[]                                                               எழுதுகோலின் ஓவியம் எழுதுகோலின் ஓவியம்     தமிழ் எழுத்துக்களாய்…! தமிழ் எழுத்துக்களாய்…!     “உரிமை - Creative Commons Attribution-ShareAlike 4.0 International License” நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்ப்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.   எழுதுகோலின் ஓவியம் – நூலைப் பற்றி   எம் எழுதுகோலின் ஓவியம் வரையப்பட்டது எப்போழுதிலிருந்து என அணுதினமும் யோசிக்கிறேன். ஓவியங்கள் காகிதத்தில் மட்டுமே, அதன் துவக்க காலம் தேடுதலில் மட்டுமே. அணுதினமுன் நான் காணும் காட்சிகளும், உலகம் மீதான எனது பார்வைகளும் மட்டுமே வெள்ளைக் காகிதங்களில் தீட்டப்பட்டுள்ளன. நான் தீட்டிய ஓவியங்கள் அனைத்தையும் உங்கள் கனிவான பார்வைக்கு முன்வைக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை முழுமையாய் பார்த்துவிடுங்கள், ஏனெனில் இதன் ஆக்கம் எனக்கு மட்டுமே உரியதல்ல…! காகிதங்கள் தந்த மரங்களுக்கும்; எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்; மொழி தந்த தமிழுக்கும்; கருத்துக்கள் தந்த சமுகத்திற்கும்; ஊக்கங்கள் தந்த நண்பர்களுக்கும்; படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்; பிழைகள் திருத்தி தந்த கவிஞருக்கும்; உரித்தானது எனது ஓவியத்தின் வெற்றி…..!!   பிழைகளும், குறைகளும் இருப்பின் என்னிடம் கொடுத்துவிடுங்கள்; அதற்கு நானே முழுப்பொறுப்பு….! என் எழுதுகோலின் ஓவியங்கள் உங்கள் இதய அறையில் என்றும் அலங்கரிக்கும்   நம்பிக்கையுடன் நவீன் ராஜ் தங்கவேல் எழுதுகோலின் ஓவியம் – ஆசிரியர் பற்றி   நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது இரண்டாவது புத்தகம். எனது முதல் புத்தகம் “வகுப்பறைச் சாரல்கள்” என்னும் நூலுக்கு உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது இரண்டாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.   வகுப்பறைச் சாரல்கள் – http://freetamilebooks.com/ebooks/vagupparai-saralgal/   கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.   எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA   என்னை தொடர்பு கொள்ள – 8148266328 மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com             சமர்ப்பணம்   அன்பின் உருவான அன்னைக்கும்; அறிவின் உருவான தந்தைக்கும்; ஆற்றலின் உருவான ஆசானுக்கும்; நம்பிக்கையின் உருவான நண்பர்களுக்கும்;                              இத்தொகுப்பினை அன்பினால் சமர்ப்பிக்கிறேன்   அன்னையின் சிறப்புகள்   எம் தமிழன்னையின் சிறப்புகளை எடுத்துரைக்க… எழுத விளைகிறேன் எண்ணற்ற       கவி வரிகளை….! எம் தாய் மொழியாம் தமிழென்னும்       அமுத மொழி கொண்டு…..! எனினும் முடியவில்லை – அவளைக்       கொண்டு அவளின் சிறப்புகளை எடுத்துரைக்க…..! எம் பிறவி முடியும் வரை       பிரயத்தளிப்பேன் என்றாவது ஒரு நாள்       எடுத்துரைப்பேன்…..!   மண் வாசம் சாய்ங்கல வேளையில உப்பரிகையில் நானும் நிக்க இராத்திரிக்கு விடுதியில என்ன சோறுன்னு யோசிக்க – என் மனசு மட்டும் போகுதும்மா நான் பொறந்த மண்ணத்தேடி…!   