[] []                                                        குறும்படத் திரைக்கதைகள்                                                             முனைவர் த. டான் ஸ்டோனி                                                                   தமிழாய்வுத்துறை                                                            தூய வளனார் கல்லூரி                                                              திருச்சிராப்பள்ளி - 2 நூல் விபரம்         மின்னூலாக்கம் :  த . தனசேகர்   மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com    வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம்   குறும்படத்திரைக்கதை - 1: மிட்டாய்க்காரன் 6  குறும்படத்திரைக்கதை - 2: உறவுகள் 19  குறும்படத்திரைக்கதை - 3 கெமிஸ்ட்ரி 38  குறும்படத்திரைக்கதை - 4: கெடுவான் 45      அணிந்துரை                                                                                          முனைவர் ஞா. பெஸ்கி  இணைப் பேராசிரியர் தூய வளனார் கல்லூரி திருச்சிராப்பள்ளி - 02 தமிழக நாட்டுப்புற கருத்துக்களைக் காட்சியின் வாயிலாக உணர்த்திய நாட்டுப்புறக்கலைகளுள் தெருக்கூத்து குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. கூத்தில் தொடங்கிய தமிழ் நாடகப் போக்கு இன்று நவீன நாடகங்களாக வளர்ந்து வருகின்றது. அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்களின் வளர்ச்சியால் காட்சிப்பிம்பங்களின் வாயிலாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் திரைப்படங்கள் இமாலய வளர்ச்சி பெற்றுள்ளன. வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தன் தடங்களைப் பதிக்க விரும்பும் ஒரு கலைஞன் குறும்படங்களைத் தனக்கானப் பயிற்சிப் பட்டறையாக அமைத்துக்கொள்கிறான். இருமணி நேரத்திற்கு மேலாகக் காண்பிக்கப்படும் திரைப்படங்களைவிட இன்று பத்துநிமிடக் குறும்படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன. இத்தகைய குறும்படங்கள் இயக்குகின்ற கலைஞராக இயக்கப் பயிற்றுவிக்கின்ற இயக்குநராகத் திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த. டான்ஸ்டோனி விளங்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவான ஐந்து குறும்படங்களைத் திரைக்கதைகளாக வெளிப்படுத்தும் முயற்சியாக ‘குறும்படத் திரைக்கதைகள்’ என்னும் இந்நூல் அமைகின்றது. சமூகச் சிக்கல்களை அங்கதச்சுவையோடு வெளிப்படுத்தும் இவரின் குறும்படங்களில் தமிழ்ப்புதினங்களின் மீட்டுருவாக்கப் போக்கையும் உணரமுடிகிறது. குறும்படங்களை உருவாக்கத் துடிக்கும் ஒரு கலைஞன் காட்சிகளை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்னும் வரைச்சட்டமாக இந்நூலின் இரண்டாம் பாகமாக அமைகின்ற ‘காட்சிப்பிரிப்புகள்’ என்னும் பகுதி அமைகிறது. தமிழ் நாடகங்களைத் திரைப்படங்களாக நகர்த்தத் துடிக்கும் இளம் படைப்பாளர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்றால் மிகையில்லை. திரைக்கலையையும் தமிழலக்கியத்தையும் இணைத்துச் சாதனைகள் படைக்கத் துடிக்கும் நூலாசிரியர் முனைவர் த. டான்ஸ்டோனி அவர்களைப் பாராட்டுகிறேன். இந்நூலை வாசிக்கின்ற இளம் படைப்பாளர்கள் இந்நூலை அடியொற்றிப் பல குறும்படங்கள் படைத்து மனித சமூகத்திற்கு வளம் சேர்க்கவேண்டும் என்று விழைகிறேன். வாழ்த்துகிறேன்.                                                                                                                                                                                                                      முனைவர் ஞா. பெஸ்கி              குறும்படத்திரைக்கதை - 1:    மிட்டாய்க்காரன்   நடிகர்கள் முருகன் (மிட்டாய்க்காரன்) ருக்குமணி குழந்தை பாட்டி முதலாளியம்மா பள்ளிக் குழந்தைகள் பணக்காரப் பெண் காட்சி – 1: DAY / INT / மிட்டாய்க்காரர் வீடு / காலை 8 மணி அது ஒரு மண்குடிசை வீடு.வீட்டின் உள்ளே, மண் சுவற்றில் பலகையால் அடிக்கப்பட்டுள்ள சாமிபீடம் உள்ளது.அப்பீடத்தில் பழைய காலண்டரில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட முருகன் சாமி படம் ஒன்று உள்ளது.அப்படத்தை வாடிய பழைய பூமாலையில் சுற்றி நிற்க வைத்துள்ளனர்.பீடத்தில்விபூதியும், குங்குமமும் சிதறிக்கிடக்கின்றன. சில சந்தன வில்லைகளும், பாதி அணைத்து போடப்பட்ட சூடமும்  அப்பீடத்தில் இருக்கின்றன. முருகன்(நாயகன்) சாமி கும்பிட்டுக் கொண்டுள்ளான்.சாமிக்கு கொஞ்சம் சவ்வுமிட்டாயைப் படையலாக வைத்துவிட்டு விபூதி எடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொள்கிறான். பீடத்தின் அருகில் சார்த்தி வைக்கப்பட்டுள்ள மூங்கில் குச்சியை கும்பிட்டு எடுக்கிறான்.மூங்கில் நுனியில் ஆடை அணிந்த பொம்மையைப் பார்த்து “போலாமா” என கேட்டு… அதனை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறான். இவன் வருவதைப் பார்த்து வீட்டின் வெளியே நிற்கும் மனைவி ருக்குவும்,அவன் குழந்தையும் சிரிக்கிறார்கள். முருகன் ருக்க்கு… போயிட்டு வரேன்.(விறுவிறுவென நடக்கிறான்.)  ருக்கு (போறவனைப் பார்த்து) புள்ளைக்கு கொஞ்சம் குடுத்துட்டுப் போய்யா .. (கொஞ்ச தூரம் நடந்து போனவன். திரும்பி…) முருகன் ஏய்ய்ய்ய்ய்… ( கோபத்தில் கத்துகிறான்)(திரும்பி நடந்து ….பக்கத்தில் வந்து) உனக்குத் தெரியாதா? போணி ஆகாதததுக்கு முன்னாடி ஓசி குடுக்கக் கூடாதுனு… ( கொஞ்சம் முன்னாடி நடக்குறான். (கடுப்பாகி) மறுபடியும் பின்னாடி நடந்து வந்து.. அவள் மூஞ்சிகிட்ட கைய ஆட்டி) ஒவ்வொரு முறையும் சொல்லிகிட்டே இருப்பாங்களா? லூசு…. முண்டம்…. (குழந்தை கத்தத் தொடங்குகிறது. குழந்தையைக் காட்டி) அடங்கிடுச்சா… இதா போறப்பவே.. சனியன் திருவாய தொரந்துடுச்சி.. பொழப்பு கிலுகிலுனு தான் இருக்கும்…   ஒனக்கு தெரியாதா? போணி ஆவாததுக்கு முன்னாடி யாருக்கும் தரமாட்டேன்… யாரு குச்சித் தொட்டாலும் விளங்காதுனு” ஒனக்குத் தெரியாதா? முண்டம்.. முண்டம் ஒரு நாளைக்குப் பாரு ஒரே அடி….. அப்புறம் காலம் புல்லா அழுகையே வராது… (கிளம்பி நடந்து போகிறான்.) ருக்கு சரிய்யயா … போகும் போது சந்தோசமா போ… கோபப்படாத….           என் புள்ளக்கிக் குடுக்க எனக்குத் தெரியும்…. (குழந்தையைப் பார்த்து) டேய் அழுவாத… (ரகசியமாக) அந்தாளு புத்தி தெரிஞ்சு தான்…அம்மா உனக்கு எடுத்து வைச்சிருக்கேன்….