[] பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! கீதா சாம்பசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! பதிப்புரிமை © 2015 இவரால் / இதனால் கீதா சாம்பசிவம். This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! - முன்னுரை - 1. அத்தியாயம் 1 - 2. அத்தியாயம் 2 - 3. அத்தியாயம் 3 - 4. அத்தியாயம் 4 - 5. அத்தியாயம் 5 - 6. அத்தியாயம் 6 - 7. அத்தியாயம் 7 - 8. அத்தியாயம் 8 - 9. அத்தியாயம் 9 - 10. அத்தியாயம் 10 - 11. அத்தியாயம் 11 - 12. அத்தியாயம் 12 - 13. அத்தியாயம் 13 - 14. அத்தியாயம் 14 - 15. அத்தியாயம் 15 - 16. அத்தியாயம் 16 - 17. அத்தியாயம் 17 - 18. அத்தியாயம் 18 - 19. அத்தியாயம் 19 - 20. அத்தியாயம் 20 - 21. அத்தியாயம் 21 - 22. அத்தியாயம் 22 - 23. அத்தியாயம் 23 - 24. அத்தியாயம் 24 - 25. அத்தியாயம் 25 - 26. அத்தியாயம் 26 - 27. அத்தியாயம் 27 - 28. அத்தியாயம் 28 - 29. அத்தியாயம் 29 - 30. அத்தியாயம் 30 - 31. அத்தியாயம் 31 - 32. அத்தியாயம் 32 - 33. அத்தியாயம் 33 - 34. அத்தியாயம் 34 - 35. அத்தியாயம் 35 - 36. அத்தியாயம் 36 - 37. அத்தியாயம் 37 - 38. அத்தியாயம் 38 - 39. அத்தியாயம் 39 - 40. அத்தியாயம் 40 - 41. அத்தியாயம் 41 - 42. அத்தியாயம் 42 - 43. அத்தியாயம் 43 - 44. அத்தியாயம் 44 - 45. அத்தியாயம் 45 - 46. அத்தியாயம் 46 - 47. அத்தியாயம் 47 - 48. அத்தியாயம் 48 - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! [pillai1]   கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com http://sivamgss.blogspot.co.in மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com creative commons attribution Non Commercial 4.0 international license உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com 2 முன்னுரை பிள்ளையார் என் இஷ்ட தெய்வம். அவரோடு உரிமையாகச் சண்டை போடுவேன். மனதுக்குள் விவாதம் செய்வேன். திட்டுவேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பவர் என் நண்பர். ஆகவே அவரைப் பற்றிய செய்திகளைத் தேடித் தேடிப் படிப்பேன். பிள்ளையார் படம் போட்ட சின்னத் தாளைக் கூட விட்டு வைக்க மாட்டேன். கொலு பொம்மை வாங்கினால் கூட வருஷா வருஷம் பிள்ளையாராகவே வாங்கிக் கொண்டிருந்தேன். பின்னர் அனைத்தும் விநியோகம் செய்தாயிற்று! [:)] ஆகவே இணையத்துக்கு வந்து எழுத ஆரம்பித்த புதிதில் மழலைகள்.காம் என்னும் இணைய தளத்தில் நண்பர் ஆகிரா அவர்கள் என்னை ஏதேனும் எழுதித் தரும்படி கேட்டபோது அதுவரை நான் கேட்டிருந்த, படித்திருந்த பிள்ளையார் கதைகளைத் தொகுக்க ஆரம்பித்தேன். பின்னர் சிலவற்றைத் தேடித் தேடிப்புத்தகங்களில் இருந்தும் பெற்றேன். அனைத்தையும் தொகுத்து இங்கே அளிக்கிறேன். இதில் என் சொந்தக் கருத்தோ, சொந்தமான கற்பனைகளோ எதுவும் இல்லை. பல புத்தகங்களில் படித்துக் கேட்டு அறிந்தவைகளே! ஆகவே இதன் குறைகள் மட்டுமே என்னைச் சார்ந்தது. நிறைகள் அனைத்தும் நான் படித்த புத்தகங்களைச் சேர்ந்தது. நன்றி. வணக்கம். கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com http://sivamgss.blogspot.co.in [pressbooks.com] 1 அத்தியாயம் 1 பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்! இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது “ஓம்” என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம். “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் — விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து!” என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, “விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்” இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் “தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!”ன்னு சொல்றாங்க. “கனிந்து”ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும். அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம். “சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!” மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்.” என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து. அடுத்து நாம் விநாயகர் எப்படி வந்தார்னு பார்க்கலாம். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/3/35/Chola_Ganesha.jpg 2 அத்தியாயம் 2 2 – பிள்ளையார் தோற்றம் பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான். (பொதுவாகவே நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ, கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க பெரியவங்களா இருக்கும்போது, எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம். இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு எடுப்பாங்க. கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க, அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இதுகூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா, எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ, சுகமோ எது வேணாலும் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.) அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார். திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். “பள பள” வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் “சமஷ்டிப் பிரணவம்”, “வியஷ்டிப் பிரணவம்” என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார். பிள்ளையாரின் உருவம் பற்றிய விளக்கம் அடுத்தாப் போல் பார்ப்போமா? [File:Kusapet vinayagar.jpg] https://commons.wikimedia.org/wiki/File:Kusapet_vinayagar.jpg 3 அத்தியாயம் 3 பிற கதைகள் விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் “பார்கவ புராணத்தில்” வேறு விதமாய்ச் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தம் தொழில்களைச் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்: பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே, அதிலிருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரானனன் ஆகும். ஏனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்துபோன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்குச் சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்க வேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க, மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்.” எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்ற சமயம், உமாதேவியாரின் திருவயிற்றில் காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அதுகண்டு அனைவரும் பதறவே, கலங்காதீர்கள் என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை “கஜானனன்” என்ற பெயர் பெற்றான். உமா தேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரானனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் “சிந்தூர விநாயகர்” என்ற பெயரும் பெற்றார். [] https://commons.wikimedia.org/wiki/File:Inuvil_pillaiyar_kovil.jpg 4 அத்தியாயம் 4 விநாயகர் உருவ ரஹஸ்யம் சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். “தத்துவ மசி” என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர். பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது “பார்கவ புராணம்” என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள். அடுத்து அவரை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போமா? [] https://commons.wikimedia.org/wiki/File:A_depiction_of_Pillaiyar_statue.JPG 5 அத்தியாயம் 5 வழிபடும் முறை சிவ பெருமானுனம், உமை அம்மையும் விநாயகரை ஆசீர்வதித்தனர். “யாராக இருந்தாலும் ஒரு செயலைத் துவங்குமுன் முதலின் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது.” என்று அருளினார்கள். தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். இந்த வரம் கடவுளருக்கும் பொருந்தும் என்று அருளியதால் சிவபெருமான் ஒருமுறை திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிரு்ஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கல், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது. இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. அன்றில் இருந்து மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படும் பொருள் ஆனது என்கிறது புராணம். ஆனானப் பட்ட விநாயகரே தாய், தந்தையருக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் எப்படி நடக்க வேண்டும்? குழந்தைகளே! தெரிந்து கொள்ளுங்கள். விநாயகர் என்ற பெருக்கு அர்த்தம் என்ன தெரிய்மா? “வி” என்றால் தன்னிகரற்ற என்று பொருள் படும். நாயகர் என்றால் தலைவர். தன்னிகரற்ற தலைவரான இந்த விநாயகருக்குக் குரு யார் தெரியுமா? சூரியன் தான் விநாயகரின் குரு. அது போல் இன்னொருவருக்கும் சூரியன் தான் குரு. அவர் யார் தெரியுமா? நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும் சூரியன் தான் குரு. இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப் பயின்றார்கள். அதுவும் எப்படி? நம்ம வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல் எல்லாம் இல்லை. சூரியனோ தாங்க முடியாத சூடு உள்ளவன். அவனிடம் பாடம் கேட்பது என்றால் லேசா? நம்மால் முடியத் தான் முடியுமா? விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும். தினம் தினம் உலகை வலம் வருகிறான் சூரியன். ஒரு நிமி்ஷம் கூடச் சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு. அப்போ என்ன செய்யலாம்? சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர். எவ்வளவு கஷ்டம் இது? இப்படி எல்லாம் க்ஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர். அனுமன் எப்படிப் பாடம் பயின்றார் தெரியுமா? வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரத்ததிற்கு முன்னால் கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன். இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம் எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம். இன்றைய நாளில் “பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது” என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தப்பு தெரியுமா? நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். அது தான் முறை. இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, சம்பிரதாயமான பூஜை முறைகளின் அர்த்தமே மாறி விட்டது. இப்போ நாம் செய்யும் தெய்வ வழிபாடு எல்லாமே ஆவணி மாதம் சுக்கிலச் சதுர்த்தியில் வரும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம் ஸ்ரீராமநவமிக்குப் பின் வரும் அனுமத் ஜெயந்தியில் முடியும் நம்முடைய பூஜை புனஸ்காரங்கள். ஆனால் இன்றோ மாறிச் செய்து வருகிறோம். அனுமத் ஜெயந்திக்கு அப்புறம் சில மாதங்களுக்கு ஒன்றுமே இருக்காது. திரும்ப அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து நாம் பிள்ளையாரை எவ்வாறு வழிபடுவது என பார்ப்போம். [] https://upload.wikimedia.org/wikipedia/en/e/ed/Lord_Ganesha_carved_in_wood.jpg 6 அத்தியாயம் 6 அணுகுவதற்கு எளியவர் விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர். மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழி பட முடியும். கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும். விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா? நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு. குழந்தைகளே! விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்வோமே, அதன் காரணம என்ன தெரியுமா? நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு “தோர்பி கரணம்” போட வேண்டும். யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது. இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும். பள்ளியில் சில மாணவர்கள் அதிகமாய்ப் படிக்காமல் இருந்தால் அவர்களுக்குத் தோப்புக்கரணம் போடச் சொல்லித் தண்டனையை ஆசிரியர் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? அந்த மாணவர்களின் மந்த நிலை மாறி சுறுசுறுப்படைந்து பாடங்களை ஒருமைப்பட்ட மனதுடன் கவனிப்பான் என்பதால் தான். இப்போ விநாயகருக்கான பிரசாத வகைகளைப் பார்ப்போமா? சொல்லுவது என்னமோ விநாயகருக்குன்னு தான். ஆனால் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு நாம் தானே சாப்பிடறோம்? அதனால் நமக்குப் பிடித்தமான உணவு வகைகளே அவருக்கும் படைக்கிறோம், பிடிச்சதுன்னும் சொல்லுகிறோம். அந்த உணவு வகைகள் என்னவென அருணகிரிநாதர் திருப்புகழில் ஒரு பட்டியலே போட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். இதில் அவரைக்காய் மட்டும் அடங்காது. பொதுவாய்த் தமிழில் அவரை என்றால் உள்ளே விதை உள்ள எல்லா விதமான பீன்ஸ் வகைக் காய்களும் அடங்கும். இந்த அவரை, கரும்பு, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, தேன், அப்பம், அதிரசம், வடை, பட்சணம் எல்லாவற்றிற்கும் மேலாய் மோதகம். இதில் சிலவற்றைப் பற்றியும் விநாயகருக்கு ஏன் அருகம்புல் விசேஷம் என்றும் பின்னால் பார்ப்போமா? [] https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f6/Ganesha-aum.jpg 7 அத்தியாயம் 7 விநாயகர் வழிபாடு ஆதி சங்கரர் பத்தித் தெரிஞ்சிருக்கும் எல்லாருக்கும், இல்லையா? அவர் என்ன செய்தார்னால், சநாதன தர்மம் என்று சொல்லப்பட்ட, தற்காலத்தில் இந்து மதம் எனக் குறிப்பிடப்படும் நம் போன்றவர்களுக்காக வழிபாட்டு முறையை 6 விதமாய்ப் பிரித்தார். அதை “ஷண்மத வழிபாடு” எனச் சொல்லுவது உண்டு. அவை என்ன என்றால்: பிள்ளையார் என்று நாம் அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு = காணபத்தியம் என்று கணங்களுக்கு எல்லாம் அதிபதியான “கணபதி” வழிபாடு முதன்மையானது. மற்றவை சிவனை வழிபடுபவர்கள் = சைவர்கள் சக்தியை வழிபடுபவர்கள் = சாக்தர்கள் விஷ்ணுவை வழிபடுபவர்கள் = வைணவர்கள் முருகனை வழிபடுபவர்கள் = கெளமாரம், குமாரக் கடவுளின் பெயரில் இருந்து கெளமாரம் வந்தது. சூரியனை வழிபடுபவர்கள் = செளரம் என்றும் பிரித்தார். இறைவன் ஒருவனே. அத்வைதம் எனப்படும் ஆதிசங்கரரின் கோட்பாடும் அது தான். என்றாலும் சாதாரண மக்களுக்காக ஏற்படுத்தப் பட்டது இது. விநாயகரை வைணவர்கள் “விஷ்வக்சேனர்” என்ற பெயரில் வழிபடுகிறார்கள். அத்வைதிகளுக்குக் கடவுள் வேறுபாடு கிடையாது. ஹரியும், ஹரனும் ஒருத்தரே! என்றாலும் விநாயக வழிபாடு அனைவரிடமும் இடம் பெற்றிருக்கிறது. விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல் மஞ்சள் பொடியிலேயோ அல்லது, பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து, அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான் பூஜைக்கு ஏற்றவர். தற்காலங்களில் கிரிக்கெட் ஆடும் விநாயகர் முதல், கணினியை இயக்கும் விநாயகர் வரை விநாயக சதுர்த்தி அன்று பார்க்க முடிகிறது. அவை எல்லாம் வழிபாட்டுக்கு உகந்தவை அல்ல. இவர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/7/72/Durga-puja-koln-2009-4.JPG 8 அத்தியாயம் 8 பிள்ளையார் சுழி [https://upload.wikimedia.org/wikipedia/ta/3/33/Pillayar_suli.JPG] https://upload.wikimedia.org/wikipedia/ta/3/33/Pillayar_suli.JPG எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அர்த்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல, விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள “மானா” என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும். [pilliyar] “அ”, “உ”, “ம” மூன்றும் இணைந்தது தான் “ஓம்” என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது “AUM” என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. “அ” என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து “உ” என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் “ம” என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம். 9 அத்தியாயம் 9 விநாயக புராணத்தில் இன்னும் சில முக்கியமான நிகழ்ச்சிகளைச் சொல்ல நினைக்கிறேன். ஒரு சமயம் கெளண்டின்ய முனிவர் தன் மனைவியான ஆசிரியையுடன் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த காலத்தில், அவர் அவ்வளவு செல்வம் பெற்றவராய் இருக்கவில்லை. கெளண்டின்யரோ விநாயகர் மேல் அளவற்ற பக்தியுடன் அவரைப் பூஜித்து வந்தார். தினமும் விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனைகளும் செய்து வந்தார். ஆசிரியைக்குக் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் நாடி பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே எனத் தாபம் இருந்து வந்தது. என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு உற்ற பணிவிடைகளைச் செய்து வந்தாள். என்றாலும் செல்வம் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது அவளுக்கு. மனைவியின் முகவாட்டத்தைக் கவனித்த கெளண்டின்ய முனிவர் காரணத்தை அறிந்திருந்தாலும், மனைவியின் வாயாலும் அதைக் கேட்டு அறிந்தார். மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு அருகின் மகிமையையும், இறைவனின் மேன்மையையும் உணர்த்த வேண்டி, கெளண்டின்யர் அவளிடம், அருகு ஒன்றை விநாயகருக்குச் சமர்ப்பித்து விட்டு எடுத்துத் தந்தார். “இந்த அருகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!” என ஆசியும் வழங்கினார். ஆசிரியை திகைத்தாள். “என்ன? ஒரு சிறிய அருகம்புல்லின் எடைக்கு ஒரு குந்துமணிப் பொன் கூட வராதே?” என நினைத்தாள். அலட்சியமாகவும், நிதானமாகவும் தேவேந்திரனை அடைந்தாள் கணவனின் உதவியுடன். அவனிடம் நடந்ததைச் சொல்லி இந்த அருகின் எடைக்குப் பொன் வேண்டுமாம் எனவும் கேட்கவே, தேவேந்திரன் திகைத்து அருகின் எடைக்குப் பொன்னா? என்னால் இயலாத ஒன்றே எனத் தவித்துத் தன் செல்வம் பூராவையும் தராசில் ஒரு பக்கமும், அருகை மறுபக்கமும் வைத்தான். அப்போது அருகின் எடைக்கு அந்தச் செல்வம் வரவில்லை. தேவேந்திரன் தானே ஏறி உட்காரவே சமனாயிற்று, தராசு. இப்போது திகைத்தாள் ஆசிரியை. இருவரும் கெளண்டிய முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். கெளண்டின்ய முனிவரிடம் நடந்ததைச் சொன்ன ஆசிரியை வெட்கித் தலை குனிந்தாள். தேவேந்திரனைப் போகச் சொன்ன கெளண்டின்யர், ஆசிரியையிடம் இந்த அருகின் மதிப்பு உனக்குத் தெரியவில்லை என்று அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். தேவலோகத்தில் தேவகன்னிகள் நாட்டியமாடிய வேளையில் அங்கே வந்த யமதர்ம ராஜன் தன் மனைவியைப் பார்க்க எண்ணித் தன் தர்ம லோகத்துக்குச் செல்லும் வேளையில் அவனின் உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் ஒரு அசுரனாக மாறியது. அக்னியைவிடவும் அதிகமான வெப்பத்துடன் இருந்த அந்த அசுரன் “அனலாசுரன்” எனவே அழைக்கப் பட்டான். அக்னி தேவனுக்கே அவனை நெருங்க முடியாத அளவுக்குத் தகித்துக் கொண்டிருந்தான். யமதர்ம ராஜனைத் தவிர மற்றவர் அனலாசுரனின் கொடுமையால் தவித்தனர். அப்போது ஒரு அந்தணர் வடிவில் தோன்றிய விநாயகர், அவர்களைத் தேற்றி அனலாசுரனைத் தேடிப் போனார். தம் சுய உருவோடு விஸ்வரூபம் எடுத்த அவர், தன் துதிக்கையால் அந்த அனலாசுரனை அப்படியே எடுத்து விழுங்கினார். பேழை வயிற்றுக்குள் மூன்று உலகையும் அடக்கிய விநாயகரின் வயிற்றுக்குள் அனலாசுரன் போகவும் அனைவரும் வெப்பம் தாங்க முடியாமல் தவித்தனர். பிரம்மா விநாயகனின் மேனி குளிர்ந்தால் தான் இந்த வெப்பம் தணியும் என அனைவரையும் விநாயகரின் மேனி வெப்பத்தைக் குறைக்கச் சொல்லவே, அனைவரும் ஒவ்வொரு வழியில் விநாயகரின் வெப்பத்தைத் தணிவித்தார்கள். ஒருவர் பாலாக அபிஷேஹம் செய்ய, இன்னொருவர், சந்தனம், பன்னீர், தேன், தயிர் என அபிஷேஹம் செய்கின்றனர். அப்போது அங்கே வந்த ரிஷி, முனிவர்கள் விஷயம் தெரிந்து கொண்டு 21 அருகம்புற்களால் விநாயகரை அர்ச்சிக்கவே விநாயகர் மேனி குளிர்ந்தது. இந்த மூவுலகின் வெப்பமும் குறைந்தது. அன்று முதல் விநாயக வழிபாட்டில் அருகு முக்கிய இடத்தைப் பிடித்தது. வேறு பூக்களோ, மலர்களோ, இலைகளோ இல்லாவிட்டாலும் ஒரு சிறிய அருகே விநாயகரை மனம் மகிழ்விக்க வைக்கும். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c2/Thajavur_Ganesha.jpg 10 அத்தியாயம் 10 விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும். ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். “ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம் வரும் நாட்களில். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/6/64/Prambanan-ganesha.jpg 11 அத்தியாயம் 11 விநாயகரைப் பலரும் வணங்கித் துதித்து அவர் அருளைப் பெற்றிருக்கின்றனர். அதில் முக்கியமான சிலர் பற்றி இங்கே காண்போம்: கிருத வீர்யன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்தான். பலவிதமான யாகங்களும், பூஜைகளும் செய்தான். ஆனாலும் பலனில்லை. ஒரு நாள் அவன் கனவில், அவன் தந்தை தோன்றினார். அவனிடம் ஒரு சுவடிக் கட்டைக் கொடுத்து, “மகனே இதில் கண்ட விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு வா! அவர் அருளால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்!” என்று சொல்லி மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த மன்னன் கையில் நிஜமாகவே ஒரு சுவடிக் கட்டு இருக்கப் பண்டிதர்களிடம் அதைக் காட்டி விளக்கம் கேட்கின்றான் மன்னன். வேத பண்டிதர்கள் அந்த ஓலைச் சுவடியைப் படித்துவிட்டு வியப்புடன் அரசனிடம் சொன்னார்கள், “அரசே, இது விநாயகனை வேண்டிச் செய்ய வேண்டிய விரதம். இதை அங்காரக சதுர்த்தி விரதம் என்பார்கள். இந்த விரதத்தைப் பற்றிப் பிரம்ம தேவர் சொன்ன விஷயங்கள் சுவடியில் உள்ளன. நாங்கள் இது வரை கேட்டிராத விரதம் இது. இதை நன்கு படித்து அதன்படி நீங்கள் விரதம் இருக்க நாங்கள் உதவுகிறோம்.” என்றனர். பெளர்ணமி தினத்துக்குப் பின்னர் வரும் சதுர்த்தியைப் பொதுவாகச் சங்கடஹர சதுர்த்தி எனச் சொல்லுவதுண்டு. அந்தச் சதுர்த்தியானது அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க் கிழமைகளில் வந்ததால் அதை அங்காரகச் சதுர்த்தி என்பது உண்டு. அம்மாதிரி அங்காரகச் சதுர்த்தி அன்று மன்னன் விரதத்தைத் துவக்கினான். விக்னம் இல்லாமல் விரதம் அனுசரித்து, விநாயகர் உதவியுடன் விரதத்தை முடித்தான். அவன் மனைவியும் கருவுற்றாள். மன்னனின் மகிழ்ச்சி, பிறந்த குழந்தையைப் பார்த்ததும் ஓடிப் போனது. கைகளோ, கால்களோ இல்லாமல் பிறந்தது ஒரு ஆண் குழந்தை மன்னனுக்கு! கலங்கிய மன்னனும், ராணியும் விநாயகர் அருளினால் பிறந்த பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் குறையை விநாயகர் தான் தீர்த்து வைக்க வேண்டும் என முழு மனதுடன் பிரார்த்தித்தனர். மகனுக்குக் “கார்த்த வீர்யன்” எனப் பெயரிட்டு வளர்த்து, உரிய வயது வந்ததும், கணேச மூல மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மூல மந்திரத்தை ஜபித்துப் பன்னிரு ஆண்டுகள் விடாமல் தவம் இருந்தான் கணபதியை நோக்கிக் கார்த்தவீர்யன். விநாயகரும் அவன் முன் தோன்றினார். “கார்த்தவீர்யா! குறையுடன் பிறந்த நீ இவ்வாறு நிறைவாக எம்மைப் பூஜித்தாய்! உனக்கு என் ஆசிகளைத் தருவதோடு அல்லாமல் ஆயிரம் கை, கால்கள் தோன்றவும் அருளுகிறேன்!” என வரம் தந்தார். ஆயிரம் கரங்களும், மிகுந்த பலத்துடனும், யாராலும் வெல்ல முடியாத திறத்துடனும் இருந்ததால் அர்ஜுனனுக்கு நிகரானவன் எனப் பேசப் பட்டு அவன் பெயரே “கார்த்தவீர்யார்ஜுனன்” என அழைக்கப் பட்டது. தனக்குக் கால்களும், கைகளும் அளித்த விநாயகருக்குக் கார்த்த வீர்யாஜுனன், பிரவாள வனம் என்னும் வனத்தில் பவளத்தால் சிலை அமைத்து ஆலயம் கட்டி வழிபாடு செய்தான். [] https://www.flickr.com/photos/ramnaganat/8484645512 12 அத்தியாயம் 12 ஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. பொதுவாகத் தேவர்கள் அமுதம் உண்டவர்கள் என்பதால் நம்மைப் போல் பசி, தாகம் அவர்களுக்குக் கிடையாது என்று சொல்லுவதுண்டு அல்லவா? மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம். அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். சென்று முனிவரைப் பணிந்த தேவேந்திரனைப் பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனைக் கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார். “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று!” என்பது வள்ளுவன் வாக்கல்லவா? முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான். கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதைப் பயன்படுத்தி வந்தார். ஒரு நாள், காட்டுக்கு ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு. அந்தப் பரிவாரத்தின் அரசன் கணன் என்பவர். அவர் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா? அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் கணன் என்னும் மன்னன். மன்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான். “என்ன? நாடாளும் மன்னன் நான்! காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் போய் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா? என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி!” என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:”மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு! என்னால் கொடுக்க முடியாது!” என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனேயே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான். ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன? யோசனையில் ஆழ்ந்தார் முனிவர். அப்போது ஒரு அசரீரி எழுந்து, “முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான “கணபதி” ஒருவரே! அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்.” என்று சொன்னது, அந்தக் குரல். உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் போன்றவை செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் கபில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார். “விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்.” என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. விநாயகர் அன்று முதல் “சிந்தாமணி விநாயகர்” எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Ganesha_statue_from_Andra_Pradesh.jpg 13 அத்தியாயம் 13 விநாயகர் பற்றிய பல்வேறு புராணக் கதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் பிரம்மா விநாயகரைப் பூஜித்த வரலாறு வருமாறு: படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன் படைப்புக்களில் பெருமிதம் கொண்டு, தன்னாலேயே அனைத்தும் நடக்கின்றன என்று ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தோடு அவர் படைத்த படைப்புக்கள் பின்னமாகிக் கொண்டு வந்தன. தொடர்ந்து இம்மாதிரிப் பின்னமான படைப்புக்கள் ஏற்படவே பயந்து போனார் பிரம்மா. தன்மேல் என்ன தவறு என யோசித்த போது, அவர் மனதில் தோன்றியது விநாயகருக்கு வழிபாடு செய்வதை நிறுத்தியது தவறு என உணர்ந்தார். உடனேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விநாயகரை நினைத்துத் தியானத்தில் அமர்ந்து முழு மனதோடு அவரைத் தியானித்தார். பிழை உணர்ந்த பிரம்மாவைச் சோதிக்க விரும்பாத விநாயகர் அவர் முன் தோன்றி தமது சக்திகள் ஆன இச்சா சக்தி, ஞான சக்தி இரண்டையும் பிரம்மாவுக்கு அளித்து இவற்றின் உதவியோடு படைப்புத் தொழிலைச் செய்து வரும்படி ஆசி வழங்கினார். படைப்புத் தொழிலை ஆரம்பித்தார் பிரம்மா. விநாயகர் கொடுத்த இரு சக்திகளையும் இரு பெண்களாய் மாற்றி வளர்த்து வந்தார். கணபதியின் சக்திகள் கணபதியிடமே போய்ச் சேர வேண்டிய வேளை வந்து விட்டது என உணர்ந்த பிரம்மா, நாரதரை அனுப்பிக் கைலையில் சிவபெருமானிடமும், உமை அம்மையிடமும் விவரத்தைச் சொல்லி வருமாறு அனுப்பி வைத்தார். நாரதரும் கைலை சென்று அம்மை அப்பனிடம் விஷயத்தைத் தெரிவிக்க, மனம் மகிழ்ந்த அம்மை, அப்பன் இருவரும் சித்தி, புத்தி என்ற பெயருடன் வளர்ந்து வந்த அந்த இரு பெண்களையும் கணபதிக்கு மணம் முடிக்கலாம் என்று சொல்லவே, பிரம்மாவும் சந்தோஷத்துடன் உடன்பட்டார். அவ்வாறே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்த நன்னாளில், சித்தி, புத்தி என்னும் தம் சக்தி தேவிகள் இருவரையும் கணபதி திருமணம் செய்து கொண்டார். நம் தென்னாட்டைப் பொறுத்த வரை கணபதி பிரம்மச்சாரி. ஆனால் வடநாட்டில் அவர் திருமணம் செய்து கொண்ட குடும்பஸ்தர். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு பெண்ணும் உண்டு. அந்தக் கதை வரும் நாட்களில். இது போலவே விஷ்ணுவும் விநாயகரைப் பூஜித்தே மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களைச் சம்ஹாரம் செய்ததாகவும் வரலாறு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் காதுகளில் இருந்து தோன்றிய இரு அரக்கர்கள் மது, கைடபர் என்னும் இருவர். தோன்றிய கணத்திலேயே அசுர வடிவெடுத்து மூவுலகையும் அச்சுறுத்தி வந்தனர் இருவரும். நான்முகனிடம் சென்று முறையிட்ட தேவர்களை, மகாவிஷ்ணு ஒருவரே இவர்களை அழிக்கத் தகுதி படைத்தவர், ஆகவே அவரிடம் சென்று முறையிடுவோம் என பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் வந்து முறையிட்டார். நடந்ததை அறிந்த அனந்த சயனன், தேவர்களுக்கும், பிரம்மாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, மது, கைடபர்களுடன் போருக்குச் சென்றார். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் யுத்தம் செய்தும் மது, கைடபர்களை மகா விஷ்ணுவால் அழிக்க முடியவில்லை. வெற்றி. தோல்வி இன்றி நீடித்த இந்த யுத்தத்தில் ஏதோ குறை என உணர்ந்த மகாவிஷ்ணு தன் மாயையால் அவ்விடத்தை விட்டு மறைந்து கைலை சென்று ஈசனிடம் வேண்ட, ஈசனும் வேழ முகத்தானை மறந்தது தான் தாமதத்துக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டினார். ஈசன் சொன்னது போல் விநாயகரை பூஜிக்க பூமிக்கு வந்தார் மகாவிஷ்ணு. மூலப் பொருளை மனதில் வைத்து முழு மனதுடன் பூஜிக்க மகிழ்ந்த விநாயகர் அசுரர்களை அழிக்கும் பராக்ரமத்தை விஷ்ணுவுக்கு அளித்து அருளினார். பின்னர் களம் இறங்கிய எம்பெருமான் நாராயணன், மது, கைடபர்களை அழித்தான் என்கிறது விநாயக புராணம். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/9/96/13th_century_Ganesha_statue.jpg 14 அத்தியாயம் 14 விநாயகரின் திருவிளையாடல்களில் அநேகம் உண்டு. அவற்றில் சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் இருக்கின்றன. ராவணேஸ்வரன் ஒரு முறை கைலைக்கு வந்து, சிவ வழிபாடு முடிந்துத் திரும்பிச் செல்லும் வேளையில், சிவலிங்கத்தின் ஜோதி வடிவம் ஒன்றைத் தனக்கு இலங்கையில் வைத்துப் பூஜிக்க வேண்டி இறைவனை வேண்டிப் பெற்றுச் செல்கின்றான். ராவணனிடம் அதைக் கொடுத்துப் பூஜித்து வரும்படி சொன்ன ஈசன் அவனிடம், “இந்த லிங்கத்தை வழியில் எங்கும் வைத்துவிடாதே! அப்புறம் அது உன்னுடையது அல்ல!” என்று எச்சரித்து அனுப்புகிறார். ராவணனும் அவ்வாறே வழியில் எங்கும் லிங்கத்தை வைக்காமல் வேக வேகமாய் இலங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றான். ஆனால் தேவாதி தேவர்களுக்கு அந்த லிங்கம் பாரதத்திலேயே பிரதிஷ்டை செய்யப் படவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ராவணனோ சிறந்த சிவ பக்தன். அவனிடம் இருந்து அதைத் திரும்பப் பெற முடியாது. என்ன செய்யலாம்? யோசித்த அமரர் குலத்தவர் விநாயகனைப் பணிய, விநாயகனோ, அவனிடம் இருந்து அறவழியில் மட்டுமே லிங்கத்தைக் கேட்கலாமே அன்றி, பறிக்க முடியாது எனச் சொல்கின்றார். பின்னர் ஒரு சிறு பிள்ளை உருவத்தில் ராவணனின் வழியில் போய் நின்று கொண்டு அங்கும், இங்குமாய் அலைகின்றார். மாலை ஆயிற்று, மாலைக் கடன்கள் நிறைவேற்ற வேண்டிய நேரமும் வந்து விட்டது. மேலைக்கடலில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். ராவணன் மாலைக்கடனை எவ்விதம் முடிப்பது எனச் சிந்தித்தான். லிங்கத்தையோ கீழே வைக்க முடியாது. பின்னர் என்ன செய்வது? யோசனையுடன் பார்த்தவன் கண்களுக்குச் சிறு பிள்ளை ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. உடனேயே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு, “பிள்ளாய்! சற்று நேரம் இந்த லிங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிரு. கீழே வைத்து விடாதே. நான் என் மாலை நேரப் பூஜைகளையும், வழிபாடுகளையும் நிறைவேற்றி விட்டு வருகின்றேன். அதுவரை உன் கையிலேயே இந்த லிங்கம் இருக்கட்டும்,” என்று சொல்லுகிறான். பிள்ளையாய் வந்த பிள்ளையாரோ, “எனக்குக் கை வலிச்சால் நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்கவே, அதற்குள்ளாய் நான் வந்து விடுவேன், என்று சொல்லிய ராவணன், மாலைக் கடன்களை நிறைவேற்றக் கடலில் இறங்கி சந்தியாவந்தனம் போன்ற ஜபங்களை ஆரம்பிக்கின்றான். ஜபங்களில் ராவணன் ஆழ்ந்து போகும் வரை கரையில் நின்ற விநாயகனோ, ராவணன் இனி பாதியில் வர முடியாது என்பது நிச்சயம் ஆனதும், அந்த லிங்கத்தைக் கீழே வைத்து விட்டு, “எனக்குக் கை வலிக்கிறது, நான் போறேன்’ என்று கூவிக் கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். கோபம் கொண்ட ராவணன், பாதியிலேயே ஓடி வந்து, அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கொண்டே வந்து லிங்கத்தை எடுக்கக் கீழே குனிந்தால் ஆஹா, லிங்கம் அப்படியே பிரதிஷ்டை ஆகிவிட்டதே? இது என்ன ஆச்சரியம்? திகைத்தான் ராவணன். சுற்றும், முற்றும் பார்த்தான், விநாயகர் தன் சுய உருவில் காட்சி கொடுத்தார், “ராவணேஸ்வரா, இந்த லிங்கம் இங்கே மேலைக் கடலில், “திருக்கோகர்ணம்” என்ற பெயரில் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். உனக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. நீ சிவ பூஜையைத் தொடர்ந்து செய்து வா. இது இவ்வாறு இருக்க வேண்டும் என்பது நியமம். ஆகவே கலங்காதே!” எனச் சொல்ல மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்த ராவணன், லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டு இலங்கை நோக்கிப் போனான். இந்தக் கோயில் கர்நாடகம், கோவா எல்லையில் மேலைக்கடலில்(அரபிக்கடல்) கடலைப் பார்த்தவண்ணமாய் உள்ளது. கோயிலுக்குத் திருக் கோகர்ணம் என்றே பெயர் இன்னமும் வழங்குகிறது. – [] https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/InsideWallPic_%2810%29.jpg 15 அத்தியாயம் 15 குழ ந்தைகளான உங்களுக்கெல்லாம் ஔவைப் பாட்டியைத் தெரியாமல் இருக்காது இல்லையா? அந்த ஒளவைப் பாட்டி சிறு வயதிலேயே அவள் தாய், தகப்பனால் கைவிடப் பட்டு வேறு ஒருவர் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து வந்த பெண் ஆவார். அவர் சிறு வயதில் இருந்தே விநாயகரை வழிபட்டு அவர் மேல் மிக்க பக்தி பூண்டு வழிபாடுகள் நடத்தி வந்தார். திருமணத்தில் அவருக்கு ஆசையே இல்லை. என்றாலும் பெற்றோர் வளர்ப்பாக இருந்தாலும் தங்கள் மகளுக்கு முறையாகத் திருமணம் செய்து பார்க்கவே ஆசைப் பட்டனர். ஆகவே ஒரு பையனைப் பார்த்து நிச்சயமும் செய்தனார். ஆனால் ஒளவைக்கோ திருமணத்தில் நாட்டமே இல்லை. என்ன செய்வது? தன் ஊரில் இருந்த குளத்தங்கரைப் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டார் ஒளவைப் பாட்டி. ஆனால் அப்போது அவர் பாட்டி அல்ல. இளம்பெண் தான். அந்த இளம்பெண் இவ்வாறு வேண்டித் துதித்ததும் அவளுக்கு உண்மையிலேயே திருமணத்தில் நாட்டம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பிள்ளையார், அவளை அந்தச் சிறு வயதிலேயே கிழவி ஆக்கினார். இவ்விதம் சிறு வயதிலேயே கிழவி ஆன அந்தப் பெண்தான் ஒளவைப் பாட்டி என்று நம் அனைவராலும் அழைக்கப் படுகின்றாள். இந்த ஒளவைப் பாட்டி விநாயகர் மேல் பல பாடல்கள் இயற்றி இருந்தாலும், இவரின் விநாயகர் அகவல் என்னும் பாடல் தொகுப்பு மிகுந்த பிரசித்தி அடைந்த ஒன்று. இந்தப் பாடலை அவர் எப்போது இயற்றினார் தெரியுமா? ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் கைலை செல்ல இறைவனை வேண்ட, இறைவனும் அவருக்கு யானனயை வாகனமாய் அளித்து அருளி, விரைவில் கைலை வருமாறு பணிக்கின்றார். அவர் இனிய நண்பர் ஆன சேரமான் பெருமாள் நாயனார் என்னும் அரசரும் இதை அறிந்து தம் குதிரை மேல் ஏறிக் கைலைப் பயணத்தைச் சுந்தரமூர்த்தி நாயன்மாருடன் தொடங்குகின்றார். செல்லும் வழியில் திருக்கோவலூர் என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஒளவைப் பாட்டி விநாயகருக்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும், ஒளவையிடம் தாங்கள் திருக்கைலை செல்வதாய்த் தெரிவிக்க ஒளவைப் பாட்டியும், சரி என்று சொல்லிவிட்டுத் தன் வழிபாட்டைத் தொடர்ந்தாள். வழிபாடு நடக்கும்போது ஒளவைப் பாட்டி, “சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட” என்று ஆரம்பிக்கும் விநாயகர் அகவலைப் பாடித் துதிக்கின்றார். இந்தப் பாடல் தொகுப்பானது யோக சாஸ்திரங்களைச் சொல்லித் தருவது. இதில் யோகத்தின் ஆரம்பமான மூலாதாரத்தில் குடி இருக்கும் கணபதியைத் துதிப்பதில் ஆரம்பித்துக் கடைசியில் சகஸ்ராரம் என்னும் யோகசித்தியை அடையும் விதம் குறித்துப் பாடியுள்ளார். “சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி” என்று பாடி அந்தச் சதாசிவனின் உள்ளொளியைக் காட்டித் தந்தது பற்றிப் பாடி இருக்கின்றார். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகர் ஒளவைப்பாட்டியைத் தன் துதிக்கையால் ஒரே தூக்காகத் தூக்கிக் கைலையில் உட்கார்த்தி வைத்துவிட்டார். ஒளவைப் பாட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. அப்போது தான் மெதுவாக அங்கே வந்தனர் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும். இருவருமே ஒளவையைப் பார்த்துத் திகைத்தனர். என்ன இது? நாம் பார்க்கும்போது கிழவி கிளம்பக் கூட இல்லையே? இப்போ இங்கே எப்படி என்று கேட்க ஒளவை பதில் சொல்கின்றாள்: “மதுர மொழி நல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி அதிர நடந்தீம் யானனயும் தேரும் அதன்பின் வருங் குதிரையுங் காதங் கிழவியும் காதங் குல மன்னரே!” என்று தான் மதுரமான மொழியுடைய உமையம்மையின் புதல்வன் ஆன விநாயகனைத் துதித்து வந்ததால் அவன் அருளாலே, யானைக்கும், குதிரைக்கும் முன்னாலேயே கைலை வந்தடைய முடிந்தது என்று சொல்கின்றார். விநாயக வழிபாட்டுக்குக் கைமேல் பலன் கிடைக்கிறது அல்லவா? [] https://www.flickr.com/photos/ramnaganat/6309399884 16 அத்தியாயம் 16 ஒரு முறை சிவ கணங்களில் ஒருவர் மகாவிஷ்ணுவின் சங்கை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். செய்வதறியாது திகைத்த விஷ்ணு, சிவனிடம் சென்று முறையிடச் சென்றார். அப்போது தன் சங்கின் ஒலி அவருக்குக் கேட்டது. சங்கொலி கேட்ட திசை நோக்கிச் சென்றார் அவர். சிவ கணங்களில் ஒருவர் அந்தச் சங்கை ஊதிக் கொண்டு இருப்பதைக் கவனித்தார். உடனே சிவனிடம் சென்று முறையிட, அவரும் விநாயகரைத் துதித்து வேண்டச் சொல்ல, விஷ்ணுவும் அவ்வாறே விநாயகரைத் துதிக்கின்றார். விநாயகர் அந்தச் சங்கை சிவகணத்திடம் இருந்து வாங்கித் தான் ஊதி விட்டு, விஷ்ணுவிடம் கொடுக்கின்றார். இந்தச் சங்கு ஊதும் கோலத்தில் ஆன விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கின்றது. இந்த விநாயகருக்கு வேண்டிக் கொண்டால், சிறு குழந்தைகளுக்கு வரும், “பாலாரிஷ்டம்” என்னும் நோய் தீரும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. இந்த விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலின் பிராகாரத்தில் அர்த்தஜாம சுந்தரர் சந்நிதிக்கு அருகே காணப்படுகின்றது. காக்கும் கடவுள் ஆயிற்றே விஷ்ணு?? அவருக்குக் கூடவா இப்படி விநாயகரைத் துதிக்க வேண்டி இருந்தது என்று தோன்றுகிறது அல்லவா? விஷ்ணுவுக்கு மட்டுமல்ல. விநாயகரின் தந்தை ஆன சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனே விநாயகரைத் துதிக்காமல் சென்றதால் கஷ்டப் பட்டான். ஏற்கெனவே பார்த்திருப்போம் என்றாலும், திரும்பப் பார்ப்போமா?? அருணகிரிநாதர் தன் திருப்புகழில் முதலில் பாடிய விநாயகர் வாழ்த்தில் கீழ்க்கண்ட வரிகளின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கெல்லாம்??? “முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா” என்று சொல்கின்றார் அருணகிரியார். முப்புரத்தையும் எரித்து, திரிபுர சம்ஹாரம் செய்ய சிவன் தேரில் ஏறிவிட்டாராம். அதுவும் எப்படி???? தேவர்கள் அனைவரும் ஆயுதங்களாகவும், வாகனங்களாகவும் மாறி நிற்க, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாக அந்த வில்லில் கட்டி, அந்த ஸ்ரீமந்நாராயணனையே அம்பாக மாற்றிக் கொண்டு, சூரிய, சந்திரத் தேரிலே புறப்பட்டாராம் ஈச்வரன். ஆனால் கிளம்பிய தேர் நின்று விட்டதாம். ஏன்? அச்சு முறிந்து விட்டது. அதனால் தேர் நின்றுவிட்டது. அப்போது தான் புரிந்ததாம் பரமேஸ்வரனுக்கு. விநாயகனை வழிபடாமல் தான் கிளம்பியதும், தேவர்கள் அனைவருமே விநாயக வழிபாடு செய்யாததும் புரிந்ததாம். உடனேயே விநாயகரை வழிபட, தேர் அச்சு மீண்டும் பொருத்தப் பட்டு சிவனார் தேரிலேறித் தன்னுடைய அட்டஹாசம் என்னும் சிரிப்பால் திரிபுர சம்ஹாரம் செய்தாராம். இந்தத் தேர் முறிந்த இடம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள அச்சிறுபாக்கம் என்னும் சிறு ஊர் ஆகும் என்றும் சொல்கின்றனர். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9a/’Seated_Ganesha’,_1200-1300,_India,_Karnataka_state,_schist,_Asian_Art_Museum_of_San_Francisco.JPG 17 அத்தியாயம் 17 இது தவிர, பாற்கடலைக் கடையும்போதும், தேவர்களோ, அசுரர்களோ விநாயக வழிபாடு இல்லாமலேயே கடைய ஆரம்பித்தனர். வாசுகி பாம்பு தான் கயிறு, மேரு மலை, மத்து. மேரு மலையில் வாசுகியைக் கட்டி இரு பக்கமும் இழுக்கின்றனர். பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவேண்டியதற்குப் பதிலாக வாசுகி கக்கும் விஷம் தான் வருகின்றது. அந்தச் சூடு தாங்காமல் தேவாசுரர்கள் அலறுகின்றனர். வெண்மையாக அன்று வரை இருந்த மகாவிஷ்ணுவோ, இந்த விஷக் காற்றுப் பட்டதும் நீலமாகிவிட்டார். திடீரென ஒரு பெரும் சத்தம்!! வாசுகியால் முடியவில்லை, கயிறு தளர, மேரு மலை சரியத் தொடங்கியது. கலங்கினர் அனைவரும். அப்போது தோன்றியதாம் விநாயகரை வழிபடாமல் தொடங்கி விட்டோம் எனத் தேவேந்திரனுக்கு. உடனே விநாயகரை வழிபட எண்ணினான். ஆனால் திரு உருவம் கிடைக்கவில்லையே?? கடல் நுரையையே விநாயகராய்ப் பிரதிஷ்டை பண்ணினான். அந்தக் கடல் நுரையிலே விக்னேஸ்வரனை ஆவாஹனம் செய்து பூஜை, வழிபாடுகள் செய்ய வாசுகியும் மீண்டும் தயார் ஆனான். பொங்கிய ஆலகாலத்தையும் விஷ்ணு, பரமசிவனுக்குக் கொடுக்கச் சொல்ல, அந்த விஷத்தை ஆலகால சுந்தரர் ஏந்தி வந்து சிவனிடம் கொடுக்க சிவன் அதை ஒரே வாயாக முழுங்க, விஷம் உள்ளே போனால் அண்ட சராசரங்களுக்கும் ஆபத்து நேரிடும் என உணர்ந்த அம்மையோ, சிவன் கழுத்தைத் தன் திருக்கரங்களால் பிடிக்க, சிவன் “திருநீலகண்டன்” ஆகி ஆசிகள் புரிய, பாற்கடல் கடையப்பட்டு, அமிர்தம் கிடைத்தது. கடல் நுரையால் ஆன விநாயகர் திரு உருவம் கும்பகோணம் சுவாமி மலைக்கு அருகே திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இன்றும் திருவலஞ்சுழியில் விநாயகரைக் கடல் நுரை உருவில் காணலாம். விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்,. இன்னும் தொடரும். மாகத ரிஷியின் மகன் கஜாசுரன் என்பவன். அவன் ரிஷி புத்திரனாக இருந்தாலும், அவன் தோழர்கள் அனைவருமே அரக்கர்களாக இருந்தமையால் அவனுக்கும் அரக்க குணமே மேலோங்கி இருந்தது. அனைவரையும் துன்புறுத்தி வந்தான். முக்கியமாய் அவனைப் பார்ப்பவர்கள் அனைவருமே தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போட்டுக் கொண்டு வணங்க வேண்டும் என ஆணையே பிறப்பித்திருந்தான். இந்த கஜாசுரன் ஒரு முறை விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, தன் வலிமையைக் காட்டுவதற்காக அண்டச் சுவர் ஒன்றை இடித்துத் தள்ள, ஆகாய கங்கை பொத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தனை வெள்ளமும் அனைத்து உலகங்களையும் மூழ்க அடிக்க, உலகே ஜலப் பிரளயத்தில் மிதந்தது. அண்ட சராசரமும் வெள்ளத்தில் மூழ்க அனைவரும் கதி கலங்கினார்கள். என்ன செய்வது எனத் திகைத்தனர். பூலோகத்தில் ஒரே ஒரு இடம் மட்டுமே மூழ்காமல் இருக்கவே, அனைவரும் அதிசயத்துடன் அங்கே வந்து ஒதுங்கலாம் என நினைத்து வந்து பார்த்தனர். அங்கே விநாயகர் வீற்றிருந்தார். உடனேயே தேவர்கள் அனைவரும், விநாயகரைத் துதித்து வணங்க, விநாயகரும் தம் துதிக்கையால் அனைத்துப் பிரளய நீரையும் உறிஞ்ச, வெள்ளம் வடிந்தது. தேவர்கள் கஜாசுரனைப் பற்றிச் சொல்ல விநாயகர் அவனுடன் போரிட்டு வென்று, அவனைத் தன் வாகனமாக மாற்றிக் கொண்டார். இந்த விநாயகர் “கலங்காமல் காத்த விநாயகர்” என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் இடம் பெற்று அருள் பாலித்து வருகின்றார். இன்னும் விநாயகரால் காவிரி நதி பெருக்கெடுத்து ஓடிய வரலாற்றை அடுத்துக் காணலாம். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/6/65/Ganesh_Festival.jpg 18 அத்தியாயம் 18 பிரம்மாவின் மானசபுத்திரியான விஷ்ணுமாயா என்பவள், தன்னுடைய பெண் என்னும் அற்புத, உன்னத சக்தியால், பூமிக்கும், பூமியில் வாழ்பவர்களுக்கும் ஏதாவது தொண்டு செய்ய ஆசைப் பட்டாள். பிரம்மா அவளுக்கு அவள் அகத்தியரின் மனைவியாகப் போய் அவ்வாறு சேவை செய்யும் நேரம் வரும் எனச் சொன்னார். அதே சமயம், அகத்தியரும், கவேர மன்னனும் (சிலர் கவேர ரிஷி என்றும் சொல்வார்கள்) பூமியில் வாழும் மக்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப் பட்டதால் லோபாமுத்திரைக்கு, நீரின் வடிவமும், மனித வடிவும் சேர்த்தே தரப் பட்டது. ஒரே சமயத்தில் மோட்சத்தை வேண்டித் தவம் இயற்ற, பிரம்மாவும் அவர்களிடம் முறையே, கவேர மன்னனும், அகத்தியரும் இல்வாழ்வைப் பூரணமாக அனுபவித்து வந்ததுமே மோட்சம் கிட்டும் எனச் சொல்லி விடுகின்றார். அதன்படி கவேர மன்னனுக்கு ஒரு மகள் பிறக்கின்றாள். அழகென்றால் அழகு! அறிவென்றால் அறிவு! முகத்திலோ பரிபூரண ஒளி பிரகாசிக்கின்றது. இப்படிப் பட்ட பெண்ணை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது? கவேர மன்னன் யோசனையிலும், கவலையிலும் ஆழத் துவங்க, மன்னனுக்கு அசரீரியாகப் பதில் கிடைக்கின்றது, அகத்தியருக்குப் பெண்ணைக் கொடுக்கும்படியாக. என்ன, அந்தக் குள்ள ரிஷிக்கா, இத்தனை அழகான இளம்பெண்? அகத்தியருக்கும், லோபாமுத்திரைக்கும் திருமணம் நடந்தது. லோபாமுத்திரையுடன் வழி நடந்தார் அகத்தியர். மலைகளிலும், காடுகளிலும் நடக்கவேண்டி வந்தது. ஆகவே லோபாமுத்திரையால் முடியாது எனக் கருதிய அகத்தியர் அவளின் நீர் வடிவைத் தன் கமண்டலத்திற்குள் அடைத்து எடுத்துக் கொள்கின்றார். உடல் வடிவில் லோபாமுத்திரை பின் தொடருகின்றாள். ஒரு இடத்தில் அகத்தியர் தவம் செய்யவும், மாலைக் கடன்களை முடிக்கவும் இடம் தேர்ந்தெடுத்து அமர, அப்போது அங்கே அர்ஜுனன் மிகுந்த தாகத்தோடு வருகின்றான். “நீர், நீர், எனக் கேட்கின்றான். அகத்தியரோ, தன் கமண்டலத்தைத் தர, அதை ஆவலுடன் எடுத்த அர்ஜுனன் அது காலியாக இருப்பது கண்டு திகைக்கின்றான் அகத்தியர் புன்முறுவல் பூக்கின்றார். மீண்டும் நடக்கின்றார் அகத்தியர். மீண்டும் ஒரு மலைப்பாங்கான இடம் வருகின்றது. இந்த இடம் நதிவடிவான லோபாமுத்திரைக்குத் தக்க இடம் என நினைக்கின்றனர் அனைவரும். ஆனால் அகத்தியரோ அப்படி நினைத்தாரா எனப் புரியவில்லை. தன் கமண்டலத்தை ஓரமாய் வைத்துவிட்டுத் தன் தியான வேலைகளில் மூழ்குகின்றார் அகத்தியர். அப்போது ஒரு சிறு அந்தண இளைஞன் அகத்தியரின் கமண்டலத்தை எடுக்கின்றான். அதனுள் தான் அடைத்து வைத்திருக்கும் லோபாமுத்திரையின் நீர்வடிவுக்கு ஏதேனும் துன்பம் நேரிடுமோ என அஞ்சிய அகத்தியர் அந்தப் பையனைத் தடுக்க வருகின்றார். கமண்டலத்தைத் தூக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் ஓட, அகத்தியர் துரத்த, கடைசியில் அந்தச் சிறுவன் கமண்டலத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடுகின்றான். நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்கே தும்பிக்கை நாதன் அபய கரத்துடன் காட்சி அளிக்கின்றார் [https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e3/InsideWallPic_(4).jpg] https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e3/InsideWallPic_%284%29.jpg 19 அத்தியாயம் 19 பலரும் சுக்லபட்ச சதுர்த்திக்கும், சங்கட சதுர்த்தி விரதம் இருக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கும் உள்ள முக்கியத்துவம் பற்றிக் கேட்டிருக்கின்றார்கள். பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது. அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் எழுதப் படாத விதி. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேய வேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு. ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது. இதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில் இருந்து பதினைந்தாம் நாள் வரும் ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று) விரதம் பூர்த்தி ஆகும். இது மாதிரியும் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும். இது கஷ்டம் என்று நினைப்பவர்கள் மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் விநாயக சதுர்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே. உடல்நலக் கேடு உள்ளவர்களால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்களையும் விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ ஒன்றும் சொல்லப் போவதில்லை. உடல் பலமும், மன பலமும் உள்ளவர்கள் மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம். இப்போ இந்த விநாயக சதுர்த்தி ஒரு சமூகப் பண்டிகையாக மாறியது எப்போ என்றால் 1893 லோகமான்ய திலகரால் ஆரம்பிக்கப் பட்டது. அன்று வரையிலும் வீடுகளில் மட்டுமே வணங்கப் பட்டு வீட்டின் கிணற்று நீரிலோ, அக்கம்பக்கம் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கப் பட்ட விநாயகரை சமுதாய ஒற்றுமைக்காகவும், அனைத்து விழாக்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதி, இன வேறுபாடு இல்லாமல் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்டது. மேலும் திலகரின் காலத்தில் ஆங்கிலேயரால் கையாளப் பட்ட பிரித்தாளும் கலை மெல்ல மெல்ல வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. இது அனைத்தையும் முறியடிக்கவும், பக்தி மார்க்கத்தின் மூலம் மக்களை எழுச்சி பெறச் செய்து சுதந்திர வேள்வியில் பங்கு பெறச் செய்யவுமே இது அவரால் ஏற்படுத்தப் பட்டது. மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புனே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவி, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, இன்று மகாராஷ்டிரத் தலை நகர் ஆன மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எனினும், நம் தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினரே வீதியில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்திவிட்டு, அந்த விநாயகரை அன்றே நீர்நிலைகளில் கரைத்து வந்தனர். ஊடகங்களின் விளைவுகளாலும், மக்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்த காரணத்தாலும் இன்று விநாயக சதுர்த்தி நம் தமிழ்நாட்டிலும் பெருமளவில் சமூக விழாவாய்க் கொண்டாடப் படுகின்றது. மகாராஷ்டிரத்தில் 10 தினங்கள் நடைபெறும் இந்த விழா இங்கே 5, 7, 9 நாட்களில் ஒவ்வொரு குழுவினர் ஒவ்வொரு நாள் என்று அரசு அறிவிப்புக்கு ஏற்ப விழாவை முடிக்கின்றனர். இந்த விநாயகர் பரவலாய் நம் நாடுமுழுதுமே வணங்கப்படும் ஒரு தெய்வமாய் இருந்து வருகின்றார். எவ்வளவு சிறிய கிராமமாய் இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ, அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகர் உட்கார்ந்திருப்பார். இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளில் விநாயகருக்கெனத் தனிக் கோயில்கள் உள்ளன. அவற்றில் நேபாளத்திலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், யு.