[] 1. Cover 2. Table of contents மகத்தான மக்கள் கலைஞன் பால்ராஜ் சஹானி மகத்தான மக்கள் கலைஞன் பால்ராஜ் சஹானி   வழக்கறிஞர்.கே.சுப்ரமணியன்   subramanian568@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - மதன் - madanbalaji@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/mahatthana_makkal_kalaigan_balraj_sahni மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: மதன் - madanbalaji@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Mathan - madanbalaji@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/aacharya_devo_bava This Book was produced using LaTeX + Pandoc சமர்ப்பணம் [“மக்கள் நாடகக் கலைஞன், சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் , தலைசிறந்த திரைப்பட விமர்சகர் மேடைப்பேச்சாளர், என்றென்றும் என் அன்புக்குரிய”எரிமலை" அறந்தை நாராயணன் நினைவுகளுக்கு ..!] முன்னுரை கவிஞர், எழுத்தாளர், நாடகநடிகர், இயக்குனர், இலக்கிய விமர்சகர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர், 134 திரைப்படங்களில் நடித்த திரைப்பட நடிகர், சமூகசெயல்பாட்டாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட மக்கள் கலைஞர் பால்ராஜ் சஹானி 1973 ஏப்ரல் 13ஆம் நாள் இயற்கையெய்தினார். அவரது மரணம் குறித்து அந்தவாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தியொன்றைப் படித்து நான் மிகுந்த வியப்புக்குள்ளானேன். அவரது இறுதிமூச்சு நிற்பதற்குச் சிலநிமிடங்கள் முன்பு, அவரது ஒரே மகன் பாரீக்க்ஷத் சஹானியிடம் தனதுவீட்டு நூலகத்திலிருந்த காரல் மார்க்ஸ் புகைப்படத்தையும், மூலதன நூல்களையும் எடுத்துவரச் சொன்னாராம். கண்களில் ஒளிமின்ன, ஆனந்தப் பரவசத்தோடு சிலநிமிடங்கள் “காரல் மார்க்ஸ் புகைப்படத்தையும், மூலதனம் நூல்களையும்” பார்த்துவிட்டு, கண்களை இறுதியாக மூடிக்கொண்டாராம்! இப்படியும் ஒரு கலைஞனா…. என்று அதிசயித்து கண் கலங்கினேன் ! அநத மகத்தான மக்கள்கலைஞனின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் P.C.ஜோஷியுடன் அவாpணைந்து “இப்டா” எனும் இந்திய மக்கள் நாடகமன்றத்தை, மக்களியக்கமாக அவர்கள் வளர்த்த வரலாற்றையும், அவரது தாய்மொழிப்பற்றையும், அவரெழுதிய புத்தகங்கள் பற்றியும், இந்தித் திரைப்படவரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அவர் நடித்த சிலதிரைப்படங்களின் கதைச்சுருக்கத்தையும் இதில் எழுதியிருக்கிறேன். இந்தப்புத்தகம் எழுதுவதற்கு தேவைப்பட்ட சில அரியபுத்தகங்களைக் கொடுத்துதவிய அன்புக்குரிய தோழர் ஓடை.பொ.துரையரசன், புத்தகத்தின் உள்ளடக்கம்பற்றி விவாதித்து, செழுமைப்படுத்த உதவிய அன்புத்தோழர்கள் S.ராதாகிருஷ்ணன் (இஸ்கப் - மாநிலப் பொதுச்செயலாளர்), ப.பா.ரமணி (த.க.இ.பெருமன்ற கோவை மாவட்டச்செயலாளர்), துணைச் செயலாளர் L.ஜான், தினமணி R.நடராஜன், ரதன் சந்திரசேகர் ஆகியோருக்கும் என் நன்றி. பகத்சிங் பற்றியும், காஷ்மீரின் இயற்கையழகு பற்றியும் பால்ராஜ் சஹானி எழுதியிருக்கும் இரண்டு அற்புதமான கவிதைகளை, கோவைக் கவிஞர் காமு-கா.முருகானந்தம் அழகுறத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கும் என் நன்றி! எனது அலுவலக வழக்குகள் அனைத்தையும், கூடுதல் பணிச்சுமைக்கிடையிலும் அக்கறையுடனும், கவனத்துடனும் திறம்பட நடத்தியதன் மூலம், இந்த புத்தகத்தையும் நான் எழுதிமுடிக்க வழக்கம்போல் எனக்குக் கூடுதல் நேரங்கிடைக்க உதவி செய்திருக்கும் அன்புக்குரிய என் அலுவலக வழக்கறிஞர் D.சதிஷ் சங்கருக்கும் நன்றி! கையெழுத்துப் பிரதிகளையும், சிலபக்கங்களை கொடுத்த உடன்பிறவாத் தங்கை N.சத்தியவாணி, எனது உதவியாளர்கள் A.ராமு மற்றும் S.சின்னராஜூ ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அருமையான அணிந்துரையை வழங்கி, இந்தப் புத்தகத்திற்கு சிறப்புச் சேர்த்திருக்கும் “தாமரை” இதழாசியாpயர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசீய நிர்வாகக்குழு உறுப்பினருமான அன்புத் தோழர் ஊ.மகேந்திரனுக்கு என் வணக்கமும், நன்றியும்! இந்த புத்தகத்தை அச்சிடுவதற்கான ஆலோசனைகள் வழங்கியதுடன் தொடர்ந்து புத்தகங்கள் எழுத என்னை ஊக்குவித்துவரும் அன்புத்தோழர் சு.பட்டாபிராமன் அவர்களுக்கும், நேர்த்தியுடனும், அழகாகவும், விரைந்தும் இந்த புத்தகத்தை அச்சிட்டுக்கொடுத்த காரைக்குடி “சன் கிரியேசன்ஸ்” உரிமையாளர் திரு.லெனின் குருசாமி அவர்களுக்கும், அச்சாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஊழியர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! புத்தகத்தின் அட்டையை அழகாக வடிவமைத்திருக்கும் அன்புத்தம்பி மதனுக்கும் என் நன்றி! NஊBழ வெளியிட்ட தோழர் P.C.ஜோஷி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பால்ராஜ் சஹானிபற்றிய கட்டுரை ஒன்றைத்தவிர, எனக்குத் தெரிந்து இந்த மாபெரும் கலைஞன்பற்றி தமிழில் வேறுநூலெதுவும் இதற்குமுன் வெளிவரவில்லை. இன்றைய தலைமுறைக்கு, குறிப்பாக கலைஇலக்கியத் துறையில் அக்கறை கொண்ட தோழர்களுக்கு பால்ராஜ் சஹானியை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். நிறைகுறைகளை எனக்குத் தெரிவித்து மேலும் சில புத்தகங்களை நான் சிறப்பாகஎழுத உங்கள் விமர்சனம் எனக்குத் துண்டுகோலாய் அமையட்டும்! தோழமையுடன், கே.சுப்ரமணியன் வழக்கறிஞர் 87E-கிரே டவுன்,2வது மாடி, கோயமுத்தூர்-641 018 அலைபேசி - 63748 32622, 94862 80307 தொலைபேசி-0422 2303070 அணிந்துரை ஓர் புரட்சிகரப் பண்பாட்டு ஆயுதம், பால்ராஜ் சஹானி புகழ்மிக்க கலைத்தாயின் புதல்வர் பால்ராஜ் சஹானி பற்றியது இந்தநூல்ல். இந்திய சுதந்திர போராட்டக்காலம் பெற்றுக்கொடுத்த பண்பாட்டு ஆயுதம் இவர். கே.எஸ் என்று நம்மால் அன்புடன் அழைக்கப்பெறும் வழக்கறிஞர் தோழர் கோவை கே.சுப்ரமணியன் அவர்கள், இந்த நூல்லில் பால்ராஜ் சஹானி பற்றிய அனைத்து விபரங்களையும், பொறுப்புணர்வுடனும் பதிவுசெய்துள்ளார். ஆண்டு 1948 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்படுகிறது. இயக்கம், தன்னை தலைமறைவு இயக்கமாக மாற்றிக்கொள்கிறது. நாடு தழுவியவகையில் கம்யூனிஸ்டுகள் பெரும்எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். பம்பாய் நகாpல் மறியல் போராட்டத்திற்கு தலைமைதாங்கிய பால்ராஜ் சஹானியும் கைது செய்யப்படுகிறார். அந்தத்தருணத்தில், அவர் பம்பாய் திரையுலகின் உயர்நட்சத்திரம். அவர் வீட்டுவாசல் அருகில் அவரது திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்புதலுக்காக ஒரு பெருங்கூட்டம் பெரும்பணத்துடன் காத்துக்கிடக்கிறது. அந்தநேரத்திலும் அவர் வாய்ப்புக்கள் பறிபோய்விடும் என்று அச்சப்படவில்லை. லட்சியத்தின்மீது கொண்ட உறுதிப்பாட்டால் எல்லாவற்றையும் இழக்கும் நெஞ்சுரத்தை பெற்றிருந்தார். அப்பொழுது எழுந்த சிக்கல் ஒன்றில் அவர் இந்திய மக்களின் தியாகப்புதல்வன் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். கைது செய்யப்படும்போது, ஹல்சல் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். பெரும்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தின் இயக்குனர் கே.ஆஷிப். எதிர்பாராத இந்தசிக்கலில் எவ்வாறு படத்தை முடிப்பது என்று திணறிப்போனார். வேறுவழியில்லாமல் பெரும்முயற்சி செய்து உள்துறை அமைச்சரை சந்தித்து, ஒரு சிறப்பு அனுமதியைப் பெற்றுவிட்டார். இந்நிகழ்வு உலகத் திரையுலகின் கவனத்தை பெறுகிறது. இரவு நேரங்களில் உண்மைக் கைதியாக கொடுஞ்சிறையில் இருக்கிறார். பகல்பொழுதில் தனது தீவிர நடிப்பாற்றலால் சிறைபோன்று வடிவமைக்கப்பட்ட ஸ்டூடியோ செட்டிங் சிறையில், சிறையதிகாரியாக நடிப்பை வெளிப்படுத்துகிறார். மனப்போராட்டம் மிகுந்த அந்தச்சூழலில் மென்மையுணர்வுக் கலைஞர் ஒருவரால் நடிப்புத்திறனை வெளிப்படுத்த முடியுமாடூ என்ற கேள்வி எழுகிறது. எப்படிப்பட்ட நெருக்கடியையும் எதிர்கொள்ளும் மனஉறுதி படைத்த கம்யூனிஸ்ட் கலைஞனால்மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும்! பால்ராஜ் சஹானி அதை சாத்தியப்படுத்தியதாக நூல்லாசியர் கே.எஸ் அவர்கள் குறிப்பிடுகிறார். இவ்வாறான ஒரு நிகழ்வை இதற்கு முன்னர் நான் கேட்டதில்லை. பூமிப்பந்தின் எங்காவது ஒருபகுதியில் இதுபோன்று நிகழ்ந்திருக்குமா என்பதும் எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கை எத்தகைய முரண்கொண்டது என்று என்னை இது யோசிக்க வைத்துவிட்டது. நான் திகைப்புடன் அந்தவாpகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். கலைஞன் பால்ராஜ் வாழ்க்கை சுவைமிக்கது. பிறந்தது சுதந்திரத்திற்கு முன்அமைந்த ஒன்றுபட்ட இந்தியாவின் ராவல்பிண்டியில் (பஞ்சாப்). இவர் தந்தை இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுப் பெரும்செல்வம் சேர்த்தவர். இவர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரிகளிலும் பட்டமேற்படிப்புவரை தலைமாணாக்கனாகத் திகழ்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றிருந்தார். பால்ராஜ் சஹானியின் இணையர் பெயர் தமயந்தி. சிறந்த கலைஇலக்கிய செயல்பாட்டாளர். திருமணத்திற்குப்பின்னர் கணவருடன் லண்டனில் குடியேறி பி.பி.சி வானொலியில் தனது சிறந்தசெயல்பாட்டால் ஒலிபரப்புச் சேவையில் உலகப்புகழ் பெற்றவர். இவரது சகோதரர் பேராசியர் ஜஸ்வந்த் ராய் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்துறையின் பேராசியராகப் பணியாற்றியபோது பால்ராஜின் கலைஇலக்கிய செயல்பாட்டை ஊக்குவித்தவர். வழிகாட்டியவர். அந்த நட்பில் தமயந்தியை சஹானி மணம்புரிந்து கொண்டார் என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்கது. மாணவப்பருவத்திலேயே தாய்மண் மீது காதல் கொண்டவராக சஹானி காணப்பட்டார். அவர் கற்றது ஆங்கிலக்கல்வி. முழு கல்லூரிச்சூழலும் ஆங்கிலப் பண்பாட்டில் கவர்ச்சி கொண்டிருந்தது. ஆனால் எந்தவிதமான மயக்கமும் இவருக்கு இதில் ஏற்படவில்லை. இவர் கிராமங்களைநோக்கி தனது பயணத்தை அமைத்துக்கொண்டார். செழுமை வாய்ந்த நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் வேலையை மாணவப்பருவத்திலேயே தொடங்கிவிட்டார். பிற்காலத்தில் தோழர் பி.சி.ஜோஷி அவர்களை சந்திப்பதற்கு முன்பே சஹானி இந்தப்பணியைத் தொடங்கியிருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், இப்டா எனும் இந்திய மக்கள் நாடகமன்றத்தின் நிறுவனரும், இந்தியா முழுவதும் நாட்டுப்புறப் பாடல்களை தொகுப்பதற்கு தனிக்களம் அமைத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் ஜோஷி அவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒரு சகாப்தம். இவரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு இந்தித் திரையுலகில் பெருமாற்றங்களை உருவாக்கிவிடுகிறது. இதையெல்லாம் ஆதாரத்துடன் நூல்லாசிரியர் நூல்லில் முன்வைத்துள்ளார். ஒருகட்டத்தில் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற முடிவுடன் சஹானி தனிக்குடித்தனம் தொடங்குகிறார். பணம் வாழ்வில் முக்கியமானதல்ல என்ற குறிக்கோளை இளமைக்காலத்திலேயே பெற்றுவிட்ட சஹானிக்கு இது, தவிர்க்கவியலாத ஒன்றாக அமைந்துபோனது. தனது நண்பர்கள் உதவியுடன் பத்திரிக்கை ஒன்றும் ஆரம்பிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப்போரின் தீவிர உள்ளடக்கத்தை இதழ் கொண்டிருக்கிறது. Monday Morning என்பது அந்த வாரஇதழின் பெயர். பல்வேறு சவால்களை சந்தித்துப் பார்த்துவிட்டு நான்கு இதழ்களோடு வேறு வழியற்று அது நின்றுபோனது. இதன்பின்னர் இவரது பயணம் கல்கத்தா சாந்திநிகேதன்நோக்கிப் பறந்து சென்ற விவரங்களும் நூல்லில் பதிவுபெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் அமைந்த இரண்டு முக்கிய வழிகாட்டும் ஆளுமைகளில் ஒருவர் மகாத்மா காந்தியடிகள். மற்றவர் ரவீந்திரநாத் தாகூர். இந்த இருவாpன் பாசறையிலும் பயின்றவர் சஹானி. இத்தகைய அரிய வாய்ப்பு வேறுயாருக்குமே அமைந்திருக்கமுடியாது! லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு புறப்பட்ட பால்ராஜ் சஹானி, முதலில் தாகூரின் சாந்திநிகேதனுக்கு வந்துசேருகிறார். இதனை இந்தியக் கலாச்சாரத்தின் தலைநகர் என்று இவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். இங்கு அவர் கற்றுக்கொண்டதில் முக்கியமானது “தாய்மொழிப்பற்றாகும்” என்பதை சஹானியின் ஆழ்மன உணர்வாக குறிப்பிடுவதை நூல்லாசிரியர் கே.எஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ரவீந்தருக்கும், பால்ராஜ் சஹானி அவர்களுக்குமிடையில் அமைந்த உரையாடலை நூல்லில் பதிவு செய்துள்ளார். இந்த உரையாடல் இன்றைய சூழலில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.. சஹானி : பல மொழிகள் தெரிந்த ஒருவர், அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு மொழியில் எழுதுவதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன். ரவீந்திரர் :: எனக்கு ஆங்கிலத்தில் புலமை இருந்தபோதிலும், நான் எனது தாய்மொழியான வங்காளத்தில்தான் சிந்தித்து எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். மொழியென்பது ஒருவருடைய கருத்தை மற்றவருக்கு தெரிவிக்கும் கருவி மட்டுமல்ல. அது அந்தமொழியின் பண்பாட்டு அடையாளமும் ஆகும். ரவீந்திரநாத் தாகூரின் இந்தக்கருத்துக்களை தனது வாழ்நாள் கொள்கையாக சஹானி ஏற்றுக்கொண்டதாக நூல்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாந்தி நிகேதனிலிருந்து விடுபட்ட சஹானி காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்திற்கு தன் மனைவியுடன் சென்ற நிகழ்வு பல தகவல்களைக் கொண்டிருக்கிறது. 1938 ஆம் ஆண்டில் கல்கத்தா மாநகரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில் சாந்திநிகேதன் சார்பில் கண்காட்சி ஒன்றும் அமைக்கப்படுகிறது. அரங்கத்தைப் பார்வையிடவந்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஜாஹிர் உசேன் பால்ராஜ், தமயந்தி இருவரையும் வார்தாவிலுள்ள காந்தியடிகள் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். வார்தா தேசியக் கல்வித்திட்டத்தின் அடிப்படைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்வதற்கு Nai Talim என்ற பெயாpல் இதழ் ஒன்று வார்தாவிலிருந்து வெளிவருகிறது. அதன் ஆசிரியர்குழுவின் பொறுப்பை தோழர் சஹானியும், தமயந்தியும் ஏற்றிருந்தார்கள். காந்தியடிகள் உள்ளிட்ட ஆசிரமவாசிகளுடன் ஓலைவேயப்பட்ட மண்குடிசைகளில் மண்ணெண்ணெய் விளக்குடன் வாழ்ந்த எளியவாழ்க்கை நூல்லில் விவாpக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் சஹானியின் தம்பியின் பெயர் பீஷ்மம் சஹானி. இவர் சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதற்குப் பிந்தையக் காலங்களிலும் இந்தியாவின் புகழார்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவருக்கு காந்தியடிகளைப்பற்றி பால்ராஜ் சஹானி அளித்த பதில் முக்கியமானதாகும். “வலிமைமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை காந்தியடிகளின் அஹிம்சைக் கொள்கையால் வெற்றிபெற முடியுமாடூ போர்க்குணம் கொண்ட இயக்கங்கள் இல்லாமல், விடுதலை சாத்தியமாடூ” என்பதுதான் தம்பியின் கேள்வி. இதற்கு பால்ராஜ் சஹானி அளித்த பதில் அவரது கொள்கைகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. “காந்தியடிகளின் லட்சியத்தின்மீது அல்லது கொள்கையின்மீது எனக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லை. வியப்புக்குரிய துணிச்சலான அந்தமனிதரோடு சிறிது காலமாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தோடு நான் இங்கு வந்தேன்” என்று பால்ராஜ் குறிப்பிட்டுள்ளார். இதன்பின்னர் இவரது பயணம் லண்டனை நோக்கி அமைந்துவிட்டது. லயோனால் பீல்டன் என்பவர் காந்தியடிகளின் நெருங்கிய நண்பர். ஆல் இண்டியா ரேடியோவின் இந்தியப் பொறுப்பாளராக பணியாற்றி இவர், பி.பி.சி வானொலி நிறுவனத்திற்கு அன்றைய காலத்தேவையை பூர்த்திசெய்ய சஹானியையும் தமயந்திiயும் போன்றவர்கள் தேவை என்றும் கூறியுள்ளார். இந்தப் பின்னணியில்தான் தம்பதியாpன் லண்டன் பயணம் அமைந்தது. பி.பி.சி வானொலி நிலையத்தில் பலரும் வியந்து கூறும்வகையில் சஹானி தம்பதியாpன் செயல்பாடுகள் அமைந்திருந்தன. இங்கு பணிபுரிந்த ஊழியர்களில் சிலர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மூலம் பிரிட்டன் முன்னணிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஹாpபாலிட், பெஞ்சமின் பிராட்லி, ரஜினி பாமிதத் ஆகியோரின் சந்திப்பு நிகழ்கிறது. இணையர் இருவரும் பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். இரண்டாம் உலகப் பெரும்போர் தீவிரமடையத் தொடங்கியது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நெருங்கியத்தொடர்பின் காரணமாக இவர்கள் சிறந்த கம்யூனிஸ்ட் கலைஞர்களாக வளர்ச்சி பெறுகிறார்கள். பால்ராஜ் சஹானியின் திரையுலக வாழ்க்கை இந்தநூல்லில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழில் இத்தனை விவரங்கள் வேறுறெந்த நூல்லிலும் இடம்பெறவில்லை என்று கருதுகிறேன். அப்போது ரஷ்யத் திரையுலகும் எதார்த்த சினிமாவின் பாpசோதனைகளையும் செய்து பார்த்துக்கொண்டிருந்தது. இவர்கள் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு திரைக்கதையிலும் இவரது பங்களிப்பு என்னடூ இவர்களால் தொடங்கப்பட்ட நியூ வேவ் திரைப்படங்களின் விபரங்கள் என்று அனைத்தும் இந்தநூல்லில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழக வாசகர்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத இந்த மாபெரும் மக்கள்கலைஞன் பால்ராஜ் சஹானியை அறிமுகம் செய்துவைப்பதை ஒரு சராசாp பணியாகக் கருதமுடியாது. தமிழகப் பொதுவுடமை இயக்கத்திற்கும், முற்போக்குச் சினிமாவுக்கும் இந்தநூல்ல் ஒரு சிறந்த பங்களிப்பு என்று உறுதிபட என்னால் கூறமுடியும். நூல்லை வாசித்து முடித்தவுடன் நூல்லாசியரைப்பற்றி குறிப்பிடுவது எனக்கான கடமையாக மாறிவிட்டது. நம்மோடு நீண்டகாலம் பழகிய தோழர்களின் வாழ்க்கையின் முக்கியபகுதிகள்கூட சில நேரங்களில் நமக்குத்தெரியாமலேயே போய்விடுகிறது. இதனைப் பொதுவுடமை இயக்கங்களின் முக்கியக் குறைபாடாகக் கருதுகிறேன். அவ்வாறு தோழர். கே.எஸ் அவர்களின் வாழ்க்கைப் பக்கங்களில் சிலவற்றை நான் அறிந்துகொள்ளாமல் போனது எனக்கு வருத்தத்தை தந்தது. இவரது அரசியல் தொடக்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில்தான். 1971 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டுவரை சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர். இந்த தொழிற்சங்கம் சென்னை நகரத்தின் தலைமைச் சங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டிருந்தது. இதன் பொதுச்செயலாளராக நூல்லாசியர் தோழர் கே.எஸ் அவர்கள், புகழ்மிக்க சுதந்திரப்போராட்ட வீரரும், பொதுவுடமை இயக்கத்தின் முன்னணித் தலைவராகவுமிருந்த ஏ.எஸ்.கே. அய்யங்கார் அவர்கள் இதன் தலைவராக இருந்தார். மிகவும் இளம்வயதிலேயே நூல்லாசிரியர் இந்தப்பொறுப்பை ஏற்றிருந்தார் என்பது வியப்புக்குரிய ஒன்றுதான். இதுகுறித்து அவாpடம் கேட்டபோது அவர் கூறியவை என்னை மிகவும் யோசிக்கவைத்தது. கோவை மாவட்டத்தில் தோழர் பி.கே.ராமசாமி அவர்கள் தேர்ந்த தொழிற்சங்கத் தலைவர். அவரால் பல இளைஞர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் தோழர் கே.சுப்ரமணியமும் ஒருவராகத் தெரிகிறது. அவர்தான் இவர் துறைமுக தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்கக் காரணமாக அமைந்தவர். மாவீரன் பாலன் மறைவுக்குப் பின்னர், கோவை நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தோழர் பார்வதிகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார். அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்தேவை கருதி பின்னர் முழுநேர ஊழியராகப் பொறுப்பேற்று கோவை திரும்பிய கே.எஸ் தொழிற்சங்க இயக்கங்களில் செயல்படத் தொடங்கியுள்ளார். கடந்த 43 ஆண்டுகளாக தொழிற்சங்க இயக்கங்களில் ஏதாவதொரு பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். மார்க்சீய தத்துவத்தில் ஆழ்ந்தபுலமை கொண்ட கே.எஸ் அவர்கள் ஒரு சிறந்த வழக்கறிஞரும் ஆவார். 1978 ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம்பெற்று, தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய இவர், இன்றுவரை தொழிலாளர்களின் வழக்கறிஞராகத்தான் அறியப்படுகிறார். இந்நூலில் இவர் எழுதி வெளியிடும் 8 வது நூல்ல். மற்ற நூல்களில் பெரும்பாலானவை கம்யூனிஸ்டு தலைவர்களின் ஆளுமை மற்றும் இயக்க வரலாறு பற்றியவை. இன்றைய நெருக்கடி மிகுந்த காலத்தின் தீர்வுக்கு இவ்வாறான எழுத்துக்கள் பொpதும் தேவைப்படுகின்றன. இந்த தேவையை சிறந்த எழுத்துத்திறன் கொண்ட நூல்லாசிரியர் கே.எஸ் அவர்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்நூலில், இன்றைய தமிழக முற்போக்கு கலைஞர்களின் தீவிர ஆதரவைப் பெறும் என்பது என் நம்பிக்கை எனது புரட்சிகர வாழ்த்துக்கள். சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, “தாமரை” இதழாசிரியர் 70 – சித்ரா டவுன்ஷிப், தர்கா சாலை, ஜமீன் பல்லாவரம், சென்னை – 600 043 இளமைக் காலமும் கல்வியும் இந்த நாடு பல்வேறு தேசீய இனங்களைக் கொண்ட ஒன்றியமாகும். வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு தேசீய இனத்திலும் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், சமூகசீர்திருத்தக்காரர்கள், சமயத் தலைவர்கள் அறிவியல் மேதைகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் தோன்றி தாங்கள் பிறந்த இனத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டுக்கும் பெருமையும், புகழையும் சேர்த்தனர். வள்ளலார், சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், மகாகவி பாரதி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, தமிழ்;த்தென்றல் திரு.வி.க., தந்தை பெரியார், கலை இலக்கிய ஆசானும், பொதுவுடைமை இயக்கத் தலைவனுமான ஜீவா மற்றும் பல பெரியோர்களால் தமிழினம் புகழ்பெற்றது. விடுதலைப் போராட்ட மாவீரன் திலகர், பொதுவுடைமை இயக்கத்திற்கு வித்தூன்றிய எஸ்.ஏ.டாங்கே, டாக்டர் ஜி. அதிகாரி போன்ற தலைவர்களால் மராட்டிய மாநிலம் புகழடைந்தது. கவியரசர் தாகூர், புரட்சித்துறவி சுவாமி விவேகானந்தர், அவரது தம்பி டாக்டர் பூபேந்திரநாத் தத்தா, அரவிந்த கோஸ், விபினசந்தர பாலர், பொதுவுடைமை இயக்கத்திற்கு கால்கோளிட்ட முஸபர் அகமது, மாவீரன் நேதாஜி, சிட்டகாங் வீராங்கனை கல்பனா ஜோஷி ஆகிய மக்களின் புதல்வர்களால் வங்க மாநிலம் பெரும்புகழ் ஈட்டியது! பஞ்சாப் சிங்கம், அஞ்சாநெஞ்சன் லாலா லஜபதிராய்;, மாவீரன் பகத்சிங் ஆகியோரால் பஞ்சாபிய இனம் வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றது. கலை, இலக்கியம், நாடகம் மற்றும் திரைப்படத்துறையில் புதிய சாதனையையும், வரலாறும் படைத்த மக்கள் கலைஞன் பால்ராஜ் சஹானியால் பஞ்சாப் மாநிலம் மேலும் பெருமை பெற்றது! இவர்கள் எல்லோரும் நாடு, இனம், மொழி எல்லைகளையும் தாண்டி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சிறந்த கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் ஒன்றுபட்டிருந்த பஞ்சாப் மாநிலம், ராவல்பிண்டி நகரத்தில் ஹர்பன்ஸ்லால் சஹானி மற்றும் லட்சுமிதேவி தம்பதியருக்கு பால்ராஜ் 1913 ஆம் ஆண்டு மே 1 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு ஒரு தம்பியும் உண்டு. தம்பி பீஸ்மம் சஹானி பிற்காலத்தில் இந்தி மொழியில் தலைசிறந்த எழுத்தாளராகப் புகழ் பெற்றார். பால்ராஜின் தந்தை தனது வாடிக்கையாளர்களுக்கு லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து அவர்கள் விரும்பும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்து வழங்கும் முகவர் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நல்ல வருமானம், வசதியான குடும்பச் சூழல். இந்து மதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர 1825 ஆம் ஆண்டில் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட ஆரிய சமாஜத்தின் கொள்கைகளில் பால்ராஜின் தந்தை தீவிரப் பற்றுடையவர். ராவல்பிண்டி நகரத்தில் ஆரிய சமாஜத்தின் கொள்கைகளை பின்பற்றியவர்களில் மிகமுக்கிய பிரமுகர். பஞ்சாப் மாநிலத்தின் இந்து மதத்தில் ஆரிய சமாஜக் கொள்கைகளை பின்பற்றியவர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் அல்லது தனியார் பள்ளிகளில் நவீனக் கல்வி படிக்க வைக்கமாட்டார்கள். சமஸ்கிருதமும், இந்திமொழியும் கற்றுக்கொடுக்கக் கூடிய குருகுலப் பள்ளிகளில் சேர்;த்து வேதக்கல்வியைக் கற்றுக்கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்தமாதிரி குருகுலக் கல்விக்கு இளம்மாணவர்களை அனுப்பும்போது ஆரிய சமாஜிகள் ஒருசில சடங்குகளைப் பின்பற்றினார்கள். குருகுலத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் தலையை மொட்டையடித்து, பூணுhல் அணிவித்து, பஞ்சகட்ச முறையில் வேட்டியைக் கட்டவைத்து சடங்குகள் செய்யப்படும். யாககுண்டத்தின் முன்னால் சில சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின்பு மொட்டையடிக்கப்பட்ட மாணவன் கைகளில் திருவோடு கொடுக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஆரிய சமாஜ பிரமுகர்கள்; அந்த மாணவன் கையிலேந்திய திருவோட்டில் ரூபாய் நோட்டுகளைப் போடுவார்கள். அந்தப் பணத்தை யாகம் மற்றும் பூஜைகள் நடத்திய பிராமண அர்ச்சகர்களுக்கு குருதட்சணையாகக் கொடுக்க வேண்டும். பால்ராஜின் தாய் லட்சுமிதேவி, தன்னுடைய அன்புமகனுக்கு இந்தமாதிரி மொட்டையடித்து சடங்குகள் செய்வதை முற்றிலுமாக வெறுத்தார். இருப்பினும் தனது கணவருக்கு அஞ்சி மறுப்பேதும் சொல்லமுடியவில்லை. இவ்வாறு சடங்குகள் முடிந்தபிறகு பால்ராஜூம், அவரது தம்பி பீஷ்மம் சஹானியும் அவர்களது வீட:;டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள குருகுலத்தில் தங்கிப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். சமஸ்கிருத மொழியில் அங்கிருந்த மாணவர்களுக்கு வேதக்கல்வி சொல்லிக்கொடுக்கப்பட்டது. துணைமொழியாக இந்தியும் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் அறவே கிடையாது. சுமார் ஒருவருடம் இந்த பள்ளியில் படித்த பால்ராஜ், குருகுலக் கல்வியை தான் விரும்பவில்லை என்றும், தன்னை முறையாக ஒரு பள்ளியில் சேர்த்து நவீன கல்வியைப் படிக்க வைக்கவேண்டும் என்றும் துணிச்சலோடு தனது தந்தையிடம் வாதிட்டார். மாணவன் பால்ராஜூக்கு அவருடைய தாயாரின் முழு ஆதரவு இருந்தது. இறுதியில் பால்ராஜூன் தந்தை தனது பிடிவாதத்தைக் கைவிட்டு நவீன கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளியில் தனது மகன்களைச் சேர்த்துப் படிக்கவைத்தார். ராவல்பிண்டி டி.