எங்கம்மா ஆக்கி வைச்ச சோறும் காய் கொழம்பும் என் தங்க சுட்டு வைச்ச தோசையும் சாப்பாத்தியும் நல்லா இருக்குனு சொல்ல தோனுணது இல்ல அப்போ…!   குடும்பத்த தோளில் சுமக்க பொறந்த மண்ண விட்டுடு பொழப்பு தேடி வந்தவன் நான் கையிலயும் காசு இருக்கு எதிருலயும் கடை இருக்கு விடுதியிலும் சோறு இருக்கு – ஆனாலும்   கோடி கணக்குல கொடுத்தாலும் எங்கம்மா கைருசியும் என் தங்க பாசமும் இங்கு சத்தியமா கிடைக்காது   இந்த தருணத்துல நான் மட்டும் அங்கிருந்தா சத்தியமா சொல்லிடுவேன் நீ வடிச்ச சோறு ரொம்ப நல்ல இருக்குதுனு……!   வந்துவிடாதே…!   என்னவள் யார் என்று அறிய       அணுதினமும் தேடுகிறேன் – இவ்வுலகில் சட்டென்று வந்துவிடாதே – என் முன்       நானே உன்னவள் என்று உன்னை தேடுவதிலேயே – என்       கற்பனையும் ஆனந்தமும் அடங்கியுள்ளது…..!!   இலட்சியப் பாதையில்   தோல்வி என்னும் வார்த்தையை அறியாதவன் நான் – என் அன்னையின் கருவறையில் இருந்தவரை…..!   சோகம் என்னும் வார்த்தையை அறியாதவன் நான் – என் பள்ளிச் சாலையில் திரிந்தவரை……!   பயம் என்னும் வார்த்தையை அறியாதவன் நான் – என் கல்லூரிச் சாரலில் நனைந்தவரை……!   எல்லாம் அறியத்துவங்கினேன் – என் வாழ்வின் வரவேற்பறையில் இருந்தே;   தோல்விகளால் தோற்றபோதும் சோகத்தால் மூழ்கியபோதும் பயத்தால் திணறிய போதும்   இலட்சியம் என்னும் வீரவாள் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறேன் – என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் நிச்சயம் எட்டிவிடுவேன் வெற்றியின் மகுடத்தை……!!!   தோல்வியின் பரிசு   தோல்விகளை சந்தித்து சந்தித்து தோல்விக்கே அழுத்துவிட்டது போலும்   என் வாழ்வில்   அதனால் தான் என்னவோ வெற்றியை தந்துவிட்டு போகிறதோ……!!!   மாற்றுத் திறனாளிகள்   எம் பாரதத்தில் அணுதினமும் ஆயிரம்       மனித உயிரிகள் பிறக்க, அவ்வுயிர்களுள் ஒன்றோ இரண்டோ       மாற்றுத் திறனோடு இருக்க, இறைவனே நேராய் வருகிறான் – தம் தோள்       பிடித்து இவ்வையகத்தில் நடக்க வைக்க….!   அறிவியலும் மருத்துவமும் ஒன்றாய் கைகோர்த்து,       என்னற்ற வினோதங்கள் புரிந்திடினும், ஏனோ இன்னும் முழுமையாய் தடுக்க முடியவில்லை,       மாற்றுத்திறனோடு பிறக்கும் உங்கள்       மரபுத்திரியை கருவிலேயே மாற்றியமைக்க…! அக்காரணம் தேடினால் – நீங்கள்       கடவுளின் செல்லப் பிள்ளைகளாம்….!   உள்ளத்தில் உறுதியும் உடலில் ஊக்கமும்       குறையாத உயிர்கள் நீங்கள்; உங்களை என்றும் வழிமொழியும்       உடன் பிறப்புகள் நாங்கள்….!!   இறைவன் ஏனோ எங்களுக்கு வாய்ப்பு       மட்டுமே தருகிறான்; ஆனால் உங்களுக்கு கூடவே பயணிக்கிறான்       வெற்றியின் ஸ்பரிசத்தை எட்டும் வரை…..!   அன்பு மாறாமல் தோள் கொடுக்கும் தோழமைகளாய்       என்றும் தம்முடன் தொடர்வோம் என்றும் தோல்வி என்னும் நிழல்       தம் மீது படாமல் இருக்க…..!        ஒன்றுபடுவோம்…..! அகிலத்தை வென்றுகாட்டுவோம்…..!!   மறைத்த காதல்   மறைக்கதான் நினைக்கிறேன்       உன்மீது கொண்ட காதலை ஏனோ உன் கண்களை கண்டவுடன்       மறந்துவிடுகிறேன் மறைத்த காதலை…..!!   