எஸ்.ஸிலும் குறிப்பிடத் தக்க வகையில் அமைந்துள்ளன. இத்துடன் விநாயகர் விஸர்ஜனம் பெறுகின்றார். விநாயகர் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. [] https://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Ganesh_%28musée_d’art_asiatique_de_Berlin%29.jpg 20 அத்தியாயம் 20 யாதவகுலத் தலைவர்களில் ஒருவன் ஆன சத்ராஜித் கொஞ்சம் செல்வமும், வளமும் பெற்றவன். அவனிடம் இருந்த செல்வத்துக்கு ஈடு இணை இல்லை என சக யாதவர்களால் பேசப் பட்டவன். அவன் தினமும் சூரியனை வணங்கி வரும் வழக்கத்தை உடையவன். ஒரு முறை சூரிய பகவான் அவன் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்து அவனுக்குக் கிடைத்தற்கரிய ஒப்பற்ற மணி ஒன்றைக் கொடுத்தான். அது ச்யமந்தக மணி எனப் பெயர் பெற்றது. கோடி சூரியப் பிரகாசம் உள்ள அந்த மணி இருக்கும் இடத்தில் தினம் தினம் தங்கத்தையும், மற்ற நவரத்தினங்களையும் கொடுக்கும் பேறு பெற்றது. சத்ராஜித் இதனால் மீண்டும் மிகுந்த செல்வந்தன் ஆனதோடு இந்த மணியையும் பாதுகாத்து வந்தான். மணியை ஒரு தனி அறையில் வைத்து பாதுகாவலர்களோடு அதை மிகப் பத்திரமாயும் ரகசியமாயும் வைத்திருந்தான். ச்யமந்தகமணி பற்றியும், அதன் தகுதி பற்றியும் பரவலாய் அனைவரும் அறிந்திருந்தாலும், சத்ராஜித்தை மீறி அதை யாராலும் கொண்டு செல்ல முடியவில்லை. சத்ராஜித்திற்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் பெயர் சத்யபாமா. அவளை யாதவர்களிலே மற்றொரு குலம் ஆன வ்ருஷ்ணி என்னும் குலத்தைச் சார்ந்த சாத்யகா என்பவனின் பிள்ளையான யுயுதானா சாத்யகி என்பவனுக்கு மணமுடிக்கக் கேட்டபோது சாத்யகா மறுத்துவிட்டான். சத்ராஜித்தி செல்வத்தை உத்தேசித்தும், அவனுடைய பெண்ணான சத்யபாமா செல்வத்திலே பிறந்து வளர்ந்தவள், தன் பிள்ளைக்குச் சரியாக வராது என்பதாலும் நிராகரித்தான். ஆனால் சத்ராஜித்தோ சாத்யகி தன்னை அவமானம் செய்ததாகவே கருதி வந்தான். இந்நிலையில் ஜராசந்தனின் தொந்திரவு தாங்காத யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உதவியோடு துவாரகைக்கு வந்து அங்கே நகரத்தை நிர்மாணித்து வாழ ஆரம்பித்தனர். அவர்களின் அப்போதைய தலைவன் ஆன உக்ரசேனனுக்குப் பணம் தேவைப் பட்டது. உக்ரசேனர் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஒரு வகையில் தாத்தாவும் ஆவார். ஆகையால் தன் பாட்டனுக்காகவும், தங்கள் குல நன்மைக்காகவும் வேண்டி சத்ராஜித்திடம் அந்த ச்யமந்தக மணியை உக்ரசேனரிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணர் வேண்டினார். ஆனால் சத்ராஜித் மறுத்தான். [] https://www.flickr.com/photos/neychurluvr/4090335616 21 அத்தியாயம் 21 சூரியனைக் குறித்துத் தான் செய்த தவம் மூலம் தனக்குக் கிடைத்த ஒப்பற்ற மணியான ச்யமந்தகத்தைக் கிருஷ்ணர் கேட்டது சத்ராஜித்திற்குப் பிடிக்கவில்லை. என்னதான் கிருஷ்ணர் மணியைத் தனக்காகக் கேட்கவில்லை என்றாலும், சத்ராஜித் அந்த மணியைக் கிருஷ்ணர் தனக்கென ஆசைப்பட்டுக் கேட்டதாகவே நினைத்தான். அந்த மணியைத் தன் தம்பியான பிரசேனனிடம் கொடுத்து வைத்தான். பிரசேனன் ஒரு நாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இந்த ச்யமந்தக மணியை வைத்திருப்பவர் அனுஷ்டிக்க வேண்டிய ஆசார நியமங்களைக் காட்டில் பிரசேனனால் கடைபிடிக்க முடியவில்லை. அவனுடன் கூட வந்தவர்களில் கிருஷ்ணரும் ஒருவர் என ஸ்காந்த புராணம் சொல்லுகின்றது. நம் கதையும் அதை ஒட்டியே போகும். கூட வந்த கிருஷ்ணரையும் மற்றவர்களையும் பிரசேனன் பிரிந்துவிடுகின்றான். தனியாய்ச் சென்ற பிரசேனன் ஒரு வலிமை வாய்ந்த சிங்கத்திடம் மாட்டிக் கொள்ள, சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு மணியை ஏதோ உண்ணும் பொருளென நினைத்து வாயில் கவ்விக் கொண்டு சென்றது. காட்டில் உள்ளே ஒரு மலைக்குகையில் நம்ம ராமாயணத்து ஜாம்பவான் தன் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருந்தார். அவர் இங்கே எங்கே வந்தார் என்பதை அப்புறம் தனியாச் சொல்றேன். இந்த ஜாம்பவானுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள், ஜாம்பவதி என்ற பெயரில். அந்தப் பெண் பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர் ஜாம்பவானுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸுகுமாரன் என்ற பெயரிட்டு அந்தக் குழந்தையை மிக மிக ஆசையுடன் வளர்த்து வந்தார் ஜாம்பவான். ஜாம்பவான் காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது வாயில் ஒளிவீசும் மணியுடன் வந்து கொண்டிருந்த சிங்கத்தைப் பார்த்தார். உடனேயே மிகுந்த பலசாலியான அவர் அந்தச் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மணியைத் தான் எடுத்துக் கொண்டார். அருமையாகப் பிறந்திருக்கும் தன்னுடைய ஆண் குழந்தைக்கு இந்த அபூர்வமான ஒளி வீசும் மணி ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கும் என நினைத்த ஜாம்பவான் ச்யமந்தக மணியைத் தன் அருமைப் பிள்ளையின் தொட்டிலில் மேலே கட்டி வைத்தார். தொட்டிலுக்குள்ளே இருக்கும் குழந்தைக் கரடி அந்தப் பொம்மையின் ஒளியைப் பார்த்துக் குதூகலித்துக் கூக்குரலிட்டுக் கொண்டு விளையாடியது. ஜாம்பவதிக்கும் தன் தம்பியின் விளையாட்டைப் பார்த்துக் குதூகலம் உண்டாக, அவளும் சந்தோஷம் அடைகின்றாள். இது இவ்வாறிருக்க, இங்கே காட்டினுள் வெகு தூரம் சென்ற கிருஷ்ணரும் மற்றவர்களும் பிரசேனனை எங்கும் காணாமல் தேடினார்கள். சூரிய அஸ்தமனமும் ஆகிவிட்டது. காட்டில் மெல்லிய இருள் கவ்வத் தொடங்கியது. தற்செயலாக வானத்தைப் பார்த்த கிருஷ்ணர் கண்களில் பிறைச்சந்திரன் தென்பட்டான். அன்று நாலாம்பிறை நாளாக இருந்தது. நாலாம் பிறைச் சந்திரன் தான் பளிச்செனக் கண்ணில் தெரியும். அதே போல் கிருஷ்ணர் கண்ணிலும் பட்டது. ஆகா, நிலவு தோன்றிவிட்டதே, இனி இருட்டி விடும், காட்டில் இருக்க முடியாது என நினைத்த கிருஷ்ணர் த்வாரகைக்குத் திரும்பினார். கிருஷ்ணருடன் ப்ரசேனன் வராதது கண்ட சத்ராஜித்திற்குச் சந்தேகம் வருகின்றது. தம்பியைத் தேட ஆட்களை அனுப்ப, பிரசேனன் இறந்து கிடப்பது கண்டு சத்ராஜித் கோபம் அடைந்தான். ச்யமந்தக மணியை அடைய கிருஷ்ணர் செய்த வேலைதான் இது என நினைத்தான் சத்ராஜித். ஆட்களை அனுப்பியோ, அல்லது கிருஷ்ணரே தந்திரமாகவோ பிரசேனனைக் கொன்றுவிட்டு ச்யமந்தக மணியை அபகரித்துக் கொண்டதாய் த்வாரகை முழுதும் தென்படுவோரிடம் எல்லாம் சத்ராஜித் சொல்ல ஆரம்பித்தான். மெல்ல, மெல்ல நாட்கள் கடக்கக் கடக்க, சிலர் நம்பவும் ஆரம்பித்தனர். கிருஷ்ணர் மனம் சஞ்சலம் அடைந்தது. ஆஹா, தான் ஒரு பாவமும் அறியாதிருக்கத் தன் மேல் இப்படி அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றார்களே என மனம் வருந்திய கிருஷ்ணர் சத்ராஜித்தின் ஆட்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றார். பிரசேனன் இறந்து கிடந்த இடத்திலிருந்து தொடர்ந்து செல்ல ஆட்களையும் பணித்துத் தாமும் உடன் சென்றார். சிறிது தூரம் வரையிலும் ஒரு மிருகத்தின் காலடி ரத்தத்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்டது. சிறிது தூரத்திற்குப் பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் போனதும் சிங்கத்தின் செத்த உடலும் கிடைத்தது. சிங்கத்தின் உடல் கிடந்த இடத்திலே ஒரு பெரிய சண்டை நடந்திருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. மற்றோர் மிருகத்தின் காலடியும் தென்பட்டது. சிங்கத்தைவிடக் காலடி பெரியதாய் இருந்ததால் கரடியாகவோ, அல்லது வேறே ஏதோ மிருகமாகவோ இருக்கலாம் என நினைத்தார்கள். அந்தக் காலடிச் சுவட்டைப் பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு குகையில் கொண்டுவிட்டது. குகைக்குள் எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டு. சத்ராஜித்தின் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த மாயக் கிருஷ்ணன் ஏதோ தந்திரம் செய்து இருட்டுக் குகையில் நம்மை எல்லாம் தள்ளப் பார்க்கின்றானே? நாம் இந்த ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவர்களாய் உள்ளே வர மறுத்தனர். கிருஷ்ணரும் சரி எனச் சம்மதித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே செல்கின்றார். கிருஷ்ணரின் உடலின் பிரகாசமே வெளிச்சமாய்த் தெரிய கிருஷ்ணர் குகைக்குள்ளே நுழைந்தார். கிருஷ்ணர் குகையினுள் நுழைந்தபோது ஜாம்பவதி தன் தம்பியான சுகுமாரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். அதை ஒரு ஸ்லோகமாய்க் கீழே காணலாம். ஸிம்ஹ: ப்ரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமார்க மா ரோதீ தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:” இந்த ஸ்லோகம் ஸ்காந்தத்தில் காணப் படுவதாய்த் தெரிய வருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், “சிங்கமானது ப்ரஸேநனைக் கொன்றது. அந்தச் சிங்கத்தை ஜாம்பவான் கொன்றார். ஸ்யமந்தகமணி இப்போது உனக்குத் தான் ஸுகுமாரனாகிய என் அருமைக் குழந்தையே, நீ இனி அழாதே!” என்று அர்த்தம் தொனிக்கும்படிப் பாடிக் கொண்டிருந்தாள் ஜாம்பவதி. கிருஷ்ணருக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது. உள்ளே நுழைந்தார். கிருஷ்ணரைக் கண்டதுமே ஜாம்பவதிக்கு அவர் மேல் இனம் புரியாத மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. என்றாலும் யாராலும் நுழைய முடியாத இந்தக் காட்டுக் குகைக்குள்ளே இவர் வந்தது எப்படி? இவர் யாராயிருக்கும்? தந்தையான ஜாம்பவான் கண்டால் இவரை என்ன செய்வாரோ என எண்ணி அஞ்சினாள். ஜாம்பவதி கிருஷ்ணரிடம் அவர் யார் என்றும் என்ன விஷயமாய் வந்திருக்கின்றார் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஆஹா, ஸ்யமந்தகம் தான் இவரை இங்கே வர வைத்திருக்கின்றதா?? என நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த மணியைக் காட்டி, அதைக் கழற்றி எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டாள். தன் தகப்பனுக்கு விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கூறினாள். தனக்கு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் அன்பை விட, அவர் தன்னைப் பிரியக் கூடாது எனத் தான் நினைப்பதைவிட, இப்போது அவர் தன் தந்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிச் செல்வதே சரி எனவும் நினைத்தாள் ஜாம்பவதி. ஆனால் கிருஷ்ணர் மறுத்தார். ஏற்கெனவே இந்த மணியை நான் தான் திருடிக் கொண்டு வந்தேன் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இப்போது உன் தந்தையையும் நான் பகைத்துக் கொண்டு இதை எடுத்துச் செல்ல வேண்டுமா? என்னால் முடியாது. அவர் எங்கே? அவருடன் நேருக்கு நேர் மோதிவிட்டே நான் இந்த மணியை வெற்றி வீரனாக எடுத்துச் செல்கின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் தன் தந்தையின் உடல் பலத்தையும், அவர் மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்றவர் என்றும் கூறிய ஜாம்பவதி, அவரால் கிருஷ்ணருக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சி மறுக்கின்றாள். கிருஷ்ணரை உடனே அந்த இடத்தை விட்டு மணியை எடுத்துச் செல்லும்படிக் கூறுகின்றாள். கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துச் சங்க நாதம் செய்கின்றார். சங்கின் முழக்கத்தைக் கேட்ட ஜாம்பவான் விழித்துக் கொண்டார். கிருஷ்ணர் வந்திருப்பதையும், அவர் வந்ததன் காரணத்தையும் தெரிந்து கொண்டார். “ஆஹா, இவன் என்னை என்ன கிழட்டுக் கரடி என நினைத்துக் கொண்டானோ? இருக்கட்டும், ஒரு கை இல்லை, இரு கையாலும் பார்த்துவிடுகின்றேன்.“ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணருடன் போருக்குத் தயார் ஆனார். த்வந்த்வ யுத்தம் நடக்கின்றது, கிட்டத் தட்ட இருபத்தொரு நாட்கள். ஜாம்பவான் தன்னால் முடிந்தவரையில் சமாளித்தார். ஆனால் மூன்று வாரத்துக்கு மேலே அவரால் முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை நினைத்துக் கொண்டு மேலும் முயன்றார். சட்டென உண்மை பளிச்சிட்டது. வந்திருப்பது சாமானியமானவர் இல்லை. ஆஹா, இவன் சாட்சாத் அந்தப் பரம்பொருளே அல்லவோ? பரம்பொருளோடா சண்டை போட்டோம்? ஜாம்பவான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸ்யமந்தக மணியையும், தன் பெண்ணான ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்குத் தானம் செய்கின்றார். ஜாம்பவதிக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. மீண்டும் த்வாரகையை அடைந்த கிருஷ்ணர் ச்யமந்தகத்தை நினைவாக சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார். சத்ராஜித்தும் கிருஷ்ணரை அநாவசியமாய் அவதூறு செய்துவிட்டதை நினைத்து வருந்தி தன் ஒரே பெண்ணான சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்வித்துக் கூடவே ஸ்யமந்தகத்தையும் ஸ்ரீதனமாய்க் கொடுக்கின்றான். ஆனால் கிருஷ்ணரோ அந்த மணியால் தனக்கு விளைந்த அபவாதத்தை மறக்கவே இல்லை. ஆகையால் திரும்ப ஸத்ராஜித்திடமே கொடுத்துவிட்டார். இன்னும் பிள்ளையார் வரலையேனு நினைக்கிறவங்களுக்குக் கொஞ்சம் பொறுங்க, இதோ பிள்ளையார் இந்தக் கதையில் நுழையும் நேரம் வந்தே ஆச்சு. [] https://www.flickr.com/photos/neychurluvr/2827388554 22 அத்தியாயம் 22 சத்யபாமாவைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்கள் அரக்கு மாளிகையில் அக்னியில் எரிந்து குடும்பத்தோடு சாம்பலாகிவிட்டனர் எனக் கேள்விப் பட்டு அதைப்பற்றி விசாரிக்க ஹஸ்தினாபுரம் சென்றார். பாமாவைத் துவாரகையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஸத்ராஜித் ஏற்கெனவே பாமாவை சததன்வா என்னும் ஒருவனுக்கும், க்ருதவர்மா என்பவனுக்கும் அல்லது அக்ரூரருக்கேயாவது சத்யபாமாவைத் திருமணம் செய்வித்துவிட முயன்று கொண்டிருந்தான். ஆனால் கடைசியில் கிருஷ்ணர் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொள்ளவே, மிக மிக நல்லவராயும், கிருஷ்ணரை ஆரம்பத்தில் இருந்தே காப்பாற்றி வந்தவரும் ஆன அக்ரூரருக்கே கிருஷ்ணர் பேரில் கொஞ்சம் பொறாமை உண்டாகிவிட்டது. அவருடன் க்ருதவர்மாவும் சேர்ந்து கொள்ள, இருவரும் சததன்வாவைப் போய்ச் சந்தித்து, எப்படியேனும் ஸ்யமந்த்கத்தையாவது ஸத்ராஜித்திடம் இருந்து அபகரிக்க வேண்டும் என நினைத்துத் திட்டம் தீட்டினார்கள். ஸததன்வாவோ, ஸ்த்ராஜித்தை அநியாயமாயும், முறையற்றும் கொன்றுவிட்டு மணியை அபகரித்து வந்துவிடுகின்றான். சத்யபாமாவோ அலறிக் கலங்கினாள். கிருஷ்ணர் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தன் மாமனாரைக் கொன்றவனைத் தானும் கொன்று பழி தீர்க்கப் போவதாய்ச் சபதம் எடுக்கின்றார். விஷயம் தெரிந்ததும் சததன்மாவுக்குக் கிலி ஏற்படுகின்றது. கிருஷ்ணர் எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துத் தன்னைக் கொன்றுவிடுவார் என நினைத்த அவன் அந்த ஸ்யமந்தக மணியை அக்ரூரர் வீட்டிலே போட்டுவிட்டு, துவாரகையை விட்டு ஓட்டம் பிடித்தான். ஸ்யமந்தகம் இருக்குமிடத்திலே சகல செளபாக்கியங்களும் ஏற்படவேண்டி இருக்க இம்மாதிரியான சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அகசுத்தியும், புறசுத்தியும் அதை வைத்திருந்தவர்களிடையே இல்லாத காரணமே ஆகும். சூரிய பகவான் சத்ராஜித்திடம் அதைக் கொடுத்தபோதே அகமும், புறமும் சுத்தமாக இல்லாவிட்டால் மணியால் நாசமே விளையும் எனச் சொல்லி இருந்தார். ஆகவே அந்த மணியால் தனக்குத் தொந்திரவு ஏற்படுமோ எனக் கலங்கியே சததன்வா அதை இப்போது அக்ரூரரிடம் போட்டுவிட்டு ஏற்படும் நாசம் அவருக்கு ஏற்படட்டும், அல்லது கிருஷ்ணர் விஷயம் தெரிந்து அக்ரூரரைக் கொன்றுவிட்டு எடுத்துக் கொள்ளட்டும். எப்படியானாலும் தன் தலை தப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டு அக்ரூரரிடம் போட்டான். அக்ரூரரோ பரமபாகவத சிரோன்மணி. ஏதோ சகவாச தோஷத்தால் கிருஷ்ணரிடம் கோபம் ஏற்பட்டதே தவிர, உண்மையில் அதற்காக வருந்திக் கொண்டிருந்தார். இங்கே கிருஷ்ணரோ, சததன்வா துவாரகையை விட்டு ஓடும் செய்தி அறிந்ததும், தன் அண்ணனாகிய பலராமரையும் கூப்பிட்டுக் கொண்டு, அவனைப் பிடித்து ச்யமந்தக மணி பற்றி அறிந்துவரப் போகின்றார். கிருஷ்ணரும், பலராமரும் ரதத்தில் செல்ல, சததன்வா குதிரையில் ஓடுகின்றான். குதிரை களைத்து விழுந்துவிடக் கால்நடையாக ஓடும் சததன்வாவைப் பிடிக்கக் கிருஷ்ணரும் ரதத்தில் இருந்து இறங்கி ஓடுகின்றார். பலராமர் கிருஷ்ணரோடு போகவில்லை. தப்பி ஓடும் ஒருவனைப் பிடிக்க இருவர் தேவையில்லை என்பது அவர் கருத்து. கிருஷ்ணர் சததன்வாவைப் பிடித்து, சண்டைபோட, சண்டையில் தோற்ற சததன்வா, பின்னர் கிருஷ்ணரால் கொல்லவும் படுகின்றான். அவனிடம் ச்யமந்தகமணியைத் தேடும் கிருஷ்ணருக்கு அது கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி ரதத்துக்கு வந்து பலராமரிடம் நடந்ததைச் சொல்ல, பலராமர் நம்பவில்லை. கிருஷ்ணர் கபடமாய் மணியை அபகரித்து வைத்துக் கொண்டு சததன்வாவையும் கொன்றுவிட்டு இப்போது பொய் சொல்லுவதாய் நினைத்த பலராமர் கோபத்துடன், கிருஷ்ணருடன் துவாரகைக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு, விதேஹ நாட்டுக்குப் போய்விட்டார். அண்ணனும் திரும்பாமல், மணியும் கிட்டாமல், அனைவரையும் விரோதித்துக் கொண்ட கிருஷ்ணர் செய்வதறியாது விழித்தார். அப்போது தான் அவருக்குத் தான் என்ன தப்பு செய்தோம் இம்மாதிரி அபாண்டமாய்ப் பழி சுமக்க என்று தோன்றுகிறது. ச்யமந்தகத்தை வைத்துக் கொண்டிருந்த அக்ரூரரோ கிருஷ்ணரிடம் அபாரமான பக்தியும், அன்பும் கொண்டவராதலால் ஒரு க்ஷண நேரம் தன் மனம் மாறியதை நினைத்தும், இப்போது ச்யமந்தகம் தன்னிடம் இருப்பதால் கிருஷ்ணருக்குத் தன்னிடம் உள்ள அன்பு போய் விரோதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தாலும், த்வாரகையை விட்டுக் கிளம்பி, ஒவ்வொரு ஊராக க்ஷேத்திராடனம் செய்து கொண்டு கடைசியில் காசியை அடைகின்றார். அங்கே போனதும் ஏற்கெனவே வேதனைப் பட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தவர் மனம் நிர்மலமாக, ஸ்யமந்தகம் எட்டு பாரம் பொன்னை வாரி வழங்க ஆரம்பித்தது. அந்தப் பொன்னையோ, அல்லது ச்யமந்தகத்தையோ தனக்கெனக் கருதாமல், தன் குடும்பத்திற்கும் செலவு செய்யாமல் தேவாலயத் திருப்பணிகளுக்கும், மற்ற உதவிகளுக்கும் செலவு செய்தார் அக்ரூரர். நாளடைவில் காசி க்ஷேத்திரமே செழிப்பாக மாறியது. இங்கே த்வாரகையில் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர் தன் அண்ணன் இல்லாமலும், ச்யமந்தக மணியின் காரணத்தால் உயிரிழந்த தன் சிறிய மாமனார் ஆன பிரசேனன், மாமனார் சத்ராஜித், நண்பன் ஆன சததன்வா ஆகியோரையும் நினைத்து வேதனைப் பட்டார். அக்ரூரரும் த்வாரகையில் இல்லாமையால் அவரிடம் ச்யமந்தகம் இருக்க வேண்டும் என நினைத்தார். அப்போது ஒரு நாள் நாரதர் அங்கே வர கிருஷ்ணர் அவரிடம் தன் துன்பத்தைச் சொல்லிக் காரணம் கேட்டார். நாரதர் சொல்கின்றார்:”கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாத சுக்கில பக்ஷ சதுர்த்தி நாள். அன்றைய பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது என இருக்க நீ அதைப் பார்த்துவிட்டாய். அதுவே உன் பேரில் ஏற்பட்ட வீண்பழிக்கும் அபவாதங்களுக்கும் காரணம்” என்று சொன்னார். “பாத்ரபத சுக்கில பக்ஷ சதுர்த்தியன்று சந்திரனைக் காணக் கூடாதா? இது என்ன புது விஷயம்? என்ன காரணம் சொல்லுங்கள் ஸ்வாமி!” என்று கேட்டார் கிருஷ்ணர். நாரதரும் சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகளே, இதோ இப்போ வரப்போறார் பிள்ளையார். [] https://www.flickr.com/photos/mynameisharsha/5157965638 23 அத்தியாயம் 23 ஹையா, பிள்ளையார் வந்துட்டாரே! எப்படி இருக்கார் தெரியுமா? மூஞ்சுறு மேலே ஏறிக் கொண்டு, வேக, வேகமாய் அதிலேயே அகில உலகத்தையும் சஞ்சாரம் பண்ணிக் கொண்டு போனார். நீண்ட துதிக்கை, நம்பிக்கையைக் கொடுக்கின்றது. ஏக தந்தம், அவர் தியாகத்தைக் குறிக்கின்றது. ஆடிக் கொண்டிருக்கும் இரு காதுகளும், மாறி மாறி வரும் பருவங்களையும் குறிக்கின்றது. சாந்தமும், அன்பும், ஞானமும், விவேகமும் கொண்ட அதி அற்புதமான வடிவம். கொழு, கொழுவென்ற பெரிய தொந்தி, குட்டிக் குட்டியாய்க் கால், கைகள், பார்க்கவே அழகு, அழகு கொஞ்சும் இந்தத் தோற்றத்துடன் பிள்ளையார் சஞ்சாரம் பண்ணும்போது, அப்படியே சந்திரலோகத்தையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்தாராம். அங்கே சந்திரன், தன் அருமை மனைவியான ரோகிணியுடன் வீற்றிருந்தான். ஏற்கெனவே சந்திரனுக்குத் தன் அழகிலும், குளுமையிலும் கர்வம் அதிகம் ஆகி இருந்தது. இப்போ வேறே மனைவியோட இருக்கானா? அவளுக்கு முன்னாலே தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டிக்கிறதா நினைச்சு, சந்திரன் பிள்ளையாரையும் அவரின் உருவத்தையும் பார்த்துப் பரிகசித்துச் சிரித்தான். கேலி செய்தான், ஏகதந்தத்தையும், யானைத் தலையையும், முறக் காதுகளையும், கொழு கொழு தொப்பையையும், குட்டிக் குட்டிக் கால், கைகளையும். கோபமே வராத விநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. சந்திரனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும், அப்போதுதான் அவன் கர்வம் அடங்கும் என நினைத்தார் விநாயகர். சந்திரனைப் பார்த்து, “அப்பா, சந்திரா, உன்னுடைய ஒளியானது உண்மை அல்லவே? சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றாய்? நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே உனக்கு இத்தனை கர்வம் தேவையா அப்பா? கொஞ்சம் யோசி!” என்று சொன்னார். ஆனால் அகங்காரத்தின் உச்சியிலிருந்த சந்திரன் மீண்டும் சிரித்தான். கோபம் கொண்ட விக்னேஸ்வரன், “இனி யாருமே சந்திரனைப் பார்க்கக் கூடாது, பார்க்கவும் முடியாது. அப்படி யாரேனும் உன்னைப் பார்த்தாலோ களங்கம் உள்ள மனதுள்ள உன்னைப் பார்த்த அவர்களும் களங்கத்தால் பீடிக்கப் படுவார்கள். உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கும், அபவாதத்துக்கும், மித்திரத் துரோகத்துக்கும் ஆளாவார்கள்.” என்று சொல்லி விடுகின்றார். சந்திரனுக்குப் பயத்துடன் அபவாதம் செய்வார்களே என்ற அவமானமும் மேலோங்க, சமுத்திரத்தினுள் சென்று மறைந்தான். சந்திர ஒளியிலே மட்டுமே மூலிகைகள் வளரும். நிலவொளி இல்லாமல் மூலிகைகள் வளரவில்லை. வைத்தியர்கள் வைத்தியம் செய்ய முடியவில்லை. உலகிலே எங்கே பார்த்தாலும் நோய், நொடி பரவி, அதைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்தனர். சூரிய ஒளி எவ்வாறு முக்கியமோ அதே போல் சந்திரனும் முக்கியம் என்பதை அறிந்த அனைவரும் வழக்கம் போல் பிரம்மாவிடம் முதலில் சென்று அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். பிரம்மாவோ மஹா கணபதியின் வாக்குக்கு மறு வாக்கு நான் சொல்ல முடியுமா? நீங்கள் அனைவரும் சாபம் நீங்க அவரையே வழிபடுங்கள். அவர் ஆவிர்ப்பவித்த திதியான சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விசேஷ வழிபாடுகள் செய்து அவருக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, அவர் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். மனம் உருகப் பிரார்த்தித்து உலக க்ஷேமத்துக்காக வேண்டி சந்திரனின் தோற்றமும், ஒளியும் தேவை என்று கேளுங்கள்.” என்று சொல்லிவிடுகின்றார். தேவர்கள் அனைவரும் சமுத்திரத்துக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து, “நீயும் சேர்ந்து விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு வழிபாடுகள் நடத்தினாலொழிய இந்தக் காரியம் பூர்த்தி அடையாது.“ என்று கூப்பிட, ஏற்கெனவே தான் செய்த தப்பை எண்ணி வருந்திய சந்திரனும் உடனே வந்தான். சந்திரனும், தேவர்களும் வழிபட்டு முடிக்கும் வேளையில் பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் பிரசன்னமாகி, தான் கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்றும், அதில் கொஞ்சம் மாறுதல் செய்வதாயும் கூறிவிட்டு, சுக்கில பட்ச சதுர்த்தி திதிகளில் உதிக்கும் நாலாம் பிறைச் சந்திரனைப் பார்க்கின்றவர்களுக்கே அபவாதம் ஏற்படும். ஆகவே அன்றைய நாள் மட்டும் யாரும் சந்திரனைப் பார்க்க வேண்டாம். மீறினால் அபவாதம், வீண்பழிக்கு ஆளாவார்கள். இதன் மூலம் யாருக்கும் தன் அழகிலோ, அறிவிலோ கர்வம் ஏற்படாமல் யாரையும் யாரும் புண்படுத்தும் செயல்களையும் செய்யாமல் இருப்பார்கள். ஆகவே நான் சொன்னதில் சிறு மாற்றத்தோடு சந்திரனுக்கு, சாபத்திலிருந்து விடுதலை அளிக்கின்றேன்.” என்று சொல்கின்றார். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லவா? இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே என்பதையும் காட்டுகின்றது அல்லவா? அதோடு இல்லாமல் மேலும் சந்திரனுக்கு உதவி செய்யும் வண்ணமாய்ப் பிள்ளையார், பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து பிள்ளையாரைப் பூஜித்து வழிபாடுகள் செய்து அன்று தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டு அவனையும் வழிபடுகின்றவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களையும் நான் போக்குவேன்.” என்று சொல்லி சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்படவும் வழி செய்தார் பிள்ளையார். தேய்பிறையிலே அவனைப் பார்த்தலே நன்மை என்று சொல்லிவிட்டு வளர்பிறையிலே பார்க்கக் கூடாது என்று சொன்னதோடு அல்லாமல், அமாவாசைக்கு அப்புறம் சந்திரன் நன்கு தெரியும் முதல் திதியில் அவனைப் பார்ப்பவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்றும், பெண்களுக்கு விசேஷமாய் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் எனவும் சொல்கின்றார். பிறைச் சந்திரனைச் சிரசிலே தரித்துக் கொண்டிருப்பதில் ஈசன் ஆன சிவபெருமான் தவிர, அம்பாள் ஆன பார்வதி தேவியும், பிள்ளையாருமே ஆகும். பின்னர் அந்தப் பிறைச் சந்திரனைத் தன் சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் பிள்ளையார். இங்கே பால சந்திரன் பற்றிய ஒரு சிறு விளக்கம். பால என்ற இந்தச் சொல்லுக்கு, குழந்தை என்ற அர்த்தம் வராது. BHALA CHANDRAN என்ற உச்சரிப்புடன் கூடிய இந்தச் சொல்லில் பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன் நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப் படுகின்றது. அல்லது PHALA CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பார் இல்லையா அதைக் குறிப்பது, PHALA என்ற சொல் என்றாலும் பால சந்திரன் Bhala Chandran என்றாலே பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே. மேற்கண்ட கதையை நாரதர் கிருஷ்ணரிடம் சொல்லிவிட்டு, “கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாதத்து நாலாம்பிறைச் சந்திரனைப் பார்த்துவிட்டாய். அதன் காரணமாகவே இப்போது இத்தகைய வீண் அபவாதங்களை நீ சுமக்க வேண்டி இருந்தது. என்னதான் அவதாரம் ஆனாலும், மனித உருவில் வந்திருப்பதால் மனிதருக்குள்ள சுகம், துக்கம் இரண்டையும் நீயும் அனுபவித்தே கழிக்க வேண்டும். ஆகையால் இப்போது விநாயகருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டாயானால் உன்னுடைய தொல்லைகள் குறையும்.“ என்று ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார் நாரதர். கிருஷ்ணரும் அவ்வாறே விநாயகருக்கு சங்கட ஹர சதுர்த்தியில் ஆரம்பித்து விரதம் இருந்து வழிபாடுகள் செய்துவருகின்றார். விநாயகரும் கிருஷ்ணரின் பக்தி வழிபாட்டில் மனம் மகிழ்ந்து, கிருஷ்ணர் அபவாதத்தில் இருந்து விலகுவாரென்றும், சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும் என்று இருந்ததை உங்களுக்காக மாற்றி, வேறு மாதிரியாகக் கொடுக்கின்றேன். எவரொருவர் இந்த ச்யமந்தகமணியின் கதையைப் படித்து வருகின்றார்களோ, அல்லது கேட்கின்றார்களோ அவர்களுக்கு பாத்ரபத மாதத்து சுக்லபட்ச சதுர்த்திச் சந்திரனைப் பார்த்தால் கூடப் பாவம் வராது. ஆகவே இந்த ச்யமந்தக மணியின் கதையும், அதில் நீங்கள் சம்பந்தப் பட்டிருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதே போல உங்கள் பிறந்த திதியான கோகுலாஷ்டமியிலும், வழிபாடுகள் நடத்திய பின்னர் சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும், என்றும் இந்த சதுர்த்தி தின வழிபாடுகளில் கிருஷ்ணரும், சந்திரனும் இடம் பெறுவார்கள் என்றும் கூறுகின்றார் பிள்ளையார் கிருஷ்ணரிடம். அது மாதிரியே கிருஷ்ணரும் விரதம் இருந்து வழிபாடுகள் செய்ததில் அக்ரூரர் காசியில் இருக்கும் விபரம் தெரிந்து விடுகிறது, காசிநகரின் செழிப்பான தன்மையிலிருந்து. உடனேயே ஆள் அனுப்பி அக்ரூரரை வரவழைக்கின்றார். நடந்தது தெரிந்த அக்ரூரரும், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டு ச்யமந்தகத்தைக் கிருஷ்ணரிடம் ஒப்படைக்க, கிருஷ்ணரோ அது இருக்க வேண்டிய இடம் அக்ரூரரிடம் தான் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிடுகின்றார் அதை. த்வாரகையும் ச்யமந்தகத்தின் மறு வரவினால் செழிப்படைகின்றது. அடுத்து நாம், பிள்ளையார் குட்டுக் குட்டிக்கிறதுக்கும், இந்த மகாவிஷ்ணுவே காரணம். அது என்னன்னு பார்ப்போமா? ஒரு சமயம் மகாவிஷ்ணு தன் சக்கரத்தைச் சுற்றி விநாயகருக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது சக்கரத்தின் ஒளியையும், சுற்றும் வேகத்தையும் கண்ட விநாயகக் குழந்தை அதைத் தன் துதிக்கையை நீட்டிப் பிடுங்கிக் கொண்டு தன் வாய்க்குள்ளே போட்டுக் கொண்டது. அதை விழுங்கவும் இல்லை. தன் வாயிலேயே அடக்கிக் கொண்டது விநாயகக் குழந்தை. மஹாவிஷ்ணு பல முறை வேண்டிக் கேட்டும் குழந்தை தர மாட்டேன் என்று அடம் பிடித்தது. எப்படியாவது குழந்தையிடமிருந்து சக்கரத்தை வாங்க வேண்டுமே? விஷ்ணு யோசித்தார். பின்னர் குழந்தையைச் சிரிக்க வைத்தால் வாயிலிருந்து சக்கரம் விழுந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்டு, தன்னிரு கைகளாலும், காதைப் பிடித்துக் கொண்டும், தலையில் குட்டிக்கொண்டும், கீழே உட்கார்ந்து எழுந்தார். அதைக் கண்ட நம் விநாயகக் குழந்தைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் சிரித்த சிரிப்பில், சக்கரம் வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது. அப்பாடா, என நிம்மதி அடைந்த விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு த்ன்னுடைய பாற்கடலுக்கு ஓடியே போய்விட்டார். இதுவே சம்ஸ்கிருதத்தில் தோர்பி: கர்ணம் என்று சொல்லப் பட்டது. தோர்பி என்றால் கைகளால் என்று அர்த்தம். கர்ணம்=காது, என்று அர்த்தம். கையால் காதைப் பிடித்துக் கொள்ளுவதே தோர்பி(ஹ்)கர்ணம் என்றாகிவிட்டது. இதையே நாம் இப்போது தோப்புக்கரணாம் என்று சொல்லுகின்றோம். [] https://www.flickr.com/photos/flickrohit/2849502909 24 அத்தியாயம் 24 எந்த ஒரு வேலையையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் நாம் விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு விட்டே ஆரம்பிக்கின்றோம் அல்லவா? இது நமக்கு மட்டும் இல்லாமல் கடவுளரும் இவ்வாறு இருந்திருக்கின்றனர் என்பதையும் இப்போது அறிந்து கொள்வோம். ஜெகந்மாதாவான அம்பிகையானவள் ஸ்ரீலலிதையாக அவதாரம் எடுத்தாள் பண்டாசுரனை ஒழிக்க. அப்போது காமேஸ்வரனாகிய ஈசனை மணந்துவிட்டு அம்பாள் பண்டாசுரனை ஒழிக்கச் செல்லுகின்றாள். அவள் சேனைக்குத் தலைமை தாங்கி சப்தமாதாக்களும் உடன் செல்கின்றனர். அப்போது நடக்கும் போரில் பண்டாசுரன் விக்னயந்திரத்தைப் பிரயோகம் செய்ய, அம்பிகையின் சேனைகள் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன. இது என்ன இவ்வாறு நேர்ந்து விட்டதே என யோசித்த அம்பிகை, தான் போருக்குக் கிளம்பும் முன்னர் விக்னேஸ்வரனைப் பிரார்த்திக்காததின் காரணமே எனப் புரிந்து கொள்கின்றாள். பின் முறையாக விக்னேஸ்வரருக்கு வழிபாடுகள் செய்து அவரைப் பிரார்த்தித்து விக்ன யந்திரத்தின் பிரயோகத்தைப் பொடிப் பொடியாக்கி பண்டாசுரனை நிர்மூலம் செய்கின்றாள். தாய்க்கு மட்டுமா இவ்வாறு நேர்ந்தது? அகில உலகத்தையும் படைத்தவனும், தாய், தந்தை இல்லாதவனும் முன்னைப் பழம்பொருளுக்கும், பழம்பொருள் ஆனவனும் ஆன அந்த சர்வேசனுக்கே இவ்வாறு நேர்ந்தது. திரிபுரத்தை எரிக்கப் புறப்பட்டார் ஈசன். அப்போது அவர் கிளம்பிய தேரின் அச்சு முறிந்ததாய்ச் சொல்லுவார்கள். இதற்கு தேவர்கள் தங்களால் தான் ஈசன் போருக்குக் கிளம்பினார் என்ற கர்வம் கொண்டது தான் காரணம் எனச் சொல்லப் பட்டாலும், விநாயக வழிபாட்டை ஈசன் நிறைவேற்றாமல் கிளம்பியதும் ஒரு காரணம் எனச் சொல்லுகின்றனர். இந்தத் தேர் அச்சு முறிந்த இடம் இன்றும், “அச்சிறுபாக்கம்” என்ற பெயரில் வழங்கி வருகின்றது. அடுத்து விநாயகர் உதவியது தன் அருமைத் தம்பிக்கு. ஆம், முருகப் பெருமானுக்கும் உதவினார் விநாயகர். விநாயகர் உதவி இன்றி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. திருமாலின் கண்மலரின் தோன்றிய இரு பெண்களில் ஒருத்தியான சுந்தரவல்லி முருகப் பெருமானைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி தவமிருக்க முருகன் அவளைப் பூமியில் பிறந்து தம்மை மணப்பாள் எனச் சொல்கின்றார். அவளும் நம்பிராஜனுக்கு மகளாய்த் தோன்றி வள்ளிமலையில் வளர்ந்து வருகின்றாள். வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்த அவளைத் திருமணப் பருவம் வந்ததும், மணம் செய்து கொள்ள முருகன் ஒரு வேடனாய், பின்னர் கிழவனாய் வர, வள்ளி மறுக்கின்றாள். முருகன் வள்ளிக்கு யானையின் மீது உள்ள பயத்தைப் புரிந்து கொண்டு, தன் அண்ணனான விநாயகரை வேண்ட, விநாயகரும் யானை உருவில் வந்து வள்ளியோடு முருகனுடன் சேர்ந்து விளையாடல்கள் புரிந்து பின்னர் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொள்ள உதவுகின்றார். விநாயகரின் வாகனம் சின்னஞ்சிறு பிராணியான மூஞ்சுறு ஆகும். ஒரு எலியைப் போய் விநாயகர் வாகனமாய்க் கொண்டிருக்கின்றாரா என எண்ணினால் அது நம் அறியாமையின் தவறே ஆகும். இறைவனை நம்மால் உணரத் தான் முடியும், புரிந்து கொள்ள முடியாது. இறைவன் இன்னார், இப்படிப் பட்டவர், இன்ன குணத்தினவர் என யாராலும் வரையறுக்கவும் முடியாது. உண்மையில் யானை போன்ற உருவமுடைய விநாயகர் ஒரு எலியின் மீது ஏறி உட்கார்ந்தால் அந்த எலி என்னத்துக்கு ஆகும்? இல்லையா? இதை ஆழ்ந்து யோசித்தாலே உண்மை புலப்படும். அணுவுக்கும் அணுவாக, நுண்ணுயிருக்குள்ளும், நுண்ணுயிராக, பெரிதிலும் பெரியதாக, ஒளியிலும் ஒளியாக, சூரியனை விடப் பிரகாசமாக, கோடி சூரியப் பிரகாசத்தை விட மேம்பட்டவனாக இறைவன் நம்மால் அறிய முடியாதவனாக இருக்கின்றான். அப்படிப் பட்ட இறைவன் நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அன்றோ. இந்த நம் கற்பனைகளைக் கடந்து எல்லையற்றவன் இறைவன் என்பதே இந்த எலி வாகனத்தின் கருத்து என ஆன்றோர் வாக்கின் மூலம் அறியலாம். அடுத்து நம் ஒளவைப் பிராட்டி விநாயகரை வழிபட்டே மூதாட்டி ஆனவள். நம் அனைவருக்கும் அது தெரியுமல்லவா? இந்த ஒளவைப் பிராட்டி ஒரு சமயம் விநாயகருக்கு வழிபாடுகள் செய்து கொண்டிருக்கும்போது சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தர மூர்த்தி நாயனாரும் கைலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் விநாயக வழிபாடுகள் நடத்தும் ஒளவையைப் பார்த்துவிட்டு, “ஒளவையே, நீர் வரவில்லையா, நாங்கள் கைலைக்குச் செல்கின்றோம்,” எனச் சொல்ல, “என் அப்பன் விநாயகன் வழிபாடு நடத்தாமல் நான் வரமுடியாது” என ஒளவை சொல்கின்றார். அவசரம், அவசரமாய் வழிபாட்டை நடத்தலாமோ என எண்ணி ஒளவை ஆரம்பிக்க, விநாயகரோ ஒளவையிடம், “மெதுவாய் உன் வழக்கம்போலவே வழிபாடுகள் நடத்து. உன்னைக் கைலையில் கொண்டு சேர்ப்பது எம் பொறுப்பு!” என உறுதி அளிக்க, ஒளவையும் நிதானமாகவே வழிபாடுகள் செய்கின்றாள். அப்போது பாடப் பட்டவையே விநாயகர் அகவல் என்றும் சொல்வார்கள். இந்த அகவல் எல்லாம் பாடி முடித்து ஒளவை தயார் ஆனதும், விநாயகர் தம் தும்பிக்கையால் ஒளவையை ஒரே தூக்காய்த் தூக்கிக் கைலையில் கொண்டு சேர்ப்பித்தார். ஒளவை சென்று பல நாட்களுக்குப்பிறகே சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் திருக்கைலை வந்து சேருகின்றனர். கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால் க அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ண மோக்ஷத்தைக் குறிக்கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர். [] https://www.flickr.com/photos/araswami/2518089760 25 அத்தியாயம் 25 பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவை கிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு. மூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றன. மயில் என்றதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார்? இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம். மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்குப் பிள்ளையார் உதவுகின்றார். வேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும், கணபதி எனவும், விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றது என்று ஆன்றோர் சொல்லுகின்றனர். மோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள பூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது. தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே? வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர். ஆனந்த புவனம்: கைலையின் ஒரு பகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது. எட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவையாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர் = தேக பிரும்மம், மகோதரர் = ஞான பிரும்மம், கஜானனர் = சாங்கிய பிரும்மம், லம்போதரர் = சக்தி பிரும்மம், விகடர் = ஆதி சக்தி, விக்னராஜர் = விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர் = சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. [] https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e7/Nepal,_ganesha,_xviii_sec.JPG 26 அத்தியாயம் 26 நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு. விநாயகருக்கும் 21-க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா). விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு. அவை கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ரதுண்டன், ஜேஷ்ட ராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்திபுத்திபதி, பிரம்மணஸ்தபதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் ஆகியன ஆகும். இவற்றின் விளக்கங்கள் வருமாறு: கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன். ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா? சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா? அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன். டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர். மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இருந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார். [] https://www.flickr.com/photos/gregor_y/180339623 27 அத்தியாயம் 27 நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் நவகிரஹத் தலங்களைப் போல் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் தலங்கள் இருக்கின்றன. இவை புனே நகரைச்சுற்றி எழுநூறு கி.மீ. தூரத்துக்குள்ளாக அமைந்துள்ளன. நம்முடைய சங்கடஹர சதுர்த்தி, மஹாராஷ்டிராவில் சங்கஷ்டஹர சதுர்த்தி என்ற பெயரில் அழைக்கப் படுவதோடு சிறு வயதில் இருந்தே சதுர்த்தி விரதமும் எடுத்துக் கொள்ளும் வழக்கமும் அங்கே உண்டு. இந்த அஷ்ட விநாயகர் தரிசனம் சங்கடஹர சதுர்த்திக்கு விசேஷம் என்று சொல்லப் படுகிறது. அஷ்ட விநாயகர் கோயில்கள் இருக்குமிடம்” மயூரேசர் = மோர்காம் ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் = தேயூர் சித்தி விநாயகர் = சித்த டேக் ஸ்ரீ மஹா கணபதி = ராஞ்சன் காமின் ஸ்ரீகிரிஜாத்மஜ விநாயகர் = வேநாத்ரி ஸ்ரீவிக்னேஸ்வரர் = ஓஜர் பல்லாவேச்வர விநாயகர் = பாலி ஸ்ரீ வரத விநாயகர் = மஹத் கணபதி பப்பா மோரியா புட்ச்யா வர்ஷி லங்கர்யா மோரியாரே பப்பா மோரியாரே ச்சைன் படேலா அம்பாலா மோரியாரே பப்பா மோரியாரே’ மேற்கண்ட பாடலை ஒவ்வொரு விநாயக சதுர்த்திக்கும் விஸர்ஜனத்தின் போது நடக்கும் ஊர்வலத்தில் மஹாராஷ்டிர மக்கள் கோஷமிட்டுக் கொண்டே செல்லுவார்கள். அந்த மோரியாரே இந்த மோர்காம்காரர் ஆன மயூரேசர் தான். இந்தக் கோயில் புனே ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் புனேயிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலப் பற்றிச் சொல்லப் படும் தலபுராணம் பின் வருமாறு: கண்டகி நகரை சக்ரபாணி என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கும் அவன் மனைவியான உக்ராவிற்கும் குழந்தைகள் இல்லாத குறையே பெரியதாக இருந்தது. செளனக் என்னும் முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்க, சூரியனைக் குறித்துத் தவம் இருக்கச் சொன்னார் அவர். இருவரும் தவம் செய்ய உக்ராவும் நாளாவட்டத்தில் கர்ப்பம் அடைந்தாள். ஆனால் என்ன இது? குழந்தையின் சூடு வயிற்றினுள் நாளாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது. அவளால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சூட்டைத் தாங்க முடியவில்லை. தவித்த உக்ரா சூடு தாங்க முடியாமல் கடலினுள் சென்றுவிட்டாள். அவள் தவிப்பைக் கண்டு வருந்திய சமுத்திர ராஜனும், அவள் குழந்தையைத் தான் தாங்கி வெளியே கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்தான். சமுத்திரராஜனால் குழந்தை அளிக்கப் பட்டதால் உக்ராவும், சக்ரபாணியும் குழந்தைக்கு “சிந்து” என்ற பெயரை இட்டு வளர்த்து வந்தார்கள். சிந்துவுக்குக் குருவாக அமைந்த அசுரர்களின் குருவான சுக்ராசாரியாரிடம் அவன் சூரியனைக் குறித்த மந்திரங்களைக் கற்றான். சுக்ராசாரியாரும் சூரியனைக் குறித்துத் தவம் செய்யச் சொல்லிக் கொடுக்க, சிந்துவும் அவ்வாறே தவம் செய்தான். மனம் மகிழ்ந்த சூரியன் அவனுக்குப் பரிசாக அமுதக் கலசத்தைக் கொடுத்து அதை சிந்துவின் வயிற்றிலேயே அவனை வைத்திருக்கும் படியும், இந்த அமுதக் கலசம் இருக்கும் வரையில் அவனை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது என்றும் சொன்னார். சூரியனிடமிருந்து அமுதக் கலசம் பெற்றுக் கொண்ட சிந்து தன் தகப்பனையே விரட்டிவிட்டுத் தானே ஆள ஆரம்பித்தான். குடிபடைகளைத் தொந்திரவு செய்ததோடு, தன்னிடம் அமுத கலசம் இருக்கும் தெம்பில் தேவாதி தேவர்களையும் துன்புறுத்த எண்னினான். இந்திரனையும், தேவர்களையும் சிறை பிடித்தான். கடைசியில் அனைவரையும் காக்க எண்ணிய விஷ்ணுவையும் சிறை பிடித்து கண்டகி நகரிலேயே சிறைவைத்தான். மற்ற தேவர்களும் பிரம்மாவும் கைலை சென்று ஈசனிடம் முறையிட, அவரோ இது விநாயகன் ஒருவனால் மட்டுமே செய்யக் கூடியது, ஆகவே அனைவரும் அவனைச் சரணடையுங்கள். என்று சொல்லிவிட்டார். அதன்படி அனைவரும் விநாயரை வந்து வணங்கி வேண்ட, அவரும் தான் மீண்டும் பிறவி எடுக்கும்போதே சிந்துவை அழிக்க முடியும் எனக் கூறினார். விநாயகர் மீண்டும் பிறப்பது எப்படி? அனைவரும் கலங்கினர். மேருமலையில் ஈசனோ அன்னைக்கு “ஓம்” என்னும் ப்ரணவத்தை உபதேசித்துப் பனிரண்டு வருடங்கள் ஜபிக்கும்படி கூறிவிட்டார். உடனேயே பார்வதி களிமண்ணால் விநாயகரை அமைத்து ஈசன் கூறிய வண்ணம் வழிபாடுகள் நடத்தினாள். அவள் செய்த வழிபாட்டால் உயிர் பெற்றார் விநாயகர். ஈசனும் அவரை ஆசீர்வதித்து, விக்னேஸ்வரனை வணங்கிவிட்டு வேலை ஆரம்பிப்பவர்களுக்குத் தடையில்லாமல் வேலை நடக்கும் எனக் கூறுகின்றார். அனைவரும் மேரு மலையிலிருந்து இறங்கி வரும் வேளையில் கமலாசுரன் என்பவனைக் கண்டார்கள். குதிரை மீது அமர்ந்திருந்த அவன், மயிலை வாகனமாய்க் கொண்ட விநாயகரோடு சண்டை போட்டான். அப்போது அவனை வெற்றி கொள்ள முடியவில்லை விநாயகரால். அவன் உடலில் காயம் பட்டுக் கீழே விழும் ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் மீண்டும் அசுரர்கள் உற்பத்தி ஆய்க் கொண்டே இருந்தனர். ஆகவே பிரம்மாவின் மானச புத்திரிகளான சித்தியையும், புத்தியையும் அழைத்து அந்த ரத்தத் துளிகள் கீழே விழாமல் குடிக்கும்படி விநாயகர் சொல்ல அவர்களும் அவ்வாறே குடித்தனர். கமலாசுரனையும் விநாயகர் கொன்றார். கண்டகி நகரில் சிறைப்பட்டிருந்த அனைவரையும் விடுவிக்குமாறு நந்தியெம்பருமானிடம் சொல்லி அனுப்புகிறார் விநாயகர். ஆனால் சிந்து மறுக்கிறான். எனவே விநாயகர் சிந்துவோடு போரிடுகிறார். விநாயகரின் பாணம் ஒன்று சிந்துவின் வயிற்றைக் கிழித்து அமுதக் கலசத்தையும் உடைத்துவிட, சிந்துவும் மாண்டான். கண்டகி நகரின் பொறுப்பை விநாயகர் ஏற்றுக் கொண்டு அனைவரையும் விடுவிக்கிறார். சித்தி, புத்தியையும் விநாயகர் மணந்து கொள்கின்றார். இந்தப் போரில் விநாயகர் மயிலை வாகனமாய்க் கொண்டு போரிட்டதால் மயூரேசர் எனப் படுகிறார். [] https://www.flickr.com/photos/unlistedsightings/5650101660 28 அத்தியாயம் 28 அடுத்து நாம் பார்க்கப் போவது சிந்தாமணி விநாயகர். இவர் தேயூர் என்னும் தலத்தில் குடிகொண்டுள்ளார். இந்த அஷ்ட விநாயகர்களை நாங்க இன்னும் தரிசனம் செய்யவில்லை, என்றாலும் பலரும் கூறுவதைப் பார்த்தும் கேட்டும் எழுதுகிறேன். ஆகவே அநுபவ நிகழ்வுகள் இதில் வராது. மஹாராஷ்டிரத்தின் புனே நகரில் இருந்து 25 கிமீதூரத்திலே இந்த நகரம் இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். ஹவேலி தாலுகாவைச் சேர்ந்த இந்த நகரம் மூவா, முக்தா, பீமா என்னும் மூன்று நதிகள் சங்கமம் ஆகுமிடத்தில் அமைந்துள்ளது. அதிசயமான ஒரு செய்தி என்னவெனில் ஒளரங்கசீப் இந்தக் கோயிலுக்கு மானியமாக நிலம் அளித்ததாகக் கூறப்படும் வரலாற்றுத் தகவல். எத்தனை உண்மை என்று தெரியாது. இனி கோயிலின் வரலாறு பின்வருமாறு: அபிஜித் என்னும் அரசனுக்குக் குழந்தை இல்லை. அவனும் அவன் மனைவி குணவதியும் வைசம்பாயன முனிவரின் சொற்படி பல்லாண்டுகள் தவம் புரிந்து ஒரு பிள்ளை பிறந்தது. கணராஜா என்னும் பெயர் வைத்து வளர்த்து வந்தனர். மிகவும் தைரியசாலியாகவும், வீரனாகவும் வலர்ந்த அந்தப் பிள்ளை ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். நண்பர்களுடன் சென்ற அரசகுமாரன் கணராஜன் காட்டில் கபிலமுனிவரது ஆசிரமத்தைக் கண்டான். தன் ஆசிரமத்திற்கு வந்த அரசகுமாரனை முறைப்படி வரவேற்று உபசரித்தார் கபில முனிவர். முனிவரின் ஆசிரமம், என்ன இருக்கப் போகிறது? காட்டில் கிடைக்கும் காய், கனி, கிழங்குவகைகள் என நினைத்த அரசகுமாரனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். அறுசுவை விருந்தே படைத்தார் கபிலமுனிவர். விருந்து முடிந்து கிளம்பும்போது இவ்வாறு விருந்து படைக்க எங்ஙனம் முடிந்தது என அரசகுமாரன் கேட்க, தன்னிடம் இந்திரன் அளித்த சிந்தாமணி இருப்பதாகவும், அது கேட்டதால் கொடுக்கும் என்றும், அதன் மகிமையாலேயே இவ்வாறு தக்காரைத் தக்கபடி தன்னால் உபசரிக்க முடிகிறது என்றும் வெளிப்படையாகச் சொன்னார் கபிலமுனிவர். அவர் என்னத்தைக் கண்டார்? கணராஜன் சிந்தாமணியைக் கேட்கப் போகிறான் என்று? அப்பாவியாய்ச் சொன்ன முனிவரிடம் நயமாகப் பேசிக் கேட்டுச் சிந்தாமணியைப் பெற முயன்றான் கணராஜன். முனிவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பின்னர் பயமுறுத்த ஆரம்பித்தான் கணராஜன். முனிவரோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பலவந்தம் ஒன்றே வழி எனக் கண்ட கணராஜன் அதைப் பலவந்தமாய்ப் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டான். மனம் வருந்தினார் கபிலமுனிவர். தேவி உபாசகரான அவர் தேவியை வணங்கி வேண்ட, அன்னையும் காக்ஷி அளித்து கணபதியைப் பிரார்த்திக்கச் சொன்னாள். கணபதியை முறைப்படி வணங்கிப் பிரார்த்தித்தார் கபிலமுனிவர். கணபதியும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணராஜனுடன் போரிட்டார். கடம்ப மரத்தின் கீழ் கணராஜனைக் கோடரியால் கொன்றார் கணபதி. மகன் இறக்கவே தன் பேரனுக்கு முடிசூட்டிய அபிஜித் மன்னன் சிந்தாமணியைத் திரும்ப கபில முனிவரிடமே கொடுத்தான். கபிலரோ அதை விநாயகருக்கு அணிவித்து அழகு பார்த்தார். இதனால் சிந்தாமணி விநாயகர் என்ற பெயரும் பெற்று இந்த ஊரிலேயே கோயிலும் கொண்டார். மற்றொரு தெரிந்த கதையும் உண்டு. கெளதம முனிவரின் மனைவியான அகல்யை இந்திரனிடம் ஏமாந்த கதை நமக்கெல்லாம் தெரியும் தானே? அப்பொழுது பாவம் செய்த இந்திரனை பாவம் நீங்க விநாயகரை நோக்கிதவம் செய்யுமாறு கெளதமர் கூறியதாகவும் அந்த விநாயகர் இவர் தான் என்றும் கூறுகின்றனர். இந்த விநாயகர் மஹாராஷ்டிரத்தின் பேஷ்வா குடும்பத்தைச் சேர்ந்த மாதவராவ் பெஷாவர் அவர்கள் குடும்பத்தின் குலதெய்வம் என்றும் இறக்கும் தருவாயில் கூட மாதவராவ் பெஷாவர் அவர்கள் கஜானன தோத்திரம் கூறிக்கொண்டே உயிர் நீத்ததாகவும் கூறுகின்றனர். கோயிலில் இருந்து மூலமுக்தா ஆற்றங்கரை வரையிலும் சாலை அமைத்தது பெஷாவர் குடும்பத்தினர் என்றும் கூறுகின்றனர். கோயிலைக்கட்டிய தரணிகர் மகராஜ் தேவ் அவர்களின் குடும்பம் காட்டில் நெடுங்காலம் தவம் செய்த மோர்ய கோசாவி குடும்பம் எனவும் சொல்லப் படுகிறது. விநாயகர் தொடர்பான அனைத்து விழாக்களும் இந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. [] http://marva78.deviantart.com/art/Ganesh-2-83381485 29 அத்தியாயம் 29 சிந்தாமணி விநாயகருக்குப் பின்னர் நாம் காண இருப்பவர் சித்தி விநாயகர். இவர் மஹாராஷ்டிராவின் புனே நகரில் இருந்து ஷோலாப்பூர் செல்லும் பாதையில் உள்ள டோண்ட் என்னும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள சித்தடேக் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ளார். கேட்டவருக்குக் கேட்டவைகளை அள்ளித் தரும் இந்த சித்தி விநாயகர் மிகவும் வரப்பிரசாதி என்று சொல்கின்றார்கள். இவர் பற்றிப் புராணங்கள் சொல்லும் தகவல்: “படைப்புத் தொழிலை ஆரம்பித்த பிரம்மா “ஓம்” என்னும் ஓங்காரத்தை ஜபித்தவண்ணம் இருந்தார். விக்கினங்களை நீக்கும் விநாயகரை ஜபித்து வந்ததால் விநாயகரும் அவருக்கு வேண்டிய அருள் புரிந்தார். படைப்புத் தொழிலில் விக்கினங்கள் நேராது எனவும் அருளிச் செய்தார். பிரம்மாவின் தவத்தின் காரணமாய் சித்தி, புத்தி என்னும் இரண்டு பெண்கள் அவருக்குத் தோன்றினார்கள். அவர்களைத் தன் மானஸ புத்திரிகளாய்ப் பாவித்த பிரம்மா ஸ்ரீ விநாயகருக்கே அவர்கள் சொந்தம் என அவருக்கே அர்ப்பணம் செய்தார். இருவரையும் ஏற்றுக்கொண்டு விநாயகர் சித்தி, புத்தி சமேதராய்க் காட்சி கொடுத்தார். பிரம்மா படைப்புத் தொழிலில் ஆழ்ந்திருக்கும்போது யோக நித்திரையில் இருந்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தோன்றினார்கள். இருவரும் தேவர்களுக்கும், பிரம்மாவிற்கும் தொல்லையைக் கொடுத்தனர். பிரம்மா நித்திராதேவியை மறைந்து போகுமாறு விண்ணப்பித்துக்கொள்ளவே, அவள் மறைய மஹாவிஷ்ணு கண்விழித்தார். மது, கைடபர்கள் தொல்லை கொடுப்பதைத் தெரிந்து கொண்டு பல்லாண்டுகள் அவர்களுடன் போரிட்டார் மஹாவிஷ்ணு. அவர்களை அழிப்பது அவ்வளவு எளிதாயில்லை. அவர்கள் மனதை மயக்க எண்ணிய மஹாவிஷ்ணு, அருமையான பாடல்களைத் தன் வீணையின் மூலம் மீட்டிப் பாட ஆரம்பித்தார். அவரது கானம் கைலையை எட்ட ஈசன் மனம் மகிழ்ந்தான். தன் பூதகணங்களான நிகும்பன், புஷ்பகந்தா ஆகியோரை அனுப்பி விஷ்ணுவை கைலைக்கு அழைத்து வரும்படி கூற விஷ்ணு கைலை வந்து வீணா கானம் பாடி ஈசனை மகிழ்வித்தார். மயங்கிய ஈசன், மஹாவிஷ்ணுவிற்கு என்ன வேண்டும் எனக் கேட்க, மது, கைடபர்களை அழிக்கும் வழி கேட்கிறார் விஷ்ணு. ஈசன், மஹாவிஷ்ணுவிடம், “விநாயகனை வணங்கிவிட்டுப் போரைத் தொடங்கவில்லை. அதனால் தாமதம். கணேச மந்திரம் ஜபித்து விநாயகரைத் துதித்துவிட்டுப் போர் புரியுங்கள்.” என்று கூறி கணேச மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். விநாயகரை தியானித்துத் தவம் புரிந்த மஹாவிஷ்ணுவிற்கு அசுரர்களை அழிக்கும் வல்லமையை அருளினார் விநாயகர். மஹாவிஷ்ணு அசுரர்களிடம் சென்று, தான் அவர்களுக்கு வரங்கள் தருவதாய்ச் சொல்ல எள்ளி நகையாடிய அவர்கள், தாங்கள் மஹாவிஷ்ணுவுக்கே வரங்கள் தருவதாய்க் கூறினர். உடனே விஷ்ணு சாமர்த்தியமாய், “உங்கள் இருவரின் மரணமும் என்னால் நேரவேண்டும்.” என்று கேட்டுவிட்டார். திகைத்த அசுரர்கள் தண்ணீரே இல்லாத இடத்திலேயே தங்களைக் கொல்ல வேண்டும் எனச் சொல்ல, மஹாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து அவர்கள் இருவரையும் தம் தொடையில் வைத்துச் சக்கராயுதத்தால் அழித்தார் பின்னர் வெற்றிக்கு அருளிய விநாயகருக்குப் பெரிய கோயில் கட்டி விக்கிரஹத்தையும் பிரதிஷ்டை செய்ததாய்க் கூறுகின்றனர். இங்குள்ள விநாயகர் விக்கிரஹம், நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் இருந்து எடுத்துவரப்பட்டது என்கின்றனர். மஹாவிஷ்ணு கட்டிய கோயில் சிதைந்து போனதாகவும், நீண்ட காலம் கழித்து ஆடு மேய்க்கும் இடையன் கனவில் விநாயகர் தோன்றித் தம் கோயில் இருக்குமிடம் பற்றிச் சொன்னதாகவும், பின்னர் அந்தப் பையன் விக்கிரஹங்களை வைத்துப் பூஜித்ததாயும் சொல்கின்றனர். மீண்டும் விநாயகர் மூலமே முறைப்படி கோயில் கட்ட பேஷ்வாக்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப் பட்டதாய்த் தெரிய வருகிறது. வட இந்தியக் கோயில்கள் அனைத்துக்கும் புனருத்தாரணம் செய்திருக்கும் ராணி அகல்யா இந்தக் கோயிலுக்கும் திருப்பணி செய்திருக்கிறாள். இதன் அருகிலேயே மஹாவிஷ்ணுவிற்கு ஒரு ஆலயமும், பஞ்சாயதன முறைப்படி அமைந்த சிவாலயம் ஒன்றும் இருப்பதாய்க் கூறுகின்றனர். விநாயகர் விக்கிரஹம் சுயம்பு எனச் சொல்கின்றார்கள். மஹாவிஷ்ணு பிரதிஷ்டை செய்தார் என்பதால் துவாரபாலகர்கள் இங்கே ஜயனும், விஜயனும். இந்தக் கோயில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கேயும் கிரிவலம் வருகின்றனர். கிரிவலச் சுற்றுப்பாதை ஐந்து கிமீட்டர் என்று கூறுகின்றனர். 