தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 13 தொல்காப்பியம் - பொருளதிகாரம் புறத்திணை இயல் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 13 தொல்காப்பியம் - பொருளதிகாரம் புறத்திணை இயல் ஆசிரியர் : பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 24 + 464 = 488 படிகள் : 1000 விலை : உரு. 460/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மோகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் முதல் பதிப்புரை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு அமைந்த எல்லாவுரைகளையுந் தொகுத்து உரைவிளக்கக்குறிப்புக்களோடும் ஆய்வுரையுடனும் வெளியிடும் பணியினை மேற்கொண்டுளது. தொல்காப்பியப் பொருளதிகாரத் தின் முதலியலாகிய அகத்திணையியல் உரைவளம் வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்கள் எழுதிய உரைவிளக்கத்தோடும் ஆய்வுரையுடனும் 1975-இல் வெளியிடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து புறத்திணையியல் உரைவளம் இப்பொழுது வெளியிடப்பெறுகின்றது. இதன்கண் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியுள்ள பழைய வுரைகளுடன் கணக்காயர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியாரவர்கள் ஆராய்ந்தெழுதிய தொல்காப்பியப் பொருட் படலப் புறத்திணையியற் புத்துரையும் சூத்திரந்தோறும் கால அடைவில் தொகுத்தமைக்கப் பெற்றுள்ளன. இவ்வுரைகளைப் பயில்வோர் உரைகளிலமைந்த அருஞ்சொற்பொருள்களையும் உரையாசிரியர்களின் கொள்கைகளையும் தெளிவாகவுணர்ந்து கொள்ளுதற்கு வாய்ப்பாக அவ்வவ்வுரைகளையொட்டிய உரைவிளக்கங்கள் அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பெற்றுள்ளன. சூத்திரந்தோறும் அமைந்த இம் மூன்றுரைகளின் பின்னே ஆய்வுரை என்ற பகுதி சேர்க்கப் பெற்றுளது. இது நூலாசிரியராகிய தொல்காப்பியனார் இயற்றிய மூலத்தை யடியொற்றிச் சூத்திரத்தின் கருத்தும் பொருளும் தெளிவாகப் புலப்படும்படி எளியநடையில் எழுதப் பெற்றதாகும். தமிழ்நூல்களைப் பயில்வோர் தமிழ்முன்னோர் வழங்கிய தமிழெண்களை மறவாது பயன்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் இவ்வுரைவளப்பதிப்பில் சூத்திர எண்களும் பக்க எண்களும் தமிழெண்களாகவே அமைக்கப்பெற்றுள்ளன. தொல்காப்பியப்புறத்திணையியலிலுள்ள துறைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படுவனவும், புறப் பொருள் வெண்பா மாலையிற் புதியனவாகக் காணப்படுவனவும் ஆகிய புறத்திணைத்துறைகள் இந்நூலின் பிற்சேர்க்கையில் அட்டவணைப் படுத்தித் தரப்பெற்றுள்ளன. புறத்திணைத் துறைகளுக்குரிய இலக்கியங்களாக உரை யாசிரியர்கள் காட்டியுள்ள உதாரணப்பாடல்கள் அடியளவில் மிக்கன. அவற்றை அவ்வாறே வெளியிடுவதாயின், நூலின் பக்கங்கள் மிகும் அச்சுத்தாள் விலையேறிய இக்காலத்தில் புத்தகத்தின் விலையும் பன்மடங்காக உயரும். எனவே உரையாசிரியர்களின் உரைவேறுபாடுகளை ஒப்புநோக்கியாராயும் நோக்குடன் வெளியிடப்பெறும் இவ்வுரைவளப்பதிப்பில் உதாரணச் செய்யுட்களின் முதற்குறிப்பும் நூற்பெயரும் பாடலெண்ணுமட்டும் தரப்பெற்றன. உரையாசிரியர்கள் உதாரணப்பாடல்களின் தொடர் களையெடுத்துக் காட்டி விளக்கந்தரும் இடங்களில் அப்பாடல்கள் உரையிலுள்ளவாறு முழுவதும் வெளியிடப்பெற்றுள்ளன. இந்நூல் வரிசைகள், தமிழியற்புலத்தினர் செய்துமுடித்த ஆய்வுப்பணிகளின் பயனாக வெளிவருவன. இவை தொடர்ந்து நிகழ்தற்கும் வெளிவருதற்கும் உறுதுணையாய் விளங்கிய முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ. சுப. மாணிக்கம், இந்நாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜே. இராமச்சந்திரன் ஆகியோர்க்கும் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவினர்க்கும் நன்றி கூறும் கடப் பாடுடையேன். இந்நூல்கள் தமிழ் முதுகலை மாணாக்கர்கட்கும் ஆய்வாளர் கட்கும் பெரிதும் பயன்படுவனவாதலின் கல்லூரி நூலகங்கள் தோறும் இப் பல்கலைக் கழக வெளியீடுகள் வாங்கி வைக்கப் பெறுதல் சிறப்புடையதாகும். தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் இவ்வுரை வளம் சிறந்த மனவளத்தைத் தமிழ் ஆய்வுவளத்தைப் பெருக்குமென்பது உறுதி. க. வெள்ளைவாரணன் தொல்காப்பியம் - பொருளதிகாரம் உரைவளம் முகவுரை உலகியல் வழக்கும் இலக்கியத் தொன்மையும் ஒருசேர வாய்க்கப்பெற்ற உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது தமிழ் என்பதனை அறிஞர் பலரும் நன்குணர்வர். பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களது பேச்சு மொழியாகவும் செய்யுள் மொழியாகவும் வழங்கப்பெற்றுவரும் தமிழ்மொழி, காலந்தோறும் உலகியல் வாழ்வில் ஏற்படும் பல்வேறு இடையூறுகட்குட் பட்டுத் தனது உருத்திரியாது இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்காலத்திற்கும் ஒத்துத் தொடரும் நிலைபேறுடையதாகவும் உயர்திணை மக்களுக்குக் கண்ணெனச் சிறப்பித்துக் கூறப்படும் கல்வி வளர்ச்சியிற் பல வேறு கலைத்துறைகட்கும் நிலைக்களமாய் விரிந்து இடங்கொடுக்கும் சொற்பரப்புடையதாகவும் நம் முன்னோர்களால் இலக்கணவரம்புடன் போற்றி வளர்க்கப் பெற்றுளது. இவ்வாறு எக்காலத்தும் நிலைபேறுடைய இனிய எளிய இலக்கணவரம்புகோலித் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த புலமைச் சான்றோர்களில் முதற்கண்வைத்து எண்ணத்தக்க தலைமைச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்தவர் ஆசிரியர் தொல்காப்பியனார் என்பதனைத் தமிழுலகம் நன்குணரும். தொல்காப்பியனார் இயற்றிய இயற்றமிழ் நூலாகிய தொல் காப்பியம் தமிழ்மொழிக்கு எக்காலத்தும் அமையவேண்டிய இயல்பாகிய வளர்ச்சி நெறிகளை மனத்துட்கொண்டு இயற்றப் பெற்றதாகும். எழுத்தின் திறனாலும் சொல்வளத்தாலும் வழக்குஞ்செய்யுளுமாகிய இருவகை வழக்கு நெறிகளாலும் தமிழ்மொழி பண்டைக் காலத்தில் எவ்வாறு இலக்கண வரம்புகோலி வளர்க்கப்பெற்றது என்பதனை இக்காலத்தாரும் தெளிவாகவுணர்ந்து பின்பற்றுதற் குரிய இயற்றமிழிலக்கண நூலாகத் திகழ்வது இத்தொல்காப்பியம் ஒன்றேயாகும். பிற்காலத்தில் தோன்றிய இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், தமிழ்நெறிவிளக்கம், அகப்பொருள் விளக்கம் முதலிய தமிழிலக்கண நூல்கள் யாவும் இத்தொல்காப்பியப் பொருளை யுளத்துட்கொண்டு இயற்றப்பெற்றனவேயென்பது அந்நூல்களைத் தொல்காப்பியத்துடன் ஒப்புநோக்கி ஆராய் வார்க்கு இனிது புலனாம். தொல்காப்பியத்தில் எழுத்துஞ் சொல்லும் பொருளுமென வகைப்படுத்தி விளக்கப்பெறும் உலகவழக்குஞ் செய்யுள் வழக்குமாகிய மொழிநடை பற்றிய தமிழிலக்கண விதிகளைக் கூர்ந்து நோக்குங்கால், அவற்றுக்கெல்லாம் நிலைக்களமாகத் தொல்காப்பியனார் காலத்திற்கு முன் எத்துணையோ சிறந்த பல இலக்கியங்களும் அவற்றின் அமைப்பினை விளக்கும் இலக்கண நூல்களும் தமிழ்மொழியில் நிலைபெற்று வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாம். ஆசிரியர் தொல்காப்பியனார் தம் காலத்திலும் தமக்கு முன்னும் இயற்றப்பெற்று வழங்கிய தமிழிலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து அவற்றின் விதிகளையெல்லாந்தொகுத்துத் தொல்காப்பியமாகிய இந்நூலையியற்றி யுதவினார் என்பது, வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே எனப் பனம்பாரனார் பாடிய சிறப்புப் பாயிரப் பகுதியால் இனிது விளங்கும். தமிழ்மொழியின் எழுத்துச் சொற்பொருள் என்னும் பாகுபாட்டின் இயற்கையமைப்பினைச் சிறிதும் சிதையாது பாதுகாக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் இயற்றப்பெற்ற தொல் காப்பியமாகிய இந்நூல், பண்டைத் தமிழிலக்கியங்களின் அமைப்பினையும் பிற்காலத்தில் தோன்றி வழங்கும் பல்வேறு இலக்கியங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுபாடுகளையும் தன்பாற் கொண்டு திகழும் தனிச் சிறப்புடைய முழுமை வாய்ந்த இயற்றமிழிலக்கண நூலாகும். இந்நூல் இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் இலக்கண நூலாய் விளங்கிய தென்பதனை முச்சங்கங்களின் வரலாறு கூறுமிடத்து இறையனார் களவியலுரை யாசிரியர் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். களப்பிரர், பல்லவர் முதலிய அயல் மன்னர்களின் படை யெடுப்பின் காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களாலும் நாட்டில் மழையின்மையாற் பல்லாண்டுகள் தொடர்ந்து வருத்திய பஞ்சத்தினாலும் தமிழ்மக்கள் தமிழ் வளர்ச்சியிற் சோர்வுற்றமையால் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்தின் பயிற்சி பாண்டிநாட்டில் இடைக்காலத்திற் குன்றியதென்பது இறையனார் களவியல் முன்னுரையாலும் வடுவில்காப்பிய மதுரைவாய்ப்பொருள் மரபு வீட்டியதால் வழுதியாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடுநாள் அடைவுகோத்தன அமுதசூத்திரம் அறுபதாய்ச் சமைநூல் அமரர் கீழ்ப்பட அறிஞர்மேற்பட அருளு மூர்த்திகளே எனவரும் ஒட்டக்கூத்தர் வாய்மொழியாலும் ஒருவாறு உய்த்துணரப்படும். தமிழரொடு தொடர்பில்லாத அயலவர் சமுதாய வாழ்வில் மேலோங்கிய பிற்றைநாளில் தமிழ் மக்களின் தொன்மை நாகரிகத்தோடு பொருந்தாத கொள்கைகள் சில தொன்மை யுடையன போலத் தமிழ் மக்களது வாழ்வில் புகுத்தப் பெற்றமையால் அக்கருத்துக்களிற் சில தொல்காப்பிய மரபியலில் நாளடைவில் இடம்பெறுவனவாயின. இங்ஙனம் தமிழ் மக்களது வாழ்க்கை முறை அயலவர் கூட்டுறவாற் சிதைந்து மாறிய பிற்காலத்தில் தொல்காப்பியத்தின் பொருள் மரபினை உள்ளவாறறியும் வாய்ப்பும் நாளடைவிற் குறைந்து போயிற்று. இத்தகைய இடர்நிலையினும் தமிழர்தம் வாழ்வியல் நூலாகிய தொல்காப்பியத்திற்குப் பொருள்கண்டு தெளிந்து உரைவரைந்த பெருமை உரையாசிரியர் எனப் போற்றப் பெறும் இளம்பூரணவடிகளுக்கேயுரியதாகும். இளம்பூரண அடிகளைப் போலவே பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர் நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் முதலிய பெருமக்கள் சிலர் தொல்காப்பியத்தை வரன்முறையாகப் பயின்று நுண்பொருள் கண்டு உரைவரைந்துள்ளனர். எனினும் இவர்கள் எழுதியவுரை தொல்காப்பியம் முழுவதற்கும் காணப் படவில்லை. இளம்பூரணரைப் போன்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல்காப்பியம் முழுவதற்கும் உரை வரைந்திருத்தல் வேண்டும் என்பது அவ்விருவருடைய உரை களையும் கூர்ந்து நோக்குங்காற் புலனாகும், இளம்பூரணரும் பேராசிரியரும் பிறவுரையாசிரியர் உரைகளைத் தம்முரைகளிற் குறிப்பிடுதலால் அவ்விருவர் காலத்திற்கு முன்னும் தொல் காப்பியத்துக்குப் பல்வேறுரைகள் வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுளது. தொல்காப்பிய வுரையாசிரியர்களாகிய இப்பெரியோர்கள் தமக்குப் பன்னூறாண்டுகள் முற்பட்டுத் தோன்றிய தொல் காப்பியனார்காலத் தமிழர் நாகரிகத்தினையும் தமிழகத்தில் இடைக் காலத்தில் வந்து புகுந்த அயலவர் கலப்பினாலுளதாகிய பிற்காலச் சாதிவேற்றுமை பற்றிய சமுதாய மாற்றத்தினையும் வேறு பிரித்துணரும் வாய்ப்பினைப் பெற்றாரல்லர். எனினும் தமக்கு இயல்பாக அமைந்த கூர்த்தமதியினாலும் தொல்காப்பிய இலக்கணவரம்பினை நன்குணர்ந்து பாடப்பெற்ற பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள் முதலிய பண்டைத்தமிழ் நூல்களைத் துறைபோகப் பயின்று உணர்ந்த தெளிவினாலும் தொல் காப்பியத்திற்கு நூலாசிரியர் கருத்துணர்ந்து மெய்ப்பொருள் காணுந்திறத்திற் பெரிதும் வெற்றி பெற்றார்கள் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. தமிழகம் தமிழ்மூவேந்தர் ஆட்சியையிழந்து அயலவராட்சிக் குட்பட்ட இடைக்காலத்தில், மக்களது வாழ்வியல் கல்வி நாகரிகம் கடவுள்வழிபாடு முதலிய எல்லாத் துறைகளிலும் அயலவரது மொழியும் சமுதாய அமைப்புமே மீதூர்ந்து நின்றமையால் இந்நாட்டிற் பரவிய அயலவர் நாகரிகம் தமிழ் மக்களது உலகப் பொதுமையுணர்வினையும் அவர்தம் தொன்மை நாகரிகத்தினையும் எத்துணைக் கூர்த்த மதியாளரும் வேறு பிரித்துணர்ந்து கொள்ள இயலாதவாறு மறைத்துவிட்ட தென்றே சொல்லலாம். இங்ஙனம் தமிழர் நாகரிகம் அயலவர் கூட்டுறவாற் பிரித்துணர வியலாத நிலையெய்திய பிற்காலத்திலே வாழ்ந்த உரையாசிரியர்கள் தம் காலச் சூழ்நிலையை யொட்டித் தொல்காப்பியத்துக்கு உரைகண்ட இடங்களும் சிலவுள. தொல்காப்பியப் பொருளதி காரத்திற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதிய உரைப்பகுதிகளை ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இவ்வுண்மை புலனாம். தொல்காப்பியவுரையாசிரியர்கள் காலச் சூழ்நிலையை யொட்டித் தொல்காப்பிய உரைகளில் இடம்பெற்ற அயலவர் கொள்கைகளை இவையென ஆராய்ந்து விலக்கி, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தொன்மையினையுளங்கொண்டு தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதிக்குப் புத்துரை காண வேண்டும் என்னும் வேட்கை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் தலைமையினை மேற்கொண்ட பேராசிரியர் நாவலர் ச. சோமசுந்தரபாரதியாரவர்கள் உள்ளத்தே முகிழ்த்தெழுந்தது. அதன் பயனாகத் தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதிக்குப் புத்துரை காணும் பணி அவர்களால் தொடங்கப்பெற்றது. தொல்காப்பியத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்றியல்களுக்கு நாவலர் பாரதியார் அவர்கள் புத்துரை வரைந்துள்ளார்கள். தமிழின் எழுத்து, சொல் ஆசியவற்றின் அமைப்பினையும் பொருள்புலப்பாட்டு நெறியினையும் ஒப்ப விளக்கும் இயற்றமிழ்த் தொன்னூற்பொருளை உள்ளவாறுணர்ந்து தமிழ் மொழியினைப் பேணிவளர்த்தற்கும் பண்டைத் தமிழ் மக்களது அகம் புறம் என்னும் வாழ்வியலமைப்பினைத் தொல்காப்பியமாகிய இலக்கணத்தோடும் சங்க இலக்கியம் திருக்குறள் முதலிய தொன்மையிலக்கியங்களோடும் ஒப்புநோக்கியுணர்தற்கும் பெருந்துணைபுரிந்துள்ளன. தொல்காப்பியத்திற்கு இளம் பூரணர், பேராசிரியர் முதலிய பெருமக்கள் ஆராய்ந்தெழுதிய பழையவுரைகளாகும். தொல்காப்பியம் பயில்வோர் அந்நூலுக் கமைந்த எல்லாவுரைகளையும் வரலாற்று முறையில் ஒருசேரத் தொகுத்து உரையாசிரியர்கள் கூறும் உரைவேறுபாடுகளைப் பகுத்து ஆராய்ந்து நூலாசிரியராகிய தொல்காப்பியனார் கருதிய பொருள் இதுவாக இருத்தல் வேண்டும் எனத் தெளிந்துணரும் முறையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்கு ஓர் உரைவளப்பதிப்பு வெளியிடுதல் இன்றியமையாதது என்பதனை அறிஞர் பலரும் நன்குணர்வர். தமிழ் நிலைபெற்ற மதுரைமாநகரில் தோன்றிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இத்தமிழ்ப் பணியினை 1966இல் தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துறையில் முப்பதாண்டு களுக்கு மேற் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரை சோமசுந்தரபுரம் குடியிருப்பில் வாழ்ந்தவரும் என்னுடைய ஆசிரியப் பெருந்தகையும் ஆகிய வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்கள், இந்தியப் பல்கலைக்கழகப் பொருளுதவிக்குழு பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கென அமைத்த ஆய்வுத்திட்டத்தின் அடிப்படையில் மதுரைப்பல்கலைக்கழகத்திலமர்ந்து தொல் காப்பியப் பொருளதிகார உரைவளமாகிய இப்புலமைப் பணியினைத் தொடங்கிச் சிறந்த முறையில் நிகழ்த்தி வந்தார்கள். தொல்காப்பியப்பொருளதிகாரத்தின் முதலியல் ஆகிய அகத்திணையியலுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியவுரைகள் இரண்டும் எனது வணக்கத்துக்கும் போற்று தலுக்கும் உரிய பேராசிரியர் கணக்காயர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தரபாரதியார் அவர்கள் எழுதிய புத்துரையும் என மூன்று உரைகள் உள்ளன. வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்கள் அகத்திணையியலுக்குக் கிடைத்துள்ள இம் மூன்றுரைகளையும் சூத்திரந்தோறும் ஆராய்ந்து, காலமுறைப் படிஅமைத்து இன்றியமையாத உரை விளக்கங்களை அவ்வவ்வுரைகள் தோறும் அடிக்குறிப்பாகத் தந்து அவற்றின் முடிவில் அச்சூத்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் தமது ஆய்வுரையினை யமைத்து அகத்திணையியல் உரை வளத்தினை நிறைவு செய்துள்ளார்கள்; திரு. பிள்ளையவர்களது ஆராய்ச்சியின் பயனாக உருவாகிய அகத்திணையியல் உரைவளம் 1972-இல் மதுரைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் வெளியிடப்பெற்றது. தண்ணார் தமிழளிக்குந் தென்பாண்டி நாட்டின் தலை நகராகிய மதுரைமாநகரின் பாங்கர்த் தோன்றிப் பல்வேறு கலைத் துறைகளையும் தமிழ்மொழி வாயிலாகப் பரப்பும் பணியினைத் தனது குறிக்கோளாகக் கொண்ட மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்த் தொன்னூல்களை முறைப்பட ஆராய்ந்து ஆய்வு நூல்கள் பல வெளியிடும் நோக்குடன் தமிழ்த்துறையின் கிளவியாகத் தமிழியற்புறம் (TAMILOLOGY) என்ற பெயருடன் தமிழாராய்ச்சித் துறையினை இரண்டாண்டுகட்குமுன் நிறுவியது. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலுள் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அறிஞர் சிலரை ஒப்பந்த முறையில் ஆய்வாளராக நியமித்துத் தமிழாராய்ச்சி தொடர்ந்து நிகழ வழியமைத்துள்ளது. தமிழியற் புலத்து ஆய்வாளரும் ஒருவராக நியமிக்கப்பெற்ற யான் என்னுடைய ஆசிரியப் பெருந்தகை வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்களால் தொடங்கப்பெற்ற தொல்காப்பியப் பொருளதிகார உரைவளப்பணியினைத் தொடர்ந்து புறத் திணையியல் முதல் உவமவியல் ஈறாகவுள்ள ஆறியல்களுக்குரிய உரைகளைத் தொகுக்கும் பணியினை நிறைவுசெய்துள்ளேன். தொல்காப்பியத்திற்குக் கிடைக்கும் பழையவுரைகளுள் தொன்மைவாய்ந்த இளம்பூரணருரை முதற்கண்ணும் அதனை யடுத்துக் கிடைக்கும் ஏனையவுரைகள் அதன்பின்னும் ஆகக் காலமுறைப்படி சூத்திரந்தோறும் பகுத்து அமைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வோருரையின்கீழும் உரைப்பகுதிக்குரிய இன்றியமையாத விளக்கங்கள் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றன. உரையாசிரியர்கள் எழுதிய உரைப்பகுதிகளுள் நூலாசிரியர்கருத்துடன் ஒத்து ஏற்றுக்கொள்ளற்பாலனவும் முரண்படுவனவும் இவையென அடிக்குறிப்பில் உரியவிடங்களில் விளக்கப்பெற்றன. சூத்திரந் தோறும் பழையவுரைகளில் முடிவில் தொல்காப்பிய மூலத்தையடி யொற்றி வரையப்பெற்ற ஆய்வுரை சாய்வெழுத்தில் அமைக்கப் பெற்றுளது. அச்சுத்தாள்விலை மிகுந்துள்ள இந்நாளில் உரை யாசிரியர்கள் உரையிற் காட்டப்பெற்றுள்ள உதாரணப் பாடல்கள் எல்லாவற்றையும் முழுவடியில் உள்ளபடியே வெளியிடு வதானால் புத்தகத்தின் விலைமிகுதியாகும் என்பதனாலும் தொல்காப்பியத்திற் கமைந்த உரைவேறுபாடுகளை ஒப்புநோக்கி ஆசிரியர் தொல்காப்பியனார் சூத்திரத்திற் சொல்லக்கருதிய பொருள் இதுவென ஆராய்ந்து தெளிந்துணரும் முறையில் ஆய்வாளர்க்குப் பயன்படு முறையில் வெளியிடப்பெறுவது இவ்வாராய்ச்சிப் பதிப்பாதலானும் உரைகளிற் காணப்படும் உதாரணப் பாடல்களின் முதற்குறிப்பும் நூற்பெயரும் பாடல் எண்ணும் சுருக்கித் தரப்பெற்றுள்ளன. உரையாசிரியர்கள் தாம் எடுத்துக்கொண்ட இலக்கணத்தைப் புலப்படுத்தற்குரிய இலக்கியப் பொருளமைதியினையோ பிற குறிப்புக்களையோ உதாரணப் பாடல்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கந்தருமிடங்களில் அவ்வப் பாடற்பகுதிகள் முழுவதும் தரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சூத்திரவுரைகட்கும் முடிவில் அமைந்த ஆய்வுரைப் பகுதி முன்னுள்ள பழையவுரைகளையும் அவற்றின் அடிக்குறிப்புக்களாகத் தரப்பெற்றுள்ள உரை விளக்கங்களையும் தழுவிய நிலையில் மேலும் தடைவிடைகளுக்கிடனின்றித் தொல்காப்பிய மூலத்தை அடியொற்றி எளியநடையில் தெளிவுரையாக வரையப்பெற்றதாகும். இவ்வாறு ஒருநூலுக்கு அமைந்த எல்லாவுரைகளையும் தொகுத்து வெளியிடப் பெறுவதாகிய உரைவளப்பதிப்பு சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் ஒன்றாகிய சிவஞான சித்தியார் சுபக்கத்திற்குக் கொன்றமாநகரம் சண்முகசுந்தர முதலியார் அவர்களால் கலி 4991-இல் (கி.பி. 1890) வெளியிடப் பெற்றது. இவ்வுரைவளப்பதிப்பில் சிவஞானசித்தியார் சுபக்கத்துக்கு மறை ஞானதேசிகர், சிவாக்கிரயோகிகள், நிரம்ப வழகிய தேசிகர், ஞானப்பிரகாசர், சிவஞானமுனிவர், சுப்பிரமணிய தேசிகர் ஆகிய அறுவரும் எழுதிய உரைகள் பாடல்கள் தோறும் பகுத்து அமைக்கப் பெற்றுள்ளன. இம்முறையினைப் பின்பற்றி மகாவித்துவான் திரு. ச. தண்டபாணிதேசிகர் அவர்கள் திருக்குறளுக்குக் கிடைக்கும் எல்லாவுரைகளையுந் தொகுத்துத் தமது ஆய்வுக் குறிப்புக்களுடன் திருக்குறள் உரைவளத்தினைத் தருமையாதீனத்தின் வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள் இம்முறையினை யடியொற்றியே நாலடியார்க்குப் பதுமனார் முதலியோர் எழுதிய உரைகளைத் தொகுத்து நாலடியார் உரைவளம் என்ற பெயருடன் தஞ்சைச் சரசுவதிமகால் நூல் நிலையத்தார் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். இப்பொழுது தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்து கல்விப்பணிபுரியும் டாக்டர் வ.அய். R¥ãukÂa« v«.V, ãv¢.o., mt®fS« M¥ãufh« mUs¥g‹ v«.V., அவர்களும் தொல்காப்பிய சொல்லதிகாரத்தின் நான்கியல்களுக்கு மட்டும் கிடைத்துள்ள உரைகளைத் தொகுத்து உரைக் கோவையென்ற பெயருடன் 1963-இல் வெளியிட்டுள்ளமையும் இங்குக் குறிப்பிடத் தகுவதாகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற் குரிய உரைவளப்பணி சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வித்துவான் திரு. ஆ. சிவலிங்கனாரவர் களால் நிகழ்த்தப்பெற்று வருவதும் இங்கே குறிப்பிடற் குரியதாகும். இவ்வாறு ஒருநூலுக்கமைந்த உரைகள் எல்லாவற்றையும் கால அடைவில் வரிசைப்படுத்தி இன்றியமையாத உரை விளக்கங்களுடன் வெளியிடப்பெறும் உரைவளப்பதிப்பு மூலநூலின் ஆசிரியர் கருதிய பொருளையும் அதற்கமைந்த உரைகளிற் காணப்படும் விளக்கங்களையும் உள்ளவாறு கற்றுணர விரும்புவார்க்கும் அப்பொருள் குறித்து மேலும் ஆராய விரும்பும் ஆராய்ச்சியாளர்க்கும் பெரிதும் துணைபுரிவதாகும். இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாய் விளங்கிய தொன்மை வாய்ந்தது இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் என்பதனை அறிஞர் பலரும் நன்குணர்வர். இந்நூல், தான் தோன்றிய நாள்முதல் தமிழ் மொழியினையும் தமிழர் நாகரிகத்தினையும் பேணி வளர்க்கும் புதுமைப்பொலிவுடன் திகழ்ந்துவரும் பெருமையுடையதாகும். இந்நூலைக் காலந்தோறும் ஆழ்ந்து பயின்ற புலமைச் செல்வர்கள் இந்நூலுக்கு வரைந்துள்ள உரைகள் யாவும் கடைச்சங்க கால முதல் இன்றளவும் பல்வேறு பரப்புடையனவாகக் கிளைத்து வளர்ந்த தமிழிலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் வரம்பாகத் திகழும் முழுமுதல் இலக்கணம் இத்தொல்காப்பியமேயென்னும் உண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்துள்ளன. இத்தகைய உரைவளங்களால் தமிழ் முதனூலாகிய தொல் காப்பியத்திற்குப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் கண்டுணர்த்திய பொருள் நுட்பங்களைத் தொகுத்துக் காணும் வாய்ப்பு உண்டாகின்றது. பண்டைத் தமிழ்த் தொன்னூலுக்கு மெய்யுரை காணுந் திறத்தில் தமிழறிஞர்கள் காலந்தோறும் பெற்றுள்ள கருத்து வளர்ச்சியினையும் அவ்வவ்வுரையாசிரியர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலைகளையும் உள்ளவாறு உணரமுடிகின்றது. பல்வேறு உரைகளிற் காணப்படும் மறுப்பும் தடைவிடைகளுங் கொண்டு மூல நூலாசிரியர் சொல்லக்கருதிய பொருள் இதுவாகத் தான் இருத்தல் வேண்டும் எனத் துணிதற்குரிய நூற்சான்றுகளும் கிடைக்கின்றன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும் அகத்திணை புறத்திணை பற்றிய தமிழ்மக்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளும் அவற்றைப் பாடுதற்குரிய புலனெறி வழக்கமாகிய செய்யுளமைப்பும் அவை குறித்த சொற்பொருள் மரபுகளும் நன்கு புலனாகின்றன. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்து, பல்கலைக்கழகம் அறிவியல், பொறியியல், தொழிலியல் முதலிய பலதுறைகளிலும் இந்தியப் பல்கலைக் கழகங்களுள் முதன்மைபெற்றுவிளங்குதல் வேண்டும் என்னும் பெருவிருப்புடன் அயராது உழைத்தும் தமிழாய்வுக்கெனத் தமிழியற்புலம் என்னும் தனித்துறையினை அமைத்தும் தமிழ் நலம் பேணிய செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் வ. சுப. மாணிக்கம் எம்.ஏ.பிஎச். o.,o.È£, அவர்களாவர். தமிழியற்புலத்தின் ஆய்வாளருள் ஒருவராக என்னை அழைத்து இணைப்பாளராக நியமித்துப் பணிகொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தராகிய அவர்கட்கும் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவினர்க்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். எம் இரண்டாண்டுப் பணியின் பயனான நூல்கள் வெளிவரும் இச்சமயத்தில், அவை சிறப்புடன் வெளிவர உறுதுணை நல்கி வரும் துணைவேந்தர் பேராசிரியர் ஜே. இராமச்சந்திரன் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி உரியதாகும். தமிழியற்புலத்தின் பணிகள் இனிது நிகழ அவ்வப்பொழுது ஆவனபுரிந்துதவிய தமிழ்த்துறைத் தலைவரும் தமிழியல் துறை மற்றும் இந்திய மொழித்துறைகளின் இணைப்பாளரும் ஆகிய டாக்டர். இராம. bgÇafU¥g‹ (jÄH©zš) v«.V.,ãv¢.o. அவர்கட்கு எனது நன்றி என்றும் உரியதாகும். தொல்காப்பியப் பொருளதிகார உரை வளத்தினை வெளியிடுவதில் ஊக்கமும் உதவியும் நல்கிவரும் பல்கலைக்கழகநூற் பதிப்பாளரும் இணைப்பேராசிரியரும் ஆகிய டாக்டர் கதிர். kfhnjt‹ v«.v.,v«.È£.,ãv¢.o அவர்கட்கும் இவ்வுரை வளப்பதிப்புக்கு உறுதுணைபுரிந்த தமிழியற்புலத்துக் கல்வெட்டுத்துறை ஆய்வாளர் பேராசிரியர் திரு. சி. கோவிந்தராசனார் அவர்கட்கும் எனது நன்றியுரியதாகும். ï›îiu ts¥gâ¥ã‹ ifbaG¤J¥ gofis mauhJ M®tKl‹ j£l¢R¢ brŒJjÉa âU brštfnzr‹, ã.rÆ., நூலின் அச்சுப்படியினைத் திருத்தியுதவிய திரு. த. nrhkRªju« v«.V., ஆகிய அன்பர்கட்கு என்னுடைய அன்பார்ந்த பாராட்டும் வாழ்த்தும் என்றும் உரியவாகும். இந்நூல் சென்னையில் அச்சேறியபோது அச்சுப்படிகளைச் சீர்செய்த டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் அவர்கட்கு என்னுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். க. வெள்ளைவாரணன் முதல் பதிப்புரை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு அமைந்த எல்லாவுரைகளையுந் தொகுத்து உரைவிளக்கக்குறிப்புக்களோடும் ஆய்வுரையுடனும் வெளியிடும் பணியினை மேற்கொண்டுளது. தொல்காப்பியப் பொருளதிகாரத் தின் முதலியலாகிய அகத்திணையியல் உரைவளம் வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்கள் எழுதிய உரைவிளக்கத்தோடும் ஆய்வுரையுடனும் 1975-இல் வெளியிடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து புறத்திணையியல் உரைவளம் இப்பொழுது வெளியிடப்பெறுகின்றது. இதன்கண் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியுள்ள பழைய வுரைகளுடன் கணக்காயர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியாரவர்கள் ஆராய்ந்தெழுதிய தொல்காப்பியப் பொருட் படலப் புறத்திணையியற் புத்துரையும் சூத்திரந்தோறும் கால அடைவில் தொகுத்தமைக்கப் பெற்றுள்ளன. இவ்வுரைகளைப் பயில்வோர் உரைகளிலமைந்த அருஞ்சொற்பொருள்களையும் உரையாசிரியர்களின் கொள்கைகளையும் தெளிவாகவுணர்ந்து கொள்ளுதற்கு வாய்ப்பாக அவ்வவ்வுரைகளையொட்டிய உரைவிளக்கங்கள் அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பெற்றுள்ளன. சூத்திரந்தோறும் அமைந்த இம் மூன்றுரைகளின் பின்னே ஆய்வுரை என்ற பகுதி சேர்க்கப் பெற்றுளது. இது நூலாசிரியராகிய தொல்காப்பியனார் இயற்றிய மூலத்தை யடியொற்றிச் சூத்திரத்தின் கருத்தும் பொருளும் தெளிவாகப் புலப்படும்படி எளியநடையில் எழுதப் பெற்றதாகும். தமிழ்நூல்களைப் பயில்வோர் தமிழ்முன்னோர் வழங்கிய தமிழெண்களை மறவாது பயன்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் இவ்வுரைவளப்பதிப்பில் சூத்திர எண்களும் பக்க எண்களும் தமிழெண்களாகவே அமைக்கப்பெற்றுள்ளன. தொல்காப்பியப்புறத்திணையியலிலுள்ள துறைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படுவனவும், புறப் பொருள் வெண்பா மாலையிற் புதியனவாகக் காணப்படுவனவும் ஆகிய புறத்திணைத்துறைகள் இந்நூலின் பிற்சேர்க்கையில் அட்டவணைப் படுத்தித் தரப்பெற்றுள்ளன. புறத்திணைத் துறைகளுக்குரிய இலக்கியங்களாக உரை யாசிரியர்கள் காட்டியுள்ள உதாரணப்பாடல்கள் அடியளவில் மிக்கன. அவற்றை அவ்வாறே வெளியிடுவதாயின், நூலின் பக்கங்கள் மிகும் அச்சுத்தாள் விலையேறிய இக்காலத்தில் புத்தகத்தின் விலையும் பன்மடங்காக உயரும். எனவே உரையாசிரியர்களின் உரைவேறுபாடுகளை ஒப்புநோக்கியாராயும் நோக்குடன் வெளியிடப்பெறும் இவ்வுரைவளப்பதிப்பில் உதாரணச் செய்யுட்களின் முதற்குறிப்பும் நூற்பெயரும் பாடலெண்ணுமட்டும் தரப்பெற்றன. உரையாசிரியர்கள் உதாரணப்பாடல்களின் தொடர் களையெடுத்துக் காட்டி விளக்கந்தரும் இடங்களில் அப்பாடல்கள் உரையிலுள்ளவாறு முழுவதும் வெளியிடப்பெற்றுள்ளன. இந்நூல் வரிசைகள், தமிழியற்புலத்தினர் செய்துமுடித்த ஆய்வுப்பணிகளின் பயனாக வெளிவருவன. இவை தொடர்ந்து நிகழ்தற்கும் வெளிவருதற்கும் உறுதுணையாய் விளங்கிய முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ. சுப. மாணிக்கம், இந்நாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜே. இராமச்சந்திரன் ஆகியோர்க்கும் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவினர்க்கும் நன்றி கூறும் கடப் பாடுடையேன். இந்நூல்கள் தமிழ் முதுகலை மாணாக்கர்கட்கும் ஆய்வாளர் கட்கும் பெரிதும் பயன்படுவனவாதலின் கல்லூரி நூலகங்கள் தோறும் இப் பல்கலைக் கழக வெளியீடுகள் வாங்கி வைக்கப் பெறுதல் சிறப்புடையதாகும். தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் இவ்வுரை வளம் சிறந்த மனவளத்தைத் தமிழ் ஆய்வுவளத்தைப் பெருக்குமென்பது உறுதி. க. வெள்ளைவாரணன் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் அகத் --- அகத்திணையியல் அகம் --- அகநானூறு இளம் --- இளம்பூரணர் கலி --- கலித்தொகை களவழி --- களவழிநாற்பது குறள் --- திருக்குறள் குறுந் --- குறுந்தொகை சிலப் --- சிலப்பதிகாரம் தொல் --- தொல்காப்பியம் நச் நச்சி --- நச்சினார்க்கினியர் நச்சர் நாலடி --- நாலடியார் பழமொழி --- பழமொழி நானூறு பத்துப் --- பத்துப்பாட்டு பதிற்று பதிற்றுப் --- பதிற்றுப்பத்து புறம் --- புறநானூறு பு. வெ. மா --- புறபொருள் வெண்பா மாலை பொருந --- பொருநராற்றுப்படை மரபு --- மரபியல் யாப். விரு. --- யாப்பருங்கல விருத்தி தொல்காப்பியம் புறத்திணை இயல் தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணை இயல் இளம்பூரணம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், புறத்திணையியல் என்னும் பெயர்த்து. இது புறப்பொருள் உணர்த்துதலாற் பெற்ற பெயர்.1 அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், மேல் அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க. அவை :--- மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறுதலும், காடுறை யுலகாகிய முல்லைப்புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும், புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும், மணலுலகாகிய நெய்தற்புறம் இரு பெரு வேந்தரும் பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலால் அது தும்பை என ஒரு குறி பெறுதலும், நடுநிலைத்திணையாகிய பாலைப்புறம் வேந்தரே யாயினும் ஏனையோராயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது வாகை என ஒரு குறி பெறுதலும், பெருந்திணைப்புறம் நிலையாமை யாகிய நோந்திறப் பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும், கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒரு பொருளே குறித்து வருதலின் பாடாண் என ஒரு குறி பெறுதலும் உணர்த்தியவாறு கண்டு கொள்க.1 மேலை ஓத்தினுள், புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது, அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே (அகத் 58) என அகத்திணைச் செய்யுள் இயற்பெயர் கூறப்பெறாதென்றமை யானும், புறத்திணை மருங்கிற் பொருந்தும் என்றமையானும் உலகியலோடு ஒத்துவரும் காமப்பொருளாகப் பாடாண் பாட்டின்கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறும் என்று கொள்க.1 ஆன்றசிறப்பின் அறம்பொருள் இன்பமென மூன்றுவகை நுதலிய துலகம் அவற்றுள் அறமும் இன்பமும் அகலா தாகிப் புறன்எனப் படுவது பொருள்குறித் தன்றே என்னும் பன்னிருபடலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்; அவர் கூறுதல் வாகைத் திணைக்கண் கட்டில் நீத்த பால் முதலாகக் காமம் நீத்த பால் ஈறாக அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.2 ஆங்ஙனம் உரைப்பின் அவற்றது வகையால் பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பின் தும்பையுள் ளிட்ட மறனுடை மரபின் ஏழே ஏனை அமர்கொள் மரபின் வாகையும் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவியல் என்ப எனவும், கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு அத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே எனவும் புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல் (மரபு 1) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி மிகைபடக் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் (மரபு. 18) என்னும் குற்றமும் பயக்கும் என்க அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமை யாதலானும், பொதுவியல் என்பது, பல்அமர் செய்து படையுள் தப்பிய நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விரித்து முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற்கண்ணும் கூறாமையானும், கைக் கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டு தலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க.1 1. அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே.1 இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின் வெட்சித் திணைக்கு இடமும் துறையும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதனானே திணையும் துறையும் என்று வரும் புறப் பொருள் என்று கொள்க. (இதன் பொருள்) அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்-அகத்திணை யிடத்து மயக்கம் கெட உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் வகைப்படக் கூறின்; அகத்திணை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல் ஓதிய இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல். வெட்சிதானே குறிஞ்சியது புறனே-வெட்சி என்னும் திணை குறிஞ்சி என்னும் திணைக்குப் புறனாம். வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரை கோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம்.1 உட்குவரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே-வெட்சித்துறை2 உட்கு வரத் தோன்றும் பதினான்கு துறையை உடைத்து. துறை பதினான்கும் வருகின்ற சூத்திரத்துள் காட்டுதும். நச்சினார்க்கினியம் : இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணையிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையிய லென்னும் பெயர்த்தாயிற்று. புறமாகிய திணையெனப் பண்புத் தொகையாம். அதனை முற்படக் கிளந்த (தொல்-பொ-அகத்-1) என்புழிப் பிற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றது இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களால் திறப்படக்கிளப்பின் எனக் கூறலின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச்சூத்திரமுற் கூறிய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதூஉம், அதுதான் இப் பகுதித்தென்பதூஉம் உணர்த்துதனுதலிற்று.1 (இ-ள்) அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்---அகத்திணை யென்னும் பொருட்கட் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இலக்கணத்தைக் கூறுபட ஆராய்ந்து கூறின்; வெட்சிதானே குறிஞ்சியது புறனே---வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம். உட்குவரத்தோன்றும் ஈரேழ் துறைத்தே அதுதான் அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து; எ-று.2 அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பையென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடையொப்புமைபற்றிச் சார்புடையவாதலும் நிலமில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை யென்பனவற்றிற்கு வாகையுங் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடைய வாதலுங்3 கூறுதற்கு அரில்தபவுணர்ந்தோ ரென்றார். ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச்சூத்திரங்களுட் கூறுதும். தானே யென்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின். பாடாண்டிணை ஒழிந்தன வற்றிற்கும் இஃதொக்கும்.1 களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுந்தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும்* போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். வெட்சித் திணையாவது களவின்கண் நிரை கொள்ளும் ஒழுக்கம்; இதற்கு அப் பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண்சேர்வதோர் உபாயமாதலின் உட்குவரத் தோன்றுமென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒரு வகைப்பட்டு இயங்குதலாகு மார்க்கமாதலிற் றுறையென்றார்; எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறை யுட்பகுதி களெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார். புறத் திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பல பொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறை யெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுளுட் பலபொருள் விராஅய் வரினும், ஒருதுறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறையாதலும், ஒரு செய்யுளுட் பலதுறை ஓருங்குவந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.2 பாரதியார்: ஒழுக்கமொன்றே கருதற்குரிய விழுப்பொருளாகக் கொண்டவர் பழைய தமிழர். மக்களின் வாழ்க்கைச் செயலெல்லாம் திணையா (ஒழுக்கமா)யடங்கும். எல்லாச் சொற்களுக்கும் அவற்றின் பொருள்பற்றியே திணையும் பாலும் வகுக்கும் தமிழ் மரபு இதற்குச் சான்று பகரும். உயிரினும் ஓம்பப்படும்---ஒழுக்கம் பேணி, அதனை ஓம்பற்குரிய மக்கட்டன்மை சுட்டுவனமட்டே உயர்திணையெனவும், ஒழுக்கமே கருதொணாப் பிற எதனையும் குறிக்கும் சொற்களனைத்தும் அல்திணை - (திணையல்லாதன) எனவும், தொல்காப்பியர் போன்ற பண்டைத் தமிழ்ப் புலவர் வகுத்த முறை இப்பழைய தமிழ் மரபுபற்றி யெழுந்ததாகும். தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் அறிவுநெறி கடைப்பிடித் தொழுகாது, உருவத்தால் மக்களே போல்பவராயினும் மேவன செய்து திரியுங் கயவரையும் விரும்பியாங்கொழுகும் நரகரொடு தேவரையும், அறிவற்ற பிற அனைத்தையும் ஒருங்கே அல்திணையாகக் கொண்டாண்ட பழந் தமிழ்மரபு உயர்வுள்ளும் தமிழர் ஒழுக்க நிலையையும் விழுப்பநோக்கையும் வலியுறுத்தும். மக்கள் வாழ்வில் தூய கற்புறுகாதல் கண்ணிய மனையற வொழுக்கம் பற்றிய அனைத்தும் அகமெனப்பட்டன. பிறர் தொடர்பின்றியமையா இற்புறவாழ்வோடியைபுடைய வெல்லாம் புறமெனப் பட்டன. தனிச் சிறப்புடைய இத்தமிழ்மரபு பேணித் தொல்காப்பியர் தம்நூற் பொருட்பகுதியில், காதல் கண்ணிய அகத்திணையாமவற்றின் பொதுவியல்புகளைத் தொகுத்து அகத்திணையியல் என்னும் பேரால் முதலிற் கூறினார். அவ்வகவொழுக்கின் சிறப்பியல்களைக் களவு---கற்பு எனுங் கைகோளிரண்டன்கீழ் வகுத்து விரிக்குமுன், பொருளை அகம்புறமென நிறுத்தமுறையானே, பொருளிடையீடாய், ஒரு வாறாகத் திணைகளுக்குத் தொடர்புடைய மற்றைப் புறவொழுக்கவியல்களையுஞ் சுட்டவேண்டி அவற்றை இவ்வியலில் விளக்குகின்றார்; ஆதலின். இது புறத்திணையியல் எனும் பெயர்கொண்டது. காதலறவொழுக்கங்களைத் தொகுத்து ஏழு திணையாகக் கொண்டதற்கேற்ப, மக்களின் புறவொழுக்கங்களையும், மறனுடை மரபின் ஏழேயாகக் கொள்ளும் பழைய தமிழ் முறையைத் தழுவி வெட்சி முதலாப் பாடாண் ஈறாப் புறத்திணை ஏழும் அவற்றின் இயல்துறை வகைகளும் இப்புறத்திணையியலிற் கூறப்படுகின்றன. பழங்காலத்தில் ஆடவர்க்குரிய சிறந்த சால்புகளான பெருமையும் உரனும் பெரிதும் மறத்தின் வீறாயமைதலின், புறவொழுக்கமெல்லாம் அமர்கொள் மரபின் திணைகளாயின.1 அவற்றை நிரலே முதலில் அகத்திணை ஒவ்வொன்றிற்கும் ஏற்புடைப் புறனாயமையும் திணை வகையும் அதன் பெயரும் குறித்தல், அதையடுத்துடனே அப்புறத்திணை யியல் விளக்கல், பிறகு அதன் துறைவகை தொகுத்தல், என முத்திறம்பட முறை பிறழாமல் விளக்குவர் தொல்காப்பியர். அவ்வத் திணைத் துறைகளின் தொகையெண் முதலிற்றிணைப் பெயரோடேனும், ஈற்றில் துறைவகையோடேனும் கூறப் பெறுகின்றது எனவே ஒவ்வொரு புறத்திணைக்கும் குறைந்த அளவு மூன்றும், திணை துறைகளின் சிறப்பியல்புகள் பெருகுமிடத்து மூன்றின் மிக்கும் சூத்திரங்கள் கூறப்படுகின்றன.2 புறத்திணை ஏழும் முறையே, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். இவை நிரலே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை கைக்கிளை என்னும் அகத்திணைகளுக்கு இயலியைபுடைமை கருதி அவ்வவற்றிற்குப் புறமாயமைவனவாய்க் கொள்ளப்பட்டுள. அவ்வமைதி அவ்வத் திணைச்சூத்திரத்தின் கீழ் விளக்கப்படும் அகத்திற்போல, புறத்தும் திணைகளை ஏற்ப அவ்வவ்வொழுக் கத்திற் சூடும் மாலை அல்லது அடையாளப் பூவாற் பெயரிட்டழைப்பது அடிப்பட்ட தமிழ்நூன்மரபாகும். இம் முறையே இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆகோளாம் வெட்சித்திணைவகையும், நான்கு, ஐந்து-ஆம் சூத்திரங்களில் ஆகோளைப்போலவே குறிஞ்சிப் புறனாய்ப் போர் துவக்கும் வெட்சியொழுக்கமாகும் கொடிநிலை --- கொற்றவைநிலை---என்பனவும் பிறவெட்சித் துறைகளும் கூறப்படுகின்றன. வெட்சி, போர்துவங்கு முன் பகைவர்க்கறிவிப்பதுபோல் அது பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவிற் கொள்ளும் ஒழுக்கமாகும். போர் துவங்கிய பின் ஆகோள் கொண்டியாவதன்றி1 வெட்சியாகாது. அடையலர்க்கு அமர்க்குறிப்பறிவித்துப் படைதொடச் செய்து அவர்மேற் செல்வதே போரறமாதலின், அமரறிவிப்பான் பகைப்புலத்து ஆகோடலைப் போர் தொடங்கும் மரபாக் கொண்டனர். பண்டைத் தமிழரும் பிறரும் பண்டைக் காலத்தில். களவில் ஆகொளவரும் முனைஞரைத்தடுத்து நிரை காவலர் மீட்க முயல்வதும், அவரொடு நிரைகொள்வார் பொருவதும்வேறு திணையாகாமல் ஆகோளின் இடை நிகழ்ச்சிகளாயடங்கும் இயல் கருதி அவற்றை அனைக்குரி மரபிற் கரந்தை என வெட்சித் துறைகளில் அடக்குவர் தொல்காப்பியர். அதுபோலவே போர்த் தொடக்கமாம் கொடிநிலை, கொற்றவை நிலை போல் வனவற்றையும் பிற பல துறைகளையும் வெட்சியி லடக்கிக் கூறினர். அவ்வாறு போர் துவக்கும் ஒழுக்கவகைகளனைத்தும் வெட்சியெனப்பட்டு, மறனுடைமரபின் அமரறத்தொகுப்பாம் புறத்திணைவகையுள் முதற்கண் கூறப்படுகின்றன1 பிறகு, பகையடப் படையோடு மேற்செல்லும் வஞ்சித் திணையை அதன் வகை துறைகளொடு 6-முதல் 8-வரையுள்ள சூத்திரங்கள் விளக்குகின்றன. அதையடுத்து, வேற்றுப்புலத்துப் படைகொடு செல்வோர் மாற்றலர் இருக்கையையெய்தி மலையுமுன் தம் ஆற்றிடை அக நாட்டுப் படையரண்களை எறிதல் அல்லது அகப்படுத்தல், அமர் வென்று தாம் மீள இன்றியமையாதாகலானும், அடையலரின் இடையரண்களை முற்றி எறிதலும் கோடலும், அவர்கட்கு வேண்டப்படுமாகலானும், அவ்வொழுக்கமாய உழிஞைத்திணையும் அதன் வகை துறைகளும் இவ்வியலில், 9-முதல் 13-வரையுள்ள சூத்திரங்களால் தெளிக்கப்படுகின்றன. முற்றுவோர் முயற்சியை அரண்காவலர் முரணாது தடுப்பதும், அக்காவலர் எதிர்ப்பைக் கடந்தடக்கியன்றி அரண் எறிதல் கூடாமையும் இயல்பாகும். முற்றுவாரின்றி மதில்காவற்போர் நிகழுமாறில்லை யாகலானும், முற்றியெறிவாரின்றி வாளா அரண்காத்திருத்தல் நொச்சியெனக் கருதப்படாதாகலானும், அரண் எறிமுறையின் ஒருதிறனா அடங்கும் முற்றெதிர்ப்பைப் பிற்காலத்தவர்போல வேறுபிரித்து நொச்சியெனத் தனித்திணை யாக்காமல். செந்தமிழியற்கை சிவணிய நிலத்துப் பழைய முறை பேணி முற்றுகை பற்றிய உழிஞைத் திணையிலடக்குவர் தொல்காப்பியர்.2 அவற்றின்பின், பகைமேற் சென்றாரைத் தகைத்து நின்றா ரெதிரூன்ற, தானையிரண்டும் தம்முள் தலைமயங்கி மலைதலாகும் தும்பைத் திணையையும், அதன் வகை துறைகளையும் 14-முதல் 17-வரையுள்ள சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. படையெழுச்சியை மட்டும் வஞ்சியென வகுப்பதும், சென்றாரை நின்றாரெதிர்ப்பதைக் காஞ்சியெனத் தனியொரு திணையாப் பிரிப்பதும், எதிர்த்திரு படையும் அதர்ப்பட மலைதலைத் தும்பையென வேறோர் திணையாக் கூறுவதும் பிற்கால வழக்கு. சென்றாரை நின்றார் எதிர்ப்பது போராய்த் தும்பையிலடங்குதலானும், பொருதலற்ற எதிர்ப்பெதுவுங் கருதல் கூடாமையானும், பண்டைத் தமிழ் நூலோர் சென்ற பகையெதிர் நின்றுதகையும் எதிர்ப்பும், இரு திறப்படையும் ஒருதலை மலையும் போரும் உடனமையத் தும்பையென வொருதிணையே கொண்டார்;1 தொல்காப்பியரும் அப்பழமரபே பேணிக் கூறுவர். போர்க்கூறாகும் தும்பைத் திணைக்குப் பின், பொருது வென்றோர் வீறு கூறும் வாகைத்திணையும் அதன் துறைகளும் 18-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களில் தெளிக்கப்படுகின்றன அமர் வெற்றியுடன், அதற்கியைபுடையதாய்ப் பிறதுறைகளில் இகலிவென்றோர் வீறும் கூட்டி, ஒப்பக்கூறல் ஒன்றெனமுடித்தல் தன்னினமுடித்தல் எனு முறையில், பாராட்டுக்குரிய வெற்றி யனைத்தும் இவ்வாகைத்திணையிலடக்கிக் கூறப்படுகின்றன. அதையடுத்து, அமர்கொள்மரபின் தும்பையும் வாகை யுமான போரும் வெற்றியுமொழிய, மற்றைய விழுப்பமும் விழுமமும் விளைக்கும் பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லிய நெறித் தாய பிறவொழுக்கத் தொகையாம். காஞ்சித்திணையும் அதன் துறைகளும் 22-முதல் 24-வரையுள்ள சூத்திரங்களாற் கூறப்படுகின்றன. இவ்வியல் ஈற்றில், இகலில் மிக்கார் வெற்றிமட்டுமன்றி, எனைத்துவகையானும் மேதக்காரை மீக்கூறலாய் அவர் பீடும் வீறும் புகழும் பாடாண்டிணையும் அதன் பொதுச் சிறப்பியல்பு களும் வகைதுறைகளும் விரிக்கப்படுகின்றன. இப்பழையமுறையினைத் தழுவாமல், பன்னிருபடலம், வெண்பாமாலை முதலிய பிற்கால நூல்கள் புறத்திணைகளைப் பன்னிரண்டாக்கிக் கொண்டன. பன்னிருபடலம் பிற்கால நூலாதல் தேற்றம். அதிற் கூறப்படும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி முதலிய பலதிணையியலும் அவற்றின் துறை வகையும் தொல்காப்பியர் கொள்கையொடு மாறுபடுதல் கண்கூடாதலின், முரணுமிவ் விரண்டும் ஒரே கணக்காயரிடம் இத்திணைகளை ஒருங்கு கேட்டோர் கூற்றாதல் கூடாமை ஒருதலை. பன்னிரு படலத்தின் வெட்சிப்படலம் தொல்காப்பிய ரால் அவரிவ்வியலிற் கூறுவதற்கு மாறாக இயற்றப்பட்ட தென்பதொன்றே பன்னிரு படலமாக்கியோர் காலம்பற்றிய கதையின் பொய்மையைத் தெளிப்பதாகும். பன்னிரு படலத்தில் வெட்சிப்படலம், தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது என்று இளம்பூரணர் இவ்வியல் வெட்சி கூறும் சூத்திரவுரைக் கீழ் விளக்கியுள்ளார். புறத்திணைத் துறைகளைப் பலவாறு பிற்காலத்தே பிறழக் கூறியோர் தம் பெயரொடு கூறத்துணியாமல், தம் நூலுக்கு உடன்பாடும் ஆட்சியும் பெறவேண்டிப் பண்டைப் பெரியோர் பெயரோட தனை வெளிப்படுத்தியது வியப்பில்லை. ஞானவெட்டியை வள்ளுவருக்கும், புலமையற்ற பல பிற்காலச் சோதிட மருத்துவச் செய்யுட்களை அகத்தியருக்கும் சுமத்தியது போலவே, காலத்தால் மிகப்பிந்திய பன்னிரு படலத்தை, தமிழகத்துப் புலந் தொகுத்தோனெனத் தன்பெயர் நிறீஇய தொல்காப்பியருக்கும், அவரோடொருபள்ளி மாணவராகக் கருதப்பெற்ற பழம்புலவருக்கும் சுமத்தியுள்ளாரெனத் தெளிதல் எளிதாம். இனி இப் பன்னிருபடலம் முதனூலாக (அதன்) வழிநூலே...bt©ghkhiy”ahjyhš, பின்னது முன்னதன் முறையையே முழுதுந் தழுவி நடப்பதாகும். இவ்வுண்மை தேறாமல், இவற்றின் புது முறையே பழைய தொல்காப்பியமுங் கூறுமெனக் கருதிப் பிற்காலப் புலவர் சிலர் அப்பண்டைநூற் சூத்திரங்களுக்கும் பின்னூற் கருத்துக்களையேற்றிப் பல விடங்களில் பிறழ உரைகூறி யிடர்ப்படுதலறிந்து பிழைவிலக்கி மெய்ப்பொருள் காண முயலுவது நம்மனோர் கடமையாகும். எழுதிணையென்னும் முந்துநூன் முறைபிறழப் பிந்தியோர் கொண்ட புறத்திணை பன்னிரண்டும் வருமாறு:-- 1) போர்த் துவக்கமாம் ஆகோள் வெற்றியும், 2) அதற்கு மறுதலையாய், வெட்சியோர் கவராமல் நிரை மீட்க முயலும் காவலர் எதிர்ப்பாம் கரந்தையும், 3) பகைவரின் நாடு கொள்ள வெழும் படைச் செலவு வஞ்சியும், 4) அதற்கு மறுதலையாய், மலையவந்த பகைவரை நின்றார் எதிரூன்றித்தகைவது காஞ்சியும் 5) மதிலை வளைத்துக் கொள்ளுதல் உழிஞையும், 6) அதற்கு மறுதலையாம், அகத்தோர் தம் மதில்காத்தல் நொச்சியும், 7) சென்ற பகையோரும் நின்று தகைவாரும் தம்முன் பொருதல் தும்பையும், 8) போரில் வெல்லுதல் வாகையும், 9) எவ்வாற்றானும் புகழப்படுதல் பாடாணும், 10) இத்திணைகட்கெல்லாம் பொது வாயுள்ளவை பொதுவியலும், 11) இருமருங்கொவ்வா ஒருதலைக் காதல், கைக்கிளையும், 12) பொருந்தாக் காமம் பெருந்திணையும் எனப் பன்னிரு புறத்திணை பகரப்படுவன இன்னும் இப்பின்னூலோர், இவற்றுள் முதலன ஏழே புறத்திணையெனவும், ஈற்றுறுமிரண்டும் அகப்புறமெனவும், இடைப்படு மூன்றும் புறப்புறமெனவும், தொகை பன்னிரண்டும் வகைபெறுமென்பர். காலத்தொடுபட்டு மரபு பிறழாமல் ஏற்புழி வழக்கொடு பொருந்தப்புகும் புதியதும், கடிதலின்றிப் போற்றற்குரியவாதல் கூடும். எனில், மிகையாகும் இப்புதிய புறத்திணைவகை பழைய தமிழ் முறையோடு முரணுவதுமட்டு மன்று; இது செவ்விய வகுப்பு முறையெதுவுமின்றி, தடை பலவற்றிற் கிடமும் தருகின்றது. முதற்கண், மேற்காட்டியாங்கு கரந்தை வெட்சியிலும் நொச்சி உழிஞையிலும் இப்பின்னூற்காஞ்சி தும்பையிலும் முறையே அதனதன் பகுதியாயடங்கியமை தலானும், எதிர்ப்பற்ற வெட்சி வஞ்சி உழிஞை தும்பைகள் கருதொணாமை கண்கூடாதலானும், இவ்வாறு கூறுவன வேறாம் திணைகளெனப் பிரித்து வகுப்பதற் கிடமும், அதிற் சிறப்பும் காணற்கில்லை. இனி, திணையனைத்தும் ஒன்றிலொன்றடங்கா அகமும் புறமுமா யிருவேறு வகைய மெனக் கொண்டபிறகு, திணை எதுவும் ஒன்று அகத்தது அன்றேல் புறத்தது எனப்படுதலன்றி, அகப்புறமாமென்றோர் புதுவகைப்படுத் தெண்ணுவது, பொய் பொய்யேயாவதன்றி, தனிப்பொய், பொய்ப் பொய், மெய்ப் பொய் என முத்திறப்படுமெனல் போல். பொருளொடு பொருந்தாப் போலி முறையேயாகும். புறமெதுவும் அகவகையாகாதது போலவே, அகமெதுவும் எனைத்து வகையானும் புறனா காமையும் ஒருதலையாத் தேறப்படும். அகத்தில் தனியகம் அகத்தகம் புறத்தகம் எனும்பாகுபாடின்மையால் புறத்துள்ளும புறமேயன்றிப் புறப் புறமும் அகப்புறமும் வேறுகோடலமை யாமையறிக. மெய்ப் பொய்-ஒளியிருள்---பகலிரா என்பனபோலவே அகப்புறத்திணை யொன்று கருதுமாறில்லை. இயல் வேறுபட்ட இருவகைத் திணைகளைப் புணர்த்து அகப்புறமெனப் புதுவதோர் விரவுத் திணை வகுத்த தோடமையாமல், புறப் புறமென வொருவகை கோடல் எற்றுக்கு? அகத்தின் வேறு புறமாதல்போல, புறத்தின் வேறுபடுவது அகமேயாகும். மற்றைய புறப்புறமென்பது பொருளில் கூற்றாம்.1 கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்குப் புறனாவதன்றிப் புறப்புறமெனல் ஆகாமையுணர்க எனக் காஞ்சிச் சூத்திரவுரையில் இம்முறையல்லா முறையை நச்சினார்க்கினியரும் மறுத்துரைக்கின்றார். பொரு வோரிருவருள் ஒருவர் வெல்லுதல் போரினியல் முடிபாகும். இதில் போராம் தும்பையைப் புறனாக்கி, போரில் வேறலாம் வாகையைப் புறப்புறமென வேறுபடுத்துவதேன்? தனிவேறியல் புடைய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பைகளை யெல்லாம் அகத்தில் வேறாம் பொதுவியல்கொண்டு புறமெனு மொருவகையாக்குவோர், அவற்றோ டியலியைபுடைய வாகை பாடாண்களையும் புறமாகக் கொள்ளாமல் வேறுவகையாக்கி மாறுபடுவானேன்? அன்றியும் பொதுவியல் என்பன புறத்திணைகளுக்குப் பொதுவாம் துறைகளேயாதலின், அவையொருதனிவேறு திணையாமாறில்லையே. பொதுவியலென்றோர் திணைப் பெயராகாமையுணர்க என நச்சினார்க்கினியரும் இதை மதுரைக் காஞ்சியுரையில் மறுப்பதறிக. மேலும் தொல்காப்பியர் போலவே கைக்கிளை பெருந் திணைகளைப் பிற்காலத்தும் அகவகையாகவே கொண்டாள்வது. நம்பியகப் பொருளாலும் அகத்துறைக் கோவைகளாலும் இனிது விளங்கும். அப்படியிருக்க, அவற்றையே மீட்டும் புறத்திணை வகையுள்ளும் கூட்டி அத் திணைத்தொகை யெண்ணை மிகுப்பானேன்? இன்னும் புறத்திணைகள் காலமிடங் கருதாமல் ஒழுக்க நெறியில் ஒவ்வோரகத்திணைகட்கும் புறனாதல் வேண்டுமென்ற நன்முறையிறந்து, புறத்திணைத் தொகையைப் பெருக்கி ஒழுக்க வேறுபாடின்றி எண்ணுக்குப் பன்னிரண்டாக்கி, அவற்றிற்கு அகத்திணை யேழனொடுந் தொடர் பறுத்துக் காணும் பயன்தானென்ன? பிந்திய நூல்கள் புறத்திணை யொவ்வொன்றன் துறைகள் இவை எனத் தொகுப்பதல்லால், தொல்காப்பியத்துட் போல அவ்வத்திணையின் செவ்வியல் விளக்காமையொன்றே, புறம்பன்னிரண்டென வகுத்தற்குரிய இயல்வேறுபாடு காணொணாமையும், அத்தொகைவகை முந்துநூல் முறையொடு முரணிப் புலனெறி வழக்காகாமையும் வலியுறுத்தும். எனவே, தொல்காப்பியரின் புறத்திணை வகுப்புமுறையே இயல்பொடு பொருந்தும் நயமுடைத் தாய்த்தொன்றுதொட்டு என்றும் நின்று வழங்கற்குரிய முன்னைத் தமிழக நன்முறையாமென்பது கண்டு தெளிக. இனி, அகத்திணையிய லுரைமுகத்துக் கூறியாங்குத் தொல் காப்பியர் நூலுள் இப்புறப்பகுதியிலும் பிறாண்டும் பிறர்கோள் பேசுமிடந்தவிர மற்றவையனைத்தும் வண்புகழ்மூவர் தண் பொழில்வரைப்பின் அகத்தவர்வழங்குந் தமிழ்ப் பழமரபுகளே கூறப்பெறுகின்றன என்பதனை மறக்கொணாது. இவ்வுண்மையை மறந்து உரைகாரர் பிற வடநூற்கொள்கைகளை இத்தமிழ் நூல் கூறுவதாகக் கொண்டதனால் பல சூத்திரங்களுக்குத் தொல் காப்பியர் நோக்குக்கும் அவர் சூத்திரச் சொற்போக்குக்கும் பொருந்தாப் பொருள்கூறி இடர்ப்படலாயினர். தமிழ் கூறுநல்லுலகத்து எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலம் தொகுத்த தொல்காப்பியரின் கருத்தைப் பேணி, அகப்புறத் தமிழ்ப்பழஞ் செய்யுண் மரபுகளுடன் முரணாவாறு, தமிழர் ஒழுக்கமுறை கூறும் இந்நூற் சூத்திரங்களின் உண்மைப்பொருள், அவ்வவற்றின் சொற்றொட ரோடு அமைவுபெற நடுநிலையிலாய்ந்தறிய முயலுபவருக்குத் தெளிதல் எளிதாம். இதற்கு மாறாகத் தமிழகத்தின் புறத்தவர் வழக்கவொழுக்கங்களைப் புகுத்தித் தமிழர் பொருளியற் கூற்றுக்களுக்கு விளக்கம் காண முயல்வது கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇயற் றாய், பிழையொடு பீழை விளைப்பதாகும். பாரதியார் கருத்து :--- இது, குறிஞ்சிக்குப் புறனாவது வெட்சியென் பதையும், அதன் துறைவகை இனைத்து இத்துணைத்து என்பதையும் கூறுகிறது. பொருள் :--- அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்க்கு முற்கூறிய அகவொழுக்கம் பற்றிய இயல் வகை முறைகளைப் பிழையற நன்கறிந்தோர்; புறத்திணை இலக்கணந் திறம்படக் கிளப்பின்---புற ஒழுக்க இயல் வகை முறைகளைத் தெளிவுபட வகுத்துரைப்பின்; வெட்சிதானே குறிஞ்சியது புறனே---வெட்சித்திணை குறிஞ்சியெனும் அகத்திணைக்குப் புறனாகும்; உட்குவரத்தோன்றும் ஈரேழ் துறைத்தே---அவ்வெட்சித்திணை அச்சம் விளைக்கும் தோற்றமுடைய பதினான்கு துறைவகை கொள்ளும். குறிப்பு :--- இதில் ஏகார மிரண்டளுள், முன்னையது, வெட்சியைப் புறத்திணை ஏழில் பிறவற்றினின்றும் பிரித்து விலக்குதலால், பிரிநிலையாம்; பின்னையது தேற்றம்; அசையுமாம். அரில்தப cz®ªnjh®...கிs¥ã‹’ என்ற எச்சக்குறிப்பால், அகத்திணைகளினியல்பை ஐயந் திரிபு கெட அறிந்தார்க்கன்றி மற்றவர்க்கு அகத்திணைகளொடு தனித்தனி யியைபுடைய புறத்திணைகளினியல் திறம்படக் கிளத்தல் கூடாமை சுட்டப்பட்டது. எனவே, புறத்திணைகளெல்லாம் முறையே ஒவ்வோர் அகத்திணைக் கியைபுடையவாதலும், அதனால் அகத்திற் போலவே புறத்தினும் திணை ஏழா யமைதலும் மரபென்பதும் வலியுறுத்தப்பட்டது. இனி, வெட்சி குறிஞ்சிக்குப் புறனாமாறு:--- காதல் கண்ணிய அனைத்தக வொழுக்கங்களுக்கும் குறிஞ்சி முதலாதல் போல, அமர்கொள்மரபின் புறத்திணைகளெல்லாம் வெட்சியைக் கொண்டு துவங்குதலானும், குறிஞ்சியும் வெட்சியும் ஒருங்கே களவில் நிகழ்வ வாதலானும், ஒழுக்க முறையால் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயிற்று. இனி, நிரை மேயும் மலைச்சார்பு களவிற் கூடும் குறிஞ்சிக்கும் களவில் ஆதந்தோம்பும் வெட்சிக்கும் சிறந்துரியதாகலும், நள்ளிரா இவ்வீரொழுக்கங்களுக்கும் ஏற்புடைத்தாகலும், இடத்தானும் காலத்தானும், இவற்றிடை ஒரு புடையியைபுடைமை எய்துவித்தலானும் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயமையும். இன்னும், மக்களின் அக ஒழுக்கம் ஏழாதல் போல, அவற்றிற்கு இயலியைபுடைய அவர்தம் புறவொழுக்கமும் எழுதிணையென வகைபெற வைப்பதே பழைய மரபாதலின், அகத்திணையியல்வகைகளை நன்கறிந்தார்க்கன்றி, புறத் திணைகளும் அவற்றின் துறைமுறைகளும் இனிது விளங்கா எனற்கு அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிடப்பின் என்றிப் புறத்திணை முதற் சூத்திரத்துவக்கத்திற் கூறப்பட்டது. எனவே, இவ்வாறு அகத்திணை ஏழொடு புறத், திணை யேழும் யாப்புற வுடையதாகக் கொள்ளுவதே அடிப்பட்ட தமிழ்மரபெனத் தெளிய வைப்பதால், அத்தொடர்பு தொலைத்துப் புறத்திணைகள் பன்னிரெண் டென்னும் பிற்காலக் கொள்கை பழவழக்கொடு முரணு மிழுக்காதல் தேறப்படும். வெட்சியின் துறைகள். வேந்து விடு முனைஞ ரால் மறனுடை மரபில் நிகழ்தலின், போர் பயிலாத நிரை காக்கும் ஆயரும் அயலாரும் அஞ்சுதல் இயல்பாம். ஆதலான், வெட்சித் துறைகள் உட்குவரத் தோன்றும் எனப்பட்டன. ஆய்வுரை : ஆசிரியர் தொல்காப்பியனார் மக்கட்குலத்தார்க்கே சிறப்புரிமையுடைய ஒழுகலாற்றினை அகம் எனவும் புறம் எனவும் இரு கூறுகளாகப் பகுத்து இலக்கணங் கூறியுள்ளார். பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் அகம் புறம் என்னும் அவ்விரு பகுதிகளையும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பகுத்து இலக்கணங் கூறினர். அகம் புறம் என்னும் இருவகைத் திணைப்பகுப்பே தொன்மை யுடையதென்பது, அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கினப்பின் எனவரும் தொல்காப்பிய நூற்பாவில் அகத்திணை, புறத்திணை எனத் திணைப்பகுப்பு இரண்டே குறிக்கப்பட்டிருத்தலால் இனிது புலனாம். ஒரு தலைக் காமமாகிய கைக்கிளை, ஒத்த காமமாகிய அன்பின் ஐந்திணை, ஒவ்வாக் காமமாகிய பெருந்திணை ஆகிய அகத்திணை ஏழிற்கும் புறமாய் அவற்றோடு ஒருவாற்றால் தொடர்புடைய புறத்திணைகள் ஏழுள என்பதனையும், இப்பகுப்பு முறை முன்னைத் தமிழ்ச் சான்றோரால் வகுக்கப்பட்ட தொன்மையுடையது என்பதனையும் கைக்கிளை முதலாய்ப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப எனவரும் நூற்பாவில் முற்படக்கிளந்த என்ற தொடராலும் என்ப என்னும் சொற்குறிப்பாலும் தொல்காப்பியனார் குறித்துள்ளமை காணலாம். வெட்சி தானே குறிஞ்சியது புறனே வஞ்சி தானே முல்லையது புறனே உழிஞை தானே மருதத்துப் புறனே தும்பை தானே நெய்தலது புறனே வாகை தானே பாலையது புறனே காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே எனவரும் தொல்காப்பியத் தொடர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை, என்னும் அகத்திணை ஏழற்கும் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை வாகை, காஞ்சி, பாடாண் என்பன புறமாம் என முறைப்பட வகுத்துள்ளமை காணலாம். இங்குச் சொல்லப்பட்ட புறத்திணை ஏழனுள் குறிஞ்சித் திணைப் புறனாகிய வெட்சித்திணை பகைவர் நாட்டுப் பசுக் கூட்டத்தினைக் களவிற் கவர்ந்து கொள்ளுதலும் அப் பசு நிரைக்குரியோர் அதனை மீட்டுக்கொள்ளுதலும் ஆகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே வெட்சி எனவும் கரந்தை எனவும் இருபெயர் பெறும். முல்லைத்திணைப் புறனாகிய வஞ்சித்திணை, மண்ணசையாளன் ஆகிய வேந்தன்மேல் மற்றொரு வேந்தன் படையெடுத்துச் செல்ல அவனும் அவன் மேற்படையுடன் செல்ல, அவ்விருவரும் ஒருவரை யொருவர் அடுதல் குறித்து மேல்செல்லுதலாகிய ஒரு தொழிலேபுரிதலின், அது வஞ்சி என ஒரே பெயர் பெறும். மருதத்துப் புறனாகிய உழிஞைத்திணை பகையரசனது அரணை வளைத்துக் கொண்டு அழிதலும், அவ்வரணுக்குஉரியமன்னன் பகைவர்க்கு இடங்கொடாது தனது அரணைக் காத்துக் கொள்ளுதலும் ஆகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞை எனவும் நொச்சி எனவும் இருபெயர் பெறும். நெய்தற்றிணைப் புறனாகிய தும்பைத்திணை தனது வன்மையினை உலகத்தார் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக் கருதிப் போர்மேற் கொண்டு வந்த வேந்தனை மாற்றானாகிய வேந்தனும் தனது ஆற்றலைப் புலப்படுத்தும் நோக்குடன் எதிர்த்துச் செல்ல அவ்விரு பெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலாகிய ஒருதொழிலே புரிதலின் தும்பை என ஒருபெயர்பெறும். பாலைத்திணைப் புறனாகிய வாகைத் திணை வேந்தராயினும் ஏனையோராயினும் தத்தமது தொழிற்றிறத்தின் மிக்கு மேம்படுதலாகிய வெற்றியினைக் குறித்தலால் வாகை என ஒருபெயர் பெறும். பெருந்திணைப் புறனாகிய காஞ்சித்திணை நிலையாமையாகிய நோந்திற (துன்ப)ப் பொருளையே குறித்து வருதலால் காஞ்சி என ஒருபெயர் பெறும். கைக்கிளைப் புறனாகிய பாடாண்திணை புலவர்பாடும் புகழுடைமையாகிய செந்திறம் என்னும் ஒரு பொருளையே குறித்து வருதலின் பாடாண் என ஒருபெயர் பெறும் என விளக்குவர் இளம்பூரணர். இவ்வாறு புறத்திணை ஏழும் முறையே வெட்சி (அதன் துறையாகிய) கரந்தை, வஞ்சி, உழிஞை, (அதன் துறையாகிய) நொச்சி, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனத் தொழில் வேறுபாட்டால் ஒன்பதாயின. மேற்குறித்த புறத்திணை எல்லாவற்றுக்கும் பொதுவாக அமைந்த துறைகளைத் தொகுத்து பொதுவியல் என ஒரு திணையும், அகத்திணை ஏழனுள் சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாத அன்பின் ஐந்திணை நீங்கலாக அவற்றின் பக்கத்தனவாகிய கைக்கிளையும் பெருந்திணையும் சுட்டியொருவர் பெயர் கொளப்பெறின் புறத்திணைப் பக்கத்தனவாகக் கருதப்படுமாதலால், அவ்வாறு இயற்பெயர் சுட்டிவரும் கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டினையும் புறத்தின் பாற்படுத்துக் கைக்கிளை பெருந் திணை என இருவேறு திணைகளும் கொண்டு புறத்திணை பன்னிரண்டெனப் பகுத்துரைத்தல் தொல்காப்பியனார்க்குப் பிற்பட்டுத் தோன்றிய பன்னிருபடலம் முதலிய நூலாசிரியர்கள் கூறிய புறத்திணையிலக்கண மரபாகும். இங்ஙனம் பகுத்துரைக்கப்படும் புறத்திணை பன்னி ரண்டனுள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்னும் ஏழும் மறனுடைமரபின (வீரமே குறித்தன) எனவும், ஏனை வாகை, பாடாண், பொதுவியல் என்னும் மூன்றும் அமர்கொள் மரபின (போர்த்துறையில் கொள்ளத்தக்க பொதுவியல்புடையன) எனவும் இங்குக் குறித்த கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டும் அகத்திணைப்புறன் எனவும் பொருள்வகையாற் பகுத்துரைப்பர் பன்னிருபடலமுடையார். ஆங்ஙன முரைப்பின் அவற்றது வகையால் பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பின் தும்பையுள்ளிட்ட மறனுடைய மரபின் ஏழே, ஏனை அமர்கொள் மரபின் வாகையுஞ் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவிய லென்ப கைக்கிளை யேனைப் பெருந்திணையென்றாங் கத்திணையிரண்டும் அகத்திணைப் புறனே. எனவரும் பன்னிருபடல நூற்பாக்களால் இப்பகுப்பு முறை இனிது புலனாதல் காணலாம். இங்ஙனம் புறத்திணை பன்னிரண்டெனக் கூறும் இப்பகுப்பு முறை கைக்கிளைமுதல் பெருந்திணையீறாக அகத்திணைகள் ஏழெனவும் அவ்வகத்திணைகளோடு தொடர்புடைய புறத் திணைகள் ஏழெனவும் பகுத்துரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்குப் பொருந்துவதன்று என்பது உரையாசிரியர் இளம்பூரணர் கருத்தாகும். புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக்கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், மொழிந்த பொருளோ டொன்றவைத்தல் (மரபு 100) என்னுந் தந்திரவுத்திக்கும் பொருந்தாததாகி மிகைபடக்கூறல் தன்னானொரு பொருள் கருதிக் கூறல் (மரபு 108) என்னுங் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாத லானும் பொதுவியல் என்பது, பல்லமர் செய்து படையுட் டப்பிய நல்லாண் மக்க ளெல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விரித்து முதற்பட எண்ணிய எழுதிணைக்கு முரித்தே எனத் தாமே (பன்னிருபடல நூலாசிரியர் கூறுகின்றாராதலின் மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக்கோடற் கண்ணும் (வெட்சியின் தொடக்கத்திலும்) கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்தெனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தையொழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய வான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தா தென்க என்பது இளம்பூரணர் கூறும் மறுப்புரையாகும். மக்களைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் அகப் பொருளொழுகலாறு பற்றிய அகத்திணைச் செய்யுட்களில் அவர் தம் இயற்பெயர் சுட்டப் பெறுதல் மரபன்று என்பதனை, மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர் (அகத். 58) எனவரும் நூற்பாவில் குறித்த தொல்காப்பியனார், இங்ஙனம் இயற்பெயர் சுட்டப் பெறுதல் புறத்திணை மருங்கு எனப் புறத்தைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்திணைகளிலன்றி அகத்திணை மருங்கு என அகத்தைச் சார்ந்து வரும் கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்களில் இடம்பெறுதல் இல்லை என்பதனை, புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கின் அளவுத லிலவே (அகத். 57) என மேல் அகத்திணையியல் இறுதியிற் கூறி, அகத்திணையொடு தொடர்புடைய புறத்திணை யிலக்கணத்திற்குத் தோற்று வாய் செய்தார். இந்நூற்பாவில் புறத்திணை, அகத்திணை என்ற அளவில் அமையாது புறத்திணை மருங்கு அகத்திணை மருங்கு எனத் தொல்காப்பியனார் விரித்துரைத்தலால் பின்னர்க் கூறப்படும் புறத்திணையைத் தழுவியும் முற்கூறிய அகத்திணையைத் தழுவியும் அவற்றின் பக்கத்தவாய் அமைந்த இருவேறு திணைப் பகுதிகள் இங்குத் தொல்காப்பியனாராற் சுட்டப்பட்டன என்பது உய்த்துணரப்படும், அகத்திணை மருங்கு என்றது கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணைகளுள் நடுவண் ஐந்திணை யெனப்படும் அகன் ஐந்திணைகளின் மருங்கே முன்னும் பின்னும் அமைந்த அகத்திணைகளாகிய கைக்கிளை பெருந்திணைகளை அன்பின் ஐந்திணையொழுகலாற்றின் தொடக்க நிலையாகிய கைக்கிளையும் முதிர்ந்த நிலையாகிய பெருந்திணையும் அகத்திணைகளேயாதலின் அவ்விருதிணைகளைக் குறித்துப் பாடல் சான்ற புலனெறி வழக்கிற் பாட்டுடைத் தலைவரது இயற்பெயரைச் சுட்டுதல் கூடாதெனவும் இத்திணைகளில் இயற்பெயர் இடம்பெறுவதாயின் இவ்வொழுகலாறுடையார் இன்னார் என்பது எல்லார்க்கும் புலனாக அவர்தம் அக வொழுகலாறு புறத்திணையொழுகலாறு போல் இன்னார் இன்னாராற் காதலிக்கப்பட்டு இத்தன்மையரானார் என உலகிற் புறத்தே பேசப்படும் நிலையினைப் பெறும் எனவும் இவ்வாறு உலகத்தார் பலர்க்கும் புலனாக இயற்பெயர் சார்த்திப் பாடப்படும் கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்கள் புறத் திணைச் சார்பினவாய்ப் புறத்திணைமருங்கு எனப்படும் எனவும் ஆசிரியர் தொல்காப்பியனாரால் அகத்திணையேழனுள் வைத்துப் பேசப்படும் கைக்கிளை பெருந்திணைகட்கும் இடையேயமைந்த வேறுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளமை காணலாம். எனவே ஆசிரியர் தொல்காப்பியனாரால் அகத்திணைஏழனுள் வைத்து எண்ணப்படும் கைக்கிளை பெருந்திணை என்பன வேறு எனவும் புறத்திணைச் சார்புடையனவாய்ப் பன்னிருபடலமுடையாராற் புறத்திணை பன்னிரண்டனுள் வைத்து எண்ணப்படும் கைக் கிளை பெருந்திணை என்பன வேறு எனவும் பிரித்துணர்தல் வேண்டும். இங்ஙனம் இருவர் நூற்கும் மாறுகோளில்லா நெறியில் அமைத்துக்கொள்ளுதலே காலந்தோறும் பல்வேறு பகுப்புடையவாய்க் கிளைத்து வளர்ந்து வரும் தமிழ்ப் பொருளிலக்கண இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்புடையதாகும். ஆய்வுரை ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என நிறுத்த முறையானே எழுத்ததிகாரத்துள் எழுத்திலக்கணமும் சொல்லதிகாரத்துள் சொல்லிலக்கணமும் உணர்த்திப் பொருளதிகாரத்தின் முதலியலாகிய அகத்திணை யியலுள் முற்பட இன்பப்பகுதியாகிய கைக்கிளை முதற்பெருந் திணை யீறாகவுள்ள அகத்திணைகள் ஏழின் பொது இலக்கணம் உணர்த்தினார். அதன்பின் அகத்திணைகளின் புறத்தனவாய் நிகழும் வெட்சி முதல் பாடாண்டிணை யீறாகவுள்ள புறப் பொருளிலக்கணம் உணர்த்துகின்றார். ஆதலால் இது புறத் திணையியல் என்னும் பெயருடையதாயிற்று. உள்ளத்து இன்பமே நுகரும் அகம் போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் உணரப்படுவதும் இஃது இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்கு எடுத்துரைக்கப்படுவதும் ஆகிய அறமும் பொருளும் பற்றிய ஒழுகலாறு புறம் எனப்படும். மனவுணர் வுடையராய மக்களது வாழ்க்கையில் அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுகலாறுகளைப் புறம் என்றது இடவாகு பெயர். ஒத்த காதலராகிய ஒருவன் ஒருத்தி யிருவர்க்கும் உரிய குடும்பவாழ்விலே அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றினைக் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என எழுதிணைகளாகப் பகுத்தது போலவே மக்கட்குலத்தார் அனைவரும் மேற்கொள்ளுதற்குரிய உலகியலாகிய பொது வாழ்க்கையில் அன்பெனும் பண்பின்வழிப்பட்டவாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல் முறைகளையும் வெட்சி முதல் ஏழுதிணைகளாகப் பகுத்துரைத்தல் பண்டைத் தமிழர்கள் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்திணைகளாகும். இவை முறையே குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை எனவரும் அகத்திணை ஏழினுக்கும் புறமாம் என்பர் தொல்காப்பியர். புணர்தல் இருத்தல் முதலிய அகத்திணையொழுக்கங்கள் தத்தமது நிலத்திற்குச் சிறப் புரிமையுடைய குறிஞ்சி, முல்லை முதலிய பூக்களாற் பெயர் பெற்றாற் போன்றே, அவற்றின் புறத்தவாகிய நிரைகோடல் மேற்செறல் முதலிய புறத்திணையொழுக்கங்களும் அவற்றை மேற்கொள்வோர் அடையாளமாகச் சூடுதற்குரிய வஞ்சி வெட்சி முதலிய பூக்களாற் பெயர் பெறுவனவாயின. அகத்திணைகளின் இலக்கணத்திணை உணர்ந்தார்க்கு அன்றி அவற்றின் புறத்தவாகிய புறத்திணையொழுகலாறுகளும் அவற்றின் துறைகளாகிய செயல்வகைகளும் இனிது விளங்கா ஆதலின் அகத்திணைகளின் பொதுவிலக்கணம் உணர்த்திய பின்னர்ப் புறத்திணையிலக்கணம் உணர்த்துகின்றார். ஆதலின் இஃது அகத்திணையியலின் பின் வைக்கப்பெற்றது. புறத்திணையியலிலுள்ள நூற்பாக்களை முப்பதாக இளம் பூரணரும், முப்பத்தாறாக நச்சினார்க்கினியரும் முப்பத்தைந்தாக நாவலர் சோமசுந்தரபாரதியாரும் பகுத்து உரைவரைந் துள்ளனர். நூற்பா. 1 இது வெட்சித்திணையினியல்புரைத்து அஃது இத்துணைத் துறையுடைத்தென்கிறது. (இ-ள்) அகத்திணைகளின்பாற்படும் ஒழுகலாறுகளைப் பிணக்கற வுணர்ந்தோர் அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகளின் இயல்பினை வகைபெறக் கூறுமிடத்து வெட்சி என்னும் திணை குறிஞ்சியென்னும் அகத்திணைக்குப் புறனாகும். அதுதான் (பகைப்புலத்தார்) நடுக்கமுறத்தோன்றும் பதினான்கு துறைகளை யுடையதாகும். பகைவரது நாட்டின்மேற் படையொடு சென்று போர் செய்யக் கருதிய வேந்தன் அந்நாட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத்தகாத மக்களைப் போரால் விளையும் இடர்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, யாம் போர் கருதி நும் நாட்டிற் புகுகின்றோம். நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லுமின் என இவ்வாறு அவர்களுக்கு அறிவித்தலும், அவ்அறிவிப்பினைக் கேட்டுணர்ந்து வெளியே செல்லும் மனவுணர்வு வாய்க்கப் பெறாத பகைவர் நாட்டுப் பசுக்கூட்டங்களை ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன் படைவீரர்களை அனுப்பிக் களவிற் கவர்ந்துவரச் செய்து பாதுகாத்தலும் அறநெறி வழாது மேற் கொள்ளுதற்குரிய பண்டைத் தமிழர் போர் முறையாகும். அம்முறைப்படி வேந்தனால் ஏவப்பட்ட படை மறவர்கள், நள்ளிரவிற் பகைவரது நாட்டிற் புகுந்து அங்குள்ள பசு நிரைகளைக் களவினாற் கவர்ந்து தம் நாட்டிற் கொணர்ந்து பாதுகாக்குஞ் செயல் வெட்சி என்னும் புறத்திணையாகும். இவ்வாறு ஆனிரைகளைக் கவர்தலை மேற்கொண்ட படைமறவர் தமது போர் முறையைப் பகைவேந்தருக்கு அறிவிக்கும் அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடிச் செல்லுதல் மரபு. அதனால் போரின் தொடக்க நிகழ்ச்சி யாகிய இச்செயல் வெட்சி எனப் பெயர் பெறுவதாயிற்று. வெட்சி என்பது சூடும் பூவாற் பெற்ற பெயர்; வஞ்சி முதலியனவும் வீரர்சூடும் பூவாற் பெற்ற பெயர்களே. வெட்சி என்னும் திணை குறிஞ்சி என்னும் அகத்திணைக்குப் புறனாகும் என்றது, அவ்விருதிணைக்கும் இடையேயமைந்த மலை, நிலம், கங்குற்பொழுது, களவு தொழில் ஆகியவற்றால் உளவாம் நெருங்கிய தொடர்பு பற்றியே என்பதனைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இனிது விளக்கியுள்ளார்கள். 2. வேந்துவிடு முனைஞர் வேற் றுப்புலக் களவின் ஆதந்து ஒம்பல் மேவற்று ஆகும். இளம்பூரணர் : இது, வெட்சித்திணையாமாறு உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்.) வேந்துவிடு முனைஞர்1 வேற்றுப் புலக்களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்-வேந்தனால் விடப்பட்ட முனை ஊரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக் கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை உடைத்து. ஓம்புதலாவது, மீளாமல் காத்தல்.2 புறப்பொருட் பாகு பாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால்வகை வருணத்தாரினும் சிறப்புடையார் அரசராதலானும் அவர்க்கு மாற்றரசர்பால் திறைகொண்ட பொருள் மிகவும் சிறந்த தாகலானும், அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்றுகோடல் வேண்டுதலானும், போர்க்கு முந்துற நிரை கோடல் சிறந்ததாகலானும், இப்பொருள் முன் கூறப்பட்டது. பன்னிரு படலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று. அன்ன இருவகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச்செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆநிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது.3 என்னை? ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர் (தொல். மரபு-100) எனவும், சிதைவெனப் படும் அவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கொள் இன்மை அன்ன பிறவும் அவற்றுவிரி வாகும் (தொல். மரபு-110) எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக் கூறல், மிகைபடக்கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (2) நச்சினார்க்கினியர் : இது வெட்சியெனக் கூறிய புறத்திணைக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) வேந்து விடு முனைஞர்---வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங் காத்திருந்த தண்டத் தலைவர்;1 வேற்றுப் புலக்கள வின்---பகைநிலத்தே சென்று களவினாலே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும்---ஆநிரையைக் கொண்டுபோந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்தாகும் வெட்சித்திணை எ - று. களவு நிகழ்கின்ற குறிஞ்சிப்பொருளாகிய கந்தருவமணம் வேத விதியானே இல்லறமாயினாற்போல இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந் தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும் அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினாற்றாமே கொண்டுவந்து பாதுகாத்தலுந் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு ஆ தந்தோம்ப லென்றார்.1 அது, ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் (புறம்--9) எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க. மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு மேவற்றாகுமென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப்பாடியில் ஆநிரை காக்குங் காவலரைக் கொன்றே நிரைகொள்ள வேண்டு தலின் ஊர் கொலையுங்* கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர் தாமே சென்று நிரை கோடலும், குறுநிலமன்னர் நிரை கோடலும். ஏனை மறவர் முதலியோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (தொல்-பொ-புறத்-1) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவுகூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக்கண்ணுங் களவு நிகழ்ந் தாற் போலப் புறத்திணை யேழற்குங் களவுநிகழுங்கொ லென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான், இருபெரு வேந்தருந் தண்டத்தலைவரை ஏவி விடுவரென்றும், ஆ தந்தோம்பும் என்றதனாற் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத்தந்தோம்புமென்று, பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின், இருபெருவேந்தர் தண்டத்தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினார்; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின.1 ஆயின் மீட்டல் கரந்தை2 என்பரால் எனின், அதனையும் இச் சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக்கரந்தை என்பாரும் உளர் மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. (களவி னென்பதற்குச் களவினானெனவுங் களவின்கணெனவும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்த லென்னும் உத்தியாம்.3 புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத்தொடங்கி, ஈண்டு அறத்தாற் பொருளீட்டுமாறுங் கூறினார். கருத்து : இது வெட்சித்திணையின் இயல் விளக்குகிறது. பொருள்: வேந்துவிடு முனைஞர்---மன்னரா லேவப் பெற்றபடை மறவர்; களவின் வேற்றுப்புல ஆதந்தோம்பல்---கரவால் பிறர் நிலத்து கவர்ந்து போந்து புறந் தருதலை; மேவற்றாகும்--- (அவ்வெட்சி) விரும்பும் தன்மைத்தாம். குறிப்பு : கொண்டபொருட் குறிப்பால் அவாய் நிலையாய் அவ் வெட்சி யென்பது கொள்ளப்பட்டது. இனி, வெட்சி மறனுடை மரபில் அமர் துவக்கும் ஒழுக்க மாதலின், போர் விரும்பும் மன்ன ரேவலால் அது நிகழ்தற்பாற்று. பிற நாட்டொடு போர் தொடங்குதல் இறைமை முறையாய் மன்னர் பாலதே யாதலால், இப்போர்த் தொடக்கத்தினை அவராணை அழித்தாதல் ஒருதலை. அன்றியும், அது போர்க் குறியாதலால், மன்னரேவினும், பொருந ரல்லாப் பிறர் மேற் கொள்ளற்பாற் றன்று. பிறர் நிரைகவர்தல் போர்த்தொடக்கம் குறியாமல் திருட்டின் பொருட்டாய்க் கருதப் பெறுமாகலின், இத்திணைக்கு மன்னர் பிறரை விலக்கித் தம் படைமறவரையே ஏவற்பாலர் மேலும், முனைஞரும் மன்ன ரேவலின்றித் தாம் விரும்பியாங்குப் போர் தொடங்கல் கூடாதாகலின், போர்த் தொடக்கமாம் ஆகோளும் வேந்தராணையில் வழி அவர்க் கொவ்வாத் தவறாகும். இத் தமிழ்ப் பேரறம் விளக்க வேண்டி, ஆனிரை கொள்ள வேந்து வி லும் அவ்வாறு விடப்படுவார் முனைஞரே யாதலும் வெட்சித் திணைக்கின்றியமையாமை சுட்டி வேந்துவிடு முனைஞர் எனக் கூறப்பட்டது. இன்னும், கவர விரும்பும் பிற நாட்டு நிரையும் போர் நிகழாக் காலத்து மன்னறக் காவல் துன்னித் தன்னிலத் துய்க்கப் பெற்றுழிக் கவரப்படுதல் முறை திறம்பி அறமழிப்பதாமாகலின், போர் துவக்குவோர் தமதல்லாப் பகை நிலத்தில் நிரைகவரற்பால ரெனற்கு வேற்றுப்புலத்து என விளக்கப்பட்டது. போராகாமல் போர்க்குரியறிவிப்பாய் நிரைகொள்ளலே இத்திணை யாதலால், பகைப்படையின் எதிர்ப்பும் போரும் வேண்டாது பகைவர் நிலத்து அவரறியாமல் கரவில் கைப்பற்றும் முயற்சியே வெட்சியும், வெளிப் படையாய்ப் பகைவரை அறைகூவி நிரைகவர்தல் தும்பைப்பாற் கொண்டியுமாமென்பது தோன்றி களவின் எனக் கூறப்பட்டது. நிரைகவரக் கருதிச் சென்றோர் எதிர்பாராத காவலர் எதிர்ப்பிற் கிடைந்து நிரை கவராதேனும் கவர்ந்தாங்கே மீட்க விட்டெனும் வாளாமீளல் ஆகோள் வெட்சியாகா தென்பதையும், மீட்க விடாமல் கவர்ந்து கொணர்ந்த நிரையைத் தம்மை ஏவிய வேந்தர் பால் ஊறின்றி யுய்ப்பது முனைஞர் கடமையாதலையும் தெளிக்க வேண்டி ஆதந் தோம்பல் மேவுற் றாகும் என விளக்கப்பட்டது. இக் கருத்ததானே, ஓம்புதலாவது மீளாமல் காத்தல் எனவும், போர்க்கு முந்துற நிரை கோடல் சிறந்த தெனவும், இச் சூத்திரத்தின் கீழ் உரைக்குறிப்பாய் இளம்பூரணர் கூறுதலும் காண்க. இம் மாற்றருஞ் சால்புடை மரபுகள் போற்றாத பிற்காலத்தில், நிரை மீட்கும் முயற்சியை வெட்சியிலடைக்காமல் கரந்தையென வேறு திணையாக்கியும் இவ்வெட்சியை வேந்தன் மேற்றாய் நிறுத்தாமல் தன்னுறு தொழிலே வேந்துறு தொழி லென்று அன்ன விருவகைத் தாக்கியும் தன்னாட்டை விலக்காமல் யாண்டும் பிறர் நிரை கவர்தல் வெட்சியாம் போலவும் முறை பிறழத் துறைகளைக் கூட்டியும் மாற்றியும், முந்துற நிரை கவர்ந்து அமரறிவித்துப் பின் பொருவதே போரறமென்பதை மறந்து போர்த் துவக்கத்தில் நிகழும் கொடிநிலை---கொற்றவை நிலை ---வெறியாட்டு அன்ன கடவுட்பராவு நிலைகளை வெட்சிக்கண் போர்த்துறைகளாக எடுத்து நிறுத்தியும், இன்னும் பல்லாற்றானும் பின்னூல்களில் மர பிறந்த மாறுபாடுகள் மலிவவாயின. பன்னிரு படலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விருவகைத்தே வெட்சி எனவும், அதைப் பின்பற்றி வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும், சென்றிகன் முனை ஆதந்தன்று என வெண்பா மாலையிலும், வெட்சியை இருகூறுபடக் கூறினாராயினும், முன் வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை, முதலாயின (படைஎடுத்துச் செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என்பன) அரசர் மேலாய் இயன்று வருதலின், வேந்துறு. தொழிலொழித்துத் தன்னுறு தொழிலெனத் தன்னாட்டும் பிறர் நாட்டும் களவில் ஆனிரை கோடலின். இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர்; ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம்; என இளம்பூரணரும் பிழைபட்ட பிற்காலக் கொள்கைகளைக் கடிதல் காண்பாம். இனி, முடிவேந்த ரல்லார் சிலரைப் புகழ்ந்துவரும் வெட்சிப் பாடாண் புறப்பாட்டுக்களைக் காட்டி, அவை மன்னர் பணிப்பின்றி ஆகோள் தன்னுறு தொழிலாய்க் கொள்வதற்கு மேற்கோள் என்பாருளர். அப்பாட்டுக்கள் குறுநில மன்னரைப் பற்றியவை. என்பெறு மரபின் ஏனோ ராகிய குறுமன்னர்க்கு வேந்துவினையியற்கை வேந்தனின் ஒரீஇய (அவ்) வேளோர் மருங்கினும் எய்திடனுடைத்து எனத் தொல்காப்பியரே கூறுகிறார். எனவே, இன்னோரைப் பாராட்டும் வெட்சிப்பாடாண் புறப்பாட்டுக்கள், ஒரு வகையாய் மன்னராவார்க்கு உறுதொழிலே கூறுவனவாம்; வேந்தன் பணிப்பின்றியும் மக்களில் யாரும் தன்னுறு தொழிலாக நிரைகவரும் தவறுக்கு இப்பாட்டுக்கள் மேற்கோளாகாமை வெளிப்படை. ஆய்வுரை இது வெட்சித் திணைக்குரிய இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) அரசனால் ஏவப்பட்ட படை மறவர், பகைவரது நாட்டிலே களவினாலே பசு நிரைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து பாதுகாத்தலைப் பொருந்தியது மேற்குறித்த வெட்சித்திணையாகும். பகைவர் நாட்டுப் பசுக் கூட்டங்களை நள்ளிரவிற் களவிற் கவர்ந்துகொண்டு வந்து தம் நாட்டிற் பாதுகாத்தலாகிய இவ் வெட்சி யொழுக்கம், நாடாள் வேந்தனது ஆணையின் வழியே நிகழ்தற்குரியதென்பதும், மன்னனது ஆணையின்றி அவனுடைய படை வீரர் முதலியோர் தம் விருப்பத்தின்படி பகைவர் நாட்டுப் பசு நிரையினைக் கவர்தற்குரியரல்லர் என்பதும் வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆ தந்து ஓம்பல் என ஆசிரியர் கூறுதலாற் புலனாம். இவ்வாறு மன்னது ஆணையின் வண்ணம் படை மறவர் மேற்கொள்ளுதற்குரிய வேந்துறு தொழிலாகிய நிரைகவர்தலை வேந்தனது ஆணைபெறாது படைவீரர் தாமே தம் விருப்பப்படி தன்னுறு தொழிலாகவும் நிகழ்த்துதற்கு உரியர் என்பது பன்னிருபடலம் என்னும் புறப்பொருள் இலக்கண நூலின் கொள்கையாகும். தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன இருவகைத்தே வெட்சி யென்ப என்பது பன்னிருபடலம். வென்றிவேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றிகன்முனை ஆ தந்தன்று என்பது புறப்பொருள் வெண்பாமாலை. இவ்வாறு நாடாள் வேந்தனது ஆணையின்றிப் படைவீரர் தாமே தம் நாட்டிலும் பிற நாட்டிலும் ஆனிரைகளைக் கவர்ந்து கொள்ளுதற்குரியர் என அரசியல் நெறிமுறைக்கு மாறுபட்ட கொள்கையினைக் கூறுவது பன்னிருபடலமாதலின், பன்னிரு படலத்தின் வெட்சிப் படலம், தொல்காப்பியனார் கூறினாரென்றல் பொருந்தாது என்றார் இளம்பூரணர். இந்நூற்பாவிலுள்ள ஆதந்தோம்பல் என்ற தொடர்க்கு ஆவினைக் களவினானே கொணர்ந்து பாதுகாத்தல் எனப் பொருள் வரைந்து, ஓம்புதலாவது மீளாமற் காத்தல் என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். ஆதந்தோம்பல் என்பதனை ஒருதிறத்தார்க்குரிய ஒரு வினையாகக் கொள்ளாது, பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவிற்கொண்டு தருதலும் அந்நிரைக்குரியோர் அந்நிரைகளை மீட்டுச் சென்று ஓம்புதலும் என இருதிறத்தார்க்குரிய இருவேறு வினைகளாகக் கொண்டு பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். முரண்பட்ட வேந்தர் இருவரிடையே நிகழும் நிரைகவர்தலும் நிரைமீட்டலும் ஆகிய இவ்விருவேறு செயல்களும் போர்த் தொடக்க நிகழ்ச்சிகளாய் வெட்சி என்னும் ஒரு திணையாய் அடங்கும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். புறப்பொருள் வெண்பாமாலையாசிரியர் வெட்சியாவது சென்று இகல்முனை ஆதந்தன்று எனவும் கரந்தையாவது தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று எனவும் ஆதருதலையும் பெயர்த்து ஓம்புதலையும் இருவேறு தொழில்களாகக் குறித் தமைக்கு ஆ தந்து ஓம்பல் எனவரும் தொல்காப்பியத் தொடரிற் குறிக்கப்படும் தருதலும் ஒம்புதலும் ஆகிய இருவேறு வினைகளே காரணமாதல்வேண்டும். மலையாகிய குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறுதலும் என வரும் இளம்பூரணர் உரையினைக் கூர்ந்து நோக்குங்கால், நிரை கவர்தலாகிய வெட்சிக்கு மறுதலைத் தொழில் நிரைமீட்டலாகிய கரந்தை என்பதும், நிரைகவரச் சென்றோர் சூடும்பூ வெட்சிப் பூவாதல் போல நிரைமீட்டற்றொழிலை மேற்கொள்ளுவோர் சூடும்பூ கரந்தையாதலின் இத்தொழில் கரந்தை எனப் பெயர் பெற்றதென்பதும் வெட்சியும் கரந்தையும் ஆகிய இவ்விருவேறு செயல்களும் குறிஞ்சித் திணைப்புறம் என ஒரு திணையாகவே வழங்கப்பெறும் என்பதும் இனிது புலனாதல் காணலாம். 3. படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்துஇறை முற்றிய ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே நோயின்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம் தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென வந்த ஈரேழ் வகையிற்று ஆகும். இளம்: இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) படையியங்கு அரவம் முதலாகக் கொடை ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு துறையை உடைத்து வெட்சித் திணை. வெட்சியென்பது அதிகாரத்தான் வந்தது. படை இயங்கு அரவம்-(நிரைகோடல் கருதிப்) படையெழும் அரவம். பாக்கத்து விரிச்சி2. (குறித்த பொருளின் பயன் அறிதற்குப் பாக்கத்துக்கண் நற்சொல் ஆய்தல். புடைகெடப் போகிய செலவு-பக்கம் கெடப் போகிய செலவு. பக்கங் கெடுதலாவது, மாற்றரசர் பக்கத்தாராகித் தம் மாட்டு ஒன்றொடு நிற்பார் அறியாமல் போதல். பக்கத் திலுள்ளாரைப் பக்கம் என்றார். புடை கெட ஒற்றின் ஆகிய வேயே-மாற்றரசர் பக்கத்துள்ளார் அறியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும். ஒற்று என்பது எவ்விடத்தும் வேண்டுமாயினும், ஆதி விளக்காக3 இவ்வோத்தின் முதற்கண் வைத்தாரென்று கொள்க. வேய் புறம்4 முற்றின் ஆகிய புறத்து இறை-(அவ்வாறு) வேய்க்கப்பட்ட இடத்தின் புறத்தினைச் சூழ்தலான் ஆகிய புறத் திருக்கை. வேய் என்பது ஆகுபெயராய் அவ்விடத்தின்மேல் நின்றது. முற்றிய ஊர்கொலை (அவ்வாறு) சூழப்பட்ட ஊரை அழித்தல். ஆ கோள்-(ஆண்டுளதாகிய) நிரையைக் கோடல். பூசல் மாற்று5-(அவ்வாறு கொண்ட நிரையை மீட்டற்கு வந்தார் பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல். நோய் இன்று உய்த்தல்6-(அவ்வாறு கொண்ட நிரையை) வருந்தாமல் உய்த்தல். நுவல்வழித் தோற்றம்7 தமர் கவன்று (சொல்லியவ)ழித் தோன்றுதல். தந்து நிறை8-(கொள்ளப்பட்ட நிரையைத்) தம் ஊரகத்துக் கொணர்ந்து நிறுத்தல். பாதீடு9 -(அந்நிரையைக்) கூறிடுதல். உண்டாட்டு10-(நிரைபகுத்த மறவர்) களிப்பினால் அயரும் விளையாட்டு. கொடை-(பகுத்த நிரையை வேண்டி இரப்பார்க்குக்) கொடுத்தல். இது முன் ஈரேழாமென்ற துறை, இருவகைப்பட்டு இருபத்தெட்டாமென்கின்றது. (இ ள்) படை இயங்கு அரவம்---நிரைகோடற்கு எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும் நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்; பாக்கத்து விரிச்சி---நிரைகோடற்கு எழுந்தோர் போந்து விட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறிய வற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்; புடைகெடப் போகிய செலவே---நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஓற்றர் உணராமற் பிற்றைஞான்று சேறலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும்; புடைகெட ஓற்றின் ஆகிய வேயே-நிரைகோடற்கு எழுந்தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று வகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரை மீட்டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச் சொல்லும்; வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை-நிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புகள் முடிந்த பின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரை வொழிந்து இருக்கின்ற இருக்கையும்; முற்றிய ஊர்கொலை-நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுநின்ற நிரை காவலரைக் கொன்று பகையறுத்தலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக்கோறலும்; ஆகோள் - நிரைகோடற்கு எழுந்தோர் எதிர் விலக்குவோர் இலராக நிரையகப்படுத்தி மீட்டலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும்; தொடலைக் கரந்தையெனக் கரந்தை சூடினமை கூறினார் தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின்: இது பொதுவியற் கரந்தையிற் கூறுதும். பூசன்மாற்று - நிரை கொண்டு போகின்றார் தம்பின்னே உளைத்தற்குரலோடு தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலைமாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றோர் தம் பின்னர்வந்து போர் செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்; வெட்சிமறவர் வீழ்ந்தமை கேட்டுவிடாது பின்வந்தோன் பாடு கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று. நோய் இன்று உய்த்தல்-நிரைகொண்டோர் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிறையினை இன்புறுத்திக் கொண்டுபோதலும் மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டு போதலும்; நுவலுழித் தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத் தற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும் ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்; தந்து நிறை நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்தலும், நிரைமீட்டோர் தாம்மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும்; பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று; வேந்தனேவலாற்றாங் கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும் மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும் நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்; உண்டாட்டு-நிரைகொண்டார் தாங்கொண்ட நிரையைப் பகுத்துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும்; கொடை-தாங்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மனமகிழ்தலும், நிரைமீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும்; என ஈரேழ் வந்த வகையிற்றாகும் என்று கூறப்பட்ட பதினான்கும் மீட்டுமொருகால் விதந்த இரு கூற்றையுடைத்தாகும் வெட்சித்திணை என்றவாறு. எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று.1 இனித் துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவேபடும்; அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் பூக்கோளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருகவென்றலும் அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்கவென்றலும், அவர் வேந்தற்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும், பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங் கூறினார். அவர் பாக்கத்தே தங்கி விரிச்சிபெற்றுப் போதலின்.1 அவற்றுட் சில வருமாறு: கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லொட்டா னடி புனை தோலி னரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை. இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது. வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலாற் றாள்வ லிளையவர் தாஞ்செல்லி--னாளைக் கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா னனைவது போலுநம் மூர். (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-753, நிரைமீட்சி) இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது. வந்த நிரையி னிருப்பு மணியுட னெந்தலை நின்றலை யாந்தருது--முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு. (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு-754, நிரைகோடல்) இது தெய்வத்திற்குப் பராஅயது; பிறவும் வருவன வெல்லாம் இதனான் அடக்குக. இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன, பாக்கத்துச் சென்றுழி இருப்புவகுத்தலும், பண்டத்தொடு வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விருச்சி வேண்டாவென விலக்கிய வீரக் குறிப்பும், விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும், பிறவுமாம். உதாரணம்:--- நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ டெங்கோ னேயின னாதலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. (தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-755, நிரைகோடல்) இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க. அரசன் ஏவலாற் போந்தோரும் விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு. இனி வேய்க்குக் காரணங்களாவன; வேய் கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன. இனி ஏனைய ஒன்றுபலவாய்த் துறைப்பாற்படுவன வந்துழிக் காண்க. இங்ஙனம் புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின் அன்றே பாடல் சான்ற புலனெறி வழக்க மென்று (தொல்-பொ-அகத்-53) அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும்; இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க. கருத்து: இது, முதற் சூத்திர விறுதியில் வெட்சிதானே உட்குவரத்தோன்று மீரேழ் துறைத்தே எனத் தொகுத்தோதிய துறைகளின் வகையும் பெயரும் விளக்குவதாகும். பொருள்: படையியங் கரவம்-நிரைகவரப் படை நடக்கும் ஆர்ப்பு. புடைகெடப் போகிய செலவு-பக்கத்து இடமில்லையாம் படி படை பரந்து செல்லுதல்; பாக்கத்து விரிச்சிசெல்லும் பக்கத்தே - புள்வாய் நற் சொல்லின் குறிப்பறிதல் (விரிச்சி-புள்ளொலியால் நல்லதறிதல்) புடைகெட ஒற்றின் ஆகிய வேய்-வேற்றுப்புலத்து இரு திறத்தும் ஒற்றறிய இடமில்லையாம்படி ஒற்றரால் அறிந்த உளவு. தம்மொற்றர் இனியறிய இடமில்லாதாயிற்று, அவர் முற்றும் ஒற்றி முடிந்ததனால் பிறர் ஒற்ற இடமில்லையாயிற்று. அவரறியாவாறு தம் மொற்றர் மறைவில் ஒற்றிய திறப்பாட்டினால். வேய்ப்புற முற்றின் ஆகிய புறத்திறை-உளவறிந்த சூழலை வளைத்து அற்ற நோக்கி அடங்கியிருத்தல். முற்றியவூர்கொலை-வளைந்துகொண்டு நிரைமீட்கப் பொரு வாரைக்கோறல்; (ஊர்-மீட்கப் பொரும் ஊரவர்க்கு ஆகுபெயர்.) ஆகோள்-ஆனிரை கொள்ளுதல்; பூசல் மாற்று-நிரைகொண்டு மீள்வோர் மீட்போரால் நேரும் பூசலை விலக்குதல். போர் இன்றி நிரை கொள்வதே நோக்காதலின், போர் என்னாது பூசல் எனப்பட்டது. பூசல்-போரின் முன் நிகழும் ஆர்ப்பு. போராய் வளருமுன் அதனைத் தடுத்து விலக்கல் வெட்சியார் வினையாதலின், பூசல் மாற்றெனப் பட்டது. நோயின் றுய்த்தல்-பற்றிய நிரை வருந்தாவாறு கொண்டு செலுத்தல்; நுவல் வழித்தோற்றம்-தம்மவர் புகழும்படி நிரைகொண்டார் மீளும் பொலிவு. தந்துநிறை-கொண்ட நிரையைத் தம திடத்துக்கொணர்ந்து நிறுத்தல்; பாதீடு-நிரைகொண்டோர் பரிசில் தம்முட் பங்கிடுதல். (பாதீடு-பங்கிடுதல்) உண்டாட்டு-வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல்; கொடை-வென்று கொண்டோர், துடியன், கணி, பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்துவத்தல்; என வந்த ஈரேழ் வகையிற்றாகும்-என்று இவ்வாறு எண்ணப்பட்ட பதினான்கு வகைப்படும் (வெட்சித்துறைகள்) குறிப்பு: செலவே, வேயே, மாற்றே என்பனவற்றுள் ஏகாரம் அசை நிலை; எண்ணேகாரமெனினும் அமையும். வெட்சித் திணையென்பது மேற் சூத்திரத்தினின்றும் அவாய்நிலை எழுவாயாயிற்று. ஆய்வுரை நூற்பா 2 இது, வெட்சித்திணைக்குரிய துறைகளை விரித்துரைக்கின்றது. (இ-ள்) நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவாரமும், ஊர்ப்புறமாகிய பாக்கத்தே படைவீரர் நற்சொற் கேட்டலும், பகைப்புலத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவர் அறியாதவாறு அவரது நாட்டின் நிலைமைகளை ஒற்றரால் ஆராய்ந்து அறிதலும் பின்னர்ப் பகைவரது ஊர்ப்புறத்தே சூழ்ந்து தங்குதலும், ஊரின் கண்ணே தம்மை வளைத்துச் சூழ்ந்த மறவர்களைக் கொல்லுதலும், அங்குள்ள ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொள்ளுதலும் அந்நிரையை மீட்டற்குத் தம்மைத் தொடர்ந்து வந்தவர்கள் செய்யும் போர்த்தொழிலை விலக்கி மீளுதலும், தாம் கவர்ந்து கொண்ட பசுநிரையை வருந்தாமற் செலுத்துதலும், இன்ன இடத்து வருவோம் எனத் தாம் சொல்லிச் சென்ற வழியிடையே தம்மை எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உளமகிழத் தோன்றுதலும், கவர்ந்த பசுக்களைத் தம்முடைய ஊரிற் கொணர்ந்து நிறுத்துதலும், பகைப்புலத்திலிருந்து பசுநிரைகளைப் பற்றிக் கொணர்தலில் ஈடுபட்ட வீரர்களுக்கு அந்நிரைகளைப் பகுத்துக் கொடுத்தலும், தாம் மேற்கொண்ட வினையை முடித்த மகிழ்ச்சியாற் கள்ளுண்டு களித்தலும், இரவலர்க்குரிய பரிசிலாகப் பசுக்களைக் கொடுத்தலும் என வெட்சித் திணை பதினான்கு துறைகளையுடையதாகும். முன்சூத்திரத்திலுள்ள வெட்சிதானே என்னும் எழுவாயை அதிகாரத்தால் வருவித்து ஈரேழ் வகையிற்றாகும் என்னும் பயனிலையை முடித்துக் காட்டுவர் இளம்பூரணர். ஈரேழ்-பதினான்கு. வெட்சித்திணைக்குரிய துறைகளாக விரித்துரைக்கப்பட்ட இப்பதினான்கினையும் நிரைகவர்தல் நிரை மீட்டல் ஆகிய இருவேறு தொழில்களுக்கும் பொருந்தப் பொருள் கொண்டு இருபத்தெட்டுத்துறைகளாக விரித்து, அவற்றுக்குப் பெரும் பொருள் விளக்கம், தகடூர் யாத்திரை, புறநானூறு முதலியவற்றிலிருந்து எடுத்துக் காட்டுத் தந்து விளக்குவர் நச்சினார்க்கினியர். படை இயங்கு அரவம்-பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவிற் கவர்ந்து கொள்ளுதல்வேண்டிச் சேனை புறப்பட்டுச் செல்லும் நிலையில் இயல்பாகவுளதாகும் ஆரவாரம், பாக்கம் சிற்றூர். விரிச்சி-நற்சொல்; அஃதாவது தாம் எண்ணிச் செல்லும் காரியம் இனிது நிறைவேறுமா என்பதனை முன்னரே அறிந்து கொள்ளுதல் வேண்டிக் குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று கேட்கப் பெறும் நற்சொல். புடைகெட-பக்கம் கெட. புடை-பக்கம்; அயல் புடை என்னும் இச்சொல், அயல்வேந்தர் பக்கத்தாராகித் தம் நாட்டில் ஒற்றராய் உள்ளாரை உணர்த்தியது. பக்கத்திலுள்ளாரைப் பக்கம் என்றது இடவாகுபெயர். புடைகெடப் போராகிய செலவு என்றது, பக்கத்திலுள்ளாராகிய ஒற்றர் அறியாதவாறு மறைந்து செல்லுதலை. புடைகெட ஒற்றின் ஆகிய வேய் என்றது. பகைப்புலத்து ஒற்றர்கள் அறியாதவகை தம்முடைய ஒற்றர்களை அனுப்பிப் பகைவரது நாட்டின் நிலைமைகளை ஒற்றி அறிதலை, வேய்-ஒற்றரால் ஒற்றி அறிதல் ஒற்றினாகிய வேய் என்புழி ஒற்றனாகிய என்னுந்தொடர் முதனிலை விளக்காய் நின்று ஒற்றினாகிய வேய்ப்புறம் எனப் பின்னரும் சென்று இயைந்தது. வேய்ப்புறம் என முற்றின் ஆகிய புறத்து இறை வேய்க்கப்பட்ட (ஒற்றியறியப்பட்ட) இடத்தின் புறத்தினைச் சூழ்ந்துகொண்டு அதன்புறத்தே தங்குதல் வேய் என்றது வேய்க்கப்பட்ட (ஒற்றியறியப்பட்ட) பகைவர் நாட்டின் இடத்தினைக் குறித்தது (தொழில்) ஆகுபெயர். புறம் என்றது அவ்விடத்தின் புறப்பகுதியினை. முற்றுதல்-வளைத்தல். பூசல் மாற்று தம்பசுநிரையை மீட்டுக்கோடல் வேண்டித் தம்முடன் பொருதற்கு வந்த கரந்தை வீரர் செய்யும் போர் நிகழ்ச்சிகளை மேலும் பரவவிடாது விலக்கித் தம் மூர்க்குப் பெயர்தல். நோயின்று உய்த்தல்-(பசுக்கள்) வருத்தமின்றிச் செல்லும்படி அவற்றைச் செலுத்துதல். இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனத் திரிந்து நின்றது. நுவல் வழித்தோற்றம் பகைப்புலத்து நிரையினைக் கவர்ந்து கொண்டு இன்னவிடத்திலே வந்து சேர்வோம் என வெட்சி மறவர் தாம் சொல்லிச் சென்ற வழியிடத்தே சொல்லிய வண்ணம் நிரையுடன் வந்து தோன்றுதல். பாதீடு-வெட்சி மறவர் பகைப் புலத்திருந்து தாம் கவர்ந்து வந்த பசுக்களைத் தம் பணிக்கு உதவிய ஒற்றர் முதலிய பலருக்கும் பகுத்துக் கொடுத்தல். பாத்தீடு பாதீடு என்றாயிற்று. பாத்தல்-பகுத்தல். இடுதல்-கொடுத்தல். உண்டாட்டு-வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியால் கள்ளுண்டு களித்து ஆடுதல். 4. மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அகத்திணைப் புறனே. இளம்: இதுவும் அது. (இ-ள்) மறம் கடை கூட்டிய குடி நிலை-மறத்தொழில் முடித்தலையுடைய குடியினது நிலைமையைக் கூறலும், சிறந்த கொற்றவை நிலையும்-சிறந்த கொற்றவையது நிலைமையைக் கூறலும், அ திணை புறன்-குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சித் திணையாம்1 குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக. இவற்றுள் ஆண்பால் பற்றி வந்ததனை இல்லாண்முல்லை யெனவும், பெண்பால் பற்றி வந்ததனை மூதின்முல்லையெனவும் கூறுப.2 கொற்றவை நிலை என்றதனானே, குறிஞ்சித் திணைக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்3 நச் : இவையும் வெட்சித்திணையா மென்கின்றது. (இ-ள்) மறங்கடைக் கூட்டிய துடிநிலை---போர்க்களத்து மறவரது மறத்தினைக் கடைக்கூட்டிய துடிநிலையும், சிறந்த கொற்றவை நிலையும்---அத் தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அகத்திணைப்புறனே---அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் என்றவாறு. நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு மொத்தலங்க மெய்பூசி யோர்ந்துடீஇத்---தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு. இஃது இருவகை வெட்சிக்கும் பொது; நிரைகொண் டோர்க்கும் மீட்டோர்க்குந் துடிகொட்டிச் சேறலொத்தலின். அருமைத் தலைத்தரு *மானிரையு ளையை யெருமைப் பலிகோ+ ளியைந்தா---ளரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானேன் றியாந்தன்மேற் சீறாம லின்று. இதனானே வருகின்ற வஞ்சித்திணைக்குங் கொற்றவை நிலை காரணமாயிற்று; தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின். இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:--- போரற்றபோது முழக்காததிருந்த முரசையெடுக்குங்கால் பராவியெடுப்பது பண்டை வழக்காமென்பதை, மாசறவிசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை...... (புறம்-50) என்னும் மோசிகீரனார் புறப்பாட்டாலும், தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக் கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச் செம்பொன் நெல்லின் செங்கதிர் சூட்டி வெண்டுகி லிட்ட விசய முரசம் என்ற பெருங்கதை, உஞ்சைக் காண்டத்து 39-ஆவது காதை, 21-24வரிகளின் குறிப்பினானும் அறிக. போர் விரும்பியோர் முதலில் வெற்றி கருதிக்கொற்றவையைப் பராவுதல். வளைபுடைக் கையிற் சூல மேந்தி கரியி னுரிவை போர்த்தணங் காகிய வரியி னுரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை அமரிளங் குமிரியு மருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே. என்னும் சிலப்பதிகார வேட்டுவ வரி 60-64, 73-74 வரிகளிலும் மற்றும் பழஞ்செய்யுள்களிலும் பரக்கக் காணலாம். இனி, துடிநிலை யென்னுமிடத்துக் குடிநிலை என இளம் பூரணர் கொண்ட பாடத்தின் பொருத்தம் புலப்படவில்லை. ஆகோள், கொற்றவைநிலைகளைப்போலக் குடிநிலை போர்த் தொடக்கத்திற்கு இன்றியமையாததன்று. இவ்வியலின் பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் துறைகளெனக் கூறப்படுவன மூன்று. அவற்றுள் முதலது கொடி நிலை (புறத்திணை சூ. 33) அஃதொழிந்த மற்றிரண்டும் புறத் திணைத் துறைகளாக முன் வேறு சூத்திரங்களில் விளக்கப் பெற்றுள்ளன. அவற்றோடு அவ்வாறு புறத்திணை எதற்கும் துறையாக யாண்டும் விளக்கவோ சுட்டவோ பெறாத கொடிநிலையை பொருள் :--- மறங்கடைக் கூட்டிய---மிடல் மலிவால் அடல் விருப்பின் விளைந்த; துடிநிலை முரசு பராவுதலும்; சிறந்த கொற்றவை நிலையும்---போருக்குச் சிறப்புரிமையுடைய கொற்றவைக் கடவுளைப் பராவுதலும்; அத்திணைப் புறன்---(ஆகிய இவ்வெட்சிவகைகளும்) மேற்குறித்த குறிஞ்சித்திணைக்குப் புறனாகும். குறிப்பு :--- மறங்கடைக் கூட்டிய என அடை கொடுக்கப் பட்டது. இதுவும் மறனுடைய மரபாம் புறத்திணையெனற்கு இதன்மேல் நடத்தக் கடவது போரேயாதலானும், போர்த் தொடக்கமே வெட்சித் திணையாதலானும், ஆகோளைப் போலவே முரசு பரவுதலும், தொடங்கும் போரில் வெற்றி விளைக்கும்படி கொற்றவை பராவுதலும், போர்த் தொடக்க நிகழ்ச்சிகளாமாத லானும், பின்னைய விரண்டும் முன்னையது போலவே வெட்சித் திணையாய்க் குறிஞ்சிக்குப் புறனாயமையும் பெற்றி இதிற் கூறப் பெற்றது. அகரச்சுட்டு புறன் என்னுங் குறிப்பால் வெட்சிக்கு அகமாக முதற் சூத்திரத்திற் குறித்த குறிஞ்சியையே குறிக்கும். அகரச் சுட்டு வெட்சித் திணையைக் குறிப்பதாகக் கொண்டு, துடி நிலையும் கொற்றவை நிலையும் வெட்சிக்குப் புறனாம் என்பர் நச்சினார்க்கினியர்.1 வெட்சியே புறப்புறமென வகுத்த வெண்பா மாலை முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பாமாலை முதலிய பின்னூ லாகும். துடிநிலை கொற்றவைநிலை களைப் புறப் புறமென்னாது வெட்சியின் துறைகளாய் அடங்கினராதலானும், இச் சூத்திரத்தின் அகரச்சுட்டு வெட்சிக்கு அகமாகிய குறிஞ்சியையே குறிப்பது தேற்றம். முதற் சூத்திரத்தில், வெட்சியைக் கரவில் நிரைகவர்தல் என விளக்கியதால் அதிலமையாமல் வெட்சியின் பாற்பட்டுப் போர்த்துவக்கத்தில் நிகழ்பவற்றுள் இவ்விருபராவுதலின் இன்றியமையாமை பற்றி இவற்றை விதந்து கூறல் வேண்டப்பட்டது. முன் அகப் பகுதியில் உரிப்பொருள் ஐந்தில் புணர்வும் புணர் தனிமித்தமும் குறிஞ்சியென விளக்கியபின், அவ்விலக்கணத்தில் அமையாத கலந்த பொழுதை யுங் காட்சியை யும் பிற சிலவற்றையும் புணர்வேபோல் குறிஞ்சிப்பாற்படுமெனக் குறித்து வேறு சூத்திரம் கூறினது போலவே அக்குறிஞ்சியின் புறமான வெட்சியிலக்கணத் திலடங்காத துடிநிலை, கொற்றவை நிலைகளும் போர்த்துவக்கமாம் வெட்சியின்பாற்படுமென்பதை இச்சூத்திரத்தால் விளங்க வைத்தார். நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொள்---மிச்சி ல்கூர் வாளின் வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின்வாய் வீழ்ந்தான் றலை: இஃது உயிர்ப்பலி; இது பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை பாடினி பாடற் படுத்துவந்தா---ணாடிய தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த தாளுழலை யாடுவோன் றான். இது குருதிப்பலி; பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது (4) நூற்பா 4 மறங்கடைக் கூட்டிய குடிநிலை என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். ஐயனாரிதனார் வெட்சித் திணையில் துடி நிலை என்பதனையே துறையாகக் குறித்துள்ளமையின் ஐயனாரிதனார் கொண்ட பாடம் துடிநிலை எனத் தெரிகின்றமை யின் நச்சினார்க்கினியரும் துடிநிலை எனவே பாடங் கொண்டார். அத்திணை என்றது, நிரைகவர்தலும் நிரைமீட்டலும் ஆகிய அவ்விருவகை வெட்சித்திணையை எனக் கொண்ட நச்சினார்க்கினியர், புறன் என்பதற்கு அவ்விருவகை வெட்சித் திணைக்கும் புறனடையாம் எனப்பொருள் வரைந்தார். புறன் என்னும் இச்சொல்லினை அகத்திணைக்குப் புறனாகிய புறத்திணை என்ற கருத்திலேயே தொல்காப்பியனார் இவ்வியலில் ஆளுதலால் அத்திணைப்புறன் என்பதற்கு மேற்குறித்த குறிஞ்சிதிணைப் புறனாகிய வெட்சித்திணையாம் என இளம்பூரணர் கூறிய பொருளே ஏற்புடையதாகும். கொற்றவை நிலைப்பகுதிகளாகிய உயிர்ப்பலி, குருதிப்பலி என்பன, நிரை கவர்தல், நிரைமீட்டல் ஆகிய இருவகை வெட்சிக்கும் மேற்சேரலாகிய வஞ்சிக்கும் பொதுவாய்வரும் துறைகள் என்பது நச்சினார்க்கினியர் உரைமேற்கோளால் இனிது புலனாம். பாரதியார் கருத்து :--- இது மேற்கூறிய வெட்சி விளக்கத்திலமையாத போர்த்துவக்கம் குறியாகும் வெட்சிவகை வேறு சில கூறுகின்றது. வாளாகூட்டி, ஒரு பரிசாயெண்ணுதல் அமைவுடைத்தன்று. புறத்துறைகளாக வேறு சூத்திரங்களில் விளக்கப்படும் இரண்டனொடு பின் சூத்திரத்தில் கொடிநிலை வாளா கூட்டிக் கூறப்பெறுதலால், அவையொப்பக் கொடிநிலையும் புறத் துறையாம் பரிசு பிறிதிடத்தில் சுட்டப்பெறுதல் முறையாகும். அதனாலும், கொடியெடுப்பு போர்த் துவக்கத்தில் நிகழ்வ தொன்றாதலானும், கொடி நிலையைக் கொற்றவை நிலையோடு வெட்சி வகையாய் இதில் தொல்காப்பியர் கூறினார் எனக் கொள்ளுதலே சிறக்கும். அக்கொடி நிலைப்பாடம் நாளடைவில் ஏடெழுதுவோரால் குடிநிலையாக மாறி இளம்பூரணர் கண்டிருத்தல்வேண்டும். அப்பாடம் சிறவாமையால் அதனைப் பொருள் பொருந்தப் போர்க்குரிய துடி நிலையாக்கி நச்சினார்க் கினியர் பாடங்கொண்டதாகக் கருதற்கு இடனுளது. அன்றியும் துடி சூறைசுட்டும் பாலைநிலப் பறையே யாதலானும் எல்லா நிலத்துக்கும் பொதுவான போர்ப்பெரு முரசுக்குப் பெயரன்றா தலானும், இங்குத் துடிநிலைப் பாடத்தினும் கொடிநிலைப் பாடமே சிறப்புடைத்தாதல் மலையிலக்காம். ஆகவே, இளம்பூரணரின் குடிநிலை நச்சினார்க்கினியரின் துடிநிலை எனுமிரு பாடங்களையும் கொள்ளாது. இதில் கொடிநிலையே பாடமாகக் கொள்ளின், பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும், எனத் தொகுத்து மூன்றனுள் மற்றவற்றோடு கொடிநிலையைக் கூட்டிக் கூறிய பெற்றி இனிது விளங்கும். போர்க்குமுன் படையெடுக்கும் மரபுண்மையை புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக் கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடு மரமுன் செல்லும் போலும் என்னும் சிலப்பதிகார வேட்டுவவரி அடிகளாலும் அறிக. ஆய்வுரை நூற்பா 4 (இ-ள்) இதுவும் அது. மறத்தொழிலை முடிக்கவல்ல வீரக் குடியிற் பிறந்தாராது நிலைமையைக் கூறுதலும், அவர்களது தறுகண்மையினை வளர்க்கும் சிறப்புடைய தெய்வமாகிய கொற்றவையின் அருள் நிலையைக் கூறுதலும் ஆகிய இவை யிரண்டும் முற்கூறிய குறிஞ்சியென்னும் அகத்திணையின் புறனாகிய வெட்சித்திணையின்பாற் படும். எ று மறக் குடியிற் பிறந்த ஆடவர் மகளிர் என்னும் இரு பாலர்க்கும் உரிய பொது இயல்பினைக் குறிப்பதாக அமைந்தது குடிநிலை என்னுந் துறையாகும். குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக. இவற்றுள் ஆண்பால் பற்றி வந்ததனை இல்லாண் முல்லை எனவும் பெண் பால் பற்றி வந்ததனை மூதின்முல்லை எனவும் கூறுப என இளம்பூரணர் தரும் விளக்கம், கழுமிய காதற் கணவனைப் பழிச்சி இழுமென் சீர்த்தி இன்மலி புரைத்தன்று (பு. வெ. மா. பொதுவியற்படலம் இல்லாண் முல்லை.) எனவும், அடல்வே லாடவர்க் கின்றியும் அவ்வில் மடல்வரன் மகளிர்க்கு மறமிகுத் தன்று (மேற்படி--வாகை--மூதின் முல்லை) எனவும் ஐயனாரிதனார் கூறும் இல்லாண் முல்லை மூதின் முல்லை என்னுந் துறைகளின் விளக்கங்களை அடியொற்றி யமைந்ததெனக் கருதவேண்டியுளது. எனவே இல்லாண் முல்லை என்னுந் துறைப் பெயரினை இல் ஆண் முல்லை எனப் பகுத்து மறக்குடியிற் பிறந்த ஆண் மகனது இயல்பு எனப் பொருள் கூறுதலே இளம்பூரணர் தரும் விளக்கத்திற்கு ஏற்புடையதாகும். சேயோன் மேய மைவரையுலகத்துக்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சிக்குரிய துறைகளுள் சிறந்த கொற்றவை நிலை என்னுந் துறையினையும் ஒன்றாகத் தொல்காப்பியனார் கூறுதலால் குறிஞ்சித் திணைக்கு முருக வேளேயன்றி (அவனுக்கு அன்னையாகிய) கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்றார் இளம்பூரணர். வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ எனவரும் திருமுருகாற்றுப் படைத் தொடர் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப்படலத் துறைகள் தொல்காப்பியனார் குறித்த வெட்சித் திணைத்துறைகளை அடியொற்றியே அமைந்துள்ளன. வெண்பாமாலையிலுள்ள வெட்சித்துறைகளுள், தொடுகழல் மறவர் தொல்குடி மரபிற் படுகண் இமிழ்துடிப் பண்புரைத் தன்று எனத் துடிநிலையும், ஒளியின் நீங்கா விறற்படையோள் அளியின் நீங்கா அருளுரைத் தன்று எனக் கொற்றவை நிலையும் அடுத்தடுத்துக் கூறப்படுதலின் இத் தொல்காப்பிய நூற்பாவுக்கு மறங்கடைக்கூட்டிய துடிநிலை என்ற பாடமே ஐயனாரிதனார் கொண்ட பாடம் எனக் கருத வேண்டியுளது. இக்கருத்தினாலேயே மறங்கடைக்கூட்டிய துடிநிலை எனப் பாடங்கொண்டார் நச்சினார்க்கினியர். புறப் பொருள் வெண்பாமாலை கரந்தைப் படலத்தில், மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனும் கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று எனக் குடிநிலை யென்ற துறை இடம் பெற்றிருத்தல் கொண்டு இத்தொல்காப்பிய நூற்பாவுக்கு மறங்கடைக்கூட்டிய குடிநிலை என்ற பாடமும் வழங்கி வந்தமை புலப்படுதலால் அதனையே இளம்பூரணர் பாடமாகக் கொண்டு உரைவரைந்துள்ளார் எனத் தெரிகிறது. இவ்வாறு இந்நூற்பாவுக்கு மறங்கடைக் கூட்டிய குடிநிலை என இளம்பூரணரும், மறங்கடைக்கூட்டிய துடிநிலை என நச்சினார்க்கினியரும் இருவேறு பாடங்களைக் கொண்டு உரை வரைவதற்கு அடிப்படையாக அமைந்தது, இவ்வுரையாசிரியர் இருவர்க்குங் காலத்தால் முற்பட்டதாய்ப் பன்னிருபடலத்தின் வழிநூலாய்த் தொல்காப்பியத்தின் சார்பு நூலாய் அமைந்த புறப்பொருள்வெண்பா மாலையேயென்பது நன்கு தெளியப்படும். தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாக்களின் பொருளமைதியினையும் தொன்றுதொட்டு வரும் பாடவேறுபாடுகளையும் உள்ளவாறு ஒப்புநோக்கி உய்த்துணர்தற்குத்துணை செய்வது புறப்பொருள் வெண்பா மாலையே என்பது இதனால் நன்கு புலனாகும். நிரைகவர்தலாகிய வெட்சிப் பகுதிக்குரிய துறைகளாகத் தொல்காப்பியனார் குறித்த படையியங்கரவம் முதல் கொடை யீறாகவுள்ள பதினான்கு துறைகளையும் அவற்றோடு துடி நிலை, கொற்றவைநிலை என்னும் இரண்டினையும் கூட்டிப் பதினாறு துறைகளையும் வெட்சித் திணைக்குரிய துறைகளாகக் கொண்டார் ஐயனாரிதனார். வெட்சித்திணையையும் அதன் துறைகளையும் சேர்த்துத் தொகைப் படுத்தும் முறையில் அமைந்தது, வெட்சி வெட்சியரவம் விரிச்சி செலவு வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள் பூசன்மாற்றே புகழ் சுரத்துய்த்தல் தலைத்தோற்றம்மே தந்துநிறை பாதீ டுண்டாட் டுயர்கொடை புலனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே கொற்றவை நிலையே வெறியாட் டுளப்பட எட்டிரண்டு ஏனை நான்கொடு தொகைஇ வெட்சியும் வெட்சித் துறையு மாகும் எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரமாகும். இதன்கண் படையியங்கரவம் முதல் கொடையீறாக வெட்சித் திணைக்குரியவாகத் தொல்காப்பியனார் குறித்த பதினான்கு துறைகளும் அவற்றையடுத்து மறங்கடைக்கூட்டிய துடிநிலை, கொற்றவை நிலை என்னும் இரு துறைகளும் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும் எனப் பின்வரும் தொல்காப்பிய நூற்பாவிற் குறிக்கப்படும் வெறியாட்டு என்னுந் துறையும் ஆகப் பதினேழு துறைகள் இடம் பெற்றுள்ளன. இவையேயன்றிப் புலனறி சிறப்பு பிள்ளை வழக்கு எனப் புதிய துறைகள் இரண்டினையும் சேர்த்து வெட்சித்திணைத் துறைகள் பத்தொன்பதாக ஐயனாரிதனார் விரித்துரைத்துள்ளார். வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத் தம்மினுமிகச் சிறப்பீந்தன்று எனவரும் புலனறி சிறப்பும், பொய்யாது புள் மொழிந்தோர்க்கு வையாது வழக்குரைத்தன்று எனவரும் பிள்ளை வழக்கும், கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை அவரவர் வினையின் அறிந்தீந்தன்று என அவர் கூறும் பாதீடு என்ற துறையிலேயே அடங்குவன என்பது ஐயனாரிதனார் தரும் இலக்கணக் கொளுக்களையும் உதாரண வெண்பாக்களையும் ஒப்பு நோக்குமிடத்து நன்கு புலனாதல் காணலாம். வெட்சித்திணைத் துறைகளாகத் தொல்காப்பியனார் கூறிய வற்றை அடியொற்றியே ஐயனாரிதனாரும் துறைவகுத்துள்ளார் என்பது வெட்சித்திணைபற்றிய இவருடைய நூற்பாக்களையும் ஒப்புநோக்குவார்க்கு இனிது புலனாகும். 5. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை உளப்பட ஓடா உடல்வேந்து அடுக்கிய உன்ன நிலையும் மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலும் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்து உரைத்தலும் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் மனைக்குரி* மரபினது கரந்தை அன்றியும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இருமூன்று மரபிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட எழுமூன்றும் துறைத்தே இளம் : வேலன் முதலாக1 வெட்சித்திணைக்குரிய துறை கூறினார்; இனி அதற்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று2 அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின் கண் நிகழ்வதாகலின் வெட்சிப் பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று. (இ-ள்.) வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பது முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று துறையும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறும் துறையொடுங் கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து.3 வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்-வெறி ஆடுதலை அறியும் சிறப்பினையுடைய வெவ்விய வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும். காந்த ளென்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவாருளராகலின், வெறியாட்டு அயர்ந்த காந்த ளென்றார்.4 அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றலாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி காந்தள் எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாயளாகிற பெண்பாற் பக்கமாகிய வெறியும் அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந் நிலத்திற்குச் சிறந்தமை அறிக.5 இது வெட்சிப் பின்னர் வைத்தார், பெரும்பான்மையும் குறிஞ்சி பற்றி நிகழு மாகலின். இது காமவேட்கை தோற்றாமல் தலைமகள் தானே முருகு மேல் நிறீஇ ஆடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவவரியுட் கண்டு கொள்க. இனி வேலன் தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. உறு பகை வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ் போந்தை வேம்பு ஆர் என வரும் மா பெருந் தானையர் மலைந்த பூவும்-மிக்கபகை வேந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையுடைய போந்தையெனவும் வேம்பெனவும் ஆரெனவும் தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும். நிரைகோள் கேட்டவழி நெடுநிலவேந்தரும் கதுமென எழுவராதலின், நிரை மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது. வாடா வள்ளி-வாடுதல் இல்லாத வள்ளி. வள்ளி என்பது ஒருகூத்து; அஃது அந்நிலத்தின் நிகழ்தலின் வாடா வள்ளி என்றார். உதாரணம் வந்த வழிக் கண்டு கொள்க. வயவர் ஏத்திய ஓடா கழல் நிலை-வீரராற் புகழப்பட்ட கெடாத கழல் நிலை. ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்-ஓடாத வெகுண்ட வேந்தரைச் சார்த்திய உன்ன நிலையும். உன்னம் என்பது மரம். அது தன் நாட்டகத்துக்கேடுவருங் கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும். பிறவும் நிமித்தமாகி வருவன வெல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக் கொள்க. மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழுப் புகழ்பூவை நிலையும்-மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதலும். பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக்காட்டிடைச் செல்வோர் அப் பூவையைக் கண்டு கூறுதல். உன்னம் கண்டு கூறினார் போல இதுவும் ஒரு வழக்கு. இஃது உரையன்றென்பார், மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப. வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க. என்னை? ஆர் அமர் ஓட்டலும்-அரிய அமரைப் போக்குதலும், ஆபெயர்த்துத்தருதல்-நிரை மீட்டல். சீர் சால்வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்-சீர்மை பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக் கூறலும். இது மற்றுள்ள திணைக்கும் பொது. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்-தன் மாட்டுள்ள போர்வலி முயற்சியினாலே கொடுஞ்சொற்களைத் தன்னொடு புணர்த்திக் கூறுதலும். இது மற்றுள்ள திணைக்கும் பொது. வருதார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும். மேல் வருகின்ற கொடிப்படையைத் தாங்கலும் வாள் வாய்த்தலாற் படுதலும் என இரண்டு வகைப்பட்ட பிள்ளை நிலையும். வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவர்க்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளான் மாறுபட்டு எழுந்தவனை மகிழ்ந்து பறை ஒலிப்ப அவற்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டும். காட்சி-(போர்க்களத்துப் பட்ட வீரரைக் கல்நிறுத்தற் பொருட்டுக்கற்) காண்டல். கல்கோள்-(அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கோடல். நீர்ப்படை---அக்கல்லை நீர்ப்படுத்துதல். நடுதல்-(அக் கல்லை நடுதல். சீர் தகு மரபின் பெரும்படை - மிகவுந் தக்க மரபினையுடைய பெரும்படையினும். அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல், அஃது இற் கொண்டு புகுதலென உரைத்த துறை. (கோட்டம் - கோயில். படை-படைத்தல்.) வாழ்த்து-(அக்கல்லைப்) பழிச்சுதல். இவை யெல்லாம் கரந்தைக்கு உரித்தாக ஓதப்பட்டனவேனும் ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப (பொருளியல்-28) என்றதனான், மறத்துறை ஏழிற்கும் கொள்ளப்படும். ஈண்டு ஓதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரைமீட்டற் பொருண்மைத்தாகிக் கரந்தையென ஓதப்பட்டன ஏழாயின6 கரந்தையாயினவாறு என்னையெனின்,7 வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் மலைசார்ந்த இடத்து வழங்குதலின், வந்த நிலத்திற்கு உரிய பொருளாகி வந்தன. பூவை நிலையும் அந்நிலத்தைச் சார்ந்து வருவதொரு தெய்வமாதலின், அந்நிலத்தின் கருப்பொருளாகி வந்தது. கற்கோள் நிலையாறும் உன்ன நிலையும் முடியுடை வேந்தர் சூடும் பூவும் கழல்நிலையும் ஏனையவற்றிற்கும் பொதுவாகலான், எடுத்துக்கொண்ட கண்ணே கூறுதல் இலக்கணமாதலின் ஈண்டு ஓதப்பட்டதென உணர்க. பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறை கூறினாராகலின்,8 புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக்கூறலுமாம்.9 ஏனையவும் இவ்வாறு மயங்கக்கூறலும் குன்றக்கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டு கொள்க. இத்துணையும் கூறப்பட்டது வெட்சித்திணை.10 நச் : இது முன் இருபெருவேந்தர்க்கும் போர்செயத் தொடங்குதற் குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக் கெல்லாம் பொதுவாகிய வழுவேழும்1 உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின் வழீஇத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும் புறத்திற்கெல்லாம் பொதுவாய் வருவனவுமாதலிற் பொதுவியலு மாயின. (இ - ள்) வெறி அறி சிறப்பின்---தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன்---உயிர்க் கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையனாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும்---தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்; செவ்வேள்வேலைத் தான் ஏந்திநிற்றலின் வேலனென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறின மையிற் கணிகாரிகையுங்2 கொள்க. காந்தளையுடைமையானும் பனந்தோடுடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும் பான்மை; ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க. இது சிறப்பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று; வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது.1 இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய காந்தள் அகத்திற்கு வந்தது. இது வேத்தியற் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாதலிற் பொதுவியலுமாயிற்று.2 வேலன் றைஇய வெறியயர் களனும்! (பத்து-திருமுரு-222) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க. மா வரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர் - மா முதலியன வற்றால் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும் படையாளர்; உறு பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை வேம்பே ஆர்என மலைந்த பூவும்-அப் புகழ்தான் உறும் பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின பூவும்; இதன் கருத்து, ஏழகத்தகரும் யானையும் கோழியும் பூழும் வட்டும், வல்லுஞ் சொல்லும் முதலியவாற்றால் தமக்கு வரும் புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் படைத் தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர் வென்றாரென்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பதூஉம், அக் கூத்தும் வேத்தியற் கூத்தின் வழீஇயின கருங்கூத்தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்பதூஉம் உணர்த்தியதாம். இதனை இங்ஙனந் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக் கூத்திற்கும் இடையே இதனை வைத்தார் இக் கருத்தானே யென்றுணர்க. இவை தன்னுறுதொழிலாயவாறு காண்க. வாடாவள்ளி---வாடுங் கொடியல்லாத வள்ளிக்கூத்தும்; அஃது இழிந்தோர் காணுங் கூத்து. இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப் பிற் கூறினார், வெறியறி சிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும் பற்றி. வயவர் ஏந்திய ஓடாக் கழனிலை உளப்பட---முன்பு கழல் கால் யாத்த வீரர் மழலைப் பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் கூத்து; ஓடாமையாற் கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல். இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப் பகுதியாம். ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்னநிலையும்---பிறக் கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்னநிலையும்; என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வெற்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக எனவும் பகைவேந்தற்குக் கேடு உளதெனில் அக்கோடு படுவதாக எனவும் நிமித்தங்கோடலும் என விரு வகைத் தெய்வத் தன்மை; அஃதுடைமையான் அடுக்கிய உன்ன நிலையுமென்றார். இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று. மன்னவன் வெற்றியே கருதாது இங்ஙனம் இருநிலைமையுங் கருதலின் வழுவுமாயிற்று. மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவைநிலையும் என்றது; மாயோன் விழுப்புகழ்---மாயனுடைய காத்தற் புகழையும்; மெய் பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்த லென்னும் புகழ்களையும்; மன்பூவை நிலையும்---மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவை நிலையும்; என்றது ஒன்றனை ஒன்றுபோற்கூறுந் துறை மன் எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனால் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமின்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க. உதாரணம் :--- ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங் கடல்வளர் புரிவளை புரையு மேனி யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளுங் கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுக ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலி னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு மரியவு முளவோ நினக்கே......... (புறம்-56) என இதனுள் அங்ஙனம் உவமித்தவாறு காண்க. குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய்---மரம்பெறாப் போரிற்குரு குறங்கும் பூம்புன னீர்நாட மார்பிற் கிடந்த மறு. இது சோழனை மாயோனாகக் கூறிற்று. ஏற் றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா மாற்றல்சால் வானவன் கண் இது சேரனை அரனாகக் கூறிற்று. இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை---யந்தரத்துக் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று. இது சேரனைப் பலதேவராகக் கூறிற்று. கோவா மலையாரங் ] கோத்த......... (சிலப்-ஆய்ச்-உள்வரி) முந்நீரி னுள்புக்கு மூவாக்........... (சிலப்-ஆய்ச்-உள்வரி) பொன்னிமயக் கோட்டுப் புலி........... (சிலப்-ஆய்ச்-உள்வரி) அவை என்பனவும், தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்திணை..........áWFo யோரே. (கலி-52) இஃது உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று. தாவா என்றதனானே அரசர்புகழைக் காட்டுவாழ் வோர்க்குக் கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க. வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி னோங்க1 ணோக்கா தரங்கு நீபோ யரசுநுகம் பூண்ட பின்னர் நின்னிலை முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே யஃதான் றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே யதனா னதருங்2 கோடு முதலிய கூட்டுண் டிகலி னிசைமேஎந் தோன்றிப் பலவா கிய3நில நீபெறு நாளே. இது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக்கூறியும் புகழ் மிகுத்தது. பல்லிதழ் மென்மலர் என்னும் (109) அகப்பாட்டினுள் அறனில்வேந்த னாளும்---வறனுறு குன்றம் பலவிலங் கினவே எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார். ஆர் அமர் ஒட்டலும்---குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டலும்; உதாரணம் :--- பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண சீறூர் மன்னன் சிறியிலை* யெஃகம் வேந்தூர் யானை யேந்துமுகத்2 ததுவே வேந்துடன் றெறிந்த வேலே யென்னை சாந்தர ரகல முளங்கழிந் தன்றே3 யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற லோச்சினன் றுரந்த காலை மற்றவன் புன்றலை மடப்பிடி நாணக் குஞ்சர மெல்லாம் புறங்கொடுத் தனவே (புறம்-308) இது சீறூர்மன்னன் வேந்தனைப் புறங்கண்டது. கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றி னாட்செருக் கனந்தர்த் துஞ்சு 4வோனே யவனெம் மிறைவன் யாமவன் பாணர் நெருநை 5வந்த விருந்திற்கு மற்றுதன் னிரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக் கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண் டீவதி லாள னென்னாது நீயும் வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக் கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச் 6சென்றுவாய் சிவந்து மேல்வருக சிறுகண் யானை வேந்துவிழு முறவே. (புறம்-316) இது மறவன் ஆரமரோட்டல் கூறியது. இவை தன்னுறு தொழில் கூறியன. இவை புறம். ஆரமரோட்ட லென்பது பொதுப்படக் கூறவே, வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க. உதாரணம் :--- வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப் புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை யுடையின் சுரையுடை வான்மு ளூக நுண்கோற் செறித்த வம்பின் வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க் குமிழுண் வெள்ளை மறுவாய் பெயர்த்த வெண்காழ் தாய வண்காற் பந்த ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப் பாணரோ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தற் குலந்துழி யுலக்கு II நெஞ்சறி துணையே (புறம்-324) இது (புறம்.) வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது. இணைப்படைத் தானை யரசோ டுறினுங் கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர் எனக் கலியுகத்தும் வந்தது. வயங்குமணி பொருத என்னும் (167) அகப்பாட்டினுள் சேக்குவங் கொல்லோ நெஞ்சே காத்தெறிந் ததர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர் எனச் சாத்தெறிதலும் அது. இங்ஙனம் பொதுவாதலிற் பொது வியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று. ஆ பெயர்த்துத் தருதலும்---வெட்சிமறவர் கொண்ட நிரையைக் குறுநிலமன்னராயினும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதலும்; உதாரணம் :--- ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைநகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே (புறம்-259) இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது. இதனுட் டன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இனிக் கண்டோரும் மறவருங் கூத்தரும் பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாங் கையற்றுக் கூறினும், அத்துறைப் பாற்படும், உதாரணம் :--- பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் ணிரும்பறை யிரவல சேறி யாயிற் றொழாதனை கழித லோம்புமதி வழா அது வண்டுமேம் படூ உமிவ் வறநிலை யாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே. (புறம்-263) இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. விசும்புற நிவந்த என்னும் (131) அகப்பாட்டும் அது. இதனுள் மறவர் நாளா வுய்த்த என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற் கரந்தைக் கண்ணே கொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின். தருதலென்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும் வலஞ்சுரி மராஅத்து (அகம்-83) என்னுங் களிற்றியானை நிரையுள், கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் றொழித்த வுவகையர் கலிசிறந்து கருங்கால் மரா அத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் நறவுநொடை நல்விற் புதவமுதற் பிணிக்குங் கல்லா இளையர் பெருமகன் புல்லி என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க. இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க. வேந்தன் சீர்சால் சிறப்பு எடுத்து உரைத்தலும்-வேந்தர்க்கு உரியபுகழ் அமைந்த தலை மகளை ஒருவற்கு உரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறலும்; இதுவும் வழு; வேந்தர்க் குரிய புகழைப் பிறர்க்குக் கூறினமையின். அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப் பொருள் யாதொன்று மிலனே காணிய சென்ற இரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினுங் கடல வுப்பொய் சாகாட் டுமணர் காட்ட கழிமுரி குன்றத் தற்றே யெள்ளமை வின்றல னுள்ளிய பொருளே (புறம்-313) இது புறம். படையாளர் கூற்று. இதற்கு முடியுடைவேந்தன் சிறப்பெடுத் துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகா தென்றுணர்க. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும் --- தன்னிடத்துளதாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்; உதாரணம்:--- தானால் விலங்காற் றனித்தாற் பிறன் வரைத்தால் யானை யெறித லிளிவரவால்---யானை யொருகை யுடைய தெறிவலோ யானு மிருகை சுமந்துவாழ் வேன் எனவரும். பெருநீர் மேவற் றண்ணடை யெருமை யிருமருப் புறழு நெடுமா நெற்றின்1 பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக் கன்றுடை மரையா துஞ்சுஞ் சீறூர்க் கோளிவண் வேண்டோம் புரவே நாரரி நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறைநனி கெழீஇக் கம்புளீனுந் தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம்-297) மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன் னொடு புணர்த்தவாறு காண்க. சீறூர் புரவாகக் கொள்ளேன்; தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான். இதுவும் பொது; புறம். வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளைநிலையும்---தன்மேல் வருங் கொடிப் படையினைத் தானே தாங்குதல், வாட்டொழிலிற் பொய்த்தலின்றி மாற்றாரைக்கொன்று தானும் வீழ்தலென இரண்டு கூறுபட்ட போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண்மையும்; வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலை வருமாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலிற் கரந்தையாம்; தும்பையாகாதென்று உணர்க. இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு. வாண்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளையாட்டும் வாளாற் பொருது உயர்ந்த அரசிளங்குமரனை அந் நாட்டிலுள்ளோர் கொண்டுவந்து பறை தூங்கிசையாக ஒலிக்கும்படி அவற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும்; இதுவும் நாட்டிலுள்ளார் கொடுத்தலிற்றன்னுறு தொழிலாய் வழுவுமாயிற்று. உதாரணம் : வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண்---டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர என வரும். இதனைப் பிள்ளைத்தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு மென்ப. அனைக்குரி மரபிற் கரந்தையும்---ஆரம ரோட்டல் முதலிய ஏழு துறைக்கும் உரிய மரபினையுடைய கரந்தையும்,5 கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணைபோல ஒழுக்கமன்று.6 அந்தோவெந்தை என்று (261) புறப்பாட்டினுள், நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை விரகறி யாளர் மரபிற் சூட்ட நிரையிவட் டந்து என்றவாறு காண்க. அது அன்றி---அக் கரந்தையே அன்றி; காட்சி---கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும் அது, கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என இருவகையாம். உதாரணம் : தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை---யாழிசூழ் மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டென னின்மாட்டோர் கல். இது கல் ஆராய்கின்றார் காட்சி. ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை யோங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீ போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் கல்லா யினையே கடுமான் றோன்றல் இது கோவலர் படலை சூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது. கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த வல்லான் படலைக்கு வம்மினோ---வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாந் தொட என்பதும் அது. கால்கோள்---கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய பின்னர் அவன் ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இருவகையாம்; உதாரணம் : வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ---வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கு மோராற்றாற் செய்வ துடைத்து. இதுவரையறை செய்யிய வம்மோ என ஒருவனைத் தெய்வமாக நிறுத்துதற்கு இடங் கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக் கால் கோடலானுங் கால்கோள். காப்பு நூல்யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ---மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி னாளை வரக்கடவ 1நாள், இது நட்டுக் கால்கொண்டது. இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடை நடு கல்லி னாட்பலி யூட்டி நன்னீ ராட்டி2 நெய்ந்நறைக் கொளீஇய3 மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற் றரவுறை புற்றத் தற்றே நாளும் புரவலர் புன்க ணோக்கா திரவலர்க் கருகா தீயும் வண்மை யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே. (புறம்-326) இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க. நீர்ப்படை---கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழி நீராட்டுதலுமென இருவகையாம்; உதாரணம் : வாளமர் வீழ்ந்த மறவோன் கலீர்த்தொழுக்கிக் கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து---நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று. இது நீர்ப்படை. பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீஇத் தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே. இது நாட்டி நீராட்டியது. நடுதல்---கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலுமென இருவகையாம், உதாரணம்:--- சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப்---போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து. இது கல் நாட்டியது. கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலாய்---நாள்வாய்த் திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டு மகிழ்ந்து. இது மறவனை நாட்டியது. சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை---அவன் செய்த புகழைத் தகும்படி பொறித்தலும், அக் கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம்; உதாரணம்:--- கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார்---மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது. இது பெயர் முதலியன பொறித்தது. அன்றுகொ ளாபெயர் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்றுகொள் பல்லா னிலமெல்லாங்---குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ பீடம்1 வகுத்து. இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது. வாழ்த்தல்---கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வ மாக்கி வாழ்த்தலுமென இருவகையாம். உதாரணம்:--- ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுக லோவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற் கோட் டிமயமே போன்று. இது கல்வாழ்த்து. பெருங்களிற்றடியில் என்னும் (263) புறப்பாட்டில் தொழாதனை கழிதலோம்புமதி என வாழ்த்தியவாறு காண்க. என்று இரு மூன்று வகையிற் கல்லொடு 2புணர---என்று முன்னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு - பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற்கூடச்;7 சொல்லப்பட்ட---இக் கூறப்பட்ட பொதுவியல்; எழுமூன்று3 துறைத்து---இருபத்தொரு துறையினையுடைத்து என்றவாறு. ஆரமரோட்டன் முதலிய எழுதுறைக்குரிய மரபினையுடைய கரந்தையும், அக் கரந்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங் கூடக், காந்தளம் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்னநிலையும் பூவைநிலையும் உளப்பட இச் சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்தெனக் கூட்டுக. மாயோனிறம்போலும் பூவைப் பூ நிறமென்று பொருவுதல் பூவை நிலையென்றால், ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல் வேண்டும்; ஆசிரியர் அவை கூறாமையின், அது புலனெறிவழக்கமன்மை யுணர்க. இதனுட் கரந்தைப் பகுதி ஏழும் வேறு கூறினார்; காட்டகத்து மறவர்க்குங் குறுநில மன்னர்க்கும் அரசன் படையாளர்தாமே செய்தற்கும் உரிமையின. கற்பகுதி வேத்தியற் புறத்திணைக்கும் பொதுவாகலின் வேறு கூறினார். ஏனைய அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறு கூறினார்.8 இனி துறையென்றதனால் ஒன்று பலவாம். அவை, கற் காணச்சேறலும்3 இடைப்புலத்துச் சொல்லுவனவுங், கண்டுழி யிரங்குவனவுங், கையறுநிலையும், பாணர் கூத்தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர் தமக்குரைப்பனவும் போல்வன கற் காண்டலின் பகுதியாய் அடங்கும்; கால்கொள்ளுங் காலத்து, மாலையும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும், அனையோற்கு இனைய கல் தகுமென்றலுந், தமர்பரிந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும்; நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டொழுக்கலும் ஏற்றிய சகடத்தினின்று இழிந்த வழி ஆர்த்தலும், அவர் தாயங்கூறலும் முதலியன நீர்ப்படையாய் அடங்கும்; நடுதற்கண் மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் நாற்றிப் பல்லியம் இயம்ப விழவச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும்; பெயரும் பீடும் எழுதுங்காலும் இப் பகுதிகள் கொள்க; நாட்டப்படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புக்களும் படைத்தல் பெரும்படைப்பகுதியாய் அடங்கும்; வாழ்த்தற் கண்ணும் இதுதான் நெடிதுவாழ்கவெனவும் இதன் கண்ணே அவனின்று நிலாவுக வெனவும் பிறவுங் கூறுவனவு மெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும்; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப் பகுதி கூறிக்கொள்க. இனிப் பரலுடைமருங்கிற் பதுக்கை என்னும் (264) புறப் பாட்டினுள் அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித் தினி நட்டனரே கல்லும் எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமை யென்பது சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க. பெயரும் பீடு மெழுதியதர்தொறும்---பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் என அகத்திற்கும் (அகம் 131) வருதலிற் பொதுவியலாயிற்று; இவை ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின் கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுங் கொள்ளா மையும் உடையவென்று உணர்க. இப் பொதுவியலின்பின் வஞ்சி வைத்தார், வஞ்சிக் கண்ணும் பொதுவியல் வருவனவுள என்றற்கு. அது வேந்துவினை முடித்தனன் என்னும் (104) அகப்பாட்டினுட் சுட்டியொருவர், பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (5) பாரதியார் கருத்து :--- நிரைகவரும் வெட்சிக்குரிய படையியங்கரவ முதலிய துறை பதினான்கு முன்கூறி, அஃதல்லாத கொடிநிலை, கொற்றவைநிலை போன்ற போர்த் துவக்க வெட்சி வகையின் துறை இருபத்தொன்று இதில் விளக்கப்படுகின்றன. (வெட்சி வகையுள் சிறந்த ஆகோளையும் அதன் துறை பதினான்கையும் முதல் மூன்று சூத்திரங்களில் விளக்கி, பிறகு போர்த் துவக்கத் திணையாகிய வெட்சியில் சிறந்து வரும் ஆகோளே யன்றிப் பொதுவாக வரும் கொற்றவை நிலை போன்ற வேறு வெட்சிவகை யுண்மை இதன்முன் சூத்திரத்தில் கூறப் பட்டது. அப் பிற வெட்சி வகைகளுக்குரிய துறைகளை இது சுட்டுகின்றது.) பொருள் :--- (1) வெறி யறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்த்த காந்தளும்---குறித்த போரில் கொற்றம் கருதிச் செறுமிகு சேயான முருகனை முதலில் பரவி, அவனுக்குரிய களியாட்டில் குறியுணர்ந்து கூறும் சிறப்பினையுடைய விரும்பத்தகும் வாய்ப்புணர்த்தும் வேலன் ஆடும் காந்தளும். (இவ்வெட்சிக்கு நேரான குறிஞ்சித்திணையில், தன் களவை மறைத்துத் தனிமை யாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட தாயர் உண்மை யுணரவேண்டிக் குறி சொல்ல விரும்பியழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின் வேறாய அக்குறிஞ்சிக்குப் புறனான வெட்சியில் வரும் துறையான வேலன் வெறியாட்டு என்பதை விளக்கவே இது வெறியாட்டு என்னாது வெறியாடும் வேலன் விரும்பிச் சூடும் பூவின் பேரால் காந்தளெனக் குறிக்கப்பட்டது. எனவே வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட்சிக்கும் பொதுவாயினும், வெட்சித்துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன்; குறிஞ்சித் துறையில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப்பூச் சூடுதல் மரபு. இதனை மதுரைக் காஞ்சியில் புறத்தில் அகத்துறையாக, அருங்கடி வேலன் முருகொடு வளைஇ அரிக்கூடு இன்னியம் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடி எனவரும் அடிகளானுமறிக.1 (2, 3, 4) உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்து புகழ்ப் போந்தை, வேம்பே. ஆரென வரூஉம் மாபெருந்தானையர் மலைந்த பூவும்---மாறுகொண்ட இருவேந்தர் பெரும் படை மறவர் தம்மை மலைவின்றித் தமரும் பிறரும் எளிதில் அறியும் வண்ணம் அடையாளமாகச் சூடும் சேரரது பனை, பாண்டியரின் வேம்பு, சோழர்தம் ஆத்தி என முறையே புகழோங்கி வரூஉம் பூக்களின் பேராலாய துறை மூன்றும், இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும், ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள் கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன் எனவரும் பொருநராற்றுப்படை அடிகளில் போந்தை வேம்பு ஆர் எனும் அடையாளப்பூ மூன்றும் அமரில் சூடும் பரிசு குறிக்கப்படுதல் காண்க. (5) வாடா வள்ளி---வாடுங்கொடி யல்லாத வள்ளி யென்னும் பெயருடைய கூத்தும். (வள்ளி என்பது வாடும் ஒரு கொடிக்கும் ஆடும் ஒரு வகைக் கூத்துக்கும் பொதுப் பெயராதலால், (ஓடாப் பூட்கை) வாடா வஞ்சி, என்பனபோல, கொடியை நீக்கிக் கூத்தைச் சுட்டும் பொருட்டு இங்கு வாடா வள்ளி எனக் கூறப்பட்டது) முருகனைப் பரசி வேலனாடுவது காந்தள்; அக்கடவுளைப் பாடிப் பெண்டிர் ஆடும் கூத்து வள்ளி. இது, மகளிர் மக்கட் டலைவனைப் புகழ்ந்து பாடும் உலகக்கைப் பாட்டாகிய வள்ளை போலாது, காந்தளைப் போலவே கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும். இவ்வியலில் பின்வரும் கொடிநிலை காந்தள் வள்ளி என்ற கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே எனும் சூத்திரத்தாலும் இவ்வியல்பு விளங்கும். பன்மர நீளிடைப் போகி நன்னகர் விண்தோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடுபல கழிந்த பின்றை எனவரும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில் விண்ணுற வோங்கி விளங்கும் மதில் சூழ்ந்த மாடங்கள் நிறைந்த ஊர்களிலும் புறநாடுகளிலும் கடவுளைப் பரசிப் பெண்டிர் ஆடும் வள்ளிக் கூத்தின் வளப்பம் குறிக்கப்படுவதறிக. (6) வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை---வென்றி மறவர் புகழும் புறங்கொடாவீறு குறிக்கப் பொருநர் காலில் அணியும் கழல் நிலையும்; (கழல் என்பது போர் வென்றிப் பெருமிதக் குறியாக மறம் பேணும் திறலுடையார் காலில் பூணும் ஒரு அணிவகை. இதில் எண்ணும்மை தொக்கது) ஒடாத் தானை ஒண்தொழிற் கழற்கால் செவ்வரை நாடன்... எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், மறக்குறியாகத் தானை காலில் கழலணியும் பரிசு கூறப்படுதல் காண்க. (7) ஓடா உடல் வேந்து உளப்பட அடுக்கிய உன்ன நிலையும்-பின் வாங்காது மலையும் வேந்தன் வெற்றியை உளத் தெண்ணி, சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தங் கொள்ளும் உன்ன நிலையும். (உடல்வேந்து என்பது பொருபடை என்பது போன்றதோர் வினைத்தொகை; உடலும் வேந்து என விரியும். உடலுதல்--- சினந்து பொருதல்; பகைத்ததுமாம்.) உன்னம்---சிற்றிலையும் பொற்பூவுமுள்ளதோர் மரவகை. பண்டைத் தமிழ் மறவர் போர்க்கெழுமுன் உன்ன மரக் கோட்டில் மாலைகளை அடுக்கிய நிமித்தங் கொள்ளுவது வழக்காறு. (இனி, குறிபார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் எனின் அம்மரக்காடு தழைவதும், கேடுளதேல் அழிவதும் ஆகிய ஒரு கடவுட்டன்மை யுண்டென்றும், அதனால் பொருநர் போருக்குமுன் அம்மரத்தைப் பரசிக் குறி கேட்பரென்றும், அவ்வாறு கேட்டலே உன்ன நிலையென்றும் உரைப்பாருமுளர்.) (8) மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்---மாயோன் விரும்பும் நிலைத்த பெரிய சிறப்பினையுடைய கெடாத உயர்ந்த புகழினைக் குறிக்கும் காயா மலரால் நிமித்தங்கொள்ளும் பூவை நிலையென்னும் துறையும். உன்ன மரக்கோட்டால் நிமித்தங் கொள்ளுவது போலத் தானைமறவர் காயாம் பூவால் நிமித்தங்கொள்ளும் ஒரு பழவழக் குண்டு. பூவை விரியும் புதுமலரிற் பூங்கழ லோய் யாவை விழுமிய யாமுணரேம்---மேவார் மறத்தொடு மல்லர் மறக்கடந்த காளை நிறத்தொடு நேர்வருத லான். என்னும் வெண்பாமாலைப் பாட்டாலும் அது விளக்கமாகும்.2 (பிற்காலத்தில், பூவைநிலை சிறப்பாக மாயோனையும் பொது வகையில் பிற கடவுளரையும் ஒரு தலைமகனுக்கு ஒப்பிடும் துறையாகக் கருதப்பட்டு வருகிறது, இப்பொருளுக்கு, ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் எனும் நக்கீரர் புறப்பாட்டை மேற்கோளாகக் கொள்ளுவர். இதில் பாண்டியன் நன்மாறனைக் கண்ணுதற்கடவுள், பலராமன், திருமால், செவ்வேள், என்னும் நான்கு கடவுளர்க்கும் ஒப்புக் காட்டிப் புகழ்வதால், இப்பாட்டு பூவை நிலைத்துறைக்குச் சிறந்த பாட்டு எனக் கொள்ளப்படுகிறது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் உள்வரி3-உம் முறையே பாண்டியன், சோழன் சேரன் ஆகிய மூவேந்தரையும் தனித்தனியே திருமாலுக்கு ஒப்புக் கூறுதலால், அவையும் பூவை நிலையாம் என்பர்) (9) ஆரமர் ஓட்டலும்---நிரை கவர்ந்த படை மறவரைக் கரந்தைப் பொருநர் வென்று புறம்கொடுத்தோடச் செய்தலும். ஈண்டும் உம்மை தொக்கது. (இதில் அமர் என்பது அமர் புரிபவருக்கு ஆகுபெயர்; வட வாரியரொடு வண்டமிழ் மயக்கத்து எனும் காட்சிக் காதை யடியினுள், வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம், தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என, என்னும் கால்கோட் காதையடியிலும், தமிழ்தலை மயங்கிய தலை யாலங்கானம் எனவரும் குடபுலவியனார் புறப்பாட்டடியிலும், கொண்டடி மிகைபடத் தண்டமிழ் செறித்து எனும் கபிலரின் 7-ஆம் பத்தின் 3-ஆம் பாட்டு அடியிலும் தமிழ் என்பது தமிழ்ப் படைக்கு ஆகுபெயராய் நிற்பதுபோல, ஈண்டு அவரென்பது தானைப் பொருநரைச் சுட்டுதல் வெளிப் படை. ஆரமர் ஓட்டல் எனப் பொதுப்பட நிற்றலால், நிரை கொண்டார் மீட்கவரும் மறவரை ஓட்டுதலும், மீட்பவர் நிரை கவர்ந்தவரை வென்றோட்டலுமாகிய இரண்டனையும் இத் தொடர் குறிக்குமெனப் பிறர் உரை கூறினர். நிரை கொள்ளும் வெட்சி மறவர் மீட்போரை வென்றழிக்கும் பரிசெல்லாம் முன் வெட்சிவகை ஆகோளின் துறைகளினுள் அடங்கக் கூறுதலானும், அதை விலக்கிக் கரந்தை முதலிய பிறவகை வெட்சித்துறைகளே இதிற் கூறவேண்டுதலானும், இதையடுத்த துறை கவரப்பட்ட நிரையை மீட்டுத் தருதலாதலின் கொண்டோரை வென்றன்றி ஆபெயர்த்துத் தருதல் கூடாமையாலும், ஈண்டு, ஆரமர் ஓட்டல் ஆகோள் மறவர் வென்றி குறியாது அவரை வென்றோட்டும் கரந்தைப் பொருநரையே குறிப்ப தொருதலை. அன்றியும் ஆரமரோட்டல் முதல் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் வரை குறிக்கப்படும் துறையனைத்தும் அனைக்குரி மரபினது கரந்தை எனத் தெளிக்கப்படுதலானும் இது கரந்தைத் துறையே யாம்) (10) ஆபெயர்த்துத் தருதலும்---பகைவர் கவர்ந்த நிரையைக் காவலர் கரந்தை சூடிப் பொருது மீட்டுத் தருதலும்; (அமரோட்டலும் ஆபெயர்த்தலும் நிரைமீட்கும் கரந்தைப் பொருநர் வினையாதலானும், கவர்ந்த மறவரை வென்று ஓட்டினாலொழிய நிரை மீட்டல் கூடாமையானும் இவை யிரண்டும் காரண காரிய முறையில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிகழும் பெற்றியவாகும். கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற் பல்லாண் இனநிரை தழீஇய வில்லோர்க் கொடுஞ்சிறைக் குரூஇப் பருந்த தார்ப்பத் தடிந்துமாறு பெயர்த்தஇக் கருங்கை வாளே எனவரும் ஔவையார் புறப்பாட்டும் கறவை தந்து பகைவர் ஓட்டிய நெடுந்தகை எனும் 264-ஆம் புறப்பாட்டும், ஆரமரோட்டல் ஆபெயர்த்துத் தருதல் எனும் துறைகளையும் ஒருபரிசாய் ஒருங்கு கூறுதல் காண்க. வளரத் துடியினும் எனும் வடமோதங்கிழார் புறப்பாட்டிலும் இவ்விரு துறைகளும் ஒருங்கு வருதல் அறிக.) (11) சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும்---மீட்சி மறவர் தம்வேந்தர் பெருமையை மீக்கூறுதலும். (இதுவும் கரந்தை வகையாதலால், மீட்போர் தம் வேந்தனை மீக்கூறுதலையே குறிப்பதாகும். என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்; பலரென்னை முன்னின்று கன்னின் றவர் ---குறள்.771 பறைநிறை கொல்யானை பஞ்சவர்க்குப் பாங்காய் முறைமுறையின் உய்யாதார் நேயம்-முறைமுறையின் ஆன்போய் அரிவையர்போய் ஆடவர்போய் யாயின்ற ஈன்போய் உறையும் இடம். ---முத்தொள்ளாயிரத்திரட்டு செய்.9 இவ்விரண்டு பாட்டுக்களிலும், மறவர் தம் வேந்தன் சிறப்புக் கூறுதல் காண்க.) (12) தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்- தத்தம் தலைமைத்தாம் முயற்சியின் திறல் குறித்துத் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதலும் ; (நெடுமொழி-தற்புகழ்ச்சி; தருக்கிய வஞ்சியுமாம். மடங் கலிற் சினைஇ எனும் பூதப்பாண்டியன் (71 ஆம்) புறப்பாட்டும், நகுதக்கனரே எனும் நெடுஞ்செழியன் (புறம் 72) பாட்டும், மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி எனும் நலங்கிள்ளி (புறம் 73) பாட்டும், ஆக மூன்றிலும் வேந்தன் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதல் விளக்கப்படுகின்றது. இனி, கந்துமுனித் துயிர்க்கும் எனும் மூலங்கிழார் புறப்பாட்டில்,.......................................nt©lh® எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில் கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய நெடுமொழி...... எனவரும் அடிகளில், பொருநர் போர்க்குமுன் ஊர்க்குள் நெடுமொழி கூறும் வழக்குண்மை சுட்டல் அறிக.) (13) அனைக்குரி மரபினது கரந்தை, அன்றியும்---அத் தன்மைக்குரிய முறையால் வரும் நிரைமீட்சித் துறைவகை யெல்லாமும் கரந்தை வகையாகும். அல்லாமலும் (அனைத்துச் சொல்அத்தன்மைத்து எனப் பொருள்படுதல், அனைத்தாகப் புக்கிபோய் எனும் 78-ஆம் கலிப்பாட்டில் வருதலாலறிக. அனைத்துக்கு என நிற்கற்பாலது அனைக்கு எனக்குறுகியது. செய்யுளிசை நோக்கி ; மனத்துக்கு என்பது மனக்கு எனவும், போருள தனைத்தும் என்பது போருளதனையும் எனவும். கம்பர் பாட்டுக்களில் இசை நோக்கிக் குறுகி வருதலும் காண்க. இனி, ஆரமரோட்டல் முதல் கூறிய நான்கும் நிரை மீட்சிக்கே வுரியவாதலின், அவற்றைக் கரந்தை என ஒருங்கு தொகுத்து, இதிற் கூறும் பிற வெட்சித் துறைகளினின்றும் வேறு பிரித்ததன் குறிப்பு அன்றியும் எனுஞ் சொல்லிடைப் பெய்து விளக்கப்பட்டது. பின்னைய பிள்ளை நிலை இரண்டும் பிள்ளையாட்டு ஒன்றும் ஆக மூன்றும் கரந்தையேயன்றி பிற வற்றிற்கும் ஏற்குமாதலின் அவை கரந்தைத் தொகுதியிற் கூட்டப்படாமல் வேறுபிரித்துக் கூறப்பட்டன. இதில் கரந்தை என்பது தனித் துறை யாகாமல் நிரை மீட்சித் துறை பலவற்றிற்குப் பொதுப் பெயராய்க் குறிக்கப்பட்டது. கரந்தை வெட்சித் திணை வகையாய்ப் பல துறைகளைத் தன்னுள் அடக்கி நிற்பதல்லாமல் தனித்தொரு துறையாகாமையால், அதற்குத் தனித்து மேற் கோட்செய்யுள் கூறுமாறில்லை. வெட்சியொடு கரந்தையை மயங்கவைக்கும் நச்சினார்க்கினியரும், கரந்தை வெட்சித் திணையாகாது எனக் கூறுகின்றார். கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலாற் பெற்ற பேராதலின், வெட்சித்திணைபோல ஒழுக்கம் அன்று என்பது இச்சூத்திரத்தின் கீழ் அவர் தரும் குறிப்பாகும். மேலும், கரந்தையை ஒரு தனித்துறையாய்க் கொள்ளின், இங்கு மொத்தம் எழுமூன்று துறைத்தே எனக் கூறியதற்கு மாறாகத் துறையெண் 32 ஆகும். இது கூடாமையால், இதில் கரந்தையைத் தனித்துறையாய்க் கொள்ளாமல் நிரைமீட்சித் துறைகளுக்குப் பொதுப் பெயராகவே கொள்ள வேண்டுமென்பது தேற்றம். எனவே, இதனை ஒரு தனித்துறையாக்குதல் பொருந்தாமை வெளிப்படை) (14) வருதார் தாங்கல்---எதிர்த்து வரும் படையின் முன்னணியைத் தனித்து நின்று தடுத்தல். (தார் என்பது படையணியைக் குறிக்கும். இதுவும் கரந்தை வகையேயாம். ஒன்னார் முன்னிலை முறுக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉம் என்னை. எனும் 262-ஆம் புறப்பாட்டில் இத்துறைவிளக்கம் காண்க. இது எதிரூன்றிப் பொரும் தும்பைத்திணைத் துறையாகாமல் வெட்சித் துறைக்குரியது என்பது பின்னின்று நிரையொடு வரூஉம் எனும் குறிப்பால் தேறப்படும்) (15) வாள் வாய்த்துக் கவிழ்தல்-- பகைவர்களால் பட்டு வீழ்தல். என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும்--(வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல்) என இருதிறப்படச் சுட்டப் பட்ட பிள்ளை நிலைத் துறைகளும். (மேலே சிறப்பாகக் கரந்தை வகை நான்கு கூறி அவற்றைத் தொகுத்துப் பொதுவாகக் கரந்தையெனக் கூறியதுபோல, இங்குத் தார் தாங்கல், கவிழ்தல் எனும் இருவகைத் துறைகளும் பிள்ளைநிலை என்பதன் வகைகளாம் என்பதை விளக்கி இவ்விரண்டின் பின் இருவகைப்பட்ட பிள்ளைநிலையும் என்று அவற்றின் தொகையும் பொதுப் பெயரும் கூறப்பட்டன. அஃதன்றிப் பிள்ளைநிலை எனத் தனித்தொரு துறையின்மையால், துறை எழுமூன்றில் இது தனித்தெண் பெறாது) (16) வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டும்---(ஆகோளல்லாத வெட்சிப் போரில் வாளால் பொருது வென்று வந்தவனை உவந்து முரசொலிக்க நாட்டை அவனுக்குப் பரிசிலாய் அளிக்கும் பிள்ளையாட்டென்னும் துறையும். (தனக்கு வெற்றி தந்த வீரனை வேந்தன் நாடுதவிப் பாராட்டுதல் நன்றி மறவா மறக்கடனாகும். இதற்கு, வாட் போரில் இறந்த மறவனுக்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளை யாட்டென்று இளம்பூரணர் உரை கூறுவர். இதில் எழுந்தோனை என்றதனால் இறவாமை தெளியப்படும்; இறந்தானை எழுந்தோனென்பது மரபன்று. அன்றியும் போரில் இறந்தவர்க்குத் துறக்க நாடு அருளுபவர் அவனைக் கொன்ற பகைவராவரன்றி இறந்த பொருநனின் வேந்தன் ஆகான். புறந்தாராது பொருது களத்துயிர் கொடுத்தவனைத் தமரும் பகைவரும் பாராட்டிப் பரிந்திரங்குவர். அவன் இறந்தமைக்கு மகிழ்வது நன்மக்களியல் பன்று. ஈண்டு மகிழ்ந்து நாடவர்க்கருளிய பரிசு கூறுதலாலும், அஃதுரையன்மை ஒரு தலையாம். வன்கண் மறமன்னன் வான்மலைந்து மேம்பட்ட புள்தலை யொள்வாட் புதல்வர்கண்---டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தான் கருதார்க்கு வாள்கெழு நாடு வர. எனவரும் பழம்பாடல் இளம்பூரணர் உரையை மறுத்துப் பகைவர்வானொடு பெற வென்றுவந்தவர்க்குப் பரிசிலாய் மன்னன் மண்கொடுக்கும் பரிசே குறிப்பதறிக) (16 முதல்21) காட்சி---பொருது வீழ்தார்க்கு நடுதற் பொருட்டுத் தக்கோர் கல்லைத் தேர்ந்து காணல்; கால்கோள்---தேர்ந்து கண்ட கல்லைக் கொணர்தல். நீர்ப்படை---விழாவொடு அக்கல்லைத் தூய நீரால் குளிப்பித்தல்; நடுதல்---பிறகு அதனை எடுத்து நடுதல்; சீர்த்தகு மரபிற் பெரும்படை---சிறந்த முறையில் நாட்டிய கல்லுக்கு மிக்க பலியுணவு படைத்தல்; வாழ்த்தல்--- அவ்வாறு கடவுளேற்றிப் பலியூட்டிய அக்கல்லைப் பழிச்சுதல்; என்று இரு மூன்று வகையில் கல்லொடு புணர---இவ்வாறு அறுதிறப்படும் நடுகல் துறைகளோடு சேர்ந்து; (இதில் புணர்ந்து என்னும் எச்சம் புணர என நின்றது. அன்றி, நின்றாங்கே கொண்டு, சேர எனப் பொருள் கொள்ளினும் அமையும்) இவையாறும் நடுகல் வகைகளாய் விழவொடு ஒடுக் கொடுத்துப் பிரித்து இரு மூன்று வகையிற் கல்லொடு புணர என எண்வேறு கொடுத்துத் தொகுக்கப்பட்டன. போரில் புகழொடு பட்டானைப் பாராட்டிக் கல் நட்டு விழாவொடு பழிச்சுதல் பண்டைத் தமிழர் வழக்காகும். பெருங் களிற்றடியில் எனத் தொடங்கும் புறப்பாட்டில் (263) ............தொழாதளை கழிதல் ஓம்புதி...ÉšYÄœ கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லை எனவருவதால், அமரில் பட்ட பொருநர்க்குத் தமர் கல்நட்டு வழிபடும் பழைய மரபு விளங்கும். பரலுடை மருங்கில் பதுக்கை நேர்த்தி மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு அணிமயற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினிநட் டனரே கல்லும் எனும் 264-ஆம் புறப்பாட்டிலும் இறந்த மறவனுக்குப் பெயர் பொறித்துக் கல்நாட்டும் பண்டை வழக்கம் குறிக்கப்படுகின்றது. சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே---கூறப்பட்ட ஆகோள் அல்லாத வெட்சிவகைத் துறைகள் இருபத்தொன்று ஆகும். (இதில் ஏகாரம் அசை---துறை ஒவ்வொன்றினொடும் வரும் உம்மை எண்ணும்மை) ஆய்வுரை நூற்பா 5 குறிஞ்சிப் புறனாகிய நிரைகவர்தல், நிரைமீட்டல் என்னும் இரு பகுதிகளுள் நிரை கவர்தற்பகுதியாகிய வெட்சித் துறைகளை மேலைச் சூத்திரத்து விரித்துக்கூறிய தொல்காப்பிய னார், நிரை மீட்டற் பகுதியாகிய கரந்தைத் துறைகளையும், புறத்திணை எல்லாவற்றுக்கும் பொதுவாக வுரிய மறத்துறை களையும், மறத்துறைகளை நிறைவேற்றி உயிர்துறந்த தெய்வ நிலை பெற்ற வீரர்களின் பெயரும் பீடும் எழுதிக் கல் நிறுத்தி வழிபடும் முறையில் அமரர்ச் சுட்டிச் செய்யப்படும் பெருஞ் சிறப்புடைய புறத்துறைகளையும் இச்சூத்திரத்து விரித்துரைக்கின்றார். (இ-ள்) குறிஞ்சி நிலத்தெய்வமாகிய சேயோனுக்குச் செய்யும் வெறி என்னும் வழிபாட்டினையறிந்து நாட்டு மக்களுக்கு நலம் புரியும் சிறப்பினையும் தெய்வத்திற்குப் பலியிடுதல் வேண்டும் என உயிர்க்கொலை கூறுதலின் வெம்மைதரும் வாயினையும் உடைய வேலன் என்பான், தன் வேந்தற்கு வெற்றி வேண்டித் தெய்வத்தைப் பரவிய காந்தளும், இருதிறப் படைகளும் மாறுகொண்டு போர்விளைக்கும் போர்க்களத்திலே இன்ன வேந்தன் படையாளர் இவர் எனத் தம்மை அடையாளந் தெரிந்து கொண்டு பகைவரொடு பொருதற்கு வாய்ப்பாக மிகப்பெரிய தமிழ்ப் படை வீரர்கள் சூடிக்கொள்ளுதற்குரிய பனை வேம்பு ஆத்தி என்னும் மூவகைப் பூக்களும், தம் நாட்டார் வெற்றி பெறுதல் வேண்டி மகளிர் முருகனைப் பரவி யாடும் வள்ளிக் கூத்தும் (போர்க்களத்திற்) புறமுதுகிட்டு ஓடாமைக்குக் காரணமாக வீரர் அணிந்த கழலின் சிறப்பும், பின்னிடாது போர் செய்யவல்ல சினமிக்க வேந்தனது வெற்றியை உள்ளத்தில் எண்ணி, நாடாள் வேந்தனாகிய அவனுக்கு நன்மையும் தீமையும் புலப்படுத்தும் இயல்பினதாகிய உன்னம் என்னும் மரத்தொடு பொருந்த நிமித்தங்கொள்ளுதலும், (காட்டகத்து அலரும் காயாம் பூவின் மலர்ச்சியைக் கண்டோர்) பூவைப்பூ மேனியாகிய மாயோனைப்போன்று தம் நாட்டினைக் காக்கவல்ல மன்னனது கெடாத பெரும் புகழாகிய பெருஞ்சிறப்பினைப் புகழ்ந்து போற்றுதலாகிய பூவைநிலையும், பெறுத்தற்கரிய போரின்கண் (வெட்சி மறவராகிய) பகைவரைப் புறங்கொடுத்து ஓடச் செய்தலும், (அவராற் கவர்ந்து கொள்ளப் பட்ட பசுக்களை மீட்டுத் தன்னாட்டிற் கொணர்ந்து தருதலும், (இவ்வாறு மீட்டுக் கொணர்ந்ததற்குரிய தறுகண்மையால் உளவாம்) புகழ் நிறைந்த தம் வேந்தனது சிறப்பினைப் படை மறவர் எடுத்துரைத்துப் பாராட்டுதலும், (வீரனொருவன்) தன் பாலமைந்த வஞ் சினத்தைத் தன்னொடு சார்த்திக் கூறுதலும், அங்ஙனம் நிரை மீட்டலை மேற்கொள்ளும் முறைமையினையுடைய வீரர்கள் போர்ப்பூவாக அணிந்த கரந்தையின் சிறப்புரைத்தலும், தம்மேல் எதிர்த்து வரும் சேனையின் முன்னணியாகிய தார் (தூசி)ப் படையினைத் தான் ஒருவனாகவே தனித்து நின்று தடுத்தலும் (அந்நிலையிற்) பகைவரது வாளாற் பட்டு வீழ்தலும் எனப் பின்விளைவறியாது மேற்கொள்ளும் போர்ச்செயல்களாகிய இரு வகைப்பட்ட பிள்ளைநிலையும் வாளாற் பொருது பகைவரை வென்று மேம்பட்டு எழுந்த வீரனாகிய இளைஞனை அந்நாட்டவர்கள் மகிழ்ந்து அவனுக்குத் தம் நாட்டினைப் பரிசாக வழங்கிய பிள்ளையாட்டும், போர்க்களத்து இறந்த வீரரைக் கல்லில் நிறுத்தி வழிபடுதற்பொருட்டு அதற்கு ஏற்புடைய கல்லைக் காணுதல், அக்கல்லினைக் கைக்கொள்ளுதல், கொண்ட கல்லினை நீர்ப்படுத்தித் தூய்மை செய்தல், அக் கல்லினை நடுதல், அங்ஙனம் நட்ட கல்லிற்குக் கோயில் எடுத்தல், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்துதல் என்று சொல்லப்பட்ட கற்கோள்நிலை ஆறும் பொருந்த இங்குச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைகளையுடையது குறிஞ்சிப் புறனாய் நிரைமீட்டற்பகுதியாகிய வெட்சியாகும். எ-று. இச்சூத்திரத் திலுள்ள எழுமூன்று துறைத்து என்னும் பயனிலைக்கு உரிய எழுவாயாக இரண்டாஞ் சூத்திரத்திலுள்ள வெட்சிதானே என்பது இங்கு அதிகாரத்தால் வந்து இயைந்தது. வெறியாட்டு என்ற துறை, நிரை கவர்வார்க்கும் நிரை மீட்பார்க்கும் பொதுப்படவுரியது என்பது, வெறியயர் சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் என நிரைகவர்தலாகிய வெட்சிக்கும் நிரைமீட்டலாகிய கரந்தைக்கும் உரிய வகையில் இதனை இடையே வைத்ததனால் உய்த்துணரப்படும். தொல்காப்பியனார் காந்தள் என்ற பெயராற் குறித்த வெறியாட்டு என்னும் இத்துறைக்கு, வாலிழையோர் வினைமுடிய வேலனொடு வெறியாடின்று என வெட்சிப்படலத்தும் தேங்கமழ் கோதை செம்ம லளி நினைந் தாங்கந் நிலைமை யாய் அறியாமை வேங்கையஞ் சிலம்பற்கு வெறியாடின்று எனப் பெருந்திணைப் படலத்தும் விளக்கங்கூறுவர் ஐயனாரிதனார். தொல்காப்பியனார் குறித்த வாடாவள்ளி என்ற துறைக்கு. பூண் முலையார் மனமுருக வேன்முருகற்கு வெறியாடின்று எனப் பாடாண்படலத்து விளக்கந்தருவர் ஐயனாரிதனார். தனது நாட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தனுடைய படை மறவர் களவிற் கவர்ந்து சென்றமையறிந்த மன்னன், தன் படை வீரர்களை அனுப்பி அப் பசுக்களை மீட்டுவருதற்கு உரிய செயல் முறைகள் நிரைகோடலாகிய போர்ச்செயலுடன் தொடர்புடையனவாய் ஒருகாலத்தே உடனிகழ்வனவாதலின் நிரைமீட்டலாகிய செயலைக் கரந்தை எனத் தனித் திணை யாக்காமல் நிரை கவர்தலும் நிரை மீட்டலுமாகிய வெட்சித் திணை என ஒரு திணையாகவே கொண்டார் தொல்காப்பியனார். நிரை கவர்தலாகிய தொழிலினை மேற்கொண்ட மறவர்கள் தாம் மேற்கொண்ட போர்ச் செயலுக்கு அடையாளமாக வெட்சிப் பூவினைச் சூடிச் செல்லுதல் போலவே அவர்க்கு மாறாக நிரைமீட்டலை மேற் கொண்ட வீரர்களும் தாம் மேற்கொண்ட செயலுக்கு அடையாளமாகக் கரந்தைப் பூவினைச் சூடிச் செல்லுதல் தொன்றுதொட்டு வரும் போர்மரபு என்பார், அனைக்குரி மரபினது கரந்தை என்றார் தொல்காப்பியனார். நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து (புறநா-261) என வரும் புறப்பாடற்பகுதியும் இம்மரபினை இனிது புலப்படுத்தல் காணலாம். கரந்தையாவது தன்னுறுதொழிலாக நிரை மீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணை போல ஒழுக்கமன்று; அந்தோ வெந்தை என்னும் புறப்பாட்டினுள், நாகுமலையன்ன நறும் பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து என்றவாறு காண்க எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதியும் இங்கு நினைக்கத் தகுவதாகும். குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலுமாகிய தொழில்வேறுபாடு குறித்து மறையே வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறும் என்றும், வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் சூத்திரம் வெட்சிக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று என்றும், அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வதாகலின் வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று என்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழு ஏழும் உணர்த்துதல் நுதலிற்று இச்சூத்திரம் எனக் கொண்ட நச்சினார்க்கினியர் தாம் கொண்ட கருத்திற்கு ஏற்ப இச் சூத்திரத்திற்கு வலிதிற் பொருள் விரித்துரைப்பர். இந்நூற்பாவில் அவரால் வழு வெனக் குறிக்கப்பட்ட துறைகள் மறவரது மறத்தினைப் புலப் படுத்துஞ் சிறப்பினவாக அமைந்துள்ளனவே யன்றி எவ்வகையானும் வழுவாதல் இல்லை என்பது இங்கு மனங்கொளத்தகுவதாகும். மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமாகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறுதல் போன்று, குறிஞ்சிப் புறமாகிய இத்திணையும் நிரைகோடலும் நிரைமீட்டலுமாகிய இருவேறு தொழில் குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறும் என்றும், அவ்விரு வகையுள் நிரைகோடற் பகுதியை விரித் துரைப்பது படையியங்கரவம் எனத் தொடங்கும் சூத்திரம் என்றும், நிரைமீட்டற் பகுதியை விரித்துரைப்பது வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் இச்சூத்திரம் என்றும் இளம்பூரணர் கூறிய கருத்துரைப் பகுதிகள், புறத்திணை ஏழெனக் கொண்ட தொல்காப்பியனார் கொள்கைக்கும் புறத் திணை பன்னிரண்டெனப் பகுத்த பன்னிருபடல முதலிய பின்னூலார் கொள்கைக்கும் இடையேயமைந்த தொடர்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம். வெறியாட்டயர்ந்த காந்தள் முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட துறைகளைப் பகுத்து எண்ணுமிடத்து, காந்தள், போந்தை வேம்பு, ஆர், வள்ளி, சழனிலை, உன்னநிலை, பூவைநிலை, ஆரமரோட்டல் ஆபெயர்த்துத்தருதல், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் எனப் பன்னிரண்டாகும். இவற்றுடன் அனைக்குரி மரபினது கரந்தை என்பதனையும் இருவகைப்பட்ட பிள்ளை நிலை, பிள்ளையாட்டு என்னும் இரண்டினையும் கற்கோள் நிலை ஆறினையும் சேர்த்தெண்ணத் துறை எழு மூன்றாதல் காணலாம். இனி, அனைக்குரி மரபினது கரந்தை என்பதனை ஒரு துறையாகக் கொள்ளாமல் காந்தள்முதல் நெடுமொழி புணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட துறைகளின் தொகுப்பாக்கி, வருதார்தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையினையும் இரண்டு துறைகளாக எண்ணி எழு மூன்றாக்கினும் அமையும். போந்தை சேரமன்னர்க்குரிய பூ. வேம்பு பாண்டியர்க்குரிய பூ. ஆர் (ஆத்தி) சோழர்க்குரிய பூ. நிரைகோள் கேட்டவழி நெடுநில வேந்தரும் கதுமென எழுவராதலின் நிரைமீட்டலின் கண் பூப்புகழப்பட்டது என்பர் இளம்பூரணர். பூவை நிலை யென்பது காட்டகத்து மலர்ந்த காயாம்பூவின் மலர்ச்சியைக் கண்டு மாயோனிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச்செல்வோர் அப்பூவையைக் (காயாம் பூவைக்) கண்டு கூறுதல், எனவும், உன்னம் கண்டு கூறினாற் போல இதுவும் ஓர் வழக்கு எனவும், இஃது உரையன் றென்பர் மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை என்ப எனவும் துறைவிளக்கங் கூறுவர் இளம்பூரணர். பூவைப்பூ மேனியாகிய மாயோனை ஞாலங்காவல் பற்றி மன்னரொடு உவமித்தலே பூவைநிலை என விளக்குவர் மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின்...jhth விழுப்புகழ் பூவைநிலை என்றார் தொல்காப்பினார். மேய---மேவிய; மேவுதல்---பொருந்துதல்; உவமையாக இயைதல். மன்பெருஞ் சிறப்பு---மன்னர்க்கு உளதாம் பெருமை வாய்ந்த நாடு காத்தற் சிறப்பு. மன் எனப் பொதுப் படக் கூறிய அதனான் நெடுநில மன்னர்க்கும் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். கோவா மலையாரம் என்பது முதலாக வரும் சிலப்பதிகாரப்பாடல்களும், திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே யென்னும் அருளிச் செயலும் தொல்காப்பியனார் சுட்டிய பூவை நிலையென்னுந் துறையினை அடியொற்றியமைந்தனவாகும். இனி, மாயோனொடு உவமித்த லேயன்றிப் பிற தேவர்களோடு உவமித்தலையும் பூவை நிலையின்பாற்படுத்தல் தொன்றுதொட்டு வரும் புறத்திணை யிலக்கிய மரபாகும் என்பது, ஏற்றுவலன் உயரிய (புறம்-56) முதலாக வரும் சங்கச் செய்யுட்களால் இனிது புலனாகும். நிரைகோடலும் நிரைமீட்டலும் இருவேறு வினை களாயினும் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் களவின் ஒருங்கு கூடி நிகழ்த்தும் குறிஞ்சித்திணை ஒழுகலாறு போல, ஒத்த தறுகண்மை யாளராகிய வெட்சி மறவர் என்னும் இருதிறத்தாரும் ஒரு காலத்து ஒருங்கு கூடி நிகழ்த்தும் போர்ச் செயலாதலின் இவற்றை வெட்சித்திணையென ஒரு திணை யாகவே கொள்ளுதல் வேண்டும் என்பது தமக்கு முற்பட்ட தமிழியல் நூலோர் துணிபாதலின் நிரைகவர்தலும் நிரைமீட்டலும் ஆக உடனிகழும் இப்போர்ச் செயல்கள் இரண்டினையும் வெட்சி என ஒரு திணை யாகவே கொண்டார் தொல்காப்பியனார். குறிஞ்சிப் புறனாய் வெட்சியில் அடக்கப் பெறும் நிரைமீட்டற் பகுதிக்குரிய துறைகள் பலவற்றையும் சூடும் போர்ப்பூவினால் அனைக்குரி மரபினதுகரந்தை என ஒன்றாக அடக்குவர் தொல்காப்பியர். இவ்வாறு வீரர்கள் வெட்சியும் கரந்தையும் சூடி இருதிறத்தினராகப் பொருதல் கருதிப் பன்னிருபடல நூலாசிரியர் நிரைகோடற் பகுதியாகிய துறைகளை வெட்சி யெனவும் நிரைமீட்டற் பகுதியாகிய துறைகளைக் கரந்தைத் திணையெனவும் இருவேறு திணைகளாக அமைத்துக் கொண்டனர் நிரைகோடல், நிரைமீட்டல் இவை ஒன்றற்கு ஒன்று மாறாய் நிகழ்தல் கருதி வெட்சியுங் கரந்தையும் தம்முள் மாறே என்ற இலக்கணக் கொள்கையும் பிற்காலத்தில் தோன்றி நிலை பெறுவதாயிற்று. நிரைமீட்டலைக் கரந்தை எனத் தனித்திணையாகக் கொண்ட புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர், கரந்தை யரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்தொழிதல், ஆளெறிபிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப்பெயர்ச்சி, வேத்தியல் மலிபு, குடிநிலை எனப் பதின் மூன்றும் கரந்தைத் திணைக்குரிய துறைகளாகக் குறித்துள்ளார். இத்துறைகளுள் ஆளெறிபிள்ளை, பிள்ளைத்தெளிவு, பிள்ளை யாட்டு, பிள்ளைப்பெயர்ச்சி என்பன தொல்காப்பியனார் குறித்த வருதார்தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளைநிலை, வாண்மலைந்தெழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டு என்னும் துறைப் பெயர்களை அடியொற்றியமைந்தனவாகும். தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் என்னுந் தொல் காப்பியத் தொடரினை அடியொற்றியமைந்தது, நெடுமொழிகூறல் என்னும் துறையாகும். வெண்பாமாலை போர்க்களத்தொழிதல் என்ற துறை தொல்காப்பியம் கூறும் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்ற துறையில் அடங்கும். தொல்காப்பியத்தில் மறங்கடைக் கூட்டிய குடிநிலை என்ற பாடத்தை யொட்டியமைந்தது, புறப்பொருள் வெண்பாமாலை கூறும் குடிநிலை என்ற துறையாகும். சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் என்ற தொல்காப்பியத் தொடர் பொருளைத் தழுவியமைந்தது வேத்தியன் மலிபு என்னும் துறையாகும். கரந்தையரவம், அதரிடைச் செலவு என்பன, முறையே படையியங்கரவம், புடைகெடப் போகிய செலவு எனவரும் நிரைகோடற்பகுதியாகிய வெட்சித் துறைகளை நிரைமீட்டற்கும் உரியவாக அமைத்துக்கொள்ளப் பெற்றனவாகும். போர் மலைதல், புண்ணொடு வருதல், கையறுநிலை என்பன பன்னிருபடலமுடையார் தாமே புதியனவாக அமைத்துக் கொண்ட துறைகளாகும். பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினரா லெனின், புண்படுதல் மாற்றார் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு (தொல்காப்பியர்க்கு) மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலான் உய்த்துணர்ந்து கண்டு கொள்க எனப் பன்னிரு படலமுடையார் புதியனவாக வகுத்துக் கொண்ட சில துறைகளின் அமைப்பினை மறுத்துரைப்பர் இளம்பூரணர். 6. வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா *மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே. இளம் : இது வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வஞ்சி முல்லையது புறன் - வஞ்சியாகிய புறத் திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாம், எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்று-அஃது ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது. ஒழியாத மண்ணை நச்சுதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை. அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக்கிளப்பின் (புறத். 1) என்பதனைக்கொணர்ந்து உரைத்துக் கொள்க. இவ்வுரை இனி வருகின்றதிணைக்கும் ஒக்கும்.1 அதற்கு இது புறனாகியவாறு என்னையெனின், மாயோன் மேய காடுறை யுலகமும் (அகத். 5) கார் காலமும் முல்லைக்கு முதற்பொருளாதலானும், பகைவயிற் சேறலாகிய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டுதலானும் பருமரக் காடாகிய மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததென்க.2 அன்னவுரைகள் முல்லைப்பாட்டினுள், கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில் சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி (முல்லைப். 24-28) என்பதனாலும் அறிக. வஞ்சி தானே முல்லையது புறனே. நச் : இது, தம்முண் மாறுபாடு கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றோ னொருவன் ஒருவன் மேற்செல்லும் வஞ்சித்திணை1 அகத்திணையுள் இன்னதற்குப் புறனா மென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர்மே லொருவர் சேறலை. அதற்கு வஞ்சி சூடிச் சேறலும் உலகியல். (இ-ள்) வஞ்சி தானே---வஞ்சியெனப்பட்ட புறத்திணை; முல்லையது புறனே---முல்லை யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு. ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை. பாடாண்டிணைக்குப் பிரிதலின்மையிற் பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (தொ-பொ-புற---24) என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடுறையுலகமுங், கார் காலமும், அந் நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக் கட் டலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்து மனைவயி னிருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின் வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல்பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம் முதல் கரு வுரியும் வந்தனவாம். முல்லைப்பாட்டினுட், கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி (பத்துப்-முல்லைப்: 24-28) என்பதனா னுணர்க. 6-(8) எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்திணை இன்ன பொருட் டென்கின்றது. (இ ள்.) எஞ்சா மண் நசை---இருபெருவேந்தர்க்கும் இடை யீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலைச் சென்று---ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந்நாட்டி டத்தே சென்று: வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று---ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல் குறித்தன் மாத்திரைத்து வஞ்சித்திணை என்றவாறு. ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம் மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசை யான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென் றுணர்க. எதிர் சேறல் காஞ்சி என்பரா லெனின், *காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க.1 ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும்.2 அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம். இங்ஙனம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற் கூறுந் துறை பதின் மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென்றுணர்க.3 (7) பாரதியார் கருத்து :--- இது வஞ்சிப்புறத்திணை முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனாம் என்கின்றது. பொருள் :--- வெளிப்படை. குறிப்பு :--- முதலேகாரம் பிரிநிலை, புறத்திணை ஏழனுள் வஞ்சியைப் பிரித்தலின் ஈற்றேகாரம் இசைநிறை அசை எனினும் அமையும். (1) அகத்தில் தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் அல்லது வினைமேற் செல்வதுபோல, வஞ்சித் தலைவனும் தலைவியைப் பிரிந்து பகைமேற் செல்லுதலானும். (2) முல்லையிலும் வஞ்சியிலும் தலைவரைப் பிரிந்த தலைவியர் தனிமை தாங்காது வருந்திக் கற்பறம் பேணி யிருப்பது பொது ஒழுக்கமாதலானும், (3) முல்லைத் தலைவர் தம் புலம்புறு தலைவியரைப் பிரிந்து செலவு மேற்கொள்வது மனையறம் பேணும் கடனிறுக்கும் பொருட்டாதல் போலவே வஞ்சித்தலைவர் மேற்செலவும் ஆண்மையறம் பேணும் பொருட்டாதலானும், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. 6-(8) கருத்து :--- இது, முல்லைக்குப் புறன் என்ற வஞ்சித் திணையின் இயல்பை விளக்குகின்றது. பொருள் :--- எஞ்சா மண்ணசை வேந்தனை---தணியாத பிறர் மண் ஆசையுடைய ஒரு வேந்தனை; வேந்தன்---(அறமற முடைய) பிறிதொரு மன்னன்; அஞ்சு தகத் தலைச் சென்று---அவன் வஞ்சநெஞ்சம் அஞ்சுமாறு தானே (படையொடு) மேற்சென்று; அடல் குறித்தன்று---வென்றடக்குதலைச் சுட்டும் அளவிற்று வஞ்சித் திணை. குறிப்பு :--- இச்சூத்திரத்திற்கு முன்னுரைகாரர் வேறு வகையாய்ப் பொருள் கூறுவர். அவர் உரை வருமாறு :--- எஞ்சா மண்ணசை---இரு பெரு வேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே, அஞ்சுதகத்தலைச் சென்று---ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதல் உண்டாக அந்நாட்டிடத்தே சென்று வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று---ஒரு வேந்தனை ஒரு வேந்தன். கொற்றம் கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித் திணை என்றவாறு; அதற்குமேல் அவர் தரும் சிறப்புரையாவது :--- ஒருவன் மண்ணசையானே மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமல் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின், இவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என்றுணர்க;1 இவருரை, சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு, வஞ்சியியல்பை இழிதகுபழிதரும் பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது. எஞ்சா மண்ணசை என்ற தொடர் அதை அடுத்து நிற்கும் வேந்தனை என்னும் இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையாயமைவது வெளிப்படை. அவ்வளவிற் கொள்ளாமல் அத்தொடரைப் பின் வரும் வேந்தன் என்னும் எழுவாய்ச் சொல்லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகுமென இவ்வுரைகாரர் விளக்குகின்றார். மன்னர் போர் கருதிப் படை யெடுப்பதன் நோக்கமெல்லாம் பிறர்மண் கவரும் வேட்கைதான் எனும் கொள்கை நாகரிக உலகம் மதிக்கும் போரறமழித்துப் பழிக்கிடனாக்கும். தக்க காரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார் மண் வேட்கையாலே படையெடுத்துச் சென்று வென்று கவர்தலே வஞ்சித்திணை எனக்கூறுவது உயர்ந்த பழந்தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத்தகும் பிழையாக்கி முடிப்பதாகும். வலிச்செருக்கால் மெலியார் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்டேனும் அதனை வெறுத்து விலக்குவதை விட்டு வேத்தியல் அறமாக்கி வஞ்சி யொழுக்கமெனச் சிறப்பித்து ஒரு திணை வகையாக்குவது, அறனறிந்து மூத்த அறிவுடைய தொல்காப்பியர் நூற்பெருமைக் கிழுக்காகும். அஃது அவர் கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிக்கின்றது. இச்சூத்திரத்தில் எஞ்சா மண்ணசை யாலிரு வேந்தர் என்னாமல் எஞ்சா மண்ணசை வேந்தனை என்றமைத்ததால் முன்னுரைகாரர் பொருள் தொல்காப்பியர் கருத்தன்று என்பது தேற்றமாகும். படையொடு பிறர்மேற் செல்லுதற்கு மண்ணசையே நோக்கமாயின் அது உயரொழுக்கமாகாமல் துன்பம்தவா அதுமேன்மேல் வரும் இழுக்காகும். இனி, மண்வேட்கையால் தன் மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளா விருப்பது ஆண்மையற மழிப்பதாகும். அதனால் தன்னாட்டின் மேல் தணியாத வேட்கையுடைய அறமற்ற அயல் மன்னன் வலி பெருக்கித் தன்மேல் வருமுன்னமே தக்க படையொடு தான் சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அது செய்யானை எஞ்சா மண்ணசை யுடையான் வஞ்சத்தால் வலி மிக வளர்ந்து வாய்த்தபோது வந்து தடிவனாகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடை யானை வென்றடக்கி ஆண்மையற மாற்றுதல் போற்றத்தகும் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கமே பழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை, அதனையே இச்சூத்திரம் விளக்குகின்றது இளம்பூரணரும் அதுவே தொல்காப்பியர் கருத்தாகக்கொண்டு இச்சூத்திரத்திற்கு ஒழியாத மண்ணைநச்சுதலையுடைய வேந்தனை வேறொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித்தது என்று நேரிய உரை கூறுகின்றார். இச்செம்பொருள் சூத்திரச் சொற்கிடனாகையால் தெளிவாகவும் அதைக் கொள்ளாமல், எஞ்சா மண்ணசையைப் படையெடுத்துச் செல்லும் வஞ்சி வேந்தனுக்கு ஏற்றிக் கூறினது அறங்கருதாமறம் பேணி அயலார் மண்ணிலாசை வைத்துப் போர் மேற் கொள்ளுவதைப் போற்றத்தகும் மன்னர் ஒழுக்க மெனப் பேசும் ஒரு சில வடநூற் கூற்றைப் பண்டைத் தமிழரின் இழுக்கறு போரற ஒழுக்கம் விளக்கும். இப்புறத்திணைச் சூத்திரக் கருத்தாகக் காட்ட முயலும் விருப்பின் விளைவாகும். இவ்விருப்புக் காரணமாக இடைக்கால உரைகாரர் படைத்துக் கூறும் குறிப்புரையில் ஒவ்வாத முரண்பாடுகள் மலிவதும் இயல்பாகும். அல்லதனை நல்லதெனச் சொல்லவரும் அல்லல்களுக்கெல்லையில்லை என்பதன் உண்மையை இவர் சிறப்புரைச் செய்திகள் வலியுறுத்துகின்றன. தணியாத மண்ணசையால் மெலியார் நாட்டை வலியார் வௌவுவது மன்னறமென்னும் ஆரியக் கொள்கையே வஞ்சித் திணையெனக் காட்டப் புகுந்து, அதை நாட்டஎழுதும் சிறப்புரையில் எழுகின்ற இடர்ப்பாடுகளைக் கருதுகின்றிலர். 1. முதலில், படையொடு செல்லும் வேந்தனை மெலியார் மண்ணில் எஞ்சா நசையால் வஞ்சி சூடினான் எனக் கூறி அவனைத் தவறுடையனாக்குங் குற்றம் மேலே குறிக்கப்பட்டது. 2. இனி, எஞ்சா மண்ணசை எனும் தொடரை நின்றாங்கே அதை அடுத்த வேந்தனை எனும் செயப்படு பொருளாகிய இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்காக்காமல். அதைத் தாண்டிப் பின்வரும் வேந்தன் எனும் எழுவாய்ச்சொல்லுக்கு அடையாக்கிப் பிறர் மண்ணாசையே போரற நோக்கம் எனும் ஆரியக் கொள்கையைப் புகுத்தலாயினர். எனின், மூலத்தில் எஞ்சா மண்ணசைவேந்தனை எனச் சொற்றொடர் நிற்பதால், மண்ணசையைப் படைஎடுக்கப்படும் வேந்தனுக்கு அறவே யில்லாமல் விலக்குமாறில்லை. வலிதிற்றம் நாட்டை வௌவவரும் பிற வேந்தனைத் தன் மண்காக்க அதற்குரியான் எதிர்ப்பது இயலறமாகவும் அவ்வாறு எதிர்க்கும் அவன் தற்காப்புமுயற்சியும் மண்ணசை காரணமான வஞ்சியாகும் என இவ்வுரைகாரர் தம் சிறப்புரையில் வற்புறுத்தினார். இதிலெழும் முரண்பாடுகளை அவர் கருதுகிலர். படையொடு வந்த பகை வேந்தனை எதிர்த்துத் தன் மண் காப்பது அறமென்று கூறும் இவரே அத்தற்காப்புப் போர் முயற்சியும் மண்ணசையால் மேற்செரும் வஞ்சியாம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? தன்னாடு கவரவரும் பகைவனை எதிர்ப்பது அறக் கடனாகு மன்றி மண்ணாசைக் குற்றமாகாதன்றே. பிறர்மண் வேட்கையைக் குற்றமெனக் கொள்ளாமல் மன்னருக்கு நல்லறமென்று சொல்லப் புகுவதால், இவ்வாறு வந்த பகைவனை எதிர்க்கும் தற்காப்பறப்போரையும் மண்ணசைப் போரென முறைமாறிக் கூற நேர்ந்தது. 3. மேலும் தன் நாடு கவர வந்தானைத் தற்காப்பின் பொருட்டுத் தகைப்பதை வஞ்சியெனக் கூறினதுமன்றி, மேற் சென்றானையும் எதிரூன்றினானையும் ஒருசேர வஞ்சித் தலைவராக்கினர். இது, வஞ்சி---மேற்செலவு எனத் துணிந்த தமிழ் இலக்கணத்தையே தடுமாறச் செய்யுந் தவறாகும் வலிகருதி வந்த மாற்றானை எதிர்த்து மலைதல் வஞ்சியாகாமல் வேறு தும்பைத் திணையாகும் எனத் தொல்காப்பியர் தெளியக் கூறு வதற்கு இவர் கொள்கைமுழுதும் முரணாகும். தும்பைதானே மைந்துபொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப இது தொல்காப்பியர் தரும் தும்பைத் திணைவிளக்கம். எனவே, பிறர் நாட்டின் மேற் செல்லுதலே வஞ்சித்திணையென் பதும் அப்படி வரும் மாற்றானை எதிர்சென்று மலைதலே தும்பைத்திணையென்பதும்2 தமிழர் புறத்திணை மரபுகள் என்று தொல்காப்பியர் ஐயமற விளக்கியுள்ளார். இத்தகைய போரறச் சிறப்பு முறையைப் போக்கிப் பொருந்தா ஆரிய முறைகளைப் புகுத்திப் புத்துரை கூற முயன்றதால் வந்த முரண் பாடுகள் இவை. இன்னும் இத் தும்பைவிளக்கம் வஞ்சியியல்பைத் தெளிப்பதற்கு ஒருவாறு உதவுகின்றது. மேற்செல்லும் வஞ்சி வேந்தனுக்கு வஞ்சித்திணைச் சூத்திரத்தில் அடை எதுவும் சுட்டப்படவில்லை. அதற்கு மாறாக மண்ணசையுடைமை படையெடுக்கப்படும் வேந்தனுக்கு அடையாகக் குறிக்கப்பட்டது. அடுத்த தும்பைத்திணைச் சூத்திரத்தில் மேல் வந்த வேந்தன் படை எடுப்புக்கு மண்ணசை நோக்கம் சிறிதும் சுட்டப்படாத தோடு, படையெடுக்கப்படும் மண்ணசைவேந்தனைப் பொரு தடக்கும் வலியுடைமை ஒன்றே தக்க காரணமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. மண்ணசையால் வந்த வேந்தன் என்னாது, வாளா வந்த வேந்தன் என முன் கூறியதனோடமை யாது, மைந்து பொருளாக வந்த வேந்தனை என்று தும்பைச் சூத்திரம் நோக்கம் தெளிப்பதினால், வஞ்சி வேந்தனின் பழுதற்ற போர் நோக்கம், பிறர் மண்ணசையன்று, அடுத்திருந்து மாணாது செய்வான் பகை, கொடுத்தும் கொளல் வேண்டு தலின், மண்ணசையுடைய வேந்தன் ஒருவனைப் பொருதடக்கும் வலியேயாம் என்பது விளக்கமாகும். முன்னுரைகாரர் கூறுமாறு மேற்செலவுக்கு மண்ணசையைக் காரணமாக்குவது தொல் காப்பியர் கருத்தாமேல் வஞ்சிக் சூத்திரத்தில் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை கூறாததோடு, மீண்டும் தும்பைத்திணைச் சூத்திரத்திலும் அவனுக்கு மண்ணசை சுட்டாது மைந்து பொருளாக என வேறு ஒரு குறிப்புக் கூறியிராரன்றே. இவ்விரு சூத்திரங்களிலும் தொல்காப்பியர் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை நோக்கை விலக்கிப் படையெடுக்கப் படுபவனுக்கே அக்குற்ற முடைமை சுட்டியிருப்பதால், மண்ணசையை மன்னர் போரற நோக்கம் ஆக்குவதை மறுத்து வெறுக்கும் தமிழ் மரபே வலியுறுகிறது3 ஆய்வுரை நூற்பா 6 இது வஞ்சித்திணையின் இலக்கணங்கூறுகின்றது. (இ-ள்) வஞ்சியாகிய திணை முல்லை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய பகை வேந்தனை மற்றொரு வேந்தன் அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சென்று பொருது அழித்தலைக் குறித்தது அவ்வஞ்சித்திணையாகும். எ-று. அளவுகடந்த மண்ணாசையுடையனாய்ப் பிறரது மண்ணைக் கவர்ந்து கொள்ளச் சோர்வு பார்த்திருக்கும் பகைமன்னன் தன்மேற் படையெடுத்து வருதற்கு முன்பே அவன் நடுக்கமுறும் படி அவனை வென்றடக்குதற்கு ஏற்ற காலம் இடம் வலி முதலியவற்றை யெண்ணி அவனது நாட்டின்மேற் போர்கருதிப் படையுடன் மேற் சேறல் நாடாள் வேந்தனது கடமையாதலால் எஞ்சா மண் நசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடுதலைக் குறித்தது வஞ்சித்திணை என்றார் தொல் காப்பியனார். காடுறையுலகமாகிய முல்லை நிலமும் கார்காலமும் ஆகிய முதற்பொருளும், அந்நிலத்திற்குரிய கருப்பொருளும். வேந்தன் தலைவியைப் பிரிந்து பாசறைக்கண்ணே தங்கியிருத்தலும் தலைவி தலைவனைப் பிரிந்து மனைக்கண் தங்கியிருத்தலும் ஆகிய உரிப்பொருளும் ஒத்தலால் வஞ்சி என்னும் திணை முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று. முல்லைப்புறம் மண்ணசையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவுபுரிதலான் அவ்விருபெரு வேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சி என ஒரு குறிபெறும் என இளம்பூரணரும், ஒருவன் மண்ணசையால் மேற் சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உள தாகலின் அவ்விருவரும் வஞ்சி வேந்தராவரென்றுணர்க என நச்சினார்க்கினியரும் கூறுவர். இவ்விளக்கம் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை வஞ்சித்திணை யாவது இது வென விளக்கவந்த ஆசிரியர், எஞ்சாமண்நசை வேந்தனை, மேற் சென்று வேந்தன் அடுதல் குறித்தது என ஒருவனது வினையாகவே கூறுதலால், இருபெரு வேந்தருள் மேற்செறலாகிய வஞ்சியொழுக் கத்திற்குரியவன் ஒருவனே என்பதும் மண்ணாசையுடைய மாற்றானாகிய வேந்தன் அஞ்சும்படி அவன் மேற்படையெடுத்துச் செல்லுதலாகிய வேந்தனொருவனது படையாளர் மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சியே இங்கு வஞ்சித்திணையெனக் குறிக்கப்பட்டதென்பதும் நன்கு புலனாகும். எஞ்சா மண்நசையாவது, தனது நாட்டின் எல்லையள வினைக் கடந்து பிறவேந்தரது நிலத்தினைத் தானே கவர்ந்து கொள்ளுதல் வேண்டும் என எண்ணும் தவிராத பேராசையாகும். எஞ்சாமை---ஒழியாமை; குறையாமை. நசை---விருப்பம். எஞ்சா நசை என்பது ஒழியாத பேராசை என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றது. மேற்செலவுக்கு இலக்காகிய வேந்தனை எஞ்சா மண்ணசை வேந்தன் என அடைமொழி புணர்த்தும் அவன்மேற் படையெடுத்துச் செல்லும் வேந்தனை வேந்தன் என அடை மொழியின்றிக் கூறியது, மண்ணசையாளன் கொண்டுள்ள மண்ணசை அவன்மேற் படையெடுத்துச்செல்லும் இவ்வேந்தனது நிலத்தைக் குறித்ததே என்பதனையும், இவன் அவன்மேற் படையெடுத்துச் செல்லுதலின் நோக்கம் அவன் தனது நாட்டினைப் பற்றுதற்கு முன்னரே அவனது பேராசையினை ஒழித்துத் தான் அவனை அடக்குதலே என்பதனையும் புலப் படுத்தும் குறிப்பினதாகும். 7. இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல் வயங்கல் எய்திய பெருமை யானும் கொடுத்தல் எய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருள்இன்று உய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியோடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே. இளம் : இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.1 (இ-ள்.) இயங்குபடை அரவம் முதலாகத் தழிஞ்சியொடு கூடச் சொல்லப்பட்ட பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்ற வாறு. பெருமை யானும் என்பது முதலாக வந்த ஆன் எல்லாம் இடைச்சொல்லாகி வந்தன. இயங்குபடை அரவம் எரிபரந் தெடுத்தல் என்பதன்கண் உம்மை தொக்கு நின்றது.2 படை இயங்கு அரவம் - படையெழும் அரவம். எரி பரந் தெடுத்தல்-(பகைவரது நாடு) எரிபரந்து கிளர்தல். வயங்கல்3 எய்திய பெருமையும் - விளக்கம் எய்திய பெருமையும், கொடுத்தல் எய்திய கொடைமையும் - கொடுத்தலைப் பொருந்திய கொடைமையும். அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றமும்-பகைவர் பலரையும் அடுத்து மேலிட்டுக் கொன்ற கொற்றமும். மாராயம் பெற்ற நெடு மொழியும்-மாராயமாகிய உவகை4 பெற்ற நெடிய மொழியும். பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்கமும்-பகைவரைப் பொருளாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கமும். விசைவரு புனலைக்5 கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமையும்-விசை கொண்டுவரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல ஒருவன் தாங்கிய பெருமையும். பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்-திரட்சி பொருந்தின பெருஞ்சோற்று நிலையும். வென்றோர் விளக்கமும்-வென்றோர் மாட்டு உளதாகிய விளக்கமும். தோற்றார் தேய்வும்-தோற்றோர் தேய்வு கூறுதலும். குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்-குறைவுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடைய கொற்றவள்ளையும். கொற்றவள்ளை - தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை6 உதாரணம் வந்துழிக் காண்க. அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு7 தொகைஇ - மாற்றார் விடுபடைக்கலன் முதலியனவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளன் அழிந்தோர்ப் பேணித்தழுவிக்கோடலொடு தொகுத்து எண்ணின். இத்துணையும் கூறப்பட்டது வஞ்சி. உரவரும் மடவரும் அறிவுதெரிந்து எண்ணி அறிந்தனை அருளார் ஆயின் யாரிவண் நெடுந்தகை வாழு மோரே (பதிற்றுப். 71) என்பதும் இதன்கண் அடங்கும். இது முதுமொழி வஞ்சி.8 கழி பெருஞ் சிறப்பின் பதின்மூன்று துறை - மிகப் பெருஞ் சிறப்பையுடைய பதின் மூன்று துறைத்தாம். வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்த ஏனைய வெல்லாம் இரு திறத்தினர்க்கும் பொதுவாக நிற்றலின் கழி பெருஞ் சிறப்பெனக் கூறினார்.9 இன்னும் கழிபெருஞ்சிறப்பின் என்றமையின், பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவைபற்றியன துணைவஞ்சி.10 நீயே புறவின் அல்லல் (புறம். 46) வள்ளியோர்ப் படர்ந்து (புறம். 47) என்னும் புறப் பாட்டுக்களில் காண்க. பிறவும் அன்ன. நச் : இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று துறைத் தென்கின்றது. (இ-ள்.))இயங்கு படை அரவம்---இயங்குகின்ற இருபடை யெழுச்சியின் ஆர்ப்பரவமும்; எரிபரந்து எடுத்தல்---இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்; இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க.1 இவை கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுந் துறையாய் வருதலின், எரிபரந் தெடுத்தற்கும் உதாரணமாயின.2 வயங்க லெய்திய பெருமையானும்3---ஒருவர் ஒருவர்மேற் செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாயவழி அவர் விளக்கமுற்ற பெருமையும்; கொடுத்தல் எய்திய கொடைமையானும்---மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழிலும்; அடுத்து ஊர்ந்து அட்டகொற்றத்தானும்4---எடுத்துச் சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி அந்நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றமும், என்னும் பதிற்றுப்பத்தும்5 அழிவு கூறிய இடம் அப்பாற் படும். மாராயம் பெற்ற நெடுமொழியானும்---வேந்தனாற் சிறப்பெய்திய அதனாற், றானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக்கூற்றுச் சொல்லும்; சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம் முற்கூறியது6 படைவேண்டிய வாறு செய்க என்றது. இஃது7 அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது. உதாரணம் :--- போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ---போர்க்கெல்லாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன். இது பிறர் கூறிய நெடுமொழி. துடி யெறியும் புலைய வெறிகோல் கொள்ள மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல்பிறழினும் பொலம்புனை யோடை யண்ணல் யானை யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு மோடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மன்ற னன்று முயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால் வம்ப வேந்தன் றானை யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே. (புறம்-287) இது தண்ணடை பெறுகின்றது. சிறிது சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது8 போர்க்களம் புக்கு நெடு மொழி கூறலும் ஈண்டு அடக்குக. பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்---பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்; உதாரணம் :--- மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யினையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச் சிதர்ந் தனையதன் வேறிரித் திட்டு நகுதலு நகுமே. இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதி யாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது. பல்சான் றீரே பல்சான் றீரே................................................... வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே. (புறம்-301) இதுவு மது. வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்9---தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசையோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினார்போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்: உதாரணம் :--- கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யேர்தரு தோணோக்கி---தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும் (தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-881) என வரும். இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது. வேந்துடைத் தானை முனைகெட நெரிதலி னேந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பொருங்கடற் காழி யனையன் மாதோ (புறம்-330) என்பதும் அது. வருகதில் வல்லே என்னும் (287) புறப்பாட்டும் அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க.10 பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலையும்---வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று தானே போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த11 உண்டியைக் கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும்; உதாரணம் :--- கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெரும்பு மூசா லிறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வோடாப் பூட்கை யொண்பொழிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்தேநின் றழங்கு குரன் முரசே (பதிற்றுப். 