கவிச் சிற்பி   அழகிய பேருந்துப் பயணத்தில் ஓர் இனிய சன்னலோரப் பயணம் புதைந்த நினைவுகள் அனைத்தும் பூக்களாய் மேலெழும்ப கண்ணீர் சாரல் கொண்டு நனைக்கிறேன் என் நினைவுகளின் தோட்டத்தை…..!   அத்தோட்டத்தின் பூக்களுக்கு மத்தியில் ஒரு சிலை பாதியாய் நின்றிருக்க காரணம் அறிய நெருங்கினேன் அத்தருணம் தான் தெரிந்தது அதன் வரலாறு…..!   “எட்டா உயரத்தில் வீற்றிருக்கும் தமிழன்னையின் உதவியோடு எட்டாம் வகுப்பில் எழுதிய முதல் கவிகளிலிருந்தே தொடங்கிவிட்டனவாம் அச்சிலையின் ஆக்கம் – எனினும் இன்று வரை முடியவில்லை” என்று……!   அக்கணமே எடுத்தேன் ஒரு முடிவினை என் ஜீவன் இப்புவி நீங்கும்முன் முடிப்பேன் அச்சிலையினை – சமர்பிப்பேன் எம் தமிழன்னையின் பாதத்தில்….             அவளின் கவி உருவை……!!!   நெடும் பயணம்   அன்பெனும் கவசம் அணிந்து அறிவெனும் ஆயுதம் ஏந்தி அனுதினமும் முன்னேறுகிறேன் – வாழ்வில் அனுபவம் என்னும் ஆசிகளோடும் அறிவுரைகள் என்னும் போதனைகளை கொண்டும் அறவழியில் நடந்த ஆன்றோர் துணையோடும் அமைதியாய் பயணிக்கிறேன் - என் இலக்கை நோக்கி……!!!   சந்திப்பில்   அழகே, சந்திப்பில் சந்தித்ததும் சிந்திக்க மறந்தேனோ – அறியேன் சந்தித்ததை சிந்திக்கும் வேளையில் – மீண்டும் சந்திக்க சிந்தை ஏங்குகிறது; சந்திக்க கண்கள் தேடுகிறது; மீண்டும் கிடைக்குமா சந்தித்த சந்திப்பில்       உன்னுடனான ஓர் அழகிய சந்திப்பு….!!!   தற்போதய தலைவனாய் நான் இருந்தால்   தரணியை ஆண்ட தமிழனின் தலைவனாய்; தமிழனால்; தமிழனுக்காக; தமிழனாய் பொறுப்பேற்றால்…. “அவனின் அபயக்குரல் அவன் இதழ் விட்டு வெளிவரும் முன் நிச்சயம் அழித்திடுவேன் – அவனின் இன்னலை” என்று உறுதிமொழிந்து அவன் ஆணையை சிரமேற்கொண்டு பணியாற்ற பொறுப்பினை ஏற்பேன்……!!   முதல் தோன்றிய மூத்த தொழிலாம் ‘விவசாயம்’ அதனை போற்றிடும் வகையில் விதைத்தவனே விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை வழங்கி இடைத்தரகரில்லா சந்தையை உருவாக்கி வேளாண் பெருங்குடி மக்கள் நலமாய் வாழும் வாழ்விற்கு வித்திடுவேன்……!   விவசாயத்தின் உறுதுணையாம் கால்நடைகள்; அவற்றில் நாட்டு இன உயிரினங்களை போற்றிக் காத்திடும் வகையில் அவற்றை காக்கும் இயக்கங்களை வலுப்படுத்தி இனப் பெருக்கம் செய்வித்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட கால்நடைகளை முற்றிலுமாய் நீக்கி கால்நடை புரட்சிக்கு வித்திட்டு வேளாண்மையை காக்கும் முயற்சியில் முற்படுவேன்……!   விவசாயத்தின் ஆதாரம் நீர் நிலைகள்; எம் பரந்த தேசத்தின் அழிந்த, அழிந்துக்கொண்டிருக்கின்ற, அழியப்போகும் அனைத்து நீர் நிலைகளையும் கண்டறிந்து; ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழிச் சாலைகளையும் இயற்கை, செயற்கை நீர் நிலைகளையும் உருவாக்கி புணரமைத்து, தூர்வாரி தடுப்பணைகளையும், அணைகளையும் கட்டி வீணாய் ஆழியில் கலக்கும் நீரையும் தடுத்து விளைநிலங்கள் செழிக்கவும், பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மாற்றியமைத்து எம் தேசத்தை நீர் பஞ்சத்திலிருந்து காத்திடுவேன் என்று உறுதியளிக்கிறேன்……!   