[] 1. Cover 2. Table of contents ரமண மகரிஷி ரமண மகரிஷி   என்.வி.கலைமணி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ramana_maharishi மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/ramana_maharishi This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Vasantha Lakshmi V - TVA ARUN - Info-farmer - Fleshgrinder - Rocket000 - Mecredis - Patricknoddy-commonswiki - Arularasan. G - Be..anyone - HoboJones - Balajijagadesh - Sgvijayakumar - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. பதிப்புரை தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பல மகான்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் மகான் ரமண மகரிஷி என்றால் அது மிகையான ஒன்றல்ல. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப மனித குலத்திற்காக அதிலும் குறிப்பாக எளியோர், வறியோருக்காக தன் வாழ்வை அர்பணித்து, அதிலே சுகம் கண்டு இறைவனை உணர்ந்தவர் ரமண மகரிஷி. ஒருமுறை அவருடைய ஆசிரமத்திற்குள் திருடர்கள் சிலர் நுழைந்து பொருட்களை அள்ளிச் செல்ல முயன்றபோது, ரமணரின் சீடர்கள் அது குறித்து ரமணரிடம் சொல்ல, அவரோ புன்னகைத்து அதனால் என்ன? எடுத்துச் செல்லட்டுமே, ஆம்! “எது என்னுடையது அதனை அடுத்தவர் அபகரிக்கிறார்” என்று வருந்த என்று கூறினாராம். வாழ்வின் தத்துவத்தை நன்கு உணர்ந்து நாம் வாழ நினைத்தால் அப்பேற்பட்ட மகான்களைப் பற்றிய செய்திகளை அறிந்தால் தான் நாமும் சிறப்பாக வாழ முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நூலினை நாங்கள் தந்திருக்கின்றோம். வாசகர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது. -பதிப்பகத்தார் திருவண்ணாமலை! பளிங்கு நதி போல மனம் தூய்மையாக இருப்பதற்குத் தெய் நிலை என்று பெயர். அந்த இறையுணர்வை உலகுக்கு உணர்த்தவே கயிலாய மலையில் சிவபெருமான் கைலாச நாதர் என்ற திருக்கோலத்தோடு காட்சி தருகிறார். அந்த மலையில் உள்ள பளிங்கு ஏரிக்கும் மானச சரோவர் என்றே பெயரிடப்பட்டுள்ளது. சிவபெருமானை வழிபடும் சிவநேசச் செல்வர்கள், ஒரு காலத்தில் கண்ணாடி போன்ற மிகத் தூய்மையான மனத்துடன் அல்லும் பகலுமாக வழிபட்டு வாழ்ந்து வந்ததால், கடவுள் அவர்கள் நெஞ்சில் கோயிலாகி அருள் பாலித்தார் என்று அறுபத்துமூன்று நாயன்மார்களது இறைவழிபாட்டு வாழ்வைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் மாக்கதை என்ற பெயரில் பெரிய புராணத்தில் எழுதியுள்ளார். அதைப் படிப்பவர்களுக்கு ஊன் உருகும்; உள்ளம் உருகும். எனவே, அத்தகைய அருளாளர்கள் மனத்துள், இறைவன் இருந்தமையால், அவர்கள் ஊர்தோறும் நடமாடும் கோயிலாக நகர்ந்து இறையருளை மக்களுக்குப் போதித்தார்கள். அத்தகைய சிவனடியார்கள் வாழ்ந்த பூமியாக, சித்தத்தை அடக்கிய சித்தர்கள் முக்திபெற்ற மண்ணாக, ஞானியர் நடமாடிய தலமாக, யோகியர் சமாதியான இடமாகத் திருவண்ணாமலை இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.  திருவண்ணாமலை என்ற புண்ணிய பூமியில் அருணாச்சலேஸ்வரர் பெருமான் திருக்கோவிலுள்ளது. இந்தப் புனிதத் தலம் தமிழ் நாட்டின் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதற்குக் காரணம் இந்த அண்ணாமலை தவமலை என்றும், யோக மலை என்றும், சிவமலை என்றும், அக்னிமலை என்றும், ஜோதிமலை என்றும் பண்டையக் காலம் முதல் இன்று வரை ஆன்மீக ஞானிகளால் அழைக்கப்பட்டு வருவதால்தான். இந்த நகர், முன்னர் வடார்க்காடு மாவட்டத்தின் ஒரு சிறப்புமிக்க நகரமாக, முதல் விடுதலைப் போர் துவங்கப்பட்ட வேலூர் பெருநகரம் உள்ள மாவட்டத்திலே, ஒரு புராணப் பெருமை பெற்ற நகரமாக இருந்தது. தற்போது ஆன்மீகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் என்ற பெயரில் ஒரு தனி மாவட்டமாகவே உருவாகியுள்ளது. சைவ ஞானியர்கள், சிவமே மலையாக உருவெடுத்தும், மலையே சிவமாக உருப்பெற்றும் உள்ள நகரம் திருவண்ணாமலை என்பர். இந்த புனித நகரமான திருவண்ணாமலை நகருக்கு மேலும் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவர்தான். திருப்புகழ் விருப்போடு படிப்பவர் சிந்தை வலுவாலே, ஒருத்தரை மதிப்பதில்லை முருகா நான் உந்தன் அருளாலே என்று திருப்புகழ் பாடி முருகனடியாராக டெருமையுடன் வாழ்ந்து முக்தி பெற்ற அருணகிரிநாதர் ஆவார். திருவண்ணாமலையை தவமலை என்று பெருமையோடு மக்களுக்கு நிரூபித்தவர்களுள் மகான் சேஷாத்திரி மௌன குரு யோகி ராம் சுரத்குமார் போன்றவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக நின்று, யோக மலையின் புகழை இந்தியா முழுவதுக்கும் மட்டுமன்று, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளுக்கெல்லாம் தனது தவ பலத்தால் நிலை நாட்டிய மகான் ரமணரிஷி ஆவார்.  திருவருள் திருஞானம் அலை மோதும் இந்தத் திருவண்ணாமலை திருக்கோவில் மண்ணிலிருந்தும், மலைக் குகையிலிருந்தும் தான், அந்த மகான் ரமணரிஷி, ‘நான் யார்?’ ‘நான் யார்?’ என்று தன்னையே ஆன்ம விசாரணை செய்து வெற்றி பெற்றார். ‘நான் யார்?’ என்று தன்னையே தான் கேட்டுக் கொள்வதற்கு ஆழமான மனோபலம் பெற்றார். முதன் முதலில் அவர் தவநிலையை மேற்கொண்ட போது, அதற்குரிய மனோபலம் இல்லை என்பதை உணர்ந்து. மூச்சுக் காற்றைக் கண்காணித்தார். போகப் போக அந்தச் சுவாசக் காற்றே அவர் மனத்தைக் கட்டுப் படுத்தியதைக் கண்டார். ஆனால், மனோவிசார மார்க்கத்தில் ‘நான்’ எனும் ஆணவ மனம் எங்கே இருந்து தோன்றுகிறது என்பதை அவர் கண்டு பிடிக்க முயற்சி மேற்கொண்டார். இந்த வழி, மூச்சைக் கண்காணித்தலைத் தன்னகத்தே கொண்டது என்பதையும் பகவான் ரமணர் உணர்ந்தார். எங்கே இருந்து எண்ணங்கள் புறப்படுகின்றன என்ற மூலத்தைக் கண்காணிக்கும் போது, நாம் மூச்சுக் காற்றின் மூலத்தையும், நோக்குகிறோம். ஏனென்றால், ‘நான்’ என்ற எண்ணம், மூச்சு என்ற இரண்டுமே ஒரே மூலத்திலிருந்துதான் புறப்படுகின்றன என்பதை அவர் கண்டார். அதை அவர் கண்டு பிடிக்க முயற்சித்தபோது, அதற்கென்ற ஒரு தனி இருப்பு ஏதும் கிடையாது என்பதையும், ஆனால், உண்மையான ‘நான்’, என்பதோடு அது இரண்டறக் கலந்து விடுகிறது என்றும் அவர் கண்டார். மகான் ரமண மகரிஷி ‘நான் யார்?’ என்பதைக் கண்டு பிடிக்க, ஆழமான மனோ பலம் மனிதனுக்குத் தேவை என்று கூறியுள்ளார். “அந்த மனோ பலமற்றவர்கள் மூச்சுக் காற்றையே கண்காணியுங்கள். போகப் போக அந்தக் காற்றே மனத்தைக் கட்டுப் படுத்தி விடும்” என்ற ஆன்ம தத்துவத்தைத் திருவண்ணாமலை குகையிலே இருந்து கொண்டுதான் உலக மக்களுக்குப் போதித்தார். அத்தகையதோர் ஆன்ம மனோ பல ஞானி, எவ்வாறெல்லாம் தவநிலையில், யோக நிலையில், சிந்தனை நிலையில், உடலை உருக்கிய பசியெனும் அக்னி நிலையில், அருள் ஞான ஜோதி நிலையில் பல துயரங்களைப் பட்டுப் பட்டு, படிப்படியாக வெற்றி கண்டு, நமக்கும், நமது ஆன்மீகத் துறைக்கும் அரும்புகழ் சேர்த்த அருளாளரானார் என்பதை, அடுத்து வரும் அத்தியாயங்களிலே படிப்போம்! பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்? பாண்டிய நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஒன்று திருச்சுழி திருத்தலம். இந்தக் கிராமம் வளம் சூழ்ந்த ஒரு சிற்றூர். கௌண்டிய முனிவர் என்பவர் அவ்வூர் ஆற்றங்கரையில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதனால் அந்த நதிக்கு கௌண்டின்ய ஆறு என்ற பெயர் வந்தது. அந்தக் கிராமத்தில் அந்த ஆறு பாய்ந்து வளமுண்டாக்குவதால் மிகப் பசுமையான, அழகான கிராமமாக அது அமைந்திருந்தது. திருச்சுழி எனும் அந்தத் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்குப் பூமிநாதர் என்று பெயர். மாணிக்கவாசகர் சுவாமிகள் அந்தப் பூமிநாத பெருமானைப் பாடி மகிழ்ந்துள்ள தலம் அது. இந்த ஊரில், சுந்தரம் அய்யரும், அவரது மனைவியார் அழகம்மாளும் இல்லற இன்பம் கண்டு வாழ்ந்து வந்தார்கள். சுந்தரம் அய்யர் மிகவும் ஏழை. ஏழை என்றால் சொல்ல வேண்டுமா என்ன? தரித்திரம் தானே அவர்களது குடும்பச் சொத்து? அதுவும், மாதம் இரண்டே இரண்டு ரூபாய்தான் அவரது குமாஸ்தா வேலைக்குரிய சம்பளம் என்றால், எப்படி இருக்கும் அய்யர் குடும்பம்? சுந்தரயமய்யர், தனது ஊதியம் இரண்டுரூபாய் தானே என்று மனமுடைந்து விட்டவர் அல்லர். ‘முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்’ என்பதற்கு ஏற்றவாறு, தனது சிந்தனை சக்தியால் மக்கள் இடையே நாணயமானவர், நேர்மையானவர் என்ற நல்ல பெயரைப் பெற்றார். அதனால், அவ்வூர் சிறு கிராமமாக இருந்தாலும், அங்கே அய்யர் குடும்பத்திற்கு நல்ல பெயரும் புகழும் இருந்தது. திருச்சுழி சுந்தரமய்யர், எப்படியோ சட்ட நூல்களை அரும்பாடுபட்டுத் தேடி, அவற்றை நன்றாகப் படித்து சட்டக் கல்விமான் ஆனார். அதனால் அவர் வழக்குரைஞர் என்ற பெயரைப் பெற்று திறமையான, நுட்பமான, நன்றாக வாதாடக் கூடிய, வல்லமையுடைய, எதிரியை மடக்கித் திணறடிக்கக் கூடிய வழக்கறிஞரானார். வெள்ளம் போல் பெருகி வரும் வருமானத்தைக் கண்டு அவரது ஏழ்மைப் பறந்தோடியது. மூதேவி ஓடினாள்; சீதேவி அழகம்மாளுக்குத் தோழியானாள்! வருமானம் வலுத்தது; உயர்ந்தது. கிராமப் பெரும் புள்ளிகளுள் ஒருவரானார் அவர். இவ்வளவு பெரிய பணம் தன்னை நாடி வந்துவிட்டதால், அவர் ஆணவக் காரராகவோ, அகந்தையராகவோ அல்லாமல், பழைய தரித்திர நாட்களை எண்ணியெண்ணி அந்தக் கொடுமைகளை நெஞ்சிலே நிறுத்தி அச்சத்துடனேயே வாழந்தார். அவரைத் தேடி, வரும் பஞ்சை பராரிகளுக்கும், ஏழை எளிய கிராமவாசிகளுக்கும் தவறாமல், தாராளமாக, உதவிகளைச் செய்து வந்தார் அதனால் திருச்சுழி கிராம வட்டாரம் மட்டுமன்று, பாண்டி நாட்டைச் சுற்று முற்றுமுள்ள நகர, கிராமங்களுக்கு எல்லாம் சுந்தரமய்யர் ஒரு வள்ளலாகவே வாழ்ந்து வந்தார். கொடையாளி என்ற பெயரைப் பெற்ற அவருக்குள்ள சிறப்பு என்ன தெரியுமோ! கொள்ளையடிப்பவர்களும், கிராமத் திருடர்களும், ஒழுங்கற்ற போக்கிரிகளும் கூட, சுந்தரமய்யர் வீட்டிற்குக் கொள்ளையடிக்க, வம்படி சண்டைகளுக்கு வருவதில்லையாம்! இதைவிடச் சிறப்பு என்னவென்றால், அந்தச் சமுதாய விரோதிகள் கூட, ‘சுந்தரமய்யரும், அவரது குடும்பமும் நன்றாக வாழவேண்டும் கடவுளே’ என்று இறைவனை இறைஞ்சுவார்களாம்! இது எப்படி? இதுதானே மனித நேயம் மாண்பு? சுந்தரமய்யரிடம் பணம் திரளத்திரள, அன்றாடம் விருந்தினர்களும், புதுப்புது நண்பர்களும் எந்த நேரமும் அவரது வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தொழில் பெருக்கம் மட்டுமே இதற்குரிய காரணமன்று! அந்த ஊர் பிரசித்திப் பெற்ற சிவத் தலமல்லவா? அதனால், தினந்தோறும் அக்கிராமத்தைக் கடந்து போகும் யாத்திரீகர்களுக்கு அன்னதானம் செய்வதற்காகவே ஒரு சத்திரத்தையும் அவர் கட்டி விட்டார். அந்த விடுதியில், நல்ல விருந்தும், உபசரிப்புகளும் முகங்கோணாமல் தினந்தோறும் நடைபெற்று வந்தது. நாளடைவில் இந்தப் பசி தீர்க்கும் விருந்து மிகவும் புகழ்பெற்று வளர்ந்தது. சுந்தரமய்யருக்கும், அழகம்மாளுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்த மகன் பெயர் நாகசாமி, இரண்டாம் மகன் வெங்கட்ராமன், மூன்றாம் பிள்ளை பெயர் நாக சுந்தரமாகும். இதில் இரண்டாவது ஆண்குழந்தை 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முப்பதாம் நாள் பிறந்தது. அக்குழந்தை பிறந்த நேரத்தில், திருச்சுழி பூமிநாதர் திருக்கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியால், அன்ன சத்திரத்தில் விருந்தினர் முதல் கிராம மக்கள் எல்லாருக்கும் தடபுடலான விருந்துகள் தாராளமாக நடைபெற்றன. அன்று இரவு திருச்சுழி பூமிநாதப் பெருமான் தேர் மூலமாக கிராமத்தை வலம் வந்து, கோயில் வாயிலை அடைந்த போது, வெங்கட்ராமன் என்ற அந்தக் குழந்தை பிறந்ததால், ஊராரும், உற்றாரும், பெற்றாரும் பெரிதும் மகிழ்ந்து, குழந்தையைப் போற்றி மகிழ்ந்தார்கள். குழந்தை பிறந்தபோது அன்னதாதா சுந்தரமய்யர் தனது இல்லத்திலே இல்லை. கோயில் ஊர்வலப் பணிகளிலே இருந்து அப்போதுதான் வீடு நோக்கி வந்தார். வந்த அந்த வள்ளலை பதிதாகப் பிறந்த வாரிசு அழுது வரவேற்றது. அதைக் கேட்ட தந்தை சுந்தரமய்யர், சிந்தை களி கொண்டு ஏழைமக்களுக்குத் தானம் வழங்கினார்! வெங்கட்ராமன் மார்கழி மாதத்தில், திங்கட்கிழமை அன்று, சிருஷ்ண பட்சத்தில், துவிதியை திதியில் பிறந்ததைக் கண்டு அய்யர் குடும்பம் பூரித்து மகிழ்ச்சிக் கடலிலே அலைமோதி தத்தளித்தது. அழுது கொண்டே பிறந்த அந்த ஆண் குழந்தையின் ஒலியைக் கேட்டு, குழந்தையின் பாட்டியான, அதாவது சுந்தரம் அய்யரின் தாயார் மகிழ்ச்சி பெற வேண்டியதற்குப் பதிலாக ஓ…. வென்று அழுதாள்! அவள் ஒருத்திதான் மூலையிலே உட்கார்ந்து முணகி முணகி அழுதாள். ஏன் தெரியுமா? சுந்தரமய்யருக்கு ஒரு தங்கை! அவளுக்கு ஒரு மகன் அதாவது சுந்தரம் அய்யர் தாயிக்கு அவன் மகள் வயிற்றுப் போனல்லவா? அதனால், பாட்டிக்கு நீண்ட நெடு நாளாய் ஓர் ஆசை! தனது மகள் சுந்தரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும். அந்தக் குழந்தையைத் தனது மகள் பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். என்பதே அக்கிழவியின் ஆசை! அதனால், அந்தப் பாட்டி, பூமிநாதப் பெருமானை மட்டுமல்ல எல்லா தெய்வங்களிடமும் முறையிட்டாள். என்ன செய்வது வழக்கறிஞர் சுந்தரம் அய்யருக்கு மீண்டும் ஆண் குழந்தையே பிறந்துவிட்டது. இளமையில் ரமணர்! இரமணர் இளமைப் பருவத்தில் அறிவு நுட்பத்துடனும், புத்திக் கூர்மையுடனும் இருந்தார். வீட்டில் புத்தகத்தோடு காணப்படமாட்டாரே தவிர, வகுப்பில் குருவுக்கும் விஞ்சிய மாணவனாகவே காட்சியளிப்பார். அவருடன் இணைந்து வகுப்பில் கல்வி பயிலும் மாணவ நண்பர்கள் யார் எதைக் கூறினாலும், அதைக் கவனமாகக் கேட்டு மனத்திலிருத்திக் கொள்வார். அது போலவே ஆசிரியர் வகுப்பில் எந்தச் செய்யுளை அல்லது பாடத்தைக் கொடுத்தாலும், அவர் பின்னாலேயே அந்தச் செய்யுளுக்கான பிற அடிகளையும் பாடல்களின் கருத்துக்களையும் அடி பிறழாமலும், வாக்கியங்கள் மாறாமலும் ஒப்புவிக்கும் மனத் திறமை பெற்றவராக விளங்கினார். வீட்டிற்கு வந்தால் அவர் எங்கேயோ விளையாடிக் கொண்டிருப்பார். புத்தகம் எங்கோ ஒரு மூலையில் வீழ்ந்து கிடக்கும். எனவே, ரமணர் என்ன படித்தார். எப்படிப் படித்தார்? எவ்வாறு படிக்காமலேயே பாடலின் கருத்துக்களைத் திருப்பிக் கூறிடும் சக்தி பெறுகிறார் என்பதே வகுப்பு ஆசிரியருக்கும் புரியவில்லை. வீட்டாருக்கும் தெரியவில்லை. ஏதோ ‘சித்தம் போக்கு சிவம்போக்கு’ என்பார்களே அதைப்போல, ரமணருடைய கல்விப் போக்கே ஒரு தனியான வழியாக இருந்தது. ரமணர் போக்கு இப்படி என்றால், அவரது அண்ணன் தம்பிகள் போக்கு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுவது இயற்கைதானே! அவருடைய தந்தையாரும், புகழ்பெற்ற வழக்கறிஞரும், அன்னதாதா எனப்படுபவருமான சுந்தரமய்யரின் மூன்று மக்களும் மூன்று விதமான போக்காகவே வளர்ந்து வந்தார்கள். அதாவது, எப்போதும் விளையாட்டாகவும், துஷ்டர்களாகவும் காட்சி தந்தார்கள் எனலாமே தவிர, அவர்களுடைய அறிவாற்றலுக்கு அடையாளமாக எதையும் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களாகவே இருக்கவில்லை. இரமணருடைய தம்பியான நாக சந்தரம் அப்போது மிகவும் சிறுவன், அவளைப் பற்றிக் கூறிட என்ன இருக்கிறது? ஆனால், அவருடைய தமையனாரான நாகசாமி, கல்வியில் திறமையாளர். வீட்டிலும் புத்தகத்தோடே உறவாடிப் பேசுவார். வகுப்பிலும் சரி, தேர்வு எழுதுவதிலும் சரி, ஆசிரியரிடம் பாட விவரங்களுக்காக வாதாடும் போதும் சரி, அவர்தான் வகுப்புப் பிள்ளைகளை மீறி முதல் மாணவனாக இருப்பார். அவ்வளவு அக்கறையுடன் படித்து, தனது தந்தையின் புகழுக்கும் பெயருக்கும் அந்த இளம் வயதிலேயே மேலும் பெருமை தேடிக் கொடுத்து மகிழ்வார். சுந்தரமய்யர் நண்டர்களும், அவரது உதவி பெறும் ஊர் மக்களும், வழக்குகளுக்காக வரும் கட்சிக்காரர்களும், அன்னசத்திரத்துக்கு வாடிக்கையாக வந்து போபவர்களும் நாகசாமியைப் பற்றி, அவரது தந்தையிடம் ஏதாவது பாராட்டுதல்களைக் கூறாமல் போகமாட்டார்கள். ஆனால், நடுமகன் இருக்கிறாரே வெங்கட்ராமன், அவரைப் பற்றி ஏதாவது சிறப்புக்கள் தெரிந்தாலும், அதைச் சுந்தரமய்யரிடம் கூறமாட்டார்கள். அவரைப் பற்றி எந்த முடிவையும் எவரும் துணிந்து அய்யரிடம் தாரளமாகக் கூறிட மனம் வராது. ஏன் தெரியுமோ? இரமணர் எப்போதும், எந்நேரமும் எதையோ பறிகொடுத்து விட்டு ஏமாந்தவனை போன்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடப்பார். இந்த இளம் பிராயத்தில் அப்படி என்ன சிந்தனையோ என்று சிலர் எண்ணியவாறே அவரிடம் பேசாமல் போய்க் கொண்டே இருப்பார்கள். சில நண்பர்கள் வெங்கட்ராமனோடு விளையாடுவோம் என்று ஆர்வத்துடன் வருவார்கள். வந்தவர்களிடம் ஏதும் பேசாமல் ஊமை போல அவர் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுப் பரிதாபம் சூழ்ந்தவராகப் போய்விடுவார்கள். எனவே, வெங்கட்ராமன் மணிக் கணக்கில் அப்படியே கற்சிலை போல உட்கார்ந்தபடியே இருப்பார். ஆனால், என்னமோ யோசித்துக் கொண்டிருப்பது போலவே தென்படுவார் காட்சிக்கு! அவரையொத்த சிறுவர்களால் வெங்கட்ராமனை ஒதுக்கிவிட்டு விளையாடவும் முடியாது. வெங்கட்ராமன் துணிச்சலுடைய சிறுவன்; தைரியசாலி; தவறாமல் உடற் பயிற்சி செய்யும் குணம் உடையவன்; சில ஊர்களில் தாதாக்களும் உண்டல்லவா? அவர்களிடம் குஸ்தி, மல்யுத்தம், சிலம்பம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தனது உடலைக் கட்டு மஸ்தான ஒரு பயில்வானைப் போல் அவர் வைத்துக் கொள்வார். பந்தாட்டத்தில் மிக வல்லவனாக இருந்தார். கிராமத்துக்கு அருகிலேயே கௌண்டின்ய ஆறு ஓடுகிறது அல்லவா? அந்த ஆற்றை நீந்தி நீந்தி இக்கரை அக்கரையாகக் கடப்பார். மரக்கிளையின் உச்சியிலே இருந்து ஆற்று நீரின் ஆழப் பகுதி பார்த்துக் குதிப்பார். மணிக் கணக்கில் நீந்திக் கொண்டே மற்ற பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு நீராடி மகிழ்வார். நேரம் போவதே அவருக்குத் தெரியாது. மரமேறி ஏறி, மற்ற சிறுவர்களையும் ஏறச் சொல்லித் தாண்டிக் குதிக்க வைப்பார். அதே போலவே, திருச்சுழி கிராமத்து வம்பர்களிடம், தாதாக்களிடம் சண்டை, சச்சரவுக்கு வலிய சென்று அவர்களை வம்புக்கு இழுத்து மல்லடிப்பார். அவர்கள் அய்யர் பிள்ளையாயிற்றே என்று மரியாதை கொடுத்து விலகிச் செல்வதை இவர் கோழைத்தனமாய்க் கருதிக் கிண்டலடிப்பார்! சண்டை சச்சவுகள் வராத நாட்களே இல்லையென்று கூடக் கூறலாம்! அவ்வளவு வம்படிப்பார் ஊர்ப் போக்கிரிகளிடம். இரமணருடைய இவ்வளவு பயிற்சிகளும் எப்போதும் வீண் போவது கிடையாது. தனது உடலை அந்த வீர விளையாட்டுக்களின் வாயிலாக, ஒரு கட்டு மஸ்தான தேகமாக்கிக் கொண்டார். அதனால் இளம் வயது வெங்கட்ராமனைக் கண்டு பேசவும், பழகவும், நட்பு கொள்ளவும் ஊரார் பயப்படுவார்கள். இந்தக் காட்சிப் போக்குகள் சுந்தரமய்யருக்கே மாளா வேதனைகளைத் தந்தன. திருமூலர் போன்ற மகான்களும், நமது நாட்டின் சித்தர் பெருமக்களும் உடலை ஓர் ஆலயமாக, கருத்தியது மரபல்லவா? ஏனென்றால் இல்லறம் நடத்துவோருக்கு உடல் வலிமையிருந்தால் தானே நோயை எதிர்த்துப் போராடிடும் சத்தி இருக்கும்? இல்லறத்துக்கு மட்டுமாதிட உடல் தேவை? துறவறத்துக்கும் தானே! உடல்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம்; அவனுடைய உயிர்தான் இறைவன். இந்த உண்மையை வெங்கட்ராமன் உணர்ந்தானோ? அல்லது இயற்கையாகப் பிறப்புடன் வந்ததோ நமக்குத் தெரியாது. என்றாலும், வெங்கட்ராமன் தனது உடலைத் திடவலிவோடு பேணி வளர்த்து வந்தார். வெங்கட்ராமனிடம் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? தூக்கம். படுத்துத் தூங்கி விட்டால் அவரை யானையே ஏறி மிதித்தாலும் எழுப்ப முடியாத அளவுக்குக் கும்பகர்ண தூக்கம் தூங்கும் இயல்புடையவராக இருந்தார். கதவைத் தாளிட்டு