[] []       புத்தகத்தில் புலம்புகிறேன் புதியவன் ராஜா       மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                  பொருளடக்கம் அணிந்துரை 9  புரட்சியாளன் 10  சிறை 11  சுரண்டல் 12  சாமியார் 13  மனிதன் 14   மாவீரன் 15   விஞ்ஞானம் 16  வன்முறை 17  சாதி 18  மனித இயந்திரம் 19  நதிகள் 20  கான்கிரிட் காடுகள் 21  சாலை விபத்து 22  கூவம் ஆறு 23  தண்ணீர் 24  மீத்தேன் 25  ஈழமக்கள் 26  ராணுவவீரனின் மரணம் 27  மரணதண்டனை 28  அனுபவ ஆசிரியர் 29  தற்கொலை 30  டாஸ்மாக் 31  காவல்துறை 32  கடவுள் 33  அறிக்கை 34  ஓசோன் 35  தொழிலாளி 36  முதலாளித்துவம் 37  இலங்கை தேசியம் 38  ஈழப்போராளிகள் 39   உடலில் இருந்து பிரிந்த உயிர் 40  மரணம் 41  இல்லாத புண்ணியம் 42  அகதிகள் 43  கருகலைப்பு 44  கணினி 45  இந்தியா 46  வழக்கறிஞர்கள் 47  கோவம் 48  கதவு+பூட்டு 49  பறவைகள் 50  இலைகள் 51  ராணுவவீரன் 52  பப்பாளி 53  விதவை 54  ஆறு 55  சினிமா 56   பார்வையில் 57  இதயம் 58  பூ 59  உணர்வு 60  மனைவி 61  கண்ணீர் 62  கண்கள் 63  கொலுசு 64  நினைவுகள் 65  நீ 66  சிலை 67  மௌனிக்கிறேன் 68  அவள் 69  என்னை ஏன் பிடிக்கவில்லை 70  நீதானே என் உயிர் 71  வாழ்கையில் 72  72  அழகு கண்ணாடி 73  உனது அழகை நான் பார்த்து ரசித்ததுவிட 73  நமதுவீட்டு கண்ணாடிதான் அதிகம்! 73  முத்தம் 74  வாழ்க்கை எனும் புத்தகம் 75  நீதான் காயப்படுத்தியது 76  அழகு ஓவியம் 77  காற்று 78   நிழல் 79  முத்தம் 80  பாதங்கள் 81  இரத்த மை 82  முத்தம் 83  ஏன் கோபம் 84  விரக்தி 85  மரங்கள் 86  இதயம் 87  மேகங்கள் 88  மின்னல் 89  மழை 90  மௌனப்பார்வை 91  எழுத்துக்கள் 92  கோலங்கள் 93  காடுகள் 94  பிரிவு 95  குருவி 96  நட்சத்திரம் 97  சூரியன் 98  கவிங்கன் 99  தீவு 100  ஏரிகள் 101  வன்னத்துபூசிகள் 102  தங்கசங்கலி 103  ஒய்வுத்தேவை 104  பிள்ளைகள் 105  மின்மினிப்புச்சிகள் 106  மரக்காட்டில் 107  சோகம் 108  பசி 109  கடைசி ஆட்டம் 110  நிலா 111  வானம் 112  மீன் 113  கொடிகள் 114  கொடிகள் படர்ந்து ஏறவே அச்சப்படுகிறது 114  எங்கு பார்த்தாலும் மின் கம்பிகள். 114  மழை ஓவியம் 115  பனைமரம் 116  சுமைதாங்கி கல் 117  பூ+பூச்சி 118  புனிதம் 119  கலங்கரை விளக்கம் 120  கடிகாரம் 121  கழிவுநீர் 122  விருதுகள் 123  வஞ்சம் 124  அவநம்பிக்கை 125  இறுதியில் 126  வாழ்க்கை 127  தன்னம்பிக்கை 128  தொலைப்பேசி 129  முரண்பாடுகள் 130  முயற்சி 131  தமிழ் 132  மனஅழுத்தம் +மாரடைப்பு 133  எழுத்தாளன் 134  சோலைக்காட்டு பொம்மை 135  விதை 136  குப்பைத்தொட்டி 137  விதைகள் 138  இறப்பு 139  அணிந்துரை   []   (திரைப்பட இயக்குனர்)    வேலுபிரபாகரன்    சமூகத்தின் சீரழிவுகளை கண்டும் காணமல் தான் மட்டும் வாழும் சுயநல போக்கோடு மக்கள் பெருகி விட்டதே  இந்த சமூகம் தாழ்ந்திருப்பதக்கு பெரும் காரணம், இச்சமூகத்தை விழிப்புறவும், எழுச்சி பெற செய்யவும்,பகுத்தறிவை பரப்ப எண்ணற்ற இளைஞர்கள் இங்கே தேவைப்படுகிறார்கள்.