அப்பாவுக்கு டாட்டா காட்டு…. (குழந்தை கத்திக் கொண்டே உள்ளது) திட்டிக் கொண்டே போகிறான்….. காட்சி – 2: DAY / OUT /  தெரு / காலை 8 மணி (முருகன், தெருவில் மிட்டாய்ப்பாடலை, வாயில் வைத்திருக்கும் பீப்பியால் பாடுகிறான். பாடலுக்கு ஏற்றாற் போல் மூங்கில் மேல் இருக்கும் பொம்மையைக் கைத்தட்ட வைத்துக்கொண்டே  போகிறான்… ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருக்கும் பாட்டி ஏ..முட்டாய்க்கார… முருகன் இதா.. வரேன்… பாட்டி வாட்ச் கட்டிவிடு.. முருகன் ஏன் ..10 மணிக்கு மாப்புள்ள வரேன்னாரா? (பேசிக் கொண்டே.. பாட்டிக்கு வாட்ச் கட்டி விடுகிறான்.) பாட்டி இல்ல.. எமன் வரேனாறு….. முருகன் ஒ மவனா? பாட்டி எ மவன்….எமன் எல்லாம் ஒண்னுதான்…(காசு கொடுக்கிறாள்).  (காசு வாங்கி்க் கொண்டு எழுகிறான்.) பாட்டி கொஞ்சம்.. கொசுறு தாடா முருகன் ஸ்கூலுக்கு நேரமாச்சி பாட்டி பாட்டி குடுத்துட்டுப் போடா முருகன்  கொசுறா… இந்தா ( மிட்டாயைப் பிய்த்துப் பாட்டிக்கி மீசை வைத்து விடுகிறான்) (ஒரு பக்கம் எடுத்துக் கொண்ட மீசையுடன், பாட்டி பொக்கை வாயில்  சிரிக்கிறாள்)   (Fade out) காட்சி - 3 DAY / OUT /  அரசுப் பள்ளி வாசல்/ காலை 10.30 மணி பள்ளியின் முகப்புக் காட்டப்படுகிறது.இடைவேளை மணியோசை ஒலிக்கத் தொடங்கி… நிறுத்தும் முன்… பாடலை சத்தமாகப் பாடுகிறான். பொம்மையின் கைகளை வேக வேகமாகத் தட்டுகிறான்.குழந்தைகள் வேகமாக ஓடி வந்து வாங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும்  வாட்ச்கட்டி, மீசை வைத்து விடுகிறான். எல்லாக் குழந்தைகளும் கேட் வரை மீசை வாட்சோடு போகின்றார்கள். கேட் அருகில் சென்றவுடன்… பள்ளி மணி அடிக்க… மீசையையும் வாட்சையும் அவசர அவசரமாக சுருட்டி மேல்பாக்கெட்டில் வைத்து, நெஞ்சோடு அழுத்திப் பிடித்துக் கொண்டே பள்ளிக்குள் ஓடுகிறார்கள். முருகன், இடுப்பில் கட்டப்பட்டுள்ள காசு பையை ஆட்டிப் பார்க்கிறான். காசுகள் குலுங்க..மகிழ்ச்சியாகிறான். பொம்மைக்கு கை கொடுத்து விட்டு..ஒருமுறை கம்பியை இழுக்கிறான்.ஓசை பலமாக வருகிறது.  மூங்கில் குச்சியை தூக்கிக் கொண்டு திரும்பும் போது..அவன் எதிரில் ஒரு சிறுவன் நிற்கிறான். முருகன் “என்ன?”என சைகையால் கேட்கிறான்.  சிறுவன் “மிட்டாய்”என கண்ணால் காட்டுகிறான்    முருகன் “காசு”என சைகையால் கேட்கிறான்.  சிறுவன் “இல்லை”என உதட்டைப் பிதுக்குகிறான்.  முருகன் “அடி கொய்யால” … காசு இல்லாம எப்புடி தர முடியும்? முட்டாய் வேணுமாம் முட்டாய்… ஓடுறா… (எனக் கோபமாக பொம்மையைத் தூக்கிக் கொண்டு திரும்பி நடக்கத்  தொடங்குகிறான்.) தோளில் கிடக்கும் பொம்மை, சிறுவனைப் பார்த்துக் கொண்டே வருவது போல் இருக்க…. முருகன் (பொம்மையிடம்)   ஒனக்கு என்ன? அங்கயே பார்வ… என பொம்மையைத் திருப்புகிறான்  (திருப்பும் போது பையன் போகாமல் அங்கேயே நிற்பதைக் கண்டவுடன்… அவனையேப் பார்க்கிறான். தன் மகன் நினைவு வருகிறது.) “இங்கன வா… (வருகிறான்)  “போணி ஆகவுதான் தரேன்.. நாளைக்கு வரும் போது காசு தந்திடனும் ன்ணா…” (மீசை  ஒட்டப் போகிறான். அச்சிறுவனுக்கு மூக்கு ஒழுகுகிறது.  தன் சட்டையிலேயே அவன் மூக்கைத் துடைத்து விட்டு, மீசை வைத்துவிட்டு நடக்கிறான்) நாளைக்கி காசு குடுத்துடனும் ண்ணா… (பொம்மையைப் பார்த்து) ஒனக்கு ஓகேவா… (சொல்லி விட்டு அவனே மூங்கிலுக்குள் கை விட்டு கைத்தட்ட வைக்கிறான்.) ஓண் பேச்சக்கேட்டா ( அப்போது…உளி போன்ற கருவியால் ஐஸ்கட்டியை வைத்து தேய்ப்பது போல ஒரு காட்சி வருகிறது.) யேண் பொழப்பு சிரிப்பா… (தேய்த்த ஐஸ்.. குடை போல இருக்க அதனுள் ஒரு ஐஸ்குச்சி சொருகப்படுகிறது)சிரிச்சிப் போய்டும் சிரிச்சி… அந்த ஸ்கூலுக்கு போகனும்…. காட்சி - 4: DAY /OUT/ மற்றொரு அரசுப்பள்ளி வாசல் (குடை போன்ற ஐஸ்ஸில் கலர் கலராக எஸ்ஸன்சு ஊற்றப்படுகிறது. அழகான கலரான ஐஸ்ஸை யாரோ உறிஞ்ச உறிஞ்ச… எஸ்ஸெண்சு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை ஐஸ்ஸாக மாறுகிறது. ஐஸ்ஸால் ஊறிப்போன உதடோடு பெருமையுடன் ஒரு சிறுவன் அந்தப் பக்கம் பார்க்கிறான். ) (இசை : சிறுவன் ஐஸ்ஸை உறிஞ்சும் சத்தம் மட்டுமே ஒலிக்க வேண்டும். உறிஞ்சி முடித்தவுடன்… ஐஸ்சுக்கு அடித்துக் கொண்டு வாங்கும் குழந்தைகளின் சத்தம் கேட்க வேண்டும்.) அவன் பார்க்கும் பக்கம் மிட்டாய்க்காரன் நின்று கொண்டிருக்கிறான்.அவனிடம் கும்பலே இல்லை.அனைவரும் ஐஸ் வண்டியைச் சுற்றி நிற்கின்றனர். சிறுவன் வேணுமா?என ஐஸ்ஸை நீட்டி கேட்கிறான்.  முருகன் (கோபமாக முறைக்கிறான்.) சிறுவன் (மீண்டும்) வேணுமா?என ஐஸ்ஸை நீட்டி கேட்கிறான்.  அவனிடம் யாருமே வாங்கவில்லை என்பதால், மூங்கிலுக்குள் கை விட்டு பொம்மையின் கைகளை வேகமாக அடிக்க வைக்கிறான்.மணி ஒலிக்கிறது.அந்த இடத்தில் யாருமே இல்லை.ஒருபுறம் ஐஸ்காரனும்… மறுபுறம் மூங்கில் குச்சியுடன் இவனும் நின்று கொண்டிருக்கிறார்கள்.தரையெங்கும் ஐஸ் குச்சிகள் நிறைய கிடக்கின்றன.ஐஸ்காரன் இவனைப் பார்த்துக் கொண்டே…. உளி போன்ற கருவியில் “நக்கலாக” ஐஸைத் தேய்க்கிறான்.பொம்மையின் கைகளை ”டப்டப்” சோகமாகத் தட்டும் ஓசை கேட்க.. (Fade Out)  காட்சி - 5: DAY / OUT /  அரசுப் பள்ளி வாசல்/ மாலை பள்ளி விடும் நேரம்.       (FADE IN) இந்தக் காட்சியில் பொம்மையின் கைகள் “டப் டப்” என மகிழ்ச்சியாகத் தட்டுகிறது.பொம்மையின் முகமும் சந்தோசமாக இருக்கிறது.பொம்மையின் தலைக்கு மேல் பல வண்ண பலூன்கள் நிறையக் கட்டிப் பறக்கின்றன. முருகன் “தர்மதுரை” ரஜினி போல கெட்டப் போட்டு ….. “ சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” பாடல் பாடிக் கொண்டு வர …. சுற்றி குழந்தைகள் கூட்டம். 10 குழந்தைகள் முகத்தில் மீசையும் … கைகளில் உள்ள வாட்சைக் காட்டிக் கொண்டும்  வீட்டை நோக்கி நடக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் பலூன் பறக்க நடந்து செல்கின்றனர். ஐஸ்காரன் இவனை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டே…. உளி போன்ற கருவியில் “வேக வேகமாக” ஐஸை தேய்க்கிறான்.   காட்சி – 5 (A) அடுத்த நாள் எம்.ஜி.ஆர் கெட்டப் போட்டு ”நல்லப் பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என ஆடிப்பாடுகிறான். ஐஸ் நன்றாக வி்ற்கிறது. மாணவர்களில் சிலர் சட்டைகளில் “இங்க்” அடித்துக் கொள்கின்றனர். (CUT) காட்சி - 6: Night  / IN /   மிட்டாய்க்காரன் வீடு/ குவியலாக சில்லரைக் காசுகள் கொட்டப்பட்டு ஒருபுறம் ருக்குவும், மறுபுறம் முருகனும் ஒரு ரூபா, இரண்டு ரூபாயாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். முருகன் “ரொம்ப சந்தோசப்படாத ருக்கு.. இன்னையயோட ஸ்கூலுக்கு முழு பரிட்சை முடிஞ்சிடுச்சி.. ஒரு மாசம் லீவு..