பெரு, சிறு, குறு அணைகள் மூலம் நீர் வழி மின்சாரம் எடுக்கவும்; நிலக்கரியின் உதவியோடு அனல்வழி மின்சாரமும்; சூரியத்தகடுகளைக் கொண்டு சூரியவழி மின்சாரமும்; இராட்சச காற்றாலை மூலம் காற்றின் மின்சாரமும்; மேலும், அனுதினமும் என் தேசத்தில் பெறப்படும் திடக்கழிவில் அறிவியல் புகுத்தி வேதியல் காற்றின் மூலம் எரிவாயு மற்றும் மின்சாரமும் எடுக்க வழிவகை செய்வேன்……!   மக்களின் மானம் காக்கும் நெசவுத்தொழிலை காத்திட மாவட்டம் தோறும் அரசின் நெசவாளர் பூங்கா அமைத்து உள்ளாடை முதல் பட்டாடை வரை – பட்டியலிட்டு உரியவிலையில் எளியோருக்கும் கிடைக்கும் வகையில் பிரயத்தளிப்பேன்……!   பாமரன் முதல் பட்டதாரி வரை வேலையில்லா இளைஞர்களுக்கு தகுதியை அடிப்படையாய் கொண்டு என் தேசத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து அரசு பணீயிடங்களையும் நிரப்பி அரசு இயந்திரம் தொய்வின்றி செயல்பட விரைந்து முயற்சிகள் எடுப்பேன்……!   உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கில் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யா பல தொழில்சாலைகளை பொதுத்துறையில் உருவாக்கி இளைஞர்களின் வேலையையும் உள்நாட்டு உற்பத்தியையும் சமரசம் செய்வேன்……!   சாதியை ஒழிக்க முதற்படியாய் பள்ளிகளின் படிவத்தில் சாதியை முற்றிலுமாய் நீக்கவும்; உயர்கல்வியில் திறமையின் அடிப்படையிலன்றி சாதிய அடிப்படையில் இட ஒதிக்கீட்டை நீக்கவும் கல்வி உதவித் தொகையை சாதியினால் அல்லாமல் பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்க அதிரடியாய் உத்தரவிடுவேன்…….!   காடுகள் நம் தேசத்தின் சொத்துக்கள்; நம் முன்னோர்களின் ஆன்மாக்கள்; அவற்றை அழிக்கும் நோக்கில் எவரேனும் செயல்பட்டாலும் பொது சொத்தை சேதப்படுத்தினாலும் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்துவேன்……!   கிராமங்கள் நமது நாட்டின் முதுகெழும்பு என்னும் மகாத்மாவின் வாக்குப்படி நகருக்கு இணையான வளர்ச்சியை கிராமமும் பெற்றிட அடித்தளம் அமைப்பேன்……!   குடி குடியை கெடுக்கும் என்பதை அறிந்து என் மக்களை அதில் செலுத்தமாட்டேன்; மேலும், என் ஆளுமைக்குட்பட்ட எல்லைக்குள் மது விற்கவும், வாங்கவும், உற்பத்தி செய்யவும் முழுமையாய் தடைகள் விதிப்பேன்……!   என் நாட்டின், மத்திய மாநில அரசுகளின் நல்லுறவை மேம்படுத்தும் விதத்தில் நடுவணரசு கொண்டுவரும் திட்டத்தையும் நமது அரசின் திட்டங்களையும் சட்டமன்றம் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் விவாதித்து பெரும்பாண்மை மக்களின் முடிவையே அரசின் நிலையாய் எடுப்பேன்……!   எம் தேசத்து மக்களில் ஒருவன் பிற தேசத்து எல்லைக்குள் இன்னல் பட்டால் – அதை எனது இன்னலாய் பாவித்து நியாயம் கிட்டும் வரை போராடி நியாயமும் பெற்றுத்தருவேன்……!   அன்றாட சமையல் பொருட்கள் தரமாய், உரிய விலையில் நியாய விலைக்கடைகளில் கிடைக்க வழிவகை செய்வேன்……!   நானோ, எனக்கு கீழ் இருக்கும் அமைச்சர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ, அரசு உயர், நடு, கடை நிலை உழியர்களோ இலஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை செய்த்தாய் அறிந்தால் மக்கள் எங்களை சட்டத்தின் முன்நிறுத்த முழு அனுமதி தருகிறேன்……!   மேற்கூறியவற்றை அனைத்தும் எனது மாநிலத்தின் உடனடி தேவைகளாய் பாவித்து அதிவிரைவாய் நடவடிக்கை எடுக்காவிட்டால் பதவி விலகவும் தயங்கமாட்டேன்……! - என்று எம் மண்ணின் மீது உறுதிமொழிகிறேன்……!!!   