30) என வரும். இது பதிற்றுப்பத்து. துறை எனவே12 கள்ளும் பாகும் முதலியனவும் அப் பாற்படும்.13 வென்றோர் விளக்கமும்---அங்ஙனம் பிண்டமேய இரு பெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற் நிறைகொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறலும்; தோற்றோர் தேய்வும்---அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு கூறுதலும்; குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்14---வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக்கூறும் வள்ளைப்பாட்டும்; வள்ளை, உரற்பாட்டு, கொற்றவள்ளை15 தோற்ற கொற்றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர். அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ---அங்ஙனம் வென்றுந் தோற்றும் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண் டழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியுந் தழுவிக்கோடலுடனே முற்கூறியவற்றைத் தொகுத்து; படைதட் டழிவோர் என்று மாறுக.16 தழிச்சுதல் தழிஞ்சியாயிற்று; பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின் என்றாற் போல. கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே---மிகப் பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் என்றவாறு வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தனவெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பென்றார்.17 இனி இயங்குபடையரவமெனவே இயங்காத வின் ஞாணொலி முதலியனவுங் கொள்க. இத்திணைக்கும் பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப் படுதலுங்கொள்க. அவை :--- கொற்றவை நிலையும், குடைநாட் கோளும், வாணாட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவைபோல்வன பிறவும் இயங்கு படையரவமாய் அடங்கும்.18 நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரைகொண்டோர்க்கும் நிரைகொள்ளப்பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுதலிற் குடை நாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறாராயினார். அவை உழிஞைக்குக் கூறுப அதற்கு இன்றியமையாமையின. இனித் துணைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய பாசறைநிலை1 கூறலும். அவர் வேற்றுப்புலத்திருத்தலின் ஆண்டு வாழ்வோர் பூசலிழைத்து2 இரிந்தோடப் புக்கிருந்த நல்லிசை வஞ்சி3 முதலியனவும் வயங்கலெய்திய பெருமைப் பாற்படும்.19 துணைவேண்டாச் செருவென்றி நாடகவழக்கு;20 துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும் (46) என்னும் புறப்பாட்டும் வள்ளியோர்ப் படர்ந்து (47) என்னும் புறப்பாட்டும் முதலியன துணைவஞ்சி என் பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண் டிணை யெனப்படு மென்றுரைக்க.21 இனி மேற்செல்வான் மீண்டு வந்து பரிசில் தருமென்றல் வேத்திய லென்றாகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற்றோடு கூறினார். இனிக் கடிமரந்தடிதலும், களிறும் மாவுந் துறைப்படி வனவற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின்பாற்படும். அவை கருவூரிடைச் சேரமான் யானையை யெறிந்தாற் போல்வன.22 இனிப் புண்பட்டோரை முன்னர்ச்செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வனபோல்வனவுந் தழிஞ்சிப் பாற்படும். இதனை முதுமொழிவஞ்சி என்பர்.23 ஆண்டுக் கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை அழியுநர் புறக்கொடை அயில்வா ளோச்சாக்---கழிதறு கண்மை (புற-வெ-மாலை. வஞ்சி-20) யெனின், அஃது ஒருவன்றாங்கிய பெருமைப் பாற்படு மென்றுணர்க.24 இச் சூத்திரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். இது செவ் வெண் உம்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது. இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபுகொடுத்து அதற் கேற்பப் பொருள் கூறலும் ஒன்று. (8) பாரதியார் கருத்து :--- இது வஞ்சித்திணையின் துறைவகையும் அவற்றின் தொகையும் கூறுகின்றது. பொருள் :--- இயங்குபடை யரவம்---போர்மேற் செல்லும் தானையின் ஆர்ப்பும்; (முன் வெட்சித்திணைத் துறையாய்க் குறிக்கப்பட்ட நிரை கவர விரையும் படை யியங்கரவத்தின் வேறாய், போர்மேற் செல்லும் தானையின் ஆரவாரம் இதில் கூறப்பட்டது. வெட்சியிலா கோள் களவில் நிகழ்வதாகலின், ஆர்த்துமேற் செல்வதற்கேற் புடைத்தன்று; அதனாலாங்கு வேந்துவிடு முனைஞரின் கரவியக் கத்தியலரவங் குறிக்கப் படை யியங்கரவம் எனப்பட்டது. போர்க் கெழுமாதலின் படை அரவமெனவும் ஆர்த்துப் போர்க் கெழுமாதலின் படை அரவமெனவும், அது போரார்ப்பின் வேறாதலின் இயங்குபடையரவ மெனவும் விளக்கிய செல்வி வியத்தற்குரித்து.1) எரிபரந்தெடுத்தல்---வழியில் பகைப்புலத்தில் தம் செலவைத் தகையும் ஊர்களை நெருப்பிட் டழித்தலும்; வயங்கல் எய்திய பெருமையானும்---மேற்செல்வோர் வினை விறல்களால் விளங்கிய சிறப்பும்; கொடுத்த லெய்திய கொடைமையானும் தானை மறவர்க்குத் தக்காங்குப் பண்பறிந்து வரிசையின் வழங்கும் கொடைப் பெருமையும்; (பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கும் வள்ளன்மை வேறு; இங்குக் குறிக்கப்படுவது போர் வீரருக்கு மன்னர் வரிசை நோக்கி நாடு முதலிய நல்கும் பரிசேயாகும்) அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தானும்---எதிர்ப்பாரை முன்னேறிப் பொருதழித்த வெற்றியும். மாராயம் பெற்ற நெடுமொழியானும்---பெற்ற பரிசிற் பெருமிதத் தற்புகழ்ச்சியும். (மாராயம் என்பது வரிசையொடு பெற்ற பரிசு சுட்டும் நன்மதிப்பு. நெடுமொழி - தற்புகழ்ச்சி.) பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்---மாற்றாரை மதியாமல் எதிர்த்து ஊக்கிய மிக்க ஆண்மைத்திறமும். இப் புறப்பாட்டில், நெடுஞ்செழியன் இளம் பருவத்தில் பகை மன்னர் எழுவரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தாக்கிப் பொருது வென்ற ஆண்மைத் திறனை இடைக்குன்றூர் கிழார் புகழும் செவ்வி பாராட்டற் பாலது. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்---விரைந்து பெருகிவரும் வெள்ளத்தை அசையாமல் நின்று தடுக்கும் கல்லணை போல, எதிர்த்து மேல்வரும் பகைப்படையை அஞ்சாது ஒருவனாய்த் தனி நின்று தகைக்கும் வீறும்; பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும்---திரளைகளாக விரும்பியாங்கு மிக்க சோற்றைத் (தானையர்க்கு) வழங்கும் தகைமையும்; இச்செய்யுள்களுள் முன்னதில் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் செருப்புகன் மறவர்க்குப் பெருஞ் சோறுகுத்த பரிசு கூறப்படுகின்றது. மற்றச் சிலப்பதிகாரச் செய்யுளடிகள் செங்குட்டுவன் வஞ்சி சூடி வட வாரியர் மேற்சென்றபொழுது நிகழ்த்திய செய்திகளுள் தன் படைத்தலைவர்க்குப் பெருஞ்சோறு வழங்கிய சிறப்புச் சுட்டுதல் காண்க. வென்றோர் விளக்கமும்---சேரும் வழியில் நேரும் போர்களில்) கொற்றம் கொண்டோர் பொலிவும்; தோற்றோர் தேய்வும்---அவரால் அடப்பட்டோர் மெலிவும்; குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்---குறையாத சீருடைய தம் மன்னர் வெற்றிக்குப் புகழும், மாற்றார் தோல்விக்குப் பரிவும் குறித்து, மகளிர் பாடும் உலக்கைப்பாட்டும்; வள்ளை என்பது பெண்டிர் பாடும் உலக்கைப்பாட்டு; அதாவது தலைவனை வாழ்த்தி முருகனைப் பரசி, உலக்கைக் குற்றோடொத்துப் பெண்டிர் பாடும் பாட்டு; ஆடவர் முருகனைப் பாடும் வள்ளியின் வேறுபட்டது.2 இது முன் வெட்சித்திணைச் சூத்திரத்தின் கீழ் விளக்கப்பட்டது. அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ---பகைவரின் அழிவுதரும் படைக்கலன்களை எதிர்த்து மார் பேற்றுப் புண் கொண்ட மறவரைத் தழுவுதலுடன் கூட்டி; (அழிபடை-வினைத்தொகை; அழிக்கும் படையென விரியும். தட்டுதல், எதிர்த்தல் அல்லது மோதலாகும்; எனவே தட்டோர் என்பது பகைவர் படைகள் மோதி மார்பு புண் பட்டவர்.) இந்நெடுநல் வாடை ஈற்றடிகள் நெடுஞ் செழியன் பாசறையில் பொருது புண்பட்ட தன்படை மறவரை முக மலர்ச்சியுடன் பொருந்தப் பாராட்டித் தமராகத் தழுவும் பரிசு குறிக்கப்படுகின்றது. இனி, இதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, தளரும் தம் படையைப் பின் வாங்காது தடுத்தூக்கித் திறன் வியந்து தழுவுதலுடனே கூட்டி எனப் பொருள் கொள்ளினும் அமையும். இப் பொருளில் இத் துறைக்குச் செய்யுள் வருமாறு :--- அவர்படை வரூஉங் காலை நும்படைக் கூழை தாங்கிய அகல்யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றானை எனாஅ அரிதாற் பெருமநின் செவ்வி; பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே. ---புறம் 169, காரிக் கண்ணனாரின் இப் புறப்பாட்டடிகள் தளரும் தன் படையின் கூழை தாங்கி, வரும் பகைப் படையை வலிதொலைத்த பிட்டனின் பெருமையைக் கூறுகின்றன. இப் பொருளில் அழிபடை என்பது அழியும் படை என விரியும்; தட்டோர் என்பது தடுத்தோர் எனும் பொருளதாகும். அழிந்து புறங்கொடுத் தோடுபவர் மேல் படை தொடாத் தறுகண்மை தழிஞ்சி எனப் பிற்காலத்துப் புலவர் சிலர் கொள்வாராயினர். அப்பொருளில் இத்துறையைப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இச் சூத்திர அடிக்கு உரைகாரர் ஒருவரும் அப்பொருள் கொள்ளாமையானும், அது ஈண்டுப் பொருந்தாமையறிக.3 கழிபெருஞ் சிறப்பிற்றுறை பதின்மூன்றே---மிகப் பெருஞ் சிறப்புடைய வஞ்சித்துறை பதின்மூன்றாகும். குறிப்பு :--- இதில், ஆன்களும் பக்கமும் இசை நிரப்பு. ஈற்றேகாரம், அசை. உம்மைகள் எல்லாம் எண் குறிக்கும். அரவம், எடுத்தல் என்பவற்றின் ஈற்றும்மை தொக்கன. ஆய்வுரை நூற்பா 7 இது, வஞ்சித்திணைக்குரிய துறைகளை விரித்துரைக்கின்றது. (இ-ள்) பகைவரொடு பொருதல் வேண்டிமேற்செல்லும் படை வீரர்களது போர் ஆரவாரமும், பகைவர் நாட்டினைத் தீக்கொளுவுதலால் எரிபரந்து கிளர்ந்தெழுச் செய்தலும், மேற்செல்வோர் பகைவர் நாட்டு எல்லையிலே பேராற்றலுடன் விளங்கிய பெருமையும் (தன்னுடைய படை வீரர்க்கும் பாணர் முதலிய பரிசிலர்க்கும்) கொடுத்தலைப் பொருந்திய வன்மைத் திறமும், பகைவர் பலரையும் தொடர்ந்து மேலிட்டுக் கொன்ற வெற்றித் திறமும் வேந்தனாற் பெருஞ்சிறப்புப் பெற்ற படை மறவர் கூறிய மீக்கூற்று மொழியும், பகைவரைப் பொருட்படுத்தாது படைகளைச் செலுத்தின பேராண்மைத் திறமாகிய தறு கண்மையும் மிக்கு விரைந்து மேல்வரும் பெருவெள்ளத்தைக் கல்லணை தடுத்துத் தாங்குதல்போன்று தம்மேல் மீதூர்ந்து தாக்கும் பகைவரது சேனை வெள்ளத்தைப் படைமறவன் ஒருவனே தடுத்துத் தாங்கிய பெருவன்மையும், வேந்தன் தன் படைவீரர் அனைவர்க்கும் திரட்சியாகப் பொருந்திய பேருண்டியினை விருப்புடன் வழங்கும் பெருஞ் சோற்று நிலையும், மேற்சென்றுபொரும் போரில் வென்றார்க்கு உளதாகிய ஒளியென்னும் புகழ் விளக்கமும், போரில் தொல்வி யுற்றோர் புகழென்னும் ஒளிகுன்றித் தேய்தலும், எக்காலத்தும் குறைதல் இல்லாத வென்றிச் சிறப்பினைப் பெறுதலாகிய கொற்ற வள்ளையும். போர்முனையின் அழிவினைச் செய்யும் படைக்கலங்களைத் தடுத்து மெலிவுற்றாரைப் பேணித் தழுவிக் கொள்ளுதலாகிய தழிஞ்சி என்னுந்துறையொடு மிக்க பெருஞ்சிறப்பினையுடைய பதின்மூன்று துறைகளையுடையது வஞ்சித்திணையாகும். இச்சூத்திரத்தில் பெருமையானும் என்பது முதலாக வந்த ஆன் என்னும் இடைச்சொற்கள் ஏதுப்பொருளுணர்த்தும் உருபாகாது எண்ணும்மையுடன் இசைந்து அசைநிலையாய் நின்றன. இயங்குபடையரவம், எரிபரந்தெடுத்தல் என்பவற்றின்கண் எண்ணும்மை தொக்கு நின்றது. பகைவரைப் பொருது அழித்தல் வேண்டிச் சினமிக்கு மேற்செல்லும் வஞ்சி மறவரால் எழுப்பப்படும் ஆரவாரம் பகைவர்க்கு அச்சத்தை விளைப் பதாகலின் அதனை இயங்குபடையரவம் என்றார். இவ்வாறன்றி வெட்சி மறவர் நள்ளிரவிற் களவினாற் பகைவர் நாட்டு ஆனிரைகளைக் கவர்தற் பொருட்டு மறைந்து இயங்கும்போது உண்டாகும் ஓசை தன்னியல்பில் எழுவது ஆதலின் படையியங்கு அரவம் எனப்பட்டது. எனவே இயங்கும் படைவீரர்களால் எழுப்பப்படுவதும், படையியங்கும்போது தன்னியல் எழுவதும் ஆகிய இவ்வேறுபாடு குறித்து இவ்விரண்டும் இருவேறு திணைக்குரிய இருவேறு துறைகளாயின. வஞ்சித்திணையில்வரும் இயங்கு படையரவம் என்ற இத்துறையினை வஞ்சியரவம் என்ற பெயராற் குறிப்பிடுவர் ஐயனாரிதனார். எரிபரந்தெடுத்தல் என்றது பகைவர் நாட்டினைத் தீக் கொளுவுதலாகும். இதனை உழுபுலவஞ்சி, பெருவஞ்சி என்னும் இரு துறைகளாற் குறிப்பிடுவர் ஐயனாரிதனார். படையுடன் மேற்சென்றோர் பகைவரது நாட்டின் எல்லையிலே பேராற்றலுடன் போர் செய்து விளங்குந் திறத்தினைக் குறிப்பது வயங்கல் எய்திய பெருமை என்ற துறையாகும். கொடுத்தலெய்திய கொடைமை கொடைவஞ்சி எனப்படும். அடுத்தூர்ந்து அட்ட கொற்றம்---பகைவர் பலவரையும் தொடர்ந்து மேற்சென்று கொன்ற வெற்றித்திறம். ஐயனாரிதனார் கூறும் கொற்றவஞ்சி பெயரளவில் இதனை ஒத்திருத்தல் காணலாம். மாராயம் என்பது வேந்தனாற் படைவீரர் பெறும் சிறப்பாகும். அஃதாவது ஏனாதி, காவிதி, பெருநம்பி முதலிய பட்டங்களும் பொற்பூவும் நாடும் ஊரும் அரசனால் அளிக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பெறுதல்; நெடுமொழி---மீக் கூற்று; வஞ்சினமும் ஆம்; மாராயம் பெற்ற நெடுமொழி என்னும் இதனை மாராயவஞ்சி, நெடுமொழிவஞ்சி என இருதுறைகளாகப் பகுத்துரைப்பர் ஐயனாரிதனார். வருவிசைப் புனலை என்ற தொடர் விசைவருபுனலை என மொழி மாற்றியுரைக்கப்பட்டது. கற்சிறை கருங்கற்களால் அமைக்கப்பட்ட அணை. ஒருவன் தாங்கிய பெருமை ஒரு தனிநிலை எனப்படும். பொருளின்று உய்த்தலாவது பகைவேந்தரை ஒருபொருளாக மதியாது தன் படைகளை அவர்மேற் செலுத்துதல். பேராண்மைப்பக்கம் பேராண்பக்கம் என்றாயிற்று. பேராண்மை---தறுகண்மை. பேராண்மை யென்ப தறுகண், ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (திருக்குறள் 773) என்றார் தெய்வப் புலவரும். புறப் பொருள் வெண்பாமாலை கூறும் பேராண்வஞ்சி என்னுந்துறை பெயரளவில் இத்துறையினை அடியொற்றி யமைந்ததாகும். பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை யாவது, வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை என விளக்கங்கூறுவர் நச்சினார்க்கினியர். இவ் விளக்கம் அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த, பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து (சிலப்-வஞ்சி. கால்கோள்-48, 49) எனவரும் சிலப்பதிகாரச் செய்தியை அடியொற்றியமைந்துள்ளமை அறிந்து மகிழத்தகுவதாகும். வஞ்சித்திணையில் இத்துறையினைப் பெருஞ்சோற்று நிலை எனவே எடுத்தாள்வர் ஐயனாரிதனார். வென்றோர் விளக்கமாவது, மேற் சென்று பொரும்போரில் வெற்றி பெற்றோர்க்கு உளதாகிய ஒளியென்னும் புகழ் விளக்கம். இதனை நல்லிசை வஞ்சி என்னுந் துறையாகக் கொள்வர் ஐயனாரிதனார். தோற்றோர் தேய்வு ஆவது, போரில் தோல்வியுற்றோர் புகழ் என்னும் ஒளி மழுங்கித் தேய்தல். புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் குறவஞ்சி என்னுந் துறை இதன்கண் அடங்கும். குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை என்பது, எக்காலத்தும் குறைதல் இல்லாத மன்னவனது வென்றிச் சிறப்பினைப்போற்றி மகளிர் பாடும் உரற்பாட்டு. வள்ளை-உரற்பாட்டு. மன்னவனது கொற்றத்தினைப் போற்றிப்பாடும் பாடற்றுறையாதலின் இது கொற்றவள்ளை என்னும் பெயர்த்தாயிற்று. மன்னவன் கொற்றத்தினைப் புகழ்ந்து போற்றி மகிழ்வோர், அவனது கொற்றத்தால் பகைவர் நாடு எய்திய அழிவினை நினைந்து இரங்குதலும் இயல்பாதலின், மன்னவன் புகழ்கிளந்து ஒன்னார் நாடு அழிவுக்கு இரங்கியது கொற்றவள்ளை என்னும் துறையெனக் கொண்டார், ஐயானரிதனார். கொற்றவள்ளை தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை என்பர் இளம்பூரணர். அழிபடை---அழிவினைச் செய்யும் படைக்கலம். தட்டோர்-தடுத்துப் புண்பட்டோர். தழிஞ்சி---தழுவிக்கொள்ளுதல். தழிச் சுதல் தழிஞ்சியாயிற்று பொருகணை தழுச்சிய புண்தீர்மார்பின் என்புழிப்போல என இத்துறையின் பெயர்க்காரணத்தை விளக்குவர் நச்சினார்க்கினியர். இனி அழிபடை என்றது போரில் எதிர்த்து நிற்றலாற்றாது புறங்கொடுத்தோடும் படை எனவும், அங்ஙனம் அழிந்தோடும் படைவீரர்மேற் படைக்கலங்களைச் செலுத்தாது அருளினால் தழுவிக்கொள்ளுதலே தழிஞ்சியாம் எனவும் கொண்டு, அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக் கழிதறுகண்மை காதலித் துரைத்தன்று எனக் கருத்துரை பகர்வர் ஐயனாரிதனார். மாற்றார்விடு படைக் கலன் முதலியவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளம் அழிந்தோர் ஆகிய வீரர்களைப் பேணித் தழுவிக் கோடலே தழிஞ்சி என்னும் துறையாம் என்பது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் கருத்தாகும். உரவரும் மடவரும் அறிவுதெரிந்தெண்ணி அறிந்தனை யருளா யாயின் யாரிவண் நெடுந்தகை வாழுமோரே (பதிற்-71) என்பதும் இதன்கண் (தழிஞ்சியென்னும் இத்துறையில்) அடங்கும் எனவும் இது முதுமொழிவஞ்சி எனவும் இளம்பூரணர் குறிப்பிடுவர். புண்பட்டோரை முன்னர்ச் செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வனபோல்வனவும் தழிஞ்சிப் பாற்படும். இதனை முதுமொழி வஞ்சி என்பர் எனவரும் நச்சினார்க்கினியர் உரை மேற்குறித்த இளம்பூரணர் உரைக்கு விளக்கமாகும். இத்தழிஞ்சியை முதுமொழி வஞ்சி எனக் கூறுவோர் இன்னாரென்பது விளங்கவில்லை. தொன்மரபின் வாட்குடியின் முன்னோனது நிலைகிளந்தன்று எனப் புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் முதுமொழி வஞ்சி என்னுந்துறையும் இங்கு உரையாசிரியர் சுட்டிய முதுமொழிவஞ்சியும் கருத்துவகையால் வெவ்வேறு துறையென எண்ண வேண்டியுள்ளது. தொல்காப்பியனார் வஞ்சித்திணைக்குரியவாகக் கூறிய துறைகளுடன் அவர் காலத்திற்குப் பின் புதிய துறைகள் சிலவும் வஞ்சித்திணையில் இடம் பெற்றுள்ளன எனத் தெரிகிறது. இச்செய்தி, குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் நெடுமாராயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும் பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று நிலையும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் (சிலப்-காட்சிக் 141-145) எனவரும் இளங்கோவடிகள் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம். இதன்கண் உள்ள குடைநிலைவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறாத புதுத்துறையாகும் ஆசிரியர் தொல்காப்பியனார் வஞ்சித்திணையை யடுத்துக் கூறப்படும் உழிஞைத்திணைத் துறைகளை விரித்துரைக்குமிடத்து குடையும் வாளும் நாள்கோள் அன்றி என எச்சப்படவைத்துத் தொடங்கு தலின் உழிஞைத் திணையின் தொடக்கத்திற் கூறப்படும் குடைநாட்கோள், வாள் நாட்கோள் என்னும் இவ்விரண்டு துறைகளும் இதற்கு முன் கூறப்பட்ட வஞ்சித்திணைக் குரியனவாகவுங் கொள்ளற்பாலன என்னுங் கருத்து பெறப் படுதலால், இவ்விரு துறைகளையும் வஞ்சித் திணைக்கு உரியனவாகக் கொண்டார் இளங்கோவடிகள். செங் குட்டுவன் வஞ்சி சூடி வடநாட்டின்மேற் படையெடுத்துச் சென்ற புறத்திணைச் செய்தியினை மீளா வென்றி வேந்தன்கேட்டு வாளுங்குடையும் வடதிசைப் பெயர்க்கென மறமிகுவாளும் மாலை வெண்குடையும் புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்தி பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து (சிலப். கால்கோள்-32-51) எனவரும் பகுதியில் விரித்துக்கூறியுள்ளார். இங்ஙனம் குடை நாட்கோள், வாணாட்கோள் என்னும் துறைகள் வஞ்சித் திணைக்குரியனவாகச் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றமை போன்று பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய புறத்திணை யிலக்கண நூல்களிலும் இடம் பெற்றன எனத் தெரிகிறது. வஞ்சியும் காஞ்சியும் பிறநாட்டுவேந்தன் தனது நாட்டின்மேற் படையெடுத்து வந்தக்கால் எதிர்சென்று அவனது சேனையைத் தடுத்து நிறுத்துதல் நாடாள் வேந்தனது கடமையாகும். இங்ஙனம் தன்னாட்டின் மேற் படையெடுத்துவரும் வஞ்சிவேந்தனது படையினை எதிர் சென்று தடுத்து நிறுத்துதலாகிய இப்போர்ச் செயல், பல்லாற்றானும் நில்லா வுலகியலைப் புல்லிநிற்றலாகிய காஞ்சித்திணையுள் அடங்குவதாகுதலின் ஆசிரியர் தொல் காப்பியனார் எதிரூன்றலாகிய இதனைத் தனித்திணையாக வகுத்துரைத்திலர். போர் மறவர் அனைவரும் உலக நிலையாமையை நன்குணர்ந்து நில்லாத வற்றால் நிலைத்த புகழை நாட்டும் குறிக்கோளுடையராதலின் அவரது வாழ்வியலின் நோக்கம் காஞ்சித்திணையேயாதலின் நிலையாமைக் குறிப்பினை எப்பொழுதும் உள்ளத்திற் கொண்டிருந்து அமைதிபெற்ற அத்தகைய படைமறவரைக் காஞ்சி சான்ற வயவர் (பதிற்று-65-90) எனவும், அவர்தம் போர்ச் செயலைக் காஞ்சி சான்ற செரு (பதிற்று 84) எனவும் புலவர் பெருமக்கள் போற்றிப் புகழ்வாராயினர். படைமறவ ருள்ளத்தே நிலைபெறுதற்குரிய இத்தகைய நிலையாமைக் குறிப்பு தமது நாட்டின்மேற் பகைவர் படையெடுத்து வந்துள்ளார் எனக் கேட்ட அளவில் அந்நாட்டுப் படைவீரர் உள்ளத்திலே மேன்மேலும் மிக்குத்தோன்ற மறங் கிளர்ந்தெழுந்து பகைவர் சேனையை எதிர்சென்று தடுத்து நிறத்துதலாகிய போர்த்தொழிலில் அன்னோர் ஊன்றி நிற்றல் இயல்பாதலின் எதிரூன்றல் காஞ்சி என்னும் சிறப்புடைய திணைப் பகுப்பும் தொல்காப்பியனார் காலத்திற்குப் பின் உருவாகி புறத்திணையிலக்கணத்தில் இடம்பெறுவ தாயிற்று. வஞ்சிவேந்தனது சேனையைத் தடுத்து எதிரூன்றல் காஞ்சித் திணையாம் என்னும் இப்புறத்திணைப் பாகுபாடு இளங்கோவடிகள் காலத்திற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே தோன்றி நாட்டில் நிலைபெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இவ்வுண்மை. தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும் (சிலப்-காட்சிக். 135-136) எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். இதுபற்றியே எதிரூன்றல் காஞ்சி வஞ்சியுங்காஞ்சியும் தம்முள் மாறே என்னும் புறத்திணை மரபு பற்றிய தொடர்களும் வழக்கியலில் நிலைபெற்று வழங்குவனவாயின. வடநாட்டிற் படையெடுத்துச்சென்ற வஞ்சிவேந்தனாகிய செங்குட்டுவன் பகைப்புலம்புக்குப் பாசறையில் தங்கியிருந்தானாக, அந்நிலையில் அவனது படையினைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் மேல்வந்த வடவர் சேனையைக் காஞ்சித்தானை (கால்கோள்-191) என இளங்கோவடிகள் குறிப்பிடுவதும் இப்புறத்திணை மரபு பற்றியேயாம். ஒருவன் தனது நாட்டின் மேற்படையெடுத்து வந்தால், நாடாள் வேந்தன் அவனை எதிர்சென்று தடுத்து நிறுத்தாது அவனது சேனை தனது மதிற்புறத்து வருமளவும் பொறுத்துத் தன் அரணினைக் காவல் செய்திருத்தல் உழிஞையின் பாற்படும். அது சேரமான் படையெடுத்து மேற்சென்றபோது தகடூரிடை அதிகமான் தங்கியிருந்ததாகும் என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் தொல்காப்பியனார் கருத்துக்கும் தகடூர் யாத்திரை முதலிய இலக்கிய அமைதிக்கும் ஏற்புடையதேயாகும். 8. 1உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் 2அனைநெறி மரபிற்று ஆகும் என்ப3 இளம் : இஃது உழிஞைத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உழிஞை மருதத்துப் புறன் - உழிஞை என்னும் புறத் திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம், முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும். அது முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய்1 வருந் தன்மைத் தாகிய நெறியை மரபாக உடைத்து. முதல் அரணம் என்றதனான் தலையும் இடையும் கடையும் என மூவகைப் படுமவற்றுள் தலையரண் அஃதாவது, அரணிற்குக் கூறுகின்ற இலக்கணம் பலவும் உடைத்தாதல். மருதத்திற்கு இது புறனாயவாறு என்னையெனின் வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர்செய்தல் ஆற்றாது உடைந்து மாற்றுவேந்தன் அரண் வலியாகப் போர் செய்யுமாகலானும், அவர் நாட்டகத்தாகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற் பொழுது காலமாகலானும் அதற்கு இது புறனாயிற்று.2 நாட்டெல்லையின் அழிப்பு உழிஞையாகுமோ எனின், அது பெரிதாயின் அதன்பாற்படும்; சிறிதாயின் வெட்சியுள் ஓதின ஊர்கொலை (புறத்திணை.3)யுள் அடங்கும்.3 (8) 8 நச் : உழிஞை தானே மருதத்துப் புறனே இஃது உழிஞைத்திணை அகத்திணையுண் மருதத்திற்குப் புறனா மென்கின்றது. (இ-ள்.) உழிஞை தானே---உழிஞை யென்று கூறப்பட்ட புறத்திணை; மருதத்துப் புறனே---மருதமென்று கூறப்பட்ட அகத் திணைக்குப் புறனாம் என்றவாறு. இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர் செலற் காற்றாது போய் மதிலகத் திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்த தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைந்திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல இதற்கும் பெரும்பொழுது வரை வின்மையானுஞ், சிறு பொழுதினும் விடியற்காலமே போர்செய்தற்குக் கால மாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. மருதநிலத்து மதிலாதல்1 அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி யெனப் பாட்டிற் கூறியவாற்றானும், பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற்---றுணங்குகல னாழியிற்றோன்று மோரெயின் மன்னன் (புறம்-338) என்றதனானுங் கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார், நிலைக்கெளிதா நீர தரண் (திருக்குறள்-அரண்-5) என்றதனானுமுணர்க. மற்று எதிர்சென் றானை வஞ்சிவேந்தன் என்னுமெனின், அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண் எதிர் சென்றிருப்பரென்றலின் வஞ்சியாகாதாயிற்று. (6) 8-(8) முழுமுத லரண முற்றலுங் கோடலும் அனைநெறி மரபிற் றாகு மென்ப. இது மேற்கூறிய உழிஞைத்திணையது பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்.) முழுமுதல் அரணம்---வேற்றுவேந்தன் குலத்துக் கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, முற்றலும் கோடலும்---சென்ற வேந்தன் வளைத்தலும் இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப-இரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ்வுழிஞைத்திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு. முழு அரணாவது மலையுங் காடும் நீருமல்லாத அக நாட்டுட் செய்த அருமதில்2. அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந் ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, எழுவுஞ்சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்.1 இனி மலையரணும் நிலவரணுஞ் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலும் கலியூழி தோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இவை வஞ்சமுடைத்தாயிற்று. சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடிபிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்த படையெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங் கொல்லாது விடுதலுங் கூறிப் பொருதலும் முதலியனவாம். இனி ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10) 1. தோட்டிமுள் --- அங்குசம் போன்று பகைவரை வலித் திழுக்கும் முள். இடங்கர் --- முதலையினத்துள் ஒருவகை. பதணம் -- - மதிலுறுப்பு ஏப்புழை --- மதிலின் உட்புறத்தே இருந்து அம்பு எய்யுந்துளை. ஞாயில் --- மதிற்புறத்தின் உள்ளிருந்து புறத்தார் மேல் அம்பு எய்து மறையும் சூட்டு. இது குருவித்தலை எனவும் வழங்கும். எழு --- புறத்தோர் சேனை உட்புகாதவாறு தடுத்து நிறுத்தும் கணைய மரம். vGîŠÓ¥ò --- fjî¡F tÈahf cŸthƉgoÆny (Ó¥ò-Éir) vL¡fÉL« ku§fŸ fjbthL bghUª âd nkȉwhGkh«; Ãiw¤j fjîkh«., திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ்சீப்புஎன்றார். வஞ்சனை பலவும் வாய்த்த அரிய மதிலை அமைத்துக் கொண்டு நாடாள் வேந்தன் அதனை அடைத்துக்கொண்டு உள்ளிருத்தலும், பகைவேந்தன் உள்ளே ஒடுங்கியிருக்கும் வேந்தனைச் சூழ்ந்தழித்தலும் அவர்தம் பேராண்மையாகிய தறுகண் உணர்வுக்கு மாசுதரும் செயல்களாதலின் அரணைப்பற்றிக் கொண்டு நிகழும் வஞ்சமுடைய இப் போர்ச்செயல்களைக் கலியூழிதொறும் பிறந்த சிறப்பில்லா அரசியல் என்றார் நச்சினார்க்கினியர். சிறப்புடைய அரசியலுக்கு அவர் தரும் விளக்கம் தறுகண் வீரர்பால் இன்றியமையாது அமைய வேண்டிய பேராண்மையின் வெற்றியினை இனிது புலப்படுத்தல் காணலாம். கருத்து :--- இது, பற்றலர் அரணை முற்றி எறியும் உழிஞைப் புறத்திணை, மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம் எனக் கூறுகிறது. பொருள் :--- உழிஞை தானே- உழிஞைத் திணையானது; மருதத்துப் புறனே- மருதம் என்ற அகத்திணைக்குப் புறனாகும். குறிப்பு :--- தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை. புறனே என்பதன் ஏகாரம் ஈற்றசை. மருதத்துக்கும் உழிஞைக்கும் அரணுடைய ஊர்களே நிலைக்களம் ஆதலானும், புலத்தலும் ஊடலும் மருத ஒழுக்கம் ஆதல்போல முற்றிய ஊரரணின் அகப்புறப் படைகள் தம்முள் கலாய்த்து இகலுதலே உழிஞையாதலானும், மருதத்துக்கு உழிஞை புறனாயிற்று. 8.(8) கருத்து :--- இஃது உழிஞையின் இயல் விளக்குகிறது. பொருள் :--- முழுமுதல் அரணம் முற்றலும்---கெடாத தலையான காவலுடைய கோட்டையை வளைத்தலும்; கோடலும்---எயில்காவல ரெதிர்ப்பை அழித்து எயிலைக் கைப்பற்றுதலும்; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப---அம்முறைகளின் தன்மை யுடைத்தாம் உழிஞைத்திணை என்பர் புறநூற் புலவர். குறிப்பு :--- முன்னைச் சூத்திரத்து உழிஞை என்பது ஈங்கு ஆகும் என்னும் வினைக்குக் கொண்ட பொருள் தொடர்பால் எழுவா யாயிற்று. என்ப என்பதற்கு ஏற்பப் புறநூற் புலவர் என்னும் வினைமுதல் அவாய்நிலையால் வருவிக்கப்பட்டது. ஓசை நோக்கி அனைய என்பதன் ஈறுகெட்டு அனை என நின்றது. ஈங்குக் கோடல் என்பது முற்றியோர் வென்று அரண் கொள்ளுதலையே குறிக்கும். கொள்ளாது முற்றிய கோட்டையை விட்டு விலகுதல் உழிஞை ஆகாமையிற் கோடலும் முற்றலுடன் கூறப்பட்டது. இனி,கோடலை அரண் காவலர் தொழிலாக்கி முற்றலை மட்டும் உழிஞை எனின், முற்றியோர் அரண் கைப் பற்றுதல் உழிஞையியல் அடங்காமல், வேறு திணையுமாகாமல், குன்றக் கூறலாய் முடியும்; அன்றியும், முற்றியோர் அரணைப் பற்றாவழி அகப்படை அதனை மீட்டுக்கோடல் இன்மையால், அவரரண் கோடல் உழிஞை என்பது மிகைபடக் கூறலாகும். இன்னும், முற்றியோரை முறையே ஒட்டி அகத்தவர் வெற்றி பெற்றகாலை, அஃது அரண் காத்தலன்றிக் கோடலாமாறில்லை யாதலானும் முற்றியோர் வெற்றியால் அரணைப் பற்றிய பின் தோற்ற காவலர் அவரை முற்றி அரணை மீட்டுக்கோடல் அவரளவில் உழிஞையே யாமாதலானும் முற்றியோரும் அரண் காவலரும் கைகலந்து பொருவது உழிஞையின் இடைஇயல் நிகழ்ச்சி யாவதன்றித் தன்னளவில் தனித்தொரு திணையாமாறு இல்லை யாதலானும், அகத்தவர் எதிர்ப்பை நொச்சியெனத் தனித்தொரு திணையாக்கின் அதற்கு நேராம் அகத்திணை ஒன்று மின்றாத லானும், அகத்தோன் வீழ்ந்த நொச்சியை உழிஞைத் துறைவகைகளுள் ஒன்றாயடக்கிப் பின் சூத்திரம் கூறுவதானும் இங்குக் கோடல் என்பது அகத்தவர்க்கு ஆகாமை ஒருதலை.1 ஆய்வுரை நூற்பா. 8. இஃது உழிஞைத்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்.) உழிஞை என்னும் திணை மருதம் என்னும் அகத் திணைக்குப் புறனாகும். (படையுடன் மேற்சென்ற வேந்தன்) எல்லாவுறுப்புக்களாலும் நிறைவுடையதாய் முழுமை பெற்ற (பகைமன்னனது) தலைமை வாய்ந்த அரணினைப் புறத்தே வளைத்துக் கொள்ளுதலும் (உள்ளேயிருந்த வேந்தன்) அம்மதிலை நெகிழவிடாது பாதுகாத்துக் கோடலும் ஆகிய அத்தன்மையலாகிய போர்நெறிமரபினையுடையது உழிஞைத் திணையாகும். இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்ட நிலையில் தன்மேற்படையெடுத்து வந்த வேந்தனை எதிர்சென்று தடுத்து நிறுத்தும் ஆற்றலின்றித் தன் மதிலகத்தே தங்கிக் கதவடைத்துக் கொண்டிருக்கும் வேந்தனது மதில், பெரும்பாலும் மருதநிலப் பகுதியாகிய நகரத்தையொட்டியமைந்திருத்தலானும், அம் மதிலை வளைத்துக் கொண்ட வேந்தனும் அந்நிலையில் தங்கியிருத்தலானும், ஒத்தஅன்பினனாகிய தலைவன் வாயில் வேண்டத் தலைவி அதற்கு உடன்படாது கதவினையடைத்துக் கொண்டு வீட்டினுள்ளேயிருத்தலாகிய மருதத்திணை யொழுக லாற்றைப் போன்று, நகர்ப்புறத்தே மதிலை வளைத்துக் கொண்டிருக்கும் வேந்தன் அரணின் உள்ளே படாது கதவினை அடைத்திருத்தல் ஒப்புமையானும், ஊடிய தலைவியைப் போன்று உள்ளிருந்த வேந்தனும் வெளியே புறப்பட விரும்புதலானும், அவ்வழிப் போர் செய்வார்க்கு மருதத்துக்குக்குரிய விடியற் காலமே ஏற்புடைய காலமாதலானும், மருதத்திணைக்குப் பெரும்பொழுது வரையறையில்லாதவாறுபோன்று இதற்கும் பெரும்பொழுது வரையறையின்மையானும், புலத்தலும் ஊடலும் மருதத்திணையாதல் போல அரணைச் சூழ்ந்து முற்றியும் அதனை நெகிழவிடாது பற்றியும் இவ்வாறு அரணின் புறத்தும் அகத்தும் உள்ள இருதிறப்படையாளரும் தம்முட் பொருதலே உழிஞைபுறனாயிற்று என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தரும் விளக்கம், அகமாகிய மருதத்திணைக்கும் புறமாகிய உழிஞைத் திணைக்கும் இடையேயமைந்த நெருங்கிய தொடர்பினை நன்கு புலப்படுத்துதல் உணர்ந்து மகிழத்தகுவதாகும். மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில் காத்தலும் என்னும் தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞை எனவும் நொச்சி எனவும் இருதிறப்பெயர் பெறும் என்பர் இளம்பூரணர். உழிஞைத்துறை வகைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சியையும் ஒரு துறையாகத் தொல்காப்பியர் அடக்கிக் கூறுதலால், நொச்சி என்பது அகத்தோன் செயலைக் குறித்ததென்பது அதனைத் தனித்ததொரு திணையாகக் கொள்ளுதல் தொல்காப்பியர் கருத்தன்று என்பதும் நன்கு விளங்கும். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங்கொள்க............. இக்கருத்தானே நொச்சி வேலித் தித்தன் உறந்தை (அகநா 122) என்றார் சான்றோரும் எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இங்கு நினைக்கத்தகுவதாகும். 9. அதுவே தானும் இருநால் வகைத்தே. இளம் : இஃது உழிஞைத் திணையை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.1 (இ-ள்.) அதுதான் இருநால் வகைத்து - உழிஞைத் துறை தான் எட்டு வகைத்து. அவையாமாறு முன்னர்க் காணப்படும். (ஏகாரமும் உம்மையும் அசைகள்.) நச் : இது முற்கூறிய முற்றலுங் கோடலும் ஒருவன் தொழிலன் றென்பதூஉம் முற்கூறியபோல ஒருதுறை இருவர்க்கு முரியவாகாது, ஒருவர்க்கு நான்கு நான்காக எட்டாமென்பதூஉங் கூறுகின்றது. (இ-ள்.) அதுவே தானும்---அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால் வகைத்து2---மதில்முற்றிய வேந்தன்கூறு நான்கும் அகத்தோன்கூறு நான்குமென எட்டு வகைத்தது என்றவாறு. அது மேற்கூறுப. (11) கருத்து :--- இது, உழிஞைத் திணை எட்டு வகைப்படும் என்கின்றது. பொருள் :--- வெளிப்படை. ஏகாரம் ஈற்றசை. ஆய்வுரை நூற்பா. 9. இஃது உழிஞைத்திணையின் வகையுணர்த்துகின்றது. (இ-ள்) முற்கூறியவாறு மதிலை முற்றுதலும் கோடலும் என இருதிறப்பட்டு நிகழும் உழிஞைத்திணை ஒவ்வொரு திறத்திற்கும் நான்கு நான்கு ஆகி எட்டு வகைப்படும். எ-று. முற்றுதற்கு நான்கும் கோடற்கு நான்கும் என எட்டாயின. 10. கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் றிவர்தலுந் தோலது1 பெருக்கமும் அகத்தோன் செல்வமும் அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் திறற்பட2 ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்படச் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே. இளம் : இதுவும் உழிஞை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலாகச் சொல்லப்பட்டன உழிஞைக் துறையாம். கொள்ளார்4 தேஎம் குறித்த கொற்றமும்-பகைவரது தேயத்தைக் கொள்ளத் குறித்த கொற்றமும். (கொள்ளார்- தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும்.) உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்-நினைத்தது முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும். இன்னும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் என்றதனால் அகத்தரசனை அழித்தது கூறலும் கொள்க. தொல் எயிற்று இவர்தலும்5-தொல் எயிலின்கண் பரத்தலும். தோலது பெருக்கமும்-தோற்படையினது1 பெருமையும். அகத்தோன்2 செல்லமும்-அகத்தரசனது செல்வமும். அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - அன்றியும் பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கமும். திறற்பட ஒருதான் மண்டிய3 குறுமையும்-வலிபட ஒரு தானாகிச் சென்ற குற்றுழிஞையும். உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில்4- வெகுண்டு வருகின்ற படையைப் பேணார் ஆரெயில் உழிஞையும். உளப்பட சொல்லப்பட்ட நாலிரு வகைத்து- உட்படக் கூறப்பட்ட எட்டு வகைத்து. பதினெட்டு, இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார்.5 இது கூறியது கூறலன்று; தொகை.6 (10) 10 நச் : இது முற்கூறிய நாலிருதுறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்---பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும்; தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள்ளாரென்ப. கழிந்தது பொழிந்தென என்னும் (203) புறப்பாட்டினுள், ஒன்னா..... ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய் என்பதும் அது ஆனா வீகை யடுபோர் என்னும் (42) புறப்பாட்டும் அது இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது.1 உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்---அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினது அவன் படைத்தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலும்; மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான் முன்னிய துறைபோகலின் (பத்துப் பட்டினப்-271, 273) என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின்.2 அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை............ கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப வாங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. (புறம்-39) இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத் துரைத்தது. வயலைக் கொடியின் வாடிய மருங்கு லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா னெல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே யேணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனவே. (புறம் 305) இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறங் கொண்டோர் கூறியது. (இவை புறம்.) தொல் எயிற்கு இவர்தலும்1---ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப்பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்; மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணும் கடுவிசைப் பொறியும் வில்லும் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை யிரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே, இப் பொன்முடியார் பாட்டும் அது. இதனாற் பூச்சூடுதல் பெற்றாம். தோலின் பெருக்கமும்---அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும்2 மிடையக் கொண்டுசேறலும்; அரணத்தோர் தத்தம் பதணத்து நிற்றலிற் றோல் கூறிற்றிலர். இந்நான்கும்3 முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க. அகத்தோன் செல்வமும்---அகத்து உழிஞையோன் குறை வில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்; அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப் பொருண் மேம்படு பண்டங்களும் முதலியவாம். அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்---மாறு பட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த் தொழிலான் வருத்திய கூறலும்; உதாரணம் :--- கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னா ளினியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்க ணாடவர் உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே யுருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சிரங்க வூர்கொள் குவமே (தகடூர் யாத்திரை) என வரும். இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது. திறப்பட ஒரு தான் மண்டிய குறுமையும்---அகத்திருந் தோன் தன்னரணழிவு தோன்றியவழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும்; உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட---புறத் தோன் அகத்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுதலகப்பட; புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டல் தகாது வேந்துறை யரணே. (தகடூர் யாத்திரை) இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று.1 இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது. சொல்லப்பட்ட நாலிருவகைத்தே---சேலிரு நால்வகைத் தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத்திணை என்றவாறு. முற்கூறிய தொகையேயன்றி ஈண்டுந் தொகை கூறினார். அந்நாலிரண்டுமேயன்றி அவைபோல்வனவும் நாலிரண்டு துறை தோன்று மென்றற்கு இவை புறத்துவேந்தன் தன் துணையாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும் ஏவி அகத்து வேந்தற்குத் துணையாகிய அரசரது முழுமுதலரண் முற்றலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்த விடத்தும் இவ்விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம். உதாரணம் முற்காட்டியவே வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்கரவ (புறத்திணை-8) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க. இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறு வராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க.1 இனி முரசுழிஞை வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டு மென மறுக்க.2 இனி ஆரெயிலுழிஞை முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும்.3 இனி இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற் படுத்திக்கொள்க. (12) பாரதியார் கருத்து :--- இது, மேல் நாலிரு வகைத்தே எனத் தொகுத்து உழிஞை வகைகளின் பெயரும் இயல்பும் கூறுகிறது. பொருள் :--- 1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் பகைவர் நாட்டைக் கொள்ளத் துணியும் வீறும். குறிப்பு :--- உள்ளின் விரைந்து முடிக்கும் உறுதி பற்றிக் குறித்த கொற்றம் என்றிறந்தகாலத்தாற் கூறப்பட்டது. 2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்---எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய திறலுடைய வேந்தன் சீரும்; 3. தொல் லெயிற்கு இவர்தலும்---பகைவர் முன் பற்றாத பழமையான மதிலைப் பற்றி முற்றியோர் ஏறுதலும். 4. தோலின் பெருக்கமும்---பகைவர் படைக்கலன் உறாவாறு தடுக்கச் செறித்த கேடகங்களின் பொலிவும்; 5. அகத்தோன் செல்வமும்---(கொளற்கு அரிதாய், உணவு முதலிய கூழும் நன்னீரும் படையும் உலையாதூக்கும் அறை போகத் தறுகண் மறவர் காவலும் உடைய) அரண் அக்காவலன் பரிசு குறித்தலும்; 6. அன்றி, முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்--- அல்லாமலும், முனைந்து அரண் கொள்ள முற்றிய தலைவன் அகத்தவர் எதிர்ப்பால் வருந்தும் பகுதியும்; (அணங்கு-வருத்தம்) இனி, முற்றியோன் அகத்தவனை வருத்தும் பரிசும் எனினுமமையும், முன்னதில் அணங்கு தன்வினை; பின்னதிலது பிறவினை. (முன்னதற்குப், புறத்தோனை அணங்கிய எனக் கொள்ளுதலுமமையும்). 7. திறப்பட ஒருதான் மண்டிய குறுமையும்---ஊறஞ்சாது உரனுடன் ஒருவனாய் எதிர்த்தேறிப் புரியும் குறும்போரும்; (ஊற்றத்தால் தனித்தேறி மாற்றலரை நெருங்கி மலையும் தறுகண்மை குறுமை அல்லது குற்றுழிஞை எனப்படும்.) சுதையத் தோங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து சிதையைத் திண்டிறல் இராவணக் குன்றிடைச் சென்றான் ததையச் செங்காரம் பரப்பிய தன்பெருந் தாதை உதயக் குன்றினிற் றுகுகுன்றிற் பாய்ந்தவன் ஒத்தான். எனும் கம்பர் பாட்டில், சுக்கிரீவன் இராவணன் மேல் தனியே பாய்ந்து மலைந்த குறும்போர் வருதல் காண்க. 8. உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்பட---வெகுண்டு மேல்வரும் உழிஞைப் பொருநரைப் பொருட்படுத்தா உரனுடையார் காவலால் கொளற்கரிதாம் அரணின் பெருமை உள்ளிட்டு; சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே---முன் சூத்திரத்தில் சுட்டப்பட்ட எட்டு வகைத்தாம் உழிஞைத்திணை. குறிப்பு :--- நாலிருவகைத்தே என முன் சூத்திரத்தில் தொகுத்த உழிஞையின் வகை எட்டும் இங்குக் கூறப்படுதலின் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே எனக் குறிக்கப்பட்டன. ஈற்றேகாரம் அசை; இசைநிறை எனினுமமையும். நாலிரு வகைத்தே என்னும் முடிபுக்கேற்ப உழிஞைத்திணை என்னும் எழுவாய், கொண்ட பொருள் தொடர்பால் கொள்ளப்பட்டது. இவை எட்டும், பிறர்கூறுமாறு துறைகளாக, உழிஞைத்துறை பன்னிரண்டும் அடுத்த சூத்திரம் கூறுதலால், இவ்வெட்டும் உழிஞைத்திணை வகையெனத் தெளிக. ஆய்வுரை நூற்பா. 10 இஃது உழிஞையின் நாலிருவகையினையும் விரித்துரைக் கின்றது. (இ-ள்.) பகைவரது நாட்டினைத் தான் வென்று கைக் கொள்வதற்கு முன்னமேயே தான் விரும்பிய வண்ணம் வேண்டியவர்க்கு அந்நாட்டினைக் கொடுத்தலை விரும்பிய வெற்றித் திறமும், அங்ஙனம் தான் எண்ணியதனை எண்ணிய வண்ணமே முடிக்கவல்ல வேந்தனது பேராற்றலின் சிறப்பும், நெடுங்காலமாக அழிவின்றி நிலைபெற்றுள்ள மதிலின்மேல் ஏறிப்போர்செய்தலும், (மதிலின் அகத்திலிருந்து மாற்றார் எய்யும் அம்புகளைத் தடுத்தல் வல்ல) கிடுகுப்படையினையேந்திய மறவர்களின் மிகுதியும், (புறத்தோன்திறமாகிய) அதுவேயன்றி அவனொடு முரணிப்போர் புரியும் அரணகத்துள்ள வேந்தனது செல்வமிகுதியும் அம்மிகுதியால் தன்னொடுமாறுபட்ட புறத்தோனைப் பொருது அகத்தோன் வருத்திய கூறுபாடும், ஆற்றல்மிக்குத் தானொருவனுமேயாகிக் கிளர்ந்தெழுந்து மதிற்புறத்தே போந்து போர் புரியும் குற்றுழிஞையும் வெகுண்டு எயிலை அழித்தற்கு முந்தும் புறத்தோரது படையினைப் பொருட்படுத்தாது இகழ்ந்திருத்தற்கேற்ற அரிய வினைத்திறம் வாய்ந்த மதிலின் வன்மையும் உட்பட (புறத்தோற்கு நான்கும் அகத்தோற்கு நான்கும் என இருதிறமாகச்) சொல்லப்பட்ட எட்டு வகையினையுடையது அவ்வுழிஞைத்திணை என்பர் ஆசிரியர். இவற்றுள் முன்னைய நான்கும் மதிலை வளைத்துக் கொண்ட வேந்தனாகிய புறத்தோனுக்குரியன; பின்னைய நான்கும் மதிலழியாமற் பற்றிக்கொண்டு காக்கும் அகத்தோனுக்கு உரிய செயல் வகைகளாம் என்பார் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே என மீண்டும் தொகை கூறினார் ஆசிரியர். 11. குடையும் வாளும் நாள்கோள் அன்றி மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றமர் ஒழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் மதில்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் இகல்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோடு ஒன்றத் தொகைநிலை என்னுந் துறையோடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. இதுவும் அது. (இ-ள்.) குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும் உழிஞைக்குரிய துறை, மேற்சொல்லப் பட்ட வற்றின் விரியும் பன்னிரண்டு உள என்றவாறு. குடையும் வாளும் நாள்கோள்-குடைநாட்கோள் வாள் நாட்கோள் என வருவனவும். மடைஅமைஏணி மிசை மயக்கமும்-மதிலிடத்து மடுத்தல் அமைந்த ஏணிசார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கமும். முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்-முற்ற அகப்பட்ட அகத்தி னுள்ளான் வீழ்ந்த நொச்சியும். அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும்-நொச்சியின் புறத்தாகிய உழிஞையான் வீழ்ந்த புதுமையும். (மற்று என்பது அசை. ஆன் என்பது இடைச்சொல்.) நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - கிடங்கின் உளதாய போரின் கண்ணே வீழ்ந்த பாசியும். அஃது அன்று ஊர்ச்செரு வீழ்ந்த அதன் மறனும் - அஃது ஒழிய ஊர்ச்செருவின்கண் வீழ்ந்த பாசிமறனும். மற்று என்பது அசை.) மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர்பக்கமும்-மதின்மேற் கோடற்குப் பரந்த மதிலோர் பக்கமும். இகல் மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும்-தம்முடன்இகலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலங் கொண்டமண்ணு மங்கலமும். வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - வென்ற வாளின் மண்ணு மங்கலமும் பொருந்த. தொகைநிலை-அம்மதிலழித்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி யடைதல். என்னும் துறையொடு தொகைஇ வகை நால்மூன்று என மொழிப---என்னும் துறையொடு கூடிய உழிஞை வகை பன்னிரண்டு என்று கூறுவர். நச்சர் : 11. இஃது எய்தாத தெய்துவித்தது; உழிஞைத்திணையுள் இரு பெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின்.1 (இ-ள்.) குடையும் வாளும் நாள்கோள் அன்றி---தன் ஆக்கங் கருதிக் குடிபுறங்காத்து ஓம்பற்கெடுத்த குடைநாட் கொள்ளுதலும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட் கொள்ளுதலும் அன்றி;1 புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளுமென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையெனப் படாதாகலின், அகத்தோனும் முற்று விடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித் தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும் நாள்கொளலாவது நாளும் ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக் காலத்தே முன்னர்ச் செல்லவிடுதல்;2 மடையமை ஏணிமிசை மயக்கம்3---மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத்தோரும் போர் செய்தலும்; கடைஇச்4 சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும்---புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன் படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு உண்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும், அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன் படையைத் தள்ளிவென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினை முதிர்ச்சியும்; அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் - புற மதிலிலன்றி உண்மதிற்கட் புறத்தோனால் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்;1 நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க; அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்குமாயிற்று. இக்கருத்தானே நொச்சி வேலித் தித்தனுறந்தை (அகம்-122) என்றார் சான்றோரும். மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்---இடை மதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம் மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக் கோளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத் தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்;2 பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர் போல இடை மதிலினும் போர் கூறினார். நீர்ச்செரு வீழ்ந்த பாசியும்-கொண்ட மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத்தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக் கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும்: பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி யென்றார். வேறு வேறு வருமெனினுங் காண்க. அதா அன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்---அம்மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப் பாசி மறனும்; பாசியென்றார் நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கமும்---புறஞ்சேரி மதிலும் ஊரமர் மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறி நின்று போர் செய்தற்குப் பரந்து சென்றோன் கூறுபாடும்; இகன் மதிற் குடுமி1 கொண்ட மண்ணும் மங்கலமும்--- அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்; வென்ற வாளின் மண்ணோடு2 ஒன்ற---இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவைமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட; ஒன்றென3 முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண்ணுதல் கொள்க. தொகைநிலை4 என்னுந்துறையொடு தொகைஇ---அவ்வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக் கடற் கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையோடு முற் கூறியவற்றைத் தொகுத்து; வகைநால் மூன்றே துறை என மொழிப---அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்து பன்னிரண்டேயாம் உழிஞைத் துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முற்றலையுங் கோடலையும் இருவகையென்றார் துறை யென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும் அத் துறைப்பாற் படுத்துக உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும் அவர் அரசர்க்கு உரைப்பனவுங் குடைச்சிறப்புக் கூறுவனவும் முரசு முதலியன நாட்கோடலும் பிறவுங் குடைநாட் கோடலாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி மேல் வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற்கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார்; எயிலுட் பொருதலும்புட்போல உட்பாய்தலும் ஆண்டுப் பட்டோர் துறக்கம் புகுதலும் பிறவும் பாசிமறத்தின்பாற் படும். ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற்படும். படிவம் முதலியன கூறல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின்பாற் படும். புறத்தோன் இருப்பிற் றொகைநிலைப்பாற்படும். துறையென மொழிப என எல்லாவற்றையுந் துறையென்று கூறுகின்றவர் தொகைநிலை யென்னுந் துறையெனத் தொகை நிலையை விதந்தோதினார் அது பலவாகாது இரண்டு துறைப்பட்டு வேறுவேறு துறையாம் என்றற்கு. அது தும்பைத் தொகைநிலைபோல் இருபெரு வேந்தரும் உடன் வீழ்தலுஞ் சிறுபான்மை உளதாமென்றுணர்க.1 எதிர் செல்லா தடைத்திருந்தோன் புறப்பட்டுப்படுதல் சிறுபான்மை யாதலின், இதனையும் வேறொரு துறையாக்கிப் பதின்மூன் றென்னாராயினார். இது வேறுவேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதனானே புறத்தோன் கவடிவித்துதலுந் தொகைநிலைப் பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க. அது, மதியேர் வெண்குடை என்னும் (392) புறப் பாட்டினுள், வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றென னாக என வரும். ஒன்ற வென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறு பான்மை என்று கொள்க. இனி மகண்மறுத்தோன் மதிலை முற்றுதன் மகட்பாற் காஞ்சிக்கண் அடங்கும்.1 யானையுங் குதிரையும் மதிற்போர்க்குச் சிறந்தன அண்மையிற் கொள்ளாராயினர். ஈரடியிகந்து பிறக் கடியிடுதலுங் கேடு என்று உணர்க.2 (13) பாரதியார் கருத்து :--- உழிஞைத் திணைவகை மேற்கூறி, இதில் அதன் துறைவகை பன்னிரண்டும் குறிக்கப்படுகின்றன. பொருள் :--- (1, 2) குடையும், வாளும், நாள்கோள்-வேந்தன் கொற்றக் குடையும், வெற்றிப் போர் வாளும் முறையே நன்னாளில் எடுத்துக்கொள்ளுதலும். அன்றி---அல்லாமலும். 3. மடையமை ஏணிமிசை மயக்கமும் - தொடையமைந்த ஏணிப் படிகளின் மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும் தம்முள் கலந்து மலைதலும். (மடை-பூட்டு. ஏணிப் பக்கச் சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுதலால், மடையமை ஏணி எனப்பட்டது. 4. கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் - முற்றியோன் தன் மறவரைச் செலுத்தி எதிர்த்தோரை மலைந்து மதிற்புறப் போர் முடிந்து ஒழியுமாறு வென்று எயிலைக் கைப்பற்றி உள்ளேறி அரணக மறவரைச் சூழும் முனைப்பும். 5. முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் - புறத் தோரால் வளைக்கப்பெற்ற அகப்படைத் தலைவன் அரண் காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும். (வீழ்தல் - விரும்புதல். நொச்சி - மதில்; அது மதிற் காவற்கு ஆகுபெயர்) 6. அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும் - அவ்வெதிர்ப் பால் வெகுண்டு புகுந்த புறப்படைத் தலைவன் விரும்பும் புதுக் கோளும். (எதிர்ப்பாரை அடர்த்து அவர் நிலையிடத்தைப் புதிதாய்க் கொள்ளுதல் புதுமை எனப்பட்டது.) (மற்று, அசை) 7. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - எயிற் புறத்து நீர் நிலையில் (அகற்ற ஒழியாது வந்த விரவும் பாசிபோல) இருதிறப் படையும் தளர்ந்தகலாமல் மேன்மேல் விரும்பிக் கலந்து மலையும் பாசித்துறையும். (விட்டு விலகாது விரைந்து விரவும் நீர்ப்பாசி போலக் கலந்திரு படையும் மலைந் திருதலையும் அலையெனமோதும் அமரின் பரிசு, பாசி எனப்பட்டது) 8. அதாஅன்று---அதுவுமன்றி; ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அரணகத்து ஊரில் அமர் விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப் போரின் தறுகண்மையும். (மற்று, அவை அதன் மறன் என்பது அண்மைச் சுட்டாய் மேற்பாசி மறனைச் சுட்டும்) 9. மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் - மதின்மேல் ஏறி அகற்றப்படாது ஊன்றிய மறவர் பரிசும். 10. இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் - பகை மதிலின் முடியகப்படுத்திய பெருமிதம் கொண்டாடும் நீர்விழாவும். (இதில் குடுமியை மதிலுக்கு ஆக்காமல் பிரித்து ஆகு பெயராக்கிப் பிறர் குடுமி எனக்கொண்டு, காவலர் முடிக்கலம் எனப் பிறர் கூறுதல் பொருந்தாமை வெளிப்படை. வேந்தனுக் கல்லால் மதில் காக்கும் மறவர்க்கெல்லாம் முடிக்கலம் இன்மையானும், முற்றிய மதின்மேல் முடிவேந்தன் ஏறி முடி பறி கொடுத்தல் இராவணற்கன்றிப் பிறமன்னர்க்குச் சான்றோர் செய்யுட்களில் கேட்கப்படா ஒருநிகழ்ச்சியாதலானும், இங்கு மதிற்குடுமி என நின்றாங்கே நேர்பொருள் கொள்ளுதலே அமையும். முற்றியோர் எயிற்குடுமி கொள்ளுதல், மேற் பெரும்பாண் அடிகளிலும் மற்றும் பல பழஞ் செய்யுட்களிலும் பரக்க வருவதனாலும், இதுவே தொல்காப்பியர் கருத்தாதல் தேற்றமாகும்.) 11. வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - உழிஞைப் போரில் வென்றோர். வெற்றி தந்த வாளை நீராட்டும் விழவுடன் பொருத்த; (மண்ணுதல் - கழுவுதல்) போர்க்கு உரைஇப் புகன்று கழித்தவாள் உடன்றவர் காப்புடை மதில ழித்தலின் ஊனுறு முழ்கி உருவிழந் தனவே (புறம். 97) (இங்கு வாளை வெற்றிதரும் படைக்கலங்களுக்குப் பொதுக் குறியீடாகக் கொள்ளுதல் சால்புடைத்தாகும். வாளைப் போலவே வேலும் பண்டை மறவர் கொண்ட போர்ப் படை யாதலின், வென்றபின் வேல்கழுவி விழ வெடுத்தலும் இத்துறையே யாகும்.) 12. ஒன்ற, தொகைநிலை யென்னும் துறையொடு தொகைஇ - (வென்ற வாளை நீராட்டும் விழவொடு) பொருந்த, தோற்றோர் தொகுதித்தொலைவாம், தொகைநிலை என்னும் துறையொடு கூட்டி; மக்கள் தொக்கதொகுதியாய்த் தொலைவதையே தொல் காப்பியர் காலப் புலவர் தொகைநிலை என வழங்கினர் என்பது, தும்பைத்திணைத் துறைவகையில் தொல்காப்பியர் சுட்டும் தொகைநிலைக் குறிப்பாலினிது விளங்கும். ஒரு வரு மொழியாத் தொகைநிலை என்பது ஆங்கவர்தரும் தொகைநிலைக் குறிப்பாகும். உழிஞையிலும் தோற்றோரின் தொகையழிவே வென்றோர் விழவொடு ஒன்றுவதாகும். (இனி, இதில் தொகைநிலைக்கு நச்சினார்க்கினியர் வேறு பொருள் கூறுவர். போர்முடிவில் வென்றோர் விழாது நின்றோரைத் திரட்டி, புண்புறம் பொதிந்தும் தண்மொழி பகர்ந்தும், அவர் திறம்வியந்தும், தளர்வோரை ஊக்கியும் பாராட்டுவது தொகைநிலை என்பதவர் கருத்து. தொகை கூட்டம் குறிக்குமாதலின், அவ்வாறு கொண்டார் போலும்.) வகை நான் மூன்றே துறை என மொழிப - பன்னிரு வகைப் படும் உழிஞைத்துறை என்பர் புறநூற் புலவர். குறிப்பு :--- இதில், மற்று எல்லாம் அசை. உழிஞைத் துறை என்பது கொண்ட பொருட்டொடர்பால் அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. புதுமையானும் என்பதில் ஆன் அசை. ஆய்வுரை நூற்பா. 11. இஃது உழிஞைத்திணைக்குரிய துறைகளை விரித்துக் கூறுகின்றது. (இ-ள்) குடிமக்களைப் புறங்காத்தற்கு எடுத்த குடையினையும் ஏந்திய வாளினையும் தனது ஆக்கங்கருதியும் பகைவரை வென்றழித்தல்வேண்டியும் புறவீடு விடுதலும், மதிலின் மீதிடு பலகையொடு பொருத்திச் செய்யப்பட்ட ஏணிமிசை நின்று புறத்தோர் அகத்தோர் ஆகிய இருதிறப்படை வீரரும் ஒருங்கே கலந்து நின்று பொருதலும், (புறத்தோன்) தன் படையினைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும்போர் இல்லையாம்படி (அகத்தோனை) வென்று உள் மதிலைக் கைப்பற்றி வளைத்துக் கொண்ட வினை முதிர்ச்சியும், அதனை எதிர்த்து வளைத்துக் கொண்ட அகத்தோன் விரும்பிய மதில் காவலாகிய நொச்சியும், அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கைக்கொண்ட புதுக்கோளாகிய முற்றுதலும், புறத்தோரும் அகத்தோரும் மதிற்புறத்து அகழின் இரு கரையும் பற்றி நீரிடைப் படர்ந்த பாசிபோன்று அக்கிடங்கின்கண் ஒதுங்கியுந் தூர்ந்தும் செய்யும் போரை விரும்பின பாசிநிலையும், அதுவன்றி ஊரகத்துப் போரை விரும்பின பாசி மறனும், இங்ஙனம் இரு திறத்தார் போர்செய்தற்கு இடனாகிய மதிலின் கண்ணே வேந்தர் இருவருள் ஒருவர் ஒருவரைக்கொன்று அவரது முடிக்கலன் முதலியனகொண்டு இறந்த வேந்தன் பெயரால் வென்றவேந்தன் முடிபுனைந்து நீராடும் மங்கலமும், இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவரை வென்றுழி அங்ஙனம் வெல்லுதற்குக் கருவியாயமைந்த கொற்றவாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலுடன் தொகைநிலையென்னுந் துறையொடு முற்கூறிய வற்றையுஞ் சேர்த்து உழிஞைத் திணைக்குரிய துறைகள் பன்னிரண்டாம் என்று கூறுவர் புறத்திணை நூலார். எ-று. முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் என்ற தொடர்க்கு, முற்ற அகப்பட்ட அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் எனப் பொருள் வரைந்து, நீரறிவறியா எனத் தொடங்கும் புறப்பாடலை உதாரணங்காட்டுவர் இளம்பூரணர். அவர் கருத்துப் படி வீழ்தல் என்றது இறந்து படுதலை. இதனையடுத்து வரும் புறத்தோன் வீழ்ந்த நீர்ச்செருவீழ்ந்த ஊர்ச்செருவீழ்ந்த என வரும் மூன்றடிகளிலும் வீழ்தல் என்னுஞ்சொல் விரும்புதல் அல்லது விழைந்து படர்தல் என்ற பொருளிலேயே ஆளப் பெறுதலால் அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் என்ற தொடர்க்கும் அகத்தோன் விரும்பின மதில் காவலும் எனப் பொருள் வரைந்து, மணிதுணர்ந்தன்ன (புறம்-272) என்ற புறப் பாடலை உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர். தொகை நிலை என்பதற்கு அம்மதிலழித்தமையால் மாறுபட்ட வேந்தரும் முரணவிந்தபடி அடைதல் என இளம்பூரணரும், பரந்துபட்ட படைக்கடற்கெல்லாம் ஒருங்குவருகெனச் சிறப்புச் செய்தல் என நச்சினார்க்கினியரும் உரை வரைந்தனர். தும்பைத்தொகை நிலைபோல் இருபெரு வேந்தரும் உடன் வீழ்தலும் சிறுபான்மை உளதாமென்றுணர்க என்பர் நச்சினார்க்கினியர். உழிஞையில் வரும் தொகைநிலை என்னும் இத்துறைக்கு இளம்பூரணர் தந்த விளக்கமே எம்மதிலின் இகல்வேந்தரும் அம்மதிலின் அடியடைந்தன்று எனப் புறப்பொருள் வெண்பாமாலையிலும் இடம் பெற்றுள்ளமை காணலாம். உழிஞைத்திணைத் துறைகளுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறைகளையுணர்த்துவது இந்நூற்பா எனக் கருத்துரைத்து இதன்கட் கூறப்படுந் துறைகள் யாவும் எயில்முற்றுவோர் எயில்காப்போர் ஆகிய இருதிறத் தார்க்கும் ஒப்பவுரியனவாகப் பொருள்வரைந்து இருபாற்பட்ட துறைகளுக்கும் உதாரணமாகப் பெரும்பொருள் விளக்க வெண் பாக்களை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். இந்நூற்பாவிற் கூறப்படும் துறைகள் சில புறத்தோனுக்கு உரியனவாகவும் சில அகத்தோனுக்கு உரியனவாகவும் ஆசிரியர் தொல்காப்பியனாரால் வரைந்து கூறப்படுதலால், இந்நூற்பாவிற் கூறப்படும் துறைகள் யாவும் புறத்தோன் அகத்தோன் ஆகிய இரு திறவேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியன எனக் கூறுதல் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகாது. இந் நூற்பாவிற் புறத்தோனுக்கு உரியவாகச் சொல்லப்பட்ட துறைகள் அகத்தோனுக்கும் அகத்தோனுக்குரியவாகச் சொல்லப் பட்ட துறைகள் புறத்தோனுக்கும் ஒப்பவுரியனவாக வழங்கிய பிற்கால மரபினை அடியொற்றித் தோன்றியது பெரும்பொருள் விளக்கம் என்னும் நூலாகும். இது நச்சினார்க்கினியர் உரையில் மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது. பிற்கால நூலாகிய இதன் கண் அமைந்த துறைகள் எல்லாவற்றையும் இந்நூற்குப் பன்னூறாண்டுகள் முற்பட்டுத் தோன்றிய தொல்காப்பியத்தில் அடக்குதல் இலக்கியங் கண்டதற்கு இலக்கணமியம்பல் என்னும் நச்சினார்க்கினியரது ஆர்வத்தின்பாற் படுமேயன்றி வரலாற்று முறைக்கு ஏற்புடைய தன்றாம் எனத் தெரிதல் வேண்டும். 12. தும்பை தானே நெய்தலது புறனே மைந்துபொரு ளாக வந்த வேந்தனைக் சென்றுதலை அழிக்குஞ் சிறப்பிற் றென்ப. இளம்பூரணம்: இது, தும்பைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தும்பை நெய்தலது புறன் - தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாம், மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்று தலையழிக்கும் சிறப்பிற்று அது வலி பொருளாகப் போர்கருதி வந்த அரசன்கண் சென்று அவனைத் தலையழிக்கும்1 சிறப்பினையுடைத்து. இதனானே எதிரூன்றல் காஞ்சி பிங்க. அநுபோக. 1474) என்பாரை மறுத்தவாறு அறிக.1 அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், இருபெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலின், அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், களரும் மணலும் பரந்தவெளி நிலத்துப் பொருதல் வேண்டு தலானும், அந்நிலம் கடல்சார்ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஓதிய எற்பாடு போர்த் தொழிற்கு முடிவாதலானும் நெய்தற்குப் புறனாயிற்று. (என்பஅசை.) (12) நச்சர் : 12 தும்பை தானே நெய்தலது புறனே. இது தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனா மென்கின்றது. இதுவும் மைந்து பொருளாகப் பொருதலின் மண்ணிடை யீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற் கூறினார்.2 (இ-ள்.) தும்பைதானே நெய்தலது புறனே---தும்பை யென்னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு. தும்பை யென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமணலுலகம்போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும் பெரும்பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த் தொழில் முடியுங்காலமாதலானும், இரக்கமுங் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறுபோலக் கணவனை இழந்தார்க் கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ் வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப வாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குப வாகலானும், பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று.1 (14) 12 (8) மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப, இஃது அத் தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) மைந்து பொருளாக வந்த வேந்தனை --- தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை; சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்றென்ப ---அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தேதான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினையுடைத்து அத் தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. வரல் செலவாதல் செலவினும் வரவினும் (தொல்-சொல்-கிளவி-28) என்பதன் பொதுவிதியாற் கொள்க. மைந்து பொருளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக; அஃது இருவர்க்கும் ஒத்தலின் எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று.2 இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனையோர்க்குங் கொள்க; அவரும் அதற்குரியராதலின். இதனைச் சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனையாற் கொல்வனவுந் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவுங் கடையூழிக்கட்டோன்றிய ஆதலிற் சிறப்பிலவாம். அவையுஞ் சிறுபான்மை கொள்க.1 (15) பாரதியார் கருத்து :--- இது, தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் எனக் கூறுகிறது. பொருள் :--- வெளிப்படை. குறிப்பு :--- ஏகாரம், முன்னது பிரிநிலை; பின்னது அசை நெய்தல் போலவே தும்பையும் ஆர்ப்பு, அலைப்பு, இரங்கல் இவற்றிற்கு இடனாதலானும், நெய்தலில் புலம்புறு தலைவியர் இரங்கல் ஓயத் தலைவர் கார்காலத்தே மீளுதல் போலத் தும்பையில் அமரோய்வு கார்காலத்தாதலானும், நெய்தற்குரிய பரந்த மென்னில வரைப்பு போர்க்குச் சிறந்துரியதாதலானும் நெய்தலுக்குத் தும்பை புறனாயிற்று. 12. (8) கருத்து :--- இது, தும்பைத்திணை இயல்பை விளக்குகிறது. பொருள் :--- மைந்து பொருளாக வந்த வேந்தனை---தன்வலியை மதித்து இகலி வந்த வேந்தனை; சென்று தலை யழிக்கும் சிறப்பிற்று என்ப---எதிர்த்துப் போய்ப்பொருதடக்கும் சீருடைத்து தும்பைத்திணை என்பர் புறநூற் புலவர். குறிப்பு :--- தும்பைத்திணை என்னும் எழுவாய், பொருட் டொடர்பால் முன் சூத்திரத்தினின்றும் பெறப்பட்டது. தும்பை இருபடையும் ஒருங்கு மலையும் போர் குறிப்பதால், வந்த வேந்தனை இருந்த மன்னவன் எதிரூன்றிப் பொருதலும் அவ்வாறு தடுத்தெதிர்த்தவனை வந்தோன் அடுத்தமர் தொடுத்தலும், ஆகிய இரு திறமும் அடங்கச் சூத்திரம் அமைந்த செவ்விகருதற்குரியது.1 எதிர்த் திருவர் மலைவதே போராதலின், போர் குறிக்கும் தும்பையின் வேறாக எதிரூன்றலைக் காஞ்சி என வேறு திணையாகக் கொள்ளும் பின்நூற் கொள்கை மிகையாதல் வெளிப்படை. அதுபற்றியே தொல்காப்பியர் எதிரூன்றலைக் காஞ்சியெனக் கூறிற்றிலர். ஆய்வுரை நூற்பா. 12. இது, தும்பைத்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத் திணைக்குப் புறனாகும். தனது போர் வன்மையினை உலகத்தார் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக் கருதிப் போர்மேற் கொண்டு வந்த வேந்தனை மாற்றானாகிய வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் சிறப்பினை யுடையது தும்பைத்திணையாம் என்பர் ஆசிரியர்---எ-று. தும்பை என்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். தத்தமது ஆற்றலை உலகத்தார்க்குப் புலப்படுத்திப் புகழ்பெறுதல் ஒன்றையே நோக்கமாகக்கொண்டு எத்தகைய சூழ்ச்சியும் இன்றி இருபெருவேந்தரும் இருதிறத்தார்க்கும் ஏற்புடைய ஒருகளத்திலே போர்செய்ய வேண்டுதலால், அதற்கு ஒத்த இடம் காடும் மலையும் வயலும் ஆகாமையானும், நெய்தற்குரிய பெரு மணலுலகம் போலக் களரும் மணலும் பரந்த வெளிநிலத்துப் போர்செய்தல் வேண்டுதலானும் நெய்தற்றிணைக்குரிய எற்பாடு போர் முடியும் பொழுதாகலானும், இரக்கவுணர்வும் தலை மகட்கே பெரும்பான்மையுளதாயவாறு போலக் கணவனை யிழந்த மகளிர்க்கேயுளதாவதன்றிப் போர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள வீரர்க்கு இரக்கமின்மையானும், அத்தகைய வீரக்குறிப்பின் பயனாய்த் தோன்றிய அருள்பற்றிப் போரின்கண் ஒருவர் ஒருவரை நோக்கி இரங்குதல் உளதாம் ஆதலானும், வீரராயினார் தமது நாட்டினைக் காக்கும் குறிக்கோளுடன் தமது வீரத்தை நிலை நிறுத்திப் போர்க்களத்து இறந்த நிலையில் அதுகண்டு அவரைப் புரந்தோராகிய வேந்தரும் நாட்டு மக்களும் கண்ணீர் மல்க இரங்குவர் ஆதலானும் நெய்தல் என்னும் அகத்திணைக்குத் தும்பை புறனாயிற்று. இருபெரு வேந்தரும் ஒருகளத்துப் பொருது தமது பெரு வன்மையினைப் புலப்படுத்தும் நிலையிற் போரில் ஈடுபட்ட படை வீரர்களின் தறுகண் ஆண்மையினைப் பலரும் அறிய விளக்கும் சிறப்பு இத் தும்பைத்திணைக்கே யுரியதாதலின் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற்று என்றார் ஆசிரியர். தலையழித்தல்---தலைமையைக் கெடுத்தல். 13. கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை வகையொடு இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே. இளம் : இது, தும்பைத்திணையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று. இது மேலனபோல ஒருபாற்கு மிகுதலின்றி இரு வகையார்க்கும் ஒத்த இயல்பிற்றாம்; ஒருவர்மாட்டும் மிகுதல் இல்லை. (இ-ள்.) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை - கணையும் வேலும் படைத் துணையாகக்கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு - நீர் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபால் பட்ட ஒரு சிறப்பின்று1 - இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்ததுபோன்று ஆடலொத்த பண்பினையுடையது. (இருநிலம் தீண்டா அரு - நீருட் கிடக்கும்அட்டை.) (13) நச் : இது தும்பைக்காவதோர் இலக்கணங் கூறுதலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.2 (இ-ள்.) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்---பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பா னெய்தும் வேல்கொண் டெறிந்தும் போர் செய்ய, அவ்வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின்3 சென்ற உயிரின் நின்ற யாக்கை---சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருநிலத் தீண்டாயாக்கை அருநிலை வகையோடு---வாளுந் திகிரியு முதலியவற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி; இருபாற் பட்ட ஒரு சிறப்பின்று இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தையுடைத்து முற்கூறிய தும்பைத்திணை என்றவாறு. எனவே முற்கூறிய மைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினார். இது திணைசிறப்புக் கூறியது. மொய்த்தலி னென்றது, யாக்கை யற்றாட வேண்டுதலிற் கணையும் வேலுமன்றி வாள்முதலியன ஏதுவாகக்கொள்க.1 பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அலீகனிற அற்றுழியும் உடம் பாடுதலின் அட்டையாட லெனவும் இதனைக் கூறுப. இனி மேற்றுறை கூறுகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே என்றுணர்க. நிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரைகொண்டானுங் களங் குறித்துப் போர்செய்தலும் வெட்சிப் புறத்துத் தும்பையாம்.2 வஞ்சியுள்ளும் விழுப்புண்பட்ட வீரரை நோக்கித் தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம்.3 முற்றப்பட்டோனை முற்று விடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி, அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன்களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத்தும்பையாம்.4 இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோடலுமன்றி மைந்துபொருளாகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று. மேற்காட்டுந் துறைகளெல்லாம் இச் சூத்திரத்துக் கூறிய இரண்டற்கு மன்றி மைந்து பொருளாயதற்கேயா மென்றுணர்க. உதாரணம் :--- நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம்-267) எய்போற் கிடந்தானென் னேறு (புறப்பொருள்-வெ-176) என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன. கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கையாயிற்று. வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை---மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர் விடாப் பாய்ந்தன மேன்மேற் பல (பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-அமர்) இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய---வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று. இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாம் இருநிலந் தீண்டா வகை. இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற்றிணை யெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற்றுறை யெனவும் படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறிய தாமென் றுணர்க. (16) பாரதியார் கருத்து :--- இது, தும்பைத்திணையின் ஒரு சிறப்புணர்த்து கிறது. பொருள் : கணையும் வேலும் துணையுறமொய்த்தலின்---அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை, (அருநிலைவகை)---பிரிந்த உயிரினின்றும் நீங்கிய பின்னும் வீழாதுநின்ற உடலின் அரிய நிலைப்பரிசு; இருநிலந் தீண்டா அருநிலைவகையொடு --- (அறுபட்டதலை முதலிய உறுப்புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல் முனைப்பால் துடித்தியங்கும் அரிய நிலைமையாகிய பரிசுடன்; இருபாற் பட்ட ஒரு சிறப்பின்றே-இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினையுடைத்து தும்பைத்திணை. குறிப்பு :--- ஈற்றேகாரம் அசை. இன்---உருபிரண்டில் முன்னது ஏதுப்பொருளிலும், பின்னது நீங்கற் பொருளிலும் வந்தன. முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற்றலும், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந் தோயாமல் துடித்தியங்கலும், ஆகிய இருவகை அரிய நிலையைச் சிறப்பாக உடையது தும்பைத்திணை. இருநிலந் தீண்டாததிது எனக் குறியாமை, சிறப்பாகத் தலை துடிப்புடன் இற்ற உறுப்பெதுவும் துடிக்கும் இயல்யிற்றாகலின் சுட்டிக் கூறல் வேண்டாமைபற்றி அமைந்தது. அன்றியும், சென்ற உயிரினின்றயாக்கை எனப் பிரித்து, இருநிலந் தீண்டா அருநிலை வகையோடு, இப்பாற்பட்ட ஒரு சிறப்பின்று எனக் கூட்டியதால், யாக்கையும் அதன் அறுபட்ட உறுப்பும் தனித்தனி சுட்டுங்கருத்துத் தெளியப்படும். (இங்கு, அரு என்பதை அட்டை எனக்கொண்டு, அதன் பின்வரும் இரு பாற்பட்ட எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இரு கூறுபட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவது போலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப் பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத் துண்டுகளும் துடிப்ப தியல்பாதலால், இரு பாற்பட்ட என்பது பொருளற்ற தாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையே யாமாதலால் அது இருநிலந் தீண்டா அருநிலை எனற்குமமையாது. அதனால், இருபாற்பட்ட எனுந் தொடர் அதை யடுத்துவரும் ஒரு சிறப்புக்கே அடையாதல் தேற்றம்) நின்ற யாக்கை, நிலந் தீண்டா உறுப்பு அருநிலை, என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க. வெற்றுடலும் அற்றதலையும் நிலந்தீண்டா நிலைக்குச் செய்யுள்; ....................tUgil தாங்கிய கிளர்தா ரகல மருங்கட னிறுமார் வயவ ரெறிய உடம்புற் தோன்றா வுயிர்கெட் டன்றே; மலையுநர் மடங்கி மாறெதிர் கழிய... முலையா நிலையி னுடல்நின் றன்றே2 ---புறநானூறு. 1 இது, சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை குறிப்பது. இனி, கொடுமணம் பட்ட எனும் பதிற்றுப்பத்துப் பாட்டில், தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ டுருவில் பேய் மகள் கவலை கவற்ற ---பதிற்று. 67 என்பதும், சிலப்பதிகாரக் கால்கோட் காதையில், தாரும் தாருந் தாமிடை மயங்கத் தோளும் தலையுந் துணிந்து வேறாகிய சிலைத்தோள் மறவ ருடற்பொறை யடுக்கத் தெறிபிண மிடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காட எனவரும் அடிகளும், இருநிலம் தீண்டாத் துணியுறுப் பருநிலை குறிப்பன. ஆய்வுரை இது, மேற்குறித்த தும்பைத்திணையின் தறுகண் ஆண்மை யாகிய சிறப்பினை உணர்த்துகின்றது. (இ--ள்) (பலரும் ஒரு வீரனை நெருங்கிப்பொருதற்கு அஞ்சிச் சேய்மையில் நின்று அம்பினால் எய்தும் சிறிது அணுகி நின்று வேல்கொண்டு எறிந்தும் போர் செய்ய, அவர்களாற் செலுத்தப்படும்) அம்பும் வேலும் செறிவுறத் தைத்தமையால் உயிர் நீங்கிய அவ்வீரனது உடம்பு, நிலத்திற்சாயாது நேர்நிற்றலும், (வாள் முதலிய படைக் கலங்களால் வெட்டுண்டு வீழும் அவ்வீரனது) தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாது அறுபட்ட அட்டையின் துண்டங்களைப் போன்று தனித்தனியே எழுந்து ஆடுதலும் என இவ்வாறு இருவகைப்பட்ட ஒப்பற்ற பெருஞ்சிறப்பினையுடையது மேற்குறித்த தும்பைத்திணையாம். எ-று. சென்ற உயிரின் நின்ற யாக்கையும், இருநிலந்தீண்டா அருநிலை வகையும் என இருபகுதிப்பட்ட ஒப்பற்ற பெருஞ் சிறப்பினை யுடையது தும்பைத்திணை என்பதாம். இருநிலந் தீண்டா அரு என்றது நீரில் வாழும் அட்டையெனப்படும் சிற்றுயிரை, நீரிலுள்ள அட்டையின் உடம்பு பலகூறாகத் துண்டிக்கப்பட்ட நிலையிலும் அறுபட்ட துண்டங்கள் தனித்தனியே இயங்குமாறு போன்று, போர்க் களத்திற்பொரும் வீரனது தலை அறுபட்ட நிலையிலும் அவனது குறையுடலும் தலையும் நிலத்திற்கிடவாது துள்ளியாடும் நிலையினையே இருநிலந் தீண்டா அருநிலை என்றார் தொல்காப்பியனார். இதனை அட்டையாடல் எனவும் கூறுப. இந்நூற்பாவில் தும்பைத்திணை வீரர்க்குரியவாகச் சொல்லப் பட்ட சிறப்பினை, விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகைநிலை யுரைத்தன்று (பு. வெ. மா. 149) என வெருவரு நிலை என்னுந் தும்பைத்துறையுள் வைத்து விளக்குவர் ஐயனாரிதனார். இளம்பூரணம் : 14. தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டும் எறிந்த தார்நிலை அன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமத் தானும் களிறெறிந்து எதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் வாள்வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும் செருவகத்து இறைவன் வீழ்வுறச்1 சினைஇ ஒருவனை2 மண்டிய நல்லிசை நிலையும் பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. இஃது தும்பைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நோனார் உட்கும் தானை யானை குதிரை என்ற மூவகை நிலையும்1 பகைவரால் உட்கப்படுகின்ற தானையும் யானையும் குதிரையுமாகிய மூவகைப்பட்டவற்றினது நிலையும். வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டும் எறிந்த தார் நிலையும்2 -வேல்வென்றி மிகலையே கண்ணோக் குடையனாய்க் களத்து முகப்பிற் சென்ற வேந்தனை மாற்றார் சூழ்ந்த இடத்து வேந்தன் பாலினனாய மற்றொரு தலைவன் தன் நிலை விட்டுத் தன்வேந்துமாட்டு அடுத்துத் துணையாய் மாற்றாரை எறிந்த தார்நிலையும். அன்றி இருவர் தலைவர் தபுதிபக்கமும்3-அஃதல்லாமல் படை நின்று பொராநின்ற இருவரும் தம்முள் பொருது படுதலும். ஒருவன் ஒருவனை உடைபடை புக்கு கூழை தாங்கிய பெருமையும்-4ஒருவன் ஒருவனைக் கெடுபடையின்கண் புக்குக் கூழை தாங்கிய பெருமையும். படை அறுத்து பாழிகொள்ளும் ஏமமும்-5கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ஏமமும். (அத்தும் ஆனும் சாரியை.) களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும்-1களிறு எறிந்து எதிர்ந் தோர் பாடும். களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்-களிற்றுடன் போந்து மலைந்துபட்ட இறை வனை மிக்க வேந்தன் படையாளர் நெருங்கி மற்றவனைப் பாடும் பாட்டும். அமல்-நெருங்கல், அதனாலாய பாட்டுக்கு ஏற்புடைத் தாயிற்று. வாள்வாய்த்து2 இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியா தொகைநிலையும்-3 வாள்தொழில் முற்றி இரு பெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாமல் பட்டபாடும். (கண் என்பது இடைச்சொல்.) செரு அகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ4 ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும்-பொருகளத்துத் தன்வேந்தன் பட அது கண்டு கறுத்தெழுந்து படைத் தலைவன் வீரனொருவனை நெருங்கிப் பொருத ஒரு நற்புகழ் நிலைமையும். பல படை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள்வாள் வீசிய நூழிலும்-5 பல படை ஒருவற்குக் கெடுதலின் அவன் ஒள்ளிய வாள் வீசிய நூழிலும் அது பலரைக் கொல்லுதல். (மற்று அசை) நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதா னாகிப் பொருதுகளத்து அடலே (புறம்.79) எனவும், வள்ளை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழில் ஆட்டு (மதுரைக் காஞ்சி-2.5.5.7) எனவும் பல உயிரை ஒருவன் கொன்றதனை நூழில் என்றவாறு அறிக. உளப்பட புல்லித்தோன்றும் பன்னிரு துறைத்து-1 உட்படப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறைகளையுடைத்து. (ஏகாரம் ஈற்றசை.) நச் : இது மைந்துபொருளாகிய தும்பைத்திணைக்குத் துறை இனைத்தென்கின்றது. (இ-ள்.) தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்---தானைநிலை யானைநிலை குதிரைநிலை என்று சொல்லப்பட்ட போர்செய்தற்கு ஆற்றா அரசர்2 தலை பனிக்கும் மூன்று கூறுபாட்டின் கண்ணும்; நோனார் உட்குவரெனவே நோன்றார் உட்காது நிற்பாரா யிற்று.3 அவர் போர்க்கொண்டு சிறப்புச்செய்யுந் தேவரும் பிணந்தின் பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவியருங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரு மென்று கொள்க. துறக்கம்புகு வேட்கையுடைமையிற் சாலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைக் கூறி, மதஞ்சிறவாமையிற் கதஞ்சிறவாத குதிரையை அதன்பின் கூறினார். குதிரையானன்றித் தேர் தானே செல்லாமையிற் றேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார்.1 நிலை யென்னாது வகை யென்றதனான் அம்மூன்று நிலையுந் தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனே வலிற் றானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரேவலிற் பொருதலும், படையாளர் ஒருவரொருவர் நிலை கூறலும் அவர்க்கு உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க. இனி இவை தாமே கறுவுகொண்டு பொருவுழித்2 தானை மறம் யானைமறங் குதிரைமற மென்று வெவ்வேறு பெயர் பெறுமென்று கொள்க.3 இனித் தாயர் கூறுவன மூதின் முல்லையாம்; மனைவியர் கூறுவன இல்லாண் முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண் முல்லையாம்; பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க. இவை கூறி ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார் மனஞெகிழ்ந்து போவாரு முளர்.4 அவை ஓரொரு துறையாக முதனூற்கண் வழங்காமையானும் அவற்றிற்கு வரையறை யின்மையானும் இவர் தானைநிலை யென அடக்கினார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார். அத் தானை சூடிய பூக்கூறலும், அதனெழுச்சியும், அரவமும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக் கண்டு இடை நின்றோர் போரை விலக்கலும் அவர் அதற்குடம்படாமைப் போர் துணிதலும், அத் தானையுள் ஒன்றற்கிரங்கலும், துணை வந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் ஏனைநாட்டென்றலும் இருபெருவேந்தரும் இன்னவாறு பொருது மென்று கையெறிதலும் போல்வன வெல்லாம் இத்துறைப்பாற்படும்.1 உதாரணம் :- கார்கருதி நின்றதிருங் கெளவை விழுப்பணையான் சோர்குருதி சூழா லனநினைப்பப்-போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து. (புற-வெ-மாலை-தும்பை-1) இது பூக் கூறியது. இதனைத் திணைப்பாட்டு மென்ப.2 வெல்பொறியு நாடும் விழுப்பொருளுத் தண்ணடையுங் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான்--பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு. (புற-வெ-மாலை தும்பை-2) இது சிறப்புச் செய்தது. வயிர்மேல் வளைநரல வைவேலும் வாளுஞ் செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி---யுயிர்மேற் பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க் குலகழியுமோர்த்துச் செயின். (புற-வெ-மாலை-தும்பை-4) இது விலக்கவும் போர் துணிந்தது. மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி னென்னாங்கொ லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப் பாழித்ப்தோண் மன்னர் படை. (புற-வெ- மாலை- தும்பை-5) இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது. கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலு மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக்---கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம். இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள்1 தமக்குப் படைத் தலைவரை வகுத்தது. இஃது உதவியது :--- இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலுங்களிற்றின் மேலுந் தேரின் மேலுங் குதிரை சேறலுந் தன்மேலிருந்து பட்டோருடலை மோந்துநிற்றலும் பிறவுமாம். இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர்யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண் டெறிந்த தார்நிலை---தன்படை போர் செய்கின்றமை கண்டு தானும் படையாளர்க்கு முன்னே சென்று வேலாற் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அது கண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத் தலைவனாயினும் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனோடு பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்; 1 தாரென்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது தார் நிலையாயிற்று. நிரப்பாது கொடுக்கும் என்னும் (180) புறப்பாட்டினுள் இறையுறு விழுமந் தாங்கி என்பதும் அது. அன்றியும் இருவர் தலைவர்2 தபுதிப்பக்கமும்---இருபெரு வேந்தர் தானைத்தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார் தாங்குதலே யன்றி அத் தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற்கண்ணும்; பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க. இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற் படுத்துக. உடைபடை ஒருவன் புக்கு ஒரவனைக் கூழை3 தாங்கிய எருமையும்---தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ஙனங் கெடுத்த மாற்றுவேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டு நின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச் சிறக்கணித்து4 நிற்கு நிலைமைக் கண்ணு; ஒருவனொருவனைத் தாங்கின எருமையென முடிக்க. படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும்---கைப்படை யைப்போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கத்தின் கண்ணும்; பாழி, வலி; இஃது ஆகுபெயர்.1 களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும்---மாற்றுவேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானுங் கடுக்கொண்டெதிர்ந்தானும்2 விலக்கி அவனையும் அக் களிற்றையும் போர்செய்தோர் பெருமைக் கண்ணும்; இது களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானைநிலையுள் அடங்காதாயிற்று. களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்3---அங்ஙனம் நின்று களிற்றொடுபட்ட வேந்தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்து நின்று ஆடுந் திரட்சிக்கண்ணும்; அமலுதல் நெருங்குதலாதலின், அமலை யென்பதூஉம் அப் பொருட்டாயிற்று; இப் பாரதப்பாட்டும் அது. வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்4---இருபெரு வேந்தர் தாமும் அவர்க்குத் துணையாகிய வேந்தருந் தானைத் தலைவருந் தானையும் வாட்டொழின்முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகைநிலைக் கண்ணும்; செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்---போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத்தாற் பட்டானாகச் சினங்கொண்ட மனத்தனாய்ப் பெரும் படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக் கண்ணும்; அது குருகுல வேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்களைவரையுங் கொன்று வென்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த் தொழில் போல்வன.1 தன்னரசன் அறப்போரிடத்துப் படாது வஞ்சனையாற் படுதலின், அவனுக்குச் சினஞ்சிறந்தது. இச் சிறப்பில்லாத தும்பையும் இக் கலியூழிக்கா மென்பது சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று (தொல்-பொ-புற 15) என்புழிக் கூறிற்று. உதாரணம் :--- மறங்கெழு2 வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக்3 காவயி னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத1 லமரர் வியந்தனர் நயந்த விசும்பி னியன்றலை யுலகமு முறிந்ததா லதுவே. இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க. ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும்---அங்ஙனம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற் கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின்2 அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று3 கருதாது அவன் வாளாற்றடிந்து கொன்று குவித்தற்கண்ணும்; வஞ்சத்தாற் கொன்ற வேந்தனைக் கொன்றமைபற்றித் தனக்குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப் பெற்றோனென்றார்.4 நூழிலாவது, கொன்று குவித்தல். வள்ளை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டு (பத்துப்-மதுரைக், 255-257) புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே---பொருத்தித் தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றவாறு. இன்னும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டன் கண்ணும் முற்கூறிய வெட்சித் திணை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள் கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால் ஏனைத் திணைக்கட் கூறினாற்போல ஒன்று நிகழ்ந்தபின் ஒன்று நிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத் திணை நிகழுமென்றற்குப் புல்லித்தோன்றும் என்றார்.1 பல்பெருங் காதமாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் துறையெனப் பலதுறை யென்பதுபோல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதியுடன் அறுதிகாட்டிற்றென்றுணர்க. இவ் விலக்கணம் மேல் வருகின்ற திணைகட்கும் ஒக்கும்.2 பாரதியார் கருத்து :--- இது, தும்பைத்திணையின் துறைவகையும் இயல்பும் கூறுகிறது. பொருள் :--- (1-3); தானை யானை குதிரை என்ற தோனார் உட்கும் மூவகை நிலையும்---பகைவரை அஞ்சப் பண்ணும் ஆட்படை வகுப்பு, யானை நிரை, குதிரையணி எனும் முத்திற நிலைகளும்; இதில் யானை---தானை---குதிரை (மா) என்ற மூவகை நிலையுமொருங்கு வருதலறிக. இனி, இவை தனித்தனியே வருதல் பெருவழக்கு. 4. வேன் மிகு வேந்தனை மொய்த்த வழி, ஒருவன்தான் மீண்டெறிந்த தார்நிலை அன்றியும்---வேன்மறத்தால் வீறுபெற்ற வேந்தனைப் (பகைமறவர்) சூழ்ந்து நெருக்கிய விடத்து, அவன் தானைத்தலைவன் தான் ஒருவனாய்ப் பகைவர் முன்னணியை மறித்து முறித்த தும்பைத்தார்நிலையும், அல்லாமலும்; 5. இருவர் தபுதிப் பக்கமும்---எதிர்த்து மலையும் இரு படைத் தலைவரும் தம்முள் பொருது கெடும் பரிசும்; (தபுதி - இழவு அல்லது கேடு. இது கெடுதல் குறிக்கும் தபு என்னும் முதனிலை யடியாகப் பிறந்த தொழிற் பெயர்) 6. ஒருவன், ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும்---ஒரு மறவன் தன் தலைவனை அவன் உடைபடையுட் புகுந்து (அதன் பின்னணியைத் தாக்கும் பகைவரைத் தகைந்து) ஏமமுறக்காக்கும் தளராத் தறுகண்மையாகிய எருமைமறமும்;) (கூழை---பின்னணி, தாங்கல்---தடுத்தல் அல்லது பேணுதலாம். இதில் தாங்கல் வினையை ஒருவனுக்கும் கூழைக்கும் தனித்தனிப் பிரித்துக் கூட்டுக. முறியுந் தம் படையின் பின்னணியைப் பகைவர் தாக்காது காத்தலும், அப்படை முடிய அடர்த்த பகைவரை எதிர்த்துத் தடுத்து நிறுத்தலும் ஒருவன் அருந்திறலான் தானும், அத்திறலுடை மறவன் (எதிர்வரும் எதற்கும் அஞ்சாது அசையாது நிலைத்து நிற்கும் எருமைபோல) தான் ஒருவனாய்த் தளராது எதிர்த்துவரும் படையைத் தாங்கும் தறுகண்மை வியத்தற்குரிய தாதலானும், அவன் திறம் எருமை மறமெனப்பட்டது. உடையும் படையின் பின்னணி தாங்கித் தொடரும் பகைஞரைத் தாக்கித் தகையும் தறுகண்மை எருமை மறம் எனப்படும்.) 7. படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும்---மேல் வரும் பகைப் படைக்கலங்களை அழித்து மதுகைகொள்ளும் பாது காவலானும் (பாழி-மதுகை, வலி பெருமையுமாம்) 8. களிறெறிந்து எதிர்ந்தோர் பாடும்---மேல்வரும் பகைவர் யானையை எதிர்த்தேறும் மறவர் பெருமையும், 9. களிற்றொடுபட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் ஊர்ந்த யானையொடு எட்டழிந்த மன்னனை, வென்று கொன்ற மன்னனின் வாள் மறவர் சூழ்ந்தாடும் ஆர்ப்பும்; (அமலுதல்---நெருங்குதல். ஈண்டு அமலை. பலர் நெருங்கி ஆர்க்கும் ஆரவாரத்திற்கு ஆகுபெய ராயிற்று.) 10. வாள் வாய்த்து இருபெரு வேந்தரும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்---வாட்புண் பெற்று இகலும் பெருவேந்தர் இருவர் தாமும் தமக்குத் துணையாம் தமரும் ஒருவருந் தப்பாமல் மாய்ந்தழியும் தொகைநிலை என்னும் துறையும். (இதில்வரும் தும்பைத் தொகைநிலை, முன் சுட்டப்பட்ட உழிஞைத்துறையான தோற்றோர் தொலைவு குறிக்கும். தொகை நிலையில் வேறுபட்டுப் பொருமிருதிறத்தார் தொலைவும் தெரிவிப்பதாதலின் ஈண்டு வேறு கூறப்பட்டது) 11. செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்---போர்க்களத்தில் தன் வேந்தன் பட்டுவிழ வெகுண்டு அவன் படை மறவன் ஒருவன் அவனை வீழ்த்தியவரை அடர்த்தழிக்கும் தூய புகழ்ப் பரிசும்; 12. பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும், உளப்பட---பலவேறாய பகைப்படையனைத்தும் ஒருவனுக்குடைந்துகெட்டழிந்தவிடத்து அவ்வாறு வென்றவன் வீறுகொண்டு புகழ்க்குரிய தன் வெற்றிவாளை வீசிக் கொன்று குவிக்கும் நூழில் என்னும் துறையும், கூட்ட (ஒருவன் பலரைக் கொன்று குவிக்கும் தறுகண்மை நூழில் எனவும், நூழிலாட்டு எனவும் பெயர் பெறும். அது குவிதலையும் கொல்லுதலையும் குறிக்கும் சொல்லாகும்.) புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே---பொருந்தி விளங்கும் பன்னிரண்டு துறைகளையுடையது தும்பைத்திணை (ஈற்றேகாரம் அசை. உம்மைகள் எண் குறிப்பன. பொருட் டொடர்பால் தும்பைத்திணை என்னும் எழுவாய் பெறப்பட்டது.) ஆய்வுரை நூற்பா. 14. இது, தும்பைத்திணையின் துறைகளை விரித்துக்கூறுகின்றது. (இ-ள்.) காலாட்படையாகிய தானை, யானைப்படை, குதிரைப்படை எனப்பட்ட பகைவர் பொறுத்தலாற்றாது உளம் நடுங்குதற்கு ஏதுவாகிய மூவகை நிலைகளும், மேலாற்பொருது வென்றிமிகுகின்ற தம்முடைய வேந்தனை மாற்றார் படைவீரர் பலரும் சூழ்ந்துகொண்ட நிலையினை வேறோர் இடத்திற் பொருது நிற்கும் வீரனொருவன் கண்டு தான்செய்யும் போரைக் கைவிட்டு முந்துற்றுவந்து தன் வேந்தனொடு பொருகின்றாரை எறிந்து வீழ்த்திய தார்நிலையும், அதுவன்றி இருபெரு வேந்தருடைய படைத்தலைவர்கள் இருவரும் தத்தம் வேந்தர்க்குத் துணையாய் வந்து தம்மிற்பொருது இறக்கும் பகுதியும், படைத் தலைவன் ஒருவன் போர்செய்து பின்னிடும் தனது படையுட் புகுந்துநின்று தனதுபடையின் பின்னணிச் சேனையைத் தானொருவனாகவே நின்று தாங்கி நிறுத்திய எருமை மறனும், வீரனொருவன் தனது மெய்வலியால் (மற்) போர் செய்யும் ஏம நிலையும் களிற்றினை எறிந்து வீழ்த்திப் பகைவரை எதிர்த்துப் போர் செய்தோர் இறந்துபடுதலும், களிற்றுடன் பொருது இறந்துபட்ட வேந்தனைக் கொன்ற வேந்தனுடைய வாட்படை வீரர் நெருங்கிப் பாடியாடும் அமலையும், வாளாற் செய்தற்குரிய போர்த் தொழிலில் முற்றி இருபெரு வேந்தர் தாமும் அவர் களைப் பிரியாது சூழ்ந்த சுற்றத்தாரும் ஒருவரும் தப்பாமற் போர்க் களத்தில் இறந்துபட்ட தொகைநிலையும், போர்க் களத்துத் தன் வேந்தன் பொறாது இறந்துபட அதுகண்டு வீரனொருவன் சினந்து எழுந்து (தன்வேந்தனது வீழ்ச்சிக்குக் காரணமாய் நின்ற) வீரன் ஒருவனை நெருங்கிப் பொருத நல்ல புகழ்நிலையும், பல படைகளும் ஒருவனுக்குத் தோற்று ஓடுதலால் அவன் தன்னெதிர்ப்பட்ட பகைவர்களைத் தனது ஒளிமிக்க வாட்படையினாற் கொன்று குவித்த நூழிலும் உட்படப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறைகளையுடையது தும்பைத் திணை எ-று. தானை---காலாட்படைவீரர். நோனார்---பகைவர் செய்யும் போர்த்திறங்களைப் பொறுத்து எதிர்நிற்கும் வன்மையில்லாதவர்; பகைவர். உட்குதல்---நெஞ்சம் நடுக்குறுதல். மூவகை நிலையாவன தானைநிலை, யானைநிலை, குதிரைநிலை என்பன. தார்---முன்னணிப்படை; தூசிப்படை. தபுதி---இறந்துபடுதல். உடைதல் ---எதிர்த்து நிற்றலாற்றாது சிதறப் பின்னிடுதல். கூழை--- பின்னணிப்படை. தாங்குதல்---பின்னிடாது தடுத்து நிறுத்தல் எருமைக்கடாப் போன்று அசையாது தடுத்து நிற்றலால் கூழை தாங்கிய எருமை எனப்பட்டது. கூழை தாங்கிய பெருமையும் என்பது இளம்பூரணர் உரையிற் கண்ட பாடம். இதனை எருமை மறம் என்றது துறையாக ஐ யனாரிதனார் குறிப்பிடுதலால் கூழை தாங்கிய பெருமை என்ற பாடமே அவர்காலத்து வழங்கிய தொன்மையுடையதெனத் தெரிதலின் கூழை தாங்கிய பெருமை எனவே பாடங்கொண்டார் நச்சினார்க்கினியர். பாழி ---உடலின் வன்மை. பாடு---இறந்துபடுதல். வாள்வாய்த்து---வாளால் செய்யும் போர்த்தொழில். முற்றி வாட்படைக்கு இலக்காகி எனப் பொருளுரைப்பினும் அமையும். வீரனொருவன் பலரையுங்கொன்று குவித்தலை நூழில் என்பர். ஈண்டு, ஒருவரும் ஒழியாத் தொகைநிலை என்றது, போர்க்களத்திற் பொருவோர் எல்லாரும் ஒருவரும் எஞ்சுதலின்றி இறந்துபட்ட நிலையை. போர்வீரரது தறுகண் உணர்வாகிய உள்ளத்தின் திண்மை யினைப் பலரும் அறிய விளக்கும் சிறப்புடையது தும்பைத்திணை. தானைநிலை முதலாக நூழில் ஈறாகச் சொல்லப்பட்ட தும்பைத்திணைத்துறைகள் பன்னிரண்டும் மைந்து பொருளாக ஒரு களத்துப் பொருது உடற்றும் இருதிறப் படையாளர்க்கும் ஒப்ப அமைந்தன வாகும். இளம்பூரணம் : 15. வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. (இ-ள்.) வாகை பாலையது புறன் - வாகைத்திணை பாலை என்னும் அகத்திணையினது புறனாம்; தாவில் கொள்கை1 தத்தம் கூற்றை---பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப - அது கேடில்லாத கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல் என்பர். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், பாலையாவது தனக்கென ஒருநிலமின்றி எல்லா நிலத்தினும் காலம்பற்றிப் பிறப்பதுபோல இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினும் காலம்பற்றி நிகழ்வதாதலினாலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறுபோலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழப்படுதலாலும் அதற்கிது புறனாயிற்று.1 அஃது ஆமாறு வருகின்ற சூத்திரங் களானும் விளங்கும். (15) நச்சர் : 15 வாகை தானே பாலையது புறனே. இவ் வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாமென்கின்றது. (இ-ள்.) வாகை தானே---இனிக் கூறாதுநின்ற புறத் திணையுள் வாகையெனப்பட்டது தானே; பாலையது புறனே---பாலையென்னும் அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு. என்னை? பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லற நிகழ்த்திப் புகழெய்துதற்குப் புரியுமாறுபோலச், சுற்றத் தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம்பெறுங் கருத்தினாற் சேறலானும், வானினுந் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றி யெய்துவோரும் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுளதாயிற்று. பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகழுமாறுபோல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத்திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. நாளு நாளு மான்வினை யழுங்க; வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ் என ஆள்வினைச் சிறப்புக்கூறிப் பிரியுமாறுபோல இதற்குத் துறக்கமே எய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை பெருவர விற்றாய்த் தொகைகளுள் வருமாறுபோல வாகையும் பெருவரவிற்றாய் வருதலுங் கொள்க.2 (18) 15 (8) தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை---வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத் தோரும் அறிவருந் தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடு களை; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப---இருவகைப்பட மிகுதிப் படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.1 இருவகையாவன, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்த லெனப் பிறவினையாற் கூறினார். அவர் தம்மினுறழாதவழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனென்றுரைத்தலும் வாகையென்றற்கு ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல உலக முழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது1 தாவில் கொள்கையெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று.2 (19) பாரதியார் கருத்து :--- இது, வாகைத்திணை பாலை என்னுமகத் திணைக்குப் புறனாமென வுணர்த்துகிறது. பொருள் :--- வெளிப்படை. குறிப்பு :--- ஏகாரம், முன்னது பிரிநிலை; ஈற்றது அசை. பாலை அறக்காதலை வளர்த்து மீட்டும் இன்பத்தை மிகுப்பது போல, வாகை மறக்காதலை வளர்த்து வெற்றியின்பம் விளைப்பதாலும், பாலைபோல வாகையும் நிலம் வரைவின்றி யாண்டும் நிகழுமாகலானும், பாலைக்கு வாகை புறனாயிற்று. 15. (8) கருத்து :--- இது, வாகைத்திணை இயல் விளக்குகிறது. பொருள் :--- தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை---குற்ற மற்ற கோட்பாட்டளவில் மக்கள் அவரவர் துறையில்; பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப---வகைபடவிஞ்சும் விறலை வாகை என்பர் புறநூற் புலவர். குறிப்பு :--- இங்கு வாகைச் சொல் கொண்ட பொருட் டொடர்பாலும். புறநூற் புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையானும் கொள்ளப்பட்டன. இழிவொடு பழிபடு மெல்லாத்துறையும் வெறுத்துவிலக்க வேண்டுமாதலின், அவற்றை நீக்கத் தாவில் கொள்கை என்றடை கொடுத்துப் புரைதீர் திறலெதுவும் வாகைக் குரித்தென வரையறுத்துத் தெளிவித்த செவ்வி வியத்தற்குரியது. அவரவர் துறையில் பிறருடனுறழ்ந்து மேம்படு வெற்றி பெறுதல் வாகை எனப்படும். உறழ்பவரின்றி ஒருதுறையில் ஒப்பற்றுயரும் பரிசும் வாகையேயாகும். மேம்பட்டு வீறு பெறுதலே வாகையாகலின், அதற்கு உறழ்ச்சி (போட்டி) இன்றியமை யாததன்று. இசைபடப் புகழும் பாடாணின் வேறாய், உறழ்வாரை வென்றுயரும் வீறும் எதிர்ப்பின்றி ஒருதுறையில் மேம்படும் விறலும் ஒப்ப வாகை வாகையி லடங்கும். செய்யுள் :---1 ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் எனும் இடைக்குன்றூர் கிழார் புறப்பாட்டிறுதியடிகள். ஒத்தாரோ டுறழ்ந்துவென்ற வாகை குறிப்பதறிக. இன்னும் சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் எனும் கோவூர் கிழார் பாட்டினிறுதியில், விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப வலமுறை வருதலும் உண்டென்றலமந்து... துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே (புறம். 31) எனவருவது, எதிர்ப்பாரின்றி உலகறிய வுயர்ந்த தறுகண் வீறு கூறும் வாகையாதல் காண்க. ஆய்வுரை நூற்பா. 15. இது வாகைத்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ ள்) வாகைத்திணைதான் பாலை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். அஃதாவது உலகமக்கள் அனைவரும் குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்கு உரிய அறிவு, ஆண்மை, பெருமை பற்றிய கூறுபாடுகளை ஏனையோரினும் மிகுத்து மேம்படுதலாகும். எ-று. பாலை என்னும் அகத்திணை தனக்கெனத் தனிநிலம் பெறாது எல்லா நிலங்களிலும் காலம் பற்றிப் பிறப்பது போன்றே, வாகைத்திணையாகிய இதுவும் தனக்கெனத் தனிநிலம் பெறாது எல்லா நிலத்தினும் எல்லாக்குலத்தினுங் காலம் பற்றி நிகழ்தலானும், மனைவாழ்க்கையில் ஒத்தார் இருவர் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலவே சமுதாய வாழ்வில் தன்னோடு ஒத்தாரினின்றும் மேற்பட்டுப் பிரிந்து புகழப் படுதலானும் பாலைக்கு வாகை புறனாயிற்று என விளக்கந்தருவர் உரையாசிரியர். மக்கட்குலத்தார் தத்தமக்குரிய கல்வி தறுகண் முதலாகச் சொல்லப்பட்ட பல துறைகளிலும் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம்படுதலும், தமக்குரிய துறையில் எதிர்ப்பு எதுவுமின்றி இயல்பாகவே மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இருதிறமும் வாகைத் திணையெனவே கொள்ளப்படும். இவற்றுள் ஒத்தார் பிறரோடு உறழ்ச்சி வகையாற் பெற்ற வென்றியை வாகை எனவும், பிறருடன் உறழ்தலின்றித் தம் மியல்பாற் பெற்ற வென்றியை முல்லையெனவும் வேறுபடுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும். தாஇல் கொள்கை---குற்றம் இல்லாத கோட்பாடு; உலகில் வாழ்வார் பிறர்க்கு எத்தகைய துன்பமும் விளைத்தலின்றி அனை வர்க்கும் நலமே விளைக்கும் உயர்ந்த கொள்கை என்பதாம். தத்தம் கூறாவன அறிவு ஆண்மை பெருமை பற்றிய தத்தம் ஆற்றற்கூறுபாடுகளுக்கு ஏற்பத் தாம் மேற்கொள்ளும் செயல் வகைகள். பாகுபட மிகுதிப் படுத்தலாவது, உலகத்தார் பலவகை யானும் ஏனையோர் செயல்களோடும் ஒப்புநோக்கி அவற்றின் மிக்கனவாகப் பாராட்டும் வண்ணம் தத்தம் திறத்தினை மேன் மேலும் மிகுத்து மேம்படுதல். தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர் பெழுதரு வானிற முகனே எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடர் இங்குக் கூறப்பட்ட வாகைத்திணையிலக்கணத்தினையும் வாகைத்திணையை மேற் கொண்டோர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்று ஊக்கமளிக்கும் இறைவனது பேருதவியினையும் நன்கு புலப்படுத்துவதாகும். 16. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும் பாலறி மரபில் பொருநர் கண்ணும் அறநிலை வகையோடு ஆங்கெழு வகையால்1 தொகைநிலை பெற்றது என்மனார் புலவர். இளம் : இது, வாகைத்திணை பாகுபடுமாறு உணர்த்து தல் நுதலிற்று. பார்ப்பனப் பக்கம் முதலாகப் பொருநர் பக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட அத்தன்மைத்தாகிய நிலைவகையோடே ஏழ்வகையால் தொகைநிலைபெற்றது (வாகைத்திணை.) எனவே தொகைநிலை பல வென்பது பெறுதும். (இ-ள்.) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அறுவகைப்பட்ட பக்கம் எனக் கூட்டுக. அவையாவன :--- ஓதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. இவ்வொழுக்கத்தால் மிகுதல் வாகையாம் என்பது. பார்ப்பனப் பக்கமும் என்றதனான் அப்பொருளின் மிகுதி கூறலும் இதன்பாற்படும் இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். ஓதலாவது கல்வி. ஓதல் வருமாறு இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாங்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. (நாலடி. கல்வி 2) இது கல்வியின் விழுப்பம்கூறிற்று. ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆதலால்1 ஆற்றுணா வேண்டுவ தில். (பழமொழி-116) இது கற்றோர்க்கு உளதாகும் விழுப்பம் கூறிற்று. இஃது ஏனைய மூன்று வருணத்தார்க்கும் ஒக்கும். ஓதுவித்தலாவது - கற்பித்தல். ஓதுவித்தல் வருமாறு எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. (குறள்-124) வேட்டலாவது - வேள்வி செய்தல். வேட்டல் வருமாறு நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போ காது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த இருமுது நூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்அன்ன பொய்யுணர்ந்து பொய்ஓராது மெய்கொளீஇ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை கவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த அருங்கற்பின் அறம்புகழ்ந்த வலைசூடிச் சிறுநுதற்பேர் அகலல்குற் சில சொல்லிற் பல கூந்தல்நின் நிலைக்கொத்தநின் துணைத் துணைவியர் தனக்கமைந்த தொழில் கேட்பக் காடென்றா நாடென்றாங்கு ஈரேழின் இடமுட்டாது நீர்நாண நெய்வழங்கியும் எண்நாணப் பலவேட்டும் மண்நாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் திருந்தேந்துநிலை என்றும், காண்கதில் அம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பின் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனல் படப்பை எம்மூர் ஆங்கண் உண்டுந் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல் அத்தை யானே செல்லாது மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம் போல நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே. (புறம்-166) வேட்பித்தலாவது வேள்வி செய்வித்தல். நளிகடல்இருங் குட்டத்து என்னும் புறப்பாட்டினுள், ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றம் ஆக மன்னர் ஏவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே (புறம். 26) என அரசன் வேட்பித்தவாறும், பார்ப்பார் வேட்டவாறும் கண்டு கொள்க. ஈதலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல். உதாரணம் இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள. (புறம். 223) ஏற்றலாவது, கோடல்; கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமல் கோடல். உதராணம் இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்இனி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானைஎம் பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே. (புறம்-162) ஐவகை மரபின் அரசர் பக்கமும்-ஐவகைப்பட்ட அரசர் பக்கமும். அவையாவன : ஓதலும் வேட்டலும் ஈதலும் படை வழங்குதலும் குடியோம்புதலுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற்சொல்லப்பட்டன. ஏனைய இரண்டும் இனிக் கூறப்படுகின்றன.1 படைவழங்குதல் வருமாறு கடுங்கண்ண கொல்களிற்றால் காப்புடைய எழுமுருக்கிப் பொன்னியல் புனைதோட்டியான் முன்புதுரத்து சமம்தாங்கவும் பாருடைத்த குண்டகழி நீரழுவ நிவப்புக் குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை புலவுநாற் றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்துவை கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும் மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு ஆரணங் காகிய மார்பிற் பொருநர்க்கு இருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (புறம். 14) குடியோம்புதல் வருமாறு இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு, அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வோரே திருவில் அல்லது கொலைவில் அறியார் பிறர்மண் உண்ணுஞ் செம்மல்நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது பகைவர் உண்ணா அருமண் ணினையே அம்புதுஞ்சும் கடி அரணால் அறந்துஞ்சும் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை அனையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே. (புறம்-20) பக்கம் என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற் கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஆறு மரபினை யுடைய வணிகர் வேளாளர் பக்கமும்1. வணிகர்க்குரிய ஆறுபக்கமாவன; ---ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல். உதாரணம் உழுது பயன்கொண் டொலிநிரை ஓம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து---முழுதுணர ஓதி அழல்வழிபட் டோம்பாத ஈகையான் ஆதி வணிகர்க் கரசு. (புறப். வாகை. 10) வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன: உழவு; உழ வொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி. உதாரணம் சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (குறள். 1031) கருமஞ் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையில் பீடுடைய தில். (குறள். 1021) இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (குறள். 1035) பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி. (புறம். 35) இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா உணரற்பாற் றன்று (நாலடி. குடிப்பிறப்பு-4) வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம். 183) இவை ஆறும் வந்தவாறு காண்க. மறுவில் செய்தி மூவகை காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்-குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக்காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும். இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின். அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடலத்துள், பனியும் வெயிலுங் கூதிரும்யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை எனவும் ஓதுதலின் மேலதே பொரு. அறிவன் என்றது கணியனை1 மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் என்றார். நால் இரு வழக்கின் தாபத பக்கமும்-எட்டுவகைப்பட்ட வழக்கினையுடைய தாபதர் பக்கமும்.1 அவையாவன :---நீராடல், நிலத்திடைக்கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவு கோடல் தெய்வப்பூசையும் அதிதி பூசையும் செய்தல். இவற்றுள்ளும் சில வந்தவாறு காண்க. பால் அறி மரபின் பொருநர் கண்ணும்-பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொருநர் பக்கமும்.2 அஃதாவது, வாளானும் தோளானும் பொருதலும் வென்றி கூறலும் வாகையாம் என்றவாறு. அனைநிலைவகையொடு-வாளானும் தோளானும் பொருது வேறலன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகையான் வேறலொடு. அஃதாவது, சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும்-பிறவும் அன்ன. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (குறள். 648) இது சொல் வென்றி. வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து. (புறப். பெருந்திணை. 18) இது பாடல் வென்றி. கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு---பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின்று ஆடும் தொடுகழல் மன்னன் துடி. (புறப். பெருந்திணை. 17) இஃது ஆடல் வென்றி. கழகத் தியலுங் கவற்று நிலையும் அளகத் திருநுதலாள் ஆய்ந்து---கழகத்திற் பாய வகையாற் பணிதம் பலவென்றாள் ஆய நிலையம் அறிந்து. (புறப். பெருந்திணை. 16) இது சூது வென்றி. பிறவும் வந்தவழிக் காண்க. எழுவகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்-1 ஏழ்வகையான் தொகைநிலை பெற்றதென்று கூறுவர் புலவர். (ஆங்கு என்பது அசை.) (16) நச் : 16 இது வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார், இன்னும் அதற்கேயானதொரு சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறுகின்றது; மேற்கூறி வருகின்றாற்போலத் துறைப்படுத்திக் கூறுதற்கேலாத பரப்புடைச் செய்கை2 பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின்.3 (இ-ள்.) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்---ஆறு கூற்றினுட்பட்ட பார்ப்பியற் கூறும்; ஆறு பார்ப்பியலென்னாது வகையென்றதனான் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல். ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் கொடுத்தல், கோடல் என ஆறாம். இருக்கும் ஏசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின்1 இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தரும நூலும் இடையாய ஓத்து; அதர்வமும் வேள்வி முதலிய ஒழுக்கங் கூறாது பெரும் பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ்சூழும் மந்திரங்கள் பயிறலின் அவற்றோடு கூறப்படா தாயிற்று.2 ஆறங்கமாவன, உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் திருத்தமும் அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்து வாசம் ஆபத்தம்பம் ஆத்திரயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வாராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.3 தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனுமுதலிய பதி னெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின.4 இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும்1 அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய் ஓத்து. எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின்2 அகத்தியந் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஓத்தாமென்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமா யணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாரும் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும் இடைச்சங்கத்தார் செய்தன இடையுங், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது. அவற்றின் சிறப்பையுஞ் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம். இனி ஓதுவிப்பனவும் இவையேயாகலின் அவைக்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்லோனுணர்வு வகை அறிந்து அவன் கொளவரக் கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும்3 ஒன்றுபற்றி மங்கல மரபினாற் கொடைச் சிறப்புத் தோன்ற அவிமுதலியவற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி; வேளாண்மைபற்றி வேள்வியாயிற்று. வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்கோதிய இலக்கண மெல்லாம் உடையனால் 4மாணாக்கற்கு அவன் செய்த வேள்விகளாற் பெரும்பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல்; இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம் முதலிய வற்றானுணர்க. கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத் துணையாயினாரும் ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மையைச் செய்தல். கோடலாவது, கொள்ளத் தகும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகுகொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்பநிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங் கொடுக்கின்றான் உவகைபற்றியுங், கொள்பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடை கடை யென்பனவுங் கொள்க. இனிவேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற்கோடலுங் கொடுப்பித்துக் கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள்கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந் துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம்.1 பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பால்கட்டோன்றின வருணத்தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற் கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க. உதாரணம், ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகு மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி. (பதிற்றுப்-24) இஃது அந்தணர்க்குக் கூறிய பொது. 2முறையோதி னன்றி முளரியோ னல்லன் மறையோதி னானிதுவே வாய்மை---யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினாள் சான்றான் மகனொருவன் றான். இஃது ஓதல். இனி ஓதற்சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க. இம்மை பயக்குமா லீயக் குறை வின்றாற் றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோன் மம்ம ரறுக்கு மருந்து (நாலடி-14-2) ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாதலா லாற்றுணா வேண்டுவ தில் (பழமொழி)) ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு நித்திய மாக நிரம்பிற்றே---யெத்திசையுந் தாவாத வந்தணர் தாம்பயிற்றக் காவிரிநாட் டோவாத வோறதி னொலி? இஃது ஓதுவித்தல். எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. (குறள்-அறிவுடைமை-4) இஃது ஓதுவித்தற் சிறப்பு. நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டி னாறுணர்ந்த வொருமுதுநூ லிகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய வுரைசால் சிறப்பிற் றுரவோர் மருக நீர்நாண நெய்வழங்கியு மெண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ்பரப்பியு மருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை யென்றுங், காண்கதில் லம்ம யாமே இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க. ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ---னீந்த மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி வழுவாமற் காட்டிய வாறு. இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு. நளிகட லிருங்குட்டத்து என்னும் (26) புறப்பாட்டினுள், அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனடையான் கண்ணே யுள. (குறள்-ஈகை-3) இஃது ஈதல். ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (குறள்-ஈகை-8) இஃது ஈதற் சிறப்பு. நிலம்பொறை யாற்றா நீதிபல கொண்டுங் குலம்பெறு தீங் கந்தணர் கொள்ளார்---நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோற் றாவா தொளிசிறந்த தாம். (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-குடிமரபு) இஃது ஏற்றல். தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். (நாலடி-48) இஃது ஏற்றற் சிறப்பு. ஓதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய. ஐவகை மரபின் அரசர் பக்கமும்---ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ்செய்தல் என்னும் ஐவகையிலக்கணத்தையுடைய அரசியற் கூறும். வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொதுவும், பிற்கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க. பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்வி களுள் இராசசூயமுந் துரங்க வேள்வியும் போல்வன அரசர்க் குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிந்த புனிற்றாநிரையுங், கனகமும் கமுகு முதலியனவும் அன்னமும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையுந், தண்ணடையுங், கன்னியரும், பிறவுங்கொடுத்தலும் மழுவாணெடியோனொப்பன் உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களாலும் நாற்படையானுங் கொடைத் தொழிலானும் பிறவாற்றானும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனங் காக்கப்படும் உயிர்க்கு ஏதஞ்செய்யும் மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியால் தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும். வகையென்றதனானே களவுசெய்தோர் கையிற் பொருள் கோடலும், ஆறிலொன்றுகோடலுஞ், சுங்கங்கோடலும். அந்த ணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப்பொருள் நும்மிடத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு அது கோடலும், மறம்பொருளாகப் பகைவர்நாடு கோடலுந், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன்றாயங்கோடலும், பொருளில்வழி வாணிகஞ் செய்துகோடலும், அறத்திற் றிரிந்தாரைத் தண்டத் திற்றருமாறு பொருள்கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்க மென்றதனான் அரசர் ஏனைவருணத் தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றிய வருணத்துப் பகுதியோருள் சில தொழிற்குரியர் என்று கொள்க. உதாரணம் :--- சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவைதுணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விருப்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி (பதிற்றுப்-21) என வரும். கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் வீறுசால் புதல்வர்ப் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப அன்னவை மருண்டென னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை வண்மையும் மாண்பும் வளனு மெச்சமுந் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபல நனந்தலை பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே (பதிற்று-74) எனவும் வருவனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங் காண்க. ஒருமழுவாள் வேந்த னொருமூ வெழுகா லரசடு வென்றி யளவோ---வுரைசான்ற வீட்டமாம் பல்பெருந்தூ ணெங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை. இதுவும் வேட்டல். விசையந் தப்பிய என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் (குறள்-கொடுங்.10) இது காவல் கூறிற்று. கடுங்கண்ண கொல்களிற்றான என்னும் (14) புறப் பாட்டுப் படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க. தொறுத்தவய லாரல் பிறழ்நவு பாடல் சான்ற பயங்கெழு வைப்பி னாடுகவி னழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் மழை வேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே. (பதிற்று-13) இதனுண் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும் அறத்திற் றிரிந்த வேந்தனை யழித்து அவன் நாட்டைக் குடி யோம்பிக் காத்தவாறுங் கூறிற்று. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். (குறள் செங்-10) இது தண்டம். இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்1--- ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும்; வாணிகரையும் வேளாளரையும் வேறு கூறாது இருமூன்று மரபினேனோரெனக் கூடவோதினார். வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தலின். இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாரு முளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர். பக்கமென்பதனான் 2வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக; ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குத் தொழில்வரையறை அவர் நிலைகளான் வேறு வேறு படுதல்பற்றி அவர்தொழில் கூறாது இங்ஙனம் பக்க மென்பதனான் அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சி கொண்டன. உதாரணம் :--- ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார்---வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து. (பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு-குடிமரபு) இது வாணிகரீகை. உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறர்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவரு ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே. (புறம்-183) இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (குறள்-ஈகை-8) இஃது இருவர்க்கும் 1ஈதற்சிறப்புக் கூறிற்று. போர்வாகை வாய்ந்த புரவலரின் மேதக்கா ரேர்வாழ்ந ரென்பதற் கேதுவாஞ்---சீர்கா லுரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்த நிரைகாத்துத் தந்த நிதி. இது வேளாளர் நிரைகாத்தது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர். (குறள்-உழவு-3) இஃது உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின். (குறள்-நடுவு-10) இது வாணிகச்சிறப்பு இருவர்க்குங் கூறியது. இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன---குடிப்பிறந்தார் குன்றாவொழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று. (நாலடி-குடி-3) இது வழிபாடு கூறியது;1 ஏனைய வந்துழிக் காண்க. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்---காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுக லாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடை யோன் பக்கமும்; தேயத்தைக் கிழவோ டேஎத்து (இறையனாரகப்-8) என்றாற்போலக் கொள்க. கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவ ரென்றுணர்க.2 நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும்---அவ்வறிவர் கூறிய ஆகமத்தின் வழிநின்று 3வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துந் தவம்புரியுங் கூறும்; வழக்கென்றதனான் அந் நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று கொள்க. அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும், இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீநாப்பணும், நீர்நிலையினும் நிற்றலுங் கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந் துறந்த காற்றொட்டும் வாய்வாளாமையும் பொருளென் றுணர்க.1 இனி யோகஞ்செய்வார்க்குரியன, இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என்னும் எட்டும் ஆம். இவற்றை, பொய்கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம் பெற்றதற் குவத்தல் பிழம்புநனி 2வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் நூய்மை பூசனைப் பெரும்பய 3மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமய முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும் உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளோடு கொளுத்த னினைவே ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் 1தகையது சமாதி என்னும் உரைச் சூத்திரங்களா னுணர்க. பக்கமென்றதனான், முட்டின்றி முடிப்போர் முயல்வோர் என்பனவும். நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையார்ச் சோர்சடை தாழச் சுடரோம்பி---யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி (புற-வெ-மாலை-வாகை-14) என்பனவுங் கொள்க. ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி ரிழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகுங் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் 2கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே (புறம்-251) எனவும், வைததனை யின்சொலாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று 3கூழை மதிப்பானும்---4ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார் (திரிகடுகம்-48) எனவும், ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து (குறள்-அடக்கம்-6) எனவும், ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும் (குறள்-அவா-10) எனவும், நீஇ ராட னிலக்கிடை கோட றோஓ லுடுத்த றொல்லெரி யோம்ப லூரடை யாமை யுறுகடை புனைதல் காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல்பென மொழிப எனவும் வரும். ஏனைய வந்துழிக் காண்க. அறிமரபிற் பொருநர்கட் பாலும் - தாந்தாம்; அறியும் இலக்கணங்களாலே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்; அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் 1வேறலாம். உதாரணம் :--- விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (குறள்-சொல்வன்மை-8) இது சொல்வென்றி, வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணான் பாடினான் வெண்டுறையுஞ் செந்துறையும் 2வேற்றுமையாக்--- கண்டறியாக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா ழந்நரம்பு 1மச்சுவையு மாய்ந்து (புறப்-வெ-மாலை-பெருந்-18) இது பாடல்வென்றி. கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு--பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந் தொடுகழன் மன்னன் றுடி. (புறப்-வெ-மாலை-பெருந்-17) இஃது ஆடல்வென்றி. இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி யொருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல 2விருதலை யொசிய வெற்றிக் களம்புரு மள்ளர்க் கடந்தடு நிலையே. (புறம்-30) இது மல்வென்றி. கழகத் தியலுங் கவற்றி னிலையு மழகத் திருநுதலா வாய்ந்து புழகத்துப் பாய வகையாற் பணிதம் பலவென்றா ளாய வகையு மறிந்து. (புற-வெ-மாலை-ஒழிபு-19) இது சூதுவென்றி. அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகை நிலை பெற்றது3 என்மனார் புலவர்---அக் கூறப்பட்ட ஆறு பகுதியும் நிலைக்களமாக அவற்றுக்கண் தோன்றிய வேறுபட்ட கூறுபாட்டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றால் துறை பல திரண்ட தொகை பெற்றது அவ் வாகைத்திணை என்று கூறுவாராசிரியர் என்றவாறு. அனையென்றது சுட்டு. நிலை---நிலைக்களம். நிலையது வகை. ஆங்கென்றதனை அனைநிலைவகையொ டென்பதன்கண் வகைக்கு முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச் சொல்லாதலின் முன்னெண்ணியவற்றோடு கூட்டி ஏழாயிற்று. இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்கும் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினாலும், அவள் பிறர்க்குரியளாகிய காலத்துக் களவில் தோன்றினாலும், அவள் கணவனை1 இழந்திருந்துழித் தோன்றினாலும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற் கண்ணும் இவ்வாறே தோன்றினாரும், அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந்தொழில்வகையாற் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண்பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனைநிலை வகைப்பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர்2 அறிவன்றேயத்து அனைநிலை வகையோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழி வென்றி முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனை நிலை வகையாம். ஒரு வரையறைப்படாது பலதுறைப்படுவனவற்றை யெல்லாம் தொகைநிலையெனத் தொகுத்து ஒரோவொன்றாக்கிக் கூறினார்; தொகுத்துக் கூறலென்னும் உத்தி வகையான். பார்ப்பனவாகை அரசவாகையென்றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற் குன்றக்கூறலாமாதலின் இங்ஙனமோதினார்.1 காட்டாதனவற்றிற்கு உதாரணங்கள் வந்துழி வந்துழிக் காண்க. (20) பாரதியார் கருத்து :--- இது, வாகையின் சிறப்புவகைகளைக் கூறுகிறது. பொருள்:--- அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்--- ஆறுவேறுவகை மரபினரான பார்ப்பாரின் சிறப்பியல்பின் சார்பாயும், ஐவகை மரபின் அரசர் பக்கமும்---ஐவேறு குடி வகையினராயாளும் மன்னர் இறைமைத் திறமையின் சார்பாயும்; இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்---அறுவேறு மரபினரான மற்றைய தமிழக மக்களின் சிறப்பியல்களின் சார்பாயும்; மறுவில் செய்திமூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்தேயமும்--வழுவற்ற வகையால் நிகழ்ச்சிகளை வெயில் மழை பனியெனும் தன்மையால் வேறுபட்ட முக்காலத்திற்குமேல் முட்டின்றிக் கடைபோக நடத்தி முடிக்கும் அறிஞன் திறல்சார்பாயும்; நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும்---எட்டுவகையில் நோற்பார் நோன்பின் சார்பாயும்; பாலறிமரபில் பொருநர் கண்ணும்---அறத்தின் பாகுபாடறிந்த முறையாற் பொருவார் போர்த் திறத்தின் சார்பாயும்; (இங்கிதனை இரட்டுற மொழிதலாக்கி, ஒப்ப நடிப்பவர் பொருநுத் திறலையும் குறிப்பதாகக் கொள்ளுதலும் கூடும்; (பொருந்---ஒப்பு; போல நடித்தல்) அனைநிலைவகையொடு---அத்தன்மைய நிலையில் வேறலின் கூறாய் வீறுதரும் பிறவகை வினைவிறற்றுறையுடனே; ஆங்கெழு வகையிற் றொகை நிலை பெற்ற தென்மனார் புலவர்---ஏழு வகையாகத் தொகுக்கப்படும் தன்மையுடையது (வாகைத்திணை) என்பர் புறநூற் புலவர். குறிப்பு :--- தொகைநிலை பெற்றது என்ற வினைக்கேற்ப வாகைத்திணை எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர் பால் முன்னைச் சூத்திரத்திலிருந்து கொள்ளப்பட்டது. ஆங்கு உரையசை புலவர் என வாளா கூறினும், இடம் பொருட் பொருத்தம் நூற்போக்குகளுக்கேற்பப் புறநூற் புலவர் என உரை கூறப்பட்டது. அறுவகைப்பட்ட பார்ப்பனர் என்றதனால் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையார் என்பது தெளிவு.1 இதனையடுத்து அரசர் ஏனோர்களுக்கு மரபால் வகை எண் கூறப்படுதலின். பார்ப்பனரின் அறுவகையும் அவர்தம் மரபு பற்றியதேயாகும்; மரபுச்சொல் குடிவகை குலமுறை வழக்காறுகளைக் குறிக்கும். இனி, ஆறு தொழிலுடைமையால் பார்ப்பார் அறுவேறு வகையினராகாமை வெளிப்படை. ஓதுவியாது ஓதும்வகையார், ஓதாது ஓதுவிக்கும் வகையார், என்ற முறையில் ஒவ்வொரு தொழில்வகையால் பார்ப்பாரை வெவ்வேறு மரபினராய் வகுப்பது யாண்டும் கேட்கப் படாதது. இன்னும் இருபிறப்பாளருள் ஆறுதொழில் பின்னோர்க் கின்றிப் பார்ப்பாருக்குச் சிறப்புரிமை; மூன்றே :--- ஏற்றல், வேட்பித்தல், ஓதுவித்தல். இவை வீறுதரும் பெற்றியதன்றாதலின், வாகைவகை யாகா. கொடைக்கு மாறாகக் கொள்ளுதலும் உயிர்செகுத்துண்டு வேட்டலும், வேதனத்துக்கு ஓதுவித்தலும் வெற்றிக்குரிய வாகையாகத் தமிழர் கொள்ளார். அவை வாகை வகையாய்ப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இங்குக் கருதற்கில்லை எனவே, இக்காலப் பார்ப்பார்---எண்ணாயிரவர் ---மூவாயிரத்தவர்---வடமர்---சோழியர்---என வெவ்வேறு மரபினராதல் போல, முற்காலத்தமிழகத்தும் பார்ப்பார் மரபால் ஆறுவகை பிரிந்தவராதல் இயல்பு. இனி, அறுவகை வைதிக மதமரபாக அறுவகைப்பட்டவராதலும் கூடும். எனைத்து வகையாயினும், இங்கு மரபால் அறுவகையிற் பிரிவுடைய பார்ப்பார் பரிசு குறிப்பதல்லால், அவர் அனைவருக்கும் பொதுவாகும் வினையாலவரை அறுவகைப் படுத்தல் தொல்காப்பியர் கருத்தன்மை ஒருதலை. துவக்கத்தில் தென் தமிழ் வரைப்பில் வந்து புகுந்த வம்பப் பார்ப்பார் மிகச்சிலராவர். மரபாலன்னோர் அறுவகையராதல் அக்காலத்தனைவரு மறிந்த தொன்றாகலின் வகைவிரியாது அதன் தொகை கூறப்பட்டது. யாவருமறிவதைக் கூறுதல் மிகையாதலின்; இருசுடர், மூவேந்தர், நானிலம், என்புழி, சுடர்வகை வேந்தர் குடிவகை நிலவகைகளை விரித்தல் வேண்டாதது போல, இதற்குப்பின் ஐவகை மரபின் அரசர்--- இரு மூன்று மரபின் ஏனோர் என அனைவரும் அறிந்த அவர் மரபுவகை விரியாது தொகைஎண்ணாற் குறிப்பதுபோல, அக்காலம் யாவருமறிந்த பார்ப்பனர் மரபுவகை ஆறாதலின் எண்மட்டும் கூறப்பட்டது. வேந்தர்தம் வாகைக்குரியவை போர்வென்றிகொடை செங்கோற்செவ்வி போல்வன. அதுவேபோல் ஏனைய தமிழ் மக்களுக்கு அவரவர் கொண்ட தவறறு தொழில் எல்லாம் வாகைக் குரியவாகும். ஐவகை மரபின் அரசர் என்றது, சேர, சோழ, பாண்டியராவார். முடிவேந்தர் குடிமூன்று. ஆளுதற்குரிய வேளிர் குடிஒன்று. மற்றைய குறுநில மன்னர் குடிமரபொன்று, ஆக மன்னவர் ஐவகை மரபினராய்ப் பண்டைத் தமிழகத் தாண்டன ராதலின்;1 அரசர் எனப்படுதலான். ஈண்டுக் குறிப்பது ஆளுமன்னவரை மட்டுமே. தமிழ் வழக்கில் ஆளாத அரசர் என்றொரு சாதியில்லை. அமர்தொழில் தறுகண் மறவர் அனைவருக்கும் பொது உரிமை. அத்தொழில் புரிபவர் பொருநராவதல்லால், அரசர் எனப்படார். இனி, இருமூன்று மரபின் ஏனோர் என்றதும், தமிழர் மரபு வகையே குறிப்பதாகும். பண்டைத் தமிழகத்தில் மக்கள் மரபாலும் தொழிலாலும் ஒத்த உரிமையுடன் வாழ்ந்தவர்கள்; அவரிடைப் பிறப்பா லுயர்வு தாழ்வுடைமையும். விரும்பும் வினைபுரியும் உரிமை விலக்கும் வழக்காறில்லை. தமிழர் வாழ்க்கை முறை ஒழுக்க வழக்கம் விளக்கம் தொல்காப்பியரின் அகப்புறத்திணை யியல்களில் யாண்டும் வடநூல்சுட்டும் வருணவகைக் குறிப்பு ஒரு சிறிதுமில்லை. இவ்வுண்மை பெயரும் வினையு மென்றாயிருவகைய எனும் சூத்திர உரையில் விரித்து விளக்கப்பட்டது. அதனாலும் இங்குத் தொழிற்றுறையில் வாகை சூடுவோரின் மரபு வகை கூறுதலானும், வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் வழக்கன்றிப் பிறநூல் மரபுகள் பேணாமையே தொல்காப்பியரின் துணிபாதலானும், ஈண்டு நிலம்பற்றிய தமிழர் மரபு வகை சுட்டுவதே கருத்தாதல் தேற்றமாகும். தமிழரின் தாவில் கொள்கை வினையனைத்தும் வாகைக்குப் பொருளாக வெற்றி விரும்பு மக்களின் மரபு வகைகளையே இங்கு எண்கள் சுட்டுவது ஒருதலை. ஆயர், குறவர், உழவர், பரவர் என முல்லை முதல் நானில மக்களும்,நிலக்குறிப்பின்றி யாண்டு முள்ள வினைவலர், ஏவன் மரபினர் என்றிருவகையின் மக்களுமாக மரபால் அறுவகைப்பட்ட தமிழர்குடிகள் உண்மையைத் தொல்காப்பியரே அகத்திணையியலில் தெளித் துளாராதலின்2 தமிழர் புறவொழுக்கம் கூறுமிவ்வியலின் இச்சூத்திரத்தும் தமிழரை இரு மூன்று வகையின் ஏனோர் என்றடங்கக் குறிப்பதே அவர்கருத்தாமெனத் தேர்வது பொருத்தமாகும். அகத்திணை குறிக்கும் அடியோர் பிறர்போல் இன்ப ஒழுக்க மேற்பாராயினும் தாம் பிறர் உடைமையாய்த் தனிவினையுரிமை தமக்கில ராதலின், வாகைக் குரியாராகா ரென்பது வெளிப்படை. அவரொழியத் தமிழர் அறுவகை யாரே வாகைக்குரியர். இப்பழந் தமிழ் மரபுகள் கருதாமல், முன் உரைகாரர் இங்கு முதல் மூன்றடிகளும் வடநூல் வருண வேறுபாடுகளை அவரவர்க் கறுதியிட்டு வகுத்த தொழிற்றொகுதியுடன் இங்குக் குறிப்பனபோலக் கொண்டு பொருந்தாப் பொருள் கூறியிடர்ப்படுவர். தொல்காப்பியரின் துணிந்த நோக்கும், சூத்திரச்சொற்றொடர்ப்போக்கும் தெற்றெனத்தெளிக்கும் செம்பொருளைச் சிந்தியாமல், பழங்கால வழக்குகளை யறியாததால் தாமறிந்த தங்காலப் பிறநூற் கொள்கைகளை அறப் பழந் தமிழ் நூலுட் புகுத்த முயன்றவர் மயங்கலாயினர். இங்கு வருண கரும வரையறை விளக்குவது கருத்தாமேல், அதைத் தெளிக்கும் சொற்பெய்தல் எளிதாகும். அதற்கு மாறாகத் தொழிற் சுட்டொழித்துக் குடிசுட்டும் மரபுச் சொற்பெய்தமைத்த சிறப்பின் குறிப்புச் சிந்திக்கற்பாற்று. அறுதொழிலுடைய பார்ப்பனர் பக்கமும், ஐவகைத் தொழிலுடை யரசர் பக்கமும், இருமூன்று தொழிலுடை ஏனோர் பக்கமும் என ஏற்ற தொழில்சொற் கூற்றால் விளக்கும் ஆற்றலின்றி இயைபினை மறந்து வேற்றுப்பொருள் விளக்கும் மரபுச்சொற் பெய்தனரென்று கூற யாரும் துணியார். இன்னும் இங்கு வருணவகை விளக்குவதே கருத்தாயின், உரிமையுடைய இரு பிறப்பாளர் மூவரையுமுறையே கூறிப் பிறகு அவர்க்குரிய அடிமைகளாய் உரிமையுற்ற நான்காம் வருணத்தாரையும் வரிசை முறையே வகுத்துக் கூறுவர். அதைவிட்டுப் பார்ப்பாரையும் ஆளும் வேந்தரையும் மட்டும் சுட்டி, வைசியரையும் ஆளாச் சத்திரியரையும் அறவே விட்டு, அந்தணரும் அரசரும் அல்லார் எல்லாரையும் சூத்திரருடன் சேர்த்து ஓராங்கெண்ணி ஒரு வகுப்பாக்கி ஒத்தவாகைத் தொழிலுடைய ஏனோர் எனத் தொகுத்துச் சுட்டிய தொன்றே வருண தரும வகையெதுவும் கருதுங் குறிப்பிங்கின்மையினை வலியுறுத்தும், அன்றியும், தமிழகத்தில் நான்கு வருணம் என்று மின்மை யாவருமறிந்த உண்மை. தமிழரொடு கலவாத் தருக்குடைய பார்ப்பார் தமிழருள் சத்திரியர் வைசியரென யாரையும் தழுவினதில்லை. உணவும் மணமும் ஒத்தும் வேள்வியும் முப்புரிச் சடங்கும் இருபிறப் பெய்தலும் இன்னபிறவும் தம்மரபினர்க்கு ஒத்த வுரிமையைத் தமிழருள் யார்க்கும் பார்ப்பார் தாரார். இல்லாக் கற்பகம் பொல்லா யாளிகள் கதைக்கப்படுதல்போல். இடை இரு வருணமும் வடவர் புனைந்த நூற்கதையன்றித் தமிழக வரைப்பில் வழக்காறில்லை. இன்னும், பார்ப்பாரல்லா மற்றைய மூன்று வருணத்தார்க்கும் மனு முதலிய வடநூல்கள் விதிக்கும் தொழில்வகைகள். இச்சூத்திரப் பழைய உரைகாரர் அவரவர்க்குக் காட்டும் தொழில் வகைகளுடன் முற்றும் முரணுதலானும், அவருரை பொருந்தாமை தேறப்படும். தமிழரெல்லாரும் கடைவருணச் சூத்திரர் என்பதே பார்ப்பனர்துணிவு மற்றைய மேலோர் மூவருக்கும் அடிமைகளாய்த் தொண்டு புரிவதொன்றே அவர்க் குரிய தொழில்; பிற தொழி லெதுவும் தமக்குத்தம் பயன்கருதி மேற்கொள்ளுமுரிமை சூத்திரருக்குச் சிறிதுமில்லை. ஒத்த உணவு மணம் ஓதல் வேட்டல் தொழில் முதலிய ஆரிய மக்களுரிமை எதுவுமில்லா இழிந்த அடிமைச் சூத்திரரை இருபிறப்புடைய வைசியரோடெண்ணி, வைசியர் தொழில்களைச் சூத்திரருக் குரித்தாக்கினதுமன்றி, தரும நூல்களின் வைசியருக்கும் விலக்கிய அறுதொழிலுடைமையையும் சூத்திரரான நான்காம் வருணத் தமிழருக்குத் தந்து கூறும் உரை ஆரிய நூல்களொடு முரணித் தமிழ் மரபு மழித்ததாகும். வரலாற்றுண்மை சிறிதுமறியாது வேளாளருள்ளிட்ட தமிழ்ப்பெருமக்களை எல்லாம் கடைக் கீழடிமைச் சூத்திர வருணத்தவரெனக் கூறுந் துணிவு அறிவறம் வெறுக்கும் வேற்றுரையாகும். இனி, பெரும் பொழுதாறும் வெயில், மழை, பனி என்ற மூன்றிலடங்கும். மூவகைக்காலமும் நெறியினாற்றிய அறிவன் என்றது, தன்மையால் முழுதும் வேறுபட்ட வெயில் மழை பனி என்ற மூவகைக் காலங்களின் நிலைமையும் விளையும் நுண்ணிதினுணர்ந்து காலத்தாலாற்றுவ ஆற்றிப் பயன்கொள்ளும் மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சரைக் குறிப்பதாகும். நாளும் கோளும் கண்டது போலக் கொண்டு கூறி வயிறு வளர்ப்போர், கேட்போர் விரும்பும் எதிர்கால நன்மைகளைப் புனைந்து கூறித் தந்நலம் பேணுமளவினர். வேரை எதிர்கால விளைவுகள் எடுத்துக்கூறும் கணிகளெனப்படுவதன்றி, மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவர் என்பது அமையாது. அறிவோடமையாது ஆற்றுதலும் கூறுதலால், கணிகளின் வேறாய், வருவன சூழ்ந்து செயல்வகை தேர்ந்து ஆய்ந்தாற்றும் அறிஞரான அமைச்சரைக் குறிப்பதே கருத்தாதல் தேற்றம். தாபதவழக்கு நாலிரண்டாதலு மக்காலவழக்கு. தாபதர்---தவம் செய்வார்; (தவம்---உற்ற நோய், நோற்றல். (நோற்றல்--- பொறுத்தல்) உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலிலிருத்தல், நீரில் நிற்றல், காமங்கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல்போலத் திண்ணியோருள்ளங் கண்ணிய வகையின) அனைநிலைவகைய என்பதில், அனைய எனுஞ்சொல் செய்யுளோசை நோக்கி அனை எனக் குறுகிற்று. அவ்வகைப் பிற வாகைக்குரியவை ஆடல், பாடல், ஓவியமெழுதுதல் போல்வன தேரும் குதிரையும் யானையு மூவரும் திறல்வகை யெல்லாம் இதனுள் அடங்கும். இவை வாகை வகைகளே. வாகைத் துறைகளை அடுத்த சூத்திரம் கூறும். ஆய்வுரை நூற்பா. 16. இந்நூற்பா வாகைத்திணையினை எழுவகையாகப் பகுத் துரைக்கின்றது. (இ-ள்) (தொழிலால்) அறுவகைப்பட்ட பார்ப்பார்க்குரிய பகுதியும், ஐவகைப்பட்ட அரசர்ப்பகுதியும், அறுவகைத் தொழி லினரான ஏனை நில மக்கள் பகுதியும், குற்றமற்ற ஒழுகலாற்றினை இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியால் அமைத்த முழுதுணர்வுடைய அறிவன் பகுதியும், எட்டுவகைப்பட நிகழும் தவஞ்செய்வார் பகுதியும். முன்னர்ப் பல கூறுபாடுகளாகப் பகுத்துணர்த்திய போர்த்துறைகளையறிந்த பொருநராகிய போர்மறவர்க்குரிய கூறுபாடும், அத்தன்மை யவாகிய நிலைமையுடைய பிற தொழில்வகையான் உளவாகும் வென்றிவகையுடன் சேர்த்து இவ்வாறு எழு வகையாகப் பகுத்துரைக்கப்படும் தொகைநிலையினைப் பெற்றது வாகைத் திணை---எ-று. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமாவது ஓதல், ஓது வித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறு தொழில்களாகும். அறுதொழிலோர் (560) எனத் திருக்குறளிலும், ஓதல் வேட்டல் அவை பிறர்ச்செய்தல், ஈதல் ஏற்றலென்று ஆறு புரிந்தொழுகும் அறம்புரி அந்தணர் (24) எனப் பதிற்றுப் பத்திலும் அந்தணர்க்குரிய அறுதொழில்கள் குறிக்கப் பெற்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தகுவதாகும். ஐவகை மரபின் அரசர் பக்கமாவது ஓதல், வேட்டல், ஈதல் படை வழங்குதல், குடி யோம்புதல் என்னும் ஐவகைப் பகுதியாம் என்பர் இளம்பூரணர். ஈண்டு இருமூன்று மரபின் ஏனோர் எனக் குறிக்கப்பட்டோர் இச்சூத்திரத்துக் கிளந்துரைக்கப்பட்ட பார்ப்பாரும், அரசரும், அறிவரும், தாபதரும், பொருநரும் அல்லாத குடிமக்களாகிய ஏனையோராவர். இருமூன்று மரபின் ஏனோராவர் வணிகரும் வேளாளரும் எனக்கொண்டு, வாணிகர்க்குரியனவாக ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் ஆறு தொழில்களையும் வேளாளர்க் குரியனவாக உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடுபுறந்தருதல், வழிபாடு, வேத மொழிந்த கல்வி, என்னும் ஆறு தொழில்களையும் குறிப்பிடுவர் இளம்பூரணர். வணிகர்க்கு உரியவாகக் கூறிய ஆறு தொழில்களும் புறப்பொருள் வெண்பா மாலை வணிக வாகை உதாரண வெண்பாவில் விரித்துரைக்கப் பெற்றன. அந்நூலில் வேளாண் வாகைக்குரிய உதாரண வெண்பாவில் இளம்பூரணர் கூறியவாறு ஆறுதொழில்கள் குறிக்கப் பெறவில்லை. மேல் வருணத்தார் மூவரும் மனம் விரும்ப அவர்கள் ஏவியனவற்றைச் செய்தலும் உழுதலுமாகிய இரண்டு தொழில்களே வேளாண்மாந்தர்க்குரியனவாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப்பட்டுள்ளன. வடவாரியரது வருகையால் நால்வகை வருணப்பாகுபாடு இந்நாட்டிற் பேசப்படும் நிலையினைப் பெற்ற பிற்காலத்திலே வாழ்ந்தவர் ஐயனாரிதனார். அவர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் இளம் பூரணர் நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள். எனவே இருமூன்று மரபின் ஏனோர் என்பதற்கு வணிகரும் வேளாளரும் எனக்கொண்ட உரையாசிரியர்கள் உரைப்பகுதி ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகக் கொள்ளத் தக்கதன்று. பார்ப்பனப்பக்கத்தையும் அரசர் பக்கத்தையும் பகுத்துக் கூறிய தொல்காப்பியனார் தம் காலத்து நால்வகை வருணப்பாகுபாடு தமிழகத்தில் நிலைபெற்றிருப்பின் பார்ப்பனப் பக்கம் அரசர் பக்கம் என்றதுபோல வணிகர் பக்கம் வேளாண் பக்கம் என்பவற்றையும் தனித்தனியே எடுத்துரைத்திருப்பர். ஏனோர் என்னுஞ் சொல் முன்னர் எடுத்துக் கூறப்பட்டோர் அல்லாது எஞ்சியுள்ளார் அனைவரையும் கூட்டுவதன்றி வணிகர், வேளாளர் ஆகிய இருதிறத்தாரையும் சுட்டினதெனக் கொள்ளுதற்கு இடமில்லை. இருதிறத்தாரையுமே ஏனோர் எனக் குறித்தனராயின் வணிகர்க்கு மூன்றும் வேளாளர்க்கு மூன்றும் என்றே கூறவேண்டிவரும். இனி இருதிறத்தார்க்கும் உரியவாக அறுவகைத்தொழில்கள் உளவெனக்குறித்தலே இருமூன்று மரபின் ஏனோர்பக்கம் என்ற தொடரில் கருத்தாயின், அறு வகைத்தொழில்களும் அவ்விரு திறத்தார்க்கும் ஒப்பவுரியனவாகவே எண்ணப் பெறுதல் வேண்டும். இளம்பூரணர் முதலியோர் கூறுமாறு வணிகர் வேளாளர் ஆகிய அவ்விரு திறத் தார்க்கும் வேறுவேறாக எண்ணப்படும் இருவகை அறுதொழில்களையும் ஒருங்குதொகுத்து இருமூன்று மரபு எனத் தொல்காப் பியர் இணைத்துரைத்தார் என்றல் பொருந்தாது. அன்றியும் வடவாரிய நூல்களிற் பேசப்படும் நால்வகை வருணப்பாகுபாடு ஆரிய இனத்தாரிடையன்றிப் பண்டைத் தமிழ் மக்களிடையே வழங்காத ஒன்றாகும். வண்புகழ்மூவர் தண் பொழில்வரைப் பாகிய தமிழகத்தில் மக்களை நிலவகையாற் பகுத்துரைத்தலல்லது குலவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் என்றும் நிலவியதில்லை. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் சிறப்புடைய கொள்கை நிலவிய தமிழகத்தில் தமிழ் மக்களுக்கேயுரிய ஒழுகலாறுகளை விரித்துரைப்பது இயற்றமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் ஆகும். தமிழியல் நூலாகிய இத் (தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பிற்காலத்தில் இந்நாட்டிற் குடியேறிய வடவரது வருணாச்சிரம விதிகளை வலிந்து புகுத்திப் பொருள் கூறுதல் வரலாற்று நெறிமுறைக்கும் தொல் காப்பியனார் கருத்துக்கும் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதனைத் தொல்காப்பியங்கற்போர் உளங்கொள்ளுதல் இன்றியமையாத தாகும். மறுவில் செய்தி மூவகைக்காலமும், நெறியின்ஆற்றிய அறிவின் தேயமும் என்ற தொடர்க்கு, குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலும் ஆகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற்பொறுத்த அறிவன் பக்கமும் எனப் பொருள் வரைந்து, அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியின் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாது ஆகாயத்தைப் பார்த்து, ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் நெறியின் ஆற்றிய அறிவன் என்றார் என விளக்கம் கூறி, புரிவின்றி யாக்கைபோல் (கணிவன் முல்லை) எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளை உதாரணங்காட்டினார் இளம் பூரணர். புறப்பொருள் வெண்பாமாலையில் வாகைப்படலத்தில் அறிவன் வாகை என்னுந் துறையினை விளக்குமிடத்து, முக்கால நிகழ்ச்சியையும் அறியுமவனே அறிவன் வாகை என்பதனை, புகழ்நுவல முக்காலமும், நிகழ்பறிபவன் இயல்புரைத்தன்று எனவரும் கொளுவில் ஐயனாரிதனார் தெளிவாக விளக்கி யிருத்தலால் அவ்வாசிரியர் கருத்துக்கு ஏற்ப, இம்மூவுலகின் இருள்கடியும் ஆய்கதிர்போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்---தம்மின் உறழா மயங்கி யுறழினும் என்றும் பிறழா பெரியோர்வாய்ச் சொல் என்ற வெண்பாவினையே அறிவன் வாகைக்கு உதாரணமாகக் காட்டியிருத்தல் வேண்டும். ஐயனாரிதனார் தாம் இயற்றிய புறப் பொருள் வெண்பாமாலையில் அறிவன்வாகையையடுத்துத் தாபத வாகையைக் குறித்துள்ளமை, மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் எனவரும் தொல்காப்பிய நூற்பாவின் துறையமைப்பினை அடியொற்றியதாகும். பனியும் வெயிலுங் கூதிரும் யாவும் துனியில் கொள்கையொடு நோன்மையெய்தித் தணிவுற்றிருந்த கணிவன் முல்லை எனவரும் பன்னிருபடலச் சூத்திரத்தில் கணிவன் முல்லையின் இலக்கணம் கூறப்படுகின்றதேயன்றி அறிவன்வாகையைப் பற்றிய குறிப்பு இடம்பெறாமையும் இங்குக் கருதத்தகுவதாகும். வாகைத்திணையின் எழுவகையுள் இறுதியிற் கூறப்பட்ட அனை நிலை வகை என்பது, அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் முதல் பாலறி மரபிற்பொருநர் என்பது ஈறாக முற்கூறிய ஆறு வகைகளிலும் அடங்காத எஞ்சிய பலவகைவென்றியையும் உள்ளடக்கிய தனித்தொகுப்பாகும். தாபதப்பக்கமாவன தவஞ்செய்வார்க்குரிய செயல் முறைகள். பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொருநர் என்றது, வில், வேல், வாள் முதலிய படைக் கருவிகளாலும் மெய்யின் மொய்ம்பினாலும் பகைவரொடு பொருது மேம்படுதலில் வல்ல வீரர்களை. பார்ப்பனப்பக்கம் முதல், பாலறி மரபிற்பொருநர் ஈறாகக் கூறிய அறுவகையுள் அடங்காது, அவைபோன்று எஞ்சியுள்ள தொழிற்றிறங்களில் தத்தங்கூறுபாட்டினை மிகுவித்து மேம்படுத லாகிய வாகைச் செய்திகள் யாவும் அனைநிலை வகை என வாகைத்திணையின் ஏழாவது வகையாக முன்னோர்களால் அடக்கியுரைக்கப்பட்டன என்பார், அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் என்றார். பெரும்பகை என்றது புறப்பகையை எனவும் அரும் பகை என்றது அகப்பகையை எனவும் கொள்ளுதல் ஏற்புடையதாகும். குற்றமே காக்க பொருளாகக் குற்றமே, அற்றத் தரூஉம் பகை (434) எனவரும் திருக்குறள் இக்கருத்துக்கு அரண் செய்தல் அறியத் தகுவதாகும். 17. கூதிர் வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும் ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கும் ஆற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் ஒல்லார் இடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானும் மாவி னானுந் துகட்டபு சிறப்பின் சான்றோர் பக்கமும் கடிமனை நீத்த பாலின் கண்ணும் எட்டுவகை நுதலிய அவையகத் தானும் கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடையி னானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானும் அருளொடு புணர்ந்த அகற்சி யானும் காமம் நீத்த பாலி னானுமென்று இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே. இளம் : இது, வாகைத்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கூதிர்ப்பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதினெட்டுத்துறையும் வாகைத்துறையாம். எனவே, மேற்சொல்லப் பட்ட ஏழ் வகையும் திணையென்று கொள்க.1 கூதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றி கண்ணிய வகையும் - கூதிர்ப்பாசறையும் வேனிற்பாசறையும் என்று சொல்லப்பட்ட இருவகைப் பாசறைகளையும் போரின் மீது கொண்ட காதலாற் பொருந்திக் கருதிய போர்நிலை வகையும். இவை இரண்டும் இரு வகை.2 (இச்சூத்திரத்தில் வரும் இன்னும் ஆனும் இடைச்சொற்கள்.) ஏரோர் களவழி அன்றி களவழி தேரோர் தோற்றிய வென்றியும்-3 ஏரோர் களவழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும். அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம் (களவழி-களத்தில் நிகழும் செயல்கள்.) உதாரணம் இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழின் மருப்பின் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள்மின் ஆக வயங்குகடிப் பமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக அரசுஅராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு சணநரி யோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடையாள இஃது ஏரோர் களவழி. ஓஒ உவமை உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து. (களவழி. 36) இது போரோர் களவழி. நளிகடல் இருங்குட்டத்து வளியுடைத்த கலம்போலக் களிறுசென்று களன் அகற்றவும் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய எஃகேந்தி அரசுபட அமருழக்கி உரைசெல முரசு வௌவி முடித்தலை அடுப்பாகப் புனற்குருதி உலைக்கொளீஇத் தொடித்தோள் துடுப்பில் துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய இது களவேள்வி. தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும் - தேரோரைப் பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடு குரவையும்.1 ஒன்றிய மரபின் தேர்ப்பின் குரவையும் - பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடு குரவையும். பெரும்பகை தாங்கும் வேலும்-பெரிய பகையினைத் தாங்கும் வேலினைப் புகழுமிடமும். அரும்பகை தாங்கும் ஆற்றலும் - பொருதற்கரிய பகையைப் பொறுக்கும் ஆற்றலும். புல்லாவாழ்க்கை வல்லாண் பக்கமும்2-பொருந்தாத வாழ்க் கையினையுடைய வல்லாண் பக்கமும். ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்து தொல் உயிர் வழங்கிய அவிப்பலியும்3--பொருந்தாதார் நாணுமாறு தலைவரைக் குறித்து முன்பு சொன்ன வஞ்சின மரபின் ஒன்றோடு பொருந்தித் தொன்றுதொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலியும். ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கும்1-பொருந்தாதார் இடத்தின் கண் பொருந்திய பக்கமும். அஃதாவது, போரில்வழி நாடு கைத்தென்று கொண்டு உவத்தல். (கைத்து-கையகப்பட்டது. உவத்தல்-வெகுளிவிட்டிருத்தல்.) நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பெருமலை யானையொடு புலங்கெட இறுத்துத் தடந்தாள் நாரை படிந்திரை கவரும் முடந்தை நெல்லில் கழைஅமல் கழனிப் பிழையா விளையுள் நாடகப் படுத்து வையா மாலையர் விசையுநர்க் கறுத்த பகைவர் தேஎத்து ஆயினும் சினவாய் ஆகுதல் இறும்பூதாற் பெரிதே. (பதிற்றுப். 32) என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு என்க. பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்1-பகட்டினானும் ஆவினானும் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய சான்றோர் பக்கமும். பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவார் குற்றம் தீர்ந்தார் வணிகர், இவ்விரு குலத்தினும் அமைந்தார் பக்கமும். அவர் குலத்தினுள் அளவால் மிக்க நீர்மையராதலின் வேறு ஓதப்பட்டது. கடிமனை நீத்த பாலும்2-கடிமனை நீத்த பக்கமும். அஃதாவது, பிறர்மனை நயவாமை, மேல், காம நீத்த பாலினானும் என்று ஓதுகின்றா ராகலின், இது மனையறத்தின் நின்றோரை நோக்கவரும். உதாரணம் பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு) அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (குறள்- 148) எட்டுவகை நுதலிய அவையகமும்3-எட்டுப் பாகுபாட்டைக் குறித்த அவையகமும். எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இவ்வகை மிகுதி உடைத்தென்றவாறு. அவையாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்பன. அவை எட்டினானும் அவை வருமாறு குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காத லின்பத்துள் தங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்காறு இன்மை அவாஅ இன்மையென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பஇம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே. (ஆசிரியமாலை) கட்டமை ஒழுக்கத்து கண்ணுமையும்-கட்டுதல் அமைந்த ஒழுக்கத்தினைக் குறித்த நிலையினும். அஃதாவது, இல்லறத்திற்கு உரித்தாக நான்கு வருணத்தார்க் கும் சொல்லப்பட்ட அறத்தின்கண் நிற்றல், அவையாவன --- அடக்கமுடைமை. ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை என்பன. மிகுதி யாகலின், வாகை யாயின. அடக்கமுடைமையாவது, பொறிகள் ஐம்புலன்கள்மேல் செல்லாமை அடக்குதல். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. (குறள்-126) ஒழுக்கமுடைமையாவது, தங்குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்கமுடையராதல். ஒழுக்கம் விழுப்பம் தாலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். (குறள். 131) நடுவுநிலைமையாவது, பகைவர்மாட்டும் நட்டார் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. சமன் செய்து சீர்தூக்குங்கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. (குறள். 118) வெஃகாமையாவது, பிறர்பொருளை விரும்பாமை. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். (குறள் 172) புறங்கூறாமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. (குறள். 181) தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலை அஞ் சுதல். தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு. (குறள். 201) அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்கா றிலாத இயல்பு (குறள். 161) பொறையுடைமையாவது, பிறர் தமக்கு மிகுதியாகச் செய்த வழி வெகுளாமை. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். (குறள். 158) பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க. இடையில் வண்புகழ்க்கொடையும்-இடைதலில்லாத வளவிய புகழினைத் தரும் கொடையும். அஃதாவது, கொடுத்தற்கு அரியன கொடுத்தல். இதுவும் பாகுபாடு மிகுதிப்படுதலின் வாகையாயிற்று. கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடிழந் ததனினும் நனிஇன் னாதென வாள்தந் தனனே தலையெனக்கு ஈய பிழைத்தோர்த் தாங்கும் காவலும்1-தம்மாட்டுப் பிழைத் தோரைப் பொறுக்கும் ஏமமும். பொருளொடுபுணர்ந்த பக்கமும்2-மெய்ப்பொருள் உணர்ந்த பக்கமும். உதாரணம் ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு (குறள். 354) எனவும், சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (குறள் 351) எனவும் வரும். இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கமும் என்றது, அறம் பொருள் இன்பம் மூன்றினும் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்த பொருளொடு பொருந்திய பக்கமும் என்றுமாம். பொருளாவது நாடும் அரணும் பொருளும் அமைச்சும் நட்பும் படையும். படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (குறள். 381) என்பதனானும் கொள்க அவையிற்றின் மிகுதி கூறலும் வாகை யாம். நாடாவது, தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. (குறள். 731) அரணாவது, கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். (குறள். 745) பொருளாவது, உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள். 756) அமைச்சாவது, வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. (குறள். 632) நட்பாவது, அழிவின் அவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள். 787) படையாவது, அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த வன்கண் அதுவே படை. (குறள். 764) பக்கம் என்றதனால் ஒற்று, தூது, வினைசெயல்வகை, குடிமை, மானம் என வருவனவெல்லாம் கொள்க. அவற்றுட் சில வருமாறு:- கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. (குறள்-585) கற்றக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தூது. (குறள்-986) பிறவும் அன்ன. இன்னும் பொருளோடு புணர்ந்த பக்கம் என்றதனாற் புதல்வர்ப் பேறுங் கொள்க. உதாரணம் படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே (புறம். 188) அருளொடு புணர்ந்த அகற்சியும்-அருளொடு பொருந்தின துறவும். அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பவற்றைப் பொருந்துதலாம். அவற்றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலான் அகற்சி என்றார்.1 அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப் படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை. அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. (குறள்-241) கொல்லாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை. அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். (குறள்-321) பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந் தீமை இலாத சொலல். (குறள்-291) கள்ளாமையாவது, பிறர்க்குரிய பொருளைக் களவினாற் கொள்ளாராதல். களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் (குறள்-287) புணர்ச்சி விழையாமையாவது, பிரமச்சரியம் காத்தல். மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். (நாலடி, தூய்தன்மை. 1) கள்ளுண்ணாமையாவது கள் உண்டலைத் தவிர்தல். களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (குறள்-928) துறவாவது, தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். (குறள்-341) காமம் நீத்த பாலும்-ஆசையை நீத்த பக்கமும். காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து-என்று இரண்டு கூறுபட்ட1 ஒன்பது துறைத்து. (17) நச் : 17 இது மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங்காதவற்றிற்கு முற்கூறிய துறைகளேபோலத் தொடர் நிலைப்படுத்தாது2 மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப்படுத்துத் துறை கூறுகின்றது. (இ-ள்.) கூதிர் வேனில் என்று இருபாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்; கூதிர், வேனில் ஆகு பெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல். இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவிமேற் காதலின்றிப் போரின்மேற் காதல்சேறலின் ஒன்றியென்றார். இக் காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினாரேனும் ஓர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்று வழித் தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்குமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று. வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே (அகம்-84) எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம். அகத்திற்கு வழுவன்றென்றற்கு மரபென்றார். 1ஏனைய காலங்களாற் பாசறைப் பெயர் இன்றென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார். இங்ஙனங் கூறவே முற்கூறிய துறைபோலத் தொடர்நிலைப் படுத்தலின்றாய் இதனானே பலவாகி ஒருதுறைப்படுத்தலும் இன்றாயிற்று. இனி இருத்தற்பொருண் முல்லையென்பதேபற்றிப் பாசறைக் கண் இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறுவாரும் உளர்.2 ஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்3---வேளாண்மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்று வித்த வென்றியன்றிக் களவழிச் 4செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்; என்றது நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுவர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக 1வாள்பட ஓச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனாவேண்மான் இடத்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம். உதாரணம்:--- இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர் கான நரியோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வருந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன வோடை நுகல வொல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே (புறம்-369) எனவரும். நளிகட லிருங்குட்டத்து என்னும் (26) புறப்பாட்டுப் பலி கொடுத்தது. தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்---தேரின் கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைத் தாடுங் குரவையானும்; ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்---தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவையானும்; பெரும்பகை தாங்கும் வேலினானும்1---போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்; காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படை யாதலானுஞ் சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும் பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப்படைக்ளெல்லாம், மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனையு முட்டின்று முடித்தல் (தொல்-பொ-செய்-110) என்னும் உத்தியாற் பெறவைத்தார். அரும்பகை தாங்கும் ஆற்றலானும்---வெலற்கரும் பகைவர் மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதி யானும்;1 வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும்---உயிர் வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்; பக்கமென்றதனால் தாபதப்பக்கமல்லாத போர்த் தொழிலாகிய 4வல்லாண்மையே கொள்க. ஒல்லார்2 நாணப் பெரியவர்க் கண்ணிச் 3சொல்லியவகையின் ஒன்றொடுபுணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும்---பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதி யிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகிவருகின்ற உயிரை 5அங்கியங் கடவுட்குக் கொடுத்த அவிப்பலியானும்; நாணுதலாவது நம்மை அவன் செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையால் வென்றமையால் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல். உதாரணம் :--- எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல் வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான்-றம்பி புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா னறவோன் மறமிருந்த வாறு. இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். (குறள்-படைச்-9) இதுவும் அது. ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கினும்1---பகைவராயினும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறப்பும்போல்வன வேண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தலானும்; உதாரணம் :--- இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி மைந்தனை வெல்வான் வரங்கொண்டான்---றந்தநா ளேந்திலைவேன் மன்னனே யன்றி யிதற்குவந்த வேந்தனும் பெற்றான் மிகை இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவச குண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று.2 இத்துணையு மறத்திற்குக் கூறியன. பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்---எருதும். எருமையுமாகிய பகட்டினானும் யானையுங் குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினீங்குஞ் சிறப்பினால் அமைந்தோரது கூறுபாட்டானும்; இவற்றான் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினார். பக்கமென்றதனாற் புனிற்றாவுங் காலாளுந் தேருங் கொள்க.3 கட்டில் நீத்த பாலினானும்1---அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதியானும்; அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி. உதாரணம் :--- கடலு மலையுந் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன் னெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் றம்பி யாங்கவ னடி பொறை யாற்றி னல்லது முடி பொறை யாற்றலன் படிபொறை குறித்தே. இஃது அரசு கட்டினீத்த பால். பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே (புறம்-358) என்பதும் அது. எட்டுவகை நுதலிய அவையத்தானும்---எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்; அவை குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு நிலைமை அழுக்காறின்மை அவாவின்மை எனவிவை யுடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல். உதாரணம் :--- குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை 1யுடன்மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வான்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே (ஆசிரியமாலை-புறத்திரட்டு- அவையறிதல்) என இதனுள் எட்டும் வந்தன. கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்---வேத முதலிய வற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சியானும்; கண்ணது தன்மை கண்மையெனப்படுதலின் அதனைத் கண்ணுமையென உகரங் கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பது எளுமை வலுமை வல்லுவோர் என்றாற்போல. இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினையும் வென்று தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனைநயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம். உதாரணம் :--- ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து (குறள்-அடக்க.16) ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும் (குறள்-ஒழுக்-1) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி (குறள்-நடுவு-8) பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனன்றோ வான்ற வொழுக்கு (குறள்-பிறனில்-8) படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் (குறள்-வெஃகாமை-2) அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது (குறள்-புறங்-1) தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு (குறள்-தீவினை-1) ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு (குறள்- அழுக்கா-1) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல் (குறள்-பொறை-8) பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க. விழையா வுள்ளம் விழையு மாயினுங் கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்த லினையா பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்த் தெரியுங் காலை. (அகம்-2-86.8-14) என இது தொகுத்துக் கூறியது. இடையில் வண்புகழ்க் கொடைமையானும்---இடை யீடில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்; உலகமுழுதும் பிறர் புகழ் வாராமைத் தண்புகழ் பரத்தலின் இடையிலென்றார். வண்புகழ்-வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக் கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக் காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம். உதாரணம் :--- கேடி னல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் னாடிமுந் ததனினு நனியின் னாதென வாடந் தனனே தலையெமக் கீய (புறம்-165) என வரும். இது புறம். பிழைத்தோர்த் தாங்குங் காவலானும்---தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும்; காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு ஏதம் வாராமற் காத்த லாதலால், இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று.1 பொருளோடு புணர்ந்த பக்கத்தானும்---அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதி யானும்; பக்கமென்றதனான் மெய்ப்பொருளுணர்த்தலுங் கொள்க. உதாரணம் :--- படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு. (குறள்-இறை.1) நாடு அரண்முதலாகக் கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற் காண்க. படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணு முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு1 நடந்து சிறுகை நீட்டி யிட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்து நெய்யுடை யடிசின்2 மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே. (புறம்-188) கேள்வி கேட்டுப் படிவமொடியாது (74) என்னும் பதிற்றுப்பத்தும் அது. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு (குறள்-மெய்யு-4) என வரும். அருளொடு புணர்ந்த அகற்சியானும்---அருளுடைமையோடு பொருந்திய துறவறத்தானும்; அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரையும் கொடுத்துக் காத்தலும் அதன் வருத்தந் தனதாக எண்ணி வருந்துதலும் பொய்யாமை கள்ளாமை முதலியனவுமாம். இக் கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று. காமம் நீத்த பாலினானும்---அங்ஙனம் 3பிறந்தபின்னர் எப்பொருள்களினும் பற்றற்ற பகுதியானும்; உதாரணம் :--- காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங் கெடக்கெடு நோய் (குறள்-மெய்யு- 10) என வரும். பாலென்றதனால் உலகியலு ணின்றே காமத்தினைக் கை விட்ட பகுதியுங் கொள்க. என்று இருபாற்பட்ட1 ஒன்பதிற்றுத் துறைத்தே--முன்னர் ஒன்பானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒன்ப தாகிய பதினெட்டுத் துறையினையுடைத்து வாகை என்றவாறு. இதுனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது விரித்தவாற்றான் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க. பாரதியார் கருத்து :--- இது, வாகைத்திணையின் துறை பதினெட்டு ஆமாறு விளக்குகிறது. இவை துறைகளென்றதனால் முன் சூத்திரம் கூறிய ஏழும் துறையாகாமல் வாகைத்திணையின் வகையாதல் தேறப்படும். பொருள் :--- கூதிர் வேனில் என்று இருபாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்---கூதிர்ப்பாசறை, வேனிற் பாசறை, என்னும் காலத்திற்கேற்ப அமைத்த கட்டூர்களில் போர் விருப்பால் பொருந்தியிருந்து அமர்கருதிய முறையும். (பாசறை எனினும் கட்டூரெனினும் ஒக்கும்.) நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில் 166 முதல் 188 முடியவுள்ள அடிகளில் வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி என்பது முதல் பாசறையில் கூதிரின் பரிசு கூறப்படுவ தறிந்தின்புறுக. மலைமிசைக்குலைஇய எனும் மதுரை எழுத்தாளன் அகப்பாட்டும், மூதில்வாய்த் தங்கிய எனும் பெரும் பொருள் விளக்க வெண்பாவும் இத்துறைச் செய்யுட்களாகும். நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டில் 6;71 முதல் 86 முடிய 100 முதல் இறுதிவரையுள்ள அடிகளில் வினைமேற் சென்ற தலைவன் மீளற்குரிய காருக்குமுன் போரை விரும்பிக் காதலை வென்று களத்துத் தங்கும் வேனிற் பாசறைப் பரிசு விளக்குதல் கண்டு மகிழ்க. 2. ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்---களமர் களத்தில் நெற்போரடித்தல் முதலிய விழவார்ப்போடு, போர்க்களத்தில் தேர் மறவர் வெற்றிவிழவின் வீறும் ; 3. தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும்---தேர்மறவரை வென்றழித்த குரிசிலின் தேர்முன் அவன் கடை மறவர் களித்தாடுங் குரவைக் கூத்தும். 4. ஒன்றிய மரபிற் பின் தேர்க்குரவையும்---அதனொடு பொருந்து முறையானே வென்ற குரிசில் சென்றதேரின்பின் அவன் தானை மறவரும் ஏனை விறலியரும் அவன் புகழ் பாடி வாழ்த்தியாடும் குரவைக்கூத்தும்; (இனி, தேர்ப்பின் களத்துப் பிணக்கூழுண்ணும் பேய்களாடுங் குரவை எனினும் அமையும்) 5. பெரும்பகை தாங்கும் வேலினாலும்---தனதிற் பெரிய பகைப்படையைத் தடுக்கும் வேல் வென்றியும். (பகை---என்பது பகைப்படைக்கு ஆகுபெயர். தாங்குதல்--- தடுத்தல்) 6. அரும்பகை தாங்கும் ஆற்றலானும் --- தடுத்தற்கரிய மாற்றலர் தானை மடங்கத் தடுக்கும் திறலும். (இதிலும், பகை--- பகைப்படைக்கு ஆகுபெயர்) (இடைக்குன்றூர் கிழாரின் புறம் 78-ம்) நெடுஞ்செழியன், தன்னை மதியாமல் தன் இளமை இகழ்ந்து மேல்வந்த அரும்பகை தாங்கி வென்ற, ஆற்றலை விளக்குகிறது. மேல்ஐந்தாவதும் இதுவும் ஒரு குரிசிலின் தறுகண்மைத்திறலே குறிப்பினும் முன்னது வேல்விறலை விதந்து கூறப் பின்னது போர்த்திறனும் பெருவலியும் பேசுகிறது.) 7. புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்---சிறந்து பொருந்தாச் சிறிய வாழ்வினும் வண்மை குன்றா வேளாண்மையும், இடனில் பருவத்தும் ஒப்புரவுக் கொல்கார் கடனறி காட்சி யவர்---ஆதலின். வறுமைக்கஞ்சாத் தறுகண ரூக்கம் வாகைக்குரித்தாயிற்று. 8. ஒல்லார் நாணப் பெரியவர்க்கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும்---பகைவரும் நாணுமாறு தம் தலைவரைக் குறித்து முன்சொன்ன வஞ்சின வுரையொடு வாய்ப்ப அமைத்துப், பழந்தொடர்புடைய (படையா) உயிரைக் களப்பலியாக வழங்கும் மறவேள்வியும். 9. ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும்---பகைவரை இடம் வாய்ப்புழி அன்பாற் றழுவிக் கொள்ளும் பெருந்தகவும். குறிப்பு :--- இவ்வொன்பதும் மறத்துறையில் வாகைக்குரியன. இனிவரும் ஒன்பதும் அறத்துறையில் வாகைக்குரியவாகும். 10. பகட்டினாலும் ஆவினாலும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்---எருதானும் பசுவானும் குற்றமற்ற சீர்மிகு சால்புடையார் பெருமையும். (பகட்டால் சிறப்புடைச் சான்றோராவர், கோழை படாமேழிச் செல்வராய வேளாண் மாந்தர்; அவராற் சிறப் புறுவார் ஆயர், அதாவது கோவலர். ஆவினானும் எனக் கொள்ளாமல், மாவினாலும் எனப்பிரித்து, யானை குதிரையாகிய மாவினானும் என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மறத்துறைக்குப் பொருந்துமல்லாமல், அவரே கூறுகிறபடி முன் ஒன்பது மட்டும் மறவகையாக இது முதல் பின்வரும் ஒன்பதும் அறவகை வாகைத்துறைகளாதலின், அவ்வரிசையில் முதலாகுமிது அறத்துறைப் பொருளோ டமையாமை தெளிவு.) 11. கட்டில் நீத்த பாலினாலும்---அரசுகட்டிலை இகழ்ந்து துறக்கும் உரவோர் பரிசும்; (இங்குக் கடிமனை நீத்த பாலினாலும் எனப் பாடல் கொண்டு, பிறர்மனை நயவாமை குறிக்கும். என்பார் இளம் பூரணர். அஃதான்ற அறவொழுப்பாமெனினும் இவ்வாழ்வார் எல்லார்க்கும் பொது அறமாதலின் தனி ஒருவர் வாகைக்குரிய வீறாகாது. அன்றியும், அதனினும் அருமைத்தாகும் அறிவழி காமவெறியொழி விறலை இதன் கீழ்க் காம நீத்த பா லினாலும் எனக் கூறுதலான். அதிலடங்கும் பிறர்மனை நயவாமையைத் தனித்தொரு துறையாக்குதலிற் சிறப்பில்லை. இன்னும் அப் பாடங்கொள்ளின், இறைமைச் செல்வத்தை இகழ்ந்து துறக்கும் உள்ள வெறுக்கையைக் குறிக்கும் வகைத்துறை இல்லா தொழியும் ஆகையால், இங்குக் கட்டில் நீத்த பால் எனும் பாடமே சிறத்தலறிக.) 12. எட்டுவகை நுதலிய அவையத்துனும்---எண்வகைச் சால்புகளும் நிறைந்தார் மன்றத்து மதிக்கப்பெறுஞ் சிறப்பும்; குறிப்பு :--- அவையத்து முந்தியிருக்கும் வீறு கூறுகிறது. அத்தகைய சால்புகள் ஒழுக்கம், கல்வி, குடிப்பிறப்பு, வாய்மை, தூய்மை, நடுவுநிலை, அவாவின்மை, அழுக்காறாமை, எனப்படுதல் நூலானறிந்தது. 13. கட்டமையொழுக்கத்துக் கண்ணுமையானும்---வரையறுத்த ஒழுக்கங் கருதும் உரனும்; (குறிப்பு :--- கண்ணுமை, கண்ணுதல் அடியாகப்பிறந்த பண்புப் பெயர். (கண்ணுதல்---கருதல்) ஆளுதல் ஆண்மை எனவும், புகழ்தல் புகழ்மை எனவும் வருதல் போன்றது. விருப்பை வென்று அறிவாற் புலனைக் கட்டுப்படுத்துவதே ஒழுக்க மாதலின், கட்டமையொழுக்க மெனப்பட்டது. அதுவாகை யாதல், ஐந்தடக்கலாற்றின், ஐந்தவித்தானாற்றல்---எனப் புலனடக்குதல் அரிய திறலாகக் கூறப்படுதலானறியலாம். (இனி, கட்டமை என்பதற்கு அறநூல் விதித்த எனப் பொருள் கூறித் தரும சாத்திரங்களுக்குச் சார்பென ஆதிக்கமளிப்பர் சிலர்; தரும நூல்கள் மக்களுக்குத் தம்முள் மாறுபட விதிப்பனவாத லானும், அவற்றை எழுதியோ ராணைக்கு உளச் சான்றுக்கு எதிராக எல்லாரும் கட்டுப்படுதல் இயல்பன்றாதலானும், ஒருகால் அவ்வகைக் கட்டுப்பாடு வற்புறுத்தப்படுமேல் அது வாகையாகாமையானும், அது பொருளன்மையறிக.) 14. இடையில் வண்புகழ்க் கொடைமையானும்---இடையறவின்றி வள்ளிய புகழை வளர்க்கும் கொடையும்; 15. பிழைத்தோர்த் தாங்குங் காவலானும்---தவறிழைத் தோரைப் பொறுக்கும் ஏமமும்; 16. பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்---மெய்ப் பொருள் பற்றிய உள்ளப்பரிசும்; 17. அருளொடு புணர்ந்த அகற்சியானும்---யார்மாட்டும் விரிந்து பெருகும் அருளொடுகூடிய துறவும்; குறிப்பு :--- கடனாற்றும் முயற்சிக் கஞ்சித் தனக்கொழிவு தேடும் போலித் துறவை விலக்கி அருள் சுரந்து எல்லார் மாட்டும் பரந்து பயன்தரும் அகன்ற அன்பாற் பிறர்க்கென முயலும் மெய்த் துறவின் வீறே ஈண்டு கூறக்கருதலின், வாளா அகற்சி என்னாது அருளொடு புணர்ந்த என்றடையொடு தொடர்ந்து சுட்டப்பட்டது. 18. காமநீத்த பாலினானும்---வெல்லற்கரிய காமத்தை வெறுத்து விலக்கு மருந்திறலும்; குறிப்பு :--- இது துறவன்று; இல்வாழ்ந்தும் காமம் கூடியும் உரனுள்ளமுடைய பெரியார் உண்மையால், வேண்டிய வெல்லாம் ஒருங்குவிடும் பெருந்துறவின் வேறாய் இருநிலை வாழ்வினுமொரு தலை நிற்போரறமாகும். முற்றும் பற்று விடும் கருத்தை இதிற் புகுத்தின், மேற்குறித்த தீரத்துறக்கும் அகற்சி யுளடங்கிக் கூறியது கூறுங் குற்றமாய் முடியும். ஆதலின், மேலது துறவும், இத்துறை துறவறம் கருதாது காமம் கடியும் இரு நிலைக்கும்பொதுவான உரனுள்ளப் பெருமையும் விளக்குதல் வெளிப்படை. (இவ்வொன்பதும் மேற்கூறியாங்கு அறவகை வாகைத்துறை களாகும்.) என்றிரு பாற்பட்ட ஒன்பதிற்றுத்துறைத்தே---என வகைக்கு ஒன்பதாய் இருவகையிலெண்ணிய பதினெட்டுத் துறையுடையது வாகைத்திணை. குறிப்பு :--- பதினெட்டுத் துறைத்தே என்னாது, இருபாற் பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே என்றார்; மேற்கூறியாங்கு முன் மறவகையிலொன்பதும் பின் அறவகையிலொன்பதுமாக வாகைத் திணை துறைகொள்ளும் எனற்கு. இனி, இத்திணைத் துறை பதினெட்டும் தன்மையால் இருவேறு வகைப்படுதலின் அவற்றை ஒரு சேர எண்ணுதலமையாதாதலின், இருபாற்பட்ட எனவும், வகைக்கு ஒன்பதேயாதல் குறிக்க ஒன்பதிற்றுத்துறைத்து எனவும் விளக்கினார் இந்நூலார். இதில்வரும் இன்னும் ஆனும் உரை யசைகள்; பாங்கு பக்கம் என்பன இசை நிரப்பு; ஈற்றேகாரம் அசை. ஆய்வுரை நூற்பா. 17 இது வாகைத்திணையின் துறைகளை விரித்துரைக்கின்றது. (இ ள்) கூதிர்ப்பாசறை வேனிற் பாசறை என்னும் இருவகைப் பாசறையிடத்தும் காதலால் ஒன்றிய உள்ளத்தனாகிப் போர்க் களத்தில் நிகழ்த்த வேண்டிய போர்முறைகளை ஆராய்ந்திருந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிவாராகிய உழவர் விளையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும், தேரின்கண் அமர்ந்து பொருத அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றி மகிழ்ச்சியாலே தேர்த்தட்டிலே நின்று வீரர்களோடு கைகோத்தாடும் குரவையும், தேரோரை வென்ற வேந்தனுக்குப் பொருந்திய இயல்பான தேரின்பின்னே கூவிச் சுற்றம் ஆடும் குரவையும், பெரும் பகையினைத் தடுத்தற்குரிய வேலின் வெற்றியும், வெல்லுதற்கு அரிய (அகப்) பகையைத் தடுத்து நிறுத்தும் பேராற்றலும் (உயிரும் உடம்பும் ஒன்றியின்புறும் உலகியல்) வாழ்க்கையைப் பொருந்தாத வல்லாண்மைப் பகுதியும், தன்னொடு பொருந்தாதாராகிய பகைவர் நாணுமாறு பெரியோரைக் குறித்து, இன்னது செய்யேனாயின் இன்ன நிலையை யடைவேன் எனச் சொல்லிய வகையிரண்டினுள்ளே ஒன்றுடன் பொருந்திப் பல பிறப்புக்களிலும் பழகி வருகின்ற தன் உயிரை (த்தீயில்) அவியாக வழங்கிய அவிப்பலியும், பகை வரிடத்தும் மனம் பொருந்தித் தன் உடல் பொருள் ஆவியினை உளமுவந்து வழங்கும் அன்பின் திறமும், (எருதும் எருமையும் ஆகிய) பகட்டினாலும் (யானையும் குதிரையும் ஆகிய) மாவினாலும் முறையே பசியும் பகையும் ஆகிய தீமைகளைப் போக்கும் சிறப்பினையுடைய உடலுழைப்பும் உள்ளத்துறுதியும் அமைந்தோரது கூறுபாடும், நாடாள் வேந்தன் தனது அரச வுரிமையினைத் துகளாக நீத்துத் துறவினை மேற்கொண்ட பகுதியும், எண்வகைக் கணத்தினை மதிப்புடைய பொருளாகக் கொண்ட அவையகத்தார் சிறப்பும் உயர்ந்த நூல்களால் விதிக்கப்பட்டுக் கட்டுதலமைந்த ஒழுக்கத்தொடு பொருந்திய நற்காட்சியும், வளவிய புகழைத்தரும் இடையீடில்லாத கொடைத்திறமும், தம்மிடத்துப் பிழை செய்தோரைப் பொறுக்கும் காவற்பகுதியும், மெய்ப்பொருளுடன் ஒன்றிச் சேர்ந்த பகுதியும், எவ்வுயிர்க்கும் அருளுடையராய் இருவகைப் பற்றுக்களையும் விட்டகன்ற துறவுநிலையும், என்று இரண்டு கூறுபட்ட ஒன்பது துறைகளையுடையது வாகைத்திணை) எ-று. இருபாற்பட்ட ஒன்பதின் றுறைத்து எனவே பதினெட்டுத் துறைகளையுடைய தென்பதாம். இதன்கண் முன்னர்க் கூறப் பட்ட ஒன்பதும் மறத்துறை பற்றியும் பின்னர்க் கூறப்பட்ட ஒன்பதும் அறத்துறை பற்றியும் நிகழ்வன என்பார் இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே என்றார் ஆசிரியர். 18. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்1 நில்லா உலகம் புல்லிய நெறித்தே. இளம் : இது, காஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காஞ்சி பெருந்திணை புறன்-காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; பாங்கு அருஞ் சிறப்பின் பல் நெறியானும் நில்லா உலகம் புல்லிய நெறித்து-அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பலநெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியை யுடைத்து. பாங்கருமையாவது, ஒருவற்கு ஒருதுணையாகாமை. நிலை யாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என. இவற்றுள், இளமை நிலையாமை யாவது, பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் கனிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை---நனிபெரிதும் வேற்கண்ணள் என்றிவளை வெஃகல்மின் மற்றிவளும் கோற்கண்ணள் ஆகுங் குனிந்து (நாலடி-இளமை. 7) செல்வம் நிலையாமையாவது, அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும்---வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. (நாலடி. செல்வம். 1) யாக்கை நிலையாமையாவது முன்னர்க் காட்டுதும். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின். ஏறிய மடற்றிறம் (அகத்திணை 54) முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும் இதுபோல அதுவும் நிலையாமை நோந்திறம் பற்றியும் வருதலானும் அதற்கு இது புறனாயிற்று.1 நச் : 18 காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. இத்துணையும் உரிப்பொருள்பெற்ற அகத்திணைக்குப் புறங் கூறி, இஃது உரிப்பொருளில்லாத பெருந்திணைக்குப்2 புறனிது வென்கின்றது. இதனை வாகைக்குப் பின்வைத்தார், வீரக் குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு1 (இ-ள்) காஞ்சிதானே பெருந்திணைப் புறனே---எழுதிணை யுட் காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந் திணைக்குப் புறனாம் என்றவாறு. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்குமணம்பெற்ற பெருந்திணைபோல இக் காஞ்சியும் அற முதலாகிய மும்முதற்பொருளும் அவற்றது நிலை யின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித் தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறும் (தொல் களவியல்-14) என்ற நான்குஞ் சான்றோர் இகழ்ந்தாற் போல அறம் முதலியவற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், ஏறிய மடற்றிற (தொல். அகத்-51) முதலிய நான்குந் தீய காமமாயின வாறுபோல உலகியனோக்கி நிலையாமையும் நற்பொருளன்றா கலானும், உரிப்பொருள் இடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணைபோல அறம் பொருளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமையென்பதொரு பொருளின்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். அகத்-1) ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு இது புறனாவ தன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். 18 (8) பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) பாங்கருஞ் சிறப்பின்---தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும்---அறம்பொருள் இன்பமாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும்யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து---நிலைபேறில்லாத உலகியற் கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்துக் காஞ்சி என்றவாறு.1 எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்குதுணை. உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட் பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகன்பதற்கு வடிவு வேறின்மையிற் பல்லாற்றானுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்றார். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றானு மென்றதனாற் சில்லாற்றானும் வீடேது வாகலின்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாதலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப் பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம். உதாரணம் :--- மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெரிய வளியிடை வழங்கா வழக் கருநீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப் பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் விலைநலப் பெண்டிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா ணிலமக ளழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே (புறம்-365) இதனுள் உண்டென உரைப்பரால் உணர்ந்தோ ரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வர் நில்லா உலகம் புல்லிய தாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பலவேறு நிலை யாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம். (23) பாரதியார் 18. கருத்து :--- இது, அகப் பெருந்திணைக்குக் காஞ்சித்திணை புறனா மென்பது சுட்டுகிறது. பொருள் :--- இதன் பொருள் வெளிப்படை. குறிப்பு :--- ஏகாரமிரண்டில், முன்னது பிரிநிலை; மற்றது ஈற்றசை. பொறியவிக்கும் உரனின்றி இன்பம் விழைந்து மேவன செய்வார் காமவகை பெருந்திணையாவதுபோல, முயற்சி மேற் கொள்ளும் உரனின்றி நிலையாமை சொல்லி நெஞ்சழிய மனமடிவதே காஞ்சியாவதானும், இவ்விரண்டுக்கும் இடம் பொழுதிரண்டும் வரையறையின்மையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. 18 (8) கருத்து :--- இது, காஞ்சித்திணையின் இயல் விளக்குகிறது. பொருள் :--- பாங்கருஞ் சிறப்பின்---ஒப்பற்ற மறுமையின்பத் துக்கு; பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லிய நெறித்தே---நிலை யற்ற உலகியலை யிகழும் முறையினை யுடையது (காஞ்சித் திணை) குறிப்பு :--- நெறித்துஎன்னும் வினைக்கேற்பக் கொண்ட பொருடொடர்பால் காஞ்சித்திணை என்னுமெழுவாய் சூத்திரத்திலிருந்து கொள்ளப்பட்டது. பாங்கருமை---ஒப்பின்மை; சிறப்பு வீடுபேறும் மறுமையின்பமாதல்; சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு என்னுங் குறளானறிக. இன்னுருபு ஏதுப் பொருட்டு, பல்லாறு, யாக்கைநிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை போல்வன கூறுதலாம். மதுரைக்காஞ்சி இதற்கு எடுத்துக் காட்டாகும். இனி, இந்நூலில் இத்திணைக்கு வகுக்கும் துறைகளெல்லாம், உலகியலை இகழ்வதற்கு மாறாக, அதைத் தழுவியே அமைந்திருப்பதால், அதற்கேற்பப் பொருள் கூறுவாருமுளர். அவர் கூறும் பொருளாவது :--- பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்---முறை சிறவாத பல துறையானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்தே---நிலையற்ற உலகியலைத் தழுவியது காஞ்சித்திணை. இவ் வுரைக்கு, பாங்கு முறைப் பொருட்டாகும்; அருஞ்சிறப்பு அருங்கேடன் என்பது போலச்---சிறவாமை குறிக்கும். இப் பொருளுக்கு இதையடுத்த சூத்திர உரையில் அவ்வத்துறைக்குக் காட்டும் பாட்டே போதியதாம். ஆய்வுரை நூற்பா. 18. இது, காஞ்சித்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம். அதுதான் துணையாதலரிய சிறப்பினைப் பெறுதல் காரணமாகப் பலநெறியானும் நிலை பேறில்லாத உலகியலைப் பற்றி நிற்கும் இயல்பினையுடையதாம். எ-று. பாங்கு அரும் சிறப்பு---தனக்குத் துணை (ஒப்பு) இல்லாத சிறப்பு; என்றது தனக்கு ஒப்பில்லாத வீட்டின்பம் என்பர் நச்சினார்க் கினியர். இங்குப் பாங்கு அருஞ்சிறப்பு என்றது, தனக்கு ஒருவாற்றானும் ஒப்பில்லாததாய் உயிர்க்குயிராய்ச் சிறந்த செம் பொருளை எனக்கொள்ளுதல் ஏற்புடையதாகும். இதனைச் சிறப்பென்னுஞ் செம்பொருள் என விளக்குவர் திருவள்ளுவர். இத்தகைய செம்பொருளை இடைவிடாது நினைந்து போற்றுதலே ஒத்த அன்பினராய் ஒருவனும் ஒருத்தியும் மக்களொடு மகிழ்ந்து, மனையறங்காத்தலாகிய இவ்வுலக வாழ்க்கையின் முடிந்த பயன் என்பதனை, காமஞ்சான்ற கடைகோட் காலை ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்-கற்பு-51) எனவரும் நூற்பாவில் சிறந்தது பயிற்றல் எனத் தொல் காப்பியனார் குறித்துள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கத்தகுவ தாகும். ஏறிய மடற்றிறம் முதலாகிய நோந்திறக் காமப்பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறுபோல புறத்திணை ஐந்தற்கும் இக்காஞ்சித்திணை புறனாகலானும், இக்காஞ்சித் திணைபோலப் பெருந்திணையும் நிலையாமை நோந்திறம் (துன்பியற்பகுதி) பற்றியும் வருதலானும், பெருந்திணைக்குக் காஞ்சித்திணை புறனாயிற்று என்பர் இளம்பூரணர். எண்வகை மணத்தினுள்ளும் நான்கு மணம் பெற்ற பெருந்திணைபோல இக்காஞ்சியும் அறமுதலாகிய மும்முதற் பொருளின் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாதலானும், பின்னர் நான்கு எனப்பட்ட பெருந்திணை நான்கினையும் சான்றோர் இகழ்ந்தாற் போல அற முதலியவற்றின் நிலையின்மைகளைச் சான்றோர் இகழ்தலானும், ஏறிய மடற்றிறம் முதலிய நான்கும் தீய காமம் ஆயினவாறுபோல உலகியலை நோக்க நிலையாமையும் நற்பொருளன்றாகலானும், உரிப் பொருள்களின் இடையே மயங்கி வருதலன்றித் தனக்கென நிலமில்லாத பெருந்திணைபோல அறம் பொருள் இன்பம் பற்றி வருவதன்றி நிலையாமை யென்பதோர் பொருள் இல்லையாதல் ஒப்புமையானும் பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். உலகியலில் பலவகைத்துன்பியற்கூறுகளையும் கண்டு அஞ்சிப் பின்னிடாது அவற்றை எதிரேற்றுத் தாங்கி நிற்றல் காஞ்சித்திணையாம் எனத் தொல்காப்பியனார் பொதுப் படக்கூறிய இவ்விலக்கணத்தினை அடிப்படையாகக் கொண்டே தன்மேற் படையெடுத்து வரும் வஞ்சி வேந்தன் சேனையினைப் போரில் எதிர் ஏற்றுத் தடுத்து நிறுத்தல் காஞ்சித் திணையாம் என்னும் சிறப்பிலக் கணமும் பிற்காலத்து உருப்பெறுவதாயிற்று. எல்லாப் பொருளினும் சிறந்த சிறப்பென்னும் செம்பொருளைப் பெறுதல் வேண்டி, யாக்கை, இளமை, செல்வம் ஆகியவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலக வாழ்க்கையில் நேரும் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றல் காஞ்சித்திணையாதல் போலவே, ஒன்றாவுலகத் துயர்ந்த புகழைப் பெறுதல் வேண்டி உலகியலில் நேரும் பல வகை யின்னல்களுக்கிடையே தன்மேற் படையெடுத்து வந்த பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாகிய இப் போர்ச் செயலும் காஞ்சித் திணையாம். ஆதலின் எதிரூன்றல் காஞ்சி என்னும் சிறப்பிலக்கணமும் இதற்கு உரியதாயிற்று. தொல்காப்பியனார் கூறிய காஞ்சித் திணையின் பொது இலக்கணத்தினுள்ளே பிற்காலத்தார் வகுத்துரைத்த எதிரூன்றல் காஞ்சி என்னும் சிறப் பிலக்கணமும் அடங்குதல் காணலாம். இவ்வாறு வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறுபட்ட இருவேறு போர்ச் செயல்கள் என்னும் புறத்திணைப் பாகுபாடு இளங்கோவடிகளுக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கியதென்பதனை, தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும் எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் நன்குணரலாம். 19. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தி னானும் ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் இன்னனென்று இரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் இன்னகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலின் பெயர்த்த மனைவி வஞ்சி யானும் நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டான் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகும் என்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கத் தானுந் தாமே எய்திய தாங்கரும் பையுளும் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடை இட்ட பாலை நிலையும் அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும் மலர்தலை உலகத்து மரபுநன்கு அறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே. இளம் : இது காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை முதலாகத் தலையொடு முடிந்த நிலையொடு கூடப் பத்தாகும். என்பர் சிலர். பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்து உட்பட வருவனவற்றோடும் இருவகைப்பட்ட துறையை உடைத்து. (எனவே, முற்கூறிய பத்தும் ஒருவகை யென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.) மாற்று அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்1 - மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும். கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்2 அறிவான் மிக்கோர் அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும். பண்பு உறவரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறனும்3 -இயல்புற வரும் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்காஞ்சியும். ஏமச்சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்4-ஓம்பும் சுற்றம் இன்மையாற் புண்ணோனைப் பேய் ஓம்பிய பேய்ப் பக்கமும். இன்னன் என்று இரங்கிய மன்னையும்1-இத்தன்மையான் என உலகத்தார் இரங்கிய மன்னைக் காஞ்சியும். இன்னது பிழைப்பின் இது ஆகியர்2 என துன் அருஞ் சிறப்பின் வஞ்சினமும்- இன்னவாறு செய்தலைப் பிழைத்தேனாயின் இன்னேன் ஆகக் கடவேன் எனக் கூறிய துன்னற்கு சிறப்பினை யுடைய வஞ்சினக்காஞ்சியும், (துணிவுபற்றி ஆகியர் என இறந்த காலத்தாற் கூறினர்). இன்நகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த3 தொடாக் காஞ்சியும்-இனிய நகையார்ந்த மனைவி பேய் புண்ணோனைக் கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ்சியும். நீத்த கணவன் தீர்த்த வேலின் பெயர்த்த மனைவி ஆஞ்சியும்4-தன்னை நீத்த கணவன் விடுத்த வேலினானே மனைவி தன் உயிரையும் பெயர்த்த ஆஞ்சியும். நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும்1-ஒத்து மாறுபட்டுத் தன் மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடைஅஞ்சிய மகட்பாற் காஞ்சியும். கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்தநிலை2யொடு தொகைஇ ஈர் ஐந்து ஆகும் என்ப- தன்னைக் கொண்டான் தலையொடு தன்னுடைய முலைகளையும் தம்முகத்தையும் சேர்த்தி இறந்த நிலையும் கூடிப் பத்தாகும் என்பர் சிலர். பேர்இசை மாய்ந்த மகனை சுற்றியசுற்றம் மாய்ந்த பூசல் மயக்கமும்3-பெரிய இசையையுடையவனாய் மாய்ந்தவனைச் சுற்றிய சுற்றத்தார் அவன் மாய்ந்தமைக்கு அழுத மயக்கமும் (மகன்-ஆண்மகன்.) தாம் எய்திய தாங்கு அரும் பையுளும்4-சிறைப்பட்டார் தாம் உற்ற பொறுத்தற்கு அரிய துன்பத்தினைக் கூறுங் கூற்றும். கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தமும்5-கணவனொடு இறந்த செலவை நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும். நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்1-மிகுதி மிக்க சுரத்திடைக் கணவனை யிழந்து தனியளாய்த் தலைமகள் வருந்திய முதுபாலையும். கழிந்தோர் தேத்து சுழிபடர் உறீஇ2 ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்-செத்தோர்மாட்டுச் சாவாதார் வருத்தமுற்றுப் புலம்பிய கையறு நிலையும். காதலி இழந்த தபுதாரநிலையும்-3காதலியை இழந்த கணவனது தபுதாரநிலையும். காதலன் இழந்த தாபத நிலையும்4-காதலனை இழந்தவள் நிற்கும் தாபத நிலையும். நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇ இடையிட்ட மாலை சொல்நிலையும்5-கணவனொடு கிழத்தி பெரிய அழற் புகுவழி இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற்றும். அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்த தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்-அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகற்பெற்ற தாய் சாதற்கண் அவனைத் தலைப்பெயல் நிலையும். (தலைப்பெயல்-சேர்தல்) மலர்தலை உலகத்து மரபு நன்கு அறிய பலர் செல செல்லாக்காடு வாழ்த்தொடும்-இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங்காடு வாழ்த்துதலும். நிறை அருஞ்சிறப்பின் இரண்டு1 துறை உடைத்து - ஆக நிறையும் அருஞ்சிறப்பினையுடைய இரண்டு துறைகளையுடைத்து. (இச்சூத்திரத்தில் வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும் இடைச் சொல்லுமாம்.) (19) நச்சர் : 19 இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறையொடும் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோதிய சூத்திரமென்றுணர்க.2 (இ-ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும்---பிறராற் றாடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சியானும்; கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள்; அதனைப் பேரூர்க் கூற்றம்போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மையிற் காலம் உலகம் என (தொல்.சொல்-கிளவி-58.) முன்னே கூறினார்.1 உதாரணம் :--- பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினு மல்லது செய்த லோம்புமி னதுதா னெல்லாரு முவப்ப தன்றியு நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே. (புறம்-165) இது வீடேதுவாக வன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது. இருங்கடலுடுத்த என்னும் (363) புறப்பாட்டும் அது கழிந்தோர் ஒழிந்ததோர்க்குக் காட்டிய முதுமையும்-இளமைத்தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவின் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்; முதுமை மூப்பாதலான் அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம்.2 உதாரணம் :--- இனிநினைந் திரக்க மாகின்று நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே. (புறம்-243) இது வீடுபெறுதற்கு வழி கூறியது. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும்---நன்றாகிய குணம் உறுநிலையாகப் பெறுகின்ற பகுதியாராய்ந்து பெறுதற்குப் பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்; இது யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது. இதனை வாகைத்திணைப் பின்னர் வைத்தார்; இக் காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல்பற்றி,1 உதாரணம் :--- பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே. இது போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையினையும் பண்புற வருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று. ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்---கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மையின் அருகு வந்து புண்பட்டோனைப் பேய்தானே காத்த பேய்க் காஞ்சியானும்; பேய் காத்ததென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று; ஏமம் காப்புமாம்; ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம். இது சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வ நிலையாமையாயிற்று. பக்கமென்றதனாற் பெண்டிர் போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க. ஏனைய வந்துழிக் காண்க. இன்னன் என்று இரங்கிய மன்னையானும்---ஒருவன் இறந்துழி அவன் இத் தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய கழிவு பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்; இது பலவற்றின் நிலையாமை கூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறு பெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற் பற்றியே வருமென்றற்கு 1மன் கூறினார். இது மன்னையெனத் திரிந்து காஞ்சியென்பதனோடடுத்து 2நின்றது; இஃது உடம்பொடு புணர்த்தல். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம்-235) என இப் புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருடந்தது. பாடுநர்க் கீத்த 3பல்புக ழன்னே (புறம்-221) இது மன் அடாது அப்பொருடந்தது. செற்றன் றாயினும் என்னும் (226) புறப்பாட்டு முதலியனவும் அன்ன. இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினும் அமையும்.4 இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்---இத்தன்மைய தொன்றினைச் செய்தலாற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக் காஞ்சியானும் ; அது தான்செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வருங் குற்றத்தால் உயிர் முதலியன துறப்ப னென்றல். சிறப்பு வீடு பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு.5 உதாரணம் :--- மெல்ல வந்தெ னல்லடி பொருந்தி (புறம்-73) நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் மடங்கலிற் சினைஇ என்னும் (71, 72) புறப்பாட்டுகள் உயிருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நிலையாது வஞ்சினஞ் செய்தன. இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்---இனிதாகிய நகையினையுடைய மனைவி தன் கணவன் புண்ணுற்றோனைப் பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சியானும்; என்றது, நகையாடுங் காதலுடையாள், அவனைக் காத்து விடிவளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் நிலையாமையை எய்தினானென்றவாறு. இதுவும் ஆண்பாற்காஞ்சியாம். இக் காஞ்சியென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சி யானும்---உயிர் நீத்த கணவன் தன்னுறவை நீக்கின வேல்வடு வாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்;1 எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற் புண்பட்டு அச்சுநிகழ்தலின், யாக்கை நிலையாமை கூறியதாம். பேஎத்த என்பது உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயரெச்சம். அஞ்சின, ஆஞ்சி யென நின்றது. இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு---தன்கணவ ளல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே புல்லார்வேன் மெய்சிதைத்த புண் (தகடூர் யாத்திரை-புறத்திரட்டு. மூதின் மறம்-8) என வரும். இனி வேலிற்பெயர்த்த மனைவி யென்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப்பேக்கின மனைவி யென்று கூறி, அதற்குக் கெளவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ---னவ்வேலே யம்பிற் பிறழுந் தடங்க ணவன் காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று (புறப் வெ-மாலை. காஞ்சி-23) என்பது காட்டுப.1 நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்---பெண்கோளொழுக்கத்தினொத்து மறுத்தல் பற்றிப் பசைவனாய் வலிந்து கோடற்கு எடுத்துவந்த அரசனோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்; வேந்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலையின்மை நோக்கி அவரோடொத்து மகளிரைப் படுத்தற்கஞ்சி மறுப் பாராதலின் அஞ்சியவென்றும், மேல்வந்த வென்றுங் கூறினார். அம்முது குடிகள் தாம் பொருதுபடக் கருதுதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சி யாயிற்று. பாலென்றதனான் முதுகுடிகளேயன்றி அனைநிலைவகை யெனப்பட்டார் கண்ணும்2 (தொல்-புறத்திணை-20) இத்துறை நிகழ்தல் கொள்க. உதாரணம் :--- நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையு நெடிய வல்லது பணிந்துமொழி யலனே இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல வணங்கா யினடான் பிறந்த வூர்க்கே (புறம்-394) எனவரும். களிறணைப்பக் கலங்கின காஅ (புறம்-345) இதனுள் நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென என்றலின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர் பாற்பட்டது. முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகு மென்ப---தன் கணவன் தலையைத் தன்முகத்தினும் முலையினுஞ் சேர்த்துக் கொண்டு, அத்தலையான் மனைவி யிறந்த நிலைமையானுந் தொகை பெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவாராசிரியர் என்றவாறு. தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினைமுதலா யிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒரு துறையாமென்றற்கும் இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறொரு தொகை கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலையின்மை யெய்தலின், இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும் அதனாலெய்துதலின் மேல் வருகின்ற பெண்பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற் கியைபுபடத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக்காஞ்சியும் பெண்பாலோடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன் வைத்தார். இவை ஒரு வகையாற் பெண்பாற்கண்ணு நிலையின்மையுடைய வாயினும் இரண்டிடத்தும் ஓதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய ஆண்மகற்கே ஓதிப் பெண்பாற் பகுதியுந் தழீஇயினா ரென்றுணர்க. இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈரைந்தென்பதனைக் கூட்டிமுடிக்க. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் --- பெரும்புகழுடையனாகி மாய்ந்தானொருவனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு மயக்கத்தானும்; என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசையை ஆய்ந்தவென்பது உள்ளத னுணுக்கம். மாய்ந்த பூசன் மயக்க மென்று பாடமாயிற் சுற்றம் ஒருங்கு மாய்ந்த வழிப்பிறழுதல் பூசன் மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த மகனென்றதூஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே. ஆண்பாலும் உடன்கூறியதன்று. மேலனவற்றிற்கும் இஃதொக்கும். மீனுண் கொக்கின் றூவியன்ன(277) புறப்பாட்டும் அது. தாமே ஏங்கிய தாங்கரும் கையுளும்---அச்சுற்றத்தாருமின்றி மனைவியர் தாமே தத்தங் கொழுநரைத் தழீஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்; தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலரென்றற்கு. ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை. இது செல்லமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது. கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொலிப்ப என்னும் (249) புறப்பாட்டும் அது. தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே தனித்திருந்த தென்று கூறிக், குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் (புறம் 74) என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர். கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்---மனைவி தன் கணவன் முடிந்த பொழுதே உடன் முடிந்துபோகிய செலவுநினைந்து கண்டோர் பிறர்க்குணர்த்திய மூதானந்தத்தானும்; ஆனந்தம்---சாக்காடு. முதுமை கூறினார். உழுவலன்புபற்றி, இப்படியிறத்தலின் இது யாக்கை நிலையின்மை; நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்---மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முதுபாலையானும்; புலம்பிய வெனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று; பாலை யென்பது பிரிவாகலின், இது பெரும்பிறிதாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். நனிமிகு சுரமென்று இருகால் அதனருமை கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்ததன்றா யிற்று. இதுவும் இன்பமும் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று. கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்---கணவனோடு மனைவியர் கழிந்துழி அவர்கட் பட்ட அழிபொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்து படா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருந் தனிப்படருழந்த செயலறு நிலைமையானும்; ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும் அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோ ரென்றும் பன்மையால் ஆண்பாலுந் தழீஇயினார்; கையறுநிலை அவரையின்றி அமையாமையின்1 ஆண்பால் கையறுநிலை மன்னைக்காஞ்சியுள் அடங்கும். அழிவாவன புனல்விளை யாட்டும், பொழில் விளையாட்டுந், தலைவன்வென்றியும் போல்வன. காதலி இழந்த தபுதார நிலையும்---தன் மனைவியைக் கணவனிழந்த தபுதார நிலையானும்; என்றது தாரமிழந்த நிலை தன்காதலியை இழந்தபின் வழிமுறைத் தாரம் வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும் எஞ்ஞான்றும் மனைவியில்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனாயினும், இது காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், காதலியிழந்த நிலையுமென்றே ஒழியாது, பின்னுந் தபுதாரநிலையு மென்றார். தலைவர் வழி முறைத்தாரமும் எய்துவாராகலின் அவர்க்கு நிலையாமை சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சியின்றாயிற்று; இது யாக்கையும் இன்பமும் ஒருங்குநிலையின்மையாம். காதலன் இழந்த தாபதநிலையும்-காதலனையிழந்த மனைவி தவம் புரிந்தொழுகிய நிலைமையானும்; இருவரும் ஓருயிராய்த் திகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம். இதனை இல்லறம் இழத்தலின் அறநிலையின்மையு மென்ப.1 உதாரணம் :--- அளிய தாமே சிறுவெள் ளாம்ப லிளைய மாகத் தழையா யினவே யினியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே (புறம்248) என வரும். நல்லோள் கணவனொடு நளியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும்-கற்புடைய மனைவி தன்கணவன் இறந்துபட அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு நிலையானும்; எல்லாநிலத்தும் உளதாகித் தனக்கு வேறுநிலனின்றி வருதலானும் நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப் பாலை யென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலையென்றார். மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய் தப வரூஉந் தலைப்பெயல் நிலையும்-பொருகளத்துப் பொருதுமாயும் பெருஞ்சிறப்பிற் றீர்ந்து தன்மகன் புறங்கொடுத்துப் போந் தானாக,அது கேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்டமொன்றானும்; இனி அவன் பிறர் சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ் சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப்பெயனிலைமை யொன்றானும்;1 இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி. நிலையென்றதனால் அவள் இறந்து படாது மீடலுஞ் சிறு பான்மையாம் காஞ்சி யென்றுகொள்க. அஃது அன்பிற்கு நிலையின்மையாம். வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோவே னத்தை நின்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃக மதன்முகத் தொழிய நீபோந் தனையே யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை யீன்ற வயிறே (தகடூர் யாத்திரை, புறத்திரட்டு, மூதின்மறம்-9) இத் தகடூர்யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை. தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப---தொகைபெற்றுக் காஞ்சிபத்து வகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறப்பிற்றுறை இரண்டு உடைத்தே---ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினை யுடைத்து என்றவாறு. எனவே முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக்கண்ணுள்ள நிலையாமை காஞ்சிச்சிறப்பன்று என்றுணர்க. பாரதியார் கருத்து :--- இது, காஞ்சித்துறை விழுப்பவகை பத்தும் விழுமவகை பத்துமாக இருபதாமாறு கூறுகிறது. பொருள் :--- (1) மாற்றருங்கூற்றஞ் சாற்றிய பெருமையும்--- யார்க்கும் விலக்கொணாது இறுதிதரும் கூற்றினாற்றல் கூறும் பெருங்காஞ்சியும்; 2. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்--- இளமை கழிந்த முதியோர், மற்றையவர்க்கு அப்பரிசு சுட்டி யறிவுறுத்தும் முதுகாஞ்சியும்; 3. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும்---தகுதி யொடுபட்ட பரிசு கருதி வாய்த்த புண்ணைக் கிழித்து உயிர் துறக்கும் மறக்காஞ்சியும். பொருது வடுப்பட்ட யாக்கைநாணிக் கொன்று முகந்தேய்ந்த எஃகந் தாங்கிச் சென்று களம்புக்க காளை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுகல் நெடுநிலை நோக்கி, ஆங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோன்.......... இவன்போ லிந்நிலை பெறுக யானெனவே. இதில், முன் ஒருவன் இறந்து கல்லான நிலையைப் போரில் புண்பட்ட ஒருவன் கண்டு, யாக்கை நிலையாமையை நினைத்துத், தன் புண்ணைக் கிழித்து உயிர் துறந்த தறுகண்மை கூறப்படுதல் அறிக. 4. ஏமச் சுற்றமின்னிறப் புண்போற் பேஎயோம்பிய பேஎய்ப் பக்கமும்---பேணும் சுற்றத்தா ரின்மையால் புண்பட்ட வளைப் பேய்பேணும் பேய்க் காஞ்சியும்; 5. இன்னனென் றிரங்கிய மன்னையானும்---இன்ன பரிசுடையா னென்று இறந்தபின் ஒருவனை அயலோர் பரிந்து கூறும் மன்னைக் காஞ்சியும். 6. இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்---இது செய்யத் தவிர்ந்தால் இன்னவாக முடியக்கடவது எனக் கூறும் ஒப்பற்ற சிறப்புடைய வஞ்சினக் காஞ்சியும். 7. இன்னகை மனைவி பேஎய் புண்ணோற் றுன்றுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்---புண்பட்டோன் உளையாவாறு இனிய வரியில் நகை வாய்ந்து வரும் அவன் மனைவி அவனைப் பேய் நெருங்காமற் காத்துத் தொடவிடாத தொடாக் காஞ்சியும்; 8. நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி ஆஞ்சி யானும்---அவனுடலொடு தன்னையும் வீட்டிறந்த கணவனை முடித்த வேலினால் அவன் மனைவி கண்டோரஞ்சுமாறு தன்னுயிரைப் போக்கிய ஆஞ்சிக்காஞ்சியும்; 9. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட் பாடஞ்சியமகட்பாலானும்---குடித்தொன்மையில் ஒவ்வா நிலையில் ஒத்தானாகக் கருதி மகள் கொள்ளப் படையொடு வந்த மன்னனொடு தொல்குடி மகளைப்படுத்தலஞ்சி அதை விலக்க அவள் தன்னையர் வந்தவனொடு தம்முயிரைப் பொருட் படுத்தாது பொரும் மகட்பாற்காஞ்சியும்; களிறணைப்பக் கலங்கின காஅ எனவரும் அடைநெடுங் கல்லியார் புறப்பாட்டில், ஏர்பரந்த வயல் என்னும் குன்றூர்கிழார் மகனார் புறப் பாட்டும், (புறம் 338) கானக்காக்கை என்னும் அரிசில் கிழார் பாட்டும் (புறம் 342) மகட்பாற் காஞ்சித்துறையை விளக்குதல் உணர்க. 10. கொண்டோன் தலையொடு, முலையும் முகனும் சேர்த்தி, முடிந்த நிலையொடு தொகைஇ, ஈரைந்தாகுமென்ப---இறந்த தன் கணவன் தலையைத் தன் மார்பினும் முகத்தினும் அணைத்து அவனோடு மனைவிதானும் மாய்ந்த முதுகாஞ்சி யொடு கூட்டி விழுப்பவகைக் காஞ்சித்துறை பத்தாகும் என்பர் புறநூற் புலவர் ஒருசாரார். இனி, விழுப்பவகைக் காஞ்சித்துறை பத்தும் கூறுகிறார். அவை வருமாறு :--- 11. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசன் மயக்கத்தானும்---மிகுந்த புகழொடு பொருது மடிந்த குரிசிலொரு வனை வளைந்திரங்கும் சுற்றத்தார் அரற்றி ஓய்ந்த அழுகைக்குரலரவ மயக்கமாம் காஞ்சியும்; 12. தாமே யேங்கிய தாங்கரும் பையுளும்---போரில் ஊறுபட்டு ஓய்ந்தோர் தாங்களே பொறுத்தற்கரிய வருத்தங் கொண்டு ஏங்கும் துன்பக் காஞ்சியும்;1 (பையுள்---துன்பம்) இதில் தாமே என்பதை மனைவியர்மேல் ஏற்றி வேறு பொருள் கூறுவாரும் உளர். அது பொருந்தாமை வெளிப்படை. 13. கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்---கொழுநனொடு மாய்ந்த மனைவியின் மீச்செலவைக் கண்டு வழிச் செல்வோர் இரங்கிக் கூறும் மூதானந்தக் காஞ்சியும்; (1)........bfLfbt‹ ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே, தென்னவன் கோப்பெருந்தேவி குறைத்தனள் நடுங்கிக்--- கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி. இதில் கண்ணகி காட்டிய சான்றால் தான் குற்றமற்ற கோவலனைக் கொல்வித்த தன் தவறுகண்டு நெடுஞ்செழியன் உயிர் துறக்க, அவன் பெருங்கோப்பெண்டும் அவனுக்குப் பின் இருக்கத்தரியாமல் உடன் உயிர் இழந்தது கூறும் மூதானந்தம் வருதல் காண்க. 14. நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்---மிகப்பெரிய சுரத்திடைக் கொழு நனையிழந்து தனியளாய் மனைவி யரற்றும் முதுபாலைக் காஞ்சியும்; 15. கழிந்தோர் தேஎத்துக் கழிபடருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்---மாய்ந்தோர்மாட்டு அவருக்காக மிக வருந்தி மற்றையோ ரிரங்கும் கையறு நிலைக்காஞ்சியும்; இதற்குக், கணவனொடு மனைவியரும் கழிந்துழி இறந்து படா தொழிந்த ஆயத்தாரும் விறலியரும் தனிப்படருழந்த செயலறு நிலைமை எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மற்ற மூதானந்தம் கையறுநிலைகளு ளடங்குதலின் ஈண்டுப் பொருந்தாமையறிக. 16. காதலியிழந்த தபுதாரநிலையும்---அன்புடை மனை வியை யிழந்த கணவனது தபுதாரநிலைக் காஞ்சியும்; குறிப்பு :--- தாரம்தபு என்பது தபுதாரம் என நிலை மாறி நின்றது. முன்றில், கடைப்புறம் என்பனபோல. அதனால் சொல்மாற்றி, தாரம் தபுநிலை---இல்லாளையிழந்த நிலை எனப்பொருள் கொள்ளற்பாற்று. தபுதல்---கெடுதல்; அதாவது இழவு. 17. காதலனிழந்த தாபத நிலை---காதற் கணவனையிழந்து தவிக்கும் மனைவி நிலை குறிக்கும் தாபதநிலைக் காஞ்சியும்; 18. நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாவைநிலையும்---மனைவி, இறந்த கணவனோடு ஈமமேறிப் பெருந்தீயிற் புகுவாள் இடைவிலக்குவார்க்குக் கூறும் பாலைக் காஞ்சியும்; 19. மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப் பெயனிலையும்---பெருஞ்சிறப்பொடு களத்துப்பொருது மாய்ந்த மகனைப் படையழிந்து மாறினன் எனப் பிறர் பழிகூறக் கேட்ட தாய், அன்னவனை யீன்றமைக்கு நாணித் தன்னுயிர்விட முனைந்து களஞ்சேருந் தலைப்பெயனிலைக்காஞ்சியும்;1 இனி, மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயர எனப் பாடங்கொண்டு, சிறப்பழியப் புதல்வன் புறக்கிட எனப் பொருள்கூறி, அதற்குத் தகடூர் யாத்திரைப் பாட்டின் பகுதியை எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். அது, தாயின் மூதின் மறம் பேணினும், மகனைப் புறக்கொடைப்பழி பூணவைப்பதால், அப்பாடத்தினும் புதல்வற் பயந்த என்ற இளம்பூரணர் பழம் பாடமே பொருட்சிறப்புடைத்து. 20. மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர் செலச் செல்லாக்காடு வாழ்த்தொடு---விரிந்த இடத்தையுடைய உலகத்து இயல்முறை நன்றாய் உணருமாறு பல்லோரும் மாய்ந்தொழியத் தான் ஒழியாது நிற்கும் புறங்காட்டை வாழ்த்தும் காஞ்சியுடன்; நிறையருஞ் சிறப்பில் துறை இரண்டுடைத்தே---நிரம்பிய அரிய சீருடைய காஞ்சித் துறைகள் இருவகைத்தாம். குறிப்பு :--- இதில் ஆன் எல்லாம் அசை. ஏகாரம் ஈற்றசை இசைநிரப்பெனினும் அமையும். முதலில் ஒருபத்தைக்கூறி, நிலையொடு தொகைஇ ஈரைந் தென்ப என எண்கொடுத்துப் பிரித்து நிறுத்தியதுடன், என்ப என முற்றுவினை பெய்து முடித்தலின் அது பிறர்கோள் கூறியதாகும். காஞ்சித்துறை அப்பத்தே என்பது அவர் காலத்து ஒரு சாரார் கொள்கையாதலின், அவற்றைத் தொகுத்துத் தனிஎண் கொடுத்துப் பிரித்தார். அது தானுடன்பாடாப் பிறர்கோளெனற்கு என்ப எனப் படர்க்கை வினைமுற்றுப் பெய்து, பின் தம் துணிபு விளக்கி மற்றொரு பத்தும் சேர்த்துக் காஞ்சித்துறை இரு வகையாய் இருபதாமென முடித்தார். இனி முற்பத்தை ஈரைந்தாகும் எனப் பிரித்து நிறுத்தியதால் பின் கூறிய பத்தையும் பத்தெனத் தொகுத்துச் சுட்டியேனும், அல்லது முன்பத்தோடு கூட்டி எண்ணித் துறை இருபதெனச் சுட்டியேனும், இறுதியில் மொத்தத்தொகை எண் கூறுதல் வேண்டும். ஈற்றடி, துறை ஈரைந்தே என்றேனும், அன்றித், துறை இருவகைத்தே என்றேனும் முன் பாடம் இருந்து பின் அது சிதைந்து இருத்தல் கூடும் எனத் தோன்றுகிறது. இதில் பின்கூறிய துறைபத்தும் துன்பநிலை குறிப்பதால் இவை விழுமவகையாதல் வெளிப்படை. அதனால் விழுப்ப வகையா முதற்கூறிய துறை வகை பத்தின் வேறாகும் பின்பத்தும் என்பது விளங்குகிறது. இத் தன்மை வேறுபாட்டால் இச்சூத்திரங்கூறும் காஞ்சித்துறை இருபதும் ஒரு படித்தாய் நிரல் பட எண்ணாமல் வகைக்குப் பத்தாய்ப் பிரித்துத் தொகுத்து இரு வகைப்படுமெனத் தெரிவிக்கப்பட்டன.1 ஆய்வுரை நூற்பா. 19 இது, காஞ்சித்திணையின் துறைகளை விரித்துரைக்கின்றது. (இ-ள்) யாவராலும் தடுத்தற்கு அரிய கூற்றம் வரும் எனச் சான்றோர் சொல்லிய பெருங்காஞ்சியும், இளமையின் நீங்கி அறிவான் முதிர்ந்தோர் இளையராயினார்க்குத் தம் வாழ்க்கையிற் கண்ட உண்மைகளை எடுத்துக்காட்டி அறிவுறுத்திய முது காஞ்சியும், வீரராயினார் தமக்குரிய பண்பாகிய மறத்தினை எண்ணிப் புண்பட்டுப் பழுதுற்ற தம்முடம்பினைத் தாமே கிழித்துக் கொண்டு இறத்தலாகிய மறக்காஞ்சியும், போரிற் புண்பட்டு வீழ்ந்தோனை மருந்திட்டுப் பாதுகாத்தற்குரியோர் போர்க்களத்தில் இல்லா நிலையில் (அணங்குந்தொழிலுடைய) பேயே அவனைப் பாதுகாத்தலாகிய பேய்ப் பகுதியும், இத்தகைய பெருந்தன்மையாளன் இறந்துபட்டனனே என உலக மக்கள் இரங்குதலாகிய மன்னைக்காஞ்சியும், இன்னவாறு செய்தலைத் தவறினேனாயின் இத்தன்மையேன் ஆகக் கடவேன் எனக் கூறும் அவனை (ப் பகைவராயினார்) அணுகுதற்குரிய வஞ்சினக் காஞ்சியும். (தன்கணவன் போரில் விழுப்புண்பட்டு வீழ்தலான்) இனிய நகை முகத்தாளாகிய மனைவி புண்பட்ட தன் கணவனைப் பேய்தீண்டி வருத்தாமற் காத்தலாகிய தொடாக்காஞ்சியும், உயிர் நீத்த தன் கணவனை உயிர் நீங்குமாறு செய்து அவனது உடம்பில் தைத்துள்ள வேற் படையினையே கைக்கொண்டு அவன்மனைவி தனது உயிரைப் போக்கிய ஆஞ்சிக் காஞ்சியும், ஆற்றலால் ஒத்த (க்குடிவரவால் மாறு பட்டுத்)த் தம்மேல் போருக்கு வந்த வேந்தனொடு தொல் குடியிற்பிறந்தோர் தம் மகளைக் கொடுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியும், மணம் புரிந்து போரில் இறந்துபட்ட தன் கணவன் தலையொடு தன் கொங்கையையும் முகத்தையும் சேர்த்து அவன் மனைவி இறந்துபட்ட நிலையொடும் கூட்டி (க் காஞ்சித்திணைத் துறை) பத்தாகும் என்பர். போர்க்களத்தே பெரும்புகழுடையனாக இறந்த மைந்தனைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார் அவன் இறந்துபட்ட மைக்கு ஏங்கி அழுத பூசல் பகர்வார் ஒருவருமின்றி மயக்கமும் (தாம் உற்ற துயரத்தினை உசாவி ஆறுதல் பகர்வார் ஒருவருமின்றித்) தாம் ஒருவராகவே தனித்திருந்து இரங்குதலாகிய பொறுத்தற்கரிய துயர்நிலையும், கணவனுடன் சென்ற தலைவி தன் கணவன் இறந்துபட உடனுயிர்துறந்த செயலைநோக்கி வழிச்செல்வோர் சொல்லிய மூதானந்தமும், வெம்மைமிக்க அரிய சுரத்தின் கண்ணே தன் கணவனையிழந்து தனியாளாய் நின்று தலைமகள் வருந்திய பெரும் பிரிவுத்துயராகிய முதுபாலையும், இறந்தோரைக் குறித்து இறவாது எஞ்சியுள்ள ஏனையோர் செயலற்று வருந்திப் புலம்பிய கையறு நிலையும், மனைவியையிழந்து தனிமையுற்ற கணவனது நிலையாகிய தபுதாரநிலையும், தன் காதலனாகிய கணவனையிழந்து தனி யளாகியவள் உற்ற தாபதநிலையும், கற்பின் தன்மையாகிய நன்மையையுடையவள் செறிந்த தீயிற்பாய்ந்து உயிர்விடத்துணிந்த நிலையில் சான்றோரை, தன்னைத் தீப்பாயாதவாறு தடுத்து விலக்கும் சான்றோரை நோக்கிக் கூறும் கூற்றாகிய மாலை நிலையும், போரில் மாய்ந்த பெருஞ்சிறப்புடைய மகனைப் பெற்றதாய் சாதற்கண் அவனைத் தேடியடைந்த தலைப்றபாவ்நிலையும், இடம் அகன்று விரிந்த இவ்வுலகத்தின் நில்லா இயல்பாகிய மரபு நன்கு விளங்க உலகத்தார் பலரும் மாய்ந் தொழியவும் தான்மட்டும் மாயாதுள்ள புறங்காட்டினை வாழ்த்துதலாகிய காடுவாழ்த் தோடு (பொருந்திய பத்தினையும் கூட்டி உணர்வோர்) உள்ளத்தை ஒருவழிப்பட நிறுத்தும் அருஞ்சிறப்பினையுடைய இருவகைத் துறைகளையுடையது (காஞ்சித் திணையாம்) எ-று. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என்பது முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலை என்பது ஈறாகவுள்ள பத்துத் துறைகளும் இவ்வுலகில் அருஞ்சிறப்பினைப் பெறுதல் வேண்டும் என்னும் வேணவாவைப் புலப்படுத்துவன. பூசல் மயக்கம் முதலாகக் காடு வாழ்த்து ஈறாகச் சொல்லப்பட்ட பத்துத் துறைகளும் நில்லாத வுலகியலைப் பற்றியொழுகுந் துன்பியல் நிகழ்ச்சிகளைப் புலப்படுத்துவன. இவ்வாறு காஞ்சித் திணைக்குரிய துறைகள் மக்கள் உள்ளத்தை ஒருவழிப்பட நிறுத்தும் அருஞ்சிறப்பினையுடைய இருவகை நிலைகளைக் குறித்தலால், நிறை அருஞ்சிறப்பின் துறை இரண்டு உடைத்து என்றார் ஆசிரியர். இவற்றுள் முற்கூறிய பத்தும் ஆண்பாற்றுறை, பிற்கூறிய பத்தும் பெண்பாற்றுறை எனப் பகுத்துரைப்பர் நச்சினார்க்கினியர். இவ்விருவகைத் துறைகளையும் முறையே விழுப்பவகை எனவும் விழுமவகை எனவும் இருதிறமாகப் பகுத்து விளக்குவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். 20. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இளம் : இது, பாடாண்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பாடாண் பகுதி கைக்கிளைப் புறன்- பாடாண் திணைப்பகுதி கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; நாடும் காலை நால் இரண்டு உடைத்து-அஃது ஆராயும் காலத்து எட்டு வகையினை உடைத்து. அவையாவன :---கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல் ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளைவகை, வசைவகை என்பன. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். அதற்கு இது புறனாயவாறு என்னை யெனின், கைக்கிளை யாவது ஒரு நிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி வளமன்றே. அதுபோல இதுவும் ஒருபாற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஒரு பயன் கருதியவழி மொழிந்து நிற்பது ஆகலானும் கைக்கிளையாகிய காமப்பகுதிக்கண் மெய்ப்பெயர் பற்றிக் கூறுதலானும், கைக்கிளை போலச் செந்திறத்தாற் கூறுதலானும், அதற்கு இது புறனாயிற்று1; நோந்திறமாவது கழிபேரிரக்கம்; செந்திறமாவன அஃது அல்லாதன.2 (20) நச் : 20 இது மேற் புறத்திணை யிலக்கணத் திறப்படக் கிளப்பின் (தொல்-புறத்திணை-1) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதி நின்ற பாடாண்டிணைக்குப் பொது விலக்கணம் உணர்த்துவான் அதற்குப் பெயர் இன்ன தெனவும், அது கைக் கிளைப்புறனாமெனவும், அஃது இத்துணைப் பொருளுடைத்தெனவுங் கூறுகின்றது. (இ-ள்.) பாடாண்பகுதி கைக்கிளைப்புறனே---பாடாணெனப் பட்ட புறத்திணையது கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம்; நாடுங்காலை நாலிரண்டு உடைத்து --- தன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடாணாகவே நிறுப்ப நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து என்றவாறு. பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண்மகனையும் நோக்காது, அவனதொழுகலாறாகிய திணை யுணர்த்தினமையின் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. ஒரு தலைவன் 3பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவை தம்மின் வேறாகிய ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப் புறனாயிற்று.1 வெட்சி முதலிய திணைகளுஞ் சுட்டி யொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப்படுதலிற் பாடாண்டிணை யாயினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர் பெறுபுகழ் பிறரை வேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், அவை கைக்கிளைப் புறன் ஆகாமை உணர்க. இவ் விருகூறுந் தோன்றப் பகுதியென்றார். புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக்கிளைப் புறன் ஆகாதென உணர்க. இதனானே புறத்திணை ஏழற்கும் பெயரும் முறையும் ஒரு வாற்றாற் கூறினாராயிற்று. நாலிரண்டாவன இப் பாடாண்டிணைக்கு ஓதுகின்ற 2பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞையுந் தும்பையும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம். இனி இக்கூறிய ஏழு திணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு காட்டுங்கால் எல்லாத்திணையும் ஒத்ததாயினும், அவை பெரும்பான்மையுஞ் சிறுபான்மையுமாகி வருதலும் அவையிரண்டும் பலவும் ஒருங்கு வருதலும் பாடாண்டிணைக்கு மேற் கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க. இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம். 3 அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை பிரிய வயிரைக் கொழுமீ னார்கைய மரந்தொறுங் 4குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு மகன்கண் வைப்பி னாடும னளிய விரவுவேறு புலமொடு குருதி 1வேட்ட மயிர்கோதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் 2பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்றுப்-23) இதில் இமையவரம்பன் றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம் வேண்டினா ரென்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடாணாயிற்று. இலங்கு தொடிமருப்பின் என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின்றுலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல மகளிர்க் கல்லது 3மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் 4கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் 5குன்று நிலை தளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயு 1நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி னடையடுப் பறியா வருவி யாம்ப லாயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே (பதிற்றுப்-63) இது வாகைத்துறைப் பாடாண் பாட்டு. இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண் டிணையாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க.2 பாரதியார் கருத்து :--- இது பாடாண் திணைக்கூறுகண் அகத்தில் கைக்கிளைத் திணைக்குப் புறனாகும் எனவும், பாடாண்திணை எட்டு வகைப்படும் எனவும் கூறுகிறது. பொருள் :--- இதன் பொருள் வெளிப்படை. குறிப்பு :--- புறத்திணைகள் ஏழனுள் முன்ஆறும் கூறி முடிந்த தனாலும், எஞ்சிய பாடாண் ஒன்றே இதிற் கூறப் படுதலானும், பிறவற்றுள் ஒவ்வொன்றைப் பிரித்துக் கூறிய முன் சூத்திரங்களிற் போலத் தானே என்னும் பிரிநிலைச் சொற் குறிப்பு ஈண்டு வேண்டாதாயிற்று. புறனே...c¤nj, என் பவற்றின் ஏகாரம் அசை. மற்றத்திணைகள் போலத் தனக்கொரு தனிநிலைபெறாமல் பிறதிணைகளை நிலைக்களனாகக் கொண்டு ஏற்றவிடத்தசை ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாய் அமையுமதனியல் கருதிப் பாடாண் பகுதி எனச் சுட்டப்பட்டது. வெட்சிப்பாடாண், வஞ்சிப்பாடாண், உழிஞைப்பாடாண், தும்பைப்பாடாண், வாகைப்பாடாண், காஞ்சிப்பாடாண், புரைதீர்காமம் புல்லிய பாடாண் என்றெழு வகையிற்பாடாண் பிறத்தலின், அவ்வத் திணைப்பகுதி நீக்கிப் புகழ்ச்சிக்குரிய ஒவ்வொருபகுதியே பாடாணாமென்பது விளங்கப் பாடாண் எண்ணாமற் பாடாண் பகுதி எனத் தெளிக்கப்பட்டது. பாடாண் வகை ஒவ்வொன்றினும் அத்திணைப்பகுதி பிரித்துப் பாடாண் பகுதியை ஆய்ந்தறிய வேண்டுதலின், நாடுங் காலை எனக் கூறிய குறிப்பும் தேர்தற் குரியது. நாலிரண்டெனக் குறிக்கப்பட்டவை, பாடாண்திணை வகைகள். அவற்றின் விளக்கம் பின், கொடுப்போரேத்தி எனும் சூத்திரத்தில் கூறுகிறார்; அதையடுத்துத் தாவினல்லிசை எனுஞ் சூத்திரத்தால் பாடாணின் துறைகளை விளக்குகிறார். முன், உழிஞைக்கு முதலில் அதன் வகை கூறிய பிறகு அதன் துறைகளை விளக்கியது போலப் பாடாண் துறைகள் பின் எட்டிறந்தன கூறுதலானும், அவற்றை இதில் எட்டெனச் சுட்டுதலமை யாதாகலானும். இத்திணை வகை எட்டே பின் விரிப்பதானும், இதில் எட்டு எனுமெண் துறைத்தொகையென நச்சினார்க்கினியர் கொண்டது பொருந்தாதென்க. இனிப் புறத்திணை ஆறும், அன்பினைந்திணை கைக்கிளையாம் அகத்திணைகள் இரண்டுமாகப் பாடாண் பிறக்கும் வகை எட்டெனினுமமையும்.1 இனி, கைக்கிளையிற் காதற்சிறப்பு ஒருவர்க்கேயாவது போலப் பாடாண் சிறப்பும் பொதுமையின்றித் தகவுடையார் ஒருவருக்கே உரித்தாக வருதலானும், கைக்கிளையில் காதற் கூற்றுப் பாராட்டுந் தலைவன்மாட்டாவதுபோற் பாடாண் கூற்றும் புகழ்வோர்தம் பக்கலிலே யமைதலானும், இரண்டினுக்கும் நிலம் பொழுது வரையறை இன்மையானும், கைக்கிளையிலிழுக்கு நீக்கித் தருக்கியவே சொல்லி யின்புறுதல் போலப் பாடாணில் பழிதழுவாப் புகழ்மையொன்றே பயில்வதானும், இரு திணையுமொரு தலையாச் செந்திறமா யமைதலானும், பாடாண் கைக்கிளைக்குப் புறனாயிற்று. ஆய்வுரை நூற்பா. 20. இது பாடாண்திணையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பாடாண்திணைப்பகுதி கைக்கிளை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். அஃது ஆராயுங்காலத்து எட்டு வகையினை யுடையதாகும். எ-று. புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது, புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்பாடும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு திரு ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னுஞ் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாலாகிய பண்புடைமையினையுணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். ஒரு நிலத்திற்குரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோல ஒரு பாலுக்குரித்தன்றி ஒருவரையொருவர் யாதானும் ஓர் பயன் கருதியவழிப் பாடப்பெறுவது பாடாண். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாத செந்திறத்தால் வருவதும் இரண்டற்கும் ஒக்கும் தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்டப், புலவர் பரிசில் வேண்டுதலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோடு ஒத்தலால் பாடாண்டிணை கைக்கிளை யென்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று. குடும்பவாழ்விலே ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக் கமும், அரசியல் வாழ்விலே போர்மறவர் முதலியோர் மேற் கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகைப் புறவொழுக்கங்களும் ஆகிய இவ் வொழுக்கங்களை நிலைக்களன்களாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத் துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வன. பாடாண் திணையிலோ பாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகியபண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சிமுதலிய ஆறுதிணைகளும் தலைமக்களுக்குரிய பண்பு களையும் செயல்களையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுந் தனி நிலைத் திணைகள், பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்கூறிய திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களன்களாகக் கொண்டு தோன்றும் சார்பு நிலைத் திணையாகும். எனவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத்திணைகளிலும் குற்றமற்ற மனைவாழ்க்கை யாகிய அகத்திணையிலும் அமைந்த செயல்களாய்த் தலைமக்களுக்குரிய கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற்பாடுதற் கமைந்த ஒழுகலாறு பாடாண்திணையாகும் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். பாடாண் அல்லாத பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும், புலவராற் பாடப் பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்பின்றி ஒருவர் பால் தன்னியல்பில்நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்தும் திறத்தால் அவை வெட்சி முதலிய திணைகளின் பாற்படும் எனவும், அச்செயல்களைக் கருவாகக்கொண்டு புலவர் பாடும்போது அங்ஙனம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக்குறிப்பு பாடாண்திணையாம் எனவும் பகுத்துணர்தல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல்மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க மனை வாழ்க்கையிலும் புகழுடன்வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற்றன்மையே பாடாண் திணையென்றல் மிகவும் பொருத்தமுடையதாகும். பாடாண் திணையின் எண்வகைகளும் அடுத்துவரும் இரண்டு நூற்பாக்களில் விரித்துரைக்கப்பெற்றுள்ளமை காணலாம். இனி, பாடாண்திணையின் எண்வகையாவன: கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல் வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறைவகை, கைக் கிளை வகை, வசைவகை எனப் பகுத்துரைப்பர் இளம்பூரணர். பாடாண்டிணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவுங்கூட்டி, ஒன்றும், நிரைகவர்தல் நிரைமீட்டல் என்னும் வெட்சி வகை இரண்டும், பொதுவியல் வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக இவை எட்டும் பாடாண்திணைவகை என்பர் நச்சினார்க்கினியர். இனிப் புறத்திணைவகை ஆறும் அன்பின் ஐந்திணை கைக்கிளையாகிய அகத்திணை இரண்டும் ஆக இவ்வெட்டும் பாடாண்திணையின் வகை யெனினும் அமையும் என்பர் நாவலர் பாரதியார். ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையின் வகையாகத் தாம் கூறும் தொகையினைத் தாமே விரித்துக் கூறுதலை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது, உழிஞை இருநால் வகைத்து (புறத்-9) எனக்கூறிய அவர் கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் முதலாக ஆரெயில் ஈறாகச் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே என அவ்வகைகளை விரித்துக் கூறியுள்ளமையால் நன்கு புலனாம். அவ்வாறே பாடாண்திணை நாலிரண்டுடைத்தே எனக் குறித்த தொல்காப்பியர் தாம் சுட்டிய நாலிரு வகையினையும் இவையென அடுத்து வரும் நூற்பாக்களில் விரித்துக் கூறியுள்ளார் எனக் கொள்ளுதலே தொல்காப்பிய நூற்போக்குக்கு ஏற்புடையதாகும். 21. அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. இளம் : இது, பாடாண் பாட்டிற்கு உரியதொரு பொருண்மை உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்) அமரர்கண் முடியும் அறுவகையானும்-அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும். புரைதீர் காமம் புல்லிய வகையினும்-குற்றந் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும். அஃதாவது, ஐந்திணை தழுவிய அகம். ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப - அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணை யாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்.1 அஃதாவது, கொடிநிலை முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சியின்றிப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விருவகையானும் ஒருவனைப் புகழ்தலாற் பாடாண்பாட்டு ஆயிற்று. இன்னும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி என்ற அதனான் ஐவகைப்பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண்பகுதிக்கு ஒன்றும் என்றவாறாம். இன்னும் இதனானே இயற்பெயர் சார்த்திவாராது நாடும் ஊரும் இதுவென விளங்க வரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப் பற்றி வரும் பகுதியும் பாடாண்பாட்டாம் என்றும் கொள்க.2 (21) நச்சர் : 21 இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடி ஒன்றாமென்ற பாடாண்டிணை தேவரும் மக்களுமென இருதிறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர் பகுதி இவையென்பதுணர்த்து கின்றது.1 (இ - ள்) அமரர்கண் முடியும் அறுவகையானும்---பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின்கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும்---அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக் கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப---மேற் பாடாண் பகுதி யெனப்பகுத்துவாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவரு மென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு. அமரர்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென் பதூஉம் அவர்கண்ணேவந்து முடிவன வேறென்பதூஉம் பெற்றாம் அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்.2 இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர் சாதிப் பா வென்றல் வேதமுடிவு. இதனானே பிறப்புமுறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது; தந்திரவுத்தி வகையான். வகையென்றதனானே அமரரை வேறு வேறு பெயர் கொடுத்து வாழ்த்தலும் ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன் பெறுங் கடவுள் வாழ்த்துப்போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும்பயனாதலின், இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு1 புல்லிய வகையாவது, அம் மனக்குறிப்புத் தேவர் கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட்டானும் ஆக்கத்து மேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன் கொடுத்தலாம். இது ஒன்றனுடைய பகுதியென்க. இத்துணைப் பகுதியென்று இரண்டிறந்தன எனக் கூறாது, வாளாதே பகுதியென்றமையில் தேவரும் மக்களுமென இரண்டேயாயிற்று; அத்தேவருட் பெண்டெய்வங் கொடி நிலைகந்தழி என்புழி அடங்கும் மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற்2 செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ (புறம்-3) என்றாற்போலச் சிறுபான்மை ஆண்மக்களோடுபடுத்துப் பாடுப. வகையென்றதனான் வாழ்த்தின் கண் மக்கட்பொருளும் உடன்றழுவினும் அவை கடவுள் வாழ்த்தா மென்று கொள்க. தொகைகளிலுங் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த் தொல்லாம் இதன்கண் அடக்குக. இனி அறுமுறை வாழ்த்து வருமாறு :--- நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள்-நீத்-8) கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை (குறள்-வான்-5) நாகின நந்தி யினம் பொலியும் போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப வாயர் அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயீர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்று நெய்பயந்து நல்லமு தன்ன வளையாகு நல்ல புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற் காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது ஏனைய வந்துழிக் காண்க. புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தரசு தொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின் னறங்கெழ சேவடி காப்ப வுறந்தையோ டூழி யூழி வாழி யாழி மாநில மாழியிற் புரந்தே இது கடவுளை வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்துதலின் புரைதீர்காமம் புல்லிய வகை யாயிற்று. (26) பாரதியார் கருத்து :--- இது, பாடாண் திணை இயல் விளக்குகிறது. பொருள் :--- அமரர்கண் முடியும் அறுவகையானும்-போர் மறவர் (அஃதாவது பொருநர்) பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியீறான புறத்திணை வாகையாறினும்1 (புரை தீர்காமம் புல்லிய வகையினும்) குற்றமற்ற அகப்பகுதியில் அன்பளைந்த காதல் திணைவகையினும்; ஓன்றன் பகுதி ஒன்றும் என்ப அவ்வெழுவகைத் திணைகளுள் இயல்பாக இதற்கேற்புடைய ஒவ்வொன்றின் கூறே பாடாணாய் அமையும் என்று கூறுவர் புறநூற்புலவர். குறிப்பு :--- தனிநிலை பெறாமல், பிறதிணைகளை நிலைக் களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழ்மைக்கேற்ற பகுதியே பாடாணாயியையுமென்பதை மேற்சூத்திரத்தில் பாடாண் பகுதி எனச்சுட்டி, இதில் அதன் தன்மை தெளிய விளக்கப் பட்டது. மேற் கூறி முடித்த ஆறு புறத்திணைப் பகுதிகளிலும். அகத்திணை வகைகளுள் புகழ்மையொடு பொருந்தாப் பெருந்திணை போன்ற பழிபடும் இழி காமவகை விலக்கித் தூய காதற்பகுதிகளிலும், புகழ்மை பாராட்டுதற்கேற்ற கூறு பாடாண் எனப்பெறும். (பாடாண்-பெருமை, அஃதாவது பீடு) அவ்வத் திணைப் பொருளின் மேல் அதிற் சிறந்த ஒருவரின் புகழ் பாராட்டும் பகுதியளவே பாடாணாகும். சிறப்பெதுவும் புகழ்க்குரிய யாதாமோரொழுக்கம் பற்றியன்றி அவ்வத் திணைப் புறத்துப் பிறத்தலே இயல்பாகும். ஆதலின், பாடாண் பிற திணைகளின் சார்பாய்ப் புகழ்மைப் பொருட்டாயமைதல் வெளிப்படை. இனி, அகப்புறத் திணைகளனைத்தும் மக்கள் ஒழுக்கம் பற்றியவையாதலின் பாடாணும் மக்கட்குரியதேயாதல் வேண்டுமாதலானும், பண்டைச் சான்றோர் பாடாண் பாட்டுக்களெல்லாம் மக்களில் தக்கார் மாண்புகழாகவே வருதலானும், சூத்திரவைப்பு முறையில் தொல்காப்பியரின் மாறாத நியமப்படி இது பாடாணியல் விளக்கம் கூறவேண்டும் சூத்திரமாதலானும், சூத்திரச் சொற்போக்கால் தொல்காப்பியர் கருத்தறிதல் உரையறமாதலானும், சூத்திரச் செம்பொருளிதுவாதல் ஒருதலை. இனி, இச்சூத்திரச் சொற்பொருளை வைப்புமுறையில் இடத்திற்கியையக் கொள்ளாமல் முன்னுரைகாரர் முரண்படத் தத்தம் விருப்பின்படி வெவ்வேறாய்க் கூறுவர். அவருரை நெடு வழக்கால் புலவரை மருட்டுதலால், மெய்ப்பொருளறிய அவருரைப்பெற்றி யாராய்தலும் பொருத்தமாகும். இதற்கு இளம்பூரணர் உரையாவது: அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும், குற்றந்தீர்ந்த (ஐந்திணை தழுவிய அவற்றின் அகமான) காமத்தைப் பொருந்திய வகையினும். அவற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண்டிணையாதற்குப் பொருந்தும் என்பதே. கொடிநிலை முதலிய ஆறும், கடவுட்புகழ்ச்சியன்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல், என்ற இவ்விரு வகையானும் ஓருவனைப் புகழ்தலால் பாடாண் பாட்டாயிற்று என்பது இக்சூத்திரத்தின்கீழ் இளம்பூரணர் தரும் சிறப்புரையாகும். இனி, இதற்கு உரைகாணும் நச்சினார்க்கினியர் கூறுவர் --- முதற்கண், பாடாண்திணை தேவரும் மக்களும் என இரு திறத்தார்க்கே உரிய என்பார். இவ்விரண்டனுள் தேவர்பகுதி இவை யென்பதுணர்த்துகிறது (இச்சூத்திரம்) என்று இச்சூத்திரக் கருத்தை வரைந்து கொள்ளுகின்றனர். பின்னர்த் தாம் வரைந்து கொண்ட கருத்துடன் பொருந்த, பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்துமுடியும் அறுமுறை வாழ்த்தின்கண்ணும், அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருளை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக்கண்ணும், மேல்பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களும் எனப்பகுத்த இரண்டனுள்---தேவர்க்குரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவரும் என்று கூறுவார் ஆசிரியர் என்றவர் கூறினார். இதன் பிறகு தாம் கூறும் புதுப் பொருளைப் பொருந்திக் காட்டவேண்டி விரிவுரையிற் பல வருவித்துக் கூறுவர். அவையிற்றுள் இங்குச் சில கூறுதும். அமரரான தேவர் பரவப்படுதலேயன்றி, முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடைவேந்தரும் உலகு மாக ஆறும் பரவப்படுங்கால் அப்பராவு தேவர் கண்ணே வந்து முடியு மென்பர்1 அன்றியும் பராவப்பெறுந் தேவரல்லா இவ்வாறும் சிறப்பு வகையால் அமரர் சாதிப்பால என்றல் வேத முடிவு என ஓரமைதி காட்டுவர். இனி புரைதீர் காமம் புல்லிய வகை என்பதில் புரையைக் குற்றமென்னாது அதற்கு மாறாய உயர்ச்சியெனக் கொண்டு உயர்ந்த மறுமைப்பயனாம் வீடுபேறு வேண்டாமல் இழிந்த இம்மைப்பயன்களை விரும்பித் தேவர்ப் பராவுதலை ஆசிரியர் புரைதீர் காமம் புல்லிய தாகக் கூறினாரெனக் கொள்ளவைக்கின்றார். ஒன்றன் பகுதி ஒன்றும் என்றதற்கு உரித்தாம் பகுதியெல்லாம் தொக்கு ஒருங்குவரும் என்றுரை கூறுவர் இச்சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியர் கண்ட இப்பொருள் இளம்பூரணர் உரையோடு மாறுபடுவதுடன், தொல்காப்பியர் கருத்து ஆகாமையும் சிறிது சிந்திக்கத் தெளிவாகும். 1. முதலில், தாம் கருதிய ஆறுவகை யினை இந்நூலார் யாண்டு எவ்வாறு சுட்டினாரென்பதை இரண்டு உரைகாரருமே விளக்கினாரிலர். தாம் கூறக்கருதிய தொகைப்பொருள் இசையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல், உரைப்பார் உரைக்கும் வகையெல்லாம் சென்று அமையச் சூத்திரிப்பது இலக்கண நூல் நோக்குக்கும் தொல்காப்பியர் சொற்போக்குக்கும் பொருந்துவ தன்று. இந்நூலார் தாமே வரையறை செய்திலரெனில், அஃது அவர் நூலைக் கற்பவரை மயங்க வைக்கவும் மாறுகூறவும் இடந்தரும். இழுக்காய் முடியும். அவர் கூறும் அறுவகையினை அவர் நூலிலிருந்தே கண்டு தெளியாமையானே, உரைகாரர் பலரும் பலவாறு தத்தம் மனம்போனவாறெல்லாம் மயங்கி மாறுபடக் கூறற்கிடனாயிற்று. இதனாலன்றே நச்சினார்க்கினியர் ஈங்கு அறுவகையினைப் பரவும் வகையாக்காமல் பரவப்படும் செயற்கைக் கடவுட் போலிகளாம் தேவர்---பார்ப்பார்-பசு-மழை-மன்னர் உலகு என்றெண்ணினான். இதற்கு மாறாக இளம்பூரணர் ஈண்டு அறுவகையை வணங்கப் பெறும் பொருள்களாக்காமல் வணக்கவகைகள் ஆறெனக் கொண்டு, கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல் என்று கூறுவர். கற்றுவல்ல இருபேருரைகாரர் இதற்கு இவ்வாறு வெவ்வேறு பொருள் தம்முள் முரணிக் கூறுவரேல், மற்றையோர் உண்மை துணிவதெப்படிக் கூடும்? இவ்வாறு பலரும் பலவாறு கூற இடம்வைத்துத் தெளிவின்றி மயங்குமாறு தொல்காப்பியர் சூத்திரியாரென்பது ஒருதலை அவர் தேர்ந்து தெரிக்க நுதலிய பொருளை நுவலும் இச்சூத்திரத்து அறு வகைகளை அவர் நூலிற் கண்டு தெளிவதே கற்பவர் கடனாகும். 2. இனி, நச்சினார்க்கினியர் உரையில், நேரே பராவப்படும் பிறப்பு வகையால் இயற்கைத் தேவராவார். வேறு; தேவராய்ப் பிறவாவிடினும் வைதிகர்வாய்ச் சிறப்புவகையால் தாம் பெறும் வணக்கத்தை மெய்த்தேவர்பால் உய்க்கும் பொய்த் தெய்வப் போலிகள் வேறு ஆறு எனக் கூறப்படுகிறது. எனவே, இவ்வுரை அசலும் படியுமான தெய்வப் பகுதிகளிற் சென்று சேரும் வணக்க வகையெல்லாம் ஒருங்கு தொகுத்து இச்சூத்திரங் கூறவேண்டுவது ஏழு வகையாகவும், இந்நூலார் சூத்திரத்தில் அறுவகையென மறந்து கூறினரெனத் தொல்காப்பியரைப் பழித்தலாகும். 3. இன்னும், இயற்கை வகைப் பிறவித்தேவரன்றியும், பராவு வெறியான் மக்கள் தாமே விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் வாழ்த்துப்பெறும் செயற்கைப் பொய்த்தேவப் போலிகள் நச்சினார்க்கினியர் கூறுமாறு ஆறே என்னும் எண்ணில் அமைவனவன்றே. புள், விலங்கு, ஊர்வன, யாறு, மலை, மரம், செடி, கொடியாகிய பொருள்களில் வாழ்த்துக் கடியப்படுவ தொன்றேனுமுண்டோ? பாம்பு, எலி, பருந்து, மயில், மாடு, ஆல், வேல், அரசு அனைத்தையும் நாளும் நம்மவர் வணங்கக் காண்கிறோம். இது நல்ல வழிபாடெனவே கருதப்படுகிறது. கீதையும் வேதமும் எப்பொருளுந் தெய்வமாகும், எதன் வணக்கமும் தெய்வத்தின்பாற்சென்று முடியும் என விளக்கியிருக்க, பசு பார்ப்பாராதி ஆறு மட்டுமே வழுத்தற்குரியன வென்பது பொருந்தாதன்றே. 4. இனி, வேதம் தமிழர் படிக்கொணாதாகவே, வேதமுடி வென உரைகாரர் கூறுவவெல்லாம் சரியேயெனத் தமிழ் கற்பார் கொள்ளவும், கொண்டுவாளா அமையவும் கடவரென நச்சினார்க்கினியர் கருதினர் போலும்! அவர் இங்குக் கூறிய அறுவகையினவே தேவர்க்காம் வணக்கம் பெறற்குரிய வென்று எந்த வேதம் எப்பகுதியிற் கூறியுள்ளது? இதற்குத் தெளிவான வேதவாசகங் காட்டும்வரை இதுவே வேதமுடிவென்பது துணியப்படாததாகும். அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவின் (112) என்னும் புறப் பாடல் பாரியின் யாக்கை நிலையாமையும் செல்வநிலையாமையுங் கூறுதலிற் காஞ்சியாய்ப் பாரி புகழ் குறித்தமையாற் பாடாணுமாயிற்று. நோகோ யானே, தேய்கமா காலை, பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்? உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டல் மரீஇ யானே. (புறம். 234) என்னும், இவ்வெள்ளெருக்கிலையார் புறப்பாட்டில் வேள் எவ்வியின் கொடைவென்றி வேளாண்மையும் அவனிறந்தற் கிரங்கலுமுடன் கூறலால், இது காஞ்சிப் பாடாணாயிற்று. 7. இனிப் புரைதீர் காமம் புல்லிய பாடாண், குற்றமற்ற கைக்கிளையினும் அன்பொத்த ஐந்திணை மருங்கினும் பிறக்கும். அதற்குச் செய்யுள்- (அ) கைக்கிளைப் பாடாண் வருமாறு:- பெண்மை யுணராப் பெதும்பை யெழில்நறவம் கண்வாய் மடுத்துக் களித்தவளை யண்மித்தன் உள்ளத் துறைந்தொளிரு மோவியநீ மண்ணில்நடை கொள்ளத் தகுமோ கொடுமையெனும் வள்ளலையச் செல்வி சிரித்துச் சிறகிலேன் நான்பறக்குங் கல்வியறி யேனிரண்டு காலுடையே னாதலினால் மெல்ல நடக்கின்றேன் வெகுள்வானே னென்னவவன் கல்லா மழலை செவிக் கண்டென்னும் எல்லாநின் பொல்லாப் புருவச் சிலைகுளித்துப் போர்விழியால் கொல்லா தருளிக் கொடுமைதவிர்த் தில்லோடேன் நெஞ்சத்தை யாள நினையாயோ நீயல்லால் தஞ்சமிலேன் என்றிரக்குந் தன்கொடைமை எஞ்சாதான் அஞ்சொற் பொருளை யறியாதவன் மயங்க அஞ்சிப் பொறுக்கிகவென வல்லாந்து கெஞ்சும் உலகாளு மன்னன் உளமார்ந்த காதல் விலகாத வேளாண்மை வேட்டு. (ஆ) இருவயினொத்த தூய காதற் பாடாண்:- வையக மலர்ந்த எனும் பெருங்குன்றூர் கிழாரின் பதிற்றுப் பத்து (88-ஆம்) பாட்டில் .......................................... சேணாறு நல்விசைச் சேயிழை கணவ! மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு போல விளங்குதி பன்னாள் -பதிற்றுப்பத்து. 88) என வருவது ஒழுகுவண்ணச் செந்துறைப்பாடாண். நல்லிசைச் சேயிழை கணவ என்றதனால் புரைதீர் காமம் புல்லிய பாடாணாயிற்று. இதுவே போல, மீன்விழியினற்ப எனும் (90-ஆம்) பாட்டிலும் புரைதீர் காமம் புல்லியபாடாண் வருதலறிக ஆய்வுரை நூற்பா 21 இது பாடாண்திணைக்குரியவாக முற்குறித்த எண் வகைகளுள் ஏழினை விரித்துரைக்கின்றது. (இ-ள்) அமரகத்து அஞ்சாது போர்புரியும் வீரர்களின் bதாழிலாய்ப்bபாருந்தும்bவட்சி,tஞ்சி,cழிஞை,Jம்பை,tகை,fஞ்சிvன்பவற்றைப்bபாருளாகக்கொண்டுgடப்bபறும்mறுவகைத்âணைப்பகுதிகளும்,Fற்றமற்றmகத்திணைbயாழுகலாற்றைப்bபாருளாகக்கொண்டுgடப்பெறும்fமப்gகுதியும்Mகியïவ்வெழுவகைகளும்gடாண்திணையின்xருசார்bபாருட்கூறுகளாகப்bபாருந்தும்vன்பர்Mசிரியர்.ïவ்ntG« உலக வாழ்க்கையிற் பலர்க்கும் உரிய வாழ்க்கைக் கூறுகளாதலின் முதன்மையுடைய, இக்கூறுகளை ஒன்றன்பகுதி என முதற்கண் எடுத்துரைத்தார். அமரர் என்னுஞ்சொல், அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போரியற்றலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் படைமறவரைக் குறித்து வழங்கும் தனித்தமிழ்ச் சொல்லாகும். இந்நுட்பம், எமரனாயின் இறைகொடுத்தகல்க அமரனாயின் அமைவொடு நிற்க எனவரும் பெருங்கதைத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். படை வீரரைக் குறித்த அமரர் என்னும் இச்சொல், அம் மறவர் போர்க்களத்து உயிர்கொடுத்து விண்ணுலகெய்திய நிலையில் கல்நிறுத்தித் தெய்வமாக வைத்துப் போற்றப்பெறும் நிலையினையடைந்த பின்னர்த் தேவர் என்ற பொருளிலும் வழங்கப் பெறுவதாயிற்று. அமரர் என்னும் இச்சொல்லுக்குத் தேவர் எனப் பொருள்கொண்ட ஐயனாரிதனாரும் இளம் பூரணரும் அமரர்கண் முடியும் அறுவகையாவன: கொடிநிலை, கந்தழி, வள்ளி. புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என விளக்கம் தருவர். பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர் கண்ணே வந்து முடிதலையுடைய முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்னும் பொருள் பற்றிய அறுமுறை வாழ்த்து எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். வானவர், அந்தணர், ஆனினம், மழை, அரசன், உலகம் என்னும் ஆறு பொருள்களையும் வாழ்த்துதலே அறுமுறை வாழ்த்தாகும். ஆளுடைய பிள்ளையார் அருளிய வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் எனவரும் திருப்பாசுரத் திருப்பாடல் அறுமுறை வாழ்த்துக்கு அமைந்த தொன்மை இலக்கியமாதல் உணரத் தகுவதாகும். போர்மறவர்பாற் சென்று அமைவனவாக இப்புறத் திணையியலில் விரித்து விளக்கப்பெற்ற வெட்சி முதல் காஞ்சியீறான புறத்திணையொழுகலாறுகள் ஆறினையும் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அறுவகைப்பகுதிகளே அமரர்கண்முடியும் அறுவகை யெனப்பட்டன என்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார். இவ்விளக்கமே தொல்காப்பியனார் கருத்துக்கும் சங்கச் செய்யுட்களின் திணை துறையமைப்புக்கும் பொருத்தமுடையதாக அமைந்துள்ளமை உணர்ந்து பாராட்டத் தகுவதாகும். 22. வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. இளம் : இது, சில பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇ பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்-மேற் சொல்லப்பட்டன, வழக்கு இயலும் பக்கத்து வகைபெற நிறுத்திப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும், முன்னோர் கூறிய குறிப்பினும்-முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினும், செந்துறை வண்ணம் பகுதி வரைவு இன்று ஆங்கு-செந்துறைப்பாட்டின் கண் வரும் வண்ணப்பகுதி வரைதல் இல்லை அவ்விடத்து. குறிப்பு என்பது காமம் ஆமாறு வருகின்ற சூத்திரத்துள் காமப் பகுதி கடவுளும் வரையார் (புறத்திணை. 23) என ஒட்டி எழுந்தமையான் உணர்க.1 இதனாற் சொல்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரைந்து ஓதினாற்போலச் செந்துறைப் பாட்டிற்கு உரிய செய்யுள் இவை என்று உரைத்தல் இல்லை. பாடாண்பாட்டின்கண் வருங் காலத்தென்பது. எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என்றவாறு.2 இனி, புகழ்தல் படர்க்கைக்கண்ணும், பரவல் முன்னிலைக் கண்ணும் வருமாறு:3 கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்-நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி. (திரிகடுகம். கடவுள் வாழ்த்து) இது புகழ்தல். வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார் உய்ய உருவம் வெளிப்படுத்தாய்---வெய்ய அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும் நெடுந்தகை நின்னையே யாம். (புறப். பாடாண்-3) இதுபரவல். வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் சேறி நெறிகொள் படி வந்தோய் நீயும்---பொறிகட்கு இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க அருளீயும் ஆழி யவன். (புறப். பாடாண்-42) இது புலவராற்றுப்படை. மாயவன் மாயம் அதுவால் மணிநிரையுள் ஆயனா எண்ணல் அவனருளான்---காயக் கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச் சுழலழலுள் வைகின்று சோ. (புறப். பாடாண்-40) இது கந்தழி. வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே ஈண்டியம் விம்ம இனவளையார்---பூண்தயங்கச் சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனோ டாடும் வெறி. (புறப். பாடாண்-4ந்) இது வள்ளி. வள்ளி என்பது ஈண்டு வெறியாட்டு. கொடிநிலை வந்த வழிக் காண்க. இனி அவை சார்ந்து வருமாறு முன்னர்க் காட்டுவதும். இனிக் காமப்பகுதி வருமாறு :-- மலைபடு சாந்தம் மலர்மார்ப யாம்நின் பலர்படி செல்வம் படியேம்---புலர்விடியல் வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற் கண்டனங் காண்டற் கரிது: (புறப்.பாடாண் - 47) இஃது ஊடற்பொருண்மைக்கண் வந்தது. இது, இயற்பெயர் சார்த்தியும் வரும். வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர் முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனலூரன். (கலி. மருதம்-2) என்பது குறிப்பினாற் பாட்டுடைத்தலைமகனே கிளவித்தலை மகனாக வந்தது. பூந்தண்டார்ப் புலர்சாந்தில் தென்னவன் உயர்கூடல் தேம்பாய அவிழ்நீலத் தலர்வென்ற அமருண்கண் ஏந்துகோட் டெழில்யானை ஒன்னாதார்க் கவன்வேலில் சேந்துநீ இனையையால் ஒத்ததோ சின்மொழி. (கலி. குறிஞ்சி-21) இது காமத்தின்கண் வந்தது. (22) நச்சர் : இது மேல் ஒன்றன்பகுதி (தொல்-புறத்திணை-26) என்புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுண் மக்கட் பகுதி கூறுகின்றது. (இ-ள்) பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்---ஒரு தலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைத்தலும் கருதிய பக்கத்தின்கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும்---அறம்பொருளின்பங்களின் கூறுபாடு தோன்ற முன்னுள்ளோர் கூறிய 1குறிப்புப்பொருளின் கண்ணும்; செந் துறை நிலைஇ செவ்வன கூறுந்துறை நிலைபெற்று; வழங்கு இயல் மருங்கின்---வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப் பகுதி வரைவின்று---அச்செந்துறைக்கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று என்றவாறு. பரவல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும், பரவலும் புகழ்ச்சியும் தலைவன் கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடு வான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப் புறனாயிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கையின்மையிற் கைக்கிளையாம் குறிப்பென்றார், அறம் பொருள் இன்பம் பயப்பச்செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்.1 இது செந்துறைப் பாடாண்பாட்டெனப்படும். வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா (பத்துப்-குறிஞ்சிப்-31) என்பவாகலானும் ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும் வண்ணமென்பது இயற்சொல்: வருண மென்பது வடமொழித் திரிபு.2 ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப் பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்படுமாயிற்று. கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப்படுத்துக் கூறாதது, அனைநிலை (தொல் - புறத்திணை-20) வருணப்படுத்துத் தோன்றக்கூறலின். உதாரணம் :- நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி னளப்ப ரியையே படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் மூன்றிணை முதல்வர் போல நின்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே. (பதிற்றுப்-14) பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர். வரைபுரையு மழகளிற்றின் மிசை (புறம்-38) இது புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இயை பியன்மொழி யென்பதும் அது. உண்டா லம்மவிவ்வுலகம்.................. தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே. (புறம்-182) இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இது முனிவர் கூறுமாறு போலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியுங் கூறாது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய்ப் பாடாணாயிற்று. இவை செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக் குரியவாகி வருமென்பதூஉங் கூறின், அவை 1ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத் திணைக்கே உரித்தாகக் கூறுதற்கொரு காரணமின்மையானும் அங்ஙனங் கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சியும் அவ்வப் பொருண்மை கருதினாரைத் தலைவராக வுடைமையானும், ஏனையது அக் குறிப்பிற்றன் றாகலானும், அதற்குப் பாட்டுடைத் தலைவர் பலராயினும் ஒருவராயினும் பெயர் கொடுத்துங் கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க இத்துணை வேறு பாடுடையதனைப் பரவல் புகழ்ச்சியோடு கூட வைத்தார், அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய் வரும் என்றற்கு. இன்னும் அதனானே பாடாண்டிணைப் பொருண்மை மயங்கிவரினும் முடிந்த பொருளாற் பெயர்பெறு மென்று கொள்க. நிலமிசை வாழ்நர் என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைதுஆறி அது நன்குரைத்தல். அஃது இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு. இன்னும் மயங்கி வருவனவெல்லாம், இதனான் அமைக்க. (27) பாரதியார் கருத்து :--- இது, சில பாடாண் துறைகளில் இயற்பா விடத்துப் பயிலும் இசைப்பா வகை கூறுகிறது. பொருள் :--- வழங்கியன் மருங்கில்-பல திணைப்பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து; வகைபட நிலைஇ-அதனதன் கூறுபட நின்று; பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் வாழ்த்தலும் புகழ்தலும் நுதலுமிடத்தும்; முன்னோர் கூறிய குறிப்பினும்-பண்டைச் சான்றோர் செந்துறை வழக்குச் சுட்டும் பிறவிடத்தும் ; செந்துறை வண்ணப்பகுதி வரைவின்று-இயற்பாக்களேயன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படா. குறிப்பு :--- ஆங்கு உரையசை, ஏகாரம், ஈற்றசை உம்மைகள் எண் குறிப்பன. செந்துறையாவது, இசைத் தமிழ்ப்பாட்டு வகை. வண்ணம் என்பது இசைக்குரிய ஓசை வேறுபாடு. பிறதிணை களிற் போலப் பாடாணிலும் இயற்பாக்கள் பெரிதும் வழங்கும்; எனில், இங்குக் குறித்த சில பாடாண் வகைகளுக்கு மட்டும் இயற் பாக்களேயன்றி இசைப்பா வண்ணக்கூறுகளும் வந்து பயில்வது முண்டு என்பதே இச்சூத்திரக் கருத்தாகும். அது, வண்ணப் பகுதி வரு மெனக் கூறாது, வரைவின்று என்றதனால் விளங்கும். பாடாணில் பெரிதும் பயில்வன இயற்பாக்களே; இசைப்பா வண்ணவகை சிறுவரவிற்கே; அதுவும் இங்குக் குறித்த வகைகளில் மட்டுமேயாம். இதில் முன்னோர் கூறிய குறிப்பென்றது, பரவலும் புகழ்தலுமல்லாப் பிறதுறைகளை; குறித்த அவ்விரண்டிலும் செந்துறை வண்ணம் சிறப்புடைத்தாகும்; மற்றைய பாடாண் துறைகளில் பண்டைச் சான்றோர் செந்துறைக்குரியவெனக் குறித்தவற்றிற்கே இசைப்பா வண்ணம் ஏற்புடைத்து; அல்லன வெல்லாம் இயற்பாக்களே ஏற்குமென்க. புகழ்ச்சிப் பாடாண் வகைக்கு ஒழுகு வண்ணச் செந்துறைப் பாவகை வருமாறு:--- அட்டா னானே குட்டுவன்; அடுதோறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே; வரைமிசை யழிதரு மருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவில் சொரிசுரை கவரும் நெய்வழி புராலிற் பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல நன்னுதல் விறலிய ராடுந் தொன்னகர் வரைப்பின னுரையா னாவே. -பதிற்றுப்பத்து, செய்-47) இதில், செங்குட்டுவன் கொடையும் வென்றியும் பரணர் புகழ்தலால், இவ்வொழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று. இனி, வாழ்த்துப்பாடாண் வகைக்கு வண்ணச் செந்துறை வருமாறு:--- பைம்பொற்றாமரைப்பாணர்ச்சூட்டி...gynt” பதிற்றுப் பத்து செய்யுள் 48. செங்குட்டுவனைப் பரணர் பாடிய இப்பாட்டில் பெருந்துறை மணலினும் பலவே, நின்பெயர் வாழியர் என வருதலால், இது வாழ்த்துப்பாடாண்; அதனாலிதற்கு ஒழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று. இனி, இதற்கு நச்சினார்க்கினியார் கூறும் பொருந்தாப் புத்துரைக் குறிப்பைச் சிறிதாராய்வோம். வண்ணப்பகுதி என்னும் தமிழியற்றொடருக்குரிய செம்பொருளை யிகழ்ந்து விலக்கி, வண்ணம் எனுந் தமிழ்ச்சொல்லை வருணம் எனும் வடசொல்லின் சிதைவாகக் கொண்டனர்.1 கொண்டு, வண்ணப் பகுதி வரைவின்று என்பதற்கு, வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கும் நிலைமையின்று என்று பொருள் கூறினார். வண்ணமும் தொடையும் பொரீ, யெண்ணா என் கவாகலானும், ஐவகை நிறத்தினையும் வண்ணமென்ப வாகாலானும், வண்ணமென்பது இயற்சொல்; வருணமென்பது வடமொழித் திரிபு---என்றவரே தெளிந்து கூறினர்; எனினும் சூத்திரத்தில் அத்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளை விட்டுத் தாம் கருதிய ஆரிய மரபைப் புகுத்தி மரபு பிறழப் புத்தரை கூறுவர். இஃதவர் மனப்பாங்கிருந்தவாறு படாங்கே இயலடைவில் நிரல் நிரையே சொற்கிடந்தவாறு கண்ணழிப்பின், சூத்திரச் செம்பொருள் தெளிதலெளிது. அதைவிலக்கிச், சுண்ணம் மொழிமாற்று முதலிய அரிய மாட்டேற்று மத்துக்களால் கலக்கி, எவ்வாற்றானும் ஒவ்வாப் புதுப்பொருள் காணத்துணியு மிவரியல் பிற்கிது நல்ல சான்று. சொற்றொடர் சுட்டும் செம்பொருளை இவரே குறிக்கின்றார். அதைக் கொள்ளாமைக் கிவர் இரட்டேதுக்கள் கூறுகிறார். இதிற்குறித்த பாடாண் பகுதிகள் செந்துறை மார்க்கத்துவண்ணப்பகுதியாகியபாடல்பற்றிவரும்என்பது...T¿‹, அவை ஈண்டுக்கூறல் மயங்கக் கூறலாம். 2. அன்றியும், ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கோர் காரண மின்மை யானும் அங்ஙனங் கூறாரென்க. இவற்றுள் முதலது இடம்பற்றியது. செய்யுளியற்குரிய பாட்டுவகை புறத்திணையியலிற் கூறுதல் பொருந்தாதென்பதே. சொற்பொருளைவிட்டொழிக்க விரும்புதற்கிவர் கூறும் காரணம் இந்நூற்பா சுட்டும் பாடாண் பகுதிகள் செந்துறை மார்க்க வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதே நேரிய பொருளென்றுடன்படுகிறார். ஆனாலும், செய்யுளியற்குரிய பாவகை கூறுதலால், அச்சொற்பொருளைக் கொள்ளலாகாதென விலக்குகிறார். இஃதிவர் பொருந்தாப் புத்துரைக்குப் போதா தென்பதும், புறத்திணையியலில் சில பாடாண்பகுதிகளுக்குச் சிறந்துரிய பாவகை சுட்டுவது இயலமைவுடைத்தென்பதும், தொல்காப்பியர் மரபு முறை மறவார்க்கெளிதில் தெளிவாகும். அகப்புறத் திணைகளுக்குப் பொதுவான பாவகைகள் செய்யுளியலில் விளக்குவதால், திணைதோறும் அவ்வதற்குப் பாவகை கூறல் மிகையாகும். அதனால் தொல்காப்பியர் பிற புறத்திணைகளுக்குப் பாவகை தனித்தனி கூறிற்றிலர். எனில், செந்துறைப் பாடல் பிற திணைகளுக்குப் பயிலாமல், பாடாணிலும் யாண்டும் பயிலாமல், பரவலும்---புகழ்ச்சியும்---முன்னோர் குறிப்புமான பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துமாதலின், அப்பொருத்தம் இவ்வியலிற் பாடாண் பகுதியொடு சேர்த்துக் கூறப்பட்டது. இவ்வாறு, ஏற்ற சில பிறவிடத்தும் பொதுவின்றிச் சிறப்பாகத் தனியுரிமையுடைய பாவகைகளைச் செய்யுளியலிற் கூறாமல் ஆங்காங்கே சுட்டுவது இந்நூலாரியல்பாகும்; அகத்திணைகளுக்குக் கலியும் பரிபாடலும் உரிய என்றகத் திணை யியலிறுதியிலும் அதுவே போல உவமவகையான உள்ளுறையுவமத்தை உவமவியலில் கூறாமல் பெருந்திணை ஒழியப் பிற அகத்திணைகளுக்குச் சிறப்புரிமை கொள்ளுவதால் அகத்திணையியலினும் அவ்வாறே உவமத் தொடர்புடைய இறைச்சி முதலிய சில உள்ளுறைகளைப் பொருளியலிலும் விரித்து விளக்குதலறிக. எனவே, தன்னளவில் தவறற்றதாய் எளிதிற் பொருள் தெளியப்படுவதாகும் நேரிய சொற்பொருளை இதிற் குறித்த பாடாண் வகைக்குரிய பாவகையைச் செய்யுளிலியற் கூறாமல் இங்குத் தொடர்பு கருதிப் பாடாண் பகுதியொடு இவ்வியலிற் கூறியதால் மட்டும் மயக்கம் தருமென விலக்கு மாறில்லை. எவ்வாறாயினும் பண்டைத் தமிழ்த் திணை விளக்கும் பகுதியில், யாதும் பொருத்தமற்ற ஆரியரின் சாதிபேத ஏகவேறுபாடுகளைப் புகுத்தும் நச்சினார்க்கினியர் முயற்சி வியப்பொடு வெறுப்பை விளைப்பதாகும். எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் எனும் தமிழ் மரபொடு முற்று முரணுவதும் பிறப்பால் என்றும் மாறாத உயர்வு தாழ்வுடையதுமான ஆரிய வருண முறைகளைப் பழைய தமிழர் புறவொழுக்கம் கூறுமிடத்துப் புகுத்த முயன்றிடர்ப்படுவதிலும், பிற திணைகளுக்கும் பாடாணில் பிற பகுதிகளுக்கும் பயிலாத செந்துறை வண்ணப் பாடல் இதிற் குறித்த சில பாடாண் பகுதிகளுக்கு விலக்கில்லை என்பதைப் புறனடையாக இந்நூலாரிங்குத் தெளிக்குமுண்மை தேர்வதே பெரிதும் நயமும் பொருத்தமும் பயனுமுடைத்து. ஆய்வுரை நூற்பா. 22 இது, பாடாண்பகுதி எட்டினுட் கூறப்படாதெஞ்சிய ஒருசார் பொருட்பகுதியாகிய செந்துறை வண்ணப்பகுதியினைப் பகுத்து விளக்குகின்றது. (இ-ள்) (பாடாண்திணையுள் எட்டாவதாகிய) செந்துறை மார்க்கமாகிய வண்ணப்பகுதி உலக வழக்குடன் ஒத்து இயலும் பக்கத்துஒருவரைப் படர்க்கைக்கண் புகழ்தலும் முன்னிலைக் கண் பரவுதலும் கருதின பாராட்டும் பக்கத்தும், முன்னோர் (பின்வரும் மக்களினத்தார் உணர்ந்து உய்திபெறும் நோக்குடன்) அறம்பொருள் இன்பமாகிய நற்பொருள்களை அறிவுறுத்தும் பக்கத்தும் பாடாண்திணையின்கண் வரைவின்றிக் கொள்ளப்படும். எ-று. பாடாண்திணை பற்றிய பகுதிகளுள் மேலை நூற்பாவிற் குறித்த அமரர்கண் முடியும் அறுவகைகளினும் புரைதீர்காமம் புல்லிய வகையினும் அடங்காமல் மக்களை இயல்புவகையா போற்றிப் பரவும், பாடற்பகுதி, செந்துறை வண்ணப்பகுதி எனப் பாடாண்திணையின் எட்டாம் பகுதியாகக் கொள்ளப்படும் என்பதும் மக்களைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் வைத்துப் பாரட்டுவதும் முன்னோர் அறம் பொருளின்பமாகிய நற்பொருள்களை மக்கட்குலத்தார்க்கு அறிவுறுத்துவதும் ஆகத் தன்னியல்பில் நிகழும் இருதிறங்களும் செந்துறை வண்ணப்பகுதி என ஒரு பகுதியாய்ப் பாடாண்திணையுள் எட்டாம் பகுதியாக வரைவின்றிக் கொள்ளப்படும் என்பதும் இந்நூற்பாவின் பொருளாகும். பாடாண்திணையின் எண் வகையாவன இவையென விளக்கப் போந்த தொல்காப்பியனார், அவற்றை ஒரே நூற்பாவில் ஒரு சேரத் தொகுத்துக் கூறாமல் அமரர்கண்முடியும் அறுவகை புரைதீர்காமம், புல்லியவகை ஆகிய எழுவகைகளையும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப என முன்னோர் கூற்றாகப் பிரித்தும் அவ்வெழுவகையுடன் செந்துறை வண்ணப்பகுதி வரைவின்று ஆங்கே என எட்டாவதாக இணைத்தும் கூறியது, முற்குறித்த எழுவகைகளும் புறமும் அகமுமாகிய செய்திகளைப் பற்றிப் பாடப் பெறுவன என்றும் முற்கூறிய செந்துறை வண்ணப் பகுதியொன்றும் செயற்கை வகையானன்றித் தன்னியல்பிற் பாடப்பெறுவது என்றும் பகுத்துணர்ந்துகோடற் பொருட்டெனக் கொள்ள வேண்டியுள்ளது. 23. காமப்பகுதி கடவுளும் வரையார் ஏனோர்1 பாங்கினும் என்மனார் புலவர் இளம் : இது, கடவுள்மாட்டு வருவதொரு பாடாண் பக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காமப்பகுதி கடவுளும் வரையார் - காமப்பகுதி கடவுள்மாட்டும் வரையார், ஏனோர்பாங்கினும் (வரையார்) என்மனார் புலவர் - ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர். என்றது, கடவுள்மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு. நச்சர் : 23 இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) காமப்பகுதி---முன்னர்ப் புரைதீர்காம (தொல்-புறத்திணை-26) மென்றதனுட் புக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார்--- கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர்---மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் என்றவாறு. பகுதி ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம். இன்னும் பகுதியென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் காமஞ்சாலா இளமையோள் வயிற் (தொல்-அகத் திணை-50) காமமுமன்றி இது வேறொரு1 காமமென்று கொள்க. அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் றொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே 2யடுதோண் முயங்க லவைநா ணுவலே யென்போற் பெருவிதுப் புறுக வென்று மொருபாற் படாஅ தாகி யிருபாற் பட்டவிம் மைய லூரே. (புறம்-83) இது பெருங்கோழி நாய்கன் மகள்3 ஒருத்தி ஒத்த அன் பினாற் காமமுறாதவழியுங் குணச்சிறப்பின்றித் தானே காம முற்றுக் கூறியது. இதனானடக்குக.4 இன்னும் ஏனோர் பாங்கினும் என்பதனானே கிளவித் தலைவனல்லாத பாட்டுத் தலைவனாகத் கிளவித் தலைவனைக் கூறுவனவுங் கொள்க.5 உதாரணம் :--- கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற் றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன். (கலி-97) இது குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறியது. மீளிவேற் றானையர் புகுதந்தார் நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே. (கலி-39) என்பதும் அது. இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (28) பாரதியார் கருத்து :--- இது, புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதி ஓரோவிடத்துக் கடவுளர்க்கும் விலக்கில்லைஎன்று கூறுகிறது. பொருள் :--- காமப் பகுதி---பாடாண் வகையுள் புரைதீர் காமம் புல்லிய பகுதி; கடவுளும்---(மக்களே யன்றிக் கடவுளரும்; ஏனோர் பாங்கினும்---(தம்முள்ளும்) பிறரோடும்; வரையார்---கடியமாட்டார்; என்மனார் புலவர்---என்று கூறுவர் புறநூற் புலவர். குறிப்பு :--- இதில் உம்மையிரண்டும் சிறப்புக் குறிப்பாம். மக்கட்கன்றி, கடவுளர்க்கும் தூய காதற்பகுதி பாடாணாதற்குரித்து; காதலியல் கருதா மேதகு கடவுளரும் இருதலையும் தாமாயும் ஒருதலை மனிதரோடும் காதல் கூறும் நற்காமப் பகுதியும் பாடாண் வகையாதலுண்டு என்பது குறிப்பு. புரைதீர் காமப் பாடாண் மக்களோடு தேவரும் சேர்வதுண்டு என்பது இந்நூற்பாக் கருத்து. தூய காதல் பாடாணாதற்குரிய தென்பது, மேல் அமரர்கண் முடியும் என்ற சூத்திரத்தில் புரைதீர் காமம் புல்லிய வகையினும் என்றதனால் விளக்கப்பட்டது. காதல் பெரும்பாலும் இருமருங்கும் மக்கட்டலைவரிடை நிகழ்வதியல்பு. ஒரோவழி, ஒரு கடவுள் பிற கடவுளோடும் அன்றிக் கடவுளல்லாப் பிற மனிதரோடும் காதல் கொள்வதும், அது குற்றமற்ற தாயின் ஏற்புழிப்பாடாண் பகுதியாவதும் செய்யுளில் கடிதலில்லை என்றிதில் கூறப்படுகிறது. மேற்பாடாணியல் விளக்கத்தில் புரையுடைக்காமமே கடியப்பட்டுக் கடவுளர் தூயகாதல் விலக்காமையாலிது வேண்டாமெனில், திணையெல்லாம் மக்களொழுக்கம் பற்றியவாதலின் பாடாண்திணை கடவுளர் தூயகாதல் பற்றி வருமோ எனும் ஐயமகற்ற இது வேண்டுமென்க. பொதுவாய்ப் பொருளெல்லாம் மக்களின் அகமும் புறமுமாய ஒழுக்கங்களைப் பற்றியனவாகும் புறத்திணை ஏழனுள் இறுதி யான பாடாணும், மற்றைய போலவே மக்கட்டலைவர் மேற்றோய் ஒன்று அமரர் கொள் மரபின் அறுபுறத்திணை யினடியாய் வரும். அன்றி அகவகையில் புரைதீர்காமம் புல்லி வரும் இவ்விருவகையுள், மறனுடை மரபிற் பாடாணாறும் மக்கண்மேற்றாய்ச் செய்யுளில் வழங்கும். புரைதீர்காமம் புல்லிய பாடாணும் மானிடத் தலைமக்கள் மாட்டு வருதலே பெரு வழக்காம். சிறுவரவிற்றாக, காதல் கண்ணிய பாடாண் கடவுளரிடையும் மக்களொடு கடவுள் காதல் கொள்ளுமிடத்தும் வருதலும் புலனெறி வழக்கில் விலக்கில்லை எனும் பழமரபு கூறப்பட்டது. கடவுள் கடவுளொடு காதல்கொண்ட புரைதீர்காமப் பாடாணுக்குச் செய்யுள் வருமாறு :--- ................... ............................................. கண்ணொடு கண்ணினைக் கௌவி யொன்றையொன் றுண்ணவு நிலைபெறா துணர்வு மொன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினான், பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித் தொருவரை யொருவர் தம் உள்ள மீர்த்தலால் வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும் இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார். மருங்கிலா நங்கையும் வசையி லையனும் ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் றாயினார், கருங்கடற் gள்ளியிற்fலவிÚங்கிப்போய்ப்ãரிந்தவர்Tடினால்nபசல்nவண்டுமோ.! (கம்பர்-இராமாவதாரம்-மிதிலைக்காட்சி-செய்யுள். 35,37,38) இப்பாட்டுக்களில், திருமாலும் இலக்குமியும் பாற்கடலை விட்டுப் பிரிந்துலகில் வந்து கூடிக் காதலால் கலந்த தூய காமப்பாடாண்பகுதி பீடுபெறுதலறிக. இனி கடவுள் மானிடர் மருங்கு காதலித்த பாடாண் பகுதி, முருகவேள் குறவள்ளியை மணந்த கதையாலறிக. ............................ ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே. (முருகாற்றுப்படை,வரி -100-102) ஆய்வுரை நூற்பா.23. இதுமுற்கூறிய எட்டுவகையுள் ஒன்றாகிய காமப்பகுதிக்கு எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) மக்களைப் பொருளாகக் கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப்பொருளாகக்கொண்டு பாடினும் நீக்கார். கடவுளை ஏனைமக்கள் விரும்பியதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது. எ-று. மேற்குறித்த இரு வகையினையும் கடவுட்பக்கத்தும் ஏனோர் பக்கத்தும் மடவரன் மகளிர் மகிழ்ந்தபக்கமும் (பு.வெ.மா. சூத்-9) எனக் குறிப்பிடுவர் ஐயனாரிதனார். இவ்விருவகையினையும் கடவுண்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கம் எனவும் கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம் எனவும் முறையே குறிப்பிடுவர் இளம்பூரணர். இவற்றுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயத்தலையும் அமைத்துக்கொள்வர் நச்சினார்க்கினியர். காமம் என்னாது காமப் பகுதி என்றதனானே எழுதிணைக் குரிய காமமும் காமஞ்சாலா இளமையோள்வயிற் காமமும் அன்றி இது வேறோர் காமம் என்று கொள்க என நச்சினார்க் கினியர் தரும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். கடவுள் என்னும் சொல் தெய்வம் என்னும் பொதுப் பொருளில் மட்டும் அன்றி உலகப்பொருள்களெல்லாவற்றையும் இயக்கி நிற்கும் முழுமுதற்பொருளாகிய இறைவனைக் குறிக்கும் சிறப்பு முறையில் இங்கு ஆளப்பெற்றிருத்தலால், எல்லாம்வல்ல பரம்பொருளைத் தம் ஆருயிர்த் தலைவனாக எண்ணிப் பேரன்பு செய்யும் வழிபாட்டு முறையும் தொல்காப்பியனார் காலத் தமிழகத்தில் நிலவியிருந்தமை நன்கு தெளியப்படும். சைவத் திருமுறையாசிரியர்களாகிய நாயன்மார்களும் நாலா யிரத்திவ்வியப்பிரபந்த ஆசிரியர்களாகிய ஆழ்வார்களும் எல்லாம் வல்ல இறைவனை ஆரூயிர் நாயகனாகவும் தம்மை அவனது அருள்வேட்ட தலைவியாகவும் எண்ணிப் போற்றிய ஞான நன்னெறிப் பாடல்களாகிய திருவருளிலக்கியத்திற்கு அரண் செய்யும் இலக்கணமாக இத்தொல்காப்பிய நூற்பா அமைந்துள்ளமை உய்த்துணரத்தகுவதாகும். 24. குழவி மருங்கினும் கிழவ தாகும். இளம் : இது, குழவிப் பருவத்தும் காமப்பகுதி பாடப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குழவி மருங்கினும் கிழவது1 ஆகும் - குழவிப் பருவத்தும் காமப்பகுதி கூறப்பெறும் (அவர் விளையாட்டு மகளிரொடு பொருந்தியக்கண்) உதாரணம் வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி அஞ்சி அலற---எரிக்கதிர்வேல் செங்கோலன் நுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும் எங்கோலம் தீண்டல் இனிது. (புறப். பாடாண். 50) நச்சர் : இது முன்னிற்சூத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் புரைதீர் காமத் (தொல்-புறத்திணை-26) திற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) குழவிமருங்கினும் கிழவதாகும்---குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும் எ-று. மருகென்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க;1 தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டொன்றாது வேறு கூறினார், தந்தையரிடத்தன்றி ஒரு திங்களிற் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுந் தாலுஞ் சப்பாணியு முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறுபறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது. இப் பகுதிகளெல்லாம் வழக்கொடு சிவணிய; (தொல்-புறத்திணை-31) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப் பருவத்துக்கு உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இரு பிறப்பாளராகின்ற பருவமாம். வேளாளர்க்கும் மூவகை யோர்க்குரிய பருவமே கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக் காலும் அக்குழவிப்பருவமே கருதிப் பாடுக வென்றற்குக் கிழவதாகு மென்றார். இதற்குப் பரிசில்வேட்கை அக் குழவிக்கணன்றி அவன் தமர்க்கண்ணுமா மென்றுணர்க. உதாரணம் :--- அன்னா யிவனொருவ னந்தரத்தா னானென்றான் முன்ன மொருகான் மொழியினான்---பின்னுங் கலிகெழு கூடலிற் கண்ஞீடி வந்து புலியாய்ப் பொருவான் புகும் அந்தரத்தானா னென்றான் அம்புலி வேறாயும் ஒரு காலத்தே விளையாட்டு நிகழ்த்துமென, மதுரையிற் பிட்டு வாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது. (29) பாரதியார் கருத்து :--- இது, புரைதீர்காமம் புல்லிய வகைத்தாய பாடாண் திணைப்பகுதி மிக்கிளஞ் சிறார்மாட்டும் சார்த்திப் பாடப்பெறுமென்று கூறுகிறது. பொருள் :--- குழவிமருங்கினும்---காமஞ்சாலார் சிறாரிடத்தும்; கிழவதாகும்---புரைதீர்காமம் புல்லிய பாடாண் புலனெறி வழக்கிற் குரியதாகும். குறிப்பு :--- உம்மை சிறப்புக் குறிப்பது. காதற்செவ்வி கருதவொண்ணாப் பேதைப் பருவச் சிறார் மாட்டும் நற்காமப் பாடாண் திணை புலனெறி வழக்காற்றில் உரிமைகொள்ளும் என்பது கருத்து. காமவுணர்வு குழவிக்கின்றெனினும், அக்குழவி மாட்டுத் தூயகாதல் கொள்வாரன்புப் பெற்றி பற்றிய பாடாண் அக்குழவியர்மேல் சார்த்தி வருவதே இதிற் கூறப்படுவது. காமப் பருவமுடையார் சிறாரைக் காதலிக்குங் கைக்கிளைப் பாடாண் புரைதீர்காமம் புல்லியபாடாணா யடங்கும் பெற்றி மேலே கூறினார். அத்தூய காதலால்குழவியர்பாற் சாரும் பாடாண் பகுதியை இங்குக் கூறினார்; அதனாலிது கூறியது கூறலாகாது. இதற்குச் செய்யுள் வருமாறு :--- பொன்திகழ்தன் மார்பென் புறந்தோயச் சாய்ந்தென்கண் தன்காந்த வாற் பொத்தித் தான்சிரிக்கும்---முன்வந்தென் கன்னத்தை முத்திக் கழுத்தைக்கை யாற்றழுவும் என்னத்தன் என்வாழ் வினி. இது காமஞ்சான்ற பெண்ணியலாள் அஃதுணரா ஆண் மகவையன்பு செய்து பாராட்டும் பாடாணாகும். இனி, காமஞ்சாலா இளமையோள்வயின் காளைப்பருவத் தலைவன் தூயகாதல் பாடாணாதற்குச் செய்யுள் :--- வாருறு வணளரம்பால் ---கலி. 58 இதில், காமஞ்சாலாச் சிறுமிபாற் புரைதீர் காதல் கூர்ந்த தலைவன் அவள் இளமையும் உயிர் வௌவும் எழிலும் பாராட்டு தலால், இது காதற் பாடாணாயிற்று. இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருந்தாது, பிள்ளைத் தமிழ் போன்ற பிற்காலப் பிரபந்தப் பகுதிகளை முறிப் பதிச்சூத்திரம் என்பரவர். அது செய்யுளியலிலன்றி ஈண்டுக் கூறற் பாற்றன்மையானும், அத்தகைப் பிரபந்த வகைகள் தொல் காப்பியர் காலத்தின்மையானும், அது கருத்தன்மை வெளிப்படை. இளம்பூரணரவ்வாறு கொள்ளாமையறிக. ஆய்வுரை நூற்பா. 24. இதுவும் அது. (இ-ள்) மக்கள் குழந்தையாக வளரும் பருவத்தும் காமப் பகுதியாகிய பாடாண்பாட்டுப் பாடப்பெறுதற்குரியதாகும். இங்ஙனம் பாடப்பெறுதல் அவர் விளையாட்டு மகளிரொடு பொருந்திய நிலைமைக்கண் என்பது இளம்பூரணர் தரும் உரை விளக்கமாகும். மருங்கு என்றதனான் மக்கட் குழவியாகிய ஒரு ஒருமருங்கே கொள்க; தெய்வக் குழவியின் மையின் இதனை மேலவற்றோடு ஒன்றாது வேறு கூறினார். தந்தையரிடத்தன்றி ஒருதிங்களைக் குழவியைப்பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையும் தாலும் சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும் அம்புலியுஞ் சிற்றிலும் சிறுதேரும் சிறு பறையும் எனப்பெயரிட்டு வழங்குதலானும் என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் பிற்காலத்தெழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு இச் சூத்திரம் இலக்கணமாதலை வற்புறுத்துவதாகும். காமவுணர்வு குழவிக்கு இன்று எனினும் அக்குழவி மாட்டுத் தூய காதல் கொள்வார் அன்பின் தன்மைபற்றிய பாடாண் அக் குழவியர்மேற் சார்த்தி வருவதே இதிற் கூறப்படுவது எனவும், பிள்ளைத்தமிழ்போன்ற, பிற்காலப் பிரபந்தப் பகுதிகளைக் குறிப்பது இச்சூத்திரம் என நச்சினார்க் கினியர் கூறும் பொருள் பொருந்தாது எனவும் கூறுவர் நாவலர் பாரதியார். அவர் கருதுமாறு பிள்ளைத்தமிழ் முதலிய இலக்கிய வகைகள் பிற்காலத்துத் தோன்றி வளர்ந்தன என்பது உண்மையாயினும் இத்தகைய இலக்கியங்கள் பல தோன்றி வளர்தற்கு வேராக அமைந்தது, குழவி மருங்கினுங் கிழவதாகும் எனவரும் இத்தொல்காப்பிய நூற்பா என்பதனை மறுத்தல் ஒண்ணாது. 25. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான. இளம் : இதுவும் அது. (இ-ள்.) ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப-ஊரின் கண் காமப்பகுதி நிகழ்த்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், வழக்கொடு சிவணிய வகைமையான - அது நிகழுங்காலத்து வழக்கொடு பொருந்திநடக்கும் வகைமையின் கண். ஊரொடு தோற்றம் என்பது பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வருவது1 வழக்கு என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை. வகை என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக்கூறும் வகைச் செய்யுள். உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க. நச்சர் : ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப. இது புரைதீர் காமத்திற்கன்றிப் பக்குநின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) பக்குநின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடி வந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. தோற்றமுமென்றது, அக் காமந் தேவரிடத்தும் மக்களி டத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம். இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பு மென்று பொருள் கூறின், மரபியற்கண்ணே ஊரும் பெயரும் (தொல்-மரபியல்-27) என்னும் சூத்திரத்து ஊர்பெறுதலானும் முன்னர் வண்ணப்பகுதி (தொல்-புறத்திணை 27) என்பதனாற் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது கூறலாமென்றுணர்க. (30) நூற்பா. 