என்னப் பண்ணுறதுனு எனக்கே தெரியல…. என கலங்குகிறான். (அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விளையாடுவதை விட்டு விட்டு  கலங்கும் அப்பா முகத்தையே பார்க்கிறது)   (CUT) காட்சி - 7: Day / EXT  /நகரின் பல்வேறு சாலைகள் /  காவிரி பாலம் கொள்ளிடம் பாலம்     இரயில்வே ட்ராக் பொன்மலை பூக்கள் சிந்திய ரோடு     மணிகண்டம் வளைந்த சாலை புதிய பைபாஸ் ரோடுகள் என….தோளில் மூங்கில் பொம்மையுடன் சாலை சாலையாக அலைகிறான்.மிட்டாய் விற்கவில்லை.தில்லை நகர் சாலையில் காரில் இருந்து இறங்கும் குழந்தை ஒன்று ஓடிவந்து கேட்க..ஆசை ஆசையாக வாட்ச் கட்டுகிறான்.குழந்தையின் தாய் அவசரமாக ஓடி வந்து கையில் கட்டிய  வாட்சை பிடிங்கி மண்ணில் எறிகிறாள். பொம்மை ரொம்ப சோகமாக காட்சியளிக்கிறது. தாய் Stupid…  இதெல்லாம் சுத்தமாக இருக்காது.. ( என அழைத்துச் செல்கிறாள்.) (CUT) காட்சி - 8: Night  / IN  /   ருக்மணி வேலை செய்யும் வீடு /  இருவரும் கீரை ஆய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ருக்கு க்கா.. ஸ்கூல் தொடங்கப் போகுது.. மி்ட்டாய் எல்லாம் செய்யனும்.. முதலாளியம்மா ஏண்டி..எம் பொண்ணு வயசுதான் உனக்கு ஆகுது. Eng’r… 2nd Year தான் அவபடிக்கிறா.. நீ என்னாடான  ஒன்ரை வயசுல புள்ளய வைச்சிட்டு.. இந்த காதலு கத்திரிக்காவெல்லாம் ஏண்டி… ருக்கு க்கா… அதெல்லாம் முடிஞ்சு… ஒரு புள்ளையும் ஆச்சு. முதலாளியம்மா சரி வுடு..டி.வி.கிட்ட காசு வச்சுருக்கேன். போறப்ப எடுத்துட்டுப் போ..அதோட சார் சட்டை 2 வைச்சிருக்கேன்.  எடுத்துப் போயி உன் புருசன்ட்ட கொடு..குடுக்கிற சட்டையெல்லாம் போடுறீங்களா?இல்ல பழசுனு கடையில போட்டுறீங்களா? ருக்கு க்கா… முதலாளியம்மா வுடு.. வுடு ..சும்மா கேட்டேன். (CUT) காட்சி - 9: Day / IN  /முருகன் வீடு / காலை 8 மணி  பொம்மை கவுன் தொடியில் காய வைக்கப்பட்டுள்ளது. (CUT)  பொம்மைக் கழுவி வெளியே காய வைக்கப்பட்டுள்ளது. (CUT)  பரபரப்பாக மிட்டாய் செய்கிறார்கள். (CUT)  மூங்கிலுக்குள் கைவிட்டு பொம்மையை கைத்தட்ட வைக்கிறான்.(CUT)  கைத்தட்டுகிறது. குழந்தை சிரிக்க மீண்டும் மீண்டும் கைத்தட்ட வைக்கிறான் (CUT)  ருக்கு மிட்டாயை காய்ச்சிக் கொண்டிருக்கிறாள். (CUT)  ருக்கு ஆயிடுச்சி  (CUT)  (முருகன் சாமி முன் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். மிட்டாய் மூங்கில் குச்சியில் செட் செய்யப்பட்டு பீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாமி கும்பிட்டு திரும்புகிறான்.) ருக்கு ந்தாய்யா.. தண்ணி கொஞ்சம் குடிச்சிட்டு போ.. (மிட்டாய் குச்சியை மண் சுவர் மேல் சார்த்தப் போகிறான்) ருக்கு குடுய்யா..நான் புடிச்சுக்குறேன். முருகன் (முறைக்கிறான்) யாவாரத்துக்கு போகும் போது பொம்மையை யார் தொட்டாலும் எனக்குப் பிடிக்காதுனு தெரியாதா.. வேற யாரு தொட்டாலும் யாவாரம் ஆவாதுனு ஜோசியக்காரன் சொன்னது… மறந்திட்டியா… முண்டம் .. முண்டம்.. ( கோபத்தை அடக்குகிறான்)  ஏன் ருக்கு புரிஞ்சிக்க.. ( எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே . அவன் பின்னால் பார்த்து) ருக்கு ”அய்ய்யோ ”எனக் கத்துகிறாள்.  (திரும்பிப் பார்க்கிறான். சுவற்றில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில் பொம்மை கீழே சாயப்போக… பிடித்து விடுகிறான்) மிட்டாயை எடுக்கப் போன அவன் குழந்தை அங்கே நிற்க… குழந்தையை ஓங்கி அறைகிறான். கத்த கத்த மாறி மாறி அறைகிறான். ருக்கு வந்து தடுக்க …. கோபமாக மூங்கில் பொம்மையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான். முருகன் சனியன்… சனியன்.. கீழ விழுந்திருந்தா என்னா வாயிருக்கும்…   சனியன்… சனியன்.. கீழ விழுந்திருந்தா என்னா வாயிருக்கும்…   காலையிலே இது மூஞ்சியில தான் முழிச்சேன்…. சனியன்….   (புலம்பிக் கொண்டே நடக்கிறான். )  சாலையின் திருப்பத்தில் திரும்பும் போது..டமார் என ஒரு சத்தம்.மிட்டாய் முழுவதும் சாக்கடையில் கிடக்கிறது விழுந்த பொம்மையின் கைகள் சோகமாக “டப்படப்” எனத் தட்டுகிறது.)பைக் ஒன்று கீழே விழுந்து கிடக்கிறது.அதன் அருகில் ஒரு மொபைல் சிதறிக் கிடக்க... பைக்காரன் முருகனை “பொளேர்” என அறைகிறான். (வாய்ஸ் ஓவர் -1) ஹாலோ பாஸ்.. நீங்க போன் பேசிக்கிட்டு வந்துட்டு…. அந்த ஆள அடிக்கிறீங்க….. (CUT) (வாய்ஸ் ஓவர் -2)      பாவம்ய்யா.. யாரு மெகத்துல முழிச்சானோ.. எல்லாம் போச்சு (CUT) காட்சி - 10: Day / IN  /முருகன் வீடு / காலை 10 மணி  கோபமாக உள்ளே வந்து….தொட்டியில் தூங்கும் குழந்தையை எட்டி உதைக்க காலைத் தூக்குகிறான்.தொட்டியில் உறங்கும் குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்கிறது.தொட்டியைத் திறந்துப் பார்க்கிறான்.திடீரென தூக்கத்தில் (பயத்தில்) குழந்தை தேம்புகிறது.(இசை - விசும்பல் சத்தம் கேட்க வேண்டும்.) ருக்கு “அப்பா… அப்பானு”கத்திகிட்டே இருந்துச்சு இடிந்து உட்காருகிறான்.   அடுத்த நாள் சாமிக்கு அடிக்கப்படும் மணியோசைக் கேட்கிறது. சாமி படத்தின் முன் நின்று, சாமி கும்பிட்டு விட்டு முருகன் ருக்கு… பொம்மையை எடுத்துட்டு வா.. (ருக்கு திகைத்துப் பார்த்து) ருக்கு நானா? முருகன் ருக்கு… பொம்மையை எடுத்துட்டு வா.. பொம்மையை எடுத்துத் தருகிறாள்.) முருகன் இனிமே … முதல் படையலே. எம் புள்ளைக்குத் தான்… ( என்று கூறி.. மிட்டாயை எடுத்து மீசை வைக்கிறான்) பொம்மை மகிழ்வோடு (சத்தமாக) “டப்டப்” என கையை தட்ட. (கைத்தட்டும் ஓசையோடு)  END CARD போடப்படுகிறது.   குறும்படத்திரைக்கதை - 2:         உறவுகள்   நடிகர்கள் அமுதன் மல்லிகா அம்பிகா நவீன் காயத்திரி மார்க்கெட் வியாபாரிகள் தோழன், தோழிகள் காட்சி 1: குடோன் / உட்புறக் காட்சி / இரவு 2.00 மணி / அது ஒரு பெரிய மாம்பழ குடோன்.லாரிகள், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாம்பழம் ஏற்றி இறக்குவதற்காக ஊரின் புறத்தே அமைந்துள்ளது.இரயில் தண்டவாளத்தின் அருகில் அமைந்திருக்கும் குடோனைச் சுற்றி முட்புதர்களில் செடிகள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. குடோனின் உள்ளே, மாங்காய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.கனிய வைப்பதற்காக சுண்ணாம்பு கற்கள் போடப்பட்டு மாங்காய்கள் கொட்டப்பட்டுள்ளன.எலிகள் ‘கீச் கீச்’ என்று கத்திக் கொண்டு எதையாவது தட்டிவிட்டுக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டுள்ளன. சுவர்களில் ‘பான்பராக்’ எச்சில்கள் துப்பப்பட்டும், குவாட்டர் பாட்டிலின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டும் உள்ளன. தரையில் பாதி அணைத்து போடப்பட்ட பீடி மற்றும் சிகரெட் துண்டுகளும், ஒன்றிரெண்டு காலி பீர் மற்றும் குவாட்டர் பாட்டிகளுடன், கசக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளும் கிடக்கின்றன. அடக்கி வைக்கப்பட்ட சாக்கு பைகளின் மேல் அமுதன் உட்கார்ந்திருக்கிறான்.