21 முறை கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பாய்ச் சொல்லப் படுகிறது. [] https://www.flickr.com/photos/ahmedabadguide/8283882928 30 அத்தியாயம் 30 அடுத்து நாம பார்க்கப் போறவர் ஸ்ரீமஹாகணபதி. இவர் ராஞ்சன்காமின் என்னும் இடத்தில் கோயில் கொண்டுள்ளார். இந்தத் தலம் புனே-கோரேகான் – அஹமத் நகர் நெடுஞ்சாலையில் புனேயில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திரேதா யுகத்தில் கிருத்சதமர் என்னும் பெயரில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவரே கணபதியின் மூல மந்திரமான, “கணானாம் த்வா” எனத் தொடங்கும் மந்திரத்தை உருவாக்கியவர் ஆவார். இந்த முனிவர் ஒரு தரம் இருமல் தாங்க முடியாமல் உரக்க இருமினார். அந்த இருமலில் இருந்து சிவப்பான குழந்தை ஒன்று அவர் வாயிலிருந்து வெளி வந்தது. அந்தக் குழந்தைக்கு கணபதி மூலமந்திரத்தை உபதேசித்து, கணேசனை நோக்கி நீண்ட தவம் செய்யும்படியும், நினைத்தது நடக்கும் என்றும் கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே அந்தக் குழந்தையும் தவம் செய்து வந்தான். கணேசர் மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தைக்குக் காக்ஷி அளித்து, பொன், இரும்பு, வெள்ளி ஆகிய மூன்று உலோகங்களால் ஆன முப்புரத்தையும் வழங்கினார். அவனுக்குத் திரிபுரன் எனவும் பெயர் சூட்டினார். மேலும் தன் அம்மையும், அப்பனுமான ஈசனைத் தவிர வேறு எவராலும் திரிபுரனை வெல்ல முடியாது என்றும் வரமளித்து மறைந்தார். திரிபுரன் வரங்கள் கிடைக்கவும் மெல்ல மெல்ல ஆணவம் கொண்டான். அகந்தை புத்தியை மறைத்தது. அநியாயம் செய்யத் தொடங்கினான். மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். திருமணம் செய்து கொண்டதன் மூலம், சண்டன், பிரசண்டன் என்னும் பெயரில் இரு புத்திரர்களைப் பெற்று ராக்ஷசர்களாக வளர்த்து தேவர்கள் அனைவருக்கும், பிரம்மா, விஷ்ணு உள்பட அனைவரையும் கதிகலங்க அடித்தான். நாரதர் ஈசன் ஒருவனால் மட்டுமே திரிபுரனை அடக்க முடியும். கஜானனைத் துதித்தால் வழி பிறக்கும் என யோசனை சொல்ல அனைவரும் அவ்வாறே ஓம் எனத் தொடங்கி கணபதி மூல மந்திரத்தை உபாசிக்க ஆரம்பித்தனர். கணபதி காக்ஷி அளித்தார். தேவர்களின் துக்கத்தை அறிந்து கொண்ட அவர் ஈசனிடம் தானே நேரில் வேண்டிக்கொள்வதாயும், அவர் திரிபுரனை அழித்து தேவர்களைக் காப்பார் என்றும் வாக்குறுதி கொடுக்கிறார். என்றாலும் திரிபுரனையும் ஒரு வழி பண்ண வேண்டும் என நினைத்த கணபதி ஒரு பிராமண இளைஞனாக உருமாறி திரிபுரனிடம் சென்றார். தன் பெயர் கலாதரன் என்றும் தனக்கு வேதத்துடன் கூடவே 64 கலைகளும் தெரியும் எனவும் கூறிக்கொண்டார். 64 கலைகளில் ஒன்றை அப்போதே செய்து காட்டும்படி திரிபுரன் கேட்க, என்ன பரிசு கொடுப்பாய் என கணேசன் கேட்கிறார். வந்திருப்பது கணேசனே என்பதை அறியாத திரிபுரன் தன் உயிரையே கொடுப்பதாய்ச் சொல்கிறான். உடனேயே தன் வலிமையால் மூன்று ஆகாய விமானங்களை உருவாக்கினார் கணேசன். அவற்றைத் திரிபுரனுக்கு அளித்தார். இவற்றில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் எனவும், எது கேட்டாலும் கிடைக்கும் எனவும் கூறினார். கலாதராக வந்த கணேசனுக்குப் பரிசளிக்க விரும்பிய திரிபுரன் என்ன வேண்டும் எனக் கேட்க ஈசனிடம் உள்ள சிந்தாமணிச் சிற்பம் தான் வேண்டும் என்று கணேசன் சொல்கிறார். ஈசனோடு போரிட்டுச் சிந்தாமணிச் சிற்பத்தைக் கைப்பற்ற திரிபுரன் கிளம்பிச் செல்கிறான். முதலில் சிந்தாமணிச் சிற்பத்தைத் தனக்குத் தரும்படி ஈசனிடம் கேட்டுப் பார்க்கிறான் திரிபுராசுரன். ஈசன் மறுக்கப் போர் தொடங்கியது. அந்தப் போரில் ஈசனின் தேரின் அச்சு முறிய, சிந்தாமணிச் சிற்பத்தை எப்படியோ கைப்பற்றிய திரிபுராசுரன் அதை எடுத்துக்கொண்டு திரும்புகிறான். பார்வதியோ மனம் வருந்தி தன் தகப்பன் வீட்டிற்கு ஆறுதலுக்குச் செல்கிறாள். ஆனால் ஈசனிடம் மட்டுமே இருக்க வேண்டிய சிந்தாமணிச் சிற்பம் அசுரன் கையில் வந்ததால் இருக்குமா என்ன? பாதி வழியிலேயே சிந்தாமணிச் சிற்பம் மாயமாய் மறைந்து போகிறது. திரிபுரனுக்குக் கவலையோடு, கோபமும் அதிகரிக்க அவனுடைய அட்டகாசம் அதிகம் ஆகிறது. ஈசனோ கணபதி மூலமந்திரத்தைத் தியானித்து மீண்டும் போருக்கு ஆயத்தமாகிறார். கணபதி பீஜ மந்திரத்தை உச்சரித்து திரிபுரன் மீது அம்புவிடத் தயாராகிறார். பூமாதேவி தானே முன்வந்து ரதமாக மாறி ஈசனைத் தாங்க, சூரிய, சந்திரர்கள் அந்த ரதத்தின் சக்கரங்களாக மாறுகின்றன. பிரம்மன் சாரதியாக ரதத்தை ஓட்ட, மேரு மலை வில்லாக மாறுகிறது. மஹாவிஷ்ணுவே அம்பாகவும், அஷ்வினி குமாரர்கள் குதிரைகளாகவும் மாறுகின்றனர். ஈசன் எய்த அம்பானது திரிபுரனைத் தாக்க பளீரென்ற மின்னல் அண்ட பகிரண்டத்தையும் நடுங்க வைக்கிறது. திரிபுரன் கீழே விழுந்து இறக்க அவன் உடலில் இருந்து கிளம்பிய ஜோதியானது ஈசனிடமே அடைக்கலம் ஆனது. திரிபுரங்களையும் தன் சக்தியால் எரித்தார் ஈசன். பின்னர் இந்நிகழ்வின் நினைவாக மணிப்பூர் என்னும் இடத்தில் கணேசப் பெருமானுக்கு ஒரு கோயில் அமைக்கப் பட்டது. அதுவே தற்சமயம் ராஞ்சன்காமின் என்ற பெயரால் வழங்கப் படுகிறது. ஸ்ரீமஹா கணபதி கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். இரு கால்களையும் குறுக்காக வைத்து அமர்ந்த கோலம். சித்தி, புத்தி இருபக்கமும் காணப்படுகின்றனர். இந்தக் கோயில் பெஷாவர்கள் காலத்தில் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. அஷ்ட விநாயகர்களிலேயே மிகவும் அழகு வாய்ந்த இந்த விநாயகர் அலங்காரப் பிரியரும் கூட என்கின்றனர். இந்நகரில் பயணிகளுக்குத் தங்குமிடங்களும், சத்திரங்களும் உள்ளன [] https://www.flickr.com/photos/36043693@N06/6583913179 31 அத்தியாயம் 31 அடுத்ததாய் நாம் காண இருப்பது லேனாத்ரி என்னும் ஊரில் உள்ள கிரிஜாத்மஜ விநாயகர் ஆவார். இவரும் புனே நகருக்கு அருகேயே இருக்கிறார். இந்த அஷ்ட விநாயகர் ஆலயங்கள் அனைத்தையும் காணப் புனே சென்று அங்கே தலைமையிடமாய்க் கொண்டு சென்று வரலாம். புனேயில் இருந்து கிட்டத் தட்ட 85 மைல் தொலைவில் நாசிக் செல்லும் வழியில், குக்கா என்னும் நதியின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது லேனாத்ரி என்னும் ஊரும் அங்கே கிரிஜாமத் விநாயகர் ஆலயமும். இவர் மலையின் மீது காட்சி தருகிறார். மலையில் கிட்டத் தட்ட 250 படிகள் ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மலை ஏற முடியாதவர்களுக்கு எனக் கீழே டோலியும் இருக்கிறது. படிகள் இரும்பாலான கைப்பிடிக் குழாய்கள் பதிக்கப் பட்டுக் காணப்படும். இந்த லேனாத்ரி மலையில் உள்ள ஒரு குகையிலே அம்பாள் தவம் செய்ததாய்க் கூறுகின்றனர். தனக்கென ஒரு மகன் பிறக்க ஆசைகொண்ட பார்வதி தேவி இந்த மலையில் உள்ள ஒரு குகையில் தவமிருந்ததாயும், அதன் பலனாகவே விநாயகர் தோன்றியதாயும் ஐதீகம். பார்வதி தேவியின் உடலின் அழுக்கும், எண்ணெயும் சேர்த்து வைத்துப் பிள்ளையார் போன்ற உருவம் அமைத்து வைக்க, அதற்கு உயிரும் வந்தது. தாயின் விருப்பம் போல் விநாயகராக அவதரித்துள்ளதாய் அந்தக் குழந்தையும் கூறினார். பார்வதி அந்தக் குழந்தைக்குக் கணேஷ் என்ற பெயர் வைக்கிறாள். சத்வம், ரஜம், தாமசம் மூன்று குணங்களையும் உள்ளடக்கியவன் என அதற்கு அர்த்தம் என்கின்றனர். ஈசன் விநாயகரை வணங்குபவருக்கு எந்தக் காரியத்திலும் தடை ஏற்படாது என ஆசியளிக்கிறார். பதினைந்து வருடங்கள் இங்கே கழித்த விநாயகர் பின்னர் அரக்கனான சிந்துவை வெல்ல வேண்டும் என்பதை உணர்கிறார். சிந்துவோ விநாயகரை அழிக்க நினைக்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை. பால கணேஷின் லீலைகள் லேனாத்ரி மலையை மகிழ்விக்கின்றன. ஆறாம் வயதில் விஸ்வகர்மா அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி அளித்து ஆயுதங்களையும் அவருக்கு அளித்தார். அவை பாசக்கயிறு, பரசு என்னும் கோடரி, அங்குசம், தாமரை மலர் போன்றவை ஆகும். ஏழாம் வயதில் கெளதம முனிவரால் உபநயனம் செய்விக்கப் பட்டது. இங்கே அன்னையை கிரிஜா என்ற பெயரில் அழைப்பதால் அன்னையின் இதயத்தில் இடம்பெற்ற விநாயகரும் கிரிஜாத்மஜ விநாயகர் என்ற பெயரைப் பெற்றார். மலை மீது உள்ள பதினெட்டு பெளத்த குகைகளில் எட்டாவது குகையில் கிரிஜாத்மஜ விநாயகர் கோயில் கொண்டு இருக்கிறார். ஒரே கல்லால் ஆன குகைக்கோயில் தெற்கே பார்த்து அமைந்துள்ளது. சந்நிதிக்கு எதிரே அமைந்திருக்கும் சபாமந்திரில் ஒரு தூண் கூட அமைக்காமல் கட்டப் பட்டிருக்கிறதாய்க் கேள்விப் படுகிறோம். குகைக்கல்லிலேயே வடிக்கப் பட்ட கிரிஜாத்மஜ விநாயகர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். பக்தர்கள் தாங்களே இவருக்கு வழிபாடுகள் நடத்தலாம். விநாயகரின் சந்நிதியின் முன்னால் ஆறு தூண்களோடு கூடிய சிறிய சபா மண்டபத்தில் அழகான யானைகள், பசுக்கள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. தினமும் காலையில் பஞ்சாமிர்த அபிஷேஹம் நடக்கிறது. தற்சமயம் இந்தக் கோயிலும், மலையும், குகைகளும் தொல் பொருள்த் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. [] https://www.flickr.com/photos/myclicks_babu/10051527655 32 அத்தியாயம் 32 புனே நகரில் இருந்து கிட்டத்தட்ட 90 மைல் தூரத்தில் குக்கடி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது ஒரு விநாயகர் கோயில். அதற்கு ஓஜர் விக்னேஷ்வர் என்று பெயர். இது கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டதாய்ச் சொல்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலின் விமானம் தங்கத்தால் ஆனது என்றும் சொல்கின்றனர். அஷ்டவிநாயகர் கோயில்களிலும் இந்த ஒரு கோயிலில் மட்டுமே தங்க விமானம் உண்டென்றும் சொல்கின்றனர். இந்தக் கோயில் பற்றிய தல வரலாறு: ஹேமவதி என்னும் நகரை அபிநந்தன் என்னும் அரசன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் யாகங்கள் நிறையச் செய்து வந்தான். ஒரு சமயம் இந்திரபதவி வேண்டி யாகம் செய்தான். யாகம் மிகவும் சிறப்பாகவும், விதிமுறைகளை மீறாமலும் அமைந்து வரவே, இந்திரனுக்குத் தன்னுடைய பதவி போய்விடுமோ என்னும் கவலை வந்துவிட்டது. ஆகவே எப்படியானும் யாகத்தில் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினான். தொல்லைகளை எவ்விதமேனும் தர வேண்டும். யோசித்துவிட்டுக் காலதேவனிடம் அபிநந்தன் யாகத்தில் தொல்லைகளைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். காலதேவன் விக்னாசுரன் என்னும் பெயரில் தோன்றி அபிநந்தனின் யாகம் முழுமையாகப் பூர்த்தி ஆகாவண்ணம் பல இடைஞ்சல்களையும் செய்தான். யாகத்தில் பங்கு பெற்ற ரிஷி, முனிவர்கள் இதனால் பல இடையூறுகளையும் சிரமங்களையும் அநுபவித்தனர். யாகக் கிரியைகள் முடங்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் நின்றேவிடும் போல் இருக்கும் நிலை வர, அனைவரும் என்ன செய்வது என்று கூடி ஆலோசித்து இதற்குச் சரியான காவல் கஜானனே தருவான் என முடிவுக்கு வந்தனர். கஜானனை வணங்கி அவரிடம் முறையிட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிய விக்னேஸ்வரர் பர்ஷ்வ முனிவருக்கும், அவர் மனைவியான தீப வத்ஸலாவுக்கும் மகனாகப் பிறக்க முடிவு செய்தார். அவ்வண்ணமே பிறந்தார். ஈசனின் ஆலோசனையின் பேரில் அனைவரும் பர்ஷ்வ முனிவரை வந்து சந்தித்தனர். கணபதி என்ற பெயருடன் வளர்ந்து வரும் அவரது குமாரனைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்லி அவதார காரியம் நிறைவேறவும், அவர்களுக்கு உதவி செய்யவும் கணபதியை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறார்கள். விக்னாசுரனை வேறு எவராலும் அழிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். பர்ஷ்வ முனிவரும் ஒப்புக் கொண்டு கணபதியை அவர்களோடு அனுப்பி வைத்தார். தேவர்களோடு சென்ற கணபதி ஈசன் துணையுடன் விக்னாசுரனைத் தனது அங்குசத்தால் பிடித்துக் கொல்லாமல் தேவாதி தேவர்களின் முன்னிலையில் நிறுத்துகிறார். தன்னைக் கொல்லவில்லை என்பதைக் கண்டும், தனக்கு நேரிட்டிருக்கும் மகத்தான பாக்கியத்தை நினைத்து மகிழாமல் விக்னாசுரன் அப்போதும் தீமைகளே செய்ய நினைத்தான். காற்றாகவும் கடுங்காற்றாகவும், புயல்காற்றாகவும், அக்னியாகவும், ஊழித்தீயாகவும் மாறினான். அவன் சக்தி அனைத்தையும் திரட்டிக்கொண்டு அந்தப் பகுதியில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தான். ஆனால் விநாயகர் அனைத்தையும் தன் தும்பிக்கையும் அங்குசமும் துணைக்கொண்டு தடுத்து நிறுத்தினார். அக்னியாலும் அந்தப் பகுதியை நாசம் செய்ய நினைத்து அவனால் முடியாமல் போகவே தனது இயலாமையைக் கடைசியில் உணர்ந்த விக்னாசுரன் கணபதியின் கால்களைச் சரணம் அடைந்தான். தன்னை அழிக்க வேண்டாம் என்றும் என்றென்றும் தன் பெயர் நிலைத்து நிற்க வேண்டியே தான் இத்தகைய காரியங்களைச் செய்ததாகவும், இத்தகைய செயல்களால் நற்பெயர் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டதாகவும் கூறி மன்னிப்புக் கோரினான். அவன் விருப்பத்தைப் புரிந்து கொண்ட கணபதியும் அவன் பெயரான விக்னாசுரன் என்பதில் உள்ள விக்னத்தைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார். விக்னேஸ்வரர் ஆனார். விக்ன ராஜன் எனவும் அழைக்கப் பட்டார். விக்னாசுரனுக்கும் முக்தி அளித்து அவனைச் சிறப்புறச் செய்தார். இந்த ஊரில் உள்ள விக்னேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதாகவும் நுழைவாயிலில் இரண்டு தீபஸ்தம்பங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். கோயிலுக்குள் நுழையும்போது இருக்கும் இரு துவாரபாலகர்களைத் தாண்டினால் இரு பெரிய கூடங்கள் வருகின்றன. முதல் கூடம் 20 அடி உயரத்திலும் அடுத்தது 10 அடி உயரத்திலும் உள்ளது. முதல் கூடத்தில் துண்டிராஜ் என்பவர் இருக்கிறார். அடுத்த கூடத்தில் விநாயகரின் வாகனமான எலி ஒன்று ஓடும் நிலையிலேயே சலவைக்கல்லால் செதுக்கப் பட்டு வைக்கப் பட்டுள்ளது. பஞ்சாயதன முறையிலான வழிபாட்டுக்குரிய சூரியன், சிவன், விஷ்ணு, அம்பாள், கணபதி ஆகியோருக்கும் தனித்தனியாக சந்நிதியின் நான்கு மூலைகளிலும் இடம் கொடுத்துள்ளதாய்ச் சொல்கின்றனர். மூலவரான விக்னேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இடப்பக்கமாய்த் தும்பிக்கையை வைத்திருக்கும் இவரின் திருமேனியில் சிந்தூரம் பூசப் பட்டுக் காணப்படுகிறது. இரு பக்கமும் அவரின் இரு மனைவியரான சித்தி, புத்தி காணப்படுகின்றனர். பெஷாவர் மன்னர்களில் ஒருவரான சிம்மாஜியப்பா இந்தக் கோயிலைத் திருப்பணிகள் செய்து தங்க விமானத்தையும் அமைத்துக் கொடுத்ததாய்ச் செய்திகள் கூறுகின்றன. இந்த சிம்மாஜியப்பா இளவரசனாக இருந்த போது இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். கோயிலின் நுழைவாயில் உயரம் குறைவாக இருந்ததால் அவர் தலைக்கிரீடம் கீழே விழுந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தான் இப்போது போர்ச்சுக்கீசியரோடு சண்டை போடச் செல்வதாயும் வெற்றி பெற்று வந்ததும், இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்வதாயும் அப்போது நுழைவாயிலையும் உயரமாக்குவதாயும் பிரார்த்தித்துக் கொண்டார். அவ்வாறே வெற்றி பெற்றுத் திரும்பியதும், இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தார். அதன் பின்னர் 1967-ம் ஆண்டு அப்பா சாஸ்திரிகள் என்ற கணேச பக்தர் ஒருவரால் இந்தக் கோயில் புனருத்தாரணம் செய்யப் பட்டு யாத்திரிகளுக்கெனத் தனியாக ஒரு விடுதியும் கட்டப் பட்டுள்ளது பல்லாவேச்வர விநாயகர் = பாலி இது இல்லை. இது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.. [] https://www.flickr.com/photos/offbit2010/5331452953 33 அத்தியாயம் 33 கடைசி எட்டாவது விநாயகர் கோயிலுக்கு இப்போ வந்திருக்கோம். மஹாராஷ்டிராவின் கர்ஜத் என்னும் ஊரில் இருந்து சுமார் 25 அல்லது முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மஹத் என்னும் கிராமம். இதற்கு மும்பையில் இருந்தும் வரலாம். மும்பையில் இருந்து சுமார் 85 கிமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீவரத விநாயகர். கெளண்டின்யபூர் என்னும் ஊரை ஆண்டு வந்த மன்னன் பீமா புத்திரப்பேறு வேண்டி மனைவியோடு காட்டில் தவம் செய்து வந்தான். அங்கே இருந்த விஸ்வாமித்திரரோடு அவனுக்குச் சந்திப்பு ஏற்பட்டது. அவரிடம் தன்மனக்குறையைத் தெரிவிக்க அவரும் அவர்களுக்கு, கஜானன மந்திர உபதேசம் செய்தார். ஒரு கோயிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்கும்படியும் கூறினார். அதன்படியே செய்த அரசனுக்கும், அரசிக்கும் ஒரு அழகிய மகன் பிறந்தான். மகனுக்கு ருக்மாங்கதன் என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தான் அரசன். அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய ருக்மாங்கதன், தந்தையிடம் இருந்து கணேச மந்திர உபதேசமும் பெற்று தினமும் அதை ஜபித்து வந்தான். ஒரு முறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ருக்மாங்கதன் களைப்பின் பேரில் அங்குள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். முனிவர் பெயர் வாசகநவி என்பதாகும். அவர் அவனை வரவேற்றுப் பர்ணசாலையில் அமரச் செய்து தான் நீராடிவிட்டு வருவதற்காகக் கிளம்பினார். ரிஷி பத்தினியிடம் குடிக்க நீர் கேட்ட ருக்மாங்கதனுக்கு நீர் கொண்டு வந்த கொடுத்த ரிஷிபத்தினிக்கு அழகும், அறிவும், ஆண்மையும் நிரம்பிய ருக்மாங்கதன் மேல் ஆசை வந்தது. ருக்மாங்கதனிடம் அதைத் தெரிவித்துத் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட, அவனோ மறுத்துவிட்டான். கோபம்கொண்ட முகுந்தா என்னும் பெயருள்ள ரிஷிபத்தினி அவனைக் குஷ்டரோகியாக மாறும்படி சபிக்க, அப்படியே குஷ்டரோகியானான் ருக்மாங்கதன். மனம் வருந்தி எவரும் அறியாமல் கணேசனைக் குறித்துத் தவம் இயற்றினான் ருக்மாங்கதன். அப்போது அங்கே வந்த நாரத முனி அவனிடம் சிந்தாமணி குளக்கரையின் அருகில் உள்ள விநாயகரை வழிபட்டுத் தவம் இயற்றும்படி சொல்லிச் சென்றார். அப்படியே சிந்தாமணி குளக்கரைக்குச் சென்று அங்கிருந்த ஸ்ரீகணேசரை வழிபட்டுத் தவம் இருந்தான் ருக்மாங்கதன். கணேசரும் மனம் மகிழ்ந்து அவன் இழந்த அழகையும், ஆண்மையையும் திரும்பக் கொடுத்தார். முன்னெப்போதையும் விட இப்போது இன்னும் ஒளிர்ந்தான் ருக்மாங்கதன். முகுந்தாவோ எந்நேரமும் ருக்மாங்கதன் நினைவிலேயே இருந்தாள். யாரைப் பார்த்தாலும் அவள் கண்களுக்கு ருக்மாங்கதனாகவே தெரிந்தது. இப்படி அலைந்த அவளைக் கண்ட இந்திரனுக்கு அவள் மேல் ஆசை வர, அவள் ருக்மாங்கதனை நினைத்துத் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது அவளை அடைந்தான். அதனால் அவள் கர்ப்பம் அடைந்தாள். குழந்தைக்கு கிரிட்ஸமாதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் முகுந்தா. குழந்தை மிகவும் புத்திசாலியாகத் திகழ்ந்தான். வேதங்களிலும், மந்திரங்களிலும், மற்ற தந்திரங்களிலும் தேர்ந்தவன் ஆன கிரிட்ஸமாதா ஒரு முறை மகத மன்னனின் அவையில் நடந்த ஒரு விவாதத்தில் அத்ரி, விஸ்வாமித்திரர் போன்ற முனி சிரேஷ்டர்களோடு கலந்து கொண்டான். அவன் யார் என்பதை உணர்ந்த அத்ரி முனிவர் அவனிடம் அவன் வாசகநவி முனிவரின் சொந்த மகன் இல்லை எனவும், ருக்மாங்கதனின் மகன் எனவும் அவனிடம் கூற, அவனும் அதைத் தன் மகனிடம் கேட்கிறான். அன்னையோ பதில் சொல்லாமல் நிற்க, “பாவம் செய்த நீ முட்கள் நிறைந்த பழமாக மாறுவாய்!” என்று சபிக்கிறான். கோபம் கொண்ட முகுந்தாவும் மகனை,” ஒரு ராக்ஷசனுக்குத் தந்தையாவாய்!”என்று சபித்துவிடுகிறாள். அப்போது விண்ணிலிருந்து அசரீரி, “கிரிட்ஸமாதாவின் தகப்பன் இந்திரன்” என ஒரு குரல் ஒலிக்க, தாய், மகன் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கிரிட்ஸமாதா தன் கதி இப்படியானதை நினைத்து நொந்து போய் ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறான். புஷ்பக் என்னும் காட்டில் விநாயகரை நினைத்துத் தவம் செய்கிறான். இலை, தழைகளையே உணவாக எடுத்துக்கொண்டு கடுந்தவம் செய்கிறான். விநாயகரும் மனம் மகிழ்ந்து வரம் கொடுப்பதாய்க் கூறுகிறார். கிரிட்ஸமாதாவும் தனக்கு எதுவும் வேண்டாம் எனவும், விநாயகரை அங்கேயே கோயில் கொண்டு பக்தர்களின் துயரைப் போக்கிப் புனிதப் படுத்த வேண்டும் எனவும் வேண்ட, விநாயகரும், அவன் பெயர் வேத விற்பன்னர்களில் முதலாக இருக்கும் என ஆசி வழங்கி அங்கே கோயில் கொள்வதாயும், வரும் நாட்களில் இந்தக் காடு பத்ரகா என்ற பெயரில் வழங்கப் படும் எனவும் கூறுகிறார். பின்னர் அங்கேயே வேண்டிய வரங்களைத் தந்தருளும் ஸ்ரீவரத விநாயகராக அருள் பாலிக்கிறார். சுயம்புவாகத் தோன்றியவர் என்று சொல்கின்றனர் கி.பி.1725-ம் ஆண்டு இந்தக் கோயிலை பெஷாவர்கள் திருப்பணிகள் செய்து கட்டி முடித்தார்கள். மஹத் கிராமத்துக்கு இந்தக் கோயில் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஓட்டுக்கூரையோடு கூடிய ஒரு வீடு போன்ற தோற்றத்தில் இந்தக் கோயில் காட்சி அளிப்பதாய்ச் சொல்கின்றனர். எட்டு யானைகள் தாங்கி நிற்பது போன்ற அமைப்போடு கூடிய இந்தக் கோயிலில் உள்ளே இரு விநாயகர் விக்கிரஹங்கள் இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். மூன்று கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வரும் இந்தக் கோயிலில் பக்தர்கள் அவர்களே தங்கள் கைகளால் விநாயகரைப் பூஜித்து வழிபடலாம். இங்கே யாத்ரிகர்களுக்குத் தங்கும் வசதிகளும் உண்டு. தியானம் செய்வதற்கு இந்த விநாயகர் கோயில் சிறந்த இடமாய்க் கருதப் படுகிறது. இத்துடன் அஷ்ட விநாயகர் கோயில்கள் முடிவடைந்தன [] https://www.flickr.com/photos/premnath/8009024999 34 அத்தியாயம் 34 இனி நாம் காணப்போவது விநாயகரின் ஷோடச நாமங்கள் ஆகும். அதாவது விநாயகருக்கு உள்ள பதினாறு பெயர்களையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கப் போகிறோம். ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்று விநாயகருக்குப் பதினாறு பெயர்கள் உண்டு. முதல் நாமம் ஸுமுகர் என வருகிறது. எல்லாரிடமும் ஸுமுகமாய் இருக்கணும் என்று சொல்லுவார்கள் இல்லையா? “ஸூ” என்றால் நல்ல, முகம் என்றால் தெரியும் இல்லையா? நல்ல முகம். அதாவது இன்முகம். இன்முகம் காட்டி வரவேற்றார்கள் என்பார்களே, கேட்டிருப்பீங்க இல்லையா? விநாயகர் அத்தகையதொரு இன்முகத்தோடேயே எப்போதும் காட்சி அளிக்கிறார். ஆகையால் அவருக்கு ஸுமுகர் என்ற பெயர். விக்னேஸ்வரர் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவருடைய கருணா கடாக்ஷம் ஆநந்தத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவரைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் தெரியாத ஒரு சந்தோஷம் உண்டாகிறது. பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்க நமக்கு அலுப்பதில்லை. எல்லாச் சிவாலயங்களிலும் இவரைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளேயே போகவேண்டும். அதிலும் தன் பெரிய தொந்தியைத் தூக்கிக்கொண்டு நிருத்த கணபதியாக நாட்டியமாடிக்கொண்டு காட்சி அளிப்பார். மேலும் முகம் என்றால் வடமொழியில் மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் வாய்க்கும் அதுதான் பெயர். முகம் என்றால் வாய்தான். தமிழில் மூஞ்சிக்குப் பெயரை முகம் என்ற வடமொழிப் பெயராலேயே அழைக்கிறோம். அத்தகைய வாயினால் ஸத் விஷயங்களைத் தன் வாயால் சொல்பவர் விநாயகர். வித்யை, அதனால் அடையும் ஞாநம் இவற்றை உடையவர் விநாயகர். அத்தகைய ஞாநத்தைத் தன் வாயினால் போதிப்பதாலேயும் இவர் ஸுமுகர் என்று சொல்கிறோம். மேலும் யானை வடிவான விநாயகருக்கு அந்த யானையைப் போலவே தும்பிக்கை உள்ளது அல்லவா? நமக்கெல்லாம் வாய் தெரிகிறாப்போல் உதடு இருக்கிறது. ஆனால் யானைக்கோ வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை தொங்குகிறது அன்றோ? அதே போல் விநாயகருக்கும் வாய் தெரியாமல் தும்பிக்கை இருக்கிறது. சாப்பிடும்போதும் யானை பிளிறும்போதும் மட்டுமே தும்பிக்கையைத் தூக்கிக்கொண்டு தன் வாயைக் காட்டுகிறது. அவ்விதமே விநாயகரும் காரண, காரியமில்லாமல் வாயைத் திறக்காமல் காரண, காரியத்தோடு வாயைத் திறக்கிறார். மற்ற நேரங்களில் தன் தும்பிக்கையால் வாயை மூடிக்கொள்கிறார். இது தான் அவருடைய ஸுமுகத்துக்குப் பொருள். அடுத்து ஏகதந்தர். பொதுவாய் யானைகளுக்கு, ஆண் யானைகளுக்கு இரண்டு தந்தங்கள் உண்டு. ஆனால் நம்ம பிள்ளையாரோ ஒரே தந்தக்காரர். எப்படினு பார்ப்போமா? இவருக்கும் இரண்டு தந்தங்கள் தான் இருந்தது. ஆனால் வலப்பக்கத்து தந்தத்தை ஒடிச்சுக்கையில் வைச்சிருப்பார். முதல்லே கொம்பை ஒடிச்சது எதுக்குன்னா கஜமுகாசுரனை வதம் பண்ண. தன்னோட கொம்பையே ஒடிச்சு அதை ஆயுதமா வைத்துக்கொண்டு கஜமுகாசுரனை வதம் பண்ணினார் கஜானானர். அடுத்துக் கொம்பை உடைச்சுக்கொண்டது வியாசர் மஹாபாரதம் சொல்லும்போது. வியாசருக்குத் திடீர்னு மஹாபாரதத்தைக் காவியமாய் வடிக்க எண்ணம் வந்து அதை யார் எழுதுவாங்கனு யோசிச்சப்போ பிள்ளையார் தான் சரியான ஆள்னு தோணி அவரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னாராம். பிள்ளையாரும் சரினு ஒத்துண்டு வந்தார். எழுதறதுக்கு இமயமலைப் பாறைகள் இருக்கு. ஆனால் எதை வைச்சு எழுதறது? வியாசரோ ஆரம்பிச்சுட்டார். விநாயகர் யோசிக்கவே இல்லை. தன்னோட தந்தத்தை ஒடைச்சு எடுத்துக்கொண்டு அதை எழுத்தாணியாய் உபயோகித்துக்கொண்டு எழுத ஆரம்பிச்சார். இப்படி ஒரு பக்கத்து தந்தத்தை உடைத்துக்கொண்டதால் ஏக தந்தர் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்த பெயர் கபிலர் என்பது. கபிலர் என்றால் சிவந்த நிறமுள்ளவர் என்று அர்த்தம். பிள்ளையாருக்கு இந்த நிறம் தான் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பல ஸ்வரூபங்களிலும் ஒவ்வொரு நிறம் உண்டு. வெண்மை நிறம், நீல நிறம், சிவந்த நிறம் எனப் பல நிறங்கள் உண்டு பிள்ளையாருக்கு. கஜமுகாசுரனைக் கொன்ற ரத்தம் பூராவும் தஞ்சைக்கருகே திருச்செங்காட்டாங்குடி என்னும் ஊரின் காட்டில் பாய்ந்ததால் அங்கே உள்ள பிள்ளையாரும் அந்த ரத்தம் பட்டு சிவந்த நிறமாய் விட்டாராம். ஆகவே கபிலர் என்ற பெயரும் உண்டு பிள்ளையாருக்கு அடுத்த பெயர் கஜகர்ணகர். கஜமுகர் என்று முகம் மட்டுமே யானை மாதிரி இருக்கிறதைச் சுட்டிக் காட்டுவது. கஜகர்ணகர் என்றால் யானைக்காது என்று அர்த்தம். கர்ணம் என்றால் காது தான் பொருள். இவ்வளவு பெரிய காது பிள்ளையாருக்கு எதுக்குன்னா, நம் குறைகளைக் கேட்பதற்கு என்றும் வைத்துக்கொள்ளலாம். யானை மற்றப் பிராணிகளைப் போல் அல்லாமல் காதை மட்டும் விசிறிக்கொள்ளும். மற்றப் பிராணிகளால் இவ்விதம் முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டிக்கொள்ளும், மனிதனுக்கோ ரொம்பவே சிரமமான ஒன்று. இப்படி இயலாத ஒன்றைச் செய்வதற்குத் தான் “கஜகர்ணம் போட்டாலும் நடக்காது” என்ற வழக்குச் சொல்லில் கூறுகிறோம். கஜகர்ணம் என்பதற்குப் பொருள் குட்டிக்கரணம் இல்லை. யானை எப்படித் தன் காதை மட்டும் ஆட்டிக்கொள்கிறதோ அப்படி நம்மால் இயலாது. ஆனால் இதை விநாயகர் எளிதாய்ச் செய்கிறார். மேலும் யானை என்றால் அதற்கு மத நீர் வந்து கொண்டிருக்கும், கன்னத்தில் வழியும் மத நீரால் மொய்க்கும் ஈக்களை, எறும்புகளை விரட்டவும் அது காதை விசிறி போல் ஆட்டிக்கொள்ளும். இங்கேயோ பிள்ளையாருக்குப் பெருகும் மத நீரை ஆன்றோர்கள் அவருடைய அருள் மழையாகச் சொல்கின்றனர். பக்தர்களுக்காகப் பெருகும் அருள் மழையை விளையாட்டாய்த் துடைக்கிறாராம் விநாயகர். அடுத்த பெயர் லம்போதரர். லம்போதரர் என்றால் பெரிய வயிறை உடையவர் என்று அர்த்தம். பிள்ளையாருக்கு எவ்வளவு பெரிய தொந்தி என்பது நான் சொல்லித் தெரியவேண்டாம். விநாயகர் அகவலில் ஒளவைப் பாட்டி “பேழை வயிறு” என்று சொல்கிறாள். இந்த வயிற்றுக்குள் என்ன இருக்கிறது? அண்டாண்டங்கள் இருக்கின்றன. அண்டங்களை எல்லாம் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டிருப்பதால் பேழை வயிற்றுக்காரராக இருக்கிறார் பிள்ளையார். சங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும்போது வரும் முதல் பாடலே, லம்போதர லக்குமிகரா என்று பிள்ளையாரைச் சொல்லித் தான் ஆரம்பிக்கும். எப்போவுமே தொந்தி, தொப்பையோடு யாரைப் பார்த்தாலும் நம்மையும் அறியாமல் மனம் குதூகலிக்கும். அதுவும் அவர் நம்ம இஷ்ட தெய்வமாயும் இருந்துட்டால்? கேட்கவே வேண்டாம். தொந்தி கணபதி மட்டுமில்லாமல் அவர் செளபாக்கியங்களைத் தரும் லக்ஷ்மிகரமாகவும் இருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் வேடிக்கையும் விநோதமுமாக மக்களைச் சிரிக்கப் பண்ணிக்கொண்டு காட்சி அளிக்கும் விநாயகரின் அடுத்த நாமாவளி விகடர். சம்ஸ்கிருத அகராதியில் விகடர் என்றாலே ஹாஸ்யம் என்று அர்த்தம் இருக்காது. கோரமாய் பயங்கரமாய் இருப்பதைத் தான் அதிலே சொல்லி இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஹாஸ்யம் செய்து சிரிக்க வைப்பவர்களையே விகடன் அல்லது விகடகவி என்றெல்லாம் சொல்கிறோம். இந்த ஹாஸ்யம் சும்மாச் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும் ஹாஸ்யம். விநாயகரின் புத்தி சாதுர்யத்திற்குக் கேட்கவே வேண்டாமே. சூரியனின் சீடர் ஆயிற்றே? தம் புத்தி சாதுர்யத்தால் நம்மைச் சிரிக்கப் பண்ணுகிறார் விகடரான விநாயகர். அம்மா உமையிடமும், அப்பா ஈசனிடமும் குறும்புகள் செய்து அவர்களைச் சிரிக்க வைப்பாராம். குழந்தைக்குறும்புடன் ரிஷிகளையும் வம்புக்கு இழுப்பாராம். இப்படி வம்புக்கு இழுத்த அகஸ்தியரின் கமண்டலத்து நீரே காவிரியாகப் பெருக்கெடுத்து ஓடியது என்பதை அறிவோம் அல்லவா? ராவணனை ஏமாற்றிக் கோகர்ணத்திலே ஆத்மலிங்கப் பிரதிஷ்டை பண்ணியதும் விநாயகரே. ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரை ஸ்ரீராமர் தன் பட்டாபிஷேஹப் பரிசாக விபீஷணனுக்கு அளிக்கிறார். அதை எடுத்துக்கொண்டு இலங்கை செல்லும் விபீஷணனிடம் இருந்து அதை நாட்டை விட்டுச் செல்லாதபடிக்குத் தடுத்தவர் விநாயகர். விபீஷணனை ஏமாற்றிக் காவேரி நதிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே ஸ்ரீரங்கத் தீவில் அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணகர்த்த விகடரான இந்த விநாயகரே. இதைத் தவிரவும் இந்த விகட விநாயகர் பண்ணிய குறும்புகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம். [] https://www.flickr.com/photos/sandeera/6748075905 35 அத்தியாயம் 35 அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து வந்தவர்கள் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ராமரும், சீதையும் பட்டாபிஷேகத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொன்டிருந்தனர். பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீஷணன் கிளம்பிக் கொண்டிருந்தான். ஸ்ரீராமர் அவனுக்குத் தங்கள் குல தெய்வமான பெருமாளின் பள்ளி கொண்ட கோலத்தைக் கொண்டிருக்கும் விக்ரஹத்தைப் பரிசாக அளித்தார். பெருமாள் அழகாகப் பள்ளி கொண்டிருந்தார். ஆண்டாண்டு காலமாக இக்ஷ்வாகு குலத்தவர் பூஜை செய்து வந்த பரம்பரை விக்ரஹம் அது. ப்ரணவாகாரமான விமானத்தின் கீழ் இருந்தார். விமானத்தோடு அப்படியே விபீஷணனுக்குப் பரிசளித்த ராமர் இதை எங்கேயும் கீழே வைக்கலாகாது. வைத்தால் வைத்த இடத்தில் பிரதிஷ்டை ஆகிவிடும். ஆகவே நீ இலங்கை போய்ச் சேரும் வரைக்கும் விக்ரஹம் கையிலேயே இருக்கட்டும். என்று சொல்லிக் கொடுத்தார். விபீஷணனும் விக்ரஹத்தை எங்கேயும் வைக்காமல் வெகு ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு வந்தான். மெல்ல மெல்லத் தென் பகுதிக்கு வந்து சேர்ந்த விபீஷணன், காவிரிக்கரையை அடைந்தான்.அங்கே மாலைக்கான அநுஷ்டானங்களைச் செய்ய நினைத்தான். ஆனால் விக்ரஹத்தைக் கீழே வைக்க முடியாதே. யோசித்த விபீஷணனுக்குச் சற்றுத் தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளை கண்களில் பட்டான். அவனை அழைத்து, “இந்த விக்ரஹத்தைக் கைகளில் வைத்துக்கொண்டிரு. நான் நதியில் இறங்கி அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறினான். அந்தச் சிறுவனும் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான். அவன் கைகளுக்கு விக்ரஹம் கனமாகத் தெரிய வந்தால் தான் விக்ரஹத்தைக் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினான். அப்போது விபீஷணன் அப்படிக் கைகள் கனத்தால் தன்னை அழைக்குமாறு கூற சிறுவனும் தான் மூன்று முறை கூப்பிடுவதாகவும், மூன்று முறை அழைத்தும் விபீஷணன் வரவில்லை எனில் விக்ரஹத்தைக் கீழே வைத்துவிடுவேன் எனவும் கூற விபீஷணனும் சம்மதித்தான். அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது என்றும் தான் சீக்கிரம் வந்துவிடுவதாகவும் கூறி நதியில் இறங்கிக் குளித்துவிட்டு அநுஷ்டானங்களை ஆரம்பித்தான். மெல்ல மெல்ல நதியின் நடுவே போய்விட்டான். குறும்புக்காரப் பிள்ளை அதுவரை பேசாமல் இருந்தவன், அப்போது விபீஷணனைக் கூவி அழைத்தான். நதியின் நடுவே இருந்த விபீஷணனுக்குக் காதில் விழவில்லை. விழுந்ததும் திரும்பிப் பார்த்த அவன் கரைக்கு ஓடோடி வருவதற்குள்ளாக அந்தப் பிள்ளை விக்ரஹத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிவிட்டது. கோபம் கொண்ட விபீஷணன் விக்ரஹத்தைக் கீழே இருந்து எடுக்க முயல, விக்ரஹம் எடுக்க வரவில்லை. அங்கேயே பிரதிஷ்டை ஆகி விட்டது. மேலும் கோபத்தோடு அந்தச் சிறுவனைத் தேடி ஓடினான். மறைவில் நின்று கொண்டிருந்த சிறுவனைத் தேடிக் கண்டு பிடித்து அவன் தலையில் ஓங்கிக் குட்ட நினைக்க, அந்தப் பிள்ளை ஓடோடிப் போய் மலைக்கோட்டை உச்சியில் மறைந்து கொள்ள, விபீஷணன் விடாமல் துரத்திக்கொண்டு போய்க் குட்டு ஒன்றை வைத்தார். அப்போது தன் சுய உருவில் காட்சி அளித்தார் விநாயகர். ஏமாற்றம் அடைந்த விபீஷணனைச் சமாதானம் செய்துவிட்டு, பெருமாளை இலங்கைக்குக் கொண்டு போக முடியாமைக்கு வருந்த வேண்டாம் எனவும், பெருமாள் இலங்கையைப் பார்த்தவாறே காட்சி அளிப்பார் எனவும் சமாதானம் கூற ஒருவாறு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கைக்குப் பயணமானான். விநாயகரால் அன்று காவிரிக்கரையில் தடுத்தாட்கொண்டு வைக்கப்பட்ட பெருமாள் தான் நம்பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். ரங்கராஜர் எனவும் சொல்வார்கள். உச்சிப் பிள்ளையார் கோயிலில் குடி கொண்டிருக்கும் விநாயகருக்குத் தலையில் விபீஷணன் குட்டிய அடையாளம் இன்றும் காணப்படுவதாகவும் கூறுவார்கள். சம்ஸ்கிருத அகராதியில் விகடர் என்றாலே ஹாஸ்யம் என்று அர்த்தம் இருக்காது. கோரமாய் பயங்கரமாய் இருப்பதைத் தான் அதிலே சொல்லி இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஹாஸ்யம் செய்து சிரிக்க வைப்பவர்களையே விகடன் அல்லது விகடகவி என்றெல்லாம் சொல்கிறோம். இந்த ஹாஸ்யம் சும்மாச் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும் ஹாஸ்யம். விநாயகரின் புத்தி சாதுர்யத்திற்குக் கேட்கவே வேண்டாமே. சூரியனின் சீடர் ஆயிற்றே? தம் புத்தி சாதுர்யத்தால் நம்மைச் சிரிக்கப் பண்ணுகிறார் விகடரான விநாயகர். அம்மா உமையிடமும், அப்பா ஈசனிடமும் குறும்புகள் செய்து அவர்களைச் சிரிக்க வைப்பாராம். குழந்தைக்குறும்புடன் ரிஷிகளையும் வம்புக்கு இழுப்பாராம். இப்படி வம்புக்கு இழுத்த அகஸ்தியரின் கமண்டலத்து நீரே காவிரியாகப் பெருக்கெடுத்து ஓடியது என்பதை அறிவோம் அல்லவா? ராவணனை ஏமாற்றிக் கோகர்ணத்திலே ஆத்மலிங்கப் பிரதிஷ்டை பண்ணியதும் விநாயகரே. ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரை ஸ்ரீராமர் தன் பட்டாபிஷேஹப் பரிசாக விபீஷணனுக்கு அளிக்கிறார். அதை எடுத்துக்கொண்டு இலங்கை செல்லும் விபீஷணனிடம் இருந்து அதை நாட்டை விட்டுச் செல்லாதபடிக்குத் தடுத்தவர் விநாயகர். விபீஷணனை ஏமாற்றிக் காவேரி நதிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே ஸ்ரீரங்கத் தீவில் அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணகர்த்த விகடரான இந்த விநாயகரே. இதைத் தவிரவும் இந்த விகட விநாயகர் பண்ணிய குறும்புகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம். பிரம்ம புத்திரியான மானசா பூவுலகத்து மக்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டாள். அதற்கு என்ன வழி என்று தன் தகப்பன் ஆன பிரம்மாவைக் கேட்க அவரும் அவள் பூலோகத்தின் மானுடப் பெண்ணாகப் பிறந்தே செய்ய முடியும் என்று கூறுகிறார். அந்தச் சமயம் குழந்தை வேண்டித் தவம் இருந்த கவேர மன்னனுக்கு மானசாவைப் பெண்ணாகப் பிறக்க வைக்கிறார். அவளும் கவேர மன்னனின் மகளாக லோபாமுத்திரை என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து வருகிறாள். அவளுக்குத் திருமணம் செய்யும் பருவம் வந்துவிடுகிறது. அழகும், அறிவும் நிறைந்த பெண்ணை எவருக்குத் திருமணம் செய்து வைப்பது என்று யோசித்துக் குழம்பிய கவேரமன்னனுக்கு அகத்தியருக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படியும், அவன் குமாரியின் மூலம் தென்னாட்டிற்கு மாபெரும் வளம் கிடைக்கப் போவதாயும் அசரீரி குரல் கொடுக்கிறது. அவ்விதமே அகத்தியருக்குத் தன் குமாரியைத் திருமணம் செய்து கொடுக்கிறான் கவேரமன்னன். லோபாமுத்திரையும் அகத்தியரும் அங்கிருந்து தென்னாட்டிற்கு வருகின்றனர். வரும் வழியெல்லாம் மலைகள், காடுகள், மேடு, பள்ளங்கள். அவற்றைக் கடந்து தன் மனைவியால் நடக்க இயலாது என்றுணர்ந்த அகத்தியர் அவளை நீர் வடிவாக்கித் தன் கமண்டலத்தில் அடைத்துக்கொண்டு நடக்கிறார். வழியில் ஒரு இடத்தில் தன் அன்றாட அநுஷ்டானங்களை முடிக்க எண்ணி அமர்ந்தார் அகத்தியர். கையில் உள்ள கமண்டலத்தை எங்கே வைப்பது? மிகுந்த யோசனையுடன் கமண்டலத்தை ஓர் ஓரமாக வைத்துவிட்டுத் தன் அநுஷ்டானங்களை மேற்கொண்டார். அப்போது அங்கே வந்த ஒரு சின்னஞ்சிறு அந்தணச் சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு அந்தக் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு ஓடவே, திரும்பிப் பார்த்த அகத்தியர் அந்த சிறுவனைத் துரத்திக்கொண்டு ஓட, அந்தச் சிறுவன் கமண்டலத்து நீரை அங்கேயே அப்படியே கவிழ்த்துவிட்டு ஓட, மீண்டும் அகத்தியர் துரத்த, அங்கே காட்சி அளிப்பது! யாருனு நினைச்சீங்க? நம்ம பிள்ளையார் தான்! தும்பிக்கை நாதனைக் கண்ட அகத்தியர் ஆஹா, இங்கே தான் லோபாமுத்திரையின் சேவை ஆரம்பிக்கணும் என்பது இறைவன் கட்டளை என்று புரிந்து கொண்டார். பிள்ளையார் கவிழ்த்த அந்தக் கமண்டலத்தில் இருந்தே காவிரி உற்பத்தி ஆனாள். கவேரமன்னனின் புதல்வி ஆனதால் காவிரி என்ற பெயர் பெற்றாள் லோபாமுத்திரை. அவள் நீர் வடிவம் நதியானதும், உடல் வடிவில் அகத்தியரைப் பின் தொடர்ந்து சென்றாள் என்று புராணங்கள் கூறும். இவ்விதம் வேடிக்கைகள் செய்தார் நம்ம விநாயகர். அதோடு மட்டுமா? ராவணனையும் ஏமாற்றினார். ராவணன் திருக்கைலையிலே சிவ வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பி இலங்கை நோக்கி வரும்போது ஈசன் கொடுத்த ஆத்மலிங்கத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்யும் எண்ணத்தோடு வந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஆத்மலிங்கத்தை எங்கேயும் கீழே வைக்காமல் தலையில் சுமந்து செல்லக் கட்டளை இடப்பட்டிருந்தது. வழியில் அவனுக்கு இயற்கை உபாதை அதிகமாகவே ஆத்ம லிங்கத்தைக் கீழே வைக்க முடியாமல் என்ன செய்வது என்று யோசித்தபோது, வந்துட்டார் நம்ம பிள்ளையார். அவரோட வழக்கப்படி ஒரு சின்னப் பையனாய்க் குறும்பு கொப்பளிக்கத் தோன்றினார். அந்தப் பையனைப் பார்த்த ராவணன் சற்று நேரம் இந்த விக்ரஹத்தை வைத்துக்கொள் என்று சொல்லிக் கொடுக்க, அந்தப் பிள்ளையோ, என்னாலே ரொம்ப நேரமெல்லாம் சுமக்க முடியாதாக்கும், கை வலிக்கும், கை வலிச்சா உன்னை மூணுதரம் கூப்பிடுவேன். நீ அதுக்குள்ளே வந்துடணும், இல்லைனா நான் கீழே வச்சுடுவேன் என்று பயமுறுத்த, ராவணனும் சரி என்று சம்மதிக்கிறான். அவன் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம், இந்தப் பக்கம் நம்ம பிள்ளையார் மூணு தரம் அவனைக் கூப்பிட்டுவிட்டு லிங்கத்தைக் கீழே வைத்தார். அப்போது தான் இதிலே ஏதோ சூது என்று புரிந்துகொண்ட ராவணன் ஓடி வந்து அந்தப் பிள்ளையின் தலையில் மூன்று முறைகள் ஓங்கிக் குட்ட, அவனுக்கு எதிரே காட்சி அளித்த விக்னேஸ்வரர் அவனை ஒரு பந்து போலத் தூக்கி எறிந்தார். தன் இருபது கைகளாலும் அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று முடியாமல் போகவே இதுவும் இறைவன் திருவிளையாடல் என்று புரிந்து கொண்ட ராவணன் விநாயகருக்கு எதிரே தன் தலையில் மூன்று முறைகள் குட்டிக்கொண்டு மன்னிப்புக் கோரினான். [] https://upload.wikimedia.org/wikipedia/commons/7/79/Khairatabad_Ganesh.jpg 36 அத்தியாயம் 36 தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி! கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால் க= அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக்குறிக்கும் ண= மோக்ஷத்தைக் குறிக்கும் சொல் பதி=சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி. ஈசன்:கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றது. கணேசனே ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர். பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவைகிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு. மூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றது. மயில்னதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார்? இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம். மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்கு பிள்ளையார் உதவுகின்றார். வேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும் கணபதி எனவும் விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர். மோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள பூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது. தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே? வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர். ஆனந்த புவனம்: கைலையின் ஒருபகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது. எட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவை யாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர்= தேக பிரும்மம், மகோதரர்= ஞான பிரும்மம், கஜானனர்=சாங்கிய பிரும்மம், லம்போதரர்=சக்தி பிரும்மம், விகடர்=ஆதி சக்தி, விக்னராஜர்=விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர்=சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு. [File:Ganpati at Pune.JPG] https://en.wikipedia.org/wiki/File:Ganpati_at_Pune.JPG 37 அத்தியாயம் 37 விநாயகருக்கும் 21-க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா). விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு. அவை கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ரதுண்டன், ஜேஷ்ட ராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்தி,புத்திபதி, பிரம்மணஸ்பதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் ஆகியன ஆகும். இவற்றின் விளக்கங்கள் வருமாறு: 1. கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன். 2. ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா??? 3. சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா? அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது. 4. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன். 5. டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர். 6. மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இருந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார். 7. லம்போதரன்: லம்போதர லக்குமிகரன். இத்தனை பெரிய வயிறு இருக்கே?? உலகையே உள்ளடக்கி இருப்பதால் வயிறு பெரிசா இருக்கு. அண்ட பகிரண்டத்தையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் பெரிய வயிற்றைக் கொண்டவன். 8. கஜானனன்: கஜமுஹாசுரனை அடக்கியதால் ஏற்பட்ட பெயர். ஆணவத்தின் வடிவன் அவன். ஆனை முகம் கொண்ட அவனை அடக்கியதால் யானைமுகனும் இந்தப் பெயர் பெற்றான். 9. ஹேரம்பன்:தன் பக்தர்கள் வேண்டிப் பிரார்த்தனை செய்து அபிஷேஹ ஆராதனைகள் செய்யணும்னு எல்லாம் காத்திருக்காமல், ஒரு அருகம்புல்லைச் சாத்தினாலே உள்ளம் குளிர்ந்து போய் கஷ்டப் படுபவர்களை ரக்ஷிக்கின்றான் விநாயகன். அதனால் ஹேரம்பன் என்னும் பெயர். 10. வக்ரதுண்டன்: பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளைத் தடுப்பவன். தீமைகளைத் தடுக்கும் தன் மகனுக்கு அருமை அன்னை வைத்த பெயர் இது. 11. ஜேஷ்டராஜன்: மூத்தவன். அனைவருக்கும் மூத்தவன் என்பது இங்கே பொருந்துமோ? ஏனெனில் ஸ்கந்தபூர்வஜன் என்ற பெயரும் விநாயகனுக்கு உண்டு. முழுமுதல் பொருளாக இருப்பதால் ஜேஷ்டராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம். 12. நிஜஸ்திதி: ஸ்திதி நிலைத்து இருப்பது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வது மண்ணும், நீரும் கொடுக்கும் வளங்களாலேயே. அந்த மண்ணிலும் நீரிலும் நிலைத்து இருப்பவன், மூலாதாரப் பொருளாக இருப்பவன் விநாயகனே. அதனாலேயே பிள்ளையார் பிடிக்கிறதுனால் களிமண்ணை நீரில் குழைத்துப் பிடிக்கிறோம். இப்படி உண்மையாக நிலைத்து அனைத்து உயிர்களிலும் இருப்பதால் அவன் நிஜஸ்திதியாகக்கூறப்படுவான். 13. ஆஷாபூரன்: புருகண்டி முனிவர் விநாயகரைக் குறித்துத் தவம் இயற்றி, இயற்றிக் கடைசியில் விநாயகர் போல் அவருக்கும் தும்பிக்கை ஏற்பட்டது. விநாயகரின் உதவியால் தன்னுடைய ஆசைகள் நிறைவேறியதால் இப்பெயரை அவரே விநாயகருக்குச் சூட்டினார். 14. வரதன்: அனைவருக்கும் வேண்டியவரங்களைக் கொடுப்பவன். 15. விகடராஜன்: இந்த மாயாலோகம் என்று சொல்லப் படும் பிரபஞ்சத்தில் உண்மையாகப் பரம்பொருளாய்த் தோன்றுபவன். 16. தரணிதரன்: இந்த பூமியை அவனே ஆள்கின்றான். ஆகையால் அதையே ஆபரணமாகவும் அணிகின்றான். எப்போதும் காத்து ரக்ஷிப்பவன் அவனே. 17. சித்தி, புத்தி பதி: மனிதருக்குத் தேவையானது சித்தியும், புத்தியும். சித்தி என்னப்படும் கிரியாசக்தியும், புத்தி எனப்படும் இச்சாசக்தியும் நன்கு வேலை செய்தாலே ஞானசக்தியை அடைய முடியும், அத்தகையதொரு சக்திகளை தன்னுள்ளே கொண்டவன் விநாயகன் ஞானசக்தியாகவே தென்படுகின்றான். ஞானத்தை அவனே அளிக்கின்றான். சித்தி, புத்திக்கு அவனே தலைவன். 18. பிரம்மணஸ்பதி: பிரம்மா வைத்த பெயர் இது. பிரம்மம் என்றால் சப்தம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. வேத நாதமாக, ஓங்கார சொரூபமாக, வேத நாதத்திற்கும் ஆதாரமாய்க் காட்சி கொடுக்கும் விநாயகனை பிரம்மணஸ்தபதி என அழைத்தார் பிரம்மா. 19. மாங்கல்யேசர்: விநாயகர் அனைத்தையும் காத்து ரக்ஷிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. 20. சர்வபூஜ்யர்: எந்தத் தெய்வ வழிபாடென்றாலும் விநாயக வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க முடியாது. முன்னதாக அவரை வணங்க வேண்டும். அனைவராலும் வழிபடப் படுபவர் விநாயகர். அதனாலே சர்வ பூஜ்யராக இருக்கின்றார். 