சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 19 கம்பராமாயணம் தொகுப்பு (பாகம் - 1) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 19 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 568 = 576 படிகள் : 1000 விலை : உரு. 360/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. பதிப்பகத்தார் உள்ளுறை கம்பராமாயணம் தொகுப்பு முன்னுரை 3 அணிந்துரை 5 பதிப்புரை 9 தனிப் பாடல்கள் 14 பால காண்டம் பாயிரம் 19 1. ஆற்றுப் படலம் 21 2. நாட்டுப் படலம் 25 3. நகரப் படலம் 31 4. அரசியல் படலம் 37 5. திரு அவதாரப் படலம் 39 6. கையடைப் படலம் 50 7. தாடகை வதைப் படலம் 56 8. வேள்விப் படலம் 65 9. அகலிகைப் படலம் 72 10. மிதிலைக் காட்சிப் படலம் 80 11. கைக்கிளைப் படலம் 90 12. குலமுறை கிளத்துப் படலம் 93 13. கார்முகப் படலம் 97 14. எழுச்சிப் படலம் 107 15. சந்திர சயிலப் படலம் 113 16. வரைக்காட்சிப் படலம் 116 17. பூக்கொய் படலம் 118 18. நீர் விளையாட்டுப் படலம் 122 19. உண்டாட்டுப் படலம் 124 20. எதிர் கோள் படலம் 129 21. உலாவியல் படலம் 133 22. கோலம் காண் படலம் 136 23. கடிமணப் படலம் 142 24. பரசுராமப் படலம் 150 அயோத்தியா காண்டம் 1. மந்திரப் படலம் 159 2. மந்தரை சூழ்ச்சிப்படலம் 170 3. கைகேசி சூழ்வினைப் படலம் 184 4. நகர் நீங்கு படலம் 198 5. தைலம் ஆட்டு படலம் 229 6. தயரதன் மோட்சப் படலம் 235 7. கங்கைப் படலம் 241 8. குகப்படலம் 244 9. வனம்புகு படலம் 251 10. சித்திரகூடப் படலம் 257 11. பள்ளியடைப் படலம் 262 12. ஆறுசெல் படலம் 279 13. கங்கை காண் படலம் 285 14. திருவடி சூட்டு படலம் 297 ஆரணிய காண்டம் 1. விராதன் வதைப் படலம் 317 2. சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் 323 3. அகத்தியப் படலம் 327 4. சடாயு காண் படலம் 334 5. பஞ்சவடிப் படலம் 342 6. சூர்ப்பணகைப் படலம் 343 7. திரிசிரா வதைப் படலம் 366 8. தூடணன் வதைப் படலம் 377 9. கரன் வதைப் படலம் 379 10. இராவணன் துன்புறு படலம் 382 11. மாரீசன் வதைப் படலம் 399 12. சீதையை வஞ்சித்த படலம் 410 13. சடாயு உயிர் நீத்த படலம் 426 14. அயோமுகிப் படலம் 439 15. கவந்தன் படலம் 446 16. சபரி பிறப்பு நீங்கு படலம் 453 கிட்கிந்தா காண்டம் 1. பம்பைப் படலம் 457 2. அனுமப் படலம் 460 3. நட்புக்கோள் படலம் 466 4. மராமரப் படலம் 474 5. துந்துபிப் படலம் 477 6. கலன் காண் படலம் 479 7. வாலி வதைப் படலம் 483 8. தாரை புலம்புறு படலம் 506 9. அரசியல் படலம் 508 10. கார்காலப் படலம் 513 11. கிட்கிந்தைப் படலம் 519 12. தானை காண் படலம் 537 13. நாடவிட்ட படலம் 540 14. பிலம்புக்கு நீங்கு படலம் 545 15. ஆறுசெல் படலம் 551 16. சம்பாதிப் படலம் 556 17. மயேந்திரப் படலம் 564 கம்பராமாயணம் தொகுப்பு (பாகம்-1) (1962) முன்னுரை அம்பொனெடு மணிமாட அயோத்தி எய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்- றன்பெருந்தொல் கதைகேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டாள் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எம்பெருமான் றன்சரிதை செவியாற் கண்ணாற் பருகுவோம் இன்னமுதை மதியோம் இன்றே. -குலசேகரர் சிறையிருந்த செல்வியின் ஏற்றஞ் சொல்லும் இராமாயணம் இந்திய நாட்டு இணையிலாக் கவிஞர் பலராலும் இயற்றப் பட்டுள்ளமை எவரும் அறிந்த உண்மை. செந்தமிழ்ச் சங்கச் செய்யுள்களிலும் இராம காதையின் குறிப்புகள் திகழ்வதைக் காணலாம். கருதாரும் கவிச்சக்கரவர்த்தியெனப் பாராட்டும் கம்ப நாடர் தமிழ் மரபிற்கியைய அமைத்த மாபெருங் காப்பியமாகிய கம்பராமாயணம் சான்றோர் கவி நலந்தெரிக்குஞ் சால்புடையதாய்க் கற்றோரிதயங் கவருங் கருவூலமாய்த் திகழ்வது. கம்ப நாடன் கவிதையிற் போற் கற்றோர்க் கிதயங் களியாதே! என்னும் அறிஞர் தம் ஆர்வ மொழி இக்கூற்றினை வலியுறுத்தும். `நாடிய பொருள் கைகூடும் என்னுந் தொடக்கத்தினை யுடைய பாயிரச் செய்யுள் நூற்பயனை நுவலுகின்றது. `நாடிய பொருள் என்னுந் தொடர் `விரும்பும் பொருள் என்னுங் கருத்தை உட்கொண்டதாதலின், எவர் எப்பொருளை விரும்பினும், அப்பொருளை இப்பெருங் காப்பியப் பயிற்சி இனிதளிக்கும் பெற்றி வாய்ந்ததென்பது பெறப்படும். இறையருள் விரும்பிக் கற்பாரும், கவியின்பம் நுகரக் கருதிக் கற்பாரும், தமிழர் பண்பாட்டை அறிய விரும்பிக் கற்பாரும், பிற பயன் பெறவிழைந்து கற்பாரும் விரும்பியது பெறுவர் ஆதலின், இந்நூல் அனைவர்க்கும் பயன்படுவதாய் மிளிர்வது தேற்றம். கம்பர் பாடிய கவித்தொகை பதினாயிரம் என்பர். வித்தாரக் கவிஞரின் விறலினை விளக்கும் அப்பதினாயிரங் கவிகளையும் ஓதியுணரப் போதிய ஓய்விலார் பலர்க்கும் பயன்படவேண்டும் என்னும் கருத்தால் கதைத் தொடர்பு கெடாத வகையில் விரிவான வருணனைகளை விலக்கி, இச்சுருக்கத்தை விளக்கக் குறிப்புரையுடன் செய்யுளில் அமைந்த கடின சந்திகளைப் பிரித்துப் பொருள் விளக்கத்திற்கு இன்றியமையாத குறியீடு களையும் செய்து தமிழ்நாட்டிற்கு வழங்கிய பெரியார் சாமி. சிதம்பரனாரவர்களுக்குத் தமிழ்நாடு பெரிதும் கடமைப் பட்டுள்ளதெனக் கருதுதல் தவறாகாது. சாமி. சிதம்பரனாரவர்கள் தமிழ் மொழிக்குச் செய்து வந்த பெருந்தொண்டினைப் பலரும் அறிவர். தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் என்னும் குறள் வழி வாழ்ந்த அப்பெரியார், பயனுள்ள நூல் பல இயற்றி நாட்டுக்கு நலம் விளைத்தவர். அப்பெரியார் நெடுங் காலம் முயன்று தொகுத்து வைத்துச் சென்ற இந்நூலினை அவர்தம் இல்லக் கிழத்தியார் வெளியிட மேற்கொண்ட நன் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன். இந்நூல் அச்சாகுங்கால், தம் இடையறாத அலுவல்களுக் கிடையே அச்சுத்தாள்களைத் திருத்தும் அருந்தொண்டினை அன்புடன் ஏற்று அழகுறச் செய்துமுடித்த சென்னை மாநிலக் கல்லூரித் துணைத் தமிழ்ப் பேராசிரியர் உயர்திருவாளர் கோ. சங்கரராசனார் எம்.ஏ., அவர்களின் தகவுடைமை நமது பாராட்டுக்குரியதாம். தமிழ் அன்பர் பலரும் இப்பதிப்பினைப் பெற்றுப் பயின்று பெரும் பயன் பெறவேண்டு மென்பது எனது வேண்டுகோள். கம்பர் கவிகற்றுக் கன்னித் தமிழ்வளர்க்கும் இம்பரார் வாழ்க இனிது, சென்னை மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை 29-1-62 அணிந்துரை jÄœ இலக்கியத்தின் கொடுமுடியாகவும், தமிழ் மொழியின் வற்றா வளத்துக்கும், சொல்லாற்றலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும், தமிழ் மக்கள் எண்ணி வந்த எண்ணங்கள், அவர்களுடைய இதயக் கனவுகள், இணையற்ற இலட்சியங்கள், முதலியவற்றின் வெளியீடாகவும், அவர்களது கடவுட் கொள்கைக்கும் சமயச் சிந்தனைக்கும் நிலைக்களமாகவும், உலகில் என்றும் `அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் அடிப்படைக் கருத்தை நிலைபெறச் செய்து, பழிபாவங்களும் கொடுங்கோன்மைகளும் பெருகுதலைக்கண்டு தளராமல், அறவழியிற் செல்வோர் தருமத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதாகவும் விளங்கும் பெருங்காப்பியம் கம்பராமாயணம். கம்பராமாயணம், தோன்றிய நாள் முதல் அறிஞர் பெருமக்களின் உள்ளத்தை ஆரப் பிணித்துப் பேரின்பம் நல்கி வந்துள்ளது. கவிஞர் பலர் தம் செந்தமிழ்ப் பனுவல்களில் இந்நூல் கருத்துக்களையும், சொற்றொடர்களையும் எடுத்தாண்டு வந்துள்ளனர். உலகப் பெருங் காப்பியங்களுள் உயர்ந்த இடம் வகிப்பது கம்பராமாயணம் என இதனை உளமாரப் பாராட்டிப் பரவசராகின்றார் பன்மொழித் திறமறிந்த வ. வே.சு. ஐயர். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை உண்மைவெறும் புகழ்ச்சி யில்லை என்று பெருமிதப் பறை முழக்குகின்றார். `பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலிக்க விரும்பிய பாரதியார். நாடு விடுதலை பெற்ற பிறகு மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் காரணமாக நமது பழம் பெரும் நூல்களைக் கற்பதில் பேரார்வம் பெருகி வருகின்றது. பண்டைத் தமிழ் நூல்கள் பல, மறு பதிப்புகளாகவும், மலிவுப் பதிப்புகளாகவும் வெளிவந்து மக்கள் மன்றத்தில் கொலுவீற்றிருக்கின்றன. அம்முறையில், கம்பராமாயண மூலம் அண்மையில் சில பதிப்பாளர்களால் வெளியிடப் பட்டுப் பரவியது. இப்பொழுது சாமி. சிதம்பரனார் அவர்களால் தொகுக்கப்பட்ட `இவ் விராமாயணத் தொகுப்பு வெளிவருகின்றது. மற்ற நூல்களையும் காப்பியங்களையும் போலன்றிக் கம்பராமாயணம் அளவாற் பெருகியது. இந்நூலின் முன்னுரையில் மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்று கம்பன் ஒரு வித்தாரக் கவிஞன்; தனது காலக் காப்பிய நெறிக்கேற்பத் தனது நூலை மிக விரிவாக, ஏறக்குறையப் பத்தாயிரம் கவிகளால் இயற்றியிருக்கின்றான். மூல நூலாகிய வால்மீகி இராமாயணத்தைக் காட்டிலும் கம்பராமாயணம் அளவாற் பெருகியது என்பர் அறிஞர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார். வேறு வேறு அலுவல்களிலே ஈடுபட்டிருக்கின்ற பலர் இந்நூலை முழுவதும் கற்பதற்கு அரிய முயற்சியும் காலமும் தேவைப்படுகின்றது. அத்தகையவர் களுக்குக் காப்பியத்தின் சுவை சற்றும் குறைவுபடாமல் தொகுக்கப்பட்ட இத்தகைய பதிப்புப் பேருதவியாக அமையும். நூல் முழுவதையும் ஆர அமரக் கற்க விரும்புகின்றவர்களுக்கும், இது ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். பேராசிரியர் எ. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கம்ப ராமாயணப் பதிப்பு முயற்சிகள் பற்றிய தமது ஆராய்ச்சிக் கட்டுரையில் இத்தகைய முயற்சி யொன்று மேற்கொள்ளப் படுவது இன்றியமையாதது என்பதை எடுத்துக் காட்டுகின்றார்கள். இந்த முயற்சியை இதற்குமுன் மேற்கொண்ட அறிஞர்களில் திரு.வெ.ப. சுப்பிரமணிய முதலியார் பலருக்கு வழிகாட்டி யாவார். அவர் `கம்பராமாயண இன்கவித் திரட்டு என்ற முறையில் சிற்சில நயமான கவிகளை மட்டுமே தேர்ந் தெடுத்து அவற்றிற்கு விரிவான உரை எழுதி, இடையில் கதைத் தொடர்பு அறாமல் உரை நடையில் கதைச் சுருக்கத்தை எழுதி வெளி யிட்டுள்ளார். பின்னர் திரு. சொ. முருகப்பா அவர்களின் சுருக்கப் பதிப்பில் பால காண்டமும், அயோத்தியா காண்டமும் சிறந்த உரையுடன் வெளிவந்தன. திரு. சொ.முருகப்பா அவர்களின் சுருக்கப் பதிப்பின் பாராட்டுரையில் பேராசிரியர் எ. வையாபுரிப் பிள்ளை அவர்கள் சுருக்கப் பதிப்பில் அமைக்கப்படவேண்டும் பகுதிகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 1. கதை தொடர்புற அமைதல். 2. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் அவற்றுக்குரிய பூர்வாங் கத்துடன் காணப்படுதல். 3. கதாபாத்திரங்களின் தனிச் சிறப்பு விளங்குதல். 4. நூலின் அமைப்பு, பெருமை, இதிகாசம் அல்லது பெருங் காப்பியத்தின் சிறப்பியல்புகள் முதலியன நன்கு புலப்படுதல். 5. சுவையுடைய கவிகள் அனைத்தும் உளவாதல். அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் இத்தொகுப்பில் இந்த நெறிகள் யாவும் திருத்தமுற மேற்கொள்ளப்பட்டிருப்பது போற்றற்குரியதாகும். அவர்கள் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக உழைத்து இத்தொகுப்பை உருவாக்கியிருக் கிறார்கள். ஒப்பற்ற கலைக் கோயிலாகிய கம்பராமாயணத்தில் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதன் ஒவ்வொரு பாடலிலும் ஆழ்ந்து ஈடுபட்டு அனுபவித்து, `யான்பெற்ற இன்பம் பெருக இவ்வையம் என்னும் கருத்துக்கொண்டு, இத்தொகுப்பை அவர்கள் உருவாக்கியிருக் கிறார்கள். இதைத் தம் வாழ்நாளின் இலட்சியப் பணியாகக் கருதித் தம் வாழ் நாளிலேயே வெளியிட்டுவிடவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அவ்வெண்ணம் அன்னாருடைய மறைவுக்குப் பின் அவர்களது முதலாண்டு நினைவு நாளை ஒட்டியே நிறைவேறியிருக்கின்றது. ஒரே புத்தகத்தில் கம்பராமாயணம் முழுவதையும் அமைத் திருப்பதும் அவ்வப் பக்கங்களிலேயே அடியில் எளிமையும் தெளிவும் கூடிய நடையில் சிறந்த குறிப்புரையும் பொருள் முடிபுகளும் எழுதியிருப்பதும் இந்தச் சுருக்கப் பதிப்பில் குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும். பத்தாயிரம் பாடல்களில் நாலாயிரம் பாடல்கள் இதனுள் தொகுக்கப்பெற்றுள்ளன. பாடல்கள் விடப்பட்ட இடங்களில் கதைத் தொடர்பு அறாமல் அப்பாடல்களில் காணப்படும் செய்திகள் சுருக்கி வரையப் பட்டுள்ளன. பாடல்களுக்குத் தலைப்புகள் கொடுத்திருப்பது கற்போருக்குப் பெரும் துணையாக அமையும். அருஞ்சொற் பொருள், கதைக்குறிப்புகள், தொடர்களுக்கு விளக்கம், பொருள் முடிபு, உவமை முதலிய அணி வகைகளை விளக்குதல், சிற்சில பாட பேதங்களைக் காட்டுதல் என்ற பல சிறப்புகளைக் கொண்டது அவர்கள் வரைந் துள்ள குறிப்புரை. எடுத்துக்காட்டாக: 1. ஏனல் - செந்தினை, இறுங்கு - சோளம் என்பன; போன்று அருஞ்சொற் பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2. ஐம்படை: சங்கு, சக்கரம், வில், வாள், தண்டாயுதம் ஆகிய திருமாலின் ஐந்து படைகளையும் பொன்னால் செய்து கோத்து அணிவது வழக்கம். என்பது போன்ற விளக்கக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3. வெண் மேகத்திற்குச் சிவபெருமானும், கரு முகிலுக்குத் திருமாலும் உவமை என்பது போன்ற விளக்கங்கள் பாடற் பொருளைத் தெளிவுபடுத்துவன. 4. பெண்கள் உலக்கையால் தானியங்களைக் குற்றும் போது பாடும் பாட்டுக்கு வள்ளை என்று பெயர். இதுபோன்ற அரிய குறிப்புகள், தமிழ் மரபுகள் பலவற்றை விளக்கி நூலின் பொருள் இனிது விளங்கச் செய்வன. பல நாட்கள் அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்ளுடன் சேர்ந்து நான் இலக்கிய ஆராய்ச்சிகளிலும், உரையாடல் களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டதுண்டு. டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை அவர்களின் தலைமையில் நிறுவப்பட்ட எங்கள் கம்பன் மன்றக் கூட்டங்களில் சிறப்புச் சொற்பொழிவு களிலும் வகுப்புகளிலும் அவர்கள் கலந்துகொண்டு மன்றப் பணியில் எனக்கு ஊக்கம் அளிப்பது வழக்கம். அவர்களுடைய மேற்பார்வையிலேயே இந்நூல் அச்சாகி வெளி வந்திருக்குமானால் அவர்களுடைய பதிப்பு அனுபவத் தாலும், நூலாராய்ச்சித் திறத்தாலும் இது எவ்வளவோ திருத்தமும், உயர்வும் பெற்றிருத்தல் கூடும். அது இயலாத காலையில் அவர்களது துணைவியார்தம் கணவரின் நெஞ்சக் கருத்துக்கள் பலவற்றை நினைவிற்கொண்டு இத்தொகுப்பின் அமைப்பு, அச்சுக்கோப்பு முதலிய சிறிய செய்திகள் வரையும் கூடப் பெரிதும் கருத்தைச் செலுத்தித் தமிழ் மக்களின்முன் சமர்ப்பித்திருக்கிறார்கள். அறிஞர் பெருமக்கள் பதிப்புத் திருந்து வதற்கான வழிமுறைகளை அன்பு கூர்ந்து எடுத்துரைப்பார் களானால் அம்மையார் அவற்றைப் போற்றி ஏற்றுக் கொண்டு எதிர்காலப் பதிப்புகளில் அமைத்துச் செப்பம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. கோ. சங்கரராசன் செயலாளர் சென்னைக் கம்பன் மன்றம். பதிப்புரை கவிச் சக்கரவர்த்தி கம்பன் பாடிய ஆறு காண்டங்களிலே உள்ள பாடல்கள் 10,587 ஆகும். (இந்த எண், ம. சண்முகம் பிள்ளை பதிப்பில் உள்ளது.) பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களையும், 3949 பாடல்களாகச் சுருக்கிக் கம்ப ராமாயணப் பெருங்காப்பியத்தின் கதை அமைப்பும், பெருமையும் விளங்க, கவிதைகளின் சுவையும், கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகளும் தோன்ற ஆசிரியரவர்கள் இதனைத் தொகுத்திருக்கிறார்கள்; தமிழறிந்த அனைவரும் சுலபமாகவும் (குறைந்த கால அளவிலும்) இந்த உயர்ந்த காவியத்தைக் கற்றுணரும் வகையில் தொகுத்து எழுதி யுள்ளார்கள். கல்வியிற் சிறந்த கம்பனுடைய கவிதையின் நயத்தில் - கம்பன் இலக்கியத்தின் இனிமையில் - இந்நூலாசிரியர் தமது 21வது வயது முதலே ஈடுபட்டுக் கற்று வந்தவர். இவர் படித்த பழைய கம்ப ராமாயண நூல்களிலுள்ள குறிப்புகளாலும், நாட்குறிப்புச் சுவடியில் எழுதி உள்ள குறிப்புகள் மூலமும் இது காணப்படும். (இந் நூலாசிரியர் தமது 21வது வயது முதல், ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவர்.). பலரால் பதிப்பிக்கப்பட்ட கம்ப ராமாயணப் பழைய நூல்களை எல்லாம் சேகரித்து நீண்ட காலம் பொறுப்புணர்ச்சியோடு படித்து ஆராய்ச்சி செய்தும், பல ஆண்டுகள் ஒரே சிந்தனை யாகத் திட்டமிட்டும் இந்நூலை உருவாக்கியுள்ளார். இடையில் பல இடையூறுகள், தள்ள முடியாத பல பொறுப்புள்ள வேலைகள் இருந்தும், தளரா முயற்சியுடன் மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார். என்ற ஆன்றோர் அனுபவ வாக்கின்படி உழைத்து வந்தார். கம்பனின் ஒப்பற்ற புலமையை, அன்பு, பண்பு, ஒழுக்கம், வீரம் முதலிய நற்குணங்களை இராமன் வழியாகக் காட்டும் கம்பன் நெறிகளை, மாணவர்களும், மற்றவர்களும், கற்றுணர வேண்டு மென்பதே இந்நூலாசிரியரின் கருத்தும், இலட்சியமும் ஆகும். கங்கையாறு தோன்றிய பின் வேறுள்ள ஆறெல்லாம், மேம்பாடு இழந்தன; சீதை தோன்றிய பின் ஏனை அழகிய மாதர் அனைவரும் அழகிழந்தார்கள். கணங்குழையாள் எழுந்ததற்பின் கதிர்வானில் கங்கையெனும் அணங்கிழியப் பொலிவிழந்த ஆறொத்தார் வேறுற்றார் (கார்முகப் படலம்) அவ்வாறே கம்பராமாயணம் பாடப்பெற்றபின் மற்றெல்லா நூல்களும் சிறப்புற்றனவாயின என்று கூறலாம். இப்படிப்பட்ட இலக்கியச் சிறப்புள்ள கம்பன் கவிதையை, ஆறு காண்டங்களும் படிக்க மலைப்புத் தோன்றாவண்ணம் கவிதையின் இன்பத்தில் யாவரும் ஈடுபட்டு இன்புறுவதற்கான முறையில் சுருக்கி எழுதி யிருக்கிறார்கள். 6-8-1956 ல் கம்பராமாயணச் சுருக்கம் எழுதத் தொடங்கினேன். 10-6-1957ல் கம்பராமாயணம் எழுதி முடிந்தது. என இந்நூலாசிரியரின் `நாட்குறிப்புச் சுவடியில் காணப் படுகிறது. இந்தத் தொகுப்பு நூல் எழுத ஆரம்பிப்பதற்கு முன் கம்பனை அணுகுவதற்கு ஒரு வழிகாட்டியாக 1955ல் `கம்பன் கண்ட தமிழகம் என்ற ஓர் ஆராய்ச்சி நூல் இவர்களால் வெளியிடப்பட்டது. 1. கம்பன் பெருமை, 2. கம்பன் காலத் தமிழகம், 3. கம்பனுக்கு முன் இராமாயணம். 4. கம்பன் கருத்து. 5. கம்பனும் மதமும், 6. ஒழுக்கமே உயர்குடி. 7. மதுவும் மாமிசமும். 8. ஒருவனும் ஒருத்தியும். 9. இராவணன் இழிகுணம். 10. இராமனும் இராவணனும். 11. கம்பர் கண்ட தமிழர் பண்பு. 12. கம்பரும் வள்ளுவரும். 13. கம்பன் தமிழ்க் காதல். 14. கம்பனும் நன்றியறிவும். 15. கம்பன் கண்ட அரசியல். 16. கருத்தில் சிறந்தவன் கம்பன் என்று பல நோக்கங்களில் கம்பன் கவிதையின் பெருமைகளை ஆராய்ந்து, பாராட்டி எழுதித் தமது பேராவலை - கம்பன் மீதும் அவன் காவியத்தின் மீதும் தாம் கொண்ட பேரார்வத்தை இந்நூலில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் அந்நூலின் முன்னுரையில் `கம்பன் ஒரு உயர்ந்த கவிஞன்; ஒப்பற்ற புலவன்; நாட்டு மக்களின் கருத்தை ஒட்டி நயமான கவிதை புனைவதிலே வல்லவன்; காலப் போக்கை உணர்ந்தவன்; மக்கள் மனப்பான்மையை அறிந்தவன்; சான்றோர்களின் கொள்கையைத் தழுவியவன்; தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறவாதவன்; தமிழ் அன்னைக்குச் சிறந்த முடிசூட்டியவன்; தமிழ்த்தாயையும், தமிழ் நாட்டையும் போற்றிப் புகழ்ந்தவன்; தமிழ் மக்கள் தவறான வழிகளிலே சென்று தடுமாறாமல் உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற சிறந்த சிந்தை படைத்தவன். என்றும், `உயிரினும் ஒழுக்கமே சிறந்தது என்பதிலே உறுதியான பற்றுள்ளவன், தமிழ் மக்கள், மதம், சாதி, மொழி வெறுப்புகள் இல்லாமல் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்னும் கருத்துள்ளவன், கம்பன் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள். மேலும்`.....உள்ளத்திலே உணர்ச்சியில்லாமல் எழுதப்படும்எழுத்திyஉயிரோட்ட«இராது. பிறரால் தூண்டப்படாமல், தானே, துள்ளியெழுந்தஉள்ளத்துட‹எழுது«கவிதைகளிy -காவியங்களிyகதைகளிy -கட்டுரைகளிலேதோ‹உயிர்த்துடிப்பிருக்கும்’என்று«சிறந்jகருத்துக்கsவெளியிட்டுள்ளார். யாருடைய தூண்டுதலாலும் நான் இராமாயணத்தைப் பாடவில்லை; குற்றமற்ற வெற்றியுடைய இராமன் வரலாற்றில் உள்ள ஆசையால் - அதைத் தமிழ் மக்கள் படிக்கும்படி இனிய சொற் சுவைக் காவியமாகச்செய்துதர வேண்டும் என்ற ஆசையால்- நானேதான்பாடினேன். ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்று இக்காதஇல் கொற்றத்து இராமன் கதை அரோ என்று கம்பன் பாடியது போல என் கணவர் (நூலின் ஆசிரியர்) இந்த இராமாயணச் சுருக்க நூலை யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தாமே, தம் பேரார்வம் நிறைவேறு வதற்காகத் தொகுத்து எழுதினார். கம்பநாடன்கவிதையிற்போல்கற்றோர்க்குஇதயம்களியாதேஎன்பது ஒருபழந்தமிழ்ப்புலவர்பட்டு. கம்பன் கவியைப்படித்தவர்க்குத்தன் அதன் அருமைதரியும். தமிழின் அருமையை அறிந்தவர்கள், இனிமையை உணர்ந்தவர்கள், கம்பன் கவிதையிலே ஈடுபட்டால் கவலைகளையெல்லாம் மறந்துவிடுவர், களிப்புக் கடலிலே நீந்திவிiளயாடுவர், உள்ளத்திலே கவிச்சுவயைப் பாய்ச்சிக் களிப்பூட்டுவதிலேகம்பன்கவிக்குநிகர்கம்பன்கவிnயதான். மேலே காட்டிய பழந் தமிழ்ப் பாட்டின் பகுதி இவ்வுண்மையை உணர்த்து கிறது. என்று கம்பன் பெருமையில் நூலாசிரியர் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவன் கம்பன். அவன் காவியத்தைச் சுருக்கித் தொகுத்த நூலாசிரியர் இந்த ஆராய்ச்சி நூல் மக்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் சொல்லுவார்கள். இது வரையில் இந்த மாதிரி வெளிவரவில்லை. சீக்கிரம் வெளியிட வேண்டும் என்று முதலில் எழுதியதை ஜூன் 1959ல் மறுபடியும் எடுத்து எழுதினார்கள். பலதிருத்தங்கள் செய்து, வெளியீட் டாளர்களின் காலதாமதம் கண்டு, தைத்திங்களில் (1961) `நாமே வெளியிடுவோம் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம்.... செய்ய நினைத்திருந்த திட்டம் நிறைவேறி - பெரும் முயற்சியுடன் தோற்றுவித்த இந்நூல் வடிவம் பெற்றுப் புகழடைவதைக் கண்டு - அவர்கள் மகிழ்வதைக் காண எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. தமிழன்னைக்கும் விருப்பம் இல்லை. அவர்களின் கருத்தின்படி இலட்சியத்தை நிறைவேற்றிய நிம்மதி பெறுகிறேன். இப்பெரு நூலுக்குத் தொகுப்பாசிரியரின் சிறந்த முன்னுரை பெற முடியவில்லை. அந்தக் குறையைப் போக்கித் தமிழுலகம் தலைமேற்கொண்டு போற்றும், முதுபெரும் புலவர் மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களும், எனது கணவரின் அன்பிற்குரிய நண்பரும், காவியப் புலவர்களிலே தலைசிறந்தவரான கம்பரின் இராமாயணத்திலே மிக்க ஆர்வம் உடையவருமான திரு. கோ. சங்கர ராசன் எம்.ஏ.,(சென்னைக் கம்பர் மன்றச் செயலாளர்) அவர்களும் சிறப்புமிக்க முன்னுரை வழங்கியுள்ளார்கள். இவ்விருவருக்கும் உளமார்ந்த நன்றி உரியதாகும். இந்நூலின் ஆசிரியரின் விருப்பப்படியே பிழையில்லாமல் வெளியிட வேண்டுமே என்று மிகவும் அஞ்சினேன். அதற்கும், கற்றோர்களின் உள்ளத்தைக் கவரும் இத்தொகுப்பு நூலின் பெருமையை உணர்ந்த திரு.கோ. சங்கரராசன் எம்.ஏ., அவர் களே, கைம்மாறு கருதாமல்அச்சுத் தாள்களையும் பிழையின்றித் திருத்தி, சிரமம் பாராமல் மிகக் கவனித்து எமது வெளியீட்டு முயற்சியில் இந்த முக்கியமான உதவிகளை ஏற்றுக் கொண்ட தற்கும் எமது உளமார்ந்த நன்றி அவர்க்கு என்றும் உரியதாகும். தமிழ் மக்களுக்கும், கவிதையுணர்ச்சியுடைய அனைவருக்கும் வற்றாத இன்ப சாகரமாக அமைந்த இந்த உயர்ந்த இலட்சிய நூல், வடிவம் பெறுவதற்கும் அச்சாகி வெளிவருதற்கும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு எனக்குச் சிறு சிரமமும் இல்லாமல் தானே முன்னின்று சகல விதத்திலும் செயலாற்றிய, நூல் வெளியிடுவதில் அனுபவமுடைய குழந்தைகள், சிறுகதை எழுத்தாளர் திரு. பி.இ. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் அன்புள்ள நன்றி உரித்தாகுக. கம்பராமாயணப் பெருங்காப்பியத் தொகுப்பு காம்பீர்யத் தோடு அச்சிடப்பட்டு நூல் வடிவம் பெறக் கருத்துகள் வழங்கி, சகல ஏற்பாடுகளும் செய்து பேசி முடித்துத் தந்துதவிய திரு. மணலி. சி.கந்தசாமி அவர்களுக்கும் எங்கள் நன்றியுரித்தாகுக. சிறந்த முறையில் அழகிய விதத்தில் பிழையின்றி ஊக்கத் துடன் அச்சிட்டு உதவிய குமுதம் அச்சகத்தார் அவர்களுக்கும் அச்சகத் தொழிலாளர்களுக்கும் எங்கள் நன்றி உரியது. அன்புடன் விற்பனை செய்ய முன் வந்து உற்சாகத்துடன் விற்பனை உரிமை ஏற்றுக் கொண்ட என்.சி.பி.எச். பிரைவேட் லிமிடெட் தாபனத்தினர் அவர்களுக்கு எங்கள் நன்றியுரிய தாகுக. பதிப்பு முறைகளில் அனுபவமுடைய பெருமக்கள் அன்பு கூர்ந்து இந்நூல் இன்னும் திருத்தமுற அமைவதற்கான ஆலோசனைகளை நல்குவார்களாயின் நன்றியுடன் அவற்றை மறுபதிப்பில் அமைத்துக் கொள்வோம். இலக்கிய நிலையம் அன்புள்ள, 9, சவுராஷ்டிரா நகர், சிவகாமு சிதம்பரனார் ஏழாவது தெரு, சென்னை - 24 15-5-1962 கம்பன் பெருமையும் இராமாயண மாண்பும் தனிப் பாடல்கள் கம்பன் பெருமை வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச், சடையப்பன் வாழ்த்துபெறத், தாழ்வார் உயரப், புலவோர் அகஇருள் தான்அகலப், போழ்வார் கதிரின் உதித்த, தெய்வப் புலமைக் கம்பநாட்டு ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு, யாதும் அரியது அன்றே. 1 குறிப்புரை: 1. வாழ்வுஆர்- இன்புற்று வாழ்கின்றவர்கள் நிறைந்த. அகஇருள்- உள்ளத்தில் உள்ள அறியாமையாகிய இருட்டு. போழ் வார் கதிரின் - இருளைப் பிளக்கின்ற பெரிய சூரியனைப் போல். ஏ-அசை. இராமாயணத் தோற்றம் நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற, ஆரணக் கவிதை செய்தான் அறிந்தவான் மீகி என்பான்; சீர்அணி சோழ நாட்டுத் திருவழுந் தூரில் வாழ்வோன், கார்அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிசெய் தானே 2 2. ஆரணம்-வேதம் உள்ள வடமொழியிலே. கவிதை செய்தான் - காவியமாகச் செய்தான். கார் அணி கொடையான் - மேகம் போன்ற கொடையை யுடையவன். தமிழ் அமுதம் அம்பிலே சிலையை நாட்டி, அமரர்க்குஅன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்னத், தானும் தமிழிலே தாலைநாட்டிக், கம்பநாடு உடைய வள்ளல், கவிச்சக்கர வர்த்தி, பார்மேல் நம்புபா மாலை யாலே நரருக்குஇன்று அமுதம் ஈந்தான் 3 3. அம்பிலே - நீரிலே (பாற்கடலில்.) சிலையை நாட்டி - கல்லாகிய மந்திர மலையை நாட்டி. தம்பிரான் - திருமால். தாலை நாட்டி - நாவன்மையை நிலை நாட்டி. நம்பு பா மாலையாலே - யாவரும் நன்மை தரும் என்று நம்புகின்ற செய்யுள் வரிசையால். கம்பன் காலம் எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே, கம்ப நாடன் பண்ணிய இராம காதை, பங்குனி, அத்த நாளில், கண்ணிய அரங்கர் முன்னே கவிஅரங்கு ஏற்றி னானே. 4 4. சகாத்தம் - சகாப்தம்; நூற்றாண்டு. அத்த நாள் - அத நட்சத்திரம் கண்ணிய - அன்பர்களால் நினைக்கப்பட்ட. கவி அரங்கு - கவிஞர்களின் சபையிலே. ஏற்றினான் - ஏறும்படி செய்தான். ஏ - அசை. கம்பன் கவிச்சிறப்பு இம்பர் நாட்டில், செல்வம்எல்லாம், எய்தி அரசுஆண்டு இருந்தாலும் உம்பர் நாட்டில், கற்பகக்கா ஓங்கு நீழல் இருந்தாலும், செம்பொன் மேரு அனையபுயத் திறல் இராமன் திருக்கதையில்,. கம்ப நாடன் கவிதையில்போல், கற்றோர்க்கு இதயம் களியாதே. 5 5. இம்பர் நாட்டில் - இவ்வுலகில் உள்ள நாட்டில் (மண்ணுலகில்) உம்பர் நாட்டில் - வானுலகில். உம்பர் - வான். புயம் திறல் சேர் - புய வலிமை பொருந்திய. கவிதையில்போல் - கவிதையில் உண்டாகும் மகிழ்ச்சியைப் போல். கம்பன் கவி பாடிய வரலாறு கழுந்த ராய்த்,தன கழல்பணி யாதவர் கதிர்மணி முடிமீதே அழுந்த வாளிகள் தொடுசிலை ராகவ, அபிநவ கவிநாதன், விழுந்த ஞாயிறு எழுவதன் முன்,மறை வேதிய ருடன்ஆராய்ந்து, எழுந்த ஞாயிறு விழுவதன் முன்,கவி பாடினது எழுநூறே. 6 6. கழுந்தராய் - அறிவற்றவராய். தன் - தன்னுடைய. தொடு சிலை - தொடுத்து விடுகின்ற வில்லையுடைய. ராகவ - இராமனிடம் அன்பு பூண்ட. அபிநவ கவி நாதன் - புதுமை நிறைந்த கவியரசன். விழுந்த ஞாயிறு எழுவதன் முன் - இரவில், எழுந்த ஞாயிறு விழுவதன் முன் - பகலில். ஞாயிறு - சூரியன். இராமாயண மாண்பு நாடிய பொருள்கை கூடும்; ஞானமும், புகழும், உண்டாம்; வீடுஇயல் வழிஅது ஆக்கும்; வேரிஅம் கமலை நோக்கும்; நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை சூடிய சிலைஇ ராமன் தோள்வலி கூறு வோர்க்கே. 7 7. வாகை சூடிய - வெற்றி மாலை தரித்த. வீடு இயல் - வீட்டை அடைவதற்கான. வழி அது ஆக்கும் - நல் வழியை உண்டாக்கும். வேரிஅம் கமலை - நறுமணம் பொருந்தி தாமரை மலரில் உள்ள இலக்குமி. நோக்கும் - கருணை உண்டாகும். `கூறுவோர்க்கு நாடிய.... நோக்கும். நன்மையும் செல்வமும் வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம், இடம்உள பாடையா தொன்றின் ஆயினும், திடம்உள ரகுகுலத்து இராமன் தன்கதை, அடைவுடன் கேட்பவர், அமரர் ஆவரே. 8 8. இடம் உள - இவ்வுலகில் உள்ள. பாடை - பாஷை. ரகு குலத்து இராமன் - ரகு வம்சத்திலே பிறந்த இராமன். அடைவுடன் - முறையுடன் அமரர் - தேவர்; இறவாதவர்; நித்திய சூரிகள். கம்பராமாயணம் பால காண்டம் பால காண்டம் பாயிரம் கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும், நிலைபெ றுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகுஇ லாவிளை யாட்டுடை யார்அவர் தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே. 1 பாலகாண்டம்: பாலப்பருவத்தில் நடந்த வரலாற்றைக் கூறுவது. பதினாறு வயதுக்கு உட்பட்ட பருவம் பாலப் பருவம். காண்டம் பெரும் பகுதியையும், படலம் சிறுபகுதி யையும் குறிப்பன. பாயிரப் படலம் - நூலுக்கு முன்னுரையாக உள்ள பகுதி. கடவுள் வாழ்த்து, அவை அடக்கம், நூல் வரலாறு, நூற்பயன் முதலியவைகள் பாயிரத்துள் அடங்கும். 1. தாம் உளஆக்கலும் - தாமே உண்டாக்குதலும். நீங்கலா - நீங்காத அலகுஇலா - முடிவில்லாத. முத்தொழில்களையும் உடையவரே தலைவர். ஏ- அசை. சிற்கு ணத்தர் தெரிவரும் நன்னிலை எற்குஉ ணர்த்தரிது; எண்ணிய மூன்றனுள் முற்கு ணத்தவ ரேமுத லோர்;அவர் நற்கு ணக்கடல் ஆடுதல் நன்று;அரோ. 2 2. சிற்குணத்தர் - அறிவுத்தன்மை உள்ளவர்களாலும். தெரிவு அரும் நன்னிலை - தெரிந்து சொல்ல முடியாத சிறந்த கடவுளின் தன்மையை. எண்ணிய மூன்றனுள் - எண்ணப்பட்ட சாத்துவிகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணத்துள், சித் - அறிவு, அரோ - அசைச் சொல். ஆதி அந்தம் அரியென, யாவையும் ஓதி னார்,அல கில்லன உள்ளன வேதம் என்பன, மெய்ந்நெறி நன்மையன் பாதம் அல்லது பற்றிலர்; பற்றுஇலார். 3 3. ஓதினார் - ஓதினவர்கள்.அலகு இல்லன உள்ளன - அளவற்றவைகளான. வேதம் என்பன - வேதம் என்பவைகளால் கூறப்படும். பாதம் அல்லது பற்றுஇலர் - பாதத்தைத்தவிர மற்றொன்றில் பற்றுவைக்கமாட்டார். பற்றுஇலர் - அவர்கள் பற்றற்ற ஞானிகளாவர். அவை அடக்கம் ஓசை பெற்றுஉயர் பாற்கடல் உற்று,ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையல்உற் றேன்;மற்றுஅவ் ஏசில் கொற்றத்து இராமன் கதை;அரோ. 4 4. பூசை - பூனை. ஏசு இல் கொற்றத்து - குற்றம் அற்ற வெற்றியையுடைய. அரோ - அசை. வையம் என்னை இகழவும், மாசுஎனக்கு எய்தவும்,இது இயம்புவது யாதெனில், பொய்இல் கேள்விப் புலமையி னோர்புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே. 5 5. யாது எனின் - யாது காரணம் என்றால். புகல் - விரும்பிப் பாராட்டுகின்ற. தெய்வமாக்கவி - தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த வான்மீகியின். மாட்சி - கவிப்பெருமையை. முத்த மிழ்த்துறை யின்முறை போகிய உத்த மக்கவி ஞர்க்குஒன்று உணர்த்துவன்; பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ! 6 6. முறைபோகிய - முறையே கற்றுச் சிறந்த. பன்னப் பெறுபவோ - ஆராய்ந்து சொல்வதற்கு உரியனவோ? அறையும் ஆடுஅரங் கும்படப், பிள்ளைகள் தரையில் கீறிடில், தச்சரும் காய்வரோ? இறையும் ஞானம் இலாதஎன் புன்கவி முறையின் நூல்உணர்ந் தாரும் முனிவரோ. 7 7. ஆடு அரங்கும் - நடனசாலையும், பட - காணப்படும்படி. இறையும் - சிறிதும். நூல் வரலாறு தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவி னார்உரை யின்படி,நான் தமிழ்ப் பாவி னால்இது உணர்த்திய பண்பு; அரோ. 8 8. மூவரானவர் - வான்மீகி, வசிட்டர், வியாசர் ஆகிய மூவர். வசிட்டர் செய்தது வாசிட்டராமாயணம்; வியாசர் செய்தது, அத்யாத்ம ராமாயணம். வியாசரை நீக்கிப் போதா யனரைச் சேர்த்து மூவர் என்றும் உரைப்பர். போதாயனர் செய்தது போதாயன ராமாயணம். முந்திய நாவினார் - சிறந்த நாவன்மையுள்ள வான்மீகியார். அரோ - அசை. நடையின் நின்றுஉயர் நாயகன் தோற்றத்தில் இடைநி கழ்ந்த,இ ராமாவ தாரப்பேர்த் தொடைநி ரம்பிய தொல்லைநன் மாக்கதை, சடையன் வெண்ணெய்நல் லூர்வயின் தந்ததே. 9 9. நடையின்நின்று - நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்று, நாயகன் - தலைவனாகியதிருமாலின். தோற்றத்தின் இடை நிகழ்ந்த - அவதாரங்களுள் ஒன்றாக நடந்த. தொடை - செய்யுள். தொல்லை நல் மா கதை - பழமையான நல்ல சிறந்த கதை. சடையன் - சடையப்ப வள்ளல். சடையப்ப முதலியார் என்றும் உரைப்பர். சடையன் வாழ்ந்தவூர் வெண்ணெய் நல்லூர்; கம்பரை ஆதரித்த வள்ளல் சடையன். கம்பர் அவ்வூரில் இருந்து கொண்டு இராமாயணத்தைப் பாடி முடித்தார். ஏ - அசை. 1. ஆற்றுப் படலம் ஆசு அலம்புரி ஐம்பொறி வாளியும், காசு அலம்புரி முலையவர் கண்எனும் பூசல் அம்பும், நெறியின் புறம்செலாக் கோச லம்புனை ஆற்றணி கூறுவாம். 1 ஆற்றுப்படலம்: ஆற்றைப் பற்றி உரைக்கும் படலம். கோசல நாட்டை வளம் பெறச் செய்வது சரயுநதி. அதன் வெள்ளப் பெருக்கையும், சிறப்பையும் உரைப்பது ஆற்றுப் படலம். 1. ஆசு அலம்புரி - மிகுந்த துன்பத்தைச் செய்யும். ஐம்பொறி வாளியும் - ஐந்து பொறிகளாகிய அம்பும். காசு அலம்பு - பொன்மணி மாலைகள் கிடந்து அசைகின்ற. பூசல் அம்பும் - போர் செய்கின்ற அம்பும். கண்ணுக்கு உவமை அம்பு. கோசலம் - கோசல நாடு.ஐம்பொறி - மெய், வாய்,கண், மூக்கு, செவி என்பவை. மழையின் சிறப்பு நீறுஅணிந்த கடவுள் நிறத்த, வான் ஆறுஅணிந் துசென்று ஆர்கலி மேய்ந்து,அகில் சேறுஅணிந் தமுலைத் திருமங் கைதன் வீறுஅணிந் தவன்மே னியின், மீண்டவே. 2 2. வான் - மேகம். ஆறு அணிந்து சென்று - வானத்தின் வழியே அழகு செய்து கொண்டு போய். அகில் சேறு - அகில் குழம்பு. தன் வீறு அணிந்தவன் - தன் மார்பில் அழகாக அணிந் திருக்கின்ற திருமாலின். வெண்மேகத்திற்குச் சிவபெருமானும், கருமுகிலுக்குத்திருமாலும் உவமை. பம்பி மேகம் பரந்தது `பானுவால் நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்; அம்பின் ஆற்றுதும்; என்றுஅகல் குன்றின்மேல் இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3 3. பம்பி - எழுந்து. பானுவால் - சூரியனால். நம்பன் மாதுலன் - சிவபிரானுடைய மாமன். அம்பின் - நீரினால். ஆற்றுதும் - வெப்பத்தைத் தணிப்போம். அகல் குன்றின் மேல் - அகலமான இமயமலை மீது. இம்பர் வாரி - இவ்வுலகில் உள்ள கடல். புள்ளி மால்வரை பொன் என நோக்கி, வான் வெள்ளி வீழ்இடை வீழ்த்தன தாரைகள்; உள்ளி உள்ளவெல் லாம்உவந்து ஈயும்,அவ் வள்ளி யோரின் வழங்கின மேகமே. 4 4. புள்ளிமால்வரை - சிறந்த பெரிய இமயமலையை. வான் - மேகங்கள் தாரைகள் - தம் மழைத்தாரைகளாகிய. வெள்ளி வீழ் - வெள்ளி விழுதுகளை இடை வீழ்த்தன - அம்மலையினிடையே விழச்செய்தன. உள்ளி - பிறர் துன்பத்தை நினைத்து; கொடை யின் சிறப்பை எண்ணி. வெள்ளத்தின் தன்மை மானம் நேர்ந்துஅறம் நோக்கி மனுநெறி போன தண்குடை வேந்தர் புகழ்என ஞானம் முந்திய நான்மறை யாளர்கைத் தானம் என்னத் தழைத்தது நீத்தமே 5 5. - மணியும், பொன்னும், மயில்தழைப் பீலியும், அணியும், ஆனைவெண் கோடும், அகிலும்,தன் இணையில் ஆரமும், இன்னகொண்டு ஏகலால் வணிக மாக்களை ஒத்தது,அவ் வாரியே. 6 6. மயில் தழை பீலியும் - மயிலின் சிறகான பீலியும். தன் இணைஇல் ஆரமும் - தனக்கு ஒப்பில்லாத சந்தனக்கட்டையும். வாரி - வெள்ளம். பூநி ரைத்தும்,மென் தாது பொருந்தியும், தேன்அ ளாவியும், செம்பொன் விராவியும், ஆனை மாமத ஆற்றொடு அளாவியும், வான வில்லை நிகர்த்தது,அவ் வாரியே. 7 7. மெல்தாது - மெல்லிய மகரந்தங்கள். அளாவியும் - கலந்தும். விராவியும் - கலந்தும். மாமதம் - மிகுந்த மதநீராகிய. ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்புஇகந்து, ஊக்கமே மிகுந்து, உள்தெளிவு இன்றியே, தேக்கு எறிந்து வருதலின், தீம்பனல், வாக்கு தேன்நுகர் மாக்களை மானுமே. 8 8. உள் தெளிவு இன்றி - உள்ளே தெளிவில்லாமல்; உள்ளம் மயங்கி. தேக்கு எறிந்து - தேக்க மரத்தை வீசிக் கொண்டு; ஏப்பம் விட்டுக் கொண்டு. வாக்கு - ஊற்றுகின்ற. வெள்ளம் குடியரைப் போல வந்தது. மானும் - ஒக்கும். சரயு நதியின் மேன்மை இரவி தன்குலத்து எண்ணில்பல் வேந்தர்தம் பரவு நல்ஒழுக் கின்படி பூண்டது; சரயு என்பது; தாய்முலை அன்ன து,இவ் உரவு நீர்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம். 9 9. இரவிதன் குலத்து - சூரிய குலத்திலே தோன்றிய. வேந்தர்தம் - வேந்தர்களின். பரவு - சிறந்த. நல் ஒழுக்கின்படி பூண்டது - நல்ல ஒழுக்கத்தின் தன்மையைக் கொண்டது. இவ் உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம் தாய்முலைஅன்னது; சரயு நதி தாயின் முலை போன்றதாகும். வேறு முல்லையைக் குறிஞ்சி யாக்கி, மருதத்தை முல்லை யாக்கிப் புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅறு மருதம் ஆக்கி, எல்லையில் பொருள்கள் எல்லாம் இடைதடு மாறும் நீரால் செல்உறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே. 10 10. எல்லையில் - அவ்விடங்களில் உள்ள. இடைதடுமாறும் நீரால் - இடம் பெயரச் செய்யும் தன்மையினால். செல் உறு - உயிர்கள் சென்று பிறவியை அடைகின்ற. கதியில் செல்லும் - நிலைகள் தோறும் விடாமல் சென்று தன் பயனைத்தரும். வினை யென - வினைப் பயனைப் போல. அன்று ஏ - அசைகள். கல்இடைப் பிறந்து போந்து கடல்இடைக் கலந்த நீத்தம், எல்லையில் மறைக ளாலும் இயம்பரும் பொருள்ஈது என்னத் தொல்லயில் ஒன்றே ஆகித், துறைதொறும், பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்தது; அன்றே 11 11. கல்இடை - மலையிலே. நீத்தம் - வெள்ளமானது. பொருள் ஈடு என்ன- பரம் பொருள் இது என்று சொல்லும்படி. தொல்லையில் - பழமையில். துறை தொறும் - நீர்த்துறைகள் தோறும். பரந்த சூழ்ச்சி பல் பெரும் சமயம் - பரந்த ஆராய்ச்சி யையுடைய பல பெரிய சமயங்களும். சொல்லும் பொருளும் போல் - சொல்லுகின்ற பரம் பொருளைப் போலவும். ஆற்று வெள்ளத்துக்குக் கடவுள் உவமை. தாதுஉகு சோலை தோறும், சண்பகக் காவு தோறும், போதுஅவிழ் பொய்கை தோறும், புதுமணத் தடங்கள் தோறும், மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும், ஓதிய உடம்பு தோறும் உயிர்என உலாயது அன்றே 12 12. தாது - மகரந்தம். மாதவி - குருக்கத்தி, பூகவனம் - கமுகந்தோப்பு, கமுகு - பாக்கு. வெள்ளத்துக்கு உயிர் உவமை. 2. நாட்டுப் படலம் வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகி என்பான் தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்; ஆங்கவன் புகழ்ந்த நாட்டை, அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசல் உற்றான் என்ன,யான் மொழியல் உற்றேன். 1 நாட்டுப் படலம்: கோசல நாட்டின் சிறப்பை எடுத்துரைக்கும் பகுதி. 1. வாங்க அரும்-பிற காவியங்களில் பெறமுடியாத. பரதம் நான்கும் - அடிகள் நான்கும். வகுத்த - பொருந்தி சுலோகங் களைச் செய்த. தீம்கவி - இனிய கவிகளைக் கொண்டு. நறவம் - தேன். மாந்தி - குடித்து. மூங்கை - ஊமையன். மருத நிலம் வரம்பெலாம் முத்தும்; தத்தும் மடையெலாம் பணிலம்; மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்; மேதிக் குழியெலாம் கழுநீர்க் கொள்ளை; பரம்பெலாம் பவளம்; சாலிப் பரப்பெலாம் அன்னம்; பாங்கர்க் கரும்பெலாம் செந்தேன்; சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம். 2 2. தத்தும் - தண்ணீர் தாவிப்பாயும். பணிலம் - சங்கு. குரம்பு எலாம் - கரைகளில் எல்லாம். மேதி - எருமை. கழுநீர்க் கொள்ளை - செங்கழு நீர் மலர்த்தொகுதி. பரம்பு எலாம் - பரம்படித்த இடங்களில் எல்லாம். சாலி பரப்பு எலாம் - செந்நெற் பயிர் பரந்திருக்கும் இடங்களில் எல்லாம். பாங்கர் - பக்கத்தில் உள்ள. சந்தம் கா எலாம் - அழகுள்ள சோலைகளில். ஆறுபாய் அரவம்; மள்ளர் ஆலைபாய் அமலை; ஆலைச் சாறுபாய் ஓதை; வேலைச் சரங்கின்வாய் பொங்கும் ஓசை; ஏறுபாய் தமரம்; நீரில் எருமைபாய் துழனி, இன்ன மாறு மாறாகித் தம்மின் மயங்குமாம் மருத வேலி. 3 3. மள்ளர் - உழவர். அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி, இவைகள் ஓசையைக் குறிக்கும் சொற்கள். வேலி - நிலம். தண்டலை மயில்கள் ஆடத், தாமரை விளக்கம் தாங்கக், கொண்டல்கள் முழவின் ஏங்கக், குவளைகண் விழித்து நோக்கத், தெண்திரை எழினி காட்டத், தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட, மருதம்வீற்று இருக்கும் மாதோ. 4 4. தண்டலை: தண்தலை - குளிர்ந்த இடம்; சோலை. விளக்கம் - விளக்கு. கொண்டல் - மேகம். திரை - அலை. எழினி - திரை. தேம்பிழி மகரயாழின் - பிழிந்தெடுத்த இனிய தேனைப் போன்ற மகரயாழின் இசையைப்போல. மகரயாழ் - யாழ்வகை களில் ஒன்று; பத்தொன்பது நரம்புகளை யுடையது. நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி; தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்; தூர்இடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி போர்இடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை. 5 5. தூர்இடை - புதர்களில். இப்பி - முத்துச்சிப்பிகள். போர்இடை - வைக்கோல் போர்களின்மேல். தோகை - மயில். பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட கண்,கை,கால், முகம்,வாய் ஒக்கும் களைஅலால், களைஇ லாமை, உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பார்; பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால். 6 6. களை அலால் - களைகளைத் தவிர. களை இலாமை - வேறு களைகள் இல்லாமையைக் கண்டு. உண் கள் வார் - உண்ட கள் ஒழுகுகின்ற. கடைவாய் மள்ளர் - கடைவாயையுடைய உழவர்கள். சேல்உண்ட ஒண்க ணாரின் திரிகின்ற செங்கால் அன்னம், மால்உண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை, கால்உண்ட சேற்று மேதி கன்றுஉள்ளிக் கனைப்பச், சோர்ந்த பால்உண்டு துயிலப், பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை. 7 7. சேல் உண்ட - சேல்மீனை வென்ற. மால் உண்ட - சிறந்த. நளினப் பள்ளி - தாமரையாகிய படுக்கையிலே. கன்று உள்ளி கனைப்ப - கன்றை நினைத்துக் கத்தியதனால். பண் ண- வயல்கள். மக்கள் மாண்பு பொருந்திய மகளி ரோடு வதுவையில் பொருந்து வாரும்; பருந்தொடு நிழல்சென்று அன்ன இயல்இசைப் பயன்துய்ப் பாரும்; மருந்தினும் இனிய கேள்வி செவிஉற மாந்து வாரும்; விருந்தினர் முகங்கண்டு அன்ன விழாஅணி விரும்பு வாரும். 8 8. -. எறிதரும் அரியின் சும்மை எடுத்துவான் இட்ட போர்கள் குறிகொளும் போத்தில் கொல்வார்; கொன்றநெல் குவைகள் செய்வார்; வறியவர்க்கு உதவி மிக்க விருந்துண மனையில் உய்ப்பார் நெறிகளும் புதையப் பண்டி நிறைத்துமண் நெளிய ஊர்வார். 9 9. எறிதரும் அரியின் சும்மை -வாளால் அறுத்துக்கொண்டு வந்த நெல் அரிகளின் சுமைகளால். வான் இட்ட போர்கள் - வானை அளாவும்படி போட்ட நெற்போர்களை. குறிகொளும் - ஓட்டுவோர் குறிப்பின்படி செல்லுகின்ற. போத்தில் - எருமைக் கடாக்களால். கொல்வார் - மிதிக்கச் செய்து நெல்லைப் பிரிப்பார். பண்டி நிறைத்து - வண்டிகளிலே நிரப்பி. முந்துமுக் கனியும், நானா முதிரையும், முழுத்த நெய்யும், செந்தயி ரொடு,தேன், கண்டம் முதலிய செறிந்த சோற்றில் தம்தம்இல் இருந்து தாமும், விருந்தொடும், தமரி னோடும், அந்தணர் முதலோர் உண்டி அயில்வுறும் அமலைத்து எங்கும். 10 10. முந்து முக்கனியும் - சிறந்த முக்கனிகளும். நானா முதிரையும் - பலவகையான பருப்பு வகைகளும முழுத்த நெய்யும் - நிறைந்த நெய்யும். கண்டம் - சர்க்கரை. சோற்றில் - சோற்றுடன். உண்டி அயர்வுறும் - உணவுண்ணுகின்ற. அமலை - ஆரவாரம். வேறு ஈரநீர் படிந்து இந்நிலத்தே சில கார்கள் என்ன வரும்,கரு மேதிகள்; ஊரில் நின்றகன்று உள்ளிட, மெல்முலைத்; தாரை கொள்ளத், தழைப்பன சாலியே. 11 11. படிந்து - மூழ்கி. கார்கள் - மேகங்கள். மேதிகள் - எருமைகள். கன்று உள்ளிட -கன்றை நினைக்க. தாரை - பால் தாரையை. கொள்ள- ஏற்றுக்கொண்டதனால். சாலி - நெற் பயிர். தோயும் வெண்தயிர் மத்துஒலி துள்ளல்போய் மாய, வெள்வளை வாய்விட்டு அரற்றவும், தேயும் நுண்இடை சென்று வணங்கவும், ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 12 12. துள்ளல் - ஓசை. மாய - மறையும்படி. வெள்வளை - வெண்மையான சங்கு வளையல்கள். அங்கை - உள்ளங்கை. தினைச் சிலம்புவ தீம்சொல் இளம்கிளி; நனைச் சிலம்புவ நாகிளவண்டு; பூம் புனைச் சிலம்புவ புள்இனம்; வள்ளியோர் மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே. 13 13. சிலம்புவ - ஒலிப்பன. நனை - பூக்கும் பருவமுள்ள அரும்புகள். பூம்புனை - மலர்கள் நிறைந்த நீர்நிலைகளிலே. மங்கல வள்ளை - மங்கலப் பாட்டு. பெண்கள் உலக்கையால் தானியங்களைக் குற்றும்போது பாடும் பாட்டுக்கு வள்ளை யென்று பெயர். பெரும் தடங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும் விருந்தும் அன்றி, விளைவன பாவையே. 14 14. வைகலும், வருந்தி வந்தவர்க்கு ஈதலும், விருந்தும் அன்றி விளைவன யாவையே? வைகலும் - நாள்தோறும். கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா நிலம் சுரக்கும் நிறைவளம்; நன்மணி பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரியதம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம். 15 15. கலம் - மரக்கலம். `நிலம் கணக்கு இலா நிறைவளம் சுரக்கும் நிறைவளம் - நிறைந்த செல்வம். பிலம் - சுரங்கம். கூற்றம் இல்லைஓர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்; ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே 16 16. கூற்றம் இல்லை - கூற்றுவன் கொடுமையில்லை. கூற்றுவன் - எமன் இது அகாலமரணம் இல்லை என்பதைக் குறித்தது. தம் சிந்தையின் - தம் எண்ணத்தினாலும்; செய்கை யால் - செயலாலும். சீற்றம் இல்லை - சினம் தருவனவற்றை நினைப்பதுமில்லை, செய்வதும் இல்லை. ஆற்றல் - செய்தல். பந்தினை இளையவர் பயில்இடம், மயில்ஊர் கந்தனை அனையவர் கலைதெரி கழகம், சந்தன வனம்அல சண்பக வனமாம்; நந்தன வனம்அல நறைவிரி புறவம். 17 17. இளையவர் - இளம் பெண்கள். பந்தினைப்பயில் இடம் சந்தனவனம் அல்ல; சண்பகவனமாம். கந்தனை அனையவர் கலை தெரி கழகம் நந்தனவனம் அல்ல; நறை விரி புறவம். நறை - தேன். புறவம் - முல்லை நிலம். செல்வச் சிறப்பு கோதைகள் சொரிவன குளிர்இள நறவம்; பாதைகள் சொரிவன பருமணி கனகம்; ஊதைகள் சொரிவன உயிர்உறும் அமுதம்; காதைகள் சொரிவன செவிநுகர் கவிகள். 18 18. கோதைகள் - மலர் மாலைகள். பாதைகள் - மரக்கலங்கள். ஊதைகள் - குளிர் காற்றுக்கள். உயிர் உறும் - உயிரை அடைந்து இன்பம் செய்கின்ற. செவிநுகர் கவிகள் - செவியால் நுகர்ந்து இன்புறும் கவிதைகளை. `காதைகள் சொரிவன. எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும், கொள்ளும், கொள்ளையில் கொணரும் பண்டியும், அள்ளல் ஓங்குஅளத்து அமுதின் பண்டியும் தள்ளும் நீர்மையின் தலை மயங்குமே. 19 19. ஏனல் - செந்தினை. இறுங்கு - சோளம். சாமை - ஒருவகைத்தானியம். கொள்ளையில் கொணரும் - மிகுதியாக ஏற்றிக் கொண்டு வரும். அள்ளல் ஓங்கு அளத்து - சேறு நிறைந்த உப்பளத்திலே விளைந்த. அமுது - உப்பு. தள்ளும் நீர்மையின் - ஒட்டிக்கொண்டு போகப்படும் தன்மையினால். தலை மயங்கும் - ஒன்றோடு ஒன்று கலந்து காணப்படும். உயரும் சார்விலா உயிர்கள், செய்வினைப் பெயரும் பல்கதிப் பிறக்கும் ஆறுபோல்; அயிரும், தேனும், இன்பாகும், ஆயர்ஊர்த் தயிரும், வேரியும் தலை மயங்குமே. 20 20. உயரும் சார்வு இலா உயிர்கள் - உயர்ந்த கதியை அடைதல் இல்லாத உயிர்கள். செய்வினை - தாம் செய்த வினையால். பெயரும் பல்கதி - மீண்டும் மீண்டும் வருகின்ற பல பிறவிகளிலே. அயிரும் - வெல்லக் கட்டியும் (வேரியும்) தலை மயங்கும் - இடம் விட்டு இடம் பெயர்ந்து கிடக்கும். தாலி ஐம்படை தழுவும் மார்பிடை மாலை வாய்அமுது ஒழுகும் மக்களைப் பாலின் ஊட்டவார் செங்கை, பங்கையம் வான் நிலாஉறக் குவிவ மானுமே. 21 21. தாலி ஐம்படை - ஐம்படைத்தாலி. மாலை - ஒழுங்காக. வாய் அமுது ஒழுகும் - வாய் நீர் ஒழுகுகின்ற. பாலின் - பால் உணவால். ஊட்டுவார் செங்கை - ஊட்டுகின்ற பெண்களின் சிவந்த கரம். வான்நிலா உற - வானத்திலே சந்திரன் தோன்றி யவுடன். பங்கயம் குவிவமானும் ஏ - தாமரை மலர் குவிவதை ஒக்கும் ஐம்படை; சங்கு, சக்கரம், வில், வாள் தண்டாயுதம், ஆகிய திருமாலின் ஐந்து படைகளையும் பொன்னால் செய்து கோத்து அணிவது வழக்கம். பொற்பின் நின்றன பொலிவு; பொய்இலா நிற்பின் நின்றன நீதி; மாதரார் அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே. 22 22. பொற்பின் - நல்ல பண்புகளால். பொலி நின்றன - அழகு நிலை நின்றன. பொய் இலா நிற்பின் - பொய்யற்ற நிலைமையால்; நீதி நின்றன்; அற்பின் - அன்பினால். கால மாரி - பருவ மழை. வண்மை இல்லை,ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் யுரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். 23 23. வண்மை - கொடை. நேர்செறுநர் இன்மையால் - நேரேநின்று போர் புரியும் பகைவர். திண்மை இல்லை - வலிமை யில்லை. பல்கேள்வி - பல நூல்களைப்பற்றிய கேள்விகளையும். மேவலால் - பெற்றிருப்பதால். வெண்மை இல்லை - ஒருவரிடமும் அறியாமை யில்லை. கோசல நாட்டு மக்களின் வாழ்வைக் குறித்த செய்யுள் இது. `ஒண்மையில்லை பல் கேள்வி யோங்கலால் என்ற பாடபேதமும் உண்டு. 3. நகரப் படலம் நகரத்தின் சிறப்பு செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம்சொல் வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும் புகழ்ந்தது; வரம்புஇல் எவ்உல கத்தோர் யாவரும் தவம்செய்து ஏறுவான் ஆதரிக் கின்ற அவ்வவுல கத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது, அயோத்திமா நகரம். 1 நகரப் படலம்: நகரத்தின் சிறப்பை உரைக்கும் பகுதி. கோசல நாட்டின் தலைநகர் அயோத்தி. அதன் பெருமை இப்பகுதியில் சொல்லப் படுகின்றது. 1. `அயோத்திமாநகரம் செவ்விய - குற்றமற்ற. மதுரம் சேர்ந்தன - இனிமை அமைந்த. பொருளின் - சிறந்த பொருள் பொருந்திய. சீரிய கூரிய - சிறந்த பொருள் நிறைந்த. தீம்சொல் வவ்விய - இனிமையான சொற்களைத் தேர்ந்தெடுத்துரைக்கும் வன்மை பொருந்திய. கவிஞர் - தமிழ்க் கவிஞர். ஏறுவான் ஆதரிக்கின்ற - அடைவதற்கு விரும்புகின்ற. அவ் உலகத்தோர் - அந்த வானுலகில் உள்ளவர்களும். இழிவதற்கு - இறங்கி வந்து வாழ்வதற்கு. அருத்தி - ஆசை. உமைக்குஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒருதனிக் கொழுநனும், மலர்மேல் கமைப்பெரும் செல்வக் கடவுளும் உவமை கண்டிலர்; அங்கது காண்பான் அமைப்பரும் காதல் அதுபிடித்து உந்த, அந்தரம் சந்திரா தித்தர் இமைப்பிலர் திரிவர்; அதுஅலால் இதனுக்கு இயம்பலாம் உவமைமற்று யாதோ! 2 2. இருவர்க்கு - சீதேவி, பூதேவி என்னும் இருவர்க்கு. கமை- பொறுமையுள்ள. அமைப்பு அரும்காதல் - அடக்க முடியாத ஆசை. உந்த - தள்ள. அந்தரம் - வானத்தில். சந்திர ஆதித்தர் - சந்திர சூரியர்கள். புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அருமறைப் பொருளே மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மாதவம் அறத்தொடும் வளர்த்தார்? என்அரும் குணத்தின் அவன்இனிது இருந்து, இவ் ஏழ்உலகுஆள்இடம் என்றால், ஒண்ணுமோ இதனின் வேறொரு போகம் உறைவிடம் உண்டென உரைத்தல். 3 3. இதனின் போகம் உறைவு வேறு இடம் உண்டு என உறைத்தல் ஒண்ணுமோ - இதைக்காட்டினும் எல்லா இன்பங் களும் உறைகின்ற வேறு இடம் உண்டு என்று சொல்ல முடியுமோ? தங்குபேர் அருளும் தருமமும் துணையாத் தம்பகைப் புலன்கள் ஐந்துஅவிக்கும் பொங்குமா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன செங்கண்மால் பிறந்துஆண்டு அளப்பரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் அம்கண்மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன்னகர் அமரர் நாட்டு யாதோ! 4 4. தம்பகைப்புலன்கள் ஐந்து - தமக்குப் பகையாகிய புலன்கள் ஐந்தையும். பொறிகளின் தன்மை புலன். உணர்ச்சி, சுவை, ஒளி, நாற்றம், ஓசை, இவை ஐம்புலன்கள். பொறிகள் பா. 10. அவிக்கும் - அடக்கும். மதிலின் உயர்வு மேவரும் உணர்வின் முடிவுஇலா மையினால் வேதமும் ஒக்கும்;விண் புகலால் தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும் திண்பொறி அடக்கிய செயலால்; காவலில் கலைஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால் காளியை ஒக்கும்; யாவரும் தன்னை எய்துதற்கு அரிய தன்மையால் ஈசனை ஒக்கும் 5 5. மேவரும் உணர்வின் - பொருந்திய அறிவினால். முடிவு இலாமையால் - அதன் அந்தத்தை அறிய முடியாமையால். திண் பொறி - வலிமையுள்ள இயந்திரங்களை. அடக்கிய செயலால் - தன்னிடம் வைத்திருக்கின்ற செயலால். திண்பொறி - வலிமை யுள்ள ஐம்பொறிகள். (ஐம்பொறி பா.10) கலைஊர் கன்னி - துர்க்கா தேவி. துர்க்கைக்கு வாகனம், கலை மான். அன்னமா மதிலுக்கு ஆழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி, பொன்விலை மகளிர் மனம்எனக் கீழ்போய்ப், புன்கவி எனத்தெளிவு இன்றிக், கன்னியர் அல்கும் தடம்என யார்க்கும் கடப்பரும் காப்பினது ஆகி நன்னெறி விலக்கும் பொறிஎன எறியும் கராத்தது; நவிலல்உற் றதுநாம். 6 6. நாம் நவிலல் உற்றது - நாம் சொல்லத் தொடங்கி யதாகிய. அன்ன மாமதிலுக்கு - அப்பெரிய மதிலுக்கு. ஆழிமால் வரையை - சக்கரவாள கிரியை. அலைகடல் சூழ்ந்துஅன - அலை வீசும் கடல் சூழ்ந்திருப்பது போன்ற. அகழி - அகழானது; இன்றி; ஆகி; பொறிஎன - ஐம்பொறிகளைப் போல. எறியும் கராத்தது - பாய்கின்ற முதலைகளைக் கொண்டதாகும். வேறு ஏகுகின்ற தம்கணங்க ளோடும்எல்லை காண்கிலா நாகம்ஒன்று அகன்கிடங்கை நாமவேலை ஆம்எனா மேகம்மொண்டு கொண்டெழுந்து விண்தொடர்ந்த குன்றம்என்று ஆகம்நொந்து நின்றுதாரை அம்மதிற்கண் வீசுமே. 7 7. நாகம் ஒன்றும் - பாதாளம் வரையிலும சென்றுள்ள அகல் கிடங்கை - அகலமான அகழியை. நாமவேலை ஆம் எனா - அச்சந்தரும் கடல் என்று கருதி. மேகம் - மேகங்கள் அதில் படிந்து. ஆகம் நொந்து - உடல் வருந்தி. மாளிகைகளின் மாண்பு வான்உற நிமிர்ந்தன; வரம்பில் செல்வத்த; தான்உயர் புகழன; தயங்கு சோதிய; ஊனம்இல் அறநெறி உற்ற; எண்இலாக் கோன்நிகர் குடிகள்தம் கொள்ளை சான்றன. 8 8. நிமிர்ந்தன - உயர்ந்தவை. தயங்கு - விளங்குகின்ற. ஊனம் இல் - குற்றமற்ற. உற்ற - பொருந்தியவை. எண்ணில் - ஆராய்ந்தால். அக் கோன் நிகர் - அத்தசரதனை ஒத்த. கொள்ளை சான்றன - கூட்டம் நிறைந்தவை. மின்என, விளக்கென, வெயில் பிழம்பெனத், துன்னிய தமனியத் தொழில தழைத்த,அக் கன்னிநல் நகர்நிழல் கதுவலால், அரோ பொன்உலகு ஆயதுஅப் புலவர் வானமே. 9 9. துன்னிய - பொருந்திய. தமனியத் தொழில் தழைத்த - பொன்னைக் கொண்டு செய்த வேலையால் சிறந்து விளங்குகின்ற. கன்னி - அழியாத. நிழல் கதுவலால் - ஒளிபற்றிக் கொள்வதால்தான். புலவர் - தேவர்களின். அரோ; அசை. அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர் கரும்கடைக் கண்அயில், காமர் நெஞ்சினை உருங்குவ; மற்றவர் உயிர்கள் அன்னவர் மருங்குல்போல் தேய்வன; வளர்வது ஆசையே 10 10. கரும் கடைக்கண் அயில் - கரிய கடைக்கண் பார்வையாகிய வேற்படைகள். காமர் நெஞ்சினை - காமங் கொண்டவர்களின் உள்ளத்தை. உருங்குவ - உண்ணுவன. மற்றவர் - அக்காமுகர்களின். மண்டபங்களின் மாட்சி மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம்; அன்னம்மென் நடையவர் ஆடும் மண்டபம்; உன்அரும் அருமறை ஓதும் மண்டபம்; பன்னரும் கலைதெரி பட்டி மண்டபம். 11 11. பன்ன அரும் கலைதெரி - சொல்லுதற்கு அரிய கலைகளைப் பற்றியெல்லாம் ஆராய்கின்ற. பட்டி மண்டபம் - கல்வி மண்டபம். மக்களின் பொழுது போக்கு முழங்குதிண் கடகரி முன்பின் ஊரவும், எழும்குரத்து இவுளியோடு இரதம் ஏறவும் பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர வழங்கவும், பொழுதுபோம்; சிலர்க்கு அம்மாநகர். 12 12. அ மாண்நகர் சிலர்க்கு - அச்சிறந்த நகரிலே சிலருக்கு. முழங்கு - பிளிறுகின்ற. திண்கட கரி - வலிமையுள்ள மத யானை மேலமர்ந்து. முன் பின் - வலிமையுடன். எழும் குரத்து இவுளியோடு - எழுந்து பாய்கின்ற குளம்பை யுடைய குதிரையுடன் சேர்ந்த. பழங்கணோடு - வறுமைத் துன்பத்துடன் வந்து. பரிவு - துன்பம். கரியொடு கரிஎதிர் பொருத்திக்; கைப்படை வரிசிலை முதலிய வழங்கி; வால்உளைப் புரவியின் பொருவில்செண் டாடிப், போர்க்கலை தெரிதலின் பொழுதுபோம்; சிலர்க்குஅச் சேண்நகர். 13 13. அ சேண்நகர் சிலர்க்கு - அந்தப் பரந்த நகரிலே சிலருக்கு. கரி - யானை. எதிர் பொருத்தி - எதிராகப் போர் புரியும்படி முட்ட விட்டும். வழங்கி - பழகியும். வால் உளை - நீண்ட பிடரிமயிரையுடைய. புரவியில் - குதிரை மீதேறி. பொருஇல் செண்டு ஆடி - ஒப்பற்ற குதிரை யோட்டத்திற்குரிய தெருவிலே விளையாடியும். தெரிதலின் - ஆராய்வதிலும். நந்தன வனத்துஅலர் கொய்து, நவ்விபோல் வந்துஇளை யவரொடு வாவி யாடி,வாய்ச் செந்துவர் அழிதரத் தேறல் மாந்திச்,சூது உந்தலின், பொழுதுபோம்; சிலர்க்குஅவ் ஒள்நகர். 14 14. அ ஒள் நகர் சிலர்க்கு - அந்த ஒளி பொருந்திய நகரிலே சில பெண்களுக்கு. நவ்விபோல் வந்து - மான்களைப் போல் வந்து. இளையவரொடு - இளமை பொருந்திய தம் காதலர்களுடன் கூடி. செம் துவர் - நல்ல சிவப்பு நிறம். வேறு தெள்வார் மழையும், திரைஆழியும் உட்க, நாளும் வள்வார் முரசம் அதிர்மாநகர் வாழும் மாக்கள் கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை; யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை; மாதோ. 15 15. தெள்வார் மழையும் - தெளிந்த நீரைச் சொரிகின்ற மேகமும். உட்க - அஞ்சும்படி. வள்வு ஆர் முரசம் அதிர் - வளைவு பொருந்திய முரசம் ஒலிக்கின்ற. மாக்கள் - மக்களிலே. இலாமை - இல்லாமையால். கொள்வார் - இரந்து ஏற்றுக் கொள்ளு கின்றவர். மாது, ஓ; அசைகள். கல்லாது நிற்பார் பிறர்இன்மையின், கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவைவல்லர் அல்லாரும் இல்லை; எல்லாரும் எல்லாப் பெரும்செல்வமும் எய்த லாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ. 16 16. முற்ற வல்லாரும் - முழுவதும் வல்லவர்களும். அவை - அக்கல்வி கேள்விகளிலே. வல்லவர் அல்லாரும் - குறைந்தவர் களும். மாது, ஓ; அசைகள். ஏகம் முதற்கல்வி முளைத்தெழுந்து, எண்ணில் கேள்வி ஆகும் முதல்திண் பணைபோக்கி, அரும் தவத்தின் சாகம் தழைத்து, அன்பரும்பித், தருமம் மலர்ந்து, போகம் கனிஒன்று பழுத்தது போலும் அன்றே. 17 17. ஏகம் முதல் கல்வி - ஒப்பற்ற முதன்மையான கல்வி யாகிய விதை. முளைத்து எழுந்து - முளைத்துச் செழித்து வளர்ந்த. எண்இல் கேள்வி ஆகும் - அளவற்ற கேள்விகளாகிய. முதல் திண்பணை போக்கி - சிறந்த வலிமையுள்ள கிளைகளைப் பரப்பி. தவத்தின் - தவமாகிய. சாகம் தழைத்து - இலைகள் தழைத்து. போகம் கனி ஒன்று - இன்பமாகிய பழம் ஒன்றை. பழுத்தது போலும் - பழுத்து வைத்துக் கொண்டிருந்ததை ஒத்தது அந்த நகரம். அன்று, ஏ; அசைகள். 4. அரசியல் படலம் அம்மாண் நகருக்கு அரசன், அரசர்க்கு அரசன்; செம்மாண் தனிக்கோல் உலகுஏழினும் செல்ல நின்றான்; இம்மாண் கதைக்கோர் இறைஆய, இராமன் என்னும், மொய்ம்மாண் கழலோன், தருநல்அற மூர்த்தி அன்னான். 1 அரசியல் படலம்: தசரதனது அரசாட்சி முறையைப் பற்றிக் கூறும் பகுதி. 1. செம்மாண் தனிக்கோல் - நல்ல சிறந்த ஒப்பற்ற ஆட்சி. மொய்மாண் கழலோன் - வலிமையுள்ள சிறந்த வீரக் கழலை யுடைய இராமனை. தரு - பெற்றெடுத்த. தசரதன் தன்மை தாய்ஒக்கும் அன்பில்; தவம்ஒக்கும் நலம் பயப்பின்; சேய்ஒக்கும் முன்னின்றுஒரு செல்கதி உய்க்கும் நீரால்; நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும்; நுணங்கு கேள்வி ஆயப்பு குங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான். 2 2. அன்னான்- அத்தசரத வேந்தன். முன் நின்று - சிறந்து நின்று. ஒரு செல்கதி உய்க்கும் நீரால் - அனைவரையும் செல்லத் தக்க நற்கதியிலே செலுத்தும் தன்மையினால். சேய் - புத்திரன். நுணங்கு கேள்வி - நுட்பமான நூற் கேள்விகளை. ஈந்தே கடந்தான் இரப்போர்கடல்; எண்ணில் நுண்ணூல் ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும் அளக்கர்; வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின்தொடர் போக பௌவம். 3 3. எண்இல் நுண் நூல் - அளவற்ற சிறந்த நூல்களை யெல்லாம். ஆய்ந்தே - ஆராய்ந்தே. `அறிவு என்னும் அளக்கர் கடந்தான். அளக்கர் - கடல். பகை வேலை - பகையாகிய கடலை. காய்ந்தே - அழித்தே. திருவில் தொடர் போகம் எல்லாம் - செல்வத்தோடு பொருந்திய இன்பங்களை யெல்லாம். கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் - ஆசை தீர அனுபவித்தே கடந்தான். வேறு வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர் உள்ளமும், ஒருவழி ஓட நின்றவன்; தள்ளரும் பெரும்புகழ்த் தயரதப் பெயர் வள்ளல்;வள் உறைஅயில் மன்னர் மன்னனே. 4 4. ஒரு வழி - ஒரு நெறியிலே. ஓட நின்றவன் - செல்லும்படி அரசாட்சி புரிந்தவன். வள்உறை அயில் - தோற் பையிலே உறைகின்ற வேலாயுதத்தையுடைய. மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின்றித் தண்நிழல் பரப்பவும் இருளைத் தள்ளவும் அண்ணல்தன் குடைமதி அமையும்; ஆதலால் விண்ணிடை மதியினை மிகைஇது என்பவே. 5 5. அண்ணல் தன் - பெருமையில் சிறந்த அந்தத் தசரதனுடைய. குடை மதி அமையும் - குடையாகிய சந்திரனே போதுமானதாகும். இது மிகை என்பவே - இது மிகையானது என்பார்கள். வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான், உயிர்எலாம் தன்உயிர் ஒப்ப ஓம்பலால், செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிர்எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான். 6 6. வயிரவான்பூண் அணி - வயிரங்களால் செய்யப்பட்ட சிறந்த அணி கலன்களைத் தரித்த. மடங்கல் மொய்ம்பினான் - சிங்கம் போன்ற வலிமையுள்ளவன். ஓம்பலால் - பாது காப்பதனால். செயிர்இலா - குற்றமில்லாத. குடிகள் உயிர்கள், அரசன் உடம்பு. குன்றென உயரிய குவவுத் தோளினான் வென்றிஅம் திகிரிவெம் பருதிஆம்என, ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை நின்று நின்று உயிர்தொறும் நெடிது காக்குமே. 7 7. வென்றி அம்திகிரி - வெற்றியுள்ள அழகிய ஆட்சிச் சக்கரமானது. பரிதி ஆம் என - சூரியன் என்று சொல்லும்படியும். ஒன்று என - ஒப்பற்றது என்று சொல்லும்படியும். மீமிசை - எல்லாவற்றுக்கும் மேலாக. உயிர்தொறும் - எல்லா உயிர் களையும். எய்என எழுபகை எங்கும் இன்மையால் மொய்பெறாத் தினவுறு முழவுத் தோளினான்; வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய்எனக் காத்து,இனிது அரசு செய்கின்றான் 8 8. எய்என எழுபகை - எம்மேல் கண்களை விடு என்று சொல்லிக் கொண்டு எழுகின்ற பகைவர்கள். மொய்பெறா - போர் செய்வதைப் பெறாமல். தினவுஉறு - தினவு பொருந்திய. முழவு - மத்தளம் போன்ற. செய் - வயல். தசரதன் ஆட்சிக்கு, வறிஞன் காக்கும் வயல் உவமை. 5. திரு அவதாரப் படலம் தசரதன் மனக்குறை ஆயவன், ஒருபகல், அயனையே நிகர் தூயமா முனிவனைத் தொழுது, `தொல்குலத் தாயரும், தந்தையும், தவமும், அன்பினால் மேயவான் கடவுளும், பிறவும், வேறும் நீ! 1 திரு அவதாரப் படலம்: இராமனுடைய சிறந்த பிறப்பைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. ஆயவன் - அத்தகைய தசரதன். அயன் - பிரமன். முனிவன் - வசிட்டன். அன்பினால் மேய - அன்பினால் வந்த. வான் கடவுளும் - சிறந்த கடவுளும். பிறவும் - இம்மைக்கு நன்மை தரும் பொருள்களும். வேறும் - மறுமைக்கு நன்மைதரும் பொருள் களும். நீ - நீயேதான். எம்குலத் தலைவர்கள் இரவி தன்னினும் தம்குலம் விளங்குறத், தரணி தாங்கினார்; மங்குநர் இல்என வரம்பில் வையகம் இங்குனது அருளினால் இனிதின் ஓம்பினேன். 2 2. இரவி தன்னினும் - சூரியனைக் காட்டிலும். மங்குநர் இல் என - புகழிலே குறைந்தவர்கள் இல்லை என்று சொல்லும்படி. `தம்குலம் விளங்குற தரணி தாங்கினார் - இவ்வுலகைக் காத்தனர். இனிதின் ஓம்பினேன் - நானும் நன்றாகப் பாது காத்தேன். `அறுபதின் ஆயிரம் ஆண்டும் மாண்டுற உறுபகை ஒடுக்கிஇவ் வுலகை ஓம்பினேன்; பிறிதொரு குறையிலை; என்பின் வையகம் மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டு;அரோ. 3 3. மாண்டுற - கழிந்து போகும்படி. உறுபகை ஒடுக்கி - மிகுந்த பகைவர்களை அழித்து. மறுகுறும் - கலக்கமடையும். மறுக்கம் - உண்டு - மனக்கலக்கம் உண்டு. அரோ; அசை. `அரும்தவ முனிவரும், அந்த ணாளரும், வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்; `இரும்துயர் உழக்குவர் என்பின் என்பதோர் அரும்துயர் வருத்தும்என் அகத்தை; என்றனன். 4 4. வாழ்வின் வைகினார் - நல்வாழ்விலே வாழ்ந்தனர். என்பின் - எனக்குப் பின் காப்போர் இல்லாமையால். இரும்துயர் உழக்குவர் - மிக்க துன்பத்தால் வருந்துவார்கள். வசிட்டன் நினைவு முரசறை செழும்கடை, முத்தம் மாமுடி, அரசர்தம் கோமகன் அனைய கூறலும் விரைசெறி கமலமென் பொகுட்டு மேவிய வரசரோரு கன்மகன் மனத்தின் எண்ணினான். 5 5. செழும் கடை - செழித்த இடமான. முற்றம் - வாசலை யுடைய. விரைசெறி - மணம் நிறைந்த. வரசரோருகன் மகன் - வரமருளும் தன்மையுள்ள பிரமதேவன் மகனாகிய வசிட்டன். அலைகடல் நடுவண்ஓர் அநந்தன் மீமிசை மலையென விழிதுயில் வளரும் மாமுகில் கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்என்று உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை. 6 6. அநந்தன் - ஆதிசேடன். மலையென - பச்சை மலைபோல். மாமுகில் - சிறந்த மேகம் போன்ற திருமால். உலைவுறும் - வருந்துகின்ற. குறை தீரும் என்று வசிட்டன் கூறுதல் `ஈதுமுன் நிகழ்ந்த வண்ணம் என,முனி இதயத் தெண்ணி, `மாதிரம் பொருத திண்தோள் மன்னநீ! வருந்தல்! ஏழ்ஏழ் பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி தீதற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும், என்றான். 7 7. மாதிரம் - திசை. வேள்வி - யாகத்தை. தீதுஅற முயலின் - குற்றமறச் செய்து முடித்தால். சிந்தை நோய் - மனத்துயரம். வருகலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும் `வாய்மை தருகலை மறையும், எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன்; திருகலை உடைய இந்தச் செகத்துளோர் தன்மை தேரா, ஒருகலை முகச்சி ருங்க உயர்தவன் வருதல் வேண்டும். 8. 8. வாய்மை - உண்மை. எண்ணின் - அவன் கற்றறிந்த வைகளை ஆராய்ந்தால். சதுமுகன் - நான்முகன்; பிரமன். திருகலை உடைய- குற்றத்தையுடைய. தேரா - அறியாத. ஒருகலை சிருங்கம் முகம் உயர்தவன் - ஒரு மான் கொம்பை முகத்திலே உடைய தவசி; கலைக்கோட்டு முனிவன்; வடமொழியில், `ருசியசிருங்க முனிவன் என்று பெயர். சிருங்கம் - கொம்பு. இவன் காசிய முனிவர் புதல்வன். இவன் முகத்தில் ஒரு மான் கொம்பு உண்டு. கலைமானிடம் பிறந்தவன். `பாந்தளின் மகுடகோடி பரித்தபார் அதனின் வைகும் மாந்தரை விலங்கென்று உன்னும் மனத்தன், மாதவத்தன், எண்ணில் பூந்தவிசு உகந்து ளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த சாந்தனால், வேள்வி முற்றின், தனயர்கள் உளராம்; என்றான். 9 9. பாந்தன் - பாம்பு; ஆதிசேஷன். மகுட கோடி பரித்த - முடிகளை அணிந்த தலைகளின் உச்சியிலே சுமக்கப்பட்ட. பூம் தவிசு உகந்துளோன் - பூவாசனத்தில் விரும்பி உறைகின்ற பிரமன். புராரி - சிவபெருமான். சாந்தனால் - சாந்த குணமுள்ளவனால். கலைக்கோட்டு முனிவன் வரலாறு இது கேட்ட தசரதன் `அக்கலைக் கோட்டு முனிவன் யாண்டை யான்? அவனை அழைப்பது எவ்வண்ணம்? என்றான். வசிட்டன் மறுமொழி கூறுகிறான். புத்தான கொடுவினையோடு, அரும்துயரம் போய்ஒளிப்பப், புவனம் தாங்கும் சத்தான குணம்உடையோன்; தயையினொடும், தண்அளியின் சாலை போல்வான்; எத்தானும் வெலற்கரியான்; மனுகுலத்தே வந்துதித்தோன்; இலங்கும் மோலி உத்தான பாதன்அருள் உரோமபதன் என்றுளன் இவ்வுலகை ஆள்வான். 10 10. புத்தான கொடுவினையோடு - மிகுந்த கொடுஞ் செயல்களும். அரும் துயரம் - அரிய துன்பங்களும். சத்தான - நன்மையான. தயையினொடு - அன்புக்கும். தண் அளியின் - குளிர்ந்த இரக்கத்திற்கும். சாலைபோல்வான் - உறையுள்ளா வான். உத்தானபாதன் அருள் - உத்தானபாதன் பெற்ற. அன்னவன் தான் புரந்தளிக்கும் திருநாட்டில், நெடும்காலம் அளவ தாக மின்னிஎழு முகில்இன்றி, வெம்துயரம் பெருகுதலும், வேத, நன்னூல் மன்னும்முனி வரைஅழைத்து, மாதானம் கொடுத்தும்,வான் வழங்கா தாகப், பின்னும்முனி வரர்க்கேட்பக், `கலைக்கோட்டு முனிவரின்வான் பிலிற்றும் என்றார். 11 11. அன்னவன்தான் - அந்த உரோமபாதன். வான் வழங்காதாக - மழை பெய்யாமற்போகவே. வான்பிலிற்றும் - மழை பெய்யும். உரோமபதனுடைய நாடு, அங்கநாடு. ஓதநெடும் கடல்ஆடை உலகினில்வாழ், மனிதர் விலங்கெனவே உன்னும் கோதில்குணத்து அருந்தவனைக் கொணரும்வகை யாவது?எனக் குணிக்கும் வேலை சோதிநுதல் கருநெடும்கண், துவர்இதழ்வாய்த், தரளநகைத், துணைமென் கொங்கை, மாதர்எழுந்து `யாம்ஏகி அரும்தவனைக் கொணர்தும்;என வணக்கம் செய்தார். 12 12. ஓதம் நெடும்கடல் ஆடை - ஓசையையுடைய பெரிய கடலை ஆடையாகக்கொண்ட. மனிதர் - மனிதர்களை. கோதுஇல் குணத்து - குற்றமற்ற குணங்களையுடைய. குணிக்கும்வேலை - ஆராயும் சமயத்தில். தரளம் நகை - முத்துப்போன்ற பற்கள். அம்மாதர்களுக்கு அரசன் விடையளித்தனன், அவர்கள் தவசிகள் போல் வேடம் புனைந்து சென்றனர். கலைக்கோட்டு முனிவனிடம் பழகினர். அவனை ஒரு நாள், தங்கள் உறையுளுக்கு வர வேண்டுமென வேண்டினர். அவனும் ஒருப்பட்டான். அவர்கள் முனிவனை அழைத்து வந்தனர். அம் முனிவன் பாதங்கள் அங்கதேசத்தில் பட்டவுடன் இடி இடித்து மழை பெய்தது. இது கண்ட உரோமபத மன்னன் சேனைகளுடன் முனிவனை எதிர்கொண்டான். அப்பொழுது முனிவன் இது ஏதோ சூழ்ச்சி என்று எண்ணிச் சினந்தான். உடனே இந்திரன் தோன்றி, முனிவனுடைய சினத்தைத் தணித் தான். பின்னர், உரோமபதன், முனிவனிடம் உண்மையை உரைத்தான்; தனது நகருக்கு அழைத்துச் சென்றான்; தன் மகள் சாந்தை என்பவளை மணம் புரிந்து கொடுத்தான். இப்பொழுது அங்குதான் இருக்கிறான் அம் முனிவன் என்றான் வசிட்டன். தசரதன் கலைக்கோட்டு முனிவனை அழைக்கச் செல்லுதல் உடனே தசரதன் படைகள் புடை சூழ அங்க நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான்; உரோமபதன் தசரதனை எதிர்கொண்டு அழைத்து உபசரித்தான். செவ்விநறும் சாந்தளித்துத், தேர்வேந்தன் தனைநோக்கி, `இவண்நீ போந்த கவ்வைஉரைத்து அருள்திஎன நிகழ்ந்தபரிசு அரசர்பிரான் கழற லோடும், `அவ்வியம் நீத்து உயர்ந்தமனத்து அருந்தவனைக் கொணர்ந்துஆங்கண் விடுப்பன் ஆன்ற செவ்விமுடி யோய்;எனலும் தேர்ஏறிச் சேனையொடும் அயோத்தி சேர்ந்தான். 13 13. செவ்விநறும் சாந்து - அழகிய மணமுள்ள சந்தனம். கவ்வை - காரியம். நிகழ்ந்த பரிசு - பேச்சு நடந்த விதத்தை. அரசர்பிரான் - தசரதன். அவ்வியம் நீத்து - பொறாமையைவிட்டு. அருந்தவன் - கலைக்கோட்டு முனிவன். ஆன்ற செவ்வி முடியோய் - சிறந்த அழகிய முடியை உடையவனே. பின்னர் உரோமபதன் கலைக்கோட்டு முனிவனிடம் செல்ல அவன் உன் வேண்டுகோள் யாதென்றான். அதற்கு உரோமபதன் உரைத்தது. `புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகைதன் புகழில் பூத்த அறன்ஒன்றும் திருமனத்தான்; அமரர்களுக்கு இடர்இழைக்கும் அசுரர் ஆயோர் திறல்உண்ட வடிவேலான்; தெசரதன்என்று உயர்கீர்த்திச் செங்கோல் வேந்தன்; விறல்கொண்ட மணிமாட அயோத்திநகர் அடைந்துஇவண்நீ மீளல், என்றான். 14 14. புறவு - புறா. துலை - தராசு. பெருந்தகை - சிபிச்சக்கர வர்த்தி. புகழில் பூத்த - புகழ்பொருந்திய குலத்திலே பிறந்த. அவுணர் ஆயோர்திறல் உண்ட - அசுரர்களின் வலிமையை அழித்த. விறல் - வெற்றி. மீளல் - மீளவேண்டும். முனிவர், மனைவியுடன் அயோத்தி யடைந்தார்; தசரதன் எதிர்கொண்டு அழைத்து வணங்கி உபசரித்தான். கசட்டுறு வினைத்தொழில் கள்வராய் உழல் அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும், அருமறை வழக்கை நீங்கலா விசிட்டரும், வேத்தவை பொலிய மேவினார். 15 15. கசடு உறுவினைத் தொழில் - குற்றம் பொருந்திய தீவினைக்குக் காரணமான தொழில்களைச் செய்யும். கள்வராய் உழல் - திருடர்களாகத் திரிகின்ற. அசட்டர்கள் ஐவரை - அறிவற்றவர்களான ஐம்பொறிகளை அறுவர் ஆக்கிய - இல்லாதவர்களாகச் செய்த. விசிட்டரும் - பெரியோர்களும். வேத்தவை - அரச சபை. கசடு - கசட்டு. வேந்து - வேத்து; என வந்தன. தரசதன் உரைத்தது `சான்றவர் சான்றவ! தருமம், மாதவம் போன்றொளிர் புனித!நின் அருளில் பூத்த என் ஆன்றதொல் குலம்இனி அரசின் வைகும்;ஆல், யான்தவம் உடைமையும் இழப்பின் றாம்;அரோ. 16 16. நின் அருளின் பூத்த - உனது கருணையினால் சிறப்படைந்த. ஆன்ற தொல் குலம் - மிகவும் பழமையான குலம். இழப்பு இன்று - பயனற்றுப் போகாது. ஆல்; அரோ; அசைகள். முனிவன் மறு மொழி என்னலும் முனிவரன் இனிது நோக்குறா, `மன்னவர் மன்னகேள்! வசிட்டன் என்னும்ஓர் நல்நெடும் தவன்துணை; நவைஇல் செய்கை நீ! நின்னைஇவ் வுலகினில் நிருபர் நேர்வரோ? 17 17. -. தசரதன், தன்குறையைத் தீர்த்தருளும்படி, முனிவனை வேண்டிக் கொண்டான். என்றலும், `அரசநீ இரங்கல் இவ்வுலகு ஒன்றுமோ! உலகம் ஈரேழும் ஓம்பிடும் வன்திறல் மைந்தரை அளிக்கும் மாமகம் இன்றுநீ இயற்றுதற்கு எழுக ஈண்டு; என்றான். 18 18. -. கலைக்கோட்டு முனிவன் கட்டளைப்படி, யாகத்திற் கான ஏற்பாடு நடந்தன. முனிவன் வேள்வியை முடித்தான். அவ்வேள்வித்தீயிலிருந்து ஒரு பூதம் கையில் அமுதம் நிறைந்த தட்டொன்றை ஏந்திப் புறப்பட்டது. அத்தட்டி லிருந்த அமுதத்தில் ஒரு பாதியைக் கோசலைக்கும், மற்றொரு பாதியில் ஒரு பகுதியைக் கைகேசிக்கும், மற்றப் பகுதியையும், உதிர்ந்துள்ள மீதத்தையும் சுமித்திரைக்கும் அளித்தான் அரசன். அதன் பின் அவர்கள் மூவரும் கருக் கொண்டனர். மக்கள் பேறு ஆயிடைப் பருவம்வந்து அடைந்த எல்லையின், மாயிரும் புவிமகள் மகிழ்வின் ஓங்கிட, வேய்புனர் பூசமும், விண்ணுளோர் புகழ் தூயகர்க் கடகமும் எழுந்து துள்ளவே. 19 19. ஆயிடை - அப்பொழுது. பருவம்வந்து அடைந்த எல்லையில் - கருவுயிர்க்கும் காலம் வந்தசமயத்தில். வேய்புனர் பூசமும் - மூங்கில்போன்ற புனர்பூச நட்சத்திரமும். தூயகர்க் கடமும் - பரிசுத்தமான கடகலக்கனமும். இராமன் கடகலக் கனத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தான். ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வரும் அவனை,அஞ்சனக் கருமுகில் கொழுந்துஎழில் காட்டும் சோதியைத், திருஉறப் பயந்தனள் திறம்கொள் கோசலை. 20 20. உதரத்துள் - வயிற்றுள். அஞ்சனம் கருமுகில் கொழுந்து - மை, கரிய மேகத்தின் செழிப்பு என்னும். எழில் - இவைகளின் அழகை. திருஉற - உலகம் நன்மையாகிய செல்வத்தைப் பெறும்படி. திறம் - நற்பண்பு. ஆசையும் விசும்பும்நின்று அமரர் ஆர்த்தெழ, வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துறப், பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள், மாசறு கேகயன் மாது மைந்தனை. 21 21. ஆசையும் - திசைகளிலும். விசும்பும் - வானத்திலும். வாசவன் - இந்திரன். பூசமும் மீனமும் பொலிய - பூசநட்சத்திரமும் மீனலக்கனமும் சிறந்து விளங்க. `கேகயன் மாது மைந்தனை நல்கினாள், பரதன் பிறந்தது மீனலக்கனம், பூசநட்சத்திரம். தளைஅவிழ் தருஉடைச் சயில கோபனும், கிளையும்,அந் தரமிசைக் கெழுமி ஆர்த்தெழ, அளைபுகும் அரவினோடு, அலவன் வாழ்வுற, இளையவள் பயந்தனள் இளைய மென் கொடி. 22 22. தளை அவிழ் தரு உடை - அரும்புகள் முறுக்கவிழ்ந்து மலர்கின்ற மரங்களையுடைய. சயிலகோபன் - இந்திரன்; மலைகள்மேல் சினங் கொண்டவன். அரவு - ஆயில்ய நட்சத்திரம். அலவன் - கடகலக்கனம். இளையவன் - இளையவனாகிய இலக்குவனை. இளையமென்கொடி - சுமித்திரை இலக்குவன், கடகலக்கனம், ஆயில்ய நட்சத்திரத்திலே பிறந்தான். படம்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார் நடம்கிளர் தர,மறை நனி மகிழ்ந்திட, மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட, விடம்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள். 23 23. பாந்தன் - பாம்பாகிய ஆதிசேடன். பார் - நிலமகள். நடம் கிளர்தர - நடனமாடி விளங்க. மறை நாடகம் நவில - வேதங்கள் நடனமாட. மடங்கல் - சிம்மலக்கனமும். மகமும் - மகநட்சத்திரமும். விடம்கிளர் - நஞ்சபோல் கருமையாகக் காணப்படும். விழியினாள் - விழியை யுடைய சுமித்திரை. சத்துருக்கனன், சிம்மலக்கனத்தில் மகநட்சத்திரத்தில் பிறந்தான். மன்னவன் மகிழ்ச்சி `இறைதவிர்ந் திடுகபார், யாண்டுஓர் ஏழ்;நிதி நிறைதரு சாலைதாழ் நீக்கி யாவையும் முறைகெட வறியவர் முகந்து கொள்கெனா அறைபறை; என்றனன் அரசர் கோமகன். 24 24. யாண்டு ஏழொடு ஏழ் - பதினான்கு ஆண்டுகள். இறை தவிர்ந்திடுக - வரிநீங்குக. நிதி நிறைதருசாலை - செல்வம் நிறைந்துள்ள பண்டாரத்தின். தாழ் நீக்கிட - கதவைத் திறந்து. முறைகெட - இன்னார்தான் முதலில் கொள்ளவேண்டும் என்ற முறை ஒழிய. படைஒழிந் திடுக!தம் பதிகளே இனி விடைபெறு குக,முடி வேந்தர்! வேதியர் நடைஉறு நியமமும் நவையின்று ஆகுக! புடைகெழு விழாவொடு பொலிக! எங்கணும். 25 25. படை ஒழிந்திடுக - போர் ஒழிக. முடிவேந்தர் - சிறைப்பட்டிருக்கும் முடிவேந்தர்கள். தம்பதிகளே - தமது நகரங்களை யடைவதற்கு. நியமம் - விரதம். எங்கணும் புடைகெழு விழாவொடுபொலிக - எங்கும் நிறைந்த விழாக்களுடன் விளங்குவதாக. ஆலயம் புதுக்குக! அந்த ணாளர்தம் சாலையும், சதுக்கமும் சமைக்கசந்தியும்; காலையும் மாலையும் கடவு ளர்க்கு அணி மாலையும் தீபமும் வழங்கு கென்றனன். 26 26. சாலையும் - வீடுகளும். சதுக்கமும் சந்தியும் - நாற்சந்தி களையும், ஐஞ்சந்தி முச்சந்திகளையும். சமைக்க - புதிதாக அமைக்க. புதல்வர்கள் வளர்ச்சி நான்கு புதல்வர்களும், இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் என்ற பெயருடன் வளர்ந்து வந்தனர். தக்க பருவத்தில் கல்வியும், படைக்கலப் பயிற்சியும் பெற்றனர். காவியும், ஒளிர்தரு கமலமும், எனவே ஓவிய எழில்உடை ஒருவனை அலது ஓர் ஆவியும் உடலமும் இலதென, அருகின் மேவினன் உலகுடை வேந்தர்தம் வேந்தன். 27 27. காவியும் - நீலோற்பல மலர்களும். ஒளிர்தரு கமலமும் எனவே - அம்மலர்களிடையே விளங்கும் தாமரைமலர்களும் என்று கூறும்படியான. ஓவிய எழில் உடை - சித்திரம்போன்ற அழகுள்ள. ஒருவனை அலது - இராமனை அல்லாமல். தசரதன் இராமனையே உயிராகக்கொண்டு வாழ்ந்தான். அமிர்துகு குதலையொடு அணிநடை பயிலாத் திமிரம்அது அறவரு தினகரன் எனவும், தமரம்அது உடன்வளர் சதுமறை எனவும், குமரர்கள் நிலமகள் குறைவுஅற வளர்நாள். 28 28. அமிர்துஉகு - அமுதம் சிந்துகின்ற. குதலையொடு - மழலை மொழிகளுடன். பயிலா - பழகி. திமிரம் அது அற - இருள் அழியும்படி. வரு தினகரன் எனவும் - எழுந்து வருகின்ற சூரியனைப்போலவும். தமரம் அது உடன் வளர் - பண்ஒலியுடன் வளர்கின்ற. குமரர்கள் - தசரத குமாரர்களாகிய இராம, பரத, இலக்குவ, சத்துருக்கனராகிய நால்வர்கள். ஐயனும், இளவலும், அணிநில மகள்தன் செய்தவம் உடமைகள் தெரிதர, நதியும், மைதவழ் பொழில்களும், வாவியும் மருவி, `நெய் குழல் உறும் இழை எனநிலை திரிவார். 29 29. ஐயன் - இராமன். இளவல் - இலக்குவன். மைதவழ் - மேகங்கள் தவழ்கின்ற. மருவி - ஒன்றுசேர்ந்து விளையாடி, நெய்குழல் உறும் இழை என - நெய்கின்ற குழலும் அதில் பொருந்திய நூலும் என்று சொல்லும்படி நிலைதிரிவார் - பிரியாமல் திரிவார்கள். பரதனும் இளவலும் ஒருநொடி பகிராது இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல் உரைதரு பொழுதினும் ஒழிகிலர்; எனைஆள் வரதனும், இளவலும் எனமரு வினரே. 30 30. இளவலும் - சத்துருக்கனனும். பகிராது - பிரியாமல். இவுளி - குதிரை. இவரினும் - ஊர்ந்தாலும். உரைதருபொழுதினும் - சொல்லும் போதும்; படிக்கும்போதும். வரதன் - இராமன்; வரத்தைத் தருபவன் வரதன். எதிர்வரும் அவர்களை, எமையுடை இறைவன், முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிர, `எதுவினை? இடர்இலை? இனிதுநும் மனையும், மதிதரு குமரரும், வலியர் கொல் எனவே. 31 31. முதிர் தரு கருணையின் - மிகுந்த கருணையுடன். வினை எது - உம்முடைய தொழில் என்ன? இடர் இலை - துன்பம் இன்றி வாழ்கின்றீரா? நும் மனையும் இனிது - உமது மனைவி சுகமா? மதிதரு - அறிவுள்ள. வலியர் கொல் - வலிமையுள்ள வர்களா? `அஃதுஐய நினைஎமது அரசென உடையேம், இஃதுஒரு பொருள்அல, எமது உயிருடன் ஏழ் மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன் உகுபகல் அளவென உரைநனி புரிவார். 32 32. அஃது - நீ கேட்டபடியே அதுவாகும். உடையேம் - உடைய எங்களுக்கு. மலரோன் உகுபகல் அளவு - பிரமன் அழியும் காலம் வரையிலும். `எமது உயிருடன் ஏழ் மகிதலம் முழுதையும்; உறுகுவை - அடைவாயாக. 6. கையடைப் படலம் விசுவாமித்திரன் வருகை அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும் விரசுறு தனிக்குடை விளங்க, வென்றிசேர் முரசுஒலி கறங்கிட, முனிவர் ஏத்துறக், கரைசெயல் அரியதுஓர் களிப்பின் வைகுநாள். 1 கையடைப்படலம்: தசரதன் தன் மக்களான இராம இலக்குவர்களை விசுவாமித்திர முனிவரிடம் அடைக் கலமாகக் கொடுத்ததைப்பற்றிக் கூறும் பகுதி. கையடை - அடைக்கலம். 1. அகிலம் யாவையும் - உலகம் எங்கும் விரசுஉறு - செறிந்த. கறங்கிட - ஒலிக்க. கரை செயல் அரியது - எல்லையற்ற. நனைவரு கற்பக நாட்டு நன்னகர் அனைவரும் அணைதர அயிர்க்கும்; சிந்தையால் நினையவும் அரியது; விசும்பின் நீண்டது ஓர் புனைமணி மண்டபம் பொலிய எய்தினான். 2 2. நனைவரு - மொட்டுக்கள் பொருந்திய. கற்பகம் - கற்பகமரங்கள் நிறைந்த. நாட்டு நல் நகர் - நாட்டின் தலைநகரான அமராவதியில் உள்ளார். அயிர்க்கும் - ஐயத்திற்கு இடமானது. தூயமெல் அரிஅணைப் பொலிந்து தோன்றினான்; சேய்இரு விசும்பிடைத் திரியும் சாரணர் `நாயகன் இவன்கொல்என்று அயிர்த்து, `நாட்டம்ஓர் ஆயிரம் இல்லைஎன்று ஐயம் நீங்கினார். 3 3. சேய்இரு - தொலைவில் உள்ள. சாரணர் - தேவதூதர்கள். நாயகன் - தங்கள் தலைவனாகிய இந்திரன். மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர் `மன்னுயிர் அடங்கலும் உலகும்வேறு அமைத்துத் தேவரோடு இடங்கொள் நான்முகனையும் படைப்பன் ஈண்டெனாத் தொடங்கிய துனிஉறு முனிவன் தோன்றினான். 4 4. மடங்கல்போல் - சிங்கம்போன்ற. மொய்ம்பினான் முன்னர் - வலிமையுள்ள தசரதன் முன்பு. இடம்கொள் - சத்தியலோகத்தை இடமாகக் கொண்டு வாழ்கின்ற. ஈண்டு படைப்பென் - இங்கே புதிதாகப் படைப்பேன். துனி உறு முனிவன் - சினமிகுந்த விசுவாமித்திர முனிவன். தசரதன் விசுவாமித்திரனைப் போற்றுதல் நிலம்செய்தவம் என்றுணரின் அன்று;நெடி யோய்!என் நலம்செய்வினை உண்டெனினும் அன்று;நகர் நீயான் வலம்செய்து வணங்கஎளி வந்தஇது முந்துஎம் குலம்செய்தவம்; என்றுஇனிது கூறமுனி கூறும். 5 5. நகர் - இந்நகருக்கு `யான்வலம் செய்து வணங்க நீ எளிவந்த இது - நீ எளிதாக வந்த இச்செயல், நிலம்... அன்று; என் நலம் செய்வினை உண்டு - என்னுடைய நல்வினையால் நேர்ந்தது உண்டு. எனினும் அன்று - என்றாலும் அது உண்மையன்று. முந்து எம் குலம் செய்தவம் - முன்பு என் குலம் செய்த தவமே இங்கு நீ வந்தது. விசுவாமித்திரன் பாராட்டுரை என்அளைய முனிவரரும், இமையவரும், இடையூறுஒன்று உடையர் ஆனால், பல்நகமும் நகுவெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து அந்நகரும், கற்பகநாட்டு அணிகவரும் மணிமாட அயோத்தி என்னும் பொன்நகரும் அல்லாது, புகல்உண்டோ இகல்கடந்த புலவு வேலோய். 6 6. பல் நகமும் நகும் - பல மலைகளையும் பார்த்துச் சிரிக்கின்ற. வெள்ளிப் பனிவரையும் - வெள்ளியாகிய குளிர்ந்த கைலாய மலையும். பதும பீடத்தன் - தாமரை மலரை இருக்கை யாகக் கொண்டவனது. நகரும் - சத்தியலோகமும். கற்பகநாட்டு - கற்பகத்தரு நிறைந்த வானுலகில் உள்ள. அணிநகரும் - அழகிய அமராவதி நகரமும். புகல் உண்டோ - வேறு புகும் இடம் உண்டோ. இகல் கடந்த - பகைவர்களை வென்ற. புல அவேலோய்- புலால் நாற்றம் வீசும் வேற்படையை உடையவனே. இன் தளிர்க்கற் பகநறுந்தேன் இடைதுளிக்கும் நிழல்இருக்கை இழந்து போந்து நின்றுஅளிக்கும் தனிக்குடையின் நிழல் ஒதுங்கிக், குறையிரந்து நிற்ப நோக்கிக் குன்றுஅளிக்கும் குலமணித்தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து நீகொண்டு அன்றுஅளித்த அரசுஅன்றோ புரந்தரன்இன்று ஆள்கின்றது அரச என்றான். 7 7. கற்பகம் - கற்பக மரத்திலிருந்து சொட்டும். நறும் தேன் - நல்ல தேன். இடை - இடையிடையே. துளிக்கும் - சிந்துகின்ற. நின்று அளிக்கும் - நிலைத்து நின்று காக்கும். குன்று அளிக்கும் - மலையின்தோற்றத்தைக் கொடுக்கும். குலம் மணித்தோள் - கூட்டமான இரத்தினங்களை அணிந்த தோள்களையுடைய. உரைசெய்யும் அளவில்,அவன் முகம்நோக்கி, உள்ளத்தில் ஒருவ ராலும் கரைசெய்ய அரியதுஒரு பேர்உவகைக் கடல்பெருக, கரங்கள் கூப்பி, `அரசு எய்தி இருந்தபயன் எய்தினென்;மற்று இனிச்செய்வது அருளு கென்று, முரசுஎய்து கடைத்தலையான் முன்மொழியப், பின்மொழியும் முனிவன் ஆங்கே 8 8. அவன் முகம் நோக்கி - அந்த விசுவாமித்திரன் முகத்தைப்பார்த்து. கடைத்தலையான் - தலைவாசலையுடைய தசரதன். தசரதன் என்னால் ஆக வேண்டியது யாதென்று விசுவா மித்திரனை வேண்ட அவன் வந்த காரியத்தை உரைக்கிறான். தருவனத்துள் யான்இயற்றும் தகைவேள்விக்கு இடையூறாய்த், தவம்செய் வோர்கள் வெருவரச்சென்று அடைகாம வெகுளிஎன, நிருதர்இடை விலக்கா வண்ணம் `செருமுகத்துக் காத்திஎன நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத்தந் திடுதிஎன, உயிர்இரக்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான். 9 9. தகை வேள்விக்கு - சிறந்த வேள்விக்கு. நிருதர் - அரக்கர். அரக்கருக்குக் காமமும் வெகுளியும் உவமை. வெகுளி - சினம். செருமுகம் - போர்முனை. உயிர் ஈர்க்கும் - உயிரைக் கவர்கின்ற. உளைய - உள்ளம் வருந்தும்படி. தசரதன் துயரம் எண்இலா அருந்தவத்தோன் இயம்பியசொல், மருமத்தின் எறிவேல் பாய்ந்த புண்ணில்ஆம் பெரும்புழையில், கனல்நுழைந்தால் எனச்செவியில் புகுத லோடும் உள்நிலா வியதுயரம் பிடித்துந்த, ஆருயிர்நின்று ஊசல் ஆடக், கண்இலான் பெற்றிழந்தான் எனஉழந்தான் கடுந்துயரம் கால வேலான். 10 10. மருமத்தின் - மார்பிலே. எறிவேல்பாய்ந்த - பகைவனால் வீசப்பட்டவேல் பாய்ந்த. புண்ணில்ஆம் - புண்ணில் உண்டாகிய. பெரும் புழையில் - பெரிய தொளையில். கனல் - தீ. உள் நிலாவிய - உள்ளத்திலே தோன்றி நின்ற. உந்த - தள்ள. காலவேலான் கடும்துயரம் உழந்தான் - காலனைப்போன்ற வேலையுடையவன் மிகுந்த துன்பத்தால் வருந்தினான். தசரதன் உரை தொடைஊற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான், ஒருவண்ணம் துயரம் நீங்கிப், `படைஊற்றம் இலன்;சிறியன் இவன்பெரியோய்! பணிஇதுவேல் பனிநீர்க் கங்கை புடைஊற்றும் சடையானும் நான்முகனும் புரந்தரனும் புகுந்து செய்யும் இடையூற்றுக் கிடையூறாய் யான்காப்பன்; பெருவேள்விக் கெழுக என்றான். 11 11. தொடை ஊற்றின் - தேன் அடையிலிருந்து ஒழுகு வதைப்போல நறும்தாரான் - நறுமணமுள்ள மலர்மாலை அணிந்த தசரதன். படை ஊற்றம் இலன் சிறியன் - இவன் படைப் பயிற்சி யில்லாத சிறுபிள்ளை. அவர் - அவ்வரக்கர்களின். புடை - பக்கத்தில். இடையூற்றுக்கு - தடைக்கு. இடையூறாய் - நான்தடையாக நின்று. விசுவாமித்திரன் சினம் என்றனன்;என் றலும்முனிவோடு எழுந்தனன்மண் படைத்தமுனி; இறுதிக் காலம் அன்றென,ஆம் என,இடையோர் அயிர்த்தனர்,மேல் வெயில் கரந்தது; அங்கும்இங்கும் நின்றனவும் திரிந்தன;மேல் நிவந்தகொழும் கடைப்புருவம் நெற்றி முற்றச் சென்றன;வந் ததுநகையும்; சிவந்தன கண்; இருண்டனபோய்த் திசைகள் எல்லாம். 12 12. அயிர்த்தனர் - ஐயுற்றனர். வெயில் கரந்தது - சூரியனும் ஒளிந்தான். மீநிவந்த - மேலே காணப்பட்ட. கொழும் கடைப் புருவம் - நல்ல புருவக்கடை. நெற்றி முற்றச்சென்றன - நெற்றியின் மேல் ஏறின. வசிட்டன் உரைத்த சமாதானம் கறுத்த மாமுனி கருத்தை உன்னி`நீ பொறுத்தி என்றவன் புகன்று `நின்மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும்நாள் மறுத்தியோ? எனா வசிட்டன் கூறுவான். 13 13. கறுத்த மாமுனி - சினந்த பெரிய விசுவாமித்திர முனிவனுடைய. அவன்புகன்று - அவனுக்குக் கூறி. உறுத்தல் ஆகலா - பிறராலே அடைவிக்க முடியாத. உறுதி - நன்மை. `பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம்போய் மொய்கொள் வேலையாய் முடுகும் ஆறுபோல், ஐய நின்மகற்கு அளவில் விஞ்சைவந்து எய்து காலம்இன்று எதிர்ந்தது என்னவே. 14 14. மொய்கொள் வேலைவாய் - பெருமைகொண்ட கடலிலே. முடுகும் ஆறுபோல் - விரைந்து சேரும் தன்மைபோல். விஞ்சை - வித்தைகள். கடலிலே இருந்து மழையாக வந்த நீர் மீண்டும் கடலை அடைவதுபோல் இராமனிடம் பிறந்த வித்தைகள் மீண்டும் அவனையே அடையும் காலம் வந்தது. குருவின் வாசகம் கொண்டு கொற்றவன் `திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்றுஎன வருக என்றனன், என்னலோடும் வந்து அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 15 15. கொற்றவன் - தசரதன். அறிவின் உம்பரான் - எல்லோர் அறிவினும் மேம்பட்டவனாகிய இராமன். அருகு சார்ந்தனன் - தசரதன் அருகில் வந்தான். வந்த நம்பியைத் தம்பி தன்னொடும் முந்தை நான்மறை முனிக்குக் காட்டி,`நல் தந்தை நீ!தனித் தாயும்நீ! இவர்க்கு; எந்தை தந்தனன்; இயைந்தசெய்: கென்றான். 16 16. நம்பியை - இராமனை. தம்பி தன்னொடும் - இலக்கு வனோடும். முனிக்கு - விசுவாமித்திரனுக்கு. நம்பி - எல்லா இலட்சணமும் நிறைந்தவன்; ஆண்களில் சிறந்தவன். கோசிகன் கோபந்தவிர்ந்து மைந்தர்களுடன் புறப்படுதல் வென்றி வாள்,புடை விசித்து, மெய்மைபோல் என்றும் தேய்வுறாத் தூணி யாத்து,இரு குன்று போன்றுயர் தோளில் கொற்றவில் ஒன்று தாங்கினான் உலகம் தாங்கினான். 17 17. புடைவிசித்து - பக்கத்திலே கட்டி. மெய்மைபோல் - உண்மையைப் போல. என்றும் தேர்வுறா - ஒருநாளும் அம்புகள் குறையாமலிருக்கின்ற. தூணியாத்து - அம்புப் புட்டிலைக்கட்டி. அன்ன தம்பியும், தானும், ஐயன்ஆம் மன்னன் இன்உயிர் வழிக்கொண்டால் எனச், சொன்ன மாதவன் தொடர்ந்து சாயை போல், பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான். 18 18. அன்ன தம்பியும் - அவ்வாறே வாளும், அம்புப்பட்டியும், வில்லும் தாங்கிய இலக்குவனும். மாதவன் தொடர்ந்து - முனிவனைத் தொடர்ந்து. சாயைபோல் - அவனுடைய நிழலைப் போல். புரிசை - கோட்டைமதிலை. கரும்பு கால்பொரக், கழனி வார்ந்ததேன் வரம்பு மீறிடு மருத வேலிவாய், அரும்பு கொங்கையார் அம்மெல் ஓதிபோல் சுரும்பு வாழ்வதுஓர் சோலை வைகினார். 19 19. கால்பொர - காற்றுமோதி ஒடிந்ததனால். வரம்புமீறிடும் - வரம்பைத் தாண்டி ஓடுகின்ற. தேவு மாதவன் தொழுது, தேவர்தம் நாவுள் ஆகுதி நயக்கும் வேள்விவாய்த் தாவு மாபுகை தழுவு சோலை கண்டு, `யாவது ஈதென்றான் எவர்க்கும் மேல் நின்றான். 20 20. தேவுமாதவன் - தெய்வத்தன்மை பொருந்திய முனிவனை. ஆகுதி - வேள்வித் தீயில் இடும் பொருள்களை. நயக்கும் - விரும்பியிடுகின்ற. வேள்விவாய் - வேள்வியிலிருந்து. எவர்க்கும் மேல்நின்றான் - இராமன். 7. தாடகை வதைப் படலம் அங்க நாடு `திங்கள்மே வும்சடைத் தேவன்மேல், மாரவேள் இங்குநின்று எய்யவும், எரிதரும் நுதல்விழிப் பொங்குகோபம்சுடப், பூளைவீ, அன்னதன் அங்கம்வெந்து, அன்றுதொட்டு அனங்கனே ஆயினான். 1 தாடகை வதைப்படலம்: தாடகை என்னும் அரக்கியைக் கொன்றதைப் பற்றிக்கூறும் பகுதி. 1. திங்கள்மேவும் சடை - சந்திரன் பொருந்திய சடையை யுடைய. தேவன் - பரமசிவன். பொங்கு கோபம்- எழுந்த கோபத்தீ. பூளைவீ - பூளைப்பூ. அனங்கன் - அங்கம் இல்லாதவன். வாரணத்து உரிவையான், மதனனைச் சினவுநாள், ஈரம்அன்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம், ஆரணத்து உறையுளாய்! அங்கநாடு; இதுவும்அக் காரணக் குறிஉடைக் காமன்ஆச் சிரமமே. 2 2. வாரணத்து உரிவையான் - யானைத்தோலையுடைய சிவபெருமான். காரணக்குறி உடை - காரணப் பெயராக. பற்றுஅவா வேரொடும் பசைஅறப், பிறவிபோய் முற்ற,வால் உணர்வுமேல் முடுகினார் அறிவுசென்று உற்றவா னவன்,இருந்து யோகுசெய் தனன்எனின், சொற்றலாம் அளவதோ மற்றிதன் தூய்மையே? 3 3. பற்று அவா வேரொடும் பசைஅற - பற்றும் ஆசையும் அடியோடு தொடர்பற்றுப்போக. பிறவிபோய்முற்ற - அதனால் பிறவி ஒழிய. வால் உணர்வுமேல் முடுகினார் - குற்றமற்ற அறிவிலே சிறந்து நின்றவர்களின். அறிவு சென்று உற்ற - அறிவிலே சென்றுபொருந்திய. வானவன் - தேவனாகிய சிவபெருமான். சொற்றலாம் -சொல்லக்கூடியனவாகிய. பற்று - நான், எனது என்னும் பற்று. அவா - பார்த்ததைப் பெறவேண்டும் என்னும் ஆசை. என்றுஅவ்அந் தணன்இயம் பலும்வியந்து, அவ்வயின் சென்று,வந்து, எதிர்தொழும் செந்நெறிச் செல்வரோடு அன்றுஉறைந்து, அலர்கதிர்ப் பரிதிமண் டிலம்அகன் குன்றின்வந்து இவர,ஓர் சுடுசுரம் குறுகினார். 4 4. செந்நெறிச் செல்வர் - முனிவர்கள். அலர்கதிர் - விரிந்த கதிர்களையுடைய. அகன்குன்றின் வந்து - பெரிய உதயகிரியிலே தோன்றி. இவர - மேலேறி வரும்போது. சுடுசுரம் - பாலைவனம். அவர்கள் இரவில் அங்கே தங்கி, விடிந்தபின் நடந்து, ஒரு பாலைவனத்தை அடைந்தனர். பாலைவனக் காட்சி பருதிவா னவன்,நிலம் பசைஅறப் பருகுவான் விருதுமேற் கொண்டுலாம், வேனிலே அல்லதுஓர் இருதுவேறு இன்மையால், எரிசுடர்க் கடவுளும் கருதின்வேம் உள்ளமும்; காணின்வேம் நயனமும். 5 5. பருதி வானவன் - சூரியதேவன். நிலம் பசைஅற - நிலத்தின் ஈரப்பசை ஒழியும்படி. விருதுமேல்கொண்டு - வெற்றிக் கொடியைப் பிடித்துக் கொண்டு. உலாம் - உலவுகின்ற. வேனில் - கோடைப்பருவம். இருது - பருவகாலம். வேம் - வேகும். நயனம் - கண். படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும்நா முடியவேம்;முடியமூடு இருளும்,வான் முகடும்வேம்; விடியுமேல் வெயிலும்வேம்; மழையும்வேம்; மின்னினோடு இடியும்வேம்; என்னின்வேறு யாவை வேவாதவே? 6 6. படியின்மேல் வெம்மையை - அந்தப்பாலை நிலத்திலே உள்ள வெப்பத்தைப்பற்றி. மூடுஇருளும் - கவியும் இருட்டும். வான் முகடும் - வானத்தின் உச்சியும். தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும் மூவகைப் பகைஅரண் கடந்து, முத்தியில் போவது புரிபவர் மனமும், பொன்விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே. 7 7. தாவரும் இருவினை செற்று - துன்பங்கள் தாவி வருகின்ற நல்வினை தீவினைகள் என்னும் இருவகை வினைகளையும் அழித்து. தள்ள அரும் - நீக்க முடியாத. மூவகைப்பகை அரண்கடந்து - காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவகையான பகையாகிய காவலையும்தாண்டி. முத்தியில் போவது புரிபவர் - வீட்டுநெறியிலே செல்ல விரும்புகின்றவர்களின். பசையும் அற்றது - சிறிதும் தொடர்பற்று நின்றது. எரிந்தெழு கொடுஞ்சுரம் இனையது எய்தலும் அருந்தவன் `இவர்பெரிது அளவில் ஆற்றலைப் பொருந்தினர் ஆயினும்,பூவின் மெல்லியர்; வருந்துவர் சிறிதுஎன மனத்தின் நோக்கினான். 8 8. எரிந்துஎழு - தீப்பற்றி எழுகின்ற. சுரம் - பாலைவன மாகிய. மனத்தின் நோக்கினான் - மனத்திலே கருதினான். நோக்கினன், அவர்முகம் நோக்க, நோக்குடைக் கோக்கும ரரும்அடி குறுக, நான்முகன் ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ்வழி ஊக்கினன்; அவைஅவர் உள்ளத்து உள்ளினார். 9 9. நோக்குஉடை - குறிப்பறியுந்தன்மை யுடைய. கோ குமரர் - அரச குமாரர்கள். ஊக்கினான் - உபதேசித்தான். அவை - அந்த வித்தைகளை. உள்ளிய காலையின், ஊழித் தீயையும் எள்உறு கொழுங்கனல் எரியும் வெம்சுரம் தெள்ளுதண் புனல்இடைச் சேறல் ஒத்தது; வள்ளலும் முனிவனை வணங்கிக் கூறுவான். 10 10. -. சுழிபடு கங்கைஅம் தொங்கல் மோலியான் விழிபட வெந்ததோ? வேறுதான் உண்டோ? பழிபடர் மன்னவன் படைத்த நாட்டின்ஊங்கு அழிவதுஎன் காரணம்? அறிஞகூறு! என்றான். 11 11. கங்கை - கங்கையையும். அம்தொங்கல் - அழகிய மாலையையும். மோலியான் - முடியையுடைய சிவபெருமான். என்றலும் இராமனை நோக்கி, இன்உயிர் கொன்றுஉழல் வாழ்க்கையள்; கூற்றின் தோற்றத்தள்; அன்றியும் ஐஇரு நூறு மையல்மா ஒன்றிய வலியினள்; ஊழித் தீஅனாள். 12 12. ஐ இருநூறு - ஐந்து இருநூறு; ஆயிரம் மையல்மா - மதம்பிடித்த யானைகளின். ஒன்றிய வலியினள் - ஒன்றுபட்ட வலிமையுள்ளவள். பாலைவனத்தைப்பற்றியும், தாடகையைப்பற்றியும் விசுவாமித்திரன் உரைத்தல் சுகேது என்னும் இயக்கன் புதல்வி தாடகை. அவளைச் சுந்தன் என்பவன் மணந்தான். அவர்களுக்கு மாரீசன், சுவாகு என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் பிறந்த களிப்பால் சுந்தன் அகத்தியர் தவம் புரிந்த இடத்திற்கு வந்தான்; அவர் இருந்த வனத்தை அழித்தான். அகத்தியர் ஆத்திரத்துடன் விழித்து நோக்கினார்; சுந்தன் சாம்பலானான்; உடனே தாடகையும் மைந்தர்களும் அகத்தியரை நோக்கி ஓடி வந்தனர்; ஆரவாரம் புரிந்தனர். தமிழ்எனும் அளப்பரும் சலதி தந்தவன், உமிழ்கனல் விழிவழி ஒழுக, உங்கரித்து `அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிகென உரைத்தனன் அசனி எஞ்சவே. 13 13. சலதி - கடலுக்கு. தந்தவன் - இலக்கணம் செய்து கொடுத்தவன்; அகத்திய முனிவன். உமிழ்கனல் - உள்ளத்திலிருந்து வெளிவந்த கோபத்தீ. உங்கரித்து - உங்காரம் செய்து; உம் என்று சினந்துரைத்து. அழிவன - நன்மைகள் அழியக்கூடிய தீச்செயல்களை. அசனி எஞ்சவே - இடியும் வலிமை அழியும்படி. அவர்கள் அரக்கர்களாயினர்; மாரீசனும், சுவாகுவும் பாதலத்திலிருந்த சுமாலியிடம் சென்றனர். புதல்வர்கள் என்று உறவு கொண்டாடினர்; இராவணனுக்கு மாமன் முறையாயினர். தாடகை மைந்தரைப் பிரிந்த பின், முனிவனின் சாபத்தை எண்ணிக் கடுஞ்சினம் கொண்டாள். மண்உருத்து எடுப்பினும், கடலை வாரினும், விண்உருத்து இடிப்பினும், வேண்டின் செய்கிற்பாள்; எண்உருத் தெரிவரும் பாவம் ஈண்டிஓர் பெண்உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள். 14 14. மண் உருத்து எடுப்பினும் - நிலத்தைச் சினந்து தூக்கினாலும். உருத்து - சினந்து. விண் இடிப்பினும்; வேண்டின் - விரும்பியவற்றை. எண் உரு தெரிவு அரும்பாவம் - அளவும் உருவும் அறியமுடியாத பாவங்கள் எல்லாம். ஈண்டி - ஒன்று சேர்ந்து. திரியும் பெற்றியாள் - திரிகின்ற தன்மையுள்ளவள். சூடக அரவுழல் சூலக் கையினள், காடுறை வாழ்க்கையள்; கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்! தாடகை என்பதுஅச் சழக்கி நாமமே. 15 15. கண்ணில் காண்பரேல் - உன்னைக் கண்ணால் நன்றாகக் காண்பாராயின். ஆடவர் - ஆண்களும். பெண்மையை அவாவும் - பெண்தன்மையடைந்து உன்னைத் தழுவவிரும்பும். சூடகம் அரவு உழல் - கங்கணமாகப் பாம்பு சுழன்றுகொண்டிருக்கின்ற. சூலக்கையினள்; .... வாழ்க்கையள்; அச்சழக்கி நாமம் தாடகை என்பது. சழக்கி - குற்றமே உருவானவள். உளப்பரும் பிணிப்பரா உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களை அழிக்கும் ஆறுபோல், கிளப்பரும் கொடுமைய அரக்கி கேடிலா வளப்பெரு மருதவைப்பு அழித்து மாற்றினாள். 16 16. உளம் பரும் பிணிப்பு அரு - உள்ளத்திலே உள்ள பெரிய ஆசையாகிய கட்டுநீங்காத. உலோபம் ஒன்றுமே - உலோ பத்தன்மை என்ற ஒரு கெட்ட குணமே. கிளப்ப அரும் - சொல்லமுடியாத. வளம் பரும் மருதவைப்பு - செழித்த பெரிய மருதநிலத்தை. வேறு இலங்கைஅர சன்பணி அமைந்தொர் இடையூறாய், விலங்கல்வலி கொண்டெனது வேள்வி,நலி கின்றாள்; அலங்கல்முகிலே அவள்இவ் அங்கநிலம் எங்கும் குலங்களொடு அடங்க,நனி கொன்று,திரி கின்றாள். 17 17. அலங்கல் முகிலே - மாலையை அணிந்த மேகம் போன்றவனே. இலங்கை அரசன் - இராவணனுடைய. பணி அமைந்து ஓர் இடையூறாய் - கட்டளைக்கு அடங்கிநின்று ஒரு தடையாய். விலங்கல் - மலைபோன்ற வலிமை கொண்டு. நலிகின்றாள் - அழிக்கின்றாள். முன்உலகு அளித்து,முனி தந்தஉயிர் எல்லாம் தன்உணவு எனக்கருது தன்மையினள்; மைந்த! என்இனி உணர்த்துவது? இனிச்சிறிது நாளில் மன்உயிர் அனைத்தையும் வயிற்றில்இடும், என்றான். 18 18. முன் உலகு அளித்து - பழமையான இவ்வுலகைக் காத்து. முறை நின்ற உயிர் எல்லாம் - நீதிநெறியிலே நின்ற உயிர்களை யெல்லாம். தாடகையின் தோற்றம் அங்குஉறுவன் அப்பரிசு உரைப்பஅது கேளா, கொங்குஉறை நறைக்குல மலர்ச்செனி குலுக்கா, `எங்குஉறைவது இத்தொழில் இயற்றுபவள்? என்றான் சங்குஉறை கரத்துஒரு தனிச்சிலை தரித்தான். 19 19. இறைவன் - கோசிகமுனிவன். கொங்கு உறை - மணம் பொருந்திய. நறைக்குலம் மலர்ச்சென்னி - தேன் அமைந்த சிறந்த மலரை யணிந்த தலையை கைவரை எனத்தகைய காளைஉரை கேளா ஐவரை அகத்துஇடை அடைத்தமுனி, `ஐய! இவ்வரை இருப்பதுஅவள் என்பதனின் முன்புஓர் மைவரை நெருப்புஎரிய வந்ததுஎன வந்தாள். 20 20. கைவரை - யானை. ஐவரை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்ற ஐவகை ஆசைகளையும். அகத்துஇடை அடைத்த - உள்ளத்திலே அடக்கிவைத்திருக்கின்ற. முனி - விசுவாமித்திரன். மைவரை - கருமலை. மேகம்அவை பற்றுபு பிழிந்தனள் விழுங்கா, மாகவரை அற்றுஉக உதைத்தனள்; மதித்திண் பாகம்எனும் முற்றுஎயிறு அதுக்கி, அயில்பற்றா, ஆகம்உற உய்த்துஎறிவென் என்றுஎதிர் அழன்றாள். 21 21. பற்றுபு - பிடித்து. விழுங்கா - விழுங்கி. மாகவரை - வானத்தை அளாவிய பெரிய மலைகள். அற்றுஉக - தூளாகிச் சிந்தும்படி. மதித்திண் பாகம் எனும் - சந்திரனுடைய வலிய ஒருபகுதி என்னும்படியான. முற்று எயிறு - கோரப்பற்களை. ஆகம்உற - உடம்பிலே தாக்கும்படி. அண்ணல் முனிவற்குஅது கருத்துஎனினும், ஆவி உண்என வடிக்கணை தொடுக்கிலன், உயிர்க்கே துண்எனும் வினைத்தொழில் தொடங்கியுளள் ஏனும் பெண்என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 22 22. முனிவற்கு - விசவாமித்திர முனிவனுக்கு. அது கருத்து எனினும் - அவளைக் கொல்லவேண்டும் என்பதாகிய அதுவே கருத்தென்றாலும். வடிக்கணை - கூர்மையான அம்பை. உயிர்க்கே துண் எனும் - உயிருக்கு அச்சம் உண்டாக்கும். வினைத்தொழில் - கொடிய செயலாகிய காரியத்தை. இராமன் எண்ணத்தை அறிந்த விசுவாமித்திரன் உரை; `தீதென்று உள்ளவை யாவையும் செய்து,எமைக் கோதென்று உண்டிலள்; இத்தனை யேகுறை; யாதென்று எண்ணுவது இக்கொடி யாளையும் மாதென்று எண்ணுதியோ மணிப் பூணினாய்! 23 23. எமை - எம்போன்ற முனிவர்களை யெல்லாம். கோது என்று - சாரம் அற்ற சக்கை ன்று கருதியே. தேவர்கள் எல்லாம் இவளிடம் தோற்றுப் போயினர்; கொடுமை செய்தவளைக் கொல்வது பாவம் அன்று; அசுரர்களுக்கு ஆதரவளித்த கியாதி என்பவளைத் திருமால் கொன்றார்; உலகை அழிக்கத் துணிந்த மதி என்பவளை இந்திரன் கொன்றான்; அவர்கள் பழி பெற வில்லை; புகழே பெற்றனர்; `மன்னும் பல்உயிர் வாரித்தன் வாய்ப்பெய்து தின்னும் புன்மையின் தீமை ஏது? ஐய! பின்னும் தாழ்குழல் பேதைமைப் பெண்இவள் என்னும் தன்மை எளிமையின் பாலதே. 24 24. தீமை எதோ - வேறு தீமைதான் எது? எளிமையின் பாலது ஏ - தகுதியற்றது; இவள் தன்மையை அறியாமையால் உண்டானதே. `ஈறில் நல்லறம் பார்த்துஇசைத் தேன்; இவள் சீறி நின்றிது செப்புகின்றேன் அலேன்; ஆறி நின்றது அருள்அன்று; அரக்கியைக் கோறி என்றுஎதிர் அந்தணன் கூறினான். 25 25. ஈறுஇல் நல் அறம் பார்த்து - அழிவில்லாத நல்ல அறத்தை எண்ணியே. இசைத்தேன் - கூறினேன். இவள் சீறிநின்று - இவள்மேல் கோபங்கொண்டு. ஆறிநின்றது - சினம்தணிந்து நின்றது. கோறி - கொல்லுக. அந்தணன் - முனிவன். இராமனும் போருக்குத் துணிந்தான்; தாடகை தன் சூலப் படையை அவன் மேல் வீசினாள். புதிய கூற்றனையாள் புகைந்து ஏவிய கதிர்கொள் மூவிலைக் காலவெம்தீ, முனி விதியை மேற்கொண்டு நின்றவன் மேல்,உவா மதியின் மேல்வரு கோள்என, வந்ததே, 26 26. புகைந்து ஏவிய - கோபித்து விடுத்த. கதிர்கொள் - ஒளி பொருந்திய. மூஇலை கால வெம் தீ - மூவிலைச் சூலமாகிய ஊழிக்காலக் கொடுந் தீ. முனிவிதியை - விசுவாமித்திரன் கட்டளையை. உவாமதி - முழுமதி. கோள்என - இராகு என்னும் கிரகத்தைப்போல. இராமன் முழுமதி; சூலம் இராகு. மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் கோல விற்கால் குனித்ததும் கண்டிலர்; காலனைப் பறித்துஅக் கடியாள் விட்ட சூலம் அற்ற துண்டங்கள் கண்டனர். 27 27. மாலும் - திருமாலின் அவதாரமான இராமனும். கோலம் வில்கால் - அழகிய வில்லின் அடியை. குனித்ததும் - வளைத்ததையும். காலனைப் பறித்து - எமனிடமிருந்து பிடுங்கி. அதன் பின் தாடகை மாரிபோல் கற்களை வீசினாள். இராமன் அவைகளை அம்புகளால் வீழ்த்தி அவள் மீது ஒரு கணையை ஏவினான். தாடகையின் வீழ்ச்சி சொல்ஒக்கும் கடிய வேகச் சுடுசரம், கரிய செம்மல் அல்ஒக்கும் நிறத்தி னாள்மேல் விடுத்தலும், வயிரக் குன்றக் கல்ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று; கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்எனப் போயிற்று; அன்றே 28 28. சொல்ஒக்கும் - முனிவர்களின் சாபச்சொல்லப் போன்ற. அல் ஒக்கும் - இருட்டைப்போன்ற. நெஞ்சில் - அவளு டைய மார்பிலே. அப்புறம் கழன்று - பின்புறமாகக் கழன்று. கல்லாத அற்பர் நெஞ்சில் நல்லோர் உரை நிலைக்காமல் மறைவது; அம்புக்கு உவமை. பொன்நெடும் குன்றம் அன்னான், புகர்முகப் பகழி என்னும் மன்நெடும் கால வன்காற்று அடித்தலும், இடித்து வானில் கல்நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்தமேகம் மின்னொடும் இடியி னோடும் வீழ்வதே போல வீழ்நதாள். 29 29. புகர் முகம் பகழி - கூர்மையான நுனியை உடைய அம்பு. மன் நெடும்வல் கால காற்று - நிலைத்த பெரிய வலிமையுள்ள ஊழிக்காலக் காற்று. நெடுகல்மாரி பெய்ய - பெரிய கல் மழையைப் பெய்வதற்காக. பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த, தடியுடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை, தலைகள் தோறும் முடியுடை அரக்கற்கு, அந்நாள் முந்தி உற்பாத மாகப் படியிடை அற்று வீழ்ந்த வெற்றிஅம் பதாகை ஒத்தாள். 30 30. பொடி உடை - புழுதியுள்ள. தடி உடை எயிற்று பேழ்வாய் - தசை பொருந்திய பற்கள் அமைந்த பிளந்த வாயையுடைய. தாடகை - தாடகை யானவள். அரக்கற்கு - அரக்கனாகிய இராவணனுக்கு. முந்தி - முதலில் தோன்றும். உற்பாதமாக - கெட்ட சகுனமாக. படியிடை - நிலத்தில். வாசநாள் மலரோன் அன்ன மாமுனி பணிம றாத காசுஉலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப் போரில், கூசிவாள் அரக்கர்தங்கள், குலத்துஉயிர் குடிக்க அஞ்சி ஆசையால் உழலும் கூற்றும் சுவைசிறிது அறிந்தது அன்றே. 31 31. நாள்மலரோன் அன்ன - புதிய தாமரைமலரில் இருக் கின்ற பிரம்ம தேவனைப்போன்ற. மாமுனி - விசுவாமித்திரன். காசு உலாம் - இரத்தினங்கள் அமைந்த .காகுத்தன் - இராமன். கன்னிப்போர் - சிறிய போர்; முதற்போர். கூசி - நாணமடைந்து. யாமும்எம் இருக்கை பெற்றேம், உனக்குஇடை யூறும் இல்லை, கோமகற்கு இனிநீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்னா மாமுனிக்கு உரைத்துப், பின்னர் விற்கொண்ட மழைஅனான்மேல் பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயி னாரே. 32 32. எம் இருக்கை - எமது உறையுளாகிய வானுலகை. வில்கொண்ட மழை - வில்லைக் கொண்ட மேகம்; இராமனுக்கு உவமை. 8. வேள்விப் படலம் விண்ணவர் போய பின்றை, விரிந்தபூ மழையி னாலே தண்எனும் கானம் நீங்கித், தாங்கரும் தவத்தின் மிக்கோன், மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்தன சடையன், வெண்ணய் அண்ணல்தன், சொல்லே யன்ன படைக்கலம் அருளி னானே. 1 வேள்விப் படலம்; விசுவாமித்திரனால் செய்யப்பட்ட வேள்வியைப் பற்றிக் கூறும் பகுதி. 1. தவத்தின் மிக்கோன் - தவத்திலே சிறந்த விசுவாமித்திரன். வெண்ணெய் நல்லூர்ச் சடையன் சொல் வறியர்வகளின் வறுமையை ஒழிக்கும்; முனிவன் தந்த படைக்கலம் பகைவர்களை அழிக்கும். ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல் தன்பால் ஊறிய உவகை யோடும், உம்பர்தம் படைகள் யாவும் தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம் மாறிய பிறப்பில் தேடி வருவபோல் வந்த அன்றே. 2 2. ஆறிய - குற்றங்கள் அற்ற. அறிவன் - விசுவாமித்திரன். கூறி அளித்தலும் - அப்படைகளைப் பயன்படுத்தும் முறை களைக் கூறிக்கொடுத்ததும். தேறிய - தெளிந்த. செய்த - ஒரு பிறப்பிலே செய்த. மாறிய பிறப்பில் - மறுப்பிறப்பிலே. வந்த - வந்தன. அன்று; ஏ; அசைகள். `மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீரநீ விதியின் எம்மை ஏவின செய்து நிற்றும் இளையவன் போல; என்று தேவர்தம் படைகள் செப்பச், செவ்விதென்று அவனும் நேரப், பூவைபோல் நிறத்தி னாற்குப் புறத்தொழில் புரிந்த; அன்றே. 3 3. மேவினம் - உன்னை அடைந்தோம். பிரிதல் ஆற்றேம் - பிரியமாட்டோம். விதியின் - முறைப்படி. எம்மை ஏவின - எமக்கு இட்ட கட்டளையை. இளையவன்போலச் செய்து நிற்றும். செவ்விது - நல்லது. நேர - ஒத்துக் கொள்ள. பூவைபோல் - காயாம் பூவைப்போன்ற. புறம் தொழில் - வெளியிலே செய்ய வேண்டிய வேலைகளை. புரிந்த - செய்து கொண்டிருந்தன. அன்று; ஏ; அசைகள். இனையன நிகழ்ந்த பின்னர்க் காவதம் இரண்டு சென்றார் அனையவர் காண ஆண்டோர் அகல்நதி அணுகித் தோன்ற முனைவஈது யாவது என்று முன்னவன் வினவப், பின்னர் வினைஅற நோற்று நின்ற மேலவன் விளம்பல் உற்றான். 4 4. அகல்நதி - பெரிய நதியாகிய கோசிகநதி. முனைவ - முனிவனே. முன்னவன் - இராமன். வினை - நல்வினை தீவினைகள். மேலவன் - உயர்ந்தவனாகிய விசுவாமித்திரன். காவதம் - காதம். `எம்முனாள் நங்கை இந்த இருநதி ஆயினாள் என்று அம்முனி புகலக், கேளா, அதிசயம் மிகவும் தோன்ற செம்மலும் இளைய கோவும் சிறிதுஇடம் தீர்ந்த பின்னர், `மைம்மலி பொழில்யாது? என்ன, மாதவன் கூறல்உற்றான். 5 5. எம்முனாள் நங்கை - எமது முன்னவளாகிய நங்கை. இருநதி - பெரிய நதி. சிறிது இடம் தீர்ந்தபின்னர் - சிறிது வழிநடந்து முடிந்தபின். விசுவாமித்திரன் மாபலியின் வரலாற்றை உரைத்தல் தங்கள் நாயகரின், தெய்வம் தான்பிறிது, இலைஎன் றெண்ணும் மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய் எங்கள்நான் மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் இருந்து மேல்நாள் செய்தவம் செய்தது; அன்றே. 6 6. -. ஆனவன் இங்குஉறை கின்றஅந் நாள்வாய் ஊனம்இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்றுஓர் ஏனம் எனும்திறல் மாவலி என்பான் வானமும் வையமும் வௌவுதல் செய்தான். 7 7. ஆனவன் - அப்படித்தவம் புரிந்தவனாகிய திருமால். ஒடுங்கும் எயிற்று ஓர் - அடங்கும் தந்தங்களையுடைய. ஒரு ஏனம் - பன்றி. வௌவுதல் செய்தான் - கைப்பற்றிக்கொண்டான். செய்தபின் வானவ ரும்செயல் ஆற்றா நெய்தவழ் வேள்வியை முற்றிட நின்றான்; ஐயம்இல் சிந்தையர் அந்தணர் தம்பால் வையமும் யாவும் வழங்க வலித்தான். 8 8. செயல் ஆற்றா - செய்யமுடியாத. வலித்தான் - உறுதி செய்து கொண்டான். ஆயது அறிந்தனர் வானவர்; அந்நாள் மாயனை வந்து வணங்கி இரந்தார்; `தீயவன் வெம்தொழில் தீர்என நின்றார்; நாயக னும்அது செய்ய நயந்தான். 9 9. வெம்தொழில்தீர் - கொடுந்தொழிலை நீக்குக. நின்றார் - வேண்டி நின்றார். நயந்தான் - விரும்பினான். காலம் நுனித்துஉணர் காசிபன் என்னும் வால்அறி வற்குஅதி திக்குஒரு மகவாய் நீல நிறத்து நெடுந்தகை வந்து,ஓர் ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான். 10 10. காலம் - முக்கால நிகழ்ச்சிகளையும்; நுனித்து - ஆராய்ந்து. வால் - பரிசுத்தமான. ஆலம்விதை வாமனனுக்கு உவமை. அதிதி - காசிபன் மனைவி. அவன் மாபலியிடம் சென்றான். மாபலி வரவேற்றான். மாபலியின் கொடையை வாமனன் புகழ்ந்தான். சிந்தை உவந்துஎதிர் என்செய என்றான்; அந்தணன் மூவடி மண்அருள்; உண்டேல் வெம்திற லாய்இது வேண்டும்; எனாமுன், தந்தனன் என்றனன்; வெள்ளி தடுத்தான். 11 11. உண்டேல் - கூடுமானால். வெம்திறவாய் - கொடிய வலிமையுள்ளவனே. வெள்ளி - சுக்கிராச்சாரி; மாபலியின் குலகுரு. வெள்ளியை ஆதல் விளம்பினை; மேலோய்! வள்ளியர் ஆகில் வழங்குவ தல்லால், எள்ளுவ என்சில; இன்உயி ரேனும் கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். 12 12. -. மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய் வீந்தவர் என்பவர்; வீந்தவ ரேனும் ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே. 13 13. எந்தாய் - எந்தையே. இரந்தவர் - யாசித்தவரே. வீந்தவர் என்பவர் - மாண்டவராவர். வீந்தவரேனும் - இறந்தவராயினும். இருந்தவர் யாரே - புகழோடு இருந்தவர் வேறுயார்தான். அடுப்பவ ரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர்; கொடுப்பவர் முன்பு கொடேல்என நின்று தடுப்பவ ரேபகை; தம்மையும் அன்னர் கெடுப்பவர்; அன்னதுஓர் கேடிலை என்றான். 14 14. அடுப்பவரும் - போர்புரிகின்றவர்கூட. பழிசெய்ஞ்ஞரும் அல்லர் - கொடுமை செய்கின்றவர்களும் அல்லர். பகை - பகைவராவர். அன்னது ஓர் கேடு இல்லை - அதுபோன்ற ஒரு கெடுதி வேறொன்றும் இல்லை. கட்டுரை யின்தம! கைத்துஉள போழ்தே இட்டுஇசை கொண்டுஅறன் எய்த முயன்றோர்க்கு உள்தெறு வெம்பகை யாவது லோபம், விட்டிடல்; என்று விலக்கினர் தாமே. 15 15. கட்டுரையின் - செல்லப்போனால். தம்கைத்து உள போழ்தே - தம்முடையகையில் பொருள் உள்ள காலத்திலேயே. முயன்றோர்க்கு - முயல்கின்றவர்களுக்கு. உள்தெறு வெம்பகை யாவது - உள்ளே யிருந்து அழிக்கின்ற கொடிய பகையாவது. லோபம் - உலோபகுணமாகும். விட்டிடல் ஆதலால் அக்குணத்தை விட்டுவிடுக. என்று விலக்கினர் -என்று அக்குணத்தை விலக்கினார்கள். தாம்; ஏ; அசை. முடியஇம் மொழிகளை மொழிந்து, மந்திரி கொடியன்என்று, உரைத்தசொல் ஒன்றும் கொண்டிலன்; அடிஒரு மூன்றுநீ அளந்து கொள்கென, நெடியவன் குறியகை நீரில் நீட்டினான். 16 16. முடிய - முடிவாக. என்று - என்று கூறி. நெடியவன் - திருமால். திரிவிக்கிரமன் கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும், பயந்தவர் களும்இகழ் குறளன், பார்த்துஎதிர் வியந்தவர் வெருக்கொள, விசும்பின் ஓங்கினான்; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. 17 17. கயம்தரு நறும்புனல் - குளத்திலிருந்து கொண்டுவந்து தாரை வார்த்த நல்ல நீர். பயந்தவர்களும் இகழ் - பெற்றோர் களும் இகழ்கின்ற உருவத்தை யுடைய. எதிர்பார்த்து வியந்தவர் - எதிரில்கண்டு வியப்படைந்தவர்கள். வெருகொள - அச்ச மடையும்படி. விசும்பு - வானம். உயர்ந்தவர்க்கு உதவிய உதவி உவமானம். வாமனர் ஓரடியால் உலகையும், மற்றோர் அடியால் வானையும் அளந்துகொண்டார்; மூன்றாம் அடிக்கு மாபலியையே கொண்டார்; மண்ணையும் விண்ணையும், வானவர்களுக்குக் கொடுத்து விட்டுப் பாற்கடலுக்குப் போய் விட்டார். இதுதான் நான் வேள்வி செய்யும் இடம் என்றான் கோசிகன். பின்னர் அவர்களைக் காவலாக வைத்துவிட்டு வேள்வி புரியத் தொடங்கினான். விசுவாமித்திரன் வேள்வி எண்ணுதற்கு ஆக்கரிது, இரண்டு மூன்றுநாள் விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை, மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர். 18 18. முனிவன் - விசுவாமித்திரன். இரண்டு மூன்று நாள் - ஆறு நாட்கள். விண்ணவர்க்கு ஆக்கிய - தேவர்களுக்காகச் செய்த. எண்ணுதற்கு ஆக்க அரிது வேள்வியை - நினைப்பதற்கும் இயற்றுவதற்கும் அரிதான வேள்வியை.... மைந்தர்கள்.... காத்தனர். இமையின் - இமையைப்போல. காத்தனர் திரிகின்ற காளை வீரரில் மூத்தவன், முழுதுணர் முனியை முன்னி;நீ தீத்தொழில் இயற்றுவர் என்ற தீயவர் ஏத்தரும் குணத்தினாய்! வருவது என்று? என்றான். 19 19. காத்தனர் திரிகின்ற - வேள்வியைக் காத்துச் சுற்றிக் கொண்டிருக்கின்ற. மூத்தவன் - இராமன். முன்னி- அடைந்து. வார்த்தை மாறுஉரைத்திலன் முனிவன் மௌனியாய்ப்; போர்த்தொழில் குமரனும் தொழுது போந்தபின் பார்த்தனன் விசும்பினைப்; பருவ மேகம்போல் ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே. 20 20. பருவமேகம்போல் - கார்கால மேகம்போல் சூழ்ந்து. அசனி அஞ்சவே - இடியும் அஞ்சும்படி. ஆர்த்தனர் இடித்தனர் - ஆரவாரித்து முழங்கினார்கள். அவர்கள் மலைகளைப் பறித்து வீசினர்; பல படைகளை எறிந்தனர்; வேள்வியைச் சிதைக்க முயன்றனர். கவருடை எயிற்றினர், கடித்த வாயினர், துவர்நிறப் பங்கியர், சுழல்கண் தீயினர், `பவர்சடை அந்தணர் பணித்த தீயவர் இவர்,என இலக்குவற்கு இராமன் காட்டினான். 21 21. கவர்உடை எயிற்றினர் - கிளைகள் பொருந்திய பற்களையுடையவர்கள்; கோரப்பற்கள் உள்ளவர்கள். பங்கியர்- தலைமயிரை யுடையவர்கள். சுழல்கண் - சுழல்கின்ற கண்களிலே. பவர்சடை - நெருங்கிய சடையுள்ள. அந்தணன் - விசுவாமித்திரன். பணித்த - உரைத்த. அரக்கர்கள் அழிவு கண்டஅக் குமரனும் கடைக்கண் தீஉக, விண்தனை நோக்கித்,தன் வில்லை நோக்கினான், `அண்டர் நாயக! இனிக் காண்டி ஈண்டுஅவர் துண்டம் வீழ் வன;எனத் தொழுது சொல்லினான். 