மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14 தமிழக ஆவணங்கள் சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 295/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பொருளடக்கம் தமிழக ஆவணங்கள் முகவுரை 18 சாசனச் செய்யுள் மஞ்சரி 26 திருவக்கரை 157 திருக்காரிக் கரை 164 முப்புரம் எரித்த முதல்வன் 169 திருப்பாலைவனம் 174 வரகுண பாண்டியனின் கல்வெட்டு 178 வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள் 182 திருமெழுக்குப் புறம் 187 உதிரப் பட்டி அல்லது இரத்தக் காணி 191 தேனவரை நாயனார் சாசனம் 195 ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்கள் 199 நந்திவர்மன் காலத்துச் சாசனங்கள் 237 மூவர்கோயில் சாசனம் 278 கோழிப்பாம்பு 293 யுவான் சுவாங் யாத்திரைக் குறிப்பு 296 அடிமை வாழ்வு 300 தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்கள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் குறிப்பு : சாசனச் செய்யுள் மஞ்சரி (1959) என்னும் நூல். முகவுரை பழைய சாசன வெளியீடுகளைப் படித்துக் கொண்டிருந்த போது அவற்றின் இடையுடையே சில சாசனங்கள் செய்யுளாக அமைந் திருப்பதைக் கண்டேன். கண்டபோது, அச் செய்யுட்களைத் தொகுத்து வைப்பது நலம் என்று தோன்றியது. வெவ்வேறு காலத்திலே வெவ்வேறு இடங்களில் இருந்த புலவர்கள் அவ்வபோது பாடிய தனிச் செய்யுட்களைப் பிற்காலத்தவர் தொகுத்துத் தனிப்பாடற்றிரட்டு என்னும் பெயருடன் வெளியிட்டுருப்பதைப் படித்து நாம் பல செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். அதுபோலவே, வெவ்வேறு ஊர்களிலே வெவ்வேறு காலத்தில் சாசனங்களிலே எழுதப்பட்ட செய்யுள்களைத் தொகுத்து வெளியிட்டால், அது தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆராய்வதற்கும், அக்காலத்து அரசியல் சமூக இயல் வரலாறுகளைத் தெரிந்து கொள்வதற்கும் பெரிதும் துணையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, சாசனங்களில் காணப்படுகிற செய்யுள்களைத் தொகுத்துச் ‘சாசனச் செய்யுள் மஞ்சரி’ என்று பெயரிட்டு அமைத்தேன். பிறகு, இது போன்று, கன்னடம் தெலுங்கு சமஸ்கிருதம் என்னும் மொழிகளில் உள்ள சாசனங்களிலும் செய்யுள்கள் இருப்பதையறிந்து, அச்செய்யுள்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்களா, என்றறிய, அறிந்தவர்களை உசாவினேன். கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் உள்ள சாசனச் செய்யுள்களைத் தொகுத்து அந்தந்த மொழியில் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். ஆகவே, நான் தொகுத்த தமிழ்ச் சாசனச் செய்யுட்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று எண்ணினேன். சாசனங்களிலே, பெரும்பாலும் அரசர்களின் மெய்க் கீர்த்திகள் செய்யுளாக அமைந்திருக்கின்றன. அந்த மெய்க் கீர்த்திச் செய்யுட்களை மட்டும் சிலர் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், மெய்க்கீர்த்தி அல்லாத வேறு தனிச் செய்யுட்களைத் தொகுத்து இதுவரையில் சரிவர அச்சிடவில்லை. ஆகவே, மெய்க் கீர்த்திச் செய்யுட்களைத் தவிர, ஏனையச் சாசனச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிடுவது மிகத் தேவையானதென்பதைக் கண்டேன். ஏனென்றால், சாசனங்களைத் தொகுதி தொகுதியாக அச்சிட்டிருக்கிற செய்திப் பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரில், பலர் சாசன சாலைகளில் (இரண்டொரு புத்தகச்சாலைகள் தவிர) சாசன வெளியீடுகள் காணப்படுவதில்லை. சில சாசன வெளியீடுகள் இப்போது விலைக்குக் கிடைப்பதும் இல்லை. இவ்வாறு சாசன வெளியீடுகள் கிடைப்பதற்கு அரிய அரும்பொருளாக உள்ளன. அரிதில் முயன்று தேடிக் கண்டுப்பிடித்தாலும், வசன சாசனங்கள் எவை, செய்யுள் சாசனங்கள் எவை என்பதைக் கண்டு பிடிப்பது எளிய காரியம் அல்ல. ஏனென்றால், கருங்கல்லிலும் செப்பேட்டிலும் சாசனச் செய்யுள்களைச் செதுக்கியவர்கள், செய்யுள் களைச் செய்யுள் அமைப்புப்படி அடிபிரித்து எழுதாமல், வசனங் களை எழுதிவைப்பதுபோல எழுதி வைத்தார்கள். இதனால், வசன சாசனங்களிலிருந்து செய்யுட் சாசனங்களைப் பிரித்தறிவது எளிதானதல்ல. அதிலும் அச்சுப் புத்தங்களில் செய்யுள்களைப் படித்துப் பழகியவர்கள், (ஓலைச்சுவடியில் செய்யுள்களைப் படித்துப் பழகாதவர்கள்) சாசனங்களிலுள்ள செய்யுள்களைக் கண்டறிவது மிகமிகக் கடினமானது. சிறிதாவது செய்யுள் இலக்கணம் அறிந்தவர் களும் செய்யுள்களை ஏட்டுச்சுவடியில் படித்துப் பழகியவர் களுந்தான் சாசனங்களில், அடிபிரித்து எழுதாமல் நெடுக எழுதியுள்ள செய்யுட்களைக் கண்டறிய முடியும். மேலும், இந்திய சாசனங்கள் என்னும் சாசன வெளியீட்டில், சாசன வாசகங்களை இலத்தின் (ஆங்கில) எழுத்தினால் அச்சிட்டி யிருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளில் எழுதப்பட்டுள்ள சாசனங்களை ஆங்கில எழுத்தில் அச்சிட்டால் அவற்றை யார் படிப்பார்கள்? இவ்வாறு பதிப்பித்துள்ள சாசனங்களைப் படிப்பதில் உச்சரிப்பு இடர்பாடுகள் பல உண்டு. இது ஒருபுறமிருக்க, தமிழ் எழுத்தில் பதிப்பித்துள்ள சாசனங் களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் சில இடர்பாடுகளும் துன்பங்களும் உண்டு. ‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்னும் பழமொழி ஓலைச்சுவடிகளை எழுதினவர்களுக்கு மட்டும் அல்லாமல், செப்பேட்டை எழுதினவனுக்கும் கருங்கல்லில் எழுதினவனுக்கும் கூட முழுவதும் பொருந்தும். எப்படி என்றால், இவர்கள் எல்லோரும், புள்ளிப் பெறவேண்டிய எழுத்துக்களுக்குப் பெரும்பாலும் புள்ளி வைத்து எழுதுவதில்லை : மிக அருமையாக யாரோ ஒருவர்தான் புள்ளி அமைத்து எழுதுவார்கள். இதில் உள்ள இன்னொரு சங்கடம் என்னவென்றால், இக்காலத்து மெய்யெழுத்துக்களைப்போலவே அக்காலத்து மெய்யெழுத்துக்களும் புள்ளிப் பெற்றிருந்ததோடு எகர ஒகரக் குற்றெழுத்துக்களும் அக்காலத்தில் புள்ளிபெற்றிருந்தன. இக்காலத்தில் எகர ஏகார ஓங்காரங்களுக்குத் தனித்தனி எழுத்துக்கள் புள்ளியிடப்படாமல் எழுதப்படுகின்றன. ஆனால், அக் காலத்தில் இவ்வவெழுத்துக்களைப் புள்ளி அமைத்தும், புள்ளி அமைக்காமலும் எழுதிவந்தார்கள். புள்ளியிடப்பட்ட எகர ஒகரங்கள் குற்றெழுத்தாகவும் புள்ளியிடப்படாத எகர ஒகரங்கள் நெட்டெழுத் தாகவும் அக்காலத்தில் வாசிக்கப்பட்டன. ஆனால், கல்லிலும் செம்பிலும் ஏட்டிலும் எழுதிய அக்காலத்து எழுத்தாளர்கள் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்கும் (எகர ஒகர மெய்யெழுத்துக்கள்) புள்ளியிடாமல் எழுதிவைத்தார்கள். எகர ஒகரக் குற்றெழுத்துக் களுக்கும் மெய்யெழுத்துக் களுக்கும் புள்ளியிட்டெழுத வேண்டும் என்று நன்னூள் சூத்திரமும் தொல்காப்பிய சூத்திரமும் கூறுகின்றன. “மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்” என்றும், “எகர ஒகரத் தியற்கையும் அற்றே” என்றும் தொல்காப்பிய இலக்கணம் (எழுத்ததிகாரம், சூத்திரம் 15, 16) கூறுகிறது. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு எய்தும் எகர ஒகரமெய் புள்ளி” என்று நன்னூல் சூத்திரம் கூறுகிறது. இந்த இலக்கண முறைப்படி புள்ளி பெறவேண்டிய எழுத்துக்கள் எவை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டால் தான், சாசனங்களைப் பிழையில்லாமல் படித்து அறிய முடியும். இல்லை யேல் தவறுகள், பெருந்தவறுகள் ஏற்படும். சில உதாரணங்களை காட்டுவோம் : எறு, ஒது என்று சாசனங்களில் எழுதியிருந்தால் இவற்றை முறையே ஏறு, ஓது என்று வாசிக்கவேண்டும். பழைய இலக்கண முறைப்படி. இவற்றின்மேல் புள்ளி இல்லாதபடியால் இவ்வெழுத்துக் களை நெட்டெழுத்தாகக் கொள்ளவேண்டும். (ஆனால் புள்ளி யிடாமலே எழுதுவது அக்காலத்து எழுத்தாளர் வழக்கமாகையால் இதை நெட்டெழுத்தாகக் கொள்வதா, குற்றெழுத்தாகக் கொள்வதா என்கிற ஐயம் ஏற்படுகிறது.) இவ்வாறு மெகம, செரி, மெய, தெனருநத, பெசி, முனறு, தெஙகமழ, செவவெல, வெடகை, வெறு, செறு, தெவர, குணடுர, தநதென என்று சாசன எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இவற்றை முறையே மேகம், சேரி, மேய், தேனருந்த, பேசி, மூன்று, தேங்கமழ், செவ்வேல், வேட்கை, வேறு, சேறு, தேவர், குண்டூர், தந்தேன் என்று இடமறிந்து வாசிக்க வேண்டும். கொடல, கொலவளை, மலரொன, பொல, பெரருளான, நொககி, சொனனொம, கொளரி, பொதிநிழல, பொரததனன, வானறொய, தெனறொய, கொளரவம, மெநதன என்று சாசனங்களில் எழுதப்பட்டிருக்கும். இவற்றை முறையே கோடல், கோல்வளை, மலரோன், போல, பேரருளான், நோக்கி, சொன்னோம், கோளரி, போதிநிழல், போர்த்தன்ன, வான்றோய், தேன்றோய், கோளரவும், மேந்தன் என்று இடமறிந்து வாசிக்கவேண்டும். சில சொற்கள், இகரத்திற்கும் ஈகாரத்திற்கும் வேறுபாடு தோன்றாமல் எழுதப்பட்டிருக்கும். விதி, வெலை, நிர், நிலம், கண்டிர, திரும, சிரமை, நிடிய, விரன என்றிருப்பதை முறையே வீதி, வேலை, நீர், நீலம், கண்டீர், தீரும், சீர்மை, நீடிய, வீரன் என்று வாசிக்கவேண்டும். இவ்வாறு பண்டைக் காலத்துச் சாசன எழுத்துக்களை வாசிப்பதில் சில இடர்பாடுகள் உள்ளன. இத்தகைய இடர்களும் துன்பங்களும் ஒருபுறமிருக்க, வேறு சில துன்பமும் காணப்பட்டன. அவை என்னவென்றால், சாசனச் செய்யுள்கள் சிலவற்றில் இடையிடையே சில பல எழுத்துக்கள் மறைந்துள்ளன. இடையிடையே எழுத்துக்கள் மறைந்துபோன செய்யுள்களை அடிபிரித்துச் செய்யுள் உருவத்தில் அமைப்பது கடினமானது. கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுட்கள் சிலவற்றில், செய்யுள் இலக்கண முறைக்கு மாறுபட, சில அடிகளில் அதிக எழுத்துக்களும் சில அடிகளில் குறைந்த எழுத்துக்களும் காணப்படு கின்றன. அவை, எழுத்துக்களைச் செதுக்கிய சிற்பிகளின் அறியாமை யினால் நேர்ந்த பிழைகளாகும். அப்படிப்பட்ட செய்யுள்களை உள்ளது உள்ளபடியே அமைத்து எழுதியுள்ளேன். சாசனத்தில் உள்ள செய்யுள்களை அடிபிரித்து அமைத்ததும், எகர ஒகர மெய்யெழுத்துக்களை ஆராய்ந்து தக்கவாறு சொற்களை அமைத்ததும் தவிர ஏனைய திருத்தங்கள் எதையும் நான் செய்ய வில்லை. செய்யுள்களில் எழுத்துக்கள் தவறாக இருந்தாலும், அதிக மாகவோ குறைவாகவோ இருந்தாலும், அவற்றை உள்ளது உள்ள வாறே எழுதியுள்ளேன். இந்த வகையில் குறைபாடு காணப்பட்டாலும் அவை தவிர்க்க முடியாதவை என்பதை வாசகர் அறிய வேண்டும். சாசனச் செய்யுள்களை மட்டும் அச்சிடுவதால் பயனில்லை. அவற்றிற்கு விளக்கங்களும் குறிப்புகளும் எழுதினால் பெரிதும் பயன்படும் என்றறிந்து, ஒவ்வொரு செய்யுளுக்கும் விளக்கமும் குறிப்பும் எழுதியுள்ளேன். மேலும் அவை உள்ள, அல்லது கிடைத்த இடங்களையும், அவை அச்சிடப்பட்டுள்ள வெளியீடுகளின் பெயர் களையும் காட்டியுள்ளேன். கால வரையறைப்படி செய்யுட்களைத் தொகுப்பதில் குறைகள் உள்ளபடியால் அப்படித் தொகுக்காமல். மாவட்ட முறையாகச் செய்யுள்களைத் தொகுத்துள்ளேன். தென் இந்திய சாசனங்கள், இந்திய சாசனங்கள், புதுக்கோட்டை சாசனங்கள், திருவாங்கூர் சாசனங்கள், கர்னாடக சாசனங்கள் ஆகிய சாசன வெளியீடுகளில் உள்ள சாசனச் செய்யுட்களைத் தொகுத் துள்ளேன். செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்துள்ள சில சாசனச் செய்யுள்களையும் இதனுடன் தொகுத்துள்ளேன். இது வரையில் வெளிவராத புதிய சாசனச் செய்யுள் ஒன்றையும் இதனுடன் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளேன். இந்தப் புதிய சாசனச் செய்யுளை இதில் அச்சிடக் கொடுத்துதவியவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரும், சாசன ஆராய்ச்சியிலும் சரித்திர ஆராய்ச்சியிலும் வல்லவருமான உயர் திரு. T.V. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள். அப்பெரியாருக்கு மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிலே சாசனச் செய்யுட்கள் இவ்வளவுதான் என்று நினைக்க வேண்டா. இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட செய்யுள்கள் உள்ளன. அவை அச்சிடப்படாமல் எபிகிராபி இலாகாவில், வைக்கப்பட்டு, உலகத்துக்குப் பயன்படாமல் உள்ளன. இப்போது எனக்குக் கிடைத்தவரையில் சாசனச் செய்யுள்களை அச்சிடுகிறேன். இந்த நூலில் உள்ள செய்யுட்கள், தமிழ் இலக்கியத்தை ஆராய்வதற்கும், பண்டைக் காலத்துச் சமுதாய வாழ்க்கை நிலை. அரசியல் நிலை, வரலாற்றுச் செய்தி முதலியவைகளை ஆராய்வதற்கும் பெரிதும் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ‘சாசனச் செய்யுள் மஞ்சரி’ என்னும் இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவிபுரியவேண்டுமென்று டில்லியில் உள்ள சாகித்திய அக்கடமி என்னும் கழகத்தைக் கேட்டுக்கொண்டேன். அக்கழகத்தார் தமது தமிழ்க் குழுவின் மூலமாக இத்தொகுப்பை ஆராய்ந்து, அக்குழுவின் இசைவு பெற்று, இந்நூலை வெளியிடும் செலவுக்காக ரூபா ஐந்நூறு நன்கொடையாக வழங்க உடன்பட்டனர். ஆகவே இந்நூல் சாகித்திய அக்கடமின் ஆதரவில் வெளிவருகிறது. இவ்வுதவியை அளித்தருளிய சாகித்திய அக்கடமிக்கும், அதன் தமிழ்க் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூர், சென்னை 15-3-1959 சீனி.வேங்கடசாமி (இது பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்து. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறைக் கிராமத்தில் ‘நாலு மூலைக் கேணி’ என்னும் மாற்பிடுகு பெருங்கிணற்றுச் சுவரில் எழுதப்பட்டுள்ளது. இதன் வாசகத்தைக் கீழே காண்க.) கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன் னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய். (இது வட்டெழுத்து. ஒருகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட எழுத்து இது. இவ்வெழுத்தின் வாசகத்தை கீழே காண்க.) வட்டழுத்துப் படத்தின் வாசகம் தென்னவர்தந் திறலாணைச் சிலைஒடுபுலி கயலிணைமன் பொன்னிமையச் சிமையத்து விறற்கருவி இற்றைக்குந் தொழில்செய்து வந்தவர் பின்னோன் செயல்பல பயின்றோர் முன்னோன் திருமலிசாசன மிதற்குச் செழுந்தமிழ் பாடினோனற்றை நிருபசேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து. சாசனச் செய்யுள் மஞ்சரி சுந்தர பாண்டியன் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, திருப்புட்குழி, விஜயராகவப் பெருமாள் கோவில் முன் மண்டபத்துக் கிழக்கு மேடைச் சுவர். பதிப்பு : எண் 455. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஆறு. (No. 455. S.I.I. Vol. VI.) விளக்கம் : இந்த மண்டபத்தை அமைத்தவர், எடுத்தகை அழகியான் பல்லவராயர் என்பவர். பெருமாள் குலசேகர தேவரான சுந்தர பாண்டியனை வாழ்த்துகிறது இந்தக்கவி. சாசனச் செய்யுள் வாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன் வாழ்க சுந்தர மன்னவன் தென்னேய். பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக. எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம். குறிப்பு :- பண்டைக் காலத்து வழக்கம்போல இச்செய்யுளில், ஏகார ஈற்றெழுத்து யகரமெய் பெற்றுள்ளது. ----- கோதண்டராமன் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, சின்ன காஞ்சீபுரம், அருளாளப் பெருமாள் (வரதராசப் பெருமாள்) கோவிலைச் சூழ்ந்துள்ள மண்டபங்களின் திண்ணைச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 853. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No. 853. S.I.I. Vol. IV.) விளக்கம் : வசனமாக எழுதப்பட்ட ஒரு சாசனத்தின் அடியில் இந்தச் செய்யுள் காணப்படுகிறது. சாசனச் செய்யுள் கூர்வேல் வல்ல கோதண்ட ராமன் குலோத்துங்கன் பேரால் பணித்தமைக்கும் விச்சையம்மன் சேரமான் வங்கத்தே துங்க வடகொல்லம் கொண்டமைக்கும் சங்கத் தருங்கடலே சான்று. ----- மணியன் பெருங்கன் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, மாகறல் வைகுண்டபெருமாள் கோவில் மண்டபத்தின் தென்புறச் சுவரிலும், தாயார் சந்நிதி வாயிலின் மேற்புறத்திலும் எழுதப்பட்டுள்ள செய்யுட்கள். பதிப்பு : எண்கள் 437, 438. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (Nos. 437, 438. S.I.I. Vol. VII.) விளக்கம் : இராஜராஜ சோழனின் 23-ஆம் ஆண்டில், பட்டியர் போயன் மணியன் என்பவர் இக்கோவிலில் திருப்பணிகள் செய்ததை முதல் செய்யுள் கூறுகிறது. அண்டம்பாக்கிழான் திருவன் என்பவர், முருகன் கோவிலைக் கட்டியதாக இரண்டாவது செய்யுள் கூறுகிறது. இந்த முருகன் கோவில் இப்போது தாயார் சந்நிதியாக இருக்கிறது. முன்பு, முருகன் திருவுருவம் இங்கு இருந்ததாகவும், பிற்காலத்தில் அவ்வுருவம் இவ்வூர்ச் சிவன் கோவிலுக்குக் கொண்டு போகப் பட்டதாகவும் கூறப்படுகிறது. முருகன் இருந்த ஆலயத்தில் இப்போது மடைப்பள்ளி நாச்சியார் என்னும் உருவம் வைக்கப் பட்டிருக்கிறது. இதற்குப் பூசைக் கிடையாது. ஆனால், இந்த முருகன் ஆலயம் இப்போது தாயார் சந்நிதி என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் வாயிலின் மேலே இரண்டாவது செய்யுள் எழுதப் பட்டிருக்கிறது. முதலாவது செய்யுளின் மேலே கீழ்கண்ட வாசகம் எழுதப் பட்டிருக்கிறது : “ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 23-வது ஐயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் திருமேற்கோயில் வீற்றிருந்த எம்பெருமான் கோவில் ஸ்ரீவிமானமும் திருவர்த்த மண்டபமும் திருமண்டபமும் சோபனமும் ஸ்ரீபீடமும் இவ்வூர் பட்டியர் போயன் மணியன் பெருங்கன் செய்வித்தான். ஹரி.” சாசனச் செய்யுள் திருமன்னு ஸ்ரீராச ராசற் கியாண்டு சென்ற விருபத்து மூன்றாவதிற் செந்தளிர் சூழ் மருமன்னும் பொழிற் றிருமாகறல் திருமேற்கோயில் மன்னிவீற் றிருந்த பெருமாளுக்கு மண்மேற் கருமன்னு சீவிமான மத்தமண்டப மேர்கலந்த மண்டபத்தோடு சோபானஞ் சீபீடந் தருமன்னுங் கொடைப்பட்டியர் போயன் மணியன் தரும்பெருங்கன் செய்வித்தான் தருமநிலைபெறவே. 1 சீராச ராசற் காண்டறிற் றென்மாகறற் பாரார்புக ழண்டம் பாக்கிழான் - காரார் தருப்போல் தருந்திருவன் காழன் முருகன் திருக்கோயில் செய்தான் சிறந்து. 2 ----- திருமால் மாவலிவாணன் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, காஞ்சீபுரம், ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், மேற்கு - தெற்குப்புறச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளவை. பதிப்பு : எண் 348 - A. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No. 348-A. S.I.I. Vol. IV.) விளக்கம் : திருமால் மாவலிவாணன் என்னும் அரசனுடைய போர் வெற்றியைக் கூறுகின்றன இச்செய்யுட்கள். சாசனச் செய்யுள் அடுகயலை முன்னாளி லாடகக் குன்றிட்ட வடுமறைந்து போயும் மறையா - முடுகுசமர மாற்றோர் தொழுந்திருமால் மாவுதைப்ப வேல்வழுதி தோற்றோடிப் போன சுவடு. 1 மாலாக்கி யிந்திரையைத் திருத்தோள்வைத்து வையமொரு கோலாற் புரந்தருள மாவலிவாணன் நன்கொற்றவடி வேலாற் றுரப்புண்டபின் வீரமாறன் வெகுண்டு பண்டு காலாற் குடித்த கடற் கண்களால் விழக் கண்டனமே. 2 ஏற்றார்க் கிடாதா ரில்லையென்ப தின்றறிந்தேஞ் சீற்றத் திருமால் செருவேற்க - மாற்றிலாப் பொன்னிட்டான் சென்னிகொடிப் பன்னிட்டான் சேரமான் வென்னிட்டான் கொற்கையார் வேந்து. 3 குறிப்பு :- செய்யுள் 1. ஆடகக் குன்று - பொன்மலை, இமய மலை. திருமால் - திருமால் மாவலிவாணன். மாவலிவாணர் என்னும் வாணாதிராயர்கள், பாண்டியரின் கீழ்ப் படைத் தலைவராக இருந்தவர்கள். பாண்டியர் ஆற்றல் குறைந்த பிற்காலத்தில் இவர்கள் சுயேச்சை பெற்றுப் பாண்டிய - அரசர்களைத் தமக்குக் கீழ்ச் சிற்றரசராகும்படிச் செய்தார்கள். இவ்வாணாதிராயர்களில் ஒருவன் திருமால் மாவலிவாணன் என்பவன். செய்யுள் 2. மாவலிவாணனால் துரத்தப்பட்ட வீரமாறன் என்னும் பாண்டியன் வரலாறு தெரியவில்லை. செய்யுள் 3. மூன்றாம் வரியில் கொடிப் பன்னிட்டான் என்றிருப்பது கொடிப்பின்னிட்டான் என்றிருத்தல் வேண்டும். வென்னிட்டான் - முதுகுகாட்டித் தோற்றோடினான். ----- சண்டேசுவரர் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பெரும்பேர் கிராமம், இவ்வூர் தான்தோன்றீசுவரர் கோவில் முன் மண்டபத்துத் தெற்குச்சுவரில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : எண் 484. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No. 484. S.I.I. Vol. VII.) விளக்கம் : இது சண்டேசுவரர் ஓலைச் செய்யுள். தண்டீசுவரர் ஓலை என்றும் கூறப்பெறும். சண்டேசுவரர் அல்லது தண்டீசுவரர் என்பவர் சைவ அடியார்களில் ஒருவர். சிவன் கோவில்களில், எல்லா விசாரணைகளையும் செய்யும்படி சிவபெருமான் சண்டேசுவரரை ஏற்படுத்தியதாகப் புராண வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றுப்படி சிவன் கோவில் வரவு செலவு கணக்குகளைச் சண்டேசுவரர் பேரினால் எழுதுவது பண்டைக் காலத்து மரபு. இந்தச் செய்யுள் அந்த மரபைக் கூறுகிறது. “புகழ்மாது விளங்க ஐயமாது விரும்ப” என்று தொடங்குகிற ஒரு சாசனத்தின் கீழே இந்தச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது. சாசனச் செய்யுள் சண்டேசுவரன் ஓலை சாகரஞ்சூழ் வையகத்தீர் கண்டீச்சரன் கரும மாராய்க - பண்டேய் அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமைச் சென்னிமேற் கொள்க. குறிப்பு :- இந்தச் செய்யுள், பாடபேதங்களுடன் வேறு சாசனங்களிலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றை இங்கே குறிப்பிடுவது அமைவுடைத்து. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, உடையார் கோயில் திருக்களாவுடைய மகாதேவர் ஆலயத்தின் வடபுறச் சுவரில் உள்ள செய்யுள். (எண். 1041, தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு.) தண்டீச்சரன் ஓலை சாகரஞ்சூழ் வைய்யகத்து கண்டீச்சுரன் கருமம் ஆராய்மின் - பண்டே அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து. தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் தாலுகா, திருமாத்தூர், அபிராமேசுவரர் கோவில் முதல் பிரகாரம் தென்புறச் சுவரிலும் இதே செய்யுள் பாடபேதத்துடன் காணப்படுகிறது. (எண் 750, தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு.) தண்டேசுரன் ஓலை தாபரஞ்சூழ் வையகத்து கண்டீசன் கருமம் ஆராய்க - பண்டே அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து. வெண்ணெயூரில் உள்ள விசுவநாதர் கோவிலில், இதே செய்யுள் வேறு பாடபேதத்துடன் காணப்படுகிறது. அது, “செந்தமிழ்”, நான்காந் தொகுதியில், 252-ஆம் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாடபேத முள்ள முதல் இரண்டடி இது : “தண்டீச் சுரன் கோயிற் றாபரஞ்சூழ் வையகத்திற் கண்டீச் சுரங் கருப்ப மீறாகப் - பண்டே” புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, கள்ளம்பட்டி, மதீசுவரர் கோவிலின் முன்புள்ள ஒரு கல்லில் இச்செய்யுள் எழுதப்பட்டுள்ளது. அது, புதுக்கோட்டை சாசனங்கள் 989-ஆம் எண்ணில் அச்சிடப் பட்டிருக்கிறது. இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்துவிட்டன. ----- மகதைப் பெருமாள் இடம் : வடஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், முதல் பிரகாரம், வடக்குப் பக்கச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 97. தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு. (No. 97. S.I.I. Vol. VIII.) ‘செந்தமிழ்’ மூன்றாந் தொகுதி, பக்கம் : 427-432. விளக்கம் : மகதைப் பெருமாள் என்பவரின் வீரத்தையும் வெற்றியையும் புகழையும் கூறுகின்றன இந்தச் செய்யுட்கள். மகதை என்பது மகதநாடு. இதற்கு நடுநாடு என்னும் பெயரும் உண்டு. மகதைப் பெருமாள் வாண குலத்தைச் சேர்ந்தவன். ஆகையால், வாணகோ வரையன் என்றுங் கூறப்படுகிறான். மகதைப் பெருமாள், திருவண்ணா மலை கோவிலைப் பொன் வேய்ந்தான். ஆதலால், பொன் பரப்பினான் மகதைப் பெருமாள் என்றும் கூறப்படுகிறான். இவன் சோழ அரசனுக்குக் கீழ்டங்கியவன். சாசனச் செய்யுள் பொன் பரப்பினானான மகதைப் பெருமாள் கவி. தாரு முடியு முரசுந் தமக்குரிய பாரு முடன்பெறுவர் பார்வேந்தர் - வீரப் பெருமாள் மகதேசன் பேரெழுதித் தத்தம் திருமார்பி லாளோலை செய்து. 1 வன்மதுரை விட்டு வடகடலான் மால்வழுதி தென்மதுரை பட்டின்று தென்கடலான் - நன்னுதலாய் மல்லார்தோள் மாகதர்கோமான் முனிந்தால் மன்னவருக் கெல்லாங் கடலோ விடம். 2 ஆழந் தருகடல் வையத் தரசு செலுத்திய செங்கோ லரசெல்லாம் வேழந் தருகொடை வாண திவாகரன் விதிமுறை செய்வது மெய்கண்டீ ரீழந் திரையிடு மாணிக் கப்படி யடுமின் தென்னரீ ரிடீராகிற் சோழன் திரையிடும் யானைக் குங்களை யிடுமென் றிருமிது சொன்னோமே. 3 பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புரவித் தேரோன் திருவுத் திராடநாள் - பேருவமை குன்றெடா மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்ப ரின்றெடா னின்றெடா னென்று. 4 தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன்முடி மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு முருவத் திகிரி யுயர்நெடுந்தோர் வாணன் புருவக் கடைவளையப் போம். 5 தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா தூந்து மணிநீர்த் துறையாகா - வேந்துமுலைப் பூணாகா மாறி விழவாகா பொன்னெடுந்தேர் வாணாகா வென்னாதார் மண். 6 பொருப்பிற் கரிய புகர்முக வெங்கூற்றின் மருப்பிற் றுளைப்புண்ண வாரா - திருப்பில் வடியுளவாஞ் செவ்வேல் மகதையர் கோமா னடியுளவாம் வேந்தற் கரண். 7 அரிந்த கனைகழற்காற் போர்வளவர் கோனை வரிந்த திறைக்காக வாணா - தெரிந்தானை வாங்கினா யென்று வழுதியர்கள் தாங்கலங்கி யேங்கினார் பாரிழந்தோ மென்று. 8 முருகுந்து காஞ்சியும் வஞ்சியும் கொண்ட மொய்தார் மகதன் திருகுங் கனைகழல் வீக்கிய நாள்சீ பராந்தகனிற் பெருகுங் குருதிப் புனல்வாய் தொறும் பிலவாய் மடுத்துப் பருகுங் கழுதுடன் செம்மைகொண் டாற்கும் பனிக்கடலே. 9 மட்டியன் றேறிய தார்புனை வாண புரந்தரனீ` வெட்டியன் றேகொன்ற வெண் மணிப்பொடி யுதிரவெள்ளத் தொட்டியென் றேனுந் துலைவதுண்டே துலையாதபந்தி கட்டியன் றேதெவ்வர் பாய் பரித்தானை கலக்குவதே. 10 கொங்குங் கலிங்கமுங் கொண்ட கண்டா கொடித் தேருதியர் தங்கும் பதிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல் பொங்குஞ் சினப்படை வங்கார 1தொங்கன் புரண்டுவீழச் செங்குன்ற மின்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே. 11 வாரொன்று முலையாய்மற் றவரொன்றும் பழுதுரையார் மகதை வேந்தன் போரொன்று புரியாமுன் பெரியகுறிச் சியில்லெழுந்த புகையே கண்டாய் காரன்று கனலெரியை மின்னென்று தளரேல் காரைக் காட்டி லூரொன்று மதிள்விழுந்த பேரொலியும் உருமதிர்வ தொக்கும் காணே. 12 முன்பொரு படைக்டலை விட்டரச ரானார் மூலதன மும்பரியு முறைமுறை பரிவாரித் தென்பகை யடக்கியபின் வாணகுல தீபன் செய்ததனி யாண்மைவட திக்கி லறிகிற்பீர் 2பண்டொரு பொருப்பரண் விடாமலைய மானைப் போரயிலில் பொருத போதொரு பெரும்போர் வன்பறை தவிர்த்தொரு குதிரைவலி யாலவனை வாட்டுறை தவிர்த்ததொரு கோலின் வலியாலே. 13 மண்ணாள் திகிரிக்கை வாணன் வடுகெறிந்த எண்ணா யிரஞ்சூழ்ந்த எண்டிசையும் - புண்வடிந்த நீரே நீர்காக நிழலே நிழல்நெடும்பேய்த் தேரேதேர் செஞ்சேறே சேறு. 14 எண்மேல் மிகும்பரித் தேர்மக தேசன் இகல் விசையைப் பெண்மேல் விரும்பிவெம் போர்செய்த நாள்பின் குடாவடுகர் விண்மேல் நடந்து வடுகென்னு நாமம் விலக்குண்டபின் மண்மேல் நடந்தது தேசிமுன் னான் வடுகொன்றுமே. 15 சூழும் பிணவனைமேல் தோய்கழுகின் பந்தற்கீழ் வீழுங் கழுதினங்கள் 3மெய்காப்ப - வாழுந்தன் தொன்னகரே போல்வடுகர் துஞ்சத் துயிற்றியதே மன்னவர்கோன் மகாதர்கோன் வாள். 16 மடலளவு நிறைந்தொழுகு மதுமலர்த்தார் மகதேசன் வைய்யங் காக்கும் அடலளவி லணிநெடுந்தோர் ஆயு . . . . . . ரமனை வணங்கா வரச ரியாவர் கடலளவு நடந்ததவன் கணை குரக்கு மவன்றன் கதிர்வேல் மன்ன ருடலளவு நடந்ததுமற் றுலகளவு நடந்ததவன் ஒருசெங் கோலே. 17 தெற்கோடி மாமறுகில் தெண்மணலைச் சேயிழையா ரமரற்கு மருந்தாக்க வல்லவா - யாற்கு முயிராய் செங்கோ லுயர்நெடுந்தோர் வாணன் னயிரா வதத்தி னடி. 18 சொல்லி விடுசெரு மீனவர் சூழு முரிமைகொ டாழ்கட லெல்லி விடுபட வெறுவ ரேனு மியமபுரி யேறுவர் கொல்லி விடுமுத காதிபர் கூளி கருதில ரூர்புக வல்லி விடும் அயிராவதம் வாணன் வரவிடு நாளையே. 19 வேளை நெடுங்கல்லும் வெட்டும் விரற்குகையு மூளை தெரிக்கு முடித்தலையு - நாளை மதிவா ணுதல்மடவாய் காணலாம் வாண னதிவா ரணன்தொடர்விட் டால். 20 குறிப்பு :- 3-ஆம் செய்யுள். மனிதரை யானையால் மிதித்துக் கொல்லும் வழக்கம் அக்காலத்திலிருந்ததை இச்செய்யுள் கூறுகிறது. 4-ஆம் செய்யுள். அரசர் தமது பிறந்த நாளில் போர் செய்வது மரபன்று. பொன்பரப்பினானான மகதைப் பெருமாளும், தான் பிறந்த திருவுத்திராட நாளில் போர் செய்வதில்லை என்பது கருத்து. 15-ஆம் செய்யுள். இரண்டாம் அடியில், “குடாவடுகர்” என்றிருப்பது “கொடா வடுகர்” என்றிருக்க வேண்டும். ஆனால், சாசனங்களிலெல்லாம் இச்சொல் “குடு” என்றே எழுதப்படுகிறது. குடு என்னும் பழைய உருவம் இக்காலத்தில் “கொடு” என்று திரிந்துள்ளது போலும். பொன்பரப்பினானான மகதைப் பெருமாளின் சிறப்புக்களைக் கூறுகிற இந்தச் செய்யுட்களில் சில, திருவண்ணாமலை தாலுகா, செங்கமா கிராமத்தில் உள்ள ரிஷபேசுவரர் கோவில் தென்புறச் சுவரிலும் எழுதப்பட்டுள்ளன. அவை, தென் இந்திய சாசனங்கள், ஏழாந் தொகுதி, 123-ஆம் நெம்பரில் அச்சிடப்பெற்றுள்ளன. மேலேயுள்ள செய்யுள்களில் 9, 10, 12, 11, 13, 16, 19 எண்ணுள்ள செய்யுள்கள் அந்தச் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆகையால் அவற்றைத் தனியே இங்குக் காட்டவில்லை. ----- மகதைப் பெருமாள் இடம் : வடஆர்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், முதல் பிரகாரம், வடக்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : ‘செந்தமிழ்’ மூன்றாந் தொகுதி, பக்கம் 432. விளக்கம் : இவையும், பொன்பரப்பினானான மகதைப் பெருமாளைப் பற்றிய கவிகள். சாசனச் செய்யுள் ஸ்வஸ்திஸ்ரீ பொன்பரப்பினானான மகதைப் பெருமாள் கவி. நாமான் அரவிந்தமான் விந்தமான் முடி நாகர்சென்னிப் பூமான் விரும்பும் புகழ்மக தேசற்குப் போர்வழுதி வாமா னிறையிட்ட வன்னாள் துடங்கிஅவ் வானவர்தம் கோமான் றனதென றிரான் அமராபதிக் குஞ்சரமே. 1 மேருவின்மேல் வென்று கயல்பொறித்த வார்த்தையிலும் வாரிபட வேலெறிந்த வார்த்தையிலும் - கார்விலங்கு முன்னிட்ட வார்த்தையிலுந் தென்னவர் மாகதற்குப் பின்னிட்ட வார்த்தை பெரிது. 2 குறிப்பு :- மகதைப் பெருமாளின் யானைணைப் புகழ்கிறது முதற் செய்யுள். பாண்டியன், மகதைப் பெருமாளிடம் தோல்வி யடைந்ததைக் கூறுகிறது இரண்டாவது செய்யுள். ----- ஆட்கொண்டான் இடம் : வடஆர்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, செங்கமா. இவ்வூர் ரிஷபேசுவரர் கோவில், தென்ச் சுவரில் உள்ள செய்யுட்கள். பதிப்பு : எண் 121. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஆறு. (No. 121. S.I.I. Vol. VII.) விளக்கம் : கண்ணணனூர் ஆட்கொண்டான் என்பவர், முருகன் திருவுருவத்தை இக்கோவிலில் அமைந்ததைக் கூறுகின்றன இச் செய்யுள். சாசனச் செய்யுள் திருவளரும் புயன்தென் கண்ணை ஆட்கொண்ட நாயகனிற் பொருள்வளரும் புவுயிற் பொலிவெய்திப் பொருந்திடவே யுருவளர் தோகையின் மேல்வந் துதித்தெழு ஞாயிறுபோற் கருவளர் கந்தனைக் கற்பித் தடியிணை கண்டனனே. 1 பெரியுடையார் திருமேனி கல்யாணி திருமேனியாக நீடுலகில் வாழ நிறைந்து திருவிருக்க நாடிநெதி எய்தி நலந்திகழ - கோடுவளர் கண்ணனூ ராட்கொண்டான் கந்தனைக் கற்பித்தா னண்ணல் சிறுவேளன் அறிந்து. 2 குறிப்பு:- செய்யுள் 1. கண்ணை - கண்ணனூர். செய்யுள் 2. நெதி - நிதி, செல்வம். கோப்பெருஞ் சிங்கனும் ஆட்கொண்ட தேவனும் இடம் : வடஆர்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோவில், முதல் பிரகாரம், மேற்குப் பக்கத்துச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 69. தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு. (No. 69. S.I.I. Vol. VIII.) விளக்கம் : கூடலாளகப் பிறந்தான் கோப்பெருஞ் சிங்கனும் அவன் மகன் ஆட்கொண்ட தேவனும் இந்தக் கோவிலுக்குச் செய்த தான தருமங்களைச் சிறப்பித்துக் கூறுகிறது இந்தச் செய்யுள். சாசனச்செய்யுள் கார்வளர் மேனிக் கமலக் கண்ணன் பார்வள ருந்திப் பல்லவர் பெருமான் சகல புவனச் சக்கர வர்த்தி கூட லவனி யாளப் பிறந்தான் 5 கோப்பெருஞ் சிங்கன் குரைகழற் காடவன் சொன்மறை யாக்கன் சுடர்வா ளெடுத்துப் பின்வர நடந்து பிலந்திறந் தருளிய காவலர் தம்பிரான் கண்ணா ரமுத ரருண மால்வரைப் பெருமாள் தமக்குச் 10 செய்த திருப்பணி தெரிந்தெடுத்துரைப்பிற் காதிற் கம்பியுங் கதிர்மணி மகுடமும் செங்கதி ரெரிக்கு மங்க சுத்தமும் பாகு வலையமும் பைம்பொற் பலதொழிற் கீழிடும் 15 பேதை பாதமும் பிறங்கிருட் கண்டமு மிளஞா யிற்றி னெழினிறந் தோன்ற வளர்மா ணிக்க வாளிவெயி லரும்பிய விரிகட லவனி யாளப் பிறந்தான் திருவா சிகையுஞ் சிங்கா சனமும் 20 கற்பக விருக்கமு முத்தின் பந்தலு மோடரி மைக்க ணுமையிசை பாடி ஆடிய வதிருங் கழற்பெரு மாளுக் கினமா ணிக்க மிலங்கச் செய்த பரதம் வல்ல பெருமா ளென்னுந் 25 திருவா சிகையுஞ் சிறந்த செங்கதி ரொளி விளங்கு மாணிக்கமுந் துளங்கும் வயிரமுங் கட்டிய பொலன்தருக் கூட மஞ்சனமுங் கண்ணா ரமுதர்காமக் கோட்டத் துண்ணா முலையா முமையவள் தனக்குப் 30 பருமணி நிரைத்த திருவுடை யாடையும் வென்றிவேல் கொண்டு குன்றெறி முருகன் செந்நிற மேனியுந் தேவியர் மேனியு மைஞ்ஞிஞிறத் தோகை வண்ணமு மடையப் பொன்னிற மாக்கிய பொற்பணி பலவு 35 மல்லை காவல னிச்சங்க மல்லன் பல்லவர் வேந்தன் பரதம் வல்லன் கூட லவனி யாளப் பிறந்தான் செய்தன விப்பணி யடங்கவு மிவன்சிறந் தூழி காலம் வாழி இவன்மகன் 40 வாடா வாகைக் காடவ குமாரன் வான்புகழ் மல்லையு மயிலையுங் காஞ்சியுந் தண்டக நாடுந் தண்புனற் பாலியும் பெண்ணையுங் கோவலும் மெவுகையு முடையவ னெண்ணருஞ் சிறப்பில் யாவரு மதித்த 45 விருதரில் வீரன் விறல்வீ ராசனி கரிய நாதன் காதற் குமரன் குடதிசைக் கருநடர் தென்புலங் குறுகவும் வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந் தழியவும் போர்பல கடந்து பொருந்தா மன்னவ 50 ராரெயிற் சேர்ந்தூர் மலையர ணழித்து நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்து மேம்படத் தங்கோன் வாகையுங் குரங்கும் விசையமுந் தீட்டிய வடல்புனை நெடுவே லாட்கொண்ட தேவன் 55 கடகரி முனைமுகங் கடந்த காங்கயன் கண்ணா ரமுதர் கனங்குழை யாகத் தண்ணா மலையற் கன்புகெழு நெஞ்சில் விருப்புடன் செய்த திருப்பணிக் கோவை யாவையு மெடுத்துப் பாவல ருரைப்பில் 60 நின்ற தொல்புகழ் நிலமுழு தளித்த வென்றி புனைதோ ளாட்கொண்ட தேவன் வேணா வுடையா னென்னும் பெயரா னீணாள் வாழ நிலைபெறச் செய்த பெருமா ளமருந் திருமண் டபமும் 65 மருக்கமழ் கனகத் திருப்பளி யறையுந் திருவமு தேற்றும் பெருமண் டபமும் விரிவுடன் செய்திருக் காக்கள்ளியும் பெருவிற லவனி யாளப் பிறந்தான் திருமண்டபமுஞ் செழுமலர் தொடுத்த 70 கண்ணி வாடாது கண்ணிமை யாது மண்மிசை நடவா வானோர் வலம்வர வெண்மதி நிலவில் விளங்குசுட ரெரிக்கும் படித்தள மென்னவும் படிமூன் றுக்கு மடித்தள மென்னவு மடையா மன்னவர் 75 மலைத்தளம் பறித்தம் மன்னவர் சுமந்தச் சிலைத்தளங் கொண்டு செய்தசிலைத் தளமு மெல்லையி லுகந்தொறுஞ் செல்வந் தொலையாது வரும்படி வகுத்த நிச்சங்க மல்லன் பெரும்பண் டாரமும் பிறைமுடிப் பெருமா 80 ளின்னாள் வந்திருந் தமைதோன் றவு முன்னா ளமைந்த முறைமை காணவும் வாட்டடங் கண்ணியர் மனைத்தொறும் பலிகொளக் காட்டிய வடிவிற் கங்காள வேடமும் வான்முகத் தமரர் வணங்கச் செய்த 85 நான்முகத் தெரு நாயகி தனக்கு மப்படி வகுத்த வணிநெடுந் தெருவுஞ் செப்பிய கதிரவர் திசைவலம் போதும் சோதி நன்மணி வீதிகள் இலங்கக் கலைபயில் தவத்தோர் நிலைபெற விருக்க 90 மலைவகுத் தனைய காங்கயன் மடமுங் கானிற் பயிலுங் கடவுளர் தமக்கு வேனிற் றென்றல் வியன்பெருங் கவரி யிருமருங் கிரட்டவு மிமையவர் துதிக்கவு மருமணம் பெருகிய வாள்வல பெருமாள் 95 திருநெடுந் தோப்புந் தீத்த மாகிய வமுத நன்னதி யனைத்திலுங் தூய தமி'99ணாடு காத்த பெருமாள் தடாகமும் வண்டிசை பாடல் மதுமலர் வாசங் கொண்ட காடவ குமாரன் தோப்புங் 100 கவின் வெம்பரிக் கதிர்வழி தடுத்த வவனி யாளப் பிறந்தான் தோப்பும் தலநிகழ் சேனைத் தலைவன் தோப்பும் வெம்மை நாளில் வெஞ்சுர னடைந்தவர் தம்மனங் குளிரத் தண்டலை நிழற்செயு 105 மம்மை மடமு மைய்ய னேரியும் வெற்பகந் துளைத்தெனக் கற்புடை யராகி யடனெடும் பிலத்தி லமுதுவந் தெழுந்த வடிவாள் வல்ல பெருமாள் கிணறு மளிமுரல் கமலமு மாம்பலு மலர்ந்து 110 குளிர்புனற் காடவ குமாரன் தடாகமுங் குன்று கரையன்ன கோடுயர் நெடுங்கரை வென்று மலைகொண்ட பெருமா ளேரியுஞ் சுரர்தரு நெருங்கிய சோலையு மொவ்வாப் பரதம் வல்ல பெருமாள் தோப்பும் 115 வளஞிமி றார்க்கு மடலிளம் பாளை விரைகமழ் வீர ராயன் தோப்புந் தவநெறிச் சுந்தரர் தம்பெருங் குலத்திற் த . . . . ற்குச் செய்து குடுத்த கடலென நிறைந்து கார்வயல் விளைக்கும் 120 விச் . . சை நிச்சங்க மல்ல னேரியுங் காங்கயன் தடாகமுங் காங்கயன் மடமும் பூங்கமழ் சோலையும் பொற்புடன் விளங்க யில்வகை யாவையுஞ் செய்தன னதனாற் பாவை பாகன் சேவடித் தாமரை 125 யணிந்த சென்னியர் பார்க்குங் கண்ணின ரணிந்த நீற்றின ராகம நன்நெறி படிந்த நெஞ்சினார் பரசமையங் கடனை கடிந்த வாணையர் கண்ணுதற் பெருமா னாதி நாத நாய்வேடங் கொண்டு 130 பாய்புனற் கங்கை யாயிர முகங்கொண்ட டார்த்தெழு மன்னா ளேற்றுக் கொண்ட திருந்திய பிறைமுடி யருந்தவச் சடாதர ராதியி லஞ்செழுந் தோதிய தொண்டரென் றெண்ணிய நாற்பத் தெண்ணா யிரவருந் 135 திருவரு ளிவன்மேல் வைத்தன ரிருநிலந் தன்னி லினிதுவாழ் கெனவே. குறிப்பு :- 51 - ஆம் வரியில், “நல்லிசைக் கடாம்புனை நன்னன்” என்று கூறப்பட்டுள்ளது. இதில், நல்லிசைக்கடாம் என்பது சங்க காலத்து இலக்யிமாகிய பத்துப்பாட்டில் மலைபடுகடாம் என்னும் பாட்டாகும். மலைபடுகடாம் பாடியவர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்பவர். இப்பாடலைப் பெற்றவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் என்னும் சிற்றரசன். வரி 43. ‘மெவுகையு’ என்பது ‘உதகையு’ என்றிருத்தல் வேண்டும். 129 வரி முதல் 132 வரி வரையில், சிவபெருமான் நாய் வேடங் கொண்டு கங்கையை ஏற்ற செய்தி கூறப்படுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கங்காதரமூர்த்தி உருவத்தில், சிவபெருமான் கங்கையைத் தாங்குகிற உருவம் இருப்பதைக் காண்கிறோம். பிற்காலத்துக் கங்காதரமூர்த்தி சிற்ப உருவத்தில் நாய் உருவம் காணப்பட வில்லை. இந்தச் சாசனத்தில் நாயின் உருவம் குறிப்பிடப் பட்டிருப்பது கருதத்தக்கது. காடவராயர் இடம் : வடஆர்க்காடு மாவட்டம், செய்யாறு தாலுகா, அத்தி கிராமம் இவ்வூர் அகத்தீசுவரர் கோவில், திருவுண்ணாழிகைத் தென்புறச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : எண் 125. தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு. (No. 125. S.I.I. Vol. XII.) விளக்கம் : தொண்டைமண்டலங் கொண்ட பல்லவ வாண்டா ரான காடவராயரின் சிறப்பைக் கூறுகின்றன இச்செய்யுட்கள். பல்லவ அரசர்களுக்குக் காடவராயர் என்பது பெயர் சாசனச் செய்யுள் ஸ்வஸ்திஸ்ரீ. கூடல் ஆளப் பிறந்தாரான காடவராயர் மகனார் தொண்டைமண்டலங் கொண்ட பல்லவாண்டாரான காடவராயர் கல்வெட்டு. தங்கோ நகர்பெறத் தம்புவி தாம்பெறத் தான்வணங்கிய செங்கோல் வளைக்கை யாரிவை ரோடும் அடியுங் கையும் பங்கேருக மன்ன பல்லவன் காடவன் பார்முழுதா னெங்கோ னனுமதந் தோளிலிடா மன்ன ரெம்மன்னரே. 1 பொருதிக் கிலுஞ்சென்று போர்வென்ற பல்லவன் காடவர் கோன் கருதிப் பொரச்சென்று சேவூரினிற் றிருக்கண் சிவக்கப் பருதிக்கு மேலுமுயர் பிணக்குன்றிற் பரந்திழிந்த குருதிப்புனல் தொண்டை நன்னாடடங்கலுங் கொண்டதுவே. 2 கூராழி யேத்திய பல்லவற்குக் கூடல் மன்னவற்குப் பாராழி சூழ்ந்திசை பரிக்குப் பந்தி பண்டடைந்த நீராழி வேழங்க ணீராடு மாமடு நின்றகொற்றப் போராழி வெற்பிவன் செங்கோல் நடக்கும் பெருவழியே. 3 தொழுதிய லாமன்னர் தொண்டைத் திருநாடு கொண்டவரூர் கழுதிய லக்கண்ட காடவன் பல்லவன் காசினிமேற் பழுதிய லாத்தனிச் செங்கோல் நடாத்திப் பராக்ரமஞ்சென் றெழுதிய தூணங்க ளெண்டிசை சூழ்ந்த வெழுகிரியே. 4 கைம்மலை வெள்ளக் கடற்படைப் பல்லவன் காடவர்தஞ் செம்மலை வந்து பணியா வடமன்னர் சேனைவிட்டுத் தம்மலைவிட்டுப் புறமலை வேலித் தலத்துளஞ்சா தெம்மலை யெச்சுரத்துப் புகுவார் புக்கிருப்பதற்கே. 5 வண்டற் புனற்பெண்ணை நாடுடையான் வடவேங் கடவெற்பன் தொண்டைத் திருநாடு தோள்வலியாற் கொண்ட தொண்டைமன்னன் கண்டற் கடற்கச்சிப் பல்லவன் காடவன் காரிருளிற் பண்டைப் பிரமவர்க் கன்பிலாப் பொற்பதாம் புயனே. 6 குறிப்பு:- இச்செய்யுட்களில் மூன்றாவதான “கூராழியேந்திய” என்னும் செய்யுள், வட ஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, ரங்கம்பேட்டைக்கு அருகில் உள்ள மோரி ஜொனை என்னும் இடத்தில் ஒரு பாறைமேல் எழுதப்பட்டுள்ளது (தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு, 127-ஆம் எண் சாசனம்). அந்தச் சாசனச் செய்யுளின் மேலே சிதைந்துபோன சாசன வாசகம் எழுதப் பட்டிருக்கிறது. அதன் வாசகம் இது: “கூடல் ஆளப்பிறந்தார் மகனார் தொண்டை மண்டலங் கொண்ட பல்லவாண்டாரான வீரர் வீரன் காடவராயர் ... ... ... ...” 3-ஆம் செய்யுள். கூடல் மன்னவன் என்பது மதுரை நகரின் மன்னவன் என்பது பொருள் அன்று. இந்தக் கூடல், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் ஆகும். 4-ஆம் செய்யுள். கழுது - பேய். 5-ஆம் செய்யுள். கைம்மலை வெள்ளக் கடற்படைப் பல்லவன் என்பது, யானைப் படையையும் கடற்படையையும் உடையவன் என்பது. ----- விடுகாதழகிய பெருமாள் இடம் : வடஆர்காடு மாவட்டம், போளூருக்கு அடுத்த திருமலை. இவ்வூர் மலைமேலுள்ள சிகாநாதசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள குகைவாயிலின் வெளிப்புறச் சுவரில் உள்ளச் செய்யுள். பதிப்பு : எண் 75. தென் இந்திய சாசனங்கள், முதல் தொகுதி (No. 75. S.I.I. Vol. I.) விளக்கம் : சேர அரசர் குலத்தவனாகிய எழினி என்பவன், முன் ஒருகாலத்தில் இந்த மலையின்மேலே அமைத்த இயக்கன் இயக்கி உருவங்கள் பிற்காலத்தில் பழுதடைந்து போக, அக்குலத்தில் தோன்றிய அதிகமான் விடுகாதழகிய பெருமாள் என்னும் அரசன் அவ்வுருவங்களைப் பழுது தீர்த்துப் புதுப்பித்ததோடு வெண்கல மணியொன்றைத் தானம் செய்ததையும், கடப்பேரியிலிருந்து ஒரு கால்வாயை வெட்டியமைத்ததையும் இச்செய்யுள் கூறுகிறது. இந்தச் செய்யுளுக்கு மேலே ஒரு வடமொழிச் செய்யுளும் எழுதப் பட்டிருக்கிறது. சாசனச் செய்யுள் சேரவம்சத்து அதிகைமான் எழினி செய்த தர்ம யக்ஷரையும் யக்ஷியாரையும் எழுந்தருளுவித்து எறிமணியும் இட்டுக் கடப்பேரிக் காலுங் கண்டு குடுத்தான். வஞ்சியர் குலபதி எழினி வகுத்த வியக்க ரியக்கியரோ டெஞ்சிய வழிவு திருத்தியிவ் வெண்குண விறைதிரு மலைவைத்தான் அஞ்சிதன் வழிவருமவன் வழிமுதலி அதிகன் வகன் நூல் விஞ்ஞையர் தலபுனை தகடையர் காவலன் விடுகாதழகிய பெருமாளேய். குறிப்பு:- இயக்கர் இயக்கியர் - யக்ஷன், யக்ஷி. இவர்கள் அருகக் கடவுளின் பரிவாரத் தெய்வங்கள். எண்குண இறை - எட்டுக் குணங்களையுடைய அருகக் கடவுள். வகன் - குபேரன். தகடை - தகடூர். இச்செய்யுளின் ஏகார ஈறு அந்தக் காலத்து வழக்கப்படி யகரமெய் பெற்றுள்ளது. இவ்வரசர்கள், கடை எழு வள்ளல்களில் ஒருவனாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் மரபில் வந்தவர்கள் எனத் தெரிகின்றனர். குணவீர முனிவர் இடம் : வடஆர்க்காடு மாவட்டம், போளூருக்கு அருகில் உள்ள திருமலை என்னும் ஊர். இவ்வூர் ஏரியின் மதகில் உள்ளது இந்தச் சாசனம். பதிப்பு : எண் 66. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஒன்று. (No. 66. S.I.I. Vol. I.) விளக்கம் : இவ்வூர் வைகைத் திருமலை என்றும், வைகாவூர் திருமலை என்றும் கூறப்படும். இது பேர்போன ஜைனத் திருப்பதி. இவ்வூர் குந்தவை ஜினாலயம் பேர்போனது. குணவீரமாமுனிவர் என்பவர், கணிசேகர மருபொற் சூரியன் என்பவர் பெயரினால், நிலங்களுக்கு நீர் பாய இவ்வூர் ஏரியில் கலிங்கு கட்டியதை இந்தச் செய்யுள் கூறுகிறது. இந்தச் செய்யுளுக்கு மேலே, இராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்தி கீழ்க்கண்டபடி எழுதப் பட்டிருக்கிறது :- ‘ஸ்வஸ்திஸ்ரீ. திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வெங்கை நாடுங் கங்காபாடியு நுளம்பபாடியுந் தடிகைபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர வீழமண்டலமும் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் எல்லா யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவிராஜ இராஜசேகரி பன்மரான இராஜராஜ தேவர்க்கு யாண்டு 21 - ஆவது.” சாசனச் செய்யுள் அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன் அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவ தென்றுங் கலைபுரியு மதிநிபுணன் வெண்கிழான் கணிச் செக் கர மருபொற் சூரியன்றன் நாமத்தால் வாம நிலைநிற்குங் கலிஞ்சிட்டு நிமிர்வைகை மலைக்கு நீடூழி இருமங்கும் நெல்விளையக் கண்டோன் கொலைபுரியும் படைஅரைசர் கொண்டாடும் பாதன் குணவீர மாமுனிவன் குளிர்வைக்கக் கோவேய். குறிப்பு :- பொன்னி ஆறு - காவேரி ஆறு. கலிஞ்சு - கலிங்கு. கோப்பெருஞ் சிங்கன் இடம் : வடஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி தாலுகா, வாயலூர். இவ்வூர் ஏரி கரைமேல் உள்ள கல்லில் எழுதப்பட்டுள்ள செய்யுட்கள். இந்த வாயலூர், செங்கற்பட்டிலுள்ள வாயலூர் அன்று. இது தெள்ளாற்றிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி இருபத்து மூன்று பக்கம் 174 -182. (Epigraphia Indica Vol. XXIII. page 174 - 182.) விளக்கம் : கோப்பெருஞ் சிங்கன் என்னும் பல்லவ அரசன். தெள்ளாறு என்னும் ஊரில் சோழ அரசனுடன் போர் செய்து அவனை வென்றுச் சிறைபிடித்து வைத்ததையும், அவனுடைய வீரத்தையும் புகழ்ந்து பேசுகின்றன இந்தச் செய்யுட்கள். இந்தத் தெள்ளாற்றுப் போர், மூன்றாம் நந்தி வர்மன் என்னும் பல்லவ அரசன் பாண்டியனுடன் செய்த தெள்ளாற்றுப் போர் அன்று. இது பிற்காலத்தில் நடந்த போர். சாசனச் செய்யுள் ஸ்வஸ்திஸ்ரீ. சகலபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ கோப்பெருஞ் சிங்கன் சோழனைத் தெள்ளாற்றில் வென்று பரிச்சின்ன முங் கொண்டு சோழனைச் சிறையிட்டுவைத்து சோணாடு கொண்ட அழகிய சீயன். பொன்னி நாடனு முரிமையும் அமைச்சரு மிருப்பதுன் சிறைக்கோட்டம் பொருப் பிரண்டென வளர்ந்த தோள் வலியினாற் கொண்டு சோணாடு கன்னி காவிரி பகீரதி நின்பிரியா தெண்டுறை வாவி காவல் மன்னவர் திரையுட னுணங்குவ துன்பெருந் திருவாசல் வென்னிடாத போர்க் கன்னடர் வென்னிடப் பொருததுன் பெருஞ்சேனை விளங்கு செம்பொனி னம்பலக் கூத்துநீ விரும்பிய தேவாரம் பின்னி காவல அவனி நாராயண பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவகோப் பெருஞ்சிங்க நின் பெருமை யார் புகழ்வாரேய். 1 திரையிட் டிருமின்கள் தெவ்வேந்தர் செம்பொன் திரையிடாப் பூம்புகார்ச் சோழன் - சிறைகிடந்த கோட்டந்தனை நினைமின் கோப்பெருஞ்சிங்கன் கமல நாட்டங் கடைசிவந்த நாள். 2 மீளிவன் கொண்ட விடைவேந்தர் மார்பினும் தோளினுந் தீட்டிய தொண்டை மன்னவர் வாளில் வென்றிடு சிறைவளவன் தூங்கிய நாளினும் பெரியதின் னாளெனப் புலம்புமே. 3 அறைகடலி னிசையுடனே யண்டர் வேயினாம் பல்லிசை செவிகவர அந்திமலை நிறைமடியி னிலவென்னு நெருப்புப் பட்டால் நீரிலை நின்றாற்றுவளோ நிருபதுங்கா பிறைபொருத கனமகர கிம்புரிவன் கோட்டுப் பெருங்களிற்றுச் சோழனையும் மமைச்சரையும் பிடித்துச் சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீயா திரிபுவனத் திராசாக்கள் தம்பிரானே. 4 ஒருநாளும் விடியாத நெடிய கங்கு லூழியென நீண்டுவர உலகிற் புன்கண் மருண்மாலை யிதுமுன்னே வந்ததென்றால் மடந்தையிவ ளாற்றுவளோ மல்லைவேந்தே பொருமாலை முடியரசர் கன்னிமாதர் போற்றிசெயும் புவனமுழு துடையார் தாமுந் திருமாதும் புணர்புயத்து மிண்டன்சீய திரிபுவனத் திராசாக்கள் தம்பிரானே. 5 இது கோச் சீயன் ஆணை. குறிப்பு :- செய்யுள் 1. அவனிநாராயணன் - இது கோப் பெருஞ் சிங்கனுடைய சிறப்புப் பெயர். இவனுடைய முன்னோனான தெள்ளாற்றெறிந்த நந்திவர்மனுக்கும் இந்தச் சிறப்புப் பெயர் உண்டு. பின்னி - பெண்ணையாறு ; தென்பெண்ணையாறு. இச்செய்யுளின் ஈற்றுச்சொல், யகரமெய் பெற்றுப் புகழ்வாரேய் என்றிருக்கிறது. இது அக்காலத்து முறை. செய்யுள் 2. தெவ்வேந்திர் - பகையரசர்களே. செய்யுள் 3. கோப்பெருஞ் சிங்கனுடைய கொடி விடைக் கொடி. அதாவது ஏற்றுக்கொடி. அவனுடைய முத்திரையும் ஏறு (எருது). இவனால் வெல்லப்பட்ட மன்னருடைய மார்பிலும் தோளிலும் இவனுடைய முத்திரையாகிய எருதின் உருவத்தை (பச்சைக்குத்தி) எழுதினான். இது, அவர்களை அவமதிப்பதாகும். இவ்வாறு அவமதிக்கப்பட்ட அரசர்கள், இவனால் சிறைபிடிக்கப்பட்டுச் சிறைச் சாலையில் இருந்து இறந்த சோழ அரசன் பட்ட துன்பத்தை விடப் பெரிய துன்பமாகக் கருதினார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து. போரில் வெற்றிப் பெற்ற அரசர், தமது முத்திரையைத் தோற்ற அரசரின் மார்பிலும் தோளிலும் பொறிப்பது அக்காலத்து வழக்கம். செய்யுள் 4. திரிபுவனத் திராசக்கள் தம்பிரான் - சோழ அரசர்களின் தலைவன். சோழ அரசர்கள் தம்மைத் திரிபுவன சக்கரவர்த்திகள் என்று கூறிக்கொள்வது வழக்கம். கோப்பெருஞ் சிங்கன், சோழனைப் போரில் வென்று அவனைச் சிறைவைத்துச் சோழ நாட்டை யரசாண்ட படியினாலே, திரிபுவனத் திராசாக்கள் தம்பிரான் என்று புகழப்படுகிறான். செய்யுள் 5. மல்லை - மாமல்லபுரம். இப்போது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. இது பண்டைக் காலத்தில் பல்லவ அரசர்களின் துறைமுகப்பட்டினம். சீயன் - சிங்கன்; அதாவது கோப்பெருஞ் சிங்கன். கோப்பெருஞ் சிங்கன் என்னும் பெயருடைய பல்லவ அரசர்கள் இருவர் இருந்தனர். அவ்விருவரில் இந்தக் கோப்பெருஞ் சிங்கன் முதலாமவன். இவன், ஏறத்தாழ கி.பி. 1232-இல் சிம்மாசனம் ஏறினான் என்பர். தெள்ளாற்றுப் போரிலே இவனால் சிறைபிடிக்கப்பட்ட சோழன், கி.பி. 1216-இல் முடிசூடிக்கொண்ட மூன்றாம் இராஜாஜன் என்பர். ----- வீரவீர ஜினாலயம் இடம் : வடஆர்காடு மாவட்டம், ஆரணி தாலுகா, பூண்டி. இவ்வூர் பொன்னிநாதர் ஆலயம் என்னும் ஜைனக் கோவிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : எண் 62. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No. 62. S.I.I. Vol. VII.) விளக்கம் : இந்த அழகான அகவற்பா, ஒரு அரசன் வீரவீர ஜினாலயத்துக்குத் தானதருமங்கள் செய்ததைக் கூறுகிறது. வீரவீர ஜினாலயம் என்பது பொன்னிநாதர் கோவில். இந்தச் செய்யுளின் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. சாசனச் செய்யுள் சிறப்பருளிக் கொற்றவன் மகிழ்ந்த கொள்கைய னாகி மெய்த்தவத் தீர்க்கு வேண்டுவ தியாதென அத்தவ னுரைப்போ னின்னகன்றலை ஞாலத்துச் 5 செயங்கொண்ட சோழ மண்டலந் தன்னிற் பயன்படு சோலைப் பல்குன்றக் கோட்டத்து வேண்டியது சுரக்கு மெய்யூர் நாட்டுப் பூண்டி யென்பது காண்டகு திருநகர் சீயன் சம்புமன் திரு . . ற மாப்பொய் 10 காலத்துப் புரத்துடன் வந்தது அறநெறி வளர வருணமக் கென்ன மறவலி தானை மன்னர் மன்னன் சினவரன் றனக்குச் சொம்பொற் கோயி னிவன்தக வருளிநின்று நீடு விளங்க 15 வீர வீர சினாலய மென்றுதன் பெயர்பொறித் தமைத்துப் பெருஞ்சிறப் பியற்றி முனிகள் பூண்டியென் றினிதினி னடப்ப வெல்லை தழுவிய விரும்பே டுட்பட நல்லறத் தழைப்ப நன்மகைத் தனனே 20 அஃதான்று அணிநக ரகன்பெய ரெல்லை யாவதுங் கணியிலுப் பைக்குக் காண்டகு மேற்கு நெருநற் பாக்கத் தெல்லை வடமேற்கும் பொருநற் குன்றிப் புனல்யாற்றின் வடக்குங் 25 குலாமலி குண்டிகைத் துறைக்கு வடகிழக்கு மிலாறை யாதிக்க மங்கலத் தெல்லைக்கேய் கிழக்கு மிரும்புனற் பொய்கை மெயூரெல்லை ..ந்த தென்கிழக்கு மல்லற் றொல்சீர் மறையோ ராதை யெல்லை நிலத்துக் கியைந்த தெற்கு 30 மிவ்வாத னூரி லகன்பெய ரெல்லையிற் பீலி மடுவிற்குப் பிறங்குதென் மேற்கு மெண்டிசை மருங்கினு மியன்ற வெல்லையிற் குண்டிசைக் கல்லு நாட்டிக் கண்கவர் கொல்லை நன்னிலங் குறைவின்றி விரிந் . . . 35 னெல்லை முற்று மிறையும் வரியு மந்த ராயமு மாயமு மமஞ்சியும் வந்தன பிறவு மாற்றி வளமலி மாளிகை யெடுக்கவு மணிக்குலை கமுகு நாளி கேரமு நன்குட னாக்கவுங் 40 கரும்புஞ் செந்நெலு மொருங்குட னடவுஞ் சண்பகந் தமனகஞ் சாதி கேதகை வண்கழு நீருடன் மலர்பல வியற்றவும் . . . . ஞ் செக்கு மமைக்கவு மருளிச் சாலையுந் தவமுந் தருமமுந் தழைப்பச் 45 செம்பிலுங் கல்லிலுஞ் செய்து தன்புக ழலர்கதி ரளவுஞ் செல்ல மலர்தலை யுலகின் வாழ்வமைத் தனனே. குறிப்பு :- வரி 5. செயங்கொண்ட சோழ மண்டலம் - தொண்டை மண்டலம். வரி 13. சினவரசன் - ஜினன், அருகன். வரி 15. சினாலயம் - அருகன் கோவில். ----- ஆலத்தூர் திவாகரன் இடம் : வடஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, திருவல்லம். இவ்வூர் பில்வநாதேசுவரர் கோவிலின் மகாமண்டபத்துத் தென்புறச் சுவரில் உள்ள செய்யுள் சாசனம். பதிப்பு : எண் 325. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No. 325. S.I.I. Vol. IV.) விளக்கம் : வல்லத்துப் பில்வநாதேசுவரர் கோவில், முற்காலத்தில் திருவல்லத்து ஆழ்வார் கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக்கோவில் பூசைக்காக ஆலத்தூர் திவாகரன் என்பவர் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் ஆலத்தூ ராளி திவாகரன்தான் செய்வித்தான் பாலொத்த வெள்ளி நாற்பதின் கழஞ்சால் - சோலைத் திருவலத்தே யாழ்வார் திருப்பல்லிக்குச் செல்வம் வருநலத்தான் கொள்கைதான் மற்று. திருவுண்ணாழிகையார் வசம். குறிப்பு :- திருவலத்தே - திருவல்லத்தே. திருவண்ணாழிகை - அகநாழிகை; அதாவது கருப்பக்கிருகம். ‘திருவண்ணாழிகை உடையார் வசம்’ என்பது, கருப்பக்கிருகத்தில் பூசை செய்யும் குருக்களிடம் இந்தத் தர்மம் ஒப்படைக்கப்பட்டது என்பது கருத்து. ----- குராமரம் இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, திருப்பதிக்குன்று கிராமம், திரைலோக்யநாதர் என்னும் ஜைனக் கோவிலின் ஒரு மேடை மீது உள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு, எண் 399. (No. 399, S.I.I. Vol. VII.) விளக்கம் : இந்தக் கோவிலில் உள்ள குராமரத்தைப் புகழ்கிறது இச்செய்யுள். சாசனச் செய்யுள் தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி முன்னுளது மும்முனிவர் மூழ்கியது--மன்னவன்தன் செங்கோல் நலங்காட்டுந் தென்பருத்திக் குன்றமர்ந்த கொங்கார் தருமக் குரா. குறிப்பு :- குரா என்பது குராமரம். கோரா மரம் என்றும் கூறப்படுகிறது. மும்முனிவர் யாவர் என்பது தெரியவில்லை. மல்லி சேனர் என்னும் வாமன முனிவரும், அவர் சீடர் புஷ்ப சேனரும் இங்கு இருந்தனர் என்பது சாசனங்களினால் தெரிகிறது. ----- சுந்தரபாண்டியன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலின் வலதுபுறச் சுவரில் உள்ளவை. பதிப்பு : எண் 618. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.618. S.I.I. Vol. IV.) விளக்கம் : சுந்தரபாண்டியனின் வெற்றிச் சிறப்பைக் கூறுகின்றன. சாசனச் செய்யுள் காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவுந் தேரேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து தாரேற்ற வெம்படை யாரியர் தண்டுபடத் தனியே போரேற்று நின்ற பெருவார்த்தை யின்றும் புதுவார்த்தையே. பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கையர்க் கவைமேற் கண்பட்ட முத்தவடங் கண்டு காக்கிலன் காடவர்கோன் எண்பட்ட சேனை யெதிர்பட் டொழுக வெழுந்த புண்ணீர் விண்பட்ட டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே. குறிப்பு :- செந்தமிழ் தென்னவன்-சடாவர்மன் சுந்தர பாண்டியன்I. செய்யுள் 2. காடவர்கோன் - பல்லவ அரசன்; இவன் கோப்பெருஞ் சிங்கன் போலும். சுந்தர மீனவன் - சுந்தர பாண்டியன்I. ----- சுந்தரபாண்டியன் இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுரவாயிலின் வலதுபுறச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : எண் 619. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.619. S.I.I. Vol. IV.) விளக்கம் : சுந்தரபாண்டியன் வென்ற போர்க்களத்தின் உவமை. சாசனச் செய்யுள் வட்ட வெண்குடை மன்னர் தம்புகல் கொண்டு மாமுடி கொண்டுபோர் மாறு கொண்டெழு போசளன் தடை கொண்டு வாணன் வனம்புகத் தொட்ட வெம்படை வீரன் வெற்றி புனைந்த சுந்தர மாறன்முன் சூழி விட்ட தெலிங்கர் சேனை துணித்து வென்ற களத்துமேல் விட்ட வெம்பரி பட்ட பொழுதெழு சோரி வாரியை யொக்குநீர் மேல் மிதந்த நிணப் பெருந்திரள் வெண் ணுரைத்திர ளொக்குமுன் பட்ட வெங்கரி யந்த வீரர் படிந்த மாமுகி லொக்கும்வீழ் பருமணிக் குடை யங்கு வந்தெழு பருதி மண்டல மொக்குமே. குறிப்பு :- சுந்தர மாறன் - சுந்தர பாண்டியன். இவன் தெலிங்க ருடன் செய்த போர்க்களத்தின் வர்ணனை இச் செய்யுள். குதிரைப் படை சிந்திய இரத்தம் கடலையொத்தது. நிணப்பெருந்திரள் இரத்தக் கடலில் தோன்றும் நுரை போன்றன. போரில் இறந்த யானைகள், கடல்நீரைப் பருகும் மேகம் போன்றிருந்தன. தோற்றோடிய அரசன் போட்டுச் சென்ற வெண்கொற்றைக் குடை, கடலிலிருந்து தோன்றுகிற சூரியனைப் போன்றிருந்தது என்பது கருத்து. ----- சுந்தர பாண்டியன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலுக்குள் வலதுபுறச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 620. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.620. S.I.I. Vol. IV.) விளக்கம் : சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசன், தில்லைச் சிற்றம்பலத்தில் துலாபாரம் ஏறித் தன் எடைக்குச் சரியாக பொன்னையும் முத்தையும் நிறுத்துத் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. முதல் அடியில் இரண்டு எழுத்துக்கள் மறைந்துவிட்டன. சாசனச் செய்யுள் இனவ . . கம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட் சின மதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்ததொக்கும் கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே. குறிப்பு :-சுந்தரத் தென்னவன் - சடாவர்மன் சுந்தர பாண்டியன் ஐ. இவன் கி.பி. 1251-1271 வரையில் அரசாண்டான். சிதம்பரக் கோவிலின் மேற்குக் கோபுரத்தை அமைந்தவன் இவன். வனசத் திரு - செந்தாமரையில் உள்ள திருமகள். செஞ்சொற்றிரு சொல்லின் செல்வியாகிய கலைமகள். சோழகுலவல்லி இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலுக்குள் வலதுபுறச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 621. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.621. S.I.I. Vol. IV.) விளக்கம் : திருமூலத்தானமுடையான் என்பவர் இச் செய்யுட்களை இயற்றினார். சாசனச் செய்யுள் ஓதுஞ் சகரர் யாண்டோ ரொருபத்தெட்டில் மேலாதி மூலநாளி லானிதனில் - சோதி துளங்கிலமேல் சோழன் சோழகுல வல்லி களங்கமற வைத்தான் கரு. 1 வண்ணந் திகழுங் கொடியாட மன்னுஞ் சோழ குலவல்லி நண்ணுந் தலைமை யுடையாரை நாமார் புகழப் பாமாலை யெண்ணும் படியில் புகழாளர் என்றே யன்றே யென்னுடைய கண்ணும் பழனக் கழுமலமுங் கலந்தார்த் திருவ மலந்தாரேல். திருமூலத்தான முடையான். குறிப்பு :- சோழகுல வல்லி - கோப்பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழதேவரின் மடைப்பள்ளி உத்தியோகஸ்தன் பெயர். ----- விக்கிரம பாண்டியன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கீழைக்கோபுரத்துத் தெற்குக் கதவுநிலையில் உள்ள செய்யுள். பதிப்பு : ‘செந்தமிழ்’, நான்காந் தொகுதி : பக்கம் 493. விளக்கம் : விக்கிரம பாண்டியனின் யானையைப் புகழ்கிறது. சாசனச் செய்யுள் மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தரிடும் யானை திருவுள்ளத் தேறுமோ - தானவரை வென்றதல்ல மேனிநிறம் வெள்ளையல்ல செங்கனகக் குன்றதல்ல நாலல்ல கோடு. குறிப்பு :- இந்த அரசன் சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன். இவன், கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவன். ----- சுந்தர பாண்டியன் இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கீழைக்கோபுரத்துத் தெற்குக் கதவுநிலையில் உள்ள செய்யுட்கள். பதிப்பு : ‘செந்தமிழ்’, நான்காந் தொகுதி : பக்கம் 492, 493. விளக்கம் : சுந்தர பாண்டியனின் வெற்றிச் சிறப்பைக் கூறுகின்றன. சாசனச் செய்யுள் மீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்றதடந் தோளான் மதுரைமன் சுந்தர பாண்டியன் சூழ்ந்திறைஞ்சி யாளான மன்னவர் தன்னேவல் செய்ய வவனிமுட்ட வாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே. 1 கொங்க ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து வெங்க ணழலில் வெதுப்புமே - மங்கையர்கண் சூழத் தாமம்புனையுஞ் சுந்தரத்தோள் மீனவனுக் கீழத்தா னிட்ட இறை. 2 வாக்கியல் செந்தமிழ்ச் சுந்தர பாண்டியன் வாளமரில் வீக்கிய வன்கழற் கண்ட கோபாலனை விண்ணுலகிற் போக்கிய பின்பவன் தம்பியர் போற்றப் புரந்தரசி லாக்கிய வார்த்தை பதினா லுலகமு மானதுவே. 3 குறிப்பு :- சுந்தரபாண்டியன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவன். வீரகண்ட கோபாலன், கணபதி என்னும் காகதீய அரசர்களை வென்றான். 3-ஆம் செய்யுளில் கூறப்படும் ‘கீழ்கண்ட கோபாலன்’ என்பவன், வீரகண்ட கோபாலன் ஆவான். ----- நரலோக வீரன் இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் முதல் பிரகாரத்தின் வெளிப்பக்கம், வடபுறச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 225. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.225. S.I.I. Vol. IV.) விளக்கம் : இந்தச் செய்யுளுக்கு மேலே வடமொழிச் செய்யுள் களும் உள்ளன. தமிழ்ச் செய்யுட்கள் கூறுவதையே வடமொழிச் செய்யுள்களும் கூறுகின்றன. இச்செய்யுட்கள், முதலாங் குலோத்துங்கச் சோழனின் சேனைத் தலைவனாகிய நரலோகவீரன். திருச்சிற்றம் பலத்தில் செய்த திருத்தொண்டுகளைக் கூறுகின்றன. நரலோக வீரன் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் என்னும் இரண்டு அரசர்கள் காலத்திலும் இருந்தான். சாசனச் செய்யுள் எல்லை கடலால் இகல்லெந் தணக்க வந்த செல்வமெலாம் தில்லைச் சிற்றம்பலத்து - தொல்லைத் திருக்கொடுங்கை பொன்மேந்தான் திண்மைக் கலியின் தருக்கொடுங்க வெல்கூத்தன் தான். 1 தில்லையில் பொன்னம்பலத்தைச் செம்பொனால் மேந்துவா னெல்லையைப் பொன்னாக்கினா னென்பரால் - ஒல்லை வடவேந்தர் செல்வமெலாம் வாங்க வேல்வாங்கும் குடைவேந்தர் தொண்டையார் கோன். 2 தென்வேந்தர் கூநிமிந்த செந்தமிழர் தென்கோயில் பொன்மேந்து திக்கைப் புகழ்வேந்தா னொக்கும் குற்றம்பல கண்டோன் கோலிழைக்கு வெல்கூத்தன் சிற்றம் பலத்திலே சென்று. 3 பொன்னம்பலக் கூத்தாடு மிடம் பழமரைவில் பொன்னம்பலக் கூத்தர் பொன்மேந்தார் - தென்னர் மலைமன்னர் ஏனை வடமன்றக் குலமன்னர் செல்வ மெலாம் கொண்டு. 4 தில்லைச்சிற் றம்பலத்தே பேரம்பலந் தன்னை மல்லற் கடற்றான் வாழ்கூத்தன் - வில்லவுதொ நம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றலனை மாற்றியகோன் செம்பு மேவித்தான் தெரிந்து. 5 ஏனை வடவரைசர் இட்டிடைந்த செம்பொனால் ஏனலென தில்லை நாயகற்கு - ஆனை சொரிகலமா மாமயிலை தொண்டையர்கோன் கூத்தன் பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து. 6 தெள்ளு புனற்றில்லைச் சிற்றம்பலத் தார்க்கு தள்ளி எதிரம்பலந் தாதம்பாதம் - புள்ளுண்ண நற்பிக்கம் கொண்ட நரலோக வீரன்செம் பொற்படிக்கம் கொண்டான் புரிந்து. 7 இட்டான் எழில்தில்லை எம்மாற் கிசைவிளங்க மட்டார் பொழிர்மணவில் வாழ்கூத்தன் - ஒட்டாரை இன்னமற்ற நித்தான நேற்றினான் நீண்டொளிசேர் செம்பொற் றனிக்காளம் செய்து. 8 ஆடுந் தனித்தேனுக்கு அம்பலத்தே கர்ப்பூரம் நீடுந் திருவிளக்கு நீடமைந்தான் - கூடா ரடிக்கத்தினை நரியும் புள்ளும் கடிக்கப் பெருங்கூத்தன் தான். 9 பொன்னம்பலம் சூழப் பொன்னின் திருவிளக்கால் மன்னுந் திருச்சுற்று வந்தமைந்தான் - தென்னவர்தம் பூபெறு வார்குழலா ரொடும் பொருள் பெரு மாவேறு தொண்டையார் மன். 10 சிற்றம் பலத்தானை ஏற்றினா ரெவ்வடத்து போற்றாத தால்வந்த கொழுநெதியால் - பற்றொக்கு கட்ட வஞ்சனம் வெலுகார் மணவில் கூத்தன்திருக் கட்ட வஞ்சநாமஞ் செய்து. 11 தொல்லைப் பதித்தில்லைக் கூத்தற்குத் தொண்டையர்கோன் எல்லைத் திசைக்கரிகள் எட்டளவும் - செல்லப்போய் சாலமுதுபேய் தடிக்க தாறட்டிகத்தங்கு தொண்டையர்கோன் பாலமுது செய்வித்தான் பரிந்து. 12 ஆடுந் தெளிதேனை ஆயிரநாழி நெய்யால் ஆடும்படி கண்டான் அன்றினார்கள் - ஓடுந் திறங்கண்ட நாளன் சினக்களிற்றான் ஞால மறங்கண்ட தொண்டையர்கோன் ஆங்கு. 13 நட்டப் பெருமான் நாமஞானங் குழைந்தளித்த சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட வாட்டிக்கும் தொண்டையர்கோன் மன். 14 மல்லக் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தே தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்ல மழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற் கிழிவுகண்டான் தொண்டையர்கோ னுற்று. 15 தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை எல்லைக் குரைவரைபோ லீண்டமைத்தான் - தொல்லைநீர் மண்மகளைக் கங்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருத்தி உண்மகுழும் தொண்டையர்கோ னுற்று. 16 புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய் விக்கரணம் பார்ப்படந்ததன் மேல்விதித்து - திக்களவு மாநடத்திக் கோல்நடத்தும் வாள்கூத்தன் மண்ணில்லறம் தாநடத்தில் நீடுவித்தான் தான். 17 வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும் மாதுசூழ் பாதமும் மகுழ்ந்தார்க்குப் - போதுசூழ் தில்லைக்கே செய்தான் திசைகளிறு போய்நிற்கும் எல்லைக்கே செல்கலிங்க ரேறு. 18 நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச் செந்தேனின் னிடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் - கடங்கார் கருமாளி கைய்மேல் பகடுதைத்த கூத்தன் திருமாளிகை யமைத்தான் சென்று. 19 எவ்வுலகும் எவ்வுயுரு மீன்று மெழிலழியாச் செவ்வியாள் கோயில் திருச்சுற்றைப் - பவ்வஞ்சூழ் எல்லைவட்டன் தங்கோற் கியல்விட்ட வாட்கூத்தன் தில்லைவட்டத்தே 'b9யமைத்தான் சென்று. 20 வாளுடைய பொற்பொதுவின்மன் நடந்தன னடமாடும் ஆளுடைய பாவைக் கவிஷேகம் - வேளுடைய பொற்பினான் பொன்னம்பலக் கூத்தன் பொங்குசட வெற்பினாற் சாத்தினான் வேறு. 21 சேதாம்பன் வாயுமைக்குந் தில்லையந் தேவிக்கும் பீதாம்பரஞ் சமைத்தான் பேரொலிநீர் - மோதா வலைகின்ற வெல்லை யபயனுக்கே யாக மலைகின்ற'b9 தொண்டையார் மன். 22 செல்வித் திருந்தறங் கண்ணா னகரித் தில்லைக்கே நல்லமகப்பா லெண்ணை நாள்தோறும் - செல்லத்தான் கண்டா னரும்பையர்கோன் குண்ணக்கநீர் ஞாலமெல்லாங் கொண்டான் தொண்டையர் கோன். 23 பொன்னுலகு தாம் புலியூர் தொழுவதற்கு குன்னிழி கின்ற சொக்கமால் - தென்னர் . . . டாமற் செகுத்த கூத்தன் செம்பொன்னின் கொடிபுறஞ் செய்த குமா. 24 ஆதிசெம்பொன் னம்பலத்தி லம்மா னெழுந்தருளும் வீதியும்பொன் மேய்ந்தெனனாய் மேல்விளக்கும் - சோதிக் கொடியுடைத்தா பொன்னால் குறுகவலான் ஒன்றும் படியமைத்தான் தொண்டையர்கோன் பார்த்து. 25 நாயகர் வீதி எழுந்தருளும் நன்னாளால் தூய கருவெழு தூபத்தால் - போய்யொளிசேர் வான்மறைக் கண்பானிம் பண்மகவன் வண்புகழால் தான்மறைக் கூத்தன் சமைத்து. 26 பாருமைய் மொட்பச் செய்வீர் சீரியர் திருவுருவ மான திருக்கோலம் - பெருகொளியால் காட்டினான் தில்லைக்கே தாசந்வாய் வெங்கலியை ஓட்டினான் தொண்டையர் கோன். 27 என்றுஞ் சிற்றம்பலத் தெங்கோமா னந்தி சங்கோடு முலகேத்தச் சாந்தமைத்தான் - கல்லுவந் துயினக் கொள்வீர் கொள்வொன்னல் வெல்களெர்களிரி வளித்திடு தொண்டையர்கோன் வென்று. 28 மன்னுந் திகழ் தில்லைக்கே வாணிக்க சகணத் துன்னுபொழில் மணவில் தொண்டைமான் - என்றுந் துண்ணக் கண்டான் இகல்வேந்த ராகம்பருந் துண்ணக் கண்டான் பரிந்து. 29 தில்லைத் தியாகவல்லி விண்சிற்பஞ் சவினி எல்லைநிலங் கொண்டிறை யிழிச்சி - தில்லை மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர் குறைமுடிப்பார் தொண்டையர் கோ. 30 என்றும் பெறுதலால் ஏறாவிழிற் புலியூர் மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று குடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே தடுத்தான் தொண்டையர்கோன் றான். 31 முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவர் ஒக்கமைத்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்தலத்தி லெல்லைக் கிரிவா யிசை யெழுதினான் கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தே சென்று. 32 தில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப நல்ல திருநந்தா வனஞ்சமைத்த - வில்லத்திருக் கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை யீட்டங்கொள் காலிங்க ரேறு. 33 நூறாயிர முகமாங் கமைத்தான் னோன்சினத்தி பாறாக வெல்களிற்று வாட்கூத்தன் - கூறாளும் வல்லிச் சிறுகடைக்குக் கான்வளர் நாடஞ்செய் தில்லைச் சிற்றம்பலத்தே சென்று. 34 மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் மாசற்ற வற்றைப் பெருவழியும் - ஈசற்குத் தென்புலியூர்க்கே யமைத்தான் கூத்தன் திசையனைத்து மன்புலி யாணை நடக்கறை யத்து. 35 ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோராயிரஞ் சுரவி ஆங்கிளத்தா னேற்றெதிர்ந்தா ராழிழையார் - தாங்கா தொக்கி உடலாவி யுயிர்நாட் போக்கி இருக்கின்ற தொண்டைய ரேறு. 36 தொல்லோர் வாழ்தில்லைச் சுடலையமர்ந்தார் கோயில் கல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - பொலன் மறைவளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம லறம்வளர்க்கக் காலிங்க னாய்ந்து. 37 தில்லை மூவாயிரவர் தங்கள் திருவளர எல்லையில் பேரேரிக் கெழில்மதகு - கல்லினால் தானமைத்தான் தெவ்வேந்தர்க் கெல்லாங் கலந்தவீர வானமைத்தான் தொண்டையார் மன். 38 ஹர உ இது வெட்டுவித்தான் காலிங்கராயர் ஆண்ட அரசு. அற மறவற்க அறமல்லது துணையில்லை. திருச்சிற்றம்பலம். குறிப்பு :- சாசனத்தைப் பொறித்த சிற்பியின் தவறுதலினால் , சில செய்யுட்களில் பொருள் விளங்காதபடி எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவை சாசனத்தில் உள்ளபடியே அச்சிடப்பட்டுள்ளன. 24-ஆம் செய்யுளில் மூன்றாம் அடியில் சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. 1, 2, 4- ஆம் செய்யுட்களில் “மேந்தான்” என்றிருப்பது வேய்ந்தான் என்றிருத்தல் வேண்டும். இச்செய்யுட்களில் கூறப்படுகிற நரலோக வீரன், தொண்டை யர்மன், காலிங்கன், கூத்தன் என்னும் பெயர்களை உடையவன். செய்யுள் 15. நரலோக வீரன் தில்லைச் சிற்றம்பலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தை அமைத்ததை இச்செய்யுள் கூறுகிறது. இந்த மண்டபத்திற்கு ஸ்ரீ விக்கிரமசோழன் திருமண்டபம் என்று பெயர் சூட்டினான். .ந்த மண்டபத்துத் தூண்கள் சிலவற்றில் இன்றும், “ஸ்ரீ விக்கிரம சோழன் திருமண்டபம்” என்று எழுதப் பட்டிருப்பதைக் காணலாம். செய்யுள் 22. இதில், அபயன் என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனை. ----- விக்கிரம பாண்டியன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கீழைக்கோபுரத்து வடக்குப் பக்கச் சுவரில் எழுதப்பட்டுள்ளவை. பதிப்பு : ‘செந்தமிழ்’ நான்காந் தொகுதி : பக்கம் 493, 494. விளக்கம் : விக்கிரம பாண்டியன் வெற்றிச் சிறப்பைக் கூறுகின்றன. சாசனச் செய்யுள் ஏந்து மருவி யிரவி புரவியின்முன் பூந்து வலைவீசும் பொதியிலே - காந்துசின வேணாடனை வென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப் பூணாரம் பூண்டான் பொருப்பு. 1 புயலுந் தருவும் பொருகைப் புவநேக வீரபுனல் வயலுந் தரளந்தரு கொற்கை காவல வாரணப்போர் முயலுங் கணபதி மொய்த்த செஞ்சோதி முகத்திரண்டு கயலுண் டெனுமதுவோ முனிவாறிய காரணமே. 2 வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே பொங்கி வடதிசையிற் போகாதே - யங்கிருப்பாள் பெண்ணென்றும் மீண்ட பெருமாளே பேரிசையாழ்ப் பண்ணொன்றும் வேய்வாய் பகை. 3 குறிப்பு :- இங்குக் கூறப்படும் விக்கிரம பாண்டியன், சடைய வர்மன் விக்கிரம பாண்டியன் ஆவன். இவனுக்குப் புவனேக வீரன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. 13-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தவன். இவன், சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் பாண்டி நாட்டின் ஒரு பகுதியை அரசாண்டான். செய்யுள் 2. விக்கிரம பாண்டியனுக்குப் புவனேக வீரன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இவன் காகதீய அரசன் வீரகண்ட கோபாலனைப் போரில் கொன்றான். பிறகு, அவன் உறவினனாகிய கணபதி என்பவன் இவனிடம் நட்பு கொள்ள, அவனுக்கு அரசை அளித்தான். இச் செய்தியைக் குறிக்கிறது இச்செய்யுள். செய்யுள் 3. “பொங்கி வடதிசையிற் போகாதே அங்கிருப்பாள் பெண்” என்பது, தெலுங்கு தேசத்தின் ஒரு பகுதியைக் காகதீய குலத்தில் வந்த ருத்ராம்பா என்பவள் அரசாண்டதைக் கூறுகிறது. இந்த இராணி ருத்திரதேவ மகாராஜ என்னும் ஆண்பெயர் பூண்டு அரசாண்டாள் என்று பிரதாபருத்தீரீயம் என்னும் நூல் கூறுகிறது. பெண்ணின் மேல் போருக்குச் செல்வது அரசருக்கு மரபன்று என்பதை இச்செய்யுள் கூறுகிறது. விக்கிரம பாண்டியன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் இரண்டாம் பிராகார வாயிலின் மேற்குப் பக்கச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 228. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.228. S.I.I. Vol. IV.) விளக்கம் : புவனேக வீரன் என்னும் சிறப்புப் பெயருடைய விக்கிரம பாண்டியன். வெள்ளாறு என்னும் இடத்தில் போர் வென்றதையும், பகை மன்னரைச் சிறைப்பிடித்ததையும் இச்செய்யுட்கள் கூறுகின்றன. சாசனச் செய்யுள் சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கிற் செவ்வாறு பட்டோட வவ்வாறு சென்றப் போர்வென்று வனப்பேய் நடங்கண் டதற்பின் புலியூர் நடங்கண்ட புவனேக வீரா பார்பண் டளந்துண்டோ ராலிற் கிடக்கும் பச்சைப் பசுங்கொண்ட லேபத்ப நாபா கார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றுங் கடலல்ல வென்பேதை கண்டந்த கடலே. 1 மாறுபடு மன்னவர்தங் கைபூண்ட வாளிரும்பு வேறுமவர் கால்பூண்டு விட்டதே - சீறிமிக வேட்டந் திரிகிளிற்று விக்கிரம பாண்டியன்த னாட்டங் கடைசிவந்த நாள். 2 குறிப்பு :- செய்யுள் 1. புவனேக வீரன் - இது மாரவர்மன் விக்கிரம பாண்டியனின் சிறப்புப் பெயர். செய்யுள் 2. விக்கிரம பாண்டியன். இவன் கி.பி. 1269 முதல் 1296 வரையில் அரசாண்டான். மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்தவன். இந்தச் சோழன் உதவியினால் பாண்டிய அரசைப் பெற்றவன். பல்லவர் கோன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் உள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு : முன்னுரை, பத்தாம் பக்கம். (Page 10, Preface, S.I.I. Vol. XII.) விளக்கம் : பல்லவ அரசன் தில்லையில் உலா வந்ததைக் கூறுகிறது. சாசனச் செய்யுள் சுந்தரத் தோரண நாட்டித் துகிற்கொடி சூட்டிமுத்துப் பந்தரப் பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன் செந்தளிர்க் கைக்கோத் தபையன் மகளுடன் தில்லையுலா வந்தளிக்கும் பெருமாள் வெற்பர் மாதை மணஞ்செய்யவே. குறிப்பு :- அபையன் - அபயன். அபயன் மகள் -சோழ அரகன் மகள். ----- குந்தவையாழ்வார் இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவிலின் உள்பிராகாரம் வடக்குப் புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி ஐந்து, பக்கம் 105. (Epigraphia Indica, Vol. V. Page 105.) விளக்கம் : குலோத்துங்க சோழனுடைய தங்கையார் குந்தவை யாழ்வார், தில்லைச் சிற்றம்பலத் திருக்கோவிலில் செய்த தான தருமங்களைக் கூறுகிறது. இச்செய்யுளின் மேலும் கீழும் உரை நடையில் சில செய்திகள் எழுதப்பட்டுள்ளன. சாசனச் செய்யுள் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையார் ராஜராஜன் குந்தவையாழ்வார் ஆளுடை யார்க்கு தண்ணீர் அமுது செய்தருள இட்ட மிண்டம் ஒன்றினால் குடிநற்கல் நிறை மதுராந்தகன் மாடையோடு ஒக்கும் பொன் 50 . ஐம்பதின் கழஞ்சு. உ நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு நாற்பத்து நாலாண்டில் மீனநிகழ் நாயற்று வெள்ளிபெற்ற உரோகிணிநா ளிடபம்போதால் தேனிலவு பொழிற்றில்லை நாயகர் தன் கோயிலெலாம் செம்பொன் மேய்ந்தா ளேனவருந் தொழுதேத்தும் ராஜராஜன் குந்தவை பூவிந்தையாளே. தில்லைநாகய தேவற்குத் திருக்கண்ணாடியும் இட்டார். உ ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு. இது உடையார் ராஜேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோவிலில் முன் வைத்தது. உ இந்தக் கல்லு திருவெதிரம்பலத்து திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப்பத்தியிலே வைத்தது. உ குறிப்பு :- இந்தச் செய்யுளில் சயதரன் என்பது முதலாங் குலோத்துங்க சோழனின் சிறப்புப் பெயராகும். அவனுடைய நாற்பத்து நாலாம் ஆண்டில். குந்தவையார் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்ததாக இச் செய்யுள் கூறுகிறது. சயதரனுடைய 44-ஆம் ஆண்டு கி.பி. 1114 என்பர் சரித்திர நூலோர். இந்தக் குந்தவையார், ஸ்ரீ .இராஜராஜ சோழன் மகளும் குலோத்துங்க சோழன் தங்கையும் ஆவார். இவர் சிதம்பரக் கோவிலைப் பொன் வேய்ந்ததோடு, வேறு சில தானங்களையும் செய்ததை இச்செய்யுளும் வசனமும் கூறுகின்றன. அன்றியும், இராஜேந்திர சோழனுக்குக் காம்போச அரசன் கல் ஒன்றைக் காட்சிப் பொருளாக அளித்ததையும், அக்கல் சிற்றம் பலத்தின் எதிரம்பலத்தில் வைக்கப்பட்டதையும் இந்தச் சாசனம் கூறுகிறது. சரித்திரப்புகழ் படைத்த இந்தக் கல் இப்போது சிதம்பரத் திருக்கோவிலில் இருக்கிறதா? புதுக்கப்பட்டபோது இந்தக் கல் தவறிப் போய்விட்டதா? இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து இக் கல்லைக் கண்டெடுக்க வேண்டுவது அறிஞர் கடமையாகும். ----- கம்பன் மூவேந்த வேளான் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர். இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவிலின் திருவுண்ணாழி கையின், தெற்கு - கிழக்கு - வடக்குப் புறச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. பதிப்பு : எண் 863. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.863. S.I.I. Vol. VII.) விளக்கம் : இந்த அழகான அகவற்பா, முதலாம் இராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்டது. இந்தச் சோழனிடம் அதிகாரியா யிருந்த கம்பன் மூவேந்த வேளான் என்பவர். வீரட்டானேசுவரர் கோவிலில் செய்த தானதருமங்களைக் கூறுகிறது. இந்தக் கம்பன் மூவேந்த வேளானை அம்பர்நாடன், ஆலங்குடிக் கோன், திரைமூர் நாடன், மணற்குடி நாடன் என்று இச்செய்யுட்கள் கூறுகின்றன. இந்த அகவற்பாவின் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. சாசனச் செய்யுள் . . . . . . . . . . . . . . . . ஜயஜய வென்று மொழி பன்னிய வாய்மையிற் பணியப் பொன்னியல் விசும்பரிற் கதமும் பசும்புரி வெள்ளுளை 5 நெடுஞ்சுவற் றெடுத்த குறுந்துனைப் படுங்க னள்ளுறப் பொன்ஞான் வள்ளுற வச்சத் தனிக்கா லரசு மனக்காற் கங்குற் குழம்புபடு பேரிருட் பிழம்புபட வுருட்டிய செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன் 10 வழிமுதல் வந்த மஹிபதி வழிமுத லதிபதி நரபதி அஸ்வபதி ....ட கஜபதி கடலிடங் காவலன் மதிமுதல் வழுதியர் வரைபுக மற்றவர் தேவிய ரழுதுய ரழுங்கலி லழுங்கப் பொழுதியல் 15 வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக் கலிங்கன் கனb. . கப்பா ...வங்கன் அம்மை . . . . . . . . . . . . . . .ட் புதுமலர் வாகை புனைந்து நொதுமலர் கங்க பாடி கவ்விக் கொங்கம் 20 வெளிப்படுத் தருளி யளிபடுத் தருளிய சாரல் மலையட்டுஞ் சேரன் மலைஞாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற் கோபுரங் கோவை குலைய மாபெரும் 25 புரிசை வட்டம் பொடிபடப் புரிசைச் சுதைகவின் படைத்த சூளிகை மாளிகை யுதைகை முன்னொள்ளெரி கொளுவி உதகை வேந்தைக் கடல்புக வெகுண்டுபோந்து சூழமண் டலந்தொழ வீழமண் டலமுங்கொண்டு 30 தண்டருளிப் பண்டு தங்கடிருக் குலத்தோர் தடவரை எழுதிய பொங்குபுலிப் போத்துப் புதுக்கத் துங்கத் திக்கினிற் சேனை செலுத்தி மிக்க வொற்றை வெண்குடைக்கீ ழிரட்டை வெண்கவரி தெற்றிய வனலந் 35 திவள வெற்றியுள் வெற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் தண்டமிழ் நாடன் சண்ட பராக்கிரமன் றிண்டிரற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு மடந்தைமன் ஸ்ரீராஜ ராஜ னிந்திர சமனான் 40 ராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலைமிகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந் துண்டா விளக்கு 45 . . . . . . . . . . . சி சொல்லிய வரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான் பரைசை வண்களிற்றுப் பூழியன் விரைசெயு 'b9 மாதவித் தொங்கல் மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன் 50 றிருப்பிய முயங்குந் தேவி விருப்புடன் வந்துதித் தருளிய மலையர் திருக்குலத்தோ ரன்மை யாக தமரகத் தொன்மையிற் குலதெய்வ . . . . . . . கொண்டது நலமிகுங் கவசந் தொடுத்த கவின்கொளக் 55 கதிர்நுதித் துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் புளகப் புதவக் களகக் கோபுர வாயின் மாடமாளிகை வீதித் தேசாந் தன்மைத் தென்திருக் கோவலூ ரீசரந் தன்றக் கவன்றது மீசரங் 60 குடக்குக் கலுழி குணக்குகால் பழுங்கக் காளா கருவுங் கமழ்சந் தனமுந் தாளார் திரள்ச் சாளமு நீளார் குறிஞ்சியுங் கொடியு முகடுயர் குன்றிற் பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர் 65 புதுமத கிடறிப் போர்க்கலிங் கிடந்து மொதுமொது முதுதிரை விலகி கதுமென வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத் தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் 70 தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப் பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல மினல் புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக் 75 கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் பேரெட் டான வீரட் டான மனைத்தினு மனாதி யாயது நினைப்பினு முணர்தற் கரியது யோகிக ளுள்ளது புணர்தற்'b9 கினியது பொய்கைக் கரையது 80 சந்தன வனத்தது சண்பகக் கானது நந்தன வனத்தி னடுவது பந்தற் சுரும்படை வெண்பூங் கரும்பிடை துணித்தரத் தாட்டொலி யாலை யயலது பாட்டொலிக் கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள் 85 பசுந்தாட் டீயுஞ் செந்நெற் பழனத் தசும்பார் கணி. . . . . . . . . . யவற்றை யருக்க னரிச்சனை முற்றிய நான்மறை தெரிந்து நூன்முறை யுணர்ந்தாங் கருச்சனா விதியொடு தெரிச்சவா கமத்தொழில் 90 மூவெண் பெயருடைய முப்புரி நூலோர் பிரியாத் தன்மைப் பெருந்திரு வுருடையது பாடகச் சீறடிப் பணிமுலைப் பாவையர் நாடகத் துழதி நவின்றது சேடகச் சண்டையுங் கண்டையுந் தாளமுங் காளமுங் 95 கொண்டதிர்ப் படகமுங் குளிறுமத் தளங்களுங் கரடிகைத் தொகுதியுங் கைம்மணிப் பகுதியு முருடியல் திமிலை முழக்கமும் மருடரு வால்வளைத் துணையு மேல்வளைத் தணையுங் கருப்பொலி மேகமுங் கடலுமெனக் கஞலி 100 திருப்பொலி திருப்பலி சிநத்து விருப்பொலிப் பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ் 'b9நாவலர் நாற்கவி நவின்றது ஏவலி லருஷையோ டரஹர வெனக்குனித் தடிமைசெய் பருஷையர் பகுவிதம் பயின்றது கருக்ஷை 105 முக்கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது மண்ணவர் தொழுவது வானவர் மகுழ்வது மற்று மின்ன வளங்கொள் மதிற்பதாகைத் தெற்றுங் கொழுநிழற் சிவபுரத் தரற்குப் பன்னா ணிலைபெற முந்நா ளுரவோன் 110 செய்த தானந் தேவன் குடியி லலகியல் மரபி னமைந்து உலகியல் சாண்பன் னிரண்டிற் சமைந்த தனிக்கோல் போற்றுற வளந்த நூற்றறு பதுகுழி மாவொன் றாக வந்த வேலி 115 யாறே காலி லந்தங் களைந்து நீங்கிய நிலத்தா னீங்கா நெற்றுகை ஆங்கொரு மாவிற் கறுகல மாகக் கொழுநூற் றவராடுங் கூட்டி யளந்த எழுநூற் றிருபதி லிறைமகற் குரிமை 120 நாழி யெட்டான் வாழியட் டானக் கருங்கா லொன்றாற் செங்கை யிரண்டிட் டளந்த நெல்லா லறுபதனிற் களைந்த நிவந்தத் தன்மை நினையி லுவந்து நஞ்சுண் டவருக் கமுதுண நயந்த 125 வொத்தெண் வழுவாப் பத்தெண் குத்தல் பழநெல் லரிசி பன்னிரு நாழிக்கு பதினை யிரட்டிநெற் பதினை யிரட்டியுங் குறுவா ளான நெடுவா ணயனிக் கோரிரு நாழியுள்ப் படுத்து யர்ந்தநெல் 130 நாலெட் டான நாழியும் மெ ..... . . . . . . . . மிளகுமுப் பிடிக்கு செல்லக் குடுத்த நெல்லஞ் ஞாழியுஞ் சூழ்கறி துவன்ற பொழ்கற் கொள்நெற் பெருக்கிய நாலுரி யுருக்கிய நறுநெ 135 யுழக்கரை தனக்கு வழக்கரை வினவில் முந்நா ழியுந்தயிர் முந்நாழிக் காங்கறு நானா ழியுமடைக் காய மிதிற்குப் பன்னீ ருழக்கும் பரிசா ரகமா ணன்னான் கினுக்கு நெல்லறு நாழியுந் 140 திருமடைப் பள்ளிப் பெருமடைக் குறவு மிந்தன வொருவற்குத் தந்த முன்னாழியும் ஆகநெற் கலமு மேகநற் றிவசம் அப்பரி சியற்றிலி லறுவகை யிருதுவு மிப்பரி சியற்றி யெழுந்துநே ரானபின் 145 புதுமலர் விரிந்து மதுமலர் சோலைப் புள்ளூர் கோவ லுள்ளூர்ப் பழநிலம் இரட்டு முக்காலிற் றந்த பதினைஞ்சு மொட்டுக் கல்லைக் கவர்மூன்று மாவும் ஆலஞ் செறுவி லஞ்சு மாவும் 150 திரண்டு பாய்புனற் றெங்காச் செறுவி லிரண்டு மாவும் இலுப்பைக் காலிரண்டும் நெல்லா லித்தெழும் புல்லா லிப்புற மஞ்சொடுங் கூட்டி ஆகிய நிலத்தொகை அப்புத்திரண் டியல்மா முப்பத் திரண்டு 155 மேலா றுணந்த நாலா றெண்பயி லந்தண ரனைவர்க்கு மரிச்சனா போகந் தந்தப் பின்னைத் தடமலர்ப் பொய்கைப் போதகர் பழனப் புதுமலர்ச் சோலைச் சிதாரி பலமஞ்சு மஞ்சமாற் கெட்ட 160 திருவையன் கோட்டமில் குணத்தாற் செம்பொற் புரிசைச் சிவபுரத் தாற்குக் கோவ லந்தணர் பாற்கொண்டு கொடுத்தன பண்டைக் கோலாற்'b9 பண்டைக் குழித்தொகை மணங்கொண் டீண்டு முணங்கல் பூண்டி 165 யொப்புத் தொறுமா முப்பத்தறு மாவு மிகவந் துயர்புனற் பகவந்தக் கழனி யெட்டுமுத லிருபது மாவு மட்டவிழ் பூத்துழா வியபுனல் மாத்துழான் வேலி ஏவிய வெட்டு மாவும் வாவியற் 170 கோடாறு பழனக் காடேறு மாநில மஞ்சுங் களர்நிலம் பத்துந் நெஞ்சகத் துள்ளத் தகும்புன லுரவுக் கடலுகா யம்பளத் திரண்டும் பாவருங் கணியக் கழனியி லெட்டுங் கைகலந் துரைப்பிற் 175 றுழனி . . . . . . . . கலமென மேற்படி காலாற் பாற்பட வளந்த வீங்குட னவர் பாங்குடன் றொகுத்த மெஞ்ஞூற் றிரைகயில் மேதக தூநெ லஞ்ஞூற் றிருபத் திருகலம் என 180 மற்றைத் தொகையில் மதிவளர் சடையோன் பெற்ற வாரம் பிழையறப் பேசி லைம்பதிற் றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு கலத்தொடு முணங்கல் பூண்டியிற் கறைஞெல் நஞ்சை ஞீக்கிப் புஞ்சை நான்மா 185 மாத்தாற் கலவரை யான வரையறை அறுகல மேற்றிப் பெறுகல வளவை மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக் கலத்தினில் மற்றக் கண்ணுதற் காக நிலத்தவ ருவந்த நிவந்தந் நலத்தகு 190 நாளொன் றினுக்கு நான்முன் னாழி பானிறத் தன்மைத் தூநிறக் குத்த லரிசியி லான நெல்லு வரிசையிற் குறுபவள் கூலி யெற்றிப் பெறுவன பேணிய பழநெற் றூணியுங் காணிய 195 வையமிது புகழு நெய்யமுது முப்பிடி கொள்ளக் கொடுத்த நெல்லறு நாழியும் பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயி ரொருமுன் னாழிக் கிருமுன் னாழியு யடைக்கா யமுதுக் காறுரி யத்து 200 மந்தண னொருவ னபிஷேகஞ் செய்யத் தந்தன குறுமணிமுற் றதைந்த நாழியு மறையேவல் செய் மாணிரண் டினுக்குக் குறைவறக் குடுத்த நெற்குறுணி ஞானாழியு மோராண் டினுக்கு நேராண்டாக 205 நண்ணிய நக்ஷத் திரமென னல்லோ னண்ணிய திருவிளக் கெண்பதுங் கண்ணெனக் காவியர் கயல்பயி லாவியூ ரதனிற் றிக்குடை யிவரு முக்குடை யவர்தம் அறப்புற மான திறப்பட நீக்கிச் 210 சாலி விளைஞிலம் வேலி யாக்கி முதல்வதின் மூன்றே முக்காலே யரைக்கா லிதன்த னிவந்த மியல்வகை யுரைப்பில் ஒப்பத் திருவனை யவர்முப்பத் திருவர் பாடல் பயின்ற நாடக மகளிர்க்கும் 215 நெஞ்சா சார நிறைவொடு குறையாப் பஞ்சா சாரியப் புகுதி யோர்க்கும் நறைப்புது மலர்விரி நந்தவான மிறைப்புத் தொழில்புரிந்த விருந்தவத் தோற்கும் யோகி யொருவனுக்கு நியோக முடைநில 220 . . . . . . . . . . . . வாழியர் செஞ்சடைக் கடவுடன் றிருவாக் கேழ்வித் தஞ்சடைக் கடிகையன் றனக்கும் நெஞ்சில் விதித்த முறைமை மதித்து நோக்கி யின்னவை பிறவு மாராஜ ராஜன் 225 றன்னவை முன்னற் றத்துவ நெறியி லறங்கள் யாவையு மிறங்கா வண்ணம் விஞ்ஞா பனத்தால் மிகவெளிப் படுத்தோன் அன்பது வேலியி லடைக்குன் றகர்க்கு மொன்பது வேலி யுடைய வுரவோன் 230 கொம்பர் நாடுங் குளிர்மலர்ச் சோலை யம்பர் நாடன் ஆலங்குடிக் கோன் தெண்டிரைப் பழனத் திரைமூர் நாடன் வண்டிரைத் துயர்பொழில் மணற்குடி நாடன் நேரிய னருமொழி நித்த வினோதன் 235 காரிய மல்லதோர் காரிய நினையா தாராண் டலைமைக் கற்பக சதுசன பேராண் டலைமைப் புணர்புயத் துரவோன் கூத்தொழில் கேளா தேத்தொழில் முனைந்த கண்டர் கரிசறத் துரிசறக் கலிசெக 240 மண்டல சுகதியில் வயப்புலி வளர்த்தோன் வான்பால் மதியும் வலம்புரி யிடம்பரி யான்பால் வதியும் விரிசடைக் கடவுள் நெற்றிக் கண்ணும் நிலத்தவர் நினைந்த தெற்றிக் கண்ணுஞ் சிந்தா மணியும் 245 போலப் பிறந்த புகழோன் கோலக் கருங்களிற் றுழவன் கம்பத் தடிகள் மாதி விடங்கு வருபரி வல்ல வீதி விடங்கன் மென்கருப் பாலைத் தலந்தருந் தண்டலைத் தடநீர் 250 நலந்தரு பொன்னி நாடுகிழ வோனே. 1 வேலியார்கோன் வீதிவிடங்கள் விறற்கம்ப னாலியல்மான் சோழ னதிகாரி - கோலப் படியின்மேற் பொற்பூப் பைங்கோவல் வீரட்டர் முடியின்மேல் வைத்தான் முயன்று. 2 பொன்முகக் கழஞ்சால் மணிப்பட்டம் பூம்புனைந்து மின்மிக்க கட்டமைத்து மேற்கட்டி - சொன்மிக்க கோவலன் வீரட்டற் கீந்தான் குலவேலி காவலான் வாழ்கம்பன் கண்டு. 3 சென்னி திறற் ஸ்ரீராஜ ராஜற் கியாண்டு திகழு மிருபத்தேழிற் செழுநீர் வேலி மன்னிய கம்பன் மஹிமாலைய மூவேந்த வேளான் விண்ணப்பத்தால் மணிநீர்க் கோவ லென்னியல்சீர் வீரட்டத் திலங்க மொன்று பொன்னூற்றாற் செய்ததற்கு வெள்ளிப் பீடம் பன்னிய தொண்Qற்றறு முக்கழஞ்சுடை யம்பொன் பேர்த்தும் அய்ங்கழஞ்சின் மேற் பத்துமாவே. 4 குறிப்பு:- இச்செய்யுளில் சில சொற்கள் இவ்வாறு பயின்றுள்ளது காண்க: அரிச்சனை (அருச்சனை), துழதி (தொகுதி), மகுழ்வது (மகிழ்வது), உள்ப்படுத் துயந்த (உட்படுத் துயர்ந்த), குடுத்த (கொடுத்த), ஞாழி (நாழி), ஞெல் (நெல்), ஞீக்கி (நீக்கி), ஞிலம் (நிலம்). இச்செய்யுட்களில் கூறப்படும் திருப்பணிகள் இராஜராஜ சோழனுடைய ஆட்சி இருபத்தேழாவது ஆண்டில் செய்யப் பட்டன. ----- அரும்பாக்க எல்லை இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர். இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவில் தென்ப் புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : எண் 857. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.857. S.I.I. Vol. VII.) விளக்கம் : கோவிராஜ ராஜகேசரி பன்மர் என்னும் சோழ அரசனுடைய 11-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது இச்சாசனச் செய்யுள். இது அரும்பாக்கம் என்னும் ஊரின் எல்லையைக் கூறுகிறது. இந்தச் சாசனச் செய்யுளின்மேலே கீழ்க்கண்ட வசனம் எழுதப்பட்டிருக்கிறது. “ஸ்வஸ்திஸ்ரீ. காந்தளூர்சாலை கலமறுத்த கோவிராஜ ராஜ கேசரிய் பன்மக் கியாண்டு 11 - ஆவது மலாட்டு குறுக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் திருவீரட்டான முடையாற்கு மிலாடு உடையான் இராமன் நாட்டடிகள் வைத்த நொந்தா விளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை சபையார் வசம் சந்த்ராதித்தவல் விளக்கெரிப் பதற்குக் குடுத்த பொன் பன்னிரு கழஞ்சு. பன்மாஹேஸ்வர ரக்ஷை.” சாசனச் செய்யுள் இறைவ னரும்பாக்க மெல்லைக் கற்குட்டம் முறைசேர் கோவல் முழைசுனை - பிறைநுதலாய் வெண்மாறங் கெல்லை மேல்பால் கறடிவடாவாறு கீழ்பால் கண்ணத்தம் பாடியாங் காண். குறிப்பு :- இவ்வெண்பாவின் மூன்றாமடி பொருந்தவில்லை. ----- கம்பன் வீதிவிடங்கன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர். இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவிலின் வடக்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : எண் 880. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.880. S.I.I. Vol. VII.) விளக்கம் : “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்” என்று தொடங்குகிற'b9 கோவிராஜ பாகேசரி பன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவரின் 29-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனத்தின் கீழ் இந்தச் செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. ஐயங்கொண்ட சோழபுரத்து மிலாடான ஜனநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருகோவலூர் வீரட்டான முடைய மகாதேவருக்கு 150 பசுக்கள் தானங் கொடுக்கப் பட்டதை இச் செய்யுள் கூறு கிறது. “பசு ஒன்றுக்கு பாலாழாக்காக நிசதம் பால் பதக்கிருநாழி முழாக்குப் பால் உச்சம் பொழுது பாலாடியருள” இந்தப் பசுக்கள் இக்கோவிலுக்குத் தானங் கொடுக்கப்பட்டன. சாசனச் செய்யுள் பாலிக்குங் கோவலூர் சிற்றிங்கூர் மருதூர் பதிமல்லம் பதிற்றுப்பத் தொடுபதிற் றைஞ்சான காலிக்குப் புணையாகத் திருவுண்ணா ழிகையார் கைக்கொண்டு கறவைஒன் றாலாழாக் காங்கணக்குக் கோலிக்கொள் பால்பதினெண் ணாழிமுழக் குக்கோவல் வீரட்டர்க்கு மஞ்சனமாடக் குடுத்தான் வேலிக்கோன் திறற்கம்பன் விறல்வீதி விடங்கன் வேந்தர்பிரா னருமொழிக்கு விண்ணப்பஞ் செய்தே. குறிப்பு :- பதிற்றுப்பத்தொடு பதிற்றைஞ்சு - நூற்றைம்பது. காலி - பசு. திருவுண்ணாழிகையார் - அகநாழிகையார் (கருப்பக் கிருகத்தார்), அதவாது மூலஸ்தானத்தில் பூசை செய்யும் ஆதி சைவர்கள். குடுத்தான் - கொடுத்தான். பழைய சாசனங்களில் இந்தச் சொல் குடுத்தான் என்றே எழுதப்பட்டுள்ளது. வேலிக்கோன் கம்பன் வீதிவிடங்கன் - இவன் இராஜராஜ சோழனின் ஒரு உத்தியோகஸ்தன். அருமொழி - அருமொழித் தேவர்; இது இராஜராஜ சோழனின் பெயர். ----- காடவர்கோன் பாவை இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, சிற்றாமூர். இவ்வூர் மலைநாதர் கோவிலின் பின்புறமுள்ள பொடாவின் அடியில் உள்ள செய்யுள். பதிப்பு : எண் 830. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.830. S.I.I. Vol. VII.) விளக்கம் : சிற்றாமூர் மலைநாதர் கோவில் ஜைனக் கோவில். இக்கோவிலுக்குச் சோழ அரசியார் தருமஞ் செய்ததை இச் செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் காடவர்கோன் பாவை கனைகழற்காற் சோழற்கு நீடுபுகழ்த் தேவியார் நீணிலத்துப் - பீடுசிறந் தமரும் சிற்றாமூர் செய்திறங்கல் மீட்பித் தறம்பெருக வாக்கு மவள். குறிப்பு :- காடவர் கோன் பாவை - பல்லவ அரசன் மகள். இவர் சோழ அரசனை மணந்தார். இவர், நிலத்தைச் செப்பனிட்டு அதனை இக்கோவிலுக்குத் தானமாக வழங்கினார். ----- புத்தன் இராசசிங்கன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, திண்டீசுவரர் கோவில் முன் மண்டபத்துத் தெடன புறச் சுவரில் உள்ள செய்யுள். பதிப்பு : எண் 837. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.837. S.I.I. Vol. VII.) விளக்கம் : புத்தன் இராசசிங்கன் என்பவன் இந்த கோவிலின் முன் மண்டபத்தைக் கட்டியதை இந்த செய்யுள் கூறுகிறது. இவன் கோ இராஜராஜ ராஜ கேசரி பர்மன் என்னும் சோழ மன்னனுக்கு கீழடங்கிய சிற்றரசன். சாசனச் செய்யுள் சீராருந் தென்கிடங்கிற் றிண்டீச்சரத் தரனுக் கேராருங் கன்மண்டப மெடுத்தான் - பாராரும் பொன்னான பூமகள்சேர் புத்தன் இராசசிங்க னென்னானை ஆறையா றேறு. புத்த னிராசசிங்கன் ஏவத் திருத்திண்டீஸ்வரமுடையார் மண்டபம் செய்வித்தான் வாகூர் சிவப்பிராமணன் திருமாங் கோயில் வாணகோவரையன். குறிப்பு :- கிடங்கில் என்பது திண்டிவனத்தின் பழையப் பெயர். இந்த மண்டபம் அமைந்த இராசசிங்கனின் மனைவி கண்ணன் அருஞ்சிகைப் பிராட்டி என்பவர், இந்தக் கோவிலுக்கு விளக்கு எரிப்பதற்காக ஆடுகளை தானம் செய்திருக்கிறார். “இவ்வூர் கடம்புழான் புத்தன் இராசசிங்கன் அகமுடையாள் கண்ணன் அருஞ்சிகைப் பிராட்டி வைத்த நந்தா விளக்கு இரண்டினுக்கு விட்ட சாவாமூவாப் பேராடு நூற்றெண்பது” என்று இக்கோவிலிலுள்ள இன்னொரு சாசனம் கூறுகிறது. (No.836. S.I.I. Vol. VII.) ----- நரேந்திரப் போத்தரையன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, தளவானூர். இவ்வூரில் உள்ள பாறைக்குன்றில் அமைக்கப்பட்ட குகைக் கோயிலின் தூணில் உள்ள செய்யுள். பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி 12. பக்கம் 225 - 26. (Epigraphia Indica Vol. VII. P. 225 - 26.) விளக்கம் : நரேந்திரப் போத்தரையன் என்பது மகேந்திரவர்மன் I உடைய சிறப்புப் பெயர். இவன் கி.பி. 600 முதல் 630 வரையில் அரசாண்ட பல்லவ அரசன். முதன் முதலாக தமிழ் நாட்டிலே பாறைகளை குடைந்து குகைக் கோயில்களை அமைத்தவன் இவனே. வெண்பேடு - இப்போதுள்ள தளவானூருக்குப் பழைய பெயர். சத்துருமல்லன் என்பதும் முதலாம் மகேந்திர வர்மனுடையப் பெயர். சாசனச் செய்யுள் தொண்டையந் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் மிகமகிழ்ந்து - கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்துருமல் லேஸ்வராலயமென் றரனுக் கிடமாக வாங்கு. இவ்வூர் பிரம மங்கலவன் செல்வன் சிவதாசன் சொல்லியது. குறிப்பு :- இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள சாசனச் செய்யுட்களில் இதுவே காலத்தினால் முற்பட்டது. நரேந்திர போத்தரையன் என்பவன், இக்குகைக் கோயிலை அமைத்து இதற்குச் சத்துருமல்லேஸ்வராலயம் என்று பெயரிட்டதை இச்செய்யுள் கூறுகிறது. இச்செய்யுளைப் பாடியவர் பிரமமங்கலவன் செல்வன் சிவதாசன் என்பவர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு. ----- காடவராயர்கள் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, விருத்தாசலம். வேதகிரீசுவரர் கோவிலின் இரண்டாவது கோபுர வாயிலின் வலப்புறத்தில் உள்ள சாசனம். பதிப்பு : எண் 263. தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு. (No. 263. S. I. I. Vol. XII.) விளக்கம் : கீழ்க்கண்ட செய்யுட்கள் காடவராயர் சிலரைப் புகழ்கின்றன. காடவராயர் என்பவர் பல்லவ அரசர்கள். வளந்தா னாரான காடவராயரையும், அவர் மகன் ஆட்கொள்ளியாரான காடவரா யரையும், அவர் மகன் நாலுதிக்கும் வென்றாரான ஏழிசை மோகன் காடவராயரையும், அவன் தம்பி அரசநாராயணன் கச்சிராயரான காடவராயரையும் புகழ்கின்றன. இந்தச் செய்யுட்கள் எழுதப்பட்டுள்ள கோபுரவாயிலுக்குக் கண்டராதித்தன் வாசல் என்று பண்டைக் காலத்தில் பெயர் வழங்கப்பட்டது. சாசனச் செய்யுள் அரசநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன் கண்டராதித்தன் வாசலில் கல்வெட்டுவித்தபடி. வரிவளை பொலம்பூண் கொடுத்த மங்கையர் மயலுற மனந்தான் துடக்கு கின்றன மதிகதி ரிரண்டாங் கெனச் சிறந்தொளிர் வயிரமு மிசைத்தாங் கிடப் பிசைந்தன பரிமள தளந்தான் சமைத்த குங்கும பரிவொடு பசுஞ்சாந் தெழக் கமழ்ந்தன பலிகொள விரந்தாங் குமிக்க சிங்களர் பரவையில் விழுந்தாங் கெடத் துடர்ந்தன கரிபரி உடன்சேர்ந் தெடுத்த கங்கர்கள் கருவரை யிடந்தான் புகக் கடந்தன கனலென வுகந்தான் சுடத் துடங்கிய கலிவலி பெலந்தான் புகத் துரந்தன வரிபெற விரந்தான் தடக்கை ஒன்றினி லகலிட முகந்தாம் புனற் சொரிந்தன வரசரை நெடுஞ்சரங் கிடக்கை கொண்டன அழகிய வளந்தான் திருப்பு யங்களே. 1 இது வளந்தானாரான காடவராயர் கவி. அங்குலவும் வயற்பெறுகை ஆட்கொள்ளி காடவர்கோன் பங்குலவு மதசானை பதநிகளம் விடுகின்றா னிலங்குமணி முடியரசர் யார்கொலோ விணையடியில் விலங்கு கலின் கலினென்ன வீதிதொறும் வருவாரே. 2 இது இவர் மகனார் ஆட்கொள்ளியாரான காடவராயர் கவி. பொருகாம னம்பு புகுந்துயிர்மே லன்றிச் செருகா விடையாமஞ் செல்லா - தொருகாலும் பாகாகா மாலியானைக் கண்டு பணிந்தானை மோகாகா வந்திபடா முன். 3 இது இவர் மகனார் நாலுதிக்கும் வென்றாரான ஏழிசை மோகன் காடவராயர் கவி. துடக்கு மாரன் சொரிசரப் பாயல்மேற் கிடக்கு மிவ்வுல கென்பதுங் கேட்டுமே வடக்கு மேருவுந் தெற்கு மலையமுங் கடக்கு மாணையான் கச்சிய ராயனே. 4 மும்மலை முன்பெறிந்தாய் பின்பு முரணிரட்டர் தெம்மலை வாதாபி சென்றிருந்தாய் - மெய்யம்மைச் செருவரசே பின்னிச் சிலம்பா வெறிந்த தெருவரைசே மேனா ளுடன்று. 5 இது இவர் தம்பியார் அரசநாராயணன் கச்சியராயரான காடவராயர் கவி. இவர் மகன் சகரையாண்டு ஆயிரத்தொரு நூற்றெட்டினால் ஆடி மாசத்துப் பிற்பத்தில் கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் கற்கடக மாராயன் கூடலும் அதியமானாடும் அழித்து வெற்றிக்கொடி உயர்த்த அனுமனும் பொறித்தான் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன். பாரள வல்ல பணைத்தோ ளளவு பகலவன்போந் தேரள வல்லநின் செங்கோ லளவு திகிரிச் செங்கை காரள வல்ல பரவீர சேகர காடவநின் போரள வெவ்வள வாம்பர வேந்தர் புறத்தளவே. 6 தாரார் மணிப்புயந் தண்ணந் துழாய்மண நாறுஞ்சந்தக் காரார் திருநிறஞ் செய்யாள் திருமண நாறுங்கச்சி யாரார் திகிரிக்கை யாளப் பிறந்தாற் கசஞ்சலற்குப் பாராள் வடமன்னர் பொன்முடி நாறும் பதாம்புயமே. 7 விடையள விட்ட கொடிவீர சேகர காடவநின் நடையள விட்டது ஞாலங்க ளேழையும் வாழிநின்போர்ப் படையள விட்டது பத்துத் திசையும்பரியமுத்தக் குடையள விட்ட திரிசுடர் சூழண்ட கூடத்தையே. 8 ஸ்வஸ்திஸ்ரீ. இக் கல்வெட் டழிப்பான் வல்லவரையன் சத்தியம். குறிப்பு :- செய்யுள் 1. இது வளந்தானார் ஆன காடவராயரின் புயத்தை (தோள் வலியைப்) புகழ்கிறது. செய்யுள் 2. இதில் இரண்டாம் அடியில் மதசானை என்றிருப்பது மதயானை என்றிருக்க வேண்டும். வீரசேகர காடவராயன் அதிகமான் நாட்டையும் கூடலையும் அழித்தது சக ஆண்டு 1108 என்று கூறுகிறபடியால் அது நிகழ்ந்தது. கி.பி. 1186-இல் ஆகும். அதிகமான் நாடு என்பது தகடூர் என்னும் தர்மாபுரி. கற்கடக மாராயன் என்பவன் யார் என்பது தெரியவில்லை. ----- அடையவளைந்தான் வீரர் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், கூடலூர் தாலுகா, திருவேந்தி புரம் (திருவயிந்திபுரம்). தேவநாயகப் பெருமாள் கோவில், மேலைக் கோபுரவாயிலின் இடதுப்புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு :எண் 771. (No.771. S. I. I. Vol. VII.) விளக்கம் : தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் அரசனின் படைவீரர் சிறப்பைக் கூறுகிறது இச் செய்யுள். சாசனச் செய்யுள் அருள்புனை தொண்டையர் கோமா னடைய வளைந்தபிரான் பொருபடை மன்னவர் வீரமொன்றே; பொரும்போர் தொலைந்தும் வருகதிர் முந்து குணதிசை ஆள்வர், வடக்கிருப்பர் வெருவரு தென் திசை கொள்வர், செல்லாநிற்பர் மேற்றிசைக்கே. ----- அறவுரை இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைலில் உள்ள திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள, நாலுமூலைக்கேணி என்னும் மாற்பிடுகு பெருங் கிணற்றுச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி பதினொன்று : பக்கம் 154 - 158.(Epigraphia Indica Vol. XI. Page. 154 - 158.) விளக்கம் : இந்தக் கிணறு, பல்லவ அரசனான தந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்கிணற்றை அமைத்தவன், கம்பன் அரையன் என்பவன். இந்தச் சாசனச் செய்யுளுக்கு மேலே, கீழ்கண்ட செய்தி எழுதப்பட்டிருக்கிறது : “ஸ்வஸ்திஸ்ரீ. பாரத்துவாஜ கோத்திரத்தின் வழித் தோன்றிய பல்லவ திலக குலோத்பவன் நந்திவர்ம்மற்கு யாண்டு நான்காவ தெடுத்துக்கொண்டு ஐந்தாவது முற்று வித்தான், ஆலம்பாக்க விசையநல்லூழான் தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப் பெருங்கிணறு. இதன்பியர் மார்ப்பிடுகு பெருங் கிணறெண்பது. இது ரக்ஷிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்று வரும்.” சாசனச் செய்யுள் கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன் னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய். குறிப்பு :- இச்செய்யுளில் ஏகார ஈற்றுச் சொற்கள் யகர மெய் பெற்று நில்லாதேய், பண்டேய். நையாதேய், வைம்மினேய் என்று வந்திருப்பது கருதத்தக்கது. பண்டைக் காலத்துச் சாசனப் பாடல்களில் பெரும்பாலும் இவ்வாறே உள்ளன. ----- குருகூர் நம்பி இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா, அன்பில் கிராமம், சுந்தரராசப் பெருமாள் கோவில் வடக்குப் புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு : எண் 187. (No. 187. S. I. I. Vol. VIII.) விளக்கம் : இந்தக் கோவிலில், அழகியபெருமாள் இளை யாழ்வார், மலர்மகள், அனுமார் இவர்களின் உருவங்களைக் குருகூர்நம்பி என்பவர் அமைத்ததைக் கூறுகிறது இச் செய்யுள். சாசனச் செய்யுள் அன்னவயல் சூழ்அன்பி லவர்கள்நீடி அழகெய்தி முப்பொழுதுங் கண்டுபோற்ற மன்னும் அழகிய பெருமாள் இளையகோவை மலர்மகளை மாருதியை எழுந்தருளு வித்தோன் கன்னநய குடைத்தடகைப் பாருண்நிதி காண்டகுசீர்க் கிளைதாங்கி கலைகள் ஓதி செந்நெல்வயல் சூழ்வீரை சிங்கம்எங்கள் சீகுருகூர் நம்பிஎனுஞ் செழுமறையோன் தானே. குறிப்பு :- சுந்தரராசப் பெருமாள் என்று இப்போது வழங்குகிற பெயர் பண்டைக்காலத்தில் அழகியபெருமாள் என்று வழங்கியது. சிராமலையந்தாதி இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மலையின்மேல் உள்ள மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவில் சுவர்களில் எழுதப்பட்டுள்ள செய்யுட்கள். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண் 167. (No. 167. S. I. I. Vol. IV.) விளக்கம் : இந்தச் செய்யுட்கள், சிராமலைச் சிவபெருமான் மீது பாடப்பட்ட அந்தாதிச் செய்யுட்கள். கலித்துறைப் பாவினால் இயற்றப்பட்டவை. இதனைப் பாடிய புலவர் பெயர் நாராயணன் என்பது. இவர் கி.பி. 9 அல்லது 10- ஆம் நூற்றாண்டில் இருந்தவராவர். சில செய்யுட்களில் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. சாசனச் செய்யுள் உலக மடந்தை நுதலுறந்தைப் பதி யந்நுதற்குத் திலதம் பரம னமருஞ் சிராமலை யம்மலைவா யலகின் னிறைந்த கதிர்மணி பாய . . மேல் வந்ததந்தாதி . . ப் பொன்னி பரன் கழுத்திற் கொண்ட வெள்வடமே. 1 வடகயிலாயமுந் தென்மான் மலையப் பொருப்பு மென்னுந் தடவரை தாமிதன் றன்மைய வாவது தாமுணர்ந்துங் கடவரை மேக முழக்குஞ் சிராமலை கண்டகண் முடவரை யொக்கு மறுசான் றெண்ணி மொழிகின்றதே. 2 மொழிந்திடுமெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின் கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கொடல் கருமுகில்வான் பொழிந்திடு மெல்லருவிச் சிராமலை புகுத்துடுமி னிழிந்திடு நும்வினை யீச னங்கேவந் தெதிர்ப்படுமே. 3 படும்போழு தாயிற்று வெங்கதிர் கூர்றுவன் பற்றிநம்மை யடும்பொழு வஞ்சலென்பான் சிராமலையர் எரிவந் திடும்பொழு தாயிற் றெதிர்கண்டிடி லெமருங் கொடியர் நெடும்பொழுதா லென்கொலோ வன்பர்நீர்வந்து நிற்கின்றதே. 4 நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சனுங்கித் தெற்கும் வடக்குந் திரிந்தே வருந்திச் சிராமலைமேற் பொற்குன்றனைக் கண்டுகொண்டே னினிபுறம் போகலொட்டேன் கற்குன்றனைய நெஞ்சிற் செல்வரா லில்லை காரியமே. 5 காரிக் குதவார் கடவுட் கிறைச்சியுங் கள்ளுநல்கு மோரிக் குரற்பெண்க ளொன்றறியீ ரொருபால் குறவர் சேரிக் கொடுமுடித் தெய்வச் சிராமலைத் தெண்மணிநீர் வாரிக் குளிக்க வொளிக்குமெய்ந் நோயி மடவற்கே. 6 மடக்கோல் வளையிடத் தான்றன் சிராமலை வாழ்த்திலர்போல் படக்கோ நிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார் விடக்கோ கிடந்தன வௌர்வரையார் கொள் வாளளைந்தார் தடக்கோ வெளிப்படுத்தார் மறவீர் நுங்கள் சுற்றத்தையே. 7 சுற்றத்தை நியத்தி நின்றசூள் புணையாகச் சுரம்படர்ந்த நற்றத்தை பெரலிக்கு நல்குகண்டாய் பண்டு நாடறியப் பெற்றத்தை யேறும் பெருமான் சிராமலை மேலோர்சேர் குற்றத்தை நீங்கும் குணத்துர வோர்தாங்கள் கோளரியேய். 8 கோளரி யேறு போலக்கொல் யானையைக் கொன்றுதிங்கள் வாளரி யேறு கண்ணா யிருந்தவன் மால்கடல்வா யாளரி யோறிடத் தாண்டான் சிராமலை ஐவனமாந் தோளரி யேறு தஞ்சமா ரிதற்குந் தலைமகளே. 9 தலைமக . . . . . . பர னொருவன் னவன் றம்பி கொம்பார் குலைமுக யானைத் தலையின்னவர் தாயலை மலையாள் முலைமுக நியமயங்கி மயங்கிற்றுன் முன்மையென்னோ சிலைமுக நீடு திருமலை மேய திகம்பரனே. 10 பரந்தெரி . . . .ன் றுகளாகிப் பகையுறனைச் சரந்தெரி கானவர் தன்னய . க தடமலரோன் சிரந்தோயா வொள்வலி சதித்த விரன் சிராமலை போலுந் . . . . வானுடன் போன வெள்வளைக்கே. 11 வளைவர . . . . . .ய வந்துகாண மணி நாளில்வந்த முளைவா யெயிற்று முதவச் சிராமலை முடியிலவிள் சுளைவாய் சொரிந்த பெருந்தேன் சுடர்தோய் நறுங்கமலத் தளைவாய்த் தேனருந்தச் சுரும் பார்க்கின்ற தண்பரணியே. 12 பரணித் தடையா வலர்கள்பெறு குருரம்பைக் கிணைமல்லமுத்தங் கரணத் தடங்கண்மலர் காதளவும் முன் காரதிருந் திரணைத் தடஞ்சாரற் பரமன் சிராமலை சூழ்சுளை திரணைத் தாங்கப் பிடித்துடி யறுகேநின்ற பாயமயிற்கே. 13 மயிலார் . . . . . க . . . . மென்று பேரகில் வஞ்சியென்று பயிலாக் கிளியும் மயிலும் படைக்குணகன் பார்த்துழைமா னயிலா தொழிகி லவை வளங்காவ லெவ்வா றமைத்தார் வெயிலார் மழுவன் சிராமலை வாழ்நர்தம் மெல்லியற்கே. 14 மெல்லிய . . . த . . மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச் சொல்லிய கோவிற் கருள் செய்தவன் சூழலும் முகிலை வல்லிய மால் களிறென்று தன் வாளுகிராற் கதுவச் செல்லிழி சாரற் சிராமலை மேய திருவடியே. 15 வடிக்குங் கருங்குழல் மேலுமைச் தாள் மொய்த்த வண்டகற்றிக் கொடிக்குங் குமக்கொங்கை மேலுங் கொண்டாள் கொண்ட லந்திமந்தி பிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போலநன்றுந் தடிக்குங் கலையல்கு லாளின்ப நீதந்த தண்டழையே. 16 தழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு பிழைகொண்டு பொய்யென்று பேசிவிட் டேற்கவர் பேரருளான் மழைகொண்ட கண்டர்தம் மானிர்ச் சிராமலை வந்துநின்றா ருழைகொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றிடிலே. 17 உற்றார் தலையிட வொன்னார் முகந்த உண்டுமிக்க துற்றா ரிடுவ ரெனத்தொழு தோங்குந் தொழார் புரங்கள் செற்றார் சிராமலை சேரவல்லார் திருநாம மெல்லாங் கற்றார் கனைகழல் கண்டிறைஞ் சாதவர் கைத்தலமே. 18 கைத்தலைக் கராமலை நெல்லிக் கனிபோல் கலைகளெல்லா மெத்தலைப் பாடு விதியுணர்ந்தோர் தங்கள் விதியெங்குஞ் செய்த்தலை நிலமலருஞ் செழுநீர் சிராமலையான் பைத்தலைப் பாம்புகண்டீ ரரைமேற் கொண்ட பட்டிகையே. 19 பட்டிப் பசுமுள் படரத் துடர்ந்துநின் பாடுசொல்லின் முட்டித் திரியு முகில்போ லதிரு முரட்கயிற்றாற் கட்டிக்கொடாளுங் கருமஞ்சொன்னாங்கன்னி யாரமெங்குங் மட்டிக் கமழுஞ் சிராமலையீர் நுமதவிடையே. 20 மதவிடைப் பாகன் மதியிடைப் பாகன் மழைநிறத்தோர்க் குதவிடப் பாக னுமையிட பாக னுயர்கலிங்கு கதவிடப் பாகு கமுகெழக் காமர் கடிநகர் வாய்ப் புதமடப் பாய்புனற் பொன்னிச் சிராமலைப் பொன்வண்ணனே. 21 பொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிக் கொண்ட மன்வண்ண மால்கடனஞ் சம்மிருந்த மறைமிடற் றான்றன் வண்ணந்தி வண்ணங் கண்டுதளிர் வண்ணம் வாடிச்சென்றான் மின்வண்ண நுண்ணிடை யாளெங்ங னேசெய்யு மெய்ப்பணியே. 22 பணியா வதுநஞ் சிராமலை மேய பரமற்கென்று துணியாடையு மணிவாய் நன்றுந் துவ ரூட்டிக்கொங்கை பிணியாதொழிந்தனை யோர்மனத் தேய்பிணிப் பான்றுடையா யணியா ரடிகள் பழந்தவஞ் சால வயிர்ப்புடைத்தேய். 23 அயிர்ப்புடையாய் நெஞ்சமே யினித் தேறர மங்கையல்லள் செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய் பயிரிப்புடை யாளடிப் பார்தோய்ந்தன படைக்கணிமைக்கு முயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே. 24 கிடைவாய் மடந்தையு மைந்தனுங் கேட்கிற் சிராமலையா னடைவா யவரை யனையார் கிளைபோ லழிந்துபட்டார் கடைவாய் நிணந்தின்ற பாவிதன் காதற் கரும்பெடையின் முடைவாய் புகச்சொரி முண்மாக் காளத்து முன்பினரே. 25 முன்வந்து நின்றனை யென்றுரைக் கேன்முகிழ் மென்முலைக்கீழ் மின்வந்து நின்றனன் நுண்ணிடையாய் விதியே வலிந்த பொன்வந்த கொன்றையர் பூந்தண் சிராமலை போற்றலர்போல் பின்வந்து வனகா னவர்கைய் பாடும் பெருஞ்சுரத்தே. 26 பெருஞ்சிலை யாற்புர மூன்றெறித் தோன்பிறைக் கோட்டுக்கைம்மா வுரிஞ்சிலை தேங்கமழ் பாங்கற் சிராமலை யுள்ளலர்போல் வருஞ்சிலை யோர் நுமராகின் மறைவன் வன்கானவரேற் கருஞ்சிலை யாலழிப் பன்கலங் காதுநிற் காரிகையே. 27 காரிகத் தாழ்பொழிற் கண்ணார் சிராமலைக் காமர்கொன்றைத் தாரிகத் தாழ்சடைச் சங்கரனே சதிரொப்பனகொ பாரிகத் தாழுநின் பாதம் பணிந்தவ ரேதமஞ்ச வோரிகத் தாவருங் கானகத் தாடி யுரைகின்றதே. 28 உறைவாய் சிராமலை யுள்ளுமென் சிந்தை யுள்ளுமென்றும் பிறைவாயய் மழுவாட் பெரியவனே நுன் பியற்கணிந்த கறைவா யரவங் கடியா வகையடியே னறியே னறைவா யழலுமிழும் புரிந்தாடி யலமருமே. 29 அலமரு நெஞ்சத் தரிவைகண் டாற்றுங்கொல் போற்றலர்தங் குலமரு முப்புரங் கொன்றவன் கோலச் சிராமலைசூழ் நிலமரு தென்றுளி நித்திலங் கோப்ப நெடும்பொழில்கள் சலமரு வெள்வடம் பூணத்தண் கானெடுந் தாழ்பனியே. 30 பனிப்படம் போர்த்தனள் பார்மகள் யானும் பசலையென்னுந் துனிப்படம் போர்த்திங்குத் தேனங்குத் தாரன்பர் துங்கக்கைம்மா முனிப்படம் போர்த்தபிரான் சிராப் பள்ளியு மூரிக்கொண்மூத் தனிப்படம் போர்க்கும் பருவமன்றோ வந்து சந்தித்ததே. 31 வந்து சந்தித்திலர் காதலர் பேதையை வாதைசெய்வா னந்திசந்திப்ப வெழுந்த தரன்றன் சிராமலைவாய்க் கொந்து சந்தித்த செங்காந்தண் முகைகொண்டு கொண்டிடுவான் மந்தி சந்திப்ப வரவென் றுள்வாடு மதிப்பகையே. 32 மதியும்பகை முன்னைவாயும் பகை மனையும் மனைசூழ் பதியும் பகை பகையன்றில் என்றும் பகை பான்மைதந்த விதியும் பகையெனிலும் மன்ப ரன்பினர் வெள்ளக்கங்கை பொதியுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே. 33 குழனெறி கட்டிய கொம்பனையா ரொடுங் கொண்டசுற்ற மழனெறி காட்டு மிடத்தெனக்குத் தனக் கன்பர் சென்ற பழனெறி காட்டும் பரன் சிராப்பள்ளி பரவக் கற்றேன் முழுநெறி யாகிலுஞ் செல்லே னினிச்செல்வர் முன்கடைக்கே. 34 இனிச்செல்வர் முன்கடைக் கென்செயச் செறுமினைய னெஞ்சேய் கனிச்செல்வ மாம்பொழிற் காவிரித் தென்கரைப் பூவிரிக்கும் முனிச்செல்வர் சேருஞ் சிராப்பள்ளி மேய முக்கட் சுடரைத் தனிச்செல்வனைப் பணிந் துள்ளமிர் தூரித் தடித்தனமே. 35 தடித்த சுறதங் கமழ்சாரற் சிராமலைச் சங்கரன்றன் கொடிக்கண்ட வள்ளேறன்ன வெற்றிiக் கரங்கொடிழைத் தரண்சூழ் படிக்கண் விட்டார்த்தன ராயர் தளைப் பருவலியாற் பிடித்த மொய்ம்பர்க் கின்றெளிய ளன்றோ வெங்கள் பெண்ணமிர்தே. 36 பெண்ணமிர்தைப் பார்பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை வண்ணப் பயலை தணிவித்திரேல் வம்மின் செம்மனத்துக் கண்ணப்பனுக் கருள் செய்த சிராமலையானைக் கண்டு விண்ணப்பமுஞ் செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே. 