ஏ.வி. பள்ளியில் பால்ராஜ் மெட்ரிகுலேசன் தேர்வில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் டி.ஏ.வி கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சமஸ்கிருதம் மற்றும் தத்துவப் பாடங்களைத் தேர்வுசெய்து படித்தார். துணைப்பாடங்களாக ஆங்கில மொழியும், அறிவியல் பாடமும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இந்தக்கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் மாணவன் பால்ராஜ் ஆரிய சமாஜ பழக்கவழக்கங்கள், நடை உடை பாவனைகள், தினசரி கடவுளை வணங்குதல் ஆகியவற்றைக் கைவிட்டு மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறினார். சிகை அலங்காரத்தில் குடுமி வைத்தலைக் கைவிட்டு, ஆங்கிலேய மாணவர்கள் பாணியில் நவீன முறையில் “கிராப்” வைத்துக் செய்து கொண்டார். பஞ்சகட்ச வேட்டி, ஜிப்பா ஆடைகளை கைவிட்டு பேண்ட், சர்ட் உடை அலங்காரத்திற்கு மாறினார். மற்ற மாணவர்கள், நண்பர்களோடு ஆங்கிலத்தில் உரையாடுவது, நகரத்தின் திரையரங்குகளில் ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பது, வீட்டிற்கு வெளியில் நண்பர்களோடு சேர்ந்து தேநீர் அருந்தும் பழக்கங்களை மேற்கொண்டார். ஆங்கிலக் கவிதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்களை ஆர்வத்துடன் கற்கத்தொடங்கினார். ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியவர் அவருடைய ஆங்கிலப் பேராசியர் ஜஷ்வந்த் ராய் என்பவராவார். பிற்காலத்தில் தான் எழுதிய வாழ்க்கை வரலாற்று குறிப்புகளில் தனது வாழக்கையில் பெரும்மாற்றத்தையும், திருப்புமுனையையும், முற்போக்கான எண்ணங்களையும் உருவாக்கியவர்களில் ஆங்கில மொழிப்பேராசியர் ஜஸ்வந்த் ராயும், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த பொதுச்செயலாளர் தோழர் P.ஊ.ஜோஷி என்றும் நன்றியுடன் பதிவு செய்திருக்கிறார். தனது ஆங்கிலப் பேராசியார் ஜஸ்வந்த் ராய் தனக்கு புரட்சிக்கார ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி மற்றும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் மீது ஆர்வத்தை உண்டாக்கியவர் என்று பால்ராஜ் குறிப்பிட்டுள்ளார். இண்டர்மீடியட் வகுப்பில் பஞ்சாப் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றார். அதன் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசிடம் கல்வி உதவித்தொகை அவருக்குக் கிடைத்தது. பஞ்சாப் மாநிலத்திலேயே மிகவும் புகழ்பெற்றிருந்த லாகூர் அரசினர் கலைக் கல்லூரியில் இந்தி மொழியில் இளங்கலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டத்தில் ஆங்கிலத்தில் கவிதை எழுதும் திறமை அவருக்கிருந்தது. 1931 மார்ச் 23 ம் நாள் மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலத்தில் பகத்சிங்கின் துணிச்சலையும் தியாகத்தையும் வியந்து, உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஆங்கிலத்தில் ஒரு கவிதையை இயற்றி கல்லூரி ஆண்டு மலரில் வெளியிட்டார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதை பகத்சிங் பகத்சிங்கேஸ என் அருமைச் சகோதரனே ஸ உன் மரணத்திற்கு எல்லோரும் அழுகிறார்கள் அரற்றுகிறார்கள். ஆனால் நானோ வேதனைப் பெருமூச்சோடு மகிழ்ச்சியும் அடைகிறேன் காரணம் - அடிமை இந்தியாவில் இருந்து விடுதலை பெற்ற அதிர்ஷ்டக்காரன் நீ வாழ்ந்த காலத்தில் நிர்ப்பந்தங்களின் அழுத்தத்தில் இரத்தக் கண்ணீர் வடித்தாய் ஆனால் இப்போது உன் ஆன்மா சுதந்திர வானில் சுற்றித் திரிகிறது எந்த அடிமைச் சங்கிலியும் எட்டிப் பார்க்க முடியாத எல்லையற்ற வெளிகளில் சஞ்சரிக்கிறது ஒரு கவலை என்னை வாட்டுகிறது. உன்னை அடக்கம் செய்த அந்தச் சிறுதுண்டு நிலம் அதுவும் கூட இப்போது அடிமைதான் உன் பூத உடல் அமைதியாய் சுதந்திரமாய் நிம்மதியாய் ஓய்வெடுக்க புனிதமான புதைகுழிப் பூமியையாவது விடுதலை செய்வோமா நீ வாழ்ந்தது அடிமையாய்இ அடிமைக்கு ஏது நிம்மதியான ஓய்வு (ஆங்கிலத்திலிருந்து தமிழில் : கவிஞர் காமு-கா. முருகானந்தம்) மேலும், கல்லூரிக் காலத்தில் அவர் அடர்ந்த கானகங்களிலும், ஏரிகளிலும், நதிக்கரைகளிலும் அடிக்கடி பயணம் செய்து இயற்கை அழகை இரசிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். காஷ்மீர் மாநிலம், _நகருக்கு அருகில் குல்மார்க் பள்ளத்தாக்கின் இயற்கை அழகில் மனதைப் பறிகொடுத்து, ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதை: காஷ்மீர் பள்ளத்தாக்குஸ குல்மார்க்கில் ஓர் இரவு அமைதி ஆழ்ந்த அமைதி பூமியில் எங்கும் இல்லா அமைதியை ஊடறுத்துக் கேட்கிறது துரத்து அருவியின் பேரோசை விதிவசத்தால் பிரியப்போகும் காதலர்களின் கடைசி சந்திப்பின் விசும்பல் இளவரசிகளாய் தோன்றும் இந்தக் குன்றுகளை இனி எப்போது காண்பேன் இந்தப் பேரழகில் ஆழ்ந்து போவது இனி எப்போது எங்கோ இரவுத் தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்து ஏங்கத்தான் முடியும் நிலவும் நட்சத்திரங்களும் சிந்தும் நீல ஒளியில் இரவு அழகாகிறது ஒவ்வொரு ஒற்றை விளக்கும் குடிசைக்குள் ஊர்ந்து வரும் மகிழ்ச்சியை அடைகாக்கும் கூடாகிறது அந்த இரவில் தான் குடிசையை விட்டு வெளியே வருகிறேன் பனிக் குன்றுகளின் மேல் பார்வை பதிகிறது நிலைகுத்துகிறது ஒளிரும் நட்சத்திரங்கள் அச்சமூட்டுகின்றன (ஆங்கிலத்திலிருந்து தமிழில் : கவிஞர் காமு-கா.முருகானந்தம்) இவ்வாறு லாகூர் அரசினர் கலைக்கல்லூரியில் பால்ராஜ் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற காலத்தில் அவர் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதும் அளவிற்கு திறமை பெற்றிருந்தார். ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி மற்றும் உருது மொழிகளில் படைப்புகளை வெளியிடும் அளவிற்கு மொழிப்புலமை பெற்றிருந்தார். தந்தையின் இறக்குமதித் தொழிலில் “மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் நாம் விரும்பும் தொழிலில், வேலையில் சுறுசுறுப்பாக நாம் ஈடுபடவேண்டும். மனசுக்கு பிடிக்காத வேலையில், அதிருப்தியுடன் நீடிப்பது நம் வாழ்நாளை வீணாக்கும் செயலாகும். நாம் தேர்ந்தெடுத்த தொழில் அல்லது வேலை காலப்போக்கில் நம்முடைய சுபாவத்துக்குப் பொருத்தமானதல்ல என்று அனுபவத்தில் தெரியவந்தால், அது எவ்வளவு வருமானம் வருக்கூடிய தொழில் அல்லது வேலையாக இருந்தாலும் சரி ..... அதை உடனே கைவிட்டுவிட்டு நம் மனம் விரும்பும் வேறு தொழில் அல்லது வேலைக்கு மாறிக் கொள்ள வேண்டும்” என்பது என் அண்ணனின் கொள்கை, பிறவிக்குணமாகும். (எழுத்தாளர் - பீஸ்மம் சஹானி - பால்ராஜ் சஹானியின் தம்பி) கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பால்ராஜ் சஹானி மேற்கொண்ட வாழ:க்கைப் பயணம், அவரது குணத்தைப் பற்றி அவரது தம்பி சொன்ன மேற்கண்ட சொற்சித்திரம் முற்றிலும் சரியானதே என்பதை நாம் பார்க்கப் போகிறோம். 1933ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (M.A.) பட்டம் பெற்றவுடன் பால்ராஜ் தன் சொந்த ஊரான ராவல்பிண்டி நகருக்குத் திரும்பினார். அந்தக் காலத்தில் அவரைப்போல் படித்த இளைஞர்களின் கனவு, மேற்கொண்டு ஐ.சி.எஸ் படித்து ஆங்கிலேயரின் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராவதே! பால்ராஜ் அவரது சுதந்திரமான எண்ணங்கள், கலைஇலக்கியம், இசை மற்றும் நாடகங்களிலிருந்த ஆர்வம் காரணமாக அரசுவேலையை அறவே வெறுத்தார். அவரது தந்தை தன்னுடைய இறக்குமதி வாணிபத்தில் ஈடுபடுமாறு அவரை வற்புறுத்தி வந்தார். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நவீன ஆடம்பரமான கைக்கடிகாரம், வாசனை திரவியங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், வண்ணத் துணிகள் மற்றும் சில ஆடம்பரப் பொருட்களைத் தயார் செய்யும் புகழ்பெற்ற நிறுவனங்கள், அவற்றை ராவல்பிண்டி நகரில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் முகவராக பால்ராஜின் தந்தையை நியமித்திருந்தார்கள். அந்தப் பொருட்களை விநியோகம் செய்துவிட்டு, வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தார். இதன்மூலம் அவருக்கு கணிசமான தொகை கமிஷனாகக் கிடைத்து வந்தது. இந்த இறக்குமதி வணிகத் தொழிலில் அதிக முதலீடு எதுவும் தேவைப்படவில்லை. நஷ்டம் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. ஓய்வு நேரமும் அதிகமாகக் கிடைத்தது. தந்தையின் வற்புறுத்தலையும், விருப்பத்தையும் தட்டமுடியாமல் பால்ராஜ் 1937 ஆம் ஆண்டு வரை சுமார் மூன்றாண்டு காலம் அவரது தொழிலைக் கவனித்து வந்தார். இதில் அவருக்கு பெரிய விருப்பம் எதுவுமிருக்கவில்லை. ஓய்வுநேரம் அதிகம் கிடைத்ததால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவரது நெருங்கிய நண்பரும் நாடோடிப் பாடல்களை சேகரித்து பதிப்பிட்டு வெளியிடுவதில் மிகுந்த அக்கறை கொண்டவருமான எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் தேவேந்திர சத்யாத்திரி என்பவருடன் இணைந்து, பஞ்சாப் கிராமங்களில் சுற்றியலைந்து மக்களைச் சந்தித்தார். மேற்கத்திய கல்வியும், நடை, உடை, பாவனைகளுக்கும் பழகிப்போயிருந்த பால்ராஜூக்கு கிராம மக்களின் சந்திப்பு, அந்த மக்களின் பாரம்பரியமான கலைகளின்மீது அவருக்கு புதியஆர்வத்தை ஏற்படுத்தியது. அந்த நண்பருடன் ஏராளமான நாடோடிப் பாடல்களைச் சேகரித்தார். கிராம மக்களின் நாட்டார் இலக்கியத்தை தெரிந்துகொண்டார். அந்த அனுபவம், பிற்காலத்தில் கம்யூனிஸட் கட்சி தலைவர் பி.சி.ஜோஷி தொடங்கிய இந்திய மக்கள் நாடகமன்றத்தின் கலைநிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில், இயக்குவதில் அவருக்கு மிகுந்த உதவியாக அமைந்தது. பால்ராஜிடம் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிய ஆங்கிலமொழிப் பேராசியர் ஜஸ்வந்த் ராயை அவர் தனது குருவாகவே மதித்துப் போற்றினார். பால்ராஜின் ஆளுமையைச் செழுமைப்படுத்தியதில் அவருக்குப் பெரும்பங்குண்டு. கல்லூரி மாணவப்பருவத்தில் பேராசிரியர் ஜஸ்வந்த் ராய் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய பால்ராஜ் சஹானிக்கு தனது தங்கை தமயந்தியைத் திருமணம் செய்துகொடுக்க முன்வந்தார் ஜஸ்வந்த் ராய். பால்ராஜ் - தமயந்தி திருமணம் 1936 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. தமயந்தியும் முற்போக்கான கருத்துகள் கொண்ட இளம்பெண். பால்ராஜின் வாழ்க்கையில், அவர் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனை முயற்சிகளிலும் பால்ராஜூக்கு உறுதுணையாகவும், உந்துசக்தியாகவும், தோழியாகவும் விளங்கினார். தந்தையின் இறக்குமதி கமிஷன் ஏbஜன்ட் வேலையில் மூன்றாண்டுகளுக்கு மேல் பால்ராஜால் ஆர்வத்துடன் ஈடுபடமுடியவில்லை. திருமணமும் முடிந்துவிட்டது. ராவல்பிண்டி வாழ்க்கை அவருக்கு கசந்துவிட்டது. புதிய வாழ்க்கை அனுபவங்களைத் தேடி அவரது மனம் அமைதியில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேறி தானொரு புதிய வேலையில் ஈடுபடப்போவதாக 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது பெற்றோரிடம் அறிவித்தார். தந்தையின் தொழிலில் அவருக்கிருந்த மூன்று வருட அனுபவங்களின் அடிப்படையில் தனது ஒரே தம்பி பீஷ்மம் சஹானிக்கு இறக்குமதி கமிசன் ஏbஜன்ட் தொழிலில் பின்பற்ற வேண்டிய நடைமுறை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். அவரது முடிவை மாற்றமுடியாதென்று கண்டுகொண்ட தந்தையால் அவரைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை “சிறகு முளைத்த பறவை கூட்டைவிட்டு வெளியேறி வானில் சுதந்திரமாக பறந்துசெல்வது இயற்கைதான்” என்று பால்ராஜின் தாயார் தனது கணவனைச் சமாதானப்படுத்தினார். செப்டம்பர் மாதஇறுதியில் பால்ராஜ் தனது மனைவி தமயந்தியையும் அழைத்துக்கொண்டு லாகூரில் ஒரு வாடகை வீட்டுக்குக் குடியேறினார். பால்ராஜ், கல்லூரியில் தன்னுடன் ஒன்றாகப் படித்த மாணவன் ஜக் பர்வேஸ் சுந்தர், அவரது நண்பர் பி.பி.எல்.பேடி மற்றும் திருமதி.பேடி ஆகிய நான்கு பேரும் ஒன்றிணைந்து “Monday Morning” என்ற ஆங்கில வாரஏட்டை லாகூரில் தொடங்கினார்கள். ஏற்கனவே லாகூர் நகரிலிருந்து The Tribune எனும் தேசீய வாரஏடும், ஆங்கிலேய ஆட்சியை ஆதரிக்கும் Civil and Military Gazzette என்ற வாரஏடும் ஆங்கிலத்தில் வெளியாகி வாசகர்களிடையே பரவலான ஆதரவுடன் வெளிவந்து கொண்டிருந்தன. பால்ராஜ் மற்றும் ஆசிரியர் குழுவிற்கு எந்தவிதமான பத்திரிக்கை முன்அனுபவம் இருந்ததில்லை. பத்திரிக்கை நடத்துமளவிற்கு நிதிவசதியும் போதாது. முரட்டுத் துணிச்சலுடனும், ஆர்வத்தின் காரணமாகவும் தொடங்கப்பட்ட Monday Morning என்ற வாரஇதழ் நான்கு வாரத்தோடு நின்றுவிட்டது. வெளிவந்த நான்கு இதழ்களின் தயாரிப்பும் தரமாக இல்லாமல் மோசமாக இருந்தன. பால்ராஜின் பத்திரிக்கையாளர் கனவு லாகூரில் அத்துடன் கலைந்து போனது! லாகூர் கல்லூரி நண்பன் ஒருவரின் அண்ணன் வாத்ஸhயனர் என்பவர் கல்கத்தா நகரில் பிரபல இந்தி எழுத்தாளராக புகழ்பெற்றிருந்தார். அவர் மூலமாக கல்கத்தா நகரில் ஏதாவதொரு வேலை தேடிக்கொள்ளலாம் என்ற திட்டத்தோடு, நண்பனிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதம் வாங்கிக்கொண்டு 1937 ஆம் ஆண்டின் இறுதியில் லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்துசேர்ந்தார் பால்ராஜ். எழுத்தாளர் வாத்ஸhயனர் வீட்டிலேயே மனைவி தமயந்தியுடன் தங்கினார். சிறுவர்களுக்கான இந்தி இலக்கிய இதழ் “சசித்ரா பாரத்” ஆசிரியரிடம் பால்ராஜை எழுத்தாளர் வாத்ஸhயனர் அறிமுகப்படுத்தினார். அந்த சிறுவர்களுக்கான இலக்கிய இதழில் சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கதைகளை நகைச்சுவை ததும்ப பால்ராஜூம் தொடர்ந்து எழுதிவந்தார். வாசகர்களிடையே அவரது கதைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது. அவர் எழுதும் கதை மாதத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே அந்த இதழில் வெளியானது. வெளியான ஒவ்வொரு சிறுகதைக்கும் பால்ராஜூக்கு ரூபாய் நான்கு மட்டுமே சன்மானமாக கொடுக்கப்பட்டு வந்தது. இந்த குறைந்த வருமானத்தில் அவரால் குடும்பம் நடத்துவதற்கு சிரமமேற்பட்டது. நிதிப்பற்றாக்குறைவினால் பால்ராஜ் மிகுந்த நெருக்கடிக்கும், மனஉளைச்சலுக்கும் உள்ளானார். தன்னுடன் குடியிருக்க உதவிசெய்த எழுத்தாளர் வாத்ஸhயனருக்கும் பால்ராஜ் தொடர்ந்து சுமையாக இருக்க விரும்பவில்லை. குறிப்பிட்ட மாதவருமானம் வரக்கூடிய வேலையை தேடிக்கொண்டிருந்தார். அந்த நெருக்கடியிலான நேரத்தில், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தலைமையேற்று நடத்திவந்த சாந்திநிகேதன் உயர்நிலைப்பள்ளியில் இந்திமொழி ஆசிரியர் வேலைக்கு ஒருவர் தேவையென்றும், அந்த ஆசிரியர் வேலைக்கு மாதம் ரூபாய் நாற்பது சம்பளமும், தங்குமிடமும், உணவும் வழங்கப்படும் என்றும் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் வெளியாகி இருந்ததைப் பால்ராஜ் கவனித்தார். முழுநேர எழுத்தாளர் வேலையைக் கைவிட்டுவிட்டு சாந்திநிகேதன் உயர்நிலைப்பள்ளியில் இந்திமொழி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். சாந்திநிகேதனில் இந்திமொழி ஆசிரியர்வேலை அவருக்கு பல புதிய அலுபவங்களைத் தந்தது. மற்ற கல்வி நிறுவனங்களைப் போலில்லாமல் அங்கு மாணவர்களுக்கான வகுப்புகள் மரத்தடியில் பசுமையான புல்வெளியில் நடத்தப்பட்டது. வகுப்பறைகளே கிடையாது. உயர்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் பசுமையான புல்தரையும், மரம், செடிகொடிகளும் அமைந்து மனதுக்கு பரவசமூட்டும். அதிகாலையில் அங்கே தங்கிப்படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் இன்னிசைப் பாட்டு, பால்ராஜ் - தமயந்தி தம்பதியினரை துயில் எழுப்பியது. அதிகாலை நேரத்தில் மகாகவி தாகூர், தான் இயற்றிய வங்கமொழிப் பாடல்களுக்கு அவரே இசையமைத்து பாடிக் கொண்டிருப்பதை பால்ராஜ் - தமயந்தி பலமுறை கேட்டு மகிழ்ந்தார்கள். முக்கியமான பாடங்கள் அனைத்தும் தாய்மொழியான வங்கமொழியிலேயே நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியையும் துணைப்பாடங்களாக மாணவர்கள் கற்றுக்bhண்டனர். அங்கு பணியிலிருந்த ஆசிரியர்களும், மாணவர்களும், தாகூரின் சிறுகதைகளை, பாடல்களை இசைநாடகங்களாக்கி நிகழ்ச்சிகளை நடத்தினர். பால்ராஜூம் ஓர் நாடகத்தை எழுதி இயக்கினார். சாந்திநிகேதனில் அவருக்கு கிடைத்த புதிய அனுபவத்தின் காரணமாக “சாந்திநிகேதன் இந்தியாவின் கலாச்சாரத் தலைநகர்” என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். சாந்திநிகேதனில் அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் “தாய்மொழி” சம்பந்தமாக அவருக்கு புதியதொரு விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும் பால்ராஜ் நினைவு கூர்கிறார். அவர் ஆசிரியர் வேலையில் இருந்த காலத்திலேயே கல்கத்தாவிலிருந்து வெளியான பல இலக்கிய இதழ்களுக்கு இந்தியிலும், ஆங்கிலமொழியிலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதிவந்தார். பால்ராஜூம் தமயந்தியும் அடிக்கடி தாகூரை சந்தித்து அரசியல் மற்றும் சமூகப்பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருநாள் பால்ராஜ் தாகூருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது தான் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதிவரும் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டார். “பல மொழிகள் தெரிந்த ஒருவர் அவருக்குப் பழக்கமான எந்தமொழியில் வேண்டுமானாலும் பத்திரிக்கைகளுக்கு எழுதலாம்” என்று பால்ராஜ் குறிப்பிட்டார். அதற்கு தாகூர் “எனக்கு ஆங்கிலத்தில் புலமை இருந்தாலும் நான் எனது தாய்மொழியான வங்கமொழியிலேயே முதலில் எழுதுகிறேன். தேவைப்படும்போது அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக் கொள்வது எனது வழக்கம். ஏனெனில், நாம் சிந்திப்பது நமது தாய்மொழியில்தான். மொழி என்பது ஒருவரது கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்கும் கருவி மட்டுமல்ல. தாய்மொழி என்பது அந்த மொழியைப் பேசும் இனத்தின் பண்பாட்டு அடையாளமாகும். தாய்மொழி ஒருவனுடைய மனைவிக்குச் சமம். அவன் பயன்படுத்தும் மற்ற மொழிகள் மனைவியின் அந்தஸ்தை அவனுக்கு கொடுக்காது. தாய்மொழியைத்தவிர மற்ற மொழிகள் அவனுக்கு தெரிந்திருந்தாலும் அவனைப் பொறுத்தவரை அவன் பயன்படுத்தும் மற்ற மொழிகள் மனைவிiயைத் தவிர அவன் வேறொரு பெண்ணை விரும்பியதைப் போலத்தான். அவனுடைய மனைவியைவிட இன்னொருத்தி எவ்வளவு பேரழகியாக இருப்பினும் அவளும் மனைவியும் ஒன்றல்ல” என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார். இந்த உரையாடல்தான் பிற்காலத்தில் பால்ராஜ் பல சிறுகதைகள், பயண நூல்கள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், ஆகியவற்றை அவரது தாய்மொழியாகிய பஞ்சாபி (குர்முகி) மொழியில் எழுதிப் புகழ்பெறக் காரணமாக அமைந்தது என்றும், “தாய்மொழிக் கொள்கையில் காரல் மார்க்ஸ், காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரே எனது குருக்கள்” என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். சாந்திநிகேதனில் இருந்த காலத்தில் வங்கமொழி இசையை கேட்டு ரசிப்பதற்கும், தாகூர் இயற்றிய கவிதைகளுக்கு அவரே இசையமைத்து பாடுவதைக் கேட்பதற்கும் பால்ராஜூக்கு ஏராளமான வாய்ப்புகள் ஏற்பட்டன. “இதன்மூலம் இந்திய நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு குறித்தும் அவருக்குப் புதியதொரு விழிப்புணர்வு ஏற்பட்டது” என்றும் பால்ராஜ் நினைவு கூர்கிறார். காந்தியடிகளும், ஜவஹர்லால் நேருவும் தாகூரைச் சந்தித்துப்பேச பலமுறை சாந்திநிகேதனுக்கு வந்துசென்றார்கள். அவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் பால்ராஜூக்கு ஏற்பட்டது. மேலும், சாந்திநிகேதனில் அவர் புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் புரட்சியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். புகழ்பெற்ற இந்திமொழியறிஞரும், எழுத்தாளருமான ஹஸhரி பிரசாத் துவிவேதி, வரலாற்றாசிரியர் சித்தி மோகன் சென் மற்றும் தலைசிறந்த நாடக ஆசிரியர் நந்தலால் கோஷ் ஆகியோர் சாந்திநிகேதனில் தங்கியிருந்து மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தினார்கள். அவர்களோடு நெருங்கிப்பழகிய பால்ராஜூக்கு, “இந்திய சமூகத்தைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும் ஆழமான சிந்தனைகளையும், வளமான புதிய அனுபவத்தையும் என்னுள் ஏற்படுத்தியது” என்றும் பால்ராஜ் நினைவு கூர்கிறார். பால்ராஜின் மனைவி தமயந்தியும் சாந்திநிகேதன் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து இந்திமொழியில் இளங்கலைப் பட்டம் (B.A.) பெற்றார். வார்தா ஆசிரமம் நோக்கி….. சாந்திநிகேதனில் பால்ராஜ் ஆசிரியர் பணியிலிருந்தபொழுது 1938 ஆம் ஆண்டின் இறுதியில் கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒரு அரங்கமும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அந்த கண்காட்சி அரங்கத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பால்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் டாக்டர். ஜாகீர் உசேன் சாந்திநிகேதன் கண்காட்சி அரங்கத்தைப் பார்வையிட ஒருநாள் வந்திருந்தார். அவர் பால்ராஜோடு உரையாடி, அவரது எழுத்தாற்றல் முன்அனுபவங்களை அறிந்து வியந்தார். மராட்டிய மாநிலம், வார்தாவில் ஒரு புதிய தேசியக் கல்வித்திட்டம் உருவாக்கியிருப்பதாகவும், காந்தியடிகள் அந்த ஆசிரமத்திலேயே தங்கியிருந்து அந்த கல்வித் திட்டத்திற்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் பால்ராஜிடம் தெரிவித்தார். வார்தா கல்வித் திட்டத்தை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக வார்தா ஆசிரமத்திலிருந்து “Nai Talim” என்ற பத்திரிக்கை துவக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இலண்டனில் உயர்கல்வி கற்றபின் நாடு திரும்பியிருந்த ஆரியநாயகம் என்பவர், அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக செயல்பட்டு வருவதாகவும், பால்ராஜ் அந்த பத்திரிக்கையின் உதவியாசிரியராகச் செயல்பட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சாந்திநிகேதனுக்குள் மரம், செடிகொடி நிறைந்த அழகிய பூங்காவிற்கிடையில் அமைதியான இயற்கைச் சூழ்நிலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், சாந்திநிகேதனுக்கு வெளியே காந்தியடிகளின் தலைமையில் சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டெழுந்து அனல்வீசிக் கொண்டிருந்ததையும் பால்ராஜ் அறிவார். இந்த விடுதலைப் போராட்டத்தில் ஏதாவதொரு வழியில் தானும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்பினார். அதன்விளைவாக, சாந்திநிகேதன் ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு வார்தா கல்வித்திட்டத்தின் பத்திரிக்கை “Nai Talim” உதவியாசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள 1939 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்தை நோக்கி பால்ராஜ் தனது புதிய வாழ்க்கைப் பயணத்தைத் துவக்கினார். காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்து “Nai Talim” பத்திரிக்கை வேலைகளில் மூழ்கினார். ஆசிரமத்திற்குள் வசித்துக் கொண்டிருந்த காந்தியடிகளை அடிக்கடி சந்தித்து, பல அரசியல் மற்றும் சமூகப்பிரச்சனைகள் குறித்து விவாதங்களை நடத்தினார். தாகூரைப் போலவே, காந்தியடிகளும் தாய்மொழிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பால்ராஜ் உணர்ந்தார் ! பால்ராஜ் உட்பட ஆசிரமவாசிகள் அனைவரும் ஓலை வேயப்பட்ட மண்குடிசைகளில் வாழ்ந்தனர். மின்சாரவிளக்கு கிடையாது. இரவில் ஒளியூட்டுவதற்கு மண்ணெண்ணெய் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சமையல் அடுப்புக்கு விறகுகளும், சுள்ளிகளும் பயன்படுத்தப்பட்டன. எல்லோருக்குமே சைவ உணவு. ஆண், பெண் ஆசிரமவாசிகள் அனைவரும் முரட்டுக் கதர்த்துணியையே அணிந்தனர். ஆசிரமத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஆசிரமவாசிகளோடு தினசரி காலையிலும் மாலையிலும் காந்தியடிகள், நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். பத்திரிக்கை வேலைகள் அதிகம் இல்லாதபோது பால்ராஜூம் காந்தியடிகளின் நடைபயணத்தில் கலந்து கொள்வதுண்டு. பால்ராஜின் பத்திரிக்கைப் பணிகளையும், ஆசிரம வாழ்க்கையையும் நேரில்பார்க்க அவரது தம்பி பீஷ்மம் சஹானி ஒருமுறை ஆசிரமத்திற்கு விருந்தினராக வந்து தங்கியிருந்தார். பால்ராஜை சமாதானப்படுத்தி சொந்த ஊருக்கு திருப்பியழைத்துவர இளையமகனை அனுப்பி வைத்ததே அவர்களின் தந்தைதான்! அண்ணனது எளிமையான வாழ்க்கையைப் பார்த்து பீஷ்மம் சஹானி ஆச்சரியப்பட்டார். “காந்தியடிகள் மற்றும் தாகூர் ஆகிய இருவரில் யாராவது ஒருவருடன் வாழ முடிவுசெய்ய வேண்டிய நேரம் வந்தால், நீங்கள் யாருடன் வாழ விரும்புகிறீர்கள்” என்று பீஷ்மம் சஹானி தன் அண்ணனிடம் கேள்வியெழுப்பினார். “நிச்சயமாக காந்தியடிகளுடன்தான்” என்று பதிலளித்தார் பால்ராஜ்! “காந்தியடிகளின் கதர்துணி இயக்கம், சுற்றுப்புறச்சூழல் சுத்தம் மற்றும் அஹிம்சை வழியிலான போராட்டங்கள்மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பது ஒரு பொருளற்ற ஆர்வம், பிரமை. இந்தவகைப் போராட்டங்களினால் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நாட்டைவிட்டுத் துரத்திவிட முடியுமென்று எப்படி நம்புகிறீர்கள்” இது தம்பி பீஷ்மம் சஹானி எழுப்பிய கேள்வி. சிறிதுநேரம் ஆழ்ந்துயோசித்த பால்ராஜ், தம்பிக்குச் சொன்ன பதில் “ காந்தியடிகளின் கொள்கைகள், இலட்சியம்மீது எனக்கு பெரிய ஆர்வம் எதுவுமில்லை என்றாலும், இந்த துணிச்சாலான வியப்புக்குரிய மனிதரோடு சிறிது காலமாவது வாழவேண்டுமென்ற விருப்பத்தோடுதான் நானிங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவருடைய துணிச்சலுக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை உனக்குச் சொல்லவேண்டும். வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தியடிகள் லண்டனுக்கு போயிருந்தார். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் காந்தியடிகளுக்குக் கொடுத்த ஒரு விருந்தின்போது “பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நினைத்தால் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தை ஆங்கிலேயரின் ஆயுத பலத்தால் ஒரே நாளில் ஒழித்துக்கட்டிவிட முடியும்” என்று அந்த பிரதமர் சொன்னாராம். அதற்கு காந்தியடிகள் “சாத்வீகமுறையில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் மக்களை, சாதாரண கோழைகளென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். எனது தாய்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தால், உங்கள் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு கொளுத்துவதைப்போல் கொளுத்தி விடுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம் ! லண்டனில் B.B.C. வானொலியில் வேலை. வார்தா ஆசிரமத்தில் பால்ராஜ் தங்கியிருந்த காலத்தில், 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்திய வானொலி நிலையத்தில் (All India Radio) இயக்குனராக இருந்த லயோனல் பீல்டன் என்பவர், ஆங்கிலேய அதிகாரியாக இருந்தும் அவர் காந்தியடிகளின்மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார். லண்டனில் செயல்பட்டுக் கொண்டிருந்த பி.பி.சி வானொலி நிலையத்தில், இந்திய மக்களுக்காக செய்தி ஒலிபரப்புப்பிரிவைத் தொடங்குதற்காக லண்டனுக்கு போகும்வழியில் வார்தா ஆசிரமத்திற்கு வந்திருந்தார். பால்ராஜின் சிறப்பான தகுதிகளையும், முன்அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தமாதிரி திறமையுள்ள பால்ராஜூம் தமயந்தியும் லண்டன் பி.பி.சி வானொலியில் இந்திமொழி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வேலையில் சேர்ந்தால், அந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையுமென்று கருதினார். தனது எண்ணங்களை காந்தியடிகளோடு பகிர்ந்து கொண்டார். அவர்கள் இருவரையும் லண்டன் அழைத்துச் செல்ல காந்தியடிகளிடம் அனுமதி கேட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் பால்ராஜூம், தமயந்தியும் பி.பி.சி. வானொலியில் சேர்ந்து பணியாற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று காந்தியடிகளும் கருதினார். இவ்வாறு காந்தியடிகளின் அனுமதியைப் பெற்ற பால்ராஜூம் தமயந்தியும் 1940 ஆம் ஆண்டின் இறுதியில் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்களுக்கு முதல் ஆண்குழந்தை பிறந்தது. ஆறுமாதக் கைக்குழந்தை பரிக்ஷத் சஹானியை தனது பெற்றோர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு பால்ராஜ் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். லண்டன் பி.பி.சி வானொலியில் கணவன்மனைவி இருவரும் செய்தி ஒலிபரப்பாளர் மற்றும் கலைநிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக வேலைக்குச் சேர்ந்தனர். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பால்ராஜ் தம்பதியர் செய்தி வாசிப்பாளராகவும், கலைநிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்களாகவும் திறம்படப் பணியாற்றினார்கள். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர், முசோலினி மற்றும் டோஜோ (ஜப்பான்) சர்வாதிகாரிகள் மற்றும் பாசிஸ்ட் கூட்டணி முறியடிக்கப்படவேண்டியதின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உரைநடை நிகழ்ச்சிகளாகத் தயாரித்து வழங்கினர். வெளிநாட்டுப் போர்க்களங்களில் போரில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களிடையே இந்த வானொலி நிகழ்ச்சிகள் பெருத்த வரவேற்பைப் பெற்றன! லண்டன் பி.பி.சி வானொலி நிலைய நிகழ்ச்சித் தயாரிப்பில் பல இடதுசாரி அறிஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். மேலும், அந்த வானொலியில் பணியாற்றிவந்த பெருமபான்மையான ஊழியர்கள் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் தலைமையில் இயங்கிவந்த தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள். பால்ராஜ்-தமயந்தியுடன் பணியாற்றிவந்த சகஊழியர்கள்மூலம் அவர்களுக்கு இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் மார்க்சீய தத்துவமும் அறிமுகமாயின. மேலும் பி.பி.சி வானொலியில் பணியாற்றிய கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மூலம் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபலமான கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள் ஹாp பாலிட், பெஞ்சமின் பிராட்லி,; ரஜனி பாமிதத் ஆகியோர் அறிமுகமானார்கள். கணவன்மனைவி இருவரும் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் “DAILY WORKER” இருவருக்கும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஊட்டின. இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம், ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக நடைபெற்றுவந்த உலகளாவிய போராட்டத்துடனுள்ள இணைப்பையும் கண்டுகொள்ள பால்ராஜ் தம்பதியருக்கு இங்;கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் தொடர்பு உதவியது. பால்ராஜின் அறிவுத்தேடல், அவரை விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகளுக்கு அறிமுகம் செய்தது. வானொலியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்ததின் மூலம், நாடகங்களுக்குத் தேவைப்படும் புதிய குரல்வளத்தை பால்ராஜ் கற்றுக்கொண்டார். இந்தி, இந்துஸ்தானி மற்றும் உருது மொழிகளில் ஏராளமான சிறு நாடகங்கள் எழுதித் தயாரித்து இயக்கினார். பாசிச ஆதிக்கத்தின் அபாயங்களையும், கொடுமைகளையும் அம்பலப்படுத்துவதற்கு பல்வேறு கலாச்சார வடிவங்களைப் பயன்படுத்தினார். லண்டன் திரையரங்குகளில் உலகப்புகழ் பெற்ற “அலெக்ஸhண்டர் நொவாஸ்கி, போர்கப்பல் பொடாம்கின், பால்டிக் டெபுடி, தாய், கார்க்கியின் வாழ்க்கை, வோல்கா – வோல்கா” ஆகிய சோவியத் ரஷ்யத் திரைப்படங்களை பால்ராஜூம் தமயந்தியும் பார்த்து ரசித்தனர். அந்த திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பங்களையும், எதார்த்தவகை நடிப்பையும் தனக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் பால்ராஜ் கூறுகிறார். திரைப்படங்களின் கதைகள் சமூகநீதிக்கும், அடிப்படையான சமூகமாற்றத்திற்கும் குரல் கொடுப்பவையாக இருக்கவேண்டும் என்பதையும் அந்த ரஷ்யப் படங்களின்மூலம் தான் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார். சோவியத் ரஷ்ய திரைபடங்களைப் பார்த்து ரசித்த அவர்கள் புதிய அனுபவங்களைப் பெற்றனர். உலகப் புகழ்பெற்ற ரஷ்ய திரைப்பட இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியையும் அடையாளம் கண்டனர். இதன் காரணமாகத்தான் “காரல் மார்க்ஸ், லெனின், காந்தியடிகள், தாகூர் மற்றும் ரஷ்ய திரைப்பட இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஆகியோர் என் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்திய குருமார்கள்” என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் பால்ராஜ் நன்றி தெரிவித்துப் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவிலிருந்தபோது, இலக்கியம் மற்றும் நாடகக்கலையில் அபாரமான திறமைகளை பால்ராஜ் வெளிப்படுத்தியிருந்தார். நடிப்புக்கலை, நாடகக்கலை, நாடகங்கள் எழுதித் தயாரித்தல், இயக்குதல், ஆகியவற்றில் இலண்டனில் கிடைத்த சிறப்புப்பயிற்சி மூலம், அவர் மேலும் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். அவருடைய இந்த அனுபவம், பிற்காலத்தில் இந்திய வாழ்வின் கலாச்சார துறையில், குறிப்பாக இந்திய மக்கள் நாடகமன்றம் மற்றும் திரைப்படவுலகில் அவர் பல அரிய சாதனைகள் புரிய அடித்தளமாக அமைந்தது. பால்ராஜ் என்ற மனிதநேயமிக்க இந்திய தேசபக்தனுக்கு, லண்டன் வாழ்க்கை கொடுத்த புதியஅனுபவம், பிற்காலத்தில் இந்தியா திரும்பியவுடன் அவர் பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட உந்துசக்தியாக அமைந்தது என்று சொல்லலாம். இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பால்ராஜூம் தமயந்தியும் தாய்நாடு திரும்பினர். இங்கிலாந்து நாட்டில் தங்கி உயர்கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் இந்தியர்களிடம் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பென் பிராட்லி தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார். பால்ராஜூம் தமயந்தியும் தாய்நாடு திரும்புவதற்கு முன்பே அவர்களிருவரும் கம்யூனிஸ்ட் கட்சியின்மீது வைத்துள்ள பற்று, இலட்சியத்தில் மனஉறுதி, எடுத்துக்கொண்ட வேலைகளைக் கடினமாக உழைத்து நிறைவேற்றுதல் போன்ற அரிய பண்புகளைப் பாராட்டி, புகழ்பெற்ற அந்த இங்கிலாந்து நாட்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பென் பிராட்லி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷிக்கு அறிக்கையொன்றை அனுப்பியிருந்தார். இதை பி.சி.ஜோஷி தனது நினைவுக் குறிப்புகளில் பதிவுசெய்துள்ளார். இந்திய மக்கள் நாடகமன்றத்தின் இதயம் பி.சி.ஜோஷி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில் (1936-1947) அவரது தலைமையில் கட்சி அடைந்த சாதனைகளில் மிகமுக்கியமான வரலாற்றுச் சாதனையென்பது “இந்திய மக்கள் நாடகமன்றம்” எனும் கலாச்சார இயக்கமாகும்! பல்வேறு மாநிலங்களில், குறி;ப்பாக வங்காளம், ஆந்திரா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 1936 ஆம் ஆண்டிலிருந்தே ஒருசில கலை, கலாச்சாரக் குழுக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வந்தன. அவற்றை “இந்திய மக்கள் நாடகமன்றம்” என்ற பெயரில் அகில இந்திய அமைப்பின்கீழ் பி.சி.ஜோஷி ஒருங்கிணைத்தார். 1943 மே மாதம் 23 ஆம் நாள்முதல் ஜுன் 1 ஆம் நாள்வரை பம்பாயில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முதல் தேசீய மாநாடு எழுச்சியோடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மே 25 ஆம் நாள் இந்திய மக்கள் நாடகமன்றம் (INDIAN PEOPLES THEATRE - IPTA ) என்ற கலாச்சார அமைப்பின் தொடக்க மாநாடும் அதேநகரில் நடந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் அவரவரது தாய்மொழியில் நாடகங்கள், தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாடோடிப்பாடல்களின் இசைநிகழ்ச்சிகளையும் நடத்திக்காட்டி கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளையும், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்களனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர். 1943 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் பம்பாயில் இந்திய மக்கள் நாடகமன்றத்தைத் தொடங்கி வழிநடத்திய மாநாட்டு வரவேற்புக்குழுவிற்கு ஜவஹர்லால் நேரு அடியிற்கண்ட வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். “இந்திய மக்கள் நாடகமன்றம், மக்களுக்கான நாடக இயக்கத்தை வளர்ச்சியடையச் செய்வதில் நடவடிக்கைகள் மேற்கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உங்கள் நாடக இயக்கத்தின் வளர்ச்சியில் நான் அக்கறை கொண்டுள்ளேன். மக்களின் பாரம்பரியமான பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தின்மீது அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கலையை வளர்த்தீர்களானால், உங்கள் இயக்கம் வெற்றியடைய அதிக வாய்ப்புகளுண்டு. மக்கள்மீது அக்கறைகொண்ட படைப்புகளை உருவாக்கவில்லையென்றால், உங்கள் இயக்கம் காலப்போக்கில் மறைந்துவிடும். மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான சுற்றறிக்கையை கூர்ந்து கவனித்து மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில், நடைபெறவிருக்கும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களுக்கானவை. மக்கள் நலனில் அக்கறை கொண்டவை! சீனாவிலும், ஸ்பெயின் நாட்டிலும் நடைமுறையிலிருக்கும் கலை, கலாச்சார இயக்கம் மக்கள் நலன் சார்ந்தவை. துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அப்படியில்லை. உங்கள் புதிய அமைப்பு முற்போக்கான பாதையில் நடைபோடும் என்று நம்புகிறேன். இந்திய மக்கள் நாடகமன்றம் மக்களின் ஆதரவைப்பெற்று பெரும்வெற்றியடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.” ஜவஹர்லால் நேரு தீர்க்கதரிசனமாகச் சொன்ன அவரது வாழ்த்துக்களுக்கேற்ப மக்களின் அனைத்து வகையான பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் பயன்படுத்தி இந்திய மக்கள் நாடகமன்றம் அகில இந்திய அளவில் மக்களிடையே புகழ் பெற்றது. பல புதியபுதிய மக்கள் கலைஞர்களை அடையாளங்கண்டு அறிமுகப்படுத்தியது. மக்களிடையே பரவலாகப் பிரபலமாகி வரவேற்புப் பெற்றிருந்த கலை வடிவங்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொள்கைகளையும், போராட்டங்களையும், கருத்துக்களையும், தேசபக்தி, மதச்சார்பின்மை மற்றும் நாட்டுநடப்புகளையும் மக்களிடையே பரவலாகக் கொண்டுபோக முடியும் என்பதை பி.சி.ஜோஷி கம்யூனிஸ்ட் கட்சி அணியினருக்குப் புரியவைத்தார். கலை, கலாச்சார நிகழ்ச்சிகளிலிருந்து ஒதுங்கித் தனிமைப்பட்டுக்கிடந்த கம்யூனிஸ்டுகளுக்கு கலை, கலாச்சார இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பும், அக்கறையும் ஆர்வமும் ஏற்படவும் ஜோஷி தூண்டுதலாக இருந்தார். இந்திய மக்கள் நாடகமன்றத்தைச் செயல்படுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகத் தலையிடாமல் அந்த அமைப்பு சுதந்திரமாகவும், ஜனநாயக வழியிலும் கட்சி சார்பற்ற முற்போக்கான கருத்துக்கள் கொண்ட கலைஞர்களுடனும் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஜோஷி வழிகாட்டினார். இந்திய மக்கள் நாடகமன்றம் ஜோஷியின் நேரடி மேற்பார்வையில் பல்துறைக் கலைஞர்களை ஒருங்கிணைத்தது. முற்போக்கான கருத்துக்கள் கொண்ட நாடகங்கள், தெருக்கூத்துக்கள், இசைநடனங்கள், நாடோடிப் பாடலிசை நிகழ்ச்சிகள் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே நடத்தப்பட்டன. தொழிற்சங்க மாநாடுகள், விவசாயிகள் மாநாடுகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் “இப்டா” என்றழைக்கப்பட்ட இந்திய மக்கள் நாடகமன்றத்தின் கலைக்குழு பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி, மக்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு புதிய உற்சாகம் பிறந்தது. கலைஞர்களிடமிருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் ஜோஷி மிகஅற்புதமாகச் செயல்பட்டார். கடுமையான கட்சி வேலைகளுக்கு இடையேயும் ஜோஷியே நாடகம், இசைநடன நிகழ்ச்சிகளுக்கு நேரில்வந்து கண்டுகளித்து அவற்றில் பங்கேற்ற கலைஞர்களை உற்சாசப்படுத்தினார். 1943 ஆம் ஆண்டில் தோன்றிய இந்திய மக்கள் நாடகமன்றம், பம்பாயில் தலைசிறந்த கலாச்சார இயக்கமாக வளர்ந்து மக்களிடையே புகழ்பெற்றது. அதன் கலைநிகழ்ச்சிகளுக்கு அன்றைய பிரபல இந்தித் திரைப்படக் கலைஞர்கள் பிரிதிவிராஜ் கபூர், ராஜ்கபூர், ஷசிகபூர் குடும்பத்தினர் மிகவும் உதவி செய்தனர். முதன்முதலாக முற்போக்கான எதார்த்தக்கதைகளை மையமாகக்கொண்ட திரைப்படங்களான தேவதாஸ், மதுமதி, யஹுதி, தோ பிகா ஜமீன் போன்ற படங்களைத் தயாரித்தும் , இயக்கியவருமான பிமல்ராய் (இன்றைய பங்களாதேசம் டாக்காவில் பிறந்தவர்) பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற நடனமேதை உதய சங்கர், அவரது மாணவி சாந்தி பரதன், பத்திரிக்கையாளரும், நாடக இயக்குனர், திரைப்படக் கதாசிரியர் மற்றும் இயக்குனருமான K.A.அப்பாஸ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் இந்நாடகமன்றத்தின் வளர்ச்சிக்கு உதவினார்கள். மும்பையில் தோன்றிய இந்திய மக்கள் நாடகமன்றத்தின் தலைவராக பிமல் ராயும், மறைந்த தோழர் பார்வதி கிருஷ்ணன் (பிற்காலத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர்) செயலாளராகவும் பி.சி.ஜோஷியின் வழிகாட்டுதலில் சிறப்பாகச் செயல்பட்டார்கள். 1943 – 44 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொடிய வங்கப்பஞ்சத்தில் இருபது லட்சம் மக்கள் உணவு கிடைக்காமல் பசிப்பட்டினியால் மாண்டு போனார்கள். இந்திய மக்கள் நாடகமன்றம் மும்பையிலும், அகமதாபாத்திலும், லாகூர், ராவல்பிண்டி நகரங்களிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி பல லட்சம் ரூபாயைத் திரட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட பஞ்ச நிவாரணப் பணிகளுக்குக் கொடுத்தது. இந்திய மக்கள் நாடகமன்றம் வங்கப்பஞ்சம் குறித்து நடத்திய கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடகத்தைக் காண பம்பாய் நகரத்தின் அனைத்து முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தார்கள். டாடா மற்றும் நுஸ்லி வாடியா போன்ற பெரிய தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் இந்த கலைநிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தனர் என்றும், வங்கப்பஞ்சத்தின் கோரக்காட்சிகளை மேடையில் கண்டு அவர்கள் கண்ணீர் விட்டழுததாகவும் பத்திரிக்கைகள் எழுதின. இந்திய மக்கள் நாடகமன்றத்தின் “மூளை” ஜோஷியென்றால், அதன் “முதுகெலும்பும், இதயமும்” திரைப்பட நடிகர் பால்ராஜ் சஹானியென்றும் சொல்வார் மறைந்த தலைவர் பார்வதி கிருஷ்ணன். 1944 ஆம் ஆண்டில் லண்டனிலிருந்து இந்தியா திரும்பி வந்தவுடன் தமயந்தி, பிரிதிவிராஜ் கபூரின் திரைப்பட நிறுவனத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அவரது முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்தது. பால்ராஜ் சஹானியும், இந்தி திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். கணவன்மனைவி இருவரும் பி.சி.ஜோஷியுடன் நெருக்கமான நட்புடன் இருந்ததுடன், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திய மக்கள் நாடகமன்றத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு நாடகங்களில் நடிக்கப் பயிற்சியும் கொடுத்தனர். பால்ராஜ் சில நாடகங்களை இயக்கியதுடன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். பால்ராஜ் சஹானியும் தமயந்தியும் சேரிகளிலும், ஏழைஎளிய உழைப்பாளி மக்கள் வாழும் சேரிப்பகுதிகளுக்கும் நாடகக்குழுவுடன் நேரில்சென்று வீதிநாடகங்களையும் நடத்தினர். அவற்றின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், நாட்டின் விடுதலைப் போராட்ட லட்சியங்களையும் பரப்பும் பணிகளையும் மேற்கொண்டார்கள். இப்டா என்ற இந்திய மக்கள் நாடகமன்றம் வங்காளம், உத்திரப் பிரதேசம், ஆந்திரம், கேரளம், பஞ்சாப், மராட்டிய மாநிலக் கலைஞர்களிடையே மிகவும் புகழ்பெற்ற கலைக்குழுவாக வளர்ந்தது. இந்த நாட்டுமக்களின் பாரம்பரியமான கிராமப்புறக் கலைகளை, நாடோடிப் பாடல்களை “இப்டா” கலைஞர்கள் உள்வாங்கிக் கொண்டு அவற்றில் புதிய முற்போக்கான கருத்துக்களைப் புகுத்தி மக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜோஷி கேட்டுக்கொண்டார். நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் “இந்திய மக்கள் நாடகமன்றம்” ஒரு புகழ்மிக்க அத்தியாயமாகும்! அரங்கத்தில் நடைபெற்ற நாடகங்களை வீதிநாடகங்களாக மாற்றியதும், பல்வேறு மொழி பேசும் இசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் பாடிய “சேர்ந்திசை” [COIR] என்ற புதிய இசைவடிவமும் இப்டாவின் சாதனைகளென்றே சொல்லலாம் ! பால்ராஜ் சஹானியின் இப்டா களப்பணிகளும் சாதனைகளும் 1944 ஆம் ஆண்டின் இறுதியில் மும்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பால்ராஜ் சஹானி மற்றும் தமயந்தியை கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷிக்கு அவரது தனிச்செயலாளர் தோழியர் பார்வதி கிருஷ்ணன் (தோழர் மோகன் குமாரமங்கலத்தின் தங்கை) அறிமுகப்படுத்தினார். பார்வதி கிருஷ்ணன் 1954 ஆம் ஆண்டுமுதல் 1957 ஆம் ஆண்டுவரை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் இரண்டு முறை கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மிகச்சிறப்பாகப் பணியாற்றினார். பால்ராஜ் சஹானியும், தமயந்தியும் அவர்கள் இந்தியத் திரைப்படங்களில் நடிப்பதற்கான முயற்சிகள் செய்துவருவதை பி.சி.ஜோஷியிடம் தெரிவித்தார்கள். பி.சி.ஜோஷி 1943ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய மக்கள் நாடகமன்றத்தை மறுசீரமைப்பு செய்யும் வேலையை அப்போது தொடங்கியிருந்தார். அந்த வேலைகளிலும் அவர்களின் உதவி தேவைப்படுமென்றும் ஜோஷி சொல்லிவைத்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சில அறிவுஜீவிகளின் தலைமையில் இப்டா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நடுத்தரவர்க்கக் கலைஞர்கள் தலைமையேற்று நடத்திய நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அவர்களது தனிப்பட்ட திறமைகளைக் காட்டிக்கொள்கிற நிகழ்ச்சிகளாகவும், அவற்றை தங்களுடைய சொந்த நலன்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் போக்கும் இப்டா இயக்கத்தில் தலைதூக்கி இருந்தது. கிராமியக் கலைஞர்கள் மற்றும் நாடோடிப்பாடகர்கள் ஆகியோரையும் இணைத்து கூட்டு முயற்சியாக கலைநிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த கலைஞர்கள், தங்களது சொந்தப் பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மேடையாக இப்டாவை பயன்படுத்தினார்கள் என்று பி.சி.ஜோஷி விமர்சனம் செய்திருக்கிறார். இந்தக் குறைபாடுகளை களைந்து, இப்டா நிகழ்ச்சிகளை தலைமைதாங்கி நடத்தும் கலைஞர்கள் கூட்டுமுயற்சிக்கு முதலிடம் கொடுத்துத் தரமான நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பால்ராஜூம் தமயந்தியும் உதவிசெய்ய வேண்டும் என்று அவர்களிடம் பி.சி.ஜோஷி கேட்டுக்கொண்டார். பி.சி.ஜோஷியுடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு பால்ராஜ் சஹானியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. திரைப்படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளைவிட அவர் இப்டாவின் நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் அதிகமான விருப்பத்துடன் தீவிரமாகச் செயல்பட்டார். இப்டா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் தங்களது நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு பால்ராஜ் சஹானி அவர்களுக்கு நிறைய ஒத்திகைகள் நடத்திப் பயிற்சி கொடுத்தார். கலைஞர்களின் மனம் புண்படாமல் அவர்களுக்கு நவீன மேடைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். இதில் அவருக்கு ஏற்கனவே லண்டனில் நல்லஅனுபவம் கிடைத்திருந்தது. இப்டா தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் தேசீய மற்றும் சர்வதேசீய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலைஞர்களுக்கு புரியும்படி விளக்கினார். அவர்கள் அவற்றை மனதில் உள்வாங்கிக்கொண:டு சிறப்பாக நடிக்க வழிகாட்டினார். பாரம்பரியமான கிராமப்புற கலைவடிவங்களான கதைப்பாடல் நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், நாடோடிப் பாடல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய சம்பவங்களையும், சமூகநீதிக்கான மக்கள் போராட்டங்களை உள்ளடக்கமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்தார். பம்பாய் நகரம் பரந்து விரிந்த பெரிய நகரம். நகரத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு திசைக்குச் சென்று வீதிநாடகங்களை நடத்துவதற்கு விரைவாகச் செல்லும் போதிய பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. பால்ராஜ் சஹானிக்கு போதிய போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துகொடுக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிதிவசதி இல்லாமல் இருந்தது. இலண்டன் பி.