விட்டு அவர் தூங்கி விட்டாரானால், கதவை உடைத்து தான் அவரை எழுப்ப வேண்டும். பரம்பரை சாபம் இரமணருடைய அதாவது வெங்கட்ராமன் என்ற சிறுவனுடைய தந்தையாரான சுந்தரமய்யர் பரம்பரையினர் முன்பொரு சமயம் ஒரு துறவிக்குப் பிச்சை இல்லை என்று கூறி அமைதியாக அனுப்பாமல் அவரை வாயில் வந்தவாறு ஏசிப்பேசி அவமானப் படுத்திவிட்டனராம். கோபத்தோடு காணப்பட்ட அந்தத் துறவி, சுந்தரமய்யர் பரம்பரையாளரைப் பார்த்து, “என்னைப் பார்த்தா பிச்சைக்காரன் என்று கேலி புரிந்தாய்? உனது பரம்பரையில் யாராவது ஒருவன் பிச்சைக்காரனாகி, தெருத் தெருவாக சோற்றுக்கும், துணிக்கும் அலைந்தே தீருவான் பார்!” என்று சாபமிட்டு விட்டு விர்ரென்று வீதி வழியே விரைந்தார். அந்தச் சாமியாரது கோப சாபத்துக்கு ஏற்றவாறு சுந்தரமய்யர் வம்சத்தில் யாராவது ஒருவர் அடுத்தடுத்து துறவு பூண்டு பிச்சைக்காரனாகவே அலைந்தார்கள். இந்தச் சாபம் சொல்லி வைத்தாற்போல சுந்தரமய்யர் பரம்பரையில் பலித்து வந்தது. சுந்தரமய்யரின் சிறிய தகப்பனார் ஒருவர் சந்நியாசி ஆனார்! போனவர் மீண்டும் வீடு திரும்பாமல் பிச்சைக்காரனாகவே சென்று விட்டார். அவருக்குப் பிறகு அய்யரின் சகோதரர் வெங்கடேசய்யர் என்பவர், வடநாடு நோக்கி தீர்த்த யாத்திரை சென்றார். அவரும் வீடே திரும்பவில்லை. வேறொருவர் மூலமாக அவரைப் பற்றி வந்த தகவலில், சிதம்பரம் கோவிலில் அவர் பிச்சைக்காரனாக பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதோடு, கோயிலுக்கு வரும் புனித சேவார்த்திகளுடைய கால்கள் புண்ணாகி விடக் கூடாதே என்ற இரக்க உணர்வோடு வழியிலே முளைத்துக் கிடந்த முட்களையும், கற்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதாக, வந்த அந்தத் தகவல் கூறிற்று. அந்த முட்களையும் கற்களையும் அகற்றிய பக்தாபிமானியின் பெயர் சிவானந்த யோகி. அவருக்குப் பின்னாளில் பல பத்தியாளர்கள் மாணவர்களாக மாறினார்கள். யோகியின் புகழ் பிறகு வளர்ந்தோங்கிப் பெருமை பெற்றது. இந்தச் சந்நியாசியின் சாப நிலைக் கேற்ப சுந்தரமய்யர் கண்முன்னாலேயே அவருடைய உறவினர்கள் இருவர் பிச்சைக்காரனாக மாறினார்கள். இப்போது சுந்தரமய்யர் பிள்ளைகளிலே யார் துறவி ஆவார்களோ என்ற பேச்சு ஊர் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் அவ்வளவு மன வருத்தப் பரிதாபத்துடன் அய்யர் குடும்பத்தைக் கவனிக்கலானார்கள். சுந்தரமய்யர் துறவு கொள்ளமாட்டார். அந்த அவசியமும் அவருக்கு இல்லை, ஆனால், அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று விளையாட்டாகப் பேசிக் கொள்வார்கள் ஊராருள் சிலர். அந்த மூன்று பேர்களிடம் அந்த அறிகுறிகளே இல்லையென்று அடித்துப் பேசினார்கள் மற்றும் சிலர். சுந்தரமய்யருடைய மூத்த மகன் நாகசாமி கல்வியில் கெட்டிக்காரனாக இருந்தான். இரண்டாம் மகன் வெங்கட்ராமனும் எல்லாவகையிலும் ஒழுங்கானவனாக இருந்தான். அதுவும், வம்படி, வழக்கும் குறும்புத் தனமும் கொண்டவனாக இருந்தானே ஒழிய, சந்நியாசியாக ஆகுமளவுக்கு அவனுக்கு அறிவுமில்லை; குடும்ப நிலையுமில்லை. சிறிய பையனும், வெங்கட்ராமனும் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வந்தார்கள். இந்தக் குடும்பச் சூழ்நிலையில் வழக்கறிஞராகப் புகழ் பெற்றிருந்த சுந்தரமய்யர் 1895-ஆம் ஆண்டில் எதிர்பாராமல் திடீரெனக் காலமானார். அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் செலவுகளையும், காரியங்களையும், ஊரார் பக்க பலத்துடன் அந்தக் குடும்பம் செய்து முடித்தது. வெங்கட்ராமனும், அவன் தமையனாரும், மதுரை மாநகரிலே உள்ள சுந்தரமய்யரது தம்பி சுப்பய்யர் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கி தங்களது கல்வியைத் தொடர்ந்தார்கள். மதுரையில் உள்ள ஸ்காட் நடுநிலைப் பள்ளி என்ற வெள்ளையர் நடத்தும் பள்ளியில் வெங்கட்ராமன் சேர்ந்து ஒழுங்காகப் படித்து வந்தார். மூத்தவன் நாகசாமி மேல் படிப்புக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதற்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் பள்ளியில் அண்ணனும், தம்பியும் சேர்ந்து கல்வி கற்றார்கள். இதற்கிடையே வெங்கட்ராமன் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்தான். இந்நிலையில் சுந்தரமய்யர் குடும்பத்திலுள்ள எவருக்கும் சந்நியாசி ஆகும் சாபம் நிறைவேறுமளவுக்குத் தெய்வ பக்தியோ, துறவு மனப்பான்மையோ, காணப்படும் அறிகுறிச் செயல்கள் ஏதும் ஏற்படவில்லை. வெங்கட்ராமன் எல்லாரையும் போலவே கோயிலுக்குப் போவான். இறை வழிபாடு செய்வான்; திரும்பி வீடு வருவான். பள்ளிப் பாடங்களைப் படிப்பான்; தானுண்டு மற்ற பள்ளி வகுப்பு நண்பர்களுண்டு என்று விளையாடுவான். அவனது பள்ளி கிறித்துவர்கள் நடத்தும் பள்ளி. அங்கும் கூட பைபிள் பாடம் நடக்கும். அதைக்கூட கவனமாகப் படிக்க மாட்டான் அவன். எனவே, சாமியார் அவர்களது பரம்பரைக்கு இட்ட சாபம் பலிக்காது; சுந்தரமய்யர் குடும்பத்துக்கு நல்ல காலம்தான் என்று கிராம மக்கள் பேசினார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அன்றுவரை அக்குடும்பத்தில் அதற்கான அறிகுறிகள் இல்லாதது தான். அமைதியைத் தேடி மாணவன் வெங்கட்ராமன் இங்கிலீஷ் இலக்கணத்தை, புத்தகத்திலே இருந்து பார்த்து பார்த்து எழுதிக் கொண்டிருந்தான். வகுப்பில் சில மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைக் கவனிப்பதில்லை! அதனால் அவர்கள் மறுநாள் அதை வீட்டிலே புத்தகம் பார்த்து எழுதுவார்கள். அவர்களுள் ஒருவனாக அன்று வெங்கட்ராமன் இருந்ததால், ஆசிரியருக்கு அஞ்சி இலக்கணத்தை எழுதிக் கொண்டிருந்தான்!. இந்த நிலை வெங்கட்ராமனுக்கு ஏற்பட என்ன காரணம்? வகுப்பில் ஆசிரியர் பாடம் போதிக்கும்போது, அவன் ஏதோ சிந்தனையில் தன்னையுமறியாமல் மூழ்கி விடுவதுண்டு! இந்தப் பழக்கம் அவனுக்கு வழக்கமாகி விட்டதால், ஆசிரியர் அவனை அடிக்கடி பார்த்துக் கண்டிப்பார். இந்த வழக்கத்தில் அன்று அதிக நேரமாக ஆழ்ந்து கிடப்பதைக் கண்ட ஆசிரியர், ‘வெங்கட்ராமா, எழுந்திரு! பாடம் சொல்லும் போது தூங்குகிறாயா? அல்லது மயக்கமா? என்ன காரணம்?’ என்று கோபமாகக் கேட்டார். அவனால் வாய் திறந்து ஏதும் பதில் கூற முடியவில்லை! மௌனமாக நின்றிருந்தான். உடனே ஆசிரியர் சினத்தால் அவனைப் பார்த்து, நாளை வரும்போது இலக்கணப் பாடத்தை மூன்று முறை எழுதிவா என்று ஆணையிட்டு விட்டார். அதை எழுதாமல் போக முடியுமா வகுப்புக்கு? அதனால் தான் அன்று அவன் புத்தகத்தைப் பார்த்து வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தான். பாவம்! ஒரு முறைக்கு இருமுறை அந்தப் பாடத்தை எழுதினான்! அவனுக்கே ஒரு சலிப்பு! எத்தனை முறை இவ்வாறு, எழுதுவது என்ற சோம்பல்! அதனால் உடனே எழுந்து சற்று அங்குமிங்கும் நடமாடி மீண்டும் அமர்ந்து மூன்றாம் முறையாகப் பாடத்தை எழுதத் துவங்கியபோது மறுபடியும் ஏதோ ஒரு சிந்தனையிலே ஆழ்ந்து போனான். கண்களை மூடிக் கொண்டு, வாய் எதையோ முணு முணுத்துக் கொண்டிருக்கும் தனது தம்பியின் காட்சியைக் கண்ட அவரது அண்ணன் நாகசாமி, அப்போது அந்த நிலையைக் கண்டு, என்ன செய்கிறான்? என்ன முணுமுணுப்பு இவனுக்கு? என்று சிறிது நேரம் தம்பி எதிரிலேயே நின்று கொண்டிருந்தார்! மூடிய கண்களையும், வாய் முணுமுணுப்பையும் நிறுத்தாத தனது தம்பியைக் கண்டு கோபம் கொண்டார் அவர். வெங்கட்ராமா! என்னடா செய்கிறாய்? என்று கூச்சலிட்டார். அண்ணனது கோபக் குரலைக் கேட்ட தம்பி, ஏதும் பதில் கூற முடியாமல் ஊமையாகவே உட்கார்ந்து கொண்டிருந்தான். தம்பி, படிப்பான்! தந்தைப்போல வழக்கறிஞராவான்; குடும்பம் முன்னேறும் என்றெல்லாம் திட்டமிட்ட நாகசாமிக்கு, தம்பி புத்தகத்தைப் பிரித்து வைத்து விட்டு என்னமோ முணுமுணுக்கிறானே என்று ஆத்திரம் அடைந்து கல்வியில் கவனமில்லாத உனக்கு என்ன வேலை வீட்டில்? உதவாக்கரை, உதவாக்கரை என்று திட்டிவிட்டு மீண்டும், உதவாக்கரைகளுக்கு வீட்டில் வேலையில்லை என்ற கொந்தளித்தார். வீட்டில் என்ன வேலை? என்ற அண்ணனுடைய சொல் வெங்கட்ராமன் நெஞ்சிலே நெருப்பைக் கொட்டி விட்டது. அப்போது தந்தையற்ற நிலையையும் தமையனுடைய எரிமலைச் சொற்களையும் குறித்து அவன் நீண்ட நேரமாகச் சிந்தித்தபடியே அமர்ந்திருந்தான். அப்போது பதினைந்து வயதுடைய சிறுவனானதால் அவன் மீண்டும் மீண்டும் குழம்பிக் கொண்டே இருந்தான். அப்போது சுந்தரமய்யருடைய நண்பர் ஒருவர் சுப்பய்யர் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற வெங்கட்ராமன், எங்கிருந்து போகிறீர்கள்? என்று விசாரித்தான். வந்தவர் ‘அருணாசலத்தில்’ இருந்து என்றார். ‘என்ன! ஒரு அருணாசலமா? எப்போதோ கேட்ட பேராக இருக்கிறதே அது!’ என்று அவன் தனக்குத்தானே ஒரு மகிழ்ச்சி கொண்டான். இந்தப் பெயர் ஒன்றும் அவனுக்குப் புதியது அல்ல. ஏனென்றால், சுந்தரமய்யர் அந்தப் பெயரைப் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறான்! அவ்வளவு ஏன்? சிவநேசர்கள் பெரும்பாலும் அருணாசலத்தைப் பற்றிப் பாடக் கேட்டிருக்கிறான்! எனவே, அந்த நினைவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் அவன் எண்ணியெண்ணி யோசித்து, வீட்டுக்கு வந்த அந்தப் பதியவரைப் பார்த்து, ‘ஐயா, அருணாசலம் என்கிறீர்களே, எங்கே இருக்கிறது அந்த அருணாசலம்?’ என்று கேட்டான் வெங்கட்ராமன்! வந்தவர் அந்தப் பதினைந்து வயது பையனைப் பார்த்து, ‘அது போகட்டும். சுப்பய்யர் இருக்கிறாரா?’ என்று கேட்டார்! உடனே அவன், ‘அவர் வெளியே சென்றுள்ளார். மாலைதான் வருவார்’ என்று அவசரமாகப் பதிலைச் சொல்லிவிட்டு, ‘ஐயா, எங்கே உள்ளது அருணாசலம்?’ என்று மீண்டும் கேட்டான். ‘என்ன தம்பி, இது கூடவா உனக்குத் தெரியாது. திருவண்ணாமலை என்ற ஊரைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா? அங்கேதான் அருணாசலம் இருக்கிறது’ என்றார் வந்தவர்!  இதைக் கேள்விப் பட்ட வெங்கட்ராமனுக்கு, ஏதோ ஒரு புத்துணர்ச்சி புலப்பட்டது. திருவண்ணாமலை போக வேண்டும்! அருணாசலத்தைப் பார்க்க வேண்டும் என்பதையே அன்று முதல் நினைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் வெங்கட்ராமன் தினந்தோறும் மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வான்; வழிபாடு செய்வான்; அங்கே உள்ள சிவ மகிமை ஓவியங்களை உற்று நோக்கிப் படிப்பான்; சிந்தனை செய்து கொண்டே வீடு வருவான். ஒரு நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சேக்கிழார் பெருமானுடைய ‘திருத்தொண்டர்கள் மாக்கதை’ வரலாறு நடந்து கொண்டிருந்தது. அதை அமர்ந்து கேட்டான். அவர்களது பக்தி உணர்வுகள் வெங்கட்ராமனின் நெஞ்சிலே பதிந்து விட்டது! அவனது வாய் பெரியபுராண அடியார்களைப் பற்றியே பேசியது! எப்போது பார்த்தாலும் சிவ வரலாறே அவனைச் சிந்தனையில் ஆழ்த்தியது. இந்தச் சைவ சிந்தனை ஞானக் கிளர்ச்சி சில நாட்களுக்குப் பின் மறைந்துவிட்டது. அவனுக்குத் திருவண்ணாமலை நினைப்பும், அருணாசலம் சிந்தனையும்தான் நாளுக்கு நாள் மேலிட்டு வளர்ந்து விரிந்து மனம் முழுவதும் பரவியது. “சாதகன் ஆர்வம் அதிகமானவனாக இருந்து, சத்குருவின் உபதேசம் கிடைத்து, சாதனை இடையூறு இல்லாமல் நடைபெற்று, வேளையும் அதற்கு வந்து விட்டால் சித்தி கிட்டும்” என்று பின்னாளில் பகவான் ரமண மகரிஷியாக மாறிய பின்பு அவர் யாக மாறிய பின்பு அவர் கூறிய அருள் வாக்குக்கு ஏற்றவாறு, வெங்கட்ராமன் என்ற பதினைந்து வயது பையனுக்கு இன்னும் வேளையே வரவில்லை.  1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பவாக்கில், திட உடலோடு இருந்த வெங்கட்ராமனுக்குள் திடீரென ஒரு பலவீனம் புகுந்தது; நெஞ்சுள் அச்சம் குடியேறியது. என்ன காரணம் அச்சத்துக்கு என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், திடீர் திடீர் என்று அவனுக்குள் ஒரு திகில் உண்டாகும். உடல் சோர்ந்து விடுவான் வியர்த்துக் கொட்டும் மயங்கி விழுந்து விடுவான் வெங்கட்ராமன்! அதுஎன்ன? அது என்ன என்ற விவரத்தை மகான் ரமண மகரிஷியே பிற்காலத்தில் கூறியுள்ளார். “நான் சாகப் போவதாய் எனக்குள் ஒரு பயம் உண்டாயிற்று. புலன்கள் ஓய்ந்து கொண்டிருக்கின்றன. திகிலை நான் நன்றாக உணருகிறேன். ஆனால், உடலில் எவ்வித மாறுதலும் புலப்படவில்லை. இவ்வாறு நான் ஏன் பயம் கொள்கிறேன் என்று சிந்தித்தேன். சிந்திக்கச் சிந்திக்க அந்த அச்சத்தின் காரணம் எனது அறிவுப் பிடியுள் அகப்படாமலேயே நழுவிக் கொண்டே இருந்தது. ஆனாலும், நான் ஏன் பயப்படுகிறேன்? அவ்வாறு அஞ்சுவது முறையாகுமா? என்ற கேள்விக்கும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. மற்றவர்களையாவது கேட்கலாமா? என்ற ஆசையும் எனக்குள் உண்டாகவில்லை. இந்தப் பயத்தை நானே செய்வதென மனத்தில் முடிவு செய்து கொண்டேன். நான் அந்தச் சமாதானத்தைத் தேட முற்பட்டேன்.” "அப்போது ஹிருதயத்தில் எண்ணங்களின் நடமாட்டம் மிகவும் கடுமையாகிறது. மரண பயமும், அதன் நுகர்ச்சியும் ஒரே நேரத்தில் நடந்தன. என் உடல் மரத்துப்போகும். மூச்சும் தடையுறும் உதடுகள் தாமாகவே இறுகும். வாயிலிருந்து சிறு சத்தங்கூட அப்போது வெளிவராது. என் உடம்பு பிணம்போல் அங்கே கிடந்தது. “இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், என்னுடைய மனோ விருத்திகள் முன்னைப் போன்றே மாறாமல் இருந்தன. சாகும் விதம் இதுதான் என்று புரிந்து கொண்டேன். உடல் ஒரு கட்டை போல் கிடப்பதை அறிந்தேன். இதை மக்கள் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். சற்று நேரத்தில் இது எரிந்து நீறாகிவிடும் இந்நிலையிலும், ‘நான்’ ‘எனது’ என்ற உணர்வு முன்போலவே இருந்தது. சரீரம் மரம் போல் தரையில் கிடக்க, நான் இருக்கிறேன் என்ற உணர்வு அழியாமல் இருப்பது ஆச்சரியம் அல்லவா? சாவும் ஒரு கனவு போலத்தான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.” மரண அனுபவத்தை உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிறுவன் வெங்கட்ராமன் பெற்றான். ஒரு மனிதன் செத்த பிறகும் கூட ஏதோ சக்தி உள்ளது. அந்தச் சக்தியே ஆத்மா என்பதை வெங்கட்ராமன் உணர்ந்தான். இது அனுபவத்தால் அறிந்த உண்மை, அவன் அடிக்கடி இந்த உண்மையைச் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனையால் அவனது எண்ணங்கள் உறுதி பெற்றன. எண்ணியவற்றை எண்ணி எண்ணி அது திண்மை பெறுமாயின் அதைப் பெறக் கூடும் அல்லவா? அதற்காகவே வெங்கட்ராமன் மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். சிந்தனை செய்யும் போது மட்டுமன்று, வெங்கட்ராமன் எப்போதும், எங்கும் தனிமையிலேயே இருக்க ஆசைப்பட்டான். அவ்வாறே அவனும் ‘தனித்திரு’ என்ற வள்ளலார் சித்தாந்தத்தின் படியே வாழ்ந்து வந்தான். காணவந்த நண்பர்களிடமும் அவன் எதையும் பேசமாட்டான். அத்தகையவனை நண்பன் எவனாக இருந்தாலும் நாடுவானா? எனவே, நண்பர்களது பிரிவும் அவனுக்கு உருவானது. அடுத்தபடியாக, அவன் எவ்வளவு பிரியமாக, நண்பர்களோடு விளையாடுவானோ, அந்த ஆட்டங்களை எல்லாம் அறவே அவன் மறந்து விட்டான். நாளுக்கு நாள் சிந்தனை பலமாயிற்று? குறும்பும் குத்தலும் கூத்தும், வம்பும், வாதுமாக தெம்பாகக் குதித்தவன், இப்போது அந்த எண்ணமே எழாதவன் போலாகிவிட்டான். அவ்வளவு தூரம் அவனது மனம் மாறி விட்டது. அதாவது, அவனிடம் முன்பிருந்த அகந்தை, ஆணவம், அத்தனையும் அழிந்தது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக எல்லாரிடமும் சண்டை சச்சரவுகளை உருவாக்கும் மனோபாவம் கொண்டவன். இப்போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்திற்கு எடுத்துக் காட்டாகி விட்டான். அவ்வளவு தூரம் அவன் பசுப்போல், சாதுவாகக் காட்சி தந்தான்; இப்போது அடுத்தவர்களிடம் பேசுவதே தேவையற்ற செயல் என்று நடந்து கொள்கிறான். இதற்கு முன்பெல்லாம், அவன் கோயிலுக்குப் போகவே வெறுப்படைவான்! அத்தகையவன் இன்று தினந்தோறும் திருவண்ணாமலை பஜனை பாடுகிறான்! அருணாசலம் நாமாவளி இசைக்கின்றான்! மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலே கதியெனக் கிடக்கின்றான். அங்குள்ள சிலைகளைத் தெய்வீகக் கலை வடிவங்கள் என்று புகழஞ்சலி செய்து போற்றுகின்றான். வெங்கட்ராமனுடைய இயல்பான குணங்களும், சுபாவங்களும், மறைந்து விட்டன. என்று சேக்கிழார் பெருமானுடைய பெரிய புராண விரிவுரையை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் கோயிலில் கேட்டானோ, அன்று முதல் வெங்கட்ராமன் சிவபெருமான் சன்னதியிலே அமர்ந்து கொண்டு, தேவார திருவாசகங்களை ஓதும் போது, அவன் கண்களிலே நீர் வழி நீர்ந்து சிதறி சிந்தும் பக்தி உணர்ச்சி கண்டு பக்தர்கள் பிரமிப்படைவார்கள். வெங்கட்ராமன் என்ற சிறுவனுடைய அப்போதைய மனோபாவ நிலையை நாம் எழுதுவதைவிட, அதே சிறுவன்  பகவான் ரமண மகரிஷியான பின்பு எழுதுகிறார் அதை படியுங்கள். “நான் பௌத்தர்களைப் போல துக்கவாதி அல்ல. ஏனென்றால், அதுவரையில் நான் உலக துக்கங்களை நுகர்ந்ததே இல்லை. அப்படியானால் உலகம் துக்கமயமானது என்ற அறிவு எனக்கு எப்படி உண்டாயிற்று?” “நான் மோட்சம் அடையவும் விரும்பவில்லை; ஏனென்றால், நான் தளைகளின் துன்பங்களை அறியாதவன். என் உள்ளத்தில் ஒருவிதமான விசித்திரமான வேதனை, கிளர்ச்சி முதலியவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் மூழ்கியதும் எல்லா விதத் தாபங்களும் அடங்கிவிடும்.” “தியானம் நீங்கி எழுந்ததும், அளவில்லாத தாபம் உண்டாகிவிடும். இந்தத் தாபத்தை என்னால் துக்கம் என்று கூற முடியவில்லை; சுகம் என்றும் சொல்ல முடியவில்லை. அதை எழுத்தாலும், எண்ணத்தாலும் வருணிக்க முடியாது.” “மீனாட்சி - சுந்தரேஸ்வரரையும், நாயன்மார்களையும் நான் ஆலயத்தில் கண்டதும் என் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.” மேற்கண்டவாறு வெங்கட்ராமனுடைய விழிப்பு நிலை இருந்தது. எப்போதும் சிறிது நேரம் தனிமை கிடைத்தால் கூட போதும். உடனே யோகாசனப் பயிற்சியாளரைப் போல ஆசனமிட்டு உட்கார்ந்து, எல்லாவற்றையும் மறந்து தியானத்தில் ஆழ்ந்து விடுவான். எந்த வருத்தமோ, துன்பமோ, கவலையோ அப்போது அவனைத் தீண்டாது. “அதே நேரத்தில் வீட்டிலும், தமையன் நாகசாமி, உதாவக்கரைகளுக்கு வீட்டிலே வேலை இல்லை, என்று கூறிவிட்டார். அவர் அவ்வாறு சொல்லி விட்டாரே என்பதற்காக நான் அவர் மீது கோபம் கொள்ள முடியுமா என்ன? அவர் கூறியது முழுக்க முழுக்க நியாயந்தானே!” “கல்வியில் கவனம் செலுத்தாத உதவாக்கரைகளுக்கு எவராவது வீட்டில் இடம் கொடுப்பார்களா? சோற்றுக்கும் பாரமாய், வாழ்க்கைக்கும் பாரமாய் இருப்பதா ஒரு பிள்ளைக்கு அழகு? அவனால் வீட்டுக்கும் பலனில்லை; நாட்டுக்கும் பிரயோசனமில்லை. அப்படிப்பட்டவன் வீட்டில் இருக்கலாமா? இதைத்தானே அண்ணன் நாகசாமி கேட்டார்? அவர்மீது என்ன தவறு?” என்று மனம் சலித்தவனாய், விரக்தியோடு, தமையன் திட்டியதிலே உள்ள நியாயத்தையும் உணர்ந்து, ஆண்டவனே என்னுடைய எதிர்காலம் இப்படியா அலைமோத வேண்டும்? உன்னைத் தவிர எனக்கு வழிகாட்டும் கருணையாளர் யார்? உன்னை விட்டால் எனக்கு வேறுகதி யார்? கடவுளே, இனிமேலும் மானமுள்ள ஓர் உதவாக்கரை வீட்டில் இருப்பானா? என்றவாறே வெங்கட்ராமன் தனது கண்களை மீண்டும் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அப்போது அருணாசலேஸ்வரர் அவனுக்கு ஏதோ அருள் பாவிப்பது போன்ற ஒரு நிழலாட்டம் காட்சி தந்தது. தியானம் கலைந்து அவன் கண் விழித்த போது, மீண்டும் அன்ணன் நாகசாமியே எதிரிலே நின்று கொண்டிருந்தார். ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகவில்லையா?’ என்ற அதட்டும் குரலிலே அவர் தம்பியைக் கேட்டார். ‘போக வேண்டும் அண்ணா! பன்னிரண்டு மணிக்கு இன்று வகுப்பு’ என்றான் வெங்கட்ராமன்! உடனே, நாகசாமி அன்பான குரலில் ‘வெங்கட்ராமா! அப்பாவும் இல்லை, நமக்கு யார் கதி! உனக்கு நானும் எனக்கும் நீயும்தானே! கல்வியை நீ கவனமாகப் படித்தால்தானே, தாம் அப்பாவின் பெயரைக் காப்பாற்றிக் கௌரவமாக வாழமுடியும்? உனக்கு இது தெரிய வேண்டாமா? சரியாக நீ படிக்கவில்லையே என்ற கோபத்தால் அல்லவா உன்னைத் திட்டிவிட்டேன்!’ ‘சரி சரி போகட்டும் எதையும் மனத்தில் வைத்து வருத்தப்படாதே! கீழே பெட்டி மேலே ஐந்து ரூபாய் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு, எனது கல்லூரிக்குப் போ, எனக்கு என்ன சம்பளமோ அதைக் கட்டி விட்டு, பிறகு உனது பள்ளிக்கூடத்துக்குப் போ, தம்பி!’ என்று நாகசாமி தனது தம்பியை ஆறுதல் கூறி, தேற்றி கீழே அனுப்பி வைத்தார்! ‘சரி அண்ணா’ என்ற மகிழ்ச்சியோடு தம்பி வெங்கட்ராமன் அண்ணனிடமிருந்து விடைபெற்றுக் கீழே வந்தான். பெட்டிமேலே அண்ணன் சொன்ன ஐந்து ரூபாய் அப்படியே இருந்தது. அதில் மூன்று ரூபாயை எடுத்துக் கொண்டான். இரண்டு ரூபாயை அண்ணன் வைத்திருந்த இடத்திலேயே வைத்தான். தனக்குத் தேவையான மூன்று ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டான் வெங்கட்ராமன். ஒரு கடிதத்தில், ‘அண்ணா உங்களுடைய எண்ணப்படி உதவாக்கரையான நான் வீட்டை விட்டுப் போகிறேன். இனிமேல் என்னைத் தேடி அலைய வேண்டாம். தங்கள் பணம் இரண்டு ரூபாயை இந்தக் கடிதத்தின் மேலே வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்ளவும்.’ என்று எழுதி வைத்து விட்டு, அமைதித்தேடி 1896-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 26- ஆம் நாள் வீட்டை விட்டு அவன் வெளியேறி நடந்து கொண்டே இருந்தான். பிச்சை எடுத்த அன்னதானப் பிரபு நாகசாமி வைத்திருந்த ஐந்து ரூபாயில், வெங்கட்ராமன் மூன்றே மூன்று ரூபாயை மட்டும்தான் எடுத்துக் கொண்டான். அவன் நினைத்திருந்தால் ஐந்து ரூபாயையும் கூட எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் எடுக்கவில்லை. “அண்ணா, நான் அருணாசலத்தைத் தேடி, எனது கருணாமூர்த்தி வாழும் இடமான திருக்கோவிலுக்குப் போகிறேன். என்னைத் தேடி அலையவேண்டாம்; பணம் காசுகளை வீணாகச் செலவு செய்ய வேண்டாம். என்னைப் பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை.” இத்துடன் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்தான் என்ன குறிப்பு அது? வேறொன்றுமில்லை. தனது தமையன் நாகசாமி கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காக வைத்திருந்தபணத்தில் தானே வெங்கட்ராமன் மூன்று ரூபாயை எடுத்தான். அதனால் தனது அண்ணனுக்கு சம்பளம் கட்டப்படவில்லை என்ற உண்மையை உள்ளது உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்ற தனது தம்பியின் நடத்தையை, நாணயத்தைக் கண்டு அண்ணன் மிகவும் பாராட்டினார். ஆனால், அவர்தான் கடிதம் எழுதினார் என்பதற்கான கையெழுத்தை அவர் போடவில்லை. அதற்குக் காரணம், அவர் எங்கோ புறப்படப் போகிறோம் என்ற பரபரப்பாகும்.  தமையன் பணத்தில் மூன்று ரூபாய் மட்டுமே தனது வழிச்செலவுக்காக எடுத்துக் கொண்டார். அருணாசலம் போக இந்தப் பணம் போதுமா? எப்படிப் போகவேண்டும்? எந்த வழியில் போக வேண்டும். எங்கே இருக்கிறது அந்தத் திருத்தலம்? என்ற விவரமெல்லாம் வெங்கட்ராமனுக்குத் தெரியாது! ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டிலே விடப்பட்டவனைப் போல அவர் நேராக, விர்ரென்று மதுரை இரயில்வே நிலையத்திற்குள் வந்தார். நேராகப் பயணச் சீட்டு வழங்கும் இடத்திற்குச் சென்று, தனது மூன்று ரூபாயில் மூன்றணாவை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, இரண்டு ரூபாய் பதின்மூன்றணாவுக்கு எவ்வளவு தூரம் ரயிலில் போக முடியுமோ, அவ்வளவு தொலைவிலே உள்ள திண்டிவனம் நகருக்குப் பயணச் சீட்டு பெற்றார். திண்டிவனம் எங்கே உள்ளது? அங்கிருந்து அருணாசலம் உள்ள திருவண்ணாமலை நகர் எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படிப் போக வேண்டும்? எங்கே போய் இறங்க வேண்டும் என்ற விவரமெலாம் அந்தப் பதினைந்து வயது சிறுவனுக்குத் தெரியாது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தெரிந்தவர்கள் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமே என்ற உணர்வுகூட அவருக்கு உண்டாகவில்லை. மதுரை ரயில்வே நடை மேடைக்குப் புகைவண்டி வந்து நின்றது. வந்த வேகத்தோடு வெங்கட்ராமனும் வேகமாக ஏறி உட்கார்ந்து கொண்டான். அப்போது அந்தச் சிறுவனுக்கு அந்த அளவில்தான் விவரமும், உணர்ச்சியும் இருந்தது. இரயில் பெட்டியிலே ஏறி உட்கார்ந்தாரோ இல்லையோ வெங்கட்ராமன், உடனே தியானத்தில் மூழ்கிவிட்டான். இரயில் புறப்பட்டது; வண்டி அசைவதையும், ஆடுவதையும், குலுங்குவதையும் கண்டு இது முதல் பயணமாக இருந்ததால் ஏதோ ஓர் அச்சம் ஏற்பட்டது அவனுக்கு.  திருச்சி சந்திப்பில் வந்து நின்றது வெங்கட்ராமன் ஏறி வந்த ரயில். அப்போது முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒரு மதகுரு அங்கு வந்து அமர்ந்தார். அவருடன் வந்த சில இஸ்லாமியர்களுடனும், இந்து மத நண்பர்களுடனும், மகான்களது வரலாற்றைப் பற்றி அந்த மதகுரு எனப்படும் மௌல்வி ஆழமாகப் பேசிவந்தார். முஸ்லிம் மௌல்வி பேசுவதை அந்தப் பெட்டியிலே உள்ள சிலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதகுருவும் மிக சுவராஸ்யமாய் பேசிக் கொண்டே வந்தார். எல்லாரும் அவர் உரையாடலை ஆமோதிப்பதைப் போலத் தலையாட்டியபடியே இருந்தார்கள். ஆனால், அதே பெட்டியில், எதிர் வரிசைப் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் மட்டும் மௌல்விப் பேச்சைக் கேட்டும் கேளாததுமான நிலையிலிருப்பதை அவர் கண்டார். "தம்பி! எங்கேயப்பா போகிறாய்? என்றார் மௌல்வி! நானா! திருவண்ணாமலை நகருக்குப் போகிறேன் என்றான் சிறுவன். திருவண்னாமலையா! நானும் அந்த ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ரயில் நிலையத்தில் தானே இறங்கப் போகிறேன். என்றார் முஸ்லிம் மதகுரு! “என்ன ஊரிலய்யா நீங்கள் இறங்கப் போகிறீர்கள்?” என்றதற்கு, திருக்கோயிலூரில் என்றார் முஸ்லீம்! ‘திருக்கோயிலூரா!’ அப்படியானால் இந்த ரயில் திருவண்ணாமலை நகருக்குப் போகிறதாய்யா? என்று மௌல்வியைக் கேட்டார் அவர்! திருவண்ணாமலைக்கு ரயில் போகாது, எந்த ஊருக்கு நீ பெற்றாய் பயணச்சீட்டு?’ என்றார் மத வெங்கட்ராமன் உடனே ’திண்டிவனம் வரை டிக்கெட் வாங்கி உள்ளதாகச் சொன்னான் அந்த மதகுருவிடம்! ‘என்ன திண்டிவனமா? என்னய்யா தம்பி, பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்? திருவண்ணாமலை போகிறவன் திண்டிவனம் டிக்கெட் வாங்கினேன்’ என்கிறாயே!’ ‘சரி, சரி பரவாயில்லை. ஒரு காரியத்தை நீ கவனமாகச் செய்ய வேண்டும். விழுப்புரம் சந்திப்பிலே நீ இறங்கி வேறு வண்டிக்கு மாறி ஏறித் திருக்கோயிலூருக்கும், திருவண்ணாமலைக்கும் போகலாம்! என்ன தம்பி நான் சொல்வதைக் கவனமாகத்தானே கேட்டாய்?’ என்றார் மீண்டும் அதே முஸ்லீம் மத குரு. ‘ஆமய்யா’ என்ற அந்தச் சிறுவன், தனது டிக்கட்டை திண்டிவனத்துக்குப் பெற்று விட்டதை எண்ணி வருந்தினான். ஆனால், மௌல்வி கூறிய விவரத்தால் திருவண்ணாமலை போகும் வழியைப் புரிந்து கொண்டான்! இது கண் பழுதுற்ற ஒரு பயணிக்கு குத்துக்கோல் ஒன்று கிடைத்த மாதிரியாயிற்று அவனுக்கு! திருவண்ணாமலை என்ற பெயர் மௌல்வி வாயிலும், மற்றப் பயணிகள் வாயிலும் பெருமையாகப் பேசப்பட்டதை அவன் கேட்டு மனத் திருப்தியடைந்தான். இந்த வரம்பு மீறிய மகிழ்ச்சியைப் பெற்ற வெங்கட்ராமன் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து போனான்! வந்தது விழுப்புரம் ரயில் நிலையம்! மதுரையிலே அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து விழுப்புரம் வரும்வரை ஒரே பட்டினி! பாவம், பசி அவன் வயிற்றிலே நெருப்பை மூட்டியது! ஒரே எரிச்சல்! அதனால் ரயில் நிலையத்தை விட்டு வெளிப் புறம் வந்த அவன் அங்குமிங்கும் சுற்றினான்! வெங்கட்ராமன் அச்சமும், கூச்சமும் உடையவன்! அவன் வீட்டார் பிறருக்குக் கொடுத்து வழங்கியவர்களே தவிர எவரிடமும் பசி என்று புசிக்க அன்னம் கேட்டவர்கள் அல்லர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்தானே இவனும்! யாரிடமும் எதையும் கேட்டு அவனுக்குப் பழக்கமுமில்லை அதனால், திருவண்ணாமலைக்குப் போக வழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான், அவன். களைத்தது உடல்; எரிகிறது வயிறு. சோர்ந்தன கால்கள்; நடக்க முடியாமல், உட்கார்ந்து விட்டான் வெங்கட்ராமன்! சுற்றும் முற்றும் பார்த்த போது, எதிரே ஒரு உணவு விடுதி தெரிந்தது! உள்ளே சென்றான்; உணவு வேண்டும். பசிக்கிறது என்று கேட்டான் அவன்! சிறு பையன் முகமெலாம் வியர்த்து விட்டதைக் கண்ட உணவு விடுதிக்காரர், தம்பி சோறு வேண்டுமானால் கொஞ்சம் நேரம் உட்காரு, இப்போதுதான் சோறு வேகின்றது. அதுவரை கொஞ்சம் நேரம் களைப்பாறு, அதற்குள் உணவு தயாராகி விடும் என்றார். உட்கார்ந்து விட்டான் வெங்கட்ராமன்; என்ன செய்வான் பாவம், பசியோ பசி! ஆனாலும் அவன் அப்போதும் பசியை மறந்து ஆழ்ந்து விட்டான் தியானத்தில்! ஆனால், ஓட்டல்காரர் பையனிருக்கிறானா? என்பதை அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். தியானத்தில் இருப்பவனைப் போலக் கால்களை மடக்கி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை மூடிக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஓட்டல்காரர், ஓஹோ பசி தியானமோ என்று பையனைப் பரிகாசம் செய்து கொண்டே அவனைத் தட்டி எழுப்பி உணவுண்ண அழைத்தார். ஓட்டல்காரர் போட்ட சாட்பாட்டை வெங்கட்ராமன் உண்டான். தனது லீட்டுச் சாப்பாடு போல இருந்ததாலும், சில வேளைகள் கிடந்த பட்டினியாலும், சிறுவன் ஓட்டல்காரரைக் கேட்டுச் சற்று அதிகமாகவே உண்டு பசியாறினான். பிறகு. தனது கையிலிருந்த சில்லறைப் பணத்தை ஓட்டல் காரரிடம் அவன் கொடுத்தபோது, ஓட்டல் காரர் பையனைப் பார்த்து ‘எவ்வளவு காசு வைத்திருக்கிறாய் தம்பி?’ என்று கேட்டார். ’ஐயா, இரண்டரை யணாதான் இருக்கிறது என்றான் பையன். உடனே ஓட்டல்காரர் பையன் மீதுள்ள அன்பால், ‘தம்பி, உன் காசு எனக்கு வேண்டாம். நீயே வைத்துக் கொள்’ என்று கனிவுடன் கூறியதைக் கண்ட சிறுவன், ஓட்டல் காரர் உள்ளத்தின் அழகை அவரது முகக் கண்ணாடியால் கண்டு ஒரு வித மன நெகிழ்வடைந்தான். பிறகு அவருக்கு வணக்கம் கூறிய வெங்கட்ராமன் விர்ரென்று ரயில்வே நிலையத்திற்குள் வந்து சேர்ந்தான். ஓட்டல்காரர் வேண்டாம் என்று கூறிய அந்த இரண்டரை அணாவுக்கு மாம்பழப்பட்டு எனும் ரயில் நிலையம் வரை பயண அட்டையைப் பெற்றான். அந்த ரயிலடி வந்ததும் இறங்கி மிக வேகமாக திருவண்ணாமலை ஊரை நோக்கி நடந்து கொண்டே இருந்தான். அந்த வேகத்தோடும், ஓட்டலில் உண்ட சோற்றின் தெம்போடும் சுமார் பத்துமைல் தூரம் வரை அங்கிருந்து நடந்து அரகண்ட நல்லூர் என்ற ஊரையடைந்தான் வெங்கட்ராமன். அப்போது ஆளே அசந்து போய் ஒரு கோயில் ஓரம் உட்கார்ந்து விட்டான். அவனையுமறியாத களைப்போடு! அந்தக் கிராமத்தில் உள்ள அந்தக் கோவில் ஒரு சிறு மலைக் குன்று மீது கட்டப்பட்டுள்ளதாகும். அக்கோயிலின் சுவாமி பெயர் ஒப்பிலிநாதர் எனப்படும். அந்தக் கோயிலுள்ள குன்றின்மீது ஏறிப் பார்த்தால் திருவண்ணாமலையிலுள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தெரியும். அந்தக் கோயிலின் ஒரு மூலையில், மண்டப ஓரமாக வெங்கட்ராமன் ஓய்ந்து உட்கார்ந்து விட்டான். சிறுவனல்லவா? பாவம்! அந்த மண்டப மூலையில் உட்கார்ந்தான் என்று கூறினோம் அல்லவா? அவன் அங்கே அமர்ந்த பின்பு தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அந்தத் தியானத்தில் அவனுக்கு அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் திவ்விய ஜோதி தரிசனம் தெரிந்தது போன்ற ஓர் உணர்வைப் பெற்றான். வெங்கட்ராமன் கனவிலே தெரிந்த திவ்விய ஜோதி எப்படி வந்தது என்பது எல்லாம் ஆண்டவன் செயலே; அவனையன்றி ஒரு பொருளும் அசையாது என்பது ஆன்றோர் சொல்லாயிற்றே என்று நம்பினான். ஆனால், எந்த ஒரு தெளிவான விடையும், விளக்கமும் விளங்காமல் அந்தக் கனவிலேயே மிதந்தபடியே மீண்டும் சமாதியில் மூழ்கினான்! மின்சாரக் கனவு ஓடியபடியே இருந்தது! கொஞ்ச நேரம் கழிந்தது; கோயில் குருக்கள் உள்ளே இருந்து வந்தார். ‘யாரப்பா நீ, என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? எழுந்திரு. எழுந்திரு கோயில் கதவை மூடவேண்டும்! வெளியே போ!’ என்று அவர் வேலை செய்த சோர்வால் களைத்து வெறுப்போடு பையனிடம் பேசினார்! ஐயர் போட்ட ஓசையால், அரண்டு எழுந்துவிட்ட சிறுவன் தியானம் கலைந்தான். குருக்களை நோக்கி ‘பிரசாதம் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டான். கெஞ்சினான்! பசி, பாவம்! ‘பிரசாதமா! ஒன்றுமில்லையே தம்பி! என்று குருக்கள் கையை விரித்து விட்டு, போ தம்பி நேரமாகிறது’ என்றார்! பாவம் பசியால் வருந்திக் கொண்டிருந்த வெங்கட்ராமன், குருக்கள் முகத்தைப் பார்த்து நான் இன்றிரவு இங்கே தங்க அனுமதிப்பீர்களா? என்று பணிவுடன் கேட்டான்.  ‘கோயில் கதவை மூட வேண்டும் வெளியே போ என்று கூறினால், கேட்பதையே திரும்பவும் கேட்கிறாயே, போ’ என்று கோபமாகத் தடித்த குரலிலே குருக்கள் சொன்னார். வருத்தத்துடன் வெளியே வந்த சிறுவனைப் பார்த்த அங்கு வேலை செய்யும் மற்றொருவன், தம்பி இங்கே இருந்து கீழூர் என்ற ஊர் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே போ பிரசாதம் கிடைக்கும் என்று கனிவுடன் சொல்லி வழியையும் காட்டி அனுப்பி வைத்தான். உடனே அந்தச் சிறுவன் பசி வேகத்தோடு வேகமாக விரைந்து நடந்து அந்த மனிதன் கூறிய கீழூர் கோயிலுக்கு வந்தான். அந்தக் கோயில் அர்ச்சகர் அங்கே நின்று கொண்டிருந்தார் ஆலயச் சிலையருகே, அவரைக் கண்டு நமஸ்காரம் என்றான். பசிக்கிறது ஏதாவது பிரசாதம் கொடுப்பீர்களா? என்று அவன் கேட்டான்! அந்த அர்ச்சகர் அவன் என்ன கேட்கிறான் என்பதைச் சரியாகக் கேட்டுக் கொள்ளாமலே, வழக்கம்போல எல்லாருக்கும் சொல்லுவதைப் போலவே ‘இல்லை, இல்லை’ என்று கையால் சைகை காட்டிவிட்டு உள்ளே போய்விட்டார். என்ன செய்வது? பசியோ வாட்டுகிறது! ஒரு கணம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தபோது, வேறு ஒரு அர்ச்சகர் பெரிய அர்ச்சகரைப் பார்த்து எனக்குரிய பங்குப் பிரசாதத்தை அந்தப் பையனுக்குக் கொடும் என்றார். சற்று கோபமாக! உடனே பெரிய அர்ச்சகர் ’இங்கே என்னிடம் இல்லை தம்பி, அதோ அந்தப் பிராமணர் வீட்டுக்குப் போ கிடைக்கும். என்றார். வெங்கட்ராமன் தள்ளாடித் தள்ளாடி அர்ச்சகர் சொன்ன வீட்டு வாசற்படியருகே போய் நின்றான். பசி மயக்கம்! அவனுக்கு. வாய் திறந்தும் கேட்க முடியாத களைப்பு. அப்படியே அங்கேயே, மயக்கத்தோடு கீழே விழுந்தான் சிறுவன். பாவம்! அன்ன சத்திரம் கட்டி வாழ்ந்தவர்; போனவர்க்கெலாம் சோறு போட்டுப் புண்ணியம் தேடிக் கொண்ட அவனது தந்தை சுந்தரம் அய்யர் மகனுக்கு இங்கே பசிக்குப் புசி என்று ஒரு பிடி பிரசாதம் கொடுக்க யாருக்கும் இரக்க உணர்வு இல்லாமல் போய் விட்டது பார்த்தீர்களா? அந்த அன்னதாதாவின் மகன் கீழே விழுந்து விட்டதைக் கண்ட அங்கிருந்த சிலர்; அவனைத் தூக்கி மயக்கத்தைத் தெளிவித்து, அங்கும் பிரசாதம் தீர்ந்து விட்டதால், பாத்திரத்திலே இருந்த கடைசிப் பிடி சுண்டலை அவனுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒரு பிடி சுண்டலை அவன் மென்று தின்ற விட்டு, வயிறு முட்ட, தண்ணீரைக் குடித்தான்! வேறு என்ன செய்வான் பாவம்! அன்று இரவே வெங்கட்ராமன் அங்கே இருந்த திண்ணை ஒன்றிலே படுத்துக் கழித்தான்! வயிற்றுக்குரிய ஆகாரம் இல்லாததால் தூக்கம் வரவில்லை அவனுக்கு! எழுந்தான் சிறுவன்! ஊரைப் பார்த்தான்! திருவண்ணாமலை இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கும் என்று அவ்வழியே போன ஒருவரைக் கேட்டான். இருபதுமைல் இருக்கும் என்ற அந்த வழிப்போக்கர் கூறியதைக் கேட்ட வெங்கட்ராமனுக்கு மீண்டும் கவலை அவன் மனதைப் புண்ணாக்கி விட்டது. எப்படி நடந்து போவது? உடல் முழுவதும் வலி எடுக்கிறதே. முட்டிக் கால்கள் நோகின்றனவே என்ற மன வருத்தத்துடன் யோசித்தான். ரயிலில் போனால் தான் போக முடியும். இனி ஓரடி கூட நடக்க முடியாதே நம்மால், என்றெல்லாம் எண்ணிய போது, அவன் காதிலே போட்டிருந்த கடுக்கன்களைப் பார்த்தான்! கழற்றினான் வெங்கட்ராமன் கடுக்கன்களை! அவற்றை எடுத்துக் கொண்டு அருகே இருந்த ஒரு பிராமணர் வீட்டு வாயிற் படியிலே நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டுக்காரர் வெளியே  வந்தார். அவரிடம், ‘ஐயா, பசிக்கிறது. சாப்பிட ஏதாவது ஆகாரம் கொடுப்பீர்களா?’ என்று அவன் கேட்டான். அதற்கு அவர், ’உள்ளே போய் கேள் தம்பி, இன்று கண்ணபரமாத்மா பிறந்தநாள், ஏதாவது ஓர் ஆகாரம் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பார்கள் தம்பி, என்று கூறிவிட்டுப் போனார். வெங்கட்ராமன் கடுக்கன்களைக் கைக்குள் மூடிக் கொண்டு வீட்டுக் குள்ளே சென்று நின்றான். அந்த வீட்டுக்கார அம்மாள் யார் இந்தப் பையன்? பார்த்தால் பிராமணச் சிறுவனைப் போல இருக்கின்றானே என்று அவனைத் தோற்றத்தால் புரிந்து கொண்டு, ‘என்ன தம்பி வேணும்’ என்றார். ‘அம்மா, பசி, ஏதாவது ஆகாரம் தருவீர்களா? என்று கேட்டான் வெங்கட்ராமன், அன்று கண்ணபெருமான் பிறந்த நாளல்லவா? அவளுக்கு ஒரே மகிழ்ச்சி! காரணம், கண்ண பரமாத்மாதான் இப்படி பிராமணச் சிறுவன் உருவத்திலே வந்து அன்னம் கேட்கிறார்’ என்று எண்ணிக் கொண்டு, சிறுவனை உட்காரச் சொல்லி, உணவில்லாததால் வயிறு நிரம்பச் சிற்றுண்டி கொடுத்தாள். வெங்கட்ராமன் அந்த அம்மையார் கொடுத்த அன்பான அமுதை வயிறார உண்டான். வெங்கட்ராமன் கிடைத்த சிற்றுண்டியைப் பசி வேகத்தால் உண்டு கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்குரியவரான முத்துசாமி என்பவர், சிறுவனைப் பார்த்து இரக்கப்பட்டு, ‘மெதுவாகச் சாப்பிடு. ஏன் அவசரம் அவசரமாகத் தின்கின்றாய்’ என்று அம்மையாரை விட அன்போடு ஆறுதல் கூறினார். அப்போது வெங்கட்ராமன் உண்டு முடித்து எழுந்து கை அலம்பிக் கொண்டு அவரருகே வந்து நின்று, ’நான் திருவண்ணாமலை போக வேண்டும். என்னிடம் பணமில்லை ரயிலுக்கு டிக்கட் வாங்கிட. அதனால், இந்த எனது கடுக்கன்களை விற்றுப் பணம் கொடுத்தால் உங்களுக்குப் புண்ணியம்! என்று பணிவாகக் கேட்டுக் கொண்டதைக் கண்டு இரக்கப்பட்டார் அவர். உடனே. சிறுவனிடமிருந்து கடுக்கன்களை வாங்கியவர் விற்றுப் பணம் வாங்கி வரும் வரை ‘இங்கேயே இரு தம்பி. அதற்குள் உணவும் தயாராகிவிடும். சாப்பிட்டு விட்டுப் போகலாம்’ என்று சொல்லி விட்டுக் கடுக்கன்களோடு போனார் அவர். முத்துசாமி திரும்பி வருவதற்குள், அந்த அம்மையார் உணவைத் தயார் செய்து விட்டார். வெங்கட்ராமனைத் தன்னருகே உட்கார வைத்துக் கொண்டு அவன் வயிறார உணவை உண்ண வைத்து, வடை பாயாசத்துடன் அவர் உபசரித்தார். வெங்கட்ராமன் அன்றுதான் தனது வீட்டில் உணவு உண்டதைப் போல முழு மன நிறைவுடன் உண்டு அன்னக் களைப்பை அகற்றினார்!. கடுக்கன்களை விற்றுக் கொண்டு வந்த பணத்தை முத்துச்சாமி வெங்கட்ராமனிடம் கொடுத்து, ‘ஜாக்கிரதை தம்பி பணம்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவர் மனைவி கட்டுச் சோறு பொட்டலத்தோடு சிறுவனிடம் வந்து, தம்பி இந்தப் பொட்டலத்தில் உணவு உள்ளது. மறுபடியும் பசியெடுக்கும் போது சாப்பிடப்பா’ என்று அந்த உணவுப் பொட்டலத்தை வெங்கட்ராமனிடம் அன்போடு கொடுத்தார். இரண்டையும் கடவுள் கொடுத்தார் என்று வெங்கட்ராமன் பக்தியோடு அவற்றைப் பெற்றுக் கொண்டு, பசிக்குச் சோறு போட்ட அந்த இரண்டு உயிர்களது கொடைக் குணத்துக்கு நன்றி கூறி, விடை பெற்றுக் கொண்டு ரயில் நிலையம் தேடி வந்து சேர்ந்தான்! அப்போது ரயிலும் வந்ததால், திருவண்ணாமலைக்கு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலேறி அமர்ந்தான் வெங்கட்ராமன்! நரகத்திலே சொர்க்கம் தேடினார்! இரயில் வண்டியிலே அமர்ந்திருந்த சிறுவன் வெங்கட்ராமன், திருவண்ணாமலை எப்போது வரும் என்று எதிர்பார்த்தவாறே ஆடி அசைந்து பயணம் செய்து கொண்டே இருந்தான். ஒவ்வொரு ரயில் நிலையப் பெயர்ப்பலகையையும் கவனமாகப் படித்துக்கொண்டே போனான். 