37 வேறு கண்டாய் நெஞ்சமே தளரேல் விளை மாங்கனியின் சேறு கண்டாருண் சிராமலை யாதிதன் செல்வஞ்சொன்னால் யாறு கண்டா யவன் றேவியில் லம்பல மேற்பதைய மேறு கண்டா யவனேறிப் பல்காலம் மியங்குவதே. 38 காலால் வலஞ்செய்து கையாற் றொழுது கண்ணாறக் கண்டு மேலா னவருடன் வீற்றிருப்பா னெண்ணில் மெய்ப்புலவீர் சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப் பாலா னறுநெய்யோ டாடியைப் பாடிப் பணிமின்களே. 39 பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர் தணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் மொய்ம்மை தவம்புகுநாள் கணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த மணிமின்கள் போலோளிர் வான்றோய் சிராமலைப் பள்ளி வள்ளலுக்கே. 40 வள்ளலுக்கும் மலை மாதர்தங் கோனுக்கு வார்சடைமேல் வெள்ளெருக்கும் மதியும் பொதிந்தானுக்கு வெண்பளிங்கு தெள்ளலைக்கும் மருவிச் சிராப்பள்ளிச் சிவனுக் கன்பா யுள்ளலுக்கு நன்று நோற்றதன்றோ வென்றுணர் நெஞ்சமே. 41 நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு தஞ்சப் பெருக்குளதா னஞ்சிராமலைச் சாரலுண்டு துஞ்சுந் துணையுஞ் சிவனைத் தொழுது துறக்கமெய்தார் பஞ்சந் நலியப் பலிதிரிவார் சிலர் பாவியரே. 42 பாவிய ராக புரத்திற்பட்டார் பசுஞ் சந்தனத்தி னாலி யாரவு சிராமலை யானையு நல்லனென்னோ மோவியராலு மெழுதப்படா வுருவத் தசுரர் தேவிய ராவியுங் கொண்ட தன்றோ வவன் செஞ்சரமே. 43 சரங்கலந்தோரைப் புணர்விக்க வேயார் மென்றார் கணவன் னிரங்கலந்தோ டெரி சேர்கின்ற வாறென் சிராமலையா யிரங்கலந்தோ விலையால் வினையெற்கென் றிரதிமண்மேற் கரங் கலந்தோலிடக் கண்டதன்றோ நின்றன் கண்மலரே. 44 கண்மலர் நீலங் கனிவாய் பவழங் கருங்குழல்கார் எண்மலர் மூக்கிளங் கொங்கைகள் கோங்கிடை யென்வடிவென் னுண்மல ராசையி னொப்புடைத் தல்கிலொண் பொன்மலையான் றண்மலர் சேர்தனிச் சங்கிடுவா ளொரு பெண்கொடிக்கேய். 45 பெண்கொடி யாரிற் பிறர்கொடியா ரில்லை பேரிடவத் திண்கொடி யாரைச் சிராமலை யாரைத் திருநுதன்மேற் கண்கொடியாரைக் கனவிற் கண்டு கலைகொடுத்த வொண்கொடியாரை யுணர்வழிந் தாரென் றுரைப்பர்களேய். 46 கள்ளும் முருகுந் தருமலரான் மிக்க சந்திறைஞ்சி யுள்ளும் புறமும் மொருக்க வல்லார்கட் குலகறியக் கொள்ளும் மடிமை கொடுக்குந் துறக்கம் பிறப்பறுக்குந் தெள்ளும் மருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே. 47 கொழுந்தார் துழாய்முடிக் கொற்ற'b9 கருடக் கொடித்தேவுஞ் செழுந் தாமரையிற் றிசைமுகத் தாதியுஞ் சேவடிக்கீழ்த் தொழுந் தாரியர்தந் துணிவைப் பணியச் சுடர்ப்பிழம்பா யெழுந்தான் சிராமலைக் கேறநம் பாவம் மிழிந்தனவே. 48 இழியும் நரகமு மேறுந் துறக்கமு மிவ்விரண்டும் பழியும் புகழுந் தரவந்தன வினைப் பற்றறுத்துக் கழியும் முடம்பு கழிற்தவர் காணுங் கழலன்கண்டீர் பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனேய். 49 புண்ணியன் வேதம் முதல்வன் புரமூன் றெரித்தவன்று திண்ணியன் றேவர் பிரானென்ன நின்றான் சிராமலைவாய்க் கண்ணியன் றண்ணந் தழையன் கனைபொற் கழலனம்பாற் றண்ணியன் இன்றும்வரும் மன்று போன தனிவில்லியே. 50 வில்லியன் பின்செல்ல முன்செல்லா விரிவையு மென்கிளிப்போல் சொல்லிபின் செல்லமுன் செல்லா விடலையுட் சொல்லிமான் வல்லிபின் செல்லமுன் செல்லா திடங்கொண்ட மாதவர்போ லெல்லிபின் செல்லமுன் செல்லார் சிராப்பள்ளி யெய்துவரேய். 51 எய்துவ ராயமுந் தாமும் இரும்பொழி லென்னைமையல் செய்தவர் வாழ்வுஞ் சிராமலை யென்பது சென்றுகண்டால் மெய்தவர் மான்விழி மென்முலை தண்ணிய வம்முலைக்கீ ழைதவர் நுண்ணிடை யல்கிலுஞ் சால வளவுடைத்தேய். 52 உடைத்தேய் வருதுன்ப வெம்பகை நீக்கி உலகளிக்குஞ் சடைத்தேவர் முடித் தேவருந் தாடொழத் தானவரைப் புடைத்தேய் கெடுத்த பரமன் சிராமலைப் பாடிருந்துங் கடைத் தேவனைத் தொழுமோ வினையேனென் கரதலமேய். 53 கரம்பற்றிய வில்லி கைப்பற்றிய வல்லி காலைக்குஞ் சுரம்பற்றிய செழுமம் பொன்சுடர்க் கமலத் தயன்றன் சிரம்பற்றிய மழு வாளிதன் சாரற் சிராமலைசேர் வரம்பற்றிய பெரியோரிற் சென் றேகின வாழ்பதியே. 54 பதியிலந் நாடிலம் பைம்பொற் குடைபெறப் பண்டுசெய்த விதியிலம் . . . . . . இலம்வியன் கங்கையென்னு நதியிலங்குஞ் சடை நாதன் சிராமலை நண்ணவெண்ணும் மதியிலம் வாழ்வா னிருத்துமென் னோநம் மனக்கருத்தேய். 55 மனக்கருத் தாகிய .ரவலை கண்செ . . . . பற்றின . . க்கருத்து . . . . . . . இருந் தென் . . . . . . . . கெலாம் . . . . . . . . . . . . . . . . . . . . கொட்டிற் றளைக்கு . . . . . . . . . . . சிராமலையே. 56 மலையாள் மடந்தையோர் பாகத்தன் மாகத்து மானதஞ் சிலையா லழிவித்த நாதன் சிராமலை தேவர் . . . . . வ முலையா யொருவர் . . . . . . . . . குயிர்க . . . . . . . மிலையா . . . . .ழி ருணர்ந்தெமை வினாவி யியங்குவரேய். 57 இயங்கிய காலு நிலனும் எரியு மிருவிசும்பும் மயங்கிய நீரும் மறையும் பிறவு மருவியரந் தயங்கிய சோதியுந் தானாந் திருமலைத் தத்துவன்றாள் முயங்கிய சிந்தையி னார்க ளெந்நாளு முடிவிலரே. 58 முடியரை சாளு முந்நீரகன் ஞாலந்தன் முனணிந்த வடியாரையாள் விடுவான் சிராமலை ஐய நிலயிற் பிடியரை சாளி பிடிப்ப நடுக்குறும் பெய்புனத்தேய் குடியரை சாளுங் குறவருஞ் சாலக் கொடுமையரே. 59 கொடும்பற் றுயங்கிக் குழிகண் ணிடுங்கிக் குரனடுங்கி இடும்பைக் கொதுங்கி யிருமற் பகைகொல்ல இல்லிபட்ட நெடும்பற் களைய நிலையா வுடலை நிலையுமென்னார் திடும்பற் கலுழிச் சிராமலை யாளியைச் சேர்ந்தவரேய். 60 ஆளியைச் சேர்ந்த வகலத் தவனுக் கிளையவம்மென் றோளியைச் சேர்ந்த பிரான்றன் சிராமலை துன்னலர்போல் மீளியைச்சேர் நாதனம் செய்தளையெய் வினையேன் பயந்த வாளியைச் சேர்ந்த சிலைபோல் லுருவத்து வாணுதலே. 61 நுதன்மிசைச் செங்கண் மலர்ந்தனங் கொடையின் மன்மதவேள் மதனுகட் போந்தழற் சிந்துவித்தான் வண் சிராமலைவெற் பிதன்மிசை சாரலில் யாமா டிடமிள வண்டுறங்கும் புதன்மிசைத் தோன்றியுங் காந்தளும் பூக்கும் பொழிலிடமே. 62 பொழிலுடையார் பணி பொன்னடி வானவர் முன்முடிசேர் கழலுடையா னது காமர் சிராமலைக் காரனைய குழலுடையாணசையராற் குறவர் கொல்லியானைக் கொள்ளித் தழலுடையா நெறி யம்பொறி போர்க்குந் தயங்கிருளே. 63 இருளின் படலம் மிவை கார்முகி லில்லைவென்னின் மருளும் மயர்வும் பெரிதுடையா ரில்லை வல்லி . . . ருணோய்தெரும் மனத்தார்க்கருளும் பிரான்றன் சிராமலைபோல் பொருளும் மவிரும் பொன்னகர் வீதி புகுந்தாரேய். 64 வீதி வந்தாருடன் வெள்களந்தான் விளராலிவடன் சோதி சேர்ந்தான் சிந்தை . . . ல்லி . வுண்ணா . . ரதருவின் . . . சிந்தா மந்தி யாடுஞ் சிராமலைப் பொன்மலைபோ லாதி செந்தாமரை வண்ணங் கண்டா னங்கள் இழையே. 65 இழையிடங் கொண்ட தடமுரண் . . . . திளங் கோமதலை விழையிடங் கொண்டவெண் . ரனாறி. ர் தன்றி . ன்னி. . . ழவி மழையிடங் கொண்ட சிராமலையா ரளி மிறந்தவர்போல் பிழையிடங் கண்டது . . . . . . . . ள் பெண்கொடிக்கே. 66 கொடிக்கட்டிய மணி மாளிகைத் தில்லையுட் கொற்றமன்னர் முடிக்கட்டிய முகை சேர்கழல் மூவாயிரம் முன்னின் றடிக்கட்டிய கழலார்க்கநின் றம்பலத் தாடுமைய்யெர் வடிக்கட்டிய பொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே. 67 வான்றோய் சிராமலை வந்திறைஞ் சாதவர் மையல்வைகுந் தேன்றோய் மொழியவர் செவ்வாய் நினைந்து வெள்வாய் புலர்ந்து மீன்றோய் கடலன்ன வேட்கைய ராகத்தம் மெய்ம்மைகுன்றி ஊன்றோ யுடலிங் கொழிந்துயிர் போக்கும் உறைப்பினரே. 68 உறைப்புடைக் கூற்றை யுகைத்துயிர் மாற்றி யுலகறிய மறைப்புடை மார்க்கண் டயற்கருள் செய்தவன் வானெரிவாய்க் கறைப்புடைப் பாம்புறை திங்கட் கரைக்கங்கை நீரலைக்குஞ் சிறைப்புடைச் செஞ்சுடையன் உறை கோயில் சிராப்பள்ளியே. 69 பள்ளியம் மாதுயிலெற் கின்றிலை பாவிப் பிழைத்தாய் வள்ளிதம் . . . . . . சிலைவேடன் உட்கா . . . . . வெள்ளியம் மாலை யாளன் சிராமலை மேன்மலையன் உள்ளியம்மா விரந்தா லுகந்திய பத முன்மத்தமே. 70 மத்தமமைத்தான் சென்னிப் பொன்னிமவான் பெற்ற மாதுதன் b . . . . . . . . . . . . . . . முழுதும் பித்தமைத்தாய் சிந்தை நொந்து குலமந்து பேர் மாக்கண் முத்தமைத் தாய்க்கங்கை . . . . கில் . . . . நின் முதிர்ச்சியையே. 71 முதிரும் பாவை முகந்த கொண்மூ முகடேறி முன்னி யதிரும் மா . . . ப்பது . . . . . . . . வ்வமுங் கதிருங் கலந்த சிராமலை யாளி கழனோம்பு கதிர்த் திருவருள் போலினியானை யின் றெய்துவனே. 72 யானையின் றெய்த பிடியாமட . . . . . . . . . யன்பர்தம் வாழ்நாளை . . றென்னுவிட்டார் சிந்தை . . னெறுங் கொன்ற வீரன் சிராமலை யெவினப்பாற் பூனை நின்றெங்கும் பொரியதிர் தினம் புகுந்தனரே. 73 தினம்புகு கின்றது தண்பணை யாகத்தான் . . . மா வினம்புகு தேர் நின்றிழிந்து புக்கா ரன்பரென்று . . வுஞ் சினம்புகு திண்விடைப் பாகன் சிராமலைத் தெய்வமன்னான் மனம்புகு வெம்பிணிக்கொ . . . . . . .ணந்திட்ட மாமருந்தேய். 74 மருந்தேய் சிராமலை மாமணியே மருதாடமர்ந்தாய் குறுந்தேய் நறும்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரேய் முருந்தேய் முறுவ லுமைகணவா முதல்வா வெனநின் நிருந்தேய் நிறையழிந்தேன் வினையேன் பட்ட வேழைமையே. 75 ஏழைப் புதல்வன் னெனக்குத் துணையுமக் கெங்கையையுங் கோழைக் குரற்பெரும் பாணனையுங் கொளக் குன்றர்கொன்ற வாழைக் குலைமண நாறுஞ் சிராமலை வாழ்த்தலர்போல் மோழைப் பெரும்பேய் செல்லேலு நில்லெனுமென் முன்கடையே. 76 கடையகத்துச் சென்று கானிமித்து நின்று கைவிரித்து நடையகத்துப் பெரி தென்னத் திரிவர் நகுமதிசேர் சடையகத்துக் கங்கை வைத்தான் சிராமலை சார்வொழிந்து படையகத்துச் செல்வராய் நல்லாரான . . . . ரே. 77 களகன் னிவனெனப் பாரோர்நகப் பணையின் மடன்மே லளகந் நுதலி யொருவர் நாட லியானைக்கன்று மிளகு மடமையின் முளையும் மிளகமென் றேன்பருகிக் குளகுந் நுகருஞ் சிராமலை சூழ்ந்த குலப்பதிக்கேய். 78 பதியொற் றிடராற் படுதலையிற் பலி கொள்வதெங்குங் கதியொற்றி ஊர்வது காசின் மால்விடை காதலியுந் நதியொற்றி யூர்நகர் நஞ்சுண்பன தந்தலை . . ஞ்ச மதியொற்றி யூருஞ் சிராமலை மாதவர் வாழ்வகையே. 79 மாதவர் வாழுஞ் சிராமலை மாமணி கண்டாங்கேய் போதுவ ராகிலும் போமடவா யென்ன நிலநடுவே யீதவர் விதியின் றென்பர்போ லிருந்தோங் குணத்தோய் . . . யாவிசொல் லாயவர்பாற் சென்று சொல்லுதற்கேய். 80 சொல்லும் பொருளுஞ் சுவையும் பயனு மிலவெனிலும் அல்லும் பகலு மிகதா மெனக்குப் புரமெரிப்பான் வில்லுங் கணையுந் தெரிந்த பிரான்றன் சிராமலைமே லெல்லுங் கனைகழலின் குணம் பாரித்த வென்கவியே. 81 கவியலைத் துண்ணுங் கலைஞர்தங் காமரறு கார்க்களிற்றின் செவியலைத் துண்ணுஞ் சிராமலை வாழ்நனைச் சேரகில்லார் புவியலைத் துண்ணும் போர்வண் . . . . . வலராய் நவியலைத் துண்ணு மங்காடு நங்கை . . ராடு நண்ணுவரே. 82 நண்ணுதலர் காநற்படு மலரு நறுங் குடுமி விண்ணுதல் போழுஞ் சிராமலை வெற்பனை வேறிருந்து மண்ணுதல் ரடிப்பணிந்த னாமமதை... டக்கயென் ... வல்லார்க் கெளிதிமை யோர்த மிரும்பொழிலே. 83 இரும்பிடைச் சேர்ந்ததெண்ணீர் வளன்மை பெற்றிமை யோரிக்கப் பொரும்படைக் கூரெய்த பொன்மலை யாயைப் புணர்ந்தபின்னைக் கரும்பா . . . . . . . . மிர்துங் களிவளனுஞ் சுரும்பிடைத் தேனுநன் பாலுநின் போலச் சுவையில்லையே. 84 இல்லையென்பார் பொரு ளுண்டெனப் பரிவ விரதிபழஞ் சொல்லுந்தளை யாலவர் இரணங்கள் முன்றின் சுடர்விளக்காத் தில்லையென்பர் தென்சிராமலையா யென்று சென்றிறைஞ்சி வல்லையன்பர்க நெஞ்செயடு .னியின வன்பழிக்கே. 85 பழிக்கும் இருட்படலம் பேரருளன் கையு மஞ்செழுதயு லிழிக்கும் இமையவ ரேறும் மிடத்தெதிர் வந்தருவி தெழிக்குஞ் சிராமலைச் சித்தரைத் தீர்த்த . . . . . யக் கழிக்கும்மிது மெய்ம்மை கைகண்ட யோகங் கடலிடத்தே. 86 இடங்கொண்ட வேலையு மெழுமலையுந் திசை யானையெட்டும் படங்கொண்ட நாகஞ் சுமந்தவிப் பாருமே படருங்கொல்லோ திடங்கொண்ட சாரனற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்சேர் நடங்கொண்ட சேவடிக் குஞ்சித் தருள்செய்த நானகத்தே. 87 அருள்செய்வதும் படையென் மெய்ம்மையே யடியேனுக் கிம்மை பொருள்செய் துதவும் புதல்வரைத் தந்தென் பொல்லாத சொல்லால் மருள்செய்த மாலை கெண்டானை வண்டாருஞ் சிராமலைவா யிருள்செய்த கண்டனையே தொண்டர்காள் வந் திறைஞ்சுனே. 88 வந்திறைஞ்சித் தளர்ந்தேன் செல்லுமோ சிந்தை மாதவர்மேற் சந்திறைஞ்சிப் படர் சாரற் சிராமலைத் தாழ்ப்பொழில்வாய்க் கொந்திறைஞ்சிக் கமழ் கோதை சூலாவிக் குழலவிழப் பந்திறைஞ்சிப் பிடிப்பா ளிடைக்கே சென்று பற்றுய்டதே. 89 தேறுசொல்லாத தமிழ்த்தென் வேம்பய ரண்ணற் செங்குவளை நாறு மல்லாகத்து நாராயணன் பண்டை நான்மறையும் ஏறு மல்லோனைச் சிராமலை யாளியை யிங்கு . . . . .த்த னீறுமல்லோர் தம்மை நோக்கவல்லார்க்கென்று நோயில்லை.90 நோயிலங் காதலுடைய நெஞ்சேய் நுரைவெண் கடலுட் போயிலாங் காபுரஞ் செற்றபொற் றேர்வன் போத்திருந்து வாயிலங் கார்தரு மந்திரத்தால் வணங்கிப் பணிந்த சேயிலங் கார்கழற் றீர்த்தன் சிராமலை சென்றடைந்தே . 91 அடைக்குங் கதிர்மணி யாரம் முலைக்கணிந் தல்கின்மெல்லம் புடைக்குங் கலைபுனைந் தோதியிற் போது புனைந்துவிட்டார் விடைக்கும் முமைக்கு நற்பகன் சிராமலை மெல்லியலி ரிடைக்குங் இளையவர்க்கும் பகையோ நும்மை யீன்றவரேய். 92 ஈன்றாள் வருந்த விம்மைப்பிறந் தம்மைக் கிரங்கிநைய்யு மூன்றா முடிகொண் டொளிப்போ மெளிப்பட்bடாருங்கிநின்றோம் தோன்றாழ் சிராமலை வாரியின் மூரித் தெய்வக்களிறேய் தோன்றா யெமக்கொரு நாள்வினைப் பாசத் துடரறவே. 93 துடரிடை யாத்த ஞமலியைப் போலிருந்தேனிச் சுற்றத் திடரிடை யாப்பவிழ்த் தென்னைப் பணிகொள் பொன்னைப் புரையுஞ் சுடரிடை யாத்தபைங் கொன்றையு மத்தமுஞ் சூழ்சடையின் படரிடை யாத்த பரமன் சிராமலைப் பால்வண்ணனே. 94 பால்வண்ண நீற் றெம்பரன் சிராப்பள்ளிப் பரஞ்சுடர்தன் பால்வணங் கண்டுநம் பல்வண்ண நீங்கிப் பக்கத் திடஞ்சேர் மால்வண்ணங் கண்டுதம் மால்வண்ணங் கொண்ட வளைசரிந்து மால்வண்ணங் கொண்டுவந்தார் சென்று காண்மின்கள் மங்கையிரே. 95 மங்கை யம்பார் கண்ணி பெண்ணுக் கரைசி மலைமடந்தை கொங்கையம் பாரங்கள் போல்வா னெழுந்து குவிந்தழிந்து பங்கயம் பாதங்கள் பொன்மலர் பெறாதவர்ப் பொன்மலைமேற் புங்கவன் பாதந் தொழு தொழிப்போ மெங்கள் பொய்யுடம்பே. 96 பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடியப் புழுப்பொதிந்த மெய்யினைக் காத்து வெறுத்தொழிந்தேன வியன்பொன்மலைமே லையனைத் தேவர்தங் கோனை யெம்மானை யம்மான் மறிசேர் கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே. 97 கழலும் மருளுநஞ் சென்னி வைத்தோன் கனகச் சிலம்பிற் சுழலும் மலரும் மசோகும் பலாசுந் துடரா தெழிந்திட் டழலின் புறத்து வெண்ணீ றொத்தனநம் மணிவாளையார் குழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குராமலரே. 98 குராமலை கொண்ட உலகொளி மதியமுங் கோளரவும் இராமலை வான்பகை யென்பது பொய்மெய்ம்மையோர்க்கருளுஞ் சிராமலை வானவன் சென்னியின் மேற்கொண்ட சீர்மையினாற் கராமலை நீர்க்கங்கை பாலுடன் வாழ்கின்ற கண்டனரே. 99 கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா லுண்டன மோந்தன வைம்பொறி யுள்ளு முயிர் தழைப்பக் கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா லுண்டன மோந்தன பொன்மலையாளை கயர்க் கோக்கினவே. 100 ஓக்கிய கையோ டொருக்கிய வுள்ளத்தி யோக்கியர்தம் வாக்குயர் மந்திரம் வானரங் கற்று மந்திக் குரைக்குந் தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்மே லாக்கிய சிந்தை யடியார்க் கென்னோ வின்றரியனவே . 101 அரியன சால வெளிய கண்டீ ரருவித் திரள்கள் பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக் கரியன செய்யன நுண்புகர்ப் பைங்கட் கடாக்களிற்றி னுரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே. 102 மற்பந்த மார்வன் மணியன் மகன் மதிள் வேம்பையர்கோ னற்பந்தமார் தமிழ் நாராயணஞ் சிராமலைமேற் கற்பந்த னீழலில் வைத்த கலித்துறை நூறுங் கற்பார் பொற்பந்த னீழ லரன்றிருப் பாதம் பொருந்துவரே. 103 மாட மதிரை மணலூர் மதிள்வேம்பை யோடமர் சேஞலூர் குண்டூர்இந் - நீடிய நற்பதிக் கோனா ராயணஞ் சிராமலைமேற் கற்பதித்தான் சொன்ன கவி. 104 குறிப்பு :- இவ்வந்தாதியைத் தருமபுர ஆதீனத்தார் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். சாசனச் செய்யுளில் மறைந்து போன சொற்களுக்கு அவர்கள், தமது யூகம்போலச் சொற்களை அமைத்து அச்சிட்டிருக்கிறார்கள். நாம் இங்கு அச்சிட்டிருப்பது, அரசாங்கத்தார் பதிப்பித்துள்ள வாசகம். மறைந்த எழுத்துக்களும் சொற்களும் விடுபட்டுள்ளன. பிழைகளும் திருத்தப்படவில்லை. இக்கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களிற் சில இலக்கண வரம்புக்கு மாறுபட்டுள்ளன. 13-வது செய்யுளின் முதல் அடியில் 20 எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறே சில செய்யுட்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்துக்கு மாறுபட்டு எழுத்துக்கள் குறைந்தும் அதிகப்பட்டும் உள்ளன. இது சாசனச் செய்யுளைச் செதுக்கிய சிற்பியின் தவறு என்று தோன்றுகிறது. திருச்சிராப்பள்ளி மலைமேல், மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவிலின் சுவரில் இச் சாசனக் கவிகள் எழுதப்பட்டுள்ளன. இக்காலத்துத் “தொடர்” என்று வழங்கும் சொல் இச் செய்யுள்களில் “துடர்” என்று பயின்றிருக்கிறது. ----- நக்கன் திருவேகம்பன் இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா, உய்யக் கொண்டான் திருமலை. இவ்வூர் உஜ்ஜீவ நாத சுவாமி கோவிலின் முதல் பிராகாரத்து வெளிப்புறச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண் 545. (No. 545. S. I. I. Vol. IV.) விளக்கம் : “வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்” என்று தொடங்குகிற சாசனத்தின் இறுதியில் இந்தச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனமும் செய்யுளும், கோவிராஜ கேசரி பன்மரான வீர ராஜேந்திர தேவரின் 5-வது ஆண்டில் எழுதப்பட்டன. கருப்பூர் கம்பன் மகனான நக்கன் என்பவர், இக் கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்காகத் தொண்Qறு ஆடுகளைத் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. கோவில்களில் ஆட்டு நெய்யினால் விளக்கெரிப்பது அக்காலத்து வழக்கம். சாசனச் செய்யுள் கருப்பூர்மன் கம்பனுக்குக் காதலன்சீர் நக்கன் விருப்பூர் விழுமிய தேவர்க்கு - திருப்பூர் விளக்குவைத்துத் தொண்ணூ றா டாங்களித்தான் மெய்யே உளக்கருத்தால் சால உகந்து. குறிப்பு :- கருப்பூர் - இது சோழநாட்டு உறையூர்க் கூற்றத்துக் கருப்பூர். கம்பன் - கருப்பூர் உடையான் ஏகம்பன். காதலன் - மகன். நக்கன் - இவன், கருப்பூருடையான் ஏகம்பனின் மகனான நக்கன் திருவேகம்பமுடையான். இவனுக்குக் கேரளாந்தக விழுப்பரையன் என்னும் பெயரும் உண்டு. விழுமிய தேவர் - திருக்கற்குடி விழுமியதேவர் என்னும் பெயருள்ள சிவபெருமான். கற்குடி விழுமியார் கோவில், இப்போது உஜ்ஜீவநாத சுவாமி கோவில் என்று வழங்குகிறது. ----- பத்மநாப நாராயணன் இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா, அன்பில் கிராமம், சுந்தரராஜப்பெருமாள் கோவில் மேற்க்குப்புறத்துச் சுவரில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு : எண் 186. (No. 186. S. I. I. Vol. VIII.) விளக்கம் : பத்மநாப நாராயணன் என்பவர் இந்தக் கோவிலுக்கு எண்பது கலம் நெல் விளையக் கூடிய மும்மா நிலத்தைத் தானம் செய்ததையும் அதனைக் கோவிலின் சார்பாக அரும்பாளூரார் ஏற்றுக் கொண்டதையும் இந்தச் செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் இற்புகலோடை மும்மாச் செய்க் கெண்பதின்கல னெல்லுப் பொலிசைக் கொத்து கல்நிலைக்க - பற்பனாப னாராயணன் வைத்தானாங் கரும்பா ளூரோங்கொண் டூராயிறை யிறுப்போ முற்று. குறிப்பு :- செய் - வயல். பொலிசை - பலிசை, வட்டி. ----- பட்டினப்பாலை மண்டபம் இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 12 மைலில் உள்ள திருவெள்றைக் கிராமம். பதிப்பு : “செந்தமிழ்” நாற்பத்தொன்றாந் தொகுதி. விளக்கம் : பாண்டியள் சோழநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, சோழ அரசரின் கட்டடங்களை எல்லாம் தகர்த்து அழித்தான் என்றும், பட்டினப்பாலை என்னும் செய்யுளைப் பண்டைக்காலத்தில் கரிகாற்சோழன் மேல் உருத்திரன் கண்ணனார் பாடி யரங்கேற்றிய நினைவுக்காக அமைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபத்தைமட்டும் அழிக்காமல் விட்டுவைத்தான் என்றும் இந்தச் சாசனச் செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் வெறியார் தளவத்தொடைச் செயமாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறுமே யங்கு நின்றனவே. குறிப்பு :- மாறன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன். அரமியம் - அரண்மனை. கண்ணன்செய் பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்மீது பாடிய பட்டினப்பாலை என்னும் செய்யுள். அச்செய்யுளைப் பாடிப் பெற்ற பரிசில், பதினாறு நூறாயிரம் பொன் என்று கலிங்கத்துப் பரணி (இராச பாரம்பரியம் 22) கூறுகிறது. பட்டினப்பாலையை அரங்கேற்றியதன் நினைவுக் குறியாகச் சோழநாட்டில் பதினாறுகால் மண்டபம் ஒன்று இருந்ததையும், மற்றக் கட்டடங்களை அழித்த பாண்டியன் இதனைமட்டும் அழிக்காமல் விட்டுவைத்ததையும் இச்செய்யுள் கூறுகிறது. இவ்வாறு செய்த பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் (முதலாமவன்). இவனைச் சோணாடு வழங்கியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியதேவர் என்றும் கூறுவர். இவன் கி.பி. 1216 முதல் 1238 வரையில் அரசாண்டான். இவனால் தோல்வியடைந்த சோழன் மூன்றாம் இராசராசன் ஆவான். மாறவர்மன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டுக் கட்டடங்களை அழித்த செய்தி அவனுடைய சாசனத்திலும் கூறப்படுகிறது. (No. 372. S. I. I. Vol. IV.) திருப்பரங்குன்றத்து உமையாண்டான் கோவில் என்னும் குகைக்கோவிலில் உள்ள சாசனம் இச்செய்தியைக் கூறுகிறது. அப்பகுதி வருமாறு : “. . . . . தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியும் நீலமும் நின்று கவினிழப்ப வாவியு மாறு மணி நீர் நலனழித்துக் கூடமு மாமதிளுங் கோபுரமு மாடரங்கு மாடமு மாளிகையு மண்டபமும் பலவிடித்துத் தொழுதுவந் தடையார் நிருபர்தந் தோகையர் அழுத கண்ணீ ராறு பரப்பிக் கழுதை கொண் டுழுது கவடி வித்திச் செம்பி யனைச் சினமிரியப் பொருது சுரம்புக வோட்டி . . . . . . .” இவ்வாறு மாளிகையும் மண்டபமும் பல இடிக்கப்பட்ட போது, பட்டினப்பாலைப் பதினாறுகால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டான், அது புலவரின் நினைவுக்குரி யாகலின். ----- சுவரன் மாறன் இடம் : தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள செந்தலை. இவ்வூர் சுந்தரேசுவரர் கோவிலின் முன்புறமுள்ள மண்டபத்தின் நான்கு தூண்களில் உள்ளவை. பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி 13 : பக்கம் 134 - 149: “செந்தமிழ்” ஆறாந் தொகுதி : பக்கம் 6 - 18. (I. S. I. A. Vol. II. P. 1-21. Epigraphia Indica Vol. XIII. PP. 134 - 149.) விளக்கம் : சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயர் சுருங்கிச் செந்தலை என்று வழங்குகிறது. செந்தலைக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள நியமம் என்னும் கிராமத்தில் உள்ள பிடாரிகோவில் மண்டபத்தில் இந்தத் தூண்கள் ஆதியில் இருந்தன. பிற்காலத்தில், இந்தப் பிடாரிகோவில் இடிந்துபோன பிறகு, அங்கிருந்த இத் தூண்களைச் செந்தலைக்குக் கொண்டுவந்து இந்த மண்டபங்கட்ட உபயோகித்துக்கொண்டார்கள். மண்டபங் கட்டும் போது இந்தத் தூண்களின் மேல்பகுதிகளைச் சிறிது குறைத்துவிட்டார்கள். குறைந்தபோது அதில் இருந்த எழுத்துக்களில் சில வரிகள் அழிந்து விட்டன. ஆகவே, செய்யுள்கள் முழுவதும் கிடைக்காமல் முதலிலும் கடையிலும் அழிந்து காணப்படுகின்றன. நியமம் என்னும் ஊரில், பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன் என்பவன் மாகாளி கோவிலை அமைத்ததையும், அவன் வென்ற போர்களையும், அவனைப் பாடிய புலவர்களின் பெயர் களையும் இந்தத் தூண்களில் உள்ள செய்யுள்களும் வசனங்களும் கூறுகின்றன. இந்தச் சாசனத்தின் எழுத்துக்கள் வெகு அழகாக எழுதப்பட்டுள்ளன. சாசனச் செய்யுள் “. . . . டுத்த பெரும்பிடுகு முத்தரையனாயின குவாவன் மாற னவன்மக னிளங்கோ வதியரைய னாயின மாறன் பர மேஸ்வர னவன்மகன் பெரும்பிடுகு முத்தரைய னாயின சுவரன்மாற னவனெடுப்பித்த படாரி கோயிலவனெறிந்த வூர்களுமவன் பேர்களு மவனைப் பாடினார் பேர்களுமித் தூண்மேலெழுதின இவை.” வெங்கட் பொரும . . சேர் வேல்கொடியான் வாண்மாறன் செங்கட் கரும்பகடு சென்றுழக்க - வங்குலந்தார் தேரழுந்தி மாவழுந்தச் செங்குருதி மணபரந்த வூரழுந்தி யூரென்னு மூர். 1 . . . . . . . . . . .ப்ப ஓடிக் கழுகு கொழுங்குடற் கவ்வ - விழிகட்பேய் புண்ணளைந்து கையூம்பப் போர்மணலூர் வென்றதே மண்ணளைந்த சீர்மாறன் வாள். 2 பாச்சில்வேள் நம்பன் பாடின. நிற்கின்ற தண்பணை தோறுந் தஞ்சைத் திறம் பாடிநின்றார் விற்கின்ற வீரர்க ளூர்கின்ற விப்பிணக் குன்றுகண் ணெற்குன்ற யானை . . . . . . .ன்ம . . . . . . . . . . . . . . 3 பால்கொண்ட செவ்வாய் விளையா மொழிப் பருவத்துமுன்னம் வேல்கொண்ட . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 4 மறப்படை மீனவன் வல்லரன் பல்லவன் சேனைக்கன்று புறப்படுமாறு பொருகளிற்று . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 5 எங்கை யளவிற்றேய் பாண விகல்விக்கு மங்கைச் சேருவே லமர்வல்ல . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 6 . . . . . . . ர்க்கே யல்லையா யக்காலந்தான் முல்லைக்கேய் முற்படுமோ என்றென்று - வல்லக்கோன் காரைவாய்ப் போர்வென்ற வேன்மாறன் கைபோலுங் காரைவாய்க் கேளேனேய் கண்டு. 7 கோட்டாற் றிளம்பெருமானார் பாடியது. . . . . . . . . . . . . வாளமருள் வாகைப்பூக் குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன் - றஞ்சைக்கோன் கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெரித்தான் றேளா லுலகளிக்குந் தோள். 8 . . . . . . . . . . . லாத் தோய்ந்தனவா லெங்கும் வருபுனல்சூழ் வல்லக்கோ மாறன் - செருவில் மறங்கூர்வாய்ப் பட்டா ருடல்குடைந்து மாந்திப் புறங்கூர்வாய்க் கொண்டெழுந்த புள். 9 பாச்சில்வோள் நம்பன் பாடின. பேரிலைப் பங்கயங் கூம்பப் பிறையின் குறுமுளைப்போந் தீரிலைக் கொள்ளும் பதமி . . ணி யரண மூட்ட கூரிலை . . . . . . . . . . கழன்ம . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .வ்வ . . . . 10 சொற்புகு தொண்டைக் கனிபுகு தூமதிபோன் முகத்தாள் பொற்புக வெற்புப் புகுதிகண்டாய் புகழிப் பொருதார் கற்புக விற்புக கண் .வன் கள்வர கள்வன் றஞ்சை நற்புக ழாளன் . . . . . . . . . . . . . . . . . . 11 சேட்டிணர் பூந்தன் பொழிற் செம்பொன் மாரிக்கடி அரணம் மூட்டின சீற்றம் முன் சென்றது பின்பு பகட்டினத்தோர் கே . . . மாறன் கடிநக . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 12 பனையைப் பகடுகூடா யன்று பல்லவன் வெல்லத் தென்னன் முனையைக் கெடச்சென்ற மாறன் முகில்வளர் பீலிஉந்தச் சுனையைச் சுனைமணிப்பாறை அப்பாறை சொல்லென்விளைந்த வினையைப் பாரழு விருக்கி . . . . . . . . . . . . . . 13 எண்கி னிருங்கிளையு மேறற் கரியவேய் வண்கைச் செருமாறன் வாள்காய்த்தி - விண்படர் வான்செய்நாடு தாமூர்ந்த மாநாடக் கண்ணனூர்க் கோனாடர் புக்கொளித்த குன்று. 14 எரிவிசும்பு மிருநிலமாய்த் தென்பவான் மாறன் செருவேன் மறங்கனன்று சீறக் கொடிமாடத் தன்கொடும்பைக் கூடாத மன்னர் நெடுமா மதிலிடிந்த நீறு. 15 கிழார்க் கூற்றத்துப் பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங் காஞ்சன் பாடினபாட் டித்தூண்கள் மேலன எல்லாம் நாகங் கண்டஞ்ச வென்னெஞ்சங் கல்லென்ன வொல்லென் கடனீர் மாகங்கொண் டெறிவர் சாத்தன் மாறனெங்கோன் றுடர்க்கண் மேகங் கொண்டான் வ . . . . . . . . ப்பக . . . . . . . . . . . . . கொண் . . . . . . . . மரு . . . . . . . . 16 . . . . பாண் மகனேய் பண்டெல்லாம் யாமறிது மேங்கயர்க்கேய் சொல்லுநீய் - மாமறங்கைத் தென்னாடர் காதலியர் தீய்நாட வாய்சிவந்த மின்னாடர் வேண்மாறன் மெய். 17 . . . . . . . . . . . . . . . . . . . . . . . போலரைசு பிறவா பிறநெடு மேருநெற்றிப் பொன்போல் பசுங்கதி ராயிரம் வீசும்பொற் றேர்ப்பருதிக் கென்போ தரவிடுமோ இணைச்சோதி இருவிசும்பேய். 18 ஆசார்யர் அநிருத்தர் பாடியது. . . . . . . . . . . . . . . . ற்ற தீதுகண்டான் றஞ்சைச்செம்புல நாட்டுவெண்கோடல்விண்ட போதுகண்டாயர் மலையப் புதுமணன் மீதுசெந்தீத் தாதுகண்டா லன்ன கோவங்களூர்கின்ற தாழ்புறவேய். 19 தன்முதலாயமும் பூவையுந்தன் கைக்கிளியு முன்பிட் டென்முதலன்பு மென்னாகச் செய்தா னியக்கத்தை விண்டார் வன்முதல் ச . க்கருங்கைப் பகடுய்த்த மாறன் றெவ்வற் கன்முத . . ங்கடத் தேகினான் பின் . . . . ரி . . கயே. 20 அமருண்ணிலை பாடின. குறிப்பு :- செய்யுள் 1. மாறன் - பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன். சுவரன் மாறன் அழுந்தியூரில் போர்வென்றதை இச்செய்யுள் கூறுகிறது. செய்யுள் 2. கையூம்ப - கையைச் சப்ப. சுவரன் மாறன் மணலூரில் போர்வென்றதை இச்செய்யுள் கூறுகிறது. செய்யுள் 5. புறப்படுமாறு - புறங்கொடுக்கும்படி; போரில் பின்னடையும்படி. செய்யுள் 7. வல்லக்கோன் - வல்லத்து அரசனாகிய சுவரன் மாறன். செய்யுள் 11. கள்வர கள்வன் - இது சுவரன் மாறனுடைய சிறப்புப்பெயர். ----- சிவலோக நாதன் இடம் : தஞ்சாவூர் மாவட்டம், சீகாழி தாலுகா, திருவெண்காடு. இவ்வூர் சிவன்கோயில் முதல் பிராகாரத்தின் வடக்குப்பக்கச் சுவரில் உள்ளது. பதிப்பு : “செந்தமிழ்” தொகுதி பதினான்கு : பக்கம் 355. விளக்கம் : வீரராஜேந்திர சோழன் காலத்தில் எழுதப்பட்டது இந்த சாசனம். இக்கோயில் சிவபெருமானுக்கு இந்த அரசன் பெயரால், அபிஷேகம் செய்யத் தேன், பால், பஞ்சகௌவ்யம் முதலிய பொருள்களைச் சிவலோகநாதன் என்பவர் அமைத்த தருமத்தை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் பூப்பாவை கோன் வீரராஜேந்திரர்க்காகப் புராரிகல நாப்பால் நவிற்றுஞ் சிவலோக நாதனென நறுதேன் ஆப்போ லோடைதொடும் வெண்காட்டரற் கமைப்பித்தவறங் காப்பா னவனென்னை ஆளுடை யானிக் கடலிடத்தே. ----- கச்சியர் கோன் இடம் : தஞ்சாவூர் மாவட்டம், மாயவரம் தாலுகா, கடையூர். அமிர்தகடேசுவரர் கோவில் வாயிலின் வலது புறத்துச் சுவரில் எழுதப்பட்டுள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு : எண் 265. (No. 265. S. I. I. Vol. XII.) விளக்கம் : பல்லவ அரசன் ஒருவன் சோழனை வென்று அரசாண்டதை இச்செய்யுட்கள் கூறுகின்றன. சாசனச் செய்யுள் வார்மன்னு வெல்கழல் மானவன் பாலுங்கள் மாமரபிற் தார்மன்னர் பெற்ற தனுமக் கொடியித் தலம்புரக்கும் கார்மன்னு செம்பொற் கனகொடை மோகதென் கச்சிநற் போர்மன்னு வேள்பெற்ற தாரும் பெறாத புலிக்கொடியே. 1 சிவனன்று நல்கிய செஞ்சின வேற்றுக் கொடியுயர்த்த தவனந் தருபரிக் கச்சியர் கோன்பச்சை யேயுயர்வித் தவனங் குலபதி தன்னுடன் போந்துதண் காவிரிநீர்ப் புவனங் கொடுத்துக் கொண்டான் வன்பால் வெம்புலிக்கொடியே.2 ----- கந்தன் மாதவன் இடம் : தஞ்சாவூர் மாவட்டம், மாயவரம் தாலுகா, நீடூர். இவ்வூர் சிவன்கோவிலின் தென்புறச்சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி பதினெட்டு : பக்கம் 64 - 69. (Epigraphia Indica Vol. XVIII. PP.64 - 69.) விளக்கம் : மிழலைநாட்டு வேள் கந்தன் மாதவன் என்பவர் நீடூர் சிவாலயத்தில் செய்த திருப்பணிகளைக் கூறுகின்றன இச் செய்யுள்கள். கந்தன் மாதவனுடைய முன்னோர் அமிதசாகர முனிவரைக் கொண்டு யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் நூல்களை இயற்றுவித்தனர் என்பதையும் இச்செய்யுள்கள் கூறுகின்றன. சாசனச் செய்யுள் கூரிய வுல கனைத்துங் குடைக்கீ ழாக்கிய குலோத்துங்க சோழர்க் காண்டொரு நாற்பத்தா றதனிடைத் தில்லை யம்பலத்தே வட கீழ்ப்பால் போரியல் மதத்துச் சொன்னவா ரறிவார் கோயிலும் புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையால் விளங்கப் பொருப்பினால் விருப்புறச் செய்தோன். நேரியற் காண்டே ழைஞ்சுடன் மூன்றினில் நிகரிலாக் கற்றளி நீடூர் நிலவினாற் கமைத்த நிலாவினா னமுத சாகர னெடுத்த . . தொகுத்த காரிகைக் குளத்தூர் மன்னவன் தொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக் கற்பகம் மிழிலை நாட்டுவே ளாண் டவன் கந்தன் மாதவனே. 1 களத்தூர்க் கோட்டத்து மருதத்தூருடையான் குன்றன் திருச் சிற்றம்பலமுடை யானேன் கன்னி நாயற்று ஏழாந் தியதியுந் திங்கட் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் இத் திருப்பெருமா னாண்டார் திருக்கை மலரிலேய் நான் நீர்வார்த்த குடிக்காடு இரட்டைப்பாடி கொண்ட சோழ வளநாட்டு வடகோ நாட்டு உறத்தூர்க் கூற்றத்துப் பையூருடையான் திருச்சிற்றம்பல முடையான் வேதவன முடை யானை நான் கவி பாடி பாடின கவிக்கு எனக்கு பரிசில் தந்த தன்காணியான குடிக்காடு இரும்பூதிக்கு வடபொற்கெல்லை நெடுங்கீரைக்குடி எல்லைக்குத் தெற்கும் மேல்பாற்கெல்லை மேற்படி யூர் எல்லைக்கு கிழக்குந் தென்பாற்கொல்லை பையூர் சுடுகாட்டுக் குள......” குறிப்பு : இதற்கு மேல் இந்தச் சாசனம் மறைந்து கிடக்கிறது. திருச்சிற்றம்பலமுடையான் வேதவனமுடைமயான் மேல் பாடின கவியின் (பிரபந்தத்தின்) பெயர் தெரிய வில்லை. ----- உமையாள் நகைப்பு இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. அகிலாண்டேசுவரி அம்மன் கோவில், இரண்டாவது. கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு:புதுக்கோட்டை சாசனங்கள், எண் 1092 (No. 1092. I. P. S.) விளக்கம் : உமையாளை இடது புறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வம்மையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியாமலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடாமுடி குறைந்து சிறுகுடுமியாய்விட்டதாம். அதைக்கண்டு உமையம்மையார், “அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப்போகிறார்!” என்று கூறி நகைப்பதாக இச்செய்யுள் நயம்படக் கூறுகிறது. இந்தச் செய்யுளை இயற்றியவர் ஆதிநாதர் என்பவர். சாசனச் செய்யுள் எங்கள் நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே - கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்ட தெங்கே யினிமறைப்பா ரென்று. ஆதிநாதர் ----- பங்கள ராயர் இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, காரையூர் கிராமம். மாரியம்மன் கோவிலுக்கு முன்புறமுள்ள ஒரு கல்லில் எழுதப் பட்டுள்ள சாசனம். பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 998 (No. 998. I. P.S.) விளக்கம் : பங்களராயர் என்னும் தமிழ்ப் புலவரின் வீட்டுப் பெயரைக் கூறுகிறது இந்தச் செய்யுள். சாசனச் செய்யுள் பாரார் தமிட்புலவன் பங்களராயன் பைம்பொற் சீரா ரகத்தின்பேர் செப்புங்கால் - ஏராருங் காராளர் கானார் வருங்கற்பக வீரரெனும் பேராளர் தம்முடைய பேர். குறிப்பு :- தமிட் புலவன் என்பது தமிழ்ப் புலவன் என்றிருத்தல் வேண்டும். ----- சொக்கநாத இலக்கயன் இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, அம்மன் குறிச்சி, சுந்தரேசுவரர் கோவில், முன் மண்டபத்தில் உள்ள செய்யுள். பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 992 (No. 992. I. P.S.) விளக்கம் : இந்தக் கோவிலின் முன்மண்டபத்தை, மாவை பாலகிருட்டினன் சொக்கநாத இலக்கயன் என்பவர் கட்டியதை இச் செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் திசைவாச ரம்மன் குறிச்சியில்வாழ் சொக்கர் செம்பொன்முடி அசைவாக மெச்சிட விசுவ கன்மாவு மதிசயிப்ப விசைவாடை வீச மணிமண்டபங் கட்டி வீறுபெற்றான் இசைமாவை வால கிட்டணன் சொக்கநாம இலக்கயனே. ----- இளங்கோமான் வாணன் இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. இம்மலையில் தம்பிக்கிணற்றுக்குப் போகும் வழியில் ஒரு பாறையில் எழுதப்பட்டுள்ள செய்யுள். பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 676 (No. 676. I. P.S.) விளக்கம் : வாணன் தம்பி, வடுகரைப் போரில் வென்றதைக் கூறுகிறது இச்செய்யுள். இதற்கு மேலே பதினாறு வரிகளில் வேறு செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எழுத்துக்கள் பெரிதும் அழிந்து விட்டபடியால் அச்செய்யுளை இங்குத் தரவில்லை. சாசனச் செய்யுள் மன்னாடு பூங்கழலான் வாணற் கிளங்கோமா னன்னாள் வடுகெறிந்த ஆர்வத்தால் - இன்ன மறங்கால் வேலண்ணல் வரும்வரு மென்றேங்கி உறங்கா வடவேந்த ரூர். ----- சோளி வீரராயன் இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. சிகாமணிநாத சுவாமி கோவில் இரண்டாங்கோபுரவாயிலின் இடதுபுறம் உள்ள சாசனம். பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 679 (No. 679. I. P.S.) விளக்கம் : சோளி வீரரயான் என்பவரைப் புகழ்கிறது இச்செய்யுள். சாசனச் செய்யுள் வன்படையார் தேவியர்தம் மங்கலநாண் தட்டாணிக் கன்புரிய வோடாணி யாகுமே - இன்பப் பரராசர் கோபாலன் பல்லவர்கோன் சோளி வீரராயன் சிங்கார வாள். பாண்டியன் புகழ் இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. இம்மலை மேலுள்ள சிகாமணிநாத சுவாமி கோவில், இரண்டாங்கோபுர வாயிலின் வலதுபுறச் சுவரில் உள்ளது இந்தச் சாசனம். பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 651, 652. (No. 651, 652. I. P.S.) விளக்கம் : பாண்டியன், சோழனை வென்று அரசாண்டதைக் கூறுகின்றன இச்செய்யுள்கள். சாசனச் செய்யுள் தென்னவன் செய்ய பெருமான் திருமதுரை மன்னவன்றன் மால்களிற்று வல்லிக்கும் - பொன்னிநாட் டாலிக்குந் தானை அபையன் குலமகளிர் தாலிக்கு மொன்றே தளை. பொன்னி வளநாடு பாணன் பெறப்புரந்தான் சென்னி திருமார்பிற் செயல்தீட்டினான் - முன்னே புரமெறிவார் மண்சுமக்கப் பூபாரங் காத்தான் தரமறியான் மீனவர்கோன் தான். குறிப்பு :- இரண்டாவது செய்யுளில் இரண்டாம் வரியில் செயல் தீட்டினான் என்பது சேல் தீட்டினான் என்றிருக்க வேண்டும். பாண்டியன், சோழ அரசனை வென்று அவனுடைய மார்பில் தன்னுடைய முத்திரையாகிய சேல்மீன் உருவத்தைப் பச்சை குத்தினான். வென்ற அரசர், தமது அடையாள முத்திரையைத் தோல்வியுற்ற அரசரின் மார்பிலும் தோளிலும் பொறித்துவைப்பது அக்காலத்து வழக்கம். ----- பாண்டியன் வெற்றி இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. சிகாமணிநாத சுவாமி கோவில் கோபுரவாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ளவை. பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 653, 654, 655. (No. 653, 654, 655. I. P.S.) விளக்கம் : பாண்யனுடைய வீரத்தையும் வெற்றியையும் கூறுகின்றன. சாசனச் செய்யுள் மால்விட்ட படைதுரந்மு வடுகெறிந்து மகதேசன் வடிவேல் வாங்க கால்விட்ட கதிர்முடிமே லிந்தரனைப் புடைத்ததுமுன் கடல்போய் வற்ற வேல்விட்ட தொருதிறலு முகிலிட்ட தனிவிலங்கும் வெற்பி லேறச் சேல்விட்ட பெருவலியு மாங்கேவிட்டு நடந்தான் தென்னர் கோவே. வெற்றுறமுன் வேற்செய்ய கொற்கையர்கோ மாறன் பரிக்குத்தோற்ற கழல்வளவன் சோணாட்டி - லெற்றும் புகையாற் குவளையாம் பூங்குமுதம் புண்ணீர் கயாற்றிற் சேர்கழு நீராம். கன்னி வளநாடன் காவேரி நாடாளச் சென்னி விழுந்தோடுஞ் சேவடிகள் - பொன்இரை யெரிகாலுங் கான நடந்திச் சென்னியையுங் கரிகால னாடக்கிடவோ காண். பூதானமாக மறவணியேந்தல் எப்போதும் மடை மீதான வம்பல வாணர்தம் பூசை விளங்கச் செய்தோர் ஏதாகிலுங் தடை வந்தாலு . . திறல் வாழுங்குரு மாதா பிதாப் பசுவை . . . . . . . . . . . . . . குறிப்பு :- இரண்டாம் செய்யுளில் சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. ----- இராமநாத முனிவர் இடம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம். இக்கோவிலின் திருவுண்ணாழிகை வாயிலுக்கு தென் புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : தமிழ் - வடமொழிச் சாசனங்கள், பக்கம் 58. (Tamil and Sanskrit Inscriptions. P.58.) விளக்கம் : இராமேசுவரக் கோவிலின் ஆடல் மண்டபத்தை சக ஆண்டு 1520-இல் (கி.பி. 1598-இல்) இராமநாத முனிவர் கட்டிமுடித்ததைக் கூறுகிறது. சாசனச் செய்யுள் சேல்கண்ட வாரி யிலங்கேசன் வெம்பழிதீர முன்னாள் மால்கண்ட கோயி லிராமீச ராடல்செய் மண்டபத்தை நூல்கண்ட நற்சக னாயிரத்தோ டைந்து நூற்றிருபான் மேல்கொண்ட நாளின் முனி ராமநாதன் விதித்தனனே. குறிப்பு :- சகன் - சாலிவாகன சகாப்தம். முனிராமநாதன் - இராமநாத பண்டாரம் அவர்கள். இந்தத் திருப்பணி, கூத்தன் சேதுபதி காத்ததேவர் என்னும் இராமநாதபுரத்து அரசர் காலத்தில் நிகழ்ந்தது. ----- இராமநாத முனிவர் இடம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம். முதல் பிராகாரம், பிள்ளையார் கோவிலுக்குத் தெற்கில், மேற்குச் சுவரில் உள்ளது. பதிப்பு : தமிழ் - வடமொழிச் சாசனங்கள், பக்கம் 59. (Tamil and Sanskrit Inscriptions. P.59.) விளக்கம் : சக ஆண்டு 1530-இல் (கி.பி. 1608) இராமேசுவரக் கோவிலில் திருப்பணியை இராமநாத முனிவர் செய்து முடித்ததைக் கூறுகிறது. சாசனச் செய்யுள் பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்று முப்பான் மருவ நற்றும் புவியினையாள் வீசுபூபதி நாளிற் றொண்டர் குற்றங் கடிந்த வரராம நாயகர் கோயிலன்பான் முற்றுந் தவங்கள் புரி ராமநாதன் முடித்தனனே. குறிப்பு :- பதினைந்து நூற்று முப்பால் - ஆயிரத்து ஐந்நூற்று முப்பது. இராமநாதன் - இராமநாத பண்டாரம் என்னும் இராமநாத முனிவர். ----- இராமநாத முனிவர் இடம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கோவில், இரண்டாம் பிராகாரம், கோடிதீர்த்தத்தின் மேற்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : தமிழ் - வடமொழிச் சாசனங்கள், பக்கம் 59. (Tamil and Sanskrit Inscriptions. P.59.) விளக்கம் : சக ஆண்டு 1530-இல் (கி.பி. 1608-இல்) இராமநாத முனிவர் இந்தக் கோவிலை கற்றளியாகக் கட்டியதைக் கூறுகிறது. சாசனச் செய்யுள் திருமா லரனுக் கபிடேகஞ் செய்யச் சிலையதனால் வருமாறு கண்ட வண்கோடிப் புனற்கு மகாலயத்தைத் தருமாயிரத் தைஞ்ஞூற்று முப்பான் செல்சகன் வருடத் தருமா தவஞ்செய் முனிராம நாத னமைத்தனனே. குறிப்பு :- இரண்டாம் அடியில், “கோடிப் புனற்கு மகாலயத்தை” என்றிருப்பதை “கோடிப் புனற்கண் மகாலயத்தை” என்றும் படிக்கலாம். ----- அதிவீரராமனின் தருமம் இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமி கோவில், பெரிய கோபுரத்தில் வடக்குச் சுவரில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : “செந்தமிழ்”, தொகுதி 4, பக்கம் 120. விளக்கம் : அதிவீரராம பாண்டியன் இக்கோவிலுக்கு வழங்கிய தானங்களைக் கூறுகிறது இச்செய்யுள். சாசனச் செய்யுள் அத்தர் தென்காசி கண்டோன் கண்ட வாலையமு மடியாரும் வாழ்வுபெற வந் தழக னதீவீர ராமன் சறுவமானிய மதாகக் கொடுத்த படிதான் சித்திரைப் பரணியூர்த் தெண்ட கோஷப் பொன் திரும்பக் கொடுத்தவ் வூரிற் செங்கோட்டையார் கொண்ட பகுதியு நிறுத்தித் திருக்கோயிற் பகுதியாய் வைத்ததை யறக்கழித் தாயங் கணக்குடன் மகாநவமி திருநாளிடை வந்த காணிக்கை பாட்டப் பகுதி காணம்பல் வரியிவை யெலாங் கழித்துப் பத்திரமாய்க் குண ராமநாதற்கு மேற்படி பணங்கழித் தடியர் வீட்டுப் பணமுங் கழி . . . . த்திப்படிச் சருவமானியப் பட்டையமு மருளி னானே. ----- குலசேகர பாண்டியன் இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமி கோவில், தென்புறச் சுவரில் உள்ளச் செய்யுள்கள். பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், முதல் தொகுதி, பக்கம் 105. (T. A. S. Vol. I. Page. 105) விளக்கம் : நெல்வேலி மாறன் என்னும் வீரவேற் குல சேகர பாண்டியன் முடிசூடியதையும், அவன்மேல் வீர வெண்பாமாலை பாடப்பட்டதையும் இச்செய்யுள்கள் கூறுகின்றன. சக ஆண்டு 1474 இல் (கி.பி. 1552-இல்) இவன் முடிசூடினான். சாசனச் செய்யுள் ஏறிய சகாத்த மாயிரத்து நானூற்றெழுபதின் னாலில் வரிழ்சம் பரிதாபிதனில் மாதம் தேறிய சித்திரை யிருபத் தொன்பதாகுந் தேதி யிரண்டாம் பகந் திங்க ளுரோகணிநாள் வீறுயர்ந்த மிதுனத்து நெல்வேலி மாறன் வீரவேள் குலசேகரச் செழியனென்று சுர ராறுபுனை யகிலேசர் காசியிலே விளங்கவணி மவுலி தரித்தனன் பரராசர் பணிந்தனரே. 1 ஏடியல் மாலையணிந் தாலும் வாடு மெனப்புலவோர் பாடியவீரவெண்பா மாலையைப் பொன்னின் பாண்டியன்போர் தேடிய வேற்செழியன் குல சேகரத் தென்னனைப்போற் சூடிய வேந்தருண்டோ வொரு வேந்தரைச் சொல்லுகிலே. 2 நன்றாக. குறிப்பு :- செய்யுள் 1. வரிழ்சம் என்பது வருஷம் என்றிருக்க வேண்டும். வீர வெண்பாமாலையைப் பாடிய புலவர் பெயர் தெரிய வில்லை. அந்நூல் இப்போது இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. ----- குலசேகர பாண்டியன் இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன் மண்டபத்தின் வடப்புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், முதல் தொகுதி, பக்கம் 103. (T. A. S. Vol. I. Page. 103) விளக்கம் : தென்காசி விசுவநாதர் கோவில் கோபுரத்தைக் கட்டத் தொடங்கி அது முடிவுபெறுவதற்கு முன்னர் இறந்துபோன அரிகேசரி பராக்கிரம பாண்டியனுடைய தம்பி குலசேகர பாண்டியன், அக் கோபுர வேலையைத் தொடர்ந்து செய்துமுடித்ததை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் விண்ணாடர் போற்றுந் தென்காசி பொற்கோபுர மீதிலெங்க ளண்ணாழ்வி செய்தபண யிப்படி குறையாய்க் கிடக்க வொண்ணா தெனக்கண் டுயர்ந்ததட் டோடெங்கு மூன்றுவித்தான் மண்ணாளு மாலழகன் குலசேகர மன்னவனே. குறிப்பு :- அண்ணாழ்வி - தமையன். ----- ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் இடம் :பாண்டிநாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், வடபெருங்கோவிலுடை யான் ஆலயத்தின் கிழக்குப்புறம் உள்ள உயரமான கோபுரத்தின் நிலைக்கால் ஒன்றில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : “செந்தமிழ்”, தொகுதி ஐந்து, பக்கம் 438. விளக்கம் : இந்த கோபுரத்தை மேருமலைக்கு ஒப்பிடுகிறது இச்செய்யுள். சாசனச் செய்யுள் இருக்கோது மந்தணர்சூழ் புதுவாபுரி யெங்கள்பிரான்மருக் கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்திருக்கோபுரத் துக்கிணை யம்பொன் மேருச் சிகரமென்றே பருக்கோதலா மன்றிவே றுபமானப் பணிப்பில்லையே. ----- பராக்கிரம பாண்டியன் இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன்புறம் இடிந்துள்ள கோபுரச் சுவரில் எழுதியுள்ள சாசனச் செய்யுள்கள். பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், முதல் தொகுதி, பக்கம் 96, 97. (T. A. S. Vol. I. Page. 96, 97) விளக்கம் : அரிகேசரி பராக்கிரம பாண்டியன் இக் கோவிலைக் கட்டியதையும், பிறகு இக்கோவிலின் கோபுரத்தைக் கட்டத் தொடங்கியதையும், அவனுடைய சிறப்புக்களையும் இச்செய்யுள் கூறுகின்றன. சாசனச் செய்யுள் அன்பினுடன் சகாத்த மாயிரத்து முந்நூற் றறுபத் தெட்டின்மேல் வைய்காசித் திங்கள் மன்தியதி யீரைந்திற் பூருவ பக்க மருவு தெசமியில் வெள்ளி வாரந்தன்னில் மின்திக ழுத்தரநாள் மீனத்தில் வாகைவே லரிகேசரி பராக்கிரம மகிபன் தென்திசையிற் காசிநாதர் கோயில் காணச் சென்றுநின்று தரிழ்சணைதான் செய்வித்தானே. 1 பன்னு கலியுக நாலாயிரத் தைஞ்ஞூற் றைம்பத் தெட்டின் மேலெவரும் பணிந்து போற்றச் சென்னெல்வயற் றென்காசி நகரில் நற்கார்த்திகைத் திங்கள் தியதியைந்திற்'b9 செம்பொன் வார மன்னிய மார்கழிநாளில் மதுரை வேந்தன் வடிவெழு தொணாத பராக்கிரம மகிபன் சொன்ன வரைபோற் றிருக்கோபுரமுங் காணத் துடியிடையா யுபானமுதல் துடங்கி னானே. 2 சேலேறிய வயற் றென்காசி யாலையந் தெய்வச்செய லாலே சமைத்த திங்கென் செயலல்ல வதனையின்ன மேலே விரிவு செய்தே புரப்பாரடி வீழ்ந்தவர்தம் பாலேவல் செய்து பணிவன் பாராக்கிரம பாண்டியனே. 3 மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வருக்கமுன்னின் றெனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசி யென்றுமண்மேல் நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட நிருபர்பதந் தனைத்தாழ்ந் திறைஞ்சித் தலைமீ தியானுந் தரித்தனனே. 4 பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப் பூதலத்தில் தாங்கிளை யுடனே புரப்பார்கள் செந்தா மரையாள் காந்தன் பராக்கிரமக் கைதவன் மான கவசன்கொற்கை வேந்தன் பணிபவ ராகி யெந்நாளும் விளக்குவரே. 5 காண்டகு சீர்புனை தென்காசிக் கோபுரக் கற்பணியா றாண்டில் முடித்துக் கயிலை சென்றா னகிலேசர் பதம் பூண்டுறை சிந்தை யரிகேசரி விந்தைப் போர்கடந்த பாண்டியன் பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியனே. 6 ஆரா யினமிந்தத் தென்காசி மேவுபொன் னாலையத்து வாராதோர் குற்றம் வந்தாலப் போதங்கு தந்ததனை நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன் பாரா ரறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே. 7 அரிகே சரிமன் பராக்கிரம மாற னரனருளால் வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம் புரிசேர் கடற்புவி போற்றவைத் தேனன்பு பூண்டிதனைத் திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதமென் சென்னியதே. 8 சாத்திரம் பார்த்திங் கியான்கண்ட பூசைகள் தாம் நடாத்தி யேத்தியவன்பால் விசுவநாதன் பொற்கோயி லென்றும்புரக்கப் பாத்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடனல் கோத்திரந் தன்னி லுள்ளார்க்கு மடைக்கலங் கூறினனே. 9 மென்காசை மாமல ரன்ன மெய்யோற்கும் விரிஞ்சனுக்கும் வன்காசு தீர்த்திடும் விச்சுவ நாதன் மகிழ்ந்திருக்கப் பொன்காசை மெய்யென்று தொட்ட கைக்குமிப் பூதலத்துத் தென்காசி கண்ட பெருமாள் பராக்கிரமத் தென்னவனே. 10 ஏரார் சகாத்த முந்நூற்றுட னாயிரத் தெண்பத்தஞ்சிற் சீராரு மார்கழி சித்திரை நாளிற் சிறந்துகுற்றம் வாராத பூரணையினிற் பராக்கிரம மாற . . . . . . . . . . . . கயிலாயந்தான் . . . . . . . . கண்டனனே. 11 கோதற்ற பத்தி யறுபத்து மூவர்தங் கூட்டத்திலோ தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன் னம்பலத்தோ வேதத்திலோ சிவ லோகத்திலோ விசுவ நாதனிரு பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே. 12 ஓங்குநிலை யொன்ப துற்றதிருக் கோபுரமும் பாங்கு பதினொன்று பயில்தூணுந் - தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி தன்னிலன்றி யுண்டோ தலத்து. 13. அணிகொண்ட வந்த வணங்குமொன் றேயடி யேற்குனக்கு மணிகொண்ட வாசல் மணியும்ஒன் றேபகை மன்னரையும் பிணிகொண்ட காரையு முந்நீரை யும்பெரும் பூதத்தையும் பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே. குறிப்பு :- செய்யுள் 1. சகாத்தம் - சாலிவாகன சகாப்தம். சகாத்தம் 1368 என்பது கி.பி. 1446-ஆம் ஆண்டு. செய்யுள் 2. கலியுகம் 4558 என்பது சக ஆண்டு 1379 ஆகும் ; கி.பி. 1457-ஆம் ஆண்டு. உபானம் என்பது கோவில் கட்டடத்தின் அடிப்பகுதிக்குப் பெயர். செய்யுள் 12. சகாத்தம் முந்நூற்றுடன் ஆயிரத்தெண்பத்தைந்து என்பது 1385. இது கி.பி. 1463-ஆம் ஆண்டு. முதலாவது செய்யுளுக்குக் கீழே “அடைவு திகழ் சகாத்த மாயிரத்து முந்நூற்றறுபத் தொன்பதின் மேற்செல்” என்று தொடங்கும் செய்யுள் சிதைந்து அழிந்துவிட்டது. ஆதலின் அச்செய்யுள் இங்கு எழுதப்பட வில்லை. ----- அய்யனம்பி இடம் : கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கிராமத்துக்கு அருகில் உள்ள குகாநாத சுவாமி கோவிலில் உள்ள கல் வெட்டெழுத்து. பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், பக்கம் 169. (T. A. S.Page.169) விளக்கம் : குகாநாத சுவாமி கோவில் என்னும் பெயருடன் இப்போது இடிந்து கிடக்கிற இந்தக் கோவிலின் பழைய பெயர் இராஜ இராஜேசுவரம் என்பது. இது, சோழ மன்னன் இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. சோழ மன்னனுடைய அமைச்சன் மங்கலக்கால கிழான் ஆன அய்யனம்பி என்பவர், கன்னியாகுமரியில் தண்ணீர்ப் பந்தல் அமைத்ததை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் தெண்டிரைநீர்த் தென்குமரி மானகர்த்தண் ணீர்ப்பந்தல் எண்டிசையும் ஏத்த வினிதமைத்தான் - விண்டிவரும் ஐந்தெரியலான் அய்யனம்பி அடல்வளவன் மந்திரி தென்மங் கலக்கால மன். ----- ஐயனம்பி இடம் : கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கிராமம், குகநாத சுவாமி கோவிலில் உள்ள சாசனம். பதிப்பு : திருவாங்கூர் சாசனங்கள், பக்கம் 170. (T. A. S. Page.170) விளக்கம் : கன்னியாகுமரியில் தண்ணீர்ப்பந்தல் அமைத்த மங்கலக்கால கிழான் அய்யனம்பி, மேற்படி தண்ணீர்ப் பந்தல் நடை பெறுவதற்காக மணற்குடி என்னும் ஊரில் நிலம் தானங் கொடுத்ததைக் கூறுகிறது இச்செய்யுள். சாசனச் செய்யுள் மானமிக்க வேல்ஐயன் மங்கலக்கா லமன்குமரித் தானமைத்த பந்தலிற்றண் ணீரட்ட - தேனரைத்த மயத்தங்கு சோலை மணற்குடியிலே வைத்தா னித்தம் பதினாழி நெல். ----- திருவிக்கிரமன் இடம் : திருவாங்கூரைச் சேர்ந்த வாழ்விச்ச கோட்டம். இவ்வூர்ப் பகவதி கோவிலின் முகமண்டபத்தில் உள்ள வட்டெழுத்துச் சாசனம். பதிப்பு : திருவாங்கூர் சாசனங்கள்: ஆறாந்தொகுதி,எண்125. (No. 125. T. A. S. Vol. VI. Part II. ) விளக்கம் : இந்தக் கிராமத்தின் பெயராகிய வாழ்விச்ச கோட்டம் என்பது வாள் வைத்த கோட்டம் என்பதன் திரிபு. கோட்டம் - கோவில். இவ்வூர்ப் பகவதி கோவிலில் உள்ள உருவம் கொற்றவையின் (மகிடாசுரமர்த்தினியின்) உருவம். கொற்றவை, போர்வீரர்களின் வெற்றித் தெய்வம். ஆகையினாலே, போரை வென்ற அரசன் தனது வெற்றிவாளைக் கொண்டுவந்து, கொற்றவையின் முன்பாக இரத்தத்தைக் கழுவிக் கறைபோக்கி வைப்பது வழக்கம். அந்த வழக்கப்படி முன் ஒருகாலத்தில் திருவாங்கூரை அரசாண்ட அரசன் ஒருவன் தன் வெற்றிவாளின் இரத்தக் கறையைக் கழுவி வைத்த கோவில் ஆகையால், இக்கோவிலுக்கு வாள்வைத்த கோட்டம் என்று பெயர் உண்டாயிற்று. பிறகு, இந்தக் கோவிலின் பெயரே இந்த ஊருக்கும் பெயராக அமைந்தது. கொல்லம் ஆண்டு 795-இல் (கி.பி. 1620-இல்) இரவிவர்மன் காலத்தில் இந்தக் கோவிலின் முன்மண்டபத்தைத் திருவிக்கிரமன் என்பவர் ஒரே கல்லினால் கட்டிய மைத்ததை இந்தச் செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் ஆதியெழு நூற்றுடன்தொண்ணூ ற்றையா மாண்டி லற்பசியேழ் முற்றசமி யவிட்டம் வெள்ளி மாதிசைசே ரின்னாளி லிரவி வேந்தன் மனமகிழ்ப் பகவதிவாள் வைத்த கோட்டத் தோதிலுறு மிறைவியிருப் பதற்கு மேன்மை யுறும் முகமண்டப மாமதற்கு நாப்பண் மூதறிவா லொருகலின் மண்டபஞ் செய்வித்தான் முல்லை மங்கலவன் திருவிக்கிரமன் தானே. குறிப்பு :- பழந்தமிழரின் போர் முறையிலே, உழிஞைத் திணையில் வாண்மண்ணு நிலை என்னும் ஒரு துறை உண்டு. அது, புறப்பொருள் வெண்பாமாலையில் (உழிஞைப் படலம், வாண்மண்ணு நிலையில்) இவ்வாறு கூறப்படுகிறது : “புண்ணிய நீரிற் புரையோ ரேத்த மண்ணிய வாளின் மறங்கிளர்ந் தன்று.” ‘உயர்ந்தோர் துதிப்பத் தீர்த்த நீராலே மஞ்சனமாட்டிய வாளினது வீரத்தைச் சொல்லியது.’ (பழைய உரை) “தீர்த்தநீர் பூவொடு பெய்துதிசை விளங்கக் கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்து மிடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான் புடையா ரறையப் புகழ்.” ‘ தீர்த்த நீரும் மலருஞ் சொரிந்து திக்கு விளங்கக் கூரிய வாளினை மஞ்சனமாட்டிப் பதாகையாற் சிறந்த தேரினையுடையான் இரண்டாவதும் உருமேற்றையொக்கும் வீரமுரசு ஆர்ப்ப இந்த அரணிடத்தே களவேள்வி வேட்டான், பக்கத்துள்ள மன்னரெல்லாம் தன் கீர்த்தியைச் சொல்ல.’ (பழைய உரை) தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், 68-ஆம் சூத்திரத்தில் கூறப்படுகிற வாள்மண்ணுதல், வாண் மங்கலம் என்பதையும் காண்க. கீழ்க்கண்ட ஆங்கில வெளியீடுகளில் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளையும் காண்க. Balgalchchu, Epigraphia Indica Vol. VI. Page 55; A note on the word Balgalchchu, The Indian Antiquary Vol. XL (1911) P. 98. ----- தாமோதரன் இடம் : திருவாங்கூரைச் சேர்ந்த வாழ்விச்ச கோட்டம். என்னும் ஊரில் உள்ள பகவதிகோவில் வட்டெழுத்துச் சாசனம். பதிப்பு : திருவாங்கூர் சாசனங்கள்: தொகுதி ஆறு,எண்126. (No. 126. T. A. S. Vol. VI. Part II. ) விளக்கம் : இவ்வூர்ப் பகவதி கோவிலில், முல்லை மங்கலத்துத் தரணிதரன் என்னும் தாமோதரன் திருப்பணிகள் செய்து கொல்லம் ஆண்டு 798-இல் (கி.பி. 1623-இல்) காலஞ்சென்றதை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் எத்திசையும் புகழ்பெறவே மருவு கொல்லம் எழுநூற்றுத் தொண்ணூ ற்றோ டெட்டா மாண்டில் ஒத்துவளர் பங்குனி நாலாறோ டொன்றில் லொத்துநிற்குங் கார்த்திகைமுன் மூன்றாம் பக்கம் சத்திய வாசகன் முல்ல மங்கலத்து தரணிதர னெனும் தாமோதர னன்பாக பக்தியினால் திருப்பணிகள் பலவும் செய்தே பரலோகமடைந்து அரன்பொற் பாதம்பெற்றானே. ----- இராசகண்ட கோபாலன் இடம் : சித்தூர் மாவட்டம், திருமலை திருப்பதியில் உள்ள மேளம் மண்டபத்தின் தெற்குப்புறச் சுவரில் உள்ள சாசனம். பதிப்பு : திருப்பதி தேவஸ்தானத்துச் சாசனங்கள்: எண் 80. (No. 80. T. D. I. Vol. I. ) விளக்கம் : இராசகண்ட கோபாலன் என்னும் சிற்றரசனின் கைவண்மையைப் புகழ்கிறது இச் சாசனச் செய்யுள். இராசகண்ட கோபாலன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தொண்டை நாட்டின் வடபகுதியை அரசாண்டான். சாசனச் செய்யுள் எத்தலமும் ஏத்து மிராசகண்ட கோபாலன் கைத்தலத்தின் கீழோர்க் கையில்லை - இத்தலத்தி லுண்ணாதா ரில்லைஇவன் சோறுணு மிவன்புகழை எண்ணாதா ரில்லை யினி. ----- ஒபளநாதன் இடம் : சித்தூர் மாவட்டம், சந்திரகிரி தாலுகா, திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் முதல் பிராகாரம் தென்புறச் சுவரில் உள்ளது இச்செய்யுள். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : தொகுதி, எண் 297. (No. 297. S. I. I. Vol. IV. ) திருப்பதி தேவஸ்தானத்துச் சாசனங்கள்: முதல் தொகுதி, எண் 117. (No. 117. T. D. I. Vol. VI. I. ) விளக்கம் : ஒபளநாதன் என்பவர், திருவேங்கடப் பெருமா ளுக்குத் திருக்கைமலர் (கைக்கவசம்) தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் ஒதவளர் வண்மை யொபளநாதன் தஞ்சை யாதவர்கோன் வாழ வினிதூழி - போத மருக்குலவுஞ் சோலை வடவேங்கட வாணர்க்குத் திருக்கைமலர் தந்தான் சிறந்து. ----- குறிப்பு : இரண்டாம் அடியில், வாழவினி தூழி என்றிருப்பது வாழ்க வினிதூழி என்றிருத்தல் வேண்டும். மரு-மணம். இதில் கூறப்படுகிற ஒபளநாதன் ஹொபள யாதவன் ஆவான். இவன் யாதவராயர் என்னும் அரச பரம்பரையைச் சேர்ந்தவன் போலும். புடோலி அரசன் இடம் : சித்தூர் மாவட்டம், சித்தூர் தாலுகா, மேல்பாடி கிராமத்துச் சோமிநாதேசுவரர் கோவில் மகாமண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ள உள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண் 317. (No. 317. S. I. I. Vol. IV. ) விளக்கம் : இந்தச் சோமநாதர் கோவில், முற்காலத்தில் சோளேந்திரசிங்கர் கோவில் என்று பெயர்பெற்றிருந்தது என்பது இந்தச் செய்யுளினால் தெரிகிறது. இந்தச் செய்யுளுக்கு மேலே இவ்வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது : “இராஜராஜ தேவற்கு யாண்டு எட்டவாது. சிறை மீட்ட பெருமாளான சீயகங்க தேவர் மாமன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் புடொலி அரசன் இத் திருமண்டபம் செய்வித்தான்.” சாசனச் செய்யுள் பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் புவிமே லெத்திசையுஞ் செல்லும்எழில் மேற்படி - மெய்த்தவத்தாற் சோளேந்திர சிங்க நாயகற்குத் துகவமணி வளேந்து மண்டபஞ் செய்தான். குறிப்பு :- மூன்றாம் அடியில் ‘துகவமணி’ என்றிருப்பது ‘துங்கமணி’ என்றிருக்க வேண்டும். ----- நம்பி அப்பி இடம் : சித்தூர் மாவட்டம், திருத்தணி டிவிஷன், திருத்தணி. இவ்வூரில் உள்ள வீரட்டானேசுவரர் கோவிலின் தென்புறச் சுவரில் உள்ளது இச் சாசனச் செய்யுள். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு : எண் 94. (No. 94. S. I. I. Vol. XII. ) விளக்கம் : திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோவில், யானைக் கோவில் (கஜபிருஷ்ட விமானம்) ஆக அமைந்திருக்கிறது. இக் கற்றளி, அடிமுதல் முடிவரையில் கருங்கல்லினால் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர் நம்பி அப்பி என்பவர். இது, பல்லவ மன்னன் அபராஜித வர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இந்தச் சாசன வெண்பாவைப் பாடியவன் அபராஜித வர்மனே. அபராஜிதவர்மன் பல்லவ அரசர்களில் கடைசி அரசன். பல நூற்றாண்டுகளாகப் பல்லவ அரசர்களுக்கு கீழடங்கியிருந்த சோழ அரசர், அபராஜிதவர்மனை வென்று சோழப் பேரரசை நிறுவினார்கள். சாசனச் செய்யுள் “திருந்து திருத்தணியில் செஞ்சடை யீசர்க்குக் கருங்கல்லால் கற்றளியா நிற்க - விரும்பியே நற்கலைக ளெல்லாம் நவின்றசீர் நம்பிஅப்பி பொற்பமைய செய்தான் புரிந்து. இ வெண்பா பெருமானடிகள்தாம் பாடி அருளுத்து.” குறிப்பு :- வெண்பாவின் கீழுள்ள வாக்கியத்தில், பெருமானடிகள் என்பது அபராஜித வர்மன் என்னும் பல்லவ அசனைக் குறிக்கிறது. ‘பாடி அருளுத்து’ என்றிருப்பது ‘பாடி அருளியது’ என்றிருக்க வேண்டும். இந்தச் சாசனம் உள்ள வீரட்டானேசுவரர் கோவில், பல்லவ அரசர்கள் கட்டிய கடைசி கோவில் என்பதையும், இக் கட்டடத்தின் சிறப்பியல்புகளையும் வெளிப்படுத்தியவர், பிரெஞ்சுக்காரராகிய மூவோ தூப்ராய் ஆவார். இவர் எழுதிய Pallava Antiquities Vol. II என்னும் நூலில் இக்கோவிலைப் பற்றிக் காணலாம். ----- காமவில்லி இடம் : சித்தூர் மாவட்டம், கீழ்த் திருப்பதியில் அலிபிரி என்னும் இடத்தில் உள்ள பெரியாழ்வார் கோவிலின் மேற்குப்புறச் சுவரில் உட்பகுதியில் உள்ள சாசனம். பதிப்பு : திருப்பதி தேவஸ்தானத்துச் சாசனங்கள், முதல் தொகுதி, எண் 177. (No. 177. T. D. I. Vol. I. ) விளக்கம் : பூவை நகரத்துக் காமவல்லி என்பவர், அம்மை ஏரி என்னும் ஏரியைத் திருவேங்கடப்பெருமாளுக்குத் தானமாகக் கொடுத்ததைக் கூறுகிறது இச்செய்யுள். சாசனச் செய்யுள் கைப்பயலாம் பூவைநகர்க் காமவில்லி சர்ப்பகிரி யப்பனுக்கு நற்பொலியூட் டாக்கினால் - ஒப்பாவா லென்னம்மை முப்பத் திரண்டறமுங் கற்பித்த தன்னம்மை ஏரி தனை. குறிப்பு :- ‘கைப்பயலாம்’ என்றிருப்பது ‘கைப்புயலாம்’ என்றிருக்கவேண்டும். சர்ப்பகிரியப்பன் - சேஷாத்திரிநாதன், வேங்கடேசப்பெருமாள். வேங்கடமலைக்குச் சேஷாத்திரி என்னும் பெயரும் உண்டு. ----- நின்றாடுவான் இடம் : ஆந்திர தேசத்துக் கோதாவரி மாவட்டம், இராமச்சந்திர புரம் தாலுகா, திராட்சாராமம் என்னும் ஊரில் பீமேசுவரர் கோவில். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு, எண் 1026. (No. 1026. S. I. I. Vol. IV. ) விளக்கம் : திராட்சாராமத்தின் பெயர் தமிழில் இடர்க் கரம்பை என்று கூறப்படுகிறது. வீமேச்சரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்காக நின்றாடுவான் என்பவர் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. இந்தச் செய்யுளின் கீழே, தெலுங்கு எழுத்தில், “லிகித : வீரராஜேந்திர ஆசரிய்யன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதனால், இந்தக் கல்வெட்டெழுத்தைச் செதுக்கியவன் பெயர் வீரராஜேந்திர ஆசாரியன் என்பது தெரிகிறது. சாசனச் செய்யுள் இம்பர் நிகழ விளக்கிட்டான் இடர்க்கரம்பைச் செம்பொனணி வீமேச்சரந் தன்னில் - உம்பர்தொழ விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ் மண்ணுய்ய நின்றாடு வான். குறிப்பு :- இதே இடத்தில் உள்ள 1027 எண்ணுள்ள சாசனமும் தமிழ்ச் செய்யுளே. இதில், இடையிடையே எழுத்துக்கள் மறைந்து விட்டபடியால் அச்செய்யுளை இங்குத்தரவில்லை. ----- பஞ்சநதி முடிகொண்டான் இடம் : அந்திர தேசத்துக் கோதாவரி மாவட்டம், இராமச்சந்திர புரம் தாலுகா. திராட்சாராமம், பீமேசுவரர் கோவிலில் உள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள் : தொகுதி நான்கு, எண் 1338. (No. 1338. S. I. I. Vol. IV. ) விளக்கம் : திராட்சாராமம் என்னும் ஊர் தமிழில் இடர்க் கரம்பை என்று கூறப்படுகிறது. பீமேசுவரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்குத் தானம் செய்வதை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் புயல்மேவு பொழிற்றஞ்சை முதல்பஞ்ச நதிவா'99ன் புதல்வன் பூண்ட வயல்மேவு களியானை முடிகொண்டான் மாநெடுவேல் வத்தர் வேந்தன் இயல்மேவு தோளபயற் கிருபத்தை யாண்டில் இடர்க் கரம்பைச் செயல்மேவு மீசர்க்குத் திருநந்தா விளக்கொன்று திருத்தி னானே. குறிப்பு :- முடிகொண்டான் - பஞ்சநதி முடிகொண்டான். வத்தர் வேந்தன் - வத்தராசன். இவனுடைய முழுப்பெயர், “திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சாதவன். பஞ்சநதி முடிகொண்டானான வத்தராயன்” என்று சாசனத்தில் காணப்படுகின்றது. இவன் சோழ அரசனின் உத்தியோகஸ்தன். இடர்க்கரம்பை ஈசர் - இடர்க்கரம்பையில் கோவில் கொண்டுள்ள பீமேசுவரர். ----- கங்கப்பெருமாள் இடம் : மைசூர், கோலார் தாலுகா, விபூதிபுரம். இவ்வூரில் இடிந்து கிடக்கும் ஜலகண்டேசுவரர் கோவிலில் உள்ள சாசனம். பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் கோலார் தாலுகா, எண் 132. (Eipigraphia carnatica Vol. X. Inscriptions In grantha and Tamil. Kolar Taluk. No. 132) விளக்கம் : சகர ஆண்டு 1101-இல் (கி.பி. 1179-இல்) கங்கப் பெருமாள் என்னும் சிற்றரசன் இங்குக் கோவில் அமைத்து அதற்குத் தானங்களை வழங்கினதைக் கூறுகிறது இந்தச் செய்யுள். சாசனச் செய்யுள். திருமகள் துணைவன் ஐயமகள் நாயகன் இருநிலங் காவல னிளங்கோன் தழைசைமன் வடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன் குடதிசை யிந்துவின் குலமுதற் சிறந்தோன் 5 தென்திசைக் காவிரிச் செழுநீர் கடந்தோன் வந்திசைப் புரிந்தான் வானவன் கோன்றன் சென்னியிற் கையவன் கத்தவன் திருக்கிர பொன்னி னாரமு மீரமும் புனைந்தோன் எண்டிசை யமரரு மியமனு நடுங்கிப் 10 பண்டுவெங் காளி பரிகலம் பறித்தோன் நீணெடுங் குன்றகந் துணித்து நாகர் கீணிலை யாகல மேபச யாண்மையி லரசுப் பெடியத் தாக்கி யாங்கவர் முரைசம் கவர்ந்து மாடகலத்தம ராயன் 15 முத்தி . ட பருணிதன் முசுகுந்த கிரிநாதன் வண்டர் பாவன் விக்கண்டனடன வாத்தன் புரவா தீசன் செல்வன் பெயரால் மற்றவன் திருமகள் பலவழங்கு கற்பின் மாதேவி யென்பாள் பஞ்சவர் தூதன் 20 பானாரி புத்திரன் வெஞ்சிலைத் தடக்கை வீர கங்கன் நடுற்ற சிற்றநதனர் சாரமன் தொடுகடற் றானைத் தோன்றற் கிளையவள் வெங்கணான் விக்கிரமா திற்தற்குத் தங்கை கூத்தற்குத் தான்முன் சிறந்தவள் 25 ஓடக் கொற்றத் தோங்கிய முக்கடக வாதங் கோன் கச்சி காவலன் நறு தென்னனை யடுகளத் தட்டு வென்ற மாகடந்த பன விரியுர வேந்தன் பொன்பன பொன்புண் கெடுவெபங் காக்கு 30 மெழிற்கங்கப் பெருமாள் அத்தை வாழி யகலிடத் தெல்லாச் செல்வமும் தோற்றமும் யாவையு நில்லா வென்னும் நிலமை யோதி அருந்தவம் புரிந்த சிந்தைய ளாகி யிருந்தறஞ் செயிவர தியால்பென்ன யெண்ணி 35 சுற்றும் புரிசையுந் தோரணவா யதலுங் கற்றளி யதுவுங் கவின்பெற வமைத்து நந்தன வனமுந் திருமடைப் பள்ளியு மமைந்தனிக் குளமும் மடைவிளாகமும் பாகுத்து ஒற்றைச் சங்கும் இரட்டை தாரையும் 45 மற்றும் பலபல வாச்சியங்களும் பட்டமு மணிபூம் பாரிகல் பகருமடெ புற்றகட்டும் பலபடி நிமந்த பரிசிறு கருளியன் றெழிற்சகரிற் றாயிரத் தொருநூற் றொன்றென அறிஞரும் உரைத்த நாளில் அணியுஞ் 46 சந்தமு மகிலு மாரமு மணியும் பொன்னும் வருபுனற் சாரற் கொங்கலர் கூவளை கூநறிடை யுமையொடு சங்கரன் றன்னை தாபித் தனனே. குறிப்பு :- இந்த அகவற்பாவைக் கல்லில் வெட்டின சிற்பியின் தவறுதலால் இடையிடையே எழுத்துக்கள் பிறழ்ந்துள்ளன. இதனைப் பாடிய புலவர் இச்செய்யுளை நன்கு இயற்றியிருக்கிறார். ஆனால், தமிழறியாத கற்றச்சனால் இச்செய்யுளில் பிழைகள் காணப் படுகின்றன. பிரமராயன் இடம் : மைசூர், சிட்லகட்ட தாலுகா, ஜங்கம கோட்டை, கொல்ல ஹள்ளி கிராமத்தின் வடக்கில் உள்ள பைரண்ணன் நிலத்தில் உள்ள தமிழ்ச் சாசனம். பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் எழுத்துச் சாசனங்கள் சிட்லகட்ட தாலுகா, எண் 9. (Eipigraphia carnatica Vol. X. (Inscriptions in Grantha and Tamil). Sidlaghatta Taluk. No. 9) விளக்கம் : உதயமார்த்தாண்ட பிரமராயன் என்பவர், சோமீச்சுரக் கோவிலைக் கட்டி அதற்கு வேண்டிய நிலபுலங்களைத் தானம் செய்ததை இந்தச் செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் ஸ்வஸ்திஸ்ரீ சக வருஷம் ஆயிரத்து நாற்பத்திரண்டு. பூமகள் புணரப் புகழது வளரப் புவியோர் போற்ற வெங்கலி கடிந்து செங்கோ லோச்சிப் பூமி வேந்தன் கோழியர் குலபதி ஸ்ரீராஜ ராஜன் 5 ஸ்ரீவிக்கிரம சோழ தேவர்க் கியாண்டிரண் டதனில் நாரா நிகரிலி சோழமண் டலத்துக் காரார் வயல்சூழ் கைய்வர நாட்டுள் மாட மாளிகை மண்டப மோங்கிய கூட . . . கொற்ற 10 வாயதல் பாகட்டூர் . . . . . . . . . ம் பாவையர் நடம்பயில் சூகுட் டூரில் தொன்னில நிகழத் தருமொரு நல்குந் தன்ம . . னருமொழிச் சதுப்பேதி மங்கலத்துப் பல்லோர் புகழும் நல்லோர் முதல்வன் 15 மாத்திரை யதனில் மாநெதி நல்கும் மாத்திரை யர்கோன் னாதுலர் சாலை பாண மாத்தும் பார்ப்பனப் பெருமாள் சாமுண் டையன் றன்பெருந் தேவி புச்செறி குழலாள் விச்சமை பயந்த 20 தண்டமி ழாலையன் தாரணி ஏத்து மெண்டிசை நிகழு மிருபிறப் பாளன் கொண்ட லன்ன குவலய தந்திரனான வோங்கு புகழான் உதையமார்த் தாண்ட பிரம்ம ராயன் தேன்கமழ் தாரோன் 25 செழுமறை வாணன் தன்றிருத் தமையன் றன்பெய ராலே பொன்புரி சடையணிப் புண்ணியன் விண்ணவர் நாமீச்சர . . . . . . னி தேத்திய சோமீச்சரந் திருக்கோயி லெடுப்பித் . . . . . . . . . . சிறந்து 30 . . . லாண மிசைப்ப திருப்பிர திஷ்டை நிகழப் பண்ணி திருவடி நிலையுஞ் செம்பொனா லமைத் துருவது வளர உமாசகிதன் திருமேனி யிருநிலம் போற்ற வெழுந்தரு ளுவித்துக் கேதகை மல்லிகை 35 கிஞ்சுக மஞ்சரி பாதரி புன்னை பராரை யாரமகிழ் சிதலை மௌவல் செருந்தி செண்பக மாதவி என்றிவை வளம்பெற வமைத்துச் செங்கண் விடையோன் சென்னி மன்னுங் கங்கை நீரு 40 மண்ணுங் குணர்ந்து குருக்கள் குளிரக் கோயில் மேல்பாற் றிருக்குள மாகத் தீர்த்தங் கண்டு செழுநில மேத்தக் கொட்டுத் தட்டுங் குலவி நிலவ விருப்புறு மடியார் மேவிமுன் சிறக்கத் 45 திருப்படி மாற்றுக்குத் தேவர் தானமாகப் பெரிஏரியில் நிலமோ ராயிரமுஞ் சிற்றேரியில் நிலமோ ராயிரமுஞ் சீரார் செந்தமி ழோர்களிப் பார வீரா யிரங்குழி . . னிற் றிகழக் 50 கு'99பதி யாயெங் குற்றங் கடியுங் கணவதியார் குமரர்க் கிருநூறு குழியு மாராய னான பிரா . . . . . . . ன சூரிய தேவர்க் கிருநூறு குழியு மஞ்சொல்லா . . . . ததவ . . . . செய்வான் 55 றிருக்களத்து மேல்பாற் பாலை நன்நில மொருவே லியுநற் பண்ணையும் . ழிந . பெண்ணை மேல்பாற் பசுவூர் நாற்பா லெல்லை யுட்பட நான்செய் புஞ்சை நன்னில நிகழு நான்மறை யவர்பாற் 60 பொன்னற விட்டு மண்ணறக் கொண்டு தாரணி நிகழத் தன்கிளை வளரச் சந்திரா தித்தர் தாமுள் ளளவும் ஊழி வாழி யுரவுபெற வமைத்தனன் வாழி வாழி வையத் தினிதே. குறிப்பு :- இச்செய்யுளின் இடையிடையே எழுத்துக்கள் மறைந்து விட்டபடியால், சில சொற்களின் உருவங்கள் தெரிய வில்லை. சாசனத்தைக் கல்லில் வெட்டியவரின் கைப்பிழையால் சில சொற்கள் பொருள் விளங்காமலிருக்கின்றன. வரி 15. மாநெதி - மாநிதி. வரி 33. உமாசகிதன் திருமேனி - உமாமகேசுவர மூர்த்தம். உமையும் மகேசுவரனும் ஒரே ஆசனத்தில் சுகாசன மூர்த்தமாக எழுந்தருளிய உருவம். வரி 40. குணர்ந்து - கொணர்ந்து, கொண்டுவந்து. வரி 60. “பொன்னறவிட்டு மண்ணறக் கொண்டு” இத்தொடர்மொழி வேறு பழைய சாசனங்களிலும் காணப்படுகின்றது. ‘பொன்னறக் கொண்டு மண்ணறக் கொடுத்தோம்’, ‘பொன்னற இட்டு மண்ணறக் கொண்டேன்’, ‘பொருளற'b9 இட்டு விலையறக் கொண்டு’ என்று சாசனங்களில் காணப்படுகின்றன. வரி 20, 61. தாரணி என்பது தரணி என்றிருத்தல் வேண்டும். தரணி - நிலம், பூமி. ---- பெரியான் இடம் : மைசூர், கோலார் தாலுகா, விபூதிபுரத்திலுள்ள ஜலகண்டேசுவரர் கோவிலில் உள்ள சாசன கவி. பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் கோலார் தாலுகா, எண் 131. (Eipigraphia carnatica Vol. X. Part II. Kolar Taluk. No. 131.) விளக்கம் : குவளாலபுரத்து (கோலார்) ஏரியின் கீழ் உள்ள நிலங்களைத் தானம் செய்த பெரியான் என்பவரைப் புகழ்கிறது இச் செய்யுள். இந்தத் தானம், சகரை யாண்டு 1120-இல் (கி.பி. 1198-இல்). விக்கிரம கங்கன் என்னும் அரசன் காலத்தில் செய்யப்பட்டது. சாசனச் செய்யுள் அலைகடல் உடுத்த மலர்தலை யுலகத் தெண்ணருங் கீர்த்தி இசையா ரதிபன் அண்ணலெங்குந்தை யமான் காதலன் கோதில் . . . . நகரங் 5 குடியேற்றிய ஆதிவணி கேசன் அளகைப் பதியுந் தானுடை யோன். . . . திரைலோக்ய பட்டண ஸ்வாமி ஐய்யனருட் சீராசைத் தேவ னுடனவ தரித்த ஆயிழை யாளுய்ய . . ண்டை 10 அருந்ததியே யனையாள் தந்தாய் திருவயிற் றுதித்த துளங்குமணித் திருமார்பன் செங்கமலப் புனல் புடைசூழ் செழுந் தொண்டை வளநாடன் எங்கள் பெரியாற் கிளைய பெரியான் மற்றீண் டுலகில் 15 ஒப்பரிய சகரையாண் டோரா யிரத்துமேற் செப்பரிய நூறு கடந் திருபதுதான் சென்றதற்பின் வென்றிபுனை கடாக் களிற்று விக்கிரம கங்கன் குன்றெறிந்த கூரிலைவேற் கொற்றவனை யிடுவித்துக் கொத்தலரும் பூம்புனல்சூழ் 20 குவளாலத் தேரிதனில் உத்தமத்தே நீர்நில மற்றொரு வெலயு மாளு சோலை யதனுக்கு வடமேற்கே விடுவித்துத் திருச்செல்வம் பல பெருக்கிச் சி . . லியு முப்பொழுதுங் கருத்தமைய 25 வெழுந் தருளும்படி நிமந்தங் கட்டுவித்துச் சந்திரா தித்தவரை திருப்புகழ் நிறுத்தி நிந்த ளுரிலத் தினிதுவாழ் கெனவே. ஸ்ரீ மாஹேஸ்வரரும் ஐந்நூற்றுவரும் ரக்ஷை. குறிப்பு :- வரி 4. குவளால மாநகரம், இப்போது கோலார் என்று வழங்கப்படுகிறது. வரி 21. வெலயுமாளுசோலை என்னும் சொல்லின் சரியான உருவம் தெரியவில்லை. கடைசி வரியில், நிந்தளுரிலத்தினிது என்றிருப்பது, ‘இந்த நானிலத் தினிது’ என்றிருக்க வேண்டும். ----- செட்டிதேவன் இடம் : மைசூர், சிந்தாமணி தாலுகா, உபாரப்பேட்டைக் கிராமத்தில் உள்ள சாசனச் செய்யுள். பதிப்பு : கர்னாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் சிந்தாமணி தாலுகா, எண் 83. (Eipigraphia carnatica Vol. X. Inscriptions in Grantha and Tamil. No.83) விளக்கம் : சக ஆண்டு 1101-இல் (கி.பி. 1179-இல்) செட்டி தேவன் என்பவர் தம் பெயரால் செட்டீச்சரம் என்னும் கோவில் அமைத்து அதில் சிவபெருமானை எழுந்தருளுவித்து அக் கோவிலுக்கு நிலபுலங்களைத் தானம் செய்ததைக் கூறுகிறது இந்தச் சாசனம். சாசனச் செய்யுள் தேனாருஞ் செங்கமல மாதுபுணருந் தோளான் கானாரும் விந்தைமகன் காதலாம் பூநாடும் வண்டறியாத் தாமரையோன் தன்மரபில் வந்துதித்த கண்டன் கவுண்டல்லிய கோத்திரத்தான் எண்டிசையும் 5 சாலிவயல் புகுந்து சண்பகப்பூஞ் சோலைதொறும் பாலிமணி சிந்திப் பரந்தோங்கி யால . . . . துச் செய்யார் கு . . புழக்கிச் செங்கமலப் பொய்கைபுகுங் கைய்வார நாடன் மிகுங்கார்மே பொய்யாத கங்கையிலுந் தூயபிரான் கண்டார் வல்லவனாம் 10 அங்கைமுகில் அமுதன் தன்புதல்வ . . .ங்களுக்கு மாதர் மறையோன் மநுநெறிஇம் மாநிலத்தின் தாதாதயர் வளர்க்குந் தண்ண . . . ஞ்சி . . . ராக்கிரம . . . . ன . . ருடி . . . கு . . . . தாமரைப்பூ . . . . .ழ துட்டராதித்தன் துர்க்குல நகுலன் செட்டிதேவன் 15 . . . . ன் மாதாரு மட்டுலவு நாகஞ் சுமந்திட ஞாலமெலாந் தானிகழு . . ன் பிரமாதிராயன் மிகவோகை யோடு மாதவியேமுல்லை வருக்கைகமழ் சந்தனமே சூதவனமேதா புன்னை போதலரும் சோலைவயல் தோறுஞ் சுரும்பினங்கள் பண்பாட 20 வேலையது போலும் விதிர்ச்செட்டில் ஆலிலைமேற் பள்ளிகொண்ட மாலும் பதுமத்தோனுங் காணா வெள்ளிமலை நாதன் மிகவிரும்ப வொள்ளுத்திருக் கற்றளியு முகமண்டபமு முருப்பெறச்செய் தூழிபல வாழப்பெருக்கும் சகவருஷம் ஆயிரத் தொருநூற் 25 றொன்று மிகநல்ல வருவிகாரி புகலுமிடப ஞாயிற்றுப் பிற்பக்கம் பொன் . . . திடமான திதிகை திரு. .ழ. . மூர்த்தம் பன்னு க. . . .ங்கை பாசத் திருமகளு முன்னு கமல மெனவுகப்பப் பன்மறையோர் பாதத்திற் . . . தி . . வெ . . .ளும் வீற்றிருப்ப மாதவர்கள் 30 செட்டீச்சர மென்று சி. . . .ட்டுத் திசைக்கு மெழில் விளக்காய்ச் சிட்டர் தொழ மண்ணும் வளஞ்சுரப்ப மாமறைகள் தாந்தழைப்ப விண்ணு மழைபொழிய வெங்கலிபோய் எண்ணிய சீராருங் கௌசி . . . ன் ராஜராஜபட்டன் வல்லைப்பூமன் 35 சீரார் சிவ . . றையோன் தனக்கு நீராறப் பாணியிலே வார்த்துப் பசுபதியைப் பூசித்துங் காணியதுவுங் கொடுத்து கல்வெட்டி நீணிலத்துக் கொங்காளுஞ் சோலைசூழ சோழன் . . . பொரான கொங்கர் கோடி மங்கலமுடை . . . . . ந்தாங்கு 40 கழதில்லைப் பிரான் அரிவாட்டத்தா யாண்டாரற்கு கோயில் மல்லைனெதிமாடா பத்தியங்கொடுத்து சொல்லரிய பாரசிவன் பம்மனுக்குப் பல்லியங்கள் வாசிக்கப் பேராப் பெருங்காணி தான்குடுத்து சீரார் திருவாபரணம் பொன் ஐங்கழஞ்சாற் பட்டம் 45 பொருமால் விடையோற்கு . . . . . . . ரும் வேற்றுப் படாத பரிகல பரிச்சின்னம் நூற்றுப்பல வெண்கலம் அளித்துத் தோற்றிய நற்சந்தி மூன்றினுக்கு நல்விளக்கோர் பத்தாக்கிக் கற்செக் கிரண்டில் . . . யாண்ணை தாங் கொடுத்துக் 50 கோங்கி . . . .ங்கோலப் பொழில் புடைசூழ்கொத்த நூருங் கிறையுந் தாலவ . . துச் சாலநல் சொக்க சமுத்திரத்திற் சோமபாதியுங் கொடுத்து ....க்கும்விதற செட்டில் ஆமுதகட்டும் மாதகட்டும் நீக்கியபின் கொல்லை யிருகண்டகமுந் தானங் கொடுத்து 55 எல்லையலாத் தன்ம மியற்றியபின் பல்லவையோர் சொல்லார் புகட்தன்ம . . லையிது சோரா பேய்கள் மேலெழுதுங் கணக . . . . . சொல்லார்ந்த முத்தமிழோர் தாம்புகழு மூன்றுநாட்டு மண்டலிகன் அத்தநெறி ....க்கோ ராகரமாம் நித்தந்தருவார் கொடைத்தடக்கைத் 60 தூயிந் துட்டர்கண்டன் திருவாய் மொழிந்தருளக் கேட்டு இருமா . . ஞ் சொற்புலவோர் தாம் பு . . . தலூர் மன்மறையோன வித்தகநற் பூந்துழாய் மார்பனுக்குச் சித்தந் தளராதவன் பி . . . . .செம்பொனருள் நம்பெருமாள் அளவிலி அறிஞன்ற னெழுத்து பின்னும் 65 பிழையாத வாய்மைப் பிரமதராயன் செட்டி மழையார் முகில்அங்கை மாதானி பழைய மறையாலுங் காணவொண்ணாப் பாதன் அரன் திருமேனி கோயில் குறையா திலக்கணங்களாற் சமைத்த அறிஞன் அருள்கூர்ந்த நெஞ்சினோன் 70 . . கிம . . . த்தனமா பொன்பெருகு புகட்சங்கர செட்டிப்பெயர் இராயாசாரி யென்னு பெயர் சிட்டர் பலர் செப்பச் சிறப்பித்து மட்டுலவு சீரார் பொழிற் . . . ன்ற கிறைக்குத் தெற்கிற் கிலேரி சிட்டங் கிறையுங் கொடுத்தான் 75 இத்தன்மங்கள் சந்த்ரா தித்தியவ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . குறிப்பு :- இச்செய்யுளின் இடையிடையே எழுத்துக்கள் மறைந்துவிட்டபடியால் சில இடங்களில் செய்யுளடியைச் சரியாக அமைக்க இயலவில்லை. இறுதியிலும் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. ----- ஆரியச் சக்கரவர்த்தி இடம் : இலங்கை, கொழும்பு நகரத்துப் பொருட்காட்சி சாலையில் உள்ள ஒரு கல்லெழுத்துச் சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண். 1413. (No. 1413. S. I. I. Vol. IV. ) விளக்கம் : இலங்கையை அரசாண்ட சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒருவனை இந்தச் செய்யுள் புகழ்கிறது. சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழர் ஆவர். ‘சேது’ என்பது இவர் களுடைய ஆணைப்பெயர். இவர்களுடைய காசுகளில், படுத்திருப்பது போன்ற எருது உருவமும், ‘சேது’ என்னும் எழுத்தும் பொறிக்கப் பட்டிருந்தன. இந்த அரசர்கள் இடைக்காலத்திலே, இலங்கையின் சில பகுதிகளை அரசாண்டார்கள். சாசனச் செய்யுள் சேது கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மடமாதர் தாம். குறிப்பு :- மூன்றாம் அடியில், சிங்கை நகர் ஆரியன் என்பது சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியை. அனுரேசர் - அனுரை நகரின் அரசர். அனுரை என்பது அநுராதபுரம். இது இலங்கைத் தீவின் பழைய தலைநகரம். இந்நகரில் இலங்கை அரசர்கள் அரசாண்டார்கள். ----- தன்மபாலன் இடம் : இலங்கைத் தீவின் பழையகாலத்துத் தலைநகரமான அநுராதப்புரத்தில், ஆர்க்கியாலஜி சர்வே அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள பழைய கல்லெழுத்துச் சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண். 1405. (No. 1405. S. I. I. Vol. IV. ) விளக்கம் : இந்தச் செய்யுளின்மேலே ஒரு வடமொழிச் செய்யுளும், அதற்கு மேலே, இடையிடையே எழுத்துக்கள் மறைந்து போன ஒரு தமிழ்ச் செய்யுளும், அதற்குமேலே சாசன வாசகமும் எழுதப்பட்டுள்ளன. எழுத்துக்கள் மறைந்து சிதைந்துள்ள செய்யுளை இங்கு எழுத வில்லை. சாசனச் செய்யுள் போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந் தீதி லருள்சுரக்குஞ் சிந்தையா - னாதி வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை ஒருதன்ம பால னுளன். குறிப்பு :- இந்தச் செய்யுள், மாக்கோதை தன்பாலர் என்னும் பௌத்த பிக்குவைப் புகழ்ந்து கூறுகிறது. போதி நிழல் அமர்ந்த புண்ணியன் - அரசமரத்தின் கீழே எழுந்தருளியுள்ள புத்தர் பெருமான். ----- இணைப்பு : பராந்தகன் வீரநாராயணன் இடம் : திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்த செப்பேட்டுச் சாசனம். பதிப்பு : இந்தச் செப்பேட்டுச் சாசனம் இதற்கு முன்பு வெளியிடப் படவில்லை. முதல் தடவையாக இப்போது வெளியிடப்படுகிறது. இந்தச் சாசனத்தை அன்புகூர்ந்து கொடுத்தருளியவர், அண்ணாமலைப் பல்கலைகழகத்துத் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரும், சாசன ஆராய்ச்சிப் பேரறிஞருமாகிய உயர்திரு. T. V. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள். விளக்கம் : இந்தச் செப்பேட்டுச் சாசனம் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. முழுவதும் செய்யுளால் ஆனது. வட்டெழுத்தினால் எழுதப்பட்டது. சடையவர்மன் பாண்டியன் பராந்தகன் வீரநாராயணன் என்னும் பாண்டியனின் ஆட்சியில் ஆறாவது ஆண்டில் எழுதப்பட்டது. களபரரை வென்று பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவிய பாண்டியன் கடுங்கோன், காடக சோமயாஜி என்பவருக்குச் சோமாசி குறிச்சி என்னும் ஊரை யாகபோகமாகக் கொடுத்தான். அவன் வழங்கிய செப்பேடு காடக சோமாஜியின் பரம்பரையார் வசம் இருந்தது. அது பிற்காலத்தில் காணாற்போக, அப் பரம்பரையில் வந்த நாராயணன் கேசவன் என்பவர் மேற்படி சோமாசிகுறிச்சிக்கு எல்லை குறிப்பிட்டுப் புதிய செப்பேடு எழுதித்தரவேண்டுமென்று ஸ்ரீ பராந்தக மகாராசனைக் கேட்டுக்கொள்ள, அவ்வரசன் சோமாசிகுறிச்சிக்கு மதுரகரநல்லூரெனப் பெயர் சூட்டி இச் செப்பேட்டுச் சாசனத்தை அளித்தான். இந்தச் சாசனம், பிற்காலத்துப் பாண்டியர் பரம்பரையைக் கூறுகிறது. கோச்சடையன் என்னும் ஸ்ரீ வரகுண மகாராசன் (முதலாம் வரகுணன்). அவன் மகன் ஸ்ரீவல்லபன், அவன் மகன் வரகுண பாண்டியன் (இரண்டாம் வரகுணன்) ஆகியவர்களைக் கூறுகிறது. இரண்டாம் வரகுண பாண்டியனின் மகன் இச்சாசனம் வழங்கிய பாண்டியன் பராந்தகன் வீரநாராயணன் ஆவன். இவன் கி.பி. 880 முதல் 900 வரையில் அரசாண்டான். இவனைப் பராந்தக மகாராசன், மகரகேதனன், கோச்சடையன், ஸ்ரீநிகேதனன் என்று இச் சாசனம் கூறுகிறது. சாசனச் செய்யுள் ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழு மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்காப்ப விண்ணென்பெய ரேயணிய மேகதாலி விதானத்தின் றண்ணிழற்கீழ் ஸஹஸ்பரண மணிகிரணம்விளக்கிமைப்ப 5 புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப் பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப் பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச் 10 சோதிமர கததுளைத்தாட் சுடர்பொற்றா மரைமலர்மிசை விளைவுறுகளங் கமணியின்மேன் மிளிர்ந்திலங்கு சடைமுடிஓ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலை ஒடுதோன்றின சதுர்ப்புஜன்சதுர் வ்வக்த்ரந் சதுர்வ்வேதிசதுர்த்வயாக்ஷந் மதுக்கமழ் மலர்க் கமல யோனி மனந்தந்த மாமுனிஅத்ரி 15 அருமரவிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணி லிருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணந் வெளிப்பட்டனன் மற்றவற்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்கு கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்தி 20 பூந்தளவ மணிமுறுவற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவர்ப்பின் பார்வேந்த ரெனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலுவியசெழு மகரக்குலம் விசைஒடுவின் மீன்னொடு மிக்கெழுந்த கடற்றிரைகள் 25 சென்றுதன்சே வடிப்பணிய அன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விக்ஞாபணை யும்பெறலரு நகுஷந்மத விலாசமும் வஞ்சத்தொழில் வாதாபி சீராவியு மஹோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுநேதுசுதை சுந்தரதையு மொருங்குமுன்ன மடிநண்ண சியோமேனி உயுதலத்தோன் 30 மடலவிழ்ஆ மலுய்த்து மாமுனிபுரோ கிதன்னாகக் கடல்கடைந் தமிர்துண்ணவுங் கயலிணைவட வரைப் பொறித்தும் ஹரிஹயந தாரம்பூண்டு மவன்முடிஒடு வளைஉடைத்தும் விரிகடலைவே லின்மீட்டும் தேவாசுரச் செருவென்றும் அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடைய வேந்தழித்துந் 35 திசவதனன் .......நினுக்குச் சந்துசெய்துந் தார்த்தராஷ்டிரர் படைமுழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வாணர் அநுஜன் வசுசாப மகல்வித்தும் ....தொன் னகரழித்தும் பரிச்சந்தம் பலகவர்ந்தும் நாற்கடலொரு பகலாடியும் கோடிபொன் னியதிநல்கிக் 40 கலைக்கடலைக் கரைகண்டுபொன் பகடாயிரம் பரனுக்கீயும் உரம்போந்ததிண் டோளரைசுக சுரம்போகித் துறக்கமெய்தியும் பொன்னிமயப் பொருப்பதனில் தன்னிலையிற் கயலெழுதியும் வாயல்மீ மிசைநிமிர்ந்து பலவேண்டி விருப்புற்றுங் காயல்வாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் 45 மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத்தமிழ்வளர்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின் 50 இடையாரையும் எழில்பேணவைக் கூட்டியினிய வெல்கொடி எடுத்த குடைவேந்தர் திருக்குலத்துக் கோமன்னர் பலரொழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் ஸ்ரீவரகுணன் குரைகழற்கோச் சடையற்குச் சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் ஸ்ரீவல்லபன் 55 மெய்போயந் தோளியர்கள் வித்யாதர ஹிரண்ய (கர்ப்ப) குண்ணவல மாவென்றுங் கரைகடலீ ழங்கொண்டும் விண்ணாள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் காடவருக் கடலாணூ ர்ப் பீடழியப் பின்னின்றுங் குடகுட்டுவர் கு'99சோழர் தென்கொங்கர் வடபுலவர் 60 அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடையதைக் கதி......காட்டி யமபுரசீலன் ஒளிறிலைவே வலதுபாய பகு...லன் உம்பவர்வான் உலகணைந்தபின் மற்றவற்கு மகனாகிய கொற்றவனங் கோவரகுணன் பிள்ளைபிறை சடைக்கணிந்த விடையேறி எம்பெருமானை 65 உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் அரவரைசன் பல்லூழி ஆயிரமா யிருந்தலையால் பெரிதரிதின் பொறுக்கின்ற பெரும்போஹமண் மகளைத்தன் தொடித்தோளில் லெளிதுதாங்கிய தொண்டியர் கோன் றுளக்கில்லி யடிப்படைமா னாபரணன் திருமுருகன் மயிலையர்கோன் 70 பொத்தப்பிக் குலச்சோழன் புகழ்தருசிரீ கண்டராசன் மத்தமா மலைவலவன் மதிமகளக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸ்ரீபராந்தக மகாராஜன் விரைநாமத் தேர்வீரகர்ணன் முன்பிறந்தவேல் வேந்தனைச் செந்தாமரைமலர்ப்பழனச் செழுநிலத்தைச் செருவென்றுங் 75 கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக்கரணியும் தென்மாயனுஞ் செழுவெண்கையு பராந்தகன்னுஞ் சிலைக்கணீர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா ஹனங்கொண்டும் ஆறுபல தான்கண்டும் அமராலையம் பலசெய்துஞ் சேறுபடு வியன் கழனித் தென்விழிஞ நகர்கொண்டுங் 80 கொங்கினின்று தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசை கொண்டும் எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறத்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்தி லியற்றுவித்தும் நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும் 85 வென்றிப்போர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கரிரார்கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகைகண் டகோன் (கண்டன்) மதுராபுர பரமேஸ்வரன் மாநிநீமகர கேதநன்மகன் செங்கோல்யாண்டு ஆறாவதின் மேல்நின்ற தொடர்யாண்டில் பொன்சிறுகா மணிமாடப் புரந்தரனது நகர்போன்ற 90 களக்குடிநா டதனிற்படுங் களக்குடிவீற் றிருந்தருள ஆசிநா டதனிற்படும் பிரமதேய மகன்கிடக்கைத் தேசமலிதிரு மங்கலமிது பண்டுபெரு நலனுட் படுவதகைப் பாங்கமைந்த குடிகளது காராண்மை யொடெழுந்த முதுகொம்பர்க் கொடைமுந்து கிடந்ததனைக் 95 கற்றறிந்தோர் திறல்பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரடோண் மாக்கடுங்கோன் மான்பேர்த் தளியகோன் ஒன்றுமொழிந் திரண்டோம்பி ஒருமுத்தீ யுள்பட்டு நன்றுநான் மறைபேணி ஐய்வேள்வி நலம்படுத்து அறுதொழிற்கள் மேம்பட்டு மறைஓர்பந் நிருவர்க்குக் 100 காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் செப்பேடுசெய்து குடுத்தருளினன் தேர்வேந்தநின் குல முதல்வன் மைப்படுகண் மடமகளிர் மணவேள்மனு ஸமானன் வழுவாத செங்கோனடவி மண்மகட்கொரு கோவாகிக் கழுதூரில் சித்திசெய்த கடிக்கூட னகர்காவலன் 105 சோமாசி குறிச்சியிது தொல்லைமேற்படி கிடந்ததனை ஸோமபான மநோசுத்தராகிய காடகசோம யாஜியார்க்கு யாகபோக மதுவாக எழிற்செப்பேட் டொடுகுடுத்தனன் ஆகியஇவ் வூரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில் இழந்துபோ யினவென்றும் ஏதமில்சோ மாசிகுறிச்சிச் 110 செழுந்தரைய நிலத்துப்படும் நிலத்தைக் கடன்றிருக்கைய கீழ்வன மணிதருபெரு நான்கெல்லை இட்டுக்கொண்டு மற்றதனை மதுரகர நல்லூரென்று பேரிட்டுக் குடிநிலனா கக்கொண்ட நிலமதுவும் அவகூடி நிலனாகேய்ந் தவிரயிது தொண்டுசோ மாசிகுறிச்சி 115 மேலைபுரவேற்ப பெ(று)வதென்றும் சொல்லியவூ ரிரண்டுந்தம்பி லெல்லைகலந்து கிடக்குமாதலில் ஒன்றாக வுதவுமென்றும் வாசநாள் மலர்கமழ்பொழில் லாசிநாட்டுள் .....மாகிய கருவமைந்த கனகமாளிகைத் திருமங்கல நகர்த்தோன்றல் சோமாசி குறிச்சிஎன்னுங் காமர்வண் பதிகாவலன் 120 வடிவமைவான கோத்திரத்து பௌதாயன சூத்திரத்துக் குடியினனாக வெளிப்பட்டு குணகணங்கட் கிடமாகி மறைநான்கின் துறைபோகிய மாயானமவி பட்டற்குச் சிறுவனாகிய பெருந்தகைஓன் றிசைமுகன்வெளிப் பட்டனையன் தர்ம்ம வத்சலன், 125 மாயநாரா யணபட்டர் மஹாபந்தி வயிறுயிர்த்த சேயான திருத்தகைஓன் ஸ்ரீநாராயணங் கேசவன் கல்விக்கடல் கரைகண்டு மக்ஷத்தியான மதமுணர்ந்து சொல்வித்தகந் தனதாக்கி சத்சீலா சாரனாகி மீனவள்வீர நாரணற்கு விஸ்வாச குணங்கட் 130 கானதன்மைய னாதலில்லரு ளறிந்துவிண் ணப்பஞ்செய மதுரதர தரநாணுஎனும் வளம்பதிசோ மாசிகுறிச்சி அதன்மேலே புரவேற்றி ஆங்கதுந்திரு மங்கலமும் உடன்கூடப் பிடிசூழ்வித் துலகறியக் குடுத்தருளினன் வடங்கூடு முலைமகளிர் மன்மதவேள் மனுசரிதன் 135 மற்றிதனுக் காணத்தி வண்டமிழ்க் கோன்திக்கி போற்றடம்பூண்மணிமார்பன் பொழிற்புல்லூ ரெழிற்பூசுரன் செய்யுந்து புனற்செறுவிற் செங்கழுநீர் மலர்படுகர் வைகுந்த வளநாடன் வத்ஸகோத்ர சூடாமணி ஹரிசரண கமலசேகரன் ஆயிரத்தஞ் ஞூற்றுவன் 140 திருமகிழி ளையனக்கன் திசைநிறைபெரும் புகழாளன் அவனிதலம் புழழுநிதி அவனாசூர் குலதிலகன் நத்தலர்பூம் பொழிறழுவிச் சாலிவிளை வயல்வளத்தால் மேதகுபுகழ் பேணவுணாட்டு பெருநலூர்வெள்ளி எனப்பெயரிய திருந்துபதிக் குடித்தலைவன் தென்னவன்திரு வருள்சூடிய 145 பெருநலூர்வெள்ளி கிழவனாகிய பெருந்தகைசேந் தனுகிழவன் நலமலிசீர் நடுவுநிலை நன்குநா யகனாகவும் அலர்கமழும் பொனலளித்து நாட்டுக்கக் கிரமாகிய முகி(ல்) தோய்பொழில் முசுக்குறிச்சி முற்கூடிப் பினோர் கார்முளைய அகனிலத்தோர் புகழளத்து நாட்டுக்கோன் னருந்தமிழின் 150 பாத்தொகுத்தெருள் பயன்தருவோன் கொடைபயில்கற் பகசீலன் சாத்தம்படர் தெனப்பெயரிய தக்கோன் மிக்கோங்கு கார்வயல்சூழ் களாத்திருக்கைப் பேரரண்சூழ் பெருங்காக்கூர்த் தலைவனாகிய குலக்குரிசில் தகுநேய மாணிக்கம் கலைபயில் கிழவகோனும் கணக்கு (நருமேறயில்) கணக்கராகவும் 155 மாசில்வான் குடித்தோன்றிய ஆசிநாட்டு நாட்டாரும் மச்சுறுபர மன்னுவந்த நெச்சுறநாட்டு நாட்டாரும் உடனாகிநின் றெல்லைகாட்டப் பிடிசூழ்ந்த பெருநான் கெல்லை கீழெல்லை புனல்புவனி புத்தேள்மா ருதம்கனல் இருசுடர் எஜமானன் ஆகியதிற லஷ்டமூர்த்தி 160 அமரர்க்கு மறிவரிஓன் வேகவெள் விடைபாரதி பீஷ்மலோ சனன்மகிழ்ந்து(ங் கோல்)பெய்வான் றிருவிருப்பூர் முழிநின்று தென்கிழக்கு நோக்கிப்போயின வெள்ளாற்றுக்கும் ஆயினபெரு நல்லூர்ச்சிறைக்கும் பன்கள்ளி முரம்புக்கும் வண்ணத்தார் வளாகத்தின் நன்குயர்பரம் பீட்டுக்கும் 165 நலமிகுகள் ளிக்குறிச்சி மேலைக்கள்ளி முரம்புக்கும் மேற்குநடை யாட்டிகுளத்தில் சாலநீர் கோளுக்கும் இக்குளத் தின்தென் கொம்பின் மறுவாக்கும் பாங்கமைவடு பாறைக்கும் பயந்தருகுடி நடைஏரி ஓங்கியவன குளத்தகம் பாலலையொழுகிய வனபெருப்புக் 170 இப்பெருப்பை, ஊடறுத்துச் செவ்வடு செழுங்கிழக்கு நோக்கி வாரிக்கொள்ளிக் கேய்போயின வழியதற்கும் வயல்மலிந்த வாரிக்கொள்ளிக் குளத்தினீர் கோளுக்கும் அடிகுழிக்கும் மேக்கும் தென்னெல்லை 175 திருமரு நிலப்பாறைக்கும் செஞ்சாலி விளைகழனி ஏரியணை வடகடைக் கொம்பிற்கும் ஒழுகுகள்ளி முரம்புக்கும் நீருடை அரைய்ச்சுனைக்கும் ஊருடையான் குழித்தென்கடைக் கொம்புக்கும் நெடுமதிற்கற்'b9 றாழ்வுக்கும் நீர்மாற்றுந் திடலுக்கும் 180 கடிகமழ்பூந் தார்க்கணத்தார் குழிக்கும் வடமேலெல்லை கூற்றன்குழி மீழ்குழியேய் போயினபடு காலுக்கும் போற்றரு மாருதமாணிக் குளத்துக்கரைப் பெருப்புக்கும் நாடறிநங் கையார் குழியின்மீய் குழியேய் காடதேரிக்கேய் போயின வழிக்கு மேதமில் 185 லெறிச்சில் வழிக்கும் எழிலமை நெச்சுறநாட் டோலைகுளத் தெல்லைக்கும் கிழக்குமன் வடவெல்லை வளமிக்க மருதலி இளநெச்சுறத் தெல்லைக்கும் வெள்ளாற்றுக்கும் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லை உண்ணிலமொன் றொரியாமல் 190 காரண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் சீர்சான்ற திசையனைத்தின் னெல்லைவாய்க் கன்னாட்டித் தருமங்களி ரொன்றுபயில் திருமங்கலத்துச் சபையார்க்கும் தொல்லைவண் சோமாசி குறிச்சிமல்லன் மாமறையோர்க்கும் பிரமதேய ஸ்திதிவழாவகைய்ப் ப்ருதுவியின் கண் ணிலைபெறுத்து 195 தர்ம்மப ராயணனாகிய தராபதிகொடுத் தருளிப்பின் ஈண்டியபெரும் புகழேயுங் சாண்டில்ய கோத்திரத்து எண்ணார்புகழ் ஏகசந்தி காத்யாயன கோத்திரத்து வரிவண்டு மதுநுகர்பொழிற் சிரீவல்லப மங்கலத்து செப்பரிய செழுஞ்செல்வத்துப் பமவிரால் மேதக்க 200 கலைபயில் க'99ஸ்வாமி பட்டற்கு தற்பெருமா மதலை உலவுகீர்த்தி யோகேஸ்வர பட்டற்கு விசிஷ்டனாகிய திருவடிச் சோமாசி யென்னுஞ் சீர்மறையோன் மகள்பயந்த திருமருசீர்ச் சிரீமாதவன் ஸ்ரீமாதவ சரணேஸ்வரன் வேதவே தாந்தங்களும் விவிதாசாரமும் தன்னோடுபிற 205 ரோதிக்கேட்டு தரம்பெய்த நீரைக்காமா சால்யனாகி பெருந்தகைப் பிரமதேய மிதற்கு பிரஸஸ்தி செய்தோற்கு திருந்தியநன் பெருவயக்கலும் செழும்புணற் பருத்திவயக்கலும் இவ்வயல்களிக் கிணறிரண்டும் அக்கிணற்றால் விளைநிலனும் மற்றவ்வூர் மாசபைஓர் பெற்றபரிசேய் கொடுத்தபின் 210 சீரியசெழுமம் பணிஇதற்குச் செப்பேடு வாசகத்தை ஆரியம்விராயத் தமிழ்தொடுத்த மதிஓற்கும் அதுஎழுதிய கற்பமைந்த கரதலத்துச் சிற்பமார்த் தாண்டற்கும் மண்ணெங்கும் நிறைந்தவான் புகழ்கண்ணங் கீரன்வயக்கல் திருவுலகு நற்சிங்க குளவளால் மருவியசோ 215 மாசிவயக்கல் லென்னும் வயல்கடிளிற் கிணறுகள்ளொரு மூன்றும் எக்காலமும் மன்னுக்கிணற்றில் வயலனைத்தும் இறையிலி யாகவும் சொல்லிய இக்கிணறு மூன்றின் னிடைக் கிடந்ததொன் னிலமுழுவதும் இல்லவளா லதுவாகவும் எழின்மிக்க தோட்டமாகவும் 220 பால்லெருமை பெருவராலுகள் புனற்பதி இதனிற் கோல்லுரிமையிற், செம்பாகமும் மஹாசபை குறிப்பொடு கொடுத்துப் 'b9பகல்செய்யும் பருதிஞாயிறும் இரவுச் செய்யும் பனிமதிஉம் அகல்ஞாலமும் உளவளவும் செப்பேடுசெய்து கொடுத்தருளினன் 225 மணிநீழ்முடி மன்பணிகழல் வசுழாதிப வாசுதேவன் அணிநீள வுய்த்தஹிதாகனி அசலாசலன் நவர்ஜ்யன் கொந்தலர்தார் கோச்சடையன் கூடற்கோன் குருசரிதன் செந்தமிழ்க்கோன் ஸ்ரீநிகேதனன் ஸ்ரீபராந்தக மகராஜன் தேர்மிகுமாக் கடற்றானைத் தென்னவர்கோன் றிருவருளாற் 230 சீர்மிகுசெப் பேட்டுக்குச் செந்தமிழ்ப்பாத் தொடைசெய்தோன் கிர்தஉகமெனும் ஊழிக்கண் அவிர்சடைமுடி அரன்வேண்ட நற்பரசு நிர்ம்மித்தவ னளிர்சடைமே லலங்கல்பெற்ற மாமுனிவன் வழிவந்தோன் பாமருபண் டிதராசன் பொன்வரன்றி மணிவரன்றி அகில்வரன்றிக் கரைபொருபுனற் 235 றென்வைய்கை வளநாடன் செழுங்குண்டூர் நகர்த்தோன்றல் பாண்டித்தமி ழாபரண னென்னும்பல சிறப்புப் பெயரெய்திய பாண்டிமா ராயப்பெருங் கொல்லனாகிய சீரிவல்லவன். தென்னவர்தந் திறலாணைச் சிலைஓடுபுலி கயலிணைமன் பொன்னிமையச் சிமையத்து விறற்கருவி இற்றைக்குந் 240 தொழில்செய்து வந்தவர்பின் னோன்செயல்பல பயின்றோர் முன்னோன் திருமலிசாசன மிதற்குச் செழுந்தமிழ்பா டினோனற்றை நிருபசேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து. குறிப்பு :- அடி 48. களப்பாழர் என்பது களப்பாளர் என்பதன் திரிபோலும். களப்பாழர் அல்லது களப்பாளர் என்பவர் களப்பரர் (களபரர்) என்னும் அரசரைக் குறிக்கிறது. கடைச் சங்க காலத்துக்குப் பின்னர், களபரர் என்னும் அரசர் வடக்கிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து சேர, சோழ, பாண்டியர்களைவென்று அரசாட்சியைக் கைக் கொண்டனர். சில காலத்துக்குப் பிறகு, கடுங்கோன் என்னும் பாண்டிய அரசன் வெளிப்பட்டுக் களபர அரசனை வென்று மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிறுவினான். இதைத்தான், “கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங் களைந்தும்” என்று இச்சாசன அடி கூறுகிறது. இச்செய்தியையே 95, 96 -ஆம் வரிகளில் , “களப்பாழரைக் களைகட்ட மல்திரள்தோள் மாக்கடுங்கோன்” என்று மீண்டும் இச் சாசனம் கூறுகிறது. அடி 51. இதில் கூறப்படுகிற'b9காடவன் என்பவன் பல்லவ அரசன் ஆவன்; இவன் இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லன். இவனை வென்ற பாண்டியன் வரகுண மகாராசன் முதலாம் வரகுணன்). இச்சாசனச் செய்யுளைப் பாடியவன் பண்டிதராசன், பாண்டித் தமிழாபரணன், பாண்டிமாராயப் பெருங்கொல்லன் என்னும் சிறப்புப் பெயர்களையுடைய சிரீவல்லபன் என்றும், அவன் வைகையாற்றங்கரையில் இருந்த குண்டூர் நகரத்தில் இருந்தவன் என்றும் 229 - 233- ஆம் அடிகள் தெரிவிக்கின்றன. இச் செப்பேட்டைச் செதுக்கியவன், நக்கன் என்னும் இயற் பெயரையுடைய நிருபசேகரப் பெருங்கொல்லன் என்னும் சிறப்புப் பெயரையுடையவன் என்று 238-ஆம் வரியினால் அறிகிறோம். 124, 126, 161, 205, 234-ஆம் வரிகளில் பெருந்தகை ஓன், திருத்தகைஓன், அறிவறிஓன், மாசபைஓர், சிலைஒடு என்று எழுதப் பட்டிருத்தல் காண்க. இது சாசனம் எழுதியவரின் பிழைபோலும். திருவக்கரை* தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் தாலுகாவில் திருவக்கரை என்னும் திருப்பதி இருக்கிறது. இங்குள்ள சிவன் கோவிலில் சந்திர சேகரேசுவரரும், வடிவாம்பிகை அம்மையும் எழுந்தருளியிருக்கின்றார்கள். திருஞான சம்பந்த மூர்த்திநாயனார், இக் கோயிற் சிவபெருமானைப் பாடியுள்ளனர். ‘சந்திரசேகரனே! அருளாய்’ என்று தண் விசும்பில் இந்திரனும்முதலா இமையோர்கள் தொழு திறைஞ்ச அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால் மந்தர மேரு வில்லா வளைத்தானிடம் வக்கரையே’ என்பது அத்திருப்பதிக்கத்தில் மூன்றாஞ் செய்யுள். திருவக்கரைத் திருக்கோயிலிலே பல கல்வெட்டெழுத்துக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டெழுத்துக்களிலிருந்து இந்தக் கோயிலைப் பற்றிய பழைய செய்திகளை அறிகிறோம். இந்தக் கல்வெட்டெடு எழுத்துக்களில் காலத்தினால் பழமையானது, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தது. இவனுடைய 16-வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1000 - 1001). இந்தக் கோவில் கற்றளியாகக் கட்டப்பட்டது. கற்றாளியாகக் கட்டப்படுவதற்கு முன்பு இக் கோவில் செங்கற் கட்டடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோயிலைக் கற்றளியாகக் கட்டியவர், செம்பியன்மாதேவியார் என்னும் சோழ அரசியார். “ஸ்ரீகோராஜராஜ ராஜகேசரி பன்மற்கு யாண்டு 16-வது ஸ்ரீ கண்டராதித்த தேவர் தம்பிராட்டியார் ஸ்ரீஉத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் எடுப்பித்தருளின ஸ்ரீவக்கரைத் திருக்கற்றளிச் சிவலோகம் உடைய பரம சுவாமிகள்” என்று இந்தச்சாசனம் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து வருகிற நீண்ட சாசனம் முற்றுப் பெற வில்லை. நிலமும் பொன்னும் தானஞ் செய்து அவற்றின் வருவாயி லிருந்து திருவமுது நெய்யமுது, பொரிக்கறி, மிளகுப்பொடி ஆகிய கறியமுது இரண்டு, தயிர் அமுது அடைக்காயமுது வெற்றிலையமுது முதலியவற்றுக்கு நிபந்தங்கள் செய்திருக்கிறார். மற்றும் தலைப்பறை கொட்டும் உவச்சன், திருப்பதிகம் பாடுவார், திருப்பள்ளித் தாமம் பறிப்பான், திருவலகும் திருமெழுக்கும் இட்டுப் பள்ளித்தாமம் தொடுப்பவள், ஸ்ரீகாரியஞ் செய்கிறவர்கள் முதலியோருக்கு நிபந்தங்கள் செய்திருக்கிறார். மற்றும் ‘கலசங்களும் சால்களும் குடங்களும் பெருந்திருவமுதுக்குப் பானைகளும் சட்டிகளும்’ இடும் குசவனுக்கும், நிபந்தங்கள் செய்திருக்கிறார் (222. நி. த. இ. க. தொகுதி 17.) இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இந்தக் கோவிலைக் கருங்கல்லினால் கற்றளியாகக் கட்டி நிலங்களையும் பொன்னையும் வழங்கின இந்த அரசியார், பானை சட்டிகளில் திருவமுது செய்ய நிபந்தங்கள் செய்திருக்கிறார். சோழப் பேரரசியாகிய அவர் விரும்பியிருந்தால் பொன், வெள்ளி. வெண்கலப் பாத்திரங்களை வழங்கி இருக்கலாம். அப்படி இல்லாமல் மட்கலங்களை நியமித்து, அக்காலத்து வழக்கத்தைத் தெரிவிக்கிறது. அரசர்களுங்கூட அக்காலத்தில் மட்கலங்களையே சமைப்பதற்கு உபயோகித்தார்கள் என்பது இதனால் தெரிகிறது. முதலாம் இராஜராஜனுடைய 29-ஆம் ஆட்சியாண்டில் எழுதப் பட்ட இன்னொரு சாசனம் இக்கோவிலில் இருக்கிறது. அது கி.பி. 1013 - 14 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அது மாம்பாக்கம் உடையான் சாத்தன் ஆலை என்பவன் இந்தக் கோவிலில் நந்தா விளக்கு ஒன்று வைத்து, அவ்விளக்குக்கு நாள் தோறும் நெய் அட்டுவதற்காகத் தொண்ணூறு ஆடுகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. அதாவது ஆட்டுப் பாலிலிருந்து நெய் எடுத்துத் திரு விளக்கு ஏற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்ததைக் கூறுகிறது. (195. தெ. இ. க. தொகுதி 17.) இராஜேந்திரசோழன் (முதலாமவன்) ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1018) நந்தி வர்மன் என்பவன் திருநந்தா விளக்கு ஒன்று இக்கோயிலுக்கு வைத்தான். விளக்கு எரியும் நெய்க்காகத் தொண்ணூறு ஆடுகளையும் கோயிலுக்குத் தானம் செய்தான். இதனை இன்னொரு சாசனம் கூறுகிறது. (197. தெ. இ. க. தொகுதி 17.) இராசேந்திர சோழனின் 21-ஆம் ஆண்டில் (கி.பி. 1052) இந்தக் கோவிலில், இணையன் ஆடவல்லானான பெரியன் என்பவர் 72 பலம் நிறையுள்ள வெண்கலத்தினால் செய்த ஒரு செயகண்டிகையை (சேமக்கலம்) தானம் செய்தார் என்று இன்னொரு சாசனம் கூறுகிறது. (198) முதலாங்குலோத்துங்க சோழனின் பத்தாம் ஆண்டுச் சாசனம் (கி.பி. 1079) ஒன்று, அழகிய சோழப் பல்லவரையனுடைய அகமுடையான் காமருடையான் திருவாலை பொன் என்பவர், இக்கோயிலுக்குச் சந்தி விளக்குக்காகப் பன்னிரண்டு ஆடுகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. (199) இந்த சோழனுடைய 29-ஆம் ஆண்டுச் சாசனம் (கி.பி 1098) இந்தக் கோவிலுக்குத் தேவரடியாரைத் தானம் செய்ததைக் கூறுகிறது. “ஐயங்கொண்ட சோழ மண்டலத்து (தொண்டை மண்டலத்து) மாத்தூர் நாட்டுப் பந்திமங்கலத்துப் பரலிகை ஊர் இருக்கும். வேளாண் மாம்பாக்க முடையான் அமுதன்பள்ளி கொண்டானும், அமுதன் வேளானும், அமுதன் உய்ய வந்தானும் இவ்வனை வோங்கள் அடியாள் அங்காடியும், இவள் மகள் பேரங்காடியும், இவள் மக்களும் திருவக்கரையுடைய மாதேவற்குத் தேவரடியாராக ஸ்ரீஹஸ்தத்தே நீர்வார்த்துக் குடுத்தோம்” என்று இந்த சாசனம் கூறுகிறது. (204) விக்கிரம சோழனுடைய மூன்றாம் ஆண்டு (கி.பி. 1120) சாசனம், ஓய்மா நாட்டு முந்நூற்றுக்குடிப்பள்ளி செங்கெணி அம்மையப்பன் பண்டி என்பவர் இக்கோயில் பெருமானுக்கு மந்திரபோனகம் நெய்யமுது கறியமுது அடைக்காயமுது தயிரமுது முதலியவற்றிற்கு நிவந்தம் செய்ததைக் கூறுகிறது. (201) இவருக்கு நரலோகவீரப் பேரரையன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. திருவக்கரைச் சிவன் கோவிலில், எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலின் வாயிலில் இடதுபுறத்து வாயிலின் நிலையில் ஒரு செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. அது கீர்வருமாறு : ஸ்வஸ்திஸ்ரீ. இசைவிளங்குடையன்மன் எங்கோனுக்கு இருபத்து நாலாமாண்டு குசைவிளங்கு மறையவர்கள் குழுமிய வக்கரை மாலின் கோயில் சாலத் திசை விளங்கு திருவாசல் பொற்கதவு சமைத்தான் வென்றி திசைவிளக்கு வேற்கண்டன் துருவ்வைகோன் வழிக்கரிசி மடந்தை கோவே. இந்த சாசன எழுத்து, கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகத் தோன்றுகிறது. சோழ அரசனான இரண்டாம் இராஜதிராஜனால் ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1169), திருவக்கரைக் கோயிலின் கோபுரம் கட்டப்பட்டது. இதற்கு முன்னர்க் கோபுரம் இல்லை என்று தோன்றுகிறது. இந்தக் கோபுரத்தைக் கட்டினவன் அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்வுவராயன் என்பவன். இந்தச் சாசனத்தின் வாசகம் இது :- “ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜதிராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது திருவக்கரை ஆளுடையார் கோயிலில் திருக்கோபுரம், கண்டர், சூரியன் திருக்கோபுரம் என்னும் பெயரால் செய்வித்தான் அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்” (217). இந்த சம்புவராயனே இத்திருக்கோவிலில் ஆயிரக்கால் மண்டபத்தையுங் கட்டினான். இந்த மண்டபம் மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய இரண்டாவது ஆண்டில் (கி.பி. 1179) கட்டப்பட்டது. இந்த சாசனத்தின் வாசகம் இது :- “ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தரையுங் கொண்டருளின, ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 2-வது. இராஜராஜ வள நாட்டு மாத்தூர் நாட்டு உடையார் திருவக்கரை ஆளுடையார் கோயிலில் இத்திருமண்டபம் கண்டர் சூரியன் திருமண்டபம் என்னும் பெயரால் செய்வித்தான் அம்மை அப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன் (212). மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆண்டில் (கி.பி. 1194) எழுதப்பட்ட இன்னொரு சாசனம். இந்தக் கோவிலில் நான்கு நந்தாவிளக்கு தானங்கொடுத்ததைக் கூறுகிறது. தானங்கொடுத்தவர் ஒரு காடவராயர். “இத்திரு நந்தாவிளக்கு நாலுக்கும் விட்ட சாவா மூவாப்பசு 128. ரிஷபம் 4. ஒரு நந்தா விளக்கு 32 பசுக்கள் வீதம் 4. விளக்குகளுக்கு 128 பசுக்களைக்கொண்டு இந்த பசுக்களின் பாலிலிருந்து நெய்யும் அந்த நெய்யினால் விளக்கேற்ற வேண்டும் என்பது கட்டளை. 4 ரிஷபம் (காளை மாடு) தந்தது எதற்கென்றால், இவை “சாவா பசுக்கள்” ஆகையால் இப்பசுக்களின் எண்ணிக்கை குறையாமல் கன்றுகள் வளர்ச்சி எய்தி இருப்பதற்கு (215). இந்த மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய 16-ஆம் ஆட்சியாண்டில் கண்டர் சூரியன் சம்புவராயன் இரண்டு விளக்குகளைத் தானஞ் செய்தான். சம்புவராயன் இக்கோவிலில் கோபுரத்தின் ஆயிரக்கால் மண்டபத்தையும் கட்டும் முன்னமே கூறினோம். குத்துவிளக்கு சாசனத்தின் வாசகம் இது : “ஸ்வஸ்திஸ்ரீ. திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு உடையார் திருவக்கரை ஆளுடைய அம்மை அப்பன் பாண்டி நாடு கொண்ட கண்டர் சூரியன் செய்வித்து இட்ட நிலைகுத்து விளக்க 2- னால் இருப்பு நாள் உட்படத் தாரா எடை ஆயிரத்து நூற்றிபத்து இருபலம்.” (216. தெ. இ. க. தொகுதி 17). மூன்றாம் விக்கிரம பாண்டியனுடைய நான்காம் ஆண்டில் (கி.பி. 1285) எழுதப்பட்ட சாசனம், இப்பாண்டியனுடைய அரசு கோவிலில் ஒரு மண்டபம் கட்டியதை கூறுகிறது. “பெருமாள் விக்கிரம பாண்டிய நம்பிராட்டியார் உலகமுழுதுடையார் வித்த திருமண்டபம் யாண்டு 4” (21) இந்தப் பாண்டியனுடைய ஆறாவது ஆண்டில் (கி.பி. 1288) எழுதப்பட்ட சாசனம் இந்தப் பாண்டியன் இந்தக் கோவிலுக்கு தானங்கொடுத்ததைக் கூறுகிறது. இவன் பேரால் நித்தியபூசை, திருநாள்களை? தான். “நம்பேரால் கட்டின? பாண்டியன் சந்திக்கும் விக்கிரம பாண்டியன் திருநாளுக்கும் அமுதுபடி சாத்துபடி? வேண்டும் நித்த நைமித்தங்களுக்கும்? மத்து காணி” என்று இச்சாசனம் கூறுகிறது. முதலாங் குலாத்துங்க சோழனுடைய 44-ஆம் ஆண்டுச் சாசனம் (கி.பி. 1113). இக்கோயிற் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் துர்க்கைக்கும் திருவிளக்காக (65) பொற்காசு தானம் செய்யப் பட்டதைக் கூறுகிறது. “இக்காசு அறுபத்தஞ்சுக்குத் திருவக்கரை ஆளுடையார்க்கு ஒரு திருநந்தாவிளக்கும், திருவக்கரை ஆழ்வார்க்கு ஒரு திருநந்தா விளக்கும், துர்க்கைக்கொரு சந்தி விளக்கும், இரண்டு தேவர்களுக்கும் சனி எண்ணெய் காப்பு மாசத் திருநாழி எண்ணெயும் நீக்கி நின்றது தூண்டுவான் கூலியாகவும் இப்பரிசு சந்திராதித்தவல் இக்கோயி லிரண்டுங், குடமும் அலகுங்கொண்டு புகுவார் இத்திரு விளக்கும் எரித்து இக்கோயில் கைக்கொண்டு திருவாராதனை செய்வோம்” என்று இந்தச் சாசனப்பகுதி கூறுகிறது. (203) சாலிவாகன சக ஆண்டு 1352 - இல் (கி.பி. 1430 - இல்) செம்மந்தை காங்கேயன் என்பவர் இக்கோவிலில் ஒரு கோபுரத்தையும் ஒரு மண்டபத்தையுங் கட்டினார் என்று ஒரு செய்யுட் சாசனங் கூறுகிறது. இந்தக் கோபுரமும், மண்டபமும் முற்கூறிய கண்டர் சூரியன் சாம்புவராயன் அமைத்த கோபுரமும் மண்டபமும் அல்ல ; இவை வேறு, “விம்பச் சகர மற்றொராயிரத்து முந்நூற்றுக்குமேல் ஐம்பத் திரண்டினில் வக்கரையார்க்கு அணிகோபுரமுஞ் செம்பொற்றிரு மண்டபமுங் கண்டான் செஞ்சொல் தேவரசன் கப்பக் களிற்றண்ணல் இதூர்மன் செம்மந்தை காங்கேயன்” (218) இந்தக் கோபுரமும் மண்டபமும் பிற்காலத்தில் பழுதடைந்த போது செவ்வன்னன் என்பவர் இவற்றைப் புதுப்பித்தாரென்று இங்குள்ள இன்னொரு சாசனச் செய்யுள் கூறுகிறது. இந்தச் சாசனத்தின் எழுத்து பிற்காலத்தது. இந்தச் சாசனச் செய்யுள் இது! “பன்னாக பூஷணர் வக்கரை ஈசற்குப் பத்தியுடன் முன்னளிற் காங்கயன் கோபுரம் மண்டபம் முற்றுங்கண்டான் இந்நாள் அதனை யெல்லாம் நவமாக்கினன் எங்கள் கச்சிச் சின்னான் துணைவன் அரசன் குமாரன்நற் செவ்வண்ணனே” (219) இந்தச் செய்திகளையெல்லாம் திருவக்கரைத் திருக்கோயிலில் எழுதப்பட்டிருக்கிற கல்வெட்டுச் சாசனங்களிலிருந்து அறிகிறோம். கல்லில் எழுதிவைக்காமலிருந்தால் இவைகளை நாம் எங்ஙனம் அறிய முடியும் ? திருக்கோயில்களில் திருவிளக்கு ஏற்றினால் ஞானம்பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. திருவிளக்கு இடுவது பெரும் புண்ணிய மாகக் கருதப்படுகிறது. திருவிளக்கேற்றிக் கடவுளை வணங்கினால் கடவுள் திருவருள் கிடைக்கும். விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே. என்று திருநாவுக்கரசு சுவாமிகள் கூறுவது காண்க. முற்காலத்துப் பெரியவர்கள் எண்ணெய் விளக்கேற்றுவதை விட, நெய் விளக்கு ஏற்றுவதை உயர்வாக மதித்தார்கள். (இதனால் எண்ணெய்விளக்கு கூடாது என்பதன்று). இதனால்தான் அக்காலத்தவர் வசதியிருந்த போது திருக்கோயில்களில் நெய்யினால், திருவிளக்கு ஏற்றினார்கள். அதற்காக ஆடுகளையும் பசுக்களையும் திருக்கோயில் களுக்குத் தானம் கொடுத்தார்கள். செல்வர்கள் அக்காலத்தில் பசுக்களையும் அடுகளையும் திருக்கோயில்களுக்குத் தானஞ்செய்து, அவற்றின் பாலிலிருந்து கிடைக்கிற கலப்பற்ற நெய்யினால் திருவிளக்கேற்ற நிபந்தங்களைச் செய்தார்கள். இச் செய்திகளைக் கல்வெட்டெழுத்துக்களிலிருந்து அறிகிறோம். ----- திருக்காரிக் கரை* திருக்காரிக்கரை திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டத்துத் திருவள்ளூர் தாலுகாவில் இராமகிரி என்னுமிடத்தில் இருக்கிறது. திருக்காரிக்கரை என்னும் பழைய பெயர் மாறி, இப்போது இராமகிரி என்று பெயர் வழங்கப்படுகிறது. திருக்காரிக்கரை நாகலாபுரத்துக்கு அருகில் இருக்கிறது. நாகலாபுரத்திலிருந்து தும்பூரு கோனைக்கு போகிற இடைவழியில், திருக்காரிக்கரைக் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் பெயர் வாலீசுவரர் என்பது. சாசன எழுத்துக்களில் ‘திருக்காரிக்கரை உடைய நாயனார்’ என்று பெயர் கூறப்படுகிறார். பழைய சாசன எழுத்துக்களிலே, “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ( தொண்டை மண்டலத்து)க் குன்ற வர்த்தனக் கோட்டத்து நின்றையூர் நாட்டுத் திருக்காரிக்கரை” என்று கூறப்படுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் திருக்காளத்திக்குச் சென்ற போது, போகிறவழியில் திருக்காரிகைக் கோவிலுக்கு வந்து, சிவபெருமானை வணங்கிச் சென்றார் என்று பெரிய புராணத்தினால் அறிகிறோம். “பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றடைவார் செல்கதிமுன் அளிப்பார்தம் திருக்காரிக்கரை பணிந்து தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின், உம்பர்குழாம் மல்குதிரு காளத்தி மாமலைவந் தெய்த்தினார்.” (திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 343) இதனால், திருக்காரிக் கரை வாலீசுவரர் திருக்கோயில், மிகப் பழமையானது என்பது தெரிகின்றது.) இந்தக் கோவிலிலே கல்வெட்டுச் சானங்கள் சில காணப் படுகின்றன. அவை கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டது. அவை, இந்தக் கோவிலுக்கு நிலங்களும் ஆடு மாடுகளும் பொருள் களும் தானம் செய்யப்பட்டதைக் கூறுகின்றன. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்துச் சாசனங்களும், மூன்றாம் இராசராசன் காலத்துச் சாசனங்களும், இங்குக் காணப்படுகின்றன. மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்துச் சாசனங்களாவன. :- இவனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டவை இரண்டு சாசனங்கள். திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரராஜேந்திர சோழ தேவருடைய (மூன்றாங்குலோத்துங்க சோழனுடைய) ஆறாவது ஆண்டில் (கி.பி. 