அப்படிபட்ட வீரிய நோக்கம்  கொண்டவர்தான்  அன்பு தம்பி  புதியவன்ராசா  அவர்கள், பகுத்தறிவை பரப்ப நினைக்கும் தோழர்களுக்கும் பேச்சுப்பயிற்ச்சியும்,எழுத்துப் பயிற்ச்சியும் பெரிதும் தேவைப்படுகிறது.அப்படித்தான் புதியவன்ராசா அவர்கள் தன் எழுத்து ப்பயிற்ச்சியை,புத்தகத்தில் புலம்புகிறேன்,என துவக்கியிருக்கிறார்.மரம் முளை விட்டிருக்கிறது,இது மரமாகி பல கனிகளை வழங்கி நாடெங்கும் பகுத்தறிவு பரப்ப,பல வீரிய விதைகளை உருவாக்கும் என உறுதியாய் நம்பலாம்.     []   புரட்சியாளன்       []         தன்னம்பிக்கையில் தளராமல் போராடு, உனக்கான சரித்திர ஏடுகள் காத்திருக்கிறது நாளை உன் வரலாற்றை எழுத!                         சிறை   []     என்னை சிறையில் அடைத்தீர்,   என் சிந்தனைகளையும், என் கற்பனைகளையும், எந்த சிறையில் அடைப்பீர்?             சுரண்டல்   []     அட்டைப்பூச்சி இரத்ததை உறிஞ்சிகிறது,     தொயிலாளியின் “உழைப்பை” முதலாளி  உறிஞ்சிகிறான்.                 சாமியார்   []                உழைத்து வாழமுடியாம சாமியார திரியற கிட்டத்தான்      எதிர்காலம் கேட்டு நிற்கிறார்கள் மக்கள்.                                                                                      மனிதன்   []     தட்டுத் தடுமாறி போய்விட்டது  மனிதா!   வாழ்க்கை ஓரிடம் கரைத்தட்டி  நின்றுதான் ஆகவேண்டும்.                      மாவீரன்   []     மாவீரன்  மறைவதில்லை உலகத்தில்          மறக்கடிக்க படுகிறான் .                      விஞ்ஞானம்   []     மனிதன்  கால்களால்  நடந்து சென்ற போது  பூமி  எவ்வளோ  பெரியது  என்று  நினைத்தான் விலங்குகள்  மீது அமர்ந்து சென்றபோது  பூமியில்   எங்கும் சென்றுவிடலாம்   என்று நினைத்தான்,  இன்று  விஞ்ஞானத்தின்  உச்சியில் இருக்கும்  மனிதன்  “பூமியே  சிறு  புள்ளி”தான்  என்கிறான்.                   வன்முறை   []     கற்களால்  அடிப்பது மட்டும் வன்முறையில்லை, கோப சொற்களால் அடித்து நெஞ்சை  காயப்படுத்தும் ஒருவகையில் வன்முறைதான்.             சாதி     []     தங்கமும் பித்தளையும் இந்த மண்ணில்தான் எடுக்கப்பட்டது, ஆனால், தங்கத்துக்கு இருக்கும் மரியாதையை பித்தளைக்கு கொடுப்பது    இல்லை.                   மனித இயந்திரம்   []     மனித கழிவுகளை அல்லவேண்டிய இயந்திரம் ஏசி அறையில் இருக்கிறது, மனிதன்நோய்க்கு  ஆளாகிறான்.                     நதிகள்   []     மேல் ஆடையை உறுவி உல் ஆடையை அள்ளி நிர்வாணமாய் நிற்கவைக்கப்பட்ட மனித நாகரிகத்தின் அன்னை நதிகள்.                 கான்கிரிட் காடுகள்   []     விளைநிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக மாறி கான்கிரிட் காடுகளாக காட்சி அளிக்கிறது                   சாலை விபத்து   []     ஐந்து நிமிடம் காத்துருக்க முடியவில்லை உன்னால்   எங்களை வாழ்நாள் முழுக்க காத்துருக்கவைத்து விட்டு செல்கிறாய் நீ.                       கூவம் ஆறு   []       நன்ணீரை நாசம் செய்துவிட்டு கழிவுநீரை சுத்தம் செய்கிறது தொழிற்சாலைகள்.                     