22 22. அ குமரனும் - அந்த இலக்குவனும். தீ உக - நெருப்புப் பொறி சிந்த. அண்டர் - தேவர்கள். தூமவேல் அரக்கர் தம் நிணமும், சோரியும், ஓமவெம் கனலிடை உகும்,என்று உன்னிஅத், தாமரைக் கண்ணனும் சரங்க ளேகொடு கோமுனி இருக்கைஓர் கூடம் ஆக்கினான். 23 23. தூமம்வேல் - புகைபொருந்திய வேலாயுதத்தை யுடைய. நிணமும் சோரியும் - சதையும் இரத்தமும். ஓமம் வெம்கனல் இடை - ஓம குண்டலத்திலே உள்ள சூடான தீயிலே. கோமுனி இருக்கை - சிறந்த விசுவாமித்திரன் இருந்த இடத்தை. நஞ்சுஅட எழுதலும் நடுங்கி நாள்மதிச் செஞ்சடைக் கடவுளை அடையும் தேவர்போல், வஞ்சனை அரக்கரை வெருவி, மாதவர் `அஞ்சன வண்ண!நின் அபயம் யாம்! என்றார். 24 24. நஞ்சு அட எழுதலும் - ஆலகால நஞ்சு கொல்லு வதற்காகத் தோன்றியவுடன். நாள்மதி - இளம்பிறை. அடையும் - சரணம் அடைந்த. வெம்சின அரக்கரை வெருவி - கொடியசின முள்ள அரக்கர்களைக் கண்டு அஞ்சி. மாதவர் - சிறந்த தவத்தையுடைய முனிவர்கள். இராமன் அவர்களுக்கு அபயம் அளித்தான். இராமன் கணைகளால் அரக்கர்கள் அழிந்தனர்; தாடகையின் மக்களிலே மாரீசன் கடலில் தள்ளப்பட்டான்; சுவாகு கொல்லப்பட்டான். வேள்வி இனிது முடிந்தது. தேவர்களும் முனிவர்களும் வாழ்த்தினர். பின்னர், கோசிகன் `மிதிலை வேந்தன் வேள்வி ஒன்றுண்டு; அதையும் காண்போம் என்று உரைத்து, இராமனையும், இலக்குவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். 9. அகலிகைப் படலம் கோசிகன், இராமன், இலக்குவன் மூவரும் சோணை யாற்றங் கரையைச் சேர்ந்தனர்; கதிரவன் மறைந்தான். கறங்கு தண்புனல் கடிநெடும் தாள்உடைக் கமலத்து அறம்கொள் நாண்மலர்க் கோயில்கள் இதழ்க்கதவு அடைப்பப், பிறங்கு தாமரை வனம்விட்டுப் பெடையொடு களிவண்டு உறங்கு கின்றதோர் நறுமலர்ச் சோலைபுக்கு உறைந்தார். 1 அகலிகைப் படலம்: அகலிகையைப்பற்றி உரைக்கும் பகுதி . அகலிகை - அழகுள்ளவள். 1. கறங்கு தண்புனல் - சுழல்கின்ற குளிர்ந்த நீரை. கடிநெடும் தாள் உடை - காவலாகக் கொண்ட நீண்ட தண்டையுடைய. கமலத்து - தாமரையின். அறம்கொள் - தேனைக்கொடுத்து அறத்தைச் சேர்த்துக்கொள்ளுகின்ற. நாள் - புதிய. பிறங்கு - விளங்குகின்றது. அமுதம் பிறந்த வரலாறு அச்சோலையின் சிறப்பை அறிய விரும்பினான் இராமன், விஞ்சையர் மகள் ஒருத்தி; திருமகளைப் பணிந்தாள்; அவள் அணிந்திருந்த மலர் மாலையைப் பெற்றாள்; அவள் தன்னைப் பணிந்த துர்வாச முனிக்கு அந்த மாலையைக் கொடுத்தாள். முனிவன் அம்மாலை யுடன் இந்திரலோகம் எய்தினான். ஊர்வலமாக வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டான்; உவந்தான்; அம்மாலையை அவனிடம் அளித்தான். தனைஒவ் வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன்கை வனையும் மாலையை நீட்டலும், தோட்டியால் வாங்கித் துனைவலத்து அயிரா வதத்து எருத்திடைத் தொடுத்தான்; பனைசெய் கையினால் பறித்து அடிப்படுத்தது அப்பகடு. 2 2. தனை ஒவ்வாதவன் - தனக்கு யாரும் ஒப்பில்லாதவனாகிய துர்வாச முனிவன். தோட்டியால் - அங்குசத்தால். துனைவலத்து - விரைவும் ஆற்றலும் உடைய. எருத்து - கழுத்து. பனை செய்கை யினால் - பனைமரத்தால் ஆக்கியது போன்ற தும்பிக்கையினால். பகடு - யானை. இந்திரனுடைய யானைக்கு ஐராவதம் என்று பெயர் அது வெண்ணிறமுள்ளது. அதைக்கண்ட துர்வாச முனிவன் அடங்காத சினங் கொண்டான்; அனைவரும் அஞ்சினர். பூத நாயகன், புவிமகள் நாயகன், பொருவில் வேத நாயகன் மார்பகத்து, இனிதுவீற் றிருக்கும் ஆதி நாயகி விருப்புறு தெரியல்கொண்டு அணைந்த மாத ராள்வயின் பெற்றனென், முயன்றமா தவத்தால் 3 3. பூதநாயகன் - ஐந்துபூதங்களுக்கும் தலைவன்; ஐந்து பூதங்கள்; மண், நீர், தீ, காற்று, வானம். விருப்புஉறு - விரும்புகின்ற. தெரியல் - மாலையைக். கொண்டு அணைந்த மாதராள்வயின் கொண்டுவந்த ஒருவித்தியாதரப் பெண்ணிடமிருந்து. `முயன்ற மாதவத்தால் பெற்றனன். இன்று நின்பெரும் செவ்விகண்டு, உவகையின் ஈந்த, மன்றல் அம்தொடை இகழ்ந்தனை! நினதுமா நிதியும் ஒன்ற லாதபல் வளங்களும், உவரிபுக்கு ஒளிப்ப, குன்றி நீதுயர் உறுகென உரைத்தனன் கொடியோன். 4 4. செவ்வி - உலாவின் அழகைக்கண்டு. மன்றல் அம் தொடை - மணம் பொருந்திய அழகிய மாலையை. நினது மாநிதியும் - உன்னுடைய பெரிய நிதிகளும். குன்றி - எல்லா இன்பங்களும் குறைந்து. கொடியோன் - துர்வாசன். (உலா - ஊர்வலம்) அர மடந்தையர், கற்பகம், நவநிதி, அமிர்தச் சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கற்று ஒருபெரும் பொருள் இன்றியே உவரிபுக்கு ஒளிப்ப வெருவி ஓடின கண்ணன்வாழ் வெண்ணெய் மேவாரின். 5 5. கற்பகம் - கற்பகத்தரு. நவநிதி - புதிய செல்வமாகிய சங்கநிதி பதும நிதிகள். அமிர்தசுரபி - காமதேனு. வாம்பரி - தாவுகின்ற குதிரை. மதமலை - மதத்தையுடைய மலைபோன்ற யானை. தொடக்கு அற்று - தொடர் பில்லாமல். வெண்ணெய் வாழ் கண்ணன்மேவாரின் - வெண்ணெய் நல்லூரில் வாழ்கின்ற கண்ணனுடைய பகைவரைப்போல. வெருவி ஓடின - அஞ்சி ஓடின. சடையப்ப வள்ளலுக்குக் கண்ணன் என்ற பெயரும் உண்டுபோலும். வெய்ய மாமுனி வெகுளியால், விண்ணகம் முதலாம் வையம் யாவையும் வறுமைநோய் நலிய, வானவரும், தையல் பாகனும், சதுமுகக் கடவுளும் கூடிச் செய்ய தாமரைத் திருமறு மார்பனைச் சேர்ந்தார். 6 6. வெய்யமாமுனி - துருவாசன். நலிய - துன்புறுத்த. தையல்பாகன் - சிவபெருமான். திருமறுமார்பனை - திருவையும் மறுவையும் அணிந்த மார்பையுடைய திருமாலை. மறு - ஒரு அடையாளம். முனிவன் வெகுளியால் விளைந்ததை விளம்பினர். அஞ்சற்க! மந்திர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொள்ளுங்கள்; பாற்கடலைக் கடையுங்கள் என்றார் திருமால். அவ்வாறே தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். மால் ஆமையாய் நின்று மந்தர மலையின் அடியைத் தாங்கினார். இந்திரனை விட்டு நீங்கிய எல்லாச் செல்வங்களும் வந்தன. அமுதமும் பிறந்தது. திருமால் மோகினி உருவில் வந்தார். அசுரர்கள் அந்த மோகினியை அடைவதில் சண்டையிட்டுக் கொண்டு மடிந்தனர். தேவர்கள் அமுதம் உண்டனர். வெருவும் ஆலமும், பிறையும்,வெள் விடையவற்கு ஈந்து; தருவும் வேறுள தகைமையும், சதமகற்கு அருளி; மருவு பல்பெரும் வளங்களும் வேறுஉற வழங்கித்; திருவும், ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி. 7 7. வெள்விடையவற்கு - வெண்மைநிறமுள்ள காளையை யுடைய சிவபெருமானுக்கு. தருவும் - கற்பகத்தருவும். தகைமையும் - சிறந்த பொருள்களையும். சதமகன் - இந்திரன். வேறுஉற வழங்கி - வெவ்வேறு தேவர்கள் பெறும்படி கொடுத்து. `சீதரமூர்த்தி திருவும் ஆரமும் அணிந்தனன் ஆரம் - கௌத்துப ரத்தின மாலை. அதன்பின், அசுரர்களின் அன்னையாகிய திதி, மகப்பேறு வேண்டித் தவம் புரிந்தாள். அந்த இடந்தான் இது. முருகன் வளர்ந்த சரவணப் பொய்கையும் இங்குதான் இருக்கின்றது என்றான் முனிவன். பின்னர்ப் பொழுது விடிந்தது பகலவன் தோன்றினான். அங்கு நின்றெழுந்து அயன்முதல் மூவரும் அனையார், செங்கண் ஏற்றவன் செறிசடைப் பழுவத்தின் நிறைதேன் பொங்கு கொன்றைஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும் கங்கை என்னும்அக் கரைபொரு திருநதி கண்டார். 8 8. அயன்முதல் மூவர் - பிரம்மா, திருமால், சிவன். செங்கண் ஏற்றவன் - சிவபெருமானுடைய . செறிசடை பழுவத்தின் - நெருங்கிய சடையாகிய காட்டிலிருந்து உதிர்ந்த. நிறை தேன் பொங்கு கொன்றை - மிகுந்த தேனையுடைய கொன்றை மலர் களை. ஈர்த்து ஒழுகலால் – இழுத்துக் கொண்டு வருவதனால். காவிரியைப் பொருவும் - காவிரியாற்றைப் போன்ற. பொன்னிற முள்ளது - பொன்னி. கங்கையின் சிறப்பு இக்கங்கையின் பெருமை யாது? உரைத்தருளவேண்டும் என்றான் இராமன். அதன் மாண்பைக் கோசிகன் கூறினான். அண்ட கோளகைக்கு அப்புறத்து அகிலம் அன்று அளந்த புண்ட ரீகமென் பதத்திடைப் பிறந்து,பூ மகனார் கொண்ட தீர்த்தமாய்ப் பகிரதன் தவத்தினால் கொணர மண்தலத்து வந்து அடைந்ததுஇம் மாநதி மைந்த! 9 9. மைந்த! இம்மாநதி - இச்சிறந்த கங்காநதி. அண்ட கோளகைக்கு - உலக உருண்டைக்கு. அகிலம் அன்று அளந்த - உலகை அன்று ஓரடியால் அளந்த திருமாலின். புண்டரீக மென் பதத்திடை - தாமரை மலர்போன்ற மெல்லிய பாதத்திலே. பூமகனார் - நான்முகன். அரன்கொள - சிவபெருமான் சடையிலே தாங்கிக்கொள்ள. மண்தலத்து - நிலத்தில். சகரர் தம்பொருட்டு அருந்தவம் பெரும்பகல் தள்ளிப், பகிர தன்கொணர்ந் திடுதலால், பகிரதி ஆகி, மகித லத்திடைச் சந்நுவின் செவிவழி வரலால், நிகர்இல், சாநவி, எனப்பெயர் படைத்ததுஇந் நீத்தம். 10 10. பெரும்பகல் அரும்தவம் தள்ளி - பல நாட்களைச் சிறந்ததவத்திலே கழித்து. மகிதலம் - மண்ணுலகம். சந்நுவின் செவிவழி வரலால் - சந்நு முனிவனுடைய காதின் வழியே நுழைந்துவந்ததால். பாகீரதி; சாநவி; என்ற பெயரால் கங்கை வழங்கப்படுவதற்குக் காரணம் கூறியது இச்செய்யுள். இதைக் கேட்டதும் தசரத குமாரர்கள் கங்கையைப் பணிந்தனர். அப்பொழுது விசாலை நகர வேந்தன் வந்து அவர்களை வணங்கிச் சென்றான். பின்னர் மிதிலை நாட்டை மேவினர். அகலிகை வரலாறு இனைய நாட்டினில் இனிதுசென்று, இஞ்சிசூழ் மிதிலை புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்துவந்து இறுத்தார்; மனையின் மாட்சியை அழித்து,இழி, மாதவன் பன்னி கனையும் மேட்டுஉயர் கருங்கல்ஓர் வெள்ளிடைக் கண்டார். 11 11. இனைய நாட்டினை - இத்தகைய விதேக நாட்டை. இனிது சென்று இனிது கடந்து. இஞ்சிசூழ் - மதில் சூழ்ந்த. புனையும் - அலங்கரிக்கும். புரிசையின் - கோட்டை மதிலின். இறுத்தார் - தங்கினார். மனையின் மாட்சியை அழித்து - இல்லறத்திற்குரிய சிறந்த கற்பை அழித்து. இழி - இழிவடைந்த. மாதவன் பன்னி - கௌதம முனிவன் மனைவியாகிய அகலிகை. கனையும் நெருங்கியிருக்கின்ற. கண்ட கல்மிசை காகுத்தன் கழல்துகள் கதுவ, உண்ட பேதமை மயக்கற, வேறுபட்டு உருவம் கொண்டு, மெய்உணர் பவன்கழல் கூடியது ஒப்பப், பண்டை வண்ணமாய் நின்றனள்; மாமுனி பணிப்பான். 12 12. காகுத்தன் - இராமனுடைய. கழல்துகள் - காலின்தூசு. கதுவ பட்டவுடன். உண்ட - உள்ளத்திலே கொண்டுள்ள. பேதையை மயக்குஅற - அறியாமையாகியகலக்கம் நீங்கியபின். வேறுபட்டு - முன்னிருந்த நிலையில் மாறுபட்டு. உருவம்கொண்டு - ஒளி உருக்கொண்டு. அவன் கழல் மெய் உணர்வு கூடியது ஒப்ப - அவ்விறைவன் பாதத்திலே உண்மை அறிவு சென்று சேர்ந்ததைப்போல. பணிப்பான் - சொல்லத் தொடங்கினான். மாயிரு விசும்பின் கங்கை மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த! மேயின உவகை யோடு மின்என ஒதுங்கி நின்றாள், தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்; என்றான். 13 13. கொணர்ந்தோன் மைந்த - கொண்டுவந்த பகீரதன் மரபிலே பிறந்த மைந்தனே. மேயின - பொருந்திய. மின் என - மின்னல்கொடி போல. தீவினை நயந்துசெய்த - துய தொழிலை விரும்பிச் செய்த. அளித்தோன் - கொடுத்தவனாகிய கௌதம முனிவனுடைய. பன்னி - மனைவி. பொன்னைஏர் சடையான்கூறக் கேட்டலும், பூமி கேள்வன் `என்னையே! என்னையே! இவ் வுலகியல் இருந்த வண்ணம்; முன்னைஊழ் வினையி னாலோ? நடுஒன்று முடிந்தது உண்டோ? அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளு கென்றான். 14 14. பொன்னை ஏர் சடையன் - பொன்பேன்ற அழகிய சடையையுடைய விசுவாமித்திரன். பூமிகேள்வன் - நிலமகளின் தலைவன். நடு ஒன்று - மற்றொன்றினாலோ. முடிந்தது. உண்டோ - இவ்வாறு நிகழ்ந்த துண்டோ? இங்ஙன் - இவ்விதம். அடுத்த ஆறு - நிகழ்ந்த காரணத்தை. அவ்வுரை இராமன் கூற, அறிவனும் அவனை நோக்கி, `செவ்வியோய் கேட்டி! மேல்நாள் செறிஅடர்க் குலிசத்து அண்ணல், அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை,அற்றம் நோக்கி, நவ்விபோல் விழியி னாள்தன் வனமுலை நணுகல் உற்றான். 15 15. செறிசுடர் குலிசத்து அண்ணல் - நிறைந்த ஒளியுள்ள வச்சிராயுதத் தையுடைய இந்திரன். அவ்வியம் அவித்த - பொறாமைபோன்ற கெட்ட குணங்களை அழித்த. அற்றம் - இல்லாதசமயம். நவ்விபோல் - மான்போன்ற. தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும் பாய உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒருநாள் உற்ற மையலால் அறிவு நீங்கி, மாமுனிக்கு அற்றம் செய்து, பொய்யிலா உள்ளத் தான்தன் உருவமே கொண்டு புக்கான். 16 16. உய்யலாம் உறுதிநாடி - காமநோயிலிருந்து பிழைக்கும் நன்மையை விரும்பி. உழல்பவன் - அலைந்து கொண்டிருந்த இந்திரன். மாமுனிக்கு அற்றம் செய்து - கௌதமனுக்குப் பிரிந்து செல்லும் சமயத்தை உண்டாக்கி. பொய்யிலா உள்ளத்தான் - கௌதமமுனிவனுடைய. புக்கு அவளோடும் காமப் புதுநல மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனன்; உணர்ந்த பின்னும் தக்கதன்று என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்பத், தாழா முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான். 17 17. புக்கு - முனிவன் உறைவிடத்திலே புகுந்து. புதுநலமது வின் தேறல் - புதிய இன்பமாகிய மதுவின் தெளிவை. ஒக்க உண்டு இருத்தலோடும் - ஒன்றுபட்டு நுகர்ந்திருந்தபோது. உணர்ந்தனள் - அவன் இந்திரன் என்பதை அறிந்தாள். தக்கது அன்று - இது தனக்குத் தகுதியானது என்று. தேறாள் - தெளியாதவளாய். தாழா - குறைவில்லாத. கௌதமரைக் கண்டதும் இந்திரன் ஒரு பூனை உருக்கொண்டு ஓடினான். தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்ய தூயவன், அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால் ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாகென்று ஏயினன்; அவைஎ லாம்வந்து இயைந்தன இமைப்பின் முன்னம். 18 18. விழிதீ சிந்த நோக்கி - கண்களிலிருந்து தீப்பொறி சிந்தும்படி பார்த்து. சொல்லால் - சாபச் சொல்லால். ஏயினன் - சாபம்விட்டான். எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும் நகைவந்து எய்தப் புல்லிய பழியி னோடும் புரந்தரன் போய பின்றை மெல்லிய லாளை நோக்கி`விலைமகள் அனைய நீயும் கல்லியல் ஆதி என்றான்; கருங்கலாய் மருங்கில் வீழ்வாள். 19 19. புல்லிய - பொருந்திய. கல் இயல் ஆதி - கல்லின் தன்மை யுடையவள் ஆகுக. மருங்கில்வீழ்வாள் - அவ்விடத்தில் வீழ்கின்றவள் `பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால் அழல்பெரும் கடவுள் அன்னாய்! முடிவுஇதற்கு அருளு கென்னத் `தழைத்து வண்டு இமிரும் தண்தார்த் தசரத ராமன் என்பான் கழலதுகள் கதவ இந்தக் கல்உருத் தவிர்தி என்றான். 20 20. அழல்பெரும் கடவுள் - தீ வடிவான பெரும் கடவுளான சிவனைப் போன்றவனே. தழைத்து - செழிப்புடையதாய். வண்டு இமிரும் - வண்டுகள் மொய்க்கின்ற. தண்தார் - குளிர்ந்த மலர்மாலையை அணிந்த. இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனிஇந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ! மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே,உன் கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன். 21 21. இவ்வண்ணம் - இதுதான். நிகழ்ந்த வண்ணம் - நடந்த நிகழ்ச்சி யாகும். உலகுக்கு எல்லாம் - உலகத்து உயிர்களுக் கெல்லாம். உய்வண்ணம் அன்றி - பிழைக்கும் தன்மை பிறந்ததே அல்லாமல். துயர் வண்ணம் - துன்புறும் நிலை. உறுவது உண்டோ - வருவதுண்டோ. மழைவண்ணத்து - மேகநிறத்தை யுடைய. அண்ணலே - பெருமையில் சிறந்தவனே. `அங்கு மைவண்ணத்து அரக்கிபோரில் உன்கைவண்ணம் கண்டேன்; இங்குகால் வண்ணம் கண்டேன் கைவண்ணம் - கைத்திறம். கால்வண்ணம் - காலின் திறமை. தீதிலா உதவி செய்த சேவடிக், கரிய செம்மல், கோதிலாக் குணத்தான் சொன்ன பொருள்எலாம் மனத்தில் கொண்டு `மாதவன்அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே? போதுநீ அன்னை, என்று பொன்அடி வணங்கிப் போனாள். 22 22. செம்மல் - இராமன். கோதுஇலா குணத்தான் - குற்றமற்ற குணமுடைய விசுவாமித்திரன். படர் உறாதே-நடந்ததை எண்ணித் துன்புறாதே. அன்னை நீ போது - அன்னையே நீ போவாயாக. பிறகு அவர்கள் கோதமன் உறையுளை உற்றனர். விசுவாமித்திரன், இராம இலக்குவர் களை இன்னார் என்று கோதமனுக்கு அறிமுகப்படுத்தினான். `அஞ்சன வண்ணத் தான்தன் அடித்துகள் கதுவா முன்னம், வஞ்சிபோல் இடையாள், முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்; நெஞ்சினால் பிழைப்பிலாளை, நீஅழைத் திடுக என்ன, கஞ்ச மாமுனிவன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான். 23 23. வஞ்சிபோல் - வஞ்சிக்கொடிபோன்ற. முன்னை வண்ணத்தின் - பழய உருவுடைய வளாய். பிழைப்பு இலாளை - குற்றம் அற்றவளை. நீ அழைத்திடுக - நீ அழைத்துக்கொள் வாயாக. கஞ்சம் - தாமரை மலரிலே வாழும். மாமுனிவன் அன்ன - சிறந்த முனிவனாகிய பிரமனைப் போன்ற. கருத்துள் கொண்டான் - உள்ளத்துள் ஏற்றுக்கொண்டான். குணங்களால் உயர்ந்த வள்ளல், கோதமன் கமலத் தாள்கள் வணங்கினன், வலங்கொண்டு ஏத்தி மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை யீந்து, ஆண்டு அருந்தவ னோடும் வாச மணம்கிளர் சோலைநீங்கி, மணிமதில் கிடக்கை கண்டார். 24 24. வள்ளல் - இராமன். அணங்கினை - தெய்வப்பெண் போன்றவளை அவன் கை ஈந்து - அம்முனிவனிடம் விட்டு. ஆண்டு - அங்கிருந்து. அரும் தவனோடும் - விசுவாமித்திர னோடும் புறப்பட்டு. வாசமணம்கிளர் - மிகுந்த வாசனை வீசுகின்ற. மணி மதில் கிடக்கை - அழகிய மதிலின் நிலையை. 10. மிதிலைக் காட்சிப் படலம் `மையறு மலரின் நீங்கி, யான்செய்மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்; என்று, செழுமணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி, அந்தக் கடிநகர், கமலச் செங்கண் ஐயனை `ஒல்லை வாஎன்று அழைப்பது போன்றது; அம்மா. 1 மிதிலைக் காட்சிப் படலம்: விதேக நாட்டின் தலை நகரான மிதிலை நகரத்தின் காட்சியைக் காணும் பகுதி. 1. மைஅறு மலரின் நீங்கி - குற்றமற்ற செந்தாமரை மலரி லிருந்து பிரிந்து. செய்யவள் - இலக்குமி. கடிநகர் - காவல் பொருந்திய நகரமானது. ஒல்லைவா - விரைந்து வருக. அம்மா; அசை. ஆதரித்து அமுது கோல்தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை யாதுஎனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருத லாலே, திருமகள் இருந்த செய்ய போதுஎனப் பொலிந்து தோன்றும் பொன்மதில் மிதிலை புக்கார். 2 2. ஆதரித்து - அவள் உருவத்தை எழுதவிரும்பி. அமுது கோல் தோய்த்து - அமுதத்திலே எழுதுகோலைத் தோய்த்து எடுத்து. யாது என - எப்படி என்று அறியாமல். செய்யபோது - செந்தாமரைமலர். மிதிலை நகருக்குச் செந்தாமரை மலர் உவமானம். சொற்கலை முனிவன் உண்ட சுடர்மணிக் கடலும், துன்றி அல்கலந்து இலங்கு பன்மீன் அரும்பிய வானும் போல, வில்கலை நுதலி னாரும், மைந்தரும் வெறுத்து நீத்த பொற்கலன் கிடந்த, மாட நெடுந்தெரு அதனில் புக்கார். 3 3. சொல்கலை முனிவன் - தமிழுக்கு இலக்கண நூலை இயற்றிய அகத்திய முனிவன். உண்ட - நீரை உண்டபின் வறண்டுபோன. சுடர்மணிக் கடலும் - ஒளிபொருந்திய மணிகள் காணப்படுகின்ற கடலைப்போலவும். துன்றி அல்கலந்து - நிறைந்த இரவிலே பொருந்தி. இலங்கு பன்மீன் அரும்பிய - விளங்குகின்ற நட்சத்திரங்கள் தோன்றியிருக்கின்ற. வில்கலை - ஒளிவீசும் ஆடைகளை அணிந்த. கலன் - ஆபரணங்கள். அவர்கள் நகரின் பல காட்சிகளையும் கண்டனர். அரசனுடைய கோயிலையும், அதைச் சுற்றிய மதிலையும், அகழியையும் பார்த்தனர். மேலும் நடந்து சென்று நாடக அரங்கின் காட்சி ஒன்றைக் கண்டனர். நெய்திரள் நரம்பில் தந்த, மழலையின் நிறைந்த பாடல் தைவரு மகர வீணை தண்உமை தழுவித் தூங்கக், கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார். 4 4. நெய்திரள் நரம்பின் தந்த - நெய்பூசிய திரண்ட நரம்பினையுடைய யாழோசைபோல் பாடப்பட்ட. மழலையின் நிறைந்த பாடல் - மழலைமொழி போல் இனிமை நிறைந்த பாடலும். தைவரும் மகரவீணை - தடவப்படும் மகரவீணையின் இசையும். தண் உமை - மத்தள ஒலியும். தழுவித்தூங்க - ஒன்றோடு ஒன்று இணைந்து நடக்க. ஐயம் நுண் இடையார் - உண்டோ இன்றோ என ஐயப்படும் சிறிய இடையுள்ள மகளிர். மகரவீணை - சுறாமீன் உருவில் உள்ள வீணை. பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப் பொங்க, மாசறு பிறவி போல வருவது போவ தாகி, காசறு பவளச் செங்காய் மரகதக் கமுகு பூண்ட ஊசலில், மகளிர் மைந்தர் சிந்தையோடு உலவக் கண்டார். 5 5. பூசலின் - ஆரவாரத்தினால். பொங்க - ஓசையிட. மாசுஅறு - குற்றம் அற்ற. காசுஅறு - குற்றமற்ற. மரகதம் - பசுமை. கமுகுபூண்ட - பாக்குமரத்தில் கட்டிய. வரப்புஅறு மணியும், பொன்னும், ஆரமும், கவரி வாலும், சுரத்திடை அகிலும், மஞ்ஞைத் தோகையும், தும்பிக் கொம்பும், குரப்புஅணை நிரப்பும் மள்ளர் குவிப்புறக், கரைகள் தோறும் பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார். 6 6. வரப்புஅறு; வரம்புஅறு - அளவற்ற. ஆரமும்- சந்தனமும். கவரி - கவரிமான். சுரத்திடை - பாலைநிலத்தில் உள்ள. மஞ்ஞை - மயில். தும்பிக் கொம்பும் - யானைத் தந்தமும். குரப்பு ஆணை மள்ளர் - உழவர். பொன்னி - காவிரி. ஆவணம் - கடைவீதி. கடை வீதிக்குக் காவிரிக்கரை உவமை. வள்உகிர்த் தடக்கை நோவ மாடகம் பற்றி, வார்ந்த கள்என நரம்பு வீக்கிக், கையொடு மனமும் கூட்டி, வெள்ளிய முறுவல் தோன்ற, விருந்தென மகளிர் ஈந்த தெள்விளிப் பாணித் தீம்தேன் செவிமடுத்து இனிது சென்றார். 7 7. வள்உகிர் - கூர்மையான நகத்தையுடைய. மாடகம் - யாழ். வார்ந்த - ஒழுகிய. வீக்கி - இழுத்து. தெள்விளிப்பாணி - இசையாகிய. வாள்அரம் பொருத வேலும், மன்மதன் சிலையும் வண்டின் கேளொடு கிடந்த நீலச் சுருளும்,செங் கிடையும் கொண்டு நீள்இரும் களங்கம் நீக்கி நிரைமணி மாடம் நெற்றிச் சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார். 8 8. வாள் - கூர்மை. வண்டின் கேளொடு - வண்டுக்கூட்டத் துடன். நீலச்சுருள் - நீலநிறமுள்ள சுருண்ட கூந்தல். நீள்இரும் - நீண்டபெரிய. களங்கம் - கறை. மாதர்முகம் சந்திரனுக்கு உவமை. வேல் கண்ணுக்கும் சிலை புருவத்துக்கும், கிடை, உதட்டுக்கும் உவமைகள். காதலர் காட்சி பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிபூவின் தென்உன் தேனின் தீம்சுவை செஞ்சொல் கவியின்பம், கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களிபேடோடு அன்னம் ஆடும் முன்துறை கண்டங்கு அயல்நின்றாள். 9 9. `களிபேடோடு அன்னம் ஆடும் முன்துறை, கன்னிமாடத்து உம்பரின் மாடே, தென் உண்தேறல் தீஞ்சுவை, செம்சொல்கவி இன்பம், பொன்னின்சோதி, போதினின் நாற்றம் பொலிவேபோல் கண்டு அங்கு அயல் நின்றார், முன்துறை - சிறந்த நீர்த்துறைக்கு அருகிலே. உம்பரின் மாடு - மேலிடத்தில். தென் - வண்டுகள். நாற்றம் பொலிவேபோல் - மணத்தையும் தோற்றத்தையும்போல காணப்பட்ட. கண்டு - சீதாதேவியைக் கண்டு. சுவை, கவியின்பம், சோதி, மணம், தோற்றம், இவைகள் சீதைக்கு உவமை. செப்பும் காலைச் செங்கம லத்தோன் முதல்யாரும் எப்பெண் பாலும் கொண்டுஉவ மிப்போர் உவமிக்கும் அப்பெண்தானே ஆயின போது,இங்கு, அயல்வேறுஓர் ஒப்பு எங்கேகொண்டு எவ்வகை நாடி, உரைசெய்வேம்? 10 10. எப் பெண்பாலும் - எந்தப் பெண்பாலுக்கும். கொண்டு - உவமை யாகக்கொண்டு. அப்பெண்தானே - அந்தப் பெண்ணாகிய இலக்குமியே. ஆயினபோது - சீதை வடிவானபோது. உமையாள் ஒக்கும் மங்கையர், உச்சிக் கரம்வைத்தே கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணார்; இமையா நாட்டம் பெற்றிலம் என்றார்; இருகண்ணால் அமையா தென்றார் அந்தர வானத் தவர்எல்லாம். 11 11. கமையாள் - பொறுமை முதலிய நற்பண்புகளை யுடை யவள். மேனி கண்டவர் - உடலழகைக்கண்டு இவ்வுலகினர். காட்சி - அழகு. அமையாது - பார்த்து முடியாது. தம்நேர் இல்லா மங்கையர் செங்கைத் தளிர்மானே! அன்னே! தேனே! ஆரமிழ் தே! என்றுஅடிபோற்றி முன்னே முன்னே மொய்ம்மலர் தூவி, முறைசாரப் பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். 12 12. மொய் மலர்தூவி - நிறைந்த மலர்களை இறைத்து. முறைசார - முறையேவர. பொன்னே சூழும் - பொன்னிறமுள்ள மகரந்தப்பொடிகள் நிறைந்த. பூவின் ஒதுங்கி - மலர்களின்மேல் நடந்து. இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே மழைபொரு கண்இணை மடந்தை மாரொடும் பழகியது எனினும்இப் பாவை தோன்றலால், அழகெனும் அழகும்ஓர் அழகு பெற்றதே 13 13. இழைகள் - கழுத்தில் அணிவன. குழைகள் - காதில் அணிவன. `அழகு எனும் அழகும் இப்பாவை தோன்றலால் ஓர் அழகு பெற்றது. எண்அரு நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றைஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 14 14. நலத்தினாள் - அழகினையுடையவள். இனையள் - இவ்வாறாக. கண்ணொடு - ஒருவர் கண்களோடு. கண்இணை - மற்றொருவர் கண்கள். கவ்வி - ஒன்றுபட்டு. ஒன்றை ஒன்று உண்ணவும் - ஒன்றை ஒன்று அனுபவிக்கவும். உணர்வும் நிலை பெறாது ஒன்றி - இருவர் உணர்ச்சியும் தனித்து நிற்காமல் ஒன்றுபட. அண்ணல் - இராமன். அவள் - சீதை. நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல்இணை, ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன; வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும், தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. 15 15. நோக்கிய - சீதைபார்த்த. நோக்கு எனும் - பார்வை என்னும். நுதிகொள் - கூர்மை பொருந்திய. ஆக்கிய - சிறந்த. மதுகையான் - வலிமையுள்ள இராமனது. தாக்கு அணங்கு அனையவள் - மோகினி போன்றவளின். மோகினி; அழகால் ஆடவரை மயக்கித் துன்புறுத்தும் ஒரு தெய்வம். பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து, ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால், வரிசிலை அண்ணலும், வாள்கண் நங்கையும், இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார். 16 16. பருகிய - ஒருவரை ஒருவர் விழுங்கிய. பாசத்தால் - கயிற்றால்; அன்பால். இதயம் மாறி புக்கு - ஒருவர் உள்ளத்திலே மற்றொருவர் மாறிப் புகுந்து. எய்தினார் - சேர்ந்தார். மருங்கிலா நங்கையும், வசைஇல் ஐயனும் ஒருங்கிய இரண்டுஉடற்கு உயிர்ஒன்று ஆயினார்; கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? 17 17. மருங்கு - இடை. வசை - குற்றம். ஒருங்கிய - ஒன்றுபட்ட. கலவி நீங்கிப்போய் பிரிந்தவர் - ஒன்று சேர்ந்ததைவிட்டுப் பிரிந்துபோனவர்கள். கூடினால் - மீண்டும் ஒன்றுபட்டால். அந்தம்இல் நோக்குஇமை அணைகி லாமையால் பைந்தொடி ஓவியப் பாவை போன்றனள்; சிந்தையும், நிறையும்,மெய் ந்நலனும் பின்செல, மைந்தனும் முனியொடு மறையப் போயினான். 18 18. அந்தம்இல் - முடிவில்லாத. சிந்தையும் - சீதையின் எண்ணமும். நிறையும் - மனஉறுதியும். மெய்நலனும் - உடல் அழகும். பின்செல - தன் பின்னேவர. நோம்; உறும் நோய்நிலை நுவல கிற்றிலள்; ஊமனின் மனத்திடை உன்னி விம்மினாள்; காமனும் ஒருசரம் கருத்தில் எய்தனன் வேம்எரி அதனிடை விறகிட்டு என்னவே. 19 19. நோம் - வருந்துவாள். உறும் நோய் நிலை - தன்னை யடைந்த நோயின் நிலையை. வேம் எரி அதனிடை - எரிகின்ற நெருப்பிலே. தழங்கிய கலைகளும், நிறையும், சங்கமும் மழுங்கிய உள்ளமும், அறிவும், மாயையும் இழந்தவள், இமையவர் கடைய யாவையும் வழங்கிய கடல்என வறியள் ஆயினாள். 20 20. தழங்கிய கலைகளும் - ஒலிக்கின்ற மேகலாபரணங் களையும். சங்கமும் - சங்க வளையல்களையும். அழுங்கிய - வருந்திய. மாமையும் - அழகிய நிறத்தையும். சீதையின் காதல் நோய் கம்பம்இல் கொடுமனக் காம வேடன்கை அம்பொடு சோர்வதுஓர் மயிலும் அன்னவள், வெம்புறு மனத்தனல் வெதுப்ப மென்மலர்க் கொம்பென அமளியில் குழைந்து சாய்ந்தனள். 21 21. கம்பம் இல் - நடுக்கம் இல்லாத. அம்பொடு - அம்பினால். வெம்புறு - வேதனை அடைகின்ற. கொம்பு என - கிளையைப் போல. குழைந்து - துவண்டு. தாதியர் செவிலியர், தாயர், தவ்வையர், மாதுயர் உழந்துழந்து அழுகி மாழ்கினர்; யாதுகொல் இதுவென எண்ணல் தேற்றலர்; போதுடன் அயினிநீர் சுழற்றிப் போற்றினர். 22 22. தவ்வையர் - மூத்தவர்களான தோழிமார்கள். அழுங்கி மாழ்கினர் - வருந்திக் கலங்கினர். எண்ணல் தேற்றலர் - எண்ணித் தெளியமுடியாத வராயினர். போதுடன் - மலர்களுடன். அயினி நீர் - ஆலத்தி நீர். சுழற்றி - சுற்றி எடுத்து. போற்றினர் - தெய்வங் களை வணங்கினர். கண்ணெச்சில் கழித்தனர்; திருஷ்டிகழித்தனர். `அல்வினை வகுத்ததோர் அலங்கல் காடுஎனும்; `வல்எழு அல்லவேல் மரகதப் பெரும் கல்எனும் இருபுயம்; `கமலம் கண்எனும்; `வில்லொடும் இழிந்ததோர் மேகம் என்னும்;ஆல். 23 23. வல் எழு - வலிய இரும்புத்தூண். மரகதம் - பசுமையான. பெரும் கல் - பெரியமலை. இழிந்தது ஓர் - கீழே இறங்கி வந்த ஒரு. ஆல்; அசை. நெருக்கிஉள் புகுந்து,அரு நிறையும், பெண்மையும் உருக்கிஎன் உயிரொடும் உண்டு போனவன், பொருப்புஉறழ் தோள்புணர் புண்ணி யத்தது, கருப்புவில் அன்று;அவன் காமன் அல்லனே. 24 24. உள் நெருங்கி புகுந்து - என் உள்ளத்தில் நெருக்கிக் கொண்டு நுழைந்து. பொருப்பு உறழ் - மலையைப்போன்ற. தனு - வில்லானது. கருப்புவில் அன்று - கரும்புவில் அன்று. பெண்வழி நலனொடும், பிறந்த நாணொடும், எண்வழி உணர்வும்நான் எங்கும் காண்கிலென்; மண்வழி நடந்தடி வருந்தப் போனவன் கண்வழி நுழையும்ஓர் கள்வனே கொல்;ஆம். 25 25. பெண் வழி நலனொடும் - பெண்ணிடம் இயற்கையாக உள்ள அழகையும். பிறந்த நாணோடும் - அவர்களுடன் பிறந்த நாணத்தையும். எண்வழி உணர்வும் - எண்ணும் தன்மையுள்ள அறிவையும். இந்திர நீலம்ஒத்து இருண்ட குஞ்சியும், சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும், சுந்தர மணிவரைத் தோளு மேஅல, முந்திஎன் உயிரைஅம் முறுவல் உண்டதே. 26 26. இந்திர நீலம் ஒத்து - இந்திரநீல மாணியைப்போன்ற. குஞ்சியும் - தலைமயிரும். சுந்தர மணிவரை - அழகிய இரத்தின மலைபோன்ற. முறுவல் - புன்சிரிப்பு. படர்ந்தொளி பரந்துயிர் பருகும் ஆகமும், தடம்தரு தாமரைத் தாளு மேஅல, கடம்தரு மாமதக் களிநல் யானைபோல் நடந்தது கிடந்ததுஎன் உள்ளம் நண்ணியே. 27 27. படர்ந்து - அகலமாகி. உயிர்பருகும் - உயிரை உண்ணும். ஆகமும் - மார்பும். தடம்தரு - குளத்திலேபூத்த. கடம்தரு - மதநீரைச் சிந்துகின்ற. மாமதக்களி - சிறந்த வலிமைச் செருக்குடைய. நடந்தது - நடந்து சென்ற காட்சியே, என் உள்ளம் நண்ணிக்கிடந்தது. உரைசெயின், தேவர்தம் உலகு ளான்அலன் விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்; வரிசிலைத் தடக்கையன்; மார்பின் நூலினன்; அரசிளம் குமரனே ஆகல் வேண்டுமால். 28 28. உரைசெயின் - அவனை இன்னான் என்று சொல்லத் தொடங்கினால். விரைசெறி - மணம் நிறைந்த. தாமரை - தாமரைபோன்ற கண்கள். மெய்மையால் - உண்மையினால். அந்தி மாலை கண்டு அகம் நோதல் விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும், எரிநிறச் செக்கரும், இருளும் காட்டலால், அரியவட்கு அனல்தரும் அந்தி மாலையாம் கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான். 29 29. விரிமலர் - விரிந்த மலர் மணத்தோடு கூடிய. செக்கரும் - செவ்வானமும். அரியவட்கு - சிறந்தவளாகிய சீதைக்கு. அனல்தரும் - காமத்தீயை வளர்க்கும். அந்திமாலைஅம் - அந்திப் பொழுதாகிய.. வேறு கயங்கள் என்னும் கனல்தோய்ந்து, கடிநாள் மலரின் விடம்பூசி, இயங்கு தென்றல், மன்மதவேள் எய்த புண்ணின் இடைநுழைய; உயங்கும் உணர்வும், நன்னலமும் உருகிச் சோர்வாள்; உயிர்உண்ண வயங்கு மாலை வரல்நோக்கி, இதுவோ கூற்றின் வடிவென்றாள். 30 30. கயங்கள் - தடாகங்கள். தோய்ந்து - படிந்து. கடிநாள் - மணமுள்ள புதிய. உயங்கும் - வருந்துகின்ற. உணர்வும் - அறிவும். நல்நலமும் - நல்ல அழகும். வயங்கு - விளங்குகின்ற. கூற்றின் - எமனுடைய. இருளின் தோற்றம் ஆலம் உலகில் பரந்ததுவோ! ஆழி கிளர்ந்த தோ! அவர்தம் நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பிய தோ! காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து, காயத்தின் மேலும், நிலத்தும் மெழுகியதோ! விளங்கும் இருளாய் விளைந்ததுவே. 31 31. ஆலம் - நஞ்சு. ஆழி - கருங்கடல். கிளர்ந்ததோ - பொங்கி வந்ததோ. அஞ்சனத்தில் - மையில். குழைத்து - குழப்பி. நிலவு கண்டு நிலைதளர்தல் வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள்எல்லாம் உண்ண எண்ணித் தண்மதியத்து உதயத் தெழுந்த நிலாக்கற்றை மண்ணும் விண்ணும் திசைஅனைத்தும் விழுங்கிக் கொண்ட; விரிநன்னீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன் புகழ்போல் எங்கும் பரந்துளதால். 32 32. வண்ணம் மாலை கை பரப்பி - மங்கல் நிறமுள்ள மாலைக்காலமாகிய கையை விரித்து. மதியத்து உதயத்து எழுந்த - சந்திரன் தோற்றத்திலிருந்து புறப்பட்ட. நிலாக்கற்றை - நிலவின் தொகுதி. பண்ணை - வயல்களையுடைய. ஆல் - அசை. சடையன் புகழ் நிலாவுக்கு உவமை. விரைசெய் கமலப் பெரும்போது விரும்பிப் புகுந்த திருவினொடும் குரைசெய் வண்டின் குழாம்இரியக் கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்; உரைசெய் திகிரி தனைஉருட்டி, ஒருகோல் ஓச்சி உலகாண்ட அரசன் ஒதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்றது அரக்காம்பல். 33 33. குரைசெய் - ஒலிக்கின்ற. இரிய - நீங்க. கூம்பி - இதழ்கள் குவிந்து சாம்பி - வாட்டமடைந்து. குவிந்து உளது - மூடிக்கொண்டது. திகிரிதனை உருட்டி - ஆணைச்சக்கரத்தை நடத்தி. ஒருகோல் ஓச்சி - ஒப்பற்ற செங்கோல் செலுத்தி. ஒதுங்க - மறைந்தவுடன். குறும்பு - குறுநில மன்னர். அரக்காம்பல் - செவ்வல்லி மலர்கள். தாமரை பேரரசனுக்கும், செவ்வல்லி சிற்றரசர்களுக்கும் உவமை. ஆல்; அசை. நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக்கதிர் தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்; சேக்கை யாகி மலர்ந்த செந்தாமரைப் பூக்கள் பட்டதுஅப் பூவையும் பட்டனள். 34 34. நீக்கம் இன்றி நிமிர்ந்த - எங்கும்பரந்த. சரிந்தனள் - விழுந்தாள். பூக்கள்பட்டது - மலர்கள் அடைந்த வாட்டத்தை. பூவையும் - கிளி போன்றவளும். வாச மென்கல வைகளி, வாரிமேல் பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்; வீச வீச வெதும்பினள் மென்முலை; ஆசை நோய்க்கும ருந்தும்உண் டாம்கொலோ? 35 35. மென்முலை - சீதை. கலவைக்களி - சந்தனக் குழம்பை. புலர்ந்து புழுங்கினள் - உடல் காய்ந்து வெந்தாள். உண்டு ஆம்கொல் - உண்டோ. ஓ; அசை. 11. கைக்கிளைப் படலம் இராமன் காதல் ஏகி மன்னனைக் கண்டுஎதிர் கொண்டுஅவன் ஓகையோடும் இனிதுகொண்டு உய்த்திட, போக பூமியில் பொன்னகர் அன்னதுஓர் மாக மாடத்து அனைவரும் வைகினார். 1 கைக்கிளைப்படலம்: தனித்திருந்து காதலால் வருந்து வதைக் கூறும் பகுதி. 1. ஓசை - மகிழ்ச்சி. உய்த்திட - அனுப்பிவைக்க. போக பூமியில். சுவர்க்கத்தைப் போன்றதும். பொன்னகர் அன்னது - தேவலோகம் போன்றதுமான. மாகம் - உயர்ந்த. முனியும் தம்பியும் போய்,முறை யால்தமக்கு இனிய பள்ளிகள் எய்தினர்; பின்இருள் கனியும் போல்பவன், கங்குலும், திங்களும் தனியும் தானும்அத் தையலும் ஆயினான். 2 2. முனியும் தம்பியும் - விசுவாமித்திரனும் இலக்குவனும். பள்ளிகள் - படுக்கைகளை. இருள்கனியும் போல்பவன் - கரிய கனியைப்போன்றவனாகிய இராமன். தையல் - சீதை. வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும் வெள்ளப் பாற்கடல் போல்மிளிர் கண்ணினாள், அள்ளல் பூமகள் ஆகுங்கொல் ஓ! எனது உள்ளத் தாமரை உள்உறை கின்றதே. 3 3. வள்ளல் சேக்கை - வள்ளல்தன்மை பொருந்திய ஆதிசேடனாகிய படுக்கையைக்கொண்ட. கரியவன் வைகுறும் - திருமால் வாழும். மிளிர் - விளங்குகின்ற. எனது உள்ளத் தாமரையுள்; உறைகின்றதே - உறைகின்ற காரணத்தால். அள்ளல் - சேற்றிலே தோன்றிய. பூமகள் ஆகுங்கொல் - தாமரை மலரில் வாழும் இலக்குமி ஆவாளோ? ஓ; அசை. கன்னல் வார்சிலைக் கால்வளைத் தேமதன் பொன்னை முன்னிய பூங்கணை மாரியால், என்னை எய்து தொலைக்கும் என்றால்,இனி வன்மை என்னும்இது ஆரிடை வைகுமே? 4 4. கன்னல் வார்சிலைக் கால் - கரும்பால் ஆகிய நீண்ட வில் தண்டை. மதன் - மன்மதன். பொன்னை முன்னிய - இலக்குமி யாகிய அவளை முன்னிட்டு. தொலைக்கும் - என் உறுதியை அழிக்கும். ஆர்இடை - யாரிடம். ஏகும் நல்வழி; அல்வழி என்மனம் ஆகுமோ; இதற்கு ஆகிய காரணம், பாகு போல்மொழிப் பைந்தொடி, கன்னியே ஆகும்; வேறிதற்கு ஐயுற வில்லையே! 5 5. நல்வழி ஏகும் - என் உள்ளம் நல்லவழியில்தான் செல்லும். அல்வழி - தீ நெறியிலே. ஆகுமோ - செல்லுமோ? ஆகிய - உண்டான. பாகுபோல் - சர்க்கரைப்பாகுபோன்ற. இவ்வாறு இராமன் வருந்தும்போது சந்திரனும் மறைந்தான்; இராமன் சிறிதுநேரம் உறங்கினான்; பொழுதும் விடிந்தது. ததையும்மலர்த் தார்அண்ணல் இவ்வண்ணம் மயல்உழந்து தளரும் வேலை, சிதையும்மனத்து இடர் உடைய, செங்கமலம் முகம்மலரச் செய்ய வெய்யோன், புதைஇருளின் எழுகின்ற புகர்முகயா னையின் உரிவைப் போர்வை போர்த்த உதயகிரி எனும்கடவுள் நுதல்கிழித்த விழியேபோல் உதயம் செய்தான். 6 6. ததையும் - நெருங்கியிருக்கும். மயல் உழந்து - காம மயக்கத்தால் வருந்தி. தளரும்வேலை - சோர்வடையும் பொழுது. சிதையும் மனத்து - நிலைகுலைந்த நெஞ்சத்திலே. இடர்உடைய - துன்பமுள்ள. செங்கமலம் முகம் மலர - செந்தாமரைகளாகிய மனைவிமார்களின் முகம் மலரும்படி. புதை இருளின் எழுகின்ற - நிறைந்த இருளைப்போல் எழுந்த. புகர்முகயானையின் உரிவை - புள்ளிகள் பொருந்திய யானையின் தோலை. போர்வை போர்த்த - போர்வையாகப் போர்த்திய. உதயகிரி எனும் கடவுள் - உதயகிரி என்னும் சிவபெருமானுடைய. நுதல் கிழித்தவழியே - நெற்றியைப் பிளந்து கொண்டு எழுந்த நெருப்புக் கண்ணைப் போல. செய்ய வெய்யோன் உதயம் செய்தான். சிவபிரான் போன்றது உதயகிரி. அதன்மேல் உதித்த சூரியன், சிவபிரானுடைய நெற்றிக் கண்ணைப்போன்றது. கொல்ஆழி நீத்துஅங்கோர் குனிவயிரச் சிலைதடக்கைக் கொண்ட கொண்டல், எல்ஆழித் தேர்இரவி இளம்கரத்தால் அடிவருடி அனந்தல் தீர்ப்ப, அல்ஆழிக் கரைகண்டான், ஆயிரவாய் மணிவிளக்கம் அழலும் சேக்கைத் தொல்ஆழித் துயிலாதே துயர்ஆழி இடைக்கிடந்து துயில்கின் றானே. 7 7. கொல்ஆழி நீத்து - கொல்லும் சக்கராயுதத்தை நீக்கி விட்டு. குனி - வளைகின்ற. கொண்டல் - மேகநிறத்தன. எல் ஆழிதேர் இரவி - ஒளி பொருந்திய சக்கரம் அமைந்த தேரையுடைய சூரியன். அனந்தல் - தூக்கத்தை ஆயிரம்வாய் மணிவிளக்கம் - ஆதிசேடனுடைய ஆயிரம் வாய்களிலும் உள்ள. மணிவிளக்கம் - இரத்தினங்களாகிய விளக்குகள். அழலும் - ஒளி வீசுகின்ற. சேக்கை - படுக்கையிலே. துயில்கின்றான்ஏ - தூங்கு கின்றவன். அல் ஆழிக்கரை கண்டான் - இரவாகிய கடலின் கரையைக் கண்டான். ஏ - அசை. ஊழிபெயர்ந் தெனக்கங்குல் ஒருவண்ணம் புடைபெயர, உறக்கம் நீத்த சூழியா னையின்எழுந்து, தொல்நியமத் துறைமுடித்துச், சுருதி அன்ன வாழிமா தவன்பணிந்து, மனக்கினிய தம்பியொடும், வம்பின் மாலை தாழும்மா மணிமௌலிச் சனகன்உறை பெருவேள்விச் சாலை சார்ந்தான். 8 8. புடைபெயர - தன் நிலையை விட்டு நீங்க. சூழியானை யின் - முகபடாத்தை யுடைய யானையைப்போல. நியமத்துறை முடித்து - நாட்கடன்களைச் செய்துமுடித்து. (நாள்கடன்கள் - நித்தியகர்மானுஷ் டானங்கள்) வம்பின் மாலைதாழும் - மணம்பொருந்திய மாலை தொங்கும். மாணி மௌலி - சிறந்த இரத்தினங்கள் வைத்திழைத்த முடியை அணிந்த. சனகன் புரிந்த வேள்வி முடிந்தது; அவன் அரசவையை அடைந்து அமர்ந்தான்; கோசிகனும் குமரர் களுடன் வீற்றிருந்தான். 12. குலமுறை கிளத்துப் படலம் இருந்தகுலக் குமரர்தமை இருகண்ணும் முகத்தழகு பருக நோக்கி, அருந்தவனை அடிவணங்கி `யாரைஇவர் உரைத்திடுமின் அடிகள் என்ன, `விருந்தினர்கள்; நின்னுடைய வேள்விகா ணியவந்தார்; வில்லும் காண்பார்; பெரும்தகைமைத் தசரதன்தன் புதல்வர்;என அவர்தகைமை பேசல் உற்றான். 1 குலமுறை கிளத்துப் படலம்: சூரிய குலத்தின் வரலாற்றைக் கூறுகின்ற பகுதி. 1. இருகண்ணும் - தனது இருகண்களும். முகத்து அழகு பருக - அவர்களுடைய முகத்தின் அழகை உண்ணும்படி. அவர் தகையை - அந்த இராம இலக்குவர்களின் பெருமையை. ஆதித்தன் குலமுதல்வன் மனுவினையார் அறியாதார்? பேதித்த உயிர்அனைத்தும் பெரும்பசியால் வருந்தாமல் சோதித்தன் வரிசிலையால் நிலமடந்தை முலைசுரப்ப சாதித்த பெருந்தகையும் இவர்குலத்துஓர் தராபதிகாண். 2 2. ஆதித்தன் குலமுதல்வன் - சூரிய குலத்தின் தலை வனாகிய; ஆதித்தன் என்னும் சோழனுடைய குலத்தலைவன்; என்றும் பொருள் உரைப்பர். பேதித்த - பலவேறு வகைப்பட்ட. சாதித்த - செய்த. பெருந்தகை - சிறப்புள்ளவனாகிய பிருது என்னும் மன்னனும். பிணிஅரங்க, வினைஅகல, பெரும்காலம் தவம்பேணி, மணிஅரங்கு நெடுமுடியாய்! மலர்அயனே வழிபட்ட பணிஅரங்கப் பெரும்பாயல் பரம்சுடரை யாம்காண, அணிஅரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார். 3 3. பிணி அரங்க - உலக பாசம் ஒழிய. வினை அகல - நல்வினை தீவினைகள் நீங்க. மணி அரங்கு - மணிகள் பதித்த. பணி - பாம்பு; ஆதிசேடன். அணி அரங்கம் - அழகிய அரங்கத்திலே. அரங்கம் - ஆற்றலின் இடையில் உள்ள திட்டு. திருமாலை அரங்கத்தில் எழுந்தருளச் செய்தவன் இட்சுவாகு மன்னன். இன்உயிர்க்கும் இன்உயிராய் இருநிலம்காத் தார்என்று பொன்உயிர்க்கும் கழலவரை யாம்போலும் புகழ்கிற்பாம்; மின்உயிர்க்கும் நெடுவேலாய்! இவர்குலத்தோன் மென்புறவின் மன்உயிர்க்குத் தன்உயிரை மாறாக வழங்கினன்ஆல். 4 4. பொன் உயிர்க்கும் - பொன் ஒளிவீசும். யாம்போலும் புகழ்கிற்பாம் – எம்போன்றவர் களாலா புகழமுடியும்? புறவின் - புறாவின். மாறாக - பதிலாக. புறவுக்காக உயிர்கொடுத்தோன் சிபிச்சக்கரவர்த்தி. இவன் சிபிச் சோழன் என்றும் கூறப்படுவான். தூநின்ற சுடர்வேலாய்! அனந்தனுக்கும் சொலற்குஅரிதேல் யான்இன்று புகழ்ந்துஉரைத்தற்கு எளிதோஏடு அவிழ்கொன்றைப் பூநின்ற மவுலியையும் புக்குஅளைந்த புனல்நங்கை வான்நின்று கொணர்ந்தானும் இவர்குலுத்துஓர் மன்னவன்காண்! 5 5. தூநின்ற - நிணம்பொருந்திய. ஏடு அவிழ் - இதழ் விரிந்த. மவுலியையும் – சடை முடியையும். புக்கு அளைந்த - புகுந்து துழாவிய. புனல் கங்கை - புனலாகிய கங்கையை. கங்கையைக் கொண்டு வந்தவன் பகீரதன். `அயன்புதல்வன் தசரதனை அறியாதார் இல்லை,அவன் பயந்தகுலக் குமரர்;இவர் தமக்குள்ள பரிசெல்லாம் நயந்துரைத்துக் கரையேறல் நான்முகற்கும் அறிதாம்;பல் இயம்துவைத்த கடைத்தலையாய்! .ன்அறிந்த படிகேளாய்! 6 6. அயன் புதல்வன் - அஜமகாராஜனுடைய புதல்வன். குலக்குமரர் - சிறந்த குமாரர்கள். உள்ள பரிசு எல்லாம் - உள்ள பெருமை முழுவதையும். நயந்து - விரும்பிக்கூறி. கரைஏறல் - முடிவுகாண்பது. பல் இயம் - பல வகையான வாத்தியங்கள். துவைத்த - முழங்குகின்ற. `துனியின்றி உயிர்களிப்பச் சுடர்ஆழிப் படைவெய்யோன் பனிவென்ற படிஎன்னப் பகைவென்று படிகாப்போன்; தனுஅன்றித் துணையில்லான்; தருமத்தின் கவசத்தான்; மனுவென்ற நீதியான்; மகவின்றி வருந்துவான். 7 7. துனியின்றி உயிர்செல்ல - துன்பமில்லாமல் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வாழும்படி. ஆழிப்படை வெய்யோன் - சக்கரப்படை போன்ற கதிரவன். படி - பூமி. மனுவென்ற நீதியான - மனுதர்மத்தையும் வென்று சிறந்த நீதியை யுடைய தசரதன். அவன், கலைக்கோட்டு முனிவன் உதவியால் புத்திர காமேட்டி யாகம் புரிந்து புதல்வர்களைப் பெற்றான். விரிந்திடுதீ வினைசெய்த வெவ்வியதீ வினையாலும், அரும்கடையில் மறைஅறைந்த அறம்செய்த தவத்தாலும், இரும்கடகக் கரதலத்து இவ் எழுதரிய திருமேனிக் கரும்கடலைச் செங்கனிவாய்க் கவுசலைஎன் பாள்பயந்தாள். 8 8. விரிந்திடு தீவினை செய்த - பரவியிருக்கின்ற பாவமானது புரிந்த. வெவ்விய தீவினையாலும் - கொடிய தீமையாலும். அரும் கடைஇல் - சிறந்த முடிவற்ற. மறை அறைந்த - வேதங்களால் சொல்லப்பட்ட. இரும் கடகம் கரதலத்து - பெரிய கடகமென்னும் அணியைப் பூண்ட கரங்களையும். கரும் கடலை - இராமனை. தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளம்எனும் தகையானைப், பரதன்எனும் பெயரானை, எள்ளரிய குணத்தாலும், எழிலாலும், இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர்கோன் மகள் பயந்தாள். 9 9. தள்ள அரிய - தள்ள முடியாத. நீதித்தனி ஆறு - நீதியாகிய சிறந்த ஆறுகள். புகமண்டும் - புகுந்து நிறைந் திருக்கின்ற. பள்ளம் எனும் - கடல் என்று சொல்லத்தக்க. எள்ள அரிய - வெறுக்கமுடியாத. கேகயர் கோன் மகள் - கைகேசி. அருவரிய திறலினராய், அறம்கெடுக்கும் விறல்அரக்கர் வெருவருதிண் திறலார்கள், வில்ஏந்தி வரும்மேருப் பருவரையும், நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள், இருவரையும் இவ்விருவர்க்கு இளையாளும் ஈன்றெடுத்தாள். 10 10. அருவலிய திறலினராய் - சிறந்தவலிமையும் வெற்றியும் உள்ளவர் களாய். விறல் - வெற்றி. திண் திறலார்கள் - மிகுந்த வலிமையுள்ளவர்கள். இருவரையும், இலக்குவன், சத்துருக்கனன் ஆகிய இருவரையும். இளையாள் - சுமித்திரை. `திறையோடும் அரசுஇறைஞ்சும் செறிகழற்கால் தசரதனாம் பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வர்எனும் பெயரேகாண்! உறையோடும் நெடுவேலோய்! உபநயன விதிமுடித்து மறைஓத வித்து,இவரை வளர்த்தானும் வசிட்டன்காண்! 11 11. திறையோடும் - கப்பங்களுடன் வந்து. அரசு - அரசர்கள். பொறையோடும் தொடர் - பொறுமையோடு ஏனைய நல்லியல் புகளும் பொருந்திய. உறை ஓடு - உறையில் ஓடியிருக்கின்ற. `அலைஉருவக் கடல்உருவத்து ஆண்தகைதன் நீண்டுயர்ந்த நிலைஉருவப் புயவலியை நீஉருவ நோக்கையா! உலைஉருவக் கனல்உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி, மலைஉருவி, மரம்உருவி, மண்உருவிற்று ஒருவாளி. 12 12. அலை உருவம் - அலைகளின் வடிவான. கடல் உருவத்து - கடல் போன்ற நீல நிறமுள்ள. ஆண் தகை தன் - ஆண் தன்மையே உருவான இராமனுடைய. நிலை உருவம் - நிலைத்த அழகமைந்த. நீ உருவ - நீ உன் கண்களால் முழுவதும். உலை உரு - கண்டார் அஞ்சுகின்ற உருவுள்ள. உரம் உருவி - மார்பிலே நுழைந்து. வாளி - அம்பு. `செக்கர்நிறத்து எரிகுஞ்சிச் சிரக்குவைகள் பொருப்பென்ன உக்கனவோ முடியவில்லை; ஓர்அம்பி னொடும்அரக்கி மக்களில்அங்கு ஒருவன்போய் வான்புக்கான்; மற்றையவன் புக்கவிடம் அறிந்திலேன்; போந்தனன்,என் வினைமுடித்தே. 13 13. செக்கர் நிறத்து - செவ்வானம் போன்ற நிறமுள்ள. எரிகுஞ்சி - தீக் கொழுந்து போன்ற தலை மயிரையுடைய. சிரம் குவைகள் - தலைக்கூட்டங்கள் உக்கன - சிந்தியவைகளுக்கு. ஒருவன் - ஒருவனாகிய சுபாகு. மற்றையவன் - மற்றொருவனாகிய மாரீசன். `கோதமன்தன் பன்னிக்கு முன்னைஉருக் கொடுத்ததுஇவன் போதுவென்றது எனப்பொலிந்த பொலன்கழற்கால் பொடிகண்டாய்! காதல்என்றன் உயிர்மேலும் இக்கரியோன் பால்உண்டால்; ஈதுஇவன்தன் வரலாறும், புயவலியும்; எனஉரைத்தான். 14 14. போது வென்றது - தாமரை மலரை வென்றது. பொலன் - அழகிய. கழல் கால் - வீரகண்டாமணியைத் தரித்த கால்களில் பொருந்திய. என்தன் உயிர் மேலும் - என்னுடைய உயிர்மேல் எனக்கிருக்கும் ஆசையை விட. இக்கரியோன்பால் காதல் உண்டு ஆல் - இவ்விராமன்பால் எனக்கு அன்பு உண்டு. ஆல்; அசை. 13. கார்முகப் படலம் இராமன் சிறப்பை அறிந்த சனகன் கூறியது `மாற்றம் யாதுஉரைப்பது? மாய விற்குநான் தோற்றனென் என்மனம் துளங்கு கின்றதால்; நோற்றனள் நங்கையும், நொய்தின் ஐயன்வில் ஏற்றுமேல், இடர்க்கடல் ஏற்றும்; என்றனன். 1 கார்முகப் படலம்; இராமன் வில்லை நாணேற்றி முறித்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. கார்முகம் - வில். 1. யாது மாற்றம் உரைப்பது - நான் என்னதான் மறுமொழி கூறுவது? மாய விற்கு - வஞ்சனை உருவான வில்லுக்கு. துளங்கு கின்றது - நடுங்குகின்றது. நோற்றனன் - தவம்புரிந்தவளாவாள். நொய்தின் - எளிதில். ஆல்; அசை. உடனே அவ்வில்லைக் கொண்டுவருமாறு கட்டளை யிட்டான் சனகன்; அறுபதினாயிரவர் அவ் வில்லைத் தூக்கி வந்தனர். அதைப் பார்த்தவர்கள் பலவாறு உரையாடினர். `சங்கொடு சக்கரம் தரித்த செங்கைஅச் சிங்கஏறு அல்லனேல்,இதனைத் தீண்டுவான் எங்குளன் ஒருவன்? இன்றுஏற்றின் இச்சிலை, மங்கைதன் திருமணம் வாழுமால்; என்பார். 2 2. இச்சிலை இன்று ஏற்றின் - இவ்வில்லை இன்று நாணேற்றுவானாயின். வாழும் ஆல் - நடந்து வாழும். ஆல்; அசை. `கைதவம் தனுஎனல்; கனகக் குன்றென்பார்; செய்ததுஅத் திசைமுகன் தீண்டி அன்று;தன் மொய்தவப் பெருமையின் முயற்சியால் என்பார் எய்தவன் யாவனோ ஏற்றிப் பண்டென்பார்; 3 3. தனுஎனல் கைதவம் - வில் என்று கூறுவது வஞ்சனை யாகும். கனகக் குன்று - மேரு மலை. என்இது கொணர்கென இயம்பினான் என்பார்; மன்னவர் உளர்கொலோ மதிகெட்டார் என்பார்; முன்னைஊழ் வினையினால் முடிக்கில் ஆம்,என்பார்; கன்னியும் இச்சிலை காணுமோ? என்பார். 4 4. -. மொய்த்தனர் இன்னணம் மொழிய, மன்னன்முன் உய்த்தனர்; நிலம்முதுகு உளுக்கிக் கீழ்உற வைத்தனர்; வாங்குநர் யாவரோ? எனாக் கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே. 5 5. மொய்த்தனர் - கூடினவர்கள். நிலம் முதுகு - நிலமகளின் முதுகை. உளுக்கிக் கீழ் உற - உலுக்கிக் கீழே அழுந்தும்படி. வாங்குநர் - இவ் வில்லை எடுத்து வளைப்பவர். கைத்தலம் விதிர்த்தனர் - கைகளை உதறிக் கொண்டு நின்றனர். போதகம் அனையவன் பொலிவை நோக்கி,அவ் வேதனை தருகின்ற வில்லை நோக்கித்,தன் மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய, கோதமன் காதலன் கூறல் மேயினான். 6 6. போதகம் அனையவன் - யானைக்கன்றை ஒத்த இராமனது. தன் மாதினை - தன் மகளையும். நோக்குவான் - பார்க்கின்ற சனகனுடைய. கோதமன் காதல் - கௌதமனுடைய புதல்வனாகிய சதாநந்தன். வில்லின் வரலாறு இது சிவபெருமான் வில்; தக்கன் வேள்வியைச் சிதைக்கப் பிடித்துச் சென்ற வில்; வேள்வி சிதைந்தவுடன் இதனை இம்மன்னன் குலத்து முன்னோன் ஒருவனிடம் விட்டுச் சென்றான். நிலத்தை உழுதோம்;அந்நிலத்திலே சீதை தோன்றினாள்; பல மன்னர் அவள் அழகைக் கண்டு காதலித்தனர்; இந்த வில்லை வளைப்பவருக்கே சீதை உரியவள் என்று உரைத்தோம்; அவர்களால் இதை வளைக்க முடியவில்லை. அவர்கள் ஜனகனுடன் போர் தொடுத்துத் தோற்றனர். `எம்மன்னன் பெரும்சேனை, ஈவதனை மேற்கொண்ட செம்மன்னர் புகழ்வேட்ட பொருளேபோல் தேய்ந்ததால்; பொம்என்ன வண்டலம்பும் புரிகுழலைக் காதலித்த அம்மன்னர் சேனை,தமது ஆசைபோல் ஆயிற்றால். 7 7. செம்மன்னர் - சிறந்த மன்னர்களின். புகழ்வேட்ட பொருளே போல் - புகழை விரும்பிச் செலவு செய்கின்ற செல்வத்தைப் போல. பொம்; ஒலிக்குறிப்பு. வண்டு அலம்பும் - வண்டுகள் ஒலிக்கின்ற. சேனைகளுக்குச் செல்வமும், ஆசையும் உவமைகள். `அன்றுமுதல் இன்றளவும் ஆரும்இந்தச் சிலைஅருகு சென்றுமிலர்; போய்ஒளித்த தேர்வேந்தர் திரிந்தும்இலர்; என்றும்இனி மணமும்இலை என்றிருந்தேம்; இவன்ஏற்றின் நன்று; மலர்க் குழல்சீதை நலம்பழுது ஆகாதென்றான். 8 8. திரிந்தும் இலர் - திரும்பியவர்களும் அல்லர்; நலம்பழுது ஆகாது - அழகு வீணாகாது. நினைந்தமுனி பகர்ந்தஎலாம் நெறிஉன்னி, அருந்தவனும் புனைந்தசடை முடிதுளக்கிப், போர்ஏற்றின் முகம் பார்த்தான்; வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன் நினைந்தஎலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான். 9 9. நினைந்த முனி பகர்ந்த எலாம் - நடந்தவைகளை நினைத்த சதாநந்த முனிவன் கூறியவைகளை யெல்லாம். நெறி உன்னி - முறையே நினைத்து. அருந்தவனும் - விசுவாமித்திரனும். துளக்கி - அசைத்து. போர் ஏற்றின் - போர் செய்யும் ஆண் சிங்கம் போன்ற இராமனுடைய வனைந்த அனைய - எழுதியது போன்ற. அறிஞர்கள் வாழ்த்து பொழிந்தநெய் ஆவுதி வாய்வழி பொங்கி எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்; அழிந்தது வில்என விண்ணவர் ஆர்த்தார்; மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார். 10 10. பொழிந்தநெய் ஆகுதி - ஊற்றிய நெய்யாகிய ஆகுதி யால். வாய் வழி பொங்கி எழுந்த - அவ்விடத்தினிலிருந்து மிகுந்து எழுந்த. முப்பகை வென்றார் - காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று பகைகளையும் வென்ற முனிவர்கள். ஆசிகள் மொழிந்தனர். பெண்கள் பேச்சு கரங்கள் குவித்து,இரு கண்கள் பனிப்ப, `இரும்களிறு இச்சிலை ஏற்றிலன் ஆயின் நரந்தம் நறைக்குழல் நங்கையும் நாமும் முருங்குஎரி யில்புக மூழ்குதும் என்றார். 11 11. பனிப்ப - நீரைச்சிந்த. இரும்களிறு - பெரிய ஆண் யானையாகிய இவ்விராமன். நரந்தம் நறை - கத்தூரியின் வாசனை வீசும். குழல் - கூந்தலையுடைய. முருங்கு எரியில் - அழிக்கும் தன்மையுள்ள தீயிலே. `வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால், கொள்என, முன்பு கொடுப்பதை அல்லால், வெள்ளை மனத்தவன், வில்லை எடுத்துஇப் பிள்ளைமுன் இட்டது பேதைமை என்பார். 12 12. -. `ஞான முனிக்கொரு நாண்இலை என்பார்; `கோன்இவ னில் கொடி யோன்இலை என்பார்; `மானவன் இச்சிலை கால்வளை யானேல், பீனத னத்திவள் பேறுஇலள் என்பார். 13 13. ஞானமுனி - சதாநந்தன். கால் வளையானேல் - இரண்டு முனைகளையும், வளைக்காமல் விடுவானாயின். பீனதனத்து - பருத்த தனங்களையுடைய. பேறு - பாக்கியம். இராமன் வில்லை முறித்தல் தோகையர் இன்னன சொல்லிட; நல்லோர் ஓகைவி ளம்பிட; உம்பர் உவப்ப மாகம்அ டங்கலும்; மால்விடை யும்,பொன் நாகமும், நாகமும், நாண நடந்தான். 14 14. ஓகைவிளம்பிட - மகிழ்ச்சியால் நல்லுரைகள் மொழிய. மாகம் அடங்கலும் உம்பர் உவப்ப- வானுலக முழுவதும் உள்ள தேவர்கள் மகிழ்ச்சியடைய. மால் - பெரிய. பொன் நாகமும் - பொன் மலையும். நாகமும் - யானையும். ஆடக மால்வரை அன்னது தன்னைத், தேடரும் மாமணி, சீதைஎ னும்பொன் சூடக வால்வளை, சூட்டிட நீட்டும் ஏடவிழ் மாலை,இதென்ன, எடுத்தான். 15 15. ஆடகம் - பொன். சீதை எனும் - சீதை என்று சொல்லப் படும். பொன் சூடகம் - பொன்னால் செய்த சூடகம் என்னும் அணியையும். வால் வளை - வெண்மையான சங்கு வளையல் களையும் உடையவளுக்கு. சூட்டிட - சூட்டுவதற்காக. நீட்டும் - நீட்டுகின்ற. ஏடு அவிழ் மாலை - இதழ்கள் விரிந்த மலர் மாலை. இது என்ன- இது என்று கண்டவர் சொல்லும்படி. தடுத்துஇமை யாமல் இருந்தவர். காளின் மடுத்ததும், நாண்நுதி வைத்ததும், நோக்கார்; கடுப்பினில் யாரும்அறிந்திலர்; கையில் எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார். 16 16. இமையாமல் தடுத்து இருந்தவர் - கண்களை இமைக்காமல் தடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். தாளின் மடுத்ததும் - அவ்வில்லைக் காலின் கீழ் வைத்ததையும். நாண் நுதி வைத்ததும் - நாணை இழுத்து அதன் முனையிலே வைத்ததையும். கடுப்பினை - விரைவை. இற்றது - ஒடிந்த ஓசையை. மக்கள் மகிழ்ச்சி ஐயன்வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டுத் தையலார் இழிந்து பாரின் மகளிரைத் தழுவிக் கொண்டார்; செய்கையின், வடிவின், ஆடல், பாடலின் தெளிதல் தேற்றார்; மைஅரி நெடும்கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார். 17 17. இறுத்த - ஒடித்த. காணிய - காணும் பொருட்டு. பாரின் மகளிரை - மண்ணுலகத்துப் பெண்களை. தெளிதல் தேற்றார் - வேற்றுமை தெரிந்து கொள்ள முடியாதவர்களாயினர். மை அரி - மை பூசிய இரேகைகள் படர்ந்த. மயங்கி - திகைத்து. தயரதன் புதல்வன் என்பார்; தாமரைக் கண்ணன் என்பார்; புயல்இவன் மேனி என்பார்; பூவையும் பொருவும் என்பார்; மயல்உடைத்து உலகம் என்பார்; மானிடன் அல்லன் என்பார்; கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்; 18 18. புயல் - மேகம் பூவையும் - காயாம் பூவையும். பொருவும் - ஒக்கும். மயல் உடைத்து - இவனை மனிதன் என்று சொல்லு கின்ற அறியாமையை உடையது. கயல் பொரு - கயல் மீன்கள் போர் செய்து கொண்டிருக்கின்ற. நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்; கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்னதே ஆல்; தம்பியைக் காணும் என்பார்; தவம்உடைத்து உலகம் என்பார்; இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார். 19 19. கொம்பினை- சீதா தேவியை. குரிசில் - பெருமையில் சிறந்த இராமன். இம்பர் இந்நகரில் தந்த - இவ்வுலகில் இந்த நகரத்தில் இவர்களை அழைத்துக் கொண்டுவந்த. சீதையின் காதல் கலக்கம் இச்சமயத்திலே சீதை ஒரு சந்திரகாந்த மண்டபத்தை அடைந்தாள்; அங்குள்ள படுக்கையில் கிடந்தாள்; காதல் வெப்பத்தால் கலக்கமடைகின்றாள். நாண்உலாவு மேருவோடு நாண்உலாவு பாணியும், தூண்உலாவு தோளும்,வாளி யோடுலாவு தூணியும், வாள்நிலாவின் நூல்உலாவும் மாலைமார்பு, மீளவும் காணல்ஆகும் ஆகின்,ஆவி காணலாகும் ஆகுமே. 20 20. நாண் உலாவு மேருவோடு - நாணுதல் உற்ற மேருமலை போன்ற வில்லுடன். நாண் உலாவு பாணியு - அவ்வில்லின் நாணிலே பொருந்திய கையும். தூண் உலாவு - தூண்போல் காணப்படுகின்ற. தூணி - அம்புப் புட்டி. வாள் நிலாவின் - ஒளி பொருந்திய நிலவைப் போல. ஆவி காணல் ஆகும் - உயிர் நிலைத்திருப்பதைக் காணலாகும். பஞ்சுஅரங்கு தீயின்ஆவி பற்ற,நீடு கொற்றவில் வெம்சரங்கள் நெஞ்சரங்க, வெய்யகாமன் எய்யவே, சஞ்சலம் கலந்தபோது, தையலாரை உய்யவந்து, அஞ்சல்! அஞ்சல்! என்கிலாத ஆண்மைஎன்ன ஆண்மையே 21 21. பஞ்சு அரங்கு தீயின் - பஞ்சை அழிக்கின்ற தீயைப் போல.ஆவிபற்றி ஓடும் - என் உயிரைப் பற்றி அழித்து ஓடுகின்ற. கொற்றவாய் - வெற்றி பொருந்திய. வெம் சரங்கள் - கொடிய அம்புகளை. நெஞ்சு அரங்க - மார்பில் அழுந்தும்படி. விண்ணுளே எழுந்தமேகம், மார்பின்நூலின் மின்னொடும் மண்ணுளே இழிந்ததென்ன வந்துபோன மைந்தனார், எண்உளே இருந்தபோதும் யாவர்என்று தேர்கிலேன்; கண்உளே இருந்தபோதும் என்கொல்காண்கி லாதவே. 22 22. விண்ணுளே - வானத்திலே. மார்பின் நூலின் மின்னொடும் - மார்பிலே அணிந்த நூலாகிய மின்ன லோடும். இழிந்தது என்ன - இறங்கி வந்ததைப் போல. எண் உளே - உள்ளத்திலே. காண்கிலாத - கண்கள் காணவில்லை. என் கொல் - இது என்ன அதிசயம்! பெய்கடல் பிறந்தயல், பிறக்குஒணா மருந்துபெற்று? ஐயபொன் கலத்தொடுஅங்கை விட்டிருந்த ஆதர்போல், மொய்கிடக்கும் அண்ணல்தோள் முயங்கிடாது முன்னமே, கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பது என்கொலோ? 23 23. அயல் பிறக்கு ஒணா - வேறிடத்தில் பிறக்க முடியாத. மருந்து பெற்று - அமுதைப் பெற்றும் அதை அருந்தாமல். ஐய - அழகிய. அம் கை விட்டு இருந்த - அழகிய கையிலிருந்து நழுவ விட்டிருந்த. ஆதர் - மூடர். மொய்கிடக்கும் - வலிமை பொருந்திய. கட்டுரைப்பது - பேசுவதால். என்கொல் - என்ன பயன்? ஓ; அசை. என்றுகொண்டுள், நைந்துநைந்து, இரங்கி,விம்மி விம்மியே, பொன்திணிந்த கொங்கைமங்கை, இடரின்மூழ்கு போழ்தின்வாய்க், குன்றம்அன்ன சிலைமுறிந்த கொள்கைகண்டு குளிர்மனத்து ஒன்றும்உண்கண் மதிமுகத்து ஒருத்திசெய்த துரைசெய்வாம். 24 24. என்று கொண்டு உள் நைந்து நைந்து - என்று சொல்லிக்கொண்டு மனம் வருந்தி வருந்தி. பொன் திணிந்த - பொன் நிறமுள்ள தேமல்கள் நிறைந்த. போழ்தின் வாய் - பொழுதில். குன்றம் அன்ன - மலை போன்ற. குளிர் மனத்து - குளிர்ந்த உள்ளத்தையும். ஒன்றும் உண்கண் - பொருந்திய மையுண்ட கண்களையும். மதிமுகத்து ஒருத்தி - மதிபோன்ற முகத்தையும் உடைய ஒருத்தி. சீதை, இராமனுடைய வெற்றிச் செய்தி கேட்டல் வடங்களும் குழைகளும் வான வில்லிடத், தொடர்ந்தபூம் கலைகளும் குழலும் சோர்தர, நுடங்கிய மின்என, நொய்தின் எய்தினாள் நெடும்தடம் கிடந்தகண் நீல மாலையே. 25 25. நெடும்தடம் கிடந்த கண் - பெரிய தடாகத்திலே மலர்ந்து கிடந்த மலர்போன்ற கண்களையுடைய. நீல மாலையே - நீல மாலை என்பவள். வடங்களும் - கழுத்தி லணிந்த மாலை களும். குழைகளும் - காதணிகளும். வானவில் இட - வான வில்லைப்போல் பலநிற ஒளிகளை வீச. பூ - மெல்லிய. கலை - உடை. நுடங்கிய - அசைந்த. நொய்தின் - விரைவில். வந்தடி வணங்கிலள் வழங்கும் ஓகையள்; அந்தம்இல் உவகையள் ஆடிப் பாடினள்; `சிந்தையுள் மகிழ்ச்சியும்,புகுந்த செய்கையும், சுந்தரி சொல்எனத் தொழுது சொல்லுவாள். 26 26. வழங்கும் ஓகையள் - கூறும் மகிழ்ச்சி மிகுந்த சொற் களையுடையவள்; வந்து அடி வணங்கிலள்; உவகையள் - மகிழ்ச்சியுடையவளாய். என - என்று சீதை கேட்க. கயம்,ரதம், துரகம்,மாக் கடலன்; கல்வியன், தயரதன் எனும்பெயர்த் தனிச்செல் நேமியான்; புயல்பொழி தடக்கையான் புதல்வன்; பூங்கணை மயல்விளை மதனற்கும் வடிவின் மேன்மையான். 27 27. கயம் - யானை. துரகம் - குதிரை. மா கடலன் - பெரிய கடல் போல் உடையவன். தனிச்செல் நேமியான் - ஒப்பற்றுச் செல்லும் ஆட்சிச் சக்கரத்தையுடையவன். புயல்பொழி - மேகம்போல பொருளை வாரி வழங்குகின்ற. மயல்விளை - காம மயக்கத்தை உண்டாக்குகின்ற. மராமரம் இவைஎன வளர்ந்த தோளினான்; அராவணை அமலன்என்று அயிர்க்கும் ஆற்றலான்; இராமன் என்பதுபெயர்; இளைய கோவொடும், பராவரும் முனியொடும் பதிவந்து எய்தினான். 28 28. அரா அணை - பாம்புப் படுக்கையையுடைய. அயிர்க்கும் - ஐயுறத்தக்க. பராவரும் - வணங்குதற்குரிய. பதி - நகருக்கு. மாத்திரை அளவில்தாள் மடுத்து, முன்பயில் சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்; ஏத்தினர் இமையவர்; இழிந்த பூமழை; வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே. 29 29. மாத்திரை அளவில் - இமைப் பொழுதில். தாள்மடுத்து - காலின் கீழ் வைத்து. முன்பயில் சூத்திரம் - முன்னே பழகியறிந்த யந்திரம். தோளின் வாங்கினான் - புய வலிமையால் வளைத்தான். வேத்து அவை - அரச சபை. வேந்து; வேத்து. கோமுனி யுடன்வரு கொண்டல் என்றபின், தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால், `ஆம்அவ னேகொல் என்று ஐயம் நீங்கினாள், வாம மேகலைஇற வளர்ந்தது அல்குலே. 30 30. கோமுனி - விசுவாமித்திர முனிவன். வாம மேகலை இற - அழகிய மேகலாபரணம் அறுந்து போகும்படி. அல்குல் வளர்ந்தது - இடை பருத்தது. `இல்லையே நுசுப்பு என்பார் `உண்டுண்டு என்னவும், மெல்இயல் முலைகளும் விம்ம விம்முவாள்; `சொல்லிய குறியின்அத் தோன்றலே அவன்; `அல்லனேல் இறப்பன்; என்று அகத்துள் உன்னினாள். 31 31. நுசுப்பு - இடுப்பு. இல்லையே என்பார் உண்டு உண்டு என்னவும். மெல்லியள் - சீதை. விம்ம - பருக்க. விம்முவாள் - உடல் பருத்தவளானாள். குறியின் - அடையாளங்களால். தசரதனுக்குச் செய்தி அனுப்புதல் ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள்; பாசடைக் கமலத்தோன் படைத்த வில்இறும் ஓசையின் பெரியதோர் உவகை எய்தி,அக் கோசிகற்கு ஒருமொழி சனகன் கூறுவான். 32 32. ஆசையுற்று அயர்பவள் - காதலால் வருந்துகின்ற சீதை. பாசு அடை கமலத்தோன் - பசுமையான குலைகளையுடைய தாமரை மலரோனாகிய பிரமன். கோசிகர்க்கு - கோசிக முனிவனாகிய விசுவாமித்திரனிடம். உரைசெய் எம்பெரும! உன்புதல்வன் வேள்விதான். விரைவின்,இன்று ஒருபகல், முடித்தல் வேட்கையோ! முரசெறிந்து அதிர்கழல் முழங்கு தானை,அவ் அரசையும், இவ்வழி அழைத்தல் வேட்கையோ! 33 33. வேள்விதான் - திருமணத்தை. வேட்கையோ - விருப்பமோ? அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய. அவ்வரசையும் - அந்த அரசனாகிய தசரதனையும். மல்வலான் அவ்வுரை பகர, மாதவன், `ஒல்லையில் அவனும்வந்து உறுதல் நன்றென, எல்லையில் உவகையான், `இயைந்த வாறுஎலாம் சொல்லுகஎன்று ஓலையும் தூதும் போக்கினான். 34 34. மல்லவாள் - மல்யுத்தத்திலே வல்லவனாகிய சனகன். மாதவன்- விசுவாமித்திரன். நன்றுஎன - நல்லது என்று கூற. எல்லைஇல் உவகையான் - அளவற்ற மகிழ்ச்சியையுடைய சனகன். இயைந்தஆறு எலாம் - நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம். 14. எழுச்சிப் படலம் கடுகிய தூதருரும் காலில் காலின் சென்று இடிகுரல் முரசுஅதிர் அயோத்தி எய்தினார்; அடிஇணை தொழஇடம் இன்றி, மன்னர்தம் முடியொடு முடிபொரு வாயில் முன்னினார். 1 எழுச்சிப் படலம்: தசரதன், இராமனுடைய திருமணத்தின் பொருட்டு மிதிலைக்குப் புறப்படுவதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. காலில் - கால் நடையினால். காலின் சென்று - காற்றைப் போல் விரைந்து சென்று. முரசுஅதிர் - முரசு முழங்குகின்ற. அடி இணை - அடிகள் இரண்டையும். முடி பொரு - முடி மோதுகின்ற. முகந்தனர் திருவருள்; முறையின் எய்தினார்; திகழ்ந்துஒளிர் கழல்இணை தொழுது, செல்வனைப் புகழ்ந்தனர்; `அரசநின் புதல்வர் போயபின் நிகழ்ந்ததை இதுஎன நெடிது கூறினார். 2 2. முகந்தனர் - பெற்றனர். திகழ்ந்துஒளிர் - மிகவும் பிரகாசிக்கின்ற. செல்வனை - தசரதனை. நிகழ்ந்ததை - நடந்தது. ஐ; சாரியை. நெடிது - விவரமாக. கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை `ஈறுஇல்வண் புகழினாய்! இதுஅது என்றனர்; வேறுஒரு புலமகன் விரும்பி வாங்கினான்; மாறுஅதிர் கழலினான் `வாசி என்றனன். 3 3. ஈறுஇல் - அழியாத. வண்புகழினாய் - சிறந்த புகழை யுடையவனே. புலமகன் - அறிஞன். மாறுஅதிர் - பகைவர் அஞ்சும்படி ஒலிக்கின்ற. கழல் - வீர கண்டாமணி. இலைமுகப் படத்தவர் எழுதிக் காட்டிய தலைமகன் சிலைத்தொழில் செவியில் சார்தலும், நிலைமுக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட மலைஎன வளர்ந்தன வயிரத் தோள்களே. 4 4. இலைமுகப்படத்து - ஓலையின் முன்புறத்து. அவர் - ஓலை எழுதுவோரால். எழுதிக் காட்டிய - எழுதி விளக்கி யிருக்கின்ற. தலைமகன் - இராமனுடைய. நிலைமுக - நிலைத்த இடத்தில் அமைந்த. வலையங்கள் - தோள் வளையங்கள். நிமிர்ந்து நீங்கிட - வாய் அகன்று கீழே விழும்படி. வந்த தூதர்களுக்குப் பரிசு வழங்கினான். சேனைகள் மிதிலைக்குப் புறப்பட வேண்டும் என்று முரசறையும்படி ஆணையிட்டான். முரசறைந்தனர். சாற்றிய முரசொலி செவியில் சாருமுன் கோல்தொடி மகளிரும், கோல மைந்தரும், வேல்தரு குமரரும், வென்றி வேந்தரும், காற்றுஎறி கடல்எனக் களிப்பின் ஓங்கினார். 5 5. கோல் தொடி - கோல் வடிவான வளையலை அணிந்த. கோலம் - அழகுள்ள. உழுந்திட இடம்இலை உலகம் எங்கணும்; அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம்பு ஆயினான் எழுந்திலன், எழுந்திடைப் படரும் சேனையின் கொழுந்துபோய்க் கொடிமதில் மிதிலை கூடிற்றே. 6 6. உழுந்து - உளுந்து, சேனையின் கொழுந்து - சேனையின் முன்னணி. சேனையின் பெருக்கமும் சிறப்பும் அம்கண் ஞாலத்து அரசு மிடைந்து,அவர் பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால், கங்கை யாறு கடுத்தது; கார்எனச் சங்கு பேரி முழங்கிய தானையே. 7 7. ஞாலம் - உலகம். அரசு மிடைந்து - அரசர்கள் நெருங்கி. சாமரை - வெண் சாமரம். போர்த்தலால் - மூடி யிருத்தலால். கார்என - மேகம்போல. சங்கு, பேரி முழங்கிய தானை கங்கையாறு கடுத்தது. தானை - சேனை. கடுத்தது - ஒத்தது. சுழிகொள் வாம்பரி துள்ள,ஓர் தோகையாள் வழுவி வீழல்உற் றாளை,ஓர் வள்ளல்தான் எழுவின் நீள்புயத் தால்எடுத்து ஏந்தினான், தழுவி நின்றுஒழி யான்,தரை மேல் வையான். 8 8. சுழி கொள் - நல்ல சுழிகளைக் கொண்ட. வாம்பரி - பாய்கின்ற குதிரை. துள்ள - துள்ளிக் குதித்தமையால். தோகை யாள் - மயில் போன்றவள். எழுவின் - இரும்புத் தூண் போன்ற. சுழியும் குஞ்சி மிசைச்சுரும்பு ஆர்த்திட பொழியும் மாமத யானையின் போகின்றான், கழிய கூரிய என்றுஒரு காரிகை விழியை நோக்கித்,தன் வேலையும் நோக்கினான். 9 9. சுழியும் - சுருண்டிருக்கும். குஞ்சி - ஆண் மயிர். சுரும்பு - வண்டு. யானையின் - யானையைப் போல. கழிய கூரிய - மிகவும் கூர்மையானவை. தரங்க வார்குழல் தாமரைச் சீறடிக் கருங்கண் வாள்உடை யாளை,ஓர் காளைதான் `நெருங்கு பூண்முலை நீள்வளைத் தோளினீர்! மருங்குல் எங்கு மறந்தது நீர்என்றான். 10 10. தரங்க வார்குழல் - அலைபோல் வளைந்து நீண்ட கூந்தல். சிறு அடி; சீறடி. கரும்கண் வாள் - கருமையான கண்ணாகிய வாட்படையை. மருங்குல் - இடை. கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி மாற்றம் பேசுகி லாளைஓர் மைந்தன்தான், `ஆற்று நீரிடை அம்கைக ளால்எடுத்து ஏற்று வார்உமை யாவர்கொ லோ?என்றான். 11 11. மாற்றம் - வார்த்தை. ஏற்றுவார் - கரை ஏற்றுவார். யாவர் கொல் ஓ - யார்தான். கொல்; கேள்வியைக் குறிக்கும் இடைச் சொல். ஓ; அசை. வாம மேகலை யார்இடை, வாலதி பூமி தோய்பிடிச், சிந்தரும் போயினார்; காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள் ஆமை மேல்வரும் தேரையின் ஆங்குஅரோ. 12 12. காமர் - அழகிய. தேரையின் ஆங்கு - தேரையைப் போல. வாமமேகலையார் இடை - அழகிய மேகலையை - அணிந்த பெண்களிடையிலே. வாலதி - வால். தோய் - படுகின்ற. பிடி - பெண் யானைகளின் மேல். சிந்தரும் - மூன்றடி உயரமுள்ள குள்ளர்களும். சந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்; சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்; எந்தை வில்இறுத் தான்எனும் இன்சொலை மைந்தர் பேச மனம்களித்து ஓடுவார். 13 13. சோர்பவை சந்த வார் குழல் - அவிழ்ந்து வீழ்கின்ற அழகீய நீண்ட கூந்தலை. தாங்கலார் - கையால் ஏந்தி முடிக்காதவர்கள். சிந்து - அறுந்து சிதறுகின்ற. குடையர், குண்டிகை தூக்கினர், குந்திய நடையர், நாசி புதைத்தகை நாற்றலர்; கடக ளிற்றையும், காரிகை யாரையும் அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார். 14 14. குண்டிகை - கமண்டலம்; நீர்க்கலம். நாசி புதைத்த - மூக்கை மூடிய. கை நாற்றலர் - கையைத் தொங்க விடாதவர்கள். கடகளிற்றையும் - மத யானையையும். அடைய - நெருங்க. குடையொடு பிச்சம், தொங்கல் குழாங்களும், கொடியின் காடும், இடையிடை மயங்கி எங்கும் வெளிகரந்து இருளைச் செய்யப், படைகளும், முடியும், பூணும், படர்வெயில் பரப்பிச் செல்ல, இடையொரு கணத்தின் உள்ளே இரவுண்டு பகலும் உண்டே. 15 15. குடையொடு பிச்சம் - குடையுடன் சேர்ந்த குஞ்சங்கள். தொங்கல் குழாங்களும் - ஏனைய குஞ்சங்களின் கூட்டமும். மயங்கி - நெருங்கி. வெளிகரந்து - வான வெளியை மறைத்து. இடை - அச்சேனையினிடையே. நிறைமதித் தோற்றம் கண்ட நீர்நெடும் கடலிற் றாகி அறைபறை துவைப்பத், தேரும் ஆனையும்ஆடல் மாவும் விறல்கெழு வேற்கண் ணாரும் மைந்தரும் விரவி, ஒல்லை நெறியிடைப் படர, வேந்தன் நேயமங் கையர் எழுந்தார். 16 16. நிறை மதி - முழுமதியின். நீல் நெடும் - நீல நிறமுள்ள பெரிய. கடலிற்று ஆகி - கடலின் தன்மையுள்ளதாகி. துவைப்ப - ஒலிக்க. ஆடல்மாவும் - நடனமாடும் குதிரைகளும். விறல்கெழு - வெற்றி மிகுந்த. விரவி - கலந்து. நேய மங்கையர் - அன்புக்குரிய மகளிர். பொய்கைஅம் கமலக் கானில் பொலிவதுஓர் அன்னம் என்னக் கைகயர் வேந்தன் பாவை, கணிகையர் ஈட்டம் பொங்கி ஐயிரு நூறு சூழ்ந்த ஆய்மணிச் சிவிகை தன்மேல் தெய்வமங் கையரும் நாணத் தேன்இசை முரலப் போனாள். 17 17. அம் கமலம் கானில் - அழகிய தாமரைக் காட்டில். கணிகையர் அணியின் ஈட்டம் - ஏவல் புரியும் மகளிர் வரிசையின் கூட்டம்.ஐயிரு நூறு - ஆயிரம். ஆய்மணி - சிறந்த மணிகள் பதித்த. தேன்இசை முரல - வண்டுகள் இசை பாடும்படி. விரிமணித் தார்கள் பூண்ட வெம்பரி வெரிநில் தோன்றும் அரிமலர்த் தடம்கண் நல்லார், ஆயிரத்து இரட்டிசூழக், குருமணிச் சிவிகை தன்மேல் கொண்டலின் மின்இது என்ன, இருவரைப் பயந்த நங்கை யாழ்இசை முரலப் போனாள். 18 18. விரி மணித்தார்கள் - ஒளிவீசும் மணிமாலைகளை. வெம்பரி வெரி நில் - கொடிய குதிரைகளின் முதுகிலே. அரி மலர் - இரேகை பொருந்திய மலர் போன்ற. தடம்கண் நல்லார் - விசாலமான கண்களையுடைய பெண்கள். குருமணி - ஒளி வீசும் மணிகளால் ஆகிய. கொண்டலின்- மேகத்தின் இருவரைப் பயந்த நங்கை - சுமித்திரை. வெள் எயிற்று இலவச் செவ்வாய் முகத்தைவெண் மதியம் என்று கொள்ளையின் திரள்வான் மீன்கள் குழுமிய அனைய ஊர்தி, தெள்அரிப் பாண்டில் பாணிச் செயிரியர் இசைத்தேன்சிந்த, வள்ளலைப் பயந்த நங்கை, வானவர் வணங்கப் போனாள். 19 19. இலவம் செவ்வாய் - இலவம் பூப்போன்ற சிவந்த வாயை யுடைய. கொள்ளையின் திரள்வான் மீன்கள் - கூட்டமாகத் திரண்டிருக்கும் நட்சத்திரங்கள். குழுமிய அனைய - குழுமியதைப் போல. ஊர்தி - மணிகள் பதித்த சிவிகையாகிய வாகனத்திலே. தெள்அரி - தெளிந்த வண்டொலிபோன்ற. பாண்டில் பாணி - தாளத்துடன் பாடும் பாட்டையுடைய. செயிரியர் - இசை வல்லுநர். நங்கை - கோசலை. காரணம் இன்றி யேயும் கனல்எழ விழிக்கும் கண்ணார், வீரர்,வேத் திரத்தார், தாழ்ந்து விரிந்தகஞ் சுகத்து மெய்யார், தார்அணி புரவி மேலார், தலத்துளார், கதித்த சொல்லார், ஆரணங்கு அனைய மாதர் அடிமுறை காத்துப் போனார். 20 20. வேத்திரத்தார் - பிரம்பைக் கையிலே கொண்டவர்கள். தாழ்ந்து விரிந்த - தொங்கிப் பரந்த. கஞ்சுகம் - சட்டை. தலம் - நிலம். கதித்த - கோபித்த. அடி முறை - பாதத்தை முறையே. துப்பினின் மணியின் பொன்னின் சுடர்மர கதத்தின் முத்தின் ஒப்பற அமைத்த வையம் ஓவியம் போல ஏறி முப்பதிற்று இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ்மென் கொங்கைச் செப்பரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழப் போனார். 21 21. துப்பினில் - பவளத்தாலும். மணியின் - மாணிக்கத் தாலும். பொன்னின் - பொன்னாலும். சுடர் மரகதத்தின் - ஒளி பொருந்திய மரகதத்தினாலும். (மரகதம் - பச்சை) முத்தின் - முகத்தினாலும். ஒப்புற - அழகாக. முப்பதிற்று இரட்டிகொண்ட ஆயிரர் - அறுபதினாயிரவர். செவிவயின் அமுத கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின் அவிகையின் அளிக்கும் நீரார், ஆயிரத்து இரட்டி சூழக் கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன்,முத்துச் சிவிகையில், அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்றான். 22 22. செவிவயின் - காதின் வழியே. அமுத கேள்வி - அமுதம் போன்ற நூல் கேள்விகளை. தெவிட்டினார் - தெவிட்டும்படி உண்டவர்கள். தேவர் நாவின் அவி - தேவர்கள் நாவால் சுவைத்துண்ணும் அவிர்ப் பாகத்தை. நீரார் - தன்மையுள்ளவர்கள். கவிகையின் நீழல் - குடை நிழலிலே. அருந்ததி கணவன் - வசிட்டன். முத்தின் சிவிகையின் - முத்துக்களால் செய்த பல்லக்கிலே. முத்துப் பல்லக்கு அன்னப் பறவை போன்றது. பொருகளிறு, இவுளி, பொன்தேர், பொலம்கழல் குமரர், முந்நீர் அருவரை சூழ்ந்த தென்ன, அருகுபின் முன்னும் செல்லத் திருவளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர், வீரர் இருவரும் முனிபின் போன இருவரும் என்னப் போனார். 23 23. இவுளி - குதிரை. முந்நீர் அருவரை சூழ்ந்தது என்ன - கடல், பெரிய மலையைச் சுற்றியது போல. திருவளர் - அழகு நிறைந்த. இருவரும் - பரத சத்துருக்கனர் இருவரும். நித்திய நியமம் முற்றி, நேமியான் பாதம் சென்னி வைத்தபின், மறைவ லோர்க்கு வரம்பறு மணியும், பொன்னும், பத்திஆன் நிரையும், பாரும், பரிவுடன் நல்கிப் போனான், முத்தணி வயிரப் பூணான் மங்கல முகிழ்த்த நன்னாள். 24 24. நித்திய நியமம் - தினக் கடன்களை. நேமியின் - திருமாலின். பத்தி ஆன்நிரையும் - வரிசையான பசுக்கூட்டங் களையும். பொற்றொடி மகளிர் ஊரும் பொலன்கொள்தார்ப் புரவி வெள்ளம் சுற்றுபு, கமலம் பூத்த தொடுகடல் திரையின் செல்லக், கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப மற்றொரு கதிரோன் என்ன, மணிநெடும் தேரில் போனான். 25 25. பொலம் கொள் - அழகு பொருந்திய. புரவி - குதிரை. சுற்றுபு - சூழ்ந்து. கமலம் பூத்த - தாமரைகள் மலர்ந்த. தொடு கடல் - ஆழமான கடலின். திரையின் - அலைகளைப் போல. கூம்ப - குவிய. குதிரைக் கூட்டத்திற்குக் கடல் அலை உவமை. தசரதனுக்குக் கதிரோன் உவமை. இவ்வாறு தசரதன் படைகள் சென்று சந்திர சைலம் என்னும் மலைச் சாரலை அடைந்தன. தசரதனும், சுற்றத் தினரும், படைகளும் அந்த மலைச் சாரலிலே தங்கினர். 15. சந்திர சயிலப் படலம் நேர்ஒ டுங்கல்இல் பகையினை நீதியால் வெல்லும் சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போலக், காரொ டுந்தொடர் கவட்டுஎழில் மராமரக் குவட்டை வேரொ டும்கொடு, கிரிஎன நடந்ததுஓர் வேழம். 1 சந்திரசயிலப் படலம்: சந்திரசயிலம் என்னும் மலையைப்பற்றிக் கூறும் பகுதி. 1. நேர் ஒடுங்கல்இல் பகையினை - நேரே அடங்காத பகைவரை. நீதியால் - அரச நீதியினால். சூழ்ச்சியே போல - தந்திரத்தைப் போல. காரொடும் தொடர் - மேக மண்டலத்தை அளாவிய. கவட்டுஎழில் - கிளை பொருந்திய அழகிய. மரா மரம் குவட்டை - மராமரம் என்னும் மலையை. கிரிஎன - மலையைப் போல. கதம்கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறிப் பதங்கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்; பன்னூல் விதங்க ளால்அவன் மெல்லென மெல்லென விளம்பும் இதங்கள் கொள்கிலா மன்னனை ஒத்ததுஓர் யானை. 2 2. கதம்கொள் சீற்றத்தை - நெஞ்சில் நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்ட கோபத்தை. கழறி - கூறி. பதம்கொள் - பக்குவமாக வசப்படுத்திக்கொள்ளும். இதங்கள் கொள்கிலா – நல்லுரை களை ஏற்றுக் கொள்ளாத. யானையை அரசனுக்கும்; பாகனை மந்திரிக்கும் உவமையாகக் கூறப் பட்டது. தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும், அவர்தம் மருண்ட புன்மையை மாற்றுவர், எனும்இது வழக்கே; உருண்ட வாய்தொரும் பொன்உருள் உரைத்துரைத்து ஓடி இருண்ட கல்லையும் தன்னிறம் ஆக்கியது இரதம். 3 3. தெருண்ட மேலவர் - அறிவிலே தெளிந்த பெரியவர்கள். சிறியவர் - சிறியவர்களிடம் சென்று. மருண்ட புன்மை - அறிவற்ற இழிந்த குணத்தை. வழக்கே - முறையாகும். உருண்டவாய் தொறும் - உருண்டு சென்ற இடந்தோறும். பொன் உருள் - பொன்னாலாகிய சக்கரங்கள். நீர்திரை நிரைத்ததென நீள்திரை நிரைத்தார்; ஆர்கலி நிரைத்ததென ஆவணம் நிரைத்தார்; கார்நிரை எனக்களிறு காவிடை நிரைத்தார்; மாருதம் நிரைத்தஎன வாசிகள் நிரைத்தார். 4 4. நீர் திரை - நீரின் அலைகள். நிரைத்தது என - வரிசையாக நிறுத்தப் பட்டது. போல. ஆவணம் - கடைத்தெரு. கார்நிரை -மேக வரிசை. கா - சோலை. மாருதம் - காற்று. வாசிகள் - குதிரைகள். தீயவரொடு ஒன்றியதி றத்துஅரு நலத்தோர், ஆயவரை அந்நிலை அறிந்தனர், துறந்தாங்கு, ஏயஅரு நுண்பொடி படிந்துடன் எழுந்தே பாய்பரி, விரைந்துஉதறி, நின்றன பரந்தே. 5 5. ஒன்றிய - நட்புக் கொண்ட. திறத்து அருநலத்தோர் - திறமையும் சிறந்த பண்புகளும் உடையோர். ஆயவரை - அத்தீயவரை. அறிந்தனர் அந்நிலை - இன்னார் என்று அறிந்து கொண்ட அப்பொழுதே. ஏய அரும்நுண் பொடி - பொருந்திய மிகவும் நுண்மையான புழுதியிலே. மும்மைபுரி வன்கயிறு கொய்து,செயல் மொய்ம்பால் தம்மையும் உணர்ந்து,தரை கண்டு,விரை கின்ற அம்மையினொடு இம்மையை அறிந்துநெறி செல்லும் செம்மையவர் என்ன,நனி சென்றன துரங்கம். 6 6. மும்மைபுரி - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று புரிகளையுடைய. வன்கயிறு கொய்து - வலிய பாசமாகிய கயிற்றை அறுத்து. செயல் மொய்ம்பால் - தமது நற்செயலாகிய வலிமையால்; யோகச் செயலாகிய வலிமையால். தரைகண்டு - முத்தியுலகையும் அறிந்து. அம்மையினொடு இம்மையை அறிந்து - மறுமைப் பயனையும் இம்மைப் பயனயும் உணர்ந்து. நெறி செல்லும் - ஞான நெறியிலே ஒழுகும். துரங்கம் - குதிரைகள். நனி சென்றன - மிகவும் விரைந்து சென்றன. வெள்ளநெடு வாரிஅற வீசிஉள வேனும், கிள்ளஎழு கின்றபுனல், கேளிரின் விரும்பித் தெள்ளுபுனல் ஆறுசிறி தேஉதவு கின்ற, உள்ளது மறாதுஉதவும் வள்ளலையும் ஒத்த. 7 7. தெள்ளு புனல் ஆறு - தெளிந்த நீரையுடைய ஆறு. வெள்ளநெடு வாரி - மிகுந்த நீரை. அறவீசியில வேனும் - முழுவதும் நீரை வீசாமலிருந்தாலும். கிள்ள - தோண்டுவதனால். எழுகின்ற புனல் - வருகின்ற நீரை. சிறிதே உதவுகின்ற - சிறிது உதவி செய்யும் தன்மையானது. கேளிரின் விரும்பி - வறுமை யுற்றாலும் உறவினரைப் போல அன்பு காட்டி. உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த. ஆற்றுக்கு வள்ளல் உவமை. வெயில்நிறம் குறையச், சோதி மின்னிழல் பரப்ப, முன்னம் துயில்உணர் செவ்வி யோரும், துனியுறு முனிவி னோரும் குயிலொடும் இனிது பேசிச், சிலம்பொடும் இனிது கூவி, மயிலினம் திரிவ தென்னத் திரிந்தனர் மகளிர் எல்லாம். 8 8. வெயில்நிறம் குறைய - அவர்களுடைய அணிகலன் களின் ஒளியால் வெய்யிலின் நிறமும் மங்க. முன்னம் நேரத்தி லேயே. துனிஉறு - ஊடல் கொண்ட. சிலம்பொடும் - காலில் அணிந்த சிலம்போடும்; மலையின் எதிரொலி யோடும். தாள்இணை கழல்கள் ஆர்ப்பத் தார்இடை அளிகள் ஆர்ப்ப வாள்புடை இலங்கச் செம்கேழ் மணிஅணி வலயம் மின்னத் தோள்என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி வாள்அரி திரிவ என்னத் திரிந்தனர் மைந்தர் எல்லாம் 9 9. அளிகள் - வண்டுகள். செம்கேழ் மணிஅணி - செம்மை யான ஒளி பொருந்திய இரத்தினங்களால் அழகாகச் செய்யப் பட்ட. தோள்என - தோள்கள் போல. சூழல்கள் - சுற்றுப்புறங் களை. வாள் அரிதிரிவ என்ன - கொடிய சிங்கங்கள் திரிவதைப் போல. 16. வரைக்காட்சிப் படலம் சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர்மணிக் கனகக் குன்றைப் பற்றிய வளைந்த என்ன, பரந்துவந்து இறுத்த சேனை; கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பனார், வந்து உற்றவர் காணல்உற்ற வரைநிலை உரைத்தும் அன்றே. 1 வரைக் காட்சிப் படலம்: மலையின் காட்சியை எடுத்துரைக்கும் பகுதி. 1. சுடர் மணிக் கனகக் குன்றை - ஒளி வீசும் இரத்தினங்கள் கிடக்கும் பொன் மலையை (சந்திர சயிலம்) இறுத்த - தங்கிய. சேனைகளுக்குக் கடல்கள் உவமை. ஆடவர் ஆவி சோர, அஞ்சன வாரி சோர ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்தம் அரம்பை மாதர் தோடுஅவிழ் கோதை நின்றும் துறந்தமந் தாரமாலை வாடல, நறவுஅ றாத, வயின்வயின் வயங்கும் மாதோ. 2 2. அஞ்சன வாரி சோர - கரிய கடல் போன்ற கண்களி லிருந்து நீர் சிந்த. தோடு அவிழ் - இதழ் விரிந்த. கோதை - மாலையை அணிந்த தலைமயிர். நறவு அறாத - தேன் வற்றாதவை. சரம்பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா நரம்பினோடு இனிது பாடி, நாடக மயிலோடு ஆடி, அரம்பையர் வெறுத்து நீத்த அவிர்மணிக் கோவை ஆரம் மரம்பயில் கடுவன் பூண மந்திகண்டு உவக்கும் மாதோ. 3 3. சாபம் - வில். ஆடா - ஆடாமல். அவிர் மணிக்கோவை ஆரம் - ஒளிவீசும் மணிகளால் கோக்கப்பட்ட மாலை. கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு. நிலமகட்கு அணிகள் என்ன நிரைகதிர் முத்தம் சிந்தி, மலைமகள் கொழுநன் சென்னி வந்துஇழி கங்கை மான, அலகில்பொன் அலம்பி ஓடி, ஆரம்சேர் அருவி மாலை உலகளந் தவன்தன் மார்பின் உத்தரீ யத்தை ஒத்த. 4 4. நிரை கதிர் - வரிசையான ஒளியையுடைய. முத்தம் சிந்தி - முத்துக்களைச் சிதறி. மலைமகள் கொழுநன் - சிவபிரானுடைய. சென்னி - தலையிலே. கங்கை மான - கங்கை நதியைப் போல. பொன் அலம்பி - பொன்னைக் கொழித்து. ஆரம் சாந்து வீழ் - சிறந்த சந்தனக் கட்டைகளும் வந்து வீழ்கின்ற அருவியானது. பானல்அம் கண்கள் ஆடப், பவளவாய் முறுவல் ஆடப், பீனவெம் முலையின் இட்ட பெருவிலை ஆரம் ஆடத், தேன்முரன்று அளகத் தாடத், திருமணிக் குழைகள் ஆட, வானவர் மகளிர் ஆடும் வாசநாறு ஊசல் கண்டார். 5 5. பானல் - கருங்குவளை மலர். முறுவல் ஆட - புன் சிரிப்புத் தவழ. பீன வெம் முலையின் - பருத்த விருப்பத்தை யுண்டாக்கும் முலையின்மேல். ஆரம் - முத்து மாலை. தேன் முரன்று - வண்டுகள் ஒலித்துக் கொண்டு. அளகத்து - கூந்தலிலே. வாசம் நாறு - வாசனை வீசுகின்ற. ஊசல் - ஊஞ்சல். சுந்தர வதன மாதர், துவர்இதழ்ப் பவள வாயும், அந்தம்இல் சுரும்பும், தேனும், மிஞிறும்உண்டு, அல்குல் விற்கும் பைந்தொடி மகளிர் `கைத்தொர் பசையில்லை என்ன விட்ட மைந்தரின் நீத்த தீந்தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். 6 6. அல்குல் விற்கும் பைந் தொடிமகளிர் - விலை மகளிர். கைத்து ஓர் பகைஇல்லை என்ன - கையிலே ஒருபசையும் இல்லை என்று கண்டவுடன். விட்ட மைந்தரின் - கைவிடப்பட்ட ஆண்களைப் போல. வாயும், சுரும்பும், தேனும், மிஞிறும் உண்டு நீத்த தீந்தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். துவர் - செம்மை. வள்ளங்கள் - கிண்ணங்கள். சுரும்பு, தேன், மிஞிறு இவைகள் வண்டின் வகைகள். கைஎன மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி, பைஅரவு இதுஎன்று அஞ்சிப், படைக்கண்கள் புதைக்கின் றாரும்; நெய்தவழ் வயிரப் பாறை நிழல்கிடைத் தோன்றும் போதைக் கொய்துஇவை தருதிர் என்று கொழுநரைத் தொழுகின் றாரும். 7 7. கைஎன - கைபோல. மலர வேண்டி - மலர விரும்பி. அரும்பிய- மலரும் பருவத்தை அடைந்த. பை அரவு - படமுள்ள பாம்பு. போதை - மலரை. கண்ணுக்கு இனிதாகி விளங்கிய காட்சியாலும் எண்ணற்கு அரிதாகி இலங்கு சிரங்களாலும் வண்ணக் கொழும்சந்தனச் சேதகம் மார்பணிந்த அண்ணல் கரியோன் தனை ஒத்ததுஅவ் ஆசில்குன்றம். 8 8. சிரங்களாலும் - தலைகளாலும். வண்ணம் - நல்ல நிறமுள்ள. கொழும் - சிறந்த. சந்தனச் சேதகம் - சந்தனக் குழம்பை. கரியோன் - திருமால். ஆசுஇல் - குற்றமற்ற. உண்ணா அமுதுஅன்ன கலைப்பொருள் உள்ளத்துஉண்டும், பெண்ஆர் அமுதம் அனையார்மனத்து ஊடல்பேர்த்தும், பண்ஆன பாடல் செவிமாந்திப், பயன்கொள் ஆடல் கண்ணால் நனிதுய்க்கவும், கங்குல் கழிந்தது அன்றே. 9 9. ஊடல் பேர்த்தும் - ஊடலை நீக்கியும். பண்ஆன - இசையான. செவிமாந்தி - காதால் உண்டு. நனி - மிகவும். இம்மலைச் சாரலிலே தசரதன் தன் படைகளுடன் இரவுப் பொழுதைக் கழித்தான்; பொழுது விடிந்தபின் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சோணை யாற்றை அடைந்தான். 17. பூக்கொய் படலம் அடைந்தவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்; மடந்தையர் குழாங்க ளோடு, மன்னரும், மைந்தர் தாமும் குடைந்துவண் டுறையும் மென்பூக் கொய்துநீ ராட, மைதீர் தடங்களும் மடுவும் சூழ்ந்த தண்நறும் சோலை சார்ந்தார். 1 பூக்கொய் படலம்: தசரதனுடன் சென்றவர்கள், சோணையாற்றங் கரையிலே தங்கி, அங்கிருந்த சோலை யிலே மலர் கொய்து மகிழ்ந்த செய்தியை உரைக்கும் பகுதி. 1. அவண் இறுத்த பின்னர் - அந்தச் சோணை ஆற்றுக் கரையிலே தங்கிய பின்பு. உம்பர் - உச்சியை. வண்டு குடைந்து உறையும் - வண்டுகள் கிளறிக் கொண்டு வாழ்கின்ற. மைதீர் - குற்றமற்ற. தடங்களும் - பொய்கைகளும். மடுவும் - நீர்க்குழிகளும். தண்நறும் - குளிர்ந்த நறுமணம் கமழும். பாசிழைப், பரவை அல்குல், பண்தரு கிளவித், தண்தேன் மூசிய கூந்தல், மாதர் மொய்த்தபேர் அமலை கேட்டுக் கூசின அல்ல; பேச நாணின குயில்கள் எல்லாம்; வாசகம் வல்லார் முன்நின்று யாவர்வாய் திறக்க வல்லார், 2 2. பாசிழை - பசுமையான அணிகலன்களைப் பூண்ட. பரவைஅல்குல் - பரந்த அல்குலையும். பண்தரு கிளவி - இசை போன்ற இனிமையைத் தரும் சொற்களையும். தண்தேன் மூசிய கூந்தல் - குளிர்ந்த தேன் படிந்த கூந்தலையும் உடைய. அமலை - ஓசை. வாசகம் வல்லார் - இனிமையுடன் பேச வல்லவர்களின். நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கிச், செஞ்சவே கமலக் கையால் தீண்டலும், நீண்ட கொம்பும் தம்சிலம்பு அடியின் மென்பூச் சொரிந்துடன் தாழ்ந்த என்றால் வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்க லாதார். 3 3. நாட்டம் - கண்களால். செஞ்சவே - நன்றாக. கமலக் கையால் - தாமரை மலர் போன்ற கை யினால். நீண்ட கொம்பர் - உயர்ந்த கிளை. தம் சிலம்பு அடியில் - அம்மாதர்கள் தம் சிலம்பணிந்த பாதங்களிலே. அம்புயத்து அணங்கின் அன்னார் அம்மலர்க் கைகள் தீண்ட, வம்பியல் அலங்கல் பங்கி, வாள்அரி மருளும் கோளார் தம்புய வரைகள் வந்து தாழுமேல், தளிர்த்த மென்பூம் கொம்புகள் தாழும் என்றல் கூறலாம் தகைமைத்து ஒன்றோ. 4 4. அம் புயத்து - தாமரை மலரிலே உள்ள. அணங்கின் அன்னார் - இலக்குமியைப் போன்றவர்களின். வம்பு இயல் - மணம் பொருந்திய. அலங்கல் - மலர் மாலையை அணிந்த. பங்கி - தலைமயிரையுடைய. வாள் அரிமருளும் கோளார் - கொடிய சிங்கமும் அஞ்சும் வலிமையுள்ள ஆடவர்களின். கூறல்ஆம் - குறித்துச் சொல்லக்கூடிய. தகைமைத்து ஒன்றோ - பெருமை யுள்ள தொரு பொருளோ? நதியினும் குளத்தும் பூவா நளினங்கள், குவளை யோடு மதிநுதல் வல்லி பூப்ப, நோக்கிய மழலைத் தும்பி அதிசயம் எய்திப் புக்கு வீழ்ந்தன; அலைக்கப் போகா; புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார். 5 5. நளினங்கள் - தாமரை மலர்களை. குவளையோடு - நீலோற் பவமலர்களுடன். மதிநுதல் வல்லி பூப்ப - மதிபோன்ற முகத்தையுடைய மகளிராகிய கொடிகள் பூத்து நிற்க. நோக்கிய - அதைப் பார்த்த. மாலை - வரிசையான. தும்பி - வண்டுகள். அலைக்க - ஓட்டினாலும். புதுமை பார்ப்பார் - புதியனவற்றைத் தேடி நிற்பவர்கள். மயில்போல் வருவாள் மனம்காணிய, காதல் மன்னன் செயிர்தீர் மலர்க்கா வின்ஓர்மாதவிச் சூழல் சேரப் பயில்வாள், இறைபண் டுபிரிந்தறி யாள்பதைத்தாள்; உயிர்நாடி ஒல்கும் உடல்போல் அலமந்து உழந்தாள். 6 6. மனம் காணி - உள்ளத்தை உணரும் பொருட்டு. செயிர்தீர் - குற்றமற்ற. மாதவிச் சூழல் சேர - குருக்கத்திக் கொடி படர்ந்த இடத்திலே சேர்ந்திருக்க. பயில்வாள் - பழகியவள். இறை பண்டு - சிறிதும் இதற்கு முன்பு. பிரிந்தறியால் - பிரிந்தறி யாதவள். ஒல்கும் - தளரும். அலமந்து உழன்றாள் - மனங்கலங்கித் திரிந்தாள். போர்என்ன வீங்கும் பொருப்பன்ன பொலம்கொள் திண்தேர் மாரன் அனையான் மலர்கொய்துஇருந் தானை வந்துஓர் கார்அன்ன கூந்தல், குயில்அன்னவள், கண் புதைப்ப, ஆர்என்ன லோடும அனல்என்ன அயிர்த்து உயிர்த்தாள். 7 7. போர்என்ன- போர் என்ற சொல்லைக் கேட்ட உடனேயே. வீங்கும் - பூரிக்கும். மாரன் - மன்மதன். கார் அன்ன - மேகம் போன்ற. அனல் என்ன - தீயென்று சொல்லும்படி. அயிர்த்து - சினந்து. உயிர்த்தாள் - பெருமூச்சு விட்டாள். ஊக்கம் உள்ளத் துடைய முனிவரால் காக்கல் ஆவது காமன்கை வில்எனும், வாக்கு மாத்திரம்; அல்லது, அல்லியின் பூக்கொய்வார் புருவக் கடை போதுமே. 8 8. உள்ளத்து ஊக்கம் உடைய - உள்ளத்திலே தவம் புரியும் முயற்சியுள்ள. காமன் கை வில் காக்கல் ஆவது - மன்மதன் கை வில்லால் வருந்துயர் காக்கக் கூடியதாகும். எனும் - என்னும் சொல். வாக்கு மாத்திரம் - வாய்ச் சொல் மாத்திரமே யாகும். அல்லது - அன்றியும். வல்லியின் - பூக்கொடிகளிலே. போதுமே - அவர்கள் ஆற்றலை அழிக்கப் போதுமான தாகும். நாறு பூங்குழல் நன்னுதல், புன்னைமேல் ஏறினான் மனத்து உம்பர்சென்று ஏறினாள்; ஊறில் ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் வீறுசேர்முலை மாதரை வெல்வரோ 9 9. மனத்துஉம்பர் சென்று - மனத்திலே போய். ஊறுஇல் - குற்றமற்ற. வீறுசேர் - அழகு பொருந்திய. சினையின் மேல்இருந் தான்,உருத் தேவரால் வனைய வும்அரி யாள்வனப் பின்தலை நினைவும் நோக்கமும் நீக்கலன்; கைகளால் நனையும், நாள்முறி யும்கொய்து நல்கினான். 10 10. சினையின்மேல் இருந்தான் - மலர் பூத்த கிளையின்மேல் இருந்த காதலன். தேவரால் உரு வனையவும் அரியாள் - தேவர்களாலும் உருவத்தை எழுதுவதற்கும் முடியாதவளின். வனப்பில் தலை - அழகிலே வைத்த. நனையும் - அரும்புகளையும். நாள் முறியும் - புதிய தளிர்களையும். வண்டு வாழ்குழ லாள்முகம் நோக்கிஓர் தண்டு போல்புயத் தான்தடு மாறினான்; உண்டு கோபம்என்று உள்ளத் துணர்ந்து;அவள் தொண்டை வாயின் துடிப்பொன்று சொல்லவே. 11 11. தண்டுபோல் புயத்தான் - தண்டாயுதம் போன்ற வலிய தோளையுடையவன்; வண்டுவாழ்.... .தடுமாறினான். தொண்டை வாயின் - சிவந்தவாயின். துடிப்பு ஒன்று சொல்லவே - துடிப்பானது ஒன்றைக் குறிப்பால் சொல்லியவுடன்; உண்டு .... உணர்ந்தனன். இவ்வாறு மலர்கொய்து விளையாடிய பின்னர் அவர்கள் ஒரு தடாகத்தை யடைந்தனர். நீரில் குளித்து விளையாடத் தொடங்கினர். 18. நீர் விளையாட்டுப் படலம் அங்கவர் பண்ணை, நன்னீர் ஆடுவான் அமைந்த தோற்றம் கங்கைவார் சடையோன் அன்ன மாமுனி கனல, மேல்நாள் மங்கையர் கூட்டத் தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் பொங்குமா கடலுள் செல்லும் தோற்றமே போன்ற தன்றே. 1 நீர் விளையாட்டுப் படலம்: பூக்கொய்து விளையாடிய ஆண்களும் பெண்களும் நீர் நிலைகளிலே மூழ்கி விளை யாடிய செய்தியை உரைக்கும் பகுதியாகும். 1. அங்கு அவர் பண்ணை - அங்கே அவர்கள் கூட்டம் தோற்றம் - காட்சியானது. மாமுனி - துர்வாச முனிவன் கனல - கோபிக்க. பொங்குமா கடலுள் - பொங்கிய பெரிய கடலினுள். போன்றது - ஒத்திருந்தது. அன்று; ஏ; அசைகள். மையவாம் குவளை யெல்லாம் மாதர்கண் மலர்கள் பூத்த; கையலாம் உருவத் தார்தம் கண்மலர் குவளை பூத்த; செய்யதா மரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த; தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே. 2 2. மையவாம் - கரிய நிறமுள்ள. கண் மலர்கள் - கண் மலர்களைப் போல. மைஅவாம் - அழகு பொருந்திய. உருவத் தார்தம் - உருவத்தை யுடைய பெண்களின். தாளைஏய் கமலத் தாளின் மார்புறத் தழுவு வாரும்; தோளையே பற்றி வெற்றித் திருஎனத் தோன்று வாரும்; பாளையே விரிந்த தென்னப் பரந்தநீர் உந்து வாரும், வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவு வாரும். 3 3. தாளை ஏய் - தண்டு பொருந்திய. கமலத்தாளின் - தாமரையில் உள்ள திருமகளைப் போல. மார்பு உற - தமது கணவர்களின் மார்பிலே பொருந்த. வெற்றித்திரு - ஜெயலக்ஷ்மி. உகள - துள்ளுவதைக் கண்டு. ஆன தூயவ ரோடுஉடன் ஆடினார் ஞான நீரவர் ஆகுவர் நன்றுஅரோ; தேனும், நாவியும், தேக்கு,அகில் ஆவியும் மீனும் நாறின; வேறினி வேண்டுமோ. 4 4. ஆன - அறிஞர்களான. தூயவரோடு -பரிசுத்தமானவர் களுடன். உடன் ஆடினர் - ஒன்றாகப் பழகினவர்கள்; நன்று ஞானநீரவர் - நல்ல அறிவுத்தன்மையுள்ளவர். நாவியும் - கத்தூரியின் மணமும். தேக்கு அகில் ஆவியும் - தேக்கு அகில் ஆகியவைகளின் புகையும். மிக்க வேந்தர்தம் மெய்அணி சாந்தொடும், புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால், ஒக்க நீல முகில்தலை ஓடிய செக்கர் வானகம் ஒத்ததுஅத் தீம்புனல். 5 5. மெய் அணி - உடம்பில் பூசிய. சாந்தொடும் - சந்தனக் குழம்போடு. புக்க - நீராடப் புகுந்த. நீலமுகில் தலை - நீலநிறமுள்ள மேகத்தின்மேல். ஒக்க ஓடிய - சமமாகப் பரந்த. செக்கர்வானகம் - செவ்வானத்தை. தைய லாளை,ஓர் தார்அணி தோளினான், நெய்கொள் ஓதியின் நீர்முகந்து எற்றினான்; செய்ய தாமரைச் செல்வியைத் தீம்புனல் கையின் ஆட்டும் களிற்றரசு என்னவே. 6 6. நெய் கொள் ஓதியின் - நெய் தடவிய கூந்தலின் மேல். நீர்முகந்த - நீரைக் கையால் அள்ளி. எற்றினான் - இறைத்தான். செய்ய தாமரை - செந்தாமரை. இது கஜ லட்சுமியின் தோற்றத் தைக்குறித்தது. தள்ளி ஓடி அலைதடு மாறலால், தெள்ளு நீரிடை மூழ்குசெந் தாமரை; புள்ளி மான்அனை யார்முகம் போல்கிலாது உள்ளி நாணி ஒளிப்பன போன்றவே. 7 7. தெள்ளு நீரிடை - தெளிந்த நீரிலே. புள்ளிமான் அனை யார் - புள்ளிமான் போன்ற பெண்களின். முகம் போல்கிலாது - முகம்போல் இல்லாததை. உள்ளி - நினைத்து. மேவி னார்பிரிந் தார்அந்த வீங்குநீர், தாவு தண்மதி தன்னொடும் தாரகை ஓவு வானமும், உள்நிறை தாமரைப் பூவெ லாம்குடி போனதும் போன்றதே. 8 8. மேவினார் பிரிந்தார் - நீராடப் புகுந்தவர்கள் பிரிந்தனர்; அந்த வீங்குநீர் - அதன்பின் அப்பெரிய நீர்நிலை. தாவு - தவழ்ந்து போகின்ற. தாரகை ஓவு - நட்சத்திரங்களும் நீங்கிய. குடி போனதும் - குடி பெயர்ந்து போனதையும். போன்றது - ஒத்திருந்தது. ஓ; அசை. மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய ஆன நீர்விளை யாடலை நோக்கினான்; தானும் அன்னது காதலித் தான்என, மீன வேலையை, வெய்யவன் எய்தினான். 9 9. ஆன - சிறந்ததான. அன்னது - அதை. காதலித்தான் என - விரும்பியவனைப் போல. மீன வேலையை - மீன்கள் நிரம்பிய மேல் கடலை. வெய்யவன் - கதிரவன். ஆற்றல் இன்மையி னால்அழிந் தேயும்,தம் வேற்று மன்னர்தம் மேல்வரும் வேந்தர்போல், ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும் தோற்ற சந்திரன் மீளவும் தோன்றினான். 10 10. அழிந்தேயும். தோற்ற பின்னரும். தம் வேற்று மன்னர்தம் - தமது பகையரசர்களின் மேல். வரும் - படையெடுத்து வரும். மாதர் முகங்களொடு ஏற்று - மாதர் முகங்களோடு எதிர்த்து நின்று. 19. உண்டாட்டுப் படலம் கலந்தவர்க்கு இனியதோர் கள்ளு மாய்ப்,பிரிந்து உலந்தவர்க்கு உயிர்சுடும் விடமு மாய்,உடன் புலந்தவர்க்கு உதவிசெய் புதிய தூதுமாய், மலர்ந்தது நெடுநிலா மதனன் வேண்டவே. 1 உண்டாட்டுப் படலம்: தசரதனுடன் சென்ற படைகள் கள்ளுண்டு களித்து விளையாடிய செய்தியைக் கூறும் பகுதி. 1. கலந்தவர்க்கு - காதலருடன் கூடியிருப்பவர்க்கு. உலந்தவர்க்கு - வாடியவர்க்கு. உடன் புலந்தவர்க்கு - காதலருடன் ஊடியவர்க்கு. மதனன் - மன்மதன். ஆறெலாம் கங்கையே ஆய; ஆழிதான் கூறுபால் கடலையே ஒத்த; குன்றெலாம் ஈறிலான் கயிலையே இயைந்த; என்இனி வேறுயாம் புகல்வது நிலவின் வீக்கமே. 2 2. கூறு - புகழ்ந்து சொல்லுகின்ற. ஈறுஇலான் - அழிவில்லாத சிவபெருமானின். இயைந்த - ஒத்த. நிலவின் வீக்கமே - நிலவின் மிகுதியைப் பற்றி; வேறு யாம் புகல்வது இனி என்? கங்கையின் நிறம் வெண்மை. அந்த நிலவிலே மாதர்களும், மைந்தர்களும் மகிழ்ந்து விளையாடினர்; மதுவருந்தி மகிழ்ந்தனர். விடன்ஒக்கும் நெடிய நோக்கின், அமிழ்துஒக்கும் இன்சொ லார்தம் மடன்ஒக்கும் மடனும் உண்டே? வாள்நுதல் ஒருத்தி, காண தடன்ஒக்கும் நிழலைப் பொன்செய் தண்நறும் தேறல் வள்ளத்து, `உடன்ஒக்க உவந்து, நீயே உண்ணுதி தோழி! என்றாள். 3 3. விடன் - விஷம். நோக்கின் - கண்களையுடைய. மடன் ஒக்கும் - அறியாமைக்கு ஈடான. மடனும் உண்டே - அறியாமை யும் உண்டோ? தடன் ஒக்கும் நிழலை - தன் உடம்பைப் போன்ற சாயையை; தண்நறும் தேறல் பொன் செய்வள்ளத்து - குளிர்ந்த மணமுள்ள கள் நிறைந்த பொன்னாற் செய்த கிண்ணத்திலே. உடன் ஒக்க உவந்து - என்னுடன் கூட மகிழ்ந்திருந்து. அச்சநுண் மருங்கு லாள்ஓர் அணங்கனாள், அனக பந்தி, நச்சுவேல் கருமகண், செவ்வாய், நளிர்முகம் மதுவுந் தோன்றப்; `பிச்சிநீ! என்செய் தாய்!இப் பெருநறவு இருக்க, வாளா எச்சிலை நுகர்தி யோ?என்று எயிற்றரும்பு இலங்க நக்காள். 4 4. அச்சம் நுண் - மிகவும் மெல்லிய. அளக பந்தி - கூந்தலின் தொகுதியும். நச்சுவேல் கரும் கண் - நஞ்சு பொருந்திய வேல் போன்ற கரிய கண்களும். செவ்வாய் - சிவந்த வாயும். நளிர் முகம் - அழகு விளங்கும் முகமும். பிச்சி - பைத்தியக்காரியே. எயிற்று அரும்பு - பற்களாகிய முல்லை அரும்புகள். இலங்க நக்காள் - தோன்றும்படி நகைத்தாள். புறம்எலாம் நகைசெய்து ஏசப், பொருவரும் மேனி, வேறோர் மறம்உலாம் கொலைவேல் கண்ணாள், மணியின்வள் ளத்து, வெள்ளை நிறநிலாக் கற்றை பாய, நிறைந்தது போன்று தோன்ற, நறவென அதனை வாயில் வைத்தனர்; நாண்உட் கொண்டாள். 5 5. புறம் எலாம் - பக்கத்தில் உள்ளவர்களெல்லாம். பொருவரும் மேனி- ஒப்பற்ற அழகு பொருந்திய உடம்புள்ள. மறம் உலாம் - கொடுமை பொருந்திய. மணியின் வள்ளத்து - இரத்தினத்தாலாகிய கிண்ணத்திலே. நறவு என - அந்த நிலாக்கற்றையைக் கள்ளென்று கருதி. யாழ்க்கும்,இன் குழற்கும், இன்பம் அளித்தன இவையாம் என்னக் கேட்கும்மெல் மழலைச் சொல்ஓர், கிஞ்சுகம் கிடந்த வாயாள், தாள்கரும் குவளை தோய்ந்த தண்நறைச் சாடி யுள்,தன் வாள்கணின் நிழலைக் கண்டாள், வண்டென ஓச்சு கின்றாள். 6 6. கேட்கும் - கேட்கத்தக்க. மெல்மழலைச் சொல்லாள் - மென்மையான மழலைச் சொற்களையுடையவள். கிஞ்சுகம் கிடந்த - முருக்க மலர் போன்ற. தாள் கரும் குவளை தோய்ந்த - அடியையுடைய கருங்குவளை மலர் பொருந்திய. வாள்கணின் - வான் போன்ற கண்களின். ஓச்சுகின்றாள் - ஓட்டுகின்றாள். களித்தகண் மதர்ப்ப, ஆங்கோர் கனம்குழை, கள்ளின் உள்ளே வெளிப்படு கின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி, `அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீவந்து ஒளித்தனை அஞ்சல்? என்றாங்கு இனியன உரைத்து நின்றாள். 7 7. களித்த கண் மதர்ப்ப -கள்ளுண்டு களித்த கண்களால் செருக்கடையும்படி. கனம் குழை - கனமான காதணியையுடை யவள்; என்ற ஆங்கு - என்பன போன்ற. இனியன - இனிய சொற்களை. அழிகின்ற அறிவி னாலோ, பேதைமை யாலோ, ஆற்றுச் சுழிநின்ற தன்ன உந்தித் தோகைஅங் கொருத்தி, செந்தேன் பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரைத்துக் கீழ்வந்து இழிகின்ற கொழுநி லாவை, நறவென வள்ளத்து ஏற்றாள். 8 8. அழிகின்ற அறிவினாலோ - கள்ளுண்டு அழிந்த அறிவினாலோ. உந்தி - கொப்பூழையுடைய. பூவின் வேய்ந்த - பூவால் போடப்பட்ட. புரைத்து - பொத்துக் கொண்டு. கீழ் வந்து இழிகின்ற - கீழே வந்து இறங்குகின்ற. கண்மணி வள்ளத் துள்ளே களிக்கும்தன் முகத்தை நோக்கி, விண்மதி, மதுவின் ஆசை வீழ்ந்ததென்று ஒருத்தி உன்னி, `உள்மகிழ் துணைவ னோடும் ஊடும்நாள், வெம்மை நீங்கித் தண்மதி யாகில், யானும் தருவன்இந் நறவை என்றாள். 9 9. கள்மணி வள்ளத்து உள்ளே - கள் நிறைந்த இரத்தினத் தால் ஆகிய கிண்ணத்தினுள். விண்மதி- வானத்துச் சந்திரன். மதுவின் ஆசை - மதுவின் ஆசையால். உள்மகிழ் - மனமகிழ்ந்த. நாள் - நாளில். வெம்மை நீக்கி - வெப்பந் தருவதைவிட்டு. தண் மதியாகில் - குளிர்ந்த சந்திரனாகவே இருப்பாயானால். எள்ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி, முன்கை தள்ளத்தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள்; உள்ளத்தின் மயக்கம் தன்னால், உட்புறத்து உண்டென் றெண்ணி வள்ளத்தை மறித்து வாங்கி மணிநிற இதழில் வைத்தாள். 10 10. எள்ஒத்த கோலம் - எள்ளுப் பூவைப் போன்ற அழகிய. முன்கை தள்ளி - முன்கை நடுக்கித் தள்ளியதனால். தவிசிடை உகுத்தும் - தன் ஆசனத்திலேயே சிந்தியதையும். தேறாள் அறியா தவளாயினாள். மறித்து வாங்கி - மீண்டும் எடுத்து; திருப்பி எடுத்து; மணி நிறம் - செம்மணி போன்ற நிறத்தையுடைய. வளைபயில் முன்கை,ஓர் மயில்அ னாள்தனக்கு இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும், முளைஎயிறு இலங்கிட முறுவல் வந்தது; களகள உதிர்ந்தது கயற்கண் ஆலியே. 11 11. இளையவள் பெயரினை - இளைய மனையாள் பெயரை. முனை எயிறு இலங்கிட - முளை போன்ற பற்கள் தோன்றும்படி. முறுவல் - சிரிப்பு. ஆலி - நீர்த்துளிகள். ஊறுபேர் அன்பினாள் ஒருத்தி, தன்உயிர் மாறுஇலாக் காதலன் செயலை, மற்றொரு நாறுபூங் கோதைபால் நவில நாணுவாள்; வேறுவேறு உறசில மொழி விளம்பினாள். 12 12. ஊறு - வளர்கின்ற. தன் உயிர் மாறு இலா - தன் உயிர் வேறாக இல்லாத ஒன்றுபட்ட. காதலன் - கணவன். நாறு பூங்கோதை பால் - மணம் வீசும் பூமாலையைப் பூண்டவளிடம். கருத்துஒரு தன்மையது, உயிரும் ஒன்று,தம் அருத்தியும் அத்துணைஆய நீரினார்; `ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்றுஎனப் பொருத்தினர் இவர்,எனப் புல்லி னார்;அரோ 13 13. தம் அருத்தியும் - தம் காதலும். அத்துணை ஆய நீரினார் - அவ்வளவாகிய தன்மையுள்ளவர்கள். உடலும் ஒன்று என - உடம்பும் ஒன்றுதான் என்னும்படி. இவர் பொருந்தினர் - இவர்கள் சேர்த்துக் கொண்டனர். என - என்று கூறும்படி. புல்லினார் - இறுகத் தழுவிக் கொண்டனர். அரோ; அசை. மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள், பிறப்பினோடு இறப்பெனப் பெயரும் சிந்தையாள்; துறப்பரு முகில்இடைத் தோன்றும் மின்எனப் புறப்படும்; புகும்ஒரு பூத்த கொம்பனாள். 14 14. மறப்பிலர் - மறக்காதவளாய். பிறப்பினோடு இறப்புஎன - பிறப்பும் சாவும் என. பெயரும் - இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்ற. சிந்தையாள் - மனமுடையவள் ஆனாள். துறப்புஅரும் - நீக்குவதற்கு அரிய. ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றந்தான் வார்த்தையின் உணர்த்துதல் வறிதன் றோ?என வேர்த்தனள்; வெதும்பினள்; மெலிந்து சோர்ந்தனள்; பார்த்தனள் ஒருத்திதன் பாங்கு அனாளையே. 15 15. ஆர்த்தியும் - ஆசையையும், உற்றதும் - உற்ற துன்பத் தையும், அற்றம்தான் - குறையையும் கூட; அறிஞர்க்கு வார்த்தையின் உணர்த்துதல்; வறிது அன்றோ - வீண் அன்றோ? எனா - என்று எண்ணி. வெதும்பினள் - வாடினள். ஒருத்தி தன்; பாங்கினாளை - தோழியை; பார்த்தனள். வேறு பொன்அரும் கலனும் தூசும் புறத்துள துறத்தல் வம்போ, நன்னுதல் ஒருத்தி தன்பால் அகத்துள நாணும் நீத்தாள்; உன்னரும் துறவு பூண்ட உரனுடை ஒருவ னேபோல் தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று, அன்றே! 16 16. தூசும் - ஆடையும். புறத்துஉள - பக்கத்தில் உள்ள வேறு பொருள்களையும். வம்பேர் - புதுமையோ? உரன்உடை - மனோ வலிமையுடைய. கொள்ளைப்போர் வாட்க ணாள் அங்கொருத்தி,ஓர் குமரன் அன்னான் வள்ளல்தார் அகலந் தன்னை, மலர்க்கையால் புதைப்ப நோக்கி, `உள்ளத்தார், உயிர்அன் னாள்மேல் உதைபடும், என்று, நீர்நும் கள்ளத்தால் புதைத்திர் என்னா முன்னையின் கனன்று மிக்காள். 17 17. கொள்ளைப் போர் வாள் கணாள் - உயிர்களைக் கொள்ளை கொள்ளும் போர் வாளைப் போன்ற கண்களை யுடையவள். ஓர் குமரன் அன்னான் - ஒப்பற்ற முருகனைப் போன்றவனாகிய. வள்ளல் தார் அகலம் தன்னை - வள்ளலின் மாலையணிந்த மார்பை. மலர்கையால் புதைப்ப - தாமரை மலர் போன்ற கைகளால் மூடிக்கொள்ள. கள்ளத்தால் - திருட்டுத் தனத்துடன். கனன்று மிக்காள் - சினந்து சீறினாள். மதியின் மறைவும் கதிரவன் வரவும் கடையுற நன்னெறி காண்கி லாதவர்க்கு இடையுறு திருஎன இந்து நந்தினான்; படர்திரைக் கருங்கடல் பரமன் மார்பிடைச் சுடர்மணிக்கு அரசென இரவி தோன்றினான். 18 18. கடையுற - முடிவுற. இடையுறு - பின்வாங்குகின்ற. திருவென - செல்வத்தைப் போல. இந்து - சந்திரன். நந்தி - மறைந்தான். கருங்கடல் - கரிய கடல் போன்ற. பரமன் மார்பிடை - மேலோன் ஆகிய திருமாலின் மார்பிலே விளங்குகின்ற. சுடர் மணிக்கு அரசுஎன - ஒளிபொருந்திய இரத்தினங்களுக்கெல்லாம் அரசாயிருக்கின்ற கௌத்துவ மணியைப் போல. இரவி - சூரியன். 20. எதிர் கோள் படலம் அடாநெறி அறைதல் செல்லா அருமறை அறைந்த நீதி விடாநெறிப் புலமைச், செங்கோல், வெண்குடை வேந்தர் வேந்தன், படாமுக முகிலின் தோன்றும் பருவம்ஒத்து, அருவி பல்கும் கடாம்நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான். 1 எதிர்கோள் படலம்: தசரதனை, சனகராசன் எதிர் கொண்டு அழைத்துச் சென்ற செய்தியை உரைக்கும் பகுதி. 1. அடாநெறி - தீயொழுக்கத்தை. அறைதல் செல்லா - சொல்லாத. நீதி விடாநெறி - நீதி தவறாத ஒழுக்கத்தையும். புலமை - அறிவையும், செங்கோல் - நேர்மையான ஆட்சியையும், வெண்குடை - வெண் பட்டுக் குடையையும் உடைய. வேந்தர் வேந்தன் - தசரதன். படாம்முக முகிலின் - நிறைந்த மேகங் களுடன் காணப்படும். பருவம் ஒத்து - கார் காலத்தைப் போல. அருவிப்பல்கும் - அருவியாகப் பெருகி ஓடும். கடாம் நிறை - மதநீர் நிறைந்த. ஆறுபாயும் - ஆறுகள் கலக்கின்ற. சுடலொடும் - சேனைக் கடலோடும். சேனை கடலாகவும், யானைகளின் மதநீர்ப் பெருக்கு அக்கடலில் கலக்கும் ஆறாகவும் கூறப்பட்டது. வந்தனன் அரசன் என்ன, மனத்தெழும் உவகை பொங்கிக், கந்தடு களிறும், தேரும், கலினமாக் கடலும் சூழச், சந்திரன் இரவி தன்னைச் சார்வதுஓர் தன்மை தோன்ற, இந்திர திருவன் தன்னை எதிர்கொள்வான் எழுந்து வந்தான். 2 2. அரசன் வந்தனன்; என்ன - என்று சொல்லக் கேட்டவுடன். கந்துஅடு - கட்டுத் தறியை முறிக்கின்ற. களிறும் - யானைகளும். கலின மா கடலும் - விரைந்து செல்லும் குதிரைக் கடலும். இரவிதன்னை - சூரியனை. இந்திர திருவன்- இந்திரனைப் போன்ற செல்வமுள்ளவனாகிய தசரதனை. தசரதன் சூரிய குலத்தினன்; சனகன் சந்திர குலத்தினன். இவ்வாறு வந்த சனகனுடன் படைகள் திரண்டு வந்தன; மிதிலா நகர மக்கள் மிகுதியாக வந்தனர்; வழியெலாம் அணி செய்யப் பட்டிருந்தன. கந்தையே பொருகரிச் சனகனும், காதலே உந்த,ஓ தரியதுஓர் தன்மையோடு, உலகுளோர் தந்தையே அனைய,அத் தகவினான் முன்பு,தன் சிந்தையே பொருநெடும் தேரின்வந்து எய்தினான். 3 3. கந்தையேபொரு - கட்டுத்தறியை முறிக்கின்ற. கரி - யானைப் படையை யுடைய. காதலே உந்த - அன்பே முன்தள்ள. அத்தகவினான் - அப் பெருமை யுள்ள தசரதன். தன் சிந்தையே பொரு - தன் மனம்போல் விரைந்து செல்லும். மன்னர்கள் இருவரும் மகிழ்ந்து தழுவிக் கொண்டனர். மிதிலைக்குப் புறப்பட்டனர். அப்பொழுது இராமனும், இலக்குவனும் தந்தையை எதிர்கொள்ள வந்தனர். தம்பியும், தானும்,அத் தானைமன் னவன்நகர்ப் பம்புதிண் புரவியும், படைஒரும், புடைவரச், செம்பொனின் பசுமணித் தேரின்வந்து எய்தினான், உம்பரும் இம்பரும் உரகரும் தொழஉளான். 4 4. அ தானைமன்னவன் நகர் - அச்சேனையை யுடைய சனகனது மிதிலா நகரிலிருந்து புறப்பட்டு. பம்பு - நிறைந்த. உரகரும் - நாகர்களும். காவியும், குவளையும், கடிகொள்கா யாவும்ஒத்து, ஓவியம் சுவைகெடப் பொலிவதுஓர் உருவொடே, தேவரும் தொழுகழல் சிறுவன்,முன் பிரிவதோர் ஆவிவந்து என்னவந்து அரசன்மாடு அணுகினான். 5 5. காவி - நீலோற்பவமலர். குவளை - கருங்குவளை மலர். கடிகொள் காயா - மணம் பொருந்திய காசாம்பூ. பொலிவது - விளங்குவதாகிய . சிறுவன் - இராமன். அரசன்மாடு - தசரதன் பக்கத்தில். அனிகம்வந்து அடிதொழக், கடிதுசென்று, அரசர்கோன் இனியபைம் கழல்பணிந்து எழுதலும், தழுவினான்; மனுவெனும் தகையன்மார் பிடை மறைந் தன,மலைத் தனிநெடும் சிலைஇறத் தவழ்தடங் கிரிகளே. 6 6. அனிகம் - படைகள். பைம்கழல் பணிந்து - பசுமையான பொன்னாலாகிய வீர மணிகளைத் தரித்த பாதங்களைப் பணிந்து மலைதனி நெடும் சிலை இற - மலை போன்ற ஒப்பற்ற பெரிய வில் ஓடியும்படி செய்து. தவழ் தடம் கிரிகள் - விளங்குகின்ற அகன்ற மலைகள் போன்ற புயங்கள். மனு எனும் தகையன் - தசரதனது. `மார்பிடை மறைந்தன. இளையபைம் குரிசில்வந்து அடிபணிந்து எழுதலும், தளைவருந் தொடையன்மார் பினில்உறத் தழுவினான், களைவரும் துயர்அறக் ககனம்எண் திசையெலாம் விளைதரும் புகழினான்; எவரினும் மேன்மையான். 7 7. களைவு அரும் துயர்அற - பிறரால் நீக்க முடியாத துன்பங்களை நீக்கியதனால். ககனம் - வானத்திலும். எண்திசை எலாம் - எட்டுத் திக்குகளிலும். விளைதரும் - பரவியிருக்கின்ற. தளைவரும் - கட்டப்பட்ட. தொடையன் - மாலையை அணிந்த தசரதன். இளைய பைம்குரிசில் - இலக்குவன். கற்றைவார் சடையினான் கைக்கொளும் தனுஇறக் கொற்றநீள் புயம் நிமிர்த் தருளும்அக் குரிசில்,பின் பெற்றதா யரையும்அப் பெற்றியில் தொழுதெழுந்து உற்றபோது, அவர்மனத்து உவகையார் உரைசெய்வார்? 8 8. கற்றைவார் - கற்றையாக நீண்ட. சடையினான் - பரமசிவன். தனுஇற - வில் ஒடியும்படி. நிமிர்ந்து அருளும் - உயர்த்தியருளிய. குரிசில் - இராமன். அப்பெற்றியில் - அவ்விதமே. அவர் மனத்து - அத்தாய் மார்களின் உள்ளத்திலே தோன்றிய. உன்னுபேர் அன்புமிக்கு ஒழுகிஒத்து, ஒண்கணீர் பன்னுதா ரைகள்தரித், தொழுதெழும் பரதனைப், பொன்னின்மார் புறஅணைத்து உயிர்உறப் புல்லினான் தன்னைஅத் தாதைமுன் தழுவினால் என்னவே. 9 9. உன்னுபேர் அன்பு - எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்கின்ற பேரன்பானது. மிக்க ஒழுகி ஒத்து - மிகுந்து ஒழுகியதைப்போல. ஒள்கண் - ஒளி பொருந்திய கண்கள். நீர் பன்னுதாரைகள் தர - நீர்நெருங்கிய தாரைகளைச் சிந்த. தாதை - தந்தை. புல்லினான்- தழுவிக் கொண்டான். பின்னர் இலக்குவனைச் சத்துருக்கனனும், பரதனை இலக்குவனும் வணங்கினர். சான்றெனத் தகையசெங் கோலினான், உயிர்கள்தாம் ஈன்றநல் தாயெனக் கருதுபேர் அருளினான், ஆன்றஇச் செல்வம்இத் தனையும்ஒத்து அருகுறத் தோன்றலைக் கொண்டுமுன் செல்கெனச் சொல்லினான். 10 10. சான்று எனத்தகைய - எல்லோர்க்கும் சாட்சியாகும் என்று சொல்லும் தகுதியுள்ள. கருதுபேர் அருளினான் - கருது கின்ற பேரன்புள்ளவன். ஆன்ற இச்செல்வம் - நிறைந்த இப்படைச் செல்வங்கள். இத்தனையும் - இவ்வளவும். ஒத்து அருகுஉற - ஒன்றாகப் பக்கத்திலே பொருந்தும்படி. தோன்றலை - இராமனை. தம்பிமார்கள் குதிரைகள் மீதேறிச் சூழ்ந்து வந்தனர்; இராமன் ஒரு தேரில் ஏறி மிதிலை மாநகர வீதிகளின் வழியே சென்றான். 21. உலாவியல் படலம் மான்இனம் வருவ போன்றும், மயில்இனம் திரிவ போன்றும், மீன்இனம் மிளிர வானில், மின்இனம் மிடைவ போன்றும், தேன்இனம் சிலம்பி ஆர்ப்பச், சிலம்பினம் புலம்ப, எங்கும் பூநனை கூந்தல் மாதர் பொம்எனப் புகுந்து மொய்த்தார். 1 உலாவியல் படலம்: மிதிலை நகர வீதியிலே இராமன் ஊர்வலமாகப் போகும்போது நிகழ்ந்த செய்தியைக் கூறும்பகுதி. 1. மீன் இனம் - நட்சத்திரக் கூட்டங்கள். மிளிர - விளங்க. மின் இனம் - மின்னற் கூட்டம். மிடைவபோன்றும் - நெருங் கிவையகளைப் போலவும். தேன் இனம் - வண்டுக்கூட்டம். சிலம்பி ஆர்ப்ப - ஒலித்து ஆரவாரம் செய்ய. சிலம்பு இனம் - கால்களில் அணிந்த சிலம்புக் கூட்டம். பூநனை கூந்தல் - மலரில் உள்ள தேனால் நனைந்த கூந்தலையுடைய. பொம் என - விரைந்து. மொய்த்தார் - கூடினார்கள். `கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின் றோம்,இப் பெண்ணின்நீர் மையினால் எய்தும் பயன்இன்று பெறுதும்; என்பார்; மண்ணின்நீர் உலந்து, வானம் மழைஅற வறந்த காலத்து உண்ணும்நீர் கண்டு வீழும் உழைக்குலம் பலவும் ஒத்தார். 2 2. இப் பெண்ணின் நீர்மையினால் - இப் பெண் தன்மை யினால். எய்தும் பயன் - அடையும் பயனை. மண்ணின் நீர் உலந்து - நிலத்திலே நீர் இன்றிக் காய்ந்து. வானம் - மேகமும். மழைஅற - மழையின்றி. வறந்த காலத்து - வற்றியகாலத்தில். உழைக்குலம் - மான் கூட்டம். அரத்தம்உண்டு அனைய மேனி அகலிகைக்கு, அளித்த தாளும், விரைக்கரும் குழலிக் காக வில்இற நிமிர்ந்து வீங்கும் வரைத்தடம் தோளும் காண, மறுகினில் வீழும் மாதர், இரைத்துவந்து அமிழ்தின் மொய்க்கும் ஈஇனம் என்னல் ஆனார். 3 3. அரத்தம் உண்டு அனைய - செந்நிறத்தை விழுங்கியது போன்ற. அளித்த - அருள்புரிந்த. விரைக்கரும் குழலிக்காக - சீதையின் பொருட்டு. வில்இற - வில்ஒடியும்படி. வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்துஇமை யாது நின்ற மாதரார் கண்கள் ஊடே வாவுமான் தேரில் செல்வான்; யாதினும் உயர்ந்தோர், தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான். 4 4. கண்கள் ஊடே - கண்களின் இடையிலே. வாவு மான் தேரில் - தாவுகின்ற குதிரைகள் கட்டியதேரிலே. உறுபொருள் - தகுந்த பொருளை. தாக்கணங்கு அனையாள் மேனி தைத்தவேள் சரங்கள் பாராள்; வீக்கிய கலனும், தூசும், வேறுவேறு ஆனது ஓராள்; ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி,ஆண்டு அமலன் மேனி நோக்குகின் றாரை எல்லாம் எரிஎழ நோக்கு கின்றாள். 5 5. தாக்கு அணங்கு அனையாள் - மோகினியை ஒத்தவள் ஒருத்தி மேனி -தன் உடம்பில். வீக்கியகலையும் - இடையிலே கட்டிய மேகலையும். அமலன் மேனி - இராமனது மேனியை. தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அஃதே; வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார். 6 6. தொடுகழல் கமலம் அன்ன - அணிந்த வீரக்கழலை யுடைய தாமரை மலர் போன்ற. வாள்கொண்ட - வாளைப் போன்ற. ஊழ்கொண்ட - தனித் தனி முறையைக் கொண்டிருக் கின்ற. வண்ண வாய்ஒரு வாள்நுதல், `மானிடர்க்கு எண்ணும் கால்இவ் விலக்கணம் எய்திட ஒண்ணு மோ?ஒன்று உணர்த்துகின் றேன்இவன் கண்ண னே;இது கண்டிரும் பின்என்றாள். 7 7. வண்ணவாய் - அழகிய வாயையுடைய. ஒருவாள் நுதல் - ஒளியுள்ள நெற்றியை உடைய ஒருத்தி இதுபின் கண்டிரும் - இதைப் பின்பு காணுங்கள். வேர்த்து, மேனி தளர்ந்து,உயிர் விம்மலோடு, ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும், தீர்த்தன் இத்தனை சிந்தையின், செங்கணின் பார்த்தி லான்;உள் பரிவில னோ?என்றாள். 8 8. உயிர்விம்மலோடு - உயிரை வருத்தம் துன்பத்துடன். ஆர்த்தியுற்ற - ஆசையுற்ற. தீர்த்தன் - இராமன் இத்தனை - இவ்வளவையும். உள்பரிவு இலனோ - உள்ளத்திலே அன்பு இல்லாதவனோ? மருள் மயங்கு மடந்தையர் மாட்டொரு பொருள்ந யந்திலன் போகின்ற தே;இவன் கருணை என்பது கண்டறி யான்;பெரும் பரிண தன்கொல் படுகொலை யான்என்றாள் 9 9. மருள்மயங்கு - மடமை பொருந்திய. நயந்திலன் - விரும்பாதவனாய். போகின்றதே - செல்வது சரிதானோ. பரிண தன்கொல் - அறிவாளியோ; ஞானியோ. பெருத்த காதலின் பேதுறு மாதரின் ஒருத்தி, மற்றங்கு ஒருத்தியை நோக்கி, `என் கருத்தும் இவ்வழி கண்டதுண்டோ என்றாள்; அருத்தி உற்றபின் நாணம்உண் டாகுமோ! 10 10. பேது உறும் - அறியாமையைப் பெற்ற. அருத்தி உற்றபின் - ஆசை மிகுந்தபின். மாதர் இன்னணம் எய்த்திட, வள்ளல்போய்க், கோதில் சிந்தை வசிட்டனும், கோசிக வேத பாரனும் மேவிய மண்டபம், ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான். 11 11. இன்னணம் - இவ்வாறு. எய்த்திட - வருந்தி இளைக்கும் படி. கோசிக வேதபாரனும் - விசுவாமித்திர முனிவன் என்னும் வேதத்தை அறிந்தவனும். மேவிய - பொருந்திய. ஏதி - ஆயுதங் களை யுடைய. திருவின் நாயகன், மின்திரிந் தால்எனத் துருவு மாமணி ஆரம் துயல்வரப், பருவ மேகம் படிந்தது போல்படிந்து? இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான். 12 12. திருவின் நாயகன் - இராமன். மின்திரிந்தால் என - மின்னல் உலவியதுபோல. துருவு மாமணி ஆரம் - தேர்ந்தெடுத்த சிறந்த இரத்தின மாலை. துயல்வர - மார்பிலே அசைய. பருவமேகம் - கார்கால மேகம். இருவர் தாளும் - வசிட்டன், விசுவாமித்திரன் என்னும் இருவர் பாதங்களையும். இறைஞ்ச அன்னவர் ஏத்தினர்; ஏவஓர் நிறைங்ச பூந்தவிசு ஏறி நிழல்கள் போல் புறஞ்செய் தம்பிய ருள்பொலிந் தான்அரோ, அறஞ்செய் காவற்கு அயோத்தியுள் தோன்றினான். 13 13. அன்னவர் ஏத்தினர் - அவர்கள் வாழ்த்தினர். ஏவ - கட்டளையிட. புறம்செய் - பக்கத்திலே காவல்புரிந்து கொண்டிருக் கின்ற. அறம்செய் காவற்கு - அறத்தைக் காப்பதற்காக. அரோ; அசை. தசரதனும் படைகளுடன் அந்த மண்டபத்தை அடைந்தான்; முனிவர்களை வணங்கினான்; அரியா சனத்தில் அமர்ந்தான்; பொது மக்களும், பல நாட்டு மன்னர்களும் குழுமியிருந்தனர். 22. கோலம் காண் படலம் தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த ஓவியம் உயிர்பெற்று என்ன, உவந்துஅரசு இருந்த காலைத், தாவில்வெண் கவிகைச் செங்கோல் சனகனை இனிது நோக்கி, `மாவியல் நோக்கி னாளைக், கொணர்கென வசிட்டன் சொன்னான். 