பி.சி வானொலி நிலைய வேலைகளிலிருந்து விலகும்போது பால்ராஜ் சஹானிக்கும் தமயந்திக்கும் கிடைத்த சேமிப்புத்தொகையில் பால்ராஜ் இப்டா வேலைகளை கவனிப்பதற்காகவே சொந்தமாக ஒரு மோட்டார்சைக்கிளை விலைக்கு வாங்கிக்கொண்டார். அவரது மோட்டார்சைக்கிளில் குறுக்கும் நெடுக்குமாக நகரத்தில் பலதிசைகளிலும் இப்டா கலைஞர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளை பால்ராஜ் மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்தார். தோழர் பி.சி.ஜோஷிக்கு நேரம் கிடைக்கும்போது அவரையும் மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இப்டா வீதிநாடகங்கள் நடைபெறும் இடத்திற்கு அவரையும் அழைத்துச் சென்றார். இப்டா கலைக்குழுவினர் பம்பாய், அந்தோpப் பகுதியில் ஒரு பெரியபங்களாவை வாடகைக்கு எடுத்து அங்கு கூட்டுவாழ்க்கை நடத்தினர். பெரிய சுற்றுச்சுவருக்கு மத்தியில் ஏராளமான மரங்கள் மற்றும் பசுமையான புல்தரைகளை கொண்டிருந்த அந்த இடம் நாடகங்களின் ஒத்திகை பார்ப்பதற்கும், கூட்டாகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வசதியான இடமாக இருந்தது. ஒத்திகைப் பயிற்சிகள் பெரும்பாலும் திறந்தவெளியில் நடைபெற்றன. பால்ராஜூம் இப்டா நாடகக் கலைஞர்களுக்கு நாள்தோறும் 10 மதல் 12 மணிநேரம் கடுமையாக ஒத்திகைப் பயிற்சியை கொடுத்தார். இப்டா கலைஞர்களின் பயிற்சித் திட்டத்தில் அரசியல் கல்வியும் இருந்தது. பிரபல கலைஞர்கள் பிருதிவிராஜ் கபூர், K.A.அப்பாஸ், நடனமேதை உதயசங்கர், இசைமேதை பண்டிட் ரவிசங்கர், வங்கத்தின் இசைமேதை சலீல் சௌத்திரி, இந்தித் திரையிசை மன்னன் R.D.பர்மன் ஆகியோர் பால்ராஜ் இயக்கத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்;ச்சிகளைப் பார்வையிட வந்துசெல்வது வழக்கமாக இருந்தது. இவர்களது வருகை, பால்ராஜூக்கும் மற்ற இப்டா கலைஞர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தையுமளித்தது! பி.சி. ஜோஷி மற்றும் பால்ராஜ் சஹானியின் நேரடி வழிகாட்டுதலில் இப்டா கலைஞர்கள் முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட பல நாடகங்களையும், கதைப்பாடல் நிகழ்ச்சிகளையும், இசைநடன நிகழ்;ச்சிகளையும் அரங்கேற்றினார்கள். அவை அனைத்தும் மக்களிடையே பேராதரவு பெற்றது. இப்டா நாடக இயக்கத்தில் பால்ராஜ் சஹானி தீவிரமாக ஈடுபட்டதின் விளைவாக தொழிலாளிவர்க்கம் மற்றும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த திறமைவாய்ந்த பல புதியகலைஞர்களை அடையாளம் கண்டு மக்கள் முன்னால் அவர்களை அறிமுகப்படுத்தினார். இப்டா நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கான களப்பணியை தொடங்குவதற்கு மராத்திய மொழியறிவு, அவருக்குத் தேவைப்பட்டது. பம்பாய் நகரத்தில் பெரும்பான்மையான தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் தாய்மொழியான மராத்திமொழியில் பால்ராஜ் சஹானிக்கு ஒரு வார்த்தைகூடத் தெரியாது. அவரது தாய்மொழி பஞ்சாபி. கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு சமஸ்கிருதம் மற்றும் உருது உட்பட பல மொழிகளிலும் அவருக்குப் புலமை இருந்தது. இப்டா நாடகவேலைகளில் திறமையாகச் செயல்பட மராத்தி மொழியை மிகவேகமாக கற்றுக்கொண்டார். அந்த, மொழியினுடைய கலாச்சாரப் பாரம்பரியம் குறித்தும் அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். பம்பாயில் தொழிலாளிகளின் வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கும், அவர்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வரலாற்றை தெரிந்துகொள்வதற்காகவும் உழைப்பாளி மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு நேரில்சென்று, அவர்களது தாய்மொழி மராத்தியிலேயே அவர்களுடன் கலந்துரையாடினார். “தமாஷா” நாடகக் கலைஞர் அன்னபாவ் சாத்தே பால்ராஜின் இடைவிடாத களப்பணிகள்மூலம் அவர் பல அற்புதமான கலைஞர்களைக் கண்டுபிடித்தார். இப்டா மூலம் அந்தப் புதியகலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். “மண்ணுக்குள் மறைந்து கிடந்த அந்த வைரங்களைத் தோண்டியெடுத்து மிகுந்த தொழில்நுட்பத்துடன் பட்டைதீட்டி ஒளிவீசும் வைரக்கற்களாக மாற்றினார்” என்று பி.சி.ஜோஷி, பால்ராஜ் சஹானியின் இப்டா பணிகளைப் பாராட்டினார். “தமாஷா” என்பது மராட்டிய மாநில மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய கிராமிய நாடகமாகும். இந்நிகழ்ச்சியை நடத்துவதில் அன்னபாவ் சாத்தே என்ற தலித் தொழிலாளி மிகவும் பிரபலமாக இருந்தார். பள்ளிப்படிப்பு அவருக்கு அதிகமில்லை. “தமாஷா” நாடகத்தை தயாரிப்பதிலும், அதில் நடிப்பதிலும் திறமையான கலைஞராக விளங்கிய அன்னாபாவ் சாத்தேவோடு பால்ராஜ் நெருக்கமான நட்புறவை வளர்த்துக்கொண்டார். அந்த கிராமப்புற நாடகக் கலைஞரிடம் தொழிலாளிவர்க்க வாழ்க்கையின் இலட்சியம் குறித்து அவர் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் பூர்வமாக பால்ராஜ் அவரிடம் பேசிப் புரிய வைத்தார். தமாஷா கிராமிய நாடகவடிவத்தில் பல முற்போக்கான கருத்துகள் கொண்ட நிகழ்ச்சிகளை உருவாக்க அன்னபாவுக்கு பால்ராஜ் பயிற்சிகொடுத்தார். பால்ராஜ் சொல்லிக்கொடுத்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை அந்த கிராமியக் கலைஞன் நன்றாகப் புரிந்துகொண்டதுடன், தன்னுடைய கலைக்குழுவில் இருந்த தோழர்களுடனும், இடதுசாரி அறிவுஜீவிகளுடனும் விவாதித்துத் தன்னுடைய அறிவாற்றலை நன்றாக வளர்த்துக்கொண்டார். அந்த கலைஞர்கள் நடத்திய ஒத்திகைகள் மற்றும் கூட்டங்களில் பால்ராஜூம் கலந்துகொண்டு அவர்களது மனம் புண்படாமல் நவீன மேடைக்கலையை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். நாடோடிக் கலையுணர்வு, “தமாஷா” கிராமப்புற நாடகக்கலையின் வடிவம் மற்றுமதன் பாரம்பரியத்துக்கு பெரியபாதிப்பு இல்லாமல் பல முற்போக்கான படைப்புகளை தயாரிக்க அன்னபாவ் சாத்தேவுக்கு பால்ராஜ் உதவிசெய்தார். பால்ராஜ் சஹானி கொடுத்த இடைவிடாத பயிற்சியின் காரணமாக அன்னபாவ் சாத்தேவும் அவரது குழுவினரும் தங்களுடைய நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக தயாரித்து மக்களிடம் பாராட்டும் அங்கீகாரமும் பெற்றார்கள் ! பால்ராஜ் கண்டெடுத்த இன்னொரு நாட்டுப்புறக் கலைஞன்: கவன்கர் ! “நல்லா பாவாடா” என்பது மராட்டிய கிராம மக்களின் பாரம்பரியமான கதைப்பாடல் வடிவம். கிராமங்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகளில் புராண, இதிகாசம் மற்றும் கர்ணபரம்பரைக் கதைகளை இரவு முழுவதும் பாடல்களாகப் பாடி நடத்தப்படும் கதாகாலட்சேபமாகும். இந்த கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதில் கவன்கர் என்ற கலைஞர் மக்களிடையே மிகவும் புகழ்பெற்றிருந்தார். அவர் ஓரளவுக்கு கல்வியும் பெற்றிருந்தார். நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் வடிவத்தை மாற்றாமல் சுதந்திரப் போராட்டம், மதநல்லிணக்கம், சோசலிச சமூகமாற்றம் ஆகிய கருத்துக்களை உள்ளடக்கமாக வைத்து “பாவாடா” கலைஞன் கவன்கர் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க பி.சி.ஜோஷியும், பால்ராஜூம் உதவினர். இந்த புதிய மாற்றத்தால் கிராமப்புற கலைஞன் கவன்கர் பம்பாய் மக்களிடையே பிரபலமாகி விரைவில் புகழின் உச்சிக்கே சென்றார். பம்பாயின் “பால் ராப்சன்” அமர்ஷேக்! தொழிலாளி வர்க்கத்திலிருந்து தோன்றி கம்பீரமான குரலில் பாடிக் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் பாடகர் அமர்ஷேக், பால்ராஜ் கண்டெடுத்த மற்றுமொரு புகழ்பெற்ற நாடோடிப் பாடல் கலைஞன். அவர் தானே பாடல்கள் இயற்றி, அவற்றிற்கு இசையமைத்து பாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். அவரது பாடல்களின் உள்ளடக்கம் முற்போக்கான திசைவழியில் அமைவதற்கு பால்ராஜ் அவருக்கு இடதுசாரி அரசியல் கருத்துகளைச் சொல்லிக் கொடுத்துப் பயிற்சியளித்தார். தொழிலாளர், விவசாயிகள் பேரணிகள் முடிவிலும், மாநாடுகளிலும், அமர்ஷேக் இசைக்குழுவினர் நடத்திய நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றன. அமர்ஷேக் “பம்பாயின் பால் ராப்சன்” என்று அன்புடன் அழைக்கப்படுமளவுக்குப் புகழ் பெற்றார். திரையிசை மேதை பிரேம் தவான் பிற்காலத்தில் இந்தி திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசியராகவும், இசையமைப்பாளராகவும் புகழ்பெற்ற பிரேம் தவானும் பி.சி.ஜோஷி மற்றும் பால்ராஜ் கூட்டணியால் கண்டுபிடிக்கப்பட்டு இப்டா மூலம் அறிமுகமானவர். பிரேம் தவான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறையதிகாரியின் மகன். “கதர்” (GHADAR) எனும் புரட்சி இயக்கத்தின் தலைவர்கள் பஞ்சாப் சிறைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்களது வீரதீரச் செயல்களைத் தந்தை மூலம் கேள்விப்பட்ட பிரேம் தவான் இளம் வயதிலேயே முற்போக்கான கருத்துக்களோடு வளர்ந்தார். பின்னர், பம்பாயிக்கு வந்து இப்டாவின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டதுடன், திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியும், இசையமைத்துப் பாடியும் மக்களிடையே புகழடைந்தார். சமையல் கலைஞன் - கதகளியாட்டக்காரனாக…. சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து திறமையுள்ள கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு இப்டா நிகழ்ச்சிகளில் பால்ராஜ் வாய்ப்பளித்துப் பயன்படுத்திக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் பம்பாய் அலுவலக உணவுக் கூடத்தில் சமையல்காரராக வேலை செய்துவந்த தோழர் அப்புண்ணிக்கு கதகளி நடனமாடத் தெரியும் என்று கேள்விப்பட்ட பால்ராஜ், இப்டா நாடக நிகழ்ச்சிகளில் அவரைக் “கதகளி நடனமாடும்” கலைஞராக வாய்ப்பு கொடுத்தார். பிற்காலத்தில் தோழர் அப்புண்ணிக்கு டெல்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நடனஇயக்குனர் வேலை கிடைத்து, அதன் மூலம் புகழ்பெற்றார். கல்கத்தாவில் டிராம் ஓட்டுனராக வேலை பார்;த்துவந்த தோழர் தாசரத் என்பவரிடம் “டோலக் மற்றும் டிரம்” இசைக்கருவிகள் வாசிப்பதில் இருந்த திறமையைக் கண்டுவியந்த பால்ராஜ், அவரையும் இப்டா நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டார். பிற்காலத்தில் இந்தி திரையுலகில் இசைப் புயலாக விளங்கிய ஆர்.டி.பர்மன் இசைக் குழுவில் தாசரத் சேர்ந்து புகழ்பெற்றார். இப்டாவின் பொதுச்செயலாளராக இருந்த பால்ராஜூம், அவரது நாடகம் மற்றும் இசைக்குழுத் தோழர்களும் பம்பாயில் மதக்கலவரம் நடந்த பகுதிகளில் அமைதி மற்றும் மதநல்லிணக்கம் ஏற்படுத்த, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிருந்தும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்களை நடத்தினார்கள். வாடகை லாரியின் மேடையிலேயே மத நல்லிணக்கம் சம்பந்தமான ஓரங்க நாடகங்களையும், இசைநிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். அதிக பொருட்செலவில் அரங்கங்களில் நடந்து கொண்டிருந்த நாடகங்களை வீதிக்கு கொண்டுவந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கும் வகையில் நாடகக்கலையை வளர்த்தது இப்டாவின் முதன்மையான சாதனை - என்று பால்ராஜ் பதிவு செய்திருக்கிறார். மேலும், நாடகங்கள் மற்றும் இசைநிகழ்ச்சிகளிலும் சமூகஅக்கறையுள்ள முற்போக்கான கதைகளையும் புகுத்தி மக்களிடையே புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதும் இப்டாவின் சாதனையே ! இப்டா குழுவினர் 1945-46 ஆம் ஆண்டுகளில் அரங்கேற்றிய “இந்தியாவின் ஆன்மா” எனும் நாடகமும் “அழியாவரம் பெற்றவர்கள்” எனும் நாட்டிய நாடகமும், கலை இலக்கிய நாடக வரலாற்றில் மக்களின் பேராதரவைப் பெற்று முத்திரை பதித்தவை என்று ஜோஷி பாராட்டியிருக்கிறார். “அழியாவரம் பெற்றவர்கள்” நாட்டிய நாடகம், இந்தியாவின் கலாச்சார, பண்பாட்டு வரலாற்றின் முக்கியமான காலகட்டங்களை கலை நயத்தோடு விவரிக்கும் நாடகமென்றும், இந்த நாட்டிய நாடகம் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பிமல் ராய், இசைமேசை சித்தோ பிரசாத், பண்டிட் ரவிசங்கர், நடனமேதை சாந்தி பரதன் மற்றும் இளங்கம்யூனிஸ்ட் தலைவர் பார்வதி கிருஷ்ணன் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். 1947 ஆம் ஆண்டின் இறுதியில் பி.சி.ஜோஷி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கல்கத்தாவில் கூடிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசீய மாநாட்டில் தோழர் பி.டி.ரணதிவே பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் போலியானது” என்றும், “ஜவஹர்லால் நேரு பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் ஏஜண்ட்” என்றும், “நேருவின் ஆட்சியை ஆயுதங்தாங்கிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் தூக்கியெறிவோம்” என்றும் கட்சியெடுத்த அதிதீவிர, சாகசவாத, குறுங்குழுவாதக் கண்ணோட்ட முடிவால் (செக்டோpயன்) இரண்டாண்டு காலம் கட்சிக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்ட கட்சித்தலைமையின் அதிதீவிர முடிவுகளால் “இப்டா” நாடக இயக்கமும் காலப்போக்கில் நிலைகுலைந்து கலகலத்துப் போனது. “நேருவின் அரசாங்கத்தைத் தூக்கியெறிவோம்” என்ற கட்சியின் அதிதீவிரப் பாதையைக் கருப்பொருளாகக் கொண்டு நாடகங்கள், கலைநிகழ்ச்சிகளை இப்டா கலைஞர்களும் தயாரித்து வழங்கும்படி வற்புறுத்தப்பட்டார்கள். இப்டாவின் புதிய பொதுச்செயலாளராக ராமராவ் என்ற ஆந்திரத் தோழர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கட்சித் தலைமையின் சர்வாதிகாரப்போக்கு பிடிக்காமல் கே.ஏ.அப்பாஸ், ரித்விக் கட்டாக், சேட்டன் ஆனந்த் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் இப்டா நாடக இயக்கத்திலிருந்து விலகினார்கள். கட்சியின் அதிதீவிரப்பாதை அவருக்கு உடன்பாடில்லாமலிருந்தும்கூட பி.சி.ஜோஷியின் வற்புறுத்தலால், பால்ராஜ் சஹானி கட்சியிலும், இப்டா நாடக இயக்கத்திலும் தனது பணிகளைத் தொடர்ந்தார். ஜவஹர்லால் நேருவைக் கிண்டலும் கேலியும், நையாண்டி செய்தும் அவரையொரு பதவிப்பித்தராகச் சித்தரித்து இப்டா பொதுச்செயலாளர் ராமராவ், எழுதி இயக்கிய “ஜாடு-கி-குர்ஷி” நாடகத்தில் பால்ராஜ் கதாநாயகனாக நடித்தார். “இந்த நாடகம், எனது கலையுலக வாழ்கையில், ஒரு கரும்புள்ளி” என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் வருத்தத்துடன் பால்ராஜ் பதிவு செய்திருக்கிறார். 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நேருவின் ஆட்சிக்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சி நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களை பல நகரங்களில் நடத்தியது. பால்ராஜ் தலைமையில் பம்பாய் நகரில் பேரணி நடைபெற்றது. தடையைமீறி நடைபெற்ற ஊர்வலத்தின்மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். ஊர்வலத்தலைவர் பால்ராஜ் சஹானியும், பல தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றம் பால்ராஜூக்கு ஆறுமாதம் சிறைதண்டனை வழங்கியது. சிறைதண்டனை முடிந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பால்ராஜ் சிறைக்குச் சென்றதுடன் இப்டாவின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது. அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கஞ்சியும், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிதீவிர, சாகசப் பாதையைக்கண்டு விரக்தியும், ஏமாற்றமுமடைந்த இப்டாவின் முன்னணிக் கலைஞர்கள் விலகிச்சென்றார்கள். “கலையுலக வானில் பிரகாசமாக ஒளிவீசிய இப்டா என்ற முழுநிலவு, ஓர்நாள் இரவு திடீரென மறைந்து காணாமல் போனது” என்று இப்டாவின் சோக முடிவை பால்ராஜ் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். இந்தி திரைப்படங்களில் மக்கள் கலைஞன் “மார்க்சீயம் என்பது அரசியல் தத்துவம் மட்டுமே என்று சிலர் எண்ணுகின்றனர். இது தவறான கருத்து. இயற்கை மற்றும் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் அறிவியல் கண்ணோட்டத்துடன் நாம் அணுக வேண்டும் என்று மார்க்சீயம் நமக்குப் போதிக்கிறது. நம் கருத்துகளில் இதுவரை ஏற்பட்டுள்ள தவறான கண்ணோட்டத்தைப் போக்கி, வாழ்க்கையின் உண்மை நிலையைக் கண்டறிய இந்தத் தத்துவம் நமக்கு உதவுகிறது. சமூகவியல் ஆய்வாளர்களுக்கும், முற்போக்கான அரசியல்வாதிகளுக்கும் இந்த தத்துவம் சரியான பாதையைக் காட்டுவதைப்போலவே, நம் காலத்துக் கலைஞர்களும் மார்க்சீயத் தத்துவத்தைக் கற்றுத்தெரிந்து கொண்டால், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்பை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தும். அவர்களது கலைப்பணியும் சிறப்பாக அமையும்”- பால்ராஜ் சஹானி. திரைப்படங்கள் 20 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான சாதனை ! 1946 ஆம் ஆண்டில் பால்ராஜ் சஹானி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது புராண இதிகாசக் கதைகள், மாயாஜாலக் காட்சிகள் நிறைந்த மந்திரவாதிகள் கதைகளும் கொண்ட இந்தித் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான சம்பவங்கள், இந்திய சமூகத்தில் நிலவிவந்த வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் நிலப்பிரச்சனை, நாட்டின் விடுதலைக்குப்பின்பு அமைய வேண்டிய புதிய சமூகஅமைப்பு, சமூகநீதிக்கான போராட்டங்கள்பற்றி எந்தவிதமான திரைப்படமும் வெளிவந்ததில்லை. சமூகஅக்கறையுடன் மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் திரைப்படங்களைப் பால்ராஜ் தேர்ந்தெடுத்து நடிக்கத்தொடங்கினார். 1946 ஆம் ஆண்டில் பாணி மஜூம்தார் இயக்கத்தில் வெளியான “இன்சாப் (நீதி)” அவர் நடித்த முதல் திரைப்படம். அவர் 1973 ஆம் ஆண்டு இறுதியாக நடித்த “கரம் ஹவா” (அனல் காற்று) திரைப்படம் உட்பட சுமார் 27 ஆண்டு காலத்தில் 134 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு திரைக்கதையும் இந்தித் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு திரைப்படமும் சமூகஅக்கறையுடன் மக்களின் பிரச்சனையைப் பேசியது. சினிமா விமர்சகர்கள் அவர் நடித்த திரைப்படங்களை “புதிய அலை திரைப்படங்கள்” என்றும், இந்தித் திரைப்பட உலகில் அவை புதியதொரு சகாப்தத்தை ஏற்படுத்தியது என்றும் பத்திரிக்கையாளர்கள் பாராட்டி எழுதினர். அவரது வாழ்க்கை அனுபவத்திலிருந்து அவர் திரைப்படங்களில் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாத்திரங்களும் இந்தித் திரைப்பட ரசிகர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. தொழிலாளியாக, விவசாயியாக, ரிக்ஷாகாரனாக, விவசாயக்கூலித்தொழிலாளியாக, முஸ்லிம் வியாபாரியாக, பஞ்சாலை முதலாளியாக, கல்லூரிப் பேராசியராக, கல்லூரிப் பட்டம் பெற்றபின்பு வேலை தேடியலையும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனாக பல்வேறு பாத்திரங்களில் நடித்து, இந்தித் திரைப்பட உலகில் புதிய வரலாறு படைத்தார். பால்ராஜ் நடித்த “தோ பிகா ஜமீன்” (2 ஏக்கர் நிலம்) 1953 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி உலகப் புகழ்பெற்றது. சோவியத் ரஷ்யாவிலும், சீனா, போலந்து, செக்கோஸ்லேவேகியா, ஜொ;மன் ஜனநாயக குடியரசு போன்ற சோசலிச நாடுகளிலும் வெளியிடப்பட்டு அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. இந்தியத் திரைப்படங்களில் முதன்முதலாக “கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்” வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையைப் பெற்றது. இந்தத் திரைப்படம் “இந்திய திரைப்படங்களின் யதார்த்த சினிமா” என்ற வகையில் முதல்தரமான படம் என்று மக்களிடையே பரவலாக வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படம் பிற்காலத்தில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களாக அங்கீகாரம் பெற்ற பிமல் ராய், சத்தியஜித் ரே, ஹிரிகேஸ் முகர்ஜி, மிர்னாள் சென், குரு தத், M.S..சத்யூ போன்ற இயக்குநர்களுக்கு உந்து சக்தியாக அமைந்தது. தோ பிகா ஜமீன் (இரண்டு ஏக்கர் நிலம்) வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரையிசை மேதை சலீல் சௌத்ரி (செம்மீன் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர்). எழுதிய சிறுகதையின் அடிப்படையில் திரைக்கதையாகத் தயாரிக்கப்பட்டது. “தோ பிகா ஜமீன்” என்ற பெயரில் வங்கத்தின் ஏழைவிவசாயிகளின் வாழ்க்கையைப்பற்றி தாகூர் எழுதிய கவிதையின் தலைப்பே திரைப்படத்துக்கும் சூட்டப்பட்டது. திரைக்கதையின் சுருக்கம் : வங்கத்தின் கிராமம் ஒன்றில் மஹாட்டோ என்ற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சம்பு மஹாட்டோ என்ற ஏழைவிவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. மனைவி பார்வதி, 15 வயதில் ஒரே மகன் கண்ணையா மற்றும் தந்தை கங்கு ஆகியோருடன் அந்த நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்துவந்தான் சம்பு மஹாட்டோ. அவனது ஒரே வாழ்வதாராம் அந்த இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. விவசாய வேலைகளுக்குத் தேவைப்படும் பணம் இல்லாத காரணத்தால் அடிக்கடி அந்த ஊர் நிலப்பிரபு ஹர்னாம்சிங்தாகூரிடம் , சம்பு வட்டிக்கு வாங்குவது வழக்கம். வட்டியைப் பணமாகத் திருப்பிக்கொடுப்பதற்குப் பதிலாக வாரத்தில் இரண்டு நாட்கள் சம்புவின் குடும்பத்தினர், கடன் கொடுத்த நிலப்பிரபுவின் பண்ணையில் இலவசமாக உழைக்க வேண்டும். இதுதான் அந்தக்காலத்தில் பெரும்பாலான வடமாநில கிராமங்களில் நிலவிவந்த உழைப்புச் சுரண்டல் நடைமுறை. […] சம்புவின் இரண்டு ஏக்கர் நிலத்தையொட்டி இரண்டுபுறமும் அவனுக்குக் கடன் கொடுத்த நிலப்பிரபுவின் விவசாயநிலம் பரந்துவிரிந்து கிடந்தது. ஏழை விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும்போதே சம்பு மாதிரி படிப்பறிவில்லாத விவசாயிகளிடம் நிலப்பிரபுவின் கணக்குப்பிள்ளை பல வெற்று ஸ்டாம்ப் பேப்பர்களில் கையொப்பம் வாங்கிக்கொள்வான். நிலப்பிரபு ஹர்னாம் சிங்கிடம் ஒருமுறை சம்பு அறுபத்தைந்து ரூபாய் கடன் வாங்கியிருந்தான். அதற்கு வட்டியாக அவனது குடும்பம் முழுவதும் ஆறுமாதங்களுக்குமேல் நிலப்பிரபுவின் பண்ணையில் ஏற்கனவே இலவசமாக உழைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அந்த நிலப்பிரபு தனது நிலத்தில் வேறொரு முதலாளியுடன் கூட்டு சேர்ந்து ஒரு பஞ்சாலையைக் கட்டுவதற்குத் திட்டமிட்டான். பஞ்சாலையை கட்டுவதற்கு நிலப்பிரபுவின் விவசாய நிலத்துக்கு இடையில் இருந்த சம்புவின் இரண்டு ஏக்கர் நிலமும் தேவைப்பட்டது. அந்த இரண்டு ஏக்கர் நிலத்தையும் தனக்கே விற்றுவிடும்படி நிலப்பிரபு, சம்புவிடம் கேட்டுப் பார்த்தான். சம்பு அதற்கு மறுத்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த நிலப்பிரபு, சம்பு தன்னிடம் வாங்கிய கடன் தொகை முழுவதையும் 48 மணி நேரத்தில் திருப்பிக்கொடுத்துவிட வேண்டுமென்றும், இல்லையென்றால் அவன்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் மிரட்டினான். மனைவி பார்வதியின் கம்மல், மூக்குத்தி , தாலி ஆகியவற்றை விற்றும், வீட்டிலிருந்த பண்டபாத்திரங்கள், கால்நடைகளை விற்றும் கிடைத்த ரூ.65/-ஐ எடுத்துக் கொண்டு கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த சம்பு, நிலப்பிரபு வீட்டுக்குப் போனான். நிலப்பிரபுவிற்;கு சம்பு ரூ.235/- திருப்பிச் செலுத்தவேண்டுமென்று கணக்குப்பிள்ளை ஒரு வெடிகுண்டைத் தூக்கிப்போட்டான். ரூ.65/-க்கு மேல் பணம் திரட்ட சம்புவிற்கு எந்த வழியுமில்லை. இனி விற்பதற்கு அவனிடம் எந்தப் பொருளுமில்லை. ஏற்கனவே சம்புவை ஏமாற்றிக் கையொப்பம் வாங்கியிருந்த ஸ்டாம்ப் பேப்பர்களைப் பூர்த்திசெய்து நிலப்பிரபு, ரூ.235/- கேட்டு நீதிமன்றத்தில் சம்பு மீது ஒரு பொய்வழக்கைத் தாக்கல் செய்தான். ரூ.65/- மட்டுமே கடனாகப் பெற்றதாக சம்பு நீதிமன்றத்தில் அழுதுபுரண்டான். எந்தப் பயனுமில்லை. சம்பு, அந்த நிலப்பிரபுவிற்கு ரூ.235/-ஐ மூன்று மாதங்களுக்குள் செலுத்தவேண்டும் என்றும், தவறினால் அவனது இரண்டு ஏக்கர் நிலம் ஏலமிடப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். கையிலிருந்த ரூபாய் 65 போக மீதித்தொகையைத் திரட்ட, அவனது நண்பன் ஒருவரின் ஆலோசனைப்படி வேலை தேடி சம்பு கல்கத்தா நகருக்குப் போனான். அவன் புறப்பட்ட ரயிலில் அவனுக்கும் தெரியாமல் அவனது 15 வயது மகன் கண்ணையாவும் அதே ரயிலில் வேறொரு பெட்டியில் ஏறி கல்கத்தாவுக்கு வந்துசேர்ந்தான். தந்தையைத் தனியே தவிக்கவிட அந்த 15 வயது சிறுவனுக்கு மனது கேட்கவில்லை. அப்பாவும், மகனும் முன்பின் அறிமுகமில்லாத அந்த பெரிய நகரத்தில் வேலை தேடியலைந்தனர். இறுதியில் மகன் கண்ணையா தெருவோரம் ஷூ பாலீஷ் போடும் ஒருவனிடம் உதவியாளனாக வேலைக்குச் சேர்ந்தான். அந்த தெருவோர ஷூ பாலீஷ் போடும் செருப்புத் தைக்கும் தொழிலாளி, சம்புவை தனது