தண்ணீர்   []     நான் வேர்களுக்கு செல்வதுவிட தொழிற்சாலை குழ்யய்களுக்குசெல்வதுதான் அதிகம்.                       மீத்தேன்   []     இதய மையத்தில் துளையிட்டு காற்றை உருஞ்சிகிறது இறக்கமற்ற இயந்திரம்.                       ஈழமக்கள்   []       பூக்கள் (ஈழமக்கள் )நான்கு புறங்களும் தாக்க படுகிறது எங்களை ( துப்பாக்கி குண்டுகளால் ) மழைத்துளிகளால்...                 ராணுவவீரனின் மரணம்   []     வழிமிது விழிவைத்து காத்திரு என் வருகைக்காக வந்தான் ராணுவ அணிவகுப்போட...                     மரணதண்டனை   []       ஒருதனி மனிதன் செய்த கொலை ஒட்டுமொத்த அரசாங்கமும் செர்ந்துசெய்தா தண்டனையா ?                   அனுபவ ஆசிரியர்   []     என் ஆசிரியர் எனக்கு சொல்லிகொடுத்தது  விட எனது அனுபவ ஆசிரியர் எனக்கு அதிகம் சொல்லிகொடுத்து இருக்கிறது.                       தற்கொலை   []       தற்கொலை என்பது கோழைகளை பத்திரமாக இருக்க பூட்டிக்கொள்ளும் இறுதி கதவு...                   டாஸ்மாக்   []     முன்பெல்லாம் மாணவர்களை படிக்கவைத்து அழகுபார்த்தது அரசு இன்று குடிக்கவைத்து வேடிக்கை பார்க்கிறது                     காவல்துறை   []     முன்பொல்லம் சாராயம் விற்பவரை கைது செய்தது காவல்துறை இன்று விர்க்கவேண்டாம் என்று   போரடும்மக்களை கைதுசெய்கிறது காவல்துறை…                     கடவுள்   []     இல்லாத ஒன்றை இருட்டு அறையில் தேடுகிறார்கள் இருப்பவரை முதியோர் காப்பகத்தில் விட்டு…                       அறிக்கை   []     வீதியில் இறங்கி போராடியவர்கள் எல்லாம் இன்று ஏசி அறையில் படுத்துக்கொண்டு வேற்று வார்த்தைகல்மூலம் போராடுகிறார்கள் அறிக்கையில்…                       ஓசோன்   []       கிழிந்து இருக்கிற எனது இதயத்தை தைக்க நல்ல தையல்காரர் தேவை.                   தொழிலாளி   []       முதலாளிஎனும் வாணலில் வருத்து எடுக்கபடுகிறது எங்கள் உழைப்பை...                   முதலாளித்துவம்   []     உள்ளே இருக்கும் தேங்கவைமட்டும் சுரண்டிக்கொண்டு வீதியில் எறியப்பட்ட ஒடுகளைபோல எங்கள் உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டது இந்த முதலாளி முதலைகள்…                   இலங்கை தேசியம்     []     துளிர்க்கும் போதே இலங்கை தேசியம் எனும் நன்சுவைக்கபடுகிறது.                         ஈழப்போராளிகள்   []     எங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்ததைவிட துரோக குண்டுகள் துளைத்ததுதான் அதிகம்.                உடலில் இருந்து பிரிந்த உயிர்   []       பூ வாடி இருக்கிறது வாசமும் இப்போதுதான் செடியிலிருந்து பிரிந்து செல்கிறது...                 மரணம்   []     வாடியசெடி வாசலிலே நிற்கிறது தன் வாழ்க்கை போராட்டங்களை முடித்துகொண்டு.                     இல்லாத புண்ணியம்   []       மகத்தான மனிதநேயத்தை கொன்றுவிட்டு இல்லாத புண்ணியம் தேடுகிறார்கள்.                     