1184-இல்) எழுதப்பட்டவை. பையூர் நாடாழ்வான் குவளையம் அழகியான் ஒற்றிஅரசன், இக்கோவிலுக்குத் திருநந்தாவிளக்குக்காகத் தொண்ணூற்றாறு ஆடுகளைத் தானங் கொடுத்ததைக் கூறுகிறது- அதாவது இந்த ஆடுகளின் பாலிலிருந்து நெய் எடுத்து நாள் தோறும் ஒரு திருவிளக்கு ஏற்றுவதற்காக இந்த ஆடுகள் தானம் செய்யப் பட்டன) (No. 701. S. I. I. Vol. XVII). இதே ஆள் இந்தக் கோவிலுக்கு தொண்ணூற்றாறு ஆடுகளைத் தானஞ்செய்ததை இன்னொரு கல்வெட்டு கூறுகிறது. இந்த சாசனத்தின் விசித்திரம் என்னவென்றால், “திருஞாயிற்றுக் கிழமைதோறும் ஒரு ஆடு வெட்டக் கடவதாக விட்ட ஆடு தொண்ணூற்றாறு” என்று இந்த சாசனத்தில் எழுதப் பட்டு இருப்பதுதான். (No. 708. S. I. I. Vol. XVII). இது மிகவும் புதுமையாகக் காணப்படுகிறது. சிவன் கோவில்களில் ஆடுகளை வெட்டும். வழக்கம் இல்லை. இதுவரையில் இந்த வழக்கம் இருந்ததில்லை. ஆனால் இந்த ஒரே சாசனம் ஆடுவெட்டுவதைக் கூறுகிறது! காளிக் கோயிலுக்கு மரபுதான். ஆனால் சிவன் கோவிலில் வெட்டுவது மரபு அன்று. வழக்கமும் அன்று. நிச்சயமாகக் கிடையாது. இந்தக் கல்வெட்டெழுத்து கூறுவது கருத்து என்ன என்று தெரியவில்லை. இந்த அரசனுடைய 11-ஆம் ஆண்டில் (கி.பி. 1188 - 89 -இல்) எழுதப்பட்ட சாசனம், கோசலைத்தரையன் வலந்தருவான் கோசலத் தரையன், இக்கோயிலில் திருவிளக்கு எரிப்பதற்காக முப்பத்திரண்டு பசுக்களைத்தானஞ் செயத்ததைக் கூறுகிறது. இந்தப் பசுக்களின் பாலிலிருந்து கிடைக்கிற நெய்யினால் திருவிளக்கு எரிக்கவேண்டும் என்று இந்த சாசனங் கூறுகிறது. நெய் அளிக்கும் உழக்குக்கு ‘திருக்காரிக் கரையுடையான்’ உழக்கு என்றுக் கூறப்பட்டுள்ளது. (No. 686. S. I. I. Vol. XVII) இவ்வரசனுடைய 15 - ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் (கி.பி. 1192 - 93.) இதன் பிற்பகுதி எழுதப்படாமல் விட்டுவிடப் பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் விளக்கு எரிப்பதற்காக 49 பழங்காசு கொடுக்கப்பட்டதை கூறுகிறது. (No. 688. S. I. I. Vol. XVII) இந்த அரசனுடைய 32-வது ஆண்டில் எழுதப்பட்ட இரண்டு சாசனங்கள் (கி.பி. 1209 - 10). தனி நின்று வென்ற வீரநரசிங்க யாதவராயன், இந்தக் கோவிலில்சித்திரைத் திருநாள் உற்சவத்துக்கு நீர்வாயில் என்னும் ஊரைத் தேவதானமாகக் கொடுத்ததைக் கூறுகிறது. ‘நீர்வாயில் காசாயம் பொன்னாயம் நெல்லாயம் உட்பட’ விட்டதாகக் கூறுகிறது. (No. 696. S. I. I. Vol. XVII) இரண்டாவது சாசனம், “திருக்கரிக்கரையுடைய பிள்ளையாருக்குப் பூசைக்கும் அமுது படிக்கும்” ஆக வேலூரும் சாத்தமங்கலமும் சூரலூர்த்தடையும் சர்வமானியமாகக் கொடுத்ததைக் கூறுகிறது. (No. 697. S. I. I. Vol. XVII) மூன்றாம் இராஜராஜசோழன் காலத்துச் சாசனங்கள் :- இவ்வரசனுடைய 10ஆம் ஆண்டில் ....? கோயிலில் நந்தாவிளக்கு ஒன்றுக்காக திரண்டு பசுக்களை, நின்றையூர் நாட்டுக்கே தானம் கொடுத்ததைக் கூறுகிறது. (No. S. I. I. Vol. XVII) இந்தச் சோழனுடைய 25 ஆம் ஆண்டு (கி.பி. 1240 - 41) எழுதப்பட்ட சாசனங்கள் காரிப்பிள்ளை என்பவர் மூன்று மானங் (பொற்காசு) இந்தக் கோவிலுக்கு தானம் செய்ததைக் கூறுகிறது. இந்த காசு வட்டியிலிருந்து ஒரு நந்தாவிளக்கு நாள் தோறும் ஏற்ற வேண்டுமென்று இந்தச் சாசனங் கூறுகிறது. (No. 712. S. I. I. Vol. XVII) இவ்வரசனுடைய 27-ஆம் ஆண்டில் (கி.பி. 1242-43) எழுதப்பட்ட சாசனம் இக்கோவிலில் திருவிளக்கு ஏற்றுவதற்கு கோட்டூர் வடுகன் ஒன்றரை மா... பொன்னைத் தானம் செய்ததைக் கூறுகிறது (No. 710. S.I.I. Vol. XVII) இவ்வரசனுடைய 29-ஆம் ஆண்டில் சாசனம் (கி.பி. 1245) கொட்டன் கிழவன் (கிழவன் - தலைவன்) வடுக்கப்பன் என்னும் வயிராதராயன் இக்கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காகப் பதினாறு பொற்காசுகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. (No. 713. S. I. I. Vol. XVII) சாளுக்கிய வீர கண்ட கோபாலனுடைய 3-வது ஆண்டு (கி.பி. 1294 - 49) வீரந்திர தேவனான யாதவராயரின் சேனாதிபதி -- விழுப்பதராயன் .இக்கோவிலுக்குப் பசு எருமைகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. இவ் எருமைகளின் பாலிலிருந்து நெய் எடுத்துத் திருவிளக்கு ஏற்ற வேண்டுமென்று சாசனங்கள் கூறுகின்றன. (No. 716. S. I. I. Vol. XVII) யாதவராயரின் 36-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம், அரிகண்ட புரத்து ஊரார் இந்தக் கோவிலுக்குத் தங்கள் ஊரில் நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. இந்த நிலத்தின் வருவாயிலிருந்து இக்கோவிலில் திருநாள் (உற்சவத்துக்கு)ச் செலவு செய்ய வேண்டு மென்று இந்த சாசனம் கூறுகிறது. (No. 705. S. I. I. Vol. XVII) இரண்டாம் ஹரிஹரராயர் காலத்து...? வேலூர்க் கிராமத்தார், தங்கள் மனைகளையும் தோட்ட துரவுகளையும் இக்கோவிலுக்குத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. (இந்த ஊரில் இதற்கு முன்பே கோவிலுக்குத் தானஞ் செய்யப் பட்ட நிலம் இருந்தது. (No. 700. S. I. I. Vol. XVII) இரண்டாம் புக்கராயர் காலத்துச் சாசனம் (கி.பி. 1382) திருக்காரிக்கரையில், ‘திருவானன்மடம்’ என்னும் பெயருள்ள ஒரு மடம் இருந்ததையும், அந்த மடத்துத்தலைவர் சத்தியதரிசினி என்பவர் இருந்ததையும், அந்த மடத்துக்கு நின்றையூர் நாட்டு வெண் குளத்தூரார் நிலம் தானம் செய்ததையுங் கூறுகிறது. காவந்த கண்டலூர் நத்தமும் ஏரியும் நன்செய் புன்செய் நிலங்களும் இந்த மடத்துக்குத் தானம் செய்யப்பட்டன. (No. 699. S. I. I. Vol. XVII) சாலிவாகன சக ஆண்டு 1358-இல் (கி.பி. 1436-இல்) ஸ்ரீசக்கரகர் என்னும் சிற்றரசன் இக்கோவிலில், திருக்கதவுகளை அமைத்து, திருப்பள்ளியறை நாச்சியாரையும் எழுந்தருளுவித்தார் என்று ஒரு சாசனங் கூறுகிறது. (No. 693. S. I. I. Vol. XVII) வீர நரசிங்க யாதவராயரின் 36-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் இந்தக் கோவிலில் பூசைசெய்து கொண்டிருந்த சிவப் பிராமணர், தங்களுடைய 42-வது வட்டத்தில் பத்துவட்டத்தை (பத்துநாள் பூசையை) அகவலன் சூரிய பட்டனுக்கு விற்றுவிட்ட செய்தியைக் கூறுகிறது. (No. 711. S. I. I. Vol. XVII) திருக்காரிக்கரைக் கோவில் குளக்கரையில் ஒரு கருங்கல் நந்தி இருக்கிறது. அதன் வாயிலிருந்து நீர் விழுந்துக் கொண்டிருக்கிறது : இந்த நந்தியின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்து கி.பி. 10- ஆம் நூற்றாண்டு எழுத்தாகத் தெரிகிறது. இதன் வாசகம் :- ஸ்ரீ பரமேஸ்வரன் தரிசனத்திலேறிடு என்று பிரசாதஞ் செய்யச் சாமுண்டி’ மகன் கூவத்துப் பெருந்தாசன் விட்ட ஏறு” என்பது. (No. 717. S. I. I. Vol. XVII) கூவம் என்னும் ஊரில் இருந்த சாமுண்டி என்பவரின் மகனான பெருந்தச்சன் என்னும் சிற்பியின் கனவிலே சிவபெருமான் தோன்றிக் கல்லினால் ஒரு நந்தியைச் செய்துவை என்று கூற, அதன்படியே அவன் இந்த நந்தியைச் செய்து இதன் வாயிலிருந்து நீர்வரும்படி அமைத்தான் என்பது இதன் பொருள். இங்கு இன்னுஞ்சில கல்வெட்டுழுத்துக்கள் உள்ளன. அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல. அவற்றுள் சில சிதைந்துள்ளன. இதுவரையும் கூறியதிலிருந்து இந்தக் கோயிலைப்பற்றி மறைந்து போன எத்தனையோ பல செய்திகளை அறிந்துக் கொள்கிறோம். முப்புரம் எரித்த முதல்வன்* மாமல்லபுரம், தமிழர்களின் சிற்பக் கலைக்கு ஒரு பெருஞ் சிறப்பிடம். அங்கே எத்தனையோ பல, அழகிய வியத்தகு சிற்பங்கள் சிறப்புற அமைந்துள்ளன. எழில் கனிந்த அச் சிற்பங்களுள் ஒன்றின் படத்தினை, யான் அண்மையிற் காண நேர்ந்தது. அதனைப் பேராசிரியர் திரு. பண்டித இராம. மீனாட்சிசுந்தரம் பிள்ளை எம்.ஏ. அவர்கள், எனக்கு அனுப்பி வைத்ததுடன், அதற்குரிய விளக்கத் தினைத் தருமாறும் கேட்டிருந்தார்கள். இந்தச் சிற்பத்தின் படத்தைக் கண்ட போது, நான் பெரிதும் வியப்பு அடைந்தேன். சிவபெருமானுடைய விரட்ட மூர்த்தங்களில் ஒன்றான திரிபுராந்தக மூர்த்தியின் திருவுருவம் அது. திரிபுராந்தக மூர்த்தியின் நின்ற கோலமாக அமைந்த சிற்ப உருவங்களைத் தான் நான் கண்டிருந்தேன். இருந்த கோலமாக அமைந்த திரிபுராந்தக மூர்த்தியின் சிற்ப உருவத்தை இதற்கு முன்பு நான் கண்டது இல்லை. ஆகவே அந்தப் படத்தைக் கண்டு வியப்பு அடைந்தேன். இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சிவபெருமான் தம்முடைய இடது கையில் பிடித்துள்ள நீண்ட வில் முதலில் நம்முடைய கருத்தைக் கவர்கின்றது. உடனே இது கோதண்டராமன் திருவுருவம் என்று நினைக்க தோன்றுகிறது. இவ்வுருவத்தின் மற்றக் கைகளில் காணப்படுகின்ற மற்ற ஆயுதங்களைக் காணும் போது தான் இது கோதண்டராமன் உருவம் அன்று, சிவபெருமானுடைய உருவம் என்பதை உணர்கிறோம். உயரமான ஆசனத்தின் மேலே கம்பீரமாகவும் உவகையோடும் அமர்ந்திருக்கிற சிவபெருமான் சடா மகுடத்துடன் நான்கு திருக்கை களுடனும் காட்சியளிக்கிறார். வலது காலை மடக்கி ஆசனத்தின் மேல் படிய வைத்து இடது காலை தொங்க விட்டு சிவபெருமான் சுகாசன மூர்த்தமாக அமர்ந்திருக்கிறார். நாண் ஏற்றிய வில்லைத் தரையில் ஊன்றி அதை இடதுக் கையினால் பிடித்திருக்கிற இவர், வலது கையிலே அம்பு ஒன்றை ஏந்திக் கொண்டிருக்கிறார். கூர்மையான அம்பின் தலைப் புறம் கீழ்நோக்கியும், இறகுகளுடன் கூடிய வால்புறம் மேல் நோக்கியும் இருக்கிறது. அம்பின் சிறகுகளின் மேலே அக்கினித் தேவனின் உருவம், மிகுந்த கோபத்துடன் காட்சியளிக்கிறது. அம்போடு சேர்ந்தாற் போல அக்கினித் தேவனின் உருவம் காணப்படுகிற போதிலும், அக்கினி தேவன் அம்புடன் இணைந்திருக்க வில்லை. இந்த அம்பு சாதாரண அம்பு அன்று தீயைக் கக்கும் “எரிமுகப் பேரம்பு” என்பதைக் காட்டுவதற்காகவே அம்புடன் சேர்ந்திருப்பது போலத் தீக்கடவுளின் உருவத்தை அமைத்திருக்கிறார், இந்த உருவத்தை அமைத்த சிற்பக் கலைஞர்! தீக்கடவுளின் முகத்தைச் சூழ்ந்து தீச்சுடர் அனலைக் கக்கிக் கொண்டு எரிகிறது. தீக்கடவுளின் கண்களும், கோரைப் பற்களும் அவர் சினங்கொண்டு சீறுவதைக் குறிக்கின்றன. “இதோ எரித்து விடுகிறேன் பார்” என்று சினத்தினால் துடித்துக் கொண்டிருப்பது போலத் தீக்கடவுளின் உருவம் அமைந்திருக்கிறது. சிவபெருமான் கையிலுள்ள அம்பு, அனலைக் கக்கும் எரிமுக அம்பு என்பதைத் தெரிவிப்பதற்காகத் தீகடவுளின் உருவத்தை அம்புடன் சேர்த்துச் சிற்பக் கலைஞர் சித்தரித்துக் காட்டியுள்ளார். சிவபெருமான் எரிமுகப் பிழம்பினால் திரிபுரத்தை எரித்தார் என்று சாசனம் கூறுகிறது. “திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப” என்று சிலப்பதிகார காவியம் கூறுவது காண்க. சிவபெருமான் திரிபுரம் எரித்ததை, மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவுந்தி ஊரில் அழகாகக் கூறுகிறார். “வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உனைந்தன முப்புரம் - உந்தீபற ஒருங்குடன் வெந்தவாறு -உந்தீபற ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் ஓரம்பே முப்புரம் - உந்தீபற ஒன்றும் பெருமிகை - உந்தீபற” ஏகம்பர் (ஏக+அம்பர்-ஒரே அம்பை உடையவர்) ஆகிய சிவ பெருமான் கையில், அம்பு (இரண்டு அம்பு) இல்லை; ஒரே அம்புதான் இருக்கிறது. அந்த ஒரு அம்பைக் கொண்டே அவர், முப்புரத்தை எறித்து அழித்து விட்டார். இந்தக் கருத்தை, இவ்வுருவத்தை அமைத்த சிற்பி வெகு நன்றாகக் காட்டியுள்ளார். சிவபெருமான் கையில் ஒரே ஒரு அம்பை மட்டும் காட்டியிருப்பது மாத்திரம் அன்று. அம்பறாத் தூணி இந்தச் சிற்பத்தில் காணப்பட வில்லை. வில்லைக் கொண்டு அம்பு எய்தியவர்களுக்குத் தோளில் அம்பாறத் தூணி அவசியம் இருக்கும். ஆனால், ஏகாம்பரராகி சிவபெருமானுக்கு அம்பறாத் தூணித் தேவையில்லை. ஏனென்றால் அவர் ஏக அம்பர்! இந்தக் கருத்தை வெகு நன்றாக விளக்கி யிருக்கிறார். இந்தச் சிற்ப உருவத்தைப் பார்க்கிறவர்களுக்கு இந்த நுட்பமான பார்வையும் வேண்டும். சாத்திரக் கருத்தைத் தெரிவிக்கத் தானே சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்தச் சிற்ப உருவத்தை ஆராய்பவர், சிவபெரு மானுடைய மற்றொரு வலது கையில் மழுவும் சூலமும் காட்சி அளிக்கின்றன. (மழு - கோடாரி). இந்த ஆயுதங்கள் பொதுவாகச் சிவபெருமானுடைய மூர்த்தங்கள் எல்லாவற்றிலும் காணப்படுவது வழக்கம். மழுவும் சூலமும் வெவ்வேறு தண்டுகளில் அமையாமல் இரண்டும் ஒரே தண்டில் அமைந்துள்ளன. சிவபெருமானுக்கே உரிய இந்த ஆயுதங்கள் இந்தச் சிற்பத்தில் அமையவில்லையானால், இந்த உருவத்தைக் கோதண்டராமன் உருவம் என்று கருத வேண்டி யிருக்கும். சிவபெருமானின் இடது காலின் பக்கமாக, தண்டாயுதம் போன்ற ஒரு ஆயுதம் தொடையின் மேல் சாய்ந்துகிடக்கிறது. இடது தொடையின் மேல் சாய்ந்து கிடக்கிற இந்த ஆயுதத்தையும், வில்லையும், சிவபெருமான் தம்முடைய மற்றொரு இடது கையினால் அணைத்துக் கொண்டிருக்கிறார். கனத்ததாகக் காணப்படுகிற இந்த ஆயுதத்தைக் காண்கிறவர் சிலர், இது தண்டாயுதம் என்றும், இதை வைத்துக் கொண்டிருக்கிற இந்த உருவம் துவார பாலகனின் உருவம் என்றும் கருதுவர். உண்மையில் தண்டாயுதம் அன்று. கட்டங்கம் அல்லது கட்டுவாங்கம் என்னும் ஆயுதம் இது. கட்டுவாங்கம் என்பது ஒரு கோயிலின் தலைப்பில் முழுமையான மண்டையோட்டைக் கட்டி வைத்திருக்கும் ஓர் ஆயுதம்! இது சிவபெரு மானுக்கே உரியது. அப்பர் சுவாமிகளின் தேவராத்தில் இது குறிக்கப் படுகிறது. பல்லவர்கள் காலத்துச் சிற்ப உருவங்களில் இது சாதாரணமாகக் காணப்படுகிறது. கட்டுவாங்கத்தைச் சுற்றிக் கொண்டு ஒரு நாகப்பாம்பு படமெடுத்து ஆடுவதை இடது கைக்குக் கீழே காண்க. சிவபெருமானுக்கு இடது புறத்தின் மேலே இன்னொரு முத்தலை நாகம் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. நஞ்சுண்டவ ராகிய சிவபெருமானுக்கு நாகப்பாம்புகள் உகந்த அணிகலன்களாக உள்ளன என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அம்பையும் மழுவையும் பிடித்திருக்கிற விரல்களின் அமைப்பைப் பாருங்கள். இவற்றைக் கல்லில் அமைத்தச் சிற்பக் கலைஞரின் நுண்ணறிவை இவை புலப்படுத்துகின்றன. திரிபுராந்தகமூர்த்தி அவுணர்களின் முப்புரங்களை எரிமுகப் பேரம்பினால் எய்து எரியச் செய்து அழித்தார் என்பது புராணக் கதை. இது பாமர மக்களுக்காகக் கூறப்படுவது. இதற்குச் சாத்திரக்கருத்தும் உண்டு. அது சைவ சித்தாந்தக் கருத்து இக்கருத்தைத் திருமூல நாயனார், தமது திருமந்திரப்பாட்டு ஒன்றில் நன்றாக விளக்கிக் கூறுகிறார். “அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவன மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரே” என்பது அச்செய்யுள். கருங்கல்லிலே புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள இந்த அருமையான சிற்பம், ஏறத்தாழ மூன்று அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ளது. இது அமைக்கப்பட்ட காலம் எது என்பதை ஆராய்வோம். சிவபெருமான் அமர்ந்திருக்கிற ஆசனத்தின் அமைப்பையும், அவர் அணிந்திருக்கிற ஆடை ஆசனத்தின் மேலே தொங்கிக் கொண்டிருக்கிற அமைப்பும், பல்லவ அரசர் காலத்துச் சோமாஸ் கந்த மூர்த்தியின் அமைப்புப்போலக் காணப்படுகின்றது. மேலும் இவர் அணிந்திருக்கிற தடித்த பூணூhல், பல்லவர் காலத்துச் சிற்பங்களில் காணப்படுவது போலவே இடது தோளின் மேலிருந்து மார்பின் மேல் வந்து வலது கையின் மேல் செல்லுகிறது.இவ்வித அமைப்புகளைக் கொண்டு, இந்தச் சிற்பம் பல்லவ அரசர் காலத்துச் சிற்பம் என்று உறுதியாகக் கூறலாம். இது மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலைச் சேர்ந்து காணப்படுகிறபடியால், அக் கோயில் அமைக்கப்பட்ட காலத்தில் சிற்பம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கடற்கரைக் கோயிலை அமைத்தவன் சிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மன் ஆகையால், அவர் காலத்தில் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதவாது இன்றைக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சிற்ப உருவம், அருமையானக் கலைச் செல்வம்! நமது நாட்டிலே மூளை முடுக்குளில் போற்றுவார். அற்றுஅருமை பெருமை தெரியாமல் கிடக்கிற ஆயிரக்கணக்கான சிற்பக் கலைச் செல்வங்களில் இது ஒன்று. கடலிலிருந்து வீசும் குளிர்ந்த உப்பங் காற்றினாலும், வென்பனி மழையினாலும் தாக்குண்டு மழுங்கிப் போய், ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. திரிபுராந்தக மூர்த்தமாக அமைந்துள்ள இந்தச் சிற்ப உருவம், புராணக் கருத்தையும், சித்தாந்தக் கருத்தையும் எவ்வளவுத் தெளிவாகக் காட்டுகின்றது! இந்த உருவத்தில் காணப்படுகின்ற மழு, திரிசூலம், நாகப்பாம்பு முதலிய பொருள்களுக்கெல்லாம் ஒவ்வொரு சாத்திரக் கருத்து உண்டு. அவற்றை எல்லாம் இங்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய அருமையான சிற்ப உருவத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருக்கும் உரிய கடமையாகும். திருப்பாலைவனம்* இந்த ஊருக்கு 4,5, ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன். இந்த ஊர்க் கோயிலை (கோயில் கட்டடத்தைப்) பார்ப்பதற்காகவே வந்தேன். பகலில் வந்து கோயிலை பார்த்து விட்டு உடனே திரும்பிவிட்டேன், பஸ்வசதி இல்லாத காரணத்தினால். கோயில் கட்டட அமைப்புகளில் ஏழுவிதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அந்த விமான அமைப்புகள் சிலவற்றை அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறுகிறார். அவ்விதமான அமைப்புக்களில் ஆலக் கோயில் அல்லது யானைக் கோயில் என்பதும் ஒன்று. ஆலக் கோயில் என்றால் ஆனைக் கோயில். ஆனைக் கோயில் கட்டடங்களைக் கஜபிருஷ்ட விமானம் என்று சிற்பசாஸ்திரங்களில் பெயர் கூறப்படுகிறது. கஜபிருஷ்ட விமானக் கோயில்களாகிய ஆனைக் கோயில் கட்டங்கள் தொண்டைநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) தான் அதிகமாக இருக்கின்றன. சோழ நாட்டில் சில யானைக் கோயில்கள் மட்டும் இருக்கின்றன. பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் நானறிந்த வரையில் இல்லை. தென் கன்னட மாவட்டத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பாக அமைந்திருக்கின்றன. தொண்டை மண்டலத்தில் இருக்கிற ஆனைக் கோயில் கட்டடங்கள் பலவற்றை நேரில் போய்ப் பார்த்திருக்கிறேன். ஆனைக் கோயில் கட்டடங்களில் அடிப்படையான அமைப்பில் மாறுதல் இல்லை. ஆனால், அந்தக் கட்டடங்களின் சிறப்பு அமைப்புகள் (உறுப்புகளின் அமைப்புகளில்) ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு வகையான புதுமைகள் அமைந்திருக்கின்றன. இந்த திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப் பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள். இந்தத் திருப்பாலைவனத்து யானைக் கோயில்போல அமைந்திருக்கிற இன்னொரு கோயில் (நான்கண்டவரையில்) காஞ்சிபுரத்துக்குத் தெற்கே மாகறல் என்னும் ஊரில் இருக்கிற சிவன் கோயில் கட்டடம் ஆகும். ஆனால், மாகறல் ஆனைக் கோயிலை விட திருப்பாலை வனத்து யானைக் கோயிலில் அழகான சிறப்புகள் இருக்கின்றன. இந்தக் கோவில், பிற்காலச் சோழர் ஆட்சியில் ஏறக்குறைய கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருப்பாலைவனம் என்னும் ஊரின் பெயரை பார்க்கும்போது இவ்வூரில் பண்டைக் காலத்துப் பாலைமரங்கள் அதிகமாக இருந்தன என்பதை அறிகிறோம். பாலைமரம் இந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. இவ்வளவு அழகான கட்டடம் உள்ள இந்தக் கோயிலைப் பற்றி ஒரு நல்ல அழகான புத்தகம் ஒன்றை இக்கோவில் அதிகாரிகள் வெளியிடுவார்களானால் நலமாக இருக்கும். யாரும் இல்லாத காட்டிலே ரோஜாவும், மல்லிகையும், தாமரையும் அழகாகப் பூத்திருக்குமானால் அவற்றின் அழகு ஒருவருக்கும் தெரியாமலே போகும். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கோவிலின் செய்தி. இதன் அருகில் உள்ள பழவேற்காடு என்னும் ஊர். பழவேற்காட்டைப்பற்றிச் சில செய்திகள் சொல்ல விரும்புகிறேன். பாலைமரங்கள் இருந்த இடம் பாலைவனம் (திருப்பாலைவனம்) என்று பெயர் பெற்றதுபோல, வேல்காடு (வேல மரக்காடு) இருந்த இடம் வேற்காடு என்று பெயர் பெற்றது. பழவேற்காடு என்றால், பழமையான வேல்காடு என்பது பொருள். பூந்தமல்லிக்கு அருகில் திருவேற்காடு என்னும் ஊர் உண்டு. அந்த ஊரிலும் ஒரு கஜபிருஷ்ட விமானக் கோயில் (ஆனைக் கோயில்) உண்டு. மரங்கள் நிறைந்த காடுகள் பிற்காலத்திலே ஊர்களாக மாறிய போது, அந்தந்தக் காடுகளின் பெயரே அந்தந்த ஊர்களுக்கு பெயராக அமைந்துவிட்டன. ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, காய்க்காடு, மாங்காடு, தில்லைவனம், பாலைவனம், கடம்பவனம் முதலிய பெயர்கள் எல்லாம் அவை ஆதிகாலத்தில் அந்தந்த மரங்களையுடைய காடுகளாக இருந்தன என்பதைத் தெரிவிக்கின்றன. பழவேற்காட்டிலே, 350 ஆண்டுகளுக்கு முன்னே ஐரோப்பாக் கண்டத்திலிருந்து டச்சுக் காரர்கள் வந்தார்கள். வந்து 1610-ல் ஒரு கோட்டையைக் கட்டி அதில் இருந்து வியாபாரம் செய்தார்கள். அந்த வாணிகம் முக்கியமாக மலாக்கா, மலேயா நாடுகளுடன் நடை பெற்றது. ஆகவே பழவேற்காடு ஒரு நல்ல துறைமுகப் பட்டினமாக அமைந்தது. டச்சுக் காரர்கள் ஹாலண்டு தேசத்திலிருந்து வந்தவர்கள். இவர்களுக்குத் தமிழில் உல்லாந்தர் ஒல்லாந்தர் என்றும் பெயர் வழங்கிற்று. ஒல்லாந்தர் இருந்த பழவேற்காட்டுக் கோட்டையை கி.பி. 1781-இல் ஆங்கிலேயர் கைப்பற்றி அரசாண்டார்கள். ஆங்கிலேயர் பழவேற்காட்டைப் புலிக்காட் என்றனர். புலிகள் உள்ள காடுகள் அல்ல. பழவேற்காடு என்னும் சொல் ஆங்கிலேயன் வாயில் நுழையாமல் புலிகாட் ஆயிற்று. பழவேற்காட்டுக்குத் தெற்கே கடற்கரையோரமாக இருப்பது சிந்தாமணிகோயில் என்பது. சிந்தாமணி கோவிலுக்குக் கீழைக்கோ கர்ணம் என்னும் பெயரும் உண்டு. ஏனென்றால், மேற்குக் கடற்கரை ஓரமாக, தென் கன்னடம் மாவட்டத்தில் கோகர்கர்ணம் என்னும் ஒரு க்ஷேத்திரம் இருக்கிறது. அதற்கு நேர்கிழக்கில் இந்தச் சிந்தாமணி கோயில் இருப்பதனால் இதற்குக் கீழைக்கோகர்ணம் என்று பெயர். இந்த இடத்தில், சோழர் காலத்தில் ஒரு துறைமுகம் இருந்ததென்று அங்குள்ள சாசனத்தினால் தெரிகிறது. சிந்தாமணி கோயிலுக்குத் தெற்கே திருக்காட்டுப் பள்ளி என்னும் ஊர் இருக்கிறது. சாதாரணமாகக் காட்டுப் பள்ளி என்று கூறுவார்கள். திருக்காட்டுப் பள்ளியில் யஜ்ஞமட்டன் என்பார் யஜ்ஞேஸ்லாம் என்னும் கோயிலைக் கட்டினான். இந்த யஜ்ஞ பட்டம், நந்தி வர்மனுடைய புரோகிதன் மூன்றாம் நந்திவர்மன் என்றும் தெள்ளா றெறிந்த நந்திவர்மன் என்றும் கூறப்படுகிற நந்திக் கம்பலத்தின் தலைவ னாகிய நந்திவர்மனுடைய புரோகிதன். திருக்காட்டுப்பள்ளிக் கோவிலுக்கு தெள்ளாறெறிந்த நந்திவர்மன் நிலங்களைத் தானம் செய்திருக்கிறான் என்பதை அவனுடைய செப்பேட்டுச் சாசனத் தினால் அறிகிறோம். கடைசியாக பழவேற்காட்டு ஏரியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த ஏரி இப்போது கடலுடன் சேர்ந்து கடலின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. முற்காலத்தில் இது காயல் ஆக இருந்தது என்று கூறுவர். கடற்கரை ஓரமாக இருந்த காயல்களின் ஊர்களும் இருந்தன. பிறகு கடல் பெருக்கெடுத்து காயலில் புகுந்து பெரியதோர் ஏரியாக மாறிவிட்டது. பழவேற்காட்டு ஏரியின் நீளம் ஏறக்குறைய 37 மைல். அகலம் சில இடங்களில் 11 மைல். சில இடங்களில் 3 மைல். சென்னைப் பட்டினத்துக்கு வடக்கே 14 மைல் தூரத்தில் எண்ணூhர் என்னும் ஒரு ஊரில் ஒரு காயல் இருக்கிறது. சென்னை சாக்ரின் பேசினிலிருந்து ஒரு கால்வாய் 1802-இல் வெட்டி இதனுடன் இணைக்கப்பட்டது. பிறகு எண்ணூர் காயலிலிருந்து 154 ஆண்டு களுக்கு முன்பு 1806-இல் கந்தப்பிள்ளை கால்வாய் என்னும் ஒரு கால்வாய் வெட்டி பழவேற்காட்டு ஏரியுடன் இணைக்கப்பட்டது படகு போக்குவரத்துக்காக. பழவேற்காட்டு ஏரியை ‘கடல் கொண்ட சகாகதிநாடு’ என்று ஒரு சாசனம் கூறுகிறது. (காகந்தி - காவிரிப்பூம்பட்டினம். பூம்புகார்) திருப்பாலைவனம், பழவேற்காடு இரண்டும் செங்கற்பட்டு மாவட்டத்தின் பொன்னேரி தாலுகாவில் உள்ளன. இந்த மாவட்டத்தின் பழைய பெயர் பையூர்க் கோட்டம் என்று கூறப்படுகிறது. பையூர்க் கோட்டத்தின் வடக்கே பையூர் இளம் கோட்டம் என்னும் ஒரு கோட்டம் கூறப்படுகிறது சாசனங்களில். பையூர்க் கோட்டமும் பையூர் இளங்கோட்டமும் ஒரே கோட்டங்களா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. பண்டைக்காலத்திலே தொண்டைமண்டலம் 24 கோட்டங் களாகப் பரிக்கப்பட்டிந்தது. சோழ, பாண்டி, சேர நாடுகளில் கூற்றங்கள் இருந்தன. கோட்டமும் கூற்றமும் ஒன்றே. ஒவ்வொரு கோட்டமும் இரு நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அதாவது பல கிராமங்கள் சேர்ந்தது நாடு. சில நாடுகள் சேர்ந்தது கோட்டம் அல்லது கூற்றம். இவ்வாறு இருந்த பழய நிலப் பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் வேறு பெயர் பெற்றது. ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய போது, கர்நாடக நவாப்பு குடும்பத்தை சேர்ந்த ஒருவரை, ஆட்சி செய்வதற்கு எளிதாக நாட்டைப் பிரித்துத் தரும் படி கேட்டுக் கொண்டார்கள். கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முஸ்லீம் உத்தியோகஸ்தர், பிர்க்கா, தாலுகா, ஜில்லா என்று பிரித்துக் கொடுத்தார். அதன் படியே ஆங்கிலேயர் பெயரிட்டு ஏற்றுக் கொண்டார்கள். அக்காலம் முதல் பழைய கோட்டம், நாடு என்னும் பிரிவுகள் மறக்கப் பட்டு விட்டன. அவை இப்போது சாசனங்களில் மட்டும் காணப் படுகின்றன. வரகுண பாண்டியனின் கல்வெட்டு* இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 2ஆம் ஆண்டில் முடிசூடிப் பாண்டியநாட்டை அரசாண்டான். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவன். மிக்க சிவபக்தியுள்ளவன். இவன் காலத்துக்கு முன்னே (ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான்), அப்பர் சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகள், தமிழ் நாடெங்கும் பக்தி இயக்கத்தைப் பரப்பிச் சைவ சமயத்தை வளர்த்துச் சென்றனர். இந்தப் பாண்டியனின் காலத்தில் பக்தி இயக்கம் மறைந்து விட வில்லை. அவன் காலத்திலே சுந்தரமூர்த்தி சுவாமி வாழ்ந்திருந்து, சமயப் பிரசாரம் செய்தனர். இவனுடைய காலத்தில் அரசியல் குழப்பங்கள் அதிகமாக இருந்தன. இவன் பகையரசருடன் பல போர்களைச் செய்ய வேண்டியவனாக இருந்தான். ஆனால் எந்தப் போர்களுக்கு இடையேயும், சிவ பக்தனான இவன் சைவத் தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தான். வரகுணனுக்கு சிவ லோகம் காட்டிய திருவிளையாடல் போன்ற சில திருவிளை யாடல்கள், இவன் காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிகின்றது. திருச்செந்தூரில் உள்ள முருகப் பெருமான் திருக்கோயிலில், வரகுணபாண்டியனுடைய நீண்ட கல்வெட்டுச் சாசனம் ஒன்று காணப்படுகின்றது. இவன் திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு நித்தியக்கலைகளை அமைத்ததை, இந்தச் சாசனம் கூறுகிறது. 1400 பொற்காசுகளை, இவன் இந்தக் கோயிலுக்குத் தானம் செய்து, முதல் கெடாமல் அதன் வட்டிப் பாதியிலிருந்து நித்திய பூசை நடைபெற ஏற்பாடு செய்ததை இச்சாசனத்திலிருந்து கூறுகிறோம். இந்தப் பாண்டியனிடத்தில் காவலர்களாக இருந்த இருப்பைக்குடிக்கோன்! அளற்று நாட்டுக்கோன், ‘சாத்தம் பெருமான் என்பவர்களிடம் இந்தப் பொற் காசுகளைக் கொடுத்தனுப்பி, நித்திய பூசைகள் நடைபெறுவதற்கு இவ்வரசன் ஏற்பாடு செய்தான். இதிலிருந்து அந்தக் காலத்தில் (1100 ஆண்டுகளுக்கு முன்னரே) திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெற நித்திய பூசைகளின் விவரம் நன்கு தெரிகின்றது. அதனைக் கீழே தருகிறோம்:- சுப்பிரமணி படாரர் கோயில், திருமூலத் தானத்துக்குப் படாரர்க்கு உரிய நித்தியப்படி விவரம் பின்வருமாறு:- திருவமுது : அரிசி, செந்நெற்றீட்டல் ஒருவேளைக்கு நானாழியாக, நான்கு வேளைக்கு அரிசி பதினாறு நாழி. நெய்யமுது: திருவமுதுக்குப் பசுவின் நறுநெய், ஒரு வேளைக்கு நாழி. ஒரு வேளைக்கு உழக்கு “கறி துமிக்கவும் பொரிக்கவும் ஒரு வேளைக்கு ஆழாக்காக நான்கு வேளைக்கு நெய்யமுது நாழி உரி” தயிரமுது: நிவேதிக்க தயிரமுது ஒரு வேளைக்கு ஒரு நாழி. கடுத்தயிர் அமுது ஒரு வேளைக்கு உரி. ஆகநான்கு வேளைக்குப் பசுவின் தோய் தயிர் ஆறு நாழி. வாழைப்பழ அமுது: ஒரு வேளைக்கு நான்கு பழமாக நான்கு வேளைக்கு வாழைப்பழம் பதினாறு. சர்க்கரை அமுது: ஒரு வேளைக்கு ஒரு பலமாக நான்கு; வேளைக்கு நான்கு பலம். கறி'b9அமுது: காய்கறி ஒன்று, புளிங்கறி ஒன்று, புழுக்குக் கறி ஒன்று, பொரிக்கறி ஒன்று ஆகக் கறி அமுது நான்கினுக்கு ஒரு வேளைக்குப் பத்துப்பலமாக நான்கு வேளைக்குக் கறி அமுது நாற்பது பலம். காயம் : மிளகு அமுது, மஞ்சளமுது, சீரக அமுது, சிறுகடுகு அமுது, கொத்தம் பரி அமுது; ஆகக்காயம் ஐந்து. இவை ஒரு வேளைக்கு முருச்செவிடாக நான்கு வேளைக்கு காயம் உழக்கே இரு செவிடு. கும்மாயம் : (கும்மாயம் என்பது சிறுபயற்று அவியலுடன் வெல்லமும் நெய்யும் கலந்து செய்வது). இதற்குச் சிறு பயற்றுப் பருப்பு ஒரு வேளைக்கு உரியாக நான்கு வேளைக்கு இரு நாழி சிறுபயிறு. இலை அமுது : (இது இலையமுது என்றும், வெற்றிலை அமுது என்றும் கூறப்படும்). ஒரு வேளைக்கு மூவடுக்காக நான்கு வேளைக்கு வெற்றிலை அமுது மூன்று பற்று”. அடைக்காயமுது : (பாக்கு அமுது). ஒரு வேளைக்குப் பதினான்கு. நான்கு வேளைக்கு அடைக்காயமுது ஐம்பத்தாறு. திருநந்தா விளக்கு : விளக்கு ஒன்றுக்கு உரிநெய். ஐந்து திருவிளக்குப் பசுவின் நறு நெய் நியதி இருநாழி உரி. திருமஞ்சனம்: (அபிஷேகம்) பசுவின்பால் நியதி (நாள் ஒன்றுக்கு) நானாழி, பசுவின் தயிர் நானாழி, இளநீர் வழுவை உட்பட நாழி இள நீருக்கு இள நீராக நியதி இள நீர் எட்டு. திருப்பள்ளித்தாமம்: பூமாலை, நாள் தோறும் அளக்கக்கடவ நறும்பூ பத்து நாழி. பயிற்றுப்பொரி: சிறுப்பயிற்றுப் பொரிக்காக நாழி உழக்கு. பற்று மஞ்சள்: திருமேனிபூசி அருளமேற்றோல் சிதைத்த பற்று மஞ்சள் நியதி உழக்கு. வெண்கூறை: (கூறை - ஆடை). மூன்று மாதத்துக்கு நான்கு இணை (ஜோடி)யாக ஓராண்டு நான்கு முறைக்கு வெண்கூறை பதினாறு இணை. மேற்கட்டிப் புடவை: திருமடைப்பள்ளிக்கு மேற்கட்டியாகப் புடவை (துணி) இரண்டு. ஆறு திங்களுக்கு ஈரிணை; ஓராண்டு இரண்டு முறைக்குப் புடவை நால் இணை. தூபம்: ஸ்ரீ தூபம் சீதாரியினுக்கு வேண்டும் உறுப்பு அகில் உட்படக் கற்பூரமும் தேனும் நியதி அரைக்காணம் விலைபெற இடுவது. மேற்கட்டு வெண்கூறை :- கர்ப்பக்கிருகத்துக்கு மேற்கட்டி வெண்கூறை (துணி) இரண்டு. ஆறு திங்களுக்கு நாலு இணையாக ஓராண்டு இரண்டு முறைக்கு வெண்கூறை எட்டு இணை, திருப்பலி : திருப்பல்லிக்குப் பசுவின் தோய் தயிர் நாள் ஒன்றுக்கு நாழி. கொற்று: தட்டளி கொட்டிகளுக்கு (வாத்தியம் வாசிப் போருக்கு), கொற்று (சோறு), திங்கள் ஒன்றுக்கு நாலுகலம் பத்துக் குறுணி நாழி உரியாக, பன்னிரண்டு திங்களுக்கு நெல்லு நிறைமதி நாராயத்தால் ஐம்பத்தேழுகலம். ஸ்ரீஉடையாடை:- மூன்று திங்களுக்கு ஓர் இணையாக நான்கு முறைக்கு ஸ்ரீஉடையாடை. நாலிணை: இன்னொரு ஸ்ரீஉடையாடை ஆண்டுக்கு நாலிணை. திருமஞ்சன நெய்: “திருமஞ்சனம் ஆடி அருளப் பசுவின் நறுநெய் நியதி நான்குநாழி.” சந்தனக் குழம்பு : “திருமேனி பூசும் சந்தனக் குழம்புச் சந்தனம் நியதி முப்பலம்.” கற்பூரம்: திருமேனி பூசும் திருச்சந்தனத் தோடு கட்டி அரைக்கும் கற்பூரம் நியதி ஏழரைக் காணம். திருமஞ்சன இளநீர்: “திருமஞ்சனம் ஆடி இளநீர் வழுவை (வழுக்கை) உட்பட, நியதி இருநாழியினுக்கு நாழி இளநீருக்கு நாலிள நீராக, நியதி இடும் இளநீர் “எட்டு” (குறிப்பு : கற்பூர தீபம் இதில் குறிப்பிட வில்லை. அக்காலத்தில் கற்பூரத்தீபம் வழக்கத்தில் இல்லை போலும். அது பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம். தேங்காய் உடைப்பதும் குறிப்பிடப்படவில்லை. இதுவும் பிற்காலத்து ஏற்பட்ட வழக்கம் போலும். தேவாரப் பாடல்களிலும் கற்பூர தீபாரதனை குறிப்பிடப் படவில்லை). சிவபக்தனான வரகுண பாண்டியனுடைய பக்தி, இந்தக் கட்டளையிலிருந்து நன்கு தெரிகிறது. இது சுந்தர மூர்த்தி சுவாமிகள் வாழ்ந்திருந்த 9-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சாசனம் என்பது கருதத்தக்கது. வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள்* வரகுண பாண்டியனுக்கு கோமாறஞ் கடையன் என்னும் பட்டப் பெயர் உண்டு. இந்தப் பாண்டியன், அந்தக் காலத்தில் பல்லவ இராச்சியத்தோடு இணைந்திருந்த சோழ நாட்டின்மேல் படை யெடுத்துச் சென்று போர் புரிந்தான். சோழ நாட்டிலே வேம்பில் என்னும் ஊர்க்கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பிறகு, நியமம் என்னும் ஊரில் தங்கியிருந்த போது, திருச்சிராப்பள்ளியில் மலையின் மத்தியில் உள்ள குகைக்கோயிலுக்கு 125 கழஞ்சு பொன்னைத் தானஞ் செய்தான். திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயில் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனால் அமைக்கப்பட்டது. அந்தக் குகைக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கே, வரகுண பாண்டியன் மேற் சொன்னபடி 125 கழஞ்சு பொன்னைத் தானம் செய்தான். அந்தப் பொன்னின் வட்டியைக்கொண்டு நாள் ஒன்றுக்கு நான்கு திருவிளக்குகளை ஏற்றும்படி அவன் கட்டளை யிட்டிருந்தான். அந்தப் பொன்னைச் சிற்றம்பர் என்னும் நகரத்தார் பெற்றுக்கொண்டு, நாள் தோறும் திருக்கோயிலில் நந்தாவிளக்கு எரிக்கப் பொறுப் பேற்றுக் கொண்டனர். அந்தச் சாசனத்தின் வாசகப் பகுதி இது: “கோமாறஞ் சடையற்கு யாண்டு நான்கு நான் ஈராயிரத்தைந் நூற்றுஒன்று வேம்பில் மதிள் அழித்துப் போந்து நியமத்திருந்தருளிச் சோமசூர்யான்வயத் துவய திலகாலங்கார ராயின பாண்டியாதி ராசர் வரகுணதேவர் திருமலை படாரர்க்குக் கொடுத்த பொன் பாடிக்கல்லால் 125 கழஞ்சு.” திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள ஜம்புநாதசுவாமி கோயில், பாறையைக் குடைந்தமைத்த குகைக் கோயிலாகும். இந்தக் கோயிலில் சிவலிங்க உருவமாக எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குத் ‘திருவெள்ளறைத் திருவானைக்கல் பெருமானடிகள்’ என்பது பழைய பெயர். (வெள்ளறை - வெள்ளைக் கல்; அறை - கல், மலை. ஆனைக்கலம் என்பது அந்த மலையின் பெயர்.) இந்தத் திருக்கோயிலில் இரண்டு திருவிளக்குகளை எரிப்பதற்காக வரகுண மகாராசன் 120 கழஞ்ச பொன்னைத் தானஞ் செய்தான். இந்தப் பொன்னின் முதல் கெடாமல், இதன் வட்டித் தொகையிலிருந்து இரண்டு விளக்குகளை எரிப்பதற்கு இவன் நிபந்தம் செய்தான். இந்தச் சாசனத்தின் வாசகப் பகுதி இது : “கோமாறஞ் சடையற்கு யாண்டு நாலாவதற்கு எதிர் ஒன்பதாவது விருச்சிக ஞாயிற்றுத் திங்கட்கிழமை பெற்ற அஸ்வதி முதலாக தேவதானந் திருவெள்ளறைத் திருவானைக்கற் பெருமானடிகளுக்கு பாண்டி மாராசர் ஆயின கோமாறஞ் சடையன் இரண்டு நொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிக்க அண்ட நாட்டு வேளான் கையில் விடுத்த பொன் 120 கழஞ்சு.” இந்தச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விருச்சிக ஞாயிற்றுத் திங்கட்கிழமை பெற்ற அஸ்வதி’ என்னும் குறிப்பைக் கொண்டு கணித்தால், அந்த ஆண்டு கி.பி. 824, நவம்பர் மாதம் 7 ஆம் தேதி திங்கட் கிழமை என்று தெரிகிறது. இந்தக் குறிப்புப்படி கணித்தால் கி.பி. 874 ஆம் ஆண்டு நவம்பர் 22க்கும் பொருந்துகிறது. அண்ட நாட்டு வேளான், இரண்டாம் வரகுண பாண்டியனின் காலத்தில் இருந்தவன் ஆகையால், இந்தச் சாசனம் கி.பி. 874 ஆம் ஆண்டில் எழுதப் பட்டதாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் சப்தரிஷீசுவரர் கோயில் சாசனங்களில் ஒன்று, கோமாறஞ் சடையனான வரகுண பாண்டியனின் சாசனமாகும். இந்த சாசனத்தில் இந்தப் பாண்டியன் இந்தக் கோயிலுக்கு இரண்டு நந்தா விளக்கு எரிக்க 120 பொன் (பழங்காசு) தானஞ் செய்ததைக் கூறுகிறது. லால்குடி என்பது, கர்நாடக நவாபு காலத்தில் (பிற்காலத்தில்) உண்டான பெயர். லால்குடி என்பதற்குச் சிவந்த நிறக் கோயில் என்பது பொருள். இவ்வூரின் பழையப் பெயர் திருவத்துறை என்பது. திருவத்துறைக் கோயிலை வடமொழியாளர் சப்தரிஷீசுவரர் கோயில் என்பர். இந்தச் சாசனத்தின் பகுதி இது: “கோமாறஞ் சடையற்கு யாண்டு 4-ஆவதின் எதிர் 9-ஆம் ஆண்டு தனு ஞாயிற்றுச் செவ்வாய்க் கிழமை பெற்ற சதயத்து நாள் இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறை மகாதேவர்க்கு இரவும் பகலும் சந்திராதித்தல் இரண்டு நொந்தாத் திருவிளக்கு எரிப்பதாக கோமாறஞ் சடையனாயின பாண்டிய குலபதி வரகுண மகாராயர் அண்ட நாட்டு வேளாண் கையில் கொடுத்த பழங்காசு 120”. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள எறிச்சாவுடையார் கோயிலிலும், பாண்டியன் வரகுண மகாராசன் கட்டளைகள் அமைத்தான். இச்செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகிறது. எறிச்சாவுடையார் கோயிலுக்கு அக்காலத்தில் வழங்கின பெயர் திருப்போத்துடையார் கோயில் என்பது. வரகுண மகாராசன், தொண்டை நாட்டில் போர் செய்து பெண்ணை யாற்றங் கரையில் உள்ள அரசூரில் தங்கியிருந்த போது இந்தக் கட்டளையை ஏற்படுத்தினான். “ஸ்ரீபடாரர் அனுக்கிரகத்தினால் முள்ளி நாட்டு இளங்கோய்க்குடி திருப்போத் துடையார் ஸ்ரீகோயில் படாரர்க்கு முதல் கெடமை பொலி கொண்டு நான்கு காலமும் திருவமுது செலுத்துவதாக வரகுண மகாராசர் தொண்டை நாட்டுப் பெண்ணைக்கரை அரைசூர் வீற்றிருந்து இளங்கோய்க்குடிச் சபையார் கையில் கொடுத்த காசு 290”. என்று இந்தச் சாசன வாசகம் தொடங்குகிறது. (படராகர் - கடவுள்; பொலி - வட்டி) இந்த 290 பொற்காசின் வட்டியிலிருந்து நாள் தோறும், நான்கு பொழுது திருவமுது நிவேதிக்க வரகுண பாண்டியன் கட்டளை ஏற்படுத்தினான். அதன் விபரம் வருமாறு: திருவமுது : ஒரு வேளைக்குச் செந்நெல் தீட்டல் அரிசி நானாழி. கும்மாயம் : (கும்மாயம் என்பது பயற்றுப்பருப்புப் புழுக்கலுடன் சர்க்கரையும் நெய்யும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி) இதற்குப் பயற்றுப்பருப்பு இரு நாழி.) பசுவின் நறுநெய் : உழக்கு தயிர் : “பசுவின் தோய் தயிர் உரி” வாழைப்பழம் : ‘கருவாழைப்பழம் நான்கு’. சர்க்கரை ஒரு பலம். கறியமுது : காய்கறி ஒன்று, புளிங்கறி இரண்டு, புழுக்குக்கறி ஒன்று ஆகக் கறி ஐந்தினுக்குக் கறி பத்துப் பலம். பசுவின் நெய் : “கறி துமிக்கவும் பொரிக்கவும் பசுவின் நறுநெய் ஆழாக்கு”. காயம் : “இரு செவிடு” இலையமுது : (வெற்றிலை) “வெள்ளிலை ஈரடுக்கு” அடைக்காய் : (பாக்கு) பத்து. சர்க்கரை : நாற்பலம் (கும்மாயத்துக்கு) “இப்பரிசு நியதிப்படி முட்டாமை நெடுங் காலமுஞ் செலுத்து வதாக வைத்தார் ஸ்ரீவரகுண மகாராசர்” என்று முடிக்கிறது இந்த சாசனம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருக்கோடிக் காவல் திருக்கோடீசுவரர் கோவிலுக்கும் வரகுண மகாராசர் 180 கழஞ்சு பொன் தானம் செய்திருக்கிறார். இந்தப் பொன்னின் வட்டியைக் கொண்டு மூன்று ‘நொந்தா விளக்கு’ எரிப்பதற்கு இவர் கட்டளை அமைத்தார். இந்தக் கோயில் சரசுவதி கணபதி ஆகிய இரண்டு தெய்வங்களுக்கு விளக்கெரிக்க வேண்டுமென்பது கட்டளை. “திருக்கோடிக்காவில் ஸ்ரீசரஸ்வதி கணபதிகளுக்கு மூன்று நொந்தா விளக்கெரிப்பதற்கு வரகுண மகாராசர் கொடுத்த பின் நாற்றெண்பதின் கழஞ்சு”. என்று கூறுகிறது இந்த சாசன வாசகம். சம்பந்த சுவாமிகள் காலத்தில் கணபதி ஈச்சரம் என்னும் கோயில் இருந்தமை, தேவாரத்தினால் தெரிகின்றது. கலை மகளுக்கும், விநாயகருக்கும் கோயில் இருந்த செய்தி, கல்வெட்டுக்களில் முதல் முதலில் காணப்படுவது இந்தக் கல்வெட்டிலேதான். * திருமெழுக்குப் புறம்* திருக்கோயில்களில் நாள்தோறும் திருமெழுக்கிட்டுக் கோமயம் கோசலம் தெளித்துத் தூய்மைப்படுத்துவது வழக்கம். இதற்குத் திருமெழுக்கு இடுதல் (மெழுகுதல்) என்று பெயர். திருமெழுக்குத் தொண்டினைச் சிலர் பக்தியின் பொருட்டு இலவசமாகச் செய்வர். இந்தத் தொண்டு நடை பெறுவதன் பொருட்டுச் செல்வந்தர் சிலர் நிலம் அல்லது பொருள் தானம் செய்வதும் உண்டு. இவ்விதத் தானத்துக்குத் திருமெழுக்குப்புறம் என்பது பெயர். திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத் தமக்கையாரான திலகவதியார், திருவதிகை வீரட்டானக் கோவிலில் திருமெழுக்குத் திருத்தொண்டினைச் செய்துவந்தார். அவர் பக்திகாரணமாக ஊதியத்தை விரும்பாமல், தாமாகவே இத்திருத்தொண்டினை நாள் தோறும் செய்துவந்தார். “புலவர்தன்முன் திருவலகு பணிமாறிப் புனிறகன்ற நலமலி ஆன் சாணத்தால் நன்குதிரு மெழுக்கிட்டு மலர்கொய்து கொடுவந்து மாலைகளும் தொடுத்தமைத்துப் பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பலசெய்தார்.” என்றும், “சீறடியார் திருவலகும் திருமெழுக்கும் தோண்டியம் கொண்டு ஆறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடுபத்தார்.” திலகவதிதாயாரைப் போல எல்லோரும் இந்தத் திருத் தொண்டினை இலவசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. திருமெழுக்கிடும் திருத்தொண்டினைச் செய்வதற்கென்று கோவில் களில் நிபந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதற்குத் திருமெழுக்குப் புறம் என்பது பெயர். திருமெழுக்குத் தொண்டினைச் செய்கிறவர் களுக்குக் காசுகொடுக்காமல் அதற்குப் பதிலாப நெல் கொடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்பொருட்டு நிலங்கள் தானம் செய்யப் பட்டிருந்தன. அந்த நிலங்களில் விளையும் நெல்லைத் திருமெழுக்கிடு வோருக்குக் கொடுப்பது வழக்கம். இந்தச் செய்தியைச் சாசனங் களிலிருந்து அறிகிறோம். அந்தச் சாசனங்கள் சிவவற்றைக் காட்டுவோம். தஞ்சாவூர் மாவட்டம், மாயூரம் தாலுகா, குற்றாலம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் சாசனம். இந்தக் கோயிலுக்குச் சொன்ன வாறறிவார் கோயில் என்பது பழையப் பெயர். இப்போது, உத்த வேதீஸ்வரர் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது. உத்தம சோழனின் தாயாரான செம்பியன் மாதேவியார் என்னும் அரசியார் இந்தக் கோவிலுக்குப் பல கட்டளைகளை அமைந்திருக்கிறார். அக்கட்டளை களில் ஒன்று திருமெழுக்குப்புறம். “திருமுற்றம் திருவலகிட்டுத் திருமெழுக்கிடுவார் மூவர்க்கு நிசதம் நெல்லுக் குறுணி நானாழியாக ஓரட்டைக்கு நெல்லு நாற்பத்தைங் கலத்துக்கு நிலன் காலே அரைமா அரைக்காணி” (1) என்று இந்தச் சாசனச் செய்யுள் கூறுகிறது. பெயர் திருக்கற்றளி மகாதேவர் கோயில் என்பது. இப்போதைய பெயர் உத்வாக நாத சுவாமி கோயில் என்பது. இந்தக் கோவிலுக்கும் செம்பியன் மாதேவியார் நிபந்தங்களைச் செய்திருக்கிறார் என்பதை இங்குள்ள சாசனம் கூறுகிறது. இங்குக் கோயிலில் திருமெழுக்கிடுவார் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருக்கோடிகா. இவ்வூர் இப்போது திருக்கோடிகாவல் என்று கூறப்படுகிறது. திருக் கோடிகாவுக்குக் கண்ணமங்கலம் என்னும் பெயரும் இருந்தது என்று சாசனத்திலிருந்து தெரிகிறது. இவ்வூரிலுள்ள திருக்கோடிகா சாசனம். திருமெழுக்குப்புறமாக நிலம் தானம் செய்யப்பட்டிருந்ததைக் கூறுகிறது. இந்த நிலத்தின் எல்லையை இந்த சாசனம் இவ்வாறு கூறுகிறது. ஆத்திரையன் கிழவன் மெழுக்குப் புறமாக வைத்த நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை உட்சிறு வாய்க்காலுக்கு மேற்கு, தென்பாற் கெல்லை புழுவாய்க்காலுக்கு வடக்கு , மேற்பாற் கெல்லை மெழுக்குப் புறத்துக் கிழக்கு வடபாற் கெல்லை மெழுக்குப்புறத்துக்கு வடவெல்லைக் கொத்தத்துக்கு தெற்கு நிலம் காணி அரைக்காணிச் செய். இவ்வாறு திருமெழுக்கென்று நிலங்கள் தானம் செய்யப் பட்டிருந்தன. திருக்கோயில்களில் திருவுலகு இட்டுச் சாணநீர் தெளித்து மெழுகுவது மரபு. பசுவின் சாணத்தினால் மெழுகுவது தொன்று தொட்டுள்ள வழக்கம். கற்றரையல்லாத மண்தரைகளுக்குச் சாணநீர் மெழுகுவது மரபு. பசுவின் சாணத்தினால் மெழுகினால் பூச்சிகள் சேரா. மேலும் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் முற்காலத்தில் பஞ்சகவ்வியம் (ஆனைந்து) அபிஷேகம் செய்யப்பட்டது என்பதைச் சாசனங்களும் தெரிவிக்கின்றன. பஞ்சகவ்வியம் என்னும் ஆன் ஐந்து என்பது, பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோமூத்திரம் என்பன. திருக்கோயில்கள் மெழுகுவதற்குரிய சாணம் கன்று ஈன்று புனிறு நீக்கிய பசுவின் சாணமாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. “புனிறு அகன்ற நலமலி ஆன் சாணத்தினால்” திலகவதியார் திருமெழுக்குத் தொண்டு செய்தார் என்று பெரிய புராணங் கூறுவது காண்க. அந்தக் காலத்துக் கோயில்களுக்கும், இந்தக் காலத்துக் கோயில் களுக்கும் வேறு பாடுகள் உண்டு. அக்காலத்தில் கோயில் தரை பெரும்பாலும் மண்தரையாக அல்லது செங்கல் தரையாக இருந்தது. அப்போது சாணத்தினால் மெழுக வேண்டியிருந்தது. இக்காலத்தில் கோயில் தரைகள் பெரும்பாலும் கருங்கல் தரையாக இருப்பதனால் சாணத்தினால் மெழுக வேண்டிய அவசியம் இல்லை. திருவலகிட்டு நீரினால் சுத்தம் செய்தால் மட்டும் போதும். இக்காலத்துக் கோயில்களில் நிகழ்கிற நடை முறையை அறியேன். கோயில்களையும் சுற்றுப் புறங்களையும், தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க வேண்டுவது மிகமிக அவசியமாகும். கோயிலைக் கண்காணிப்போரும் கோயிலுக்குச் சென்று வழிபடு வோரும் இதில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். காகிதம், தேங்காய் நார், வாழைப்பழத் தோல், பூக்கள் முதலிய பொருள்களைக் கோயில் தரையில் சிதறுவது கூடாது. இந்தச் செய்தியில் கோவிலுக்குச் சென்று வழிபடுவோர் கருத்தாக இருக்கவேண்டும். கோயிலுக்குச் சென்று வழிபடுவது எவ்வளவு புண்ணியச் செயலென்று கருதுகிறோமோ, அவ்வளவு புண்ணியமானது கோவிலில் குப்பைப் போடா திருப்பதும் என்பதை ஒவ்வொரு வரும் கருத்தில் வைக்க வேண்டும். இறைவன் எவ்வளவு புனிதமானவனோ அவ்வளவு புனிதமானது இறைவனின் கோயில் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். * உதிரப் பட்டி அல்லது இரத்தக் காணி* “பரும யானையொடு பாஞ்சால ராயனை வெங்களத் தட்ட வென்றி யிவையென நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப் பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து” என்பது பெருங்கதை (வத்தவ காண்டம் : கொற்றங் கொண்டது 10-13) நெய்த் தோர்ப் பட்டிகை என்பதற்கக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், “நெய்த்தோர் = இரத்தம். பட்டிகை = பத்திரிகை” என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவு தான் எழுத முடியும். பண்டைக் காலத்து உரையாசிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டை யுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை. “நெய்த்தோர்ப் பட்டிகை” என்பது, பண்டைக் காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப் போன ஒரு செய்தி யெனத் தெரிகிறது. பண்டைக்காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச் சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது. உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகையாகக் கொடுத்தான் என்பது மேலே காட்டிய செய்யுளின் கருத்து. நெய்த்தோர் என்பது இரத்தம் அல்லது உதிரம் எனப் பொருள்படும். பட்டிகை என்பதற்குப் பத்திரிகை என்று பொருள் கொள்வதைவிட பட்டி எனப் பொருள் கொள்வது சிறப்புடைத்து. நெய்த்தோர்ப்பட்டி என்று பெருங்கதையில் வழங்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் சாசனங்களில் உதிரப்பட்டி என்று வழங்கப்பட்டிருக்கிறது. வேறு சாசனங்களில், இரத்தக் காணி என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நெய்த்தோர்ப் பட்டி, உதிரப்பட்டி, இரத்தக் காணி என்னும் பெயர்கள் ஒரே பொருளைக் குறிக்கின்றன என்பது விளங்குகிறது. தன் அரசனுடைய வெற்றிக்காகப் போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தைச் சிந்தி கொற்றத்தை நாட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றிபெற்ற அரசன் நிலங்களை இனாமாக அளிப்பது வழக்கம். இவ்வாறு தானம் செய்யப்பட்ட நிலத்திற்கு இரத்தக் காணி, உதிரப்பட்டி, நெய்த் தோர்ப்பட்டி என்று பெயர் வழங்கப்பட்டன. சில சமயங்களில், போர் வீரன் உயிர் நீத்தலும் உண்டு. அப்போது அவனது ஆற்றலைப் பாராட்டி, இறந்துபட்ட வீரனுடைய உறவினருக்கு உதிரப்பட்டி வழங்கப்படும். தமிழ் நாட்டு மூவேந்தரும், குறுநில மன்னரும் மறைந்து போன இக்காலத்திலே, பண்டை பழக்க வழக்கங்களும் மறைந்து போயின. ஆயினும், பழைய நூல்களிலே அப்பழைய பழக்க வழக்கங்களைக் குறிக்கும் சொற்கள் நின்று நிலவுகின்றன. இக்காலத்து அச்சொற்களுக்குப் பொருள் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது. சாசனங்கள், சில சமயங்களில், இவ்விதச் சொற்களுக்குப் பொருள் காண உதவி செய்கின்றன. உதிரப்பட்டியைக் குறிக்கும் சில சாசனங்களைக் கீழே தருகிறேன். இராமநாதபுரம் சில்லா, திருப்பத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர் ?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது. 4t of 1928. இராமநாதபுரம் சில்லா, சாத்தூர் தாலுகா, திருத்தங்கல் கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் எழுதப்பட்ட சாசனம் 577 டிக 1922. இதில், வரதுங்கராம தனிப்புலி, கலங்காத கண்ட நாயகரின் வழிவந்த, வள்ளி பொம்மன் கலங்காத கண்ட நாயகர் என்பவருக்குத் திருத்தங்கல் கிராமத்தில் இரத்தக் காணி தானம் செய்யப்பட்ட செய்தி கூறப் படுகிறது. (இந்தச் சாசனத்தின் பக்கத்தில், ஒரு வீரன் தரையில் நின்ற வண்ணம் அருகில் இருக்கும் குதிரையின் தலையை வாளால் வெட்டுவது போன்றும், அக்குதிரையின் மீது ஒருவீரன் அமர்ந்து வாளேந்தியிருப்பது போன்றும், இக்குதிரை வீரனுக்கும் பக்கத்தில் மற்றொரு வீரன் குதிரைமீதமர்ந்து இருப்பது போன்றும் சிற்பம் கற்பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.) தென் ஆர்க்காடு சில்லா, திருக்கோவலூர் தாலுகா, காடையார் கிராமத்துச் சாசனம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில், நாடியா கவுண்டர் மகன் கலிதீர்த்தான் என்பவன் போர்க்களத்தில் உயிர் நீத்தமைக்காக, ஏரம நாயகர் என்பவர் நிலம் தானம்செய்த செய்தி கூறப்படுகிறது 237 of 1936. போர்க்களத்தில் பிறருக்காக உயிர் கொடுத்தவருக்கு மட்டும் உதிரப்பட்டி தானம் அளிக்கப்பட்ட போதிலும், போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு பொறுக்க முடியாமலோ உயிர் விட்டவர்க்கும் உதிரப்பட்டி வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உதாரணம் :- தென் ஆர்க்காடு சில்லா, சிதம்பரம் தாலுகா, அரகண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈசுரர் கோயில் சாசனம். இது, பொன்னாண்டை என்னும் பெயருள்ள தேவராட்டியர் மகன் இளவெண்மதி சூடி ஆடினான் என்பவன், கோயில் மண்டபம் கட்டி முற்றுப்பெறும் பொருட்டுத் தன் தலையை அறுத்துக் கொண்டதற்காக 100 குழி நிலம் உதிரப்பட்டியாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது. 197 of 1934 -1935. புதுக்கோட்டை, திருமய்யம் தாலுகா காரமங்கலம் அகத் தீசுவரர் கோயில் சாசனம், பாண்டியன் ஸ்ரீ குலசேகர தேவரின் 32-வது ஆண்டில் எழுதப்பட்டது. மேற்படி கோயில் மண்டபத்தைப் பழுது தீர்த்துக் கொண்டிருந்த கல் தச்சன், அறங்குளவன் என்பவன் பெரிய அடிபட்டுக் காயம் பட்டபடியால், மிழலைக் கூற்றத்து பாம்பாற்று நாட்டுத் தலைவனான தன்ம ஆட்கொண்ட தேவர் என்னும் தன்மராயர் அவனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்தார் என்று இச்சாசனம் கூறுகிறது. ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லப தேவருடைய 13-வது ஆண்டுச் சாசனம் 172 of 1935 - 36. சுந்தர பாண்டிய பட்டன் மனைவி பிறர் கொடுமை தாங்காது நஞ்சுண்டு இறந்தமைக்காக மேற்படி பட்டனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது. தஞ்சை சில்லா நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் சோமநாதே சுவரர் கோயில் சாசனம், ராசராச தேவருடைய 20-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது 406 of 1925. இதில், சோமநாத மங்கலம், சோமநாத சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமங்களுக்கும் சீதக்க மங்கலம் என்னும் கிராமத்துக்கும், முடிகொண்ட சோழப் பேராறு என்னும் ஆற்றின் நீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதில் சச்சரவு ஏற்பட்டு அதன் காரணமாக ராசராசப் பேரரையன் என்பவனைத் தவறாகக் கொன்று விட்ட குற்றத்திற்காக அவன் மகன் எதிரிலாப் பேரையனுக்கு உதிரப் பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதுகாறும் எடுத்துக் காட்டிய சாசனச் சான்றுகளிலிருந்து இரத்தக் காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்பன இன்னதென்று அறியக்கிடக்கிறது. தேனவரை நாயனார் சாசனம்* இலங்கையிலே கொளும்பு நகரத்துப் பொருட்காட்சி சாலையிலே ஒரு சாசனக்கல் இலங்கையின் தென்கோடியில் உள்ள காலி என்னும் ஊரிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்தக் கல் 4 அடி 9 அங்குல நீளமும், 2 அடி 6 அங்குல அகலமும், 5 அங்கலக் கனமும் உள்ளது. இதிலே தமிழ், சீனம், பாரசீகம் என்னும் மூன்று மொழிகளில் சாசனம் எழுதப்பட்டுள்ளது. (இந்தக் கல் கண்டெடுக்கப்பட்ட வரலாறு முதலியவற்றை J.R.A.S. (C.B.) Vol. XXII. P. 129-ல் காண்க. இந்தச் சாசனத்தின் மொழிப் பெயர்ப்பு முதலிய செய்திகளைப்பற்றி The Galle Trilingual Stone by Mr. E.W. Perera, Spolia zeylanica Vol. viii pp 122 ff. காண்க.) சீன தேசத்துச் சக்கரவர்த்தி யுவுங்லோவின் 7-ஆம் ஆண்டில், இரண்டாம் மாதத்தில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. யுவங்லோ அரசன் கி.பி. 1403இல் ஆட்சிக்கு வந்தான். தேனவரை நாயனாரின் புகழைக் கேள்விப்ட்ட சீனத்து அரசன், தமது தூதத்களாகிய சிங்வோ, உவிங் சுவிங் என்பவர்களின் மூலமாகச் சில பொருள்களைக் காணிக்கையாக அனுப்பியதையும் அப்பொருள்களின் விபரத்தையும் இந்தத் தமிழ் சாசனம் கூறுகிறது. சீனமொழி சாசனத்தில் இந்தத் தூதர்களின் பெயர்கள் ச்சிங் ஹோ என்றும் வங் ச்சிங் லீன் என்றும் கூறப்படுகின்றன. தமிழ் சாசனம் தேனவரை நாயனாரைத் தேனவரை ஆழ்வார் என்றும் கூறுகிறது. தெய்வங்களை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும், பட்டாரகர் என்றும் கூறுவது தமிழ் மரபு. சீனமொழி சாசனம், மேற்படி சீனத்து அரசன் புத்தர் கோவிலுக்கு அளித்த காணிக்கைப் பொருள்களைக் கூறுகிறது. பாரசீக மொழி சாசனம் மிகவும் சிதைந்து, அழிந்து காணப்படுகிறபடியால் யாருக்குக் காணிக்கைப் பொருள் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. முகம்மதியர் சம்பந்தமான நிலையத்துக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பொருள்களைக் கூறுகின்றது என்பதில் ஐயமில்லை. தமிழ்ச் சாசனத்தில் கூறப்படுகிற காணிக்கைப் பொருள்களைப் போன்ற பொருள்களே மற்ற இரண்டு சாசனங்களிலும் குறிக்கப்படுகின்றன. சிங்கள மொழியில் தேவுநுவர என்பது தேவநகரம் என்று பொருள்படும். இப்போதைய சிங்கள மொழியில் இந்நகரம் தேவுந்தர என்று வழங்கப்படுகிறது. தமிழில் தேனவரை என்று வழங்கப்படும் போர்ச்சுகீசியர் இப்பெயரை தனவெர என்று வழங்கினார்கள். ஆங்கிலத்தில் இப்பெயர் தொண்ட்ரா என்று வழங்குவர். இந்த நகரம் இலங்கைத்தீவின் தென்கோடியில் இருக்கிறது. இது பண்டைக் காலத்தில் பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில், போர்ச்சுகேசியர் கொளும்பு துறைமுகம் உண்டாக்கிய பிறகு, பழைய துறைமுகப் பட்டினமாகிய தேனவரை நாளடைவில் சிறப்புக்குன்றி, சாதாரண சிறு கிராமமாக மாறிப் போயிற்று. தேனவரைத் துறைமுகப்பட்டினம் சிறப்புற்றிருந்த காலத்தில் அக்காலத்து வியாபாரக் கப்பல்கள் இங்குவந்து தங்கின. மிகப் பழைய காலத்தில் யவனக் கப்பல்கள் (கிரேக்க கப்பல்கள்) இங்கு வந்தன. பிற்காலத்தில் அரபியர்களும், சீனர்களும் மற்றவர்களும் இந்தத் துறைமுகத்தில் தமது வியாபாரப் பொருள்களைக் கொண்டு வந்து இறக்கியும், இங்கிருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டும் வியாபாரம் செய்தார்கள். தொன்றுதொட்டு தமிழகக் கப்பல் வியாபாரிகளும் இந்நகரத்தில் வியாபாரம் செய்தனர். அன்றியும் தமிழர் பலர் இந்நகரத்தில் தங்கிக் குடியிருந்தனர். அவர்கள் இந்நகரத்திலே வருணனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டனர். தேனவரை நகரத்தில் கோயில் கொண்டிருந்த வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் (இது உதகபால வருணன் என்பதன் திரிபு) என்று வழங்கினார்கள். பிற்காலத்தில் உபுல்வன் என்னும் சொல் உப்பலவண்ணன், உத்பலவர்ணன் என்று பாலி மொழியிலும், வடமொழியிலும் கூறப்பட்டது. பின்னர், மாலிக்காபூர் முதலான முகம்மதியரின் படையெடுப்புக் காலத்தில், தமிழ் நாட்டுப் பார்ப்பனர் சிலர் சிங்கள அரசரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களை ஆதரித்த சிங்கள அரசர் அவர்களைத் தேவாலயங் களில் (பௌத்த ஆலயங்கள் அல்ல - இந்து தேவாலயங்கள்) பூசை செய்ய நியமித்தார்கள், நாளடைவில், காலப் போக்கில், இவர்கள் உப்பலவண்ணனை விஷ்ணுவாக மாற்றிவிட்டனர். தேனவரை நகரத்திலும் பார்ப்பனர் குடியிருந்த செய்தி சாசனங்களினால் தெரிகிறது. தேனவரையில் இருந்த (உபுல்வன்) உப்பலவண்ணனைப் பிற்காலத்தவர் தேனவரை ஆழ்வார் என்றும், தேனவரை நாயனார் என்றும் பெயரிட்டழைத்தனர். சிங்களவர் தேவுந்தர தேவியோ (தேவுந்தர நகரத்துத் தெய்வம்) என்று வழங்கினார்கள். கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தேனவரை நாயனார் கோவில் சீனநாடு வரையில் புகழ்பெற்றிருந்ததென்பதை இந்தச் சாசனத்தினால் அறிகிறோம். (இந்நகரத்தில் முற்காலத்தில் இருந்த வருணன் (உபுல்வன்) கோயிலைப்பற்றியும், வருணன் வழிபாட்டைப் பற்றியும் முன்னைய ‘பொழில்’களில் கூறியுள்ளேன்). 1. ஸ்வ(ஸ்தி) ... ... ... ... ... ... .... .... ... 