1 கோலம் காண்படலம்: சீதாதேவியை அலங்கரிக்கும் செய்தியைக் கூறும் பகுதி. 1. உவந்து அரசு இருந்தகாலை - மகிழ்ந்து தசரதன் இருந்த சமயத்தில். தாஇல் - குற்றமற்ற. வெண்கவிகை செங்கோல் - வெண்பட்டுக் குடையையும், செங்கோலையும் உடைய. மாஇயல் - மாவடுவின் தன்மையைக் கொண்ட. நோக்கினாளை - கண்களையுடைய சீதையை. உரைசெயத் தொழுதகையன், உவந்த உள்ளத்தன், `பெண்ணுக்கு அரசியைத் தருதிர் ஈண்டென்று ஆயிழை யவரை ஏவக், கரைசெயற்கு அரிய காதல் கடாவிடக், கடிது சென்றார், பிரசம்ஒத்து இனிய சொல்லார்; பேதை தாதியரில் சொன்னார். 2 2. உரைசெய - வசிட்டன் இவ்வாறு உரைத்தவுடன். ஆயிழைய வரை - ஏவற்பெண்களை. காதல் கடாவிட - அன்பு அவர்களைச் செலுத்த. பிரசம் ஒத்து -தேனைப்போன்ற. பேதை தாதியரில் - சீதையின் தாதிமார்களிடம் சனகன் உரைத்ததை. அமிழ்இமைத் துணைகள் கண்ணுக்கு அணியென அமைக்கு மாபோல், உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார்; அமிதினைச் சுவைசெய் தென்ன அழகினுக்கு அழகு செய்தார்; இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ! 3 3. அமிழ் இமை - அமிழ்கின்ற இமைகளை. துணைகள் கண்ணுக்கு - துணைகளாகக்கொண்ட கண்களுக்கு. அணிஎன அமைக்கும் ஆபோல் - அணிகலன் என்று ஒன்றைப் பொருத்து வதுபோல. உருவினை - அழகை. ஓரார் - அறியாதவர்களாய். சுவைசெய்து என்ன - ருசியுடையதாகச் செய்தது போல. இமிழ்திரை - ஒலிக்கின்ற அலைகளையுடைய. பரவை ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகம். ஏழைமை - அறியாமை. மாது; ஓ; அசைகள். நெய்வளர் விளக்கம் ஆட்டி, நீரொடு பூவும் தூவித் தெய்வமும் பராவி, வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன், ஐயவி அறுகு சேர்த்தி, வால்நிற அயினி சுற்றிக், கைவளர் மயில்அன் னாளை வலம்செய்து காப்பும் இட்டார். 4 4. நெய்வளர் - எண்ணெயால் எரிகின்ற. விளக்கம் காட்டி - விளக்கைச் சுற்றி; தீபாராதனைகாட்டி. வேதபாரகர்க்கு - வேதபாராயணம் செய்தவர்களுக்கு; செம்பொன் ஈந்து. ஐயவி, அறுகு சேர்த்தி - வெண்சிறுகடுகும், அறுகம்புல்லும் கூட்டி, வால்நிற அயினி சுற்றி - தூயநிறமுள்ள ஆலத்தி நீரைச்சுற்றி எடுத்து. காப்பும் இட்டார் - கையிலே மஞ்சட் கயிற்றாலான காப்பும் கட்டினர். கஞ்சத்துக் களிக்கும் இன்தேன் கவர்ந்துணும் வண்டு போல, அம்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினான் அழகை மாந்தித், தம்சொற்கள் குழறித், தத்தம் தகைதடு மாறி நின்றார்; மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ 5 5. கஞ்சத்து - தாமரை மலரிலே. கிள்ளைக் கெல்லாம் - கிளிகளுக் கெல்லாம். மாந்தி - கண்களால் பருகி. தத்தம் - தங்கள் தங்கள். தகைதடுமாறி - இயற்கைக் குணங்கள் குலைந்து. மஞ்சர்க்கும் - மைந்தர்களுக்கும். இழைகுலாம் முலையி னாளை, இடைஉவா மதியின் நோக்கி, மழைகுலாம் ஓதி நல்லார் களிமயக்கு உற்று நின்றார்; உழைகுலாம் நயனத் தார்மாட்டு ஒன்றொன்றே விரும்பற்கு ஒத்தது; அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்? 6 6. இழைகுலாம் - அணிகலன்கள் விளங்குகின்ற. இடை உவாமதியின் நோக்கி - பௌர்ணமியில் தோன்றும் முழுமதியைப் போலப் பார்த்து. மழை குலாம் ஓதி - மேகம்போல் விளங்கும் கூந்தலையுடைய. நல்லார் - பெண்கள் களி - களிப்பினால். உழை குலாம் - மான் கண்களைப்போல் விளங்குகின்ற. ஒன்று ஒன்றே - ஒவ்வொரு அவயத்தின் அழகுமே. ஆற்றவல்லார் யாவரே - அன்புகாட்டாமல்பொறுத்திருக்க வல்லவர் யார்தான். சங்கம்கை உடைமை யாலும், தாமரைக் கண்ண தாலும், எங்கெங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற் றென்ன அங்கங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின் நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம்இனிப் புகல்வ தென்னோ! 7 7. சங்கம் - சங்கு வளையல்களை; வலம்புரிச்சங்கை. தாமரை - செந்தாமரை மலரை; அன்பர்களின் உள்ளத் தாமரைகளை. வெவ்வேறு உள்ளத்தின் - தனித்தனியாக உள்ளத்திலே. எழுதிற்று என்ன - எழுதிவைத்தது போல. நங்கையும் - சீதையும். நம்பி ஒத்தாள் - இராமனை ஒத்தாள். வல்லியை உயிர்த்தநில மங்கைஇவள் பாதம் மெல்லிய உறைக்கும்என அஞ்சிவெளி எங்கும் பல்லவம் மலர்த்தொகை பரப்பினள் எனத்தன் நல்அணி மணிச்சுடர் தவழ்ந்திட நடந்தாள். 8 8. வல்லியை - கொடிபோன்ற சீதையை. உயிர்த்த - பெற்ற. உரைக்கும் - உறுத்தும். பல்லவம் மலர்த்தொகை - தளிர்களையும், மலர்களையும். என - என்று சொல்லும்படி. தவழ்ந்திட - பரவும்படி. பொன்னின்ஒளி, பூவின்வெறி, சாந்துபொதி சீதம், மின்னின்எழில் அன்னவள்தன் மேனியது மான, அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தும் நாண மன்அவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள். 9 9. பூவின்வெறி - பூவின்மணம். சாந்துபொதிசீதம் - சந்தனத்திலே உள்ள குளிர்ச்சி. மின்னின் நிழல் - மின்னலின் ஒளி. அன்னவள்தன் - இவைகளெல்லாம் அவளுடைய. மேனிஒளி மான - உடம்பின் அழகை ஒத்திருக்க. மன் அவை இருந்த - மன்னர்கள் சபை கூடியிருந்த. அன்னவளை, `அல்லள்என, ஆம்என அயிர்ப்பான் கன்னிஅமிழ் தத்தைஎதிர் கண்டகடல் வண்ணன்; உன்உயிர் நிலைப்பதொர் அருத்தியொடு உழைத்தாண்டு இன்அமிழ்து எழக்களிகொள், இந்திரனை ஒத்தான். 10 10. கடல்வண்ணன் - இராமன். அன்னவளை -அச்சீதையை. அல்லள் என - முன் நான் பார்த்தவள் அல்லள் என்றும். ஆம்என - அவளேயாம் என்றும். அயிர்ப்பான் - சந்தேகப்படுவான். உன் உயிர் - சிறந்ததாகக் கருதப்படும் உயிர். நிலைப்பது ஒரு அருத்தி யொடு - நிலைத்திருக்கவேண்டும் என்னும் ஓர் ஆசையுடன். எழ களிகொள் - எழக்கண்டு களிப்புக் கொண்ட. `எங்கள்செய் தவத்தினில் இராமன்என வந்தோன் சங்கினொடு சக்கரம் உடைத்தனி முதல்;பேர் அங்கண்அரசு; ஆதலின்அவ் அல்லிமலர் புல்லும் மங்கையிவள் ஆம்என வசிட்டன்மகிழ் வுற்றான். 11 11. தனிமுதல் - ஒப்பற்ற முதல்வனாவான். பேர் அம்கண் அரசு - பெரிய அழகிய கண்களையுடைய அரசன். அல்லிமலர் - தாமரை மலரில். புல்லும் - பொருந்திய. மங்கை திருமகள். துன்றுபுரி கோதைஎழில் கண்டு,உலகு சூழ்வந்து ஒன்றுபுரி கோலொடு தனித் திகிரி உய்ப்பான் `என்றும்உல கேழும்அர செய்திஉளன் ஏனும், இன்றுதிரு எய்தியதுஇது என்னவயம் என்றான். 12 12. துன்றுபுரி கோதை - நெருக்கமாக மலர்களை வைத்துத் தொடுக்கப் பட்ட மாலையை அணிந்த. உலகுசூழ் வந்து -உலகம் முழுவதையும் சுற்றி வந்து. ஒன்றுபுரி - ஒரே விதமாக ஆட்சிபுரி கின்ற. கோலொடு - செங்கோலுடன். உய்ப்பான் செலுத்து கின்றவனாகிய தசரதன். நைவளம் நவிற்றுமொழி நண்ணவர லோடும் வையம்நுகர் கொற்றவனும் மாதவனும் அல்லார் கைகள்தலை புக்கன; கருத்துளவை எல்லாம் தெய்வம்என உற்ற; உடல் சிந்தைவயம் அன்றோ; 13 13. நைவளம் நவிற்றும் மொழி - நைவளம் என்னும் பண்ணைப்போல் பேசுகின்ற சொற்களையுடைய சீதை. நண்ண - அருகில். வையம் நுகர் கொற்றவனும் - இவ்வுலகத்தையே ஊழிநாளில் உண்ணும் திருமாலின் அவதாரமாகிய இராமனும். கருத்து உளதும் எல்லாம் - கருத்துள்ள எல்லாப் பொருள்களும். உற்ற - நினைத்தன. மாதவரை முற்கொள வணங்கி,நெடு மன்னன் பாதமல ரைத்தொழுது, கண்கள்பனி சோரும் தாதைஅருகு இட்டதவி சில்,தனி இருந்தாள்; போதினை வெறுத்தரசர் பொன்மனை புகுந்தாள். 14 14. மாதவரை - முனிவர்களை. முற்கொள வணங்கி - முதலிலே பணிந்து - நெடுமன்னன் - பெரிய மன்னனாகிய தசரதனுடைய. கண்கள் பனிசோரும் - கண்களிலே குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர் ஒழுகுகின்ற. தாதை அருகு - தந்தையாகிய சனகன் பக்கத்திலே. போதினை - தாமரை மலரை. புகுந்தாள் - புகுந்தவளாகிய சீதாதேவி. எய்வளைவில் ஏற்றதும் இறுத்ததும் உரைத்தும் மெய்விளை விடத்துமுதல் ஐயம்விடல் உற்றாள்; ஐயனை அகத்து வடிவேஅல, புறத்தும் கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள். 15 15. எய்வளைவில் - அம்பெய்வதற்கு வளைக்கின்ற வில்லை. இறுத்ததும் - ஒடித்ததையும். உரைத்தும் - சொல்லக்கேட்டும். மெய்விளைவு இடத்து - உண்மை தெரிந்தபோதிலும். முதல் ஐயம் - முதலிலே உண்டான சந்தேகத்தை. விடல் உற்றாள் - இப்பொழுது விடத்தொடங்கினாள். ஐயனை - இராமனை. அகத்து வடிவே அல - உள்ளத்திலே காணும் உருவத்தை மட்டும் அல்லாமல். கரும்கடை நெடும்கண்ஒளி ஆறு,நிறை கண்ணப் பெரும்கடலின் மண்டஉயிர் பெற்றினிது உயிர்க்கும் அரும்கலன் அணங்குஅரசி, ஆர்அமிழ்து அனைத்தும் ஒருங்குஉடன் அருந்தினரை ஒத்துஉடல் தடித்தாள். 16 16. ஒளிஅறு - ஒளியாகிய ஆறு. நிறைகண்ணப் பெரும் கடலில் - நிறைந்த கண்ணன் என்னும் பெரிய கடலிலேபோம். மண்ட - பாய. உயிர்பெற்று இனிது உயிர்க்கும் - அதனால் உயிர் பெற்று இனிதாக விளங்குகின்ற. கணம்குழை `கருத்தில்உறை கள்வன்எனல் ஆனான் வணங்குவில் இறுத்தவன் எனத்துயர் மறந்தாள்; அணங்குறும் அவிச்சைகெட விச்சையின் அகம்பாடு உணர்ந்தறிவு முற்றுபயன் உற்றவரை ஒத்தாள். 17 17. கணம்குழை - தொகுதியான காதணிகளையுடைய சீதை. கருத்தின் உறை - என் உள்ளத்திலே உறைகின்ற. கள்வன் எனல் ஆனால் - கள்வன் என்று சொல்லக்கூடியவன்தான். வணங்குவில் இறுத்தவன் - வளையும் வில்லை ஒடித்தவன். அணங்குறும் - துன்புறுத்துகின்ற. அவிச்சை கெட - அறியாமை ஒழிய. விச்சை யின் - கல்வி அறிவால். அகம்பாடு உணர்ந்து - உள்ளத்திலே இறைவன் தோன்றுவதை அறிந்து. அறிவுமுற்று - அறிவு முதிர்ந்து. பயன் உற்றவரை - பயனடைந்த ஞானியரை. அக்காலை தசரதன், தன் அண்டையிலிருந்த கௌசிகனை நோக்கித் திருமணத்திற்கேற்ற நன்னாளைக் குறிக்க வேண்டினான். வாளைஉக ளக்கயல்கள் வாவிபடி மேதி மூளைமுது கைக்கதுவ மூரியவ ரால்மீன் பாளைவிரி யக்குதிகொள் பண்ணைவள நாடா நாளைஎன உற்றபகல் நற்றவன் உரைத்தான். 18 18. வாளை - வாளைமீன். உகள - துள்ள. கயல்கள் தாவு அதின் - கயல் மீன்கள் தாவுகின்ற அதனால். மேதி - எருமையின். மூளை - தலையையும். முதுகை - முதுகையும். கதுவ - உரச, மூரிய - வலிமையுள்ள. பாளைவிரிய - கமுகமரத்தின் பாளை விரியும் படி. உற்ற பகல் நாளை - பொருத்தமான நாள் நாளையாகும். அன்னம்அரி திற்பிரிய அண்ணலும் அகன்றுஓர் பொன்னின்நெடு மாடமனை புக்கனன்; மணிப்பூண் மன்னவர் பிரிந்தனர்கள்; மாதவர்கள் போனார்; மின்னுசுடர் நாயகனும் மேருவின் மறைந்தான். 19 19. அன்னம் - சீதாதேவி. அண்ணல் - இராமன். மின்னு சுடர் நாயகன் - சூரியன். 23. கடிமணப் படலம் இரவு முழுதும் இராமனும் சீதையும் உறங்கவில்லை; தனித் தனியே இருந்து காதலால் தவித்தனர்; பொழுது புலர்ந்தது; இன்று சானகிக்குத் திருமண நாள் என்று பறைசாற்றப் பணித்தான் சனகன்; பறையறைந்தனர்; உடனே நகர மக்கள் உவகையுடன் நகரை அணி செய்தனர். மணம் காண வந்த மக்கள் கலவைகள் புனைவாரும், கலன்நல தெரிவாரும், மலர்குழல் மிலைவாரும், மதிமுகம் மணிஆடித் திலகம்முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும், இலவுஇதழ் பொலிகோலம் எழில்பெற இடுவாரும். 1 கடிமணப் படலம்: சிறந்த திருமணத்தைப்பற்றி உரைக்கும் பகுதி. கடிமணம் - சிறந்த விவாகம். 1. கலவைகள் - வாசனை கலந்தவைகளை. கலன் நல தெரிவாரும் - அணிகலன்களை நல்லவைகளாகத் தெரிந்தெடுத்து அணிகின்றவர்களும் மதிமுகம் - மதிபோன்ற முகத்தில். மணிஆடி - இரத்தினத்தால் ஆன கண்ணாடியின் முன்நின்று. திலகம் - பொட்டினை. முன் இடுவாரும் - நெற்றியில் வைப்பவர்களும். சிகழிகை - மாலையை. இலவு இதழ் - இலவு மலர்போன்ற உதட்டிலே. பொலி - விளங்கும்படி. கோலம் - செந்நிறக் கோலத்தை. மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும், இன்னிசை மணியாழின் இசைமது நுகர்வாரும், சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும், கன்னலின் மணவேலைக் கடிகைகள் தெரிவாரும். 2 2. மணியாழின் - அழகிய யாழின். இசைமது - இசைத் தேனை. சென்னியர் - பாணர்கள். சிலதியர்- தோழியர்கள். கன்னலின் - நாழிகை காட்டும் கருவிகளைக்கொண்டு. மண ஓலை கடிகைகள் - மண ஓலையில் குறிப்பிட்டிருக்கும் நேரங்களை. தெரிவாரும் - ஆராய்கின்றவர்களும். தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும், ஊர்தியில் வருவாரும், ஒளிர்மணி நிறைஓடைக் கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும், பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும். 3 3. ஊர்தியில் - வேறு வாகனங்களில். ஒளிர் மணி நிறை - ஒளிவீசும் மணிகள் நிறைந்த. ஓடை - நெற்றிப்பட்டத்தையுடைய. கார்மிசை - கரிய ஆண்யானைகளின் மேல். கரிணியில் - பெண் யானைகளின்மேல். திருமண மண்டபக் காட்சி கரைதெரிவு அரியது, கனகம் வேய்ந்தது, வரைஎன உயர்ந்தது, மணியில் செய்தது, நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்; அரசர்தம் அரசனும் அணுகல் மேயினான். 4 4. கரைதெரிவு அரியது- அளவுகாண முடியாதது. கனகம் - பொன். நிரைவளை - வரிசையாக வளையல்களை அணிந்த சீதையின். மணவினை நிரப்பும் - மணத்திற்கான பண்டங்களை நிரப்பிவைத்திருக்கும் மண்டபம். அரசர்தம் அரசன் - தசரதன். அனையவன் மண்டபம் அணுகி, அம்பொனின், புனைமணி ஆதனம் பொலியத் தோன்றினான்; முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்; சனகனும் தன்கிளை தழுவ ஏறினான். 5 5. மண்டபம் அணுகி - மண்டபத்தை அடைந்து. அம்பொனின் மணிபுனை - அழகிய பொன்னில் இரத்தினங் களை வைத்துச் செய்யப்பட்ட. ஆசனம் பொலிய - ஆசனம் சிறந்து விளங்கும்படி. தன்கிளை தழுவ - தனது சுற்றத்தார் சூழ. எண்தவ முனிவரும், இறைவர் யாவரும், அண்டரும், பிறரும்புக்கு அடங்கிற் றாதலின், மண்டபம், வையமும் வானும் வாய்மடுத்து உண்டவன் மணிஅணி உதரம் ஒத்ததே. 6 6. எண் தவமுனிவரும் - சிறந்த தவத்தையுடைய முனிவர் களும். மண்டபம் - அக் கல்யாணமண்டபமானது. வாய்மடுத்து - வாயிலே வைத்து. உண்டவன் - உண்ட திருமாலின். மணி அணி - நீலமணியைப்போன்ற அழகிய. உதரம் - வயிற்றை. இராமன் மாப்பிள்ளைக் கோலங் கொள்ளல் சங்கினம் தவழ்கடல் ஏழில் தந்தவும், சிங்கல்இல் அருமறை தெரிந்த தீர்த்தங்கள் கங்கையே முதலவும், கலந்த நீரினால் மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே. 7 7. கடல் ஏழில் - கடல்கள் ஏழிலிருந்தும். தந்தவும்- கொண்டு வந்தனவும். சிங்கல் இல் - குற்றம் இல்லாத. அருமறை தெரிந்த - அரிய வேதங்களால் ஆராய்ந்தறிந்த. தீர்த்தங்கள் - தீர்த்தங்களான. மஞ்சனம் - நீர்முழுக்கை; அபிஷேகத்தை. மரபின் - முறைப்படி. கோதறு தவத்துத்,தன் குலத்துளோர் தொழும் ஆதிஅம் சோதியை அடிவ ணங்கினான்; காதுஇயல் கயல்விழிக் கன்னி மார்களை வேதியர்க்கு அருமறை விதியின் நல்கியே. 8 8. கோது அறுதவத்து - குற்றமற்ற தவத்தினையுடைய. ஆதி அம்சோதியை - முதன்மையான அழகிய ஒளிமயமான அரங்க நாதனை. காது இயல் - காதுவரையிலும் நீண்டிருக்கின்ற. கயல் - சேல்மீன் போன்ற. அழிவரும் தவத்தினோடு அறத்தை ஆக்குவான், ஒழிவரும் கருணைஓர் உருவு கொண்டென, எழுதரும் வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே. 9 9. அழிவரும் - தீயோர்களால் அழிந்து வருகின்ற. தவத்தினோடு அறத்தை - தவத்தையும் அறத்தையும். ஆக்குவான் - நிலைக்கச் செய்யும் பொருட்டு. ஒழிவு அரும் - நீங்காத. கருணை - கருணையே. கலவை சாத்தி - கலவைச் சந்தனம்பூசி. இராமன், மேகம் போன்றவன். மண்உறு சுடர்மணி வயங்கித் தோன்றிய கண்உறு கரும்கடல் அதனைக், கைவளர் தண்நிறப் பாற்கடல் தழீஇய தாம்என வெண்ணிறப் பட்டொளி விளங்கச் சாத்தியே. 10 10. மண்உறு - சாணைபிடித்து. சுடர்மணி - ஒளிவிடுகின்ற இரத்தினம் போல். வயங்கித் தோன்றிய - விளங்குகின்ற. கண்உறு - பெருமை பொருந்திய. கருங்கடல் அதனை - கருங்கடலை. கைவளர் - அலைகளாகிய கைகளையுடைய. தண் நிறம் - குளிர்ச்சியும் வெண்ணிறமும் பொருந்திய. தழீஇயதாம் என - தழுவிக்கொண்டதாம் என்று சொல்லும்படி. இராமன் கருங்கடல் போன்றவன். முப்பரம் பொருளுக்குள் முதலை, மூலத்தை, இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை, அப்பனை, அப்பினுள் அமுதைத் தன்னையே ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ. 11 11. முப்பரம்பொருள் - சிவன், திருமால், நான்முகன் என்னும் மூன்று, பரம்பொருள்கள். இப்பரம் - இந்த உலகத்தொடர்பை. துடைத்தவர் - விட்டவர். அப்பினுள் - பாற்கடலில் அமைந்த. தன்னையே ஒப்பனை - தன்னைத்தானே ஒத்திருப்பவனை. ஒப்பனை - அலங்காரம் செய்ததைப்பற்றி. உரைக்க ஒண்ணுமோ - சொல்லமுடியுமோ? இராமன் மணமண்டபத்தை அடைதல் பல்பதி னாயிரம் பசுவும், பைம்பொனும் எல்லையில் நிலனொடு மணிகள் யாவையும் நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான்மறைச் செல்வர்கள் வழுத்துறத் தேர்வந்து ஏறினான். 12 12. நான் மறைச் செல்வர்கள் - அந்தணர்கள். வழுத்துற - வாழ்த்துக் கூற. தேர்வந்து ஏறினான் - இராமன் தேரில் வந்து ஏறினான். பொன்திரள் அச்சது, வெள்ளிச் சில்லிபுக்கு உற்றது, வயிரத்தின் உற்ற தட்டது, சுற்றுறும் நவமணி சுடரும் தோற்றத்தது; ஒற்றைஆ ழிக்கதிர்த் தேரோடு ஒப்பதே. 13 13. வெள்ளிச்சில்லி - வெள்ளிச் சக்கரம். புக்கு உற்றது - புகுந்து அமைந்தது. சுற்றிஉறும் - சுற்றிலும் பொருந்திய. நவமணி சுடரும் - நவமணிகள் ஒளிவீசும். ஒற்றை ஆழிக்கதிர் - ஒற்றைச் சக்கரத்தையுடைய கதிரவனது. அனையதோர் தேரினில் அருணன் நின்றெனப், பனிவரும் மலர்க்கண்அப் பரதன் கோல்கொளக், குனிசிலைத் தம்பியர் இருவ ரும்குழைந்து இனியபொன் கவரிகால் இயக்க, ஏகினான். 14 14. அருணன் நின்று என - சூரியனின் தேர்ப்பாகனாகிய அருணன் ஓட்டுவதற்காக ஏறிநின்றதைப்போல. பனிவரு மலர் கண் - குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்களையுடைய. கோல் கொள - குதிரை ஓட்டும் கோலைக் கையிலே கொள்ள. குனிசிலை - வளைந்த வில்லுகளையுடைய; கவரிகால் இயக்க - கவரிகளால் காற்று வீச. வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின் எள்அரும் பூண்எலாம் இரிய நிற்கின்றார்; உள்ளன யாவையும் உதவிப், பூண்டவும் கொள்எனக் கொள்எனக் கொடுக்கின் றாரினே. 15 15. மகளிர் - பெண்கள். உள்ளனயாவையும் உதவி - உள்ளவற்றை யெல்லாம் கொடுத்து. பூண்டவும் - தாம் உடம்பில் அணிந்திருக்கின்ற வற்றையும். கொடுக்கின்றாரின் - கொடுக் கின்றவர்களைப்போல். பூண் எலாம் - அணிகலன்கள் எல்லாம். இரிய - நீக்கும்படி. திருமணக் காட்சி இவ்வாறு சென்ற இராமன் தேரை விட்டிறங்கித் திருமண மண்டபத்தை எய்தினான்; முனிவர்களையும் தந்தையையும் முறையே வணங்கித் தந்தையின் அருகில் அமர்ந்தான்; சீதையும் அம்மண்டபத்தை அடைந்தாள். அனைவரும் சீதா - ராமர் களைக் கண்டு சிந்தை மகிழ்ந்தனர். மன்றலின் வந்தும ணித்தவிசு ஏறி, வென்றி நெடுந்தகை வீரனும், ஆர்வத்து, இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்; ஒன்றிய போகமும், யோகமும் ஒத்தார். 16 16. மன்றலின் வந்து- கல்யாணமண்டபத்தை அடைந்து. மணித் தவிசுஏறி - இரத்தினாசனத்தில் ஏறி. வீரனும் - இராமனும். அன்னமும் - அன்னம்போன்ற சீதையும். கோமகன் முன்சன கன்குளிர் நன்னீர், `பூமக ளும்பொரு ளும்என நீஎன் மாமகள் தன்னொடு மன்னுதி என்னாத் தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான். 17 17. கோமகன் முன் - அரசகுமாரனாகிய இராமன் முன்பு. குளிர் நன்னீர் - குளிர்ந்த நல்ல நீரைச் சொரிந்து. (தாரை வார்த்து) பூமகளும் பொருளும் என - திருமகளும் செல்வமும்போல. மன்னுதி - இணைந்து வாழ்க. தடம்கையில் - நீண்ட இராமன் கையிலே. அந்தணர் ஆசி, அரும்கல மின்னார் தந்தபல் லாண்டிசை, தார்முடி மன்னர் வந்தனை, மாதவர் வாழ்த்தொலி யோடு முந்திய சங்கம் முழங்கின; மாதோ. 18 18. அரும்கல மின்னார் - சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்கள். பல்லாண்டு இசை - பல்லாண்டுப் பாடல். முந்திய - முற்பட்ட. வெய்ய கனல்தலை, வீரனும் அந்நாள் மையறு மந்திரம் மும்மை வழங்கா, நெய்அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே, தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான். 19 19. வெய்ய கனல்தலை - வெப்பமுள்ள தீயின் எதிரிலே. வீரனும் - இராமனும். மையறு - குற்றமற்ற. மும்மை- மூன்று முறை. வழங்கா - சொல்லி. ஆவுதி - தீயின்முன் செய்யவேண்டிய. யாவையும் - எல்லாச் சடங்குகளையும், நேர்ந்தே - செய்து முடித்தபின். இடம்படு தோள்அவ னோடுஇயை வேள்வி தொடங்கிய வெம்கனல் சூழ்வரு போதில், மடம்படு சிந்தையள், மாறு பிறப்பில் உடம்புஉயி ரைத்தொடர் கின்றதை ஒத்தாள். 20 20. இடம்படு - விசாலமான. தோள் அவனோடு - புயங்களையுடைய இராமனுடன். இயை - பொருந்துவதற்கான. வேள்வி தொடங்கிய - திருமணத்தைச் செய்யத் தொடங்கிய. வெம்கனல் சூழ்வருபோதில். வெம்மையான தீயைச் சுற்றிவரும் போது. மடம்படு - அறியாமை பொருந்திய. சிந்தையள் - சிந்தையளாகிய சீதை. மாறுபிறப்பில் - மாறிவரும் பிறப்பிலே. உடம்பு - உடம்பானது. வலம்கொடு தீயை வணங்கினர் வந்து, பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி, இலங்கொளி அம்மிமி தித்து,எதிர் நின்ற கலங்கல்இல் கற்பின் அருந்ததி கண்டார். 21 21. பொலம் பொரி செய்வன - அழகிய பொரிகளைக் கொண்டு செய்வனவாகிய. செய்பொருள்முற்றி - சடங்குகளை யெல்லாம் முடித்து. கலங்கல் இல் - கலக்கமற்ற. மற்றுள செய்வன செய்து மகிழ்ந்தார்; முற்றிய மாதவர் தாள்முறை சூடிக், கொற்றவ னைக்கழல் கும்பிட லோடும் பொற்றொடி யைக்கொடு நன்மனை புக்கான். 22 22. மற்று உள செய்வன - மற்றும் உள்ள செய்யக் கடவனவாகிய சடங்குகளை யெல்லாம். முற்றிய - அறிவிலே முதிர்ந்த. மாதவர்தாள்- முனிவர்களின் பாதங்களை. முறைசூடி - முறைப்படி தலையில் சூட்டிக் கொண்டு. கொற்றவனை - தசரதனை. கேகயன் மாமகள் கேழ்கிளர் பாதம் தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி, ஆயதன் அன்னை அடித்துணை சூடித், தூயசு மித்திரை தாள்தொழ லோடும். 23 23. கேகயன் மாமகள் - கைகேசி. கேழ்கிளர் - ஒளிபொருந்திய. அன்னமும் அன்னவர் அம்பொன் மலர்த்தாள் சென்னிபு னைந்தனள்; சிந்தை உவந்தார்; கன்னி அருந்ததி காரிகை காணா! `நன்மக னுக்கிவள் நல்அணி என்றார். 24 24. அன்னமும் - சீதையும். சென்னி - தலையிலே. கன்னி - இப்பெண். அருந்ததி காரிகை - அருந்ததிபோன்ற கற்புடையவள். நல்அணி - நல்ல அணிகலன். எண்இல கோடிபொன், எல்லையில் கோடி வண்ண அரும்கலன், மங்கையர் வெள்ளம், கண்அகல் நாடுஉயர், காசொடு தூசும், பெண்ணின் அணங்கனை யாள்,பெறு கென்றார் . 25 25. வண்ண அரும்கலன் - ஒளிபொருந்திய சிறந்த அணிகலன்கள். வெள்ளம் - கூட்டம். கண் அகல் - பெரிய. காசு உயர் தூசும் - விலை உயர்ந்த ஆடைகளும். பெண்ணின் - பெண்களிலே. அணங்கு அனையாள் - தெய்வம்போன்றவள். நூற்கடல் அன்னவர் சொற்கடல் நோக்கி, மால்கடல் அன்ன மனத்தவ ளோடும் கார்க்கடல் போல்கருணைக் கடல், பண்டைப் பாற்கடல் ஒப்பதுஓர் பள்ளி அணைந்தான். 26 26. நூல்கடல் அன்னவர் - நூல்களின் கடல்போன்ற அறிஞர்களின். சொல் கடன்நோக்கி - சொற்களின்படி தன் கடமையை உணர்ந்து செய்தபின். கடல் அன்னமால் - கடலைப் போன்ற பெரிய காதலைக்கொண்ட. மனத்தவளோடும் - மனத்தவளாகிய சீதையுடன். கார்கடல்போல் கருணைக் கடல் - கரிய கடல்போன்ற கருணைக்கடலாகிய இராமன். பள்ளி - படுக்கை. பின்னர்ச் சனகனின் தம்பியாகிய குவசத்துவசனு டைய மகளிர் ஊர்மிளையை இலக்குவனும், மாண்டவி யைப் பரதனும், சுருத கீர்த்தியைச் சத்துருக்கனனும் மணந்தனர். இராமனுடைய திருமணம் போலவே, இவர்களுடைய திருமணங்களும் இனிது நடந்தன. ஈந்து அளவு இல்லதுஓர் இன்பம் நுகர்ந்தே ஆய்ந்துஉணர் கேள்வி அருந்தவ ரோடும், வேந்தனும் அந்நகர் வைகினன்; மெள்ளத் தேய்ந்தன நாள்சில; செய்தது உரைப்பாம். 27 27. வேந்தனும் - தசரதனும். வைகினன் - வசித்தான். நாள் சில தேய்ந்தன - நாட்கள் சில கழிந்தன. 24. பரசுராமப் படலம் விசுவாமித்திரன் அனைவரையும் வாழ்த்தி விட்டு இமயம் நோக்கிச் சென்றான்; தசரதன் முதலிய அனைவரும் அயோத்திக்குப் புறப்பட்டனர். முன்னேநெடு முடிமன்னவன் முறையில்செல, மிதிலை நன்மாநகர் உறைவார்மனம் நனிபின்செல, நடுவே தன்ஏர்புரை தருதம்பியர் தழுவிச்செல, மழைவாய் மின்னேபுரை இடையாளொடும் இனிதேகினன் வீரன். 1 பரசுராமப் படலம்: பரசுராமனை, இராமன் வெற்றி கொண்ட செய்தியை உரைக்கும் பகுதி. 1. முடிமன்னவன் - தசரதன். நனி பின்செல - மிகவும் அன்புடன் பின்னேபோக. தன் ஏர்புரைதரு - தன் அழகை ஒத்த. தழுவிச்செல - சேர்ந்து செல்ல. மழைவாய் மின்னே புரை - மேகத்தில் தோன்றும் மின்னலைப்போன்ற. இடையாள் - சீதை. வீரன் - இராமன். சகுனம் ஏகும்அள வையின்,வந்தன வலமும்மயில், இடமும் காகம்முத லியமுந்திய, தடைசெய்வன கண்டான், நாகம்அனன், `இடையிங்குளது இடையூறுஎன நடவான், மாகம்மணி அணிதேரொடு நின்றான்நெறி வந்தான். 2 2. ஏகும் அளவையின் - இவ்வாறு போகும்போது. வந்தனமயில் வலமும் - வந்தனவாகிய மயில் வலப்பக்கமாகவும். காகம் முதலிய - காகம் முதலிய பறவைகள். இடமும் முந்தின - இடப்பக்கமாகவும் காணப்பட்டனவாய். நாகம் அன்ன - யானை போன்ற தசரதன். இடை - வழியிடையே. இங்கு இடையூறு உளது என; நடவான் - மேலே செல்லாதவனாய். மாகம் அணி அணிதேரொடு - வானத்தை அளாவியஅழகிய தேரோடு. நின்றான் - அப்படியே நின்றுவிட்டான். நின்றேநெறி உணர்வான்ஒரு நினைவாளனை அழையா, நன்றோ,பழுது உளதோ,நயம் உரைநீநடு, என்னக் குன்றேபுரை தோளான்எதிர் புள்ளின்குறி தேர்வான் இன்றேவரும் இடையூறுஅது நன்றாய்விடும் என்றான். 3 3. நின்றே - இவ்வாறு பயணத்தை நிறுத்தி. நெறி உணர்வான் - சகுனத்தின் முறையை உணர்கின்றவனாகிய. ஒரு நினைவாளனை - ஒரு ஆராய்ச்சியாளனை. தோளான் எதிர் - தசரதன்முன். அது நன்றாய்விடும் - இறுதியில் அது நன்மையாக முடியும். பரசுராமன் வருகை பாழிப்புயம் உயர்திக்கிடை அடையப்,புடை படரச் சூழிச்சடை முடிவிண்தொட, அயல்விண்மதி தொத்த, ஆழிப்புனல், எரி,கால்,நிலம், ஆகாயமும் அழியும் ஊழிக்கடை முடிவில்தனி உமைகேள்வனை ஒப்பான். 4 4. பாழிப்புயம் - வலிமை பொருந்திய தோள்கள். புடைபடர் - பக்கத்திலே பொருந்திய. அ சூழிச்சடைமுடி - அந்த உச்சியை யுடைய சடாமகுடம். விண்தொட - வானத்தைத் தொட. அயல் - அச்சடைமுடியின் பக்கத்திலே. ஆழிப்புனல் - கடல்நீர். எரி - தீ. கால் - காற்று. நிலம் - ஆகாயமும். அழியும் - (ஆகிய) ஐம்பூதங்களும் அழிகின்ற. ஊழிக் கடைமுடிவில் - ஊழியின் இறுதியிலே. தனி - தனித்து நிற்கும். உமைகேள்வன் - உமா தேவியின் கணவனாகிய சிவபெருமான். சையம்புக நிமிர்அக்கடல் தழுவும்படி சமைவான் மையின்உயர் மலைநூறிய மழுவாளவன் வந்தான்; ஐயன்தனை அரிதில்தரும் அரசன்அது கண்டான் வெய்யன்வர நிபம்என்னைகொல் எனவெய்துறும் வேலை. 5 5. சையும்புக - மலையானது பூமியினுள் மறைய. நிமிர் அக்கடல் - அதனால் மேலே பொங்கிவந்த அக்கடல். தழுவும்படி - நிலத்தை மூடிக் கொள்ளும்படி. சமைவான் - முயற்சி செய்பவனாகிய. மையின் - மேகங்களுடன். உயர்மலை நூறிய - உயர்ந்த கிரவுஞ்சமென்னும் மலையை அழித்த. மழுவாள் அவன் - கோடரிப் படையைக்கொண்ட பரசுராமன். அரசன் - தசரதன். வெய்யன்வர - இக்கொடியவன் இங்கு வருவதற்கு. நிபம் - காரணம். வெய்துறும் வேலை - துன்புறும்போது. பொங்கும்படை இரியக்,கிளர் புருவக்கடை நெரிய, வெங்கண்பொறி சிதறக்,கடிது உரும்ஏறென இடியாச், சிங்கம்என உயர்தேர்வரும் குமரன்எதிர் சென்றான், அங்கண்,அர சன்மைந்தனும் ஆரோஎனும் அளவில். 6 6. பொங்கும் படைஇரிய - நிறைந்த சேனைகள் பயந்தோட. பொறி - தீப்பொறி. உரும் ஏறு என - இடியேற்றைப் போல. இடியா - குரல் எழுப்பி. குமரன் - இராமன். அம்கண் அழகனும் - அழகிய கண்களை யுடைய இராமனும். அரைசன்அவன் இடைவந்தினிது ஆராதனை புரிவான், விரைசெய்முடி படிமேல்உற அடிமீதினில் விழவும், கரைசென்றிலன் அனையான்நெடு முடிவின்கனல் கால்வான் முரசின்குரல் பட,வீரனது எதிர்நின்றிவை மொழிவான். 7 7. அரசன் - தசரதன். அவன் இடை - பரசு இராமனிடம். படிமேல் உற - நிலத்திலே படிய. தரை சென்றிலன் அனையான் - சினக்கடலின் கரையை அடையாதவனாகிய அந்தப் பரசுராமன். நெடுமுடிவின் - ஊழிக் காலத்தின். கனல்கால்வான் - தீயைப் போலக் கோபத் தீயை உமிழ்ந்து. முரசின் குரல்பட - முரசின் ஒலிபோல் காணப்பட. வீரனது - இராமனுடைய. எதிர் - முன்னிலையிலே. பரசுராமன் பேச்சு `இற்றோடிய சிலையின்திறம் அறிவேன்,இனி யான்உன் பொற்றோள்வலி நிலைசோதனை புரிவான்நசை உடையேன், செற்றோடிய திரள்தோள்உறு தினவும்சிறிது உடையேன், மற்றோர்பொருள் இலை,இங்கிதுஎன் வரவு;`என்றனன் உரவோன். 8 8. நசையுடையேன் - விருப்பமுடையேன். செற்று ஓடிய - பகைவர்களை அழித்து உயர்ந்த. திரள்தோள் உறு - திரண்ட தோள்களில் பொருந்திய. உரவோன் - பரசுராமன். தசரதன் வேண்டுகோள் அவன் அன்னது பகரும்அள வையின்மன்னவன் அறைவான், `புவனம்முழு வதும்வென்றொரு முனிவற்குஅருள் புரிவாய், சிவனும்,அரி அயனும்அலர், சிறுமானிடர் பொருளோ, இவனும்எனது உயிரும்உனது அபயம்இனி, என்றான். 9 9. அவன் - அப்பரசுராமன். பகரும் அளவையின் - சொல்லும் பொழுது. மன்னவன் - தசரதன். ஒரு முனிவற்கு - ஒரு காசிப முனிவனுக்கும். அருள்புரிவாய் - இவ்வுலகைத் தானமாகக் கொடுத்தருளியவனே. சிவனும் அரி அயனும் அவர் - சிவனும் அரியும் பிரமனும் அல்லாதவர்களாகிய. சிறு மானிடர் பொருளோ - சிறு மனிதர்கள் உனக்கு ஒரு பொருளோ? பரசுராமன் இவ்வுலகை வென்று காசிப முனிவனுக்கு இதைத் தானமாகக் கொடுத்தான் என்பது புராணம். `விளிவார்விளி வது,தீவினை விழைவார்உழை அன்றோ? களியால்இவன் அயர்கின்றன உளவோ?கனல் உமிழும் ஒளிவாய்மழு உடையாய்!பொர உரியாரிடை அல்லால் எளியார்இடை வலியார்வலி என்ஆகுவ தென்றான். 10 10. விளிவார் விளிவது - கோபிக்கின்றவர்கள் கோபம் கொள்ளும் இடம். தீவினை - தீச்செயல்களை. விழைவார்? உழை அன்றோ - விரும்பிச் செய்கின்றவர்களிடம் அன்றோ? களியால் - செல்வச் செருக்கால். இவன் - இவ்விராமன். அயர்கின்றவும் - நன்மைகளை மறப்பதும். உளவோ - உண்டோ? ஒளிவாய் - ஒளி பொருந்திய. பொர - போர் செய்வதற்கு. வலியார் வலி - வலியாருடைய வலிமை. என் ஆகுவது - என்ன ஆவது? என்னாஅடி விழுவானையும், இகழாஎரி விழியாப், பொன்னார்கலை அணிவான்எதிர் புகுவான்நிலை உணராத், தன்னால்ஒரு செயல்இன்மையை நினையாஉயிர் தளரா, மின்னால்அயர் வுறும்வாள் அரவு என,வெந்துயர் உற்றான். 11 11. என்னா - என்று கூறி. அடி விழுவானையும் - பாதங்களிலே வீழ்ந்த தசரதனையும். இகழா - இகழ்ந்து. எரி விழியா - நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்துப் பார்த்து. நிலை உணரா - நிலையை உணர்ந்து. நினையா - நினைத்து. உயிர் தளரா - உயிர் சோர்ந்து. அயர்வுறும் - சோர்வடையும். வாள் அரவு என - கொடிய பாம்பைப்போல. வெய்து உறல் உற்றான் - துன்பத்தை அடைந்தான். பரசுராமன் கூற்று நீ ஒடித்த வில் முன்பே ஒடிபட்ட வில்; இதோ உள்ள என் கை வில்லும் அதுவும் ஒன்றாகப் பிறந்தவை; அதைச் சிவபெருமானும், இதைத் திருமாலும் ஏந்திப் போர் புரிந்தனர் சிவபெருமான் வில் முரிந்தது. அதனை அவர் இந்திரனிடம் கொடுத்தார். அதுவே மிதிலை யிலிருந்த வில். திருமால் தன் வில்லை இருசிக முனிவரிடம் ஈந்தார். அவர் என் தந்தையிடம் அளித்தார். அவர் என்னிடம் தந்தார் என்று உரைத்துப் பரசுராமன் தன் வில்லை இராமனிடம் நீட்டினான். `உலகெலாம் முனிவற்கு ஈந்தேன்; உறுபகை ஒடுக்கிப்போந்தேன்; அலகில்மா தவங்கள் செய்துஓர் அருவரை இருந்தேன்; ஆண்டைச் சிலையைநீ இறுத்த ஓசை செவிஉறச் சீறி வந்தேன்; மலைகுவன் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான். 12 12. முனிவற்கு - காசிப முனிவனுக்கு. உறுபகை - மிகுந்த பகைவர்களை. ஒடுக்கிப் போந்தேன் - அடக்கி வந்தேன். அலகு இல் - அளவற்ற. ஓர் அருவரை - ஒரு சிறந்த மலையிலே. மலைகுவன் - போர் செய்வேன். வல்லை ஆகின் - வல்லமையுடையவனாயின். தனுவை வாங்குதி - இந்த வில்லை வளைப்பாயாக. இராமனின் வீரச் செயல் என்றனன், என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி நன்றொளிர் முகத்தன்ஆகி, `நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக என்னைக் கொடுத்தனன்; வீரன் கொண்டு,அத் துன்றுஇரும் சடையோன் அஞ்சத்தோள்உற வாங்கிச் சொல்லும். 13 13. என்றனன் - என்று பரசுராமன் கூறினான். என்ன நின்ற - என்று சொல்வதைக் கேட்டு நின்ற. வலியின் ஆண்ட - வலிமை யுடன் கையாண்ட. வீரன் - இராமன். துன்று இரும் - நெருங்கிய நீண்ட. தோள்உற - தோள் வலிமை தோன்ற. வாங்கி - வளைத்து. `பூதலத் தரசை எல்லாம் பொன்றுவித் தனை;என் றாலும், வேதவித் தாயமேலோன் மைந்தன்நீ! விரதம் பூண்டாய்!, ஆதலின் கொல்லல் ஆகாது, அம்பிது பிழைப்பது அன்றால்; யாதுஇதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி; விரைவின் என்றான். 14 14. பொன்றுவித்தனை - மடியச் செய்தனை. வேதவித்து ஆய - வேதத்தை அறிந்தவனாகிய. மேலோன் மைந்தன் நீ - உயர்ந்த ஜமதக்கினி முனிவனுடைய மைந்தனாவாய் நீ. விரதம் பூண்டாய் - தவத்தை மேற்கொண்டுள்ளாய். இது அம்பு - இந்த அம்பு. பிழைப்பது அன்று - தவறுவது அன்று; இதற்கு இலக்கம் ஆவது யாது?; இலக்கம் - குறி. ஆல்; அசை. பரசுராமன் பணிவு `பொன்உடை வனைகழல் பொலங்கொள் தாரினாய்! மின்உடை நேமியான் ஆதல் மெய்மையே; என்உளது உலகினுக்கு இடுக்கண்? யான்தந்த உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடன்றால்! 15 15. பொன் உடை - பொன்னால் செய்யப்பட்ட. வனைகழல் - வேலைப் பாடமைந்த வீரகண்டாமணியைத் தரித்த. பொலம் கொள் - அழகு பொருந்திய. மின்உடை (நீ) ஒளிபொருந்திய. நேமி யான் ஆதல் - சக்கரப் படையை உடைய திருமாலாவது. இடுக்கண் - துன்பம். உன் - உரத்துக்கு - உன் வலிமைக்கு. ஆல்; அசை. `எய்தஅம்பு இடைபழுது எய்தி டாமல்,என் செய்தவம் யாவையும் சிதைக்க வேஎனக் கைஅவன் நெகிழ்த்தனன்; கணையும் சென்று,அவன் மையறு தவம்எலாம் வாரி மீண்டதே. 16 16. இடை பழுது எய்திடாமல் - இடையிலே வீண் போகாமல். கை அவன் நெகிழ்ந்தனன் - கையை அங்குச் சிறிது தளர்த்தினான். `எண்ணிய பொருள்எலாம் இனிது முற்றுக மண்ணிய மணிநிற வண்ண! வண்துழாய்க் கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய புண்ணிய! விடை!எனத் தொழுது போயினான். 17 17. மண்ணிய - கடைந்த. மணிநிறம் - நீலமணியின் ஒளியைப் போன்ற. வண்ண - நிறத்தையுடையவனே. வண்துழாய் - செழிந்த துளசியின். கண்ணிய - மாலையையுடையவனே. களைகண் ஆகிய - பற்றுக்கோடாக இருக்கின்ற. விடை என - விடை தருக என்று. அழிந்தவன் போனபின் அமலன், ஐ உணர்வு ஒழிந்து,தன் உயிர்உலைந்து உருகு தாதையை, மொழிந்தபேர் அன்பினால் தொழுது, முன்புபுக்கு, இழிந்தவான் துயர்க்கடல் கரைநின்று ஏற்றினான். 18 18. அழிந்து அவன் போனபின் - தோற்று அப்பரசுரசு ராமன் போன பிறகு அமலன் - இராமன். ஐ உணர்வு ஒழிந்து - ஐம்புல உணர்ச்சியும் நீங்கி. தன் உயிர் உலைந்து - தன் உயிர் வருந்தி. முன்புக்கு - முன் சென்று இழிந்த - இறங்கி மூழ்கிய. வான் - பெரிய; துயர்க்கடல் நின்று கரை யேற்றினான். பரிவுஅறு சிந்தைஅம் பரசு ராமன்கை வரிசிலை வாங்கி,ஓர் வசையை நல்கிய ஒருவனைத் தழுவிநின்று, உச்சி மோந்து,தன் அருவிஅம் கண்எனும் கலசம் ஆட்டினான். 19 19. பரிவு அறு - அன்பற்ற. வரிசிலை வாங்கி - கட்டமைந்த வில்லை வளைத்து. ஓர் வசையை நல்கிய - ஒப்பற்ற பழியை பரசுராமனுக்கு அளித்த. அருவி - அருவிபோல் சொரிகின்ற. கலசம் - குடத்தால். அனைவரும் அயோத்தி யடைந்து இன்புற்று வாழ்ந்தனர். அப்பொழுது ஒருநாள் தசரதன் பரதனை அழைத்தான்; அவனது பாட்டன் அனுப்பிய செய்தியை அவனுக்குத் தெரிவித்தான். `ஆணையின் நினதுமூ தாதை, ஐய!நின் காணிய விழைவதோர் கருத்தன்; ஆதலால் கேணியில் வளைமுரல் கேக யம்புகப் பூண்இயல் மொய்ம்பினாய் போதி; என்றனன். 20 20. ஆணையின் - ஆட்சியாகிய அதிகாரத்தையுடைய. கருத்தன் - உள்ளத்தன். கேணியில் - குளங்களிலே. வளைமுரல் - சங்குகள் ஒலிக்கின்ற. கேகயம் புக - கேகய தேசத்தை அடைவதற்கு. ஏவலும், இறைஞ்சிப்போய், இராமன் சேவடிப் பூவினைச் சென்னியில் புனைந்து போயினான்; ஆவிஅங்கு அவன்அலது இல்லை ஆதலால் ஓவல்இல் உயிர்பிரிந்து உடல்சென்று என்னவே. 21 21. ஏவலும் - இவ்வாறு கட்டளை யிட்டவுடன். அங்கு அவன் அலது - அங்குள்ள அந்த இராமனைத் தவிர. ஆவி இல்லை - அப்பரதனுக்கு வேறு உயிர் இல்லை. ஓவர் இல் - பிரிதல் இல்லாத. உடல் சென்று என்ன - உடல்மட்டும் தனியாகச் சென்றது என்று சொல்லும்படி; போயினான். ஆனவன் போனபின், அரசர் கோமகன் ஊனம்இல் போர்அரசு உய்க்கும் நாள்இடை, வானவர் செய்தமா தவம்உண்டு ஆதலால், மேல்நிகழ் பொருளினை விளம்பு வாம்அரோ. 22 22. ஆனவன் - அந்தப்பரதன். அரசர் கோமகன் - தசரதன். ஊனம் இல் - குற்றம் இல்லாமல். பார் அரசு - உலகில் அரசாட்சியை. நாள் இடை - நாளில். அரோ; அசை. அயோத்தியா காண்டம் 1. மந்திரப் படலம் கடவுள் வாழ்த்து வானின் றிழிந்து வரம்புஇகந்த மாபூ தத்தின் வைப்பெங்கும் ஊனும், உயிரும் உணர்வும்போல், உள்ளும், புறத்தும் உளன்என்ப கூனும்,சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல்துறந்து கானும் கடலும் கடந்துஇமையோர் இடுக்கண் காத்த கழல்வேந்தே. 1 அயோத்தியா காண்டம்: அயோத்தி நகரத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறும் பகுதி. மந்திரப் படலம்: இராமனுக்கு முடி சூட்டுவதைப் பற்றித் தசரதன் அமைச்சர், குரு, பொது மக்கள் ஆகியவர் களுடன் இருந்து எண்ணியதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. `கூனும்.... கழல் வேந்தே, வான் நின்று....உளன் என்ப! கூனும் - கூனியும். சிறிய கோத்தாயும் - சிறிய அரசியாகியதாயும்; சிறிய கோத்தாய் - கைகேசி. தசரதன் மந்திராலோசனை மண்டபத்தை அடைந்து தனித்திருந்தான். ஆலோசனைக்குரியவர்களை அழைத் தான். அவர்கள் வந்தனர். மண்உறு முரசினம், மழையின் ஆர்ப்புறப் பண்உறு படர்சினப் பரும யானையான், கண்உறு கவரிஅம் கற்றை சுற்றுற, எண்உறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான். 2 2. மண் உறு முரசு இனம் - பசை தடவப்பட்ட முரச வாத்தியங்கள். பண் உறு - அலங்கரிக்கப்பட்ட. படர் சினம் - மிகுந்த கோபத்தையுடைய. பருமம் - முதுகிலே ஆசனத்தை யுடைய. எண் உறு - எண்ணத்தக்க. சூழ்ச்சியின் இருக்கை - மந்திராலோசனை மண்டபம். சந்திரற்கு உவமைசெய் தரள வெண்குடை அந்தரத்து அளவும்நின்று அளிக்கும் ஆணையான், இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த,தன் மந்திரக் கிழவரை வருகென்று ஏவினான். 3 3. தரள வெண்குடை - முத்துச் சரங்கள் தொங்கும் வெண்பட்டுக் குடை. அந்தரத்து அளவும் - மேல் உலகு வரையிலும். இமையவர் குரு - பிரகபதி. மந்திரக் கிழவர் - ஆலோசனைக்கு உரிய மந்திரிமார்கள். வசிட்டன் வருகை பூவரு பொலன்கழல் பொருவில் மன்னவன் காவலில், ஆணையின் கடவு ளாம்எனத், தேவரும் முனிவரும் உணரும்; தேவர்கள் மூவரில் நால்வராம் முனிவந்து எய்தினான். 4 4. மன்னவன் காவலில் - மன்னவனைக் காப்பதிலும். ஆணையின் - அவனை நல்வழியிலே நடக்கும்படி ஏவுதலிலும். கடவுளாம் என - குலதெய்வமாகும் என்று. உணரும் - உணரப் படுகின்றவன். தேவர்கள் மூவரில் - தேவர்களான அயன்மால் சிவன் மூவரோடு. முனி - வசிட்ட முனிவன். அறிஞர்கள் வருகை குலம்முதல் தொன்மையும், கலையின் குப்பையும், பலமுதல் கேள்வியும் பயனும் எய்தினார்; நலமுதல் நலியினும் நடுவும் நோக்குவார்; சலம்முதல் அறுத்துஅரும் தருமம் தாங்கினார். 5 5. குலம் முதல் தொன்மை - குலப் பெருமை. நலம் முதல் நலியினும் நன்மை அடியோடு அழிவதானாலும். நடுவும் நோக்குவார் - நடு நிலைமையையே குறியாகக் கொண்டவர்கள். சலம் முதல் - கோபம் முதலியவற்றை. அமைச்சர்கள் திறமை உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்; மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும் கற்றவர், மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார். 6 6. உற்றது காண்டு- நிகழ்ந்ததைக்காண்டு.கோளார் - வலிமை யுள்ளவர். வினையின் வந்தது ஆயினும் - ஊழ்வினையல்நர்ந்ததாயினும்.மற்றல் ஆற்றும் பெற்றியர் - மாற்றச் செய்யும் தன்மையுள்ளவர். கவரிமா - மயிர் உதிர்ந்தால் உயிர் வாழாத தன்மையுள்ள கவரிமான். காலமும், இடனும், ஏற்ற கருவியும், தெரியக் கற்ற நூல்உற நோக்கித், தெய்வம் நுனித்துஅறம் குணித்த மேலோர்; சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெளிந்து கொண்டு பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார். 7 7. நூல் உற நோக்கி - நீதி நூல்களை நன்றாக அறிந்து. தெய்வம் நுனித்து - தெய்வச் செயலையும் ஆராய்ந்து. குணித்த - எண்ணிப் பார்த்த. பால்வரும் - அவைகளின் பங்காக வருகின்ற. உறுதி யாவும் - நன்மைகள் எல்லாவற்றையும். தலைவற்குப் பயக்கும் - தலைவனுக்குப் பயன்படும்படி செய்யும். நீரார் - தன்மையுள்ளவர். தம்உயிர்க்கு உறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர், செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார்; தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். 8 8. தம் உயிர்க்கு உறுதி எண்ணார் - தந்நலம் கருதாதவர். செம்மையின் - நன்மையிலிருந்து. திறம்பல் செல்லா - மாறாத. தேற்றத்தார் - தெளிந்த அறிவுள்ளவர். நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு எல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்; ஒல்லைவந்து உறுவன உற்ற பெற்றியின் தொல்லைநல் வினையென உதவும் சூழ்ச்சியார். 9 9. மருத்துவன் - வைத்தியன். ஒல்லை வந்து உறுவன - விரைந்து வந்து சேர்வனவாகிய தீமைகள். உற்ற பெற்றியின் - வந்த சமயத்தில். சூழ்ச்சியார் - அறிவுத் திறமுள்ளவர். மருத்து வனையும், நல்வினையையும் போன்றவர்கள் ஆலோசகர்கள். இத்தகையோர் அறுபதினாயிரவர் வந்தனர்; அரசனை வணங்கித் தத்தம் இடங்களில் அமர்ந்தனர். தசரதன் அவர்களைப் பார்த்து நான் அறுபதினாயிரம் ஆண்டுகள் இவ்வுலகை ஆண்டேன் என்றான். மேலும் கூறுகின்றான். தசரதன் பேச்சு கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மாநிலம் தன்னைஇத் தகைதரத், தருமம் கைதர, மன்உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்; என்உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். 10 10. கற்பின் - கற்பைப்போல. இத்தகைதர - இத்தகைய பெருமையுண்டாக. உறுவதே - உற்ற நன்மையையே. உறுவதும் - பொருந்திய நன்மையையும். நம் முன்னோர்களெல்லாம் இறுதிக் காலத்தில், தம் புதல்வர்கள் பால் அரசளித்து, அருந்தவம் புரிந்து வீடு பெற்றனர். `நம்குலக் குரவர்கள் நவையின் நீங்கினார், தம்குலப் புதல்வரே தரணி தாங்கப்போய் வெம்குலப் புலன்கெட வீடு நண்ணினார், எங்குஉலப் புறுவர்என்று எண்ணி நோக்குகேன். 11 11. குரவர்கள் - முன்னோர்கள். வெம் குலம்புலன் கெட - கொடிய தொகுதியான புலன் உணர்ச்சி கெடுமபடி. எங்கு உலப்பு உறுவர் - அவர்கள் எப்படிக் குறையுள்ளவர் ஆவர்? என்று எண்ணி நோக்குகேன் - என்று எண்ணிப் பார்க்கின்றேன். வெள்ளநீர் உலகினில், விண்ணின், நாகரில் தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான், கள்ளரின் கரந்துறை காமம் ஆதியாம் உள்உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? 12 12. கள்ளரின் - கள்ளரைப்போல. கரந்து உறை - மறைந்திருக்கின்ற. காமம் ஆதியாம் - காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் முதலிய. உள் உறை - உள்ளத்திலே உறைகின்ற. ஒதுங்கி - அஞ்சி மறைந்து. ஒட்டிய பகைஞர்வந்து உருத்த போர்இடைப் பட்டவர் அல்லரேல், பரம ஞானம்போய்த் தெட்டவர் அல்லரேல், செல்வம் ஈண்டென விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார்? 13 13. ஒட்டிய - சூளுரைத்த. உருத்த போர் இடை - சினந்து செய்த போரிலே. பட்டவர் - இறந்தவர். பரம ஞானம் போய் - உயர்ந்த அறிவிலே மிகுந்த. தெட்டவர் - தெளிந்தவர். வீடு உளார் - வீடு பெறுவார்? இறப்பெனும் மெய்ம்மையை, இம்மை யாவர்க்கும் மறப்பெனும் அதனில்மேல் கேடு மற்றுண்டோ? துறப்பெனும் தெப்பமே துணைசெ யாவிடின், பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ? 14 14. மறப்பு எனும் அதனின் மேல் - மறத்தல் என்னும் அதைவிட. பிழைக்கல் - தப்பித்துக்கொண்டு கரை யேறுதல். பிறவிக் கடலைத் தாண்டத் துறவே தெப்பமாகும். அரும்சிறப்பு அமைவரும் துறவும், அவ்வழி தெரிஞ்சுஉறவு எனமிகும் தெளிவும், ஆய்வரும் பெரும்இறை உளஎனில் பிறவி என்னும்இவ் இரும்சிறை கடத்தலின் இனியது யாவதே. 15 15. தெரிஞ்சு - தெரிந்துகொள்ளுவதால். உறவு என மிகும் தெளிவும் - அத்துறவுக்கு உறவு என்று மிகுந்து வருகின்ற தெளிந்த அறிவும். ஆய் வரும் - ஆகிய வருகின்ற. பிறவியாகிய சிறையைத் தாண்டுவதற்கு, துறவு, தெளிவு ஆகிய இரண்டு சிறகுகள் வேண்டும். உம்மையான் உடைமையின், உலகம் யாவையும் செம்மையின் ஓம்பி,நல் அறமும் செய்தனென்; இம்மையின் உதவி,நல் இசைந டாயநீர், அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால்! 16 16. ஓம்பி - பாதுகாத்து. இம்மையின் உதவி - இப்பிறப்பிலே உதவி செய்து. நல் இடை நடாய - நல்ல புகழை நடத்திய. அம்மையின் - மறுமைக்கான செயலுக்கும். இழைத்ததீ வினையையும் கடக்க எண்ணுதல் தழைத்தபேர் அருள்உடைத் தவத்தின் ஆகுமேல், குழைத்ததுஓர் அமுதினைக் கோடல் நீக்கி,வேறு அழைத்ததீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? 17 17. இழைத்த - முன்செய்த. கோடல் நீக்கி - உட்கொள்ளு வதை விட்டு. வேறு அழைத்த - வேறு பெயரால் அழைக்கப்பட்ட. மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும் நொந்தனென்; இராமன்என் நோவை நீக்குவான் வந்தனன்; இனிஅவன் வருந்த, யான்பிழைத்து உய்ந்தனென் போவதுஓர் உறுதி எண்ணினேன். 18 18. -. இறந்திலன் செருக்களத்து, இராமன் தாதைதான் அறம்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்; துறந்திலன்; என்பதோர் சொல்உண் டானபின் பிறந்திலென் என்பதின் பிறிதுண் டாகுமோ! 19 19. இராமன் தாதை தான் மூப்படைந்த பின்னரும், அறந்தலை நிரம்ப, செருக்களத்து இறந்திலன்; துறந்திலன்; அறம் தலை நிரம்ப - அறநெறி முற்றுப்பெற. சொல் - பழிச் சொல். `பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம் திருமகள் மணவினை தெரியக் கண்டயான், அருமகன் நிறைகுணத்து அவனி மாது,எனும் ஒருமகள் மணமும்கண்டு, உவப்ப உன்னினேன். 20 20. அருமகன் - இராமன். நிறை குணத்து -நிறைந்த குணங்களையுடைய. அவனி மாது - பூமி தேவி. ஒரு மகள் மணமும் - ஒப்பற்ற மகளைச் செய்து கொள்ளும் மணத்தையும். `ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி,இப் பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறும், மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்; யாதுநும் கருத்தென, இனைய கூறினான். 21 21. பேதைமைத் தாய் வரும் - அறியாமையால் தோன்றும். தொடங்கிய - தொடங்கும் பொருட்டு. நண்ணுவேன் - அடைய எண்ணினேன். இனைய - இவற்றை. வேறு திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும், சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர், ஆங்கே வெருண்டு, மன்னவன் பிரிவுஎனும் விதிர்ப்புறு நிலையால் இரண்டு கன்றினுக்கு இரங்கும்ஓர் ஆஎன இருந்தார். 22 22. ஆங்கே மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்புறு நிலையால் வெருண்டு - அப்பொழுது மன்னவனுடைய பிரிவு என்கின்ற நடுக்கம் தரும் நிலையினால் அஞ்சி. வசிட்டன் வார்த்தை `நிருப! நின்குல மன்னவர் நேமிபண்டு உருட்டிப் பெருமை எய்தினர்; யாவரே இராமனைப் பெற்றார்! கரும மும்இது; கற்றுணர்ந் தோய்க்குஇனிக் கடவ தரும மும்இது; தக்கதே உரைத்தனை தகவோய்! 23 23. பண்டு நேமி உருட்டி - முன்பு ஆட்சி புரிந்து. இனி கடவ - இனிச் செய்யவேண்டிய. தகவோய் - பெருமையுள்ளவனே. ò©Â a«bjhl® ntŸÉfŸ ahití« òǪj m©z ny!யினி அருந்தவம் இயற்றவும் அடுக்கும்; வண்ண மேகலை நிலமகள் மற்றுனைப் பிரிந்து கண்இ ழந்திலள் எனச்செயும் நீதந்த கழலோன்; 24 24. -. தசரதன் நிலை மற்ற வன்சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப் பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்தஅப் பெருவில் இற்ற அன்றினும், எறிமழு வாளவன் இழுக்கம் உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான். 25 25. மற்றவன் - வசிட்டன். பிஞ்ஞகன் - சிவபெருமான். எறி மழுவாளவன் - எறிந்து கொல்லுகின்ற மழுவாள் என்னும் படையையுடைய பரசு ராமன். இழுக்கம் உற்ற - துன்ப மடைந்த (தோல்வி யடைந்த). சுமந்திரன் கூற்று `உறத்த கும்அரசு, இராமற்குஎன்று உவக்கின்ற மனத்தைத் துறத்தி நீஎன்னும் சொற்சுடும்; நின்குலத் தொல்லோர் மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று; அறத்தின் ஊங்கினிக் கொடிதெனல் ஆவதொன்று யாதோ? 26 26. வழக்கன்று - முறை யன்று. அறத்தின் ஊங்கு - அறத்தைக் கைவிடுவதைக் காட்டிலும். இனி கொடியது எனல் ஆவது - வேறு கொடியது என்று சொல்வது. ஒன்று யாதோ - வேறொன்று உண்டோ? புரசை மாக்கரி நிருபர்க்கும், புரத்துஉறை வோர்க்கும், உரைசெய் மந்திரக் கிழவர்க்கும், முனிவர்க்கும், உள்ளம் முரசம் ஆர்ப்பநின் முதல்மணிப் புதல்வனை முறையால் அரசன் ஆக்கிப்பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்? 27 27. புரசை - கழுத்துக் கயிற்றையுடைய. மாக்கரி - பெரிய யானைகளை யுடைய. புரத்து - நகரிலே. உள்ளம் முரசம் ஆர்ப்ப - மனம் முரசம் போல் ஆரவாரிக்க. என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும், இறைவன் `நன்று சொல்லினை! நம்பியை நளிர்முடி சூட்டி நின்று? நின்றது செய்வது; விரைவினில் நீயே சென்று கொண்டுஅணை திருமகள் கொழுநனை என்றான். 28 28. நளிர் முடி - பெருமையுள்ள முடியை. நின்றது - மீத முள்ளதை. (தவத்தை). கொண்டு அணை - அழைத்துக்கொண்டு வருக. சுமந்திரன் சென்று இராமனை அழைத்து வருதல் f©L ifbjhGJ `Ia!இக் கடல்இடைக் கிழவோன் உண்டுஓர் காரியம் வருகென உரைத்தனன் எனலும் புண்ட ரீகக்கண் புரவலன் பொருக்கென எழுந்துஓர் கொண்டல் போல்சென்று கொடிநெடும் தேர்மிசைக் கொண்டான். 29 29. கடல் இடை - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திற்கு. கிழவோன் - உரிமையுள்ளவனாகிய மன்னன். கொண்டல் போல் - மேகம் போல். இராமன் வருகை ஆயது அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம் தாயை முன்னிய கன்றென நின்றுயிர் தளிர்ப்பத் தூய தம்பியும் தானும்அச் சுமந்திரன் தேர்மேல் போய்அ கம்குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான். 30 30. -. மாத வன்தனை வரன்முறை வணங்கி,வாள் உழவன் பாத பங்கயம் பணிந்தனன்; பணிதலும் அனையான் காதல் பொங்கிடக் கண்பனி உகுத்திடக் கவிர்வாய்ச் சீதை கொண்கனைத் திருஉறை மார்பகம் சேர்த்தான். 31 31. வாள் உழவன் - வாளையே உழு படையாகக் கொண்ட தசரதனுடைய. கண் பனி உகுத்திட - கண்கள் குளிர்ந்த ஆனந்தக் கண்ணீரைச் சொரிய. கவிர் வாய் - சிவந்த வாயையுடைய. நலம்கொள் மைந்தனைத் தழுவினன் என்பதுஎன் நளிநீர் நிலங்கள் தாங்குறும் நிலையினை நிலையிட நினைந்தான்; விலங்கல் அன்னதிண் தோளையும், மெய்த்திரு இருக்கும் அலங்கல் மார்பையும் தனதுதோள் மார்புகொண்டு அளந்தான். 32 32. நிலையிட - அளக்க. விலங்கல் அன்ன - மலை போன்ற. அளந்தான் - அளந்து பார்த்தான். தசரதன் இராமனிடம் கூறுதல் `உரிமை மைந்தரைப் பெறுகின்றது உறுதுயர் நீக்கி இருமை யும்பெறற்கு என்பது பெரியவர் இயற்கை; தருமம் அன்னநின் தந்தயான் தளர்வது தகவோ? கருமம் என்வயின் செய்யின்,என் கட்டுரை கோடி! 33 33. இருமையும் - இம்மை மறுமைப் பயன்கள் இரண் டையும். இயற்கை - சிறந்த கொள்கை யாகும். என்வயின் கருமம் செயின் - என்பால் நல்ல செயலைச் செய்வாயானால். கோடி - கொள்க. `மைந்த! நம்குல மரபினில் வந்தருள் வேந்தர் தம்தம் மக்களே கடன்முறை நெடுநிலம் தாங்க, ஐந்தொடு ஆகிய முப்பகை மருங்கற அகற்றி உய்ந்து போயினர்; ஊழிநின்று எண்ணினும் உலவார். 34 34. ஐந்தொடு ஆகிய முப்பகை - ஐந்தொடு கூடிய மூன்று பகை. ஐந்து - ஐம்புலன். மூன்று - காமம் வெகுளி மயக்கம். மருங்கு அற - தம்மிடம் இல்லாமல். `முன்னை ஊழ்வினைப் பயத்தினும் முற்றிய வேள்விப் பின்னை எய்திய நலத்தினும் அரிதினில் பெற்றேன்; இன்னம் யான்இந்த அரசியல் இடும்பையின் நின்றால் நின்னை யீன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ? 35 35. பயத்தினும் - பயனாலும். அரிதினில் பெற்றேன் - சிறப்பாக உன்னைப் பெற்றேன். இடும்பையின் - துன்பத்திலே. பயத்தினின் - பயனால். நிரம்புவது - யான் பெறும் நன்மை. `அனையது ஆதலின் அரும்துயர்ப் பெரும்பரம் அரசன் வினையின் என்வயின் வைத்தனன் எனக்கொளல் வேண்டா; புனையும் மாமுடி புனைந்துஇந்த நல்அறம் புரக்க நினையல் வேண்டும்;யான் நின்வயின் பெறுவதுஈது என்றான். 36 36. அரும் துயர் பெரும்பரம் - மிகுந்த துன்பத்தைத் தரும் பெரிய அரச பாரத்தை. வினையின் - வஞ்சகத்தால். இராமன் இணக்கம் தாதை அப்பரிசு உரைசெயத் தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; `கடன்இது என்றுணர்ந்தும்; `யாது கொற்றவன் ஏவியது அதுசெயல் அன்றோ நீதி எற்கென நினைந்தும்;அப் பணிதலை நின்றான். 37 37. காதல் உற்றிலன் - விரும்பவும் இல்லை; இகழ்ந்திலன் - வெறுக்கவும் இல்லை. கடன் - கடமை. எற்கு நீ என நினைந்தும் - எனக்கு அறமாகும் என்று நினைத்தும். அப்பணி தலை நின்றான் - அரசனுடைய அக்கட்டளையை ஏற்றுக்கொண்டான். மந்திராலோசனை சபை கலைந்தது. மன்னன் தன் கோயிலை அடைந்தான். இராமனும் சுமந்திரன் தேரில் தன் கோயிலை அடைந்தான். பின்னர் அரசர்களுக் கெல்லாம் கருட முத்திரை பொறித்த ஓலையனுப்பி வரவழைத்தான். அவர்களிடம் முடி சூட்டுதற்கான செயல் களை முறையுடன் செய்யும்படி பணித்தான் தசரதன். மக்கள் மகிழ்சசி இறைவன் சொல்எனும் இன்நறவு அருந்தினர் யாரும் முறையின் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர, உறையும் விண்அகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். 38 38. இன்நறவு - இனிய தேனை. முந்துறு - மிகுதியாக உண்டான. உறையும் விண் அக - இன்பம் வாழும் வானுலகத்தை. எய்தினர் - அடைந்தவரை. ஒத்த சிந்தையர், உவகையின், ஒருவரின் ஒருவர் தத்த மக்குஉற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்; முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார்; அத்த! நன்றென அன்பினோடு அறிவிப்ப தானார். 39 39. -. `மன்னர்களின் மாற்றலன் பரசுராமனைப் பங்கப் படுத்திய வீரனுக்கு அரசளித்தது அறமே என்றனர். அப்பொழுது அவர்களின் உள்ளத்தை ஆராய ஒரு கேள்வியை விடுத்தான் தசரதன். `மகன்வயின் அன்பினால் மயங்கி யான்இது புகலநீர் புகன்றஇப் பொம்மல் வாசகம் உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ? தகவுஎன நினைந்ததோ? j‹ikv‹? என்றான். 40 40. பொம்மல் வாசகம் - பொலிவுள்ள மொழிகள். உகவையின் - மகிழ்ச்சியினால். தகவு என - தகுதிதான் என்று. வேந்தர்கள் தந்த விடை `தானமும், தருமமும், தகவும், தன்மைசேர் ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும், மானவ! எவையும்நின் மகற்கு வைகுமால்; ஈனம்இல் செல்வம்வந்து இயைக என்னவே. 41 41. நன்மையும் மானவ - நன்மையையும் உடைய சிறந்தவனே. இயைக - சேர்வதாக. `ஊருணி நிறையவும், உதவும் மாடுஉயர் பார்கெழு பழுமரம் பழுத்துஅற் றாகவும்; கார்மழை பொழியவும், கழனி பாயநதி வார்புனல் பெருகவும், மறுக்கின் றார்கள்யார்? 42 42. மாடு உயர் - பக்கத்திலே உயர்ந்த. பார் கெழு - நிலத்திலே செழித்திருக்கின்ற. அற்று ஆகவும் - அக்குளத்தைப் போல் நிறைந்திருக்கவும். நதி - ஆற்றிலே. வார் புனல் பெருகவும் - ஓடுகின்ற நீர் பெருகுவதையும். பனையவாம் நெடும்கரப் பரும யானையாய்! நினைஅவாம் தகையனாய், நிமிர்ந்த மன்உயிர்க்கு எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டுஅவற்கு அனையவாறு அன்பின அவையும் என்றனர். 43 43. பனையவாம் - பனையினைப் போன்ற. நினை அவாம் - நின்னை அனைவரும் விரும்பக்கூடிய. மன்னன் மகிழ்ந்தான்; வேந்தர்களுக்கு விடைதந்து அனுப்பினான்; பின்னர்க் கணிதர்களை அழைத்துக் கொண்டு மற்றொரு மண்டபத்தை அடைந்தான். 2. மந்தரை சூழ்ச்சிப்படலம் ஆண்டை அந்நிலை ஆக, அறிந்தவர் பூண்ட காதலர், பூட்டுஅவிழ் கொங்கையர், நீண்ட கூந்தலர் நீள்கலை தாங்கலர் ஈண்ட ஓடினர் இட்டுஇடை இற்றிலர். 1 மந்தரை சூழ்ச்சிப் படலம்: மந்தரை என்னும் கூனி செய்த தந்திரத்தைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. ஆண்டை அந்நிலை ஆக - அவ்விடத்தில் அவ்வாறு நடக்க. பூண்ட காதலர் - மிக்க அன்புள்ளவர். பூட்டு அவிழ் - கச்சு அவிழ்ந்த. நீள் கலை - நீண்ட ஆடை. இட்டு இடை - சிறிய இடை. ஆடு கின்றனர்; பண்அடைவு இன்றியே பாடு கின்றனர்; பார்த்தவர்க் கே,கரம் சூடு கின்றனர்; சொல்லுவது ஓர்கிலர் மாடு சென்றனர் மங்கையர் நால்வரே. 2 2. பண் அடைவு இன்றி - இசை முறை இல்லாமல். மாடு - கோசலையின் பக்கத்தில். `மன்நெ டுங்கழல் வந்து வணங்கிடப், பல்நெ டும்பகல் பார்அளிப் பாய்என நின்நெ டும்புதல் வன்தனை, நேமியான் தொல்நெ டும்முடி சூட்டுகின் றான்என்றார். 3 3. மன் - மன்னர்கள் பலரும். வந்து நெடும் கழல் வணங்கிட. நேமியான் - ஆளுவோனாகிய தசரதன். தொல் நெடும் முடி - பழமையான பெரிய புகழ் அமைந்த முடியை. சிறக்கும் செல்வம் மகற்கு,எனச் சிந்தையில் பிறக்கும் பேர்உவ கைக்கடல் பெட்புஅற வறக்கும் மாவட வைக்கனல் ஆனதால்; துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே. 4 4. சிறக்கும் செல்வம் - சிறந்து வரும் அரச செல்வம். பெட்பு அற - அதன் தன்மை கெட. `துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கம் மாவடவைக் கனல் ஆனதால் வறக்கும். துணுக்கம் - துன்பம். வறக்கும் - வறண்டது. அன்ன ளாயும், அரும்பெறல் ஆரமும், நல்நி திக்குவை யும்,நனி நல்கித்,தன் துன்னு காதல் சுமித்திரை யோடும் போய், மின்னும் நேமியன் மேவிடம் மேவினாள். 5 5. அரும் பெறல் - சிறந்த. ஆரமும் - மாலைகளும். நனி நல்கி - மிகுதியாகக் கொடுத்து. துன்னு - நிறைந்த. காதல் - அன்ப. நேமியான் - திருமால். மேவு இடம் - பொருந்தியிருக்கும் கோயிலை. மேவி மெல்மல ராள்நில மாதுஎனும் தேவி மாரொடும், தேவர்கள் யாவர்க்கும் ஆவி யும்,அறி வும்,முத லாயவன் வாவி மாமலர்ப் பாதம் வணங்கினாள். 6 6. மெல்மலராள் - இலக்குமி. நிலமாது - பூமிதேவி. ஆவியும் - உயிரும். வாவி மாமலர் - தடாகத்தில் உள்ள தாமரை மலர் போன்ற. தசரதன், கணிதர்களிடம் `முடி சூட்டற்கான நன்னாளை நவில்க என்றான். அவர்கள் `நாளையே நன்னாள் என்றனர். பிறகு வசிட்டனை அழைத்து, `இராமன் முடி புனைவதற்கு ஆவன செய்து, நல்லுரைகள் நவின்றருள்க என்று வேண்டினன். வசிட்டன் வாய் மொழிகள் `யாரொ டும்பகை கொள்ளலன், என்றபின், போர்ஒ டுங்கும்; புகழ்ஒடுங் காது;தன் தார்ஒ டுங்கல்செல் லாது;அது தந்தபின் வேரொ டும்கெடல் வேண்டல்உண் டாகுமோ? 7 7. தன் தார் ஒடுங்கல் செல்லாது - தன் சேனையின் பலம்குறையாது. அது தந்த பின் - அத்தகைய நன்மை உண்டான பிறகு. கோளும், ஐம்பொறி யும்குறை யப்பொருள் நாளும் கொண்டு நடுவுறு நோன்மையின் ஆளும் அவ்வர சேஅரசு; அன்னது வாளின் மேல்வரும் மாதவம்; மைந்தனே! 8 8. கோளும் - புலன்களைக் கொண்டிருக்கின்ற. ஐம்பொறி யும் குறைய - ஐம்பொறிகளின் தீமைகளும் குறையும்படி. பொருள் - சிறந்த பொருளை. நடு உறு நோன்மையின் - நடு நிலை பொருந்திய வலிமையுடன். அன்னது - அவ்வரசே. வாளின் மேல் வரும் மாதவம் - வாளாயுதத்தின்மேல் நின்று செய்யும் பெரிய தவமாகும். உமைக்கு நாதற்கும், ஓங்குபுள் ஊர்திக்கும், இடைப்பில் நாட்டம்ஓர் எட்டுடை யானுக்கும், சமைத்த தோள்வலி தாங்கினர் ஆயினும், அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. 9 9. உமைக்குநாதன் - சிவன். புள் ஊர்தி - திருமால். சமைத்த - ஒப்பாக அமைந்த. என்பு தோல்உடை யார்க்கும், இலார்க்கும்தம் வன்ப கைப்புலன் மாசற மாய்ப்பதென்; முன்பு நின்றுயர் மூவுல கத்தினும் அன்பின் அல்லதோர் ஆக்கம் உண்டாகுமோ? 10 10. என்புதோல் உடையார்க்கும் - எலும்பும் தோலும் உடைய மக்களுக்கும். இல்லார்க்கும் - அவையில்லாத தேவர் களுக்கும். புலன் - புலன்களை. மாய்ப்பது என் - மாய்ப்பதனால் என்ன பயன்? அன்பின் அல்லது - அன்பினால் அல்லாமல் வேறொன்றால். ஓர் ஆக்கம் - ஒரு செல்வம். வையம் மன்உயி ராக,அம் மன்உயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னனுக்கு, ஐயம் இன்றி அறம்கட வாது;அருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? 11 11. அறம் கடவாது - அறம் தவறாமல் பயன் தரும். மெய்யின் அருள் நின்றபின் -உண்மையில் அருள்நெறியிலே நின்றபின். வேள்வியும் - வேறு யாகங்களும். இனிய சொல்லினன், ஈகையன், எண்ணினன், வினையன், தூயன், விழுமியன், வென்றியன், நினையும் நீதி நெறிகட வான்எனில், அனைய மன்னற்கு அழிவும்உண் டாம்கொலோ? 12 12. எண்ணினன் - ஆராய்ச்சியை உடையவன். வினையன் - முயற்சியை உடையவன். விழுமியன் - சிறந்தவன். சீலம் அல்லன நீக்கிச்,செம் பொன்துலைத் தாலம் அன்ன தனிநிலை தாங்கிய ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ! 13 13. சீலம் அல்லன - ஒழுக்கமற்றவைகளை. துலைதாலம் அன்ன- தராசின் நடுநாவைப்போல நின்று. நல்லவர் நோக்கிய - மந்திரிகளின் நோக்கத்தைப் பெற்ற. அரசர்களுக்கு அமைச்சர்களே கண்கள். தூம கேது புவிக்கெனத் தோன்றிய வாம மேகலை மங்கைய ரால்வரும் காமம் இல்லை எனில்,கடும் கேடுஎனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே. 14 14. தூமகேது - வால் நட்சத்திரம். வால் நட்சத்திரம் காணப்பட்டால் பின்னால் ஏதோ பெரிய தீமை நிகழ்வதற்கு அறிகுறி என்பர். வாமமேகலை - அழகிய மேகலாபரணத்தை அணிந்த. நாமம் - அச்சம். இவ்வாறு வசிட்டன் அரச நீதிகள் பலவற்றை இராமனுக்கு உரைத்தான். அதன்பின் இராமன் செய்ய வேண்டிய சில சடங்குகளையும் செய்யும்படி வகுத்தான். வசிட்டன் செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்த தைப்பற்றி அரசனுக்கு அறிவித்தான். அரசன் நகரை அலங்கரிக்கும்படி பறையறைந்து அறிவிக்கும்படி பணித்தான். ஏவின வள்ளுவர், `இராமன் நாளையே பூமகள் கொழுநனாய்ப் புனையும் மௌலி;இக் கோநகர் அணிகெனக் கொட்டும் பேர்இயம் தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார். 15 15. ஏவின - பறையடித்துத் தெரிவிக்கும்படி ஏவப்பட்ட. கோநகர் - தலைநகரத்தை. பேர் இயம் - பெரிய வாத்தியத்துடன். தேவரும் களிகொள - மக்களே அன்றித் தேவர்களும் மகிழ்ச்சி யடையும்படி. கவிஅமை கீர்த்திஅக் காளை, நாளையே புவிஅமை மணிமுடி புனையும்; என்றசொல், செவிஅமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம் அவிஅமுது ஆனதுஅந் நகர்உ ளார்க்குஎலாம். 16 16. கவி அமை கீர்த்தி - கவியில் அமைத்துப் பாடத்தக்க புகழுள்ள. செவி அமை - காதால் கேட்டு. நுகர்ச்சியது - உணரத்தக்கது. அவி அமுது ஆனது - வேள்வியில் கொடுக்கப் படும் உணவை ஒத்தது. ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்; வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்மயிர் போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்; தூர்த்தனர் நீள்நிதி சொல்லி னார்க்கெலாம். 17 17. ஆர்த்தனர் - ஆரவாரித்தனர். தடித்தனர் - பருத்தனர். `சொல்லினார்க்கு எலாம் நீள் நிதி தூர்த்தனர். தூர்த்தனர் - அள்ளிக்கொடுத்தனர். வெள்ளிய, கரியன, செய்ய, வேறுஉள கொள்ளைவான் கொடிநிரைக் குழாங்கள் தோன்றுவ, கள்அவிழ் கோதையான் செல்வம் காணிய புள்எலாம் திருநகர் புகுந்த போன்றவே. 18 18. கொள்ளைவான் - எண்ணற்ற உயர்ந்த. நிரைக் குழாங்கள் - வரிசைக் கூட்டங்கள். புள் எலாம் - பல நிறமுள்ள பறவைகள் எல்லாம். ஆடல்மான் தேர்க்குழாம், அவனி காணிய வீடெனும் உலகின்வீழ் விமானம் போன்றன; ஓடைமாக் களிறுகள் உதய மால்வரை தேடரும் கதிரொடும் திரிவ போன்றவே. 19 19. ஆடல்மான் - ஆடுகின்ற குதிரைகள் பூட்டிய. அவனி - மண் உலகை. காணிய - காணும்பொருட்டு. வீடுஎனும் உலகின்- சுவர்க்கத்திலிருந்து. வீழ் - கீழே இறங்கிய. ஓடை - நெற்றிப் பட்டத்தையுடைய. உதயமால் வரை - கீழ்த்திசையில் உள்ள பெரிய மலைகள். கதிர் - சூரியன். கூனியின் காட்சி அந்நகர் அணிவுறும் அமலை வானவ பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்வையில், இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள். 20 20. அணி உறும் - அலங்கரிக்கப்பெறும். அமலை - பெரிய ஆரவாரத்தால். ஏல்வையில் - பொழுதில். துன்னரும் - வேறு எவரிடமும் பொருந்துதல் இல்லாத. தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள்; ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்; கான்றுஎரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்; மூன்றுல கினுக்கும்ஓர் இடுக்கண் மூட்டுவாள். 21 21. ஊன்றிய - உள்ளத்திலே நிலைத்த. உளைக்கும் - வருத்தும். கான்று எரி - தீப்பொறிகளைக் கக்கி எரிகின்ற. கதிக்கும் - சினந்துரைக்கும். தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல் மண்டினாள்; வெகுளியின் மடித்த வாயினாள்; பண்டைநாள் இராகவன் பாணி வில்உமிழ் உண்டைஉண் டதனைத்தன் உள்ளத்து உன்னுவாள். 22 22. தொண்டைவாய் - கோவைக் கனிபோன்ற இதழோடு கூடியவாயை யுடைய. கேகயன் தோகை - கைகேசி. பாணிவில் உமிழ் - கைவில்லிலிருந்து வெளிப்பட்ட. உண்டை உண்டதனை - உண்டையால் அடியுண்டதை. தீண்டலும் உணர்ந்தஅத் தெய்வக் கற்பினாள் நீண்டகண் அனந்தரும் நீங்கு கிற்றிலள்; மூண்டெழு பெரும்பழி முடிக்கும் வெவ்வினை தூண்டிடக் கட்டுரை சொல்லல் மேயினாள். 23 23. அனந்தர் - தூக்கம். சொல்லல்மேயினாள் - சொல்லத் தொடங்கினாள், கூனி. அணங்குவாள் விடஅரா அணுகும் எல்லையும் குணம்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல், பிணங்கு,வான் பேர்இடர் பிணிக்க நண்ணவும் உணங்குவாய் அல்லைநீ! cw§F thŒ!என்றாள். 24 24. அணங்கு - துன்புறுத்தும். வாள்விட அரா - கொடிய விஷப் பாம்பு. பிணங்குவான் - வருந்தும்படி. உணங்குவாய் அல்லை - வருந்தவில்லை. கைகேயி சொல்வது வெவ்விடம் அனையவள் விளம்ப, வேற்கணாள், `தெவ்அடு சிலைக்கைஎன் சிறுவர் செவ்வியர்; அவ்வவர் துறைதொறும் அறம்தி றம்பலர்; எவ்விடர் எனக்குவந்து அடுப்பது? ஈண்டெனா; 25 25. வெவ்விடம் அனையவள் - கூனி. வேல் கணாள் - கைகேசி. தெவ் அடு - பகைவர்களைக் கொல்லுகின்ற. செவ்வியர் - நல்லவர்கள். guhtU« òjštiu¥ ga¡f ahtU« cuhtU« JaiuÉ£L cWâ fh©guhš; ÉuhtU« òÉ¡bfyh« ntjnkmd, ïuhkid¥ gaªjbt‰F ïl®c© nlh?என்றாள்; 26 26. பராவஅரும் - புகழ்வதற்கு அரிய. உரா அரும் - வருகின்ற கொடிய. விராவரும் - பஞ்ச பூதங்களும் கலப்பதனால் வருகின்ற. வேதமே - அறிவு நூல்போன்ற. எற்கு - எனக்கு. ஆழ்ந்தபேர் அன்பினாள் அனையகூறலும், சூழ்ந்ததீ வினைநிகர் கூனி சொல்லுவாள்; `வீழ்ந்தது நின்நலம்; திருவும் வீந்தது; வாழ்ந்தனள் கோசலை மதியி னால் என்றாள். 27 27. அன்பினாள் - கைகேசி. திருவும் வீந்தது - செல்வமும் அழிந்தது. முடிசூட்டு விழாக்கேட்டு கைகேசியின் களிப்பு மாற்றம் அஃதுஉரைசெய மங்கை உள்ளமும் ஆற்றல்சால் கோசலை அறிவும் ஒத்தவால்; வேற்றுமை உற்றிலள்; வீரன் தாதைபுக்கு ஏற்றவள் இருதயத்து இருக்க வேகொலாம் 28 28. மங்கை - கைகேசி. ஏற்றவள் - கூனியின் சொற்களைக் காதிலே ஏற்றவளுடைய இருதயத்து. வீரன்தாதை - தசரதன், புக்கு இருக்கவே; வேற்றுமை உற்றிலன் ஆம் - மனம் வேறு படாதவளாயினள். கொல்; ஆயபேர் அன்பெனும் அளக்கர் ஆர்த்தெழத் தேய்விலா முகமதி விளங்கித் தேசுஉறத் தூயவன் உவகைபோய் மிகச்சு டர்க்கெலாம் நாயகம் அனையதுஓர் மாலை நல்கினாள். 29 29. ஆய - அப்பொழுது உண்டாகிய. அளக்கர் - கடல். உவகைபோய் மிக - மகிழ்ச்சி மிகுந்து வளர. சுடர்க்கும் எலாம் - ஒளி பொருந்திய அணிகளுக்கெல்லாம். நாயகம் அனைய - தலைமையானதைப் போன்ற. கூனியின் கொதிப்புரைகள் தெழித்தனள், உரப்பினள், சிறுகண் தீஉக விழித்தனள், வைதனள், வெய்து உயிர்த்தனள், அழித்தனள், அழுதனள், அம்பொன் மாலையால் குழித்தனள் நிலத்தை;அக் கொடிய கூனியே. 30 30. தெழித்தனள் - கூச்சலிட்டாள். உரப்பினள் - அதட்டினாள். வெய்து உயிர்த்தனள் - பெருமூச்சு விட்டாள். அழித்தனள் - நிலத்தின் கோலத்தைக் காலால் அழித்தாள். நிலத்தைக் குழித்தனள் - நிலத்தைக் குழி விழும் படி செய்தாள். வேதனைக் கூனிபின் வெகுண்டு நோக்கியே, பேதைநீ! பித்திநின்! பிறந்த சேயொடும் நீதுயர் படுக;நான் நெடிதுஉன் மாற்றவள் தாதியர்க்கு ஆள்செயத் தரிக்கி லேன்;என்றாள். 31 31. நின் பிறந்த - உன்னிடம் பிறந்த. சேயொடும் - மகனோடும். நெடிது - நீண்ட காலம். சிவந்தவாய்ச் சீதையும், கரிய செம்மலும் நிவந்தஆ சனத்துஇனி திருப்ப, நின்மகன் அவந்தனாய் வெறுநிலத்து இருக்கல் ஆனபோது உவந்தவாறு என்,இதற்கு உறுதி யாதென்றாள். 32 32. நிவந்த ஆசனத்து - உயர்ந்த சிம்மாசனத்திலே. உவந்த ஆறு என் - இதற்கு நீ மகிழ்ந்த காரணம் என்ன? இதற்கு உறுதி யாது - இதற்கு நீ கொண்ட மன உறுதிதான் என்ன? மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் சிறந்தனன் திருவினில்; திருவும் நீங்கினான்; இறந்திலன் இருந்தனன் என்செய்து ஆற்றுவான்; பிறந்திலன் பரதன்,நீ பெற்ற தால்என்றாள். 33 33. மைந்தனும் - இராமனும். திருவினில் சிறந்தனன்; `நீ பெற்றதால் பரதன், பிறந்திலன்; திருவும் நீங்கினாள்; இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான் - என்ன செய்து துயரந்தணிந்திருப்பானோ? சரதம்இப் புவியெலாம் தம்பி யோடும்,இவ் வரதனே காக்குமேல், வரம்பில் காலமும் பரதனும் இளவலும் பதியின் நீங்கிப்போய், விரதமா தவம்செய விடுதல் நன்றென்றாள். 34 34. சரதம் - உண்மையாகவே. வரதனே - இராமனே. பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு ஆக்கிய பொலன்கழல் அரசன் ஆணையால் தேக்குஉயர் கல்அதர் கடிது சேண்இடைப் போக்கிய பொருள்எனக்கு இன்று போந்ததால். 35 35. பரதன் தன்னை - பரதனை. பண்டு - முன்பே. அரசன் - தசரதனுடைய. தேக்கு உயர் கல் அதர் - தேக்க மரங்கள் வளர்ந்த மலைநெறியிலே சென்று சேரக் கூடிய. கடிதுசேண் இடை - மிகவும் தொலைவில் உள்ள கேகய நாட்டுக்கு. போக்கிய - அனுப்பிய தன். பொருள் - அர்த்தம். போந்தது - விளங்கிற்று. ஆல் ;அசை. kªjiu ã‹dU« tifªJ TWthŸ; mªju« Ô®ªJyF mË¡F« ÚÇdhš jªijí« bfhoa‹!நற் றாயும் தீயளால்? எந்தையே! பரதனே! v‹brŒ thŒ!என்றாள். 36 36. வகைந்து - வகைப்படுத்தி. அந்தரம் நீர்ந்து- முடிவு செய்து. உலகு அளிக்கும் நீரினால் - இவ்வுலகை இராமனுக்கு அளிக்கும் தன்மையால். தீயள் ஆல் - தீயவள்; ஆல்; அசை. அரசர்இல் பிறந்து,பின் அரசர் இல்வளர்ந்து, அரசர்இல் புகுந்து,பேர் அரசி ஆனநீ கரைசெயற்கு அரும்துயர்க் கடலில் வீழ்கின்றாய்! ciubra¡ nf£»iy; cz®â nah!என்றாள். 37 37. உரை செயக் கேட்கிலை - சொல்லியும் கேட்க வில்லை. உணர்தியோ - நீயேதான் உணர்கின்றாயோ வென்றால் அதுவும் இல்லை. கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும், வில்வினை உரிமையும், அழகும் வீரமும் எல்லையில் குணங்களும் பரதற்கு எய்திய; புல்லிடை உகும்அமு தேயும் போல்என்றாள். 38 38. வில்வினை- வில்யுத்தம் புரிவதிலே. உரிமையும் - சிறந்த தன்மையும். பரதற்கு எய்திய - பரதனிடம் அமைந்திருக்கின்றன. புல்லிடை உகும் - புல்லிலே சிந்திய. அமுது ஏயும்போல் - அமுதம்போல் ஆயின. கைகேசியின் கடுஞ்சினம் வெயின்மு றைக்குலக் கதிரவன் முதலிய மேலோர், உயிர்மு தல்பொருள் திறம்பினும் முறைதிறம் பாதோர்; மயில்மு றைக்குலத்து உரிமையை மனுமுதல் மரபைச் செயிர்உ றப்புலைச், சிந்தையால் என்சொன்னாய் தீயோய்! 39 39. வெயில் முறை - கிரணங்களின் வரிசையை யுடைய. குலம் கதிரவன் - குலத்தின் முதல்வனாகிய சூரியன். உயிர் முதல் பொருள் - இவ்வுலகில் உள்ள உயிர் முதலிய எப்பொருள்கள். திறம்பினும் - மாறுபட்டாலும். மயிர் முறைக்குலத்து - கேகயர் குலத்தின். செயிர் உற - குற்றம் மிகவும் அணையும்படி. எனக்கு நல்லையும் அல்லைநீ! என்மகன் பரதன் தனக்கு நல்லையும் அல்லைநீ! jUknk neh¡»‹, cd¡F ešiyí« mšiy!வந்து ஊழ்வினை தூண்ட மனக்கு நல்லன சொல்லினை ! மதியிலா மனத்தோய்! 40 40. தருமமே நோக்கின் - அறநெறியை நினைத்துப் பார்த்தால். மனக்கு நல்லன - உன் மனத்திற்கு நல்லன என்று தோன்றியவற்றை. மதியிலா அறிவற்ற. பிறந்து இறந்துபோய்ப் பெறுவதும் இழப்பதும் புகழே; நிறம்தி றம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின் திறம்தி றம்பினும், செய்தவம் திறம்பினும், செயிர்தீர் மறம்தி றம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ! 41 41. புகழ் - புகழ் ஒன்றுதான். நிறம் திறம்பினும் - குணம் மாறினாலும். நெறியின் திறம் - ஒழுக்கத்தின் தன்மை. செயிர் தீர் மறம் - குற்றமற்ற வீரம். வரன் முறை - ஒழுங்கு முறை. போதி என்எதிர் நின்று;நின் புன்பொறி நாவைச் சேதி யாதுஇது பொறுத்தனென்; புறஞ்சிலர் அறியின், நீதி அல்லவும், நெறிமுறை அல்லவும் நினைந்தாய் ஆதி; ஆதலின் அறிவிலி அடங்குதி; என்றாள். 42 42. சேதி யாது - துண்டிக்காமல். புறம் சிலர் அறியின்- வெளியிலே உள்ளவர் சிலர் அறிந்தால் வெறுப்பர். வெறுப்பர் என்னும் சொல்வருவித்துரைக்கப் பட்டது. கூனியின் வஞ்சக வார்த்தைகள் mŠá kªjiu mf‹¿yŸ; m«bkhÊ nf£L« eŠR Ô®¡»D« Ô®»yhJ mJeȪJ v‹d¤, `jŠr nkcd¡F cWbghUŸ cz®¤Jif jÉnu‹ tŠá nghÈ!என்று அடிமிசை வீழ்ந்துரை வழங்கும். 43 43. நஞ்சுதீர்க்கினும் - விஷத்தை மருந்தினால் முறித்தாலும். தீர்கிலாது நலிந்து என்ன- அதன் கொடுமை நீங்காமல் நின்று துன்புறுத்துவதைப் போல. வஞ்சிபோலி - வஞ்சிக் கொடி போன்றவளே. `_¤j t‰FcǤJ muRvD« KiwikÆ‹, cyf« fh¤j k‹dÅ‹ ïisa‹m‹ nwh,flš t©z‹; V¤J ÚŸKo òidtj‰F ïirªjd‹ v‹whš Û¤j U«bršt« gujid Éy¡FkhW vtndh? 44 44. மன்னனின்- தசரதனைவிட. கடல் வண்ணன் - இராமன். மீதரும் செல்வம் - மேன்மை தரும் செல்வத்தைப் பெறாமல். விலக்கும் ஆறு எவன் - விலக்குவது ஏன்? `அறம்நி ரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும், பெறல்அ ரும்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்; மறம்நி னைந்துமை வலிகிலர் ஆயினும், மனத்தால் இறல்உ றும்படி இயற்றுவர் இடையறா இன்னல். 45 45. அறன் நிரம்பிய - அறத்தைப் பற்றிய எண்ணங்கள் நிறைந்த. சிந்தனை பிறிது ஆம் - எண்ணம் வேறுபட்டுவிடும். மற்றநினைந்து - வீரத்தை எண்ணி; பாவத்தைக் கருதி. வலிகிலர் - துன்புறுத்துவார் அல்லர். மனத்தால் இறல் உறும்படி - நெஞ்சால் துன்புறும்படி. `òÇí« j‹kf‹ mubrÅš, ójy« všyh« vÇí« áªjid¡ nfhriy¡F cilikah« v‹whš, gÇí« Ã‹Fy¥ òjšt‰F«, Ãd¡F«,ï¥ gh®nkš cÇaJ v‹?அவள் உதவிய ஒருபொருள் அல்லால். 46 46. `தன் மகன் அரசு புரியும் எனல் எரியும் சிந்தனை - பொறாமை கொள்ளும் மனத்தையுடைய. பரியும் - அன்பு செலுத்தும். இப்பார்மேல் - இவ்வுலகில். `தூண்டும் இன்னலும், வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வந்துனை இரந்தவர்க்கு இருநிதி அவளை வேண்டி ஈதியோ! btŸFâ nah!விம்மல் நோயால் மாண்டு போதியோ! மறுத்தியோ! எங்ஙனம் வாழ்தி! 47 47. தூண்டும் - யாசிப்பதற்குத் தூண்டுகின்ற. விம்மல் நோயால் - துன்ப நோயால். `காதல் உன்பெரும் கணவனை அஞ்சி,அக் கனிவாய்ச் சீதை தந்தை,உன் தாதையைத் தெறுகிலன்; இராமன் மாது லன்அவன்; நுந்தைக்கு வாழ்வினி உண்டோ? பேதை! உன்துணை யார்உளர்? பழிபடப் பிறந்தார். 48 48. கணவனை அஞ்சி - கணவனுக்குப்பயந்தே. சீதை தந்தை - சீதையின் தந்தை; இராமன் மாதுலன் - இராமனுடைய மாமனாகிய. அவன் - அந்தச் சனகன். உன் தந்தையைத் தெறுகிலன் - உன் தந்தையைக் கொன்றழிக்க வில்லை. பேதை - அறிவிலியே. பழிபடப்பிறந்தார் உன் துணை யார் உளர்? கைகேசியின் கருத்து மாற்றம் தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின்; இமையோர் மாயை யும்,அவர் பெற்றநல் வரம்உண்மை யாலும், ஆய அந்தணர் இயற்றிய அரும்தவத் தாலும். 49 49. சூழ்ச்சியின் தேவி தூய சிந்தையும் திரிந்தது - மந்தரையின் அறிவின் திறமையால் கைகேசியின் பரிசுத்தமான உள்ளமும் மாறுபட்டது. இமையோர் ... உண்மையாலும்; தவத்தாலும் சிந்தையும் திரிந்தது. அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும், துரக்க, நல்அருள் துறந்தனள் தூமொழி; மடமான் இரக்கம் இன்மையன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே. 50 50. துரக்க - ஏவுதலால். தூய்மொழி - தூய மொழியை உடைய கைகேயி. மடமான் - அழகிய மான் போன்ற கைகேசியின். பரக்கும் -பரவியிருக்கின்ற. அனைய தன்மையள் ஆகிய கைகயன் அன்னம், வினைநி ரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி `எனைஉ வந்தனை! ïÅia!என் மகனுக்கும் அனையான் புனையும் நீள்முடி பெறும்படி புகலுதி; என்றாள். 51 51. வினை நிரம்பிய - சூழ்ச்சி நிறைந்த; தீவினை நிறைந்த. எனை உவந்தனை - என்னிடம் அன்புவைத்தாய். பெறும்படி - பெறும் விதத்தை. நாடி ஒன்றுஉனக்கு உரைசெய்வேன், `நளிர்மணி நகையாய்! தோடுஇ வந்ததார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை, ஆடல் வென்றியான் அருளிய வரம்அவை இரண்டும் கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள். 52 52. நாடி - ஆராய்ந்து. நளிர் மணி நகையாய் - குளிர்ந்த முத்துப் போன்ற பல் வரிசையை உடையவளே! தோடு சிவந்த - இதழ்கள் விரிந்த. தார் - மலர் மாலை அணிந்த. சம்பரன் - சம்பராசூரன். ஆல் வென்றியான்- போரிலே வெற்றி பெற்றவன். கோடி - கொள்க. கோடிய - வளைந்த. `இருவ ரத்தினில் ஒன்றினால் அரசுகொண்டு, இராமன் பெருவ னத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து திரித ரச்செய்தி ஒன்றினால்; செழுநிலம் எல்லாம் ஒருவ ழிப்படும் உன்மகற்கு; உபாயம்ஈது; என்றாள். 53 53. `ஒன்றினால் இராமன் பெருவனத்து இடை பெயர்ந்து ஏழ் இரு பருவங்கள் திரிதரச் செய்தி பெயர்ந்து - சென்று. பருவங்கள் - ஆண்டுகள் ஒரு வழிப்படும் - ஒரே வழியாகக் கிடைக்கும். `நன்று சொல்லினை! நம்பியை நளிர்முடி சூட்டல்! துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்இவ் விரண்டும் அன்ற தாம்எனின் அரசன்முன் ஆர்உயிர் துறந்து பொன்றி நீங்குதல் புரிவென்யான் போதிநீ! என்றாள். 54 54. துன்று கானத்தில் - அடர்ந்த காட்டில். பொன்றி நீங்குதல் - இறந்து போதல். 3. கைகேசி சூழ்வினைப் படலம் கைகேசியின் கோலம் கூனி போனபின், குலமலர்க் குப்பைநின்று இழிந்தாள்; சோனை வார்குழல் கற்றையில் சொருகிய மாலை, வான மாமழை நுழைதரு மதிபிதிர்ப் பாள்போல், தேன்அ வாவுறும் வண்டினம் அலமரச் சிதைத்தாள். 1 கைகேசி சூழ்வினைப் படலம்: கைகேசி எண்ணி முடித்த செயலைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. குலம் மலர்க்குப்பை நின்று - நிறைந்த மலர்கள் குவிந்த படுக்கையிலிருந்து. சோனை - மேகம் போன்ற. வார் குழல் கற்றையில் - நீண்ட கூந்தல் தொகுதியில். மாலை - மலர் மாலையை. வானமா மழை - மானத்தில் உள்ள பெரிய மேகத்தில். மதி - சந்திரனை. பிதிர்ப்பாள்போல் - பிதுக்கி எடுப்பவளைப் போல. அலமர - தவிக்கும்படி. சிதைத்தாள் - பிய்த் தெறிந்தாள். விளையும் தன்புகழ் வல்லியை வேர்அறுத்து என்னக் கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும் வளைது றந்தனள்; மதியினில் மறுத்,துடைப் பாள்போல் அளக வாள்நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள். 2 2. புகழ் வல்லியை - புகழாகிய கொடியை. கிளைகொள் - கிளைகளைக் கொண்ட. கிளை - மேகலையில் உள்ள வேலைப் பாடுகள். கிண்கிணி - பாத சரம். மறு - களங்கத்தை. அளக வாள் நுதல் - கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடையவள். அரும்பெறல் - அருமையாக இடப்பெற்ற. திலகம் - பொட்டு. தாவில் மாமணிக் கலன்,மற்றும் தனித்தனிச் சிதறி, நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக், காவி உண்டகண் அஞ்சனம் கான்றிடக் கலுழாப் பூஉ திர்ந்ததோர் கொம்புஎனப் புவிமிசைப் புரண்டாள். 3 3. தாஇல் - கெடுதல் இல்லாத. மாமணிகலன் - சிறந்த இரத்தினாபரணங்கள். மற்றும் - மற்றுமுள்ள அணிகலன்கள் எல்லா வற்றையும். நாவி - கத்தூரி மணம் கமழும். ஓதியை - கூந்தலை. தைவர - தடவும்படி. காவி உண்ட - நீலோற் பல மலரின் அழகை உண்ட. கண் அஞ்சனம் - கண்களில் உள்ள மை. கான்றிட - கரையும்படி. கலுழா - அழுது. நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்துயின் றென்னக், கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்கும்என்று அயோத்திவந் தடைந்தஅம் மடந்தை தவ்வை ஆம்எனக் கிடந்தனள் கைகயன் தனையை. 4 4. நவ்வி - மான். நாடக மயில் - நடனமாடும் பெண் மயில். கவ்வை கூர்தர -துன்பம் மிகும்படி. கடிகமழ் - மணம் வீசுகின்ற. கமலத்து அவ்வை - தாமரை மலரில் உள்ள திருமகளாகிய அன்னை. தவ்வையாம் என - அந்த இலக்குமியின் மூத்தாள் என்று சொல்லும்படி. கைகயன்; தனயை - மகள்; கிடந்தனள். தசரதன் கைகேசியைக்காணல் தசரதன் கைகேசியைக் காண அவள் மனையை அடைந்தான்; அவனுடன் வந்த மன்னர்கள் வெளியில் நின்றனர்; அவன் மட்டும் உள்ளே புகுந்தான். அடைந்துஅவண் நோக்கி அரந்தை என்கொல் வந்து தொடர்ந்தது எனத்துயர் கொண்டு சோரும் நெஞ்சன், மடந்தையை, மானை எடுக்கும் ஆனை யேபோல் தடம்கைகள் கொண்டு தழீஇ எடுக்கல் உற்றான். 5 5. அவண் அடைந்து - அங்கே வந்து. அரந்தை - துன்பம். தடம் கைகள் கொண்டு - நீண்ட கைகளால். நின்றுதொ டர்ந்தநெ டும்கை தம்மை நீக்கி மின்துவள் கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்; ஒன்றும்இ யம்பலள் நீடு உயிர்க்கல் உற்றாள்; மன்றல்அ ரும்தொடை மன்னன் ஆவி அன்னாள். 6 6. மன்றல் அரும் தொடை - மணம் வீசும் சிறந்த மாலை யணிந்த. மன்னன் ஆவி அன்னாள் - தசரதனின் உயிர் போன்றவள். நீடு உயிர்க்கல் உற்றாள் - பெருமூச்சு விடத் தொடங்கினாள். `உன்னை இகழ்ந்தவர் யார்? உரைப்பாய் என்றான் மன்னன். `என்பால் அன்பிருந்தால் பண்டைய வரம் இரண்டையும் தா என்றாள் கைகேசி. கள்அவிழ் கோதை கருத்துண ராத மன்னன் வெள்ளநெ டும்சுடர் மின்னின் மின்ன நக்கான்; `உள்ளம்உ வந்துள செய்வன்; ஒன்றும் உலோவேன்; வள்ளல்இ ராமன்உன் மைந்தன் ஆணை; என்றான். 7 7. கள் அவிழ் கோதை - தேன் சிந்துகின்ற மலர் மாலையை அணிந்த கைகேசியின். வெள்ளம் நெடும் சுடர் மின்னின் - மிகுந்த பெரிய ஒளியையுடைய மின்னலைப்போல. உவந்துள - விரும்பியனவற்றை. ஆன்றவன் அவ்வுரை கூற அன்னம் அன்னாள் `தோன்றிய பேர்அவ லம்து டைத்தல் உண்டேல் சான்றுஇமை யோர்குலம் ஆக மன்ன நீஅன்று ஏன்றவ ரங்கள்இ ரண்டும் ஈதி ஏன்றாள். 8 8. ஆன்றவன் - அறிவு நிரம்பிய தசரதன். பேர் அவலம் - பெரிய துன்பத்தை. இமையோர் குலம் சான்று ஆக - தேவர் குலம் சாட்சியாக. என்ற - ஒப்புக் கொண்ட. வரம்கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி இறங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால் பரங்கெட இப்பொழு தேப கர்ந்திடு என்றான்; உரங்கொள்ம னத்தவள் வஞ்சம் ஓர்கி லாதான். 9 9. மம்மர் அல்லல் எய்தி - தடுமாற்றமும் துன்பமும் அடைந்து. இரங்கிட - வருந்த. என்பால் பரம்கெட - என் உள்ளத்தின் பால் உள்ள பாரம் நீங்கும்படி. `ஏய வரங்கள் இரண்டில், ஒன்றி னால்என் சேய்உலகு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால் போய்வனம் ஆள்வது; எனப்பு கன்று நின்றாள் தீயவை யாவையினும் சிறந்த தீயாள். 10 10. -. நாகம் எனும்கொடி யாள்தன் நாவின் வந்த சோகம் விடம்தொட ரத்து ணுக்கம் எய்தா; ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 11 11. சோக விடம் - துன்பத்தைத்தரும் விஷம். துணுக்கம் எய்தா - துன்பம் அடைந்து. ஆகம் அடங்கலும் - உடம்பு முழுவதும். அராவின் - பாம்பு கடித்ததனால். வேகம் அடங்கிய - துடிப்பு அடங்கிய. வேழம் - யானை. தசரதன் தளர்ச்சி மேவி நிலத்தில் நிற்கும், விம்மும், வீழும் ஓவி யம்ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்; பாவி யைஉற்று எதிர்பற்றி எற்ற எண்ணும்; ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான். 12 12. மேவி - மெதுவாக எழுந்து. விம்மும் - விம்மி விம்மி அழுவான். உற்று - நெருங்கி. எதிர் பற்றி - நேரே பிடித்து. எற்ற- கொல்ல. அலக்கண் - துன்பம். பெண்என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்; உள்நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும்; கண்இலன் ஒப்ப அயர்க்கும்; வன்கை வேல்வெம் புண்நுழை கிற்க உழக்கும் ஆனை போல்வான். 13 13. பெண் என - பெண் என்று நினைத்து. உட்கும் - அவளைக்கொல்ல அஞ்சுவான். உள் நிறை வெப்பொடு - மனத்தில் நிறைந்த சினத்தீயுடன். அயர்க்கும் - சோர்வடைவான். வேல் - வேலானது. புண் - புண்ணிலே. உழக்கும் - வருந்துகின்ற. அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும், உள்ளம் நஞ்சிலள், நாணிலள், என்ன நாணம் ஆமால், வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே தஞ்சென மாதரை உள்ள லார்கள் தக்கோர். 14 14. ஐயனது - தசரதனாகிய தலைவனுடைய. அல்லல் கண்டும் அஞ்சலன்; நஞ்சிலள் - இரங்காள். என்ன - என்று சொல்ல. நாணம் ஆம் - நாணமாகும். `நீயே இதைக்கேட்டாயா? அல்லது பிறர் வஞ்சனை யால் கேட்டாயா? என்றான் மன்னன். `நானேதான் கேட்டேன்; வரந்தர மறுத்தால் இறந்து மடிவேன் என்றாள் கைகேயி. இந்த நெடுஞ்சொல்அவ் வேழை கூறும் முன்னே வெந்த கொடும்புணில் வேல்நு ழைந்தது ஒப்பச், சிந்தை திரிந்து,தி கைத்து, அயர்ந்து வீழ்ந்தான், மைந்தன் அலாதுஉயிர் வேறு இலாத மன்னன். 15 15. -. `ஆகொடி யாய்!எனும்; ஆவி காலும், `அந்தோ! ஓகொடி தே,அறம்! என்னும் உண்மை ஒன்றும் சாகஎ னாஎழும்; மெய்த ளாடி வீழும்; மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். 16 16. மாகமும் நாகமும் மண்ணும் - வானுலகையும் கீழ் உலகையும் நில உலகையும். வாளான் - வாளையுடைய தசரதன். ஆ கொடியாய் எனும்; ஆவிகாலும் - பெருமூச்சு விடும். உண்மை ஒன்றும் - உண்மை முழுவதும். மெய்தளாடி - உடல் தளர்ந்து. `நாரியர் இல்லை,இஞ் ஞாலம் எங்கும், என்னக் கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும் பூரியர் எண்அடை வீழ்வன்; என்று பொங்கும், வீரியர் வீரம்வி ழுங்கி நின்ற வேலான். 17 17. பூரியர் எண் இடை - கீழ் மக்களின் எண்ணிக்கையிலே. பொங்கும் - சினத்தால் பொங்குவான். வீரியர் - வீரர்களுடைய. கையொடு கையைப் புடைக்கும்; வாய் அடிக்கும்; மெய்உரை குற்றம் எனப் புழுங்கி வாடும்; நெய்எரி உற்றென நெஞ்சழிந்து சோரும்; வைய்யக முற்றும் நடந்த வாய்மை மன்னன். 18 18. என புழுங்கி - என்று மனம் புழுங்கி. நெய் எரி உற்று என - நெய்தீயை அடைந்தது போல. வைய்யக முற்றும் - உலக முழுவதையும். வாய்மை நடந்த - உண்மையிலே தவறாமல் ஒழுகும்படி செய்த. தசரதன் வேண்டுகோள் `கொள்ளான் நின்சேய் இவ்வரசு, அன்னான் கொண்டாலும் நள்ளாது இந்த நானிலம்; ஞாலம் தனில்என்றும் உள்ளார் எல்லாம் ஓதஉ வக்கும் புகழ்கொள்ளாய்! எள்ளா நிற்கும் வன்பழி கொண்டென் பயன்?என்றான். 19 19. இந்த நானிலம் நள்ளாது - இந்த உலகம் விரும்பாது. ஓத உவக்கும் - புகழ்ந்து பேசும்படி மகிழத் தகுந்த. எள்ளா நிற்கும் - எல்லோரும் இகழும்படியான. வன்பழி - அழியாத பழியை. `வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்; இனிமற்றென்; ஏன்ஓர் செய்கை? யாரொடு நீஇவ் அரசாள்வாய்! யானே சொல்லக் கொள்ள இசைந்தான் ;முறையாலே தானே நல்கும் உன்மகனுக்கும் தரை; என்றான். 20 20. மண்ணவர் உய்யார் - இவ்வுலகத்தினர் பிழைத்திருக்க மாட்டார்கள். ஏன் ஓர் செய்கை - ஏன் இந்தக் கொடும் செயல்? `கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்;என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றையது ஒன்றும் மற;என்றான். 21 21. உள் நேர் ஆவி - என் உடம்பினுள் பொருந்திய உயிரை. மற்றையது - இராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்னும் மற்றொரு வரத்தை. கைகேசி இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல்வேந்தன்; தன்னேர் இல்லாத தீயவள் உள்ளம் தடுமாறாள்; `முன்னே தந்தாய் இவ்வரம்; நல்காய் முனிவாயேல் என்னே! மன்னா! யாருளர் வாய்மைக்கு இனி; என்றாள். 22 22. நல்காய் முனிவாயேல் - கொடுக்காமல் வெறுப் பாயானால். மன்னா என்னே - அரசனே உன் வாக்குறுதி என்னாவது? வாய்மைக்கு - உணமையைக் காப்பாற்றுவதற்கு. `இனியார் உளர் என்றாள் தசரதன் அச்சொல் கேளா, ஆவி புழுங்கா, அயர்கின்றான்; பொய்ச்சொல் கேளா, வாய்மொழி மன்னன் பொறைகூர, `நச்சுத் தீயே பெண்உரு அன்றோ, எனநாணா முச்சற் றார்போல் பின்னும் இரந்தே மொழிகின்றான். 23 23. கேளா - கேட்டு. புழுங்கா - புழுங்கி. கேளா - கேட்கும் அறியாத. பொறை கூர - பொறுமை மிகுந்தவனாய். என நாணா - என்று எண்ணி நாணி. முச்சற்றார் போல் - மூச்சற்றவர்களைப் போல. `நின்மகன் ஆள்வான்; நீஇனிது ஆள்வாய்; நிலம்எல்லாம் உன்வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரைகுன்றேன்; என்மகன், என்கண் என்உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடிற வாமை நய;வென்றான். 24 24. உரை குன்றேன் - வாக்குறுதி தவற மாட்டேன். நாடு இறவாமை - நாட்டை விட்டு நீங்காமையை மட்டும். நய - விரும்புக. `மெய்யே என்றன் வேர்அற நூறும் வினைநோக்கி, நையா நின்றேன்; நாவும் உலர்ந்தேன்; நளினம் போல் கைய்யான் இன்றென் கண்எதிர் நின்றும் கழிவானேல் உய்யேன், நங்காய்! உன்அப யம்என் உயிர்;என்றான். 25 25. என்றன்வேர் அற - என் ஆயுளாகிய அடிவேர் முடியும் படி. நூறும் அழிக்கின்ற. வினைநோக்கி - செயலைப் பார்த்து. கைய்யான் - இராமன். கைகேசி இரந்தான் சொல்லும் இன்னுரை கொள்ளாள், முனிவுஎஞ்சாள் மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள், வசைபாராள், `சரம்தாழ் வில்லாய் தந்த வரத்தைத் தவிர்கென்றல் உரந்தான் அல்லால் நல்லறம் ஆமோ? உரை;என்றாள். 26 26. முனிவு எஞ்சாள் - சினம் தணியாதவளாய். சரம்தாழ் வில்லாய் - அம்புகளை எய்வதிலே சிறிதும் குறை வில்லாதவனே. உரந்தான் அல்லால் - வலிமையே அல்லாமல். தசரதன் கொடியாள் இன்ன கூறினள்; கூறக், குலவேந்தன் `முடிசூ டாமல் வெம்பரல், மொய்கான் இடைமெய்யே நெடியோன் நீங்க, நீங்கும்என்ஆவிஇனி;என்னா, இடிஏறு உண்ட மால்வரை போல்,மண் இடைவீழ்ந்தான். 27 27. கொடியாள் - கைகேசி குலவேந்தன் - சிறந்த குலத்திலே பிறந்த மன்னன். காத்தலும் - தடுத்து விட்டதும். நெடியோன் மொய்கான் இடையே நீங்க - இராமன் அடர்ந்த காட்டிற்குச் செல்ல. `என் ஆவி நீங்கும் இனி இடி ஏறு உண்ட - இடியால் தாக்குண்ட. `ஒன்றா நின்ற ஆர்உயி ரோடும் உயிர்கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர், என்னும் புகழ்அல்லால், இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக் கொன்றார் இல்லைக், கொல்லுதி யோநீ! கொடியாளே. 28 28. ஒன்றா நின்ற - உடலோடு பொருந்தி நின்ற .பொன்றா முன்னம் - இறக்கும் முன்பே. இன்று ஓர் காறும் - இன்று வரையிலும். எல் - ஒளி. `ஏவம் பாராய்! இல்முறை நோக்காய்! அறம்எண்ணாய்! ஆஎன் பாயோ! அல்லை மனத்தால் அருள்கொன்றாய்! நாஅம் பால்,என் ஆருயிர் உண்டாய்! இனிஞாலம் பாவம் பாராது இன்உயிர் கொள்ளப் படுகின்றாய். 29 29. ஏவம்பாராய் - குற்றத்தை எண்ண மாட்டாய். இல் முறை - நற்குடியிலே பிறந்த மகளிரின் முறையை. நோக்காய் - எண்ணிப் பார்க்க மாட்டாய். வல்லை - கொடிய. `மண்ஆள் கின்றார் ஆகி, வலத்தால், மதியால்வைத்து எண்ணா நின்றார் யாரையும் எல்லா இகலாலும், விண்ணோர் காறும் வென்ற எனக்கு,என் மனைவாழும் பெண்ணால் வந்தது அந்தரம், என்னப் பெறுவேனோ? 30 30. வலத்தால் - பலத்தாலும், மதியால் - அறிவாலும். வைத்து எண்ணா நின்றார் - சிறப்பாக வைத்து எண்ணப்படு கின்றவர்கள். விண்ணோர் காறும் - விண்ணோர் வரையிலும் உள்ள அனைவரையும். அந்தரம் - முடிவு. கைகேசி ஆழிப் பொன்தேர் மன்னவன் இவ்வாறு அயர்வுஎய்திப் பூழிப் பொன்தார் முற்றும் அடங்கப் புரள்போதில் ஊழின் பெற்றாய், என்றுஉரை; இன்றேல் உயிர்மாய்வென் பாழிப் பொன்தோள் மன்னவ! என்றாள் பசைஅற்றாள். 31 31. பூழி - புழுதியிலே. பொன்தார் முறறும் அடங்க - அழகிய மாலை முழுதும் பொருந்துமபடி. பசை அற்றாள் - அன்பற்ற வளாகிய கைகேசி. என் உரை ஊழின் பெற்றாய் - வரத்தை முறைப்படி பெற்றாய். பாழி - வலிமையுள்ள. பொன்தாள் - அழகிய தோள். தசரதன் `வீந்தா ளேஇவ் வெய்யவள் என்னா, மிடல்வேந்தன் `ஈந்தேன் ஈந்தேன்!இவ்வரம்; என்சேய் வனம்ஆள, மாய்ந்தே நான்போய் வான்உலகு ஆள்வென்; வசைவெள்ளம் நீந்தாய்! நீந்தாய்! நின்மக னோடு நெடிது;என்றான். 32 32. மிடல் - வலிமை. இவ்வெய்யவள் வீந்தாளே என்னா - இக்கொடியவள் என்னை விட்டு இறந்தவளே ஆவாள் என்று எண்ணி. கூறா முன்னும் கூறு படுக்கும் கொலைவாளின் ஏறுஆம் என்னும் வன்துயர், ஆகத்து இடைமூழ்கத், தேறான் ஆகிச், செய்கை மறந்தான்; செயல்முற்றி ஊறா நின்ற சிந்தையி னாளும் துயில்வுற்றாள். 33 33. கூறு படுக்கும் - துண்டு போடும். கொலைவாளின் - கொலை வாளால் நேர்ந்த. ஏறு ஆம் என்ன - தலை சிறந்தது என்னும் படியான. வன்துயர் - கொடிய துன்பம். ஆகத்து இடை - உள்ளத்திலே. தேரான் ஆகி - தெளியாதவன் ஆகி. ஊறா நின்ற - மகிழ்ச்சி மிகுந்து நின்ற. நகர மக்களின் மகிழ்ச்சி கைகேசியின் செயல் கண்டு நாணினவளைப் போல் இரவு என்னும் மங்கை மறைந்தாள்; விடிந்தபின், நகர மக்கள், இராமனுடைய முடிபுனை விழாவைக் காண ஆவல் கொண்டனர்; ஆதவனும் குணதிசையிலே தோன்றினான். மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்; வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறுள மகளிர் எல்லாம் சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ்வூர் சாதுவ மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். 34 34. கற்பின் மிக்கார் மாதர்கள் - கற்பிலே சிறந்த பெண்கள். சாதுவ மாந்தர் எல்லாம் - சற்குணமாகிய ஒழுக்கத்தையுடைய மக்கள் எல்லாம். வேந்தரே பெரிதென் பாரும்; வேதியர் பெரிதென் பாரும்; மாந்தரே பெரிதென் பாரும்; மகளிரே பெரிதென் பாரும்; போந்ததே பெரிதென் பாரும்; புகுவதே பெரிதென் பாரும்; தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரியக் கண்டார், 35 35. போந்ததே - வந்திருக்கின்ற கூட்டமே. புகுவதே - வருகின்ற கூட்டமே. தேர்ந்ததே தேரின் அல்லால் - தாம் அறிந்ததையே அறிந்தார்கள் அல்லாமல். குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்துக் கூட்டித் திவளும்அஞ் சனம்என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டித் தவளஒள் மதியுள் வைத்த தன்மைசால் தடம்கண் நல்லார் துவளும்நுண் இடையார், ஆடும் தோகைஅம் குழாத்தின் தொக்கார். 36 36. திவளும் - விளங்குகின்ற. தவளம் ஒள் மதியுள் வைத்த - வெண்மையான ஒளி பொருந்திய சந்திரனிலே வைத்தது போன்ற. தன்மை சால் - தன்மை பொருந்திய. மதி, முகத்திற்கு உவமை. தோகை அம் குழாத்தின் -மயில் கூட்டத்தைப் போல. நலம்கிளர் பூமி என்னும் நங்கையை, நறும்து ழாயின் அலங்கலான் புணரும் செல்வம் காணவந்து அடைந்தி லாதார், இலங்கையின் நிருத ரே,இவ் ஏழுல கத்து வாழும் விலங்கலும்,ஆசை நின்ற விடாமத விலங்க லே;ஆல். 37 37. அடைந்திலாதார் - சேராதவர்கள். நிருதரே - அரக்கர் களும். விலங்கலும் - மலைகளும். ஆசை நின்ற - எட்டுத்திக்கு களிலும் காவல் புரிந்து நின்ற. விடாமதம் - நீங்காத நீரையுடைய. விலங்கலே - யானைகளுமே யாகும். ஆல்; அசை. முற்பயந்து எடுத்த காதல் புதல்வனை, முறையி னோடும் இல்பயன் சிறப்பிப் பாரின், ஈண்டிய உவகை தூண்ட அற்புதன் திருவைச் சேரும் அருமணம் காணப் புக்கார், நற்பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். 38 38. நான் மறைக்கிழவர் எல்லாம் - அந்தணர்கள் அனை வரும். இல்பயன் சிறப்பிப்பாரின் - மணம் புரிவிப்பாரைப்போல. அற்புதன் - இராமன். திருவை - அரசுச் செல்வத்தை. தவத்தின் நல்பயன் உய்க்கும் - தவத்தால் நல்ல பயனை அடையும். கைகேசியின் மனை நோக்கிச் செல்லும் இராமனைக் கண்டோர் மகிழ்ச்சி அப்பொழுது முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்டன; கணிதர்கள் `முடிசூட்டுதற்கான நன்னேரம் வந்து விட்டது என்றனர். `உடனே அரசனை அழைத்து வருக என்று சுமந்திரனிடம் சொன்னான் வசிட்டன். விண்தொட நிவந்த கோயில் வேந்தர்தம் வேந்தன் தன்னைக் கண்டிலன்; வினவக் கேட்டான்; கைகயி கோயில் நண்ணித் தொண்டைவாய் மடந்தை மாரில் சொல்ல,மற்று அவரும்சொல்ல, பெண்டிரின் கூற்றம் அன்னாள் `பிள்ளையைக் கொணர்க என்றாள். 39 39. நிவந்த - உயர்ந்த. கோயில் - அரண்மனையிலே. வினவ - அங்கிருந்தோரைக் கேட்க. கேட்டான் - அவர்கள் சொல்லி யதைக் கேட்டான். தொண்டை வாய் - சிவந்த வாயையுடைய. மடந்தை மாரில் - பெண்களின் மூலம். அவரும் சொல்ல - அவர் களும் கைகேசியினிடம் சொல்ல. அன்னாள் - ஒத்தவளாகிய கைகேயி. என்றனள்; என்னக் கேட்டான்; எழுந்தபேர் உவகை பொங்கப் பொன்திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்; தன்திரு உள்ளத் துள்ளே தன்னையே நினையும் அந்தக் குன்றுஇவர் தோளி னானைத் தொழுது,வாய் புதைத்துக் கூறும். 40 40. என்றனள் - என்று கூறினாள். என்னக் கேட்டான் - என்று கூறியதைக் கேட்டான். பொன் திணி - அழகு நிறைந்த. தன்னையே - திருமாலாகிய தன்னையே. குன்று இவர் - மலை போல் உயர்ந்த. கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னைப் பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்; சிற்றவை தானும் ஆங்கே கொணர்கெனச் செப்பி னாள்,அப் பொன்தட மகுடம்சூடப் போதிது விரைவின் என்றான். 41 41. பெரும் பரிவு இயற்றி - பெரும் அன்பு செய்து. பொன்தட மகுடம் - பொன்னாலாகிய பெரிய முடியைச் சூட்டிக் கொள்ள. ஐயனும் அச்சொல் கேளா, ஆயிர மௌலி யானைக் கைதொழுது, அரசவெள்ளம் கடல்எனத் தொடர்ந்து சுற்றத், தெய்வகீ தங்கள் பாடத், தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத், தையலார் இரைத்து நோக்கத், தார்அணி தேரில் சென்றான். 42 42. ஐயனும் - இராமனும். கேளா - கேட்டு. ஆயிரம் மௌலியானை - திருமாலை. தெய்வ கீதங்கள் - தெய்வத் தன்மை பொருந்திய வேத கீதங்களை. இரைத்து - ஒருவரோடு ஒருவர் பேசுவதனால் ஓசையிட்டுக் கொண்டு. துண்எனும் சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து,தூய மண்எனும் திருவை நீங்கி, வழிக்கொளா முன்னம் வள்ளல் பண்எனும் சொல்லி னார்தம் தோள்எனும் பணைத்த வேயும் கண்எனும் கால வேலும், மிடைநெடும் கானம் புக்கான். 43 43. துண்எனும் சொல்லாள் - அஞ்சத்தக்க சொல்லையுடைய கைகேசி. வழிக்கொளா முன்னம் - காட்டுக்குப் போகும்முன்பு. வேயும் - மூங்கில்களும். வேலும் - வேல மரங்களும. மிடை - நெருங்கிய. `உயர்அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும் புயல்பொழி மேகம், என்ன புண்ணியம் செய்த? என்பார்; செயல்அரும் தவங்கள் செய்துஇச் செம்மலைத் தந்த செல்வத் தயரதற்கு என்ன கைமாறு உடையம்யாம் தக்கது;என்பார். 44 44. தாமரை - தாமரை மலரும். மேகம் - மேகமும். யாம் தக்கது என்ன கைம்மாறு உடையம் - நாம் தகுந்ததாகிய எத்தகைய பதில் உதவியைச் செய்துள்ளோம்? வேறு மின்பொருவு தேரின்மிசை வீரன்வரு போழ்தில், தன்பொருவில் கன்றுதனி தாவிவரல் கண்டாங்கு, அன்புருகு சிந்தையொடும் ஆவுருகு மாபோல், என்புருக, நெஞ்சுருக, யார்உருக கில்லார்? 45 45. மின் பொருவு - மின்னலை ஒத்த. தன் பொருவு இல் - தனது ஒப்பற்ற. இனைந்து உருகி - வருந்திக் கரைந்து. `தாய்கையில் வளர்ந்திலன், வளர்த்தது தவத்தால் கேகயன் மடந்தை;கிளர் ஞாலம்இவன் ஆள ஈகையில் உவந்தவள், இயற்கைஇது என்றால் தோகைஅவள் பேர்உவகை சொல்லல் அரிது! என்பார். 46 46. கிளர் ஞாலம் - விளங்குகின்ற உலகை. ஈகையில் - கொடுத்தலினால். உவந்தனள் - மகிழ்ந்தனள். இயற்கை இது என்றால் - உண்மை நிலைமை இதுவாகும் ஆனால். தோகை அவள் - மயில் போன்ற கைகேசியின். பாவமும் அரும்துயரும் வேர்பறியும் என்பார்; பூவலயம் இன்றுதனி அன்று,பொது என்பார்; தேவர்பகை உள்ளனஇவ் வள்ளல்தெறும் என்பார்; ஏவல்செயும் மன்னர்தவம் யாவதுகொல் என்பார். 47 47. அரும் துயரும் - பாவத்தினால் வரும் கொடிய துன்பமும். வேர்பறியும் - வேரோடு ஒழியும். இன்று - இன்று முதல். பொது - எல்லோர்க்கும் பொதுவாகும். தெறும் - அழிக்கும். ஆயன நிகழும் வேலை, அண்ணலும், அயர்ந்து தேறாத் தூயவன், இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி, `நாயகன் உரையான் வாயால், நான்இது பகர்வென் என்னாத், தாய்என நினைவான் முன்னே கூற்றுஎனத் தமியள் வந்தாள். 48 48. அண்ணலும் - இராமனும். அயர்ந்து தேறா - சோர்வடைந்து தெளிவடையாத. தூயவன் - தசரதன். வந்தவள் தன்னைச் சென்னி மண்உற வணங்கி, வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச் சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்; அந்திவந் தடைந்த தாயைக் கண்டஆன் கன்றின் அன்னான். 49 49. வந்து அவள் தன்னை - வந்து அக்கைகேசியை. வாசம் - மணம் வீசும். சிந்துரம் பவளம் செவ்வாய் - குங்குமம் போன்ற பவள நிறமுள்ள சிவந்த வாயை. தானை மடக்குற - ஆடையைப் பறக்காமல் மடக்கிக் கொள்ள.துவண்டு நின்றான் - வணங்கி நின்றான். கைகேசியின் மாற்றமும் இராமனின் தோற்றமும் நின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சின் கொன்றுழல் கூற்றம் என்னும் பெயர்இன்றிக், கொடுமை பூண்டாள், `இன்றெனக்கு உரைத்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்; ஒன்றுனக்கு உந்தை மைந்த உரைப்பதுஓர் உரைஉண்டு; என்றாள். 50 50. இரும்பினால் இயைந்த - இரும்பால் அமைந்த. நெஞ்சின் - நெஞ்சினையுடைய. கொன்று உழல் - கொன்று திரிகின்ற. பெயரினில் - பெயரையுடையவனையும்விட. உணர்த்தல் ஆவது ஏயதே எனில் - உணர்த்துவது தகுமானால். ஆகும் - உணர்த் தலாகும். `மைந்த, உந்தை உனக்கு உரைப்பது ஓர் உரை ஒன்று உண்டு என்னாள். `எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல், உய்ந்துஎன் அடியேன்; என்னின் இயைவது உண்டேல், வந்ததுஎன் தவத்தின் ஆய வருபயன் மற்றொன்று உண்டோ? தந்தையும் தாயும் நீரே, தலைநின்றேன். பணிமின்! என்றான். 51 51. என் தவத்தின் ஆய வருபயன் வந்தது - என் தவத்தினால் தோன்றி வருகின்ற பயன் கைகூடி வந்ததாகும். தலை நின்றேன் - உமது பணியைத் தலைமேற் கொண்டு நின்றேன். `ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீபோய்த் தாழ்இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவம்மேற் கொண்டு, பூழிவெம் கானம்நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி, ஏழிரண்டு ஆண்டில் வாஎன்று இயம்பினன் அரசன்; என்றாள். 52 52. தாழ் இரும் சடைகள் - தொங்குகின்ற நீண்ட சடை களை. தாங்கு அரும் தவம் - தாங்க முடியாத துன்பம் உள்ள தவத்தை. பூழி வெம்கானம் - புழுதியும் வெப்பமும் உள்ள காட்டை. இப்பொழுது எம்ம னோரால் இயம்புதற்கு எளிதோ? யாரும் செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு; பின்புஅவ் வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்றது;அம்மா! 53 53. முன்பு ஒப்பதே - முன்பு செந்தாமரையை ஒப்பதாகிய அம்முகம். அவ்வாசகம் உரைக்கக் கேட்ட பின்பு - அவ்வார்த் தையை மனம் அறியக் கேட்ட பின்பு; (அம்முகம்) `அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது. அம்மா; அசை. தெருள்உடை மனத்து மன்னன் ஏவலில் திறம்ப அஞ்சி, இருள்உடை உலகம்தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான், உருள்உடை சகடம் பூண்ட உடையவன் உய்த்த கார்ஏறு அருள்உடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது, ஒத்தான். 54 54. தெருள் உடை - தெளிந்த அறிவுள்ள. மன்னன் - தசரதனுடைய. ஏவலில் திறம்ப அஞ்சி - கட்டளையை மீறுவதற்குப் பயந்து. உருள் உடை - சக்கரத்தையுடைய. சகடம் பூண்ட - வண்டியிலே கட்டப்பட்ட. உடையவன் உய்த்த கார் ஏறு - உரியவனால் ஒட்டப்பட்ட கரிய காளை. `மன்னவன் பணிஅன் றாகில் நும்பணி மறுப்ப னோ?என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ? என்இனி உறுதி அப்பால்; இப்பணி தலைமேல் கொண்டேன்; மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்; 55 55. -. இவ்வாறு உரைத்த இராமன் அவளை வணங்கினான்; தந்தையையும் திசை நோக்கித் தாழ்ந்தான்; கோசலையின் கோயிலை நோக்கிப் புறப்பட்டான். 4. நகர் நீங்கு படலம் தாயும் சேயும் குழைக்கின்ற கவரி இன்றிக், கொற்றவெண் குடையும் இன்றி, இழைக்கின்ற விதிமுன் செல்லத், தருமம்பின் இரங்கி ஏக, `மழைக்குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும்என் றென்று தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன்,ஒரு தமியன் சென்றான். 1 நகர் நீங்கு படலம்: இராமன், இலக்குவன், சீதை மூவரும் அயோத்தி நகரை விட்டுப் பிரிந்து போவதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. குழைக்கின்ற - வீசுகின்ற. இழைக்கின்ற விதி - நன்மை தீமைகளைச் செய்கின்ற ஊழ்வினை. உள்ளத்து அன்னாள் முன் - உள்ளத்தையுடைய அக்கோசலையின் முன்னே. தமியன் - தனியனாக. `புனைந்திலன் மௌலி, குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் என்கொல்? என்னும் ஐயத்தாள் நளின பாதம், வனைந்தபொன் கழல்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி `நினைந்ததென் இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு? என்றாள். 2 2. நளின பாதம் - தாமரை மலர்போன்ற பாதங்களை. வனைந்த பொன் கழல் - வேலைப்பாடமைந்த பொன்னாலாகிய வீரகண்டா மணியையுடைய. குழைந்து - வருந்தி. இராமன் மங்கை அம்மொழி கூறலும், மானவன் செங்கை கூப்பி,`நின் காதல் திருமகன், பங்கம் இல்குணத்து எம்பி, பரதனே துங்க மாமுடி சூடுகின் றான்;என்றான். 3 3. மானவன் - சிறந்தவன்; மனு குலத்தில் பிறந்தவன். பங்கம் இல் - குற்றம் அற்ற. துங்கம் மாமுடி - பரிசுத்தமான சிறந்த முடியை. கோசலை `முறைமை அன்றென்பது ஒன்றுண்டு; மும்மையின் நிறைகு ணத்தவன், நின்னினும் நல்லனால்; குறைவி லன்;எனக் கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினாள். 4 4. நால்வர்க்கும் - இராமன் முதலிய நால்வர் பாலும். மறு இல் - குற்றமற்ற. அன்பினில் - அன்பிலே. வேற்றுமை மாற்றினாள் - வேற்றுமையை நீக்கி ஒன்று பட்டவள். என்று பின்னரும் `மன்னவன் ஏவியது அன்று எனாமை, மகனே உனக்குஅறன்; நன்று நும்பிக்கு நானிலம் நீகொடுத்து ஒன்றி வாழுதி; ஊழி பல; என்றாள். 5 5. மன்னவன் ஏவியது - மன்னவன் கட்டளையை. அன்று எனாமை - செய்யக் கடவதன்று என்று மறுக்காமையே. அறன் - கடமையாகும். ஒன்றி - ஒன்று பட்டு. இராமன் தாய்உ ரைத்தசொல் கேட்டுத் தழைக்கின்ற, தூய சிந்தை,அத் தோமில் குணத்தினான், `நாய கன்,எனை நன்னெறி, உய்ப்பதற்கு, ஏயது உண்டொர் பணி;என்று இயம்பினான். 6 6. தழைக்கின்ற - மகிழ்ச்சி மிகுகின்ற. தோம் இல் - குற்றம் இல்லாத ஓர் பணி ஏயது உண்டு - ஓர் கட்டளை இட்டதுண்டு. `ஈண்டு ரைத்த பணிஎன்னை? என்றவட்கு, `ஆண்டொர் ஏழினொடு ஏழ்,அகன் கான்இடை, மாண்ட மாதவத் தோர்உடன் வைகிப்,பின் மீண்டு நீவரல் வேண்டும்என் றான்; என்றான். 7 7. ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ் - பதினான்கு ஆண்டுகள். மாண்ட மாதவத்தோர் உடன் - சிறந்த தவசிகளுடன். வைகி - வாழ்ந்து. கோசலையின் துன்பம் ஆங்குஅவ் வாசகம் என்னும் அனல்,குழை தூங்கு தன்செவி யில்தொட ராமுனம் ஏங்கி னாள்;இளைத் தாள் ;திகைத்தாள்; மனம் வீங்கி னாள்விம்மி னாள்விழுந் தாள்அரோ 8 8. அனல் - தீயானது. குழை தூங்கு - காதணி அசைந்து கொண்டிருக்கின்ற. மனம் வீங்கினாள் - மனம் மயங்கினாள். விம்மினாள்- விம்மி விம்மி அழுதாள். அரோ; அசை. `வஞ்ச மோமக னே!உனை மாநிலம் தஞ்சம் ஆகநீ தாங்குஎன்ற வாசகம்; நஞ்ச மோ!இனி நான்உயிர் வாழ்வெனோ! அஞ்சும்! அஞ்சும்!என் ஆருயிர் அஞ்சும்!ஆல். 9 9. -. கையைக் கையின் நெரிக்கும்;தன் காதலன் வைகும் ஆல்இலை அன்ன வயிற்றினைப் பெய்வ ளைத்தளி ரால்பிசை யும்;புகை வெய்து உயிர்க்கும்; விழுங்கும்; புழுங்கும்;ஆல். 10 10. காதலன் - இராமன்; மகன். வளைபெய் தளிரால் - வளையல் போட்ட தளிர் போன்ற கைகளால். புகை வெய்து உயிர்க்கும் - புகை போல் வெப்பமாக மூச்சு விடுவாள். விழுங்கும் - மூச்சை இழுப்பாள். நன்று மன்னன் கருணை எனாநகும்; நின்ற மைந்தனை நோக்கி `நெடும்சுரத்து என்று போவது எனாஎழும் இன்உயிர் பொன்றும் போதுஉறல் உற்றது போலுமே. 11 11. நெடும் சுரத்து - நீண்ட பாலைவனத்தை நோக்கி. இன்னுயிர் - இனிய உயிர். பொன்றும்போது - அடங்கும்போது. உறல் உற்றது போலும் - அடைகின்ற மரணத் துன்பத்தை அடைந்தது போல் ஆனாள். `அன்பு இழைத்த மனத்துஅர சற்குநீ என்பி ழைத்தனை? என்றுநின்று ஏங்கும்;ஆல், முன்பி ழைத்த வறுமையின் முற்றினோர் பொன்பி ழைக்கப் பொதிந்தனர் போலவே. 12 12. என் பிழைத்தனை - என்ன குற்றம் செய்தாய். முன்பு இழைத்த - முன்பு செய்த தீவினையால். வறுமையின் முற்றினோர் - வறுமை நிறைந்தவர்கள். பொன் பிழைக்க - இடையிலே பெற்றிருந்த பொன் கைவிட்டுத்தவறிப்போக அதனால் வருந்தி. பொதிந்தனர் - முகத்தை மூடிக்கொண்டு வருந்துகின்றவர். `அறம் எனக்குஇலை யோஎனும்; `ஆவிநைந்து இறவி டுத்ததுஎன்? தெய்வதங் காள்!எனும்; பிறஉ ரைப்பதுஎன்? கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். 13 13. -. இராமன் கூறிய ஆறுதல் இத்தி றத்தின் இடர்உறு வாள்தனைக் கைத்த லத்தின் எடுத்துஅரும் கற்பினோய்! பொய்த்தி றத்தினன் ஆக்குதி யோ?புகல்! மெய்த்தி றத்துநம் வேந்தனை நீஎன்றான். 14 14. மெய்த்திறத்து - மெய்யின் பக்க முள்ள; நம் வேந்தனை, நீர்; பொய்த் திறத்தினன் - பொய்யின் பக்கம் இருப்பவனாக. புகல் - சொல்லுக. `சிறந்த தம்பி திருஉற, எந்தையை மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை உறைந்து தீரும் உறுதிபெற் றேன்;இதின் பிறந்து யான்பெறும் பேறென்பது யாவதே! 15 15.-. கோசலையின் விருப்பம் `ஆகின் ஐய அரசன்தன் ஆணையால் ஏகல் என்பது யானும் உரைக்கிலென்; சாக லாஉயிர் தாங்கவல் லேனையும் போகின், நின்னொடும் கொண்டனை போகென்றாள். 16 16. -. இராமன் அறிவுரை `என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத் தாது,உடன் துன்னு கானம் தொடரத் துணிவதோ! அன்னை யே!அறம் பார்க்கிலை யாம்;என்றான். 17 17. வற்புறுத்தாது - அமைதியுடன் வாழும்படி வலியுறுத் தாமல், உடன் - என்னுடன். துன்னுகானம் - நெருங்கிய காட்டுக்கு. `வரிவில் எம்பிம் மண்ணரசாய் அவற்கு உரிமை மாநிலம் உற்றபின், கொற்றவன் திருவின் நீங்கித் தவம்செய்யும் நாள்,உடன் அருமை நோன்புகள் ஆற்றுதி யாம்அன்றே. 18 18. வரிவில் எம்பி - கட்டமைந்த வில்லையுடைய என் தம்பி பரதன். கொற்றவன் - அரசனாகிய தந்தை. திருவின் - அரச செல்வத்தை விட்டு. அன்று; ஏ; அசைகள். `சித்தம் நீதிகைக் கின்றதுஎன்? தேவரும் ஒத்த மாதவம் செய்துயர்ந் தார்அன்றே; எத்த னைக்குள ஆண்டுகள், ஈண்டுஅவை பத்தும் நாலும், பகல்அல வோ?என்றான். 19 19. -. `முன்னர்க் கோசிகன் என்னும் முனிவரன் தன்அ ருள்தலை தாங்கிய விஞ்சையும், பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ? இன்னம் நன்றுஅவர் ஏயின செய்தலே. 20 20. கோசிகன் - விசுவாமித்திரன். அருள் தலை தாங்கிய - அருளால் பெற்ற. விஞ்சையும் - வித்தையும். பேறும் - செல்வமும். அவர்க்கு - அம் முனிவர்களுக்கு. ஏயின - அவர்கள் இட்ட பணிகளை. `மாத வர்க்கு வழிபாடு இழைத்து,அரும் போதம் முற்றிப், பொருஅரு விஞ்சைகள் ஏதம் அற்றன தாங்கி, இமையவர் காதல் பெற்றுஇந் நகர்வரக் காண்டி;ஆல். 21 21. இழைத்து - செய்து. அரும் போதம் முற்றி - சிறந்த அறிவு நிறைந்து. `ஏதம் அற்றன பொரு அரும் விஞ்சைகள் தாங்கி. ஏதம் - குற்றம். தாங்கி - பெற்று. இத்தி றத்த, எனப்பல வாசகம் உய்த்து உரைத்த மகன்உரை, உட்கொளா, `எத்தி றத்தும் இறக்கும் இந்நாடுஎனா மெய்த்தி றத்து விளங்கிழை உன்னுவாள். 22 22. உய்த்து உரைத்த - ஆராய்ந்து கூறிய. உள் கொளா - மனத்திலே கொண்டு. எத்திறத்தும் இந்நாடு இறக்கும் எனா - எவ்வகையிலும் இந்நாட்டை விட்டு நீங்குவான் என்று. `அவனி காவல் பரதனது ஆகுக; இவன்இஞ் ஞாலம் இறந்துஇரும் கான்இடைத் தவன்நி லாவகை காப்பென், தகவினால் புவனி நாதன் தொழுது; என்று போயினாள். 23 23. இ ஞாலம் இறந்து - இந்த நாட்டைத் துறந்து. தவன் நிலாவகை - தவத்திலே நில்லாதபடி. தகைவு இலா - யாராலும் தடுத்தற்கரிய. போகின் றாளைத் தொழுது, புரவலன் ஆக மற்றுஇவள் தன்னையும் ஆற்றி,இச் சோகம் தீர்ப்பவள் என்று, சுமித்திரை மேகம் தோய்தனிக் கோயிலை மேயினான். 24 24. புரவலன் ஆக - அரசன் இருக்கட்டும் அவனையும். இவள் தன்னையும் - என் அன்னையாகிய இக்கோசலையையும். கோசலையின் துயரம் நடந்த கோசலை, கேகய நாட்டுஇறை மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன் கிடந்த பார்மிசை வீழ்ந்தனள்; கெட்டுஉயிர் உடைந்த போதின் உடல்விழுந்து என்னவே. 25 25. கெட்டு உயிர் உடைந்தபோது - நிலைகெட்டு உயிர் நீங்கிய காலத்தில். உடல் விழுந்து என்ன - உடம்பு விழுந்தது போல. `மன்னவன் கிடந்த பார் மிசை வீழ்ந்தனள். திரையார் கடல்சூழ் உலகின் தவமே! திருவின் திருவே! நிரையார் கலையின் கடலே! நெறியார் மறையின் நிலையே! கரையா அயர்வேன் எனை,நீ கருணா லயனே, என்என்று உரையா இதுதான் அழகோ! உலகேழ் உடையாய்! என்னும். 26 26. நிரைஆர் - ஒழுங்காக அமைந்த. நெறிஆர் - நன்னெறிகள் நிறைந்த. கரையா அயர்வேன் - கரைந்து வருந்துவேன். தசரதன் தவிப்பு இராமனைக் காணாமல் மன்னர்கள் திகைத்தனர். என்னவென்று அறிந்து வருமாறு வசிட்டனை வேண்டினர். கோசலையின் அழுகுரல் கேட்டு வசிட்டன் வந்தான்; மன்னன் நிலைகண்டு மயங்கினான்; கைகேயி வசிட்டனை வணங்கி நடந்ததை நவின்றாள். வசிட்டன் அரசனைத் தூக்கி எடுத்து ஆறுதல் கூறினான். சொற்றாள்; சொற்றா முன்னம், சுடர்வாள் அரசர்க்கு அரசைப் பொற்றா மரைபோல் கையால் பொடிசூழ் படிநின்று எழுவி, `கற்றாய்! அயரேல்! அவளே தரும்நின் காதற்கு அரசை! எற்றே செயல்!என்று அறியேன்; என்றுஎன்று இரவா நின்றான். 27 27. சொற்றா முன்னம் - சொல்லும் முன்பே. பொடி சூழ் - தூசி படிந்த. படி - நிலம். எழுவி - எழுப்பி. காதற்கு - காதலனுக்கு; மகனுக்கு. `நின் காதற்கு அரசை அவளே தரும் செயல் எற்றே - இச்செயல் என்னே. என்றம் முனிவன் தன்னை, `நினையா வினையேன் இனியான் பொன்றும் முன்னம் அவனைப் புனைமா மகுடம் புனைவித்து? ஒன்றும் வனம்என்று உன்னா வண்ணம் செய்து,என் உரையும் குன்றும் பழிபூ ணாமல் காவாய்! கோவேஎன்றான். 28 28. நினையா வினையேன் - நினைத்தறியாத செயலை யுடையேன். பொன்றும் முன்னம் - சாவதற்கு முன்பே. வனம் ஒன்றும் என்று - காட்டை அடையும் என்பதை. உன்னா வண்ணம் - நினைக்காதபடி. `முனியும் முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி `இனிஉன் புதல்வற்கு அரசும் ஏனை யோர்க்கு இன்உயிரும் மனுவின் வழிநின் கணவற்கு உயிரும்; உதவி வசைதீர் புனிதம் மருவும் புகழே புனைவாய்! பொன்னே! என்றான். 29 29. முனியும் - வசிட்ட முனிவரும். முனியும் செய்கை - வெறுக்கும் செயலையுடைய. ஏனையோர் - மற்றையோர். மனுவின் வழி - மனுவின் பரம்பரையில் வந்த. புனிதம் மருவும் - பரிசுத்தம் பொருந்திய. மொய்ம்மான் வினைவேர் அறவென்று உயர்வான் மொழியா முன்னம், விம்மா விழுவாள்; `அரசன் மெய்யில் திரிவான் என்னில், இம்மாண் உலகத்து உயிரோடு இனிவாழ்வு உகவேன்; என்சொல் பொய்ம்மா ணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள். 30 30. மொய்ம்மாண் வினை - வலிமை மிகுந்த வினைகளை. வேர் அற - அடியோடு அழியும்படி. உயர்வான - உயர்ந்தவனாகிய வசிட்டன். விம்மா - விம்மி. மெய்யில் - உண்மையிலிருந்து. பொய் மாணாமற்கு - பொய்யாகாதிருக்கும் பொருட்டு. கொழுநன் துஞ்சும் எனவும், கொள்ளாது உலகம் எனவும், பழிநின்று உயரும் எனவும், பாவம் உளதாம் எனவும், ஒழிகின் றிலை;அன் றியும்ஒன்று உணர்கின் றிலை;யான் இனிமேல் மொழிகின் றனஎன்? என்னா முனியும் முறையன்று என்றான். 31 31. ஒழிகின்றிலை - உன் பிடிவாதத்தை விடுகின்றாய் அல்லை. ஒன்று உணர்கின்றிலை - நன்மை ஒன்றை நீயாகவும் அறிகின்றிலை. முறை ஒன்று - இது நீதி யன்று. `கண்டேன் நெஞ்சம் கனிவாய்க்; கனிவாய் விடம்நான் நெடுநாள் உண்டேன், அதனால் நீஎன் உயிரை முதலோடு உண்டாய்! பண்டே எரிமுன் உன்னைப் பாவீ தேவி யாகக் கொண்டேன் அல்லேன், வேறோர் கூற்றம் தேடிக் கொண்டேன். 32 32. நெஞ்சம் கனிவாய் கண்டேன் - உன் உள்ளத்தை நன்றாக உணர்ந்தேன். கனிவாய் விடம் - கனிந்த வாயின் விடத்தை. `விழிக்கும் கண்வேறு இல்லா வெம்கான், என் கான் முளையைச் சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய், என்னைப் போழ்வாய், பழிக்கு நாணாய் மாணாப் பாவி! இனிஎன் பல,உன் கழுத்தின் நாண்உன் மகற்குக் காப்பின் நாணாம்; என்றான். 33 33. விழிக்கும் கண் வேறு இல்லா - விழித்துப் பார்க்கும் கண் வேறில்லாமல் அழிக்கின்ற. வேம் கான் - கொடிய காட்டிற்கு. கான் முளை - மைந்தன். சுழிக்கும் - அலையும்படி செய்யும். நாண் - தாலிக்கயிறு. காப்பின் நாண் - காப்புக்கயிறு. இன்னே பலவும் பகர்வான் இரங்கா தாளை நோக்கிச் `சொன்னேன் இன்றே, இவள்என் தாரம் அல்லள் துறந்தேன்; மன்னே ஆவான வரும்அப் பரதன் தனையும், மகன்என்று உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு; என்றான். 