25. உரித்து என்னும் பயனிலைக்கு எழுவாயாக மேற்பகுக்கப் பட்டுநின்ற காமப்பகுதி என்பதனை வருவித்து ஊரிற்பொது மகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்பகுதிக்கு உரிய தாகும் எனவும், அது பின்னுள்ளோர் ஏழுபருவமாகப் பகுத்துக் கலிவெண் பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம் எனவும் நச்சினார்க்கினியர் தரும் விளக்கமும் பின்னே தோன்றிய இலக்கியங்களுக்கும் இலக்கணம் அமையும் முறையில் இயற்றப் பெற்றது தொல்காப்பியம் என்னும் உண்மையைப் புலப்படுத்தல் காண்க. 25 (8) வழக்கொடு சிவணிய வகைமை யான. இது அமரர்கண் முடியும் (தொல்-புறத்திணை-26) என்னுஞ் சூத்திர முதலியவற்றுக்கெல்லாம் புறனடை. (இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீறாகக் கிடந்தனவெல்லாஞ் சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக்கண்ணே யான பொருள்களாம் எ-று. எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து. கடவுள் வாழ்த்துப் பாடுங்கான் முன்னள்ளோர் பாடியவாறன்றி முப்பத்துமூவருட் சிலரை விதந்துவாங்கிப் பாடப் பெறாது. இனி அறுமுறைவாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப் படா. நச்சர் : 25 இனிப் புரைதீர் காமம் புல்லிய வகையும் ஒருவன்றொழுங் 1குலதெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது. இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறிய வாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது. இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண் தெய்வத்தோடு இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகை வசுக்கள் போல்வரையும் புத்தர்1 சமணர் முதலியோரையுங் கூறப்படாது. இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித் தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக் காதல் கூறுங்காலும் முன்னோர் கூறியவாறன்றிக் கூறப்படாது. இனிக் குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது. இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குல மகளிர்க்குக் கூறப்படாது. இன்னுஞ் சிவணிய வகைமை என்றதனானே முற்கூறிய வற்றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங்குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவன வெல்லாங் கொள்க.2 மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பால்பயந் தழீஇய பயங்கெழு நெடுந்தோட்டு நீரறன் மருங்குவழிப் படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சரச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந. (பதிற்றுப்-21) இது மலை யடுத்தது. ஆவஞ் சேர்ந்த புறத்தே தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும். (புறம்-14) இது படையடுத்தது. பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியாள் பாம்புண் பறவைக்1 கொடிபோல---வோங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி (புற. வெ-பாடாண் 31) இது கொடியடுத்தது. வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமா லெனவே. (புறம்-60) இது குடையடுத்தது. முரசு முழங்குதானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போல. (பொருந) இது முரசடுத்தது. சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர்நாடன் மாலு மழைத்தடக்கை மாவளவன்---காலியன்மா மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப் பொன்னுரைகற் போன்ற குளம்பு. இது புரவியடுத்தது. அயிற்கதவம் பாய்ந் துழக்கி யாற்றல்சான் மன்ன ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற்---பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற்2 கிள்ளி களிறு. (முத்தொள்ளாயிரம்-யானைமறம்-71) இது களிறடுத்தது. நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் 3பொலிவு தோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ. (புறம்-4) இது தெரடுத்தது. மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப. (புறம்.10) இது தாரடுத்தது. இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு சின்னப்பூ வென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க.1 (31) பாரதியார் கருத்து :--- இது, பாடாண் திணையில் தலைமக்கள் ஊரும் உயர்குடிப்பிறப்பும் பாராட்டற்குரியன என விளக்குகிறது. பொருள் :--- ஊரொடு தோற்றமும்---தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப்பிறப்பும்; உரித்தெனமொழிப---பாடாண்திணையில் பாராட்டுக்குரிய எனக் கூறுவர் புறநூற் புலவர்; வழக்கொடு சிவணிய வகைமையான---அப்பாராட்டு புலனெறி வழக்கொடு பொருந்தும் பகுதிகளில். குறிப்பு :--- ஓடு இரண்டில் முன்னது எண் குறிக்கும் பின்னது மூன்றாம் வேற்றுமையுருபு. இதில், அடி இரண்டும் ஒரு சூத்திரமாயமைதல் பொருளடைவாற்றெளிவாகும். காலத்தால் முந்திய இளம் பூரணரும் அவ்வாறே கொள்ளுதலால், அதுவே பழைய பாடமாவது தேற்றம். இவற்றைப் பிரித்திருவேறு நூற்பாக் களாக்கிப் பொருந் தாப் புதுப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். தனித்துத் தன்னளவில் பின்னடி,முடிந்த பொருளுதவாமை வெளிப்படை. புறத்திணை அல்லது பாடாண் வகையனைத் திற்கும் பொதுவான புறனடை கூறுதல் கருத்தாயின், அவ்வகையனைத்துங் கூறியபின்னிறுதியிற் புறனடை கூறல் முறையாகும். இன்னும் இதன்பின்னும் பாடாண் வகை கூறுவதால் ஈண்டிது பொதுப்புறனடையாகாது. அன்றியும் முதலடிக்கு இவர் கூறும் புதுப்பொருள் தமிழறமும் பழமரபும் அழியவரு மிழுக்காகும். ஊரிற் பொது மகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்குரித்து எனக் கூசாது கூறுகிறார். பரத்தை ஒருத்தியேயன்றிப் பலரொடும் வாழ்வாரிருக்கலாம். அன்னாரும் அவ்வாழ்வை நாணாமல் ஊரறியக்காட்டி அதைப் பாராட்டும் உயிரொழுக்கமாகக் கருதும் பேதைமைக்காளாகார். அவ்வளவு நாணற்ற கீழ்மக்கள் உளராயின் அவர்கயமையைப் பாடாண்திணைக்குரித் தெனப் புலவர் தலைவரான தொல்காப்பியர் கொள்ளார். அக்கயவர் வாழ்வு வரைவிலா மாணிழையர் மென்தோள் அளறாழும் புரையிலாப் பூரியராம் திருநீக்கப்பட்டார் தொடர்பாக வெறுக்கப்படுவதே தமிழற மரபாயிருக்க அதைப் புலவர் புகழ்ந்து பாடும் பீடுசான்ற பாடாண்திணைப் பகுதியாக நச்சினார்க்கினியர் கூறத்துணிந்தது வியப்பாகும். அத்துணிவு அவர் மதித்த ஒரு சில பிற்காலப் போலிப்புலவர் செய்யுட் போக்கையும், அவர் காலக் கயவர் சிலர் வாழ்க்கையையும் நோக்கியவர் கொண்டார் போலும். சொற்றொடர் சுட்டும் செம்பொருளை விலக்குதற்கு அவர்கூறும் ஏதுக்கள் போதாமையும் வெளிப்படை. அதையுமா ராய்வோம். இச்சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பும் என்று பொருள் கூறின். (1) முன்னர் வண்ணப் பகுதி 8 என்பதனால் பிறப்புப் பெறுதலானும். (2) மரபியற் கண்ணே ஊரும் பெயரும் என்னும் சூத்திரத்து ஊர் பெறுதலானும், இது கூறியது கூறலாமென்றுணர்க. இவ்விரண்டேதுக்களும் பொருளற்றன. (1) முதலில் வண்ணப்பகுதி என்பது செந்துறைப் பாட்டின் இன்னோசை வண்ண வகையைச் சுட்டுவதன்றி, ஒருவர் பிறந்த வருணவகை குறியாமை வழங்கியல் மருங்கின் எனு மேற் சூத்திரக் குறிப்புரையில் விளக்கப்பட்டது. ஆண்டது பாடாண் தலைமக்களின் குலப்பிறப்பைச் சுட்டாமை ஒரு தலை. அன்றியும், வருணம் பொதுவாக ஆரியநூற் சாதியாவதன்றி, ஒருவரின் உயர்குடிப்பிறப்பாகாது. பாடாணாதற்குத் தலைமக்களின் உயர்குடிப்பிறப்பே உரித்தாமன்றி, வாளாவருண வகைசுட்டல் போதாது. பிறப்பளவில் சிறப்புச் சொல்லி இறுமாக்கும் வருண வகை பழைய தமிழ்மரபுமன்று. ஆன்றகுடிப் பிறப்பே வேந்தவாம் பண்பாகத் தமிழறநூல் கூறும். ஆதலின், இதிற் பொலிவு சுட்டும் தோற்றச்சொல், பீடுடைய தலைமக்கள் பிறந்த குடிப் பெருமையைக் குறிப்பதல்லால், வேதங்கூறும் சாதியைச் சுட்டாது. (2) இனி, ஊரும் பெயரும் எனு மரபியற் சூத்திரம் நுதலும் பொருளும் இடஇயைபும் வேறு; அச்சூத்திரமே இடைச்செருகல் என்பாருமுளர். இன்னும், பின் மரபியற் சூத்திரம் ஊர் குறிப்பதால் ஈண்டைக்கேற்ற ஊர் கொள்ளலாகா தெனின், ஆண்டுப் பெயரும் மரபியற் சூத்திரம் சுட்டுவதால் இங்கிப் பகுதியில் பெயர் குறிப்பதும் பிழையாதல் வேண்டும். அதற்கு மாறாகப் பாடாண் தலைமக்களின் பெயர் கூறப் பெறுமென்பது இதையடுத்து மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே எனக் கூறப்படுகிறது ஆகவே, பாடாண் தலைவரின் ஊரும் உயர்குடிப்பிறப்பும் பெயருமே அத்திணைப் பகுதியில் கூறுதல் மரபென்பதே இதுவும் இதையடுத்த பின் சூத்திரமும் விளக்கும் பொருளாதல் தேற்றமாகும். தலைமக்கள் அகத்திணைப் பகுதியில் கூட்டியொருவர் பெயர் கொளப் பெறார் என விலக்கியதால், புறத்தில் புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதியில் அவர் ஊரும் குடிப்பிறப்பும் பெயரும் சுட்டுதல் விலக்கின்றென்பதை ஈண்டைக்கேற்ப இப்புறத்திணையியலில் இயையக் கூறினர் இந்நூலார். இதற்கிளம்பூரணர் உரையும் சிறவாது, ஊரொடு தோற்றம் என்பது, பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாக வருவன என்றவர் கூறினர். மலைகலங்கினு நிறைநிலைகலங்காத் தமிழ் மகளிரெல்லாம் ஒரே திலனுலவில் உயிரினும் சிறந்த தம் நாணினுஞ் சிறந்த கற்பிழந்து காமவெறி கொள்ள வைத்துப் பழி பிறங்கும் பிற்காலப் பிரபந்தங்களை அமைப்பதற்கு இப்பொருள் கொண்டார் போலும், நிறையுடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார். அதற்கு மாறாகத் தந்நெஞ்சிற் பிறரைப் புகுத்துவர் பெண்டிரெனும் புலனெறியைத் தொல்காப்பியர் நூலுட்காண முயல்வது சுடருள் இருள் காண்ப தாகும். ஊர் குறித்தல் உரித்தாகும் பாடாண் பாட்டு வருமாறு :--- அணியிழையார்க் காரணங் காகிமற் றந்நோய் தணிமருந்துந் தாமேயா மென்ப---மணிமிடைபூண் இம்மென் முழவி னெயிற்பட்டின நாடன் செம்மல் சிலைபொருத தோள். (சிறுபாணுரையீற்றுப் பழைய பாட்டு) கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேற் கூடலென்று---கூடல் இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து. (முத்தொள்ளாயிரம் 73) இனித் தோற்றம் அதாவது குடிப்பிறப்பினுயர் வுரித்தாகும் பாடாண்பாட்டு :--- முத்தொள்ளாயிரம் 54, 88, 95-ஆம் பாடல்களில் கொற்கை என்றூரும் மாறன் என்றுயர் குடிப்பிறப்பாந் தோற்றமும் ஒருங்குவருதலும் காண்க. ஆய்வுரை நூற்பா. 25. இதுவும் அது. (இ-ள்) (பாடாண்வகையாகிய காமப்பகுதி) ஊரின்கண் புலப்பட்டுத் தோன்றுதலும் உரியதாகும்; (பாடல்சான்ற) புலனெறி வழக்கொடு பொருந்தி நடக்கும் கூறுபாட்டின்கண் எ-று. உரித்து என்னும் பயனிலைக்கு எழுவாயாகக் காமப் பகுதி என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. ஊரொடு---ஊரின்கண்; உருபு மயக்கம். தோற்றம்---தோன்றுதல்; புலனாதல். தன்னேரில்லாத்தலைவன் ஊரின்கண் உலாவந்து தோன்றுங் கால் அவனைக்கண்டு காதல்கொண்ட மகளிர் தமது காதலைப் புலப்படுத்துரைப்பதாகச் செய்யுள் செய்தலும் நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கொடு பொருந்திய நிலைமைக்கண் புரைதீர்காமப் பகுதியாகவே கொள்ளப்படும் என்பது இந்நூற்பாவில் கருத்தாகும். இவ்வகையாற் பாடப்பெற்றனவாக முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். இனி, ஊரொடு தோற்றம் என்பது, பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வருவது எனவும், வழக்கு என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை வகை என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக் கூறும் வகைச் செய்யுள் எனவும் விளக்கந்தருவர் இளம்பூரணர். சேரமான்பெருமாள் நாயனார் பாடியருளிய திருக்கயிலாய ஞானவுலாவும் பிற்காலத்தில் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலாப்போல்வனவும் ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப, வழக்கொடு சிவணிய வகைமையான எனவரும் இத்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றித் தோன்றிய இலக்கியங்களாகும். இனி, இதன்கண் வழக்கொடு சிவணிய வகைமையான என்ற அடியினைத் தனிச்சூத்திரமாகக் கொண்டு அமரர்கண் முடியும் என்னுஞ் சூத்திரமுதலியவற்றுக்கெல்லாம் புறனடையாகக் கொண்டு உரைவரைந்தார் நச்சினார்க்கினியர். ஆசிரியர் தொல்காப்பியனார் கற்பார்க்குப் பொருள் தெள்ளிதின் விளங்க வைத்துக்கொண்ட நூற்பா அமைப்பின்படி நோக்குங்கால் இவ்வோரடியினை ஒருசூத்திரமாகக் கொள்ளுதல் பொருந் தாமை புலனாம். எனவே இவ்விரண்டடிகளையும் ஒரு சூத்திரமாகக் கொண்டு உரைவகுத்த இளம்பூரணர் கொள்கையே இங்கு ஏற்புடையதாகும். ஊரொடு தோற்றமும் உரித்தெனமொழிப என்பதற்கு, ஊரிற் பொதுமகளிரோடு கூடி வந்த விளக்கமும் பாடாண் திணைக்கு உரித்து என்று கூறுவர் எனப் பொருள் வரைந்து, வழக்கொடு சிவணிய வகைமையான என்பதன் உரையில் ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது என விளக்கந்தருவர் நச்சினார்க்கினியர். இவ்விளக்கம் உரையாசிரியர் தம்காலத்து வழங்கிய உலகச் செய்யுளாகிய இலக்கியத்தினை முதனூலாகிய தொல்காப்பிய இலக்கணத்துடன் தொடர்புபடுத்தி ஒப்பியல் நோக்குடன் கூறப்பட்டதெனவே கொள்ளற்பாலதாகும். இனி, பாடாண் திணையில் தலைமக்கள் ஊரும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டற்குரியன என விளக்குவது இந்நூற்பா எனக் கருத்துரை வரைவர் நாவலர் பாரதியார். காமப்பகுதி கடவுளும் வரையார் என்பது முதல் மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே என்பது முடியவுள்ள நான்கு சூத்திரங்களும் பாடாண் பகுதி எட்டினுள் ஒன்றாகிய காமப்பகுதியினைக் குறித்த சிறப்பு விதிகளாதலின் இந்நூற்பாவினைப் பாடாண்திணைப்பகுதிகள் அனைத்திற்கும் உரிய பொதுவிதியாகக் கொண்டு உரைவரைதல் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. 26. மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே இளம் : இதுவும், பாடாண்பாட்டிற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மெய்ப்பெயர்1 மருங்கின் வைத்தனர் வழியே2 -மேற் சொல்லப்பட்டனவும் இனிக் கூறுகின்றனவும் ஒருவற்குக் காரணமாகி மெய்ப்பெயராகி வரும் பொதுப்பெயரான் அன்றி இயற்பெயரின் பக்கத்து வைத்தனர் நெறிப்பட. (26) நச்சர் : 26 இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக் குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது. (இ-ள்.) மெய்ப்பெயர்மருங்கின்---புறத்திணைக்குரிய மெய்ப் பெயர்களின் மருங்கே; வழி வைத்தனர்---புறத்திணை தோன்றுதற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர் என்றவாறு. என்றது எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழியென்பது ஆகுபெயர்.3 மெய்ப்பெயராவன புறத்திணைக்குரிய பாட்டுடைத் தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம். இதன்கருத்துச் சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாஅர் (தொல்-அகத்திணை 54) என அகத்திணையியலுட் கூறினமையிற் கிளவித்தலைவன் பெயரை மெய்ப்பெயராகக் கொள்ளாது ஏனைப் புறத்திணையாற்கொண்ட மெய்ப் பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருணிகழவும் பெறுமென்பதாம்.1 உதாரணம் :--- 2அரிபெய் சிலம்பின் என்னும் (6) அகப் பாட்டினுள் தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரியாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க. மருங்கு என்றதனாற் பாட்டுடைத்தலைவன் பெயர்கூறிப் பின்னர் நாடு முதலியன கூறன் மரபென்று கொள்க. அதுவும் அச் செய்யுளாற் பெற்றாம். நிலம்பூத்த மாமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல். (கலி-27) இதனுட் கூடலிடத்துத் தலைவி யென்பது கூறினார். கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல்விளையாட்டும் விரும்பார்கொல். (கலி-27) இதனுள் வெண்வேலான் குன்றென மலை கூறினார். திசை திசை தேனார்க்குந் திருமருத முன்னுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர். (கலி-29) இதனுள் ஆறு கூறினார். புனவளர் பூங்கொடி என்னும் (27) மருதக்கலியும் அது. கரிய மலர்நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி யரியசூள் பொய்த்தா ரறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையு முத்துங்கண்டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே யெம்மூர். (சிலப். கானல்-7) இது முதலிய மூன்றும் புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க. இன்னுஞ் சான்றோர் செய்யுட்கள் இங்ஙனம் வருவன வெல்லாம் இதனால் அமைக்க. இக் கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்டலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச் செய்யுள் செய்தாரேனும் தம்மிசை பரந்துலகேத்த வேதினாட்டுறைபவ ரென்று இவை பாடாண்டிணையெனப் பெயர்பெறா என்றற்கு இது கூறினார்.1 (32) பாரதியார் கருத்து :--- இது புரைதீர்காமப் பாடாண்பகுதியிற்றலை மக்கள் பெயருங் கூறப்பெறு மரபுண்மை சுட்டுகிறது. பொருள் :--- மெய்ப்பெயர்---தலைமக்களின் உண்மைப் பெயரை; மருங்கில் வழியே வைத்தனர்---பாடாண் பகுதியில் நெறியாக அமைத்துக் கூறினர் புறநூற்புலவர். குறிப்பு :--- மருங்கு---பக்கம்; இங்கது பாடாணின் பக்கம் குறிக்கும். அகத்திணைக்கு விலக்கப்பட்ட இயற்பெயர் காதற் பாடாண் புறத்திணையில் வருதல் புலனெறியாதலின், வழியே வைத்தனர் என விளக்கப்பட்டது ஈற்றேகாரம் அசை. புறநூற் புலவர் எனுமெழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. ஆய்வுரை நூற்பா. 26. இது, புரைதீர்காமம் பற்றிய பாடாண்பாட்டிற்கு உரிய தோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) மேல் அகத்திணைக்கண் அளவுதல் இல என விலக்கிய இயற்பெயராகிய மெய்ப்பெயரை அதன்மருங்கு (பக்கம்) எனப்படும் கைக்கிளை பெருந்திணை பற்றிய பாடல்களில் வழி முறையாக வைத்துப் பாடினர் பண்டைப் புலவர். எ-று; எனவே, பாடாண் திணைப்பகுதி எட்டினுள் ஒன்றாகிய காமப்பகுதி பற்றிய பாடல்களில் தலைமக்கட்குரிய இயற்பெயர் இடம் பெறுதல் தொன்றுதொட்டு வரும் இலக்கிய மரபாகும் என்றாராயிற்று. மெய்ப்பெயராவது ஒருவரது உடம்புடன் இயைத்து வழங்கப்பெறும் இயற்பெயர் என்பது ஆகும். இயற் பெயர் என்பது ஒருவரது மெய்க்கு இட்டு வழங்கும் பெயராதலின் மெய்ப்பெயரெனப்பட்டது. இனி, அகத்திணைப்பாடல்களிற் கிளவித்தலைவர்களைக் குறித்துப் புனைந்துரையாக வழங்கும் பொதுப்பெயர்கள் போலன்றிப் புறத்திணைப்பாடல்களிற் பாட்டுடைத் தலைவர் களைக் குறித்து மெய்மையாக வைத்துரைக்கப்பெறும் இயற்பெயரும் நாடும் ஊரும் முதலாயினவுமே மெய்ப்பெயர்கள் எனவும் சுட்டியொருவர்ப்பெயர்கொளப் பெறார் என அகத் திணையியலுட் கூறினமையின் கிளவித்தலைவர் பெயர் மெய்ப் பெயராகாது எனவும் சுட்டியொருவர்ப் பெயர்கொள்ளும் பாடாண்திணைக்குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத் திணை நிகழும் என்பது இந்நூற்பாவின் கருத்தெனவும் இந்நூற்பாவில் வழி என்றது புறத்திணை தோன்றுதற்குரிய வழியாகிய அகத்திணை எனவும் கொள்வர் நச்சினார்க்கினியர். புறத்திணைக்குரிய மெய்ப்பெயர்களின் மருங்கே அகத்திணையை வைத்தார் முதல் நூலாசிரியர் என்பது இந்நூற்பாவுக்கு அவர்கூறும் பொருளாகும். அரிபெய்சிலம்பின் என்னும் (6) அகப்பாட்டினுள் தித்தன் எனப் பாட்டுடைத் தலைவன் பெயரும், பிண்ட நெல்லின் என நாடும், உறந்தை என ஊரும், காவிரியாடினை என யாறும் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் பாட்டுடைத் தலைவரைப் போற்றியுரைக்கும் பாடாண்டிணை யாகிய புறத்திணையின் வழியே அகத்திணைச் செய்யுட்கள் பாடப்பெறுவன வாயின என்னும் இலக்கிய வரலாற்றுண்மை யினை இனிது புலப்படுத்தல் காணலாம். 27. கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இளம் : இது, சார்ந்துவருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும் - குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்டமூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - பாட்டுடைத் தலை மகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.1 உதாரணம் பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல---ஓங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி (புறப். பாடாண். 39) இது கொடிநிலை. அன்றெறிந் தானும் இவனால் அரண்வலித்து இன்றிவன் மாறாய் எதிர்வார்யார்---கன்றும் அடையார் மணிப்பூண் அடையாதார் மார்பின் சுடராழி நின்றெரியச் சோ (புறப். உழிஞை. 7) இது கந்தழி. வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. வந்தது கொண்டு வாராத துணர்த்தல்1 (தொல். மரபி. 110) என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்க. முருகாற்றுப்படையுள், மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி (திருமுருகு. 71-73) என்றவழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுட்சார்த்தியவாறு காண்க. இனிப் பரவற்குச் சார்ந்து வருமாறு;---கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் என்னுங் கலிப்பாட்டினுள், அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழின் மார்பில் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயல் உறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் ஒன்று முதுகடல் உலகம் முழுவதும் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே (யாப்-விரு. 83. மேற்கோள்) என்பதனுட் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தியவாறு காண்க. பிறவும் அன்ன. (27) நச்சர் : இது தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதியிரண்டுங் கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒரு வழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய ரென்கிறது.1 (இ - ள்) கொடிநிலை---கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி---ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி---தண்கதிர்மண்டிலம்;என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்---என்று சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே---முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும் என்றவாறு. பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள் (கலி-141) என்ற வழிக் கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் மண்டிலமென்றாற் போலக் கொடிநிலை யென்பதூஉம் அப் பொருடந்ததோர் ஆகுபெயர். இனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந் நீடனிலைமை பற்றிக் கொடிநிலை யென்பாருமுளர். குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே (குறுந். 132) என்றாற்போல வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை? பன் மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடியெனப்படுதலின், அத் தொடையினை இடைவிடா துடைத்தாதலின் அதனை அப் பெயராற் கூறினார்; முத்துக்கொடியெனவும் மேகவள்ளி யெனவுங் கூறுவதுபோல. கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார். இனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள்1 அடங்காத பெண்பாற் றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள் வாழ்த்தினுட் படுவனவாயின பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை? ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமை யானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமை யானுமென்பது, அல்லதூஉம், வெண்கதிர் அமிர் தந்தேவர்க்கு வழங்கலானும் வள்ளியென்பதூஉமாம் என்பது. உதாரணம் :--- மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா னாகத்தா னீமறைய நாட்கதிரே---யோகத்தாற் காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு இது கொடிநிலை வாழ்த்து. சார்பினாற் றோன்றாது தானொருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர் இது கந்தழி வாழ்த்து. பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு---மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம் இது வள்ளி வாழ்த்து. தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை பனிக்கண்ணி சாவு படுத்துப்---பனிக்கணத் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென் றியாமுரையா நிற்கு மிடத்து இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து. (33) பாரதியார் கருத்து :--- இது, திணைகள் மக்கள் ஒழுக்கங்குறித்தே வரு மாயினும், பாடாண் வகையிலொரு சில தலைமக்கள் பாராட்டுடன் கடவுட்பராவலும் தழுவிவருமரபு கூறுகிறது. பொருள் :--- கொடிநிலை, காந்தள்; வள்ளி என்ற---கொடி நிலை காந்தள் வள்ளி என்னும் பெயருடைய; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்---போர்த்துவக்கமாம் வசையற்ற வெட்சியின் மறங்கடைக் கூட்டிய சிறப்புவகை மூன்றை முதலாகக்கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் கடவுட் பரவுதலுடன் பொருந்திவரும். குறிப்பு :--- ஈற்றேகாரம் அசை. பொதுவாகப் பாராட்டுநுதலும் பாடாணின் சிறப்புவகை மூன்று, கடவுள் வாழ்த்தைத் தழுவி வருதல் குறிக்கக் கடவுள் வாழ்த்துக்கு ஓடுக் கொடுத்துரைக்கப் பட்டது. போரைத் தொடங்குந்திணை வெட்சி, அதன் பொதுவகை ஆகோள்; சிறப்பு வகைகளுள் பாடாணாய்க் கடவுள் வாழ்த்துக் கண்ணுவன இதிற் குறித்த மூன்று மேயாதலின் முற்றும்மை கூட்டப்பட்டது. இதிற் குறித்த மூன்றும் தம்மளவில் வெட்சி வகைகள். அவற்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றே கடவுள் வாழ்த்தொடுவருமெனற்கு. முதலன மூன்றும் என்று கூறப்பட்டது. அகரமுதல எழுத் தெல்லாம் என்றதுபோல, கடவுள் கண்ணிய பாடாண்வகை இதிற்குறித்த மூன்று முதலன எனக் கொள்க. முதலன ஈண்டுக் குறிப்பு வினை; முதலாகவுடையன என விரியும். இனி, கொடிநிலை முதலிய மூன்றையு முதலன என்றது, அடிவ அமர்கொள் மரபுத்திணை எழில் முதலாய வெட்சியில் போர்த்தொடக்க முதலில் நடைபெறுவன வாதலின், என்பாருமுளர். வெட்சி வகையாய் இதிற்குறித்த கொடிநிலை முதலிய மூன்றும், அடுத்த சூத்திரம் கூறும் வஞ்சிவகைக் கொற்றவள்ளை, ஓன்றும், இங்கு முறையே அவ்வத் திணையடியாய்ப் பிறக்கும் பாடாண் வகையையே குறிக்கும் என்பதை இளம்பூரணர் நச்சினார்க்கினியரிருவரும் கூறுகின்றனர். ஆனால், இதன் முதலடியில் கொடிநிலை கந்தழி வள்ளி என்றிருவரும் பாடல் கொண்டு கந்தழிக்கு வெவ்வேறு பொருள் கூறுவர். கந்தழி என் றொன்றை எத்திணைக்கும் துறையாகத் தொல்காப்பியர் கூறிலர்; யாண்டுமதை அவர் விளக் கவுமில்லை பழைய சான்றோர் செய்யுட்களிலும் இப்பெயருடைய புறத்துறை எதுவும் பயிலாமையானும், இனைத்தென விளக்காதெனையும் வாளா பெயரளவில் சுட்டி மயங்கவைப்பது தொல்காப்பிய ரியல் பன்றாதலானும், இதில் கந்தழி என்ற பாடம் பொருந்தாமை வெளிப்படை. அன்றியும், இதில் கடவுள் கண்ணியபாடாணாய் முடியுமெனக் குறித்த மூன்றும் மறனுடைய மரபிற் போர் துவக்கும் புறவொழுக்காம் ஒரே தன்மையவென விளங்க முதலனமூன்றும் என்றொரு நிரலில் சுட்டப்படுதலானும். அவற்றுள் கொடிநிலையும் வள்ளியும் போர்த் துவக்கத்தில் நிகழும் வெட்சி வகைகளாய் முன் விளக்கப் பட்டனவாதலானும். அவற்றுடன் பொருந்த ஒருங்கு கூட்டப்படும் மற்றொன்று மலைபோலவே (இங்கு விளக்காமல்) முன் விளக்கப்பட்ட போர்த்துவக்க வெட்சிவகையாதல் வேண்டுமாதலானும், இவ்வியலில் முன் வெட்சித்துறைகளுள் முதலில் முருகக் கடவுள் வாழ்த்துடன் போர் துவக்குவதாய் விளக்கப்பட்டது. காந்தளா தலானும் அதை யிங்குச் சுட்டாது விட்டுக் கடவுள் வாழ்த்தொடு வரும் வெட்சிப் பாடாண் வகை முதலன மூன்றும் என முற்றம்மை கொடுத்து முடித்தது குன்றக்கூற லெனும் குற்றமாமாதலானும், கடவுள் வாழ்த்தொடு பாடாணாய் முடியும் வெட்சியல்லாப் பிறவஞ்சிவகைய இதன்பின் வேறு சூத்திரத்திற் கூறுதலாலிங்கு சுட்டிய மூன்றும் வெட்சிவகையாதலே முறையாதலானும், அத்தகைய வெட்சிவகை காந்தள் என்றன்றிக் கந்தழியென முன் சுட்டப்பெறாமையானும், இதிற் கந்தழியிடத்தில் காந்தளே நிற்றற்கு அமைவுடைய பாடமாதல் வேண்டும்;1 நாளடைவில் பொருட் பொருத்தங் கருதாமல் ஏடு பெயர்த்தெழுதும் பரிசால் அது சிதைந்து கந்தழி யாகி, பிறகதன் பொருத்த மாராயா துரைகாரர் தத்தமக்குத் தோற்றியவாறு பொருளுரைக்க அப்பாடமே நிலைத்தது போலும். இயற் பொருத்தம் தேராமல் கண்டாங்குக் கந்தழிப்பாடம் கொண்டவுரைகாரரும். அவருரையால் மயங்கிய பிறரும், அதன் பொருளும் பொருத்தமும் தெளிந்து துணியமுடியாமல் தம்முள் மாறுபட்டு மறுகுவ தொன்றே அப்பாடத்தியைபின்மையைத் தெளிப்பதாகும். இதை நச்சினார்க்கினியர் பாடாண் பரிசழித்து அருவான கடவுளாக்குவர் ; அது பாடாண் புறத்துறையாகாமையை ஆன்றோர் பழைய செய்யுட்களில் ஆட்சியின்மை வலியுறுத்தும் இளம்பூரணர் கந்தழியியல்பை விளக்காமல் அன்றெறிந்தானு, மெனும் வெண்பாமாலைப் பாட்டைக் காட்டியமைவர். அப்பாட்டு உழிஞை வகை யாதலொன்றே, வெட்சிவகை குறிக்குமிங்கது பொருந்தாமை துணியப் போதிய சான்றாம். இனி, (1) கொடிநிலை வெட்சிப் பாடாணாய்க்கடவுள் வாழ்த்தொடு வருதற்குச் செய்யுள் வருமாறு: 1. புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங் காலைக் கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும் போலும் (சிலப்பதிகாரம்-வேட்டுவவரி.) இதில், நிரைகருதிப் போதல் வெட்சியாதலும், அதற்குக் கொடியெடுத்து முன் செல்லுதல் கொடிநிலை யாதலும் காண்க. 2. மாற்றார் நிரைகருதி மாறன் படைமறவர் கூற்றிற் கொதித்தெழுந்தார் கோமான்சீர்---போற்றிக் கயலுயர்த்திக் கொற்றவையைக் கைதொழுதார் தங்கோண் வியனுலகை வென்றாள்க வென்று இதில், வெட்சிப் பாடாண் கடவுள் வாழ்த்தொடு மாறன் கயற் கொடிநிலை தழுவி வருதலறிக. ( )வெட்சிக் காந்தள் பாடாணாதற்குச் செய்யுள் :--- வெண்போழ் கடம்போடு குடி யின்சீர் ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்கலம் (அகம். 98) இதில், வெட்சி வகைக் காந்தளில் முருகக் கடவுள் வாழ்த்து வருதலறிக. இன்னும், கடம்பெறிந்து சூர்தடிந்த செவ்வேளின் கைவேல் மடம்பெரியள் சிற்றிடைச்சி வள்ளி---தடவிழிவேற் கஞ்சமகிழ் வோனைவெறி யாடி யயர்வோமால் பஞ்சவன்கோல் பாராள்க வென்று எனும் வெண்பாவில், முருகக் கடவுள் வாழ்த்தோடு வெட்சி வகைக் காந்தள்---பாண்டியரின் பாடாணாய் வருதல் காண்க. 3. இனி, முருகனைப் பெண்டிர் பாடிப்பரவும் வெட்சிவகை வள்ளிப் பாடாணாதற்குச் செய்யுள் :--- அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடுங்---குமரன் முன் கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையார் ஏர்க்காடுங் காளை யிவன் (நச் உரைமேற்கோள்) இதில், பெண்டிர் முருகனைப் பாடும் வள்ளி எனும் வெட்சித் துறை வருதலறிக. இனி, வள்ளிப் பாடாணாய் வருமாறு :--- பெருங்கட் சிறுகுறத்தி பின்மறுகும் சேயோன் அருங்குன்றம் பாடுதுநா மன்று---கருங்கடல்மேல் வேல்விடுத்த வேப்பந்தார் மாறன் தமிழ்வேந்தன் கோள்வளர வாழ்த்தெடுத்துக் கொண்டு இது மகளிர் முருகனைப் பாடிப் பாண்டியனைப் புகழ்ந்து பரவுதலால், வள்ளிப் பாடாணாதலறிக. ஆய்வுரை நூற்பா.27. இது, பாடாண்திணைப்பகுதிகளுள் போர்வீரர்கண்ணே பொருந்தும் துறைகள் சிலவற்றுக்கு உரியதோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) வேந்தர் வெற்றிகுறித்து எடுத்த கொடியின் சிறப்புணர்த்தும் கொடி நிலையும், பகைவேந்தர்க்குப் பற்றுக் கோடாகவுள்ள அரணையழித்தலாகிய கந்தழியும், வேந்தற்கு வெற்றி வேண்டியாடும் வள்ளிக்கூத்தும் எனப் போர்த் தொடக்கத்தின் முன்னர் வைத்து எண்ணத்தக்க குற்றமற்ற சிறப்புடைய இப்புறத் துறைகள் மூன்றும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருங்காலத்து முற்குறித்த செந்துறை வண்ணப்பகுதியாகிய கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் எ-று. கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் எனத்தொல்காப்பியனார் கூறியது கொண்டு, அரி,அயன், அரன் என்னும் முத்தேவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்து அரசனது கொடியைப் புகழ்வது கொடி நிலையென்றும், திருமால் சோ என்னும் அரணையழித்த வெற்றியைச் சிறப்பிப்பது கந்தழியென்றும், மகளிர் முருகனை வழிபட்டு வெறியாடுவது வள்ளியென்றும், துறைவிளக்கம் கூறினார் ஐயனாரிதனார். இம்மூன்றனுள் முதலிரண்டு துறைகளுக்கும் அவரியற்றிய வெண்பாமாலைப் பாடல்களை உதாரணமாகக் காட்டினார் இளம்பூரணர், வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க என வரைந்து, இம்மூன்று துறைகளுக்கும் ஐயனாரிதனார் கூறிய விளக்கங்களை அவ்வாறே ஏற்றுக்கொண்டுள்ளார். இனி கொடிநிலையென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலை பெற்றுத்தோன்றும் வெஞ்சுடர் மண்டிலமாகிய ஞாயிறு எனவும், கந்தழி என்பது ஒருபற்றுக்கோடுமின்றி அருவாய்த்தானேநிற்குந் தத்துவங்கடந்த பொருள் எனவும், வள்ளி என்பது தேவர்க்கு அமிர்தம் வழங்குந் தண்கதிர் மண்டிலமாகிய திங்கள் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மூன்றனுள் கந்தழி என்பதற்கு அவர்கூறும் இலக்கணம் கடவுளுக்கேயுரிய சிறப்புடைய தாதலால் அதுவே கடவுள் வாழ்த்தாவதன்றிக் கடவுள் வாழ்த்தினைச் சார்ந்துவரும் வேறொரு புறத்துறையென அதனைக் கொள்ளுதற்கில்லை. ஞாயிறுந் திங்களுமே கூறுவது தொல் காப்பியனார் கருத்தாயின் ஞாயிறு திங்கள் சொல்லனவரூஉம் (தொல்-கிளவி) என்றாற்போன்று எல்லார்க்கும் புலனாகும் இயற்சொல்லால் ஞாயிற்றையும் திங்களையும் வழங்குவதன்றிக் கொடிநிலை, வள்ளி எனத் தாம் கருதியபொருள் பலர்க்கும் புலனாகாத நிலையில் வைத்துக் கூறமாட்டார். எனவே கொடிநிலை முதலிய மூன்றற்கும் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மேற்குறித்த நச்சினார்க்கினியர் விளக்கத்தை அடி யொற்றிக் கொடிநிலையை ஞாயிறு எனவும் வள்ளியைத் திங்கள் எனவும் கந்தழி என்பதற்குத் தான் பற்றி நின்றதனை யழிக்கும் தீயெனவும் பொருள் கூறி இம்மூன்றும் முத்தீவழிபாட்டினைக் குறிக்கு மென்றார் மறைமலையடிகளார். கொடிநிலை என்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெறு தலையுடைய மேகத்தையும், கந்தழி என்பது பற்றற்றாராகிய நீத்தாரையும், வள்ளியென்பது வண்மைபற்றி நிகழும் அறத்தையும் குறிப்பன எனக்கொண்டு, இம்மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் என்றும், இம்முறையிலேயே திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரங்கள் வைக்கப்பெற்றன என்றும் கூறுவர் அறிஞர் மு. இராகவையங்கார். சிலப்பதிகார மங்கல வாழ்த்துப்பாடலில், திங்களைப்போற்றுதும், ஞாயிறு போற்றறுதும், மாமழை போற்றுதும் எனவரும் வாழ்த்துப் பாடல்களைக் கூர்ந்து நோக்குங்கால் மேற்குறித்த ஞாயிறு திங்கள் என்னும் இரு சுடர் வணக்கத்துடன் இயைத்துரைக் கப்படும். வள்ளி என்பதற்குக் கைம்மாறு கருதாது மன்னுயிர்கள் நலம்பெறப் பொழியும் மாமழையெனப் பொருள் கொள்ளுதலே பொருத்தமுடைய தாகும் என்பது மற்றொரு விளக்கமாகும். இனி முதலனமூன்றும் என்றமையால், கொடிநிலை முதலிய துறைகள் மூன்றும் இவ்வியலின் முதற்கண் சொல்லப் பட்டன வாதல் வேண்டும் என்றும் கந்தழி என்னுஞ்சொல் தொல்காப்பியத்தில் இவ்வோரிடத்திலன்றிப் பிறவிடங்களில் எங்கும் இடம் பெறாமையானும் கொடிநிலை வள்ளி என்பவற்றையடுத்து முதலிற் கூறப்படாமையானும், இச்சொல் பழைய தமிழ்நூல்களில் யாண்டும் காணப்படாமையானும் வெறிய சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என ஆசிரியர் முன்னர் வெட்சித்திணையிற் குறித்த காந்தள் என்பதே ஏடெழுதுவோராற் கந்தழி எனத் தவறாகத் திரிந் தெழுதப்பட்டதென்றும் முன்னர் மறங்கடைக்கூட்டியகுடிநிலை எனவரும் புறத்திணையியற் சூத்திரத்தில் இளம்பூரணர் கொண்ட குடிநிலை என்ற பாடம் கொடிநிலை என்றே வழங்கிவந்து பின் ஏடெழுதுவோரால் குடிநிலை எனவும் துடிநிலை எனவும் திரித்தெழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்றும், எனவே, கொடிநிலை காந்தள் வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலனமூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதே இந்நூற்பாவின் திருந்திய பாடம் என்றும் கொண்டு அதற்கேற்பப் பொருள் வரைந்து உதாரணங்காட்டுவர் நாவலர் பாரதியார். முதலனமூன்றும் என்ற தொடர், இவ்வியலின் முதற்கண் கூறப்பட்ட மூன்றும் என்ற பொருளிலன்றிப் பாடாண்திணைக் குரிய புறத்திணைத் துறைகளில் முதலிடம் பெறத்தக்கனவாகிய மூன்றும் என்ற கருத்திலேயே இங்கு ஆளப்பெற்றது என்பது. இளம்பூரணர் நச்சினார்க்கினியர் உரைகளால் நன்கு விளங்கும். முற்படக்கிளந்த எழுதிணையென்ப என்னும் அகத்திணையியல் நூற்பாவும் இங்கு நோக்கற்பாலதாகும். இத்தொடர்க்கு இவ்வியலின் முதற்கண் சொல்லப்பட்ட மூன்றும் எனப் பொருள் கொள்ளின் கொடிநிலை என்ற துறை முற்பகுதிகளில் இடம்பெறவில்லை. அதுபோலவே கந்தழியும் இடம் பெற வில்லை. வள்ளி என்னுந் துறையினைப் போன்று அவையிரண்டும் முன்னர்க்கூறப்பட்டிருத்தல்வேண்டும் என்ற துணிவுடன் முன் கூறப்பட்ட குடிநிலையைக் கொடிநிலையெனவும் கந்தழியைக் காந்தள் எனவும் திருத்துதல் முன்னோர் கூறிவரும் உரைமரபுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. கந்து என்னும் சொல் பற்றுக்கோடு என்னும் பொருளில் வழங்குதல் கடிமரந்தடிதல் ஓம்பு நின், நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே (புறம்-57) எனவும் காதன்மை காந்தா அறிவறியார்த்தேறுதல் (திருக்குறள்-507) எனவும் வருந்தொடர்களால் இனிது விளங்கும். தொல்காப்பியனார் கூறிய முறையே கொடிநிலை கந்தழி வள்ளி என்ற மூன்று துறைகளுக்கும் விளக்கம் கூறவந்த ஐயனாரிதனார், கந்தழி என்பதனையே துறைப்பெயராகக் கொண்டு விளக்கந் தருதலால், கந்தழி என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்று வழங்கும் தொன்மையுடையதென்பதும், அச் சொல் கந்து-அழி-கந்தழி என இருசொற்புணர்ச்சியாய் ஒட்டி ஒரு சொல்லாய்நின்று, பற்றுக்கோட்டினையழித்தல் என்ற பொருளில் பகைவர்க்குப் பற்றுக்கோடாகிய அரணையழித்த பெருந்திறலைக் குறிக்கும் புறத்துறையின் பெயராய் வழங்குவ தென்பதும், இத்துறையில் புலவர்பாடும் பாடாண்திணைப் பாடல்களில், மாயோனாகிய காத்தற் கடவுள் சோ என்னும் அரணையழித்த பேராற்றலும் இணைத்துப் போற்றப்படுதலால் அத்துறை கடவுள் வாழ்த்தொடு பொருந்திய நிலையினை யுடையதாயிற்று என்பதும் இங்கு உய்த்துணரத்தக்கனவாம். வந்ததுகொண்டு வாராதது முடித்தல் என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்திவருமெனவும் கொள்க முருகாற்றுப்படையுள், மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி (திருமுருகா-71-73) என்ற வழி ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட்சார்த்தியவாறு காண்க. இனிப் பரவற்குச் சார்த்து வருமாறு கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் (யா. வி. 83 மேற்கோள்) என்னுங் கலிப்பாவினுள் அடுதிறலொருவநிற் பரவுதும் எங்கோள் தொடுகழற் கொடும்பூண் பட்டெழின் மார்பிற் பயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் தொன்று முதுகட லுலக முழுவதும் புரி திகிரி யுருட்டுவோ னெனவே என்பதனுள் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தியவாறு காண்க. பிறவும் அன்ன, எனவரும் இளம்பூரணர் உரைப்பகுதி, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றுமேயன்றிப் பிற துறைகளும் பாட்டுடைத் தலைவர்களை வாழ்த்தும்வழிக் கடவுள்வாழ்த் தொடு கலந்து வருதற்குரியன என்னும் வழக்கியல் மரபினை நன்கு புலப்படுத்தல் காணலாம். மாற்றாரை வென்றுயர்த்த கொடியின் சிறப்புணர்த்தும் கொடிநிலையென்ற துறையும், மாற்றாரது அரணையழித்த வெற்றித் திறத்தைக் குறிக்கும் கந்தழி என்னுந்துறையும், தறுகண் மையினால் போருடற்றிய வீரர்க்கும் பரிசிலர்க்கும் வரையாது வழங்குதலாகிய மாறா வண்மையைக் குறிக்கும் வள்ளி என்னுந் துறையும் பாட்டுடைத்தலைவரொடு இயைத்துப் பாடப்பெறும் நிலையில் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என்பதே இந் நூற்பாவின் பொருளாகக் கொள்ளுதல் பொருத்த முடையதாகும். பாட்டுடைத் தலைவரது ஊக்கம் நிலைபெறக் கொடி நிலையும், மாற்றாரை வெல்லும் உறுதி நிலைபெறக் கந்தழியும், தம் கீழ்வாழ்வார்க்கு வரையாது வழங்கும் வண்மை நிலைபெற வள்ளியும் ஆகிய துறைகளிற் பாடாண்பாட்டுப் பாடுங்கால் அவர்தம் வழிபடு தெய்வத்தின் திருவருளை வேண்டி வாழ்த்துதல் பாடாண் மரபு என்பதனை வற்புறுத்துவதே இந்நூற்பாவின் கருத்தாதல் உய்த்துணரத்தகுவதாகும். 28. கொற்ற வள்ளை ஓரிடத் தான. இளம் : இது, பாடாண்திணைக்கு உரியதொரு பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கொற்றவள்ளை ஓர் இடத்து ஆன - கொற்ற வள்ளையும் ஓர் இடத்துப் பாடாண்பாட்டாம். என்றது, துறைகூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயின் பாடாண்திணையாம் என்றவாறு.1 உதாரணம் வல்லாராயினும்...........fªjh‰whnt” புறம்-57 நச்சர் : இஃது எய்தாதது எய்துவித்தது; தேவர்க்கும் உரியவாம் ஒரு சார்அப் பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின். (இ-ள்.) கொற்றவள்ளை---அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய் வெட்சி முதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை; ஓரிடத்தான்---மேற்கூறி நின்ற தேவர் பகுதிக் கண்ணதன்றி அவரின் வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது என்றவாறு. எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்றிளைஞருங் கூளிச்சுற்றமும் ஒன்றனை eச்சிப்òகழ்ந்துtளாதேTறுதலும்,<ண்டுக்Tறுகின்றbகாற்றவள்ளைòலவன்xன்றனைeச்சிbவட்சிKதலியVழனானும்òகழ்ந்துiரத்தலுமாயிற்wதலிற்‘படையியங்fரவம்(தொல்-புறத்âணை.3) முதலாக வஞ்சியிற் குன்றாச்சிறப்பிற் கொற்றவள்ளை யீறாகக் கிடந்த பொருட்பகுதியெல்லாம் பாடாண் டிணையாகப் பாடுங்கான் மக்கட்கே யுரிய என்பதூஉம், உழிஞை முதலிய வற்றைப் பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப உரியவென்பதூஉங் கூறுதலாயிற்று.1 என்னை? அரசியலாற் போர்குறித்து நிரைகோடலும் மீட்டலும் மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க் கேலாமையாயினும், அவுணரான் முற்றப்பட்டதுறக்கத்தினை அகத்துழிஞை யரணாக்கி மனுவழித் தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல் வனவும்2 பிறவுந் தேவர்க்குக் கூறுதலான் அவரும் மதின் முற்றிய வழிப் போர் தோன்றுதலும் ஆண்டு வென்றியெய்துதலும் உடையராதலின் பாடாண் பொருட்கும் உரியாரென நேர்பட்டது. இச் சூத்திரம் மக்கட்கெய்திய பொருண்மையை மீட்டுங்கூறி நியமித்ததாம்; ஆகவே, வெட்சி முதல் வஞ்சியிற் கொற்றவள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக் குரியராகி இடைபுகுந்த தேவர்க் காகவென விதிவகையான் விலக்கியதாம் எனவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்பதூ உங் கூறினாராயிற்று. கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க. உதாரணம் :--- மாவடியபுல நாஞ்சிலாடா......... நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே. (பதிற்று 25) இது புலவன் பொருணர்ச்சிக் கூறலிற் பாடாண்கொற்ற வள்ளை, வல்லாராயினும் வல்லுந ராயினும் காலனுங் காலம் என்னும் (57, 41) புறப்பாட்டுக்களும் அது. பாரதியார் கருத்து :--- கடவுள் வாழ்த்துக் கண்ணிய பாடாணாகும் வெட்சிவகை மூன்றை மேற் சூத்திரம் குறித்தது. இது, வஞ்சிவகைக் கொற்ற வள்ளையும் ஓரோவழிக் fடவுள்tழ்த்தொடுgடாணாமெனக்Tறுகிறது.bghUŸ :--- வெளிப்படை. குறிப்பு :--- முன் சூத்திரம் சுட்டும் வெட்சி வகை மூன்றும் பாடாணாங்கால் எப்போதும் கடவுள் கண்ணியே வரும். அவை போலாது வஞ்சிவகைக் கொற்றவள்ளை பாடாணாங்கால் ஓரோ விடத்து மட்டும் கடவுள் வாழ்த்தைத் தழுவி வரும். எனவே, வள்ளை கடவுள் வாழ்த்தின்றி மக்கள் சீர்த்திமட்டுஞ் சுட்டிப் பாடாணாய் வரும் பெற்றியதென்பது பெறப்படும். திணைவேறு பாட்டோடு இத்தன்மை வேறுபாடுடைமையாலும் வள்ளை மற்ற வெட்சி வகை மூன்று போலப் போர்க்கு முன்னிகழாமல் தொடங்கியபின் நிகழ்வதாலுமவற்றோடு சேர்க்காமல் பிரித்திதனைத் தனி வேறு நூற்பாவில் விளக்க நேர்ந்தது. புறம் 7-ஆம் பாடல் வஞ்சிவகைக் கொற்றவள்ளை; கரிகாற் சோழன் போர்ச்செலவின் புகழும் அவன் பகைவர் நாடழிவின் பரிவுங் கூறுதலாற் கடவுள் கண்ணா வஞ்சிப்பாடாணாயிற்று. இனிக் கொற்றவள்ளை, கடவுள் கண்ணிய பாடாணாதற்குச் செய்யுள் :--- நேரார் நிலமழிய நீள்மதிலூர் தாமெரியப் போர்மேல் வழுதிபடை போவதற்குக்---கார்குறுதும் நெற்றி விழியோனை நேர்ந்தவன்றாள் பாடுதுநாம் கொற்றந் தரவுலக்கை கொண்டு இதில் கண்ணுதற் கடவுளை வாழ்த்திப் போர்மேற் செல்லும் பாண்டியன் தமிழ்ப் படையைப் பாராட்டி நெற்குறும் பெண்டிர் பாடுதலாலிது வள்ளைப் பாடாணாதலறிக. ஆய்வுரை நூற்பா. 28 இதுவும் பாடாண்திணையிற் கடவுள்வாழ்த்தொடு விர விவருதற்குரிய பொருள் கூறுகின்றது. (இ-ள்) குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை என முன் வஞ்சித்திணைக்குரியதாகச் சொல்லப்பட்ட கொற்றவள்ளை என்னுந்துறையும் ஒரோவழிக் கடவுள்வாழ்த்தொடு பொருந்திப் பாடாண்பாட்டாய் வரும். எ-று. இந்நூற்பாவுக்கு கொற்றவள்ளையும் ஓரிடத்துப் பாடாண் பாட்டாம் எனப்பொருள் வரைந்த என்றது, துறை கூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயின் பாடாணாம் என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். மன்னவன் புகழ்கிளந்தும் ஒன்னார் நாட்டின் அழிவுக்கு இரங்கியும் பாடப்பெறும் கொற்றவள்ளைப் பாடல், ஒரோவழிக் கடவுள்வாழ்த்தொடு பொருந்திவரும் என்பது இந்நூற்பாவின் பொருளாகும். பகைவர் நாடழிவிற்கு இரங்கும் துன்பியலிடத் திலன்றி மன்னவனது புகழ்கிளக்கும் இன்பியலிடமாகிய ஓரிடத்திலேயே கடவுள் வாழ்த்துப் பொருந்திவரும் என்பார் கொற்றவள்ளை ஓரிடத்தான என்றார் ஆசிரியர் எனக் கொள்ளுதல் பொருந்தும். கொற்றவள்ளை கடவுள் வாழ்த்தொடு பொருந்திப் பாடாண் பாட்டாய் வருதற்கு நேரார் நிலமழிய என்ற செய்யுளை உதாரணமாகக் காட்டுவர் நாவலர் பாரதியார். 29. கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் அடுத்தூர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்தும் சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும் கண்படை கண்ணிய கண்படை நிலையும் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலை நோக்கிய1 விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉவும்2 ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் உளவென மொழிப. இளம் : இது, பாடாண் திணைக்குத் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல் முதலாக வேலை நோக்கிய விளக்கு நிலை ஈறாகச் சொல்லப் பட்டனவும், வாயுறை வாழ்த்து முதலாகக் கைக்கிளை உளப் பட்ட நால்வகையும் பாடாண்திணைக்குத் துறையாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் என்றது, கொடுப்போர் ஏத்தல் எனவும், கொடார்ப் பழித்தல் எனவும், கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் மூவகைப்படும். இதனாற் பெற்றது, ஈவோரைப் புகழ்தலும், ஈயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு. அடுத்து ஊர்ந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்-வென்றியும் குணனும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும். அஃது இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல் மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும். சேய்வரல் வருத்தம் வீட வாயில்காவலர்க்கு உரைத்த கடை நிலையும்1 சேய்மைக்கண்ணின்று வருகின்ற வருத்தம் தீர வாயில் காவலர்க்கு உரைத்த வாயில் நிலையும். கண்படை கண்ணிய கண்படை நிலையும்2-இறைவன் கண் படை நிலையைக் குறித்த கண்படை நிலையும். என்றது, அரசன் இனிது துயின்றது கூறல் என்றவாறாம். கபிலை1 கண்ணிய வேள்விநிலையும்-கபிலையைக் குறித்த வேள்விநிலையும். வேலை நோக்கிய2 விளக்குநிலையும் - வேலினைக் குறித்த விளக்கு நிலையும். நோக்குதலாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல். வாயுறை வாழ்த்தும் - வெஞ்சொல்லைப் பிரித்தலின்றிப் பிற்பயக்குமென்று வேம்பும் கடுவும்போல ஓம்படைக் கிளவியாலே மெய்யுறக் கூறுதலும்.3 வாயுறை வாழ்த்தின் இலக்கணம் வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழி நனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. (தொல். செய்யு. 108) செவியறிவுறூவும்-உயர்ந்தோர்மாட்டு அவிந்து ஒழுகுதல் வேண்டும் எனச் செவியறிவுறுத்துக் கூறுதலும். செவியுறையின் இலக்கணம் செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தற்றே. (தொல். செய்யு. 110) ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்-மன்னன் இடத்ததாகி வரும் புறநிலை வாழ்த்தும். அது, வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே (தொல். செய்யு. 106) என்பதனால், இனிது வாழ்மின் என்னும் பொருள்மேல் வரும். கைக்கிளை வகையொடு-ஆண்பாற்கூற்றுக் கைக்கிளையும் பெண்பாற்கூற்றுக் கைக்கிளையும். இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு. உளப்பட தொகைஇ தொக்க நான்கும் உள என மொழிப உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் (முன்னையவும் இத்திணைக்கு) உள என மொழிப. நச்சர் : 29 இது முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட் பாடாண்டிணைக் குரிய துறை கூறுகின்றது. (இ-ள்.) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்--- பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக்கூறிய பிறர்க்கீயாதாரை இழித்துக் கூறலும்; சான்றோர்க்குப் பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்கதன் றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர் பயன்படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக்கூறலின் இவர்க்கு இங்ஙனம் கூறுதல் தக்கதாயிற்று.1 இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க. அடுத்து ஊர்ந்து எத்திய இயன்மொழி வாழ்த்தும்---தலை வனெதிர்சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன் மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்; என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக் குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும், அன்னோர்போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும் உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த் தாயிற்று. இதனை உம்மைத் தொகையாக்கி இயன் மொழியும் வாழ்த்து மென இரண்டாக்கிக்கொள்க. இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலாலும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று. இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வணிக னாயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென வாங்குப் பட்டன் றவன்கைவண் மையே. (புறம் - 134) இது பிறருஞ் சான்றோர் சென்ற நெறி யென்றமையின் அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட வரு வனவெல்லாம் இதன்கண் அடக்குக. சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த கடை நிலையானும்---சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்தீர வாயில் காக்கின்றவனுக்கு என வரவினை இசையெனக் கூறிக் கடைக்கணின்ற கடைநிலையும்; இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும் பாடாண்டலைவனதே துறையென்பது பெற்றாம். இழிந்தோரெல்லாந் தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் (தொல்- பொரு-புற 36) என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்.1 இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலில் பரிசில் கடாயதின்றாம். ஆன்; அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்தலு மொன்று. கண்படை கண்ணிய கண்படைநிலையும்---அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத்து வரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறிய கண்படை நிலையும்; கண்படை கண்ணிய என்றார், கண்படை முடிபொருளாக இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு. கபிலை கண்ணிய வேள்வி நிலையும்---சேதாவினைக் கொடுக்கக் கருதிய கொடைநிலை கூறுதலும்; இது வரையா ஈகையன்றி இன்னலுற்றாற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறுநாட் காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறினார். கண்ணிய என்றதனாற் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுங் கொள்க. பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச்---சென்னிதன் மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த் தானுலக மண்ணுலகா மன்று. வேலின் ஓக்கிய விளக்கு நிலையும்1---வேலும் வேற்றலையும் விலங்காதோங்கியவாறு போலக் கோலோடு விளக்கும் ஒன்று பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும். இன்: உவமப்பொருள் இது கார்த்திகைத் திங்களிற் கார்த் திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழுமேலும் வலமுமிடமுந் திரிபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்து விட்டெழுந்ததென்று அறிவோராக்கங் கூறப்படுவதாம். வேலின் வெற்றியை நோக்கிநின்ற விளக்குநிலையெனப் பொருள் கூறி. வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி (புறப்-வெ. மாலை-பாடாண். 12) என்பது காட்டுவாரும் உளர். அவர் இதனை நிச்சம் இடுகின்ற விளக்கென்பர். வாயுறை வாழ்த்தும்---வாயுறைவாழ்த்தே...nt«ò§fLî«’ என்னும் (112) செய்யுளியற் சூத்திரப்பொருளை உரைக்க. இதற்கு2 ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவுங் கைக்கிளைப்புறனாகிய பாடாணாயிற்று. செவியுறைக்கும் இஃதொக்கும். உதாரணம் :--- எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய1 முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயோ ராகலி னின்னொன்று மொழிவ லருளு மன்பு நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (புறம்-5) இதனுள் நிரயங் கொள்வாரோ டொன்றாது காவலை யோம் பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக்கூறி அவற்கு உறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்று. காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும்2 பன்னாட் காகு (புறம்-184) என்னும் புறப்பாட்டும் அது. தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகை களுக்கு நூலாகலின், அவர் சூத்திரப்பொருளாகத் துறை கூற வேண்டுமென்றுணர்க. செவியுறைதானே (தொல்-பொ-செ-114) என்னும் சூத்திரப் பொருண்மை இவ்வுதாரணங்கட்கு இன்மை உணர்க.3 செவியறிவுறூஉம்---இதற்குச் செவியுறை தானே என்னும் செய்யுளியற் (114) சூத்திரப் பொருளை உரைக்க. ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவுங் கூறுமாறு போல உறுவும் உறூஉதலெனவும் உறூஉவெனவுங் கூறப்படும். வடாஅது பனிபடு நெடுவரை வடக்கு (புறம்-6) இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையுங் கூறினான். செவியுறைப் பொருள் சிறப்புடைத்தென்று அவன் கருதி வாழ்தல் வேண்டி. ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்---தெய்வ வழிபாடு உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித்தோன்றும் பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்; தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாதற்கு ஆவயின் வரூஉம் என்றார்.1 இதற்கு வழி படு தெய்வம் என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க. இதுவுந் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தால் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார் கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று. கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇ-மேற் 2காமப் பகுதியென்ற கைக்கிளையல்லாத கைக்கிளையின் பகுதியோடே வாயுறை வாழ்த்துஞ் செவியறிவுறூஉம் புற நிலைவாழ்த்துங்கூட நான்காகிய தொகைபெற்ற நான்கும்; வாயுறை வாழ்த்து முதலிய மூன்றுந் தத்தம் இலக்கணத் திற்றிரிவுபடா; இக் கைக்கிளை திரிவுபடுமென்றற்கு எண்ணும் மையான் உடனோதாது உளப்படவென வேறுபடுத்தோதினார். அகத்திணையியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், காமஞ் சாலா இளமையோள்வயிற் (தொல்-பொ-அகத்-50) கைக்கிளையும், முன்னைய நான்கும் (தொல்-பொ-அகத்-52) என்ற கைக்கிளையும், காமப்பகுதி (தொல்-பொ-புறம்-28) என்ற கைக்கிளையும், களவியலுண் முன்னைய மூன்றும் (தொல்-பொ-கள-14) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோராயினும் பிறராயினுங் கூறுதற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் கடைநிலைக் காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனால் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் திரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக் காலத்துத் தான் குறித்து முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ் செய்து இன்பமின்றி யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று. உதாரணம் :--- அருளா யாதலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண் கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப வினைத லானா ளாக விளையோய் கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றெழுதனம் வினவக் காந்தண் முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி யெம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேக னொல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே. (புறம்-144) இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப்பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு. கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென வினவ, யாங் கிளையல்லேம் முல்லை வேலி நல்லூர்க்கண்ணே வருமென்று சொல்வாளெனக் கூறுதலின், அஃது ஏனைக் கைக்கிளைகளின் வேறாயிற்று. கன்முழை யருவி என்னும் (147) புறப்பாட்டும் அது. தொக்க நான்கும் உள என மொழிப---அந்நான்கும் முற்கூறிய ஆறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக் கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. தொக்க நான் கென்றதனான் இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉம் கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றோடு உடன்கூறாராயினார்; அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (35) பாரதியார் 29 கருத்து :--- இது, முன் பாடாண் பகுதி---நாடுங்காலை நாலிரண்டுடைத்து எனச் சுட்டிய பாடாண் வகைப் பொருள் எட்டினியலும் பெயரும் கூறுகிறது.1 பொருள் :--- (1) கொடுபபோரேத்தி---கொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தலும்: குறிப்பு :--- இதில் ஏத்தி எனுமெச்சத்தை ஏத்தல் வினை எனப் பெயராக்கி வேறு பிரித்தெண்ணல் வேண்டும்; வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடைந்துடன் மாணட தரசு எனுங் குறளில், ஐந்தெனும் எண்கருதிக் கற்றறிதலைக் கற்றலும் அறிதலுமாகப் பிரித்தெண்ணியதுபோல இதற்குச் செய்யுள், பாரி பாரி யென்று பல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனு மல்லன்; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே (புறம்-107) பொருள் : (2) கொடாஅர்ப் பழித்தலும்-பற்றுள்ளத்தால் ஈயாதி வறியாரை இகழ்தலும்: குறிப்பு :--- ஈயார் பழியும் ஈவோர் புகழாமாதலின் அதுவும் பாடாணாயிற்று. புறம் 151-ல், ஈயாவிச்சிக்கோவை யிகழ்ந்து ஈயும் கண்டீரக் கோவைப் புகழ்வதறிக. இரவலர்புரவலை நீயுமல்லை என வெளிமானைப்பழித்த பெருஞ்சித்திரனார் புறப்பாட்டும் (162), ஒல்லுவதொல்லும் என்று நன்மாறனைப் பழித்த மூலங்கிழார் புறப்பாட்டும் (196) இவ்வகையின. பொருள் :--- (3) அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும்---நெருங்கிய பொருந்திப் புகழும் இயன்மொழி வாழ்த்தென்னும் துறையும்; குறிப்பு :--- உள்ளசால் புரைப்பது இயன்மொழி பிற் காலத்திது மெய்க்கீர்த்தி எனப்பட்டது. இன்னும், குறத்தி மாட்டிய எனும் கபிலர் புறப்பாட்டும் (108) பாரியை அவரடுத்தூர்ந்தேத்தியதாம். இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட் டன்றவன் கைவண்மையே (புறம்-134) என்பதும் அது. பொருள் :--- (4) சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க்குரைத்த கடைநிலையானும்---நெடுந்தொலைவழி நடந்த வருத்தம் நீங்கப் புரவலர் தலைக்கடைக்காவலரிடம் இரவலர் கூறும் கடைநிலையும்; குறிப்பு :--- இதில், ஆன் அசை. பொருள் : (5) கண்படை கண்ணிய கண்படை நிலையும்--- இரவலன் உறக்கங் கருதிக் கூறும் கண் படை நிலை எனுந் துறையும்; பொருள் :--- (6) கபிலைகண்ணிய வேள்விநிலையும்---கபிலை நிறஞ்சிறந்த ஆவைக்கருதிய வேள்வி நிலையும்; குறிப்பு :--- இதில், கபிலை என்பது அந்நிறமுடைய பசுவுக்கு ஆகுபெயர், இதனை ஆக்கொடை என்பர் பழைய உரை காரரிருவரும். புறம்-166-ல் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் காட்டுப்பசு ஏழுவகை நாட்டுப்பசு ஏழுவகை யாகப் பதினாலுவகைப் பசுவால் வேட்ட புகழை மூலங்கிழார் குறித்தல் காண்க. இது பார்ப்பன வாகைப்பாடாண். பொருள் :--- (7) வேலினோக்கிய விளக்குநிலையும்---மறத்தால் காத்து அறத்தா லோச்சும் செங்கோல் மாட்சி விளங்கும் விளக்குநிலை என்னுந் துறையும்; குறிப்பு :--- இதில், ஓக்கிய என்பது ஓச்சிய என்பதன் மரூஉ. இனி, வேலைநோக்கிய விளக்குநிலை எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அதுவுமிப்பொருளே குறிப்பதாகும். இரு ளொழித்து ஒளியுதவும் விளக்குப்போல நாட்டில் வேந்தர் வேலும் கோலும் தீதகற்றி நலம் தருவதை விளக்குந்துறை என்பது கருத்து. வேல் காவற்கும், கோல் முறை செய்தற்கும் ஆகு பெயர்கள். இதற்குச் செய்யுள் வருமாறு :--- இருமுந்நீர்க் குட்டமும் எனும் புறப்பாட்டில் (20) செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே ... ... ... ... ... ... ... ... பகைவ ருண்ணா அருமண் ணினையே ... . ... ... ... ... ...... அறந் துஞ்சுஞ் செங்கோ லையே; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினை. என வருவது இத்துறை. இன்னும், நெல்லுமுயிரன்றே எனும் மோசிகீரனார் பாட்டும் (புறம். 186) நாடா கொன்றோ? எனும் ஔவை புறப்பாட்டும் (187) இத்துறையே குறிப்பன. பொருள் :--- (8) வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்---வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, அவற்றுடன் ஒருங்கெண்ணப்பட்டு வரும் புற நிலை வாழ்த்து, எனும் வாழ்த்தியல் வகை மூன்றும்: கைக்கிளை வகையோடுளப்படத் தொகைஇத் தொக்க நான்கும்--- (புரைதீர் செந்திறக்) கைக்கிளை வகையாய்ப் பாடாணா வனவோடுஞ் சேரக்கூட்டி, முன்னேழும்போற்றனிநிலையின்றி இனம்தொக்கு வரும் தொகைப் பரிசாலொத்த இந்நான்கும்; உள என மொழிப-முன்னேழோடும் சேர்த்தெட்டாவதுபாடாண் வகையாய் எண்ணுதற்குள்ளன என்பர் புறநூற் புலவர். குறிப்பு :--- இந்நூற்பாவில் வரும் உம்மைகள் எல்லாம் எண் குறிப்பன. செய்யுளியலில் புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ எனத் திறநிலை மூன்றும் சேர்த்தெண்ணப் பெறுவதையும், கைக்கிளைச் செய்யுள், செவியறி, வாயுறை, புறநிலை, என்றிவை தொகுநிலை என்றொரு பரிசாய்ச்சேர்ந்து வருவதையும் செய்யுளியலிற் கண்டு தெளிக. இந்நான்கும் ஒருங்கே தொகு நிலைகளாவதானும், ஒரு பரிசாய்ப் பாடாணாதற்குரியவை யாதலானும், அவற்றை ஒருங்கே கூட்டி எட்டாவது வகையாயிதிலெண்ணப்பட்டன. இதற்குமாறாயிவற்றைப் பிரித்துத் தனித்தனியே நான்காக்கி, ஏத்தலையும் பழித்தலையும் ஒன்றாக்கி, முன்கூறிய ஆறனோடேபத்தாய்ப் பாடாண் திணைக்குரிய துறைகள் உள என்பர் நச்சினார்க்கினியர். பாடாண் துறைகள் இதற்கடுத்த நூற்பாவில் கூறப்பெறு வதாலும் மற்றப் புறத்திணைகளுக்குரிய துறைகளையெல்லாம் சேர்த்தொவ்வொரு நூற்பாவிலமைப்பதும், வெட்சி, உழிஞை போன்ற சில திணைகளின் சிறப்புவகைகளை மட்டும் வேறொரு சூத்திரமாக்குவதும் தொல்காப்பியர் கொண்டாளு முறையாதலாலும், இதில் கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளன்றித் துறைகளாகாமை தெளிவாகும். இன்னும், பாடாண் நாடுங்காலை நாலிரண்டு (சிறப்பு வகை) யுடைத் தென முன்னே ஏழைத் தனித்தனி எண்ணிவிட்டு இறுதியிலொரு பரிசான இந்நான்கை உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் உள எனப் பிரித்து வேறு கூறியதாலும், இது பாடாணின் சிறப்பு வகை எட்டையே சுட்டுவது தேற்றமாகும். ஏத்தலும் பழித்தலும் வெவ்வேறு பரிசுடைமைமேற்காட்டிய சான்றோர் செய்யுட் களாலறிவதாலும் அது பொருந்தாமை தெளிவாகும். இன்னும் முன் நாலிரண்டுடைத்து என்பதைத் திணைவகையின்றித் துறைகளையே சுட்டுவதாய்க் கொள்ளின், இதிலும் இதையடுத்த சூத்திரத்தும் முறையே கூறப்பெறுவன தனித்தனியே எட்டிறந்தனவாமாதலானும் அதுபொருந்தாமை ஒருதலை. அதனாலுமது தொல்காப்பியர் கருத்தாகாது. ஆய்வுரை நூற்பா. 29 இது, பாடாண்டிணைக்குரிய துறைகளை விரித்துரைக் கின்றது. (இ-ள்) இரவலர் பரிசிலர் முதலியோர்க்கு வேண்டுவன கொடுக்கும் வண்மையாளரைப் புகழ்ந்து அங்ஙனம் வரையாது வழங்கும் உள்ளமில்லாத இவறன்மையாளரைப் பழித்தலும், புலவர்பாடும் புகழுடையவர்களை நெருங்கி முந்துற்று அவர்தம் வென்றியும் கொடைத்திறனும் முதலிய நல்லியல்புகளை எடுத்து மொழிந்து உளமுவந்து வாழ்த்தும் இயன்மொழிவாழ்த்தும், பரிசிலர் நெடுந்தூரத்திலிருந்து வருகின்ற தமது வருத்தம் நீங்க (வள்ளலது முற்றத்தைக் காக்கும்) வாயில் காவலர்க்கு உரைத் தலாகிய வாயில்நிலையும், பாட்டுடைத் தலைவர் இனிய துயில் கொள்ளுதலைக் கருதிய கண்படைநிலையும், அத்தலைவர்கள் அந்தணர் முதலியோர்க்குப் பசுக்களைக் கொடுத்தலைக்கருதிய வேள்விநிலையும், (பாட்டுடைத் தலைவரது) வேலின் வெற்றியைக் குறித்துச் சுடர்விட்டெரியும் விளக்கினது நிலையினைக் கூறுதலும், (பின்னர்ப் பயன்விளைக்கும் என்னும் நல்ல நோக்குடன் வேம்பும் கடுவும்போல வெஞ்சொல்லினைப் பிரித்தலின்றிப் பாதுகாத்தற் சொல்லாற் கூறும்) வாயுறை வாழ்த்தும், (உயர்ந்தோன்பால் அடங்கியொழுகுதல் வேண்டும் எனச்) செவியறிவுறுத்துக்கூறும் செவியறிவுறூஉம், (பாட்டுடைத் தலைவரை வாழ்த்துதற்கண் அவர்தம் வழிபடு தெய்வத்தைப் புறத்தே காவலாக நிறுத்தி வாழ்த்தும்) புறநிலை வாழ்த்தும் (ஆடவர் மகளிராகிய இரு பாலாரிடத்தும் தோன்றும்) ஒருதலைக் காமமாகிய கைக்கிளை வகையும் என முற்கூறியவற்றுடன் தொகுத்துரைக்கப்படும் நான்கும்( ஆகிய பத்துத் துறைகளும்) பாடாண்டிணைக்குரியவாக உள்ளன எனக்கூறுவர் ஆசிரியர். எ-று. கொடுப்போரேத்திக் கொடாஅர்ப்பழித்தல் என்பதனைக் கொடுப்போர் ஏத்தல், கொடாஅர்ப்பழித்தல், கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப்பழித்தல் என மூவகைத் துறைகளாகக் கொள்வர் இளம்பூரணர். இதனாற் பெற்றது ஈவோரைப் புகழ்தலும் ஈயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு என்பது அவர் கருத்து இவ்வாறே, இயன்மொழி வாழ்த்து என்பதனையும் இயன் மொழி, வாழ்த்து, இயன்மொழி வாழ்த்து என மூன்றாகப் பகுத்துத் தனித்தனி யுதாரணங்காட்டுவர் இளம்பூரணர். கண் படை---கண்ணிமைகள் தம்முட் பொருந்துதல்; துயில்கொள்ளுதல் பாட்டுடைத் தலைவன் இனிது துயில் கொள்ளுதலைக்கூறுவது கண்படைநிலை என்னும் துறையாகும். கபிலை---பசு. கண்ணுதல் ---கருதுதல்; கருதி வழங்குதலாகிய கொடைத்தொழிலைக் குறித்தது, வேல்---அரசர்க்கு வென்றிதரும் வேலாகிய படைக் கலம். மாசூர்ந்து மயங்கி அவியாது நின்றெரியும் விளக்கினது சுடர்நிலை நோக்கி அதுகாரணமாக மன்னனது வேலின் வெற்றி இனிது புலனாதலைக் கூறி மன்னனை வாழ்த்துதலால் வேலை நோக்கிய விளக்குநிலை என்றார் ஆசிரியர் வேலை நோக்குதலாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல் என விளக்குவர் இளம்பூரணர். வேலினோக்கிய விளக்குநிலை என்பது நச்சினார்க்கினியர் உரையிற் கண்ட பாடமாகும். வாயுறை வாழ்த்தாவது வேம்பினையும் கடுவினையும் போன்ற கடுஞ்சொற்களைத் தடுத்தலின்றி, எதிர்காலத்திற் பெரும்பயன் விளைக்கும் என்ற நல்ல நோக்கத்துடன் பாதுகாவற் சொல்லால் மெய்யறிவித்தலாகும். செவியறிவுறூஉவாவது, பெரியோர் நடுவண் பெருக்கமின்றிப் பணிந்து ஒழுகுதல் கடன் என அறிவுறுத்துவதாகும். புறநிலை வாழ்த்தாவது, நின்னால் வழிபடப்பெறுந் தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந்தீர்ந்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துவதாகும். கைக்கிளை---ஒருமருங்கு பற்றிய கேண்மை; அஃதாவது காதற்கேண்மையினை விரும்புதற்குரிய ஒருவன் ஒருத்தி என்னும் இருவருள் ஒருவரிடத்தேமட்டும் வெளிப்பட்டுத் தோன்றும் காமவுணர்வு. இஃது ஒருதலைக்காமம் எனவும் வழங்கப்படும். இவ்வுணர்வு ஆண், பெண் இருதிறத்தார்கண்ணும் தனித்தனியே அரும்பித் தோன்றுதலின் இவ்விருதிறமும் அடங்கக் கைக்கிளை வகை என்றார் ஆசிரியர். இவ்விருதிறக் கைக்கிளையையும் புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளைப் படலத்தில் ஆண்பாற் கூற்று பெண்பாற்கூற்று என ஐயனாரிதனார் விரித்துக் கூறியுள்ளமை காணலாம். 30. தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயில்எடை நிலையும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக் கமும் சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங் கலமும் சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும் மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும் மன்எயில் அழித்த மண்ணுமங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலங் கண்ணிய ஓம்படை உளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றோடு கண்ணிய வருமே. இளம் : இதுவும் அது (இ-ள்) துயிலெடைநிலை முதலாகப் பரிசில் விடை ஈறாகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட்ட உலக வழக்கின் அறியும் மூன்று காலமும்பற்றி வரும் பாடாண்திணை என்றவாறு. கிடந்தோர்க்கு தாவில் நல்இசை கருதிய சூதர் ஏத்திய துயில் எடை நிலையும்-கிடந்தோர்க்குக் கேடு இல்லாத நற்புகழைப் பொருந்தவேண்டிச் சூதர் ஏத்திய துயில் எடை நிலையும்.1 கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத்2 தோன்றிப் பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிரச்3 சொன்ன பக்கமும்-கூத்தராயினும் பாணராயினும் பொருநராயினும் விறலியாயினும் நெறியிடைக் காட்சிக் கண்ணே எதிர்த்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளன் நுமக்குப் பெறலாகும் எனவும் சொன்ன பக்கமும். பக்கமும் என்றதினான். ஆற்றினது அருமையும் அவன் ஊரது பண்பும் கூறப்படும். அவற்றுள், சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெரு மங்கலமும்---சிறந்த நாட்கண் உண்டாகிய செற்றத்தை நீக்கிப்பிறந்த நாட்கண் உளதாகிய பெருமங்கலமும். சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்4-ஆண்டுதோறும் முடிபுனையும் வழி நிகழும் மிகப்புண்ணிய நீராட்டு மங்கலமும். இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்---ஒழுக்கத்தை மிகுத்து ஏத்தப்பட்ட குடை நிழல் மரபு கூறுதலும். மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும்-பகைவரைக் கருதிய வாள்மங்கலமும். மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும்1- நிலைபெற்ற எயிலை அழித்த மண்ணு நீராடு மங்கலமும். இஃது உழிஞைப் படலத்துக் கூறப்பட்ட தாயினும் மண்ணு நீராடுதலின் இதற்கும் துறையாயிற்று. இவ்வாறு செய்தனை எனப் புகழ்ச்சிக்கண் வருவது பாடாண் திணையாம். இவ்வுரை மறத்துரை ஏழற்கும்2 ஒக்கும். உதாரணம் வந்தவழிக் காண்க. பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்-பரிசில் கடாவுதலாகிய கடைக்கூட்டு நிலையும். இன்னும் இதனானே, பரிசில்பெறப் போகல் வேண்டு மென்னும் குறிப்பும் கொள்க. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்கவளனை ஏத்தி வழக்கின்கண் தோன்றிய இருவகைவிடையும். அவையாவன, தான் போதல்வேண்டும் எனக் கூறுதலும் அரசன் விடுப்பப் போதலும். இருவகை விடையும் என்றதனால், பரிசில் பெற்றவழிக் கூறுதலும் பெயர்ந்தவழிக் கூறுதலும் ஆம், அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலம் கண்ணிய ஒம்படை-அச்சமும் உவகையும் ஒழிவு இன்றி நாளானும் புள்ளானும் பிற நிமித்தத்தானும் காலத்தைக் குறித்த ஓம்படையும். அச்சமாவது, தீமை வரும் என்று அஞ்சுதல். உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல். நாளாவது, நன்னாள் தீநாள், புள்ளாவன, ஆந்தை முதலியன. பிற நிமித்தமாவன, அலகு முதலாயின. காலங் கண்ணுதலாவது, வருங்காலங் குறித்தல். உதாரணம் ஆடியல் அழற்குட்டத்து (புறம்-229) என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது. ... ... ... ... ... ... .. . ... ... ... ... ......òJ¥òŸ வரினும் பழம்புள் போகினும் விதுப்புறல் அறியா ஏமக் காப்பினை அனையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே (புறம்-20) என்பது புள்பற்றி வந்தது. காலனுங் காலம் பார்க்கும் (புறம்-41) என்னும் புறப்பாட்டு, நிமித்தம் பற்றி வந்தது. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் (புறம்-195) என்பது ஓம்படை பற்றி வந்தது. உளப்படஞாலத்து வரும் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றோடு கண்ணிய வருமே-இவை உளப்படத் தோன்றும் வழக்கினது கருத்தினானே காலம் மூன்றனொடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்திணை. (30) இரண்டாவது புறத்திணை இயல் முற்றிற்று. நச்சர் : 30 இதுவும் அது. (இ-ள்) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்1---தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்; கிடந்தோர்க் கெனப் பன்மை கூறவே, அவர் துயிலெடுப்புத் தொன்று தொட்டு வருமென்பதூஉஞ், சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகர் முதலாயினோருட்1 சூதரே இங்ஙனம் வீரத்தால் துயின்றாரைத் துயிலெடுப்புவரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையும் Tறப்படுமென்பதூஉங்bகாள்க.mt® அங்ஙனந்துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம் உளதாயிற்று. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்---ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியுமென்னும் நாற்பாலாருந் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறு மாறு கூறிய கூறுபாடும்; கூத்தராயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற் றொழிற்கு உரியோர்களும் பாரதிவிருத்தியும் விலக்கியற்கூத்தங் கானகக்கூத்துங் கழாய்க் கூத்தும்2 ஆடுபவராகச் சாதிவரையறை யிலராகலின் அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந்தத்தஞ் சாதியில் திரியாது வருதலிற் சேரவைத்தார்; முற்கூறிய முப்பாலோருடன் கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின் கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்; அது விறலாகலின் அவ் விறல்பட ஆடுவாளை விறலியென்றார். இவளுக்குஞ் சாதிவரையறை யின்மையிற் பின்வைத்தார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் பண்டைப்பாணருமெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதொரு தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாகலின் விறலியென ஒருமையாற் கூறினார். ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்னபக்கமும்---இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத் தோன்று கையினாலே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்து பெறாதார்க்கு இன்ன விடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும்; பக்கமென்றதனானே அச் செய்யுட்களைக் கூத்தராற்றுப் படை பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப் படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கூறுதலுங் கொள்க. கூத்தராற்றுப்படை தடுமாறு தொழிலாகாமற்1 கூத்தரை ஆற்றுப் படுத்தென விரிக்க. ஏனையவும் அன்ன. முருகாற்றுப்படையுட் புலம்பிரிந் துறையுஞ்சேவடி யெனக் கந்தழி கூறி, நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்பப் பெறுதி யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறலரும் பரிசி னல்கும் எனவுங் கூறி, ஆண்டுத் தான் பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓரிர வலனை ஆற்றுப்படுத்ததென்பது பொருளாகக் கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமை யுணர்க. இனி இசைப்புலவர்க்கும் நாடகப்புலவர்க்கும் இங்ஙனங் கூறலமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத் தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின். நாளணி செற்ற நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெரு மங்கலமும்---நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியும்; அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறைசெய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன. சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலையொழிதலும் இறைதவிர்த்தலுந்1 தானஞ்செய்தலும் வேண்டின கொடுத்தலும் பிறவுமாம். மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்ப. ஆகு பெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணியாயிற்று. உதாரணம் :--- அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்திரம்போன் மாண்ட களிறூர்ந்தா---ரெந்தை யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. (முத்தொள்ளாயிரம்-82) இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற் றென்றலின் வெள்ளணியாயிற்று. செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ---சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம். இது சிறைவிடுதல் கூறிற்று. கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின்---நண்ணாதீர் தேர்வேந்தன் றென்னன் றிருவுத் திராடநாட் போர்வேந்தன் பூச லிலன். (முத்தொள்ளாயிரம்-7) இது செருவொழிந்தது. ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதயநா---ளாமாறு காம நுகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல் இதனுள் இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெரு மங்கல மென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க. சிறந்த சீர்த்தி மண்ணும் மங்கலமும்---அரசர்க்குச் சிறப் பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும். இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார் பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென்றற்கு குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தோடு கூடிய மண்ணு மங்கலமுங் கொள்க. இதனானே யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் நாண்மங்கலமும் பெறுதும்.1 நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும்---உலகவொழுக் கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக் கணமும்; இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந் நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடிபுறங்காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின். மரபென்றதனாற் செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க.1 உதாரணம் :--- மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமா---வெங்கணு முற்றுநீர் வைய முழுது நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை (முத்தொள்ளாயிரம்-62) என வரும். அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும்---பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை எனவும், ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேள் வளவ (புறம்-35) எனவும், திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான் (சிலப்-மங்கல) எனவும், திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி (சிலப்-கானல்வரி) ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதுங் காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். (சிலப்-மங்கல) எனவும் இவை குடையையும் செங்கோலையுந் திகிரியையும் புனைந்தன. மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும்-பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்; இது பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் வென்ற வாளின் மண் (புறத்திணை-13) ணென்பதனில் வேறாயிற்று.1 புகழ்ச்சிக்கட் பகைவரை இகழ்ந்து புகழ்தலின் மாணார்ச்சுட்டிய என்றார். இது பாணியிற் பயின்றுவரும். மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தி1 மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுமங்கலமும்; அழித்ததனான் மண்ணுமங்கலம் உதாரணம் :--- கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில். (புறம்-15) என எயிலழித்தவாறு கூறி, வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட (புறம்-15) எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க. குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமையின் இதனின் வேறாயிற்று. பரிசில் கடைஇய நிலையும்---பரிசிலரை நீக்குதலமையாது நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித் தான் குறித்த பொருண்மை யினைச் செலுத்திக் கடாவின நிலையும்; கடைக் கூட்டு நிலையும்---வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலையும்; 2 இதுவும் இழிந்தோர் கூற்றாயிற்று, இருத்தலே3 அன்றிக் கடாவுதலின். நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டு மென்னுங் குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றும்4 இருவகை விடையும்---அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக்கூறி உலக வழக்கியலால் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடையும்; இருவகையாவன, தலைவன், தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம். யரும்பட ரவ்வ முழந்ததன் றலையே தென்பரவர் மிடல்சாய (புறம்-378) இது தானே போவென விடுத்தபின் அவன் கொடுத்தவளனை உயர்த்துக் கூறியது. உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக வல்லே யகறி ரோவெம் மாயம் விட்டெனச் சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றரத்தர யானு மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மைதீர வந்தனென் (பத்துப்-பொருநராற்-119-29) இது யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக்கூறியது. நடைவயின் தோன்று மென்றதனாற் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில் பெற்றுவந்து காட்டிப் போகலும், இடை நிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. உதாரணம் :--- ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிது மீத லெளிதே மாவண் டோன்ற லதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறம்-121) இது சிறிதென்ற விடை. இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்ல ரிரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வல் யானே (புறம்-162) இது பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை. வேழம் வீழ்த்த வீழுத்தொடைப் பகழி என்னும் (152) புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது. நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங் கடும்பின் கடும்பசி தீர யாழநின் னெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கு மின்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயு மெல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் றிருந்துவேற் குமண னல்கிய வளனே (புறம்-993) இது மனைவிக்குக் கூறியது. நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலங்கண்ணிய ஓம்படை உளப்பட---நாணிமித்தத் தானும் புண்ணிமித்தத்தானும் பிறவற்றினிமித்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்டு அஞ்சிய அச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவன் முற்கூறியவற்றோடே கூட; ஒருவன் பிறந்த நாள்வயின் ஏனைநாள்பற்றிப் பொருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடிய வழி அவன் நாண்மீனிடைத் தீதுபிறத்தலும், வீழ்மீன் தீண்டிய வழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின் கண் தோன்றிய நிமித்தம். 1புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும் பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின் கண் தோன்றிய நிமித்தம்; ஓர்த்து நின்றுழிக்கேட்ட வாய்ப் புள்ளும் ஓரிக்குர லுள்ளிட்டனவுங் கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளை தோன்றுதலுந் தண் சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம்.2 உவகை. அன்பு இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஓம்படை கூறுதலின் அது காலங்கண்ணிய ஓம்படையாயிற்று. எஞ்ஞான்றுந் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவற்கு இன்னாங்கு1 வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின்றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று. நெல்லரியு மிருந்தொழுவர் என்னும் (24) புறப் பாட்டினுள் நின்று நிலைஇயர்நின் னாண்மீன் என அவனாளிற்கு முற் கூறியவாற்றான் ஓரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது. உதாரணம் : அடிய லழற்குட்டத்து (புறம் -229) இதனுட் பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமை பற்றிக் கூறியது. இருமுந்நீர்க் குட்டமும் இப் புறப்பாட்டும் அது. புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்ட தீங்கின் பயன் நின்மேல் வாராமல் விதுப்புறவறியா ஏமக் காப்பினையாக என்று ஓம்படை கூறியது, அதுமேல் நின்னஞ்சுமென்று அச்சங் கூறி வெளிப்படுத்ததனான் உணர்க. மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும், என்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலு மளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல்புளிப்பினும் பகலிருளினு நாஅல்வேத நெறிதிரியினுந் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யந்தீ யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும்போன்றே (புறம் - 2) என்னும் புறப்பாட்டுப் பகைநிலத்தரசற்குப்1 பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் ஓம்படை வாழ்த்தாயிற்று. காலனுங் காலம் என்னும் (41) புறப்பாட்டும் அது. ஞாலத்து வரூஉம் நடக்கையது2 குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே---உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத்தினானே மூன்று காலத்தோடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற் கூறிவருகின்ற பாடாண்டிணை என்றவாறு என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமைபற்றி வேறுபடு மாயின், அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுணர்த்திய வாறு. அவை, பகைவர் நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல் நிகழினும், அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும் பொருள் வருவாய்பற்றிச் சேறலும், வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு; மாற்றரசன் முற்றியவழி ஆற்றாதோன் அடைத்திருத்தலும், அரசியலாயினும் அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவர வேண்டியிருத்தலும்,ஆற்றலன்றி ஆக்கங் கருதாது காத்தே யிருத்தலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு. இனி வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க.1 காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க.2 உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும்பற்றி இது பாடாண்டிணையுட் கூறினார். எல்லாத் திணைக்கும் புறனடையாதல் வேண்டி இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடை கடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக்கோடலும் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.3 முற்கூறியன வெல்லாம் ஒம்படையுளப்படக் கண்ணிய வரு மென்பது. (36) இரண்டாவது புறத்திணையியற்கு ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகைமுடிந்தது பாரதியார் 30 கருத்து :--- இது, பாடாண்துறை கூறுகிறது. பொருள் :--- (1) கிடந்தோர்க்குத் தாவினல்லிசை கருதிய சூதரேத்திய துயிலெடை நிலையும்-துயிலும் புரவலர்க்குப் புரைபடா அவர் நல்ல புகழைக் கருதிக் கட்டியங் கூறுவோர் எடுத்துரைக்கும் துயிலெடை என்னும் பள்ளி எழுச்சியும்; (2) கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்---கூத்தர் முதலிய நால்வகை இரவலரும்; (கூத்தர், பிறரொப்புக் கருதாது. பேசாமல் பாடாமல் மெய்ப்பாட்டால் அவிநயித்தாடுபவர். பாணர் இசைபாடுவோர்; இவர் தம் பாட்டும் கையாளுமிசைக் கருவியுங் கருதி, இசைப்பாணர் யாழ்ப்பாணர்---துடிப்பாணர் அதாவது மண்டைப் பாணர்---எனப் பலதிறப்படுவர்; யாழ்ப்பாணர் தம் யாழ்பற்றிச் சீறியாழ்ப்பாணர் அல்லது சிறுபாணர்---பேரியாழ்ப்பாணர் அல்லது பெரும் பாணர் என்றிருவகையினராவர். இனி, பொருநராவார் நாடகத்தில் குறித்த ஒருவரைப் போல நடிப்பவர். (பொருந்---ஒப்பு) விறலி, இசைக்கேற்ப ஆடுபவள் (வில்---உள்ளுணர்வை மெய்படக் காட்டுந் திறன். அதிதிறலுடையார் விறலியர்.) ஆற்றிடைக்காட்சி உறழத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீச்இச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்-(பரிசில் பெற்று மீளுமொருவன் தன்னெதிரே பரிசில் விரும்பித் தரும்புரவலரைத் தேடிவரும் இரவலனுக்கு) வழியிடையில்தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை மற்றவனுக்குத் தெரிவித்துத், தனக்களித்த புரவலன்பாற் சென்றுபெறச் சொல்லும் பகுதியும்) இதில், கூத்தராற்றுப்படைக்குமலைபடுகடாமும், பாணராற்றுப் படைக்குச் சிறுபாண்---பெரும்பாண் பாட்டுக்களும், பொருநராற்றுப்படைக்கு முடத்தாமக் கண்ணியார் கரிகாலனைப் பாடிய பொருநராற்றுப்படைச் செய்யுளும், விறலியாற்றுப் படைக்குப் புறநானூற்று 105,33---பாட்டுக்களும் எடுத்துக்காட்டாகும். (3) சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நாள் வயிற் பெருமங்கலமும்---பிறந்த வெள்ளணி நன்னாளில் சினமகற்றிச் சிறந்த பெருநாள் விழவயரும் பெருமங்கலம் என்னும் வெள்ளணி விழாவும்; (பெருமங்கலம்--- வெள்ளணி என்னும் பிறந்த நாள் விழா. அந்நாளில் வெள்ளையணிதலால்,அஃதப்பெயர் பெற்றது. இகழும் பகைவரைக் கறுத்தலும் தவறு செய்தாரை ஒறுத்தலும் வெள்ளணி விழாவொடு கொள்ளாத சினமாதலின் அவற்றை விலக்கிச், சிறைவீடு கொடை முதலிய சிறந்தன செய்வதே முறையாதலிதிற் சுட்டப்படுந்துறையாகும்.) (4) சிறந்த கீர்த்தி மண்ணு மங்கலமும்---முடிபுனைந்த விழவின் நீராட்டு மங்கலமும்: (வடநூல்களிலும் இது, பட்டாபிசேக உத்சவம் எனப் பாராட்டப்படுகிறது.) (5) நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும்---உலகிய லொழுக்குயர்த்தும் புகழ்பெற்ற வேந்தனது குளிர்ந்த குடைநிழல் முறைமையும். (6) மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும்-பகைவர் பால் கொற்றங்கருதிக் கொண்டாடும் வாள்நீராட்டு மங்கலவிழாவும்; (7) மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும்-நீண்டு நிலைத்த பகையரணெறிந்து பாழ்செய்து நீராடும் மறவிழவும்; (முன் உழிஞைத்துறையாகச் சுட்டிய இகன் மதிற்குடுமி கொண்ட மண்ணுமங்கலம் கணிலையழியாது கைப்பற்றிய விழவாம்; இப்பாடாண்துறை, பற்றாது பகையர ணெறிந் தழித்துப் பாழ்செய்த களியாட்டைக் குறிப்பதால் இது முன்னதின்வேறாதல் வெளிப்படை. இங்கு மங்கலம் மகிழ் கூரும் விழவைக் குறிக்கும். மண்ணு விழவெல்லாம் விழவயர்வார் நீராடித் தொடங்குமரபு பற்றிய குறிப்பு: எனவே, விழவுகள் மண்ணுமங்கல மெனப்பெறுதலறிக.) (8) பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்---இரவலர் புரவலன் தலைவாயிலை யணுகிப் புகழ்ந்து பரிசில் கேட்கும் பெற்றியும் : (கடைக்கூட்டு---தலைக்கடை சேர்தல். கடைஇய என்பது கடாவிய என்பதன் செய்யுட் சொல்; கடாவல்---கேட்டல்) (9) பெற்றபின்னரும் பெருவளனேத்தி நடைவயிற் றோன்றும் இருவகை விடையும்---பரிசில் பெற்றபின்னும் (பெறு முன் ஏத்தியது போலவே) பெற்றோன் ஈந்தோனை மீக்கூறிப் புகழ்ந்து இரவலன் தானே விடைவேண்டலும் அவனுக்குப் புரவலன் விடைதரலும் ஆகிய உலகவழக்கில் பயின்றுவருமிரு வகை விடைகளும்; பொருநராற்றப்படை வரி 118---129 இவ்வடிகளில், பரிசிலன் பன்னாள் கரிகாற் புரவலனோடிருந்து, தனதூர்செல்வ விடை கேட்க அவன் பிரிவுக்கு வருந்திப் பின்னும் அவன் வறுமையும் வேட்கையும் தீர ஈந்தனுப்பியது கூறுதலால் இது இரவலன் விடை கேட்குந் துறையாதல் காண்க. (10) அச்சமும் உவகையும் எச்சமின்றி நாளும் புள்ளும் பிறவற்றினிமித்தமும் காலங்கண்ணிய ஓம்படை உளப்பட நன்னாளும் நல்லகுறி (வாய்ப்புள்) நற்சொல் (விரிச்சி) முதலிய மற்றைய வாய்ப்புக்களும் கொண்டு, தலைவனுக்கு நேரும் தீமைக்கச்சமும் நன்மைக்கு மகிழ்வும் கூர்ந்து கவனக்குறைவின்றி ஆய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக்கூறும் வாழ்த்தடங்க; புறம் 41-ல் உற்கமுதலியன பகைவருக்குத் தீது சுட்டும் வாய்ப்புள் (உற்பாதம்) அவற்றை நோக்கிப் பகைவர்மேற் கிள்ளிபடையெடுத்துச் செல்ல அவன்பகைவர் அஞ்சித் தத்தம் புதல்வரை முத்திமனக்கலக்கத்தைமனைவிமார்க்கு மறைப்பர். அந்நிலையிற் காற்றுக்கூடிய நெருப்புப்போல் அவன் தகை வாரின்றி விரைந்து சென்று வென்று வீறெய்தப் பகைவர்நாடு பெருங்கலக்குறும் என்று, அவன் வென்றிப் புகழும் அவன் மாற்றார் நாடழிபிரக்கமும் கூறுதலால் இது கொற்றவள்ளைப் பாடாணாயிற்று. மண்திணிந்த நிலனும் எனும் புறப்பாட்டில், பாஅல் புளிப்பி னும்பக லிருளினும் ... ... ... ... ... ... நடுக்கின்றி நிலீயரோ வத்தை, அடுக்கத்து ... ... ... ... ... ... பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (புறம்-2) எனவருவது பாடாண் திணையில் ஓம்படையுள்ளிட்ட வாழ்த்துத் துறையாகும். ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் காலமூன்றோடு கண்ணியவருமே---உலகியலில் வரும் ஒழுக்க நோக்கால் முக்காலமுந் தழுவிப் பாடாண் துறைகள் வரும். குறிப்பு :--- இந்நூற்பாவில் வரும் உம்மைகள் எண் குறிப்பன. பக்கம் என்பது இசை நிரப்ப நின்றது ஈற்றேகாரம் அசை. இதிற்கூறப்படுந் துறைகள் எல்லாம் பலதிறப்பட்ட புறத்திணை களுக்குரியவெனினும், அவை அவ்வத்திணைப் பொரு ளோடமை யாது தலைவன் புகழ் பரவல்களாயும் வருதலால் பாடாண் துறைகளாய் முடிகின்றன. அதனாலவை முன் பிற திணைகளோடு கூறினும் ஆங்குவேறு பொருணோக்குடைமையின், இங்கவை கூறியன கூறும் குற்றமாகாமை தேறப்படும். ஆய்வுரை நூற்பா.30 இதுவும் அது, பாட்டுடைத் தலைவர் பலர்க்கும் பொதுவாகவுரிய பாடாண்திணைத் துறைகளை முன்னைச் சூத்திரத்தில் விரித்துக் கூறிய ஆசிரியர்,நாடாளுந் தலைவர்களாகிய மன்னர்க்கே சிறப்புரிமையுடைய பாடாண்திணைத்துறைகளை இச்சூத்திரத்தால் விரித்துரைக்கின்றார். ஆதலின் இதுவும் அது எனக் கருத்துரை வரைந்தார் இளம்பூரணர். (இ-ள்) குற்றமில்லாத நல்ல புகழைப் பெறுதற்குரிய செயல்களைக் கருதி நிறைவேற்றும் நிலையில் தறுகண்மை யுணர்வுடன் துயில் கொண்டிருந்த அரசரைச் சூதர் ஏத்தி எழுப்பிய துயிலெடை நிலையாகிய பள்ளியெழுச்சியும், ஆடல் மாந்தராகிய கூத்தரும் இசைபாடுதலில் வல்லபாணரும் (ஒருவரைப்போன்று ஒத்து நடித்தலில் வல்ல) பொருநரும் (எண்வகைச் சுவையும் குறிப்பும் புலப்பட ஆடுதலில் வல்ல) விறலியும் வழியிடையே தம்மினத்தாரை எதிர்ப்பட்ட காலத்துத் தாம் பெற்றுள்ள பெருவளத்தாலும் பசியடநின்ற அவரது வறுமைத்துயராலும் தம்முள் மாறுபட்ட தோற்றத்தினராய்த் தோன்றிய நிலையில், வள்ளலிடத்துப் பரிசில் பெற்ற பெருவளமுடையோர். அங்ஙனம் பெறாதாரை நோக்கி, இன்ன வள்ளலிடத்துச் சென்றால் யாம் பெற்ற பெருவளத்தினை நீவிரும் பெறலாம் என அறிவுறுத்தி, அவர்களும் தாம் சென்ற நெறியிற் சென்று பயன்பெறும் வண்ணம் சொல்லி ஆற்றுப் படுத்தின பகுதியும் (வேந்தன் பகைவர் திறத்துத்தான்) நாள் தோறும் கொண்டுள்ள செற்றத்தைநீக்கித் தான் பிறந்த சிறப்புடைய நாளிலே கொண்டாடுதற்குரிய வெள்ளணி விழாவாகிய நாண்மங்கலமும், (தான் முடி புனைந்த தன்னாளை ஆண்டுதோறும் கொண்டாடும் நிலையில் நிகழும்) மிகு புகழாற் சிறந்த புண்ணிய நன்னீராட்டு மங்கலமும். (குடிமக்களது) நல்லொழுக்க வாழ்க்கையினை உயர்த்துப் புகழ்தற்குக் காரணமாகிய அரசனது (செங்கோல் முறைமையாகிய) குடை நிழல் மரபும், மாட்சிமையில்லாத பகைவரை வென்றடக்குதல் கருதி அரசனது வாட்படையினை நீராட்டி வழிபடுதலாகிய வாண் மங்கலமும், பகைமன்னரது நிலை பெற்ற மதிலையழித்து நீராடும் மண்ணுமங்கலமும், (கூத்தர் பாணர் முதலிய பரிசிலர் தத்தம் பதிகட்கு விரைந்து செல்லும் வேட்கையினராய்த் தாம் பெறுதற்குரிய) பரிசிற்பொருளை வினவி நிற்றலாகிய கடைக் கூட்டு நிலையும், பரிசில் பெற்ற பின்னரும் தாம் பெற்றுள்ள மிக்க வளங்களைப் பாராட்டி (த் தம்மூர்க்குப்) போதல் வேண்டும் எனக் கூறித் தாமே விடை பெற்றுச் செல்லுதலும் மன்னனால் விடையளிக்கப்பெற்றுச் செல்லுதலும் என) உலக நடையிற் காணப்படும் இருவகை விடையும், நாளும் பறவையும் பிறவுமாக உலகியலிற் குறிக்கப்படும் பல்வேறு நிமித்தங்களாற் பாட்டுடைத் தலைவற்குத் தோன்றவிருக்கும் தீமைகளைக் கருதிய நிலையில் தம்முள்ளத்தே தோன்றும் அச்சமும் நன்மைகளைக் கருதிய நிலையில் தோன்றும் உவகையும் நீங்குதலின்றிச் சென்ற காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆகிய முக்காலத்தும் தீங்கின்றி வாழ்தல்வேண்டும் என வாழ்த்தும் ஓம்படையும் உட்பட இவ்வுலகத்து நிலைபெற்றுவரும் உலகியலொழுக லாற்றினையுளங் கொண்ட புலவரது மனக்குறிப்பினாலே இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தொடும் பொருந்தக் கருதும் வண்ணம் அமைந்ததுறைகள் பாடாண்திணைக்கு உரியவாக வரும். எ-று. நல்லிசை என்றது நல்ல புகழைப் பெறுதற்குரிய செயலை கருதிய---செய்தல் வேண்டி; செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். கருதுதல்---ஆராய்ந்து முடித்தல். கிடைத்தல்- துயிலல். சூதர்--- நின்றேத்துவோர். துயிலெடை---துயிலினின்றும் எழுப்புதல்; பள்ளியெழுச்சி, நடை---உலகியலொழுகலாறு. கண் ணுதல் -கருதுதல். ஓம்படை---தீங்கின்றிப் பாதுகாத்தும் கருத்துடன் கூறப்படும் உரை. நடக்கை---உலக்க நடை . குறிப்பு என்றது பாடும் புலவரது உளக்குறிப்பினை. காலம் மூன்றொடும் கருதி வருதலாவது, சென்றகாலத்துத்திறமும் நிகழ்காலத்து நிலைமையும் எதிர்காலத்துச் சிறப்பும் அமையப் பாடப்பெற்று வருதல். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணை ஏழற்கும் புறனாய் நிகழும் புறத்திணைகள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை காஞ்சி,பாடாண் என ஏழுதிணைகளாகப் பகுத்துரைத்தார். பின்வந்த பன்னிருபடலமுடையாரும் அதன் வழிநூல் செய்த ஐயனாரிதனாரும் பகைவரது நாட்டின் ஆனிரையைக் கவர்தல் வெட்சி, அந்நிரையினைமீட்டல் கரந்தை, பகைவர் நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, தம்மேல் வந்த பகைவர் சேனையை எதிர்நின்று தடுத்து நிறுத்தல் காஞ்சி, தம்முடைய மதிலைப் பகைவர் கைப்பற்றாதவாறு காத்துக்கொள்ளுதல் உழிஞை, இருதிறப் படைகளும், ஒரு களத்து எதிர் எதிர் நின்று பொருதல் தும்பை, பகைவரைப் போரில் வெல்லுதல் வாகை, மேற்குறித்த திணைகட்கெல்லாம் பொதுவாயுள்ள செயல்வகைகள் பொதுவியல், அகத்தின் வழுவிய ஒருதலைக்காமம் கைக்கிளை, ஒவ்வாக்காமம் பெருந்திணை என இவ்வாறு பன்னிரு பகுதிகளாகப் புறத்திணையைப் பகுத்துரைத்தனர். இப்பன்னிரண்டனுள் முதலனவாகிய வெட்சி முதலாகவுள்ள ஏழும் புறம் எனவும், இறுதியிலுள்ள கைக்கிளை பெருந்திணை இரண்டும் அகப்புறம் எனவும், இடையிலுள்ள வாகை, பாடாண், பொதுவியல் என்ற மூன்றும் புறப்புறம் எனவும் பகுத்துரைக்கப் பெற்றன. தொல்காப்பியனார் காலத்துக்குப் பன்னூறாண்டுகள் பிறபட்டுத் தோன்றிய இப்பகுப்பு முறையினைத் தொல்காப்பியனார் காலத்தில் வழங்கிய தொன்மையுடையதாக நிலை நிறுத்தும் நோக்கத்துடன் பிற்காலத்தில் இயற்றப்பெற்ற புறத்திணையிலக் கணம் பன்னிருபடலம் என்பதாகும். வெட்சிப் படலம் முதல் பெருந்திணைப்படலம் ஈறாகப் பன்னிரு படலங்களின் தொகுப்பாக அமைந்த இந்நூல் அகத்தியர்க்கு மாணாக்கர்களாகிய தொல் காப்பியனார் முதலிய பன்னிருவராலும் முறையே ஒவ்வொரு படலமாக இயற்றிச் சேர்க்கப் பெற்றதென்றும், பன்னிரு படலத்துள் முதற்கண்ணுள்ள வெட்சிப் படலத்தை இயற்றியவர் அகத்தியர்க்கு முதல் மாணவராகிய தொல்காப்பியனார் என்றும் கதை புனைந்து வழங்கப்பெறுவதாயிற்று. இஃது உண்மை வரலாறு அன்று. பிற்காலத்திற் புனைந்துரைக்கப்பட்ட கதையே என்பதனையுணர்ந்த தொல்காப்பிய முதலுரை யாசிரியராகிய இளம்பூரணர் பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியனார் செய்ததன்று எனத் தெளிவாகக் கூறி இக்கதையை மறுத்துள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். அகத்திணையேழின் புறனாகிய புறத்திணைகளும் ஏழெனக் கொள்ளுதலே அகம் புறம் எனப் பகுத்த பண்டைத் தமிழியல் நூலார் திணைப்பகுப்புக்கு ஏற்புடையதாகும் எனவும் அதற்கு மாறாகப் புறத்திணைகள் பன்னிரண்டு எனக் கொள்ளுதல் பொருந்தாது எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். எனினும் தொல்காப்பியத்தின் வழி நூல் செய்யப்புகுந்த பிற்கால இலக்கண ஆசிரியர்கள், முன்னோர் நூலின் வழி மருங்கு ஒத்துப் பின்னோன்வேண்டும் விகற்பங்கூறல் என்னும் வழிநூல் சார்புநூல் இலக்கணமரபின்படி தாம் சொல்லக் கருதிய விகற்பங்களை மரபுநிலை திரியாதவாறு கூறுதல் ஏற்புடையதேயாதலின் பன்னிருபடலமுடையார் கொண்ட புறத்திணைப் பகுப்பினை மரபுநிலை திரியா மாட்சியவாகி, விரவும் பொருளாக அமைத்துக்கொள்ளுதலே முறையாகும். அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை உழிஞைத் திணைகளின் மறுதலை வினையை வீற்றுவினையாதலும் வேற்றுப்பூச்சூடுதலும் ஆகிய வேறுபாடு பற்றி வேறுதிணையாக வைத்தெண்ணுதலும் இன்னோரன்னவை பிறவும் திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன எனவும் இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல முதலிய நூல்களை வழீஇயின வென்றிகழ்ந்து... தமக்கு வேண்டியவாறே கூறும் எனவும் சிவஞான முனிவர் கூறும் அமைதி இங்ஙனம் அமைத்துக்கொள்ளுதலை வற்புறுத்துங் கருத்தினதாதல் அறியத்தகுவதாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கைக்கிளை முதல் பெருந் திணையீறாகவுள்ள ஏழுதிணைகளும் அகத்திணையெனவே கொண்டனர் எனினும் அவ்வேழினுள்ளும் அகம் புறம் எனச் சிறப்பாகக் கொள்ளத்தக்கன முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்திணைகளேயாதலின் அவற்றை மக்கள் நுதலிய அகனைந்திணை எனக் குறித்தார். அடியோர், வினைவலர் தலை மக்களாக அமைதல் அகன் ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைகளின்பாற்படும் என்பதனை, அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர் (அகத்திணையியல்-25) எனவரும் நூற்பாவிலும், ஏவன்மரபின் ஏனோரும் கைக்கிளை பெருந்திணைகளில் தலைமக்களாதற்குரியவர் என்பதனை, ஏவன் மரபி னேனோரும் உரியர் ஆகிய நிலைமையவரும் அன்னர் (அகத்திணையியல்-26) என அடுத்துவரும் நூற்பாவிலும் தொல்காப்பியனார் குறித் துள்ளார். இங்ஙனம் அன்பின் ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைகளில் அடியோர், வினைவலர், ஏவன் மரபின் ஏனோர் தலைமக்களாகப் பாடப்பெறுதலுண்டு என்பதற்குக் கலித்தொகையில் வரும் பாடல்களை நச்சினார்க் கினியர் எடுத்துக் காட்டுத் தந்து விளக்கியுள்ளமை காணலாம். அகத்திணையொழுகலாறுபற்றிய இப்பாடல்களை யாவும் அன்பின் ஐந்திணையெனக் கொள்ளப்படாது அவற்றின் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைகளின் பாற்படுவன என்பார், கடிவரை யிலபுறத்து என்றார் ஆசிரியர். புறத்து என்றமையால், அகத்திணையேழனுள் அகன் ஐந்திணைக்கு முன்னும் பின்னும் வைத்துரைக்கப்படும் கைக்கிளையும் பெருந்திணையும் அகன்ஐந்திணையின் புறம் என வழங்கப் படுதலுண்டு என்பதும் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் புலனாம். மக்கள் நுதலிய அகனைத்திணையும் சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் என விதித்த தொல்காப்பியனார். தலைமக்களது இயற்பெயர் சுட்டப்பெறுதல் புறத்திணை மருகில் அமைந்த கைக்கிளை பெருந்திணைக்கண் அன்றி அகத்திணைமருங்கில் அமைந்த கைக்கிளை பெருந்திணைக்கண் இல்லை என்பதனை, புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலலே (அகத்திணை-58) எனவரும் நூற்பாவில் தெளிவாகக் குறித்துள்ளார். எனவே அகத்திணையேழனுள் அகன்ஐந்திணைக்கு முன்னும் பின்னும் வைத்துரைக்கப்படும் கைக்கிளை பெருந்திணை என்னும் இரு திணைகளும் அகத்திணைமருங்கு என அகத்திணையொடும், புறத்திணை மருங்கு எனப் புறத்திணையொடும் இயைத் துரைக்கப்படும் இருவகை நிலைமையினையுடையன என்பதும், அகத்திணை மருங்கு எனப்படும் கைக்கிளை பெருந்திணைகளில் அகனைந்திணை யிற்போன்று தலைமக்களது இயற்பெயர் பொருந்தி வருதல் உண்டென்பதம் ஆசிரியர் கருத்தாதல் நன்கு துணியப்படும். மேற்குறித்தவாறு அகம் புறம் என்னும் இவ்விருதிணை களையும் அகத்திணைமருங்கு, புறத்திணை, புறத்திணை மருங்கு என நால்வகையாகப் பகுத்துரைக்கும் பெயர் வழக்கம் தொல் காப்பியத்தில் இடம் பெற்றிருத்தலைக் கூர்ந்துணர்ந்த பிற்கால இலக்கண ஆசிரியர்கள், அகம் புறம் என்னும் இவ்விருதிணை களையும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நால்வகையாகப் பகுத்துரைத்தனர் எனக் கருதவேண்டியுளது. பிற்சேர்க்கை---1 தொல்காப்பியத் துறைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படுவனவும், புதியனவும் பற்றிய விவரம் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை 3 நூற்பா எண் வெட்சித்திணை. 