2. இரா சாதி ராச பரமேசுரன் பூர்ண சந்திரப் பிரகாசன்சீனத்தில் 3. மஹாஇராச இலங்கா ராச்சியத்தில் நாயினார் தேநவரை 4. நாயினார்க்குத் திரு முன் காணிக்கையாக நாயினார்பிரகா 5. சங்கேட்டு தூதர் சிங்வோ உவிங்சுயிங்ங் கையி 6. லே வரக்காட்டினதுII இப்பாசிதம் கேட்ப்பதுII இ 7. ந்தப் புவனத்திலுண்டான பிராணிகளெல்லாம் நாயி 8. னார் கிருபையினாலே சுகமே பரிபாலியா நின்றதுII ஆங்குவரு 9. கிற ரோங்கும் மனித்தரும் தேநவரை நாயினார் திரு அரு 10 ளத்தால் ஒழிந்தாண்டரையேயாள் நின்றதுII இப்படியை 11. த் தேனவரை ஆழ்வார்க்கு காணிக்கை ஆக காட்டினதுII 12. ஆகப்படி பொன் வெள்ளி துலக்கி பட்டு சந்தனம் 13. எண்ணைக் காப்புப் பல காணிக்கைக்கு வகை பொன்ஆயிரம் க 14. ழஞ்சு வெள்ளி அய்ஞ்சாயிரக் கழஞ்சு பல நிறத்துலக்கி அய்ம்பது பல 15. நிறப் பட்டு அய்ம்பது பொன் எழுத்து (காசதார)த் தூசஞ்சுவடு நாலு 16. ந்த சுவடு இரண்டு நீலத் தூசஞ் சுவடு இரண்டு பழஞ்செப்பு சிவ தூபம்இ 17. டுகிற செப்புப் பாத்திரம் அஞ்சு பூக்குத்துகிற செப்புக் 18. கெண்டி பத்துக் கறிக்கால் பத்து குத்து விளக்கிச் சாவான் அஞ்சு கறி 19. க்கால் அஞ்சு மரத்தாலே பொன் பூசின தாமரைப்பூசுவடு ஆறு 20 அகில் வைக்கிற பொன் செப்பு அஞ்சு மெழுகுதிரி சுவடுபத்து 21. எண்ணை இரண்டாய்ரத்து அஞ்ஞூறு கட்டி சந்தன முறி 22. பத்து ஆக இவ்விசைப் படியாலுள்ளது ......நாயினார் 23. தேனவரை நாயினார்க்கு திரு முக்காணிக்கையாகக் குடுக்கவும் II 24. யுங்லொக்கு யாண்டு ஏழா யிரண்டா (ம்ம) டிII1 குறிப்பு :- 6-ஆம் வரி “இப்பாசிதம் கேட்பது” என்பதில் பாசிதம் என்பது பாஷிதம் என்னும் சொல்லின் திரிபு. 8,9 ஆம் வரி “வருகிற ரோங்கும்” என்பதை “வருகிறவ ரோங்கும்” என்று வாசிக்கவும். 12, 14 ஆம் வரிகளில் வருகிற “துலக்கி” என்பது பட்டுத் துணியைக் குறிக்கிறது போலும். 13, 21ஆம் வரிகளில் வரும் “எண்ணை” என்பதனை “எண்ணெய்” என்று வாசிக்கவும். 15ஆம் வரியில் “தூசம்”, என்பது துவசம் என்பதன் திரிபு போலும். துவசம் = கொடி. மேற்படி வரியில் “சுவடு” என்பது இரட்டை எனப் பொருளுள்ள சோடி என்பதன் திரிபாக இருக்கலாம். 21ஆம் வரி இரண்டாயிரத்து அஞ்ஞூறு கட்டி என்று வாசிக்கவும். கட்டி என்பது முகத்தல் அளவை. சீன நாட்டுச் சொல்லாகிய “சட்டிஸ்” என்பதன் திரிபோலும். சந்தன முறி = சந்தன மரத்துண்டு. ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்கள்* (லீடன் செப்பேடுகள்) பெரியச் செப்பேடு1 இராஜராஜசோழன் I. வழங்கியது. இச் செப்பேட்டில் வடமொழிப் பகுதி, தமிழ்ப்பகுதி என்னும் இரண்டுப் பகுதிகள் உள்ளன. வடமொழிப் பகுதியின் தமிழாக்கம் இது:- 1. ஸ்வஸ்திஸ்ரீ. திருமகளின் காஸ்மீரத் தைலம் பூசப்பெற்ற மங்கைச் சுவடுகள் பொருந்திய மார்பையும், சுழலுகின்ற உயர்ந்த தரமலையுடன் உராயும்போது மின்னுகிற பொன்னாலான தோள்வளை களையும், ஒளியினால் மின்னுகின்ற சார்ங்கம் முதலிய படைகளை ஏந்திய... க்கைகளையும், நீலமேனியையும் உடைய மூன்று உலகங்களையும் காத்தருளுகிற திருமால், மேன்மேலும் செல்வத்தை அருள்வானாக. 2. இளம்பிறை சூடிய சிவபெருமான் பெருமாட்டியுடன் கயிலாய மலையில் விளையாடிக் கொண்டிருக்கிற காலம் வரையிலும், திருமால் பாற்கடலிலே அரவணையிலே அறிதுயில் கொண்டிருக்கிற காலம் வரையிலும், உலகங்களுக் கெல்லாம் ஒரே ஒளியாக உள்ள பகலவன் உலகத்தில் இருளை ஓட்டிக் கொண்டிருக்கிற காலம் வரையிலும் சோழர் பரம்பரை துன்பங்களை நீக்கி உலகத்தைக் காத்தருள்வதாக. 3. உலகத்தின் ஒரே கண்ணாக விளங்கும் சூரியனிடமிருந்து, அரசர்களில் முதல்வனாகிய மனு பிறந்தான். அதன் பிறகு அவன் மகன், அரசர்களின் மணிமுடிகள் தீண்டப்பட்ட கால்களையுடைய வாகு பிறந்தான். அவன் குடியில், நற்குணங்களுக்கு உறை விடமானவனும், பிரமனுக்கு நிகரானவனும் லோகா லோகமலை வரையில் உலகத்தை நீதியோடு அரசாண்ட மாந்தாத்ரி பிறந்தான். 4. அவன் மகன் வீரனான முசுகுந்தனாவான். அவனுக்கு, அரச லோகத்தின் சூடாமணி போன்ற வளபன் பிறந்தான். அவன் குலத்திலே, உலகம் முழுவதும் சிபி என்று புகழ் பெற்றவனும், மன்னர்களால் வணங்கப்பட்ட பாதங்களை யுடையவனும் ஆன புகழ்வாய்ந்த அரசன் பிறந்தான். 5. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்த நிறைந்த அறிவுள்ள அந்த அரசனுடைய குணங்களை, கவிகளில் சிறந்த வியாசன் இல்லாமல் வேறு யார்தாம் கூறமுடியும்? 6. இந்தக் குலமாகிய கடலுக்கு முழுநிலா போன்றவனும் பதினாறு கலைகளோடு கூடிய முழு நிலாவைப் போல எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமானவனும் ஆன சோழன் என்பவன் பிறந்தான் இவனுக்குப் பின், இவன் குலத்திலே பிறந்தவர்கள் எல்லோரும் இவனுடைய சோழன் என்னும் பெயரையே சூட்டிக் கொண்டார்கள். 7. அதன்பிறகு எல்லாப் பகைவரையும் வென்ற ராஜகேசரி என்பவனும், அவனுக்குப் பிறகு பகைமன்னரின் நகரங்களை அழிப்பதில் ஊக்கமுள்ள பரகேசரி என்பவனும் பிறந்தார்கள். 8. ராஜகேசரி, பரகேசரி என்னும் பெயர்கள் இந்த அரச குலத்தில் பிறந்தவர்களுக்கு மாறிமாறிச் சூட்டப்பட்டன. 9. இந்தக் குலத்திலே, அரசர்க்கரசனும் பகைவர்கள் எல்லோ ரையும் வென்றவனும் சூரியகுலத்தின் கொடி போன்றவனும் வெல்ல முடியாத காலனையும் போரிலே வென்று பெறமுடியாத காலகாலம் (மிருத்ஜியுத்) என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய சுரகு பிறந்தான். 10. இவனுடைய குலத்திலே, பகை மன்னராகிய யானைகளுக்கு சிங்கம் போன்றவனாகிய புலிக்கொடியோன் (வியாக்கிரகேது) பிறந்தான். இக் குலத்தில், வல்லமையுடைய மன்னன் இரவலர்க்குக் கற்பகமரம் போன்ற பஞ்சபன் பிறந்தான். 11. பகைமன்னருக்குக் காலனைப்போன்ற கரிகாலன் என்னும் அரசன் இக்குலத்திலே பிறந்தான். இவன் காவேரி ஆற்றிற்கு கரைகளைக் கட்டினான். 12. இந்தக் குலத்திலே, நிலைபெற்ற புகழ் படைத்த கோசெங்க ணான் என்னும் அரசன் பிறந்தான். இவன், சிவபெருமானுடைய பாத தாமரையின் (தேனையுண்ணும்) வண்டு போன்றவன். இவன் குலத்திலே கோக்கிள்ளி என்னும் அரசன், - நல்லறிவுள்ளவன் திருவின் செல்வன், மணிமுடி தரித்த மன்னர்களால் வணங்கப் பெற்ற பாதங்களை யுடையவன் - பிறந்தான். 13. இந்தக் குலத்திலே, மிக்க ஆற்றல் வாய்ந்த வெற்றியுள்ள விஜயாலயன் தோன்றினான். இவன் நிலவுலகம் முழுவதையும் வென்றான். இவனுடைய தாமரை போன்ற பாதங்கள் இவனை வணங்கும் மன்னர்களின் முடியில் உள்ள மணிகளின் ஒளியினால் விளக்கம் அடைந்தன. 14. இந்த மலைபோன்ற அரசனிடமிருந்து சூரியன் போன்ற ஒளிமிக்க ஆதித்தியன் தோன்றினான். இவன் வெயில் போன்ற பேராற்றலினால் பகைவராகிய இருட் கூட்டத்தை அழித்தான். 15. கணக்கற்ற மணிக்குவியல்களையும் ஏராளமான ஆற்றலையும் உடைய இவனிடமிருந்து பராந்தகன் என்னும் அரசன் பிறந்தான். இவன், கணக்கற்ற மணிகளையும் மீன்களையும் கொண்ட பாற் கடலிலே வெண்ணிலாத் தோன்றியது போல, முழுச் சிறப்புடன் உலகத்திற்கு நன்மை செய்யத் தோன்றினான். 16. இவன் சக்கரவாளமலை வரையில் உள்ள உலகத்தை வென்று, கலி என்னும் இருட்டை ஓட்டி, எல்லா உலகத்தையும் அமைதி நிலவ அரசாண்டு அநேக நகரங்களை அமைத்து, வெண்மேகம் போன்ற தன் புகழைத் திசை எங்கும் பரப்பினன். 17. சூரியகுலத்தின் கொடிபோன்ற இவன் (பராந்தகன்), தன்னுடைய ஆற்றலினாலே எல்லா இடர்களையும் வென்று அவ்விடங்களிலிருந்து கொண்டுவந்த தூய பொன்னினாலே புலியூரில் (சிதம்பரத்தில்) சிவ பெருமானுடைய விமானத்தை வேய்ந்தான். 18. அரசர்கள் முடி தாழ்த்தி வணங்கப்பட்ட அடிகளையுடைய இந்த அரசனுக்கு, இந்திரன் போன்ற செல்வமும் முத்தீ போன்ற ஒளியும் படைத்த மூன்று மக்கள் தோன்றினர். அவர்கள், ராஜாதித் தியனும் பேர்போன கண்டராதித்தியனும் ஆற்றல் வாய்ந்த அரிஞ்சயனும் ஆவர். இவர்களின் பெயர் மூவுலகத்திலும் புகழ் பெற்றவை. 19. பராந்தகன், தன் பகைவரின் சேனைகளை வென்று புகழ் கொண்டு, அறநெறியில் நடந்து, நீர்சூழ்ந்த நிலவுலகத்தைக் காத்து விண்ணுலகஞ் சென்ற பின்னர், அவன் மகன் இராஜதித்தியன் - ஆற்றல் வாய்ந்தவன், அரசர்களின் முடிகளால் தேயப்பெற்ற பாதங்களையுடையவன் - அரசாண்டான். 20. சூரியகுலத்தின் அணியாக விளங்கிய அந்த வீரனான இராஜதித்தியன் சிறந்ததோர் யானையின்மேல் அமர்ந்து தன் கூரிய அம்புகளைத் திசை எங்கும் எய்து, அஞ்சாத கிருஷ்ணராஜனையும் போர்க்களத்திலே அவன் சேனைகளுடன் கலங்கச்செய்து, (கிருஷ்ண ராஜனுடைய) அம்புகளால் மார்பு பிளக்கப்பட்டு வானவூர்தி ஏறிமூவுலகமும் புகழ வீரசுவர்க்கம் சென்றான். 21. வீரம் மிக்க இராஜதித்தியன் தாமரைபோன்ற முகமுள்ள தெய்வமகளிர்க்கு இன்பந்தரச் சென்ற பிறகு, அவனுடைய ஆற்றலும் புகழும் வாய்ந்த தம்பி கண்டராதித்தியன் பகை என்னும் காரிருளை ஓட்டி உலகத்தை அரசாண்டான். 22. மதுராந்தகன் என்னும் மகனைப் பெற்றுக் காவேரி ஆற்றின் கரைமேல் தன்பெயரினால் ஒரு ஊரை உண்டாக்கி, கண்டராதித்தியன் விண்ணுலகம் சென்றான். 23. அவன் விண்ணுலகம் சென்ற பிறகு, பகைமன்னராகிய காட்டுக்குப் பெருந் தீபோன்ற வீரனாகிய அரிஞ்சயன் உலகத்தை அரசாண்டான். 24. அரிஞ்சயனுக்குப் பராந்தகன் பிறந்தான். இவன் வீரத்தில் முப்புரமெரித்தவனுக்கு நிகரானவன். பகைக்கூட்டங்களை அழித்தவன். தன் நல்ல குணங்களினாலே குடிமக்களை மகிழ்வித்து நிலவுலகத்தை அமைதி நிலவ அரசாண்டான். 25. இவன், சேவூரில் கூர்மையான அம்புகளைத் தன் அழகான வில்லிலிருந்து திசை எங்கும் எய்தும் கூர்மையான வாளை வீசியும் பகைமன்னருடைய மலை போன்ற யானைகளிலிருந்து இரத்த ஆறுகளைப் பாயச் செய்தான். 26. இந்த அரசன் ஆதித்தியன் என்றும் கரிகாலன் என்றும் பெயருள்ள மகனையும் சூரியகுலத்தின் சூடாமணிபோன்ற ராஜராஜன் என்னும் பெயருள்ள மகனையும் பெற்றான். 27. பராந்தகன் தேவலோகத்தை ஆளச்சென்ற பிறகு (இறந்த பிறகு) ஆதித்தியன் உலகத்தை அரசாண்டான். 28. இளைஞனான ஆதித்தியன், மனுகுலத்தின் ஒளி போன்றவன், மதங்கொண்ட யானையோடு சிங்கக்குட்டி விளையாடுவது போன்று, வீர பாண்டியனுடன் இவன் போர் செய்தான், 29. இவ்வரசர் தலைவன் விண்ணுலகஞ் சென்ற பிறகு, கண்டராதித்தியனின் மகன், மகேந்திரன் போன்ற வல்லமை மிக்க மதுராந்தகன் உலகத்தை அரசாண்டான். 30. இந்த அரசன் தேவர்கள் உலகத்தை அரசாளச் சென்ற பிறகு, வீரம் மிக்க சோழர் குலத்தின் விளக்குப் போன்றவன், தன்னை வணங்கும் அரசர்களின் மணிமுடிகளால் தேயப்பெற்ற கால்களை யுடைய ராஜராஜன், ஆதிசேஷனைவிட ஒளியுள்ள தோளின்மேல் ஆட்சிப் பொறுப்பைத் தாங்கி உலகத்தை அரசாண்டான். 31. இவ்வரசன், பாண்டிய துளுவ கேரள நாடுகளையும் சிம்மளேந்திரன் சத்தியாஸ்ரன் முதலியவர்களையும் தன் ஆற்றலி னால் வென்று, அவர்களுடைய யானைகளையும் குதிரைகளையும், மணிகளையும் அரசுகளையும் கைக்கொண்டு தன் புகழினால் பத்துத் திசைகளையும் விளங்கச் செய்தான். 32. நாடுகளையெல்லாம் வென்று அரசர்களைத் தனக்குக் கீழடங்கிய பிறகு, மன்னர் மன்னனாகிய. இராஜராஜன், விண்ணுல கத்தில் இந்திரன் போன்று, தன் நகரத்தில் எல்லோரும் வணங்க பெற்றிருந்தான். 33. சூரியன் தோன்றுகின்ற உதயகிரி வரையிலும், தென் கடல் வரையிலும், அஷ்டமலை வரையிலும், சிவபெருமான் இருக்கிற இமய மலை வரையிலும் உள்ள, தமது குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புகிற அரசர்கள், எல்லா இன்பங்களையும் துய்ப்பதற்காக நித்தியவினோத னுடைய தாமரை மலர் போன்ற பாதங்களை அடைக்கலம் புகுந்தனர். 34. ஆற்றலுடையவனாயும் புகலிடமாயும் இருப்பதனாலே அவன் பாதங்களையடைந்த அரசர்களும் உலகத்திலுள்ள நல்லவர்களும் அவ்வரசனை வரம்பற்ற கொடைவள்ளல் ராஜாஸ்ரயன் என்று கூறுகிறார்கள். (73 - முதல் 86 - வரிகள்) பல நூல்களாகிய கடலின் கரை கண்டவனும், அரசர்களின் மணிமுடிகளிலிருந்து வீசும் ஒளியினாலே பொன்போல் விளங்கும் கால்மணையுடையவனும் ஆன இந்த அரசன் இராஜகேசரிவர்மன் இராஜராஜன் தனது 21 ஆவது ஆண்டில் இதனை வழங்கினான். தன்னுடைய அறிவின் மேன்மையினாலே தேவகுருவை வென்றவனும், கற்றறிந் தவர் என்னும் தாமரைக் காட்டிற்கு ஓர் சூரியன் போன்றவனும், இரவலர்களுக்குக் கற்பகமரம் போன்றவனும், சைலேந்திர குலத்தில் பிறந்தவனும், ஸ்ரீவிஷயநாட்டின் தலைவனும் டதஹா தேசத்தை ஆட்சி செய்பவனும், மகரமுத்திரையுடையவனும், அரசதந்திரம் எல்லாம் அறிந்த சூளாமணிவர்மனின் குமாரனும் ஆன புகழ்பெற்ற மாறவிஜயோத்துங்கவர்மன் என்னும் அரசன், கோயில்களாலும், சத்திரங்களாலும், தண்ணீர் பந்தல்களாலும், பூங்காவனங்களினாலும், மாளிகைகளினாலும் மகிழ்ச்சிக்குரிய தாக விளங்கும் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டின் பட்டனக் கூற்றத்தில் உள்ள உலகத் துக்குத் திலகம் போன்ற நாகப்பட்டனத்திலே, தன் உயரத்தினாலே கனககிரியையும் சிறியதாகச் செய்து தன் அழகினால் வியப்படையச் செய்கிற சூளாமணிவிகாரை என்று தன் தகப்பனார் பெயரால் அமைத்த புத்தர் பெருமான் கோவிலுக்கு (இராஜராஜன்) வழங்கினான். மேற்கூறிய நாட்டில் பட்டனக் கூற்றத்தில் பிடிசூழ்ந்து பிடாகை நடத்தி எல்லையமைத்து யானைமங்கலம் என்னும் ஊரைத் தானமாக (இராஜராஜன்) வழங்கினான். செய்யுள் : 35 - 36. ஆற்றல் வாய்ந்த அரசன் (இராஜராஜன்) தெய்வமான பிறகு (இறந்த பிறகு), அவனுடைய அறிவு வாய்ந்த மகன் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறித் தன் தந்தையாகிய சக்கரவர்த்தியினால் தானமாக வழங்கப்பட்ட ஊரைச் சாசனம் செய்து கொடுத்தான். 37. ஆதிசேஷன் இந்த உலகத்தைத் தாங்குகிற வரையிலும் இந்த விகாரைக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தானம் நிலை பெறுவதாக. 38. நல்லொழுக்கத்துக்கு உறைவிடமான, மிக்க ஆற்றல் வாய்ந்த இந்தக் கடாக தேசத்து அரசன், எதிர்காலத்து அரசர்களை இவ்வாறு வேண்டிக் கொள்கிறான் : “இந்த என்னுடைய அறச்செயலை எக்காலத்திலும் காத்தருளுங்கள்.” 39. உலகத்தில் புகழ்பெற்ற கொட்டையூரில் உள்ள நல்லொழுக்க முடைய குற்றமற்ற வசிஷ்ட குலத்தில் பிறந்த அறிஞர்களைப் பின்பற்றுகிற அனந்தநாராயணன் என்னும் பிராமணன் இந்த பிராஸ்தியைப் பாடினான். 40-42. நீதியோடு அரசாண்ட பகையரசர்களை வென்று ஆற்றல் வாய்ந்த அரசனுடைய உத்தியோகஸ்தனான, காஞ்சி வாயில் என்னும் ஊரில் பிறந்தவன் இராஜராஜ மூவேந்தவேளான் என்னும் பெயர் படைத்த தில்லையாளி என்பவன், அரசன் ஆணைப்படி இந்தச் சாசனத்தை நன்றாக எழுதினான். 43-44. கடாக தேசத்து அரசன் ஆணைப்படி ஸ்ரீமான் அடிகள் மகனான அடக்கமும் அறிவும் உள்ள துவவூரவான் அணுக்கன் என்பவன் இந்தச் சாசனத்தை எழுதச் செய்தான். 45-48. ஹோவ்ய மரபின் திலகம் போன்று, காஞ்சிபுரத்திலே பிறந்து எழுதுவதில் சித்திரகுப்தனுடன் போட்டியிடுகிறவர்களான மிக்க அறிவு வாய்ந்து கிருஷ்ணனுக்குப் பிறந்தும் கிருஷ்ண (கரிய) ஒழுக்கம் இல்லாத ராஜராஜ மகாசார்யன் என்னும் வாசுதேவனும் கிருஷ்ணனுடைய இரண்டு மக்களான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரையை மொய்க்கின்ற வண்டுகள் போன்ற ஸ்ரீரங்கனும் தாமோதரனும், வாசுதேவனின் மகனான தாமரைப் போன்ற கண்களை யுடைய கிருஷ்ணனும், ஆராவமுதன் மகனான பேச்சு வன்மையுள்ள புருஷோத்தமனும் ஆகிய இவ்வைவரும் இந்தச் செப்பேட்டை எழுதினார்கள். 108. “இச் சாசனம் வெட்டினோம் ஐயங்கொண்டசோ 109. ழமண்டலத்து ஸ்ரீகாஞ்சீபுரத்து ஓவியச் சித்திரகாரிய கிருஷ்ணன் வாசுதேவனான ராஜராஜப்பே 110. ராசார்யனேனும் கிருஷ்ணன் திருவரங்கனும் கிருஷ்ணன் தாமோதரனும் வாசு தேவன் கிருஷ்ணனும் 111. ஆராவமிர்து புருஷோத்தமன்னும்.” ----- தமிழ்ப்பகுதியின் வாசகம் இது : (முதல் ஏடு, முதல் பக்கம்) 1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோநேரின்மை கொண்டான் க்ஷத்ரியஸிஹா மணி வளநாட்டு 2. ப்பட்டனக் கூற்றத்து நாட்டார்க்கும் பிரமதேயக் கிழவர்க்கும் தேவதானப் பள்ளி 3. ச்சாந்தக்கணி முற்றூட்டு வெட்டப் பெற்றூர்களிலார்க்கும் நகரங்களிலார்க்கும் 4. நமக்கு யாண்டு இருபத்தொன்றாவது நாள்தொண்ணூற்றி ரண்டினால் 5. தஞ்சாவூர்ப் புரம்படி மாளிகை ராஜாஸ்ரயனில் தெற்கில்மண்டபத் 6. து நாம் இருக்கக் கிடாரத்தரையன் சூளாமனிமன்னன் க்ஷத்ரியசிஹா 7. மணி வளநாட்டுப் பட்டநக் கூற்றத்து நாகப்பட்டனத்து எடுப்பிக்கின்ற சூளா 8. மணிபன்ம வி ஹாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்கு க்ஷத்ரிய சிஹாமணிவ 9. ளநாட்டுப் பட்டநக் கூற்றத்து ஆனைமங்கலம் பள்ளிச்சந்தம் இறங்கலுள்பட அள 10. ந்தபடி நீங்கல் நீக்கி நிலன் தொண்ணுற்றேழே யிரண்டுமா முக்காணி யரைக்கா (முதல் ஏடு, இரண்டாம் பக்கம்) 11. ணி முந்திரிகைக்கீழ் மூன்றுமா முக்காணி முந்திரிகைக்கீழ் அரையேயிரண் 12. டுமாவினில் இறைகட்டின காணிக்கடன் நெல்லு எண்ணாயிரத்துத் தொள்ளாயி 13. ரத்து நாற்பத்து முக்கலனே இருதூணிக்குறுணி ஒரு நாழியும் கடாரத்தரையன் 14. க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத்தெடுப்பி 15. க்கின்ற சூளாமணிபன்மா விஹாரத்துப் பள்ளிக்கு இருப்பதாக யாண்டு இருபத் 16. தொன்றாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக்குடுக்க 17. வென்று நாம் சொல்ல நம் ஓலை எழுதும் நித்தவிநோத வளநாட்டு ஆ 18. வூர்க்கூற்றத்து விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தக்காரன் எழுத்தினாலும் நம்ஓ 19. லை நாயகன் உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தச் சதுர்வே 20. திமங்கலத்து கிருஷ்ணன் இராமனான மும்மடி சோழ பிரஹ்ம மஹாராயனும் நித்த (இரண்டாம் ஏடு, முதல் பக்கம்) 21. வினோத வளநாட்டு பாம்புணிக் கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்ல 22. வயனான மும்மடி சோழ போசனும் அருமொழி தேவவள நாட்டு நென்மலி நாட்டுப் பரு 23. த்திக்குடையான் வேளான் உத்தமசோழனான மதுராந்தக மூவேந்த வேளானும் 24. ஒப்பினாலும் புக்க நந்தீட்டினபடியே வரியிலிட்டிக் கொள்கவென்று 25. நம் கருமமாராயும் ஆரூரன் அரவணையானான பராக்கிரமசோழமூவே 26. ந்த வேளானும் தத்தன் சேந்தனான செம்பியன் மூவேந்த வேளானு 27. ம் அருங்குன்ற முடையான் மாப்பேறன் பொள்காரியும் நடுவிருக்கும் புள்ள 28. மங்கலத்துப் பரமேஸ்வரபட்ட சர்வ்வகிரது யாஜியும் கடலங்குடித் தாமோதர பட்டனு 29. ம் நம் கருமமாராயும் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுத் திருநரையூர் நாட்டுக்கற்குடை 30. யான் பிசங்கன் பாளூரான மீனவன் மூவேந்த வேளானும் அருமொழிதேவ வளநாட்டு (இரண்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 31. ப் புறங்கரம்பைநாட்டு வங்கநகருடையான் சங்கரநாராயண அரங்கனும் நடுவி 32. ருக்கும் வெண்ணைநல் லூர்த் தம்மடிபட்டனும் பசலைத் தியம்பகபட்டனும் சொ 33. ல்லப் புரவுவரிக் கிளிநல்லூர் கிழவன் கொற்றன் பொற்காரியும் கழுமலமுடை 34. யான் சூற்றியன் தேவடியும் பழுவூருடையான் தேவன் சாத்தனும் 35. கள்ளிக்குடையான் அணையன் தளிக்குளவனும் வரிப்பொத்தகம் சா 36. த்தனூருடையான் குமரன் அரங்கனும் பருத்தியூர் கிழவன் சிஃகன் வெ 37. ண்காடனும் இருந்து யாண்டு இருபத்தொன்றாவது நாள் தொண்ணூhற்றா 38. றினால் பள்ளிச்சந்தம் இறையிலியாக வரியிலிட்டுக் குடுத்த தங்கனாட்டுப்பட்டன 39. க் கூற்றத்து ஆனைமங்கலம் அளந்தபடி நீங்கல் நீக்கி நிலன்தொண் ணூhற்றே 40. ழேயிரண்டு மாக்காணி யரைக்காணி முந்திரிகைக் கீழ்மூன்றுமா முக்காணி 41. முந்திரிகை கீழரையே யிரண்டுமாவும் பிடிசூழ்ந்து பிடாகை நடப்பிப்பதாகக் கண்காணிநடு (மூன்றாம் ஏடு, முதல் பக்கம்) 42. விருக்கும் வெண்ணைநல்லூர்த் தம்மடிபட்டனையும் பட்டன் க்ஷத்திரியசிஹாமணி வ 43. ளநாட்டுத் திருநறை யூர்நாட்டு ஸ்ரீ துங்கமங்கலமான அபிமானபூஷணச் சதுர்வே 44. திமங்கலத்துத் தூற்பில் ஸ்ரீதர பட்டனையும் இந்நாட்டு வேளநாட்டுத் திருநல்லூ 45. ர் பார்க்குளத்துப் பற்பநாப பட்டனையும் இவ்வூர் பேரேமபுறத்து வெண்ணைய 46. பட்டனையும் ராஜேந்திர சிம்மவளநாட்டு காரநாட்டுத்தனியூர் ஸ்ரீவிரநாராய 47. ணச் சதுர்வேதிமங்கலத்து துவேதை கோமபுரத்து நந்தீஸ்வரபட்டனையும் புரவுவ 48. ரி கள்ளிக்குடையான் அணையன் தளிக்குளவனையும் பேர்த்தந்தோன் தா 49. ங்களும் இவர்களோடு நின்று எல்லை தெரித்துப் பிடிசூழ்ந்து பிடாகை நடந்து கல்லு 50. ங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து போத்தகலென்னும் வாசத்தால் மந்திர 51. வோலை விளைத்தூர்கிழவன் அமுதன் தீர்த்தகரன் எழுத்தினாலும் மந்திரவோலைநா (மூன்றாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 52. யகன் கிருஷ்ணன் இராமனான மும்மடி சோழ பிரஹ்மஹாராயனும் அரைசூருடை யான் ஈ 53. ராயிரவன் பல்லவயனான மும்மடிசோழபோசனும் பருத்திக்குடையான் 54. வேளான் உத்தமசோழனான மதுராந்தக மூவெந்தவேளா 55. னும் ஒப்பினாலும் திருமகள் போலப் பெருநிலச் செல்வியு 56. ந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர் 57. ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் நு 58. ளம்ப பாடியுந் தடிகை பாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங்கலி 59. ங்கமும் எண்டிசை புகழ் தர ஈழமண்டலமுந் திண்திறல் வென்றித்தண் 60. டார் கொண்டு தன்னெழில் வளர் ஊழியுளெல்லா யாண்டுந்தொ 61. ழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத்தேசு கொள் ஸ்ரீகோவி (நாலாம் ஏடு, முதல் பக்கம்) 62. ராஜராஜகேசரிவர்ம்மரான ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு இருபத்தொன்றாவது நாட்டோ 63. முக்குத்திருமுகம் வர நாட்டோமுந் திருமுகங்கொண்டு எதிரெழுந்து சென்று தொழுதுவா 64. ங்கித் தலைமேல் வைத்துப்பிடி சூழ்ந்துபிடாகை நடந்து எல்லை தீர்த்து கல்லு 65. ங் கள்ளியு நாட்டி அறவோலை செய்த நிலத்துக்குக் கீழ்பாற்கொல்லை க்ஷத்ரி 66. ய சிஹாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துக் கோவூர் மேலெல்லை 67. கோவூர்த்தச்ச னிலத்துக்கும் கோவூர்க் காவிதியோடைக்கும் மேற்குந் 68. தெற்கினும் இவ்வூர்ப் புகையுண்ணியென்னும் நிலத்துக்கு மே 69. ற்கும் தெற்கின்னும் இவ்வெல்லையே கிழக்கு நோக்கிப்போய் இன்னிலத் 70. துக்கு தெற்கின்னும் புகையுண்ணியென்னும் நிலத்துக்கு மேற்கும் தெ 71. ற்கின்னும் மேற்கின்னும் புகையுண்ணிக்குப் பாயும் வாய்க்காலின் மேலைய (நாலாம் ஏடு. இரண்டாம் பக்கம்) 72. ரைக்காலில் நாற்றுக்காலாக அட்டிக் கிடந்த சிறுவரம்புக்கு வடக்கும் இன்னும் இவ்வரை 73. க்காலிலேய் மேற்கு நாற்றுக்காலாக அட்டிக்கிடந்த சிறு வரம்புக்கு மேற்கும் இன்னும் 74. இந்நாற்றுக்காலுக்கேய் தெற்கு வரம்பாக அட்டிக்கிடந்த வரம்புக்கு வடக்கும் இன்னும் 75. ம் இவ்வரைக்காலின் மேல்வரம்புக்கு மேற்கும் இன்னும் இன்னும் இவ்வரைக்கா 76. லின் தெற்கில்ப் புகையுண்ணியரைக்காலுக்கு மேற்கும் இன்னும் இத 77. ன் தெற்கில் கோவூர்க்குசவ நிலன் ஒருமாவரைக்கு மேற்கும் இதன் தெற்கில் 78. ஒருமாவரைக்கு மேற்கும் இதன் தெற்கில் ஓடையில் நடுவுக்குத் தெற்கும் இன் 79. னும் இக் கோவூர் எல்லைக்கு மேற்கும் தெற்கின்னும் கோவூர் வெள்ளாளன் அ 80. ரைசூர் மறியாடி ஒருமாவுக்கு மேற்கும் இதன் தெற்கில் ஓடை நடுவுக்குத்தெற்கும் இ 81. வ்வோடையே தென்கிழக்கு நோக்கிப் போய் மேற்பள்ளவாய்க்கால் இவ்வோ (ஐந்தாம் ஏடு, முதல் பக்கம்) 82. டைக்கோய் விழுந்த இடத்துக்கு மேற்கும் இன்னும் மேற்பள்ள வாய்க்காலின்தென் 83. கரைக்கு தெற்கும் கோவூர் மேல்பள்ளத்து மேல்வரம்புக்கு மேற்கும் இவ்வூர் மே 84. ல்பள்ளத்து வெள்ளாளன் உறாப்பழி பாக்கர அரைக்காலில் வடவரம்புக்குவ 85. டக்கும் இவ்வரைக்காலின் மேலை ஓடையின் நடுவுக்கும் வெள்ளாளன் ப 86. ரமேஸ்வரன் நறையூர் அரைக்காலுக்கு மேற்கும் இவ்வோடையின் நடு 87. வுக்கு மேற்கும் கோவூர் வெள்ளாளனைய்யாறன் சேந்தன் அரைக்காலின் 88. கொத்தத்து இவ்வோடைக்கே - மேற்கும் இவ்வரைக்காலுக்குத் தெற்கு 89. ம் மேல்பள்ள நிலத்தின் கொத்தத்து இவ்வோடைக்கேய் மேற்கும் இவ்வோ 90. டைஇறிவட்டி வாய்க்காலுக்கேய் விழுந்த இடத்துக்கு மேற்கும் இவ்வேரிவட்டிவாய்க்கா 91. லுக்கே மேற்கும் இன்னும் இவ்வேரிவட்டி வாய்க்காலுக்கேய் தெற்கும் இவ்வே (ஐந்தாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 92. றிவட்டி வாய்க்காலுக்கே மேற்கும் தென்பாற்கெல்லை இவ்வேறி வட்டிவா 93. ய்காலுக்கு வடக்கும் இவ்வேரிவட்டி வாய்க்காலே மேற்கு நோக்கிச்செ 94. ன்று இவ்வாய்க்காலை யூடறுத்துத் தென்கரைக்கேயேரி தெற்கின்னு 95. ம் இவ்வானை மங்கலத்து பிரமதேயத்துப் படுகை வேலி நில 96. த்தின் மேலெல்லையே சென்று தென்மடலாய்க்கிடந்த ஓடைக் 97. கு மேற்கும் இவ்வெல்லையே தெற்கு நோக்கிச் சென்று மேற்கி 98. ன்னும் இவ்வோடைக்கேய் வடக்கும் இன்னும் இவ்வோடைக்கு 99. வடக்கு நோக்கியேரிவட்டி வாய்க்காலுக் கேயுற்றதற்கு கிழக்கும் இவ்வேரிவட்டி 100. வாய்க்காலை யூடறுத்து வடகரையே யேறி இவ்வாய்க்காலின் வடகரையே 101. மேற்கு நோக்கிச்சென்று இவ்வாய்க்காலுக்கு வடக்கும் இவ்வெல்லையேய் (ஆறாம் ஏடு, முதல் பக்கம்) 102. மேற்கு நோக்கிச் சென்று இவ்வாய்க்கால்தான் கிடந்தவாறே மேற்கு நோக்கி இந்நாட்டுப் 103. பட்டனக் கூற்றத்து பிரமதேயம் சீவளைக்குடியில் நிலன் நான்மாவில் வடவரம்பேயுற் 104. று இவ்வரம்பே மேற்குநோக்கிச்சென்று இவ்வழிக்கு வடக்கும் இவ்வெல்லை 105. யே மேற்கு நோக்கிச்சென்று பழவிளப்பான ஓடையேயுற்ற இவ்வெல்லை 106. க்குவடக்கும் மேல்பாற்கெல்லை வடக்கும் நோக்கி நாட்டுப் போக்குதலை 107. வாயர் வெட்டப் பேற்றுக் கிழக்கும் வடக்கின்னும் இன்னாட்டுப்பட்ட 108. னக்கூற்றத்து முஞ்சி குடி நிலத்தின் கீழெல்லையா ஓடையேற்றுஇவ் 109. வோடையின் நடுவேய் வடக்கு நோக்கிச் சென்று இவ்வோடையுள்ளப்பட இவ்வோ 110. டைக்குக் கிழக்கும் இவ்வோடைதான் கிடந்தவாறேய் வடக்கு நோக்கி இம்முஞ்சிக்கு 111. டி நிலமேயுற்று இம்முஞ்சிகுடிக்குக் கீழெல்லையான ஓடையேயுற்று வடக்கின் (ஆறாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 112. னும் இவ்வெல்லைக்குக் கிழக்கும் இவ்வோடைதான் கிடந்தவாறேய் பலமுடொக்குழு 113. டொங்கி வடக்கு நோக்கி இம்முஞ்சிகுடி நிலமேயுற்று இம்முஞ்சிகுடிங்குக்கீழெல்லையான 114. ஓடையேவடக்கின்னும் இவ்வெல்லைக்குக் கிழக்கின்னும் இவ்வோடைதான் கி 115. டந்தவாறேய் வடக்குநோக்கிச் சென்று இதனை விட்டு இம்முஞ்சிகுடி வெள்ளாள 116. ன் இராமன் கோவிந்தன் நான்மாவின் தென்வரம்பேயுற்று இவ்வெல்லையே வ 117. டக்கு நோக்கிச்சென்று இம்முஞ்சிகுடி பிரமதேயமான நிலத்தின்தென் வரம்பே 118. யுற்று இதனுக்குத்தெற்கும் இதனுக்கேய் கிழக்கும் இன்னும் இம்முஞ்சிகுடி 119. பிரமதேயம் நிலத்துக்கேய் வடக்கும் இவ்வெல்லையே வடக்கு நோக்கிச்சென்று இ 120. ம்முஞ்சிகுடி வெள்ளாளன் வகைக் கீழெல்லையான நிலத்துக்குக் கிழக்கும் இவ் 121. வெல்லையே வடக்குநோக்கிச் சென்று வடமேற்கு நோக்கி முஞ்சிகுடி ஊதாரிமய (ஏழாம் ஏடு, முதல் பக்கம்) 122. க்கலென்னும் நிலமேயுற்று இன்னிலத்தின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் இதன் வட 123. வரம்பேய் மேற்கு நோக்கிச் சென்று வடவரம்புக்கு வடக்கும் இச்செயின் மேலைப்ப 124. றையோடை வடக்கு நோக்கிச் சென்று இவ்வோடைக்குக் கிழக்கும் இவ்வோடையேவட 125. க்கு நோக்கிச்சென்று இவ்வானை மங்கலத்துக்குப் பாயக்கல்லின ராஜ 126. ராஜன் வாய்க்காலேயுற்று இவ்வாய்க்காலை யூடறுத்து வடகரைக்கேயேறி 127. இவ்வானை மங்கலத்து பிரமதேயத்துக்குக் காலவாயென்னும் நிலத்தி 128. ன் கீழ்வரம்புக்குக் கிழக்கும் வடக்கும் நோக்கிச் சென்றும் கிழக்கு நோக்கிச்செ 129. ன்றும் இவ்வானை மங்கலத்து பிரமதேயத்துக் கிளான் கிளான் காற்செயின்தென் வ 130. ரம்பேயுற்றுத் தென்கிழக்கு நோக்கிச் சென்று இதனின்று வடகிழக்கு நோக்கியும் 131. கிழக்கு நோக்கியும் சென்ற எல்லைக்குத்தெற்கும் கிழக்கும் இதன் வடவரம்பேய் (ஏழாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 132. வடமேற்கு நோக்கிச்சென்று இதனுக்கு வடக்கும் இன்னும் இவ்வானை மங்கலத்து 133. பிரமதேயத்து ஆரிதன்சிறியான் கடம்பன் மூன்றுமாவின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் வ 134. டபாற்கெல்லை இச்செயின் தென்வரம்பே கிழக்கு நோக்கிச் சென்று இதனுக்குத்தெற்கு 135. ம் இந்நாட்டுப் பட்டனத்துக்கூற்றத்து பிரமதேயம் பிரம்பில் கொட்டிடலான நிலத் 136. தின் எல்லையே கிழக்கு நோக்கிச் சென்று இவ்வானைமங்கலத்து பிரமதேய 137. த்து வாச்சியன் பரமேஸ்வரன் பூவன் நிலத்தின் மேல்வரம்பே யுற்றதற்குத் 138. தெற்கும் இந்நிலத்துக்கேய் மேற்குந் தெற்கும் கிழக்கும் இந்நிலத்து பிரமதேயம் 139. பிரம்பில் கொட்டிடலான நிலத்தின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் இவ்வரம்பேய் வடக்கு நோக்கிச் 140. சென்று விளப்பென்னும் ஆற்றின் தென்கரையேயுற்றுத் தென்கரைக்குத் தெற்கும் இக்கரை 141. யே கிழக்கு நோக்கிச் சென்று இவ்வானை மங்கலத்து மகாதேவர் தேவதானமான ஒ (எட்டாம் ஏடு, முதல் பக்கம்) 142. ருமாவரையின் மேல்வரம்பேயுற்று இவ்வரம்புக்கு மேற்கும் இவ்வரம்பேய் தெற்கு 143. நோக்கி இத்தேவர் தேவதானமான முள்ளி வரவையின் மேல்வரம்பேயுற்று இ 144. வ்வரம்புக்கு மேற்கும் இவ்வரம்பே தெற்கு நோக்கியுங்கிழக்கு நோக்கியுஞ் செ 145. ன்று இத்தேவர் குளமேயுற்று இத்தேவர் குளத்துக்குப் பாயும் வாய்க்கா 146. லின் மேல்வரம்பே தெற்கு நோக்கிச் சென்று இத்தேவர் தேவதானங்க 147. ணவதிகாலான நிலத்தின் மேல்வரம்புக்கு மேற்கும் இக்கணவதிகாலான 148. தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று இவ்வரம்புக்குத் தெற்கும் இத் 149. தேவர் தேவதானமான மெழுக்குப்புறம் ஒருமாவின் மேல்வரம்புக்கு மேற்கும் இவ்வொரு 150. மாவின் தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று இவ்ரம்புக்குத் தெற்கும் இத்தே 151. வர் தேவதானம் முக்காணியின் தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று பத் (எட்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 152. தல் வாய்க்காலே யுற்றதற்குத்தெற்கும் இப்பத்தல் வாய்க்காலின் மேல் கரையேவ 153. டக்கு நோக்கிச் சென்று விளப்பேயுற்றதற்குக் கிழக்கும் இவ்விளப்பையூடறு 154. த்து வடகரைக்கேயறி இந்நாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேய மூங்கிற் 155. குடியெல்லையேயுற்று இவ்வெல்லையே வடக்கு நோக்கியுங் 156. கிழக்கு நோக்கியுஞ் சென்று இதனுக்குக் கிழக்குந் தெற்கும் இன் 157. னும் இம்மூங்கிற்குடி நிலத்துக்கேய் மேற்கும் இவ்வெல்லையே 158. தெற்கு நோக்கி விளப்புக்கேயுற்று விளப்பையூடறுத்துத் தென் 159. கரைக்கே யேறித் தென்கரையே கிழக்கு நோக்கிச்சென்று இந்நாட்டுக்கோவூ 160. ர்க் கணவதிமயக்கலான நிலத்தின் மேல்வரம்பே யுற்றதற்குத் தெற்கும் இக்க 161. ணவதி மயக்கலான நிலத்தின் மேல்வரம்புக்கு மேற்கும் இக்கணவதிமயக்க 162. லின் தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று இந்நாட்டுப் பட்டனக்கூற்றத்து (ஒன்பதாம் ஏடு, முதல் பக்கம்) 163. பிரமதேயம் நல்லூர்ச்சேரிக்குப் பாயும் வாய்க்கா லையுற்றதற்குத் தெற்கும்இவ் 164. வாய்க்காலின் தென்கரையேய் கிழக்கு நோக்கிச் சென்று இந்நாட்டுக்கோவூர் 165. வெள்ளாளன் உருப்பழி பாக்கர னொருமாவின் தென்வரம்பேயுற்று இத்தென் 166. வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று கோவூர் முன்றுடங்கின தச்சன்னிலத்துக்கேயு 167. ற்றதற்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான் கெல்லையு மகப்பட்ட நீர்நிலனு 168. ம் புன்செயும் ஊரும் ஊரிருக்கையுங் குளமும் ஸ்ரீ கோயில்களும் பறைச்சேரி 169. யுங் கம்மாண்சேரியுஞ் சுடுகாடும் பெறுவதாகவும் இவ்வூர் மனையும் ம 170. னைப் படைப்பையுங் கடையுங் கடைத்தெருவும் மன்றுங் கன்றுமேய்பாழுங்கு 171. ளமுங் கொட்டகாரமுங்கிடங்குங் கேணியும் புற்றுந்தெற்றியுங் காடும் பீடிலிகையுங் க 172. ளரும்உவரும் ஆறும் ஆறிடுபடுகையும் ஓடையும் உடைப்பும் மீன்பயில் பள்ளமுந்தேன்ப 173. யில் பொதும்பும் மேல்நோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும் உள்ளிட்டுநீர்பூசி நெ 174. டும் பரம்பெறிந்து உடும்போடியாமை தவழ்ந்த தெவ்வகைப்பட்டதும் உண்ணிலமொ 175. ழிவின்றிக் காராண்மை மீயாட்சியும் மிகுதிக்குறையு முள்ளடங்க இப்படிப்பெற்றத 176. ற்குப் பெற்ற வியவஸ்தை இன்னிலத்துக்கு நீர்க்கீந்தவாறு வாய்க்கால் குத்திப் 177. பாய்த்தவும் வாரவும் விடவும் பெறுவதாகவும் இன்னிலத்துக்கு 178. ப் பாயும் வாய்க்கால்கள் மேனடைநீர்பாயவும் வாரவும் பெறுவ 179. தாகவும் இவ்வாய்க்கால்கள் அன்னியர் குறங்கறுத்துக் குத்தவும் 180. விலங்கடைக்கவுங் குற்றேத்தம் பண்ணவுங் கூடைநீ ரிறைக்கவும் 181. பெறாததாகவுஞ் சென்னீர்ப் பொதுவினை செய்யாததாகவும் அன்னீரடைத்துப்பா 182. ச்சப் பெறுவதாகவுஞ் சுட்டோட்டால் மாடமாளிகை யெடுக்கப்பெறுவதாகவுந் 183. துரவு கிணறு இழிச்சப்பெறுவதாகவுங் காவு தெங்கிடப்பெறுவதாகவுந் தமநக 184. மும் மருவுமிருவேலியுஞ் செண்பகமுஞ் செங்கழுநீரும் மாவும் பலாவுங் கமுகும் பனை (பத்தாம் ஏடு, முதல் பக்கம்) 185. யுங் கொடியுமுள்ளிட்ட பல்லுருவில் பயன்மரமிடவுந் நடவும் பெறுவதாகவும் பெரு 186. ஞ் செக்கிடப்பெறுவதாகவும் இவ்வூர் நிலத்தையூ டறுத்துப் புறவூர்களுக்குப் போய் 187. நீர்பாயும் வாய்க்கால்கள் மேனடைநீர் பாயவும் வாரவும் பெறுவதாகவும் புறவூர் நி 188. லத்தூடு போந்து இவ்வூர் நிலத்துக்குப் பாயும் வாய்க்கால்கள் மேன 189. டை நீர் பாயவும் வாரவும் பெறுவதாகவும் இவ்வூரிட்ட தெங்கும் பனையும்ஈ 190. ழவரேறப்பெறாததாகவுந்தன் குடிக்கேற்ற வண்ணம் முரைசும் முப்படித் தோ 191. ரணமும் நாட்டப்பெறுவதாகவும் இப்படி பெற்றதற்குப் பெற்ற பரிஹாரந்நாடாட்சி 192. யும் ஊராட்சியும் வட்டிநாழியும் பிடாநாழியுங் கண்ணாலக் காணமும் வண்ணாரப்பாறை 193. யுங் காசுக் காணமுந் நீர்கூலியும் இலைக்கூலியுந் தறிப்புடவையுந்தரகுந்தட்டார்ப்பாட்ட 194. மும் இடைப்பாட்டமு மாட்டுக்கிறையும் நல்லாவுந் நல்லெருதுந் நாடுகாவலும் ஊடுபோ (பத்தாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 195. க்கும் விற்பிடியும் வாலமஞ்சாடியும் உல்கும் ஓடக்கூலியும் மன்றுபாடும் மா 196. விரையுந் தீயெரியும் ஈழம்பூட்சியும் கூத்திக்காலும் உள்ளிட்டுக் கோத்தொட்டுண் 197. ணப் பாலதெவ்வகைப் பட்டதுங் கோக்கொள்ளாதேய் பள்ளிச்சந்தத்துக்கே 198. ய் பெறுவதாகவும் இப்படி பெற்ற வியவஸ்தையும் பரிஹாரமும் 199. பெற்ற இந்நிலங் காராண்மை மீயாட்சியும் மிகுதிகுறைமையு முள்ள 200. டங்கப் பட்டனக் கூற்றத்து நாகபட்டனத்துக் கடாரத்தரையன் எடுப்பி 201. க்கின்ற சூளாமணிப் பன்மவி ஹாரத்துப் பள்ளிக்குப் பள்ளிச்சந்தமி 202. றையிலியாகக்குடுத்த இன்னாட்டு ஆனைமங்கலம் பள்ளிச்சந்த இறங்கலு 203. ள்பட யாண்டு இருபத்தொன்றாவது முதல் பிடிசூழ்ந்து பிடாகை நடந்து கல்லு 204. ங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து குடுத்தோம். க்ஷத்ரியசிகாமணி வ (பதினோராம் ஏடு, முதல் பக்கம்) 205. ளநாட்டுப்பட்டனக் கூற்றத்து நாட்டோம் நாட்டாரோடும் உடனின்று பிடிசூழ்ந்து பிடாகைநடந்துகல் 206. லுங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து குடுத்தேன் புரவுவரி கன்ளிக்குடையான் அணயன் 207. தளிக்குளவனேனிவை யென்னெழுத் தென்றும் இவ்வானை மங்கலம் பிடி சூழ்ந் 208. துபிடாகை நடக்கிறபோது ஆனையேறி இன்னாட்டாரோடும் உடனின்றெல்லை 209. தெரித்துக் காட்டினேன் இவ்வானை மங்கலத் திருக்கும் வெள்ளாளன் கோன்புத் 210. தனேனிவையென் னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து 211. அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூ 212. ற்றத்து பிரமதேயங் கடம்பனூர் சபையோம் இவர்கள் சொல்ல இவ்வூர் மத்தியஸ்தன் முப்பத்திரு 213. வன் யஜ்ஞனான கற்பகாதித்தனேனிவை யென்னெழுத்தென்றும் இக்கடம்ப னூரார்சொ 214. ல்ல இவ்வூர் வைகாநசன் நாராயணன் தாமோதரனேனிவை யென்னெழுத்தென் (பதினோராம் ஏடு, இரண்டாம் பக்கம்) 215. றும் இப்படி பிடாகை நடந்து பிடி சூழ்ந்து அறவோலை செய்து குடுத்தோம் 218. ஹ்ம மங்கல்யனேனிவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து அறவோ 219. லை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூ 220. ற்றத்து வேலங்குடி வேலங்குடியான் நாராயணன் ஒற்றியேன் 221. இவையென் னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்த பிடாகை நடந்து அ 222. றவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்ற 223. த்து பிரமதேயம் மூங்கிற்குடி சபையோம் இவ்வூர் மத்யஸ்தன் குணவன் ந 224. ந்தியான அலங்காரப் பரியனேனிவை யென்னெழுத் தென்றும் இப் (பன்னிரண்டாம் ஏடு, முதல் பக்கம்) 225. படி பிடி சூழ்ந்த பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகா 226. மணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நரிமன்றத்து ஊரோம் ஊரார் சொல்ல எழு 227. தினேன் இவ்வூர் மத்யஸ்தன் ஐம்பத்திருவன் விடேல் விடுகனேன் இவை என் 228. னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை 229. செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துச் 230. சாத்தமங்கலத் தூரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் வே 231. ட்கோவன் நெதிரன் சாத்தனான நானூற்றுவப் பெருங்கோவேளா 232. னேனிவை யென்னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அற 233. வோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத் 234. து பிரமதாயம் சந்நமங்கலத்து சபையோம் சபையார் சொல்ல எழுதினேன். (பன்னிரண்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 235. இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் துருக்கன் கமுதனேனிவை யென்னெழு 236. த்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோ 237. ம் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் கொட்டாரக்குடி ச 238. பையோம் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஊரன் சந்திரசேகர னான 239. பிரம மங்கல்யனேன் இவையென்னெழுத்தென்றும் இப்பிடி பிடி சூழ்ந்து 240. பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணிவள 241. நாட்டுப் பட்டனக் கூற்றத்துக் கோவூர் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் 242. இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஐயனைய னேனிவை யென்னெழுத்தெ 243. ன்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகைநடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரி 244. யசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து உத்தூர் ஊரோம் ஊரார் சொல்லவெ (பதின்மூன்றாம் ஏடு, முதல் பக்கம்) 245. ழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் நக்கன் முள்ளியேனிவை யென் 246. னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத் 247. தோம் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் நன்னிமங்க 248. லத்து சபையோம் சபையார் சொல்ல இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் 249. கண்ணன் அலங்காரப் பிரியனேனிவை யென் னெழுத்தென்றும் இ 250. ப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரிய 251. சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் போருவனூர் சபை 252. யோம் சபையார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் வேட்கோவ 253. ன் மாதேவன் ஊரனேனிவை யென்னெழுத்தென்று இப்படி பிடி சூழ்ந்து பிடா 254. கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டன (பதின்மூன்றாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 255. க்கூற்றத்து ஆளங்குடி ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேனிவ்வூர்க் கரணத்தான் கா 256. சியபன் சூர்யன ரங்கனேன் இவை என்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பி 257. டாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூ 258. ற்றத்துத் துறையூர் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தா 259. ன் பாரத்வாஜி திரித்தி வைகுண்டன் எழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடா 260. கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட் 261. டனக் கூற்றத்து பிரமதேயம் பிரம்பில் சபையோர் இவ்வூர்க் கரணத் தான்மத்ய 262. ஸ்தன் குணவன் நந்தியான அலங்காரப் பிரியனேன் இவையென்னெழுத்தென்று 263. ம் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் கடம்பங் குடியூரோ 264. ம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தான் மத்யஸ்தன் குணவன் நந்தியான அல (பதினான்காம் ஏடு, முதல் பக்கம்) 265. ங்காரப் பிரியனேன் இவையென்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து அற 266. வோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து சேந்தமங் 267. கலத்து ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் மத்யஸ்தன் ஊரான் ஐயனே 268. னிவை என்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செ 269. ய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துச் சிறுச்சேந்தமங்க 270. லத்து எட்டி வலஞ்சுழியன் சங்கனேன் இவையென்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ் 271. ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு 272. ப் பட்டனக் கூற்றத்துக் குற்றாலத்தூரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தான் 273. வேட்கோவன் தேவன்ஊரனேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடா 274. கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டி (பதினான்காம் ஏடு, இரண்டாம் பக்கம்) 275. னக் கூற்றத்துத் திருநாவூர் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் மத்யஸ்த 276. ன் சதுர்முகனரங்கத்தேனிவை என்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து 277. பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட் 278. டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் உவர்க்குடி சபையோம் சபையார் சொ 279. ல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் வேட்டுகோவன் மாநாகன் நா 280. ராயண னேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பி 281. டாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாம 282. ணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து முஞ்சிக்குடி ஊரோம் ஊரார் சொ 283. ல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தான் வேட்டுக்கோவன் மாநாகன் கண்ண 284. னேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அ 285. றவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து தி (பதினைந்தாம் ஏடு, முதல் பக்கம்) 286. ருக்கண்ணங்குடி சபையோம் சபையார் சொல்ல வெழுதினேன் இவ்வூர்க் காரணத் 287. தான் வேட்கோவன் அதிராமன் இருபத்து நால்வ னாகியமுன்னூற்றுவனே 288. னிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை 289. செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் 290. கூற்றத்து கடம்பவல வாட்கை ஊரோம் ஊரார் எழுதினேன்இ 291. வ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஊரானூரானேனிவை என்னெழு 292. த்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து 293. குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து 294. ப் பாளங்கொற்றங்குடி ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தா 295. ன் மத்யஸ்தன் ஊரானூரனேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ் 296. து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு (பதினைந்தாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 297. ப் பட்டனக் கூற்றத்து வெண்கிடங்கில் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கர 298. ணத்தான் மத்யஸ்தன் ஊரான் நக்கனே னிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்ந்து 299. பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் இவ்வானைமங்கலத்து பிரமதே 300. யத்து ஆரிதன் சிறியான் கடம்ப னேனிவை என்னெ ழுத்தென்றும் இப்பரிசுப் பட்டா 301. ய் நின்று பிடி நடப்பித்து அறவோலை செய்வித்தேன் க்ஷத்ரிய சிகாம 302. ணி வளநாட்டுத் திருநறையூர் நாட்டு பிரமதேயம் ஸ்ரீ துங்க மங்கலத்து 303. த் தூற்பில் ஸ்ரீதரபட்டனேனிவையென் னெழுத்தென்றும் இப்படி பட்டாய் 304. நின்று பிடி நட ப்பித்து அறவோலை செய்வித்தேன் க்ஷத்ரியசிகாமணி வள 305. நாட்டு வேளா நாட்டுத் திருநல்லூர்ப் பார்க்குளத்துப் பற்பநாப பட்டனே னிவை என் 306. னெழுத்தென்றும் இப்பரிசு பட்டாய் நின்றுபிடி நடப்பித்து அறவோலை செய்வித்தேன் க்ஷ 307. த்ரியசிகாமணி வளநாட்டு வேளநாட்டுத் திருநல்லூர் பேரேமபுரத்து வெண் 308. ணைய பட்டனேனிவை யென்னெழுத்தென்றும் இப்பரிசு பட்டாய் நின்றுபி 309. டி நடப்பித்து அறவோலை செய்வித்தேன் ராஜேந்த்ர சிம்ம வளநாட்டு ஸ்ரீவீரநா (பதினாறாம் ஏடு, முதல் பக்கம்) 310. ராயணச் சதுர்வேதிமங்கலத்து துவேதைகோமபுரத்து நந்தீஸ்வரபட்டனேனிவை 311. என்னெழுத்தென்றும் புகுந்த அறவோலைப்படியே வரியிலிட்டுக் கொள்கவென்று நங்கரும மாரா 312. யும் மீனவன் மூவேந்தவேளானும் கொற்றமங்கல முடையானும் தேவன் குடையானும்ந 313. டுவிருக்குங் கடலங்குடித்தாமோதரபட்டனும் கொட்டையூர்ப் பூவத்தபட்டனும் நங்கரும 314. மாராயும் பராக்ரம சோழ மூவேந்த வேளானு ம்செம்பியன் மூவேந்த வேளானும் சோழவே 315. ளானும் அரைசூரருடையானும் நடுவிருக்கும் புள்ளமங்கலத்து பரமேஸ்வரபட்ட சர்வ்வ 316. கிரது யாஜியுஞ் சொல்லப் புரவுவரி ஆலங்குடியான் கோதண்டன் சேனனும் பூ 317. தமங்கலமுடையான் இளவடிகள் நள்ளாறனும் ஆலத்தூருடையான் கற்பகஞ் 318. சோலையும் வரிப்பொத்தகம் பருத்தியூர் கிழவன் சிங்கன் வெண்காடனும் 319. முகவெட்டிக் கீழ்வாய் கணவதியும் முண்டனரங்கனுஞ் சையதனமலனும் தத்தன் 320. சீகிட்டனும் வரிப்பொத்தகக்கணக்கு மாதேவன் பூமியும் வரியிலிடு உறுவூருடையா 321. ன் தாழி வீரசோழனும் பட்டோலை பெருமானம் பலத்தாடியும் சீகண்டன் தேவனும் 322. மாகாளனரிஞ்சியும் நக்கன் மண்டகவனும் இருந்து யாண்டு இருபத்துமூன்றாவது (பதினாறாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 323. துகாள் நூற்றறுபத்துமுன்றினால் வரியீலிட்டுக் குடுத்தது வூவை உய்யக்கொண்டார் 324. வளநாட்டுத் திரைமூர் நாட்டு நாடார்கிழான் அரையான் அருமொழியான ராஜே 325. ந்த்ரசோழப் பல்லவரையன் எழுத்து உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு 326. க்கேரளாந்தகச் சதுர்வேதிம ங்கலத்து கிருஷ்ணன் ராமனான ராஜேந்த்ரசோழ 327. பிரம மாராயனுக்கும் ஓக்கும் நித்தவிநோத வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத் 328. து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவயனான உத்தமசோழப் பல்லவ 329. ரையனுக்கும் ஒக்கும் ராஜேந்த்ர சிம்ம வளநாட்டுக் குறுக்கை நாட்டுக்க 330. டலங்குடி துவேதைகோமபுரத்து தாமோ தரபட்டனுக்கும் ஒக்கும் உய்யக்கொண்டா 331. ர்வளநாட்டு அம்பர்நாட்டு குறும்பில்கிழான் அரையன் சீகண்டனான மீனவன் மூவே 332. ந்த வேளானுக்கும் ஒக்கும். ----- சிறிய செப்பேடு1 குலோத்துங்கசோழன் I வழங்கியது (முதல் ஏடு) 1. புகழ்மாது விளங்க ஐயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையாற் சிறந்த மணிமுடி சூ 2. டி வில்லர் குலைதர மீனவர் நிலைகெட விக்களர் சிங்களர் மேல்கடல் பாயத் திக்கணைத் துந்தன் சக்கரநடாத் 3. தி வீரசிங்காசனத்துப் புவனமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கோவி ராஜசேகரி பன்மரான சக்க 4. ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது ஆயிரத் தளியாக ஆஹவமல்ல 5. குலகாலபுரத்து கோயிலினுள்ளால்த் திருமஞ்சன சாலையில் பள்ளிபீடம் காலிங்கராஜனில் எழுந்தருளி இருக்ககிடராத் 6. தரையன் கேயமாணிக்க வளநாட்டு பட்டனக் கூற்றத்து சோழகுலவல்லி பட்டனத்து எடுப்பித்த ராஜேந்த்ர சோ 7. ழப் பெரும்பள்ளிக்கும் ராஜராஜப் பெரும்பள்ளிக்கும் பள்ளிச் சன்தமான ஊர்கள் பழம்படியந்தாரயமும் வீர 8. சேஷையும் பன்மை பண்டை வெட்டியும் குந்தாலியும் சுங்க மேராமும் உள்ளிட்டன வெல்லாம் தவிர்ந் 9. தமைக்கும் முன்பு பள்ளிச் சந்தங்கள் காணியுடைய காணி ஆளரைத் தவிர இப்பள்ளிச் சங்கத்தார்க்கே காணி 10. யாகப் பெற்றமைக்கும் தாம்ர சாசனம் பண்ணித்தர வேண்டுமென்று கிடாரத்தரையர் துதன் ராஜவி 11. த்யாதர ஸ்ரீ சாமந்தனும் அபிமானோத்துங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பம் செய்ய இப்படி சந்திவிக்ரஹி 12. ராஜவல்லபப் பல்லவரையனோடுங் கூடஇருந்து தாம்ரசாசனம் பண்ணிக் குடுக்க என்று அதிகாரி 13. கள் ராஜேந்த்ர சிங்கமூவேந்த வேளார்க்குத் திருமுகம் ப்ரசாதஞ் செய்தருளி வரத் தாம்ர சாசனஞ்செய்தபடி கடாரத்த 14. ரையன் கெய மாணிக்க வளநாட்டு பட்டனக் கூற்றத்து சோழகுலவல்லி பட்டனத்து எடுப்பித்த ராஜராஜப் பெரும்பள்ளி 15. க்கு பள்ளிச் சந்தம் கெயமாணிக்க வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து ஆனைமங் கலம் நிலந்தொண்ணூ ற்றேழே இரண் (இரண்டாம் ஏடு, முதல் பக்கம்) 16. டு மாக்காணி அரைக்காணியும் முன்புடைய காணி ஆளரைத் தவிர இப்பள்ளிச் சங்கத்தார்க்கே காணியாகவும் இது காணிக்கடன் நெல்லு 17. எண்ணாயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து முக்கலனே இருதூணிக் குறுணி முன்னாழியினால் நிச்சயித்த நெல்லு நாலாயிரத் 18. தைஞ்ஞூ ற்றுக் கலமும் ஆனைமங்கலத்து பிரமதேயம் நிலம் பன்னிரண்டே முக்காலினால் நெல்லு நானூற்றுக்கல 19. ம் நிச்சயித்த நெல்லுஐஞ்ஞூற்று அறுபதின் கலமும் இன்னாட்டு முஞ்சிகுடி நிலம் இருபத்தேழே முக்காலே முக்காணி அ 20. ரைக் காணியினால் காணிக்கடன் நெல்லு இரண்டாயிரத்தெழு நூற்றெழுபத்தொன்பதின் கலனே தூணி 21. நாநாழி நிச்சயித்த நெல்லு ஆயிரத்தெண்ணூ ற்றுக் கலமும் திருவாரூர் கூற்றத்து ஆமூர் நிலம் 22. நூற்றாறே மாகாணியில் காணிக்கடன் நெல்லுப் பதினாயிரத்தறுநூ ற்றுக்கலனே இருதூணிக் 23. குறுணி அறுநாழி நிச்சயித்த நெல்லு ஐயாயிரத்தொண்ணூ ற்றை ம்பதின் கலமும் அளநாட் 24. டு கடகுடியான நாணலூர் நிலம் எழுபதே முக்காலே நான்மாவரை யினால் காணிக்கடன் நெ 25. ல்லு ஆயிரத்தைஞ்ஞூ ற்றொருபத்து நாற்கலனே ஐங்குறுணி ஒருநாழி நிச்சயித்த நெல்லு இரண்டா 26. யிரத்தொண்ணூ ற்று நாற்பதின் கலமும் இன்னாட்டுக்கீழ்ச் சந்திரப்பாடி நிலம் பத்தே இரண்டு மாகாணி 27. அரைக்காணி முந்திரிகை கீழ்முக்காலினால் காணிக்கடன் நெல்லு ஆயிரத் தொருபத்திருகலனே ஐங்குறுணியும் இன்னா 28. ட்டுப் பாலையூர் பிரமதேயம் நிலம் அறுபதே முக்காலினால் நெல்லு ஆயிரக் கலம் நிச்சயித்த நெல்லு ஆயிரத்தை 29. ஞ்ஞூற்று கலமும் ஐயங்கொண்ட சோழ வளநாட்டுக் குறும்பூர் நாட்டுப் புத்தக்குடி நிலம் என்பத்தேழே 30. காலினால் காணிக்கடன் நெல்லு எண்ணாயிரத்தெழு நூற்றிருபதின் கலனே தூணி நாநாழி நிச்சயித்த நெல்லுஆ (இரண்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 31. றாயிரத்தொருநூற்றெழு கலமும் விஜயராஜேந்திர சோழ வளநாட்டு இடைக் கழிநாட் 32. டு உதையமார்த்தாண்ட நல்லூர்நிலம் மூன்றே மாவினால் நெல்லு நூற்று 33. முப்பத்தைங்கலனே முக்குறுணி முன்னாழி இது வரிசைப்படி இறை 34. க் கட்டுத் திருவாய்மொழிந்தருளினபடி நெல்லு எழுபத்தெண் கலனேய் ஐங்குறுணி 35. இதில் இப்பள்ளிக்குப் பாதியும் இவ்வூர்களில் பல பாட்டங்கள் உள்ளிட்ட அந்தராய 36. மும் பன்மை பண்டவெட்டியும் உட்படக்கடவ காசும் நெல்லும் இப்பள்ளிக் (மூன்றாம் ஏடு, முதல் பக்கம்) 37. கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதாக இறையிலி இட்டமைக்கும் இப் பள்ளிச் சந்தங்கள் முன் 38. புடைய காணி ஆளரைத் தவிரக்குடி நீக்கி இப்பள்ளிச் சங்கத்தார்க்கே காணியாக குடுத்தோமென்றும் 39. கெயமாணிக்க வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துச் சோழகுல லல்லிப்பட்டன த்து ஸ்ரீ சைலேந்த்ர சூடாமணிவ 40. ர்ம்ம விஹாரமான ராஜராஜப்பெரும்பள்ளிக்குப் பள்ளி நிலையும் பள்ளி விளாக மும் உட்பட்ட எல்லைகீழ் 41. பாற்கெல்லை கடற்கரையில் மணற்குன்றுட்பட மேற்கும் தென்பாற்கெல்லை புகை 42. உணிக்கிணற்றுக்கு வடக்கும் இதன்மேற்கு திருவீரட்டான முடைய மஹா தேவர் நிலத்து 43. க்கு வடக்கும் இதன் மேற்குப் பரவைக்குளத்து மாராயன் கல்லுவித்த குளத்தில் வடகரை மேற்கு நோ 44. க்கி காரைக்காற்ப் பெருவழியுற வடக்கும் மேற்பாற்கெல்லை காரைக்காற்ப் பெருவழிக் கிழக்கும் 45. வடபாற்கெல்லை சோழகுல வல்லிப்பட்டனத்து நிலம் வடகாடன்பாடி எல்லைக்குத் தெற்கும் ஆகஇன் (மூன்றாம் ஏடு, இரண்டாம் பக்கம்) 46. நான்கெல்லைக்குட்படப்பட்ட நிலம் முப்பத்தொன்றே முக்காலே இரண்டுமா முந்திரிகை இது அந் 47. தராயமும் பன்மை பண்டவெட்டியும் மற்றும் எப்பேர்ப் பட்டதும் உட்பட இப்பள்ளிக்கே இறையி 48. லி குடுத்தோம் இப்படி செய்து குடுக்கவென்று திருவாய் மொழிந்தருளித்த திருமுகம் பிராசாதஞ்செய்தரு 49. ளி வந்தது. தாம்ர சாசனம் பண்ணிக் குடுக்கவென்று சந்துவிக்ரிஹகன் ராஜவல்லவப் பல்லவரையரும் அ 50. திகாரிகள் ராஜேந்திரசிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாம்ர சாசனம் எழுதி 51. னேன் உடக்கோடி விக்கிரமா பரணத் தெரிந்த வல வலங்கை வேளைக்காறரில் நிலையுடைய பணை 52. யான் நிகரிலி சோழன் மதுராந்தகனேன் இவை என் எழுத்து. குறிப்பு :- இந்தச் சாசனங்களில் குறிக்கப்பட்ட கடாஹ, கடாரம், கிடாரம் என்பன மலைய தீபகற்பகத்தில் உள்ள கடார தேசம் ஆகும். இப்போது இத் தேசம் கெடா (Keddah) என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீ விஷய என்றும், ஸ்ரீ விஜய என்றும் கூறப்படுகிற தேசம் சுமாத்திர தீவில் உள்ளது. இந்தத் தேசங்கள் சைலேந்திர அரசர்களால் ஆளப்பட்டன. சோழர்கள் கடல் கடந்து சென்று சைலேந்திர அரசர்களின் கடார தேசத்தையும் ஏனைய நாடுகளையும் வென்று அரசாண்டார்கள். இந்த வரலாற்றைச் சோழர் சரித்திரத்தில் காண்க. ----- நந்திவர்மன் காலத்துச் சாசனங்கள்* 2 - ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டம், வேலூர் தாலுகா, பள்ளி கொண்டை கிராமத்து நாகநாதேசுவரர் கோவில் முன் மண்டபத்துத் தூணில் உள்ள சாசனம். நந்தி போத்தரையரின் இரண்டாம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சாசனம், வித்தூரை ஆண்ட, அமணி கங்கரையர் மகன் செல்வ வாணரையன் என்பவர் முகமண்டபத்தைக் கட்டியதைக் கூறுகிறது. இப்போதைய பள்ளிக் கொண்டை கிராமத்தின் பழைய பெயர் வித்தூர் என்பது இச்சாசனத்தினால் தெரிகிறது. சாசன வாசகம்1 1. ஸ்ரீ நந்திப் போ 2. த்தாயர்க்கு யா 3. ண்டு இரண்டாவது 4. அமணி கங்கரையர் 5. மகன் செல்வவா 6. ணரயன் வித்தூ 7. ராண்டு செய்வித் 8. தமுக மண்டக 9. ம். 3 - ஆம் ஆண்டு புதுக்கோட்டை குன்னாண்டார் கோவில் கிராமத்துப் பர்வதகிரீஸ்வரர் கோவிலின் தென்கோடியில் உள்ள சாசனம். நந்திவர்மனின் 3-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச் சாசனம், மீபுழை நாட்டு வடுவூர் கணவதிமான் என்பவர் 200 பேருக்குத் திருவாதிரையில் உணவு கொடுக்க நெல் தானம் செய்ததைக் கூறுகிறது. சாசனம் வாசகம்2 1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோநந்திப் போந்த 2. ரையர்க்கு யாண்டு 3-ஆவது மீ 3. புழை நாட்டு வடுவூர்க் கணவதிமா 4. ன்னாயின பகைச்சந்திர விசைஅ 5. ரையன் றிருவாதிரை நான்றுஅ 6. ட்டழிய வைத்த அரிசி 200 இரு 7. நூற்றுநாழி நூற்துவர்க்கு || 3 - ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, கிளியனூர் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலின் தென் புறச் சுவரில் உள்ள சாசனம் : திகைத்திறல் கிராமத்தார், ஓய்மாநாட்டுக் கிளிஞெலூரில் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் என்னும் கோயிலைக் கட்டி, விளக்குக் காக 300 ஆடும், திருவமுதுக்காக இரண்டு நிலமும் தானம் செய்ததைக் கூறுகிறது. சாசன வாசகம்3 1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோவிசைய நந்திவிக்கிரம பற்மக்கி யாண்டு மூன்றாவது ஓ 2. ய்மானாட்டு கிளிஞெலூர் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் எடு 3. ப்பித்த திகை திறலார் திருவிளக்குக்கு வைத்த ஆடு முந்நூறும் இவரே திருவமு 4. துக்கு வைத்த ஸ்ரீ கோயிலின் கீழை செறுவிரண்டும் இறையிலி. இத்தன்மம் ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் என்றலைய் மேலது. 4 - ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், லால்குடி, சப்தரிஷீசுவரர் கோவில் வடபுறச் சுவரில் உள்ள சாசனம், நந்திப் போத்தரையரின் 4-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. லால்குடியின் பழைய பெயர் திருத்தவத்துறை என்பது சப்தரிஷீசு வரரின் பழைய பெயர் திருத்தவத்துறை மகாதேவர் என்பதும் இச்சாசனத்திலிருந்து அறியப்படுகின்றன. சாசன வாசகம்4 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. யாண்டு 4-வதின் எதிராமாண்டு இடை யாற்று நாட்டுத் திருத்தவத்துறை மஹாதேவர்க்கு தெள்ளாறெறித்த நந்திப்போத்தரை 2. யர் குடுத்த பழக்காசு 60. இவ்வறுபது காசும் இஞ் ஞாட்டு நல்லிமங்கலத்துச் சபையோம் இவ் வறுபது காசும் திருத்தவத்துறை மகாதேவர் 3. ரிடை கொண்டு நாராய நாழியால் நிசதி நாழிசெய் ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்தவல் இரவும் பகலும் எரியக் கொண்டு சென்று அளப்போ மானோ 4. ம் நல்லிமங்கலத்து சபையோம் திருத்தவத்துறை மஹா தேவர்க்கு அளவோமாயில் முட்டில் முட்டி ரட்டியும் மூலைப்பட்ட பன்மஹேஸ்வரரே 5. சபையாகவும் தனித்ததாகவும் நிலைக்கள முள்ளிட்ட தான் வேண்டுகோவினுக்கு புக்களவு இருநூற்றுப் பதினாறு காணம் தண்டமிட ஒ 6. ட்டினோம் நல்லிமங்கலத்து சபையோம். இது பன் மஹேஸ்வரர் நாற்பத்தொண்ணாயிரவரு மிரக்ஷை. 4 - ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் உள்ள சாசனம். சாசனம்5 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்தி விக்கிர 2. ம மருமற்கு யாண்டு நாலாவது திருக் 3. கோவலூர் திருவீ ரட்டாநத்து மா 4. தேவர்க்கு நந்தா விளக்கினு 5. க்கு அதிஅரையமங்கலத்து 6. திருநிலைகிழ ..... கன்ன ..... 7. த்த பொன் ...... ம .... ம .... 8. பதிநறு கழஞ்சு இப்பொ 9. ன்னுக்கு நிசதம் உரிய் நெ 10. ய் பொலியூட்டாக அட்ட வைத்தது 11. காத்தார் கய்யுழுது குடுத்து 12. இப்பொன் பன்மாயேஸ்வரரக்ஷை 5 - ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, மணலூர் பேட்டை, காக்கா நாச்சியார் மண்டபத்தில் உள்ள சாசனம் ஒன்று, விஜயநந்தி விக்கிரவர்மரின் 5 - ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.6 இதில் மகாதேவடிகள் என்பவர் கோவில் பூசைக்கும் விளக்குக்கும் நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. மகாதேவடிகள், வாண கோவடிகள் சித்தவடவனார் என்னும் சிற்றரசரின் மகள் என்றும், வயிர மேகனாரின் தங்கை என்றும் கூறப்படுகிறார். 6- ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி தாலுகா, வெண்குன்றம். இவ்வூர் மலைமேல் உள்ள தவளகிரீசுவரர் கோவிலுக்கு அருகில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது சாசனம்7 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. நந்திப் போத்தரையர்க்கு யாண்டா 2. றாவது வெண்குன்றக் கோட்டத்து வெண்குன்றத்து 3. சபையோம் எம்மூர் மலைமேற் படாரரை நொ 4. க்கத்தெல்லா நெல்லும் ஐப்பசியும் பொன்னும் 5. நெய்யும் எப்பேர்ப்பட்டதும் நெல்வாயிலிலிருந்து 6. வாழும் தொசியார்க்கு விற்று விலையாவரணம் செய்துகு 7. டுத்தோம் வெண்குன்றத்து சபையோமிதன் றென்னோ 8. ம்உண்டிகையும் பட்டிகையும் காட்டாமேய் நிலைக்காத் 9. து முன்பு நிற்க வெய்மெய் வெறாபிரங் 10. காணமிட வொட்டிக் குடுத்தோம் இத்தர்ம்ம 11. த்தை இலக்கித்தானடி என்றிலைமேலன. 6 - ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி தாலுகா, திருவெள் ளறைக் கிராமத்து ஜம்புநாதசுவாமி கோயிலுக்கு முன்புள்ள கல்லில் எழுதப்பட்டுள்ள சாசனம். பாரத்வாஜ கோத்திர பிரஃமாக்ஷத்ர குலத்து ஸ்ரீ தந்தி நந்தி வர்மரின் 6 - ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இது, செல்லிக்கோமான் மல்லவான் என்பவரைக் கூறுகிறது. இச் சாசனம் செய்யுளால் ஆனது. இதனைப் பாடியவர் பெருங்காவிதி சடையன்பள்ளி என்பவர். இந்தச் சாசனத்தின் நடுப்பாதியைப் பிற்காலத்தவர் செதுக்கிவிட்டபடியால், இதன் மத்திய பகுதியின் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. சாசன வாசகம்8 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. பாரத்வ ............லக ப்ரந்மாக்ஷத்ர குலோத்பவ 2. ல்லவ மஹாராஜ ..............ரமேஸ்வரநாயகி ஸ்ரீ தந்திந 3. ந்திவர்மற்குய ..............றாவது திருவெள்ளறைப 4. ரிடையார் பிரம.............ல்லவ மாமறைத் தொன்றி 5. வனிவேந்தன்.............ள் மாற்பிடுகிளங்கோவேளா 6. ன் சாத்தன் செ.........தன் மாமன் பரசிராமன் 7. திருமருமான் பெருb.........செல்லிக் கோமான்மல்ல 8. வாந்தோண்மறவ..........தசூடி ராடி சூடி மாமணி 9. வௌhளரையர்தங்...........லை நிரவயனந்தந்தி மங்கை 10. க்கான் உறுதியான் புகழ்வளர்க மண்ணி மேலெய் 11. பிரம தேயத்து உறுதியான் விழுப்பேரரையன்சா 12. த்தன் மற்றவன் புகழ்நிற்க. இது பாடித்தந்தோன். 13. பெருங்காவிதி சடையன் பள்ளி. 6 -ம் ஆண்டு மூன்றாம் நந்தி வர்மனின் வேலூர்பாளையச் செப்பேடு நந்திவர்மனின் 6-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச் சாசனம், சோழ மகாராஜன் குமாராங்குசன் விரும்பியபடி யஞ்ஞபட்டன் என்பவர் ஸ்ரீ காட்டுப்பள்ளியில் கட்டிய சிவன்கோயில் பூசைக் காகவும் அன்னசத்திரத்துக்காகவும் ஸ்ரீ காட்டுப்பள்ளியைத் தானம் செய்ததைக் கூறுகிறது. விஜய நந்தி வர்மனுடைய வேலூர்ப் பாளையத்து செப்பேட்டுச் சாசனம்.9 வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்துக்கு வடமேற்கே 7 மைலுக்கப்பால் உள்ளது வேலூர்ப் பாளையம் என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில், 1911-ஆம் ஆண்டில், விஜயநந்தி வர்மனுடைய செப்பேட்டுச் சாசனம் கண்டுபிடிக்கப் பட்டது. பிறகு, இச்சாசனம் சென்னை அரசாங்கத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுச் சென்னைக் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேலூர்ப் பாளையத்திலிருந்து கிடைத்தபடியால் இது, வேலூர்ப் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனம் என்று பெயர் பெற்றது. இந்தச் சாசனம் ஐந்து செப்பேடுகளைக் கொண்டது. இச் செப்பேடுகளின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் தவிர, மற்ற எட்டுப் பக்கங்களிலும் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச் செப்பேடுகள் ஏறக்குறைய 8¾ அங்குலம் நீளமும் 31/dn72 அங்குலம் அகலமும் உள்ளவை. ஐந்து செப்பேடுகளும் ஒரு வளையத்தில் கோக்கப் பட்டுள்ளன. வளையத்தில் வட்டமாயமைந்த இவ்வரசனுடைய முத்திரை இருக்கிறது. இவ்வரசனுடைய ஆணைக்கு அடையாள மாகிய நந்தி (எருது) பருத்திருப்பது போன்ற உருவம் இதில் செதுக்கப்பட்டுள்ளது. அரச சின்னமாகிய சாமரைகளும் மங்கலத்தைக் குறிக்கிற சுவஸ்திகம், குத்து விளக்குகளின் உருவங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன. முத்திரையின் ஓரத்தில், பல்லவக் கிரந்த எழுத்துக்கள் தேய்ந்து அழிந்து காணப்படுகின்றன. திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிவன் கோயிலுக்கு அக்கிராமத்தைத் தானம் வழங்கிய செய்தியை இந்தச் சாசனம் கூறுகிறது. பப்ப பட்டாரகன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற யஜ்ஞபட்டன், திருகாட்டுப்பள்ளிக் கோயிலைக் கட்டினான். விஜயநந்தி வர்மனுடைய ஆறாவது ஆண்டிலே, சோழ மகாராசன் குமாராங்குசன் விண்ணப்பத்தினால், அக்ரதந்த குடும்பத்தைச் சேர்ந்த இறையூர் உடையான் நம்பி என்னும் அமைச்சன் ஆணத்திப்படி, கச்சிப்பேட்டுப் பேராயன் என்னும் தச்சன் இச் செப்பேடுகளை எழுதினான். இச்சாசனம் வடமொழியிலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. வடமொழியில் அரசனுடைய மெய்க் கீர்த்தியை எழுதியவர் மாகேசுவரன் மனோதீரன் என்பவர். இந்தக் கோயில் இருக்கிற திருக்காட்டுப்பள்ளி என்னும் கிராமம், செங்கற்பட்டு மாவட்டத்துப் பொன்னேரி தாலுகாவில் இருக்கிறது. புழற்கோட்டத்து நாயறுநாட்டுக் காட்டுப்பள்ளி என்று சாசனத்தில் கூறப்படுகிறது. வடமொழி சாசனம் இந்த சாசனத்தில் உள்ள வடமொழிச் சுலோகங்களின் தமிழாக்கம் வருமாறு : “ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்ஸிவாய. எங்கும் நிறைந்ததும், அறிஞரால் என்றும் உள்ளது எங்கும் இருப்பது குற்றமற்றது என்று புகழப்படுவதும், ஆழ்ந்த பக்தியினாலே அடையப்பெறுவதும், வாக்கு மனங்களுக்கு எட்டாததும், நன்மையாகிய மங்கலத்தைத் தருவதும், அழிவற்றதும், பெரியவர்களான முனிவர்கள் புலன்களின் வேகத்தை அடக்கித் தவம் இருந்து அடைய முயற்சி செய்யப்படுவதும் ஆகிய ஒளிமயமான பரம்பொருள் நிலைபெற்ற இன்பத்தை அளிக்கக்கடவது. சர்வாணி (பார்வதி)யின் மார்பில் திகழும் சந்தனக் குழம்புபட்டு அழகாக விளங்குகிற ஸ்ரீகண்டனுடைய திருக்கைகள், தேவர்களின் பகைவர்களுடைய மனைவிமார் அணிந்த நகைகளைக் களைந்தவை. (தேவரின் பகைவரைக் கொன்றவை.) வடவைத் தீயின் ஒளிபோல விளங்கும் ஆயுதங்களை ஏந்தியவை ; தலையில் மாணிக்கம் உள்ள நாகங்களைக் கடகங்களாகப் பூண்டவை. அத்தகைய திருக்கைகள் எப்போதும் உலகத்தைக் காக்கக்கடவது. தாமரை போன்ற கொப்பூழையுடையவரின் (திருமாலின்) நாபித்தாமரையில் இருந்து நான்முகன் தோன்றினான். அவனிட மிருந்து ஆங்கீரசன் தோன்றினான். அவனிடமிருந்து தேவகுரு பிரகஸ்பதி தோன்றினான். அவனிடமிருந்து சம்யூ தோன்றினான். அவனிட மிருந்து சம்யவன் (பாரத்துவாஜன்) தோன்றினான். அவனிடமிருந்து துரோணன் தோன்றினான். அவனிடமிருந்து , காமனை எரித்த சிவ சத்தாக உள்ள துரௌணி (அசுவத் தாமன்) தோன்றினான். அம்முறையே, அவனிடமிருந்து மிக்க புகழுடைய வனும் உலக முழுவதுக்கும் அதிபதியும் ஆகிய பல்லவன் தோன்றினான். அவனிடமிருந்து பல்லவ அரசர் பரம்பரை உண்டாயிற்று. பூமியைத் தாக்குவதனாலே களைத்துப்போன ஆதிசேஷனுடைய களைப்பைப் பல்லவ அரசர் தங்களுடைய தோள்வலியினாலே போக்கி, காத்தல் தொழிலினாலே குடி ஜனங்களின் சிறு துன்பத்தையும் களைந்து உலகத்தைக் காப்பாற்றினான். இந்தப் பரம்பரையிலே, அசோகவர்மன் முதலான மன்னர்கள் தெய்வமான பின் (இறந்த பிறகு) பல்லவகுல சூளாமணியான், இந்திரையின் (இலக்குமியின்) கணவன் (திருமால்) போன்று காளபர்த்ரி தோன்றினான். இவனுடைய மகனான சூதபல்லவனுக்குப் புகழ்பெற்ற வீரகூர்ச்சன் தோன்றினான். இவன், நாகர்குல அரசனுடைய மகளை மணந்துக் கொண்டு நாக மன்னனுடைய அரசு உரிமைகளையும் பெற்றான். இவனுக்கு, இக்குலத்துக்கு ஓர் சந்திரன் போல ஸ்கந்த சிஷ்யன் பிறந்தான். இவன் சத்தியசேனனிடமிருந்து இரு பிறப்பாளரின் (பிராமணரின்) கடிகையைப் கைப்பற்றினான். இவனிடமிருந்து குமாரவிஷ்ணு தோன்றி, காஞ்சீ நகரத்தைக் கைப்பற்றிப் போர்களில் வெற்றியடைந்தான். பிறகு, கடல் போன்ற சேனைகளையுடைய சோழர்களுக்கு வடவாமுகாக்கினி போன்று புத்தவர்மன் தோன்றினான். இவனுக்கு பிறகு விஷ்ணுகோபன் முதலிய அனேக அரசர்கள் அரசாண்டு கழிந்த பிறகு, நந்திவர்மன் (I) பிறந்து பினாகபாணியின் (சிவபெருமானின்) அருளினாலே திருஷ்டி விஷம் உடைய ஆற்றல் மிக்க பாம்பை ஆட்டிவைத்தான். அதன் பிறகு, பகைவர் இறுமாப்பை அழித்த சிம்ம வர்மன் தோன்றினான். இவனுக்கு உலகம் முழுவதும் வெற்றிப் புகழ்படைத்த வீரனாகிய சிம்மவிஷ்ணு பிறந்தான். இவன், நெல் வயல்களையும் அழகான கமுகஞ் சோலைகளையும் அணிகலனாக அணிந்த கவீரனு டைய மகளால் (காவிரி ஆற்றினால்) அழகு பெற்ற சோழர்களின் சோழ நாட்டைக் கைப்பற்றினான். இவன் மகனாகிய மகேந்திரனுக்கு, உபேந்திரன் (திருமால்) போன்று புகழ் பெற்றவனும், பல பகைவர்களை வென்று வாதாபி நகரின் நடுவில் நின்ற அவர்களுடைய வெற்றிக் கம்பத்தை எடுத்துக் கொண்டவனுமாகிய நரசிம்மவர்மன் (I) பிறந்தான். இவனுக்குப் பரமேசுவரன் (I) பிறந்தான். இவன் பகைவர் களுடைய இறுமாப்பை அழித்து, சளுக்கிய அரசனுடைய சேனை யாகிய இருளை ஓட்டும் சூரியனைப் போன்று விளக்கினான். இவனுடைய மகன் நரசிங்க வர்மன் (II) மகேந்திரனுக்கு ஒப்பான இவன், இரு பிறப்பாளருக்குக் கடிகையையமைத்து, சந்திரசேகர னுக்கு (சிவபெருமானுக்கு)க் கயிலாய மலைக்கு ஒத்ததாகக் கற்றளியை அமைத்தான். இவன் மகன், அரசர்களால் வணங்கப்பட்ட பரமேசுவரன் (II) என்பவன். கலியாகிய இருளைப் போக்கிய இவன் மனு முறைப்படி அரசாண்டான். இவனுக்குப் பிறகு பழைய மன்னர்களின் நற்குணங்கள் யாவும் பொருந்திய நந்திவர்மன் (II) தோன்றி, நான்கு கடற்பரப்பையும் ஆடையாக வுடுத்த பூமியையும் (பல்லவ) அரசகுடும்பத்தின் வளமையையும் கைக்கொண்டான். சேனா சமுத்திரத்தை உடையவனும், பல நற்குணங்களாகிய இரத்தினங்களுக்கு உறைவிடமான கடல் போன்றவனும் ஆகிய இவனுக்கு, உயர்ந்த மலையிலிருந்து ரேவா (நருமதை) என்னும் ஆறு தோன்றியது போல, பெரிய அரச குடும்பத்தில் பிறந்த ரேவா என்பவவள் அரசியாக வாய்ந்தாள். இவ்வரசிக்கு இவ்வுலகத்திலே மகனாகப் பிறந்தவன். புகழ் வாய்ந்த நந்திவர்மன் என்னும் அரசன். இவன் உலகத்தால் (மக்களால்) விரும்பப்பெற்று, மூன்று உலகத்தையும் காப்பதே தன் நோக்கமாகக் கொண்டு, வீரம் கொடை தியாகம் என்னும் தூயகுணங்கள் ஒன்றையொன்று சேர்ந்திருக்க விரும்பி நெடுநாள் தேடிக் கடைசியில் ஒன்று சேர்ந்ததுபோல, இம்முக்குணங்களும் தன்னிடம் ஒருங்கே யமையப்பெற்று, தாமரைக் கண்ணனைப் போல (திருமாலைப் போல) விளக்கினான். வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை யாளும் ஆற்றல் படைத்த இந்தப் பல்லவ மகாராஜனுக்கு, முப்புரங்களை வென்ற வீரனுக்கு (சிவபெருமானுக்கு) கௌரி மனைவியாக வாய்ந்தது போல, கடம்பகுல சூளாமணியான புகழ் வாய்ந்த அரசனுடைய மகளான அக்கள நிம்மதி என்பவள் மனைவியாக வாய்த்தாள். ஒனியை (சூரியனை) வைகறைப் பொழுது போலவும், வியக்கத் தக்க சத்தியை (வேலை) யுடைய குமரனை அம்பிகை தந்தது போலவும், வெற்றி மிக்க சயந்தனைச் சசி தந்ததுபோலவும், புகழ் பெற்ற நந்திவர்மனை (iii) இவள் (அக்கள நிம்மதி) தந்தாள். இவன் (நந்திவர்மன் iii) தன் தோள் வலியினாலும், ஆற்றலி னாலும், தன் வாளியினாலும் கொன்ற யானைகளின் மருப்புகளிலிருந்து வெளிப்பட்ட முத்துக்கள் நகைப்பது போலக் காணப்பட்ட போர்க் களத்திலே, தன் பகைவர்களைக் கொன்று, மற்றவர்களால் கைப்பற்ற முடியாத அரசாட்சியைக் கைப்பற்றினான். இந்த அரசனால் இந்த உலகம் சிறப்படைந்து விளக்கியதுபோல அவ்வளவு சிறப்பை, பூஞ்சோலைகள் இளவேனிலினாலும், உயர்குடிப் பிறந்தவர் நல்லொழுக்கத்தினாலும், மங்கையர் கற்பினாலும், செல்வந்தர் கொடையினாலும், கற்றறிந்தவர் அடக்கத்தினாலும், தாமரைகள் சூரியனாலும், கார்காலத்திற்குப் பின்னர் விளங்கும் அகன்ற வானம் சந்திரனாலும் அடையவில்லை. கல்வியினாலும் அடக்கத்தினாலும் நிலைபெற்ற நற்குணங் களினாலும் விளங்கும் பப்ப பட்டராகன் என்னும் சிறப்புப் பெயரை யுடைய யஜ்ஞபட்டன் என்பவன், வேத சாஸ்திர சாங்கியங்களைக் கற்றதினாலும், சிவபெருமானிடத்து இடையறாத பக்தியினாலும் பேர்போனவன். உயரமான கயிலயா மலைபோல ஒரு கோயிலைச் சிவபெருமானுக்கு ஸ்ரீகாட்டுப்பள்ளி என்னும் ஊரில் கட்டினான். இவனுடைய (யஜ்ஞபட்டனுடைய) தந்தை, சொல்லின் செல்வி (கலைமகள்)யின் கணவனைப் (பிரமனைப்) போல தூய்மையான அறிவையுடைய சிவதாசன் என்னும் பெயரையுடையவன். இவனு டைய தாயார், நல்ல பெருங் குணங்களைப் பெற்றதனால் நிலமகளைப் போன்ற திரேணமணி என்பவள். இவனுடைய பாட்டன் யஜ்ஞன் என்பவன் ; கலாநிதியைப் போல (சந்திரனைப் போல) கலைகளின் உறைவிடமாகவும், சுத்தமான நடத்தையுடையவனாகவும், இருபிறப்பாளரில் சிறந்தவனாகவும், அறியாமை என்னும் இருளை ஓட்டுகிறவனாகவும், திக்கெங்கும் புகழ்பெற்றவனாகவும் இருந்தான். அந்தக் கடவுளாகிய சர்வனுக்கு (சிவனுக்கு)ப் பூசை வணக்கம் முதலிய ஊழியம் செய்வதற்குத் திருக்காட்டுப் பள்ளிக் கிராமத்தை அரசன் தானமாக வழங்கினான். தனது வீரத்தினால் விளங்கப்பட்டவனும் தனது ஈகையினால் ராதேயனுக்கு (கர்ணனுக்கு)ச் சமானமானவனும் நல்ல ஒழுக்க முடையவனும் வீரமிக்க சோழகுலத்துக்குச் சூளாமணி போன்றவனும் ஆன குமாரங்குசன் என்னும் பெயருள்ளவன் இந்தத் தானத்தைச் செய்யக் கேட்டுக் கொண்ட விஞ்ஞாபதியாவன். இதற்கு ஆஜ்ஞாபதியாக இருந்தவன், அரசனுடைய அமைச்சனான, அக்ரதந்த மரபு என்னும் வேனிற்கால வானத்திலே வெண்ணிலா போன்று விளங்கும் நம்மன் என்னும் பெயருள்ளவன். மனம் வாக்கு காயங்களினாலே மற்றவரின் நன்மைக்காக உழைக்கிற மாகேசுவா மனோதீரன் என்பவன் இந்த மெய்கீர்த்தியைக் கூறினான். தமிழ் சாசனம் இவ்வாறு எழுதப்பட்ட வடமொழி சாசனத்திற்குப் பிறகு, கீழ்கண்ட தமிழ்சாசனம் எழுதப்பட்டுள்ளது :- “புழற்கோட்டத்து நாயறு நாட்டுத் திருக்காட்டுப்பள்ளிப் பஞ்சவரம் ஆஇரக்காடி. இது கோவிசைய நந்தி வர்ம்மற்கு யாண்டு ஆறாவது சோழ மஹாராஜர் விண்ணப்பத்தால் இரையூர் உடையான் நம்ப னாணத்தியாகத் திருக்காட்டுப்பள்ளிச் சன்னக்குறி யஜ்ஞபட்ட ரெடுப்பித்த யஜ்ஞேஸ்வரத்து மஹாதேவர்க்கு நாட்டு நீங்கலாய் உட்புரவாய தேவர் தானமாகப் பெற்றதற்குப் பெற்ற பரிஹாரம் நாடாட்சியும் ஊராட்சியும் புரவு பொன்னும் திருமுக்காணமும் வட்டியும் நாழியும் புதாழியும் தட்டு காயமும் ஈழம் பூட்சியும் இடைபூட்சியும் மன்றுபாடும் தரகும் தறிக்கூறையும் கூலமும் நல்லாவும் நல்லெருதும் நல்லாடும் நாடு காவலும் ஊடுபோக்கும் கல்லாணக் காணமும் குசக்காணமும் பாறைக் காணம் பட்டின சேரியும் மற்று மிவ்வூரெல்லை உள்ளகப்பட்டது கோத்தொட்டுண்ணப் பாலதெல்லாம் எவ்வகைப் பட்டதும் கோக்கொள்ளப் பெறாதே இவ்யஜ்ஞேஸ்வரத்து மஹாதேவ ரேய் கொள்ளப்பெற்றதற்குப் பெற்ற வியவஸ்தை சுட்டோட்டால் மாட மாளிகை எடுக்கப் பெறுவதாகவும் தமனகமும் இருவேலியும் செங்கழுநீரும் உள்ளியும் நடப்பெறுவதாகவும். காவுதெங்கிடப் பெறுவதாகவும். துரவு கிணறிழித்தப் பெறுவதாக வும் பெருஞ் செக்கிடப் பெறுவதாகவும் இவ்வூரெல்லை உள்ளிட்ட தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவ ரேறப்பெறா தாராகவும் இவ்வகைப்பட்ட வியவஸ்தை யினோடு யஞ்ஜேஸ்வரத்து மஹா தேவர்க்குத் தேவதானமாய் ஸர்வ பரிஹாரமாக பரடத்தி சென்றது.” மீண்டும் வடமொழிச் சுலோகம் எழுதப்பட்டுள்ளது. அதன் கருத்து வருமாறு :- “ ஓ! எதிர் காலத்தில் உலகத்தை ஆளப்போகிறவர்களே! அரசர்களுக்குக் கொடி போன்ற நந்திவர்மன், அரனுடைய மலரடிகளாகிய சூளாமணியால் விளங்கப் பெற்ற தன் தலையை வணங்கி, தாமரை போன்ற கைகளைக் குவித்து இந்த நல்ல செயலை (இந்த அறத்தை) எப்போதும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தருமமாகிய பாலம், எல்லா அரசர்களுக்கும் பொதுவானது. ஆகையினாலே, இந்த அறத்தை எல்லாக் காலத்திலும் காத்தருளும்படி இப்போதுள்ள அரசர்களையும் எதிர் காலத்தில் வரப்போகிற அரசர்களையும் இந்த இராமன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தச்சர் குலமென்னும் ஆகாயத்துக்கு வெண்ணிலா போன்று விளங்கும், வேலைத்தரத்தில் எங்கும் புகழ்பெற்ற சிற்றாயன் மகன் பேராயன் இந்த ஏடுகளை எழுதினான்.” “ கச்சிப்பேட் டைம்மனைச் சேரிக் காஷ்ட காரிமகன் பேராயன் எழுத்து.” 10 - ஆம் ஆண்டு தென்ஆர்க்காடு மாவட்டம், கூடலூர் தாலுகா, திருவதி, வீரட்டானேசுவரர் கோவில் வாயிலின் வலது பக்கத்தில் உள்ள சாசனம். சாசனம்10 1. ஸ்வஸ்ஸ்ரீ ஸ்ரீ 2. திருவீரட்டான 3. த்து மஹாதே 4. வர்க்குத் தெள் 5. ளாற்றெறிந்த 6. நந்திப் போ 7. த்தரையர் தி 8. ருவிளக்கினு 9. க்குக் குடுத்த 10. பொன் நிறை 11. நூற்றுக்க 12. ழஞ்சு இதன் 13. பலிசையால் 14. யாண்டுப 15. த்தாவதுமு 16. தலாக நாள 17. வாய் நாழி 18. நெய் அள 19. ந்து குடுத்து 20. இரண்டு நந் 21. தாவிளக்கு எரிப் 22. பிப்பே னானேன் 23. இத்திரு வீரட்டான 24. த்துக் குடும்பி 25. ருள் காளிஸ்ஸருமனே 26. ன் இவ்விளக்கு 27. .......நகரத்து பல்மா3 11 - ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் உள்ளசாசனம். சாசனம்12 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்திவிக்கிரம பரும 2. ற்கு யாண்டு பதினொன்றாவது மலாட்டுக் கு 3. றுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்த் தி 4. ருவீ ரட்டானத்து மாதேவர்க்கு நந்தாவிள 5. க்கிரவும் பகலும் மிரண்டு விளக்கெரிப்பத 6. ற்கு விடேல் விடுகு இளங்கோ அதியரைய னாயி 7. .........விக்ரமபூதி மகள் விடே 8. .........யின சாத்தன் மறவன் றேவி பூதி 9. .........விடேல் விடுகு கல்லால் நி 10. ..........ன்னிறை நாற்பத்தெண் க 11. .........சை கழஞ்சின் வாய்த் திங் 12. .........ட்டுவதாக திருக் கோவலூர் 13. ........த்தார் கைய்வழி வைத்தது 13 -ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டம், அரக்கோணம் தாலுகா, காவேரிப் பாக்கம் முத்தீசுவரர் கோவில் கோபுரவாயிலின் உள்ளில் உள்ளது. நந்திவர்மனின் 13-ஆம் ஆண்டு இடப்பட்ட இச் சாசனம், அய்யக்கி பங்கள அடிகளின் மருமகள் கோயிலில் விளக்கெரிப்பதற் காக 5 கழஞ்சு பொன் தானம் கொடுத்ததைக் கூறுகிறது. இடை யிடையே எழுத்துக்கள் காணப்படவில்லை. கடைசியில் சுவர் மறைந்துள்ளது. சாசனம்13 1. ஸ்வஸ்திஸ்ரீ நந்திவர்மருக்கு யாண்டு பதின்மூன்றாவது எம்மூர் அய்யக்கி பங்கள அடிகள் மருமகள் பக்கல் அஞ்கழஞ்......... 2. ழஞ்சு பொன் வைத்து பதின்............ல் இவ்வெண்ணை உள்ளிட்டன்றி எம்மூரவர் நிசதி ஆழாக்கும் குடு.......... 3. ........காலமும் முட்டாமல் அட்டுவிப்பார்களாகவும் ஸ்ரீ........ 14-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா, களத்தூர், முன் குடுமீசுவரர் முகமண்டபத்துத் தரையில் உள்ள கல்லில் எழுதப்பட்ட சாசனம். நந்திவர்ம மகாராசனின் 14-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சாசனம், களத்தூர் பெருமக்கள் மேற்படி ஊர் ஏரியின் வருவாயிலிருந்து மூன்றில் ஒரு பகுதியைக் கோயிலுக்குத் தானம் செய்ததைக் கூறுகிறது. சாசனம்14 1. ஸ்வஸ்திஸ்ரீ | நந்திவர்ம 2. மஹாராஜற்குப் 3. பதினாலாவது களத் 4. தூர்க் கோட்டத்து கள 5. த்தூர் பெருமக்கள் (பங்) 6. (கானா) (ட்bடயில்)... 7. ....த்தாந் ஏரிப்பாத் 8. து கோயிலாக பரமே 9. ஸ்வரன் முன்பாக பெ 10. ருமக்களும் கடவமூன் 11. றில் ஒன்றும் பரமே 12. ஸ்வரன் சுக்ருகம். || 15-ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், செஞ்சி தாலுகா, தளவானூர், “குகைக் கோயிலில்” தூணில் உள்ள சாசனம். விஜயநந்தி விக்ரமவர்மனின் 15-ஆம் ஆண்டு இடப்பட்ட இச்சாசனம், வெண்பேட்டில் இருந்த இக்கோயில் ஊழியர் ஒருவர், மோடன் என்பவரிடம் ஒரு கழஞ்சு பொன் தானம் செய்ததைக் கூறுகிறது. சாசன வாசகம்15 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய 2. நந்திவிக்கிரமப் 3. பருமருக்கு யாண்டு பதி 4. னைந்தாவது வெண் 5. பேட்டு வாழும் தளிஉடைய 6. காளய இ... ....மகன்தே 7. .......... 8. .......... 9. முலங்கூர்ப் புரைசர் 10. மோடன்னிடைக் க 11. ழஞ்சுப் பொன் முதல் 12. ல் கொண்டு இப்பொ16 16-ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர் வீரட்டானேசுவரர் கோவிலில் உள்ள சாசனம். சாசனம்17 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்திவிக் 2. கிரம பருமற்கு யாண்டு பதினாறாவது 3. மலாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத்தி 4. ருக்கோவலூர்த் தி........னத் 5. து மாதேவர்க்.......... 6. இரவும் பகலு......... 7. தற்கு தென்னவனி.......... 8. மறவம் பூதி வைத்த........ விடேல் 9. விடுகு திப்பொக்குச் செம்பொன் 10. இருபத்து நாற்கழஞ்சு.... 11. இதன் பலிசை கழஞ்சிற் பேர்த்திது.... 12. உரிய்நெய் அட்டுவதாக திருக்கோவ 13. லூர் நகரத்தார் கைய்வழி வைய்த்த 14. து. 17-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீ பெரும்பூதூர் தாலுகா, மாங்காடு கிராமம், வள்ளீஸ்வரர் கோயில் தரையில் உள்ள கல் எழுத்துச் சாசனம் : “கோவிசைய நந்தி விக்ரம பருமரின்” 17-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சாசனம், இக்கோயிலுக்குக் குன்றத்தூர் செழியவாணியர் திருவாதிரையிலும் தலையு வாவிலும் (அமாவாசையிலும்) பூசைக்காகத் தானம் செய்யததைக் கூறுகிறது. சாசன வாசகம்18 1. ஸ்ரீ கோவிசைய நந்தி விக்கிரம பருமருக்கு யாண்டு பதினேழாவது புலி 2. யூர்க் குடிக்கோட்டத்துக் குன்றத்தூர்ச் செழிய வாணியர்களோ 3. ம் திருவாதிரையுந் தலைவாவும் திங்கள் நிலவியுங் காட்டு வோ 4. மானோம் திருவெள்ளி கீழுடைய சபையோம். 18-ஆம் ஆண்டு காஞ்சீபுரத்து உலகளந்த பெருமான் கோயிலின் தென் புறத்தின் தரையில் உள்ள கல் சாசனம். கடைசியில் சில பகுதிகள் இக்கல்லின் பின்புறத்தில் இருக்கவேண்டும். கல், தரையில் புதைக்கப் பட்டிருப்பதால் பின் பகுதி எழுத்துப் படிக்காமல் விடப்பட்டுள்ளது. இதில், விடேல் விடுகு குதிரைச் சேரி என்னும் கடைத் தெருவில் வாணிகஞ் செய்வது பற்றிக் கூறப்படுகிறது. சாசன வாசகம்19 1. ஸ்வஸ்தி ஸ்ரீ தெள்ளாற் றெறிந்த நந் 2. திப் போத்தரையர்க்கு யாண்டு ப 3. தினெட்டாவது அநுத்தரப் பல்ல 4. வரையன் விண்ணப்பத்தாற் கா 5. டு பட்டி தமிழ்ப் பேரரைய னா 6. ணத்தியாக விடேல் விடுகு குதிரை 7. ச் சேரியார்க்குக் கருப்பூரந் தலையா 8. கச் செருப்புக் கடையாக எல்லா 9. வியாபாரமுங் கடை ஏறிவாணிக 10. ஞ் செய்யப் பெறுவாராகப் ப 11. ணித்தோம் பூமி உள்ள அளவு 12. இதற்கு சர்வ்வ (பரிஹாரம)கக் கு 13. டுத்தோம் இப்பரிசு முற்றுவித் 14. தான் சாத்தப் போசன் வெண்ண.... 18-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா, படூர் கிராமத்து மேட்டுத் தெருவில் உள்ள ஒரு கல்சாசனம். இந்தச் சாசனத்தில் முதல் இரண்டு வரியில் எழுத்துக்கள் மறைந்து விட்டன. ஆனால் முதல் வரியின் கடைசியில் “நந்” என்னும் எழுத்துக் காணப்படுகிறது. எனவே இது நந்தி வர்மனைக் குறிக்கிறது என்பதை யறியலாம். இந்தச் சாசன எழுத்துக்கள் நந்திகாலத்து எழுத்தைப் போல இருக்கின்றதும் ஒரு சான்றாகும், படுவூர் விழுப்பெருந்தாய விஷ்ணு கிருஹத்து நின்றருளுகின்ற பெருமானடி களுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகளைத் தானம் செய்ததைக் கூறுகிறது. சாசன வாசகம்20 1. ...........நந் 2. ......ற்கு யாண்டு பதி 3. னெட்டாவது ஆமூர் கோட் 4. டத்துக் கோட்ட மன்றாடி 5. கள் படுவூர் விழுப்பெ 6. ருந்தாய விஷ்ணு கிருஹத்து 7. நின்றருளுகின்ற பெருமா 8. னடிகளுக்கு வைய்த்த நந் 9. தாவிளக்கொன்றுக்கு வை 10. த்த ஆடு சாவா மூவாப் பேரா 11. டு தொண்ணூ று இதன் மம் ரக்ஷி 12. ப்பார் அடிபொடி என் தலைமேல 13. து. 18-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்துக் கோவிலடி என்னும் ஊரில் உள்ள, சடையார் கோயில் என்னும் இடிந்துபோன கோயிலின் வாயில் நிலையில் உள்ள சாசனம். சாசன வாசகம்21 1. ஸ்வஸ்தி ஸ்ரீ 2. தெள்ளாற் றெ 3. றிந்த நந்தி 4. ப் போத்தரைய 5. ர்க்கு யாண்டு 6. 18 ஆவது தி 7. ருக் கடை முடி 8. மஹா தேவர்க் 9. கு இரண்டு நொ 10. ந்தா விளக்கினு 11. க்கு குடுத்தபொ 12. ன் அறுபதின் 13. கழஞ்சு இப்பொ 14. ன் கொண்டு பலி 15. சை ஊட்டினா 16. ல் நாழ் வானா 17. ழி நெய் முட்டா 18. மை அரிச்சிப் 19. பார் கை விலே(ய்) 20. கொடுத்து திருவி 21. ளக்கெரிப்போ 22. மானோம் அன் 23. பில் சகையோ 24. ம் இது பன்மஹே 25. ஸ்வர ரக்ஷை செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை தாலுகா, திருவெற்றியூர் கோயிலிலுள்ள சாசனம் ஒன்று, தெள்ளாறெறிந்த நந்தி போத்தரையரின் 18-ஆம் ஆண்டு, 298-ஆம் நாள் எழுதப்பட்டது.22 இச்சாசனம், நந்திவர்மன், கோயிலில் விளக்கு எரிப்பதற்காக 105 பொன் தானம் செய்ததையும், நந்தியம்பாக்கம் கிராமத்தார் அதைப் பெற்றுக் கொண்டதையும் கூறுகிறது. இது சிதைந்து போன சாசனம். நாயறு நாட்டு நந்தியம்பாக்கம் என்பது நந்திவர்மனுடைய பெயரால் ஏற்பட்ட கிராமம் என்று தோன்றுகிறது.23 நந்திவர்மனின் 18-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இன்னொரு சாசனம், தென் ஆர்க்காடு மாவட்டத்து திருக்கோயிலூர் தாலுகா மணலூர் பேட்டையில், காக்கா நாச்சியார் மண்டபம் என்னும் இடிந்து போன மண்டபத்தில் இருக்கிறது.24 திருவுழுதீசுவரத்து மகா தேவருக்குத் தேவமாரன் என்பவர் விளக்குக்காகப் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது. 18-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, திருச்சென்னம்பூண்டி, சடையார் கோவிலில் வாயிலின் வலது புறச் சுவரில் உள்ளது. சாசன வாசகம்25 1. ஸ்வஸ்தி ஸ்ரீ 2. தெள்ளாற் றெ 3. றிந்த நந்தி 4. ப் போத்தரைய 5. ர்க்கு யாண்டு 6. 18 - ஆவது தி 7. ருக் கடை முடி 8. மஹா தேவர்க் 9. கு இரண்டு நொ 10. ந்தா விளக்கினு 11. க்கு குடுத்தபொ 12. ன் அறுபதின் 13. கழஞ்சு இப்பொ 14. ன் கொண்டு பலி 15. சை ஊட்டினா 16. ல் நாழ்வாய் நா 17. ழி நெய் முட்டா 18. மை அரிச்சிப் 19. பார் கை விலேய் 20. குடுத்து திருவி 21. ளக் கெரிப் போ 22. மனோம் அன் 23. பில் சகையோ 24. ம் இது பன்மாஹே 25. ஸ்வர ரக்ஷை 19-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா, திருக்கோடிக்காவல், திருக்கோடீசுவரர் கோயில் தெற்குப்புறச் சுவர் சாசனம். நந்திப் போத்தரையரின் 19-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சாசனம், திருக்கோடிக்கா சிறுநங்கை ஈஸ்வரத்துக் கோயிலில் திருவிளக்கு எரிப்பதற்காக ஆழி சிறியன் என்பவர் 100 கலம் நெல் தானம் செய்ததைக் கூறுகிறது. திருக்கோடீசுவரர் என்பதன் பழைய பெயர் திருக்கோடிக்கா சிறு நங்கை யீசுவரம் என்பது தெரிகிறது. இச்சாசனம், பழைய சாசனத்தைப்படி எடுத்துப் பிற்காலத்தில் எழுதப்பட்டது. சாசன வாசகம்26 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. இதுவும் 2. மொரு பழங் கற்படி யா 3. ண்டு நந்திப் போத்தரை 4. யற்கு பத்தொன்ப 5. தாவது திருக்கோடிக்கா 6. வில் சிறுநங்கை ஈஸ்வரத் 7. து மஹாதேவர்க்கு திருவிளக்கி 8. னுக்கு ஆழிசிறியன் குடுத்த நெல் 9. லு நூற்றுக் கலம் இன்னெல்லின்ப 10. லிசையால் நாள்வாய் உழக்கு நெய் 11. நொந்தா விளக்கெரிப் போமானோம் இத் 12. தளி அர்ச்சிப்போம் ஆத்திரையன் நா 13. ராயணன் ஏறனும் இவன்றம்பிமாரும் 14. இன்னால்வோம் இது பழங்கற் 15. படி. இந்த ஸ்ரீ விமானத்திலே 16. ஏற வெட்டின மையில் முன் 17. னிவாஜகம் வெட்டிக்கிட 18. ந்த தனிக் கல்லால் உபை 19. யோக மில்லாமையால் 20. அது தவிர்ந்தது இது 21. நந்தில் பன்மாயேஸ்வரர் க 22. டைக் கூட்ட பெற்றார். 19-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கில், 14 கல் தூரத்தில் உள்ள திருவெள்ளறைக் கிராமத்துப் புண்டரீகாக்ஷ சுவாமி குகைக் கோயிலின் மேற்குப்புறத்துத் தூணில் உள்ளது இந்த சாசனம். வெயில் மழையினால் தாக்குண்டு காலப் போக்கில் இச்சாசன எழுத்துக்கள் பெரிதும் மறைந்து விட்டன. சில எழுத்துக்கள் மட்டும் காணப்படுகின்றன. சாசன வாசகம்27 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. நந்திவர்ம்மற்கு யா.... 2. 19 பல்லவகுல திலக... 3. நந்தி வர்ம்மற்கு............ 4. தித்த குல கேதன......... 5. (வி) சய நல்லூழான......... 6. (ய) ரையனால் நி........28 தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பெரு மாண்டூர், ரிஷபநாத ஸ்வாமிக்கோயில் என்னும் ஜைனக் கோயிலின் மேற்குப்புறச் சுவரில் உள்ளது. சாசனம்29 1. கோவிசைய நந்தி விக்கிரமவர்மற்கு யாண்டு பத்தொன்பதாவது பெரு 2. ம் பள்ளிஇல் வைத்த பொலியூட்டு நெல்முத லிரு நூற்று.30 21-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி தாலுகா, சென்னி வாய்க்கால், சிவன் கோயிலின் இடிந்த கோபுரத்துக்கு அருகில் உள்ள நடுகல் சாசனம். நந்திவர்மனின் 21-ஆம் ஆண்டு இடப்பட்டுள்ள இச் சாசனம், இங்கிருந்த மடத்தைச் சுட்டு அழித்தபோது, இம்மடத்தைச் சேர்ந்த சத்தியமுற்றத்தேவன் எதிர்த்தபோது அவன் கொல்லப்பட்டதைக் கூறுகிறது. இச்சாசனக் கல்லில், ஒரு ஆள் நெஞ்சில் அம்பு தைக்கப் பட்டிருப்பதுப் போல ஒரு உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இச்சாசனத்தில் பராந்தகபுரத்து அறிஞ்சிகை ஈஸ்வரம் கூறப்படுகிற படியால், நந்தி வர்மனுக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து வாழ்ந்திருந்த அறிஞ்சயன், அவன் தந்தை முதலாம் பராந்தச்சோழன் காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எழுத்தும் 10ஆம் நூற்றாண்டு எழுத்தாகத் தோன்றுகிறது. எனவே, இச்சாசனம் பழைய சாசனத்தைப் பார்த்துப் பிற்காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. சாசன வாசகம்31 1. ஸ்வஸ்திஸ்ரீதெள் 2. ளாற்றெறிந்து 3. ராஜ்யமுங்கொ 4. ண்ட நந்திப் 5. போத்தரையர்க் 6. கு யாண்டு இரு 7. பத்தொன்றாவது 8. பராந்தகப் புரத் 9. து அறிந்தி 10. கை ஈஸ்வரகிரு 11. ஹம் சாசன 12. த்தா லுடையோ 13. ரும்............... 14. .......தளி 15. யிலாதாகி நின்ற பட்ட ரேன்மாவலியநி 16. யஸ்தாந மாள்வான் செ (வணற்குண்டு) கொ 17. ண்டு வந்து மடமுஞ் சுட்டுக் காத்த ஸிகுர 18. வரையு மெறிந்து இவர் ஸிஷ்யன் ஒரு பிரா 19. மணன் சத்திமுற்றத் தேவன் றுண்டுப 20. ட்டான் வல்லுவனாட் டான். விஜயநந்தி விக்கிரமவர்மனின் 21-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இன்னொரு சாசனம், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுகா, அவிலால கிராமத்துக் கபிலேசுவரர் கோவிலில் இருக்கிறது.32 இவ்வூர் ஏரியைச் செம்மையாக வைத்திருப்பதற்காகக் கல்லாணக்காணம், வீதநாழி என்னும் வரிப் பணத்தை விக்கிரமாதித்த மகாபலி வாணராயர் விட்டுக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவர் மனைவியார் அதிப்பிரசாதி என்னும் விஜ்ஜியக்கனார் என்பவர் வேண்டுகோளின்படி இந்த வரிப்பணம் கொடுக்கப்பட்டது. விக்கிரமாதித்த மகாபலிவாணராயர், நந்தி வர்மனின் கீழடங்கிய சிற்றரசர். 22-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா திருப்பலாத்துறை (திருப்பிராய்த்துறை), ஆதி மூலேஸ்வரர் கோயில் மண்டபத்து வடபுறச் சுவரில் உள்ள சாசனம். இக்கோயிலுக்கு இரண்டு விளக்கெரிப்பதற்காக 60 கழஞ்சு பொன் தானம் செய்யப்பட்டதை இச்சாசனம் கூறுகிறது. சாசன வாசகம்33 1. ஸ்வஸ்திஸ்ரீ 2. தெள்ளாற்றெறி 3. ந்த நந்திப் 4. போத்தரையர் 5. யாண்டு இருபத் 6. திரண்டாவது தி 7. ருப்பாற்றுரை ம 8. ஹாதேவபடாரர் 9. க்கு இரண்டு ந 10. ந்தா விளக்கெரி 11. ப்பதற்கு குடுத் 12. த பொன் அறு 13. பதின் கழஞ்சு இ 14. ப் பொன் கொண்டி 15. ரண்டு நந்தாவிள 16. க்கும் முட்டாமை 17. எரிப்போ 18. மானோம் திருப்ப 19. ற்றுறை ஸபை 20. யோம் இதுப 21. ........... செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சீபும் தாலுகா, கூரம், சிவன் கோயிலின் தூண் ஒன்றில் உள்ளது. சாசன வாசகம்34 1. ஸ்வஸ்திஸ்ரீ || நந்தி 2. வர்ம்மமஹாராஜ 3. ந்நெழுத்து ஊற் 4. றுக்காட்டுக் கோட் 5. டத்துக் கூரத் 6. து சபையார் 7. காண்க தம்மூ 8. ரக்கள நிம்மடி 9. ப்போற்றிபடி 10. ஆயின ஆறுப 11. ட்டி நிலமும்மு 12. ன்பெற்றாரைமாற்றி 13. யாண்டு இருப 14. த்து......... 15. ............ 16. மஹாதேவ 17. ....அர்ச்சனாபோக 18. .....க்காளன் அர்ச்சி 19. த்துண் பானாகக்கா 20. ......குப்பணித்...... 21. .......தலுட்டாங் கண் 22. டருள திருக்கோயி 23. லிற் படாரர் திருவடி 24. க்கீழை சிலாலேகை 25. செய்து குடுக்க இற் 26. நீக்கி........ 22-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா. திருவைகாவூர், வில்வநாதேசுவரர் கோயில் முன் மண்டபத்துத் தென்புறச் சுவரில் உள்ள சாசனம். திருவைகாவூர் ஈசுவரருக்கு வண்ணக்கவிளகம் என்னும் 11/2 வேலி நிலம் தானம் செய்யப்பட்டதை இச்சாசனம் கூறுகிறது. இது பழைய சாசனத்தின் படியாகும். இதில், திருவைகாவூருக்குத் திருபுவன மாதேவி சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரைக் கூறுகிற படியால், இப்பெயர் ஏற்பட்ட பிற்காலத்தில் இச்சாசனம், பழைய சாசனத்தைப் பார்த்துப் படி எடுக்கப்பட்டது போலும். சாசன வாசகம்35 1. ஸ்வஸ்திஸ்ரீ நந்திவர்ம மராஜற்கு யாண்டு இருபத் திரண்டாவது திருவைய்காவு 2. டைய மஹாதேவற்கு திருநொந்தா விளக்கும் அமுது படிக்கும் உபையம்வை 3. ய்க்க சந்திப்பெலியார் திரிபுவனமாதேவிச் சருப் பேதிமங்கலத் 4. து ஸபையார் பக்கல் பொன் குடுத்துப் பொலி கூலிக்குச் செல 5. வாக காசுகொள்ளா ஊற்கீழ் இறையிலியாக மணலிடில் வேலி 6. யாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் 11/2 இன்னிலம் ஒன்ற 7. ரையும் இறக்காதான் திருவடி இரண்டு மெந்தலை மேலின இது இறக்குவாந்தங்க 8. ளம்மைக்குத் தாநேய் மினாளன்|| இது கல் வெட்டுப்படி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா, திருவிடை மருதூர், மகாலிங்க சுவாமி கோயிலின் வடக்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம். “காடுபட்டிகள் நந்திபோத்தரையர்” திருவிடைமருதூர் கோயிலுக்குத் தானம் செய்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது. இந்தக் காடுவெட்டி நந்திப்போத்தரையரை மூன்றாம் நந்திவர்மன் என்று கூறுகிறார்கள். ஆனால் இரண்டாம் நந்திவர்மனுக்குப் பொருந்தும். இந்த பழைய சாசனம், பிற்காலத்திலே பரகேசரிவர்மனுடைய 4-ஆம் ஆண்டில் படியெடுத்து எழுதப்பட்டது. பரகேசரிவர்மன் என்பவர் உத்தமச்சோழராக இருக்கக்கூடும். சாசன வாசனகம்36 1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி வன்மற்கு யாண்டு 4-ஆவது நாள் 3000205னால் திருவிடைமருதில் தேவர் நாடகசாலையே இத்தேவர் ஸ்ரீகார்யம் திருத்தக் கடவ திரைமூர் சபையோரும் திருவிடை மருதில் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் தேவ 2. ர் கணக்கு மருதன் பிரமகுட்டனும் ஸ்ரீகார்ய மாய்கின்ற பூசலான் குடையாரும் இருந்து தேவற்கு வைய்த்த பொலியூட்டினால் வைத்த விளக்கு ஆராய்ந்த இடத்து இந்த ஸ்ரீ கோயில் கற்றளி எடுப்பதற்கு முன்பொலியூட்டுக்குப் பிரமாணமாய் உள்ள கற்கள் 3. எல்லாம் அடிமனைக்கீழே இட்ட கல்லின்படி எடுத்துக்கொண்டு இட்டமையில் முன் படி மேலே கன்மேல் வெட்டிக் கொள்க வென்று ஏவக் கன்மேல் வெட்டினபடி காடு பட்டிகள் நந்திப்போத்தரை 4. யர் குமார மார்த்தண்டனென்னும்37 விளக்கினுக்கு வைச்ச பொன் 60 இப்பொன் அறுபதின் கழஞ்சும் கொண்ட திரைழர் சவையார் அட்டக்கடவதான நெய் உரி இனால் விளக்கு க-உம்.38` திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி தாலுக்கா, லால்குடி சப்தரிஷீசுவரர் கோவில் வடபுறத்துச் சுவரில் உள்ள சாசனம். கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எழுத்தாகக் காணப்படுகிற இச்சாசனம், பழைய சாசனத்தின் படி என்று தெரிகிறது. லால்குடியின் பழைய பெயர் திருத்துவத்துறை என்பது இச்சாசனத்தினால் தெரிகிறது. இதில், திருத்துவத்துறை சிவபெருமானுக்கு இரவும் பகலும் விளக்கெரிப்பதற்காக “தெள்ளாறெறிந்து வென்ற நந்திப்போத்தரையர்” 60 பொற்காசு தானம் செய்ததைக் கூறுகிறது. சாசன வாசகம்39 1. ஸ்வஸ்திஸ்ரீ யாண்டு எதிராமாண்டு இடையாற்று நாட்டுத் திருத்துவத்துறை மஹாதேவர்க்கு தெள்ளாறெறிந்து வென்ற நந்திப்போத்தரை 2. யர் குடுத்த பழங்காசு 60-து இவ்வறுபது காசும் இஞ்ஞாட்டு நல்லிமங்கலத்து சபை யோம் இவ்வறுபது காசும் திருத்துவத்துறை மஹாதேவர் 3. இடைகொண்டு நாராய நாழியால் நிசதி நாழி நெய் ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் இரவும் பகலும் எரியக்கொண்டு சென்று அளப் போமானாம் 4. ம் நல்லி மங்கலத்து சபையோம் திருத்துவத்துறை மஹாதேவர்க்கு அளவேமாயில் முட்டில்முட்டி ரட்டியும் மூலப்பட்ட பன்மகேஸ்வரரே 5. சபையாகவும் தனித்தாகவும் நிலைக்களமுள்ளிட்ட தான் வேண்டுகோவினுக் புக்கவுள இரு நூற்றுப்பதினாறு காணம் தண்டமிட வெ 6. ட்டினோம் நல்லிங்கலத்து சபையோம். இது பன் பன்மகேஸ்வரர் நாற்பத் தொண்ணாயிரவரும் இரக்ஷை. சயாம் தேசத்துச் சாசனம் சயாம் தேசத்து தகோபா மாவட்டத்தில் காவு பஃரஹ் நாராய் (நாராயண குன்று) என்னும் இடத்தில் ஒரு தமிழ் எழுத்துச் சாசனம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சாசனத்தில் சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. அது அவனி நாரணன் (தெள்ளாறெறிந்த நந்திவர்மன்) காலத்துச் சாசனம் என்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கருதுகிறார்கள். அந்தச் சாசனத்தின் வாசகம் இது : 1. .........ரவர்மன்கு......... 2. (ம)ந தாநநங்கூரடை....... 3. ....தொட்டகுளம் பேர் ஸ்ரீ அ....... 4. நாரணம் மணிக் கிராமத்தார்..... 5. கும் சேனா முகத்தார்க்கும் 6. ...முதார்க்கும் அடைக்கலம்.40 பாண்டியன் வரகுணமகாராசனுடைய சாசனம் கீழ்க்கண்ட சாசனம் சோழநாட்டில் உள்ளது. வரகுண மகாராசன், சோழநாட்டை வென்று அரசாண்ட காலத்தில் இது எழுதப் பட்டது. அக்காலத்தில் சோழ நாட்டில் வழங்கிய வட்டெழுத்தினால் எழுதப் படாமல் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் வழங்கிவந்த பல்லவ எழுத்தினால் இச்சாசனம் எழுதப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி என்னும் ஊரில் உள்ள சப்தரிஷீசுவரர் கோயிலில் இந்தச் சாசனம் இருக்கிறது. மாறஞ்சடைய னான வரகுண மகாராசன் இக் கோயிலுக்கு 120 பழம்பொற்காசு, கோயிலில் விளக்கு எரிப்பதற்காக வைத்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது. லால்குடியின் பழைய பெயர் திருவத்துறை என்பதும் சப்தரிஷீசுவரரின் பழைய பெயர் திருத்துறை மகாதேவர் என்பதும் இச்சாசனத்தினால் தெரிகின்றது : சாசன வாசகம்41 1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாஞ்சடையர்க்கு யாண்டு 4 வதின் எதிர் 9 ஆமாண்டு தனுநாயற்று செவ் வாக்கிழமை பெற்ற சதயம்த்து நாள் இ 2. டையாற்று நாட்டு திருத்தவத்துறை மஹா தேவர்க்கு இரவும் பகலும் சந்திராதித்தவல் இரண்டு நொ(ந்தா திருவிளக்கு) 3. எரிப்பதாக கோமாறஞ் சடையனாகின பாண்டிய குலபதி வரகுணமஹாராயர் அண்டநாட்டு வேளான் கையில்க் குடுத்த பழங் 4. காசு 120 நூற்றிருபது காசுங் முதல் கெடாமை பொலியூட்டினால் நிசதிநா............ 5. அளப்போமானோம் இப்படி ஒட்டி இக்காசு கொண்டோம் இடையாற்று நாட்டு இளம் பெருங் காயிருக்கை சபையோ 6. ம் இஞ்ஞெய் நிசதி இருநாழியும் முட்டில் முட்டி ரட்டியும் மூலப்பட்ட பன்மஹேஸ்வரரே சபை யாகவும் தனித்தாகவும் நி...... 7. ள்ளிட்ட தான் வேண்டு கோவினுக்கு புக்கவுள அஞ்ஞாற்று காணம் தண்டமிட ஒட்டிக் குடுத்தோம் திருத்தவத்துறை மஹாதேவர்க்கு. 4-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம், தஞ்சை தாலுகா, தில்லஸ்தானத்து இருதயா லேசுவரர் கோவில் சாசனம். சாசன வாசகம்42 1. ஸ்வஸ்திஸ்ரீ கோமா 2. றஞ்சமையற்கு யா 3. ண்டு 4 மாண்டு திரு 4. நெத் தாநந்து ம 5. ஹா தேவற்கு வரகு 6. ண மஹாராஜ திருவி 7. ளக்கினுக்கு நம்பி 8. ராட்டியார் கைவழி 9. கொண்ட காசு 2000ம் 10. கோன் பரா(ன்) தக 11. னார் கை வழிகொண் 12. ட காசு 1000ம் வெண் 13. ப நாட்டு வௌhன 14. ன் வழி குடு(த்)த காசு 15. 1020 மாக இதனால் 16. நிசதி நாநா 17. ழி னெய் நாராச நாழி 18. யால் ஸ்ரீ கோயிலு 19. க் கெய் கு(ண)ந்து 20. அட்டு வொமா னோம் ப 21. னையூர் இரண் 22. டு செரி சபை 23. யோம். 10-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம், தஞ்சை தாலுகா, செந்தலை, சுந்தரேசுவரர் கோவில் மண்டத்துத் தூணில் உள்ள சாசனம். சாசன வாசகம்43 1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்ச 2. டையற்கு யாண்டு 10 ஆ 3. வது விடேல் விடுகு முத்தரை 4. யந் அடியான் கிட்காவற் காத்தா 5. ன் நியமமாகாளத்து பிடாரி 6. யாற் கொரு திருவிளக்கிநுக் 7. கும் ஒரு திருவமுர்துக்கு மு 8. தலாக இப்பிடாரியார் உள் 9. ளூர்களில் கல்லிக்குடுத்த 10. நிலம் அரை காணிக்கடன் 11. ஜ 50 இது பன்மாஹெஸ்வ 12. ர ரக்ஷை. அம்பா சமுத்திரத்துச் சாசனம் திருநெல்வேலி மாவட்டத்து அம்பா சமுத்திரம் தாலுகாவில் அம்பா சமுத்திரம் என்னும் ஊர் இருக்கிறது. இதன் பழைய பெயர் இளங்கோக்குடி அல்லது இளங் கோயிக்குடி என்பது. இங்கு இப்போது, எரிச்ச உடையார் கோயில் என்று வழங்கப்படுகிற சிவன் கோவில் இருக்கிறது. இக்கோயிலுக்குப் பழைய பெயர் திருப்போத்துடையார் கோயில் என்பது. இக் கோயிலில் வரகுண பாண்டியனுடைய சாசனம் ஒன்று வட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அச்சாசனத்தின் வாசகம் இது : 1. ஸ்வஸ்தி ஸ்ரீ படரரனுக் கிரஹத்தினா 2. ற் முள்ளி நாட்டிளங் கோக் குடி தி 3. ருப்போத்துடையார் ஸ்ரீகோயில் படார(ர்)க்கு முதல் 4. கெடாமை பொலி கொண்டு நான்கு காலமுந் திருவமு 5. து செலுத்துவதாக வரகுண மஹாராஜர் தொண்டை நாட்டுப் 6. பெண்ணைக்கரை அரைசூர் வீற்றிருந்து இளங் கோக் கு 7. டிச் சவையார் கைய்யிற் குடுத்த காசு இருநூற்று தொ 8. ண்ணூ று இவற்றாற் காசின் வாயிரு கலமாக ஆண்டு 9. வரை சவையா ரளக்கும் பொலி நெல் ஐந்நூற் நூற் றெண்பதை 10. ங் கலம் இவை கொண்டு படாரர் பணிமக்களும் இளங் 11. கோக் குடிச் சவையாரும் உடனின்று வரகுண 12. மஹாராஜர்க்கு ராஜ்யவர்ஷம் நான்காவதுக்கு எதிர் 13. பன்னிரண்டாம் யாண்டு துலாஞாயிறு முதலாக நிகதி 14. யாக நான்கு கலமுந் திருவமுது செலுத்தும் ப 15. டி ஒரு பொழுதைக்கு வேண்டுவன அரிசி செந்நெற் 16. றீட்டல் நானாழி கும்மாயத்துக்கு பயற்று 17. ப் பருப்புரி நிவேதிக்க பசுவின் னறு நெய்யு 18. முக்குப் பசுவின்றோய் தயிருரிக் கருவாழை 19. ப் பழனான்கு சர்க்கரை ஒரு பலம் கறி அமிர் 20. து காய்க்கறி ஒன்று பொரிக்கறி ஒன்று எற்றிக் கறி 21. ஐந்சி னுக்குங் கறி பதின் பலம் 23. கறி துமிக்கவும் பொரிக்கவும் பசுவினறு நெ 24. ய் ஆழாக்கு கூட்டுக்கு பசுவின்தோய் தயி 25. ருரிக் காயம் இரு செவிட்டு இலை அமிர்து 26. வெள்ளிலை ஈரடுக்கு அடைக்காய் பத்து 27. நூறு ஒரு செவிட்டு ஆக நிகதி நான்கு 28. பொழுதைக்கு வேண்டுவன அரிசி செ 29. ந் நெற் றீட்டல் பதினறு நாழி இரண்டாம் பக்கம் 30. ஆக ஓராட்டைக்கு அரிசி செந்நெ 31. ற்றீட்டல் அறுபத்து நாற் 32. கலம் இவை கலவரிசிக்கு முக்கல 33. நெல்லாக நூற்றுத் தொண்ணூ ற்றிரு கல 34. ம் பயற்றுப் பருப்பிரு 35. நாழி இவை நாழிப் பருப்பு 36. க்கு முந்நாழி நெல்லாக ஓராட் 37. டைக்கு நெல் இருபத்து நாற் கலம் 38. பசுவின்னறு நெய் நாழியுரி இ 39. வை நாழி நெய்க்கு முப்பதினாழி நெ 40. ல்லாக ஓராட்டைக்கு நெல் நூற்றெண்ப 41. தின் கலம் பசுவின் றோய் தயி 42. ர் நானாழி இவை நாழித் தயிர்க்கு 43. முந்நாழி நெல்லாக ஓராட்டைக்கு நெ 44. ல் நாற்பத்தெண்கலம் கருவாழைப்ப 45. ழம் பதினாறு இவை இரண்டுக்கு 46. நாழி நெல்லாக ஓராட்டைக்கு நெல் 47. முப்பத்திருகலம் சர்க்கரை நாற்(ற)ப 48. லம் இது ஒருபலத்துக்கு நாழி 49. ய்யுரி நெல்லாக ஓராட்டைக்கு நெல் 50. இருபத்து நாற்கலம் கறி நாற்ப 51. தின் பலம் இவை பன்பல 52. த்துக்கு நாழி நெல்லாக ஓராட் 53. டைக்கு நெல் பதினறு கலம் காயம் 54. ஆழக்கே முச்செவிட்டு இது 55. உழக்கு காயத்துக் கறுநா மூன்றாம் பக்கம் 56. ழி நெல்லாக ஓராட்டை 57. க்கு நெல் பத்தொன்ப 58. தின் கலனேமுக்குறுணி 59. இலையமுது வெள் 60. ளிலை இரண்டு பற்று 61. இவை ஒரு பற்றுக் கி 62. ரு நாழி நெல்லாக ஓரா 63. ட்டைக்கு நெல் பதி 64. னறு கலம் அடைக்கா 65. ய் நாற்பது இவை இ 66. ருபதடைக்காய்க்கு முந் 67. நாழி யுரி நெல்லாக 68. ஓராட்டைக்கு நெல்லி 69. ருபத்தெண்கலம் நூறு 70. நாற்செவிட்டு இது 71. நாழிக்கு நாழியாக 72. ஓராட்டைக்கு நெல் 73. பன்னிருகுறுணி எல் 74. லாம் ஏற்றி ஓராட் 75. டைக்கு வே'99 நெல் ஐந் 76. நூற்றெண்பதின் கலம் 77. இப்பரிசு நியதி 78. ப் படி முட்டாமை 79. நெடுங்கால முஞ்செ 80. லுத்துவதாக வைத்தா 81. ர் ஸ்ரீ வரகுண மகா ராஜர். நந்திபோத்தரையர் மகாதேவியர் மாறம்பாவையரின் சாசனங்கள் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுக்கா, திருச்சென்னம் பூண்டி, சடையார் கோவிலில் ஒரு தூணில் உள்ள சாசனம். சாசன வாசகம்44 1. ..............த்தி....... 2. முடி மஹா தேவர்க்கு மாசிமக 3. ந்திருவிழா வெடுப்பதற்கு ச 4. ந்திராதித்தவற் பல்லவதிலக 5. குலத்து நந்திப் போத்தரை 6. யர் மஹாதேவியாரான அடிகள் 7. கண்டன் மாறம் பாவையார் வை 8. த்த பொன் பதினேழு கழஞ்செ 9. கால் இப்பொன்னில் முதல் விழா 10. எடுக்கு நான்று எழுகழஞ்சு பொ 11. ன்னா லோராண்டில் கழஞ்சின் வா 12. ய் கலவரிசியாக எழுகல வரிசியா 13. ல் திருமேனியாட நெய் பால் தயிர் 14. ஐஞ்ஞாழிச் செதும் இளநீர் இருபது 15. அகநாழிகை பரிபார மடங்கத் திரு 16. வமிர்தரிசி முக்குறுணியும் திருவ 17. மிர்துந் திருவிளக்கும் நெய்யா 18. ழி தயிர் இருநாழி அமிர்து கறி 19. சற்கரை வாழைப்பழம் அடைக்கா 20. யிருபதும் இப்படி யாராதிப்பிக்கவும் 21. மிக்க வரிசி கொண்டு பிராமணருமடி 22. கள் மாரு முண்டு திருவிழாவெடுத்து 23. மிக்க பொன்னில் இருகழஞ்சு பொன் 24. னாற் பலிசை யாண்டுவரை அரை 25. க்கழஞ்சினால் நிசதி நறும்பூ நூறு 26. வடமோரிலைச் சாந்தும் எழுநாளிடு 27. விதாக நின்ற பொன்னில் கழஞ்சே காலால் 28. பலிசை ஓராண்டில் பன்னிரு நாழியுரிய் 29. நெய்யால் பிராம்மணரும் அடிகள் மாரும் 30. உண்பதாக நிறை எழுகழஞ்சு பொன் 31. இதன்குறை எழுத்து கிழைக்கால் 32. எழுத்தின் குறை 33. பலிசை யாண்டு 34. வரைகழஞ்சின் 35. வாய் கால்ப்ப 36. லிசையாக வந் 37. த பொன்கழஞ்செ 38. முக்கால் இப்பொ 39. ன் கொண்டு தீர்த் 40. தமாடினால் திரு 41. நமனத்துக்கு 42. வேண்டுமவி 43. கொண்டு நூ 44. ற்றெட்டுக் கலை 45. சத்தால் திருந 46. மனஞ் செய்வ்வ 47. தாக இப்பொன் 48. கொண்டாரை இ 49. லக்ஷணம் செய் 50. து எய்யினாட்டு 51. தேவதானம் சிரி 52. கண்டபுரத்து அ 53. றுகை வாணிகர் கை 54. வ்வழி வைத்தது 55. இதுபன்மா 56. ஹேஸ்வர ரிரக்ஷை மாறன் பாவையார் சாசன வாசகம்45 1. க்கு பல்லவ தில கு 2. லத்து நந்திப் போத் 3. தரையர் மஹாதேவி 4. யாரான அடிகள் கண் 5. டன் மாறம் பாவையா 6. ர் வைத்த பொன் அறு 7. கழஞ்சே காலால் பூ 8. வில் கழஞ்சின் வா 9. ய்யரைக்கால்ப் பொ 10. ன்னாக வந்த பலி 11. சை பூவில் முக்காலே ஐஞ் 12. சுமா இப்பொன் கொண்டு ஐ 13. ப்பிகை விஷூவும் சித் திரை 14. விஷூவும் திருமேனி யாட 15. நெய் பால் தயிர் ஐஞ் ஞாழி 16. ச் செய்தும் பரிபாரமடங்க 17. திருவமிர் தரிசி பதக்கு நா 18. னாழி இவ்வெவ்வை இளநீர் 19. வாழைப் பழஞ் சற்கரை இ 20. ருபது செய்தும் நறும்பூச் 21. சாந்து குங்கிலிய முங்கொ 22. ண்டாராதிக்கவும் இந் நாளா 23. ல் பிராமணர் ஐம்பதின் மரு 24. ம் திருக்கோயில் பணி செய் 25. யும் மாணிகள் ஐவ்வரும் 26. அடிகள் மாரும் பணி செய் 27. மக்களும் உண்பதாக வைத் 28. தேன் எய்யினாட்டுத் தேவ 29. தானம் சிரிகண்ட புர 30. த்து அறுவை வாணி 31. கர் இப்படி அறுதிங் 32. கள் வார மராய்வதாக 33. வைத்தேன் கண்டன் மா 34. றம் பாவையேன் இது ப 35. ல்மாஹேஸ்வர ரிர 36. க்ஷை. அடிக்குறிப்புகள் * Ep. Ind. Vol. XXII P. 267 - 281. 1. S. I. I. Vol. XII. No. 45. (A. R. No. 475 of 1925) 2. S. I. I. Vol. XII. No. 46 (A. R. No. 347 of 1914) 3. S. I. I. Vol. XII. No. 47. (A. R. No. 158 of 1919) 4. Epi. Ind. Vol. XX. p. 52. 5. No. 929. S. I. I. Vol. VII. A. R. No. 300 of 1902 6. Ep. Col. 469. of 1937 - 38 7. No. 80. S. I. I. Vol. VII. A. R. No. 73 of 1900 8. S. I. I. Vol. XII. No. 48, A. R. No. 88 of 1910 and 529 of 1905. 9. S. I. I. Vol. II, p. 501 - 517. 10. No. 309. S. I. I. Vol. VIII. A. R. No. 36 of 1903. 11. இதன் கீழே இரண்டு வரி எழுத்து அழிந்துவிட்டன. 12. No. 924. S. I. I. Vol. VII, A. R. No. 295 of 1902. 13. S. I. I. Vol. XII. No.50. (A. R. No. 406 of 1905). 14. S. I. I. Vol. XII. No. 51. (A. R. No. 349 of 1911). 15. S. I. I. Vol. XII. No.52. (A. R. No. 49 of 1905). 16. இதன் பிறகு சாசன எழுத்து புலப்படாமல் அழிந்திருக்கிறது 17. No. 925. S. I. I. Vol. VII. A. R. No. 296 of 1902. 18. S. I. I. Vol. XII. No.53. (352 of 1908.) 19. J. S. I.A. Vol. I.p. 160 - 185. M.C.C. Mag. Vol. VIII. p. 102. 20. S. I. I. Vol. XII. No.54. A. R. No. 8 of 1934-35. 21. J. S. I. A. Vol. II. p. 160-185. 22, 23. Epi. Col. 162 of 1937-38. 24. Ep. Col. 467 of 1937-38. 25. No. 503. S. I. I. Vol. VII. A. R. No. 283 of 1901. 26. S. I. I. Vol. XII. No.55. A. R. No. 27 of 1930-31. 27. J. S. I. A. Vol. I. p. 160-185. 28. மற்றப் பகுதிகள் மறைந்து விட்டன. 29. No. 847. S. I. I. Vol. VII. A. R. No. 220 of 1902. 30. இந்தச் சாசனம் முழுதும் எழுதப்படவில்லை. 31. S. I. L. Vol. XII. No.56. A. R. No.144 of 128-29. 32. Ep. Col. 188 of 1937-38. 33. S. I. I. Vol. XII. No.57. A. R. No.180 of 1907. 34. No. 40. S. I. I. Vol. VII. A. R. No. 38 of 1900. 35. S. I. I. Vol. XII. No.58. A. R. No. 48 of 1914. 36. S. I. I. Vol. III. No.124. No. 199 of 1907. 37. குமார மார்த்தான்டன் என்னும் பெயர் 199 - 1907 சென்னை எபிகிராபி அறிக்கையில் காணப்படுகிறது. இப்பெயர் பல்லவமல்லன் ஆன இரண்டாம் நந்திவர்மனுக்கு உண்டு. ஆனால், மூன்றாம் நந்தியைத் தான் இச்சாசனம் குறிக்கிறது என்று சாசன இலாகாதார் கூறுகிறார்கள். 38. See S. I. I. Vol. XII. No. 59 p. 24. 39. Epi. Indi. Vol. XX, (A. R. No. 120 of 1928-29.) 40. இச் சாசனத்தைப் பற்றிய கட்டுரைகளைக் கீழ்கண்ட கட்டுரைகளில் காண்க : Note a Tamil Inscription in siam. By E. Hultzsch. pp. 337-339. The Takopa Tamil Inscription. pp. 689-690. J. R. A. S. 1913. Supplementary note on a Tamil Inscription in Siam by E. Hultzsch pp. 397-398. J. R. A. S. 1914. J. O. R. Madras Vol, VI p. 300. 41. Epi. Ind. Vol. XX. pp. 52,53 42. No. 608. S. I. I. Vol. V. A. R. No. 51 of 1895. 43. No. 446. S. I. I. Vol. VI. A. R. No. 10 of 1899. 44. No. 523. S. I. I. Vol. VII. (A. R. No. 301-A. of 1901.) 45. No. 525. S. I. I. Vol. VII. A. R. No. 303 of 1901. அடிக்குறிப்புகள் 1. Inscriptions (Texts) of the Pudukkottai state No. 14. 2. The Kodumbalur Inscription of Vikrama Kesari; Prof. K.A. Nilakanta Sastri P.1 - 10. J.O.R. Vol. VII - 1933. 3. S. I. I. Vol. II P. 501-517. 4. 2-ஆம் பத்து. 9-ஆம் திருமொழி. 5. 5. Epi. Rep. Madras. G. O. No. 574. 17th July 1908. P. 87-89; J. O. R. Madras Vol. VII P. 1-10. 6. Pallava Administration Etc. by C. Minakshi, P. 303. 7. J. R. A. S. 1934. 8. Nos. 258 and 273 of 1903. No. 306 of 1903. 9. The date of Bhuti vikrama kesari, K. A. Nilakanta Sastri, J. R. A. S. July 1935. 10. 377 of 1914. 11. 335 and 336 of 1904. அடிக்குறிப்புகள் 1. On Yuan chuang’s Travels in India By Thomas watters, Vol. II, P. 224 -225. 2. Ancient geography of India by General Cunningham, p. 545. 3. P. 226. on Yuan Chwang’s Travels in India by Thomas Watters, Vol II. 4. P. 548. Ancient geography of India by General Cunningham. 5. சீல பத்திரர் என்பவர் நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர். இவர் சீனயாத்திரிகரான யுவான் சுவாங்குக்கு வடமொழி கற்பித்த ஆசிரியர். 6. P. 228 - 299. on yuan chwang’s Travels in INdia by Tomas watters, Vol.II. 7. P. 549. Ancient geography of India by General Gunningham. மூவர்கோயில் சாசனம்* I புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் தாலுகா கொடும் பாளூரில் மூவர்கோயில் என்னும் இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப் பட்ட வடமொழிச் சாசனம் ஒன்று இருக்கிறது. கொடும்பை என்னும் கொடும்பாளூரை அரசாண்ட பூதி விக்கிரம கேசரி என்னும் வேளிர்மரபைச் சேர்ந்த சிற்றரசன் இந்தச் சாசனத்தை எழுதினான். இவன் தன் மனைவியர் இருவர் பேராலும் தன் பேராலும் ஆக மூன்று கோயில்களைக் கட்டியதோடு பெரிய மடம் ஒன்றையும் கட்டி, அந்த மடத்தைக் காளமுகச் சைவ குருவாகிய மல்லிகார்ச்சுனர் என்பவருக்குத் தானம் செய்தான். அன்றியும், 50 துறவிகளுக்கு உணவுக்காகப் பதினொரு கிராமங்களையும் தானம் செய்தான். இந்த செய்தியைக் கூறுகிற இந்த சாசனத்தில், பூதிவிக்கிரம கேசரியின் முன்னோர்களான ஏழு தலைமுறையில் இருந்தவர்களின் செய்தி களும் கூறப்படுகின்றன. இந்தச் செய்திகள் பழைய சரித்திர வரலாற்றினைக் கூறுகிறபடியினால் மிகவும் உபயோகம் உள்ளவை. இந்தச் சாசனத்தின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் அழிந்து விட்டன. இந்த மூவர்கோவில் சாசனத்தை முதன்முதல் கண்டுபிடித்த வெங்கையா அவர்கள் 1907-08 ஆம் ஆண்டு, சென்னை எபிகிராபி அறிக்கையில் வெளியிட்டார். பிறகு இந்தச் சாசனம் புதுக்கோட்டை சாசனங்கள் என்னும் நூலில் 14-ஆம் எண் சாசனமாக வெளியிடப்பட்டது.1 சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கீழ்நாட்டு ஆராய்ச்சி என்னும் ஆங்கில வெளியீட்டில், 1933-இல் சாசனத்தை வெளியிட்டதோடு இதன் கருத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.2 நமது ஆராய்ச்சிக்கு இந்தச் சாசனம் பெரிதும் வேண்டியதா யிருக்கிறது. ஆகையினால், இந்தச் சாசனக் கருத்தைத் தமிழில் தருகிறேன். கொடும்பளூர் சாசனம் - தமிழாக்கம் ................. பாண்டியனுடைய யானைக் கூட்டத்தை வென்றவன் ................................ 1. இவன் வழியில், மழவரை வெற்றிகொண்ட புகழ்பெற்ற வீரதுங்கனான பிரவீரஜித்து இவனுக்கு மகனாகப் பிறந்தான். இவனுக்கு அதிவீர அநுபமன் என்பவன் பிறந்தான். இவனுக்குச் சங்ககிருத்து என்பவன் பிறந்தான். இவனுக்குப் பிறந்தவன், இளவயதிலே பாம்புகளோடு வளர்ந்து புகழ்பெற்ற நிருபகேசரி ஆவன். இவன் மகன் வாதாபியை வென்ற பரதுர்க்கமர்த்தனன் என்பவன். 2. இவனுடைய மகன், திவ்விய புகழொளி பெற்றவனும், அதிராஜ மங்கலத்தில் சளுக்கியனை வென்ற (கொன்ற?)வனுமாகிய சமராபிராமன் என்பவன். 3. இவன் மகன் யதுவம்வசத்தின் கொடிபோன்றவனான, தன் பெயருக்கேற்றபடி இணையற்றவனான அநுபமன் என்பவன். இவன் சோழ அரசன் மகளை மனைவியாகப் பெற்றவன். இவள், திருமாலின் மனைவி திருமகளைப் போன்றும், பிரமன் மனைவி கலைமகளைப் போன்றும், அரசனுடைய மனைவி மலைமகளைப் போன்றும் சிறப்பு வாய்ந்தவள். 4. இவருக்குப் பிறந்தவன் புகழ்பெற்ற பூதி என்னும் பெயருடைய மின்னாமலை என்பவன். இவன் போரிலே விக்ரமகேசரி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். 5. பல்லவர் சேனையின் இரத்தந் தோய்ந்தபடியினாலே, காவிரி ஆற்றின் நீர் செந்நிறமாயிற்று. மேலும் இந்த வீரன், போரிலே வீரபாண்டியனை வென்று வஞ்சிவேளைக் கொன்றான். 6. பகைவராகிய யானைக் கூட்டத்தை வென்ற பிறகு விக்ரம கேசரி கொடும்பாளூர் நகரத்திலே வாழ்ந்திருந்தான். 