அகதிகள்   []       புது வாழ்வை தேடி பிறந்த  மண்ணைவிட்டு கனத்த எடையோடு மிதந்து  கொண்டுவருகிறது மறைக்கட்டைகள்...           கருகலைப்பு   []     பூ உலகை பாற்பதுக்குள் செடியிலிருந்து கிள்ளப்படுகிறது அருமைமொட்டுக்கள்…                     கணினி   []     நோட்டு புத்தகம் பேனாக்கள் இன்று பரிணமித்துள்ளது கணினிகளால்...                   இந்தியா   []       இருபத்தொன்பது கண்ணாடித்துண்டுகலால் அடிக்கிவைக்க பட்டநாடு பத்திராமாய் கையாளுங்கள்…                 வழக்கறிஞர்கள்   []     நீதியை கொன்றுவிட்டு நீதியை நிலை நாட்டுவோம் என்று நிதியின் மீது   சத்தியம் செய்கிறார்கள் வழக்கறிஞர்கள்.                   கோவம்   []       மனிதன் சிறுக சிறுக மனித தன்மையை இழந்து மிருக தன்மையை அடைகிறான் கோவப்படும் பொது.               கதவு+பூட்டு   []     பாதுகாப்புக்காக இருக்கின்றவன் இன்று பாதுகாப்பு இல்லாமல்  இருக்கின்றான்                       பறவைகள்   []     ஒய்யாரமாய் நடந்து ஊரெங்கும் உலா வந்தவர்களை என்ன குற்றத்துக்கு சிறைபிடித்திர்   பறந்து வாழ்வோருக்கு உலகிலேயே சிறையேது.                   இலைகள்   []       எனக்கு வாழ்வு கொடுத்த என் அன்னையே உன் பாதங்களில் இருக்க விரும்புகிறேன். அனைவருக்கும் தான் வாழ்வு   முடியும்போதுதான்  தெரியும் தாயின் அன்பு.                 ராணுவவீரன்   []     போராளி என்பவன்   மரணத்தை கொன்றுவிட்டுத்தான் போர்களத்தில் நிற்கின்றான் .                       பப்பாளி   []     நீயும் கருவிளிருந்துதான் வந்தாய் நீயே கரு கலைக்க விஷ மருந்தாய் இருக்கிறாய்.                   விதவை   []     கணவனை  இழந்தால் மனைவி விதவை  மனைவியை இழந்தால் கணவன்?   கட்டியவன் கைவிடப்பட்டதால் சிகப்பு ரோஜாவின் மீது வெள்ளை சாயம் பூசப்படுகிறது.           ஆறு   []     ஆடம்பரமாய்  வீடு கட்டினோம் ஆறுகளை அம்மனமாக்கிவிட்டு                       சினிமா   []     பல கலைகளை  தின்று ஏப்பம் விடப்பட்டது நவீன காலத்து சினிமா                        பார்வையில்   []     கல் தடிக்கி விழதா நான்     உன் பார்வை தடிக்கி விழுந்தேன்       மண்ணில் அல்ல              உன் மனதில்!          இதயம்   []       என் இதயம் துடிக்க மறுக்கிறது மரணத்திற்கு சில நிமிடம் முன்பு…                   பூ   []       அதிகாலையில் அழகாக  இருந்தவளோ அந்தியில் கிரங்கிபோனவளோ   உயிருடன் இருந்தாய் ஓர் இடம் உயிரில்லாமல் திரிந்தாய் பல இடம்.                 உணர்வு     []     உயிர் இல்லாத சிலைக்கு உருவம் எதற்கு? உயிர் இல்லாத நிழல்க்கு உருவம் எதற்கு? காதலை புரிந்துகொள்ளாத மனிதர்க்கு பூமியில் இடம் எதற்கு?                   மனைவி     []       எனது அன்புகூட பொய்யயிருக்குலாம் உனது அன்பு உண்மை நான் பல சந்தர்ப்பங்களில் உணர்த்து இருக்கிறேன்.             கண்ணீர்   []     கொட்டும் மழைகூட வரண்டுபோகலாம் ஆனால், வரண்டுபோகாதது உனது கண்களில் கண்ணீர்.       கண்கள்   []     கடலையே கண்களால் கைது செய்து இருக்கிறாய் நீ அழுகிறபோதுதான் கரைகளையும் கடலையும் காணமுடிகிறது.   