21. விக்னராஜன்: அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவர். திரிபுர சம்ஹாரத்திற்குச் சென்ற ஈசனின் தேர் அச்சு முறியவும், விநாயக வழிபாடு செய்யாததால் அவ்வாறு இடையூறு ஏற்பட்டதாகவும் , விநாயக வழிபாட்டுக்குப் பின்னர் தடை இல்லாமல் சம்ஹாரம் முடிந்ததாகவும், புராணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் தேவி மஹாத்மியத்தில் அசுரன் செய்த விநாயகனின் சக்கர வழிபாடு தேவியின் வதத்தைத் தடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதை முறித்த பின்னரே தேவியினால் வழிபட முடிந்தது என்றும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவனே விநாயகன். விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், புருவங்கள் காற்றையும் புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கின்றன. [File:Chitrashalagoa.jpg] https://en.wikipedia.org/wiki/File:Chitrashalagoa.jpg 38 அத்தியாயம் 38 இப்போ இயன்றவரை எளிய தமிழில் விநாயகரைத் துதித்துக் காசிபர் எழுதினதாய்ச் சொல்லப் படும் காரியசித்தி மாலை பத்திச் சொல்லப் போறேன். முதல்லே ஒரு முன்னுரை. இந்தக் காரிய சித்தி மாலையை நான் பல வருஷமாப் படிக்கிறேன். முதல்லே ஆரம்பிச்சது என்னமோ காரியம் ஒண்ணு நடக்கணும்னு தான். காரியம் சித்தி ஆனாலும் நம்ம பிள்ளையாரோடதாச்சேனு தினம் முடியாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். நிச்சயமாய் மனசுக்கு ஆறுதலும் ஏற்படுது, கவலைகள், பிரச்னைகள் இருந்தால் மனம் லேசாக ஆகும். கவனிக்கவும், பிரச்னைகள் தீரும்னு சொல்லலை. நமக்கு வந்ததை நாம தான் தீர்த்துக்கணும். பிரச்னைகளைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை ஏற்பட்டு விடும். அதற்கு உத்திரவாதம் உண்டு. “பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்த மறைஆ கமலங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.” நாம் அனைவருமே பந்த பாசங்களால் கட்டுண்டவர்களே. இது நம்முடையது என்ற எண்ணம் இல்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அந்தப் பந்த, பாசங்களை அகற்றும் குணமுள்ளவன் வேழமுகத்தான் ஒருவனே! மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? விநாயகனே ஓங்கார வடிவானவன். அத்தகைய ஓங்கார சொரூபியான விநாயகனிடமிருந்தே அனைத்துக் கலைகளும், வேதங்களும், ஆகமங்களும் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. இத்தனை பெருமை வாய்ந்த இறைவனாகிய கணபதியை நாம் உள்ளத்தில் அன்பு மீதூற வணங்கித் துதிப்போம். “உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ் உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளி யாவன்? உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டுங் களைகண் எவன் அந்த உலகமுதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.” இந்த உலகில் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் மூலாதாரமாகிய கணபதியே! இறைவன் படைத்த இவ்வுலகில் நிறைந்திருக்கும் காம, குரோத, மத, மாற்சரியங்கள் எவையும் அவனிடம் ஒட்டுவதில்லை. அவன் எந்தவிதமான விருப்போ, வெறுப்போ இல்லாதவனாக இருக்கின்றான். பரிபூரணப் பேரொளியாய் நிறைந்துள்ளான். இந்த உலகில் உள்ள நாம் செய்யும் செயல்களின் வினப்பயனை நமக்குத் தருபவன் அவனே. தீவினைகளைக் களைகின்ற திறன் படைத்தவனும் அவனே. அத்தகைய உலகுக்கே ஆதிகாரணம் ஆன முழு முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழச் சரணம் எனத் துதிப்போம். “இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும்பஞ்செனமாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச் செய்யும் கடவுள் முதலோர்க்கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத் தடவு மருப்புக் கணபதிபொன் சரணம் சரணம் அடைகின்றோம்.” நெருப்பில் இட்ட பஞ்சு எப்படி உடனே இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அவ்வாறே கணபதியைத் துதித்தால் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. கணபதியைத் துதித்து அவனைத் தொடர்ந்து நாம் சென்றோமானால் அந்த உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் வாழும் பதிக்கு எடுத்துச் சென்று நமக்கு நற்கதியை ஊட்டுவார். நாம் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேற்ற மற்ற எந்தக் கடவுளரையும் விட விக்னராஜன் ஆகிய கணபதியே துணை புரிவான். அவனாலேயே நம் காரியங்கள் அனைத்தும் முடித்து வைக்கப் படும். இனிதாகவும், எளிதாகவும், சிரமம் இன்றியும் நம் காரியங்களை முடித்து வைக்கும் ஏகதந்தன் ஆகிய கணபதியின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம். “மூர்த்தியாகித் தலமாகி முந்நீர்க்கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினானும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.” விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம். “செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப் படும் அப்பொருள் யாவன் ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யில் இறைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.” நாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம். “வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய வேதமுடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப் போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.” வேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம். [] https://commons.wikimedia.org/wiki/File:Ganesha_Painting_at_a_Temple_in_Bhadrachalam.jpg 39 அத்தியாயம் 39 தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை – கணேசன்! “மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன்நீர் இடை நான்காய் நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.” நிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும். காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான். ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும், மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும், ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம். “பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கரிய பரன்யாவன் பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன் பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.” பந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன் அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப் பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும் கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம். “இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்றுதினம் மும்மைச் சந்திகளில் தோத்திரஞ்செயினும் சகல கரும சித்தி பெறும் சிந்தை மகிழச் சுகம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்” இந்த காரியசித்திமாலையின் எட்டுப் பாடல்களும் கணபதி தோத்திராட்டகம் என வழங்கப் படுகிறது. இந்தத் தோத்திரத்தை மூன்று நாட்கள் மூன்று பொழுதுகளிலும் சொல்லுபவர்களுக்கு அனைத்துக் கருமங்களில் இருந்தும் சித்தி கிடைத்து முக்தி பெறுவார்கள். எட்டு நாட்கள் தொடர்ந்து உச்சரிப்போரும் சதுர்த்தி தினங்களில் எட்டு முறைகள் உச்சரிப்போரும் அட்டமாசித்திகளையும் அடைவார்கள். திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ் ஒருபான் முறையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார். ஒவ்வொரு நாளும் பத்துமுறைகள் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் அரசாங்க சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் கைகூடும். அவ்வாறு இருபத்தொரு முறைகள் ஓதினால் மக்கட்பேறு, கல்வி, செல்வம் முதலிய எல்லா நலங்களையும் அடைவார்கள்.” என்று விநாயகர் காசிபர் முதலானோர்க்கு அருளிச் செய்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. எது எப்படி இருந்தாலும் நம்பிக்கையுடன் விநாயகர் கோலம் போட்டு, இந்தக் காரிய சித்திமாலை படிச்சுட்டு, விநாயகரை வேண்டிக் கொண்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறுகின்றன என்பதற்கு நான் காரண்டி! [] https://www.flickr.com/photos/enygmatic/3328704782 40 அத்தியாயம் 40 தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! – தரணிதரன்! சனிக்கிழமைக்குத் தான் விநாயகர் விஸர்ஜனம். அதுவரைக்கும் வருவார். இன்னிக்கு நாம பார்க்கப் போற கதை ஜனகமஹாரிஷியுடையது. ஜனகர் ஒரு பெரிய இல்லறத் துறவிங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். யாக்ஞவல்கியரின் சீடர். மனதிலே எதுவுமே பாதிக்காவண்ணம் பிரம்மஞானம் பெற்றவர். அப்படிப் பட்டவரா அவர் எப்படி ஆனார்? அதுக்கான முன்னுரையே இது. இப்போ நாம் பார்க்கப் போற விஷயம். மிதிலையை ஆண்டு வந்த ஜனகராஜாவின் அரண்மனை தர்பார். அனைத்து மந்திரி பிரதானிகள் புடைசூழ மன்னன் கொலுவீற்றிருந்தான். அப்போது அந்த அவைக்குள்ளே நாரதர் நுழைந்தார். எந்த இடத்துக்கும், எந்த நேரத்திலும் பிரவேசிக்கக் கூடிய உரிமையைப் பெற்ற அவர் காரணம் ஏதும் இல்லாமலா வந்திருப்பார்? இல்லை, காரணம் இருந்தது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்த நாரதரை அனைவரும் வணங்க, மன்னன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து நாரதரை வரவேற்கவில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே அவரை வரவேற்றான். எனினும் மன்னனை மனமார ஆசீர்வதித்தார் ஜனகர். “மன்னா, நீ விரும்பிய அனைத்துச் செல்வங்களும் , மற்ற வளங்களும் உனக்குக் கிடைக்க இறைவன் அருள் புரிவான்.” என்றார். ஜனகருக்குக் கொஞ்சம் அலக்ஷியம். ஏளனமாய்ச் சிரித்தார். “நாரதரே, இதை வேறே யாரானும் சொல்லி இருந்தால் இன்னும் சிரித்திருப்பேன். அனைத்தும் அறிந்த நீர் சொல்லலாமா? நான் என்ன கல்லாதவனா? அனைத்தும் அறியாதவனா? கொடுப்பவன் யார்? எடுப்பவன் யார்? கொடுப்பவனும் நானே! எடுப்பவனும் நானே! எல்லாம் வல்லவ அந்த இறைவனும் நானே! ஜனகன் என்ற மன்னனும் நானே! அவற்றை வேண்டாமெனில் நானே வெறுத்து ஒதுக்கவும் செய்வேன்! அனைத்தும் நான்! நானே பிரம்மம்! பிரம்மமே நான்!” என்றான் மன்னன். நாரதருக்கு தீர்க்கதரிசனம் தெரியும் என்றாலும் மன்னனின் இந்த அகம்பாவமான பேச்சு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. வாய் திறவாமல் வெளியே வந்தார். நேரே கெளண்டிய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார். கெளண்டின்ய ரிஷி தான் அருகம்புல்லின் மகிமையை உலகுக்குத் தன் மனைவி மூலம் காட்டியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் ஆசிரமத்தில் இருந்த விநாயகர் கோயிலில், ரிஷி வழிபட்ட விநாயகர் முன்னே நின்று, “விநாயகா, இது என்ன? ஜனகனுக்கு புத்தி பேதலித்துவிட்டதா? உண்மையான பிரம்மம் என்னும் தத்துவம் அறியாமல் பேசுகின்றானே! கர்வம் வந்துவிட்டதே! நாடாளும் மன்னனுக்கு இறை உணர்வில் இத்தனை கர்வம் வந்தால் குடி மக்கள் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்? மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் அன்றோ? இந்த ஜனகனுக்கு நல்லறிவு புகட்டவேண்டிய காலமும் வந்துவிட்டது. நீயே அருள் புரிவாய், வேழமுகத்தோனே!” என்று வேண்டிக் கொண்டார். ஜனகரின் அரண்மனை வாயில். அந்தணர் ஒருவர் தள்ளாத வயது, உடலெல்லாம் குஷ்ட நோயால் பீடிக்கப் பட்டு, நடக்கக் கூட முடியாத நிலை. அரண்மனை வாயிலில் வந்து நின்றுகொண்டு “பசி, பசி” என புலம்பிக் கொண்டு இருந்தார். காவலர்கள் செய்வதறியாமல் மன்னனுக்குத் தகவல் தர, மன்னன் அவரைத் தன்னிடம் அழைத்துவரச் செய்தான். அந்தணர் உள்ளே வந்ததும், “என்ன வேண்டும்?” என மன்னன் கேட்க, “பசிக்கு உணவு!” என்றார் அந்தணர். மன்னனுக்கு ஒரு வழியில் நிம்மதி! அப்பாடா, நம்மால் முடிந்ததைக் கேட்டாரே!” பூ, இவ்வளவு தானா? யாரங்கே, இந்த அந்தணனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடுங்கள்!” “உத்தரவு மன்னா!” அந்தணர் சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். உணவும் பரிமாறப் பட்டது. அந்தணரும் இலையில் கை வைத்தாரோ இல்லையோ உணவு மொத்தமும் காணோம், காணவே காணோம்! சுற்றி இருந்தவர்கள் ஏதும் புரியாமல் மீண்டும் பரிமாற, மீண்டும் அந்தணர் கைவைக்க, மீண்டும் அதே கதை! சமைத்த அனைத்து உணவுகளும் வர, மிச்சம், மீதி வைக்காமல் அனைத்தும் பரிமாறப் பட அனைத்தும் இப்படியே காணாமல் போயின. ஆனால் அந்தணரின் பசி மட்டும் தீரவில்லை. பரிமாறியவர்கள் களைத்துச் சோர்ந்து போய், “ திரும்பச் சமைத்துத் தான் போடவேண்டும். பொறுங்கள்.” என்று கூற, அந்தணருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “பசி என வந்தவனுக்கு முதலில் பசியைத் தீருங்கள். அப்புறம் சமைக்கலாம்.” என்று சொல்ல, பணியாளர்கள் செய்வது அறியாமல் தானியங்களைப் பச்சையாக அப்படியே எடுத்துக் கொடுக்க அதுவும் போதவில்லை என அந்தணர் சொல்ல, நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் சேமிப்பில் இருந்தவை எல்லாம் கொடுத்தும் அந்தணருக்குப் போதவில்லை. இனி தானியம் விளைந்து வந்து சேமித்தால்தான் அரண்மனைக் களஞ்சியத்தில் தானியம். அரசனுக்குத் தகவல் போனது. தலைநகரில் இருந்த குடிமக்கள் அனைவரிடம் இருந்தும், உணவுப் பொருட்கள், உணவு வகைகள், தானிய வகைகள், பழ வகைகள், காய்கள் வரவழைக்கப் பட்டன. எங்கிருந்து எத்தனை வந்ததலும் அந்தணர் கை வக்கும்போதே மாயமாய் மறைந்து கொண்டிருந்தது. அனனவரும் நடுங்கினார்கள். மன்னனுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது! யாரிவன்? ஏதோ பூதமாய் இருப்பானோ? பிசாசோ? பிரம்ம ராக்ஷசோ? இவனை எப்படியாவது நல்லவார்த்தை சொல்லி வெளியே அனுப்பவேண்டும் என நினைத்த வண்ணம் அரசன் முதலில் அந்த அந்தணனை நாட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் எனக் கட்டளை இட்டான். அந்தணன் அரசனைப் பார்த்து, “பசி என வந்தவனுக்கு உணவு கொடுக்காமல் நாட்டை விட்டுத் துரத்துகின்றாயே? நீ ஒரு பெரிய மஹாராஜா! அதுவும் அன்றொருநாள் நாரதர் வந்தபோது சபையில் “நானொரு பிரம்மம். என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கொடுப்பதும், நான், எடுப்பதும் நான்! என்னால் முடியாதது எதுவும் இல்லை.” என்றெல்லாம் பேசினாயே? இந்த ஏழைப் பிராமணனின் பசியைப் போக்க முடியாத நீயும் ஓர் அரசனா? “ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. தன் அகங்காரத்தை நினைத்து மனம் நொந்தான். தவறை உணர்ந்து அதற்குப் பிராயச் சித்தமும் செய்ய விரும்பினான். [] https://commons.wikimedia.org/wiki/File:Tibetan-bronze-statue-Ganesha.jpg 41 அத்தியாயம் 41 தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை – ஜேஷ்ட ராஜன்! இதனிடையில் பசி, பசி என்று பறந்த அந்தணர் மிதிலாபுரியை விட்டுத் தள்ளி ஒரு குடிசையில் வசித்து வந்த திரிசிரன் என்பவனின் குடிசை வாயிலுக்கு வந்திருந்தார். திரிசிரனின் மனைவி விரோசனை. இருவரும் விநாயகரின் பக்தர்கள். அன்றைய வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றைக்குக் கிடைத்த ஒரே ஒரு அருகம்புல் இட்ட நீரை விநாயகருக்கு நிவேதனம் செய்து, அந்த ஒற்றை அருகம்புல்லைக் கணவனுக்கு உணவாய் அளித்துவிட்டுத் தான் அந்த நீரை அருந்தலாம் என விரோசனை எண்ணி இருந்தாள். அப்போது தான் அந்தணர் அங்கே போய்ச் சேர்ந்தார். சோர்வோடு இருந்த அந்தணரைப் பார்த்த திரிசிரனும், அவன் மனைவியும் அந்தணரை வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டனர். அந்தணரும், தனது தாளாத பசியைச் சொல்லி, தான் ஜனகனின் அரண்மனைக்குச் சென்றதாகவும், அங்கே அளித்த உணவு போதவில்லை. ஏதோ போட்டான் அரை மனதாக என்றும் சொன்னார். திடுக்கிட்டனர் திரிசிரனும், விரோசனையும். அத்தனை பெரிய மஹாராஜா உணவளித்தே பசி ஆறாதவர் இங்கே வந்து சாப்பிட்டா பசி ஆறப் போகின்றார்? கவலையுடனே அவரைப் பார்த்து, உள்ள நிலைமையைத் தெளிவாய் எடுத்து உரைத்தார்கள். முதல்நாள் வரையிலும் யாசகம் எடுத்து உணவு உண்டு வந்ததையும், அன்றைக்கு யாசகத்திலும் எதுவும் கிட்டாமல், விநாயகருக்கு வழிபாடு செய்து, அருகை நிவேதனம் செய்து, அதுவும் ஒரே ஒரு அருகம்புல்! அந்த அருகைக் கணவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுத் தான் நீர் அருந்த இருந்ததையும் விரோசனை கண்ணீர் பொங்கக் கவலையுடனே தெரிவித்தாள். அந்தணரோ குதித்தார்! “ஆஹா, அருகும், அந்த அருகு இருந்த நீருமா?? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்னுடைய குஷ்ட நோய்க்கான மருந்தல்லவோ அருகு? அதைத் தீர்க்க இந்த அருகு ஊறிய நீரைவிடச் சிறந்த மருந்து உண்டோ? மேலும் ஜனகன் உள்ளன்போடு எனக்கு உணவு படைக்கவில்லை. அவனிடம் உள்ள செல்வத்தைக் காட்டவும், அவனுடைய செல்வாக்கைக் காட்டவுமே உணவு படைத்தான். உள்ளன்போடு ஒரு கைப்பிடி உணவு கொடுத்தால் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடுமே. அதுவும் தும்பிக்கையானுக்கு நீங்கள் இருவரும் நம்பிக்கையோடு படைத்தது வீண் போகுமா??” அந்தணர் அந்த அருகைக் கிட்டத் தட்டப் பறித்து வாயில் போட்டுக் கொண்டு நீரையும் அருந்தினார். என்ன ஆச்சரியம்? அங்கே காட்சி கொடுப்பது யார்? தலை ஆட்டிக் கொண்டு, மத்தள வயிறுடன் உத்தமி புதல்வன் அன்றோ வந்துவிட்டான்? இது என்ன விந்தை? இது மட்டுமா? மேலும், மேலும் விந்தைகள் நடந்தன. திரிசிரனின் மண்குடிசை இருந்த இடத்தில் இப்போது மாளிகை ஒன்று முளைத்தது. களஞ்சியம் நிரம்பி வழிந்தது. தங்கமும், முத்தும், பவளமும், வைரமும் மாளிகையில் காணக் கிடைத்தன. திரிசிரன் தம்பதிகளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பலவாறு விநாயகரைப் போற்றித் துதித்தனர். அத்தோடு நில்லாமல் திரிசிரனுக்கு வந்த பாக்கியம் ஜனகனுக்கும் தெரியவேண்டாமா? மிதிலாபுரியே செல்வத்தில் மிதந்தது. அந்தணரால் உண்ணப் பட்ட உணவுப் பொருட்களைப் போல் பலமடங்கு உணவுப் பொருட்கள், மேன்மேலும் செல்வங்கள், நிறைந்தன. திடீரென வந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் விவரம் விசாரித்து அறிந்து கொண்டு திரிசிரனைக் காண வந்தான். அங்கே இருந்த விநாயக மூர்த்ததை வணங்கித் தன் மமதையை அடக்கித் தனக்குப் பாடம் புகட்டியதற்கு நன்றி சொன்னான். விநாயகரும் அவன் முன்னால் தோன்றி, அவனுடைய அறியாமை நீக்கி நல்ல குருவை நாடி ஞானத்தைத் தரக் கூடிய அறிவைப் பெற அருள் புரிந்தார். அதன் பின்னரே ஜனகரும் யாக்ஞவல்கிய மஹரிஷியை நாடி உபதேசம் பெற்று ராஜரிஷியாக மாறினார்.. அருகம்புல் தோல் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. முக்கியமாய் குஷ்டநோய்க்கு அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறியுள்ளதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவ்வளவு பெரிய சாமிக்கு இவ்வளவு சின்ன வாகனமா என்ற கேள்வி எனக்கும் வந்திருக்கு. ஆனால் ஒரு எலி போன்ற சாதாரணப் பிராணியைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டது அவரோட எளிமையையே காட்டுகின்றதுனு அப்புறமா தோன்றியது. எலி பொதுவாய் எல்லாரும் விரட்டும் ஒரு பிராணி. பொறி வைத்துப் பிடிப்போம். அதைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டதில் இருந்து எவ்வளவு சிறிய மனிதராய் இருந்தாலும் அவர்களிடமும் ஏதாவது ஒரு முக்கியத்துவம் இருக்குனு புரிய வைக்கிறார் போலிருக்கு. காலால் ஒரு நசுக்கு நசுக்கினால் உயிர் போயிடும் அந்த எலிக்கு. ஆனால் அதை இத்தனை பெரிய தொப்பை உள்ள பிள்ளையார் வாகனமாய்க் கொண்டிருக்கின்றார் என்றால் தன் உடம்பையும் அதற்கேற்றவாறு மிக மிக கனமில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்றும் தோன்றுகின்றது. உட்கார்ந்திருக்கும் இடமோ அநேகமாய் ஏதாவது ஆற்றங்கரையிலோ, அல்லது குளத்தங்கரையிலோ, அரசமரத்தடி போதும். வேறே சுக, செளக்கியங்கள் வேண்டாம். அரசமரத்தின் சலசல, சப்தம் கேட்டால் தான் புரியும் எத்தனை இனிமை என்று. மேலும் மரத்தில் வந்து கூடு கட்டும் பலவிதமான பட்சிகள், அவற்றின் இனிய கானங்கள் சற்று நேரம் உட்கார்ந்து பார்த்தால் புரியும் பட்சிகள் ஒன்றுக்கொன்று நடத்திக் கொள்ளும் பேச்சு வார்த்தை. சாதாரணமாய் நம் நாட்டில் அரசமரத்தை வெட்டுவதில்லை. ஏனெனில் அவை மும்மூர்த்திகளின் சொரூபமாய்ப் பார்க்கப் படுகின்றது. விருட்சங்களுக்கெல்லாம் அரசன் என்பதால் அரசமரம் என்ற பெயர் பின்னால் வந்தது. ஆனால் அதற்கு முன்னால் அந்த மரத்திற்கு வேறு பெயர். ம்ம்ம்ம்????? அதுக்கும் ஒரு கதை உண்டு. மறந்துடுச்சு, நினைவு வரும்போது எழுதறேன். இந்த அரசமரம் மூலத்தில் அதாவது வேர்பாகம் பிரம்மா, என்றும் மத்திய பாகம் விஷ்ணு என்றும், மேல்பாகம், அதாவது தலைப்பாகம் ஈசன் என்றும் சொல்லுவதுண்டு. நீர், நிலைகளில் நீராடிக் குளித்துவிட்டு, இந்த மாதிரி கரையில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவது மிக மிக உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அரசமரக் காற்று உடலுக்கு நன்மை செய்யும். நீர் தான் உலகில் முதலில் தோன்றியதாய்ச் சொல்லுவார்கள். பின்னர் தோன்றியது மண் எனப்படும் பூமி. பிள்ளையாரைக் களிமண்ணால் பிடிக்கின்றோம். மண்ணில் இருந்து தோன்றியவர் பிள்ளையார். முதலில் தோன்றியவர் என்பதற்காகவும், மண்ணில் இருந்து தோன்றியவர் என்பதாலும் மண்ணில் செய்த பிள்ளையார்களை நீரில் கரைக்கின்றோம். நீரில் அனைத்து தேவதைகளும் குடி இருப்பதாய்ச் சொல்லுகின்றோம். ஆகவே நீரில் கரைப்பதுதான் முறையானது என்பதாலேயே மண்ணும், நீரும் சேர்த்துச் செய்த கலவையான பிள்ளையாரை நீரில் கரைக்கின்றோம். ஆனால் இன்றைய நாட்களில் இது மிக மிக அருவருப்பான ஒரு விஷயமாய்ப் போய் விட்டது. [File:Ganesh mimarjanam 2 EDITED.jpg] https://en.wikipedia.org/wiki/File:Ganesh_mimarjanam_2_EDITED.jpg 42 அத்தியாயம் 42 கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர சதுர்த்தி வந்த கதை! பிள்ளையார் குளிக்கத் தயாராய்க் காத்துட்டு இருக்கார். கீழே பாருங்க, சாப்பாடு அவருக்குக் கொடுக்கிறாங்க, எல்லாருக்கும் உண்டு, அம்பியைத் தவிர! 😛 இன்னிக்கு விஜய் தொலைக்காட்சியிலே பால கணேஷ் குழந்தைகளுக்கான கார்ட்டுன் படம் போட்டாங்க. ஹிஹிஹி, நானும் குழந்தை தானே, பார்த்துட்டு இருந்தேன்! நல்லாவே எடுத்திருக்காங்க, என்றாலும் இசை திரைப்பட இசையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ??? ஆனால் பிள்ளையார், ராக்-அன் -ரோல் ஆடுகின்றார், ஆங்கில இசைக்குக் கணங்களோடு ஆடுகின்றார், ஸ்கேட்டிங் செய்கின்றார், ஐஸ் ஸ்கேட்டிங் செய்கின்றார், சர்ஃபிங் செய்கின்றார். இப்படி மிக நாகரீகமாகவே குழந்தைகளின் மனதைக் கவருகின்றார். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு விசிலும் அடிக்கின்றார் மூஷிகனைப் பார்த்து, கொழுக்கட்டை திருடும்போதும், நந்தியை ஜெயிக்கும்போதும், கணங்களை ஜெயிக்கும்போதும். சிவனின் உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கணங்களோடு ஆடுவது, நம்ம வீட்டில் குழந்தை அப்பாவோட பேனா, பென்சில், மொபைல் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாடும் நினைப்பே வருது. நந்தி மேல் சவாரி செய்யும் கணநாயகனைக் கொழுக்கட்டை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது பார்த்தால் குழந்தைகளின் மனதை நாம் மாற்றச் செய்யும் ஓர் முயற்சியாகவே மனதில் பதிகின்றது. ஜெரி மாதிரியான பாத்திரப் படைப்பு மூஷிகனுக்கு. அதனால் நல்லாவே நடிக்குது அந்தக் கார்ட்டூன் பாத்திரமும்! :))))))))))))) கொட்டம் அடிக்கிறார் பிள்ளையார். மறுபடி வந்தாலும் பார்க்கலாம், என்னைப் பொறுத்தவரை! ************************************************************************************ விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும். ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். “ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். [] https://commons.wikimedia.org/wiki/File:Ganesh_maharashtra.jpg 43 அத்தியாயம் 43 கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! 2 காலையில் குளித்துவிட்டுப் பிள்ளையாரை வணங்கித் தலையின் இருபக்கமும் குட்டிக் கொள்ளுவதால் நல்ல ரத்த ஓட்டமும், நரம்புகளில் புத்துணர்ச்சியும் ஏற்படும். நம் முன்னோர்கள் ஆராயாமல் எதையும் செய்யவில்லை எனினும், நடுவில் வந்த சில பிரச்னைகளால், ஒரு தலைமுறைக்குக் காரண, காரியம் தெரியாமல் போனதால், எல்லாமே மூட நம்பிக்கை என்று ஏற்பட்டு விட்டது. மாறக்கொஞ்ச நாட்கள், இல்லை மாதங்கள் கூட இல்லை, வருடங்களே பிடிக்கலாம் எனினும் மாற்றம் வரும். முதன் முதல் இதை ஆரம்பித்து வைத்தது பற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றது. என்றாலும் முக்கியமாய்ச் சொல்லப் படுவது மகாவிஷ்ணுவின் சக்கரத்தைப் பிள்ளையார் வாங்கி வைத்துக் கொண்டு கொடுக்கவில்லை என்றும், அவர் மனதை மாற்ற விஷ்ணு விளையாட்டுக் காட்டும்போது, தன் தலையில் இரு கைகளாலும் குட்டிக் கொண்டதாயும், அப்போது விநாயகர் சிரித்தபோது வாயிலிருந்து சக்கராயுதம் கீழே விழ, விஷ்ணு அதை எடுத்துக் கொண்டதாயும் ஒரு கதை. விநாயகரை இம்மாதிரி மகாவிஷ்ணு விளையாட்டுக் காட்டியதற்குப் பின்னரே இந்த நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது அதன் பின்னர் அகத்தியர் காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த போது, மக்களுக்குப் பயன் பட வேண்டி, அகத்தியர் மாலைக் கடன்கள் செய்யச் சென்ற போது, அந்தக் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்கள் செய்ய ஆரம்பிக்க அப்போது அங்கே அந்தணச் சிறுவனாக வந்த விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகின்றார். கமண்டலத்து நீர் பொங்கிப் பெருகிப் பிரவாகமாய் ஓட ஆரம்பிக்க, திகைத்துப் போன அகத்தியர் குறும்பு செய்த சிறுவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சிறுவனைப் பிடிக்க ஓட, விநாயகர் அவர் கையில் மாட்டாமல் அங்கே இங்கே அலைக்கழித்துவிட்டுப் பின்னர் மாட்டிக் கொள்ளுகின்றார். சிறுவனைக் குட்டுவதற்கு அகத்தியர் கையை ஓங்க, விநாயகர் காட்சி தருகின்றார். குட்ட நினைத்த தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகின்றார் அகத்தியர். மக்களின் பயனுக்கு ஆகவேண்டியதை அடைத்து வைத்ததாலேயே தான் வந்து இம்மாதிரிச் செய்யும்படி ஆயிற்று என விநாயகர் சொல்ல, அகத்தியரும் தன் தவற்றை ஒப்புக் கொள்ளுகின்றார். (பிள்ளையாரப்பா, கர்நாடகாக் காரங்க காதிலே போய்ச் சொல்ல மாட்டியா???) இம்மாதிரி தோர்பி கரணம் போடுவதால் மூளை நரம்புகள் தூண்டப் படுவதாய் சமீபத்திய ஆராய்ச்சி சொல்லுவதாய் நம்ம இ.