34 34. அவனும் உரிமைக்கு ஆகான் - அப்பரதனும் எனது இறுதிக் கடன்களைச் செய்வதற்கு உரியவன் ஆகான். இராமனை எண்ணித் தசரதன் புலம்பல்: `பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே; பொன்னின் புகழே; மின்னின் மின்னும் விரிவில் குமரா! மெய்யின் மெய்யே! என்னின் முன்னம் வனம்நீ அடைதற்கு எளியேன் அல்லேன், உன்னின் முன்னம் புகுவேன் உயர்வா னகம்யான்; என்றான். 35 35. பொன்னின் முன்னம் - பொன்னைவிடச் சிறந்து. பொன்னின் புகழே - திருமகளின் புகழ்பொருந்திய கணவனே. `அள்ளல் பள்ளப் புனல்சூழ் அகன்மா நிலமும், அரசும், கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும் கள்ளக் கைகே சிக்கே உதவிப் புகழ்கைக் கொண்ட வள்ளல் தனம்என் உயிரை மாய்க்கும் மாய்க்கும்; என்றான். 36 36. அள்ளல் - சேறு. வள்ளல் தனம் - வள்ளல் தன்மை. `கேட்டே இருந்தேன் எனினும், கிளர்வான் இன்றே அடைய மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்கண்; மைந்தா! காட்டே உறைவாய் நீ,இக் கைகே சியையும் கண்டுஇந் நாட்டே உறைவேன் என்றால் நன்றுஎன் தன்மை! என்றான். 37 37. கேட்டே - நீ காட்டுக்குப் போகின்றாய் என்பதைக் கேட்டு. கிளர்வான் - உயர்ந்த வானுலகை. என்கண் வன்கண் - என்னிடம் இரக்கமின்மை பொருந்திய தாகும். `மெய்யார் தவமே செய்துன் மிடல்மார்பு அரிதில் பெற்ற செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும், உய்யார்! உய்யார்! கெடுவேன்! உன்னைப் பிரியின் வினையேன்; அய்யா! கைகே சியைநேர் ஆகே னோநான்; என்றான். 38 38. மிடல் மார்பு - வலிமையுள்ள மார்பை. செய்யாள் - இலக்குமி. என்றோ ஒன்றொன்று ஒவ்வா உரைதந்து, அரசன் உயிரும் சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தித் தேய்ந்தான்; மென்தோள் மார்பின் முனிவன் `வேந்தே அயரேல்! அவனை இன்றுஏ காத வண்ணம் தகைவன் உலகோடு என்னா. 39 39. என்னா - என்று. ஒவ்வா இசை தந்து - ஒவ்வாத சொற்களைக் கூறி. அவனை இன்று; உலகோடு - நாட்டிலிருந்து. ஏகாத வண்ணம் தகைவென் - போகாதபடி தடுப்பேன். தசரதன் பழங் கதை பகர்தல் என்று உரைத்து வசிட்டன் சென்றான்; தசரதன் உள்ளத்தில் சிறிது ஆறுதல் கொண்டிருந்தான்; கோசலை யும் `இராமன் திரும்பி வருவான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தசரதன் பழைய நிகழ்ச்சி ஒன்றைக் கோசலைக்குக் கூறினான். `பொன்ஆர் வலயத் தோளான் கானோ புகுதல் தவிரான்; என்ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இதுகோ சலைகேள்! முன்னாள் ஒருமா முனிவன் மொழியும் சாபம் உளதுஎன்று அந்நாள் உற்ற தெல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 40 40. -. முன்னொரு காலத்தில் நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். சலபோசன முனிவன் குமரன் சுரோசனன் என்பவன் ஒரு நீர் நிலையிலே நீர் முகந்து கொண்டிருந் தான். அவனை நான் காணவில்லை. நீர் முகந்த ஓசை மட்டும் கேட்டது. யானையென்று கருதிக் கணை விட்டுக் கொன்றேன். மைந்தன் பிரிவால் தந்தை மாண்டான். `நீயும் உன் புதல்வன் பிரிவால் பொன்றுக என்று சாபமிட்டான். அச்சாபம் பலிக்கும் காலம் வந்த தென்று வருந்தினான் தசரதன். கோசலை உள்ளந்துடித்தாள். வசிட்டன் இராமனுடைய முடிசூட்டு விழாவைக் காணக் கூடியிருந்த அரசவைக்கு வந்தான். `பரதற்கு நாடு; இராமற்குக் காடு; என்ற செய்தியைச் சொன்னான்; அனைவரும் அரற்றினர். பொது மக்கள் பேச்சு கிள்ளையொடு பூவை அழுத கிளர்மாடத்து உள்உறையும் பூசை அழுத, உருஅறியாப் பிள்ளை அழுத, பெரியோரை என்சொல்ல; வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். 41 41. கிள்ளை - கிளிகள். பூவை - நாகண வாய்ப்புட்கள். கிளர் மாடத்து - உயர்ந்து விளங்குகின்ற மாளிகையின். பூசை - பூனை. ஆவும் அழுத,அதன் கன்றுஅழுத, அன்றலர்ந்த பூவும் அழுத,புனல் புள்அழுத, கள்ஒழுகும் காவும் அழுத, களிறுஅழுத, கால்வயப்போர் மாவும் அழுத, அம் மன்னவனை மானவே. 42 42. கால் வயம்போர் - காற்றைப்போல் வெற்றியுடன் போர் செய்கின்ற. மாவும் - குதிரைகளும். மானவே - ஒப்பவே. மண்செய்த பாவம் உளதென்பார்; மாமலர்மேல் பெண்செய்த பாவம் அதனில் பெரிதென்பார்; புண்செய்த நெஞ்சை விதியென்பார்; பூதலத்தோர் கண்செய்த பாவம் கடலில் பெரிதென்பார். 43 43. மாமலர்மேல் பெண் - சீதாதேவி. விதி நெஞ்சைப் புண் செய்த என்பார் - ஊழ்வினையே உள்ளத்தைப் புண்படுத்தியது என்பார். ஆளான் பரதன் அரசென்பார்; ஐயன்இனி மீளான் நமக்கு விதிகொடிதே காண்என்பார்; கோள் ஆகி வந்தவா கொற்றமுடி தான்என்பார்; மாளாத நம்மின் மனம்வலியார் ஆர்என்பார். 44 44. விதி நமக்கு கொடிது காண் - விதிநமக்குக் கொடுமையைச் செய்வதாக இருக்கின்றது. `கொற்ற முடிதான்; கோள் ஆகி - தீமையாகி. வந்த ஆ - வந்த விதம் என்னே. ஆதி அரசன் அரும்கே கயன்மகள்மேல் காதல் முதிரக் கருத்தழிந்தா னாம்,என்பார்; சீதை மணவாளன் தன்னோடும் தீக்கானம் போதும்; அதுவன்றேல் புகுதும் எரிஎன்பார். 45 45. ஆதி அரசன் - முதலரசனாகிய தசரதன். கருத்து - அறிவு. போதும் - நாமும் போவோம். எரி புகுதும் - தீயில் வீழ்வோம். கையால் நிலம்தடவிக் கண்ணீர் மெழுகுவார்; உய்யாள் பொன்கோசலைஎன்று ஓவாது வெய்துயிர்ப்பார்; அய்யா!இளம்கோவே! ஆற்றுதியோ நீ!என்பார்; நெய்யார் அழல்உற்றது உற்றார்; அந்நீள்நகரார். 46 46. பொன் கோசலை உய்யாள் - அழகிய கோசலை உயிர் வாழ மாட்டாள். நெய் ஆர் அழல் உற்றது - நெய் ஊற்றிய நெருப்பு அடைந்த தன்மையை. `பெற்றுடைய மண்அவளுக்கு ஈந்து பிறந்துஉலகம் முற்றுடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி உற்றுறைதும் யாரும்; உரையவே இன்னாளில் புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போம்?; என்றார். 47 47. பெற்றுடைய - வரத்தால் பெற்று உரிமையாக உடைய. கோவை - அரசனாகிய இராமனை. பிரியாது மொய்த்து ஈண்டி - பிரியாமல் சூழ்ந்து நெருங்கி. `என்னே நிருபன் இயற்கை இருந்தவா! தன்நேர் இலாத தலைமகற்குத் தாரணியை முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப் பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்;என்பார். 48 48. -. இலக்குவன் சீற்றம் `கண்ணில் கடைத்தீஉக, நெற்றியில் கற்றை நாற, விண்ணில் சுடரும்கெட, மெய்யினின் நீர்வி ரிப்ப. உள்நிற் கும்உயிர்ப்பு எனும்ஊதை பிறக்க நின்ற அண்ணல் பெரியோன் தனதுஆதியின் மூர்த்தி ஒத்தான். 49 49. நெற்றியில் கற்றை நாற - நெற்றியிலே மயிர்த் தொகுதி தொங்க மெய்யினின் நீர் விரிப்ப - உடம்பிலிருந்து வியர்வை நீர் பரவ. உள்நிற்கும் - உள்ளே உலவி நிற்கின்ற. உயிர்ப்பு எனும் - பெருமூச்செனும். ஊதை. பெருங்காற்று. அண்ணல் பெரியோன் - சிறந்த பெரியோனாகிய இலக்குவன். ஆதியின் மூர்த்தி -ஆதி உருவாகிய ஆதி சேடனை. சிங்கக் குருளைக் கிடுதீம்சுவை ஊனை நாயின் வெம்கண் சிறுகுட் டனுக்குஊட்ட விரும்பி னாளால்; நங்கைக்கு அறிவின் திறம்நன்றிது! நன்றிது!என்னா கங்கைக்கு இறைவன் கமலத்தை புடைத்து நக்கான். 50 50. வெம் கண் - விரும்பத் தகுந்த கண்களையுடைய. நங்கைக்கு - கைகேசிக்கு. கங்கைக்கு - கங்கை பாயும் நாட்டுக்கு. கமலக்கை - தாமரை போன்ற கைகளை. புடைத்து - கொட்டி நின்று. `புவிப்பாவை பரம்கெடப் போரில் வந்தோரை எல்லாம் அவிப்பானும், அவித்தவர் ஆக்கையை அண்டம் முற்றக் குவிப்பானும், இன்றேஎன் கோவினைக் கொற்ற மௌலி கவிப்பானும் நின்றேன்; இதுகாக்குநர், காமின்! என்றான். 51 51. புவிப்பாவைபரம் - பூமி தேவியின் பாரம். அவிப்பானும் - அழிக்கின்றவனும். அண்டம் முற்ற - உலகம் முழுவதும். விண்ணாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும் எண்நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவ ராகி மண்நாட்டுநர், காக்குநர்,நீக்குநர், வந்த போதும் பெண்ணாட்டம் ஒட்டேன் இனிப்பேர்உல கத்துள்; என்னா. 52 52. எண் நாட்டவர் - எண்ணத் தகுந்த நாட்டினர். மண் நாட்டு நர் - உலகைப் படைப்பவர். காக்குநர் - காக்கின்றவர். வீட்டு நர் - அழிக்கின்றவர். `இப்பேர் உலகத்துள்; பெண் நாட்டம் ஒட்டேன் - பெண்களின் கருத்துக்கு இடம் கொடுக்க மாட்டேன். காலைக் கதிரோன் நடுஉற்றதொர் வெம்மை காட்டி, ஞாலத் தவர்கோ மகன்அந்நக ரத்து நாப்பண், மாலைச் சிகரத் தனிமந்தர மேரு முந்தை வேலைத் திரிகின் றதுபோல்திரி கின்ற வேலை. 53 53. நடு உற்றது ஓர் - உச்சியை அடைந்தது போன்ற ஒரு. ஞாலத்தவர்கோ - உலகினர்க்கு அரசனாகிய தசரதனுடைய மகன் - மகனாகிய இலக்குவன். மாலை சிகரம் - வரிசையான சிகரங்களையுடைய. இராமன் இலக்குவனிடம் வருதல் வீறாக் கிய பொற்கலன் வில்லிட, ஆரம் மின்ன, மாறாத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வந்தான்; கால்தாக் கநிமிர்ந்துபு கைந்துக னன்று பொங்கும் ஆறாக்கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன. 54 54. வீறு ஆக்கிய - அழகாகச் செய்யப்பட்ட. வில் இட - ஒளி வீச. ஆரம் - முத்துமாலை. கால் தாக்க - காற்று வீச. ஆறாக் கனல் - ஆறாத ஊழித் தீயை. ஆற்றும் - தணிவிக்கின்ற. இராமன் கேள்வி மின்ஒத்த சீற்றக் கனல்விட்டு விளங்க நின்ற பொன்ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக்கை யானை `என்அத்த! என்நீ இமை யோரைமு னிந்தி லாதாய்; சன்னத்தன் ஆகித் தனு ஏந்து தற்கு ஏது என்றான். 55 55. மின் ஒத்த - மின்னலைப் போன்ற. சீற்றக்கனல் விட்டு - கோபத்தீயைச் சிந்தி. என் அத்த - என் அப்பனே. சன்னத்தன் ஆகி - கோபசன்னத்தன் ஆகி. இலக்குவன் விடை `மெய்யைச் சிதைவித்து நின் மேல்முறை நீத்த நெஞ்சம் மையின் கரியாள் எதிர், நின்னை அம்மௌலி சூட்டல் செய்யக் கருதித், தடை செய்குநர் தேவ ரேனும் துய்யைச் சுடுவெம் கனலில்சுடு வான்து ணிந்தேன். 56 56. நின்மேல் முறை - உனக்குச் சிறப்பாக உரிய அரசு முறையை. நீத்த - நீக்கிய. நெஞ்சம் மையின் கரியாள் - நெஞ்சமானது மையைக் காட்டினும் கருமையுள்ளவளாகிய கைகேசியின். எதிர் - நேரிலேயே. துய்யை - பஞ்சை. சுடுவெம் கனலில் - சுடுகின்ற கொடிய தீயைப் போல. வலக்கார் முகம்,என்கைய தாக,அவ் வான்உ ளோரும் விலக்கார்; அவர்வந்துவி லக்கினும், என்கை வாளிக்கு இலக்கா எரிவித்து;உலகு ஏழினொடு ஏழும், மன்னர் குலக்கா வலும்இன்று உனக்கு யான்தரக் கோடி என்றான். 57 57. வலம் கார் முகம் - வெற்றியைத் தரும் வில். இலக்கா எரிவித்து - இலக்காகும்படி அழித்து. மன்னர் குலம் காவலும் - மன்னர் குலத்துக்குரிய அரசாட்சியும். கோடி - கொள்க. இராமன் இளையான் இதுகூற,இ ராமன்இ யைந்த நீதி வளையா வரும்நன்னெறி நின்அறிவு ஆகும் அன்றே; உளையா அறம்வற்றிட ஊழ்வழு வுற்ற சுற்றம் விளையா தநிலத்துஉனக்கு எங்கன் விளைந்தது? என்றான். 58 58. இயைந்த நீதி வளையா வரும் - பொருந்த நீதி கோணாமல் வருகின்ற. உளையா அறம் - அழியாத தருமம். ஊழ்வழுவுற்ற - முறை தவறிய. நிலத்து - இடத்தில். இலக்குவன் நீண்டான் அதுஉரைத்தலும் நித்திலம் தோன்ற நக்குச் `சேண்தான் தொடர்மாநிலம் நின்னதுஎன்று உந்தை செப்பப் பூண்டாய், பகையால்இழந் தேவனம் போதி என்றால், யாண்டோ அடியேற்குஇனிச் சீற்றம் அடுப்பது? என்றான். 59 59. நித்திலம் - முத்துக்கள் போன்ற பற்கள். தோன்ற - தெரியும்படி சேண்தான் தொடர் - அகலம் பொருந்திய. `இனி அடியேற்குச் சீற்றம் அடுப்பது - வருவது. யாண்டோ - வேறு எப்பொழுதுதான்? `நின்கண் பரிவில்லவர் நீள்வனத்து உன்னை நீக்கப் புன்கண் பொறியாக்கை பொறுத்துயிர் போற்று கேனோ என்கண் புலம்முன், உனக்கு ஈந்து,பின் இல்லை என்ற வன்கண், புலம்தாங்கிய மன்னவன் போல; என்றான். 60 60. பரிவு இல்லவர் - அன்பில்லாதவர். புன்கண் பொறி யாக்கை - துன்பந்தரும் ஐம்பொறிகளையுடைய உடம்பை. பொறுத்து - சுமந்து கொண்டு. என் கண் புலம்முன் - என் கண்ணெதிரே. உனக்கு ஈந்து - இந்நாட்டை உனக்குத் தந்து, பிறகு, வன் கண் புலம் - கொடிய கட்புலனை. மன்னவன் போல - மன்னவனைப் போல. இராமன் `பின்குற்றம் மன்னும் பயக்கும்அரசு, என்றல் பேணேன்; முன்கொற்ற மன்னன், முடிகொள்கெனக் கொள்ள மூண்டது என்குற்றம் அன்றோ, இகல்மன்னவன் குற்றம் யாதோ! மின்குற்று ஒளிரும் வெயில்தீக்கொடு அமைந்த வேலோய்! 61 61. பின் குற்றம் - பிறகு குற்றத்தை. மன்னும் பயக்கும் - மிகுதியாக தரும். கொள்ள மூண்டது - ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. இகல் - வலிமையுள்ள. மின் குற்று ஒளிரும் - மின்னலின் ஒளியை வென்று விளங்குகின்ற. வெயில் தீக்கொடு - வெய்யில் போன்ற வெம்மையைக் கொண்டு. `நதியின் பிழைஅன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழைஅன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழைஅன்று; மகன்பிழை அன்று; மைந்த விதியின் பிழை;நீ இதற்குஎன்கொல் வெகுண்டது? என்றான். 62 62. பதியின் - தலைவனாகிய தசரதனுடைய. பயந்து - பெற்று. மகன் - பரதன். இதற்கு வெகுண்டது என்கொல் - இதற்காகக் கோபங்கொண்டது ஏன்? இலக்குவன் `உதிக்கும் உலையுள்உறு தீஎன ஊதை பொங்கக் கொதிக்கும் மனம்எங்ஙனம் ஆற்றுவென்? கோள்இ ழைத்தாள் மதிக்கும் மதியாய்,முதல் வானவர்க் கும்வலீ இதாம் விதிக்கும் விதியாகும்என் வில்தொழில் காண்டி; என்றான். 63 63. உதிக்கும் - தோன்றும். உலையுள் உறு - உலையிலே பொருந்திய. தீ என - நெருப்பைப்போல. கோள் இழைத்தாள் - கொடுமை செய்தவளின் மதிக்கும் மதியாய் - அறிவுக்கும் அறிவூட்டுவதாய். வலீஇதாம் - வலிமையுடையதாகிய. விதிக்கும் - ஊழ்வினைக்கும். விதி ஆகும் - கட்டளை யிடுவதாக நிற்கின்ற. இராமன் ஆய்தந்துஅவன் அவ்வுரை கூறலும், `ஐய நின்றன் வாய்தந்தன கூறுதி யோ!மறை தந்த நாவால்; நீதந்தது அன்றேநெறி யோர்கண் நிலாதது; ஈன்ற தாய்தந்தை என்றால்அவர் மேல்சலிக் கின்றது என்னோ. 64 64. அவன் ஆய்தந்து அவ்வுரை கூறலும் - அவ்விலக்குவன் ஆராய்ந்து அவ்வார்த்தைகளைக் கூறியவுடன். நீ தந்தது - நீ இப்பொழுது உரைத்தது. நெறியோர் கண் இலாதது - நல்லொழுக்க முள்ளவர்களிடம் இல்லாத மொழியாகும். சலிக்கின்றது ஒன்றோ - வெறுப்படைகின்றது ஒரு நீதி யாகுமோ? இலக்குவன் நல்தா தையும்நீ! தனிநா யகன்நீ! வயிற்றில் பெற்றா யும்நீயே! பிறர்இல்லைப் பிறர்க்கு நல்கக் கற்றாய் இதுகா ணுதிஇன்று; எனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தா னைஅன்னான். 65 65. முற்றா மதியம் - இளம்பிறையை. மிலைந்தான் - தரித்து. முனிந்தானை அன்னான் - சினந்தவனாகிய சிவபிரானை ஒத்த இலக்குவன். நற்றாதையும்...இன்று’ என - என்று கூறி. கை மறித்தான் - கையைத் தன் தொழில்மேலே செலுத்தினான். இராமன் வரதன் பகர்வான் `வரம்பெற் றவள்தான் இவ்வையம் சரதம் உடையாள் அவள்;என் தனித்தாதை செப்பப் பரதன் பெறுவான்; இனியான் படைக்கின்ற செல்வம் விரதம்; இதின்நல் லதுவேறு இனியா வது? என்றான். 66 66. இவ்வையம் - இவ்வுலகத்தை. சரதம் - உண்மையாக. விரதம் - தவமேயாகும். இதில் நல்லது- இதைவிடச்சிறந்தது. `ஆன்றான் பகர்வான் பினும்,ஐய இவ்வையம், மையல் தோன்றா நெறிவாழ் துணைத்தம் முனைப்போர் தொலைத்தோ! சான்றோர் புகழும் தனித்தாதையை வாகை கொண்டோ! ஈன்றா ளைவென்றோ! இனிஇக்கதம் தீர்வது; என்றான். 67 67. இவ்வையம் - இவ்வுலகம் காரணமாக. மையல் தோன்றா நெறிவாழ் - மயக்கம் அற்ற நன்னெறியிலே வாழ்கின்ற. இ கதம் தீர்வது - இக்கோபத்தைத் தீர்த்துக் கொள்வது? இலக்குவன் செல்லும் சொல்வல்லான் எதிர்தம்பியும் `தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்; இருதோள்எனச் சோம்பி ஓங்கும் கல்லும் சுமந்தேன்; கணைப்புட்டிலும், கட்ட மைந்த வில்லும் சுமக்கப் பிறந்தேன்வெகுண் டென்னை? என்றான். 68 68. செல்லும் சொல்வல்லான் எதிர் - எங்கும் செல்லத்தக்க சொல்லிலே வல்ல இராமன் எதிரில். தெவ்வர் சொல்லும் - பகைவர்கள் கூறுகின்ற. சொல்லும் - பழிச் சொல்லையும். இராமன் நன்சொற் கள்தந்தாண்டு எனைநாளும் வளர்த்த தாதை தன்சொல் கடந்துஎற்கு அரசாள்வது தக்க தன்றால்; என்சொல் கடந்தால் உனக்குயாதுளது ஈனம்? என்றான், தென்சொல் கடந்தான் வடசொற்கலைக்கு எல்லை தேர்ந்தான். 69 69. நன் சொற்கள் தந்து - நல்ல அற மொழிகளை உரைத்து. ஆண்டு - பாதுகாத்து. சொல் கடந்து - சொல்லை மீறி. என் சொற்கள் தந்தால் - என் சொற்களின்படி நடக்க இடந்தந்தால். `வட சொல்கலைக்கு எல்லை தேர்ந்தான்; தென் சொற்கள் - இவ்வாறு அழகிய சொற்களை. தந்தான் - உரைத்தான்; தென் சொல் - தமிழ் மொழியை. கடந்தான் - கற்றுக் கடந்தவன். வட சொல்கலைக்கு - வடமொழிக்கலைகளின். எல்லை தேர்ந்தான்- முடிவை அறிந்தவன் என்போரும் உண்டு. இலக்குவன் சினம் தணிதல் சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும் மாற்றம் துறந்தான்; மறைநான்கென வாங்கல் செல்லா நால்தெண் திரைவேலையின், நம்பிதன் ஆணை யாலே ஏற்றம் தொடங்காக் கடலில்தணிவு எய்தி நின்றான். 70 70. வாங்கல் செல்லா - மீறிச் சொல்லாத. நால்தெண்திரை வேலையின் - அசைகின்ற தெளிந்த அலைகளையுடைய கடலைப்போல அடங்கி, சீற்றம் துறந்தான்; - மாற்றம் துறந்தான்! நம்பிதன் ஆணையாலே - இராமனுடைய கட்டளையினால். ஏற்றம் தொடங்கா - நிலத்திலே ஏறிவராத. கடலில் - கடலைப் போல. இராமனும் இலக்குவனும் சுமித்திரையிடம் வருதல் கண்டாள் மகனும் மகனும் தனகண்கள் போல்வார் தண்டா வனம்செல் வதற்கேசமைந் தார்கள் தம்மை; புண்தாங் குநெஞ்சத் தினளாய்ப் படிமேல் புரண்டாள்; உண்டா யதுன்பக் கடற்குஎல்லை உணர்ந்தி லாதாள். 71 71. -. சோர்வாளை ஓடித்தொழுது ஏத்தினன், துன்பம் என்னும் ஈர்வாளை வாங்க, மனம்தேறுதற்கு ஏற்ற செய்வான், `போர்வாள் அரசர்க்குஇறை பொய்த்தனன் ஆக்க கில்லேன் கார்வான் நெடும்கான் இறைகண்டுபின் மீள்வன், என்றான். 72 72. சோர்வாளை - சோர்கின்ற சுமித்திரையை. ஈர்வாளை - பிளக்கின்ற வாளை. இறை - இறைவனை. கார்வான் - கருமையான பெரிய; மேகங்கள் படிந்த பெரிய. இறை கண்டு - சிறிது பார்த்து விட்டு. `கான்புக் கிடினும், கடல்புக் கிடினும், கலிப்பேர் வான்புக் கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி யான்புக் கதுஒக்கும்; என்னையார்நலி கிற்கும் ஈட்டார், ஊன்புக்கு உயிர்புக்கு உணர்புஉக்கு உலையற்க; என்றான். 73 73. கலிபேர் வான் - ஆரவாரமும் பெருமையும் உள்ள வானுலகம். நலிகிற்கும் ஈட்டார் - துன்புறுத்தும் வன்மை யுள்ளவர்? ஊன்புக்கு - உடம்பிலே பொருந்திய. உயிர் புக்கு - உயிரிலே அமைந்த. உணர்பு உக்கு - அறிவு சிதறி. உலையற்க - வருந்த வேண்டாம். மரவுரி பெறுதல் தாய்ஆற் றுகிலாள்தனை ஆற்றுகின் றார்கள் தம்பால், தீஆற் றுகின்றார் எனச்சிந்தையி னின்று தேற்ற, நோய்ஆற் றுகில்லா உயிர்போல நுடங்கு இடையார் மாயாப் பழியாள் தரவற்கலை ஏந்தி வந்தார். 74 74. தீ ஆற்றுகின்றார் என - தீயைத் தணிக்கின்றவர்களைப் போல. சிந்தையின் நின்று தேற்ற - கவலையிலிருந்து நீங்கும்படி. ஆற்றுகின்றவர்கள் தம்மால் - சுமித்திரையின் துன்பத்தை ஆற்றுகிறன்றவர்களாகிய இராம இலக்குவர்பால். நோய் ஆற்று கிலா - நோயைப் பொறுக்க முடியாத. நுடங்கு - அசைகின்ற. மாயாப் பழியாள் - கைகேசி. வற்கலை - மரவுரி. கார்வா னம்ஒப்பான் தனைக்,காண் தொறும்காண் தொறும்போய் நீராய் உகக்கண் ணினும்நெஞ்சு அழிகின்ற நீரார் `பேரா இடர்ப்பட்டு அயலார்உறு பீழை கண்டும் தீரா மனத்தாள் தர,வந்தன சீரம்; என்றார். 75 75. நெஞ்சு கண்ணிணும் நீராய் - உள்ளம் கண்ணை விட நீராகிச் சிந்தும்படி. அழிகின்ற நீரார் - வருந்துகின்ற தன்மை யுள்ளவர். பீழை - துன்பம். தீரா - கொடுமை தீராத. சீரம் - மரவுரி. வாள்நித் திலவெண் ணகையார்தர, வள்ளல் தம்பி, `யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் பூணப் பிறந்தா னும்நின்றான்; அவை, போர் விலோடும் காணப் பிறந்தே னும்நின்றேன்;அவை காட் டும்; என்றான். 76 76. வாள் நித்திலம் - ஒளி பொருந்திய முத்துப்போன்ற. வெள்நகையார் - வெண்மையான பற்களையுடைய மாதர்கள். யாணர் திரு நாடு - புதிய செல்வங்களையுடைய அழகிய நாட்டைப் பெறாமல். சுமத்திரையின் அன்புரை `ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி; மாகாதல்இ ராமன் அம் மன்னவன்; வையம் ஈந்தும் போகாஉயிர்த் தாயர்நம் பூங்குழல் சீதை; என்றே ஏகாய்!இனி இவ்வயின் நிற்றலும்ஏதம்; என்றாள். 77 77. உனக்கு அவ்வனம் - உனக்கு அக்காடு. இவ் அயோத்தி ஆகாதது. அன்று - இந்த அயோத்தி நகரமேயாகும். போகா உயிர் - இறக்காத உயிரையுடைய. ஏதம் - தவறாகும். பின்னும் பகர்வாள், `மகனேஇவன் பின்செல், தம்பி என்னும் படியன்று, அடியாரினும் ஏவல் செய்தி! மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா! அதன்றேல், முன்னம் முடி;என் றனள்வார் விழிசோ ரநின்றாள். 78 78. என்றனள் - என்று கூறி, வார் விழி - நீண்ட கண்களிலே. சோர நின்றாள் - நீர் சோரும்படி நின்றாள். இருவரும் தொழுதனர், இரண்டு கன்றுஒரீஇ வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்; பொருவரும் குமரரும் போயி னார்,புறம் திருவரைத் துகில்ஒரீஇச் சீரை சாத்தியே. 79 79. இரண்டு கன்று ஒரீஇ - இரண்டு கன்றுகளைப் பிரிந்து. வெருவரும் - துன்புறும். திரு அரைதுகில் ஒரீஇ -அழகிய இடையிலே அணிந்த உடையை நீக்கி. சீரை சாத்தி - மரவுரியை அணிந்து கொண்டு. இலக்குவனைப் பார்த்து இராமன் உரைத்தல் `அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும் முன்னையர் அல்லர்;வெம் துயரின் மூழ்கினார்; என்னையும் பிரிந்தனர்; இடர்உ றாவகை உன்னைநீ என்பொருட்டு உதவுவாய் என்றான். 80 80. முன்னையர் அல்லர் - முன்புள்ள நிலையினர் அல்லர். இடர் உறாவகை - துன்புறாத படிகாக்க. இலக்குவன் தந்த விடை ஆண்தகை அம்மொழி பகர, அன்பனும் தூண்தகு திரள்புயம் துளங்கத் துண்எனா மீண்டதோர் உயிர்இடை விம்ம விம்முவான், `ஈண்டுனக்கு அடியனேன் பிழைத்தது யாதுஎன்றான். 81 81. தூண்தகு - தூணைப்போன்ற. துளங்க - நடுங்கும்படி. துண்எனா - திடுக்கிட்டு. மீண்டது ஓர் உயிர் இடை - போய் மீண்டதாகிய ஓர் உயிரைப் போல. விம்ம - துன்பம் மிகுதிப்பட. பிழைத்தது - செய்த தவறு. `நீர்உள எனின்உள மீனும் நீலமும், பார்உள எனின்உள யாவும்; பார்ப்புறின் நார்உள தனுஉளாய்! நானும், சீதையும் ஆர்உளர் எனின்உளேம் அருளு வாய்; என்றான். 82 82. மீனும் நீலமும் உள - மீனும் நீல நிறமும் இருப்பன. நார் உள - நாணியோடு கூடியுள்ள. உளேம் - உயிரோடு இருப்போம்? `பைந்தொடி ஒருத்திசொல் கொண்டு, பார்மகள் நைந்துயிர் நடுங்கவும் நடத்தி கான்எனா உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்; மைந்தன்என்று இனையசொல் வழங்கி னாய்;எனா. 83 83. உண்மை காவலன் உய்ந்தனன் இருந்தனன்- உண்மை யின் காவலனாகிய தசரதன் பிழைத்திருந்தான். மைந்தன் என்று - அவன் மைந்தன் தான் என்று என்னைக் கருதி. உரைத்தபின் இராமன்ஒன்று உரைக்க உன்னிலன்; வரைத்தடம் தோளினான் வதனம் நோக்கினான்; விரைத்தடம் தாமரைக் கண்ணை மிக்கநீர் நிரைத்திடை இடைவிழ நெடிது நிற்கின்றான். 84 84. வரைத் தடம் தோளினான் - மலைபோன்ற பெரிய தோனையுடைய இலக்குவனது. வதனம் - முகத்தை. இடை இடை விழ - நிலத்திலே சிந்த. வசிட்டன் வருத்தமும் வார்த்தையும் அவ்வயின், அரசவை அகன்று நெஞ்சகத்து எவ்வம்இல் இருந்தவ முனிவன் எய்தினான்; செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்; கவ்வைஅம் பெரும்கடல் முனியும் கால்வைத்தான். 85 85. அவ்வயின்- அப்பொழுது; எவ்வம் இல் - குற்றம் இல்லாத. முனிவன் - வசிட்டன். செவ்விய - அழகிய. குமரர் - இராம இலக்குவர்கள். கவ்வை - துன்பம். `முனியும் கவ்வை அம்பெரும் கடல் கால் வைத்தான். அன்னவர் முகத்தினொடு அகத்தை நோக்கினான்; பொன்அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்; என்இனி உணர்த்துவது! எடுத்த துன்பத்தால் தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான். 86 86. பொன் அரை - பொன்னாடை தரிக்கும் இடுப்பிலே. சீரை - மரவுரி. உணரும் தன்மையான் - எல்லாவற்றையும் அறியும் தன்மையுள்ளவன். வாழ்வினை நுதலிய மங்க லத்துநாள் தாழ்வினை அதுவரச் சீரை சாத்தினான்; சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ! 87 87. வாழ்வினை நுதலிய - அரச வாழ்வைக் கருதிய. மங்கலத்து நாள் - சுப நாளிலே. தாழ்வினையது - தீ வினை யானது. சூழ் வினை - வரக் கூடிய பூர்வவினை. வில்தடம் தாமரைச் செங்கை வீரனை உற்றடைந்து `ஐயநீ ஒருவி, ஓங்கிய கல்தடம் காணுதி என்னின், கண்அகல் மல்தடம் தானையான் வாழ்கி லான்;என்றான். 88 88. நீ ஒருவி - நீ பிரிந்து. ஓங்கியகல் தடம் - உயர்ந்த மலை களையுடைய வனத்தை. கண் அகல் - நிறைந்த. மல்தடம் தானை யான்- வலிமையுள்ள பெரிய சேனையையுடைய தசரத மன்னன். இராமன் உரை `அன்னவன் பணிதலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்;அவன் இடரை நீக்குதல் நின்னது கடன்;இது நெறியும்; என்றனன் பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். 89 89. பன்னகப்பாயலின் - ஆதிசேடனாகிய படுக்கையி லிருந்து. பள்ளி நீங்கினான் - துயில் நீங்கியவனாகிய இராமன். `அன்னவன்.... என்றனன். பன்னகம் - பாம்பு. வசிட்டன் வெவ்வரம் பையில்சுரம் விரவென் றான்அலன்; தெவ்வர் அம்பு அனையசொல் தீட்டி னாள்தனக்கு, அவ்அரம் பொருதவேல் அரசன், ஆய்கிலாது, `இவ்வரம் தருவென்என்று ஏன்றது உண்டுஎன்றான். 90 90. வெவ் அரம் பயில் - கொடிய முட்கள் நிறைந்த. சுரம் விரவு - காட்டை அடைக. தெவ்வர் அம்பு அனைய - பகைவர் விடும் அம்பு போன்ற. அவ் அரம் பொருத - அந்த அரத்தால் தேய்த்துக் கூர்மையாக்கப்பட்ட. என்றது - ஒப்புக் கொண்டது. `ஏன்றனன் எந்தைஇவ் வரங்கள்; ஏவினாள் ஈன்றவள்; யான்அது சென்னி ஏந்தினேன்; சான்றுஎன நின்றநீ தடுத்தியோ? என்றான் தோன்றிய நல்அறம் நிறுத்தத் தோன்றினான். 91 91. சான்று என - நீதிக்குச் சாட்சி என்று சொல்லும்படி. தோன்றிய - பழமையாகத் தோன்றிய. என்றபின் முனிவன்ஒன்று இயம்ப எண்ணிலன்; நின்றனன், நெடும்கண்நீர் நிலத்து நீர்த்துஉக; குன்றன தோளவன் தொழுது, கொற்றவன் பொன்திணி நெடுமதில் வாயில் போயினான். 92 92. நீர்த்து உக - தாரையாகச் சிந்தும்படி. தோளவன் - இராமன். தொழுது - முனிவனை வணங்கி. பொது மக்கள் புலம்பல் சுற்றிய சீரையன், தொடரும் தம்பியின், முற்றிய உவகையன், முளரிப் போதினும் குற்றமில் முகத்தினன் கொள்கை கண்டவர், உற்றதை ஒருவகை உணர்த்து வாம்;அரோ! 93 93. முளரிப் போதினும் - தாமரை மலரைக் காட்டிலும். கொள்கை கண்டவர் - கொள்கையைப் பார்த்த மக்கள். நகர உற்றதை - அடைந்த நிலையை. அரோ; அசை. அந்தணர், அருந்தவர், அவனி காவலர், நந்தல்இல் நகர்உளார், நாட்டுளார் கள்தம் சிந்தைஎன் புகல்வது? தேவர் உள்ளமும் வெந்தனர், மேல்வரும் உறுதி வேண்டலார். 94 94. மேல் வரும் - மேலே (பின்பு) வரக்கூடிய. உறுதி வேண்டலார் - நன்மையையும் விரும்பாதவர்களாய். தேவர் உள்ளமும் வெந்தனர் - தேவர் தம் மனமும் புழுங்கினர். அறுபதி னாயிரர் அரசன்தேவியர்; மறுவறு கற்பினர், மழைக்கண் நீரினர்; சிறுவனைத் தொடர்ந்தனர் திறந்த வாயினர்; எறிதிரைக் கடல்என இரங்கி ஏங்கினார். 95 95. -. கன்னிநன் மயில்களும், குயில் கணங்களும், அன்னமும், சிறைஇழந்து அவனி சேர்ந்தன என்ன, வீழ்ந்து உழந்தனர், இராமன் அல்லது மன்உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். 96 96. கன்னி - இளமையான. கணம் - கூட்டம். `என்ன, இராமன் அல்லது, மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்று இலார் வீழ்ந்து உழந்தனர். உழந்தனர் - வருந்தினர். புகல்இடம் கொடுவனம் போலும் என்று,தம் மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால், அகல்மதில் நெடுமனை, அரத்த ஆம்பல்கள் பகல்இடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே. 97 97. வாய்களால் - வாய்களின் தோற்றத்தால். அகல்மதில் நெடுமனை - அகலமான சுவர்களுடைய பெரிய வீடுகள் எல்லாம். அரத்த ஆம்பல்கள் செவ்வல்லிமலர்கள். பகல் இடை - பகலில். பழமை - வயல். வீடுகள் வயல்களை ஒத்தன. தாயரும், கிளைஞரும், சார்ந்து ளார்களும், சேயரும், அணியரும், சிறந்த மாதரும், காய்எரி உற்றனர் அனைய கவ்வையர்; வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். 98 98. கார் எரி - சுடுகின்ற நெருப்பிலே. உற்றனர் அனைய - வீழ்ந்த வரைப் போன்ற. கவ்வையர் - துன்பத்தை உடையவர்கள். மொய்த்தனர் - கூடினார்கள். இரைத்தனர்; இரைத்தெழுந்து ஏங்கி எங்கணும் திரைப்பெரும் கடல்எனத் தொடர்ந்து பின்செல, உரைப்பதை உணர்கிலன், ஒழிப்பது ஓர்கிலன், வரைப்புயத்து அண்ணல்தன் மனையை நோக்கினான். 99 99. -. மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப் புக்கிடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு உக்கனர், உயங்கினர், உருகிச் சோர்ந்தனர்; துக்கம்நின்று அறிவினைச் சூறை யாடவே. 100 100. பூசல் இட்டு உக்கனர் - ஓசையிட்டுக் கண்ணீர் சிந்தி அழுதனர். உயங்கினர் - வருந்தினர். அட்டிலும் இழந்தன புகை; அகிற்புகை நெட்டுஇலும் இழந்தன; நிறைந்த பால்,கிளி வட்டிலும் இழந்தன; மகளிர் வான்மணித் தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே. 101 101. அட்டில் - சமையல் வீடு. நெட்டு இல்லும் - பெரிய மாளிகைகளும். கிளி வட்டிலும் - கிளிகளின் உணவுக்கிண்ணங் களும். வான் மணித்தொட்டிலும் - உயர்ந்த மணிகள் பதித்த தொட்டிலும். மகவும் சோரவே மகளிர் இழந்தன - குழந்தைகள் சோர்வடையும் பெண்களை இழந்தன. முழவுஎழும் ஒலிஇல; முறையின் யாழ்நரம்பு எழஎழும் ஒலிஇல; இமைப்பில் கண்ணினர் விழவுஎழும் ஒலிஇல; வேறும் ஒன்றுஇல அழஎழும் ஒலிஅலது அரச வீதியே. 102 102. முழவு எழும் - மத்தளத்திலிருந்து எழும்பும். இடைப்பு இல் கண்ணினர் - இமைக்காத கண்களையுடைய தேவர்களுக்குச் செய்யும். செய்மறந் தனபுனல்; சிவந்த வாய்ச்சியர் கைம்மறந் தனபசும் குழவி; காந்துஎரி நெய்மறந் தன;நெறி அறிஞர் யாவரும் மெய்மறந் தனர்;ஒலி மறந்த வேதமே. 103 103. செய்புனல் மறந்தன - வயல்கள் நீரை மறந்தன. காந்து எரி - சுடுகின்ற தீ. நெறி அறிஞர் - நன்னெறியை அறிந்தவர்கள். மெய் மறந்தனர் - தங்களையே மறந்தனர். இராமன் சீதையின் மனையை அடைதல் அழுது தாயரோடு, அருந்தவர், அந்தணர், அரசர் புழுதி ஆடிய மெய்யினர் புடைவந்து பொருமப் பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா, எழுது பாவைஅன் னாள்மனத் துணுக்கமொடு எழுந்தாள். 104 104. புடை வந்து பொரும - பக்கத்திலே சூழ்ந்து அழும்படி. பழுது சீரையின் - குற்ற முள்ள மரவுரியின். வரும்படி பாரா - வரும் விதத்தைப் பார்த்து. அன்னாள் - சீதை. இராமனை நோக்கி ‘இக்கோலத்திற்குக் காரணம் யாது? என்று அழுகையுடன் கேட்டாள். இராமன் தந்த விடை பொருவில் எம்பி புவிபுரப் பான்;புகல் இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய்க் கருவி மாமழைக் கல்தடம் கண்டுநான் வருவென் ஈண்டு; வருந்தலைநீ; என்றான். 105 105. புகல் - பாராட்டிக் கூறத்தகுந்த. இருவர் - தாய்தந்தையர் இருவரின். ஏந்தினென் - தலைமேற் கொண்டேன். கருவி மாமழை - தொகுதியான பெரிய மேகங்களையுடைய. கல்தடம் - காடு. சீதையின் சிந்தையும் செயலும் நாய கன்வனம் நண்ணல்உற் றான்என்றும் மேய மண்இழந் தான்என்றும் விம்மலள்; நீவ ருந்தலை! நீங்குவென் யான்;என்ற தீய வெம்சொல் செவிசுடத் தேம்புவாள். 106 106. -. துறந்து போம்எனச் சொற்றசொல் தேறுமோ? உறைந்த பாற்கடல் சேக்கை உடன்ஓரீஇ, அறம்தி றம்பல்கண்டு ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பும், பிரிவிலள் ஆயினாள். 107 107. துறந்து போம் - நீங்கிச் செல்வான். தேறுமோ - பொறுப்பாளோ! பால் கடல் சேக்கை - பால்கடலின் படுக்கையில். உடன் ஒழீஇ - ஒன்றாக இருந்ததை விட்டு நீங்கி. அறம் திறம்பல் - தருமம் நிலை கெடுவதை. பிரிவு இலள் - ஆயினாள் - வந்து சேர்ந்து பிரியாமலிருக்கின்றவள். அன்ன தன்மையள் `ஐயனும் அன்னையும் சொன்ன செய்யத் துணிந்தது தூயதே! என்னை என்னை இருத்திஎன் றான்எனா உன்ன உன்ன உயிர்உமி ழாநின்றாள். 108 108. என்னை, என்னை இருத்தி என்றான் - என்னை ஏன் இங்கேயே இருப்பாய் என்றான். என்னா - என்று. உயிர் உமிழா நின்றாள் - உயிர் வெளியேறும்படி நின்றாள். `வல்அ ரக்கரின் மால்வரை போய்விழுந்து, அல்அ ரக்கின், உருக்குஅழல் காட்டுஅதர்க் கல்அ ரக்கும் கடுமைய அல்ல,நின் சில்அ ரக்குண்ட சேவடிப் போது, என்றான் .109 109. வல் அரக்கரின் - வலிய அரக்கரைப் போன்ற. மால்வரை - பெரிய மலைகளிலே. போய் விழுந்து - சூரிய வெப்பம் போய்ப் படிந்து. அல் - இரவிலும். அரக்கின் உருக்கு அழல் - அரக்கின் உருக்கைப் போல் சுடுகின்ற. காட்டு அதர்க்கல் - காட்டு வழியிலே உள்ள கல்லின் மேல். அரக்கும் கடுமைய அல்ல - அழுத்தி வைத்து நடக்கும் வலிமையுடையன அல்ல. சில் அரக்கு உண்ட - மெல்லிய செம் பஞ்சுக்குழம்பு தடவிய. `பரிவு இகந்த மனத்தோடு, பற்றிலாது ஒருவு கின்றனை; ஊழி அரக்கனும் எரியும் என்பது யாண்டையது? ஈண்டுநின் பிரிவி னும்சுடு மோபெரும் காடு?என்றாள். 110 110. பரிவு இகந்த - அன்பு நீங்கிய. ஒருவுகின்றனை - நீங்குகின்றாய். ஊழி அருக்கனும் எரியும் என்பது - ஊழிக் காலத்துச் சூரியனும் சுடும் என்பது. யாண்டையது - எப்படியோ அறியேன். அண்ணல் அன்னசொல் கேட்டனன், அன்றியும் உள்நி வந்தக ருத்தும்உ ணர்ந்தனன்; கண்ணின் நீர்க்கடல் கைவிட நேர்கிலன் எண்ணு கின்றனன் என்செயல் பாற்றுஎனா. 111 111. உள் நிவந்த - அவள் உள்ளத்திலே ஓங்கிய. கண்ணின் நீர் கடல் - கண்களிலிருந்து நீரைக் கடல் போல் சிந்துகின்ற சீதையை. என் செயல் பாற்று என - என்னதான் செய்யக் கூடியது என்று. `எண்ணுகின்றனன். அனைய வேலை அகன்மனை எய்தினள்; புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்; நினைவின் வள்ளல்பின் வந்தயல் நின்றனள்; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 112 112. அனைய வேலை - அச்சமயத்தில். புனையும் சீரம் - அணியத் தகுந்த மர உரியை. பனையின் நீள் கரம் - பனையைப் போல் நீண்ட கையை. ஏழை தன்செயல் கண்டவர் யாவரும், வீழும் மண்இடை வீழ்ந்தனர்; வீந்திலர்; வாழும் நாள்உள என்றபின் மாள்வரோ! ஊழி பேரினும் உய்குநர் உய்வரே. 113 113. ஏழை - அறியாதவளாகிய சீதை. விழும் - இறுதியிலே இறந்து மடியும். வீந்திலர் - இறந்திலர். வாழும் நாள் - ஆயுள். தாயர், தவ்வையர், தன்துணைச் சேடியர், ஆயம் மன்னிய அன்பினர், என்றுஇவர் தீயின் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான் தூய தையலை நோக்கினன் சொல்லுவான். 114 114. தவ்வையர் - தமக்கைமார்கள். சேடியர் - தோழியர். ஆயம் தன்னுடன் விளையாடும் பெண்கள். இராமன் உரையும் சீதையின் குறையும் `முல்லை யும்,கடல் முத்தும், எதிர்ப்பினும் வெல்லும் வெள்நகை யாய்!விளைவு உன்னுவாய் அல்லை; போத அமைந்தனை; ஆதலின் எல்லை அற்ற இடர்தரு வாய்; என்றான். 115 115. போத அமைந்தனை - என்னுடன் வரத்துணிந்தனை. இடர் தருவாய் - துன்பத்தைத் தரப் போகின்றாய். கொற்ற வன்அது கூறலும், கோகிலம் செற்றது அன்ன குதலையள் சீறுவாள்; உற்று நின்ற துயரம்இது ஒன்றுமே; என்து றந்தபின் இன்பம்கொல் ஆம் என்றாள். 116 116. கோகிலம் செற்றது அன்ன - குயில் சினந்து கூவுவதைப் போன்ற. குதலையள் - மழலைச் சொல்லையுடையவள். உற்று நின்ற - உன்னை அடைந்து நின்ற. என் - என்னை. இராமன் நகரைத் துறத்தல் சீரை சுற்றித் திருமகள் பின்செல, மூரி விற்கை இளையவன் முன்செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட,அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ! 117 117. மூரி வில் கை - வலிமையுள்ள வில்லைக் கையிலே கொண்ட. காரை - மேகத்தை. அஊரை உற்றது - அவ்வூராரை அடைந்த துன்பத்தைப் பற்றி. ஆரும் பின்னர் அழுதுஅவ லித்திலர்; சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர்; `வீரன் முன்வனம் மேவுதும் யாம்எனாப் போர்என்று ஒல்ஒலி கைம்மிகப் போயினார். 118 118. அவலித்திலர் - துன்புறவில்லை. வீரன்முன் - இராமன் செல்வதற்கு முன்பே. போர் என்று - போர் மூண்டது என்று சொல்லும்படி. ஒல் ஒலி கை மிக - ஒல் என்ற ஓசை மிகும்படி. தாதை வாயில் குறுகினன் சார்தலும் கோதை வேலவன் தாயரைக் கும்பிடா, `ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்என்றான்; மாத ராரும் விழுந்து மயங்கினார். 119 119. தாதை வாயில் - தந்தையின் மாளிகை வாசலை. கோதை - மாலை. கும்பிடா - கும்பிட்டு. ஆற்றுமின் - சமாதானப் படுத்துங்கள். மயங்கினார் - வருந்தினார்கள். வாழ்த்தி னார்தம் மகனை; மருகியை; ஏத்தி னார்;இளை யோனை; வழுத்தினார் `காத்து நல்குமின் தெய்வங் காள்!என்றார் நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 120 120. நாதழும்ப - நாவிலே தழும் பேறும்படி. அரற்றி நடுங்குவார் - அலறி நடுங்குகின்ற தாய்மார்கள். தம் மகனை வாழ்த்தினார்; மருகியை; ஏத்தினார் - புகழ்ந்தார்கள். வழுத்தினார் - போற்றினார்கள். அன்ன தாயர் அரிதில் பிரிந்தபின், முன்னர் நின்ற முனிவனைக் கைதொழாத், தன்னது ஆருயிர்த் தம்பியும், தாமரைப் பொன்னும், தானும்ஓர் தேர்மிசைப் போயினான். 121 121. அன்ன தாயர் - அத்தகைய தாய்மார்களை விட்டு. அரிதில் பிரிந்தபின் - பிரியமுடியாத துன்பத்துடன் பிரிந்த பின். முனிவனை - வசிட்டனை. தொழா - தொழுது. 5. தைலம் ஆட்டு படலம் ஏவிய குரிசில்பின் யாவர் ஏகிலார்? மாவியல் தானைஅம் மன்னை நீங்கலாத் தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மாநகர் ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால். 1 தைலம் ஆட்டு படலம் : மாண்ட தசரதன் உடம்பைக் கெடாமல் தைலத்திலே மூழ்க வைத்திருந்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. ஏவிய - நகரை விட்டுச் சென்ற. குரிசில்பின் - பெருமையில் சிறந்த இராமன் பின்னே. மா இயல் தானை - பெருமை பொருந்திய சேனையையுடைய. மீன்பொலி தர,வெயில் ஒதுங்க, மேதியோடு ஆன்புகக், கதிரவன் அத்தம் புக்கனன்; கான்புகக் காண்கிலேன் என்று கல்லிடைத் தான்புக முடுகினன் என்னும் தன்மையான். 2 2. மீன்பொலிதர - நட்சத்திரம் விளக்கம் பெற. வெயில் ஒதுங்க - வெயில் மறைய. மேதி - எருமை. ஆன் - பசு. கல் இடைதான் புக - அத்தமன கிரியிலே தான் செல்லுவதற்கு. முடுகினன் - விரைந்தான். அந்தியில் வெயில்ஒளி அழிய, வானகம் நந்தல்இல் கேகயன் பயந்த நங்கைதன் மந்தரை உரையெனும் கடுவின் மட்கிய சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே. 3 3. நந்தல் இல் - கெடுதல் இல்லாத. கடுவின் - விஷத்தால். மட்கிய பட்டுப்போன; கெட்டுப்போன. சிந்தையின் - மனத்தைப் போல `வானகம் செம்மை நீங்கி சிந்தையின் இருண்டது. திருநகர்க்கு யோசனை இரண்டு சென்று,ஒரு விரைசெறி சோலையை விரைவின் எய்தினான்; இரதம்நின்று இழிந்துபின் இராமன் இன்புறும் உரைசெறி முனிவரோடு உறையும் சாலையே. 4 4. விரை செறி - மணம் நிறைந்த. இன் துணை - இனிய துணைவராக அமைந்த. உரை செறி - புகழ் மிகுந்த. குயின்றன குலமணி நதியின் கூவத்தில், பயின்றுயர் வால்உகப் பரப்பில், பைம்புலில், வயின்தொறும் வைகினர்; ஒன்றும் வாய்மடுத்து அயின்றிலர்; துயின்றிலர்; அழுது விம்மினார். 5 5. குல மணி குயின்றன - சிறந்த மணிகள் நிறைந்து கிடக்கின்ற. நதியின் கூவத்தில் - நதியின் கரையில். பயின்று. பயின்று உயர் - நெருங்கி உயர்ந்த. வால் உகம் பரப்பில் - வெண் மணல் பரப்பிலே. வயின் தொறும் - இடங்கள் தோறும். தொடுத்தகல்இ டைச்சிலர்து வண்டனர் துயின்றார்; அடுத்தஅடை யில்சிலர்அ ழிந்தனர் அயர்ந்தார்; உடுத்ததுகில் சுற்றுஒருத லைச்சிலர் உறைந்தார் படுத்ததளி ரின்சிலர்ப சந்தனர் அசந்தார். 6 6. அடுத்த அடையில் - ஒன்றன்மேல் ஒன்று படிந்த இலையில். படுத்த - பரப்பிய. பசந்தனர் - வருந்தியவர்களாய். இராமன் சுமந்திரனிடம் சொல்லுதல் `பூண்டபேர் அன்பி னாரைப் போக்குவது அரிது; போக்காது ஈண்டுநின்று ஏகல் பொல்லாது; எந்தைநீ இரதம் இன்னே தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டைஓர்ந்து என்னை அங்கே மீண்டனன் என்ன மீள்வர்; இதுநின்னை வேண்டிற்று; என்றான். 7 7. தூண்டினை மீள்வது ஆக்கின் - ஓட்டிக் கொண்டு திரும்பிப் போவாயானால். சுவட்டை ஓர்ந்து - அடையாளத்தை அறிந்து. வேண்டிற்று - வேண்டிக் கொண்டது. சுமந்திரன் சோர்வுரை `தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப் பூவியல் கானகம் புகஉய்த் தேன்என்கோ! கோவினை உடன்கொடு குறுகி னேன்என்கோ! யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சனேன். 8 8. பூ இயல் - மலர்கள் நிறைந்த. உய்த்தேன் - செலுத்தினேன். கோவினை - இராமனை. `வன்புலக் கல்மன மதியில் வஞ்சனேன், என்புஉலப் புறஉடைந்து இரங்கும் மன்னன்பால் உன்புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கெனோ! தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ! 9 9. வன்புலம் - வலிய புலன்களையும். கல் மனம் - கல் மனத்தையும். மதிஇல் - அறிவற்ற. என்பு - உடம்பு. உலப்புற - அழியும்படி. உடைந்து - மனம் உடைந்து. உன்புலக்கு உரிய - சொல் - உனது அறிவுக்கு ஏற்ற சொல்லை. தென்புலம் கோமகன் - எமன். `அங்கிமேல் வேள்விசெய்து அரிதில் பெற்றநின் சிங்கஏறு அகன்றதென்று உணர்த்தச் செல்கெனோ எங்கள்கோ மகற்குஇனி, என்னின் கேகயன் நங்கையே நடைமுறை நல்லள் போலும்;ஆல். 10 10. எங்கள் கோமகற்கு - எங்கள் அரசனுக்கு. இனி - இனிநான். அங்கிமேல் - அக்கினியின்பால். `வேள் .... செல்கெனோ. என்னின் - என்னை விட. ஆல்; அசை. முடிவுற இன்னன மொழிந்த, பின்னரும் அடிஉறத் தழுவினன்; அழுங்கு மோஅரா இடிஉறத் துவளுவது என்னும் இன்னலன்; படிஉறப் புரண்டனன்; பலவும் பன்னினான். 11 11. அடி உற - பாதங்களைப் பொருந்த. அழுங்கு - வருந்து கின்ற. துவளுவது - புரள்வது. என்னும் - என்று சொல்லத்தக்க. இன்னலன் - துன்பத்தை உடையவன். தடக்கையால் எடுத்துஅவன் தழுவிக் கண்ணநீர் துடைத்து,வேறு இறுத்தி,மற்று இனைய சொல்லினான்; அடக்கும்ஐம் பொறியொடு கரணத்து அப்புறம் கடக்கும்வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான். 12 12. அவன் தழுவி - அவனைத் தழுவிக் கொண்டு. கண்ணநீர் - கண்களின் நீரை. அடக்கும் ஐம்பொறியொடு - அடக்க வேண்டிய ஐம்பொறிகளின் அறிவுக்கும். கரணத்து - அக்கருவி யாகிய மனத்துக்கும். அப்புறம் கடக்கும் - அப்பால் நிற்கும். வால் உணர்வினுக்கு - தூய்மையான அறிவுக்கு. அணுகும் காட்சியான் - காணப்படும் தோற்றத்தை யுடையவன். வருந்திய சுமந்திரனை இராமன் ஆற்றுதல் `பிறத்தல்என்று உற்றதன் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வதோர் செம்மை உள்ளத்தாய் புறத்துறு பெரும்பதி பொதுவின்று எய்தலும், அறத்திறம் மறத்தியோ, அவலம் உண்டெனா. 13 13. பெறுவ யாவையும் - பெறக்கூடிய நன்மை தீமைகள் எல்லாவற்றையும். திறத்துஉளி - முறைப்படி நினைத்து. அவலம் உண்டு எனா - துன்பம் உண்டு என்று எண்ணி. அறத்திறம் மறத்தியோ - அறத்தின் தன்மையை மறந்து விடுகின்றாயோ. `முன்பு நின்று இசைநிறீஇ முடிவு முற்றிய பின்பும்,நின்று உறுதியைப் பயக்கும் பேர்அறம்; இன்பம்வந்து உறும்எனின் இனியது; ஆயிடைத் துன்பம்வந்து உறும்எனில் துறக்கல் ஆகுமோ! 14 14. பேர் அறம் - நிறந்த அறமானது. இசை நிறீஇ - புகழை நிலை நாட்டி. முடிவு முற்றிய பின்பும் - சிறந்த பின்பும். துறக்கல் ஆகுமோ - அப்பேரறத்தைத் துறக்கலாமோ? நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று;அரோ இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறம்;எனல் சூரர் ஆவதே. 15 15. நிறம் பெரும் படைக்கலம் - ஒளி பொருந்திய பெரிய படைக்கலம். நிறத்தின் நேர் உற - மார்புக்கு நேரே வரவும். மறப்பயன் விளைக்குறும் - வீரச் செயலைக் காட்டுகின்ற. வன்மை அன்று - வல்லமை சிறந்தது அன்று. `கான்புறம் சேறலில், அருமை காண்டலால், வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம், யான்பிறந்து, அறத்தில்நின்று இழுக்கிற்று என்னவோ? ஊன்திறந்து உயிர்குடித்து உழலும் வேலினாய்? 16 16. ஊன் திறந்து - உடலைப் பிளந்து. உழலும் திரிகின்ற. கான்புறம் சேறலில் - காட்டுக்குச் செல்வதில். அருமை காண்டலால் - துன்பம் உண்டு என்று கருதுவதால். வான் பிறங்கிய - பெரிதாக விளங்குகிற். இழுக்கிற்று - தவறிற்று. என்னவோ - என்று சொல்லும்படி விடுவதோ? `வினைக்குஅரும் மெய்ம்மையின் வனத்துள் விட்டனன் மனக்குஅரும் புதல்வனை என்றல், மன்னவன் தனக்குஅரும் தவம்;அது தலைக்கொண்டு ஏகுதல் எனக்குஅரும் தவம்;இதற்கு இரங்கல், எந்தை நீ! 17 17. வினைக்கு அரும் மெய்ம்மையன் - செய்வதற்கு அரிய உண்மையை உடையவனாகிய தசரதன். மனக்கு அரும் - மனத்திற்கு இனிய சிறந்த. அது தலைக்கொண்டு - அதைத் தலையிலே சுமந்து கொண்டு. இரங்கல் - வருந்தாதே. என்று உரைத்து `வசிட்டனுக்கு என் வணக்கம் கூறு; என்னிடம் அன்பு காட்டிய வாறே பரதனிடமும் பரிவு காட்டும் படி பகர்க என்றனன். `ஏழ்இரண்டு ஆண்டுநீத்து ஈண்ட வந்துனைத் தாழ்குவென் திருஅடி;தப்பி லேன்எனச் சூழிவெம் கடகளிற்று இறைக்குச் சோர்வுஇலா வாழிமா தவன்சொலால் மனம்தெ ருட்டுவாய், 18 18. நீத்து - கழித்து. ஈண்டவந்து - திரும்ப வந்து. சூழி - முகபடாம். வெம் கடம் களிற்று - கொடிய மத யானையை யுடைய. அரசன் சொல்லி - அரசனிடம் கூறி. மனம் தெருட்டுவாய் - மனத்தைத் தேற்றுவாய். `முறைமையால் என்பயந்து எடுத்த மூவர்க்கும் குறைவிலா என்நெடு வணக்கம் கூறிப்பின் இறைமகன் துயர்துடைத்து இருத்தி மாடென்றான் மறைகளை மறந்துபோய் வனத்துள் வைகுவான். 19 19. -. சீதையின் உரை பின்னர்ச் சுமந்திரன் சீதையைப் பணிந்தான்; அவள் முகத்தை நோக்கினான். அன்னவள் கூறுவாள்; `அரசர்க்கு, அத்தையர்க்கு, என்உடை வணக்கம்முன் இயம்பி, யான்உடைப் பொன்நிறப் பூவையும் கிளியும் போற்றுமின் என்னமற்று எங்கையர்க்கு இயம்பு வாய்! என்றாள். 20 20. -. இலக்குவன் தந்த விடை `ஆறினன் போல்சிறிது அவலம், அவ்வழி, `வேறிலா அன்பினாய் விடைதந்து ஈகெனா ஏறுசே வகன்தொழுது, இளைய மைந்தனை, கூறுவது யாதென, இனைய கூறினான். 21 21. அவ்வழி அவலம் சிறிது ஆறினன்போல் - அப்பொழுது துன்பம் சிறிது தணிந்தவனைப் போல. ஏறு - ஆண் சிங்கம் போன்ற. சேவகன் - வீரனை. `உரைசெய்துஎம் கோமகற்கு உறுதி ஆக்கிய தரைகெழு திருவினைத் தவிர்த்து, மற்றொரு விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை, அரசன்என்று இன்னம்ஒன்று அறையல் பாலதோ! 22 22. உரை செய்து - உனது என்று சொல். உறுதி ஆக்கிய- கொடுத்துவிட்ட. தவிர்த்து - ஆளாமல் நீங்கும்படி. குழலி மாட்டு - கூந்தலையுடையவளிடம். முதலில் உரைத்ததைப் பின்பு மறுத்தவன் தசரதன் என்ற கருத்தை வெளியிட்டான் இலக்குவன். `கானகம் பற்றிநல் புதல்வன் காய்உணப், போனகம் பற்றிய பொய்யில் மன்னற்கு, இங்கு ஊன்அகம் பற்றிய உயிர்கொடு இன்னும்போய் வானகம் பற்றிலா வலிமை கூறு;என்றான். 23 23. போனகம் பற்றிய - சிறந்த உணவை உண்டு கொண்டிருககின்ற. ஊன் அகம்பற்றிய - உடம்பிலே பொருந்திய. உயிர்கொடு - உயிரை வைத்துக் கொண்டு. `மின்னுடன் பிறந்தவாள் பரத வேந்தற்குஎன் மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான் தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன்னலென்; என்னுடன் பிறந்தயான் வலியன்; என்றியால். 24 24. என் மன்னுடன் - என் மன்னனாகிய இராமனுடன் தன்னுடன் - பரதன் தன்னுடன். தம்பி முன் அலன் - தம்பிக்கு முன்னும் பிறந்தவனல்லேன். தம்பி - சத்துருக்கனன். இராமன் இன்னுரை ஆரியன் இளவலை நோக்கி `ஐயஇச் சீரிய அல்லன செப்பல் என்றபின் பாரிடை வணங்கினன், பரியும் நெஞ்சினன், தேரிடை வித்தகன் சேறல் மேயினான். 25 25. சீரிய அல்லன - சிறப்பற்ற (ஒழுக்கமற்ற.) செப்பல் - சொல்லற்க. வித்தகன் - கல்வியிலே சிறந்த சுமந்திரன். இராமன் பிரிந்து செல்லல் தையல்தன் கற்பும்,தன் தகவும் தம்பியும் மையறு கருணையும், உணர்வும், வாய்மையும் செய்யதன் வில்லுமே சேமம் ஆகக்கொண்டு ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே. 26 26. அல்லின் நாப்பண் - நள்ளிரவிலே. தன்தகவும் - தன் பெருந்தன்மையும். சேமம் ஆகக்கொண்டு - பாதுகாவலாகக் கொண்டு. 6. தயரதன் மோட்சப் படலம் அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும், அழகன் தன்மேல் எஞ்சல்இல் பொன்போர்த் தன்ன இளவலும், இந்து என்பான் வெம்சிலைப் புருவத் தாள்தன் மெல்அடிக் கேற்ப வெண்ணூல் பஞ்சிடைப் படுத்தால், என்ன, வெண்நிலாப் பரப்பப் போனார். 1 தயரதன் மோட்சப் படலம்: தசரதன் இறந்ததைப் பற்றிக் கூறும் பகுதி. 1. இந்து என்பான் - சந்திரன் என்பவன். மெல் அடிக்கு ஏற்ற - மெல்லிய அடியை வைத்து நடப்பதற்கு ஏற்ற. வெண்நூல் பஞ்சு - வெண்மையான நூலைத் தரும் பஞ்சை. இடைபடுத்தால் என்ன - வழியிலே பரப்பியது போல. பரிதிவா னவனும் கீழ்பால் பருவரை பற்றா முன்னம், திருவின்நா யகனும் தென்பால் ஓசனைஇரண்டு சென்றான்; அருவிபாய் கண்ணும், புண்ணாய் அழிகின்ற மனமும், தானும், துரிதமான் தேரில் போனான் செய்தது சொல்லல் உற்றாம். 2 2. பரிதி வானவனும் - சூரியதேவனும். பருவரை - பெரிய மலையை. பற்றா முன்னம் - அடைவதற்கு முன்பு. (உதயத்துக்கு முன்பு) துரிதமான தேரில் - விரைவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரிலே. போனான் - போனவனாகிய சுமந்திரன். கடிகைஓர் இரண்டு மூன்றில், கடிமதில் அயோத்தி கண்டான்; அடியினைத் தொழுதான் ஆதி முனிவனை; அவனும் உற்ற படிஎலாம் கேட்டு, நெஞ்சில் பருவரல் உழந்தான்; முன்னே முடிவுஎலாம் உணர்ந்தான்,`அந்தோ! முடிந்தனன்மன்னன்? என்றான். 3 3. கடிகை - நாழிகை. இரண்டு மூன்றில் - ஆறில். கடி - காவல் பொருந்திய. ஆதி முனிவன் - வசிட்டன். பருவரல் - துன்பம். `நின்றுஉயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க; வள்ளல் ஒன்றும்நான் உரைத்தல் நோக்கான்; தருமத்திற்கு உறுதி பார்ப்பான்; வென்றவர் உளரோ? மேலை விதியினை என்று விம்மிப் பொன்திணி மன்னன் கோயில் சுமந்திர னோடும் போனான். 4 4. நின்று உயர் - நிலைநின்று வளரும். தடுக்க நேர்ந்திலன் - தசரதன் தடுக்க உடன்பட வில்லை. போனான் - வசிட்டன் சென்றான். `தேர்கொண்டு வள்ளல் வந்தான் என்றுதம் சிந்தை உந்த, ஊர்கொண்ட திங்கள் என்ன, மன்னனை உழையர் சுற்றி, கார்கொண்ட மேனி யானைக் கண்டிலர்; கண்ணில் வற்றா நீர்கொண்ட நெடும்தேர்ப் பாகன் நிலைகண்டே, நிலையின் தீர்ந்தார். 5 5. தேர்கொண்டு - தேரில் ஏறிக்கொண்டு. வள்ளல் - இராமன். ஊர் கொண்ட - ஊர் கோள் சூழ்ந்த. திங்கள் - சந்திரன். உழையர் - பக்கத்திலிருப்போர். நிலையில் தீர்ந்தார் - நிலை கலங்கினர். தசரதன் மரணமும் தேவியர் துயரமும் `இரதம்வந் துற்றது; என்றாங்கு யாவரும் இயம்ப லோடும், வரதன்வந் துற்றான் என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்; புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி, விரதமா தவனைக் கண்டான்; `வீரன்வந் தனனோ? என்றான். 6 6. புரைதபு - குற்றமற்ற. கமல நாட்டம் - தாமரை போன்ற கண்களை. `இல்லைஎன்று உரைக்கல் ஆற்றான்; ஏங்கினன் முனிவன் நின்றான்; வல்லவன் முகமே, நம்பி வந்திலன் என்னும் மாற்றம் சொல்லலும் அரசன் சோர்ந்தான்; துயர்உறும் முனிவன் `நான்இவ் அல்லல்காண் கில்லேன் என்னா ஆண்டுநின்று அகலப் போனான். 7 7. - . நாயகன் பின்னும் தன்தேர்ப் பாகனை நோக்கி, `நம்பி சேயனோ அணிய னோஎன்று உரைத்தலும், தேர்வ லானும் வேய்உயர் கானில், தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும் போயினன் என்றான், என்ற போழ்தத்தே ஆவி போனான். 8 8. தன் தேர்ப்பாகனை - தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனை. சேயனோ - தூரத்தில் இருக்கின்றானோ. வேய்உயர் கானம் - மூங்கில்கள் உயர்ந்து நெருங்கி யிருக்கின்ற காட்டிலே. உயிர்ப்பிலன், துடிப்பும் இல்லன் என்றுணர்ந்து உருவம் தீண்டி அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி, மயில்குலம் அனைய நங்கை, கோசலை மறுகி வீழ்ந்தாள், வெயில்சுடு கோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள். 9 9. -. இருந்த அந்தணனோடு, எல்லாம் ஈன்றவன் தன்னை ஈனப் பெருந்தவம் செய்த நங்கை, கணவனைப் பிரிந்து, தெய்வ மருந்துஇழந் தவரின் விம்மி, மணிபிரி அரவின் மாழ்கி, அருந்துணை பிரிந்த அன்றில் பெடைஎன அரற்றல் உற்றாள். 10 10. இருந்த அந்தணனோடு - படைக்கும் தொழிலைச் செய்திருந்த பிரமனுடன். எல்லாம் ஈன்றவன் தன்னை - உலகை யெல்லாம் பெற்றெடுத்த திருமாலை. ஈன - பெற்றெடுக்க. நங்கை - கோசலை. தெய்வ மருந்து - அமுதம். மாழ்கி - வருந்தி. நோயும் இன்றி நோன்கதிர் வாள்,வேல் இவையின்றி மாயும் தன்மை மக்களின் ஆகா, மறமன்னன்; காயும் புள்ளிக் கற்கடம் நாகம், கனிவாழை, வேயும் போன்றான்; என்று மயங்கா விழுகின்றாள். 11 11. நோன் கதிர் - சிறந்த ஒளி பொருந்திய. கற்கடம் - நண்டு. நாக - பாம்பு. வாழை - தன்னிடத்திலே கனியைக் கொண்ட வாழை. வேயும் - மூங்கிலையும். வடித்தாழ் கூந்தல் கேகயன் மாதே! மதியாலே பிடித்தாய் வையம், பெற்றனை பேரா வரம்;இன்னே முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள்; முகில்வாய்மின் துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள். 12 12. வடிதாழ் கூந்தல் - அழகு பெற்றுத் தொங்கும் கூந்தலை யுடைய. மதியால் - அறிவின் வல்லமையால். `இன்னே, மந்திரம் - ஆலோசனையை. `முடித்தாய் அன்றே முகில்வாய் மின் - மேகத்தினிடம் உள்ள மின்னல். ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற, தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர்சோர, ஊழி திரிவது எனக்கோயில் உலையும் வேலை, மற்றுஒழிந்த மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்துஇரைத்தார். 13 13. ஆழி வேந்தன் - ஆளும் வேந்தனுடைய. பெருந்தேவி - கோசலை. துளங்கி ஏங்கி - நடுங்கி வருந்தி. கோயில் உலையும் வேலை - அரண்மனையே கலங்கும் சமயத்தில். மாழை - மாவடுப் போன்ற. துஞ்சி னானைத் தம்உயிரின் துணையைக் கண்டார்; துணுக்குற்றார்; நஞ்சு நுகர்ந்தால் எனஉடலம் நடுங்கா நின்றார்; என்றாலும் அஞ்சி அழுங்கி விழுந்திலர்ஆல்;அன்பில் தறுகண் பிறிதுஉண்டோ? வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம்வலித்தார். 14 14. அஞ்சி அழுங்கி - பயந்து வருந்தி. அன்பில் - அன்பை விட. தறுகண் - வீரம்; அஞ்சாமை. வானில் தொடர்வான் - வானுலகில் சென்று காண்பது என்று. செய்யக் கடவ செயற்குஉரிய சிறுவர் ஈண்டை யார்அல்லர்; எய்தக் கடவ பொருள் எய்தாது இகவாஎன்ன, இயல்புஎண்ணி, மையல் கொடியாள் மகன்ஈண்டு வந்தால் முடித்தும் மற்றுஎன்ன, தையல் கடல்நின்று எடுத்துஅவனைத் தைலக் கடலின் தலைஉய்த்தான். 15 15. சிறுவர் - மக்கள். எய்தக்கடவ - வரக்கூடியவை. இகரா - நீங்க மாட்டா. மையல் - அறிவு மயங்கிய. கொடியாள் - கொடியவளாகிய கைகேசி. தையல் கடல் நின்று - பெண்கள் கூட்டத்திலிருந்து. தேவிமாரை இவற்குரிமை செய்யும் நாளில் செந்தீயின் ஆவி நீத்திர் எனநீக்கி, அரிவை மார்கள் இருவரையும் தாவில் கோயில் தலையிருத்தித் தண்தார்ப் பரதன் கொண்டு அணைகென்று ஏவி னான்,மன் னவன்ஆணை எழுது முடங்கல் எடுத்தோரை. 16 16. என நீக்கி- என்று தடுத்து. அரிவைமார்கள் - கோசலை சுமத்திரை. தாஇல் கோயில் தலை - குற்றமற்ற அரண்மனையில். பரதன் கொண்டு அணைகென்று - பரதனைக் கொண்டு வந்து சேருங்கள் என்று. மன்னவன் ஆணை எழுதி - அரசன் கட்டளையை எழுதி `முடங்கல் எடுத்தோரை ஏவினான். மீன்நீர் வேலை முரசுஇயம்ப, விண்ணோர் ஏத்த மண்இறைஞ்சத் தூநீர் ஒளிவாள் புடைஇலங்கச் சுடர்த்தேர் ஏறித் தோன்றினான்; வானே புக்கான் அரும்புதல்வன், மக்கள் அகன்றார் வரும்அளவும் யானே காப்பென் இவ்வுலகை என்பான் போலஎறிகதிரோன் 17 17. மீன்ஆர் வேலை - மீன்கள் நிறைந்த கடலாகிய. தூநீர் - தூய தன்மையுள்ள. ஒளிவாள் - ஒளியாகிய வாள்படை. வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும்அங்கு இருந்தான்என்றே இருந்தார்கள்; எல்லாம் எழுந்தார் அருள்இருக்கும் பெரும்தா மரைக்கண் கருமுகிலைப் பெயர்ந்தார் காணார்; பேதுற்றார்; பொருந்தா நயனம்பொருந்திநமைப்பொன்றச் சூழ்ந்தஎனப்புரண்டார். 18 18. வருந்தா வண்ணம் - யாரும் வருந்தாத வகையில். பெயர்ந்தார் - தம் இடத்தை விட்டுச் சென்று தேடியும். பேதுற்றார் - மயங்கினார்கள். பொருந்தா நயனம் - மூடாத கண்கள். பொருந்தி - மூடி. நமை பொன்றச் சூழ்ந்த - நம்மை இறக்கும்படி செய்து விட்டன. தேரின் சுவடுநோக்குவார் திருமா நகரின் மிசைத்திரிய ஊரும் திகிரிக் குறிகண்டார் உணர்ந்தார்; எல்லாம் உயிர் வந்தார்; ஆரும் அஞ்சல்! ஐயன்போய் அயோத்தி அடைந்தான் எனஅசனிக் காரும் கடலும் ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிதுஆர்த்தார். 19 19. திரிய ஊரும் - திரும்பிச் செல்லும். திகிரிக் குறி - சக்கரங்களின் அடையாளத்தை. அசனிக்காரும் - இடியோடு கூடிய மேகமும். ஒருவழிக் கொண்டு - ஒன்று கூடி. ஆறுசெல்லச் செல்லத்தேர் ஆழிகண்டார்; அயல்பால வேறு சென்ற நெறிகாணார்; விம்மா நின்ற உவகையராய், மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் ஏறி ஒடுங்கும் எறிகடல்போல் எயில்மா நகரம் எய்தினார். 20 20. விம்மா நின்ற - மிகுந்த. மண்முழுதும் ஏறி - உலகம் முழுவதும் பரந்து. ஒடுங்கும் - மீண்டும் தன் எல்லையில் தங்கும். எயில் - மதில். புக்கார்; அரசன் பொன்உலகம் போனான் என்னும் பொருள்கேட்டார் உக்கார் நெஞ்சம்; உயிர்உகுத்தார்; உற்றது எம்மால் உரைப்பரிது;ஆல் தக்கான் போனான் வனம்என்னும் தகையும் உணர்ந்தார் மிகைஆவி அக்கா லத்தே அகலுமோ அவதி என்றுஒன்று உளதுஆனால் 21 21. நெஞ்சம் உக்கார் - மனம் உடைந்தார். உற்றது - அடைந்த துயரத்தை. தக்கான் - இராமன். மிகை ஆவி - மிஞ்சி உள்ள உயிர். அவதி என்று ஒன்று - துன்பம் என்ற ஒன்று. உளது ஆனால் - அனுபவிக்க இருக்குமானால். 7. கங்கைப் படலம் இராமனும் சீதையும் சென்ற காட்சி வெய்யோன்ஒளி, தன்மேனியின் விரிசோதியின் மறையப், பொய்யோவெனும் இடையாளொடும், இளையானொடும் போனான்; மையோ,மர கதமோ,மறி கடலோ,மழை முகிலோ, ஐயோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான். 1 கங்கைப் படலம்: இராமன், இலக்குவன், சீதை மூவரும் கங்கைக் கரையை அடைந்த நிகழ்ச்சியைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. வெய்யோன் ஒளி - சூரியன் ஒளியானது. தன் மேனியின் விரி - தன் உடம்பிலிருந்து பரவுகின்ற. ஐ, ஒ - வியத்தற்குரியது. அளிஅன்னதொர் அறல்துன்னிய குழலாள்;கடல் அமிர்தின் தெளிஅன்னதொர் மொழியாள்;நிறை தவம்அன்னதொர் செயலாள்; வெளிஅன்னதொர் இடையாளொடும் விடைஅன்னதொர் நடையான் களிஅன்னமும் மடஅன்னமும் நடமாடுவ கண்டான். 2 2. அளிஅன்னது - வண்டினைப் போன்றதாய். ஓர் அறல் துன்னிய - ஒப்பற்ற கருமணல் நெருங்கி யிருப்பது போன்ற. களி அன்னமும் - களிப்புடைய ஆண் அன்னமும். மட அன்னமும் - அழகிய பெண் அன்னமும். அஞ்சம்பையும், ஐயன்தனது அலகுஅம்பையும் அளவா, நஞ்சங்களை வெலவாகிய நயனங்களை உடையாள், துஞ்சும்,களி வரிவண்டுகள் குழலின்படி சுழலும் கஞ்சங்களை, மஞ்சன்கழல் நகுகின்றது கண்டாள். 3 3. அஞ்சு அம்பு - மன்மதனுடைய ஐந்து மலர் அம்புகள். அவை, தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம் ஆகியவை. அலகு அம்பு - கூர்மையான அம்பு. குழலின்படி - புல்லாங் குழல்போல் இசைபாடி. கஞ்சம் - தாமரை. மஞ்சன் - மைந்தன். மாகந்தமும் மகரந்தமும் அளகம்தரும், மதியின் பாகம்தரு நுதலாளொடு, பவளந்தரும் இதழான், மேகம்தனி வருகின்றது மின்னோடென, மிளிர்பூண் நாகம்தனி வருகின்றது பிடியோடென நடவா. 4 4. மாகந்தமும் - மிகுந்த மணத்தையும். மதியின் பாகம் - பிறை மதி. மிளிர் பூண் நாகம் - ஒளி விடுகின்ற பூணை அணிந்த யானை. கங்கைக் கரையில் முனிவர்கள் வரவேற்பு கங்கை என்னும் கடவுள் திருநதி தங்கி வைகும் தபோதனர் யாவரும், `எங்கள் செல்கதி வந்ததென்று ஏமுறா, அங்கண் நாயகன் காணவந்து அண்மினார். 5 5. எங்கள் செல்கதி - எங்கள் தவம் செல்லும் இடம். ஏம் உறா - மகிழ்ச்சி அடைந்து. அம்கண் - அழகிய கண்களையுடைய. நாயகன் - தலைவனாகிய இராமனை. எதிர்கொடு ஏத்தினர்; இன்னிசை பாடினர்; வெதிர்கொள் கோலினர் ஆடினர்; வீரனைக் கதிர்கொள் தாமரைக் கண்ணனைக், கண்ணினால் மதுர வாரி அமுதென மாந்துவார். 6 6. வெதிர் கொள் - மூங்கிலால் செய்து கொண்ட. கோலினர் - முக்கோலை உடையவர்கள். வாரி மதுர அமுது என - பாற் கடலிலே தோன்றிய இனிய அமுது என்று கருதி. கண்ணினால் மாந்துவார் - கண்களால் கண்டு உண்ணுகின்றவர்கள். மனையின் நீங்கிய மக்களை, வைகலும் நினையும் நெஞ்சினர், கண்டிலர் தேடுவார், அனையர் வந்துற, ஆண்டெதிர்ந் தார்கள்போல் இனிய மாதவப் பள்ளிகொண்டு எய்தினார். 7 7. மனையின் நீங்கிய - வீட்டிலிருந்து பிரிந்த. கண்டிலர் தேடுவார் - காணாமல் தேடுகின்றவர்கள். எதிர்ந்தார்களில் - எதிரில் பார்த்தவர்கள் செய்வது போல. மாதவப்பள்ளி - சிறந்த தவம்புரியும் இடத்துக்கு. பொழியும் கண்ணில் புதுப்புனல் ஆட்டினர்; மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர்; அழிவில் அன்பெனும் ஆர்அமிர்து ஊட்டினர்; வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். 8 8. கண்ணில் - கண்ணிலிருந்து வருகின்ற. புதுப் புனல் - புதிய நீரால். இன் சொலின் - இனிய சொல்லுடன். ஆர் அமிர்து - அரிய அமுதத்தை வாட்டினர் - போக்கினர். காயும் கானில் கிழங்கும், கனிகளும் தூய தேடிக் கொணர்ந்தனர்; `தோன்றல்நீ! ஆய கங்கை அரும்புனல் ஆடினை, தீயை ஓம்பினை செய்அமுது; என்றனர். 9 9. -. மங்கை யர்க்கு விளக்கன்ன மானையும் செங்கை பற்றினன், தேவரும் துன்பறப், பங்க யத்துஅயன் பண்டுதன் பாதத்தின் கம்கை யில்தரு கங்கையில் ஆடினான். 10 10. பங்கயத்துஅயன் - நான்முகன். பண்டு - திரிவிக்கிர மாவதாரம் எடுத்த பழங்காலத்தில். தன் பாதத்தின் - தன் பாதத்தைக் கழுவிய. கம் - நீரை. கையில்தரு - கையினால் எடுத்துத் தந்த. கங்கையின் ஆடினான் - கங்கையிலே நீராடினான். கங்கை திருமாலின் பாதத்தில் பிறந்த வரலாறு இது. துறைந றும்புனல் ஆடிச், சுருதியோர் உறையுள் எய்தி, உணர்வுடை யோர்உணர் இறைவன் கைதொழுது, ஏந்தெரி ஓம்பிப்பின், அறிஞர் காதற்கு அமைவிருந்து ஆயினான். 11 11. துறை - கங்கைத் துறையிலே. இறைவன் - இறைவனை. ஏந்து எரிஓம்பி - உயர்ந்த அக்கினிக் கடன்களைப் பாது காத்துச் செய்த. காதற்கு அமை - அன்புக்குப் பொருந்திய. வருந்தித் தான்தர வந்த அமுதையும் `அருந்தும் நீர்என்று அமரரை ஊட்டினான்; விருந்து மெல்அடகு உண்டு விளங்கினான்; திருந்தி னார்வயின் செய்தன தேயுமோ? 12 12. மெல் அடகு - மெல்லிய வெற்றிலை. திருந்தினார் வயின் - நல்லோர் பால். செய்தன - செய்த நன்மைகள். தேயுமோ - அழியுமோ? 8. குகப்படலம் குகன் இராமனைக் காணவருதல் ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு நாய கன்;போர்க் குகன்எனும் நாமத்தான்; தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்; காயும் வில்லினன்; கல்திரள் தோளினான். 1 குகப் படலம்: குகன் இராமனைச் சந்தித்த நிகழ்ச்சியை உரைக்கும் பகுதி. 1. ஆயிரம் அம்பிக்கு - ஆயிரக் கணக்கான மரக்கலங் களுக்கு. தொன்மையான் - பழமையான உரிமையுள்ளவன். காயும் - எதிரிகளை அழிக்கும். கல்திரள் - மலைபோல் திரண்ட. காழம் இட்ட குறங்கினன்; கங்கையின் ஆழம் இட்ட நெடுமையி னான்;அரை தாழ விட்டசெந் தோலன்; தயங்குறச் சூழ விட்ட தொடுபுலி வாலினான். 2 2. காழம்இட்ட - வயிரம் பாய்ந்த. இறங்கினன் - துடையை உடையவன். கங்கையின் ஆழம் இட்ட - கங்கையின் ஆழத்தை அளவிட்டது போன்ற. நெடுமையினான் - உயரம் உள்ளவன். அரை தாழவிட்ட - இடுப்பில் கட்டித் தொங்கவிட்ட. தயங்குற - விளங்கும்படி. சூழவிட்ட - சுற்றப்பட்ட. தொடு - தொடுத்த. பல்தொடுத் தன்ன பல்சூல் கவடியன்; கல்தொடுத் தன்ன போலும் கழலினான்; அல்தொடுத் தன்ன குஞ்சியன்; ஆய்கதிர் நெல்தொ டுத்து நெரிந்த புருவத்தான். 3 3. பல்தொடுத்து அன்ன - பற்களைக் கோத்தல் போன்ற. பல்சூல் - பலவாகத் தொங்குகின்ற. கவடியன் - சோகி மாலையை அணிந்தவன். சோகி - ஒரு வகைப் பூச்சிக் கூடு. கல்தொடுத்து அன்ன - கற்களைக் கோத்துக் கட்டியது போன்ற. கழல் - வீரக்கழல். அல் - இருட்டு. பெண்ணை வன்செறும் பின்பிறங் கிச்செறி வண்ண வன்மயிர் வார்ந்துஉயர் முன்கையன்; கண்அ கல்தட மார்புஎனும் கல்லினன்; எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 4 4. பெண்ணைவன் செறும்பில் - பனையின் வலிய சிலாம் பைப் போல. பிறங்கிச் செறி - விளங்கி நிறைந்த. வண்ணவன் மயிர் - கரு நிறம் உள்ள வலிய மயிர். வார்து உயர் - நீண்டு உயர்ந்த. கண் அகல் - இடம் அகன்ற. எண்ணெய் உண்ட - எண்ணெயிலே முழுகுண்ட. கச்சொடு ஆர்த்த கறைக்கதிர் வாளினன்; நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்; பிச்ச ராம்அன்ன பேச்சினன்; இந்திரன் வச்சி ராயுதம் போலும் மருங்கினான். 5 5. கச்சொடு - இடையிலே கட்டிய கச்சையிலே. ஆர்த்த - கட்டிய. கறை - இரத்தக் கறை படிந்த. நச்சு அராவின் - நச்சுப் பாம்பைப் போல. நடுக்குறும் - பார்ப்போரை நடுங்கச் செய்யும். பிச்சராம் அன்ன - பித்தரைப் போன்ற. மருங்கினான் - இடுப்பை யுடையவன். ஊற்ற மேமிக, ஊனொடு மீன்நுகர், நாற்றம் மேய நகையின் முகத்தினான்; சீற்றம் இன்றியும் தீஎழ நோக்குவான்; கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். 6 6. ஊற்றமே மிக - வலிமை மிகுந்தபடி. நாற்றம் மேய - புலால் நாற்றம் பொருந்திய. குமிறும் - ஒலிக்கின்ற. சிருங்கி பேரம் எனத்,திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையின்; ஒருங்கு தேனொடு, மீன்,உப காரத்தன்; இருந்த வள்ளலைக் காணவந்து எய்தினான். 7 7. சிருங்கிபேரம் - குகனுடைய உகரத்தின் பெயர். தேனோடு ஒருங்கு - தேனுடன் சேர்ந்த. மீன் உபகாரத்தான் - மீனையும் உதவக் கூடியவன். வள்ளலை - இராமனை. சுற்றம் அப்புறம் நிற்கச், சுடுகணை வில்து றந்து,அரை வீக்கிய வான்ஒழித்து, அற்றம் நீத்த மனத்தினன்; அன்பினன்; நற்ற வப்பள்ளி வாயிலை நண்ணினான். 8 8. அரை வீக்கிய - இடையிலே கட்டிய. அற்றம் நீத்த - குற்றம் நீங்கிய. நின்றான் நெஞ்சின் நிரம்புறும் அன்பால்; `இன்றே நின்பணி செய்திட இறைவா நன்றே வந்தனென்; நாய்அடி யேன்யான்! என்றே கூவினன், எயினரின் இறையோன். 9 9. எயினரின் இறையோன் - வேடர்களின் தலைவன். நெஞ்சின் நிரம் புறும் அன்பால் நின்றான், `இன்றே.... அடியேன் என்றே கூவினன். கூவா முன்னம் இளையோன் குறுகி;`நீ ஆவான் யார்?என, அன்பின் இறைஞ்சினான்; தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்; நாவாய் வேட்டுவன் நாய்அடி யேன்; என்றான். 10 10. இளையோன் குறுகி - இலக்குவன் வந்து. சேவிக்க - பணிசெய்ய. நாவாய் - மரக்கலங்களையுடைய. இராமனும் குகனும் சந்திப்பு நிற்றிஈண்டு என்று புக்கு, நெடியவன் தொழுது,தம்பி, `கொற்றவ நின்னைக் காணக் குறுகினன்; நிமிர்ந்த கூட்டச் சுற்றமும்தானும் உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்; எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை;குகன் ஒருவன்; என்றான். 11 11. ஈண்டு நிற்றி என்று - இங்கே நிற்க என்று சொல்லி. நெடியவன் - பெரியவனாகிய இராமனை. நிமிர்ந்த - நிறைந்த. எற்றுநீர் - அலையெறிகிற நீரையுடைய. அண்ணலும் விரும்பி `என்பால் அழைத்திநீ அவனை என்றான் பண்ணவன் `வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்; கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி மண்உறப் பணிந்து, மேனி வளைத்து,வாய் புதைத்து நின்றான். 12 12. பண்ணவன் - புகழையுடைய இலக்குவன். கனிந்தனன் - மனம் உருகினான். இருத்தியீண்டு என்ன லோடும் இருந்திலன், எல்லை நீத்த அருத்தியன்; `தேனும், மீனும், அமுதினுக்கு அமைவ தாகத் திருத்தினென் கொணர்ந்தேன், என்கொல் திருவுளம்; என்ன, வீரன் விருத்தமா தவரை நோக்கி, முறுவலன் விளம்பல் உற்றான். 13 13. எல்லைநீத்த - அளவு கடந்த. அருத்தியன் - அன்புள்ளவன். திருத்தினென் - பக்குவம் செய்து. முறுவலன் - புன்சிரிப்புடையவனாய். `அரியதாம்; உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால்,அமிழ்தினும் சீர்த்த அன்றே! பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம்; எம்ம னோர்க்கும் உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான். 14 14. அரியதாம் - சிறந்ததாகும். சீர்த்த - சிறந்தன. பரிவினில் தழீஇய என்னில் - அன்புடன் அமைந்ததானால். பவித்திரம் - தூய்மையானதே. சிங்கஏறு அனைய வீரன்பின்னரும் செப்பு வான்;`யாம் இங்குறைந்து, எறிநீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப் பொங்குநின் சுற்றத் தோடும் போய், உவந்து இனிதுன் ஊரில் `தங்கி,நீ நாவா யோடும் சாருதி விடியல்! என்றான். 15 15. யாணர் பொங்கும் - அழகு நிறைந்த. விடியல் சாருதி - காலையில் வருவாயாக. கார்குலாம் நிறத்தான் கூறக், காதலன் உணர்த்து வான்,`இப் பார்குலாம் செல்வ! நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வ னேன்யான், இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன்! ஆனதுஐய! செய்குவேன் அடிமை; என்றான். 16 16. கார்குலாம் - மேகம்போல் விளங்குகின்ற. காதலான் - அன்புள்ள குகன். ஈர்குஇலா - பிடுங்கி எறியாத. இன்னலின் இருக்கை நோக்கி - துன்பத்தின் நிலையைக்கண்டு. தீர்கிலேன் - பிரிந்து செல்ல மாட்டேன். கோதைவில் குரிசில், அன்னான் வறிய கொள்கை கேட்டான்; சீதையை நோக்கித், தம்பி திருமுகம் நோக்கித்; தீராக் காதலன் ஆகும்என்று கருணையின் மலர்ந்த கண்ணன், `யாதினும் இனிய நண்ப! இருத்தியீண்டு எம்மொடு; என்றான். 17 17. கோதைவில் குரிசில் - மாலையை அணிந்த வில்லை யுடைய பெருமை மிகுந்த இராமன். அன்னான் - அந்தக்குகன். கருணையின் மலர்ந்த கண்ணன் - கருணையால் சிறந்த கண்களையுடையவன். திருநகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி! என்னப், பருவரல் தம்பி கூறப், பரிந்துஅவன் பையுள் எய்தி, இருகணீர் அருவி சோரக் குகனும் ஆண்டிருந்தான்;`என்னே பெருநிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும்;என்னா. 18 18. பருவரல் - துன்பத்துடன். அவன் பரிந்து பையுள் எய்தி - அவன் அன்புற்றுத் துன்பம் அடைந்து. விரிஇருள் பகையை ஓட்டித், திசைகளை வென்று, மேல்நின்று ஒருதனித் திகிரி உந்தி, உயர்புகழ் நிறுவி, நாளும் இருநிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்துஅருள் புரிந்து வீந்த செருவலி வீரன் என்ன, செங்கதிர்ச் செல்வன் சென்றான். 19 19. விரி இருள் பகையை ஓட்டி - விரிந்த இருளாகிய பகையை விரட்டி. மேல் நின்று - உயர்ந்து நின்று. ஒருதனித் திகிரி உந்தி - ஒப்பற்ற ஒரு சக்கரமுள்ள தேரைச் செலுத்தி. வீந்த - மறைந்த. செருவலி வீரன் - போரிலே வல்ல வீரனைப் போல. மாலைவாய் நியமம் செய்து, மரபுளி இயற்றி வைகல், வேலைவாய் அமிர்தன் னாளும், வீரனும், விரித்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரிவில் ஏந்திக், காலைவாய் அளவும்,தம்பி இமைப்பிலன் காத்து நின்றான். 20 20. மாலைவாய் - மாலையில். நியமம் - செய்ய வேண்டிய கடன்களை. வைகல் - தங்கி யிருக்கின்ற. நாணல் மாலை வாய் - நாணற் புல் வரிசையில். பாரின் பாயல் - நிலமாகிய பாயிலே. தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன் ;தொடுத்த வில்லன்; வெம்பிவெந்து அழியா நின்ற நெஞ்சினன்; விழித்த கண்ணன்; தம்பிநின் றானை நோக்கித், தலைமகன் தன்மை நோக்கி, அம்பியின் தலைவன், கண்ணீர் அருவிசோர் குன்றின் நின்றான். 21 21. தும்பியின் குழாத்தில் - யானைக் கூட்டம் போல். அம்பியின் தலைவன் - ஓடங்களின் தலைவன். அருவி சோர் குன்றின் - அருவி நீர் விழுகின்ற மாலையைப் போல. அன்பால் உருகிய குகன் பொழுது புலர்ந்தது, இராமன் எழுந்து காலைக் கடன்களை எல்லாம் முடித்தான். குகனை நோக்கி `விரைவில் நாவாயைக் கொணர்க என்றான். ஏவிய மொழிகேளா, விழிபுனல் பொழிகண்ணான்; ஆவியும் உலைகின்றான், அடியிணை பிரிகில்லான்; காவியின் மலர்,காயாக், கடல்,மழை அனையானைத், தேவியோடு அடிதாழச், சிந்தனை உரைசெய்வான். 22 22. கேளா - கேட்டு. காவியின் மலர், காயா, கடல், மழை இவை இராமனுக்கு உவமைகள். தாழா - பணிந்து. சிந்தனை உரை செய்வான் - எண்ணத்தை உரைப்பான். காவி - கருங்கு வளை. காயா - காசாம்பூ. `பொய்ம்முறை இலரோம்;எம் புகல்இடம் வனமேயால்; கொய்ம்முறை உறுதாராய்! குறைவிலம் வலியேமால்! செய்ம்முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை, இம்முறை உறவென்னா, இனிதிரு நெடிதுஎம்மூர். 23 23. கொய்முறை உறு - கொய்து முறையாகத் தொடுத்து அமைந்த. உறவு என்னா - உறவினர் என்று கொண்டு. `தேன்உள; தினைஉண்டால்; தேவரும் நுகர்தற்காம் ஊன்உள; துணை,நாயேம் உயிர்உள; விளையாடக் கான்உள; புனல்ஆடக் கங்கையும் உளதுஅன்றோ? நான்உள தனையும்நீ இனிதிரு; நடஎம்பால். 24 24. -. அண்ணலும் அதுகேளா, அகம்நிறை அருள்மிக்கான், வெண்ணிற நகைசெய்தான்; `வீரநின் உழை,யாம்அப் புண்ணிய நதியாடிப், புனிதரை வழிபாடுஉற்று, எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனி;என்றான். 25 25. -. குகனும் இராமன் உள்ளக் குறிப்பை உணர்ந்தான். நாவாயைக் கொணர்ந்தான். இராமன் அந்தணர்களிடம் விடை பெற்று நாவாயிலேறிக் கங்கையின் தென் கரையை அடைந்தான். `சித்திர கூடம் செல்லும் நெறி எது? என்று குகனைக் கேட்டான். குகன் வேண்டுகோள் `தீயன வகையாவும் திசைதிசை செலநூறித், தூயன உறைகானம் துருவினென் வரவல்லேன்; மேயினை பொருள்நாடித் தருகுவென்; வினைமுற்றும் ஏயின செயவல்லேன்; இருளினும் நெறிசொல்வேன். 26 26. தீயனவகை யாவும் - தீயனவாகிய விலங்கினங்கள் யாவையும். நூறி - அழித்து. தூயன உறை - நல்ல பிராணிகள் வாழ்கின்ற. மேயின - விரும்பின. கல்லுவென் மலையேனும், கவலையின் முதல்யாவும்; செல்லுவென் நெறிதூரம்; செறிபுனல் தரவல்லேன்; வில்லினம் உளென்;ஒன்றும் வெருவலென், இருபோதும் மல்லினும் உயர் தோளாய் மலர்அடி பிரியாதேன். 27 27. கவலையின் முதல் யாவும் - கவலையின் கிழங்கு முதலிய எல்லா வகைக் கிழங்குகளையும். மலைமேலும் கல்லுவென்; இருபோதும் - பகல் இரவு இரு பொழுதிலும். திருவுளம் எனின்,மற்றென் சேனையும் உடனேகொண்டு ஒருவலென் ஒருபோதும் உறைகுவென்; உளர்ஆனார் மருவலர் எனின்முன்னே மாள்குவென்; வசையில்லேன் பொருவரு மணிமார்பா! போதுவென் உடன்என்றான். 28 28. ஒருபோதும் ஒருவலென் உறைகுவென் - ஒருபோதும் பிரியாமல் வாழ்வேன். மருவலர் - பகைவர். `உளர் ஆனார் எனின்.... உடன்போது வென். இராமன் சகோதரத்தன்மை அன்னவன் உரைகேளா, அமலனும் உரைநேர்வான்; `என்உயிர் அனையாய்நீ! இளவல்உன் இளையான்;இந் நன்னுத லவள்நின்கேள்; நளிர்கடல் நிலம்எல்லாம் உன்னுடை யதுநான்உன் உரிமையின் உளென்என்னா. 29 29. அன்னவன் - குகன். கேளா - கேட்டு. `நீ என் உயிர் அனையாய். நின்கேள் - உன் உறவினள். நளிர் கடல் - குளிர்ந்த கடல் சூழ்ந்த. `துன்புளது எனின் அன்றோ சுகம்உளது? அதுஅன்றிப் பின்புளது, இடைமன்னும் பிரிவுஉளது எனஉன்னேல்! முன்புளம் ஒருநால்வேம்; முடிவுளது எனஉன்னா அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர்ஆனோம்! 30 30. பின்பு உளது - பின்பு உன்னைக் காணும் நிகழ்ச்சி உண்டு. இடை நடுவிலே. மன்னும் - பொருந்திய. முடிவுளது என உன்னா - முடிவு உண்டு என்று நினைக்க முடியாத. `அங்குள கிளைகாவற்கு அமைதியின் உளன்உம்பி; இங்குள கிளைகாவற்கு யார்உளர் இசையாய், உன்கிளை எனதன்றோ! உறுதுயர் உறலாமோ! என்கிளை இதுகா!என் ஏவலின் என்றான். 31 31. அங்கு உள - அந்த அயோத்தியில் உள்ள. உம்பி - உன் தம்பியாகிய பரதன். `என் ஏவலின் என்கிளை இது இனிது கா என்றான். பணிமொழி கடவாதான், பருவரல் இகவாதான், பிணிஉடை யவன்என்னும் பிரிவினன், விடைகொண்டான்; அணியிழை மயிலோடும், ஐயனும், இளையோனும், திணிமரம் நிறைகானில், சேண்உறு நெறிசென்றார். 32 32. பருவரல் - துன்பத்தினின்றும். இகவாதான் - நீங்காதவன். பிரிவினன் - பிரிகின்ற துன்பத்தை யுடையவனாய். திணிமரம் - நெருங்கிய மரங்கள்; திணி வலிமையும்ஆம். சேண் உறு - தூரத்தில் செல்லுகின்ற. 9. வனம்புகு படலம் காட்டின் காட்சி பூரியர் புணர்மாதர் பொதுமனம் எனமன்னும், ஈரமும் உளதில்லென்று அறிவரும் இளவேனில், ஆரியன் வரலோடும், அமுதளவிய சீதக் கார்உறு குறி,மானக் காட்டியது அவண்எங்கும். 1 வனம் புகு படலம்: இராமன், இலக்குவன், சீதை மூவரும் கங்கையைத் தாண்டிக் காட்டை அடைந்ததைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. பூரியர் - அற்பர்களை; அல்லது அற்பர்களால். ஆரியன் - சிறந்தவனாகிய இராமன். சீதம்கார் உறுகுறி - குளிர்ந்த மேகங்கள் வந்து சேர்வதற்கான அடையாளத்தை. `வானம் காட்டியது இளவேனிலுக்குப் பொது மகளிர் மனம் உவமை. வெயில்,இள நிலவேபோல் விரிகதிர் இடைவீசப் பயில்மரம் நிழல்ஈனப் பனிபுரை துளிவானம் புயல்தர, இளமென்கால் பூஅளவியது எய்த, மயில்இனம் நடமாடும் வழிஇனி யனபோனார். 2 2. பயில்மரம் - நெருங்கிய மரங்கள். இளம் மென்கால் - இளந் தென்றல் காற்று. பூ அளவியது எய்த - பூவின் மணத்தைக் கலந்து வீச. இனியன வழி - இனிமைகள் நிறைந்த வழியிலே. `சேந்தொளி விரிசெவ்வாய்ப், பைங்கிளி, செங்கோலக் காந்தளின் மலர்ஏறிப் பொலிவது, கவினாரும் மாந்தளிர் நறுமேனி மங்கைநின் மணிமுன்கை ஏந்தின எனல்ஆகும் இயல்பின; இவைகாணாய்! 3 3. சேந்து ஒளி விரி - அழகுபெற்று ஒளி பரவுகின்ற. செம் கோலம் - நல்ல அழகுள்ள. கவின் ஆரும் - அழகு பொருந்திய. நின் முன்கை மணி ஏந்தின எனல் ஆகும் - உன் முன் கையிலே இரத்தினத்தை ஏந்தி யிருப்பதைப் போல இருப்பதாகும். `அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! செருந்தியின் மலர்தாங்கும் செறியித ழின்அசோகம், பொருந்தின களிவண்டின் பொலிவன, பொன்ஊதும் இருந்தையின் எழுதீஒத்து எழுவன, இயல்காணாய்! 4 4. செறியிதழின் - நெருங்கிய இதழ்களையுடைய. களி வண்டில் - கள்ளுண்டு களித்த வண்டுகளுடன். இருந்தையின் - கரியிலிருந்து. செருந்தி மலர் பொன்னிறமுள்ளது; அசோக மலர் சென்னிறமுள்ளது; வண்டுகள் கருநிறமுள்ளவை. குன்றுறை வயமாவின் குருளையும், இருள்சிந்திப் பின்றினது எனலாகும் பிடிதரு சிறுமாவும் அன்றில பிரிவுஒல்லா; அண்டர்தம் மனைஆவின் கன்றொடு விளையாடும் தளியன; பலகாணாய்! 5 5. வயமாவின் குருளையும் - புலியின் குட்டியும். பின்றினது - பின்னியது அன்றில - தம்முள் பகை கொள்ளவில்லை. பிரிவு ஒல்லா - பிரிதலும் இல்லை. அண்டர் தம் மனை - இடையர்கள் வீட்டிலே யுள்ள. என்றுநல் மடவாளோடு இனிதினில் விளையாடிப் பொன்திணி திரள்தோளான் போயினன் நெறி;போதும் சென்றது குடபால்;அத் திருமலை இதுஅன்றோ என்றனன், வினைவென்றோர் மேவிடம்; எனலோடும் 6 6. வினை வென்றோர் மேவு இடம் - தீவினையை வென்றழித்தவர்கள் அடைகின்ற இடமாகிய. அத்திருமலை இது அன்றோ - அந்தச் சித்திரக் கூட மலை இதுவன்றோ. பரத்துவாச முனிவன் வருகை அருத்தியின் அகம்விம்மும் அன்பினன்; நெடுநாளில் திருத்திய வினைமுற்றிற்று இன்றுஎனல் தெரிகின்றான்; பரத்துவன் எனும்நாமப் பரமுனி, பவநோயின் மருத்துவன் அனையானை, வரவுஎதிர் கொளவந்தான். 7 7. அருத்தியின் - ஆசையினால். அகம் விம்மும் - மனம் நிறைந்த. பரத்துவன் - பரத்துவாசன். பவ நோயின் - பிறவி நோயின். குடையினன்; நிமிர்கோலன்; குண்டிகை யினன்;மூரிச் சடையினன்; உரிமானின் சருமன்;நல் மரநாரின் உடையினன்; மயிர்நாறும் உருவினன்; நெறிபேணும் நடையினன்; மறைநாலும் நடம்நவில் தரும்நாவான். 8 8. மூரிச் சடையினன் - மிகுந்த சடையை உடையவன். மானின் உரி சருமன் - மானின் உரியான தோலையுடையவன். மயிர் நாலும் - மயிர் வளர்ந்து தொங்கும். நெறிபேணும் நடை யினன் - வேத நெறியைப் போற்றும் ஒழுக்கத்தையுடையவன். செந்தழல் புரிசெல்வன்; திசைமுக முனிசெவ்வே தந்தன உயிர்எல்லாம் தன்உயிர் எனநல்கும் அந்தணன்; உலகேழும் அமைஎனின், அமரேசன் உந்தியின் உதவாமே உதவிடு தொழில்வல்லான். 9 9. திசைமுக முனி - நான்முகன். நல்கும் - அருள் செய்யும். அமரே சன் - திருமால். உந்தியின் உதவாமே - நாபிக் கமலத்தி லிருந்து படைக்காம லிருந்தாலும். உதவிடு தொழில் - படைக்கும் தொழிலைச் செய்வதிலே. அம்முனி வரலோடும் அழகனும் அலர்தூவி, மும்முறை தொழுதான்;அம் முதல்வனும் எதிர்புல்லி இம்முறை உருவோநான் காண்குவது? எனஉள்ளம் விம்மினன்; இழிகண்ணீர் விழிவழி உகநின்றான். 10 10. அநகன் - இராமன். எதிர் புல்லி - எதிராகத் தழுவிக் கொண்டு. இம்முறை உருவோ - இத்தகைய கோலமோ. நான் எய்து - நான் காணப்பெறுவது? இழி கண்ணீர் - வருகின்ற கண்ணீர். அகல்இடம் நெடிதுஆளும் அமைதியை; அதுதீரப் புகல்இடம் எமதுஆகும் புரைஇடை இதுநாளில் தகவுஇல தவவேடம் தழுவினை வருவானேன்? இகல்அடு சிலைவீர! இளையவ னொடும்என்றான். 11 11. அகல் இடம் - பெரிய நில உலகை. நெடிது - வழிவழியாக அமைதியை - தகுதியுடையவனே. புகல் இடம் - வாழும் இடம். புரை இடை - ஆசிரமத்தை நோக்கி. தகவுஇல் - உனக்குத் தகாத. இகல்அடு - பகைவர்களைக் கொல்லும். உற்றுள பொருள்எல்லாம் உணர்வுற உரைசெய்தான்; நற்றவ முனி,`அந்தோ விதிதரு நவை என்பான்; `இற்றது செயல்உண்டோ இனிஎன இடர் கொண்டான்; பெற்றிலள் தவம் அந்தோ பெருநீல மகள்என்றான். 12 12. உற்றுஉள - நிகழ்ந்துள்ள பொருள்; செய்தி. உணர்வுற - அறியும் படி. விதிதரு நவை - விதிதந்த குற்றம். இற்றது - இத்தன் மையான வருந்தத்தக்க. இடர் - துன்பம். பெருநில மகள் தவம் பெற்று இலள் - பெரிய பூமி தேவி தவப்பயனைப் பெறாதவளாயினள். அல்லலும் உள,இன்பம் அணுகலும் உளஅன்றோ, நல்லவும்உள, செய்யும் நவைகளும் உளஅன்றோ! இல்லையொர் பயனான்இன்று இடர்உறும் இதின்;என்னாப் புல்லினன், உடனேகொண்டு இனிதுறை புரைபுக்கான். 13 13. நான் இன்று இடர் உறும் இதின் ஓர் பயன் இல்லை - நான் இன்று துன்புறுவதனால் ஒரு பயனும் இல்லை. என்னா - என்று தன் மனத்தைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு. புல்லினன் - தழுவிக் கொண்டு. புரை - இடத்திற்குள். புக்கு,உறை விடம்நல்கி, பூசனை முறைபேணி தக்கன கனிகாயும் தந்து,உரை தரும்அன்பால் தொக்கநன் முறைகூறி, தூயவன் உயிர்போலும் மக்களின் அருள்உற்றான்; மைந்தரும் மகிழ்வுற்றார். 14 14. புக்கு - ஆசிரமத்தில் புகுந்து. பூசனை முறை பேணி - உபசாரத்தை முறையாகச் செய்து. உரைதரும் - சொல்லுகின்ற. தொடக்க நல்முறை கூறி - மிகுந்த நல்ல நீதிகளைக் கூறி. தூயவன் - முனிவன். மக்களின் - மக்களிடம் காட்டுவது போன்ற. அருள் உற்றான் - கருணை காட்டினான். இரவில் இராமன் முதலியோர் பரத்துவாசன் உறை யுளில் இருந்தனர். பொழுது விடிந்தபின் பரத்துவாசன் இராமனை நோக்கி இங்கு எல்லா வசதிகளும் உண்டு; இங்கேயே தங்கலாம் என்றான். `கங்கை யாளொடு, கரியவள், நாமகள் கலந்த சங்கம் ஆதலின் பிரியலன்; தாமரைச் செங்கண் அங்கண் நாயக! அயனுக்கும் அரும்பெறல் தீர்த்தம்; எங்கள் போலியர் தரத்ததுஅன்று; இருத்திர் ஈண்டுஎன்றான். 15 15. கரியவள் - யமுனை. நாமகள் - சரசுவதி. எங்கள் போலியர் தரத்தது அன்று - எங்கள் போன்றவர்க்குக் கிடைப்பதற் குரியதன்று. பூண்ட மாதவன் அவ்வழி விரும்பினன் புகல, நீண்டது அன்றுஇது; நிறைபுனல் நாட்டுக்கு; நெடுநாள்; மாண்ட சிந்தைய! இவ்வழி வைகுவென் என்றால், ஈண்ட யாவரும் நெருங்குவர்; என்றனன் இராமன். 16 16. அவ்வழி - அவ்வாறு. விரும்பினன் புகல - விரும்பிக் கூற. நீண்டது அன்று இது - கோசல நாட்டுக்குத் தொலைவில் உள்ளது அன்று இவ்விடம். மாண்ட சிந்தைய - சிறந்த உள்ளத்தை உடையவனே. இவ்வழி - இவ்விடத்தில். ஈண்ட - விரைந்து. `ஆயின் இதற்கு அப்பால், பத்துக் காதம் கடந்தால், சித்திர கூட பர்வதம் உண்டு; அங்குச் சென்று வாழ்க என்றான் முனிவன். இராமன் முதலியவர்கள் முனிவனிடம் விடை பெற்று நடந்தனர். நடுப்பகலில் காளிந்தி நதியைக் கண்டனர். காளிந்தியைக் கடத்தல் ஆறு கண்டனர் அகமகிழ்ந்து இறைஞ்சினர்; அறிந்து நீறு தோய்மணி மேனியர் நெடும்புனல் படிந்தார்; ஊறும் மென்கனி கிழங்கினோடு உண்டுநீர் உண்டார்; `ஏறி ஏகுவது எங்ஙனம்? என்றலும் இளையோன். 17 17. நீறுதோய் - புழுதி படிந்த. ஊறு - சுவை மிகுந்த. ஏறி ஏகுவது - ஓடத்தில் ஏறிக் கடப்பது. வாங்கு வேய்ங்கழை துணித்தனன், மாணையின் கொடியால் ஓங்கு தெப்பம்ஒன்று அமைத்துஅதன் உம்பரின் உலம்போல் வீங்கு தோள்அண்ணல், தேவியோடு இனிதுவீற்றிருப்ப, நீங்கினான் அந்த நெடுநதி இருகையில் நீந்தி. 18 18. வாங்கு வேய்ங்கழை - வளைந்த மூங்கிலின் கழிகளை. மாணையின் கொடி - ஒரு வகைக் கொடி. அதன்உம்பர் - அதன்மேல். உவம்போல் - திரண்ட கல்லைப்போல். வீங்கு - உயர்ந்த. அக்கரை அடைந்தபின் மூவரும் வழி நடந்து ஒரு பாலை வனத்தை அடைந்தனர் .இப்பாலையைச் சீதை எப்படிக் கடப்பாள் என்று எண்ணினன் இராமன். பாலை மாறிற்று. காலம் இன்றியும் கனிந்தன கனி;நெடும் கந்தம் மூலம் இன்றியும் முகிழ்த்தன; நிலன்உற முழுதும் கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள்; இன்பச் சீலம் அன்றியும் செய்தவம் வேறும்ஒன்று உளதோ! 19 19. காலம் இன்றியும் - பருவகாலம் இல்லாமலும். நெடும் கந்தம் - பெரிய கிழங்குகள். மூலம் இன்றியும் - வேர் இல்லாமலும். முகிழ்த்தன - தோன்றின. இன்பச் சீலம் அன்றியும் - இன்பத்தைத் தரும் நல்லொழுக்கத்தைத் தவிர. வெளிறு நீங்கிய பாலையை மெல்எனப் போனார்; குளிறு வான்மதிக் குழவிதன் சூல்வயிற்று ஒளிப்பம், பிளிறு மேகத்தைப் பிடிஎனப், பெரும்பனைத் தடக்கைக் களிறு நீட்டும்,அச் சித்திர கூடத்தைக் கண்டார். 20 20. வெளிறு நீங்கிய - வெண்மை நீங்கிப் பசுமையடைந்த. குளிறுவான் - ஒலிக்கின்ற வானில் உள்ள. மதிக்குழவி - பிறைச் சந்திரன். தன் சூல்வயிற்று - தனது கருக் கொண்ட வயிற்றிலே. பிளிறும் மேகத்தை - இடிக்கின்ற மேகத்தைக் கண்டு. 10. சித்திரகூடப் படலம் இயற்கைக் காட்சியை இராமன் சீதைக்குக் காட்டுதல் `நீண்ட மால்வரை மதிஉற, நெடுமுடி நிவந்த, தூண்டும் மாமணிச் சுடர்சடைக் கற்றையின் தோன்ற மாண்ட வால்நிற அருவி,அம் மழவிடைப் பாகன் காண்த கும்சடைக் கங்கையை நிகர்ப்பன காணாய்! 1 சித்திரகூடப் படலம்: சித்திரகூட பர்வதத்திலே நிகழ்ந்த செய்தியைக் கூறும் பகுதி. 1. நிவந்தநெடுமுடி - உயர்ந்த பெரிய உச்சியை யுடைய. நீண்டமால்வரை - பெரிய மலையானது. மதிஉற - மேக மண்டலத்தைப் பொருந்த. தூண்டும் - ஒளியைத் தூண்டுகின்ற. மாமணி சுடர் - சிறந்த இரத்தினங்களின் ஒளி. சடை கற்றையின் தோன்ற - சடைத் தொகுதி போலக் காணப்பட. மாண்ட வால்நிற அருவி - சிறந்த வெண்மையான நிறத்தையுடைய அருவியானது. மலை, சிவபிரானைப் போல இருந்தது. `உருகு காதலின், தழைகொண்டு மழலைவண்டு ஓச்சி, முருகு நாறுசெந் தேனினை முழைநின்றும் வாங்கிப் பெருகு சூல்இளம் பிடிக்கு,ஒரு பிறைமருப்பு யானை, பருக வாயினில், கையினின்று அளிப்பது பாராய். 2 2. முருகு நாறு - மணம் வீசுகின்ற. முழைநின்றும் - குகை களிலிருந்து. பெருகு சூல் - முதிர்ந்த கருவையுடைய. `அளிக்கும் நாயகன், மாயைபுக்கு அடங்கினன் எனினும், களிப்பில் இந்தியத்து யோகியைக் கரக்கிலன்; அதுபோல், ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத்தெரி கின்ற பளிக்க றைச்சில பரிமுக மாக்களைப் பாராய். 3 3. அளிக்கும் நாயகன் - காக்கும் தலைவன். இந்தியத்து - இந்திரியங்களையுடைய. யோகியை - யோகியர்க்கு. கரக்கிலன் - ஒளிக்கமாட்டான். பளிக்கு அறை - பளிங்கு இடங்களிலே. பரிமுக மாக்களை - குதிரை முகவிலங்குகளை. `ஒருவில் பெண்மைஎன்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே! மருவு காதலின் இனிதுடன் ஆடிய மந்தி, அருவி நீர்கொடு வீசத்தான் அப்புறத்து ஏறிக், கருவி மாமழை உதிர்ப்பதுஓர் கடுவனைக் காணாய்! 4 4. ஒருவில் - நீங்காத. பெண்மை என்று உரைக்கின்ற - பெண் தன்மை என்று சொல்லப்படும். மந்தி - பெண் குரங்கு. கடுவன் - ஆண் குரங்கு. `அறைக ழல்சிலைக் குன்றவர், அகன்புனம் காவல் பறைஎ டுத்தொரு கடுவன்நின்று அடிப்பது பாராய்! பிறையை எட்டினன் பிடித்து, `இதற்கு இதுபிழை என்னாக் கறைது டைக்குறு பேதைஓர் கொடிச்சியைக் காணாய்! 5 5. அறை கழல் சிலை - ஒலிக்கின்ற வீரக் கழலையும், வில்லையும் உடைய குன்றவர் - குறவர்கள். பறை - பறையை. கொடிச்சியை - குறத்தியை. `மடந்தை மார்க்கொரு திலதமே! மணிநிறத் திணிகல் தொடர்ந்த பாறையில் வேயினம் சொரிகதிர் முத்தம் இடந்தொ றும்கிடந்து இமைப்பன, எக்கிளம் செக்கர் படர்ந்த வானிடைத் தாரகை நிகர்ப்பன பாராய்! 6 6. மணி நிறம் - மாணிக்கத்தின் நிறத்தைக் கொண்ட. திணிகல் தொடர்ந்த - வலிய கல்லாக வளர்ந்த. வேயினம் - மூங்கில்கள். எக்கு இளம் செக்கர் படர்ந்த - மிகுந்த இளமை யான செம்மை பரவிய. தாரகை - நட்சத்திரங்கள். `குழுவு நுண்துளை வேயினும், குறிநரம்பு எறிவுற்று எழுவு தண்தமிழ் யாழினும், இனியசொல் கிளியே! முழுவ தும்மலர் விரிந்தநாள் முருக்கிடை மிடைந்த பழுவம், வெம்கனல் கதுவியது ஒப்பன; பாராய்! 7 7. குழுவும் நுண்தொளை வேயினும் - பொருந்திய சிறிய தொளைகளையுடைய வேய்ங் குழலைக்காட்டிலும். குறி நரம்பு எறிவுற்று - குறித்த நரம்பைத் தெறித்து, எழுவு - எழுப்புகின்ற. முருக்கு - முருக்க மலர்கள். இடைமிடைந்த - எங்கும் நிறைந்த. பழுவம் - காடுகள். வெம்கனல் கதுவியது - தீப்பற்றியதை. `வளைகள் காந்தளில் பெய்தன அனையகைம் மயிலே! தொளைகள் தாழ்தடக் கை,நெடும் துருத்தியின் தூக்கி அளவில் மூப்பினர் அருந்தவர்க்கு அருவிநீர் கொணர்ந்து களப மால்கரி குண்டிகை சொரிவன காணாய்! 8 8. வளைகள் - சங்குகளை. காந்தளில் பெய்து அன - காந்தள் மலரிலே மாட்டி யிருப்பதை. அனைய - போன்ற. மால்கரி களபம் - பெரிய யானையின் கன்றுகள். `தொளைகொள்... குண்டிகை சொரிவன காணாய் குண்டிகை - கமண்டலம். `வடுவின் மாவகிர் இவைஎனப் பொலிந்தகண் மயிலே! இடுகு கண்ணினர், இடர்உறு மூப்பினர்ஏக, நெடுகு கூனல்வால் நீட்டின, உருகுறு நெஞ்சக் கடுவன், மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணாய்! 9 9. இடுகு கண்ணினர் - பார்வை சுருங்கிய கண்ணை யுடையவர்கள். வால் நீட்டின - வாலை நீட்டினவாய். `ஐவ னக்குரல் ஏனலின் கதிர்இறுங்கு, அவரை, மெய்வ ணக்குறு வேயினம் ஈன்றமெல் அரிசி, பொய்வ ணக்கிய மாதவர் புரைதொறும் புகுந்து,உண் `கைவ ணத்தவாய்க், கிள்ளைதந்து அளிப்பன காணாய்! 10 10. ஐவனக் குரல் - மலை நெற் கதிர். ஏனல் - தினை. இறுங்கு - சோளம். வேயினம் - மூங்கில்கள். பொய் வணக்கிய - பொய் யைப் பணியச் செய்த. புரைதொறும் - உறைவிடந்தோறும். கை வணத்தவாய் - கையின் தன்மையுள்ளனவாய். இடிகொள் வேழத்தை, எயிற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம், கற்றறிந் தவர்என அடங்கிச், சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாம்மிதித்து, ஏறப், படிக ளாம்எனத், தாழ்வரை கிடப்பன பாராய்! 11 11. இடிகொள் - இடியின் ஓசையைக் கொண்ட. வேழத்தை - ஆண் யானையை. மாசுணம் - மலைப்பாம்புகள். தாழ்வரை - மலையடிவாரத்தில். இனைய யாவையும் ஏந்திழைக்கு இயம்பினன் காட்டி, அனைய மால்வரை அருந்தவர் எதிர்வர, வணங்கி, வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான், மனையில் மெய்யெனும் மாதவம் புரிந்தவன் மைந்தன்.` 12 12. மனையின் - இல்லத்திலே. மெய் எனும் - உண்மை யென்னும். மாதவம் - சிறந்த தவத்தை. புரிந்தவன் மைந்தன் - புரிந்தவனாகிய தசரதன் மைந்தன். `இனைய யாவையும்... ஆனான். மாலைக் காட்சி மந்தியும், கடுவனும் மரங்கள் நோக்கின; தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின; நிந்தையில் சகுந்தங்கள் நீளம் நோக்கின; அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான். 13 13. தந்தியும் - ஆண் யானைகளும். பிடிகளும் - பெண் யானைகளும். தடங்கள் - மலையடிவாரத்தை. சகுந்தங்கள் - பறவைகள். நீள - நீண்ட நெறியிலே பறப்பதை. நோக்கின - எதிர் பார்த்தன. மொய்யுறு நறுமலர் முகிழ்த்த வாம்சில; மையறு நறுமலர் மலர்ந்த வாம்சில; ஐயனோடு, இளவற்கும், அமிழ்து அனாளுக்கும், கைகளும், கண்களும், கமலம் போன்றவே. 14 14. மொய்உறு - வண்டுகள் மொய்க்கின்ற. நறுமலர் சில முகிழ்த்தவாம் - மணமுள்ள மலர்கள் சில குவிந்தனவாம். மைஅறு - குற்றமற்ற. `நறு மலர் சில மலர்ந்தவாம். மாலைவந்து அகன்றபின், மருங்கி லாள்ஒடும். வேலைவந்து உறைவிடம் மேய தாம்எனக் கோலைவந்து உமிழ்சிலைத் தம்பி கோலிய சாலைவந்து எய்தினான்; தவத்தின் எய்தினான். 15 15. வேலை - கடல். உறைவிடம் மேயதாம் என - உறையும் இடத்தை அடைந்ததாம் என்று சொல்லும்படி. வந்து கோலை உமிழ்சிலை - முன் வந்து அம்பைச் சிந்துகின்ற வில்லையுடைய. தம்பி - இலக்குவன். சாலை - பர்ணசாலை - பர்ணசாலைக்குக் கடல் உவமை. இலக்குவனைப் பார்த்து இராமன் உரைத்தல் மேவு கானம் மிதிலையர் கோன்மகள் பூவின் மெல்லிய பாதமும் போந்தன; தாவில் எம்பிகை சாலை சமைத்தன; யாவை யாதும் இலார்க்குஇயை யாதவே. 16 16. மேவு கானம் - துன்பம் பொருந்திய காட்டிலே. கை - கைகள். சாலை சமைத்தன - பர்ண சாலையை அமைத்தன. யாதும் இலார்க்கு - வறியோர்க்கு. இயையாத யாவையே - நேராத துன்பங்கள் எவையுண்டு? `என்று சிந்தித்து இளையவன் பார்த்துஇரு குன்று போலக் குலவிய தோளினாய்! என்று கற்றனை நீயிது போல்என்றான்; துன்று தாமரைக் கண்பனி சோர்கின்றான். 17 17. இளையவள் பார்த்து - இலக்குவனைப் பார்த்து. துன்று - இதழ்கள் நெருங்கிய. `அடரும் செல்வன் அளித்தவன் ஆணையால் படரும் நல்லறம் பாலித்து, இரவியின் சுடரும் மெய்ப்புகழ் சூடினென் என்பதென்; இடர்உ னக்குஇழைத் தேன்நெடு நாள்; என்றான். 18 18. அடரும் - நிறைந்த. படரும் - வனத்திற்குச் செல்லும். பாலித்து - காத்து. இரவியின் சுடரும் - கதிரவனைப்போல் விளங்குகின்ற. அதுகேட்ட இலக்குவன், சிந்தை வருந்தி `எல்லாம் முன் செய்த வினை என்றான். பின்னும் தம்பியை நோக்கிப், பெரியவன் `மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு; இதற்கு என்ன கேடுண்டு?இவ் எல்லையில் இன்பத்தை உன்னு! மேல்வரும் ஊதியத்தோடு; என்றான். 19 19. வரம்பு உண்டு - எல்லையுண்டு. இதற்கு - இந்தத் தவத்துக்கு. மேல்வரும் ஊதியத்தோடு - பின்னர் கிடைக்கும் இலாபத்தோடு. `இவ் எல்லையில் இன்பத்தை உன்னு என்றான். பெரியவன் - இராமன். 11. பள்ளியடைப் படலம் அயோத்தியிலிருந்து கேகய நாடு சென்ற தூதர்கள் பரதன் இருந்த இடத்தை அடைந்தனர்; தங்கள் வருகையை அறிவித்தனர். `தூதர் வந்தனர் உந்தைசொல் லோடு,`எனக் காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான், போதுக எங்கெனப் புக்கு,அவர் கைதொழத்; `தீது இலன்கொல்? திருமுடி யோன் என்றான். 1 பள்ளி அடைப் படலம்: தசரதன் ஈமப் படுக்கையை அடைந்ததைப் பற்றிக் கூறும் பகுதி. 1. சிந்தையான் - சிந்தையை உடைய பரதன். ஈங்கு போதுக என - இங்கே வருக என்று சொல்ல. அவர் - அத்தூதர்கள். திருமுடியோன் - தசரதன். `வலியன் என்றவர் கூற மகிழ்ந்தனன்; `இலைகொள் பூண்இளங் கோஎம் பிரானொடும் உலைவில் செல்வத்த னோ?என `உண்டுஎனத் தலையின் ஏந்தினன் தாழ்தடக் கைகளே. 2 2. இலை கொள்பூண் - இலை வடிவாகச் செய்யப்பட்ட. ஆபரணத்தை யுடைய. இளங்கோவொடு எம்பிரான் - இலக்கு வனுடன், இராமன். மற்றும் சுற்றத்தார்களைப் பற்றியெல்லாம் கேட்டறிந்தான் பரதன். தூதுவர் `இது கொற்றவன் திருமுகம் என்று உரைத்து அதனைக் கொடுத்தனர். பரதன் அதைப் பெற்றான் அவர்களுக்குப் பரிசளித்தான். பின்னர் இராமனைக் காணலாம் என்ற ஆவலுடன் அயோத்திக்குப் புறப்பட்டான். `எழுக சேனை என்று ஏவினன்; எய்தினன் தொழுது கேகயர் கோமகன் சொல்லொடும் தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்; பொழுதும் நாளும் குறித்திலன் போயினான். 3 3. -. யானை சுற்றின; தேர்இரைத்து ஈண்டின; மான வேந்தர் குழுவினர்; வாள்உடைத் தானை சூழ்ந்தன; சங்கும்முரன்றன; மீன வேலையின் விம்மின பேரியே. 4 4. ஈண்டின - நெருங்கின. மான - சிறந்த. தானை - சேனை. முரன்றன - முழங்கின. மீன வேலையின் - மீன்களை யுடைய கடலைப்போல. விம்மின - ஒலித்தன. பேரி - பேரிகை. ஊன்அ ளைந்த உடற்குஉயி ராம்எனத் தான்அ ளைந்து தழுவின தண்ணுமை; தேன்அ ளைந்து செவிஉற வார்த்தென வான்அ ளைந்தது மாகதர் பாடலே. 5 5. தான் அளைந்து - தான் இசையுடன் கலந்து. தண்ணுமை - மத்தளம். தழுவின - கூடியிருந்தன. `மாகதர் பாடல் ஏ தேன் அளைந்து செவி உற வார்த்துஎன வான் அளைந்தன. மாகதர் - இசை பாடுவரின். மேன் அளைந்து - தேன் கலந்து. வான் அளைந்தன - வானுலகில் கலந்தன. ஆறும், கானும், அகன்மலையும் கடந்து, ஏறி ஏழ்பகல் நீந்திப்,பின் எந்திரத்து ஊறு பாகு மடையுடைத்து, ஒள்முறை நாறு பாய்வயல், கோசலை நண்ணினான். 6 6. எந்திரத்து ஊறுபாகு - கரும்பாலையில் ஊறி வருகின்ற சாறு. மடை உடைத்து - மடையை உடைத்துக் கொண்டு. ஒள்முளை நாறு வயல் பாய் - ஒளி பொருந்திய முளை தோன்றி யிருக்கின்ற வயல்களிலே பாய்கின்ற. கோசலை நாட்டின் பாழ்பட்ட காட்சி ஏர்து றந்த வயல்;இள மைந்தர்தோள் தார்து றந்தன; தண்தலை நெல்லினும் நீர்து றந்தன; தாமரை நீத்தெனப் பார்து றந்தனள் பங்கயச் செல்வியே. 7 7. வயல் ஏர் துறந்த; தார் - மாலை. தண்டலை - சோலை களிலும். நெல்லினும் - நெல் வயல்களினும். நீர் துறந்தன - நீர் இன்றி நீங்கின. பங்கயச் செல்வி - இலக்குமி. தாமரை நீத்து எனப் பார் துறந்தனள். ஏய்ந்த காலம் இதுஇதற் காம்என ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால், பாய்ந்த சூதப் பசுநறும் தேறலால் சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன, சாலியே. 8 8. அரிகுநர் மள்ளர் இன்மையால் - அரிகின்றவர்களாகிய உழவர்கள் இல்லாமையால். சூதம் பசும்நறும் தேறலால் - மாம்பழத்தின் புதிய இனிய தேனால். சாலி - நெற்பயிர். சாய்ந்து; ஒசிந்து - ஒடிந்து. முளைத்தன. பாடல் நீத்தன வண்டொடு பாண்குழாம்; ஆடல் நீத்தன அரங்கொடு அகன்புனல்; சூடல் நீத்தன சூடிகை; சூளிகை மாடம் நீத்தன மங்கல வள்ளையே. 9 9. வண்டொடு - வண்டுகளுடன். பாண் குழாம் - பாணர் கூட்டம். அரங்கொடு அகன்புனல் - அரங்கும் பெரிய நீர் நிலையும். ஆடல் நீத்தன. சூடிகை - கலசங்கள். சூடல் நீத்தன - தோரணங் களைத் துறந்தன. சூளிகை - மாளிகையில் உள்ள நிலா முற்றங்கள். மங்கல வள்ளை நீத்தன - மங்கலப் பாடல்களைத் துறந்தன. நகை இழந்தன வாள்முகம் நாறுஅகில் புகை இழந்தன மாளிகை; பொங்குஅழல் சிகை இழந்தன தீவிகை; தேமலர்த் தொகை இழந்தன தோகையர் ஓதியே. 10 10. நகை - சிரிப்பு. வாள் - ஒளி. தீவிகை - விளக்கு. பொங்கு அழல் சிகை - கிளர்ந்து எரியும் தீக்கொழுந்தை. தோகையர் ஓதியே - பெண்களின் கூந்தல். தே மலர்த்தொகை - தேன் பொருந்திய பூங்கொத்துக்களை. அலர்ந்த பைம்கூழ் அகன்குளக் கீழன, மலர்ந்த வாயில் புனல்வழங் காமையால் உலர்ந்த; வன்கண் உலோபர் கடைத்தலை புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே. 11 11. அகன் குளக்கீழன - அகன்ற குளத்தின் கீழ் உள்ளன வாகிய. அலர்ந்த பைங்கூழ் - மடல் விரிந்த நெற்பயிர். மலர்ந்த வாயில் - திறந்த மதகின் வழியே. உலர்ந்த - காய்ந்தன. பயிர் காய்ந்தமைக்குப் பரிசிலர் உவமானம். நாவின் நீத்துஅரு நல்வளம் துன்னிய பூவின் நீத்தென, நாடு பொலிவொ ரீஇத், தேவி நீத்து,அரும் சேண்நெறி தாவிட, ஆவி நீத்த உடல்எனல் ஆயதே. 12 12. நாவின்நீத்து - நாவினாற் கூறும் புகழையும் நீங்கி. நீத்துஎன - நீங்கியதைப் போல. தேவும் நீத்து - இராமனும் நீங்கி. அரும் சேண் நெறி தாவிட - அரிய நீண்ட வழியிலே நடந்து வனத்திற்குச் செல்ல. கோசல நாட்டுக்குப் பிணம் உவமை. என்ற நாட்டினை நோக்கி, யிடர்உழந்து ஒன்றும் உற்றது உணர்ந்திலன்; உன்னுவான், `சென்று கேட்பதொர் தீங்குள தாம்எனா; நின்று நின்று நெடிதுயிர்த் தான்;அரோ. 13 13. -. மீண்டும் எய்தி,அம் மெய்யெனும் நல்அணி பூண்ட வேந்தன் திருமகன், புந்தி,தன் தூண்டு தேரினும் முந்துறத் தூண்டுவோன், நீண்ட வாயில் நெடுகர் நோக்கினான். 14 14. தூண்டு தேரினும் - ஓட்டப்படுகின்ற தேரைக் காட்டிலும். புந்திதான் முந்துறத் தூண்டுவான் - அறிவை முன்னே செல்லும் படி ஏவுகின்றவனாகிய பரதன். பரதன் கண்ட அயோத்தி ஈட்டு நன்புகழ்க்கு, ஈட்டிய யாவையும் வேட்ட வேட்டவர் கொண்மின்! விரைந்துஎனக்; கோட்டி மாக்களைக் கூறுவ போல்வன, கேட்டி லன்முர சின்கிளர் ஓதையே. 15 15. ஈட்டுநல் புகழ்க்கு - சேர்க்கின்ற நல்ல புகழுக்காக. வேட்டவேட்டவர் - விரும்பிய பொருள்களை விரும்பியவர்கள். கோட்டி மாக்களை - வட்டமான மக்களை. கூவுவபோல்வன - அழைப்பின் போல்வனவாகிய. முரசின் கிளர் ஓதை - முரசின் பரவிய ஓசையை; கேட்டிலன். தேரும், மாவும், களிறு, சிவிகையும், ஊரும் பண்டியும், ஊருநர் இன்மையால், யாரும் இன்றி எழில்இல வீதிகள், வாரி இன்றிய வாலுக ஆற்றினே. 16 16. வாரி இன்றிய - நீர் அற்ற. வாலுகம் ஆற்றினே - வெண் மணல் பரந்த ஆற்றைப்போல் காணப்பட்டது. அயோத்தி நகருக்கு நீர்வற்றிய ஆறு உவமை. தந்தையின் மரணம் கேட்டுத் தளர்தல் இத்தகைய காட்சியைக் கண்டு சென்ற பரதன் சத்துருக் கனனுடன் தசரதன் அரண்மனையை அடைந் தான்; அவனைத் தேடினான். ஆய காலையில் ஐயனைத் தந்தஅத் தூய தாயைத் தொழல்உறு வான்தனை, `கூயள் அன்னை குறுகதிர் என்றுஒரு வேய்கொள் தோளி தொழுது விளம்பினாள். 17 17. ஐயனைத் தந்த - இராமனைப் பெற்ற. தூய தாயை - கோசலையை. வேய் கொள் தோளி - மூங்கிலின் தன்மையைக் கொண்ட தோளை யுடைய. வந்து தாயை அடியில் வணங்கலும், சிந்தை ஆரத் தழுவினள்; `தீதிலர் எந்தை, என்ஐயர், எங்கையர், என்றனள்; அந்தம் இல்குணத் தானும் `அதாம் என்றான். 18 18. தீதிலர் - துதற்றவர்களா யுள்ளனரா? என்ஐயர் - என் தமையன் மார்கள். வேறு `மூண்டெழு காதலான் முளரித் தாள்தொழ வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்மும்ஆல்; ஆண்தகை நெடுமுடி அரசர் கோமகன் யாண்டையான் பணித்திர்; என்று இருகை கூப்பினான். 19 19. மூண்டு எழு காதலான் - மிகுந்த அன்புடையவனாகிய தந்தையின். முளரித்தாள் - தாமரை மலர்போன்ற பாதங்களை. விம்மும் - விரைகின்றது. ஆல்; அசை. Mdt‹ ciubra mÊÉš áªijahŸ `jhdt® tÈbjhiy¤J mtÅ jh§»a nj‹mk® bjÇayh‹ njt® ifbjhH thdf« vŒâdh‹; tUªjšÚ! என்றாள். 20 20. - எறிந்தன கடியசொல் செவியுள் எய்தலும், நெறிந்தலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன்; அறிந்திலன்; உயிர்த்திலன்; அசனி ஏற்றினால் மறிந்துயர் மராமரம் மண்உற்று என்னவே. 21 21. எறிந்து அன - கல்லைத் தூக்கி எறிந்தது போன்ற. மறிந்து உயர் - வானத்தை மறைத்து உயர்ந்த. மராமரம்; அசனி ஏற்றினான் - இடியேற்றால் மண் உற்று என்ன - மண்ணிலே சாய்ந்தாற் போல. நெடிது வீழ்ந்தனன். வாய்ஒளி மழுங்கத்தன் மலர்ந்த தாமரை ஆய்மலர் நயனங்கள் அருவி சோர்தரத் `தீயெரி செவியில்வைத் தனைய தீயசொல் நீஅலது உரைசெய நினைப்ப ரோஎன்றான். 22 22. வாய் ஒளி மழுங்க - வாயிலிருந்து வருகின்ற சிறந்த சொற்கள் குறைய. தீஎரி - தீக்கொழுந்தை. தீய சொல் - கொடும் சொல்லை. தந்தையை எண்ணித் தவித்தல் ‘அறந்தனை வேர்அறுத்து அருளைக் கொன்று,உயர் சிறந்தநின் தண்அளித் திருவைத் தேசுஅழித்து இறந்தனை ஆம்எனில், இறைவ நீதியை மறந்தனை, உனக்குஇதின் மாசு மேல்உண்டோ! 23 23. தண்ஒளி திருவை - குளிர்ந்த அன்பைப் பெற்ற அரசாட்சியாகிய செல்வத்தின். தேசு அழித்து - ஒளியைக் கொடுத்து. மாசு - குற்றம். ‘சினக்குறும்பு எறிந்து,எழு காமத்தீ அவித்து, இனக்குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும் மனக்குறு நெறிசெலும் வள்ளி யோய்!மறந்து உனக்குஉறு நெறிசெலல் ஒழுக்கின் பாலதோ! 24 24. சினம் குறும்பு எறிந்து - சினமாகிய தீமையைக்கொன்று. இனம் குறும்பு - சினம் காமம் இவைகளுக்கு இனமான தீமைகள். யாவையும் எற்றி - எல்லாவற்றையும் அழித்து. மனக்கு உறும் - மனத்திற்கு உகந்த. ‘முதலவன் முதலிய முந்தை யோர்பழம் கதையையும் புதுக்கிய தலைவன், கண்ணுடை நுதலவன் சிலைவிலின் நோன்மை நூறிய புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய்! 25 25. முதலவன்- சூரியன். கண்ணுடை நுதலவன் - சிவபெருமான். சிலைவிலின்- மலை போன்ற வில்லின். நோன்மை - வலிமையை. நூறிய - அழித்த. புதல்வனை - இராமனை. `பற்றுஉறு தவத்தினில் பயந்த மைந்தற்கு முற்றுலகு அளித்து,நீ முறையின் எய்திய கொற்றநல் முடிமணக் கோலம் காணவும் பெற்றிலை போலும்,நின் பெரிய கண்களால். 26 26. -. ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து, ஊற்றுறு கண்ணினன் உருகு வான்,தனைத் தேற்றினன் ஒருவகை; சிறிது தேறிய கூற்றுறழ் வரிசிலைக் குரிசில் கூறுவான். 27 27. ஆவலித்து - அழுது. தனை ஒருவகை தேற்றினன் - தன்னைத்தானே ஒருவாறு தேற்றிக் கொண்டான். கூற்று உறழ் - கூற்றுவனை ஒத்த. குரிசில் - பெருமையில் சிறந்த பரதன். இராமன் வனம் சென்றது கேட்டு வருந்தல் `எந்தையும், யாயும்,எம் பிரானும், எம்முனும் அந்தம்இல் பெரும்குணத்து இராமன்; ஆதலால், வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால், சிந்தைவெம் கொடுந்துயர் தீர்கலாது என்றான். 28 28. -. அவ்வுரை கேட்டலும், அசனி ஏறென வெவ்வுரை வல்லவள் மீட்டும் கூறுவாள்; `தெவ்அடு சிலையினாய்! தேவி, தம்பிஎன்று இவ்விரு வோரொடும் கானத் தான்; என்றாள். 29 29. -. `வனத்தினன் என்றவள் இசைத்த மாற்றத்தை `நினைத்தனன்; இருந்தனன்; நெருப்புண் டான்என; வினைத்திறம் யாதுஇனி விளைப்பது? இன்னமும் எனைத்துள கேட்பன துன்பம்? ah‹;v‹wh‹.` 30 30. வினைத்திறம் இனி விளைப்பது யாது - வினையின் கொடுமை இன்னும் உண்டாக்கும் துன்பம் எதுவோ? யான் இன்னமும்; கேட்பன - கேட்கக்கூடிய. துன்பம் எனைத்துள - துன்பம் எவ்வளவு உண்டோ? இராமன் காட்டுக்குச் சென்ற காரணம் அறிதல் ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல்;`அப் பூங்கழற் காலவன் வனத்துப் போயது, தீங்கிழைத்த அதனினோ? தெய்வம் சீறியோ? ஓங்கிய விதியினோ? ahâ ndh?எனா. 31 31. -. `தீயன இராமனே செய்யு மேல்,அவை தாய்செயல் அல்லவோ தலத்து ளோர்க்கெலாம்; போயது தாதைவிண் புக்க பின்னரோ? ஆயதன் முன்னரோ? mUS å®!என்றான். 32 32. தாய் செயல் அல்லவோ - தாய் தன் குழந்தையை வருத்தும் செயல் போன்றது அன்றோ? ஆய் அதன் முன்னரோ - காடு செல்லத் துணிந்தவனாய் அதற்கு முன்போ. `குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய செருக்கினால் அன்று;ஒரு தெய்வத் தாலும்அன்று; அருக்கனே அனையஅவ் வரசர் கோமகன் இருக்கவே வனத்துஅவன் ஏகி னான்; என்றாள். 33 33. - `குற்றம்ஒன் றில்லையேல், கொதித்து வேறுளோர் செற்றதும் இல்லையேல், தெய்வத் தால்அன்றேல், பெற்றவன் இருக்கவே பிள்ளை கான்புக உற்றதென்? bjÇju ciubrŒ å®?என்றான். 34 34. கொதித்து - சினந்து. வேறுஉளோர் - மற்றவர்களால். செற்றதும் - வெறுத்ததும். இல்லையேல் - காரணம் இல்லை யானால். பின் அவன் உவந்தது என் - பின்னர் தசரதன் இறந்ததற்குக் காரணம் என்ன? `வாக்கினால் வரந்தரக் கொண்டு மைந்தனைப் போக்கினேன் வனத்திடைப்; போக்கிப், பார்உனக்கு ஆக்கினேன்; அன்னது பொறுக்க லாமையால் நீங்கினான் தன்உயிர் நேமி வேந்து;என்றாள். 35 35. வாக்கினால் - அரசன் முன் எனக் களித்திருந்த வாக்கின் படி. பார் - நாட்டை. நேமிவேந்து - ஆட்சிச் சக்கரத்தை யுடைய அரசன். `தன் உயிர் நீக்கினான்; என்றாள். சூடின மலர்க்கரம், சொல்லின் முன்செவி கூடின; புருவங்கள் குதித்துக் கூத்துநின்று ஆடின; உயிர்ப்பினோடு அழற்கொ ழுந்துகள் ஓடின; உமிழ்ந்தன உதிரம் கண்களே. 36 36. சூடின மலர்க்கரம் - தலையிலே சூடி யிருந்த மலர் போன்ற கைகள். செவி கூடின - காதுகளைச் சேர்ந்தன. `கண்கள் உதிரம் உமிழ்ந்தன. கொடியவெம் கோபத்தால் கொதித்த கோளரி, கடியவள் தாய்எனக் கருது கின்றிலன்; நெடியவன் முனியும்என்று அஞ்சி நின்றனன்; இடிஉரும் அனையவெம் மொழிஇ யம்புவான். 37 37. கடியவள் - கொடியவளை. நெடியவன் - இராமன். பரதன் கைகேசியை இகழ்ந்து, தானும் பரிதவித்தல் `மாண்டனன் எந்தை,என் தம்முன் மாதவம் பூண்டனன் நின்கொடும் புணர்ப்பினால் என்றால், தீண்டிலென் வாய்அது, கேட்டும் நின்றயான் ஆண்டன னே,யன்றோ, அரசை ஆசையால்! 38 38. கொடும் புணர்ப்பினால் - கொடிய சூழ்ச்சியினால். வாய்அது கீண்டிலன் - உன் வாயைக் கிழிக்காமல் இருக்கின்றேன். `நீஇனும் இருந்தனை! யானும் நின்றனென்! ஏஎனும் மாத்திரத்து எற்று கிற்றிலென்! Mat‹ KÅí« v‹W mŠá nd‹myhš தாய்எனும் பெயர்எனைத் தடுக்கற் பாலதோ! 39 39. -. ‘சுழிஉடைத் தாய்சொலும் கொடிய சூழ்ச்சியால் வழியுடைத் தாய்வரு மரபை மாய்த்து,ஒரு பழியுடைத் தாக்கினன் பரதன் பண்டு,எனும் மொழியுடைத்து ஆக்கலின் முறைமை வேறுண்டோ! 40 40. சுழிஉடை தாய் சொலும் - வஞ்சனையுள்ள தாய் - கூறிய. வழி உடைத்தாய் - வழிவழியாக, வரும் மரபை மாய்த்து - வருகின்ற முறையை அழித்து. முறைமை - தீய முறைமை. வேறு `இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவெண்ணா; அறந்தான் ஈதென்று அன்னவன் மைந்தன் அரசெல்லாம் துறந்தான்; தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் பிறந்தான் ஆண்டான்; என்னும்இது என்னால் பெறலாமே. 41 41. `அந்த வரத்துக்கு; இழிவு எண்ணா - கேடு நினைக்காமல்; `தந்தை இறந்தான். `மாளும் என்றே தந்தையை உன்னான்; வசைகொண்டாள் கோளும் என்னா லே,எனல் கொண்டான்; அதுவன்றேல் மீளும் அன்றே, என்னையும் மெய்யே உலகெல்லாம் ஆளும் என்றே போயினன் அன்றோ? அரசாள்வான். 42 42. வசை கொண்டாள் - பழியைத் தேடிக் கொண்ட கைகேசியின். கோளு - கொள்கையும். `என்னாலே எனல் கொண்டான்; ‘வில்லார் தோளான் மேவினன் வெம்கா னகம்;என்ன நல்லான் அன்றே துஞ்சினன்; நஞ்சே அனையாளைக் கொல்லேன், மாயேன், வன்பழி யாலே குறைவற்றேன் 43 42. என்முன் - என் முன்னவனாக. உடன் வந்தான் - கூடப் பிறந்தவன். கைஆர் கல்லை - கையாகிய கலத்தில். புல்அடகு உண்ண - அற்பமான இலை உணவை வைத்து உண்ணவும். சாலியின் - செந்நெல்லின். நின்றது - நான் நின்றதை. நின்றார் - உலகில் நின்றவர். ‘வில்லார் தோளான் மேவினன் வெம்கா னகம்;என்ன நல்லான் அன்றே துஞ்சினன்; நஞ்சே அனையாளைக் கொல்லேன், மாயேன், வன்பழி யாலே குறைவற்றேன்mšny ndh?யான் அன்புடையார்போல் அழுகின்றேன். 44 44. வன்பழியாலே குறைவற்றேன் - கொடிய பழியால் நிரம்பினேன். `ஏன்றுன் பாவிக் கும்பி வயிற்றின் இடைவைகித் தோன்றும், தீராப் பாதகம் அற்றென் துயர்தீரச், சான்றும் தானே நல்அறம் ஆகத், தகைஞாலம் மூன்றும் காண, மாதவம் யானே முயல்கின்றேன். 45 45. ஏன்று பாவி உன்- இசைந்த பாவியாகிய உன்னுடைய. பாதகம் அற்று - பாவம் தீர்ந்து. `நல் அறம் தானே சான்றும் ஆக - நல்லறமே சான்றாக. `சிறந்தார் சொல்லும் நல்லுரை சொன்னேன்; செயல்எல்லாம் மறந்தாய், செய்தாய் ஆகுதி! மாயா உயிர்தன்னைத் துறந்தாய் ஆகில், தூயையும் ஆதி! உலகத்தே பிறந்தாய் ஆதி! ஈதலது இல்லை பிறிதுஎன்றான். 46 46. -. இவ்வாறு வருந்திச் சினந்த பரதன் கோசலையின் அரண்மனையை அடைந்தான். அவள் அடிகளிலே வீழ்ந்து அழுது புலம்பினான். `கொடியவர் யாவரும் குலங்கள் வேர்அற நொடிகுவென்; யான்;அது நுவல்வது எங்ஙனம்? கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன், முடிகுவென் அரும்துயர் முடிய என்னும்;ஆல். 47 47. கொடியவர் யாவரும் - இராமனுக்குக் கொடுமை செய்தவர்கள் அனைவரும். வேர் அற நொடிகிலர் - அடியோடு அழிந்திலர். அரும் துயர் முடிய - கொடுந் துயர் நீங்க. முடிகுவென் - இறப்பேன். `இரதம்ஒன்று ஊர்ந்துபார் இருளை நீக்கும் அவ் வரதனில் ஒளிபெற வளர்ந்த தொல்குலம், பரதன்என்று ஒருபழி படைத்தது என்னுமால்; மரகத மலைஎன் வளர்ந்த தோளினான். 48 48. ஒன்று இரதம் ஊர்ந்து - ஒற்றைச் சக்கரமுள்ள இரதத் திலே ஏறி ஊர்ந்து. அவ் வரதனின் - அந்தச் சூரியனைப் போல. `வாள்தொடு தானையான் வானில் வைகிடக், காடுஒரு தலைமகன் எய்தக், கண்இலா நாடுஒரு துயர்இடை நைவ தேஎனும்; தாள்தொடு தடக்கைஅத் தரும மேஅனான். 49 49. தாள் தொடு தடம்கை - முழந்தாளைத் தொடுகின்ற நீண்ட கைகளையுடைய; அத்தருமமே அனான் - பரதன். வாள்தொடு தானையான் - வாளைத் தரித்த சேனையையுடைய தசரதன். கோசலையின் கேள்வி புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள்; குலம்,பொறை, கற்பு, இவை சுமந்த கோசலை; `நிலம்பொறை ஆற்றலன், நெஞ்சம் தூய்துஎனாச் சலம்பிறிது உற,மனம் தளர்ந்து கூறுவாள். 50 50. புலர்வு - துன்பத்தை. நிலம்பொறை - ஆற்றலன் - அரச பாரத்தை ஏற்று நடத்தமாட்டான். நெஞ்சம் தூய்து - இவனுடைய உள்ளம் குற்றமற்றது. சலம் பிறிது உற - கோபம் அதற்கு மாறான பொறுமையை அடைய. ‘மைஅறு மனத்தொரு மாசு ளான்அலன்; செய்யனே;’என்பது தேரும் சிந்தையாள், ‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம், ஐய!நீ! அறிந்திலை போலும் ஆல்? என்றாள். 51 51. செய்யனே - நல்லவன்தான். கைதவம் - வஞ்சனையை. ஆல்; அசை. பரதன் பதைப்பு `அறம்கெட முயன்றவன், அருள்இல் நெஞ்சினன், பிறன்கடை நின்றவன், பிறரைச் சீறினோன், மறம்கொடு மன்உயிர் கொன்று வாழ்ந்தவன், துறந்தமா தவர்க்குஅரும் துயரம் சூழ்ந்துளோன். 52 52. பிறன்கடை - பிறன் மனை வாயிலில் அவன் மனைவியை விரும்பி. மறம்கொடு - இரக்கமற்ற தன்மையுடன். `தாய்பசி உழந்துயிர் தளரத் தான்தனிப் பாய்,பெரும் பாழ்வயிறு அளிக்கும் பாவியும், நாயகன் பட,நடந் தவனும் நண்ணும்அத் தீஎரி நரகத்துக் கடிது செல்கயான். 53 53. தான் தனிப்பாய் - தான் தனித்திருந்து. நாயகன் பட - தலைவன் அழியும்படி. நடந்தவன்- வஞ்சகமாக நடந்தவன். `பொய்க்கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன், கைக்கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன், எய்த்திடத்து இடர்செய்தோன், என்றுஇன் னோர்புகும் மெய்க்கொடு நரகிடை விரைவின் வீழ்க யான். 54 54. பொய்க்கரி - பொய்சாட்சி. கரந்து - ஒளிந்து நின்று. எய்த்திடத்து - இளைத்திருந்தபோது. `அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன், மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன், நிந்தனை தேவரை நிகழ்த்தி னோன்புகும் வெம்துயர் நரகத்து வீழ்க யானுமே. 55 55. -. ‘கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்து பால்உண்டோன், மன்றிடைப் பிறர்பொருள் மறைத்து வவ்வினோன், நன்றியை மறந்திடும் நயம்இல் நாவினோன், என்றிவர் உறும்நரகு என்ன தாகவே! 56 56. கன்று உயிர் ஓய்ந்து உக - கன்று உயிர் சோர்ந்து மாளும்படி; `பால் கறந்து உண்டோன். மன்றிடை - நீதி சபையிலே பொய் வழக்குத் தொடுத்து. நயம்இல் - நீதியற்ற. `ஆறுதன் உடன்வரும் அஞ்சொல் மாதரை ஊறுகொண்டு அலைக்கத்,தன் உயிர்கொண்டு ஏகினோன், சோறுதன் அயல்உளோர் பசிக்கத் துய்த்துளோன், ஏறும்அக் கதியிடை யானும் ஏறவே. 57 57. ஆறு தன்னுடன் வரும் - வழியிலே தன்னுடன்வரும் ஊறு கொண்டு - துன்பம் செய்யும் கருவியைக் கொண்டு. அலைக்க - பிறன் ஒருவன் துன்புறுத்துவதைக் கண்டு. துய்த்துளோன் - உண்டவன். ‘அழிவரும் அரசியல் எய்தி, ஆகும்என்று இழிவரு சிறுதொழில் இயற்றி, ஆண்டுதன் வழிவரு தருமத்தை மறந்து, மற்றொரு பழிவரு நெறிபடர் பதகன் ஆகயான்! 58 58. அழிவு அரும் - நிலையான. ஆகும் என்று - என்னால் எதையும் செய்ய முடியும் என்று கர்வங்கொண்டு. நெறிபடர் - வழியிலே செல்லுகின்ற. பதகன் - பாதகன். `கன்னியை அழிசெயக் கருதி னோன்,குரு பன்னியை நோக்கினோன், பருகி னோன்நறை, பொன்இகழ் களவினில் பொருந்தி னோன்,எனும் இன்னவர் உறுகதி என்ன தாகவே. 59 59. நறை பருகினோன் - கள் உண்டோன். பொன் - பொன்னை. இகழ் களவினில் - இகழத்தக்க திருட்டின்மூலம். பொருந்தினோன் - அடைந்தவன். `ஏற்றவர்க்கு ஒருபொருள் உள்ளது, இன்று,என்று மாற்றலன் உதவலன், வரம்பில் பல்பகல் ஆற்றினன் உழற்றும்ஓர் ஆதன் எய்தும்,அக் கூற்றுறு நரகின்ஓர் கூறு கொள்கயான். 60 60. மாற்றலன் உதவலன் - மாற்றாமல் உதவி செய்யாதவன். ஆற்றினன் உழற்றும் - வரச் செய்து ஒன்றும் கொடுக்காமல் துன்புறுத்தும். ஓர் ஆதன் - ஒரு மூடன். நரகின் ஓர் கூறு - நரகத்தின் ஒரு பாகத்தை. `தீயன கொடியவள் செய்த செய்கையை நாயினேன் உணரின்,நன் னெறியின் நீங்கலாத் தூயவர்க்கு இடர்இழைத்து உழலும், தோம்உடை ஆயவர்; வீழ்கதி அதனில் வீழ்கயான். 61 61. இடர் இழைத்து உழலும் - துன்பம் புரிந்து திரியும். தோம்உடை ஆயவர் - குற்றமுள்ளவர்கள். வீழ்கதி - விழுகின்ற நரக கதியிலே. கோசலை, இவ்வாறு வருந்திய பரதனைக் கானத்தி லிருந்து மீண்ட இராமனாகவே கருதினாள்; அவனைத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுத்தாள். `முன்னை நும்குல முதல்உ ளோர்கள்தாம் நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்! மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் உன்ன உன்னநைந்து உருகி விம்முவாள். 62 62. -. மன்னவன் ஈமக்கடன் பரதனும் கோசலையும் இவ்வாறு வருந்தும் சமயத்தில் அங்கே வசிட்டன் வந்தான். guj‹ mtid¥ gªjh‹; `vªij ah©ilah‹? என்றான். வசிட்டன் வாய்விட்டுப் பேச முடியாமல் கலங்கினான். கோசலை யின் உத்தரவு பெற்றுப் பரதன் வசிட்டனுடன் சென்று தந்தையின் உடலைக் கண்டான்; தவித்துப் புலம்பினான். பின்னர், பரதன், வசிட்டன், சுமந்திரன், அரசன் தேவிமார்கள், பரிசனங்கள் அனைவரும் அரசன் உடலை எடுத்துக்கொண்டு சரயு நதிக்கரையை அடைந்தனர். ஈமக் கடனுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னர் பரதனைப் பார்த்து `நீ செய்ய வேண்டிய கடன்களைச் செய். என்றனர். என்னும் வேலையில் எழுந்த வீரனை, `அன்னை தீமையால் அரசன் நின்னையும் துன்னு துன்பத்தால் துறந்து போயினான் முன்ன ரே;என முனிவன் கூறினான். 63 63. என்னும் வேலையில் - என்ற சமயத்தில். துன்னு துன்பத்தால் - உள்ளத்தில் பொருந்திய துன்பத்தினால். முனிவன் - வசிட்டன். இதைக் கேட்ட பரதன், இடியேறுண்ட அரவம் போல் ஏங்கினான்; அழுதான். `உரைசெய் மன்னர்,மற்று என்னில்,யாவரே? இரவி தன்குலத்து எந்தை முந்தையோர்; பிரத பூசனைக்கு உரிய பேறிலேன், அரசு செய்யவோ அமைவ தாயினேன். 64 64. எந்தை முந்தையோர் - என் தந்தை வழியிலே வந்த முன்னோர்களில். என்னில் யாவரே - என்னைப்போல் பாவம் புரிந்தவர்கள் யார்? பிரத பூசனைக்கு - பிரேதச் சடங்கு செய்வதற்கு. என்று கூறிநொந்து இடரின் மூழ்கும்,அத் துன்று தாரவற்கு, இளைய தோன்றலால் அன்று நேர்கடன் அமைவது ஆக்கினான், நின்று நான்மறை நெறிசெய் நீர்மையான். 65 65. இளைய தோன்றலால் - சத்துருக்கனனைக் கொண்டு. தேவியர் உடன்கட்டை ஏறல் இழையும், ஆரமும், இடையும், மின்னிடக் குழையும் மாமலர்க் கொம்ப னார்கள்தாம், தழையில் முண்டகம் தழுவு கான்இடை முழையில் மஞ்ஞைபோல் எரியின் மூழ்கினார். 66 66. தழைஇல் முண்டகம் - இலை யில்லாத தாமரை மலர்கள். தழுவுகான் இடை - பொருந்திய காட்டிலே. முழையின் - மலைக்குகையிலிருந்து வந்த. மஞ்ஞைபோல் - மயில்களைப் போல வந்து. கூடியிருந்த பெண்களின் முகங்கள் இலையற்ற தாமரைக்காடுகள் போல் இருந்தன. ஆங்கி, நீரினும் குளிர, அம்புயத் திங்கள் வாள்முகம் திருவி ளங்குறச், சங்கை தீர்ந்துதம் கணவர் பின்செலும் நங்கை மார்புகும் உலகம் நண்ணினார். 67 67. நீரினும் அங்கி குளிர - நீரைக்காட்டிலும் நெருப்பு குளிர்ச்சியைத் தர. சங்கை தீர்ந்து - உள்ளத் துயர் நீங்கி. அதன்பின் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள் எல்லாம், நூல் முறைப்படி செய்து முடிக்கப்பட்டன. அனைவரும் கலைந்து போயினர். துக்கம் கொண்டாட வேண்டிய நாள்களும் கழிந்த பின்னர் வசிட்டன் பரதன் இருக்கும் இடத்தை அடைந்தான். ஏனையோரும் வந்தனர். மன்னர் இன்றியே வையகம் வைகல்தான் தொன்மை அன்றெனத் துணியும் நெஞ்சினர், அன்ன மாநிலத்து அறிஞர் தம்மொடும் முன்னை மந்திரக் கிழவர் முந்தினார். 68 68. -. 12. ஆறுசெல் படலம் பரதனை அரசேற்க வேண்டுதல் மந்திரக் கிழவரும்,நகர மாந்தரும், தந்திரத் தலைவரும், தரணி பாலரும், அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் சுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். 1 ஆறு செல் படலம்: பரதன், இராமனை அழைத்து வரும்பொருட்டு வழி நடந்து சென்றதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. மந்திரக் கிழவர் - மந்திரிமார்கள். தந்திரத் தலைவரும் - சேனைத் தலைவர்களும். அந்தர முனிவர் - வானத்தில் செல்லும் ஆற்றல் உள்ள முனிவர்கள். குரிசிலை - பரதனை. சுற்றினர் இருந்துழிச் சுமந்தி ரப்பெயர் பொற்றடம் தேர்வலான், புலமை உள்ளத்தான் கொற்றவர்க்கு உறுபொருள் குறித்த கொள்கையான், முற்றுணர் முனிவனை முகத்து நோக்கினான். 2 2. கொற்றவர்க்கு - அரசனுக்கு. உறு பொருள் - நன்மை செய்வதையே. குறித்த - கடமையாகக் கொண்ட. கொள்கையான் - கொள்கையை யுடையவன். `கொற்றவர்க்கு - பரதனுக்கு. உறு பொருள் - மனத்தில் உற்ற செய்தியை. குறித்த - குறிப்பால் அறிந்த. கொள்கையான் - ஆற்றலையுடையவன். என்றும் கூறலாம். நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை, வாக்கினால் அன்றியே உணர்ந்த மாதவன் `காக்குதி உலகு,நின் கடன்அ தாம்என கோக்கும ரனுக்குஅது தெரியக் கூறுவான். 3 3. நோக்கினால் - பார்வையினால். மாதவன் - வசிட்டன். கோகுமரனுக்கு - பரதனுக்கு. `தருமம்என்று ஒருபொருள் தந்து-நாட்டுதல் அருமைஎன் பதுபெரிது அறிதி ஐயநீ! இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டிது; தெருள்மனத் தார்க்குஅலால் தெரிதற் பாலதோ. 4 4. ஒரு பொருள்தந்த - ஒப்பற்ற பொருளை யாவரும் பின்பற்றச் செய்து. அருமை - சிறந்த செயல். இது - இத்தருமம். தெருள் மனத்தார் - தெளிந்த மனத்தையுடையவர். `வள்உறு வயிரவாள் அரசுஇல் வையகம் நள்உறு கதிரிலாப் பகலும், நாள்ஓடும் தெள்உறு மதியிலா இரவும், தேர்தரின் உள்உறை உயிர்இலா உடலும் ஒக்குமே. 5 5. வள்உறு - உறையிலே உள்ள. வயிரவாள் அரசு இல் - வயிரவாளையுடைய அரசன் இல்லாத. வையகம் - உலகம். நள்உறு - விரும்புகின்ற. நாள் - நட்சத்திரம். `முறைதெரிந்து ஒருவகை முடிய நோக்குறின், மறையவன் வகுத்தன மண்ணில், வான்இடை, நிறைபெருந் தன்மையின் நிற்ப, செல்வன், இறைவனை இல்லன யாவை? காண்கிலம். 6 6. முடிய நோக்குறின் - நன்றாக ஆராய்ந்தால். நிற்ப செல்வன - நிற்பனவும் செல்வனவும் ஆகியவைகளில். இறைவரை யில்லன - தலைவரைப் பெற்றில்லாதவை. உந்தையோ இறந்தனன், உம்முன் நீத்தனன், வந்ததும் அன்னைதன் வரத்தின்; மைந்தநீ அந்தம்இல் பேர்அரசு அளித்தி! அன்னது சிந்தனை எமக்குஎனத் தெரிந்து கூறினான். 7 7. -. பரதன் அரசேற்க மறுத்தல் `தஞ்சம் இவ்வுலகம்நீ தாங்கு வாய்எனச் செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும், `நஞ்சினை நுகர்என நடுங்கு வாரினும் அஞ்சினன்; அயர்ந்தனன்; அருவிக் கண்ணினான். 8 8. -. நடுங்கினன்; நாத்தடு மாறி நாட்டமும் இடுங்கினன்; மகளிரின் இரங்கு நெஞ்சினன்; ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதரத் தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான். 9 9. இடுங்கினன் - வருந்தினான். உணர்வு கைதர - அறிவு கைகொடுக்க. `அரசவைக்கு; உள்ளம் - தன் மனத்தில் உள்ளதை; `சொல்லுவான் தொடங்கினன். ‘மூன்றுல கினுக்கும்ஓர் முதல்வ னாய்,முதல் தோன்றினன் இருக்க,யான் மகுடம் சூடுதல் சான்றவர் உரைசெய்அத் தருமம் ஆயதேல், ஈன்றவள் செய்கையில் இழுக்குண் டாகுமோ? 10 10. சான்றவர் உரை செய் - அறிவுடையோரால் சொல்லப் படுகின்ற. அத்தருமம் ஆயதேல் - அச்சிறந்த அறமாகுமானால்? ‘அடைவரும் கொடுமைஎன் அன்னை செய்கையை, நடைவரும் தன்மைநீர் நன்றிது, என்றிரேல், இடைவரும் காலம்ஈண்டு இரண்டும் நீத்து,இது கடைவரும் தீநெறிக் கலியின் ஆட்சியோ? 11 11. இடைவரும் - கிருதயுகம் கலியுகம் இரண்டுக்கும் இடையில் வரும். காலம் இரண்டும் ஈண்டு நீத்து - திரேதா யுகம். துவாபர யுகம் என்னும் இரண்டையும் இங்கே நீக்கி. `வேத்தவை இருந்தநீர், விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார், மூத்தவர் இருக்கவே, முறைமை யால்நிலம் காத்தவர் உளர்எனில், காட்டிக் காண்டிரால். 12 12. விமலன் உந்தியின் - திருமாலின் உந்தியிலே. பூத்தவன் முதலினர் - தோன்றியவன் முதலோராக. தோன்றினார் - பிறந்தவர்களிலே. காட்டிக் காண்டிர் - மெய்ப்பித்துக் காட்டுங்கள். ஆல்; அசை. `நன்னெறி என்னினும், நான்இந் நானிலம் மன்உயிர்ப் பொறைசுமந்து இருந்து வாழ்கிலேன்; அன்னவன் தனைக்கொணர்ந்து, அலங்கல் மாமுடி, தொல்நெறி முறைமையில் சூட்டல் காண்டிரால். 13 13. -. `அன்றெனில் அவனொடும் அரிய கான்இடை நின்றினிது அருந்தவம் நெறியின் ஆற்றுவென்; ஒன்றினி உரைக்கின்,என் உயிரை நீக்குவென்; என்றனன் என்றபோது இருந்த பேரவை. 14 14. -. `ஆன்றபேர் அரசனும் இருப்ப, ஐயனும் ஏன்றனன் மணிமுடி; ஏந்தல்! வேந்தநீ! வான்தொடர் திருவினை மறுத்தி, மன்இளம் தோன்றல்கள் யார்உளர்? நின்னின் தோன்றினார். 15 15. ஐயனும் - இராமனும். வான் தொடர் - பெருமை நிறைந்த. திருவினை - அரச செல்வத்தை. மன் இளம் தோன்றல்கள் - அரச குமாரர்கள். `ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும், வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ! ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் வாழிய நின்புகழ்! என்று வாழ்த்தினார். 16 16. வளர்க்க வேண்டுமோ - புகழைப் பெருக்க வேண்டுமோ. எஞ்சினும் - அழிந்தாலும். குரிசிலும் தம்பியைக் கூவிக், கொண்டலின் முரசறைந்து இந்நகர் முறைமை வேந்தனைத் தருதும்ஈண்டு என்பது சாற்றித், தானையை விரைவினில் எழுகென விளம்பு வாய்,என்றான். 17 17. கொண்டலின் - மேகத்தைப் போன்ற ஒலியையுடைய. முறைமை வேந்தனை - அரச முறைக்கு உரிய இராமனை. இந்நகர் தருதும் - இந்நகருக்கு அழைத்து வருவோம். பரதன் இராமனைக் கொணரப் புறப்படுதல் நல்லவன் உரைசெய, நம்பி கூறலும், அல்லலின் அழுங்கிய அன்பின் மாநகர் ஒல்என இரைத்ததால், உயிர்இல் யாக்கைஅச் சொல்எனும் அமிர்தினால் துளிர்த்தது என்னவே. 18 18. நம்பி கூறலும் - சத்துருக்கனன் அவ்வாறே பறையறைந்து தெரிவிக்கும்படி செய்தவுடன். அவித்தஐம் புலத்தவர், ஆதி யாய்உள புவித்தலை உயிர்எலாம், இராமன் பொன்முடி கவிக்கும்என்று உரைக்கவே களித்த தால்;அது செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம். 19 19. ஐம்புலத்தவர் - முனிவர்கள். அவித்த - அடக்கிய. எழுந்தது பெரும்படை, ஏழு வேலையின் மொழிந்தபேர் ஊழியின் முழங்கி; முந்தெழ அழிந்தது கேகயன் மடந்தை ஆசை;போய்க் கழிந்தது துயர்;நெடும் காதல் தூண்டவே. 20 20. பெரும்படை மொழிந்த பேர் ஊழியின் - பெரிய சேனைகள், சொல்லப்பட்ட பெரிய ஊழிக்காலத்திலே. ஏழு வேலையின் முழங்கி எழுந்தது - ஏழு கடல்களும் ஒலித்து எழுந்தாற் போல முழங்கிக் கொண்டு புறப்பட்டது. நெடும் காதல் தூண்டவே துயர் கழிந்தது - பெரிய அன்பு தூண்டிய தனால் அந்நகரத்தாரின் துன்பம் நீங்கிற்று. தாரையும், சங்கமும், தாளம், கொம்பொடு, வார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும் பேரியும் இயம்பல சென்ற; பேதைமைப் பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. 21 21. வார்மிசை - வார் பொருந்திய. பம்பையும் - பம்பை என்னும் வாத்தியமும். பேரியும் இயம்பல - பேரிகைகளும் ஒலியில்லாமல். பேதைமைப் பூரியர் - அறிவற்ற அற்பர்கள். தாவரும் நாண்முதல் அணிய லால்தகை மேவரு கலங்களை வெறுத்த மேனியர், தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர், பூஉதிர் கொம்பென மகளிர் போயினார். 22 22. தாஅரும் - அழியாத. நாண் முதல் - நாணம் முதலான நல்ல குணங்களாகிய அணிஅலால் - அணிகலன்களைத் தவிர. மருள் கொள் - மயங்கும்படி. அலைநெடும் புனல்அறக் குடித்த லால்,புவி நிலைபெற நிலைநெறி நிறுத்த லால்,நெடு மலையினை மண்ணுற அழுத்த லால்,தமிழ்த் தலைவனை நிகர்த்ததுஅத் தயங்கு தானையே. 23 23. புனல்அற - நீர் முழுவதையும். புவி நிலைபெற - உலகம் நிலைக்கும் படி. நெறிநிலை நிறுத்தலால் - ஒரு நெறியிலே நிறுத்தியதனால். தமிழ்த் தலைவனை - அகத்திய முனிவனை. தயங்கு - நிறைந்த. சேனைக்கு அகத்தியன் உவமை. அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமாச் செறிபெருந் தானையும், திருவும் நீங்கலால், குறியவன் புனல்எலாம் வயிற்றில் கொண்டநாள் மறிகடல் ஒத்தது,அவ் வயோத்தி மாநகர். 24 24. ஆதி அந்த மா - அடியோடு முடிவாக. குறியவன் - அகத்திய முனிவன். மறிகடல் ஒத்தது - அலை வீசிய கடல் வற்றிப் போனதைப் போல் காணப்பட்டது. அயோத்திக்கு வற்றிய கடல் உவமை. இன்னணம் நெடும்படை ஏக, ஏந்தலும் தன்உடைத் திருஅரைச் சீரை சாத்தினான்; பின்இளை யவனொடும், பிறந்த துன்பொடும், நன்னெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான், 25 25. ஏந்தலும் - பரதனும். தேர்மிசை நடத்தல் - தேரின் மேலேறிப் போவதை. மேயினான் - செய்தான். தாயரும், அருந்தவத் தவரும், தந்தையின் ஆயமந் திரியரும், அளவில் சுற்றமும், தூயஅந் தணர்களும், தொடர்ந்து சூழ்வரப் போயினன் திருநகர்ப் புரிசை வாயிலே. 26 26. -. மந்தரைக் கூற்றமும் வழிச்செல் வாரொடும் உந்தியே போதல்கண்டு, இளவல், ஓடிப்போய், அந்தரத்து எற்றுவான், அழன்று பற்றலும், சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான். 27 27. உந்தியே - தள்ளிக்கொண்டு நடந்து. எற்றுவான் - எறியும் பெருட்டு. இளவல் - சத்துருக்கனன். சுந்தரத் தோளவன் - பரதன். முன்னையர் முறைகெட முடித்த பாவியைச் சின்னபின் னம்,செய்தென் சினத்தைத் தீர்வெனேல்; `என்னையின்று என்ஐயன் துறக்கும் என்றலால் `அன்னைஎன்று உணர்ந்திலென்,ஐய நான்என்றான். 28 28. -. `ஆதலால் முனியும்என்று ஐயன் அந்தம்இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்; கோதிலா அருமறை குலவு நூல்வலாய்! போதும்நாம்; என்றுகொண்டு அரிதின் போயினான். 29 29. `ஆதலால், அந்தம்இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும் ஐயன் முனியும் என்று - இராமன் வெறுப்பான் என்று உணர்க. இவ்வாறு சென்ற பரதன், தன் சேனையுடன், இராமனும் சீதையும் இளவலும் தங்கியதோர் சோலை யிலே தங்கினான். அல்அணை நெடும்கண்நீர் அருவி ஆடினன்; கல்அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்; வில்அணைத்து உயர்ந்ததோள் வீரன் வைகிய புல்அணை மருங்கில்தான் பொடியின் வைகினான். 30 30. அல் அணை - இரவு வந்தபோது. கல்அணை - கல்லிலே பொருந்திய. புல்அணை மருங்கில் - புல் படுக்கையின் பக்கத்தில். பொடியின் - புழுதியிலே. 13. கங்கை காண் படலம் பூவிரி பொலன்கழல் பொருவில் தானையான், காவிரி நாடன்ன கழனி நாடுஒரீஇத், தாவர சங்கமம் என்னும் தன்மைய யாவையும் இரங்கிடக், கங்கை எய்தினான். 1 கங்கை காண் படலம்: பரதனும், அவன் சேனையும் கங்கையைக் காணுவதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. பூவிரி - அழகுடன் விளங்கும். பொலன்கழல் - பொன் கழலையணிந்த. பொருஇல் - ஒப்பற்ற. காவிரி நாடு - சோழ நாடு. ஒரீஇ - நீங்கி. குகன் கோபம் கான்தலை நண்ணிய காளை பின்படர் தோன்றலை, அவ்வழித் தொடர்ந்து சென்றன, ஆன்றவர் உணர்த்திய அக்கு ரோணிகள் மூன்றுபத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே. 2 2. கான்தலை நண்ணிய - காட்டில் சென்ற. காளை - காளை போன்ற இராமன். பின்படர் - பின் தொடர்ந்த. தோன்றலை - பரதனை. அவ்வழி - அவ்வாறே. ஆன்றவர் - அறிஞர்கள். மூன்று பத்தாயிரத்து இரட்டி - அறுபதினாயிரம். யானை 21,870 தேர் 21,870. குதிரை 65,610 காலாள் 2,18,700 கொண்டது ஒரு அக்குரோணியாகும். அப்படை கங்கையை அடைந்த ஆயிடை, `துப்புடைக் கடலின்நீர் சுமந்த மேகத்தை ஒப்புடை அண்ணலோடு உடற்ற வேகொலாம் இப்படை எடுத்ததுஎன்று எடுத்த சீற்றத்தான். 3 3. ஆயிடை - அப்பொழுது. துப்பு உடை - தூய்மையான. மேகத்தை ஒப்பு உடை அண்ணல்; இராமன். உடற்றவேகொல் ஆம் - போர் செய்வதற்காகவோ. எடுத்த - மிகுந்த. குகன்எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்; தொகைமுரண் சேனையைத் துகளின் நோக்குவான்; நகைமிகக், கண்கள்தீ நாற, நாசியில் புகைஉறக், குனிப்புறும் புருவப் போர்விலான். 4 4. கூற்றின் - எமனைப் போன்ற. தொகை முரண் - மிகுந்த தொகையும் வலிமையும் உள்ள. துகளின் - தூசியைப்போல். தீநாற - கோபத் தீ தோன்ற. நாசி - மூக்கு. குனிப்பு உறும் - வளைகின்ற. புருவம் - புருவமாகிய. கட்டிய சுரிகையன், கடித்த வாயினன், வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன், கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன், கிட்டியது அமர்எனக் கிளர்ந்த தோளினான். 5 5. சுரிகை - உடை வாள். கிளர்ந்த - பருத்த; பூரித்த. `எலியெலாம் இப்படை, அரவன் யான்,என ஒலிஉலாம் சேனையை உவந்து கூவினான்; வலிஉலாம் உலகினில் வாழும் வள்உகிர்ப் புலிஎலாம் ஒருவழிப் புகுந்த போலவே. 6 6. என - என்று கூறி. வள் உகிர் - கூர்மையான நகங்களை யுடைய. `புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போல (நின்ற) ஒலிஉலாம் சேனையை உவந்து கூவினான். குகனுடைய சேனைகள் அவனைச் சூழ்ந்து நின்றன; பரதன் சேனைகள் வட கரையிலும், குகனுடைய சேனைகள் தென்கரையிலும் நின்றன. குகன் கோப மொழிகள் தோன்றிய புளிஞரை நோக்கிச், `சூழ்ச்சியின் ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு ஏன்றனென், என்உயிர்த் துணைவற்கு ஈகுவான் ஆன்றபேர் அரசு,நீர் அமைதி ராம்என்றான். 7 7. புளிஞரை - வேடர்களை. ஏன்றனன் - முடிவு செய்தேன். நீர் அமைதிர் ஆம் - நீங்களும் இதற்கு இணங்குவீர்களாக. `துடிஎறி; நெறிகளும், துறையும் சுற்றுற ஒடிஎறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்! foba¿ f§ifÆ‹ fiutª njh®fis¥ `ão,v¿, gl,`vdh¥ bga®¤J« TWth‹.` 8 8. துடி எறி - பறையை அடியுங்கள். ஒடிஎறி - அழித்து விடுங்கள். அம்பிகள் - மரக்கலங்கள். கடிஎறி - மணம் வீசுகின்ற. பட பிடிஎறி எனா - அழியும்படி பிடியுங்கள், வெட்டுங்கள் என்று. வேறு அஞ்சன வண்ணன்என் ஆருயிர் நாயகன் ஆளாமே, வஞ்சனை யால்அரசு எய்திய மன்னரும் வந்தாரே! செஞ்சரம் என்பன தீஉமிழ் கின்றன செல்லாவோ? உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ? 9 9. அஞ்சன வண்ணன் - இராமன். தீ உமிழ்கின்றன செஞ்சரம் என்பன - தீயைச் சிந்துகின்றனவாகிய சிவந்த அம்புகள் என்பவை. ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ? வேழ நெடும்படை கண்டுவி லங்கிடும் வில்ஆரோ? தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்அன்றோ? ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ? 10 10. விலங்கிடும் - பயந்து ஒதுங்குகின்ற. வில்லாளோ - வில்வீரனா யான்? ஏழமை - அறியாமையையுடைய. ‘முன்னவன் என்று நினைந்திலன், மொய்புலி அன்னான்ஓர் பின்னவன் நின்றனன் என்றிலன், அன்னவை பேசானேல், என்இதென் என்னை இகழ்ந்தது?இவ் எல்லை கடந்தன்றோ? மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும்சரம் வாயாவோ? 11 11. முன்னவன் - தமையன். மொய்புல் அன்னான் - வலிமை பொருந்திய புலியைப் போன்ற. வாயாவோ - தைக்காவோ? ‘பாவமும், நின்ற பெரும்பழி யும்,பகை, நண்போடும் ஏவமும் என்பவை மண்உல காள்பவர் எண்ணாரோ? ஆவது போக;என் ஆருயிர்த் தோழமை தந்தான்மேல் போவது, சேனையும் ஆருயி ரும்கொடு போய்அன்றோ? 12 12. ஏவமும் என்பவை - தீமையும் என்பவைகளைப்பற்றி. ஆவது போக - ஆவது ஆகட்டும். என் ஆருயிர் - எனது அரிய உயிரைப்போல. `அருந்தவம் என்துணை ஆள, இவன்புவி ஆள்வானோ? மருந்தெனின் அன்றுஉயிர், வண்புகழ் கொண்டுபின் மாயேனோ? பொருந்திய கேண்மை உகந்தவர் தம்மொடு போகாதே இருந்தது நன்று; கழிக்குவென் என்கடன்; இன்றோடே. 13 13. உகந்தவர் - நட்பை விரும்பியவர். ‘நின்ற கொடைக்கைஎன் அன்பன் உடுக்க நெடும்சீரை, அன்று கொடுத்தவர் மைந்தர் பலத்தை,என் அம்பாலே கொன்று குவித்த நிணம்கொள் பிணக்குவை, கொண்டோடித் துன்று திரைக்கடல் கங்கை மடுத்திடை தூராதோ? 14 14. நிணங்கொள் பிணக்குவை - மாமிசங்களைக் கொண்ட பிணக்குவியலை. கங்கை கொண்டு ஓடி - கங்கை இழுத்துக் கொண்டு ஓடி. துன்று திரைக்கடல் மடுத்து - நெருங்கிய அலைகளையுடைய கடலை அடைந்து. இடை தூராதோ - அக்கடலிடத்தை மேடாக்காதோ? `ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரே,ஆள, `வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ? நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர், நாம்ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ? 15 15. ஆடுகொடிப் படை - அசைகின்ற கொடிகள் ஏந்திய படையை. ‘மாமுனி வர்க்குஉற வாகி,வனத்திடை யேவாழும், கோ,முனி யத்தகும் என்று மனத்து,இறை கொள்ளாதே, ஏமுனை உற்றிடில், ஏழு கடற்படை என்றாலும், ஆமுனை யில்சிறு கூழ்என இப்பொழுது ஆகாதோ? 16 16. கோ - இராமன். முனியத்தகும் - கோபிக்கக் கூடும். என்று மனத்து இறைகொள்ளாதே - என்று உள்ளத்திலே சிறிதும் நினைக்காமல். ஏமுனை - போர் முனையை. உற்றிடில் - அடைந்தால். ஆ முனையில் - பசுவின் எதிரிலே பட்ட. சிறுகூழ் என - இளம் பயிரைப்போல. பரதனுக்குச், சுமந்திரன் குகனைப் பற்றிக் கூறுதல் என்பன சொல்லி, இரும்பன மேனியர் ஏனோர்முன், வன்பணை வில்லினன், மல்உயர் தோளினன், வாள்வீரற்கு அன்பனும் நின்றனன்; நின்றது கண்டு,அரி ஏறுஅன்ன முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர்வல்லான். 17 17. இரும்புஅன மேனியர் - இரும்பைப் போன்ற உடலின ராகிய. ஏனோர்முன் - மற்றைய வேடர்களின் முன்பு. வன்பணை - வலிமையுள்ள பருத்த. மல்உயர் - மற்போர் செய்து பழகி - உயர்ந்த. வாள் வீரற்கு - வாள் வீரனாகிய இராமனுக்கு. அன்பன் - குகன். அரியேறு அன்னமுன்பன் - ஆண் சிங்கம் போன்ற வலிமையுள்ள பரதன். மூரிய தேர் வல்லான் - வலிமையுள்ள தேரோட்டுவதில் வல்லவனாகிய சுமந்திரன். `கங்கைஇரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான், உங்கள்குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன்; உயர்தோளான், வெம்கரியின் ஏறனையான், வில்பிடித்த வேலையினான், கொங்கலரும் நறுமதண்தார்க் குகன்எனும் குறியுடையான். 18 18. வேலையினான் - கடல் போன்ற சேனையையுடையவன். கொங்கு அலரும் - மகரந்தங்கள் சிந்துகின்ற. நறும் தண்தார் - மணமுள்ள குளிர்ந்த மாலையை அணிந்த. குறி - பெயர். `கல்காணும் திண்மையான், கரைகாணாக் காதலான், அல்குஆணி கண்டனைய அழகமைந்த மேனியான், மல்காணும் திருநெடுந்தோள் மழைகாணும் மணிநிறத்தோய்! நின்காணும் உள்ளத்தான் நெறிஎதிர்நின் றனன்;`என்றான். 19 19. கல் காணும் - மலையைப் போன்ற. அல்கு ஆணி கண்டுஅனைய - இரவின் மூலத்தைக் கண்டால் போன்ற. மல் காணும் - மல்யுத்தத்திலே வெற்றி காணும். மழை காணும் - மேகத்தைப் போல் காணப்படுகின்ற. தன்முன்னே அவன்தன்மை, தந்தைதுணை முந்துரைத்த சொல்முன்னே உவக்கின்ற துரிசுஇலாத் திருமனத்தான், `மன்முன்னே தழீஇக்கொண்ட மனக்கினிய துணைவனேல், என்முன்னே அவன்காண்பென் யானேசென்று;என எழுந்தான். 20 20. தந்தை துணை - தந்தையின் துணைவனாகிய சுமந்திரன்; தந்தையைப் போன்ற துணைவனாகிய சுமந்திரன். துரிசு இலா - களங்கமற்ற. மன் - இராமன். என்றெழுந்து, தம்பியொடும், எழுகின்ற காதலொடும், குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி, நின்றவனை நோக்கினான்; திருமேனி நிலைஉணர்ந்தான்; துன்றுகரு நறும்குஞ்சி எயினர்கோன் துண்என்றான். 21 21. நின்றவனை - நின்ற பரதனை. எயினர்கோன் துண் என்றான் - வேடர் தலைவனாகிய குகன் திடுக்கிடடான். பரதனும் குகனும் பிரிவுகொள்ளுதல் வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை, நற்கலையில் மதியென்ன நகைஇழந்த முகத்தானைக், கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான், விற்கையினின்று இடைவீழ, விம்முற்று நின்றொழிந்தான். 22 22. வற்கலை - மரவுரி. மாசடைந்த - அழுக்கடைந்த. நல் கலைஇல் - நல்ல ஒளியற்ற. மதிஎன்ன - சந்திரனைப் போன்ற. கல் கனிய - கல்லும் கனியும்படி. `நம்பியும்என் நாயகனை ஒக்கின்றான், அயல்நின்றான், தம்பியையும் ஒக்கின்றான், தவவேடம் தலைநின்றான்; துன்பம்ஒரு முடிவில்லைத்; திசைநோக்கித் தொழுகின்றான்; எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான். 23 23. -. `உண்டுஇடுக்கண் ஒன்றுடையான்; உலையாத அன்புடையான், கொண்டதவ வேடமே கொண்டிருந்தான்; குறிப்பெல்லாம் கண்டுணர்ந்து பெயர்கின்றேன், காமின்கள், நெறி;என்னாத் தண்துறையோர் நாவாயில் ஒருதனியே தான்வந்தான். 24 24. உண்டு இடுக்கண் ஒன்று உடையான் - உண்டாகிய துன்பம் ஒன்றை உடையவன். உலையாத - அழியாத. அன்புடையான் கொண்ட - அன்புள்ள இராமன் கொண்டிருந்த. குறிப்பெல்லாம் - எண்ணமெல்லாம். வந்துஎதிரே தொழுதானை, வணங்கினான் மலர்இருந்த அந்தணனும் தலைவணங்கும் அவனும்,அவன் அடிவீழ்ந்தான்; தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான். 25 25. தொழுதானை - தொழுத குகனை. அவனும் - பரதனும். அவன் - அக்குகன். அடி வீழ்ந்தான். பரதன் அடிகளிலே வீழ்ந்து வணங்கினான். சீர்த்தியான் - சிறப்புள்ளவனாகிய பரதன். வேறு தழுவின புளிஞர் வேந்தன், தாமரைச் செங்க ணானை, `எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை என்றான்; `முழுதுலகு அளித்த தந்தை, முந்தையோர் முறையி னின்றும் வழுவினன்; அதனை நீக்க மன்னனைக் கொணர்வான்; என்றான். 26 26. தழுவின புளிஞர் வேந்தன் - தழுவிக் கொள்ளப் பட்டவனாகிய குகன். எழுவினம் - கல்தூணைவிட. முந்தையோர் - முன்னோர். முறையினின்றும் வழுவினன் - முறையிலிருந்து தவறினான். மன்னனை - இராமனை. கொணர்வான் - கொண்டு வரும் பொருட்டு வந்தேன். கேட்டனன் கிராதர் வேந்தன், கிளர்ந்தெழும் உயிர்ப்பன்ஆகி, மீட்டும்மண் அதனில் வீழ்ந்தான்; விம்மினன் உவகை பொங்கத் தீட்டரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன், பொய்யில் உள்ளத்தான், புகலல் உற்றான். 27 27. கிராதர் - வேடர்கள். கிளர்ந்து எழும் - ஓங்கி எழுகின்ற. உயிர்ப்பன் ஆகி - மூச்சையுடையவன் ஆகி. விம்மினன் - உடல் பூரித்தான். `தாய்உரை கொண்டு,தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்ன நீத்துச், சிந்தனை முகத்தில் தேக்கிப், போயினை என்ற போழ்து,புகழினோய் தன்மை கண்டால், ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா 28 28. முகத்தில் சிந்தனை தேக்கி - முகத்தில் கவலை மிகுந்து. நின்கேழ் ஆவரோ - உனது கீர்த்திக்கு ஒப்பாவாரோ. அம்மா; அசை. `என்புகழ் கின்றது ஏழை எயினனேன்; இரவி என்பான் தன்புகழ்க் கற்றை, மற்றை ஒளிகளைத் தவிர்க்கு மாபோல், மன்புகழ் பெருமை, நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம், உன்புகழ் ஆக்கிக் கொண்டாய்! ca®Fz¤J cuî¤ njhshŒ! 29 29. இரவி என்பான்தன் - சூரியனுடைய. புகழ்க்கற்றை - புகழக் கூடிய ஒளித் தொகுதி. மன்புகழ் பெருமை - அரசர்கள் புகழ்கின்ற பெருமையை யுடைய. உரவு - வலிமை. எனஇவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறிப் புனைகழல் புலவு வேல்கைப் புளிஞர்கோன், பொருவில் காதல் அனையவற்கு அமைவில் செய்தான்; ஆர்அவற்கு அன்பி லாதார்? நினைவரும் குணம்கொடு அன்றோ இராமன்மேல் நிமிர்ந்த காதல்? 30 30. மாற்றம் - சொற்கள். புலவு - புலால் நாற்றம் வீசுகின்ற. பொரு இல்காதல் - ஒப்பற்ற அன்புடைய. அனையவற்கு - அப்பரதனுக்கு. அமைவில் செய்தான் - தகுந்தவாறு உபசாரம் செய்தான். குணம் கொடு அன்றோ - குணங்களைக் கொண்டன்றோ. இராமன்மேல் நிமிர்ந்த காதல் - இராமன் மீது குகனுக்கு நிறைந்த காதல் உண்டாயிற்று? அவ்வழி அவனை நோக்கி அருள்தரு வாரி அன்ன செவ்வழி உள்ளத் தண்ணல், தென்திசைச் செங்கை கூப்பி,‘எவ்வழி உறைந்தான் நம்முன்? என்றலும் எயினர் வேந்தன் `இவ்வழி வீர யானே காட்டுவல் எழுக; என்றான். 31 31. அவ்வழி - அவ்விடத்தில். அருள் தருவாரி அன்ன - அருள் சுரக்கும் கடல் போன்ற. செவ்வழி உள்ளத்து - நல் வழியை நாடும் உள்ளத்தையுடைய. அண்ணல் - பரதன். எவ்வழி - எவ்விடத்தில். கார்எனக் கடிது சென்றான், கல்லிடைப் படுத்த புல்லில் வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்; பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரல் பரவை புக்கான்; வார்மணிப் புனலான் மண்ணை மண்ணுநீர் ஆட்டும் கண்ணான். 32 32. கார்என - மேகம்போல. கல்இடை படுத்த புல்லின் - கல்வி பரப்பிய புல்லின்மேல். வார்சிலை - நீண்ட வில். வள்ளல் - இராமன். பருவரல் பரவை - துன்பக் கடலில். வார்மணி - ஒழுகுகின்ற கருமணி போன்ற. புனலால் - நீரால். மண்ணை மண்ணும் - மண்ணைக் கழுவுகின்றது போல. நீர் ஆட்டும் கண்ணான் - நீரால் முழுகச் செய்யும் கண்ணையுடைய பரதன். `இயன்றதுஎன் பொருட்டி னால்இவ் இடர்உனக்கு என்ற போழ்தும், அயின்றனை கிழங்கும் காயும் அமிழ்துஎன; அரிய புல்லில் துயின்றனை; எனவும், ஆவி துறந்திலென், சுடரும் காசு குயின்றுஉயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே. 33 33. `என் பொருட்டினால் இவ்இடர் உனக்கு இயன்றது இடர் - துன்பம். இயன்றது - உண்டாயிற்று. அயின்றனை - உண்டனை. சுடரும் காசு குயின்று - ஒளிவிடும் இரத்தினங்கள் பதித்து. உயர் - உயர்ந்து விளங்குகின்ற. யான் கொள்வென் - நான் அடைந்தவனே ஆவேன். தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லு வான்,’அந் நீண்டவன் துயின்ற சூழல் இதுவெனின், நிமிர்ந்த நேயம் பூண்டவன், தொடர்ந்து பின்னே போந்தவன், பொழுது நீத்ததுah©L?என இனிது கேட்டான்;எயினர்கோன் இதனைச் சொன்னான். 34 34. தூண்தர - தூணின் தன்மையைத் தரும்படி. நிமிர்ந்த - உயர்ந்த. நீண்டவன் - இராமன். சூழல் - இடம். நிமிர்ந்த நேயம் - மிகுந்த அன்பு. பொழுது நீத்தது - பொழுது கழிந்தது. `அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும், அவளும் துஞ்ச, வில்லைஊன் றியகை யோடும், வெய்துஉயிர்ப் போடும். வீரன், கல்லைஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள்நீர் சொரியக் கங்குல் எல்லைகாண் பளவும் நின்றான்! இமைப்பிலென் நயனம்; என்றான். 35 35. அல்லை ஆண்டு அமைந்த - இருளைக் கொண்டு அமைந்த.அழகன் - இராமன். அவள் - சீதை. வெய்து உயிர்ப் போடும் - பெருமூச்சோடும். வீரன் - இலக்குவன். கல்லை ஆண்டு உயர்ந்த - கல்லை அடக்கி உயர்ந்த. கங்குல் எல்லை - இரவின் முடிவு. நயனம் இமைப்பிலென் - நானும் கண்களை இமைத்திலேன். என்பத்தைக் கேட்ட மைந்தன் `இராமனுக்கு இளையார் என்று முன்புஒத்த தோற்றத் தேமில், யான்என்றும் முடிவி லாத துன்பத்துக்கு ஏது வானேன்; அவன்அது துடைக்க நின்றான்; அன்பத்துக்கு எல்லை உண்டோ? அழகிதுஎன் அடிமை;என்றான். 36 36. ஒத்த தோற்றத்தேமில் - ஒத்த பிறப்புடைய எங்களுள். ஏது ஆனேன் - காரணமானேன். அவன் - இலக்குவன். அது துடைக்க நின்றான் - அத்துன்பத்தைப் போக்கத் துணையாக நின்றான். அன்பத்துக்கு - அன்புக்கு. பரதனுடன் வந்தவர்களைக் குறித்துக் குகன், கேட்டறிதல் அப்புழுதியிலேகிடந்து புரண்ட பரதன்; `என்னை இக்கங்கையைக் கடக்கச் செய்தால், என் துன்பக் கடலைக் கடப்பேன் என்றான். உடனே குகன் தனது நாவாய்களைக் கொணர்ந்தான். பரதனுடைய படைகளைத் தென் கரை யிலே கொண்டுபோய்க் குவித்தான். பரதன், சத்துருக்கனன், தாயர் மூவர், குகன், சுமந்திரன் ஆகியோர் ஒரு பட கிலேறினர். அப்பொழுது குகன் தாயர்களைக் குறித்துக் கேட்டான். சுற்றத்தார் தேவரொடும் தொழநின்ற கோசலையைத் தொழுது நோக்கி ‘கொற்றத்தார்க் குரிசில்!இவர் ஆர்என்று குகன்வினவ, ‘கோக்கள் வைகும் முற்றத்தான் முதல்தேவி; மூன்றுலகம் ஈன்றானை முன்ஈன் றானைப் பெற்றத்தால் பெறும்செல்வம், யான்பிறத்த லால்துறந்த பெரியாள்; என்றான். 37 37. குரிசில் - குரிசிலே. வைகும் - காத்திருக்கும். முற்றத்தான் - வாசலை யுடையவனாகிய தசரதனுடைய. மூன்றுலகும் ஈன்றானை - பிரமனை. முன் ஈன்றானை - முன்பு பெற்றவனாகிய திருமாலின் அவதாரமான இராமனை. பெற்றத்தால் பெரும் செல்வம் - ஈன்றதால் பெற்ற பெரும் செல்வத்தை. பெரியாள் - பெரியாளாகிய கௌசலை. என்றலுமே அடியின்மிசை நெடிதுவீழ்ந்து அழுவானை, `இவன்யார் என்று கன்றுபிரி கார்ஆவின் துயருடைய கொடிவினவக், கழற்கால் மைந்தன் `இன்துணைவன் இராகவனுக்கு, இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்; குன்றனைய திருநெடுந்தோள் குகன்என்பான்; இந்நின்ற குரிசில்; என்றான். 38 38. கன்றுபிரி கார்ஆவின் - கன்றைப் பிரிந்த காராம் பசுவைப் போன்ற. கொடி - கொடி போன்ற கோசலை. நைவீர்அலீர் மைந்தீர் இனித்துயரால்! நாடுஇறந்து காடு நோக்கி, மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலம்ஆயிற்று ஆம்அன்றே; விலங்கல் திண்தோள் கைவீரக் களிறுஅனைய காளை,இவன் தன்னோடும் கலந்து, நீவிர் ஐவீரும் ஒருவீராய், அகலிடத்தை நெடும்காலம் அளித்திர்; என்றான். 39 39. -. அறந்தானே என்கின்ற அயல்நின்றாள் தனைநோக்கிஐய அன்பின் நிறைந்தாளை உரை;என்ன, `நெறிதிறம்பாத் தன்மெய்யை நிற்பது ஆக்கி இறந்தான்தன் இளம்தேவி; யாவர்க்கும் தொழுகுலமாம் இராமன் பின்பு பிறந்தானும் உளன்என்னப் பிரியாதான் தனைப்பயந்த பெரியாள்; என்றான். 40 40. அயல் நின்றாள்தனை - பக்கத்திலே நின்றவளாகிய சுமித்திரையை. நெறி திறம்பா - முறை தவறாத. தன் மெய்யை - தன் உண்மையை. இறந்தான் - தசரதன். தொழுகுலமாம் - வணங்குவதற்குரியவனான. சுடுமயா னத்திடைதன் துணையேகத், தோன்றல்,துயர்க் கடலின் ஏகக், கடுமையார் கானகத்துக் கருணைஆர் கலிஏகக், கழற்கால் மாயன் நெடுமையால் அன்றளந்த உலகெல்லாம், தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அளந்தாளை, ‘யார்இவர்?என்று உரைஎன்னக் குரிசில் கூறும். 41 41. தன் துணையோ - தன் கணவன் போக. தோன்றல் - தன்மகன். கருணை ஆர்கலி - கருணைக் கடலாகிய இராமன். மாயன் - மாயமான் குறுகிய வடிவில் வந்தவன். நெடுமையால் - நீண்ட உருவால். குரிசில் - பரதன். `படர்எலாம் படைத்தாளைப், பழிவளர்க்கும் செவிலியைத்தன் பாழ்த்த பாவிக் குடரிலே நெடும்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய, உடர்எலாம் உயிர்இலா எனத்தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே; இடர்இலா முகத்தாளை அறிந்திலையேல், இந்நின்றாள் என்னை யீன்றாள். 42 42. படர் எலாம் - துன்பங்களை யெல்லாம். உடர் எலாம் - உடம்புகள் எல்லாம். ஒருத்தி அன்றே - ஒருத்தி ஆவாள். என்னக் கேட்டு,அவ் இரக்கம் இலாளையும், தன்நற் கொள்கையின் வணங்கினன் தாய்என, அன்னப் பேடை, சிறையில் தாய்க்கரை துன்னிற் றென்னவும் வந்தது தோணியே. 43 43. கரைதுன்னிற்று என்ன - கரையை அடைந்தது என்று சொல்லும் படி. தோணிக்கு அன்னப் பறவை உவமை. இழிந்த தாயர் சிவிகையின் ஏறத்,தான் பொழிந்த கண்ணின் புதுப்புனல் போயினான்; ஒழிந்தி லான்குக னும்உடன் ஏகினான்; கழிந்த னன்பல காவதம் காலினே. 44 44. இழிந்த தாயர் - தோணியிலிருந்து இறங்கின தாய்மார்கள். தான் புதுப்புனல் பொழிந்த கண்ணினன் - தான் புதிய நீரைச் சிந்தும் கண்களையுடையவனாய். ஒழிந்திலன் - அன்பு நீங்காத. பரதன் முதலிய அனைவரும் இவ்வாறு நடந்து சென்று பரத்து வாசன் ஆசிரமத்தை அடைந்தனர். 14. திருவடி சூட்டு படலம் பரத்தின் ஓங்கும் பரத்துவன் என்னும்,அவ் வரத்தின் மிக்குஉயர் மாதவன் வைகுஇடம், அருத்திகூர அணுகினன்; ஆண்டுஅவன் விருத்தி வேதிய ரோடுஎதிர் மேவினான். 1 திருவடி சூட்டு படலம்: இராமன் தனது பாதுகை களைப் பரதனுக்கு முடியாகச் சூட்டியதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. பரத்தின் ஓங்கும் - தவ ஒழுக்கத்திலே உயர்ந்து நிற்கின்ற. வரத்தின் மிக்கு உயர் - வரங் கொடுக்கும் வல்லமையிலே மிக உயர்ந்த (அனுக்கிரக சக்தி) வைகு இடம் - வசிக்கும் இடத்திலே. அருத்தி - அன்பு. கூர - மிக. விருத்தி வேதியர் - யோக சாதனை யுள்ள வேதியர்கள். வந்த மாதவத் தோனை,அம் மைந்தனும், தந்தை ஆம்எனத் தாழ்ந்து வணங்கினான்; இந்து மோலிஅன் னானும் இரங்கினான், அந்தம் இல்நலத்து ஆசிகள் கூறினான். 2 2. மைந்தன்- பரதன். தந்தை யாம்என - தந்தையைக் கண்டது போல. தாழ்த்து - தலை குனிந்து. இந்து மோலி - சந்திரனைத் தரித்த சடா முடியை யுடைய சிவபிரான். அந்தம்இல் நலத்து - அளவற்ற நன்மைகள் உண்டாகும்படி. ‘எடுத்த மாமுடி சூடி,நின் பால் இயைந்து அடுத்த பேர்அரசு ஆண்டிலை; ஐயநீ! முடித்த வார்சடை யோடும், முனிவர்தூசு உடுத்து நண்ணுதற்கு, உற்றுளது யாது! என்றான். 3 3. எடுத்த - உயர்ந்த. இயைந்து அடுத்த - இணங்கிச் சேர்ந்த. பேர் அரசு - பெரிய அரசாட்சியை. ஆண்டிலை - ஏற்று ஆளாமல். வார் - நீண்ட. முனிவர் தூசு உடுத்து - முனிவர்கள் உடுக்கும் மரவுரியைத் தரித்து. உற்றுளது - நேர்ந்த காரணம். பரத்து வாசனைக் கண்ட பரதன் வணங்கினான். mtD« gujid thœ¤âd‹; `Ú Ko òidahkš kuîÇ jǤJtªj fhuz« ahJ? என்றான். சினக்கொ டுந்திறல் சீற்றவெம் தீயினான் மனக்க டுப்பினன்; மாதவத்து ஓங்கலை `எனக்கு அடுத்தது செய்திலென் என்றசொல் உனக்கு அடுப்பது அன்றால்,உர வோய்என்றான். 4 4. கொடும் திறல் - மிகுந்த வலிமையுள்ள. சினம் - சீற்றம் வெம்தீயினான் - மிகுந்த சினமுள்ள கொடிய தீயைப் போன்றவன். மாதவத்து ஓங்கலை - பெரிய தவத்திலே உயர்ந்த பரத்துவாசனை நோக்கி. உரவோய் - தவ வலிமை யுள்ளவனே. `உனக்கு அடுத்ததும் அன்று. மறையின் கேள்வற்கு `மன்இளந் தோன்றல்பின் முறையின் நீங்கி முதுநிலம் கொள்கிலேன்; இறைவன் காக்கிலன் ஆம்எனில், யாண்டெலாம் உறைவென் கானத்து ஒருங்குஉட னே;என்றான். 5 5. மறையின் கேள்வற்கு - வேதநூற் கேள்விகளையுடைய பரத்து வாசனுக்கு. மன் இளந்தோன்றல் பின் - இராமனுக்குப் பின்னோனாகிய யான். இறைவன் - இராமன். உரைத்த வாசகம் கேட்டலும் உள்எழுந்து இரைத்த காதல் இருந்தவத் தோர்க்கெலாம் குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால்; அரைத்த சாந்துகொண்டு அப்பியது என்னவே. 6 6. உள் எழுந்து இரைத்த காதல் - மனத்துள் எழுந்து பெருகிய அன்பையுடைய. குரைத்த மேனியொடு - பூரித்த உடம்புடன். `உள்ளம் குளிர்ந்தது. ஆல்; அசை. பின்னர்ப் பரதனுக்கும் அவன் சேனைக்கும் பரத்து வாசன் விருந்தளித்தான்; எல்லோரும் விருந்துண்டு மகிழ்ந்தனர். இன்னர் இன்னணம் யாவரும், இந்திரன் துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான் அன்ன காயும் கிழங்கும்உண்டு அப்பகல் பொன்னின் மேனி பொடிஉறப் போக்கினான். 7 7. இன்னணம் - இவ்வாறு. தோன்றல்தான் - பரதன். அப்பகல் - அந்த இரவுப் பொழுதை. நீல வல்லிருள் நீங்கலும், நீங்குறும் மூலம் இல்கன வின்,திரு முற்றுஉற ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு ஈறுசெல் காலம் என்னக் கதிரவன் தோன்றினான். 8 8. மூலம்இல் கனவின் - ஆதாரமற்ற கனவைப் போல. திருமுற்றுற - செல்வம் முடிவடைய. ஈறுசெல் காலம் அன்ன - முடிந்து போகின்ற காலத்தைப் போல. வேறு காலைஎன்று எழுந்தது கண்டு,வானவர், `வேலைஅன்று அணிகமே என்று விம்முறச் சோலையும் கிரிகளும் சுண்ண மாய்எழப் பாலைசென்று அடைந்தது பரதன் சேனையே. 9 9. காலை என்று - காலை என்று சொல்லப்படும் பகற் பொழுது. அனிகம் - சேனைதான். விம்முஅற - சந்தேகம் நீங்கும்படி. சுண்ணம்ஆய் எழ - தூளாகி மேலே பறக்கும்படி. வன்தெறு பாலையை மருதம் ஆம்எனச் சென்றது, சித்திர கூடம் சேர்ந்ததால்; ஒன்றுரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்றெனப் பொன்றிய புரவலன் பொருவில் சேனையே. 10 10. வன்தெறு - கொடுமையாய்த் துன்புறுத்தும். ஒன்றுரைத்து - உண்மையாகிய ஒன்றைக் கூறி. பொன்றிய - மாண்ட. தூளியின் படலையும் துரகம் தேரொடு மூள்இரும் சினக்கரி முழங்கும் ஓதையும், ஆள்இரும் குழுவினர் ஆர வாரமும், கோள்இரும் படையிது,என்று உணரக் கூறவே. 11 11. தூளியின் படலையும் - புழுதியின் பரப்பும். துரகதம் - குதிரை. ஆள் இரும்குழுவினர் - காலாட் படையாகிய பெரிய கூட்டத்தினரின். கோள் - வலிமையை யுடைய. இரும்படை - பெரிய படை. பரதன் சேனையைப் பார்த்த இலக்குவன் கொதிப்பு எழுந்தனன் இளையவன். ஏறி னான்,நிலம் கொழுந்துயர் அனையதோர் நெடிய குன்றின்மேல், செழுந்திரைப் பரவையைச் சிறுமை செய்தஅக் கழுந்துடை வரிசிலைக் கடலை நோக்கினான். 12 12. நிலம் கொழுந்து - நிலத்தின் கொழுந்து. சிறுமை பேசிய - சிறியது என்று சொல்லும்படி வந்த. கழுந்து உடை - வலிமை யுள்ள. வரிசிலைக் கடலை - கட்டமைந்த வில்லையுடைய சேனைக் கடலை. பரதன், இராமனுடன் போர் செய்வதற்காகவே இப்பெரும் படையுடன் வருகின்றான் என்று எண்ணிச் சினந்தான். குதித்தனன் பார்இடைக், குவடு நீறுஎழ மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்; `மதித்திலன் பரதன்,நின் மேல்வந் தான்,மதிள் பதிப்பெரும் சேனையின் பரப்பி னான்;என்றான். 13 13. குவடு - மலைச்சிகரம். நீறுஎழ - பொடியாகிப் பறக்கும்படி. கட்டினன் சுரிகையும், கழலும்; பல்கணைப் புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டமைத்து இட்டனன்; எடுத்தனன் வரிவில்; ஏந்தலைத் தொட்டடி வணங்கிநின்று இனைய சொல்லினான். 14 14. சுரிகை - வாள். பொறுத்தனன் - தாங்கினான். ஏந்தலை - இராமனை. ‘இருமையும் இகழ்ந்தஅப் பரதன் ஏந்துதோள் பருமையும், அன்னவன் படைத்த சேனையின் பெருமையும், நின்ஒரு பின்பு வந்தஎன் ஒருமையும் கண்டினி உவத்தி உள்ளம்நீ! 15 15. இருமையும் - இம்மை மறுமை ஆகிய இரண்டு இன்பங் களையும். ஏந்துதோள் - உயர்ந்த தோள்களின். என் ஒருமையும் - எனது ஒப்பற்ற வீரத்தையும். ‘ஒருமகள் காதலின், உலகை நோய்செய்த பெருமகன் ஏவலின், பரதன் தான்பெறும் இருநிலம் ஆள்கைவிட்டு, இன்றென் ஏவலால் அருநரகு ஆள்வது காண்டி ஆழியாய்! 16 16. ஒரு மகள் காதலின்- ஒரு பெண்மேல் வைத்த ஆசையால். உலகை நோய் செய்த - உலகத்தைத் துன்புறுத்திய. என் ஏவலால் - என்னுடைய அம்பின் வலிமையால் மாண்டு. ‘வையகம் துறந்துவந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கென, நின்னை யீன்றவள் நைதல்கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய கைகயன் மகள்,விழுந்து அரற்றக் காண்டியால்! 17 17. நைதல் கண்டு - வருந்துவதைக் கண்டு. நவையின் ஓங்கிய - பழியினால் உயர்ந்த. ‘அரம்சுட அழல்நிமிர் அலங்கல் வேலினாய்! விரைஞ்சுஒரு நொடியில்,இவ் அனிக வேலையை, உரம்சுடு வடிக்கணை ஒன்றில் வென்று?முப் புரம்சுடும் ஒருவனின் பொலிவன் யான்;என்றான். 18 18. அரம் - அரத்தின் கூர்மையைப் போன்று அமைந்து. சுடஅழல் நிமிர் - சுடும்படியான தீ நிரம்பிய. அலங்கல் வேலினாய் - மாலையை அணிந்த வேல்படையை உடையவனே. விரைஞ்சு - விரைந்து. உரம்சுடு - வலிமையை அழிக்கின்ற. ஒருவனின் - ஒப்பற்ற சிவபெருமானைப் போல. இராமன் சொல்லிய இன்னுரைகள் `இலக்குவ! உலகம்ஓர் ஏழும் ஏழும்நீ கலக்குவென் என்பது கருதி னால்,அது விலக்குவது அரிது;அது விளம்பல் வேண்டுமோ! புலக்குரித்து ஒருபொருள் புகலக் கேட்டியால். 19 19. விலக்குவது அரிது - தடுக்க முடியாது. புலக்கு உரித்து - அறிவுக்கு உரியதாகிய. ஒரு பொருள் - ஒரு விஷயத்தை. ஆல் ; அசை. நம்குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர் எங்குஉலப் புறுவர்கள், எண்ணின் யாவரே தம்குலத்து ஒருவஅரும் தருமம் நீங்கினர்? பொங்குஉலத் திரளொடும் பொருத தோளினாய். 20 20. எங்கு உலப்புறுவர்கள் - எங்கே அழிந்து போவார்கள்? ஒரு வரும் - நீங்குதற்கரிய. எனைத்துள மறை,அவை இயம்பற் பாலன, பனைத்திரள் கரக்கரிப் பரதன் செய்கையே; அனைத்திறம் அல்லன அல்ல அன்னது நினைத்திலை என்வயின் நேய நெஞ்சினால். 21 21. இயம்பல் பாலன - சொல்லுகின்றன வெல்லாம். பனைத்திரள் கரம்கரி - பனை மரத்தைப் போல் திரண்ட கையை யுடைய யானை போன்ற. அனைத்திறம் அல்லன - அத்தகைய தகுதியற்றவை. அல்ல - அவன் செய்கையல்ல. பெருமகன், என்வயின் பிறந்த காதலின் வரும்,என நினைகையும், மண்ணை என்வயின் தரும்என நினைகையும் தவிரத், தானையால் பொரும்என நினைகையும் புலமைப் பாலதோ? 22 22. பெருமகன் - பரதன். புலமைப் பாலதோ - அறிவுடைமை யாகுமோ. `சேண்உயர் தருமத்தின் தேவைச், செம்மையின் ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ! பூண்இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டெனைக் காணிய; நீஇது பின்னும் காண்டியால். 23 23. சேண் உயர் - மிகவும் உயர்ந்த. ஆணியை - ஆணி வேரை. பூண் இயல் - அணிகலன் அழகு பெற்ற. சேனையை விட்டுத் தனித்து வந்த பரதன் தோற்றம் தொழுதுயர் கையினன்; துவண்ட மேனியன்; அழுதழி கண்ணினன்; அவலம் ஈதென எழுதிய படிவம்ஒத்து எய்து வான்தனை, முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான். 24 24. அழுது அழி - அழுது வருந்திய. அவலம் ஈது என - துன்பத்தின் உருவம் இதுதான் என்று. படிவம் - வடிவம். முடிய - முழுவதும். கார்ப்பொரு மேனிஅக் கண்ணன் காட்டினான், `ஆர்ப்புறு வரிசிலை இளைய ஐயநீ, தேர்ப்பெருந் தானையான் பரதன் சீறிய, போர்ப்பெரும் கோலத்தைப், பொருந்த நோக்குஎனா. 25 25. ஆர்ப்புறு - ஆரவாரம் செய்கின்ற. பரதன் - பரதனது. சீறிய - சினந்து வந்த. போர் பெரும் கோலத்தை - போர்க்கோலம் கொண்டுவந்த பெரிய காட்சியை. கார்பொரு மேனி - மேகத்தைப் போன்ற நிறமுள்ள. `அக்கண்ணன் காட்டினான். எல்ஒடுங் கியமுகத்து இளவல் நின்றனன்; மல்ஒடுங் கியபுயத் தவனை வைதுஎழும் சொல்லொடும், சினத்தொடும், உணர்வு சோர்தர, வில்லொடும் கண்ணநீர் நிலத்து விழவே. 26 26. மல் ஒடுங்கிய - வலிமை பொருந்திய; புயத்தவனை... வீழவே; எல் ஒடுங்கிய முகத்து. - ஒளி குன்றிய முகத்தை யுடையனாய், `இளவல் நின்றனள். கோதறத் தவம்செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனள், நலத்தின் நீங்கினாள், வேதனைத் திருமகள் மெலிகின் றாள்,விடு தூதுஎனப் பரதனும் தொழுது தோன்றினான். 27 27. வேதனை மெலிகின்றாள் திருமகள் - வேதனையால் வருந்துகின்றவளாகிய இராஜ்ய லட்சுமி. `அறந்தனை நினைந்திலை! அருளை நீத்தனை! துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான்; மறந்தனன் மலர்அடி வந்து வீழ்ந்தனன்; இறந்ததன் தாதையை எதிர்கண்டு என்னவே. 28 28. இறந்த தன் தாதையை - இறந்த தன் தந்தையை. `எதிர் கொண்டு என்னவே மறந்தனன் - தன்னை மறந்தவனாய்; `மலர்அடி வந்து வீழ்ந்தனன். உண்டுகொல் உயிர்என ஒடுங்கி னான்,உருக் கண்டனன், நின்றனன், கண்ணன் கண்எனும் புண்டரீ கம்பொழி புனல்அ வன்சடா மண்டலம் நிறைந்துபோய் வழிந்து சோரவே. 29 29. உயிர் உண்டு கொல்என - உயிர் உண்டோ என்று ஐயுறும்படி. ஒடுங்கினான் - இளைத்தோனாகிய பரதனுடைய. கண் எனும் புண்டரீகம் - கண் என்னும் தாமரை மலரிலிருந்து. சடாமண்டிலம் - சடை முடி. அயாவுயிர்த்து, அருகணீர் அருவி மார்பிடை உயாவுறத், திருஉளம் உருகப் புல்லினான், நியாயம்அத் தனைக்கும்ஓர் நிலயம் ஆகினான், தயாமுதல் அறத்தினைத் ததீஇயது என்னவே. 30 30. அயா உயிர்த்து - பெரு மூச்சு விட்டு. உயாஉற - பெருகிவழிய. தயாமுதல் - அருட் கடவுள். புல்லினன் நின்றுஅவன் புனைந்த வேடத்தைப் பல்முறை நோக்கினான்; பலவும் உன்னினான்; `அல்லரின் அழுங்கினை ஐய! MSil kšca® njhËdh‹ tÈa ndh?என்றான். 31 31. புல்லினன் நின்று - தழுவி நின்று. அவன் புனைந்த வேடத்தை - அப்பரதன் பூண்ட வேடத்தை. ஆளுடைமல் உயர் தோளினான் - தசரதன். வலியனோ - வலிமை யுள்ளவனாக இருக்கின்றானா? (சௌக்கியமா?) அரியவன் உரைசெயப் பரதன் ஐயநின் பிரிவெனும் பிணியினால் என்னைப் பெற்ற,அக் கரியவள் வரம்எனும் கால னால்,தனக்கு உரியமெய்ந் நிறுவிப்போய் உம்ப ரான்;என்றான். 32 32. அரியவன் - இராமன். கரியவள் - பாவமே உருவானவள். உரிய மெய் - உரிய புகழுடம்பை. தாதையின் பிரிவு கேட்டு இராமன் வருந்துதல் `விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்யசொல் புண்இடை அயில்எனச் செவிபு காமுனம், கண்ணொடு மனம்,சுழல் கறங்கு போலஆய், மண்இடை விழுந்தனன், வானின் உம்பரான். 33 33. விண்இடை - வானுலகத்தை. வெய்ய - கொடிய. புண்இடை - புண்ணிலே. அயில் என - வேல் நுழைந்தது போல. கண்ணொடு மனம் - கண்ணும் மனமும். சுழல் கறங்கு போலஆய் - சுற்றுகின்ற காற்றாடி போல் ஆகி. வானின் உம்பரான் - வானுலகுக்கு மேல் உள்ள பரமபதத்திற்கு உரியவன். இருநிலம் சேர்ந்தனன் இறை; உயிர்த்திலன்; உரும்எறி அரவுஎன உணர்வு நீங்கினான்; அருமையின் உயிர்வர அயா உயிர்த்துஅகம் பொருமினன்; பன்முறை புலம்பி னான்!அரோ! 34 34. இறை - தலைவனாகிய இராமன். உரும் எறி - இடியால் தாக்குண்ட. உணர்வு - உணர்ச்சி; நினைப்பு. அயாஉயிர்த்து - பெருமூச்சு விட்டு. `நந்தா விளக்கனைய நாயகனே! நானிலத்தோர் தந்தாய்! தனிஅறத்தின் தாயே! தயாநிலையே! எந்தாய்! இகல்வேந்தர் ஏறே! இறந்தனையே! அந்தோ! இனிவாய்மைக்கு ஆர்உளரே மற்றுஎன்றான். 35 35. -. `சொல்பெற்ற நோன்பின் துறையோன் அருள்வேண்டி, நல்பெற்ற வேள்வி நவைநீங்க நீஇயற்றி, என்பெற்று நீபெற்றது இன்னுயிர்போய் நீங்கலோ! bfhšbg‰w bt‰¿¡ bfhiybg‰w T®ntnyhŒ! 36 36. சொல்பெற்ற - புகழ்பெற்ற. நோன்பின் துறையோன் - தவத்திலே சிறந்த கலைக்கோட்டு முனிவன்.நல்பெற்ற - நன்மை பெற்ற. நவை - குற்றம். கொன் பெற்ற - அச்சந் தரும் தன்மையைப் பெற்ற. ‘வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி பூண்டிவ் வுலகுக்கு இடர்கொடுத்த புல்லனேன், மாண்டு முடிவதல்லால், மாயா உடம்பிது கொண்டு ஆண்டு வருவதினி ஆர்முகத்தே நோக்கவோ! 37 37. வேண்டும் திறத்து ஆரும் - என்றும் விரும்பும் தன்மை யுள்ள அனைவரும். வேண்ட - வேண்டிக் கொண்டதனால். பூண்டு - ஏற்று. ஆண்டு - அங்கே. ‘தேன்அடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் கான்அடைந்தேன், என்னத் தரியாது, காவலநீ வான்அடைந்தாய்! இன்னம் இருந்தேன்நான் வாழ்வுகந்தே! ஊன்அடைந்த தெவ்வர் உயிர்உடைந்த ஒள்வேலாய்! 38 38. வாழ்வு உகந்தே - வாழ்வை விரும்பி. தெவ்வர் ஊன் அடைந்த - பகைவர் உடம்பிலே பொருந்திய. உயிர் அடைந்த - உயிரைச் சேர்ந்திருக்கின்ற. இராமனுக்கு ஆறுதல் உரைத்தல் இவ்வாறு வருந்திய இராமனைத் தம்பியரும் மன்னவர்களும் தாங்கித் தேற்றினர். வசிட்டனும் ஆறுதல் கூறினான். பரத்துவாசன், முதலிய முனிவர்கள் மந்திரிகள் படைத் தலைவர்கள் ஏனைய உறவினர்கள் அனைவரும் இராமனைச் சூழ்ந்திருந்தனர். அப்பொழுது வசிட்டன் உரைக்கின்றான்: ‘துறத்தலும், நல்அறத் துறையும் அல்லது புறத்தொரு துணையில் பொருந்தும் மன்உயிர்க்கு; இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீ! 39 39. நல்அறத்துறையும் - நல்ல இல்லறத் துறையும். புறத்து ஒரு - வேறு ஒரு. ‘பெறுவதன் முன்,உயிர் பிரிதல் காண்டியால் மறுவறு கற்பினில் வையம் யாவையும் அறுவதி னாயிரம் ஆண்டும், ஆண்டவன் இறுவது கண்டு,அவற்கு இரங்கல் வேண்டுமோ! 40 40. மறு அறு - குற்றமற்ற. கற்பினில் - கல்வி கேள்விகளால். மாண்வன் - சிறந்தவன். இறுவது கண்டு - இறந்தது கண்டு. ‘சீலமும், தருமமும், சிதைவில் செய்கையாய்! சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய மூலம்வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம்என்று ஒருவலை கடக்கல் ஆகுமோ? 41 41. சீலமும் - ஒழுக்கமும். சொல்லும் தாங்கிய - வேதங்களின் சொல்லையும் தாங்கிய. மூலம் வந்து உதவிய - வேண்டுவோர்க்கு முதன்மையாக வந்து உதவி செய்கின்ற. மூவர் - மும்மூர்த்திகள். `ஐயநீ! யாதொன்றும் அவலிப் பாய்அலை! உய்திறம் அவற்கினி இதனின் ஊங்குண்டோ? செய்வன வரன்முறை திருத்திச், சேந்தநின் கையினால் ஆற்றுதி கடன்எ லாம்என்றான். 42 42. யாதொன்றும் - சிறிதும். அவலிப்பாய் அலை - வருந்த வேண்டாம். சேந்த - சிவந்த. `விண்ணுநீர் மொக்குளின் விளியும் யாக்கையை, எண்ணிநீ அழுங்குதல் இழுதைப் பாலதால்; கண்ணின்நீர் உகுத்தலின் கண்ட தில்லை;போய் மண்ணுநீர் உகுத்திநீ மலர்க்கை யால்;என்றான். 43 43. விண்ணுநீர் மொக்குளின் - மழைநீர்க் குமிழியைப் போல். விளியும் - அழியும். இழுதைப் பாலதுஆல் - அறியாமையின் பாற்பட்டதாகும். கண்டது இல்லை - கண்ட பயன் ஒன்றும் இல்லை. மண்ணும் நீர் - கழுவும் நீரை. சீதையின் துயரம் இராமனை அனைவரும் அழைத்துச் சென்றனர். அவன் நீராடினான். வசிட்டன் காட்டிய வழியிலே நீர்க் கடன்களைச் செய்தான். பின்னர் அனைவரும் சீதையிருந்த வீட்டை எய்தினர். எய்திய வேலையில், தமியள் எய்திய தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்; கைகளின் கண்மலர் புடைத்துக், கால்மிசை ஐயன்அப் பரதன்வீழ்ந்து அரற்றி னான்;அரோ! 44 44. தையலை - சீதையை. கைகளில் - கைகளால். கால்மிசை - சீதையின் பாதங்களிலே. அரோ; அசை. அந்நெடும் துயர்உறும் அரிய வீரனைத், தன்நெடும் தடக்கையால் இராமன் தாங்கினான்; நல்நெடும் கூந்தலை நோக்கி, `நாயகன் என்நெடும் பிரிவினால் துஞ்சி னான்என்றான். 45 45. -. துண்எனும் நெஞ்சினள்; துளங்கி னாள்;துணைக் கண்எனும் நெடுங்கடல் கலுழி கான்றிட மண்எனும் செவிலிமேல் வைத்த கையினாள், பண்எனும் கிளவியால் பன்னிஏங்கினாள் 46 46. துண்எனும் நெஞ்சினள் - திடுக்கிட்ட நெஞ்சினளாய். துளங்கினாள் - நடுங்கினாள். பன்னி - சொல்லி. கல்நகு திரள்புயக் கணவன் பின்செல, நல்நகர் ஒத்தது நடந்த கானமும்; `மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால், அன்னமும் துயர்க்கடல் அடிவைத் தாள்;அரோ. 47 47. கல்நகு - மலையைக் கண்டு சிரிக்கின்ற. திரள் புயம் - திரண்ட புயத்தையுடைய. `நடந்தகானமும் நல்நகர் ஒத்தது துஞ்சினன் - இறந்தான். அன்னமும் - அன்னம்போன்ற சீதா தேவியும். ஆயவள் தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் தாயரின் முனிவர்தம் தருமப் பன்னியர்; தூயநீர் ஆட்டினர்; துயரம் நீக்கினர்; நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார். 48 48. தாயரின் - தாய்மார்களைப் போன்ற. தருமப்பன்னியர் - தரும பத்தினிகள். நாயகன் - இராமனிடம். நவையுள் நீங்கினார் - குற்றமற்றவர்கள். தேன்தரும் தெரியல்அச் செம்மல் நால்வரை ஈன்றவர் மூவரோடு, இருமை நோக்குறும் சான்றவர் குழாத்தொடும், தருமம் நோக்கிய தோன்றல்பால், சுமந்திரன் தொழுது தோன்றினான். 49 49. மூவரோடு - கோசலை. கைகேசி, சுமித்திரை ஆகிய மூவருடன். தோன்றல்பால் - இராமனிடம். இராமன் தாயர்களை வணங்கினான். அனைவரும் இராமன் நிலையைக் கண்டு வருந்தினர்; அவனைச் சூழ்ந் திருந்தனர். சூரியனும் மறைந்தான்; அன்றிரவும் கழிந்தது. பரதன் வேண்டுகோளும் இராமன் மறுப்பும் அன்று தீர்ந்தபின் அரச வேலையும், துன்று செஞ்சடைத் தவரும், சுற்றமும், தன்து ணைத்திருத் தம்பி மார்களும், சென்று சூழஆண்டு இருந்த செம்மல்தான். 50 50. அரச வேலையும் - அரசர்களின் கடலும். தவரும் - தவசிகளும். செம்மல் - இராமன். இராமன் கேள்வி `வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால் சரதம் நின்னதே; மகுடம் தாங்கலாய். விரத வேடம்நீ என்கொல் மேவினாய்? பரத கூறு;எனாப் பரிந்து கூறினான். 51 51. வரதன் - தரசதன்; வரதன் - வேண்டுவனவற்றை யெல்லாம் கொடுக்கக் கூடியவன். சரதம் நின்னதே - உண்மையாக உன்னுடையதே யாகும். விரத வேடம் - தவ வேடத்தை. நீ வேண்டுவான் என்கொல் - நீ விரும்பியது ஏன்? பரதன் உரைத்த பதில் ‘நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்குஅருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? 52 52. நிறையின் நீங்கிய - கற்பிலே தவறிய. பொறையின் நீங்கிய - பொறுமையற்ற. தொல்லையோர் முறையின்- முன்னோர் முறையிலிருந்து. நீங்கிய அரசின் - தவறிய அரசைவிட. முந்துமோ - தீமையில் மிகுந்ததோ? `தொகையில் அன்பினால் இறைவன் துஞ்சநீ புகையும் வெம்சுரம் புகுதப், புந்தியால் வகையில் வஞ்சனாய் அரசு வவ்வ,யான் பகைவ னேகொலாம்? இறவு பார்க்கின்றேன். 53 53. தொகைஇல் - உன்மேல் வைத்த அளவற்ற. அரசு வௌவ - அரசாட்சியைக் கவர்ந்து கொள்ள. யான் இறவு பார்க்கிறேன் - நான், சோர்வடையும் சமயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றவனாகிய. பகைவனே கொல்ஆம் - பகைவனோ? `உந்தை தீமையும், உலகு றாதநோய், தந்த தீவினைத் தாய்செய் தீமையும், எந்தை நீங்கமீண்டு அரசு செய்கெனா சிந்தை யாவதும் தெரியக் கூறினான். 54 54. உலகு உறாத நோய் தந்த - உலகம் இதுவரையிலும் அடையாத பெரிய துன்பத்தைத் தந்த. தீவினை - தீத்தொழிலை யுடைய. தாய் செய்தீமையும் - தாயாகிய கைகேசி செய்த தீமையும். சிந்தை யாவதும் - மனக்கருத்து முழுவதும். இராமன் `பரவு கேள்வியும், பழுதில் ஞானமும், விரவு சீலமும், வினையின் மேன்மையும், உரவி லோய்! தொழற்கு உரிய தேவரும் குரவ ரே;எனப் பெரிது கோடியால். 55 55. விரவு சீலமும் - பொருந்திய ஒழுக்கமும். உரவிலோய் - வலிமையான வில்லை யுடைய பரதனே. குரவரே - தாய் தந்தையர்களே; இருமுது குரவர். `அந்த நற்பெரும் குரவர் ஆர்எனச் சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால், தந்தை தாயர்என்று இவர்கள் தாம்;அலால் எந்தை கூறவேறு எவரும் இல்லையால். 56 56. -. `தாய்வ ரம்கொளத் தந்தை ஏவலால் மேய நம்குலத் தருமம் மேவினேன்; நீவ ரம்கொளத் தவிர்தல் நீர்மையோ! MŒî mU«òy¤J m¿î nkÉdhŒ! 57 57. நீ வரம்கொள - நீ வரத்தினால் பெற்றதை. தவிர்தல் - அடையாமல் நீங்குதல். நீர்மை - நல்ல தன்மையாகுமோ? ஆய்வுஅரும் - பிறரால் ஆராய்ந்து காண முடியாத. புலத்து அறிவு மேவினாய் - சிறந்த அறிவு பொருந்தியவனே. `jda® MÆdh®, jªij jhaiu ÉidÆ‹ ešynjh® ïiria ntŒjnyh., நினையல் ஓவிடா நெடிய வன்பழி புனைத லோஐய! புதல்வர் ஆதல்தான். 58 58. வினையின் - நற்செயல்களால். இசையை வேய்தலோ - புகழால் போர்த்துவதோ. நினையல் ஓவிடா - நினைவிலிருந்து நீங்காத. புனைதலோ - சூட்டுவதோ! (இவற்றுள் எதைச் செய்வ தனால்) ஐய - ஐயனே. புதல்வர் ஆதல் - புதல்வர் ஆவார்களா? தான்; அசை. வரன்நில், உந்தைசொல் மரபி னால்உடைத் தரணி நின்னதென்று இயைந்த தன்மையால், உரனின் நீபிறந்து உரிமை யாதலால். அரசு நின்னதே ஆள்கஎன்னவே. 59 59. வரன்நில் - வரத்தினாலே நின்ற. உந்தை சொல் மரபினால் - உன் தந்தை சொல்லிய முறையின்படி. உரனின் -வலிமையை யுடைய. என்னவே - என்று இராமன் கூறவே. பரதன் முன்னர் வந்துதித்து, உலகம் மூன்றினும் நின்னை ஒப்பிலா நீபி றந்தபார் என்ன தாகில்,நான் இன்று தந்தனென்; மன்ன போந்துநீ மகுடம் சூடு;எனா. 60 60. -. இராமன் `எந்தை ஏவஆண்டு ஏழொடு ஏழ்எனா வந்த காலம்நான் வனத்துள் வைக;நீ தந்தை பாரகம் தன்னை மெய்மையால் அந்த நாள்எலாம் ஆள்என் ஆணையால். 61 61. -. வேறு `மன்னவன் இருக்க வேயும், மணிஅணி மகுடம் சூடுக என்ன,யான் இயைந்தது, அன்னான் ஏயது மறுக்க அஞ்சி; அன்னது நினைந்தும் நீஎன் ஆணையை மறுக்க லாமோ! சொன்னது செய்தி ஐய! Ja®cHªJ mauš! என்றான். 62 62. -. வசிட்டன் வேண்டுகோள் `இதவியல் இயற்றிய குரவர் யாரினும், மதவியல் களிற்றினாய்! மறுவில் விஞ்சைகள் பதவிய இருமையும் பயக்கப் பண்பினால் உதவிய ஒருவனே உயரும்; என்பரால். 63 63. மதஇயல் களிற்றினாய் - மதங்கொண்ட ஆண் யானையை உடையவனே. இத இயல் - நன்மைகளை இயற்றிய. குரவர் யாரினும் - குரவர்கள் எல்லோரையும்விட. பதவிய - நல்ல பதவியை. ஒருவனே - ஆசிரியனாகிய ஒருவனே. குரவர் - ஐங்குரவர்; அவர் - அரசன், உவாத்தியாயன், தாய், தந்தை, தம்முன். `என்றலால், யான்உனை எடுத்து, விஞ்சைகள் ஒன்றலா தனபல உதவிற்று உண்மையால்; அன்றெனாது, இன்றெனது ஆணை, ஐயநீ! நன்றுபோந் தளி உனக்கு உரியநாடு என்றான். 64 64. அன்றுஎனாது - நான் ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று என்று மறுக்காமல். எனது ஆணை - என்னுடைய கட்டளையை மேற்கொண்டு. அளி - ஏற்றுக் காத்தருள்க. இராமன் இயம்பிய விடை கூறிய முனிவனைக், குவிந்த தாமரைச் சீறிய கைகளால் தொழுது, செங்கணான், `ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்றுஉரை கூறுவது உளதுஎனக் கூறல் மேயினான். 65 65. சீரிய - சிறந்த. ஆறிய சிந்தனை - அறிந்து அடங்கிய உள்ளத்தை யுடைய. கூறுவது உரை ஒன்று உளது - சொல்லக் கூடிய வார்த்தை ஒன்று உண்டு. `சான்றவர் ஆக,தன் குரவர் ஆக,தாய் போன்றவர் ஆக,மெய்ப் புதல்வர் ஆக,தான்; தேன்தரு மலர்உளான் சிறுவ! brŒt‹v‹W V‹wã‹, m›îiu kW¡F« <£lnjh? 66 66. தேன் தருமலர் - தேனையூற்றும் தாமரை. மலர் உளான் - மலரிலே உள்ள பிரமனுடைய. சிறுவ - மைந்தனே. செய்வென் என்று ஏன்ற பின் - ஒன்றைச் செய்வேன் என்று ஏற்றுக்கொண்ட பின். மறுக்கும் ஈட்டதோ - தடுப்பதற்கு உரியதோ? `முன்னுறப் பணித்தவர் மொழியை, யான்எனச் சென்னியில் கொண்டு,அது செய்வென் என்றதன் பின்னுறப் பணித்தனை, பெருமை யோய்! எனக்கு என்இனிச் செய்வகை? ciubrŒ <§F!என்றான். 67 67. முன்உறு - முதலில். பணித்தவர் - ஏவியவர்களின். யான் என சென்னியில் கொண்டு - நான் எனது தலைமேற் கொண்டு. என்றதன் பின் உற - என்ற பிறகு. முனிவனும் `உரைப்பதோர் முறைமை கண்டிலெம் இனிஎன இருந்தனன்; இளைய மைந்தனும், `அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு;நான் பனிபடர் காடுஉடன் படர்தல் மெய்;என்றான். 68 68. இளைய மைந்தனும் - பரதனும். பனிபடர் - துன்பம் பரவிய; குளிர்ச்சி பொருந்திய. காடு - காட்டில். உடன் படர்தல் - உன்னுடன் வருதல். பரதன் சூளுரைத்துப் பாதுகை ஏற்றல் அப்பொழுது விண்ணவர்கள் `நாடு காத்தல் உன் கடமை என்று பரதனை நோக்கிப் பகர்ந்தனர். இராமனும் அதையே மொழிந்தான். ‘ஆம்எனில் ஏழிரண்டு ஆண்டினில் ஐயநீ நாமநீர் நெடுநகர் நண்ணி, நானிலம் கோமுறை புரிகிலை என்னில் கூர்எரி சாம்இது சரதம்!நின் ஆணை சாற்றினேன். 69 69. ஆம்எனில் - ஆகும் என்றால். நாமநீர் - அச்சந் தரும் அகழி நீர் சூழ்ந்த. கோமுறை புரிகிலை என்னில் - அரசாட்சி புரியவில்லையானால். கூர்எரி - மிகுந்த நெருப்பில் வீழ்ந்து. சாம்இது - சாகின்ற இவ்வுறுதி. சரதம் - உண்மையாகும். என்பது சொல்லிய பரதன், யாதும்ஓர் துன்பிலன்; அவனது துணிவை நோக்கினான்; அன்பினன், உருகினன், `அன்னது ஆகென்றான். தன்புகழ் தன்னினும் பெரிய தன்மையான். 70 70. தன்புகழ் தன்னினும் பெரியதன்மையான் - இராமன். அன்னது ஆகென்றான் - அப்படியே ஆகட்டும் என்றான். விம்மினன் பரதனும், வேறு செய்வதுஒன்று இன்மையின், அரிதுஎன எண்ணி ஏங்குவான்; `செம்மையின் திருவடித் தலந்தந்து ஈகென எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். 71 71. அரிதுஎன எண்ணி - இராமனைத் திரும்ப அழைத்துச் செல்லுதல் முடியாத செயல் என்று எண்ணி. ஏங்கினான் - வருந்தினான். செம்மையின் - நன்மையினை யுடைய. திருவடித் தலம் - பாதுகைகளை. தந்து ஈக என - கொடுத்தருளுக என்று வேண்டிக்கொள்ள. எம்மையும் - எல்லா உலக இன்பங்களையும். அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான், முடித்தலம் இவைஎன முறையின் சூடினான், படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான், பொடித்தலம் இலங்குறு பொலம்கொள் மேனியான். 72 72. அடித்தலம் - பாதுகைகள். முடித்தலம் இவை என - முடியிடத்திற்கு உரியவை இவை என்று. பொடித்தலம் இலங்குறு - புழுதி தன்னிடம் படிந்து காணப்படும். பொலம்கொள் மேனி யான் - அழகு பொருந்திய மேனியை உடையவன். `பரதன்; படித் தலத்து இறைஞ்சினன் போயினான். படித்தலத்து - நிலத்தில். பரதன் முதலிய அனைவரும் இராமனை விட்டுத் துயரத்துடன் பிரிந்து சென்றனர்; குகனும் அவர்களுடன் போனான். பரதன் அயோத்தி நகருக்குள் புகுதவில்லை. அயோத்தியின் புறத்திலேயே தங்கிவிட்டான். நந்தியம் பதியிடை நாதன் பாதுகம் செந்தனிக் கோல்முறை செலுத்தச், சிந்தையான் இந்தியங் களைஅவித்து இருத்தல் மேயினான். அந்தியும் பகலும்நீர் அறாத கண்ணினான். 73 73. நந்தியம்பதி - அயோத்திக்குப் புறத்தில் உள்ள ஒரு ஊர். நாதன் - இராமனுடைய. சிந்தையான் - மனோ வலிமையால். இந்தியர்களை - இந்திரியங்களை. அவித்து - அடக்கி. குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் நின்றவர் நலிவரால் நேயத் தால்;எனாத் தன்துணைத் தம்பியும் தானும் தையலும் தென்திசை நெறியினைச் சேறல் மேயினான். 74 74. நின்றவர் - பக்கத்தில் இருப்பவர். நேயத்தால் நலிவர் - அன்பு காரணமாக அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பார்கள். ஆரணிய காண்டம் 1. விராதன் வதைப் படலம் வாழ்த்து பேதி யாது,நிமிர் பேத உருவம் பிறழ்கிலா, ஓதி ஓதிஉண ரும்தொறும் உணர்ச்சி உதவும் வேதம், வேதியர், விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா ஆதி தேவர்அவர், எம்அறி வினுக்கு அறிவு;அரோ. 1 ஆரணிய காண்டம்: ஆரணியத்திலே நடந்த நிகழ்ச்சி களைப்பற்றிக் கூறும் பகுதி. ஆரண்யம் - காடு. விராதன் வதைப்படலம்: விராதன் என்னும் அரக்கனைக் கொன்றதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. பேதியாது - தன் தன்மையில் மாறுபாடு இல்லாமல். நிமிர் பேத உருவம் - நிறைந்த பலவகையான உருவங்களிலும், பிறழ்கிலா - வேற்றுமையின்றிக் கலந்திருக்கின்ற. வேதம், வேதியர், விரிஞ்சன் முதலோர்களால் தெரிகிலா ஆதி தேவர்! விரிஞ்சன் - பிரமன். நூல் முத்தி ருத்திஅவ் விருந்த னையமொய்ந் நகையொடும், சித்தி ரக்குனி சிலைக்கும ரர்சென்று அணுகினார்; அத்தி ரிப்பெயர் அருந்தவன் இருந்த அமைதி பத்தி ரப்பழு மரப்பொழில் துவன்று பழுவம். 2 2. முத்து இருத்தி - முத்துக்களை வரிசையாக அமைத்து. அவ் இருந்தனைய - அம்முத்துக்கள் இருந்ததைப் போன்ற. இருந்த அமைதி - இருந்த இடமாகிய. பழுமரப்பொழில் - முதிர்ந்த மரக்கூட்டம். துவன்றிய - நெருங்கிய. பழுவம் - காடு. அவர்கள் அத்திரி முனிவரைப் பணிந்தனர்; முனிவர் அவர்களை மனங்கனிந்து வரவேற்றார். `குமரர், நீர்இவண் அடைந் துதவு கொள்கை எளிதோ, அமரர் யாவரொடும் எவ்வுல கும்வந்தது அலவோ? vkÇ‹ ah®jt« Ka‹wt® fŸ?என்று உருகினன்; தமர்எ லாம்வர உகந்தனைய தன்மை முனிவன். 3 3. உதவு கொள்கை - காட்சி தந்த தன்மை. வந்த அளவே - வந்த அவ்வளவு பெருமையுள்ளதாகும். முனிவன் மனைவி அநசூயை சீதையை வரவேற்று உபசரித் தாள். பின்னர் அவர்கள் தண்டகாரண்யத்தை அடைந்தனர். விராதன் தோற்றம் பூதம் அத்தனையும் ஓர்வடிவு கொண்டு, புதிது,என்று ஓத ஒத்தஉரு வத்தன்; உரும்ஒத்த குரலன்; காத லித்துஅயன் அளித்த கடையிட்ட கணிதப் பாத லக்கமத வெற்புஅவை படைத்த வலியான். 4 4. கடை யிட்ட - கடைசியில் வைத்த. கணித பாதம் - கணக்காகிய காலுடன். லக்கம் - லட்சம். மத வெற்பு அவை - மத யானைகளின் பலத்தை. படைத்த - தன்னிடம் கொண்ட. வலியான் - வலிமையுள்ளவன். விராதன் ஒன்றேகால் லட்ச யானை பலமுள்ளவன். சார வந்து,அயல் விலங்கினன்; மரங்கள் தரையில் பேர, வன்கிரி பிளந்துக, வளர்ந்து இகல்பெரு வீர வெஞ்சிலை யினோர்எதிர், விராதன் எனும்அக் கோர வெம்கண் உரும்ஏறு அனகொடுந் தொழிலினான். 5 5. விலங்கினன் - தடுத்தனன். வன்கிரி பிளந்து உக - வலிய மலைகள் பிளந்து சிந்த. இகல் பெறா - பகையைப் பெறாத. கோர வெம்கண் - அச்சம் தரும் கொடிய கண்களையுடைய. `விராதன் ... தொழிலினான். சார வந்து. `நில்லும்! ÚY«! எனவந்து, நிணம்உண்ட நெடுவெண் பல்லும், வல்எயிறும் மின்னு பகுவாய் முழைதிறந்து, அல்லி புல்லும்அலர் அன்னம் அனையாளை, ஒருகைச், சொல்லும் எல்லையின் முகந்துயர் விசும்பு தொடர. 6 6. பகுவாய் முழை திறந்து - பிளந்த வாயாகிய குகையைத் திறந்து. ஒரு கை - ஒரு கையினால். முகந்து - தூக்கி. அதைக் கண்டு இராம இலக்குவர்கள் சின மூண்டனர்; வில்லை நாணேற்றினர்; `அடா எங்கே ஓடுகின்றாய்? Ú! என்று சொல்லி அவனைத்தொடர்ந்தனர். அப்பொழுது அவன் உரைத்ததாவது. `ஆதி நான்முகன் வரத்தின், எனதாவி அகலேன்; ஏதி யாவதுவும் இன்றி, உலகுயாவும், இகலில் சாதி யாதனவும் இல்லை; உயிர்தந் தனென்அடா! போதிர் மாதிவளை உந்தி, இனிது;என்று புகல. 7 7. ஏதி யாவதும் இன்றி - ஆயுதங்கள் ஒன்றும் இல்லாமலே. இகலில் - என் வலிமையினால். இவளை உந்தி - இவளை என்னிடம் விட்டு விட்டு. இதைக் கேட்ட இராமன் நகைத்தான்; தன் வில்லின் நாணொலியை எழுப்பினான்; அவ்வொலியால் உலகமே நடுங்கிற்று. வஞ்ச கக்கொடிய பூசை, நெடுவாயின் மறுகும் பஞ்ச ரக்கிளி யெனக்,கதறு பாவை யைவிடா; நெஞ்சு உளுக்கினன் எனச்சிறிது நின்று நினையா; அஞ்ச னக்கிரி அனான்எதிர் அரக்கன் அழலா. 8 8. பூசை நெடுவாயின் மறுகும் - பூனையின் பெரிய வாயிலே அகப்பட்டு மயங்கும். பஞ்சரம் கிளி - கூட்டில் உள்ள கிளி. விடா - தரையிலே விட்டு. நெஞ்சு உளுக்கினன் என - நெஞ்சம் கலங்கினவன்போல. நினையா - நினைத்து. அழலா - அழன்று. சூலம், மலை, மரம் முதலியவைகளை அரக்கன் வீசி ஆரவாரித்தான்; அவைகளையெல்லாம் இராமன் அம்பு களால் தடுத்து வீழ்த்தினான். எரியின் வார்கணை இராமன் விட,எங்கும் நிலையாது உருவி யோட,மறம் ஓடுதல் செயா உணர்வினான்; அருவி பாயும் வரைபோல் குருதிஆறு, பெருகிச் சொரிய, வேகவலி கெட்டுணர்வு சோர்வு உறுதலும். 9 9. மறம் ஓடுதல் செயா - கொடுந்தன்மை நீங்காத. வேகவலி - மிகுந்த வலிமை. மெய்வ ரத்தினன்; மிடற்படை விடப் படுகிலன்; செய்யும் மற்றுஇகல் என்று, சினவாள் உருவி,வன் கைது ணித்தும்என, முந்து கடுகிப் படர்புயத்து எய்வில் மல்பொருவு தோள்,இரு வர்ஏற நிருதன். 10 10. முந்து கடுகி - விரைந்து. படர்புயத்து - பெரியபுயத்தில். எய்வு இல் - பிறரால் அம்பு எய்யப்படாத. உண்டுஇழந்த உணர்வு அவ்வயின் உணர்ந்து, முடுகித் தண்டுஎழுந் தனைய தோள்கொடு சுமந்து, தழுவிப் பண்டுஎழும் தனது வன்கதி பதிற்றின் முடுகிக் கொண்டுஎழுந் தனன்வி ழுந்துஇழி கொழும்கு ருதியான். 11 11. உண்டு இழந்த - காயமுண்டு இழந்த. உணர்ந்து - மீண்டும்பெற்று. தண்டு - தண்டாயுதம். வன்கதி - மிகுந்த வேகம். பதிற்றின் முடுகி - பத்து மடங்கு விரைந்து. விராதன் இருவர்களையும் சமந்து வானத்தில் எழுந்தபோது சீதை புலம்பல் மாத யாவுடைய தன்கணவன், வஞ்சன் வலியின் போத லோடும், அலமந்தனள்; புலர்ந்து பொடியில் கோதை யோடும்ஓசி கொம்பென விழுந்த னள்,குலச் சீதை; சேவல் பிடியுண்ட சிறைஅன்னம் அனையாள். 12 12. மாத தயா உடை - மிகுந்த கருணையுடைய. ஓசி - ஒடிந்த. குலச் சீதை - சிறந்த சீதை. சேவல் பிடி உண்ட - ஆண் அன்னம் பிறரால் பிடிக்கப்பட்டதனால் துன்புறும். பின்னை ஏதும் உதவும் துணைபெறாள்; உரைபெறாள்; மின்னை ஏய்இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள்; `அன்னை யேஅனைய அன்பின் அறவோர்கள் தமைவிட்டு, என்னை யேநுகர்தி; என்றனள் எழுந்து விழுவாள். 13 13. `பின்னை உதவும் - துணை ஏதும் பெறாள். உரை பெறாள் - ஆறுதல் மொழியும் பெறாதவளாய். நுடங்கிய - தளர்ச்சி அடைய. அதுகண்ட இலக்குவன் `இன்னும் நாம் தாழ்த்தல் கூடாது என்று இராமனிடம் உரைத்தான். உடனே இராமன் விராதன் தோளை வாளால் துணித்தான். இருவரும் நிலத்தில் இறங்கினர்; விராதனும் வீழ்ந்தான்; இராமன் அவன் உடலைத் தன் காலால் எற்றினான்; அவன் ஒரு விஞ்சையனாக விண்ணில் நின்று இராமனை வாழ்த்தினான். விராதன் வாழ்த்து ‘பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி, நனிநின்ற சமயத்தோர் எல்லாரும், நன்றென்னத் தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி, நீயாகில், இனிநின்ற முதல்தேவர் என்கொண்டென் செய்வாரே? 14 14. பனி நின்ற - அஞ்சும்படி நின்ற. என் கொண்டு - என்ன பெருமையைக் கொண்டு. ‘நீஆதி பரம்பரமும், நின்னவே உலகங்கள், ஆயாத சமயமும்நின் அடியவே; அயல்இல்லை; தீயாரின் ஒளித்தியால், வெளிநின்றால் தீங்குண்டோ? வீயாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ? 15 15. ஆயாத சமயமும் - ஆராய்ந்து காண முடியாத பற்பல மதங்களும். வீயாத - அழியாத. வேண்டுமோ - உனக்கு வேண்டுமோ. ஆல்; அசை. ‘தாய்தன்னை அறியாத கன்றில்லை; தன்கன்றை ஆயும் அறியும்; உலகின்தாய் ஆகி;ஐய! நீஅறிதி எப்பொருளும்; அவைஉன்னை நிலைஅறியா; மாயைஇது என்கொலோ? வாராதே வரவல்லாய்! 16 16. ஆயும் - தாயும். அவை - அவ்வுயிர்கள். உன்னை நிலை - உன்னுடைய நிலையை. ‘பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர், இருவினையும் உடையார்போல், இருந்தவம்நின்று இயற்றுவார்; திருஉறையும்மணிமார்ப! நினக்கென்னை செயற்பால; ஒருவினையும் இல்லார்போல் உறங்குதியால் உறங்காதாய்! 17 17. -. `அரவாகிச் சுமத்தியால்! அயில்எயிற்றின் ஏந்துதிஆல்! ஒருவாயின் விழுங்குதியால்! ஓர்அடியால் ஒளித்திஆல்! திருவான நிலமகளை; ஈதறிந்தால் சீறாளோ? மருவாரும் துழாய்அலங்கல் மணிமார்பின் வைகுவாள். 18 18. `திருவான நில மகளை; அரவாகிச் சுமத்தி, அயில் எயிற்றின் - பன்றியாகிக் கூர்மையான தந்தத்தால். ஏந்துதி - தாங்குவாய். மரு ஆரும் - வாசனை பொருந்திய. ஆல்; அசைகள். ‘தாய்தன்னை அறியாத கன்றில்லை; தன்கன்றை ஆயும் அறியும்; உலகின்தாய் ஆகி;ஐய! நீஅறிதி எப்பொருளும்; அவைஉன்னை நிலைஅறியா; மாயைஇது என்கொலோ? வாராதே வரவல்லாய்! 16 19 19. `இறையும் ஒப்பு பெறல் அரிய - சிறிதும் உவமை கூறுவதைப் பெறமுடியாத. அப்பு உறையுள் - பால் கடலை. துப்பு உறழும் நீர்த்த - பவளத்தை ஒத்த தன்மையுள்ள. இவ்வாறு வாழ்த்தி வணங்கிய விஞ்சையனை `நீயார்? என்றான் இராமன். `நான் தும்புரு என்னும் பெயருள்ளவன்; குபேரன் உலகில் வாழ்ந்தேன்; அவன் சபையில் நடனமாடிய அரம்பையரைக் காதலித்தேன். அதனால் அரக்கனாகும்படி சபிக்கப்பட்டேன்; உன் பாதம் பட்டபின், என்சாபம் நீங்கும் என்ற வரம் பெற்றேன் என்றான். `அன்று மூலம் ஆதியாய்! இன்று காறும் ஏழையேன் நன்று தீது நாடலேன்; தின்று தீய தேடினேன். 20 20. `MâahŒ! அன் றுமூலம் - அன்று முதல். இன்று காறும் - இன்று வரையிலும். `தூண்ட நின்ற தொன்மைதான் வேண்ட நின்ற வேதநூல் பூண்ட நின்பொ லங்கொள்தாள் தீண்ட இன்று தேறினேன். 21 21. தூண்ட - என்னை நல் வழியிலே நடக்கும்படி தூண்ட. தொன்மை - பழவினையால். வேண்ட - நான் உன்னைத் துதிக்கும் படி. தேறினேன் - பிழைத்தேன். தான் ; அசை. `தெறுத்து வந்த தீதெலாம் அறுத்த உன்னை, ஆதனேன் ஒறுத்த தன்மை, ஊழியாய்! பொறுத்தி என்று போயினான். 22 22. தெறுத்து - உயிர்களை அழித்து. வந்த - அதனால் வந்த. ஆதனேன் - அறிவற்றவனாகிய யான். கைகொள் கால வேலினார் மெய்கொள் வேத மெய்யர்வாழ் மொய்கொள் சோலை முன்னினார் வைகல் தானும் வைகினார். 23 23. கால வேலினார் - காலனைப் போன்ற வேலையுடை யவர்கள். மொய் கொள் - மரங்கள் நிறைந்திருக்கின்ற. முன்னினார் - அடைந்தார். வைகல் தானும் - ஒரு நாள் முழுவதும். 2. சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் இராமன், இலக்குவன், சீதை மூவரும் பொழுது போகும் சமயத்தில் சரபங்கன் தவம்புரியும் வனத்தை அடைந்தனர். செவ்வே லவர்சென் றனர்சே ரல்உறும் அவ்வே லையில்எய் தினன்ஆ யிரம்ஆம் தவ்வாறு இரவும் பொலிதா மரையின் வெவ்வேறு அலர்,கண் ணினன்விண் ணவர்கோன். 1 சரபங்கர் பிறப்பு நீங்கு படலம்: சரபங்கன் என்னும் முனிவன் பிறவியிலிருந்து விடுதலை பெற்றதை உரைக்கும் பகுதி. 1. சென்றனர் சேரல் உறும் - சென்று சேர்கின்ற. தவ்வாது - தவறாமல். இரவும் - இரவிலும். பொலி - அலர்ந்து விளங்குகின்ற தாமரையைப் போல. வெவ்வேறு அலர் - தனித்தனியே விளங்கு கின்ற. விண்ணவர் கோன் - இந்திரன். நின்றான் எதிர்நின் றநெடுந் தவனும் சென்றான் எதிர்கொண் டுசிறப் பமையா ‘என்தான் இவண்எய் தியவாறு? எனலும் பொன்றா தபொலங் கழலோன் புகலும். 2 2. `எதிர் நின்றான். நின்ற நெடுந்தவனும் எதிர் சென்றான். நெடும் தவன் - சரபங்கன். சிறப்பு அமைய - சிறந்த மரியாதை களைச் செய்து. `இவண் எய்தி ஆறு என்தான் எனலும். பொன்றாத - அழியாத. நின்னால் இயல்நீ திநெடும் தவம்இன்று ‘என்னா லும்விளம் பரிது’என்று உணர்வான் அந்நான் முகன்,நின் னைஅழைத் தனன்ஆல; பொன்ஆர் சடைமா தவ!போ துதியால். 3 3. நின்னால் இயல் - உன்னால் சொல்லப்படும். நீதி நெடும் தவம் - நீதி தவறாத பெரிய தவத்தின் பெருமையை. என்று உணர்வான் அந்நான் முகன் - என்று எண்ணுகின்றவனாகிய அந்த நான்முகன். ஆல்; அசைகள். ‘எந்தாய்! உலகு யாவையும், எவ்வுயிரும் தந்தான் உறையும் நெறிதந் தனனால்; நந்தா தபெரும் தவ!நா டதுநீ வந்தாய் எனின்,நின் எதிரே வருவான். 4 4. தந்தான் - தந்தவனாகிய பிரமன். உறையும் நெறி - தான் உறையும் பிரமபதத்தை. நந்தாத - கெடாத. நாடு அது நீ - பிரம லோகமாகிய அதற்கு நீ. ஆல்; அசை. எல்லா உலகிற் கும்உயர்ந் தமையான் சொல்லா வகைநீ உணர்தொன் மையைஆல், நல்லாள் உடனே நடநீ! எனலும் அல்லேன் எனவால் அறிவான் அறைவான். 5 5. நீ உணர் - நீ அறிந்த .தொன்மையை - பழமையை உடையவன். வால் அறிவான் - தூய்மையான அறிவுடையவன் (சரபங்கள்.) சிறுகா லைஇலா, நிலையோ திரியா, குறுகா, நெடுகா, குணம்வே றுபடா, உறுகால் கிளர்பூ தம்எலாம் உகினும் மறுகா நெறிஎய் துவென்வான் உடையாய். 6 6. வான் உடையாய் - தேவேந்திரனே. சிறு காலையிலா - சிறிய கால வரம்பில்லாதது. உறுகால் - ஊழிக் காலத்தில் உண்டா கின்ற. கிளர் பூதம் எலாம் - விளங்குகின்ற பூதங்கள் எல்லாம். உகினும் - அழிந்தாலும். மறுகா நெறி - அழியாத பதவியை. இவ்வுரைகள் அங்கு வந்த இராமன் முதலியோர் காதுகளில் விழுந்தன. அங்கு நின்ற ஐராவதத்தைக் கண்டு, இந்திரன் வந்துளான் என்று எண்ணினான் இராமன். அவன் இலக்குவனையும், சீதையையும் பொழிலின் புறத்திலே நிறுத்தி விட்டு, முனிவன் இடத்தை எய்தினான். இந்திரன் இராமனை வணங்கினான். `தோய்ந்தும் பொருள்அனைத்தும், தோயாது நின்ற சுடரே! bjhl¡fW¤njh® R‰wnk!பற்றி நீந்த அறிய நெடும்கருணைக் கெல்லாம் நிலயமே! வேத நெறிமுறையின் நேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே! பகையால் அலைப்புண்டு அடியேம் அடிபோற்ற, அந்நாள் ஈந்த வரம்உதவ எய்தினையே! எந்தாய்! இருநிலத்த வோநின் இணையடித்தா மரைதாம். 7 7. தொடக்கு அறுத்தோர் - உலக பாசத்தை விட்டவர் களின். நேடி - தேடி. அலைப்புண்டு - வருந்தி. ‘மேவதார் இல்லை; மேவினரும் இல்லை; வெளியோடு இருள்இல்லை; மேல்கீழும் இல்லை; மூவாதமை இல்லை; மூத்தமையும் இல்லை; முதல்,இடையோடு, ஈறில்லை; முன்னொடுபின் இல்லை;njth!இங்கு இவ்வோநின் தொன்றுநிலை என்றால், சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக் காவாது ஒழியின் பழிபெரிதோ, அன்றே; கருங்கடலில் கண்வளர்ந்தோய்! if«khW« c©nlh? 8 8. மேவாதார் - பகைவர். வெளி - பகல். மூவாமை - இளமை. இவ்வோ - இவைகளோ. ஒன்றாகி,மூலத்து உருவம் பலவாகி, உணர்வும் உயிரும் பிறிதாகி, ஊழி சென்றுஆ சறும்காலத்து அந்நிலையது, ஆகித், திறத்துஉலகம் தானாகிச், செஞ்சவே நின்ற நன்றாய ஞானத் தனிக்கொழுந்தே ! நங்கள் நவைதீர்க்கும் நாயகமே! நல்வினையே நோக்கி நின்றாரைக் காத்தி! அயல்பேரைக் காய்தி! நிலையில்லாத் தீவினையும் நீதந்தது அன்றே! 9 9. ஊழி சென்று - பிரளயம் தோன்றி. ஆசறும் காலத்து - முடியும் காலத்தில். திறத்து உலகம் - பலவகைப்பட்ட உலகங்களும். இவ்வாறு இராமனை வாழ்த்திய இந்திரன், பின்னர் முனிவரிடம் விடை பெற்றுச் சென்றான். இராமன் முனி வனை வணங்கினான். சீதையும் இலக்குவனும் வந்தனர். அவர்கள் அன்றிரவு முனிவர் உறையுளில் தங்கியிருந்தனர். விடிந்த பின் முனிவன், தீ வளர்த்து அதிலே உயிர் விடத் துணிந்து, இராமனிடம் ஒப்புதல் கேட்டான். வரிசிலை உழவனும், மறைஉழ வனை,‘நீ புரிதொழில் எனை!அது புகலுதி!’ எனலும் ‘திருமகள் தலைவ!செய் இருவினை அற,யான் எரிபுக நினைகுவன் அருள்கென இறைவன். 10 10. வரிசிலை உழவன் - இராமன். புரி தொழில் எனை - செய்ய விரும்பிய காரியம் என்ன. செய் - செய்த தவத்தினால். திரு வினை உற - மோட்ச செல்வத்தையடைய. `யான்வரும் அமைதியின் இதுசெயல் எவனோ? மான்வரு தனிஉரி மார்பினை எனலும்; மீன்வரு கொடியவன் விறல்அடு மறவோன், ஊன்விடும் உவகையின், உரைநனி புரிவான். 11 11. அமைதியின் - சமயத்தில். மான் வரு தனி உரி - மானினிடமிருந்து வந்த சிறந்த தோலை. மீன் வரு கொடியவன் - மன்மதன். விறல் அடு - வெற்றியை அழித்த. மறவோன் - வீரன். `ஆயிரம் யுகம்உள தவம்அயர் குவன்,யான், நீஇவண் வருகுதி, எனும்நினைவு உடையேன்; போயின இருவினை, புகல்உறு விதியால் மேயினை, இனிஒரு வினையிலை விறலோய். 12 12. ஆயிரம் யுகம் - ஆயிரம் யுகமாக. உள தவம் - சிறந்துள்ள தவத்தை. அயர்குவென் - செய்கின்றவனாகிய. `ஆதலின் இதுபெற அருள்என உரையாக், காதலி அவளொடு கதழ்எரி மூழ்கிப், போதலை மருவினன் ஒருநெறி; புகலா வேதமும் அறிவரு மிகுபொருள் உணர்வோன். 13 13. புகலா வேதமும் - சொல்ல முடியாத வேதத்தாலும். அறிவு அரு - அறிய முடியாத. மிகு பொருள் உணர்வோன் - சிறந்த பொருளை உணர்ந்த சரபங்கன். உரையா - உரைத்து. கதழ் எரி - கொடிய தீயிலே. பின்னர் அவர்கள் மூவரும் சரபங்கன் உறையுளை விட்டுப் புறப்பட்டுத் தண்டகாரண்யத்தை அடைந்தனர். 3. அகத்தியப் படலம் மலைகளும், மரங்களும், மணிக்கல் பாறையும், அலைபுனல் நதிகளும், அருவிச் சாரலும், இலைசெறி பழுவமும், இனிய சூழலும், நிலைமிகு தடங்களும் இனிது நீங்கினார். 1 அகத்தியப் படலம்: அகத்திய முனிவரைச் சந்தித்ததைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. இலை செறி பழுவமும் - இலைகள் நெருங்கிய சோலை களும். சூழலும் - சுற்றுப்புறங்களும். நிலை மிகு தடங்களும் - பரப்பு மிகுந்த தடாகங்களையும். தண்டகவனத்து முனிவர்கள் சந்திப்பு ஆய்வரும் பெருவலி அரக்கர் நாமமே வாய்வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்; தீவரு வனத்திடை விட்டுத் தீர்ந்ததுஓர் தாய்வர நோக்கிய கன்றின் தன்மையார். 2 2. ஆய்வு அரும் பெருவலி - ஆராய்ந்து காணமுடியாத மிகுந்த வலிமையுள்ள. வாய் வெரீஇ அலமரும் - வாயினால் அஞ்சிக் கூறி வருந்துகின்ற. மறுக்கம் - குழப்பம். இட்டுத் தீர்ந்தது ஓர் - விட்டு நீங்கிய ஒரு. கரக்கரும் கடுந்தொழில் அரக்கர் காய்தலின், பொரற்குஇடம் இன்மையின், புழுங்கிச் சோருநர்; அரக்கர்என் கடலிடை ஆழ்கின் றார்,ஒரு மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினார். 3 3. கரக்க அரும் - மறைக்க முடியாத. காய்தலின் - சினத்தலால். புழுங்கி - மனம் வெந்து. தெரிஞ்சுற நோக்கினர், செய்த செய்தவம் அரும்சிறப்பு உதவ,நல் அறிவு கைதர, விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந்துயர்ப் பெருஞ்சிறை வீடுபெற்று அனைய பெற்றியார். 4 4. செய் தவம் - சிறந்த தவம். விரிஞ்சு உறப்பற்றிய - மிகவும் உறுதியாகப் பிடித்த. பிறவி - பிறப்பென்னும். வெம் துயர்ப்பெரும் சிறை - கொடிய துன்பமாகிய சிறையிலிருந்து. வீடு - விடுதலை. வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம் பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால், மூண்டெழு வெகுளியை முறையின் நீக்கினார்; ஆண்டுறை அரக்கரால் அலைப்புண் டார்;அரோ. 5 5. பொறையின் ஆற்றலால் - பொறுமையின் வன்மையால். எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின் கொழுந்தென நின்றஅக் குரிசில் வீரனைப் பொழிந்தெழு காதலில் பொருந்தி னார்;அவன் தொழுந்தொறும், தொழுந்தொறும், ஆசி சொல்லுவார். 6 6. -. முனிவர்கள் முறையீடு இனியதோர் சாலைகொண்டு ஏகி, `இவ்வயின் நனிஉறை என்றுஅவற்கு அமைய நல்கித்,தாம் தனிஇடம் சார்ந்தனர்; தங்கி,மற்றைநாள் அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான். 7 7. சாலை கொண்டு ஏகி - பர்ணசாலைக்கு அழைத்துக் கொண்டுபோய். என்று அவற்கு அமைய நல்கி - என்று சொல்லி, அவனுக்கு ஏற்ற இடத்தைக் கொடுதது. சொல்லுவன் - சொல்லும் பொருட்டு. எய்திய முனிவரை இறைஞ்சி, ஏத்துவந்து அய்யனும் இருந்தனன்; ‘அருள்என! என்றலும், ‘வய்யகம் காவலன் மதலை! வந்ததுஓர் வெய்யவெம் கொடுந்தொழில் விளைவு கேள்!எனா. 8 8. ஏத்து வந்து - துதித்து. வெய்ய வெம் கொடும் தொழில் - மிகவும் கொடிய வீனையின். விளைவு - பயன். `இரக்கம்என்று ஒருபொருள் இலாத நெஞ்சினர், அரக்கர்என்று உளர்சிலர்; அறத்தின் நீங்கினார்; நெருக்கவும், யாம்படர் நெறிஅ லாநெறி துரக்கவும், அரும்தவத் துறையும் நீங்கினேம். 9 9. யாம் படர் நெறி - நாங்கள் செல்லுகின்ற ஒழுக்க நெறியை விட்டு. அலா நெறி துரக்கவும் - செல்லத்தகாத நெறியிலே செல்லவும். `வல்லியம் பலதிரி வனத்து, மான்என, எல்லியும், பகலும்,நொந்து இரங்கி ஆற்றலெம்; சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினேம்; வில்இயல் மொய்ம்பினாய்! åL fh©Fnkh? 10 10. வல்லியம் பல திரி - புலிகள் பல திரிந்து கொண்டிருக் கின்ற. வில் இயல் - வில்லின் திறம் அமைந்த. `மாதவத்து ஒழுகலெம்; மறைகள் யாவையும் ஓதலெம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்; மூதெரி வளர்க்கிலெம்; முறையின் நீங்கினேம்; ஆதலின் அந்தண ரேயும் ஆகிலேம். 11 11. -. ‘இந்திரன் எனின்,அவன், அரக்கர் ஏயின, சிந்தையில், சென்னியில், கொள்ளும் செய்கையான்; எந்தை!மற்று யார்உளர் இடுக்கண் நீக்குவார்? வந்தனை யாம்செய்த தவத்தின் மாட்சியால். 12 12. -. `உருள்உடை நேமியால் உலகை ஓம்பிய, பொருள்உடை மன்னவன் புதல்வ! போக்கிலா இருள்உடை வைகலெம்; இரவி தோன்றினாய்! அருள்உடை வீர;நின் அபயம் யாம், என்றார். 13 13. உருள் உடை நேமியால் - எங்கும் உருண்டு செல்லும் ஆணைச் சக்கரத்தால். போக்கு இலா - நீங்காத. இருள் உடை வைகலேம் - இருளடைந்த நாளை உடையேம். முனிவர்களின் முறையீடு கேட்டு இராமன் இரக்கம் `வேந்தன் வீயவும், யாய்துயர் மேவவும், ஏந்தல் எம்பி வருந்தவும், என்நகர் மாந்தர் வன்துயர் வரவும் யான்வனம் போந்தது என்னுடைப் புண்ணியத் தால்,என்றான். 14 14. ஏந்தல் எம்பி - சிறந்தவனாகிய என் தம்பி. கூரவும் - மிகவும். ‘அறம்த வாநெறி அந்தணர் தன்மையை மறந்த, புல்லர் வலிதொலை யேன்,எனின் இறந்து போகிலும் நன்று;இது அல்லது, பிறந்து யான்பெறும் பேறென்பது யாவதோ? 15 15. அறம் தவா நெறி - அறம் கெடாத நல்லொழுக்கத்தை யுடைய. தன்மையை - சிறப்பை. ஆவுக் காயினும், அந்தணர்க் காயினும், யாவர்க் காயினும், எளியவர்க் காயினும், சாவப் பெற்றவரே, தகை வான்உறை தேவர்க் கும்தொழும் தேவர்கள் ஆகுவார். 16 16. தகை வான் உறை - சிறந்த வானுலகில் வாழ்கின்ற. தேவர்க்கும் தொழும் - தேவர்களாலும் வணங்கத்தச்சு. ‘சூர்அ றுத்த வனும்,சுடர் நேமியும், ஊர்அ றுத்த ஒருவனும் ஓம்பினும், ஆர்அ றத்தினொடு அன்றிநின் றார்,அவர் வேர்அ றுப்பன்; வெருவன்மின் நீர்! என்றான். 17 17. சூர் அறுத்தவனும் - சூரனைக் கொன்ற முருகனும். நேமி - திருமால். ஊர் அறுத்த ஒருவனும் - திரிபுரமாகிய ஊரை அழித்த ஒப்பற்ற சிவபெருமானும். ஆர் அறத்தினோடு அன்றி - பொருந்திய அறத்தினோடு அல்லாமல். நின்றார் அவர் - மறத்தினோடு நின்றவர்களாகிய அவ்வரக்கர்களின். உரைத்த வாசகம் கேட்டுவந்து, ஓங்கிட இரைத்த காதலர்; ஏகிய இன்னலர்; திரித்த கோலினர்; தேமறை பாடினர்; நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார். 18 18. ஓங்கிட இரைத்த - ஓங்கும்படி வளர்ந்த. திரித்த - சுழற்றிய. தேமறை - தெய்வத் தன்மை பொருந்திய வேதப் பாடல்களை. இராமன் சில நாட்கள் அங்கே தங்கியிருந்தான். பின்னர் அகத்திய முனிவரைக் காணப் புறப்பட்டான். இராமன் முதலியோர் வழி நடந்து சுதீட்சணன் என்னும் அருந்தவன் இடத்தை அடைந்தனர். அவனிடம் சில நாள் விருந்தினரா யிருந்தனர்; அவன் தன் தவத்தின் பயன் முழுவதையும் இராமனுக்கு அளித்தான்; பின்னர் அவர்கள் அகத்தியன் உறையும் சோலையை எய்தினர். அகத்தியன் பெருமை ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான், ஈண்டுவகை வேலை,துணை ஏழ்உலகம் எய்த, மாண்டவர தன்சரண் வணங்கஎதிர் வந்தான்; நீண்டதமி ழால்உலகை, நேமியின் அளந்தான். 19 19. நீண்ட - வளர்ச்சியடைந்த. நேமியின் - திருமாலைப் போல. அளந்தான் - அளந்தவனாகிய அகத்தியன். ஈண்டு உவகை வேலை - மிகுந்த மகிழ்ச்சிக் கடலானது. துணை ஏழ் உலகும் எய்த - ஈரேழுலகங்களையும் அடையும் படி. மாண்ட வரதன் - சிறந்த இராமனுக்கு. சரண் வழங்க - தனது திருவடிகளை வழங்கும் பொருட்டு. உழக்குமறை நாலினும் உயர்ந்துஉல கம்ஓதும் வழக்கினும், மதிக்கவி யினும்மர பின்நாடி, நிழற்பொலி கணிச்சி மணிநெற்றி உமிழ்செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான். 20 20. நிழல் பொலி கணிச்சி - ஒளி விளங்கும் மழுப்படையை யும். மணி நெற்றி உமிழ் செங்கண் - அழகிய நெற்றியிலே நெருப்பைச் சிந்தும் சிவந்த கண்ணையும் உடைய. தழல் புரை சுடர்க் கடவுள் - தீப்போன்ற ஒளி வடிவான சிவபெருமான். தந்த தமிழ் - தந்த மொழியை. உழக்கும் - வருந்திக் கற்கும்படியுள்ள. மறை நாலினும் - வேதங்கள் நான்கிலும். உலகம் ஓதும் வழக்கினும் -உலக வழக்கிலும். மதிக் கவியினும் - அறிவு புகட்டும் கவியினாலும். உயர்ந்து - உயர்ந்து விளங்கும்படி. மரபின் நாடி - முறைப்படி அதன் இலக்கணத்தை ஆராய்ந்து. தந்தான் - உலகுக்குத் தந்தவன். இது அகத்தியன் செயலையும் தமிழின் சிறப்பையும் உரைத்தது. கண்டனன் இராமனை வரக்;கருணை கூரப், புண்டரிக வாள்நயனம் நீர்பொழிய நின்றான்; எண்திசையும்; ஏழ்உலகும், எவ்வுயிரும் உய்யக், குண்டிகையி னில்,பொருவில் காவிரி கொணர்ந்தான். 21 21. `இராமனை வரக் கண்டனன் புண்டரிக வாள் நயனம் - தாமரை மலர் போன்ற ஒளி பொருநதிய கண்களிலே. குண்டிகை - கமண்டலம். நின்றவனை, வந்தநெடி யோன்,அடி பணிந்தான்; அன்றவனும் அன்பொடு தழீஇஅழுத கண்ணான், `நன்றுவரவு என்றுபல நல்உரை பகர்ந்தான்; என்றும்உள தென்தமிழ் இயம்பிஇசை கொண்டான். 22 22. நின்றவனை - தமிழ் முனிவனை. என்றும் உள தென்தமிழ் - என்றும் அழியாது நிலவும் அழகிய தமிழுக்கு. இயம்பி - இலக்கணம் கூறி. இசை கொண்டான் - புகழ் பூண்ட அகத்தியன். அகத்தியன் அன்புரை ‘ஈண்டுறைதி ஐய!இனி இவ்வயின் இருந்தால், வேண்டியன மாதவம் விரும்பினை முடிப்பாய்! தூண்டுசின வாள்நிருதர் தோன்றியுளர் என்றால் மாண்டுக மலைந்து,எமர் மனத்துயர் துடைப்பாய்! 23 23. தூண்டு சினம் - மிகுந்த சினத்தையுடைய. வாள் நிருதர் - வாட் படையையுடைய அரக்கர்கள்.மாண்டு உக மலைந்து - அழிந்துபோகும்படி போர் செய்து. ‘வாழும்மறை; வாழும்மனு நீதிஅறம் வாழும்; தாழும்இமை யோர்உயர்வர்; தானவர்கள் தாழ்வார்; ஆழிஉழ வன்புதல்வ! ஐயம்இலை மெய்யே; ஏழுலகம் வாழும்இனி இங்குறைதி! என்றான். 24 24. -. இராமன் கருத்துரை ‘செருக்கடை அரக்கர்புரி தீமை,சிதைவு எய்தித் தருக்குஅழி தரக்,கடிது கொல்வது சமைந்தேன்; வருக்கமறை யோய்!அவர் வருந்திசையின் முந்துற்று இருக்கைநலம்; நிற்குஅருள்என்? என்றனன் இராமன். 25 25. சமைந்தேன் - உறுதி கொண்டு நின்றேன். வருக்க மறையோய் - கூட்டமான வேதங்களில் வல்லவனே. நிற்கு அருள் என் - உனக்கு விருப்பம் யாது? அகத்தியன் செயலும் உரையும் அகத்தியன் இராமன் கருத்தை ஒத்துக் கொண்டான் தன்னிடம் இருந்த திருமாலின் வில், அம்புப் பெட்டி, ஒப்பற்ற வாள் சிவபெருமான் திரிபுரத்தை எரித்த கணை இவைகளை இராமனிடம் கொடுத்தான். ‘ஓங்குமரன் ஓங்கி,மலை யோங்கி,மணல் ஓங்கிப் பூங்குலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மித், தூங்குதிரை ஆறுதவழ் சூழலது,ஓர் குன்றின் பாங்கர்உள தால்உறையுள் பஞ்சவடி; மஞ்ச! 26 26. பூங்குலைகுலாவு - பூங்கொத்துக்கள் விளங்குகின்ற. புடை விம்மி - பக்கத்திலே பரவி. தூங்குதிரை - அசைகின்ற அலைகளையுடைய. உறையுள் - உறையத் தக்க அவ்விடம். `கன்னிஇள வாழைகனி ஈவ;கதிர் வாலின் செந்நெல்உள; தேன்ஒழுகு போதும்உள; தெய்வப் பொன்னிஎனல் ஆயபுனல் ஆறும்உள; போதா, அன்னம்உள, பொன்இவளொடு அன்பின்விளை யாட. 27 27. கன்னி - அழகிய. கதிர் வாலின் செந்நெல் - கதிரும் வாலும் அமைந்த செந்நெற்பயிர்களும். போதும் - மலர்களும். பொன்னி - காவேரி. போதா - நாரைகளும். அன்னம் - அன்னப் பறவைகளும். ‘ஏகிஇனி அவ்வயின் இருந்துறைமின்! என்றான்; மேகநிற வண்ணனும் வணங்கிவிடை கொண்டான்; பாகனைய சொல்லியொடு, தம்பிபரி வின்பின் போக,முனி சிந்தைதொட ரக்,கடிது போனான். 28 28. பாகு அனைய - சக்கரைப் பாகு போன்ற இனிய. சொல்லி - சொல்லையுடையவளாகிய சீதை. பரிவின் - துன்பத்துடன்; அன்புடன். முனி - அகத்தியன். 4. சடாயு காண் படலம் நடந்தனர் காவதம் பலவும்; நன்னதி கிடந்தன, நின்றன கிரிகள் கேண்மையின் தொடர்ந்தன, துவன்றின, சூழல் யாவையும் கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே. 1 சடாயு காண் படலம் : சடாயு என்னும் கழுகரசனைக் கண்டதைப்பற்றிக் கூறும் பகுதி. 1. கேண்மையின் - உறவுகொண்டதுபோல. தொடர்ந்தன துவன்றின - தொடர்ந்து நெருங்கிய. சூழல் - சுற்றுப்புறங்கள். தூய்மையன்; இரும்கலை துணிந்த கேள்வியன்; வாய்மையன்; மறுவிலன்; மதியின் கூர்மையான்; ஆய்மையன்; மந்திரத்து அறிஞ னாம்எனச் சேய்மையின் நோக்குறு சிறுக ணான்தனை. 2 2. இரும்கலை துணிந்த கேள்வியன் - மிகுந்த கல்வியும் முடிவான கேள்வியும் உடையவன். ஆய்மையன் - ஆராய்ச்சி யுடையவன். மந்திரத்து - ஆலோசனையையுடைய. இராம இலக்குவர் சடாயுவைக் காணல் ஓங்குயர் நெடுவரை ஒன்றில் நின்றுஅது, தாங்கலது, இருநிலம் தாழ்ந்து தாழ்வுற, வீங்கிய வலியினில் இருந்த வீரனை ஆங்கவர் அணுகினர், அயிர்க்கும் சிந்தையார். 3 3. அது தாங்கலது - அது தாங்கமுடியாமல். வீங்கிய வலியினில் - மிகுந்த வலிமையுடன். ‘அயிர்க்கும் சிந்தையார், ஆங்கவர் அணுகினர்! ‘இறுதியைத் தன்வயின் இயற்ற எய்தினான் அறிவிலி அரக்கனாம்; அல்லன் ஆம்எனின் எறுழ்வலிக் கலுழனே! என்ன உன்னிஅச் செறிகழல் வீரரும் செயிர்த்து நோக்கினார். 44. தன்வயின் இறுதியை இயற்ற - தனக்குத்தானே முடிவைத் தேடிக் கொள்ள. எறுழ் வலி - மிகுந்த வலிமையுள்ள. செயிர்த்து - சினந்து. இராம இலக்குவர்களைக் கண்ட சடாயுவின் சிந்தனை வனைகழல் வரிசிலை மதுகை மைந்தரை, அனையவன் தானும்கண்டு அயிர்த்து நோக்கினான்; ‘வினைஅறு நோன்பினர் அல்லர்; வில்லினர்; புனைசடை முடியினர்; புலவ ரோ!எனா. 5 5. வனை கழல் - வேலைப்பாடமைந்த வீரக் கழலையும். வலி - சிலை - கட்டமைந்த வில்லையும் உடைய. மதுகை - வலிமையுள்ள. வினை அறு - தீவினையை அறுக்கின்ற. நோன்பினார் - தவசியர். புலவரோ - தேவர்களோ. புரந்தரன் முதலிய புலவர் யாரையும் நிரந்தரம் நோக்குவென்; நேமி யானும்அவ் வரம்தரும் இறைவனும் மழுவ லாளனும் கரந்திலர் என்னை,யான் என்றும் காண்பென்;ஆல். 6 6. புலவர் - தேவர்கள். வரந்தரும் இறைவன் - பிரமதேவன். மழுவலாளன் - சிவன். என்னைக் கரந்திலர் - எனக்கு ஒளிக்க மாட்டார்கள். ஆல்; அசை. உலகுஒரு மூன்றும்தம் உடைமை ஆக்குறும் அலகறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்; மலர்மகட்கு உவமையா ளோடும் வந்தஇச்; சிலைவலி வீரரைத் தெரி கிலேன்எனா. 7 7. அலகு அறும் - அளவற்ற. இலக்கணம் - உத்தம இலக்கணம். மலர் மகள் - இலக்குமி. `கருமலை செம்மலை அனைய காட்சியர்; திருமகிழ் மார்பினர்; செங்கண் வீரர்தாம், அருமைசெய் குணத்தின்என் துணைவன், ஆழியான் ஒருவனை இருவரும் ஒத்து ளார்;அரோ. 8 8. அருமை செய் - அரிய செயல்களைச் செய்யும். குணத்தின் - தன்மை யினையுடைய. ஆழியான் ஒருவனை - தசரதன் ஒருவனையே. அரோ; அசை. சடாயுவின் கேள்வி எனப்பல நினைப்புஇனம் மனத்துள் எண்ணுவான், சினப்படை வீரர்மேல் செல்லும் அன்பினான், `கனப்படை வரிசிலைக் காளை நீவிர்யார்? மனப்பட எனக்குரை வழங்கு வீர்!என்றான். 9 9. கனம் படை வரிசிலை - பெருமையுள்ள படையாகிய கட்டமைந்த வில்லையுடைய. மனம்பட - மனத்தில் பதியும்படி. இராம இலக்குவர் விடை வினவிய காலையின், மெய்ம்மை அல்லது புனைமலர்த் தார்அவர் புகல்கி லாமையால், `கனைகட லொடு,நிலம், காவல் ஆழியான் வனைகழல் தயரதன் மைந்தர் யாம்,என்றார். 10 10. -. தசரதன் இறப்பறிந்து சடாயு வருந்துதல் உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன், தரைத்தலை இழிந்து,அவர்த் தழுவும் காதலன், ‘விரைத்தடம் தாரினான்! வேந்தர் வேந்தன்தன் வரைத்தடம் தோள்இணை, வலியவோ! என்றான். 11 11. உவகை வேலையன் - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாகி. `தசரதன் இறந்தனன் என்றனர். சடாயு சோர்ந்து வீழ்ந் தான். அவனைத் தூக்கி எடுத்துச் சோர்வு நீக்கினர். தன் உணர்வு பெற்ற சடாயு. தசரதனை நினைந்து தளர்ந்து புலம்பினான். வேறு அலங்காரம் எனஉலகுக்கு அமுதளிக்கும் தனிக்குடையாய்! ஆழி சூழ்ந்த நிலம்காவல் அதுகிடக்க, நிலையாத நிலைஉடையேன் நேய நெஞ்சின் நலம்காண நடந்தனையோ! நாயகனே! தீவினையென் நண்பின் நின்றும் விலங்கானேன்! ஆதலினால் விலங்கினேன்; இன்னும்உயிர் விட்டி லேனால். 12 12. தீவினையேன் விலங்கானேன் - தீவினையையுடைய நான் விலங்காகி நின்றேன். ஆதலினால் விலங்கினேன் - ஆதலால் விலகி நின்றேன். `தயிர்உடைக்கும் மத்தென்ன, உலகைநலி சம்பரனைத் தடிந்த அந்நாள் அயிர்கிடக்கும் கடல்வலயத்து அயல்அறிய, `நீஉடல்,நான் ஆவி, என்று செயிர்கிடத்தல் செய்யாத திருமனத்தாய்! செப்பினாய் திறம்பா நின்சொல்; உயிர்கிடக்க, உடலை, விசும்பு ஏற்றினார் உணர்விறந்த கூற்றி னாரே. 13 13. அயிர் கிடக்கும் - நுண் மணல் படிந்து கிடக்கும். கடல் வலயத்து - கடல் சூழ்ந்த உலகிலே. செயிர் கிடத்தல் செய்யாத - குற்றமற்ற. நின் சொல் திறம்பா - உன் சொல் தவறாகாவாம். `உணர்வு இறந்த கூற்றினார் உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார். எழுவதுஓர் இசைபெருக, இப்பொழுதே, ஒப்பரிய எரியும் தீயில் விழுவதே நிற்க,மட மெல்,இயலார் தம்மைப்போல், நிலத்தின் மேல்வீழ்ந்து அழுவதே யான்!’என்னா, அறிவுற்றான் எனஎழுந்து, ஆங்கு அவரை நோக்கி, ‘முழுவதுஏழ் உலகுடைய மைந்தன்மீர் கேண்மின்!என முறையின் சொல்வான். 14 14. எழுவது ஓர் இசை பெருக - உண்டாக்கும் ஒரு புகழ் வளரும்படி. விழுவதே - விழுந்து மாள்வதே சிறந்ததாகும். யான் அழுவதே - நான் அழலாமோ? `அருணன்தன் புதல்வன்யான் அவன்படரும் உலகெல்லாம் படர்வேன்; ஆழி இருள்மொய்ம்பு கெடத்துரந்த தயரதற்குஇன் னுயிர்த்துணைவன்; இமையோ னோடும் வருணங்கள் விரிகின்ற காலத்தே வந்துதித்தேன்; கழுகின் மன்னன்; தருணங்ககொள் பேரொளியீர்! சம்பாதி பின்னர்வரு சடாயு என்றான். 15 15. அருணன் - சூரியன் தேர்ப்பாகன். ஆழி - அரசாட்சி யினால். இருள் மொய்ம்பு - பகைவர்களின் வலிமை. கெட துறந்த - அழியும்படி செய்து துரத்திய. தருணம் கொள் - இளமை பொருந்திய. ஆண்டுஅவன்ஈது உரைசெய்ய, அஞ்சலித்த மலர்க்கையார் அன்பி னோடும், மூண்டபெரும் துன்பத்தால், முறைமுறையின் நிறைமலர்க்கண் மொய்த்த நீரார், பூண்டபெரும் புகழ்நிறுவித், தம்பொருட்டால் பொன்உலகம் புக்க தாதை மீண்டனன்,வந் தான், அவனைக் கண்டனரே ஒத்தனர்;அவ் விலங்கல் தோளார். 16 16. விலங்கல் தோளார் - மலை போன்ற தோளையுடை யவர்கள். மருவினிய குணத்தவரை இருசிறகால் உறத்தழுவி `மக்காள் நீரே உரியகடன் வினையேற்கும் உதவுவீர்! உடல்இரண்டுக்கு உயிர்ஒன் றானான் பிரியவுந்தான் பிரியாதே இனிதிருக்கும் உடற்பொறையாம் பீழை பாராது எரிஅதனின் இன்றேபுக்கு இறவேனேல் இத்துயரம் மறவேன் என்றான். 17 17. மருவு இனிய - பொருந்திய இனிய. உடல் பொறையாம் - உடல் பாரமாகிய. பீழை பாராது - துன்பத்தைப் பார்க்கலாம். இராம இலக்குவர்கள் வேண்டுகோள் உய்வி டத்துஉத வற்குஉரி யானும்தான் மெய்வி டக்கரு தாதுவிண் ஏறினான்; இவ்வி டத்தினில் எம்பெரு மான்எமைக் கைவி டின்பினை யார்களை கண்உளார்? 18 18. உய்வு இடத்து - துன்பத்திலிருந்து தப்பவேண்டும் பொழுது. மெய் விட - உண்மையை விட்டுவிட. பினை - பின்னை. களைகண் உளார் யார் - பாதுகாப்பாக உள்ளவர் யார்? ‘தாயின், நீங்கஅரும் தந்தையின், தண்நகர் வாயின் நீங்கி வனம்புகுந்து எய்திய நோயின் நீங்கினம் நுன்னின்; எங்களை நீயும் நீங்குதி யோநெறி நீங்கலாய்?19. -. என்ற சொல்லர், இருந்தழி நெஞ்சினன், நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் `அன்றுஅது என்னின் அயோத்தியின், ஐயன்மீர் சென்ற பின்அவன் சேர்குவென் யான்;என்றான். 20 20. நினைந்து அவன் - அவன் ஆலோசித்து. அன்று அது என்னின் - நல்லது அன்று அதுவானால். அவன் சேர்குவென் - அத்தசரதன் சென்ற இடத்தை அடைவேன். ‘வேந்தன் விண்அடைந் தான்எனின் வீரர்நீர், ஏந்து ஞாலம் இனிதுஅளி யாது,இவண் போந்தது என்னை? புகுந்தஎன்? புந்திபோய்க் காந்து கின்றது; கட்டுரை யீர்!என்றான். 21 21. ஏந்து ஞாலம் - முன்னோர்களால் தாங்கிய உலகத்தை. அளியாது - காக்காமல். தாதை கூறலும், தம்பியை நோக்கினான் சீதை கேள்வன்; அவனும்,தன் சிற்றவை மாத ரால்வந்த செய்கை, வரம்பிலா ஓத வேலை, ஒழிவின்று உணர்த்தினான். 22 22. செய்கை வரம்பிலா ஓத வேலை - செய்கையாகிய எல்லையற்ற கடல் போன்ற செய்திகள். ஒழிவு இன்று - ஒன்று விடாமல் எல்லாவற்றையும். `உந்தை உண்மையன் ஆக்கி,உன் சிற்றவை தந்த சொல்லைத் தலைக்கொண்டு தாரணி, வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே! எந்தை! tšyJ aht®tš yh®?எனா. 23 23. எந்தை - எந்தையே. வல்லது - நீ செய்ய வல்லதாகிய காரியத்தை. யாவர் வல்லார் - வேறு யார்தான் செய்ய வல்லார்? அல்லித் தாமரைக் கண்ணனை, அன்புறப் புல்லி, மோந்து, பொழிந்தகண் ணீரினன், ‘வல்லை மைந்த!அம் மன்னையும், என்னையும், எல்லை யில்புகழ் எய்துவித் தாய்!என்றான். 24 24. அல்லித் தாமர - இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற. வல்லை - வலிமையுள்ள. பின்ன ரும்அப் பெரியவன், பெய்வளை அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்; ‘மன்னர் மன்னவன் மைந்த!இவ் வாள்நுதல் இன்னள் என்ன இயம்புதி யால்;என்றான். 25 25.-.அல்இ றுத்தன தாடகை ஆதியா, வில்இ றுத்தது இடைஎன, மேலைநாள் புல்இ றுத்தது யாவும் புகன்று,தன் சொல்இ றுத்தனன் தோன்றல்பின் தோன்றினான். 26 26. அல் இறுத்து அன - இருட்டு உருவெடுத்துத் தங்கினது போன்ற. புல் இறுத்தது - காட்டிற்கு வந்து தங்கியது. தன் சொல் இறுத்தனன் - தன் சொல்லை முடித்தான். கேட்டு உவந்தனன் கேழ்கிளர் மௌலியான், ‘தோட்டு அலங்கலி னீர்!துறந் தீர்வள; நாட்டு; நீர்இனி நண்ணுதல் காறும்இக் காட்டில் வைகுதிர் காக்குவென் யான்என்றான். 27 27. கேட்டு உவந்தனன்; கேழ்கிளர் - ஒளி விளங்குகின்ற. மௌலியான் - முடியை உடையவனாகிய சடாயு. தோட்டு அலங்கலினீர் - பூவிதழ் உள்ள மாலையை யுடையவர்களே. வைகுதிர் - வாழுங்கள். `இறைவ! எண்ணி அகத்தியன் ஈந்துளது; அறையும் நன்மணி ஆற்றின் அகன்கரைத் துறையுள் உண்டுஒரு சூழல்;அச் சூழல்புக்கு உறைதும்; என்றனன் உள்ளத்து உறைகுவான். 28 28. ஈந்து உளது - சொல்லி உள்ளது. அறையும் - ஒலிக்கின்ற. நன்மணி ஆற்றின் - நல்ல இரத்தினங்கள் நிறைந்த கோதாவரி ஆற்றின்.அகன் கரைத்துறையுள் - அகன்ற கரையையுடைய நீர்த்துறையின் அருகில். சூழல் - இடம். பெரிதும் நன்றுஅப் பெரும்துறை வைகிநீர் புரிதிர் மாதவம்; போதுமின்; யான்அது தெரிவு றுத்துவென் என்றுஅவர் திண்சிறை விரியும் நீழலில் மேவவிண் சென்றனன். 29 29. அப்பெரும் துறை - அப்பெருமையுள்ள இடத்தில். திண் சிறை - வலிய சிறகுகளின். விரியும் நீழலில் - பரந்த நிழலிலே. ஆய சூழல் அறிய உணர்த்தி,அத் தூய சிந்தைஅத் தோமில் குணத்தினான் போய பின்னைப் பொருசிலை வீரரும் ஏய சோலை இனிதுசென்று எய்தினார். 30 30. ஆய சூழல் - அத்தகையதாகிய இடத்தை. தோம் இல் - குற்றமில்லாத. ஏய சோலை - வளம் பொருந்திய சோலையை. 5. பஞ்சவடிப் படலம் கோதாவரியின் சிறப்பு புவியினுக்கு அணியாய், ஆன்ற பொருள்தந்து, புலத்திற்று ஆகி, அவிஅகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறிஅ ளாவிச், சவிஉறத் தெளிந்து, தண்என் ஒழுக்கமும் தழுவிச், சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார். 1 பஞ்ச வடிப் படலம்: இராமன் முதலிய மூவரும். பஞ்சவடி என்னும் இடத்தை அடைதல். பஞ்சவடி - ஐந்து நதிகள் கூடும் இடம். 1. ஆன்ற - நிறைந்த; சிறந்த. புலத்திற்று ஆகி - விளை நிலங்களை உடையதாய்; புலமை பொருந்தியதாய். அவிஅகம் துறைகள் தாங்கி - அமைதியான இடத்தையுடைய நீர்த் துறைகளைக்கொண்டு; சிறந்த அகப்பொருள் துறைகளை ஏற்று. ஐந்திணை நெறி - ஐந்து நிலங்களின் வழியிலே; ஐந்து திணை ஒழுக்கங்களை. சவிஉற - ஒளி பொருந்தும்படி. சான்றோர் கவியைப் போலக் காட்சியளித்தது கோதாவரி யாறு. வண்டுறை கமலச் செல்வி வாள்முகம் பொலிய, வாசம் உண்டுறை குவளை உண்கண் ஒழுங்குற நோக்கி, ஊழின் தெண்திரைக் கரத்தின் வாரித் திருமலர் தூவிச், செல்வர்க் கண்டடி பணிவது என்னப் பொலிந்தது கடவுள் யாறு. 2 2. கடவுள் யாறு - கங்கை நதி. தாமரை முகமாகவும், குவளை கண்ணாகவும், அலை கையாகவும் உருவகம் செய்யப் பட்டன. செல்வர்க்கண்டு - செல்வர்களைக்கண்டு. எழுவுறு காதலாரின் இரைத்து இரைத்துஏங்கி ஏங்கிப் பழுவநாள் குவளைச் செல்விக் கண்பனி பரந்துசோர வழுவிலா வாய்மை மைந்தர் வனத்துறை வருத்தம் நோக்கி, அழுவதும் ஒத்த தால்அவ் அலங்குநீர் ஆறு மன்னோ. 3 3. பழுவம் நாள் குவளை - மிகுந்த அன்றலர்ந்த நீலோற்பவ மலராகிய. செவ்வி - அழகிய. கண் பனி பரந்து சோர - கண்களிலிருந்து குளிர்ந்த நீர் பரவி விழும்படி. அலங்கு நீர் - அசைகின்ற நீரையுடைய. மன்; ஓ; அசைகள். ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன், உழையள் ஆகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்; மாதவள் தானும், ஆண்டு வந்துநீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள். 4 4. ஒதிமம் - அன்னப் பறவை. ஒதுங்கக்கண்ட - அசைந்து செல்வதைக் கண்ட, உழையள் ஆகும் - பக்கத்தில் நடப்பவளாகிய. மாது அவள் தானும் - சீதையும், போதகம் - யானை. வில்இயல் தடக்கை வீரன், வீங்கு,நீர் ஆற்றின் பாங்கர் வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கைதன் மருங்குல் கண்டான்; எல்லிஅம் குவளைக் கானத்து இடைஇடை மலர்ந்து நின்ற அல்லிஅம் கமலம் கண்டாள். அண்ணல்தன் வடிவு கண்டாள். 5 5. எல்லி அம் குவளைக்கானத்து - இருண்ட அழகிய நீலோற்பல மலர்க்காட்டில். அல்லி அம்கமலம் - இதழ்களை யுடைய அழகிய தாமரை. இராமன் பஞ்சவடியிலே, ஒரு சோலையிலே, இலக்குவனால் அமைக்கப்பட்ட பூஞ்சாலையிலே தங்கியிருந்தான். 6. சூர்ப்பணகைப் படலம் சூர்ப்பணகை வருகை நீலமா மணிநிற நிருதர் வேந்தனை மூலநா சம்பெற, முடிக்கும் மொய்ம்பினாள், மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான்விளை காலம்ஒர்ந்து உடன்உறை கடிய நோயனாள். 1 சூர்ப்பணகைப் படலம்: இராவணன் தங்கையாகிய சூர்ப்பணகை வருதலும், அவமானப்படுதலும் ஆகிய செய்தியைக் கூறும் பகுதி. 1. நிருதர் வேந்தன் - இராவணன். மூலம் நாசம் பெற - அடியோடு அழியும்படி. தான் விளை காலம் ஓர்ந்து - தான் தீங்கு விளைக்கின்ற காலத்தை அறிந்து (எதிர்பார்த்து.) வெய்யதோர் காரணம் உண்மை மேயினாள், வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள்; நொய்தின் இவ் வுலகெலாம் நுழையும் நோன்மையாள் எய்தினள் இராகவன் இருந்த சூழல்வாய். 2 2. வெய்யது ஓர் - தீமை விளைவதற்கான ஒரு. காரணம் உண்மை - காரணம் இருந்ததனால். நோன்மையள் - வலிமை யுள்ளவள். எண்தகும் இமையவர், `அரக்கர் எங்கள்மேல் விண்டனர்; விலக்குதி என்ன, மேலைநாள் அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக் கண்டனள்; தன்கிளைக்கு இறுதி காட்டுவாள். 3 3. தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் - தன் உறவினர்க்கு அழிவைக் காட்டுகின்றவளாகிய சூர்ப்பனகை. விண்டனர் - பகைத்தனர். அண்டசத்து - பாம்புப்படுக்கையினின்றும். சூர்ப்பணகையின் சிந்தனை `சிந்தையின் உறைபவற்கு உருவம் தீய்ந்ததால்; இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு முந்திய மலர்க்கண்ஓர் மூன்று; நான்குதோள். உந்தியில் உலகளித் தார்க்கு;என்று உன்னுவாள். 4 4. சிந்தையின் உறைபவற்கு - உள்ளத்தில் வாழ்கின்ற மன்மதனுக்கு. உந்தியின் - தன் உந்திக்கமலத்தினின்றும். உலகு அளித்தார்க்கு - இவ்வுலகைத் தந்த திருமாலுக்கு. `கற்றைஅம் சடையவன், கண்ணின் காய்தலால், இற்றவன், அன்றுதொட்டு இன்று காறும்,தான் நற்றவம் இயற்றி,அவ் அநங்கன் நல்உருப் பெற்றனன் ஆம்;எனப் பெயர்த்தும் எண்ணுவாள். 5 5. கண்ணின் காய்தலால் - கண்ணால் எரித்ததனால், இற்றவன் - உடம்பு அழிந்து போனவன். அநங்கன் - அங்கமில்லாதவன். `அதிகம் நின்று ஒளிரும்இவ் அழகன் ஆண்முகம் பொதிஅவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ! கதிர்மதி ஆம்எனின் கலைகள் தேயும்;அம் மதிஎனின் அதற்கும்ஓர் மறுஉண்டு என்னும்ஆல். 6 6. -. `நற்கலை மதிஉற வயங்கு நம்பிதன், எற்கலை திருஅரை எய்தி ஏமுற வற்கலை நோற்றன; மாசி லாமணிப் பொற்கலை நோற்றில போலும்ஆல்; என்றாள். 7 7. நல் கலைமதி உற - பூரணச் சந்திரனைப்போல. எல்கலை திரு அரை - இருளை விலக்கும் அழகிய இடையை. ஏமுற - இன்பம் அடைய. வற்கலை - மரவுரி. பொன்கலை - பொன்னாடை. நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக் கோத்தஅன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள, ஏத்தவும் பரிவின்ஒன்று ஈக லான்,பொருள் காத்தவன் புகழ்எனத், தேயும் கற்பினாள். 8 8. நீத்தமும் வானமும் - வெள்ளமும் வானமும். குறுக - சிறிதாகும் படி. குளிப்ப மீக்கொள் - முழுகும்படி மிகுதியாக. ஏத்து உதவும் பரிவின் - புகழைத்தரும் அன்புடன். ஒன்று ஈகலான் - ஒன்றும் கொடுக்காமல். வான்தனில் வரைந்ததோர் மாதர் ஓவியம் போன்றனள்; புலர்ந்தனள்; புழுங்கும் நெஞ்சினள்; தோன்றல்தன் சுடர்மணித் தோளில் நாட்டங்கள்; ஊன்றினள்; பறிக்கஓர் ஊற்றம் பெற்றிலள். 9 9. சுடர் மணித்தோளில் - ஒளி பொருந்திய அழகிய தோளின்மேல். ஊன்றினள் - பதிந்தனள். பறிக்க - ஊன்றிய கண்களைத் திரும்பப் பிடுங்குவதற்கு. ஊற்றம் - வலிமை. நின்றனள், `இருந்தவன் நெடிய மார்பகம் ஒன்றுவென்; அன்றெனின் அமுதம் உண்ணினும் பொன்றுவென்; போக்கினி அரிது போன்ம்;எனாச், சென்றெதிர் நிற்பதோர் செய்கை தேடுவாள். 10 10. ஒன்றுவென் - தழுவுவேன். இனி போக்கு அரிது போன்ம் - இனித் திரும்பிப் போதல் முடியாது போலும். `எயிறுடை அரக்கி,எவ் வுயிரும் இட்டதோர் வயிறுடை யாள்,`என மறுக்கும்; ஆதலால், குயில்தொடர் குதலை,ஓர் கொவ்வை வாய்இள மயில்தொடர் இயலியாய் மருவல் நன்றெனா. 11 11. குயில் தொடர் - குயில்கள் தமது இனமென்று எண்ணித் தொடர்ந்து வரத்தக்க. குதலை - மழலைச் சொற்களையுடைய. மயில் தொடர் - மயில்கள் தொடர்ந்து வரும். இயலியாய் - தன்மையுடையவளாய். மருவல் - அமைதல். திருமகள் மந்திரத்தால் சூர்ப்பணகை அழகுருக் கொளல் பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா அங்கையின் ஆயமந் திரத்தை ஆய்ந்தனள், திங்களில் சிறந்துஒளிர் முகத்தள், செவ்வியள் பொங்குஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். 12 12. பாவியா - தியானித்து. அங்கையின் ஆய - தன் கை வசப்பட்டதாகிய. ஆய்ந்தனள்- உருப்போட்டாள். திங்களில் - சந்திரனைவிட. விசும்பினில் - ஆகாயத்தில். பொலிய - விளங்கும்படி. பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச், செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி; அம்சொல்இள மஞ்ஞைஎன, அன்னம்என, மின்னும் வஞ்சிஎன, நஞ்சம்என, வஞ்சமகள் வந்தாள். 13 13. பஞ்சி - பஞ்சும். ஒளி விஞ்சு - ஒளி மிகுந்த. குளிர் பல்லவம் - குளிர்ந்த தளிரும் - அனுங்க ஒப்பாகாமல் வருந்த. செம் செவிய - சிவந்த அழகிய. கஞ்சம் - தாமரை. மஞ்ஞை - மயில். கானில்உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி, மேனிநனி பெற்று,விளை காமம் நிறைவாசத் தேனின்மொழி உற்று?இனிய செவ்விநனி பெற்று,ஒர் மானின்விழி பெற்று,மயில் வந்ததுஎன வந்தாள். 1414. கானின் உயர் - வாசனையால் உயர்ந்த. கற்பகம் உயிர்த்த - கற்பக விருட்சம் பெற்றெடுத்த. கதிர் வல்லி - ஒளி பெற்ற கொடியைப்போல. விளை காமம் நிறை - உண்டாகும் காமம் நிறைந்த. இனிய செவ்வி, நனி பெற்று - இனிய அழகை மிகுதி யாகப்பெற்று. இராமன் சூர்ப்பணகையைக் காணலும், கேட்டலும் நூபுரமும், மேகலையும், நூலும்,அறல் ஓதிப் பூமுரலும் வண்டும்,இவை பூசலிடும் ஓசை தாம்உரைசெய் கின்றதுஒரு தையல்வரும்; என்னாக், கோமகனும் அத்திசை குறித்துஎதிர் விழித்தான். 15 15. நூபுரமும் - கால் சிலம்பும். நூலும் - உடையும். அறல் ஓதிப்பூ - கருமணல் போன்ற கூந்தலிலே உள்ள மலரில். முரலும் - ஒலித்துக் கொண்டிருக்கின்ற. வானிலிருந்து இவ்வாறு இறங்கி வரும் சூர்ப்பணகை யைக் கண்ட இராமன். `இவள் யாரோ? என்று எண்ணினன். அவள் மான்போல் நடந்து, அவன் அண்டையில் வந்து அசைந்து நின்றாள். அவ்வயின் அவ்வாசைதன் அகத்துடைய அன்னாள், செவ்விமுகம் முன்னி,அடி செங்கையின் இறைஞ்சா வெவ்விய நெடுங்கண்அயில் வீசி,அயல் பாரா, நவ்வியின் ஒதுங்கிஇறை நாணிஅயல் நின்றாள். 16 16. அவ்வாசை; அவ் ஆசை. செவ்வி முகம் - இராமனுடைய அழகிய முகத்தை. முன்னி - முன்னே கண்டு. இறைஞ்சா - வணங்கி, கண் அயில் வீச - கண்ணாகிய வேற்படையை வீசி. நவ்வியின் - மனம்போல. இறை - சிறிது. இராமன் Ôâštu thf!திரு நின்வரவு! சேயோய்! போதஉளது எம்உழைஓர் புண்ணியம்அது அன்றோ! ஏதுபதி? ஏதுபெயர்? aht®cwî? என்றான் வேதமுதல்; பேதைஅவள் தன்னிலை விரிப்பாள். 17 17. சேயோய் - தூரத்தில் உள்ளவரே. எம் உழை போத உளது - எம்மிடம் வர நேர்ந்தது. விரிப்பாள் - விரித்துரைக்கத் தொடங்கினாள். சூர்ப்பணகை பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி;முப் புரங்கள் செற்ற சேவலோன் துணைவன்ஆன செங்கையோன் தங்கை;திக்கின் மாவெலாம் தொலைத்து வெள்ளி மலைஎடுத்து உலகம் மூன்றும் காவலோன் பின்னை;காம வல்லியாம் கன்னி; என்றாள். 18 18. பூவிலோன் - பிரமனுடைய. புதல்வன் - புதல்வனாகிய புலத்திய னுடைய. மைந்தன் புதல்வி - மைந்தனாகிய விச்சிர வசுவின் மகள். பிரமன் மகன் புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு; அவன் புதல்வி சூர்ப்பநகை. சேவலோன் - காளையை ஊரும் வல்லவன் (சிவன்.) செம்கையோன் - அழகிய கையையுடைய குபேரனது. திக்கின்மா - திசை யானைகள். இராமன் அவ்வுரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான், `செய்கை செவ்விதன்று, அறிதல் ஆகும் சிறிதின்,என்று உணராச் செங்கண் வெவ்வுரு அமைந்தோன் தங்கை, என்றது மெய்ம்மை ஆயின், இவ்வுரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான். 19 19. செம்கண் வெவ்உரு - சிவந்த கண்களும் கொடிய உருவமும். இஉரு - இந்த அழகிய உருவமும். இயைந்த தன்மை - அமைந்த விதத்தை. சூர்ப்பணகை தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்வி லாள்;அம் மாயவல் அரக்க ரோடு வாழ்வினை மதிக்க லாதேன், ஆய்வுறு மனத்தேன் ஆகி, அறம்தலை நிற்ப தானேன்; தீவினை தீய நோற்றுத் தேவரில் பெற்றது; என்றாள். 20 20. பணியா முன்னம் - உத்தரவிடும் முன்பே. வாழ்வினை - வாழ்வதை. மதிக்கலாதேன் - விரும்பாத நான். ஆய்வு உறு - நன்மையை ஆராய்கின்ற. தீய நோற்று - அழியும்படி தவம் புரிந்து. இராமன் இமையவர் தலைவ னேயும் எளிமையின் ஏவல் செய்யும் அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின், சுமையுறு செல்வத் தோடும் தோன்றலை; துணையும் இன்றித் தமியைநீ வருதற்கு ஒத்த தன்மைஎன் தையல்! என்றான். 21 21. இமையவர் - தேவர்களின். தலைவனேயும் - தலை வனாகிய இந்திரனும். சுமை உறு - நிறைந்த. சூர்ப்பணகை வீரன் அஃது உரைத்த லோடும், மெய்யிலாள் `விமல! யானஅச் சீரியர் அல்லார் மாட்டுச் சேர்கிலென்; தேவர் பாலும், ஆரியர் முனிவர் பாலும் அடைந்தனென், இறைவ! ஈண்டோர் காரியம் உண்மை, நின்னைக் காணிய வந்தேன்; என்றாள். 22 22. -. இராமன் அன்னவள் உரைத்த லோடும் ஐயனும் `அறிதற்கு ஒவ்வா நன்னுதல் மகளிர் சிந்தை, நன்னெறிப் பால அல்ல; பின்இது தெரியும்; என்னாப் `பெய்வளைத் தோளி! என்பால் என்னைகா ரியத்தை சொல்அஃது இயையுமேல் இழைப்பல்; என்றான் .23 23. -. சூர்ப்பணகை `தாம்உறு காமத் தன்மை, தாங்கள்நேர் உரைப்பது என்பது ஆம்எனல் ஆவது அன்றால் அரும்குல மகளிர்க்கு, அம்மா! ஏமுறும் உயிர்க்கு நோவேன்! என்செய்கேன்! யாரும் இல்லேன்! fhk‹v‹W xUt‹ brŒí« t‹ikia¡ fh¤â! என்றாள். 24 24. அரும் குலமகளிர்க்கு, தாம் உறு காமத்தன்மை, தாங்கள் நேர் உரைப்பது என்பது - தாமே நேரடியாகச் சொல்லுவ தென்பது. ஆம் எனல் ஆவது அன்று - ஆகக்கூடியதன்று. ஏம் உறும் - இன்பத்தை நாடும். ஆல். அம்மா; அசைகள். இராமன் சேண்உற நீண்டு மீண்டு, செவ்வரி சிதறி வெவ்வேறு ஏண்உற மிளிர்ந்து நானா விதம்புரண்டு இருண்ட வாட்கண் பூண்இயல் கொங்கை, அன்னாள், அம்மொழி புகற லோடும், `நாண்இலள், ஐயள், நொய்யள், நல்லளும் அல்லள்; என்றான். 25 25. சேண் உறநீண்டு - பார்வை நெடுந்தூரம் செல்லும்படி நீண்டு. செவ்விர் - சிவந்த இரேகைகள். வெவ்வேறு ஏண் உற - வேறு வேறு எண்ணும்படி, `அய்யன்நாண் இலள், நொய்யள், நல்லளும் அல்லள், என்றான் - என்று நினைத்தான். நொய்யள் - அற்பமானவள். சூர்ப்பணகை பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் பூசல்வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம்மகள் ‘புகன்ற என்கண் ஆசைகண்டு அருளிற்று உண்டோ, அன்றெனல் உண்டோ? என்னும் ஊசலின் உலாவு கின்றாள்; மீட்டும்ஓர் உரையைச் சொல்வாள். 26 26. பெற்றி ஓராள் - தன்மையை அறியாதவளாய். பூசல் - ஆரவாரம் புரிந்தது. `அழகனே! நீ இங்கு வந்ததை யான் அறியேன்; என்னிளமை பாழாயிற்று; என்றாள். இராமன் அவள் உள்ளத்தை உணர்ந்தான். `நீ அந்தணர் பாவை; நான் அரசர் குலம்; என்றான். `என் தந்தை அந்தணன்; தாய் அரக்கர் மரபு; நீ என்னைத் தள்ளினால் நான் உயிர் வாழேன். என்றாள். `அரக்கரை மனிதர் மணத்தல் பொருத்தம் அன்று; இது புலமையோர் கூற்று. என்றான். நான் தேவர்களை வணங்கி அரக்கத் தன்மையை அகற்றினேன். என்றாள். இராமன் ‘ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கொரு தலைவன், ஊங்கில் ஒருவனோ குபேரன், நின்னொடு உடன்பிறந் தவர்கள்; அன்னார் தருவரேல் கொள்வென்; அன்றேல் தமியை;வே றிடத்துச் சார; வெருவுவென் நங்கை! என்றான்; மீட்டுஅவள் இனைய சொன்னாள். 27 27. ஓங்கு ஒரு தலைவன் - உயர்ந்த ஒப்பற்ற தலைவன். சூர்ப்பணகை ‘காந்தர்ப்பம் என்பது உண்டால், காதலில் கலந்த சிந்தை மாந்தர்க்கும் மடந்தை மார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம், ஏந்தல்பொன் தோளி னாய்!ஈது இயைந்தபின், எனக்கு மூத்தவேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறும்ஓர் உரைஉண்டு; என்றாள். 28 28. காந்தர்ப்பம் - கந்தருவ மணம். ஏந்தல் பொன் - உயர்ந்த அழகிய. `முனிவரோடு உடையர் முன்னே முதிர்பகை; முறைமை நோக்கார் தனியைநீ ஆத லால்மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த வினையம்ஈ தல்லது இல்லை; விண்ணும்நின் ஆட்சி யாக்கி இனியராய் அன்னர் வந்துன் ஏவலின் நிற்பர்; என்றாள். 29 29. `முன்னே முனிவரோடு முதிர்பகை உடையவர்; முறைமை நோக்கார் - இனி அப்பகை முறையைப் பார்க்கமாட்டார்கள். அவரொடும் தழுவற்கு - அப்பகைவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு. வினையம் - காரியம். இராமன் `நிருதர்தம் அருளும் பெற்றேன்! நின்னலம் பெற்றேன்! நின்னோடு ஒருவரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ! திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயந்தது என்னா, வரிசிலை வடித்த தோளான் வாள்எயிறு இலங்க நக்கான். 30 30. ஒருவு அரும் செல்வத்து - நீங்காத செல்வத்திலே. வரிசிலை வடித்த - கட்டமைந்த வில்லை மாட்டித் தொங்க விட்டிருக்கின்ற. சீதையைக் கண்ட சூர்ப்பணகை கூறல் இச் சமயத்தில் பக்கத்திலிருந்த பர்ணசாலையி லிருந்து சீதை வந்தாள். சூர்ப்பணகை அவளைக் கண்டு தன் உள்ளத்தில் தோன்றியவைகளை எல்லாம் உரைக்கத் தொடங்கினாள். பண்புற நெடிது நோக்கிப் ‘படைக்குநர் சிறுமை அல்லால் எண்பிறங்கு அழகிற்கு எல்லை இல்லையாம்’ என்று நின்றாள்; கண்பிற பொருளில் செல்லா; கருத்துஎனின் அஃதே; கண்ட பெண்பிறந் தேனுக்கு, என்றால் என்படும் பிறருக்கு? என்றாள். 31 31. பண்பு - அவருடைய (சீதை) அழகுத் தன்மையை. உற நெடிது நோக்கி - மிகவும் கூர்ந்து பார்த்து. எண் பிறங்கும் - மதிப்புக்கும் மிகுந்த. பொருதிறத் தானை நோக்கிப், பூவையை நோக்கி நின்றாள்; கருதமற்று இனிவேறு இல்லைக், கமலத்துக் கடவுள் தானே ஒருதிறத்து உணர நோக்கி, உருவினுக்கு, உலகம் மூன்றின் இருதிறத் தார்க்கும் செய்த வரம்பு;இவர் இருவர்;என்றாள். 32 32. `இராமனும் சீதையும் இம்மூன்றுலகத்தில் உள்ளோர்க் கும், அழகின் எல்லையாக இருக்கும்படி பிரமனால் படைக்கப் பட்டவர்கள் என்று நினைத்தாள். ஒரு திறத்து உணர நோக்கி - ஒரு தன்மையாக நன்றாக எண்ணி. உருவினுக்கு - அழகுக்கு. ‘மருவொன்று கூந்த லாளை வனத்திவன் கொண்டு வாரான்; உருவிங்கு உடைய ராக மற்றையோர் யாரும் இல்லை; அரவிந்த மலருள் நீங்கி, அடியிணை படியில் தோயத் திருஇங்கு வருவாள் கொல்லோ? என்றுஅகம் திகைத்து நின்றாள். 3333. மரு ஒன்று - மணம் பொருந்திய. கூந்தலாளை - கூந்தலையுடைய மனைவியை. இங்கு இது உரு உடையர் ஆக - இங்கே இது போன்ற அழகுள்ளவராக. அரவிந்த மலர் - தாமரை மலர். படி - நிலம். `பொன்னைப்போல் ஒளிரும் மேனிப் பூவைப்பூ வண்ணத் தான்,இம் மின்னைப்போல் இடையா ளோடும் மேவும்மெய் உடையன் அல்லன்; தன்னைப்போல் தகையோர் இல்லாத் தளிரைப்போல் அடியி னாளும் என்னைப்போல் இடையே வந்தாள்; இகழ்விப்பென் இவளை; என்னா.34 34. பூவைப்பூ - காயாம் பூவின். வண்ணத்தான் - நிறத்தை யுடையவன். இகழ்விப்பேன் - வெறுக்கும்படி செய்வேன். ‘வரும்இவள் மாயம் வல்லள்; வஞ்சனை அரக்கி; நெஞ்சம் தெரிவில; தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால்; உருஇது மெய்யது அன்றால்; ஊன்நுகர் வாழ்க்கை யாளை வெருவினென்; எய்தி டாமல் விலக்குதி வீர! என்றாள். 35 35. -. இராமன் `ஒள்ளிதுஉன் உணர்வு மின்னே! உன்னையார் ஒளிக்கும் ஈட்டார்; தெள்ளிய நலத்தி னால்உன் சிந்தனை தெரிந்தது அம்மா; கள்ளவல் அரக்கி போலாம், இவளும்நீ காண்டிஎன்னா, வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான். 36 36. உன்னை ஒளிக்கும் ஈட்டார் யார் - உன்னை மறைக்கும் வல்லமையுள்ளவர் ய்ர்? முறுவல் முததம் - பற்களாகிய முத்துக்கள். சூர்ப்பணகை ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின், அஞ்சொல், வேயிடை தோளி னாளும், வீரனைச் சேரும் வேலை ‘நீயிடை வந்தது என்னை நிருதர்தம் பாவை! என்னாக் காய்எரி அனைய கள்ளி உள்ளத்தாள், கதித்த லோடும். 37 37. வேய் இடை - மூங்கிலும் அழகில் பின் வாங்குகின்ற. தோளினாளும் - தோளையுடைய சீதையும். காய் எரி - சுடுகின்ற தீ. கதித்தல் - கோபித்தல். சீதையின் செயல் அஞ்சினள்; அஞ்சி அன்னம் மின்இடை அலைய ஓடிப் பஞ்சின்மெல் அடிகள் நோவப் பதைத்தனள்; பருவக் கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்னக் குஞ்சரம் அனைய வீரன் குலவுத் தோள் தழுவிக் கொண்டாள். 38 38. மின் இடை அலைய - மின்னல் போன்ற இடை துவளும்படி. மஞ்சிடை - மேகத்தில். வயங்கித்தோன்றும் - விளங்கும். குஞ்சரம் - யானை குலவு - திரண்ட. இராமன் வளைஎயிற் றவர்க ளோடு வரும்விளை யாட்டுஎன் றாலும் விளைவன தீமை யேயாம்; என்பதை உணர்ந்து, வீரன், `உளைவன இயற்றல்! ஒல்லை உன்நிலை உணரும் ஆயின், இளையவன் முனியும்; நங்கை ஏகுதி விரைவின் என்றான். 39 39. வளை எயிற்றவர்களோடு - வளைந்த பற்களையுடைய அரக்கியர்களுடன். உளைவன இயற்றல் - வருந்தத்தக்க செயல் களைச் செய்யாதே. ஒல்லை - விரைவில். சூர்ப்பணகை பொற்புடை அரக்க, `பூவில், புனலினில், பொருப்பில் வாழும் அற்புடை உள்ளத் தாரும், அநங்கனும் அமரர் மற்றும் எற்பெறத் தவம்செய் கின்றார்; என்னைநீ இகழ்வது என்னே! நற்பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி, என்றாள். 40 40. அற்பு உடை - அன்புடைய. என்பெற - என்னை அடைய. நல்பொறை - நல்ல பொறுமையுள்ள குணங்கள். `நெஞ்சின் இல்லாக்கள்வியை நச்சி என்னை நீ இகழ்வது என்னே. சூர்ப்பணகையின் சூழ்ச்சியும் தோல்வியும் இனி இவளோடு பேச்சு வேண்டாம் என்று எண்ணினான் இராமன். சீதையுடன் தன் பர்ணசாலைக்குள் போய்விட்டான். நின்றிலள் அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள்; `இன்றுஇவன் ஆகம் புல்லேன் எனின்உயிர் இழப்பேன் என்னாப் பொன்திணி சரளச் சோலைப் பளிக்கறைப் பொதும்பர்ப் புக்காள்; சென்றது பரிதி மேல்பால் செக்கர்வந்து இறுத்தது அன்றே. 41 41. அவனைச் சேரும் நெறியினை - அவனை அடையும் வழியை. ஆகம் - மார்பை. புல்லேன் எனின் - தழுவிக்கொள்ளேன் ஆயின். பொன் திணி - பொன் போன்ற மகரந்தங்கள் நிறைந்த. சரளம் - அகன்ற. பொதும்பர் - உள்ளே. செக்கர்- அந்தி வானம். வேறு அழிந்த சிந்தைய ளாய்அயர் வாள்வயின் மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால் வழிந்த நாகத்தின் வன்தொளை வாள்எயிற்று இழிந்த கார்விடம் ஏறுவது என்னவே. 42 42. அழிந்த - வருந்திய. வழிந்த - ஒழுகுகின்ற. வன் தொளை - வலிய தொளையையுடைய. வாள் எயிற்று கூர்மையான பல்லிலிருந்து. இழிந்த - இறங்கிய. வந்து கார்மழை தோன்றினும் மாமணிக் கந்து காணினும் கைத்தலம் கூப்பும்;ஆல் இந்து காந்தத்தின் ஈர நெடுங்கலும் வெந்து காந்த வெதும்புறு மேனியாள். 43 43. மாமணிக்கந்து - கரிய இரத்தினத் தூணை. கூப்பும் ஆல் - குவிக்கும்; ஆல்; அசை. இந்து காந்தத்தின் - சந்திர காந்தத்தின். ஈரம் - குளிர்ந்த. வஞ்ச னைக்கொடு மாயை வளர்க்கும்என் நெஞ்சு புக்குஎனது ஆவத்தை நீக்குஎனும்; அஞ்ச னக்கிரி யேஅரு ளாய்எனும்; நஞ்சு நக்கினர் போலந டுங்குவாள். 44 44. வஞ்சனைக் கொடுமாயை - வஞ்சனையாகிய கொடிய மாயையை. வளர்க்கும் - வளர்க்கின்ற. எனது அவத்தை - என் துன்பத்தை. அஞ்சனக் கிரி - கருமலை. காவி யோகய லோஎனும் கண்ணிணைத் தேவி யோதிரு மங்கையின் செவ்வியாள்; பாவி யேனையும் பார்க்குங்கொ லோவெனும்; ஆவி ஓயினும் ஆசையின் ஓய்விலாள். 45 45. கண் இணை - கண்கள். ஆவி ஓயினும் - உயிர் ஒடுங்கினாலும். ஆசையின் - காமத்தின். ஓய்வு இலாள் - ஒடுக்கம் இல்லாதவள். வேறு விடியல் காண்டலின் ஆண்டுதன் உயிர்கண்ட மெய்யாள் படியி லாள்மருங்கு உள்ளளவு எனைஅவன் பாரான் கடிதின் ஓடினென் எடுத்துஒல்லைக் கரந்துஅவள் காதல் வடிவி னான்உடன் வாழ்வதே வாழ்வுஎன மதியா. 46 46. விடியல் - விடியற்காலம். படி இலாள் - ஒப்பில்லா தவளாகிய தேவி. மருங்கு உள்ளளவு - பக்கத்தில் இருக்கும் வரை யிலும். ஒல்லைக் கரந்து - விரைவில் ஒளித்து. மதியா - எண்ணி. வந்து நோக்கினள் வள்ளல்போய் ஒருமணித் தடத்தில் சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்; தம்பி இந்து நோக்கிய நுதலியைக் காத்துஅயல் இருண்ட கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள். 47 47. ஓர் மணித் தடத்தில் - ஓர் அழகிய நீர்த்துறையிலே. சந்தி - காலைக் கடனை. நோக்கினன் - கருதியவனாய். தம்பி - இலக்குவன். இருண்ட கந்தம் நோக்கிய - இருண்டதும் வாசனை பொருந்தியதுமான. தனிஇ ருந்தனள் சமைந்ததுஎன் கருத்துஎனத் தாழ்வுற்று இனிஇ ருந்துஎனக்கு எண்ணுவது இல்என எண்ணாத் துனிஇ ருந்த,வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள்; கனிஇ ரும்பொழில் காத்துஅயல் இருந்தவன் கண்டான். 48 48. என் கருத்து சமைந்தது - என் எண்ணம் பலித்தது. துனியிருந்த - அச்சம் பொருந்திய. வன்மனத்தினள் - இரக்கமற்ற நெஞ்சினள். தோகையை - சீதையை. கனி - பழங்களையுடைய. இரும் பொழில் - பெரிய சோலையிலே. `நில்ல டீஇஎனக் கடுகினன்; பெண்என நினைந்தான்; வில்எ டாது,அவள் வீங்குஎரி யாம்என விரிந்த சில்வல் ஓதியைச் செங்கையில் திருகுறப் பற்றி, ஒல்லை ஈர்த்துஉதைத்து, ஒளிகிளர் சுற்றுவாள் உருவி. 49 49. சில்வல் ஓதியை - சில வலிய கூந்தலை. திருகுற - சுற்றும்படி. ஒல் வயிற்று - அடி வயிற்றில். சுற்று வாள் - உடை வாளை. ஊக்கித், தாங்கி,விண் படர்வென்,என்று உருத்தெழு வாளை, நூக்கி நொய்தினின், `வெய்துஇழை யேல்என நுவலா, மூக்கும், காதும்,வெம் முரண்முலைக் கண்களும், முறையால் போக்கிப் போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான். 50 50. ஊக்கித்தாங்கி - உற்சாகத்துடன் சுமந்துகொண்டு. உருத்து - சினந்து. நூக்கி - விரைவில் கீழே தள்ளி. வெய்து இழையேல் - தீமை செய்யாதே. சூர்ப்பணகையின் அழுகை கொலைது மித்துஉயிர் கொடுங்கதிர் வாளின்,அக் கொடியாள் முலைது மித்து,உயர் மூக்கினை நீக்கிய முத்தம், மலைது மித்தென, இராவணன் மணியுடை மகுடத் தலைது மித்தற்கு நாள்கொண்டது ஒத்ததோர் தன்மை. 51 51. கொலை துமித்து - கொலையை நீக்கி. முலைதுமித்து - முலையை அறுத்து. மலைதுமித்துஎன - மலைகளைத் துண்டித்தாற்போல. உயரும் விண்ணிடை; மண்ணிடை விழும்;கிடந்து உழக்கும்; அயரும் கைகுலைத்து அலமரும்; ஆருயிர் சோரும்; பெயரும்; பெண்பிறந் தேன்பட்ட பிழைஎனப் பிதற்றும்; துயரும் அஞ்சிமுன் தொடர்ந்திலாத் தொல்குடிப் பிறந்தாள். 52 52. முன் துயரம் அஞ்சி - முன்பு துன்பமும் பயந்து. தொடர்ந்திலா - தொடராத. வேறு `நிலையெடுத்து, நெடுநிலத்து நீயிருக்கத், தாபதர்கள் சிலைஎடுத்துத் திரியும்இது சிறிதன்றோ! தேர்வஎதிர் தலைஎடுத்து விழியாமை சமைப்பதே? தழல்எடுத்தான் மலைஎடுத்த தனிமலையே! ïitfhz thuhnah! 53 53. நிலைஎடுத்து - நிலைகொண்டு. தலைஎடுத்து விழியாமை - தலையெடுத்துப் பார்க்க முடியாத அவமானத்தை. சமைப்பதே - செய்வதோ? தழல் எடுத்தான் - சிவபெருமான். `புலிதானே புறத்தாகக் குட்டிகோள் படாதென்ன, ஒலிஆழி உலகுரைக்கும் உரைபொய்யோ! ஊழியினும் சலியாத மூவருக்கும், வானவர்க்கும், தானவர்க்கும் வலியானே! ah‹g£l tÈfhz thuhnah! 54 54. புறத்தாக - அயலில் இருந்தாலும். கோள்படாது - பிறரால் பிடித்துக் கொள்ளப்படாது. சலியாத - அழியாத. வலிகாண - துன்பத்தைக் காண. `காற்றினையும், புனலினையும், கனலினையும், கடுங்காலக் கூற்றினையும், விண்ணினையும், கோளினையும் பணிகோடற்கு ஆற்றினைநீ, ஈண்டிருவர் மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ உன்வலத்தைச்? át‹jl¡if thŸbfh©lhŒ! 55 55. கோளினையும் - நவக்கிரகங்களையும். பணிகோடற்கு - ஏவல் கொள்ளுவதற்கு. ஆற்றினை நீ - வலிமையுடைய நீ. ‘உருப்பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும்,உன் செருப்படியின் பொடிஒவ்வா மானுடரைச் சீறுதியோ, நெருப்படியில் பொடிசிதற, நிறைந்தமதத் திசையானை மருப்பொடியப் பொருப்பிடியத் தோள்நிமிர்த்த வலியோனே! 56 56. உருப்பொடியா - உருவம் எரிந்து சாம்பலாகாத. அடியில் நெருப்பு பொடி சிதற - கீழே நெருப்புப் பொடி சிந்தும்படி. மருப்பு ஓடிய - தந்தங்கள் ஒடியும்படி. பொருப்பு இடிய - மலைகள் தூளாக. ‘தேனுடைய நறுந்தெரியல் தேவரையும் தெறும்ஆற்றல் தானுடைய இராவணற்கும், தம்பியர்க்கும் தவிர்ந்ததோ! ஊனுடைய உடம்பினராய், எம்குலத்தோர்க்கு உணவாய மானுடவர் மருங்கேபுக்கு ஒடுங்கினதோ வலிஅம்மா? 57 57. தெறும் - அழிக்கும் அரக்கர் நரமாமிசம் உண்டனர். `மரன்ஏயும் நெடும்கானில் மறைந்துரையும் தாபதர்கள் உரனேயோ! அடல்அரக்கர் ஓய்வேயோ! உற்றுஎதிர்ந்தார் அரனேயோ! அயனேயோ! அரியேயோ! எனும்ஆற்றல் கரனேயோ! ah‹g£l ifawî fhzhnah! 58 58. அடல் - கொல்லும் வல்லமையுள்ள. கையறவு - செயலற்ற துன்பத்தை. ‘இந்திரனும், மலரயனும், இமையவரும் பணிகேட்பச், சுந்தரிபல் லாண்டிசைப்ப, உலகேழும் தொழுதேத்தச் சந்திரன்போல் தனிக்குடைக்கீழ் நீயிருக்கும்சவைநடுவே, வந்தடியேன் காணாது முகங்காட்ட வல்லேனோ? 59 59. சுந்தரி - இந்திராணி. பல்லாண்டு இசைப்ப - பல்லாண்டு வாழ்க வென்று வாழ்த்துக் கூற. `உரம்நெரிந்து விழ,என்னை உதைத்துருட்டி மூக்கரிந்த நரன்இருந்து தோள்பார்க்க, நான்கிடந்து புலம்புவதோ! கரன்இருந்த வனம்அன்றோ! ïitglî« flntndh! அரன்இருந்த மலைஎடுத்த அண்ணாவோ! m©zhnth! 60 60. உரம் நெறிந்துவிழ - பலமிழந்து விழும்படி. இவை படவும் - இத்துன்பங்களை அடையவும். `நசையாலே மூக்கிழந்து, நாணம்இலா நான்பட்ட வசையாலே நினதுபுகழ் மாசுண்டது ஆகாதோ! திசையானை விசைகலங்கச், செருச்செய்து, மருப்புஒசித்த இசையாலே நிறைந்தபுயத்து இராவணவோ! ïuhtznth! 61 61. -. `கானமதின் இடையிருவர் காதொடுமூக் குடன்அரிய மானம்அதால் பாவியேன் இவண்மடியக் கடவேனோ! தானவரைக் கருவறுத்துச், சதமகனைத் தளையிட்டு, வானவரைப் பணிகொண்ட, மருகாவோ! kUfhnth! 62 62. கானம் அதின் இடை - காட்டிலே தவசிகளாயுள்ள. மருகாவோ - இந்திரசித்தாகிய மருமகனே. `ஒருகாலத்து, உலகேழும் உருத்துஎரியத் தனுஒன்றால் திருகாத சினம்திருகித், திசைஅனைத்தும் செலநூறி, இருகாலில் புரந்தரனை இரும்தளையில் இடுவித்த, மருகாவோ! khDlt® tÈfhz thuhnuh! 63 63. உருத்து எரிய - மிகுந்து எரியும்படி. திருகாத சினம்திருகி - பின்னடையாத சினம் மிகுந்து. செலநூறி - தோற்கும்படி அழித்து. `கல்ஈரும் படைத்தடக்கை அடல்கர தூடணர்முதலா அல்ஈரும் சுடர்மணிப்பூண் அரக்கர்குலத்து அவதரித்தீர்! கொல்ஈரும் படைக்கும்ப கருணனைப்போல், குவலயத்துள் எல்லீரும் உறங்குதிரோ! ah‹miH¤jš nfçnuh! 64 64. கல்ஈரும்படை - மலைகளைப் பிளக்கவல்ல ஆயுதங் களைக் கொண்ட. அடல் - வெற்றியையுடைய. அல்ஈரும் - இருளை விலகும்படி செய்யும். கொல்ஈரும் - கொன்று பிளக்கும். என்றுஇன்ன பலபன்னி இகல்அரக்கி அழுதுஇரங்கிப் பொன்துன்னும் படிஅகத்துப் புரள்கின்ற பொழுதகத்து நின்றுஅந்த நதிஅகத்து நிறைதவத்தின் துறைமுடித்து வன்திண்கைச் சிலைநெடுந்தோள் மரகதத்தின் மலைவந்தான். 65 65. பலபன்னி - பலவற்றைக் கூறி. பொன்துன்னும் - அழகு பொருந்திய. படி அகத்து - நிலத்தில். வந்தானை முகம்நோக்கி வயிறுஅலைத்து மழைக்கண்ணீர், செந்தாரைக் குருதியொடு செழுநிலத்தைச் சேறுஆக்கி `அந்தோஉன் திருமேனிக்கு அன்புஇழைத்த வன்பிழையால் எந்தாய்யான் பட்டபடி இதுகாண்என்று எதிர்விழுந்தாள். 66 66. வயிறு அலைத்து - வயிற்றைப் பிசைந்து கொண்டு. அன்பு இழைத்த - அன்பு செய்த. விரிந்துஆய கூந்தலாள் வெய்யவினை யாதானும் புரிந்தாள்என் பதுதனது பொருவரிய திருமனத்தால் தெரிந்தான்;இன்று இளையானே இவளைநெடும் செவியோடுமூக்கு அரிந்தான்என் பதும்உணர்ந்தான்; அவளைநீ யார்என்றான். 67 67. விரிந்துஆய - விரிந்து கிடக்கின்ற. பொருஅரிய - ஓப்பற்ற. அவ்வுரைகேட்டு அடல்அரக்கி, அறியாயோ நீ,என்னை? தெவ்வுரைஎன்று ஓர்உலகும் இல்லாத சீற்றத்தான் வெவ்விலைவேல் இராவணனாம் விண்ணுலகம் முதலாய எவ்வுலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான்என்றாள். 68 68. அடல் அரக்கி - கொடிய அரக்கி. தெவ்உரை என்ற - பகைமை என்று சொல்லும் வார்த்தைகூட. எவ்வுலகும் - எல்லா உலகங்களையும். இராமன் இளையோனை நோக்கி `இவள் செய்த தவறு யாது என்றான். அதற்கு இளையோன் தந்த விடை. `தேட்டந்தான் வாள்எயிற்றில் தின்னவோ! தீவினையோர் கூட்டந்தான் புறத்துளதோ! குறித்தபொருள் அறிந்திலென்ஆல்; நாட்டந்தான் எரிஉமிழ, நல்லாள்மேல் பொல்லாதாள் ஓட்டந்தாள்; அரிதின்இவள் உயிர்கவர்ந்தாள்; எனஉரைத்தான். 69 69. தேட்டம்தான் - இவன் விருப்பந்தான். நல்லாள்மேல் - சானகியின் மேல். ஓட்டந்தாள் - ஓடி வந்தாள். அரிதின் - விரைவாக. உடன்று - அஞ்சி. சூர்ப்பணகை கூறுதல் ஏற்றவளை வரிசிலையோன் இயம்பாமுன், இகல்அரக்கி, `சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினம்திருகிச் சூல்தவளை நீர்உழக்கும் துறைகெழுநீர் வளநாடா! மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம்;என்றாள். 70 70. சேற்றவளை - சேற்றில் உள்ள சங்கு. சினம் திருகி - சினம் மிகுந்து. சூல்தவளை - கருக்கொண்டிருக்கும் தவளை. நீர் உழக்கும் - பாய்ந்து நீரைக் கலக்கும். இராமன் கடிந்து உரைத்தல் ‘பேடிப்போர் வல்லரக்கர் பெருங்குலத்தை ஒருங்குஅவிப்பான் தேடிப்போந் தனம்;இன்று, தீமாற்றம் சிலவிளம்பி வீடிப்போ காதே!இவ் வெவ்வனத்தை விட்டுஅகல ஓடிப்போ! என்றுரைத்த உரைகடந்தாற்கு, அவள்உரைப்பாள். 71 71. வீடிப்போகாதே - இறந்து போகாதே. உரை கடந்தாற்கு - சொற்களைக் கடந்து நின்றவனாகிய இராமனுக்கு. (சொல்லில் அடங்காதவன்.) சூர்ப்பணகை பேச்சு `ஆக்கரிய மூக்குங்கை அரியுண்டாள் என்றாரை நாக்கரியும் தயமுகனார்; நாகரிகர் அல்லாமை, மூக்கரிந்து, நும்குலத்தை முதல்அரிந்தீர்! ïÅck¡F¥ ngh¡fÇJï› mHifbayh« òšÈilna cF¤Ônu! 72 72. என்றாரை - என்று சொன்னவர்களின். தயமுகனார் - பத்துமுகங்களை யுடையவர். நாகரிகர் அல்லாமை - இரக்கம் அற்றவர் என்பதைக் காட்ட. முதல் அரிந்தீர் - அடியோடு அறுத்தீர்கள். `வான்காப்போர், மண்காப்போர், மாநாகர் வாழ்உலகம் தான்காப்போர், இனித்,தங்கள் தலைகாத்து நின்றுங்கள் ஊன்காக்க உரியார்யார்? v‹id,cÆ® Ú®fh¡»‹, ah‹fh¥bg‹; mšyhš,m› ïuhtzdh® cs®!என்றாள். 73 73. மாநகர் - சிறந்த நகர்கள், உங்கள் ஊன்காக்க - உங்கள் உடம்பை அழியாமல் காக்க. ‘காவல்திண் கற்பமைந்தார் தம்பெருமை தாம்கழறார், ஆவல்பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம்அன்றோ; ‘தேவர்க்கும் வலியான்தன் திருத்தங்கை யாள்இவள்,ஈண்டு ஏவர்க்கும் வலியாள்’என்று இளையானுக்கு இயம்பீரோ! 74 74. காவல் - தமக்குக் காவலாகி. திண்கற்பு அமைந்தார் - வலிமையுள்ள கற்புடைய பெண்கள். `மாப்போரில் புறம்காப்பேன்! வான்சுமந்து செலவல்லேன்! தூப்போலக் கனிபலவும் சுவையுடைய தரவல்லேன்! fh¥nghiu¡ if¤Jv‹?நீர் கருதியது தருவேன்;இப் பூப்போலும் மெல்இயலால் பொருள்என்னோ? புகல்வீரே. 75 75. புறம்காப்பேன் - உங்கள் பக்கம் நின்று காப்பாற்றுவேன். தூப்போல - புலாலைப் போல. கைத்துஎன் - வெறுத்து என்ன பயன்? மெல்லியலால் - மெல்லிய தன்மையுள்ளவளால். (சீதையால்) பொருள் என்னோ - பயன்தான் என்ன. `குலத்தாலும், நலத்தாலும், குறித்தனவே கொணர்தக்க வலத்தாலும், மதியாலும், வடிவாலும், மடத்தாலும், நிலத்தாரும், விசும்பாரும், நேரிழையார் என்னைப்போல் சொலத்தான்இங்கு உரியாரைச் சொல்லீரோ வல்லீரேல். 76 76. நலத்தாலும் - நல்ல குணங்களாலும்; வடிவாலும் - உருவத்தாலும். மடத்தாலும் - இளமையாலும். நிலத்தாரும் வீசும்பாரும் - நிலத்தில் உள்ளவர்களும் வானுலகில் உள்ளவர் களும் ஆகிய. நேர் இழையார் - பெண்களிலே. `ngh¡»Ü® v‹ehá, nghŒ¤bj‹!நீர் பொறுக்குவிரேல் ஆக்குவென்ஓர் நொடிவரையில்; அழகமைவெள்; அருள்கூறும் பாக்கியம்உண்டு எனின்,அதனால் பெண்மைக்கோர் பழுதுண்டோ! மேக்குயரும் நெடுமூக்கும் மடந்தையர்க்கு மிகையன்றோ! 77 77. போய்த்துஎன் - போய்விட்டதனால் நட்டம் என்ன? அருள் கூறும் - கருணையுடன் பேசும். மேக்கு உயரும் - மேலே உயர்ந்திருக்கின்ற. ‘விண்டாரே அல்லாரோ வேண்டாதார்; மனம்வேண்டின் உண்டாய காதலின்என் உயிர்என்பது உமதுஅன்றோ! கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம்அன்றோ, கொண்டாரே கொண்டாடும் உருப்பெற்றால் கொள்ளீரோ! 78 78. வேண்டாதார் விண்டாரோ - வேண்டாதவர் என்பவர் மனம் வேறு பட்டவர் அன்றோ. கட்டழகு - பேரழகு. கொண்டாரே - கணவர்கள் மட்டும். `சிவனும்,மலர்த் திசைமுகனும், திருமாலும், தெறுகுலிசத்து அவனும்,அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே! புவனம்அனைத் தையும்ஒருதன் பூங்கணையால் உயிர்வாங்கும் அவனும்உனக்கு இளையானோ! இவனேபோல் அருள்இலனால். 79 79. தெறு குலிசத்தவனும் - அழிக்கின்ற வச்சிராயுதத்தை யுடைய இந்திரனும். அவனும் - அந்த மன்மதனும். இவனே போல் - இந்த இலக்குவனைப்போல். `உனக்கு இளையானோ வேறு ‘பொன்உருவப் புனைகழலீர்! புழைகாண மூக்கரிவான் பொருள்வேறு உண்டோ? இன்உருவம் இதுகொண்டிங்கு இருந்தொழியும் நம்மருங்கே; ஏகாள் அப்பால்; பின்இவளை அயல்ஒருவர் பாரார்;என் றேஅரிந்தீர்! பிழைசெய் தீரோ, அன்னதனை அறிந்தன்றோ அன்புஇரட்டி பூண்டதுநான் அறிவி லேனோ! 80 80. புழைகாண - துளைகள் தெரியும்படி. இருந்தொழியும் - இருந்து விடுவாள். பாரார் - கண்ணாலும் பார்க்க மாட்டார்கள் அதனால் கற்பழியாள்; பிறர்நெஞ்சு புகாத கற்புடையள் ஆவாள். `வெப்பழியா நெடுவெகுளி வேல்அரக்கர் ஈதறிந்து வெகுண்டு நோக்கின் அப்பழியால் உலகனைத்தும் நும்பொருட்டால் அழிந்தனவாம்; அறத்தை நோக்கின் ஒப்பழியச் செய்கிலார் உயர்குலத்துத் தோன்றினார்; உணர்ந்து நோக்கி இப்பழியைத் துடைத்துதவி இனிதிருத்திர் என்னொடும்;என்று இறைஞ்சி நின்றாள். 81 81. வெப்பு அழியா - ஆத்திரம் அடங்காத. அப்பழியால் - அக்கொடுமை யினால். ஒப்பு அழியச் செய்கிலார் - இருவர் சம்மதித்துச் செய்து கொண்ட மணத்தை அழியும்படி செய்ய மாட்டார்கள். இராமன் கூறியது `தரைஅளித்த தனிநேமித் தயரதன்தன் புதல்வர்யாம்; தாய்சொல் தாங்கி, விரைஅளித்த கான்புகுந்தோம்; வேதியரும் மாதவரும் வேண்ட நீண்டு கரைஅளித்தற்கு அரியபடைக் கடல்அரக்கர் குலந்தொலைத்துக் கண்டாய் பண்டை வரைஅளித்த குலமாட நகர்புகுவேம்! ïitbjÇa kd¡bfhŸ! என்றான். 82 82. விரை அளித்த - மணம் வீசுகின்ற. நீண்டு - இங்கே தங்கியிருந்து. கரை அளித்தற்கு அரிய - எல்லை கட்டுவதற்கு முடியாத. வரை அளித்த குலம் மாடம் - மலைகளின் தோற்றத்தைக் கொடுக்கும் சிறந்த மாளிகைகள் நிறைந்த. சூர்ப்பணகையின் பதில் ‘காம்புஉறழும் தோளானைக் கைவிடீர்; எனினும்,யான் மிகையோ! கள்வர் ஆம்,பொறியில் அடல்அரக்கர் அவரோடே செருச்செய்வான் அமைந்தீர் ஆயின்,தாம்பொறியின் பலமாயம் தரும்பொறிகள் அறிந்தவற்றைத் தடுப்பன் அன்றே; பாம்பறியும் பாம்பினகால் எனமொழியும் பழமொழியும் பார்க்கி லீரோ? 83 83. காம்பு உறழும் - மூங்கிலைப்போன்ற. கள்வர்ஆம் - வஞ்சகர்களாகிய. பொறிஇல் - அறிவற்ற. அடல் - வலிமையுள்ள. செருச்செய்வான் - போர் புரியும் பொருட்டு. அமைந்தீர் ஆயின் - நின்றீர்களானால். தாம் - அவர்கள். பொறியில் - அடையாளம் காணமுடியாத. பொறிகள் அறிந்து - அடையாளங்களை அறிந்து. `உளம்கோடற்கு உனையிழைத்தாள் உளள்ஒருத்தி என்னுதியேல், நிருத ரோடும் களம்கோடற்கு உரியசெருக் கண்ணியக்கால், ஒருமூவேம் கலந்த காலை, குளம்கோடும் அன்றே,அக் கொடியதிறல் வீரர்தமைக் கொன்ற பின்னர்; இளங்கோவோடு எனையிருத்தி; இருகோளும் சிறைவைத்தாற்கு இளையாள் என்றே. 84 84. உனைஉளம் கோடற்கு இழைத்தாள் - உள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்படி செய்தவள். களம் கோடற்கு உரிய - போர்க்களத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குரிய. செருகண்ணியக் கால் - போரைவிரும்பினால். குளம் கோடும் - தலையைக் கொள்ளுவோம். இருகோளும் - சூரிய சந்திரர்களையும். சிறைவைத்தாற்கு - சிறையிலே வைத்த இராவணனுக்கு. `பெரும்குலா உறுநகர்க்கே பெயரும்நாள் வேண்டும்உருப் பிடிப்பேன்; அன்றேல் அரும்கலாம் உற்றிருந்தான் என்னினும்,ஆம்; இளையவன் தான் அரிந்த நாசி ஒருங்கிலா இவளோடும் உறைவெனோ? என்பானேல், இறைவ ஒன்றும் மருங்கிலா தவளோடும் அன்றோநீ நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய். 85 85. பெரும் குலா - பெரிய கொண்டாட்டம். உறும் நகர்க்கே - பொருந்திய அயோத்தி நகரத்துக்கு. `ஈங்கு இளையவன்தான்; அரும்காலம் - அரிய கோபம்; உற்று இருந்தான் எனினும். ஒருங்குஇலா - முழுதும் இல்லாத. ஒன்றும் மருங்கு - பொருந்திய இடை. (இடுப்பு) என்றவள்மேல், இளையவன்தான் இலங்குஇலைவேல் கடைக்கணியா, ‘இவளை யீண்டு கொன்றுகளை யேம்என்றால் நெடிதுஅலைக்கும்; அருள்என்கொல்? கோவே!’ என்ன ‘நன்றுஅதுவே யாம்அன்றோ போகாளேல் ஆக?,’என நாதன், கூற, ஒன்றும்இவர் எனக்கிரங்கார் உயிர்இழப்பென் நிற்கில்,என அரக்கி உன்னா. 86 86. இலங்கு இலைவேல் - விளங்குகின்ற இலைவடிவான வேலாயுதத்தை. கடைக்கணியா - கடைக்கண்ணால் பார்த்து. நெடிது அலைக்கும் - மிகவும் துன்புறுத்துவாள். அருள் என்கொல் - உத்தரவு என்னவோ? உன்னா - நினைத்து. `ஏற்றநெடும் கொடிமூக்கும், இருகாதும், முலையிரண்டும் இழந்து வாழ ஆற்றுவெனே! வஞ்சனையால் உமைஉள்ள பரிசறிவான் அமைந்தது அன்றோ! காற்றினிலும் கனலினிலும் கடியானைக், கொடியானைக், கரனை உங்கள் கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்; என்றுசலம் கொண்டு போனாள். 87 87. ஏற்றம் நெடும்கொடி மூக்கும் - உயர்ந்த நீண்ட கொடிபோன்ற மூக்கும். உமை உள்ள - உம்மிடம் உள்ள. பரிசு அறிவான் - தன்மையை அறியும் பொருட்டு. கொண்டு சலம் என்றுபோனாள் - என்று கூறிக் கோபங்கொண்டு போனாள். 7. திரிசிரா வதைப் படலம் இருந்த மாக்கரன் தாள்இணை யின்மிசை, சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பெனத் தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர்மேல் விரிந்த மேகம்எனவிழுந் தாள்அரோ! 1 திரிசிராவதைப் படலம்: சூர்ப்பணகையின் சொல்லைக் கேட்டுப் போர் செய்யவந்த கரன், தூடணன், திரிசிரன் என்ற மூன்று அரக்கர்களில் திரிசிரன் வதைபற்றி உரைக்கும் பகுதி. 1. மாகரன் - பெரிய கரனுடைய. சோரி - இரத்தம். தூம்பு - நீர்விழும் மதகின்வாய். செக்கர்மேல் விரிந்த - செவ்வானத்தின் மேல் பரந்த. கரன் கேள்வி வாக்கிற்கு ஒக்கப் புகைமுகந்து வாயினான் நோக்கிக் ‘கூசலர் நுன்னைஇத் தன்மையை ஆக்கிப் போனவர் ஆர்கொல்?என் றான்;அவள்; மூக்கின் சோரி முழீஇக்கொண்ட கண்ணினான். 2 2. மூக்கின்சோரி - மூக்கிலிருந்து வடிகின்ற இரத்தத்திலே. முழீஇக் கொண்ட - முழுகிக் கொண்டிருக்கின்ற. கண்ணினாள் - கண்களையுடைய வளாகிய சூர்ப்பநகை; சொல்லத் தொடங்கினாள். சூர்ப்பணகையின் சொற்கள் இருவர் மானிடர்; தாபதர்; ஏந்திய வரிவில் வாட்கையர்; மன்மதன் மேனியர்; தரும நீரர்; தயரதன் காதலர்; செருவில் நேரும் நிருதரைத் தேடுவார். 3 3. செருவில் நேரும் - போரிலே எதிர் நிற்கின்ற. நிருதரை - அரக்கர்களை. `தேடுவார் இருவர் மானுடர் தரும நீரர் - தருமத்தின் தன்மையுள்ளவர். ஒன்றும் நோக்கலர் உன்வலி; ஓங்குஅறன் நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார்; வென்றி வேல்கை நிருதரை வேர்அறக் கொன்று நீக்குதும்; என்றுணர் கொள்கையார். 4 4. `உன்வலி ஒன்றும் நோக்கலர்: நின்று நோக்கி ஓங்கு அறன் நிறுத்தும் நினைப்பினார் என்று உணர் - என்று உள்ளத்திலே கொண்டிருக்கும். `மண்ணின், நோக்கரு வானினின், மற்றினில், எண்ணி நோக்குறின், யாவர்க்கும நேர்கிலாப் பெண்ணின் நோக்குடை யாள்;ஒரு பேதை;என் கண்ணின் நோக்கி உரைப்பரும் காட்சியாள். 5 5. மற்றினில் - வேறுள்ள இடங்களிலும். எண்ணி நோக்குறின் - ஆராய்ந்து பார்த்தால். பெண்ணின் நோக்குடையாள் - பெண்ணின் அழகனைத்தும் அமைந்தவள். `கண்டு நோக்கரும் காரிகை யாள்தனைக் கொண்டு போவல் இலங்கையர் கோக்கு;எனா விண்டு மேல்எழுந் தேனை, வெகுண்டுஅவர் துண்டம் ஆக்கினர் மூக்கு,எனச் சொல்லினாள். 6 6. விண்டுமேல் எழுந்தேனை - மனம்மாறுபட்டு அவள் மேல் பாய எழுந்த என்னை, அவர்- அத்தாபதர்கள். அரக்கர்களின் முதற் பலி கரன், அவர்களைக் காட்டுக என்று எழுந்தான். `தேரைக் கொணர்க என்றான். பக்கத்திலிருந்த பதினான்கு அரக்கர்கள் `இப்பணியை எமக்குத் தருக என்று வேண்டினர். அவர்கள் படைக்கலம் ஏந்தி நின்றனர். `நன்று சொல்லினிர்! நான்,இச் சிறார்கள்மேல் சென்று போர்செயின் தேவர் சிரிப்பரால்; கொன்று சோரி குடித்துஅவர் கொள்கையை வென்று மீளுதிர்! மெல்லிய லோடுஎன்றான். 7 7. -. என்ன லோடும் விரும்பி இறைஞ்சினார், சொன்ன நாண்இலி அந்தகன் தூதென, அன்னர் பின்படர் வார்என ஆயினார், மன்னன் காதலர் வைகிடம் நண்ணினார். 8 8. நாண்இலி - காணம் அற்ற சூர்ப்பணகை. அந்தகன் தூதுஎன - எமனுடைய தூதைப்போல் முன் செல்ல. அன்னர் - அவ்வரக்கர்கள். படர்வார்என - செல்கின்றவர்களைப்போல. இராமனைச் சுட்டிக் காட்டினாள் சூர்ப்பணகை; அரக்கர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஏத்து வாய்மை இராமன் இளவலைக், `காத்தி தையலை என்றுதன் கற்பகம் பூத்தது அன்ன பொருவில் தடக்கையால் ஆத்த நாணின் அருவரை வாங்கினான். 9 9. பொருஇல் - ஒப்பற்ற. ஆத்த - கட்டப்பட்ட. நாணின் - நாணையுடைய. அருவரை - சிறந்த மலைபோன்ற வில்லை. வாங்கினான் - வளைத்தான். மரங்கள் போல்நெடு வாள்ஒடு தோள்விழ, உரங்க ளால்அடர்ந் தார்;உர வோன்விடும் சரங்கள் ஓடின தைக்க, அவர்கள்தம் சிரங்கள் ஓடின; தீயவள் ஓடினாள். 10 10. மரங்கள்போல் - வெட்டப்பட்டு வீழ்ந்த மரங்களைப் போல. உரங்களால் - மார்புகளின் வலிமையால். அடர்ந்தார்க்கு - போர் செய்தவர்களின் மேல். அரக்கர்படை திரண்டு வருதல் பதினால்வர்பட்ட செய்தியைச் சூர்ப்பணகை கரனிடம் கூறினாள்; அவன் வெகுண்டான்; `முரசறைந்து படைகளை யழையுமின் என்றான்.முரசறையப்பட்டது; படைகள் திரண்டன. தேர்இனம் துவன்றின; சிறுகண் செம்முகக் கார்இனம் நெருங்கின; காலின் கால்வரும் தார்இனம் குழுமின; தடையில் கூற்றுஎனப் பேரினம் கடல்எனப் பெயரும் காலையே. 11 11. துவன்றின - நெருங்கின. கார் இனம் - யானைகள். காலின் கால் வரும் - காற்றைப் போன்ற காலைப்பெற்ற. தார்இனம் - குதிரைப்படை. பேர்இனம் - பெரிய காலாட்படை. ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்; மாயிரும் ஞாலத்தை விழுங்கும் வாயினர்; தீஎரி விழியினர்; நிருதர் சேனையின் நாயகர்; பதின்மரோடு அடுத்த நால்வரே. 12 12. ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் - ஒவ்வொருவரும் தனித்தனியே ஆயிரம் யானை பலமுள்ளவர்கள். சேனையின் நாயகர் - சேனைத் தலைவர்கள். பதின்மரோடு அடுதத நால்வர் - பதினான்கு பேர். உரத்தினர்; உரும்என உரறும் வாயினர்; சுரத்தெரி படையினர்; கமலத் தோன்தரும் வரத்தினர்; மலைஎன மழைது யின்றெழு சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார். 13 13. உரும் என - இடிபோல. உரறும் - பேரொலியிடும். கமலத்தோன் - பிரமன். மழை துயின்று எழு - மேகம் படுத்துறங்கி எழுகின்ற. தருக்கினர் - கர்வம் உள்ளவர். செருக்கும் - களிக்கின்ற. சூலமும் பாசமும் தொடர்ந்த செம்மயிர்ச் சாலமும், தறுகணும், எயிறும் தாங்கினார்; ஆலமும் வெளிதெனும் நிறத்தர்; ஆற்றலால் காலனும் காலன்என்று அயிர்க்கும் காட்சியார். 14 14. செம்மயிர்ச் சாலமும் - சிவந்த மயிர்த் தொகுதியும். தறுகணும் - அஞ்சாமையும். ஆலமும் - விடமும். அயிர்க்கும் - அஞ்சும். எழுவரோடு எழுவராம், உலகம் ஏழொடுஏழ் தழுவிய வென்றியர்! தலைவர்; தானையர்; மழுவினர்; வாளினர்; வயங்கு சூலத்தர்; உழுவையோடு அரியென உடற்றும் சீற்றத்தார். 15 15. உழுவையொடு அரிஎன - புலியும் சிங்கமும் போல. உடற்றும் - பகைவரைத் துன்புறுத்தும். தூடணன், திரிசிராத் தோன்றல் ஆதியர், கோடணை முரசினம் குளிறு சேனையர், ஆடவர் உயிர்கவர் அலங்கல் வேலினர்; பாடவ நிலையினர் பலரும் சுற்றினர். 16 16. கோடு அணை - சங்குபோல் பேரோசை பொருந்திய. முரசு இனம் குளிறு - முரச வாத்தியங்கள் முழங்குகின்ற. பாடவ நிலையினர் - களிக்கின்ற தன்மையுள்ளவர்கள். கோடணை - கோஷணை; பேரரொலி; என்றும் கூறுவர். வேறு வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு; மாயா பந்தமா வினையம் மாளப் பற்றறு பெற்றி யோர்க்கும், உந்தரு நிலைய தாகி உடன்உறைந்து, உயிர்கள் தம்மை அந்தகற்கு அளிக்கும் நோய்போல், அரக்கிமுன் னாகஅம்மா! 17 17. அரக்கிமுன்னாக - சூர்ப்பணகை முன்னேவர. வள்ளியோன் மருங்கு - இராமன் இருக்கும இடம். மாய பந்தமாவினையம் மாள - மாயப் பிணிப்பான பெரிய தீவினை ஒழிய. நோய்போல் - தீவினையைப்போல. `அரக்கி முன்னாக - நோய்போல், வள்ளியோன் மருங்கு, சேனை வெள்ளம் வந்தது. படைகள் இராமன் இருந்த பக்கம் அடைந்தன. இராமன் இலக்குவனை நோக்கி `நீ சீதையைக் காத்திரு; நான் சேனைகளைச் சிதைக்கின்றேன் என்றான். `இப் பணியை எனக்கருள்க என்றான் இலக்குவன். இராமன் இசைந்திலன். இராமன் பணியை மேற்கொண்டிருந்தான் இலக்குவன். குழையுறு மதியம் பூத்த கொம்பனாள், குழைந்து சோர, தழையுறு சாலை நின்றும், தனிச்சிலை தரித்த மேரு, மழைஎன முழங்கு கின்ற வாள்எயிற்று அரக்கர் காண முழையினின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான். 18 18. குழை உறுமதியம் பூத்த கொம்பு அனாள் - காதணி யையுடைய சந்திரனைப் பூத்திருக்கின்ற பூங்கொம்பு போன்றவள். கொம்பு - கிளை; கொடி; சதைக்குப் பூங்கொம்பு உவமை. மடங்கலின் - சிங்கத்தைப்போல; இராமனுக்கு மடங்கல் உவமை. தோன்றிய தோன்றல் தன்னைச் சுட்டினள் காட்டிச் சொன்னாள்; வான்தொடர் மூங்கில் தந்த வயங்குவெம் தீயிது என்னத், தான்தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் ஏன்றுவந்து எதிர்த்த வீரன் இவன், இகல் இராமன்; என்றே. 19 19. மூங்கில்தந்த தீ மூங்கில் காட்டையே அழித்துவிடும். இது சூர்ப்பணகைக்கு உவமை. இவன் இகல் இராமன் என்ன - இவன்தான் வலிமையுள்ள இராமன் என்று. `தோன்றிய தோன்றல் தன்னைச் சுட்டினள் காட்டிச் சொன்னாள். கெட்ட சகுனங்கள்கண்டு அகம்பன் கூறுதல் வேறு `குருதி மாமழை சொரிந்தன மேகங்கள் குமுறிப் பருதி வானவன் ஊர்வளைப் புண்டது; பாராய்! கருது வீரநின் கொடிமிசைக் காக்கையின் கணங்கள் பொருது வீழ்வன, புலம்புவ, நிலம்படப் புரள்வ. 20 20. `மேகங்கள் குமுறி குருதி மாமழை சொரிந்தன பருதி வானவன் - சூரியதேவனை. ஊர்வளைப்பு உண்டது - பரிவேடம் சுற்றியது. (பரிவேடம் - சுற்று வளையம்.) `வாளின் வாய்களை ஈவளைக் கின்றன; வயவர் தோளும் நாட்டமும் இடம்துடிக் கின்றன; தூங்கி மீளி மொய்ம்படை இவுளிவீழ கின்றன; விரவி ஞாளி யோடுநின்று உளைக்கின்ற நரிக்குலம் பல;அல். 21 21. மீளி மொய்ம்படை - மிகுந்த வலிமையுள்ள படையான். இவுளி தூங்கி வீழ்கின்றன - குதிரைகள் தூங்கி விழுகின்றன. ஞாளியோடு - நாய்களோடு. நரிக்குலம் விரவிநின்று - நரிக் கூட்டங்கள் கலந்து நின்று. உளைக்கின்ற - ஊளையிடுகின்றன. `பிடிஎ லாம்மதம் பெய்திடப் பெரும்கவுள் வேழம் ஓடியு மால்மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர்வான் இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும் முடியின் மாலைகள் புலாலொடு முழுமுடை நாறும். 22 22. பிடியெலாம் - பெண் யானைகளெல்லாங்கூட. கவுள் - காதையுடைய. கம்பிக்கும் - நடுங்கும். புலாலொடு - புலால் நாற்றத்தோடு. முழுமுடை நாறும் - பெரிய துர்நாற்றம் வீசும். `இனைய ஆதலின் மானிடன் ஒருவன்என்று இவனை நினைய லாவதுஇங்கு ஏழைமை; நீஅமர்க்கு இயன்ற வினையெ லாம்செய்து வெல்லல்ஆம் தன்மையன் அல்லன்; புனையும் வாகையாய்! bghW¤âv‹ ciu! எனப் புகன்றான். 23 23. நினையலாவது - நினைப்பது. இங்கு ஏழைமை - இப்பொழுது அறியாமை. வினைஎலாம் செய்து - மாயச் செயல்களை யெல்லாம் செய்த. உரைத்த வாசகம் கேட்டலும், உலகெலாம் உலையச் சிரித்து, ‘நன்றிதுஎன் சேவகம்! தேவரைத் தேய அரைத்த அம்மிஆம் அலங்குஎழில் தோள்;அமர் வேண்டி இரைத்து வீங்குவ; மானிடற்கு எளியவோ? என்றான். 24 24. என் சேவகம் இது நன்று - எனது காவலாகிய இது நன்று. அலங்கு எழில் தோள் - அசைகின்ற அழகுள்ள தோள். தேவரைத் தேய அரைத்த அம்மியாம். தோளுக்கு அம்மி உவமை. இரைத்து - பருத்து. இராமனைச் சூழ்ந்த படைகள் வேறு பல்லாயிரம் இருள்கீறிய பகலோன்என ஒளிரும் வில்லாளனை முனியா,வெயில் அயிலாம்என விழியாக், கல்லார்மழை கணமாமுகில் கடைநாள் விழுவனபோல், எல்லாம்ஒரு தொடையாஉடன் எய்தார்;வினை செய்தார். 25 25. இருள் கீறிய = இருளைப் பிளந்து ஓட்டிய. `பல்லாயிரம்; பகலோன் என - சூரியனைப்போல. வெயில் அயிலாம் என - ஒளி வீசும் வேல்போல். கடைநாள் கணமாமுகில் கல்ஆர் மழை விடுவனபோல் - ஊழிக்காலத்தில் கூட்டமான மேகம் கல்மாரி போன்ற மழையைப் பெய்வது போல். எல்லாம் ஒரு தொடையா - எல்லா ஆயுதங்களையும் ஒரே வரிசையாக. எறிந்தார்என எய்தார்என நினைந்தார்என எறிய அறிந்தார்என அறியாவகை அயில்வாளியின் அறுத்தான்; செறிந்தாரையும், பிரிந்தாரையும், செறுத்தாரையும், சினத்தால் மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான்சிலை பிடித்தான். 26 26. அயில்வாளியின் - கூர்மையான அம்புகளால், மறிந்தா ரையும் - தடுத்தவர்களையும். வலித்தாரையும் - இழுத்தவர் களையும் `சிலைபிடித்தான் மடித்தான். உடைந்தார்களை நகை செய்தனர் உருள்தேரினர்; உடனாய் அடைந்தார்படைத் தலைவீரர்கள் பதினால்வரும்; அயில்வாள் மிடைந்தர்நெடும் கடல்தானையர், மிடல்வில்லிநர், விரிநீர் கடைந்தார்வெரு வுறமீதெழு கடுவாம்எனக் கொடியார். 27 27. கடு ஆம் என - விஷமாம் என்னும். அயில்வாள் மிடைந்தார் - கூர்மையான வாளேந்தி நெருங்கியவர்கள். வேறு சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில் ஆற்றில தலைஎனும் ஆக்கை கண்டிலர்; தெற்றினர் எயிறுகள் திருகி னர்,சினம் முற்றினர், இராமனை முடுகு தேரினார். 28 28. தெற்றினர் - மனம் மாறுபட்டனர். எயிறுகள் திருகினார் - பற்களை நறநறவென்று கடித்தனர். இராமனை முடுகு - இராமனிடம் விரைகின்ற. அப்படைத் தலைவர் பதினால்வரும் இராமன் மேல் அம்புகளைச் சொரிந்தனர். இராமன் அவைகளைத் தடுத்து அவர்களுடைய தேர்களையும் அழித்தான். அவர்கள் வில்லேந்தி நிலத்தில் நின்று பொருதனர்; விற்களையும் துணித்தான்; பின்பு மலைகளை ஏந்தி வானத்தில் நின்று போர் புரிந்தனர். கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் இலைகொள்வெம் பகழிஏ ழிரண்டு வாங்கினான்; கொலைகொள்வெம் சிலையொடு புருவம் கோட்டினான்; மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே. 29 29. கல்வியான் - இராமன். கோட்டினான் - வளைத்தான். அரக்கர் படைகளின் அழிவு அத்தலைத் தானையன்; அளவில் ஆற்றலன்; முத்தலைக் குரிசில்;பொன் முடியன்; முக்கணான் கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்; வைத்தலைப் பகழியான் மலைசெய் வில்லினான். 30 30. முத்தலைக் குரிசில் - மூன்று தலைகளையுடைய சிறந்தவன்; திரிசிரன். அவன் தோற்றத்திற்குச் சூலம் உவமை. வைதலை பகழியான் - கூர்மையான முனையுள்ள அம்புகளை யுடையவன். அன்னவன் நடுவுற, ஊழி ஆழியீது என்னவந்து எங்கணும் இரைத்த சேனையுள், தன்னிகர் வீரனும் தமியன் வில்லினன்; துன்இருள் இடையதோர் விளக்கின் தோன்றினான். 31 31. அன்னவன் - அத்திரிசிரன். நடுஉற - நடுவிலே இருக்க. ஊழி ஆழி ஈது என்ன - யுகமுடிவிலே எழுந்துவந்த கடல் இது என்று சொல்லும்படி. சேனைஉள் - சேனையின் நடுவிலே. வீரனும் - இராமனும். அரக்கர் சேனை இருள; இராமன் விளக்கு. அற்றன சிரம்என அறிதல் தேற்றலர்; கொற்றவெம் சிலைச்சரம் கோத்து வாங்குவார்; இற்றில, தாள்என எழுந்து, விண்ணனைப் பற்றின மழைஎனப் படைவ ழங்குவார். 32 32. -. கேடகத் தடக்கையை; கிரியின் தோற்றத்த; ஆடகக் கவசத்த, கவந்தம் ஆடுவ; பாடகத்து அரம்பையர் மருளப் பல்வித நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே. 33 33. ஆடகம் - பொன்னலாகிய. கவந்தம் - முண்டங்கள். பாடகத்து - கால்களிலே சிலம்பை அணிந்த. மருள - மயங்கும்படி. தெரிகணை மூழ்கலின் திறந்த மார்பினர், இருவினை கடந்துபோய் உம்பர் எய்தினார்; நிருதர்தம் பெரும்படை நெடிது; நின்றவன் ஒருவன்என்று உள்ளத்தின் உலைவுற் றார்சிலர். 34 34. தெரிகணை - தேர்ந்தெடுத்துவிடும் கணைகள். திறந்த - பிளந்த. பெரும்படை நெடிது நின்றவன் - பெரிய படையுடன் நெடுநேரம் நின்று போர் செய்தவன். ஒருவன் - ஒப்பற்றவன் என்று கருதி. கைக்களிறு அன்னவன் பகழி, கண்டநர் மெய்க்குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின; மைக்கரு மனத்தொரு வஞ்சன், மாண்பிலன், பொய்க்கரி கூறிய கொடுஞ்சொல் போலவே. 35 35. கைக்களிறு அன்னவன் - கையையுடைய ஆண் யானை போன்ற இராமனுடைய. பகழி - அம்பு. கண்டவர் - எதிரே காணப்பட்டவர்களின். மெய்க்குலம் - உடம்புக் கூட்டங்களை. மைகரு மனத்து - குற்றம் நிறைந்த மனத்தையுடைய. கரி - சாட்சி. அம்புக்குக் கொடுஞ்சொல் உவமை. அம்சிறை அறுபதம், அடைந்த கீடத்தைத் தஞ்செனத் தன்மயம் ஆக்கும் தன்மைபோல், வஞ்சகத்து அரக்கரை வளைத்து, வள்ளல்தான் செஞ்சரத் தூய்மையால் தேவர் ஆக்கினான். 36 36. அம்சிறை அறுபதம் - அழகிய சிறகையுடைய குளவி. கீடத்தை - புழுவை. தஞ்சுஎன - தஞ்சமாக அடைந்ததனால். செம்சரத்து தூய்மையால் - நல்ல அம்பின் பரிசுத்தத்தினால். திரிசிரன் வதம் இது கண்ட திரிசிரன் தன் தேரை வானத்தின் மேல் ஓட்டி நின்று ஆரவாரம் புரிந்தான். ஊன்றிய தேரினன், உருமின் வெம்கணை, வான்தொடர் மழைஎன, வாய்மை யாவர்க்கும் சான்றென நின்ற,அத் தரும மன்னவன் தோன்றல்தன், திருஉரு மறையத் தூவினான். 37 37. தேரினன் - தேரையுடைய திரிசிரன். தரும மன்னவன் - தசரதன். இராமன் அவன் அம்புகளைத் தடுத்தான்; அவன் தேரையும் பாகனையும் அழித்தான்; ஓரம்பால் அவனுடைய இரண்டு தலைகளைக் கொய்தான்; ஆயினும அவன் ஒரு தலையுடன் பொருதான்; இராமன் அவன் வில்லை முறித் தான். திரிசிரன் மலைகொண்டு தாக்கினான். இராமன், அவனுடைய கால்களையும், தோள்களையும், மற்றொரு தலையையும் அம்பால் அறுத்துத் தள்ளினான். திரிசி ராஎனும் சிகரம்மண் சேர்தலும் செறிந்த நிருதர் ஓடினர்; தூடணன் விலக்கவும் நில்லார்; பருதி வாளினர் கேடகத் தடக்கையர், பரந்த குருதி நீரிடை வார்கழல் கொழுங்குடல் தொடக்க. 38 38. பருதி வாளினர் - சூரியன் போன்ற ஒளிபொருந்திய - வாளையுடையவர்கள். கொழும்குடல் - கொழுத்த குடல். வார்கழல் - நீண்ட கால்களில் மாட்டிக்கொள்ளும்படி. நிருதர் ஓடினர் - அரக்கர்கள் ஓடின 8. தூடணன் வதைப் படலம் தூடணன் போர் வச்சை யாம்எனும் பயம்மனத்து உண்டென வாழும் கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்; நிச்ச யம்எனும் கவசந்தான் நிலைநிற்பது அன்றி, அச்சம் என்னும்ஈது ஆருயிர்க்கு அருந்துணை ஆமோ! 1 தூடணன் வதைப்படலம்: திரிசிரன் தமையனாகிய தூஷணன் என்பவன் கொலையுண்டதைக் கூறும் பகுதி. 1. வச்சையாம் - பழிக்குக் காரணமாகும். கொச்சை மாந்தரை - இழிவுள்ள மக்களைக்கண்டு. கூசார் - அஞ்சமாட்டார்கள். நிச்சயம் - உறுதி. செம்பு காட்டிய கண்இணை, பால்எனத் தெளிந்தீர்! வெம்பு காட்டிடை நுழைதொறும் வெரிந்உறப் பாய்ந்த கொம்பு காட்டுதி ரோ!தட மார்பிடைக் குளித்த அம்பு காட்டுதி ரோ!குல மங்கைக்கு அம்மா. 2 2. செம்பு காட்டிய - செம்பைப்போல் சிவந்து காட்டிய. வெம்பு காட்டிடை - கொடிய காட்டின் வழியே. நுழைதொறும் - பயந்து நுழைந்து ஓடுந்தோறும். வெரிந்உற - முதுகில்பட. கொம்பு - மரக்கிளை. குலமங்கையர்க்கு - வீட்டில் உள்ள மகளிர்க்கு. அம்மா; அசை. V¡f« ï§Fïj‹ nkY«c© nlh!இகல் மனிதன் ஆக்கும் வெஞ்சமத்து ஆண்மை;அவ் அமரர்க்கும் அரிதாத் தாக்க ரும்புயத்து, உம்குலத் தலைமகன் தங்கை மூக்கொடு அன்றி,நும் முதுகொடும் போம்பழி முயன்றீர். 3 3. ஏக்கம் - கவலை. இகல் மனிதன் - வலிமையுள்ள மனிதன் ஒருவன். அவ் அமரர்க்கும் அரிதா - அந்தத் தேவர்களாலும் முடியாத. ஆண்மை - வீரத்தை. வெம்சமத்து ஆக்கும் - கொடிய போரிலே காட்டுவான். இவ்வாறு தூடணன் கூறி ஓடின படைகளைத் திரட்டினான்; இராமன் எதிரே வந்து நின்று போர் புரிந்தான். தூட ணன்விடு சரம்அவை யாவையும் துணியா, மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா ஆடல் கொண்டனன் அளப்பரும் பெருவலி அரக்கர் கூடி நின்றஅக் குரைகடல் வறள்படக் குறைத்தான். 4 4. துணியா - துண்டாகும்படி செய்து. மாடு - பக்கத்திலே. மாற - அழிய. ஆடல் கொண்டனன் - திருவிளையாடலை மேற்கொண்டான். அக்குரைகடல் - அந்த ஓசையுள்ள சேனைக் கடல். வறள்பட - வறண்டு போகும்படி. அறம்கொ ளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் பிறங்கி நீண்டன கணிப்புஇல; பெரும்கடு விசையால் கறங்கு போன்றுளது ஆயினும், பிணப்பெரும் காட்டில் இறங்கும், ஏறும்,அத் தேர்பட்டது யாதென இசைப்பாம்; 5 5. அறம் கொளாதவர் - அறநெறியை மேற்கொள்ளா தவர்களாகிய அரக்கல்களின். பிறங்கி - உயர்ந்து. கணிப்பு - எண்ணிக்கை. கறங்கு - காற்றாடி. சென்ற தேரையும் சிலையுடை மலைஎனத் தேர்மேல் நின்ற தூடனன் தன்னையும் நோக்கிய நிமலன் `நன்று! e‹W!நின் நிலை,என அருள்இறை நயந்தான் என்ற காலத்துஅவ் வெய்யவன் பகழிமூன்று எய்தான். 6 6. நிமலன் - குற்ற மற்றவனாகிய இராமன். அருள் - இரக்கம் காட்ட. இறை -சிறிது. நயந்தான் - விரும்பினான். பகழி - அம்பு. எய்த காலமும் வலியும்நன்று எனநினைந்து இராமன் செய்த சேய்ஒளி முறுவலன் கடுங்கணை தெரிந்தான்; நொய்தின் அங்குஅவன் நொறில்பரித் தேர்பட நூறி கையில் வெஞ்சிலை அறுத்து,ஒளிர் கவசமும் கடிந்தான். 7 7. நொறில் - சுழல்கின்ற. பரி - குதிரை. நூறி - நொறுக்கி. கடிந்தான் - விலக்கினான். தேவர் ஆர்த்தெழ, முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் ஓவுஇல் வாழ்த்தொலி நாற்கடல் முழக்கென ஓங்க காஅ டா!இது, வல்லையேல் நீ,எனக் கணைஒன்று ஏவி னான்;அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான். 8 8. சிலம்பும் - ஒலிக்கும். ஓவுஇல் - இடைவிடாத. வல்லையேல் - வல்லவனானால். 9. கரன் வதைப் படலம் கரன் புரிந்த கடும்போர் தம்பிதலை யற்றபடி யும்,தய ரதன்சேய் அம்புபடை யைத்துணி படுத்ததும் அறிந்தான்; வெம்புபடை விற்கைவிச யக்கரன் வெகுண்டான், கொம்புதலை கட்டிய குலக்கரி கடுப்பான். 1 கரன் வதைப்படலம்: மூத்தோனாகிய கரன் கொல்லப் பட்டதைக் கூறும் பகுதி. 1. தலை கொம்பு கட்டிய - தலையில் கொம்பு பொருந்திய. கொம்பு - தந்தம்; தலை முகத்தைக் குறித்தது. கடுப்பான் - ஒப்பான். அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும், சிந்துரம் வயப்புரவி, தேர்திசை பரப்பி, இந்துவை வளைக்கும்எழி லிக்குலம் எனத்,தான் வந்துவரி வில்கைமத யானையை வளைத்தான். 2 2. அந்தகனும் உட்கிட - எமனும் அஞ்சும்படி. சித்திரம் - யானை. வயம்புரவி - வெற்றியுள்ள குதிரைகள். இந்துவை - சந்திரனை. எழிலிக்குலம் - மேகக் கூட்டம். மதயானையை - மதயானை போன்ற இராமனை. அன்றிடர் விளைத்தவர் குலங்களொடு அடங்கச் சென்றுஉலை வுறும்படி தெரிந்துகணை சிந்த; மன்றிடை நலிந்துவலி யோர்கள்எளி யோரைக் கொன்றனர் கவர்ந்தபொரு ளின்,கடிது கொன்ற, 3 3. அன்று இடர் - அன்று துன்பத்தை உண்டாக்கியவர். உலைவுறும் படி - அழியும்படி. மன்றிடை - நீதிமன்றத்தில். நலிந்து பொய் வழக்கால் துன்புறுத்தி. கொன்றனர் கவர்ந்த - அழித்துப் பறித்த. கடும்கரன் எனப்பெயர் படைத்தகழல் வீரன், அடங்கலும் அரக்கர்அழிவு உற்றிட அழன்றான்; ஓடுங்கல்இல் நிணக்குருதி ஓதம்அதின் உள்ளான், நெடும்கடலின் மந்தரம் எனத்தமியன் நின்றான். 4 4. `அரக்கர் அடங்கலும் அழிவுற்றிட அழன்றான் - கனல்போல் சீறினான். நிணம் குருதி ஓதம் அதின் - நிணம்படிந்த இரத்தக் கடலிலே மந்தர மலைபோல. செங்கண்எரி சிந்த,வரி வில்பகழி சிந்தப், பொங்குகுரு திப்புணரி யுள்புகையும் நெஞ்சன், கங்கமொடு, காகம்மிடை யக்,கடலின் ஓடும் வங்கம்என லாயதொரு தேரின்மிசை வந்தான். 5 5. பொங்கு குருதிப் புணரியுள் - மிகுந்த இரத்தக் கடலிலே நின்று. கங்கமொடு காகம்மிடைய - பருந்துகளுடன் காக்கை களும் நெருங்க. வங்கம் எனல் ஆயது - மரக்கலம் என்று சொல்லக்கூடியதாகிய ஒரு. கரன் பெய்த ஆயிரக்கணக்கான அம்புகளை இராமன் அழித்தான்; இராமனுடைய அம்புகளையும் கரன் அழித்தான். இருவரும் கடுஞ்சினத்துடன் போர் புரிந்தனர். அப்பொழுது இராமன். வேறு `முடிப்பன் இன்றொரு மொய்கணை யால்எனாத் தொடுத்து நின்றுஉயர் தோள்உற வாங்கினான்; பிடித்த திண்சிலை, பேர்அகல் வானிடை இடிப்பின் ஓசை படக்கடிது இற்றதே. 6 6. இன்று ஒரு மொய்கணையால் - இப்பொழுது ஒரு வலிமையுள்ள அம்பினால். முடிப்பென் எனா - இவன் உயிரை முடிப்பேன் என்று எண்ணி. வாங்கினான் - வளைத்தான். கடிது இற்றது - விரைவில் ஒடிந்தது. வெற்றி கூறிய வானவர், வீரன்வில் இற்ற போது துணுக்கம்உற்று ஏங்கினார்; மற்றொரு வெஞ்சிலை இன்மை மனக்கொளா `அற்ற தால்எம் வலிஎன அஞ்சினார். 7 7. துணுக்கம் உற்று - திடுக்கிட்டு. மனக்கொளா - நினைத்து. என்னும் மாத்திரத்து, ஏந்திய கார்முகம் சின்னம் என்றும், தனிமையும் சிந்தியான் மன்னர் மன்னவன் செம்மல்; மரபினால் பின்னு றத்தன் பெரும்கரம் நீட்டினான். 8 8. கார்முகம் - வில். சின்னம் என்றும் - ஒடிபட்டது என்றும். தனிமையும் - தான் படையின்றித் தனித்திருப்பதையும். செம்மல் - இராமன். கண்டு நின்று கருத்துணர்ந் தான்என, அண்டர் நாதன் தடக்கையின் அத்துணை பண்டு போர்மழு வாளியைப் பண்பினால் கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன். 9 9. அண்டர் நாதன் - தேவர்களின் தலைவனாகிய இராமன். மழுவாளி - பரசுராமன். கொடுத்த வில்லை,அக் கொண்டல் நிறத்தினான் எடுத்து, வாங்கி வலங்கொண்டு, இடக்கையில் பிடித்த போது, நெறிபிழைத் தோர்க் கெலாம் துடித்த வால்இடக் கண்ணொடு தோளுமே. 10 10. வலம்கொண்டு வாங்கி - வலக்கரத்தால் வளைத்து. `இடக்கையில் பிடித்தபோது நெறி பிழைத்தோர்க்கு எல்லாம் - அறநெறி தவறியவர்களுக் கெல்லாம். இராமன், கரன் பொழிந்த கணைகளையெல்லாம் துணித்து வீழ்த்தினான்; அவனுடைய வலக்கரத்தையும் தோளுடன் அறுத்தான். இடக்கரத்தையும் வீழ்த்தினான்; அவன் தலை யையும் துண்டித்தான் வானவர் பூமாரி பொழிந்து ஆரவாரித்தனர். முனிவர் வந்து முறைமுறை மொய்ப்புற, இனிய சிந்தை இராமனும் ஏகினான், அனிக வெம்சமத்து ஆருயிர் போகத்,தான் தனியி ருந்த உடல்அன்ன தையல்பால். 11 11. மொய்ப்புற - சூழ்ந்துவர. அனிகவெம் சமத்து - சேனைகள் நிறைந்த கொடிய போர்க்களத்திலே. தையல் - சீதை. இராமன், உடல்; சீதை, உயிர். விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியின் புண்ணின் நீரும், பொடிகளும் போய்உக, அண்ணல் வீரனைத், தம்பியும், அன்னமும் கண்ணின் நீரினில் பாதம் கழுவினார். 12 12. -. சூர்ப்பணகையின் செய்கை ‘ஆக்கி னேன்மனத்து ஆசை;அவ் வாசைஎன் மூக்கி னோடும் முடிய முடிந்திலேன்; வாக்கி னால்உங்கள் வாழ்வையும், நாளையும் போக்கி னேன்;கொடி யேன்!என்று போயினாள். 13 13. ஆசு அற - பூண்டில்லாமல். கலம் குறைத்து எழு - கப்பலைச் சிதறடித்து வீசுகின்ற. கால் என - சுழல்காற்றைப்போல. நொய்தின் - விரைவில். அலங்கல் வேற்கை அரக்கரை ஆசறக் குலங்கள் வேர்அறுப் பான்குறித்து ஆழ்கடல் கலங்கு றைத்துஎழு கால்எனக் காலினால் இலங்கை மாநகர் நொய்தின்சென்று எய்தினாள். 14 14. -. 10. இராவணன் துன்புறு படலம் இரைத்தநெடும் பணைஅரக்கர் இறந்ததனை மறந்தனள்,போர் இராமன் துங்க வரைப்புயத்தின் இடைக்கிடந்த பேராசை மனம்கவற்ற, ஆற்றாள் ஆகித், `திரைப்பரவைப் பேர்அகழித் திண்நகரில் கடிதோடிச் சீதை தன்மை உரைப்பன்எனச் சூர்ப்பணகை வரஇருந்தான், இருந்தபரிசு உரைத்தும்; மன்னோ. 1 இராவணன் துன்புறுபடலம்: சூர்ப்பணகை, சீதையின் அழகைப் பற்றிச் சொல்லக்கேட்டு, இராவணன் காமநோய் கொண்டு வருந்தியதை உரைக்கும் பகுதி. 1. நெடும்பணை - பெரிய பேரிகையையுடைய. மனம் கவற்ற - மனத்தைத் துன்புறுத்த. பரவைப்பேர் அகழி - கடலையே பெரிய அகழாகக் கொண்ட. வர இருந்தான் - வரவை எதிர்பார்த் திருந்தான். மன்; ஓ; அசைகள். இராவணன் அவையிருக்கை நிலையிலா உலகினிடை நிற்பனவும், நடப்பனவும், நெறியின் ஈந்த மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பரிது; நுனிப்பதொரு வரம்பில் ஆற்றல் உலைவிலா வகைஇழைத்த தருமம்என, நினைந்தவெலாம் உதவும், தச்சன் புலன்எலாம் தெரிப்பதொரு, புனைமணிமண் டபம்அதனில் பொலிய; மன்னோ. 2 2. நுனிப்பது ஒரு வரம்புஇல் ஆற்றல் - எண்ணற்கரிய அளவற்ற அறிவினால். உலைவு இலாவகை இழைத்த - அழியாத வகையில் வருந்திச் செய்த. புலன் எலாம் - அறிவின் திறமை முழுவதையும். மன்; ஓ; அசைகள். வண்டலங்கு நுதல்திசைய வயக்களிற்றின் மருப்பொடிய அடர்த்த பொன்தோள் விண்தலங்கள் உறவீங்கி ஓங்குதய மால்வரையின் விளங்க;மீதில் குண்டலங்கள், குலவரையை வலம்வருவான் இரவிகொழும் கதிர்சூழ் கற்றை மண்டலங்கள் பன்னிரண்டும் நாலைந்தாய்ப் பொலிந்தவென வயங்க; மன்னோ. 3 3. வண்டு அலங்குநுதல் - வண்டுகள் ஓசையிட்டு மொய்க்கும் நெற்றியையுடைய. வீங்கி - பருத்து. உதயமால் வரையின் - உதய கிரியைப் போல. கொழும் கதிர்கற்றை சூழ் இரவி மண்டலங்கள் - சிறந்த ஒளிக்கற்றை பொருந்திய சூரியர்கள். வயங்க - விளங்க. மன்; ஓ; அசைகள். வாள்உலாம் முழுமணிகள் வயங்குஒளியின் தொகைவழங்க, வயிரக் குன்றத் தோள்எலாம் படிசுமந்த விடஅரவின் படநிரையின் தோன்ற; ஆன்ற நாள்எலாம் புடைதயங்க; நாமநீர் இலங்கையில்தான் நலங்க விட்ட கோள்எலாம் கிடந்தநெடும் சிறையன்ன, நிறைஆரம் குலவ மன்னோ. 4 4. வாள் உலாம் - ஒளிபொருந்திய. பட நிரையில் - பட வரிசையைப் போல. நாள் எலாம் - நட்சத்திரங்களெல்லாம். நலங்கவிட்ட - ஒளி மழுங்கும்படிவிட்ட. கோள்எலாம் - கிரகங்கள் எல்லாம். ஆரம் - முத்துமாலை. வேறு ஆய்வரும் பெருவலி அரக்கர் ஆதியோர் நாயகர், நளிர்மணி மகுடம் நண்ணலால், தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து, செஞ்சுடர் ஆய்மணிப் பொலன்கழல் அடிநின்று ஆர்ப்பவே. 5 5. ஆய்வு அரும் - எண்ணுதற்கு முடியாத. பெயர்ந்து - நிறம் மாறி. மணி - இரத்தினங்கள் பதித்த. மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர் ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல், தேவரும், அவுணரும், முதலி னோர்திசை தூவிய நறுமலர்க் குப்பை துன்னவே. 6 6. முதல்வர் முந்தையோர் - முதல்வராகிய முன்னோர்கள் ஓவலர் - ஒழிவில்லாமல். ஓங்கல் போல் - மலைபோல். இன்னபோது, இவ்வழி நோக்கும், என்பதை உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர்; மின்அவிர் மணிமுடி விஞ்சை வேந்தர்கள் துன்னினர் முறைமுறை துறையின் சுற்றவே. 7 7. விஞ்சை வேந்தர்கள் - வித்தியாதர மன்னர்கள். துறையின் சுற்றவே - அரசசபையைச் சுற்றிலும். முறைமுறை துன்னிர் - வரிசை வரிசையாக நெருங்கினார்கள். மங்கையர் திறத்துஒரு மாற்றம் கூறினும், தங்களை யாம்,எனத் தாழும் சென்னியர்; அங்கையும், உள்ளமும், குவிந்த ஆக்கையர்; சிங்கஏறு எனத்திறல் சித்தர் சேரவே. 8 8. திறல் சித்தர் சிங்கஏறு என சேரவே - வலிமையுள்ள சித்தர்கள் ஆண் சிங்கம்போலச் சேர்ந்துவர. சித்தர்கள்; தேவர் களில் ஒருவகையினர். அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டொரு நன்மொழி பகரினும், நடுங்கும் சிந்தையர்; `என்னைகொல் பணியென இறைஞ்சு கின்றனர் கின்னரர், பெரும்பயம் கிடந்த நெஞ்சினர். 9 9. -. குண்டலம் முதலிய குலம்கொள் பேர்அணி மண்டிய பேர்ஒளி வயங்க வீசலால், உண்டுகொல் இரவுஇனி உலகம் ஏழினும், எண்திசை மருங்கினும், இருள்இன்று என்னவே. 10 10. -. கங்கையே முதலிய கடவுள் கன்னியர் கொங்கைகள் சுமந்துஇடை கொடியின் ஒல்கிடச் செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர் மங்கல முறைமொழி கூறி வாழ்த்தவே. 11 11. -. ஊருவில் தோன்றிய உருப் பசிப்பெயர்க் காரிகை யார்முதல் கலாப மஞ்ஞைபோல், வார்விசிக் கருவியோர் வகுத்த பாணியின், நாரியர், அருநடம் நடிப்ப நோக்கியே. 12 12. ஊருவில் - பிரமனது தொடையில். வார் வீசிக்கருவி யோர் - வாரால் இழுத்துக் கட்டப்பட்ட தோற் கருவியை உடையவர்கள். தோற் கருவி - மத்தளம் முதலியன. பாணியின் - தாளத்திற்கு ஏற்ப. இருந்தனன், உலகங்கள் இரண்டும், ஒன்றும்,தன் அருந்தவம் உடைமையின், அளவில் ஆற்றலின் பொருந்திய இராவணன், புருவக் கார்முகக் கருந்தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே. 13 13. உலகங்கள் இரண்டும் ஒன்று - மூன்றுலகங்களும். புருவம் கார் முகம் - புருவமாகிய வில்லையுடைய. `இராவணன், வெள்ளத்தே, இருந்தனன். சூர்ப்பணகையின் தோற்றம் தங்கையும் அவ்வழித், தலையில் தாங்கிய செங்கையள், சோரியின் தாரை சேந்திழி கொங்கையள், மூக்கிலள், குழையின் காதிலள், மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள். 14 14. சோரியின் தாரை - இரத்த தாரை. சேந்துஇழி - சிவந்து வடிகின்ற. குழைஇல் - குழையற்ற; குழை - காதணி. மங்குலின் ஒலிபட - மேகத்தின் ஒலி தோன்ற (இடிதோன்ற.) தோன்றலும், தொன்னகர் அரக்கர் தோகையர், ஏன்றுஎதிர் வயிறலைத்து, இரங்கி ஏங்கினார்; மூன்றுலகு உடையவன் தங்கை, மூக்கிலள் தான்தனி யவள்வரத் தரிக்க வல்லரோ! 15 15. அரக்கர் தோகையர் - அரக்கர்குலப் பெண்கள். எதிர் ஏன்று - அவள் எதிரே பொருந்தி நின்று. வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக் கொண்டு. `செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார்உளர்? முப்புறத்து உலகமும் அடங்க மூடிய இப்புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்றுஇது அப்புறத்து அண்டத்தோர் ஆர்;என் றார்சிலர். 16 16. தெவ்வர் - பகைவர். முப்புறத்து உலகமும் - மூன்று உலகமும். இப்புறத்து அண்டத்தோர்க்கு - இந்த அண்டத்தில் உள்ளவர்களுக்கு. `என்னையே இராவணன் தங்கை என்றபின், அன்னையே! v‹wo tz§fš m‹¿na, c‹dnt x©Qnkh xUt uhš?இவள் தன்னையே அறிந்தனள் தான்என றார்சிலர். 17 17. -. சொல்பிறந் தார்க்கிது துணிய ஒண்ணுமோ? `இல்பிறந் தார்தமக்கு இயைவ செய்திலள்; கற்பிறந் தாள்;எனக், கரன்கொ லாம்இவள் பொற்புஅறை ஆக்கினன் போல்;என் றார்சிலர். 18 18. சொல் பிறந்தார்க்கு - இன்னார் என்று குறிப்பிடத் தகுந்த சொல்லையுடையவர்க்கு. ஒண்ணுமோ - முடியுமோ. இல்பிறந்தார் தமக்கு - நற்குடியிலே பிறந்தவர்க்கு. இயைவ - ஏற்ற செயல்களை. பொற்பு அறை ஆக்கினன் - அழகு அற்றுப் போம்படியாகச் செய்தனன். புகன்று - சினந்த. `புகன்று இவள் பொற்பு அறை ஆக்கினன் கரன் கொல்போல். முழவினில், வீணையில், முரளி, யாழினில், தழுவிய குழலினில், சங்கில், தாரையில் எழுகுரல் இன்றியே, என்றும் இல்லதுஓர் அழுகுரல் பிறந்ததுஅவ் விலங்கைக்கு அன்று;அரோ. 19 19. முழவு - மத்தளம். முரளி - மூக்கால் வாசிக்கும் ஒருவகை வாத்தியம். எழுகுரல் - எழுகின்ற ஓசை. அரோ; அசை. கள்உடை வள்ளமும், களித்த தும்பியும், உள்ளமும் ஒருவழிக் கிடக்க ஓடினார்; வெள்ளமும் நாண்உற விரிந்த கண்ணினார்; தள்உறு மருங்கினர் தழீஇக்கொண்டு ஏகினார். 20 20. -. வேறு நெய்ந்நிலைய வேல்அரசன் நேருநரை யில்லான் இந்நிலை உணர்ந்தபொழுது எந்நிலையம்? என்னா, மைந்நிலை நெடுங்கண்மழை வான்நிலைய தாகப் பொய்ந்நிலை மருங்கினர், புலம்பினர் புரண்டார். 21 21. நெய் நிலைய - நெய் பொருந்திய. நேருநரை - பகைவரை. மைநிலை - மையுள்ள. வான்மழை நிலையது ஆக - பெரிய மேகத்தின் தன்மையுடையதாக; மேகம் பொழியும் மழையின் தன்மையுள்ளதாக. சூர்ப்பணகை இராவணன் அடிகளில் வீழ்ந்து கதறல் என்றினைய வன்துயர், இலங்கைநகர் எய்த, நின்றவர் இருந்தவரொடு ஓடுநெறி தேடக் குன்றின்அடி வந்துபடி கொண்டல்என மன்னன் பொன்திணி கருங்கழல் விழுந்தனள் புரண்டாள். 22 22. ஓடும்நெறிதேட - ஓடும் வழியைப் பார்க்க. படிகொண்டல்என - படிகின்ற மேகம்போல. கொண்டல் - மழைக்கால மேகம். பொன் திணி - பொன்னை நிறைத்துச் செய்த. கரும் கழல் - வலிமையான வீரக்கழலை யணிந்த பாதத்திலே. இராவணனுக்கு மலையும், சூர்ப்பணகைக்குக் கார்கால மேகமும் உவமைகள். இராவணன் கோபம் மூடினது இருட்படலை மூவுலகும் முற்ற; சேடனும் வெருக்கொடு சிரத்தொகை நெளித்தான்; ஆடின குலக்கிரி; அருக்கனும் வெயர்த்தான்; ஓடின திசைக்கரிகள்; உம்பரும் ஒளித்தார். 23 23. மூவுலகும் முற்ற இருள்படலை மூடினது - மூன்றுலகும் இருட் போர்வை மூடிற்று. குலக்கிரி - பெரிய மலைகள். விரிந்தவல யங்கள்மிடை தோள்படர மீதிட்டு எரிந்தநய னங்கள்எயிற் றின்புறம் இமைப்ப; நெரிந்தபுரு வங்கள்நெடு நெற்றியினை முற்றத் திரிந்தபுவ னங்கள்;வினை தேவரும் அயிர்த்தார். 24 24. மீதிட்டு - மேலே நோக்கி. எரிந்த - தீப்போல் எரிந்த. எயிறின் புறம் - பற்களின் பக்கத்திலே. நெடு நெற்றியினை - நீண்ட நெற்றியை. வினை தேவரும் - ஏவல் வினை செய்கின்ற தேவர்களும். மடித்தபில வாய்கள்தொறும் வந்துபுகை முந்தத் துடித்ததொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக், கடித்தகதிர் வாள்எயிறு மின்கஞல, மேகத்து இடித்தஉரும் ஒத்துஉரறி, ‘யாவர்செயல்? என்றான். 25 25. சுறுக்கொள - கூர்மையாகும்படி. மின்கஞல - மின்னல் புறப்பட. உரறி - ஓசையிட்டு. சூர்ப்பணகையின் சொற்கள் `கானிடை அடைந்துபுவி காவல்புரி கின்றார்; மீனுடை நெடுங்கொடியி னோன்அனையர்; மேல்கீழ் ஊன்உடை உடம்புடைமை யோர்,உவமை இல்லா மானிடர்; தடிந்தனர்கள் வாள்உருவி; என்றாள். 26 26. மேல் கீழ் - மேலுலகிலும் கீழுலகிலும் வாழும். ஊன் உடை உடம்பு உடைமையோர் - மாமிசம் பொருந்திய உடம்பைப் பெற்றவர்களிலே. உவமை இல்லா - தமக்கு யாரும் உவமையற்ற; `மானிடர். தடிந்தனர் - அறுத்தனர். `செய்தனர்கள் மானிடர் எனத்திசை அனைத்தும் எய்தநகை வந்தது;எரி சிந்தினகண் எல்லாம்; நொய்தவர் வரித்தொழில் நுவன்றமொழி ஒன்றோ! `பொய்தவிர்! பயத்தைஒழி! ò¡fòfš! என்றான். 27 27. நொய்தவர் - அற்பமானவர்களின். வலித்தொழில் - வீரச்செயலைப் பற்றி. நுவன்ற மொழி ஒன்றோ - கூறிய மொழி ஒன்றுதானோ? (இன்னும் பலவற்றைக் கூறினை) பொய்தவிர் - பொய் சொல்லுவதை விடு. `மன்மதனை ஒப்பர்மணி மேனி;வட மேருத் தன்எழிலை ஒப்பர்திரள் தோளின்வலி தன்னால்; என்அதனை இப்பொழுது இசைப்பது? உலகேழின் நல்மதம் அழிப்பர்ஓர் இமைப்பின்நனி வில்லால். 28 28. மணிமேனி - அழகிய உடம்பால். உலகு ஏழின் - உலகங்கள் ஏழின். நல்மதம் - சிறந்த வலிமையையும். நனி வில்லால் - பெரிய வில்லினால் ஓர் இமைப்பின் அழிப்பர் - ஒரு இமைநேரத்தில் அழித்து விடுவர். ‘வந்தனை முனித்தலைவர் பால்உடையர்; வானத்து இந்துவின் முகத்தர்;எறி நீரில்எழும் நாளக் கந்தமலரைப் பொருவு கண்ணர்,கழல், கையர்; அந்தம்இல் தவத்தொழிலர்; ஆர்அவரை ஒப்பார்? 29 29. எறிநீரில் - அலை வீசுகின்ற நீரிலே. எழும் நாளம் - வளர்ந்தெழும் கொடியையுடைய. கந்தமலர் - மணம் பொருந்திய தாமரைமலர். வற்கலையர்; வார்கழலர்; மார்பின் அணி நூலர்; விற்கலையர்; வேதம்உறை நாவர்;நனி மெய்யர்; உற்குஅலையர்; உன்னைஓர் துகள்துணையும் உன்னார்; சொல்கலை எனத்தொலைவில் தூணிகள் சுமந்தார். 30 30. நனிமெய்யர் - மிகவும் உண்மையுள்ளவர்கள். உற்கு அலையர் - உன்னால் வருந்த மாட்டார்கள். துகள் தனையும் - அணு அளவாகக்கூட. `மாரர்உளரே இருவர் ஓர்உலகின் வாழ்வார்; வீரர்உளரே அவரின் வில்லதனின் வல்லார்; ஆர்ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள்? ஐயா ஓர்ஒருவரே முதல்வர் மூவரையும் வெல்வார். 31 31. `ஓர்உலகின் வாழ்வார் இருவர் மாரர் - உளரே மாரர் - மன்மதர்கள். அவரின் - அவரைவிட. வில்அதனின் வல்லார் - வில்வித்தையிலே சிறந்தவர்களாகிய. வீரர் உளரே - வீரர்களும் உண்டோ? `ஆறுமனம் அஞ்சினம் அரக்கரை. எனச்சென்று ஏறுநெறி அந்தணர் இயம்ப; உலகெல்லாம் வேறும்எனும் நுங்கள்குலம் வேரொடும் அடங்கக் `கோறும்என முந்தைஒரு சூள்உறவு கொண்டார். 32 32. அரக்கரை ஆறு மனம் அஞ்சினம் - அரக்கரைக் கண்டு அமைதியான உள்ளம் அஞ்சினோம். ஏறு நெறி - உயர்ந்த ஒழுக்கத்தையுடைய. வேறும் - வெல்வோம். ஆறு அறிவு; ஐமபுல அறிவுடன் பகுத்தறிவும் சேர்ந்த ஆறு அறிவு. `தராவலய நேமிஉழ வன்தய ரதப்பேர்ப் பராவரு நலத்தொருவன் மைந்தர்;பழி யில்லார்; விராவரு வனத்துஅவன் விளம்பஉறை கின்றார்; இராமனும் இலக்குவனும் என்பர்பெயர் என்றாள். 33 33. தராவலயம் - பூமண்டலத்தை. நேமி உழவன் - ஆட்சி புரிகின்றவனாகிய. பராவுஅரு நலத்து - புகழ்வதற்கரிய சிறப்புள்ள. விராவரு - தாவரசங்கமங்கள் கலந்த. இராவணன் நாணம் `மருந்தனைய தங்கைமணி நாசி வடிவாளால் அரிந்தவரும் மானிடர்; அரிந்தும் உயிர்வாழ்வார்; விருந்துஅனைய வாள்ஓடும் விழித்து,இறையும் வெள்காது, இருந்தனன் இராவணனும், இன்உயிர்கொடு இன்னும். 34 34. விருந்து அனைய - புதிதாக இருப்பதை ஒத்த. இறையும் வெள்காது - சிறிதும் நாணாமல். மூளும்உள தாயபழி என்வயின் முடித்தோர் ஆளும்உள தாம்;அவரது ஆர்உயிரும் உண்டாம்; வாளும்உளது; ஓதவிடம் உண்டவன் வழங்கும் நாளும்உள; தோளும்உள; நானும்உளென்; அன்றோ. 35 35. மூளும் உளது ஆயபழி - வளர்கின்றதாகிய இழி செயலை. முடித்தோர் ஆளும் - முடித்தவர்கள் ஆளும் இயல்பும். ஓதவிடம் - கடலில் தோன்றிய விஷத்தை. நாளும் - ஆயுளும். ‘அவர்களைக் கரன் முதலோர் கொன்றிலரோ? என்றான் இராவணன். வேறு சொல்என்றன் வாயில் கேட்டார்; தொடர்ந்தெழு சேனை யோடும் கல்என்ற ஒலியில் சென்றார் கரன்முதல் காளை வீரர்; எல்ஒன்று கமலச் செங்கண், இராமன்என்று இசைத்த ஏந்தல், வில்ஒன்றில், கடிகை மூன்றில், ஏறினர் விண்ணில் என்றாள். 36 36. எல்ஒன்று - ஒளி பொருந்திய. ஒன்றில் - ஒன்றினால். கடிகை மூன்றில் - மூன்று நாழிகையில். `நீ செய்த குற்றம் என்ன? c‹ m§f§fis mt®fŸ mW¡f nt©oa fhuz« v‹d? என்றான் இராவணன். என்வயின் உற்ற குற்றம், யாவர்க்கும் எழுதொ ணாத தன்மையன் இராம னோடும், தாமரை தவிரப் போந்தாள், மின்வயின் மருங்குல் கொண்டாள்; வேய்வயின் மென்தோள் கொண்டாள்; பொன்வயின் மேனி கொண்டாள்; பொருட்டினால் புகுந்தது என்றாள். 37 37. மின்வயின் - மின்னலிடமுள்ள தன்மையைப் போன்ற. மருங்குல் - இடை. வேய்வயின் - மூங்கிலிடமுள்ள தன்மையைப் போன்ற. பொன்வயின் - பொன்னிட முள்ள தன்மையைப் போன்ற. மேனி - நிறம். சீதையின் அழகைக் கூறி இராவணனைக் காமத்தில் வீழ்த்தல் ‘காமரம் முரலும் பாடல் கள்எனக் கனிந்த இன்சொல். தேமலர் நிறைந்த கூந்தல், தேவர்க்கும் அணங்காம் என்னத் தாமரை இருந்த தையல், சேடியாம் தரமும் அல்லள்; யாம்உரை வழங்கும் என்பது ஏழைமைப் பாலது அன்றோ? 38 38. காமரம் - வண்டுகள். கள்எனக் கனிந்த - கள்ளைப்போல உள்ளத்தை இழுக்கும் தன்மை நிறைந்த. தேமலர் - தேன் பொருந்திய மலர்கள். ஏழைமைப்பாலது - அறியாமையின் பாற்பட்டது. `மஞ்சொக்கும் அளக ஓதி; மழைஒக்கும் வடிந்த கூந்தல்; பஞ்சொக்கும் அடிகள்; செய்ய பவளத்தின் விரல்கள் ஐய! அஞ்சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள்; வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற் றேனும் கடலினும் பெரிய கண்கள். 39 39. மஞ்சு - மேகம். அளக ஓதி - அடர்ந்த கூந்தல். வடித்த - தொங்குகின்ற. அளவிற்றேனும் - அளவாயினும். `ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும்இது இழுதைச் சொல்,இவ் வாசம்நாறு ஓதி யாளைக் கண்டனன், வவ்வல் ஆற்றான் பேசலாம் தகைமைத்து அல்லாப் பெரும்பிணி பிணிப்ப, நீண்ட ஆசையால் அழிந்து தேய்ந்தான், அநங்கன் அவ்வுருவம்; அம்மா. 40 40. இழுதைச்சொல் - பொய் மொழியாகும். வவ்வல் ஆற்றாள் - கவரமுடியாதவனாய். பெரும் பிணி - பெரிய காதல் நோய். அம்மா; அசை. ‘தோளையே சொல்லு கேனோ! சுடர்முகத்து உலவு கின்ற வாளையே சொல்லு கேனோ! அல்லவை வழுத்துகேனோ! மீளவும் திகைப்பது அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்; நாளையே காண்டி அன்றே, நான்உனக்கு உரைப்பது என்னோ? 41 41. வாளையே - வாள்போன்ற கண்களை. வழுத்துகேனோ - சொல்லுவேனோ. ‘வில்ஒக்கும் நுதல்என் றாலும், வேல்ஒக்கும் விழிஎன் றாலும், பல்ஒக்கும் முத்தென் றாலும், பவளத்தை இதழ்என் றாலும், சொல்ஒக்கும்; பொருள்ஒவ் வாதால்; சொல்லல்ஆம் உவமை உண்டோ நெல்ஒக்கும் புல்என் றாலும் நேர்உரைத் தாக வற்றோ? 42 42. நேர் உரைத்தது ஆக - ஓரளவு ஒப்பென்று கூறியதாக. வற்று - வலிமை பெறுமோ. ‘இந்திரன் சசியைப் பெற்றான்; இருமூன்று வதனத் தோன்தன் தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்க ணானும் செந்திரு மகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும், அந்தரம் பார்க்கின், நன்மை அவர்க்கில்லை உனக்கே ஐயா! 43 43. இருமூன்று வதனத்தோன் - ஆறுமுகங்களையுடைய முருகன். அந்தரம் பார்க்கின் - முடிவாகப் பார்க்கும்போது. `நன்மை அவர்க்கு இல்லை உனக்கேஎன்றும். `நன்மை அவர்க்கே உனக்கில்லை என்றும் பொருள் காண்க. ‘பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்; மேகத்தில் மின்னை முன்னே வென்றநுண் ணிடையி, னாளை மாகத்தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி? 44 44. ஆகத்தில் - மார்பில். மாகம்தோள் - வானளாவிய தோள்களையுடைய. எங்ஙனம் வைத்து வாழ்தி - எப்படிவைத்து வாழப்போகின்றாய்? `பிள்ளைபோல் பேச்சி னாளைப் பெற்றபின் பிழைக்கல் ஆற்றாய்! கொள்ளைமா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய! வள்ளலே உனக்கு நல்லேன்; மற்றுநின் மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க் கெல்லாம் கேடுசூழ் கின்றேன் அன்றே. 45 45. பிள்ளைபோல் - குழந்தை போன்ற. பிழைக்கல் ஆற்றாய் - நீங்கியிருக்கப் பொறுக்க மாட்டாய்; பிழைக்க மாட்டாய். மீன்கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்தத், தேன்கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடைச் சீதை என்னும் மான்கொண்டு ஊடாடு நீ;உன் வாள்வலி உலகம் காண! யான்கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால். 46 46. ஊடாடும் - நடமாடும். வேலை மேகலை - கடலை ஆடையாகக் கொண்ட. ஊடாடுநீ - நீவிளையாடுக. ஊடாடு வண்ணம் - விளையாடும்படி. `தருவது விதியே என்றால், தவம்பெரிது உடைய ரேனும் வருவது வருநாள் அன்றி, வந்துகை கூட வற்றோ! ஒருபது முகமும், கண்ணும், உருவமும், மார்பும் தோள்கள் இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனிநீ எந்தாய்! 47 47. வந்து கைகூடவற்றோ - வந்து சேரும் வல்லமை யுடையதோ? `அன்னவள் தன்னை நின்பால் உய்ப்பல்,என்று அணுகல் உற்ற என்னை,அவ் விராமன் தம்பி இடைப்புகுந்து, இலங்கு வாளான் முன்னைமூக் கரிந்து விட்டான்; முடிந்ததுஎன் வாழ்வும்; உன்னின் சொன்னபின் உயிரை நீப்பான் துணிந்தனென்; என்னச் சொன்னாள் 48 48. -. இராவணன் உள்ளத்திலே காமத் தீ கோபமும், மறனும், மானக் கொதிப்பும்,என்று இனைய எல்லாம் பாபம்நின் றிடத்து நில்லாத் தன்மம்போல், பற்று விட்ட; தீபம்ஒன்று ஒன்றை யுற்றால் என்னலாம் செயலில்,புக்க தாபமும் காம நோயும் ஆர்உயிர் கலந்த அன்றே. 49 49. மறனும் - வீரமும். மானக்கொதிப்பும் - மானத்தின் மிகுதியும். தன்மம் - கர்மம். தாபமும் காமநோயும் - துன்பமும் காமநோயும். பற்று விட்ட - ஒன்றின் தொடர்பை விட்ட. தீபம் தீபத்தோடு கலந்தாற்போல துன்பமும் காமமும் உயிரோடு கலந்தன. கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான், உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான், வெற்றி அரன்நையும் கொண்ட காமன் அம்பினான் முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்தி லாதான். 50 50. வெற்றி அரன் - வெற்றியையுடைய சிவபெருமானால். நையும் கொண்ட – அழியுந் தன்மையைக் கொண்ட. கேட்ட - சூப்பணகை சொல்ல கேட்ட. சிற்றிடைச் சீதை என்னும் நாமமும், சிந்தை தானும் உற்றிரண்டு ஒன்றாய் நின்றால், ஒன்றொழித்து ஒன்றை உன்ன மற்றொரு மனமும் உண்டோ? மறக்கலாம் வழிமற்று யாதோ? கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்க லாமோ? 51 51. -. மயில்உடைச் சாய லாளை வஞ்சியா முன்னம், நீண்ட எயில்உடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான்; அயில்உடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல வெயில்உடை நாளில் உற்ற வெண்ணெய்போல் உருகிற்று அன்றே.52 52. -. விதியது வலியி னாலும், மேல்உள விளைவி னாலும். பதிஉறு கேடு வந்து குறுகிய பயத்தி னாலும், கதிஉறு பொறியின் வெய்ய காமநோய், கல்வி நோக்கா மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்த தன்றே. 53 53. பதிஉறு - இலங்கை நகர்க்கு வருகின்ற. கேடு வந்து குறுகிய பயத்தினாலும் - தீமை வந்து நெருங்கிய பயனாலும். கதி உறு பொறியின் - விரைகின்ற அறிவைப்போல. கல்விநோக்கா - கல்வியை அறியாத. மதியிலி - அறிவற்றவனை. `வெய்ய காமநோய் வளர்ந்தது அன்று; எ; அசைகள். பொன்மய மான நங்கை மனம்புகப், புன்மை பூண்ட தன்மையோ, அரக்கன் தன்னை அயர்த்ததோர் தன்மை யாலோ! மன்மதன் வாளி தூவி நலிவதோர் வலத்தன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்த தன்றே. 54 54. தன்னை அயர்த்ததுஓர் - தன்னை மறந்ததாகிய ஒரு. வலத்தன் ஆனான் - வன்மையை உடையவன் ஆனான். வதிந்தது - தங்கிற்று. அன்று; ஏ; அசைகள். இராவணன் காமநோயால் வருந்துதல் உடனே இராவணன் தன் இருக்கையை விட்டு எழுந்தான். தன் மாளிகையை அடைந்தான்; காம நோயின் கொடுமையைப் பொறுக்க முடியாமல், ஒரு சோலையை அடைந்தான். ஒரு அமளியில் வீழ்ந்தான்; அப்பொழுது வசந்த காலம் வந்தது. வன்பணை மரமும் தீயும், மலைகளும் குளிர, வாழும்! மென்பனி எரிந்த தென்றால், வேனிலை விளம்ப லாமோ! அன்பெனும் விடம்உண் டாரை ஆற்றலாம் மருந்தும் உண்டோ! இன்பமும் துன்பந் தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே. 55 55. வன்பணை மரமும் - வலிய கிளைகளையுடைய மரமும். குளிர - குளிர்ச்சியடையும்படி. அன்பு - காதல். இயைந்தது - இணைந்தது. அன்று; ஏ; அசைகள். இராவணன் கார்காலத்தை விரும்பினான்; அதுவும் வந்தது; அதனாலும் வெம்மை தணிந்திலன், கூதிர்ப் பருவத்தைக் கொணர்க வென்றான்; வந்தது; அதனாலும் பயனில்லை. பருவ காலமே வேண்டாம் என்று வெறுத்தான். கூலத்தார் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு, வெதுப்பு நீங்க. நீலத்தார் அரக்கன் மேனி நெய்இன்றி எரிந்தது அன்றே; காலத்தால் வருவது ஒன்றோ! காமத்தால் கனலும் வெந்தீச் சீலத்தால் அவிவது அன்றிச் செய்யத்தான் ஆவது உண்டோ! 56 56. கூலத்துஆர் உலகம் - கடற்கரையைப் பொருந்திய உலகம். நீலத்துஆர் - நீல நிறத்தையுடைய. கனலும் - சுடுகின்ற. வெண்மதி கண்டு வேதனை வேறு ‘தேயா நின்றாய், மெய்வெளுத்தாய், உள்ளம் கறுத்தாய், நிலைதிரிந்து காயா நின்றாய் ஒருநீயும்; கண்டார் சொல்லக் கேட்டாயோ! பாயா நின்ற மலர்வாளி பறியா நின்றார் இன்மை யால் ஓயா நின்றேன்! உயிர்காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே! 57 57. உள்ளம் கறுத்தாய் - நடுவிலே கறுப்பு நிறம் உடையாய்; சந்திரனிடமுள்ள களங்கத்தைக் குறித்தது. பறியா நின்றார் - பறிக்கின்றவர். உடுபதி - சந்திரன். (உடு - நட்சத்திரங்கள்) பின்னர்ச் சூரியனையும் பகலையும் தருகவென்றான்; அவைகள் வந்தன; துன்பம் தணியவில்லை. இளம்பிறை யைக் கொணர்க வென்றான். அதனாலும் ஆறுதல் பெற்றிலன். அதன்பின் அந்த காரம் வந்தது. அவ்விருளிலே சீதையின் உருவெளித் தோற்றத்தைக் கண்டான். வேறு `பண்டே உலகேழிலும் உள்ள படைக்க ணாரைக் கண்டேன்! இவர்போல்வதொர் பெண்உருக் கண்டி லேனால்; உண்டே எனின்வேறினி, எங்கை உணர்த்தி நின்ற வண்டேறு கோதை மடவாள்இவள் ஆகும் அன்றே. 58 58. படைக்கணாரை - வேற்படைபோன்ற கண்களை உடையவர்களை. வண்டு ஏறுகோதை - வண்டுகள் ஏறியிருக் கின்ற மாலையை யணிந்த. இராவணன் சூர்ப்பணகையை அழைத்துக் கேட்டல் ஒருபது முகமும், கண்ணும், உருவமும், மார்பும் தோள்கள் இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனிநீ எந்தாய்! 47 59. கொடியாள் - சூர்ப்பணகை. வாள்கண் - வாள்போன்ற கண்களுடன். `செந்தாமரைக் கண்ணொடும், செங்கனி வாயி னோடும், சந்தார்தடந் தோளொடும், தாழ்தடக் கைக ளோடும், அம்தார்அக லத்தோடும், அஞ்சனக் குன்றம் என்ன, வந்தான்இவன் ஆகம் அவ்வல்வில் இராமன்; என்றாள். 60 60. சந்து ஆர்தடம் தோளொடும் - அழகு பொருந்திய பெரிய புயங்களோடும். தாழ் - முழங்கால் அளவும் தாழ்ந்த. அம்தார் அகலத்தொடும் - அழகிய மாலையை அணிந்த மார்பொடும். அஞ்சனம் - மை. ‘பெண்பால்உரு, நான்இது கண்டது, பேதை நீ!ஈண்டு எண்பாலும் இலாததொர்ஆண்உரு என்றி, என்னே! கண்பால்உறு மாயை கவற்றுதல் கற்ற நம்மை, மண்பாலவ ரேகொல் விளைப்பவர் மாயை? என்றான். 61 61. எண்பாலும் இலாததுஓர் - எட்டுத்திசைகளிலும் இல்லாததாகிய ஒரு. கண்பால் உறு - கண்ணுக்குத் தெரியும். மாயை - மாயையால். கவற்றுதல் - துன்பம் செய்வதை. `நீ கண்டது உருவெளித் தோற்றம்; சீதைஅல்லள் என்றாள் சூர்ப்பணகை. அன்னாள்அது கூற அரக்கனும் `அன்ன தாக நின்னால்அவ் விராமனைக் காண்குறும் நீர்என் என்றான்; `எந்நாள் அவன் என்னைஇத் தீர்வரும் இன்னல் செய்தான் அந்நாள்முதல் யானும் அயர்த்திலன் ஆகும்; என்றாள். 62 62. காண்குறும் நீர் - காணுந்தன்மை. அயர்த்திலென் ஆகும் - மறந்திலென் ஆவேன். ‘ஆம்ஆம்!அது அடுக்கும்;என் ஆக்கையொடு ஆவி நைய வேம்ஆல!வினை யேற்குஇனி என்விடி வாகும்?’ என்னக்’ ‘கோமான்உல குக்குஒரு நீ!குறை கின்றது என்னே! பூமாண்குழ லாள்தனை வவ்வுதி போதி! என்றாள். 63 63. -. இராவணனும் மாரீசனும் அதன்பின் இராவணன் தெய்வத் தச்சனால் அமைக்கப் பட்ட சந்திரகாந்த மண்டபத்தை அடைந்தான்; தென்றல் வீசிற்று. அவனுடைய காமத்தீ தணியவில்லை. பின்பு அமைச்சர்களை அழைத்தான்; அவர்களும் வந்தனர். வேறு வந்தமந் திரிய ரோடு, மாசற மரபின் எண்ணிச், சிந்தையின் நினைந்த செய்யும் செய்கையன், தெளிவில், நெஞ்சன்; அந்தரம் செல்வது ஆண்டோர் விமானத்தில், ஆரும் இன்றி, இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான். 64 64. `வந்த.... செய்கையன் இது இராவணன் இயல்பு. இந்தியம் அடக்கி நின்ற - இந்திரியங்களை அடக்கித் தவத்திலே நின்ற. 11. மாரீசன் வதைப் படலம் இராவணனைக் கண்ட மாரீசன் எதிர்கொண்டழைத் தான்; உபசரித்தான்; ‘நீ தனித்து என்னிடம் வந்த நோக்கம் யாது? என்றான். `வன்மை தரித்தோர், மானிடர்; மற்றங்கு அவர்வாளால் நின்மரு கிக்கும் நாசியி ழக்கும் நிலைநேர்ந்தார்; என்மர புக்கும், நின்மர புக்கும், இதன்மேல்ஓர் புன்மை, தெரிப்பின் வேறினி எற்றே, புகல்வேலோய். 1 மாரீசன் வதைப்படலம்: மாரீசன் கொல்லப்பட்டதைக் கூறும் பகுதி. 1. தெரிப்பின் இதன்மேல் ஓர் புன்மை - சொல்லப்போனால் இதைவிட பெரிய ஓர் இழிவு. `என் மரபுக்கும், உன் மரபுக்கும் வேறு இனி எற்றே - வேறு இனி என்ன உண்டு? `திருகு சினத்தார், முதிர மலைந்தார்; சிறியோர்நாள் பருகினர் என்றால், வென்ற நலத்தின் பழி அன்றோ? இருகை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்! இகல்வேல்உன் மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான் வரிவில்லால். 2 2. திருகு சினத்தார் - மிகுந்த கோபம் உள்ளவர்களாய். முதிர மலைந்தார் - பெரிய போர் செய்தவர்களாகிய. சிறியோர் - அரக்கர்களின். நாள் பருகினர் - ஆயுளை உண்டனர். வென்ற நலத்தின் - அவர்கள் இதுவரையிலும் வெற்றி பெற்றதனால் கிடைத்த நன்மையைவிட. பழிஅன்றோ - இழிவு அன்றோ இப்பொழுது மிகுந்தது? `வெப்பழி யாதுஎன் நெஞ்சும் உலந்தேன்; விளிகின்றேன்; ஒப்பிலர் என்றே போர்செயல் ஒல்லேன்; உடன்வாழும் துப்பழி செவ்வாய் வஞ்சியை வௌவத் துணைகொண்டிட்டு, இப்பழி நின்னால் தீரிய வந்தேன் இவண்; என்றான். 3 3. வெப்பு அழியாது - ஆசையழியாமல். விளிகின்றேன் - சாகின்றேன். ஒப்பு இலர் என்றே - அவர்கள் எனக்கு ஒப்பில்லா தவர் என்று எண்ணியே. துப்புஅழி - பவளத்தின் நிறத்தையும் அழிக்கின்ற. வஞ்சியை - வஞ்சிக்கொடி போன்ற சீதையை. தீரிய- தீரும் பொருட்டு. `மன்னா! நீநின் வாழ்வை முடித்தாய்! மதிஅற்றாய்! உன்னால் அன்றுஈது; ஊழ்வினை என்றே உணர்கின்றேன்; இன்னா வேனும் யான்இது உரைப்பென் இதம்;என்னாச் சொன்னான் அன்றே, அன்னவ னுக்குத் துணிவெல்லாம். 4 4. உன்னால் அன்று - உன்னால் தேடிக்கொண்டது அன்று. இன்னாவேனும் - துன்பத்தை அடைவனாயினும். இது உரைப்பென் - இந்த நன்மையைச் சொல்லுகின்றேன். துணிவு எல்லாம் - தான் எண்ணியதை எல்லாம். திறத்திற னாலோ செய்தவம் முற்றித் திருஉற்றாய்! மறத்திற னாலோ சொல்லுதி! சொல்ஆய் மறைவல்லோய்! அறத்திற னாலே எய்தினை அன்றோ அதுநீயும், புறத்தி னாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? 5 5. திறம் திறனாலோ - உயர்ந்த தன்மையாலோ. திருஉற்றாய் - செல்வம் பெற்றாய். மறம் திறனாலோ - பாவத்தின் தன்மை யாலோ. அறம் திறனாலே - அறத்தின் தன்மையாலே. புறம் திறனாலே - அறத்தின் புறமான பாவத்தால். ‘நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடையல்லா வாரங் கொண்டார், மற்றொரு வன்தன் மனைவாழும் தாரங் கொண்டார், என்றிவர் தம்மைத் தருமந்தான் ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்ஐயா? 6 6. நாரம் கொண்டர் நாடு - அன்பு கொண்டவர்களின் நாட்டை. நடை அல்லா - ஒழுக்கமற்ற செயல்களை. வாரம் கொண்டார் - உரிமையாகக் கொண்டவர்கள். ஈரும் - பிளக்கும்; அழிக்கும். காண்டர் - கெட்டவர்களில். அந்த இராமன் உன்னினும் படைப் பெருக்குடைய கரனைக் கொன்றான்; மிகவும் ஆற்றல் பொருந்திய விராதனை வதைத்தான். ‘மாண்டார் மாண்டார்; நீஇனி மாள்வார் தொழில்செய்ய வேண்டா; வேண்டா செய்திடின் உய்வான் விதிஉண்டோ? ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன்! அறம்நோனார் ஈண்டார்; ஈண்டார் நின்றவர்? எல்லாம் இலர்அன்றோ? 7 7. மாண்டார் - சிறந்தவர்களும். மாண்டார் - தீவினை செய்ததனால் இறந்தார். வேண்டா செய்கு எனின் - விரும்பாத செயல்களையே செய்வேன் என்றால். அறம் நோனார் - அறம் செய்யாதவர். ஈண்டார் - நற்கதியை அடையமாட்டார். ஈண்டார் நின்றவர் எல்லாம் - அறநெறியை அணுகாமல் நின்றவர்கள் எல்லாம். இலர் அன்றோ - இவ்வுலகில் புகழ் இலர் ஆயினர் அன்றோ? எம்பியையும், என் அன்னையையும் அம்பால் அழித்தான்; அவனையும் அவன் தம்பியையும் எண்ணும் போதே என் உள்ளம் நடுங்குகின்றது. `நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால், பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாம்; புலையாடற்கு ஒன்றும் உன்னாய்; என்னுரை கொள்ளாய்; உயர்செல்வத்து என்றும் என்றும் வைகுதி ஐயா! இனி;என்றான். 8 8. நின்றும் சென்றும் வாழ்வன - தாவர சங்கமங்கள். பொன்றும் என்னும் - அழியும் என்று சொல்லப்படும். புலை ஆடற்கு - தீமை செய்வதற்கு. கொள்ளாய் - கொள்வாய். இராவணன் சினம் வேறு நிகழ்ந்ததை நினைத்திலை;என் நெஞ்சின்நிலை, அஞ்சாது இகழ்ந்தனை; எனக்குஇளைய நங்கைமுகம் எங்கும் அகழ்ந்தவரை ஒப்புற அமைத்தவரை, ஐயா! புகழ்ந்தனை; தனிப்பிழை, பொறுத்தெனென் இதுஎன்றான். 9 9. அகழ்ந்தவரை - தோண்டியவரை; ஒப்புற அமைத்தவரை - மூக்கை அறுத்துவிட்டு மேடு பள்ளம் இல்லாமல் அமைத்த வரை. மாரீசன் அறிவுரை தன்னைமுனி வுற்றதறு கண்தகவு இலோனைப் பின்னைமுனி வுற்றிடும் எனத்தவிர்தல் பேணான்; `உன்னைமுனி வுற்றுஉன் குலத்தைமுனி வுற்றாய்! v‹idKŠɉ¿iy Æbj‹?என இசைத்தான். 10 10. தறுகண் தகவு இலோனை - அஞ்சாமையால் ஒப்பில்லா தவனை. பின்னை முனிவு உற்றிடும் - பின்னும் கோபத்தை அடைவான். என தவிர்தல் பேணான் - என்று விட்டுவிட மாட்டான். ‘யாதும்அறி யாய்!உரை கொளாய்!இகல் இராமன் கோதைபுனை யாமுன்உயிர் கொள்ளைப்படும் அன்றே; பேதைமதி யால்‘இஃதொர் பெண்உருவம்’ என்றாய், சீதைஉரு வோ?நிருதர் தீவினையது அன்றோ? 11 11. கோதை புனையாமுன் - போருக்குப்புறப்பட மாலை அணிவதற்கு முன்பே. உயிர் கொள்ளைப்படும் - எதிரிகளின் உயிர் கொள்ளை கொள்ளப்படும். ஈசன்முதல், மற்றும்இமை யோர்உலகும், மற்றைத் தேசமுதல், முற்றும்ஓர் இமைப்பின்உயிர் தின்ப; கோசிகன் அமைத்தகட வுட்படை, கொதிப்பொடு ஆசில கணிப்பில இராமன்அருள் நிற்ப. 12 12. கோசிகன் அமைத்த - விசுவாமித்திரனால் அமையச் செய்த. கடவுள் படை - தெய்வத் தன்மையுள்ள ஆயுதங்கள். கொதிப்போடு - சினத்துடன். ஆசுஇல - குற்றமற்றனவாய். கணிப்புஇல - அளவற்றவை. இராமன் அருள் நிற்ப - இராமனு டைய அருளை எதிர்நோக்கி நிற்பன. அவை `ஈசன் முதல்.... உயிர்தின்ப. `வேதனைசெய் காமவிடம் மேலிட மெலிந்தாய்! ÔJiubrŒ jhŒ!இனைய செய்கைசிதை வன்றோ? மாதுலனும் ஆய்மரபின் முந்தையுறு வந்தேன் ஈதுரைசெய் தேன்அதனை எந்தைதவிர்; என்றான். 13 13. -. இராவணன் கடுங்கோபம் என்னஉரை அத்தனையும் எத்தனையும் எண்ணிச், சொன்னவனை யேசின அரக்கர்பதி சொன்னான்; ‘அன்னைஉயிர் செற்றவனை அஞ்சிஉறை கின்றாய்! உன்னைஒரு வற்குஒருவன் என்றுணர்கை நன்றோ? 14 14. -. `மறுத்தனை எனப்பெறினும் நின்னைவடி வாளால் ஒறுத்துமனம் உற்றது முடிப்பென்;ஒழி கில்லேன்; வெறுப்பன கிளத்தல்உறும் இத்தொழிலை விட்டென் குறிப்பின்வழி நிற்றி,உயிர் கொண்டுழலின்; என்றான். 15 15. -. மாரீசன் சினமின்றிக் கூறியது வேறு `உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின் உணர்த்தி னேன்;மற்று என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்; நன்மையும் தின்மை அன்றோ நாசம்வந்து உற்ற போது; புன்மையின் நின்ற நீராய் செய்வது புகறி; என்றான். 16 16. உன்வயின் - உன்பால். உறுதி நோக்கி - நன்மை வளர வேண்டும் என்று எண்ணி. என்வயின் - என்பால். புன்மையின் நின்ற நீராய் - இழிசெயலில் நின்ற குணத்தையுடையவனே. புகல்தி - சொல்வாய். இராவணன் `நீ சீதையைக் கொண்டுவரவேண்டும். என்றான். khßr‹, `mj‰fhf eh‹ v‹d brŒa nt©L«? என்றான். `சீதையை மாயையால் வஞ்சித்துக் கவர வேண்டும். என்றான் இராவணன். ‘புறத்தினி உரைப்ப தென்னே! புரவலன் தேவி தன்னைத் திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்; அறத்துளது ஒக்கும் அன்றே; அமர்த்தலை வென்று கொண்டுன் மறத்துறை வளர்த்தி மன்ன!என்ன மாரீசன் சொன்னான். 17] 17. புறத்து இனி - வேறு இன்னும். புரவலன் - இராமன். திறத்துழி அன்றி - வலிமையினால் அல்லாமல். அமர்த்தலை - போரிலே. மறத்துறை - வீரத்தின் பெருமையை. ஆனவன் உரைக்க,நக்க அரக்கர்கோன், `அவரை வெல்லத் தானையும் வேண்டு மோஎன் தடக்கைவாள் தக்கது அன்றோ! ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே! மானவள் ஆத லாலே மாயையின் வலித்தும்; என்றான். 18 18. மானவள் - மானத்தையுடையவள்; மானிடப் பெண்; மான் போன்றவள்; மநுகுலத்தவள். வலித்தும் - பிடிப்போம். ‘அதற்காக நான் செய்ய வேண்டுவது என்ன? என்றான் மாரீசன். ‘நீ பொன் மான் உருவத்துடன் போய்ச் சீதையின் சிந்தையைக் கவர்க. என்றான் இராவணன். வேறு மேனாள் அவன் வில்வலி கண்டமையால் தானாக நினைந்து சமைந்திலன் ஆல்; `மான் ஆகுதி என்றவன் வாள்வலியால் போனான்மன மும்செய லும்புகல்வாம்! 19 19. மேல் நாள் - விசுவாமித்திரன் வேள்விசெய்த முன்னாளில். தானாக நினைந்து சமைந்திலன் - தானாக நினைத்து மான் உருவெடுக்கவில்லை. கலைமான்முத லாயின கண்டவெலாம் அலைமானுறும் ஆசையின், வந்தனவால்; நிலையாமனம், வஞ்சனை, நேயம்இலரா விலைமாதர்கண் யாரும் விழுந்தெனவே. 20 20. அலைமான் உறும் ஆசையின் - அலைகின்ற மானை அடையும் ஆசையினால். நிலையாமனம் - நிலையற்ற மனமும். வஞ்சனை - வஞ்சகமும் உள்ளவர்களும். நேயம் இலா - அன்பில்லா தவர்களுமான. விலைமாதர் கண் - விலைமாதர்கள்பால். அந்த மானைக்கண்ட சீதை இராமனிடம் வந்து `பொன்மான்; மாணிக்கக் கால்களை உடையது; காணத் தக்கது. என்றாள். இராமன் அதைக் காண எழுந்தான். அப்பொழுது இலக்குவன் தடுத்தான். `காயம்கன கம்;மணி கால்,செவி,வால்; பாயும்உரு வோடுஇது பண்புஅலவால்; மாயம்,எனல் அன்றி, மனக்கொளவே ஏயும்,இறை மெய்அல என்றளவே. 21 21. காயம் - உடம்பு. கனகம் - பொன். கால், செவி, வால்மணி - கால், காது, வால் இவைகள் இரத்தினங்கள். இறை மனம் கொளவே - சிறிது மனத்தில் எண்ணினாலே. மெய்அல ஏயும் - உண்மை அன்று என்பது தோன்றும். என்ற அளவே - என்று சொல்லிய அளவில். இராமன் பதில் ‘நில்லாஉல கின்நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்;மண்உயிர்தாம் பல்ஆயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை; இளம்குமரா! 22 22. நிலை - உண்மை நிலைமையை. நேர்மையினால் வல்லாரும் - நீதியிலே சிறந்தவர்களும. ஆல்; அசை. `இதற்குள் அந்த மான் எங்கேயாவது மறைந்து விடுமே என்று பதை பதைத்தாள் சீதை. வேறு அனையவள் கருத்தை உன்னா, அஞ்சனக் குன்றம் அன்னான், `புனைஇழை காட்டுஅது என்று போயினான்; பொறாத சிந்தைக் கனைகழல் தம்பி, பின்பு சென்றனன்; கடக்க ஒண்ணா வினைஎன வந்து நின்ற மான், எதிர் விழித்தது; அன்றே. 23 23. உன்னா - உன்னி; நினைத்து, புனை இழை - சீதையே. பொறாத சிந்தை - இராமனைவிட்டுப் பிரிந்திருக்கப் பொறுக்காத உள்ளத்தையுடைய. `என்ஒக்கும் என்ன லாகும்? இளையவ, இதனை நோக்காய்! தன்ஒக்கும் உவமை அல்லால், தனைஒக்கும் உவமை உண்டோ! பல்நக்க தரளம் ஒக்கும்; பசும்புல்மேல் படரும் மெல்நா மின்ஒக்கும்; செம்பொன் மேனி; வெள்ளியின் விளங்கும் புள்ளி. 24 24. என்ஒக்கும் என்னல் ஆகும் - எதை ஒக்கும் என்று சொல்லலாம். தன்ஒக்கும் - தன்னைத்தானே ஒத்திருக்கும். நக்க - ஒளிபொருந்திய. தரளம் - முத்து. மேனி - உடம்பின்மேல். ‘வரிசிலை மறைவி லோனே! மான்இதன் வடிவை உற்ற அரிவையர், மைந்தர், யாரே ஆதரம் கூர்கி லாதார்? உருகிற மனத்த ஆகி, ஊர்வன, பறப்ப யாவும், விரிசுடர் விளக்கம் கண்ட விட்டில்போல் வீழ்வ காணாய்! 25 25. ஆதரம் கூர்இலாதார் - ஆசை மிகாதவர்கள். விரிசுடர் விளக்கம் - மிகுந்த ஒளியுள்ள விளக்கு. இலக்குவன் அது மாயமான் என்பதை அறிந்தான்; `இதை விட்டுப் பிரிவதே நலம் என்றான். சீதை அதைப் பிடித்துத் தரும்படி இராமனை வலியுறுத்தி வேண்டிக் கொண்டாள் ஐய,நுண் மருங்குல் நங்கை அஃதுரை செய்ய, ஐயன் ‘செய்வென்’என்று அமைய, நோக்கத் தெளிவுடைத் தம்பி செய்யும்; ‘வெய்யவல் அரக்கர், வஞ்சம் விரும்பினார், வினையின் செய்த கைதவ மான்என்று, அண்ணல் காணுதி கடையின்! என்றான். 26 26. அமைய - செய்யத் துணிந்து அந்த மானைப் பார்க்க. வஞ்சம்விரும்பினார் - ஏமாற்ற விரும்பி. வினையில் செய்த - மாய வினையால் செய்த. கைதவ மான் - பொய் மான்; வஞ்சக மான். ‘மாயமேல் மடியும் என்தன் வாளியின்; மடிந்தபோது காய்சினத் தவரைக் கொன்று கடன்கழித் தோமும் ஆதும்; தூயதேல் பற்றிக் கோடும்; சொல்லிய இரண்டில் ஒன்றும் தீயதே உரைத்தி! என்றான்; தேவரை இடுக்கண் தீர்ப்பான். 27 27. மாயமேல் என்தன் வாளியின் மடியும் - இந்த மான் மாயமான் ஆனால் என் அம்பினால் மாண்டுபோகும். காய் இனத்தவரை - அரக்கரை. ஆதும் - ஆவோம். இரண்டில் ஒன்றும் - இவ்விரண்டிலும் பொருந்திய. தீயது ஏ உரைத்தி - தீமையைக் கூறுக. ஏ - அசை. `பின்நின்றார் இனையர் என்றும் உணர்கிலம்; பிடித்த மாயம் என்என்றும் தெளிதல் தேற்றாம்; யாவதுஈது என்றும் ஓராம்; முன்னின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல், பொன்னின்ற வயிரத் தோளாய்! புகழ்உடைத் தாம்அன்று என்றான். 28 28. முறையின் நின்றார் முன்நின்றார் முனிந்துள - நதியிலே நின்ற முன்னோர்கள் வெறுத்த. வேட்டம் முற்றல் - வேட்டை யாடுதலைச் செய்வது. `பகைஉடை அரக்கர் என்றும், பலர்என்றும், பயிலும் மாயம் மிகையுடைத் தென்றும், பூண்ட விரதத்தை விடுதும் என்றல், நகையுடைத் தாகும் அன்றே, ஆதலின் நன்றுஇது என்னாத் தகைஉடைத் தம்பிக்கு அந்நாள் சதுமுகன் தாதை சொன்னான். 29 29. பயிலும் மாயம் - செய்யும் வஞ்சனை. மிகை உடைத்து என்றும் - மிகுதியாக உண்டு என்றும் எண்ணி. சதுமுகன் தாதை - இராமன். இதன் பின் இலக்குவன் `நானே அதைப் பற்றிக் கொணர்வேன் என்றான். `நீர் அதைப் பிடிக்கமாட்டீரோ என்று இராமனைக் கேட்டு வருந்தினாள் சீதை. `சீதையை நீ காத்திரு என்று இலக்குவனிடம் சொல்லிவிட்டு, இராமனே அந்தப் பொன்மானைப் பிடிக்கப் போனான். குன்றிடை இவரும், மேகக் குழுவிடைக் குதிக்கும், கூடச் சென்றிடின் அகலும்; தாழின் தீண்டலாம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கு; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல்அம் கோதை மாதர் மனம்எனப் போயிற்று; அம்மா! 30 30. கூடச் சென்றிடின் - அதன் அருகில் சென்றால். தாழின் - அதனுடன் செல்லாமல் நின்றால். நிதிவழி - பணம் பிடுங்கும் வழியிலேயே. நேயம் நீட்டும் - அன்பைச் செலுத்தும். மன்றல் - நறுமணம். `காயம்வே றாகிச், செய்யும் கருமம்வே றாயிற்று அன்றே; ஏயுமே, என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே; ஆயுமெய் உறுதல் செல்லாது; ஆதலால் அரக்கர் செய்த மாயமே ஆய தே;நான் வருந்தியது; என்றான் வள்ளல். 31 31. ஏயுமே எண்ணின் - இது பொருந்துமேயாயின். முன்னம் எண்ணமே - முன்பு இவ்வெண்ணமே. நாம் வருந்தியது - நாம் இதன்பின் வந்து வருந்தியது. `அரக்கர் ஆனவர்கள் செய்த. மாயமே ஆயதே - வஞ்சகமே ஆயிற்று. இராமன் உள்ளக் குறிப்பை உணர்ந்த மாரீசன் ஓட்டம் வேறு பற்று வான்இனி அல்லன்; பகழியால் செற்று வானில் செலுத்துவன் என்பதை மற்றுஅம் மாய அரக்கன் மனம்கொளா உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான். 32 32. பகழியால் செற்று - அம்பால் கொன்று. மனம் கொளா - மனத்தில் எண்ணிக்கொண்டு. உம்பரின் - வானத்தில். ஓங்கினான் - எழுந்தான். அக்க ணத்தினில் ஐயனும், வெய்யதன் சக்க ரத்தின், தகைவுஅரி தாயஓர் செக்கர் மேனிப் பகழி செலுத்தினான், `புக்க தேயம்புக்கு இன்உயிர் போக்குஎனா. 33 33. வெய்ய - கொடிய. சக்கரத்தின் - சக்கராயுதத்தைப் போல. தகைவு அரிது ஆய - யாராலும் தடுக்க முடியாத. செக்கர்மேனி பகழி - சிவந்த நிறமுள்ள கணையை. புக்கதேயம் புக்கு - புகுந்த இடமெல்லாம் புகுந்து. நெட்டி லைச்சரம், வஞ்சனை நெஞ்சுஉறப் பட்டது; அப்பொழு தேபகு வாயினால், அட்ட திக்கினும் அப்புற மும்புக. விட்ட ழைத்து,ஒரு குன்றென வீழ்ந்தனன். 34 34. வஞ்சனை நெஞ்சுஉற - வஞ்சகம் பொருந்திய மார்பிலே பொருந்த பகு வாயினால் - பிளந்த வாயினால். விட்டழைத்து - கூச்சலிட்டு அழைத்து. வெய்ய வன்,தன் உருவொடு வீழ்தலும், செய்யது அன்றெனச் செப்பிய தம்பியை, `ஐயன் வல்லன்;என் ஆருயிர் வல்லன்;நான் உய்ய வந்தவன் வல்லன்; என்று உன்னினான். 35 35. செய்யது - நல்லது அன்று. வல்லன் - சிறந்த வல்லமை யுள்ளவன். ஆசை நீளத்து அரற்றின வீழ்ந்த,அந் நீசன் மேனியை நின்றுற நோக்கினான்; `மாசில் மாதவன் வேள்வியின் வந்த,மா ரீச னேஇவன் என்பதும் தேறினான். 36 36. நீளத்து ஆசை அரற்றினன் - நீண்ட திசை முழுவதும் கேட்கும்படி அலறி. `புழைத்த வாளி உரம்புகப், புல்லியோன் இழைத்த மாயையின், என்குர லால்எடுத்து அழைத்தது உண்டு;அது கேட்டயர்வு எய்துமால் மழைக்கண் ஏழை;என்று உள்ளம் வருந்தினான். 37 37. புழைத்த வாளி - தொளைத்த அம்பு. உரம்புக - மார்பில்புக. என் குரலால் இசைத்து - என் குரலால் இலக்குவன் பெயரைச் சொல்லி. மழைக்கண் ஏழை - மழைபோல் கண்ணீர் சிந்தும் சீதை. `மாற்றம் என்இனி, மாயாமா ரீசன்என்று, ஏற்ற சாலையின் முன் உணர்ந் தான்எனது, ஆற்றல் தேரும் அறிவினன்; ஆதலால், தேற்று மால்இளை யோன்;எனத் தேறினான். 38 38. இனி மாற்றம் என் - இனி சொல்லவேண்டியது என்ன. மாய மாரீசன் என்று - மாயத்தையுடைய மாரீசன் மொழி யென்று. ஏற்ற சாலையின் முன் உணர்ந்தான் - தக்க காலத்தில் முன்பு அறிந்திருந்தான். `மாள்வ தேபொரு ளாகவந் தான்அலன் சூழ்வது ஓர்பொருள் உண்டுஇவன் சொல்லினால்; மூள்வது ஏதம்; அதுமுடி யாமுனம் மீள்வ தேநலன்; என்றுஅவன் மீண்டனன். 39 39. சூழ்வது ஓர் பொருள் உண்டு - தீமை செய்வதற்கு எண்ணிய ஒரு காரியம் உண்டு. ஏதம் மூள்வது - தீமை உண்டாகும். 12. சீதையை வஞ்சித்த படலம் மாயமான் குரல் கேட்டுச் சீதை வருந்துதல் எயிறு அலைத்து, முழைதிறந்து, ஏங்கிய செயிர்த லைக்கொண்ட சொல்,செவி சேர்தலும், குயில்த லத்திடை உற்றதொர் கொள்கையாள்; வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள். 1 சீதையை வஞ்சித்த படலம்: இராவணன் தவசி உருக்கொண்டு சென்று சீதையைக் கவர்ந்து சென்றதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. எயிறு அலைத்து - பற்களை நறநறவென்று அசைத்து. முழை திறந்து - குகை போன்ற வாயைத் திறந்து. ஓங்கிய செயிர்தலைக் கொண்ட - மிகுந்த துன்பத்தை இடமாகக் கொண்ட. கொள்கையாள் - தன்மையளாய். `பிடித்து நல்கு,இவ் உழைஎனப் பேதையேன் முடித்த னென்முதல் வாழ்வுஎன மொய்அழல் கொடிப்ப டிந்த தெனநெடும் கோள்அரா இடிக்கு இடைந்தது எனப்புரண்டு ஏங்கினாள். 2 2. உழை - மான். முதல் வாழ்வு முடித்தனன் - முதல்வனு டைய வாழ்க்கையை முடித்தேன். நெடும்கோள் அரா - பெரிய வலிமையுள்ள பாம்பு. இளையோனை ஏவுதல் `குற்றம் வீந்த குணத்தின்எம் கோமகன், மற்றுஅவ் வாள்அரக் கன்புரி மாயையால், இற்று வீழ்ந்தனன், என்னவும், என்அயல் நிற்றியோ இளையோய்! xUÚ! என்றாள். 3 3. குற்றம் வீந்த குணத்தின் - குற்றம் அழிந்த குணத்தினை யுடைய. இற்று - இறந்து. இலக்குவன், இராமன் பெருமை கூறல் `எண்மையார் உலகினில் இராமற்கு ஏற்றம்,ஓர் திண்மையார் உளர்எனச் செப்பற் பாலதோ! bg©ikahš ciubra¥ bgWâ uhš!என உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான். 4 4. எண்மைஆர் - எளிமை பொருந்திய. இராமற்கு ஏற்றம் - இராமனை விட உயர்ந்த. திண்மையார் உளர் - வலிமையுள்ளவர் உண்டு. உண்மையான் - உண்மை நெறியை உடையவன். `இடைந்துபோய் நிசிசரற்கு இராமன், எவ்வம்வந்து அடைந்தபோது அழைக்குமே! அழைக்கு மாம்எனின், மிடைந்தபே ரண்டங்கள் மேல, கீழன, உடைந்துபோம்; அயன்முதல் உயிரும் வீயும்ஆல். 5 5. இராமன் நிசிசரற்கு இடைந்துபோய் - இராமன் அரக்கனுக்குத் தோற்றுப்போய். எவ்வம் - துன்பம். மிடைந்த - நெருங்கிய. `மாற்றம்என் பகர்வது? k©Q«, thdK« ngh‰wt‹ âÇòu« vǤj ò§ft‹, V‰¿Ã‹W vŒjÉš ï‰wJ; v«ãuh‹ M‰wÈ‹ miktJX® M‰wš c©iknah! 6 6. வன்திரிபுர - வலிமையுள்ள திரிபுரத்தை ஆற்றலின் - ஆற்றலைப் போல. உண்மையோ - உண்டோ. `காவலன், ஈண்டுநீர் கருதிற்று எய்துமேல், மூவகை உலகமும் முடியும்; முந்துள தேவரும் முனிவரும் முதல் செவ்வியோர் ஏவரும் வீவர்;மற்று அறமும் எஞ்சுமால் 7 7. நீர் கருதிற்று எய்துமேல் - நீர் எண்ணியதை அடை வானாயின். முதல செவ்வியோர் - முதலிய சிறந்தவர்கள். ஏவரும் வீவர் - அனைவரும்இறந்து போவார்கள். எஞ்சும் - அழியும். ஆல்; அசை. `பரக்கஎன் பகர்வது? பகழி பண்ணவன் துரக்க,அங்கு அதுபடத், தொலைந்து சோர்கின்ற அரக்கன்அவ் வுரையெடுத்து அரற்றி னான்;அதற்கு இரக்கம்உற்று இரங்கலிர்! இருத்திர்! ஈண்டு! என்றான். 8 8. பரக்க பகர்வது என் - விரிவாகக் கூறுவதற்கு என்ன உண்டு? பண்ணவன் - இராமன். தொலைந்து சோர்கின்ற - தன் மாயம் அழிந்து தளர்கின்ற. சீதையின் சினமும் செயலும் என்றவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்; கொன்றன இன்னலள்; கொதிக்கும் உள்ளத்தள்; `நின்றநின் நிலையிது நெறியிற்று அன்று;எனா வன்தறு கண்ணினன் வலிந்து கூறுவாள். 9 9. நெறியிற்று அன்றுஎன - ஒழுங்குடையது அன்று என்று. வன்தறு கண்ணினள் - வலிய கொடுந்தன்மை யுள்ளவளாய். வயிர்த்து - பகை கொண்டு. `ஒருபகல் பழகினார் உயிரை யீவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும்,நீ வெருவலை நின்றனை; வேறுஎன்? யான்இனி எரியிடைக் கடிதுவீழ்ந்து இறப்பென் ஈண்டு;எனா. 10 10. -. தாமரை வனத்திடைத் தாவும் அன்னம்போல் தூமவெம் காட்டுஎரி தொடர்கின் றாள்தனைச், சேமவில் குமரனும் விலகிச், சீறடிப் பூமகம் நெடுநிலம் புல்லிச் சொல்லுவான். 11 11. தூமம்வெம் - புகையுள்ள கொடிய. காடு எரி - காட்டுத் தீயை நோக்கி. சீறடிபூ - சிறிய அடிகளாகிய மலர்களிலே வீழ்ந்து. இலங்குவன் இராமனைத் தேடிச் செல்லல் துஞ்சுவது என்னைநீர் சொற்ற சொல்லையான் அஞ்சுவென்; மறுக்கிலேன் அவலம் தீர்ந்தினி இஞ்சிரும்; அடியனேன் ஏகு கின்றனென்; வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ! 12 12. அவலம் தீர்ந்து - துன்பந்தீர்ந்து. இஞ்சிரும் - இங்கே யிருங்கள். `அறம்தனால் அழிவிலது ஆகல் ஆக்கலாம்; இறந்துபாடு இவர்க்குறும்; இருக்கின், இவ்வழி துறந்துபோம் இதனையே துணிவென், தொல்வினைப் பிறந்துபோந்து இதுபடும் பேதை யேன்;எனா. 13 13. இறந்துபாடு - இறந்துபடும் தன்மை. இருக்கின் - நாம் தாமதித்திருந்தால். `போவது புரிவல்யான், புகுந்தது உண்டுஎனின், காவல்செய் எருவையின் தலைவன் கண்உறும்; ஆவது காக்கும்;என்று அறிவுற்று, அவ்வழித் தேவர்செய் தவத்தினால், செம்மல் ஏகினான். 14 14. புகுந்தது உண்டு எனின் - வந்ததாகிய ஆபத்து ஒன்று உண்டென்றால். எருவையின் தலைவன் - கழுகு அரசன்; சடாயு. கண்உறும் - காண்பான். செம்மல் - இலக்குவன். இராவணன் வருகை இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற முளைஎயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான் முளைவரித் தண்டொரு மூன்றும், முப்பகைத் தளையரி தவத்தவர் வடிவும் தாங்கினான். 15 15. இரவு பார்க்கின்ற - சமயம் பார்க்கின்ற. முளைவரி தண்டு ஒரு மூன்றும் - ஆப்புள்ள கட்டமைந்த ஒரு திரிதண்டமும். முப்பகைத்தளை - மூன்று பகையாகிய பந்தம். அரசு, புரசு, மூங்கில் மூன்றையும் கொண்டு முறுக்கிச் செய்தது திரிதண்டம். முப்பகை, காமம், வெகுளி, மயக்கம் என்பன. ஊண்இலன் ஆம்,என உலர்ந்த மேனியன்; சேண்நெறி வந்ததோர் வருத்தச் செய்கையன்; பாணியின் உழந்திடைப் படிக்கின் றான்என வீணையின் இசைபட வேதம் பாடுவான். 16 16. பாணியின் உழந்து இடை - தாளத்தோடு வருந்தி நடனத்தின்கண். படிக்கின்றான் என - பாடுகின்றவனைப் போல. வீணையின் இசைபட - வீணையின் இசையோடு பொருந்த. பூப்பொதி அவிழ்ந்தன நடையன்; பூதலம் தீப்பொதிந் தாம்என மிதிக்கும் செய்கையன்; காப்பரு நடுக்குறும் காலன், கையினன்; மூப்பெனும் பருவமும் முனிய முற்றினான். 17 17. பூபொதி அவிழ்ந்தன - பூமுடிப்பு அவிழ்ந்து வீழ்ந்தது போன்ற. நடையன் - சந்தடியற்ற மெதுவான நடையை உடையவன். காப்ப அரு - தடுக்க முடியாத. நடுக்கு உறு - நடுக்கம் பொருந்திய. ஏமுறு நிலையினன், இடுகு கண்ணினன்; ஆமையின் இருக்கையன்; வளைந்த ஆக்கையன்; நாமநூல் மார்பினன்; நணுகி னான்;அரோ தூமனத்து அருந்ததி இருந்த சூழல்வாய். 18 18. இடுகு கண்ணினன் - சுருக்கிப் பார்க்கின்ற கண்ணை யுடையவன். நாமநூல் - பெருமையுள்ள நூலை அணிந்த. அருந்ததி - சீதை. அரோ; அசை. தோமறு சாலையின் வாயில் துன்னினான், நாமுதல் குழறிட நடுங்கு சொல்லினான், ‘யாவர்இவ் விருக்கையுள் இருந்து ளீர்? என்றான்; காமன்வெம் சரம்படக் கருகும் மேனியான். 19 19. -. சீதையைக் கண்டு இராவணன் எண்ணுதல் வெற்பிடை மதம்என வெயர்க்கும் மேனியன், அற்பின்நல் திரைபுரள் ஓசை வேலையன் பொற்பினுக்கு அணியினைப், புகழின் சேக்கையைக் கற்பினுக்கு அரசியைக், கண்ணின் நோக்கினான். 20 20. வெற்பிடை - யானையினிடமிருந்து ஒழுகும். அற்பினில் - அன்பிலே. திரைபுரள் ஓசை வேலையன் - கடல் போன்றவன். சேக்கையை - இருக்கையை. புனமயில் சாயல்தன் எழிலில், பூநறைச் சுனைமடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் இனம்எனக் களித்துளது என்பது என்?அவன் மனம்எனக் களித்தது கண்ணின் மாலையே. 21 21. சுனைபூ நறை மடுத்து - உண்டு - சுனையில் உள்ள பூவின் தேனை மிகுதியாக உண்டு. இசை முரலும் - பண்பாடும். தும்பி - வண்டு. கண்ணின் மாலை - கரை வரிசை. கண்களுக்கு வண்டுகள் உவமை. `அரைகடை யிட்டமுக் கோடி ஆயுவும் புரைதபு தவத்தின்யான் படைத்த போதுமே; நிரைவளை முன்கைஇந் நின்ற நங்கையின் கரையறு நன்னலக் கடற்கு;என்று உன்னினான். 22 22. அரைகடையிட்ட - அரை என்பதை இறுதியிலே வைத்த. முக்கோடி ஆயுவும் - மூன்று கோடி ஆயுளும். (மூன்றரை கோடி ஆயுள்) புரைதபு - குற்றமற்ற. நன்னலம் - நல்ல அழகு. `தேவரும், அவுணரும், தேவி மாரொடும் கூவல்செய் தொழிலினர் குடிமை செய்திட, மூவுல கமும் இவர் முறையின் ஆள,யான் ஏவல்செய்து உய்குவென் இனி;என்று உன்னினர்ன். 23 23. கூவல்செய் தொழிலினர் - கூப்பிடப்படும் தொழிலாளர் களாய். குடிமை செய்திட - குடிமக்களின் தொழிலைச் செய்யும்படி. `உளைவுறு துயர்முகத்து ஒளியி தாம்எனின், முளைஎயிறு இலங்கிடும் முறுவல் என்படும்? தளைஅவிழ் குழல்இவள் கண்டு தந்தஎன் இளையவட்கு அளிப்பென்என் அரசு; என்று எண்ணினான். 24 24. உளைவு உறு - வருத்துகின்ற. துயர்முகத்து ஒளி - துன்பமுள்ள முகத்தின் அழகு. முறுவல் என்படும் - புன்சிரிப்பிலே எவ்வளவு அழகு தோன்றும்? இவள்கண்டு - இவளைக்கண்டு. இராவணத் துறவியைச் சீதை உபசரித்தல் ஆண்டையான் அனையன உன்னி, ஆசைமேல் மூண்டெழு சிந்தனை முறையி லோன் தனைக் காண்டலும், கண்ணின்நீர் துடைத்த கற்பினாள் ஈண்டெழுந் தருளும்?என்று இனிய கூறினாள். 25 25. ஆசைமேல் மூண்டெழு - ஆசைமேல் மிகுந்து எழுந்த. சிந்தனை - எண்ணம் உள்ள. முறையிலோன் தனை - ஒழுங்கற்ற வனை ஏத்தினள்; எய்தலும் `இருத்திர் ஈண்டுஎன வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்; மாத்திரி தண்டுஅயல் வைத்த வஞ்சனும் பூத்தொடர் சாலையின் இருந்த போழ்தினே. 26 26. வேத்திரத்து ஆசனம் - பிரம்பால் செய்த ஆசனத்தை. மா திரி தண்டு - பெரிய முக்கோலை. பூதொடர் - பூவால் தொடுக்கப்பட்ட. நடுங்கின மலைகளும், மரனும், நாஅவிந்து அடங்கின பறவையும்; விலங்கும் அஞ்சின; படம்குறைந்து ஒதுங்கின பாம்பும்; பாதகக் கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே. 27 27. -. இராவணத் துறவி இருந்தவன் `யாவதுஇவ் விருக்கை? ï§Fiw mUªjt‹ aht‹?Ú® ahiu? என்றலும், `விருந்தினர்; இவ்வழி விரகுஇ லார்எனப் பெருந்தடம் கண்ணவள் பேசல் மேயினாள். 28 28. விருந்தினர் - புதிதாக வந்தவர். இவ்வழி விரகு இலார் - இந்த இடத்தை அறியாதவர். சீதாதேவி `தயரதன் தொல்குலத் தனையன்; தம்பியோடு உயர்குலத்து அன்னைசொல் உச்சி ஏந்தினான். அயர்விலன் இவ்வழி உறையும்; அன்னவன் பெயரினைத் தெரிகுதிர்! பெருமை யீர்; என்றாள். 29 29. தயரதன் - தசரதனுடைய. தொல்குலத் தனையன் - பழமையான குலத்திலே பிறந்த புதல்வன். அயர்வு இலது - சோர்வில்லாமல். இராவணத் துறவி `கேட்டனென், கண்டிலென், கெழுவு கங்கைநீர் நாட்டிடை ஒருமுறை நண்ணி னேன்;மலர் வாள்தடம் கண்ணின் நீர் யாவர் மாமகள்? fh£oil mU«gfš fÊ¡»‹ Ö®?என்றான். 30 30. -. சீதாதேவி `அனகமா நெறிபடர் அடிகள்! நும்அலால் நினைவதோர் தெய்வம்வே றிலாத நெஞ்சினான்; சனகன்மா மகள்;பெயர் சனகி; காகுத்தன் மனைவியான்; என்றனள் மறுவில் கற்பினாள். 31 31. அனகம்மா நெறிபடர் - பாவமற்ற சிறந்த வழியிலே ஒழுகுகின்ற. காகுத்தன் - இராமன். துறவிகளைத் தெய்வமாக வழிபடுந் தன்மையுள்ளவன் சனகன். அவ்வழி அனையன உரைத்த ஆயிழை, `வெவ்வழி வருந்தினிர்; விளைந்த மூப்பினிர்; இவ்வழி இருவினை கடக்க எண்ணினிர்; எவ்வழி நின்றும்இங்கு எய்தி னீர்;என்றாள். 32 32. ஆய்இழை - சிறந்த ஆபரணங்களை அணிந்தவள். வெவ்வழி - கொடிய வழியிலே நடந்து. இருவினை - நல்வினை தீவினைகளை. துறவி இராவணன் பெருமை கூறல் `இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச் சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்; அந்தரத் தோடும்எவ் வுலகும் ஆள்கின்றான் மந்திரத்து அருமறை வைகும் நாவினான். 33 33. எழுதல் ஆகலா - எழுத முடியாத. மந்திரத்து அருமறை - மந்திரத்தோடு கூடிய சிறந்த வேதங்கள். `ஈசன்ஆண் டிருந்தபேர் இலங்கு மால்வரை ஊசிவே ரொடும்பறித்து எடுக்கும் ஊற்றத்தான், ஆசைகள் சுமந்தபேர் அமரி யானைகள் பூசல்செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான். 34 34. ஊற்றத்தான் - வலிமையுள்ளவன். ஆசைகள் - திசைகளைச் சுமந்த - காத்த. பேர் அமரி - பெரிய போர் செய்யும் வலிமையுள்ள. பூசல் - சண்டை. `தாள்உடை மலர்உளான் தந்த அந்தம்இல் நாள்உடை வாழ்க்கையன்; நாரி பாகத்தன் வாள்உடைத் தடக்கையன்; வாரி வைத்தவெம் தோள்உடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான். 35 35. தாள்உடை - கொடியையுடைய. நாரி - பெண். வாரி வைத்த - பிடித்து அடைத்துவைத்த. கோள்உடை - கிரகங்களை உடைய. வெம்சிறையினன் - கொடிய சிறைச்சாலையை உடையவன். `வெம்மைதீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன்; செம்மையோன்; மன்மதன் திகைக்கும் செவ்வயின்; எம்மனோர் அனைவரும் இறைவன் என்றுஎணும் மும்மையோர் பெருமையும் முற்றும், பெற்றியான். 36 36. செவ்வியன் - அழகுள்ளவன். மும்மையோர் - மும்மூர்த்திகளின். பெருமையும் முற்றும் - பெருமையையும் அழிக்கும். பெற்றியான் - தன்மையுள்ளவன். அனைத்துல கினும் அழகமைந்த நங்கையர் எனைப்பலர் அவன்தனது அருளின் இச்சையோர்; நினைத்துஅவர் உருகவும்; உதவ நேர்கிலன்; மனக்கினி யாள்ஒரு மாதை நாடுவான். 37 37. அவன் தனது - அவனுடைய. அருளின் இச்சையோர் - அருளினை விரும்பி நிற்போர். `அனைத்துலகிலும் அழகமைந்த நங்கையர் எனைப்பலர் - எத்தனையோ பலர். உதவ நேர்கிலன் - இன்பத்தை உதவச் சம்மதிக்காதவன். `ஆண்டையான் அரசுவீற் றிருந்த அந்நகர் வேண்டி,யான் சில்பகல் உறைதல் மேவினேன்; நீண்டனென் இருந்து,அவன் பிரியும் நெஞ்சிலேன், மீண்டனென்; என்றனன் வினையம் உன்னுவான். 38 38. நீண்டனென் இருந்து - நெடுநாட்கள் தங்கியிருந்து. அவன் பிரியும் நெஞ்சிலேன் - அவனைப் பிரியும் மனமற்றவனாய். வினையம் உன்னுவான் - சீதையின் கருத்தை அறியும் பொருட்டு. சீதையின் கேள்விகள் `வேதமும் வேதியர் அருளும் வெஃகலாச், சேதன மன்உயிர் தின்னும் தீவினைப் பாதக அரக்கர்தம், பதியின் வைகுதற்கு, ஏதுஎன்? clyK« Äifv‹W v©Qå®! 39 39. வெஃகலா - விரும்பாத. சேதனை மன்உயிர் தின்னும் - அறிவுள்ள நிலைத்த உயிர்களை எல்லாம் தின்னும். தீவினை - கொடுஞ் செயலையுடைய. வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்; புனத்திரு நாட்டிடைப் புனிதர் ஊர்புக நினைத்திலிர்; அறநெறி நினைக்கி லாதவர் இனத்திடை வைகினிர்; என்செய் தீர்? என்றாள். 40 40. -. இராவணத் துறவி வேறு மங்கைஅஃது உரைத்தல் கேட்ட வரம்பிலான், `மறுவின் தீர்ந்தார் வெங்கண்வாள் அரக்கர் என்ன வெருவலம், மெய்ம்மை நோக்கின், திங்கள்வாள் முகத்தி னாளே; தேவரின் தீயர் அன்றே; எங்கள்போ லியர்க்கு நல்லார் நிருதரே ஆவர்; என்றான். 41 41. மறுவின் தீர்ந்தார் - குற்றமான வழியிலே நடக்கின்ற வர்கள். வெம்கண்வாள் - கொடுமையைத் தம்மிடங்கொண்ட வாளையுடைய. வெருவலம் - அஞ்சமாட்டோம். அதேவரில் - அந்தத் தேவர்களைவிட. சேயிழை, அன்ன சொல்லத், தீயவர்ச் சேர்தல் செய்தோர் தூயவர் அல்லர், சொல்லின், தொல்நெறி தொடர்ந்தோர்; என்றாள் மாயவல் அரக்கர் வல்லர் வேண்டுரு வாக்க, என்பது ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின் அயல்ஒன்று எண்ணாள். 42 42. அன்ன சொல்ல - இராவணன் அவைகளைக் கூறியவுடன், சொல்லின் தூயவர் - சொல்லப்போனால் பரிசுத்த மானவர்களும். தொல்நெறித் தொடர்ந்தோர் - பழமையான ஒழுக்க நெறியைப் பின்பற்றியவர்களும். `தீயவர்ச் சேர்தல் செய்யார் - தீயவர்களுடன் சேரமாட்டார்கள். மாயவல் அரக்கர் வேண்டு உருவாக்க வல்லர். `அயிர்த்தனள் ஆகும் என்றுஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான்; பெயர்த்தது துடைக்க எண்ணிப் பிறிதுறப் பேசல் உற்றான்; `மயக்கறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றலாம் நெறிஎன் என்றான். 43 43. பிறிதுற - வேறுவிதமாக. இயற்கையின் - இயல்பான நல்வழியில். இயற்றல் ஆம் நெறி - தீமை செய்யக்கூடிய வழி. என் - என்ன? (ஒன்றும் இல்லை.) சீதாதேவி திறம்தெரி வஞ்சன் அச்சொல் செப்பலும், செப்பம் மிக்காள் `அறம்தரு வள்ளல் ஈண்டிங்கு அருந்தவம் முயலும் நாளுள், மறம்தலை திரிந்த வாழ்க்கை அரக்கர்தம் வருக்கத் தோடும் இறந்தனர் முடிவர்; பின்னர் இடர்இலை உலகில்; என்றாள். 44 44. திறம்தெரி வஞ்சன் - சீதையின் மனவலிமையை அறிந்து கொள்ளு கின்றவனாகிய அந்த வஞ்சகன். மறம்தலை - பாவத்தின்கண் ஈடுபட்டு. திரிந்த வாழ்க்கை - அலைந்த வாழ்க்கை யையுடைய. இராவணத் துறவி மானவள் உரைத்த லோடும் `மானிடர் அரக்கர் தம்மை மீன்என மிளிரும் கண்ணாய்! வேர்அற வெல்வர் என்னின், யானையின் இனத்தை எல்லாம் இளமுயல் கொல்லும்; இன்னும் கூன்உகிர் மடங்கல் ஏற்றின் குழுவைமான் கொல்லும். என்றான். 45 45. கூன் உகிர் - வளைந்த நகங்களையுடைய. மடங்கல் ஏற்றின் - ஆண் சிங்கங்களின். சீதாதேவி `மின்திரண்டு அனைய பங்கி விராதனும், வெகுளி பொங்கக் கன்றிய மனத்து வென்றிக் கரன்முதல் கணக்கி லோரும், பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும்; என்றாள்; அன்று அவற்கு அடுத்தது உன்னி மழைக்கணீர் அருவி சோர்வாள். 46 46. பங்கி - தலைமயிரையுடைய. வெகுளி பொங்க - கோபம் மிகுந்ததால். கன்றிய மனத்து - நைந்த மனத்தையுடைய. பொன்றிய பூசல் - இறந்த போரைப்பற்றி. ‘வாள்அரி வள்ளல்; சொன்ன மான்கணம் நிருதர்; அன்னார் கேளொடு மடியு மாறும், வானவர் கிளரு மாறும், நாளையே காண்டிர் அன்றே; நவையிலிர் உணர்கி லீரோ! மீளருந் தருமந் தன்னை வெல்லுமோ பாவம்? என்றாள். 47 47. வாள்அரி வள்ளல் - கொடிய சிம்மம்போன்ற இராமனால். கேளொடு - சுற்றத்தோடு. கிளருமாறும் - உயர் வடையும்படியும். இராவணத் துறவியின் சினம் தேனிடை அமுத ளாய அன்ன,மென் சிலசொல் மாலை, தான்உடைச் செவிக ளூடு தவழ்உறத், தளிர்த்து வீங்கும் ஊன்உடை உடம்பி னானும், உருகெழு மானம் ஊன்ற, `மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான். 48 48. அன்னம் -அன்னம்போன்ற சீதையின். மென்சில சொல்மாலை - மெல்லிய சில சொற்றொடர்கள். தவழ்உற - தவழ்ந்து நிற்க. உருகெழு மானம் - மிகுந்த வெட்கமானது. ஊன்ற - உள்ளத்திலே பதிய. சீறினன் உரைசெய் வான்`அச் சிறுவலிப் புல்லி யோர்கட்கு ஈறுஒரு மனிதன் செய்தான், என்றெடுத்து இயம்பி னாயேல், தேறுதி, நாளை யே,அவ் இருபது திண்தோள் வாடை வீறிய பொழுது, பூளை வீயென வீவன்அன்றே. 49 49. அச்சிறுவலி புல்லியோர்கட்கு - அந்தச் சிறிய வலிமை யுள்ள அற்பர்களான அரக்கர்களுக்கு. ஈறு - இறுதியை (அழிவை.) வாடை வீறிய பொழுது - காற்று மிகுந்து வீசியபோது. பூளைவீ என - பூளைப் பூவைப்போல. வீவன் - அழிவான். அன்று; ஏ; அசைகள். சீதையின் இகழ்ச்சி `அரண்தரு திரள்தோள் சால உளஎனில் ஆற்றல் உண்டோ? கரண்டநீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த, கழற்கால் வீரன் திரண்டதோள் வனத்தை எல்லாம், சிறியதோர் பருவம் தன்னில், இரண்டுதோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான்? என்றாள். 50 50. அரண்தரு - காவல் செய்கின்ற. கரண்டநீர் இலங்கை - கமண்டல நீர்போன்ற கடல் சூழ்ந்த இலங்கை. வீரன் - வீரனுடைய. (கார்த்த வீரியார்ச்சுனன்.) திரண்ட தோள்வனத்தை எல்லாம் - திரண்ட புயவனம் முழுவதையும். (கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் தோள்கள்.) இரண்டு தோள் ஒருவன் - இரண்டுதோள் களையுடைய ஒருவனாகிய பரசுராமன். இராவணன் உருக் காட்டல் என்றிவள் உரைத்த லோடும் எரிந்தன நயனம்; திக்கில் சென்றன திரள்தோள்; வானம் தீண்டின மகுடம்; திண்கை ஒன்றொடுஒன்று அடித்த மேகத்து உரும்என; எயிறு தம்மில் மென்றன; வெகுளி பொங்க; விட்டது மாய வேடம். 51 51. எயிறு தம்மில் - பற்கள் தாமாகவே. வெகுளி பொங்க மென்றன - கோபம் பெருகக் கடித்தன. இராவணன் உருவைக் கண்டு சீதை நடுங்கினாள். அவன், `நீ பெண்ணாதலின் உன்னைப் பிசைந்து தின்னாமல் விட்டேன். என்றான். `விண்ணவர் ஏவல் செய்ய வென்றஎன் வீரம் பாராய்! மண்ணிடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்! பெண்எனப் பிழைத்தாய்! அல்லை; உன்னையான் பிசைந்து தின்ன எண்ணுவென் என்னின், பின்னை என்உயிர் இழப்பென் என்றான். 52 52. மண்இடை - இவ்வுலகிலே. புழுவின் வாழும் - புழுவைப் போல வாழும். `குலைவுறல் அன்னம்! முன்னம் யாரையும் கும்பி டாஎன் தலைமிசை மகுடம் என்னத், தனித்தனி இனிது தாங்கி, அலகில்பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய, உலகம்ஈ ரேழும் ஆளும் செல்வத்துள் உறைதி? என்றான். 53 56. அன்னம் குலைவுறல் - அன்னமே வருந்தாதே. தனித்தனி - தனித் தனியாகத் தலையில் வைத்து. இனிது தாங்கி - நன்றாகச் சுமந்து. அலகு இல் பூண் - அளவற்ற அணிகலன்களையுடைய. சீதையின் வீர மொழிகள் செவிகளைத் தளிர்க்கை யாலே சிக்குறச் சேமம் செய்தாள் ‘கவினும்வெம் சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பி னேனைப், புவியிடை ஒழுக்கம் நோக்காப், பொங்குஎரிப் புனிதர் ஈயும் அவியை,நாய் வேட்டது என்ன, என்சொனாய் அரக்க? என்னா. 54 54. சிக்குற - மறையும்படி. சேமம் செய்தாள் - மூடிக் கொண்டாள். ஒழுக்கம் நோக்கா - ஒழுக்கத்தை எண்ணி. எரிப்புனிதர் - வேள்வித் தீ வளர்க்கும் பரிசுத்தமானவர்கள். அவி - அவிர்ப்பாகம். `புல்நுனை நீரின், நொய்தாப் போதலே பொருந்தி நின்ற, என்உயிர் இழத்தல் அஞ்சி, இற்பிறப்பு அழிதல் உண்டோ? மின்உயிர்த்து, உறுமின் சீறும் வெம்கணை விரவா முன்னம் உன்உயிர்க்கும் உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி; என்றாள். 55 55. நொய்தாப் போதலே - விரைந்து அழிந்துபோகும் தன்மையை. இல்பிறப்பு - குடிப்பிறப்பின் பெருமை. மின்உயர்த்து - மின்னலைப்போல் ஒளி வீசி. உருமின் சீறும் - இடியைப்போல் முழங்குகின்ற. இராவணன் சீதையை நிலத்தொடு பெயர்த்தெடுத்தல் ஆண்டா யிடைதீ யவன்,‘ஆ யிழையைத் தீண்டான் அயன்முன் உரைசிந் தைசெயாத்; தூண்தான் எனலாம் உயர்தோள் வலியால்., கீண்டான் நிலம்போ சனைகீழ்ப் புடையே. 56 56. அயன்முன் உரை - நான் முன்னே கூறிய சாப மொழியை. சிந்தை செயா - நினைத்து. கீழொடு மேல் - கீழும் மேலும். யோசனை கீழ்ப்புடையே நிலம் கீண்டான் - ஒரு யோசனை அளவுள்ள நிலத்தைக் கீழே அகழ்ந்தான். கொண்டான் உயர்தேர் மிசை;கோல் வளையாள் கண்டாள்; தனதுஆ ருயிர்கண் டிலளால்; மண்தான் உறும்மின் னின்வயங் கினள் ஆல்; விண்தான் வழியா எழுவான் விரைவான். 