கோழைகளின் கொடுங்கோல் ஆயுதமே கண்ணீர்.         கொலுசு   []     என்னை தினமும் காலையில் எழுப்புகிற கீதமே என் மனைவின் கால் கொளுசுதான்.                 நினைவுகள்   []     என் நினைவை இழந்து போகிறேன் என்னவளை மறக்க நினைக்கும் போதுல்லாம்.                         நீ   []     வார்த்தைகளை வம்புக்கு இழுத்து நூலில் கோர்த்து எழுதப்பட்ட கவிதை நீ!                         சிலை   []     சிந்தனை  உளிகளால் சிறுக சிறுக  செதுக்கப்பட்ட,  சிலை ஓவியம் நீ!                 மௌனிக்கிறேன்   []     முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகளும் முள்ளாய் குத்துகிற கோபங்களும் முரண்பட்டு போய் நிற்கும்போது  மௌனிக்கிறேன்!                 அவள்   []     அவள் ஈராக்கூந்தளால்  தலைக்கோதி நிற்க வஞ்சகமாய் உடுருவி ஈரக்காற்று தோடக்களால் என்னை துளைத்து செல்கிறது காற்று. என்னை ஏன் பிடிக்கவில்லை   []     உனக்கு பிடிக்கின்ற அனைத்தும் எனக்கும் பிடிக்கின்றது என்னைமட்டும் ஏன் பிடிக்கவில்லை.             நீதானே என் உயிர்   []     பார்வையில்லாமல் பார்க்க முடியாது கால்கள் இல்லாமல் நடக்கமுடியாது கைகளில்லாமல் எதுவம் செய்ய முடியாதுன்னு நீயே சொல்லியிருக்கிறாய் அப்ப  என் இதயமில்லாமல் நான் எப்படி உயிர்வாழ முடியும்!           வாழ்கையில் []   துளைத்த எனது முகவரியை தேடிகண்டுபிடித்தேன் உனது வருகைக்கு பின்!                         அழகு கண்ணாடி   []     உனது அழகை நான் பார்த்து ரசித்ததுவிட நமதுவீட்டு கண்ணாடிதான் அதிகம்!                     முத்தம்   []     உன் ஒரு முத்தத்துக்காக ஓராயிரம் முறை சிறையில் இருப்பேன் உன் மனசிறையில்.                   வாழ்க்கை எனும் புத்தகம்   []     என் புத்தகத்தில் எனக்கு பிடித்த சிலபக்கங்கள் உன் வரவுக்கு பின்…                       நீதான் காயப்படுத்தியது   []     பெண், காயப்பட்டவருக்குதன் தெரியும் வலியின் வேதனை என்னை காயப்படுத்துதியேதே நீதான்...                         அழகு ஓவியம்   []     எத்தனை ஆயிரம் ஓவியங்கள் இருந்தாலும் எனக்கான சிறந்த ஓவியம் நீதான்…                         காற்று   []     கண்ணுக்கு தெரியாத காற்று என் கண்ணத்தில் முத்தம்மிட்டு சென்றது என்னவளின் சுவாசகாற்று...                        நிழல்   []     நெடுந்துரமாய் நடந்தும் என்னை  அடிப்பட்டால் வலிக்காதவன் பின் தொடர்ந்து வருகிறான்…                     முத்தம்   []     தீடிப்பார் வண்ணம் என்கிறது  உனது கன்னம் தீட்ட உதறுகிறது எனது உதடு கைகள்.                       பாதங்கள்   []     அகழ்வாராய்ச்சில்  தேடி எடுக்கப்பட்டது உனது பாத சுவடுகள்!                     இரத்த மை   []     அவளைப்பற்றி எழுத  நினைத்தேன்   எனது ரத்தம் கூட ஆர்ப்பரிக்கிறது   பேனாவில் மையாக!           முத்தம்   []     எப்பொழுதும் சாப்பிட்டாலும் திகட்டாத இனிப்பு உன் முத்தம்.                     