கொ. இங்கே எழுதி இருக்கார் பாருங்க. மனித உருவும், விலங்கு உருவும் இணைந்த கோலத்தில் காட்சி அளிப்பதன் தாத்பரியமும் அனைத்து உயிர்களும் தன்னில் அடங்கும் என்பது தான். கழுத்துக்குக் கீழே மாயை, கழுத்துக்கு மேலே பரம்பொருள் என்ற உருவில் காட்சி அளிக்கின்றார் விநாயகர். நம்முடைய மூளையே சிந்திக்கின்றது அல்லவா?? அத்தகைய சிந்தனையைத் தருவதாலேயே அதை உயர்த்திச் சொல்லப் படுகின்றது. உடல் செயல்படவேண்டுமானால் மூளை சிந்திக்கவேண்டும். அது தலையினுள்ளே இருக்கின்றது. அதேபோல் தலைக்கு ஆதாரமாய் உடல் திகழ்கின்றது. இரண்டும் இல்லாமல் மற்றொன்று இல்லை. உடலால் உழைக்கவும் வேண்டும், அறிவாற்றலால் சிந்திக்கவும் வேண்டும். இதைச் சுட்டிக் காட்டவே விநாயகரின் தலை யானை உருவில் பெரியதாக இருக்கின்றது. பிள்ளையாருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம் வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலினுள் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் வெளியே வெறும் மாவாகக் காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் பூரணம் இனிப்பாய் இருப்பதைப் போல் நம் வாழ்விலும், இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர்.எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும். தேங்காய் உடைப்பது என்பதும் மிக அரிய ஒரு தத்துவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனுக்கு எவ்வாறு மூன்று கண்களோ அவ்வாறே தேங்காய்க்கும் மூன்று கண்கள். ஈசனைப் போன்ற உயர்ந்த தேங்காயைப் பிள்ளையாருக்குப் படைப்பதின் மூலம் நம்மிடம் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த வஸ்துவை இறைவனுக்குக் கொடுக்கிறோம். மேலும் தேங்காயின் ஓடு மிகவும் கெட்டியாய் நம் மண்டை ஓட்டைப் போல் இருக்கிறது. அதன் பருப்பும், உள்ளே உள்ள இனிப்பான நீரும் நம் உடலினுள் மூளைக்கு மிக அருகில் அமைந்துள்ள அமிர்தமய கோசத்தைக் குறிக்கும். நம் மண்டையையே சிதற அடிக்கிற பாவனையிலும், நம் அகங்காரம் அதன் மூலம் அகன்று உள்ளே உள்ள அமிர்தானந்த மய நிலையை நாம் அடைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தவும் தேங்காய் உடைக்கப் படுகிறது. இது போன வருஷம் போட்ட பதிவில் இருந்து எடுத்தது. சிதறுகாய் உடைப்பதன் தாத்பரியமும் நம் ஆணவம் சுக்குநூறாய்ச் சிதறவேண்டும் என்பதற்கே. விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப் போதும். அதுவும் இல்லையா, தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லைப் பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்குச் சாற்றினல் போதும். மனம் குளிர்ந்துவிடுவார் விநாயகர். அனலாசுரனை விழுங்கியதாய் விநாயகர் உடலில் சூடு அதிகம் ஆக, அந்தச் சூடு தாங்க முடியாமல் அகில உலகமும் நடு நடுங்க, விநாயகரே தன்னை அருகால் அபிஷேகம் செய்யச் சொன்னதாய்ச் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்தது அருகம்புல் இதற்கு ஈடு, இணை ஏதும் கிடையாது என்பதைக் கெளண்டின்யர் மனைவி ஆசிரியை செய்த பரீட்சை மூலம் தெரிந்து கொண்டிருக்கின்றோம். தெரியாதவங்க கையைத் தூக்குங்க, கதை நாளைக்கு வரும்! [] https://commons.wikimedia.org/wiki/File:Philadelphia_Museum_of_Art_-_Ganesha.jpg 44 அத்தியாயம் 44 கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! 3 கெளண்டின்ய ரிஷியின் ஆசிரமம்.தன் மனைவியான ஆசிரியையுடன் அங்கே இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொண்டிருந்தார் முனிவர். தூய தவ வாழ்க்கையை இல்லறத்துடன் கூடி அனுசரிப்பது எவ்வாறு என்பதற்கு ஒரு உதாரணமாய்த் திகழ்ந்தார் கெளண்டின்யர். ஆதி முதல்வனும், வேழமுகத்தோனும் ஆன விநாயகன் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் கெளண்டின்யர் தினமும் அறுகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தார். ரிஷிபத்தினியான ஆசிரியைக்குத் தான் ரிஷிபத்தினியாக இருந்தாலும் இவ்வுலகின் சுக,போக செளக்கியங்களையும் அனுபவிக்க முடியாமல் கணவர் தடை செய்கின்றார் என்ற ஒரு எண்ணமும் இருந்து வந்தது. முனிவரும் இதை நன்கு அறிவார். ஒருநாள் ஆசிரியை விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த மலர்கள் எத்தனையோ இருக்க அறுகம்புல்லை மட்டும் வைத்து அர்ச்சிப்பது ஏன் எனத் தன் கணவனை வினவினாள். கெளண்டியரும் பொறுமையாக அவளுக்கு அனலாசுரனை விழுங்கிய விநாயகர் பற்றியும், விநாயகர் வயிற்றில் அனலாசுரனைப் போட்டுக் கொண்டதால் வெப்பம் தாங்க முடியாமல் அக்னி உட்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பதறித் துடித்ததையும், அப்போது விநாயகரே, பிரம்மாவின் மூலம் தனக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை, அபிஷேகம் செய்யச் சொன்னதையும், மூவுலகிலும் இருந்து வந்த ரிஷி, முனிவர்கள் அனைவரும் 21 அறுகம்புல்லால் விநாயகரை அர்ச்சித்ததையும் கூறுகின்றார். விநாயகரும் அதில் மகிழ்ந்து எனக்குப் பிடித்தமானது அறுகும், வன்னியுமே என்று சொல்லி மறைந்தாராம். இதைக் கூறினார் மனைவியிடம் கெளண்டியர். மனைவியோ, “எல்லாம் சரி, இந்த அறுகம்புல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வது??எந்தப் பொருள் வாங்குவதானாலும் பணம் வேண்டுமே? அறுகம்புல்லால் ஆவது என்ன?” என்று ஏளனமாய்க் கேட்கின்றாள். அவளைக் கண்டு நகைத்த கெளண்டியர், “பெண்ணே, இந்தா, இந்த ஒரு அறுகம்புல் போதும். என் தவவலிமையால் உன்னை இந்திரலோகத்துக்கு அனுப்புகின்றேன். தேவேந்திரனிடம் சென்று இந்த அறுகம்புல்லின் எடைக்கு எடை செல்வம் பெற்று வருவாய்!” என்று சொல்லுகின்றார். அவளும் ஒத்துக் கொள்ள அறுகம்புல்லை அவளிடம் அளித்து, தன் தவ வலிமையால் அவளை இந்திரலோகம் அனுப்புகின்றார் கெளண்டின்யர். இந்திரனிடம் அந்த அறுகம்புல்லைக் காட்டி அதற்கு ஈடான செல்வத்தைக் கொடுக்குமாறு ஆசிரியை கேட்டாள். இந்திரனும் அந்த அறுகை தராசின் ஒரு தட்டிலே வைத்து, மறு தட்டிலே பொன்னை வைக்கின்றான். தன்னிடம் உள்ள அனைத்தையும் வைக்கின்றான். ஆனாலும் தட்டு உயரவில்லை. திகைத்த தேவேந்திரன் தன்னையே வைக்கின்றான். ஆசிரியை கூட கெளண்டியரின் ஆசிரமத்திற்கு வருகின்றான் அவளுக்கு அடிமையாக. ஆசிரியையும் புரிந்து கொள்ளுகின்றாள். பக்தியோடும், பூரண ஈடுபாட்டோடும் கொடுக்கும் ஒரு அறுகம்புல் எத்தகைய பெருஞ்செல்வத்துக்கும் ஈடாகாது என. மனம் சலனம் அடையாமல் ஒரே நிலையில் இருந்து ஒருமைப்பாடு உண்டாக விநாயக வழிபாடே சிறந்தது. அதனாலேயே அந்தக் காலங்களில் மந்த புத்தியுள்ள மாணாக்கர்களைத் தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போடச் செய்வார்கள். இதன் மூலம் மூளை சுறுசுறுப்பு அடையும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்ப ஒரே வழி தோர்பி கரணம் தான். நெற்றியில் குட்டிக் கொள்ளுவதால் பிந்துவின் உள்ளே மறைந்திருக்கும் அமிர்த கலசம் எழும்பி உடல் முழுதும் பரவும். மன அமைதி ஏற்பட்டு மனம் ஒருமைப் படும். இதை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்றால் இன்று விஞ்ஞான பூர்வமாயும் இது நிரூபிக்கப் பட்டுள்ளது என்பதற்குஇ.கொ.வின் இந்தப் பதிவே சான்று. விநாயகர் தோற்றத்தின் தத்துவமே தீமையைத் தடுப்பது ஆகும். விக்கின விநாயகன் என்பதன் அர்த்தமே அதுதான். நன்மை செய்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமலும், தீமை செய்பவர்களைத் தடுப்பதுமே விநாயகரின் தோற்றத்தின் தத்துவம். மனதில் உள்ள மாபெரும் அசுரன் ஆன தீயகுணம் நீங்கி, நல்ல குணம் பெருக விநாயக வழிபாடு உதவி செய்யும். இதைத் தான் அசுரர்களை வெல்வதற்காக விநாயகரை வழிபட்டுச் சென்றனர் தேவர்கள் என்று சொல்லுகின்றார்கள். நாம் நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் பல சமயம் தீய எண்ணமே மேலோங்குகின்றது அல்லவா? அந்த அசுர குணம் மேலோங்காமல் இருக்கவே விநாயக வழிபாடு அவசியம் ஆகின்றது. விநாயகர் திருக்கைலையின் சித்திரமண்டபத்தில் உள்ள ஏழுகோடி மந்திரங்களுக்கு நடுவில் உள்ள, “சமஷ்டிப் பிரணவம்” வ்யஷ்டிப் ப்ரணவம்” ஆகிய இரு ப்ரணவங்களின் சேர்க்கை என்று புராணங்கள் சில கூறுகின்றதாய்த் தெரியவருகின்றது. விநாயகருக்கு ஒற்றைக் கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. விநாயகரை வழிபடுவோர் ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகலும் புகழ ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”டன் வாழ்வார்கள். “தத்துவ மசி” என்ற வாக்கியத்தின் வடிவே விநாயக சொரூபம். பிரணவ சொரூபம் ஆன விநாயகரின் காது, அகன்ற தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற சொல்லின் வடிவத்தைக் காட்டுகின்றது. திருவடிகள் ஞானசக்தியும், இச்சாசக்தியும். பேழை போன்ற பெரிய வயிற்றில் அனைத்து உலகும் அடங்கும். கரங்கள் ஐந்தொழில்களைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், மோதகக் கரம் காத்தலையும், அங்குசக் கரம் அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருள்வதையும் சுட்டுகின்றது. மூன்று கண்களாய் சூரியன், சந்திரன், அக்னியை உருவகம் செய்கின்றனர். விநாயகரின் நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சூரிய ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சிவ ரூபம் ஆகும். விநாயகரை வணங்க மறந்த பிரம்மன் படைத்த சிருஷ்டிகள் அனைத்தும் சரியான உருவம் பெறாமல், இஷ்டத்துக்கு பேய், பிசாசுகள் போல் அலைய ஆரம்பிக்க தன் தவறை உணர்ந்த பிரம்மா விநாயரை வணங்கிப் பின்னர் சிருஷ்டி சக்தியைப் பிரயோகம் செய்ய ஆரம்பிக்கின்றார். அப்போது தேவர்கள் அமிர்தத்தால் ஆன மோதகம் ஒன்றை ஈசனிடம் கொடுக்க, விநாயரையும், முருகனையும் பார்த்து ஈசன் யார் முதலில் உலகைச் சுற்றிப் புண்ணியம் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கே இந்த மோதகம் என்று சொல்ல முருகன் மயிலேறி புண்ணிய நதிகளில் நீராடி, மலை, காடுகளில் உள்ள ஈசனின் சான்னித்தியத்தை அறிந்து வரப் புறப்படுகின்றார். விநாயகரோ தாய், தந்தையரை வணங்குவதே புண்ணியம், அதைவிடப் புண்ணியம் ஏதுமில்லை என்று சொல்லி அவர்களை வழிபட, ஈசன் மோதகத்தை விநாயகருக்கு அளிக்க அதுவே இன்று வரையிலும் விநாயகர் கையில் காட்சி அளிக்கின்றது. பிள்ளையாரப்பா, அம்பிக்கு இந்த மோதகத்தைக் கொடுத்துடாதே! பத்திரம்! இந்தக் கதை சற்றே மாறி மாம்பழக் கதையாகத் திரைப்படங்கள் மூலம் அறிகின்றோம். உண்மையில் இந்தக் கதையின் தாத்பரியம் மறைக்கப் பட்டு ஒரு மாம்பழத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்ட கடவுள்களாய்ச் சித்திரிக்கப் பட்டதிலே அது தான் உண்மை என்று நம்பும் அளவுக்கு இருக்கின்றோம். யாராக இருந்தாலும் முதலில் தாய், தந்தையருக்கே மரியாதை செய்யவேண்டும், தாய், தந்தையரைப் போற்ற வேண்டும், அவர்களைக் கடவுளுக்கு நிகராய் வணங்க வேண்டும் என்பதே இதன் உண்மையான தத்துவம். ஆனால் இன்று இது திரைப்படங்களின் தாக்கத்தால் பக்தர்களிடையே பிரிவை உண்டாக்கிப் பெரும் சண்டைக்கும் வழி வகுத்திருக்கின்றது. இது ஒரு துர்ப்பாக்கியமே. தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்து, அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவையே அரைச்செங்கல்லைத் தூக்கிப் போட்டு இதன் மேல் நில் என்று சொன்ன புண்டரீகன் கதை எல்லாருக்கும் தெரியும் தானே? நம் தர்ம சாஸ்திரமும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தானே சொல்லுகின்றது. இந்தக் கதையின் உள் அர்த்தமே இது தான். மறக்காதீங்க. யாரும், யாரோடயும், எப்போவும், எதுக்காகவும் சண்டை போட்டுக்கலை, நாமளும் போட்டுக்க வேண்டாம்! விநாயகர் வலம் வருவார்! ஸ்வாமி ஓம்கார் said… என் அன்பு சகோதரி உங்கள் பதிவு மிக அருமை. கணபதியின் அனைத்து புராண கதைகளையும் தொட்டு படர்கிறது. நல்ல ரசிக்கும்படியாக இருந்தது. உங்கள் எழுத்தில் கூறிய அருகம்புல்லை பற்றி சில கருத்துக்கள் கூற விரும்புகிறேன். நமது கலாச்சாரத்தில் சிவன், விஷ்ணு, சக்தி மற்றும் விநாயகருக்கு தான் இலை அர்ப்பணிக்கிறோம். சிவனுக்கு வில்வம் , விஷ்ணுவுக்கு துளசி, அம்மனுக்கு வேம்பு என படைத்தலும் கணபதிக்கு அருகம்புல் படைப்பதில் ஒரு சூட்சமம் உண்டு. மேல் சொன்ன இலைகளை மனிதன் பயிர் செய்தால் பெறலாம். ஆனால் அருகம்புல் தானே வளர வேண்டும். மனிதனால் பயிர் செய்ய முடியாது. பிரணவ பொருளான விக்நேஷ்வரனும் நித்யமானவன்…யாராலும் உருவாக்கப்பட்டவன் அல்ல என்பதை உணரவே அருகம்புல். ( பார்வதி தேவி உருவாகியதாக சொல்லுவது செவி வழி கதையே புராணத்தில் இல்லை.) அருகம்புல்லுக்கு விதை, கனி , கிளை கிடையாது. பந்த பாசம் , மறு ஜென்மம் அனைத்தையும் நீக்கி முக்திக்கு வழிகாட்டவே அருகம்புல்லை அவருக்கு அர்ப்பணிக்கிறோம். பிரணவ மந்திரம் மூன்று பகுதிகளை கொண்டது. “அ ஊ ம்” என்பதின் இணைவே என மாண்டுக்கிய உபநிஷத் கூறுகிறது. அதன் அடிப்படையில் அதன் சப்த கால இடைவெளியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான். சிறிய தலை (அ) , பெரிய வயிறு (ஊ), சிறிய கால்கள் (ம்) . நீங்கள் கூறியது போல கணநாதன் பிரணவ வடிவில் இருக்கிறான்… உங்களை பாராட்ட வந்து விட்டு அதிக கருத்துக்கள் சொன்னதற்கு மன்னிக்கவும்… ஸ்வாமி ஒம்கார் http://gurugeethai.blogspot.com/ கருத்துக்கு நன்றி ஸ்வாமி ஓம்கார். [] https://www.flickr.com/photos/modomatic/2394983434 45 அத்தியாயம் 45 கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் – 4 இப்போது சங்கடஹர சதுர்த்தியில் முக்கியமான அங்காரக சதுர்த்தி வந்த விதம் பற்றிப் பார்ப்போமா??அங்காரகன் என்றால் செவ்வாய். செவ்வாய் கிரகம் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். பூமிக்கு மிக அருகே இருக்கும் கிரகம் அது என்பதோடு அல்லாமல் சிவந்த நிறத்துடனும் காணப்படும். நம் கண்களால் செவ்வாயைப் பார்க்க முடியும். அந்தச் செவ்வாய் என்னும் அங்காரகன் ஈசன் ஆன பரமேஸ்வரனின் புத்திரன் என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர் ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயனின் அம்சமே அங்காரகன் என்றும் சொல்லுவார்கள். அங்காரகன் வழிபாட்டில் ஸ்கந்தன் என்னும் முருகன் மட்டுமல்லாமல் விநாயகருக்கும் சிறப்பான இடம் உண்டு. வசிஷ்டரின் பரம்பரையில் வந்த பாரத்வாஜ முனிவருக்கும், தேவ மங்கை ஒருத்திக்கும் பிறந்த குழந்தை அங்காரகன். குழந்தை பிறந்ததுமே தேவமங்கை தேவலோகம் திரும்பிச் செல்ல, முனிவரோ தன் தவத்தை விட்டு விட்டு இல்லறத்தில் மூழ்கியதை நினைத்து நொந்துகொண்டு குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் தவத்தைத் தொடர நர்மாதைக்கரைக்குச் செல்லுகின்றார். குழந்தையின் மேல் பாசம் கொண்ட பூமித்தாய் அந்தக் குழந்தையைச் சொந்தக் குழந்தை போல் வளர்த்து வர, குழந்தை வளர்ந்து வந்தது. செந்நிறம் உள்ள அந்தக் குழந்தையை அங்காரகன் என்று அழைத்து வந்தாள். குழந்தை வளர்ந்து ஏழு வயதில் ஒரு நாள் தன் தாயான பூமித்தாயிடம் தன் தந்தை பற்றிக் கேட்கின்றான் அங்காரகன். தந்தை பாரத்வாஜ ரிஷி என்று தெரிந்ததுமே அவரைக் காண ஆவலாய் இருக்க, அவனை அழைத்துக் கொண்டு பாரத்வாஜ ரிஷியின் ஆசிரமம் சென்ற பூமா தேவி குழந்தையை அவருடையது என்பதைத் தெளிவு படுத்தி விட்டு அவரிடம் ஒப்படைக்கின்றாள். பாரத்வாஜரும் ஏற்றுக் கொண்டு முறைப்படி செய்யவேண்டிய உபநயனம் போன்ற சடங்குகளைச் செய்துவிட்டுப் பிள்ளைக்கு வேதங்களும் கற்றுக் கொடுக்க அங்காரகன் நான்கு வேதங்களிலும் தேர்ந்தவன் ஆகின்றான். பின்னர் தன் நிலை இன்னும் உயரவேண்டும் என்று விரும்பிய அங்காரகன் தந்தையின் ஆசிகளோடு காட்டிற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பிக்கின்றான். விக்னங்களைத் தீர்க்கும் விக்ன விநாயகனை வேண்டி அவன் செய்த தவத்தால் மனம் மகிழ்ந்து விநாயகர் காட்சி அளிக்கின்றார், அது ஒரு மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று. அன்று தாமதமாய் சந்திரன் வரும் சந்திர உதய காலத்தில் அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுக்க, அவன் வேண்டுகோள் என்னவெனக் கேட்கின்றார் விநாயகர். அங்காரகனும் தான் தேவலோகம் சென்று தேவர்களோடு சேர்ந்து இருந்து அமிர்தம் அருந்தி அமரன் ஆக ஆசைப் படுவதாய்ச் சொல்லுகின்றான் மேலும் உங்கள் சர்வ மங்கள சொரூபத்தைத் தரிசித்த என்னை இன்று முதல் உங்கள் பெயராலேயே மங்களன் என அழைக்கவும் வேண்டுகின்றேன். நான் உங்களை வழிபட்டுத் தரிசித்த இந்தச் சதுர்த்தி நன்னாளில் உலகத்து மக்கள் அனைவரும் வழிபட்டுத் தங்கள் துன்பங்கள் நீங்கப் பிரர்த்தித்தால் அவர்களின் இன்னல்களை நீக்கி அருள வேண்டும். மேலும் மங்களங்களை உண்டாக்கும் உங்கள் அருளால் என்னையும் அனைவரும் வழிபடும் கிரகமாய் ஆக்கவேண்டும். என்று அங்காரகன் கேட்க விநாயகரும் அவ்வாறே அருளுகின்றார்.விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்த இடத்திலேயே அவரின் விக்ரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து “மங்கள விநாயகர்” என்று பெயரிட்டு வழிபட்டான் அங்காரகன். பின்னர் விநாயகர் அருளால் தேவலோகம் சென்றடைந்து அமிர்தமும் அருந்தி அமரன் ஆனான். கூடவே நவகிரகங்களில் முக்கியமான கிரகமாகவும் ஆனான். அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய்க் கிழமை. அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுத்த அந்தச் செவ்வாய்க் கிழமையில் தேய்பிறைச் சதுர்த்தி வந்தால் அதை “அங்காரக சதுர்த்தி” என்று சொல்லுவதுண்டு. அன்று விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் தீரும். விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும். ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். “ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். [] https://www.flickr.com/photos/50349222@N00/5998951819 46 அத்தியாயம் 46 கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் – 6. ஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. பொதுவாகத் தேவர்கள் அமுதம் உண்டவர்கள் என்பதால் நம்மைப் போல் பசி, தாகம் அவர்களுக்குக் கிடையாது என்று சொல்லுவதுண்டு அல்லவா? மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம். அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். சென்று முனிவரைப் பணிந்த தேவேந்திரனைப் பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனைக் கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார். “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று!” என்பது வள்ளுவன் வாக்கல்லவா? முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான். கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதைப் பயன்படுத்தி வந்தார். ஒரு நாள், காட்டுக்கு ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு. அந்தப் பரிவாரத்தின் அரசன் கணன் என்பவர். அவர் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா? அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் கணன் என்னும் மன்னன். மன்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான். “என்ன? நாடாளும் மன்னன் நான்! காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் போய் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா? என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி!” என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:”மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு! என்னால் கொடுக்க முடியாது!” என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனேயே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான். ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன? யோசனையில் ஆழ்ந்தார் முனிவர். அப்போது ஒரு அசரீரி எழுந்து, “முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான “கணபதி” ஒருவரே! அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்.” என்று சொன்னது, அந்தக் குரல். உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் போன்றவை செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் கபில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார். “விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்.” என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. விநாயகர் அன்று முதல் “சிந்தாமணி விநாயகர்” எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார். [] http://neeruart.deviantart.com/art/1-Lord-Ganesha-Original-Acrylic-Painting-493700897 47 அத்தியாயம் 47 கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7 அம்பி சுக்லபட்ச சதுர்த்திக்கும், சங்கட சதுர்த்தி விரதம் இருக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கும் உள்ள முக்கியத்துவம் பற்றிக் கேட்டிருந்தார். பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது. அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் எழுதப் படாத விதி. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேயவேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு. ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது. இதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில் இருந்து, பதினைந்தாம் நாள் வரும் ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று) விரதம் பூர்த்தி ஆகும். இது மாதிரியும் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும். இது கஷ்டம் என்று நினைப்பவர்கள் மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் விநாயக சதுர்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே. உடல்நலக் கேடு உள்ளவர்களால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்களையும் விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ ஒன்றும் சொல்லப் போவதில்லை. உடல்பலமும், மனபலமும் உள்ளவர்கள் மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம். [] https://commons.wikimedia.org/wiki/File:Nepalese_-_Dancing_Ganesha_-_Walters_543011.jpg 48 அத்தியாயம் 48 இப்போ இந்த விநாயக சதுர்த்தி ஒரு சமூகப் பண்டிகையாக மாறியது எப்போ என்றால் 1893 லோகமான்ய திலகரால் ஆரம்பிக்கப் பட்டது. அன்று வரையிலும் வீடுகளில் மட்டுமே வணங்கப் பட்டு வீட்டின் கிணற்று நீரிலோ, அக்கம்பக்கம் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கப் பட்ட விநாயகரை, சமுதாய ஒற்றுமைக்காகவும், அனைத்து விழாக்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதி, இன வேறுபாடு இல்லாமல் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்டது. மேலும் திலகரின் காலத்தில், ஆங்கிலேயரால் கையாளப் பட்ட பிரித்தாளும் கலை மெல்ல, மெல்ல வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. இது அனைத்தையும் முறியடிக்கவும், பக்தி மார்க்கத்தின் மூலம் மக்களை எழுச்சி பெறச் செய்து சுதந்திர வேள்வியில் பங்கு பெறச் செய்யவுமே இது அவரால் ஏற்படுத்தப் பட்டது. மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புனே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல, மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவி, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, இன்று மகாராஷ்டிரத் தலை நகர் ஆன மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எனினும், நம் தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினரே வீதியில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்திவிட்டு, அந்த விநாயகரை அன்றே நீர்நிலைகளில் கரைத்து வந்தனர். ஊடகங்களின் விளைவுகளாலும், மக்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்த காரணத்தாலும் இன்று விநாயக சதுர்த்தி நம் தமிழ்நாட்டிலும் பெருமளவில் சமூக விழாவாய்க் கொண்டாடப் படுகின்றது. மகாராஷ்டிரத்தில் 10 தினங்கள் நடைபெறும் இந்த விழா இங்கே 5,7, 9 நாட்களில் ஒவ்வொரு குழுவினர் ஒவ்வொரு நாள் என்று அரசு அறிவிப்புக்கு ஏற்ப விழாவை முடிக்கின்றனர். இந்த விநாயகர் பரவலாய் நம் நாடுமுழுதுமே வணங்கப்படும் ஒரு தெய்வமாய் இருந்து வருகின்றார். எவ்வளவு சிறிய கிராமமாய் இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ, அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகர் உட்கார்ந்திருப்பார். இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளில் விநாயகருக்கெனத் தனிக் கோயில்கள் உள்ளன. அவற்றில் நேபாளத்திலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், யு.எஸ்ஸிலும் குறிப்பிடத் தக்க வகையில் அமைந்துள்ளன. இத்துடன் விநாயகர் விஸர்ஜனம் பெறுகின்றார். விநாயகர் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. கணபதி பப்பா மோரியா மங்கல மூரத்தி மோரியா [] https://commons.wikimedia.org/wiki/File:கணபதி_சிலை.jpg 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !