[] 1. Cover 2. Table of contents கற்பூர வெண்பா கற்பூர வெண்பா   ஆ. வேலு     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/karupura_venpa} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/Gnaniyin_Kavithaikal This Book was produced using LaTeX + Pandoc அணிந்துரை "எல்லாரும் வாழ்க்கையில் எல்லாமும் பெற்று நல்லா றது வழியில் தானடந்து எல்லாரும் என்றென்றும் எவ்வுயிர்க்கும் அன்புசெயல் வேண்டும் என்பெதுவே கற்பூரம் ஏக்கம்" இந்த கற்பூரத்தின் வாழ்த்திலே இவ்வணிந்துரையைத் தொடங்குகிறேன். கற்பூர வெண்பாவில் வரும் ‘கற்பூரம்’ என்ற கதாப்பாத்திரம் நான் நம் கவிசர் ஐயா திரு.வேலு அவர்கள். கற்பூர வெண்பாவில் தன் வாழ்க்கைக் கதையை தெளிவாக எளிதாக இனிதாக வடித்துத் தந்திருக்கிறார். இக்கதை ஒரு காவிப் பேழை. அரிய பொக்கிஷம். இப்பெருந்தகை- யாளரைப் பெற்றதனால், சூராணம் நிச்சயமாகப் பெருமை கொள்ளும். ஊரின் பெருமை, மனித மாண்பு, வாழ்வின் அருமை, ஆசிரியப் பணியின் மேன்மை, நல்லிணக்க செருமை, பாசப்பிணைப்பு, இறையாண்மைச் சிதறல்களே இக்காவியத்தில் பெருக்கெடுத்து ஓடுவதைக் காணலாம். இவையே இன்றையத் தலைமுறைக்குத் தரப்படும் நன்னெறி என்பதனை இக்காவியம் உணர்த்தும். கண்ணனையும், ஆதிபரா சக்தியையும் தில்லையம்பலத்தில் நடனமாடும் சிவனாரின் அருளை அழைத்து நம்மை ஆசிக்கும் நடையே இவரின் தனிப்பெருமை. இக்காவியம் இளையத் தலைமுறைக்கு சான்றாக அமைய வாழ்த்துகிறேன். ‘வேண்டும் வரம் தந்திடுவார் அருள்புரிவார் சந்தியாகப்பர்’. அருட்சகோதர் ஜான் பெர்னாண்டோ, FSC., தலைமையாசிரியர், புனித ஜேம்ஸ் மேனிலைப் பள்ளி, சூராணம் முகவுரை கற்பூர வெண்பா என்பது கற்பூர சுந்தரன் என்னும் பெயருடைய ஒரு சாதாரண தமிழ்க்குடி மகனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஆகும். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் போன்றது இஃது பாலப் பருவம், வாலிபப் பருவம், வயோதிகப் பருவம் ஆகிய முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. முந்நுறு நேரிசை வெண்பாக்களால் வார்க்கப்பட்டுள்ள ஒரு பேரிலக்கியமாகும் ‘கற்பூர வெண்பா’ கற்பூர வெண்பா நூலின் ஆசிரியர் ஆகிய கவிஞர் ஆ.வேலு என்னுடைய சொந்த வாழ்க்கை வரலாற்றை நேரிடையாகச் சொல்லாமல் கற்பூர சுந்தரனைக் கதாநாயகனாக்கி அவன்மூலம் கூறியிருக்கிறேன். மனித வாழ்க்கையில் வாழ்வு ஒருகாலம் தாழ்வு ஒருகாலம் என்பது பழமொழி. வறுமை கொடியது; அதனினும் கொடியது இளமையில் வறுமை. கற்பூர சுந்தரன் என்ற புனைப் பெயரை உடைய நான் இளமையில் வறுமையுற்று முதுமையில் வளம்பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மக்கள் காப்பியம் படைக்க ஆசைகொண்டு‘கற்பூர வெண்பா’காவியம் பாடியுள்ளேன். கற்பூரசுந்தரன் பிறப்பு, ஊர், ஊரின்சிறப்பு, ஊரில் உள்ள மக்கள் சிறப்பு, நாடு, நாட்டின் சிறப்பு, அரசியல் கட்சிகள், மனிதநேயம், அறஒழுக்கம் ஆகிய பல்வேறு தலைப்புக்களில் காவியம் பேசுகிறது. காவியப் பூங்காவில் நுழைந்து சுற்றிப் பார்க்கலாம்; தமிழைப் படிக்கலாம்; ருசிக்கலாம்; கட்டணம் ஏதுமில்லை. காப்புச் செய்யுளில் ஆரம்பித்து வாழ்த்துப்பாவில் முடிகிறது கதை. -கவிஞர் ஆ.வேலு ஆசிரியர் விநாயகர் துதி கற்பூர வெண்பாவாம் காவியம் நானெழுத கற்பக விநாயகனே காப்பு. முருகப் பெருமான் துதி முத்துக்குமரா முடிசாய்த்தேன் உன்பாதம் அத்தன் எனக்குநீ அல்லவா– வித்தகனே கற்பூர வெண்பாவாம் காவியம் நான் பாட நற்புத்தி எந்தனுக்கு நல்கு. தமிழ்த்தாய் வாழ்த்து மூவேந்தர் போற்றிய முத்தமிழே முக்கனியே பாவேந்தர் நாவாழும் பைங்கிளியே -மூவாத எப்போதும் கன்னிப் பெடைமயிலே என்தாயே எப்போதும் என்உள் இரு. இயற்கை வாழ்த்து வெய்யோன் தினகரனை வீழ்ந்து வணங்குகிறேன் உய்யுமுயிர் ஓம்புத லால் சந்திரனைக் கைகூப்பி சந்ததம் போற்றுகிறேன் வந்தஇருள் போக்குத லால் கார்முகிலை வானோக்கி கண்டு வணங்குகிறேன் பார்செழிக்க நீர்தருத லால். தமிழ்சான்றோர் வணக்கம் இராமா யணம் படைத்த நற்றமிழ்க் கம்பரையும் பாரோர் மெச்சும் பாரதி சுப்பனையும் சுத்தத் தமிழன் சுந்தரம் பிள்ளையையும் பச்சைத் தமிழன் பாரதிதாசனையும் கன்னித் தமிழ்க் பேசும் கண்ணனின் தாசனையும் எண்ணிக் கவிபாடும் ரெங்கன் வாலியையும் வெண்பா புவியாம் புகழேந்திப் புலவரையும் என்புருகப் பாடும் மாணிக்க வாசரையும் திரு.வி.க என்னும் சிந்தனைச் சிற்பியையும் சிந்திக்கச் சொன்ன தெய்வப்புலவரையும் சிந்தனைக்கு வாரா புலவர் யாவரையும் வந்தனை செய்து வாழ்த்தி வணங்குறேன். பாலப் பருவம் கற்பூரசுந்தரன் பிறப்பு 1. பொன்னாத்தாள் ஆறுமுகம் புண்ணியத்தில் வந்துதித்தான் கன்னல் பயிர்போலக் கற்பூரம் -அன்னவனைப் பேணி வளர்த்திட்டார் பெற்றோர் பிரியமுடன் மாணிக்கம் என்று மகிழ்ந்து . ஊரின் சிறப்பு 2. மாட மனையில்லை மாநகர் தானுமிi;லை கூடி வசிப்பர் குடும்பமாய்-வீடு பனைஓலை மேற்கூரை பாங்கான முற்றம் அணைபோலத் திண்ணை அதில் . 3. மலைசார்ந்த காடில்லை மைதானம் ஏதுமில்லை விளைநிலம் சுற்றி இருக்கும் -குலைதள்ளி வாழை தலைகுனியும் வாலைப்பெண்போல பாளை விரிக்கும் பனை . 4. சூராணம் பேருராம் சுற்றியுள்ள ஊர்களிலே காராளர் வாழ்கிறார் காணலாம் -சீராக வளர்ந்துவரும் ஊராகும் வாங்குவோர் விற்போர் பலரங்கு பார்க்க உவப்பு . 5. இந்து, கிறிஸ்த்து, இசுலாம் எனமக்கள் பந்தப் பிணைப்பில் பழகிடுவார் -எந்தஒரு பேதம் இருக்காது பேசுவார் நல்லதையே வேதம் அதுவே அவர்க்கு . 6. வெந்ததை உண்டு விதிவந்தால் செத்திடுவார் சிந்தனை ஏதும் செய்தறியார் -பந்தம்உளர் கந்த மலர்க்காடாம் கற்பூர சுந்தரனின் சொந்த ஊர் சூரா ணம் . 7. நாற்றிகையும் சாலை நடப்பதற்கு நல்லதாம் போக்கு வரத்தெளிதாய் போகலாம் -கேட்டபொருள் வீட்டுக்கே வந்துவிடும் வேறெங்கும் ஏன் போக வாட்டம் அவர்க்கில்லை வாழ்வில் . 8. குளிக்கச் குளம்உண்டு கும்பிடக் கோவிலுண்டு களித்துப் படிக்கக் கலைக்கூடம் -அங்கேயே எட்டு வகுப்புண்டு ஈடில்லா ஆசிரியர் கற்றல் எளிதாகும் காண்க . 9. திருவிழா மட்டுமல்ல தேர்ப்பவனி கூடவுண்டு மருவிலா ஆலயங்கள் மத்தியிலே –திருவுடையார் அள்ளிக் கொடுக்கின்றார் ஆண்டவன் நற்பணிக்கு வெள்ளிப் பணத்தை விரைந்து . 10. ஆண்டுதான் தைப்பிறந்தால் ஆனந்தம் கொண்டாட்டம் வேண்டும் களியாட்டம் வீட்டார்க்கு –மாண்டதொரு மஞ்சு விரட்டாகும் மாப்பிள்ளை எல்லார்க்கும் விஞ்சும் வீரந்தான் மேல் . அன்றும் இன்றும் 11. காதவழி என்றாலும் கால்நடைதான் அன்றைக்கு பாதம் வழிக்குது பள்ளிசெல்ல –வேதனைதான் கேட்கின்றார் ஆட்டோ கிடுகிடுனு போவதற்கு வீட்டாரை வேண்டித்தான் இன்று . 12. எட்டுவரை பள்ளி இருந்தது அன்றைக்கு திட்டமிட்டுக் கற்றார் சிறார்கள் -கட்டமிட்டு பத்தில் இருந்து பன்னிரண்டாய் நிற்கிறது வித்தக ஆல்போல் விரிந்து . 13. தேநீர் நிலையம் தெருவோரம் ஒன்றுதான் ஆவி பறக்கும் அனல்போல –வீதியிலே ஒன்றுபலவாகி ஊருக்குள் நிற்கிறது இன்பம் நமக்குத்தான் இன்று . 14. காய்கனி விற்கும் கடையொன்றும் அன்றில்லை பாய்விரித்துப் பார்க்கிறது சந்தை –தாய்மார் அலையலையாய் செல்கின்றார் அங்காடி நோக்கி கலைமிளிரும் காட்சிதான் காண்க . 15. காய்ச்சலுக்கு சுக்குக் கசாயந்தான் அன்று பாய்ச்சுகிறார் இன்செக்சன் பாருங்கள் -மேச்சாக மாத்திரைகள் உட்கொண்டால் மாறிப்போம் எந்நோயும் சூத்திரம் சொல்கின்றார் சொல் . 16. வயிற்றுவலி வந்துவிட்டால் வைத்தியரைப் பார்ப்பார் எயிற்றுவலி வந்தாலும் ஏன்அவர்தான் -பயிற்சிபெற்ற இன்றுள்ள டாக்டர்இன் செக்சன் செய்துவிட்டு எண்ணுகிறார் ஈங்கு பணத்தை . 17. ஊர்ப்பணம் போவார்க்கு ஊறுகாய் கட்டுச்சோறு ஆர்தயவும் தேவையில்லை அன்னலர்க்கு –பார்மீதில் எங்கும் உணவகங்கள் ஈடில்லா உபசரிப்பு இங்கு பயணிக்குத் தான் . 18. தொந்திக் கணபதியை தோத்தரிக்க ஆலயம் மந்தைப் பிடாரியை வணங்கிடவும் -நந்தவனம் ஆகம அய்யனார் ஆலயமும் சந்தி யாகப்பர் கோவிலும் உண்டு . 19. ஊருணித் தண்ணீர்தான் உண்டு குடிப்பதற்கு மாரி வழங்கியது மக்களுக்கு –ஊரினிலே அந்தநிலைமாறி ஆழ்துளை ஊற்றுநீர் எந்த ஒருமாசுமில்லை ஈங்கு . கற்பூரம் பள்ளிக்குச் சென்றான் 20. கல்வி பெறுவதற்கு கற்பூர சுந்தரனை பள்ளிக்குப் போகப் பணித்தார்கள் -கள்ளமிலா உள்ளம் களிகூர்ந்து ஓதினான் நற்றமிழை தௌ;ளத் தெளிவாகத் தான் . 21. காலில் செருப்பில்லை கட்டவொரு ஆடையில்லை நூலிழைக் வோணந்தான் நொய்யாடை - காலையில் கஞ்சி பழந்சோறு கற்கும் கலைக்கூடம் விஞ்சி நடப்பான் விரைந்து . 22. நான்கு வகுப்பேதான் நல்ல கலைக்கூடம் ஆங்கு இருவராம் ஆசிரியர் -தீங்கில்லை அமர மரப்பலகை (அ)எழுதக் கரும்பலகை குமரன் படித்தான் கூர்ந்து . நான்கு வகுப்பு முடித்தவன் திறமை 23. நற்றமிழைப் பேசவும் நன்கு எழுதவும் பெற்றோர்சொல் தட்டாமல் பேணிடவும் -மற்றும் குறிப்பில் குறிப்பறிந்து கூர்ந்து செயல்படவும் அறிந்திருப்பான் நன்கு அவன் . 24. கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தவெனும் வீட்டுக் கணக்கெல்லாம் விலாசிடுவார் -நீட்டல் முகத்தல் நிறுத்தல் முதலான வாய்ப்பாடு மிகத்தெளிவாய் கற்றிடுவார் காண் . 25. சுத்தம் சுகாதாரம் சொல்கின்ற நற்பண்பு அத்தனையும் நமக்கு அவசியந்தான் -பெத்தவர் உள்ளம் களிப்பெய்தும் ஊரார் புகழ்ந்திடுவார் வெல்லமாம் பிள்ளை அவர்க்கு . தொடர்ந்து படித்தான் சுந்தரம் 26. தாயை இழந்தான் தனயனாம் சுந்தரம் வாய்க்குமா கல்வி வருந்தினான் -தேய்பிறையாய் தந்தை இருந்து தடுத்திட்டர் மேற்படிப்பை விந்தை இதுவே வியப்பு . ஆசிரியர்முன் கற்பூரம் 27. ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியர் மாணிக்கம் வந்தவர் கூப்பிட்டார் வாவென்று –சுந்தரனை அப்பாதான் சொன்னார் அரைக்காசு இல்லையென்று எப்படி வருவேன்நான் என்றான் . 28. காசு தரவேண்டாம் கற்பதற்குப் புத்தகத்தை ஓசியில் நான்தருவேன் உந்தனுக்கு -கூசாதே நாளையே வந்துவிடு நானுனக்கு நல்லாசான் காளையே வேண்டாம் கவலை . 29. புத்துயிர் பெற்று போனான்கலைக்கூடம் முத்தமிழ் வித்தகன் முன்னிலையில் -பத்தியுடன் ஆசான் அடிபணிந்து அன்னாரின் சொற்கேட்டு; காசில்லா சுந்தரன் கனிந்து . 30. எட்டாம் வகுப்பு படித்து முடித்தான் பட்டயம் ஈஎஸ்.எல்சி பாலனுக்கு –திட்டமோ இல்லை இவனுக்கு இன்னும் படிப்பதற்கு நல்லதாம் தந்தைக்கு நாள் . 31. அரசு பொதுத்தேர்வு ஆங்கிலம் வேண்டுமென விருப்பம் இருந்தால் எழுதலாம் -வெறுக்கலாம் மறுத்தாலும் மாமன்றச் சான்றுதான் மாணவர்க்கு வருத்தம் அவர்க்கில்லை வாழ்க! 32. கெட்டநாள் பாலனுக்கு கேட்காமல் வந்ததன்று தொட்டான் உழுதொழிலைத்தான் -பட்டான் கடுந்துன்பம் காலமெலாம் காணி தரவில்லை கடுகளவு தானியமும் தான் . 33. நடுநிலைப் பள்ளியின் நற்சான்று பெற்றாலும் கடுனளவும் இல்லை கலையறிவு –ஆங்கிலத்தில் உலக மொழியை ஓதாத மாந்தற்கு இலையாம் மதிப்புத்தான் ஈங்கு . வீட்டில் படித்தான் 34. உழுதொழிலைத் தொட்டாலும் ஒண்டமிழைக் கற்க முழுஆர்வம் கொண்டு முயன்று –பழுதின்றி பண்பட்ட செந்தமிழ் பாடும் திறம்பெற்றான் எண்ணிய எண்ணம்போல் ஈங்கு . 35. ஈற்றடி தந்தால் எஞ்சிய முன்றடியை போற்றும் படிக்கு மணிவெண்பா –போட்டி பலவற்றில் பங்குபெற்றுப் பாராட்டுப் பெற்றவனாம் புலவன் கற்பூரம் போல . தந்தை சொன்னார் 36. வேளாண்மை செய்ய விதித்த விதியுனக்கு கேளாய் மகனே கெடுதலில்லை –வாழ்வாய் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் -உனைத்தொழுது எழுந்துண்டு வாழ்வார் பலர் . 37. தந்தைசொல் மிக்கதோர் மந்திரம்இல்லைஎன்று தங்கும் களிப்பில் தனையனும்-அங்கிருந்த கலப்பை தனைத்தூக்கி காளைகள் ஏர்பூட்டி குலப்பெருமை காத்திட்டாள் கோன் . 38. வாழை வரகுசம்பா வான்னோக்கும் நெற்பயிர் பேழை பணம்நிரப்பும் பேரான –விளைமிளகாய் வேற்கடலை தோட்டப் பயிர் முதலாய்க் கொல்லையில நாற்பயிரும் செய்திட்டான் நன்கு . 39. விளையும் மழைபெய்தால் இல்லையென்றால் இல்லை களைப்புத்தான் மிஞ்சும் கட்டந்தான்-விளைவில்லை என்றாலும் செய்வார் இந்தப் பயிர்த்தொழிலை இன்னும் உழைப்பார் இவர் . 40. உழைத்து உழைத்துத்தான் ஓடாகிப்போனார் இளைத்த மேனி இவர்க்கு -இளைத்தாலும் தன்னலம் பேணாதன் பிள்ளைநலம் பேணார் என்சுகமோ இங்கு இவர்க்கு . 41. வானத்து ராசா வழங்கினால் வேளாண்மை கானத்து ஆற்றில் சுடுமணல்தான் -ஊனந்தான் ஊற்றுநீர் இல்லை உழவன் படுந்துன்பம் மாற்றுவார் யாரோ மண்ணில் . 42. மோதிரத்தை விற்றுத்தான் முத்தூட்டு வங்கியிலே மேதியோன்று வாங்கியே பால்கறந்து –வீதியிலே விற்றுப் பணம்கேர்த்தான் வெப்புநோய் மேதிக்கு பற்றி மடிந்ததே பாவம் . 43. அன்றுமுதல் இன்றுவரை அல்லல்தரும் பஞ்சந்தான் நின்று புயல்வானம் பொழியாது –என்றும் தொடர்கதைதான் நம்நாட்டில் தொல்லை உழவனுக்கு கடல்கடந்து போவான் பிழைக்க . 44. ஆடியில் நெல்விதைத்தான் அழகன் கற்பூரம் வாடியே போனது விளைவில்லை –தேடி அரிசியாம் கம்பு அதுவாங்கிப் பயிர்செய்தான் பெரிதாகி நின்றது நன்றாய் . 45. கம்புப் பயிர்வளர்ந்துகதிர்நீட்டி நிற்கையிலே வெம்பு கரிபோல வெள்ளம் -பொங்கியே வந்தது கம்பு வயலில் அமுங்கியது தம்பி தலைவைத்தான் கை . 46. வாழைதான் காய்த்தது வாழைப்பழம் நூறுமட்டும் பேழை தலைசுமந்தான் சந்தைக்கு –காளைதான் விற்றது சீப்பொன்று விற்காது மிஞ்சியதை உற்றான் சுமந்திட்டான் ஊர் . 47. கத்தரி காய்த்தது கத்தரிக்காய் பத்துக்கிலோ மெத்தினான் பெட்டியில் விற்கத்தான் -கத்தரிக்காய் விற்றது ஓர்கிலோதான் விற்காது மிஞ்சியதை பற்றித் தலைவைத்தான் பாவி . 48. ஆழி தெரியாது அழகன் சுப்பனுக்கு மேழி தெரியும் உழுதற்கு -கூலி உழைத்தாலும் கிட்டாது ஓடிப் பிழைக்க விழைந்தாலும் போக விடார் . 49. கொழும்புச் சீமைக்கு கூப்பிட்டார் வாவென்று அழுகின்ற பிள்ளைக்கு ஆதரவாய் -எழுந்து போனான் ரயிலேறி பொன்மண்டபம் கேம்பில் பேனா பிடித்தவர் முன் . 50. கையைக் காட்டென்றார் கண்டோன்மெண்ட் ஆபீசர் பைய விரித்தானே உள்ளங்கை –அய்யன் கள்இறக்கப் போகின்றாய் காய்த்திருக்கு கைஎன்று தள்ளிட்டார் சுப்பனைத் தான் . 51. இலங்கைக்கு சென்றுமகன் ஈட்டுவான் பொருளென்று பலமாம நம்பினார் தந்தை –நலமொன்றும் இல்லாது திரும்பி இடைவழியில் வந்திட்டான் பொல்லாத காலந்தான் போலும் . 52. விதித்தது சுப்பனுக்கு வேளாண்மை தானென்று நிமித்திகனே சொல்லிவிட்டான் நேற்று-விதியைத்தான் மாற்றமுடியுமா மாவீரன் என்றாலும் ஏற்று இருந்தான் இவன் . பத்தியும் பசனையும் 53. கூடிப் பிரார்த்தித்துக் கும்பிட ராமனைத்தான் பாடிப் பணிந்து பரவிடவும் -நாடிமுன் பசனை மடம்என்ற பாங்கான கூடமொன்று நிசமாக நிற்கிது நேர் . 54. சனிக்கிழமை தோறும் சமர்ப்பணம் சங்கீதம் பனிமலர்ப் பாமாலை ராமருக்கு –அணிந்திடுவார் கோவிந்தா என்றுசொல்லிக் கும்பிடுவார் அந்த நாதந்தான் ஒலிக்கும் நாவில் . 55. கற்பூர வாசம் கலந்திருக்கும் கூட்டத்தில் கற்பூரம் என்பான் கலந்து –பொற்பூறும் புண்ணியரைப் போலப் புகன்றிடுவான் சன்மார்க்கம் கண்ணியமும் கொல்லில் கலந்து . 56. தேவாரம் சந்தத் திருப்புகழும் தேன்பாவாம் தேவன் திருமூலர் மந்திரமும் -மூவாத வண்ணத் தமிழில் வாய்ப்பாட்டுப் பாடிடுவான் கனித்தமிழில் கற்பூரம் தான் . 57. நாட்டையொடு காம்போதி நாவினிக்கும் மோகனமும் பாட்டிசையில் ஆனந்த பைரவியும்-கேட்கத்தான் இனிக்கும் விதித்தில் இசைகூட்டிப் பாடிடுவான் கனித்தமிழில் கற்பூரம் தான் . 58. பசனை மடமாகப் பயன்பட்ட கட்டடத்தை குசனின் தந்தைக்குப் கோபுரமாய் -விசயன்தான் நாராயணன் என்னும் ராமபிரான் ஆலயமாய் மாற்றி நிறுவினான் மகிழ்ந்து . 59. ஆண்டுக்கு ஓர்முறைதான் ஆலயத்தில் பொன்விழா நீண்ட நிகழ்ச்சியோன்றும் நேராது -ஈண்டிங்கு சோதிமின்னல் சப்பரத்தில் சாமிபடம் வைத்துத்தான் வீதிஉலா நள்ளிரவாம் வேளை . 60. ஊரார் உவந்தளித்த உறுபொருள் அத்தனையும் சீராகச் செய்திடுவார் செலவு –பேரான அபிசேகம் படையல் ஆராதனை முடித்தால் விபூதி பிரசாதந் தான் . கற்பூர சுந்தரனின் தினசரி வேலை 61. காலை எழுந்தவுடன் கைகால் கழுவுமுன்பே காளை இரண்டையும் கட்டவிழ்த்து –வேலைக்கு வைக்கோல் உணவளித்து வாளிநீர் காடடுவது பையன் பணியதுதான் பார் . 62. காலைக் கடன்முடிந்து கஞ்சி குடித்துவிட்டு வேலையாம் வீட்டில் வினைமுடித்து –காளையவன் பள்ளிக்குச் சென்று பாடம் படித்திடுவான் கள்ளம் கபடமிலான் காண் . 63. மாலையில் பள்ளி மணியடிக்கும் வீட்டுக்கு வேலைகயது ஏதேனும் வீட்டில் -காளைக்கு காத்திருக்கும் காளைக்கு வைக்கோல் பிடுங்கி சேத்துவைக்கும் வேலைதான் சீராய் . கற்பூரம் யோகா செய்தான் 64. யோகா சனம் செய்தால் உறுதியாம் உடலுக்கு வேதாந்தம் சொன்னான் விமலன் -வேகாத பட்ட மிளகாய் தின்றால் பவுன்போல மாறுமுடல் கெட்டானே கற்பூரம் கேடு . 65. காலையில் கஞ்சியுடன் காய்ந்த் மிளகாய்ஒன்று வேளை தவறாமல் விழுங்கினான் -நாளடையில் குடல்வெந்து போகக்குயவனின் சூளைபோல் மடநெஞ்சே வாழ்கநீ என்றான் . 66. வடக்கே வடகாடு வல்லம்ஊர் தெற்குவரை நடக்காத இடமில்லை புண்ணுக்கு –திடமான மருந்தோன்றும் கிட்ட்வில்லை மைந்தன் சுப்பனுக்கு வருந்தினான் அந்தோ வலி . 67. வயிற்றுவலி நிரந்தரமாய் வந்துவிட்ட தென்றாலும் லயித்துப் பயந்து நடக்கவில்லை –லயித்து அன்றாடம் செய்யும் அலுவல்கள் அத்தனையும் நன்றாகச் செய்தான் நயந்து . வானம் பார்த்த பூமி சிவகங்கை மாவட்டம் 68. வானம் பொழியுமென நம்மித்தான் வயல்வேலை தானம்செய் மேல்குலத்தோர் தமிழ்மக்கள் -மானம்உள்ளர் உழுது பயிர்விளைத்து உண்ண உணவளிப்பார் பழுதில்வாப் பண்புதான் பார் . 69. வெட்டித்தனமாக வேண்டாத நேரத்தில் கொட்டித்தான் தீர்க்கும் கனமழைதான் -திட்டுத்திடல் வெட்ட வெனியெல்லாம் வெள்ளக் காடாகும் பட்டம் இருக்காது பயிர்க்கு . 70. ஓடையொன்று உண்டங்கு ஊரின் வடக்காக ஆடிவிளையாடும் ஆடவர்க்கு –ஓடைநீர் ஓடி முடிவதற்கு ஓர்திங்கள் ஆகிவிடும் ஓடும்நீர் அழகேதான் அழகு . 71. மாட்டுக்குத் தீவனம் வைக்கோல் தவிடு நீட்டும் பசும்புல்லும் தேவை –காட்டுக்கு சென்றுதான் புல்லறுத்து சேகரித்து தலைசுமத்தல் என்றும் இவனுக்கு வேலை . 72. ஒற்றையடிப் பாதை ஓடையிலே வெள்ளம் கற்பூரம் செல்வான் கடந்து –புற்கட்டு திரட்டித் தலைவைத்து தள்ளாடிச் சோர்வான் கரண்டைக்கால் சேற்றுக்குள் கால் . விளையாடும் நேரம் 73. காலைமுதல் மாலைவரை ஓய்வில்லை சுப்பனுக்கு வேலைதான் நேரமில்லை விளையாட –மேலைஎழும் வெண்ணிலவு தோன்றியங்கு வீதிஉலா காண்கையிலே என்றும் விளையாட்டில் இன்பம் . 74. கிளித்தட்டு கொக்கு கபடியுடன் நொண்டி கிரிகெட்டு ஆட்டம் கிடையாது –களிப்புற்றூர் கைதட்ட உற்சாகம் பெற்றிடுவர் காளைகள் மெய்மறந்து ஆடிடுவர் மேலும் . 75. பாலகுமரனைபோல் பாவையரும் வெண்ணிலவில் கோல விழிக்கொக்கு கும்மியடி –கோலாட்டம் பள்ளாங் குழியாட்டம் பண்ணிசையில் தாலாட்டு எல்லாம் எளிதாம் இவர்க்கு . வசந்தத் திருநாள் 76. நாற்றிசையும் போற்றும் நயினார் கோவில்தான் மேற்றிசையில் பார்வை முகமாம் -அற்புதந்தான் எந்தவொரு ஆலயமும் இல்லை புவியில் இந்தநிலை இங்குமட்டுந் தான் . 77. சொந்தஊர் சுப்பனுக்கு சூராணம் தெற்காக ஐந்திரண்டு கல்தொலைவில் ஆலயம் -வந்தஒரு வைகாசி விசாகம் வசந்தத் திருநாளாம் கைராசி சுப்பனுக்கும் தான் . சிலம்பாட்டம் கற்றான் கற்பூரம் 78. பாவம் தனைப் போக்கும் பண்டிதனாம் நாகலிங்கம் தேவனாம் சன்னதிக்குத் தென்மேற்கில்- வல்லம்ஊர் தேவர் குலம்வந்த தேவனாம் அரசென்பார் சிலம்பம் பயிற்றுவித்தார் சிறக்க . 79. வல்லம் அரசுதான் வந்து சிலம்பம் சொல்லிக் கொடுத்தார் சூராணம் -நல்வினையாம் கற்போர் குழுமத்தில் சேர்ந்தான் கற்பூரம் கற்றான் சிலம்பக் கலையை . 80. திருநாக லிங்கத்தின் தேர்ப்பவனி முன்பாக அரங்கேற்றம் போலச் சிலம்பாட்டம் -அரங்கத்தில் பாராட்டுப் பெற்றான் புதல்வன் கற்பூரம் ஆராரோச் சொன்னார் அரசு . சந்தியாகப்பர் திருநாள் 81. ஆடி முதல்நாளில் அமைந்த திருநாளில் பாடிப் பலிபூசை செய்திடுவார் -நாடியே வருவோர் வணங்கிடுவார் வேண்டும்வரம் தந்திடுவார் அருள்புரிவார் சந்தியா கப்பர் . 82. ஆண்டுக் கொருமுறைதான் ஆடித்திருவிழா மாண்ட பெருமை மணிவிழா -ஈண்டிங்கு கற்பூரம் தாயார்தான் காலணா கொடுப்பார் விற்கும்நல் தின்பண்டம் வாங்க . 83. ஓரணா என்பது ஓராறு காசுதான் சீரான காலணா ஒன்றரைதான் -பேரான சல்லிக்குப் பொரிஉருண்டை தாராளம் வாங்கலாம் அல்வா கிடைக்காது ஆங்கு . திரைப்படம் பார்த்தான் கற்பூரம் 84. பதிநான்கு கல்தொலைவில் பாமக்குடிநகரில் மிதிவண்டி இல்லாது கால்நடைதான் -சதிராடும் சினிமா படம்பார்க்கச் சென்றான் கற்பூரம் மினிப்பயல்கள் நால்வருடன் தான் . 85. நம்பிக்கை டிக்கெட்டை நன்முறையில் வாங்க செம்மறிக் கூட்டம்தான் சேர்ந்திருக்க –தம்பிமார் தோள்மீது நின்று துருவினான் கற்பூரம் ஆளுக்கொரு டிக்கெட்டைத் தான் . 86. டிக்கெட்டை வாங்கியதும் திடுதிடுனு உள்நுழைந்தார் மொட்டை இருக்கை முதுகில் -சட்டென்று அமர்ந்துதான் பார்த்தார்கள் அப்படம் பெயரோ நமக்குப் புரியாது ‘சௌ சௌ’ . சிறுவயதில் அம்மான் வீட்டில் கற்பூரம் 87. தாயார் பிறந்தஇடம் தஞ்சாவூர் மாவட்டம் பாய்ந்தோடும் வெள்ளாற்றின் தென்கரையில் -தாய்மாமன் சொந்தவூர் பாண்டியன் பத்திரத்தில் சிசிகாலம் சுந்தரன வாழ்ந்தான் சுகித்து . 88. ஆண்டுக்கு ஓர்முறைதான் போவான் வருவான் பாண்டிய பத்திரத்தை நாடி -ஈண்டிங்கு நாற்பது கல்தொலைவு நடந்துதான் சென்றான் கற்பூரம் கால்களுந்தான் தேய . உடையார் மண்டகப் படி 89. சேதுபதி மன்னர் தேவர்முன் விண்ணப்பம் தீது வராதுதான் செய்திட்டார் -ஆதியில் கற்பூரம் முன்னோர் கணக்கிட்டுக் கேட்டபடி பெற்றிட்டார் மண்டகப் படி . 90. பத்தாவது நாளில் ஆட்டம்கொண் டாட்டம் சப்தா வருணமெனச் சாற்றினார் -நத்தமன் என்னும் குலத்திற்கே ஈய்ந்திட்டேன் நானென்ரார் மன்னராம் சேதுபதி மகிழ்ந்து . 91. நயினார் கோவிலுறை நாகலிங்கம் சாமியை உயில்பெற்றுக் கொண்டாடும் உரிமையை –உடையார் பெற்றிட்ட நாள்முதலாய்ப் பேணிக்கொண்டாடுகிறார் கற்பூரம் என்பானும் கலந்து . கற்பூர சுந்ரதனுக்கு தெரிந்ததும் தெரியாததும் 92. மதுரை தெரியாது மல்லிகைப் நன்கறிவான் குதிரை தெரியாது குப்பனுக்கு –எதுகை மோனை தெரியாது முல்லைப்பூ நன்கறிவான் ஆனை அறிவான் அவன் . 93. ஆறு தெரியாது அழகன் சுப்பனுக்கு சோறு தெரியும் சுவைப்பதற்க்கு –காருஎனும் வண்டி தெரியாது வாழைமரம் நன்கறவான் தொண்டியைப் பார்த்ததும் இல் . 94. ரயிறு தெரியாது ராமேசம் போனதில்லை பயிற்றுவிக்கும் கல்லூரி பார்த்ததில்லை –மயிலாடும் சோலைமலை பார்த்ததில்லை சுப்பன் பழனி ஆலயத்தைக் கண்டதில்லை அவன் . 95. காடு தெரியாது கார்கடலை கண்டதில்லை மாடு கவனத்தில் மட்டுடுந்தான்-பாடுபட்டு நாளும் உழைத்திடுவான் நல்லபெயர் வாங்கிடுவான் தாளும் குணமுடையான் தான் . கற்பூரம் வீடு ஆடை அணிகலன் 96. மூன்று முழத்துண்டு முன்கால் அரைச்சட்டை ஆன்ற பெருமை அணிகலன்கள் -மாண்ட பெருமை பெரிதாகப் பேசவோ ஒன்றுமில்லை வறுமை சிறுவனது வாழ்வில் . 97. அண்ணனும் தங்கையுண்டு அன்புக்கோர் அக்காள் என்றும் உறவில் குறையில்லை –அன்புகொண்டு கூடிக்குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்திட்டார் வாடிய தன்மையொன்றும் இல் . 98. மண்குடிசை வீடு மனையில் இருகுடும்பம் பண்பட்ட மாந்தர் பணியில் -இன்புற்று பெற்றோரும் பிள்ளைகளும் வேறுபா டேதுமின்றி உற்றார் ஒருகுடும்பம் போல் . எருதுகட்டுப் பிரியன் 99. எருதுகட்டு சல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் மறக்காமல் சென்றிடுவான் மாணிக்கம் -பெருவெயில் சுட்டு எரித்தாலும் தோன்றாது மெய்வருத்தம் கட்டிளம் காளைக்குத் தான் . 100. நாடகம் சங்கீதம் நாட்டுக் கரகாட்டம் பாடகர் பாட்டுப் கவியரங்கம் -பார்கத்தான் துள்ளி எழுவான் தொலைதூரம் என்றாலும் பள்ளிப் பருவத்துப் பாலன் . வாலிபப் பருவம் ** கற்பூர சுந்தரன் கோவில் திருப்பணி** 101. வீர விநாயகன்தான் வினைதீர்ப்பான் என்றெண்ணி ஊரின் குளக்கரையில் உன்னதமாய் -ஓர்கோவில் கட்டி முடித்து கலசந்தான் நீராட்டி விட்டுவிட்டுச் சென்றார் முன்னோர் . 102. கற்பூரம் கண்பார்த்துக் காணி நிலம் வழங்க பொற்பூரும் கோவில் புதுப்பித்து –நற்பணிதான் செய்து முடித்து திரும்பவும் நீராட்டி செய்து மகிழ்ந்திட்டான் தீரன் . 103. மாரிக்கு மேடையுண்டு மந்தைமுச் சந்தியிலே காரி பொழிந்தால் கரைந்துவிடும் -ஊரின் சீமான் உதவினார் சீமைஓடு மேற்கூரை குமரன் புதுப்பித்தான் கோவில் . 104. காக்கும் ஒருதெய்வம் காக்கா ருடையவராம் வாக்குத் தவறாத மந்தையம்மான் -ஊக்கம் அருளும் அரிராமன் ஆலயங்கள் மூன்றுக்கும் நிருவாகி கற்பூரம் தான் . 105. நிருவாகி கற்பூரம் நீண்டநாள் நற்பணிகள் அற்புதமாய்ச் செய்தான் அறிந்து –மற்றுமவன் நற்பெயரும் பெற்றிட்டான் நாவ்வர் மத்தியிலே கற்பூரம் கற்பூரம் தான் . 106. எட்டு வருடங்கள் ஏரார்ந்த ஆலயங்கள் திட்டமிட்டு நிர்வாகம் செய்திட்டான் - பட்டியலில் தேர்ந்த நடிகர்களால் சீர்மிகு நாடகங்கள் பார்க்கப் பரவசந்தான் பாரில் . 107. அரிச்சந்திர பூபதி அல்லல் தனைக்கூறும் உரிச்சொல் இலக்கணமாம் ஓர்கூத்து - தெருமேடை வள்ளி திருணமாம் வாழ்வியலின் நாடகமும் சொல்லி நடத்துவான் சுப்பன் . கற்பூர சுந்தரன் வேலை 108. அடாது பொழிந்தாலும் மாமழைதான் நாடகம் விடாது நடத்தப் படுமென்பார் -விடாது பட்டான் பாடுமிகப் பலனில்லை கற்பூரம் பட்டான் மனக்கவலை தான் . 109. எண்பது ஆண்டு எதிர்வீட்டுத் தாத்தா பண்பட்ட உள்ளம் படைத்தவர்தான் -கண்கூர்ந்து பார்த்தேன் உன்முகத்தை வாடுவது ஏன்என்றார் சோர்ந்துள்ள சுந்தரனைப் பார்தது. 110. தன்கருமம் செய்வார் தவம்செய்வார் என்றஒரு நன்மொழி கூறியதை நான்கேட்டு –வன்மையுடன் உன்னிப்பாய் பாடுபட்டேன் ஒன்றுமில் என்றுசொல்லி கண்ணீர் வடித்தான் கசிந்து . 111. நாட்டுக்கே மன்னன் நளனென்பான் நாடிழந்த கெட்ட கதை சொல்கின்றேன் கேட்பாய்நீ –விட்டானா ஊழ்வினைக்கே மன்னன் உலகாட்டும் ஓர்தலிதான் பாழ்படுத்தும் பாவிப் பயல் . 112. கண்ணீரைச் சுண்டிவிட்டு கற்பூரம் சொன்னசொல் என்னநான் செய்தேன் பிறர்க்கின்னா –ஒன்றேனும் சொல்லுங்கள் அய்யன்மீர் சும்மா விடமாட்டேன் சல்லிச் சனிப்பயலை நான் . 113. வீரன் குமரன் விநாயகரைப் போலவே வீரன் கலியனை வெல்பவனாம் -சூராணம் கற்பூரம் நீயல்லால் காளையர் இல்லையிங்கு கற்பூரம் வீரமே வீரம் . சங்கரன் செட்டியார் அறிவுரை 114. கண்டேன் உனது கவலையைப் போக்குதற்கு நன்றே உனக்குரைப்பேன் நான் -நின்றே கற்பிக்கும் ஆசான் பணியொன்று நன்றாம்சொல் விற்பனனே தேடு விரைந்து . 115. செட்டியர் சொன்னதெல்லாம் செவிமடுத்த கற்பூரம் திட்டமிட்டான் செம்மையாய்ச் செய்வதற்கு –பட்டதொரு கட்டம் மறந்து கவனமாய் சுந்தரன் கை தொட்டெழுதி விட்டான் மனு . 116. விண்ணப்பம் செய்தான் ஆசிரியர் பயிற்சிக்கு வண்ணப்பா வாவென்று அழைப்பு –திண்ணமாய் கிடைத்ததும் சென்றான் முடித்தான் பயிற்சி அடைந்திட்டான் ஆசிரியர் பணி . 117. ஐந்து வகுப்புள்ள ஆரம்பப் பள்ளிதான் நைந்தே போனான் நடத்துவதில் -ஐந்துக்குப் போதிய பிள்ளையின்றி புழுங்கினான் கற்பூரம் நீதி தெரியாது நின்றான் . 118. ஆய்வாளர் பள்ளிக்கு வந்திடுவார் சோதனைக்கு நோய்வாய்ப் பட்டவர்போல் நொந்திடுவார் -பேயாகேள் பிள்ளைகள் இல்லை பிடித்திடுவேன் சம்பளத்தை வள்ளல் அளித்திடுவார் வாழ்த்து . 119. நிருவாகி பள்ளிக்கு வந்திடுவர் வந்ததும் தருவார் வசைமாரி தயங்காமல் -பெருமாளாம் பிள்ளை வருகையினை கூட்டியே போடுங்கள் இல்லையெனில் இல்லைஎன்பார் ஈதல் . 120. ஆய்வாளர் நிர்வாகி அன்புக்குப் பாத்திரமாய் தோய்வான் கற்பூரம் சொற்கேட்டு –நாய்போல வாலாட்டிக் காட்டிடுவான் வாழ்வார்க்கு நன்றியினை தாலாட்டு நெஞ்சுக்குத் தான் . 121. ஆசிரியர் வேலையென்றால் அற்புதமாம் உன்னதமாம் சோசியர்போல் சொன்னார்கள் சுப்பனுக்கு- காசினியில் ஆசான் பணியை அசிங்கப்படுத்தியது ஆட்சியர்தான் என்று அறிக . 122. அந்தநிலை இன்றுவரை அப்படித்தான் என்றுசொன்னால் எந்தஒரு தப்பும் இலைஎன்பேன் -எந்தஒரு கேடில்லா கல்வியினை கேட்டவர்க்கு விற்றுவிட்டார் நாடியது நாட்டுக்கு நட்டம் . கற்பூர சுந்தரன் திருமணம் 123. மக்கள் இனிதாக வாழ்வதற்கு இல்லறந்தான் தக்கதெனச் சொன்னார் சான்றோர் -மிக்கஒரு அன்பும் அறனும் உடைத்தாயின் அதுவே நன்றாகும் என்றும் நமக்கு . 124. சான்றோர் சொன்னபடி தனயன் சுந்தரமும் மாண்புள்ள மங்கை மனைவியை –காண்பதற்கு ஊரெல்லாம் தேடவில்லை உள்ளூரில் பெண்மணிதான் மாறில்லா வள்ளி மகள் . 125. பக்கத்து வீட்டினிலே பாவைதான் பண்புள்ளாள் தக்க துணையாவாள் தம்பிக்கு –முக்காலும் நன்றாகச் சிந்தித்து நல்லதோர் அண்ணன் ஒன்றாகச் சேர்த்தார் ஓர்ந்து . 126. ஆண்டு விசயவாம் ஆவணிமாதத்தில் வேண்டும் விவாக முகூர்த்தம் -என்றவர்கள் பட்டயம் அச்சடித்துப் பந்தல்கால் நாட்டியபின் விட்டார் திருமண அழைப்பு . 127. வானுயர் மாளிகையோ வான்பார்த்த மண்டபமோ கோன்வாழும் கோவிலோ இல்லை –பின்னிய தென்னை புதுஓலை சீரான நற்பந்தல் மன்னன் மணப்பந்தல் தான் . 128. மின்விளக்கு உண்டுதான் மேளம் அதுவுண்டு பொன்வண்டுக் கோலந்தான் போட்டிருக்கு பெண்ணுக்கு கண்டாங்கிச் சேலைதான் கச்சிதமாய் பிடிச்சிருக்கு பொண்ணுக்கு பொன்னில்தான் தாலி . 129. அம்மி மிதிக்கவில்லை ஆகாயம் பார்க்கவில் கும்மி இருந்தோரைக் கும்பிட்டார் -தம்பதிகள் தங்கத் தமிழ்நாட்டின் தம்பதிகள் வாழ்கவென்று மங்கலம் பாடினர் மகிழ்ந்து . புது மாப்பிள்ளைக்கு பொண்வீட்டு விருந்து 130. மோதகம் பொங்கலுடன் மோர்க்குழம்பு பாயசம் போனகம் உண்டு பொழுதெல்லாம் மானமுள்ள ஆகமந்தான் சொன்னதோ அக்காலப் பழக்கமோ போகம் கிடையாது புழுக்கம் . 131. மாதம் ஒருமூன்று மாப்பிள்ளை பட்டதுன்பம் ஏதும் தெரியாது ஏங்குவது –போதுமடா பொல்லாத துர்பழக்கம் போகமில்லா பேய்பழக்கம் சொல்லத்தான் வெட்கம் வெளியில் . 132. காமமெனும் வெந்தணலில் கருகித் தினம்செத்து போகம் இனிக்காத புண்வாழ்வு-ஆகமந்தான் கேடு தனைச்சுமந்த கற்பூர சுந்தரன்தான் வீடுவந்து சேர்ந்தான் வெந்து . கற்பூர சுந்தரன் குடும்ப வாழ்வு 133. இவ்வாழ்வில் என்றும் இன்பசுகம் மிகப்பெற்று நல்வாழ்வில் நன்மக்கள் நால்வராம் -வல்லவர் ஆண்டுஇரண்டு பெண்ணிரன்டு ஆருயிராம் செவ்வங்கள் ஊன்உடலில் கண்டதுவும் உண்மை . 134. தந்தை கடனாகும் தான்பெற்ற பிள்ளைகளை எந்தவொரு இன்னலும் நேராது –தந்தைதான் ஆளாக்கிம் பேராக்கி அவைதனிலே முன்வைத்தான் கோளாளன் கற்பூரந் தான் . கற்பூரம் ஆசிரியர் வேலை ராசிநாமா 135. ஆசிரியர் வேலைதான் அவன்செய்தான் மூன்றாண்டு பூசனை செய்தே புலம்பி –யோசித்து வெங்கன் வேலைதனை விட்டுவிட்டு அண்ணன் அங்காடி தன்னில் அமர்ந்தான் . ஏன் ராசிநாமா 136. வெந்தணல் புண்ணில் வேல்கொண்டு குத்தியாய் வந்தஒரு வேளையெல்லாம் வாதம் -நொந்தமனம் தாங்க முடியவில்லை தன்மானம் போனது வாங்க முடியவில்லை வசை . 137. மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே ஊனம் அதுவே உயிர்க்கு –மானமிகு மைந்தன் கற்பூரம் மாண்பு உயர்குன்றம் தெய்வந்தான் என்றும் துணை . 138. கோடி கொடுத்தாலும் கும்பிடேன் நாணமின்றி ஆடிடுவேன் அன்புக்கு என்றும் -பாடிடுவேன் பொய்புகலேன் வேலை புறக்கணித் தேன்என்று கைகழுவி விட்டான் காளை . 139. அங்மாடி வேலை ஐந்தொன்று மாதந்தான் தம்பிக்கும் அண்ணனுக்கும் தகராறு –வம்புநீ செய்யாதே என்றார் சினங்கொண்டு அண்ணன் மெய்மறந்து போனான் வீரன் . 140. அரசனை நம்பி புருசனை விட்டவள்போல் அரசன் கற்பூரம் ஆனான் -வீரசந்தான் வந்ததும் போயிற்று வாஞ்சைமிரு அண்ணன் தந்ததும் போனதே தான் . 141. அடிதாங்கும் உள்ளம் இடிதாங்கக் கூடுமோ இடிவந்து தாக்கியதே நெஞ்சை –படிந்திட்ட ஊழ்என்னும் பாவி உலுக்கினான் சுந்தரத்தை பாழ்பட்டுப் போனானே பாவம் . 142. இருக்கம் பயிர்தின்று ஏங்குமொரு கன்றைபபோல்; உருகினனே நெஞ்சம் உளைந்து –திருவாளன் மெய்சோர்ந்து நின்றான் மிலேச்சன்போல் மேதினியில் செய்வதறியாது திகைத்து . 143. கூட்டிக் கழித்துப் பெருக்கித்தான் பார்த்ததிலே பாட்டி கணக்கே சரியாகும் -பாட்டி சொல் நொட்டியே ஆனாலும் நூக்கரையே என்றாலும் கட்டியவன் வாழ்வில் களிப்பு . மீண்டும் ஆசிரியர் வேலை 144. மானம் பெரிதேன்று மார்தட்டிப் பேசியவன் வேணும் எனக்குத்தான் வேலைஎன்று –ஊனமிலா வக்கத்த வாத்தியார் வாழ்வுதரும் வேலையினை பார்க்கத்தான் போனான் பணிந்து . 145. ஓச்சன்தட்டென்பார் ஊரின்பேர் உள்ளவர்கள் அச்சமில்லா தேவரினம் அங்க –மிச்சதுள்ளோர் நாயக்கர் கோனார் நலிந்த தலித்தென்பார் தாயகந்தான் சான்றோர் பதி . 146. காடு பனங்காடு வீடெல்லாம் மண்குடிசை தேடும் தொழிலோ விவசாம் -பீடுநடை ஆண்களும் பெண்டும் அயரா துழைத்திவார் வீண்வம்பு பேசுவார் இல் . 147. பாடசா லைக்கூரை பாம்ஓலை வேய்ந்தது ஓடாது அடக்கூரை ஓராண்டு –சாடா ஊழ்கறையான் தின்றுவிடும் ஓலை முழுவதையும் பாழ்பட்டுப் போகும் பன்னி . 148. ஆண்டும் கொருமுறை ஆரம்பம் பள்ளியை வேண்டும் புதுப்பிக்கும் வேலை –நீண்டதொரு இந்தநல் வேலையை ஏற்று முடிந்திட சுந்தரந்தான் செய்யலாம் என்றார் . 149. சுந்தரனைப் பார்த்துச் சொன்னார் நிருவாகி தந்தேன் உனக்கு ஒரு வேலை - எந்த ஒரு எதிர்ப்பு இயம்பாதே எம்பள்ளிக் கூரையினை புதிதாகச் செய்த்திடுவாய் போ . 150. மன்னன் விதித்தால் மறுக்கவும் கூடுமோ என்னநான் செய்திடுவேன் ஈசா - உன்னுடைய வல்லமை வேண்டுமென வணங்கிப்பின் போனான் நல்லோர் உதவியைத்தான் நாடி . 151. கற்பூரம் போய்க்கேட்டான் கட்டப் பனை ஓலை நற்பணிக்கு நல்கிடுவீர் என்று - பொற்புத்தி நால்வர் மனமுவந்து நல்கினர் ஓசியாய் மேல்கூரை போட்டான் விரைந்து . 152. நன்றி மறப்பது நல்லதல்ல என்று அன்றைக்கே சொன்னார் ஐயன் - இன்றைக்கு சொன்னதோர் பொன்மொழியைச் சிந்தித்து பாரக்கவில்லை மன்னன் நிருவாகி மனம் . 153. ஆய்வாளர் பள்ளியின் ஆய்வுக்கு வந்தால் பேய்போல முன்நின்று பிதற்றுவார் - ஆய்வாளர் வாத்தியார் உள்ளூரில் வாழவில்லை என்றால் சாத்தியமாகுமா தொழில் ? . கற்பூர சுந்தரன் பதில் 154. ஆழ அமுக்கி முகந்தாலும் ஆழ்கடல்நீர் நாழி முகக்காது நாநாழி - ஊழியரே உள்ளூரில் மாணவர்கள் ஒன்பதுபேர் என்றாக்கால் பள்ளிக்கு வாராது பத்து . 155. வீட்டுக்கு வீடு விழுந்து அழைத்தாலும் ஓட்டுக் கணக்கு ஒன்பதுதான் - கேட்பீரே உள்ளூரில் வாத்தியார் ஓர்வீட்டில் வாழ்ந்தாலும் பள்ளிக்கு வாராது பத்து . 156. ஆசான் பெருமை அளந்துசொல்வார் உண்டோ கூசாமல் பொய்சொல்லக் கூடாது - தேசிகரே ஏசுவார் இந்நிலத்தில் இழிகுலத்தார் என்னலாம் மாசு படிந்ததோ மனம் . 157. ஐந்து வகுப்புள்ள ஆரம்பப் பள்ளிக்கு ஐந்து ஆசிரியர் தேவை - அந்த ஒரு நியதி தெரியாமல் நிர்மித்தால் மூவரை பயனென்ன பாலருக்குத்தான் . 158. ஐந்து வகுப்புக்கு ஆசிரியர் மூவர்தான் சுந்தனது பள்ளிக்குச் சுந்தன்தான் - இந்தநிலை ஆய்வர் அறிந்திருந்தும் ஆசானைத் திட்டுகிறார் பேய்பற்றிக் கொண்டவரைப் போல . கல்வித்துறை அமைச்சர் கழறுகிறார் 159. எட்டு வகுப்பு வரை எந்தஒரு தேர்வும கிட்டவும் கூடாது கேட்டிடுவீர் - பட்டியலில் அடைத்துள்ள ஆடுகளாம் அன்புச் சிறுவருக்கு நடைகொடுப்பீர் மேல்வகுப்பு போக . 160. கற்பிக்கும் வேலை கனவிலும் வேண்டாம் நற்புத்தி சொன்னேன் நான்தான் - விற்பனரே வேண்டாம் கவலை விவரமாய் செல்போன் ஆண்டான் அளிப்பான் அறிவு . 161. பள்ளியும் வேண்டாம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் புள்ளியும் வேண்டாம் புகல்கின்றேன் - அள்ளித்தான் புத்தகத்தை தோளில் சுமக்கவும் வேண்டாம் அத்தனையும் ஆன்லைனில் தான் . 162. பத்துத்தலை ராவணன் ஒற்றைத்தலை ராமனால் செத்து மடிந்தான் சிங்களத்தில் - வித்தையாம் தமிழ்மொழியும் ஆங்கிலமும் சண்டை நிகழ்த்தியதில் தமிழ்மொழி கண்டது தோல்வி . 163. சமச்சீர்தான் கல்விஎன்று சாதித்த ஓர்அரசு அமர்க்களம் செய்தது அன்று - எமனையே வென்றுதான் விட்டோம் விளம்பரம் செய்தது கன்றுபோல் அன்று குதித்து . 164. ஆங்கிலம் கற்பதை ஆதரிக்கும் பள்ளிதான் ஓங்கி முரசு முழங்குவதாம் - ஏங்கி அழுது புலம்பும் அவலந்தான் காண்கிறோம் பழுது தமிழுக்குத் தான் . 165. அரசு நடத்துகின்ற ஆரம்பப் பள்ளிகளை அரசேதான் மூடும் அவலம் - நிரந்தரமாய் இந்தநிலை நீடித்தால் இன்பத் தமிழ்மொழி எந்தநிலை எய்துமோ ஈங்கு . கற்பூரம் சுற்றுலா சென்றதில்லை 166. காசிக்குச் சென்றதில்லை கங்கைநீர் ஆடவில்லை தேசமெங்கும் சுற்றுலா சென்றதில்லை - ஆசைதான் இருந்தாலும் செலவுக்கு இல்லை பணமேதும் பெருமாளைச் சேவிக்கத்தான் . 167. ஏழு மலையான் இருக்கும் இடம்போக பாழும் பணந்தான் வேண்டுமே - ஊழ்வினைதான் ஊனம் உடையோன் உயர்கொம்புத் தேனுக்கு ஏனம்கொண் டேந்தலா மோ . 168. புதுடில்லி போனதில்லை பொன்வாயில் செங்கோட்டை அதுவும் தெரியாது அழகனுக்கு - புதுப்புது பாராளும் சட்டம் பதிவு செய்யும் மக்களவை நேராக பார்த்ததும் இல . 169. அயோத்தி போனதில்லை அங்குள்ள ராமர் தெய்வ திருக்கோயில் தெரியாது - அய்யன் அமர்நாத் திருக்கோயில் பார்த்ததில்லை இல்லை நமது கொடைக்கானல் மலையை . 170. பார் போற்றும் ஆர்சியின் பள்ளி இருக்கிறது சூராணம் ஊரின் பெயர் சொல்ல – சீரான எட்டு வகுப்பு இயங்கிவரும் பள்ளியில் திட்டமிட்டார் சுற்றுலாச் செல்ல . 171. ஆறுகல் தொலைவுக்கு அப்பாலே உள்ளதொரு வீராணம் ஏரிபோல் விரிந்துள்ள ஆர்எஸ் மங்கலத்தின் கண்மாய் மதகுகளைப் பார்க்க சிங்கம்போல் சென்றார் சிறார் . 172. கையில் புளிச்சோறு காலத்துச் சாப்பாடு பையில் பணமேதும் இல்லை - மெய்சிலிர்த்து மையம் அமர்ந்து மதியத்தில் உண்டுவிட்டு வெய்யில் தனியவும் வீடு . விவசாயிகள் டூரில் கற்பூரம் 173. வேளாண்தொழிலில் விழிப்புணர்வு வேண்டுமென ஆளும் அரசு அளித்தது - விழுமிய நேர்முகக் கண்காட்சி நெல்லின் ரகம் மற்றும் காராளர் செய்யக் கணித்து . 174. காரளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கற்பூரம் ஊர்சுற்றிப் பார்த்தான் உவந்து - நேராக ஆடுதுறை மற்றும் ஆராய்ச்சி பண்ணையெல்லாம் கூடும் அளவினிலே கூர்ந்து . 175. ஊட்டி மலைசென்றான் உயர்மரங்கள் வா என்று நீட்டியது கைகளை நில்என்று - வாட்டியது கூதல் நடுக்கக் குளிர்வானம் கொட்டியது காதல் தணியவில்லை காண் . 176. மலையோரம் வாழ்கின்ற மக்கள் இருவர் கலை ஞானம் இல்லாத தோடர் - நிலையான தோட்டப் பயிர்கள் சுகம்தரும் காய்கனிகள் கேட்க இனிக்கும் கிழங்கு . 177. வாழைக்காய் பேரிக்காய் வாசமுள்ள நெல்லிக்காய் ஏழைக்கு ஏற்ற நல்கொய்யா - பேழையாம் சேப்பம் உருளை சிவப்பு நிறக் காரட்டு காப்பகம் ஊட்டி எனக் கழறு . 178. அணைக்கட்டு அத்தனையும் ஆர்வமுடன் பார்த்தான் வினைப் பயன் வந்து விரும்பி -அணைகளில் மேட்டூர் அணைக்கட்டு மேல்நாட்டார் மதிநுட்பம் காட்டும் கைவண்ணந் தான் . 179. கோவை நகர் உள்ள வேளாண் ஆராய்ச்சி சேவை அறியத்தான் சென்றான் - கோவையில் சிந்தித்து ஆராய்ச்சி செய்தசில ஓவியங்கள் வந்தவரை வாழ்த்தித் தான் பேசும் . 180. எத்தனையோ நெல் ரகங்கள் எண்ண இனித்திடும் சத்தான காய்கனிகள் சான்றாகும் - வித்தகராம் விஞ்ஞான மேதை விளைத்திட்ட புதுமைகள் மெய்ஞானம் என்பது தான் மெய் . 181. விவசாய ஆராய்ச்சி வேண்டியதே என்றும் உவந்துதான் செய்ய வழியிலையே - நவதானியம் நெற்பயிர் வேளாண்மை நேர்த்தியாய் செய்வதற்கு நன்நீர் இவையே நமக்கு . 182. கோவை நகர்தான் குடியிருக்க ஏற்றதாம் தேவைப் படும்பொருட்கள் சேர்க்கலாம் - கோவையில் வெப்பம் குறைவாகும் மேல் காற்று சீதனமாம் எப்போதும் தண்ணீர் இருக்கும் . 183. பார்க்கும் இடமெல்லாம் பஞ்சாலை நூற்பாலை ஆர்க்கும் எவர்சில்வர் பட்டறைகள் - நோக்கில் இரும்பாலை எந்திரங்கள் எண்ணில் சிறுதொழில்கள் பெருமைதான் பெற்றதாம் கோவை . 184. கலை பயிலும் கல்லூரி கட்டும் பொறியியல் நிலையில் சிறந்த மருத்துவம் - அலையலையாய் கல்வி நிலையங்கள் கற்றிடக் கோவையில் பல்துறையும் பார்க்கலாம் பார் . 185. பழைய பழங்கோட்டை பண்ணையை பார்ப்பதற்கு விழைந்தார்கள் விண்ணப்பம் செய்தபடி -பழம்பதியின் சமீன்தார் வரவேற்றார் சால்வை விரித்து சமீன்தார் பெருமை பெரிது . 186. தேநீர் விருந்து செய்திட்டார் அன்பினில் வான்நீர் சொரிந்து வாழ்த்த – தேநீர் விருந்து முடித்துப்பின் வீதிஉலா சென்றார் கருத்துக் கினியபல காட்சி . 187. காங்கேயம் கண்ணபுரம் காளைகள் கண்காட்சி ஓங்கும் புகழ்கொண்ட உன்னதந்தான் - ஆங்கு கன்றுக்கு ஓர்இடம் காளைக்கு ஓரிடம் என்ற அமைப்பே இனிது . 188. பருத்தி புண்ணாக்கு பக்குவமாய் ஆட்ட இருந்ததொரு ஆலையாம் இங்கு - அருந்துதற்கு பாற்பசுக்கள் மற்றுமுள்ள பண்ணைக் காளைகள் ஏர்உழும் காளைக்கும் ஈங்கு . பழையக் கோட்டைப் பண்ணை பண்ணைச் செய்தி முழுவதையும் வெண்பாவில் கூற முடியவில்லை. ஆகையால் உரைநடையில் எழுதி உள்ளேன் . இந்திய குடியரசு சமீன் ஒழிப்புத் திட்டம் கொண்டு வந்து சமீன்தாரி முறையை ஒழித்தது. பழைய கோட்டையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பண்ணை நிலத்தையும் மாட்டுப் பண்ணைகளையும் சமீன்தாரிடமே அரசு விட்டுவிட்டது. மாட்டுப் பண்ணையில் காங்கேயம், கண்ணபுரம் மாணப்பாறை ஆகிய மூன்று ரக மாடுகள் வளர்க்கப்பட்டன. உழவு மாடுகள் இருபது சோடிகள் இருக்கும். எல்லாவற்றையும் பராமரிக்கும் வேலை ஆட்கள் உண்டு. அவர்கள் குடும்பம் குடும்பமாய் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வீடு முதல் எல்லா வசதிகளும் பண்ணையார்தான் செய்திருக்கிறார் . மாட்டுப்பண்ணையில் காளைக்கன்றுகளுக்குத் தனிக் காம்பவுண்டும், கிடாறிகளுக்கு தனிக் காம்பவுண்டும், பசுக்களுக்கு தனிக் காம்பவுண்டும் உண்டு. பண்ணையின் பராமரிப்பு இப்படி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பொலி எருது வகைக்கு ஒன்று இருந்தது. அவற்றுக்கு தனி இடம். எருதுகளுக்கு மூக்கு கயிறு இல்லை. மூக்கில் மூன்று அங்குல விட்டமுள்ள வெண்கல பூண் (வளையம்) போடப்பட்டு அதில் இரண்டு பெரிய கனமான கயிறுகள் கட்டி வலப்புறமும் இடப்புறமும் ஒன்றாக இழுத்து அங்கு ஊன்றப்பட்டுள்ள ஆள் உயர முழைத்தூண்களில் எருதுகள் கட்டப்பட்டிருந்தன. எருதுகளை அவிழ்த்து தண்ணீர் காட்ட இரண்டு ஆட்கள் வேண்டும். எருது முதுகின் குறுக்களவு இரண்டே முக்கால் அடி இருக்கும். எருதின் உயரம் ஆறு அடி இருக்கும் . ஒரு காம்பவுண்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிடாறிகள் இருக்கும். தினசரி பொலி எருதை இருவர் இருபக்கமும் கயிற்றைப் பிடித்தபடி கிடாறிகள் உள்ள காம்பவுண்டுக்குள் கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு கிடாறி மேல் எருது விழும். உடனே எருதை மீண்டும் கொண்டுபோய் முழையில் கட்டிவிடுவார்கள். கிடாறியை அடையாளம் கண்டு கவனிப்பார்கள் . காளைக் கன்றுகள், கிடாறிகள் விற்பனை செய்வது உண்டு. காங்கேயம் காளைகள் விலை அதிகம். பசும்பால் விற்பதில்லை . அரண்மனைக்கு வேண்டியது போக மீதியை வேலையாட்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இது . பெரியாறு அணைக்கட்டில் கற்பூர சுந்தரன் 189. பீடு உடைய பெரியாறு அணைக்கட்டு காடும் மலையும் கலந்ததே - பீடுடைய பிறநாட்டு என்ஜினீயர் பென்னிக்குக் என்பார் மறங்கொண்ட நெஞ்சு மனிதர் . 190. குமிழி மலைவயிற்றைக் குண்டால் துழைத்து அமிழ்தமாம் தண்ணீரை அப்புறத்தில் - தமிழகம் பெற்று விவசாயம் பீடுபெறச் செய்திட்ட பென்னிக்குக் என்றும் வாழ்க! 191. பேரு பெரியாறு பேர்பெற்ற சிற்றாறு ஊர்எதுவும் இல்லை பக்கத்தில் - ஆறு ஒன்பது கிலோமீட்டர் ஓர்பக்கம் காடு வன்மை வனவிலங்கு வாழும் . 192. பெற்றோல் படகு பெரியார் அணைபோக உற்றதாம் தேக்கடி ஊர்இருந்து - வுற்றாத நீர்த்தேக்கம் வான்நோக்கி நிற்கும் அணைக்கட்டு பார்க்கப் பரவசந்தான் பார் . கற்பூரம் பணிபுரிந்த பள்ளிகள் 193. முன்பு பணிபுரிந்தான் முத்து விநாயகரில் பின்புதான் வீரமாமுனிவரில் - அன்பு அன்னை உலகமாதா நடுநிலைப்பள்ளியில் நன்றாம் பணிஎன்பேன் நான் . 194 கல்வியில் வேண்டும் புரட்சி என காந்திமகான் வல்லான் வகுத்ததொரு திட்டம் - நல்ல தொழில்மூலம் கல்வி சுயதேவைப் பூர்த்திஎன வழியொன்று சொன்னார் வகுத்து . 195. கற்பூரம் கற்றது காரிலேசன் வேஷம் ஆவ்டீச்சிங் மற்றபடி மாண்டிசோரி வாராது - தெற்றென கற்பிக்கும் தொழிலைக் கச்சிதமாய் செய்தான் நற்புத்தி பெற்றிருந்த தால் . 196. மாணவர் சங்கம் மாதம் ஒருமுறை காணக் கவின்மிகு காட்சியாம் - மாணவர்கள் பேச்சுத் திறமையைப் பேணி வளர்த்திட்டான் பேச்சுக் கலைப்போட்டி மூலம் . 197. ஆடலும் பாடலும் அபிநய காட்சியும் தேடக் கிடைக்காத ஒயிலாட்டம் - பாடல் பாட்டு பயிற்சியொடு பண்நிறைந்த சங்கீதம் கூட்டுப் பிரார்த்தனையும் கூட . 198. பெற்றோர் ஆசிரியர் பேரியக்கம் பள்ளியில் நற்பணி செய்திட நாளும் - அற்புதமாய் பள்ளி வளர்ச்சிக்குப் பாடுபட செய்திட்டான் அள்ளிக் கொடுத்தனர் அன்பில் . 199. ஆண்டுக் கொருமுறை ஆண்டுவிழா பள்ளியில் ஆண்டறிக்கை சமர்ப்பணம் அன்று - வேண்டும் விளையாட்டுப் போட்டி வெகுமதி வெற்றிக்கு கலைகட்டும் கோலந்தான் காண . 200. வட்டம் அளவில் வழங்கும் போட்டிகளில் திட்டமாய்ப் போட்டியிடும் சாக்கூர் - பட்டம் பரிசுகளை வென்றெடுக்கும் சுந்தரன் பள்ளி வருவான் ஆசான் மகிழ்ந்து . 201. பள்ளி சீரமைப்பு மாநாடு என்ற ஒரு நல்லதோர் திட்டம் நடைமுறையில் - உள்ளது மாநாட்டு மேன்மை மலரினில் கற்பூரம் பேனா வளங்கியது ‘கவிதை’ . 202. கவிதை பகலவனின் காருண்யம் பேசும் புவியில் உயிரியக்கம் நீ என்று - கவிதையது பன்னிரெண்டு சீர்கொண்ட பாலாகும் அஃது சொன்னால் இனிக்கும்நம் நா . ஆசிரியர் பணியிடை பயிற்சி 203. விருது நகர்சென்றான் விரும்பும் பயிற்சி அரசு அழைத்ததால் அங்கு - ஒருவாரம் ஆங்கிலம் கற்பிக்கும் அந்தஒரு தந்திரந்தான் ஓங்கும் செயல்மூலம் கல்வி . 204. பல்கலை உள்ளவூர் பாளையங்கோட்டையில் நல்வழியில் பாடம் நடத்துதற்கு - வல்லவராம் ஆசான்கள் கற்பித்தார் ஆங்கிலப் போதனையை மாசம் ஒருதிங்கள் மகிழ்ந்து . 205. கற்பூரம் அந்தக் கழகத்தில் சேர்ந்து அற்புதமாய் பெற்றான் பயிற்சி - பெற்றபின் செயல்முறைக் கற்பித்தல் செய்தவன் காட்டினான் மயல்நீக்கி மற்றவருக்கு ஆங்கு . 206. கற்பூரம் பள்ளிப் பணிமூப்பு என்பதினால் பெற்றான் தலைமைப் பதவி மற்றுமுள்ள ஆசிரியர் யாவர்க்கும் சர்னாய் தோழனாய் நேசக் கரம்நீட்டி நின்றான் . 207. நல்ல சிரியராம் நல்லதோர் பட்டத்தை எல்லாரும் ஊரில் அளித்தார் - நல்லரசு கண்ணுக்குத் தோன்றவில்லை கற்பூரம் செய்தபணி மண்ணுக்குத் தோன்றியது மாண்பு . கற்பூர சுந்தரன் சமூகப்பணி 208. சூராணம் மண்ணைத் துணைபோட்டுப் பார்த்ததில் நீரெல்லாம் எங்கனுமே உப்பு - சூராணம் கண்மாயின் உத்தாவில் கண்டான் கற்பூரம் உண்ணும்நீர் உள்ளதொரு ஊற்றை 209. வன்மையுள்ள வாலிபர் நால்வரை சேர்த்தான் மண்கிணறு வெட்டுதற்கு வாகாய் - நன்னீர் ஊற்றெடுத்து வந்தது ஒரைந்து மீட்டரில் மாற்றமிலா மண்கிணற்றில் தான் . 210. ஆற்றுப் பெருக்கற் றடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றமிகு ஆற்றுப்படுகை அருகினில் இல்லையே ஊற்றுநீர் தோண்டித்தான் உண்ண . 211. மண்கிணறு நாளடைவில் மண்சரிந்து மூடிவிடும் தண்ணீரை காணமுடியாது - என்னதான் செய்வதெனச் சிந்தித்தான் சிந்தனையில் சுந்தரனின் அய்யத்தைத் தீர்த்த தறிவு . அன்றைய நிலை 212. உறைக்கிணறு ஒன்றுதான் தீர்வாகும் என்றெண்ணி நிறைவேற்றத் திட்டம் நினைந்தான் - நிறைவாக சல்லி மணல்சிமென்ட் சாகசமாய்ச் சேகரித்தான் சொல்லி உறைபோடத் தான் . 213. கிணறு உறைசெய்யும் கீழ்மட்டக் கைவினைஞர் மனமுவந்து வந்தார் உறைபோட – கிணறுக்கு பக்கத்தில் போட்டார் பல உறைகள் பாங்காக வக்கணையாய்க் கட்ட கிணறு . 214. உறைக்கிணறுத் தண்ணீர் ஊருக்கு மிச்சம் இறை த்தார்கள் வாளியால் இன்புற்று - பறைசாற்றி ஊர்மக்கள் சொன்னார்கள் உன்னத செயலென்று ஆர் பெறுவார் அந்தப் புகழ் . இன்றைய நிலை 215. ஊராட்சி மன்றங்கள் ஒவ்வொரு ஊரிலும் சீரான செயல்இன்று செய்கின்றார் - ஏராளம் தண்ணீர்க் குழாய்பதித்து தாராளம் தண்ணீர் எண்ண இனிப்பான செய்தி . 216. தெற்குத் தமிழகம் தெண்ணீர் மழையின்றி வற்கடம் ஆவது வாடிக்கை - வெற்பதுபோல மற்போர் அரசர்கள் ஆண்டஅக் காலத்தே அற்ப மழையே அவிழும் . 217. விண்நின்று பெய்திடும் வேண்டாத நேரத்தில் கண்மாய் குளங்கள் கரைபுரள - தண்ணீரை உண்ணீர்க் குளம்நிரம்பி ஊருக்கு உதவிடுவான் புண்ணியன் கற்பூரந் தான் . பிச்சை கேட்பார்க்கு ஈதல் 218. அய்யப்பன் ஆலயமோ ஆறுமுகன் சன்னதியோ வெய்ய வினைதீர்க்கப் போவார்க்கு - செய்ய வரம்வேண்டிச் செல்வோர்க்கும் வன்கருமம் தீர்ப்பார்க்கும் தரம்பார்த்தும் செய்வான் தருமம். 219. ஈதல்இசைபட வாழ்தல் அதுல்ல(து) ஊதியமில்லை உயிர்க்கு - நீதிதான் ஈய்ந்திட்ட வள்ளுவத்தை ஏற்பவனாம் கற்பூரம் ஈய்ந்தான் இரப்பார்க்கு ஈங்கு . 220. பிச்சை எடுப்பார் பெருவயிற்றுக் கென்றாலும் அச்சமின்றி அங்கை விரித்திடினும் - நிச்சயமாய் மிச்சத்தை உண்டியலில் சேர்ந்திடுவேன் என்றாலும் பிச்சை அளித்திடுவான் பிறர்க்கு . 221. ஆசான் பயிற்சி அளிக்கு மொரு பள்ளியில் நேசமுடன் ஓரிடந்தான் வாங்கி - காசின்றி படித்துப் பயன்பெறும் ‘ஓர் நபர்’ வாழ்க்கைக்கு விடியல் அளித்தான் விரும்பி . அரசியலில் கற்பூரம் 222. எந்தஒரு கட்சியிலும் இல்லை உறுப்பினராய் அந்தநிலை தன்னில் அரசியலில் - சந்ததமும் கலைஞரது ஆட்சிக்கே கற்பூரம் ஆதரவு நிலையாக என்றென்றும் உண்டு . 223. முத்தமிழ் ஆசான் முடிசூடா மன்னன் எத்திசையும் போற்ற எழுந்தவன் - புத்திக்கே புத்தி புகலும் பகுத்தறிவுச் சூரியன் வித்தைக்(கு) அகத்தியனாம் வேந்து . 224. கைவண்டி ரிக்சாவாம் காலம் இரிந்திட நெய்வண்டி கொண்டுவந்தார் நேராய் - செய்யஒரு தொழிலில்லா வாலிபர்க்கு தந்தார் சுதந்திரமாய் தொழில் செய்ய ஆட்டோ சொகுசு . 225. ஊரெல்லாம் மின்விளக்கு உண்ணக் குடிநீர் பேர்விளங்கச் செய்திட்டார் பெம்மான் - கூரையுள்ள குடிசைகளை மாற்றிவிட்டுக் கெட்டிவீடு கட்டி குடியிருக்கச் செய்திட்டார் கோன் . 226. தடையின்றிச் செல்ல தரைப்பாலம் மேம்பாலம் கடல்சீற்றம் தவிர்ப்பதற்கு கல்சுவராம் - திடமான அணைக்கட்டு நீர்த்தேக்கம் அத்தனை திட்டங்களும் முனைந்து முடித்துவிட்டார் ‘மு.க’ . 227. வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த திருமகனார் தெய்வ உலகம்போய் சேர்ந்துவிட்டார் - செய்திட்ட செய்ய திருப்பணிகள் செந்தமிழ்ச்சங்கூதி வையகம் உள்ளவரை வாழ்த்தும். கலைஞரின் மாறுபட்ட கொள்கை 228. சாதியை நீக்கி சமயத்தை மாய்த்திடுவேன் நீதியைக் குப்புற நாட்டிடுவேன் - மேதினியில் நம்பாதே தெய்வத்தை நான்தான் கலைஞரென்றால் சம்மதம் சொல்வாரோ சான்றோர் ? 229. குணமான மந்திரிகள் கோட்டை வாழ் கோமான்கள் பணம் என்னும் பேய் பிடித்து ஆடுகிறார் - பிணம்தின்பார் குணமாக்கும் பூசாரிபார் மீது யாருமில்லை சனநா யகம்காணும் சாவு . 230. தேவைக்கு மேலாக சேர்த்தால் பணத்தை கோவைத்திருடன் அவனேதான் - சாவைத்தான் எண்ணாமல் என்றும் இருக்கலாம் என்றெண்ணும் புண்ணியந் தேடாப் புளிஞன் . 231. பலகட்சி நாட்டை பாழ்படுத்தும் பண்பில்லா சிலகட்சி தேடுவது தன்னலந்தான் - உலைவைக்கும் பெருமையாம் வாழ்க்கைக்குத் பெற்றதாய் நாட்டுக்கும் இருகட்சி ஏற்படைத்து ஈங்கு . 232. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி ஒத்து வராது உலகுக்கு - மொத்தத்தில் பல்லாண்டுக் காலம் பரத திருநாட்டை பல்லாங் குழிபறித்தார் பலரும் . 233. வந்தநல் வெள்ளையர் வாகான நல்லாட்சி இந்தியா என்று பெயரிட்டார் - இந்தியர் ஒன்றுபட்டால் இன்று உலகம் பயப்படும் நன்று நடக்கும்நல் ஆட்சி . வயோதிகப் பருவம் கற்பூர சுந்தரன் பிள்ளைகள் திருமணம் 234. பிள்ளை திருமணம் பெற்றோர் கடனென்று நல்லவன் கற்பூரம் நன்கறிவான் - வெள்ளமென ஆசை அலைமோதும் அரவணைக்கப் பேரனை நேசக் கரங்கள்தான் நீட்டி . 235. உற்றார் உறவினர் ஒன்றாகச் சேர்ந்து நற்றவப் பிள்ளைக்கு நாள்பார்த்து - பொற்றாலி பொருத்தம் இருந்தால் பொண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நிச்சயம் தான் செய்வார் . 236. தாய்க்குத் தலைமகனாம் சற்குணபாண்டியன் வேய்வலிமை கொண்ட வீரனாம் - தாய்க்கு தெரியாத் திருமணந்தான் செய்தான் மகனென்று புரியாமல் நின்றாள் புலம்பி . 237. தந்தைக்குச் சொல்லாத் தனயன் திருமணம் விந்தை எனக்கண் விழிதிட்டார் - தந்தைக்கு செலவு சிறிதளவும் இல்லைதான் என்றாலும் உலைவு உடலைத்தான் தின்றது . 238. இரண்டாவது பிள்ளை இன்ஜினியர் பட்டணத்தில் அரசின் பணிதான் ஆற்றுபவர் - தரமான மண்டபத்தில் கல்யாணம் மாப்பிள்ளை மன்னனுக்கு கண்டான்கற் பூரம் கனவு . 239. கனவோ நனவோதான் கண்டது கற்பனையோ மனதில் நினைந்தது மாண்பாகும் - மணவிழா அப்பனுக்குச் சொல்லாமல் ஆலயத்தில் கல்யாணம் எப்படி ? சூழ் வினையின் சூது . 240. நடந்தது என்னவோ எல்லாமே நன்றுதான் நடக்கும் செயலெல்லாம் நன்றே - நடக்கத்தான் போகும் செயலெல்லாம் போற்றும் படியிருக்கும் ஆகம்ந்தான் கண்ணனின் ஆசி . 241. கண்ணபிரான் போதனைகள் காதுக்கு இன்பந்தான் சொன்னதெல்லாம் சுப்பனுக்குத் துன்பந்தான் - மின்னல்போல் தாக்கியது துன்பந்தான் தந்தையின் உள்மனதை நீக்குவார் இல்லை நினைந்து . 242. பார்க்கவன் வம்சத்தில் பாரி பரம்பரையில் பேர்விளங்க வந்தவனாம் கற்பூரம் - யார் ஒருவர் இல்லை என்று வந்தால் இயன்றதை செய்திடுவான் இல்லைஎன மாட்டான் இசைந்து . 243. தலித்து இனத்திற்கு தக்கநல் வீடில்லை மெலிந்த அவர்வாழ்வை மேம்படுத்த – விளைநிலத்தை அளித்தான் ஒரு ஏக்கர் ஆட்சியர் சார்பாக களித்தான் அவன்கருணை கண்டு . 244. பத்துக் குறுக்கந்தான் பூர்வீகமும் சேர்த்து வித்தது போக நான்கேதான் - பத்துக்கு சரிநான்கு மிச்சம் சமமாகப் பங்கிட்டான் ஒருநான்கு மக்களுக்கும் ஓர்ந்து . 245. பெண்மக்கள் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளெல்லாம் எண்ணம்போல் நல்கினான் ஈங்கு - அன்னவர் உள்ள களிப்புடனே உன்னதமாய் வாழ்கின்றார் நல்லவர் நான்குபேர் வாழ்த்த . 246. ஆண்டுக் கொருமுறைதான் ஆனந்தப் பொங்கல் மாண்ட திருநாளாம் மக்களுக்கு - ஆண்டுதோறும் தங்கள் கடனென்று தந்தையாம் கற்பூரம் பொங்கல் சீர் செய்வான் புரிந்து . 247. மூத்த மகளுக்கு முத்தான பெண் மகவு பேத்தி இருவர் பெருமைதான் - மூத்தவள் ஆகாது போய்விட்டாள் அன்புடை பெற்றோருக்கு சோகத்தில் ஆழ்ந்தான் சுப்பன் . 248. இரண்டாவது பெண்ணை எம்.ஏ படிக்க வைத்தான் வரன் வேண்டும் காலம் வந்ததினால் - கரம்பிடிக்க மாப்பிள்ளை தேடி மணமுடித்து வைத்தான் மூப்பு வயதில் முனந்து . 249. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்று - அன்புடன் வாழ்த்தி அனுப்பினான் வாழ்கின்ற சென்னைக்கு பேத்தியைப் பேரனைப் பிணைத்து . 250. ஆண்பிள்ளைச் செல்வம் அடைந்துவிட்டார் இன்று வீண்போகவில்லை விளைவு - நீண்டநாள் ‘வாழ்க இருவரும் வாழ்வாங்கு வையத்தில்’ வாழ்த்தினான் கற்பூரம் வாழ்த்து . 251. ஆண்மக்கள் வாழ்வினில் ஆனந்தம் பொங்க மாண்புடன் வாழ்கின்றார் மாட்சி - ஆண்டவனை ஆசீர் வழங்க அடிபணிந்து வேண்டுகிறான் பாச மழையில் நனைந்து . கற்பூரத்தை வதைசெய்த நோய்கள் 1. தலைவலி 252. தலைவலியும் காய்ச்சலும் வந்தால் வலிதெரியும் நிலைதெரிந்து சொன்னார்கள் நோயின் - தலைவிலியாம் வந்தது கற்பூரம் மண்டை பிளக்கவே நொந்து விழுந்திட்டான் நோயில் . 253. பக்கத்தில் உள்ளது பல்நோக்கு வைத்தியம் குக்கிராமம் பேர்தான் கிளாஞ்சனி - மிக்கநல் ஆங்கில டாக்டர் அளித்திட்டார் மாத்திரை நீங்கியது நோய்தான் வலி . 254. அன்றைக்குச் சொன்னார் அறிந்துதான் டாக்டர் என்றும் வராது இனிமேல் - நின்றது பத்துப் பைசாவின் மாத்திரையில் மண்டை வலி அத்துக்குப் பேர்சொன்னார் ‘ஆஸ்பிரின்’ . 2. காய்ச்சல் 255. அடிக்கடி காய்ச்சல் அல்லல் படுத்தியது படியேறிப் பார்த்தான் பலரிடம் விடிவில்லை செல்லுங்கள் காரைநகர் செல்லையா டாக்டரிடம் அல்லல் அகலுமென்றார் ஆய்ந்து . 256. என்றொருவர் சொல்லவும் ஏகினான் காரைநகர் நன்றாக ஆராய்ந்து நல்கினார் - இன்றைக்கு இன்செக்சன் காய்ச்சல் ஏகிவிடும் நாளைக்கு என்றுதான் சொன்னார் இவர் . 257. செல்லையா டாக்டர்தான் செய்த மருத்துவத்தில் சொல்லாமல் சென்றது காய்ச்சல் - தொல்லைதான் தந்த பெருங்காய்ச்சல் அன்றுமுதல் இன்றுவரை வந்ததே இல்லைதான் வாழ்வில் . 3. பவுந்திர சிலந்தி 258. சுந்தர் மெடிக்கல் ஃபவுண்டேசன் சென்னையில் வந்த பூவிந்திரக் கட்டிக்கு - வந்தவர் கோபாலன் டாக்டர் கொடுத்தார் அறுவை பாவாணன் சுப்பன் பயந்தான் . 259. ஆண்டு கடந்தும் ஆறவில்லை புண்தான் ஆன்றாய்ந்து சொன்னார் அடுத்தவர் - நீண்டநாள் ஆறாது தொல்லை அளிக்கிறது என்றாக்கால் காரணம் காசநோய் பூச்சி . 260. காசநோய் பார்க்கும் கருணையுள்ள டாக்டர் பாசமுடன் நோக்கினார் சுப்பனை - காசநோய் பூச்சிகளைக் கொன்றால்தான் புண் ஆறும் என்றார் பூச்சிக்கொல் மாத்திரைதான் உண்டான் . 261. ஈராறு திங்களாய் ஆறாத புண்தான் ஓரிரு நாளில் ஒழிந்தது - மாயமாய் காசக் கிருமிகளை கண்டுசொன்ன டாக்டர் பேசும் கடவுளரே தான் . 4. அம்மை நோய் 262. இரண்டுமுறை வாழ்வில் எழுந்தது அம்மை அரண்டு வணங்கினான் அம்மணியை - மாரியைத்தான் பிள்ளையைக் காப்பது பெற்றவள் கடனன்றோ பிள்ளை உனக்குநான் என்றான் . 263. மருந்தெதுவும் வாங்கவில்லை மாத்திரை போடவில்லை வருந்தி வணங்கினான் மாரியை - மருந்துதான் நோய்க்குத் திருநீறும் வேப்பிலை மட்டுந்தான் தாய்க்கு அணைப்பதுவே சாந்தி . 5. திடீர் மயக்கம் 264. வயதுதான் தொண்ணூரில் வந்தது சுப்பனுக்கு மயக்கம் தலைசுற்றி வீழ்த்தியது - பயந்துதான் தூக்கியுடன் சென்றார் துரிதமாய் டாக்டரிடம் ஆக்கினார் சோதனைக்கு உடல் . 265. சோதனை செய்தபின் சொன்னார் மருத்துவர் வேதனை மூளையில் என்று - சாதனைதான் நான்குநாள் வைத்தியம் நன்றாகிப் போனது ஆங்கு அவனுக்குத் தான் . 266. மயக்கம்தான் தீர்ந்தாலும் மாறவில்லை சோகம் தயக்கந்தான் மாத்திரை சாப்பிட – தயங்காமல் மாதமிரண் டாயிரம் மாத்திரை டானிக் சோதனை சுப்பனுக்குத் தான் . 267. மயக்கம் மலையேறிப் போனது என்றாலும் தயக்கம் நடக்க முடியவில்லை - பயந்தான் கைத்தடியை ஊன்றித்தான் கால்கள் இரண்டொடு வைத்தான் கடவுள் நடக்க . கற்பூரம் எழுதிய நூல்கள் 1. தெய்வீக சிந்தனைகள் 268. தெய்வீகம் என்பது தேவன் அருட்செல்வம் கைதொழுதால் கிட்டும் கரும்பு - மெய்யான அருட்செல்வம் தேடல் அரிது எவர்க்கும் பொருட்செல்வம் தேடல் எளிது . 269. ‘தெய்வீக சிந்தனைக்கு’ தேன் தமிழில் பாட்டெழுதி வையகம் உய்ய வழங்கியுள்ளான் - மெய்யன்பர் ஏவரும் படிக்க இணையதளம் உள்வைத்தான் பாவலரும் போற்றும் படிக்கு . 2. குறள்விடுதூது இந்த நூல் இரண்டடியில் சந்தப்பாடல்களால் ஆக்கப்பட்ட சிற்றிலக்கியமாகும். திருக்குறளை தெய்வப் பெண்ணாக உருவகம் செய்து அவளையே தூது சொல்லப் பணிக்கிறார் நூலாசிரியர். குறள் கூறும் அறநெறியை மக்களுக்குப் போதனை செய்ய அவளாள்தான் முடியுமெனத் திடமாக நம்புகிறார் ஆசிரியர். ஒரு சில கருத்துக்களை மட்டும் எடுத்துக்காட்டு வெண்பாவில் காண்க . 270. குறள் கூறும் நன்னெறியை கூறத்தான் மக்களுக்கு திறமையுள்ள தூதுவரைத் தேர்ந்தெடுத்தான் - கற்பூரம் மணக்கும் திருக்குறளாம் வள்ளுவர் பெற்றெடுத்த அணங்கை அனுப்பினான் தூது . 271. தென்மதுரை தேன்மொழியே தேவர் குறளணங்கே எண்டிசையும் தூது நவில்வாய் - மண்டலத்தில் அற்றம் அகற்றிடும் ஆண்டவனைக் கும்பிடுதல் கற்றார் கடனென்று சொல் . 272. அன்புடையார் என்றும் உதவிடுவார் அன்பிலார் என்றும் உதவார் அவருக்கே - நல்லாய்கேள் அன்பு வழிநின்று ஆற்றுவார் செயலென்றால் பண்பு அதுவாம் பகர் . 273. உற்றார் உறவினர் ஒன்றுபட்டு என்றென்றும் சுற்றம் தழுவுதல் வேண்டும் - வெற்றிடத்தில் காக்கை கரவாது கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள . 274. வானின் றுலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று போய் சொல்லு - அணங்கே துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை . 275. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழ்வார் குடிமக்கள் - சொல்மாதே நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின் . 3. கவிதைப் பூங்கா 276. பல்வகை பூவால் படைத்த கதம்பம் போல் நல்ல கதம்பப்பா மாலையாம் - நல்நெறியை குவித்து வைத்துள்ள கொஞ்சு தமிழ்ப் பெட்டகமாம் கவிதைப்பூங் காவாம் கலை . கூட்டுப் பிரார்த்தனை என்ற தலைப்பில் கவிதைப் பூங்காவில் இறைவணக்கப் பாடல் ஒன்று உண்டு. பாடலின் மையக் கருத்தை உள்ளடக்கிய ஒரு வெண்பா.. . 277. காசில் வடமதுரைக் கண்ணன் கீதையும் ஏசு பெருமான் இறையருளும் - மாசில்லா அல்லா உரைசெய்தகுர்ஆனாம் இம்மூன்றும் சொல்லுவது எல்லாம் அறம் . ஆக்கை நிலையாமை பற்றி வெண்பா 278. நேத்து இருந்தவரை இன்றைக்கு இல்லை என்பார் கூத்து நடக்குதம்மா குவலயத்தில் - சேர்த்தபணம் ஆக்கம் அறிந்து செலவுடனும் பல்லுயிர்க்கும் ஆக்கை நிலையாமை கண்டு . கற்பூர சுந்தரன் குடும்பம் 279. மாண்பு மனைவியுடன் மக்களும் நிரம்பினர் மாண்புள்ள நண்பர்கள் சேர்ந்து - தேன்கூடாம் கற்பூரம் வீடு கலகலப்பாய்க் காணும் நற்செய்திக் கூட்டந்தான் நாளும் . 280. மனைவி கணவருக்கு மந்திரி, மக்கள்தான் வினைசெய்வார் நன்கு அறிந்து - அனைவருமே அவரவர் செய்கருமம் ஆற்றுவார் ஆய்ந்து சுவர்போல நிற்கா துழன்று . மனைவி மரணம் 281. ஒன்று பதினொன்று பத்தேழாம் ஆண்டில் நன்றான ஐப்பசித் திங்களில் - பெண்மணியாம் கற்பூரம் காதல் மனைவி உயிர்நீத்தார் பொற்பூறும் புண்ய வதி . 282. கர்மகிரியை கடல்தேவி தேவிபட்டினத்தில் பெரியோரின் சொற்படியே செய்தார்கள் - விரிவாக மேன்மைச் சடங்குகள் செய்தால்தான் மேற்சென்ற ஆன்மா அடையுமென்றார் சாந்தி . கற்பூர சுந்தரனின் கையறுநிலை இரங்கற்பா 283. அறுசுவை ஆகாரம் ஆக்கும் திறமையுள்ள கருணை உளம்கொண்ட காரிகையே - திருமணந்தான் ஆனபொழுதிலிருந்து அன்புக்கு இலக்கணமாய் ஆனவளே என்னநீ ஆனாய் ? 284. ஊரைவிட்டுப் போய்விட்டாய் ஊனமுள்ள என் கண்கள் நீரைவிட்டு நிற்கிறதே ஏங்கி - ஊரைவிட்டு செல்லத் துணிந்துவிட்டாய் என்றாலும் எங்கள் உள்ளத்தில் வைத்திருப்போம் உன்னை . கற்பூர சுந்தரன் வீடு 285. கட்டினான் வீடொன்று கல்யாணம் ஆனபின் பட்டினம் ஓடுதான் பதிந்து - கட்டிடம் மண்சுவர் வீடின்று மார்பிளாம் கல்பதித்து மின்னுது மின்மினியாம் வீடு . கற்பூரம் உணவு 286. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்தான் - என்றதனால் ஆய்ந்து புலால் உணவை அப்புறம் தள்ளிவிட்டு காய்கனிதான் உண்பான் கறி . உடை 287. களர்களராய் ஆடைகடைகளில் வாங்கி பலரும் அணிகின்றார் பார்க்கின்றோம் - உளம்மகிழ்ந்து கற்பூரம் பூணுவது காதி என்னும் வெள்ளாடை பொற்பு அவனுக்கு அது . ஒழுக்கம் 288. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்றென்பார் வள்ளுவனார் - பொய்யாமை அறஞ்செய்து வாழ்கின்றான் அன்றுமுதல் இன்றுவரை மறந்தேனும் சொல்வதில்லை பொய் . பணி ஓய்வு 289. ஆயிரத்துத் தொள்ளாயிரம் எண்பத்து ஆறில் ஓய்வு கிடைத்தது உட்கார – உய்ய உபகாரச் சம்பளம் ஒன்றும் கிடைத்தது சுபவாழ்வு சுப்பனுக்குத் தான் . 290. வாழ்வின் இளமையில் வாட்டியது நல்குரவு தாழ்வுற்று நின்றான் தயங்கி - பாழ்பட்ட வறுமை விலகியது வந்தது செல்வமின்று பெருமை வளமைதான் வாழ்வில் . 291. ஆசிரியர் வேலை அமர்ந்தநாள் சம்பளம் காசு ஒருஅய்ந்து ஆயிரந்தான் - காசின்று முப்பது லட்சம் முழுமையாம் சம்பளம் தப்பேதும் இல்லை கணக்கு . கவிச்சக்கரவர்த்திகள் நால்வர் 1. கம்பர் - விதி விளையாடியது சோழ மன்னன் அவையை அலங்கரித்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் நாடு கடத்தப்பட்டு பாண்டியநாடு வந்து கூலி வேலை செய்தார். ஓர் ஊரில் வேலம்மாள் என்ற பெண் மண்சுவர் வீடு கட்டிக் கொண்டிருந்தாள். மண்ணைக் குழைத்து சுவர் வைக்கும் வேலையில் ஈடுபட்டார். வேலைக்கு கூலி காசு கிடையாது, நெல்தான் சாப்பாடு இலவசம். களிமண் காய்ந்ததும் வெடித்து விழுந்துவிடும். வெடிக்காமல் இருப்பதற்கு துவரை மிலாரை பாதியில் ஒடித்து சுவரில் குத்திச் செருகிவைத்தார். அப்பொழுது அவர் பாடிய அழகிய வெண்பா ஒன்று காண்க! 292. மற்கொண்ட திண்புயத்தான் மாநகர் மாநகர்விட்டிங்கு வந்தேன் சொற்கொண்ட பாவின் சுவை - அறிவார் ஈங்கில்லையே விற்கொண்ட பிறைநுதலாள் வேலி தரும் கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே . ஒட்டக்கூத்தருக்கும் காளமேகப் புலவருக்கும் மோதல் ஒட்டக்கூத்தர் 293. மூச்சு விடுமுன்னே முந்நூறும் நாநூறும் ஆச்சுதென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - பேச்சென்ன வெள்ளைக் கவிகாள மேகமே உந்தன் கள்ளக் கவிக்கடையைக் கட்டு . காளமேகப்புலவர் 294. இம்என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்என்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆகில் பெருங்காளமேகம் பிள்ளாய் . கம்பருக்கும் ஒளவையாருக்கும் மோதல் ‘ஓரிலைத் தாமரை அன்று, ஒருகாலில் நாலிலைப் பந்தல் அடி’ . என்றார் கம்பர் அவ்வளவுதான் ஒளவையாருக்கு வந்தது கோபம், யாரைப் பார்த்து அடியே என்றாய், அடுமடையா ! என்றவர், கவி இருப்பாணி வைத்து அறைந்தார் கம்பரின் நாவில். இதோ அந்தக் கவி காண்க . 295. எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டழேல் கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அடா என்றார் . ஒருகாலில் நான்குஇலை உள்ளது. ஆரைக் கொடி என்றார் ஒளவையார். யாகாவாராயினும் ‘நா’ காக்க என்பதை மறந்ததால் கம்பருக்குத் தலை குணிவு . ஒளவையார் பாடலுக்குப் பொருள் எட்டேகால் லட்சணம் - அவலட்சணம் தமிழில் - அ = 8, வ = கால் 1/4 அவ = 8 1/4 (அவலட்சணம் = அசிங்கம்) எமனேறும் பரி = எருமைமாடு பெரியம்மை வாகனம் = நாய் கூரையில்லா வீடு = குட்டிச்சுவர் குலராமன் தூதுவன் = குரங்கு ஆரை = நீர்நிலையில் வளரும் செடி கற்பூர வெண்பா ஆசிரியர் கவிஞர் ஆ.வேலு, காரைக்குடி ரயில் நிலையம் பக்கத்தில் குடியிருந்தபோது அவரது நண்பர் ஒருவர், ரயில் சங்கு ஊதிக்கொண்டு போவது பற்றி ஒரு வெண்பா பாடுங்கள் என்றபோது ஆசிரியர் பாடிய வெண்பா . 296. தெற்கு வடக்காகச் செல்லும் ரயிலெல்லாம் பொற்சங்கு ஊதிப் புகழ்வனவாம் - நற்கருணை வள்ளல் அழகப்பர் வாழ்க எனச்சொல்லி உள்ளம் களிப்பில் உறைந்து . ஆன்மீகம் வளர்ப்போம் 297. எங்கும் இருப்பான் எமையாளும் ஈசனவன் நம்முள்ளும் உள்ளான் இணைந்து - நம்உடல் தங்கும் உயிராவான் தாயாகி நம்மை அங்கை அரவணைப்பில் காப்பான் . 298. பொறிவாயில் ஐந்தவித்து பொன்மனதை சீராக்கி நெறிநின்றால் வாழலாம் நன்கு - அறிவழிக்கும் ஆசை அகற்ற அணுகாது துன்பம் ஈசன் அடிநிழலே இன்பம் . 299. இறைவனை என்றும் வணங்குதல் நன்று மறைவழி காட்டும் மனிதற்கு - குறையிலா நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் இறையருளும் கிட்டும் நமக்கு . 300. வடமதுரை ஆண்டவனே மாமன்னா கண்ணா விடமாட்டேன் என்னைவிட்டுப் போக – படங்கொண்ட பாம்பணை மெத்தையிலே பள்ளி கொண்ட ரெங்காநின் பூம்பாதம் ஒன்றே புகல் . 301. நம்மைநம் ஆசை அழைத்த வழிநடந்தால் செம்மையாம் நம்வாழ்வு சீரழியும் - அம்மையாம் ஆதிபரா சக்தியை ஆராதனை செய்தால் சோதி மயமாகும் வாழ்வு . 302. தில்லையில் ஆடிய சிவனார் திருவருளே தொல்லை தனைத்தீர்க்கும் வாழ்வில் - நல்ல அனைத்து நலன்களும் ஆகும் சிவனால் நினைத்து வணங்க நமக்கு . 303. எல்லாரும் வாழ்க்கையில் எல்லாமும் பெற்று நல்லா றதுவழியில் தானடந்து - எல்லாரும் என்றென்றும் எவ்வுயிர்க்கும் அன்புசெயல் வேண்டும் என்பதுவே கற்பூரம் ஏக்கம் . மங்கல வாழ்த்து வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு வாழிய அகில உலகமும் நாமும் வாழிய! வாழிய!! வாழிய வே!!! வாழிய செங்கதிர் வாழ்கநல் வளர்மதி வாழிய மாமழை வாழ்கநல் பயிர்த்தொழில் வாழிய கைத்தொழில் வாழ்கநல் விசைத்தொழில் வாழிய! வாழிய !! வாழியவே!!! வாழிய ஆவினம் வாழ்கநல் எழில்வனம் வாழிய அருமறை வாழ்கநல் அருள்நெறி வாழிய சான்றோர் வாழ்கநல் உயர் அறம் வாழிய! வாழிய !! வாழியவே!!! FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.