7. புலவர்களுக்குக் கற்பகத் தருவாகவும், அரசரின் கையாகிய தாமரைகளுக்குத் தண்மதியாகவும், மண்மகளுக்கு திருமகளுக்கும் நாமகளுக்கும் புகழ்மகளுக்கும் தலைவனாகவும் இருந்து இவன் அரசாண்ட போது, கூர்மையானது மகளிர் கண்களிலேயும், நிலையின்மையானது அவர்களின் இமையிலேயும், கருமையானது அவர்கள் கூந்தலிலேயும், நெருக்கமானது அவர்கள் தனத்திலேயும் காணப்பட்டன. (மற்ற இடங்களில் காணப்படவில்லை.) 8. இவனுடைய இரண்டு நல்ல மனைவியர் கற்றளி, வரகுணை என்பவர். கற்றளி இரண்டு அழகான பிள்ளைகளாகிய பராந்தகன், ஆதித்யவர்மன் என்பவரைப் பெற்றாள். 9. தவவொழுக்கத்தில் சிறந்தவரான வித்தியாராசி என்பவரின் சீடரும் அத்ரேய கோத்திரத்தில் பிறந்து வேதங்களைக் கற்று மதுரையில் வசித்து வந்தவருமாகிய புகழ் பெற்ற மல்லிகார்ச்சுனர் என்பவர் ஒருவர் இருந்தார். 10. தன் பெயரினாலும் தனது இரண்டு மனைவியர் பெயரினாலும் மூன்று விமானங்களை அமைத்து அவற்றில் மகேசுவரரை எழுந்தருளி வித்து இவன் (விக்கிரமகேசரி) அவனுக்கு (மல்லிகார்ச்சுனருக்கு) ஒரு பெரிய மடத்தை அளித்தான். 11. இந்த யாதவன், காளமுக வழிபாட்டைச் செய்யும் முனிவர் தலைவனுக்கு ஒரு பெரிய மடத்தையும் அதனுடன் சேர்ந்த பதினொரு கிராமங்களையும் கொடுத்தான். 12. அசித வக்ரத் (காளமுக) துறவிகள் ஐம்பதின்மருக்காகப் பெரிய மடத்தையும்...........சந்தனம், புஷ்பம், அட்சதை, தூபம், தீபம், தாம்பூலம்.......அரசன்.......... இந்த சாஸனத்திலிருந்து கீழ்கண்ட சிற்றரசர், யாதவகுலத்தைச் சேர்ந்த வேளிர், கொடும்பாளூரில் இருந்தார்கள் என்பது தெரிகிறது. பாண்டியனுடைய யானைப்படையை வென்றவன் பெயர் காணப்பட வில்லை. 1. பிரவீரஜித்து, 2. வரதுங்கன் (மழவரை வென்றவன்.) 3. அதிவீர அநுபமன் 4. சங்க கிருத்து 5. நிருபகேசரி (இளமையில் பாம்புகளோடு வளர்ந்தவன்) 6. பரதுர்க்கமர்த்தனன் (வாதாபிஜித்) 7. சமராபிராமன் (சளுக்கியனை அதிராசமங்கலத்தில் வென்றவன், யதுவம்சகேது என்னும் சிறப்புப் பெயருள்ளவன், சோழன் மகளான அனுபமை என்பவளை மணந்தவன்) 8. பூதி விக்ரமகேசரி (பல்லவர் சேனையை வென்றவன். பாண்டியனை வென்று வஞ்சிவேளைக் கொன்றவன். கற்றளி, வரகுணை என்பவரை மணந்தவன். கற்றளி வயிற்றில் பிறந்தவர்) பராந்தக வர்மன், ஆதித்ய வர்மன். II இந்த சாசனத்தை ஆராய்வோம். முதலில் 5-ஆவது எண்ணில் கூறப்பட்ட நிருபகேசரியை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பு இந்தச் சாசனத்தை ஆராய்ச்சி செய்த வெங்கையா, நீலகண்ட சாஸ்திரி, மீனாட்சி, ஹீராஸ் பாதிரியார், ஆரோக்கியசாமி முதலியவர்கள். நிருபகேசரியைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஏன் ஆராயாமல் விட்டார்களோ தெரியவில்லை. இவனைப்பற்றி நாம் ஆராய்வோம். நிருபகேசரி என்பது அரசர் சிங்கம் என்று பொருள் பெறும். இது, இவனுடைய சிறப்புப் பெயராக தெரிகிறது. இவன் இளமையில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று இந்தச் சாசனம் இவனைப்பற்றிக் கூறுகிறது. இதன் கருத்து என்ன? பாம்புகளோடு இருந்து மனிதன் வாழ முடியுமா? அது இயற்கையா? நிருபகேசரி, சிறுவயதில் பாம்புகளுடன் வளர்ந்தான் என்பதன் பொருள் என்ன? பாம்பு என்றாலும் நாகம் என்றாலும் ஒன்றே. தென்னிந்தி யாவிலே நாகர் என்னும் ஓர் இனத்தார் இருந்தார்கள். அவர்களுக்குப் பாம்பு அல்லது நாகம் அடையாளச் சின்னம். பல்லவ அரசர்களில் ஒருவன், நாக அரசன் மகளை மணஞ்செய்து கொண்டு அரசுரிமை யைப் பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. விஜய நந்திவர்மனுடைய வேலூர்ப்பாளையத்துச் செப்புச் சாசனம், பல்லவ அரசர் வழியில் வந்த வீரகூர்ச்சன் என்பவன், நாக அரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்டு நாகர் அரசுரிமைப் பெற்றான் என்று கூறுகிறது.3 நாகர் சம்பந்தம் பெற்றபடியினாலே, பல்லவருக்கு நாகர் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறது. மேலும் நாகக்குரிய பாம்புக்கொடியைப் பல்லவ அரசரும் கொண்டிருந்தார்கள். காஞ்சீபுரத்து வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டிய இரண்டாம் நந்திவர்மனான பரமேசுவரன் பாம்புக்கொடியை யுடையவன் என்று திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். “தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்றுசென்ற பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர மதுவே.” என்று கூறுகிறார்.4 இதனால் பல்லவருக்குப் பாம்புக்கொடி உண்டென்பது தெரிகிறது. அன்றியும் நாகர் (பாம்பர்) என்னும் பெயரும் அவருக் கிருந்ததென்பது விளங்குகிறது. கொடும்பாளூர் அரசனான நிருபகேசரி, இளமையில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று கூறப்படுவதன் கருத்து, அவன் பல்லவர் குடும்பத்தில் வளர்ந்தான் என்பதாகும். பல்லவ இராச்சியத்தின் அருகில் இருந்த கொடும்பாளூர் சிற்றரசர், பல்லவரோடு நட்புடையவராய் இருந்தனர். ஆகவே சங்ககிருது தன் மகனான நிருபகேசரியைப் பல்லவர் அரண்மனையில் வளரவிட்டான் என்பதனால் அவன் பல்லவருடன் நட்பு முறையில் இருந்தான் என்பது தெரிகிறது. சங்ககிருது, பல்லவ அரசனான சிம்ம விஷ்ணுவின் காலத்திலும், நிருபகேசரி முதலாம் மகேந்திவர்மன் காலத்திலும் இருந்தவராதல் வேண்டும். எனவே, நிருபகேசரி தனது இளமையில் மகேந்திரனுடன் வளர்ந்தான் போலும். நிருபகேசரியின் மகனான பரதுர்க்கமர்த்தனன் (பகைவர் கோட்டையை அழிப்பவன் என்பது பொருள்.) வாதாபிஜித் (வாதாபி நகரத்தை வென்றவன்) என்று கூறப்படுகிறான். எனவே இவன், மாமல்லனான நரசிம்ம வர்மன் புலிகேசியின் வாதாபி நகரத்தின் மேல் படை யெடுத்தபோது அவனுடன் வாதாபிக்கு சென்று அப்போரில் கலந்து கொண்டு அந் நகரை வென்றான் என்பது தெரிகிறது. இவன் மகன் சமராபிராமன் (போர் செய்வதில் உவகை கொள்பவன்), அதிராசமங்கலத்தில் சளுக்கியனைக் கொன்றவன் (வென்றவன்) என்று கூறப்படுகின்றான். “அதிராஜமங்கலாஜௌ யோ நிஜகான சளுக்கிம்” என்பது வாசகம். இதில் நிஜகான என்னும் வினைச் சொல்லுக்குக் கொன்றான் என்றும் எதிர்த்தான் என்றும் இரண்டு பொருள் உண்டு. இவ்விரண்டும் பொருள்களில் கொன்றான் என்பதே இங்குக் கொள்ளத்தகுந்தது. ஏனென்றால் வின்சன் ஸ்மித் முதலிய சரித்திர ஆசிரியர்கள், இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மேல் படையெடுத்து வந்த போது போரில் கொல்லப்பட்டான் என்று எழுதிகிறார்கள். ஆகையினாலே, சமராபிராமன் சளுக்கியனை (இரண்டாம் புலிகேசியைக்) கொன்றான் என்று கூறுவதே பொருத்த மானது. இதனால், பரதுர்க்கமர்த்தனனும் அவன் மகனான சமரா பிராமனும் மாமல்லனான முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பதும், மகனான சமராபிராமன் புலிகேசியைப் போரில் கொன்றான் என்பதும் தகப்பனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபி போரில் கலந்து கொண்டான் என்பதும் தெரிகின்றன. புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனின் கர்னூல் சாசனங்களில், தன் தந்தையாகிய புலிகேசியை மூன்று அரசர்கள் சேர்ந்து தோல்வியடையச் செய்தார்கள் என்று கூறுவது இங்கு நினைவுகொள்ளத் தக்கது. இரண்டாம் புலிகேசியை வென்ற மூன்று அரசர்கள் யாவர்? மாமல்லனான நரசிம்மவர்மக் ஒருவன்; அவனுடன் தங்கியிருந்த இலங்கை மன்னான மானவம்மா என்பவன் இரண்டா மவன்; கொடும்பாளூரை அரசாண்ட யதுகுலவேள் (தந்தையும் மகனுமான பரதுர்க்கமர்த்தனனும் சமராபிராமனும். இவர் இருவரும் ஒரே குடும்பத்தவர் ஆகையால் இருவரையும் ஒருவராகக் கொள்க.) மூன்றாமவன். சமராபிராமன், வாதாபிகொண்ட நரசிம்மவர்மனுக்குப் பிறகும், இரண்டாம் மகேந்திரவர்மன் முதலாம் பரமேசுவரன் ஆகிய பல்லவ அரசர் காலத்திலும் இருந்தவனாகத் தெரிகிறான். இவனைப்பற்றிய இன்னொரு சிறப்பான செய்தி என்னவென்றால், இவன், சோழன் மகளான அனுபமை என்பவளை மணஞ்செய்து கொண்டான். என்பதே. முடியுடை வேந்தராகிய சேர சோழ பாண்டியர், சிற்றரசராகிய வேளிரிடம் பெண்கொள்வது மரபு; ஆனால் வேளிருக்குத் தம் பெண்ணைக் கொடுப்பதில்லை. முடியுடை மன்னருக்குத் தம் பெண்கொடை கொடுப்பவர் வேளிர் என்பது தொன்றுதொட்டு வந்த வழக்கம். இதனை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் கூறுகிறார். இந்தப் பழைய வழக்கத்துக்கு மாறாகச் சிற்றரசனும் வேளிர் மரபைச் சேர்ந்தவனுமாகிய சமராபிராமனுக்குச், சோழன் தன் மகளை மணஞ்செய்து கொடுத்தான் என்று கொடும்பளூர்ச் சாசனம் கூறுகிறது. இந்த மாறுதலுக்குக் காரணம் என்ன? இக்காலத்தில் சோழ மன்னர், பல்லவ அரசருக்குக் கீழ்பட்டு அவருக்கு அடங்கியிருந்தனர். அதாவது முடியுடைமன்னர் வழியில்வந்தவராக இருந்தும் சோழர் பல்லவருக்குக் கீழ்ப்பட்டிருந்தனர். ஆனால், முடியுடை வேந்தரல்லாத சிற்றரசராகிய கொடும்பாளூர் வேளிர், பல்லவருக்கும் பாண்டியருக்கும் கீழடங்காமல் சுதந்தரராக வாழ்ந்திருக்கிறார்கள். அன்றியும் பல்லவ அரசருக்கு நண்பர்களாக அவரைச் சார்ந்து பெருமைப் பெற்றிருந்தனர். ஆகவே, பல்லவரின் கீழ் சிற்றரசனாக இருந்த சோழன் தன் மகளைச் சமராபிராமனுக்கு மணஞ்செய்வித்தான் போலும். சமராபிரான் மகன் பூதிவிக்ரமகேசரியும் சோழர் குடும்பத்தில் மணஞ்செய்து கொண்டவனாகத் தெரிகிறான், இவனுக்கு முன்னர் மூன்று தலைமுறைவில் இருந்தவர்கள், பல்லவருடன் நண்பராக இருந்திருக்க, இவன் பல்லவரோடு பகைத்து அவர்கள் சேனையை வென்றான் என்று சாசனம் கூறுகிறது. பூதிவிக்ரமகேசரி, இரண்டாம் நரசிம்மவர்மனான இராஜசிம்மன் காலத்தில் இருந்தவனாதல் வேண்டும். இவன் பல்லவரைப் பகைத்தபடியினால், இவனுடைய இரண்டாம் பாட்டனான நிருபகேசரி பல்லவ அரசருடன் வளர்ந்தான் என்று கூறாமல், பல்லவர் மீது இவனுக்கிருந்த வெறுப்புத் தோன்றும் படி பாம்புகளோடு வளர்ந்தான் என்று இவனுடைய கொடும்பாளூர் சாசனம் கூறுகிறது போலும். III பூதிவிக்கிரமகேசரியின் கொடும்பாளூர்ச் சாசனத்தை ஆராய்ந்தவர்களில் சிலர் தவறான கருத்தையும் வென்றும் யூகத்தையும் ஆதாரமாகக் கொண்டு பூதிவிக்ரமகேசரி கி.பி.10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று முடிவுகட்டியுள்ளனர்.5 ஆனால், வேறு சில ஆராய்ச்சியாளர்கள் பூதிவிக்ரமகேசரி கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவன் என்று கூறுகின்றனர். கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவர் என்பதே ஆராய்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது. பூதிவிக்ரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறுவோர் என்ன காரணம் காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம். 1. விக்ரமகேசரியின் கொடும்பாளூர்ச் சாசன எழுத்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதபட்டதாகக் காணப்படுவதனாலே, விக்ரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாதல் வேண்டும் என்பது இவர்கள் கருத்து. இந்தச் சாசனத்தின் முன்பகுதி அழிந்துவிட்டது; பின்பகுதியும் அழிந்துவிட்டது. எனவே, இதுதான் மூல சாசனமா என்பதில் சந்தேகம் தோன்றுகிறது. இது, பழைய சாசனத்தின் பிரதியாகப் பிற்காலத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கக்கூடும் அல்லவா? ஆகவே, இது மூல சாசனமா அல்லது பிற்காலத்துப் படிஎழுத்துச் சாசனமா என்பது தெரியாத நிலையில், வெறும் எழுத்தின் சான்று கொண்டு காலத்தைத் தீர்மானிப்பது தவறு. பழைய சாசனங்களைப் பிற்காலத்தில் படிஎடுத்துப் புதுப்பிக்கிற'b9 வழக்கம் உண்டு. உதாரணமாக நந்திவர்மன் III காலத்துச் சாசனத்தைப் பிற்காலச் சோழர் படி எடுத்து எழுதி வைத்திருக்கிறார்கள். 144 of 1928-29; S. I. I. Vol. XII No.55. மூன்றாம் நந்தியின் மற்றொரு சாசனத்தையும் பிற்காலச்சோழர் படி எடுத்து எழுதி வைத்திருக்கிறார்கள். 480 of 1954 No. 58 S. I. I. Vol. XII. எனவே, முற்பகுதியும் கடைப்பகுதியும் மறைந்துபோன கொடும்பளூர்ச் சாசனத்தை கி.பி. 10-ம் நூற்றாண்டுச் சாசனம் என்று கூறுவது தவறு. சாசனத்தில் கூறப்படும் செய்திகள் கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுச் செய்தியாக இருப்பதனாலே இந்தச் சாசனம் பழைய சாசனத்தின் படியாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. 2. பூதிவிக்ரமகேசரி, வீரபாண்டியன் என்பவனை வென்றான் என்று இச் சாசனம் கூறுகிறது. இந்த வீரபாண்டியன், இராஜராஜ சோழனுடைய மூத்த தமையனான ஆதித்ய கரிகாலன், தன் இளமைப் பருவத்தில் போர் செய்த வீரபாண்டியன் என்று சிலர் யூகிக்கிறார்கள். இந்த யூகத்தை ஆதாரமாகக் கொண்டு பூதிவிக்ரமகேசரி, ஆதித்தியன் கரிகாலன் இருந்த கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 970-க்குமுன்) இருந்தவன் என்று கூறுகிறார்கள். இந்த முடிவும் ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், வெறும் பெயர் ஒற்றுமையைமட்டும் சான்றாகக்கொண்டு இது முடிவு செய்யப்பட்டது. பூதிவிக்ரமகேசரி போர் செய்த வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன் போர்செய்த வீரபாண்டியனும் ஒரே ஆளா? வீரபாண்டியன் என்னும் பெயருள்ள வேறு பாண்டியரும் இருந்திருக்கக் கூடும் அல்லவா? இருவரும் ஒரே பாண்டியனுடன் போர்செய்தார்கள் என்பதற்குச் சான்று என்ன? வீரபாண்டியன் என்னும் பெயர் ஒற்றுமை மட்டுந்தானே சான்றாக இருக்கிறது? எனவே, பெரிதும் ஐயத்திற்கிடமானதும் தெளிவான சான்று இல்லாததுமான இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 3. பூதிவிக்கிரமகேசரியின் பாட்டனான பரதுர்க்க மர்த்தனன், வாதாபிஜித் (வாதாபிநகரத்தை வென்றவன்) என்னும் சிறப்புப் பெயருடையவன் என்று கொடும்பாளூர் சாசனம் கூறுகிறது. வாதாபி நகரம் கி.பி 642-இல் நரசிம்மவர்மனால் வெல்லப்பட்டது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து முடிவுகட்டிய உண்மை. அந்த வாதாபிப்போரில், கொடும்பாளூர் அரசன் பரதுர்க்கமர்த்தனனும் கலந்துகொண்டு போரைவென்று வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். ஆனால் பூதிவிக்கிரம கேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று சாசன எழுத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முடிவு செய்து கொண்ட சிலர், பூதிவிக்கிரமகேசரியின் பாட்டனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபிப் போரை கி.பி. 642-இல் வென்று வாதாபிஜித் என்று பெயர்பெற்றான் என்று சுறினால், அது இவர்கள் காட்டும் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்தவில்லை யாகையால், பரதுர்க்கமர்த்தனன் செய்த வாதாபிப்போர் பிற்காலத்தில் நடந்த இன்னொரு வாதாபிப் போராக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அஃதாவது, இரண்டு வாதாபிப்போர் நடந்ததென்றும் முதலாவது போர், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலும், இரண்டாவது போர் 9-ஆம் நூற்றாண்டிலும் நடந்ததென்று இவர்கள் யூகிக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் யூகிக்கிறார்களே தவிர சாசனங்களோ சரித்திரமோ இலக்கியமோ யாதொரு சான்றையும் இவர்கள் காட்டவில்லை. ஆதாரமற்ற வெறும் யூகத்தைமட்டும் சான்றாகக் கொண்டு சரித்திரம் எழுதுவது பைத்தியக்காரத்தனமாகும். பூதிவிக்கிரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று சரித்திர ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதியதற்கு ஏற்பவே, அவருடைய மாணவியாகிய டாக்டர் மீனாட்சியும் “பல்லவர் ஆட்சி” என்னும் நூலில் எழுதுகிறார்.6 இவரும் சான்றுகள் இல்லாமலே யூகம் செய்துகொண்டு எழுதுகிறார். தெள்ளாரெறிந்த நந்திவர்மன் காலத்தில் இரண்டாவது வாதாபிப்போர் நடந்ததாக இவர் கூறுகிறார். குறுகோடு என்னும் குறுக்கோட்டையை நந்திவர்மன் வென்றதை நந்திக்கலம்பகம் கூறுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, நந்திவர்மன் கீழ் விக்ரமகேசரியின் பாட்டனான பரதுர்க்கமர்த்தனன் சிற்றரசனாக இருந்து குறுகோட்டைப் போரில் கலந்திருக்கக்கூடும் என்று இவர் யூகிக்கிறார். இராஷ்டிரகூட அரசனுடன் நிகழ்ந்த அந்தக் குறுக்கோட்டைப்போரிலே, ராஷ்டிரகூடருக்கு உதவியாக சளுக்கிய அரசனும் வந்திருக்கக்கூடும். அப்படி உதவிக்கு வந்த சளுக்கிய அரசனைப் பரதுர்க்கமர்த்தனன் கொன்றிருக்கக் கூடும். அதனால் அவனுக்கு வாதாபிஜித் என்று பெயர் வந்திருக்கக்கூடும். அல்லது, குறுக்கோட்டையை வென்றபிறகு, வாதாபி நகரத்தில் சென்று போர் செய்து அந்நகரை வென்றிருக்கக்கூடும். இவ்வாறு எல்லாம் இந்த ஆசிரியர் பொறுப்பில்லாமல் ஆதாரங்களையும் சான்றுகளையும் காட்டாமல் மனம் சென்றபடியெல்லாம் யூகித்துக் கொண்டு போகிறார். இவர் யூகிக்கும் யூகமும் ஒப்புக்கொள்ளத்தக்கதாயிராமல் முரண்படுகிறது. குறுக்கோட்டைப்போரை வென்றால் “குறுகோடுஜித்” என்று பெயர் ஏற்படுமே தவிர வாதாபிஜித் என்று பெயர் உண்டாகக் காரணம் இல்லை அல்லவா? ஆகவே, மூன்றாம் நந்திவர்மன் குறுக்கோட்டையை வென்ற பிறகு, வாதாபி நகரத்தையும் வென்றான் என்று இவர் யூகிக்கிறார் இதற்கு யாதொரு சான்றும் கிடையாது. நந்திக்கலம்பகம், நந்திவர்மன் வாதாபியை வென்றான் என்று எங்கும் கூறவில்லை, அன்றியும் சாசனங்களும் இல்லை. இவ்வாறு இல்லாத ஒன்றைக் கற்பித்துக் கொள்கிறார் இந்த ஆசிரியர். கொடும்பாளூர்ச் சிற்றரசர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், முத்தரை யரால் அடக்கப்பட்டுப் பெருமை குன்றியிருந்தனர். ஆகவே அவர்கள் 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடந்த குறுக்கோட்டைப் போரில் கலந்துக் கொண்டனர் என்று கூறுவதே பொருந்தாது. 8, 9-ஆம் நூற்றாண்டுகளில், பல்லவருக்கு உதவியாக இருந்த சிற்றரசர் முத்தரையர் என்பது சாசனங்களினால் தெரிகிறது. முத்தரையர், கொடும்பாளூர் அரசரை வென்று அடக்கியபிறகே சிறப்படைந்தனர் என்பதும் அறியத்தக்கது. இவற்றையெல்லாம் ஆராயும்போது, கொடும்பாளூர் அரசன் பரதுர்க்கமர்த்தனன் வாதாபிநகரப் போரில் கலந்து கொண்டது, மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் நிகழ்ந்த வாதாபிப்போரிலேதான் என்பது தெளிவாகிறது. கி.பி. 642-இல், இரண்டாம் புலிகேசி காலத்தில், பல்லவ நரசிம்மவர்மன் நடத்திய வாதாபி போருக்குச் சாசனச் சான்றுகளும் இலக்கிகயச் சான்றுகளும் உள்ளன. அதன்பிறகு மற்றொரு வாதாபிப் போர் நடந்ததாக இது வரையில் யாதொரு சான்றும் கிடையாது. ஆனால், மேற் கூறியவர்கள் மட்டும் இரய்டாவது வாதாபிப் போர் நடந்ததாக யூகிக்கிறார்கள். பேரனான பூதி விக்ரம கேசரியை கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று இவர்கள் முடிவு செய்து விட்டபடியால், பாட்டனான பரதுர்க்கமர்த்தனன் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்து வாதாபிப் போரை வென்றான் என்று கூறினால் உலகம் நகைக்கும் அல்லவா? ஆகவே, ஆதாரம் இல்லா விட்டாலும் பிற்காலத்தில், இரண்டாவது வாதாபிப் போர் நடந்திருக்க வேண்டும் என்று இவர்கள் யூகித்துக் கற்பனை செய்துகொண்டார்கள். நரசிம்மவர்மன் காலத்தில், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் நடந்த வாதாபிப் போரில், வாதாபி ஜித்தாகிய பரதுர்க்க மர்த்தனன் இருந்தான் என்று சொல்ல இவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆகவே, ஆதாரம் இல்லாத இண்டாவது வாதாபிப் போரை இவர்கள் கற்பனைசெய்து எழுதிவைத்து விட்டார்கள். இவர்கள் கற்பனையை, உண்மையை நாடுவோர், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கொடும்பாளூர் மூவர் கோயில் சாசனம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுச் செய்திகளைக் கூறுகிறது என்று 7ஹீராஸ் பாதிரியாரும் ஆரோக்கியசாமியும் கூறுகிற முடியு சரியானதென்று கொள்கிறோம். 4. வெறும் யூகம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு சரித்திர ஆராய்ச்சி செய்கிற இவர்கள் மேலும் “ஆராய்ந்து” முடிவு கூறுகிறார்கள். இவர்கள் கூறுவது வருமாறு: இராஜகேசரி வர்மன் காலத்துச் சாசனமும் பரகேசரி வர்மன் காலத்துச் சாசனமும்8 இளங்கோவேள் ஆன மறவன் பூதி என்பவர் பெயரைக் கூறுகின்றன. இவற்றில் ஒன்று மறவன் பூதியின் மனைவியான கற்றளிப் பிராட்டியைக் கூறுகிறது. இவற்றில் பூதி, கற்றளி என்னும் பெயர்கள் கூறப்படுவதால், பூதி விக்ரம கேசரிக்கு இளங்கோ வேள் மறவன் பூதி என்னும் பெயரும் உண்டு என்றும், மறவன் பூதியின் மனைவி கற்றளிப் பிராட்டி, பூதி விக்ரம கேசரியின் மனைவி கற்றளி என்றும் பெயர் ஒற்றுமை ஒன்றை மட்டும் கொண்டு முடிவு கட்டிவிட்டார்கள். பூதிவிக்கிரம கேசரி வேளிர் குலத்தவன் என்பதும் யதுவம்சத்தவன் (யாதவவம்சத்தவன்) என்றும் கொடும்பாளூர்ச் சாசனம் கூறுகிறது. பெயர் ஒற்றுமை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஆராயும் இவர்கள், யதுவம்சத்து பூதிவிக்கிரம கேசரி மறவவம்சத்தைச் சேர்ந்தவன் என்றும் தீர்மானம் செய்துவிட்டார்கள்9 இதுமட்டுமா? இன்னொரு சாசனம்10 செம்பியன் இருக்குவேள் என்பவரையும் அவர் மனைவி வரகுணை என்பவரையும் கூறுகிறது. பூதிவிக்கிரம கேசரியின் மற்றொரு மனைவியின் பெயர் வரகுணை யாகையினாலே, இந்தச் சாசனத்தில் கூறப்படும் வரகுணை, பூதிவிக்கிரம கேசரியின் மனைவிதான் என்று பெயர் ஒற்றுமை ஒன்றுமட்டும் சான்றாகக் கொண்டு, பூதிவிக்கிரம கேசரிக்கு செம்பியன் இருக்குவேள் என்னும் பெயரும் உண்டு என்று யூகித்துக் கொண்டு அதையே முடிவுகட்டி விட்டார்கள். வேறு இரண்டு சாசனங்கள்11 மதுராந்தக இருக்குவேளான ஆதித்தன் விக்ரம கேசரி என்பவன் பெயரைக் கூறுகின்றன.இப் பெயரில் விக்ரம கேசரி என்று இருப்பதனாலே, இந்த ஆளும் பூதிவிக்ரம கேசரியே என்று முடிவு கட்டிவிட்டார்கள். இவ்வாறு பெயர் ஒற்றுமை மட்டும் இவர்களுக்குச் சான்றாக உள்ளன! வரகுணை, கற்றளி என்னும் பெயர் உள்ள பெண்கள் எல்லாரும் பூதிவிக்ரம கேசரியின் மனைவியராகத்தான் இருக்க வேண்டுமோ? வரகுணை, கற்றளி என்னும் பெயர்கள் வேறு பெண்களுக்குச் சூட்டப்படவில்லையா? பூதி என்னும் பெயரும், விக்ரம கேசரி என்னும் பெயரும் வேறு எவருக்கும் உரியனவன்றோ? கொடும்பாளூர்ச் சாசனத் தலைவனாகிய பூதிவிக்ரம கேசரிக்கு மட்டுந்தான் இப்பெயர்கள் உரியனவோ? இவ்வாறு சாசனங்களில் காணப்படுகிற இப்பெயர்களை யெல்லாம் ஒருவரைத்தான் குறிப்பிடுகின்றன என்று முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ? இந்த ஆராய்ச்சியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? முக்கியமாக இரண்டு செய்திகளைக் கவனிக்கவேண்டும்? விக்ரம கேசரியின் இரண்டாம் பாட்டனான நிரூபகேசரி இளமைப் பருவத்தில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தச் செய்தியைச் சரித்திரக்காரர்கள் எல்லோரும் இதுவரையில் ஆராயாமலேயே விட்டுவிட்டார்கள். நாம் மேலே கூறியபடி, பாம்புகளோடு (நாகருடன்) வளர்ந்தான் என்பதற்கு பல்லவ அரசருடன் வளர்ந்தான் என்பது கருத்து. பூதிவிக்ரம கேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தான் என்றால் அவனுடைய இரண்டாம் பாட்டனான விக்ரமகேசரி கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாதல் வேண்டும். 9-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் ஆதிக்கம் ஆட்டம் கண்டு விட்டது. வீழ்ச்சியடையும் நிலையில் இருந்த பல்லவருடன் கொடும்பாளூர் விக்ரம கேசரி தொடர்பு கொண்டிருந்தான் என்பது பொருந்தாது. பல்லவர் சிறப்புற்றிருந்த காலத்தில் விக்ரம கேசரி, பல்லவருடன் தொடர்பு கொண்டு அவர்களோடு வளர்க்கப்பட்டான் என்பதே பொருத்தமாகும். பல்லவர் சிறப்பு உச்சநிலையில் இருந்தது கி.பி. 7-ஆம் நூற்றாண்டில். ஆகவே, விக்ரம கேசரி கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாதல் வேண்டும். இரண்டாவதாகக் கருதவேண்டியது: பூதிவிக்ரமகேசரியின் பாட்டனான பரதுர்க்கமர்த்தனன், வாதாபிஜித் (வாதாபியை வென்றவன்) என்று சாசனம் கூறுகிறது. சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி யினுடைய தலைநகரமான வாதாபி நகரத்தை வென்றான் நரசிம்ம வர்மன். இவன் இந்நகரத்தை கி.பி. 642-இல் வென்றான். இதனால் இவனுக்கு வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவனுடைய சேனை தலைவனாக இருந்தவர் பரஞ்சோதி எனப்படும். சிறுத்தொண்டை நாயனார். இந்தப் போரில், பரதுர்க்க மர்த்தனனும் கலந்துக் கொண்டு வாதாபி நகரத்தை வென்றதில் பெரும் பங்கு எடுத்திருக்கக் கூடும். ஆகையால் இவனுக்கு வாதாபிஜித் என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். வாதாபிப் போரில், நரசிம்மவர்மன் நேரில் கலந்துக் கொள்ளவில்லை. தன் சேனைத் தலைவனாகிய பரஞ்சோதியாரை அனுப்பினான். பல்லவ அரசரின் நண்பர்களாக இருந்த கொடும்பாளூர்ச் சிற்றரசனான நிருபகேசரியும், வாதாபிப் போரில் கலந்து கொண்டிருக்கவேண்டும். பரதுர்க்க மர்த்தனனின் தந்தையான நிருபகேசரி, பல்லவருக்கு நெருங்கிய நண்பனாய் நாக குலத்தவராகிய பல்லவரோடு வளர்ந்தான் என்று மேலே கூறினோம். எனவே, தந்தையாகிய நிருபகேசரி பல்லவ அரசருக்கு நெருங்கிய நண்பனாக இருந்ததுபோலவே மகனான பரதுர்க்கமர்த்தனும் பல்லவ அரசருக்கு நண்பனாக இருந்து நரசிம்மவர்மன் நிகழ்த்திய வாதாபிப் போரில் கலந்து கொண்டு அதனை வென்று வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரையடைந்தான் என்று கருதுவது உண்மைக்கும் யுக்திக்கும் பொருந்துகிறது. ஆகவே, பரதுர்க்கமர்த்தனனாகிய வாதாபிஜித் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவன் என்பதும் அவன் கி.பி. 642-இல் நிகழ்ந்த வாதாபிப் போரில் கலந்துகொண்டு அப்போரை வென்றவன் என்பதும் தெளிவாகிறது. எனவே அவன் பேரனாகிய பூதிவிக்ரம கேசரியும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இறுதியில் அல்லது கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இருந்தவனாவன் என்பதே தெரிகிறது. பிற்காலத்தில் மற்றொரு வாதாபிப் போர் நடந்திருக்கக் கூடும் என்று சிலர் கருதுவதற்குச் சான்றுகள் ஒன்றேனும் இல்லை. பேர்பெற்று புகழுடன் இருந்த கொடும்பாளூர் அரசர்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலே, முத்தரைய மரபினரால் வெல்லப்பட்டுப் பெருமை குன்றிவிட்டார்கள். ஆகவே, கொடும்பாளூர் அரசரில் சிறப்புடன் இருந்த பூதிவிக்ரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலே இருந்திருக்க முடியாது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அல்லது கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பூதிவிக்ரமகேசரி இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது தவறாகாது. ஹீராஸ் பாதிரியாரும், ஆரோக்கியசாமியும் இக்கருத்தைக் கொண்டிருப்பதும் கருதத்தக்கது. எழுத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மூவர் கோயில் சாசனம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. எழுத்துக்களைப் பற்றிய ஆராய்ச்சி, நமது நாட்டைப் பொருத்தவரையில், இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆகவே எழுத்துக்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு காலத்தை ஆராய்வது சிறந்ததாகாது. சாசனத்தில் கூறப்பட்ட மற்ற விஷயங் களையும் நோக்க வேண்டும். இந்தச் சாசனம் முதலும் கடைசியும் இல்லாதபடியினாலே இது மூல சாசனம் என்று எப்படிக் கருதக்கூடும்? மூல சாசனத்திலிருந்து பிற்காலத்தில் எழுதப்பட்டபடியாக இருக்கக்கூடும் அல்லவா? எனவே, மூவர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிற கொடும் பாளூர் அரசராகிய பரதுர்க்கமர்த்தனனும் (வாதாபிஜித்), அவன் மகன் சமராபிரானும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பதும் பல்லவ அரசன் சார்பாகச் சளுக்கியருடன் போர் செய்து வாதாபி நகரத்தை வென்றவர் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் விளங்குகின்றது. கோழிப்பாம்பு* கோழிப்பாம்பு அல்லது குக்குடசர்ப்பம் என்பதைப் பற்றி நூல்களில் படிக்கிறோம். சீவக சிந்தாமணி, மேருமந்தர புராணம் முதலிய நூல்களிலே கோழிப்பாம்பு கூறப்படுகிறது. சீவகன் பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டரசன் மகள் பதுமையைக் கோழிப்பாம்பு தீண்ட, அதன் நஞ்சினைச் சீவகன் தீர்த்து அவளை மணம் செய்து கொண்டான் என்று சீவகசிந்தாமணி கூறுகிறது. “அரி குரல் கோழிநாமத்தரவு அவட்கடித்த தாகத் திருவிழை யவளைத் தீர்த்தேன். தீர்விலா நண்பு வேண்டிப் பொருகளி யானை மன்னன் புனையிழை யவளைத் தந்தான் இருமதி கழிந்த பின்றை இடையிராப் பொழுதிற் போந்தேன்” இச் செய்யுளில் கோழிநாமத்தரவு என்பதற்கு, குக்குடசர்ப்பம் என்று உரையாசிரியர் நச்சினார்கினியர் உரை எழுதியிருக்கிறார். மேருமந்தா புராணம் என்னும் நூலிலும் கோழிப்பாம்பு கூறப்படு கிறது. பூதி என்னும் இயற் பெயரையும் சத்திய கோஷன் என்னும் சிறப்புப் பெயரையும் உடைய அமைச்சன், பொருட் செல்வத்தில் பேராசையுடையவனாய் அதனோடு செற்றமும் பகையும் கொண்டிருந்தபடியினாலே, அவன் பிற் பிறப்புகளில் மலைப் பாம்பாகவும், சமரீ என்னும் விலங்காகவும் பின்னர்க் கோழிப் பாம்பாகவும் பிறந்தான் என்று அப் புராணம் கூறுகிறது. “பற்றினால் பூதி பாம்பாய்ச் சமரமாய்க் கோழிப்பாம்பாய்ச் செற்றத்தால் தீயில் வெம்பு நரகத்தைச் செறிந்து நின்றான்.” (நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம்.) கமடன் என்பவன் கோழிப்பாம்பாகப் பிறந்து திரிந்தான் என்று ஸ்ரீ புராணம் கூறுகிறது. பாகுபலி, என்றும் புஜபலி என்றும் பெயருள்ள முனிவருடைய உருவச்சிலையை 525 வில் உயரமுடையதாகப் பொன்னால் செய்து பரதச் சக்கரவர்த்தி பௌதனபுரத்தில் அமைத்தார் என்றும் அவ்வுருவச்சிலையைச் சூழ்ந்து கோழிப்பாம்புகள் வசித்து வந்தபடியினாலே மனிதர் யாரும் அதன் அருகில் செல்ல முடியாம லிருந்தது என்றும் கன்னட நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு புலவர் களால் நூல்களிலே கூறப்படுகிற குக்குடசர்ப்பம் என்னும் கோழிப் பாம்பு எப்படி யிருக்கம்? அதன் உருவ அமைப்பு எப்படிப்பட்டது? சீவக சிந்தாமணி பதுமையார் இலம்பகத்தில், “நங்கை தன் முகத்தை நோக்கி” என்னும் செய்யுள் உரையில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர், கோழிப்பாம்பைப் பற்றிய செய்தியொன்று கூறுகிறார். “நங்கைதன் முகத்தை நோக்கி நகைமதி யிதுவென் றெண்ணி அங்குறை யரவு தீண்டி அவ்வையோ என்று போகக் கொங்கலர் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்பேர் செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சேர்ந்தான்.” என்பது அச்செய்யுள். இதில், குறை யரவு என்பதற்கு நச்சினார்க் கினியர் கூறும் விளக்கமாவது : “குறையரவு வினைத்தொகை. காலம் நீட்டித்தாற் பாம்பு குறைந்து ஒரு கோழிப் பறவை நீளம் பறந்து செல்லுமென்று கூறி, அதனைக் குக்குட சர்ப்ப மென்ப.” இந்த விளக்கத்தினால், பாம்புக்கு ஆயுள் நீளமானால் அதன் உடல் குறுகி, கோழி பறக்கும் தூரம் பறக்கும் ஆற்றல் அடையும் என்பதும் இதற்குக் கோழிப்பாம்பு என்பது பெயர் என்பதும் விளங்குகிறது. மைசூரில் தொட்டபெட்டா என்றும் விந்தியகிரி என்றும் இரத்தினகிரி என்றும் பெயருள்ள மலையின் மேல் பாகுபலி முநிவரின் உருவம் ஒரு பெரும் பாறையில் அமைக்கப்பட்டிக்கிறது. பாகுபலி முனிவரின் அருகில் குக்குட சர்ப்பங்கள் வசித்திருந்தன என்னும் புராணக் கதைக்கு ஏற்ப, இவ் வுருவத்திற்கு அருகிலே கோழிப்பாம்பின் உருவம், ஒன்று கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உருவம், நச்சினார்க்கினியர் கூறியது போன்று இராமல், தலையும் கழுத்தும் பாம்பின் உருவமாகவும், உடம்பும் காலும் கோழியின் உருவமாகவும் அமைந்திருக்கின்றன. இவ் வுருவம் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்டதாகும். இக் கோழிப்பாம்பின் உருவத்தைப் படத்தில் காண்க ----- யுவான் சுவாங் யாத்திரைக் குறிப்பு* யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், இந்திய தேசத்தில் செய்த யாத்திரையைப் பற்றி எழுதிய குறிப்பிலே, தமிழ் நாட்டைப் பற்றிய குறிப்புகளைக் கூறுவோம். சுலிய “தன கடகத்திலிருந்து யாத்திரிகர் தென் மேற்காக 1000 லீ கடந்து சுலியவுக்குச் சென்றார். இந்த நாடு 2400 லீ சுற்றளவுள்ளதென்றும் இதன் தலைநகரம் 10 லீ சுற்றளவுள்ளதென்றும் சொல்லப்படுகிறது. இங்கே ஜன நெருக்கமில்லாத காடடர்ந்த பிரதேசம் அதிகம். வழிபறிக் கொள்ளைக்காரர் அதிகம். சதுப்பான வெப்பமுள்ள பிரதேசம். ஜனங்கள் பயங்கரமாகவும் துன்மார்க்கராகவும் இருக்கின்றனர். தீர்த்தங்கரை வழிபகிறார்கள். பௌத்த விகாரைகள் பாழடைந்து கிடக்கின்றன. சிலவற்றில் மாத்திரிம் பிக்ஷூக்கள் இருக்கிறார்கள். தேவாலயங்களும் அநேக திகம்பர ஆலயங்களும் இருக்கின்றன. தலைநகருக்குத் தென்கிழக்கில் அசோகர் கட்டிய சேதியம் ஒன்று உண்டு.........”1 இதில், தனகடகம் என்று கூறப்படுவது தான்ய கடகம் என்னும் பெயரையுடைய அமராவதி நகரம். இது கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கிறது. இந்த நகரத்திலிருந்து சுலிய நாடு தென்மேற்கில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் யாத்திரிகரின் வரலாற்று நூலில் ஓர் இடத்தில் மேற்கில் என்றும் இன்னொரு இடத்தில் தெற்கில் என்றும் எழுதப் பட்டிருக்கிறது. சுலிய என்பது சோடை அல்லது சோழ என்பதாகும். கன்னிங்காம் அவர்கள் சுலிய என்னும் இடம் தற்போதைய கர்னூல் மாவட்டம் என்று கூறுகிறார்.2 மேலும் தரணிக் கோட்டையிலிருந்து (தனகடகம்) மேற்கு தென்மேற்கில் 160 மைலில் உள்ள தென்று கூறுகிறார். திராவிடம் “சுலிய நாட்டிலிருந்து கல்லும் காடும் உள்ள 1500 அல்லது 1600 லீ தூரத்தைக் கடந்து த-லொ-பி-து நாட்டுக்கு யாத்திரிகர் சென்றார். இது 6000 லீ-க்கு மேற்பட்ட சுற்றளவுள்ளது. இதன் தலைநகரம் கஞ்-சிஹ்- பு- லொ என்பது. இது 30 லீ சுற்றளவுள்ளது. செழிப்பான நில வளம் உள்ளது. பூக்களும் பழங்களும் நிறைந்து, உயர்ந்த பொருள்களை விளைவிக்கின்றன. இந் நாட்டுமக்கள் அச்ச மற்றவர்களாய் முழுதும் நம்பத்தக்கவர்களாயுள்ளனர். பொது நலக் கருத்துள்ளவரும் கல்விக்கு பெருமதிப்புக் கொடுக்கிறவரும் ஆக இருக்கிறார்கள். இவர்கள் பேசும் எழுதும் மொழி மத்திய இந்தியாவின் மொழிக்கு மாறுபட்டது. இங்கு 100-க்கு மேற்பட்ட பௌத்தப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1000-க்கு மேற்பட்ட பிக்ஷூக்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஸ்தவிர பௌத்த பிரிவினர் தேவாலயங்கள் 80-க்கு மேற்பட்டவையுள்ளன. இவைகளில் பெரும்பாலும் திகம்பரர்களுக்குரியது. இந்தத் தேசத்திற்கு முற்காலத்தில் புத்தர் பெருமான் அடிக்கடி எழுந்தருளியிருந்தார். இந்தப் பிரதேசத்திலே புத்தர் பெருமான் எங்கெங்கு எழுந்தருளி உபதேசம் செய்து மக்களைப் பௌத்தராக்கினாரோ அங்கங்கெல்லாம், அசோக சக்கரவர்த்தி பள்ளிகளைக் கட்டினார். இந் நாட்டுத் தலைநகரம் தர்மபால பூசா அவர்கள் பிறந்த நகரமாகும்......................” “தலைநகருக்கு அருகிலே பௌத்த விகாரை யுண்டு இந்த விகாரை, இந்நாட்டிலே கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் கூடுகிற இடமாகவுள்ளது. இங்கு 100 அடி உயரம் உள்ளதும், அசோகர் காலத்தில் கட்டப்பட்டதும் ஆன ஒரு பள்ளி இருந்தது. இந்த இடத்தில் புத்தர் பெருமான் தீர்தகரரை உபதேசத்தினால் வென்று பெருந்தொகையினரான மக்களைப் பௌத்தராக்கினார். நான்கு புத்தர்கள் முற்காலத்தில் இங்குத் தங்கின இடமும் உண்டு.”3 இதில் த - லொ - பி - து என்பது திராவிட என்பதாகும்: அதாவது திராவிட தேசம். கஞ்சிஹ்புலொ என்பது காஞ்சீபுரம்.4 யுவான் சுவாங் உடைய வரலாறு காஞ்சீபுரத்தைப் பற்றிய சில செய்திகளைக் கூறுகிறது. அதுவருமாறு :- காஞ்சீபுரம் இலங்கைக்குச் செல்வதற்குரிய ஒரு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. இங்கிருந்து இலங்கைக்குப் போக மூன்று நாளாகும். யாத்திரிகர் (யுவான் சுவாங்) இந்நகரத்தைவிட்டு இலங்கைக்குப் போகு முன்னரே, இலங்கை அரசன் இறந்து விட்டான். அங்குப் பஞ்சமும் குழப்பமும் ஏற்பட்டிருந்தன. அங்கிருந்து 300 பிக்குகள் இந்தியாவுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தபோது, சீன யாத்திரிகர் அவர்களைச் சந்தித்து இவ்வாறு கேட்டார்:- உங்கள் நாட்டிலே பத்தந்தர் (புத்தர்), ஸ்தவிர பௌத்த மதத்தைப் போதித்துத் திரிபிடகத்தையும் யோக சாஸ்திரத்தையும் அருளிச் செய்தார் என்று அறிகிறேன். அவற்றைக் கற்றுக் கொள்ள நான் அங்கே போக விரும்புகிறேன். நீங்கள் ஏன் இங்கு வந்துவிட்டீர்கள்? அதற்கு அந்தப் பிக்குகள், பஞ்சம் ஏற்பட்டதால் இங்கு வந்து விட்டதாகவும், அன்றியும் புத்தர் பிறந்து வளர்ந்த ஜம்புத்தீவில் (பாரத நாட்டில்) உள்ள பௌத்த திருப்பதிகளைக்கண்டு வணங்கு வதற்காக வந்ததாகவும் கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்னார்கள் : ‘எங்களுக்கு மேல் அதிகமாகக் கற்றவர்கள் அங்கு இல்லை. தங்களுக்கு ஏதேனும் தெரிய வேண்டுமானால் எங்களைக் கேட்கலாம்’ என்று கூறினார்கள். அதன் மேல் சீன யாத்திரிகர், யோக சாத்திரத்தில் தமக்கிருந்த சில ஐயங்களைப் பற்றி அவர்களிடம் கேட்டார். அதற்கு இலங்கைப் பிக்குகள் கூறிய விடை சீலபத்திரர்5 கூறியதற்கு மேற்பட்டதாக இல்லை.” மொ லொ கூட (மலகூட) “ காஞ்சீபுரத்தை விட்டு சீனயாத்திரிகர் தெற்கே 3000 லீ சென்று மொலெகூட தேசத்தை யடைந்தார். இந்தத் தேசம் 5000 லீ சுற்றளவுள்ளதென்றும், தலைநகரம் 40 லீ சுற்றளவுள்ள தென்றும் கூறுகிறார். நிலம் புதர்களடர்ந்த கரம்பாகவும் விளை வில்லாமலும் இருந்தன. இங்கு அதிக வெப்பமாகவும் மக்கள் கருநிறமுள்ளவர் களாகவும் இருந்தனர். அநேக பௌத்த விகாரைகள் இருந்தன. ஆனால் சில விகாரைகள் மட்டும் நன்னிலையில் இருந்தன. பிக்குகள் சொற்பத் தொகையினர் இருந்தனர். வெவ்வேறு பிரிவினருக்குத் தேவாலயங்கள் இருந்தன. முக்கியமாகத் திகம்பரர்கள் அதிகமாக இருந்தார்கள். தலைநகருக்குக் கிழக்குப்புறத்தில் அசோக சக்கரவர்த்தியின் தம்பியாரான மகேந்திரன் கட்டிய பழைய பௌத்த விகாரையின் இடிந்து போன கட்டிடம் இருந்தது. இது புத்தர் பெருமான் உபதேசம் செய்த இடமாகையால், அதை நினைவு கூர்தல் பொருட்டு இது கட்டப்பட்டது. காலப் பழமையுள்ள இந்த இடம். அடியவர் விரும்பிய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் சக்தியுடையது என்று நம்பப்படும். அவ்வாறே இன்றும் தொழப்படுகிறது. இந்தத் தேசத்தின் தெற்கில் கடலுக்கு அருகிலே மொலொய (மலைய) மலை இருந்தது. இம் மலையில் சந்தனமரம் கற்பூர மரம் முதலிய மரங்கள் இருந்தன. இதற்குக் கிழக்கில் பொடலக மலை இருந்தது. இதன் உயரமான உச்சியில் செல்லக் குறுகிய பாதை உள்ளதாயும் உச்சியில் தூயநீருள்ள ஏரியொன்று இருந்தது என்றும், அதிலிருந்து அருவியொன்று மலையை 20 தடவை சுற்றிக்கொண்டு கடலில் சென்று விழுந்தது என்றும் கூறப்படுகிறது.ஏரியின் கரையில் தேவாலயம் ஒன்று இருந்ததாகவும் அங்கு குவான் த்ஸுத்ஸாய் பூசா அடிக்கடி சென்றதாகவும் கூறப்படுகிறது. பூசாவைக் காண்பதற்கு அருவியையும் மலையையும் அரிதில் கடந்து அடியவர் சென்றார்களென்றும், ஆனால் சிலர் மட்டுந்தான் கோயிலுக்குச் செல்ல முடிந்ததென்றும் கூறப்படுகிறது. மலையடிவாரத்திலிருந்து பிரார்த்தனை செய்தால் பூசா, சில சமயம் பாசுபத தீர்த்தகரராகவும் சில சமயம் மகேசுவரராகவும் காட்சியளிக்கிறாராம். பொதலக மலைக்கு வடகிழக்கே கடற்கரையோரத்தில் ஒரு நகரம் உண்டு. இது செங்லொவுக்கு (சிங்களத்துக்கு) அடுத்துள்ள கடலில், இலங்கைக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கிருந்து இலங்கை 300-லீ தென்கிழக்கே உள்ளதென்று கூறுகிறார்கள்.”6 இதில் கூறப்பட்ட மலகூடம் என்பது மலையகூடப் பிரதேசமாகிய பாண்டிய நாடு. இந்த மலையகூட நாடு என்று சீன யாத்திரிகர் கூறுவது, கிழக்கே தஞ்சாவூர் மதுரை மாவட்டங்களையும், மேற்கே கோயம்புத்தூர் கொச்சி திருவாங்கூர் பிரதேசங்களையும் கொண்டது என்று கன்னிங்காம் கூறுகிறார்.7 அடிமை வாழ்வு* அடிமை வாழ்க்கை இரண்டு விதம். ஒன்று தனிப்பட்ட மனிதன், தனிப்பட்ட மற்றொருவனுக்கு அடிமைப்படுவது; மற்றொன்று, ஒரு அரசாட்சிக்கு மற்றொரு நாடு அடிமைப்படுவது. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனிதன் அடிமைப் படுவது சட்டப்படி செல்லாது. ஆனால் ஒரு அன்னிய ஆட்சியின் கீழ் இன்னொரு நாடு அரசியல் அடிமையாக இருப்பதை இன்றும் காண்கிறோம். சமீபகாலத்தில் பல நாடுகள், குறிப்பாகக் கிழக்கு தேசத்து நாடுகள், அயல் நாட்டு ஆட்சியினின்று விடுதலைப் பெற்றுள்ளன. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகள், இப்போது அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார அடிமை நாடுகளாகிக் கொண்டு வருகின்றன. அதாவது அரசியல் விடுதலைப் பெற்றுப் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு எழுதப் புகுந்தது அரசியல் அடிமைத்தனத்தைப்பற்றியும் அல்ல; பொருளாதார அடிமைத்தனத்தைப்பற்றியும் அல்ல. தனி மனிதன் தனி மனிதனுக்கு ஆட்பட்டு அடிமைலாழ்வு வாழ்ந்த பழஞ்செய்தியைப்பற்றித்தான் இங்கு நாம் ஆராய்வது. எகிப்து, கிரேக்கம். உரோமாபுரி முதலிய பழைய நாகரிக நாடுகளில் அடிமைகள் இருந்தார்கள் என்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். இடைக் காலத்திலும் உலகம் முழுவதிலும் அடிமைகள் இருந்ததையும், ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் விற்கப் பட்டதையும் பற்றிப் படிக்கிறோம். ஆனால் பாரத தேசத்திலும் தமிழ் நாட்டிலும் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பதே நம்மவரில் பெரும்பாலருக்குத் தெரியாது. பாரததேசத்தில் ஆதிமூலம் அடிமைகளே கிடையாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர் இருக்கிறார்கள். ஏன்? இந்திய சரித்திரம் எழுதியவர்கள் கூட, இந்தியாவில் பண்டைக்காலத்தில் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பது பற்றி எழுதவே இல்லை. பண்டைக்காலத்தில் பாரத நாட்டிலும் தமிழ் நாட்டிலும் அடிமைகள் இருந்தனர். மனிதர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். அடிமைகளுக்குப் பிறந்த சந்ததிகளும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்; அடிமைகளையுடையவர்கள், ஆடு மாடுகளை விற்பதுபோல, தங்களிடமிருந்த அடிமைகளை விலைக்கு விற்றனர்; ஆடு மாடுகளைப் போலவே அடிமைக் கூட்டமும் இருந்தது என்று கூறினால், பலருக்கு புதுமையாக இருக்கும் ; சிலர் நம்பவும் மாட்டார்கள். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அடிமைகள் இருந்தார்களா? ‘இது என்ன புதுமை!’ என்று வாசகர்கள் வியப் படைவார்கள். பண்டைக்காலத்தில் தமிழ் நாட்டிலும் ஆயிரக்கணக்கான மனித அடிமைகள் வாழ்ந்து வந்தார்கள். செல்வம் உள்ளவர் அக்காலத்தில் காசு கொடுத்து ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கி னார்கள். அடிமைகள் வேண்டாதபோது அவர்களை காசுக்கு விற்றார்கள். சமீப காலத்தில், உலகம் முழுவதும் மனித அடிமை கூடாது என்று சட்டம் செய்யப்பட்டபிறகு, ஏனைய நாடுகளில் அடிமைத் தன்மை விலக்கப்பட்டது போலவே, தமிழ் நாட்டிலும் அடிமை முறை விலக்கப்பட்டது. இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் பண்டைக்காலத்தில் அடிமைகள் இருந்தார்கள் என்பதற்குச் சாசனச் சான்றுகளும் ஆதாரங் களும் உள்ளன. ஆனால் இந்திய சரித்திரத்திலும் தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் மனித அடிமைகளைப் பற்றிய செய்தி எழுதப்பட வில்லை. இந்நாட்டில், மக்கள் சமுகத்தில் நடைமுறையில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றிய செய்தி இந்திய சரித்திரத்திலும் தமிழ் நாட்டுச் சரித்திரலும் ஏன் இடம் பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஆட்சியில் திருவாடுதுறைக் கோவிலுக்கு ஒரு பெண் மகள் அடிமையாக விற்கப்பட்டாள் என்னும் செய்தியை அக்கோவிலில் உள்ள ஒரு சாசனம் கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழவள நாட்டில், ஆக்கூர்நாட்டு கலைச் செங்காடு என்னும் ஊரில் உள்ள திருவளம்பூர் உடையார் கோயிலுக்கு எட்டு ஆட்கள் அடிமையாக விற்கப்பட்டனர். இவர்களை விற்றவன் பெயர் கவகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழன் என்பது, இச் செய்தி மேலப்பெரம்பலூர் தக்ஷீணபுரீஸ்வரர் கோவிலில் சாசனத்தில் காணப்படுகிறது. திருசெங்காட்டங்குடி கோவில் சாசனம் இராஜராஜன்-2 உடைய 13-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. நான்கு பெண்கள் அக்கோவிலுக்குத் தேவரடியாராக 700 காசுக்கு விற்கப்பட்டனர் என்று கூறுகிறது. திருவாலங்காடு வீரட்டானேசுவரர் கோவில் சாசனம், அக் கோவிலில் அடிமை ஊழியர்கள்பற்றிக் கூறுகிறது. இவ்வடிமைகளில் சிலர் வயிராதராயராலும் அவர் மனைவியராலும் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டவர். வேறு சில அடிமைகள் காசு கொடுத்து வாங்கப்பட்டவர். திருச்சி மாவட்டம் திருச்சித் தாலுகா திருப்பலத்துறை தாருகவ னேசுவரர் கோவில் சாசனம் சக ஆண்டு 1926-இல் எழுதப்பட்டது. கி.பி. 1374-இல் எழுதப்பட்டது. மழவதரையர் என்பவர் தன்னிடமுள்ள அடிமைகளைப் பிரீதிதானமாகக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவருக்கு உள்ள நிலபுலங்களையும் வீடு மனைகளையும் பிரீதிதானமாகக் கொடுத்த இவர், தமது அடிமைகளையும் தானமாகக் கொடுத்தார், அந்த அடிமைகளின் பெயர்களும் கூறப்படுகின்றன. அப்பெயர்களாவன :- தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப் பிள்ளை, நல்லாம் பிள்ளை மகன் தாயினும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள், பிறவி, அழகியாள், இவள் மகள் நம்பாள், இவன் தம்பி வளத்தான்; இவன் தம்பி தாழி, இவன் தம்பி வளந்தான், இவன் தம்பி ஆண்டி, பிறவி முதல் ஆண்டி வரையில் உள்ள ஏழு பேரையும் மழவதரையர், கம்பண்ண உடையார் காரியப்பேர் சந்தரசன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கினார். மற்றவர்கள், இவர்களிடம் முன்னமே அடிமைகளாக இருந்தவர். புதுக்கோட்டை திருமையம் தாலுகா திருமையம் சத்திய மூர்த்திகோயில் சாசனம் பராக்கிரம பாண்டிய தேவர் என்னும் அரசனுடைய 7-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஒரு பிரபு தன் மகனுக்குக்காணி மனை அடிமை கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. “சீரனத்தேவன் முனையத்தரையன் மக்கள் நயனாரேன், என் மகன் சீரானத்தேவர்க்கு நான் குடுத்த கணியாட்சியும் மனையும் அடிமையும் பிரமானம் பண்ணிக் குடுத்த பரிசாவது” என்று இந்தச் சாசனம் துவங்குகிறது. பிறகு காணி மனைகளைக் குறிப்பிடுகிறது: அடிமைகளின் பெயர்களையும் கூறுகிறது. அப் பெயர்களாவன: தேவி, அவள் மகள் சீராள், இவள் தம்பி மக்கனாயன், இவனுடைய சிறிய தாய் ஆவுடையாள், இவள் தம்பி சீரானத்தேவன், இவள் மருமகள் சீராள் பெரியநாச்சி மகன் திருமய்ய மலையாளன், சிவத்த மக்கள் நாயகன் ஆகப் பேர் எட்டு. “வளத்திமகள் மன்றி, இவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளத்தி மகன் வில்லி இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப்பட்ட சமுத்த விருத்திகளும் தானாதான விக்கிரயங்களுக்கு உரித்தாவதாக” என்று முடிகிறது இந்தச் சாசனம். புத்த ஜாதகக் கதைகளில் அடிமைகள் விற்கப்பட்டதும் வாங்கப் பட்டதும் ஆன செய்திகள் கூறப்படுகின்றன. நமது நாட்டு அடிமை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் அது ஒரு பெரிய புத்தகமாகும். சிலப்பதிகாரத்திலும் தொல் காப்பியத்திலும் கூட அடிமைகளைப் பற்றியக் குறிப்புகள் காணப் படுகின்றன. அடிமை முறை தமிழர் சமுதாயத்தில் மிகப் பழைய வழக்கமாகக் காணப்படுகிறது. இது பற்றிப் பல்கலைகழக மாணவர் ஆராய்ச்சி செய்யலாமல்லவா? நடைவாவி உற்சவம் என்றால், காஞ்சீபுர வட்டாரத்தில் பலருக்கும் தெரியும்: ஆனால் அதைப்பற்றி வெளி உலகத்தில் பலருக்குத் தெரியாது. காஞ்சிபுரத்துக்கு ஏழு மைல் தூரத்தில் ஐயங்குளம் என்னும் இடம் பெரிய வெட்ட வெளியான இடம். கண்ணுக் கெட்டிய தூரம் பரவிக் கிடக்கிற இவ்வெளியிலே, ஒண்டுவதற்கு ஒரு மரமேனும் கிடையாது. வெட்டவெளியான இந்தப் பொட்டற் காட்டிலேதான், பாலைவனத்துக்கு மத்தியில் ஒயசிஸ் போல, இந்த நடை வாவிக் கிணறும் மண்டபமும் இருக்கின்றன. இந்த நவீன காலத்திலே விஞ்ஞானத்தின் உதவியினால் Air Conditioned Room என்று அறைகளைக் குளிர்ச்சியாக அமைத்துக் கொள்கிறார்கள் அல்லாவா? இது போன்று பண்டைக் காலத்தில் நமது நாட்டு சிற்ப கலைஞர் எல்லோருக்கும் பொதுவாக இயற்கையாக அமைத்துக் கொடுத்த குளிர்ச்சியான மண்டபந்தான் இந்த நடைவாவி மண்டபம். தரை மட்டத்துக்குக் கீழே பத்து அடி ஆழத்தில் அமைக்கப் பட்டிருப்பதாலும் அதன் மத்தியில் குளம் அமைந்திருப்பதாலும், இம்மண்டபம் நல்ல வெய்யிலிலும் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. தரை மட்டத்திற்குக் கீழே அமைந்திருப்பதனால் இந்த மண்டபம் இருப்பதே தெரியாது. இந்த மண்டபம் இருக்கிற இடத்தைத் தெரிவிப்பது தன்னந்தனியே நிற்கிற அழகான தோரணவாயில் வெட்டவெளியிலே நிற்கிற இந்த தோரண வாயிலையடைந்தால் தான் நடை வாவியைக் காணலாம். இதை நடை வாவிக் குளம் என்றும் நடை வாவிக் கிணறு என்றும் கூறுகிறார்கள். ஏறக்குறைய பத்து அடி சதுரமாக அமைந்த குளம் இது. இச்சிறு ‘குளத்தைச் சுற்றிலும் சுமார் 8 அடி அகலமும் 8 அடி உயரமும் உள்ள கருங்கல்லினால் அமைந்த சுற்று மண்டபம் உள்ளது. அதற்குச் செல்ல ஒரு பக்கத்தில் மட்டும் படிகள் அமைந்துள்ளன. இது தான் நடைவாவி. நடை வாவி என்பது நடை வாவி என்று மருவி விட்டது. மண்டபத்துக்குள்ளே எல்லா நாட்களிலும் போக முடியாது. ஏனென்றால் தரை மட்டத்துக்கு அடி பத்துக்குள் போக முடியும். ஆண்டுக்கு ஒரு முறை நீரை இறைத்து விட்டு மக்கள் மண்டபத்துக்குள்ளே போகிறார்கள். அன்று அம்மண்டபத்துக்குள்ளே வரதராச பெருமாள் எழுந்தருளுகிறார். தமிழருக்கு சித்திரா பௌர்ணமி முதன்மையான சிறந்த நன்னாள். வேனிற்காலத்திலே, சித்திரை மாதத்திலே முழுநிலா நாளாகிய பௌர்ணமி இரவு தனிச் சிறப்புடையது. அன்று பல நிகழ்வுகளும், பூசைகளும், உற்சவங்களும் நடைபெறும். சித்திரா பௌர்ணமி இரவிலே நடைபெறுகிற ஐயங்குளத்து நடை வாவி உற்சவ காஞ்சீபுர வட்டத்திலே அழகான சிறந்த திருவிழாவாகும். உற்சவத்துக்கு முந்திய நாள் நடை வாவியில் நிறைந்திருக்கிற தண்ணீரை எஞ்சின் மூலமாக இறைத்து விடுகிறார்கள். முற்காலத்தில் ஏற்றம் போட்டுத் தண்ணீரை இறைப்பது வழக்கம். நீரை இறைத்து விட்ட பிறகு, மண்டபம் காலியாகி, மத்தியில் உள்ள குளத்தில் மட்டும் நீர் நிறைந்திருக்கும். அப்போது படிகளின் வழியாகப் போய் மண்டபத்திற்குள் உலாவலாம். சித்திரா பௌர்ணமியன்று காஞ்சீபுரத்திலிருந்து வரதராசப் பெருமாள் ஏழு மைல் தூரத்திலுள்ள ஐயங்குளத்திற்கு வந்து நடைவாவியை யடைகிறார். நடைவாவி மண்டபத்தில் தங்கியிருந்த பிறகு, குளத்தைச் சுற்று வலம் வந்து, வெட்டவெளியிலே அமைந்துள்ள மேடையில் சென்று அமர்கிறார். சித்திரா பௌர்ணமி உற்சவம் தொடங்கிவிட்டது. கிராமத்து மக்கள் ஆண்கள் பெண்கள், சிறுவர், சிறுமியர் கூட்டங் கூட்டமாக விழாவில் பங்கு கொள்கிறார்கள். வேனிற் காலத்தின் இனிய தென்றற் காற்று கொள்ளை கொள்ளையாக வீசுகிறது. மல்லிகைப் பூவின் மணம் எங்கும் கமழ்கிறது. குளிர்ந்த இரவும் நிலா வெளிச்சமும் தென்றற் காற்றும் மலர் மணமும் உற்சவச் சந்தடியும் ஆகிய சூழ்நிலைகள் இந்த இடத்தைத் தெய்வ லோகம் போல மாற்றி விடுகின்றன. மக்களின் மனம் உவகைக் கடலில் திளைக்கிறது. “மாசில வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்கை இணையடி நீழலே” சித்திரா பௌர்ணமி இருக்கட்டும். முழு நிலாவின் பால் நிலவு இருக்கட்டும். இளவேனிலின் தென்றற் காற்று இருக்கட்டும். இவை தமிழ் நாட்டில் எங்கும் உள்ளவைதானே! இந்த வெட்ட வெளியான பொட்டற் காட்டிலே, தரை மட்டத்தின் கீழே சுற்று மண்டபத்தையும் அந்த மண்டபத்தின் மத்தியில் சிறுகுளத்தையும் அழகாக அமைத்துக் கொடுத்தானே, அந்தச் சிற்பியின் கலைத்திறனை என்னென்று கூறுவது. மலையுச்சியிலும் கடற்கரை ஓரத்திலும் ஆற்றங் கரையிலும், காட்டின் நடுவிலும் கோயில்களையும் மண்டபங்களையும் அமைத்து அழகுப்படுத்திய சிற்பிகள், தரை மட்டத்தின் கீழும் மண்டபத்தையும் குளத்தையும் அமைத்துக் கொடுத்த திறனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நடைவாவி மண்டபம்* இந்த நடைவாவிற்கு நூறு கல் தூரத்திலே மற்றொரு பழைய நடைவாவி, தூர்ந்து போய் மறைந்து கிடக்கிறது. அதன் வாயில் நிலைமட்டும் நடை வாசி போன்ற அழகான அமைப்பும் சிற்ப வேலை பாடுகளுடன் இன்று நின்று கொண்டிருக்கிறது. ஆர்க்கியாலஜி இலாகா இதற்கு இன்னும் பாதுகாப்பு அளிக்காத காரணம் தெரிய வில்லை. கார் வசதி உள்ளவர்கள், இந் நடை வாவிக் கிணற்றைச் சித்திராப் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பட்ட பகலில் சென்று அவகாசத் தோடு காணலாம். கோயில் அதிகாரிகள் இந்த நடை வாவியை ஒரு மாதம் வரையிலாவது தண்ணீர் சுரக்காமல் வைத்து இதை பொது மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வது நல்ல சித்திரக் கலை காட்சிகள் இதில் அடக்கம் இல்லையானாலும், கட்டடச் சிற்ப அமைப்பு காணத்தக்க காட்சியாகும் நாளது சித்திரா பௌர்ணமி வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒரு முறை போய் பாருங்கள். மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி வரிசைகள் தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன. தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு: கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மை யோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில் மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில் இணைக்கப்படுகின்றன. தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் - துளு நாடு இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன. தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்: ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்: காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத் தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங் கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்: சமணம் ‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறு கின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறு பல கட்டுரைகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்: பௌத்தம் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதி யில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 9 : தமிழில் சமயம்: கௌதமபுத்தரின் வாழ்க்கை புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தொகுதி - 10 : தமிழில் சமயம்: பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் 1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ் விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுதி - 11 : தமிழில் சமயம்: புத்த ஜாதகக் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது. தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு: சிற்பம் - கோயில் மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வு களை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம். தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு: இசை - ஓவியம் - அணிகலன்கள் தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ் நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்: சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்: மறைந்துபோன தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார். சுமார் 250 மறைந்து போன நூல்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் அவர் தொகுத்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும். தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு: கிறித்துவமும் தமிழும் ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தை யும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு: சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார் அச் செய்திகளும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 19 : பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை: நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற நேமிநாதம், நந்திகலம்பகம் ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார். ‘மத்தவிலாசம்’ என்னும் சமஸ்கிருத நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. மயிலை நேமி நாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித் துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதிய உள்ள நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 20 : பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய மனோன் மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந் நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. வீ. அரசு குறிப்புகள் *திருக்கோயில் : மார்ச் 12:6, 1978. *திருக்கோயில் : ஜூலை, 1968. *செங்கற்பட்டு மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலாவது மாநாட்டு மலர். ஏப்ரல், 1963. *திருக்கோயில்: செப், 1968. *திருக்கோயில் : அக்டோபர், 1968. *தமிழ்ப்பொழில், 34:11. 1958. *மூன்றாம் நந்திவர்மன் (1958) நூலில் இடம் பெற்ற கட்டுரை. *வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1957) நூலில் இடம் பெற்ற கட்டுரை. *செந்தமிழ்ச் செல்வி 24.11.1950 *வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் (1957) நூலில் இடம்பெற்ற கட்டுரை. *நண்பன். மலர் 3, 1958.