கீழே நிறைய சிகரெட் துண்டுகள் கிடக்கின்றன.கையில் சிகரெட் ஒன்று கனிந்து கொண்டிருக்கிறது.இழுத்து புகை விட்டப்படி கீழே பார்க்கிறான்.  கீழே மல்லிகா பிணமாகக் கிடக்கிறாள்.புடவை முழுவதும் இரத்தமாக உள்ளது.கண்கள் நிலைக்குத்தி கிடக்கிறாள்.  அமுதன் கண்களை மூடி ஆழ்ந்து ‘தம்’ இழுக்க, மல்லிகாவின் அழகான சிரிப்பு நினைவுக்கு வருகிறது. மீண்டும் ஒரு ‘தம்’ இழுக்கிறான். இறக்கும்போது மல்லிகா கண்கள் சொருகி ‘க்;க்ம்ம்ம்;’ என தொண்டைக்கட்டி துடித்த துடிப்பு நினைவுக்கு வருகிறது. மீதி இருக்கும் சரக்கை எடுத்து அடிக்கிறான்.கண்கள் சிவந்து கோபமும், பயமும் அதிகமாகிறது.மனம் படபடக்க மீண்டும் ‘தம்’ பத்த வைத்து இழுக்கிறான். “நீ நடுத்தெருவுல தாண்ட நிக்கப் போற” என்று (கோபமாக) சொன்ன மனைவி அம்பிகாவின் குரல் கேட்கிறது.  அடுத்து, “ஒனக்கு அவ்வளவு தான் மரியாத” என்று (முறைத்துக் கொண்டு) சொன்ன மகன் நவீனின் குரல் கேட்கிறது.  “சனியன்கள்” என்று (எரிச்சலுடன்) சொன்ன மகள் காயத்ரியின் குரலும் முகமும் மாறி மாறி வந்து போகின்றன.  வந்து வந்து போகும் முகங்களால் கலவரம் அடைந்த அமுதன் பைத்தியம் பிடித்தது போல இங்கும் அங்கும் அலைகிறான்.தலையைப் பிடித்துக் கொண்டு கத்துகிறான். கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து, ஓங்கி தரையில் அடிக்க… வெளியே ஊளையிட்டுக் கொண்டிருந்த நாய்கள் ‘கப்சிப்’ என்று  அமைதியாகின்றன. பாட்டில் சிதறி உடையவே எலிகள் பயந்து மாம்பழ மூட்டைகளின் உள்ளே ஓடுகின்றன.அதனால், மாம்பழங்கள் உருண்டு விழுகின்றன.உருண்டு வந்த மாம்பழம் ஒன்று மல்லிகாவின் முகத்தருகே நிற்கிறது.பிணத்தை உற்றுப் பார்க்கிறான்.முகத்தைக் கையில் ஏந்திப் பார்க்கிறான். பிணமான முகம்…. பொட்டு வைத்து, பூ வைத்து, அழகான பழைய மல்லிகா முகமாக மாறுகிறது. காட்சி மாற்றம் - 2: ( Flash Back ) மாம்பழக்கடை (மார்க்கெட்) / பகல் / உட்புறக் காட்சி / காலை 6.00 மணி /   (பிணமான முகம் இப்படி தான் அழகாக மாறுகிறது).சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் மல்லிகா (நின்று கொண்டு) தன்னை அழகுப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.பழைய பாலுமகேந்திரா ஹீரோயின்கள் போல காதில் தொங்கல், பெரிய வட்ட பொட்டு, நெற்றியின் இருபுறமும் விழும் சுருள் முடி என மிக அழகாக இருக்கிறாள்.(இறந்துப் போன மல்லிகாவின் முகம் அமுதன் கையில் இவ்வளவு அழகாகக் காட்சியளிக்கிறது)அமுதன், கீழே அமர்ந்து இடுப்பு உயர ஸ்டுலில் கணக்கு நோட் வைத்துக் கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அழகுபடுத்திக் கொண்டிருந்த மல்லிகா, (காதில் உள்ள தொங்கல் ஆட) அமுதன் பக்கம் திரும்பி,   மல்லிகா எப்புடியா இருக்கேன்? அமுதன் ம்ம்.இங்க வா சொல்றேன். மல்லிகா காலையிலேயே வா. அமுதன் ஏன்… காலையிலேயேன்னா வேணாமா? மல்லிகா யோவ்…கேட்டதுக்கு மட்டும் பதில சொல்லு.‘எப்புடி இருக்கேன்?’ அமுதன்   இங்க வந்தா சொல்லுவேன். (மெல்ல நடந்து வந்து, அமுதன் வைத்து எழுதும் ‘மர டெஸ்க்கின்’ மேல் வந்து அமர்ந்து,) மல்லிகா  சரி வந்துட்டேன்.சொல்லு. (என்று முகத்தை அவன் முன் காட்டுகிறாள்). (அவள் முகத்தை ஒரு கையில் தாங்கி,) அமுதன்    (முகத்தில், ஒவ்வொரு இடமாக கை வைத்து) “இந்தப் பொட்டு,  (நெற்றியைச் சுருக்குகிறாள்)  இந்தப் புருவம்,  (புருவத்தைத் தூக்குகிறாள்)  இந்தக் கண்மை, (கண்ணைப் படபடக்கிறாள்)  இந்த உதடு, (உதட்டைச் சுழிக்கிறாள்)  இந்தப் பூ (தலையைப் பின்னால் திருப்பிக் காட்டுகிறாள்)  எல்லாம் சேர்த்து” (என்று அவள் முகத்தை தன் அருகில் இழுக்கிறான். முகம், கண்கள்மூடி மிக அழகாக இருக்கிறது). காட்சி மாற்றம் - 3: குடோன் / இரவு 2.30 மணி / உட்புறக் காட்சி   (பூ வைத்து, பொட்டு வைத்து அமுதன் கைகளில் ஏந்திய அதே அழகான முகம், கொஞ்சம் கொஞ்சமாக கருப்படைந்து பிணமாக காட்சியளிக்கிறது. கைகள் முழுவதும் இரத்தம்.)ஒரு நிமிடம் பதறிய அமுதன் அழுது துடிக்கிறான்.தலையில் அடித்துக் கொள்கிறான்.வாய் தண்ணீருக்கு அலைகிறது.தண்ணீர் தேடி அலைகிறான்.தண்ணீர் இல்லை.கீழே கிடக்கும் பாட்டில்களை   வாய்க்கு கவிழ்த்துப் பார்க்கிறான்.தொண்டை கட்டுகிறது.கீழே கிடக்கும்   சிகரெட்துண்டுகளைப் பொறுக்கி, அதில் பெரிதான சிகரெட்துண்டை எடுத்து பற்ற வைக்கிறான். “ஒன் மீசைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” (கட்) “நீ மாம்பழம் பிடிக்கிறதே ஒரு தனி அழகுதான்ய்யா” (கட்) “யாரு எது சொன்னாலும் பரவாயில்ல நீ எனக்கு கமலஹாசன்தான்ய்யா” (கட்) “யோவ்… பாதியிலேயே வுட்ற மாட்டீயே” (கட்) (மல்லிகா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கேட்கிறது. இப்படி அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவனை அலைகழிக்கிறது.) இறுதியில் ஒரு புணர்ச்சி நேரத்தில், “அப்புடி என்னாத்தய்யா கண்ட எங்கிட்ட?” என வெட்கப்பட்டுக் கொண்டே அவள் கேட்ட கேள்வி நினைவில் வருகிறது. (கட்) காட்சி 4: (Flash Back)  தினம்/வெளிப்புறம் / காலை 6.00 மணி / அமுதனின் வீடு “அப்புடி என்னாத்தய்யா கண்ட அவகிட்ட?” என மல்லிகா கேட்ட அதே கேள்வியை, அமுதனின் மனைவி அம்பிகா கேட்கிறாள்.  (அமுதன், உள்பனியனோடு பெரிய சிமெண்ட் தொட்டியில் சண்டை சேவலுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறான். இரயில்வே காலனி வீடு. தொழுவத்தில் காளை, பசு மாடுகள் கட்டப்பட்டுள்ளன. புறாக்கள் கீழே கிடக்கும் கம்புகளைக் (தீனி) கொத்திக் கொண்டிருக்கின்றன. வேட்டை நாய்கள் ஓரமாகக் கட்டப்பட்டு அவையும் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.) அம்பிகா யோவ் கேட்கிறது காதுல விழல! (அமுதன் எதுவும் பேசாமல் சண்டை சேவலுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறான்.) அம்பிகா   விழாது! நான் கேட்குறது எல்லாம் உன் காதுல விழுமா! இதேஅந்த ‘தேவுடியாசிறுக்கி’ கேட்டுருந்தா நல்ல்லா இளிச்சுகிட்டே பதில் சொல்லியிருப்ப! (அமுதன் எதுவும் பேசாமல் தண்ணீர் காட்டிக் கொண்டிருப்பான். அம்பிகா திட்டிக் கொண்டே இருப்பதால் கோழியைக் கீழே விட்டு விட்டு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்புகிறான். தான் பேசுவதை அலட்சியம் செய்வது போல, அமுதன் வெளியே போவதால் கோபமான அம்பிகா, அமுதனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து..) அம்பிகா   யோவ்.. எங்க கிளம்பிட்ட(ஆவேசமாக)  அந்த தேவுடியா பாக்ககௌம்பிட்டியா? அமுதன்   ஏய்.(முறைத்து) நானும் பாத்துகிட்டே இருக்கேன். எடுடீ கைய..  அம்பிகா   எடுக்க மாட்டேன்.(மூச்சிறைத்து)இன்னக்கி ஒரு முடிவு தெரியாமா..  (சொல்லி முடிக்கும் முன்பே அமுதன் ‘சப்’என்று ஒர் அறை விடுகிறான். அம்பிகாவும் திருப்பி அடிக்க கை ஓங்குகிறாள்.. எட்டி ஓர் உதை விடுகிறான். அம்பிகா தள்ளிப் போய் விழுகிறாள். அந்நேரம் அவன் பையன் நவீன் உள்ளே வருகிறான்.) அம்மாவின் அலறல் மகனைக் கோபமாக்குகிறது. ஆனால், இப்படி ஓரு சம்பவம் தன் வீட்டில் நடப்பதே தெரியாதது போல மகள் காயத்ரி டி.வி.யில் சூர்யாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். காயத்ரி சனியன்கள்.நிம்மதியா டி.வி.பாக்க விடுதுகளா? எப்ப பாரு (எழுந்து உள்ளே போகிறாள்) (அடி  வாங்கிக் கீழே விழுந்த அம்பிகா எழுந்து. அமுதனை நோக்கி ஆவேசமாக) அம்பிகா நாசமா போயிருவேடா…நல்லவே இருக்க மாட்ட (அமுதன் மீண்டும் அடிக்கப் போகிறான்…இடையில் புகுந்த நவீன், அப்பாவின் மேல் கைவைத்து) நவீன்   (முகத்துக்கு நேராக கையை நீட்டி)ஒங்களுக்கு அவ்வளவுதான்மரியாத…  அம்பிகா   எல்லாம் அந்த தேவுடியா சொல்லணும். (மீண்டும் அடிக்கப் போகும் அப்பாவைத் தள்ளிவிட்டு விட்டு…) நவீன்      (மிக கோபமாக)யோவ்!! உனக்கு அவ்வளவு தான் மரியாத…  அமுதன்   டேய்.(டென்சனாகி) அவள எதுக்குடா தேவுடியா தேவுடியான்கிறா  நவீன் ஆமாய்யா (நிறுத்தி) எங்க அம்மா சொல்றதுள்ள என்னா தப்பு…  (எகத்தாளமாக) அவ என்னையே ஒரு மாதிரி தான் பாக்குறா.  (முகத்தை சுருக்கி) அப்புடி வெறைக்க வெறைக்க பாக்குறவள தேவுடியானு சொல்லாம (சப்தமாக) வேற என்னனு சொல்லுவாங்க..  (சொன்னவுடன் மகனுக்கு ஓங்கி (காதோடு) ஓர் அடி விழுகிறது. மகன் சுவரில் மோதி விழுகிறான். வாயில் இருந்து இரத்தம் ஒழுகுகிறது. இரத்தத்தைக் கண்ட அம்பிகா ஆவேசமாகி..)   அம்பிகா   என் புள்ளையவே அடிக்கிறியா? வயிறு எரிஞ்சிசொல்றேன்டா (அடிவயிற்றிலிருந்து, அழுகையுடன்)  …அவளால நடுத்தெருவுல தான் நிக்கப்போ…. (சிகரெட் பற்ற வைக்க குவித்த கைகளுடன் நிற்கும் அமுதன், அம்பிகாவைப் பார்த்து ஏளனமாகப் சிரிக்கிறான்.) (Fade Out)  காட்சி மாற்றம் - 5: வெளிபுறக் காட்சி / இரவு 2.50 மணி / குடோனின் அருகில் உள்ள ரோடு “வயிறு எரிஞ்சி சொல்றேன்டா… அவளால நடுத்தெருவுலதான் நிக்கப்போற….” என்ற  சொன்ன   அம்பிகாவின் குரல் Voice over -இல் கேட்கிறது. (இரவு 2.45 மணிக்கு நடுரோட்டில் நின்று கொண்டு இருக்கிறான். சிகரெட் பற்றவைத்த குச்சியை அணைத்து ரோட்டில் போடுகிறான். ‘தம்’ இழுக்கிறான்) கொலை நடந்தது தெரிந்தால், காலையில் என்னவெல்லாம் பேசுவார்கள் என ‘தம்’ அடித்துக் கொண்டே யோசிக்கிறான்.   காட்ச மாற்றம் - 5 (1): தினம் /வெளிப்புறம்/ 8.50 மணி / மார்கெட் (டீ கடையில் ‘பெண் கொலை - கொலையாளி சரண்’ என அமுதன் முகம் போடப்பட்டு வால்போஸ்டர் தொங்குகிறது. கொஞ்சம் தள்ளி, மல்லிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.அப்போஸ்டர் முன், மக்கள் எல்லாம் ஆங்காங்கே நின்று கொண்டு வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்.)     ஆண்  1 (லாரியிலிருந்து மூட்டையை இறக்கிக் கொண்டே) “எனக்கு அப்பவே தெரியும், இப்படியெல்லாம் நடக்குமுனு.. என்ன்னா ஆட்டம்? ” ஆண்  2 (தக்காளியைப் பரப்பிக் கொண்டே) “கெட்டநடத்த கேடுனு’ சும்மாவா சொல்லியிருக்கான்” பெண் 1 ( பூக்கட்டிக் கொண்டு) “ம்.. அந்த குடும்பம்.. என்ன ஆகப்போகுதோ” பெண் 2 (கூடையைக் தலையில் தூக்கிக் கொண்டே) “பொண்ண பெத்துப்புட்டு இப்புடியா செய்வான் படுபாவி” பெண் 3 (கீழே உட்கார்ந்து இருப்பவள்) வீட்ல இருக்கிறவ ஒழுங்கா சாப்பாடு போட்ட இவன் ஏன் ஊரு மேய போகப் போறான்   (Cut) காட்சி மாற்றம் - 5 (2): தினம் / வெளிப்புறம் / 8.50 மணி / காயத்ரி பள்ளி (பள்ளியில் காயத்ரி மட்டும் யாரிடமும் பேசாமல், தலைகுனிந்து செல்கிறாள். மற்ற மாணவிகள் அவளைப் பார்த்துக் கண்ணால் சைகை காட்டி உதட்டைப் பிதுக்குகிறார்கள். (Cut) காட்சி மாற்றம் - 5 (3): தினம் / வெளிப்புறம்/ 10.00 மணி / சுரங்கபாதை மேற்புறம் (பாலத்தின் சிமெண்ட் கட்டையில், நண்பர்கள் எல்லாம் சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன் மட்டும் வேறு பக்கம் திரும்பி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறான்).   ஜோயல்(நவீனின் நண்பன்) (தோளை கட்டிப்பிடித்து) “Freeya -வுடு மச்சான்….இதெல்லாம் ஒரு மேட்டரா?” (Cut) காட்சி- 5 (4) தினம் / வெளிப்புறம்/10.00 மணி/ போலீஸ் நிலைய வாசல் (கைவிலங்குடன் போலீஸ் ஸ்டேசன் வாசலில் நிற்கும் அமுதனைப் பார்த்து) அம்பிகா “அப்பவே சொன்னேன் கேட்டியா…. இப்புடி எங்களையும் நடுத்தெருவுல நிப்பாட்டிட்டுப் போறீயே” (Cut) காட்சி  மாற்றம் - 6: இரவு / வெளிப்புறம் / 2.50 மணி / குடோனின் அருகில் உள்ள  ரோடு (இன்னொரு சிகரெட் பற்ற வைக்கிறான். வாட்ச் பார்க்கிறான். மணி 2.55 ஆகிறது.) அமுதன் (மனதுக்குள் பேசிக் கொள்கிறான் (mind Voice) ) “3.00 மணிக்கு ட்ரெயின் வரும். அவளே தற்கொலை செய்து கொண்டது மாதிரி ‘பாடி’ய தூக்கித் தண்டவாளத்தில் போட்டுட்டுப் போயிரலாம்” (என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு குடோனை நோக்கிப் போகிறான். நடந்து வரும் .. அமுதனின் கால் காட்டப்படுகிறது.) காட்சி  -7:   (Flash Back) இரவு 1.30 மணி / உட்புறம் / குடோன் (நடந்து வரும் அமுதன் கால் …கொஞ்சம் கொஞ்சமாக மல்லிகாவின் காலாக மாறுகிறது. குடோனுக்குள் மல்லிகா கையில் பையுடன் நடந்து வருகிறாள். அடுக்கி வைக்கப்பட்ட சாக்குப் பைகளின் மேல் (கோபமாக) அமுதன் உட்கார்ந்து இருக்கிறான். மல்லிகா அவள் கால் அருகில் அமருகிறாள். மல்லிகா என்னாய்யா இன்னேரத்துல.. இங்கீலீஸ் படம் எதும் பாத்தியா அமுதன் (கீழே அவளைப் பார்த்து) “சரக்கு கொடுத்து விட்டானுகளா” (பையைத் திறந்து சரக்கு பாட்டிலை எடுத்து வைக்கிறாள்) மல்லிகா பின்னாடியிருந்து பாக்கும்போது ஒன் பையன் மாதிரியே இருக்கய்யா (சரக்கை ஊற்றி அவனிடம் கொடுக்கிறாள். வாங்கி குடிக்கிறான்.) அமுதன் (பல்லைக் கடித்துக் கொண்டு) “ஏய்.. வேற ஏதாவது பேசு” மல்லிகா (எதார்த்தமாக) “ஏன்..ஆள் நல்லா பழைய படத்துல வர்ற, விஜயகுமார் மாதிரியே  இருக்கான்” (அப்போது மகன் பேசியது வந்து போகிறது.) நவீன் “அவ என்னையே ஒரு மாதிரிதான் பாக்குறா.” (சரக்கை வாங்கி அடிக்கிறான்) அமுதன் (கண்கள் மூடி)“ஏய் வாய மூடு” மல்லிகா “மார்கெட்டுல இருக்கவுளுக எல்லாம் உன் மகனைப்பத்திதான்  பேசுறாளுக… பாத்துயா… ஒன்ன மாதிரியே ஆக்கிப்புடப் போறளுக.. நவீன் “அப்புடி வெறைக்க வெறைக்க பாக்குறவள தேவுடியானு சொல்லாம வேற  என்ன சொல்லுவாங்க..” (அப்போது மகன் பேசியது வந்து போகிறது.) (போதை உச்சியில் ஏறி நிற்கிறது) அமுதன் “வேற ஏதாவது பேச மாட்டீயா” மல்லிகா “ஏன் நல்ல்லா இருக்கான்ன்… (சொல்லி முடிக்கும் முன்பே அருகில் இருந்த மாம்பழ ட்ரேவை எடுத்து ‘மடார்’ என்று ஒரே அடிக்கிறான். ட்ரேயின் சைடு உடைந்து இருந்ததால், ட்ரே, மல்லிகாவின் கழுத்தில் கத்தி போல சொருகி விடுகிறது. ட்ரேவை இழுத்ததால் கழுத்தில் இருந்து ரத்தம் பீபீச்சி அடிக்கிறது.   மல்லிகா ஏன்… என் மகன ரசிக்க எனக்கு உரிமை இல்லையா? (என்று கேட்டுக் கொண்டே தரையில் விழுகிறாள். தவறு செய்து விட்ட பதட்டத்துடன் அமுதன் திரும்பி) அமுதன் “ ஏய்ய்…என்ன்ன சொன்ன பையனா???(கண்கள் சொருகிக் கொண்டே) மல்லிகா “ஆமாய்யா உனக்கு மகன்ன்னன? எனக்குஃஃஃஃஃ” (என்று, கண்கள் நிலைக்குத்தி நிற்கிறது.) காட்சி மாற்றம் - 8: இரவு / 2.55 மணி / உட்புறக் காட்சி /  குடோன் (குடோனை நோக்கி வேக வேகமாக அமுதன் நடந்து வருகிறான். நடந்து வர.. வர குடோன் பக்கம் இருந்து நாயின் கத்துதலும்… பன்றியின் உறுமலும் கேட்கிறது. அருகில் வர வர சத்தம் அதிகமாக கேட்கிறது.அமுதன் பதட்டமடைந்து ஓட்டமும் நடையுமாக குடோனை நோக்கி வருகிறான். குடோனைத் திறந்து பார்க்கிறான்.உள்ளே இறந்து கிடக்கும் மல்லிகாவின் உடலை நாய்களும் பன்றிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு கடித்து இழுத்துக் கொண்டு உள்ளன. கலவரமான அமுதன் அவற்றை விரட்டுகிறான்.அவை பசி வெறியில் (கொடூரமான பற்கள் கொண்டு) அமுதனையும் கடிக்கின்றன.விரட்ட விரட்ட அமுதனையும் மல்லிகாவையும் மாறி மாறிக் கடிக்கின்றன. காட்சி மாற்றம் – 9: இரவு/ 3.00 மணி / வெளிப்புறக் காட்சி / குடோனின் அருகில்  உள்ள   இரயில்  தண்டவாளம் (இரயில் வரும் ஓசை கேட்கிறது. இரயிலின் வெளிச்சம் செடிகளின் மீதும், கட்டிடத்தின் மீதும் விழுகிறது. அமுதனின் முகத்தில் இரயிலின் வெளிச்சம் பட கலவரமான முகம் மிக பயங்கரமாகத் தெரிகிறது. உடலைத் தூக்கித் தண்டவாளத்தில் போட்டு விட எண்ணி, விழுந்தடித்துக் கொண்டு மல்லிகாவின் உடலைத் தரதர என இழுத்துக் கொண்டு வெளியே வருகிறான்.அவையும் துரத்திக் கொண்டு வருகின்றன.மிக அருகில் வந்த இரயிலின் வெளிச்சத்தில் நாய்களும் பன்றிகளும் மிக கொடூரமாகத் தெரிகின்றது. உடலைத் தூக்கி எறியப்போன அமுதனும் கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுகிறான்…இருவர் மேலும் இரயில் ஏறி ‘தடக் தடக், தடக் தடக்’ எனச் செல்கிறது. இரயில் இருளில் மறைய எழுத்து - இயக்கம் எனப் பெயர் போடப்படுகிறது. குறும்படத்திரைக்கதை - 3     கெமிஸ்ட்ரி     நடிகர்கள் ராய் நந்தினி அனீஸ் காட்சி – 1:   Day / Ext  /  ஜோசப் கல்லூரி வாசல்     கல்லூரிக் கதவைத் திறந்து, ராய் (ஹீரோ)  தலையை மட்டும் எட்டிப் பார்க்கிறான். உள்ளே  “விண்ணைத்தாண்டி வருவாயா” த்ரிஸா போல நந்தினி (ஹீரோயின்) நடந்து வந்து போய்க் கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட உடன் மகிழ்ச்சியாகிய ராய்,  அவளை நோக்கி ஓடி வருகிறான். அப்போது, எதிர்புறம் அவன் நண்பர்கள்  வருகிறார்கள். அதில் ஒருவன் ராயை கூப்பிடுகிறான்.  அனிஸ் “மச்சான்” ராய் “சொல்லு மச்சி” (“க்த்த்துது” என்று காரித் துப்புகிறான் நண்பன்) ராய் “தாங்ஸ் மச்சி” அனிஸ் “இதெல்லாம் ஒரு பொழப்பு …த்த்தது” (என்று மீண்டும் துப்பி விட்டு கடந்து செல்கின்றனர்.) இதை ஓரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாத ராய், (புருவத்தை உயர்த்தி தோளை குலுக்கி விட்டு)நந்தினியை நோக்கி ஓடுகிறான்.  ராய் வர வர அவள் வேகமாக நடக்கிறாள். மெயின்சாலையிலிருந்து வேகமாக முதல்வர் அறைப்பக்கம் திரும்பி நடக்கிறாள்.அவள் பின்னாடியே செல்கிறான். அவள் டிபார்மெண்ட்  நோக்கி நடப்பதை அறிந்து வேறு வழியில் செல்கிறான். அவள் திரும்பிப் பார்க்கிறாள். அவன் வராததை எண்ணி (உதட்டை பிதுக்கி வியந்து விட்டு)  chemistry block ஏறுகிறாள்.   காட்சி -2: Day / Ext  /  ஜோசப் கல்லூரி நூலக வாசல்     ஏறும்போது தூண் அருகில் மறைந்திருந்த ராய், தூண்ணை விட்டு வெளியே வந்து அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். இவள் அவனை முறைத்து விட்டு, கொஞ்சம் வழி மாற்றி நடக்கிறாள்… ராய் அவள் செல்லும் வழியை மறைக்கிறான். அப்போது, பெல் அடிக்க.. Please stand up என்ற குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்கிறது. அங்கங்கே நடந்து வந்தவர்கள் அப்படியே நிற்கிறார்கள்.(இறைவேண்டலுக்காக..)ஒலிபெருக்கியில் “நீயே நிரந்தரம்” என்ற கிறித்துவப்பாடல் ஒலிக்கிறது. chemistry block படியின் மேலே ராயும், இரண்டு படி இறங்கி நந்தினியும்  எதிர் எதிரில் நிற்கிறார்கள். ராய் கண்களால் கெஞ்சுகிறான்.நந்தினி வெறுப்புக் காட்டுகிறாள்.கண்களை மூடிக் கொள்கிறாள். மேலே நிற்கும் ராய், வாயால் அவள் தலைமுடியை “ப்பு” என ஊதுகிறான்.அதை அவள் உள்ளுக்குள் ரசிக்கிறாள்.ஆனால் அதை வெளிக்காட்டாமல்…கோபமாக அவனைப் பார்க்கிறாள்.இவன் மெதுவாக சிரித்து கண்களால் மேலேக் காட்டுகிறான்.அவள் முறைக்கிறாள். இவன் கெஞ்சுவது போல முகம் காட்டி, மீண்டும் மேலே காட்டுகிறான்.அவள் பிடிக்காதது போல (தலையை ஆட்டி) மேலே பார்க்கிறாள்.மேலே chemistry என்ற போர்டு உள்ளது. பார்த்து விட்டு முறைக்கிறாள் .இவன் கண்களால் கெஞ்சுகிறான்.பாடல் முடிகிறது.அவனைக் கடந்து நடக்கத் தொடங்குகிறாள்.  கார்த்திக் மௌன ராகம் ஸ்டைலில் முழங்கால் இட்டு அவள் கை பிடிக்க… அவள் பதற ராய் “ஓகே” னு ஒரு வார்த்தை சொல்லு.. (சொன்னால் தான் விடுவான் என அறிந்து… கண்கள் மூடி.. பல்லைக் கடித்துக் கொண்டு) நந்தினி “ஓகே ”என்கிறாள்.  அவள் கையை விட்டு விட்டு படியில் இருந்து துள்ளி குதிக்கிறான்.அவன் ஓடுவதைப் பார்த்து இவளும் சிரித்து விட்டுச் செல்கிறாள். லாலிஹால் வாசலில் துள்ளி குதிக்கிறான்.ஓடுகிறான்.எதிரில் வரும் அவன் நண்பன் வருகிறான்.அவனைப் பார்த்தவுடன் ஆடுகிறான்.அவனும் உடன் சேர்ந்து ஆடுகிறான்.இருவரும் கட்டிப்பிடித்து ஆடுகிறார்கள். கிருஷ் “என்ன ஆச்சு மச்சான்” ராய் (மூச்சிறைக்க)“மச்சான் ஓகே சொல்லிட்டாடா”  (என்று சொல்லி மீண்டும் ஆடுகிறான்.) (Fade Out) காட்சி - 3: Day / int / Exam Hall   மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்கள் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.சில ஆசிரியர்கள் கூட்டமாக நின்றுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.