ரிக்ஷாகார நண்பனிடம் அறிமுகப்படுத்தி iகரிக்ஷா இழுத்துப் பிழைக்க உதவிசெய்தான். கிராமத்தில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்துவந்த சம்பு, இப்போது iகரிக்ஷா இழுத்துப் பிழைத்தான். சிறிதுசிறிதாகக் கிடைத்த வருமானத்தை சேமிக்க ஆரம்பித்தான். நீதிமன்ற உத்தரவுப்படி சம்புவின் நிலத்தை ஏலம் விடுவதற்கான மூன்றாவது மாதக்கெடுவும் நெருங்கிக் கொண்டிருந்தது. கணவனையும், மகனையும் பார்க்க பார்வதியும் அவர்களைத் தேடி கல்கத்தா நகருக்கு ஒருநாள் வந்துசேர்ந்தாள். பார்வதி ஒரு சாலைவிபத்தில் சிக்கி படுகாயமடைந்தாள். அவளது உயிரைக் காப்பாற்றத் தேவைப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு, சம்பு சேமித்து வைத்திருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. இனி நிலத்தை மீட்பதற்கான பணம் அவர்களிடமில்லை. மிகுந்த மனச்சோர்வுடனும், நடப்பது நடக்கட்டும் என்ற விரக்தியுடனும் சம்புவின் குடும்பம் சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. மூன்று மாதக்கெடு முடிந்தவுடன், சம்புவின் இரண்டு ஏக்கர் நிலமும் நீதிமன்ற உத்தரவுப்படி ஏலம் விடப்பட்டது. அவனுக்கு கடன் கொடுத்த நிலப்பிரபு ஹர்னாம்சிங் தாகூரே அவனது நிலத்தை நீதிமன்ற ஏலத்தில் கைப்பற்றி அவன்நிலத்தோடு சேர்த்துக்கொண்டான். ஒருநாள் சம்புவின் இரண்டு ஏக்கர் நிலத்தில் பஞ்சாலைக்கு தேவைப்படும் கட்டிடவேலைகள் தொடங்கியதைப் பார்த்த சம்புவின் தந்தை கங்கு, நெஞ்சுவலியால் செத்துப்போனாhன். இறுதியில், இரண்டு ஏக்கர் நிலத்தையும் இழந்த சம்பு, மனைவி,; மகனுடன் மீண்டும் வேலை தேடிக் கல்கத்தா நகரம் நோக்கிப் புறப்பட்டுச்செல்கிறான்! அவன் பிறந்துவளர்ந்த ஊருக்கு அவன் இனிமேல் எப்போதுமே திரும்பிவரப் போவதில்லை. ரயில்நிலையம் போகும் வழியில், அவனுக்கு ஒருகாலத்தில் சொந்தமாயிருந்த நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கதறியழும் கணவன் சம்புவை பார்வதி தேற்றி அழைத்துச் செல்கிறாள். இந்த இறுதிக்காட்சியுடன் அந்தத் திரைப்படம், நம் கண்களை குளமாக்கிவிட்டு முடிவடைகிறது. சிறுநில ஏழைவிவசாயிகள், இந்த நாட்டின் கிராமங்களில் சந்திக்கும் நெருக்கடிகளை, இன்னல்களை, உழைப்புச் சுரண்டலை “சம்புவாக” நடித்த பால்ராஜ் சஹானி அந்த பாத்திரமாகவே மாறி தனது உச்சகட்ட நடிப்பாற்றல் மூலம் படத்தைப் பார்த்த மக்களின் கண்களைக் குளமாக்கினார். கல்கத்தா நகரத்தில் iகரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக நடிக்கும் காட்சிகளைப் படமாக்க, இயக்குனர் பிமல் ராய், படக்குழுவை கல்கத்தா நகருக்கு அழைத்துச்சென்று ஒரு மாதத்திற்குமேல் தங்கியிருந்து காட்சிகளைப் படமாக்கினார். iகரிக்ஷா இழுத்துச் செல்வது தத்துரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக பால்ராஜ் சஹானி iகரிக்ஷா தொழிலாளிகள் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத் தொழிலாளிகளைச் சந்தித்தார். இரவுநேரங்களில் iகரிக்ஷா ஓட்டுவதற்கு இரண்டே நாட்களில் பயிற்சியெடுத்துக் கொண்டார். ரிக்ஷாக்காரனாக நடித்த அவரது நடிப்பாற்றல் உலகம் முழுவதும் திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. பால்ராஜூக்கு ரிக்ஷாக்காரன் பாத்திரம் மிகச்சிறப்பாக அமைந்ததற்கான பின்னணிக் காரணத்தை பால்ராஜ் தனது திரையுலக அனுபவங்களை எழுதியிருக்கும் “மோp பிலிமி ஆத்மகதா” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். “கல்கத்தா நகரில் ஒருநாள் இரவு படப்பிடிப்பு ஒத்திகைக்காக ஒரு ரிக்ஷா ஸ்டான்டில் உட்கார்ந்திருந்தேன். இதுவரை நடித்த நாலைந்து படங்களும் எனக்கு முழுத் திருப்தியளிக்கவில்லை. இந்த பாத்திரத்தில் எப்படிச் சிறப்பாக நடிக்கப் போகிறேனோ என்று மனதில் ஒரே குழப்பமும், அச்சமும், படபடப்பும், சஞ்சலமும் நிறைந்திருந்தது. கோர்வையாகச் சிந்திக்கக்கூட முடியவில்லை. நள்ளிரவு நேரம் ரிக்ஷாவில் அமர்ந்து கொண்டிருந்த என்னிடம் நடுத்தர வயதுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டி அருகில் வந்து நின்றான். ஒல்லியான உடல், சுருக்கங்கள் நிறைந்த வாடிய முகம். ஐயா, இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டான். சினிமா படப்பிடிப்புப் பற்றியும், தோ பிகா ஜமீன் திரைக்கதையையும் சுருக்கமாக அவனுக்குப் புரியும் மொழியில் சொன்னேன். நிலத்தை இழந்த விவசாயியாக நான்தான் நடிக்கிறேன் என்பதையும் சொன்னேன். அவனது கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.” “ஐயா, நீங்கள் நடிக்கப்போவது என்னுடைய சொந்தக் கதை... ஆம். பீஹாரில் என் சொந்த ஊரில் வட்டிக்கு கடன் வாங்கினேன். எனக்குச் சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் நிலமும் எங்களூர் பண்ணையாரிடம் அடமானத்திலிருக்கிறது. என் நிலத்தை மீட்பதற்காக பதினைந்து வருடங்களாக கல்கத்தா தெருக்களில் ரிக்ஷா ஓட்டிப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சாவதற்குள் என் நிலத்தை மீட்பேனா என்பது சந்தேகந்தான்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வருத்தத்துடன் சொன்னான். திரும்பிப் போகும்போது “ ஐயா இது என் கதை.... ஐயா இது என் கதை” என்று தேம்பித்தேம்பி அழுதுகொண்டே என்னிடமிருந்து விடைபெற்றான். என் நெத்தியில் ஒரு சுத்தியால் அவன் அடித்ததுபோல் நான் அதிர்ச்சியடைந்தேன். என் அடிமனதிலிருந்து அசரிரியாக ஒரு குரல் கேட்டது. நடிப்புக் கலையைப்பற்றி இனியும் யோசிக்காதே. இந்த நாட்டில் கோடிக்கணக்கான ஏழைவிவசாயிகள் படும் துயரங்களை, கொடுமைகளை உலகத்துக்குச் சொல்ல உனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது... துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த விவசாயியை ரத்தமும், சதையுமாக மக்களுக்கு நீ காட்ட வேண்டாமா உனக்கு அந்த பொறுப்பில்லையா” என்று அந்த குரல் என்னை உசுப்பியது. என் முன்னால் சற்றுமுன் நின்றிருந்த அந்த ரிக்ஷாக்காரன் என் உயிரில், உள்ளத்தில், நாடிநரம்புகளில் கலந்தான். நான் அவனை அப்படியே உள்வாங்கிக் கொண்டேன். நான் இப்போது நடிகனல்ல. நடிப்புக்கலையின் நுணுக்கங்களைப்பற்றி நான் சிந்திக்க வேண்டிய அவசியமேயில்லை. நான்தான் அந்த பீஹார் ஏழை விவசாயி என்ற உணர்வு மேலோங்கி நின்றது. நடிப்புக் கலையை நான் புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. நிஜவாழ்க்கையில் என் கண் முன்னால் நடமாடும் என் நாட்டின் ஏழைஎளிய மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.” என்று பதிவு செய்திருக்கிறார். “பால்ராஜ் சஹானி இந்த படத்தில் நடிக்கவில்லை. ஒரு ஏழை விவசாயியாக, ஒரு ரிக்ஷாகாரனாகவே வாழ்ந்திருக்கிறார்” என்று அமிர்த பஜார் பத்திரிக்கையில் ஒரு திரைப்பட விமர்சகர் எனது நடிப்பைப் பாராட்டி எழுதியிருந்தார். இந்த பாராட்டு எனக்கல்ல. கல்கத்தா தெருவில் நான் சந்தித்த அந்த நடுத்தர வயது ஏழை ரிக்ஷாக்காரனுக்கே சொந்தம். அவன்தான் என் கண்களைத் திறந்தவன். சோவியத் ரஷ்யாவில் இந்த திரைப்படத்தில் எனது நடிப்பைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் “இந்தியாவின் ஏழைவிவசாயியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்” என்று மனந்திறந்து பாராட்டினார். இந்த பாராட்டும், புகழும் அந்த ஏழை ரிக்ஷாக்காரனுக்கே சேரும். சுதந்திர இந்தியாவில், இவர்களின் வாழ்க்கைத் துயரம் இன்னும் தொடர்கிறது, முடியவில்லை என்பதே நாமனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயமாகும்.:” “இந்த உலகத்தை விட்டு நான் மறையும்போது நான் இந்த படத்தில் நடித்ததை நினைவுபடுத்திப் பெருமைப்பட்டுக் கொள்வேன்.” என்று பால்ராஜ் உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் பல விருதுகளைப் பெற்று பால்ராஜூக்கு புகழைத் தேடித் தந்தது. இதற்குக் காரணமாயிருந்த அந்த ஏழை ரிக்ஷாக்காரனுக்கு பால்ராஜ் இந்தளவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆம். அவர் நடித்த அத்தனை படங்களின் கதைகளும் கற்பனைக் கதைகளல்ல. நம் கண் முன்னால் நடமாடும் நிஜ மனிதர்களே ! “கரம் ஹவா” (அனல் காற்று) 1972 ஆம் ஆண்டு பிற்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதக்கடைசியில் படம் திரைக்கு வந்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நாடக இயக்குனர் M.S.சத்யூ இயக்கத்தில் தயாரானது. திரைக்கதையை பிரபல கம்யூனிஸ்ட் எழுத்தாளர் கை@பி ஆஸ்மி (பிரபல இந்தி நடிகை ஷப்னா ஆஸ்மியின் தந்தை) எழுதியிருந்தார். இந்திய நாட்டின் பிரிவினையின்போது பாகிஸ்தான் செல்லாமல், இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட ஒரு முஸ்லிம் நடுத்தர தொழிற்சாலை உரிமையாளர் சந்தித்த துயரங்களைச் சொல்லும் கதையிது. இந்த திரைப்படம்தான் இந்த மகத்தான மக்கள் கலைஞர் பால்ராஜ் சஹானியின் கடைசிப் படம். படம் திரைக்கு வருவதற்கு இரண்டு வாரங்கள் முன்னரே, சஹானி 1973 ஏப்ரல் 13 ஆம் நாள் 59 வயதில் அகால மரணமடைந்தார். திரைக்கதைச் சுருக்கம்: உத்திரப்பிரதேச மாநிலம், ஆக்ரா நகரில் மீர்ஸh சகோதரர்கள் பல வருடங்களாக காலணி தயாரிக்கும் தொழிலைச் செய்துவருகிறார்கள். இரு சகோதரர்களில் அண்ணன் ஹலீம் மீர்ஸh, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தம்பி சலீம் மீர்ஸh (பால்ராஜ் சஹானி) காலணி தயாரிக்கும் அவர்களது சிறிய கம்பனியைக் கவனித்துக் கொள்கிறார். அவருக்கு பாஹர் மற்றும் சிக்கந்தர் என்று இரு மகன்கள். மூத்த மகன் பாஹர், அப்பா சலீம் மீர்ஸhவின் தொழிலுக்கு உதவியாக இருக்கிறான். இளைய மகன் சிக்கந்தர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். […] முஸ்லீம் லீக் கட்சியிலிருந்த அண்ணன் ஹலீம் மீர்ஸh நாட்டின் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தான், கராச்சி நகருக்கு இந்திய அரசுக்குத் தெரிவிக்காமல் ரகசியமாகக் குடிபெயர்கிறார். “இந்தியாவில் இனிமேல் இஸ்லாமியருக்கு எதிர்காலம் இல்லை, என்னோடு பாகிஸ்தானுக்கு வந்துவிடு” என்று தம்பி சலீமையும் வற்புறுத்திப் பார்த்தார். ஆனால் சலீம், அண்ணனின் யோசனையை ஏற்கவில்லை. தான் பிறந்த மண் ஆக்ராவை விட்டுவிட்டு மதத்திற்காக நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என்று மறுத்து விட்டார். மீர்ஸh சகோதரர்களில் அண்ணன் ஹலீம் ரகசியமாக பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததால், ஆக்ராவிலேயே தங்கிவிட்ட முஸ்லீம் சமுதாய மக்களிடையே மீர்ஸh குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது. மேலும் சில முஸ்லீம் வணிகர்களும், நடுத்தர தொழில்முனைவோர்களும் திடீர்திடீரென இரவோடு இரவாக இந்தியாவைவிட்டு, பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றனர். இதனால் முஸ்லீம் வணிகர்களும், தொழில்முனைவோர்களுக்கும் ஆக்ரா நகர வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டன. கடன்பெற்றவர்கள் திடீரெனப் பாகிஸ்தானுக்கு ஓடி விட்டால் கொடுத்த கடனை இழந்து விடுவோம் என்று வங்கி அதிகாரிகள் அச்சப்பட்டனர். சலீம் நடத்திவந்த காலணி தயாரிப்புக் கம்பனிக்கும் வங்கிகள் தொடர்ந்து கடன் கொடுக்க மறுத்தன. தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு நிதிவசதியில்லாமல் சலீம் மீர்ஸh நடத்திவந்த தொழிலில் அவருக்குப் பெரும்பின்னடைவும், நட்டமும் ஏற்பட்டது. இந்திய அரசின் முன்னனுமதி பெறாமல் அண்ணன் ஹலீம் ரகசியமாக பாகிஸ்தான் சென்று விட்டதால் அவர்களுக்குப் பூர்வீகமாகச் சொந்தமாயிருந்த பெரிய வீட்டையும் இந்திய அரசு கையகப்படுத்திக்கொண்டது. ஏனெனில், அந்த வீட்டின் பத்திரம் பாகிஸ்தானுக்கு ஓடிப்போன அண்ணன் ஹலீம் பெயரில் இருந்தது. தம்பி சலீம் மீர்ஸh குடும்பம் நடுத்தெருவில் நின்றது. காலணி தயாரிக்கும் தொழிலும் நசிந்து போய், பூர்வீக வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டதால் வெறுத்துப்போன சலீமின் மூத்தமகன் பாஹரும் தனது மனைவி, குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தான். வாழ்வாதாரத்தை இழந்த சலீம், தனது வயதான தாய், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த இளையமகன் சிக்கந்தர் ஆகியோருடன் வேறு ஊருக்குப்போக ஆக்ரா ரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார். வழியில் ஒரு பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள் “வேலை வேண்டும், வேலை கிடைக்கும்வரை அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று முழக்கமிட்டுச் செல்கிறார்கள். பேரணியிலிருந்த இளைஞர்கள் சிக்கந்தருடன் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் சிக்கந்தரை அடையாளங்கண்டு அந்தப் பேரணியில் கலந்துகொள்ள அழைக்கிறார்கள். மகன் சிக்கந்தரை அந்தப் பேரணியில் கலந்துகொள்ள அனுப்புகிறார் சலீம். வயதான தாயாரை வேறொரு நண்பர் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு, அவரும் அந்தப் பேரணியில் கலந்துகொள்கிறார். புதியநம்பிக்கையுடன் ஆக்ராவிலேயே சலீம் மீர்ஸh வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறார் - என்ற கடைசிக் காட்சியோடு படம் முடிகிறது. “நாட்டின் பிரிவினைக்குப் பின்னரும் மதத்தின் காரணமாக பாகிஸ்தான் செல்லாமல் தேசபக்தியுடன் இந்தியாவில் தங்கிவிட்ட முஸ்லீம் வணிகர்கள், நடுத்தர தொழில் முனைவோர் புதிதாக விடுதலையடைந்த இந்த நாட்டில் அரசின் உதவிகளும் கிடைக்காமல் பட்ட கஷ்டங்களைச் சொல்லும் இந்த திரைப்படத்தில் பால்ராஜ் சஹானி “சலீம் மீர்ஸh” பாத்திரமாகவே மாறி தனது பண்பட்ட, தரமான நடிப்பால் மக்களின் கண்களைக் குளமாக்கினார். படித்த இளைஞர்கள் சந்திக்கும் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனை இந்த திரைப்படத்தில் முதன்முதலாகப் பேசப்பட்டது. அரசின் தவறான கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் மதவேறுபாடு, மொழி, இனம், எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றுபடுத்துகிறது” என்று இந்த படம் பேசியது. மத்திய அரசின் தணிக்கைக்குழுவிடம் சான்றிதழ் பெறுவதற்காக அதன் தலைவருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் இந்த திரைப்படம் போட்டுக் காட்டப்பட்டது. கதையின் மையக்கருத்தைக் கண்டு அதிகாரிகள் அஞ்சினார்கள். திரையிடப்படும் சில நகரங்களில் மதக்கலவரம் ஏற்படலாம் எனவும் பயந்தார்கள். இதன் காரணமாக, சுமார் எட்டு மாதங்கள் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல், படத்தை நிறுத்தி வைத்தார்கள். ஆனால், இயக்குனர் ஆ.ளு.சக்யூவும், கலைஞர் பால்ராஜ் சஹானியும் கூட்டாக இணைந்து திரைப்படத்தை மத்திய அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட விமர்சகர்கள் அனைவருக்கும் மீண்டும் திரையிட்டுக் காட்டினார்கள். படத்திற்கு சான்றிதழ் வாங்குவதில் வெற்றியும் பெற்றார்கள். பரிசோதனை முயற்சியாக இந்த திரைப்படத்தை முதலில் பெங்களூரு நகரம் “சாகர் மற்றும் சங்கீத்” இரு திரையரங்குகளில் மட்டும் ரிலீஸ் செய்ய மத்திய தணிக்கைக்குழு அனுமதியளித்தது. மதக்கலவரம் ஏற்பட்டால் படத்துக்கு கொடுக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் - என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. “தேசீய ஒற்றுமையை வலியுறுத்தியும், மதநல்லிணக்கக் கொள்கையை உயர்த்திப் பிடித்தும், படித்த இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தும், இந்தியாவிலேயே தங்கிவிட்ட இஸ்லாமிய சிறுபான்மையின மக்களின் தேசபக்தி பற்றியும், தொலைநோக்கமில்லாத அரசின் திட்டங்களை விமர்சித்தும் இந்த கரம் ஹவா திரைப்படம் மிகச்சிறப்பாக பேசுகிறது” என்று பத்திரிக்கையாளர்களும், படத்தைப் பார்த்த மக்களும் வரவேற்றுப் பாராட்டினார்கள். பெங்களூரு நகரமக்களிடையே படத்துக்குக் கிடைத்த பெருத்த ஆதரவால் உற்சாகமடைந்த படத்தயாரிப்பாளர் தணிக்கைக்குழு அனுமதி பெற்று பம்பாயில் திரையிட ஏற்பாடுகளைச் செய்தார். “இந்தப் படம் தேசவிரோதப் படமென்றும், பாகிஸ்தான் ஆதரவுப் படமென்றும்,” பால் தாக்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். படம் வெளியிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை சிவசேனாக் கட்சியினர் அறிவித்தார்கள். சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேவுக்கும், மற்ற அரசியல்கட்சிப் பிரமுகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தனியாக இந்தத் திரைப்படம் சிறப்புக் காட்சியாகப் போட்டுக் காட்டப்பட்டது. அவர்கள் எதிர்ப்பும் விலகியது. திரைப்படத்தைப் பார்த்த அவர்கள் கதையை மிகவும் பாராட்;டி வரவேற்றார்கள். பின்னர், இந்தியாவின் முக்கிய நகரங்களில் படம் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்றது. பாரிஸ் நகரில் “கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும், ஹாலிவுட்டில் ஆஸ்கார் திரைப்பட விருது போட்டியிலும்” பங்கெடுத்துக் கொண்ட சிறப்பைப் பெற்றது. இந்தித் திரைப்பட வரலாற்றில் பால்ராஜ் நடித்த “தோ பிகா ஜமீன்” (இரண்டு ஏக்கர் நிலம்) “கரம் ஹவா” வும் இன்றுவரை பேசப்படுகிறது! சமூக க்கறை கொண்ட கதைக்காகவும், தேர்ந்த எதார்த்த நடிப்புக்காகவும் இந்த இரண்டு படங்களும், புதிய இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் வழிகாட்டும் படங்களாக இருப்பதுடன், பு{னா திரைப்படக் கல்லூரியில் திரைப்படக்கலையைப் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ள பெருமை படைத்ததாகும் ! காபூலிவாலா அப்துல் ரகுமான் பேரிட்சம்பழம், முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை விற்கும் சிறு வியாபாரி. அவனுக்குச் சொந்த ஊர், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரம் காபூல். கல்கத்தாவில் வீடுவீடாகச் சென்று அந்தப் பழங்களையும், கொட்டைகளையும் விற்பனை செய்து வருகிறான். ஒரு வாடகை வீட்டில் தனியாகத் தங்கியிருக்கிறான். காபூலில் அவனுக்கு ஐந்து வயதில் ஒரு மகளுண்டு. குழந்தை பிறந்தவுடன் அவன் மனைவி இறந்து போனாள். அந்தச் சிறுமியை ரஹ்மான், அவன் அம்மாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வந்திருந்தான். எப்போதும் தனது மகளின் நினைவாகவே இருந்தான். காபூலிவாலாவின் உடை, பஞ்சாப் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்த பட்டாணியர் அணியும் உடையைப் போலிருக்கும். முறுக்கிவிடப்பட்ட காதுவரை நீண்ட பெரியமீசை தலையில் குஞ்சம் வைத்த தொப்பி, முழுக்கைச்சட்டை, அதற்குமேல் கையில்லாத இடுப்புவரை மட்டும் நீண்டிருக்கும் மேல்கோட்டு, தொளதொள பைஜாமா மற்றும் கூர்மையான முனையுடைய இறுக்கமான பூட்ஸ். இந்த உடையலங்காரத்தில் அவன் தெருவில் நடந்து வருவதைப் பார்த்தாலே சின்னஞ்;சிறு குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் பயந்துபோய் வீட்டுக்குள் ஓடிஒளிவார்கள். அழும் குழந்தைகளைத் தாய்மார்கள் “காபூலிவாலாவிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்” என்று பயமுறுத்துவது வழக்கம். அவனைப் பார்த்து பயப்படாமல் நேருக்கு நேர் பார்த்து சிரிக்கும் ஒரே சிறுமி “மினி” அவளுக்கு ஐந்து வயதிருக்கும். காபூலில் விட்டுவிட்டு வந்த தனது மகளைப் போலவே இருந்தாள் மினி. மினியைப் பார்க்கும் போதெல்லாம் ரஹ்மானுக்கு மிகுந்த மகிழ்ச்சியேற்படும். அவன் மகளோடு உரையாடுவதுபோல மினியுடன் சிரித்துப்பேசி மகிழ்வான். அந்த சிறுமியின் வீட்டுத் திண்ணையில அமர்ந்து அவளுக்குக் கதைகள் சொல்வான். மினிக்கு இனிப்புப் பலகாரங்கள், பொம்மைகள் வாங்கிவந்து கொடுப்பான். மினியின் பெற்றோரும் தங்கள் ஐந்து வயது மகளைக் கொஞ்சுவதற்கு ரஹ்மானுக்குத் தடையாக இருக்கவில்லை. நாட்படநாள்பட ரஹ்மானுக்கும் சிறுமி மினிக்கும் இடையிலான அன்பும், பாசமும், நட்பும் வளர்ந்தோங்கியிருந்தது. கல்கத்தா நகர வாழ்க்கையில் ரஹ்மானுக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் - சிறுமி மினியின் பாசமும், அன்பு மட்டுமே ! ரஹ்மான ஒருசில வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கடனுக்கு விற்பதும் வழக்கம். அவனிடம் கடனுக்கு பேரிட்சம் பழங்கள், முந்திரிப் பருப்புகள் வாங்கியிருந்த ஒருவனிடம் ஒருநாள் ரஹ்மான் பதினெட்டு ரூபாய் பாக்கியை வற்புறுத்திக் கேட்டான். பணத்தை கொடுக்காததுடன், அவன் நாலுபேர் முன்னிலையில் “சிறுமி மினியின் தாயுடன் ரஹ்மான், தகாத கள்ள உறவு வைத்திருப்பதாக” அபாண்டமாகப் பழி சுமத்தினான். ஆத்திரமடைந்து ரஹ்மானுக்கும் அவனுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு, அடிதடியில் முடிந்தது. கடனைத் திருப்பிக் கொடுக்காமல் தகராறு செய்தவன் காயம்பட்டு செத்துப் போனான். ரஹ்மான் மீது கொலை வழக்கு நடந்தது. ஆத்திரத்தில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதால் ரஹ்மானுக்கு நீதிமன்றம் பத்தாண்டு சிறை தண்டனை மட்டுமே கொடுத்துத் தீர்ப்பு வழங்கியது. காபூலில் இருக்கும் தனது மகளையும், கல்கத்தா நகரச்சிறுமி மினியையும் ரஹ்மான் நாள்தோறும் நினைத்து நினைத்து வருந்தி சிறையில் காலம் தள்ளினான். காலச்சக்கரம் சுழன்றது. பத்தாண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலையடைந்த ரஹ்மான், மினியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில் மினியின் தந்தை ரஹ்மானைச் சந்தித்தார். மினிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இப்போது ரஹ்மான் மினியைச் சந்திக்க வந்தால் மணமகன் பெற்றோருக்கு தேவையில்லாத சந்தேகம் வருமென்றும், காபூலுக்கு திரும்பிச்சென்று அவன் மகளையும் அழைத்துக் கொண்டு மூன்று மாதங்கழித்து நடைபெறப்போகும் மினியின் திருமண விழாவிற்கு ரஹ்மான் வந்து கலந்துகொள்ளும்;படி யோசனை கூறுகிறார். அதுமட்டுமல்ல, ரஹ்மான் காபூலுக்கு சென்று திரும்ப வழிச்செலவுக்கு ஒரு தொகையையும் கொடுத்தனுப்புகிறான் மினியின் தந்தை! மினியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் நாளை எண்ணி மகிழ்ச்சியுடனும், ஆனந்தக் கண்ணீருடன் ரஹ்மான் தனது சொந்த ஊர் காபூலை நோக்கிப் பயணமாகிறான். இத்துடன் தாகூரின் கதை முடிவடைகிறது. இந்த சிறுகதையை தாகூர் 1892 ஆம் ஆண்டில் எழுதிப் புகழ்பெற்றார். ஆஙகிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரிய சிறுகதை! வங்காள மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த சிறுகதை 1957 ஆம் ஆண்டில் வங்க மொழியில் “காபூலிவாலா” என்ற பெயரில் திரைப்படமாகி பெரும்வெற்றியைப் பெற்றது. இதே கதை மீண்டும் 1961ஆம் ஆண்டில் இந்தியில் திரைப்படமாகியது. “காபூலிவாலா ரஹ்மானாக” பால்ராஜ் சஹானி நடித்து தனது பண்பட்ட உணர்ச்சிகரமான நடிப்பால் மக்களைக் கவர்ந்தார். நாடுகளின் எல்லைகள், மதம், இனம், மொழி எல்லைகளையும் தாண்டி குழந்தைகளின் நட்பும், பாசமும், அன்பும் மனிதர்களைக் கட்டிப்போடும் பேராற்றல் மிக்கது என்ற கருத்தைத் தாகூர் இந்தக் கதையில் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிமல் ராய். இயக்குனர் ஹேமந்த குப்தா. பம்பாய் நகரத்தில் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கல் - வாங்கல் தொழிலை நடத்தி வந்த சிலர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பம்பாய் மக்கள் பட்டாணியர்கள் அல்லது காபூலிவாலாக்கள் என்று அழைத்து வந்தனர். திரையில் தனது பாத்திரம் எடுப்பாகவும், நடிப்பு சிறப்பாகவும் அமைய பால்ராஜ் சஹானி கடுமையாக உழைத்தார். பம்பாய் நகரத்தில் ஒருசில பட்டாணியர்கள் குடியிருந்த பகுதிகளுக்குச் சென்றார். அவர்களணியும் உடைகளைத் தைத்துக்கொண்டார். அவர்கள் உட்காருவது, உண்ணுவது மற்றும் நடையுடை பாவனைகளைக் கவனமாக உற்றுநோக்கிக் கற்றுக்கொண்டார். காபூலிவாலா படம், அவரது கடும்உழைப்புக்கு பெரும்புகழைப் பெற்றுத் தந்தது ! மேலும் சில திரைப்படங்கள் ஹம் லோக் (நம்முடைய மக்கள்) சாதாரண மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கல்லூரி படிப்பு முடிந்தும் வேலை கிடைக்காமல் இந்த சமூகத்தில் சந்திக்கும் சவால்களைச் சொல்லும் படம். ஹல்சல் (கலகம்) ஒரு நேர்மையான சிறையதிகாரியாக பால்ராஜ் நடித்த படம். “சிறைக்கூடம், சிறைவாசிகளைத் திருத்தும் சீர்த்திருத்தப்பள்ளியாக இருக்க வேண்டும்” என்று மறைந்த மனிதஉரிமைப் போராளி நீதிபதி V.R.கிருஷ்ணையர் சொன்ன கருத்தை வலியுறுத்தும் படம். வணிகரிதியில் பெரும்வெற்றியைப் பெற்ற படம் வக்த் (விதி). அகதிகள் படும் வேதனையைச் சொல்லும் படம். முதன் முறையாக அன்றைய காலத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ராஜ்குமார், சுனில்தத், சசிகபூர்;, சாதனா மற்றும் ஷர்மிலா தாகூருடன் பால்ராஜ் இணைந்து நடித்த BOX OFFICE வெற்றிப்படம் (1965) பூகம்பத்தால் சிதறி வெவ்வேறு திசைகளில் சிதறிப்போன அண்ணன் தம்பிகள் குடும்பங்கள் பல வருடங்கள் கழித்து ஒன்று சேரும் குடும்பக்கதை. தர்த்தி-கி-லால் : 1943 – 44 ஆம் ஆண்டுகளில் ஒன்றுபட்ட வங்கத்தில் ஏற்பட்ட கொடூரமான பஞ்சத்தையும், இருபது லட்சம் மக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் மாண்ட அவலத்தையும், வங்கத்தின் கடற்கரையோர விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கல்கத்தா நகரத்தெருக்களில் அனாதைகளாக அடைக்கலம் புகுந்து அல்லல்பட்டு மரணமடைந்த கதை. மக்களைக் காப்பாற்ற முடியாத அன்னியராட்சியின் கையாலாகாதத்தனத்தை சித்தரித்த படம் “தர்த்தி கி லால்” (பூமியின் புதல்வர்கள்) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கிய இந்திய மக்கள் நாடகமன்றமே தயாரித்த முதல்படம். நாடக இயக்குனரும், கதாசியருமாகப் புகழ்பெற்ற K.A.