14 துறைகள் : 3 1. படையியங்கரவம் வெட்சியரவம் 2. விரிச்சி விரிச்சி 3. செலவு செலவு 4. வேய் வேய் 5. புறத்திறை புறத்திறை 6. ஊர்கொலை ஊர்கொலை 7. ஆகோள் ஆகோள் 8. பூசல்மாற்று பூசல்மாற்று 9. நோயின்றுய்த்தல் சுரத்துய்த்தல் 10. நூவல் வழித் தோற்றம் தலைத்தோற்றம் 11. தந்துநிறை தந்துநிறை 12. பாதீடு பாதீடு 13. உண்டாட்டு உண்டாட்டு 14. கொடை கொடை 1புலனறிசிறப்பு 1பிள்ளைவழக்கு 4 துடிநிலை(நச்சினார்க் கினியர்பாடம்) துடிநிலை கொற்றவை நிலை கொற்றவை நிலை 5 வெறியாட்டயர்ந்த காந்தள் வெறியாட்டு 1கரந்தையரவம் 1அதிரிடைச்செலவு தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை ஆரமரோட்டல் போர்மலைதல் வாள்வாய்த்துக் 1புண்ணொடு வருதல் கவிழ்தல் போர்க்களத்தொழிதல் வருதார் தாங்கல் ஆளெறிபிள்ளை 1பிள்ளைத்தெளிவு நாடவற்கருளிய பிள்ளையாட்டு பிள்ளையாட்டு கையறுநிலை தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்தல் நெடுமொழிகூறல் 1பிள்ளைப்பெயர்ச்சி 1வேத்தியன் மலிபு குடிநிலை இளம்பூரணம்(பாடம்) குடிநிலை வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் போந்தை வேம்பு ஆர் வாடாவள்ளி கழல்நிலை உன்னநிலை பூவைநிலை ஆரமரோட்டல் ஆபெயர்த்துத்தருதல் சீர்சால்வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் நெடுமொழி தன்னொடு புணர்தல் கரந்தை வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் பிள்ளையாட்டு தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் பெரும்படை வாழ்த்தல் வஞ்சித்திணை 1. இயங்குபடையரவம் வஞ்சியரவம் 2. எரிபரந்தெடுத்தல் உழபுலவஞ்சி 3. வயங்கலெய்திய பெருமை பெருவஞ்சி (இதுவும் எரிபரந் தெடுத்தலில் அடங்கும்) 4. கொடுத்தலெய்திய கொடையின வஞ்சி, கொடைமை குறவஞ்சி 5. அடுத்தூர்ந்தட்ட கொற்றம் கொற்றவஞ்சி 6. மாராயம் பெற்ற நெடுமொழி மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சி 7. பொருளின்றுய்த்த பேராண் பக்கம் பேராண்வஞ்சி 8. வருவிரைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை ஒரு தனிநிலை 9. பிண்டமேய பெருஞ் சோற்றுநிலை பெருஞ்சோற்றுநிலை 10. வென்றோர் விளக்கம் நல்லிசை வஞ்சி 11. தோற்றோர் தேய்வு (மழபுல வஞ்சி இதன் பாற் படும்) 12. குன்றாச் சிறப்பிற் குற்றமில் சிறப்பிற் கொற்றவள்ளை கொற்றவள்ளை 13. அழிபடை தட்டோர் தழிஞ்சி தழிஞ்சி குடைநிலை தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை வாணிலை கொற்றவை நிலை முதுமொழிவஞ்சி பாசறை நிலை உழிஞைத்திணை குடைநாட்கோள் குடைநாட்கோள் வாணாட்கோள் வாணாட்கோள் ஏணிமிசை மயக்கம் ஏணி நிலை முற்றிய முதிர்வு முற்றுமுதிர்வு அகத்தோன் வீழ்ந்த நொச்சி புறத்தோன் வீழ்ந்த புதுமை நீர்ச்செரு வீழ்ந்த பாசி பாசி நிலை ஊர்ச்செரு வீழ்ந்த (பாசி) மறன், மறனுடைப்பாசி மதின்மிசைக்கவர்ந்த மேலோர் பக்கம் எயிற்பாசி மதிற்குடுமி கொண்ட மண்ணு மங்கலம் மண்ணுமங்கலம் வென்றவாளின் மண் வாள் மண்ணுநிலை தொகை நிலை தொகைநிலை முரசவுழிஞை கந்தழி காந்தள் புறத்திணை புறத்துழிஞை முதுவுழிஞை அகத்துழிஞை யானை கைக்கோள் வேற்றுப்படைவரவு உழுது, வித்திடுதல் மகட்பாலிகல் திறைகொண்டு பெயர்தல் அடிப்பட விருத்தல் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை தும்பைத்திணை சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலைவகை வெருவரு நிலை தானை நிலை தானைமறம் யானைநிலை யானைமறம் குதிரைநிலை குதிரைமறம் தார் நிலை தார்நிலை இருவர் தலைவர் தபுதிப்பக்கம் இருவருந்தபுநிலை கூழை தாங்கிய எருமை எருமைமறம் படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம் ஏமவெருமை களிறெறிந்தெதிர்ந்தோர் பாடு களிற்றுடநிலை களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோராடும் அமலை விள்வாளமலை இருபெருவேந்தர் தாமும்.சுற்றமும் ஒருவருமொழியாத் தொகைநிலை தொகைநிலை செருவகத்திளைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலை பல்படையொருவற்குடைதலின் மற்றவன் வில் வாள் வீசிய நூழில் தும்பையரவம் தேர்மறம் பாண்பாட்டு நூழில் நூழிலாட்டு முன்றேர்க்குரவை பேய்க்குரவை தானைநிலை சிருங்காரநிலை உவகைக் கவர்ச்சி தன்னைவேட்டல் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை வாகைத்திணை அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் பார்ப்பன வாகை ஐவகை மரபின் அரசர் பக்கம் அரசவாகை இருமூன்று மரபின் ஏனோர் பக்கம் வாணிகவாகை வேளாண்வாகை மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன் தேயம் அறிவன் வாகை நாலிரு வழக்கிற்றாபத பக்கம் தாபதவாகை பாலறி மரபிற் பொருநர்கண்(பக்கம்) பொருந வாகை அனைநிலை வாகை கூதிர்ப்பாசறை கூதிர்ப்பாசறை வேனிற்பாசறை (வாடைப்பாசறை) ஏரோர்களவழி தேரோர் களவழி மறக்களவழி முன்றேர்க்குரவை பின்றேர்க் குரவை பெரும்பகை தாங்கும் வேல் அரும்பகை தாங்கும் ஆற்றல் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம் ஒல்லார் நாணப் பெரியவர்க்கண்ணிச் சொல்லிய ஒன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி அவிப்பலி ஒல்லாரிட வயிற் புல்லிய பாங்கு பகட்டினானுமாவினானும் துகட்டிட னிற்பயிற் சான்றோர் பக்கம் சால்பு முல்லை கட்டில் நீத்த பால் எட்டுவகை நுதலிய அவையகம் அவையமுல்லை தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை இடையியல் வண்புகழ்க் கொடை பிழைத்தோர்த் தாங்குங் காவல் பொருளொடு புணர்ந்த பக்கம் பொருளொடு புகறல் அருளொடு புணர்ந்த அகற்சி அருளொடு நீக்கம் காம நீத்த பால் வாகையரவம் முரசவாகை அரசமுல்லை பார்ப்பன மல்லை கணிவன் முல்லை மூதின் முல்லை ஏறாண்முல்லை வல்லாண்முல்லை காவன் முல்லை பேராண் முல்லை மறமுல்லை குடைமுல்லை கண்படைநிலை இணைநிலை. காஞ்சித்திணை மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை (பெருங்காஞ்சி---நிலை பெருமை யாமை நெறியுயிர்) புண் கிழித்து முடியும் மறம் மறக்காஞ்சி கழிந்தோர் தெரிந்தோர்க்குக் (முதுகாஞ்சி---காஞ்சிப் காட்டிய முதுமை பொது வியற்பால்) புண்ணோற் பேரயோம்பிய பேய்ப்பக்கம் பேய்நிலை இன்னனென்றிரங்கிய மன்னை மன்னைக் காஞ்சி துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம் வஞ்சினக் காஞ்சி மனைவி பேய்துன்னாதல் கடிந்த தொடாக் காஞ்சி தொடாக் காஞ்சி வேலிற் பேர்த்த மனைவி காஞ்சி ஆஞ்சிக்காஞ்சி முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பால் மகட்பாற் காஞ்சி தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை கொண்டோன் தலையொடு முடிந்த நிலை தலையொடு முடிதல் பூசல் மயக்கம் பூசன் மயக்கு தாமேயேங்கிய தாங்கரும் பையுள் ஆனந்தப் பையுள் மூதானந்தம் மூதானந்தம் முதுபாலை முதுபாலை கையறு நிலை கையறுநிலை தபுதார நிலை தபுதார நிலை, சுரநடை தாபதநிலை தாபத நிலை மாலைநிலை மாலை நிலை தலைப்பெயனிலை தலைப்பெயனிலை காடுவாழ்த்து காஞ்சியதிர்வு தழிஞ்சி பெருங்காஞ்சி படைவழக்கு வாள்செலவு குடைசெலவு பூக்கோணிலை தலைக்காஞ்சி தலைமாராயம் பேய்க்காஞ்சி தொட்ட காஞ்சி கட்காஞ்சி முனைகடி முன்னிருப்பு. பாடாண்திணை அமரர் கண்முடியும் அறுவகை கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்ந் தனர் பரவல், பழிச்சினர் பணிதல் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை புரைதீர் காமம் புல்லியவகை நிகழ்ந்த காமப்பகுதியுட் டோன்றிய கைக்கிளை வகை, பெருந்திணை வகை. பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப்பகுதி காமப்பகுதி கடவுள் மாட்டு கடவுட் பெண்டிர் நயந்தது கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தது துயிலெடை நிலை துயிலெடை நிலை கூத்தர் ஆற்றுப்படை கூத்தராற்றுப்படை பாணர் ஆற்றுப்படை பாணாற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை பொருநராற்றுப்படை விறலி ஆற்றுப்படை விறலியாற்றுப்படை பிறந்த நாள்வயிற் பெருமங்கலம் நாண்மங்கலம் சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் மண்ணுமங்கலம் குடைநிழல் மரபு குடை மங்கலம் வாள் மங்கலம் வாண்மங்கலம் மன்னெயிலழித்த மண்ணு மங்கலம் பரிசில் கடைஇய கடைக் கூட்டுநிலை வாயினிலை இருவகை(பரிசில்) விடை பரிசினிலை. பரிசில் விடை நாள், புள் பிறவற்றின் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை நிமித்தமும் காலங்கண்ணிய ஓம்படை ஓம்படை காமப்பகுதி கடவுளும் வரையார் கடவுள்மாட்டு கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் ஏனோர் பாங்கினும் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம் குழவி மருங்கினும் கிழவதாகும் குழவிகட்டோன்றிய காமப்பகுதி ஊரொடு தோற்றமுரித்தென மொழிப வழக்கொடு சிவணிய ஊரின்கண் டோன்றிய வகைமையான காமப்பகுதி மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அகத்திணை மருங்கின். 5 அதுவே தானும். 139 அமரர்கண் முடியும் 298 அறுவகைப் பட்ட. 194 இயங்குபடை அரவம். 108 உழிஞை தானே. 131 ஊரொடு தோற்றமும். 328 கணையும் வேலும். 166 காஞ்சி தானே. 259 காமப் பகுதி. 220 குடையும் வாளும். 150 குழவி மருங்கினும். 325 கூதிர் வேனில். 230 கொடிநிலை கந்தழி. 342 கொடுப்போர் ஏத்திக். 358 கொள்ளார் தேஎங். 140 கொற்றவள்ளை. 355 தானை யானை. 173 தாவில் நல்லிசை. 375 தும்பை தானே. 161 படையியங்கு அரவம். 36 பாடாண் பகுதி. 290 மறங்கடைக் கூட்டிய. 47 மாற்றருங் கூற்றஞ். 266 மெய்ப்பெயர் மருங்கின். 338 வஞ்சி தானே. 96 வழக்கியல் மருங்கின். 309 வாகை தானே. 188 வெறியறி சிறப்பின். 56 வேந்துவிடு முனைஞர் 28 பிற்சேர்க்கை-2 தொல்காப்பியம் - புறத்திணையியல் உதாரணப் பாடல்கள் அட்டவணை நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் வெட்சிந்திணை 1. படையியங்கரவம் நெடிபடைகானத்து வெவ்வாண் மறவர் வெவ்வாண் மறவர் (வெண்பா-வெட்சி 3) (பெரும் பொருள் விளக்கம் (பெரும்பொருள் விளக்கம் (புறத்திரட்டு 752) (புறத்திரட்டு 1236) அடியதிரார்ப்பினை (மேற்படி 763) 2. விரிச்சி எழுவணி சீறூ ரிருண் திரைகவுள் வெள்வாய் மன்ன வன்நிரை மாலை (பெரும்பொருள் விளக்கம்) சிந்தாமணி 415) (வெண்பா-வெட்சி 4) வந்தநீர் காண்மினென் நல்வேய்தெரி (சிலப்- வேட்டுவவரி வேற்றுக்கட்சி யுட் (சிலப்-வேட்டுவவரி) 3. செலவு கூற்றினைத்தன்னார் பிறர்புலமென்னார் வெவ்வாள் மறவர் (வெண்பா-வெட்சி 5) (பெரும்பொருள் விளக்கம் (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு 757) புறத்திரட்டு 1236) கங்கைபரந்தாங்கு மேற்படி 764 4. வேய் நிலையும் நிரையும் ஒருவரொருவ ஒருவரொருவ (வெண்பா-வெட்சி 6) நெடுநிலையாயத்து (பழம்பாட்டு) 5. புறத்திறை உய்ந்தொழிவா கரந்தியல் காட்டு கரந்தியல் காட்டுத் தீப் ரீங்கில்லை தீ இருநிலமருங்கி (வெண்பா-வெட்சி 7) தகடூர் யாத்திரை புறத்திரட்டு 765) 6. ஊர்கொலை இகலேதுணையா அரவூர் மதியிற் சென்ற நிலப்புறத்து வெரிதவழ சென்ற நிரைப் புறத்து (பழம்பாட்டு) (வெட்சி வெண்பா 8) 7. ஆகோள் கொடுவரி கூடிக் குமூஉக் கொடுவரி கூபுக் புல்லா ரினநிரை (வெண்பா-வெட்சி 9) (பி. வெ. 1, 9 (புறம் 257) கடல்புக்கு மண் ஏறுபடைப் பெருநிறை (பெரும்பொருள் விளக்க (புறம் 259) புறத்திரட்டு 767) 8. பூசல் மாற்று சூழ்ந்த நிரைபெயரச் ஒத்த வயவ ரொ ஓத்த வயவ ரொருங் (வெண்பா-வெட்சி 10) டிரவு றெறிந்து (பழம்பாட்டு) (தகடூர் யாத்திரை) 9. நோயின்றுய்த்தல் செருப்பிடைச் சிறுபர புன்மேய்ந் தசைஇப் முல்லை வருந்திற் (புறம் 257) (பு. வெ. 1, 11) (ஆசிரிய மாலை கல்கெழு சிறூர்க் புறத்திரட்டு 1242) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு 768) 10. நுவல்வழித் நறவுந் தொடுமின் மொய்ண லாளிரை ஓன்னார் முன்னிலை தோற்றம் (புறம் 262) (பு. வெ. 1, 12) (புறம் 262) காட்டகஞ் சென்றுயிர் மதுரைப் பேராலவாயார்) (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு 769) 11. தந்துநிறை தண்டா விருப்பினள் குளிநு குரணன் முசங் கயமலர் உண்கண்ணாய் (வெண்பா-வெட்சி 13) கழுவொடு பாகர் (வேட்டுவவரி-சிலப்) குளிநு குரன் முரசங் (பழம்பாட்டு) 12. பாதீடு ஒள்வாள் மலைந் ஒள்வாண் மலைந்தார் தார்க்கு (பு. வெ. 1, 14) (வெண்பா-வெட்சி 14) யாமே பகுத்திடல் நேரார்புலத்து (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு 770) 13. உண்டாட்டு இளிகொண்ட தீஞ் நறவுந்த தொடுமின் முட்காற் காரை சொல் (வெண்பா- புறம் 262 (புறம் 258) வெட்சி-15) பகைவர் கொண்ட 14. கொடை இளமா வெயிற்றி இளமா வெயிற்றி இளமா எயிற்றி படைத்தலைவர் முருந்தேர் கயமலர் (சிலப்-வேட்டுவவரி) (சிலப்-வேட்டுவரி) படையாளரைக் (சிலப்-வேட்டுவவரி) கொடைத்தொழில்...òšyz‰fhis கூறினது படைச் கடிமனைச் சீறூர் வாள்வலம் (புறம் 258) செருக்கு தெய்வத்திற்குப் பெற்ற (பெரும்பொருள் பராஅயது விரிச்சி விளக்கம்) வந்த நிரையின் விலக்கிய வீரக் குறிப்பு (பெரும்பொருள் விளக்கம்) வேய்கூறினார்க்குச் நாளும் புள்ளும்--தகடூர் சிறப்புச் செய்தல் யாத்திரை மாற்றருந்துப்பின் நித்திலஞ்செய் அருமைத் தலைத்தரு 15. துடிநிலை குடிநிலை துடிநிலை கொடிநிலை யானை தாக்கீது அருமைத் தலைத்தரு புள்ளும் வழிபடரப் (புறம் 289) (சிலப்-வேட்டுவவரி) கெடுகசிந்தை (புறம் 279) 16. கொற்றவை நிலை ஆளி மணிக்கொடிப் நச்சிலைவேற் உயிர்ப்பலி வளையுடைக் களயிற் (வெண்பா-வெட்சி 20) ஆலப்பண்பாடி குருதிப்பலி (சிலப்-வேட்டுவரி) 60, (4, 73, 74 1. வெறியறி சிறப்பின் வெய்ய நெடிதுயிரா அமரகத்து தன்னை வெவ்வாய் வேலன் (வெண்பா-இருபாற் அணங்குடை நெடுவரை வெறியாட்டயர்ந்த பெருந்திணை 10) (அகம் 22) காந்தள் நூற்பா எண் துறைப்பெயர்இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 2, 3, 4, ஏழக மேற்கொண் குடையலர் காந்தட்டன்ஏழக மேற்கொண் இரும்பனம் போந்தைத் போந்தை, வேம்பு ஆர், (வெண்பா-பொது 1) குறும்பூழ்ப்போர் (பொருநராற்றுப்படை) மாபெருந்தானையர் (தொடியணி தோள் ஆர்வேய்ந்த கோலத் மலைந்த பூ (வெண்பா-பொது 2) கால்களிறூர்வர் (வெண்பா-பொது 9) 5. வாடாவள்ளி (பாடல் இல்லை) மண்டம ரட்ட மறவர் பன்மர நீளிடைப் (பெரும்பாணாற்றுப்படை) 6. கழல்நிலை வாளமரின் முன்விலக்கி மீளாது பெற்ற ஓடாத் தானை வெண்பா பொது 7 ஒண்தொழிற் கழற்கால் (பெரும்பாணாற்றுப்படை) 7. உன்னநிலை துன்னருந் தானைத் துயிலின் கூந்தற் முன்னங் குழையவும் (வெண்பா-பொது 4) முன்னங் குழையவுங் (பழம்பாட்டு) பொன்னன்ன 8. பூவை நிலை பூவை விரியும் ஏற்றுவலன் உயரிய பூவை விரியும் (வெண்பா-பாடாண்4) (புறம் 56) (வெண்பா-பாடாண். ச) இந்திரனெனின் குருந்த மொசித்த ஏற்றுவலன் உயரிய (முத்தொள்ளாயிரம்) ஏற்றூர் தியானும் (புறம்-நக்கீரர் 56) ஏற்றூர்தியானும் இந்திரனென்னின் (சிலப்-ஆய்ச்சியர் குரவை (முத்தொள்ளாயிரம்) உள்வரி. 3) கோவா மலையாரங் (சிலப் 17 உள்வரி) தாமரைக் கண்ணியை (கலி 52) வீங்கு செலற் பரிதி பல்லிதழ் மென்மலர் 9. ஆரமரோட்டல் புலிக்கணமும் சீயமும் பொன்வார்ந்தகன்ன கரந்தை நீடிய (வெண்பா-கரந்தை 4) (புறம் 3, 8) (புறம் ஔவையார்) கள்ளின் வாழ்த்தி கன்றொடு கரவைதந்து (புறம் 316) (புறம் 264) வெருக்குலிடை (புறம் 324) இணைப்படைத்தானை (கலி 15), அகம் 167 10. ஆபெயர்த்துத் அழுங்கனீர் வையகத் ஏறுபடைப் பெருநிரை கரந்தை நீடிய தருதல் (வெண்பா-கரந்தை 1) (புறம் 259) (புறம் ஔவையார்) ஏறுடைப் பெருநிரை வளரத் தொடினும் கன்றொடு கறவை தந்து (புறம்-259) (புறம் 260) (புறம் 261) பெருங்களிற்றடியிற் (புறம் 263) விசும்புறநிவந்த (அகம் 131) கறையடி மடப்படி (அகம் 83) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 11. சீர்சால் வேந்தன் அங்கையுணெல்லி அத்த நண்ணிய என்னைமுன் நில்லன்மின் சிறப்பெடுத்துரைத் (வெண்பா-கரந்தை 13) (புறம் 313) (குறள் 771) -தல் பறைநிறை கொல்யானை (முத்தொள்-செய் 9) 12. நெடுமொழி ஆளமர் வெள்ளம் தானால் விலங்காற் மடங்கலிற் சினைஇ தன்னொடு (வெண்பா-கரந்தை 11) பெருநீர் மேவற் (புறம் 71) புணர்த்தல் (புறம் 299) நகுதக் கனரே (புறம் 72) மெல்ல வந்தென் நல்லடி (புறம் 73) கந்துமுனிந் துயிர்க்கும் (மூலங்கிழார் புறப்பாட்டு) 13. வருதார் தாங்கல் பிள்ளை கடுப்பப்பிணம் ஏற்றெறிந்தார் ஒன்ளார் முன்னிலை (வெண்பா-கரந்தை 7) (புறம் 262) 14. வாள்வாய்த்துக் உரைப்பினது வியப்போ ஆடும் பொழுதின் ஆளும் குரிசில் கவிழ்தல் (வெண்பா-கரந்தை 6) கெடுக சிந்தை (பெரும்பொருள் விளக்கம் (புறம்-279) பழம்பாட்டு) 15. பிள்ளையாட்டு மாடியபிள்ளை மறவர் வன்கண் மறமன்னன் வன்கண் மறமன்னன் (வெண்பா-கரந்தை 9) நாகுமுலை யன்ன (பழம்பாட்டு) (புறம் 261) 16. காட்சி மிகையணங்கு மெய்ந் தாழி கலிப்பத் (வெண்பா-பொது 8) ஊர் நனியிறந்த கல்லாயு மே றெதிர்ந்து 17. கால்கோள் பூவொடு நீர் தூவிப் வரையறை சூழ் (வெண்பா-பொது. 9) கிடக்கை காப்புநூல் யாத்து இல்லடு கள்ளின் (புறம் 329) 18. நீர்ப்படை காடு கனற்றக் வாளமர் வீழ்ந்த (வெண்பா-பொது 10) பல்லா பெயர்த்து 19. நடுதல் மாலை துயல சீர்த்த துகளிற்றாய் பெருங்களிற்றடியில் (வெண்பா-பொது 12) கோள்வாய்த்த சீயம் (புறம் 263) பரலுடை மருங்கில் 20. பெரும்படை வாட்புகாவூட்டி கைவினை மாக்கள் அன்று கொளாபெயர்த்து 21. வாழ்த்தல் அடும்புகழ் பாடி ஆவாழ் குழக்கன்று (வெண்பா-பொது 13) அணிமயிற் பீலி சூட்டி (புறம் 264) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் வஞ்சித்திணை 1. இயங்குபடையரவம் சிறப்புடை மரபிற் சிறப்புடை மரபிற் உரவுமண் சுமந்த (புறம் 31) (புறம் 31) (சிலப். கால்கோள் 34-37) விண்ணசைஇச் ஏற்றுரி போர்த்த (பெரும்பொருள் விளக்கம். (சிந்தா-மண்மகள் (புறத்திரட்டு 774) இலம்-51) இறும்பூதாற் பெரிதே (பதிற்று. 33) போர்ப்படையார்ப்ப 2. எரிபரந்தெடுத்தல் வினைமாட்சிய விரை வினைமாட்சிய விரை காலென்னக் கடிதுரா (புறம் 16) (புறம் 16) மதுரைக்காஞ்சி 125-128 களிறு கடைஇயதாட் யாண்டு தலைப்பெயர (புறம் 7) (பதிற்று. 15) எல்லையுமிரவு மெண்ணாய் 3. வயங்கலெய்திய இருங்கண் ணியானை மேற்செல்லுங்காலை நறுவிரை துறந்த பெருமை (பதிற்றுட்பத்து) (புறம் 276) 4. கொடுத்தல் எய்திய வேத்தமர் செய்தற்கு சிறாஅஅர் துடியர் கொடைமை (புறம் 12) பாணர் தாமரை (புறம் 291) இம்மைச் செய்தது (புறம் 134) கண்ணகன் வைப்பின் (பதிற்று. 3ஆம்பத்து (பதிகம்) ஈத்துக்கை தண்டாக் (பதிற்று. 15) 5. அடுத்தூர்ந்தட்ட திண்பிணி முரச மிழு நீணிலவே ந்தர் ஒருவனை ஒருவன் கொற்றம் மென (புறம் 93) யாண்டுதலைப் பெயர (புறம் 76) (பதிற்று. 15) எருமைக் கடும்பரி (சிலப். கால்கோள் 215, 218) 6. மாராயம் பெற்ற துடியெறியும் போர்க்கடலாற்றும் நிலவுக்கதி ரளைந்த நெடுமொழி புலைய(புறம் 287) துடியெறியும் புலைய (சிலப்-காட்சி 137-142, (புறம் 287) 147-149) 7. பொருளின்றுய்த்த ஆவுமானியற் மெய்ம்மலி மனத்தின் கிண்கிணி களைந்த கால் பேராண்பக்கம் பார்ப்பன (தகடூர் யாத்திரை) (புறம் 77) (புறம் 9) பல்சான்றீரே பல்சான்றீரே (புறம் 301) 8. வருவிசைப் வீடுணர்ந்தார்க்கும் கார்த்தரும் புல் வேந்துடைத்தானை புனலைக் கற்சிறை (வெண்பா-வஞ்சி 19) (தகடூர் யாத்திரை (புறத் (புறம் 330) போல ஒருவன் வேந்துடைத்தானை திரட்டு 881) வேந்துடைத் வல்லோன் தைஇய நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் தாங்கிய பெருமை (புறம் 330) தானை (புறம் 330) (மதுரைக்காஞ்சி 723-27) வருகதில்வல்லே (புறம் 287) 9. பிண்டமேய இணர்ததை ஞாழற் இணர்ததை ஞாழற் ஓடாப்பூட்கை பெருஞ் சோற்று (பதிற்று. 30) (பதிற்று. 30) (பதிற்று 30) நிலை வெள்ளைவெள்யாட்டு அரும்படைத்தானை (புறம் 286) (சிலப். கால்கோள்: வரி உண்டியின் முந்தா 48-61) 10. வென்றோர் அறாஅயாண ரகன்கட் அறாஅயாணர் அரும்பவிழ் தார்க் கோதை விளக்கம் (பதிற்று. 71) (பதிற்று 71) (முத்தொள்ளாயிரம்) இருங்கண்யானை (பதிற்று) 11. தோற்றோர் தேய்வு வான்மருப்பிற் வாஅன் மருப்பிற் வாய்வா ளாண்மையின் களிற்றியானை (பதிற்று. 80) (சிலப் கால்கோள்: 221-30) (பதிற்று. 80) 12. குன்றாச் சிறப்பிற் பாடல் இல்லை வேரறுகு பம்பிச் வேங்கை தொலைத்த கொற்றவள்ளை (முத்தொள்-புறத்திரட்டு 798) (கலி. 43) தீங்கரும்பு நல்லுலக்கை (சிலப்-வாழ்த்துக்காதை) 13. அழிபடை வருகதில் வல்லே தழிச்சிய வாட் புண்ணோர் மின்னவிர் தட்டோர் தழிஞ்சி (புறம் 284) (பெரும்பொருள்விளக்கம் சிலரோடு திரிதரும் உரவரும் மடவரும் புறத்திரட்டு 793) வேந்தன் (பதிற் - 71) வேம்புதலை யாத்த (நெடுநல்வாடை) (நெடுநல் வாடை (அவர்படை வரூஉங் 176-188) காலை (புறம் 69) உழிஞைத்திணை 1. கொள்ளார் தேஎம் ஆனா வீகையடுபோர் மாற்றுப்புலந்..........x‹dh® குறித்த கோற்றம் (புறம் 42) (பெரும்பொருள் விளக்கம். ஆரெயில் (புறம் 203) புறத்திரட்டு 793) மலையினிழிந்து... ............x‹dh® மண்ணோக்கினையே ஆரெயில் (புறம் 203) (புறம் 42) 2. உள்ளியது முடிக்கும் அடுநையாயினும் மழுவாள் மிளைபோய் கூற்றத்தீயே வேந்தனது சிறப்பு (புறம் 36) (தகடூர் யாத்திரை புறத் (புறம் 56) இரும்பிடித் தொழுதிதிரட்டு,எயில்காத்தல்).......kU§fw (புறம்44)மலையகழ்க்குவdமலையகழ்க்குவd (பட்டின-271-273) (பட்டினப்பாலை 270-273) அடுநையாயினும் (புறம் 36) வயலைக்கொடியின் (புறம் 305) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 3. தொல்லெயிற் புல்லார் இற்றைப் பகலுள் மைந்துடை ஆரெயில் கவர்தல் புகழொடு (புறத்திரட்டு 847) (பதிற்று 62) (வெண்பா-உழிஞை-12) மறனுடை மறவர்க் பொறிவரிப் புகர் (தகடூர் யாத்திரை) (பெரும்பாண் 448-454) 4. தோலின் பெருக்கம் நின்ற புகழொழிய இருகட ரியல்காப் வினைமாட்சியவிரை (வெண்பா-உழிஞை 12) (ஆசிரியமாலை. புறத் (புறம் 16) திரட்டு 852) நின்ற புகழொழிய (பு. வெண்பா. உழிஞை 12) 5. அகத்தோன் அளிதோ தானே பொருசின மாறாப் அளிதோ தானே செல்வம் (புறம் 109) (தகடூர் யாத்திரை. (புறம் 109) புறத்திரட்டு 857 அளிதோ தானே (புறம். 109) 6. புறத்தோன் நஞ்சுடை வாலெயிற் கலையெனப் பாய்ந்த தாக்கற்கும் பேரும் அணங்கிய பக்கம் (புறம் 37) (தகடூர் யாத்திரை) (பெரும்பொருள் விளக்கம்) தாய்வாங்கு கின்ற (பெரும்பொருள்விளக்கம்) செருவெங்கதிர் (முத்தொள்) 7. ஒரு தங்க மண்டிய கிண்கிணி களைந்தகால் வருகதில் வல்லே சுதையத்தோங்கிய குறுனம் (புறம் 77) (புறம் 284) (கம்பர்-யுத்த காண்டம்) 8. வருபகை பேணார் மயிற்கணத் தன்னார் மொய்வேற் கையர் மொய்வேற் கையர் ஆரெயில் (வெண்பா-உழிஞை 101) (தகடூர் யாத்திரை) (தகடூர் யாத்திரை) படையியங்கரவம் இலங்குதொடி (பதிற்றுப்பத்து) 1. குடைநாட்கோள் நெய்யணிக செவ்வேள் பகலெறிப்ப தென் முழுத்தம் ஈங்கிது (வெண்பா-உழிஞை 2) (பெரும்பொருள் விளக்கம் (சிலப்-கால்கோள் காதை) புறத்திரட்டு. எயில்கோள்) குன்றுயர் திங்கள் (தகடூர் யாத்திரை. புறத் திரட்டு-எயில்காத்தல்) 2. வாணாட்கோள் வாணாட்கொளலும் தொழுதுவிழாக் (பெரும் முழுத்தம் ஈங்கியது (வெண்பா-உழிஞை 3) பொருள் விளக்கம் புறத் (சிலப் கால்கோட்காதை) திரட்டு. எயில்கோள்) முற்றரணமென்னும் (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு எயில்கோடல்) 3. ஏணிமிசை மயக்கம் சுடுமண்ணெடுமதில் சேணுயர் ஞாயிற் பொருவரு மூதூரிற் (வெண்பா-உழிஞை 19) இடையேழுவிற் (பெரும்பொருள்விளக்கம்) பொருவரு மூதூரிற் (பெரும்பொருள் விளக்கம்) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 4. முற்றிய முதிர்வு காலைமுரச மதிலியம்ப கடல்பரந்து மேருச் ஊர்சூழ்புரிசை (வெண்பா-உழிஞை 23) ஊர்சூழ் புரிசை (பழம்பாட்டு) 5. அகத்தோன்வீழ்ந்த நீரற வறியா இருகன்றினொன் நீரறவறியா நொச்சி (புறம் 271) தாய்வாங்குகின்ற (புறம் 271) (பெரும்பொருள்விளக்கம் புறத்திரட்டு-எயில்கோடல்) மணிதுணர்ந் தன்ன (புறம் 272) 6. புறத்தோன் கோடுயர் வெற்பி வெஞ்சினவேந்தன் வெஞ்சினவேந்தள் வீழ்ந்த புதுமை (வெண்பா-உழிஞை 20) (பெரும்பொருள்விளக்கம் (பெரும்பொருள் விளக்கம்) புறத்திரட்டு-எயில்கோடல்) தாக்கற்குப் பேருந் (தகடூர் யாத்திரை. புறத் திரட்டு எயில்காத்தல்) 7. நீர்ச்செரு வீழ்ந்த நாவாயுந் தோணியு பொலஞ் செய் கருவிப் முடிமனர் எழுதரு பாசி (வெண்பா-உழிஞை 17) (சிந்தாமணி 2223) 8. ஊர்ச்செருவீழ்ந்த பாயினார் மாயும் மறநாட்டுந் மறநாட்டுந் தங்கணவர் (பாசி) மறன் (வெண்பா-நொச்சி 2) தங்கணவர் (பழம்பாட்டு) தாந்தல் கடைதோறுஞ் 9. மதின்னிசக் கவர்ந்தஅகத்தனவார்கழல் வாயிற் கிடங்கொடுக்கி நெடுமதில் நிரைப் மேலோர் பக்கம் (வெண்பா-நொச்சி- 7) புற்றுறை பாம்பின் (பதிற்று. 22) 10. மதிற்குடுமிகொண்டஎங்கண் மலர மழுவாளான்மன்னர்.........gift® மண்ணு மங்கலம் (வெண்பா-உழிஞை 28) வென்றி பெறவந்த கடிமதில் எறிந்து (பெரும்பாண்வரி-450-4) 11. வென்றவாளின்மண் தீர்த்தநீர் பூவாடு செற்றவர் செங்குருதி போர்க்கு உரைஇப் வேலின்மண் (வெண்பா-உழிஞை 27) வருபெரு வேந்தற்கு (புறம் 97) பிறர்வேல் போலாதாகி பிறர்வேல் போலாதாகி (புறம் 332) (புறம் 332) 12. தொகைநிலை வென்றுலந்த திரிய கதிர்சுருக்கி அடுந்தேர்த்தானை (பதிற்று-53) தலைவன் மதில் சூழ்ந்த (சிலப். 26 கால்கோள்வரி அறத்துறைபோ 211. 218) வாரெயில் உருள்பூங் கடம்பின் (பதிற்று 4-ம் பதிகம் பொற்புடை விரியுளைப் (நற் - 270) 13. சென்றவுயிரின் நெடுவேல் பாய்ந்த நின்ற யாக்கை (புறம் - 97) எய்போற் கிடந்தான் (பு வெ-176) நூற்பா எண் துறைப்பெயர்இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் இருநிலந்தீண்டா வான்றுறக்கம் அருநிலைவகை (பெரும்பொருள் விளக்கம்) பருதிவேன்மன்னர் 14. பூக்கூறியது கார்கருதி நின்றதிரும் (பு. வெ. தும்பை. 1) 15. சிறப்புச் செய்தது வெல்பொறியும் நாடும் (பு வெ. தும்பை-2) 16. விலக்கவும் வயிர்மேல் வளைநால போர்துணிந்தது (பு வெ. தும்பை - 4) ஒன்றற்கிரங்கல் மின்னார்சினஞ் (பு.வெ. தும்பை-5) 17. படைத்தலைவரை கங்கை சிறுவனுங் வகுத்தது பெருந்தேவனார் பாட்டு தும்பைத்தணை (புறம் 294) (புறத்திரட்டு. அதமர 10 (பதிற்று 82) கைவேல்களிற் சென்றவுயிர்போலத் முடிமனரெழுதரு 1. தானைநிலை வெண்குடை மதிய குழக் களிற் றரசர் பகைபெருமையிற் (குறள் 774) வெண்குடை மதிய (சிந்தாமணி-2223) நறுவிரை துறந்த (புறம் 294) (சிலப். கால்கோள் வரிகள் (புறம் 276) கைவேல் களிற் 194-204) தற்கொள் பெருவிரல் (குறள். படைச் 4) நறுவிரை துறந்த தற்கொள் பெருவிரல் (தகடூர் யாத்திரை. புறத் திரட்டு. படைச் செருக்கு 9.) கோட்டங் கண்ணியும் (புறம்-275) 2. யானை நிலை கையொடு கையோ மாயாத்தாற் றாக்கு அயிற் கதவம் (பெரும்பொருள் விளக்கம். (புறத்திரட்டு. முத்தொள் புறத்திரட்டு 1389) யானைமறம் 14) மருப்பூசியாக கையதுகையோடு (புறத்திரட்டு. முத்தொள் 1390) 3. குதிரைநிலை நிலம் பிறக்கிடுவது பல்லுருவக் காலின் பகைபெருமையிற் (புறம் 303) மாவாராதே (பதிற்று. 82) (புறம் 273) நிலம் பிறக் கிடுவது பருத்தி வேலிச் (புறம் 303) நூற்பா எண் துறைப்பெயர்இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் சீறூர் (புறம் 299) மாவாராதே (புறம் 273) நிலம் பிறக் (புறம் 303). 4. தார்நிலை நிரப்பாது கொடுக்குஞ் வெய்யோ னெழா இவற்கீத் துன்மதி (புறம் 180) (பெரும்பொருள் (புறம் 290) விளக்கம். புறத்திரட்டு வெய்யோ னெழா தானை மறம் 4) (புறத்திரட்டு 1362) இவற்கீத் துண்மதி (புறம் 290) நிரப்பாது கொடுக்கும் (புறம் 180) 5. இருவர் தலைவர் காய்ந்து கடுங்களிறு ஆதிசான்ற மேதகு பாடல் இல்லை தபுதிப் பக்கம் (வெண்பா-தும்பை 12) (பாரதப்பாட்டு) 6. கூழை தாங்கிய கோட்டங் கண்ணியுங் சீற்றங் கனற்றச் பாடல் இல்லை எருமை (புறம் 275) 7. படையறுத்துப்பாழி நீலக் கச்சைப் தொல்லேறு பாய்ந்த நீ லக்கச்சைப் கொள்ளும் ஏமம் (புறம் 274) (பாரதம்) (புறம் 274) நீலக்கச்சைப் பூந்து (புறம் 274) 8. களிறு எறிந்து ஆசா கெந்தை இடியா னிருண் கட்டியன்ன காரி எதிர்ந்தோர் பாடு (புறம் 307) வானவர் போரிற் (தகடூர் யாத்திரை. புறத் (பாரதப்பாட்டு) திரட்டு-1372) 9. களிற்றொடு பட்ட விழவு வீற்றிருந்த ஆளுங் குரிசில் ஆளூங் குரிசி லுவகைக் வேந்தனை அட்ட (பதிற்று-56) (புறத் நான்மருப் பில்லாக் (புறத்-1348) வேந்தன் வாளோ (பாரதப்பாட்டு) ராடும் அமலை 10. இருபெருவேந்தர் வருவார் தாங்கி வருதார் தாங்கி வருதார் தாங்கி தாமும் சுற்றமும் (புறம் 62) (புறம் 62) (புறம் 62) ஒருவரு தொழியாத் தொகைநிலை 11. செருவகத்திறைவன் வான மிறைவன் மறங்கெழு வேந்தன் மறங்கெழு வேந்தன் வீழ்வுறச் சினைஇ (வெண்பா-தும்பை 26) (பாரதப்பாட்டு) (பெருந்தேவனார் பாரதப் ஒருவன் மண்டிய பாட்டு) நல்லிசை 12. பல்படையொருவற் ஒருவனை யொருவன் வள்ளை நீக்கி ஒருவனை யொருவன் குடைதலின் (புறம். 76) (மதுரைக்காஞ்சி (புறம் 76) மற்றவன் ஒள்வாள் வள்ளை நீக்கி 255-257) வீசிய நூழில் (மதுரைக்காஞ்சி-எ அறத்திற் பிறழ 255 - 7) வாகைத்திணை 1. அறுவகைப்பட்ட இன்றினூங்கோ (புறம்-76) பார்ப்பனப்பக்கம் விழிவுடை (புறம்.31) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் ஓதல் இம்மை பயக்குமால் ஓதல் வேட்டல் (நாலடி-கல்வி 2) (பதிற்று. 24) ஆற்றவுங் கற்றார் முறையோதினன்றி (பழமொழி 116) இம்மை பயக்குமால் (நாலடி 14.2) பாடல் இல்லை. ஆற்றவுங் காற்றார் (பழமொழி) ஓதுவித்தல் எண்பபொருளவாகச் ஒத்த முயற்சியா (குறள்-424) எண்பொருளவாகச் (குறள். அறிவு-4) வேட்டல் நன்றாய்ந்த நீணிமிர் நன்றாய்ந்த நீணிமிர்சடை (புறம் 166) (புறம் 166) வேட்பித்தல் ஆன்ற கேள்வி ஈன்றவுலகளிப்ப (புறம் 26) நளிகடலிருங்குட்டத்து (புறம் 26) ஈதல் இலனென்னு மெவ்வ இலனென்னு மெவ்வ (குறள். 223) (குறள் 223) ஈத்துவக்கு மின்ப ஏற்றல் இரவலர்புரவலை நிலம் பொறை (புறம் 162) (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு. குடிமரபு) தான் சிறிதாயினந் (நாலடி 48.) 2. ஐவகை மரபின் அரசர் பக்கம் படைவழங்குதல் கடுங்கண்ண சொற்பெயர் நாட்டங் (புறம் 14) (பதிற்று 21) கேள்விகேட்டுப் (பதிற்று. 74) ஒருமழுவாள் பாடல் இல்லை. விசயந்தப்பிய(பதிற்று.) ஆபயன் குன்று (குறள் கொடுங். 10) குடியோம்புதல் இருமுந்நீர்க்குட்டம் கடுங்கண்ண (புறம் 20) (புறம் 14) தொறுத்த வயல் (பதிற்று 13) கொலையிற் கொடி (குறள். செங். 10) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 3. இருமூன்று மரபின் ஏனோர் பக்கம் வணிகர்க்குரிய உழுது பயன் கொண்டு ஈட்டியதெல்லாம் ஆறு பக்கம் (வெண்பா. வாகை 10) (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு மரபு உற்றுழி யுதவியு வேளாண் மாந்தர்க் குரிய ஆறுபக்கம் உழவு சுழன்று மேர்ப் ஈத்துவக்கு மின்ப (குறள். 1031) (குறள். ஈகை. 8) உழவொழிந்த கருமஞ் செய தொழில் (குறள். 10.1) போர்வாகை வாய்த்த விருந்தோம்பல் இரவாரிரப்பார்க் உழுதுண்டு வாழ்வாரே (குறள். 1035) (குறள் உழவு 3) பகடு புறந்தருதல் பகடு புறந்தருநர் வாணிகஞ் செய்வார்க்கு (புறம் 35) (குறள். நடுவு 10) வழிபாடு இருக்கை யெழலு இருக்கையெழலு (நாலடி குடிப்பிறப்பு4) (நாலடி. குடி 3) வேதமொழிந்த வேற்றுமை தெரிந்த கல்வி (புறம் 183) 4. மூவகைக் காலமும் புரிவின்றி யாக்கை வாய்மை வாழ்ந நெறியினாற்றிய (வெண்பா-வாகை 20) வாடாப் போதி அறிவன் தேயம் 5. நாலிரு வழக்கிற் நீர்பலகான்மூழ்கி நீர்பல கான் றாபதப்பக்கம் (வெண்பா-வாகை 14) (பு. வெ. வாகை 14) ஓவத்தன்ன ஓவத்தன்ன (புறம் 251) (புறம் 251) வைததனை (திரிகடுகம் 48) கறங்கு வெள்ளருவி ஒருமையுளாமை (புறம் 252) (குறள். அடக்க. 6) ஆரா வியற்கை (குறள். அவா. 10) நீஇராடனிலக்கிடை) 6. பாலறி மரபிற்பொரு நர்கண் (பக்கம்) வாளால் மிகுதல் ஏத்து வாட்டானை விரைந்து தொழில் (வெண்பா-வாகை 26) (குறள். சொல்வன் 8) வண்டுறையுங் (பாடல் இல்லை) (பு. வெ ஒழிபு 18) கை கால்புருவங் (பு. வெ. ஒழிபு. 17) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் மல்வென்றி இன்கடுங்கள்ளி இன்கடுங்கள்ளி (புறம். 80) (புறம். 80) கழகத் தியலுங் (பு. வெ. ஒழிபு. 16) 7. அனைநிலை வகை சொல்வென்றி விரைந்து தொழில் (குறள். 14) பாடல்வென்றி வண்டுறையுங் (வெ பெருந்திணை 18) ஆடல்வென்றி கை கால் புருவங் (வெண்பா. பெருந் திணை 17) சூதுவென்றி கழகத் தியலுங் (வெண்பா-பெருந் திணை 15) 1. கூதிர்ப்பாசறை கவலை மறுகிற் வினைவயிற் புலம்பொடு வதியு வேனிற்பாசறை (வெண்பா. வாகை 15) (அகம் 84) (நெடுநல்வாடை 166-188) மூதில்வாய் பெரும்பெயல் பொழிந்த பெரும்பொருள் விளக்கம் (முல்லைப்பாட்டு 6. 71-86, புறத்திரட்டு பாசறை. 4) 100 இறுதிவரை) கவலை மறுகிற் (பு. வெ. வாகை 15) 2. ஏரோர் களவழி இருப்பு முகஞ் செறித்த இருப்பு முகஞ் செறித்த குடிநிலை வல்சிச் (புறம் 369) (புறம் 399) பெரும்பாண் வரி 197-205) போரோர் களவழி ஓஒவுவமையுறழ் நளிகடலிருங் உருவக் கருந்தேர் (களவழி 36) (புறம் 26) (களவழி 4) ஓஒவுவமையுறழ் (களவழி 40-36) களவேள்வி நளிகட லிருங் என்னப் பெரும் (புறம் 26) படையனோ (பதிற்று செய் 77) 3. முன்றேர்க்குரவை களிற்றுக் கோட் சூடிய பொன்முடி கோட்டுமாப் பூட்டி (புறம் 371) விழவுவீற்றிருந்த (சிலப். கால்கோட்காதை (பதிற்று. 56) 232-234-239-240) 4. பின்றேர்க்குரவை வஞ்சமில் கோலானை வென்று களங்கொண்ட வென்று களங்கொண்ட (வெ. வாகை. 8) (பெரும்பொருள் விளக்கம். (பெரும்பொருள் விளக்கம்) புறத்திரட்டு களம் 12) பின்றேர்க்குரவை களிற்றுக் கோட்டன்ன (சிலப். கால்கோட் வரி 241) (புறம் 371) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 5. பெரும்பகை இவ்வே பீலியணித்து குன்று துகளாக்குங் பிளர் வேல்போல தாங்கும் வேல் (புறம் 95) (பாரதம்) (புறம் 332) இரும்பு முகஞ்சிதைய (புறம் 309) இவ்வே பீலியணிந்து (புறம் 95) 6. அரும்பகை களம்புக லோம்பு எருது காலுறாஅ வணங்கு தொடாப் தாங்கும் ஆற்றல் மின் (புறம் 87) (புறம் 387) (புறம் 78) என்னைமுன் னில்லன் களம்புக லோம்பு மின் (குறள் 771) மின் (புறம் 87) 7. புல்லா வாழ்க்கை எருது காலுறாஅ கலிவர லூழியின் எருது காலுறாஅ வல்லாண் பக்கம் (புறம் 327) (புறத்திரட்டு. 3) (புறம் 327) கலிவர லூழியின் (பாரதவெண்பா) 8. ஒல்லார் நாணப் சிறந்த திதுவெனச் எம்பியை வீட்டுத குழாக் களிற்றரசர் பெரியவர்க் (வெண்பா. வாகை 30) (பாரதம்) (பழையபாட்டு.புறத் திரட்டு 1354) கண்ணிச் சொல்லிய இழைத்த திகவாமைச் இழைத்த திகவாமற் வகையின் ஒன்றோடு (குறள். படைச் 9) (குறள். 779) புணர்த்துத் தொல் இழைத்த திகவாமை லுயிர் வழங்கிய (குறள். 779) அவிப்பலி 9. ஓல்லாரிடவயிற் மாண்டனை பலவே இந்திரன் மைந்த பகை நட் பாக் புல்லிய பாங்கு (பதிற்று. 32) (பாரதம்) (குறள் 874) அறத்திற்கே (குறள் 76) நனிபு கன்றுறைது (மதுரைக்காஞ்சி 147-151) 10. பகட்டினானு மாவி உண்டா லம்மவிவ் யானை நிரையுடைய யானை நிரையுடைய னானும் துகட்டபு (புறம் 182) (பெரும்பொருள் விளக்கம். (பெரும்பொருள் விளக்கம்) சிறப்பிற் சான்றோர் புறத்திரட்டு. குடி மரபு 9). ............k¿a பக்கம் எனைப்பெரும்படையொடு குளகரை யாத்த (பதிற்று 77) (பெரும்பாண் 147-168) ஆகாத்தோம்பி (சிலப். அடைக். 120-1 1) 11. கடிமனை நீத்த பால் பிறன் மனைநோக்காத கடலு மலையுந் பரிதி சூழ்ந்தவிப் (கட்டில் நீத்த பால் (குறள் 148) பரிதி சூழ்ந்தவிப் (புறம் 358) (புறம் 358) 12. எட்டுவகை குடிப்பிறப்படுத்துப் குடிப்பிறப்படுத்து குடிப்பிறப் புடுத்துப் நுதலிய அவையகம் (ஆசிரிய மாலை) (ஆசிரியkலை-புறத்(ஆசிரியkலை) திரட்டு-அவையறிதல்) 13. கட்டமை ஒழுக் ஒருமை (குறள் அடக்க. ஐந்தவித்தானாற்றல் கத்துக் கண்ணுமை 13) (குறள் 25) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் அடக்கமுடைமை ஒருமையுளாமை ஒழுக்கம் (குறள் பொறிவாயிலைந் (குறள் 126) ஒழுக்கம் 1) (குறள் 6) ஓகுக்கமுடைமை ஒழுக்கம் விழுப்பம் சமன்செய்து (குறள். நடுவு 8) நடுவுநிலைமை சமன்செய்துசீர் பிறன்மனை (குறள். 118) (குறள். பிறனில் 8) வெஃகாமை பயன்படு வெஃகி படுபயன் வெஃகி (குறள் 172) (குறள் வெஃகாமை 2) புறங்கூறாமை அறங்கூறானல்ல அறங்கூறானல்ல (குறள் 181) (குறள். புறங் 1) தீவினையச்சம் தீவினையா ரஞ்சார் தீவினையா ரஞ்சார் (குறள் 201) (குறள். தீவினை 1) அழுக்காறாமை ஒழுக்காறாக் ஒழுக்காறாக் (குறள் 161) (குறள். அழுக்கா. 1) பொறையுடைமை மிகுதியன்மிக்கவை மிகுதியான் மிக்கவை (குறள் 158) (குறள். பொறை. 8) விழையாவுள்ளம் (அகம். 286. 8-13) 14. இடையில் வண் மன்னாவுலகத்து மன்னாவுலகத்து ஒருநாட்செல்லலம் புகழ்க் கொடை (புறம் 165) (புறம் 165) (புறம் 101) கடந்தடுதானை (புறம்110) ஈயெனஇரத்தல் (புறம் 204) 15. பிழைத்தோர்த் தம்மையிகழ்ந்தமை தம்மையிகழ்ந்தமை நீர்த்தோ நினக்கென தாங்கும் காவல் (நாலடி. துறவு 8) (நாலடி. 58) (புறம் 43) அகழ்வாரைத் அகழ்வாரைத் கருத்தாற்றித் (குறள். 151) (குறள். பொறை. 1) (பழமொழி 19) மிகுதியான்மிக்காரை (குறள். 158) 16. பொருளொடு ஐயுணர் வெய்தியக் படைகுடி கூழமைச்சு முந்நீர்த் திரையி புணர்ந்த பக்கம் (குறள் 354) (குறள். இறை 1) (திரிகடுகம் 35) சார்புணர்ந்து சார்பு படைப்புப் பல படைத்து ஐயுணர் (குறள் 351) (புறம் 189) (குறள் 354) படைகுடி கூழமைச்சு ஐயுணர் கற்றீண்டு மெய்ப் (குறள். 381) (குறள். மெய்யு. 2) (குறள்) நாடு தள்ளாவிளையுளுந் (குறள் 731) அரண் கொளற்கரிதாய்க் (குறள். 745) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் பொருள் உறுபொருளு (குறள் 756) அமைச்சு வன்கண் குடிகாத்தல் (குறள். 632) நட்பு அழிவினவை நீக்கி (குறள். 781) படை அழிவின் றுறை (குறள் 764) தூது கற்றுக்கண் (குறள். 686) ஒற்று கடாஅ வுருவொடு (குறள்-585) புதல்வர்ப்பேறு படைப்புப் பல (புறம் 188) 17. அருளொடு புனிற்றுப் பசியுழந்த புணர்ந்த அகற்சி தன்னுயிர்க் கின்னா (குறள். இன்னா 8) அருளுடைமை அருட்செல்வஞ் வாய்மை மன்னுயிர் ஓம்பி (குறள். 241) (குறள் வாய்மை 1) (குறள். 244) களலென்னுங் (குறள். கள்ளாமை 7) யாதனின் யாதனி (குறள். துறவு 1) கொல்லாமை அறவினை யாதெனிற் உண்டாலம்ம (குறள். 326) (புறம் 182) பொய்யாமை வாய்மையெனப்படுவது (குறள். 291) கள்ளாமை களவென்னுங் (குறள். 287) புணர்ச்சி விழையாமை மாக்கேழ் மடநல்லாய் கள்ளுண்ணாமை (நாலடி-தூய்தன்மை 1) துறவு களித்தறியேன் (குறள் 928) யாதனின் யாதனின் (குறள் 341) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 18. காமநீத்தபால் காமம் வெகுளி காமம் வெகுளி இளையர் முதியர் (குறள் 360) (குறள். மெய்யு. 10) (பெரும்பொருள் விளக்கம்) இளையர் முதியர் எண் சேர்ந்த நெஞ்சத் (பெரும்பொருள் விளக்கம்) (குறள் 910) (புறத்-அறிவுடைமை 15) காஞ்சித்திணை காஞ்சி மயங்கிருங் கருவிய புறம்-365 1. மாற்றருங் இருங்கட லுடுத்தவிப் பல் சான்றீரே பல்சான்றீரே கூற்றஞ்சாற்றிய (புறம் 363) (புறம் 195) (புறம் 195) பெருமை உடற்றும் பிணித்தீ (சிந்தாமணி 2620) 2. கழிந்தோர் ஓழிந் பல்சான்றீரே இனி நினைந் திரக்க யாணர் வரவின் தோர்க்குக் காட்டிய பல்சான்றீரே (புறம் 243) (ஆசிரிய மாலை) முதுமை (புறம் 195) 3. புண்கிழித்து நகையம ராய பொருது வடுப்பட்ட பொருது வடுப்பட்ட முடியும் மறம் (வெண்பா-காஞ்சி 15) 4. புண்ணோர் பேஎ ஆயு மடுதிறலாற் புண்ணனந்த ருற்றானனப் புண்ணனந்த ருற்றானைப் யோம்பிய (வெண்பா-காஞ்சி 106) பேஎய்ப்பக்கம் 5. இன்னனென் சிறியகட் பெறினே சிறிய கட்பெறினே இளையோர் சூடார் றிரங்கிய மன்னை யெமக்கீயுமன்னே (புறம் 235) (புறம் 242) (புறம் 235) பாடுநர்க்கீத்த (புறம் 221) செற்றன்றாயினும் (புறம் 222) 6. துன்னருஞ் சிறப் நகுதக்கனரே மெல்லவந்தெனல்லடி பின் வஞ்சினம் நாடுமீக் (புறம் 72) (புறம் 73) மடங்கலிற் சினைஇ (புறம் 71) 7. மனைவி பேய் தீங்கனிப் புறவமொடு தீங்கனியிரவமொடு துன்னுதல் கடிந்த (புறம் 281) தீங்கனி யிரவமொடு தொடாக் காஞ்சி (புறம் 281) 8. வேலிற் பேர்த்த கெளவைநீர் வேலிக் இன்பமுடம்பு யானை தந்த முனிமர மனைவி ஆஞ்சி (வெண்பா-காஞ்சி 23) (தகடூர் யாத்திரை-புறத் (புறம் 2470 திரட்டு. மூதின் மறம் 8) கெளவைநீர் வேலிக் (பு. வெ. காஞ்சி 23) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 9. முதுகுடி மகட் நுதிவேல்கொண்டு நுதிவேல்கொண்டு வந்தோர் பலரே பாடஞ்சிய மகட் (புறம் 346) (புறம் 349) (புறம் 345) பால் களிறணைப்பக் கலங்கின (புறம் 345) 10. கொண்டோன் கொலையானாக் நிலையி லுயிரிழத்தற் எனறிவை சொல்லி தலையோடு (வெண்பா காஞ்சி 13) (சிலப். காதை 19. வரி முடிந்தநிலை 60-63) 11. பூசல் மயக்கம் மீனுண் கொக்கின் இரவலர் வம்மி இரவலர் வம்மி (புறம் 277) (தகடூர் யாத்திரை- (தகடூர் யாத்திரை) புறத்திரட்டு-இரங்கல் 2) 12. தாமேயேங்கிய குழவியிறப்பினும் மழைகூர்பானாட் தாங்கரும் பையுள் (புறம் 74) கதிர்மூக்காரல் (புறம் 349) குழவியிறப்பினும் குழவியிறப்பினும் (புறம் 74) (புறம் 74) 13. மூதானந்தம் ஓருயிராகவுணர்கஓருயிராகவுணர்க.......bfLfbt‹ னுயிரென (வெண்பா-சிறப்பிற் (பு வெ சிறப்பிற் (சிலப். காதை-20வரி (பொதுவியல் 9) பொது 9) 77-81) ஓருயிராகவுணர்க (வெண்பா-சிறப்பிற் பொதுவியல்) 14. முதுபாலை ஐயோவெனின்யா இளையரு முதியரும் என்றிறத் தவலங் (புறம் 255) (புறம் 254) (புறம் 253) Iயோவெனின்aன் (புறம் 265) 15. கையறுநிலை செற்றன்றாயினுந் தேரோன் மகன்பட்ட இளையோர் சூடார் (புறம் 226) (பாரதம்) (புறம் 242) 16. தபுதாரநிலை யாங்குப் பெரியதாயினு யாங்குப் பெரியதாயினு ஓவத்தன்ன (புறம் 245) (புறம் 245) (புறம் 251) 17. தாபதநிலை அளியதாமே அளியதாமே அளியதாமே (புறம் 248) (புறம் 248) (புறம் 248) குய்குரன் மலிந்த (புறம் 250) பாலை நிலை 18. மாலைநிலை பல்சான்றீரே பல்சான்றீரே பல்சான்றீரே பல்சான்றீரே பல்சான்றீரே பல்சான்றீரே (புறம் 246) (புறம் 246) (புறம் 246) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 19. தலைப்பெயல் இடம்படுஞாலத் வாதுவல்வயிறே நிலை (வெண்பா-சிறப்பிற் (புறத்திரட்டு. மூதின்மறம்.9) பொதுவியல் 5) ஏற்கண்டறிகோ நரம்பெழுந்துலறிய நரம்பெழுந்துலறிய (புறம் 278) (தகடூர் யாத்திரை) கடல் கிளர்ந்தன்ன (புறம் 278-3 2) (புறம்-295) ஈன்றுபுறந்தருதல் (புறம் 312) 20. காடு வாழ்த்து களரி பரந்து உலகு பொதியுருவந் (புறம் 356) (பெரும்பொருள்விளக்கம் நெஞ்சமர் காதலர் புறத்திரட்டு. இங்கல் 19) (புறம் 356) களரி பரந்து (புறம் 356) வெட்சியும் வாகையும் முனைப்புலத்து வந்த பாடாண் அவலெறியுலக்கை வஞ்சிப்பொருள் (பதிற்-29) வந்த பாடாண் பார்ப்பார்க்கல்லது வாகைத்துறைப் (பதிற்-63) பாடாண் பாடாண்திணை 21. அமரர்கண் முடியும் கடவுள் வாழ்த்து எரியெள் ளுவன்ன வெட்சிப் பாடாண் அறுவகை (பதிற்று) முனைப்புலத்துக் நிறைமொழி மாந்தர் (பழையபாட்டு-நக்.உரை (குறள். நீத் 8) மேற்கோள்) கெடுப்பதூஉங் (குறள். வான் 15) வஞ்சிப்பாடாண் நாகின நந்தியினம் வேந்தமற் செய்தற்கு (தகடூர் யாத்திரை-புறத் திரட்டு-1257) உழிஞைப்பாடாண் வெஞ்சின வேந்த (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு 1329) தும்பைப் பாடாண் இன்கடுங்கள்ளின் (புறம் 80) யாவிராயினும் (புறம் 88) வாகைப் பாடாண் நீர்மிகிற் சிறையு (புறம் 51) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் காஞ்சிப் பாடாண் அற்றைத் திங்கள் (புறம் 112) நோகோ யானே (புறம் 234) புரைதீர்காமம் புயல்சூடி நிவந்த கைக்கிளைப் பாடாண் புல்லிய வகை பெண்மையுணராப் காதற் பாடாண் சேணாறு நல்லிசை (பதிற்று. 88) 22. பரவலும் புகழ்ச்சி புகழ்தல் பரவல் புகழ்ச்சிப்பாடாண் யுங் கருதிய பாங் கண்ணகன் ஞால நிலநீர் வளிவீசும் அட்டானானே கினும் முன்னோர் (திரிகடுகம்-கடவுள் (பதிற்று 14) (பதிற்று. செய். 47) கூறிய குறிப்பினும் வாழ்த்து) அமைந்த செந்துறை வண்ணப்பகுதி பரவல் புகழ்ச்சி வாழ்த்துப்பாடாண் வையமகளை வரைபுரையு மழ பைம்பொற்றாமரை (வெண்பா-பாடாண்-3) (புறம் 38) (பதிற்று. செய். 48) புலவராற்றுப்படை செந்துறைப்பாடாண் வெறிகொ ளறையருவி பாட்டு (வெண்பா பாடாண்-4) உண்டாலம்மவிவ் (புறம் 182) கந்தழி மாயவன் மாயம் (வெண்பா பாடாண் 40) வள்ளி வேண்டுதியா னீயும் (வெண்பா பாடாண் 40) காமப்பகுதி மலைபடுசாந்த (வெண்பா. பாடாண் 47) வையைதன் (கலி-மருதம்-2) பூந்தண்டார்ப் (கலி-குறிஞ்சி-21) 23. காமப்பகுதி கடவுள்மாட்டுந் நல்கெனினாமிசையாள் கண்ணொடு கண்ணினைக் கடவுளும் தெய்வப்பெண்டிர் (பு.வெ. பாடாண் 48) (கம்ப. மிதிலைக்காட்சி) வரையார் நயந்த பக்கம் பல்லேற்ற பரிகலத்துப் செய். 35, 37, 38) நல்கினு நாமிசையாகுடுமிப்பருவத்தே.........xUKf« குறவர் நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் (வெண்பா. பாடாண் 48) களியானைத்தென்னன் (திருமுருகு. வரி 100-102) மானிடப் பெண்டிர் (முத்தொள். 63) நயந்தபக்கம் அணியாய செம் அரிகொண்ட கண் அடிபுனைதொடுகழன் சிவப்ப (வெண்பா. (புறம் 83) பாடாண் 49) கார்முற்றி (கலி 67) மீளி வேற்றானையர் (கலி 31) 24. குழவி மருங்கினும் வரிப்பந்து கொண்ட அன்னாயிவனொருவ பொன் திகழ்தன் »ழவதாகும்(வெண்பா-பாடாண்50) tருறுtணரைம்பால் (கலி 58) 25. ஊரொடு தோற்ற பேதைமுதலாகப் உலாச் செய்யுள் மும் உரித்தென பேரிளம்பெண் ஈறாக மொழிப வருவது வழக்கொடு சிவணிய முற்பற்றினாரை ஊர் வகைமை எரியு மேற்றத்தி அணியிழையார்க் (பொருநராறு) (சிறுபாணாற்றுப்படை மலிதேரான் கச்சியு பாட்டு) மதியிற் செருப்பிற் கூடற்பெருமானைக் (பதிற்று 21) (முத்தொள்ளாயிரம் 73) ஆவஞ் சேர்ந்த (புறம் 14) தோற்றம் பூங்கணெடு முடிப் பணிகிடந்தார்க்கும் (பு. வெ. பாடாண். 39) (முத்தொள் 95) வெயின்மறைக் வளையவாய் நீண்ட (புறம் 60) (முத்தொள் 77) முரசுமுழங்கு வழுவிலெம் வீதியுள் (பொருந. 54-5) (முத்தொள் 54) சாலியரிசூட்டான் அயிற் கதவம் (முத்தொள். யானைமறம் 17) நீயே யலங்குளைப் (புறம் 4) மன்னர் மலைத்தல் (புறம் 10) 26. மெய்ப்பெயர் நலம் பூத்த (கலி 27) மருங்கின் கண்மிசை மயிலாவ நெடுவரைச் சந்தன வைத்தனர் (கலி 27) (சிறுபாணாற்றுப் படை. வழியே திசைதிசை (கலி 26) பழையபாட்டு) புனவளர்பூங்கொடி (கலி 42) சுரியமலர் நெடுங்கட் (சிலப். கானல் 7) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் 27. கொடிநிலை கொடிநிலை கொடிநிலை வாழ்த்து கொடிநிலை கந்தழி பூங்க ணெடுமுடிப் மேகத்தான் லெற்பா புள்ளும் வழிபடரப் வள்ளி (வெண்பா பாடாண் 39) (சிலப். வேட்டுவரி) மாற்றார் நிரை கருதி கந்தழி கந்தழிவாழ்த்து அன்றெறிந் தானு சார்பினாற் றோன்றாது காந்தள் (வெண்பா-உழிஞை 7) வெண்போழ் கடம்பொடு (அகம் 98) வள்ளிக்குஉதாரண கடம்பெறிந்து சூர் மில்லை. புலவராற்றுப்படை வள்ளி வாழ்த்து சார்த்திவருமாறு பிறைகாணுங்காலை மாடமலிமறுகிற் வள்ளிப்பாற்பட்ட கூடற்குடவயின் பெண்பாற் கடவுள் வள்ளி முட்டாட்டாமரைத் வாழ்த்து அமரகத்துத் தன்னை துஞ்சி (திருமுருகு 71-73) (நச்-உரைமேற்கோள்) பரவற்குச் சார்ந்து தனிக்கணிற் பாகமுந் பெருங்கட் சிறுகுறத்தி வருமாறு அடுதிறலொருவநிற் பரவுதும் (யா. வி. 83. மேற்கோள்) 28. கொற்றவள்ளை வல்லாராயினும் மாவாடிய புல களிறுகடைஇய (புறம் 7) (புறம் 57) (பதிற்று. 25) நேரார் நிலமறிய 29. கொடுப்போர் கொடுப்போர் ஏத்தல் ஏத்திக் கொடார்ப் தடவுநிலைப் பலாவின் தடவுநிலைப் பலவி பழித்தல் (புறம்-140) (புறம் 140) பாரிபாரியென்று பாரிபாரியென்று பாரிபாரியென்று (புறம் 107) (புறம் 107) (புறம் 107) ஒல்லுவ தொல்லு கொடார்ப்பழித்தல் (புறம் 196) ஒல்லு தொல்லு புகழ்பட வாழாதார் பண்டும் பண்டும் பாடுந (புறம் 196) (குறள். புகழ் 7) (புறம் 151) களங்கன்னியன்ன கொடுப்போர் ஏத்திக் (புறம் 127) கொடர்ப்பழித்தல் மின்னுந்தமனியமும் களங்கனியன்ன (பெரும்பொருள்விளக்கம்) (புறம் 127) அடுத்தூர்ந் இயல்மொழி தேத்திய இயன் ஊர்க்குறு மாக்கள் மாசற விசித்த மொழி வாழ்த்து (புறம் 94) (புறம் 50) மலையுறழ்யானை (பதிற்று 69) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் வாழ்த்து ஆன்முலையறுத்த முரசுகடிப் பிகுப்பவும் ஒன்று நன்குடைய (புறம் 34) (புறம் 158) (புறம் 156) இன்று செலினுந் இம்மைச் செய்தது இயல்மொழிவாழ்த்து (புறம் 171) (புறம் 134) பார்ப்பார்க்கல்லது இம்மைச் செய்தது (பதிற்று 63) (புறம் 134) ஆவுமானியற் (புறம்- 9) வாயில் காவலர்க்கு வாயிலோயே வேற்றுச் சுரத்தோடு வாயிலோயே வாயி உரைத்த கடைநிலை (புறம் 206) வாயிலோயே வாயி (புறம் 206) (புறம் 206) கண்படை கண்ணிய மேலாரிறையமருண் வாய்வாட்டானை வாய்வாட்டானை கண்படைநிலை (வெண்பா-பாடாண் 8) (நச். உரைமேற்கோள்) கபிலை கண்ணிய பருக்காழும் செம் பொன்னிறைந்த காடென்றா நாடென்றா வேள்விநிலை (வெண்பா-பாடாண் 14) (புறம் 166) வேலினோக்கிய வளி துரந்தக் மைமிசை யின்றி செஞ்ஞாயிற்றுத் விளக்குநிலை (வெண்பா-பாடாண் 12) வளிதுரந்தக் கண்ணும் (புறம் 20) (பு. வெ. பாடாண் 12) ( ,, 186) ( ,, 187) வாயுறை வாழ்த்து வாயுறை வாழ்த்து வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ காய் நெல்லறுத்து எருமையன்ன (புறம் 5) எருமையன்ன புறநிலை வாழ்த்து (புறம் 184) காய்நெல்லறுத்துக் (புறம்-5) (புறம் 184) செவியுறை செவியறிவு றூஉ அந்தணர் சான்றோ செவியறிவுறூஉ பணியீய ரத்தை நின் (வெண்பா-பாடாண் 33) வாடாஅது, பனிபடு (புறம் 6) (புறம் 6) புறநிலை வாழ்த்து அந்தணர் சான்றோ புறநிலை வாழ்த்து தென்றலிடை (பு. வெ பாடாண் 33) திங்களிளங்கதிர் (யா. விரு. 55 மேற்கொள்)கண்ணுதலோன் இமையா முக்க (பெரும்பொருள்விளக்கம்- (சூத் 422. நச். உரைமேற் கடவுள் வாழ்த்து) கோள்) கைக்கிளை வகை துடியடித்தோற்றம் அருளாயாகலோ இனத்தோடினஞ் (முத்தொள் 45) (புறம் 144) அணியாய செம் கண்முழையருவி நைவாரை நல்லார் (புறம் 147) துயிலெடை நிலை அளந்த திறையா கானம் பொருந்திய கானம் பொருந்திய (வெண்பா-பாடாண் 9) (நச். உரைமேற்கோள்) கூத்தர்ஆற்றுப் திருமழை தலைஇய வான்தோய் வெண்குடை வான்தோய் வெண்குடை படை (மலைபடுகடாம்-1) (நச்-உரைமேற்கோள்) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் திருமழை தலைஇய (மலைபடு-1) பாணர் ஆற்றுப் பாணன் சூடிய பாணன் சூடிய வணர்கோட்டுச் படை (புறம் 141) (புறம் 141) (புறம் 155) மணிமலைப் பணைத் (சிறுபாண் 1) பொருநர் சிலையுலா நிமிர்ந்த சிலையுலாய் நிமிர்ந்த அறாஅயானர் ஆற்றுப்படை (புறம் 394) (புறம் 394) (பொருநராற்றுப்படை) அறா அயாணர் (பொருந. 1. 2) விறலி மெல்லியல் விறலி சேயிழை பெறுகுவை சேயிழை பெறுகுவை ஆற்றுப்படை (புறம் 133) (புறம் 105) (புறம் 105) மெல்லியல் விறலி (புறம் 133) பிறந்தநாள் அந்தணராவொடு அந்தணராவொடு செய்கை யரிய வயிற் பெரு (முத்தொள். 49) (முத்தொள். 40) (நச்-உரைமேற்கோள்) மங்கலம் செய்கை யரிய பேரிசை நன்னன் கண்ணார் கதவந் (மதுரைக்காஞ்சி வரி (முத்தொள். 39) 618-619) ஏமாரு மன்னீர் சிறந்த சீர்த்தி பாடல் இல்லை அளிமுடியாக் கண் மணிமுடிதாள் சூடி மண்ணு மங்கலம் குடை நிழல் திங்களைப் போற்றதும் மந்தரங் காம்பா மரபு (சிலப். மங்கல 1) (முத்தொள் 35) அறநீர்மை தாங்கி அறநீர்மை தாங்கி ஞாயிறு சுமந்த முரசு முழங்கு தானை (புறம் 35: 17-1) (புறம் 35வரி 4-21 திங்களைப் போற்றுதும் (சிலப்-மங்கல) திங்கண் மாலைவெண் (சிலப். கானல்) ஞாயிறு போற்றுதும் (சிலப்-மங்கல) வாண் மங்கலம் பிறர்வேல் போலா ஆளி மதுகை பார்தாங்குந் (புறம் 332) அரும்பவிந்தார்க் (முத்தொள். 38) மன்னெயிலழித்த பாடல் இல்லை கடுந்தேர் குறித்த கடுந்தேர் குழித்த மண்ணு மங்கலம் (புறம் 15) (புறம் 15) வீயாச் சிறப்பின் செற்றோர் (புறம் 15: 20-1) கடியரண் (பட்டினப்பாலை) 228-270) நூற்பா எண் துறைப்பெயர் இளம்பூரணம் நச்சினார்க்கினியர் நாவலர் பாரதியார் பரிசில் கடைஇய ஆடெரி மறந்த ஆடுநனி மறந்த கடைக்கூட்டுநிலை (புறம் 164) (புறம் 164) நல்லியா ழாகுளி மதியேர் வெண்குடை (புறம் 64) (புறம் 392) பயங்கெழு மாமழை நல்யா ழாகுளி (புறம் 266) (புறம் 64) ஊனு மூணு (புறம் 381) குன்று மலையும் (புறம் 208) இருவகை வளன் ஏத்தியது (பரிசில்) தென் பரதவர் தென்பரதவர் விடைவேண்டல் விடை (புறம் 378) (புறம் 378) எல்லையு மிரவு உயிர்ப்பிடம் பெறாஅ. (பொருநராற். 118-129) தான் பிரிதல் வேண்டிக் (பொந. 119-29) கூறியது ஒருதிசையொருவனை விடை தரல் ஊனு மூணு முனை (புறம் 121) (புறம் 381) தடவு நிலைப் பலவி (புறம் 140) இரவலர் புரவலை அரசன் விடை (புறம் 162) கொடுப்ப நின்னயந் வேழம் வீழ்த்த துறை (புறம் 163) (புறம் 152) நின்னயந்துறை (புறம் 163) நாள், புள், ஆடியலழற் குட்டத் ஆடிய லழற்குட்டத் பிறவற்றின் (புறம் 229) (புறம் 229) காலனுங் காலம் நிமித்தமும் காலங் இருமுந்நீர்க்குட்டம் (புறம் 41) கண்ணிய ஓம்படை புள் (புறம் 20) ஐம்பெரும் பூத்த புதுப்புள் வரினும் மண்டினிந்த நிலன் (புறம் 2) (புறம்-20) (புறம்-2) காலனுங் காலம் நிமித்தம் (புறம் 41) காலனும் காலம் (புறம் 41) ஓம்படை நல்லவை காலம் (புறம் 195) 1. ஓத்து--இயல்; நூற்பகுப்பாகிய அதிகாரத்தின் உட்பிரிவு. ஓதப்படுதலின் ஓத்து என்னும் பெயருடையதாயிற்று. ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் பண்டைப் பிறப்பிற் பழகிய நல்லூழின் தூண்டுதலால் ஓரிடத்து எதிர்ப்பட்டுத் தம்முள் ஒருவரையொருவர் இன்றியமையாதவராக அன்பினால் உள்ளம் ஒன்றி வாழும் வாழ்க்கை அகத்திணை அல்லது அகவொழுக்கம் எனப்படும். அகத்திணையின் பொதுவிலக்கணத்தினையுணர்த்துவது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இயலாகிய அகத்திணையியலாகும். இவ்வாறு அன்பினை வளர்க்கும் மனை வாழ்க்கையினை மேற்கொண்ட குடும்பத்தினர் பல்லாயிரவர் சமுதாய அமைப்பாகிய பொது வாழ்க்கையிலும் அரசியல் ஆட்சியிலும் ஒத்த உரிமையும் கடமையும் உடையவராய்ப் பசியும் பிணியும் பகையும் இன்றி ஒத்து வாழும் நல்வாழ்வுக்கு அரண் செய்வது புறத்திணையொழுகலாறாகும். ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்துஞ் சொல்லும் பொருளும் என வகுத்துக் கொண்ட முறையே பொருளதிகாரத்தின் முதற்கண் அகத்திணையின் பொதுவிலக்கணம் உணர்த்தி அதனையடுத்தமைந்த புறத்திணையியலாகிய இவ்வியலில் புறத்திணையின் பொதுவும் சிறப்புமாகிய இலக்கணங்களை விரித்துக் கூறுகின்றார். அதனால் இது புறத்திணையியல் என்னும் பெயருடையதாயிற்று. 1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை எனவரும் அகத்திணை ஏழிற்கும் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனவரும் புறத் திணைகள் ஏழும் புறமாம். அவற்றுள், குறிஞ்சித் திணைப்புறமாகிய ஒழுக்கம் பகைவர் நாட்டுப் பசுக்கூட்டங்களைக் களவிற் கவர்ந்து கொள்ளுதலும் அங்ஙனம் கவரப்பட்ட ஆநிரைக்குரியோர் அவற்றை மீட்டுக் கொள்ளுதலும் ஆகிய தொழில்வேறுபாடு குறித்து முறையே வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறும். முல்லைத்திணைப் புறமாகிய ஒழுகலாறு பிறர்நாட்டின் நிலப்பகுதியினைப் பற்றிக்கோடல் வேண்டும் என்னும் பெரு விருப்பத்தால் தன்மேற் படையெடுத்து வரும் வேந்தன் மேல் மற்றொரு வேந்தனும் போர் செய்தழித்தல் கருதிப் படையுடன் மேற்செல்லுதலாகிய ஒருதொழிலே புரிதலால் வஞ்சி என ஒருபெயர் பெறும். மருதத்திணை புறமாகிய ஒழுகலாறு படையொடு சென்ற வேந்தன் பகைவேந்தரது மதிலை வளைத்து அழித்தலும் உள்ளிருந்த வேந்தன் தன் மதிலை அழிவின்றிப் பாதுகாத்துக் கொள்ளுதலும் ஆகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு பெயர் பெறும். நெய்தற்றிணைப் புறமாகிய ஒழுகலாறு இருபெருவேந்தரும் ஒரு களத்து எதிர்நின்று பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலின் தும்பை என ஒரு பெயர்பெறும். பாலைத்திணைப் புறமாகிய ஓழுகலாறு வேந்தராயினும் ஏனைக் குடிமக்களாயினும் தத்தமக்குரிய துறைகளில் மேம்பட்டு விளங்கும் வெற்றித்திறம் ஆகிய ஒன்றையே குறித்தலால் வாகை என ஒருபெயர் பெறும். பெருந்திணைப் புறமாகிய ஒழுகலாறு நிலையாமையென்னுந் துன்பியலாகிய ஒரு பொருளைக் குறித்து நிற்றலால் காஞ்சி என ஒருபெயர்பெறும். கைக்கிளைப்புறமாகிய ஓழுகலாறு இன்பியலாகிய ஒரு பொருளையே குறித்து நிற்றலால் பாடாண் என ஒரு பெயர் பெறும். 1. மேல் அகத்திணையியலின் முடிவில் அகத்திணைச் செய்யுளுள் ஒருவரது இயற்பெயர் கூறப்பெறுதல் இல்லையெனவும் புறத்திணைமருங்காயின் இயற்பெயர் பொருந்தி வரும் எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுதலால் உலகியலோடு ஒத்துவரும் காமப்பொருளாகப் பாடப்பெற்ற பாடாண் பாட்டின்கண் அமைந்த இன்பவொழுக்கம் இயற்பெயர் சார்த்திவரப்பெறும் என விளக்கந்தந்தார் இளம்பூரணர். குறி--பெயர். மண் நசை--மண்ணின் மேல் வைத்த ஆசை. அஃதாவது, அயல் வேந்தரது ஆட்சியுளடங்கிய நிலப்பகுதியைத் தானே கவர்ந்து கோடல் வேண்டும் என ஆள்வோரது உள்ளத்தே தோன்றும் ஆசை. நோந்திறம்--வருத்தத்தைத்தரும் துன்பியற் பகுதி. செந்திறம்--மகிழ்ச்சியைத்தரும் இன்பியற் பகுதி, மேலை ஓத்து--இதற்கு முன்னுள்ள அகத்திணையியல். 2. அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறலாம் எனவரும் உரைத்தொடர், அறமே கூறுதலில் அகச் சார்பாகச் கூறியது மயங்கக் கூறலாம் என்றிருத்தல் வேண்டும். வாகைத்திணைக்கண் கட்டில் நீத்தபால் முதலாகக் காமம் நீத்தபால் ஈறாகவுள்ள துறைகள் பொருளையும் இன்பத்தையும் விலக்கிக் கூறுதலால், அறமும் இன்பமும் அகலாதாகிப் பொருள் குறித்துவருவது புறத்திணை எனப் பன்னிருபடலத்திற் கூறப்படும் புறத்திணையிலக்கணம் மயங்கக்கூறல் என்னும் குற்றத்தில் பாற்படும் என்பது கருத்து. 1. அகம் புறம் என்பன காரணப்பெயர்கள். உள்ளத்தின் உணர்வளவில் உணரப்படும் குறிஞ்சி முதலிய அகத்திணைகள் ஏழுடன் வெட்சி முதலிய திணைகள் ஏழும் முறையே தொடர்புடையனவாய் அவற்றின் புறத்தனவாக எல்லார்க்கும் புலப்பட நிகழ்தலின் புறம் எனப்பட்டன. (முன்பக்கத்தொடர்ச்சி) இனி, புறத்திணைகள் பன்னிரண்டெனக் கொண்டு, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்னும் ஏழும் மறத்துறை பற்றியனவாதலின் புறம் எனவும், வாகை, பாடாண், பொதுவியல் என்பன மூன்றும் புறப்புறம் எனவும், கைக்கிளை பெருந்திணை என்பன இரண்டும் அகப்புறம் எனவும் பகுத்துரைப்பர் பன்னிருபடலமுடையார். அவர் கூறுமாறு புறத்திணைகள் பன்னிரண்டாயின் அவற்றைப்புறமாகக் கொண்டுள்ள அகத்திணைகளும் பன்னிரண்டாதல் வேண்டும். அங்ஙனமன்றி அகத்திணைகள் ஏழாகவேயிருக்க, அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகள் மட்டும் பன்னிரண்டாம் என்றால், முன்னர்க்கூறிய பொருளோடு பின்னர்க்கூறப்படும் பொருளும் ஒன்றிப் பொருந்துமாறு அமைத்தல் என்னும் நூற்புணர்ப்புக்கு முரண்பட்டதாய், வழிநூல் செய்வோன் முன்னோன் நூலின் ஆதரவின்றித் தானே ஒரு பொருளைக் கருதிக் கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். அன்றியும் பெருந்திணையாகிய அகத்திணைக்குப் புறனாகிய காஞ்சித்திணை என்பது, பல்வேறு நிலையாமையினை யுணர்த்துவதாகலின், அதனை மறனுடை மரபினவாகிய புறத்திணைகளுள் ஒன்றாக இணைத்துரைத்தல் பொருந்தாது. இனி, அவர் கூறும் பொதுவியல் என்பது பலவகைப்பட்ட போர்த்துறைகளில் ஈடுபட்டுள்ள வீரர்களாகிய ஆடவர் எல்லார்க்கும் பொதுவாகவுரியதொரு தனித்திணையாயின் அதனைப் புறத்திணைகளை விரித்துரைக்கும் நூலின் தொடக்கத்திலேயே வெட்சிப்படலத்தின்முன் முதற்படலமாகக் கூறியிருத்தல் வேண்டும். இனி, கைக்கிளை பெருந்திணை என்னும் அகத்திணையிரண்டினையும் புறத்திணையெனக் கொள்ளின், அகத்திணை ஏழு என்னும் முன்னோர் கொள்கைக்கு முரணாக அகத்திணை ஐந்தே எனக் கூறவேண்டிய நிலையேற்படும். அங்ஙனம் அகத்திணை ஐந்தே எனக் கொள்ளின், பிரமம் முதலாகக் கூறப்பட்ட எண்வகை மணங்களுள் யாழோர் கூட்டமாகிய கந்தருவம் ஒன்று நீங்கலாக ஏனைய ஏழு மணங்களும் புறத்திணையொழுகலாறுகளாகவே கூற வேண்டிவரும். ஆகவே புறத்திணைகள் பன்னிரண்டெனப் பின்வந்தோர் வகுத்த இப்பகுப்புமுறை, முன்னோர் நூலிற்கும் சங்கத்தொகை நூலாகிய கலித்தொகை முதலிய சான்றோர் செய்யுட்கும் தொன்றுதொட்டுவரும் உயர்ந்தோர் வழக்கிற்கும் ஏலாததாய் முரண்படுதலாற் பொருந்தாது என்பர் இளம்பூரணர். 1. அரில்-பிணக்கம்; ஈண்டு இச்சொல் மயக்கம் என்ற பொருளில் ஆளப்பெற்றது. தப-கெட. உட்கு-அச்சம். ஈரேழ்-பதினான்கு. துறைத்து-துறைகளையுடையது. துறை என்னும் பெயரடியாகப் பிறந்தது, துறைத்து என்னும் குறிப்புவினை முற்றாகும். 1. பகைவர் நாட்டுப் பசுநிரைகளைக் கவர்ந்து கொள்ளுதலாகிய செயல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலப்பகுதியில் நிகழ்தலானும் பிறர்நாட்டு ஆனிரைகளைக் களவிற்கோடல் குறிஞ்சிக்குரிய களவொழுக்கத்தோடு ஒத்தலானும், நிரை கவர்வோர் அடையாளமாகச் சூடிக்கொள்ளும் பூ குறிஞ்சி நிலத்திற்குரிய வெட்சிப்பூவாதலானும் குறிஞ்சிக்கு வெட்சிபுறனாயிற்று என்பர் இளம்பூரணர். 2. வெட்சித்திணை என்றிருத்தல் வேண்டும். 1. அகத்திணையியலின் தொடக்கத்தில் கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய், முற்படக்கிளந்த எழுதிணையென்ப எனவமைந்த நூற்பாவில் அகத்திணையேழினையும் முற்படக்கிளந்த எழுதிணை என்றதனால், அவ்வெழுதிணைகளின் புறத்தனவாய்ப் பிற்படக் கிளந்தனவாகிய புறத்திணை ஏழுள என்பதனைக் குறிப்பினால் தோற்றுவாய் செய்து போந்த தொல்காப்பியனார், மேலே குறிப்பிற் பெறப்படவைத்த புறத்திணை ஏழினையும் இவ்வியலில் வகைபெற விளக்குகின்றார். ஆதலால் புறத்திணையியலாகிய இது, மேலை அகத்திணையியலுடன் தொடர்புடையதாய் அதனையடுத்து வைக்கப்பெற்றது என்பதாம். 2. அரில்-பிணக்கம்; தத்தம் இயல்பினைத் தனித்தனியே பிரித்துணர இயலாவாறு தம்முட் பின்னிக் கிடத்தல். தப-கெட. அரில்தபவுணர்தல் ஆவது, ஐந்திரிபாகிய மயக்கம் கெடத் தெளிவாகவுணர்தல். திறப்படக் கிளத்தலாவது, வகைபெற ஆராய்ந்து கூறுதல். உட்குவரத் தோன்றுதலாவது, கண்டோர் அச்சமுற்று நடுங்கும்படி நிகழ்தல், 3. பாலை, பெருந்திணை, கைக்கிளையென்னும் அகத்திணைகட்குத் தமக்கென நிலமில்லாதவாறுபோலவே அவற்றின் புறத்தவாகிய வாகை, காஞ்சி, பாடாண் என்னுந் திணைகட்கும் தமக்கென நிலமில்லை என்பதாம். 1. வெட்சிதானே என்புழி ஏகாரம், புறத்திணை ஏழனுள் ஒன்றை மட்டும் பிரித்தெடுத்துக் கூறுதலின் பிரிநிலை ஏகாரமாகும். இவ்வாறே வஞ்சிதானே உழிஞைதானே தும்பைதானே வாகைதானே காஞ்சிதானே எனப் பின்வரும் தொடர்களில் உள்ள ஏகாரங்களும் பிரிநிலைக்கண் வந்தன என்பதாம். 2. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் விரித்துப் பாடப் பெற்றுவரும் அகத்திணையொழுகலாற்றை விளக்கும் முறையில் அகத்திணைக்குரிய துறைப் பகுதிகளையெல்லாம் தலைவன் தலைவி தோழி முதலிய அகத்திணை மாந்தர்க்குரிய கூற்றுகளில் வைத்து விரித்துக் கூறிய தொல்காப்பியனார், தாம் எடுத்துக் கூறிய கூற்றுக்களேயன்றி அவை போன்று பரந்து பட்டுவரும் கூற்றுக்களையெல்லாம் பின்வருவோர் ஒரு நெறிப்படத் தொகுத்துப் பல்வேறு துறைகளாக வகை பெற அமைத்துக்கொள்ளும்படி செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புகளுள் (முன்பக்கதொடர்ச்சி) துறை என்பதனையும் ஓருறுப்பாகச் செய்யுளியலுள் குறித்துள்ளார். இவ்வாறு அகத்திணைக்குரிய துறைகளைப் பலபட விரித்துச் கூறிய ஆசிரியர், புறத்திணைக்குரிய துறைகளைப் பரந்துபட விரித்துக் கூறாது அவற்றையெல்லாந் தொகுத்துக் கூறும் வகையில் இலக்கணம் செய்துள்ளார். ஆயினும் அகத்திணையொழுகலாறுகளைப் போலவே புறத்திணை யொழுகலாறுகளும் பல்வேறு துறைகளாகப் பரந்துபட்டு விரியும் பொருட்பகுதிகளை உடையன என்பதனையுணர்த்துதற்குப் புறத்திணைப் பகுதிகட்கும் துறையென்பதனைப் பெயராகக் கொடுத்துள்ளார். அகப் பாடல்களில் அகத்திணைப் பொருட்பகுதிகள் பலவாயினும் ஒரு செய்யுளுள் பல பொருட்கூறுகள் கலந்து வரினும் அவை தனித்தனித் துறைகளாகவும் பல துறைகளும் விரவிய ஒரு துறையாகவும் அமைத்துத் துறைப்படுத்துப் பொருள் கொள்ளுமாறுபோலவே புறப்பாடல்களிலும் புறத்திணைப் பொருட்பகுதிகள் பலவாய்த் தனித்தனித் துறைகளாகவும் பலதுறைகளும் விரவிய ஒரு துறையாகவும் கொண்டு துறைப்படுத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும் என்பது மேற்குறித்த உரைப்பகுதியால் இனிது புலனாம். 1. அமர்கொள் மரபின் திணை-போர்ச்செயலை மேற்கொள்ளும் இயல்பினதாகிய ஒழுகலாறு. 2. புறத்திணையிலக்கணம்கூற எடுத்துக்கொண்ட தொல்காப்பியனார், முதற்கண் இன்ன அகத்திணைக்குப் புறனாயமைந்தது இன்னதிணை என அகத்திணையொடு புறத்திணைக்குரிய தொடர்பினை முதற்கண் சுட்டுவர். பின்னர் அப்புறத்திணையின் இலக்கணம் கூறுவர். அதன்பின் அப்புறத்திணையின் துறைகளை விரித்துக் கூறுவர். ஒவ்வொரு திணையிலும் துறைகள் இவ்வளவு என்னும் தொகையெண் முதற்கண் திணையோடாவது ஈற்றில் துறைவகையோடாவது இயைத்துக் கூறப்படும். எனவே ஒவ்வொரு (முன்பக்கதொடர்ச்சி) புறத்திணைக்கும் குறைந்தது மூன்று சூத்திரங்களும் திணையின் வகை துறைகளின் சிறப்பியல்களை விரித்துரைக்க வேண்டிய நிலையில் மூன்றின் மிக்க சூத்திரங்களும் அமைதல் உண்டு. இவ்வாறு நாவலர் பாரதியார் இப்புறத்திணையியலிலுள்ள சூத்திரங்களின் பொருளமைப்பினைப் பகுத்து விளக்குவர். இப்பகுப்புமுறை நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியதாகும். 1. கொண்டி-கொள்ளை; போர் தொடங்கியபின் பகைவர் நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்தல் கொள்ளையடித்தலாகிய குற்றமாகுமேயன்றி அறமுறைப் படி போர் தொடங்குதலாகிய வெட்சித்திணையாகாது என்பது கருத்து. 1. இவ்விளக்கம் தொல்காப்பியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். 2. வருதலும் செல்லலும் இருதிறத்தார் தொழில்களாய் இருதிறத்தாரும் ஒருகளத்துப் பொருதலே தும்பை என்பது தொல்காப்பியனார் கருத்தாகும். எனவேமைந்து கருதி மேற்செல்லாது தனக்குரிய இடத்திலே நின்றுள்ள வேந்தன், தன்னை நோக்கி வந்த படையினை எதிர்த்து நிற்றல் தும்பைத் திணையாகுமா என்பது ஆராயத்தக்கது. போர் என்பது ஒத்தார் இருவர் தொழிலாதலின் அதன் தொடக்கமும் இடை நிகழ்ச்சிகளும் இரு திறத்தார் தொழில் தொகுதியாகப் பிரித்துப் பேசப்படுதல் இயல்பு. அந்நிலையில் ஆகோள் வெட்சி எனவும் நிரை மீட்டல் கரந்தை எனவும் இரு வேறு (முன்பக்கதொடர்ச்சி) திணைகளாகவும் பிரித்துக் கூறப்படும் வழக்கம் பிற்காலத்துத் தோன்றி நிலைபெறுவதாயிற்று. பகைவர்மேற் சேறலாகிய ஒழுக்கம் ஒன்றினையே நுதலியது வஞ்சித்திணையாகும். தன்மேல் வந்த பகைவர் படையினைத் தன்னாட்டின் எல்லையின் நின்று தடுத்து நிறுத்துதலும் நாடாள்வேந்தர் மேற் கொள்ளுதற்குரிய போர் நிகழ்ச்சியல்லாவா? இங்ஙனம் பகைவர் சேனையினைத் தடுத்து நிறுத்தலாகிய இப்போர்ச்செயலை எந்தத் திணையுள் அடக்குவது? என்பதே இங்கு ஆராய்தற்குரிய தொன்றாகும். மேற்சேறல் ஒழுக்கம் ஒன்றையே நுதலியது வஞ்சித்திணையாம் என்பது, எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுத் தலைச்சென் றடல்குறித் தன்றே. எனவரும் நூற்பாவால் இனிது புலனாம். ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவர் என்பர் நச்சினார்க்கினியர். அவர் கூறுமாறு ஒருவன் பகைவன் மேற்சென்றால்அப் பகைவேந்தனும் அவன் மேற் படையெடுத்துச் செல்வான் என்பது உறுதியன்று. அவ்வேந்தன் தனது நாட்டெல்லையில் நின்றவண்ணமே தன்னை நோக்கி வரும் பகைவர் படையினைத் தடுத்துப் பொருது நிறுத்தலும் உண்டு. இச்செயல், தானே பகைவர் மேற் படைகொடு சென்று தாக்குதல் அன்மையின் வஞ்சித்திணையில் அடங்காது. இருதிறத்தாரும் தத்தம்வன்மையொன்றையே பொருளாகக்கொண்டு ஒருகளத்துப் பொருதல் அன்மையின் தும்பையும் ஆகாது. இருதிறப் படையாளரும் தமக்குப் பொதுவாகிய ஒரு களங்குறித்துத் தம்முள் ஒத்துநின்று போர் செய்தலே தும்பைத் திணையாம் என்பது தொன்று தொட்டுவரும் தமிழர் போர் மரபாகும். எனவே தன்மேற் படையெடுத்து வரும் வேந்தனைத் தானும் படையுடன் மேற்சென்று தாக்குதற் கேற்ற வன்மைபெறாத மன்னன் தான் உறையும் நிலத்தினைச் சார்பாகப் பற்றிக் கொண்டு பகைவரது படையினைத் தடுத்து நிறுத்தலாகிய போர் நிகழ்ச்சி, தொல்காப்பியனார் கூறியவாறு பல்லாற்றாலும் நில்லாவுலகத்தைப் புல்லிக் கொண்டு நிகழும் காஞ்சித்திணையின்பாற்பட்டதாகவே அமைதல் கண்ட முன்னைத் தமிழ்ச் சான்றோர். எதிரூன்றல் காஞ்சி எனப் புறத்திணையிலக் கணம் வகுத்துரைத்தனர் எனத் தெரிகிறது. மேற்செறலாகிய வஞ்சியும் எதிரூன்றலாகிய காஞ்சியும் போர் மேற்கொண்ட இருத்திறத்தாரிடையே ஒன்றற்கொன்று எதிர்நிலையில் நிகழும் இரு வேறு போர் நிகழ்ச்சிகள் என்பதனை தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி ரூன்றி நீள் பெருங் காஞ்சியும். (சிலப். வஞ்சிக்-காட்சிக்) எனவரும் தொடரில் இளங்கோவடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். எனவே பிற் காலத்திற் பன்னிருபடலங்கூறும் எதிரூன்றல் காஞ்சி என்னும் இப்புறத்திணை யிலக்கணமரபு தொல்காப்பியனார் கூறிய காஞ்சித் திணை யிலக்கணத்தினுள் அடங்குமென்பதும் இளங்கோவடிகள் காலத்திற்கு முன்னரே உலக வழக்கில் நிலைபெற்று வழங்கிய தொன்மை வாய்ந்ததென்பதும் நன்கு துணியப்படும். 1. அன்பின் ஐந்திணையாகிய அகவொழுக்கத்தின் வரம்பினைக் கடந்தஅக வொழுக்கமே அகப்புறம் எனப்படும். அமர்கொள் மரவின் புறத்திணைப் பகுதிகளாகிய போர் நிகழ்ச்சிகளாய் அடங்காது அந்நிகழ்ச்சிகளின் பயனாகவும் அந்நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய ஒழுக்கங்களாகவும் அமைந்தனவே புறப்புறம் எனப்படும். இப்பகுப்பு, தொல்காப்பியனார் விளக்கிய அகம்புறம் என்னும் இருவகை ஒழுகலாறுகளையும் அவற்றிடையே அமைந்துள்ள நுண்ணிய வேறுபாடு களையும் கூர்ந்துணர்ந்து கொள்ளும் முறையில் அவ்விருதிணைகளையும் மேலும் இரண்டிரண்டாகப் பகுத்து விளக்கும் பகுப்பு முறையேயன்றித் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணான பகுப்பன்று எனத் தெளிந்துணர்தல் வேண்டும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக் கருவி செய்கை எனப் பகுத்துரைக்கப்பெறும் இருதிற விதிகளையும் அகக்கருவி, புறக்கருவி, அகப்புறக்கருவி, புறப்புறக்கருவி எனவும் அகச்செய்கை, புறச்செய்கை, அகப்புறச் செய்கை, புறப்புறச் செய்கை எனவும் நுண்ணிய வேறுபாடு கருதி உரையாசிரியர்கள் பகுத்துணர்த்திய பகுப்புமுறையும், அகம்புறம் எனப்பட்ட இருவகைச் சமயங்களையும் அகச்சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், புறப்புறச் சமயம் எனப் பின்வந்தோர் பகுத்துணர்த்திய பகுப்பு முறையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கனவாகும். 1. முனைஞர்-முனையூரகத்துள்ளார். முனையூர் என்றது, நாட்டின் எல்லைப்புறத்தே பகைப்புலத்தை நோக்கியமைக்கப் பெற்ற படைவீரர் குடியிருப்பினை, மேவற்று-மேவலை யுடைத்து. 2. ஓம்புதலாவது, மீளாமற்காத்தல் என இளம்பூரணர்தரும் இவ்விளக்கம். ஆவைக்கொண்டுபெயர்தலும் அதனைமீளாமற் பாதுகாத்தலும் ஆகிய வெட்சி மறவர் செய்தியே ஆதந்தோம்பல் என்ற தொடராற் குறிக்கப்பெற்றது என்னும் அவர் கருத்தினை நன்கு புலப்படுத்தல் காணலாம். 3. படைவீரர் அரசனது ஆணைபெற்றுப் போர்மேற் செல்லுதல் வேந்துறு தொழில் எனவும், அரசனது ஆணை பெறாது படைவீரர்தாமே போர்மேற் செல்லுதல் தன்னுறுதொழில் எனவும் கூறப்படும். நாடாள்வேந்தனது ஆணையின்றித் தன்னுறுதொழிலாகப் படைவீரர் பகைவர் நாட்டிலும் அயலிடங்களிலும் களவினாற் பசுநிரையைக் கவர்தல் என்பது, நாடாள் வேந்தனது ஆணையைக் கடந்தபெருங்குற்றமாதலின், அங்ஙனம் படைமறவர் தன்னுறு தொழிலாகப் பிறர் நாட்டுப் பசுக் கூட்டத்தினைக் கவர்வர் என்றதொரு விதிகூறுதல் மிகைபடக் கூறல் என்னுங் குற்றத்திற்கு இடந்தருமாதலால், பன்னிருபடலத்தில் தன்னுறு தொழிலையும் மன்னுறுதொழிலையும் ஒப்பக்கூறும் வெட்சிப்படலம் என்ற பகுதியினைத் தன்னுறு தொழிலையே விதித்த தொல்காப்பியனார் இயற்றினார் எனக் கூறுதல் பொருந்தாது என்பது இளம்பூரணர் கருத்தாகும். 1. முனைஞர்-முனைப்புலங் காக்கும் தண்டத் தலைவர். வேற்றுப்புலம்-பகைநிலம், களவின்-களவினாலே; இன்னுருபு ஏதுப்பொருளில் வந்தது. மேவல்-பொருந்துதல்: என்றது, ஈண்டு அன்பொடு பொருந்துதலை, மேவற்று. பொருந்துதலையுடையது; குறிப்பு வினைமுற்று. 1. அன்பின் ஐந்திணைக் களவாகிய குறிஞ்சியொழுக்கம் சான்றோர் போற்றும் மனையறத்திற்கு நிலைக்களமானாற்போலப் பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவினாற் கவர்ந்து கொண்டு பாதுகாத்தலும் அறத்தின் வழி நிகழும் போர்ச் செயல்களுக்கு நிலைக்களமாகும் என்பார் ஆதந்து ஓம்பல் என்றார். 1. பன்னிரு படலமுடையார் கொள்கையை ஒருவாற்றான் உடன்பட்டு மன்னுறு தொழிலல்லாத தன்னுறு தொழிலையும் ஏற்கும் முறையில் இவ்விளக்கம் அமைந்துள்ளது. 2. நிரைகோடலும் மீட்டலும் ஆகிய இருவகை ஒழுகலாறும் வெட்சித்திணையென ஒரே திணையாய் அடங்கும் என்பதும். நிரை மீட்போர் கரந்தை சூடுதல் பற்றி அந்நிகழ்ச்சி வெட்சித்திணையுள் கரந்தை என்னும் துறையாய் அடங்கும் என்பதும் கருத்து. 3. உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தியாவது, ஒரு தொடரில் ஒரு பொருள் சொல்லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருளையுங் கொண்டறியுமாறு தோன்றச் செய்தல், களவின் ஆதந்தோம்பல் என்புழிக் களவின் என்பதற்குக் களவினான் என மூன்றாம் வேற்றுமையுருபு விரித்து ஏதுப்பொருள் படவும், களவின்கண் என ஏழாம் வேற்றுமையுருபு விரித்து இடப் பொருள் படவும் உய்த்துக் கொண்டுணர வைத்தமையோர்க. (பாடம்) நுவலுழித். 1. அதிகாரமாவது, ஒருபொருளைக்குறித்து விளக்க எடுத்துக் கொண்டு அதனை முறைமைப்படவிரித்துரைக்கும் பகுதி. வந்த ஈரேழ்வகையிற்றாகும் என இந்நூற்பாவில் வரும் பயனிலைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத்தில் வந்த வெட்சியென்பதனை வரு வித்துரைத்தமையின் வெட்சியென்பது அதிகாரத் தான் வந்தது என்றார். 2. விரிச்சி என்பது நற்சொற்கேட்டல். புடை-பக்கம்; மாற்றார் பக்கத்தாராகித் தம் பக்கத்து ஒற்றாய் நிற்போர். 3. ஆதிவிளக்கு என்பது, முதனிலைத்தீவகம் என்னும் அணி. 4. வேய்ப்புறம்-ஒற்றி அறியப்பட்ட இடம், முற்றுதல்-சூழ்தல்; வளைத்தல். 5. பூசல்மாற்று என்பது நிரைகவர்தற்குச் சென்ற வெட்சியார் நிரை மீட்டற்குத் தம்மைப் பின்தொடர்ந்து வந்த கரந்தையார் செய்யும் போரினை விலக்கிமீளுதல். 6. நோயின்று உய்த்தல்-தாம்கொண்ட பசுநிரையினை வருத்தமின்றி நடத்திக் கொண்டுவருதல். இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளாதலின் இன்று எனத் திரிந்து நின்றது. 7. நுவல்வழி-(தம்சுற்றத்தார் சொல்லியவிடத்து, தோற்றம்-(பசுநிரையொடுவந்து) தோன்றுதல். 8. தந்து நிறை-(பசுக்களைக்) கொணர்ந்து நிறுத்துதல். 9. பாதீடு-பகுத்து இடுதல்; பங்கிட்டுக் கொடுத்தல். 10. உண்டாட்டு-வினைமுடித்த மகிழ்ச்சியால் களித்து ஆடுதல். 1. படையியங்கரவம் முதலாக எண்ணப்பட்ட பதினான்கு துறைகளும் வெட்சிசூடிப் பகைப்புலத்து ஆநிரைகளைக் கவர்வார்க்கே உரியனவாகக் கொண்டார் இளம்பூரணர். வந்த (முன்னபக்கதொடர்ச்சி) ஈரேழ் வகையிற்றாகும் என்பதனை ஈரேழ் வந்த வகையிற்றாகும் என இயைத்து. இவை பதினான்கும் நிரை கவர்வார்க்கும் நிரை மீட்பார்க்கும் உரியவாய் இருவகைப்பட்டு இருபத்தெட்டாம் எனக் கொண்டார் நச்சினாரக்கினியர். இது தொல்காப்பியனார் கருத்தன்று. எனினும் இப்பதினான்கு துறைகளும் நிரைகவர்வார்க்கும் நிரைமீட்பார்க்கும் ஒப்பு உரியனவாகப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட பெரும் பொருள் விளக்கம் என்ற புறத்திணை இலக்கணம் இயம்பல் என்னும் முறைமை பற்றி ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று என நச்சினார்க்கினியர் பொருள் வரைந்து எடுத்துக் காட்டுத் தந்து விளக்கியுள்ளமை பொருத்தமுடையதேயாகும். 1. களவில் நிரைகவரச் செல்வோர் ஆரவாரமின்றிச் செல்வது இயல்பு ஆயினும் அவர்கள் நற்சொற்கேட்டலாகிய நிமித்தம் பெற்றுப் புறப்படவேண்டியிருத்தலின் வெட்சி அரவமும் இடம் பெறுவதாயிற்று. (முன்னபக்கதொடர்ச்சி) விரிச்சியாவது, தெய்வத்தைப் பரவி நற்சொல் கேட்டல், பகைவர் தம் நாட்டிற் புகுந்து களவினால் ஆநிரைகளைக் கவர்ந்த நிலையில் நிரைக்குரியோர் அரசனுக்குணர்த்தாதே விரைந்து சென்று தம்நாட்டு ஆநிரைகளை மீட்டுக் கொள்ளுதல் இயல்பாதலின் நிரை மீட்டற்கு அரசனது ஆணை இன்றியமையாததன்று என்பது கருத்து. 1. மறம்-வீரர்க்குரிய மறத்தொழில், கடைக்கூட்டுதல்-கடைபோக (நிறைவுபெற)ச் செய்து முடித்தல். குடிநிலையாவது, மறக்குடியிற் பிறந்த மைந்தரும் மகளிரும் ஆகியவர்களது வீரநிலையைக்கூறுதல். இஃது ஆண் பெண் இருபாலர்க்கும் பொதுவாதல் கருதிக் குடிறிலையென வழங்கப் பெறுவதாயிற்று. துடிநிலை என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். போர்த்தொடலுக்குச் சிறந்த ஊக்கம் அளிப்பது வெற்றி வெல்போர்க்கொற்றவை வழிபாடாதலின் சிறந்த கொற்றவை நிலை எனச் சிறப்பித்தார் தொல்காப்பியனார். 2. ஆண்பால் பற்றிவந்ததனை வல்லாண்முல்லையெனவும், பெண்பால் பற்றி வந்ததனை மூதின்முல்லையெனவும் கூறுப என இவ்வுரைத்தொடர் அமைதல் வேண்டும். இங்ஙனம் கூறுபவர் ஐயனாரிதனார். புறப்பொருள் வெண்பா மாலை வாகைப் படலத்தில் (23) வல்லாண்முல்லை என்னுந்துறையும் (21) மூதின்முல்லை யென்னுந்துறையும் இடம் பெற்றுள்ளமை இங்கு உணரத்தகுவதாகும். 3. வெற்றிவெல்போர்க்கொற்றவை சிறுவ (முருகு-258) என்பது திருமுருகாற்றுப் படை. 1. துடிநிலையும் கொற்றவைநிலையும் நிரைகவர்தல் நிரைமீட்டல் ஆகிய இருவகை வெட்சிக்கும் புறனடை எனவே நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்; வெட்சியின் புறம் என அவர் குறிப்பிடவில்லை. (பாடம்) *mid¡FÇ. கால்கோள். நடுகல். 1. வேலன் முதலாக என்பதன் முன் மேலைச் சூத்திரத்து எனச் சேர்த்துப் படிக்க. 2. கரந்தைத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று இச்சூத்திரம் எனவே கரந்தையைத் தனித்திணையாகக் கொள்ளுதலும் இளம்பூரணர்க்கு உடன் பாடாதல் பெற்றாம். 3. காந்தள் முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னோடு புணர்த்தல் ஈறாக எண்ணுமிடத்துப் பன்னிரண்டு துறைகளே வருகின்றன. இவற்றுடன் வருதார்தாங்கல், வாள் வாய்த்துக்கவிழ்தல் என்னும் இருவகைப்பட்ட பிள்ளை நிலைகளையும் பிள்ளையாட்டினையும் (முன்பக்கதொடர்ச்சி) கூட்டப் பதினைந்தாயின. இவற்றுடன் இருமூன்று வகையிற்கல் என்னும் ஆறினையும் சேர்த்து எண்ணத் துறைகள் எழுமூன்றாதல் (இருபத்தொன்றாதல்) காண்க. இச்சூத்திரத்தில் 14-ஆம் அடியாக இடம் பெற்றுள்ள அனைக்குரிமரபினது கரந்தையன்றியும் என்ற அடி நாடவற்கருளிய பிள்ளையாட்டும் என்ற அடியின் பின் 18-ஆம் அடியாக இருத்தல் வேண்டும் என்பது இளம்பூரணருரையாலும் நச்சினார்க்கினியர் உரையாலும் நன்கு புலனாகின்றது. எனவே வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பது முதலாகத் தலைத்தாணெடுமொழி தன்னொடுபுணர்த்தலும் என்ப தீறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டுதுறையும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும் பிள்ளையாட்டும் ஆகிய அணைக்குரி மரபிற் கரந்தையன்றியும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறுந்துறையொடுங்கூடச் சொல்லப்பட்ட இருபத்தொருதுறைத்து என இவ்வுரைத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். 4. காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவாருமுளர். அவர் தம் கொள்கையை உடன்படாது வெறியாட்டயர்தலே காந்தளாம் என வற்புறுத்தும் முறையில் அமைந்தது வெறியாட்டயர்ந்தகாந்தள் எனவரும் இத்தொடர் என்பது கருத்து. 5. காந்தள் என்பதனைத் தலைவன் மடலேறுதற்குப் பெயராக வழங்குவார் கருத்தை ஏற்று அங்ஙனம் மடலேறும் அளவுக்கும் ஆற்றாளாகிய தலைவி மாட்டுத் தோன்றும் வெறியும் காந்தள் எனப் பெயர்பெறும் எனவும், இதனால் காமவேட்கையினால் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய அகத்திணைபற்றிய வெறியும் அக்குறிஞ்சி நிலத்துள்ளார் அரசனதுவெற்றியை விரும்பி நிகழ்த்தும் புறத்திணைபற்றிய வெறியும் உடன் கொள்ளப்படும் எனவும், புறத்திணை பற்றிய இவ்வெறியாடல் குறிஞ்சியாகிய இந்நிலத்திற்குச் சிறந்தது எனவும் கூறுவர் இளம்பூரணர். 6. இச்சூத்திரத்தில், நிரைமீட்டற் பொருண்மைத்தாகிக் கரந்தையென ஓதப்பட்டவை: ஆரமரோட்டல், ஆபெயர்த்துத்தருதல், சீர்சால்வேந்தன் சிறப் பெடுத்துரைத்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல், வருதார் தாங்கல், வாள் வாய்த்துக் கவிழ்தல், வாண்மலைந்தெழுந்தோனைமகிழ்ந்து பறைதூங்க நாடு அவற்கருளிய பிள்ளையாட்டு என்னும் ஏழுமாம். அனைக்குரி மரபிற்கரந்தையான்றியும் என்பது மேற்குறித்த ஏழு துறைகளையும் தொகுத்த தொடராகும். இந்நுட்பம், ஈண்டு ஓதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரை மீட்டற்பொருண்மைத்தாகிக் கரந்தையென ஒதப்பட்டன ஏழாயின என வரும் இளம்பூரணர் உரைத்தொடரால் இனிது புலனாம். 7. கரந்தையாயினவாறென்னையெனின் எனவரும் இளம்பூரணர் உரைத் தொடரின் முன்னே ஏனைய என்னும் சொல்லை யியைத்து ஏனைய கரந்தை யாயின வாறென்னையெனின் என வினாவாக்கி வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் ..................... ஓதப்பட்டதெனவுணர்க எனவரும் பகுதியை அதற்குரிய விடையாகக் கொள்க. ஏனையவாவன: வெறியாட்டயர்ந்த காந்தள், வாடா வள்ளி, பூவைநிலை, உன்னநிலை, போந்தை. வேம்பு, ஆர், கழல்நிலை, காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்த்தகுமரபிற்பெரும்படை, வாழ்த்தல் என்னும் பதினான்கும் ஆகும். ஆக இளம்யூரணர் வகைப்படுத்திய கரந்தைக்குரிய துறைகள் இருபத்தொன்றாதல் காண்க. 8. கூறினாராலெனின் என்றிருத்தல் வேண்டும். 9. பன்னிருபடலத்தின் வழிநூ லாகிய புறப்பொருள் வெண்பாமாலை வெட்சி மறவர் செய்த வீரச்செயல்களை விளக்கும் புண்ணொடு வருதல், போர்க்களத்தொழிதல் என்னுந் துறைகளைக் கரந்தைத் திணைக்குரிய துறைகளாகக் கொண்டு கூறியுள்ளமை இளம்பூரணர் கூறும் மறுப்புக்கு உரியதாதல் இங்குக் கருதற்குரியதாகும். 10. கரந்தையென்பது தனித்திணையன்று; வெட்சித்திணையின் ஒரு பகுதியே யென்பதனை வற்புறுத்துவது இவ்வுரைத்தொடர். 1. புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழு ஏழாவன, வெட்சி முதற் பாடாண் ஈறாகச் சொல்லப்பட்ட புறத்திணையொழுகலாறுகள் ஏழினும் வேந்துறு தொழிலானன்றித் தன்னுறுதொழிலாய்வழுவி வருவன என்பது நச்சினார்க்கினியர் கருத்தெனக் கருத வேண்டியுளது. 2. கணிகாரிகையாவாள், வேலன் ஆடும் வெறிக்கூத்தினை ஆடுபவள். 1. சிறப்பறியா மகளிர் என்றது, வெறியறி சிறப்பின் வேலனைப் போன்று தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களாகிய பூசை முறைமையறியாத மகளிரை. மகளிர் ஆடுதலிற் புறனாம் என்பதும், வேலன் ஆடுதல் அகமாம் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்து. 2. வேத்தியற்கூத்து என்பது, வேந்தன் முதலிய மேன்மக்கள் கண்டு மகிழும் நுட்பமுடையதாய் உயர்ந்த பண்புநலம் விளங்க வேந்தரது அவைக்களத்தில் ஆடப்படுங் கூத்து. கருங்கூத்து என்பது, உயர்ந்த பண்பு நலங்களின்றித் தாழ்ந்த நிலையில் இழிந்தோரால் ஆடப்படுங்கூத்து. (பாடம்) 1. ஆங்கண், ஆங்குண் 2. அதளும் எனவும் அதர்கூட் டுண்ணு மணங்குடைப் பகழி என்பது அகம்-197. 3. தீதிலவாகிய (பாடம்) 1. சீறிலை 2. வெருவந்துமுகத்துவே 3. கிழித்தன்றே கனதற்றுஞ்சு 4. கனந்தார்த்துஞ்சு, 5. நெருதல் 6. செறுநா சிவந்து, 5. கரந்ததைக்குரிய ஏழு துறைகளாவன: ஆரமரோட்டல், ஆபெயர்த்துத் தருதல், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல், வரூதார் தாங்கல், வாள் வாய்த்துக்கவிழ்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல், வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்து பறைதூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டு என்பனவாம். அனைக்குரிமர பிற்கரந்தையன்றியும் எனவரும் இவ்வடி இச்சூத்திரத்தின் 18-ஆம் ஆடியாக அமைந்திருத்தல் வேண்டும் என்பது, ஆரமரோட்டல் முதலிய ஏழு துறைக்கும்உரிய மரபினையுடைய கரந்தையும் எனவரும் நச்சினார்க்கினியர் உரைப் பகுதியால் உய்த்துணரப்படும். 6. கரந்தை என்பது நிரைமீட்டோர் கரந்தை சூடுதலின் சூடும் பூவாற் பெற்ற பெயரேயாதலின் இதனைத் தனியொரு துறையாக நச்சினார்க்கினியர் எண்ணித் தொகை கொள்ளவில்லை என்பதும் இதனாற் புலனாம். (பாடம்) 1. வரக்கடவா 2. நன்ன ராட்டி 3. நின்னறைக் கொளீஇ (பாடம்) 1. பெயர் பொறிப்ப. 7. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகுமரபிற் பெரும்படை, வாழ்த்தல் எனக் கற்கோள் நிலை ஆறினையும் விதந்தெடுத்து எண்ணிய பின்னரும் இருமூன்று (முன்னபக்கத்தொடர்ச்சி) வகையிற்கல் என ஆசிரியர் வகைப்படுத்துரைத்தலால் இந்நிலை ஆறினையும் கல்லாம் நிலையிலும் கடவுளாம்நிலையிலும் இருவகைப் பட இயைத்து நச்சினார்க்கினியர் காட்டும் உதாரணப்பாடல்கள் இருவகைப்பட்ட கற்கோள்நிலை ஆறினையும் நன்கு புலப்படுத்துவனவாகும். (பாடம்) 1. கோட்டம் 2. உணர்க 3. மூவேழ் 8. வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவிற் கூறப்பட்ட இருபத் தொரு துறைகளையும் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய பொதுப்பகுதி எட்டெனவும் கரந்தைப்பகுதி ஏழெனவும் கற்பகுதி ஆறெனவும் மூன்று பகுதிகளாகப் பகுத்துரைப்பர் நச்சினார்க்கினியர். வெட்சித் திணை என்பது போரின் தொடக்கமாதலின், மறனுடைய மரபின் புறத்திணைகட்குப் பொதுவாகிய துறைகள் வெட்சித்திணைத்துறைகளையடுத்து இந்நூற்பாவிற் கூறப்பட்டன என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். (பாடம்) 3. காண்டற்கட் சேறலும் 1. அகத்திலும் புறத்திலும் வெறியாட்டு நிகழ்த்துவோன் வேலன் ஆயினும் அகமாகிய குறிஞ்சித்திணை வெறியாட்டிற் சூடும்பூ குறிஞ்சி மலர் எனவும் புறமாகிய வெட்சித்திணை வெறியாட்டிற் சூடும்பூ காந்தள் எனவும் இலக்கியம் காட்டிப் பகுத்துணர்த்திய திறம் பாராட்டத் தகுவதாகும். 2. இவ்வெண்பாமாலைப்பாடல் பூவைநிலைக்கு இலக்கியம். இதுகொண்டு காயாம் பூவால் றிமித்தங் கொள்ளும் வழக்கம் உண்டு எனத் துணிதற்கு இடமில்லை. ** எஞ்சா.................j‹nw” என்பது முடியத் தனிச் சூத்திரம் ஆக்குவர்.(நச்சி.) (7) 1. புறத்திணை ஏழினுள் ஒன்றாகிய வெட்சித்திணையின் இலக்கணம் கூறுமிடத்து அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர், புறத்திணையிலக்கணம் திறப்படக் கிளப்பின் எனத் தோற்றுவாய் செய்து கொள்ளும் முறையில் அமைந்த தொடரை, ஏனைய வஞ்சித்திணை முதலியவற்றின் இலக்கணங் கூறுமிடத்தும் தோற்றுவாயாக இணைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பார், கொணர்ந்து உரைத்துக் கொள்க எனவும் இவ்வுரை இனிவருகின்ற திணைக்கும் ஒக்கும் எனவும் கூறினார் இளம்பூரணர். 2. முல்லை என்னும் அகத்திணைக்குக் காடுறையுலகமும் கார்காலமும் முதற் பொருளாதல் போல, பகைவயிற்சேறலாகிய வஞ்சித்திணைக்கு நீரும் நிழலும் உள்ள காலம் வேண்டுதலானும், காடுறையுலகாகியமுல்லை நிலப்பகுதி பொருத்தமுடையதாதலானும் பருமரக்காடாகிய மலைசார்ந்த குறிஞ்சி நிலப்பகுதி அதற்குரிய இடம் ஆகாமையானும் முல்லைக்கு வஞ்சி புறனாயிற்று என்பதாம். 1. போர்த்தொடக்கமாகிய வெட்சித்திணை நிகழ்ச்சியில் ஈடுபட்ட வேந்தர் இருவருள் தோற்றோனொருவன் மாற்றான் மேற்செல்வது வஞ்சித்திணையாம் என வெட்சிக்கும் வஞ்சிக்கும் உள்ள இணைப்பினைப் புலப்படுத்துவர் நச்சினார்க்கினியர். இதனால் தோற்றோன்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சியாகாது என்பது அவர் கருத்தாதல் பெறப்படும். * தொல். பொருள். புறத்-22. 1. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின் எனவரும் இவ்வுரைத் தொடர் எதிரூன்றல் காஞ்சி என்பராலெனின் என்றிருத்தல் பொருத்தமாகும். தன்மேற் படையெடுத்துவரும் பகைவேந்தனது சேனை தனது நாட்டெல்லையிற் புகுதற்கு முன்னரே தன் படையுடன் முன் சென்று பகைவர் சேனையினைத் தடுத்து நிறுத்தலும் நாடாள் வேந்தர்கள் மேற்கொள்ளுதற்குரிய போர் வகைகளுள் ஒன்றாதலின், அங்ஙனம் தனது நாட்டின் எல்லையில் முன்னின்று பகைவரது சேனையைத் தடுத்து நிறுத்துதலாகிய போர்ச்செயலே எதிரூன்றல் எனப்படும். இங்ஙனம் பல்லாற்றானும் நில்லாவுலகத்தைப் பற்றி நிற்றலாகிய இச்செயல் தொல்காப்பியனார் கூறிய காஞ்சித் திணையின்பாற்படுதலின் எதிருன்றலாகிய இப்போர்ச்செயலை இளங்கோவடிகள் முதலியோர் காஞ்சித்திணை எனவே கொண்டனர் என்பது, தென்றிசையென்றென் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன்றிய நீள்பெருங் காஞ்சியும் (வஞ்சி--காட்சி) எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது புலனாம். 2. ஒருவன் மற்றொருவனது நாட்டின்மேற் படையெடுத்துச் சென்றால் அந் eட்டிற்குரியவன்jனதுeடழியாமற்fத்தற்குvதிரேtருதலின்ïருவர்க்கும்nமற்nசறலுளதாகலின்,ïருவரும்tஞ்சிnவந்தராவர்vன்பதும்,nவந்தனொருவன்xருவன்மேற்bசன்றுழிkற்றையான்vதிர்செல்லாதுjன்மதிற்புறத்துtருமளவும்vதிர்நோக்கிஇருப்பின்mஃதுcழிஞையின்mடங்குமென்பதும்,nசரமான்bபருஞ்சேரலிரும்பொறைjகடூர்மேற்gடையெடுத்துச்bசன்றபோதுjகடூரிடைmதிகமான்ïருந்ததுcழிஞைத்திணையாம்vன்பதும்eச்சினார்க்கினியர்fருத்தாகும்.x¥g¡ கூறலாவது, ஒன்றற்குக் கூறிய இலக்கணம் அதனையொத்த ஏனையதற்கும் பொருந்துமாறு கூறுதல். 1. பகைவேந்தன் தனது நாட்டின்மேற் படையெடுத்து வந்த நிலையில் அவன் தன்னாட்டில் நுழைவதற்குமுன் நாடாள்வேந்தன் அவன்மேற் படையெடுத்துச் சென்று தாக்குதலும் வஞ்சித்திணையேயாம் என்பது இளம்பூரணர் நச்சினார்க்கினியர் ஆகிய பண்டையுரையாசிரியர்கள் கருத்தாகும். படைகொடு மேற்சேறலாகிய வினை இருவர்க்கும் ஒப்பவுரியதாதலின் இருவரும் வஞ்சிவேந்தராவர் என்பது அன்னோர் கருத்தாகும். 2. படையுடன் மேற்சென்ற வஞ்சி வேந்தனை நாடாள். வேந்தன் தானும் அவ்வாறே படையுடன் மேற்சென்று பொராது தனது நாட்டெல்லையுடன் நின்று அவனது படையினைத் தடுத்து நிறுத்துதல் காஞ்சித்திணையாம் என்பது பன்னிரு படலமுடையார் கொள்கையாகும். எதிரூன்றலாகிய இப்போர் நிகழ்ச்சியினை இருபெரு வேந்தரும் தத்தம் பேராண்மை கருதி ஒரு களத்துப் பொருதலாகிய சிறப்புடைய தும்பைத்திணையுள் அடக்குவது தொல்காப்பியனார் கருத்தெனக் கொள்ளுதற்கில்லை. 3. மண்ணாசை மன்னரது போரறமாக்கும் வழக்கம் தொல்காப்பியத்திற் சுட்டப் பெறவில்லை. மண்ணாசையாளனாகிய அயல் வேந்தனை நாடாளும் மன்னவன் மேற்சென்று அடர்த்தலாகிய வஞ்சித்திணையைச் சிறப்பிக்கும் நோக்கில் பகைவரது நாட்டைக் கைப்பற்றுதல் வேந்தர்க்குரிய விறலாகும் என்னும் பொதுக் கருத்து உருவாகி, (முன்பக்கதொடர்ச்சி) பிறர்மண் ணுண்ணுஞ் செம்மல் நின்னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணினல்லது பகைவர் உண்ணா அருமண் னினையே என்ற பாராட்டுரைகளும் சங்கத் தொகை நூல்களில் இடம் பெறுவனவாயின. மண்ணாசையாற் படையெடுத்துச் செல்லுதல் வேந்தர்க்குரிய அரசியல் நெறி முறையாக நச்சினார்க்கினியர் கூறும் கூற்றுக்கு நாட்டிற் காலந்தோறும் உண்டாகிய அரசியல் மாற்றம் பற்றிய போர் வரலாற்று நிகழ்ச்சிகளும் அவற்றைப் போற்றிப் புகழும் புறத்திணைப் பாடல்களுமே ஆதாரமாவன. அவையன்றி வடநூற் கொள்கையெனத் தனித்ததொரு போர்க் கொள்கை இந்நாட்டில் வழங்காமையும் இங்கு நினைக்கத்தக்கதாகும். 1. இது, வஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று என்றிருத்தல் வேண்டும். 2. இந்நூற்பாவில், பெருமையானும், கொடைமையானும், கொற்றத்தானும், நெடுமொழியானும், பெருமையானும் என்ற தொடர்களில் வந்துள்ள ஆன் எல்லாம் தனக்கெனப் பொருளின்றி இடைச்சொல்லாய் நிற்றலின், இத்தொடர்களிலுள்ள ஆன் என்பதனை நீக்கிவிட்டு முறையே பெருமையும் கொடைமையும், கொற்றமும், நெடுமொழியும், பெருமையும் என எண்ணுதற் பொருளில் எண்ணும்மையொடுவந்தனவாகக் கொள்ளுதல் வேண்டும் என்பார். பெருமையானும் என்பது முதலாக வந்த ஆன் எல்லாம் இடைச் சொல்லாகி வந்தன என்றார். இயங்கும் படையரவமும் எரிபரந்தெடுத்தலும் என எண்ணும்மை விரித்துக் கொள்க என்பதாம். வஞ்சிதானே என்பதனை எழுவாயாகக் கொள்ளின் துறை பதின்மூன்றே என்பதனைப் பதின்மூன்று துறைத்தே என மொழிமாற்றிப் பொருள் கொள்ளுதல் பொருத்தமாகும். 3. வயங்கல்--விளக்கம். 4. மாராயம் என்பதற்கு உவகை எனப்பொருளுரைப்பர் இளம்பூரணர், வேந்தனாற் பெறுஞ்சிறப்பு எனப் பொருள்கொள்வர் நச்சினார்க்கினியர். 5. வருவிசைப்புனலை என்பது, விசைவருபுனலை என மொழி மாற்றிப் பொருளுரைக்கப்பெற்றது. பிண்டம்--திரட்சி. 6. கொற்றவள்ளை என்பது, நெல்முதலியவற்றை உரலிற்பெய்து உலக்கை கொண்டு குற்றும் மகளிர், தாம் பாடும் பாடல்களில் வேந்தனது வெற்றித் திறத்தைப் போற்றியுரைக்கும் (முன்பக்கத்தொடர்ச்சி) முறையில் அமைந்த புறத்துறையாகும். இங்ஙனம் வேந்தனது வெற்றித்திறம் குறித்த பாடல்களில் தோல்வியுற்ற அரசன் பணிந்து கொடுக்குந் திறையும் சுட்டப்படுதல் இயல்பாகும். ஆகவே கொற்றவள்ளை என்பதற்குத் தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை என விளக்கம் தந்தார் இளம்பூரணர், கொற்றம்--வெற்றி. வள்ளை என்பது உரலில் உலக்கை கொண்டு நெல்முதலியன குற்றுங்காற் பாடப்பெறும் இசைப்பாடல். தீங்கரும்பு நல்லுலக்கையாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் எனவரும் சிலப்பதிகாரவரிப்பாடலும், திருவாசகத்தில் வரும் திருப்பொற் சுண்ணமும் இத்தகைய வள்ளைப்பாட்டின் வகையைச் சார்ந்தனவாகும். 7. தழிஞ்சி--போரிற் புண்பட்ட வீரரைத் தளர்வகற்றித் தழுவிக் கொள்ளுதல். 8. முதுமொழிவஞ்சியாவது, பழைய வரலாற்றினையுடையராய் வாளேந்திப் போர் புரியும் மறக்குடியினரது போர்ப்பண்பினைப் புலப்படுத்தும் துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சிப்படலத்தில் இடம்பெற்றுள்ள புறத்துறையாகும். 9. இயங்குபடையரவம் முதல் தழிஞ்சியீறாக வஞ்சித்திணைக்குரியனவாக எண்ணப்பட்ட பதின்மூன்று துறைகளில் வென்றோர் விளக்கம், தோற்றோர் தேய்வு, கொற்றவள்ளை என்னும் மூன்றும்நீங்கலாக ஏனைய பத்தும் இருதிறத் தினர்க்கும் பொதுவாக நிற்றலின், கழிபெருஞ்சிறப்பின் துறை என அடைபுணர்த் தோதினார் என்பர் இளம்பூரணர். 10. பேரரசர் தமக்குத் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலி வெய்திய பாசறை நிலையுரைத்தல் துணை வஞ்சியாம்என்பதும் நீயே புறவினல்லல் (46) வள்ளியோர்ப் படர்ந்து (47) என வரும்புறநானூற்றுப் பாடல்கள் துணைவஞ்சிக்கு உதாரணமாம் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும். இளம்பூரணரும் புறநானூற்று உரையாசிரியரும் கூறும் துணைவஞ்சி என்றதொரு துறை, முன்னூலாகிய தொல்காப்பியத்திலும் பின்வந்த புறப்பொருள் வெண்பா மாலையிலும் இடம் பெறவில்லை. எனவே துணை வஞ்சி என்ற துறையைக் கூறும் புறப்பொருளிலக்கணநூல் எதுவென்பது ஆராயத் தகுவதாகும். 1. இயங்குபடை யரவமும் எரிபரந்தெடுத்தலும் என இரண்டிடத்தும் எண்ணும்மை விரித்துரைக்க என்பதாம். 2. இங்கு மேற்கோளாகக் காட்டப்பெற்ற புறநானூற்றுப் பாடல்கள் இரண்டும் முழுமையாக நோக்குமிடத்துக் கொற்றவள்ளையென்னுந் துறைப் பொருண்மை அமைந்தனவாயினும் இவற்றின்கண் எல்லுப்படவிட்ட சுடுதீ விளக்கத்து எனவும் பகைவர் ஊர்சுடு விளக்கத்து எனவும் வரும் தொடர்களைப் பகுத்து நோக்கியவழி இவை எரிபரந்தெடுத்தல் என்னுந் துறைக்கு இலக்கியமாயமைதலின் இங்கு உதாரணமாகக் காட்டப்பெற்றன என்பதாம். 3. வயங்கல்--விளக்கம்; ஈண்டுப் போர்த்துணையாக உடன் வந்தோரால் அரசன் பெற்ற விளக்கத்தினைக் குறித்து நின்றது. 4. அடுத்து ஊர்ந்து அடுதலாவது, இரவும் பகலும் பலகாலும் அடுத்தடுத்துப் பகைப்படைமேற்சென்று காவல் வீரர்களைக் கொல்லுதல். கொற்றம்--வெற்றி. 5. பதிற்றுப்பத்துள் என்றிருத்தல் பொருத்தம். அப்பாற்படும்--அடுத்தூர்ந் தட்ட கொற்றத்தின் பாற்படும். 6. முற்கூறியது என்றது, அடுத்தூர்ந்து அட்ட கொற்றம் என்னுந் துறையினை, படைவீரர் போர்க்காலங்களிற் பகைவர் படைகளின் வினைநிலையும் காலநிலையும் முதலிய செவ்விநோக்கித் தாம் விரும்பிய வண்ணம் தத்தம் தகுதிக் கேற்ற போர்ச் செயல்களை மேற்கொள்ளுதற்குரியர் என்பது இத்துறையாற் புலப்படுத்தப்பட்டது என்பதாம். 7. இஃது என்றது, மாராயம் பெற்ற நெடுமொழி என்றதுறையினை. படை வீரர் பலரும் போர்க்களத்தில் தாம் தாம் விரும்பியவாறு தத்தம் பேராண்மையைப் புலப்படுத்தும் பேராற்றலுடையராயினும் அவ்வீரர் பலரும் ஒருசேரக் குழுமிய சேனைத்தொகுதிக்குத் தக்கான் ஒருவனைக் தலைவனாக்கித் தானைத் தலைவனாகிய அவன் பணித்தவண்ணமே ஏனைப் படைவீரர் அனைவரும் போர்க்களத்தில் வினை செய்தற்குரியர் என வரையறைப்படுத்துவது இத்துறை என விளக்குவர் நச்சினார்க்கினியர். இவ்விளக்கம், நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில் (படைமாட்சி. 10) எனவரும் திருக்குறளை யடியொற்றியமைந்துள்ளமை காணலாம். 8. இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது. என்று இத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். தண்ணடை--மருதநிலம். நன்று--பெரிது. 9. கற்சிறை--கல்லணை, தாங்குதல்--தடுத்தல். 10. ஏனாதி, காவிதி முதலாக வேந்தனாற் பெறுதற்குரிய சிறப்பினை முன்னம் பெற்றுள்ள படைத்தலைவனே பொருளின்றுய்த்த பேராண்பக்கம், வருவிசைப்புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமை என்னும் இப்போர்த்துறைகள் இரண்டினையும் நிகழ்த்துதற்கு உரிமையுடையான் என்பது கருத்து. 11. பிண்டித்து வைத்தலாவது ஒவ்வொரு வீரர்க்கும் தனித்தனியே விரைந்து கொடுப்பதற்கு ஏற்றவாறு திரளையாகப் பகுத்து வைத்தல், 12. துறையெனவே எனவரும் இவ்விதப்புக் கிளவி கழிபெருஞ் சிறப்பின் துறையெனவே எனத் தனக்குரிய அடைமொழியுடன் சேர்ந்திருத்தல் இதனால் விளக்கப்படும் பொருளுணர்ச்சிக்கு இன்றியமையாததாகும். 13. அப்பாற்படும்--பெருஞ்சோற்று நிலையென்னும் அத்துறையின்பால் அடங்கும். 14. குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை என்றது, வென்ற வேந்தனது புகழ் விளக்கமும் தோற்ற கொற்றவன் அவனுக்குத் திறைப்பொருள் தந்து அடங்கி வாழ்தலும் ஆகிய குறையாத பெருஞ்சிறப்பினை நெல் முதலியன குற்றும் பெண்டிர் தாம் பாடும் பாடலில் இயைத்துப்பாடுதற்கேற்ற வகையில் நிகழும் போர்த் துறையாகும். 15. கொற்றவள்ளை என்னும் இத்துறை, வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் ஆகிய இவ்விரு பெருஞ்சிறப்பினையும் தனக்கு நிலைக்களனாகக் கொண்டு நிகழ்வது என்பார், வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளையும் எனக் காரணகாரிய இயைபு புலனாக இயைத்துரைத்தார் தொல் காப்பியனார். கொற்றங்கொண்ட வேந்தனோடு எதிர்த்து நிற்றலாற்றாது தோல்வியுற்ற மன்னன் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு அதற்கு அடையாளமாகத் திறை செலுத்துதல் முறையாதலின், கொற்றவள்ளை என்பதற்குத் தோற்ற கொற்றவன் கொடுக்கும் திறை என விளக்கம் தந்தார் இளம்பூரணர். வேந்தனது குறையாத வெற்றித் திறத்தினை வள்ளைப்பாட்டில் வைத்துப் போற்றும் நிலையில் அவனொடு பொருது தோல்வியுற்ற வேந்தனது பெயரும் அவனது நாட்டின் அழிவும் ஒருங்கே குறிக்கப்பெறுதல் இயல்பாதலின் குன்றாச்சிறப்பிற் கொற்ற வள்ளை என்பதற்கு, வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற்கிரங்கித் தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டு என விளக்கந்தந்தார் நச்சினார்க்கினியர். 16. அழிபடை தட்டோர் என்பதற்கு, எதிர்த்தோரை அழிக்கும் இயல்பினவாகிய கணைவேல் வாள் முதலிய படைக் கலன்களைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டு புண்பட்டோராகிய தம் படைவீரர்கள் என நின்றவாறே பொருள் கொள்ளுதலே பொருத்தமுடைய தாகும். 17. வேந்தர் இருவரும் தத்தம் நாட்டின் எல்லைக்கண் எதிர்சென்று தங்குதல் வஞ்சி எனவும், அவ்வளவிலமையாது மேற்சென்ற வேந்தன் பகைமன்னனது மதிலை வளைத்தலும் (முன்பக்கத்தொடர்ச்சி) மதிலகத்து வேந்தன் தன் அரணைக் காத்துக்கொள்ளுதலும் உழிஞை எனவும், வஞ்சித் திணைக்குரியனவாக விரித்துரைக்கப்பட்ட பதின்மூன்று துறைகளில் வென்றோர் விளக்கம், தோற்றோர் தேய்வு, கொற்றவள்ளை என்னும் மூன்றும் நீங்கலாக எஞ்சிய பத்துத் துறைகளும் இரு திறந்தார்க்கும் பொதுவாய் வரும்எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். வஞ்சிதானே, வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்று என மேற்சேறலை ஒருவனது தொழிலாகவே ஆசிரியர் கூறுதலானும், தென்றிசையென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன்றிய நீள்பெருங் காஞ்சியும் எனச் செங்குட்டுவன் கூற்றாக அமைந்த சிலப்பதிகாரத் தொடரில் மேற் சேறலை ஒருவன் தொழிலாகவும் தன்மேல் வந்தோனைத் தடுத்து நிறுத்துதலை, மற்றொருவன் தொழிலாகவும் இளங்கோவடிகள் இருதிறமாகப் பகுத்துக் குறிப்பிடுதலானும், படையெடுத்துச்செல்லும் வேந்தன் தனது நாட்டெல்லையளவில் அமையாது பகைவனது நாட்டின் எல்லையளவும் படையுடன் மேற்சேறலே வஞ்சித்திணையாம் எனவும், இவ்வாறன்றி இருபெரு வேந்தரும் ஒருவர் ஒருவரைப் பொருது வெற்றிகோடல் கருதித் தத்தம் நாட்டின் எல்லையளவும் சென்று தங்குதல், மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்குஞ் சிறப்பினதாகிய தும்பைத் திணையின் தொடக்கமாயடங்கும் எனவும் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். 