1896-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளன்று அதிகாலை நேரத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வண்டி வந்து நின்றது. வெங்கட்ராமன் வண்டியை விட்டுக் குதித்தான். அப்போது அண்ணாமலைக் காற்று சில்லென்று அவன் உடல் மீது படர்ந்தது. அதற்குள் அன்றைய இரவு இருள்-சிறிது சிறிதாகச் சிறுத்து ஞான விடியல் ஒளி பெருத்துப் பரவிக் கொண்டே ஒளிர்ந்தது. அருணாசலேசுவரர் கோயில் திருவண்ணாமலையில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை வெங்கட்ராமன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். இரயில் நிலையத்தில் நின்றபடியே, சிலிர்த்த உள்ளத்தோடு தன்னை மறந்து வெங்கட்ராமன், இரு கை கூப்பி கோபுர தரிசனம் கண்டு வணங்கினான். கோபுரம் உள்ள இடத்துக்கு அவன் விரைந்தோடி வந்தான் அப்போது அங்கே மக்கள் நடமாட்டமே இல்லை! ஆலயத்தின் கதவுகள் மூடிக்கிடந்தன. திருக்கோயில் சுற்றுச் சுவர்களைச் சிலர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால், வழக்கமாகத் திறக்கப்படும் நேரத்திற்கு முன்னாலேயே கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. சில  பிச்சைக்காரர்கள் கோபுரம் முன்பு அருணாசலமே கதியென்று விழுந்து கிடந்தார்கள். அவர்களுக்கு அதுதான் வீடும் வாசலும்! திறந்து கிடந்த கோபுரத்துக்குள்ளே முதல் ஆளாக வெங்கட்ராமன் நுழைந்தான். நேராகக் கருப்பக் கிரகத்துக்குப் போனான். யாராவது கேட்பார்களே என்ற அச்சமே எழவில்லை அந்தச் சிறுவனுக்கு அருணாசலேஸ்வரர் திருவடிகளிலே வீழ்ந்து, வணங்கி, கண்ணீர் சிந்தினான் அவ்வளவும் ஆனந்தக் கண்ணீர்! ’ஈஸ்வரா, பெருமானே, உம்மைவிட எனக்குக் கதி வேறுயார்? வீட்டைத் துறந்தேன் உம்மை நம்பி நாடி வந்துளேன்; பெருமான் நீங்கள்தான் இனி என்னைக் காக்கும் அம்மையும்-அப்பனும், என்று வாய்விட்டுக் கூறி வணங்கி விட்டுக் கோபுர வாயிலுக்கு மீண்டும் திரும்பி வந்தான் வெங்கட்ராமன். அருணாசலேஸ்வரரை வணங்கிய பின் அந்தச் சிறுவன் கண்ட முதல் பலன் என்ன தெரியுமா? திருவண்ணாமலைக்கு வரவேண்டும் என்று வெங்கட்ராமன் நினைப்பதற்கு ஆறேழு வாரங்களுக்கு முன்பே, அந்தச் சிறுவன் மதுரையிலே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நேரத்திலேயே, அவனது உடலிலே ஏதோ ஓர் அரிப்பும்-எரிச்சலும் ஏற்பட்டு எப்போது பார்த்தாலும் உடலைச் சொறிந்த வண்ணமே இருந்தான். அருணாலலேஸ்வரப் பெருமானை, வெங்கட்ராமன் திருவண்ணாமலைத் திருக்கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்பு, அந்த எரிச்சலும், அரிப்பும் எங்கு போய் மறைந்ததோ தெரியவில்லை. மாசுமறுவற்ற உடலையுடைய அழகிய தோற்றமே அவனுக்கு மீண்டும் ஏற்பட்டு விட்டதாக, பகவான் ரமண மகரிஷி தனது வரலாற்றின் ஓரிடத்தில் எழுதியுள்ளார். அதுதான் அவர் கண்ட முதல் அருணாசல மகிமையாகும். எரிச்சலோடும் அரிப்போடுமா போயிற்று? அவர் எண்ணங்களில் அன்று முதல் மண், பொன், பெண் என்ற சிற்றின்ப எண்ணங்களும் அழிந்து விட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மதுரையில் இருந்தபோது அவர் கேள்விப்பட்ட அருணாசலம் என்பது, ஒரு மலையின் பெயர் என்று தெரியாது. திருவண்ணாமலை வந்த பிறகுதான் அருணாசலம் என்பது ஒரு ஞானமலை; சிவன்மலை; தவமலை; யோகிகள் மலை; அஞ்ஞானத்தை அழிக்கும் மலை; மெய்ஞானத்தைப் பேணும் மலை; ஆன்ம பலத்தை வளர்க்கும் மலை என்பதை அந்தச் சிறுவன் வெங்கட்ராமன் புரிந்து கொண்டான். வெறும் கல்லாலான, சுதையாலான, உலோகங்களாலான வடிவங்களையோ அல்லது மேற்கண்ட சக்திகளைக் கொண்ட மலையையோ-அந்தச் சிறுவன் தனக்கு அருள் பாலிக்கும் பெருமானாக எண்ணவில்லை. அருணாசலம் என்ற சொல்லை, பெயரை என்று அவன் கேள்விப் பட்டானோ, அன்றே அவனது மனத்தில் அந்தச் சொல் பெரியதோர் அருட் தத்துவமாகத் தோன்றிவிட்டது. அந்த திருவருட்சக்திதான், ஆன்ம சக்திதான் வெங்கட்ராமனைத் திருவண்ணாமலைக்கு காந்த சக்திபோல ஈர்த்து, இழுத்து வந்தது. மேற்கண்ட இந்த இறை சக்தி உண்மையைப் பிற்காலத்தில் அவர் பகவான் ரமண மகரிஷியாக உருவெடுத்தபோது தனது வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். கீழுரில் வெங்கட்ராமனுடைய கடுக்கண்களை விற்று முத்துசாமி கொடுத்த அந்தப் பணத்தில் ரயில் கட்டணம் போக மீதியிருந்த பணத்தை வெங்கட்ராமன் அங்கே இருந்த ஐயங்குளத்தில் வீசி எறிந்தார். தான் அணிந்திருந்த பார்ப்பனப் பிறப்பு அடையாளமான, உயர்சாதியை உணர்த்தும் சாதிச் சின்னமான பூணுலைப் பார்த்து, பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்ற கேள்வியைத் தனக்குத்தானே மனத்தில் எழுப்பி, அந்தப் பூணுலை அறுத்து அதே குளத்தில் தூக்கி எறிந்தார். முத்துசாமி கொடுத்திருந்த அவருடைய வீட்டு முகவரிச் சீட்டையும் கிழித்து வீசினார். அதே நேரத்தில் தான் போட்டிருந்த  சட்டையையும் கழற்றிக் குளத்திலே போட்டு விட்டார். மிகுதியாக அவர் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். அதைக் கோவணம் போலக் கிழித்துக் கட்டிக் கொண்டார். மற்றவற்றைக் குளத்து நீரிலே விட்டுவிட்டார். அஞ்ஞான மாயையாக அது மிதந்து, ஞானக் குளத்தின் அமித்திலே ஆழ்ந்து சரணடைந்தது. திருக்கோயில் அருகே முடிவெட்டுவோன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை வெங்கட்ராமன் கண்டார். அவனிடம் சென்று தனது தலையை மொட்டை அடிக்கச் சொல்லி அவர் மொட்டைத் தலையரானார். மொட்டை அடித்துக் கொண்டவவர் அக் குளத்திலே குளித்தாரா என்றால் அதுவுமில்லை. அதே பழநியாண்டிக் கோலத்தோடு கோயிலுக்குள் நுழைந்தார். அதுபெரிய கோயிலானதால் அங்கே ஓரிடத்தில் சென்று உட்கார்ந்து விட்டார். அந்த இடம் வெங்கட்ராமன் தியானம் செய்ய வசதியான இடமாகவும் இருந்தது. கோயிலுக்கு எதிரில் ஆயிரங்கால் மண்டபம், அதனருகே ஒரு பூங்கா, அருகிலே ஒரு குளம். அதனைச் சிவகங்கைத் தடாகம் என்று இன்று மக்கள் அழைக்கிறார்கள். திருக்கோவிலின் முதல் பிரகாரத்தின் வடதிசையில் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது அல்லவா. அதன் நடுவில் ஒரு மேடை உள்ளது. அதற்கும் தென்கிழக்கே ஒரு பாதாளக் கோயில் இருக்கிறது. அங்கு ஒரு சிவலிங்கம் உள்ளது. வெங்கட்ராமன் அக்கோயிலுக்குள் சென்ற காலத்தில் அதற்குப் பூசை வழிபாடு ஒன்றும் செய்யும் பழக்கம் இல்லை. இப்போது அந்த இடம் பாதாள லிங்கேஸ்வரர் திருக்கோயிலாகி, பூசைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த இடத்தைத்தான் இராஜகோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது விழா நடத்திக் கோலாகலமாகத் துவக்கி வைத்தார்.  இவ்வளவு சிறப்புக்களைப் பெற்று பிற்காலத்தில் இந்தக் கோயில் பேரும் புகழும் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு மூல காரணமும் - முதல் சிந்தனையும் தோற்றுவித்தவர் பகவான் ரமண மகிரிஷிதான். இத்தகைய பெருமையுடன் இன்றும் மக்கள் போற்றி வரும் இடம்தான், ரமணர்-வெங்கட்ராமனாக திருவண்ணாமலைக் கோயிலுக்குள் நுழைந்தபோது, பூசைகள், வழிபாடுகள் ஏதும் நடைபெறாத பாழ்பட்ட இடமாக இருந்தது. அந்தப் பாதாளக் கோயில் உள்ளே எப்போதும் ஒரே இருள் கவ்விக் கிடக்கும். வெளவால் புழுக்கைகள், துரிஞ்சல் எச்சங்கள், சிறுநீர்கள், சிலந்திக் கூடுகள் எல்லாம்பெருகி, ஒரே நாற்றமடித்த இடமாக அது இருந்தது. எனவே, சுருங்கக் கூறுவதானால், அந்தப் பாதாளக் கோயில் புழு, பூச்சிகள், பாம்பு, தேள்கள் ஆடசி செலுத்தும் இடமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நரகம் போன்றிருந்த, இருள் கவ்விய இடத்தைத்தான், வெங்கட்ராமன் என்ற அந்தச் சிறுவன் தனது தியான சாதனைகளுக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தான். அங்கே இருந்த மேடை மீது உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தியானங்களைச் செய்து வந்தான் வெங்கட்ராமன். தியானம் கலைந்ததும், அந்தச் சிறுவன் அங்கும் இங்குமாக நடப்பார். எதிர்பாராமல் யாராவது அங்கு வந்து உண்பதற்காக ஏதாவது ஆகாரம் கொடுத்தால்தான் சாப்பிடுவாரே தவிர, எவரிடமும் போய் கெஞ்சிக் கேட்கமாட்டார். பட்டினத்துத் துறவியார் கூறியதைப் போல இருக்கும் இடம் தேடி சிறுவனுக்கு உண்ண உணவு வரும். வெங்கட்ராமன் தான் உலகைத் துறந்தார். உலகம் அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? அதுவும் பழநியாண்டி முருகனைப் போலக் கோவணதாரியாக ஒரு பையன் உட்கார்ந்திருப்பதால், அவனைப் போன்ற வயதுப் பையன்கள் விட்டுவிடுவார்களா சும்மா? அவர்கள் கூட்டமாக வந்து கேலி செய்தார்கள் ஏய் கோவணாண்டி என்று கூப்பிடுவார்கள். ‘கோமணம் கட்டிக்கிட்டு வெட்கமில்லாமல் உட்கார்ந்திருக்கிறான் டோய்’ என்பார்கள். சிலர் கல்லாலடிப்பார்கள்; வேறு சிலர் அவன் பைத்தியண்டா என்று கெக்கலிட்டுக் கொட்டுவார்கள். இன்னும் சிலர் ‘பைத்தியம் பைத்தியம்’ என்று கைகொட்டி பழித்துக் கிண்டலும் கேலியும் செய்வார்கள். வேலையற்றதுகளுக்கு இதுவே ஒரு வேலை என்று எண்ணி தினந்தோறும் வந்து வெங்கட்ராமன் தியானத்தைக் கலைத்துக் குறும்பாட்டம் ஆடுவார்கள். இவற்றையெல்லாம் கண்ட வயது முதிர்ந்தவர்கள் வெங்கட்ராமனிடம் இரக்கம் காட்டுவார்கள். மற்றும் சிலர் பரிவோடு அவரைப் பால சந்நியாசி என்று அன்போடு அழைத்து பயபக்தியோடு எண்ணி அவருக்குத் தொண்டு செய்வார்கள். அதனால் எல்லாம் தியானம் கலைவதால், வேறு ஓரிடமான பாதாளலிங்கம் இருக்கும் இடத்துக்கு மாறிச் சென்று தியானம் புரிவார் வெங்கட்ராமன். பாதாள லிங்கக் கோயில் எப்படிப்பட்ட இடம் என்பதை முன்னே விளக்கியிருந்தோம் அல்லவா? வேறு வழி ஏதும் புலப்படாத அந்தப் பாலயோகி, அதே இடத்துக்கே சென்று தியானம் செய்திடும் நிலை உருவானது. பாதாள அறை, பூச்சி புழுக்களது நாற்றமும், அவற்றின் நடமாட்டமும் அதிகமாக உள்ள இடம். பாம்புகள் கூட அந்த இடத்திலே பஞ்சணை கொண்டிருக்கும். தேளும், சிலந்திகளும் ஒன்றுடன் ஒன்று போராடி வரும் களம் அது. இவற்றை எல்லாம் கவனிக்க அந்த பாலயோகிக்கு நேரமேது? எது என்ன செய்தாலும் அதை அவர் கவனியாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், சிலைபோல அமர்ந்து தானுண்டு, சிவமுண்டு, தியானமுண்டு, சித்தவடக்கம் உண்டென்று இருப்பார். சும்மா இருக்குமா பாதாள அறைப் பூச்சிகளும், வௌவால்களும், புழுக்களும்? வெங்கட்ராமளை அவை ஒவ்வொன்றாக வந்து கடித்தன; அவன் மேலே ஏறி ஊர்ந்தன. வௌவால் படபட வென்று சிறகடித்து ஆசைகளை எழுப்பியபடியே இருந்தன. சிறுவனது சிந்தனையோ சிறகடித்துக் கொண்டிருந்தன. பாலசந்நியாசி தனது மனத்தைத் தளர விட்டாரில்லை. எப்படியும் அருணாசலத்தைக் காண வேண்டும் என்ற தவ வேட்கையோடு உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கொள்கைக் குன்றாக அவர் இருந்துவிடுவதால், பூச்சிகள் கடிக்கும் வலியும், அதனால் ஏற்படும் புண்களும் ரத்தமும், சீழ்வகைகளும், அரிப்பும், தழும்புகளும், காயங்களும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவ்வளவவு மனோபலத்தோடு தவமும், தியானமும் செய்து கொண்டே இருந்தார் அந்த பாலயோகி. பாலயோகி வெங்கட்ராமனுடைய தவநிலையையும் தியான ஒழுக்கத்தையும் கண்ட ரெத்தினம்மாள் என்ற ஒரு பண்பாள, பெண் சின்ன சாமியார் போல அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவயதுப் பையனது தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபமடைந்து, ‘என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், தனிமையான இடம் உள்ளது. எந்தவித புழு பூச்சிகளது தொல்லைகளின்றி, அமைதியாகத் தவம் புரியலாம்’ என்று இளம் துறவியை அழைத்தாள். சாமி, வாய்திறந்து பேசும், பதில் சொல்லும் என்று அந்தப் பெண் வெகு நேரம் காத்திருந்தாள். வெங்கட்ராமன் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. வாய் திறந்தும் பதில் சொல்லவில்லை. பிறகு, அந்தப் பெண் திரும்பிப் போவதற்கு முன்பு ஒரு துணியை பால சந்நியாசி அருகே வைத்து விட்டு, தேவையானால் உபயோகித்துக் கொள்ளட்டும் என்று சென்று விட்டார். வழக்கம் போல கோயில் குறும்புப் பையன்கள் குழுவாக வந்தார்கள். ஏளனம், கிண்டல், கல்லடி, மண்ணடிகள் எல்லாம் நடந்தன. அதை அவ்வழியாகச் சென்ற வெங்கடாசல முதலியார் என்பவர் பார்த்து விட்டு, ஐயோ ஒரு இளம் துறவி அல்லவா அங்கே தவம் செய்கிறார்? அவர்மீது குறும்பர்கள் கற்களை எறிகிறார்களே என்று பயந்து அவர்களை விரட்டியடித்தார். முதலியார் அந்த பாலயோகியைக் காண இருட்டறைக்குள் நுழைந்தார். அப்போது எதரிலே ஒரு சாமியார் வந்தார். காயம் ஏதாவது பட்டதா சாமி? என்று முதலியார் அவரைக் கேட்டார். எனக்கு எந்தலிதக் காயமும் ஏற்படவில்லை. உள்ளே சின்ன சாமியார் இருக்கிறார். அவருக்கு ஏதாவது காயம் பட்டதோ, என்னவோ போய் விசாரியுங்கள் என்று சொல்லிவிட்டு எதிரே வந்த சாமி போய் விட்டார். வெங்கடாசல முதலியார் சின்னசாமி இருக்கும் பாதாள அறைக்குள் போனார். இருட்டல்லவா? ஒன்றும் தெரியவில்லை அவர் பார்வைக்கு. பிறகு இருள் கலக்கத்தில் ஒரு மனிதனுடைய உருவம் தெரிந்தது முதலியார் வெளியே வந்தார். மண்டபத்தின் மேற்கே ஒரு தோட்டம், பழனிச் சாமி என்ற ஒரு சந்நியாசி தனது சில சீடர்களோடு அங்கே தங்கி வந்தார். வெங்கடாசல முதலியார் அந்தச் சாமியார், சீடர்களது உதவிகளோடு மீண்டும் பாதாள அறைக்குள் நுழைந்தார்.  நுழைந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து வெங்கட்ராமன் என்ற அந்த இளம் துறவியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போதும் அந்த இளம் துறவியின் தியானம் கலையவில்லை. தன்னை என்ன செய்கிறார்கள் என்றே அவருக்குத் தெரியாது. பாவம்! பூச்சிக்கடிகளால் ரத்தம் கசிந்தது. அவை கடித்த இடங்களிலே தழும்பு தழும்பாக வீக்கத்தின் அடையாளம்! காயமடைந்த அவரது உடலிலே இருந்து சீழ் வழிந்தது. இவற்றை அவர்கள் கவனித்து, இவ்வளவு வேதனைகளையுமா இந்த பால துறவி சகித்துக் கொண்டிருந்தார் என்று வியப்படைந்தார்கள். அதற்குப் பிறகு அந்த இளம் துறவியைக் கோபுர சுப்பிரமணியசாமி கோயிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அன்று முதல் வெங்கட்ராமனுக்கு பிராமண சாமி என்ற பெயர் ஏற்பட்டது. சுப்பிரமணிய சாமி கோயிலிலே வேறோர் சாமியார் இருந்தார். அவர் பெயர் மௌனசாமி என்பதாகும். அவர் வெங்கட்ராமன் என்ற பிராமண சாமிக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைகளைச் செய்து உடல் நலம் தேற்றி வந்தார். அந்தச் சாமியார் தான் உண்ணும் போது பிராமண சாமியையும் சாப்பிட வைப்பார். ஒவ்வொரு வேளையிலும் அந்தச் சாமியார் தனது உணவை பிராமண சாமியோடு பங்கீடு செய்து இருவரும் ஒரு சேர அமர்ந்து உணவு உண்டு வந்தார்கள். இளம் துறவியான பிராமண சாமியை மௌனசாமி கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்தார். இரவிலானாலும், பகலிலாளாலும் இருவரும் இணைந்தே எப்போதும் காணப்படுவதைக் கோவிலில் உள்ளோர் அனைவரும் கண்டார்கள். சில நேரங்களில் பிராமணசாமி, தனக்கு எது கிடைக்கிறதோ அதையெல்லாம் உண்டார். அபிஷேக பால் சில வேளைகளில் இரு சாமியார்களுக்கும் வரும். இருவரும் அதைக் குடித்து  மகிழ்வார்கள். சில சமயங்களில் பல மணி நேரமானாலும் அல்லது சில நாட்களானாலும் அபிஷேகப் பால் வராது. அந்த நேரத்திலே பால யோகியான வெங்கட்ராமன் தியானத்தில் ஆழ்ந்து போவார். அந்த மாதிரியான வேளைகளில் மௌனசாமி வாயைப் பிரித்து பாலை ஊற்றிப் பருக வைப்பார். கோயில் பூசாரி, இந்த இரண்டு சாமியார்களின் இணை பிரியா துறவுத் தோழமையைக் கண்ட பின்பு, அவர் இருவர்களுக்கும் சேர்த்தே அபிஷேகப் பாலை அனுப்புவார். நேரத்தில் அந்தப் பால்வாரா நிலையேற்பட்டுப் போனால், அக்கம் பக்கம் உள்ள பக்தியன்பர்கள் அந்த இரு சந்நியாசிகளுக்கும் பால் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அறுபது நாட்கள் ஓடின. பாலயோகி மதுரையை விட்டு மாணவனாகப் புறப்பட்ட வெங்கட்ராமன் எனும் பதினைந்து வயதுடைய சிறுவனின் திருவருள் தியான நிலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பக்தர்கள் இடையே முதலில் பிராமண சுவாமி என்ற விதையாக விதைக்கப்பட்டது. பிறகு அது, சின்ன சாமியானது. இப்போது குன்றக்குடி மடத்தினால் குருமூர்த்திசாமி என்ற புகழைப் பெற்றது. அது நாளுக்கு நாள் மக்கள் இடையே வளர்பிறையாக வளர்ந்து பெரும் புகழை ஈட்டிக் கொண்டிருந்தது. குன்றக்குடி மடத்தைச் சார்ந்தவர் அண்ணாமலைத் தம்பிரான் என்பவர். அவர்தான் அப்போதைய குன்றக்குடி மடாதிபதியாகத் திகழ்ந்து வந்தார். அவர் கீழாநத்தூர் பூந்தோட்டம் ஒன்றில் தங்கி தம்முடைய இறை வழிபாடுகளை நடத்தி வந்தார். இதற்கு என்ன காரணம் தெரியுமா? குன்றக்குடி மடம் துவக்கக் காலத்தில் திருவண்ணாமலை அருணாசலத்தில் இருந்தது. பிறகு தான் அது குன்றக்குடி எனும் பேரூர் ஒன்றுக்கு மாற்றப்பட்டது. அதனால், அண்ணாமலைத் தம்பிரான் எனப்படும் குன்றக்குடி மடாதிபதி குன்றக்குடியை விட்டு அருணாசலத்திற்கு வருவார். வந்தால் அந்தப் பூந்தோட்ட மாளிகையில்தான் தங்குவது வழக்கமாகும். அதுபோலவே, இம்முறையும் குன்றக்குடி மடாதிபதி திருவண்ணாமலையில் தங்கி இருந்தார். எப்போதும் போல இப்போதும் அவர், அருணாசலத்திற்கு வருகை தந்து பூந்தோட்டம் என்ற எழில் ததும்பும் குடிலில் தங்கியிருந்தார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. என்ன அதுவெனில், குன்றக்குடி மடாதிபதிக் குழுலினரின் ஆதிகுரு எனப்படும் ஒரு சந்நிதானம் சமாதியானது அந்தப் பூந்தோட்டத்திலே தான். அந்த இடத்திற்கு குருமூர்த்தம் என்று இன்றும் பெயர். அதன் காரணமாகத்தான் குன்றக்குடி திருவண்ணாமலை வந்தாரென்றால் அங்கே உள்ள பூந்தோட்டக் குடிலிலே தங்குவது வழக்கமாகும். தம்பிரான் தம் குழுவினருடன் திருவண்ணாமலை நகரிலே உள்ள முக்கியமான தெருக்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வருவார். அவ்வாறு கிடைக்கும் பிச்சையினைத் தம்பிரானுடன் வருகைத் தந்தோர் அனைவரும் கட்டுப்பாடாகக் குரு பூஜை செய்து விட்டுத்தான் உண்பார்கள். அந்த அண்ணாமலைத் தம்பிரான், மரத்தடியில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பால்போகியைப் பார்த்து, இவ்வளவு சிறு வயதில் ஒரு பையன் துறவியாக மாறி தியானம் புரிகிறானே. இது பூர்வ ஜென்ம பலனோ என்றெண்ணி வியந்தார். அதனால், அந்த இளந்துறவியின் அருகே அமர்ந்து, சிறிது நேரமானவுடன் அவர் எழுந்து போய் விடுவார். இவ்வாறு அத் தம்பிரான் தினந்தோறும் வந்தமர்ந்து செல்வதை நிறுத்திவிட்டு, இந்த பால சந்நியாசியைத் தமது குருமூர்த்தத்துக்கே அழைத்துச் சென்று தங்க வைத்தால் என்ன என்று எண்ணி, அங்கே வந்துவிட்டால் அவருடைய தவநிலைக்கு எந்தவிதத் தடையும் ஏற்படாதே என்ற எண்ணத்தால், தனது கருத்தை இளம் துறவவிக்குத் தெரிவித்தார். பிராமண சாமியாரான அந்த வெங்கட்ராமன் தம்பிரான் கருத்தை ஏற்றுக் கொண்டார். அவர் குன்றக்குடி மடமான குருமூர்த்தத்துக்கே வந்து விட்டதால், அன்று முதல் அந்த சின்னசாமி குருமூர்த்தசாமி என்று மக்களால் அழைக்கப்பட்டார். குருமூர்த்த சாமி புதிய இடம் மாறி வந்து தங்கி தவத்தில் மூழ்கினார்! தியானத்தின் ஐம்புலனாற்றல் ஒளி ஊடுருவ ஊடுருவ சந்நியாசி தனது உடலையே மறந்தார். அவருக்கு தலைமயிர் சடைத்தது. கை, கால் விரல் நகங்கள் எல்லாம் நீண்டு வளர்ந்தன. பாதாள அறையிலேயும், ஆயிரங்கால் மண்டப மேடையிலேயும் கல்லையும், மண்ணையும் வாரி எறிந்து கொண்டிருந்த குறும்பர்களின் தொல்லைகள் இல்லை என்றாலும், அவர்களை விட மோசமாக, நினைத்த நேரங்களிலே எல்லாம் கடித்துக் கொண்டே இருக்கும் எறும்புத் தொல்லை மிக மோசமாக இருந்தது. இருந்தாலும், பாலயோகி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இளம் சந்நியாசி எறும்புக் கடிகளுக்கு ஆளாகி அவதிப்படுவதைக் கண்ட ஒரு ஆன்மிக அன்பர், அவரை ஒரு பெஞ்ச் மீது உட்கார வைத்தார். அதன் நான்கு பக்கக் கால்களிலும் தண்ணீர்ப் பாத்திரங்களை வைத்தார். இதனால் பாலயோகி அமர்ந்துள்ள பெஞ்ச் மீது எறும்பகள் ஏறுவது தடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் துறவி பெஞ்சின் பின்பக்கம் சுவரில் சாய்ந்து கொள்வார். அதன்மீது எறும்புகள் ஏறி அவருக்குத் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இளம் சந்நியாசி அந்தச் கவர்மீது சாய்ந்து கொண்டிருந்த உடல் அடையாளத்தை அங்கே இன்றும் கூட காணலாம். ஒரு சிறு வயதுப் பையன் அன்ன ஆகாரம் மறந்து, தன்னை மறந்து, ஐம்புலன் ஆற்றலை வென்று தவம் செய்கிறான் என்று ஒருவர் மற்றொருவரிடம் பிரசாரம் செய்தால் போதாதா? உடனே அவை காட்டுத் தீ போலப் பரவி விடுமல்லவா?  