அப்பாஸ் இயக்கத்தில் பால்ராஜ் சஹானியும், மனைவி தமயந்தியும் இணைந்து நடித்த படம். சோவியத் ரஷ்யாவின் “மாஸ் பிலிம்ஸ்” படநிறுவனம், இந்தியப் படத் தயாரிப்பாளர்களுடன் கூட்டாக இணைந்து ரஷ்ய மொழியிலும், இந்தி மொழியிலும், தயாரித்த திரைப்படம் “பரதேசி”. 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்த ரஷ்ய வணிகர் அபனாஸ்வி நிகிதாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படம். இதில் பால்ராஜ் சஹானி அபனாஸ்வின் இந்திய நண்பனாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். காஷ்மீரி மொழியில் ஒரு திரைப்படம் கோடை காலத்தில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுப்பதற்காக பால்ராஜ் தந்தை காஷ்மீர் தலைநகரம் _நகரில் ஒரு வசதியான வீட்டை வாங்கியிருந்தார். குழந்தைப் பருவத்திலிருந்து அங்கு அடிக்கடி சென்று தங்கி காஷ்மீரின் இயற்கையழகில் பால்ராஜ் மனதைப் பறிகொடுத்திருந்தார். காஷ்மீர் மக்கள், காஷ்மீரி மொழிமீது அவருக்குத் தனிப்பாசமிருந்தது. காஷ்மீர் இயற்கையழகை ரசித்து அவர் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். காஷ்மீரி மக்கள் நேசித்த ஒரு மக்கள் கவிஞன் “மெஜ்பூர்”. அந்த காஷ்மீரி மொழிக் கவிஞன் “மெஜ்பூர்” வாழ்க்கைக் கதையை அதே மொழியில் திரைப்படமாகத் தயாரித்தார். காஷ்மீரி மொழியில் அதுதான் முதல் திரைப்படம். கவிஞன் மெஜ்பூராக பால்ராஜின் ஒரே மகன் பரிக்ஷத் சஹானியும், கவிஞனின் தந்தையாக பால்ராஜூம் நடித்தும் அந்த மாநில மக்களின் அன்பைப் பெற்றார். முற்போக்கான திரைப்படக் கலையை கற்றுக்கொள்ள தனது ஒரே மகன் பரிக்ஷத் சஹானியை “மாஸ்கோ மாக்ஸிம் கார்க்கி திரைப்படக் கல்லூரியில்” (1965-1967) சேர்த்துப் படிக்கவைத்தார். 1965 ஆம் ஆண்டுக்குப்பின் முற்றிலும் வணிகமயமாகிப்போன பாலிவுட் திரையுலகில் மகன் பரிக்ஷத் சஹானிக்கு நடிப்பு வாய்ப்புகள் அதிகமில்லாமல் போனதால், பிற்காலத்தில் அவர் படத்தயாரிப்பாளராக மாறிப்போனார். பால்ராஜூம் தனது கொள்கை, இலட்சியத்திற்கு ஒத்துவந்த ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். ஒருசில வணிகப்படத் தயாரிப்பாளர்களும் அவரைத் தேடி வந்தனர். அவர்தான் மறுத்துவிட்டார். 1946 முதல் 1973 ஆம் ஆண்டுவரை மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை, போரட்டங்களை , இந்த சமூக அமைப்பை மாற்றி அவர்கள் அடைய வேண்டிய புதிய சோசலிச சமூகஅமைப்பைப் பற்றி பால்ராஜ் படங்கள் பேசின. அவரது படங்கள் “புதிய அலைப்படங்கள்” (NEW WAVE) “இணைச் சினிமா” (Paralell Cinema) என்றும், இந்தி படங்களில் எதார்த்தவாதத்தின் புதிய போக்குகளை (New Trends) உருவாக்கிய படங்களென்று புதிய வரலாற்றைப் படைத்தது” என்றும் திரைப்பட ஆய்வாளர்கள் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். பால்ராஜ் சஹானி நடித்திருக்கும் 134 திரைப்படங்களில் ஒருசில படங்களின் திரைக்கதையும், வியக்கவைக்கும் அவரது நடிப்பாற்றலும் இன்றளவும் பேசப்படுகின்றன. இளநிலை எழுத்தர் (கரம் கோட்), ஏழை விவசாயி (தோ பிகா ஜமீன்), வீட்டுவேலைக்காரன் (அவுலத்), ஆப்கானிஸ்தானத்து பட்டாணியன் (காபூலிவாலா), பாகிஸ்தான் அகதி (வக்த்) பஞ்சாலை முதலாளி (ஏக் பூல் தோ மாலி), முஸ்லீம் சிறு தொழிலதிபர் (கரம் ஹவா), பட்டம் பெற்ற பின்னர் வேலை தேடியலையும் நடுத்தரக் குடும்பத்து இளைஞன் (ஹம் லோக்), கடமை தவறாத, நேர்மையான சிறையதிகாரி (ஹல்சல்), வங்கப் பஞ்சத்தால் கல்கத்தா நகருக்கு குடிபெயரும் சிறுநில விவசாயி (தர்த்தி கி லால்) ஆகிய பாத்திரங்களில் தோன்றி பால்ராஜ் சஹானி நடித்திருக்கும் காட்சிகள் இன்றளவும் பூனா திரைப்படக் கல்லூரியில் நடிப்புத்துறை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளன. “ஏழை விவசாயியாக நடிக்கும்போது, இந்த நாட்டின் கிராமங்களில் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயபூமியை இழந்த ஏழைவிவசாயியை நான் கற்பனை செய்துகொண்டு நடிப்பதில்லை. அவனை நான் பலமுறை பல கிராமங்களில் நேரில் பார்த்து, அவர்களின் மோசமான, வருந்தத்தக்க வாழ்க்கை நிலைமைக்காக கண்ணீர் சிந்தியிருக்கிறேன். நடிக்கத் தொடங்கிய அடுத்த நிமிடமே நான் அந்த விவசாயியாகவே உணர்கிறேன். வேலை தேடியலையும் பட்டதாரி இளைஞனின் மனவேதனையை நான் உணர்ந்திருக்கிறேன். அகதியாக நடித்தபோது என் சொந்த ஊரிலும் (ராவல்பிண்டி) டெல்லியிலும், கல்கத்தா நகரத்திலும் அலைந்து திரிந்த அகதிகளை நேரில்பார்த்து நான் மனம் பதைத்திருக்கிறேன். என்னுடைய பெற்றோரும், தம்பியுமே அகதிகளாக டெல்லிக்கு வந்தவர்கள்தான். அந்த பாத்திரத்தில் நடிக்க எனக்கு ஒத்திகையே தேவைப்படவில்லை. நான் அகதியாக நடிக்கும்போது நிஜவாழ்க்கையில் வாழ்விழந்த அகதிகள் எனக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்துவிட்டதாகவே நான் நம்புகிறேன்” என்று நடிப்புக்கலைபற்றி தனது சுயசரிதையில் பால்ராஜ் பதிவு செய்திருக்கிறார். பால்ராஜின் மனைவி தமயந்தியும் இரண்டே ஆண்டுகளில் 1945-1947 தீவார், தர்த்தி-கி-லால், ஹல்சல், தூர் சலேன், குடியா ஆகிய ஐந்து படங்களில் கதாநாயகியாக சிறப்பாக நடித்துப் புகழ்பெற்றார். 1947 ஏப்ரல் 29 ஆம் நாள் 28 வயதில் அகால மரணமடைந்தார். “நான் உயிருக்குயிராக நேசித்த என் மனைவி தமயந்தியின் உடல்மீது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் செங்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். அன்றுமுதல் மனைவியின் நினைவுகளும், அவள்மீது போர்த்தப்பட்ட செங்கொடியும் என் உடலின் ஒரு பகுதியாகவே நிலைத்துவிட்டது” என்று சுயசரிதையில் பால்ராஜ் நினைவு கூர்கிறார். ஆற்றல்மிக்க முற்போக்கு எழுத்தாளர் 1953 ஆம் ஆண்டில் வெளியான “தோ பிகா ஜமீன்” (இரண்டு ஏக்கர் நிலம்) திரைப்படத்திற்குப் பின்னர் பால்ராஜூக்கு இந்திய அளவிலும், சோசலிச நாடுகளிலும், அமெரிக்காவிலும் பெரும்புகழ் கிடைத்தது. இந்தித் திரைப்படவுலகில் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. இருப்பினும், அவர் பணத்திற்காகவும், புகழுக்காகவும் உப்புச்சப்பற்ற, சமூகமுன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத பொழுதுபோக்கு வணிகப்படங்களைத் தவிர்த்தார். சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முற்போக்கான கருத்துகள் கொண்ட திரைக்கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடித்துவந்தார். படவாய்ப்புக்காகவும், பணத்துக்காகவும் அவர் தனது கொள்கைகளில் யாருடனும் சமரசம் செய்துகொள்ளவில்லை ! 1954ஆம் ஆண்டிலிருந்தே இந்தியத் திரைப்பட உலகில் கோடீஸ்வரத் தயாரிப்பாளர்கள் நுழைந்து ஆட்டம்பாட்டம், தேவையற்ற ஆபாசக் கவர்ச்சி நடனங்கள், பாடல்கள், சண்டைக் காட்சிகள் கொண்ட வணிகப் படங்களை தயாரிக்கத் தொடங்கியிருந்தனர். மக்களுக்குப் பயன்படாத குப்பைகூளப் படங்கள் வெளிவரத் தொடங்கியதைக் கண்டு பால்ராஜ் மனம் நொந்து போயிருந்தார்;. விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்பான சினிமா, மக்களிடையே சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மூடநம்பிக்கைகளையும், பிற்போக்கான கருத்துக்களையும் அடிப்படையாகவும், பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாகக்கொண்ட வணிகப் படங்கள் தயாரிக்கப்படுவதையும் வெறுத்தார். மாணவப் பருவத்திலிருந்தே அவரது அடிமனதில் குடிகொண்டிருந்த கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் எழுதுவது போன்ற எழுத்துப் பணிகளில் 1954 ஆம் ஆண்டிலிருந்தே படைப்பிலக்கிய முயற்சிகளில் தீவரமாக ஈடுபடத் தொடங்கினார். கல்லூரி வாழ்க்கையில் அவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். பாடத்திட்டத்தில் இல்லாத பல தலைசிறந்த ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளை ஆர்வத்துடனும், அக்கறையுடனும் கற்றுத் தேறியிருந்தார். கல்லூரி ஆண்டு விழா மலர்களில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதிய அனுபவம் அவருக்குண்டு. அந்த இளம்பருவ ஆர்வம் இப்போது வேகமெடுத்தது. ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி, அவரது தாய்மொழியான “குர்முகி”(பஞ்சாபி) மொழிகளில் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டிருந்தார். நடிப்புத் தொழிலுக்காக நமது தாய்மொழி தமிழையும் கற்றுக்கொண்டு, தமிழ்த்திரையுலகக் கலைஞர்களோடு தமிழில் பேசுமளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டார். திரைப்படங்களில் நடித்து ஏராளமாகப் பணம் சம்பாதித்து புகழடைவதைவிட, எழுத்துப் பணிகள் மூலமாகவும், முற்போக்கான கருத்துகள் கொண்ட நாடகங்கள் மூலமும் மக்களிடையே சமூக விழிப்புணர்ச்சியை ஆழமாக ஏற்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கை. “எழுத்துப் பணிதான் என் முதன்மையான லட்சியம். திரைப்படங்கள் எனக்கு மனநிறைவை அளிப்பவையல்ல. இப்போது என்னிடம் ஏழாயிரம் ரூபாய் சேமிப்பில் இருக்கிறது. மேலும் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அனேகமாக எனக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை வருமானம் வரும் வாய்ப்பிருக்கிறது. அத்துடன் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு டெல்லி, அமிர்தசரஸ் அல்லது _நகர் ஆகிய ஏதாவதொரு நகரத்தில் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் போன்றொரு இலக்கிய ஆசிரமத்தை உருவாக்கி அங்கு நீயும், நானும் மற்ற முற்போக்காளர்களுடன் இணைந்து எளிமையாக வாழ்ந்து, படைப்பு முயற்சிகளில் ஈடுபடலாம்” என்று தனது எழுத்தாளர் தம்பி பீஷ்மம் சஹானிக்கு 1954ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தில் தனது எதிர்கால திட்டத்தை, விருப்பத்தை பால்ராஜ் தெரிவித்திருக்கிறார். முதல் மனைவி, நடிப்புக் கலைஞர் திருமதி தமயந்தி 1947 ஏப்ரல் மாதத்தில் அகால மரணமடைந்தார். அவர்களுக்குப் பிறந்த மகன் பரிக்ஷத் சஹானி, மகள் சப்னம் மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சந்தோஷி மற்றும் அவர்களுக்குப் பிறந்த மகள் சனோபர் ஆகியோரைக் காப்பாற்ற வேண்டிய தேவை அவருக்கிருந்தது. ஆகையால் அவர் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களிலாவது நடிக்க வேண்டிய அவசியமிருந்தது. திரைப்பட வேலைப்பளுவால் முழுநேரமாக எழுத்துப் பணிகளில் அவரால் ஈடுபடமுடியவில்லை. இந்த மனக்குறையும், வருத்தமும் அவருக்கு இறுதிக்காலம் வரை நீடித்தது. பால்ராஜ் அவரது திரைப்பட வாழ்க்கையில் (1946-1973) 134 இந்தித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவை தவிர சோவியத் ரஷ்யா மற்றும் இந்தியக் கூட்டுத் தயாரிப்பான “பரதேசி” (14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட அபனாஸ்வி நிகிதா என்ற ரஷ்ய வணிகரின் வாழ்க்கைக் கதை) என்ற ரஷ்ய மற்றும் இந்திமொழிப் படத்திலும் அந்த ரஷ்ய வணிகனின் நண்பனாக நடித்திருந்தார். இதற்காக இந்தியாவுக்கும் - மாஸ்கோவுக்குமிடையில் அடிக்கடி படப்பிடிப்புக்காக பயணம் செய்துகொண்டிருந்தார். நாடகங்களை இயக்குவது, அவற்றில் நடிப்பது போன்ற கலைப்பணிகளுடன், இந்தியக் கம்பயூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு மக்கள் இயக்கங்களிலும் கலந்துகொண்டார். இத்தனை வேலைப்பளுவுக்கிடையில் சுமார் இருபதாண்டு காலம் (1954-1973) அவரது எழுத்துப் பணிகளும் தொடர்ந்தன! இந்த குறுகிய காலத்தில் பால்ராஜ் தனது தாய்மொழியான பஞ்சாபி மொழியில் (குர்மிகி) வெளிவந்த இலக்கிய இதழ்கள் பிரித்திலாரி (அமிர்தசரஸ்), ஆர்சி(டெல்லி) மற்றும் ரணஜித் (பம்பாய்) ஆகியவற்றில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தனது பயண அனுபவங்கள், வாழ்க்கையில் தான் சந்தித்த சாமான்ய மனிதர்கள் பற்றிய வர்ணனைக் கட்டுரைகள் (portraits), தனது நாடக அனுபவங்கள், இந்த நாட்டின் மொழிப்பிரச்சனை, புத்தக விமர்சனங்கள், தேசீய - சர்வதேசீய இலக்கியப் படைப்புகளின் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். “வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் உண்மையாக இருக்க வேண்டும்” என்ற தனது கொள்கையை வலியுறுத்திய அவரது விமர்சனக் கட்டுரைகளில் வெளியான நேர்மையான, தெளிவான, ஆணித்தரமான, முற்போக்கான கருத்துகள் பல்துறை அறிஞர்களையும், பேராசியர்களையும், மாணவர்களையும், இதர படைப்பாளிகளையும் வெகுவாகக் கவர்ந்தன. அவரது வாழ்க்கையின் பிற்பகுதியின் இருபது ஆண்டுகளில் அவர் எழுதிப் புத்தகங்களாக வெளிவந்தவை: • இரண்டு பயண நூல்கள் (1960 ல் பாகிஸ்தான் பயண நூல் மற்றும் 1969 ல் சோவியத் ரஷ்யப் பயண நூல்) • எனது திரையுலக அனுபவங்கள். • நான் சந்தித்த சாமானிய மனிதர்கள். • “பப்பு என்ன சொல்கிறான்” எனும் பெரிய நாடக நூல் மேற்கண்ட புத்தகங்களனைத்தையும், இலக்கிய இதழ்களில் வெளியான ஏராளமான கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள், நாடக விமர்சனங்கள் அனைத்தையும் பால்ராஜ் தனது தாய்மொழி பஞ்சாபி(குர்முகி) மொழியிலேயே எழுதினார். அவரது தாய்மொழிப்பற்றுக்கு என்ன காரணம் அவர் வங்கத்தின் மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனில் இந்திமொழி ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் (1936-1939) தாய்மொழியின் முக்கியத்துவம்பற்றி தாகூர் அவரிடம் வலியுறுத்திக்கூறிய கருத்துக்கள்தான் காரணம். “ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்தும், இந்திமொழியில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருந்தும் இனிமேல் தாய்மொழி பஞ்சாபியில்தான் எதிர்காலத்தில் தனது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுத வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்” என்றும் “மொழி குறித்து காரல் மார்க்சும், காந்தியடிகளும், மகாகவி தாகூரும்தான் என் கண்களைத் திறந்தவர்கள்” என்று பிற்காலத்தில் பால்ராஜ் தனது மலரும் நினைவுகள் கட்டுரையில் எழுதியிருக்கிறார். பால்ராஜ் எழுதிய நூல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவை அவருக்கு காலத்தால் அழியாப்புகழைப் பெற்றுத் தந்தன. அவர் பஞ்சாபி மொழியில் மிகத்திறமையான எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். அவரது எழுத்திலிருந்த “உண்மையும், மனிதநேயமும், மதச்சார்பின்மை கொள்கைகளும், இந்தியாவிலும் ஒரு ஏற்றத்தாழ:வற்ற சோசலிச சமூகஅமைப்பு தோன்ற வேண்டும், மக்கள் எல்லோரும் சரிநிகர் சமானமாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தை உயர்த்திப் பிடிப்பனவாக அமைந்தன” என்று தலைசிறந்த இலக்கிய விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்! 1960 ஆம் ஆண்டில் பால்ராஜ் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பியவுடன் பஞ்சாப் மொழியில் எழுதிய முதல் புத்தகம் “மேரா பாகிஸ்தான் சாபர்” (எனது பாகிஸ்தான் பயணம்) இந்த புத்தகம் இந்தி, உருது மொழிகளிலும் வெளியிடப்பட்டு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. “நாட்டின் பிரிவினைக்குப் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே பகைமை நீடிப்பது இரண்டு நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல, ஏனெனில் நீண்ட பல வருடங்களாக இந்தியத் துணைக் கண்டத்தின் வளமான கலாச்சாரம், பண்பாட்டுப் வரலாறைப் பொதுவாகக் கொண்ட மக்களிடம் நல்லுறவு நீடிப்பதே இன்றைய தேவை” என்பதை அந்தப் புத்தகத்திலே வலியுறுத்தியிருக்கிறார். பயண இலக்கியத்தில் இந்த புத்தகம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்று புத்தக விமர்சகர்கள் பாராட்டினார்கள். பாகிஸ்தானில் பால்ராஜ் இந்திய மக்களின் நல்லெண்ண தூதுவராகவே வலம் வந்தார். சாதாரண ஏழை எளிய மக்களைப் பேட்டி கண்டு ஆழ்ந்த மனிதநேயத்துடன் தனது பயண நூலில் பதிவு செய்திருக்கிறார். நாட்டின் பிரிவினைக்கு முன்னால், அவரது சொந்த ஊரான ராவல்பிண்டியில் தன்னுடைய பக்கத்து வீட்டுப் பள்ளித் தோழனான “போஸ்டான்கான்” என்பவரோடு பாகிஸ்தானில் அவரெடுத்துக்கொண்ட புகைப்படத்தை நூலின் பின்னட்டையில் வெளியிட்டிருந்தார். பால்ராஜ் இந்தியாவின் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம். அவர் பாகிஸ்தானில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இளமைக்கால நண்பன் போஸ்டான்கான் ராவல்பிண்டியில் குதிரைவண்டி ஓட்டி வாழ்ந்து கொண்டிருந்தான். இன்னொரு இளமைக்கால நண்பன் டாக்ஸி டிரைவராக இருந்தான். மேலுமொரு நண்பன் வட்டாச்சியராக அரசு வேலையிலிருந்தான். இவர்களைச் சந்தித்து உரையாடியதைப் பற்றியும் அந்தப் பயணநூலில் எழுதியிருக்கிறார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, பால்ராஜ் ராவல்பிண்டியில் தான் பிறந்து வளர்ந்த பெரியவீடு என்னவாயிற்று என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பார்க்கப் போயிருக்கிறார். ஒரு முஸ்லீம் குடும்பம் பால்ராஜின் சொந்த வீட்டில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்தது. அவர் அந்த வீட்டுக்குப் போயிருந்த சமயம், அங்கொரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், விருந்தும் நடந்துகொண்டிருந்தது. மணமக்களின் பெற்றோரிடம் பால்ராஜ் “முன்னொரு காலத்தில் அந்த வீட்டின் சொந்தக்காரன் நான்தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். மேலும் விருந்தினர்களுக்குப் பிரியாணியை தட்டில்போட்டு பரிமாறத் தொடங்கினேன். அந்த முஸ்லீம் குடும்பத்தின் மூத்த பெண்மணி எனது நெற்றியில் முத்தமிட்டுக் கட்டித்தழுவி என்னை அவரது மகனாகவே அன்புசெலுத்தி ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.” என்று பால்ராஜ் அந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் சம்பவம் இந்திய, பாகிஸ்தான் இரு நாட்டு மக்களையும் பரவசமடையச் செய்தது. பஞ்சாப் மொழியில் தொடர்ந்து அவரெழுதிய அடுத்த புத்தகம் “மேரே ரூசி சாபர்நாமா” (எனது ரஷ்யப் பயணம்) இந்திய - சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தேசீயத் துணைத்தலைவராக இருந்தபொழுது, நல்லெண்ண தூதுக்குழுவுக்குத் தலைமைதாங்கி ரஷ்யா சென்றிருந்தார். ஒருமாத காலம் சோவியத் ரஷ்ய நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்து, சோசலிச ஆட்சியில் அந்த நாட்டு மக்கள் அடைந்திருந்த வளமான வாழ்க்கையை நேரில்கண்டு வியந்து விவரித்திருக்கிறார். அங்கு அவர் சந்தித்த தொழிலாளிகள், கூட்டுப்பண்ணை விவசாயிகள், நடனக்கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள், புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் பொதுவான கலைவளர்ச்சி பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகமும் இந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் வெளியிடப்பட்டு இந்தியாவிலும், ரஷ்யாவிலும், மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. இந்திய – சோவியத் நட்புறவை வளர்ப்பதில் இந்த புத்தகத்தின் பங்களிப்பைப் பாராட்டி 1970 ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் அரசாங்கம் பால்ராஜூக்கு “சோவியத் நாடு நேரு விருதினை” வழங்கிக் கவுரவித்தது. இந்தியாவில் மொழிப்பிரச்சனை குறித்து “தர்மயுக்” மற்றும் சில இந்தி மொழி இலக்கிய இதழ்களுக்கு எட்டு விரிவான கட்டுரைகளை அனுப்பினார். அவரது கட்டுரைகளின் உள்ளடக்கத்தைப் படித்துப் பார்;த்த பத்திரிக்கை ஆசிரியர்கள் மிரண்டு போனார்கள். எந்தவொரு கட்டுரையையும் பிரசுரிக்கவில்லை. பொறுமையாகக் காத்திருந்தும் பயனில்லாததால், எட்டு கட்டுரைகளையும் தொகுத்து “இந்தி எழுத்தாளர்களின் கவனத்திற்கு” என்ற பெயரில் தனது சொந்தச் செலவில் ஒரு நூலாக பல்லாயிரம் பிரதிகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்தார். உண்மையில் அந்த புத்தகத்தில் கண்டுள்ள “மொழிப்பிரச்சனை” சம்பந்தமான அவரது பார்வையும், கொள்கையும், இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த புத்தகம் பல இந்தி எழுத்தாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தக் காரணம் “மொழிப் பிரச்சனை” குறித்து பால்ராஜ் தெரிவித்திருந்த திட்டவட்டமான கருத்துக்களே! • “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்று பேசுவது இந்திய வரலாற்றில் உண்மையல்ல. இப்படிப் பேசுபவர்களுக்கு அரசியல் உள்நோக்கமுண்டு. • இந்தியா, பல்வேறு தேசிய இனங்களை கொண்ட துணைக்கண்டமாகும். ஒவ்வொரு தேசீயஇனத்தின் தாய்மொழிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் சமஉரிமை கொடுத்து சட்டங்கள் இயற்ற வேண்டும், • இந்தி, நாடு முழுவதற்குமான பொதுமொழியல்ல. இந்தி மொழியை மற்ற தேசீய இனங்களின்மீது திணிப்பது, இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஆபத்தானது. • பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆட்சியதிகாரத்திலும், கோவில் வழிபாடுகளிலும் அவரவர் தாய்மொழிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். • உருது மொழியை இஸ்லாம் மதத்துடன் இணைத்துப் பேசுவது தவறு. உருது மொழி இந்திய நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் நமக்குக் கிடைத்த பரம்பரைச் சொத்தாகும். உத்திரபிரதேச மாநிலத்திலும், ஒன்றுபட்டிருந்த பஞ்சாப் மாநிலத்திலும் பெரும்பான்மையான மக்கள் மதவேறுபாடின்றி உருது மொழியைப் பேசினார்கள். இதன் காரணமாக, உருது மொழியை சிறுபான்மை மதத்தினாpன் மொழி என்று முத்திரை குத்துவது தவறு. மத்திய மாநில அரசுகள், குறிப்பாக உத்திரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் உருது மொழிக்கு உரிய இடத்தைத் தரவேண்டும். • மொழி என்பது ஒருவர் கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்க பயன்படும் கருவி என்றும் அதற்கு மேல் எந்தவிதமான புனிதமும் அதற்கு கிடையாது என்று சில இடதுசாரிகள் சொல்லுவதும் தவறு. மொழியென்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் கலாச்சாரம் மற்றும்; பண்பாட்டு அடையாளமாகும். எனவே ஒரு மொழியின் வராற்றுப் பெருமிதத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்;ட் கட்சியின் கலை இலக்கியம் மற்றும் நாடகத் துறையின்; முன்னணி ஊழியராகச் செயல்பட்டு வந்தார். இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்றைய காலகட்டத்தில் பின்பற்றிவந்த மொழிக்கொள்கை அவருக்கு உடன்பாடாக இருக்கவில்லை. நாட்டின் இணைப்பு மொழியாக இந்தி மொழியை அவர் ஏற்கவில்லை. மொழிப் பிரச்சனை குறித்து அவருக்கிருந்த ஆழமான புரிதல் காரணமாக, தமிழ்நாட்டில் 1965ஆம் ஆண்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் பொங்கியெழுந்த போராட்டத்தை அவர் வெளிப்படையாகவே ஆதரித்தார். அவரது கதைகள், கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், கவிதைகள், நாடகங்கள், பயண இலக்கியங்கள், தன்வரலாறு ஆகிய படைப்புகள் குறித்து புகழ்பெற்ற பஞ்சாபி இலக்கிய விமர்சகர் சர்தார் கபூர்சிஸ் கும்நாம் தெரிவித்திருக்கும் கருத்துகள்: “எழுத்தாளர் பால்ராஜ் சஹானி எழுதிய ஒவ்வொரு வரியும் படிப்பவரின் இதயத்துக்குள் நுழைந்துவிடும். ஏனெனில், அது அவருடைய பரந்துபட்ட வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதியவை. பாலில் இன்சுவை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பதைப்போல் அவருடைய மிகச்சிறந்த ஆளுமையின் ஒருபகுதியும் அவரது எழுத்தில் கலந்திருக்கும். அவரது ரஷ்யப் பயண நூலை நாம் படித்தால், அவர் நமக்கு முன்னால் அமர்ந்து நம்மோடு நேரில் விவரிப்பது போலிருக்கும். நாமே அவரோடு அந்த நாட்டில் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெறுவோம். அவரது எழுத்தாற்றலின் அடிநாதமே உண்மையைப் பேசுதலாகும். அவரது படைப்புகளனைத்திலும் அவர் மக்களை உளமாற நேசிக்கும் மனிதநேயம் ஒளிவீசும். அவரது எழுத்துக்கள் தானொரு “மெத்தப்படித்த மேதாவி” என்று தனது அறிவாற்றலை முன்னிலைப்படுத்துவதாக இருக்காது. மாறாக, நம்முள் ஒரு விவாதத்தைத் துவக்கி புதிய சிந்தனைகளை உருவாக்கும். பகுத்தறிவை வளர்க்கும். அரசியல் தத்துவம், அறிவியல், சமுதாய வளர்ச்சி குறித்து எழுதும்போது அவரது எழுத்து நடை, கேள்வி பதில் வடிவத்தில் நாம் எளிதில் புரிந்துகொள்ளும்படி எளிமையாக இருக்கும். அவரது நடிப்புக்கலையைக் கண்டு நாம் வியப்பதைப்போலவே, அவரது எழுத்தாற்றலையும் உணர்ந்து வியப்படைகிறோம். அவர் எந்தப்பொருள் குறித்து எழுதினாலும், அவரது கருத்து பசுமரத்தாணி போல் நம் நெஞ்சுக்குள் இறங்கி விடும்”. அவரது சுயசரிதையைப் படிக்கும் அனைவருக்கும் மேற்சொன்ன அனுபவம் கிடைப்பது முற்றிலும் உண்மை! படித்துப் பாருங்கள். காந்தியடிகளின் “சத்தியசோதனை” புத்தகத்திற்கு இணையானது. அவருடைய பலம், பலவீனங்கள் எதையும் மறைக்காமல் எழுதப்பட்டிருக்கும் அருமையான சுயசரிதை! பொள்ளாச்சியில் மக்கள் கலைஞன் ! தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இரண்டாவது மாநில மாநாடு கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 முதல் 20 ஆம் தேதிவரை நான்கு நாட்கள் மிகக் கோலாகலமாக நடந்தது! தோழர்கள் பாலதண்டாயுதம், தா.