கேமரா மெதுவாக நகர்ந்து வந்து ராய் முகத்தில் நிற்கிறது. ராய் (சுற்றிப் பார்த்து விட்டு) “ஸ்ஸ் ..ஸ்ஸ்” என்று  கூப்பிடுகிறான்.    முன் டெஸ்க்கில் நந்தினி தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறாள்.  ஆனால், இவன் மீண்டும் மீண்டும் கூப்பிட..அவள் திரும்பவில்லை. ராய், சுற்றிப்பார்த்து விட்டு அவள் சடையைப் பிடித்து இழுக்கிறான். நந்தினி திரும்பி முறைக்க… ராய், “ஒரே ஒரு கிஸ் ” என்பது போல முகத்தைக் காட்டுகிறான். நந்தினி முறைத்து விட்டு திரும்புகிறாள். மீண்டும் “ஸ்ஸ் ..ஸ்ஸ்” என்று கூப்பிடுகிறான்  அவள் திரும்பாமல் “வெயிட்” என்பது போல் கை காட்டி விட்டு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெதுவாக தான் எழுதிய பேப்பரை நகர்த்தி அவன் பார்வையில் படும்படி வைக்கிறாள்.  (இவன் இஸ்லாமியர்கள் கும்பிடுவது போல கைகைள் இரண்டையும் வானம் நோக்கி காண்பித்து கண்கள் மூடி.. கும்பிட்டு விட்டு) அவள் வைத்தப் பேப்பரைப் பார்க்கிறான். பேப்பரில்  Subject எனும் இடத்தில்  Chemistry என்று எழுதி உள்ளது. Chemistry என்று எழுத்திற்கு க்ளோசப் வைத்தால் அது ப்ளாஸ்பேக்காக மாறுகிறது. காட்சி – 4:   (இதுவரை காதல் காட்சிகள் போல் எடுக்கப் பட்ட அனைத்துக் காட்சிகளும் மீண்டும் காட்டப்படுகிறது. அவை அனைத்தும் காதல் காட்சிகள் அல்லாமல் .. நன்றாக படிக்கும் பெண்ணான நந்தினி.. தனக்குப் பரிட்சையில் பேப்பரைக் காட்ட வேண்டும் என்பதற்காக மன்றாடிய நிகழ்ச்சிகளே என்பது விளக்கப்படுகிறது) ப்ளாஸ்பேக் முடிய… காட்சி -5: மீண்டும் Exam Hall நந்தினி வைத்தப் பேப்பரைப் பார்த்து மடமடவென்று காப்பி அடிக்கிறான்.5 minutes more என்ற குரல் கேட்கிறது.சட்டென்று நந்தினி முகம் கலவரம் ஆகிறது.தலையில் அடித்துக் கொள்கிறாள்.ராய் பார்த்து எழுதும் தன் பேப்பரை சரசரவென்று ஒவ்வொரு பக்கமாக அடிக்கிறாள்.மீண்டும் குனிந்து தலையில் கை வைத்து அழுகிறாள் (உடல் மட்டும் குலுங்குகிறது.) 3 minutes more என்ற குரல் கேட்கிறது. ராய்  கலவரம் ஆகிறான். நந்தினியைப் பார்க்கிறான்.அவள் பேப்பரைப் பார்க்கிறான்.அவள் மீண்டும் கன்னாபின்னா வென்று பேப்பரை அடிக்கிறாள். (பேப்பர்  fade out ல் காட்டப்படுகிறது.) ராய் டென்ஸனாகிறான்.சுற்றும் முற்றும் பார்க்கிறான்.தன் பேப்பரைப் பார்க்கிறான்.அடித்த அவள் பேப்பரைப் பார்க்கிறான்.அவளைப் பார்க்கிறான்.அவள் குனிந்து எழுதிக் கொண்டிருக்கிறாள். கோபமாக தான் எழுதியப் பேப்பரை தாறுமாறாக இவனும் அடிக்கிறான்.பேப்பரை கட்டி விட்டு எழுந்து கொடுக்கப் போகிறான்.போகும்போது “மடார்” என்று நந்தினி தலையில் அடித்துவிட்டுப் போகிறான். அவள் குனிந்தே இருக்கிறாள்.2 minutes more என்ற குரல் கேட்கிறது.தலை நிமிருகிறாள்.கண்களைத் துடைக்கிறாள். அழிரப்பர் கொண்டு தான் அடித்த எல்லாவற்றையும் அழித்துவிட்டு..பேப்பரைக் கட்டி நிமிர்கிறாள். மணி ஒலிக்க Stop writing  என்ற குரல் கேட்கிறது. எழுந்து கட்டிக் கொடுத்துவிட்டு நடக்கிறாள். தோழி “என்னாச்சு” என்கிறாள். பெருமிதத்துடன் ஜாக்கெட் (அ) சுடிதார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு கண் அடிக்கிறாள். அவள் கண் அடிப்பது Freez  ஆகஎழுத்து – இயக்கம் எனப் போடப்படுகிறது. குறும்படத்திரைக்கதை - 4:              கெடுவான்     நடிகர்கள் பேராசிரியர் பேராசிரியர் மனைவி & மகள் மாணவர்கள் - 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏட்டு – 2 பூக்கடைப் பெண்கள் – 2 காட்சி1:    போலீஸ் ஸ்டேசன் / உள் / காலை பத்துமணி     (போலீஸ் ஸ்டேசனின் முகப்பு காண்பிக்கப்படுகிறது. ஸ்டேசனுக்குள் யாரோ நுழைவது போன்று காட்சி வைக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைவது பின்புறம் இருந்து காட்டப்படுகிறது. இன்ஸ்பெக்டர், கீழே உட்கார்ந்து இருக்கும்  குற்றவாளிகளை ஒவ்வொருவாராகப் பார்த்துக் கொண்டுச் செல்கிறார். உடன் வரும் சப்-இன்ஸ்பெக்டர் அவர்களைப் பற்றியத் தகவல்களை சொல்லிக் கொண்டேச் செல்கிறார்.   இன்ஸ்பெக்டர் ‘இவன் யாருயா?’ (எனக் கேட்டுக்கொண்டே தன் அறை நோக்கிச் செல்கிறார்.)   ஏட்டு ‘காலேஜ் புரபேசராங்க’ என்றதும் நின்று விடுகிறார்.   இன்ஸ்பெக்டர் என்னாவாம் ?   ஏட்டு பஸ்சுல ஏதோ பொண்ணோட இடுப்பக் கிள்ளிப்புட்டாரம்.   இன்ஸ்பெக்டர் என்ன கண்ராவியா இது . . .இவனுகளே இப்படி இருந்தானுகனா இவனுகளுட்ட படிக்கிற பயலுக எப்படி இருப்பானுக. . . படிச்சவனுகலால தான் நாட்டுல தப்பு பெருகிட்டே போகுது. . .   ஏட்டு ஆமா சார். துணிஞ்சு செய்ரானுக. .நிறைய சம்பளம் வாங்குறானுல்ல. (போன் வருகிறது. )   இன்ஸ்பெக்டர் எத்தனை மணிக்கு சார். .  இப்பவா சார் . . சரி சார் .நான் வரேன்.   ஏட்டு என்ன சார். . அதுக்குள்ள போன் பண்ணிட்டான்களா. .   இன்ஸ்பெக்டர் இல்ல அது ஏதோ கமிஷனர் மீட்டிங்காம்.(சிரிக்கிறார்கள்)   இன்ஸ்பெக்டர் புதுசா வந்துட்டு. . நம்ம உயிர வாங்குரானுக. .  சரி நான் போறேன். . . அந்த லேடிட்ட கம்லைன்ட் வாங்கிட்டு. . கோர்ட்ல கொண்டு போய் ரிமாண்ட் பண்ண சொல்லுங்க. .   ஏட்டு அய்யா பொதுமக்கள் புடிச்சுக் குடுத்ததால  அந்த லேடி யாருனு  தெரியலைங்க. . இன்ஸ்பெக்டர் யோவ்! என்ன விளையாடுறீங்களா. . கம்ளைண்ட் வாங்காம எப்புடி ரிமாண்ட் பண்ணுறது. . நாளைக்கு கோர்ட்ல உன்ன கேக்க மாட்டானுக. . என்ன தான் கேப்பானுக. . . . அதுவும் அவன் புரபோஸ்சரு வேற . . .  ஏய்யய்ய என் உயிர வாங்குறீங்க. . . இத்தன வருசம் ஸ்டேசனுல இருக்கீங்க. .   ஏட்டு இல்ல சார் ப்பளிக் நியுசன்ஸ் கேஸ் போடலாம். . .   இன்ஸ்பெக்டர் ஏட்டய்ய சும்மா இருங்க. . .  சட்டம் எனக்கு சொல்லித் தராதீங்க  . ர்ரஅயn சபைhவள. . ம. க . இ க. . . புமாக. . சுமகா . . அப்புடி ஆள் ஆளுக்கு வந்துடுவானுக. . . . (அறையை விட்டு வெளிய வந்து)   இன்ஸ்பெக்டர் ஏங்க நீங்கலே இப்புடி இருந்தா எப்படி. . . சரி, ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டு போங்க. . . பிரஸ்சுல ஏதும் சொல்லலையில ஏட்டய்யா. . . சரி நான் மீட்டிங் போயிட்டு வந்துடுறேன். (வாசல் வரை சென்றவர் திரும்பி)   இன்ஸ்பெக்டர்        சார். . ஒன்ணு சொல்றேன் “ஒரு பொண்ண பெத்தவன் மூணு பேர மட்டும் தான் நம்புவான். பெத்த புள்ளய ரூமுக்குள்ள அனுப்பிச்சுட்டு, அப்பன்காரன் வெளிய நின்னுகிட்டு இருக்கிறது மூணு பேருட்ட மட்டும் தான் ஒண்ணு டாக்டர், இன்னொண்னு டீச்சர்னு சொல்ல உங்ககிட்டயும்தான். . நீங்கலே இப்படி செய்ச. . .   பேரா. நான் செய்ல சார். . நான் செய்ல சார். .   இன்ஸ்பெக்டர் போங்க சார்.தப்புசெஞ்ச எல்லாமே இப்படிதான்சொல்லுவானுக.   பேரா.   நான் செய்ல சார். . நான் செய்ல சார். . காட்சி – 2:   பஸ்  / உள் / காலை 8.30 (பஸ்ஸில் நடக்கும் காட்சிக் காட்டப்படுகிறது. பஸ்சில் இருந்து பேராசிரியரை அடித்துக் கொண்டே இறக்குவது போன்ற காட்சிக் காட்டப்படுகிறது. பொதுமக்கள் பேராசிரியரை அடித்து இழுத்து வருகிறார்கள். சிலர் செறுப்பால் அடிப்பதும் காட்டப்படுகிறது. கோவில் அருகே இருக்கும் போலீஸிடம் சொல்லி, வேனில் ஏற்றிவிடுவது போல காட்சிக் காட்டப்படுகிறது. காட்சி - 3:   போலீஸ் ஸ்டேசன்/ உள் /காலை10   இன்ஸ்பெக்டர் என்ன கண்ராவியா இது . . .இவனுகளே இப்படி இருந்தானுகனா . . இவனுகளுட்ட படிக்கிற பயலுக எப்படி இருப்பானுக. . . படிச்சவனுகலா தான் நாட்டுல தப்பு பெருகிட்டே போகுது. . .   ஏட்டு ஆமா சார். துணிஞ்சு செய்ரானுக. .நிறைய சம்பளம் வாங்குறானுல்ல.(போன் வருகிறது)   இன்ஸ்பெக்டர் எத்தனை மணிக்கு சார். .  இப்பவா சார் . . சரி சார் .நான் வரேன். சார் என்று கூறி விட்டு..சரி..ஏதோ கமிஷனர் மீட்டிங்காம்.(சிரிக்கிறார்கள்) புதுசா வந்துட்டு. . நம்ம உயிர வாங்குரானுக. .  சரி நான் போறேன். . . அந்த லேடிட்ட கம்லைன்ட் வாங்கிட்டு. . கோர்ட்ல கொண்டு போய் ரிமாண்ட் பண்ண சொல்லுங்க. . ஏட்டு அய்யா பொதுமக்கள் புடிச்சுக் குடுத்ததால  அந்த லேடி யாருனு தெரியலைங்க. .   இன்ஸ்பெக்டர் யேவ்! என்ன விளையாடுறீங்களா. . கம்ளைண்ட் வாங்காம எப்புடி ரிமாண்ட் பண்ணுறது. . நாளைக்கு கோர்ட்ல உன்ன கேக்க மாட்டானுக. .என்ன தான் கேப்பானுக. . . . அதுவும் அவன் புரபோஸ்சரு வேற . . .  ஏய்யய்ய என் உயிர வாங்குறீங்க. . . இத்தன வருசம் ஸ்டேசனுல இருக்கீங்க. .   ஏட்டு இல்ல சார் ப்பளிக் நியுசன்ஸ் கேஸ் போடலாம். . .   இன்ஸ்பெக்டர் ஏட்டய்ய சும்மா இருங்க. . .  உங்க காலமெல்லாம் இது இல்ல. . மனித உரிமை . மகஇக. . . புமாக. . சுமகா . . அப்புடி ஆள்ஆளுக்கு வந்துடுவானுக. . . .(அறையை விட்டு வெளிய வந்து) ஏங்க நீங்கலே இப்புடி இருந்தா எப்படி. . . சரி, ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டு போங்க. . . பிரஸ்சுல ஏதும் சொல்லலையில ஏட்டய்யா. . . சரி நான் மீட்டிங் போயிட்டு வந்துடுறேன்.  (வாசல் வரை சென்றவர் திரும்பி) சார். . ஒன்ணு சொல்றேன் “ஒரு பொண்ண பெத்தவன் மூணு பேர மட்டும் தான் நம்புவான். பெத்த புள்ளய ரூமுக்குள்ள அனுப்பிச்சுட்டு, அப்பன்காரன் வெளிய நின்னுகிட்டு இருக்கிறது மூணு பேருட்ட மட்டும் தான் ஒண்ணு டாக்டர், இன்னொண்னு டீச்சர்னு சொல்ல உங்ககிட்டயும் தான். . நீங்கலே இப்படி செய்ச. . .   பேரா. நான் செய்ல சார். . நான் செய்ல சார். .   இன்ஸ்பெக்டர் போங்க சார். . . தப்பு செஞ்ச எல்லாமே இப்படி தான் சொல்லுவானுக. . .   பேரா. நான் செய்ல சார். . நான் செய்ல சார். . (பேரா. ஸ்டேசனை விட்டு வெளியே வருகிறார். வாசலில் அவரின் மனைவி மற்றும் வயதிற்கு வந்த  பெண்ணும் நிற்கிறார்கள்.உடைந்து அழுகிறார்)   ரைட்டர் யோய் நடிக்காத. . . போ. . உனக்கு எல்லாம் வயசுக்கு வந்த புள்ளவேற .  .. அந்த புள்ளைய கூட தூங்க விட்டு எங்க துணி விலகி இருக்குனு பாப்பியோ என்னமோ. . . (அதைக்கேட்டு..அவர் மனைவி மயங்கி கீழே விழ..ஆட்டோஅழைக்கப்படுகிறது. மங்கலாக காட்சி டிம்மாகிறது..) காட்சி – 4:   பஸ் ஸ்டாண்டு - பிளாட்பார்ம் கடை / பகல்/வெளி (பூக்கடை வாசலில் (முகம் தெரியாமல் பின்புறம் இருந்து காட்டப்படுகிறது.) பூக்காரி அமர்ந்து இருப்பது போலக் காட்டப்படுகிறது.(பூக்காரியின் பின்புறம் கேமரா) இரண்டு பேர் பைக்கில் வருகிறார்கள். (பைக் கால் மட்டும் காட்டப்படுகிறது. பூக்காரி  எழுந்து போகிறாள். பைக்கில் வந்தவர்கள் பணம் கொடுக்கிறார்கள்.  பணத்தை வாங்க மறுத்து   பூக்காரி “பணமெல்லாம் வேண்டாம். . இங்க பிளாட்பார்ம் கடை வச்சு இருக்கதால.... . . இந்த போலீஸ்காரங்க தொல்லை தாங்கமுடியல தம்பி . . அப்பா  தான் இந்த வார்டு கவுன்சிலர் ஆச்சே. அப்பாகிட்ட சொல்லி . . . இந்த கடைக்கு மட்டும் மாநகராட்சி லைசன்ஸ் வாங்கி குடுத்தீன நல்லாயிருக்கும் . . மத்த படி நீ நம்ம புள்ள ..ஒனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்.   கௌதம் அது செஞ்சு தரேன். . நீ ஏதும் மாட்டினீயா. . . எதுவும் ப்ராம்ளம் ஆகலையே. . . (ப்ளாஷ் பேக்) காட்சி - 5: பஸ் ஸ்டாண்டு /   (கேமரா டாப்பில் வைத்து கீழே நடப்பதை எடுப்பது போல எடுக்கப்படுகிறது) பேராசிரியரை அடித்து இழுத்துச் செல்கிறார்கள். . கும்பலில்  இருந்து அந்தப் பெண் நழுவிச் செல்லுதல் காட்டப்படுகிறது.(ப்ளாஷ் பேக்  END) மீண்டும் காட்சி -6:   இடம் : பஸ் ஸ்டாண்டு - பிளாட்பார்ம் கடை வாசல்   பூக்காரம்மா நான் மாட்டல தம்பி . .  தம்பி ஒரு சந்தேகம் . பாவம் தம்பி அந்த மனுசன்யாரு தம்பி அவரு  . . ஏன் இப்படி செய்ய சென்ன. .பாவம் அது பாட்டுக்கு புக் படிச்சிகிட்டு இருந்துச்சு.பாவம் நான் அப்படி மாட்டிவுட்டதுக்கு அப்புறம். .... . . இல்ல இல்லனு அந்த ஆளு கெஞ்சுனப்ப. . . எனக்கே பாவம்மா போச்சு. . .   கௌதம் கெஞ்சுனானான்னா . . நானு அப்புடி தான கெஞ்சுனேன்.. . (ப்ளாஷ் பேக்) காட்சி -7:   உள்/ பகல் / தேர்வு அறை / (மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். மாணவனின் முதுகுப்புறமும் பேராசிரியரின் இடுப்புப் புறமும் காட்டப்படுகிறது.)எழுந்திருக்கிறான்.பிட் உருவப்படுகிறது.கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்படுகிறான்.வாக்குவாதம் ஆகிறது.   இராபர்ட் சார் வேணாம்.சார்.மாணவன் முகம் க்ளோசப்பில் காட்டப்படுகிறது. (வேறு ஒரு மாணவன் . . பைக்கில் எடுத்து ஓட்டிக் கொண்டு செல்பவன். . )   பேரா.   என்னாட வேணாம் . . போடா வெளியே. .   இராபர்ட்   சார்.கையை எடுங்க சார். . ப்ரண்ட்ஸ் பாக்குறாங்க தேவையில்லாம பிரச்சனை ஆயிடும். .   பேரா.   என்னாடா செய்வ. .   இராபர்ட்   சார். .   பேரா   என்னாடா செய்வ. . . என்னாட வேணாம் . . போடா வெளியே. . காட்சி - 8: வெளி / ரோடு/ மாணவர்கள் பைக்கில் போவது போல காட்சி      இராபர்ட் செஞ்சம்முள்ள (இராபர்ட்க்குப் போன் வருகிறது.)   இராபர்ட் எப்படா?.......சாவுட்டுண்டா   சுனில் என்னாடா ..   இராபர்ட் செத்துட்டாண்ணாம்   சுனில் சாவட்டும். .   இராபர்ட் நமக்கு எதுவும் பிரச்சனை ஆகுமா?   சுனில் அதெல்லாம் ஆகாது. . .சாவுட்டும். .  என்கிறான். (அப்போது… எதிரே வரும் லாரியில் போய் மோதி இருவரும் கீழே விழுகிறார்கள். .பால சுவற்றில் “கெடுவான் கேடு நினைப்பான் ”எழுதி வைத்துள்ள வாசகத்தை இருவரும் ..இரத்தம் வழியப்பார்த்துக் கொண்டே கண்கள் மூடுவது போன்று காட்சி முடிகிறது.