57 57. தனது ஆர் உயிர் - தனது அரிய உயிராகிய இராமனை. மண்தான் உறும் மின்னின் - மண்ணில் படிந்த மின்னல் போல். ஆல்; அசைகள். சீதையின் புலம்பல் `விடுதேர் என,வெங் கனல்வெந்து அழியும் கொடிபோல் புரள்வாள்; குலைவாள்; அயர்வாள்; துடியா எழுவாள்! துயரால் அழுவாள் `கடிதா அறனே இதுகா எனுமால். 58 58. -. `மலையே! மரனே! மயிலே! குயிலே! கலையே! பிணையே! களிறே! பிடியே! நிலையா உயிரே! Ãiyne oÅ®nghŒ ciyah tÈah® ciHÚ® ciup®! 59 59. நிலை நேடினர் போய் - எனது நிலையைத் தெரிந்து சென்று. வலியார் உழை - இராம இலக்குவர்களிடம். ‘செஞ்சே வகனார் நிலைநீர் தெரிவீர், மஞ்சே! பொழிலே வனதே வதைகாள், அஞ்சேல் எனநல் குதிரேல்! அடியேன் உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர்! 60 60. -. `நிருதா தியர்வேர் அற,நீல் முகில்போல் சரதா ரைகள்வீ சினிர்சார் கிலிரோ? வரதா! இளையோய்! மறுஏ தும்இலாப் பரதா! இளையோய்! gÊó Qânuh? 61 61. சரதாரைகள் - அம்புத் தாரைகளை. மறு ஏதும் இலா - குற்றம் ஒன்றும் இல்லாத. `கோதா வரியே! குளிர்வாய்! குழைவாய்! மாதா அனையாய்! மனனே தெளிவாய்! XjhJ cz®th® ciH,X oidnghŒ Újh‹ Éidna‹ Ãiybrhš yiynah? 62 62. குழைவாய் - இரங்கு வாய். வினையேன் - தீவினை யுடையேனாகிய. நிலை - என்னுடைய நிலைமையை. ‘முந்தும் சுனைகாள்! முழைவாழ் அரிகாள்! இந்தந் நிலனோ டும்எடுத்த கைகால் ஐந்தும் தலைபத் தும்அலைந்து உலையச் சிந்தும் படிகண் டுசிரிக் கிலிரோ? 63 63. -. சீதையின் சீற்றமும் இராவணன் ஏளனமும் சீதையின் புலம்பலைக் கேட்டான் இராவணன்; சிறிதும் இரங்கவில்லை. `mªj kÅj®fŸ v‹id¡ bfh‹W c‹id Û£f¥ ngh»‹wh®fsh? என்று கைகொட்டி நகைத்தான். வேறு வாக்கினால் அன்னான் சொல்ல, ‘மாயையால் வஞ்ச மான்ஒன்று ஆக்கினாய், ஆக்கி, உன்னை ஆருயிர் உண்ணும் கூற்றைப் போக்கினாய், புகுந்து, கொண்டு போகின்றாய்; பொருது நின்னைக் காக்குமா காண்டி யாயின், கடவல்உன் தேரை! என்றாள். 64 64. கூற்றை - கூற்றுவனாகிய இராமனை. போக்கினாய் - என்னிடமிருந்து போகச் செய்தாய். புகுந்து - அவன் இல்லாத சமயத்தில் வந்து. கடவல் - செலுத்தாதே. மீட்டும்ஒன்று உரைசெய் வாள்,‘நீ வீரனேல், விரைவில் மற்றுன் கூட்டமாம் அரக்கர் தம்மைக் கொன்று,உங்கை கொங்கை மூக்கும் வாட்டினார் வனத்திள் உள்ளார், மானிடர், என்ற வார்த்தை கேட்டும்இம் மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ? 65 65. கூட்டம் ஆம் - கூட்டத்தவராகிய. வாட்டினார் - அறுத்தவர்கள் அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ - பயத்தின் மிகுதியால் அன்றோ. மொழிதரும் அளவில் `நங்கை கேள்இது, முரண்இல் யாக்கை இழிதரு மனித ரோடே யான்செரு இழைப்பென் என்றால், விழிதரு நெற்றி யான்தரு வெள்ளிவெற்பு எடுத்த தோட்குப் பழிதரும்; அதனில் சாலப் பயன்தரும் வஞ்சம்; என்றான். 66 66. -. பாவையும் அதனைக் கேளாத் `தம்குலப் பகைஞர் தம்பால் போவது குற்றம்; வாளின் பொருவது நாணம் போலாம்; ஆவது கற்பி னாரை வஞ்சிக்கும் ஆற்ற லேயாம்; ஏவம்என்? பழிதான் என்னே? இரக்கம்இல் அரக்கர்க்கு என்றாள். 67 67. கற்பினாரை வஞ்சிக்கும் - கற்புள்ள பெண்களை வஞ்சனை செய்து கொண்டுபோகும். ஆற்றலே ஆவதுஆம் - வல்லமையே சிறந்ததாம். ஏவம் என் - அப்படியானால் குற்றந்தான் எது? பழிதான் என்- பாவந்தான் எது? 13. சடாயு உயிர் நீத்த படலம் இச்சமயத்திலே சீதையின் புலம்பல் கேட்டுச் சடாயு வந்தான்; இராவணன் தேரின்முன் சென்றான்; இறகை விரித்துத் தடுத்து நின்றான். ஆண்டுற் றஅணங் கினைஅஞ் சல்எனாத், தீண்டுற் றிலன்என் றுணர்சிந் தையினான்; மூண்டுற்று எழுவெம் கதம்முற் றிலன்;ஆல், மீண்டுற்று உரையா டலைமே யினன்;ஆல். 1 சடாயு உயிர்நீத்த படலம்: சீதையைத் தூக்கிச்சென்ற இராவணனை எதிர்த்துப் போர்புரிந்த சடாயு உயிர் விட்டதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. வெம்கதம் முற்றிலன் - கொடிய கோபத்தால் நிறைந்திலன். மீண்டு உற்று - திரும்பிவந்து. ஆல்; அசைகள். சடாயுவின் அறிவுரை `கெட்டாய் கிளையோ டுநின்வாழ் வைஎலாம் சுட்டாய்; இதுஎன் னைதொடங் கினைநீ! பட்டாய் எனவே கொடு,பத் தினியை விட்டுஏ குதியால்; விளிகின் றிலையால். 2 2. பட்டாய் எனவே கொடு - இறந்தாய் என்று நினைத்துக் கொண்டு. விளிக்கின்றிலை - இறக்கமாட்டாய். ஆல்; அசை. ‘பேதாய்’ பிழைசெய் தனை;பேர் உலகின் மாதா அனையா ளை,மனக் கொடுநீ யாதா கநினைத் தனை,எண் ணம் இலாய்; ஆதா ரம்நினக் கினியார் உளரோ? 3 3. -. ‘இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும் வெம்மைத் தொழில்இங்கு இதன்மேல் இலையால்; அம்மைக்கு அருமா நரகம் தருமால்; எம்மைக்கு இதமாக இதுஎண் ணினைநீ! 4 4. இம்மைக்கு - இப்பிறவிக்கு. உறவோடும் - சுற்றத்தோடும். வெம்மைத் தொழில் - கொடுந்தொழில். அம்மைக்கு - அப்பிறப்புக்கு. எம்மைக்கு - எப்பிறவிக்கு. `முத்தே வரின்,மூல முதற் பொருளாம் அத்தேவர் இம்மா னிடர்;ஆ தலினால் எத்தேவ ரோடுஎண் ணுவது;எண் ணம்இலாய்! பித்துஏ றினையா தல்பிழைத் தனையால். 5 5. முத்தேவரின் - மூன்று தேவர்களுக்கும். மூலம்முதற் பொருளாம் - ஆதிமூலமான முதற்பொருளாகிய. எண்ணம் இலா - அறிவில்லாத. `புரம்பற் றியபோர் விடையோன் அருளால் வரம்பெற் றவும்,மற் றுளவிஞ் சைகளும், உரம்பெற் றனஆ வன,உண் மையினோன் சரம்பற் றியசா பம்விடுந் தனையே. 6 6. உண்மையினோன் - இராமனுடைய. சாபம்பற்றிய சரம்விடும் தனையே - வில்லிலே அமைந்த கணைகளை விடும் வரையிலுந்தான். `வரம் பெற்றவும், விஞ்சைகளும், உரம் பெற்றன ஆவன. `வான்ஆள் பவன்மைந் தன்,வளைத் தவிலான் தானே வரின்,நின் றுதடுப் பரிதால்; நானே அவண்உய்ப் பன்இந்நன் னுதலைப்; போநீ! கடிதுஎன் றுபுகன் றிடலும். 7 7. நின்று - அவன் எதிரே நின்று. தடுப்பரிது - உன் உயிரைக் காத்துக் கொள்ள முடியாது. அவண் - அவ்விராமன் உள்ள விடத்தில். இராவணன் பிடிவாதம் ‘வரும்புண் டரம்!வா ளியின்மார் புருவிப் பெரும்புண் திறவா வகைபே ருதிநீ! இரும்புண்ட நீர்மீள் கினும்,என் உழையின் கரும்புண்ட சொல்மீள் கிலள்;கா ணுதியால்! 8 8. வரும் புண்டரம் - வருகின்ற கழுகே. என் உழையின் - என்னிடத்தில் இருக்கும். கரும்பு உண்ட - கரும்பின் இனிமையைக் கொண்ட. வேறு என்னும் அளவில், பயம்முன்னின் இரட்டி எய்த, அன்னம் அயர்கின் றதுநோக்கி`அரக்கன் யாக்கை சின்னம் உறும்இப் பொழுதே;சிலை ஏந்தி நங்கள் மன்னன் மகன்வந் திலன்என்று வருந்தல் அன்னை. 9 9. -. என்று சொல்லிச் சடாயு இராவணன்மேல் போர் தொடுத்தான். இராவணன் எய்த அம்புகளை யெல்லாம் அழித்தான்; அவனுடைய தேர், வில், ஆகியவைகளையும் சிதைத்தான். இறுதியில் இராவணன் தனது வாளை உருவிச் சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான்; அவன்நிலத்திலே சோர்ந்து விழுந்தான். அதுகண்ட சீதை கலக்கம் உற்றாள். சீதையின் சோர்வு `t‹Jiz cs‹vd tªj k‹dD« bgh‹¿d‹; vd¡»Å¥ òfšv‹? என்கின்றாள்; இன்துணைப் பிரிந்து,இரிந்து, இன்னல் எய்திய அன்றில்அம் பெடையென அரற்றி னாள்அரோ. 10 10. வன்துணை - வலிமையுள்ள துணைவன். உளன்என - இருக்கின்றான் என்று நம்பும்படி. இரிந்து - நீங்கி. அரோ; அசை. ‘பின்னவன் உரையினை மறுத்துப், பேதையேன் அன்னவன் தனைக்கடிது அகற்றி னேன்;பொரும் மன்னவன் சிறைஅற மயங்கி னேன்;விதி இன்னமும் எவ்வினை இயற்று மோ!எனா. 11 11. பின்னவன் - இலக்குவன். பொரும் மன்னவன் - போர் செய்த கழுகரசனாகிய சடாயுவின். `அல்லல்உற் றேனைவந்து அஞ்சல் என்றஇந் நல்லவன் தோற்பதே! நரகன் வெல்வதே! வெல்வதும் பாவமோ! வேதம் பொய்க்குமோ! இல்லையோ அறம்;என இரங்கி ஏங்கினாள். 12 12. தோற்பதே - தோல்வியடைவதோ. நரகன் - பாவி. வெல்வதே - வெல்லுவதோ? அறம் இல்லையோ? `கற்பழி யாமைஎன் கடமை; ஆயினும் பொற்பழி யாவலம் பொருந்தும் போர்வலான் விற்பழி யுண்டது; வினையி னேன்வந்த இற்பழி யுண்டது;என்று இரங்கி ஏங்கினாள். 13 13. பொற்பு அழியா - அழகு கெடாத. வலம் பொருந்தும் - வலிமை பொருந்திய. போர்வலான் - போரிலே சிறந்த இராமனு டைய. வில் பழியுண்டது - கோதண்டம் பழிப்பை அடைந்தது. இல்பழி உண்டது - வீட்டார் பழியடைந்தனர். ஏங்குவாள் தனிமையும், இறகுஇ ழந்தவன் ஆங்குறு நிலைமையும், அரக்கன் நோக்கினான்; வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் வீங்குதோள் மீக்கொடு, விண்ணின் ஏகினான். 14 14. தேரிடைவைத்த மண்ணொடும் - தேரிலேவைத்த மண்ணுடன். வாங்கினன் - தூக்கினான். வீங்குதோள் மீகொடு - பருத்த தோளின்மேல் வைத்துக்கொண்டு. விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால், கண்ணொடு, மனம்அவை சுழன்ற கற்பினாள், உள்நிறை உணர்வழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்; மண்இடைத் தன்னையும் மறந்து சாம்பினாள். 15 15. -. அரக்கன் சென்றது கண்ட கழுகின் வேந்தன் கலக்கம் ‘வந்திலர் மைந்தர்,நம் மருகிக்கு எய்திய வெந்துயர் துடைத்தனென் என்னும் மெய்ப்புகழ் தந்திலர் விதியினார்; தரும வேலியைச் சிந்தினர்; மேல்இனிச் செயல்என் னாம்கொலோ? 16 16. -. ‘வெற்றியர் உளர்எனின், மின்னின் நுண்இடைப் பொற்றொடிக்கு இந்நிலை புகுதற் பாலதோ! உற்றதை இன்னதென்று உணர கிற்றிலேன்; சிற்றவை வஞ்சனை முடியச் செய்ததோ? 17 17. வெற்றியர் - வெற்றியுள்ள இராம இலக்குவர்கள். உளர்எனின்- உயிரோடு உள்ளனர் என்றால். பொன் தொடிக்கு - பொன் வளையலை அணிந்த இச்சீதா பிராட்டிக்கு. சிற்றவை வஞ்சனை - சிற்றன்னை செய்த வஞ்சனையானது. முடியச் செய்ததோ - இவ்வாறு முடியும்படி செய்ததோ? பருஞ்சுஇறை, இன்னன பன்னி, உன்னுவான் `அரும்சிறை உற்றனள் ஆம்எ னாமனம், பொரும்சிறை அற்றதேல், பூவை கற்பெனும் இரும்சிறை அறாதுஎன இடரின் நீங்கினான். 18 18. பருஞ்சுஇறை - பருந்தின் அரசனாகிய சடாயு. பொரும் சிறை அற்றதேல் - போர்செய்யும் எனது சிறகு அறுபட்ட தாயினும். பூவை - சீதையின். கற்புஎனும் இரும்சிறை - கற்பு என்று சொல்லப்படும் பெரிய சிறகு. அறாது - அறுபடாது. அஞ்சிறை குருதியாறு அழிந்து சோரவும், `வஞ்சியை மீட்டிலென், என்னும் மானமும், செஞ்சவே மக்கள்பால் சென்ற காதலும் நெஞ்சுறத், துயின்றனன் உணர்வு நீங்கலான். 19 19. செஞ்சவே - நன்றாக. மக்கள்பால் - புத்திரர்கள்பால். (இராம இலக்குவர்கள்.) நெஞ்சுஉற- உள்ளத்திலே பொருந்த. உணர்வுநீங்கலான் துயின்றனன் - உணர்ச்சி அழியாதவனாய்த் தூங்கினான். வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்ச், செஞ்சவே திருஉருத் தீண்ட அஞ்சுவான், நஞ்சியல் அரக்கியர் நடுவண், ஆயிடைச் சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத் தான்;அரோ. 20 20. செஞ்சவே வல்லை கொண்டுபோய் - நன்றாக விரைவில் கொண்டு போய். நஞ்சு இயல் - விஷத்தன்மை பொருந்திய. சிஞ்சுப வனத்திடை - அசோக வனத்தில். அரோ; அசை. இராம இலக்குவர்கள் சீதையைத் தேடி நடத்தல் இராமனைத் தேடிச்சென்ற இலக்குவன் அவனைக் கண்டு வணங்கினான். சீதையின் துன்பத்தை எடுத்துரைத்து நடந்ததை நவின்றான். அப்பொழுதுதான். மாரீசன் குரல் சீதையைப் பிரிக்கச்செய்த சூழ்ச்சியென்று உணர்ந்தான். இராமன் விரைந்து சீதை இருந்த இடத்தை அடைந்தான்; அவளைக் காணாமல் கலங்கினான். கைத்த சிந்தையன் கனம்குழை அணங்கினைக் காணாது; உய்த்து வாழ்தர வேறொரு பொருள்இலான், உதவ வைத்த மாநிதி மண்ணொடு மறைந்தன; வாங்கிப் பொய்த்து ளோர்கொளத் திகைத்துநின் றானையும் போன்றான். 21 21. கைத்த -வெறுத்த. உய்த்து வாழ்தர - வைத்துக்கொண்டு வாழ்வதற்கு. உதவ -உதவிக்காக. மண்ணொடு மறைந்தன - மண்ணோடு மறைந்தனவாகவும். பொய்த்துளோர் - பொய்கூறி ஏமாற்றியவர். வாங்கிக் கொள - வாங்கிக்கொள்ளவும். திகைத்து நின்றானையும் - அதுகண்டு திகைத்தவனையும். இலக்குவன் உரைத்தல் `தேரின் ஆழியும் தெரிந்தனம்; தீண்டுதல் அஞ்சிப் பாரி னோடுகொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம்; பயன்இன்று; ஓரும் தன்மையீது என்என்பது உரன்இலா தவர்போல்; தூரம் போதல்முன் தொடர்தும்; என்று இளையவன் தொழலும். 22 22. உரன் இலாதவர்போல் - பலமற்றவர்களைப்போல. ஓருந்தன்மை - ஆலோசித்துக் கொண்டிருக்கும் தன்மையாகிய. ஈதுஎன் என்பது - இச்செயலை என்னென்று கூறுவது? மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடெலாம் மாய்ந்து விண்ணின் ஓங்கியது ஒருநிலை; மெய்யுற வெந்த புண்ணின் ஊடுறு வேல்என, மனம்மிகப் புழுங்கி, ‘எண்ணி நாம்இனிச் செய்வதுஎன் இளவலே? என்றான். 23 23. விண்ணின் ஓங்கியது - வானத்தில் எழுந்ததாகிய. ஒருநிலை - ஒரு நிலையைக் கண்டு. மெய்உற வெந்த - உடம்பிலே மிகவும் வெந்து போன. புண்ணின் ஊடு உறு - புண்ணின் இடையிலே நுழைந்த. சடாயுவைக் கண்டு வருந்துதல் இருவரும் தெற்கு நோக்கிச் சென்றனர்; இரண்டு யோசனை சென்றதும் வீணைக்கொடி ஒன்று வீழ்ந்து கிடந்ததைக்கண்டனர்; பின்னும் சென்றனர்; வில்லொன்று ஒடிந்து கிடக்கக் கண்டனர்; மேலும் நடந்தனர்; ஒரு சூலமும், அம்பறாத் தூணியும் கிடக்கக் கண்டனர். இன்னும் சிறிது தொலை சென்றபின் கவசம், தேர்ப்பாகன், குதிரை ஆகியவை இரத்த வெள்ளத்திலே மிதப்பதைப் பார்த்தனர்; குண்டலங்களும், மற்றும் பல அணிகளும் கிடப்பதை நோக்கினர். இறுதியில் சடாயு சிறகு அறுந்து விழுந்து கிடக்கும் இடத்தை யடைந்தனர். சடாயுவைக் கண்ட இராமன் மூர்ச்சித்து விழுந்தான். பின்னர் எழுந்து புலம்பினான். ‘தம்தா தையரைத் தனயர் கொலைநேர்ந்தார் முந்தாரே உள்ளார்? முடிந்தானே முன்ஒருவன்; எந்தாயோ! எதற்காக நீயும் இறந்தனையால். அந்தோ வினையேன் அருங்கூற்றம் ஆனேனே! 24 24. கொலை நேர்ந்தார் தனயர் - கொலை செய்தவர் களாகிய பிள்ளைகள். முந்து ஆரே உள்ளார் - இதற்கு முன்பு யார் இருந்தார்? முனை - முனபு. ஒருவன் - தசரதன். `மாண்டேனே அன்றோ! மறையோர் குறைமுடிப்பான் பூண்டேன் விரதம்; அதனால் உயிர்பொறுப்பேன்; நீண்டேன் மரம்போல நின்றொழிந்த புன்தொழிலேன்; வேண்டேன்இம் மாமாயப் புன்பிறவி வேண்டேனே. 25 25. மாண்டேனே அன்றோ - நான் இருந்தும் இறந்தவனே அன்றோ? ஒழிந்த - நன்மையினின்றும் நீங்கிய. புன் தொழிலேன் - இழிந்த தொழிலுடையேன். மாமாயப் புன்பிறவி - பெரிய பொய்யான அற்பப் பிறவி. `என்தாரம் பற்றுண்ண, ஏன்றாயைச் சான்றோயைக் கொன்றானும் நின்றான்; கொலையுண்டு நீகிடந்தாய்; வன்தாள் சிலையேந்தி, வாளிக் கடல்சுமந்து, நின்றேனும் நின்றேன், நெடுமரம்போல் நின்றேனே. 26 26. என் தாரம் பற்றுண்ண - என் மனை அயலானிடம் பிடிபட. ஏன்றாயை - அவளை விடுவிக்கும் பொறுப்பை ஏற்றாயை. வல்தாள் - மிகுந்த வலிமையுள்ள. வாளி - அம்பு. ‘சொல்உடையார் என்போல் இனிஉளரோ, தொல்வினையேன் இல்உடையாள் காண இறகுடையாய்! எண்இலாப் பல்உடையாய்! உன்னைப் படையுடையான் கொன்றகல வில்உடையேன் நின்றேன், விறல்உடையேன் அல்லேனோ? 27 27. சொல் உடையார் - புகழுடையார். விறல் உடையேன் - வலிமையுள்ளவன். அல்லேனோ - அல்லாதவனோ? இராமன் இப்படி வருந்தும்போது சடாயு கண் விழித்தான்; இருவரையும் நோக்கினான்; அவர்களை அருகில் அழைத்தான்; உச்சி முகர்ந்தான். `வஞ்சனையால் வந்த வரவு,என்பது என்னுடைய நெஞ்சகமே முன்னே நினைவித்தது; ஆனாலும், அஞ்சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ! எஞ்சல்இலா ஆற்றல் இருவீரும்; என்று உரைத்தான். 28 28. -. உண்மை உணர்ந்த சடாயு தேறுதல் உரைத்தல் `அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ! துதியறு பிறவியின் இன்ப துன்பந்தான் விதிவசம் என்பதை மேற்கொ ளாவிடின் மதிவலி யால்விதி வெல்ல வல்லமோ. 29 29. அதிசயம் - புதுமையை. துதிஅறு - புகழற்ற. விதிவசம் என்பதை - விதி வசத்தால் ஆவது என்பதை. ‘அலக்கணும் இன்பமும் அணுகு நாள்அவை விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ! இலக்குமுப் புரங்களை எய்த வில்லியார் தலைக்கலத்து இரந்தது தவத்தின் பாலதோ? 30 30. முப்புரங்களை இலக்கு எய்த - முப்புரங்களைக் குறியாக வைத்து எய்த. வில்லியார் - பரமசிவன். தலைக் கலத்து - பிரம கபாலத்தில். (தலை யோட்டில்). `பொங்குவெம் கோளரா விசும்பு பூத்தன வெம்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்; அங்கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய்கதிர்த் திங்களும், ஒருமுறை வளரும் தேயுமால். 31 31. பொங்கு வெம் கோள்அரா - கோபிக்கின்ற கொடிய வலிமையுள்ள பாம்பு. விசும்பு பூத்தன - வானம் மலர்ந்தவை போன்ற. வெம் கதிர்- சுடுகின்ற கதிர்களையுடைய. செல்வனை - சூரியனை. வேறு ‘பிள்ளைச்சொல் கிளிஅ னாளைப் பிரிவுறல் உற்ற பெற்றி தள்ளுற்ற அறமும், தேவர் துயரமும் தந்த தேயால்; கள்ளப்போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி புள்ளிற்கும் புலன்இல் பேய்க்கும் தாயன்ன புலவு வேலோய்! 32 32. பிரிவு உறல் உற்ற பெற்றி - பிரியும்படி நேர்ந்த தன்மை. தள்ளுற்ற அறமும் - அரக்கர்களால் தள்ளப்பட்ட அறமும். புள்ளிற்கும் - பறவைக்கும். புலன்இல் பேய்க்கும் - அறிவற்ற பேய்க்கும். புள்ளுக்கும் பேய்க்கும் தாய் போன்றது வேலாயுதம். `வடுக்கண்,வார் கூந்த லாளை, இராவணன், மண்ணி னோடும் எடுத்தனன் ஏகு வானை எதிர்ந்தெனது ஆற்றல் கொண்டு தடுத்தனென், ஆவ தெல்லாம்; தவத்துஅரன் தந்த வாளால் படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இதுஇன்று பட்டது என்றான். 33 33. வடுக்கண் வார் கூந்தலாளை - மாவடு போன்ற கண் களையும் நீண்ட கூந்தலையும் உடைய சானகியை. ஆவது எல்லாம் - எனக்கு ஆகின்ற வெற்றியை எல்லாம். படுத்தனன் - அழித்தான். இராமன் சினம் குறித்தவெம் கோபம் யார்மேல் கோள்உறும் கொல்,என் றஞ்சி வெறித்துநின்று உலகம் எல்லாம் விம்முறு கின்ற வேலைப், பொறிப்பிதிர் படரச் செந்தீப் புகையொடும் பொடிப்பப், பொம்என்று எறிப்பதுஓர் முறுவல் தோன்ற, இராமனும் இயம்பல் உற்றான். 34 34. வெறித்து நின்று - மயங்கி நின்று. பொறிப்பிதிர் - தீப் பொறிகள் சிந்துகின்ற. பொறிப்பிதிர் - பொடித்துகள். பொடிப்ப - தோன்ற. பொம் என்று - திடீரென்று. எறிப்பது - ஒளி வீசுகின்ற. `பெண்தனி ஒருத்தி தன்னைப் பேதைவாள் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக, நீஇக் கோள்உறக், குலுங்கல் செல்லா எண்திசை இறுதி யான உலகங்கள் இவற்றை இன்னே, கண்டவா னவர்க ளோடும் களையுமாறு இன்று காண்டி. 35 35. நீ இக் கோள் உற - நீ இக் கொலையை அடைய. குலுங்கல் செல்லா - நடுக்க மடையாத. இன்னே - இப்பொழுதே. `தாரகை உதிரு மாறும்; தனிக்கதிர் பிதிரு மாறும், பேர்அகல் வானம் எங்கும் பிறங்குஎரி பிறக்கு மாறும், நீரொடு நிலனும், காலும், நின்றவும் திரிந்த யாவும், வேரொடும் பறியு மாறும், விண்ணவர் விளியு மாறும். 36 36. தாரகை - நட்சத்திரங்கள். தனிக் கதிர் - ஒப்பற்ற சூரியன். பிதிருமாறு - சிதைந்து உதிரும்படியும். பிறங்கு - விளங்குகின்ற. `இக்கணம் ஒன்றில், நின்ற ஏழினோடு ஏழு மேல்கீழ் மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயு மாறும், திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து, நீரின் மொக்குளின் உடையு மாறும் காண்என முனியும் வேலை. 37 37. வீயுமாறும் - அழியும்படியும். அண்டகோளப் புறத்தவும் - உலகுக்கு அப்புறத்தில் உள்ளவைகளும். ‘வெம் சுடர்க்கடவுள் மீண்டு மேருவில் மறையல் உற்றான்; எஞ்சல் இல் திசையின் நின்ற யானையும் இரியல் போன; துஞ்சின உலகம் எல்லாம் என்பதுஎன்? துணிந்த நெஞ்சின் அஞ்சினன் இளைய கோவும்; அயல் உளோர்க்கு அரணும் உண்டோ? 38 38. எஞ்சல்இல் - அழியாத. இரியல் போன - நீங்கிப் போயின. அரணும் - பாதுகாவலும். சடாயுவின் ஆறுதல் மொழிகள் ‘நாட்செய்த கமலத்து அண்ணல் நல்கின நவையில் ஆற்றல் தோட்செய்த வீரம் என்னில் கண்டனை; சொல்லும் உண்டோ? தாட்செய்ய கமலத் தானே முதலினர், தலைபத்து உள்ளாற்கு ஆட்செய்கின் றார்கள் அன்றி, அறம்செய்கின் றார்கள் யாரே? 39 39. நாள் செய்த கமலத்து அண்ணல் - அன்றலர்ந்த தாமரையில் உள்ள நான்முகன். ஆற்றல் தோள் - ஆற்றல் பொருந்திய தோளையுடையவன். செய்த வீரம் - செய்த வீரத் தன்மையை. என்னில் - என்னிடம். தான் செய்த - தண்டோடு கூடிய. ‘தெண்டிரை உலகந் தன்னில், செறுநர்மாட்டு ஏவல் செய்து, பெண்டிரின் வாழ்வார் அன்றே;இது அன்றே தேவர் பெற்றி; பண்டுலகு அளந்தோன் நல்கப், பாற்கடல் அமுதம், அந்நாள் உண்டிலர் ஆயின், இந்நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ! 40 40. தெள்திரை - தெளிந்த கடல் சூழ்ந்த. உலகம் தன்னில் - மண்ணுலகிலே. செறுநர் மாட்டு - பகைவரிடம். உலகு அளந்தோன் - திருமால். ‘வம்புஇழைக் கொங்கை வஞ்சி, வனத்திடைத் தமியள் வைகக், கொம்பிழை மானின் பின்போய்க், குலப்பழி கூட்டிக் கொண்டீர்! அம்புஇழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை, உம்பிழை என்பது அல்லால், உலகம்செய் பிழையும் உண்டோ? 41 41. வம்பு இழை - கச்சை அணிந்த. கொம்பு இழை - கொம்புகள் பொருந்திய. குலப்பழி - குலத்திற்குப் பழியை. அம்பிழை - அம்பு பொருந்திய. `ஆதலால் முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கித், தேவர்தம் கருத்து முற்றி, வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி, வேறும் தீதுள துடைத்தி; என்றான், சேவடிக் கமலம் சேர்வான். 42 42. கருத்து முற்றி - எண்ணத்தை முடித்து. விதியுளி நிறுவி - முறைப் படி நிறுத்தி. வேறும்உள தீது - மற்றுமுள்ள தீமைகளை. கீதங்கொள் மலரு ளோனும் தேவரும் என்பது என்னே, வேதங்கள் காண்கி லாமை, வெளிநின்றே மறையும் வீரன் பாதங்கள் கண்ணில் பார்த்தான்; படிவங்கொள் நெடிய பஞ்ச பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம் புக்கான். 43 43. சீதம்கொள் - குளிர்ச்சி பொருந்திய. என்பது என்னே - காணாதவர்கள் என்பது மட்டும் என்ன? வெளி நின்றே - வேதத்தின் புறமாய் நின்றே. படிவம் கொள் - உருவங் கொண்ட. விளியும் நாளும் - அழியுங் காலத்திலும். போக்கு இலா - அழியாத. இராமன் இலக்குவனிடம் உரைத்தல் `அறம்தலை நின்றி லாத அரக்கனின், ஆண்மை தீர்ந்தேன், துறந்தனென் தவம்செய் கேனோ? துறப்பனோ உயிரைச் சொல்லாய்? பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால், பெற்ற தாதை இறந்தனன்; இருந்து ளேன்யான்; என்செய்கேன் இளவல்; என்றான். 44 44. அரக்கனின் - அரக்கனால். துறந்தனன் - வாழ்வைத் துறந்தவனாய். பிறந்தனன் - நான் இவ்வுலகில் பிறந்தவனாகி. பெற்று நின்ற பெற்றியால் - அடைந்து நின்ற பயனால். என்றலும் இளைய வீரன் இறைவனை இறைஞ்சி, யாண்டும் வென்றியாய்! விதியின் தன்மை பழுதில விளைந்தது அன்றோ! நின்றுஇனி நினைவது என்னே? நெருங்கிஅவ் வரக்கர் தம்மைக் கொன்றபின் அன்றோ வெய்ய கொடுந்துயர் குளிப்பது? என்றான். 45 45. விதியின் தன்மை - ஊழ்வினையின் தன்மையானது. பழுதுஇல் - வீண் போவதில்லை. வெய்ய கொடுந்துயர் - மிகவும் கொடிய துன்பத்தில். குளிப்பது - மூழ்குவது? ‘எந்தைநீ இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகி, ஏழைச் சந்தவார் குழலினாளைத் துறந்தனை தணிதி யேனும், உந்தையை உயிர்உண் டானை, உயிர்உண்ணும் ஊற்றம் இல்லாச் சிந்தையை ஆகி நின்று செய்தவம் செய்கை? என்றான். 46 46. எண்மையன் ஆகி - எளிமையை உடையவன் ஆகி. துறந்தனை - வெறுத்தவனாய். தணிதியேனும் - சினந் தணிந்தாய் ஆயினும். ஊற்றம் இல்லா - வலிமையற்ற. சிந்தையை ஆகி நின்று - உள்ளமுடையவனாகி நின்று. brŒjt« brŒif - brŒa¤ j¡f jt¤ij¢ brŒjš áwªjnjh?; நீ செய்த தவத்தையே மீண்டும் செய்தல் சிறந்ததோ? அவ்வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி, ‘இவ்வழி இனைய எண்ணின் ஏழைமைப் பாலது’ என்ன, வெவ்வழி பொழியும் கண்ணீர் விலக்கினன்; ‘விளிந்த தாதை செவ்வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ! என்றான். 47 47. இவ்வழி இனைய எண்ணின் - இவ்வாறு இவைகளை நினைத்துக் கொண்டிருப்பது. ஏழைமைப் பாலது - அறியாமை யின் பாற் பட்டதாகும். வெவ்வழி பொழியும் கண்ணீர் - துன்பத்தால் பொழியும் கண்ணீரை. உரிமையாவும் - கடமை முழுவதும். செவ்வழி திருத்துவம் - செவ்வையான முறையில் திருத்தமாகச் செய்வோம். ஏந்தினன் இருகை தன்னால், ஏற்றினன் ஈமந் தன்மேல், சாந்தொடு, மலரும் நீரும் சொரிந்தனன், தலையின் சாரி காந்துஎரி கஞல மூட்டிக், கடன்முறை கடவா வண்ணம், நேர்ந்தனன் நிரம்பும் நன்னூல் மந்திர நெறியின் வல்லான். 48 48. ஈமம் தன்மேல் - விறகுகளின் மேல். சாந்து - சந்தனம். தலையின் சாரல்- தலைப்பக்கம். காந்து எரி - எரிகின்ற நெருப்பை. கஞலமூட்டி - மிகுதியாகப் பற்றவைத்து. கடவா வண்ணம் - தவறாதபடி. பல்வகைத் துறையும், வேதப் பலிக்கடன் பலவும் முற்றி, வெவ்வகைக் குமரனு நின்ற வேலையின், வேலை சார்ந்தான் தொல்வகைக் குலத்தின் வந்தான் துன்பத்தால், புனலும் தோய்ந்தும், செல்வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன். 49 49. வேதம் - வேத முறைப்படி. பலிக்கடன் பலவும் - தேவ வுணவாகிய கடன்கள் பலவும். முற்றி - செய்து முடித்து. தொல் வகைக் குலத்தின் வந்தான் - தனது பழமையான குலத்திலே பிறந்தவனாகிய இராமனுடைய. துன்பத்தால் - துன்பத்தைக் கண்டதனால். புனலும் தோய்ந்து - தானும் நீராடி. செல்வகைக்கு - நற்கதியிலே செல்லும் வகைக்கு. செய்குவான் என்ன - செய்குவானைப் போல. வெய்யோன் வேலை சார்ந்தான் - சூரியன் மேல் கடலை யடைந்தான். 14. அயோமுகிப் படலம் அந்திவந்து அணுகும் வேலை, அவ்வழி அவரும் நீங்கி சிந்துரச் செந்தீக் காட்டோர் மைவரைச் சேக்கை கொண்டார்; இந்திரர்க்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன, வெந்துயர்க்கு ஊற்றம் ஆய விரியிருள் வீங்கிற்று; அன்றே. 1 அயோமுகிப் படலம்: அயோமுகி என்னும் அரக்கியின் செய்தியைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. சிந்து உரம் செந்தீ - அழிக்கின்ற வலிமையுள்ள செந்தீ பரவிய. மைவரைச் சேக்கை - கரியமலைச் சாரலை. இருட்டுக்கு இராக்கதர் உவமை. மெய்யுற உணர்வு செல்லா அறிவினன், வினையின் ஊக்கும் பொய்யுறு பிறவி போலப், போக்கரும் பொங்கு கங்குல் நெய்யுறு நெருப்பின் வீங்கி நிமிர்தர, உயிர்ப்ப நீளக், கையறவு உறுகின் றாரால்; காணலாம் கரையிற்று; அன்றே. 2 2. மெய்உற - உண்மையைக் காணும்படி. உணர்வு செல்லா - அறிவு செல்லாத. அறிவினன் - மூடன் ஒருவன். வினையின் ஊக்கும் - கருமத்தால் முயன்று செய்கின்ற. கையறவு - துன்பம். இராமன் பிரிவாற்றாமையால் வருந்தல் வண்டுளர் கோதைச் சீதை வாள்முகம் பொலிய வானில் கண்டனென் என்று வீரற்கு ஆங்கொரு காதல் காட்டத், தண்தமிழ்த் தென்றல் என்னும் கோள்அராத் தவழும் சாரல், விண்தலம் விளங்கும் செவ்வி வெண்மதி விரிந்தது அன்றே. 3 3. காதல் காட்ட - காதலைத் தூண்ட. கோள் அரா - கொடிய பாம்பு. சாரல் - மலைச்சாரலில். விண்தலம் விளங்கும் - வானத்தில் விளங்குகின்ற. செவ்வி - அழகுள்ள. விரிந்தது - ஒளி பரவிற்று. அன்று; ஏ; அசைகள். வேறு ‘வாங்கும் வில்லன் வரும்!வரும்! என்றுஇரு பாங்கும் நீள்நெறி பார்த்தன ளோ;எனும்வீங்கும் வேலை விரிதிரை யாம்என ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். 4 4. -. பூண்ட மானமும், போக்கரும் காதலும், தூண்ட நின்றிடை தோம்உறும் ஆருயிர் மீண்டும் மீண்டும் வெதுப்ப வெதும்பினான்; ‘வேண்டு மோஎனக்கு இன்னமும் வில்?என்பான். 5 5. இடை தோம்உறும் - மானத்துக்கும் காதலுக்கும் இடையே நின்று வருந்தும். வெதுப்ப - வாட்ட. நின்று பல்உயிர் காத்தற்கு நேர்ந்தயான், என்து ணைக்குல மங்கைஓர் ஏந்திழை தன்து யர்க்கடல் தீர்க்கும் சதிர்இலேன்; நன்று நன்றென வலிஎன நாணுமால். 6 6. நேர்ந்த யான் - உடன்பட்ட நான். துயர்க்கடல் - துன்பக் கடலை. தீர்க்கும் - ஒழிக்கும். சதிர்இலேன் - திறமையில்லாதவன் ஆனேன். ‘வென்றி விற்கை இளையவ! மேல்எலாம் ஒன்று போல உலப்பில நாள்கள்தாம்; நின்று காண்டிஅன் றேநெடும் கங்குல்தான் இன்று நீள்வதற்கு ஏதுஎன்? என்னும்ஆல். 7 7. மேல்எலாம் - முன்பெல்லாம். `நாள்கள்தாம் ஒன்று போல உலப்பு இல - கெடுதியற்றனவாயிருந்தன. ஏதுஎன் - காரணம் என்ன? ‘திறத்து இனாதன செய்தலத் தோர்உற ஒறுத்து ஞாலத்து உயிர்தமை உண்டுழல் மறத்தி னார்க்கு வலிந்தனர் வாழ்வரேல் அறத்தி னால்இனி ஆவதுஎன்? என்னும்ஆல். 8 8. செய்தவத்தோர் திறத்து- தவம் செய்கின்றவர்கள்பால். இனாதன உறஒறுத்து - துன்பம் அடையும்படி தண்டித்து. மறத்தினார்கள் - பாபத்தையுடைய அரக்கர்கள். வலிந்தனர் வாழ்வரேல் - வலிமை யுள்ளவர்களாய் வாழ்வார்களானால். பொழுது விடிந்தது வேறு மயிலும் பெடையும் உடன்திரிய, மானும்கலையும் மருவிவரப் பயிலும் பிடியும் கடகரியும், வருவ திரிவ பார்க்கின்றான்; குயிலும், கரும்பும், செழுந்தேனும், குழலும், யாழும், கொழும்பாகும், அயிலும் அமுதும் சுவைநீத்த, மொழியைப் பிரிந்தால் அழியானோ! 9 9. அயிலும் அமுதும் - உண்ணும் அமுதமும். சுவைநீத்த - சுவையற்றன என்று சொல்லும்படியான. மொழியை - இனிய மொழியை யுடையவனை. அழியானோ - வருந்தமாட்டானோ? இராமனும் இலக்குவனும் மீண்டும் சீதையைத் தேடிச் சென்றனர்; காடு மலைகளைத் தாண்டிப் பதினெட்டு யோசனைகளைக் கடந்து சென்றனர். அவர்கள் ஒரு சோலையை அடைந்த போது சூரியனும் மறைந்தான். இருள் சூழ்ந்தது. ஓர் பளிக்கறையைக் கண்டு அங்கே தங்கினர். அயோமுகி என்னும் அரக்கியின் செயல் அவ்விடை எய்திய அண்ணல் இராமன் வெவ்விடை போல்இள வீரனை `வீர இவ்விடை நாடினை நீர்கொணர் கென்றான்; தெவ்இடை வில்லவ னும்தனிச் சென்றான். 10 10. வெவ்விடைபோல் - கொடிய காளைபோன்ற. நாடினை - தேடி. தெவ்இடை - பகைவர்களைப் பின்னிடச் செய்யும். எங்கணும் நாடினன் நீர்இடை காணான், சிங்கம் எனத்தமி யன்திரி வானை, அங்குஅவ் வனத்துள், அயோமுகி என்னும் வெங்கண் அரக்கி, விரும்பினள் கண்டாள். 11 11. -. அழுந்திய சிந்தையள் ஆகி, அரக்கி எழுந்துயர் காதலின் வந்துஎதிர் நின்றாள்; `புழுங்கும்என் நோய்கெடப் புல்லுவென்; அன்றி விழுங்குவெ னாம்என விம்மல் உழன்றான். 12 12. அழுந்திய - வருந்திய. உயர் காதலின் - வளர்கின்ற காதலோடு. என்நோய் கெட - என் காமநோய் கெடும்படி. விம்மல் உழன்றாள் - பூரிப்போடு திரிந்தாள். இரந்தனென் எய்திய போதுஇசை யாது கரந்தன னேல்,நனி கொண்டு கடந்தென் முரஞ்சினில் மேவி முயங்குவென்; என்று விரைந்தெதிர் தந்தனள் தீயினும் வெய்யாள். 13 13. இரந்தானன் எய்தியபோது - யாசித்து அடைந்தபோது. இசையாது கரந்தனனேல் - சம்மதிக்காமல் மறைவானாயின். நனிகொண்டு கடந்து - மிகவும் தூரத்திலே கொண்டு சென்று. மேவி - விரும்பி. முரஞ்சினின் முயங்குவென் - மார்பிலே தழுவிக் கொள்ளுவேன். நின்றனள் ஆசையின் நீர்கலு ழும்கண் குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள்; மின்திரி கின்ற எயிற்றின் விளக்கால், கன்றுஇரு ளில்திரி கோளரி கண்டான். 14 14. நீர்கலுழும் கண் - நீர் ஒழுகும் கண்கள். குன்றிநிகர்ப்ப - குன்றி மணியைப்போல. கன்று இருளில் - வருந்துகின்ற இருட்டில். கோள்அரி - இலக்குவன். `பண்டையில் நாசி இழந்து பதைக்கும் திண்திற லாளொடு தாடகை சீராள்; கண்டகர் ஆய அரக்கர் கணத்தோர் ஒண்தொடி யாம்இவள்; என்பது உணர்ந்தான். 15 15. சீராள் - தன்மையுள்ளவன். கண்டகர் ஆய - துஷ்டர் களாகிய. `பாவிய ராம்இவர்; பண்பிலர்; நம்பால் மேவிய காரணம் வேறிலை என்பான்; `மாவியல் கானின் வயங்கிருள் வந்தாய்! ahtŸ mOï!உரை செய்கடிது என்றான். 16 16. மேவிய - அடைந்த. வேறிலை - காமத்தைத்தவிர வேறில்லை. மாஇயல் - விலங்குகள் வாழும். பேசின னுக்குஎதிர் பேசுற நாணாள், ஊசல் உழன்றுஅயர் சிந்தைய ளும்தான்; `நேசம்இல் அன்பிலன் ஆகிய நின்பால் ஆசையின் வந்த அயோமுகி என்றாள். 17 17. ஊசல் உழன்று - ஊசலாடி. அயர் சிந்தையளும் - வருந்துகின்ற உள்ளமுடையவளும். `என்னை மணந்தருள் என்று வேண்டினாள்; இலக்குவன் மறுத்தான். வெம்கதம் இல்லவள் பின்னரும் `மேலோய்! இங்கு நறும்புனல் நாடுதி என்னின் அங்கையி னால்எனை `அஞ்சலை, என்றால் கங்கையின் நீர்கொணர் வென்கடிது என்றாள். 18 18. வெம்கதம் இல்லவள் - கொடிய கோபம் இல்லாதவள். இலக்குவன் சினந்தான்; `இன்னும் இங்கேநின்றால், உன்காதையும், நாசியையும் அறுப்பேன் என்றான். அவள் இலக்குவனைக் கட்டித் தழுவி எடுத்துக்கொண்டு வானில் சென்றாள். ஆங்கவள் மார்பொடு கையின் அடங்கிப் பூங்கழல் வார்சிலை மீளி பொலிந்தான்; வீங்கிய வெம்சின வீழ்மத வெம்போர் ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான். 19 19. மார்பொடு - மார்பிலே. கையின் அடங்கி - கையால் அணைக்கப் பட்டு அடங்கி. மீளி - வலிமையுள்ள இலக்குவன். ஓங்கல் - யானை. இராமன் இலக்குவனைத்தேடி வருந்துதல் `அஞ்சொல்கிளி அன்ன அணங்கினை,முன் வஞ்சித்த இராவணன் வவ்வினனோ! நஞ்சில்கொடி யான்நட லைத்தொழிலால் துஞ்சுற்றன னோ,விதி யின்துணிவால். 20 20. நஞ்சில் கொடியவன் - நஞ்சிலும் கொடியவனாகிய இராவணனுடைய. நடலைத் தொழிலால் - வஞ்சகச் செயலால். ‘தள்ளாவினை யேன்தனி ஆர்உயிராய் உள்ளாய்!ஒரு நீயும் ஒளித்தனையோ! பிள்ளாய்!பெரி யாய்!பிழை செய்தனையால்! கொள்ளாதுஉல குன்னைஇது ஓ!கொடிதே! 21 21. உலகு உன்னை கொள்ளா - பெரியோர் உன் செயலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது ஓ கொடிது - இச்செய்கை மிகவும் கொடுமையானது. `என்னைத்தரும் எந்தையை, என்னையரைப் பொன்னைப்பொரு கின்ற பொலன்குழையாள் தன்னைப்பிரி வேன்;உளன் ஆவதுதான், உன்னைப்பிரி யாத உயிர்ப்புஅலவோ, 22 22. என்னையரை - எம் தாயரை. பொலன் குழையாள் தன்னை - சீதையை. பிரிவேன் உளன் ஆவதுதான் - பிரிந்தும் உயிருடன் இருப்பேனாவது. உயிர்ப்பு அலவோ - உயிருள்ளமை யால் அன்றோ? நாடும்பல சூழல்கள் தோறும்;நடந்து ஓடும்பெயர் சொல்லி; உளைந்துஉயிர்போய் வாடும்வகை சோரும்; மயங்குறுமால்; ஆடும்களி மாமத யானை அனான். 23 23. பல சூழல்கள் தோறும் - பல இடங்கள் தோறும். உளைந்து - வருந்தி. ஆல்; அசை. இராமன் இலக்குவனைக்கண்டு களித்தல் இவ்வாறு வருந்திய இராமன் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தான். இச்சமயத்தில் இலக்குவன் அயோமுகியின் மூக்கை அறுத்தான். அவள் அலறிய ஓசை இராமன் காதில் விழுந்தது. அது அரக்கியின் குரல் என்று அறிந்தான். உடனே தீக்கணையை ஏவி இருளைப் பகலாக்கிக் கொண்டு ஒலிவந்த திசை நோக்கிப் போனான். அயோமுகியிடமிருந்து விடுபட்டு வந்த இலக்குவன், தன்னைத் தேடி வரும் இராமனைக் கண்டான். `வந்தனென் அடியனேன் வருந்தல்! வாழிநின் அந்தம்இல் உள்ளம்;என்று அறியக் கூறுவான் சந்தம்மென் தளிர்புரை சரணம் சார்ந்தனன்; சிந்தின நயனம்வந் தனைய செய்கையான். 24 24. அந்தம்இல் - அளவற்ற அன்புடைய. கூறுவான் - சொல்லுகின்ற வனாய். சிந்தின நயனம் - இழந்த கண்கள். செய்கையான் - இராமன். ஊற்றுறு கண்ணின்நீர் ஒழுக நின்றவன், ஏற்றிளம் கன்றினைப் பிரிவுற்று, ஏங்கிநின்று ஆற்றலாது அரற்றுவது அரிதின், எய்திய பால்துறும் பனிமுலை ஆவின் பான்மையான். 25 25. ஆற்றலாது - துக்கம் தாங்காமல். அரற்றுவது - வருந்துவது. அரிதின் - அரிதாக இருக்கும் சமயத்தில். எய்திய - அடைந்த. பால்துறும் - பால் நிறைந்த. பனிமுலை - குளிர்ந்த மடியையுடைய. இலக்குவனைப் பன்முறை தழுவிக்கொண்டு கண்ணீர் சிந்தினான் இராமன். `நீ பிரிந்தாய் என்று எண்ணினேன்; இறக்கத் துணிந்தேன். fhy« fʪjj‰F¡ fhuz« v‹id? என்றான். இலக்குவன் நடந்த நிகழ்ச்சியை உரைத்தான். ‘ஆய்வுறு பெருங்கடல் அகத்துள் ஆயினார் பாய்திரை வருதொறும் பரிதற் பாலரோ? தீவினைப் பிறவிவெம் சிறையில் பட்டயாம் ஓய்வுஅறு துயர்வர உட்கல் நோன்மையோ? 26 26. ஆய்வுறு - ஆராய்தல் பொருந்திய. அகத்துள் - இடத்திலே. ஆயினார் - சென்று நிற்பவர். பரிதல்பாலரோ - வருந்தும் தன்மையுள்ளவர் ஆவரோ. உட்கல் - அஞ்சி வருந்துதல். நோன்மையோ - வலிமையோ. ` மூவகை அமரரும், உலகம் மும்மையும் மேவரும் பகைஎனக் காக மேல்வரின் ஏவரே கடப்பவர்? எம்பி நீஉளை ஆவதே வலி?இனி அரணும் வேண்டுமோ? 27 27. மூவகை அமரர் - பிரம்மா, மால், சிவன். மேவரும் பகை - அடைவதற்கரிய பகைகொண்டு. ஏவரே கடப்பவர் - யார்தான் என்னை வெல்வார்? `பிரிபவர் யாவரும் பிரிக! பேர்இடர் வருவன யாவையும் வருக! வார்கழல் செருவலி வீரநின் தீரும்; அல்லது பருவரல் என்வயின் பயிலற் பாலதோ? 28 28. செருவழி - போரிலே வலிமையுள்ள. நின்தீரும் - உன்னால் நீங்கும். பயிலல் பாலதோ - பழகுவதற்கு உரியதோ. `அரக்கியுடன் போர்புரிந்து மீண்டேன் என்றனை! அவளை நீ கொல்லவில்லை போலும் என்றான் இராமன். `அவளை நான் கொல்லவில்லை; மூக்கு, காது, முலைகளை அறுத்தேன்; அவள் ஓலமிட்டாள். என்றான் இலக்குவன். ‘தொல்இருள் தனைக்கொலத் தொடர்கின் றாளையும் கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்; வல்லைநீ மனுமுதல் மரபி னோய்!எனப் புல்லினன்; உவகையின் பொருமி விம்முவான். 29 29. தொல் இருள் - மிகுந்த இருளிலே. தனைக்கொல - உன்தன்னைக் கொல்லும் பொருட்டு. பின்னர் அவர்கள் வருணனால் வானநீர் பெற்று அருந்தினர்; இரவு முழுதும் அங்கேயே ஒரு மலையில் தங்கியிருந்தனர். 15. கவந்தன் படலம் விடியற் காலத்தில் இராம இலக்குவர்கள் இருவரும் சீதையைத் தேடிக்கொண்டு புறப்பட்டனர். நண்பகலிலே அவர்கள் கவந்தன் வாழும் வனத்தை அடைந்தனர். அவன், தன் கைகளை நீட்டி, அவைகளுக்குள் அகப்படும் எல்லாப் பொருள்களையும் தன் வயிற்றில் அடக்கிக் கொள்ளும் இயல்பினன். மரபுளி நிறுத்திலன், புரக்கும் மாண்பிலன் உரன்இலன் ஒருவன்நாட்டு உயிர்கள் போல்வன; வெருவுவ, சிந்துவ, குவிவ, விம்மலோடு இரிவன, மயங்குவ இயல்பு நோக்கினார். 1 கவந்தன் படலம்: கவந்தன் என்பவன் கையிலே இராம இலக்குவர்கள் அகப்பட்டு மீண்டதைப்பற்றிக் கூறும் பகுதி. 1. மரபுஉளி நிறுத்திலன் - நீதி முறையை எண்ணி நிலை நிறுத்தாதவன் புரக்கும் மாண்புஇலன் - ஆளும் சிறந்த குணமற்றவன். உரன் இலான் - வலிமையில்லாதவன். சிந்துவ - ஓடிச் சிதறுவன. விம்மலோடு - ஏக்கத்துடன். `தேமொழி திறத்தினால் அரக்கர் சேனைவந்து ஏமுற வளைந்ததுஎன்று உவகை எய்தினார்; நேமிமால் வரைஅது நெருக்கு கின்றதே ஆம்எனல் ஆய,கை மதிட்குள் ஆயினார். 2 2. தேமொழி - சீதை. திறத்தினால் - காரணமாக. ஏம்உற - மயக்க முற. நேமிமால்வரை அது - சக்கரவாளகிரியாகிய அது. நெருக்குகின்றது - வரவர நெருங்கி வருகின்றது. இளவலை நோக்கினன் இராமன் ‘ஏழையை உளைவுசெய் இராவணன் உறையும் ஊரும்,இவ் அளவையது ஆகுதல் அறிதி; ஐய!நம் கிளர்பெரும் துயரமும் கீண்ட தாம்,என. 3 3. இவ் அளவையது ஆகுதல் - இவ்வெல்லையை உடையது ஆவதை. கிளர்பெரும் - எழுந்த பெரிய. கீண்டதாம் - பிளந்ததாம்; அழிந்தது. `முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் எற்றிய முரசொலி, ஏங்கும் சங்கிசை பெற்றிலது; ஆதலின் பிறிதுஒன் றாம்;எனச் சொற்றனன் இளையவன்; தொழுது முன்னினான். 4 4. முழங்குதானை முற்றியவேல் - ஆரவாரிக்கின்ற சேனை சூழ்ந்தனவாயின். எற்றிய - அடிக்கப்பட்ட. ஏங்கும் - முழங்கும். முன்னினான் - ஆலோசித்தவனாகிய. `இளையவன் தொழுது சொற்றனன். ‘தெள்ளிய அமுதுஎழத் தேவர் வாங்கிய வெள்எயிற்று அரவந்தான், வேறொர் நாகந்தான், தள்ளரு வரலொடு, தலையி னால்வளைத்து, உள்ளுறக் கவர்வதே ஒக்கும்; ஊழியாய்! 5 5. வாங்கிய - இழுத்துக் கடைந்த. அரவம் - வாசுகி என்னும் பாம்பு. இதற்குள் அவர்கள் கவந்தன் அருகில் வந்து விட்டனர்; அவனைக் கண்டனர். ஓதம்நீர், மண்,இவை முதல ஓதிய பூதம்ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே, வேதநூல் வரன்முறை விதிக்கும் ஐம்பெரும் பாதகம் திரண்டுயிர் படைத்த பண்பினான். 6 6. பொருந்திற்று அன்றியே - அமைந்ததே அல்லாமல். வரன்முறை விதிக்கும் - ஒழுங்காகக் கூறுகின்ற. உயிர் படைத்த - உயிர்பெற்று வந்ததுபோன்ற. ஓலம்ஆர் கடல்என முழங்கும் ஓதையான்; ஆலமே எனஇருண்டு அழன்ற ஆக்கையான்; நீலமால் நேமியின் தலையை நீக்கிய காலநே மியைப்பொரும் கவந்தக் காட்சியான், 7 7. அழன்ற - வெம்மையைக் கொண்ட. நீலமால் - திருமால். நேமியின் - சக்கரத்தால். காலநேமியின் - காலநேமி என்பவனைப் போன்ற. கவந்தம் - உடல் குறை; முண்டம். தாக்கிய தணப்பில்கால் எறியத், தன்னுடை மேக்குயர் கொடுமுடி இழந்த மேருநேர் ஆக்கையின், இருந்தவன் தன்னை, அவ்வழி நோக்கினர் இருவரும், நுணங்கு கேள்வியார். 8 8. தளைப்பு இல்கால் - நீங்காத காற்று. எறிய - பறித்து வீச. மேக்கு உயர் - மேலே உயர்ந்த. நீர்புகும் நெடுங்கடல் அடங்கும், நேமிசூழ் பார்புகு நெடும்பகு வாயைப் பார்த்தனர்; ‘சூர்புகல் அரியதோர் அரக்கர் தொல்மதில் ஊர்புகு வாயிலோ, இது?என்று உன்னினார். 9 9. கடல் அடங்கும் - கடல் அடங்கியிருக்கின்ற. நேமிசூழ் பார் - வட்டம் பொருந்திய உலகமே. புகு - நுழையும்படியான. சூர்புகல் அரியது - அச்சம் புகுதல் இல்லாத. இலக்குவன் ‘இது ஒரு பூதம்; நம்மைத் தன் வாயிலே போட்டுக்கொள்ளும்; நாம் என்ன செய்யலாம்? என்றான். அதற்கு இராமன் பின் வருமாறு புகன்றான். ‘தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்; வேகவெம் பழிசுமந்து உழல வேண்டலேன்; ஆதலின் யான்இனி இதனுக்கு ஆம்இடம்; ஏகுதி ஈண்டுநின்று இளவ லே! என்றான். 10 10. வேக வெம்பழி - மிகுந்த கொடிய பழியை. இடம் ஏகுதி - வேறு இடத்திற்குப் போய்விடுக. ‘ஈன்றவர் இடர்பட, எம்பி துன்புறச், சான்றவர் துயர்உறப், பழிக்குச் சார்வுமாய்த் தோன்றலின் என்உயிர் துறந்த போதலால், ஊன்றிய பெரும்படர் துடைக்க ஒண்ணுமோ? 11 11. -. `இல்இயல் புடைய,நீர் அளித்த இன்சொலாள் வல்லிஅவ் வரக்கர்தம் மனைஉ ளாள்;எனச் சொல்லினென், மலைஎனச் சுமந்த தூணியென், வில்லினென், செல்வெனோ மிதிலை வேந்தன்பால். 12 12. இல் இயல்பு உடைய - இல்லறத்திற்கேற்ற குணம் பொருந்திய. வல்லி - சீதை. தூணியென் - அம்புப் புட்டியை உடையேனும். வில்லினென் - வில்லை உடையேனும். இலக்குவன் உரைத்த மறுமொழி வேறு ஆண்டான் இன்னன பன்னிட ஐயற்கு இளைவீரன் `ஈண்டியான் உன்பின் ஏகிய பின்இவ் விடர்வந்து மூண்டால், முன்னே ஆருயி ரோடும் முடியாதே, மீண்டே போதற் காமெனின், நன்றென் வினை,என்றான். 13 13. -. என்றான் என்னாப் பின்னும் இசைப்பான் ‘இடர்தன்னை வென்றார் அன்றே வீரர்கள் ஆவார்; மேலாய தன்தாய், தந்தை தம்முன், எனும்தன் மையர்முன்னே பொன்றான் என்றால், நீங்குவது அன்றோ புகழ்அம்மா? 14 14. புகழ் நீங்குவது அன்றோ - புகழ் விலகிவிடக் கூடும் அன்றோ. அம்மா; அசை. ‘என்தாய் உன்முன் ஏறிய யாவும் இசை;இன்னல் பின்றாது எய்திப், பேரிசை யாளற்கு அழிவுண்டேல், ‘பொன்றா முன்னம் பொன்றுதி’ என்றாள் உரைபொய்யா நின்றால் அன்றோ நிற்பது வாய்மை, நிலைஅம்மா! 15 15. உன்முன் - உன் அண்ணன். இசை - செய்வதற்கு இசைந்துநில். பின்றாது - தாமதமின்றி. பொய்யா நின்றால் அன்றோ - பொய்யாகாமல் இருந்தால் அன்றோ. வாய்மை நிலைநிற்பது - உண்மை நிலைநிற்பதாகும். அம்மா; அசை. ‘கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேணார்; கிளர்போரில் தோட்டார் கோதைச் சோர்குழல் தன்னைத் துவளாமல் மீட்டான் என்னும் பேரிசை கொள்ளான்; செருவெல்ல மாட்டான் மாண்டான்; என்றபின் மேலும் வசைஉண்டோ? 16 16. கொள்ளார் - ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தோட்டு; தோடு. தோடுஆர் கோதை - பூவிதழ்களால் தொடுத்த மாலை யையுடைய. துவளாமல் - சோர்ந்து போகாமல்; வாடாமல். மேலும் - இதற்கு மேலும். கவந்தனுக்கு விடுதலை `இப்பூதத்தின் கைகளைத் துண்டிப்பதற்கு வழி காணுதி; துணித்து இன்புறுவோம்; என்றான் இலக்குவன். ஆயினும் இருவரும், `நான் முன்னே! eh‹ K‹nd! என்று சொல்லிக் கொண்டு கவந்தன் முன் சென்றனர். அவன் `நீங்கள் யார் என்று இடி குரலிற் கேட்டான். இருவரும் ஒன்றும் உரையாமல் உருத்து நின்றனர். அழிந்து ளார்அவர்; இகழ்ந்தனர் என்னை;என்று அழன்றான்; பொழிந்த கோபத்தன்; பொறிக்கனல் விழிதொறும் பொடிப்ப, `விழுங்கு வேன்என வீங்கலும், விண்ணுற வீரர் எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார். 17 17. அழிந்துளார் அலர் - ஆண்மை அழிந்தவர்கள் அல்லர். அழன்றான் - சினந்தான். புதுப்பொறி - புதிய தீப்பொறி. வீரர் - இராம இலக்குவர்கள். விண்உறஎழுந்த தோள்களை - வானத்தை முட்டவளர்ந்ததோள்களை. கைகள் அற்ற கவந்தன், மலை எனக் கீழே விழுந்தான் ஆளும் நாயகன் அங்கையின் தீண்டிய அதனால், மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்; தோளும் வாங்கிய தோம்உடை யாக்கையைத் துறவா, நீளம் நீங்கிய பறவையின் விண்உற நிமிர்ந்தான். 18 18. சாபத்தின் மூளும் - சாபத்தினால் மூண்ட. முந்திய தீவினை - முன் உண்டான தீவினையை. முடித்தான் - நீக்கினான். தோளும் வாங்கிய - தோளையும் வெட்டித் தள்ளிய. தோம்உடை யாக்கையை - குற்றமுற்ற உடம்பை. துறவா - துறந்து. நீளம் நீங்கியபறவையின் - எட்டத்தில் விலகிச் சென்ற பறவையைப் போல. விண்உற நிமிர்ந்தான் - வானத்தில் உயர்ந்து நின்றாள். கவந்தன் வாழ்த்து ‘ஈன்றவனோ எப்பொருளும்! எல்லைதீர் நல்லறத்தின் சான்றவனோ! தேவர் தவத்தின் தனிப்பயனோ! மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ! தோன்றி அருவினையேன் சாபத்து இடர்தொலைத்தாய்! 19 19. எல்லைதீர் - அளவற்ற. சான்றவனோ - சாட்சியா யிருபபவனோ. கவடாய் - கிளையாய்; மூவரும் ஒருவர் என்ற கருத்து. சாபத்து இடர் - சாபத்தின் கொடுமையை. `காண்பார்க்கும் காணப் படுபொருட்கும் கண்ணாகிப் பூண்பாய்போல் நிற்றியால்! யாதொன்றும் பூணாதாய்! மாண்பால் உலகை வயிற்றொளித்து வாங்குதியால்! ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? v¥ghnyh? 20 20. பூண்பாய்போல் - எல்லாவற்றிலும் பொருந்துகின்ற வனைப் போல. யாதொன்றும் பூணுதாய் - ஒன்றிலும் பொருந்தாதவனே. வாங்குதி - திரும்பப் பெறுவாய். ஆல்; அசை. ‘ஆதிப் பிரமனும்நீ! ஆதிப் பரமனும்நீ! ஆதி எனும்பொருளுக்கு அப்பால்உண் டாகிலும்நீ! சோதிநீ சோதிச் சுடர்ப்பிழம்பும் நீஎன்று வேதம் உரைசெய்தால் வெள்காரோ வேறுள்ளார்? 21 21. -. ‘நீசெய்கை கண்டு நினைந்தனவோ நீள்மறைகள்? உன்செய்கை அன்னவைதாம் சொன்ன ஒழுக்கினவோ? என்செய்தேன் முன்னம் மறம்செய்கை எய்தினார் பின்செல்வது இல்லாப், பெரும்செல்வம் நீதந்தாய்! 22 22. -. `மாயப் பிறவி மயல்நீக்கி மாசிலாக் காயத்தை நல்கித் துயரின் கரையேற்றிப் பேயொத்த பேதைப் பிணக்கறுத்த எம்பெருமான்! நாயொத்தேன் என்ன நலன்இழைத்தேன் நான்என்றான். 23 23. பேதைப் பிணக்கு அறுத்த - அறிவின்மையாகிய குற்றத்தை ஒழித்த. இவ்வாறு வானத்தில் வனப்புடன் நின்று வாழ்த்திய வனை இராமன் கண்டான்; அவனை இலக்குவனுக்குக் காடினான். ïy¡Ft‹ `Ú ah®? என்று கவந்தனைக் கேட்டான். என் பெயர் தனு; ஒரு கந்தருவன் சாபத்தால் அரக்கன் ஆனேன்; உங்கள் கை தீண்டப் பழம் பிறவி பெற்றேன். என்றான். மேலும் அவன் உரைத்ததாவது:- `ஆயது செய்கை என்பது, அறத்துறை நெறியின் எண்ணித் தீயவர்ச் சேர்க்கி லாது செவ்வியோர்ச் சேர்த்துச் செய்தல்; தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள் ஏயதோர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 24 24. தீயவர்ச் சேர்கிலாது - கெட்டவர்களைச் சேராமல். செவ்வியோர் - நல்லவர்களைத் துணை சேர்த்துக்கொண்டு. செய்தல் ஆயது செய்கை - செய்வதே சிறந்த செயலாகும். என்பது - என்பதை. அறத்துறை நெறியின் எண்ணி - அறநெறி யிலே நினைத்து. அன்னாள் ஏயதுஓர் - அவள் ஏவிய ஒரு. நெறியின் - வழியிலே. இரலையின் குன்றம் - ருசியமுக பர்வதம். `கதிரவன் சிறுவன் ஆன கனகவாள் நிறத்தி னானை எதிர்எதிர் தழுவி, நட்பின் இனிதுஅமர்ந்து, அவனின் ஈண்ட வெதிர்பொரும் தோளி னாளை நாடுதல் விழுமிது;என்றான்; அதிர்சுழல் வீரர் தாமும் அன்னதே அமைவது ஆனார். 25 25. கதிரவன் சிறுவன் - சூரியன் புதல்வன்; சுக்கிரீவன். கனகவார் நிறத்தினானை - பொன்போற் ஒளியுள்ளவனை. அவனின் - அவனால். வெதிர்பொரு - மூங்கில்போன்ற. பின்னர் இராம இலக்குவர்கள் இருவரும் வழி நடந்து மதங்காச்சிரமத்தை அடைந்தனர். 16. சபரி பிறப்பு நீங்கு படலம் கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவாம் என்ன, உண்ணிய நல்கும் செல்வம் உறும்நறும் சோலை, ஞாலம் எண்ணிய இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லை யான புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே. 1 சபரி பிறப்பு நீங்கு படலம்: சபரி என்னும் தவமூதாட்டி தன் பிறப்பை விட்டு முத்தியடைந்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. கண்ணிய - நினைத்தவைகளை யெல்லாம். உண்ணிய நல்கு - உண்பதற்கு வேண்டியவைகளையெல்லாம் கொடுக்கும். துறக்கமே - சுவர்க்கத்தையே. அன்னதாம் இருக்கை நண்ணி, ஆண்டுநின்று, அளவில் காலம் தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாட்கு இன்உரை அருளித், `தீதின்றி இருந்தனை போலும் என்றான், முன்இவற்கு இதுவென்று எண்ணல் ஆவதோர் மூலம் இல்லான். 2 2. அன்னது ஆம் இருக்கை நண்ணி - அத்தன்மையாகிய இடத்தை அடைந்து. தலைப்பட்டு - கண்டு. ஆண்டவள் அன்பின் ஏந்தி அழுதுஇழி அருவிக் கண்ணன, `மாண்டதுஎன் மாயம் பாசம்; வந்தது வரம்பில் காலம் பூண்டமா தவத்தின் செல்வம்; போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க, விருந்துசெய்து இருந்த வேலை. 3 3. அமுது அருவி இழி கண்ணள் - அழுது அருவிபோல் நீர் வழிகின்ற கண்ணையுடையவளாய். மாயப்பாசம் - மாயை யாகிய கட்டு. செல்வம் வந்தது - பயன் கிடைத்தது. வேலை - சமயத்தில். `சிவபெருமான், நான்முகன் முதலோர் என்னை அணுகினர். `உன் தவம் முடிந்தது; இராமனைப் பூசித்தபின் எம்மிடம் வருக என்று இயம்பிச் சென்றனர் என்றாள் சவரி. ‘இருந்தனென், எந்தை நீஈண்டு எய்துதி என்னும் தன்மை பொருந்திட இன்று தான்என் புண்ணியம் பூத்தது’ என்ன, அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி, ‘நங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய், அம்மனை வாழி! என்றார். 4 4. எந்தைநீ ஈண்டு எய்துதி - எந்தையே நீ இங்கே வருவாய். என்னும் தன்மை பொருந்திட - என்னும் இயல்பை அறிந்ததனால். `இருந்தனன். பூத்தது - மலர்ந்து பயன் அளித்தது. அம்மனை - தாயே. அனகனும், இளைய கோவும், அன்றுஅவண் உறைந்த பின்றை, வினைஅறு நோன்பி னாளும், மெய்ம்மையின் நோக்கி, வெய்ய துனைபரித் தேரோன் மைந்தன் இருந்த,அத் துளக்கில் குன்றம் நினைவரிது ஆயற்கு ஒத்த நெறியெலாம் நினைந்து சொன்னாள். 5 5. வினைஅறு - தீவினையை அறுத்த. துனைபரி - விரைந்து செல்லும் குதிரைகள் கட்டிய. மைந்தன் - சுக்கிரீவன். துளக்குஇல் - அசைவற்ற. நினைவு அரிது - நினைப்பதற்கு அரியதும். ஆயற்கு ஒத்த - ஆராய்வதற்கு ஒத்ததுமான. வீட்டினுக்கு அமைவ தான மெய்ந்நெறி வெளியிற் றாகக் காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிற்று எல்லாம் கேட்டனன் என்ப மன்னோ; கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான். 6 6. மெய்ந்நெறி - மெய்வழியை. வெளியிற்றாக - வெளிப் படையாக. அறிஞர் என்ன - ஞானிகளைப்போல. கேள்வியால் - நூற்கேள்விகளால். தோட்டவர் - நிரம்பியவர்கள். உணர்வின் - அறிவினால். உண்ணும் - நுகர்ந்து மகிழும். அதன்பின் சபரி, தன் யோக சாதனையால் உடம்பைத் துறந்து உம்பர் ஏகினாள். இராம இலக்குவர் இருவரும் வியப்பெய்தினர். தண்எனும் கானும், குன்றும், திசைகளும், தவிரப் போனார், மண்இடை வைகல் தோறும் வரம்பிலாது ஆடும் மாக்கள் கண்ணிய வினைகள் என்னும் கட்டழல கதுவ லாலே புண்ணியம் உருகிற் றன்ன, பம்பையாம் பொய்கை புக்கார். 7 7. தவிரப் போனார் - நீங்கும்படி சென்றனர். ஆடும் மாக்கள் - திரியும் மக்களின். கண்ணிய - நெருங்கிய. கட்டுஅழல் கதுவலால் - கொடிய தீப்பற்றியதனால். புண்ணியம் உருகிற்று அன்ன - புண்ணியமே உருகியது போலக் காணப்படும். கிட்கிந்தா காண்டம் 1. பம்பைப் படலம் வாழ்த்து மூன்றுஉரு எனக்குணம் மும்மை யாம்முதல் தோன்றுஉரு எவையும்;அம் முதலைச் சொல்லுதற்கு ஏன்றுஉரு அமைந்தவும், இடையின் நின்றவன், சான்றுஉரு; உணர்வினுக்கு உணர்வது ஆயினான். 1 கிட்கிந்தா காண்டம்: கிஷ்கிந்தையில் நடந்த வரலாற்றைக் கூறும் பகுதி. பம்பைப் படலம்: பம்பை என்னும் பொய்கையின் சிறப்பைக் கூறும் பகுதி. 1. உரு - நிறம். குணம் மும்மையாம் முதல் - குணங்களும் மூன்றாக இருக்கின்ற முதல்வன். தோன்றுஉரு எவையும் - காணப்படும் உருவங்கள் எல்லாமும் அவனே. அம்முதலைச் சொல்லுதற்கு - அம்முதல்வன் பெருமை யைக் கூறுவதற்கு. உருஎன்று அமைந்தவும் - உருப்பெற்று அமைந்தவை களும். இடையின் நின்றவன் - தன்னிடம் நிற்கும்படி இருப்பவன். சான்றுஉரு - சாட்சியான உருவுள்ளவன். உணர்வினுக்கு உணர்வது ஆயினான் - அவனே அறிவுக்கு அறிவாக இருக்கின்றான். நிறம் மூன்று; வெண்மை, செம்மை, கருமை, குணம் மூன்று: சாத்துவிகம், இராஜசம், தாமசம். பம்பையின் சிறப்பு தேன்படி மலரது; செங்கண் வெம்கைமாத் தான்படி கின்றது; தெளிவு சான்றது; மீன்படி மேகமும் படிந்து வேலைநீர் வான்படிந்து உலகிடைக் கிடந்த மாண்பது. 2 2. கை மா - கையையுடைய விலங்கு; யானை. மீன் - மின்னல். ஈர்ந்தநுண் பளிங்கெனத் தெளிந்த ஈர்ம்புனல், பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை, சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால் ஓர்ந்துஉணர் வில்லவர் உள்ளம் ஒப்பது. 3 3. நவமணிபடர்ந்த - நவமணிகளும் பதித்து நிறைந்த. பித்திகை - படிகளை. சேர்ந்துழி சேர்ந்துழி - சேரும்போ தெல்லாம். நிறத்தை - அந்த இரத்தினங்களின் நிறத்தை. ஓர்ந்து - பல நூல்களைக் கற்றறிந்தும். எல்பொரு நாகர்தம் இருக்கை ஈதுஎனக் கிற்பதோர்த காட்சியது; எனினும், கீழ்உறக், கற்பகம் அனையஅக் கவிஞர் நாட்டிய சொற்பொரு ளாம்எனத், தோன்றல் சான்றது. 4 4. எல்பொரு - ஒளிபொருந்திய. நாகர்தம் இருக்கை - பாதாள உலகம். ஈது எனக்கிற்பது - இதுதான்எனக் காட்டுவ தாகிய. கீழ்உறத் தோன்றல் சான்றது - அடிவரையிலும் காணும் தன்மையுள்ளது. காசடை விளக்கிய காட்சித்து, ஆயினும், மாசடை பேதைமை இடைம யக்கலான், ஆசடை நல்உணர்வு அனைய தாம்எனப் பாசடை வயின்தொறும் பரந்த பண்பது. 5 5. காசுஅடை - அடியிலே முத்துக்கள் கிடப்பதை. விளக்கிய - நன்றாகக் காட்டுகின்ற. மாசுஅடை - குற்றம்பொருந்திய. ஆசு அடை - துன்பத்தை அடைகின்ற. பாசடை - இலைகள். பசுமை அடை; பாசடை. களிப்படா மனத்தவன் காணின், `கற்பெனும் கிளிப்படா மொழியவள் விழியின் கேள்எனத், துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்,என்று ஒளிப்படாது ஆயிடை ஒளிக்கும் மீனது. 6 6. களிப்படா - களிப்பற்ற. மனத்தவன் - மனமுள்ளவனாகிய இராமன். கிளிப்படா - கிளியினிடத்தும் உண்டாகாத. மொழி யவள் - இனிய மொழிகளையுடைய சீதா தேவியின். கேள் - உறவு. ஒளிப்படாது - காணப்படாமல். மீனது - மீன்களையுடையது. ஆரியம் முதலிய பதினெண் பாடையின் பூரியர், ஒருவழிப் புகுந்த தாம்என; ஓர்வில கிளவிகள் ஒன்றொடு ஒப்புஇல, சோர்வில, விளம்புபுள் துவன்று கின்றது. 7 7. பாடையின் - பாஷைகளில். பூரியர் - சிறிது அறிவுள்ள வர்கள். `கிளவிகள் ஓர்வில ஒன்றொடு ஒப்பில் - ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை. துவன்றுகின்றது - நிறைந்திருத்தலையுடையது. வேறு அன்ன தாகிய அகன்புனல் பொய்கையை அணுகிக் கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்; தன்னின் நீங்கிய தளிர்இயற்கு உருகினன் தளர்வான், உன்னும் நல்உணர்வு ஒடுங்கிடப் புலம்பிடல் உற்றான். 8 8. கன்னி - அழகிய. தளிர்இயற்கு - இளந்தளிர்போன்ற தன்மையுள்ள சீதாதேவியின் பொருட்டு. இராமன் புலம்பல் வேறு `ஓடா நின்ற களிமயிலே! சாயற்கு ஒதுங்கி உள்அழிந்து கூடா தாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ! தேடா நின்ற என்உயிரைத் தெரியக் கண்டாய்; சிந்தைஉவந்து ஆடா நின்றாய்! ஆயிரம்கண் உடையாய்க்கு ஒளிக்கும் ஆறுஉண்டோ? 9 9. சாயற்கு - சீதையின் சாயலுக்கு. ஒதுங்கி - தோற்று. உள் அழிந்து - மனம் வருந்தி. கூடாதாரின் - பகைவரைப்போல. அகம் - உள்ளம். ‘பொன்பால் பொருவும் விரைஅல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது தன்பால் தழுவும் குழல்வண்டு, தமிழ்ப்பாட்டு இசைக்கும் தாமரையே! ‘என்பால் இல்லை; அப்பாலோ இருப்பார் அல்லர்; விருப்புடைய உன்பால் இல்லை’ என்றக்கால் ஒளிப்பா ரோடும் உறவுண்டோ? 10 10. பொன்பால் பொருவும் - பொன்னின் இயல்பை ஒத்த. விரை அல்லி - மணம்பொருந்திய இதழ்களை. புல்லிப் பொலிந்த - சேர்ந்து விளங்குகின்ற. தாது - மகரந்தம். தமிழ்ப்பாட்டு - இனிய பாடலை. இலக்குவன் கூறிய ஆறுதல் வேறு ஆண்டுஅவ் வள்ளலை, அன்பெனும் ஆர்அணி பூண்ட தம்பி `பொழுது கழிந்ததால்; ஈண்டு இரும்புனல் தோய்ந்து,உன் இசைஎன நீண்ட வன்கழல் தாழ்நெடி யோய்!என்றான். 11 11. ஆர்அணி - அரிய ஆபரணத்தை. இசையென - புகழைப் போல. நீண்டவன் - திரிவிக்கிரம அவதாரம் எடுத்தவனுடைய. இராமனும், பம்பைப் பொய்கையில் நீராடி, நாட்கடன்களை முடித்தான். இருவரும் அச்சோலையின் ஒருபுறத்தே தங்கியிருந்தனர். இரவு கழிந்தது. விடிந்தபின் அவர்கள் சீதையைத் தேடிக் கொண்டு புறப்பட்டனர். 2. அனுமப் படலம் இராம இலக்குவர் சவரி குறித்த மலையை அடைந்தனர். இவர்களைக் கண்ட சுக்கிரீவன் முதலியோர் அஞ்சினர்; குகைக்குள் ஓடிப்பதுங்கினர். அவர்கள், இராம இலக்குவர்களை வாலியால் அனுப்பப்பட்டவர்கள் என்று எண்ணி நடுங்கினர். அப்பொழுது அனுமான் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்; ஒரு பிரம்மச்சாரி உருவுடன் இராம இலக்குவர்கள் இருந்த இடத்தை அடைந்தான். அனுமான் சிந்தனை ‘தேவருக் கொருதலைவ ராம்முதல் தேவர்எனின், மூவர்;மற் றிவர்இருவர்; மூரிவில் கரர்;இவரை யாவர்ஒப் பவர்உலகில்; யாதுஇவர்க்கு அரியபொருள்; கேவலத்து இவர்நிலைமை தேர்வதுஎக்கிழமைகொடு? 1 அனுமப் படலம்: அனுமனுக்கும், இராம இலக்குவர்க்கும் சந்திப்பும் நட்பும் ஏற்பட்டதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. மூரிவில் - பெரிய வில்லை. கேவலத்து - எளிதிலே. தேர்வது எக்கிழமைகொடு - அறிவது எவ்வாறு? `சிந்தையில் சிறிதுதுயர் சேர்வுறத் தெருமரலின் நொந்துஅயிர்த் தனர்அனையர்; நோஉறச் சிறியர்அலர்; அந்தரத்து அமரர்அலர்; மானுடப் படிவர்;மயர் சிந்தனைக்கு உரியபொருள் தேடுதற்கு உறுநிலையர். 2 2. சேர்வுற - அடைய. தெருமரலின் - அத்துன்பத்தால். கோஉறச் சிறியர்அலர் - வருந்துதற்குரிய எளியவர்கள் அல்லர். மயர்சிந்தனைக்கு - மயங்கத்தக்க மனத்துக்கு. `தருமமும், தகவும்,இவர் தனமெனும் தகையர்;வரு கருமமும் பிறிதொர்பொருள் கருதிஅன்று; அதுகருதின் அருமருந்து அனையது,இடை அழிவுவந் துளது;அதனை இருமருங் கினும்நெடிது துருவுகின் றனர்,இவர்கள். 3 3. தகவு - நல்லொழுக்கம். தனம் - செல்வம். கருமம் - காரியம். இடைஅழிவு வந்துளது - இடையிலே காணாமல் போய்விட்டது. `கதம்எனும் பொருண்மையிலர்; கருணையின் கடல்அனையர்; இதம்எனும் பொருள்அலதுஓர் இயல்புஉணர்ந் திலர்;இவர்கள் சதமன்அஞ் சுறுநிலையர்; தருமன்அஞ் சுறுசரிதர்; மதனன்அஞ் சுறுவடிவர்; மறலிஅஞ் சுறுவிறலர். 4 4. கதம் - சினம். இதம் - நன்மை. சதமன் - இந்திரன். தருமன் - தருமதேவனும். சரிதர் - நன்னடத்தையுள்ளவர்கள். மறலி - எமன். விறலர் - ஆற்றல் உள்ளவர்கள். வேறு என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி, அன்பினன்; உருகு கின்ற உள்ளத்தன்; ஆர்வத் தோரை, முன்பிரிந்து அனையர் தம்மை, முன்னினான் என்ன நின்றான்; தன்பெரும் குணத்தால் தன்னின் தான்அலது ஒப்பி லாதான். 5 5. எய்த நோக்கி - நன்றாகப் பார்த்து. முன்னினான் - மீண்டும் கண்டவனைப்போல. ஒப்பிலாதான் - அனுமன். `மயில்முதல் பறவை எல்லாம், மணிநிறத்து இவர்கள் மேனி வெயில்உறற்கு இரங்கி, மீதா இரும்சிறைப் பந்தர் வீசி, எயில்வகுத்து எய்து கின்ற; இனமுகில் கணங்கள் எங்கும் பயில்வுறத் திவலை சிந்திப் பயப்பயத் தழுவும் பாங்கர். 6 6. மீதா - மேலே. எயில் வகுத்து - மதில்போல் சுற்றி வளைத்து. எய்துகின்ற - அவர்களுடன் வருகின்ற. பயில்புற - நெருங்குதல் பொருந்திய. திவலை - மழைத்துளி. பயப்பயப் பாங்கர் தழுவும் - யைபப் பையப் பக்கத்தில் தொடரும். ‘காய்எரி கனலும் கற்கள், கள்ளுடை மலர்க ளேபோல் தூயசெம் கமல பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்; போயின திசைகள் தோறும், மரனொடு, புல்லும் எல்லாம் சாய்வுறும் தொழுவ போல்;இங்கு இவர்களோ தருமம் ஆவார்? 7 7. குழைந்து தோன்றும் - மென்மையடைந்து காணப்படும். `தொழுவபோல் சாய்வுறும். `துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை நீக்கித், தென்புலத் தன்றி மீளா நெறிஉய்க்கும் தேவ ரோதாம்; என்பெனக்கு உருகு கின்றது; இவர்கனிந்து அளவில் காதல்; அன்பினுக்கு அவதி இல்லை; அடைவுஎன்கொல் அறிதல் தேற்றேன். 8 8. தென்புலத்து அன்றி - எமலோகத்துக்கு அனுப்பாமல். மீளாநெறி - மோட்சலோகம். என்பு - எலும்பு. அளவில் காதல் இவர்கின்றது - அளவற்ற அன்பு மேலோங்குகின்றது. அவதி - எல்லை. அனுமனுடன் உரையாடல் இவ்வழி எண்ணி, ஆண்டுஅவ் விருவரும் எய்த லோடும், செவ்வழி உள்ளத் தானும் தெரிவுற எதிர்சென்று எய்திக் ‘கவ்வையின்று ஆக நுங்கள் வரவு’எனக் கருணை யோனும், ‘வெவ்வழி நீங்கி யோய்!நீ யார்?என, விளம்பல் உற்றான். 9 9. செவ்வழி - நல்வழியிலே செல்லும். உள்ளத்தான் - உள்ளமுடைய அனுமான். கவ்வை - துன்பம். கருணையோன் - இராமன். வெவ்வழி நீங்கியோய் - கொடிய வழியிலிருந்து நீங்கினவனே. ‘மஞ்செனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க் கெல்லாம் நஞ்செனத் தகைய வாகி, நளிர்இரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சம்ஒத்து அலர்ந்த செய்ய கண்ண!யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன்; நாமமும் அனுமன்; என்பேன். 10 10. நளிர்இரும் பனிக்கு - மிகவும் குளர்ச்சியுள்ள பனிக்கு. தேம்பா - வாடாத. கஞ்சம் - தாமரை. ‘இம்மலை யிருந்து வாழும், எரிகதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ!நும் வரவு நோக்கி விம்மல்உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன். என்றான் எம்மலைக் குலமும் தாழ இசைசுமந்து எழுந்த தோளான். 11 11. `தோளான்....tªnj‹ என்றான் தோளான் - அனுமான். செம்மல் - சுக்கிரீவன். விம்மல்உற்W -கலக்கமடைந்து. இராமன் மாருதியைப்பாராட்டš மாற்றம்அஃது உரைத்த லோடும், வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம்உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி, ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோ டில்லை யாம்;என விளம்பல் உற்றான். 12 12. மைந்தன் - இராமன். தேற்றம்உற்று - தெளிவடைந்து. இவனின் ஊங்கு - இவனைவிட. `இல்லாத உலகத் தெங்கும், இங்கிவன் இசைகள் கூரக் கல்லாத கலையும், வேதக் கடலுமே; என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்றுஅன்றே;யார் கொல் இச்சொல்லின்செல்வன், வில்லார்தோள் இளைய வீர,விரிஞ்சனோ! Éiltš yhndh? 13 13. `இங்கு இவன், இசைகள் கூர கல்லாத கலையும், வேதக்கடலுமே, உலகத்து எங்கும் இல்லாத இசைகள்கூர - புகழ் மிகும்படி. இல்லாத - இல்லாதவைகளாம். விரிஞ்சன் - பிரமன். சுக்கிரீவனைப்பற்றிக் கேட்டல் `இவன் உண்மையான பிரமச்சாரி அல்லன்; பின்னால் இவனைப்பற்றித் தெரிந்து கொள்வோம். என்று இளைய வனிடம் உரைத்தான் இராமன். அதன்பின் அவன் அனுமானைப்பார்த்து. `எவ்வழி யிருந்தான் சொன்ன கவிக்குலத்து இறைவன்? யாங்கள் அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்; இவ்வழி நின்னை உற்ற எமக்குநீ இன்று சொன்ன செவ்வழி உள்ளத் தானைக் காட்டுதி தெரிய என்றான். 14 14. செவ்வழி உள்ளத்தோனை - செவ்விய நெறியிலே செல்லும் - மனமுள்ளவனை. அனுமான் உரை ‘மாதிரப் பொருப்போடு ஓங்கி வரம்பிலா உலகில் மற்றுப் பூதரப் புயத்து வீரர் நும்ஒக்கும் புனிதர் யாரே! ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின், அன்னான் தீதுஅவித்து அரிதின் செய்த செய்தவச் செல்வம் நன்றே! 15 15. பூதரப் புயத்து வீரர் - நிலம்போன்ற தன்மையுள்ள புயத்தையுடைய வீரர்களே. மாதிரம் - திசை. வரம்பு - எல்லை. அவனை - சுக்கிரீவனை. தீது அவித்து - தீமையைத்தரும் ஐம்பொறிகளையும் அடக்கி. ‘இரவிதன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் பரிவிலன் சீறப், போந்து பருவரற்கு ஒருவன் ஆதி, அருவிஅம் குன்றில் எம்மோடு இருந்தனன்; அவன்பால் செல்வம் வருவதுஓர் அமைவின் வந்தீர், வரையினும் வளர்ந்த தோளீர்! 16 16. பரிவிலன் - அன்பற்றவனாகிய வாலி. போந்து - ஓடிவந்து. பருவரற்கு - துன்பத்துக்கு. வருவதுஓர் அமைவின் - வருகின்ற ஒரு தன்மையைப்போல. ‘யார்என விளம்பு கேன்யான் எம்குலத் தலைவற்கு உம்மை; வீரநீர் பணித்திர்! என்றான், மெய்ம்மையின் வேலி போல்வான்; வார்கழல் இளைய வீரன், மரபுளி, வாய்மை யாதும் சோர்விலன், நிலைமை யெல்லாம் தெரிவுறச் சொல்லல் உற்றான். 17 17. மரபுஉளி - சொல்லவேண்டிய முறையை எண்ணி. வாய்மை யாதும் - cண்மையிலிருந்துáறிதும்.nrh®îïy‹ - தளர்ச்சி அற்றவனாய். இலக்குவன் கூறியது `புயல்தரு மதத்திண் கோட்டுப் புகர்மலைக்கு இறையை ஊர்ந்து, மயல்தரும் அவுணர் யாரும் மடிதர, வரிவில் கொண்ட இயல்தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் யாரும் ஒவ்வாத் தயரதன், கனக மாடத் தடமதில் அயோத்தி வேந்தன். 18 18. புயல் தரும்மதம் - மேகம்போல் பொழியும் மதத்தையும். திண்கோட்டு - வலிமையான தந்தங்களையும் உடைய. புகர் மலைக்கு - புள்ளிகள் பொருந்திய மலைகள்போன்ற யானை களுக்கெல்லாம். இறையை - அரசனாகிய யானையை. ஊர்ந்து - செலுத்தி. மயல்தரும் - அறியாமையுள்ள. இயல்தரும் - தாமே அமைந்த. `அன்னவன் சிறுவ னால்இவ் ஆண்தகை; அன்னை ஏவத் தன்னுடைய உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி நல்நெடும் கானம் சேர்ந்தான்; நாமமும் இராமன் என்பான்; இந்நெடும் சிலைவ லானுக்கு ஏவல்செய் அடியன் யானே. 19 19. அன்னவன் - அத்தயரதன். தகவின் நல்கி - பெருந்தன்மை யுடன் கொடுத்து. இராமன் கானகத்தை அடைந்தது முதல், சீதையை இராவணன் எடுத்தேகியது வரையில் அனைத்தையும் உரைத்தான் இலக்குவன். உடனே அனுமான் இராமன் அடிகளை வணங்கினான். அனுமான் உண்மை உருக்காட்டல் தாழ்தலும்,`தகாத செய்தது என்னைநீ! jUk« m‹whš, nfŸÉüš kiwt yhsh! என்றனன்; என்னக் கேட்ட பாழிஅம் தடந்தோள் வென்றி மாருதி`பதுமச் செங்கண் ஆழியாய்! அடிய னேனும் அரிகுலத்து ஒருவன்; என்றான். 20 20. அரிக்குலத்து ஒருவன் - குரங்குக் கூட்டத்திலே ஒருவன். மின்உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நன்னூல் பின் உருக் கொண்டது என்னும் பெருமையாம் பொருளும் தாழப் பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான். 21 21. தருமத்தின் தனிமை தீர்ப்பான் - தருமத்தின் தனிமையை நீக்குகின்றவனாகிய மாருதி. `பின் வேதம் நன்னூல் உருக் கொண்டது என்னும் பெருமையாம் பொருளும் தாழ. பின் - பிறகு. பெருமையாம் பொருளும் - பெரிய பொருள்களும். உவமைபோதா - உவமை சொல்வதற்குப் போதாது என்று சொல்லும்படி. அனுமான் உருவைக் கண்ட இராமன் வியந்தான். `மறை களாலும் அறிவாலும் அறிய முடியாத பொருளே குரங்குருக் கொண்டு நின்றது. என்று இளையவனிடம் உரைத்தான். ‘நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால் இல்லையே துன்ப மானது; இன்பமும் எய்திற்று; இன்னும், வில்லினாய்! இவனைப் போலாம் கவிக்குலக் குரிசில் வீரன் சொல்லினால் ஏவல் செய்வான், அவன்நிலை சொல்லல் பாற்றோ? 22 22. சொல்லினால் ஏவல்செய்வான் - சொல்லின்படி ஏவல் செய்கின்றவன் இவனாயின். என்றான். பின்னர் அனுமான் அவர்களைப் பார்த்து நீங்கள் சிறிது நேரம் பொறுங்கள். யான் சுக்கிரீவனை அழைத்து வருகின்றேன். என்று இயம்பிச் சென்றான். 3. நட்புக்கோள் படலம் அனுமான் சுக்கிரீவனிடம் சென்றான். `யானும் உன் சுற்றமும், இவ்வுலகும் உய்ந்தோம். என்று முதலில் மொழிந்தான். மேலவன் திருமகற்கு உரைசெய்தான், `விரைசெய்தார் வாலிஎன்று அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன்வந் தனன்;இடர்க் கடல்கடந் தனம்;எனா ஆலம்உண் டவனின்நின்று அருநடம் புரிகுவான். 1 நட்புக்கோள் படலம்: சுக்கிரீவன் முதலியவர்களுடன் இராமன் நட்புக் கொள்ளுவதைப்பற்றிக் கூறும் பகுதி. 1. மேலவன் திருமகற்கு - சூரிய குமாரனுக்கு. உயிர்தெற - உயிரைப் போக்க. `சூழிமால் யானையார் தொழுகழல் தயரதன் பாழியால் உலகெலாம் ஒருவழிப் படரவாழ் ஆழியான் மைந்தர்;பேர் அறிவினார்; அழகினார்; ஊழியார்; எளிதின்நிற்கு அரசுதந்து உதவுவார். 2 2. சூழிமால் யானையார் - மாலையை அணிந்த பெரிய யானையை உடைய மன்னர்கள். தொழுகழல - வணங்குகின்ற பாதங்களையுடைய. பாழியால் - புயவலிமையால். `நீதியார்! கருணையின் நெறியினார்; நெறிவயின் பேதியா நிலைமையார்; எவரினும் பெருமையார்; போதியாது அளவிலா உணர்வினார்; புகழினார்; காதிசேய் தருநெடும் கடவுள்வெம் படையினார் . 3 3. நெறிவயின் - ஒழுக்க நெறியிலிருந்து. பேதியா - மாறுபடாத. காதிசேய் - விசுவாமித்திரன். காதி என்னும் மன்னன் மகன் கௌசிகன்; அவனே விசுவாமித்திரன் ஆனான். தாடகை வதம் முதல், கரன் வரையுள்ள இராமன் வீரத்தை எடுத்து விளம்பினான். ‘முனைவரும், பிறரும்,மேல் முடிவரும் பகல்எலாம், இனையர்வந்து உறுவர்என்று இயல்தவம் புரிகுவார்; வினையெனும் சிறைதுறந்து உயர்பதம் விரவினார், எனையர்என்று உரைசெய்கேன், இரவிதன் சிறுவனே! 4 4. முனைவரும் - முனிவர்களும். இயல்தவம் - தம்மால் முடிந்த தவத்தை. வினை - ஊழ்வினை. உயர்பதம் விரவினார் - முத்திபெற்றார். `மாயையால், மதியிலா நிருதர்கோன், மனைவியைத் தீயகான் நெறியின்உய்த் தனன்;அவள் தேடுவார், நீஐயா தவம்இழைத்து உடைமையால், நெடுமனம் தூயையா உடையையால், உறவினைத் துணிகுவார். 5 5. நிருதர்கோன் - இராவணன். மனைவியை - இராமன் மனைவியை. கான்நெறியின் - காட்டு வழியிலே. துணிகுவார் - வேண்டுவாராயினார். `தந்திருந் தனர்அருள்; தகைநெடும் பகைஞனாம் இந்திரன் சிறுவனுக்கு இறுதியின்று இசைதரும்; புந்தியின் பெருமையாய் போதரு என்று உரைசெய்தான், மந்திரம் கெழுமுநூல் மரபுணர்ந்து உதவுவான். 6 6. அருள்தந்து இருந்தனர் - நம்மிடம் கருணை கொண்டிருக் கின்றனர். இறுதி - அழிவு. இன்று இசைதரும் - இப்பொழுதே உண்டாகும். கெழுமு நூல் மரபு உணர்ந்து - நிறைந்த நீதி நூல்களை முறைப்படி அறிந்து. மந்திரம் உதவுவான் - ஆலோசனை கூறுகின்றவன். சுக்கிரீவன் இராமனை அடைதல் அன்னவாம் உரையெலாம் அறிவினால் உணர்குவான், உன்னையே உடையஎற்கு அரியதுஎப் பொருள்;அரோ பொன்னையே பொருவுவாய்! போது;எனப் போதுவான், தன்னையே அனையவன் சரணம்வந்து அணுகினான். 7 7. -. வேறு கண்டனன் என்ப மன்னோ கதிரவன் சிறுவன், காமர் குண்டலம் துறந்த கோல வதனமும், குளிர்க்கும் கண்ணும், புண்டரி கங்கள் பூத்துப், புயல்தழீஇப், பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த, மரகதக் கிரிஅன் னானை. 8 8. `கதிரவன் சிறுவன் அன்னானைக் கண்டனன். காமர் - அழகிய. புயல்தழீஇ - மேகங்கள் பொருந்தி. மரகதக்கிரி - பச்சைமலை. நோக்கினான் நெடிது நின்றான்; `நொடிவரும் கமலத்து அண்ணல் ஆக்கிய உலகம் எல்லாம் அன்றுதொட்டு இன்று காறும் பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்துஇரு படிவம் ஆகி மேக்குயர் தடந்தோள் பெற்று, வீரராய் விளைந்த என்பான். 9 9. நொடிவுஅரும் - சொல்லுவதற்கு அரிய. புரிந்த பாக்கியம் எல்லாம் - செய்த நன்மைகள் யாவும். குவிந்து - ஒன்று திரண்டு. என்பான் - என்று நினைப்பான். தேறினன், `அமரர்க் கெல்லாம் தேவராம் தேவர் அன்றே மாறிஇப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி; மன்னோ ஆறுகொள் சடிலத் தானும், அயனும்என்று இவர்கள் ஆதி வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே. 10 10. ஆறுகொள் - கங்கையை வைத்துக்கொண்டிருக்கின்ற. சடிலத்தானும் - சடையையுடைய சிவபெருமானும். மானுடம் - மனிதர் கூட்டம்; மனிதத்தன்மை. `வென்றது என்று தேறினான். எனநினைந்து, இனைய எண்ணி இவர்கனிற் காதல்ஓதக் கனைகடல் கரைநின்று ஏறாக், கண்இணை களிப்ப நோக்கி, அனகனைக் குறுகினான்;அவ் அண்ணலும் அருத்தி கூரப் புனைமலர்த் தடக்கை நீட்டிப் `போந்தினிது இருத்தி என்றான். 11 11. காதல்ஓதம் கனைகடல்நின்று - காதலாகிய வெள்ளத் தையுடைய கடலிலிருந்து. கரைஏறா - கரை ஏறாமல். அருத்திகூர - அன்பு மிகுந்து. இராமன் பணித்தபடி சுக்கிரீவன் உட்கார்ந்தான்; இராமனும், சுக்கிரீவனும் சூரிய சந்திரர்களைப் போலக் காட்சியளித்தனர். கூட்டம்ஒத் திருந்தவீரர், குறித்ததுஓர் பொருட்கு முன்னாள் ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும், இயைந்தது ஒத்தார்; மீட்டும்வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக் கேட்டுணர் கல்வியோடு ஞானமும் கிடந்தது ஒத்தார். 12 12. கூட்டம் ஒத்துஇருந்த வீரர் - நட்புடன் ஒன்று சேர்ந்திருந்த வீரர்களான இராம சுக்கிரீவர்கள். குறித்தது ஓர் பொருட்டு - நினைத்த ஒரு செயலை முடிப்பதற்கு. மீட்டும் - மேலும். வேரின் வாங்க - வேரோடு அழிப்பதற்காக. ஆயதோர் அவதி யின்கண் அருக்கன்சேய் அரசை நோக்கித் ‘தீவினை தீய நோற்றார் என்னின்யார்? செல்வ! நின்னை, நாயகம் உலகுக் கெல்லாம் என்னலாம், நலம்மிக் கோயை, மேயினென்; விதியே நல்கின் மேவலா காதுஎன்? என்றான். 13 13. அவதியின்கண் - சமயத்தில். தீயனதீய - தீமைகள் அழியும்படி. நாயகம் - தலைமையானவன். மேவலாகாது - அடையாதது. இராமன் மறுமொழி `மையறு தவத்தின் வந்த சவரி,இம் மலையின் நீவந்து எய்தினை இருந்த தன்மை இயம்பினள்; யாங்கள் உற்ற கையறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தோம்; ஐயநின் தீரும் என்ன; அரிக்குலத் தரசன் சொல்வான். 14 14. கையறு துயரம் - அளவற்ற துன்பம். நின்தீரும் - உன்னால் ஒழியும். என்ன - என்று இராமன் சொல்ல. சுக்கிரீவன் வேண்டுகோள் `முரண்உடைத் தடக்கை ஓச்சி, முன்னவன், பின்வந் தேனை இருள்நிலைப் புறத்தின் காறும் உலகெங்கும் தொடர, இக்குன்று அரண்உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆருயிர் துறக்கல் ஆற்றேன்; சரண்உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம். என்றான். 15 15. முன்னவன் - என் தமையனாகிய வாலி. `முரண் உடைத்தடக்கை ஒச்சி - வலிமையுள்ள நீண்ட கையை வீசி. புரத்தின்காறும் - உலகின் எல்லைவரையிலும். இராமன் கருணை மொழி என்றஅக் குரங்கு வேந்தை, இராமனும் இரங்கி நோக்கி, `உன்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன்னாள் சென்றன போக, மேல்வந்து உறுவன தீர்ப்பல்; அன்ன நின்றன எனக்கும் நிற்கும் நேர்;என, மொழியும் நேரா. 16 16. உரியஉள்ள இன்பதுன்பங்கள் - உரியனவாக இருக்கின்ற இன்ப துன்பங்களில். எனக்கும் நிற்கும் நேர் - எனக்கும் உனக்கும் ஒத்தனவாம். மொழியும் நேரா - வாக்குறுதியும் கொடுத்து. `மற்றினி உரைப்பது என்னே! வானிடை, மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது என் காதல் சுற்றம்உன் சுற்றம்;நீஎன் இன்உயிர்த் துணைவன். என்றான். 17 17. செற்றவர் - துன்புறுத்தியவர். உன்னோடு உற்றவர் - உன்னுடன் சேர்ந்தவர். அதுகேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்; அனுமான் வணங்கி வாழ்த்தினான்; எங்கள் இருக்கையாகிய நும் இருக்கையை வந்து காண வேண்டும் என்று வேண்டினான். இராமனும் இசைந்தான் அனைவரும் சுக்கிரீவன் இருக்கையை எய்தினர். வேறு கனியும், கந்தமும், காயும் தூயன இனிய யாவையும் கொணர, யாரினும் புனிதன் மஞ்சனத் தொழில்பு ரிந்து,பின் இனிதி ருந்துநல் விருந்தும் ஆயினான். 18 18. -. விருந்தும் ஆகி,அம் மெய்ம்மை அன்பினோடு இருந்து நோக்கிநொந்து, இறைவன் சிந்தியாப், `பொருந்து நன்மனைக்கு உரிய பூவையைப் பிரிந்து ளாய்கொலோ நீயும் பின்என்றான். 19 19. இறைவன் சிந்தியா - இராமன் எண்ணிப்பார்த்து. பூவையை - மனைவியை. வாலியின் தன்மையை உரைத்தல் வாலி என்பவன் வரம்பற்ற வன்மை படைத்தவன்; சிவனடியான்; இராவணனை வாலிலே கட்டி ஆட்டி யவன்; அவன் இந்திரன் புதல்வன். மாயாவி என்னும் ஓர் அவுணன் அவனிடம் போர் புரிய வந்தான். இருவரும் செருச் செய்தனர். மாயாவி தோற்று ஒருபிலத்துள் புகுந்தான்; வாலியும் அவனைத் தொடர்ந்து சென்றான். இரண்டேகால் ஆண்டுகள் கடந்தன; வாலிதிரும்பவில்லை. சுக்கிரீவன் துணுக்குற்றான். `யானும் பிலத்துட் புகுந்து அண்ணனைத் தேடுவேன் என்று புறப்பட்டான். நாங்கள் தடுத்தோம்; வற்புறுத்திச் சுக்கிரீவனை அரசனாக்கினோம். மாயாவி திரும்பி வந்தால் என்செய்வது என்று அஞ்சிப் பிலத்தின் வாயை மலைகளால் அடைத் தோம். மாயாவியை உயிருண்ட வாலி திரும்பினான்; பிலத்தின் வாய் மூடப்படிருப்பது கண்டு வெகுண்டான்; அதைக் காலால் எற்றித் திறந்து கொண்டு வெளியே வந்தான். அவனைக் கண்டதும் சுக்கிரீவன் வணங்கினான்; அரசை அவனிடம் ஒப்படைத்தான். ஆயினும் வாலி சுக்கிரீவன்மேல் ஆறாத சினங் கொண்டான். இருவரும் சண்டையிட்டனர். வாலி இவனைக் கொல்லத் துணிந்த போது தப்பித்துக் கொண்டு இம்மலையை எய்தினான். `எந்தை! மற்றவன் எயிறு அதுக்குமேல், அந்த கற்கும்ஓர் அரணம் இல்லையால்! இந்த வெற்பின்வந் திவன்இ ருந்தனன் முந்தை உற்றதொர் சாபம் உண்மையால். 20 20. எயிறு அதுக்குமேல் - பல்லைக் கடிப்பானாயின். அரண் - பாதுகாப்பு. `உருமை என்றிவற்கு உரிய தாரமாம் அரும ருந்தையும் அவன்வி ரும்பினான்; இருமை யும்துறந்து இவண்இ ருந்தனன், கருமம் இங்கிதே! கடவுள்; என்றனன். 21 21. உருமை - சுக்கிரீவன் மனைவியின் பெயர். இருமையும் - செல்வம் மனைவி இரண்டையும். இராமன் சூளுரை வேறு பொய்யி லாதவன் வரன்முறை அம்மொழி புகல, ஐயன், ஆயிரம் பெயர்உடை அமரர்க்கும் அமரன், வையம் நுங்கிய வாயிதழ் துடித்தது; மலர்க்கண் செய்ய தாமரை ஆம்பல்அம் போதுஎனச் சிவந்த. 22 22. பொய் இலாதவன் - அனுமான். அமரன் - அமரனுடைய. வையம் நுங்கிய - உலகை உண்ட. `செய்யதாமரை மலர்க்கண். ஆம்பல் அம்போது என - அல்லியின் அழகிய மலரைப்போல. ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன ஆரம் வீங்குதோள் தம்பிக்குத் தன்அர சுரிமைப் பாரம் ஈந்தவன்; பிரிவினன் ஒருவன்தன் இளையோன் தாரம் வவ்வினன் என்றசொல் தரிக்குமாறு உளதோ! 23 23. ஆரம் - மாலைகளை அணிந்து. பரிவினன் ஒருவன் - அன்புள்ள ஒருவன். ‘உலகம் ஏழினோடு ஏழும்வந்து அவன்உயிர்க்கு உதவி விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டித், தலைமை யோடு,நின் தாரமும் உனக்கின்று தருவேன், புலமை யோய்!அவன் உறைவிடம் காட்டு;என்று புகன்றான். 24 24. உதவி விலகும் என்னினும் - உதவிசெய்து தடுக்குமா யினும். வீட்டி - அவர்களை வீழ்த்தி. தலைமை - அரசு. இராமன் ஆற்றலைக் காண ஆவல் இதைக் கேட்டதும் அனைவரும் அடங்காத உவகை யுற்றனர்; பிறகு அவர்கள் இராமனை விட்டுத் தனித் திருந்து ஆராய்ந்தனர். அப்பொழுது மாருதி சுக்கிரீவனைப் பார்த்து `வாலியைக் கொல்லும் ஆற்றல் இவர்களுக்கு உண்டோ என்று ஐயுறுகின்றனை. அவ்வையம் வேண்டாம் என்றான். `சங்கு சக்கரக் குறிஉள தடக்கையில், தாளில், எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை; செங்கண் விற்கரத்து இராமன்,அத் திருநெடு மாலே இங்கு உதித்தனன் ஈண்டுஅறம் நிறுத்துதற்கு; இன்னும். 25 25. -. `என்னை யீன்றவன், `இவ்வுலகு யாவையும் ஈன்றான் தன்னை யீன்றவற்கு அடிமைசெய்! jt«cd¡F m~nj c‹id p‹wv‰F cWgj« csJ,’vd ciu¤jh‹; ï‹d njh‹wny mt‹;ïj‰F VJc©L ïiwnahŒ! 26 26. என்னை ஈன்றவன் - என் தந்தையாகிய வாயுபகவான். எற்கு உறுபதம் உளது - எனக்குக் கிடைக்கும் நற்கதி உண்டு. இன்னதோன்றலே அவன் - இப்பெரியோனே அவன். ‘துன்பு தோன்றிய பொழுது,உடன் தோன்றுவன், எவர்க்கும் முன்பு தோன்றலை அறிதற்கு முடிவுஎன்’என்று இயம்ப, ‘அன்பு சான்று,என உரைத்தனன்; ஐயஎன் யாக்கை என்பு தோன்றல உருகின எனில்,பிறிது எவனோ? 27 27. `எவர்க்கும் முன்புதோன்றலை அறிதற்கு முடிவு என்என்று - உறுதியான வழி என்ன என்று. இயம்ப - கேட்க. `துன்பு.... தோன்றுவன் அன்பு சான்றுஎன உரைத்தனன். `அவனுடைய ஆற்றலைக் காணவேண்டுமானால் அதற்கொரு வழியுண்டு; மராமரம் ஏழையும் அவனுடைய ஒரே அம்பு தொளைத்துச் செல்வதைப் பார் என்றான் மாருதி. நன்று! நன்றெனா! நன்னெடும் குன்றமும் நாணும் தன்து ணைத்தனி மாருதி தோள்இணை தழுவிச் சென்று, செம்மலைக் குறுகி,`யான் செப்புவது உளதால் ஒன்று உனக்கு,என; இராமனும் `உரைத்தி அஃது என்றான். 28 28. -. 4. மராமரப் படலம் மராமரங்களின் தோற்றம் இராமன் புன் சிரிப்புற்றான்; வில்லை நாணேற்றிக் கொண்டு அவர்களுடன் சென்றான்; அம்மரங்களைக் கண்டான். `ஏக வேண்டும்இந் நெறிஎன இனிதுகொண்டு ஏகி, `மாகம் நீண்டன; குறுகிட நிமிர்ந்தன; மரங்கள் ஆக ஐந்தினோடு இரண்டின்,ஒன்று உருவநின் அம்பு போக வே,என்றன் மனத்திடர் போம்;எனப் புகன்றான். 1 மராமரப் படலம்: இராமன் மராமரத்தை அம்பு விட்டுத் தொளைத்ததைப் பற்றிக் கூறும் பகுதி. 1. மாகம் நீண்டன - வானத்தில் உயர்ந்தன. குறுகிட நிமிர்ந்தன - வானமும் சிறிதாகும்படி வளர்ந்தனவாகிய. ஒன்று உருவ - ஒன்றைத் துளைத்துக்கொடு. ஊழி பேரினும் பேர்வில; உலகங்கள் உலைந்து தாழும் காலத்தும் தாழ்வில; தயங்குபேர் இருள்சூழ் ஆழி மாநிலம் தாங்கிய அரும்பெரும் கிரிகள் ஏழும் ஆண்டுசென்று ஒருவழி நின்றென இயைந்த. 2 2. ஊழிபேரினும் - யுகங்கள் பல சென்றாலும். உலைந்து - நிலை குலைந்து. தாழும் காலத்தும் - அழியும் காலத்திலும். கிரிகள் ஏழு: கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம் என்பவை. கலைகொண்டு ஓங்கிய மதியமும், கதிரவன் தானும் தலைகண்டு ஓடுதற்கு, அருந்தவம் தொடங்குறும் சாரல் மலைகண் டோம்,என்பது அல்லது, மலர்மிசை அயற்கும் இலைகண் டோம்,எனத் தெரிப்பரும் தரத்தன ஏழும். 3 3. சாரல்மலை கண்டோம் - மலைச்சாரலைக் கண்டோம். மராமரங்கள் மலையைப்போல் காட்சியளித்தன. தீத றும்பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் வேதம் என்னவும் தகுவன; விசும்பினும் உயர்ந்த, ஆதி அண்டம்முன்பு அளித்தவன் உலகின்,அங்கு அவன்ஊர் ஓதி மம்தனிப் பெடையொடும் புடையிருந்து உறைவ. 4 4. சாகைகள்- கிளைகள். ஓதிமம் - அன்னப்பறவை. மரங்கள் பிரமலோகத்தை எட்டியிருந்தன. அடியி னால்உல களந்தவன் அண்டத்துக்கு அப்பால் முடியின் மேற்சென்ற முடியன; ஆதலின் முடியா நெடிய மால்எனும் நிலையன, நீரிடைக் கிடந்த படியின் மேல்நின்ற மேருமால் வரையினும் பரிய. 5 5. -. இராமன் அம்பெய்தல் ஆய மாமரம் அனைத்தையும் நோக்கிநின்று, அமலன் தூய வார்கணை துரப்பதோர் ஆதரம் தோன்றச், சேய வானமும் திசைகளும் செவிடுறத், தேவர்க்கு ஏய்வி லாததொர் பயம்வரச், சிலையைநாண் எறிந்தான். 6 6. அமலன் - இராமன் உள்ளத்திலே. ஆதரம் - ஆசை. ஏய்வு இலாதது ஓர் - இதுவரையிலும் உண்டாகாததாகிய ஒரு. நாண் எறிந்தான் - நாணைச் சுண்டினான். அரிந்த மன்சிலை நாண்நெடிது ஆர்த்தலும், அமரர் இரிந்து நீங்கினர்; கற்பத்தின் இறுதிஎன்று அயிர்த்தார்; பரிந்த தம்பியே பாங்குநின் றான்மற்றைப் பல்லோர் புரிந்த தன்மையை உரைசெயில் பழிஅவர்ப் புணரும். 7 7. அரிந்தமன் - பகைவர்களைக் கொன்ற இராமன். சிலைநாண் - வில்லின் நாண்ஒலி. பரிந்த - அன்புதாங்கிய. பழிஅவர் புணரும் - பழிப்பு அவர்களைச் சேரும். எய்தல் காண்டுங்கொல் இன்னம்;என்று அரிதின்வந்து எய்திப் பொய்யில் மாருதி முதலினோர் புகழுறும் பொழுதில், மொய்கொள் வார்சிலை நாணினை முறையுற வாங்கி, வெய்ய வாளியை ஆளுடை வில்லியும் விட்டான். 8 8. இன்னம் எய்தல் காண்டும்கொல் - இன்னும் அம்பெய்வ தையும் காண வேண்டுமோ. என்று - என்று சொல்லிக்கொண்டு. ஏழு மாமரம் உருவிக்,கீழ் உலகம்என்று இசைக்கும் ஏழும் ஊடுபுக்கு உருவிப்,பின் உடன்அடுத்து இயன்ற ஏழ்இ லாமையால் மீண்டதுஅவ் விராகவன் பகழி; ஏழு கண்டபின் உருவுமால்; ஒழிவதன்று இன்னும். 9 9. ஏழு மாமரம் உருவி - ஏழு பெரிய மரங்களையும் துளைத்து. ஏழும் ஊடுபுக்கு - ஏழையும் நடுவிலே துளைத்துச் சென்று. ஏழு வேலையும், உலகமேல் உயர்ந்தன ஏழும், ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி ஏழும், மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப; `ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம்என்று எண்ணி. 10 10. இருடிகள் எழுவர் - சப்தரிஷிகள். அவர்கள்: அகத்தியர், பிருகு, குத்சர், வசிஷ்டர், கௌதமர், காசியபர், ஆங்கீரசர். மங்கையர் எழுவர்: பிராமி, மகேசுவரி, குமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி என்பவர்கள். புரவி ஏழு - சூரியன் தேர்க்குதிரைகள் ஏழு. அன்ன தாயினும், அறத்தினுக்கு ஆர்உயிர்த் துணைவன் என்னும் தன்மையை நோக்கினர் யாவரும், எவையும்; பொன்னின் வார்கழல் புதுநறுந் தாமரை பூண்டு, சென்னி மேல்கொண்ட, அருக்கன்சேய், இவைஇவை செப்பும். 11 11. யாவரும் - எல்லோரும். எவையும் - எல்லாப் பிராணி களும்; பயம் தவிர்ந்தன. சென்னி மேல்கொண்ட - தலைமேல் கொண்டு. அருக்கன்சேய் - சுக்கிரீவன். சுக்ரீவன் வாழ்த்துரைகள் வேறு `வையம்நீ! வானும்நீ! மற்றும்நீ! மலரின்மேல் ஐயன்நீ! ஆழிமேல் ஆழிவாழ் கையன்நீ! செய்யதீ அனையஅத் தேவும்நீ! ehÆnd‹ cŒatªJ cjÉdhŒ cyf«KªJ cjÉdhŒ! 12 12. -. ‘என்எனக்கு அரியது;எப் பொருளும்எற்கு எளிதுஅலால்; உன்னைஇத் தலைவிடுத்து உதவினார் விதியினார்; அன்னைஒப் புடையஉன் அடியருக்கு அடியென்யான் மன்னவர்க்கு அரச!என்று உரைசெய்தான் வசையிலான். 13 13. விதியினார் - யான்செய்தால் வினையார். வசையிலான் - சுக்கிரீவன். 5. துந்துபிப் படலம் இராமனும் இலக்குவனும் அந்த மலையின்மேல் ஒரு எலும்புக் கூட்டைக் கண்டனர். அது எருமைக் கடாவின் எலும்புக்கூடு போல் இருந்தது. இது ஏது என்று கேட்டான் இராமன். சுக்கிரீவன் அதன் வரலாற்றை உரைத்தான். துந்துபி என்னும் பெயர் படைத்த அவுணன் போர் செய்வதற்குத் திருமாலைத் தேடினான். திருமால் முன்வந்து `உன்னுடன் போரிடுவதற்குக் கரை மிடற்றவனே ஏற்றவன் என்றான். கடிதுசென்று அவனும்,அக் கடவுள்தன் கைலையைக் கொடியகொம் பினின்மடுத் தெழுதலும், குறுகிமுன், `நொடிதிநின் குறைஎன்,என் றலும்நுவன் றனன்அரோ; `முடிவில்வெம் செருஎனக்கு அருள்செய்வான் முயல்கெனா. 1 துந்துபிப் படலம்: துந்துபி என்னும் அரக்கனது எலும்புக்கூட்டைப் பற்றிக் கூறிய பகுதி. 1. நின்குறை என்நொடிதி - உன் குறை என்னென்று கூறுக. அருள் செய்வான் முயல்கஎனா - கொடுக்க முயல்க என்று. அரோ; அசை. சிவபெருமான் ‘நீ தேவர்கள் பால் செல்க! என்றான். அவுணன் வானவரை அடைந்தான். அவர்கள் தலை வனாகிய இந்திரன் ‘வாலிபால் செல்க என்றனன். அன்னவன் விட,உவந்து அவனும்வந்து, ‘அரிகள்தம் மன்னவன் வருக!போர் செய்க!எனா, மலையினைச் சின்னபின் னம்படுத் திடுதலும், சினவிஎன் முன்னவன் முன்னர்வந்து, அனையவன் முனைதலும். 2 2. அரிகள் - குரங்குகள். அனையவன் முனைதலும் - அவனோடு போர் செய்தலும். இருவரும் வையமும் வானமும் நடுங்கும்படி பெரும் போர் புரிந்தனர். அற்றதா கியசெருப் புரிவுறும் அளவினில், கொற்றவா லியும்,அவன் குவவுதோள் வலியொடும் பற்றி,ஆ சையின்நெடும் பணைமருப் பிணைபறித்து எற்றினான்; அவனும்வான் இடியின்நின்று உரறினான். 3 3. அற்றது ஆகிய - முடிவற்றதாகிய. அவன் - அந்தத் துந்துபியின். ஆசையின் - திசைகளை அளாவிய. நெடும்பணை - நீண்டு பருத்த. மருப்பு இணை - பற்கள் இரண்டையும். எற்றினான் - அடித்தான். உரறினான் - ஆரவாரித்தான். அவனை வாலி வானத்திலே வீசி யெறிந்தான்; அவுணன் உயிர் நீங்கிற்று. அவனுடைய உடல்தான் இது. `முட்டிவான் முகடுசென்று அளவிஇம் முடைஉடல் கட்டி,மால் வரையைவந்து உறுதலும், கருணையான் இட்டசா பமும்எனக்கு உதவும்; இவ் வியல்பினில் பட்டவா முழுவதும் பரிவினால் உரைசெய்தான். 4 4. இம்முடை உடல்கட்டி - இந்தக் கெட்ட நாற்றமுள்ள உடல் கூடு. உறுதலும் - விழுந்தவுடன். கருணையான் - கருணை யுள்ள மதங்கமுனிவர். எனக்கு உதவும் - எனக்கு உதவி செய்கின்றது என்று உரைத்து. இவ் இயல்பினில் பட்டஆ - இவ்வாறு நடந்த வரலாறு. மதங்கமுனிவர் தன் ஆசிரமத்தில் அவ்வுடல் விழுந்த தனால், வாலியின்மேல் சினந்து, அவனோ, அவனைச் சேர்ந்தவர் களோ இம்மலைக்கு வந்தால், கல்லாகக் கடவர் என்று சபித்தார். வேறு கேட்டனன் அமலனும் கிளந்த வாறெலாம், வாள்தொழில் இளவலை `இதனை மைந்தநீ ஓட்டஎன அவன்கழல் விரலின் உந்தினான், மீட்டது விரிஞ்சன்நாடு உற்று மீண்டதே. 5 5. ஓட்டுஎன - தள்ளுக என்று சொல்ல. உந்தினான் - தள்ளினான். மீட்டுஅது - திரும்பவும் அவ்வுடல்கட்டி. இலக்குவனது ஆற்றலையும் வானரர்கள் அறிந்து ஆரவாரம் புரிந்தனர். அதன் பின் சுக்கிரீவன் இராமனை நோக்கி `தலைவனே உனக்குக் காட்டவேண்டியது இன்னொன்று உண்டு என்று உரைத்தான். 6. கலன் காண் படலம் சீதையின் அணிகலன்களைக் காட்டல் `இவ்வழி, யாம்இயைந்து இருந்தது ஓர்இடை, வெவ்வழி இராவணன் கொணர, மேலைநாள் செவ்வழி நோக்கி,நின் தேவி யேகொல்ஆம், கவ்வையின் அரற்றினள், கழிந்த சேண்உளாள். 1 கலன்காண் படலம்: இராமன் சீதையின் அணிகலன் களைக் கண்டு வருந்திய செய்தியைக் கூறும் பகுதி. 1. இருந்தது ஓர்இடை - இருந்த ஒரு சமயத்தில். செவ்வழி நோக்கி - நல்ல வழியைப் பார்த்து. கழிந்த சேண் உளான் - மிகுந்த தூரத்தில் உள்ளவன். `உழைவரின் உணர்த்துவது உளதென்று உன்னியோ! குழைபொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்; மழைபொரு கண்இணை வாரி யோடு,தன் இழைபொதிந்து இட்டனள்; யாங்கள் ஏற்றனம். 2 2. உழைவரின் - தம்மிடம் வந்தால்; தூதரைப்போல. குறித்தது - நினைத்ததை. கண்இணை வாரியோடு - கண்களில் சிந்தும் நீரோடு. தன் இழை - தனது அணிகலன்களை. பொதிந்து - மூட்டையாகக் கட்டி. `வைத்தனம் இவ்வழி; வள்ளல்; நின்வயின் உய்த்தனம் தந்தபோது உணர்தி; ஆல்எனாக், கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினன் நெய்த்தலைப் பால்கலந்து அனைய நேயத்தான். 3 3. உய்த்தனன் தந்தபோது - கொண்டுவந்து கொடுத்தபோது. உணர்தியால் - அதன் உண்மையை அறிவாய். நெய்த்தலை - நெய்யுடன். கலன்களைக்கண்டு கலக்கம் விட்டபேர் உணர்வினை விளித்த, என்கெனோ! சுட்டன உயிரை,அவ் வணிகள், என்கேனோ! கொட்டின சாந்தெனக் குளிர்ந்த, என்கெனோ! சுட்டன என்கெனோ! யாது சொல்லுகேன்! 4 4. விட்டபேர் உணர்வினை - நீங்கியபேர் அறிவை. விளித்தன - திரும்ப அழைத்தன. அட்டன - கொன்றன. சுக்கீரிவன் சொல்லியவை இராமன் துக்கம் தாங்கமுடியாமல் சோர்ந்தான்; சோர்ந்து சாய்ந்தவனைச் சுக்கிரீவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான். தாங்கினன் இருத்திஅத் துயரம் தாங்கலாது ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான்; `வீங்கிய தோளினாய்! வினையி னேன்,உயிர் வாங்கினென் இவ்வணி வருவித் தேன்எனா. 5 5. தாங்கினன் இருத்தி - சுக்கிரீவன் இராமனைத் தாங்கி உட்கார வைத்து. `இவ்அணி வருவித்தேன் உயிர் வாங்கினேன். எனா - என்று. ‘அயன்உடை அண்டத்தின் அப்பு றத்தையும் மயர்வுஅற நாடி,என் வலியும் காட்டி,உன் உயர்புகழ்த் தேவியை உதவல் பாலென்;ஆல்; துயர்உழன்று அயர்தியோ; சுருதி நூல்வலாய்! 6 6. மயர்வுஅற நாடி - சோர்வில்லாமல் தேடி. உதவற்பாலன் - கொண்டுவந்து கொடுப்பேன். `திருமகள் அனையஅத் தெய்வக் கற்பினள் வெருவரச் செய்துள வெய்ய வன்புயம் இருபதும், ஈரைந்து தலையும், ஏவின்உன் ஒருகணைக்கு ஆற்றுமோ? உலகம் ஏழுமே. 7 7. வெருவரை - அஞ்சும்படி. வெய்யவன் - கொடியவனாகிய இராவணன். `புயம் இருபதும், ஈரைந்து தலையும், உலகம் ஏழும், உன் ஒரு கணைக்கு ஆற்றுமோ? `பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார்; கருமமே அல்லது பிறிதுஎன் கண்டது? தருமம்நீ அல்லது தனித்து வேறுண்டோ! mUiknaJ cd¡F,ËW mty« T®ânah! 8 8. பெருமை பேசலார் - தம் பெருமையைத் தாமே சொல்ல மாட்டார்கள். அவலம் கூர்தியோ - துன்பம் அடைகின்றாயோ. `என்னுடைச் சிறுகுறை முடித்தல் ஈண்டுஒரீஇப் பின்உடைத் தாயினும் ஆகப்; பேதுறும் மின்இடைச் சனகியை மீட்டு மீடும்;ஆல், பொன்னுடைச் சிலையினாய்! விரைந்து போய்;என்றான். 9 9. ஈண்டு ஓரிஇ - இப்பொழுது நீங்கி. பேதுறும் - வருந்து கின்ற. மீட்டுமீடும் – மீட்டுக் கொண்டு திரும்புவோம். உணர்ச்சிபெற்ற இராமன் உரை `விலங்குஎழில் தோளினாய்! வினையி னேனும்இவ் இலங்குவில் கரத்தினன் இருக்க வே,அவள் கலன்கழித் தனள்;இது கற்பு மேவிய பொலன்குழைத் தெரிவையர் புரிந்து ளோர்கள்யார்? 10 10. விலங்கு எழில் - மலைபோன்ற அழகிய. வினையினேனும் - தீவினை யுடையோனாகிய யானும். இலங்குவில் கரத்தினன் - வில்லைப்பிடித்த கையையுடையவனாய். கலன் கழித்தனள் - ஆபரணங்களைக் கழற்றினாள். இது - இதுபோல். `ஆறுடன் செல்பவர், அம்சொல் மாதரை வேறுளார் துயர்செயின், விலக்கி,வெம்சமத்து ஊறுஉறத் தம்உயிர் உகுப்பர்; என்னையே தேறினள் துயரம்நான் தீர்க்க கிற்றிலேன். 11 11. ஆறுஉடன் செல்பவர் - வழியிலே செல்லுகின்றவர் களாகிய. விலக்கி - அவர்களைத் தடுத்து. ஊறுஉற - துன்பம் உண்டாக. என்னையே தேறினள் - என்னை நம்பிய சீதையின். ‘விரும்புஎழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் வரும்பழி என்றுயான் மகுடம் சூடலேன்; கரும்புஅழி சொல்லியைப் பகைஞன் கைக்கொளப் பெரும்பழி சூடினேன்; பிழைத்தது என்அரோ? 12 12. வீயுமேல் - அழியுமானால். கரும்புஅழி சொல்லியை - கரும்பின் சுவையை அழிக்கின்ற சொல்லையுடைய சீதையை. பிழைத்ததுஎன் - நான் குற்றத்திலிருந்து தப்பியது எப்படி? இவ்வாறு வருந்திய இராமன் `முதலில் உன் குறையை முடிப்பேன் என்று சுக்கிரீவனைப் பார்த்து மொழிந்தான் உடனே மாருதி இராமனை வணங்கிக் கூறுகின்றான். ‘கொடும்திறல் வாலியைக் கொன்று, கோமகன் கடும்கதி ரோன்மகன் ஆக்கிக், கைவளர் நெடும்படை கூட்டினால் அன்றி, நேடரிது அடும்படை அரக்கர்தம் இருக்கை; ஆணையாய்! 13 13. ஆணையாய் - செல்வாக்குள்ளவனே. கோமகன் - அரசனாக. கைவளர் மிகுந்து. நேடரிது - தேடமுடியாது. `ஏழுபத்து ஆகிய வெள்ளத்து எம்படை ஊழியில் கடல்என உலகம் போர்க்கும்;ஆல், ஆழியைக் குடிப்பினும், அயன்செய் அண்டத்தைக் கீழ்மடுத்து எடுப்பினும், கிடைத்த செய்யும்;ஆல். 14 14. உலகம் போர்க்கும் - உலகத்தையே மூடிவிடும். குடிப்பினும் - குடிக்கவேண்டுமாயினும். கீழ்மடுத்து எடுப்பினும் - அடியோடு சேர்த்து - எடுக்க வேண்டுமாயினும். `ஆதலால் அன்னதே அமைவ தாம்;என நீதியாய் நினைந்தனென்; எனநி கழ்த்தினான்; சாதுஆம் என்ற,அத் தனுவின் செல்வனும், `போதும்நாம் வாலிபால் என்னப் போயினார். 15 15. சாதுஆம் - சற்குணமுள்ளவனாம். செல்வன் - இராமன். போதும் - போவோம். அவர்கள் பத்து யோசனை தூரம் கடந்து சென்றனர். வாலியிருந்த கிஷ்கிந்தையை அடைந்தனர். 7. வாலி வதைப் படலம் இராமன் சுக்கிரீவனைப் பார்த்து `நீ வாலியை அழைத்துப் போர் செய்! நான் தனித்து நின்று வாலியின் மேல் கணைவிட்டுக் கொல்வேன் என்றான். உடனே சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அறை கூவினான். வாலி போருக்கெழுதல் மால்பெரும் கடகரி முழக்கம், வாள்அரி ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய ஆர்ப்பொலி கேட்டனன், அமளி மேல்ஒரு பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான். 1 வாலி வதைப் படலம்: இராமன் வாலியைக் கொன்ற நிகழ்ச்சியைக் கூறும் பகுதி. 1. மால்பெரும் - மயக்கத்தையுடைய பெரிய. வாள்அரி - கொடிய சிங்கமானது. `பான்மையான்.... கேட்டனன். எழுந்தனன் வல்விரைந்து, இறுதி ஊழியில் கொழுந்திரைக் கடல்கிளர்ந் தனைய கொள்கையான், அழுந்தியது அக்கிரி; அருகின் மால்வரை விழுந்தன, தோள்புடை விசித்த காற்றினே. 2 2. தோள்புடைவிசித்த காற்றினே - தோள்கள் பக்கங் களிலே பரப்பிய காற்றினால். `அருகின்மால்வரை விழுந்தன. `வந்தெனென்! tªbjbd‹! என்ற வாசகம் இந்திரி முதல்திசை எட்டும் கேட்டன; சந்திரன் முதலிய தார கைக்குழாம் சிந்தின, மணிமுடிச் சிகரம் தீண்டவே. 3 3. இந்திரி - கீழ்த்திசை. மணிமுடி சிகரம் - மணிமுடி அணிந்த தலையாகிய மலைச்சிகரம். ஞாலமும், நாற்றிசைப் புனலும், நாகரும், மூலமும் முற்றிட, முடிவில் தீக்கும்அக் காலமும் ஒத்தனன்; கடலில் தான்கடை ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே. 4 4. மூலமும் முற்றிட - மூலகாரணமும் அழியும்படி. அக்காலமும் - அந்தக் காலாக்கினியையும். தான்கடை - தான் கடைந்ததனால் தோன்றிய. தாரையின் தடை ஆயிடைத், தாரைஎன்று அமிழ்தில் தோன்றிய வேயிடைத் தோளினாள் இடைவி லக்கினாள்; வாயிடைப் புகைவர, வாலி கண்வரும் தீயிடைத் தன்நெடும் கூந்தல் தீகின்றாள். 5 5. அமிழ்தில் தோன்றிய - அமுதம்போல் காணப்படுகின்ற. வேயிடை - மூங்கிலும் தோற்கும் தன்மைபொருந்திய. தீகின்றாள் - கருகுகின்றவளாய். `விலக்கலை! ÉL!விடு! ÉˤJ sh‹cu« fy¡»m¡ flšfilªJ mKJ f©bld cy¡fï‹ cÆ®Fo¤J xšiy ÛŸFtš kiy¡Fy kÆš!என, மடந்தை கூறுவாள். 6 6. விளித்துளான் - என்னைப் போருக்கு அழைத்துள்ள வனுடைய. உரம் - வலிமை. உலக்க - அழியும்படி. ஒல்லை - விரைவில். `கொற்றவ நின்பெரும் குலவுத் தோள்வலிக்கு இற்றனன் முன்னைநாள் ஈடுண்டு ஏகினான், பெற்றிலன் பெருந்திறல்; பெயர்த்தும் போர்செயற்கு உற்றது நெடும்துணை உடையை யால்என்றான் . 7 7. ஈடுண்டு ஏகினான் - எதிர்த்துநின்று ஓடினான். பெயர்த்தும் - மீண்டும். போர்செயற்கு - போர் செய்வதற்கு. உற்றது - வந்தது. நெடும் துணை - பெரிய துணையை. `பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில் பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம்? நீதுயர் ஒழிகென நின்று கூறினான். 8 8. பெற்றுடை ஊதிய வரங்களும் - பெற்றுள்ள பயனுடைய வரங்களும். தாரை அன்னது கேட்டவள், `அரச! ஆயவற்கு இன்உயிர் நட்பமைந்து இராமன் என்பவன், உன்உயிர் கோடலுக்கு உடன்வந் தான்,எனத், துன்னிய அன்பினர் சொல்லி னார்;என்றாள். 9 9. -. இராமனைப்பற்றி வாலியின் உரை `உழைத்தவல் இருவினைக்கு ஊறு காண்கிலாது அழைத்தயர் உலகினுக்கு, அறத்தின் ஆறெலாம் இழைத்தவற்கு, இயல்பல இயம்பி என்செய்தாய்! பிழைத்தனை பாவிஉன் பெண்மை யால்;என்றான். 10 10. உழைத்த - தாம் உழைத்துச் சேர்த்த. ஊறு காண்கலாது - முடிவுகாண இயலாமல். அழைத்துஅயர் - கூவி வருந்துகின்ற. அறத்தின் ஆறு எலாம் - அறநெறிகளை எல்லாம். இழைத்தவற்கு - நடத்திக் காட்டுகின்றவனுக்கு. ‘இருமையும் நோக்குறும் இயல்பி னாற்கு,இது பெருமையோ! இங்குஇதில் பெறுவது என்கொலோ! அருமையின் நின்று?உயிர் அளிக்கும் ஆறுஉடைத் தருமமே, தவிர்க்குமோ தன்னைத் தான்!அரோ. 11 11. இருமையும் நோக்குறும் - இம்மை மறுமைப் பயன்கள் இரண்டையும் எண்ணிப் பார்க்கின்ற. ஆறுஉடை - தன்மை யுள்ள. `தன்னைத்தான் தவிர்க்குமோ. அரோ; அசை. ஏற்றபேர் உலகெலாம் எய்தி, ஈன்றவள் மாற்றவள் ஏவ,மற் றவள்தன் மைந்தனுக்கு ஆற்றரும் உவகையால் அளித்த ஐயனைப், போற்றலை! ï‹dd òfwš ghiynah! 12 12. -. ‘நின்றபேர் உலகெலாம் நெருக்கி நேரினும் வென்றிவெம் சிலைஅலால் பிறிது வேண்டுமோ? தன்துணை ஒருவரும் தன்னில் வேறுஇலான் புன்தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ? 13 13. -. `தம்பியர் அல்லது, தனக்கு வேறுஉயிர் இம்பரின் இலது,என, எண்ணி ஏய்ந்தவன்; எம்பியும், யானும்,உற்று எதிர்ந்த போரிடை, அம்பிடை தொடுக்குமோ? அருளின் ஆழியான். 14 14. இம்பரின் - இவ்வுலகில். ஏய்ந்தவன் - அமர்ந்திருப்பவன். `இருத்திநீ இறைஇவண்; இமைப்பில் காலையில், உருத்தவன் உயிர்குடித்து, உடன்வந் தாரையும் கருத்தழித்து, எய்வென்; கலங்கல்; என்றனன்; விரைக்குழல், பின்,உரை விளம்ப அஞ்சினாள். 15 15. இவண் இறைநீ இருத்தி - இங்கே சிறிது நேரம் நீ இரு. கருத்து அழித்து - எண்ணத்தை மாற்றி. விரைக்குழல்; தாரையைக் குறித்தது. வாலி சுக்கிரீவன்மீது போர் செய்யப் புறப்படுதல் ஒல்லைச் செருவேட்டு உயர்வன்புய ஓங்கல்,உம்பர் எல்லைக்கும், அப்பால் இவர்கின்ற இரண்டினோடும், மல்லல் கிரியின்தலை வந்தனன் வாலி; கீழ்பால் தொல்லைக் கிரியின்தலை தோன்றிய ஞாயிறுஎன்ன. 16 16. ஒல்லைச் செருவேட்டு - விரைவில் போரை விரும்பி. உயர்வல்புய ஓங்கல் - உயர்ந்த வலிமையுள்ள புயங்களாகிய மலைகள். உம்பர் எல்லைக்கும் - வானின் எல்லைக்கும். இவர்கின்ற - செல்லுகின்ற. மல்லல் கிரியின்தலை - செழிப்புள்ள மலையின்மேல். தொல்லைக் கிரியின்தலை - உதயகிரியிலே. ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன், தானும்ஆர்த்தான், வேர்க்கின்ற வானத்துஉரு மேறு வெறித்துவீழப் போர்க்கின்றது எல்லாஉல கும்,பொதிர் வுற்றபூசல், கார்க்குன்றம் அன்னான்நிலந் தாவிய காலின்என்ன. 17 17. வானத்து - மேகங்களிலிருந்து. உரும்ஏறு வெறித்துவீழ - இடிகள் பயந்து கீழேவிழ. பொதிர்வுற்ற பூசல் - மிகுதிப்பட்ட ஓசையானது. `கார்க்குன்றம் அன்னான் நிலம்தாவிய காலின் என்ன எல்லா உலகமும் போர்க்கின்றது. கார்க்குன்றம் அன்னா ன் - திரிவிக்கிரம மூர்த்தி. காலின் - பாதத்தைப்போல. போர்க்கின்றது - பரவுகின்றது. இராம இலக்குவர்கள் உரையாடல் அவ்வேலையி ராமனும், அன்புடைத் தம்பிக்குஐய செவ்வேசெல நோக்குதி! தானவர் தேவர்நிற்க, எல்வேலை,எம் மேகம்,எக் காலொடு, எக்காலவெம்தீ வெவ்வேறு உலகத்திவர் மேனியை மானும்;என்றான். 18 18. எக்காலொடு - எந்தக் காற்றுதான். எக்கால வெம்தீ - எந்த ஊழித்தீதான். இவன் மேனியை மானும் - இந்த வாலியை ஒத்திருக்கும். வள்ளற்குஇளை யான்பகர் வான்,`இவன், தம்முன்வாணாள் கொள்ளக், கொடும் கூற்றுவ னைக்கொணர்ந் தான்,குரங்கின் எள்ளற்குஉறும் போர்செய எண்ணினன் என்னும்இன்னல் உள்ளத்திடை ஊன்ற, `உணர்ந்திலென் ஒன்றும்என்றான். 19 19. என்னும் இன்னல் உள்ளத்தின் ஊன்ற - என்னும் துன்பம் (இலக்குவன் தன்) உள்ளத்திலே பொருந்த. ஆற்றாது பின்னும்பகர் வான்,`அறத் தாறுஅழுங்கத் தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விதுஅன்றால்; மாற்றான்எனத் தம்முனைக் கொல்லிய வந்துநின்றான்; வேற்றார்கள் திறத்துஇவன் தஞ்சம்என்? åu!என்றான். 20 20. அறத்தாறு அழுங்க - அறநெறி கெடும்படி. `m¤jh!இது கேள்என, ஆரியன் கூறுவான்,`இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ! v¤jha® tƉ¿D« ã‹ãwª jh®fŸvšyh« x¤jhš, guj‹bgÇJ c¤jk‹ Mjšc©nlh? 21 21. பின்பிறந்தார்கள் எல்லாம் - பின்னே பிறந்தவர்கள் எல்லாம். ஒத்தால் - ஒத்து வாழ்ந்தால். வாலி சுக்கிரீவர்களின் போர் வீரத்திற லோர்இவை இன்ன விளம்பும்வேலை, தேரில்திரி வான்மகன், இந்திரன் செம்மல், என்றுஇப் பாரில்திரி யும்பனி மால்வரை அன்னபண்பார், மூரித்திசை யானைஇ ரண்டென முட்டினாரே. 22 22. பண்பார் - தன்மையுள்ளவர்களாய். முட்டினார் - போர் செய்தனர். வேறு உரத்தி னால்மடுத்து உந்துவர்; பாதம்இட்டு உதைப்பர்; கரத்தி னால்விசைத்து எற்றுவர்; கடிப்பர்;நின்று இடிப்பர்; மரத்தி னால்அடித்து உரப்புவர்; பொருப்பினம் வாங்கிச் சிரத்தின் மேல்எறிந்து ஒறுக்குவர்; தெழிப்பர்;தீ விழிப்பர். 23 23. உரத்தினால் மடுத்து உந்துவர் - மார்பினால் முட்டித் தள்ளுவார்கள். எற்றுவர் - அடிப்பர். உரப்புவர் - அதட்டுவர். உறுக்குவர் - பயமுறுத்துவர். தெழிப்பர் - ஆரவாரம் புரிவார்கள். அன்ன தன்மையர் ஆற்றலின் அமர்புரி பொழுதின், வல்நெ டும்தடம் திரள்புயத்து அடுதிறல் வாலி, சொன்ன தம்பியைத், தும்பியை அரிதொலைத் தென்ன, கொல்ந கங்களின், கரங்களின், குலைந்துக மலைந்தான். 24 24. வல்நெடும்தடம் திரள்புயத்து - வலிமையுள்ள உயர்நத் பெரிய திரண்ட புயத்தையுடைய. அடுதிறல் - கொல்லும் ஆற்றலமைந்த. தும்பி - யானை. அரி - சிங்கம். குலைந்துஉக - உறுதி சிதறும்படி. மலைந்த போதுஇனைந்து, இரவிசேய், ஐயன்மாடு அணுகி, உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட, `உள்ளம் குலைந்தி டேல்உடை வேற்றுமை தெரிந்திலம்! கொடிப்பூ மிலைந்து செல்கஎன விடுத்தனன்; எதிர்ந்தனன் மீட்டும். 25 25. இனைந்து - வருந்தி. உணங்கினன் - சோர்வடைந்து. குலைந்திடேல் - கலங்காதே. மிலைந்து - அணிந்து. `எடுத்துப் பாரிடை எற்றுவன் பற்றிஎன்று இளவல் கடித்த டத்தினும், கழுத்தினும், தன்இரு கரங்கள் மடுத்து மீக்கொண்ட வாலிமேல், கோல்ஒன்று வாங்கித் தொடுத்து நாணொடு, தோள்இறுத்து இராகவன் துரந்தான். 26 26. கடிதடத்திலும் - இடுப்பினும். மடுத்து மீக்கொண்ட - பிடித்து மேலே தூக்கிய. நாணொடு தோள்இறுத்து - நாணுடன் தோளிலே படியும் படி செய்து. வாலி வலி அழிதல் அலங்கு தோள்வலி அழிந்தஅத், தம்பியை, அருளான் வலங்கொள் பார்இடை எற்றுவான் உற்றபோர் வாலி; கலங்கி, வல்விசைக் கால்கிளர்ந்து எறிவுறக், கடைநாள் விலங்கல் மேருவும் வேர்பறிந் தால்என வீழ்ந்தான். 27 27. அழிந்த - அழிந்தவனாகிய. அருளான் - இரக்கம் காட்டாமல். வலகொள் - உறுதியுள்ள. கலங்கி - நிலைகலங்கி. வல்விசைக்கால் கிளர்ந்து எறிவுற - மிகுந்த வேகத்தையுடைய காற்று எழுந்து வீச. கடைநாள் - இறுதிக் காலத்தில். விலங்கல் மேருவும் - மலையாகிய மேருவும். சையம், வேரொடும் உரும்உறச் சாய்ந்துஎனச் சாய்ந்து, வைய மீதிடைக் கிடந்த,போர் அடுதிறல் வாலி, வெய்ய வன்தரு மதலையை மிடல்கொடு கவரும் கைநெ கிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன் கடும்கணை கவர்தல். 28 28. உரும்உற - இடி விழுந்ததனால். சையம் - மலை. மதலையை - சுக்கிரீவனை. மிடல்கொடு கவரும் - வலிமையால் தூக்கிய. வெற்றி வீரனது அடுகணை அவன்மிடல் உரத்தூடு உற்றது; அப்புறத்து உறாதமுன் உறுவலிக் கரத்தால் பற்றி வாலினும் காலினும் பிணித்தகப் படுத்தான்; கொற்ற வெம்கொடு மறலியும் சிரதலம் குலைந்தான். 29 29. மிடல்உரத்து ஊடு - வலிமையுள்ள மார்பின் நடுவிலே. உறுவலி - மிகுந்த வலிமையுள்ள. அகப்படுத்தான் - அப்புறம் போகமுடியாமல் தடுத்தான். குலைந்தான் - நடுங்கினான். தேவ ரோ!’என அயிர்க்கும்;‘அத் தேவர்இச் செயலுக்கு ஆவ ரோ;அவர்க்கு ஆற்றல்உண் டோ!எனும், ‘அயலோர் ஏவ ரோஎன நகைசெயும்; ‘ஒருவனே இறைவர் மூவ ரோடும்ஒப் பான்செய லாம்என மொழியும். 30 30. -. `வில்லி னால்துரப்பு அரிதுஇவ்வெம் சரம்;என வியக்கும்; சொல்லி னால்நெடு முனிவரோ தூண்டினார் என்னும்; பல்லி னாம்கடிப் புறும்பல நாலும்;தன் உரத்தைக் கல்லி ஆர்ப்பொடு பறிக்கும்அப் பகழியைக் கண்டான். 31 31. -. வாசத் தாரவன் மார்பெனும் மலை,வழங்கு அருவி ஓசைச் சோரியை நோக்கினன், உடன்பிறப் பென்னும் பாசத் தால்பிணிப் புண்டஅத் தம்பியும், பசுங்கண் நேசத் தாரைகள் சொரிதர நெடுகிலும் சேர்ந்தான். 32 32. வழங்கு - தரும். ஓசை அருவிச் சோரியை - ஓசையுள்ள அவிரு போன்ற இரத்தவெள்ளத்தை. நேசம் தாரைகள் - அன்பைக்காட்டும் நீர்த்தாரைகள். நிலத்திலே கிடக்கும் வாலி, `அம்பிலே பொறித்த பெயரையாவது அறிவோம் என்று எண்ணினான். அம்பை இழுத்துப் பிடித்தான். அதில் உள்ள பெயரைக் கண்டான். வாலியின் செய்கை வேறு மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிபெரும் பதத்தைத், தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும் செம்மைசேர் நாமந் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான். 33 33. தமர்க்கு - அடியவர்களுக்கு. பதத்தை - சொல்லை. `இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க் காகத் தங்கள் வில்லறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல்நூல் சொல்அறம் துறந்தி லாத சூரியன் மரபும், தொல்லை நல்அறம் துறந்தது; என்னா, நகைவர, நாண்உட் கொண்டான். 34 34. இல்லறம் துறந்த நம்பி - இல்லறத்தைவிட்டுக் கானகம் அடைந்த இராமன். அறம் துறந்திலாத - தருமத்தைக் கைவிடாத. தொல்லை - பழமையான. வெள்கிட மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும் உள்கிடும்; ‘இதுவும் தான்ஓர் ஓங்குஅற மோ?என்று உன்னும்; முள்கிடும் குழியில் புக்க மூரிவெம் களிநல் யானை தொள்கொடும் கிடந்தது என்னத் துயர்உழந்து அழிந்து சோர்வான். 35 35. முள்கிடும் குழியில்புக்க - முழுகும் குழியில் விழுந்த. மூரி - வலிமை. தொள்கொடும் - விலங்குடன். சோர்வான் - சோர்கின்ற வாலி. `இறைதிறம் பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின் முறைதிறம் பினனால்; என்று மொழிகின்ற முகத்தான் முன்னர், மறைதிறம் பாத வாய்மை மன்னர்க்கு, மனுவில் சொல்லும் துறைதிறம் பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற. 36 36. இறை திறம்பினன் ஆல் - தலைவனே நீதி தவறினான். இழிந்துளோர் - தாழ்ந்தவர்களின். இயற்கை - தன்மை. என்னே - என்னாவது. மறைதிறம் பாத - வேதநெறியில் மாறுபடாத. மனுவில்சொல்லும் துறை - மனுநூலில் சொல்லப்பட்ட அறநெறியை. திறம்பாமல் - தவறாமல். வாலி இராமனைப் பழித்தல் கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து, மண்உற்று, வரிவில் ஏந்தி வருவதே போலும், மாலைப் புண்உற்றது அனைய சோரிப் பொறியொடும் பொடிப்ப நோக்கி `எண்உற்றாய்! v‹brŒ jhŒ!என்று ஏசுவான் இயம்பல் உற்றான். 37 37. புண்உற்றது அனைய சோரி - புண்ணிலிருந்து வருகின்றது போன்ற இரத்தம். பொறிஓடும் பொடிப்பநோக்கி - கண்களி லிருந்து வருகின்ற நெருப்புப் பொறிகளோடும் சிந்தும்படி இராமனைப் பார்த்து. எண் உற்றாய் - யாது நினைத்தாய். ‘வாய்மையும் மரபும் காத்து மன்உயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்த னே!நீ! பரதன்முன் தோன்றி னாயே? தீமைதான் பிறரைக் காத்துத், தான்செய்தால் தீங்கன் றாமோ? தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும் தழுவி நின்றாய். 38 38. பிறரைத் தீமை தான் காத்து - பிறரை மட்டும் தீமை செய்யாமல் தடுத்து. `குலம்இது; கல்வி யீது; கொற்றம்ஈது; உற்று நின்ற நலம்இது; புவனம் மூன்றும் நாயகம் உன்னது அன்றோ? வலம்இது; இவ்வுலகம் தாங்கும் வண்மையீது; என்றால், திண்மை அலமரச் செய்ய லாமோ? அறிந்திருந்து அயர்ந்து ளார்போல். 39 39. குலம், கல்வி, கொற்றம், நலம், நாயகம் இவைகள் எல்லாம் உன்னுடையவை அன்றோ, திண்மை - இந்த உறுதி களையெல்லாம். அலமர - கலங்கும்படி. ‘கோவியல் தருமம், உங்கள் குலத்துஉதித் தோர்கட்கு எல்லாம், ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ? ஆவியைச், சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியைப், பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை? 40 40. கோஇயல் தருமம் - அரசியலுக்குரிய கடமை. ஆவியை - உயிராகியவளை. அமிழ்தின்வந்த - அமுதம்போல் கிடைத்த. ‘அரக்கர்,ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறுஓர் குரக்கினத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற்று உண்டோ? இரக்கம்எங்கு உகுத்தாய்! என்பால் எப்பிழை கண்டாய் அப்பா! பரக்கழி இதுநீ பூண்டால், புகழையார் பரிக்கற் பாலார்? 41 41. ஓர்அழிவு - ஓர் துன்பத்தை. அதற்கு - அதன் பொருட்டு. பரக்கழி இது - பெரிய குற்றமாகிய இதனை. யார் பரிக்கற்பாலார் - தாங்கக் கூடியவர் வேறு யார்? ‘ஒலிகடல் உலகம் தன்னில், ஊர்தரு குரங்கின் மாடே, கலியது காலம் வந்து கலந்ததோ? கருணை வள்ளால்! மெலியவர் பால தேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும்; வலியவர் மெலிவு செய்தால் புகழ்அன்றி வசையும் உண்டோ? 42 42. ஊர்தரு குரங்கின்மாடே - அலைந்து திரிகின்ற குரங்கு களின் பக்கத்தில் மட்டும். விழுப்பம் - சிறப்பு. `கூட்டுஒரு வரையும் வேண்டா கொற்றவ! பெற்ற தாதை பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து, நாட்டொரு கருமம் செய்தாய்! எம்பிக்குஇவ் அரசை நல்கிக் காட்டொரு கருமம் செய்தாய்! fUkªjh‹ ïj‹nkš c©nlh? 43 43. கருமம் - காரியம்; கருமாதி; இறுதிக்கடன். `அறைகழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது, ஆண்மைத் துறையெனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நன்னூற் கெல்லாம் இறைவநீ! என்னைச் செய்தது ஈதெனில், இலங்கை வேந்தன் முறையல செய்தான் என்று முனிதியோ? KÅÉ yhjhŒ! 44 44. ஆண்மைத்துறை - வீரமுள்ள செயல். எனல் ஆயிற்று அன்றே - என்று கூறும்படி முடிந்ததோ? முனிதியோ - கோபிப்பாயோ. `இருவர்போர் எதிரும் காலை, இருவரும் நல்உற் றாரே; ஒருவர்மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல் ஒளித்து நின்று வரிசிலை குழைய வாங்கி வாயம்பு மருமத்து எய்தல், தருமமோ? பிறிதுஒன்று ஆமோ? தகுகிலது என்னும் பக்கம். 45 45. குழைய வாங்கி - வணங்கும்படி வளைத்து. வாய்அம்பு - கூர்மையான கணையை. தகுகிலது - தக்கதன்று. என்னும்பக்கம் - என்று கூறும் பட்சபாதமேயாகும். வேறு ‘வீரம் அன்று; விதிஅன்று; மெய்ம்மையின் வாரம் அன்று;நின் மண்ணினுக்கு என்உடல் பாரம் அன்று; பகையன்று; பண்புஒழிந்து ஈரம் இன்றிஇது என்செய்த வாறுஅரோ? 46 46. விதி - ஒழுங்கு. வாரம்அன்று - பகுதியும் அன்று. பண்பு அழிந்து - குணம் கெட்டு. ‘இருமை நோக்கிநின்று, யாவர்க்கும் ஒக்கின்ற அருமை ஆற்றல்அன் றோ,அறம் காக்கின்ற பெருமை என்பது; என்?பிழை பேணல்விட்டு ஒருமை நோக்கி, ஒருவற்கு உதவலோ? 47 47. யாவர்க்கும் ஒக்கின்ற - எல்லோர்க்கும் சமமாக நிற்கின்ற. பிழைபேணல்விட்டு - பிழை நேராமல் காப்பதைவிட்டு. ஒருமை - ஒருபக்கம். ‘பிழைபேணல் விட்டு, ஒருமை நோக்கி, ஒருவற்கு உதவலோ இது என்? ‘செயலைச் செற்ற பகைதெறு வான்தெரிந்து, அயலைப் பற்றித் துணைஅமைந் தாய்எனின், புயலைப் பற்றும்அப் பொங்கரி போக்கிஒர் முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ? 48 48. செயலைச் செற்ற - உங்கள் பாதுகாவலை அழித்த. பகைதெறுவான் தெரிந்து - பகையை அழிக்க நினைத்து. புயலை - மேகம்போன்ற யானையை. பொங்கு அரி - சினமிகுந்த சிங்கத்தை - போக்கி - விட்டு. ‘கார்இ யன்ற நிறத்த களங்கம்ஒன்று ஊர்இ யன்ற மதிக்குஉள தாம்எனச், சூரி யன்மர புக்கும்,ஓர் தொன்மறு, ஆரி யன்பிறந்து ஆக்கினை ஆம்;அரோ! 49 49. கார்இயன்ற நிறத்த - கருமைபொருந்திய நிறத்தை யுடைய. ஊர் இயன்ற - ஊர்கோள் அமைந்த, ஓர் தொல்மறு - ஓர் அழியாத களங்கத்தை. `மற்றொ ருத்தன்வ லிந்துஅறை கூவவந்து உற்ற என்னை, ஒளித்துயிர் உண்டநீ, இற்ற தன்பின் இகல்அரி ஏறுஎன நிற்றி போலும், கிடந்த நிலத்து;அரோ; 50 50. இற்றதன்பின் - இறந்தபின். கிடந்தநிலத்து இகல்அரி ஏறுஎன நிற்றிபோலும் - நான் கிடந்த இடத்தில் வலிமையுள்ள ஆண் சிங்கம்போல நாணம் இன்றி நிற்கின்றாய்போலும். ‘நூல்இ யற்கையும் நும்குலத்து உந்தையர் போல்இ யற்கையும் சீலமும் போற்றலை! வாலி யைப்படுத் தாய்அலை, மன்அற வேலி யைப்படுத் தாய்விறல் வீரனே! 51 51. படுத்தாய்அலை - வீழ்த்தினாய் அல்லை. மன்அற வேலியை - அரச தர்மமாகிய வேலியை. படுத்தாய் - அழித்தாய். ‘தாரம் மற்றொரு வன்கொளத், தன்கையில் பார வெம்சிலை வீரம் பழுதுற; நேரும் அன்று மறைந்து நிராயுதன் மார்பின் எய்யவோ வில்இகல் வல்லதோ? 52 52. பாரவெம்சிலை - பெரிய கொடிய வில்லை வைத்திருப்பது. நேரும் - நேர்மையும். வில்இகல் வல்லது - நீ விற்போரில் வல்லவனானது. `மறைந்து நிராயுதன் மார்பின் எய்யவோ. இராமன் தந்த விடை `பிலம்புக் காய்நெடு நாள்,பெய ராய்,எனாப் புலம்புற்று உன்வழிப் போதல்உற் றான்தனைக், குலம்புக்கு ஆன்றமுதியர் `குறிக்கொள்நீ அலம்பொன் தாரவ னேஅரசு; என்றலும். 53 53. பெயராய் - திரும்பாமலிருந்தாய். எனா - என்று. குலம்புக்கு - உன்குலத்திலே பிறந்து. ஆன்ற - அறிவு நிரம்பிய. அலம்பொன் - அமைந்த அழகிய. `வானம் ஆளஎன் தம்முனை வைத்தவன் தானும் மாளக், கிளையின் இறத்தடிந்து, யானும் மாள்வென்; இருந்துஅரச ஆள்கிலென்; ஊன மான உரைபகர்ந் தீர்என. 54 54. கிளையின்இற - சுற்றத்தோடு அழியும்படி. தடிந்து - கொன்று. ஊனம் - குற்றம். `பற்றி, ஆன்ற படைத்தலை வீரரும், முற்று ணர்ந்த முதியரும், முன்பரும், `எற்றும் நும்அரசு எய்துவை யாம்எனக், கொற்ற நன்முடி கொண்டது;இக் கோதிலான். 55 55. முன்பரும் - பெரியோர்களும். எற்றும் - எப்படியாவது. கொண்டது - ஏற்றுககொண்டதாகும். கோது - குற்றம். `வந்த நின்னை வணங்கி மகிழ்ந்தனன்; எந்தை என்கண் இனத்தவர் ஆற்றலின் தந்த உன்அரசு; என்று தருக்கிலான் முந்தை உற்றது சொற்ற முனிந்துநீ. 56 56. ஆற்றலின் - வலுக்கட்டாயமாக. தந்தஉன் அரசு - தந்த உன் அரசாட்சியை ஏற்றுக்கொள். சொற்ற - சொல்லியவைகளை. ‘கொல்லல் உற்றனை உம்பியைக், கோதுஅவற்கு இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை; ‘அல்லல் செய்யல்; உனக்குஅப யம்;பிழை புல்லல்;’ என்னவும் புல்லலை; பொங்கினாய்! 57 57. பிழைபுல்லல் - குற்றத்தை மனத்தில் கொள்ளாதே. புல்லலை - ஆதரிக்காமல் போனாய். `ஊற்றம் உற்றுடை யான்,`உனக்கு ஆரமர் தோற்றும் என்று தொழுத கையனைக், `கூற்றம் உண்ணக் கொடுப்பென்,`என்று எண்ணினாய்; நாற்றி சைக்கும் புறத்தையும் நண்ணினான். 58 58. ஊற்றம்உற்று உடையான் - வலிமை பொருந்தியவனா யிருந்தும். ஆர்அமர் உனக்குத் தோற்றும் - அமைந்த போரிலே உனக்குத் தோற்றோம். அன்ன தன்மை அறிந்தும் அருளலை! `பின்ன வன்இவன் என்பதும் பேணலை; வன்னி தான்இடு சாப,வரம்புஉடைப் பொன்ம லைக்குஅவன் நண்ணலின் போகலை. 59 59. வன்னிதான்இடு - மதங்கமுனிவரால் இடப்பட்ட. சாபவரம்பு உடை - சாபமாகிய பாதுகாப்பை உடைய. நண்ணலின் - போய்ச் சேர்ந்ததனால். ‘ஈரம் ஆவதும், இற்பிறப்பு ஆவதும், வீரம் ஆவதும், கல்வியின் மெய்ந்நெறி வாரம் ஆவதும், மற்றொரு வன்புணர் தாரம் ஆவதைத் தாங்கும் தருக்குஅரோ! 60 60. ஈரம் - அன்பு. கல்வியின் - கல்வியால் அறிந்த. மெய்ந் நெறி - உண்மை நெறியின். வாரம் ஆவதும் - செயலாவதும். தாங்கும் - பாது காக்கும். `மறம்தி றம்பல், வலியம் எனாமனம் புறம்தி றம்ப, எளியவர்ப் பொங்குதல்; அறம்தி றம்பல் அரும்கடி மங்கையர் திறம்தி றம்பல்; தெளிவுடை யோர்க்கெலாம். 