பாண்டியன், தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம், கடலூர் பாலன், வாழப்பாடி சந்திரன், பி.கே.ராமசாமி மற்றும் ஜனசக்தி ஆசிரியர் எம்.கே.ராமசாமி ஆகியோர் இரவுபகல் பாராமல் உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்கள். பொள்ளாச்சி தொழிலதிபர் அருட்செல்வர் நா.மகாலிங்கமும், குன்றக்குடி அடிகளாரும் மாநாட்டுச் செலவுக்கு கணிசமாக நிதியுதவி செய்தனர். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் கர்நாடக இசைமேதை எஸ்.ராமனாதன், திரைப்படக் கலைஞர் பால்ராஜ் சஹானி, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையும், மற்றும் கேரளாவின் கல்வியமைச்சர் ஜோஸப் முண்டச்சேரியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டில் மறக்கமுடியாத நிகழ்ச்சி, அமரர்கள் பாலதண்டாயுதமும், தா.பாண்டியனும், முகவை ராஜமாணிக்கம் மற்றும் கடலூர் பாலனும் நடித்த “உலகப்பன்” நாடகமாகும் என்று தோழர் தா.பாண்டியன் நினைவு கூர்கிறார். இந்த நாடகத்தில் பாலதண்டாயுதம், மாவீரன் நேதாஜியின் ராணுவ உடையில் தோன்றி சிம்மகர்ஜனை புரியும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மக்கள் கலைஞன் பால்ராஜ் சஹானி, அந்த காலகட்டத்தில் இந்தி திரையுலகில் முடிசூடா மன்னனாகப் புகழ்பெற்றிருந்தார். மாநாட்டில் பால்ராஜ் சஹானி ஆற்றிய உரையின் சில பகுதிகள் : “விஞ்ஞானம் கண்டுபிடித்த பல அறிவியல் கண்டுபிடிப்புகளில் சினிமா என்பது சக்தி வாய்ந்த மீடியம்! மக்களிடையே சமூகவிழிப்புணர்ச்சியை ஊட்டவும் பயன்படுத்தலாம். பிற்போக்கான மூடக்கருத்துகளைப் பரப்பவும் பயன்படுத்தலாம். சினிமா எனும் கத்தி யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து இதன் பயன்பாடும் அமையும். அறுவைசிகிச்சை மருத்துவர் கையில் பிடித்திருக்கும் கத்தியின் பயன்பாடும், கொலைகாரன் கையில் பிடித்திருக்கும் கத்தியின் பயன்பாடும், விளைவும் நேரெதிரானவை. முற்போக்காளர்களும், கம்யூனிஸ்டுகளும் சினிமா என்ற இந்த சக்திவாய்ந்த மீடியத்தின்மீதும் கவனஞ்செலுத்த வேண்டும். நாம் விலகிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இன்றைக்கு சினிமா கொள்ளைலாபம் சம்பாதிக்கும் கோடீஸ்வரர்கள் கையில்சிக்கி வணிகமயமாகி, சீரழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இருப்பினும், நாம் நம்பிக்கையிழக்காமல் அடக்கியொடுக்கப்பட்ட ஏழைஎளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தலித் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் காட்டத் தீவிரமாக முயற்சி செய்துகொண்டேயிருக்க வேண்டும். இந்திய-சீனப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். போர்க்களம் நோக்கிப்போகும் நமது ராணுவ வீரர்களை திரைப்படக் கலைஞர்கள் நேரில் சென்று உற்சாகப்படுத்த வேண்டுமென்று ஜவஹர்லால் நேரு கேட்டுக்கொண்டார். சுனில்தத், திலீப்குமார், ராஜ்கபூர், நர்கீஸ், வைஜயந்திமாலா, மீனாகுமாரி, ஷர்மிளா தாகூர் மற்றும் பல முன்னணி திரைப்படக் கலைஞர்கள் இசைமேதைகளோடு நானும் சியாச்சின் பனிமலைச்சிகர ராணுவ முகாமுக்குப் போயிருந்தோம். சீக்கியர்கள், வங்காளிகள், தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்று பல்வேறு மாநில இனங்களைச் சேர்ந்த ராணுவவீரர்கள் நாங்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்கள். அவர்களிடையே நிலவிய தேசபக்தியும், ஒற்றுமையும் என்னுள்ளத்தில் இந்நாட்டு மக்களின்மீது புதிய நம்பிக்கையும், உள்ளக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது. மதம், மொழி, இனம் எல்லைகளைத் தாண்டி ராணுவவீரர்களுக்குள் நிலவும் அதே ஒற்றுமை, நம் மக்களிடையேயும் வளர்க்கும் உயர்ந்த நோக்கத்தோடு உங்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொலைநோக்கோடு செயல்பட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” பால்ராஜின் அற்புதமான உரையை தா.பாண்டியன் தனக்கேயுரிய அழகுதமிழில் மொழிபெயர்த்தார். மாநாட்டில் உரையாற்றிய பின்னர் தங்கியிருந்த விடுதி அறைக்கு திரும்பிய பால்ராஜ், தா.பாண்டியன் மற்றும் வரவேற்புக்குழுத் தோழர்களுடன் தோழமையுடன் எந்தவிதமான பந்தாவுமில்லாமல் கலகலப்பாகச் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாராம். பால்ராஜ், கோவையிலிருந்து விமானம்மூலம் பம்பாய் திரும்பிச்செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தார். நிதிப்பற்றாக்குறை காரணமாக வரவேற்புக்குழுத் தோழர்கள் தயங்கித்தயங்கி விமானப்பயணத்துக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டுமென்று பால்ராஜிடம் கேட்டார்களாம்! பால்ராஜூக்கு தமிழ் தெரியும். நிலைமையைப் புரிந்துகொண்டவர் “நடிப்புத் தொழிலில் எனக்குப் போதுமான வருமானம் வருகிறது. கலை இலக்கியப் பெருமன்ற மாநாடுகளில் மக்களை நேரில் சந்தித்து உரையாடுவதன்மூலம், நான் புத்துணர்ச்சியடைகிறேன். என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன். சிறப்புரையாற்ற வாய்ப்பு கொடுத்த உங்களுக்கல்லவா நான் நன்றி சொல்ல வேண்டும். என் பயணச்செலவுக்கு பணமெதுவும் வேண்டாம்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றார் அந்த மக்கள் கலைஞன் - என்று மலரும் நினைவுகளில் தா.பா. நினைவு கூர்கிறார். “மக்களை நேசித்த மகத்தான அந்த திரைப்படக் கலைஞன், கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் கலந்துகொண்ட நிகழ்வு மறக்கமுடியாதது” என்று கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் கே.சி.எஸ். அருணாசலமும் பதிவு செய்திருக்கிறார். மக்கள் கலைஞன் வாழ்விலே ! பால்ராஜ் சஹானியின் வாழ்க்கை ஒரு நல்லநோக்கத்துக்காகவும், லட்சியத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்த வாழ்க்கையாகும். அவரது ஒவ்வொரு திரைப்படமும், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் அனைத்தும் சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்வதுடன் அவர்களது அறிவை விரிவடையச் செய்தன. சமூக விழிப்புணர்வூட்டின. பால்ராஜ் சஹானி - தலைசிறந்த கம்யூனிஸ்ட்டாகவும், மக்கள் கலைஞனாகவும் வாழ்ந்தார். பால்ராஜ் எழுதிய சுயசரிதையிலும், புகழ்பெற்ற எழுத்தாளரும், நாடகாசியரும், கல்லூரிப் பேராசியருமான அவரது தம்பி பீஷ்மம் சஹானி எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாற்று நூலிலும், தம்பியின் மகள் கல்பனா சஹானி பால்ராஜ் மற்றும் அவரது தம்பி பற்றி எழுதியிருக்கும் நூலிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற தலைவர் பி.சி.ஜோஷி பால்ராஜ் சஹானியைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகத்திலும், பால்ராஜ் சஹானியின் வாழ்க்கையில் நடந்த சில மறக்கமுடியாத அடியிற்கண்ட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜே.என்.யூ. வில் பட்டமளிப்பு விழா 1972ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் பால்ராஜ் சஹானியை முதன்முதலாக நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற அழைத்திருந்தது. இந்த தகவல் வெளியானதும் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களும், இந்திய மாணவர் சங்கம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் “முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்ற ஒரு நடிகரை அழைத்திருப்பது எங்களை அவமானப்படுத்துவதாகும். அனுமதிக்க மாட்டோம், பட்டமளிப்பு விழா மண்டப வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று போராட்டத்தை அறிவித்தார்கள். துணைவேந்தரும், மற்ற பேராசியர்களும் மிரண்டுபோனார்கள், பதட்டமடைந்தார்கள். பல்கலைக் கழகத்தில் சிறப்புநிலை ஆய்வாளராக கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் பி.சி. ஜோசி அப்போது பணியிலிருந்தார். அவரைச் சந்தித்து விவாதித்தார்கள். “தனது மாணவப்பருவத்திலும், இப்டா நாடகங்களை நடத்திய காலத்திலும், திரைப்பட நடிகராக வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் எத்தனையோ மதக்கலவரங்களையும், ஆர்பாட்டங்களையும் நேரில் சந்தித்த அனுபவம் பால்ராஜ் சஹானிக்கு உண்டு. எந்த கலவர சூழ:நிலையையும் உள்ளஉறுதியுடன் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர். துணிச்சல் மிக்கவர். தனது கருத்தை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் வல்லமை அவருக்குண்டு. அவரொரு சாதாரண சினிமா நடிகரல்ல! நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும்” என்று பி.சி.ஜோஷி துணைவேந்தருக்கு நம்பிக்கையூட்டியனுப்பினார். பட்டமளிப்பு விழா மேடைக்கு பால்ராஜ் வந்தார். அரங்கத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் வணக்கத்தையும், வாழ்த்தையும் சொல்லிவிட்டு, டைப் செய்து எடுத்து வந்திருந்த உரையைக் குரலில் ஏற்றஇறக்கத்துடன் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி முடித்தார். “அன்றைய அரசியல்நிலையையும், நாட்டுநடப்புகளையும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்ட புதியதொரு சோசலிச சமூகஅமைப்பு இந்த நாட்டில் மலர்வதற்கு மாணவர் சமுதாயமும் தங்கள் உழைப்பையும், பங்களிப்பையும் செலுத்தவேண்டும்” என்று தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார். அவரொரு சாதாரண திரைப்பட நடிகன் என்று முதலில் மாணவர்கள் ஏளனமாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆங்கில இலக்கியத்தில் அவர் முதுகலைப் பட்டம் பெற்றது, காந்தியடிகள், தாகூர், ஜவஹர்லால் நேரு ஆகிய தலைவர்களோடு அவருக்கிருந்த நட்பும் தொடர்பும், லண்டன் பி.பி.சி வானொலி நிலையத்தில் அவரது பணி, நாடு திரும்பிய பின் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, இந்திய மக்கள் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திய அனுபவம், உலகப் புகழ்பெற்ற முற்போக்கான திரைப்படங்களில் நடித்து வரலாறு படைத்தது, அவரது தாய்மொழிப்பற்று மற்றும் எழுத்தாற்றல் ஆகிய அவரது வாழ்க்கைப் பின்னணி மாணவர்களனைவருக்கும் அவரது உரைமூலம் தெரியவந்தது. வியந்து போனார்கள்! அவரது உரை முடிந்ததும் அரங்கில் எழுந்துநின்று மாணவர்கள் எழுப்பிய பலத்த கரவொலி மூலம் பால்ராஜ் சஹானி என்ற அந்த மகத்தான மக்கள் கலைஞனுக்கு அன்புடனும், ஆரவாரத்துடனும் மரியாதை செலுத்தினார்கள். அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த மாணவர்களும் அவரது உரையை வியந்து பாராட்டினார்கள்! இந்த நிகழ்ச்சி “வந்தான், பார்த்தான், வென்றான்” என்று ஜூலியஸ் சீசரைப்பற்றி சேக்ஸ்பியர் செய்திருக்கும் வர்ணனையைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது ! பட்டமளிப்பு விழா உரையிலிருந்து சில பகுதிகள் : “எனது சொந்த ஊரில் வசித்து வந்த பல அறிவார்ந்த பெரியவர்களும், எனது கல்லூரிப் பேராசியர்களும், உலகிலேயே சக்திவாய்ந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்;த்து அறவழிப்போராட்டத்தின் மூலம் சுதந்திரம் பெறமுடியும் என்று சொன்ன மகாத்மா காந்தியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். காந்தி பகற்கனவு காண்கிறார் என்றார்கள். காந்தியடிகளின் மனஉறுதியைப்பற்றி அவர்கள் தவறாக எடை போட்டார்கள். மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கறிந்தவர். ஒருசிலர் மட்டுமே காந்தியடிகள் மக்களைத் திரட்டிப் போராடும் நடைமுறையை வரவேற்றார்கள். நாம் சுதந்திரதின வெள்ளிவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம்மனதில் குடிகொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையையும், அடிமைப்புத்தியையும் கைவிட்டுவிட்டோமா - என்பதை நாம் நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய சொந்த வாழ்க்கையையும், சமூகவாழ்க்கையையும் நமக்குநாமே சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுப்பதில்லை. நமது சிந்தனைகள் முழுவதும் அந்;நிய நாடுகளிலிருந்து கடன் வாங்கப்பட்டது. வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் நாம் சுதந்திரம் பெற்றுவிட்டதாக நடிக்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நான் இருக்கும் திரைப்படத் தொழிலையே ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். இந்தியாவில் தயாரித்த பெரும்பான்மையான படங்களைப் பார்த்தால் சுயமாகச் சிந்திக்கும் திறனுள்ளவர்களுக்கு, சிரிக்கத்தான் தோன்றும். அவற்றின் திரைக்கதைகள் அனைத்தும் குழந்தைத்தனமானவை. வாழ்க்கையின் உண்மைக்கு மாறானவை. நமது பகுத்தறிவிற்கு ஒத்துவராதவை. இயக்குனர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் திரைக்கதையை வடிவமைப்பதிலும், தொழில் நுட்பத்தை கையாள்வதிலும், பாடல்கள் மற்றும் நடனங்களிலும் மேற்கத்திய திரைப்படங்களையே கண்மூடித்தனமாக காப்பியடிக்கின்றனர். மேற்கத்திய திரைப்படங்;களை அப்படியே அப்பட்டமாகக் காப்பியடித்துத் தயாரிக்கப்பட்ட இந்திப் படங்களுமுண்டு. எனக்குப் பணத்தையும், புகழையும் பெற்றுத்தந்த இந்தித் திரைப்படங்களின் வருந்தத்தக்க சூழ்நிலை இதுதான்! நாடு விடுதலையடைந்த பின்னர் கலைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் நாம் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றிருக்கிறோம். திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும், சத்யஜ[pத் ரேயும், பிமல் ராயும் உலகளவில் புகழ் பெற்றிருக்கிறார்கள். நமது கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உலகத்தில் தலைசிறந்த திரைத்துறை வல்லுனர்களோடு போட்டி போடுமளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றபின் உலகநாடுகளில் நம் நாடுதான் அதிக திரைப்படங்களைத் தயார் செய்து வருகிறது. நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நமது நாட்டில் மட்டுமல்லாது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், அரபு நாடுகள், சோவியத் ரஷ்யக் குடியரசு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளிலும் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால், திரைப்படங்களைத் தயாரிப்பதில் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் இன்னும் நாம் மேற்கத்திய நாடுகளைக் காப்பியடித்து வருகிறோம். நமக்கென்று தனித்துவமான பண்பாடு, கலாச்சாரப் பாரம்பரியமுண்டு. நம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் ஏராளம். காலங்கடந்த பார்முலாக்களை பின்பற்றி, மனித சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் பயன்படாத குப்பைப் படங்களை நம்மவர்கள் தயாரித்துத் தள்ளுகின்றனர். இந்த மோசமான சூழ:நிலை இந்தி மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்டு “பாக்ஸ் ஆபீஸ்” படங்களாக ஓடி வெற்றிபெற்ற படங்களுக்கும் பொருந்தும். இலக்கிய உலகத்தின் நிலையும் இதுதான்! நம்முடைய நாவலாசிரியர்கள், நாடகாசியர்கள், கவிஞர்கள்கூட மேற்கு நாடுகளின் பாணியைப் பின்பற்றவே விரும்புகிறார்கள். கல்வித்துறையிலும் மேற்கத்திய நாடுகளின் தாக்கமே இன்றளவும் பரவலாக இருக்கிறது. சுயசிந்தனையையும், அறிவியல் தேடலையும் ஊக்குவிக்காத “மெக்காலே” கல்வி முறையை இன்னும் நாம் கைகழுவவில்லை. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் நாம் மேல்நாட்டுப் பாணியில் “கோட்-சூட்” நவீன ஆடம்பர உடையில் சென்றால்தான் மதிக்கிறார்கள். வேட்டி, சட்டைக்கு மரியாதையே கிடையாது. தமிழகமும், வங்காளமும் ஓரளவுக்கு பரவாயில்லை. அங்கு பிரமுகர்கள், படித்தவர்கள்கூட பொதுநிகழ்ச்சிகளில் அவர்களின் மாநில, பாரம்பரிய உடையில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். மக்களும் அவர்களை மதிக்கவே செய்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியில் சொத்துடைமையாளர்கள், நிலப்பிரபுக்களின் ஆதிக்கமே வலிமையாக இருந்தது என்று ஜவஹர்லால் நேரு அவர்களே தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். இதன் விளைவு என்ன நாடு விடுதலையடைந்த பின்னர் ஆட்சியதிகாரத்திலும் இந்த சொத்துடைமை வர்க்கத்தின் கையே ஓங்கியிருந்தது. இந்த நிலைமையை மாற்ற நேரு முயற்சிகள் செய்தார். ஆனால், அவராலும் வெற்றிபெற முடியவில்லை ! அதற்கு, அவர் ஏராளமான தடைகளையும், எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வந்தது. கடந்த 25 ஆண்டுகளில் பணக்காரர்கள் மேன்மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் மோசமான வறுமை நிலைக்குமே தள்ளப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண:டு நம் மக்கள் போலீசாரின் கைகளில் தடியடிபட்டதும், சிறைச்சாலைகளில் வாடியதும், இன்னுயிரைத் செய்ததும் இதற்காகத்தானா சோசலிசத்தால் மட்டுமே சமூகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை! முதலில் பட்டம், பதவி, பணம், அதிகாரத்தைக் கண்டு அஞ்சும் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். இந்த சமூகத்தில் அறிவாற்றலுக்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரமும், எந்த மரியாதையும் கிடையாது. மக்கள் அதிகாரத்துக்கும், பணத்துக்கும் அடிபணியும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். இருநூறு ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம். நாட்டின் விடுதலை, நம்மை கூண்டிலிருந்து வெளியேவர வாய்ப்பு கொடுத்துள்ளது. தயங்கித்தயங்கி மெதுவாகக் காலடியெடுத்து வைக்கும் சோம்பேறித்தனத்தை நாம் முதலில் விட்டொழிக்கவேண்டும். சிறகைவிரித்து வானில் பறந்துசெல்லும் புத்துணர்ச்சியை நாம் பெறவேண்டிய காலமிது! இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்துவதில் மாணவர்களாகிய உங்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” உரை முழுவதையும் படித்துப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள்! இணையத்தில் கிடைக்கிறது ! நன்றி மறவாத நட்புணர்வு 1961 ஆம் ஆண்டில் பம்பாய் டர்னர் ராயல் வீதியில் பால்ராஜ் இடம் வாங்கி வசதியான ஒரு வீட்டைக் கட்டினார். பம்பாயில் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் இக்ரம் அஹமது எனும் பொறியாளர்தான் அந்த இல்;லத்தை அழகாகக் கட்டிக்கொடுத்தார். புதிய இல்லத்தைக் கட்டிக்கொடுத்த தனது பொறியாளர் நண்பரின் நினைவாக பால்ராஜ், அவரது புதிய இல்லத்துக்கு “இக்ரம் இல்லம்” என்றே பெயர் சூட்டினார். பால்ராஜ் காலமான பின்னர் அவர் குடியிருந்த அந்த வீதிக்கு “பால்ராஜ் சஹானி மார்க்” என்று பம்பாய் மாநகராட்சி பெயர்சூட்டி அவரைப் பெருமைப்படுத்தியது! கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக பால்ராஜ் சஹானி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், கப்பற்படை வரலாற்றிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் 1946 பிப்ரவரி 18 முதல் 23 ஆம் நாள்வரை 6 நாட்கள் பம்பாய் நகரில் “ராயல் இண்டியன் நேவி” கப்பற்படையினாpன் வேலை நிறுத்தப் போராட்டம் பெரிய திருப்புமுனையாகும். ஏற்கனவே தரைப்படையிலும், விமானப்படையிலும் பணியிலிருந்த இந்திய வீரர்கள், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறுசிறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். ஆங்கிலேய ராணுவவீரர்களுக்கும், ஊழியர்களுக்கும், அதே வேலையைச் செய்துவந்த இந்தியர்களுக்குமிடையில் பெரிய சம்பளவித்தியாசம், மோசமான பணிநிலைமைகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய ஊழியர்களை படுகேவலமான கெட்டவார்த்தைகளில் திட்டி அவமானப்படுத்தி வந்தது ஆகிய காரணங்களால் மூண்ட அதிருப்தி, இறுதியில் வேலைநிறுத்தமாக வெடித்தது. இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளும் மக்களிடையே பொங்கிப்பெருகி வந்து கொண்டிருந்த காலம் 1945-1946 காலகட்டமாகும். 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள், மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த “தால்வார்” என்ற கப்பலில் இந்திய மாலுமி B.ஊ.தத் என்பவர் “வெள்ளையனே வெளியேறு” (ஹரவை ஐனேயை) என்ற முழக்கத்தை கப்பலின் மேல்தளத்தில் ஒரு சாக்பீஸ் கட்டியால் எழுதிவைத்தார். கப்பற்படைப் போலீஸ் அவரை உடனே கைதுசெய்து சிறையில் தள்ளியது. பம்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 1200 கப்பற்படை மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சகமாலுமி B.ஊ.தத்தை விடுதலை செய்யும் படியும், மேலும் ஆங்கிலேய மாலுமிகள், ஊழியர்களுக்கு இணையாக சமஊதியம், வேலை நிலைமைகளை வலியுறுத்தியும், செங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் இந்திய தேசீய ராணுவ வீரர்களை விடுதலை செய்யக்கோரியும் 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் காலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். உண்ணாவிரதமிருந்த மாலுமிகளை ஆங்கிலேயப் படைத்தளபதி “இந்தியக்கூலிகள், வேசிகளுக்குப் பிறந்த பசங்கள்” என்று கேவலமாகத்திட்டி அவமானப்படுத்தியதால் உண்ணாவிரதப் போராட்டம், வேலைநிறுத்தமாக வெடித்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கல்கத்தா, கராச்சி, மண்டபம் (ராமநாதபுரம்), அந்தமான் ஆகிய துறைமுகங்களில் இருந்த கப்பற்படை மாலுமிகளும் போராட்டத்தில் குதித்தார்கள். இந்திய மாலுமிகள் அவர்களது கப்பல்களின் உச்சியில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயரின் “யூனியன் ஜாக்” கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக்கொடி, கம்யூனிஸ்ட் கட்சியின் சுத்தி அரிவாள் பொறித்த செங்கொடி, முஸ்லீம் லீக் கட்சியின் பிறைநிலா பொறித்த பச்சைக் கொடி ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கொடிக்கம்பத்தில் ஏற்றினார்கள். கல்கத்தா துறைமுகத்திலும் கப்பற்படை மாலுமிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. பின்னர், 1200 மாலுமிகளும், ஊழியர்களும் 19 ஆம் நாள் காலை பம்பாய் வீதிகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் கட்சிகளின் மூன்று கொடிகளையும் கரங்களில் ஏந்தி எழுச்சி ஊர்வலமாக வந்தார்கள். பம்பாய் நகர மக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்து ஆர்ப்பரித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி தொழிற் சங்கங்களும் அறைகூவல் விடுத்ததால் கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தம் செய்து ஊர்வலமாக வந்து மாலுமிகளுக்கு உற்சாக வரவேற்பளித்தார்கள். பம்பாய் நகரம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் வெடித்தது. நகரத்தின் வழக்கமான தினசரி வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றது. கப்பற்படை மாலுமிகள், ஊழியர்களை வழி நடத்திய அவர்களின் தலைவர்கள் தங்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டார்கள். வல்லபாய் பட்டேலும், முகமதலி ஜின்னாவும், கப்பற்படை எழுச்சியால் மிரண்டு போனார்கள். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததுடன், போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு கப்பல்களுக்குத் திரும்பும்படி வலியுறுத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி தொழிற் சங்கங்கள் மட்டுமே மாலுமிகள் பக்கம் உறுதியாக நின்றன. டாக்டர் அதிகாரி, S.A.டாங்கே, S.V.காட்டே, B.T.ரணதிவே, S.S.மிராஜ்கர், K.N.ஜோக்லேக்கர், R.S.