ஏன் கோபம்   []     கசப்பான வார்த்தைகளை நீ  பரிமாற இனிப்பாய் உண்கிறது எனது செவிகள்.                   விரக்தி   []     காதலியின் திருமணம்   கருணைக்கொலை செய்தேன் நெஞ்சிக்குள் எனது ஒருதலை காதலை.                       மரங்கள்   []       அனைவரும் வருக மழைக்காக மரங்கள்  நடத்தும் இலையுதிர் கால போராட்டத்திற்கு…                 இதயம்   []     என் இதயத்தை காணவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு நட்சத்திரங்களின் துணைக்கொண்டு வானில் பார்த்தேன் நான் பிடிப்பதுற்குள் போய் விட்டது நாளைவரை காத்திருக்க  வேண்டும்!                 மேகங்கள்       []     பள்ளங்கள் இல்லாமல் தேங்கிநிற்கும் நீர்நிலைகள் மேகங்கள்!   எனது ஊர்வலத்தின் போதுதான் மேகங்களும் ஊர்வலமாய் வருகிறது.             மின்னல்   []     பல இசைக்கருவிகள் தரும் சத்தத்தை விட ஒருசில விநாடி வந்தாலும் நீ எழுப்பும் சத்தம் பல ஆயிரம் இசையை எழுப்புகிறது.     மழை   []     மண்ணில் படாத மழைத்துளி மாசு அடைந்து விழுகிறது மண்ணில்.   என்னை என் அன்னையோடு கொண்டுபோய் சேர்க்க வறுமையில் வாய்திறந்து காத்துயிருக்கிறது ஆறுகள்…   காலையில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன்  திடீரென்று வழி மறித்து என்னை தாக்கிவிட்டு சென்றது மழை!           மௌனப்பார்வை   []     சிதிலம் அடைந்த சிலைகலைபோல் சிதைக்கபடுகிறேன் சிந்தனைகளால்.                 எழுத்துக்கள்   []     எலிப்பொறியில் சிக்கிகொண்ட எலியைப்போல் என்னிடம் சிக்கிகொண்ட எழுத்துகள்.                         கோலங்கள்   []     காலையில் கோலம் போட வெளியே சென்றேன். என்னை வரவேற்க மேகங்கள் அணிவகுத்து நின்றன  மழைத்துளிகள் வந்து புள்ளிவைத்து சென்றது!     என் வாழ்நாளில் நான் பார்த்த முதல் ஓவியம் என் அம்மா போட்ட கோலம்…             காடுகள்   []     மனிதனின் மிச்சம் பறவையின் எச்சம் இயற்கையின் மகன்.                   பிரிவு   []     நான் எழுத நினைக்கும் போதுல்லாம் பிரியா  விடைப்பெற்று செல்கிறது என் கற்பனை.                           குருவி   []     ஒரு நாறில் ஆரம்பித்து இன்று மாபொரும் அரண்மனையை கட்டியிருகிறது!             நட்சத்திரம்   []     வானில் விவசாயம் செய்யப்போகிறேன் நட்சத்திர விதைகளை விதைத்திருக்கிறேன் ஆஹா! அழகாய் பூத்து குலுங்குகிறன   அறுவடை செய்ய மனதில்லை.               சூரியன்   []     நான் வரைய நினைத்த ஓவியத்தை விட நீ அழகாக வரைந்து இருக்கிறாய்! உன் ஒளி ப்ரஷ்களால் காலையுளும் மாலையுளும் சூரியன்.   ஓசோன் படலத்தை உடுருவி மேகத்தை கிழித்து எரித்து என்னை சுட்டு எரிக்கிறாய் ஒளிக்கதிர்களால்.           கவிங்கன்   []     கவிங்கனை திருமணம் செய்தேன். அவன் என்னிடம்  பேசுவவிட  கர்ப்பனையுளும் எழுத்துகளிடமும்தான் அதிகம்  பேசுகிறான்!               தீவு   []     தனித்து விடப்பட்டவளின் தனிந்திராத            கண்ணீர்  கடல்நீர்.                     