61 61. `தெளிவுடையோர்க்கெலாம், வலியம்எனா மனம்புறம் திறம்பல், எளியவர்ப் பொங்குதல், அரும்கடி மங்கையர்த்திறம் திறம்பல், அறம் திறம்பல். தெளிவு - அறிவு. புறம்திறம்பல் - வேறு வழியில் செல்லுதல். மங்கையர்திறம் - மங்கையர் கற்பை. திறம்பல் - அழித்தல். அறம்திறம்பல் - இவைகள் அறநெறியி லிருந்து தவறுவனவாம். ‘தருமம் இன்னது எனும்தகைத் தன்மையும், இருமை யும்தெரிந்து எண்ணலை; எண்ணினால் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப், பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ? 62 62. -. ஆத லானும், அவன்எனக்கு ஆருயிர்க் காத லான்,என லானும்,நின் கட்டெனென்; ஏதி லாரும், எளியர்என் றால்அவர் தீது தீர்ப்பதுஎன் சிந்தைக் கருத்து;அரோ! 63 63. ஏது இலாரும் - ஆதரவற்றவர்களையும். எளியர் - மெலிந்தவர் களையும். தீதுதீர்ப்பது - தீமையிலிருந்து நீக்குவது. வாலியின் மறு மொழி `ஐய! நுங்கள் அரும்குலக் கற்பின்அப் பொய்யில் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல் செய்தி லன்,எமைத் தேமலர் மேலவன்; எய்தின் எய்திய தாக இயற்றினான். 64 64. ஏய்ந்த - அமைந்த. புணர்ச்சிபோல் - திருமணம்போல். தேமலர் மேலவன் - பிரமன். எமைச் செய்திலன் - எம்மை மணம்புரிந்துகொண்டு வாழும்படி படைக்கவில்லை. எய்தின் எய்தியதுஆக - அடைந்தபடி அடைந்து வாழும்படியாக. ‘மணமும் இல்லை மறைநெறி வந்தன; குணமும் இல்லைக் குலமுதற்கு ஒத்தன; உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கலால் நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்! 65 65. உணர்வு சென்றுழிச் செல்லும் - மனம்போனபடி வாழும் வாழ்க்கை அல்லாமல். `மறை நெறி வந்தன மணமும் இல்லை; குலமுதற்கு ஒத்தன குணமும் இல்லை. மீண்டும் இராமன் தந்த மறுமொழி ‘நலம்கொள் தேவரின் தோன்றி, நவைஅறக் கலங்க லாஅற நன்னெறி காண்டலின், விலங்கு அலாமை விளங்கியது; ஆதலால் அலங்க லார்க்குஇது அடுப்பதுஅன் றாம்;அரோ! 66 66. கலங்கா - கலக்கம் இன்றித் தெளிவான. அலங்கலார்க்கு - வீரர்களுக்கு. `பொறியின் யாக்கைய தோ,புலன் நோக்கிய அறிவின் மேலதன் றோஅறத்து ஆறுதான்; நெறியின் நோன்மையை நேரிது உணர்ந்தநீ பெறுதி யோ,பிழை உற்றுறு பெற்றிதான். 67 67. அறத்து ஆறு - அறநெறி. பொறியின் யாக்கையதோ - ஐம்பொறிகளைக் கொண்ட உடலைப் பொறுத்ததோ. நெறியின் நோன்மை - அறநெறியின் பெருமையை. பிழைஉற்று - பிழையைச் செய்து. உறு பெற்றி - அதனால் வரும் தன்மையை. `மாடு பற்றி இடங்கர் வலித்திடக், கோடு பற்றிய கொற்றவன் கூயது,ஓர் பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் வீடு பெற்ற விலங்கும் விலங்கு;அதோ. 68 68. மாடுபற்றி - ஒருபக்கத்தைப் பிடித்து. இடங்கல் - முதலை. கோடு - சங்கு. ஓர்பாடு பெற்ற - ஒப்பற்ற பெருமை யடைந்த. விலங்கும் - விலங்காகிய யானையும். அரோ; அசை. `சிந்தை நல்லறத் தின்வழிச் சேர்தலால், பைந்தொ டித்திரு வின்பரிவு ஆற்றுவான் வெம்தொ ழில்துறை, வீடுபெற்று எய்திய எந்தை யும்,எரு வைக்குஅரசு அல்லனோ. 69 69. பைந் தொடித்திருவின் - சீதையின். பரிவு - துயரத்தை. வெம்தொழில் துறை - கொடுமையான போர்த்துறையில் புகுந்து. எருவைக்கு - கழுகுகளுக்கு. `நன்று, தீதென்று இயல்தெரி நல்அறிவு இன்றி, வாழ்வதுஅன் றோவிலங் கின்இயல்; நின்ற நன்னெறி, நீஅறி யாநெறி ஒன்றும் இன்மை,உன் வாய்மை உணர்த்துமால்; 70 70. நெறி - நிலைத்து நின்ற நல்லறங்களிலே. உன் வாய்மை - உன் சொற்கள். `தக்க இன்ன, தகாதன இன்ன,என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்க ளும்விலங் கே;மனு வின்நெறி புக்க வேல்,அவ் விலங்கும்புத் தேளிரே. 71 71. ஒக்க - அறநூல் முறைக்குப் பொருந்த. உயர்ந்துள - உயர்ந்த பிறப்பைப் பெற்றுள்ள. `காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் பாலின் ஆற்றிய பத்தி பயத்தலான், மாலி னால்தரு வன்பெரும் பூதங்கள் நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய். 72 72. கணிச்சியான் - சிவபெருமான். மாலினால் தரும் - திருமாலால் படைக்கப்பட்ட. ஆற்றுழி - வலிமையாக. நான்கு பூதங்கள்; மண், நீர், தீ, காற்று. `சினையது ஆதலின், எக்குலத்து யாவர்க்கும் வினையி னால்வரும் மேன்மையும் கீழ்மையும்; அனைய தன்மை அறிந்தும் அழித்தனை மனையின் மாட்சிஎன் றான்மனு நீதியான். 73 73. வினையினால் - தொழிலினால். மனையின்மாட்சி - பிறன் மனைவியின் கற்பை. வாலியின் கேள்வி வேறு அவ்வுரை அமையக் கேட்ட அரிகுலத் தரசும், ‘மாண்ட செவ்வியோய்! அனைய தாகச், செருக்களத்து எதிர்த்துஎய் யாதே வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால் எவ்வியது என்னை? என்றான்; இலக்குவன் இயம்பல் உற்றான். 74 74. மாண்ட - பெருமையுள்ள செவ்வியோய் - நல்லோனே. அனையது ஆக - அப்படியே ஆகட்டும். உருத்து - முன்வந்து நின்று. வில்லால் எவ்வியது - வில்லால் அம்பை ஏவியது. இலக்குவன் கொடுத்த மறுமொழி `முள்புநின் தம்பிவந்து சரண்புக, `முறையி லோயைத் தென்புலத்து உய்ப்பன் என்று செப்பினன்; `செருவில், நீயும் அன்பினை உயிருக் காகி, அடைக்கலம் யானும் என்றி, என்பது கருதி அண்ணல் மறைந்துநின்று எய்தது என்றான். 75 75. முறையிலோயை - நீதி தவறிய உன்னை. `உயிருக்கு அன்பினையாகி. வாலியின் வணக்கம் கவிகுலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்; அவிஉறு மனத்தன் ஆகி, `அறத்திறன் அழியச் செய்யான் புவியுடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த, முன்னே செவிஉறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் சொன்னான். 76 76. அவிஉறு மனத்தன் ஆகி - அறிவு மறைந்த மனமுள்ள வனாய். எண்ணினில் பொருந்த - எண்ணத்தில் தோன்ற. செல்வன் - வாலி. தாய்என உயிர்க்கு நல்கித் தருமமும், தகவும், சால்பும் நீஎன நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை நாய்என நின்ற எம்மால் நவைஅற உணர லாமே! Ôad bghW¤â! என்றான்; சிறியன சிந்தி யாதான். 77 77. தகவு - நடு நிலைமை. சால்பு - நிறைந்த நற்குணங்கள். நெறியினின் நோக்கும் நேர்மை - நன்னெறியிலே நின்று பார்க்கும் உண்மை ஒழுக்கத்தை. உணரல் ஆமே - அறியக் கூடிய தாகுமோ. இரந்தனன் பின்னும், `எந்தை! யாவதும் எண்ணல் தேற்றாக் குரங்கெனக் கருதி, நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்! அரந்தைவெம் பிறவி நோக்கும், அருமருந்து அனைய ஐயா! வரந்தரு வள்ளால்! ஒன்று கேள்;என மறித்தும் சொல்வான். 78 78. யாவதும் எண்ணல்தேற்றா - ஒன்றையும் ஆலோசித்து அறிய முடியாத. அரந்தை வெம்பிறவி - துன்பத்தைச் செய்யும் கொடிய பிறவி யாகிய. வேறு `ஏவுகூர் வாளியால் எய்து,நாய் அடியனேன் ஆவிபோம் வேலைவாய் அறிவுதந்து அருளினாய்! மூவர்நீ! முதல்வன்நீ! முற்றும்நீ! மற்றும்நீ பாவம்நீ! தருமம்நீ! பகையும்நீ! cwî«Ú! 79 79. -. ‘உண்டெனும் தருமமே உருவமாய் உடையநின் கண்டுகொண் டேன்!இனிக் காணஎன் கடவனோ? பண்டொடுஇன் றளவுமோ என்பெரும் பழவினை தண்டமே; அடியனேற்கு உறுபதம் தருவதே? 80 80. பண்டொடு இன்றளவும் - பண்டுமுதல் இன்று வரையிலு ம் உள்ள. என் பெரும் பழவினை - எனது பெரிய தீ வினையை. தண்டமே - தண்டிக்க வந்தவனே. உறுபதம் - பரமபதம். வேறு `மற்றினி உதவி உண்டோ, வானினும் உயர்ந்த மானக் கொற்றவ, நின்னை, என்னைக், கொல்லிய கொணர்ந்து தொல்லைச் சிற்றினக் குரங்கி னோடும் தெரிவுறச் செய்த செய்கை; வெற்றரசு எய்தி, எம்பி வீட்டரசு எனக்கு விட்டான். 81 81. மான - சிறந்த. தெளிவுறச் செய்த - ஆலோசனை செய்து முடித்த. செய்கை - காரியத்தால். எம்பி வெற்றுஅரசு எய்தி வீட்டரசு எனக்கு விட்டான். `ஓவிய உருவ! நாயேன் உளதுஒன்று பெறுவது உன்பால், பூவியல் நறவும் மாந்திப் புந்திவேறு உற்ற போழ்தில் தீவினை இயற்று மேனும், எம்பிமேல் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்; என்றான். 82 82. -. ‘இன்னம்ஒன்று இரப்பது உன்பால், ‘எம்பியை உம்பி மார்கள் தன்முனைக் கொல்வித் தான்என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய்! முன்முனே மொழிந்தாய் அன்றே இவன்குறை முடிப்பது ஐயா! பின்இவன் வினையின் செய்கை! அதனையும் பிழைக்க லாமோ? 83 83. இவன் குறை முடிப்பது - இவன் குறையை முடிப்பதாக. முன் முனே - முதலிலேயே. பின்இது என்வினையின் செய்கை - பின் நிகழ்ந்த இது என் ஊழ்வினையின் செயலாகும். `மற்றிலேன் எனினும், மாய அரக்கனை வாலின் பற்றிக், கொற்றவ நின்கண் தந்து குரக்கியல் தொழிலும் காட்டப் பெற்றிலென்; கடந்த சொல்லின் பயனிலை; பிறிதொன் றேனும், உற்றது செய்கென் றாலும், உரியன்இவ் அநுமன், என்றான். 84 84. மற்று இலென் எனினும் - வேறு உதவி செய்வதற்கு இல்லேன் ஆயினும். கடந்த - நடந்தவைகளைப் பற்றி. உற்றது - ஆகவேண்டிய ஒன்றை. `mDk‹v‹ gtid, MÊ Ia!நின் செய்ய செங்கைத் தனுவென நினைதி! k‰bw‹ j«ãËw j«ã ahf Ãidâ!ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை;நீ ஈண்டுஅவ் வனிதையை நாடிக் கோடி, வானினும் உயர்ந்த தோளாய். 85 85. -. என்றவற்கு இயம்பிப், பின்னை இருந்தனன் இளவல் தன்னை வன்துணைத் தடக்கை நீட்டி வாங்கினன் தழுவி, `மைந்த ஒன்றுனக்கு உரைப்பது உண்டால்; உறுதி,அஃது உணர்ந்து கோடி. குன்றினும் உயர்ந்த தோளாய்! வருந்தலை; என்று கூறும். 86 86. பின்னை இருந்தனன் இளவல்தன்னை - பின் பக்கத்தில் நின்றவனாகிய சுக்கிரீவனை. `உனக்கு உரைப்பது உறுதி ஒன்று உண்டு உறுதி - நன்மை ஆல்; அசை. `நிற்கின்ற செல்வம் வேண்டி, நெறிநின்ற பொருள்கள் எல்லாம் கற்கின்ற இவன்தன் நாமம்; கருதுவ இவனைக் கண்டாய்; பொற்குன்றம் அனைய தோளாய்! பொதுநின்ற தலைமை நோக்கின் எற்கொன்ற வலியே சாலும்; இதற்கொன்றும் ஏது வேண்டா. 87 87. நிற்கின்ற செல்வம் - மோட்சம் நெறி - ஒழுக்கம். பொருள்கள் எல்லாம் - உயிர் உள்ள பொருள்கள் அனைத்தும். `இவன் தன் நாமம் கற்கின்ற; இவனைக் கருதுவ தலைமை - பெருமையை. சாலும் - போதுமான காட்சியாகும். `கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்பரும் கணக்கில் தீமை வைகலும் புரிந்து ளாரும், வானுயர் நிலையை, வள்ளல் எய்தவர் பெறுவர் என்றால், இணையடி இறைஞ்சி, ஏவல் செய்தவர், பெறுவது ஐயா! br¥gyh« Ó®ik¤J Mnkh? 88 88. கைதவம் - வஞ்சம். யாண்டும் - எப்பொழுதும். கழிப்பரும் - தீராத. வள்ளல் எய்தவர் - இராமனால் அம்பெய்து கொல்லப்பட்டவர். வான் உயர் நிலையைப் பெறுவர் என்றால் - மிகவும் உயர்ந்த கதியை அடைவர் என்றால். `மதவியல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல் உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவு கிற்றி; பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் சிதைவிலை செய்து, நொய்தின் தீர்வரும் பிறவி தீர்தி. 89 89. மதஇயல் - செருக்கையுடைய. செய்கை - செய்கை யையும். மயர்வொடு - அறியாமையையும். மாற்றி - விட்டொழித்து. `உற்றவிடத்து ஆவி உதவுகிற்றி சிதைவுஇல - கெடாதபடி. `அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது, ஐயன் மலைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி; மன்னர் என்பார் எரிஎனற்கு உரியார் என்றே எண்ணுதி; எண்ணம் யாவும் புரிதி;சிற் றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ண வேண்டா. 90 90. பூரித்து - மகிழ்ந்து. அயர்ந்தனை - மறந்தவனாய். மரை - தாமரை. சிற்றடிமை குற்றம் - சிற்றடிமையாளர் செய்த குற்றத்தை. என்னஇத் தகைய வாய உறுதிகள் யாவும் ஏங்கும் பின்னவற்கு இயம்பி, நின்ற, பேர்எழி லானை நோக்கி, `மன்னவர்க்கு அரசன் மைந்த! மாற்றிலன் சுற்றத் தோடும் உன்அடைக் கலம்;என்று உய்த்தே உயர்கரம் உச்சி வைத்தான். 91 91. பின்னவற்கு - சுக்கிரீவனுக்கு. பேர் எழிலானை - இராமனை. உய்த்து - இராமன் பக்கம் அனுப்பி. வைத்தபின் உரிமைத் தம்பி மாமுகம் நோக்கி, `வல்லை உய்த்தனை கொணர்தி! உன்றன் ஓங்கரு மகனை என்ன அத்தலை அவனை, ஏவி அழைத்தலின், அணைந்தான் என்ப, கைத்தலத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை. 92 92. உய்த்தனை கொணர்தி - அழைத்து வருக. ஏவி - தூதரை ஏவி. கைத்தலத்து - கையால். உவரி - கடலை. கலக்கினான் பயந்த காளை - கலக்கியவனாகிய வாலி பெற்ற காளை போன்ற அங்கதன். அங்கதன் புலம்பல் ‘எந்தையே! எந்தை யே!இவ் எழுதிரை வளாகத்து, யார்க்கும் சிந்தையால், செய்கை யால்,ஓர் தீவினை செய்தி லாதாய்! நொந்தனை; அதுதான் நிற்க நின்முகம் நோக்கிக் கூற்றம் வந்ததே அன்றோ அஞ்சாது; ஆர்அதன் வலியைத் தீர்ப்பார்? 93 93. -. `பஞ்சின்மெல் அடியாள் பாகன் பதயுகம் அலாது, யாதும் அஞ்சலித்து அறியாச் செங்கை ஆணையாய்! அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் உன்னால்; இனிஅமுத ஈந்த நீயோ துஞ்சினை! வள்ளி யோர்கள் நின்னின்யார் சொல்லற் பாலார். 94 94. பாகன் - பாகத்திலுடைய சிவ பெருமானது. பதயுகம் அல்லாது யாதும் - திருவடிகளைத் தவிரவேறு ஒன்றையும். எஞ்சலர் - இறக்காதவர்களாய். வள்ளியோர்கள் - வள்ளல்கள். அங்கதனுக்கு வாலியின் அறிவுரை ஆயன பலவும் பன்னி அழுங்கினன்; புழுங்க நோக்கித், தீயுறு மெழுகின் சிந்தை உருகினன் செங்கண் வாலி, `நீயினி அயர்வாய் அல்லை, என்றுதன் நெஞ்சில் புல்லி, நாயகன் இராமன் செய்த நல்வினைப் பயன்இது; என்றான். 95 95. ஆயன - ஆகியன. பன்னி - சொல்லி. அழுங்கினன் - வருந்தினான் அங்கதன். நெஞ்சில்புல்லி - மார்பில் தழுவி. `தோன்றலும், இறத்தல் தானும், துகள்அறத் துணிந்து நோக்கின், மூன்றுல கத்தி னோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே; யான்தவம் உடைமை யால்இவ் விறுதிவந்து இசைந்தது; யார்க்கும் சான்றென நின்ற வீரன் தான்வந்து வீடு தந்தான். 96 96. துகள் அறதுணிந்து நோக்கின் - குற்றமின்றி ஆராய்ந்து பார்த்தால் மூலத்தே - ஆதி காலத்திலேயே. இவ்வுறுதி - இத்தகைய நல்ல முடிவு. `பாலமை தவிர்நீ, என்சொல் பற்றுதி ஆயின், தன்னின் மேல்ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் கால்தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா; மால்தரும் பிறவி நோய்க்கு மருந்தென வணங்கு,மைந்த. 97 97. பாலமை தவிர் நீ - சிறுபிள்ளைத் தன்மையைக் கடந்த. தன்னின் மேல் - தன்னை விட. கண்புலக்கு - கண்ணுக்கு நேரே. மால்தரும் - அறியாமையால் தரப்படும். ‘என்னுயிர்க்கு இறுதி செய்தான் என்பதை, இறையும் எண்து, உன் உயிர்க்கு உறுதி செய்தி! இவற்குஅமர் உற்றது உண்டேல், பொன்உயிர்த்து ஒளிரும் பூணாய் போதுதி, நிலைமை நோக்கி மன்உயிர்க்கு உறுதி செய்வான் மலர்அடி சுமந்து வாழ்தி! 98 98. இறையும் - சிறிதும். இவற்கு அமர் உற்றது உண்டேல் - இவ்விராமனுக்குப் பகைவருடன் போருண்டாகுமாயின். பொன் உயிர்த்து ஒளிரும் - பொன்னொளி வீசி விளங்கும். போதுதி - நீயும் செய்க. இராமனிடம் வாலியின் வேண்டுகோள் என்றனன், இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி, தன்துணைத் தடக்கை ஆரத் தனையனைத் தழுவி, சாலக் குன்றினும் உயர்ந்த திண்தோள் குரக்கினத்து அரசன், கொற்றப் பொன்திணி வயிரப் பைம்பூண் புரவலன் தன்னை நோக்கி. 99 99. -. `நெய்யடை நெடுவேல் தானை நீல்நிற நிருதர் என்னும் துய்அடைக்கு அனலி அன்ன தோளினன், தொழிலும் தூயன்; பொய்அடை உள்ளத் தார்க்குப் புலப்படாப் புலவ! k‰W‹ ifail MF«! என்றுஅவ் இராமற்குக் காட்டும் காலை. 100 100. நெய்அடை - நெய் தடவிய. துய் அடைக்கு - பஞ்சுப் பொதிக்கு. அனலி - தீயைப் போன்ற. பொய் அடை - பொய் நிறைந்த. கை அடை - அடைக்கலம். அங்கதனிடம் அன்பு தன்அடி தாழ்த லோடும் தாமரைத் தடங்க ணானும் பொன்உடை வாளை நீட்டி நீயிது பொறுத்தி என்றான். என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். 101 101. தன்அடி தாழ்தலோடும் - அங்கதன் தன் அடிகளை வணங்கியவுடன். தாமரைத் தடம்கணான் - இராமன். ஏத்தின - வாழ்த்தின. அந்நிலை - அந்த உடம்பை. வாலி தன் கையால் இழுத்துப் பிடித்திருந்த கணையைக் கைவிட்டான். அது அவன் மார்பை உருவிச் சென்றது; கடலிலே படிந்து மீண்டும் இராமனுடைய அம்புப் பெட்டியை அடைந்தது. இதன்பின் இராமன், சுக்கிரீவன் கையைப் பிடித்துக் கொண்டு, அங்கதனுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான். 8. தாரை புலம்புறு படலம் வாலியும் ஏக, யார்க்கும் வரம்பிலா உலகில் இன்பம் பாலியா முன்னர் நின்ற பரிதிசேய் செங்கை பற்றி, ஆல்இலைப் பள்ளி யானும் அங்கத னோடும் போனான்; வேல்விழித் தாரை கேட்டு, வந்துஅவன் மெய்யில் வீழ்ந்தாள். 1 தாரை புலம்புறு படலம்: வாலியின் வதைகண்டு, தாரை புலம்பியதைக் கூறும் பகுதி. 1. உலகில் யார்க்கும் வரம்பிலா இன்பம் பாலியா - உலகில் அனைவர்க்கும் அளவற்ற இன்பம் அளித்துக் காத்து. பரிதிசேய் - சுக்கிரீவன். வேறு `வரைசேர் தோள்இடை நாளும் வைகுவேன் கரைசே ரா,இடர் வேலை கண்டிலேன்; உரைசேர் ஆருயி ரேஎன் உள்ளமே! அரைசே யான்இது காண அஞ்சினேன். 2 2. கரைசேரா - இன்பமாகிய கரையை அடைந்து. இடர் வேலை - துன்பக்கடல். `நறிதா, நல்அமிர்து உண்ண நல்கலின், பிரியா இன்உயிர் பெற்ற பெற்றிதான் அறியா ரோநம னார்;அது அன்றெனின், சிறியா ரோ,உப காரம் சிந்தியார். 3 3. நறிதுஆம் - மணம் பொருந்தியதாகிய. பெற்றிதாம் அறியாரோ நமனார் - தன்மையை அறியமாட்டாரோ எமனார். அணங்கார் பாகனை ஆசை தோறும்உற்று உணங்கா நாள்மலர் தூய்உள் அன்பினால் இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் வணங்காது இத்துணை வைக வல்லையோ. 4 4. அணங்கு ஆர் பாகன் - பரமசிவன். அணங்கு - பார்வதி. உணங்கா - வாடாத. காலம் இரண்டொடு ஒன்றினும் - முக்காலங் களும். ‘நய்யா நின்றனென் நான்இருந்து இங்ஙன், மெய்வா னார்திரு நாடு மேவினாய்; ஐயா நீ!எனது ஆவி என்றதும் பொய்யோ! பொய்யுரை யாத புண்ணியா! 5 5. -. ‘சொற்றேன் முந்துற, அன்ன சொல்கொளாய்! அற்றான், அன்னது செய்க லான்,என உற்றாய், உம்பியை ஊழி காணும்நீ இற்றாய், நான்உனை என்று காண்கெனோ? 6 6. முந்துற சொற்றேன் - முன்பே சொன்னேன். அற்றால் - விருப்பு வெறுப்பற்றவனாகிய இராமன். `நீறாம் மேருவும் நீநெ ருக்கினால்; மாறுஓர் வாளிஉன் மார்பை ஈர்வதோ? தேறேன் யான்இது; தேவர் மாயமோ? வேறோர் வாலிகொ லாம்வி ளிந்துளான். 7 7. நீறுஆம் - பொடியாகும். விளிந்துளான் - இறந்திருப்பவன். வருந்திய தாரையை, மாருதி, மாதர்களுடன் அவள் இடத்திற்கு அனுப்பி வைத்தான்; வாலியின் இறுதிக் கடன்கள் எல்லாம் நடந்தன. 9. அரசியல் படலம் மறுநாள் இராமன், இலக்குவனை அழைத்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டும்படி உரைத்தான்; இலக்குவன் சுக்கிரீவனுக்கு முறைப்படி முடி சூட்டினான். சுக்கிரீவனுக்கு இராமன் கூறிய நல்லுரைகள் பொன்மா மௌலி புனைந்து, பொய்யிலான் தன்மா னக்கழல் தாழும் வேலையில், நன்மார் பில்தழு வுற்று, நாயகன் சொன்னான், முற்றிய சொல்லின் எல்லையான். 1 அரசியல் படலம்: சுக்கிரீவனுக்கு இராமன் அரசியற்றும் முறையைக் கூறியது. 1. பொய்யிலான்தன் - இராமனுடைய. `நாயகன், முற்றிய சொல்லின் எல்லையான் சொன்னான். வேறு ‘ஈண்டுநின்று ஏகி, நீநின் இன்இயல் இருக்கை எய்தி, வேண்டுவ மரபின் எண்ணி, விதிமுறை இயற்றி, வீர! பூண்டபேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில் மாண்டவன் மைந்த னோடும் வாழ்திநல் திருவின் வைகி! 2 2. விதிமுறை இயற்றி - நூலில் விதித்த முறையிலே செய்து. மைந்தனோடும் - அங்கதனோடும். `வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும், தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவ ரோடும், தூய்மைசால் புணர்ச்சி பேணித், துகள்அறு தொழிலை யாகிச், சேய்மையோடு அணிமை யின்றித், தேவரின் தெரிய நிற்றி. 3 3. வாய்மைசால் - உண்மை நிறைந்த. அறிவின் வாய்த்த - அறிவால் சிறந்த. திறம்தொழில் - வலிமையான போர்த் தொழி லையுடைய. தூய்மை சால் - பரிசுத்தமான. புணர்ச்சிபேணி -நட்பைக் காத்து. `புகைஉடைத்து என்னின்உண்டு பொங்குஅனல் அங்குஎன்று உன்னும் மிகைஉடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டல் பாற்றே. பகைஉடைச் சிந்தை யார்க்கும், பயன்உறு பண்பின் தீரா நகைஉடை முகத்தை யாகி,இன்உரை நல்கு நாவால்; 4 4. மிகை உடைத்து - அறிவையுடையது. வினையமும் - அறிவும். பயன்உறு பண்பின் - பயன்படும் குணத்திலிருந்து. தீரா - நீங்காமல். `செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தி யாமை, வைவன வந்த போதும் வசைஇல இனிய கூறல்; மெய்யன வழங்கல், யாவும் மேவின வெஃகல் இன்மை; உய்வன வாக்கித் தம்மோடு உயர்வன; உவந்து செய்வாய். 5 5. வைவன வந்தபோதும் - வைகின்ற சொற்கள் தம்மை அடைந்த போதும். யாவும் வழங்கல் - எல்லாவற்றையும் கொடுத்தல். மேவின - பிறரிடம் பொருந்திய பொருளை. வெஃகல் இன்மை - விரும்பாமை. உய்வன ஆக்கி - இச்செயல்கள் தம்மை உய்யும்படிசெய்து. தம்மோடு உயர்வன - தம்மோடு உயர்ந்து நிற்பனவாகும். `சிறியர்என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்றுஇந் நெறியிகழ்ந்து யான்ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு குறியன மேனி யாய கூனியால், குவவுத் தோளாய்! வெறியன எய்தி, நொய்தின், வெம்துயர்க் கடலின் வீழ்ந்தேன். 6 6. உணர்ச்சி நீண்டு - அறிவு வளர்ந்து. குறியன மேனியாய - குறுகிய உடம்புள்ளவளாகிய. வெறியன - இல்லாமைகளை. `மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்; என்றல் சங்கையின்று உணர்தி! வாலி செய்கையால் சாலும்; இன்னும் அங்கவர் திறத்தி னானே அல்லலும் பழியும் ஆதல் எங்களில் காண்டி அன்றே! ïjÅ‹ntW cWâ c©nlh? 7 7. சாலும் - உறுதியாகும். இதனின் - இந்த உண்மையை அறிவதை விட. வேறு உறுதி உண்டோ - வேறு நன்மை உண்டோ? `நாயகன் அல்லன்; நம்மை நனிபயந்து எடுத்து நல்கும் தாய்என இனிது பேணித் தாங்குதி தாங்கு வாரை; ஆயது தன்மை யேனும், அறவரம்பு இகவா வண்ணம், தீயன வந்த போது சுடுதியால் தீமை யோரை. 8 8. நாயகன் - அரசன்; தலைவன். பயந்து எடுத்து நனிநல்கும் - பெற்றெடுத்து மிகவும் இரக்கம் காட்டும். பேணி - காத்து. அறவரம்பு - அறத்தின் எல்லை. `இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும், யாண்டும் திறத்துளி நோக்கின், செய்த வினைதரத் தெரிந்த அன்றே; புறத்தினி உரைப்பது என்னே! பூவின்மேல் புனிதற் கேனும், அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி;அஃது உறுதி; என்ப. 9 9. திறத்து உளிநோக்கின் - அறிவால் ஆராய்ந்து பார்த்தால். புறத்து - வேறு. பூவின்மேல் புனிதன் - பிரமன். அஃது - அவ்வற நெறியில் நிற்றலே. `இன்னவை தகைமை என்ப, இயல்புளி மரபின் எண்ணி, மன்அரசு இயற்றி, என்கண் மருவுழி மாரிக் காலம் பின்உற; முறையின் உன்றன் பெரும்கடல் சேனை யோடும் துன்னுதி போதி; என்றான் சுந்தரன்; அவனும் சொல்வான். 10 10. இன்னவை தகைமைஎன்ப - இவைகள் அரசர்க்குச் சிறந்த செயல் என்பர். மாரிக்காலம் பின்உற - மழைக்காலம் கழிந்தபின். என்கண் துன்னுதி - என்னிடம் வருக. சுந்தரன் - இராமன். `குறங்குறை இருக்கை என்னும், குற்றமே குற்றம் அல்லால், அறம்கெழு துறக்க நாட்டுக்கு அரசெனல் ஆகும் அன்றே; மரங்கிளர் அருவிக் குன்றம்; வள்ளல்நீ மனத்தின் எம்மை இரங்கிய பணியாம் செய்ய இருத்தி;ஆல் சில்நாள் எம்பால். 11 11. அறம்கெழு - அறத்திலே சிறந்தவர்கள் அடையும். துறக்க நாட்டுக்கு - சுவர்க்க லோகத்துக்கு. இரங்கிய பணி - இரக்கம் கொண்டு உத்தரவிடும் பணிகளை. சீதையைத் தேடப் புறப்படும் வரையிலும் கிஷ்கிந்தை யிலேயே தங்கி யிருக்கலாம் என்று வேண்டினான்; இராமன் பாதங்களைப் பணிந்தான் சுக்கிரீவன். இராமன் அளித்த மறுமொழி ஏந்தலும் இதனைக் கேளா, இன்இள முறுவல் நாற, `வேந்தர்இல் இருக்கை எம்போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா; போந்துஅவண் இருப்பின் எம்மைப் போற்றவே பொழுது போம்;ஆல் தேர்ந்தினிது இயற்றும் உன்றன் அரசியல் தருமம் தீர்தி. 12 12. கேளா - கேட்டு. இன் இளமுறுவல் நாற - இனிய புன்சிரிப்புத் தோன்ற. வேந்தர் இல்இருக்கை - அரசர் மாளிகையில் இருப்பது. தேர்ந்து இனிது இயற்றும் - ஆராய்ந்து குடிகளுக்கு நன்மையுண்டாகும்படி நடத்த வேண்டிய. தீர்தி - நீங்குவாய். ‘தேவி,வேறு அரக்கன் வைத்த சிறையினுள் இருப்பத், தான்தன் ஆவிபோல் துணைவ ரோடும் அளவிடற்கு அரிய இன்பம் மேவினான் இராமன் என்றால், ஐய!இவ் வெய்ய மாற்றம், மூவகை உலகம் முற்றும் காலத்தும், முற்றா அன்றோ! 13 13. இவ்வெய்யமாற்றம் - இப்பழிச்சொல். முற்றாவன்றோ - அழியக் கூடியதோ. `ஆதலால் அரசு புரிந்து, நான்கு மாதங்களில், படை களுடன் வருக என்றான் இராமன். சுக்கிரீவன் மறுமாற்றம் உரையாமல் இராமனைப் பணிந்து சென்றான். வாலிகா தலனும் ஆண்டு மலரடி வணங்கி னானை, நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கிச், `சீலம்நீ உடையை ஆதல், இவன்சிறு தாதை என்னா, மூலமே தந்த நுந்தை ஆம்என முறையின் நிற்றி. 14 14. சீலம் - நல்லொழுக்கம். என்னா - என்று நினையாமல். மூலமே தந்த - முதலிலே உன்னைப்பெற்ற. என - என்று நினைத்து. என்னமற்று இனைய கூறி, `ஏகுஅவன் தொடர என்றான்; பொன்அடி வணங்கி, மற்றைப் புகழ்உடைக் குரிசில் போனான்; பின்னர்மா ருதியை நோக்கிப், `பேர்எழில் வீர! நீயும் அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின்; என்றான். 15 15. அவன் தொடர ஏகு - அவனைத் தொடர்ந்து செல்க. குரிசில் - அங்கதன். மாருதி வேண்டுதலும் இராமன் மாற்றமும் பொய்த்தல்இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சி யானும், `இத்தலை யிருந்துநாயேன், ஏயின, எனக்குத் தக்க கைத்தொழில் செய்வேன்; என்று கழல்இணை வணங்கும் காலை, மெய்த்தலை நின்ற வீரன், இவ்வுரை விளம்பி விட்டான். 16 16. புணர்ச்சியானும் - நட்புள்ளவனாகிய அனுமானும். ஏயின் - நீ இட்ட. கைத்தொழில் - அடிமைத் தொழில். மெய்த் தலை நின்ற - மெய்யிலே சிறந்து நின்ற. ‘நிரம்பினான் ஒருவன் காத்த நிறைஅரசு, இறுதி நின்ற வரம்பிலாது; அதனை மற்றோர் தலைமகன் வலிதில் கொண்டால் அரும்புவ நலனும் தீங்கும்; ஆதலின், ஐய நின்போல் பெரும்பொறை அறிவி னோரால் நிலையினைப் பெறுவது அம்மா! 17 17. நிரம்பினான் ஒருவன் - அறிவும் ஆற்றலும் நிரம்பிய வனாகிய ஒருவன். இறுதிநின்ற வரம்புஇலாது - அழியாததாகும். `நலனும் தீங்கும். அரும்புவ - தோன்றுவன. பெரும்பொறை அறிவினோரால் - பெரிய பொறுப்பைத் தாங்கும் அறிவுடை யோரால். அம்மா; அசை. `ஆன்றவர்க்கு உரிய தாய அரசினை நிறுவி, அப்பால் ஏன்றெனக்கு உரிய தான கருமமும் இயற்றற்கு ஒத்த சான்றவர், நின்னின் இல்லை; ஆதலால், தருமம் தானே பொன்றநீ, யானே வேண்ட அத்தலை போதி என்றான். 18 18. ஆன்றவற்கு - சிறந்தவனாகிய சுக்கிரீவனுக்கு. ஏன்று -ஏற்றுக் கொண்டு. சான்றவர் - அறிவுள்ளவர். ஆழியான் அனைய கூற, `ஆணையீ தாயின் அஃதே வாழியாய் புரிவேன் என்று வணங்கிமா ருதியும் போனான்; சூழிமால் யானை அன்ன தம்பியும், தானும் தொல்லை ஊழிநா யகனும் வேறோர் உயர்தடம் குன்றம் உற்றார். 19 19. சூழிமால் யானையன்ன - முகபடாத்தையுடைய யானைபோன்ற. தானும் தொல்லை ஊழிநாயகனும் - தானாகிய பழமையான ஊழியின் தலைவனும். சுக்கிரீவன் அரசாட்சி ஆரியன் அருளில் பொய்த்தன் அகல்மலை அகத்தன் ஆன சூரியன் மகனும், மானத் துணைவரும், கிளையும் சுற்றத், தாரையை வணங்கி, அன்னாள் தாய்எனத், தந்தை முந்தைச் சீரியன் சொல்லே என்னச், செவ்விதின் அரசு செய்தான். 20 20. முந்தைச் சீரியன் சொல்லே - முன்னோனாகிய சிறந்த வாலியின் சொல்லே. தந்தை என்ன - தந்தையின் சொல்லென்று கொண்டு. வளஅரசு எய்தி, மற்றை வானர வீரர் யாரும் இளைஞரின் உதவ, ஆணை கிளர்திசை அளப்பக் கேளோடு அளவிலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம்கொள் செல்வத்து இளவரசு இயற்ற ஏவி, இனிதினின் இருந்தான் இப்பால். 21 21. வளம் அரசு எய்தி - செல்வம் உள்ள அரசாட்சியைப் பெற்று. ஆணை - உத்தரவு. கிளர்திசை அளப்ப - விளங்குகின்ற திசைகளிலே பரவ. கேளொடு - உரிமையுடன். இளவரசு இயற்ற - இளவரசாயிருந்து ஆட்சி செய்யுமாறு. ஏவி - கட்டளையிட்டு. இராமன் மதங்காசிரமத்தின் ஒரு புறத்தில் இளை யோனால் அமைக்கப்பட்ட சிலை வீட்டில் இருந்தான். 10. கார்காலப் படலம் நஞ்சினில், நளிர்நெடும் கடலின், நங்கையர் அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின் வஞ்சனை அரக்கர்தம் வடிவின், செய்கையின் நெஞ்சினின் இருண்டது நீல வானமே. 1 கார்காலப் படலம் : கார்காலத்தில் நடந்த நிகழ்ச்சி யைப்பற்றிச் சொல்லும் பகுதி. 1. நீலவானம், நஞ்சு, கடல், கண், கூந்தல், அரக்கர் உருவம், செய்கை, நெஞ்சம், இவைகளைப் போல இருண்டது. பிரிந்துறை மகளிரும், பிலத்த பாந்தளும் எரிந்துயிர், நடுங்கிட, இரவி யின்கதிர் அரிந்தன வாம்என, அசனி நாஎன, விரிந்தன திசைதொறும் மிசையின் மின்னெலாம். 2 2. பிலத்த பாந்தளும் - நிலத்தின் அடியில் உள்ள பாம்பு களும். அசனி - இடி. மிசையின் - மேலே. தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே, மலையினும், மரத்தினும், மற்றும் முற்றினும், விலைநினைந்து உளவழி விலங்கும் வேசையர் உலைஒறு மனம்என, உலாயது ஊதையே. 3 3. தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றி - மேலும் கீழும் நீங்காமல். உளவழி - செல்வம் உள்ள இடத்தில். ஊதை - குளிர்காற்று. வண்ணவில் கரதலத்து அரக்கன், வாளினன், விண்ணிடைக் கடிதுகொண்டு ஏகும் வேலையில், பெண்ணினுக்கு அரும்கலம் அனைய பெய்வளை கண்எனப், பொழிந்தது கால மாரியே! 4 4. -. விழையுறு பொருள்தரப் பிரிந்த வேந்தர்வந்து உழையுற, உயிர்உற உயிர்க்கும் மாதரின், மழையுற மாமுகம் மலர்ந்து தோன்றின குழைஉறப் பொலிந்தன உலவைக் கொம்பெலாம். 5 5. பொருள்தர - செல்வத்தைத் தேடிக்கொண்டுவர. வேந்தர் - தலைவராகிய கணவர். உயிர்உற - பிரிந்த உயிர் மீண்டும் வந்ததுபோல். உலவைக் கொம்பு எலாம் - வற்றிய கிளைகள் எல்லாம். வேறு களிக்கும் மஞ்ஞையைக், கண்ணுளர் இனம்எனக் கண்உற்று அளிக்கும் மன்னரின், பொன்வழங் கினமலை அருவி; வெளிக்கண் வந்தகார் விருந்தென, இருந்துகண்டு உள்ளம் களிக்கும் மங்கையர் முகம்எனப், பொலிந்தன கமலம். 6 6. கண்உளர் இனம்என - கூத்தர்களின் கூட்டம் என்று கருதி. கண் உற்று - பார்த்து. வெளிக்கண் வந்தகார் - வான வெளியிலே வந்த மேகங்களை. சுருதி நாண்மலர் யாவையும் குடைந்தன கலவிச் சுரத நூல்தெரி விடர்எனத் தேன்கொண்டு தொகுப்ப, பரத நூல்முறை நாடகம் பயன்உறப் பகுப்பான் இரதம் மீட்டுறும் கவிஞரைப் பொருவின தேனீ. 7 7. சுருதி - இசை பாடிக்கொண்டு. நாண்மலர் - புதிய மலர்கள். சுரதநூல் தெரி - காமநூல் முறைகளை அனுபவித்துத் தெரிந்துகொள்ளும். விடர் - காமுகர். பகுப்பான் - பகுத்து அமைக்கும் பொருட்டு. இரதம் ஈட்டுறும் - சுவைகளைச் சேர்க்கின்ற. இரதம் - ரசம்; சுவை. உறவெ துப்புறும் கொடுந்தொழில் வேனிலான் ஒழியத், திறம்நி னைப்பரும் கார்எனும் செவ்வியோன் சேர, நிறம னத்துறு குளிர்ப்பினின், நெடுநில மடந்தை புறம யிர்த்தலம் பொடித்தன போன்றன, பசும்புல். 8 8. உறவெதுப்புறும் - மிகவும் வெதுப்புகின்ற. வேனிலான் ஒழிய - கோடை நீங்க. நினைப்பஅரும் திறம்கார் - நினைத்தற்கரிய சிறப்புள்ள கார் காலம் என்னும். மனத்து உறுநிறம் குளிர்ப் பினில் - மனத்தில் பொருந்திய தன்மையாகிய குளிர்ச்சியினால். புறம்தலம் - புறத்தில். பசும்புல் நிலமடந்தையின் மயிர்போல் காட்சி அளித்தன. அளவில் கார்எனும் அப்பெரும் பருவம்வந்து அணைந்தால், தளர்வர் என்பது தவம்புரி வோர்கட்கும் தகுமால்; கிளவி தேனினும் அமிழ்தினும் இழைத்தவன் கிளைதோள் வளவி யுண்டவன் வருந்தும்என் றால்அது வருத்தோ. 9 9. தோள்வளவி - தோள்களைத் தழுவி. உண்டவன் - அவ்வின்பத்தை நுகர்ந்தவனாகிய இராமன். கார்காலங்கண்டு இராமன் கலங்குதல் வேறு ‘வானகம் மின்னினும், மழைமு ழங்கினும், யான்அகம் மெலிகுவென் எயிற்று அராஎனக்; கானகம் புகுந்துயான் முடித்த காரியம், மேல்நகும், கீழ்நகும், இனிஎன் வேண்டுமோ? 10 10. மேல்நகும் கீழ்நகும் - மேலோரும் சிரிப்பர்; கீழோரும் சிரிப்பர். நெய்அடை தீஎதிர் நிறுவி, `நிற்குஇவள் கையடை என்றஅச் சனகன் கட்டுரை, பொய்யடை ஆக்கிய பொறியி லேனொடு மெய்யடை யாது;இனி விளிதல் நன்று;அரோ. 11 11. நெய்அடை - நெய்சேர்ந்த. தீஎதிர் நிறுவி - அக்கினி சாட்சியாக நிறுத்தி. கட்டுரை - சொல்லை. பொய்அடை - பொய்யுள்ளதாக. ‘தேற்றுவாய் நீஉளை யாகத் தேறிநின்று, ஆற்றுவேன் நான்உள னாக; ஆய்வளை தோற்றுவாள் அல்லள்!இத் துன்பம் ஆர்இனி மாற்றுவார்! துயர்க்கொரு வரம்புண் டாகுமோ! 12 12. நான்உளன் ஆற்றுவேனாக - நான்இருந்து பொறுத்துக் கொண்டிருக்கின்றேன். ஆய்வளை - சீதை. `தருமம்என்று ஒருபொருள் தன்னை அஞ்சியான் தெருமரு கின்றது; செறுநர் தேவரோடு ஒருமையின் வந்தன ரேனும் உய்கலார்; உரும்என ஒலிபடும் உரவி லோய், என்றான். 13 13. தெருமருகின்றது - மனம் கலங்குவதாகும். செறுநர் - பகைவர்களாகிய அரக்கர்கள். உரும்என - இடிபோல. என்றான் - என்றுரைத்தான் இராமன். இராமனுக்கு இளையோன் கூறிய ஆறுதல் மொழிகள் ‘ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப்,பின் ஏகுறும் நாள்இடை எய்தி, எண்ணுவ சேகுஅறப் பன்முறை தெருட்டிச் செய்தபின், வாகைஎன்று ஒருபொருள் வழுவற் பாலதோ? 14 14. ஆகுநர் - உதவியாக இருக்கின்றவர்கள். ஏகுறும் நாள்இடை - செல்லும் நாளில். எய்தி - சென்று. சேகுஅற - குற்றமற. தெருட்டி - ஆராய்ந்து தெளிந்து. வாகை - வெற்றி. `பைந்தொடிக்கு இடர்களை பருவம், பையவே வந்துஅடுத் துளது;இனி வருத்தம் நீங்குவாய்; அந்தணர்க்கு ஆம்அறம்; அரக்கர்க்கு ஆகுமோ? சுந்தரத் தனுவலாய்! brhšY Ú! என்றான். 15 15. பைந்தொடி - சீதை. அந்தணர்க்கு - முனிவர்க்கு. ஆகும் அறம் - உதவியாக நிற்கின்ற அறம். அரக்கர்க்கு ஆகுமோ - அரக்கர்க்குத் தோற்பவர் ஆவோமோ. கார்காலம் நீங்குதல் மள்கல்இல் பெரும்கொடை மருவி, மண்உளோர் உள்கிய பொருள்எலாம் உதவி, அற்றபோது எள்கல்இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் வெள்கிய மாந்தரின், வெளுத்த மேகமே. 16 16. மள்கல்இல் - குறைவில்லாத. கொடைமருவி - கொடைத் தன்மை பொருந்தி. அற்றபோது - பொருள் இல்லாதபோது. எள்கல்இல் - பழிக்கப்படாத. ஈவது - கொடுப்பதாகிய பொருள். தீவினை நல்வினை என்னத் தேற்றிய பேய்வினைப் பொருள்தனை அறிந்து, பெற்றதோர் ஆய்வினை மெய்யுணர்வு அணுக, ஆசுஉறும் மாயையின் மாய்ந்தது மாரிப் பேர்இருள். 17 17. பேய்வினைப் பொருள்தனை - பேயின் செயலைக் கொண்ட செல்வத்தை. ஆய்வினை மெய்உணர்வு - ஆராயும் தன்மையுள்ள உண்மை ஞானம். ஆசுஉறும் மாயையின் - குற்றமடைந்து அழியும் அறியாமையைப் போல. மூள்அமர் தொலைவுற முரசு அவிந்தபோல் கோள்அமை கணமுகில் குளிறல் ஓவின; நீள்அறு கணைஎனத் துளியும் நீங்கின; வாள்உறை உற்றென மறைந்த மின்எலாம். 18 18. மூள்அமர் தொலைவுஉற - மூண்டபோர் முடிந்தபின். கோள் - வலிமை பொருந்திய. குளிறல் - இடித்தல். ஓவின - நீங்கின. மேகம்மா மலைகளின் புறத்து வீதலால் மாகயாறு யாவையும் வாரி அற்றன; ஆகையால் தகவிழந்து அழிவின் நன்பொருள் போகஆ றொழுகலான் செல்வம் போன்றவே. 19 19. மாமலைகளின் புறத்து - பெரிய மலைகளின்மேல். வீதலால் - அழிதலால். மாகயாறு - நாலுதிசைகளிலும் உள்ள ஆறுகள். வாரி - வெள்ளம், தகவு இழந்து - பெருமை இழந்து. அழிவுஇல் நன்பொருள்போக - அழியாத நல்வினை நீங்க. ஆறு ஒழுகலான் - நல்வழியிலே நடவாதவனுடைய. வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர் நெஞ்செனத் தெளிந்தநீர் நிரந்து தோன்றுவ; பஞ்செனச் சிவக்கும்மென் பாதப் பேதையர் அஞ்சனக் கண்எனப் பிறழ்ந்த ஆடல்மீன். 20 20. பஞ்சுஎன - செம்பஞ்சைப்போல. ஆடல்மீன் - ஆடி ஓடிக்கொண்டிருக்கின்ற மீன்கள். பிறழ்ந்த - புரண்டன; விளங்கின. கல்வியின் திகழ்கணக் காயர், கம்பலை பல்வகைச் சிறாஅர்எனப், பகர்வ பல்அரி, செல்விடத்து அல்லதுஒன்று உரைத்தல் செய்கலா நல்அறி வாளரின், அவிந்தா நாவெலாம். 21 21. கணக்காயர் - ஆசிரியர்பால் கல்வி கற்கும். பல்விதச் சிறார்கம்பலை என - பலவகைப்பட்ட சிறுவர்கள் செய்யும் ஓசையைப்போல. பகர்வ பல்அரி - ஓசையிடுவனவாகிய பலவகை யான தவளைகளும். `அறிவாளரின் நாவெலாம் அவிந்த அவிந்த - அடங்கின. ஒலித்த தவளைகளுக்குச் சிறார் உவமை. அடங்கிய அறிஞர்களுக்கு அறிஞர் உவமை. இவ்வாறு கார்காலம் மறைந்தது. இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடும் வாய்ப்புக் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தனர். 11. கிட்கிந்தைப் படலம் சுக்கிரீவன் குறித்த காலத்தில் வராதது கண்டு இராமன் கூறியது `பெறல்அ ரும்திருப் பெற்று,உத விப்பெரும் திறம்நி னைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்; அறம்ம றந்தனன், அன்புகி டக்கநம் மறன்அ றிந்திலன் வாழ்வின் மயங்கினான். 1 கிட்கிந்தைப் படலம்: கிஷ்கிந்தை நகரில் நடந்த நிகழ்ச்சியைப்பற்றி உரைக்கும் பகுதி. கிஷ்கிந்தை; வாலியின் நகரம்; சுக்கிரீவனால் ஆளப்படுவது. 1. உதவிப்பெரும் திறன் - உதவியின் பெரிய தன்மையை. சீர்மை - ஒழுக்கம். `நன்றி கொன்று,அரு நட்பினை நார்அறுத்து, ஒன்றும் மெய்ம்மை சிதைத்து,உரை பொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ? சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்! 2 2. நார்அறுத்து - கட்டறுத்து. உரை பொய்த்துளார் - வாக்குறுதி பொய்த்தவரை. தங்குமோ - ஒன்றாக நிற்குமோ? `நஞ்சம் அன்னவ ரைநலிந் தால்,அது வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால் அஞ்சில் அம்பதில் ஒன்றறி யாதவன் நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய். 3 3. அஞ்சில் அம்பதில் - ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும். ஒன்று அறியாதவன் - நன்மை ஒன்றையும் உணராதவன். அம்சில அம்புஅதில் - அழகிய சில அம்புகளில். ஒன்று - ஒரு அம்பின் வலிமையைக்கூட. `ஊரும் ஆளும் அரசும்,உம் சுற்றமும் நீரும், ஆளுதி ரேஎனின், நேர்ந்தநாள் வாரும்; வாரலிர் ஆமெனின், வானரப் பேரும் மாளும் எனும்பொருள் பேசுவாய். 4 4. ஆளுதிரே எனின் - ஆட்சி புரிவீர்களோயானால். நேர்ந்தநாள் - வருவதாகச் சம்மதித்த நாளிலே. `இன்னும் நாடுதும் இங்கிவர்க் கும்வலி துன்னி னாரை, எனத்,துணிந் தார்எனின், உன்னை வெல்ல உலகொரு மூன்றினும் நின்ன லால்பிறர் இன்மை நிகழ்த்துவாய். 5 5. இங்குஇவர்க்கு வலிதுன்னினாரை - இங்கு இவர்களைக் காட்டிலும் வலிமை பொருந்தியவர்களை. இலக்குவன் போர்க் கோலத்துடன் கிட்கிந்தைக்குப் போதல் தன்து ணைத்தம யன்தனி வாளியின் சென்று, சேண்உயர் கிட்கிந்தை சேர்ந்தவன், குன்றி னின்றொரு குன்றினில் குப்புறும், பொன்து ளங்குஉளைச் சீயமும் போன்றனன். 6 6. வாளியின் - அம்புபோல. சேர்ந்தவன் - சேர்ந்தவனாகிய இலக்குவன். குப்புறும் - தாவுகின்ற துளங்கு - அசைகின்ற. உளை - பிடரிமயிர். கண்ட வானரம் காலனைக் கண்டபோல் மண்டி ஓடினர்; வாலி மகற்குஐயா; கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான் சண்ட வேகத்தி னால்;என்று சாற்றலும். 7 7. சண்டவேகம் - மிகுந்த வேகம். அன்ன தோன்றலும், ஆண்தொழி லான்வரவு இன்ன தென்றுஅறி வான்மருங்கு எய்தினான்; மன்னன் மைந்தன் மனக்கருத்து உட்கொளாப், பொன்னின் வார்கழல் தாதைஇல் போயினான். 8 8. அறிவான் - அறியும்பொருட்டு. உட்கொளா - அறிந்து. தாதை இல் - சுக்கிரீவன் இடத்திற்கு. அங்கதன் முயற்சி சுக்கிரீவன் அரண்மனையுள் மங்கையருடன் மகிழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அங்கதன் அவனைத் துயில் எழுப்பத் தொடங்கினான். `vªij nfŸ!அவ் விராமற்கு இளையவன் சிந்தை யுள்,நெடும் சீற்றம் திருமுகம் தந்த ளிப்பத், தடுப்பரும் வேகத்தான் வந்த னன்;உன் மனக்கருத்து யாதென்றான். 9 9. சிந்தைஉள் - உள்ளத்தில் எழுந்த. திருமுகம் தந்து அளிப்ப - அழகிய முகம் வெளியில் தந்துகாட்ட. இனைய மாற்றம் இசைத்தனன் என்பதோர் நினைவி லான்,நெடும் செல்வம் நெருக்கவும், நனைந றும்துளி நஞ்சு மயக்கவும், தனைஉ ணர்ந்திலன் மெல்அணை தங்கினான். 10 10. நனைநறும் துளிநஞ்சு - குளிர்ந்த மணமுள்ள தேன் துளிகளாகிய விஷம். ஆத லால்அவ் அரசிளம் கோளரி யாதும் முன்னின்று இயற்றுவது இன்மையால் கோதுஇல் சிந்தை அனுமனைக் கூவுவான், போதல் மேயினன் போதக மேஅனான். 11 11. இளம்அரசு கோளரி - இளவரசனாகிய வலிய சிம்மம் போன்ற அங்கதன். போதகமே அனார் - ஆண் யானையைப் போன்றவன். போத மேயினன் - போகத் தொடங்கினான். மந்தி ரத்தனி மாருதி தன்னொடும் வெந்தி றல்படை வீரர் விராய்வர அந்த ரத்தின்வந்து அன்னைதன் கோயிலை இந்தி ரற்கு மகன்மகன் எய்தினான். 12 12. மந்திரம்தனி மாருதி - ஆலோசனை கூறுவதிலே ஒப்பற்றவனாகிய மாருதி. விராய்வர - சூழ்ந்துவர. அந்தரத்தின் - விரைவில். இந்திரற்கு மகன் மகன் - இந்திரன் பேரன். ‘எய்தி, மேல்செயத் தக்கதுஎன்? என்றலும் செய்திர் செய்தற்கு அரும்நெடும் தீயன; நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்; உய்திர் போலும் உதவிகொன் றீர்!எனா. 13 13. செய்திர் - செய்துவிட்டீர்கள். நொய்தில் - விரைவில். `மீட்டும் ஒன்று விளம்புகின் றாள்,`படை கூட்டும் என்றுமைக் கொற்றவன் வறிய நாள்தி றம்பின்,உம் நாள்திறம் பும்எனக் கேட்டிலிர்;இனிக் காண்டிர்; கிடைத்திரால். 14 14. நாள்திறம்பின் - நாள் தவறினால். உம்நாள் திறம்பும் - உமது வாழ்நாள் அழியும். கிடைத்திர்ஆல் - அகப்பட்டுக் கொண்டீர்கள். இனி காண்டிர் - அதன் பயனைக் காணுங்கள். தேவி நீங்க,அத் தேவரின் சீரியோன் ஆவி நீங்கினன் போல்அயர் வான்;அது பாவி யாது பருகுதிர் போலும்,நும் காவி நாள்மலர்க் கண்ணியர் காதல்நீர். 15 15. -. ‘திறம்பி னீர்!மெய்; சிதைத்தீர்! உதவியை; நிறம்பொ லீர்!உங்கள் தீவினை நேர்ந்ததால் மறஞ்செய் வான்உறின் மாளுதிர்; மற்றினிப் புறம்செய்து ஆவதுஎன்? என்கின்ற போதின்வாய். 16 16. மெய்திறம்பினீர் - உண்மை தவறினீர்கள். நிறம் பொலீர் - குணம்கெட்டுப் போனீர்கள். மறம்செய்வான் உறின் - சண்டை செய்யத் தொடங்குவீர்களானால். இலக்குவன் சீற்றம் குரக்கினம் கற்களை அடுக்கிக் கோட்டை வாயிலை அடைத்து விட்டன. கைகளிலே மரக்கிளைகளை ஏந்திக் கொண்டு மதிற் புறத்திலே கூடியிருந்தன. அதைக் கண்டான் இலக்குவன். `காக்க வோகருத்து என்ற கதத்தினால் பூக்க மூரல், புரவலர் புங்கவன் தாக்க ணங்குஉறை தாமரைத் தாளினால் நூக்கி னான்,அக் கதவினை நொய்தினின். 17 17. கதத்தினால் மூரல்பூக்க - கோபத்தினால் சிரிப்புத் தோன்ற. தாக்கணங்கு - இலக்குமி. நூக்கினான் - தள்ளினான். காவல் மாமதி லும்,கத வும்,கடி மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும், தேவு சேவடி தீண்டலும், தீண்டரும் பாவம் ஆம்எனப் பற்றழிந்து இற்றவால். 18 18. கடிமேவும் - காவல் பொருந்திய. தேவு - இலக்குவன். வான ரங்கள் வெருவி, மலைஓரீஇக், கான்ஒ ருங்கு படர,அக் கான்வரை, மீன்நெ ருங்கிய வானகம், மீன்எலாம் போன பின்பொலிவு அற்றது போன்றதே. 19 19. மலைஒரீஇ - மலையைவிட்டு நீங்கி. படர - போய் விட்டதனால். மீன் - நட்சத்திரம். பொலிவு - அழகு. அன்ன காலையில், ஆண்தகை ஆழியான் பொன்னின் நன்னகர் வீதியில் புக்கனன்; சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர் ‘என்ன செய்குவது எய்தினன்? என்றனர். 20 20. ஆழியான் - இலக்குவன். சுற்றினர் நின்றவர் - சுற்றி நின்றவர்கள். `நீர்எ லாம்அயல் நீங்குமின்; நேர்ந்துயான் வீரன் உள்ளம் வினவுவல்; என்றலும் பேர நின்றனர் யாவரும்; பேர்கலாத் தாரை செள்றனள் தார்குழ லாரொடும். 21 21. நேர்ந்து - சந்தித்து உள்ளம் வினவுவல் - உள்ளத்தைக் கேட்டறிவேன். பேர்கலா - பின்னடையாமல். உரைசெய் வானர வீரர் உவந்துறை அரசர் வீதி கடந்து,அகன் கோயிலைப் புரசை யானைஅன் னான்புக லோடும்,அவ் விரைசெய் வார்குழல் தாரை விலக்கினாள். 22 22. புரசையானை அனான் - கழுத்துக் கயிற்றையுடைய யானைபோன்ற இலக்குவன். அகன்கோயிலை - அகன்ற சுக்கிரீவன் அரண்மனையுள். விலக்கினாள் - தடுத்தாள். தாரையும் இலக்குவனும் வேறு தாமரை வதனம் சாய்த்துத் தனுநெடும் தரையில் ஊன்றி, மாமியர் குழுவின் வந்தான் ஆம்என மைந்தன் நிற்பப், பூமியில் அணங்க னார்தம் பொதுவிடைப் புகுந்து, பொற்றோள் தூமன நெடுங்கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள். 23 23. தனு - வில்லை. பொதுஇடை - கூட்டத்தினுள். பொன் தோள் - அழகிய தோள்களையும். தூமனம் - தூயமனத்தையும். நெடும்கண் - நீண்ட கண்களையும் உடைய. நடுங்குவாள் - நடுங்குகின்றவளாகி. ‘அந்தமில் காலம் நோற்ற ஆற்றல்உண் டாயின் அன்றி, இந்திரன் முதலி னோரால் எய்தலாம் இயல்பிற்று அன்றே; மைந்தநின் பாதம் கொண்டெம் மனைவரப் பெற்று வாழ்ந்தேம்! உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதிவேறு இதனின் உண்டோ! 24 24. நோற்ற - தவம் புரிந்த. எய்தல் ஆம் - அடையக் கூடிய. இயல்பிற்று - தன்மையுடையது. அன்று; ஏ. ‘வெய்தின்நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை, வீர செய்திதான் உணர்கி லாது; திருவுளம் தெரித்தி என்றாள்; ‘அய்யநீ! ஆழி வேந்தன் அடியிணை பிரிக லாதாய், எய்தியது என்னை? என்றாள்; இசையினும் இனிய சொல்லாள். 25 25. வெய்தின் - கடூரத்துடன். `செய்திதான் உணர்கிலாது வெருவுறும். இலக்குவன் நிலை `ஆர்கொலோ உரைசெய் தார்என்று அருள்வரச், சீற்றம் அஃகா, பார்குலாம் முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும், ஏர்குலாம் முகத்தி னாளை, இறைமுகம் எடுத்து நோக்கித், தார்குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 26 26. அருள் வர - கருணைதோன்ற. சீற்றம்அஃகா - சினம் குறைந்து. படிவம் - தோற்றம். ஏர்குலாம் - அழகு விளங்கும். முகம் எடுத்து - முகம் நிமிர்ந்து. மங்கல அணியை நீக்கி, மணிஅணி துறந்து, வாசக் கொங்கலர் கோதை மாற்றிக், குங்குமம் சாந்தம் கொட்டாப் பொங்குமென் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான். 27 27. மங்கல அணி - மங்கல்யம். கோதை மாற்றி - மாலை அணிவதை விட்டு. கொட்டா - கொட்டிப் பூசாத. பூகம் - பாக்குமரம் போன்ற. பனிப்ப - நீர் சிந்தும்படி. `இனையராம் என்னை யீன்ற இருவரும், என்ன வந்த நினைவினான் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன்; நெடிது நின்றான்; `வினவினாட்கு எதிர்ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்றுஅப் புனைகுழ லாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான். 28 28. இருவரும் - கோசலை சுமித்திரை யாகிய இருவரும். கைகேசியைப் பற்றி நினைத்திலன். அயர்ப்புச் சென்ற - சோர்ந்த. நெடிது - நீண்ட நேரம். இலக்குவன் உரை `சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவன்; என்று மானவற்கு உரைத்த மாற்றம்மறந்தனன் அருக்கன் மைந்தன்; `ஆனவன் அமைதி வல்லை அறிஎன, அருளின் வந்தேன்; மேனிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்பு கென்றான். 29 29. ஆனவன் அமைதி - அத்தகையனான சுக்கிரீவன் நிலைமையை. வல்லை அறிஎன - விரைவில் தெரிந்து வருக என்று இராமன் சொல்ல. மேல் நிலை - சிறந்த அரசாட்சியை அடைந்து நின்ற. தாரையின் மொழி ‘சீறுவாய் அல்லை ஐய! சிறியவர் தீமை செய்தால், ஆறுவாய்; நீஅ லால்,மற்று ஆர்உளர்? அயர்ந்தான் அல்லன்; வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்துஅவ் வேலை ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவிமா றுதவி உண்டோ! 30 30. ஆறுவாய் - பொறுப்பாயாக. அஎல்லை - அவ்விடங் களிலிருந்து. ஊறும் ஆ நோக்கி - சேனைகள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு. ‘ஆயிர கோடி தூதர் அரிக்கணம் அழைக்க ஆணை போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல்புக் கோர்க்குத் தாயினும் நல்ல நீரே தணிதிரால்; தருமம் அஃதால்; தீயன செய்யார் ஆயின் யாவரே செறுநர் ஆவார்? 31 31. ஆணைபோயினர் - சுக்கிரீவன் உத்தரவின்படி சென்றனர். தணிதிர் - கோபம் தணிவீர். `செம்மைசேர் உள்ளத் தீர்கள், செய்தபே ருதவி, தீரா வெம்மைசேர் பகையும் மாற்றி, அரசுவீற் றிருக்க விட்டீர், உம்மையே யிகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ! இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே. 32 32. தீரா - என்றும் அழிய மாட்டா. வெம்மைசேர் - கொடுமை பொருந்திய. எளிமையாய் - அது எளிதிலே. ஒழிவது ஒன்றோ - நீங்கக் கூடியதொரு பழியோ. மாருதி மருங்கு வருதல் என்றவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு நன்றுணர் கேள்வி யாளன் அருள்வர நாண்உள் கொண்டான் நின்றனன்; நிற்ற லோடும், `நீத்தனன் முனிவுஎன்று உன்னி, வன்துணை வயிரத் திண்தோள் மாருதி மருங்கின் வந்தான். 33 33. `முனிவு நீத்தனன் என்று உன்னி உன்னா - நினைத்து. வன்துணை - வலிய இரண்டாகிய. மாருதியின் சொற்கள் வந்தடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி, ‘அந்தம்இல் கேள்வி நீயும் அயர்த்தனை யாகும் அன்றே முந்தின செய்கை? என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான்; ‘எந்தைகேட் டருளு கென்ன இயம்பினன் இயம்ப வல்லான். 34 34. அந்தம் இல் கேள்வி நீயும் - அளவற்ற நூல் கேள்வி களையுடைய நீயும். `முந்தின செய்கை அயர்த்தனை ஆகும் அன்றே செய்கை - நிகழ்ச்சி. அயர்த்தனை - மறந்தனை. ‘சிதைவகல் காதல் தாயைத், தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅந் தணரை, ஆவைப், பாலரைப், பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்;மாயா உதவிகொன் றார்க்குஎன் றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ? 35 35. சிதைவு அகல் - தீமை அற்ற. மாற்றல்ஆம் - அப்பாவங் களை நீக்குவதற்குரிய. ஆற்றல் - வலிமையான செயல்கள். மாயா - அழியாத. உதவி கொன்றார்க்கு - நன்றியை மறந்தவர்க்கு அப்பாவத்தை. `ஒழிக்கலாம் உபாயம் ஒன்றேனும் உண்டோ. `ஐயநும் மோடும், எங்கள் அரிக்குலத்து அரச னோடும் மெய்யுறு கேண்மை யாக்கி, மேலைநாள் விளைவது ஆன செய்கை,என் செய்கை அன்றோ? அன்னது சிதையும் ஆயின் உய்வகை எற்கும் உண்டோ? cz®îkh R©lJ m‹nwh? 36 36. மெய்உறு கேண்மை ஆக்கி - உண்மை நட்பு உண்டாகும் படி செய்து. மேலைநாள் விளைவது ஆய செய்கை - முன்னாளில் விளைந்த செய்கை. என் செய்கை அன்றோ - என்னால் உண்டான செயல் அன்றோ. மாசுண்டது - குற்றமடைந்தது. `மறந்திலன் கவியின் வேந்தன்; வயப்படை வருவிப் பாரைத் திறம்திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்த்தான்; அறந்துணை நுமக்குத் தான்தன் வாய்மையை அழிக்கு மாயின், பிறந்திலன் அன்றே; ஒன்றோ, நரகமும் பிழைப்பது அன்றால். 37 37. திறம் திறம் ஏவி - பகுதி பகுதியாக அனுப்பி. பார்த்து - எதிர் பார்த்து. அறம்துணை நுமக்கு - அறத்தைத் துணையாகக் கொண்ட உங்களிடம். பிழைப்பது - தவறாது. `உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக், கைம்மா றாக, மதவானை அனைய மைந்த! மற்றும்உண் டாக வற்றோ; சிதையாத செருவில் அன்னான் முன்சென்று, செறுநர் மார்பின் உதையானேல், உதையுண்டு ஆவி உலையானேல், உலகில் மன்னோ. 38 38. அன்னான் முன்சென்று - அவனுக்கு முன்னே சென்று. உலகில்; மற்று உண்டாகவற்றோ - வேறு கைம்மாறு உண்டாக வல்லதோ. `ஈண்டினி நிற்றல் என்பது இனியதோர் இயல்பிற்று அன்றால், வேண்டலர் அறிவ ரேனும் கேண்மைதீர் வினையிற்று; ஆமால்; ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐயநீர் அளித்த செல்வம் காண்டியால், உன்முன் வந்த கவிக்குலக் கோனொடு; என்றான். 39 39. வேண்டலர் - பகைவர். அறிவரேனும் - அறிவாரா யினும். கேண்மை தீர்வினையிற்று ஆம் - நட்பு நீங்கும் செயலாக முடியும். அனுமனுக்கு இளையோன் அளித்த மறுமொழி மாருதி மாற்றம் கேட்ட மலைபுரை வயிரத் தோளான், தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான்; சிந்தை செய்தான்; ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்;வந்து அடுத்த செல்வம் பேர்அரி தாகச் செய்த சிறுமையான் என்னும் பெற்றி. 40 40. தீர்வினை சென்று நின்ற - முடிவை அடைந்த. சீற்றத்தான் - கோபம் உடையவன் ஆனான். அருளின் - கட்டளையிலிருந்து. தீர்ந்தான் அல்லன் - நீங்கினவன் அல்லன். பேர்வு அரிதாக - பெயர்ந்து போகாதபடி. `என்னும் பெற்றி சிந்தை செய்தான் செல்வத்தில் மூழ்கிச் சிறுமைக் குணம் உற்றான் என்று எண்ணினான் இலக்குவன். `நீங்கள் காலந் தாழ்த்தீர்; இராமன் துன்பத்தை இதுகாறும் நான் ஆற்றி யிருந்தேன்; உன்னைக் கண்டு, நீங்கள் உதவி செய்யும் பெற்றியை உணர்ந்து செல்ல வந்தேன். இராமன்தன் வில் வலிமையாலேயே சீதையைக் கண்டுபிடித்து விடமுடியும். ஆயினும் அன்று நீங்கள் சொன்ன சொற்களை நிறைவேற்றாமல் காலங்கடத்தல் முறையன்று. என்றான் இலக்குவன். `தாழ்வித்தீர் அல்லீர்! பன்னாள் தருக்கிய அரக்கர் தம்மை வாழ்வித்தீர்! இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்! மரபில் தீராக் கேள்வித்தீ யாளர் துன்பம் கிளர்வித்தீர்! பாவம் தன்னை மூள்வித்தீர்! முனியா தானை முனவித்தீர் முடிவின்; என்றான். 41 41. தாழ்வித்தீர் அல்லீர் - நீங்கள் காலந்தாழ்ந்தவர்கள் மட்டும் அல்லீர். மரபின் தீரா – முறை யிலே தவறாத. கேள்வி தீயாளர் - கேள்வியும் வேள்வியும் உடையமுனிவர்களின். முனியாதானை - கோபிக்காத இராமனை. தோன்றல்அஃது உரைத்த லோடும், மாருதி தொழுது, `தொல்லை ஆன்றநூல் அறிஞ! போன பொருள்மனத்து அடைப்பாய் அல்லை; ஏன்றது முடியேம் என்னின் இறத்தும்;இத் திறத்துக் கெல்லாம் சான்றுஇனி அறனே; போந்துன் தம்முனைச் சார்தி; என்றான். 42 42. ஏன்றது - ஏற்றுக் கொண்டதை. இத்திறத்துக் கெல்லாம் - இப்பொருள்கட் கெல்லாம். `முன்னும்நீ சொல்லிற்று அற்றோ முயன்றது முயற்று காறும் இன்னும்நீ இசைத்த செய்வான் இயைந்தனம். என்று கூறி அன்னதோர் அமைதி யான்தன் அருள்சிறிது அறிவான் நோக்கிப் பொன்னின்வார் சிலையி னானும் மாருதி யோடும் போனான். 43 43. சொல்லிற்று அன்றோ - சொல்லியதனால் அன்றோ. முற்றும்காலை - முடியும்போது. இசைத்த - சொல்லியவற்றை. அன்னது ஓர் அமைதியான் தன் - அத்தகைய ஓர் தன்மை யுள்ளவனாகிய சுக்கிரீவனது. அருள் சிறிது அறிவான் நோக்கி - மனோநிலையைச் சிறிது அறிந்து கொள்ள எண்ணி. சுக்கிரீவன் இளையோன் வருகையை அறிதல் தாரை தன் குழாத்துடன் அரண்மனைக்குச் சென்றாள்; அங்கதன் அமைச்சர்களுடன் வந்தான்; இலக்குவன் அடிகளிலே இறைஞ்சினான். `என் வரவை விரைவில் உன் தந்தைக்கு விளம்புக என்றான் இலக்குவன். அங்கதன் சுக்கிரீவன் படுக்கை யிடத்தை அண்மினான்; அவன் கால்களை வருடி எழுப்பினான்; இலக்குவன் சினத்துடன் வந்திருக்கும் செய்தியை உரைத்தான். `R¡»ßt‹ ah« xU F‰wK« brŒây«; ád¤J¡F¡ fhuz« ahJ? என்றான். `இயைந்தநாள் எல்லை நீசென்று எய்தலை; செல்வம் எய்தி வியந்தனை; உதவி கொன்றாய்! மெய்யிலை என்ன வீங்கி உயர்ந்தது சீற்றம்; மற்றது உற்றது செய்யத் தீர்ந்து நயம்தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும். 44 44. இயைந்தநாள் எல்லை - ஒப்புக் கொண்ட நாளிலே. அனுமன் அது உற்றது செய்ய - மாருதி அக்கோபம் நீங்குவதற்கு உரியதைச் செய்ய `நம்மை இன்னும் முற்றும் நல்கினன். என்று அங்கதன் உரைத்தான். மேலும் நடந்ததை உரைத்தான்; குரங்குப் படைகள் இலக்குவன் வருகையைக் கண்டு அஞ்சின; கோட்டை வாயிலை அடைத்தன; இலக்குவன் அதைக் காலால் தகர்த்தெறிந்தான். `அந்நிலை கண்ட திண்தோள் அரிக்குலத்து அனிகம் அம்மா எந்நிலை உற்ற தென்கேன்; யாண்டுப்புக்கு ஒளித்தது என்கேன்; இந்நிலை கண்ட அன்னை, ஏந்திழை ஆயத் தோடும் மின்இலை வேலி னானை வழிஎதிர் விலக்கி நின்றாள். 45 45. அரிக்குலத்து அனிகம் - வானரசேனைகள். மின் இலை - மின்னுகின்ற இலைவடிவான. `மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து பொங்கிய சீற்றம் பற்றிப் புகுந்திலன்; பொருமி நின்றான்; நங்கையும் இனிது கூறி`நாயக நடந்தது என்னோ எங்கள்பால் என்னக் கேட்டாள்; இளவலும் வரவு சொன்னான். 46 46. சீற்றம் பற்றி - சீற்றத்தால். பொருமி - வருந்தி. அதுபெரி தறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி `விதிமுறை மறந்தான் அல்லன்; வெம்சினச் சேனை வெள்ளம் கதும்எனக் கொணரும் தூது கல்அதர் செல்ல ஏவி எதிர்முறை இருந்தான்; என்றாள்; இதுஇங்குப் புகுந்த தென்றான். 47 47. விடுமுறை - கட்டளையை. கல்அதர் செல்ல - மலை வழியிலே செல்லும்படி. எதிர்முறை - எதிர்பார்த்து. சுக்கிரீவன் கேள்வியும் துயரமும் R¡»ßt‹ `V‹ vd¡F¢ brhšyhkš ïJ brŒÔ®fŸ? என்றான். நான் உன்னிடம் வந்தேன்; அவன் வருகையை உரைத்தேன்; நீ உணர்ந்திலை; அதன்பின் அனுமனைத் தேடிச் சென்றேன். இப்பொழுது நீ இலக்கு வனைக் காண வேண்டும். என்றான். ‘சிதைவகல் காதல் தாயைத், தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅந் தணரை, ஆவைப், பாலரைப், பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்;மாயா உதவிகொன் றார்க்குஎன் றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ? 35 48. உறவுண்ட - கலந்த நட்புள்ள. சிந்தையான் - மனத்தினனாகிய சுக்கிரீவன். என்னின் தீர்வான் - என்னால் நீக்கிக் கொள்ளும்படி. இருந்த - அவன் நினைத்திருந்த. `ஏயின நறவுஅ லால்மற்று ஏழைமைப் பாலது என்னோ? `தாய்இவள், மனைவி, என்னும் தெளிவின்றேல் தருமம் என்னாம்! தீவினை ஐந்தின் ஒன்றாம்; அன்றியும் திருக்கு நீங்கா மாயையின் மயங்கு கின்றாம்; மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம். 49 49. ஏயின - அமைந்த. நறவு அலால் - இந்த மதுவுண்ட குற்றம் அல்லாமல். ஏழைமைப்பாலது - அறிவற்ற தன்மை யுள்ளது. jhŒ ïtŸ kidÉ v‹D« - ïtŸjhŒ., இவள்மனைவி என்னும். தெளிவு - அறிவு. தீ வினை ஐந்தின் - பஞ்சமா பாதகங்களில். திருக்கு - வஞ்சகம். மயக்கின்மேல் - கள்ளின் மேல். மயக்கும் - ஆசையும். பஞ்சமா பாதகங்கள்; கொலை, பொய், களவு, கள், சூது. `தெளிந்துதீ வினையைச் சென்றார் பிறவியைத் தீர்வர் என்னா விளிந்திலா உணர்வி னோரும், வேதமும், விளம்ப வேயும் நெளிந்துறை புழுவை நீக்கி, நறவுண்டு நிறைகின் றேனால், அளிந்தகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின் றாரின். 50 50. தீர்ந்தோர் - நீங்கினவர்கள். பிறவியில் தீர்வர் - பிறவாத நெறியைப் பெறுவர். விளிந்திலா - அழியாத. நிறை நின்றேனால் - களிப்பு நிரம்புகின்றேன். அளித்து அகத்து - கனிந்து வீட்டிலே. ‘செற்றதும் பகைஞர், நட்டார் செய்தபே ருதவி தானும் கற்றதும், கண்கூ டாகக் கண்டதும் கலைவ லாளர் ‘சொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும், படர்ந்த துன்பம் உற்றதும் உணரார் ஆயின் உறுதிவேறு இதனின் உண்டோ? 51 51. பகைஞர் செற்றதும் - பகைவர் புரிந்த தீமையையும். மானம் - பெருமை. `இதனின் வேறு உறுதி உண்டோ. வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபில் கொட்பும் தஞ்சம்என் றாரை நீக்கும் தன்மையும், களிப்பும் தாக்கும் கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தி னாரை நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்கா தன்றே? 52 52. மரபு இல்கொட்பும் - முறையற்ற கொள்கையும். தாக்கும் - சேர்ந்து துன்பம் செய்யும். ‘கேட்டனென் நறவால் கேடு வரும்எனக் கிளத்தும் அச்சொல் காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால் மீட்டினி உரைப்ப தென்னே? விரைவின்வந் தடைந்த வீரன் மூட்டிய வெகுளி யால்யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ? 53 53. காட்டியது - கண் கூடாகக் காட்டி விட்டது. கடந்தது அல்லால் - ஆபத்தைத் தாண்டினோம் அல்லாமல். வீரன் - இலக்குவனது. மூட்டிய - மிகுந்த. ஐயநான் அஞ்சி னேன்இந் நறவினின் அரிய கேடு; கையினால் அன்றி யேயும் கருதுதல் கருமம் அன்றால், வெய்யதாம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் செய்யதா மரைகள் அன்ன சேவடி சிதைக்க; என்றான். 54 54. கையினால் அன்றியேயும் - கையினால் தொடுவ தன்றியும். கருதுதல் - மனத்தால் எண்ணுதலும். கருமம் - நற்செயல். சேவடி சிதைக்க - சேவடிகளே என்னை அழிப்பதாக. இலக்குவ சுக்கிரீவர்கள் சந்திப்பு சுக்கிரீவன், `இளையோனை வரவேற்க வேண்டி யதை நீயே செய்க என்று அங்கதனுக்கு அறிவித்தான். சுக்கிரீவன் தன் சுற்றம் சூழ இலக்குவனை வரவேற்க அரண்மனை வாயிலில் காத்து நின்றான். ஊரார் அனைவரும் இளையோனை உவகையுடன் வரவேற்றனர். அங்கதன் பெயர்த்தும் வந்து,ஆண்டு அடியிணை தொழுதான், `ஐய எங்கிருந் தான்,நும் கோமான் என்றலும் `எதிர்கோள் எண்ணி மங்குல்தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான் சிங்கஏறு அனையவீர! செய்தவச் செல்வன்; என்றான். 55 55. எதிர்கோள் எண்ணி - சந்திக்கக் கருதி. மங்குல்தோய் - மேகங்கள் படிகின்ற. கொற்றம் - வெற்றி பொருந்திய. கடைத் தலை; தலைக்கடை - வாசலின். மருங்கில் - பக்கத்தில். சுக்கிரீவனும் தன் பரிவாரத்துடன் இலக்குவனை எதிர்கொள்ளல் வேறு தோற்றிய அரிக்குலத் தரசைத், தோன்றலும் ஏற்றெதிர் நோக்கினன்; எழுந்தது அவ்வழி சீற்றம்;அங்கு, அதுதனைத் தெளிந்த சிந்தையால் ஆற்றினன், தருமத்தின் அமைதி உன்னுவான். 56 56. தோன்றல் - இலக்குவன். ஏற்று - வரவேற்று. அவ்வழி - அப்பொழுது. அமைதி - நிலையை. எழுவினும், மலையினும், எழுந்த தோள்களால் தழுவினர் இருவரும்; தழுவித் தையலார் குழுவொடும், வீரர்தம் குழாத்தி னோடும்புக்கு, ஒழிவிலாப் பொற்குழாத்து உறையுள் எய்தினார். 57 57. எழுவினும் - இரும்புத் தூணைவிட. மலையினும் - மலையைவிட. எழுந்த - உயர்ந்த. ஒழிவுஇலா - கெடாத. பொன்குழாத்து - பொன் திரளால் ஆக்கப்பட்ட. உறையுள் – அரண் மனையை. சுக்கிரீவன்,அரியணையில்அமரவேண்டியபோது இலக்குவன் இயம்பியது. ‘கல்அணை மனத்தினை உடைக்கை கேசியால் எல்அணை மணிமுடி துறந்த எம்பிரான், புல்அணை வைக,யான் பொன்செய் பூத்தொடர் மெல்அணை வைகவும் வேண்டு மோ? என்றான். 58 58. கல்அணை - கல்லைஒத்த. எல்அணை - ஒளிபொருந்திய. பூதொடர் - மலர்கள் நிறைந்த. என்றவன் உரைத்தலும் இரவி காதலன் நின்றனன், விம்மினன் மலர்க்கண் நீர்உகக்; குன்றென உயர்ந்த,அக் கோயில், குட்டிம வன்தலத்து இருந்தனன் மனுவின் கோமகன். 59 59. குட்டிமவன் தலத்து - கல்பாவிய கடினமான நிலத்திலே. இருந்தனன் - உட்கார்ந்தான். மைந்தரும், முதியரும், மகளிர் வெள்ளமும், அந்தம்இல் நோக்கினர், அழுத கண்ணினர்; இந்தியம் அவித்தவர் எனஇ ருந்தனர்; நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலர். 60 60. அந்தம்இல் நோக்கினர் - அழகில்லாமல் பார்த்தனர்; உற்று நோக்கினர். இந்தியம் - ஐம்பொறிகளை. ஓர்கிலா - அறியாதவராயினர். இலக்குவன் உணவுண்ண மறுத்தல் `மஞ்சனம் விதிமுறை மரபின் ஆடினை, எஞ்சல்இல் இன்அமுது அருந்தின், யாம்எலாம் உஞ்சனம் இனி;என அரசு உரைத்தலும், அஞ்சன வண்ணனுக்கு அநுசன் கூறுவான். 61 61. `விதிமுறை மரபின் மஞ்சனம் ஆடினை மஞ்சனம் - நீர். அஞ்சன வண்ணனுக்கு - இராமனுக்கு. அநுசன் - தம்பி. `வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள இருத்தும்என் றால்எமக்கு இனியது யாவதோ? அருத்திஉண் டாயினும், அவலந் தான்தழீஇக் கருத்துவேறு உற்றபின், அமிழ்தும் கைக்கும் ஆல். 62 62. வயிறு மீக்கொள - வயிறு நிறைந்திருக்கும்படி. இருத்தும் - இருக்கின்றோம். அருத்தி - அசை. அவலம் தான்தழீஇ - துன்பத்தை அடைந்து. `மூட்டிய பழிஎனும் முருங்கு தீஅவித்து ஆட்டினை கங்கைநீர், அரசன் தேவியைக் காட்டினை எனின்,எமைக் கடலின் ஆர்அமிழ்து ஊட்டினை யால்;பிறிது உயர்வும் இல்லையால். 63 63. முருங்குதீ - அழியத்தக்க தீயை. `அரசன் தேவியைக் காட்டினை எனின், கங்கைநீர் ஆட்டினை பிறிதுஉயவும் - வேறு துன்பமும். `பச்சிலை கிழங்கு,காய், பரமன் நுங்கிய மிச்சிலே நுகர்வது; வேறு தான்ஒன்று நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய்உண்ட எச்சிலே அது;இதற்கு ஐயம் இல்லை;யால். 64 64. நுங்கிய - உண்ட. மிச்சில் - மீதம். நச்சிலேன் - விரும்பேன். `அன்றியும் ஒன்றுளது, ஐய! யான்இனிச் சென்றனன் கொணர்ந்துஅடை திருத்தி னால்,அது நுன்துணைக் கோமகன் நுகர்வது; ஆதலால் இன்றிறை தாழ்த்தலும் இனிதன் றாம்என்றான். 65 65. சென்றனன் அடைகொணர்ந்து - சென்று இலை முதலியவற்றைக் கொண்டுவந்து. இன்று இறை - இன்று சிறிது நேரம். வானர வேந்தனும் இனிதின் வைகுதல் மானவர் தலைமகன் இடரின் வைகவே ஆனது, குரக்கினத்து எமர்கட் காம்;எனா மேனிலை அழிந்துயிர் விம்மி னான்;அரோ! 66 66. `மானவர் தலைவன் இடரின் வைகவே, இனிதின் வைகுதல் ஆனது, குரக்குஇனத்து எமர்கட்குஆம். எமர்கட்கு - எங்களுக்கே. ஆம் - பொருந்தியதாம். மேல்நிலை அழிந்து - உடல் சோர்ந்து. அரோ; அசை. இராம சுக்கிரீவர்கள் சந்திப்பு சுக்கிரீவன், பின்னர் அனுமானிடம், `நீ சேனைகளை யெல்லாம் வருவிப்பாயாக. அவைகள் வரும் அளவும் நீ இங்கேயே இரு என்று பணித்தான். அங்கதனுடன் வானரப் படை முன் செல்ல சுக்கிரீவன் புறப்பட்டான்; இலக்குவனுடன் சேர்ந்து நடந்து வந்தான். எய்தினன், மாணவன் இருந்த மால்வரை நொய்தினில் சேனைபின்பு ஒழிய, நோன்கழல் ஐயவில் குமரனும், தானும், அங்கதன் கைதொடர்ந்து அயல்செலக், காதல் முன்செல . 67 67. கைதொடர்ந்து - ஒழுங்காகத் தொடர்ந்து. அயல்செல - பின்னே செல்ல. `முன்செல நொய்தினின் எய்தினன். கண்ணிய கணிப்பரும் செல்வக் காதல்விட்டு அண்ணலை அடிதொழ, அணையும் அன்பினால், நண்ணிய கவிக்குலத்து அரசன், நாள்தொறும் புண்ணியன் தொழுகழல் பரதன் போன்றனன். 68 68. கண்ணிய கணிப்புஅரும் - விரும்புகின்ற அளவற்ற. செல்வம் காதல்விட்டு - செல்வத்தில் உள்ள ஆசையை ஒழித்து. புண்ணியன் - இராமனுடைய. கழல்தொடு - பாதங்களை வணங்குகின்ற. இராமன் அடிகளிலே தன் முடி தீண்டும்படி சுக்கிரீவன் வீழ்ந்து வணங்கினான். தீண்டலும் மார்பிடைத் திருவும் நோவுற, நீண்டபொன் தடக்கையால் நெடிது புல்லினான்; மூண்டெழு வெகுளிபோய் ஒளிப்ப, முன்புபோல் ஈண்டிய கருணைதந்து இருக்கை ஏவியே. 69 69. ஈண்டிய கருணைதந்து - நிறைந்த அன்பைக்காட்டி. `அயல்இனிது இருத்தி,நின் அரசும் ஆணையும் இயல்பினின் இயைந்தவோ! இனிதின் வைகுமோ! புயல்பொரு தடக்கைநீ புரக்கும் பல்உயிர்? வெயில்இல தேகுடை; எனவி னாயினான். 70 70. இயல்பினின் இயைந்தவே - குற்றம் இன்றி இயல்பாக அமைந்திருக்கின்றனவா? பல்உயிர் - பல உயிர்களுக்கும். குடைவெயில் இலதே - உன் குடைநிழல் வெயிலைத் தராமல் இருக்கின்றதா? பொருள்உடை அவ்வுரை கேட்ட போழ்து,வான் உருள்உடைத் தேரினோன் புதல்வன் ‘ஊழியாய்! இருள்உடை உலகினுக்கு இரவி அன்னநின் அருள்உடை யேற்குஅவை அரிய வோ?என்றான். 71 71. புதல்வன் - குமாரனாகிய சுக்கிரீவன். ஊழியாய் - ஊழிக்காலத்திலும் நிலைத் திருப்பவனே! ã‹dU« És«òth‹, `bgUik nahŒ!நினது இன்னருள் உதவிய செல்வம் எய்தினேன்; மன்னவ நின்பணி மறுத்து வைகி,என் புன்னிலைக் குரக்கியல் புதுக்கி னேன்;என்றான். 72 72. இன்அருள் உதவிய - இனிய அருளால் கொடுத்த. புல்நிலை - அற்பத்தன்மையுள்ள. குரக்குஇயல் - குரங்கின் குணத்தை. பெருந்திசை அனைத்தையும் பிசைந்து தேடினென் தருந்தகை அமைந்தும்,அத் தன்மை செய்திலேன்; திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தைநீ வருந்தினை இருப்ப,யான் வாழ்வின் வைகினேன். 73 73. பிசைந்து தேடினென் - துருவித் தேடி. தரும்தகை அமைந்தும் - சீதாதேவியைக் கொண்டுவரும் திறமை அமைந் திருந்தும். இவ்வாறு வருந்திய சுக்கிரீவனை இராமன் தேற்றினான். `khUâ ah©ilah‹? என்று இராமன் கேட்டான். `அவன் படை திரட்டத் தூதனுப்பியுள்ளான்; இன்று அல்லது நாளைப் படைகளுடன் வந்து சேர்வான்; அவன் வந்த பின் இனிச்செய்ய வேண்டியதைப் பற்றி எண்ணி முடிப்போம். என்றான் சுக்கிரீவன். இதற்குள் பொழுது போயிற்று. சுக்கிரீவன் அங்கதன் ஆகியோர் வானரச் சேனைகளுடன் தங்கியிருந்தனர். அவர்கள் போன பின் இராமன் `நீ கிட்கிந்தைக்குப் போய் வந்த நிகழ்ச்சிகளைக் கூறுக என்று இளையவனைக் கேட்டான். அவனும் நடந்தவைகளை நவின்றான். பொழுதும் விடிந்தது. கதிரவன் கிழக்கில் எழும் முன்பே வானரப் படைகள் இராமன் இருந்த இடத்தை அடைந்தன. 12. தானை காண் படலம் வானர சேனைகள் எண்ணின் நான்முகர் எழுபதி னாயிரர்க்கு இயலா; உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி உண்ணவும் உதவா; கண்ணின் நோக்குறின் கண்ணுத லவனுக்கும் கதுவா; மண்ணின் மேல்வந்த வானரச் சேனையின் வரம்பே. 1 தானைகாண் படலம்: இராமன் வானரச் சேனையைக் கண்டதுபற்றி உரைக்கும் பகுதி. 1. `வானரச்சேனையின் வரம்பு - அளவை. கண்ணின் நோக்கு உறின் - கண்களால் பார்த்தால். கதுவா - எட்டாது. ஒடிக்கு மேல்,வட மேருவை வேரொடும் ஒடிக்கும்; இடிக்கு மேல்,நெடு வானக முகட்டையும் இடிக்கும்; பிடிக்கு மேல்,பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்; குடிக்கு மேல்,கடல் ஏழையும் குடங்கையால் குடிக்கும். 2 2. குடம்கையால் - உள்ளங்கையால் அள்ளி. ஆறு பத்தெழு கோடியாம் வானரர்க்கு அதிபர்; கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்; மாறில் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர்; ஊறும் இப்பெரும் சேனைகொடு எளிதின்வந்து உற்றார். 3 3. குப்புறற்கு உரியார் - குதிப்பதற்கு ஏற்ற வல்லமை யுள்ளவர்கள். மாறுஇல் - ஒப்பில்லாத. ஊறும் - வரவரப் பெருகுகின்ற. ஏழு மாக்கடல் பரப்பினும் பரப்பென இசைப்பச் சூழும் வானரப் படையொடுஅத் தலைவரும் துவன்றி; ஆழி மாபரித் தேரவன் காதலன் அடிகள் வாழி! thÊ!என்று உரைத்துஅலர் தூவினர் வணங்கி. 4 4. பரப்பினும் - பரப்பைவிட. பரப்புஎன - பரந்தது என்று. துவன்றி - சேர்ந்துவந்து. அடிகள் - சுக்கிரீவனுடைய பாதங்கள். அனைய தாகிய சேனைவந்து இறுத்தலும், அருக்கன் தனையன், நொய்தினில் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்; `நினையும் முன்னம்வந்து அடைந்தது நின்பெரும் சேனை; வினையின் கூற்றுவ! f©lUŸ Ú!யென விளம்ப. 5 5. இறுத்தலும் - தங்கியவுடன். வினையின் கூற்றுவ - தீவினையின் எமனே. சேனை கண்டு வியத்தல் இராமன் மகிழ்ந்தான்; அச்சேனைகளைக் காண ஒருமலை முகட்டில் ஏறி நின்றான். சுக்கிரீவன் வானரப் படைகளை இராமன் எதிரிலே கொண்டு வந்து நிறுத்தினான்; படைத் தலைவர்களுடன் இராமனை அடைந்தான்; படைகளைப் பார்க்கும்படி வேண்டினான். விண்ணின், தீம்புனல் உலகத்தின், நாகரின் வெற்றி எண்ணின், தான்அலது ஒப்பிலன் எனநின்ற இராமன், கண்ணின், சிந்தையின், கல்வியின் ஞானத்தின், கருதி அண்ணல் தம்பியை நோக்கினன், உரைசெய்வ தானான். 6 6. அண்ணல் தம்பியை - சிறந்த தம்பியாகிய இலக்குவனை. இச்சேனையின் முடிவை நாம் காண முடியவில்லை. கணக்கிடத் தொடங்கினால் கடலினும் பெரிது. ‘ஈசன் மேனியை, ஈரைந்து திசைகளை, ஈண்டில் ஆசில் சேனையை, ஐம்பெரும் பூதத்தை, அறிவைப் பேசும் பேச்சினைச், சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, வாச மாலையாய்! யாவரே முடிவெண்ண வல்லார்? 7 7. சமயங்கள் - மதங்கள். பிணக்குறும் பிணக்கை - தம்முள் மாறுபடும் வேற்றுமைகளை. இலக்குவன் உரை `யாவது எவ்வுல கத்தினின் இங்கிவர்க்கு இயற்றல் ஆவது ஆகுவது; அரியதுஒன்று ளதென உலாமே; தேவ! தேவியைத் தேடுவ தென்பது சிறிதால்; பாவம் தோற்றது; தருமமே வென்றது;இப் படையால். 8 8. இயற்றல் ஆவதுயாவது - செய்யக்கூடியது எதுவாயினும் அது. ஆகுவது அரியது ஒன்றுஉளது எனல்ஆமே - முடிவது அரிதாகும் என ஒன்று உண்டோ? ‘ஈண்டு தாழ்க்கின்றது என்?இனி எண்திசை மருங்கும் தேண்டு வார்களை வல்லையில் செலுத்துவது அல்லால், நீண்ட நூல்வலாய்! என்றனன் இளையவன்; நெடியோன், பூண்ட தேரவன் காதலற்கு, ஒருமொழி புகலும். 9 9. தேண்டுவார்களை - தேடுவதற்கு ஏற்றவர்களை. இளை யவன் - இலக்குவன். காதலனுக்கு - மகனாகிய சுக்கிரீவனுக்கு. 13. நாடவிட்ட படலம் இராமன் சுக்கிரீவனை நோக்கி `இனி ஆகவேண்டி யவை களைச் செய்க என்றான். சுக்கிரீவன் மாருதியைப் பார்த்து `நீதான் சீதையைத் தேடிக் கொணர வேண்டும். என்றனன். வள்ளல் தேவியை வஞ்சித்து வவ்விய கள்ள வல்அரக் கன், செலக் கண்டது. தெள்ளி யோய்!அது தென்திசை என்பதோர் உள்ளமும்எனக்கு உண்டென உன்னுவாய். 1 நாடவிட்ட படலம்: சீதையைத் தேடும்படி வானர சேனைகளை அனுப்பியதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. வல்அரக்கன் - கொடிய இராவணன். உள்ளமும் - நினைப்பும். என்று கூறி மேலும் சுக்கிரீவன். `அங்கதன், சாம்புவன் இவர்களுடன் இரண்டு வெள்ளம் சேனைகளை அழைத்துக் கொண்டு தென்றிசை நோக்சிச் செல்க என்று மாருதிக்கு உரைத்தான். சுடேணன் குடதிசையிலும். சதவலி வடதிசை யிலும், வினதன் கீழ்த்திசையிலும் படைகளுடன் தேடிச்செல்க என்றான். `ஒரு மாதத்தில் திரும்பவேண்டும் என்றும் உரைத்தான். `விந்தமலை, நருமதை, ஏமகூடம், தண்டகம், முண்டகத்துறை, பாண்டுகிரி, கோதாவரி, சுவணம், சூரியகாந்தி, சந்திரகாந்தி, கொங்கணம், குலிந்தம், ஆகிய இடங்களில் சீதையைத் தேடுங்கள் என்று வானரத் தலைவர்களுக்குப் பணித்தான். அருந்ததி மலை அரன்அதிகன், உலகளந்த அரிஅதிகன், என்றுரைக்கும் அறிவி லோர்க்குப் பரகதிசென்று அடைவரிய பரிசேபோல், புகல்அரிய பண்பிற்று ஆமால், சுரநதியின் அயலது,வான் தோய்குடுமிச் சுடர்த்தொகைய, தொழுதோர்க் கெல்லாம் வரன்அதிகம் தரும்தகைய, அருந்ததிஆம் நெடுமலையை வணங்கி, அப்பால். 2 2. பரிசேபோல் - தன்மையைப்போல. புகல்அரிய - அடை வதற்கு முடியாத. பண்பிற்று ஆம்ஆல் - பண்புள்ளதாகும். ஆல்; அசை. சுரநதி - தெய்வ கங்கை. குடுமி - உச்சியிலே. சுடர்த் தொகைய - சூரிய சந்திரர்களாகிய சுடர்களின் கூட்டத்தை யுடையன. மரகதப் பெரும் பொருப்பையும் கண்டு இறைஞ்சி அப்பாற் செல்லுங்கள். திருவேங்கடம் வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி, நான்மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையாய், நல்லறிவுக்கு ஈறாய், வேறு புடைசுற்றும் துணையின்றிப், புகழ்பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற உடைசுற்றும் தண்சாரல் ஓங்கியவேங் கடத்தில்சென்று உறுதிர் மாதோ! 3 3. வரம்பாகி - எல்லையாகி, இடைசொற்ற - இவை களிடையிலே சொல்லியிருக்கும். எல்லைஅதுஆய் - முடிவாகி. ஈறுஆய் - எல்லையாய். புடைசுற்றும் துணை - பக்கத்தில் அமைந்த உவமைத் துணை. அடை - தேன் அடைகள். `இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்றாதே, இமையோர் ஏத்தும் திருவினையும், இடுபதம்தேர் சிறுமையையும், முறைஒப்பத் தெளிந்து நோக்கிக், கரு,வினையது இப்பிறவிக்கு என்றுணர்ந்துஅங்கு அதுகளையும், கடையில் ஞானத்து, அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுளர்;ஈண்டு இருந்தும்அடி வணங்கற் பாலார். 4 4. இருவினையும் இடைவிடா - நல்வினை தீவினைகள் விடாமல் தொடருகின்ற. எவ்வினையும் - எச்செயலையும். திருவினையும் - செல்வத்தையும். இடுபதம்தேர் - பிச்சையிடும் உணவைத் தேடுகின்ற. கரு - மூலகாரணம். கடைஇல் - அழியாத. ஞானத்து - அறிவையுடைய. அருவினையின் - தீவினையின். ‘சூதகற்றும் திருமறையோர் துறையாடும் நிறையாறும், சுருதித் தொன்னூல் மாதவத்தோர் உறைஇடமும், மழைஉறங்கும் மணித்தடமும், வான மாதர் கீதம்ஒத்த கின்னரங்கள் இன்னரம்பு வருடுதொறும் கிளக்கும் ஓதை, போதகத்தின் மழக்கன்றும், புலிப்பறழும், உறங்கிடனும் பொருந்திற்று அம்மா! 5 5. சுருதித் தொல்நூல் - வேதங்களையும் பழமையான நூல்களையும் அறிந்த. மணி தடம் - மணிகள் பொருந்திய அகலமான இடம்; தாழ்வரை. கின்னரங்கள் - கின்னரம் என்னும் வாத்தியங்களின். ஓதை - ஓசையால். போதகம் - யானை. மழக்கன்று - இளம்கன்று. `கோடுறுமால் வரைஅதனைக் குறுகுதிரேல், உம்நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர்; ஆதலினான் விலங்குதிர்;அப் புறத்துநீர் மேவு தொண்டை நாடுறுதிர்; உற்றதனை நாடுறுதிர், அதன்பின்னை நளிநீர்ப் பொன்னிச் சேடுறுதண் புனல்தெய்வத் திருநதியின் இருகரையும் தெரிதிர் மாதோ. 6 6. கோடுஉறு - சிகரங்கள் அமைந்த. நளிர் - குளிர்ந்த. சேடுஉறு - சிறப்புள்ள. இருகரையும் தெரிதிர் - இருகரைகளிலும் தேடுங்கள். சோழநாடு `துறக்கம்உற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு, கடந்தால், தொல்லை மறக்கம்உற்றார் அதன்அயலே மறைந்துறைவர்; அவ்வழிநீர் வல்லை ஏகி, உறக்கம்உற்றார் கனவுஉற்றார் எனும்உணர்வி னொடும்ஒதுங்கி, மணியார் ஓங்கல் பிறக்கம்உற்ற மலைநாடு நாடி,அகன் தமிழ்நாட்டில் பெயர்க மாதோ 7 7. துறைகெழுநீர் - துறைகளிலே நிறைந்த தெளிந்த நீரையுடைய. தொல்லை - துன்பத்தை. மறக்கம் உற்றார் - மறந்தவர்கள். என்உற்றார் - என்ன பயனை அடைந்தார்? ஓங்கல் - மலைகளின். பிறக்கம்உற்ற - விளங்கியிருக்கின்ற. தமிழ்நாட்டில் - பாண்டிநாட்டில். தென் தமிழ் நாடு `தென்தமிழ்நாட்டு அகன்பொதியில், திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல், என்றும்அவண் உறைவிடம்ஆம்; ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகிப் பொன்திணிந்த புனல்பெருகும் பொருநையெனும் திருநதிபின் பொழிய, நாகக் கன்றுவளர் தடம்சாரல் மயேந்திரமா நெடுவரையும் கடலும் காண்டிர் 8 8. திருமுனிவன் - அகத்தியன். என்றும் - எந்நாளும். அவண் - அவ்விடம். உறைவு இடம்ஆம் - உங்களுக்கு உறைவிடம் ஆகிவிடும். நாகம் கன்று - யானைக் கன்றுகள். இவ்வாறு சீதையைத் தேடிச் செல்லவேண்டிய வழிகளைப் பற்றிச் சுக்கிரீவன் உரைத்தான். இதன்பின் இராமன் அனுமனைத் தனியாக அழைத்துச் சென்றான். அவனிடம் சீதையின் தோற்றத்தை எடுத்துரைத்தான். சீதையின் தோற்றம் குழல்படைத்து, யாழைச் செய்து, குயிலொடு, கிளியும் கூட்டி, மழலையும், பிறவும் தந்து, வடித்ததைம் மலரின் மேலான், இழைபொரும் இடையி னாள்தன் இன்சொற்கள் இயையச் செய்தான் பிழையிலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறுங்கொல் இன்னும். 9 9. தந்து, வடித்தகை - செய்து பழகிய கைகளையுடைய. மலரின் மேலான் - பிரமன். இழைபொரும் - நூல்போன்ற. பிழைஇலது உவமை - பிழையற்ற உவமை ஒன்றையும். `எந்நிறம் உரைக்கேன், மாவின் இளநிறம் முதிரும்; மற்றைப் பொன்நிறம் கருகும்; என்றால், மணிநிறம் உவமை போதா; மின்நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின் தன்நிறம் தானே ஒக்கும்; மலர்நிறம் சமழ்க்கும் அன்றே. 10 10. மாவின் - மாந்தளிரின். மணி - இரத்தினங்கள். மின்நிறம் - மின்னலின் நிறம். வேண்டின் - உவமை கூறவேண்டுமானால். சமழ்க்கும் - பின்னடையும். `மங்கையர் இவளை ஒப்பார் மற்றுளார் இல்லை; என்னும் சங்கையில் உள்ளம் தானே சான்றெனக் கொண்டு, சான்றோய்; அங்கவள் நிலைமை எல்லாம் அளந்தறிந்து, அருகு சார்ந்து, திங்கள்வாள் முகத்தி னாட்குச் செப்புஎனப் பின்னும் செப்பும். 11 11. சங்கையில் உள்ளம்தானே - ஐயமற்ற உள்ளத்தைச். செப்பு என - சொல்க என்று உரைத்து. நினைப்பூட்டும் சொற்கள் வேறு ‘முன்னைநாள், முனியொடும் முதியநீர் மதிலைவாய்ச், சென்னிநீள் மாலையான் வேள்விகா ணியசெல, அன்னம்ஆ டும்துறைக்கு அருகில்நின் றாளைஅக், கன்னிமா டத்திடைக், கண்டதும், கழறுவாய்! 12 12. சென்னிநீள் மாலையான் -தலையில் உள்ள முடியிலே தொங்குகின்ற மாலையை அணிந்த ஜனகன். துறை - நீர்த்துறை. `வரைசெய்தாள் வில்இறுத் தவன்,அ,மா முனியொடும் விரைசினான் அல்லனேல் விடுவல்யான் உயிர்எனா கரைசெயா வேலையின் பெரியகா தலள்தெரிந்து உரைசெய்தாள்; அஃதெலாம், உணரநீ உரைசெய்வாய். 13 13. வரைசெய்தாள் - மலைபோலச் செய்த வலிமை பொருந்திய. விரைசினான் - வந்தவன். அஃதுஎலாம் - அச்செய்தி முழுவதையும். `முன்புநான், அறிகிலா, முளிநெடும் கானிலே என்பினே போதுவாய் நினைதியோ! ஏழைநீ! ï‹gkhŒ MUÆ®¡F ïÅiaM Æid;ïŤ, J‹gkhŒ Koânah? என்றதும் சொல்லுவாய். 14 14. முளிநெடும் கானிலே - காய்ந்த பெரிய காட்டிலே. போதுவான் - வருவதற்கு. ‘ஆனபேர் அரசிழந்து அடவிசேர் வாய்உனக்கு யான்அலா தனவெலாம் இனியவோ இனி!’எனா மீனுலாம் நெடுமலர்க் கண்கள்நீர் விழ,விழுந்து ஊன்நிலா உயிரின்வெந்து அயர்வதும் உரைசெய்வாய்! 15 15. யான் அலாதன எல்லாம் - என்னைத்தவிர மற்றவைகள் எல்லாம். ஊன்நிலா உயிரின் - உடம்பிலே நிலைத்துநிற்காத உயிரைப்போல. வெந்து அயர்வதும் - வருந்திச் சோர்ந்ததையும். ‘மல்லன்மா நகர்துறந்து ஏகுநாள், மதிதொடும் கல்லின்மா மதின்மணிக் கடைகடந் திடுதன்முன், ‘எல்லைதீர்வு அரியவெம் கானம்யா தோ?எனாச் சொல்லினாள்; அஃதெலாம் உணரநீ சொல்லுவாய். 16 16. மணிகடை - அழகிய வாசலை. எல்லைதீர்வு அரிய வெம்கானம் - அளவில்லாத கொடிய காடு. அஃதுஎலாம் - அது முழுவதையும். ïidathW ciubrah, `ïÅâ‹V Fâ’vdh tidíkh kÂe‹nkh âu«mˤJ, `m¿P!நின் வினையெலாம் முடிகஎனா விடைகொடுத்து உதவலும், புனையும்வார் கழலினான் அருளொடும், போயினான். 17 17. உரைசெயா - சொல்லி. நின்வினைஎலாம் முடிக - உன் காரியம் எல்லாம் வெற்றியுடன் நிறைவேறுக. கழலினான் - இராமனுடைய. அங்கதன் முதலியவர்களும், இராமனை வணங்கிச் சீதையைத் தேடப் புறப்பட்டனர். 14. பிலம்புக்கு நீங்கு படலம் குன்றிசைத் தனவெனக் குலவுதோன் வலியினார், மின்திசைத் திடும்,இடைக் கொடியை,நா டினர்விராய், வன்திசைப் படருமாறு ஒழிய,வண் தமிழ்உடைத் தென்திசைச் சென்றுளார் திறன்எடுத்து உரைசெய்வாம். 1 பிலம்புக்கு நீங்கு படலம்: அனுமான் முதலியவர்கள் ஒரு பாதாள நகரில் புகுந்து பின்னர் அதைவிட்டு வெளி யேறியதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. இசைத்தன - சேர்க்கப்பட்டன. குலவு - விளங்குகின்ற. மின்திசைத் திடும் - மின்னலும் திகைக்கும்படி மெல்லியதான. இடைக்கொடியை - இடையை உடைய கொடிபோன்ற சீதையை. படரும் ஆறு ஒழிய - செல்லும் விதத்தைக் கூறாமல் ஒழிய. வானர வீரர்கள் விந்த மலையை அடைந்து தேடினர்; நருமதை நதிக்கரையை எய்தி நாடினர்; ஏமகூடத்தை அடைந்து துருவினர். பின்னர் ஒரு பாலை வனத்தின் வழியே சென்றனர். நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறும் ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்; காட்டினும் காய்ந்து,தம் காயம் தீய்தலால், சூட்டகல் மேல்எழு பொரியில் துள்ளினார். 2 2. சூட்ட - சூடுள்ள. கல்மேல்எழு - கல்லின் மேலிருந்து எழுந்து விழுகின்ற. பொரியில் - பொரிகளைப்போல. ஒதுங்கலாம் நிழல்இறை காண்கி லாது,உயிர் பிதுங்கலாம் உடலினர், முடிவில் பீழையர்; பதங்கள்தீப் பருகிடப் பதைக்கின் றார்;பல விதங்களால் நெடும்பில வழியின் எய்தினார். 3 3. பிழையார் - துன்பமுடையவர்கள். பலவிதங்களால் - பலவகையால் வருந்தி முடிவில். வானரர்கள் பிலத்துட் புகுதல் நின்றனர், செய்வதுஓர் நிலைமை ஓர்கிலர்; `பொன்றினம் யாம்எனப் பொருமும் புந்தியர், `வன்திறல் மாருதி வல்லை யோ? எமை இன்றிது காக்கஎன்று இரந்து கூவினார். 4 4. பொன்றினம் - இறந்தோம். பொருமும் - வருந்தும். `உய்வுறுத் துவென்;மனம் உலையிர்! ஊழின்வால் மெய்உறப் பற்றுதிர்! ÉL» ä®!என அய்யன்,அக் கணத்தினின் அகலும் நீள்நெறி கய்யினில் தடவிவெம் காலின் ஏகினான். 5 5. உய்வுறுத்துவென் - பிழைக்கவைப்பேன். ஊழின் - வரிசையாக. பிலத்துள் சென்று ஒரு நகரத்தைக் காணுதல் இந்திரன் நகரமும் இணைஇ லாதது; மந்திர மணியினின், பொன்னின், மண்ணினின் அந்தரத்து அவிர்சுடர் அவையின்று ஆயினும் உந்தரும் இருள்துரந்து ஒளிர நின்றது. 6 6. இந்திரன் நகரம் - அமராவதி. மந்திரமணியினின் - மாளிகைகளிலே பொருந்திய இரத்தினங்களாலும். மண்ணினின் - அந்நகரின் தரையிலே. சுடர்அவை - சுடர்களாகிய அவைகளின் ஒளி. புவிபுகழ் சென்னிபேர் அபயன் தோள்புகழ் கவிகள் தம் மனைஎனக், கனக ராசியும், சவியுடைத் தூசும்,மென் சாந்தும், மாலையும், அவிர்இழைக் குப்பையும், அளவி லாதது. 7 7. சென்னி - சோழனாகிய. பேர்அபயன் - சிறந்த அபய குலோத்துங் கனுடைய. கவிகள்தம் - கவிஞர்களின். சவிஉடை தூசும் - ஒளிபொருந்திய ஆடைகளும். அவிர்இழைக் குப்பையும் - ஒளிவிடும் ஆபரணக் குவியலும். பயில்குரல் கிண்கிணி பதத்த பாவையர், இயல்புடை மைந்தர்கள், இயக்கு இலாமையால், துயில்வுறு நாட்டமும் துடிப்பது ஒன்றிலாம், உயிரிலா ஓவியம் என்ன ஒப்பது. 8 8. இயக்கு - நடமாட்டம். துயில்வுறு நாட்டமும், துடிப்பது ஒன்று இலா - தூங்கும் கண்ணும், துடிக்கும் தன்மை ஒன்று இலாத. உயிர்இலா - உயிர்அற்ற. அமிழ்துறழ் அயினியை அடுத்த உண்டியும், தமிழ்நிகர் நறவமும், தனித்தண் தேறலும், இமிழ்கனிப் பிறவும், இன்னன கமழ்வுறத் தோன்றிய கணக்கில் கொட்பது. 9 9. அயினியைஅடுத்த - சோற்றைச் சேர்ந்த. நறவம் - தேன். தேறல் - கள். இமிழ் – விளங்கு கின்ற. பிறக்கமும் - குவியலும். கொட்பது - பெருமையை உடையது. வேறு கன்னிநெடு மாநகரம் அன்னதுஎதிர் கண்டார், `இந்நகர மாம்,இகல் இராவணனது ஊர்;என்று உன்னிஉரை யாடினர், உவந்தனர்; வியந்தார்; பொன்னின்நெடு வாயில்அதன் ஊடுஇனிது புக்கார். 10 10. -. புக்கநக ரத்தினிது நாடினர் புகுந்தார்; மக்கள்கடை, தேவர்தலை, வானுலகின் வையத்து ஒக்கஉறை வோர்உருவம் ஓவியம் அலால்,மற்று எக்குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார். 11 11. ஒக்க உறைவோர் - அமைந்து வாழ்வோர்களின். உருவ ஓவியம் அலால் - உருவங்களாகிய சித்திரங்களை அல்லாமல். எக்குறியின் உள்ளவையும் - எந்த உருவுள்ள பொருள்களையும். அந்நகரை மாயையோ, துறக்கமோ என்று ஐயுற்றனர், வானரர்கள் அஞ்சினர்; சாம்பவான் `இது இராவணன் இழைத்த மாயமோ என்று உரைத்தான். மாருதி `இது அரக்கர் நகரானால் அவர்களைக் கொன்று விட்டுப் புறப்படுவோம். என்று கொதித்துரைத்தான்; அப்பொழுது அங்கே சுயம்பிரபை என்னும் தவமாது ஒருத்தி யோகத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். தாமரை மலர்க்குவமை சால்புறு தளிர்க்கைப், பூமருவு பொன்செறி குறங்கிடை பொருந்தக் காமம்முதல் உற்றபகை கால்தளர, ஆசை நாமம்அழி யப்,புலனும் நல்லறிவு புல்ல. 12 12. சால்புறு - பொருந்திய. பூமருவு - அழகு பொருந்திய. பொன் செறி - பொன்னிறமுள்ள. குறங்கிடை - துடையிலே. கால்தளர - அடியோடு சோர்ந்துபோக. ஆசைநாமம் - ஆசை யென்னும் பெயர். புலனும் - ஐம்புலனும். நெறிந்துநிமிர் கற்றைநிறை ஓதி,நெடு நீலம் செறிந்தசடை உற்றது, தலத்தின்நெறி செல்லப், பறிந்துவினை பற்றற, மனப்பெரிய பாசம் பிரிந்துபெய ரக்,கருணை கண்வழி பிறங்க. 13 13. நெறிந்து நிமிர் - அடர்ந்து நீண்ட. ஓதி - கூந்தல். நீலம்செறிந்த சடைஉற்றது - நீலநிறம் பொருந்திய சடை உருவை அடைந்து. தலத்தின் நெறிசெல்ல - நிலத்திலே புரள. இருந்தனள்; இருந்தவளை எய்தினர் இறைஞ்சா, அருந்ததி எனத்தகைய சீதைஅவ ளாகப் பரிந்தனர், பதைத்தனர்; `பணித்தகுறி பண்பின் தெரிந்துணர்தி! மற்றிவள்சொல் தேவி;என லோடும். 14 14. இறைஞ்சா - வணங்கி. அவளாக - அவள் என்று எண்ணி. பரிந்தனர் - அன்பு கொண்டனர். பணித்தகுறி - இராமன் உரைத்த அடையாளங்களை. பண்பில் தெரிந்து உணர்தி - இயல்புடன் ஆராய்ந்துபார். இவ்வாறு தவத்திலிருந்தவள் சுயம்பிரபை என்பவள். `எக்குறியொடு, எக்குணம், எடுத்திவண் உரைக்கேன்! இக்குறி யுடைக்கொடி இராமன்மனை யாளோ! அக்குவடம், முத்தம்அணி ஆரம்அதன் நேர்நின்று ஒக்கும்எனின், ஒக்கும்;என மாருதி உரைத்தான். 15 15. எக்குறியொடு எக்குணம் - எந்த அடையாளமும், எந்தக் குணமும் தான் இவளுக்குப் பொருந்தும் என்று. எடுத்து உரைக்கேன் - எடுத்துக் கூறுவேன்? அக்குவடம் - எலும்புமாலை. முத்தம்அணி ஆரம்அதின் - முத்தால் ஆகிய அழகிய மாலையினை. சுயம்பிரபை யோகத்திலிருந்து விழித்து; வானர வீரர்களை `நீங்கள் யார் என்று கேட்டல் `வேதனை அரக்கர்ஒரு மாயைவிளை வித்தார், சீதையை ஒளித்தனர்; மறைத்தபுரை தேர்வுற்று, ஏதம்இல் அறத்துறை நிறுத்திய இராமன் தூதர்,உல கில்திரிதும், என்னும்உரை சொன்னார். 16 16. மறைத்தபுரை - ஒளித்திருக்கும் மறைவிடத்தை. தேர்வுற்று - தேடிக்கொண்டு. திரிதும் - திரிகின்றோம். என்றலும், இருந்தவள் எழுந்தனள் இரங்கிக், குன்றனைய தாயதொரு பேருவகை கொண்டாள்; `நன்றுவர வாகநட னம்புரிவல் என்னா நின்றனள்; நெடும்கண்இணை நீர்கலுழி கொள்ள. 17 17. எழுந்தனள்இரங்கி - எழுந்து மனம் இரங்கி. நீர்கலுழி கொள்ள - நீர் வெள்ளமாக நிறைய. இராமன் யாண்டுளான்? என்றாள். மாருதிகூறுதல். எவ்வுழை இருந்தனன் இராமன்?என யாணர்ச் செவ்உழை நெடுங்கண்அவள் செப்பிடுத லோடும், அவ்வுழை நிகழ்ந்ததனை ஆதியினொடு அந்தம் வெவ்விழைவுஇல் சிந்தைநெடு மாருதி விரித்தான். 18 18. யாணர் - அழகிய. செவ்உழை - சிறந்த மானின். நெடுங்கண் - நீண்ட கண்களை. அவள் - உடைய அவள். வெவ்விழைவுஇல் - தீமையை விரும்பாத. கேட்டவளும், `என்னுடைய கேடில்தவம் இன்னே காட்டியது வீடு;என விரும்பிநளிர் கான்நீர், ஆட்டி,அமிழ் தன்னசுவை, யின்னடிசில், அன்பேகாடு ஊட்டி,மனன் உள்குளிர, இன்உரை உரைத்தாள். 19 19. எனவிரும்பி - என்று அன்புடன் உரைத்து. நளிர்கான் நீர் ஆட்டி - அவர்களைக் குளிர்ந்த நறுமண நீரிலே குளிக்கச் செய்து. இன்அடிசில் - இனிய உணவு. மாருதியும், மற்றவள் மலர்ச்சரண் வணங்கி, `யார்இந்நக ருக்கிறைவர்? யாதுநின் இயற்பேர்? பார்புகழ் தவத்தினை! பணித்தருளு கென்றான்; சோர்குழலும் மற்றவனொடு, உற்றபடி சொன்னாள். 20 20. பார்புகழ் தவத்தினை - உலகம் போற்றும் தவத்தை யுடையவளே. சோர்குழலும் - தொங்கும் கூந்தலையுடைய சுயம்பிரபையும். உற்றபடி - நிகழ்ந்தவிதத்தை. இது நான்முகன் படைத்த நகர்; தானவன் ஒருவன் அரம்பை மாது ஒருத்தியை விழைந்தான். அவளுடன் இந்நகரில் இருந்தான். நான் அவ்வரம்பை மாதின் தோழியாக இங்கு வந்தேன். இந்திரன் அத்தானவனைத் தேடி வந்து கொன்றான். அரம்பையைச் சீறினான். என்னை இந்நகருக்குக் காவலாக் கினான். இந்நகருக்கு வரும் வழியையும் இருள் சூழச் செய்தான். `இராமனுடைய வானர வீரர்கள் வரும்போது உன் துயர் ஒழியும் என்று எனக்குரைத்தான். யானும் உம்மைக் காண தவம் புரிந்து கொண்டிருந்தேன் என்றாள். மாருதி `நீ இனித்துறக்கம் பெறுவாய் என்றான். அதன்பின், வானரர்கள் பிலத்திலிருந்து வெளியேற வழி தேடும்படி மாருதியிடம் வேண்டினர். அவனும் தனது பேருருவை எடுத்தான். பிலத்தின் மேற் பாகத்தைக் கடலிலே போய் விழும்படி பெயர்த்தெறிந்தான். என்றும்உள மேல்கடல் இயக்கில்,பில தீவா நின்றுநிலை பெற்றுளது; நீள்நுதலி யோடும் குன்றுபுரை தோளவர் எழுந்துநெறி கொண்டார்; பொன்திணி விசும்பினிடை நல்நுதலி போனாள். 21 21. என்றும்உள மேல்கடல் - அழியாதமேற்குக் கடலிலே. பிலதீவா நின்று - பிலதீவு என்னும் பெயருடன் நின்று. நீள்நுதலி - நீண்ட புருவத்தை உடைய சுயம்பிரபை. எழுந்து - பிலத்தினின்றும் மேலேவந்து. பின்பு அவர்கள் சக்கர தீர்த்தக் கரையை அடைந்தனர். அப்பொழுது கதிரோன் மறைந்தான். 15. ஆறுசெல் படலம் கண்டார் பொய்கைக் கண்அகல் நன்னீர்க் கரைதான்உற்று உண்டார், தேனும் ஒண்கனி காயும்; ஒருசூழல் கொண்டார் அன்றே இன்துயில்; கொண்ட குறிஉன்னித் தண்டா வென்றித் தானவன் வந்தான் தகவில்லான். 1 ஆறுசெல் படலம்: குரங்குப் படைகள் சீதையைத் தேடி வழிநடந்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. கண்அகல் நல்நீர் - பரவியிருந்த நல்ல நீரின். `தேனும் ஒண்கனிகாயும் உண்டார் ஒரு சூழல் - ஒரு பக்கத்தில். கொண்ட குறிஉன்னி - துயில்கொண்ட இடத்தை நினைத்து. தானவன் - அசுரன். மலையே போல்வான் மால்கடல் ஒப்பான்; மறம்முற்றிக் கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கோர் நிலையே போல்வான்; நீர்மைஇ லாதான்; நிமிர்திங்கள் கலையே போலும் கால எயிற்றான்; கால்கண்ணான். 2 2. நிமிர்திங்கள் கலையே போலும் - வளர்ந்த சந்திரனுடைய பிறையைப்போன்ற. கால எயிற்றான் - விஷப் பற்களையுடையவன். இவன் உறங்கிய வானரர்களைக்கண்டு சினந்தான்; அங்கதன் மார்பிலே குத்தினான். அவன் உறக்கத்திலிருந்து எழுந்தான். அவ்வரக்கனை எதிர்த்துக் குத்தி அவனைக் கொன்றான். வானரர்கள் அனைவரும் விழித்தெழுந்தனர். துமிரன் என்னும் அவனைப்பற்றிய செய்தியைச் சாம்பவன் உரைத்தான். பின்னர் அவர்கள் இரவு முழுதும் உறங்காம லிருந்து விடிந்தபின் பெண்ணையை நண்ணிச் சீதையைத் தேடினர். பெண்ணை நதிக்கரையை அடைதல் துறையும், தோகைநின்று ஆடு சூழலும் குறையும், சோலையும் குளிர்ந்த சாரல்நீர்ச் சிறையும் தெள்ளுபூந் தடமும், தெண்பளிக்கு அறையும் தேடினார்; அறிவின் கேள்வியார். 3 3. சூழலும் - இடமும். குறையும் - ஆற்றிடைக்குறை; அரங்கம் என்பர்; இது ஆற்றின் நடுவில் உள்ள திடல். நீர்ச்சிறை - நீர் தங்கியிருக்கும் இடம். அதன்பின் விதர்ப்பை நாட்டை அடைந்தனர்; தேடினர்; பின்னர்த் தண்டகாரணியத்தை அடைந்து தேடினர். பின்னர்ப் பாண்டு மலையின் சிகரத்தை எய்தினர்; சீதையைத் தேடினர். கோதாவரியை அடைந்தனர். எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணிநீர் யாறு தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதிச் சொல்லால் உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒருமகட்கு இரங்கி,ஞாலம் அழுகின்ற கலுழி மாரி ஆம்எனப், பொலிந்தது அன்றே. 4 4. திரையிற்று - அலையை உடையது. தொடங்கிய - தொடங்கும் பொருட்டு. ஒருமகள் - ஒப்பற்ற சீதை. கலுழிமாரி - கண்ணீர் மழை. அதன்பின் சுவணகம் என்னும் ஆற்றுத் துறையைக் கடந்து, குலிந்த நாட்டை அடைந்தனர். அங்கும் தேடி விட்டு அருந்ததி மலையை அடைந்தனர். அருந்ததிக்கு அருகு சென்றுஆண்டு, அழகினுக்கு அழகு செய்தாள் இருந்ததிக்கு உணர்ந்தி லாதார் ஏகினார்; இடையர் மாதர், பெரும்ததிக்கு அருந்தென் மாறும், மரகதப் பெருங்குன்று எய்தி, இருந்து,அதில் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை. 5 5. அருந்ததிக்கு அருகுசென்று - அருந்ததி மலையின் அருகே போய். ஆண்டு - அவ்விடத்திலிருந்து. திக்கு - திசையை. பெரும்ததிக்கு - சிறந்த தயிருக்கு. மாறும் - மாறாகப்பெறும். அதில் தீர்ந்து - அதிலிருந்து புறப்பட்டு. திருவேங்கடத்தைக் காணல் முனிவரும், மறைவ லோரும், முந்தைநாள் சிந்தை மூண்ட வினைவரும் நெறியை மாற்றும் மெய்யுணர் வோரும், விண்ணோர் எனைவரும் அமரர் மாதர் யாவரும், சித்தர் என்போர் அனைவரும், அருவி நன்னீர் நாளும்வந்து ஆடு கின்றார். 6 6. முந்தைநாள் - முன்னாளில். சிந்தை மூண்ட - மனமறிந்து செய்த. வினைவரும் - தீவினையால் வருகின்ற. நெறியை - நரகத்திற்கான வழியை. வேறு வலங்கொள் நேமி மழைநிற வானவன் அலங்கு தாள்இணை தாங்கிய அம்மலை, விலங்கும் வீடுறு கின்றன; மெய்ந்நெறிப் புலன்கொள் வார்கட்கு அனையது பொய்க்குமோ! 7 7. வலம் - வெற்றி. அலங்குதாள் இணை - விளங்குகின்ற பாதங்களை புலன்கொள்வார்க்கு - அறிவிலே கொள்ளு கின்றவர்களுக்கு. ஆய குன்றினை எய்தி, அருந்தவம் மேய செல்வரை மேவினர், மெய்ந்நெறி நாய கன்தனை நாளும் வணங்கிய தூய நற்றவர், பாதங்கள் சூடினார். 8 8. -. பின்னர் தண்டக நாடாகிய தொண்டை நாட்டில் பார்ப்பன உருவுடன் புகுதல். குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர் முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய்புனல் சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண்திரை மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கெலாம். 9 9. கடத்தொடும் - சாரல்களும். கோவலர்முன்றில் - இடையர்களின் வீட்டு எதிரிலே. படப்பை - கொல்லை. கிடக்கை - இடங்கள். தெள்திரைமன்று - கடற்கரையின் வெளியிடம். சூழ்ந்த பரப்பும் - பொருந்திய பரந்த இடமும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் கூறப்பட்டன. தேரை வன்தலைத், தெங்குஇளம் பாளையை நாரை என்றுஇளம் கெண்டை நடுங்குவ; தாரை வன்தலை தண்இள ஆம்பலைச் சாரை என்று, புலம்புவ தேரையே. 10 10. தேரை வன்தலை - தேரையை வலிய தலையிலே உடைய. நாரை என்று - நாரை என்று நினைத்து. தாரை வன்தலை - கூர்மையான வலிய தலையையுடைய. ஆம்பலை - அல்லியை. சாரை - சாரைப்பாம்பு. சேட்டு இளம்கடு வன்,சிறு புன்கையில் கோட்ட தேம்பல வின்கனிக் கூன்சுளை தோட்ட மைந்த பொதும்பரில் தூங்குதேன் ஈட்டம் என்னச்சென்று ஈயினம் மொய்ப்பன. 11 11. சேட்டுஇளம் கடுவன் - மிகவும் இளமைபொருந்திய ஆண் குரங்கு. கோட்ட - கிளைகளிலிருந்து எடுத்த. கூன்சுளை - வளைந்த சுளையிலே. தோட்டு அமைந்த பொதும்பரில் - இதழ்களோடு கூடிய மலர்கள் நிறைந்த சோலையில். தூங்குதேன் ஈட்டம் என்ன - மொய்க்கின்ற தேன் வண்டுகளின் கூட்டம்போல். செல்வர் என்றும், வடகலை தென்தமிழ்ச் சொல்வ ரம்பினர் என்றும், சுமடரைக் கொல்வர் என்றும் கொடுப்பனர் என்றும்அவ் இல்வ ரம்பினர்க்கு ஈதேனும் ஈட்டதே? 12 12. கொடுப்பனர் என்றும் - கொடுப்பவர் என்றும் பெயர் பெற்றுள்ள. அஇல் வரம்பினர்க்கு - அந்த இல்லறத்தின் எல்லையை உடையவர்களுக்கு. ஈ - வேண்டியனவற்றைத் தருகின்ற. தேனும் - காமதேனும். ஈட்டதே - சமமுள்ளதாகுமா? பொன்னி நாடு காணல் அன்ன தொண்டைநல் நாடு கடந்து,அகல் பொன்னி நாடு பொருவிலர் எய்தினார்; செந்நெ லும்,கரும் பும்கமு கும்செறிந்து இன்னல் செய்யும் நெறிஅரிது ஏகுவார். 13 13. பொன்னிநாடு - சோழநாடு. இன்னல்செயும் - நடப்போரைத் துன்புறுத்தும். நெறிஅரிது ஏகுவோர் - வழியை அரிதில் நடந்து செல்வார். பூநெ ருங்கிய புள்ளுறு சோலைகள் தேன்ஒ ருங்கு சொரிதலின் தேர்வில மீன்நெ ருங்குறும் வெள்ளம் வெரீஇப்,பல வான ரங்கள் மரங்களின் வைகுமால். 14 14. தேர்வில - அதை அறியாதனவாய். வெள்ளம் வெரீஇ - வெள்ளம் என்று பயந்து. தாறு நாறுவ தாழைகள்; தாழையின் சோறு நாறுவ தீம்பிழி மாங்கனி; நாறு நாறுவ நாறு வளர்க்குறும் சேறு நாறுவ செங்கழு நீர்;அரோ! 15 15. தாறு நாறுவ - குலைகள் காணப்படுகின்றன. தீம்பிழி - இனிய ரசத்தையுடைய. சோறு - மகரந்த மணம். நாறு நாறுவ - வயல்களில் நாற்றுக்கள் காணப்படுகின்றன. `நாறு வளர்க்குறும் சேறுசெங்கழுநீர் நாறுவ. தென் தமிழ் நாடு சேரல் அனைய பொன்னி அகன்புனல் நாடுஒரீஇ, மனையின் மாட்சி குலாம்,மலை மண்டலம் வினையின் நீங்கிய பண்பினர், மேயினார், இனிய தென்தமிழ் நாடுசென்று எய்தினார். 16 16. மனையின்மாட்சி குலாம் - இல்லறத்தின் பெருமை விளங்குகின்ற. மலை மண்டலம் - சேரநாட்டை. மேயினார் - அடைந்தார்கள்; அதன்பின். அத்தி ருத்தகு நாட்டினை அண்டர்நாடு ஒத்தி ருக்கும்என் றால்,உரை ஒக்குமோ? எத்தி றத்தினும், ஏழுல கும்புகழ் முத்தும், முத்தமி ழும்தந்து முற்றலால். 17 17. உரை ஒக்குமோ - அவ்வுரை பொருந்துமோ? முந்துமே - முதலில் நிற்கும். என்ற தென்தமிழ் நாட்டினை எங்கணும் சென்று நாடித் திரிந்து வருந்தினார்; பொன்று வாரின் பொருந்தினர் போயினார், துன்றல் ஓதியைக் கண்டிலர் துன்பினார். 18 18. பொன்றுவாரின் - இறப்பாரைப்போல். பொருந்தினர் - சோர்வடைந்தவர்களாய். துன்றல் ஓதியை - நெருங்கிய கூந்தலை யுடைய சானகியை. இறுதியில் வானர வீரர்கள் அனைவரும் மகேந்திர மலையை அடைந்தனர்; தென் கடலைக் கண்டனர். 16. சம்பாதிப் படலம் வானரர்களின் கலக்கம் மழைத்த,விண் அகம்என முழங்கி, வானுற இழைத்தவெண் திரைக்கரம் எடுத்து, `இலங்கையாள் உழைத்தடம் கண்ணிஎன்று உரைத்திட்டு, ஊழின்,வந்து அழைப்பதே, கடுக்கும்,அவ் வாழி நோக்கினார். 1 சம்பாதிப் படலம்: சடாயுவின் சகோதரனான சம்பாதி என்னும் கழுகின் செய்தியைப்பற்றிக் கூறும் பகுதி. 1. மழைத்த - மேகங்கள்படிந்த. வான்உற இழைத்த - வானத்தில் படும்படி செய்யும். ஊழின்வந்து- முறையாக எதிர் கொண்டு வந்து. கடுக்கும் - ஒக்கும். அஆழி - அந்தத் தென்கடலை. யாவரும் அவ்வயின் எளிதின் எய்தினார், பூவரு புரிகுழல் பொருவில் கற்புடைத் தேவியைக் காண்கிலார்; செய்வது ஓர்கிலார்; நாவியல் குழறிட நவில்கின் றார்;அரோ! 2 2. அவ்வயின் - அந்த மகேந்திர மலையிடத்தில். பூவரு - பூவிலே பிறந்த; நிலத்திலே பிறந்த. புரிகுழல் - சுருண்ட தலைம யிரையுடைய. நாஇயல் - சொல்லுந்தன்மை. அரோ; அசை. அருந்தவம் புரிதுமோ? அன்னது அன்றெனின் மருந்தரு நெடும்கடு உண்டு மாய்துமோ? âUeâaJ ahJ?அது செய்து தீர்தும்;என்று இருந்தனர், தம்உயிர்க்கு இறுதி எண்ணுவார். 3 3. மருந்து அருகெடும் கடு - மருந்தாகிய அரியபெரிய விஷத்தை. திருந்தியது யாது - நல்லது எதுவோ? அங்கதன் கூற்று `நாடிநாம் கொணருதும் நளினத் தாளை,வான் மூடிய உலகினை முற்றும் முட்டி,என்று ஆடவர் திலகனுக்கு அன்பி னோர்எனப் பாடவம் விளம்பினம்; பழியின் மூழ்கினாம். 4 4. நளினத்தாளை - தாமரையாளை; சீதாதேவியை. பழியில் மூழ்குவான் - பழியைப் பெறும்படி. பாடவம் விளம்பினம் - வீண் மொழிகளைப் புகன்றோம். ‘செய்தும்என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்; நொய்துசென்று, உற்றது நுவல கிற்றிலம்; எய்தும்வந்து என்பது,ஓர் இறையும் கண்டிலம்; உய்தும்என் றால்இதோர் உரிமைத்து ஆகுமோ? 5 5. வந்துஎய்தும் என்பது - நம் காரியம் கைகூடும் என்பதை. ஓர் இறையும் - ஒரு சிறிதும். உய்தும் என்றால் - பிழைத்திருப் போம் என்றால். உரிமைத்து ஆகுமோ - அன்பிற்கு உரியதாகுமோ. `எந்தையும் முனியும்;எம் இறைஇ ராமனும் சிந்தனை வருந்தும்;அச் செய்கை காண்குறேன்; நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்! புந்தியின் உற்றது புகல்வி ராம்என்றான். 6 6. உயிரினை நுந்துவென் - உயிரை விட்டுவிடுவேன். நுணங்கு - நுண்மையான. புந்தியின் - அறிவால் ஆராய்ந்து. அன்னது - அதுபற்றி. அப்பொழுது சாம்பவான் அங்கதனைப் பார்த்து ‘நாங்கள் அனைவரும் இறக்கின்றோம்; நீ மட்டும் சென்று நடந்த செய்தியை அவர்களுக்குச் சொல் என்றான். அங்கதன் ‘நீங்கள் மடிய நான் மட்டும் போவது நன்றாமோ? என்றான் . `சான்றவர் பழிஉரைக்கு அஞ்சித், தன்உயிர் போன்றவர் மடிதரப் போந்து ளான்,என ஆன்றபேர் உலகுளோர் அறைதல் முன்னம்,யான் வான்தொடர் குவன்என மறித்தும் கூறுவான். 7 7. போந்துளான் - திரும்பி வந்திருக்கின்றான். வான் தொடர்குவன் - விண்ணையடைவேன்; இறப்பேன். வேறு `எல்லைநம் இறுதி, யாய்க்கும், எந்தைக்கும் யாவ ரேனும் சொல்லவும் கூடும்; கேட்டால் துஞ்சவும் அடுக்கும்; கண்ட வில்லியும், இளைய கோவும், வீவது திண்ணம்! அச்சொல் மல்லல்நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர். 8 8. எல்லை நம் இறுதி - முடிந்த நமது சாவைப்பற்றி. துஞ்சவும் அடுக்கும் - இறக்கவும் கூடும். வில்லியும் - இராமனும். நீர்மல்லல் - நீர்வளம் பொருந்திய. ‘பரதனும், பின்னு ளோனும், பயந்தெடுத் தவரும், ஊரும், சரதமே முடிவர்; கெட்டேன்! சனகிஎன்று உலகம் சாற்றும் விரதமா தவத்தின் மிக்க விளக்கினால், உலகத்து யார்க்கும் கரைதெளிவு இலாத துன்பம் விளைந்தவா! எனக்க லுழ்ந்தான். 9 9. சரதமே முடிவர் - உண்மையாகவே மாண்டுபோ வார்கள். விரதமாதவத்தின் மிக்க - விரதத்தோடுகூடிய பெரிய தவத்திலே சிறந்த. கரைதெரிவு இலாத - கரை காணாத. இது கேட்ட சாம்பவான் உன்னையும், உன் தாதையையும் தவிர உன் குலத்திற்குப் பின்னோர் யாரும் இல்லை. ஆதலால் நீ செல்க என்றான் அங்கதனிடம். வேறு ‘ஏகுநீ அவ்வழி எய்தி, இவ்வழி தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி,எம் சாகையும் உணர்த்துதி; தவிர்தி சோகம்;போர் வாகையாய்! என்றனன் வரம்பில் ஆற்றலான் 10 10. -. அனுமான் அறிவுரை அவன்அவை உரைத்தபின்; அனுமன் சொல்லுவான்; `புவனம்மூன் றினும்ஒரு புடையில் புக்கிலம், கவனமாண் டவர்எனக், கருத்தி லார்எனத், தவனவே கத்தினிர் சலித்தி ரோஎன்றான். 11 11. அவன் - சாம்பவான். புவனம் மூன்றினும் - மூன்றுல கத்திலும். ஒருபுடையின் புக்குஇலம் - ஒரு பக்கத்திலாவது புகுந்து முழுவதும் தேடினோம் இல்லை. கவனம் மாண்டவர்என - வலிமை இழந்தவர்களைப் போல. கருத்து இலார் - அறிவிலார். தவனவேகத்தினர் - கதிரவன்போன்ற வேகத்தையுடைய நீங்கள். பின்னரும் கூறுவான் ‘பிலத்தில், வானத்தில், பொன்வரைக் குடுமியில் புறத்துள் அண்டத்தில், நன்னுதல் தேவியைக் காண்டும் நாம்எனில் சொன்னநாள் அவதியை இறைவன் சொல்லுமோ? 12 12. புறத்துள் அண்டத்தில் - வேறுள்ள அண்டங்களிலும். நாம் காண்டும் எனில் - நாம் தேடிக் காண்போமாயின். அவதியை - தவறுவதை. இறைவன் சொல்லுமோ - இராமன் குற்றமாகச் சொல்லுவானோ. நாடுத லேநலம், இன்னும்; நாடிஅத் தோடலர் குழலிதன் துயரின் சென்று,அமர் வீடிய சடாயுவைப் போல விடுதல் பாடவம்; அல்லது பழியிற் றாம்;என்றான். 13 13. துயரின் சென்று - துன்பத்திலே சென்று. அமர்வீடிய - போரிலே மாண்ட. பாடவம் - பெருமையாகும். அல்லது பழியிற்றாம் - அப்படிச் செய்யாமல் உயிர்விடுதல் பழிப்புள்ள தாகும். சம்பாதியின் வருகை என்றலும், கேட்டனன் எருவை வேந்தன்தன் பின்துணை யாகிய பிழைப்பில் வாய்மையான் பொன்றினன் என்றசொல்; புலம்பு நெஞ்சினன்; குன்றென நடந்துஅவர்க் குறுகல் மேயினான். 14 14. பின்துணையாகிய - பின்பிறந்த தம்பியாகிய. அவர் குறுகல்மேயினான் - அவர்களை நெருங்கத் தொடங்கினான். எருவைவேந்தன் - கழுகரசன். `முறையுடை எம்பியார் முடிந்த வாஎனாப் பறையிடு நெஞ்சினன்; பதைக்கும் மேனியன்; இறையுடைக் குலிசவேல் எறித லால்முனம் சிறையறு மலைஎனச் செல்லும் செய்கையான். 15 15. முறைஉடை - நீதிமுறையை உடைய. பறையிடு நெஞ்சினன் - பறையடிப்பதுபோல் அடித்துக்கொள்ளும் நெஞ்சுடையவன். இறை - தேவேந்திரன். உடை - தன்னுடைய. குலிசவேல் - வச்சிராயுதத்தை. சிறை அறு - சிறகுகள் அறுந்த. வள்ளியும், மரங்களும், மலையும் மண்உறத் தெள்ளுநுண் பொடிபடக், கடிது செல்கின்றான்; தள்ளுவன் கால்பொரத் தரணி யில்தவழ் வெள்ளிஅம் பெருமலை பொருவு மேனியான். 16 16. வள்ளி - கொடிகள். மண்உற - மண்ணில் பொருந்த. தெள்ளும் நுண்பொடிபட - மிகச் சிறிய பொடிகளாகும்படி. தள்ளுவன்கால்பொர - தள்ளுகின்ற வலிய காற்று அடிப்பதனால். எய்தினன், இருந்தவர் இரியல் போயினார்; ஐயன்,அம் மாருதி, அழலும் கண்ணினான், `கைதவ! நிசிசர! கள்ள வேடத்தை! cŒâbrhš ïÅ?எனா உருத்து முன்னின்றான். 17 17. இருந்தவர் - அங்கிருந்த வானரர்கள். இரியல்போயினார் - ஓடி விட்டனர். கைதவ - வஞ்சகனே. வெம்கதம் வீசிய மனத்தன்; விம்மலன்; பொங்கிய சோரிநீர் பொழியும் கண்ணினன், சங்கையில் சழக்கிலன், என்னும் தன்மையை இங்கித வகையினால் எய்த நோக்கினான். 18 18. வெம்கதம் வீசிய - கொடிய கோபத்தைவிட்ட. சோரிநீர் - மழை போன்ற நீரை. சங்கையில் - நிச்சயமாக. சழக்குஇலன் - குற்றம் அற்றவன். இங்கித வகையினால் - குறிப்புக்களினால். சம்பாதியின் கேள்வி நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான்; வாக்கினால் ஒருமொழி வழங்கு றாதமுன் ‘தாக்கரும் சடாயுவைத், தருக்கி னால்உயிர் நீக்கினர் யார்?அது நிரப்பு வீர்!என்றான். 19 19. கேள்வியான் - மாருதி. தருக்கினால் - வீரத்தினால். அதுநிரப்புவீர் - அதைத் தெளிவாகக் கூறுங்கள். மாருதியின் மொழி `உன்னைநீ உள்ளவாறு உரைப்பின், உற்றதைப் பின்னையான் நிரப்புதல் பிழைப்பின்று ஆகுமால் என்னும்,மா ருதிஎதிர், எருவை வேந்தனும் தன்னையாம் தன்மையைச் சாற்றல் மேயினான். 20 20. உற்றதை - சடாயுவுக்கு நேர்ந்ததை. நிரப்புதல் - விவரித்தல். தன்ஆம் தன்மையை - தன்னைப்பற்றிய செய்தியை. `சடாயு என் பின் பிறந்தான்; நான் அவனுக்கு முன் பிறந்தேன் என்றான் சம்பாதி. கூறிய வாசகம் கேட்டுக் கோதிலான் ஊறிய துன்பத்தின் உவரி யுள்புகா ஏறினன்; உணர்த்தினன்; இகல்இ ராவணன் வீறிய வாள்இடை விளிந்த தாம்,என்றான். 21 21. கோதிலான் - மாருதி. உவரியுள் புகா ஏறினன் - கடலுள் மூழ்கிக் கரையேறினான். வீறிய - சிறந்த. விளிந்ததுஆம் - இறந்துவிட்டதாகும். சம்பாதி துக்கம் தாங்காமல் புலம்பினான், மாருதி அவனைத் தேற்றினான். சடாயு இராவணனுடன் போர் செய்து மாண்ட வரலாற்றை உரைத்தான். சம்பாதியின் வேண்டுகோள் ‘வாழ்வித் தீர்எனை! மைந்தர் வந்துநீர் ஆழ்வித் தீர்அலிர் துன்ப ஆழிவாய்! கேள்வித் தீவினை கீறி னீர்,இருள் போழ்வித் தீர்!உரை பொய்யின் நீங்கினீர். 22 22. கேள்வி - கேள்வி அறிவினால். கீறினீர் - பிளந்து ஓட்டினீர்கள். இருள் - அறியாமையாகிய இருளை. `பொய்யின் உரை நீங்கினீர். `நீங்கள் எல்லோரும் இராமநாமத்தைக் கூறுங்கள் என் சிறகு முளைக்கும் என்றான் சம்பாதி. அனைவரும் இராம நாமத்தைப் பாடினர். சம்பாதியின் சிறகு முளைத்தது. வானர வீரர்கள் வியப்புற்றனர். சம்பாதியின் வரலாற்றை வினவினர். சம்பாதி சடாயு வரலாறு `தாய்எனத் தகைய நண்பீர்! சம்பாதி சடாயு என்பேம் சேய்ஒளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்; பாய்திரைப் பரவை ஞாலம் படர்இருள் பருகும் பண்பின் ஆய்கதிர்க் கடவுள், தேர்ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர். 23 23. சேய்ஒளிச் சிறைய - அழகிய நிறமுள்ள சிறகுகளை உடைய. படர் இருள் சீக்கும் - படரும் இருட்டை விலக்கும். பண்பின் - தன்மையுள்ள. ஆய்கதிர்க்கடவுள் - சிறந்த கதிர்களை யுடைய சூரிய பகவானது. `ஆயுயர் உம்பர் நாடு காண்டும்;என்று அறிவு தள்ள, மீயுயர் விசும்பின் ஊடு மேக்குறச் செல்லும் வேலை, காய்கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணு றாமுன், தீயையும் தீக்கும் தெய்வச் செங்கதிர்ச் செல்வன் சீறி. 24 24. ஆய்உயர் உம்பர்நாடு - உயரமாயுள்ள. தேவலோகத்தை. அறிவு தள்ளி - அறிவிழந்து. மேக்குற - மேலே. கண்ணுற்றும் கண்ணுறாமுன் - கண்டும் காணாத முன். `முந்திய எம்பி மேனி, முருங்கழல் முடுகும் வேலை, `எந்தைநீ! காத்தி என்றான்; யான்இரு சிறையும் ஏந்தி வந்தனென் மறைத்த லோடும், மற்றவன் மறையப் போனான்; வெந்துமெய் யிறகு தீந்து விழுந்தனென் விளிகி லாதேன். 25 25. முருங்குஅழல் - அழிக்கின்ற தீ. முடுகும்வேலை - விரைந்து சுடும் போது. ஏந்தி - விரித்து. மற்றவன் - சடாயு. மறையப்போனான் - மறைந்து வந்தான். ‘மண்ணிடை விழுந்த என்னை, வானிடை வயங்கு வள்ளல், கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், ‘சனகன் காதல் பெண்ணிடை யீட்டின் வந்த வானரர் இராமன் பேரை எண்ணிடை உற்ற காலத்து இறகுபெற்று எழுதி! என்றான்; 26 26. வள்ளல் - கதிரோன். பெண்இடை யீட்டின்வந்த - பெண்ணின் பொருட்டுத் தேடிக்கொண்டுவந்த. எண்இடை உற்றகாலத்து - எண்ணிச் சொல்லியபோது. இதைச் சம்பாதி கூறியபின் வானரர்களும் தாங்கள் வந்த செய்தியைக் கூறினர். அப்பொழுது சம்பாதி உரைத்ததாவது: சம்பாதி சீதையிருக்கும் இடம் அறிவித்தல் `பாகொன்று குதலை யாளைப் பாதக அரக்கன் பற்றிப் போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை; புக்கு வேகின்ற உள்ளத் தாளை வெம்சிறை அகத்து வைத்தான், ஏகுமின்! காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும். 27 27. பாகுஒன்று - பாகின் சுவைபொருந்திய. வேகின்ற - வருந்துகின்ற. ‘எல்லீரும் சேறல் என்பது எளிதன்றுஅவ் விலங்கை மூதூர், வல்லீரேல், ஒருவர் ஏகி, மறைந்தவண் ஒழுகி, வாய்மை சொல்லீரே துயரை நீக்கித், தோகையைத் தெருட்டி மீள்திர்! அல்லீரேல், என்சொல் தேறி, உணர்த்துமின் அழகற்கு அம்மா! 28 28. அவண்மறைந்து ஒழுகி - அங்கே மறைந்து வாழ்ந்து. தோகையை - சீதையை. தெருட்டி மீள்திர் - தெளியச்செய்து மீளுவீர். அழகற்கு - இராமனுக்கு. உணர்த்துமின் - சீதை இலங்கையில் உள்ளாள் என்று சொல்லுமின். இவ்வாறு சொல்லிய சம்பாதி `கழுகினம் அரசனின்றி அல்லல் உறும். நான் அவைகளைக் காக்கச் செல்கின்றேன். நீங்கள் எது நல்லதோ அதைச் செய்யுங்கள். என்று சொல்லிச் சென்றான். 17. மயேந்திரப் படலம் சம்பாதியின் சொல்லைக்கேட்ட அனைவரும் `நாம் இச் செய்தியைச் சுக்கிரீவனிடமும், இராமனிடமும் சென்று கூறுவோம்; நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. என்றனர். அப்பொழுது சாம்பவான் மாருதியைப் பார்த்துக் கூறியதாவது. சாம்பன் சாற்றியவை `மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர், நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர்! காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர், கடன்நின்றீர்! ஆலம் நுகர்ந்தான் அன்ன வயப்போர் அடர்கிற்பீர். 1 மயேந்திரப் படலம்: மகேந்திரமலையில் நடந்த நிகழ்ச்சியைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. மேலை - மேலான. விரிஞ்சன் - பிரமன். வீயாமிகை நாளீர் - அழியாத மிகுந்த வாழ்நாளையுடையீர். நுவல்தக்கீர் - சொல்வன்மையுடையீர். கடன்நின்றீர் - கடமையைச்செய்ய நின்றீர். அடர்கிற்பீர் - செய்வீர். `வெப்புறு செந்தீ, நீர்,வளி யாலும், விளியாதீர்; செப்புறு தெய்வப் பல்படை யாலும் சிதையாதீர்; ஒப்புறின் ஒப்பார் நும்அலது இல்லீர், ஒருகாலே குப்புறின் அண்டத்து அப்புற மேயும் குதிகொள்வீர். 2 2. வெப்புஉறு - வெப்பம் உள்ள. வளி - காற்று. ஒப்புறின் - உவமை கூறினால், ஒருகாலே குப்புறின் - ஒரு தடவை பாய்ந்து குதித்தால். ‘நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி, நவைதீரச் சொல்லவும் வல்லீர்! காரியம் நீரே துணிகிற்பீர்! வெல்லவும் வல்லீர், மீளவும் வல்லீர்! மிடல்உண்டேல் கொல்லவும் வல்லீர்!’ தோள்வலி ஒன்றும் குறையாதீர்! 3 3. நவைதீர - குற்றம் இல்லாமல். மிடல்உண்டேல் - பகைவர் களிடம் வலிமையிருக்குமானால். ஒன்றும் - சிறிதும். `போர்முன் எதிர்ந்தால் மூவுல கேனும் பொருளாகா; ஓர்வில் வலம்கொண்டு, ஒல்கலில் வீரத்து உயர்தோளீர்! பாருல கெங்கும் பேர்இருள் சீக்கும் பகலோன்முன், தேர்முன் நடந்தே, ஆரிய நூலும் தெரிவுற்றீர். 4 4. பொருள்ஆகா - பொருட்டல்ல. ஓர்வுஇல் - உணர முடியாத. ஒல்கல்இல் வீரத்து - சுருங்காத வீரத்துடன். ஆரியநூலும் - வடமொழி நூல்களை. ‘நீதியில் நின்றீர்! வாய்மை அமைந்தீர்! நினைவாலும் மாதர்ந லம்பே ணாதுவ ளர்த்தீர்! மறையெல்லாம் ஓதிஉ ணர்ந்தீர்! ஊழி கடந்தீர்! உலகீனும் ஆதி அயன்தா னேயென யாரும் அறைகின்றீர்! 5 5. மாதர்நலம் - மாதர் இன்பத்தை. பேணாது - விரும்பாமல். அயன் தானேஎன - பிரமன் தான் என்று. யாரும் அறைகின்றீர் - யாராலும் சொல்லப்படுகின்றீர். ‘நீதியில் நின்றீர்! வாய்மை அமைந்தீர்! நினைவாலும் மாதர்ந லம்பே ணாதுவ ளர்த்தீர்! மறையெல்லாம் ஓதிஉ ணர்ந்தீர்! ஊழி கடந்தீர்! உலகீனும் ஆதி அயன்தா னேயென யாரும் அறைகின்றீர்! 5 6. மடங்கல் - சிங்கம். மதிநாடி - அறிவால் ஆராய்ந்து. முற்றும் முடிக்கும் தொழில் - வெற்றிபெற முடிக்கும் தொழிலாகும். அல்லால் - அன்றியும். இடம்கெட - பெருமை கெடும்படி. வெவ்வாய் ஊறு - கொடிய இடையூறு. கிடைத்தால் - நேர்ந்தாலும். இடையாதீர் - பின்வாங்க மாட்டீர். ‘ஏகுமின்! ஏகி, எம்முயிர் நல்கி, இசைகொள்வீர்! ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னல் குறைவுஇல்லாச் சாகரம் முற்றும் தாவிடும் நீர்,இக் கடல்தாவும் வேகம் அமைந்தீர்! என்று விரிஞ்சன் மகன்விட்டான். 7 7. ஓகை- மகிழ்ச்சியான செய்தியை. மன்னையும் - இராமனையும். இன்னல் குறையில்லா - துன்பம் குறையாத. சாகரம் முற்றும் - துன்பக் கடல் முழுவதையும். தாவிடும் - தாவும் தன்மையுள்ள. விரிஞ்சன்மகன் - சாம்பவான். விட்டான் - மாருதியைத் தூண்டிவிட்டான். மாருதியின் வீரவுரைகள் வேறு `இலங்கையை இடந்து வேரோடு, இவ்வயின் தருகென் றாலும், விலங்கினர் தம்மை எல்லாம், வேரொடும் விளிய நூறிப், பொலன்குழை மயிலைக் கொண்டு போதெனப் புகன்றிட் டாலும், கலங்கலிர், உரைத்த மாற்றம் முடிக்குவல்; கடிது காண்டீர். 8 8. இடந்து - அகழ்ந்தெடுத்து. விலங்கினர் தம்மையெல்லாம் - தடுத்தவர்களையெல்லாம். விளியநூறி - இறக்கும்படி அழித்து. பொலன்குழை - அழகிய காதணியையுடைய. `நீயிரே, நினைவின் முன்னம், நெடுந்திரைப் பரவை ஏழும் தாய்,உலகு அனைத்தும் வென்று தையலைத் தருதற்கு ஒத்தீர்; போயிது புரிதிர் என்று புலமைதீர் புன்மை காண்டற்கு ஏயினீர் என்னில், என்னின் பிறந்தவர் யாவர் இன்னும். 9 9. நீயிரே - நீர் ஒருவரே. நினைவின் முன்னே - நினைப் பதற்குமுன். தாய் - தாவி. தையலை - சீதாபிராட்டியை. ஒத்தீர் - தகுந்தவர் ஆவீர். புலமைதீர் புன்மை காண்டற்கு - அறிவற்ற எனது இழிவை அறிவதற்காக. ஏயினிர் என்னின் - ஏவினீர் களாயின். `முற்றும்நீர், உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் உற்றதே எனினும், அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும், இற்றைநும் அருளும் எங்கோன் ஏவலும் இரண்டு பாலும் கற்றைவார் சிறைக ளாகக் கலுழனில் கடப்பல் காண்டீர். 10 10. முற்றும்நீர் - கடல் சூழ்ந்த. முந்நீர் - கடல். உற்றதே எனினும் - பொங்கிவந்ததாயினும். உயர்ந்ததேனும் - வானத்தில் பறப்பதாயினும். கற்றை வார்சிறைகளாக - அடர்ந்த நீண்ட சிறகுகளாகக்கொண்டு. கலுழனில் - கருடனைப்போல. `ஈண்டினிது உறைமின்; யானே எறிகடல் இலங்கை எய்தி மீண்டிவண் வருதல் காறும்; விடைதம்மின் விரைவின்; என்னா ஆண்டுஅவர் உவந்து வாழ்த்த அலர்மழை அமரர் தூவச் சேண்தொடர் சிமையத் தெய்வ மயேந்திரத்து உம்பர்ச் சென்றான். 11 11. சேண்தொடர் சிமையம் - வானளாவிய உணர்ச்சி யுடைய. மயேந்திரத்து - மகேந்திரமலையின். உம்பர் - மேலே. பொருவரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய பெருவடிவு உயர்ந்த, மாயோன் மேக்குறப் பெயர்த்த தாள்போல் உருஅறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமை யாலும் திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான். 12 12. புந்தியான் - கருத்துள்ளவனாகிய மாருதி. பெருவடிவு உயர்ந்த - பெரிய உருவமாக வளர்ந்த. மாயோன் - திருமாலின். மேக்குஉற - மேலே பொருந்த. பெயர்ந்த தாள்போல் - வளர்ந்த பாதம்போல். உருவுஅறி வடிவின்- அனைவரும் தன் உருவைக் காணும் வடிவத்தோடு. உம்பர் ஓங்கினன் - மேலே உயர்ந்தான்.