18. உழிஞைத்திணைக்குரிய துறைகளை எண்ணுமிடத்துக் குடையும் வாளும் நாள்கோள் அன்றியும் என ஆசிரியர் உம்மை கொடுத்து முன் வைத்துக் கூறுதலால், இவையிரண்டும் முன்னுள்ள வஞ்சித் திணைக்கும் உரியன என்பது குறிப்பினாற் புலப்பட வைத்தார். எனவே குடைநாட்கோள் வாணாட்கோள் என்னும் இத்துறைகள் உழிஞைத் திணைக்கேயன்றி அத்திணையின் வஞ்சித்திணைக்கும் உரியனவாதல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெறப்படும். குடைநாட்கோள் வாள்நாட்கோள் என்னும் இவ்விரு துறைகளையும் முன்னுள்ள வஞ்சித்திணைக்குரியனவாக இளங்கோவடிகள் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 19. புறப்பொருள் வெண்பாமாலையில் வஞ்சித்திணைக்குரிய துறைகளாகச் சொல்லப்பட்ட பாசறைநிலை, நல்லிசை வஞ்சி முதலியனவும் தொல்காப்பியனார் கூறிய வயங்கலெய்திய பெருமை என்னுந் துறையின்பால் அடங்கும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். 20. இரு திறத்தார்க்கும் இடையே நிகழும்போரில் ஒவ்வொருவரும் தத்தமக்குத் துணையாக மற்றவர்களையும் விரும்பியழைத்துக் கொள்ளுதலே உலகியலில் உண்மையாக நிகழக்கூடியது. இவ்வாறன்றி ஒருவன் பிறர் துணை வேண்டாது தனித்து நின்று போரில் எல்லாரையும் வெற்றி கொண்டான் என்பது, உள்ளதும் இல்லதும் விரவிக் கூறும் நாடக வழக்கின்பாற் பட்டதாகும் என்பது இத்தொடரின் பொருளாகும். 1. பாசறைநிலை:-- மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும்-பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று என்பது புற-வெ-மாலை-வஞ்சி-21. 2. (பாடம்) பூசலிசைந்து 3. நல்லிசை வஞ்சி-ஒன்னாதார் முனைகெடவிறுத்த வென்வேலாடவன் விறன் மிகுத்தன்று என்பது புற-வெ-மாலை-வஞ்சி-24. 21. புறநானூறு 46, 47-ஆம் பாடல்களைத் துணைவஞ்சி என்று கூறுபவர் புறநானூற்றுரையாசிரியர். இப்பாடல்கள் பகைவர் மேற் படையெடுத்துச் செல்லு தலாகிய வஞ்சித் திணையின்கண் அடங்காமையால் இப்பாடல்களைப் பாடாண்திணையில் அடக்குதலே பொருத்தம் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். 22. கருவூரிடைச் சேரமான் யானையையெறிந்தாற்போல்வன என நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டும் வரலாற்றுக் குறிப்பு இதுவென விளங்கவில்லை. கருவூரிடை என்பது தகடூரிடை என்றிருத்தல் வேண்டுமெனக் கொண்டு இந்நிகழ்ச்சி தகடூர் யாத்திரையிற் கூறப்படும் போரினைக் குறித்ததாகவும் கொள்ள இடமுண்டு. 23. இதனை முது மொழிவஞ்சி என்பவர் ஐயனாரிதனார். இத்துறையில் அமைந்த குளிறுமுரசங் குணில்பாயக் கூடார் ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக் - களிறெறிந்துப் புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும் (பு. வெ. மா. 48) என்னும் வெண்பா தொல்காப்பியனார் குறித்த அழிபடை தட்டோர் தழிஞ்சி என்னுந் துறைக்கும் இலக்கியமாகக் கொள்ளும் முறையில் அமைந்துள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். 24. அழிபடை தட்டோர் தழிஞ்சி என்னுந் தொல்காப்பியத் தொடர்க்கு, போரில் அழிந்து (தோற்றுப் புறங்கொடுத்து) ஓடும் படைவீரர்கள் மேல் வாள் ஓச்சாது இரக்கத்தால் தழுவிக் கொள்ளுதல் எனப் பொருள் கொண்டு, அழிகுநர் புறங்கொடை அயில்வாள் ஓச்சாக் கழிதறுகண்மை காதலித் துரைத்தன்று எனத் துறைவிளக்கம் தருவர் ஐயனாரிதனார். அஃது ஒருவன் தாங்கிய பெருமைப்பாற் படுமென்றுணர்க என அவர் கருத்தினை மறுத்துரைப்பர் நச்சினார்க்கினியர். விசையொடும் வரும் பெருவெள்ளத்தைக் கல்லணை தாங்கினாற்போல வீரனொருவன் தன்மேல்வரும் பெரும்படை யினைத் தானொருவனேயாக நின்று தடுத்த பெருமையினைப் புலப்படுத்துவது ஒருவன் தாங்கிய பெருமை என்னும் துறையாகும். தழிஞ்சியாகிய இது, தன்னெதிர் நிற்றலாற்றாது தோற்றோடும் பகைவரது படையின்மேல் வாட்படையோச்சாது பகைவரையும் கருணையால் தழுவிக் கொள்ளுதற்கேற்ற மிக்கதறுகண்மையினையுணர்த்துவதாகலின் ஒருவன் தாங்கிய பெருமையின்கண் அடங்காதென்றுணர்க. படையொடு மேற்செல்லும் அளவில் நில்லாது பகைவரது நாட்டின் எல்லை யுட்புக்கு அவரது மதிலை முற்றுகையிடுதல் வஞ்சித்திணையுளடங்காது. உழிஞைத்திணையாம் என்பது கருத்து. அஃது--அவ்வஞ்சித்திணை. இருவர்-- மேற்செல்லுந் தொழிலினராகிய வேந்தர் (முன்பக்கத்தொடர்ச்சி) இருவர். பகைவர் நாட்டின் மேற் சென்று அந்நாட்டின் எல்லையளவில் தங்குதலே வஞ்சித்திணையாகும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். 1. வெட்சியிற் கூறப்பட்ட படையியங்கரவம் என்ற துறைக்கும் இங்கு வஞ்சியிற் கூறப்படும் இயங்குபடையரவம் என்ற துறைக்கும் இடையேயமைந்த வேறுபாட்டினை நாவலர் பாரதியார் விளக்கிய திறம் நயமுடையதாகும். 2. வள்ளை என்பது, பெண்டிர்பாடும் உலக்கைப்பாட்டு எனவும் ஆடவர் முருகனைப் பாடுவது வள்ளையெனவும் இவ்வாசிரியர் கூறும் வேறுபாடு மேலும் சிந்தித்தற்குரியது. 3. தட்டோர்--தடுத்தோர்; ஈண்டு தடுத்து நின்று புண்பட்டோர் என்ற பொருளில் ஆளப்பெற்றது. பேராண்மையென்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (773) விழித்தகண் வேல்கொண்டெறிய வழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு (775) எனவரும் திருக்குறட்பாக்கள் அழிந்து புறங்கொடுத்தோடுபவர்மேல் படை தொடாத் தறுகண்மையாகிய தழிஞ்சியைச் சுட்டுதலறிக. 1.உழிஞை...........òwnd.(9)முழுமுதல்...........v‹g. (10) என, இதனை இரண்டு சூத்திரம் ஆக்குவர். (நச்சி.) (பாடம்) 2.பன்னெறி. 3. முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் எனவரூம் இவ்வுரைத் தொடரை முழுமுதல் அரணம் முற்றுதலும் காத்தலுமாய் எனத்திருத்திக் கொள்ளுதல் வேண்டும். மருதத்துப்புறம் எயில் அழித்தலும் எயில்காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறிபெறும் என இவ்வியலின் தொடக்கத்தே இளம்பூரணர் விளக்குதலால் அவ்விளக்கத்திற்கேற்ப முற்றலும் காத்தலுமாய் வருந்தன்மைத் தாகிய நெறியை மரபாகவுடைத்து என உரையில் திருத்தஞ்செய்து கொள்வதே உரையாசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். 1. புறத்தோனாகிய உழிஞையானது தொழில் முற்றுதல் எனவும், அகத்தோனாகிய நொச்சியானது தொழில் (முற்றுதலை விலக்கித் தனக்குரியதாகக்) காத்துக்கொள்ளுதல் எனவும் இருவர் தொழில்களும் ஒருங்கு இணைந்ததே உழிஞைத்திணையாம் எனவும் புலப்படுத்துவார் முற்றலும் கோடலும் அனை நெறி மரபிற்றாகும் என்ப என்றார் ஆசிரியர். 2. மேற்சொல்லுதலாகிய போர்த்தொழிலை மேற்கொண்ட வஞ்சித்திணை மன்னனொடுபோர் செய்தலாற்றுறாது தோற்றுத் தனது அரணுட்புக்கிரூந்த வேந்தன் தனது அரனணத்துணையாகக் கொண்டு போர் செய்தல் இயல்பாதலானும் அவனது அரண் நாட்டகத்து அமைந்திருக்குமா தலானும் அவ்வழி அரணின் புறத்தும் அகத்தும் இருந்து போர் செய்வார்க்கு விடியற்காலம் ஏற்புடையதாதலானும் மருதத்திற்கு உழிஞை புறனாயிற்று என்பர் இளம்பூரணர். 3. பகைவரது நாட்டெல்லையின் அழிப்பு பெரிதாயின் அஃது உழிஞைத் திணையாம் எனவும், சிறிதாயின் வெட்சித் திணையுள் ஓதிய ஊர்கொலை என்னும் துறையுள் அடங்கும் எனவும் வரும் இவ்விளக்கம், இளம்பூரணருரையில் முழுமுதல் அரணம் முற்றலும் அழித்தலுமாய் எனப் பிழைபட்ட உரைத்தொடருக்குப் பின்வந்தாரொருவரால் எழுதப் பெற்றிருத்தல் வேண்டுமெனக் கருதவேண்டியுளது. 1. மதுரைக் காஞ்சி...146. (பாடம்) 2. செறலருமதில் சேமவருமதில் 1. முழுமுதலரணம் முற்றலும் கோடலும் என இருவகைத்தொழிலுடையது உழிஞைத்திணையெனவும், அவ்விருவகைத் தொழிலுக்கேற்ப அத்திணை இரு நான்கு வகையுடையது எனவும், இவ்விருவகைத் தொழில்களையும் நிகழ்த்தற்குரிய வேந்தர்கள் அகத்தோன் புறத்தோன் என இருதிறப்படுவர் எனவும் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடுதலால் ஈண்டு முற்றலையும் கோடலையும் ஒருவரது தொழிலாகக் கூறுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அன்றியும், முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி என்பதற்குப் புறத்தோரால் வளைக்கப் பெற்ற அகப்படைத்தலைவன் அரண்காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும் என இவ்வாசிரியரே உரைவரைந்திருத்தலால் கோடல் என்பதனைப் புறத்தோனது தொழிலாகிய முற்றுதற்கு எதிராக தனக்குரிய அரணை அகப்படுத்துக் கொள்ளுதலாகிய அகத்தோனது மதில் காவற்றொழிலாகக் கொள்ளுதலே ஏற்புடையதாகும்! மேலும், ஈண்டு முற்றுதல் என்றது முழுமுதலரணைப் பற்றிநின்று பொரும் போர்நிகழ்ச்சியைச் சுட்டுவதல்லது பகைவர் மதிலை வாளா வளைத்துக் கொண்டு நிற்றலை மட்டும் சுட்டுவதன்றாம். 1. இஃது உழிஞைத்திணை இத்துணை வகைப்படும் என்கின்றது. எனக் கருத்துரைத்தலே பொருத்தமுடையதாகும். 2. எண்வகைத்து என முழுத்தொகையினைத் தொகுத்தோதாது இருநால் வகைத்து எனப் பகுத்தோதிய அதனால், மதிலை வளைத்துக்கொண்ட புறத்தோன்கூறு நான்கும் அதனை அடைத்துக்கொண்டு உள்ளிருந்து போர் புரியும் அகத்தோன்கூறு நான்கும் என இரு நான்காகப் பகுத்துரைத்தார் நச்சினார்க்கினியர். இவ்வாறு புறத்தோனுக்கு நான்கும் அகத்தோனுக்கு நான்கும் என இருநான்காகப் பகுத்துரைத்தலே தொல்காப்பியனார் கருத்தென்பது, சொல்லப்பட்ட நாலிருவகைத்தே என அடுத்துவரும் நூற்பா அமைப்பினாலும் உய்த்துணரப்படும். (பாடம்) 1. தொல் எயிற்கு இவர்தலும் தோலின். 2. திறப்பட. 3. இஃது உழிஞையின் துறைவகையினை விரித்துரைக்கின்றது எனக் கருத்துரை யமைதல் பொருத்தமாகும். 4. கொள்ளார்--பகைவர். இச்சொல், வேந்தனாகிய தனது ஆட்சித்தலை மையினை ஏற்றுக்கொள்ளாது முரணிநிற்போரையும் தனது ஆணையினை ஏற்றுக்கொண்டு அதன்வழி அடங்கி ஒழுகாதாரையும் குறித்து நின்றது. 5. தொல்லெயிற்கவர்தல் என்பது நச்சினார்க்கினியருரையிலுள்ள பாடம். இதுவே திருந்திய பாடமாகும். எயிற்கு--எயிலின்கண்; உருபுமயக்கம். 1. தோற்படை--கிடுகுப்படை. 2. அகத்தோன்--நொச்சியான். புறத்தோன்--உழிஞையான். 3. மண்டுதல்--மிக்குச்செல்லுதல். 4. வாரெயில் 5. பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந்தொகை கூறினார் எனவரும் இவ்வுரைத்தொடரில், பதினெட்டு என்பதனை நீக்கி விட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார்; இது கூறியது கூறலன்று; தொகை எனப்படித்தால் இளம்பூரணர் கருத்து இனிதுபுலனாகும். சூத்திரத்தில் இருநால்வகைத்தே எனச்சுட்டிய ஆசிரியர், நாலிரு வகைத்தே என இச்சூத்திரத்திலும் மீண்டும் தொகைகூறுதல் கூறியது கூறல் என்னும் குற்றத்தின்பாற்படாதோ என்பது வினா: பன்னிருபடலமுடையாரும் அதன்வழி நூல்செய்த ஐயனாரிதனாரும் கூறுமாறுபோன்று உழிஞைத் திணைக்குரிய துறைகள் இருபத்தொன்பது என்னுங் கொள்கையை விலக்குதற் பொருட்டே உழிஞைத்திணை நாலிருவகைத்து என மீண்டும் தொகை கூறப்பட்டது என்பது மேற்குறித்த வினாவுக்கு இளம்பூரணர் கூறும் விடையாகும். 6. தன்னுடைய ஆற்றல் பெருமை முதலியவற்றையெண்ணித் தன்னை இறையென மதித்துத் தனது ஆணையையேற்று அடங்கியொழுகாதவரும், தன்னால் இகழப்பட்டாரும் (முன்பக்கத்தொடர்ச்சி) ஆகிய பகைவர்க்குக் கொள்ளார் என்பது காரணப் பெயராதலை விளக்குவது இவ்வுரைத் தொடர். கொள்ளார் என்பதற்குத் தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும் என விளக்கம் தருவர் இளம்பூரணர். 1. புறநானூற்றில் ஆனாவீகையடுபோரண்ணல்எனத்தொடங்கும்42-ம்பாடலில்புலவரெல்லாம்நின்னோக்கினர்...Úna மாற்றிரு வேந்தர் மண்ணோக்கினையே என மாற்றரசர் நிலத்தை வென்று கைப்பற்றுதற்கு முன்னரே பரிசிலர்க்கு வழங்கினான் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளமை காணலாம், இராமபிரான் இராவணனை வென்று அவனது நாட்டைக் கைக்கொள்ளுதற்கு முன்னமே தன்னை அடைக்கலம் புகுந்த வீடணனுக்கு இலங்கையரசினை உரிமை செய்தளித்தது, கொள்ளார்தேஎம் குறித்த கொற்றம் என்னும் இவ்வுழிஞைத் துறையாம் என்பது கருத்து. 2. பட்டினப்பாலையில் வரும் மலை அகழ்க்குவனே என்ற தொடர் மாற்றார் மதிலையும் கடல்தூர்க்குவனே என்ற தொடர் அம் மதிற் புறத்து அகழையும் சுட்டி நிற்றலின் இப்பகுதி, உழிஞைத் திணையின் துறையாகிய உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புக்கு எடுத்துக்காட்டாயிற்று என்பதாம். 1. bதால்vயிற்குïவர்தல்--அழிவில்லாதgழையkதிலைmழித்தற்குÉருப்பஞ்bசய்தல்.vƉF--vÆiy; உருபு மயக்கம், தொல் எயிற்று ïவர்தல்vன்றgடத்திற்குப்‘பழையvயிலின்fண்ணதாகியkதிலுறுப்பின்nமல்Vறுதல்vனப்bபாருள்bகாள்க.vƉW எயிலின் கண்ணதாகிய உறுப்பு. இவர்தல்--ஏறுதல். 2. கிடுகு என்பது, பகைவர் எய்யும் அம்புகளைத் தடுக்கத் தோலாற் செய்யப்பெற்றது. கேடகம் என்பது, மரத்தாற் செய்யப்பட்டுத் தோலாற் பொதிந்தது. 3. இந்நான்கும் என்றது, கொள்ளார்தேஎம் குறித்த கொற்றம் முதலாகத் தோலின் பெருக்கம் ஈறாக முற்கூறிய துறைகள் நான்கினையும். 1. அகத்தோன் செல்வத்தினை அழிவின்றிக் காத்தற்கு ஏதுவாய் அமைந்த ஆரெயிலாகிய அரண், அகத்தோன் செல்வமாகிய காரியத்துள் அடங்காமையின் காரணமாகிய அது வேறு கூறப்பட்டது என்பது கருத்து. 1. தேவர்க்குரியனவாக அமைந்தவை கந்தழி, முற்றுழிஞை, காந்தள் என்னுந் துறைகளாகும். இவை முறையே திருமால், சிவன், முருகன் ஆகிய தெய்வங்களின் போர்ச் செயல்களைக் குறிப்பனவாக உழிஞைப் படலத்துள் ஐயனாரிதனார் குறித்துள்ளார். மக்களைப் பொருளாகக் கொண்டு நிகழும் உலகியலாய் எக்காலத்தும் நிகழ்தற்குரிய புறத் திணையொழுகலாற்றில் ஏதோ ஒரு காலத்து ஒருவர் வேண்டிய செய்தனவாகிய தெய்வங்களின் செயல்களைத் துறைகளாக அமைத்தல் பொருந்தாது என்னும் கருத்துப்பட அவை தமிழ் கூறும் நல்லுலகத்தன அல்ல என மறுத்தார் நச்சினார்க்கினியர். 2. முரசவுழிஞை என ஒரு துறை கூறியவர் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர். வீரர்களின் போர்ச்செயலை ஊக்குவிக்கும் கருவியாகி முரசத்தை உழிஞைத் திணையொடும் இயைத்து முரசவுழிஞை என ஒரு துறையினை அமைத்துக் கொண்டால், அதுபோலவே வலம்படுவியன்பணை என்றாற் போன்று வெற்றி முரசம் முழங்கப் பகைவர் மேற்சேறலாகிய வஞ்சித்திணையொடும் இயைத்து முரசவஞ்சி எனவும் ஒருதுறை கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் அவர் கொள்ளாமையால் அவர் கூற்று மிகைபடக்கூறல், குன்றக்கூறல் என்னுங் குற்றங்களின் பாற்பட்டு மறுக்கப்படும் என்பதாம். 3. புறப்பொருள் வெண்பாமாலையாசிரியர் கூறும் ஆரெயிலுழி ஞை என்னுந் துறை முழுமுதலரணம் என அடைபுணர்த்தோதப்பட்ட தொல்காப்பியத் தொடரிலேயே அடங்கும் என்பது கருத்து. 1. இஃது உழிஞைத்திணையின் துறைகளை விரித்துரைக்கின்றது. 2. அகத்தோன்வீழ்ந்தநொச்சியும் என்புழி வீழ்ந்த என்பதற்கு இறந்த எனவும், புறத்தோன் வீழ்ந்த நீர்ச் செருவீழ்ந்த என்றதொடர்களில் வரும் வீழ்ந்த என்பதற்கு விரும்பிச் சென்ற எனவும் இளம்பூரணர் பொருள் கொண்டுள்ளார் என்பது இளம்பூரணர் காட்டியுள்ள உதாரணச் செய்யுட்களால் இனிது புலனாம். 1. உழிஞைத் திணையில் அரணினை வளைத்துக்கொள்வோராகிய புறத்துழிஞையார், பகைவர் முற்றுகையினின்றும் அரணினை மீட்டுக் கொள்வோராகிய அகத்துழிஞையார் ஆகிய இருபெரு வேந்தர்க்கும் ஒருங்கேயுரியனவாகிய துறைகளை விரித்துக்கூறுவது இந் நூற்பாவாகும். 1. அரசன் தனது நாட்டு மக்களின் ஆக்கத்தினைக் கருதிக் குடிமக்களைத் தண்ணிழல் தந்து பாதுகாத்தற்கு அறிகுறியாயமைந்த தனது வெண்கொற்றக் குடையினைப் பகைவர் இருந்த திசைநோக்கி நல்லநாள் பார்த்துச் செல்லவிடுவது குடை நாட்கோள் எனப்படும். 2. பகைவரை அழித்தல் கருதித் தனது கொற்றவாளினைப் பகைவர் நாட்டின் திசைநோக்கி நல்லநாள் பார்த்துச் செல்லவிடுதல் வாள் நாட்கோள் ஆகும். நாள்கொளலாவது, நாளும் முகூர்த்தமும் தனக்குப் பொருத்தக் கொண்டு தான் புறப்பட்டுச் செல்லவேண்டிய காலத்திற் புறப்படமுடியாதபடி தடையேற்பட்ட விடத்துத் தனக்கு இன்றியமையாது உடன்கொண்டு செல்லுதற்குரிய பொருளைக் குறித்த நல்ல நாளிலே அத்திசை நோக்கித் தனக்கு முன்னே செல்லவிடுதல் ஆகும். 3. மடை அமை ஏணி-மீதிடு பலகையுடன் பொருத்துதல் அமைந்த ஏணி. மடை-மடுத்தல்; பொருந்துதல். மயக்கமாவது, புறத்தோரும் அகத்தோரும் தம்மிற் கலந்து பொருதல். 4. கடைஇ-கடவி; செலுத்தி. கடவுதல்-செலுத்துதல். 1. இது புறத்தோன் உள்ளத்தைக் காத்த நொச்சி என்றிருத்தல் வேண்டும். 2. மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை என்ற தொடரை, அகத்தோனுக்குரிய துறையாகப் பொருள்கொள்ளக்கருதிய நச்சினார்க்கினியர், மற்றதன் புறத்தோன் என்பதனை, மற்று புறத்தோனதன் என இயைத்து ஐயுருபு விரித்து மற்றுப்புறத்தோனதனை (அகத்தோன் வீழ்ந்த புதுமை எனவே வேண்டுஞ்சொல்வருவித்து, புறத்தோன்கொண்ட அவ்விடத்தினைப் பின்னை அகத்தோன் தான் விரும்பிக் கொண்ட புதுக்கோளும் எனப் பொருள் வரைந்துள்ளார். இங்ஙனம் ஒரு தொடரினை விகுதியும் உருபுமாகப் பிரித்துத் தாம் வேண்டியவாறு முன்னும் பின்னும் கூட்டிப் பொருளுரைத்தல் உரைநெறியன்மையின், இத்தொடர்க்கு நச்சினார்க்கினியர் கூறும்பொருள் தொல்காப்பியனார் கருத்துக் கேற்புடையதன்றென்க. 1. குடுமி என்பதற்கு முடிக்கலம் எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். 2. வென்றவாளின் மண்-வெல்லுதற்குக் கருவியாகிய கொற்ற வாளினை நீராட்டுதல். ஈண்டு மண்ணுதல் என்னுந் தொழிற்சொல் மண் எனப்பகுதியைவாய் நின்றது. (பாடம்) 3. ஒன்றின. 4. இங்கு உழிஞைத் திணைக்குரியதாக அமைந்த தொகைநிலை என்பது, பரந்து சென்று போரியற்றி வெற்றிகொண்ட படைவீரர்க்கெல்லாஞ் சிறப்புச் செய்தல் வேண்டிப் படைவீரர் எல்லாரும் ஒருங்கே வருக என ஒருசேரக் கூட்டுதல். 1. தும்பைக்கண் வரும் தொகைநிலை என்பது, போரில் எதிர்த்து நின்ற இருபெரு வேந்தரும் போர்க்களத்தில் ஒருசேர இறந்துபடுதல். 1. மகள் மறுத்தோனது மதிலை வளைத்துக்கொள்ளுதல் உழிஞைத்திணையாகாது; மகட்பாற் காஞ்சியென்னுந் துறையின் பாற்படும் என்பது கருத்து. 2. யானையும் குதிரையும் மதின்மேல் ஏறிப் பொருதற்குச் சிறந்தன அன்மையின், அவை உழிஞைத்திணையில் இடம் பெறவில்லை; மதிலை வளைத்து முற்றுகையிடுந்திறத்தில் இரண்டடி கடந்து பின்வாங்குதலும் போர்த் தொழிற்குக் கேடு பயத்தலின் பின்னடியிடும் இயல்பினவாகிய யானையும் குதிரையும் உழிஞைப் போரிற் சிறப்பிடம் பெறாமையிற் கூறப்படவில்லை என்பது கருத்து. எனினும் பகைவரது அரண் காவலையழித்தற்குரிய உழிஞைப்போரில் யானைப் படையும் ஈடுபடுத்தப்பெற்றன என்பது பதிற்றுப் பத்துப்பாடல் களாலும் புறநானூற்றுப் பாடல்களாலும் உய்த்துணரப்படும். 1. தலையழித்தல்-தலைமையினைச் சிதைத்தல்; வேந்தர் யாவரினும் உரித்தோன் யானே எனக் கருதும் செருக்கினை அழித்தல். மைந்து-வலிமை. 1. மைந்து பொருளாகவந்த வேந்தனை(எதிர்) சென்று தலைமை தீர்க்குஞ் சிறப்புடையது தும்பையெனவே மைந்துபொருளாகப் படைகொண்டு மேற்சேறல் வஞ்சி எனவும், அங்ஙனம் தன்மேற் படைகொண்டு வரும் வஞ்சி எனவும், வேந்தனை எதிரேற்று அவனுடன் பொருதல், இருபெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலாகிய தும்பைத்திணையின் பாற்படும் எனவும் கொண்டு, இதனானே எதிரூன்றல் காஞ்சி என்பாரை மறுத்தவாறு அறிக என்றார் இளம்பூரணர். எஞ்சாமண்ணசை வேந்தனை வேந்தன் அடுதல் குறித்து வரும் மேற்செலவாகிய வஞ்சியும், மைத்துபொருளாக ஒருகளத்து எதிர்நின்று பொருதற்குச் செல்லுதலாகிய தும்பையும் நோக்கத்தாலும் போர்நிகழும் இடத்தாலும், வேறுபட்ட தனித்தனித் திணைகளாதலின் வஞ்சித்திணைக்கு எதிராய் எதிர் செல்வது தும்பைத்திணையுள் அடங்கும் எனக்கொள்ளும் இளம்பூரணர் கூற்று தொல்காப்பியனார் கருத்துக்கு ஒத்ததாகத் தோன்றவில்லை. 2. பகைவர்மேற் படையொடு சென்று பொரும் போர்நெறியில் பகைவர் நாட்டு நிலவெல்லையை இடையீடாகக் கொண்டு நிகழும் போர்நிகழ்ச்சி வஞ்சித்திணை யெனப்படும் எனவும், பகைவரது மதிலரணினை இடையீடாகக் கொண்டு நிகழும் போர்நிகழ்ச்சி உழிஞைத்திணை எனப்படும் எனவும் நச்சினார்க்கினியர் கூறும் இவ்வேறுபாடு ஏற்புடையதாகும். 1. நெய்தற்குரிய பெருமணலுலகம்போலக் களரும் மணலும் பொருகளமாதல், பெரும்பொழுது வரைவின்மை, நெய்தற்குரிய ஏற்பாடு போர்த்தொழில் முடியுங்காலமாதல், நெய்தலில் தலைமகட்கே இரக்கமுளதாயவாறுபோலப் போரிற் கணவனை யிழந்த மனை வியர்க்கே இரக்கமுளதாதல், வீரர்க் குறிப்பின் அருள்பற்றிப் போரின்கண் ஒருவர் ஓருவரை நோக்கி இரங்குதல், போரிற் பலரும் இறந்த நிலைமைக்கண் கண்டோர் இரங்குதல் முதலிய காரணங்களால் நெய்தல் என்னும் அகத்திணைக்குத் தும்பை புறனாயிற்று என்பதாம். 2. தும்பைதானே, மைந்துபொருளாக வந்த வேந்தனை (மைந்து பொருளாகச்) சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என இயையும்! வந்தும் சென்றும் தலையழித்தலாகிய (முன்பக்கத்தொடர்ச்சி) இச்செயல், அவ்விருவர்க்கும் ஒத்ததாதலின், இருபெருவேந்தரும் ஒரு களத்தே பொருவது தும்பையென்னுந்திணையாம் என்றவாறு. மைந்து-வன்மை. தலையழித்தல்-தலைமை தீர்த்தல்; யானே வன்மை யுடையேன் எனப் பகைவேந்தன் கொண்ட செருக்கினை ஒழித்தல், சிறப்பிற்று-சிறப்பினையுடையது. 1. தம்முள் முரண்பட்ட வேந்தர் இருவரும் தத்தமக்கு இயல்பாக அமைந்த வன்மையொன்றையே துணையாகக் கொண்டு ஒருகளத்துப் போர் புரிதலாகிய இத்தும்பைத் திணையினையே சிறப்புடையது எனத் தொல்காப்பியனார் கூறுதலால், இவ்வாறன்றிப் போர்முறையிற் பிறழ்ந்து வஞ்சனையாற் கொல்வனவும் தெய்வங்கள் பாற் பெற்ற வரத்தினாற் கொல்வனவும் ஆகிய போர்ச் செயல்கள் தொல்காப்பியனர் காலத்திற்குப் பின் கலியூழிக்கண் தோன்றியன எனவும் அவை சிறப்பில் எனவும் வரும் நச்சினார்க்கினியர் கூற்று, பாரத காலத்துக்கு முற்பட்டவர் தொல்காப்பியனார் என்னும் அவர்தம் கொள்கையினைப் புலப்படுத்து வதாகும். 1. மைந்துபொருளாகத் தன்னை நோக்கிவந்த வேந்தனைத் தானும் மைந்து பொருளாக அவனை எதிரேற்றுச் சென்று ஒருகளத்துநின்று பொருதழிக் குஞ்சிறப்பினது தும்பை எனத் தொல்காப்பியனார் விளக்குதலால், பொருவோர் இருதிறத்தார்க்கும் உரிய வருதலும் செல்லுதலுமாகிய இருதொழில்களும் இணைந்து நிகழ்தற்குரிய ஓரிடமே இருதிறத்தாரும் எதிர்நின்று பொருதற்குரிய போர்க்களம் என்பது பெறப்படுதலின் வேந்தர் இருவர் சேனையும் ஒருகளத்து எதிர்நின்று பொரும் போர் நிகழ்ச்சியே தும்பையென்னுந் திணையாதல் நன்கு புலனாம். 1. சிறப்பின்று-சிறப்பினையுடையது; சிறப்பு இன்று எனப் பிரியும். இன், சாரியை, று-அஃறிணையொன்றன்பால் விகுதி. சிறப்பின்று என்னும் பயனிலைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத்திலுள்ள தும்பை என்பது அதிகாரத்தான் வந்தியைந்தது. 2. இந்நூற்பா தும்பைத்திணையின் சிறப்புணர்த்தியது எனவும் அடுத்து வரும் நூற்பா, மைந்துபொருளாகப் பொரும் தும்பைத் திணையின் பொதுவிலக்கணம் பற்றிய துறைகளை விரித்துரைப்பதெனவும் கொள்வர் நச்சினார்க்கினயர். (பாடம்) 3. செறுதலின். 1. உடம்பு அறுபட்டு ஆடுதற்கு அம்பும் வேலும் அன்றி வாள் முதலிய படைக்கலன்கள் உடம்பிற் செறிதலும் காரணமாகக் கொள்க. அலீகன் என்பது நீரில் வாழும் அட்டை என்னும் சிற்றுயிர். அறுதல்-அறுபட்டுத் துண்டாதல். தலை அறுபட்ட நிலையிலும் உடம்பு ஆடுதலால் இதனை அட்டையாடல் எனவும் வழங்குவர். 2. வெட்சிப் புறத்துத் தும்பையாவது, நிரைகவர்தலும் நிரை மீட்டலுமாகிய வெட்சித் திணையொழுகலாறுகளைத் தொடக்கமாகக் கொண்டு இருதிறத்தாரும் ஒருகளத்துப் போர்செய்தல். நிரைகொள்ளப்பட்டோனாகிய கரந்தையான் பொருகளங்குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரை கொண்டோன் களங்குறித்துப் பொருதலும் இதன்பால் அடங்கும். 3. வஞ்சிப் புறத்துத் தும்பையாவது, பகைவர்மேற் படையெடுத்துச் செல்லுதலாகிய வஞ்சித் திணையின் தொடக்கமாகப் போரில் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தர்க்குப் பொறாமை நிகழ்ந்து போரால் விண்ணுலகடைதலை விரும்பிய நிலைமைக்கண் இரு திறத்தார்க்கும் இடையே ஒருகளத்து நிகழும் போராகும். 4. உழிஞைப் புறத்துத் தும்பையாவது, பகைவனால் தனது அரண் முற்றுகையிடப்பட்டு உள்ளேயடங்கியிருந்த வேந்தனைப் பகைவனது முற்றுகையினின்றும் விடுவித்தற்பொருட்டு அகத்தோனுக்குத் துணையாக வேறோர் வேந்தன் வந்தவிடத்து, மதிலுள் இருந்த வேந்தன் வெளியே வந்து களங் குறித்துப் போர் நிகழ்த்தக்கருதுதலும், அவன் களங்குறித்த நிலையிற் புறத்தோனும் களங்குறித்துப் போர் நிகழ்த்தக் கருதுதலும் ஆகும். சென்ற உயிர்-சிறிதொழியத் தேய்ந்த நிலையில் உடலைப் பற்றி நிற்கும் உயிர். நின்றயாக்கை-துளக்கமின்றி நிலை நின்ற உடம்பு. சென்றவுயிரின் நின்ற யாக்கை, இருநிலந்தீண்டா அருநிலைவகை என்னும் இச்சிறப்பியல்பு, தும்பைத்திணைக்கெல்லாம் பொதுவன்மையின் திணையெனவும் படாது; தும்பைத்திணைக்கே சிறப்பிலக்கணமாதலின், துறையெனவும் படாது, துறைப்பொருள் நிகழ்ந்து முடிந்தபின் அதன் சிறப்பினைக் கண்டோர் கூறியதாகவே கொள்ளப்படும் என்பது கருத்து. 1. அட்டை என்பது நீரிலேயே வாழும் இயல்பினதாதலின் இருநிலந் தீண்டா அரு எனப்பட்டது. 2. உலையா நிலையின் உயிர் நின்றன்றே (புறம்) என்பது சென்றவுயிரின் நின்ற யாக்கை. 3. குறையுடற்கவந்தம் பேய்மகள் பரணிக்கு ஆட என்பது இருநிலந் தீண்டா அருநிலை வகை. 1. வீழ்ந்தெனச் 2. ஒருவன் 1. நோனார்-பகைவர். மூவகைநிலைகளாவன தானைநிலை; யானை நிலை, குதிரைநிலை என்பன. 2. தார்-தூசிப்படை; முன்னணிப்படை, போர்க்களத்து முகப்பாகிய முன்னணியிற் சென்று பொருதலின் தார்நிலை என்னும் பெயர்த்தாயிற்று. 3. தபுதி-இறத்தல். 4. உடைபடை-தோற்றுப்பின் னிடும் சேனை, கூழை-பின்னணிப்படை தான் ஒருவனாகவே வீரனொருவன் தான் தனித்துச் சென்று பின்னிடும் தன் சேனையைப் பின்னிடாது தாங்கிக் கொண்டு பகைவர் படையை எதிர்த்து நிற்றலின் அவனது பேராற்றல் கூழைதாங்கிய பெருமை எனப்பட்டது கூழை தாங்கிய பெருமை என்பது நச்சினார்க்கினியர் கொண்டபாடம். 5. பாழி-வலி. ஈண்டு வீரனது மெய்வன்மையைக் குறித்து நின்றது. ஏமம்-பாதுகாப்பு. 1. பாடு-படுதல்; இறத்தல். 2. அமலை-வீரர் பலர் நெருங்கிப்பாடும் பாட்டு. வாள் வாய்த்தலாவது, வாள்தொழிலில் முற்றுதல்; அஃதாவது வாளேந்திச் செய்யும் போர்த் தொழில்களைக் கடைபோகச் செய்து முடித்தல். 3. தொகை நிலையாவது, வீரர் அனைவரும் கூட்டமாக இறந்துபடுதல். 4. செரு-போர்க்களம், சினைஇ என்பது சினம் என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். சினைஇ-சினந்து; வெகுண்டு. 5. நூழிலாவது, ஒருவன் பல்லுயிர்களையும் ஒருசேரக் கொன்று குவித்தல். 1. புல்லித்தேர்றுதலாவது, போர்க்களத்து ஒன்றோடொன்று தொடர்பு படப் பொருந்தி நிகழ்தல். பன்னிருதுறைத்து-பன்னிரண்டு துறைகளையுடையது தும்பைத்திணை என்க. 2. ஆற்றாதவரை 3. நோனார்-எதிரியின் படைவன்மையினைப் பொறுத்துக்கொண்டு நின்று பொருதல் ஆற்றாத அரசர். உட்குதல்-பனித்தல்; நடுங்குதல். நோனார் உட்குவர். எனவே நோன்றார் (போரிற் பகைவர் படைக்கலங்களை எதிரேற்றுப் பொறுத்துப் பழகிய வீரர்கள்) அஞ்சாது எதிர்நிற்பர் என்பதாம். 1. தானை யானை குதிரை என்னும் முறைவைப்புக்கு நச்சினார்க்கினியர் காரணங்கூறுகின்றார். தானை-நிலத்தினின்று போர்புரியும் வீரர்தொகுதி. கதம்-வெகுளி. தானை, யானை, குதிரை, தேர் என்னும் நால்வகைச் சேனைகளுள் தேர் என்பது குதிரையின்றிச் செல்லாமையால் தேர்க்கு (மறம் இன்று) வீரமில்லையென விலக்கித் தானை, யானை, குதிரை என்னும் மூவகைநிலையே கொண்டார் தொல்காப்பியனார் என்பது கருத்து. புறப்பொருள் வெண்பாமாலை தும்பைப் படலத்தில் தானைமறம், யானை மறம், குதிரைமறம் என்னும் மூவகை மறமும் இம்முறையே முதற்கண் இடம் பெற்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். 2. பெருவழி 3. புறப்பொருள் வெண்பாமாலை தும்பைப்படலம் 3, 6, 7 பார்க்க. 4. மனநெகிழ்ந்து போவாருமுளர் என்றது, பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர்களை அன்னோர் கூறும் மூதின்முல்லை இல்லாண்முல்லை, வல்லாண் முல்லை, பாண்பாட்டு முதலியன முதனூலில் தனித் தனித் துறைகளாக வழங்காமையானும் அவற்றிற்கு இவ்வுளவு என்னும் வரையறை இன்மையானும் ஆசிரியர் தொல்காப்பியனார் இவைபோல்வன எல்லாவற்றையும் தானைநிலை என ஒரு துறையாகவே அடக்கிக் கூறினார் என்பதாம். 1. இத்துறைப்பாற்படும்-தானைநிலை என்னும் இத்துறையில் அடங்கும். 2. தும்பைவீரர் சூடிய பூக்கூறிய இவ்வெண்பா, புறப்பொருள் வெண்பாமாலையில் தும்பைத்திணைக்கு இலக்கியமாக இயற்றப்பெற்றமையின் திணைப்பாட்டு எனப்பட்டது. 1. குருக்கள்-குருகுலத்தரசராகிய துரியோதனன் முதலியோர். 1. தார் என்பது, முன்னணியில் நின்று போர்செய்யும் சேனையைக் குறித்த பெயர். ஈண்டு முன்னின்று போர்புரியும் தன் வேந்தனைக் காத்தற்கு முந்துற்று முன்னணிச் சேனையிற் சென்று போர்புரியும் வீரனொருவனது நிலையைக் குறித்தலின் தார்நிலை என்னும் பெயர்த் தாயிற்று. 2. இருவர் தலைவர்-இருபெருவேந்தருடைய படைத்தலைவர், தபுதிசாதல் 3. கூழை-பின்னணிப்படை. 4. சிறக்கணித்தல்-ஒருக்கணித்துப்பார்த்தல். 1. பாழி-வலி; இங்கு வலிமையுடைய உடம்புக்கு ஆகிவருதலின் பண் பாகுபெயர். கையெறிந்தானும்-கையால் எறிந்தாயினும். 2. கழுக்கொண்டெறிந்தானும்-கழுபடையைக்கொண்டு எறிந்தாயினும். கடு என்பதனைக் கழு எனத் திருத்துக. பாடு-பெருமை. 3. அமலை என்பது, வீரர்கள் திரளாக நெருங்கி நின்று ஆடுங்கூத்து. 4. வாள் வாய்த்தலாவது, வாளாற்செய்யுந்தொழில் முற்றுப் பெறுதல். 1. குருகுல வேந்தனாகிய துரியோதனனை வீமன் தொடையில் துணித்து உயிரைப் போக்கிய காலத்துத் துரியோதனனது சேனைக்குத் தலைவனாகிய அசுவத்தாமா வெகுண்டெழுந்து அன்றிரவில் ஊரையழித்துப் பாஞ்சால வீரர்களையும் தரும புத்திரன் முதலிய பாண்டவர் ஐவருடைய மக்களையும் ஒருசேரக் கொன்று வெற்றி கொண்ட போர் நிகழ்ச்சி செருவகத் திறைவன் வீழ்ந்தெனச்சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலை என்னும் இத்துறைக்கு இலக்கியமாம் என்பது கருத்து. (பாடம்) 2. திறங்கெழு 3. ஊர்ப்புக் காவயின். (பாடம்) 1. கொண்முதல் 2. புறக்கொடுத்தலின் 3. புரிதல் நன்றன்று 4. தனக்குக் கெட்டோர்-தனக்குத் தோற்றவர். தோற்றவர்கள் தன்னாற் கொல்லப் படுதற்குரிய தவறுடையராயினும் தோற்றவர்களைக் கொல்லுதல் நல்லிசையாகாது என்பார், நல்லிசை முன்னர்ப் பெற்றோன் என்றார். எனவே அவ்விசை இப்பொழுது கெட்டொழிந்தது என்பது கருத்து. 1. வெட்சி முதலிய திணைகளில் அமைந்த துறைகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்துப் படிகால் முறையே நிகழ்வன. இருதிறப் படைகளும் ஒரு களத்துப் பொருதலாகிய இத்தும்பைத்திணையில் ஒன்றன்பின் ஒன்று என்ற முறையிலன்றி, இரண்டு படைகட்கும் பொருந்தப் போர் நிகழ்ச்சிகள் ஒரு காலத்து ஒருங்கே நிகழும் என்பதற்குப் புல்லித்தோன்றும் என்றார் என்பர் நச்சினார்க்கினியர். 2. பல்பெருங்காதமாகிய நீண்ட வழியின்கண்ணே அறுதிப்படுத்திய இடத்தைத் துறை என வழங்குமாறு போல, அந்நூற்பாவிற் சொல்லப்பட்ட துறை என்பதும் தும்பைத் திணைக்குரியவாக நீண்டு நிகழும் போர்நிகழ்ச்சிகளை அறுதியிட்டுக் காட்டிற்று என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். இவ்விளக்கம் இனி வருகின்ற திணைகளின் துறைகட்கும் ஏற்புடையதாகும். 1. தாவென்பது, வருத்தம், வலி என்னும் பொருளில் வழங்கும் உரிச்சொல்லாகும். இங்கு இச்சொல்லிற்குக் கெடுதல் எனப்பொருள் கொண்டார் இளம்பூரணர். கொள்கை-கோட்பாடு. தத்தம் கூறு-தத்தமக்குச் சிறப்புரிமையுடைய பண்பும் தொழிலுமாகிய திறங்கள். பாகுபடுதலாவது, பலபகுதிகளாக வகைபெறக்கிளைத்தல். 1. தனக்கென நிலம்பெறாத பாலைபோல எல்லாநிலத்தும் காலம் பற்றி நிகழ்தலும், ஒத்தார் இருவர் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலத் தன்னோடு ஒத்தாரின் நீங்கிப் புகழப்படுதலும் பற்றிப் பாலைத்திணைக்கு வாகை புறனாயிற்று என்பதாம். 2. இல்லறம் நிகழ்த்திப் புகழெய்துதற் பொருட்டுத் தலைமகளைத் தலைவன் பிரிந்து செல்லுதல் பாலையாதல் போன்று, வீரன் அறப்போர் செய்து துறக்கம்புகுங் கருத்தினாற் சுற்றத் தொடர்ச்சியினீங்கிச் செல்வது வாகையாதலானும், வாளினும் தாளினும் நிறையினும் (முன்பக்கத்தொடர்ச்சி) பொறையினும் வென்றியெய்து வோரும் மனையோரைப் பிரிதல் இயல்பாதலானும், தனக்கென ஓர்நிலம் பெறாது நால்வகைநிலத்தும் பாலையொழுக்கம் நிகழுமாறுபோல முற்கூறிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பையென்னும் திணை நான்கினையும் இடமாகக் கொண்டு நிகழ்வது வாகையாதலானும் சங்கத்தொகை நூல்களுள் பாலைத் திணைப்பாடல்கள் பெருவரவிற்றாய் வருதல்போல வாகையும் பெருவரவிற்றாய் வருதலானும் பாலையென்னும் அகத்திணைக்கு வாகை புறனாயிற்றுது என்ப நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். 1. தா இல் கொள்கை-வலியும் வருத்தமும் இன்றித் தன்னியல்பில் நிகழும் ஓழுகலாறு. தத்தம் கூறு-தத்தமக்கு இயல்பாயமைந்த அறிவு, ஆண்மை, தொழில் பற்றிய கூறுபாடுகள். பாகுபட-பகுதிப்பட; இருவகைப்பட. இருவகையாவன: தன்னைத் தானே மிகுதிப்படுத்தி உயர்தலும், பிறர் மீக்கூறுபடுத்தி ஏனையோரின் உயர்த்துப் புகழப்படுதலும் ஆகும். இவ்விருவகையுள் தன்னியல் பாகப்பெற்ற வென்றியை முல்லையெனவும், உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் வழங்குதல் தொல்காப்பியனார் காலத்திற்குப் பின் தோன்றி நிலைபெற்ற புறத்திணை மரபாகும். ஒப்புடையோர் தம்மின் உறழாத நிலையினும் ஒருவனது உயர்ச்சி குறித்து, அவன் அவர்களை உறழ்ந்து உயர்ந்தான் எனப் பிறர் தன்னை உயர்த்துக் கூறும் வண்ணம் வென்றுயர்தலும் வாகைத்திணையேயாம் என அறிவித்தற்கு மிகுதிப்படுதல் எனத் தன் வினையாற் கூறாது மிகுதிப்படுத்தல் எனப்பிறவினையாற் கூறினார் தொல்காப்பியனார். 1. எல்லா மணிகளினும் சிறந்த மாணிக்கமணியின் இயல்பாகிய உயர்ச்சியினைக் கூறுவோர் அதனைப் பிறிதொரு மணியுடன் ஒப்பிட்டுப் பிரித்துக் கூறாது இயல்பாகவே நன்று என உயர்த்துக் கூறுமாறுபோல, உலக முழுவதும் அறியும்படியமைந்த ஒருவரது உயர்ச்சி யுடைமையும் வாகைத்திணையாம் என்பது கருத்து. 2. தா என்பது, வலி வருத்தம் என்ற பொருளில் வழங்கும் உரிச்சொல்லாகும். கொள்கையாவது, ஒருவர் உயர்ந்ததென மேற்கொண்டொழுகும் ஒழுகலாறு. தாஇல்கொள்கை என்பதற்கு, வலியும் வருத்தமும் இன்றி ஒருவர்க்கு இயல்பாகவேயமைந்த மிகுதிப்பாடு என்பது பொருள். எனவே இரணியனைப் போன்று பிறரைத் துன்புறுத்தித் தன்னைப் பிறர் உயர்த்துப் புகழும்படி செய்வித்துக்கொள்ளுதல் உண்மையான வாகைத்திணையாகாது என்பது புலனாம். (பாடம்) 1. வகையில். ஆயினால். 1. ஐவகை மரபின் அரசர் பக்கம் என்பதற்கு, அவையாவன ஓதலும் வேட்டலும் ஈதலும் படை வழங்குதலும் குடியோம்புதலுமாம் என இங்கு விளக்கம் தந்த இளம்பூரணர்,வேட்பித்தலாவது,வேள்விசெய்வித்தல்,நளிகடிலிருங்குட்டத்து(26)என்னும்புறப்பாட்டினுள்................mur‹ வேட்பித்தவாறும் பார்ப்பார் வேட்டவாறும் கண்டுகொள்க என முன்னர்க் குறித்துள்ளார் எனவே அரசர்க்கு வேட்டற்றொழிலினும் வேட்பித்தற்றொழிலே சிறப்புடைய தென்பது இளம்பூரணர் கருத்தெனக் கொள்ளவேண்டியுளது. அரசர்க்குரியன ஐந்தொழில்கள் ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல் எனப் புறப்பொருள் வெண்பாமாலையுரை கூறும். 1. ஏனோர் என்னுஞ்சொல், வணிகர், வேளாளர் என்னும் இருதிறத்தாரையும் ஒருங்கே குறித்ததெனக் கொண்டு இருமூன்று மரபு என்பதற்கு அவ்விரு திறத்தார்க்கும் தனித்தனியே உரியனவாக இருவேறு அறுவகைத்தொழில்களை வகுத்துக்கூறுதல் ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகுமா? என்பது ஆராய்தற் குரியதாகும். 1. அறிவன் என்றது கணிவனை எனவரும் இளம்பூரணர் கூற்று, அவர்க்குக் காலத்தால் முற்பட்ட ஐயனாரிதனார் கருத்தொடு மாறுபடுகின்றது. மறுவில் செய்திமூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் வாகையினை. புகழ்நுவல முக்காலமும், நிகழ் பறிபவனியல்புரைத்தன்று (பு. வெ. மா. வாகை-13) என விளக்கிய ஐயனாரிதனார், அறிவனின் வேறாகிய கணிவனது இயல்பினை, துணிபுணருந் தொல்கேள்விக் கணிவனது புகழ்கிளந்தன்று (பு. வெ. மா. வாகை-20) எனக் கணிவன்முல்லையென்னுந்துறையில் விளக்கியுள்ளமை இங்குக் கூர்ந் துணரத்தகு வதாகும். 1. தாபதப் பக்கமாவன, தவஞ்செய்வார்க்குரிய செயல் முறைகள். 2. பால்-பாகுபாடு; பல்வேறு போர்த் தொழிற்பகுதி. பொருநர்-வீரர். பாகுபாடு அறிந்த மரபினையுடைய bபாருநர்vன்றது,Éல்,tள்,nவல்முதலியgடைக்கருவிகளாலும்bமய்யின்bமாய்ம்பினாலும்gகைவரொடுbபாருதுnமம்படுதலில்tல்லåரர்vன்பதாம்.1. பார்ப்பனப்பக்கம் முதல் பாலறிமரபிற்பொருநர் ஈறாகக் கூறிய அறுவகையுள் அடங்காது, அவைபோன்று எஞ்சியுள்ள ஏனைத் தொழிற்றிறங்களில் தத்தங் கூறுபாட்டினை மிகுவித்து மேம்படுதலாகிய வாகைச் செய்திகள்யாவும் அனை நிலைவகை என ஏழாவது வகையாக முன்னோர்களால் அடக்கப்பெற்று வாகைத்திணை இவ்வாறு எழுவகையாகத் தொகைநிலை பெற்றதுஎன்பார் அனைநிலை வகையொடு ஆங்கு எழு வகையில் தொகைநிலை பெற்றது என்றார். (பாடம்) 2. யாப்புடைச் செய்கை 3. வெட்சி முதலாக முற்கூறப்பட்ட திணைகளில் துறைப்படுத்தினாற் போலத் துறைப்படுத்திக் கூறுதற்கேலாத பரப்புடைச் செய்கை பலவற்றையுடையது வாகைத் திணையாதலின் அங்ஙனம் விரிந்து பரந்த செய்கை பலவற்றையும் தொகுத்து ஒன்றொன்றாக்கி வாகைத்திணையினை எழுவகைப்படுத்திக் கூறுவது இச் சூத்திரமாகும். (பாடம்) 1. வியாகரணத்தாற் காரியப்படுதலின் 2. நான்மறைகளுள் இருக்கு, எசுர், சாமம் மூன்றும் தலையாய ஓத்து எனவும் அதர்வவேதம் வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு நலந்தரும் மந்திரங்களுடன் இடர் விளைக்கும் மந்திரங்களும் பயின்று வருதலால் இடையாய ஓத்து எனவும் பகுத்துரைப்பர் நச்சினார்க்கினியர். 3. நிருத்தம் என்பது, உலகியற் சொல்லையொழித்து வேதத்திற் பயின்ற சொற்களை ஆராய்வது. வியாகரணம் என்பது, உலகியற் சொற்களையும் வைதிகச் சொற்களையும் ஒருங்கே ஆராயும் ஐந்திரம் முதலிய இலக்கண நூல்கள். கற்பங்கள் ஆவன, வேதத்துடன் கூறப்படும் வேள்வி முறைகளை வகுத்துரைக்கும் போதாயனீயம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலியன. கணிதங்கள் ஆவன, நாராயணீயம், வாராகம் முதலிய எண்ணூல்கள். பிரமம் என்பது, எழுத்தாராய்ச்சி பற்றியது. சந்தம் என்பது, செய்யுளிலக்கணம். இவை ஆறும் வேதப் பொருளையுணர்தற்கு அங்கமாதலின் ஆறங்கம் எனப்பட்டன. 4. இவை வேதத்திற்கு அங்கமன்மையின் வேறாயின என இத்தொடர் இருத்தல் வேண்டும். 1. இனிமை பயின்று வருதலின் 2. உறழ்ச்சிநூல்-தருக்கம் 3. ஐந்தீயாவன : கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, சூரியன் முத்தீயாவன : ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி உலகியற்றீயாவது : சோறு சமைத்தல் முதலாக உலகியல் வாழ்விற் பயன்படுத்தப் பெறுவது, இவை--இவ்வேள்விகள்; (பாடம்) 4. மாணாக்கனை 1. ஓத்தினாற் கோடலாவது, மாணாக்கர்க்கு நூல்களைக்கற்பித்து அதனால் வரும் பொருளைக் கொள்ளுதல். கொடுப்பித்துக் கோடலாவது வேள்விகளில் தேவர்கட்கு அவி முதலியன கொடுக்கச் செய்து அங்ஙனம் புரோகிதனாயிருந்து வேட்டற்றொழிலாற்பெறும் பொருளைக்கொள்ளுதல். தான் வேட்டற்குக் கோடலாவது தானே வேள்வியொன்றினைச் செய்தற்பொருட்டு அரசர் முதலியோர் பாற் பொருளைப் பெற்றுக்கொள்ளுதல். தாயமின்றி இறந்தோர் பொருள் கோடலாவது, இறந்தார்க்குரிய பொருளைப் பெறுதற்குரிய சுற்றத்தார் இல்லாத நிலையில் அப்பொருளை ஏற்றுக்கொள்ளுதல். இழந்தோர் பொருள் கோடலாவது பொருளுக்குரியோர் அப்பொருளை அரசதண்டம் முதலியவற்றால் இழந்தநிலையில் அப்பொருளைப் பெற்றுக்கொள்ளுதல். அரசு கோடலாவது நாட்டிற்குரிமையுடையோர் இதனை ஆளுக என ஆட்சியுரிமை கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளுதல். படைக்கலங் காட்டிக் கோடலாவது. படைக்கலங்களாற் போர் செய்யும் முறையினைக் கற்பித்து அதனாற்பெறும் பொருளைக்கொள்ளுதல். இவையெல்லாம் பார்ப்பார் பொருள் கொள்ளும் முறையினைக் குறித்தனவாகும். 2. முறையோ தினன்றீ 1. இரு மூன்று மரபின் ஏனோர்பக்கம் என்பதற்கு, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதிய உரையும் விளக்கமும் நால்வகை வருணப் பாகுபாட்டினை வற்புறுத்தும் பிற்கால மிருதி நூல்களை அடியொற்றியமைந்தன; அவை ஆதியூழியின் அந்தத்தே நூல் செய்த தொல்காப்பியனார் கருத்தாகா. மிருதி நூல் கூறும் நால்வகை வருணப் பாகுபாட்டின்படி வேளாளரை நான்காம் வருணத்தவராகக் கொள்ளுதலும் அவர்க்குரிய தொழில்களுள் மூவகை வருணத் தாரை வழிபடுதலை ஒரு தொழிலாகச் சேர்த்து எண்ணுதலும், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் (திருக்குறள்-பெருமை-2) எனவும், (முன்பக்கத்தொடர்ச்சி) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் (திருக்குறள்--உழுவு--3) எனவும் வரும் தமிழ் மறைக்கு ஒவ் வாதனவாம். வாணிகர்க்கும் வேளாளர்க்கும் வழிபாடும் வேள்வியும் ஆகிய தொழில்கள் முறையே ஒவ்வாத நிலையில் அவ்விருதிறத்தாரையும் தொழில்வகை பற்றி இரு மூன்று மரபின் ஏனோர் எனக் கூட்டியுரைத்தார் தொல்காப்பியனார் என்றல் ஏற்புடையதன்றாம். (பாடம்) 2. வாணிகர்க்கு, வேளாளர் கன்னியர்கட் டோன்றினாரையும், (பாடம்) 1. ஈதல் கூறிற்று 1. வேளாளர்க்கு ஏனைய மூவகை வருணத்தாரையும் வழிபடுதல் தொழில் என்பதற்கு எடுத்துக்காட்டிய இருக்கையெழலும் எனத் தொடங்கும் நாலடியார் பாடல், வேளாண் மாந்தார்க்கு மட்டுமின்றி நற்குடிப்பிறந்த பெரியோர் அனைவருக்கும் உரிய ஒழுக்க நெறியினை விதிப்பதாகலின், அதனை வேளாளர்க்குரிய தொழில்வகையினைச் சுட்டுவதாகக் காட்டுதல் சிறிதும் பொருந்தாது. தேயம் என்னும் சொல் பக்கம் என்ற பொருளில் ஆளப்பெற்றது. 2. தமிழகத்தில் குடமலையில் வாழ்ந்தவர் அகத்தியனார். எனவே அவர் குடமணி என வழங்கப்பெற்றார். குடமுனிவர் என்னும் பெயரைப் பொருளறியாத வடமொழியாளர் கலசயோணி என மொழி பெயர்த்தனர். அதனாற் குடத்திற் பிறந்தவர் அகத்தியர் என்றதொரு பொருந்தாக் கதையும் பிற்காலத்திற் புனைந்துரைக்கப்படுவதாயிற்று. (பாடம்) 3. வீடு முயல்வார்க்கு 1. தாமரை, ஆம்பல், யாமை என்பன யோகஞ் செய்வோர் அமர்ந்திருத்தலாகிய இருத்தல் வகையாகும். வாய்வாளாமை--உரையாடாமையாகிய மௌன நிலை. பாலறிமரபிற் பொருநர் கண்ணும் எனவரும் தொடரை அறிமரபிற் பொருநர் கட்பாலும் என இவ்வாறு மாற்றாது சூத்திரத்தில் உள்ளவாறே கொண்டு, போர்க்கூறுபாட்டினை அறிந்து போரியற்ற வல்ல வீரர்கண்ணும் எனப் பொருளுரைத்தலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். 2. யுணர்தல் 3. அரசர்க் (பாடம்) 1. தசைப்பது, 2. கடும்புகை 3. கூழைத் துதிப்பானும் 4. நூறிய (பாடம்) 1. பொரலாம் 2. வேற்றுமையாற்--பண்டங்கு 1. ஈர்ஞ்சுவையும் (பாடம்) 2. ஒருதலை யொசிய வொற்றி 3. அனைநிலை வகை என்பதனைப் பார்ப்பனப்பக்கம் முதலாகப் பாலறி மரபிற் பொருநர் ஈறாக மேற்குறித்த ஆறுவகையோடும் தனித்தனி இயைத் துரைத்தால் ஆறிரண்டு பன்னிருவகையாம். அமர்குறித்த ஆறுவகையினும் அடங்காமல் எஞ்சிய வெற்றித் தொழிற் கூறுபாடுகள் அனைத்தையும் அனை நிலைவகை என ஒரு தொகுதியாக்கி அதனை ஏழாவது (முன்பக்கத்தொடர்ச்சி) வகையாகக் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்தாமென்பது அனைநிலை வகையொடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை பெற்றது என அவ்வாறினும் வேறாகிய ஏழாவது வகையாகப் பிரித்துரைத்தலால் இனிது புலனாம். 1. களவிற்றோன்றினும் 2. ஈண்டு மாமூலர் என்றது சிவயோகியராகிய திருமூலநாயனாரை எனக் கருதுதல் பொருந்தும். 1. பார்ப்பனவாகை, அரசவாகை என இவ்வாறு துறைப்பெயர் கூறினால் பார்ப்பார்க்குரிய ஓதல் முதலாகவுள்ள அறுதொழில்களும் அரசர்க்குரிய ஐவகைத் தொழில்களும் அடங்காமையின், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் ஐவகை மரபின் அரசர் பக்கம் எனத் தொகுத்துக் கூறல் என்னும் உத்தியால் ஓரோ வொன்றாக்கிக் கூறினார் ஆசிரியர். 1. தமிழகத்திற் பண்டைநாளில் வாழ்ந்த பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையோர் என்பதற்குத் தமிழ் நூல்களில் எத்தகைய குறிப்புமில்லை. ஆபயன்குன்றும் அறுதொழிலோர் நூன் மறப்பர் (திருக்குறள் 560) என்றாங்கு அவர்கள் அறுவகைப்பட்ட தொழிலுடையோராகவே தமிழ் நூல்களிற் பேசப்படுகின்றனர். அன்றியும் இங்கு எடுத்துரைக்கப்படும் வாகைத் திணையென்பது, தத்தமக்குரிய தொழிற்கூறுகளை மிகுதிப்பட வளர்த்தலையே சுட்டுவதாதலின் ஈண்டு அறுவகை ஐவகை இருமூன்று வகை எனக் குறிக்கப்பட்டன மக்களுக்குச் சிறப்புவகையாற் கூறப்படும் தொழிற் கூறுகளேயாகும். பிற்காலத்திற்போன்று பிறப்புவகையாற் கூறப்படும் குலப்பகுப்பு என அவற்றைக் கொள்ளுதல் பொருந்தாது. 1. குறுநில மன்னரும் வேளிர் மரபினைச் சார்ந்தவரே என்பது, வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து எனவரும் பதிற்றுப்பத்துத் தொடராற் புலனாதலின், வேளிரின் வேறாகக் குறுநில மன்னரைக் கூட்டி அரசர் பக்கம் ஐந்து என்றல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. 2. ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களை நிலவகையாற் பகுத்துக் கூறிய தன்றிக் குலவகையாற் பகுத்திலர் என்பது நாவலர் பாரதியார் அவர்கட்கும்உடன் பாடாதலாலும் அகத்திணையியலிற் சுட்டப்பட்ட அடியோர் வினைவலர், ஏவன் மரபின் ஏனோர் என்னும் பகுப்பு மக்களது அறிவாற்றல்களின் மிகுதி குறைவுகட் கேற்ப வழங்கும் பெயர்ப்பகுப்பாவதன்றி நிலைபெற்ற குலப்பகுப்பன்மையானும் இருமூன்றுமரபின் ஏனோர் என்பதற்கு அறுவகைப்பட்ட தமிழ்க் குடிகள் எனப் பொருள்கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. இவ்வறுவகை யோருமே தமிழ்க்குடிகள் எனின் இந்நூற்பாவில் முற்குறித்த பார்ப்பாரும் அரசரும் பிற்கூறும் அறிவரும் தாபதரும் பெரருநரும் தமிழ் மக்களின் வேறுபட்ட இனத்தவரோ என ஐயுறுதற்கிடமுண்டாதலும் இங்கு எண்ணத் தகுவதாகும். தமிழகத்தில் நால்வருணப்பாகுபாடு என்றும் இல்லாமையால் ஆரியர் கலப்பிற்குப்பின் பிற்காலத்துப் புகுந்த மிருதிநூற்கோட்டுபாடுகளை இயைத்துத் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரை தொல்காப்பியனார் கருத்துக்கு ஒத்ததன்று என வற்புறுத்துவதே நாவலர் பாரதியார் அவர்கள் எழுதியுள்ள உரைப்பகுதியின் நோக்கமாகும். இனி, ஏனோர் என்பது, முற்குறித்த பார்ப்பார் அரசர் நீங்கலாக எஞ்சியுள்ள குடிமக்கள் அனைவரையும் குறிப்பதாகும். இச்சொல் வணிகர் வேளாளர் என்னும் இருதிறத்தாரை மட்டும் குறித்ததெனக் கொண்டு இரு திறத்தார்க்கும் தனித்தனியே உரியனவாக இருவேறு (முன்பக்கத்தொடர்ச்சி) அறுவகைத் தொழில்களைப் பகுத்துரைப்பர் உரையாசிரியர்கள். மக்களைக் குறிஞ்சி முல்லை முதலிய நிலவகையாற் பகுத்துரைத்தலன்றி நிறவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்தில் தமிழகத்தில் இடம் பெறாமையானும் தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தலாகிய வாகைத்திறம் வணிகர் வேளாளர் என்னும் இருதிறத்தார்க்கு மட்டுமின்றி நானில மக்கள் அனைவர்க்கும் உரிய தொன்றாதலானும் இருமூன்று மரபின் ஏனோர் என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் பொருந்தாமை புலனாம். இனி இருமூன்று மரபின் ஏனோர் பக்கம் என்பது மரபால் அறுவகைப்பட்ட தமிழ்க்குடிகளைக் குறித்ததாகக் கொண்டு இருமூன்று மரபினராவர் ஆயர், குறவர், உழவர், பரவர், வினைவலர், ஏவன்மரபினர் எனவும் இவரல்லாத அடியோர் வாகைக்குரியவர் ஆகார் எனவும் விளக்குவர் நாவலர் பாரதியார். 1. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் முதலாக அனைநிலைவகை ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் வாகைத்திணைவகையாம் எனவும், இந்நூற்பாவில் விரித்துரைக் கப்படுவன வாகைத் திணைக்குரிய துறைகளாம் எனவும் பகுத்துணர்ந்து கொள்க என்பார், மேற்சொல்லப்பட்ட ஏழ்வகையும் திணையென்று கொள்க என்றார். 2. கூதிர்ப்பாசறை, வேனிற்பாசறை எனப்பகுத்துரைக்கப்பட்ட இரண்டும் பாசறை நிலை என ஒரு துறையாகவே எண்ணப்படும் என்பது கருத்து. 3. ஏரோர் களவழி என்பது, ஏரின்வாழ்வாராகிய உழவரது தொழிலை யொத்துப் போர்மறவர் நிகழ்த்தும் போர்த் தொழிலை உருவகித்துப் போர்க்களத்தைப் புகழ்ந்து பாடும் துறையாகும். போரோர்களவழித்தேரோர் தோற்றுவித்த வென்றியாவது, போர்க்களத்தில் தேரூர்ந்து பொருதவீரர் தோற்றுவித்த வெற்றிச் செயல்களைப் புகழ்ந்துபாடும் களவேள்வி என்னும் துறையாகும். இவ்விருவகைத் துறைகட்கும் இலக்கியமாக அமைந்தன பொய்கையார் பாடிய களவழிநாற்பதும் பரணி இலக்கியங்களும் ஆகும். 1. முன்றேர்க்குரவை முதல்வனை வாழ்த்திப் பின்றேர்க்குரவை பேயாடுபறந்தலை (சிலப். வஞ்சி) எனவரும் தொடரில் இப்புறத்துறைகள் இரண்டினையும் இளங்கோவடிகள் எடுத்தாண்டுள்ளமை காணலாம். 2. புல்லாவாழ்க்கை என்றது, வாழ்க்கை நுகர்ச்சிக்கு இன்றியமையாத செல்வத் தொடு பொருந்தாத வறுமை வாழ்க்கையினை. இத்தகைய வறுமை நிலையிலும் தறுகண் வீரன் தனது வல்லாண்மையினைத் துணைக்கொண்டு வறுமையிற் செம்மையுடையனாக வாழும் வெற்றித்திறத்தினை விளக்குவதே புல்லா வாழ்க்கை வல்லாண்பக்கம் என்னும் இப்புறத்துறை என்பது இளம்பூரணர் கருத்தாகும். 3. ஒல்லார்--பொருந்தாதார்; பகைவர். நாணுதலாவது இத்தகைய உள்ளத்திண்மை நமக்கு வாய்க்கப்பெறவில்லையேயென நாணித்தலைகுனிதல். (முன்பக்கத்தொடர்ச்சி) பெரியவர்கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்று என்றது, தமக்குத் தலைவராயுள்ள பெருமக்கள் முன்பு இன்ன செயலைச் செய்யேன் ஆயின் இன்ன நிலையினையடைவேன் என வகுத்துக்கூறிய வஞ்சினத்தின் ஒரு கூற்றினை. புணர்த்தல்--அவ்வஞ்சினக்கூற்றொடு தன்வாழ்க்கையை இணைத்தல். தொல்லுயிர்--தோற்றமில்காலமாக (அநாதியே) உள்ள பழமையான உயிர். எனவே நீண்ட நெடுங்காலமாக அழிவின்றி நிலைபெற்றுள்ளது உயிர் என்பது தொல்காப்பியனாரது தத்துவக் கொள்கையாதல் புலனாம். அவிப்பலியாவது, வீரன் தன் உயிரைப் போர்த் தீயுள் அவியுணவாக வழங்குதல். 1. ஒல்லார் இடவயின்-பகைவரிடத்தின்கண். புல்லியபாங்கு-பொருந்திய நட்பு. பகைவராயினார் தம்மொடு போர் புரிதலாற்றாது தம்மைப் பணிந்து அணுகிய நிலையில் பகைவர் நாடு தம் கையகத்தது என்று கொண்டு உவந்து பகைவர்கள் பாலும் இரக்கம் மீதூர்ந்து பகைவரை நண்பராகவும் அவர் நாட்டு மக்களைக் தம் குடிமக்களாகவும் கொண்டு அன்புடையராதல். பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு (874) எனவரும் திருக்குறள் இத்துறைக்குரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம். கைத்து-கையகத்தது. 1. பகடு-எருது. ஆ-பசு, துகள் தபு-குற்றம் தீர்ந்த, இங்குச் சான்றோர் என்றது, முறையே வேளாளரையும் வணிகரையும். பகட்டினானும் மாவினானும் எனப்பிரித்துப் பொருள் வரைவர் நச்சினார்க்கினியர். 2. கடி மனை என்பதற்குத் தீதெனக் கடிதற்குரிய பிறர் மனைவேட்கை எனப் பொருள் கொண்டு கடிமனை நீத்தபால் என்பதற்குப் பிறர் மனை நயவாமை என உரைவரைந்தார் இளம்பூரணர். இந்நூற்பாவில் துறவறத்திற் குரிய காமநீத்தபால் என்பது பின்னர்க் கூறப்படுதலின், கடிமனைநீத்தபால் என்னும் இத்துறை, மனையறத்தில் நின்றாரை நோக்கியமைந்தது என்றார் இளம்பூரணர். கட்டில் நீத்த பாலினானும் என்பது நச்சினார்க் கினியர் கொண்ட பாடமாகும். 3. அறங்கூறவையத்தார்க்குரிய எண்வகைப் பண்புகளையும் தொகுத்துரைப்பது. குடிப்பிறப்புக் கல்வி குணம் வாய்மை தூய்மை நடுச்சொல்லு நல்லணி யாக்கம்-கெடுக்கும் (முன்பக்கத்தொடர்ச்சி) அழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டும் இழுக்கா அவையின்கண் எட்டு. எனவரும் வெண்பாவாகும். உரைப்பா ருரைப்பனவெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் (231) எனவரும் திருக்குறள் புகழுக்குரிய காரணங்களுள் ஈதலே தலையாயதென்பதனை வற்புறுத்தல் காண்க. 1. பிழைத்தோர்-பிழைசெய்தோர். தாங்குதல்-அவர் செய்த பிழையினைப் பொறுத்துக்கொண்டு அவர்களைப் பாதுகாத்தல். இச்செயல் பண்பினால் மிக்க சான்றோர்க் குரிய வெற்றித் திறங்களுள் தலையாயது என்பார் பிழைத்தோர்த் தாங்குங் காவல் என்றார். 2. பொருளொடுபுணர்ந்த பக்கம் என்ற தொடரிலுள்ள பொருள் என்பதற்கு மெய்ப்பொருள் என்றும், அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றினுள் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்த நாடு அரண், பொருள், அமைச்சு, நட்பு, படை என்னும் அரசுறுப்புக்கள் ஆகிய பொருள் என்றும், தம் பொருளென்ப தம் மக்கள் என்றவாறு மக்கட்பேறாகிய பொருள் என்றும் கொள்வர் இளம்பூரணர். 1. துறவுக்கு இன்றியமையாதனவாக இங்குக் குறிக்கப்பட்ட அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமைமுதலியவற்றுள் அருளுடைமையொன்றே தம்மைவிட்டு நீங்காத வாறு புணர்தற்குரிய நற்பண்பு எனவும், கொல்லுதல், பொய்த்தல் முதலாகவுள்ள தீயபண்புகள் விட்டு அகற்றற்பாலன எனவும் விளக்குவார் அருளொடு புணர்ந்த அகற்சி என்றார் என்பது கருத்து. 1. இரண்டுகூறுபடுதலாவது, தேரோர் தோற்றிய வென்றிமுதல் அவிப்பலி முடியவுள்ள ஒன்பதும் ஒருகூறும், ஒல்லாரிடவயிற் புல்லியபாங்குமுதல் காமநீத்த பால் முடியவுள்ள ஒன்பதும் மற்றொரு கூறும் ஆக இருதிறப்படுதல். 2. எழுவகைத்திணையுள் என்பது எழுவகையுள் என்றிருத்தல் வேண்டும். முற்கூறிய துறைகளேபோலத் தொடர் நிலைப்படுத்தாவது-வெட்சி முதலாக முற்கூறப்பட்ட திணைகளுக்குச் சொல்லப்பட்ட துறைகளேபோல ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழுந்துறைகளாகத் தொடர்புபடுத்துக் கூறாது. (பாடம்) 1. ஏனைய காலங்கள் பாசறைப் பெயராதலி னென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார் 2. பாசறை முல்லை எனப் பெயர் கூறுவார் இன்னாரென்பது தெரியவில்லை. இருத்தல் உரியபொருள் தலைவிக்கும், பிரிதல் உரிப்பொருள் தலைவற்கும் வகுத்துரைத்தல் மரபாதலின் அதற்குமாறாக இருத்தலைத் தலைவற்குரியதாகக் கொண்டு தலைவியைப் பிரிந்திருக்கும் பாசறையிருப்பினைப் பாசறை முல்லை எனப் பெயர்கூறுதல் பொருத்த முடையதன்றாம். 3. ஏரோர்களவழியன்றிக் களவழித்தேரோர் தோற்றிய வென்றி என்ற தொடரை, ஏரோர்களவழித் தேரோர் தோற்றிய வென்றியன்றிக் களவழித்தேரோர் தோற்றிய வென்றி எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, வேளாண்மாக்கள் விளையுட் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி என நச்சினார்க்கினியர் கூறும் இவ்வுரை, பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை உளங்கொண்டு எழுதப் பெற்றதாகும். நச்சினார்க்கினியர் கருதுமாறு இத்தொடர், தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியைக் குறித்த தாயின் அது பாடாண்டிணை யாகுமேயன்றி வாகைத்திணையாகாது. ஆகவே தேரோர்தேற்றிய வென்றி என்பதற்குத் தேரேறி வந்த போர் வீரர்கள் ஏர்க்களத்துக் களமர் செய்யுமாறு போலப் போர்க்களத்துத் தோற்றுவித்த வெற்றிச் செய்கைகள் எனப் பொருளுரைத்தலே வாகைத்திணை யமைப்புக்கு ஏற்புடையதாகும். (பாடம்) 4. செய்யுளை (பாடம்) 1. வான்மடல் 1. பெரும்பகை-பெரியரோகிய பகை. தாங்குதல்-தடுத்தல். (பாடம்) 4. வல்லானே 5. அங்கி கடவுட்குக் 1. அரும்பகை--வெல்லுதற்கு அரிய பகைவர். தாங்குதல்--எதிர் ஏற்றுக் கொள்ளுதல். 2. ஒல்லார்--பகைவர். 3. கண்ணி--கருதி. 1. புல்லியபாங்கு ஆவது, அன்பினால் வேண்டுவன அளித்துக் கேளிரா யொழுகுந் தன்மை. 2. துரியோதனனது உயிர்த்தோழனாகிய கன்னன் தன் கவசகுண்டலங்களை இழந்தால் முடிவில் அருச்சுனனால் தான் இறந்துபட நேரும் என்பது தெரிந்திருந்தும் தன்னை இரந்து வேண்டிய இந்திரனிடம் தன் கவச குண்டலங்களைக் கொடுத்த செய்தி பாரதத்துட் கூறப்பட்டதாகும். இஃது ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கு என்னும் வாகைத் துறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாயிற்று. 3. எருதும் எருமையும் ஆகிய பகட்டினால் அமைந்த சான்றோர் என்றது உழவரையும், யானையையும், குதிரையையும் ஆகிய மாவினால் அமைந்த சான்றோர் என்றது வாளேருழ (முன்பக்கத்தொடர்ச்சி) வராகியபோர் வீரரையும் குறித்தன. இவை முறையே உழவு அஞ்சாமையும் பகையஞ்சாமையும் ஆகிய வெற்றியைக் குறித்தனவாகும். 1. கடிமனை நீத்தபாலின் கண்ணும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். (பாடம்) 1. உடனய லிருக்கை யொருநாளாமெனின் 1. பிழைத்தோர்-பிழை செய்தோர்; தவறு செய்தோர். தாங்குதல்-அறியாமையாற் செய்ததெனப் பொறுத்துக் கொள்ளுதல். பிழையினைப் பொறுத்துக் கொள்வதோடன்றிப் பிழைசெய்தார்க்கு எக்காலத்தும் தீங்கு நேராது காக்கும் கருணைத் திறமும் உடைய இவர்தம் செயல், உலகில் ஏனையோர் செயலினும் மேம்பட்டு உயர்தலின் வாகையாயிற்று என்பது கருத்து. இளம்பூரணர் உரை நோக்குக. (பாடம்) 1. நடத்துஞ் சிறுகை நீட்டியும் 2. மெய்பெற (பாடம்) 3. துறவுள்ளம் பிறந்த பின்னர் என்றவாறு. 1. இருபாற்படுதலாவது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதும் ஆக இரண்டு வகைப்படுதல். 1. பாங்கு-துணை. பன்னெறியானும்-பலவழிகளாலும். பல்லாற்றானும் என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். 1. ஏறிய மடற்றிறம், இளமை தீர்திறம், தேறுதலொழிந்த காமத்து மிகு திறம், மிக்க காமத்துமிடல் என மேல் அகத்திணையியலிற் கூறப்பட்ட பெருந்திணையாகிய துன்பியற்பகுதி அகத்திணை ஐந்திற்கும் புறன் ஆயினவாறுபோல, நிலையாமைப்பகுதியாகிய இக்காஞ்சியும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகையாகிய புறத்திணை ஐந்திற்கும் புறனாகலானும், இக்காஞ்சித்திணைபோல அப்பெருந்திணையும் நிலையாமையாகிய துன்பியல்பற்றி வருதலானும் காஞ்சியென்னும் இதுபெருந்திணை யென்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று என்பதாம். நோந்திறம்-துன்புறும் பகுதி. 2. கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் உள்ள அகத்திணை ஏழினுள் நடுவண் உள்ள திணைகள் ஐந்தும் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள்கள் உடையன எனவும் அவற்றின் முன்னும் பின்னும் வைத்தெண்ணப்பட்ட கைக்கிளையும் பெருந்திணையும் உரிப்பொருள் அல்லாதன எனவும் ஆசிரியர் கூறுதலின் உரிப்பொருள் அல்லாத பெருந்திணை என்றார் நச்சினார்க்கினியர். 1. வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்பொடு தொடர்புடையதென்பது போர்க்களத்திற் சாவுக்கு அஞ்சாது போர்புரியும் வீரர்களை முதற்குலோத் துங்கன் மெய்க்கீர்த்தியில் சாவேறெல்லாம் தனிவிசும்பேற எனச் சாஏறு எனக் குறித்த குறிப்பினால் இனிது புலனாகும். 1. பாங்கு அருஞ்சிறப்பு-தனக்கு ஒப்பில்லாத வீட்டின்பம். பாங்கு-ஒப்பு அருமை-இன்மை. ஒருவர் பெறுவதற்குரிய பேறுகள் எல்லாவற்றினும் வீட்டின்பம் சிறந்தமையால் சிறப்பு என்னும் பெயர்த்தாயிற்று. சிறப்பின் என்புழி இன்னுருபு ஏதுப்பொருளிற் பயின்றது. பல் ஆற்றானும் நில்லா உலகம்-உயிர், யாக்கை, இளமை, செல்வம் முதலிய பலவழிகளாலும் நிலைபேறில்லாத உலகம். இதனாற் காணப்படும் இவ்வுலகினது நில்லா இயல்பினைத் தொல்காப்பியனார் புலப்படுத்தினமை காணலாம். புல்லுதல்-பொருந்துதல். 1. மாற்றஅருங்கூற்றம்-யாவராலும் தடுத்து விலக்குதற்கு அரிய கூற்றம். உடம்பினின்றும் உயிரைக்கூறுபடுத்திப் பிரித்தலின், கூற்றம் என்பது இயமனுக் குரியதோர் காரணப்பெயர். கூற்றம் சாற்றிய பெருமையாவது, ஒருவர்க்கு ஊழால் வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்த எல்லையில் கூற்றம் வரும் எனப் பெரியோரால் அறிவுறுத்தப்படும் பெருங்காஞ்சி யென்னும் துறையாகும். பெருமை-பெருங்காஞ்சி. நெருதல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமையுடைத்திவ் வுலகு (336) எனவரும் திருக்குறளில் பெருமை என்று சுட்டப்பட்டது இப்புறத்துறையேயாகும். 2. கழிந்தோர்-அறிவால் மிகுந்தோர்; ஈண்டுக்கழிதல் என்றது, அறியாமையின் நீங்கி மேன்மேல் உயர்தல் என்னும் பொருளில் ஆளப்பெற்றது என்பது இளம்பூரணர் கருத்தாகும். உரைக்குங்கழிந்திங்குணர்வரியோன் (திருக்கோவையார்..............) எனச் சான்றோர் இப்பொருளில் இச் சொல்லை ஆளுதல் ஈண்டு ஒப்புநோக்கத் தகுவதாகும். ஒழிந்தோர்-அல்லாதார். காட்டிய-எடுத்துக்காட்டுடன் அறிவுறுத்திய. முதுமை-முதுகாஞ்சி. 3. பண்பு உறவரும் பகுதியாவது, வீரப்பண்பினை மேலும் பொருந்த இனி மேல் தான் எய்துதற்கு மேற்கொள்ளும் கூறுபாடு. 4. ஏமச் சுற்றம்-புண்பட்டு வீழ்ந்த வீரனைப் பாதுகாத்தற்குரிய, நெருங்கிய சுற்றத்தார். இன்றி என்னும் வினையெச்சம் இல்லாமையால் என ஏதுப் பொருளில் வந்தது. புண்ணோனைப் பேய்ஓம்பிய பக்கம் என இரண்டாமுருபு விரித்துரைக்க. 1. இன்னன் என்று இரங்குதலாவது இன்ன இன்ன உயர்ந்த தன்மைகளையுடையவன் இவன் என்று அவனுடைய உயர்ந்த பண்புகளையெல்லாம் முறையே எடுத்துக்கூறி, அத்தன்மையனாகிய தலைமகனை இழந்தோமே என வருத்தமுற்று இரங்குதல். இவ்வாறு கழிந்ததற்கிரங்குதலாகிய கையறு நிலைச் செய்யுளின்கண் கழிந்தது என்ற பொருளின் மன் என்னும் இடைச் சொற் பயின்று வருதல் பெரும்பான்மையாதலின் இது மன்னைக் காஞ்சியென்னும் பெயர்த்தாயிற்று. மன் என்னும் இடைச்சொல் மன்னை என ஈறுதிரிந்தது. 2. பிழைத்தல்-செய்யாது தவறுதல். இதுவாகியன் (இத்தன்மையன் ஆகக்கடவேன்) என்பது இளம்பூரணர் கொண்ட பாடம், இதுவாகியர் என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். 3. புண்ணோற்றுன்னுதல் கடிந்த என்பது புண்ணோனைத் துன்னுதலைக் என விரியும் புண்ணோன்-போரிற் புண்பட்ட வீரன். துன்னுதல்-நெருங்குதல். கடிதல்-விலக்குதல். 4. நீத்த கணவற்றீர்த்த வேலிற் பேர்த்த மனைவி ஆஞ்சி என இத்தொடரைச் சந்தி பிரியாத நிலையிற் கொண்டு நோக்கினால்தான் இதன் பொருள் உள்ளவாறு விளங்கும். போர்கருதித் தன்னைப் பிரிந்து சென்ற கணவனது உயிரைப் போக்கிய வேலினாலேயே அவன் மனைவி தன்னுயிரையும் போக்கிய ஆஞ்சிக் காஞ்சியும் என்பது இத்தொடரின் பொருளாகும். இப்பொருளுக்கு எற்ற இலக்கியமாக இளம்பூரணர்காட்டிய வெண்பாமாலைப் பாடல் அமைந்திருத்தலால் இதுவே அவருரையின் கருத்தாகக் கொள்ள வேண்டியுளது. பெயர்த்த என்பது எதுகை நோக்கிப் பேர்த்த எனத் திரிந்தது. பெயர்த்தல்-அப்புறப்படுத்தல், ஈண்டு தன் உடம்பினின்றும் உயிரைப்போக்குதல் என்ற பொருளில் ஆளப் பெற்றது. 1. மகட்பாடு-மகளை மணஞ்செய்து கொடுத்தல். மகட்பால்-மகட்பாற்காஞ்சி. கொண்டோன் தன்னை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட கணவன். 2. தலையொடுமுடிந்த நிலை எனவே இத்துறையினை வழங்குவர் ஐயனாரிதனார். 3. பேரிசை மாய்ந்த மகனை என்ற தொடரில் மகன் என்பது வீரன் என்ற பொருளில் ஆளப் பெற்றது, முறைப்பெயரன்று. 4. தாமே எய்திய தாங்கரும் பையுளும் என்புழி ஏகாரம், தாம் உற்ற துன்பத்திற்குத் தமது நெஞ்சத்தையன்றித் துணையாவார் பிறர் இலர் என்பது பட நின்றமையின் பிரிநிலையே காரமாகும். தாமேயேங்கிய தாங்கரும்பையுளும் என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். தாங்கு அரும் பையுள்-பொறுத்தல் அரியதுன்பம். துன்பத்திற்கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி (திருக்குறள் 1299) என வரும் தெய்வப்புலவர் வாய்மொழி இத்தொல்காப்பியத் தொடர்ப்பொருளோடு ஒப்பு நோக்குதற்குரியதாகும். 5. கணவனோடு முடிதலாவது, போர்க்களத்துப்புண்பட்டு வீழ்ந்த கணவனோடு உடனுயிர்துறத்தல். படர்ச்சி-செல்லுதல். ஆனந்தம்-சாக்காடு. மூதானந்தம்-பெருஞ்சாக்காடூ. காஞ்சிக்குரிய இத்துறையினைப் பொதுவியல் என்ற திணையில் அடக்குவர் ஐயனாரிதனார். 1. நனிமிகுசுரம்-(வெம்மை) மிகவும் பெருகியநடத்தற்கரிய வழி. கணவனை இழத்தலாவது, கணவனது உயிரைக்கூற்றங்கொள்ளப் பறிகொடுத்தல். தனிமகள்-தன்னை உடன் அழைத்து வந்த கணவனை வழியிடையே யிழந்தமையால் சுற்றத்தார் யாருமின்றித் தனியளாய் நின்றபெண். புலம்புதல்-தனிமையுற்று வருந்துதல். பாலை-பிரிவு. முதுபாலை-பெரும் பிரிவு; சாக்காடு. 2. கழிந்தோர்-இறந்தோர். கழிபடர்-மிக்கவருத்தம். உறீஇ-உற்று. ஒழிந்தோர்-இறவாது எஞ்சியுள்ளோர். 3. தபுதார நிலை என்பது, தாரம் தபுநிலை எனஇயையும். தாரம்-மனைவி. தபுநிலை-இறந்த நிலை. 4. காதலனாகிய கணவன் இறந்தநிலையில் மனைவிமேற்கொள்ளும் தவநிலை தாபதநிலை எனப்படும். 5. நல்லோள்-நற்குணநற்செய்கையினளாய மனைவி. நளிஅழல்-செறிந்துஎரியும் தீ. புகீஇ-புக்கு; செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் இங்குச் செயவென்னெச்சமாய்ப் புக எனப் பொருள்தந்து நின்றது. சொல்இடையிடுதலாவது, தீப்பாயும் நிலையில் தன்செயலைத் தடுத்து நிற்கும் சான்றோர்க்கு இடையே மறுமொழி பகர்தல். கணவனோடு தீப்பாய்தலாகிய இச்செயல் வெயில் தணிந்த மாலைக்காலத்து நிகழ்வதாதலின் மாலைநிலையெனப் பெயர்பெற்றது. அரியபெருஞ் சிறப்பினையுடைய மகனைப் பெற்ற தாய், பெற்ற அப்பொழுதே இறக்கும் நிலையாக மகனையடைந்த நிலையும் என்பது இத்தொடரின் பொருளாகும். என்றது, பெருஞ்சிறப்புடைய மைந்தனைக் கருவுயிர்ந்த தாய் பெ-றையுயிர்த்த உடற்சோர்வினால் பிள்ளையைப் பெற்ற அப்பொழுதே இறந்தொழிதலாகிய துயர்நிலையினை, தலைப்பெயனிலை என்னும் இதனைப் பொதுவியற்படலத்தில் சிறப்பிற்பொதுவியற்பால துறைகளுள் ஒன்றாக விரித்து விளக்குவர் ஐயனாரிதனார். முன்பக்கதொடர்ச்சி மாய்பெருஞ்சிறப்பிற்புதல்வன் பெயர எனப்பாடங்கொண்டு இத்துறைக்கு வேறொரு விளக்கம் கூறுவர் நச்சினார்க்கினியர். 1. துறைஇரண்டு என்றது, துறைத்தொகுதிகள் இரண்டு என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. 2. இச்சூத்திரம், காஞ்சித்திணைக்குரிய வீடுபேறு ஏதுவாகவன்றிப் பொதுப் பட நிலையின்மைப்பொருளை வகுத்து ஓதுவது எனக் கருத்துரை பகர்வர் நச்சினார்க்கினியர். 1. இங்குக் கூற்று என்றது, காலக்கடவுளை. உடம்பையும் உயிரையும் கூறுபடுத்தலின் கூற்று என்பது காரணப்பெயர். மேல் கிளவியாக்கத்தில் காலம் உலகம் என்ற நூற்பாவிற்குறிக்கப்பட்ட காலம் என்றதும் இக்கூற்றினையேயாம். 2. முதுமை கட்புலனாதலின் காட்சிப்பொருளாயிற்று அதுகாரணமாக முன் கழிந்த இளமையின் நிலையாமையும் கூறியதாயிற்று. 1. உலகப்பொருள்களின் நிலையின்மையுணர்ந்தோர் அந்நிலையே அவற்றிற் பற்றொழிந்து நிலையுடைய பொருளையடைந்து வெற்றி பெறுதல் இயல்பாதலின் இக் காஞ்சித்திணை வாகைத்திணையொடு கலந்தும் காஞ்சியாகும் என்றார். 4. மன்னைக் காஞ்சி என்ற துறை, ஆண்பாற்கையறுநிலை எனவும் வழங்கப்பெறும் என்பது கருத்து. (பாடம்) 1. மன்னே கூறினார் 2. நின்றதென்னும் 3. பல்புக ழினனே 5. பாங்கு அருஞ்சிறப்பு என்பதற்குத் தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் என முன்னர்ப் பொருள் கூறினாராதலின் துன்னருஞ்சிறப்பு என் புழிச் சிறப்பு என்பதற்கு வீடுபேறன்றி உலகியலிற் பெறுஞ்சிறப்பு என விளக்கம் தந்தார் நச்சினார்க்கினியர். 1. நீத்த கணவற் றீர்த்தவேலின் மனைவி பேஎத்த ஆஞ்சியானும் என இயைத்து உரை வரையப்பட்டுள்ளது. அஞ்சின காஞ்சி ஆஞ்சியென நின்றது என்றிருத்தல் வேண்டும். 1. இங்ஙனம் உதாரணங்காட்டியவர் இளம்பூரணர். 2. அனைநிலை என்றது, வாகைத்திணையின்கண் பார்ப்பனப் பக்கம் முதல் பாலறிமரபிற் பொருநர்கண் என்பதீறாக முற்குறித்த ஆறுபகுதிகளிலும் அடங்காத பல்வேறு (முன்பக்கத்தொடர்ச்சி) வென்றிவகைகளைத் தொகுத்துக்கூறும் ஏழாவது வகை. இதனை முற்கூறிய ஆறு வகையோடும் இணைத்துக்கூறும் நச்சினார்க்கினியர் விளக்கம் ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதன்றாம். 1. அவரையன்றிக் கையறு நிலையமையாமையின் கழிந்தோர் என்ற பன்மையால் ஆண்பாலும் தழீஇயினார் என இயையும், 1. இல்லறம் இழத்தலின் அறநிலையின்மையும் என்ப என்றிருத்தல் வேண்டும். 1. மாய்பெருஞ்சிறப்பிற் புதல்வற்பெயர எனப் பாடங்கொண்டு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பெருஞ்சிறப்பின் என்ற அடைமொழியொடு முரணுகின்றது. புதல்வற்பயந்த என இளம்பூரணர் கொண்ட பாடமே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். 1. மாய்பெருஞ்சிறப்பிற் புதல்வன் பெயர என நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் படையழிந்து மாறினான் என்று பிறர் கூற (புறம்-278) என வரும் புறப்பாடற் றொடரையடியொற்றிய புதிய பாடமெனவே தோற்றுகின்றது. 1. இந்நூற்பாவில் மாற்றருங்கூற்றஞ் சாற்றிய பெருமை முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலை ஈறாக ஈரைந்தாகும் என்ப என்றது, காஞ்சித் திணைக்குரிய விழுப்பவகைத் துறைகளாக முன்னோர் கூறிய துறைகள் எனவும், பூசல் மயக்கம் முதலாகக் காடு வாழ்த்து ஈறாகவுள்ள துறைகள் நிலையாமை குறிப்பினவாய்த் தொல்காப்பியனாரால் இணைத்துக் கூறப்பட்ட விழுமவகைத் துறைகள் எனவும் நாவலர் பாரதியார் பகுத் துணர்த்தினமை பொருத்தமுடையதேயாகும். 1. ஒருநிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக்காமமாய் வரும் கைக்கிளை போன்று ஒருபாலுக்கு உரித்தன்றி ஒருவரையொருவர் யாதானும் ஒருபயன் பெறுதல் கருதியவழிப் பாடப் பெறுவது பாடாண்திணையாதலானும், கைக்கிளையாகிய காமப்பகுதிக்கண், இயற்பெயர் கூறப்படுதல் போன்று பாடாண்திணையின் கண்ணும் இயற்பெயர் கூறப்படுதலானும், கைக்கிளைபோன்று இப்பாடாண் திணையும் செந்திறமாகிய இன்பியல்பற்றி வருதலானும் கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் பாடாண் புறனாயிற்று எனக் காரணம் கூறுவர் இளம்பூரணர். 2. நோந்திறம் என்பது, கழிபேரிரக்கமாகிய துன்பியல், செந்திறம் என்பது மகிழ்ச்சிப்பொருட்டாகிய இன்பியல். (பாடம்) 3. பாடுதலும் 1. பாட்டுடைத் தலைவர், தம்மைப் பரவுதலும் புகழ்ச்சியும் விரும்ப, அவர்களைப் பாடும் புலவர், பரிசில் முதலியன விரும்ப, இவ்வாறு இருதிறத்தாரும் ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைத்திணைபோல ஒருமருங்கு பற்றிய விருப்பமுடைய ராயிருத்தலின் பாடாண்டிணை கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று என்பதாம். 2. பொருளும் பகுதியும் 3. அவலெறி யுலக்கை 4. குழறலின் குமுறலின் (பாடம்) 1. வட்ட 2. பெருமலை 3. மலைப்பறி 4. கொண்டமை 5. குன்றினிலை 1. நுந்நுங் கொண்டினும் வென்றோயே 2. புலவராற் பாடப்பெறும் நிலையில் எல்லாத்திணையும் பாடாண் ஆதற்கு ஒத்தனவாயினும், பாடும் புலவன் ஒரு பொருளை நச்சிய குறிப்புடன் பல திணை துறைகளும் விரவி வரப் பாடப் பெறும் பாடல்கள் பாடாண் திணையாம் என்பதும் பதிற்றுப் பத்துப் பாடல்கள் நூறும் இம்முறையிற் பாடப் பெற்றனவே என்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாகும். 1. பாடாண்டிணை என்பது தனக்கெனத் தனிநிலை பெறாது வெட்சி முதலிய பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு வெட்சிப் பாடாண், வஞ்சிப் பாடாண், உழிஞைப் பாடாண், தும்பைப் பாடாண், வாகைப் பாடாண், காஞ்சிப் பாடாண், புரைதீர்காமம் புல்லிய பாடாண் என அவற்றின் பகுதியாய் வரும் சார்புநிலைத் திணையாதலின் பாடாண் பகுதி எனப்பட்டது. மேற்குறித்த ஏழுபகுதிகளுடன் ஒருவரை இயல்பாக முன்னிலைக்கட்பரவலும் படர்க்கைக்கண் புகழ்தலும் கருதிய பகுதியாகிய செந்துறை வண்ணப் பகுதியையும் சேர்த்து எண்ணப் பாடாண்டிணை எட்டுவகைப் படுதல் காண்க. இனி, பாடாண்பகுதி எட்டு என்பதற்குப், புறத்திணை ஆறும், அன்பின் ஐந்திணையும் கைக்கிளையும் ஆம் அகத் திணைகள் இரண்டுமாகப் பாடாண் பிறக்கும் வகை எட்டெனினும் அமையும் என்பர் நாவலர் பாரதியார். புரைதீர் காமம் புல்லியவகை என்பதனுள் கைக்கிளையடங்குமாதலானும் பரவலும் புகழ்ச்சியுமாகிய செந்துறைவண்ணப் பகுதி இத்தொகையில் அடங்காது விடுபடுமாதலானும் இத்தொகை விளக்கம் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. 1. புரை--குற்றம். ஒன்றன்பகுதியாவது, கொடிநிலை, கந்தழி முதலாக வரும் துறைகளில் அவ்வத் துறைகட்குரிய பொருட்பகுதியின் வேறாகப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வரும் புகழ்ச்சிக் கூறாகிய ஒரு பகுதி. ஒன்றும்--பொருந்தும். 2. கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் எனத் தேவர்கண்ணேவந்து முடியும் இவ்வறவகைகளினும், குற்றந்தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும் அமைந்தபாடல்களில் முறையே தெய்வவாழ்த்துப் பகுதியும் அகப்பொருட்பகுதியும் இடம்பெறுதல் இயல்பாதலின், அப்பொருட் பகுதிக்கு வேறாகப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வரும் ஒருபகுதியே இங்குப் பாடாண்திணையாதற்குப் பொருந்தும் என்பதுபட ஒன்றன்பகுதி ஒன்றும் என்றார் தொல்காப்பியனார் என்பதும், இன்னும் புரைதீர் காமம் புல்லியவகையினும் ஒன்றன் பகுதி என்ற அதனான், புணர்தல் முதலாகிய ஐவகை உரிப்பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண்பகுதிக்குப் பொருந்தும் என்பதும், ஒன்றன் பகுதி என்ற இதனானே இயற்பெயர் சார்த்திவாராது பாட்டுடைத்தலைவனது நாடும் ஊரும் இதுவென விளங்க ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினால் காமக் குறிப்புப்பற்றி வரும் ஒருகூறும் பாடாண்பாட்டாகும் என்பதும் இளம்பூரணர் தரும் விளக்கமாகும். 1. வெட்சி, பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் ஏழுடன் பாடாண்திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் சேர்ந்த ஒரு பகுதியும் எனப் பாடாண்பகுதி எட்டு எனக்கொண்ட நச்சினார்க்கினியர், அவ்வெட்டினுள் பாடாண்டிணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவுங்கூடிய ஒன்றினைத் தேவர்பகுதி, மக்கட்பகுதி என இரண்டாகப் பகுத்து, அவ்விரண்டனுள் தேவர்க்கு உரித்தாகும் பகுதியெல்லாம் தொகுத்துக்கூறுவது இச்சூத்திரம் எனக் கருத்துரை வரைந்துள்ளார். 2. அமரர்கண்முடியும் அறுவகை எனவே, பிறப்பு முறையாற் சிறந்த அமரர் வேறு, சிறப்பு வகையால் அமரர் சாதியுட் சேர்த்துரைக்கப்படும் அறுவகையாகிய முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்பன வேறு எனக்கொண்டார் நச்சினார்க்கினியர். 1. புரை என்பதனை உயர்வு என்ற பொருள்தரும் உரிச் சொல்லாகக் கொண்டு புரைதீர்காமம் என்பதற்கு உயர்ச்சியற்ற (இழிந்த) பொருள்களிற் சொல்லும் வேட்கைக் குறிப்பு எனப் பொருள்கொண்டார் நச்சினார்க்கினியர். 2. மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையின் என நச்சினார்க்கினியர் குறித்தது, ஒருவன் ஒருபெண்ணின் பெருமையை அவளை மட்டும் தனித்துப்பாடுதல் மரபன்று; பாடவேண்டுமானால் அவள் கணவனொடு சார்த்தியே பாடுதல் முறை என்னும் தமிழக சமுதாய மரபினை வற்புறுத்துங் கருத்தினதாகும். 1. அமரர்கண் முடியும் அறுவகையானும் எனவரும் இத்தொடர்க்கு நாவலர் பாரதியார் கூறும் இப்பொருளே தொல்காப்பியனார் கருத்துக்கு இசைந்த உண்மைப் பொருளாதல் கூர்ந்துணரத்தகுவதாகும். 1. திருஞானசம்பந்தர் அருளிய வாழ்க அந்தணர், வானவர், ஆனினம், வீழ்கதண்புனல்,வேந்தனும்ஓங்குக......itafKª துயர் தீர்கவே எனவரும் திருப்பாசுரத் திருப்பாடற்பொருளை அடியொற்றி அமரர்கண் முடியும் அறுவகையானும் எனவரும் தொல்காப்பியத் தொடர்க்கு நச்சினார்க்கினியர் இங்ஙனம் புதியதொரு உரைவிளக்கங் கண்டார் எனக் கருத வேண்டியுளது. 1. முன்னோர் கூறிய குறிப்பு என்றது முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பு. கூற்றினாலன்றிக் குறிப்பினாற் புலப்படுத்தற்குரியது காமமாதலின் இங்குக் குறிப்பு என்பதற்குக் காமக்குறிப்பு எனப் பொருள்கொண்டார் இளம்பூரணர் எனக் கருதவேண்டியுளது. 2. தெய்வத்தை முன்னிலையாக்கிப் போற்றும் தேவபாணிப்பாடலும் அகத் திணையொழுகலாற்றைப் புனைந்து பாடும்பாட்டும் இசைத்தமிழில் இன்ன இன்ன செய்யுளிற் பாடப் பெறும் எனச் செய்யுளியலில் ஆசிரியர் வரையறுத்துக் கூறியுள்ளார். அவற்றைப் போன்று செந்துறைப்பாடாண்பாட்டு இன்னஇன்ன செய்யுளிற் பாடப்பெறும் என ஆசிரியர் வரையறுத்துக் கூறாமையால் செந்துறைப் பாடாண்பாட்டிற்கு எல்லாச் செய்யுளும் ஆம் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 3. தலைவனை முன்னிலைக்கண் பாடிப் போற்றுதலைப் பரவல் எனவும், படர்க்கைக்கண் பாடிப்போற்றுதலைப் புகழ்தல் எனவும் பகுத்து விளக்குவர் இளம்பூரணர். (பாடம்) 1. குறிப்பினது பொருள் 1. செந்துறை வண்ணப்பகுதி என்றது, புனைந்துரை வகையால் மிகை பட உயர்த்துப் புகழாது ஒருவர்க்கு இயல்பாக அமைந்த நலன்களை இசைபடப் புகழ்ந்தேத்தும் பாடாண் பாட்டாகும். 2. வண்ணம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு வருணம் என்ற வடசொற்பொருளை ஏற்றியுரைத்தல் முறையன்று. செந்துறை மார்க்கம்--இசைத்துறைப்பாடல் வெண்டுறைமார்க்கம்--நாடகத்துறைப் பாடல். (பாடம்) 1. இரண்டுங்கூறல் 1. வண்ணம் என்ற தமிழ்ச் சொல்லை வருணம் என்னும் வடசொல்லின் திரிபென்று நச்சினார்க்கினியர் கூறவில்லை. வருணம் என்ற வடசொல் வண்ணம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபென்பதே நச்சினார்க்கினியர் துணிபாகும். ஆயினும் வருணம் என்ற (முன்பக்கத்தொடர்ச்சி) வடசொல்லாற் குறிக்கப்படும் சாதிவேறுபாட்டினை வண்ணம் என்னும் தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளாகவுரைத்தது தொல்காப்பியனார் கருத்துக்கு ஒவ்வாது என்பதே நாவலர் பாரதியார் கருத்தெனக் கொள்ளுதல் வேண்டும். 1. ஏனோர்--தெய்வப்பெண்டிரல்லாத மானிடப்பெண்டிர். 1. இங்குக்காமம் என்றது, ஒருவனும் ஒருத்தியும் உடம்பொடு கூடிமகிழும் இணை விழைச்சினைக் குறித்ததன்று; உயிருணர்வுடன் ஒன்றும் தூயகாதலாகிய பத்தியுணர்வினைக் குறித்தது, ஆதலின் இது வேறோர் காமம் என்று கொள்க என்றார் நச்சினார்க்கினியர் (பாடம்) 2. அடுதொறு முயங்கல் 3. இவள் பெயர் நக்கண்ணையார். புறநானூற்று 96 ஆம் பக்கத்துப் பிரதி பேதத்தா னுணர்க. 4. பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் என்னும் புலவர் பாட்டுடைத் தலைவனாகிய போரவைக் கோப்பெருநற் கிள்ளியை ஒத்த அன்பினாற் காமமுறாத நிலையிலும் தன்கண் காமமாகிய குணச் சிறப்பின்றி அத்தலைவன் பால் தான் சிறப்பாகக் கொண்டுள்ள அன்பின் பெற்றியைப் புலப்படுத்தும் முறையில் காமுற்ற தலைவியொருத்தியின் நிலையினை மேற்கோள்பாடியது 83-ஆம் புறப்பாடலாதலின், இது வேறோர் காமம் எனப்பட்டுக் காமப்பகுதி என்பதனுள் அடக்கப்படும் என்பது கருத்து. 5. கிளவித் தலைவன் என்றது, அகத்திணைச் செய்யுட்களில் அகப்பொருள் ஒழுகலாற்றுக்குரியவனாக இடம்பெறுந் தலைவனை. பாட்டுடைத் தலைவன் என்றது பாடாண்திணையாகிய புறப்பொருளொழுகலாற்றுக்குரியவனாகச் செய்யுட்களில் இடம்பெறுந் தலைவனை. 1. கிழவது--உரியது. கிழவது என்னும் பயனிலைக்கு எழுவாயாக முந்திய நூற்பாவிலுள்ள காமப்பகுதி என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. 1. வழிபடுதெய்வம் தன்பால் அன்புடைய அடியார்கட்குக் குழந்தை முதலிய பல்வேறு வடிவில் தன்னருளால் வெளிப்படுதல் இயல்பாயினும் மக்களைப் போன்று, தாய் வயிற்றிற் பத்துத்திங்கள் தங்கிக் குழவியாய்ப் பிறந்து வருதலில்லையென்பது புலப்படுத்துவார், மக்கட் குழவியாகிய ஒருமருங்கே கொள்க, தெய்வக் குழவியின்மையின் என்றார். 1. பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாகவருவது என்றது உலாச் செய்யுளை. சேரமான்பெருமாள் அருளிச் செய்த திருக்கயிலாய ஞானவுலா இதற்கு இலக்கியமாகத் திகழ்தல் காணலாம். (பாடம்) 1. குலதெய்வ (பாடம்) 1. அமணர் 2. இளம்பூரணர் கொண்டபடி இவ்வடியினையும் மேலைச் சூத்திரத்துடன் கூட்டி ஒரு சூத்திரமாகக் கொள்ளுதலே நூற்பாவமைதிக்கு ஒத்ததாகும். (பாடம்) 1. கொடிப்போல 2. கோதையென ஏடுகளிலுள்ளது. 3. பொலிவொடு தோன்றி 1. சான்றோர் செய்த புலனெறி வழக்கொடு பொருந்தி வரும் இலக்கியக் கொள்கை சிலவற்றை இங்கு நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளமை அறியத்தகுவதாகும். புறத் திணைக்குரிய பாட்டுடைத் தலைவர் பெயரை மெய்ப்பெயர் எனவே அகத்திணைக்குரிய கிளவித் தலைவர் பெயர் புனைந்துரைவகையாற் கூறப்படுவதென்பதும் உண்மைப் பெயரன்றென்பதும் புலனாம். 1. மெய்ப்பெயர்--ஒருவர்க்கு மெய்யை (உடம்பை)ச் சுட்டி வழங்குதற்கு உரியதாக இடம்பெற்று வழங்கும் இயற்பெயர் 2. வழி--நெறி. பாடாண்பாட்டில் இயற்பெயர் இடம்பெறுதல் இன்றியமையாது என்பது கருத்து. 3. இந்நூற்பாவில் வழி என்றசொல் புறத்திணை தோன்றுதற்கு வழியாகி அகத்திணை என்ற பொருளில் ஆளப்பெற்றது என்பார், வழியென்பது ஆகு பெயர் என்றார். 1. மெய்ப்பெயராற் குறிக்கப்படும் பாட்டுடைத் தலைவரது ஆட்சிக்குரிய நிலப்பகுதி யினை நில்ககளனாகக் கொண்டு கிளவித் தலைவரது அகத்திணை யொழுகலாறு நிகழ்ந்த தாகச் செய்யுள் செய்தல் மரபென்பது இதனாற் புலனாம். 2. இச் செய்யுளை 21ஆம் பக்கத்திற் காண்க. 1. சங்கச் சான்றோர், அரசர்கள் வள்ளல்கள் முதலியோர்கள் பால் தாம் கொண்டுள்ள அன்புகாரணமாக அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டூ அவர்தம் மெய்ப்பெயர் களை வைத்து அகத்திணைச் செய்யுட்கள் பாடினாராயினும் அப்பாடல்கள் பாடாண்டிணையெனப் புறத்திணைப்பெயர் பெறாது அகத்திணைச் செய்யுட்களாவே கொள்ளப்படும் என்பதாம். 1. வடு--குற்றம், முதலன--முதலாகச் சொல்லப்பட்டவை. கண்ணிய வரும்--பொருந்தியனவாய்வரும். கொடிநிலை கந்தழி என்பவற்றிற்குப் புறப் பொருள் வெண்பா மாலையிலிருந்து எடுத்துக்காட்டுத் தந்த இளம்பூரணர், வள்ளி என்னும் இத்துறைக்கு, வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமியதே ஈண்டியம் விம்ம இன வளையார்--பூண் தயங்கச் சூலமோ டாடுஞ் சுடர்சடையோன் காதலற்கு வேலனோ டாடும் நெறி. (பு. வெ. மா. பாடாண். 41) என்ற வெண்பாவையும் உதாரணமாகக் காட்டியிருக்கலாம். இதனையெடுத்துக் காட்டாது வள்ளியிற்கூர்ந்து வருமாறு வந்த வழிக் கண்டு கொள்க என எழுதியதற்குரிய காரணம், இவ்வெண்பாவில் கடவுளை வாழ்த்தும் பகுதியன்றி அதனொடு சார்ந்து வரும் புறத்திணைப் பகுதி யில்லாமையேயென எண்ண வேண்டியுளது. 1. வந்தது கொண்டு வாராதது முடித்தலாவது, ஒருங்கு தொகுத்தெண்ணப்பட்ட பொருட்டொகுதியைப் பகுத்துக் கூறியவழி, வாராததன்கண்ணும் அவ்விலக்கணத்தைச் சேர்ந்து முடித்தல். அமரர்கண்முடியும் அறுவகையானும் என்ற தொகுப்பில் முதற்கண்ணவாகிய கொடிநிலை கந்தழிவள்ளி என்ற மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் என இந்நூற்பாவிற் கூறப்பட்ட இலக்கணத்தை இம்மூன்றுடன் சேர்த்தெண்ணப்பட்ட புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்னும் ஏனை மூன்றற்கும் சேர்த்துப் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வரு மெனவும் கொள்க என்றார் இளம்பூரணர். அவர்கருத்துப்படி பத்துப்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை என்பது புலவராற்றுப் படையாகும். முருகப் பெருமான்பால் முதுவாயிரவலனாகிய புலவனை ஆற்றுப்படுத்தும் புலவராற்றுப் படையாகிய திருமுருகாற்றுப்படையுள், மாடமலிமறுகின் கூடலாகிய மதுரையின் மேற்கே அகன்ற வயலிடத்தே மலர்ந்த தாமரைமலரின் கண்ணே இரவெல்லாம் இனிது துயில்கொண்ட வண்டினம், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து, தேன்மணங்கமழும் நெய்தல் மலரிலே இசைமுரன்று, ஞாயிறு தோன்றிய காலைப்டொழுதிலே திருப்பரங்குன்றத்தினையடைந்து ஆங்குள்ள சுனையின்கண்ணே கண்போல் மலர்ந்த விரும்பத்தக்க மலரிடத்தே பரவி ஒலிக்கும் என்னும் இக்கருப்பொருள் நிகழ்ச்சியில், மாட மலிமறுகின் கூடலம்பதியிலே வளமார்ந்த அரண் மனையிடத்தே இரவுப்பொழுதிலே இன்துயில் வதிந்த பாண்டியன், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேங்கமழும் நறுமலர்ப் பொய்கை யிலே நீராடி, ஞாயிறு தோன்றும் காலைப் பொழுதிலே திருப்பரங்குன்றத்தினையடைந்து முருகப் பொருமானுடைய திருவருள் நோக்கிற்குரியனாகி அம்முதல்வனைப் பரவிப் போற்றும் வழிபாட்டு நிகழ்ச்சியினை, மாடமலிமறுகிற் கூடற்குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி யெற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந் துறைதலும் உரியன் (திருமுரு 71-77) எனவரும் பகுதியல் நக்கீரனார் குறிப்பிற் புலப்படவைத்துள்ளார். இந்நுட்பத்தினைக் கூர்ந்துணர்ந்த இளம்பூரணவடிகள், முன்பக்கதொடர்ச்சி முருகாற்றுப்படையுள், மாடமலிமறுகிற்கூடற்குடவயின், இருஞ்சேற்றகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த, முட்டாட்டாமரைத்துஞ்சி என்றவழி ஒரு முத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காணக என இங்குக் குறிப்பின் விளக்கும் திறம் உய்த்துணர்ந்து போற்றத்தகுவதாகும். 1. தேவரைப்போல் ஒருவழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்கள் என்றது. ஞாயிறு, கந்தழி, திங்கள் என்பவற்றை, அமரர் என்பது, பலர்பாற் சொல்லாயினும் தேவருள ஆண் பன்மையைக் குறித்து வழங்கும் வழக்குப் பற்றி அமரர் என்னும் ஆண்பாற் சொல் என்றார். 1. இனி அமரரென்னும் ஆண் பாற் சொல்லுள், அடங்காத வள்ளியென்னும் பெண்பால் தெய்வமும் என இவ் வுரைத் தொடரைத் திருத்திப் படித்தல் வேண்டும். 1. இந்நூற்பாவிற் பழமையாக இடம் பெற்றுள்ள கந்தழி என்ற பாடத்தைக் காந்தள் எனத் திருத்தி உரைவரைந்துள்ளார் நாவலர் பாரதியார் 1. வல்லாராயினும் என்னும் முதற்குறிப்புடையே 57-ஆம் புறப்பாடல் வஞ்சித்திணையிற் கொற்றவள்ளையென்னுந்துறைக்குரியதாயினும் நீ பிறர்நாடு கொள்ளுங்காலைப் பகைவரது காவல் மரத்தை வெட்டுதலைத் தவிர்க, தவிராது வெட்டுவாயாயின் நின்யானைக்குக் கட்டுதற்குரிய தறிகள் கிடைக்கமாட்டா என அரசனைப் புகழ்தல் கருத்தாதலின் பாடாண் பாட்டாயிற்று என்பதாம். 1. கொற்றவள்ளை என்பது, வஞ்சித்திணைத் துறைகளுள் ஒன்றாக முன்னர்க் கூறப்பெற்றது. கைக்கிளைக்குப் புறனாய் வெட்சி முதல் வஞ்சியீறாகிய பாடாண்கொற்ற வள்ளை எனவும், உழிஞை முதலிய பாடாண் கொற்ற வள்ளையெனவும், கொற்ற வள்ளையை இரண்டாகப் பகுத்து, இவற்றுள் முன்னையது மக்கட் பகுதியாகிய ஓரிடத்தின் கண்ணது; தேவர்க்கு ஆகாது எனவும், பின்னையது மக்கட்குத் தேவர்க்கும் ஒப்புவுரியது எனவும் விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர் 2. அவுணரால் வளைக்கப்பட்ட இந்திரனது நகரத்தை அகத்துழிஞை யரணாக்கி முசுகுந்தன் என்னும் சோழமன்னன் காத்த செய்தி, கடுவிசை யவுணர்கணங் கொண்டீண்டிக் கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்கு (கடலாடு. 7-9) எனவும் அமராபதிகாத்து (மேற்படி 14) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களாற் புலனாம். (பாடம்) 1. வேலின் நோக்கிய. 2. உறூஉம் 2. கடைநிலை--வாயில்நிலை என்னும் துறை. பரிசில்பெற விரும்பிய இரவலர், வள்ளலது வளமனை வாயிலின்கண் நின்று வாயில்காவலரை நோக்கிக் கூறும் முறையில் அமைந்தமையின் கடைநிலை என்னும் பெயர்த்தாயிற்று. 2. கண்படைநிலை--கண்ணின் இமைகள் தம்மிற் பொருந்தும் நிலை; அஃதாவது துயில் கொள்ளும் நிலை. என் கண்பொருந்து போதத்துங் கைவிட நான் கடவேனோ என்பது அப்பர் அருளிச் செயல். கண்ணுதல்-கருதுதல்; குறித்தல். 3. கபிலை என்பது, வேள்விக்குரிய பால் தயிர் நெய் முதலியவற்றைத் தருதற்குரிய பாற்பசு. 4. வேலினோக்கிய என்பது நச்சினார்க்கினியர் உரையிலுள்ள பாடம். 5. வெஞ்சொல் தாங்குதலின்றி என்பதற்கு வெஞ்சொல்லைப் பிரித்தலின்றி எனப் பொருள்கொள்வர் இளம்பூரணர். தாங்குதல்--தடுத்தல்; வெளிப்படாது அடக்குதல். தாங்கு தலின்றி எனவே பிற்காலத்தில் நற்பயன் விளைக்கும் என்னும் நோக்கில் பாட்டுடைத்தலைவனைத் திருத்துதற்குரிய வேம்பும் கடுவும் போன்ற வெஞ்சொற்கள் வாயுறை வாழ்த்தில் இடம் பெறுதல் உண்டு என்பது இளம்பூரணர் கருத்தாதல் புலனாம். வேம்பு, கைப்புச் சுவையுடையது. கடு என்பது துவர்ப்புச் சுவையினதாகிய கடுக்காய். புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஒருபாற்கேண்மையாகிய கைக் கிளையைக் கைக்கிளைப் படலத்தில் ஆண்பாற்கூற்று பெண்பாற் கூற்று என இரு வகையாகப் (முன்பக்கத்தொடச்சி) பகுத்துரைத்தலால் கைக்கிளை வகை என்பதற்கு ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையும் பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும் எனப் பொருள் வரைந்தார் இளம்பூரணர். 6. சான்றோர், கொடாரைப் பழித்தல் தக்கதாமோ என்பதற்கு இங்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும். 1. கடைநிலையும் கடைக்கூட்டுநிலையும் வெவ் வேறு துறைகள். இவை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு குறித்தன அல்ல. கடை-வாயில். கடைநிலையாவது, நீண்ட தூரத்திலிருந்து வரும் பரிசிலன், வள்ளலது வாயிலின் கண் நின்று வாயில்காவலர்க்குத்தாம் இன்னாரென அறிவித்தல். பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையாவது, பரிசில் பெற விரும்பியோர் தமது வறுமைத்துயர் நிலை கூறிப் பரிசிற்பொருளை வினவிக் கேட்டுத் தாம் வந்த செயலை நிறை வேற்றிக் கொள்ளுதலாகும். கடைஇய-கடாவிய. கடைக்கூட்டுதலாவது கருதிய செயலை நிறைவேற்றிக்கொள்ளுதல். 1. வேலைநோக்கிய விளக்குநிலை எனப்பாடங்கொண்டு, வேலினைக் குறித்த விளக்குநிலை எனப்பொருள் கூறினார் இளம்பூரணர். வேலினோக்கிய விளக்குநிலை எனப் பாடங்கொண்டு வேலின் ஓக்கிய விளக்கு நிலை எனப்பிரித்து வேல்போன்று செங்கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு ஓங்கு வித்த விளக்கு நிலை எனப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். வேலின்--வேல்போன்று. ஓக்கிய--ஓங்குவித்த. இங்கு விளக்கு என்றது, கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பர் நச்சினார்க்கினியர். நிச்சம் இடுகின்ற விளக்கு என்றது, நாள்தோறும் ஏற்றும் விளக்கினை. 2. இதற்கு--இவ்வாறு வேம்பும் கடுவும் போல வெய்தாகக் கூறி வாழ்த்துதற்கு. ஒருதலைவன் வேண்டானாயினும் -- ஒரு தலைவன் விரும்பானாயினும் வாழ்ச்சிப்படுத்தல்--வாழும்படி செய்தல். வேம்பு, கசப்புடையது. கடு--கடுக்காய்; துவர்ப்புடையது. (பாடம்) 1. மொய்ம்பின் 2. பன்மாக் காக்கும் 3. எருமையன்ன (புறம்-5) காய் நெல்லறத்து (புறம் 184) என வரும் பாடல்களுக்குப் புறநானூற்றின் பழைய உரையாசிரியர் பிற்கால நூல்களாகிய பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை என்பவற்றை இலக்கணமாகக் கொண்டு செவியுறை எனத் துறை கூறியுள்ளார். புறநானூறு முதலிய சங்கத் தொகைகளுக்கு அகத்தியமும் தொல்காப்பியமுமே இலக்கணம். தொல்காப்பியனார் கூறிய வேம்பும் கடுவும்போல் வெய்தாகக் கூறி உறுதிபயக்கும் முறையில் வாழ்த்துதற் பொருண்மை இச்செய்யுட்களில் அமைந்திருத்தலால் இப்பாடல்களை வாயுறைவாழ்ந்து என்னுந் துறையுள் அடக்குதலே ஏற்புடையதாகும் என்பது நச்சினார்க்கினியர் துணிபாகும். 1. புறநிலை வாழ்த்தில் இடம்பெறும் தெய்வம் பாட்டுடைத் தலைவன் என்னும் இருபொருள்களுள், தெய்வமே சிறப்புடைப்பொருளாயினும் மக்கள் நுதலிய இப்புறத் திணையொழுகலாற்றில் தெய்வத்தைப் புறம்நிறுத்தி வாழ்த்தப் பெறும் உரிமை மக்கள் கண்ணதேயாதலின் ஆவயின்வரூஉம் புறநிலை வாழ்த்து என்றார் ஆசிரியர் என்பது கருத்து. ஆவயின்--(மக்கட்பகுதியாகிய) அவ்விடத்து. 2. காமப்பகுதியல்லாத கைக்கிளையாவது, ஒருவன் ஒருத்தியென்னும் இரு பாலாரிடையே ஒருபாற்பட்டு நிகழும் காமவுணர்வாகிய கைக்கிளை போலாது, பாடும் புலவருள்ளத்தே பாட்டுடைத் தலைவரைக் குறித்துத் தோன்றும் அன்பின் திறமாகிய வேட்கை. கைக்கிளை வகையாவன; 1. தலைவன் தலைவியென்னும் இருபாலரிடத்தும், பொதுவாகத் தோன்றுதற்குரிய ஒருதலைக் காமமாக அத்திணையியலுட் கூறப்படுவது. 2. காமஞ்சாலா இளமையோள்வயின் சொல்லெதிர் பெறான் சொல்லியின் புறலாகிய ஒரு தலைக் காமம். 3. இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழ்ந்த காட்சி, ஐயம், தெரிதல், தேறல் என்னும் உள்ளக்குறிப்பு நான்குமாகிய நற்காமத்துக்கு இன்றியமையாத ஒருதலைக் காமம். 4. கடவுள் மாட்டுக்கொண்ட காமப்பகுதியாகிய கைக்கிளை. 5. எண்வகை மணத்துள் முன்னைய மூன்றும் எனப்பட்ட அசுரம், இராக்கதம், பைசாசம் என்னும் கைக்கிளைக் குறிப்பு. 6. பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியைப்போன்று வாழ்க்கையின் முற் பகுதிக்கண் ஒத்த அன்பினராய் வாழ்ந்த கடைநிலைக் காலத்துக் கணவனால் துறக்கப்பட்ட பெண்பால் காரணமாக, அப்பெண்பால் கூறுதலின்றி இடை நின்ற சான்றோராயினும் பிறராயினும் கூறுதலாகிய ஒருபாற் கேண்மையாகிய கைக்கிளை. நச்சினார்க்கினியர் கூறும் கைக்கிளை வகைபற்றிய இப்பகுப்பு முறை அவரது இலக்கியப் பயிற்சியின் பயனாக அவர்தாமே வகுத்துக் கொண்டதாகும். 1. பாடாண் வகைப் பொருள் எட்டின் இயலும் சுட்டுவது இச்சூத்திரம் என்னுங் கருத்தில் நாவலர் பாரதியார் அவர்கள் உரை அமைந்துளது. இதற்கண் கொடுப்போரேத்திக் (முன்பக்கத்தொடர்ச்சி) கொடார்ப் பழித்தல் முதலாக வேலினோக்கிய விளக்கு நிலை என்பதீறாக ஆறும், வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து, கைக்கிளைவகை எனத் தொகுத்த நான்கும் ஆகப் பத்துத் துறைகள் எண்ணப் பெற்றன. பாடாண் பகுதி நாலிரண்டினையும் அமரர் கண் முடியும் அறுவகையாயினும் வழங்கியன் மருகின் எனவரும் இரண்டு நூற்பாக்களிலும் தொல்காப்பியனார் விரித்துக் கூறினமையானும், இதன்கண் கொடுப்போரெத்திக் கொடார்ப் பழித்தல் என்ற ஒரு துறையினையே கொடுப்போரேத்தல், கொடர்ப் பழித்தல் என இரண்டாக்கியும் வாயுறை வாழ்த்து முதலிய நான்கினையும் ஒரு துறையாகத் தொகுத்தும் இவ்வாறு எண் வகையாகக் கொள்ளும்படி ஆசிரியர் சூத்திரஞ் செய்தாரென்றல் ஆ நிழலின் அறியத் தோன்றி நாடுதலன்றிப் பொருள் நனிவிளங்க அமைக்கும் தொல்காப்பியனாரது நூற்பாவமைதிக்கு ஒவ்வாமையினும் இந்நூற்பா பாடாண் வகைகளைச் சுட்டுவதாயின் பாடாணியல் புணர்த்தும் பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங்காலை நாலிரண்டுடைத்தே என்னும் நூற்பாவை அடுத்து அமைந்திருத்தல் வேண்டுமாதலானும், நாவலர் பாரதியார் கருதுமாறு கொடுப்போரேத்தல் முதலாகவுள்ள இவையே பாடாண்டிணையின் வகையாயின் அமரர்கண் முடியும் வழங்கியன் மருங்கின் என்னும் நூற்பாக்களிற் கூறப் பட்டவை பாடாண்டிணையின் வகைகளா அன்றித் துறைகளா என்னும் ஐயம் கற்போர்க்குத் தோன்றுதல் இயல்பாதலானும் கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல் முதலாகவுள்ள பத்தினையும் பாடாண்டிணையின் துறைகளாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். 1. கிடத்தல்--உறங்குதல். சூதர்--நின்றேத்துவோர். துயிலெடை--துயிலினின்றும் எழுப்புதல். 2. உறழ்தல்--ஒன்றிற்கொன்று மாறுபடுதல். பயன்எதிர--பயனைப்பெற. 3. எதிர்தல்--ஏற்றுக்கொள்ளுதல். 4. சீர்த்தி--மிகுபுகழ். மண்ணுதல்--நீராடுதல். மண்ணுமங்கலமாவது, புண்ணிய நீராட்டுமங்கலமாம். அரசர் நாட்டின் ஆட்சியினையேற்று முடிசூடிய நன்னாளினை ஆண்டுதோறும் கொண்டாடும் நிலையில் நிகழ்வது, மண்ணு மங்கலம் என்னும் இந்நிகழ்ச்சியாகும் என்பது இளம்பூரணருரையால் இனிதுபுலனாதல் காணலாம். 1. பகைவரது எயிலையழித்து அவ்விடத்து நீராடும் மங்கல நிகழ்ச்சியாகிய மண்ணுமங்கலம் என்பது, உழிஞைத் திணையிற் கூறப்பட்டதாயினும் இத்தகைய போர்ச் செயலை நிகழ்த்தி வெற்றி கொண்டானை எனவேந்தனைப் புகழ்தற் கண் வருதலின் பாடாண்டிணையாயிற்று என்பதும், இங்ஙனம் பிற புறத்திணைக்கு உரிய நிகழ்ச்சிகள் புகழ்தற் பொருள்படவரின் பாடாண் திணையாதல் மறத்துறை ஏழற்கும் ஒக்கும் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும். 2. மறத்துறை ஏழாவன; நிரைகவர்தல், நிரைமீட்டல், மேற்சேறல், எயிலழித்தல், எயில்காத்தல், இருதிறத்தாரும் பொருதல், வேறல் என்பனவாம். இவை முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்னும் திணை நிகழ்ச்சிகளாகும். 1. தாவில்கொள்கை என்றாற் போலத் தாவில் நல்திசை என ஒரு தொகைப்பட நின்றதனைப்பிரித்துத் தாவில் கிடந்தோர்க்கு எனக் கொண்டு கூட்டிப் பொருள் கூறுதல் நூலாசிரியர் கருத்துக்கு முரணாகும். 1. சூதர் நின்றேத்துவார் மாகதர்--இருந்தேத்துவார் வேதாளிகர்--வைதாளியாடுவார்; பலவகைத் தாளத்தில் ஆடல் நிகழ்த்துவோர். வந்திகர்--இசைப்பாடலாற் புகழ்ந்து போற்றுபவர். 2. பாரசவர்--ஆடற்றொழிற்குரியோராகிய ஓரினத்தார். பாரதிவிருந்தியாவது, கூத்தன் தலைவனாக நடன்நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது என்பர். இயைந்து-இசை வளர்ப்போர். விலக்கியற் கூத்து என்றது, வேந்துவிலக்கு, படைவிலக்கு, ஊர்விலக்கு என்னும் விலக்குக்களாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்த அமைந்த பலவகைப் புறநடனங்களை. கானக்கூத்து--காட்டகத்து வேட்டுவர் ஆடுங்கூத்து, கழாய்க் கூத்து--இருபக்கத்தும் மூங்கிலை நாட்டில் கயிற்றின் நடந்தாடுங்கூத்து; இது விநோதக் கூத்துள் ஒன்றாகியகலிநடம் என்பதாகும். இசைப்பாணர்--மிடற்றிசையில் வல்லவர் மண்டைப்பாணர்--மண்டையெனப்படும் மட்கலத்தையேந்திப் பிச்சையேற்று இசைபாடுவோர். யாழ்ப்பாணர்--யாழ் என்னும் நரம்புக் கருவியை வாசித்து இசை வளர்ப்போர். 1. தடுமாறு தொழிலாவது, முன்னும் பின்னும் நின்ற பெயர்கள் இரண்டனுள் ஒன்றற்கே யுரித்தாய் நில்லாது ஒருகால் நினைமுதற் பெயரோடும் ஒருகால் செயப்படுபொருளோடும் சென்று தடுமாறும் தொழில். புலிகொல்யானை என்புழி நடுவே நின்ற கொல் என்னுந் தொழிற்சொல் புலியைக் கொன்ற யானை என இரண்டாமுருபு விரிக்குமிடத்துப் பின்னுள்ள யானையின் தொழிலாகவும் புலியாற்கொல்லப்பட்ட யானை என மூன்றாமுருபு விரிக்குமிடத்து முன்னுள்ள புலியின் தொழிலாகவும் தடுமாறி வருதலின் தடுமாறு தொழிலாயிற்று. அதுபோன்று கூத்தராற்றுப்படை என்புழியும் கூத்தரை ஆற்றுப் படுத்தது. கூத்தரால் ஆற்றுப்படுத்தப்பட்டது எனத் தடுமாறு தொழிலாக உருபு விரிக்கப்பெறாது கூத்தரை ஆற்றுப்படுத்தது என ஐயுருபு மட்டுமே விரிக்கப்பெறுதலின் தடுமாறு தொழில் ஆகாமல் என்றார். 1. இறை தவிர்தல்--அரசுக்குரிய வரியினை வாங்காது நீக்குதல் 1. தமிழகக் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் நாடாள் வேந்தர் முடி புனைந்த நாளை முதலாகக் கொண்டு இத்தனையாண்டு என்று யாண்டும் திங்களும் நாளும்தொடங்கி ஆண்டுதோறும் தொடர்ந்து எழுதப்பெறுதல், சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் என்னும் இத்துறையின்பாற்படும் என்பதாம். 1. சிலப்பதிகாரக் காப்பியத்தின் முதற்கண்ணதாகிய மங்கல வாழ்த்துப் பாடலில் அமைந்த திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் பூம்புகார் போற்றுதும் என வரும் பாடற் பகுதியின் உரையில் இத்திங்கள் முதலியவற்று இவனளித்தல் முதலிய செய்கை ஒத்தலான் இவையும் இவனாற் சிறந்தன என்பதாம். இறப்பப் புனைந்துரைத்தற்குக், குடைநிழல் மரபு என்றதனால் கொடையுந் திகிரியும் உயர்ச்சியும் புனைந்து கூறியவாறாயிற்று என அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம் இங்கு ஒப்பநோக்கியுணரத் தகுவதாகும். 1. உழிஞைத்திணையுள் வரும் வாண் மங்கலம் என்பது, போரில் வெற்றி தந்த கொற்றவாளினைக் கொற்றவைமேல் நிறுத்திக் கொற்றவையைப் பரவுவதாகும். இங்குப் பாடாண்திணையுள் வரும் வாண்மங்கலம் என்பது, வாள்வென்றியாற் பசிதீர்ந்த பேய்ச் சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்துவதாகும். 1. வெள்ளை வரகு என்பது கவடி ; பலகறை, கொள் என்பது குடைவேல் மரம்; கருவை மரத்தின் ஒருவகை. 2. பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலை என்பதனைப் பரிசில் கடைஇய நிலை, கடைக்கூட்டுநிலை என இரண்டு துறைகளாகப் பகுத்துரைப்பர் நச்சினார்க்கினியர். 3. இருத்தலே என்பதனை இரத்தலே எனத்திருத்துக. பரிசில் நிலையாவது, பரிசிலர் வள்ளல்களிடத்துத் தாம்பெற்ற பரிசிலின் தன்மையினை எடுத்துரைத்தல். 4. நடைவயிற்றோன்றலாவது, உலக நடையாகிய வழக்கின்கண் காணப்படுதல். 1. இருமுந்நீர்க் புறநூனூறு--20. பக்கம், 294. 2. பிறந்தநாண்மீன் என்றது, பாட்டுடைத் தலைவன் பிறந்த நட்சத்திரம். கோண்மீன் என்றது செவ்வாய் முதலிய கிரகங்களை. வீழ்மீன்--எரிந்து வீழும் நட்சத்திரம். புதுப்புள் வருதலாவது, ஒரு நிலத்தில் முன்னர் இல்லாத பறவை வந்து சேர்தல். பழம்புள் போதலாவது, ஒரு நிலத்தில் நெடுங்காலமாகப் பயின்று வாழ்ந்த பழைய பறவை அந்நிலத்தை விட்டு நீங்கிச் செல்லுதல். பொழுதன்றிக் கூகை குழறல்--காலமல்லாத காலத்திற் கோட்டான் கத்துதல். ஓர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள் என்றது, நற்சொல் எழுதல் வேண்டும் என்னும் நோக்குடன் அதனை எதிர்பார்த்து நின்ற நிலையில் தோன்றிச் செவியிற் சேர்ந்த நற்சொல். இது விரிச்சியெனவும் கூறப்படும். ஓரிக்குரல்--நரியின் ஊளைக்குரல், கழுது--பேய். வெஞ்சுடர் மண்டிலம்--சூரியன் அதன்கண் கவந்தம் வீழ்தலாவது, தலையில்லாக் குறையுடல் வீழ்தல் போன்றதொரு குறையுண்டாதல். துளை--புள்ளி. தண்சுடர் மண்டிலமாவது சந்திரன். 1. இன்னாங்கு--துன்பம். 1. இங்குப் பகைநிலத்தரசர் என்றது, குருகுலவேந்தராகிய துரியோதனன் முதலாய நூற்றுவரை. 2. நடக்கை--வழக்கு. 1. வாகைத்திணையில் அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் ஐவகைமரபின் அரசர் பக்கம், இருமூன்று மரபின் ஏனோர்பக்கம் என அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் ஆகிய நாற்குலத்தார்க்கும் உரிய ஒழுகலாறுகளையே முறையே ஆறு, ஐந்து ஆறு, ஆறு என ஆசிரியர் வகுத்துக் கூறினார் ஆயினும் உலக வழக்கின் கண் நடைபெற்று வரும் இவ்வொழுகலாறுகள் காலவேற்றுமைபற்றி வேறுபடுதலும் உண்டு என்பார். இனி வாகைக்குப் பார்ப்பனவொழுக்கம் முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க என்றார் நச்சினார்க்கினியர். 2. உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை, பொருள் நிலையாமை எனப்பல்வேறு நிலையாமைகளை உள்ளவாறு அறிவோர் அறிவுநிலைக்கேற்ப அவ்வவற்றின் நிலை யாமையினை எடுத்துரைத்தல் காஞ்சித்திணையாம் என்பார், காஞ்சிக்கும் உயிரும் உடம்பும் பொருளும் என்ற மூன்றும் பற்றி அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க என்றார் 3. பாடாண்டிணைக்குரிய துறைகளை விரித்துரைக்கும் நிலையில் புறத்திணையியலில் இறுதிக்கண் அமைந்த இந்நூற்பா, இவ்வியலிற் கூறப்பட்ட எல்லாத்திணைக்கும் புறனடையாகவும் அமைதல்வேண்டி, ஞாலத்துவரூஉம் நடக்கையது குறிப்பிற் காலம் மூன்றோடு கண்ணிய வருமே எனத் தொல்காப்பியனார் இவ்வியலை நிறைவு செய்துள்ளமை உளங்கொளத்தகுவ தாகும். 1. இக்குறியெண் உள்ளவை புறப்பொருள் வெண்பா மாலையில் காணப்படும் புதிய துறைகள்.