ஏரிகள்   []     என்னை  புதைக்க பல இடங்களில் பள்ளம்யேடுக்கப்படுகிறது நீங்கள் என்னைமட்டும் புதைக்கப்படவில்லை பல உயிரினங்களை கொலைசெய்ய போறிங்க என்பதுதான் உன்னை.                     வன்னத்துபூசிகள்   []     பூ மீது வண்ணத்துபூச்சிகளின் படையெடுப்புகளால்  தாக்கபடுகிறேன் பூசிகளின்  உதடுகளால்,கைதுசெய்யப்பட்டு சிலநிமிடம் விடுதலை செய்யப்படுகிறேன்…           தங்கசங்கலி   []     கழுத்து எனும் ஊரிலிருந்து மார்பு எனும் ஊருக்கு புதுதாய் போடப்பட்ட ஒருவழி இரயில்ப்பாதை…                 ஒய்வுத்தேவை   []     பெண்ணாய் பிறந்தவளுக்கு   ஒய்வு என்பது மரணத்தில்தான்…                         பிள்ளைகள்   []     உலகில் எது விலைவுயர்ந்த செல்வம்   என்றால் தான்பெற்ற பிள்ளைகள்தான்.               மின்மினிப்புச்சிகள்   []     எரிபொருள் இல்லாமல் இழக்கபடுகிறது  ஜெனரேட்டர்கள் இருட்டு நேரங்களில் நடமாடும் தெருவிளக்கு.   இடி இடிக்கும்போது சிதறி   விழுந்த துகள்கள் மின்மினிபூச்சி.                   மரக்காட்டில்   []     எமது உறவுகளோடு உரசி வாழ்ந்துகொண்டு இருந்தவனை இன்று நடைப்பிணமாய் நிர்கவைக்க பட்டுயிருகிர்கள்.               சோகம்   []     இப்போ நான் அழுதால் யாருக்கும் தெரியபோவதில்லை நெஞ்சினேறிய காயம் கண்கள்நெறைய கண்ணீர்.                         பசி   []     உணவு கையிருப்பு இருக்க இல்லையா என்று தெரிந்து கொள்வதில்லை பசிக்கமட்டும் தெரிந்து கொண்டுயிருக்கிராய்…                         கடைசி ஆட்டம்   []     கருக்குழியில் இருந்து பெரிய குழியில் இறக்கிவைத்தால் ஆடாத அட்டம்மேல்லாம் ஆடுகிறான் ஆறடி குழியில் இறக்கிவைத்தால் அசையாமல் இருக்கிறான்...                       நிலா   []     சத்தமின்றி முத்தமிடு அனைவரும் உறங்குகிறார்கள்...                   வானம்     []     கவிஞன் ஆக வேண்டுமென்று  நினைத்தேன் அதற்குள் வானம் வம்புக்கு இழுக்கிறது!                     மீன்     []     மரணம் வந்தது புழு உருவத்தில்  என்னை எந்த இடுகாட்டில் புதைப்பான் என்று தெரியவில்லை. தெருத்தெருவாக ஊரூராக தேடுகிறான்   இடுகாடு கிடைக்குமா என்று  பு தைக்கப்படுகிறது மனித இடுகாட்டில்.   கொடிகள்   []     கொடிகள் படர்ந்து ஏறவே அச்சப்படுகிறது எங்கு பார்த்தாலும் மின் கம்பிகள்.     மழை ஓவியம்     []     வானம் என்ற காகிதத்தில் மழை ஓவியத்தை வரைந்தேன் அதை மழைக்காலங்களில் மட்டும் பொது மக்கள் பார்வைக்கு வைத்தேன்.               பனைமரம்   []     அனைத்து  மொழி பிள்ளைகளும் சாகாமல் காத்து வந்தாய்    உன்னை காப்பாற்ற  யாருமில்லை, நான் இந்த மொழிக்காக போராடுகிறேன்  என்று  சொல்கிறார்கள்  உண்மயில் மொழி சாகாமல் போராடியதே நீதான்.                 சுமைதாங்கி கல்     []     எவ்வளவோ சுமையை ஏற்றினாலும் சுகமாக சுமைக்கிறது  சுமைதாங்கி கல்!                 பூ+பூச்சி   []     என்னை கலங்க படுத்த ஒரு கருவண்டு சுற்றுகிறது.                   புனிதம்   []     இவ்வுலகில் புனிதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது, தாயின் அன்பை தவிர.               கலங்கரை விளக்கம்   []     சூழ்ந்த இருளில் சொந்தங்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறது.                     கடிகாரம்   []     பன்னிரண்டு மணிக்கு உன் வரவுக்காக  நேரமே நேரமெடுத்து காத்துக்கொண்டிருக்கிறது.                     கழிவுநீர்   []     மண்ணில் இருந்து உருஞ்சபட்ட நன்னீர்   பயன்படுத்தப்பட்டு  மீண்டும் மண்ணிலே  ஊட்ற்றப்படுகிறது  மறுசுழற்சிக்காக...                       விருதுகள்   []     படைப்பாளியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திசெல்லும் ஏணி விருதுகள்!                வஞ்சம்   []     வஞ்சம் கொண்ட நெஞ்சம் வஞ்சிக்கப்படும் மிக விரைவில்.                         அவநம்பிக்கை   []     தன்னம்பிக்கை இல்லதுவனின் தன்னம்பிக்கைதான் கடவுள் நம்பிக்கை.                           இறுதியில்   []     மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக்குதித்து கொண்டுயிருக்கும் உயிரினம் தன்வாழ்வு முடியப்போவது என்று தெரியாமல்.               வாழ்க்கை   []     முயற்சியில் விடாமல் போராடு முன்னேறிவிடலாம் உயரத்தில்.                   தன்னம்பிக்கை   []     சில வெற்றிக்கிபின் பல ஆயிரம் தேல்விகள்  குவிந்து கிடக்கிறது.                 தொலைப்பேசி   []     விஞ்ஞானத்தின் விறுக்கொண்டு எழுந்த பிள்ளை நான் நான் இல்லாமல் நீங்கள் வாழமுடியாத நிலைமையை   ஏற்ப்படுத்தி விட்டேன்.                 முரண்பாடுகள்   []     முரண்பாடுகளின் மொத்த உருவமே தெளிவற்ற யோசனை.                         முயற்சி   []     முயற்சி இல்லா மனிதன் முல்கம்பிக்குள் அடங்கி இருக்கும் பறவைப்போலதான்.   நம்மால் முடியாதென்று நினைக்கும் தோழா, முயற்சி செய்து பார் முடியாது என்ற சொல் கூட “முயற்சி” செய்யும்...             தமிழ்   []     இருநூற்றி நாப்பத்து ஏழு முத்துக்களை கோர்க்கப்பட்ட தமிழ் மாலை நீ!                       மனஅழுத்தம் +மாரடைப்பு   []     கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவைக்க பட்ட வெடிமருந்துகள் இறுதியில் மாபொரும் குண்டு வெடிப்பு.                           எழுத்தாளன்   []     அடித்துகொள்கிறார்கள் கதையில் வேடிக்கை பார்க்கிறான் எழுத்தாளன்...                         சோலைக்காட்டு பொம்மை   []     உடல்வுருக உழைத்தவனுக்கு உடுத்த கோமணம் தன்மீது விழுகின்ற துசிகூட துடைக்கமுடியாத பொம்மைக்கு முழு ஆடை.               விதை   []       பறவைகளின் எச்சம் விதைகளாக ஆகிறது  முயற்சி இல்லா மனிதா நீ ஏன் அந்த விதைகளுக்கு உரமாகக்கூடாது?           குப்பைத்தொட்டி   []     தேவையற்ற பொருள்களை தூக்கி எரிய  தெருக்களில் என்னை   தேடிக் கொண்டிருக்கிறார்கள்.               விதைகள்   []     நெஞ்சவயலில் சிதறடிக்கப்பட்ட சிந்தனை விதைகள்.             இறப்பு   []     மண்ணில் அமர்ந்தால் மன்னாகிவிடுமென்று நினைக்கின்றோம் நாமும் ஒரு நாள் அந்த மண்ணிற்கு உரமாக போகிறோம் என்பதை மறந்துவிட்டு...