நிம்ப்கார் ஆகிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மும்பை வீதிகளில் நடைபெற்ற தொழிலாளர் ஊர்வலங்களுக்குத் தலைமைதாங்கி களத்தில் நின்றார்கள். கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக டாக்டர் அதிகாரி அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொதுமக்களுக்கு விளக்கி துண்டுப்பிரசுரங்களை எழுதி வெளியிட்டார். கப்பற்படையினாpன் திடீர் எழுச்சியால் மிரண்டுபோன ஆங்கிலேய ஆட்சியினர் ராணுவத்தை வரவழைத்தனர். ராணுவமும், போலீசாரும் மாலுமிகள் ஊர்வலத்தின்மீதும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்மீதும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 220 மாலுமிகளும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும்;, பொதுமக்களும் கொல்லப்பட்டனர். பம்பாய் வீதிகளில் ரத்த ஆறு ஓடியது! கப்பற்படை மாலுமிகள் நடத்திய போராட்டத்தின்போது உயிருக்குமஞ்சாமல் பால்ராஜ் சஹானி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதிய பிரசுரங்களை, போராட்டக்காரர்களிடையேயும், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களிடையேயும் விநியோகம் செய்தார். லண்டன் BBC வானொலியில் அவர் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் அணிந்து கொண்டிருந்த மேற்கத்தியபாணி நவநாகரிக உடைகளை மீண்டும் அணிந்து கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கை நண்பர்களிடமிருந்து “ நிருபர் அடையாள அட்டை” ஒன்றைப் பெற்றுக்கொண்டார். தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் பம்பாய் நகரவீதிகளில் போலீஸ் தடையைமீறி ரகசியமாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசுரங்களைத் தொடர்ந்து விநியோகம் செய்துவந்தார். இந்த வேலையைச் செய்ய டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் அடையாள அட்டையும், லண்டன் நவநாகரிகமான உடையில் அவருடைய மிடுக்கான தோற்றமும் போலீஸ் தடையரண்களைக் கடந்துசெல்ல அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. கல்லூரி வாழக்கையில் துணிச்சல் : லாகூர் அரசினர் கல்லூரியில் 1930-34 ஆம் ஆண்டுவரை மாணவனாக இருந்த காலத்தில் கல்லூரி மாணவர் மன்றத்தலைவராக பால்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இந்த மாணவர் மன்றத்திற்கு கல்லூரி நிர்வாகம் நிதியுதவி அளித்துவந்தது. இந்த கல்லூரி நிர்வாகத்தை ஆங்கிலேய அரசாங்கம் நேரடியாக நிர்வகித்து வந்தது. பால்ராஜ் தலைவராக இருந்த மாணவர் மன்றம், அடிக்கடி மாணவர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திவந்தது. இந்த மாணவர் மன்றக் கூட்டங்களில் பல்கலைக்; கழக நிர்வாகிகளும், பேராசிரியர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துகொள்வது வழக்கம். அந்நிய ஆட்சியாளருக்கு ஆதரவாக இருந்த பல்கலைக்கழக நிர்வாகிகளும், பேராசியர்களும் மற்றும் ஆங்கிலேய அரசு அதிகாரிகளும் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கத்தில், பால்ராஜ் சஹானி “மாணவர் தலைவன்” என்ற முறையில் தலைமையுரையாற்றினார். “பஞ்சாப் கிராமங்களில் மக்களிடையே பிரபலமான கதையொன்று இருக்கிறது. ஒருவன் அவன் நண்பனிடம் சொல்கிறான், எனது வீட்டின் மாடியில் பரண் ஒன்று இருக்;கிறது. அந்த பரண் மீது மரப்பெட்டி ஒன்று இருக்கிறது. அந்த மரப்பெட்டிக்குள் பையொன்று இருக்கிறது. அந்த பைக்குள் மணிப்பர்ஸ் ஒன்று இருக்கிறது. அந்த மணிப்பர்சுக்குள் கள்ள நாணயம் இருக்கிறது. அந்தக் கள்ள நாணயத்தை உன்னால் செலுத்தமுடியுமானால், அதைக்கொண்டு உனக்கு விருந்து வைக்கிறேன் என்பதுதான் அந்தக்கதை. நம்மை ஆள்பவர்கள் நமக்குச் சொல்லும் வாக்குறுதிகளும் இப்படித்தான் இருக்கிறது.” பால்ராஜ் இந்தக்கதையை தனது தலைமையுரையில் சொல்லிமுடித்ததும், பல்கலைக்கழக நிர்வாகிகளும், பேராசியர்களும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தார்கள். பால்ராஜ் இப்படி தனக்குச் சரியென்று தோன்றிய கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளியிடும் துணிச்சலுடையவர் என்பதற்கு இதுவொரு உதாரணம் ! இதேமாதிரி கல்லூரி விழாவில் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசியர்கள், மாணவர்களும் கலந்துகொண்ட விருந்தில் மாணவர் தலைவன் என்ற முறையில் பால்ராஜை பேசும்படி சொன்னார்கள். “இந்த நாட்டில் நடைமுறையிலிருக்கும் கல்விமுறையும் இந்த விருந்தும் ஒன்றுதான். விருந்துக்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் அழகான, ஆடம்பர உடையணிந்து வந்திருக்கிறார்கள். விருந்து பரிமாறப்படும் மேஜைமேல் ஒளிமின்னும் வெள்ளிப்பாத்திரங்கள், கரண்டிகள், சாப்பிடும் தட்டுகள் ஆடம்பரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விருந்து பரிமாறும் ஊழியர்கள் கவர்ச்சிகரமான உடையணிந்து காட்சியளிக்கிறார்கள். ஆனால், வெள்ளிப் பாத்திரங்களுக்குள் சாப்பிட எதுவுமே இல்லை” என்று பேசினார். இவ்வாறு அவர் மாணவராக இருந்த காலத்திலேயே கல்லூரி நிர்வாகத்தின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததுடன், ஆட்சியாளருக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடையே துணிச்சலாக பேசும் குணத்தையும் பெற்றிருந்தார். தாய்மொழிப்பற்று சாந்திநிகேதனில் ரவீந்திரநாத் தாகூருடன் தாய்மொழிப்பற்றி விவாதித்ததன் காரணமாகவும், வார்தா ஆசிரமத்தில் மகாத்மா காந்தியடிகளுடன் தாய்மொழிப்பற்றி நீண்ட விவாதங்கள் நடத்தியதன் காரணமாகவும், அவருக்குத் தீவிரமான தாய்மொழிப்பற்று ஏற்பட்டிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தனது தாய்மொழி பஞ்சாபி (குர்முகி) மொழியில் கற்பதற்கு பால்ராஜூக்கு வாய்ப்புகள் இல்லாமலிருந்தது. 1944 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் நாடகமன்றத்தில் தீவிரமாக இயங்கியபோதும், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோதும் அவருக்கு தாய்மொழிப்பற்று அதிகமாக ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகவே கடினஉழைப்பின் மூலம் தாய்மொழி பஞ்சாபியை ஆழமாகவும், விரைந்தும் கற்றுக்கொண்டார். கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனங்கள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதுமளவுக்குப் புலமை பெற்றார். பஞ்சாப் மாநிலத்தில் இந்திய மக்கள் நாடகமன்றம் தோன்றுவதற்கு அனைத்து வகையிலும் உதவிகள் செய்தார். ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலத்தின் நகரங்களிலும், டெல்லி மற்றும் பம்பாய் நகரத்திலும் பஞ்சாபி மொழி எழுத்தாளர்களின் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்னணியிலிருந்து உற்சாகமாகச் செயல்பட்டார். பெரியளவுக்கு நிதியுதவியும் செய்தார். தாய்மொழிப்பற்றின் காரணமாகவே அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் முதலில் பஞ்சாபி மொழியிலேயே எழுதினார். பின்னர்தான் அந்த நூல்கள் ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவருக்கிருந்த தாய்மொழிப்பற்றின் காரணமாகவே 1965 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார். ஓரளவுக்கு தமிழ்மொழியைப் பேசக்கற்றுக்கொண்டார். எந்த மொழியையும் விரைவில் கற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பான ஆற்றல் அவருக்கிருந்தது என்று அவரது தம்பி எழுத்தாளர் பீஷ்மம் சஹானி பதிவு செய்திருக்கிறார். சிறைச்சாலை அனுபவம் : 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கே.ஆஷிப் இயக்கத்தில் “ஹல்சல்” (கலகம்) என்ற படத்தில் பால்ராஜ் சஹானியும், திலீப்குமாரும், நர்கீஸீம் நடித்தனர். படத்தில் பால்ராஜூக்கு, நேர்மையான சிறையதிகாரி பாத்திரம். சிறையதிகாரி bஜயிலாpன் தினசரி வேலைகளின் தன்மை, நடை உடை பாவனை, சிறைக்கைதிகளின் நடவடிக்கைகளை பால்ராஜ் சிறைக்குள் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் சிறையதிகாரி வேடத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று இயக்குனர் ஆஷிப்பிடம் கேட்டுக் கொண்டார். இயக்குனரும், தயாரிப்பாளரும் பம்பாய் ஆர்தர் ரோடு மத்திய சிறைக்கு பால்ராஜை அழைத்துச் சென்று ஒருநாள் bஜயிலரைச் சந்திக்க வைத்தனர். bஜயிலரை நேரில்சந்தித்து அவரோடு நெருக்கமாக உரையாடி சிறையில் அவரது தினசரி வேலைகள், கடமைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். குறிப்புகளும் எடுத்துக்கொண்டார். கைதிகளோடும் பேசினார். சிறையதிகாரி வேடத்தில் தன்னால் மிகச்சிறப்பாக நடிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினார். “இன்னும் சில நாட்களில், அவரே அந்த சிறைக்கு கைதியாக வரப்போகிறார்” என்று அப்போது அவருக்குத் தெரியாது. பால்ராஜ் சஹானி இந்தியக் கம்யூனிஸ்;ட் கட்சியில் தீவிரமான உறுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சி 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கல்கத்தா மாநாட்டில் இடதுசாரி அதிதீவிர சாகசப்பாதையில் செல்ல முடிவெடுத்தது. “நேருவின் அரசாங்கத்தை வேலை நிறுத்தங்கள் மூலமும், ஆயுதமேந்திய போராட்டங்கள் மூலமும் தூக்கியெறிவோம்” என்ற திட்டத்தோடு செயல்படத் துவங்கிய காலமது. பல முன்னணித் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். நேருவின் அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பால்ராஜ் மற்றும் கலைத்துறையிலிருந்த கட்சி உறுப்பினர்களும் விதிவிலக்கில்லாமல் கலந்துகொள்ள வேண்டுமென்று கட்சியின் பம்பாய் நகரக்கிளை உத்தரவிட்டது. நேருவின் அரசாங்கத்தை எதிர்த்து, போலீஸ் தடையுத்தரவை மீறி 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பம்பாய் நகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பால்ராஜ் சஹானி தலைமையில் நடந்தது. முதல் மனைவி தமயந்திக்குப் பின்னர் பால்ராஜூக்கு இரண்டாம் திருமணம் நடந்து இரண்டு வாரங்கள்தான் முடிந்திருந்தன. பால்ராஜ் உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சிறையில் தள்ளப்பட்டார்கள். ஜாமீனில் யாரும் வெளிவரக்கூடாதென்று கட்சி உத்தரவிட்டிருந்தது. பால்ராஜூக்கும் மற்ற தோழர்களுக்கும் ஆறு மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டது. இதனால் பால்ராஜ் சிறையதிகாரியாக நடிக்கத் தொடங்கிய “ஹல்சல்” படப்பிடிப்பை தொடரமுடியாமல் நின்று போயிருந்தது. படத்தயாரிப்பாளரும், இயக்குனர் கே.ஆஷிப்பும் உள்துறை அமைச்சரோடு பேசி பால்ராஜை “பரோலில்” வெளியில் கொண:டுவந்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தினார்கள். பகலில் “ஸ்டூடியோ சிறை செட்டிங்கில்” சிறையதிகாரியாக நடிப்பு. மாலை ஆறு மணிக்குமேல் மீண்டும் நிஜமான சிறையில் அடைப்பு! உண்மையான சிறையில் இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருந்து, பகல்நேரங்களில் ஸ்டூடியோ சிறை செட்டிங்கில் நடித்துமுடித்து வெளியான படந்தான் “ஹல்சல்”. திரைப்படத்தில் பால்ராஜின் சிறையதிகாரி வேடமும், நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்ததாக பத்திரிக்கைகள் பாராட்டின. திலீப்குமாரும், பால்ராஜ் சஹானியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்த அற்புதமான திரைப்படம் “ஹல்சல்”. “இந்தியாவிலும், வேறெந்த நாட்டிலும் இரவு நேரம் நிஜசிறையிலும், பகல்நேரம் ஸ்டூடியோ செட்டிங் சிறையில் நடிக்கும் வாய்ப்பு என்னைத்தவிர வேறெந்த நடிகருக்கும் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்” என்று பால்ராஜ் நகைச்சுவையுணர்ச்சியுடன் இந்த அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆக்கப்பூர்வமான சமூகசெயல்பாட்டாளர் 1951 ஆம் ஆண்டு வெளியான “தோ பிகா ஜமீன்” திரைப்படம் பெரும்வெற்றியை பெற்றது. சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதன்மூலம் பால்ராஜ் சஹானிக்கு இந்தி திரைப்பட உலகில் நல்லவரவேற்பும், பெரியஅங்கீகாரமும் கிடைத்தது. அவரைத்தேடி நிறைய படவாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும், அவர் முற்போக்கான திரைக்கதை அமைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். இந்தித் திரைப்படங்களில் அப்போது நடித்த திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர்களின் வரிசைக்கு உயர்ந்தார். கணிசமான வருமானமும் வந்தது. ஓய்வில்லாத தொடர்ச்சியான படப்பிடிப்புகளுக்கிடையிலும் அவர் இதயத்திற்கு நெருக்கமான சமூகசெயல்பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபட்டு வந்தார். 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் போலந்து நாட்டின் தலைநகரம் “வார்ஸh”வில் உலக இளைஞர்கள் விழா நடைபெற்றது. இந்திய இளைஞர்களின் தூதுக்குழுவிற்குத் தலைமைதாங்கி பால்ராஜ் அந்த சர்வதேச மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனக் குடியரசின் அழைப்பின்பேரில் திரைப்படக் கலைஞர் பிருதிவிராஜ் கபூர் தலைமையில் சென்ற திரைப்படக்குழுவில் K.A.அப்பாஸ், சேட்டன் ஆனந்த் மற்றும் சிலருடன் பால்ராஜ் சஹானியும் கலந்து கொண்டு சீன நாட்டுக்கு நல்லுறவுப் பயணமாகச் சென்று வந்தார். இந்திய - சோவியத் நட்புறவுக்கழகத்தின் தேசிய துணைத்தலைவராக செயல்;பட்டுவந்த பால்ராஜ், பலமுறை சோவியத் ரஷ்ய நாட்டிற்கு நட்புறவு தூதராகச் சென்றுவந்திருக்கிறார். திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களிலும், காங்கிரஸ் கட்சியில் தீவிர இடதுசாரிகளாகச் செயல்பட்டுவந்த V.K.கிருஷ்ணமேனன், திருமதி சுமத்ரா ஜோஷி, _ அமர்நாத் வித்யாலங்கார் போன்ற தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பரப்புரைகளிலும் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். பால்ராஜ் லண்டன் பி.பி.சி. வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே (1940-44) அவரும் பாதுகாப்புத் துறையமைச்சர் V.K.கிருஷ்ணமேனனும் நெருங்கிய நண்பர்கள் ! மதநல்லிணக்கப் போராளி 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மனைவி தமயந்தி இறந்த பெருந்துயரத்தை மறப்பதற்காக, குழந்தைகளான மகன் பரிக்ஷத்தையும், மகள் ஷப்னத்தையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊர் ராவல்பிண்டிக்குச் சென்றிருந்தார். ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலத்திலும், ஒன்றுபட்ட வங்க மாநிலத்திலும் நாட்டின் பிரிவினை மதவெறித் தீ, தீவிரமாகப் பரவியிருந்த நேரமது. நேற்றுவரை அண்ணன் - தம்பியாக வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியரும், இந்துக்களும் மதவெறி சக்திகளின் தூண்டுதலால் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தனர். பால்ராஜின் சொந்த ஊரில் இஸ்லாமிய மதவெறிக் கூட்டம், இந்து மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளைத் தீ வைத்து கொளுத்தினர். கடைகளும், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. பால்ராஜ் சஹானி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனும், தோழர்களுடனும் இணைந்து மதக்கலவரத் தீயைத் தணிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் இரவுபகலாக ராவல்பிண்டி நகரிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும்; தீவிரமாகச் செயல்பட்டார். கலவரம் நடந்த அனைத்து வீதிகளிலும் பால்ராஜூம், தோழர்களும் உயிருக்குத்துணிந்து தெருமுனைக்கூட்டங்களை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்குப் போனதும் பம்பாய் “இப்டா” இசைமேதை பிரேம் தவான் இயற்றிய தேசபக்தப் பாடல்களை பால்ராஜ் உரத்த குரலில் பாடுவார். கூட்டங்கூடியதும், பகத்சிங் சதிவழக்கில் ஆயுள் தண்டனையடைந்து சிறைமீண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தன்வந்திரி மதநல்லிணக்கத்தை வலியுறுத்திப் பேசுவார். நாடு சுதந்திரமடைந்த சில நாட்களுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து சில மாதங்களும் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் நடந்த மதக்கலவரங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு கொடூரமான நிலைமைக்கு தள்ளப்பட்டனர். உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய அந்த சூழ்நிலையிலும்கூட, கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பால்ராஜ் நேரில்சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். மராட்டிய மாநிலத்தில் “பிவாந்தி” என்ற நகரில் ஒருமுறை மிகமோசமான மதக்கலவரம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் குடும்பத்தினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கலவரம் நடந்த பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பால்ராஜ் சஹானி, K.A.அப்பாஸ், I.S.ஜோஹர் மற்றும் பல கலைஞர்கள் கலந்து கொண்ட திரைப்படக் குழுவினர் நேரில் சென்றனர். அவர்களனைவரும் ஒருநாள்மட்டும் இருந்துவிட்டு பம்பாய் திரும்பி வந்துவிட்டனர். கலவரத்தின் மோசமான பாதிப்புகளை நேரில்பார்த்த பால்ராஜால் மனஅமைதியுடன் பம்பாய் நகரில் தனது திரைப்பட வேலையில் ஈடுபட முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, பால்ராஜ் சஹானி மட்டும் கலவரம் நடைபெற்ற “பிவாந்தி” நகருக்கு மீண்டும் சென்று கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்களுடன் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டார். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில் அவர்களோடு இரண்டு வாரம் தங்கியிருந்து நிவாரண உதவிகளைச் செய்தார். 1971ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி வாரத்தில் முஜிபுர் ரஹ்மான்; தலைமையில் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. பிரதமர் இந்திராகாந்தி, பங்களாதேஷ் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு உதவிசெய்வதற்கு இந்திய ராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்குள் அனுப்பிவைத்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரமான அடக்குமுறையிலிருந்து உயிர்தப்பி கிழக்கு பாகிஸ்தானிலிருந்த பல குடும்பங்கள் அஸ்ஸhம் மாநில எல்லைக்குள்ளும், மேற்கு வங்காள எல்லைக்குள்ளும் அகதிகளாக வந்துசேர்ந்தனர். பங்களாதேஷ் விடுதலைப்போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை மிகச்சரியாக உணர்ந்த பால்ராஜ் சஹானி தன்னுடைய இடைவிடாத திரைப்பட வேலைகளுக்கிடையிலும், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸhம் மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்றார். அங்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் செய்த நிவாரணப் பணிகளில் கலந்துகொண்டார். அகதிகளாகக் குடிபெயர்ந்த கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், எதிர்காலத்தின்மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். “மதக்கலவரங்கள் நடைபெற்ற பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவும், வறட்சி ஏற்பட்ட பகுதிகளில் மக்களிடையே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தேர்தல் காலங்களில் முற்போக்கு எண்ணங்கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் வேலைகளைச் செய்வதற்கும் நான் நம்பி ஏற்றுக்கொண்ட மார்க்சீய தத்துவமே எனக்கு உந்துசக்தியாக இருந்தது” என்று பால்ராஜ் சஹானி தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். விளம்பரமில்லாமல் செய்த நிதியுதவிகள் : இந்தி திரைப்படங்களில் பால்ராஜ் சஹானிக்கு நிலையான ஒரு இடம் கிடைத்த பின்னர், அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்ததுடன் திரைப்படங்களின் மூலம் ஓரளவுக்கு வருமானமும் கூடியது. ஆனால், அவரது குணத்திற்கு ஏற்றமுறையில் அவர் கருப்புப்பணம் வைத்துக்கொள்வதையோ, மேன்மேலும் சொத்துக்கள் சேர்த்துக் கொள்வதையோ அதிக வருமானம் வந்தகாலத்திலும் விரும்பவில்லை. கூடுதலாக வருமானம் வந்தகாலத்தில், வறுமையில் வாடிய உறவினர்களுக்கும், நண்பர்களின் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்தார். உதவி தேவைப்படுபவர்களின் விவரங்களை புகழ்பெற்ற எழுத்தாளரும், தனது தம்பியுமான பீஷ்மம் சஹானி மூலம் தகவல்கள் திரட்டி, தம்பிமூலமே நிதியுதவிப் பணிகளை மேற்கொண்டார். வலதுகை கொடுப்பதை, இடதுகைக்குக்கூடத் தெரியாதவகையில் இந்தநிதியுதவிகளைச் செய்தார். தன்னுடைய சொந்த செலவில் அமிர்தசரஸ், டெல்லி, பம்பாய் நகரங்களில் பஞ்சாபி எழுத்தாளர் மாநாடுகளை நடத்தினார். பஞ்சாப்பில் மக்கள் நாடகமன்றத்தை உருவாக்குவதற்கு பால்ராஜ் சஹானியே செலவு செய்தார். இப்டா நாடகமன்றத்தை புனரமைப்பதற்;கும், செயல்படுத்துவதற்கும் தாராளமாக நிதியுதவி வழங்கினார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்களியக்கங்களில் அவரும் பங்கெடுத்துக்கொண்டதோடு, கட்சிக்குப் பெருந்தொகைகளை நன்கொடையாகவும் கொடுத்துவந்தார். மேலும், மராட்டிய மாநிலத்தில் வறட்சி மற்றும் மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப்பணிகளுக்காகவும் நிறைய செலவு செய்தார். பால்ராஜ் சஹானி அகால மரணமடைந்த நாளன்று, பம்பாயின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரபலமாகப் புகழ்பெற்ற உணவு விடுதிகளில் வேலை செய்துவந்த ஊழியர்களும், பம்பாய் கடற்கரையோர மீனவக்குப்பங்களில் வாழ்ந்த மக்களும் ஏராளமாகக் குவிந்தனர். அவரது உடலுக்கு கண்ணீரஞ்சலியால் மரியாதை செலுத்தினர். “ஒட்டல் ஊழியர்களாகிய நாங்கள் பல கோரிக்கைகளுக்காக ஒருமாத காலம் வேலைநிறுத்தம் செய்தோம். வேலைநிறுத்த காலத்தில் எங்கள் குடும்பங்களை பட்டினிக் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க நிதியுதவி செய்த நல்லமனிதர் மறைந்து விட்டார்.” என்று ஓட்டல் ஊழியர்கள் சிலர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேட்டியளித்தனர். “புயல், அடைமழை காரணமாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல முடியாமல் பசிபட்டினியால் நாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் எங்கள் குடும்பங்களைக் காப்பாற்றிய நல்லமனிதனை இழந்தோம்” என்று பேட்டியளித்த மீனவர்கள் கண்ணீர் சிந்தினார்கள். தேடி வந்த பட்டங்களும், விருதுகளும் திரைப்படங்களில் அவரது சாதனைகளைப் பாராட்டி இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலத்தில் 1969 ஆம் ஆண்டில் பால்ராஜ் சஹானிக்கு பத்ம_ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில் அவரது மிகச்சிறப்பான யதார்த்த நடிப்புக்காக பம்பாய் “பிலிம்பேர்” திரைப்படப் பத்திரிக்கை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அவருக்கு விருது கொடுத்துப் பாராட்டியது. அவர் எழுதிய சோவியத் ரஷ்ய பயண நூலுக்காக, சோவியத் அரசாங்கம் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருதான “சோவியத் நாடு நேரு விருதினை” பால்ராஜூக்கு வழங்கி சிறப்பு செய்தது. 1971 ஆம் ஆண்டில் இந்திராகாந்தி அம்மையார், அவரை “மாநிலங்களவை உறுப்பினர்” ஆக்குவதற்கு ஒப்புதல் கேட்டார். திரைப்பட வேலைகள், இப்டாவைப் புனரமைக்கும் பணிகள், இலக்கிய எழுத்துப்பணிகள் ஆகியவற்றின் பணிச்சுமைகள் காரணமாக அவருக்குக் கிடைத்த அந்தப்பதவி வாய்ப்பை மறுத்துவிட்டார். மேலும், இந்திராகாந்தி அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால், பால்ராஜ் சஹானிக்கு “பூனா திரைப்படக் கல்லூரியின் தலைமைப் பதவியை கொடுக்க முன்வந்தார். அந்தப் பதவியையும் பால்ராஜ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பட்டம், பதவிகளைத்தேடி நாயாய் பேயாய் சில நடிகர்கள் அலையும் இந்த உலகில், தேடிவந்த பதவிகளை ஏற்கமறுத்த பால்ராஜ் சஹானி என்ற இந்த மக்கள் கலைஞன் ஒரு “அதிசயப்பிறவி” என்றே சொல்லலாம். பால்ராஜின் மரணத்தை விரைவுபடுத்திய மரணங்கள். பால்ராஜின் சாந்திநிகேதன் வாழ்க்கையிலும், வார்தா ஆசிரம வாழ்க்கையிலும் லண்டன் பி.பி.சி. வானொலி வேலையிலும், இந்தியா திரும்பி அவர் தீவிரமாக ஈடுபட்ட இப்டா நாடக வாழ்க்கையிலும், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத்தேடி பால்ராஜ் அலைந்த ஆரம்பகட்ட கஷ்டமான வாழ்க்கையிலும் அவருக்குப் பக்கபலமாகத் தோள்கொடுத்துவந்த, அவர் உயிருக்குயிராக நேசித்த மனைவி தமயந்தி, 1947ஆம் ஆண்டில் 28 வயதில் இயற்கையெய்தியது பால்ராஜின் இதயத்தில் இடியாக இறங்கியது. தமயந்தி இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இருந்தவர். அவர்களுக்குப் பிறந்த ஒரே மகள் “ஷப்னம்” மீது பால்ராஜூக்கு அளவு கடந்த பாசமிருந்தது. மகளைத் திருமணம் செய்து கொடுத்த இடத்தில் அவள் மனநிம்மதியிழந்து இளம் வயதிலேயே மாண்டு போனாள். மகளின் அகால மரணம் அவரது இதயத்தில் சம்மட்டியடியாக இறங்கியது. மகளின் மரணத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 1973 ஏப்ரல் 13ம் நாள் மாலை திடீர் இதயநோய் தாக்குதல் மகத்தான அந்த மக்கள் கலைஞன் பால்ராஜை 59 வயதில் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. பால்ராஜ் சஹானி, வாழ்க்கையை மிகவும்நேசித்த மக்கள் கலைஞன். இந்திய மண்ணிலும் உண்மையான சோசலிச ஆட்சி மலரவேண்டுமென ஆசைப்பட்டவர். 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள் காலை படப்பிடிப்புக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி வந்திருக்கிறது. பம்பாயில் புகழ்பெற்ற நானாவதி மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப்பிரிவுக்கு லிப்டில் கொண்டுசென்றபோது உடனிருந்த மருத்துவரிடம் எழுதிக்கொள்ளும்படி அவர் சொன்ன கடைசிச் செய்தி : “I have no regrets. I have lived a full and happy life (எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியுடனும், முழுத்திருப்தியுடனும் வாழ்ந்துவிட்டேன்” இந்தியத் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழியாப் புகழைப் பெற்றுச் சென்றுள்ள, இந்த மகத்தான மக்கள் கலைஞனின் நினைவுகளுக்கு என்றும் மரணமில்லை! இந்த நூலை எழுத உதவிய நூல்கள் :- 1. AUTOBIOGRAPHY - BALRAJ SAHNI 2. BALRAJ- MY BROTHER - BHISHNAM SAHNI 3. BALRAJ & BHISHNAM SAHNI - Brothers in Political Theatre - KALPANA SAHNI 4. BALRAJ SAHNI - A Dedicated and Creative Life - P.C.JOSHI 5. THE PEOPLES WARRIOR - GARGI CHAKRABORTHY 6. P.C.JOSHI – A BIOGRAPHY - GARGI CHAKRABORTHY 7. NEW AGE ARTICLES 8. Life and Works of P.C.Joshi - Anil Rajimwale 9. பி.சி.ஜோஷி நூற்றாண்டு நினைவுக் கட்டுரைகள் - NCBH வெளியீடு 10. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் - பெருமைமிகு வரலாறு - என்.ராமகிருஷ்ணன் 11. ஒரு ஜீவநதி - பொன்னீலன் 12. Google இணையதளக் கட்டுரைகள் மேற்கண்ட புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதிய ஆசியர்கள் பலர் மறைந்துவிட்டனர். ஒரு சிலர் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். மறைந்தோருக்கு புகழஞ்சலியும், நம்மோடு வாழ்ந்து வருவோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியும். -கே.சுப்ரமணியன் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.