அதைப் போல ஒரு பாலயோகி குகையில் தவம் செய்கிறார் என்ற செய்தி அக்கம் பக்கம் கிராமங்கள் எல்லாம் சூடாகவும், சுவையாகவும் பரவியது. மக்கள் கூட்டம் நாளா பக்கங்களில் இருத்தும் திரளலானார்கள். மொட்டையடித்த தலையில் முடிகள் வளர்ந்து, கனத்து, சடைத்திருப்பதையம் கால், கை நகங்கள் கரடி போல வளர்ந்துள்ளதையும் கண்டு மக்கள் அவரை ஒரு பாலயோகி சாமியார் என்றே எண்ணவில்லை. யாரோ ஒரு பழுத்த கிழவர் சந்நியாசி வேடமணிந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றே நம்பினார்கள். அந்த இளம் துறவியின் பார்வை பெற்றவர்கள் எல்லாம் நன்மை அடைந்தே வருவதாகக் கருதினார்கள். அவர்கள் எண்ணம் போல, அவரவர்கள் நினைத்து வந்த செயல்கள் நிறைவேறின. அதனால், மக்கள் இடையே அந்த பாலயோகி மீது ஒரு தெய்வ நம்பிக்கை பிறந்து, வளர்ந்து பரவியது. மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடியது; எங்கெங்கு இருந்தோ அவரைத் தேடி வந்து தெய்வத்திடம் தரிசனம் பெறுவதைப் போலத் தரிசித்து விட்டுச் சென்றார்கள். குழந்தையில்லாத தம்பதிகள், வாழ்க்கையில் தோல்வி கண்டவர்கள், வறுமையாளர்கள், பணக் கஷ்டத்தால் அல்லல் படுவோர்கள், வியாதிகளால் அவதியுறுவோர், திருமணம் நடைபெற எண்ணுவோர், போகும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்போர், இத்தகைய குறைபாடுகள் உடைய மக்கள் தினந்தோறும் திரண்டு அணியணியாக வந்தார்கள். இரவும், பகலும் பால சந்நியாசிக்கு வேலைப் பளுக்கள் அதிகரித்தன. மக்களை ஓய்வே இல்லாமல் விசாரிக்கும் நிலை வலுத்தது. இவ்வாறான ஒரு நம்பிக்கைச் சூழல் பால யோகியிடம் மக்களுக்கு இருந்ததால், வெங்கட்ராமனை பெயரைச் சுருக்கமாக வெங்கட்ராமசாமியார், வெங்கட்ராம துறவி, பால சந்நியாசி, பாலயோகி, இளம் துறவி, குருமூர்த்த சாமி என்றெல்லாம் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு அன்போடும் பக்தியோடும் அழைத்தார்கள். மற்றும் சில மக்கள் வெங்கட் என்ற பெயரை நீக்கி விட்டார்கள். இறுதியாக ரிஷி என்றே அழைத்தார்கள். அவரைப் பார்க்க வந்த பத்திரிக்கையாளர்கள் வெங்கட்ராமர் என்ற பெயரோடு சுவாமி என்ற சந்நியாசிக் கோலத்தைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்து, வெங்கட் ராம சுவாமி என்று எழுதினார்கள். இந்த நேரத்தில் குன்றக்குடி மடாதிபதியான அண்ணாமலைத் தம்பிரான் சின்னசாமியை ஓர் அருளாளராகவே பாவித்து அவரது பெருமையை மக்கள் இடையே குருமூர்த்த சாமி என்றழைத்து நிலைநிறுத்தினார். அண்ணாமலைத் தம்பிரான் குருமூர்த்த சாமியை ஆண்டவன் தூதுவராக மதித்து வந்ததால், ஒருமுறை அவருக்குப் பால் அபிஷேகம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பாலயோகி சாமிக்கு முன்பாக, அவரைக் கடவுள் சிலையாகக்கருதி தூப தீபங்கள் காட்டி துதிப் பாடல்களும் பாடலானார். நாளடைவில் பால சந்நியாசியைப் பார்க்க வரும் படித்த கல்விமான்கள் அவர்மீது சில அற்புதங்களை எழுதினார்கள். வேறு சில கவிதை மனம் கொண்டவர்கள் சுவாமி மீது பாடல்கள் பாடினர். அவை சிறு சிறு புத்தகங்களாகவும் வெளி வந்து கொண்டிருந்தன. செல்வந்தர்கள் அவருக்குரிய நிதியை உருவாக்கினார்கள். இவ்வாறு கல்விமான்களும், கவிஞர்களும், செல்வந்தர்களும் செய்யும் அருட்பணிகள் அவரவர்கள் மனதுக்கு ஒரு முழு நிறைவை அளிக்கும் பணிகளாக அமைந்து விட்டன. அவரவர்கள்  செயல்களின் பெருமைக்குரிய நிகழ்ச்சிகளைக் கண்ட பக்தகோடி மக்கள் அவரை வெங்கட்ராம ரிஷி என்றே அழைத்து மன நிறைவைப் பெற்று வந்தார்கள் எனலாம். பால துறவியான வெங்கட்ராமனைப்பற்றிக் கவிஞர்கள் எழுதும் போற்றிப் பாடல்களும், கல்விமான்கள் கற்பிக்கும் அருட்சம்பவங்களும், அண்ணாமலைத் தம்பிரான் செய்யும் பாலாபிஷேக, தூப தீபங்களும் ரமணருக்கு மன அதிருப்தியை உண்டாக்கியது. இவையெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவும் குறிப்பாக, தம்பிரான் செயல்களை அவர் அறவே வெறுத்தார். என்ன செய்வது எல்லாவற்றையும் அவர் பொறுத்துக் கொண்டாரேயன்றி, ஏற்றுக் கொண்டவரல்லர். ஒரு நாள் குன்றக்குடி மடாதிபதியான அண்ணாமலைத் தம்பிரான் வீதி வீதியாகப் பிச்சை எடுத்துக் கொண்டு குருமூர்த்தத்துக்குத் திரும்பினார். அப்போது வெங்கட்ராமர் அவரைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா? "இந்த உடலுக்கு உணவுதான் வேண்டும். இது மிகச் சிறிய விஷயம் தான் என்றாலும், அதற்குப் பிறகு, தம்பிரானும் மனம் மாறினார். பிச்சை எடுத்து வந்து உண்ணும் பழக்கத்தை அவர் அன்று முதல் கைவிட்டார். நாளுக்கு நாள் வெங்கட்ராம ரிஷியைப் பார்க்க வரும் கிராம மக்கள், நகரவாசிகள் கூட்டம் அதிகரித்தவாறே இருந்தது. அதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமே என்று எண்ணியவர்கள். அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் தடுப்பு வேலி போட்டார்கள். அதனால் கூட்டம் தரும் தொல்லைகளும் ஓரளவு குறைந்தன. பெருகி வந்த மக்கட் கூட்டம் பாலயோகி வெங்கட்ராமருக்கு சில அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வந்தன. அந்தப் பால், பழங்கள், பணம் முதலியவற்றை என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்கள், குருமூர்த்தப் பாதுகாப்புக் குழுவினர். ஏனென்றால், வெங்கட்ராமர் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் ஒரு சேர் பால் அருந்தினார். நாளுக்கு ஒரு முறை அவர் பருகிய பால் போக, பழங்கள் போக, மீதி அனைத்தையும் அவரைக் காணவரும் மக்களுக்கே பசியாற, வழங்கி வந்தார். அதுவும் அவர் திருக்கையாலேயே அவற்றைக் கொடுத்தார். மக்களும் யோகி தரும் அருட் பிரசாதமாக அவற்றை வாங்கி உண்டு வந்தார்கள். பாலயோகி ஒரு நாளைக்கு ஒரு முறை பால் குடித்துவிட்டு, பல நூறு மக்களிடையே உள்ள குறைபாடுகளை விசாரணை செய்து. அவரவர்க்குரிய குறை தீர்க்க நிவாரணங்களைக் கூறிக் கொண்டிருக்க முடியுமா? எனவே, உழைப்பு அதிகமானது; உடற்குரிய போதுமான சக்தி குறைந்தது. இதனால் நாளுக்கு நாள் அவரது உடல் பலவீனமாகிக் கொண்டே வந்ததால், ஒரு நாள் அவரையும் அறியாமல் மயங்கிக் கீழே விழுந்து விட்டார். அதனால் நடக்க முடியாத நிலையேற்பட்டு விட்டது. இயற்கையாகவே வெங்கட்ராமர் சிறுவயதில் திடகாத்திர உ.டலோடு தான் இருந்தார். என்றைக்குத் தனது வீட்டைவிட்டு வெளியேறினாரோ, அன்று முதல் சரியான உணவும் இல்லை. பசி, பட்டினி தொல்லை. இதனால் அவரது உடல் பலவீனமாயிருந்தது. இப்போது ஒருவேளை பால், சில பழங்கள் அவரின் உழைப்புக்கு ஈடுகொடுக்கும் உரமாக இல்லாமல் போகவே, பாலயோகியுடைய உடலை அவ்வப்போது மயக்கம் தாக்கியபடியே இருந்தது. உடம்பு வெறும் எலும்புக் கூடுபோலப் காட்சி தந்தது. எவ்வளவுதான் அவர் எச்சரிக்கையாக இருந்தாலும் மயக்கமும் - பலவீனமும் அடிக்கடி வர தடுமாறுவார். தள்ளாடுவார்; விழுவாக்ர். சில நேரங்களில் அவருடன் அருகிலிருப்பார் அப்படியே கைத்தாங்கலாகத் தாங்கிக் கொள்வார்கள். இரமணரின் தொண்டர்கள் இரமண மகரிஷி குன்றக்குடி மடமான குருமூர்த்தத்திற்கு வருகை தந்த இரண்டே மாதங்களில் அண்ணாமலை தம்பிரான் தனது மடத்து வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்தது. ஒரு வாரத்தில் அவர் மீண்டும் திருவண்ணாமலைக்குத் திரும்பி விடுவதாக இரமணரிடம் வாக்களித்து விட்டுச் சென்றார். இரமணரை தான் எப்படிக் கவனித்துக் கொண்டாரோ தம்பிரான், அதுபோலப் பாதுகாத்துப் பணிவிடையாற்றும் பொறுப்பை, அவர் நாயனார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனார். தம்பிரான் ஒப்படைத்த பொறுப்பைப் போற்றி வந்த நாயனாருக்கு அவரது மடத்திலே இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் போக வேண்டிய கட்டாயம் உருவானது. காரணம், நாயனாரும் ஒரு மடத்திற்குப் பொறுப்பாளராக இருந்ததுதான். அதனால் இப்போது, யார் ரமணருக்குத் தொண்டாற்றுவது? திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம் தெருவில் ஒரு விநாயகர் கோவில்! அக் கோவிலின் பூசாரியாக இருந்தவர் பழனிச் சாமி என்ற சாமியார். அங்கே பூசைப் பணிகளைப் புரிந்து கொண்டு அவர் தனது வாணாளை நகர்த்தி வந்தார். ஒரே ஒரு வேளை உப்பில்லாத உணவை உண்பார்! அவ்வளவுதான். இவ்வாறாக இருந்த பழனிச்சாமி பூசாரியைக் கண்ட ஒரு விநாயக பக்தர், “கல்லுப் பிள்ளையார் மீது இவ்வளவு கவனம் செலுத்தும் நீர், உயிரோடு உள்ள ஒரு பிராமண சாமியாரைக் கவனிக்கவில்லையே!” என்று கூறினார் அவர் பெயர் சீனிவாச அய்யங்கார். இளம் துறவி ரமணரைப் பற்றி தெரிவித்த அய்யங்காருடைய எண்ணத்தை ஏற்று, பூசாரி குருமூர்த்தம் சென்றார்! ரமணரைப் பார்த்தார்; பணிந்தார்; பணிவிடை செய்யும் பொறுப்பை ஏற்றார்! இரண்டையும் செய்து கொண்டு வந்த அந்தப் பூசாரி பழனிசாமி, பிறகு விநாயகர் சேவையைத் துறந்து முழுக்க முழுக்க ரமணருக்கே தொண்டரானார்! ரமணரைக் காண பக்த கோடிகள் கூட்டம் அதிகமாகி வந்ததால், அவரை விட்டுப் பிரிந்து வேறு எங்கும் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. பூசாரிக்கும் ரமணருக்கும் பழநிசாமியைப் போன்ற ஒரு நம்பிக்கையான சாமியாரின் பணியும் தேவையானது. அதனாலே ரமணர் தான் சாகும் வரை பழனிசாமியைத் தன்னருகேயே வைத்துக் கொண்டார். அந்தப் பூசாரியும் ரமணர் சாகும்வரை அவர் உடனேயே இருந்து நம்பிக்கையாளரானார் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும். முதன் முதலாக மயங்கிக் கீழே விழுந்த ரமணரைத் தாங்கிப் பிடித்தவருள் ஒருவர் இந்தப் பழனிசாமி பூசாரிதான் அன்று முதல் அவரை எச்சரிக்கையுடன் கவனித்து வந்தவரும் இதே பழனிசாமிதான். ஒரு வேளை பழனிசாமிப் பூசாரி வெளியே செல்லும் அவசியம் நேரிட்டால், அப்போது ரமணரை ஓர் அறைக்குள்ளே போட்டுப் பூட்டிவிட்டுப் போவார். இரமணர் அடிக்கடி மயக்கமடைவார் என்பதற்கு ஒரு சுவையான எடுத்துக் காட்டை இங்கே தருகிறோம்: குன்றக்குடி மடம் எனப்படும் குருமூர்த்தத்திற்கு முன்பு இரண்டு புளியமரங்கள், நன்றாகக் காய்த்து, பழுத்துக் கொத்துக் கொத்தாய் புளியம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இதைத் திருடர்கள் பார்த்தார்கள். இன்று புளியம் பழத்தை அடித்து மரத்தை விட்டு இறக்கிக் கொண்டுபோய்விட வேண்டும் என்று அந்த இரண்டு திருடர்களும் கூட்டணியோடு இறங்கினார்கள். ஆனால், குரு மூர்த்தம் திண்ணையில் ரமணர் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்ததைக் கண்ட திருடரணி, இந்தச் சாமியார் நமக்கு எமனாக இருப்பானே, விழித்துக் கொண்டிருக்கும் இவனை மீறி எப்படி புளியம்பழத்தை அடித்துக் கொண்டு போவது என்று அஞ்சினார்கள். இந்த அணியில் ஒரு அதி புத்திசாலி திருடன், ஒரு குறுக்கு யோசனை செய்தான். ஆடாமல் அசையாமலிருக்கும் இந்த குட்டிசாமியார் விழித்திருக்கிறானா? தூங்குகிறானா? என்பதைச் சோதித்து விடலாம் என்று எண்ணினான். மெதுவாக குட்டித் துறவியிடம் வந்து பச்சிலைச் சாற்றைப் பிழிவோம். விழித்திருந்தால் லபோதியோ என்று கத்துவான். அப்போது நாம் ஓடிப்போவோம் என்ற தனது யோசனையை மற்றவனிடம் கூறினான்! ஒரு திருடன் வெங்கட்ராமன் உட்கார்ந்திருக்கும் இடமருகே வத்து அவரது முகத்தைப் பார்த்து, பச்சிலைச் சாற்றைப் பால சந்நியாசி கண்களிலே பிழிந்தான். அந்த அணியினர் எதிர்பார்த்தபடி பிராமண சந்நியாசி சத்தம் ஏதும் போடவில்லை. திருடர்களுக்கு ஒரே கொண்டாட்டம் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். திருடர்கள் தங்களது காரியத்தைச் சுலபமாக முடித்துக் கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா? அப்போது சின்னசாமி மயக்கம் வந்து ஆடாமல் அசையாமல் திண்ணைச் சுவற்றிலே சாய்ந்து கிடந்தார். பாவம்! இரமணர் பெருமை, தெய்வத் தொண்டு அருளாண்மையோடு அவர் வழங்கும் ஆசியால் அவர் மகிமை சிறுகச் சிறுக ஊர் தாண்டி நகர் தாண்டி, வட்டம் தாண்டி, மாவட்டம் தாண்டி, மாநிலம் முழுவதும் பரவிக் கொண்டே இருந்தது. அப்போது யார் இந்தப் பாலயோகி? இவ்வளவு சக்தியை மக்களிடம் பெற்று வருகிறானே! எந்த ஊர்க்காரன்? அவன் வரலாறு என்ன? என்பதை யாரும் அறிய முடியாமலிருந்தனர்! ரமணரும் தான் யார் என்பதை எவரிடமும் கூறாமலே இருந்து விட்டார்! அதெல்லாம் தேவையில்லை என்பது அவருடைய எண்ணம். வெங்கட்ராமய்யர் என்ற ஒரு தாசில்தார் அப்போது குருமூர்த்தம் வந்து பால சந்நியாசியைச் சந்தித்து தரிசனம் செய்து கொண்டார். பலதடவை முயன்று தோற்றுப்போன இந்த வட்டாட்சியர், இந்த தடவை யார் இந்த இளம் துறவி என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போகமாட்டேன் என்று அங்கே பிடிவாதமாக அமர்ந்து விட்டார். வெங்கட்ராமய்யர் தனது விருப்பத்தை வெங்கட்ராமன் எனப்படும் பிராமண சாமியிடமும் சொல்லிவிட்டு பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார். அப்போதுதான் அந்த வெங்கட்ராமன் சாமியார், ஒரு தாளில் ‘எனது ஊர் திருச்சுழி’ என்று எழுதிக் காட்டினார். இப்போது ரமணரிஷி என்ற பெயரை பெற்று விட்ட பாலயோகி, குரு மூர்த்தத்திற்கு வந்து ஏறக்குறைய இருபத்திரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் மக்கள் திரள ஆரம்பித்து விட்டார்கள். திருவண்ணாமலை ஓர் அருளாளர் தரிசனம் பெறுமிடம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. ஆனால், அதிகரித்துக் கொண்டே போகும் பக்தர்கள் நெரிசலை எப்படிச் சமாளிப்பது என்பது சாமியார்கள் இடையே ஒரு பிரச்சினையாகி விட்டது. குரு மூர்த்தத்திற்கு அருகே ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. அதற்குச் சொந்தக்காரராக இருந்தவர் பெயர் வெங்கட்ராம நாயக்கர். அவர் ஒரு நாள் ரமணரை சந்தித்து இங்கேயும் உங்களுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது. எனது மாந்தோப்புக்கே வந்து விடுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார். நாயக்கரது வேண்டுகோளை ரமணர் ஏற்றுச் சென்றார். நடப்பது நடக்கும் திருவண்ணாமலை குரு மூர்த்தத்திற்கு அருகே உள்ள நாயக்கருடைய மாந்தோப்பில் சென்றமர்ந்த ரமணரிஷிக்கு, நாயக்கர் இரண்டு உயரமான மேடைகளைக் கட்டிக் கொடுத்தார். அதே நேரத்தில் ரமணரைத் தரிசிக்க வரும் பக்த கோடிகளுக்குரிய பாதுகாப்புகளையும் வசதிகளையும் செய்து தந்தார். இந்த நிலை இவ்வாறிருக்க, வெங்கட்ராமன் என்ற மாணவன் திருச்சுழி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போமா? ‘கல்வியில் அக்கறை இல்லாதவர்களுக்கு வீட்டில் மட்டும் என்ன வேலை?’ என்று தனது தமையனார் கேட்ட கேள்வினால் அவமானம் தாளமுடியாமல் வெங்கட்ராமன் அண்ணனது வீட்டை விட்டுக் வெளியேறினான் அல்லவா? அந்தக் கோபத்தோடு வீட்டைத் துறந்தவன் மீண்டும் வீட்டுக்குள்ளேயே நுழையவில்லை. எங்கே போகப் போகிறான் பயல்? ஊரைச் சுற்றிவிட்டு, நண்பர்களுடன் அலைந்து விட்டு மாலை வந்து விடுவான் என்று வெங்கட்ராமன் அன்னையாரும், அண்ணனாரும் அலட்சியமாய் இருந்து விட்டார்கள். ஆனால், மாலைப் பொழுது மளமளவென மாய்ந்து, அந்தி, அரும்பி அதுவும் அமாவாசை போல இருளைக் கவ்விக் கொண்டே இருந்தது. வெங்கட்ராமன் மட்டும் வரவில்லை. அண்ணன் திடுக்கிட்டார். எங்கெங்கோ ஓடி ஓடித் தேடினார்.  மதுரையிலே அவனுடன் படித்த பள்ளி மாணவர்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் வெங்கட்ராமன் திரும்பவில்லை. அவனது தமையனார் நாகசாமி எங்கெங்கோ தேடினார் தம்பி வெங்கட்ராமனை. நாகசாமி அப்போதுதான் அவனைக் கோபமாக ஏசிய நஞ்சின் கொடூரத்தை உணர்ந்தார்! இருந்தும் என் செய்ய உடனே மானா மதுரையிலே உள்ள தனது அன்னையாருக்கு ஆளனுப்பி தேடினார். யார் யார் வெங்கட்ராமன் நண்பர்களோ அவர்களிடமெல்லாம் சென்று விசாரித்தார் நாகசாமி. எங்கெங்கு அவனுக்கு நண்பர்கள் உண்டோ, அங்கங்கே எல்லாம் சென்று கேட்டார். ஒரு புறம் வெங்கட்ராமனுடைய சிற்றப்பா அவனைத் தேடியலைந்து வேதனையோடு ஓய்ந்தார். மகனைக் காணவில்லை என்பதை அறிந்த அவனது தாயார் தெருத் தெருவாக மானா மதுரை வீதிதோறும் வெங்கட்ராமா? வெங்கட்ராமா! என்ற வேதனைக் குரலோடு அலைந்தாள். எங்கும், எந்தவித ஆறுதல் பதிலும் அவளுக்கு கிடைக்கவில்லை. மகனை இழந்த அன்னை அழகம்மை சும்மா இருப்பாளா? புருஷனை இழந்து ஐந்து ஆண்டுகூட ஆகவில்லையே, இதற்குள் இழந்து விட்டோமே மகனையும் என்று அழுதபடியே இருந்தாள்! அன்ன ஆகாரம் எதுவும் உண்ணாமல் சோகப் பள்ளத்திலே வீழ்ந்தார். எழ முடியாமல் தத்தளித்தாள் அழகம்மை! அன்னை அழகம்மை ஓர் புறம். அண்ணன் நாகசாமி மறுபுறம். சிற்றப்பா சுப்பய்யர் இன்னொரு புறமாகத் தேடினார்கள். கடைசிவரை அவர்கள் தேடிக் கொண்டே இருந்தார்களேயன்றி, எந்தவித ஆறுதல் பதிலும், மனதிற்கு உற்சாகமூட்டும் வழிகளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை; தென்படவில்லை.  திடீரென ஒருநாள் ஒரு கூத்தாடி மானாமதுரையிலே உள்ள அழகம்மையின் கணவனது தம்பியிடம், ’வெங்கட்ராமன் திருவனந்தபுரத்திலே தங்கிக் கூத்தாடி வரும் ஒரு நாடகக் குழுவிலே சேர்ந்து கூத்தாடுகிறான் என்பதைச் மூச்சு மேலும் கீழுமாக வாங்க ஓடி வந்து கூறினான். உடனே அழகம்மை தனது மைத்துனர் நெல்லையப்பரை அழைத்துக் கூத்தாடி கூறியது செய்தியா? வதந்தியா? என்றறியச் செய்தாள்! நெல்லையப்பர் போன சுவடுகள் தெரியாமல் திருவனந்தபுரத்தில் இருந்து ஏமாந்த முடிவோடு திரும்பினார். ஆனாலும் முன்னூறு நாட்கள் சுமந்து பெற்ற அன்னையாயிற்றே தானே! அதனால்தான் தாய் மிகவும் சோர்ந்தாள். தனது மகனைக் காணவில்லையே என்று! வெங்கட்ராமனுடைய தமையனாரான நாகசாமி, தனது தம்பியைத் தேடி அலுத்துப் போய், பிறகு தனது கல்வியை முடித்துக் கொண்டு, மதுரையிலே உள்ள ஒரு ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணமாயிற்று அவருக்கு. ஓரளவுக்கு தாய் மன ஆறுதல் பெற்றிட நாகசாமி திருமணம் பெரிதும் உதவியாக இருந்தாலும், பெற்ற மகனை மறக்க முடியுமா அந்த தாயால்? கொஞ்ச காலம் சென்றது. தந்தைக்குப் பிறகு அக்குடும்பத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்த சித்தப்பா சுப்பய்யர் காலமானார். மதுரையில் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது. சுப்பய்யர் காரியச் சடங்குகளுக்காக எல்லா உறவினரும் மதுரை மாநகரிலே கூடியிருந்தார்கள். அப்போது திருச்சுழியைச் சேர்ந்த ஓராள் நாகசாமியிடமும் அழகம்மையிடமும் ஓவென்று கத்திக் கொண்டு ‘வெங்கட்டு அகப்பட்டு விட்டான், வெங்கட்டு அகப்பட்டு விட்டான்’ என்று ஓடி வந்தான். சடங்குக்காக வந்திருந்த எல்லாரும் பரபரப்புடன் திடுக்கிட்டு எழுந்து ‘எங்கே? எங்கே?’ என்று கேட்டு வியப்படைந்து நின்றார்கள். உடனே ஓடிவந்த அந்த ஆள், திருவண்ணாமலை நகரில்! சாமியாராக! இருக்கிறானாம் என்றான். அந்த ஆளுக்கும் வெங்கட்டு மீது கொள்ளையாசை! அதனால் செய்தியைக் கேட்டறிந்த உணர்ச்சியுடன் அவசரம் அவசரமாக ஓடிவந்து கத்தினான். தனக்கு எப்படிக் கிடைத்தது இந்தத் தகவல் என்பதையும் அந்த மனிதன் கூறிய போதுதான், அழகம்மையின் கொழுந்தனார் நெல்லையப்பருக்கும் முழு நம்பிக்கை வந்தது! நெல்லையப்பர் அதே ஆளைக் கூட்டிக் கொண்டு, தகவல் கிடைத்த இடத்துக்குச் சென்று அங்கே மேலும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டு, அன்றிரவே திருவண்ணாமலை சென்றார். இரமணரிஷி அப்போது வெங்கட்ராம நாயக்கரின் மாந்தோப்பு மேடையிலே அமர்ந்திருந்தார். நெல்லையப்பர் ‘ரமணரைப் பார்க்கவேண்டுமென்று நாயக்கரிடம் அனுமதி கேட்டார்’. நாயக்கர் ‘முடியாது’ என்றார். மறுபடியும் நெல்லையப்பர் கெஞ்சினார். நாயக்கர் மீண்டும் மறுத்தார். இறுதியாக நெல்லையப்பர் தான் யாரென்பதையும், தனது பெயரையும் ஒரு தாளில் எழுதி இதை ரமணரிடம் கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கவே அவர் மனமிரங்கித் தனது கட்டுப்பாட்டைத் தளர்த்தினார். கடிதத்தை அவர் ரமணரிடம் காட்டினார். அதைக் கண்டதும் அவர்களை உள்ளே அனுப்புமாறு சைகை செய்தார் ரமணரிஷி! நெல்லைப்பரைக் கண்டதும், ரமண சுவாமிகள் வாய்திறந்தே அவரிடம் பேசவில்லை. காரணம், அப்போதிருந்த சூழ்நிலையானது அவரை வாயைத் திறக்க விடவுமில்லை; அதற்கான நேரமுமில்லை; சந்தர்ப்பமும் அமையவில்லை. இந்தச் சூழ்நிலையின் நெருக்கடி நெல்லையப்பருக்குத் தெரிந்திட நியாயமில்லை அல்லவா? ரமணரிடம் பேச முடியாத ஒரு நிலை உருவானதைக் கண்ட அவர், உடனே தனது தன் நிலையை உள்ளுணர்வை, விளக்கத்தை, உறவு முறையின் நெருக்கத்தைப் பழனிசாமி சாமியாரிடம் கூறினார். ‘ஐயா சாமி’, நமது பரம்பரையில், இனத்தில் இப்படி ஒரு மகான் தோன்றியிருப்பதைக் குறித்து எங்களுக்கு மிகவும் பேரானந்தம் தான், ஆனால், ரமணர் இத்தகைய ஒரு நிலையிலே இருப்பதைத்தான் என்னால் பார்க்க சகிக்கவில்லை. அவர் துறவியாகவே இருக்கட்டும்; வாழட்டும் ஆன்ம சேவை செய்யட்டும்; அருளாசிகளை மக்களுக்கு வழங்கட்டும்! ஆனால் இதே பணியை, எந்த வித தொல்லைகளும் அவருக்குச் சூழாமல் எங்களோடு இருந்து கொண்டு செய்யட்டுமே! எங்களால் எந்தவித தடைகளும் அவரது தவத்துக்கோ, தியான வழிபாடுகளுக்கோ ஏற்படாதபடி நாங்கள் பாதுகாப்பாகவே இருப்போம் இல்லையா? என்று நெல்லையப்பர் மிகவும் தழ தழத்தக் குரலோடு பழனிசாமி சாமியாரிடம் பேசினார். இதே கருத்துக்களை ரமணரும் கேட்டுக் கொண்டேதான் இருந்தார். சாமி ரமணர் நெல்லையப்பரின் எந்தக் கருத்தையும் ஏற்காதது மட்டுமன்று; அவரை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நெல்லையப்பர் சில நாட்கள் திருவண்ணாமலையில் தங்கியிருந்து, அடிக்கடி ரமணரிடம் வேண்டுகோளை விடுத்தவண்ணம் தான் இருந்தார். எல்லாவற்றுக்கும் ரமணர் ஊமையாகவே இருந்தாரே யன்றி, நெல்லையப்பரின் பொய்மொழிகளைத் தன் காதுகளால் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எனவே, நெல்லையப்பர் மதுரைக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார். நெல்லையப்பர் சொல்லியதைக் கேட்ட ரமணரின் அண்ணன் நாகசாமி, டிசம்பர் மாதம் வரும் அரசு விடுமுறை நாட்களில் தனது அன்னையுடன் திருவண்ணாமலை வந்தார். அந்த நேரத்தில் ரமணரிஷி, குன்றக்குடி மடமான குருமூர்த்தத்தில் தங்கியிருக்கவில்லை. திருவண்ணாமலையிலுள்ள அருணாசல மலையின் ஒரு குன்றுக் குகையிலே தங்கியிருந்தார். பெற்றதாயும், உடன் பிறந்த சகோதரனும் அங்கே சென்று ரமணரைப் பார்த்துக் கண்ணீர் விட்டார்கள். பத்து மாதம் சுமந்தவள் அல்லவா? அவளுக்குத்தானே தெரியும் அவள் அனுபவித்த துன்பங்கள்? அதனால் அழகம்மை பதறி, கதறி சிந்தினார் கண்ணீர். தாய் துடித்தாள்! அது அவளின் முன்னூறு நாட்களின் பாசம்! ஆனால், ஒரே இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பு நாகசாமி ஊமையாகவே நின்றார்! ஆனால், சுவாமிகளைத் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு தாயார் அழைத்தாள்; பெற்ற பிள்ளையை பேசினாள்; இதற்கா உனை ஈன்றேன் என்று தன்னையே அவள் நொந்தாள்! இவற்றையெல்லாம் ரமணர் சிலை போல நின்று பார்த்துக் கொண்டே இருந்தார். இதைவிட வேறு என்ன செய்ய இயலும் அவளால்? அருணாசலத்தைவிட அதிக அருமையுடைய அன்பை வேண்டுமானால் அவளால் வழங்க முடியும்! அதனால்தான் ஊமைபோல நின்று தாயன்புக்கு உள்ளத்தை அடகு வைத்தார். அன்னையார் அழுதாள்! இதை அருகிருந்த ஒருவர் பார்த்து, இப்படி அழுகிறாரே உமது அன்னையார் ஏதாவது ஆறுதல் கூறி அனுப்புங்கள் என்றார். ஒரே ஓர் அன்பான வார்த்தையைச் சொல்லுங்கள். அந்தச் சொற்களே பெற்ற தாயின் குடியிருந்த கோயிலுக்கு ஆறுதலான தேவாரமாக இருக்கும் சுவாமி என்று ரமணரிடம் கெஞ்சினார்!  அருகிருந்தவரின் வார்த்தைகள் ரமணரின் நெஞ்சை உருக்கிற்று. பேச வேண்டாம் சுவாமி, எழுதிக் காட்டுங்கள். அதுவே அம்மாவுக்குரிய பாசப் புதையலாகவும் இருக்கும் என்றதைக் கேட்ட ரமணர், கீழ்க்கண்டவாறு எழுதித் தன் தாயின் கையிலே கொடுத்தார். “உயிரின் வினை வழியேதான் கடவுள் அவனை நடத்துகிறான். என்ன முயன்றாலும், நடக்க முடியாததை நடக்கும்படிச் செய்ய முடியாது. இது முற்றிலும் உண்மை. எனவே மௌனமாக இருப்பதே அறிவுடைமை” என்று பகவவான் ரமணர் தனது தாயாருக்கு எழுதிக் கொடுத்தார் ஒரு தாளில்! அன்னை அதைப் படித்தாள்! அவளுடைய அன்பு வேதனை அல்லாடியது. குறை குடம் போல் ஆடித் தத்தளித்தது! மனம் தளும்பிக் கொண்டே அடைக்குந்தாழ்க்கு உண்டோ தாள்? என்று ஏங்கி எண்ணியபடியே மூத்த மகனோடு மதுரை திரும்பினார்! இரமண மகரிஷி என்ற பெயரைச் சூட்டியது யார்? திருவண்ணாமலை நகரைச் சூழ்ந்துள்ள அருணாசலம் மலையில், சத்குரு சாமி குகை, விரூபாட்சி குகை, ஸ்காந்தா சிரமம் என்ற இடங்கள் உள்ளன. அவை யாவும் யோகிகள் அமைதியான சூழலில் தியானங்கள் செய்வதற்கு ஏற்ற இடங்களாகும். பாலயோகி வெங்கட்ராமன், தனது தாயார் ஊருக்குச் சென்ற பிறகு இந்த மூன்று மலைக் குகைகளிலும் கால தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறித் தங்கிப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இந்த இடங்களில் விரூபாட்சி என்ற குகை வெங்கட்ராம சுவாமிக்கு மிகவும் பிடித்த இடம். இங்கே அவரது தொண்டரான, பழனிசாமி சாமியாரோடு அவர் அடிக்கடி சென்று தங்குவார். அந்த இடத்துக்கு ஏராளமான ஆன்மிக அன்பர்கள் வருகை தந்து, அவருக்குரிய பால் பழ வகைகளை வழங்கி அருளாசி பெறுவார்கள். திருவண்ணாமலை பாதாளக் குகையில் இருந்த பழு பூச்சிகள், வண்டுகள், வௌவால்கள், பாம்பு, தேள்கள். துரிஞ்சல்களின் அசுத்த நாற்ற வகைகள் இங்கேயும் அதிகமாக இருந்தன. இருந்தாலும், அந்த இளம் துறவி அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை தேள் கடித்தது. அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டாரே தவிர, அதற்காக அவர் சிகிச்சையேதும் செய்து கொண்டவரல்லர். அவர் எதிரிலேயே பாம்புகள் ஓடும். அதை அவர் கவனிக்க மாட்டார். அதன் வேலையை அது செய்கிறது என்று இருந்து விடுவார். அணில்கள், எலிகள், துரிஞ்சல்கள் அவர் மேலே தொப்பு தொப்பென்று விழும். கவனிக்கமாட்டார். குரங்குகள் அவர் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டு அவருக்கு மக்கள் வழங்கிய பழ வகைகளை உரித்து உரித்துத் தின்று கொண்டிருக்கும். பழனிசாமி சாமியார் அவற்றை விரட்டிக் கொண்டேதான் இருப்பார். இருந்தும் அந்தக் குட்டி அனுமார்கள் அவரையும் ஏமாற்ற சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்! வெங்கட்ராம சாமியாரைச் சுற்றி காகங்கள் அமர்ந்து விரைந்து வாழைப்பழங்களைக் கொத்திக் கொண்டிருக்கும். காகக் குஞ்சுகள் அவர் காலடியிலே தத்தித் தத்தி பறந்து விளையாடும். அந்தக் குஞ்சுகளுக்குப் பாலயோகி பழங்களை ஊட்டுவார்! அவை அச்சமின்றி அவருடன் கா கா என்று கரைந்து விளையாடும். சுவாமிகள் விரூபாட்சிக் குகையிலே தங்கியுள்ளபோது, தமிழ்நாட்டின் பெரும்புலவர்களும், கவிஞர்களும், செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்கள் தொண்டர்களும், அரசியல்வாதிகளும் தரிசிக்க வருவார்கள். இவ்வாறு வந்த அறிஞர்களுள் ஒருவர் கணபதி முனீந்திரர் என்பவர். கணபதி முனீந்திரர் பெரும் புலவர் மட்டுமல்லர்; வேத, உபநிடத, ஆகம, தந்திர மந்திர சாஸ்திரக் கலைகளையும் நன்கு கற்றறிந்த வல்லவர். எல்லா நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம். குறிப்பாக, சமஸ்கிருத மொழியில் மகாபண்டிதர். திருவண்ணாமலையிலுள்ள விரூபாட்சிக் குகையில் ஓர் இளந்துறவி இருக்கிறார். மக்களுக்கு அருளாசி வழங்கி வரும் பாலயோகி அவர் என்று கேள்விப்பட்டு திருவண்ணாமலை வந்தார். விரூபாட்சிக் குகையிலே தியானத்தில் இருந்த வெங்கட்ராம சுவாமியைக் கணபதி முனீந்திரர் சென்று சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் இருந்தபோது, புலமையால் உருவாகி இருந்த அவரது ‘நான்’ என்ற ஆணவம் தணல்பட்ட வெண்ணெய் போல் உருகி நீரானது போன்ற ஒரு நினைப்பு அவரிடையே காணப்பட்டது. அதைக் கணபதி முனீந்திரர் மிக எளிதாக உணர்ந்து கொண்டார். அதனால் ஏதோ ஒரு சக்தியை முனீந்திரர் இழந்தது போன்ற உணர்வடைந்தார். வெங்கட்ராமன் திருவண்ணாமலையிலே உள்ள அருணாசலத்தின் மலையை 1896ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன் முதலில் மிதித்தாரோ, அன்று முதல் 1907ஆம் ஆண்டுவரை, அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் அனைவரிடமும் மௌனமாகவே காட்சி தந்து கொண்டிருந்தார். அந்த மௌன விரதம் கணபதி முனீந்தரரின் சந்திப்பால் கலைந்து விட்டது. மௌனத்திலிருந்த பாலயோகிதான் பெற்றிருந்த சத்திய தரிசனத்தைச் சுவாமி, கணபதிக்கு முதன் முதவில் உபதேசமாக அருள் பாலித்தார். கணபதி அன்று யோகி இடத்திலேயே தங்கிவிட்டார். பழனிசாமி சாமியிடம், வெங்கட்ராம சாமியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். இந்தக் கணபதி முனீந்திரர்தான், வெங்கட்ராம சாமியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். இந்தக் கணபதி மூனீந்திரர்தான், வெங்கட்ராம சுவாமியின் திருப்பெயரை ‘ரமண மகரிஷி’ என்று மாற்றியமைத்தார். இந்தப் பெயர் தான் உலகமெங்கும் பரவியது. உலகம் அவரை ரமண மகரிஷி என்றே அழைத்து பெருமைப்பட்டது. கணபதி முனீந்திரர் சிறிது காலம் ரமண மகரிஷியோடு தங்கியிருந்தார். அப்போது மகரிஷி அவரிடம் சமஸ்கிருத மொழி, தெலுங்கு மொழி ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். அவை மட்டுமன்றி வேறு சில மொழிகளையும் புரியுமளவுக்குப் படித்தார். குறிப்பாக, அவர் தமிழ் மொழியில் கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்று, முதன் முதலாக ‘உள்ளத்து நாற்பது’ என்ற நூலைக் கவிதை வடிவிலே எழுதினார். அந்தக் கவிதை நூலை கணபதி முனீந்திரர் சமஸ்கிருத மொழியில் ‘சத்தரிசன்’ என்று பெயரிட்டு மொழியாக்கம் செய்தார். அதற்கு உரை எழுதியவர் கபாலி சாஸ்திரி என்ற சீடராவார். இந்த நூலுக்குப் பிறகு ரமண மகரிஷி பல நூல்களை எழுதினார். அவை பல உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. கணபதி முனீந்திரர் தனக்கு எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் ரமணரிடம் விடை தெரிந்து கொண்டார். அவற்றுள் ஒன்று ‘அஹம்’ பற்றியதாகும். ‘அஹம்’ பற்றி விசாரணை செய்வதால், விருப்பங்கள் நிறைவேறுமா? அல்லது மந்திரங்களும் தவமும் தேவையா? என்பதைப் பற்றி முனீந்திரர் ரிஷியைக் கேட்டார். அதற்கு அவர் ‘அஹம்’ பற்றிய ஆராய்ச்சியால் எல்லாவித சித்துகளும் கைகூடும். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டால், அந்த சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும்" என்றார். விரூபாட்சிக் குகையில் ரமணர் தங்கியருந்தபோது, நாட்டின் நானா பக்கங்களிலிருந்தும் மக்கள் ரமணரைக் கண்டு ஆசி பெற்றிட வருவார்கள். இந்த பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதைக்கண்ட குகையின் சொந்தக்காரர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்தார்கள். தன்னைக் காணவரும் பக்தர் பெருமக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பகவான் ரமணரிஷி அந்த இடத்தை உடனே மாற்றிக் கொண்டு சத்குரு என்ற குகைக்குப் போய் விட்டார். அங்கேயும் மக்கட் கூட்டம் திரண்டு வந்து கொண்டே இருந்தது. இந்துக்கள் பண்டிகைகள், திருவண்ணாமலை கோயில் விழாக்கள் அல்லது நகரில் நடைபெறும் வேறு, விழாக்கள், பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில், திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பொதுமக்கள், ரமண மகரிஷி ஆசிரமத்துக்கும் வந்து போவதை ஒரு வழக்கமாக உருவாக்கிக் கொண்டார்கள். அதனாலும் மக்கள் கூட்டம் பெருகி வந்தது. அன்னையுடன் ரமணர் ஊருக்கே மகன் மன்னனானாலும் மாதாவுக்கு அவன் மகன்தானே! எனவே, மகன் ரமணர் ஊராருக்கு மகானாக இருக்கலாம்; ஆனால், எனக்கு அவன் பிள்ளைதானே! அந்த பிள்ளை நல்ல உணவு இல்லாமல், நல்ல உடை உடுக்காமல், (கோவணாண்டியாய் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறானே! தினந்தோறும் அவன் திருமுகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலைதான் ரமணர் தாய்க்கு. தாய் அழகம்மாள் அதனால்தான் கடந்த முறை மூத்த மகன் நாகசாமியோடு திருவண்ணாமலைக்கு வந்தார். இந்த முறை அந்தப் பாக்கியம் கூட அந்த அன்னைக்குக் கிட்டவில்லை. ஏன் தெரியுமா? சென்றமுறை தனக்குத் துணையாக வந்த அந்த அம்மையின் மூத்த மகன், அதாவது ரமண ரிஷியின் அண்ணன், இந்த முறை தாயுடன் வரவில்லை காரணம் நாகசாமி இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார், அதனால் அழகம்மை தனியாகவே தனது மகனான ரமணரிஷியைக் காண வந்தார்! மூத்த மகனை இழந்த சோகத்தோடு இளைய மகனைக் காண வந்தார் அந்தத் தாய்! வெங்கட்ராமன் வீட்டை விட்டு வந்து விட்டபோது, தேடாத இடமெலாம் தேடி இறுதியாக திருவண்ணாமலையின் அருணாசலத்திலே சாமியாராக இருப்பதைக் கேள்விப்பட்டதும் திருவண்ணாமலைக்கு ஓடோடி வந்தாரே நெல்லையப்பர் என்பவர் அதாவது அழகம்மையாரின் கொழுந்தனார்; அவரும் காலமாகி விட்டார். இத்தகைய இழப்புகளால் வேதனையுடன் தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் திருவேங்கடத்தான் சந்நிதியான திருப்பதி ஏழுமலையானின் திருக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு, அப்படியே திருவண்ணாமலைக்கு வந்து மகனான மகான் ரமண மகரிஷியைப் பார்த்து விட்டுப் போகலாமே என்ற எண்ணத்தில் அழகம்மையார் அருணாசலம் விரூபாட்சி குகைக்கு வந்தாள். மகனைப் பார்த்தாள்! மகானைப் பார்க்க மக்கள் வரிசை வரிசையாக நிற்பதையும் தாயார் அழகம்மை பார்த்து மனம் பூரித்துப் போனார்! நமது பிள்ளையைக் காணவா இவ்வளவு பெரிய கூட்டம்! அடேயப்பா! என்று அவரை ஈன்ற போது பெற்ற இன்பத்தைவிடபெரும் மகிழ்ச்சியை அங்கே அனுபவித்தாள் அந்த தாய்! தீர்த்த யாத்திரையின் போது பல ஊர் தண்ணீர் அழகம்மை உடம்புக்கு ஒத்து வாராமையாலோ என்னவோ அந்த அம்மையார் திடீரென நோய் வாய்ப்பட்டாள்! பெற்ற தாய்க்கு அருமை மகன் ரமண மகரிஷி உடனிருந்து எல்லாப் பணிவிடைகளும் செய்தார். காய்ச்சல் கடுமையானது; அதன் அடையாளமாக ஜன்னியும் கண்டது. அப்போது ரமணமகரிஷி அருணாசலேசுவரர் மீது அம்மையே அப்பா, அன்னையின் நோயை குணப்படுத்து ஈஸ்வரா என்று பாடல் பாடித் துதித்து, தியானத்தில் ஆழ்ந்து போனார்! நீண்ட நேரமாக மகான் கண்களைத் திறக்காமல். கண் மூடியபடியே தேவாரம் ஓதினார்! பிறகு, கண் விழித்த மகரிஷி, காய்ச்சல் வேகம் தணிந்ததைக் கண்டு விபூதியை அன்னையின் நெற்றியிலே பூசினார்! நோயும் குணமானது! உடல் சுகமானதும், தாய் வீட்டுக்குப் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வழியனுப்பி வைத்தார். வீடு போய் சேர்ந்த அன்னை மகனுக்குத் தகவல் அனுப்பினார். அதன் பின்னாலே, ரமணருடைய தம்பி நாகசுந்தரத்தின் மனைவி குழந்தையைப் பெற்ற பின்பு மரணமடைந்து விட்ட செய்தியும் வந்தது. இந்த துக்கத்தைத் தாங்க முடியாத அழகம்மை, ஓராண்டு சென்றபின், அதாவது 1916ஆம் ஆண்டு அமைதியைத் தேடி மீண்டும் அருணாசலம் வந்து மகரிஷியிடமே தங்கிவிட்டார். இளம் வயது மனைவியை இழந்த நாகசுந்தரத்தால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நேரத்தில் மீண்டும் அழகம்மையார் நோயாளியானார்! தான் உயிர் பிழைப்பது அரிது என்று எண்ணிய அந்தத் தாய், நாகசுந்தரத்துக்கு எழுதிய கடிதத்தில் “எனது இரண்டு மகன்களையும் ஒரே இடத்தில் பார்த்து விட்டுச் சாக ஆசை” என்று எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் படித்த நாகசுந்தரம் அருணாசலத்துக்கு வந்து தனது தாயாரையும், மகான் ரமண ரிஷியையும் கண்டு தரிசித்தார். பிறகு தம்பியும் துறவறம் பூண்டு அண்ணனுக்குத் தொண்டரானார். அன்னை அருணாசலத்தில்! ரமணரும் அருணாசலத்தில்; அழகம்மையின் கடைசி மகன் நாகசுந்தரமும் அருணாசலத்தில்! மூவரும் ஒரே இடத்தில் தங்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மனநிறைவான வாழ்க்கை பெற்றார்கள். இந்த நேரத்தில் 1922ஆம் ஆண்டில் மே மாதத்தின் போது அழகம்மை மீண்டும் நோய்வாய்ப்பட்டார். நாளாக வியாதி முற்றியது அவளுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டதை ரமண மகரிஷி உணர்ந்து கொண்டார். தாயார் அருகிருந்து கடைசிவரை மகன் என்ற ததுை கடமைகளை, தாய் மனம் நிறைவு பெறும் அளவில் செய்தார். ஒரு நாள் தாயருகே வந்த ரமண மகரிஷி, தனது வலக்கையைத் தாய் நெஞ்சிலும், இடக்கையைத் தலையிலும் வைத்து ஆத்ம போதமளித்தார். மனக்கஷ்டங்கள் எல்லாவற்றையும் நீங்கி, அழகம்மை அமைதியானாள்! காலத்தோடு கலந்து விட்டாள்! பசுவான் ரமண மகரிஷி பெற்ற மாதாவுக்கு ஒரு சமாதி கட்டினார். அதன் மேல் ஒரு சிவலிங்கத்தை நாட்டினார்! அந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதிக்கு ‘மாத்ரு பூதேசுவரர்’ என்று அவர் பெயர் குட்டினார். மகரிஷியின் பெருமை தமிழ்நாட்டிலே மட்டுமன்று. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகத்திலும் பரவியது. அதனால், பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் பெருகி வந்து அவரிடம் அருளாசி பெற்றது. நாள் போகப் போக அவரது பெருமை இந்தியா முழுவதும் பரவியது. அவரைத் தரிசிக்க அயல் நாடுகளிலே இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தபடியே இருந்தார்கள். ரமண மகரிஷி அருணாசல மலையிலே இருந்து அடிவாரத்திற்கு வந்துவிட்டால், பக்த கோடிகள் அவரைத் தரிசிக்க வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் ரமண ரிஷியாரிடமே கேட்டுக் கொண்டார்கள். மகரிஷியும் கீழே வந்தார். பாலி தீர்த்தம் அருகே தங்கி, மக்களுக்கு அருளாசி அளித்தார். அங்கேதான் ரிஷி தங்கவேண்டும் என்று பக்தர்கள் விரும்பினார்கள். அவர்களது ஆசையை ரமணரிஷி ஏற்றார். அதற்கேற்ப அங்கே ரமணாசிரமத்தை மக்கள் நிறுவினார்கள். இரமண மகரிஷியாரின் தாயார் அழகம்மையின் சமாதிக்கு அருகில் ஒரு சிறு குடிசை கட்டினார்கள் மக்கள். மகரிஷி அங்கே தங்கினார்! ரமணரின் சீடர்களின் ஆசையாலும், ஆன்மிக அன்பர்களது அக்கறையாலும், பக்தர்களது ஆர்வ மேலீட்டினாலும் அங்கே ஓர் ஆலயம், விருந்தினர் தங்கும் விடுதி, வருபவர்கள் வசதிக்கான உணவு விடுதி ஆகியவை தோன்றின. இரமணாசிரமம் பேரின்பத்தை அடைய தியானமோ, தவமோ செய்பவர்களுக்கு வழிகாட்டிடும் ஞானாலயமாக மாறியது. அவ்வாறான மாற்றங்களுக்குப் பிறகு, கட்டங்கள் தோன்றின; மக்கள் குடியேற்றங்கள் பெருகின; வாழ்க்கையில் மன அமைதி காணும் மலர்த் தோட்டமாக ரமணாசிரமம் காட்சி தந்தது. இரமண மகரிஷியின் போதனைகள்! ** அ**ருளாளர் ரமண மகரிஷியின் ஆன்ம போதனைகளையும் புன்முறுவலையும் நெருக்கமாகக் கேட்டுப் பழகியவர்களில் பெரும்பாலோர், அவருக்குரிய ஞான குருகுல மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். பூசாரி பழனிசாமியாரைப் போல துறவுத் தொண்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதே போல பல அடியவர்கள் ரமணாஸ்ரமத்தில் தங்கி அடிக்கடி ஞானோபதேசங்களையும் கேட்டு அவர்களும் வழிகாட்டிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள். அவ்வாறு வழிகாட்டியாக வாழ்ந்த ஓர் அடியார் குறித்து வைத்த போதனைகளே கீழ்க்கண்ட உபதேச மொழிகள். தீமைகளுக்குக் காரணம் கர்மாவா? வட இந்தியாவிலே இருந்து ரமணா ஸ்ரமத்துக்கு ஒருவர் வந்தார். அவர் பாட்னா நகர்வாசி. அவர் அருணாசலம் வந்தபோது சில யோகிகளின் வம்படி வழக்குகளிலே சிக்கி சீற்றத்துடன் மகானைக் காண வந்தார். அந்தக் கோபத்தோடு அவர் ரமணரிடம் வாதித்த சம்பவம் இது. உலகத்தில் ஏன் அதிகமாக தீமைகள் வளர்ந்து வருகின்றன? நல்லவர்களை விட தீயவர்கள் எல்லா வகையிலும் சுகமாக வாழ்கிறார்களே ஏன்? இவற்றுக்கெல்லாம் காரணம் எது? கர்மாவா? தீமைகள் பலவற்றுக்கும் துன்பங்கள் பலவற்றுக்கும் காரணமான கர்மா, இவ்வாறு பலரிடம் பலவிதமாக ஏன் இருக்கிறது? என்று வட இந்தியர் கேட்டார். கர்மா பற்றி ரமண மகரிஷி கோபமாக வந்திருந்த அந்த வட இந்தியரின் முகத்தை ஒருதரம் உற்றுப் பார்த்தார். அவர்களது உள்ள உணர்ச்சிகளை மகரிஷி நன்கு புரிந்து கொண்ட பின்பு, அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அன்புடன் பதில் கூறினார். கர்மாவைப் பற்றிக் கேட்டீர்கள். அது யாருடைய கர்மா? இரண்டு வகைகளிலே கர்மா உண்டாகிறது. ஒன்று இறைவனுடையது. மற்றொன்று மனிதனுடையது. கடவுளுடையது தனிப்பட்டது. அதனால் அது கர்மாவிலே இருந்து விடுபட்டது. மனிதன் வேறுபட்டவன். எனவே கர்மா பலவகையானதாகின்றது. தன்னிலிருந்து தானே மனிதன் பிரிந்து கொண்டால், வேறுபட்ட மனிதர்கள் இருக்க மாட்டார்கள். வேறுபட்ட பல கர்மாக்களும் இருக்கா. இன்னல்களும், துன்பங்களும் மறையும் சொர்க்கத்தைக் காண்பவன் யார் தெரியுமா? தன்னிலிருந்து தானே பிரிந்தவன் தான். அவனால்தான் காண முடியும் சொர்க்கத்தை! மற்றவர்கள் நரகத்தைத்தான் காண்பார்கள். ஒருவன் தீமை செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தீமையானது விரைவில் அல்லது சற்று தாமதத்தில் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பது சான்றோர்கள் அனுபவம். இவ்வாறு நடப்பது ஏன்? தான் என்பது எல்லோரிடத்தும் ஒன்றே. மற்றவரை நீ பார்க்கும்போது, நீயே உன்னை, அவர்கள் உருவங்களிலே பார்த்துக் கொள்கிறாய். நீ மற்றவர்களிடம் அன்போடு பழக வேண்டும். ஏனென்றால் அவனுள் நீ இருக்கிறாய். நீ உன்னை நேசிப்பது போல மற்றவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதன் உட்பொருள் இது. இதைக் கேட்ட வடநாட்டுக் குழுவினர் மனநிறைவு கொண்டார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக மற்றோர் அன்பர் மகரிஷியைப் பார்த்து, ‘சுவாமி, மரண பயத்தை நீக்கிக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டார்!’ அதற்கு சுவாமி: மரண பயம் நீங்க மார்க்கம் அன்பனே! எப்போது உன்னைப் பயம் பற்றிக் கொள்கிறது? கனவு காணும் தூக்கத்தின் போதா? அல்லது மயக்கத்தில் உனது உடலை நீயே காண முடியாத நிலையிலா? என்று சிந்திக்க வேண்டும் நன்றாக நீ விழித்துக் கொண்டிருக்கும் போது தான் சாவு பயம் உன்னைப் பற்றுகிறது. உனது உடலைப் பற்றி நீ நினைக்கும் போது பயப்படுகிறாய்! கனவு இல்லாத தூக்கத்தின் போது, இருப்பது போல் நீ நீயாகவே இருந்து, மற்றவர்களைப் பாராமலிருந்தால் மரண பயம் உன்னைப் பீடிக்காது, அண்டாது. மறுபிறப்பு மகரிஷி கருத்து கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் நகரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் மறுபிறப்பு பற்றி அறிய விரும்பி ஒரு வினா தொடுத்தார் மகரிஷியிடம். ‘இறப்புக்கும் - மறுபிறப்புக்கும் இடையில் 50 முதல் 10,000 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்’ என்று கூறப்படுகிறதே ஏன்? என்று அவர் கேட்டார். ஒரு விதமான மன விழிப்புத்தன்மைக்கும், மற்றொரு நிலையில் மனோ விழிப்புத் தன்மைக்கும் அளவு கோலாக உள்ளதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லாவித அளவு கோல்களும் கற்பனைதான். எனவே, எல்லாமே தவறானவை. சிலர் நீண்ட காலத்தையும் வேறு சிலர் குறைந்த காலத்தையும் எடுத்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதுபோல் வருவதும் செல்வதும் ஆன்மா அன்று என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய மனம் தான் அப்படித் தோன்றச் செய்கின்றது. எந்த நிலையிலிருந்து இயங்க வேண்டியதிருந்தாலும், மனமானது அதற்கேற்றாற்போல ஓர் உடலை உண்டாக்கிக் கொள்கிறது. இந்த உலகில் ஒரு மானுட உடல், கனவுலகில் ஒருகனவு உடல். இந்தக் கனவு உடல் கனவுலகில் பெய்யும் மழையால் நனைகிறது. நோயால் தாக்குறுகிறது. மரணத்திற்குப் பிறகு அது சிலகாலம் இயங்காமல் இருக்கிறது. கனவில்லாத் தூக்கம் போல. எனவே, அது உடலில்லாமல் இருக்கிறது. சீக்கிரமே அது புதிய உலகில், புதிய உடலில் இயங்க ஆரம்பிக்கின்றது. ‘மறுபிறப்பு’ என்று சொல்லப்படுகின்ற மற்றோர் உடலில் இயங்கும் வரை இவ்வாறு செய்கிறது. ஆனால், தன்னைத்தானே உணர்ந்து கொண்ட ஞானியின் மனமானது. மானிட உடலின் அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்ட காரணத்தால், மரணத்தினால் அவன் பாதிக்கப்படுவதில்லை. அவனது மனமானது மறுபடியும் எழுந்து பிறப்பையும், மறுபிறப்பையும், வாழ்க்கையையும் மரணத்தையும் ஏற்படுத்துவதில்லை. உண்மையான இறப்போ அல்லது உண்மையான பிறப்போ கிடையாது என்பது இதனால் நன்றாகப் புரிகிறது. மனந்தான் இதுபோன்ற பிரமிப்புக்களை உருவாக்குகின்றது. ஆத்மா ஞானம் அடையும் வரை, இவ்வகையான உண்மை போன்ற பிரமைகள் தொடர்கின்றன.  தம்முடைய மகனை இழந்துவிட்ட வேதனையில் கடவுளிடமும், மகரிஷியிடமும் நம்பிக்கை குன்றிய ஒரு குரு குல அடியார் நீண்ட நாட்களாக ஆசிரமத்துக்கு வராமலிருந்தார். பிறகு ரமண மகரிஷியிடம் இது குறித்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்ற தீர்மானத்துடன் அவரைக் காண வந்தார். ரமணரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்ற முன் கூட்டிய திட்டத்துடனே அவர் வருகை தந்தார். வந்தவர்: சுவாமி, நம்பிக்கை என்றால் என்ன? என்றார். மகரிஷி: நம்பிக்கை, அன்பு, கருணை எல்லாம் உன்னுடைய தன்மைகளே நீதான், என்றார். வந்தவர்: அப்படியானால், நம்பிக்கை, கருணை எல்லாம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதால் வருகின்றன. எனவே, நம்பிக்கை, அன்பு என்று நாம் அழைத்தவை மாறுபடும். உண்மையாகவும் இருக்காது. அப்படித்தானே? “ஆமாம்.” “துன்பம் என்பது ஒரு நினைவுதானா?” “எல்லா நினைவுகளுமே துன்பங்கள்தாம்” “இன்பம் தரக்கூடிய நினைவுகளும் துன்பம் அளிப்பவையா?” “ஆமாம், களங்கமற்ற, மகிழ்ச்சியான, தன்னைத்தானே உணருதலிலிருந்து ஒருவனுடைய கவனத்தைத் திருப்புவதனால், அவையும் துன்பம் தருபவையே.” “மகரிஷியை அருணாசலத்திற்கு வரவழைத்தது என்ன?” “உன்னை இங்கே வரச் செய்தது எது?” “அதன் மூலமாக, நீங்கள் மதுரையிலே இருந்து புறப்பட்ட நாள் முதல் இன்றுவரை உங்களுடைய ஆன்ம நோக்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று நான் அறிய விரும்புகிறேன்.” “எதுவும் இல்லை. எவ்வித மாறுதலும் இல்லாமல் இதே அனுபவம் தொடர்ந்து உள்ளது.” “அப்படியானால், அருணாசல சுவாமியைப் புகழ்ந்து பாடல்களை மகரிஷி எழுதக் காரணம் என்ன? அவருக்காகவா? அல்லது மக்களுக்காகவா?” “நான் ஏன் எழுதினேன் என்று எனக்கே தெரியாது. உங்களுக்காக என்றும் கூட ஒரு வேளை இருக்கலாம்.” “வாழ்க்கை என்றால் என்ன?” “சாதாரணமாகக் கூறுவதானால், வாழ்க்கை , என்பது உடல், ஆன்ம நோக்கில் கடைசியாகத் தன்னைத்தானே அறிந்து கொள்ளுதல், எவ்விதம் நீ, ஒன்றை நோக்குகிறாயோ, அதைப் பொறுத்தது அது.” “மரணம் என்பது என்ன?” “ஒருவனுடைய கடைசியான உண்மைத் தன்மை.” “தற்கொலை செய்து கொள்வது தவறான காரியமா?” “ஒரு பாவமும் அறியாத உ.டலைக் கொல்வது மிகப் பெரிய தவறு. தொல்லைகளுக்கு இருப்பிடமான மனதைத்தான் தற்கொலை செய்ய வேண்டும். எதையும் உணராத உடலை அல்ல. மனம்தான் உண்மையான குற்றவாளி. கவலைகளுக்கு இருப்பிடமாக இருப்பதனால் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. ஆனால், தவறான கருத்து காரணமாகப் பாவமறியாத உடல்தான் தண்டிக்கப்படுகிறது.” மறுபிறப்பு பற்றி மகரிஷி கருத்து தன்னுடைய கணவரை இழந்த ஒரு பெண்மணி மகரிஷியிடம் மறுபிறப்புப் பற்றிக் கேட்ட கேள்வி இது. “மறுபிறப்பு இருக்கிறதா?” “பிறப்பு என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?” “தெரியுமே. நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், வருங்காலத்தில் இருப்பேனா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.” “இறந்த காலம்….! நிகழ்காலம்… எதிர்காலம்.” ஆமாம், நேற்றைய முடிவுதான் இன்று. இன்று என்பது நாளை எதிர்காலம் என்பது இன்றைய முடிவாகும். நான் சொல்வது சரிதானா? “இறந்த காலம் என்றோ, எதிர்காலம் என்றோ எதுவும் கிடையாது. நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. நேற்று என்பது நீ அனுபவிக்கும் போது அது நிகழ்காலமாக இருந்தது. அதுபோன்றே நாளையும் நீ அதை அனுபவிக்கும்போது நிகழ்காலமாய் இருக்கும். நிகழ் காலத்தின்போதுதான், நீ அனுபவிக்கிறாய், அனுபவத்திற்கு அப்பால் எதுவும் இல்லை.” “அப்படியானால், கடந்த காலம், எதிர்காலம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையா?” “ஆமாம். நிகழ்காலம் என்பது வெறும் கற்பனைதான். நோத்தைப் பற்றிய நினைவு எல்லாம் மனத்தளவில் இருப்பதால், நிகழ்காலமும் கற்பனையே. அதுபோலவே, வான்வெளியும் கற்பனைதான். ஆகையால், நேரத்தாலும், வானவெளியாலும் நிகழும் பிறப்பும், மறுபிறப்பும் கற்பனையைத் தவிர வேறில்லை.” உலகம் எவ்வாறு தோன்றியது? எல்லாத் துறைகளிலும் நன்கு அறிவு நுட்பம் கொண்ட ஒரு வட இந்தியர், “இந்த உலகம் எவ்வாறு தோன்றியது?” என்ற வினாவைத் தொடுத்தார். அதற்கு என்ன காரணம்? என்றொரு துணை வினாவையும் கேட்டார். அதற்கு மகரிஷி அளித்த பதில். “உனக்கென்று சொந்தக் கவலைகள் எதுவுமே கிடையாதா?” இருக்கின்றது. ஆகையால்தான். நான் வாழ்க்கை, இறப்பு பற்றி அறிய விரும்புகிறேன். “ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்போமா? யாருக்கு வாழ்வு? உயிர் யாருக்கு இருக்கிறது? உதாரணமாக உயிர் இருக்கிறதா உனக்கு?” “நான், என்னுடைய உடலைப் பார்ப்பதால், நான் உயிருடன் இருப்பதாக உணர்கின்றேன்.” “நீ, எப்போதுமே உனது உடலைப் பார்க்கிறாயா? நீ, தூங்கச் செல்லும்போது, அந்த உடலுக்கும் இந்த உலகத்திற்கும் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா?” “அது எனக்குத் தெரியாது. மர்மமாக இருக்கிறது அது.” “உனது உடலுக்கு என்ன நேருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தால், நீ இல்லை என்று சொல்ல முடியுமா?” “எனக்குத் தெரியாது.” “அப்படியானால், நீ இப்போது இருக்கிறாய் என்பதை எப்படி அறிந்து கொள்கிறாய்?” “நான் இப்போது உணர்வுடன் இருக்கிறேன். நான் நகருகிறேன். சிந்தனை செய்கிறேன்; ஆகையால், நான் இருப்பதை உணர்கிறேன்.” “திருவண்ணாமலையில் நீ படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறபோதும் கூட, உனது உடல் நகர்ந்து கொண்டும், சிந்தனை செய்து கொண்டும், பல இடங்களில் சுற்றிக் கொண்டும் இருப்பதை, நீ பார்க்கிறாய்-இல்லையா?” “இது மர்மமாக இருக்கிறது. நான் என்றும் உள்ளவன்-இருக்கிறேன் என்றும், என்னுடையதுதான் என்னும் பெருமை மட்டும் மாறுவதாகச் சொல்லலாமா?” “அப்படியானால், நீ இரண்டு ஆட்களாக இருப்பதாய் நினைக்கிறாய். அப்படி இருப்பது முடியக் கூடிய காரியமா? நம்பக் கூடிய சம்பவமா?” “அவ்வாறானால், எனக்குக் கருணை கூர்ந்து உண்மைக்கு வழி காட்டுங்கள்.” சினிமா, நிழற்படம் காண்பிக்கப்படும் திரை போல உண்மை என்றும் அழிவில்லாதது. படங்கள் அதில் காட்டப்படும் போது, மறைந்து இருக்கிறது. படம் நிறுத்தப்பட்ட பிறகு, அங்கிருந்த உண்மைப் பொருளான திரை நன்றாகத் தெரிகிறது. அதுபோல, மனிதர்கள், எண்ணங்கள், பொருட்கள், நிகழ்ச்சிகள் எல்லாமே படங்கள்தான். அவை சுத்தமான உணர்வென்னம் திரையில் ஓடும் உருவங்களும் நிகழ்ச்சிகளும் மறைந்துபோகும். உணர்வு மட்டுமே மிஞ்சி என்றைக்கும் இருக்கும். என்ன புரிந்ததா? அல்லது மீண்டும் ஏதாவது சந்தேகம் வருகின்றதா?" “புரிந்தது சுவாமி; உணர்ந்து கொண்டேன் உண்மையை.” மனமே! துன்பத்தின் கர்த்தா இந்த உலகம் தோன்றியது; அல்லது படைக்கப்பட்டது இன்பங்களை அனுபலிக்கவா? அல்லது இன்னல்களோடு போராடிக் கொண்டு இருக்கவா? என்ற ஐயம் சிலருக்கு எழுகின்றது. அந்த சந்தேகங்களுக்குப் பதில் சொல்லும் வகையில் மகரிஷி குறிப்பிட்டதாவது: "இந்த உலகப் படைப்பு நல்லதுமன்று; அதே நேரத்தில் கெட்டதுமன்று. தன்னுடைய எண்ணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மனம்தான் எல்லாவற்றையும் உண்டாக்குகின்றது. ஒரு பெண், பெண்ணாகத்தான் இருக்கிறாள். ஆனால், ஒரு மனம் அவளை அம்மா என்று அழைக்கின்றது. மற்றொரு மனம் சகோதரி என்று கூப்பிடுகின்றது; இன்னொரு மனம் அத்தை என்று சொல்லுகின்றது. எனவே, ஆண்கள் பெண்களை விரும்புகிறார்கள். பாம்பை வெறுக்கிறார்கள். சாலை ஓரத்தில் கிடக்கும் கல்லையும், புல்லையும் யாரும் மதிப்பதில்லை; கவனிப்பதுமில்லை. இந்தத் தொடர்புகள் தாம் இந்த உலகத்தின் துன்பங்களுக்குக் காரணம். “உலகப் படைப்பு அரச மரம் போன்றது; பறவைகள் அதிலே உள்ள பழத்தைத் தின்ன வருகின்றன; அவற்றின் கூடுகளை அந்த மரத்திலே கட்டிக் கொள்கின்றன; மனிதர்கள் அந்த மரத்தின் அடியிலே களைப்பாறுகிறார்கள். ஆனால், அதே மரத்தில் சிலர் தூக்குப் போட்டுக் கொண்டு சாகின்றார்கள். மரம் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தனது பயன்பாடுகளை உணராமல் வழக்கம் போலவே மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது.” “மனித மனம்தான் கவலைகளை உண்டாக்குகின்றது. பின்னர் அதே மனம் தான் பிறர் உதவிகளுக்காக அழவும் செய்கின்றது. ஒருவனுக்கு மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்குக் கவலைகளை மட்டுமே கொடுத்திட கடவுள் என்ன ஓரவஞ்சகரா? படைப்பில் எல்லாவற்றுக்குமே இடம் இருக்கிறது. ஆனால், மனிதன் நல்லவற்றைப் பார்க்க, நல்லவற்றை எடுத்துக் கொள்ள, அதன்படி நடந்து கொள்ள மறுக்கிறான்.” “மனிதன் அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. சுவை மிக்க உணவுப் பொருள்களை எதிரே வைத்துக் கொண்டு, அவற்றை வேண்டுமளவு எடுத்து உண்ணாமலே பார்த்துக் கவலைப்படும் பசித்த மனிதனைப் போல நடந்து கொள்கிறான்; வாழ்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா?” “அதிருஷ்ட வசமாக எல்லையில்லாக் கருணையுடன் கடவுள் மனிதர்களை மன்னித்து விடுகிறார். மனிதர்களுக்காக நீதி நெறிகளை, ஞான நூல்களை, சான்றோர்களை, வேதங்களை அளித்து அவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்திடப் பார்க்கிறார்.” “இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் எல்லாம் எதற்கும் உதவாதவை. துன்பங்களை, வேதனைகளைக் கொடுப்பவை என்றும் தெரியும். தெரிந்தும் கூட நாம் இன்பங்களையே தேடிச் செல்லுகிறோம். இதற்கு எப்படி ஒரு முடிவு காண்பது?” “கடவுளைப் பற்றி சிந்தனை செய்; நினைத்துக் கொண்டே இரு; எல்லாப் பற்றுக்களும் உன்னை விட்டு விலகி ஓடும். ஆசைகள் எல்லாம் ஒழிந்து பின்பு கடவுளைத் தொழுவோம். பிரார்த்திப்போம் என்று நினைத்தால், நீ பலகாலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.” என்று மகரிஷி அனைவருக்கும் அருளுரை கூறினார். இறையருள் பெற குரு ஒருவர் தேவை இறைவனை நினைத்து இவ்வுலகப் பற்றுக்களை விடுதற்கும், நல்வழிகளை நாடுவதற்கும், பரமனடி அடைவதற்கும் ஒரு குருவர் தேவை. இதுபற்றி மகரிஷி கூறிய கருத்துக்கள். இரமண மகரிஷியை நேரில் சந்தித்து, அவரைத் தனது ஞான குருவாக ஏற்றுக் கொள்ள நினைத்த ஒருவர், “நான் பல நூல்களைக் கற்றுள்ளேன்! அவற்றை மீண்டும் மீண்டும் சிந்தித்துள்ளேன். ஒருவரை நல்வழிப்படுத்த தனியாக ஒரு குரு தேவையில்லை என்று அந்த நூல்கள் கூறுகின்றன. பல ஆண்டுகள் அந்த நூல் கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தேன். ஆனால், ஆன்ம விடுதலைக்குச் செல்லும் கடினமான பாதைக்கு வழிகாட்டிட ஒரு ஞான குரு தேவை என்பதை இப்போது உணர்ந்து விட்டேன். மகரிஷி அவர்களே! எனக்கு ஆன்மஞான குருவாக தின்று நல்வழிப்படுத்த வேண்டுகிறேன்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு மகரிஷி என்ன பதில் கூறினார் தெரியுமா? இதோ அவை…" எல்லா வேதங்களும் ஆன்ம குரு வேண்டுமென்றுதான் அறிவுறுத்துகின்றன. நீ வேண்டிச் செல்லும் முடிவான ‘நான்’ என்பவர்தாம் குரு, ஆண்டவனை வேண்டிச் செல்பவனுடைய மனமானது அறியும் படியாக, அது ஒரு மானிட உருவம் எடுத்துக் கொள்கிறது. மானிடனின் அறியாமையைப் போக்குவதற்காகக் கடவுள் அல்லது குருதான், மனித உருவில் வருவதாகத் தாயுமானவர் கூறுகிறார்." அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ராய் என்பருக்கு இதே சந்தேகம் எழுந்தது. கீழ்க்கண்ட கேள்விகளை அவர் ரமணரிடம் கேட்டுத், தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.  “சிலர், நீங்கள் குரு தேவையில்லை என்று கூறியதாகச் சொன்னார்கள். சிலர், இதற்கு நேர்மாறாகத் தாங்கள் கூறியதாகவும் சொன்னார்கள். மகரிஷி இக் கருத்துக்களைப் பற்றிக் கூறுவது என்ன?” என்று அந்தக் கல்வியாளர் நேரில் கேட்டார். அந்த வினாவுக்கு மகரிஷி விடையளித்த போது, “குரு தேவையில்லை என்று நான் எப்போதுமே கூறியதில்லை” என்றார். அதற்கு அந்த நூல் பல கற்ற கல்வியாளார்; மகான் அரவிந்தரும், மற்றவர்களும் உங்களுக்குக் குருவாக யாருமே இருந்தது கிடையாது என்று கூறுகிறார்களே…." என்ற சந்தேகத்தை ரமணரிடம் எழுப்பியபோது, “இவை எல்லாம் நீ எதைக் குரு என்று அழைக்கிறாய் என்பதைப் பொறுத்தது. அவர் மனித உருவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.” "தத்தாத்தேயருக்கு இருபத்து நான்கு குருக்கள், பஞ்ச பூதங்களும் - நிலம், நீர் அனைத்துமே. இந்த உலகில் உள்ள எல்லாப் பொருள்களுமே அவருக்குக் குருவாக இருந்தன. எனவே, குரு ஒருவர் அவசியம் தேவை. உபநிடதங்கள், குருவால் மட்டுமே ஒரு மனிதனைக் கடவுளிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று கூறுகின்றன. ஆகையால் ஆன்ம நல்வழிப் பாட்டுக்கு ஓர் ஆன்ம குரு அவசியம் தேவையே என்றார் மகரிஷி. மகான் கூறியதைக் கேட்டுக் கொண்ட அந்த நூல் வல்லார்; மீண்டும்; “நான் சொல்வது மானிட உருவில் உள்ள குரு ஒருவரை. மகரிஷிக்கு அப்படிப்பட்டவர் யாரும் இல்லையே.” "ஒரு சமயத்தில் இல்லாது போனாலும், வேறொரு சமயத்தில் நான் பெற்றிருக்கலாம். ஆனால் நான் அருணாசல சுவாமியைப் பற்றிப் பாடவில்லையா?  “முதலில் மனிதன் தன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி கடவுளிடம் வேண்டுகிறான். தன்னுடைய ஆசைகளை விட்டு, கடவுளை அடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் காலமும் வரும். மனிதனுடைய தேவைக்கும், பிரார்த்தனைக்கும் ஏற்றவாறு கடவுள் மனித உருவிலோ, அல்லது மற்ற உருவிலோ தோன்றி அவனுக்கு வழிகாட்டித் தன்னுள் அழைத்துக் கொள்கிறான்.” என்றார் மகரிஷி! இந்த நேரத்தில் ரமணாஸ்ரமத்திற்கு அமெரிக்க யாத்ரிகர்கள் சிலர் வந்திருப்பதாக, மகரிஷியின் அணுக்கத் தொண்டரான பழனிசாமி என்ற சாமியார் ஓடிவந்து மகரிஷியிடம் கூறினார்! வந்த அமெரிக்க யாத்ரிகர்கள் ரமண மகரிஷியைச் சந்தித்து ஆசி பெற்றார்கள். நாளை மீண்டும் சந்திப்போம். ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறுங்கள் என்று மகான் கூறவே, பழனிசாமி சாமியார் எல்லா வசதிகளையும் அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அமெரிக்க ஐரோப்பியருடன் மகரிஷி மகரிஷி ரமணர் ஆசிரமத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், கிறித்துவத்தைப் பரப்பிட வந்த பாதிரியார்கள் போன்ற அறிவுடையார் எல்லாம் சில நாட்களாக தங்கியிருந்தார்கள். அவர்கள் ஏன் அங்கே தங்கியுள்ளார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. மகரிஷி எல்லா அயல் நாட்டாரிடமும் பாசத்தோடும் நேசத்தோடும் பழகி, அவர்களுக்குரிய விருந்துபசாரங்களை எல்லாம் செய்து கொடுத்தார். ரமணர் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுள் ஒருவர் எழுந்து, “கடவுள் உருவத்தில் எப்படி இருப்பார்? மனிதனைப்போல இருப்பாரா?” என்று கேட்டார். இரமணர். ‘ஆமாம்’ என்றார்! உடனே அந்த அமெரிக்கர் மீண்டும் மகரிஷியை நோக்கி, “அப்படியா! கண், காது, மூக்கு ஆகிய உறுப்புக்களுடனா?” என்றார். ‘ஆமாம்’, உனக்கு அந்த உறுப்புக்கள் இருந்தால், கடவுளுக்கு ஏன் இருக்கக் கூடாது? என்று ரிஷி அவரை மறு கேள்வி கேட்டார். “இந்து மத நூல்களில் கடவுளுக்கு இந்த அவயங்கள் எல்லாம் உண்டு என்று நான் படித்த போது, எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.” என்று அந்த அமெரிக்கர் கிண்டலடித்தார் ரமண மகரிஷியிடம்! உடனே மகரிஷி அவரை நோக்கி, "உனக்குக் கண், காது, மூக்கு ஆகியவை இருப்பது பற்றி நீயே ஏன் சிரித்துக் கொள்ளவில்லை? என்றார். அமெரிக்காவிலே இருந்து வந்தவர்கள் பலவித எண்ணங்களை உடையவர்களாக இருந்தார்கள். ஒருவர் கடவுள் எந்த உருவில் இருப்பார் என்ற சந்தேகம் தீர வந்தவர்; மற்றவர் சித்தர் என்றால் யார்? அவரைப் பார்க்க வேண்டும் என்று வந்தவர், அடுத்தவர் இப்படிப்பட்ட சந்தேகங்களைப் புரிந்து கொண்டு, அதை அமெரிக்க நண்பர்களிடம் சொல்லி தற்பெருமை பெற வேண்டும் என்ற நோக்குடையவர்; இன்னொருவர், இவ்வாறு - திரட்டிய கருத்துக்களைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற சிந்தையுடன் வந்தவர். இப்படிப்பட்டவர்களுள் ஒருவரான சித்தர்களைப் பார்க்க வந்தவர், சித்தர்கள் எல்லாம் மலைமேலேதான் வாழ்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அமெரிக்கா செல்வதற்கு முன்பு அருணாசலம் மலை முழுவதும் சுற்றி அலைந்தார். சித்தர் ஒருவரைப் பார்க்காமல் அமெரிக்கா திரும்பக் கூடாது என்ற வைராக்கியத்தோடு இரவு நேரத்தின் இருட்டிலும் சுற்றிக் கொன்டே அலைந்தார். ஆசிரமத்துக்கு அயல்நாடுகளிலே இருந்து வருபவரை தக்க முகவரியுடனும், தகுதி நிலையோடும் தங்க வைப்பது ஆசிரம அன்பர்கள் பொறுப்பு. அதற்கேற்ப, சித்தர்களை பார்க்க வந்தவரைக் காணவில்லை என்ற சந்தேகம் ஆசிரமத்தில் அலை மோதியது. ஆளுக்கொரு திசையாக அந்த அமெரிக்கரை ஆசிரமவாசிகளும் பொதுமக்களும் தேடிக் கொண்டிருந்தார்கள். ரமணர் பழனிசாமியிடம் ஒரு பெரும் விளக்கைக் கொடுத்து ஆளுக்கொரு மூலையாக விளக்கை ஏந்திக் கொண்டே தேடுங்கள் என்றார். அதற்கேற்ப கடைசியில் பெரும் பாடுபட்டு அலைந்து அந்த அமெரிக்கரை தேடித் அழைத்து வந்து விட்டார்கள். சித்தர்களைத் தேடியலைந்தவர், தனது தேடலையும் அதன் தொடர்பாக அவர் கண்ட காட்சிகளையும் கூறியபடியே, மகரிஷியை நோக்கி, “மகரிஷி அவர்களே! ஆத்ம ஞானத்தை எனக்குக் கொடுங்கள்; நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவனாக இருப்பேன்” என்று பணிவோடு வேண்டினார். மகரிஷி அதற்கு ஏதும் பதில் பேசாமல் ம்…ம்…. என்றார். மறுபடியும் அவர் “ஆத்ம ஞானத்தை எனக்குக் கொடுங்கள். நாளை நான் இந்த ஊரை விட்டே போய் விடுகிறேன்; எப்போதும் நான் ரிஷியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். அதற்கு மகரிஷி, ஒரு போதும் நீ இந்த இடத்தை விட்டுப் போக மாட்டாய் என்றார். அதற்கு அந்த அமெரிக்கர் அச்சப்பட்டார். எங்கே தனது சித்துக்களைப் பயன்படுத்தி, நம்மைப் போகவிடாமல் ரிஷி செய்து விடுவாரோ என்ற பயத்தில் எனக்கு எனது ஊரில் மிக முக்கியமான வேலை உள்ளது. நான் போகும் பாஸ்போர்ட்டும் தயாராக உள்ளது. திரும்பிப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்ட என்னை, மகரிஷி எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறார்? என்று மகரிஷியையே அவர் கேட்டார். மகரிஷி நீ ஒரு போதும் போக மாட்டாய். ஏன் தெரியுமா? நீ இங்கே வரவில்லை. கப்பல், ரயில், கார். இவைதானே உம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்தன: இங்கு வந்து நீ சேருகின்ற வரையிலும் ஒன்றும் செய்யவில்லையே, சும்மாதானே நீ உட்கார்ந்திருந்தாய்? என்றார். மகரிஷி தனக்குரிய சித்துக்களால் எங்கே தன்னைத் தடுத்து நிறுத்தி விடுவாரோ என்று பயந்துபோன அந்த அமெரிக்கர், ஒன்றும் அவ்வாறு நடவாது என்ற நம்பிக்கை பெற்றார். அமெரிக்காவின் அமோக வியாபாரத்திலும், மற்றவற்றிலும் பெரும் புள்ளியாக உள்ள அவர் எப்படி மீண்டும் அமெரிக்கா திரும்பாமல் இருப்பார். அத்தகைய பணப்பற்றுடைய ஒரு வியாபாரி, எவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைய முடியும்? பிராமண அன்பர் ஒருவர் வந்தார் மகரிஷியிடம் அருளாசி பெற. அவர் மகரிஷியைப் பார்த்து, ‘சுவாமி, அறியாமை மிக்க நாம் நிறைய படிக்கின்றோம். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், நாம் அதிக அளவு படித்ததும் உண்மையானது விலகிக் கொண்டே போகிறது..’ ‘மேல் நாட்டு வேதங்களையும் படித்தேன். அவை எதற்கும் உதவவில்லை. நம்முடைய மகான்கள் தங்களுக்குள்ளேயே மாறுபட்டு வேறுவேறு வழிகளைச் சொல்கின்றார்கள்.’ ‘நான் பிரம்மம் நான் பிரம்மம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இரு. நீ பிரம்மம் ஆகிவிடுவாய் என்று சங்கரர் கூறுகிறார். ஆன்மா ஒரு போதும் பிரம்மத்திடமிருந்து பிரிவதில்லை’ என்று மத்வாச்சாரியார் கூறுகிறார்." “நான் யார்? என்று கேட்டுக்கொள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், வேறு சில தீர்க்கதரிசிகள் வேறு விதமான வியாக்கியானங்களையும், வழிகளையும் கூறுகிறார்கள். என்னைப் போன்றோர் யார் கூறுவதை நம்பி நடப்பது சுவாமி” என்று கேட்டார். மகரிஷி ரமணர், இவன் பதில் கூறுவதற்குரியன் அல்லன் என்று எண்ணியோ - என்னவோ அவர் இதற்குரிய பதிலைக் கூறவே இல்லை. அந்த நேரத்தில் ஒருவர் கூட்டத்திடையே எழுந்து கம்பீரமான குரலில், ’சுவாமி, நான் எந்த வழியில் போவது? என்றார். மகரிஷி அவ்வாறு கேட்டவரை, கையசைத்துக் காட்டி, ‘நீ வந்த வழியே போ’ என்றார். அப்போது இயேசு மதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பிட வந்த கிறித்துவப் பாதிரியார் ஒருவர் ரமணாசிரமத்துக்கு வந்திருந்தார். அவருடன் ஐரோப்பியர்கள் சிலரும் இருந்தார்கள். வந்த அந்த இயேசு மத பேச்சாளர் பைபிள் போதிப்பதில் சிறந்து விளங்கியவர். ’இந்தப் பாதிரி இத்தகையாளர் என்ற அடையாளம் ரமண மகரிஷிக்குத் தெரியாது. அவர் மகரிஷி முன்பு வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். அப்படி அவர் பேசத் துவங்கியதும், அவரது நேர்முக உதவியாளர் என்று கூறிக் கொண்ட ஒரு பெண்மணி, உடனே நோட்டும் பேனாவும் ஏந்திக் கொண்டு, என்ன பேசுகிறார் பாதிரி, என்பதை எழுதிக் கொள்ளத் தயாரானார். பாதிரியார் எல்லா இடங்களிலும் பேசியே பழக்கப்பட்டவராதலால், சுமார் இரண்டு மணி நேரமாக ஆசிரமத்தை பிரசார மேடையாக்கிக் கொண்டார். இதை ரமண மகரிஷியைப் பின்பற்றிடும் ஆங்கிலேயே சீடர் ஒருவர் கண்டு, வெகுண்டு எழுந்து, பாதிரியாருடன் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார். ரமணாசிரமம் களைகட்டிவிட்டது. கூட்டமோ கூட்டம் அப்படிப்பட்ட கூட்டம் திரண்டது. அதுவரை யாரும் அந்தப் பாதிரியாரை இடை மறித்தே பேசவில்லை. திடீரென ஒருவர், அதுவும் வெள்ளைக்காரரே எழுந்து பேசுவதைக் கண்டு பாதிரி வியப்படைந்தார். அந்தப் பாதிரி தனக்கு பக்க பலமாக ஒரு குரல் எழாதா? தன்னைப் பின்பற்றிச் சரமாரியான கேள்விக் கணைகளை ரமணரை நோக்கி எய்திட மாட்டார்களா? தனது பேச்சுக்கும் ஏதாவது ஆதரவு முழக்கங்கள் எழாதா என்று சில நிமிடங்கள் எதிர் பார்த்துவிட்டு, பிறகு அந்தப் பாதிரியே, ‘நல்லவன் சொல்லாமல் போவான்’ என்ற அறிவு மொழிக்கு ஆளானார்! சென்றுவிட்டார்! வந்த பாதிரி, மத நல்லிணக்க வாதியாக இல்லாமல், தமது பேச்சுத் திறமையால் ரமணாஸ்ரமத்தைக் கலக்கடிக்கலாம் என்று பேசுவதற்காக வந்தவர் என்பதைக் கூடியிருந்தோர் புரிந்து கொண்டனர். இதையெல்லாம் மகரிஷி ரமணர் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். கடவுளைக் காண பையன் துடிப்பு! இருபது வயதுடைய ஒரு வாலிபன் அக்கூட்டத்திலே எழுந்து ரமண மகரிஷியார் திருமுகத்தை நோக்கி, மெதுவாக, நான் இந்த வாழ்க்கையில் கடவுளைக் காண முடியுமா சுவாமி? என்று கேட்டான். அவனைப் பார்த்து ரமணர் சிரித்துக் கொண்டே, தம்பி! நீ கேட்ட கேள்வியில் உள்ள ‘நான்’ என்பது யார்? என்றார். நான் கேட்டதை முதலில் சொல்! அந்த நான் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? வாழ்க்கை என்ற சொல்லில் அடங்கியுள்ள பொருள் என்ன? என்றார். கேட்டவன் இளைஞன்! எனவே பதில் தெரியாமல் அந்த வாலிபன் திரு திரு என்று விழித்தான். அதற்குள் அந்த வாலிபனுக்குப் பின்னாலே இருந்த ஒருவர் ஒரு தாளில், ஒரு வினாவை எழுதி மகரிஷியிடம் நீட்டினார். வேறொன்றுமில்லை. காலம், தூரம் பற்றியதே அக் கேள்வி. மகரிஷி சிங்கம் போலச் சிலிர்த்து எழுந்தார். ’இடம், காலம் இவற்றுடன் ஆத்மாவைப் பற்றியும் கேள்வி எழுப்பியவர் யார்? என்றார் ரமண மகரிஷி.  அப்போது! ‘நான்தான்’ என்றது ஒரு குரல்! நான் என்றால் உனக்கு என்னவென்று தெரியுமா? சிறிது நேரம் தயக்கம் மயக்கமானது. அதற்குப் பிறகு, போகட்டும். ‘நான்’ என்பது பற்றிய வினாவை வேதாந்த மகரிஷிகளுக்கு விட்டு விடுங்கள். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் போதும்’ என்றது. அந்தக் குரல்! என்ன? நேரமும் தூரமும், ஆத்மாவை விட உனக்கு முக்கியமாகி விட்டதா? இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையில்லை. என்றார் ரமணமகரிஷி! ஆத்மாவைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாமல் எந்த கேள்விக்கும் பதில் தெரிந்து கொள்ள முடியாது. “ஆத்மாவை முதலில் அறிந்து கொண்டுவா! பின்பு எல்லாம் தெளிவாகத் தெரிந்து விடும்! புரிந்து கொள்ளவும் முடியும்” என்றார். ரமணர் காலமானார்! ஞானி என்பவனுக்கு மரணமே கிடையாது என்று கூறியவர் மகரிஷி ரமணர்! இரமணாசிரம் மாணவர்கள், மகரிஷி ரமணருடன் ஞான உரையாடல்களில் ஒரு முறை கலந்து கொண்ட போது, ஒரு மாணவன் மகரிஷியை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் இது. “ஒரு பக்தன் எப்போதும் இறப்பதில்லை; ஏனென்றால், அவன் எப்போதோ இறந்துவிட்டான். மனிதன் வாழ்நாள் முழுவதும் எந்த எண்ணத்தை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அதையேதான் அவன் இறக்கும் போதும் நினைக்கிறான்” என்றார். “எடுத்துக் காட்டாக அவர் சொல்லும் போது, இல்லறத்தில் இருப்பவன் தன் குடும்பத்தைப் பற்றி நினைக்கிறான்; முற்றும் துறந்த துறவி கடவுளைப் பற்றி எண்ணுவான்; ஞானிக்கு வேறு நினைவு எதுவும் கிடையாதல்லவா?” “அதனால் அவனுடைய நினைவு, சிந்தனைகள் எல்லாமே பல காலத்திற்கு முன்பே இறந்து விட்டதால், அவன் உடலும் அத்துடன் இறந்து விடுகிறது ஆகையால், அவனுக்கு மரணம், என்ற ஒன்று கிடையாது.” என்றார். மகரிஷி ரமணர் உலகப் பொருள்கள் எதன் மீதும் பற்று வைக்காத துறவியாக வாழ்ந்து காட்டினார். மதுரையை விட்டு அவர் அருணாசலம் தேடி திருவண்ணாமலை வந்துபோது, தன்னிடமிருந்த மிகுதிப் பணத்தை அங்கே இருந்த அய்யங்குளத்திலே வீசி எறிந்தார். சட்டையைக் கழற்றினார்; தான் கட்டியிருந்த வேட்டியைத் துண்டு துண்டாகக் கிழித்து கோவணங்களாக்கி, அதை மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்ட கோவணாண்டியாகக் காட்சித் தந்தார்! மிகுதியிருந்த சட்டையுடன், கோவணங்களாகக் கிழித்தத் துண்டைத் தவிர, பிற அனைத்தையும் அய்யங்குளத்துக்கே ஆடைகளாக்கினார்! ரமண மகரிஷி வெங்கட்ராமன் என்ற பெயரோடு இருந்தபோது பெற்றோர் அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். அந்தப் பூணூல் கூட, மக்கள் இடையே சாதி வித்தியாசங்களை உருவாக்கிவிடும் அளவு கோலாக இருப்பதை அவர் நெஞ்சம் உணர்ந்ததால், அந்த உயர்சாதி அடையாளமாக இருந்த பூணூலை அறுத்து அய்யங்குளத்திலே தூக்கி எறிந்தார்! ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்ற தத்துவத்தின் ஞானியானார்! உலகப் புகழ் பெற்று பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புகளில் வளர்ந்திருந்த போதும், அவர் அதே கோவணான்டிக் கோலத்தோடு வாழ்ந்தாரே தவிர, பட்டு பீதாம்பரத் திருமகனாக வாழ்ந்தவரல்லர்! அளவான உணவு உண்டு, அளவான வாழ்க்கைக்கு அளவு கோலாக வாழ்ந்தார் ரமண மகரிஷி! அருணாசலமே கதியென நம்பி, தவம் தியானங்களைத் தவறாமல் செய்து, அருணாசலலேசுவரரின் அடிமையாக வாழ்ந்த அந்த மகானைக்கூட காலம் என்ற மரண நோய் விடாமல் பற்றிக் கொண்டு வாட்டி வதைத்து வேதனைப் படுத்தியது. கட்டி ஒன்று தோன்றி, அவருடைய இடது கைச் சதையைச் சிறிது சிறிதாக தின்று கொண்டே வந்தது. மகரிஷி ரமணரின் ரத்தத்தை விஷமாக்கியது. இடது கையில் முதலில் சிறு கட்டியாகத் தோன்றியது. அது ஒரு மாதம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் ஒரு மாதம் கழித்து பெரிய கட்டியாகத் தோன்றியது. மறுபடியும் இரண்டாவது முறையாக கட்டியை அறுவைச் சிகிச்சை செய்தார்கள் வித்தக டாக்டர்கள்! இரமணன் அருளாசியைப் பெற்று வரும் பக்த கோடிகள், செல்வர்கள், கல்விமான்கள் பத்திரிக்கையாளர்கள், அவரைப் பலவழிகளிலும் பின்பற்றி வந்த மனித நேயர்கள். இறையபிமானிகள், எல்லாருமே அவரது நோய்நிலை கேட்டு அளவிலா துன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். அதற்குப் பிறகு அடுத்த மாதமே மீண்டும் அந்தக் கட்டி வந்து விட்டது. அப்போது ரமண மகரிஷி மீது அல்லும் பகலும் அக்கறை கொண்ட அவரது சீடர்கள், நீங்கள் மற்றவர்களை எல்லா வகையிலும் குணப்படுத்துகிறீர்களே, உங்களை நீங்கள் எங்களுக்காகவாவது சுகப்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று மனம் நொந்து கண்ணீர் சிந்தி மகரிஷியைக் கேட்டார்கள். அதற்கு “இந்த உடம்பிடம் உங்களுக்கு ஏன் இந்தப் பற்று? அதைப் போக விடுங்கள்” என்று பகவான் ரமணர் திருவாய் மலர்ந்தருளினார். இதற்குப் பிறகு மகரிஷியின் கட்டிக்கு ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது மருத்துவம் அவரது உடலை எவ்வளவு வருத்தினாலும் அதற்காக அவர் மனம் கங்காமல், வரும் பக்தர்களுக்கு அப்போதும் புன்னகை பூத்தே அருளாசி வழங்கினார். கட்டியை ஊடுகதிர் படம் எடுத்து டாக்டர்கள் பார்த்தார்கள். மகரிஷி ரமணருடைய கையைத் துண்டிப்பதைத் தவிர வேறோர் வழியேதுமில்லை என்று மருத்துவ திறனாளர்கள் முடிவு கட்டினார்கள். இந்த முடிவை பகவான் ரமணரிடம் டாக்டர்கள் தெரிவித்தபோது, “உங்கள் உடலை நீங்களே கவனித்துக் கொள்ள நான் விடுவது போல, நீங்களும் என்னைச் சும்மா விட்டுவிடுங்கள்” என்றார் மகான் ரமணரிஷி! மகரிஷிக்கு வந்தது என்ன நோய் என்று மருத்துவத்துறை ஆய்வு செய்தபோது, ரமணருக்கு வந்தது புற்று நோய் அல்ல; நியூரோ-சார்கோமா என்ற ஒரு வகை நோயென்று உணரப்பட்டது.  புற்றுநோய் என்றால் ஓரிடத்தில் மறைந்தால், அது மற்றோர் இடத்தில் தோன்றும். ரமண மகரிஷிக்கு வந்தது அதுபோன்ற புற்று நோயல்ல என்று கண்டு பிடிக்கப்பட்டது. அப்படியானால் இந்த நோய் வந்த இடத்திலேயே திரும்பத் திரும்பக் கட்டி உருவில் பெரியதும் சிறியதுமாக மாறிமாறிவரும். கையை எடுத்து விட்டால் கட்டி திரும்ப வராது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ரமண மகரிஷி ஒரு முறை கூறிவிட்டால் அதை யாரும் மாற்ற முடியாது. அவ்வளவு பிடிவாதக்காரர் அவர். எனவே, டாக்டர்களுக்கும் பக்த கோடிகளுக்கும் பேசாமலிருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளால் ஒருவேளை ரமணர் நோய் சுகமானாலும் ஆகலாம் என்று சிலர் எண்ணினார்கள் அதற்கேற்ப பச்சிலைகளை வைத்துக் கட்டிப் பார்த்தார்கள். அந்த ராட்சச நோய் வருவதும், மறைவதும், திரும்பவும் வருவதுமாக கண்ணாமூச்சியாட்டம் ஆடிக் கொண்டே இருந்தது. குருவின் இந்த நிலைமை கண்டு வேதனைப்பட்ட ஆன்மீக மாணவர்களுள் ஒருவர், மனோ சக்தியால் நோய்களைத் தீர்த்து வைக்கும் நீங்கள், எங்களுக்காக ஏன் அவ்வாறு செய்யக் கூடாது. என்று கேட்டார்! ஆனால், நோய் குணமடைய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், அதை அப்படியே விட்டு விடுவது என்ற முடிவிற்கு அவர் வந்து விட்டார் என்று தெரிந்து விட்டது. மாறிமாறி வந்த கட்டியின் கொடுமை ரமணமகரிஷியின் உடலைத் தின்று தின்று பலவீனப்படுத்தி விட்டது. இந்த நோய் சுகமாக, எந்தெந்த வகையான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தும், பல முறை அறுவைச் சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் குணமாகும் நிலையிலில்லை. 1960-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் நாள் ரமணமகரிஷியின் நோய் மிக மோசமானது. அருளாளர் ரமணரிடம் அருளாசி பெற்றிட ஆசிரமத்துக்கு வெளியே இரண்டாயிரம் பக்தர்கள் கூடி நின்று, பகவான் உடல் நிலையைக் கேட்டு அருணாசல சிவா, அருணாசல சிவா எங்கள் மகரிஷியைக் காப்பாற்று என்று பஜனை பாடிக்கொண்டே கண்ணீர் சிந்தினார்கள். மாலை ஏழு மணி இருக்கும்! ரமணர் மூச்சுவிட வேதனைப் பட்டார்! அதனால் உடனிருந்த மருத்துவர்கள் அவருக்கு பிராணவாயு கொடுத்தார்கள். சிறிது நேரம் சென்ற பின்பு அந்த உயிர்க் காற்றும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆசிரமத்துக்கு வெளியே அருளாளர் ரமணருடைய அருளாசிக்காகக் காத்துக் கிடந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திருவண்ணாமலை நகரத்து பக்தர் பெருமக்களோடு, கிராமப்புறத்துக் குடியானவர்களும், ஏழை மக்களும் புற்றீசல் போல நகரை மொய்த்துக் கொண்டு ‘அருணாசல சிவா, அருணாசல சிவா’ என்ற பஜனை ஒலிகளோடு பாடல்களை விடிய விடியப் பாடிய படியே இருந்தனர். பகவான் ரமண மகரிஷியின் சீடர்கள், ஆசிரமத் துறவிகள், பழநிசாமி சாமியார், திருவண்ணாமலை நகர் பிரபல செல்வர்கள், கல்விமான்கள், ஆன்மிகச் செல்வர்கள் அனைவரும் ரமணர் உடலைச் சூழ்ந்து வருத்தத்தெரிவித்து தங்களது கண்ணீர்த் துளிகளை சிதறிக் கொண்டிருந்தார்கள். மணி 8.47க்கு ரமண மகரிஷியின் ஆவி பிரிந்தது! ஆன்மிக உலக மக்கள் ரமணர் மரணம் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். தியானம் திணறி அழுதது! தவம் தள்ளாடி தவித்தது! அவரது மௌனம், அவர் பிறந்த திருச்சுழியில் ஓடும் கௌடின்ய நதியின் கோடை மணல் ஊற்றுக் கண்போல வறண்டு வற்றியது. தமிழ் நாட்டு ஆன்மீக உலகமும், திருவண்ணாமலை நகரின் ஆயிரக்கணக்கான மக்களும், ரமணருக்குத் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்திய பிறகு, யோகாசன நிலையில் அவரை அமர வைத்து, கற்பூரம், விபூதி, உப்பு ஆகியவற்றையிட்டுப் புதைத்தார்கள். ரமண ரிஷியின் நினைவு என்றும் திருவண்ணாமலையிலே நிலைக்குமாறும், ஆன்மிக உலகம் அவரை என்றும் நினைவிலே நிறுத்திக் கொள்ளுமாறும், ஞானம் விளையும் அருணாசல மலையானது; எவ்வாறு பல யோகிகளை, சித்தர்களை, ஞானிகளை, அருளாளர்களை, பக்திப் பனுவல்களைப் பாடிய பாவலர்களையும் வளர்த்த ஞான வரலாற்றை ஆன்மீக உலகுக்கு வழங்கி, மக்களை உய்வித்துப் புகழ்பெற்று வருகின்றதோ, அந்த ஞான ஒளிவட்டத்தின் அருளாளர் புள்ளிகளுள் ஒரு புள்ளியாக ரமணமகரிஷியையும் அருணாசலம் ஏற்றுக் கொண்டது. வாழ்க அருணாசலம் புகழ்! FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.