வாழ்க தமிழ்…..!       வாழ்க தமிழகம்……!!      வளர்க தமிழனின் புகழ்……!!!   மழலை மொழி   இயந்திர உலகம் இரக்கமேதுமின்றி சூழல்கிறது இரும்பு இருதயம் கொண்டவர்களைக் கொண்டு….!   அதில் நானும் ஒருவனாய் மலைப் பாறைகளையும் இருதயமாய்க் கொண்டு.....!   உனது குரல் மட்டும் எம் அசைவுகளை நிறுத்திவிடுகிறது; என் இருதயத்தை நொறுக்கிவிடுகிறது; என்னையே உருக்கி விடுகிறது….!   என்ன இது மாயம்… தேவனிடம் வரமேதும் வாங்கிவந்தாயோ….! முற்பிறவியில் பயிற்சியேதும் பெற்றுவந்தாயோ…..! இல்லை, கருவில் கற்றுத்தேர்ந்து வந்தாயோ….!   பதில் சொல்லிவிடு – மழலையே; உன் வார்த்தைகள் முளைக்கா மொழிகொண்டு….!   உன் குரல் கேட்கும் தருணந்தனில் எந்தன் நினைவுகள் யாவும் பறக்கிறது; என் செவ்வாய் மட்டும் விரிகிறது; உந்தன் மழலை மொழியை கேட்கையிலே, என் இருதயமும் பூவாய் பூக்கிறது….!!!   தீப ஒளித்திருநாள்   இறைவனிடம் வேண்டினேன் ஒரு நாள் நிலவிலிருந்து பூமியை இரசிக்க….. அவனும் அருளினான் தீப ஒளித்திருநாள் இரவன்று; பிரபஞ்ச பேரழகில் நானும் ஒரு துகளாய் நிலவில் பறந்தபடி பரவ விட்டேன் எனது பார்வையை பூமியின் மீது……   பாரத தேசத்தை கண்களும் தேடின கண்டேன் அப்புனித தேசத்தை காண்பதற்கரிய காட்சிதான் அது ஒளிஒலியாய் எங்கும் திருவிழாக் கோலம் ஒளிகொண்டே யூகிக்க முடிந்தது எந்தன் தேசத்தின் எல்லைகளை….   மக்களின் ஆனந்தம் பாரதத்தாயின் வதனத்தில் பிரதிபளிக்க… அத்தருணம் ஓர் அழுகுரல் பூமியில் கேட்க தேடினேன் யார் என் அறிய; அதிர்ந்தேன் யார் என்பதை அறிந்தவுடன்....   பல்லாயிரம் கோடி ஆண்டுகளாய் வாழும் எம் அன்னை; நம் அன்னை பூமாதேவியென   காரணம் அறிய பாதத்தில் சரணடைந்தேன் பிரபஞ்சத்தில் பறந்த படி அன்பாய் அரவணைத்து அவளும் கூறினால் தீப ஒளித்திருநாள் தருணத்தின் வளி மண்டல மாசு பற்றி…..!   வாய்திறவ முடியாமல் திகைத்தேன் என் நிலை உணர்ந்து – கவலை வேண்டாம் இந்நிலையும் மாறும் என்று அன்னையும் கூற அவளின் ஆசி பெற்றேன்…..!   வீடு திரும்ப இறைவனிடம் வேண்ட அடுத்த நொடி என் வீட்டின் வாயிலில் வீடு புகும்முன் எடுத்தேன் ஒரு முடிவினை வளி மண்டலத்தை முடிந்தவரைக் காக்க……!!!   விழியின் நாணம் [இக்கவி வரிகள் ஒரு பெண்ணின் வார்த்தைகள்; பரிசம் போட்ட பின் நெடு நாள் கழித்து வரும் மன்னவனுக்கான தூது செய்திகள்]   “நாணம்” இதை வார்த்தைகளாய் மட்டுமே அறிந்தவள் – நான் ஏனோ, உங்கள் விழியின் ஸ்பரிசம் தென்றலாய் தொட்டதும் மின்னலாய் பூத்தது எந்தன் முகத்தில் – நாணத்தின் முகவரி; பரிசம் போட்டதும் தொலைத்துவிட்டேன் எனது தூக்கங்களை – தமது நினைவுகளால்; இருந்தும் கனவுகள் – கவிதைகளாய்; இத்தனை திங்களாய், எம் விழி தம் வழி நோக்கி தவித்ததை அறிவீரோ…? அறிந்து தான் தமது விழியின் ஸ்பரிசம் கொண்டு எந்தன் நாணத்தின் முகவரியை மீண்டும் காண வந்திரோ…? இனியும் இடைவெளிகள் வேண்டாம் – மன்னவா விழியின் ஸ்பரிசம் விடுத்து மொழியின் ஸ்பரிசம் கொள்ளுங்கள்….! நிகழுமா இன்றேனும் …..!!!   ஏறு தழுவல்   தொழுவம் என்னும் அரண்மனையில் என்னோடு அணுதினமும் விளையாடும்       எம் சோதரன் – காளை…..!   நானும் வளர்கிறேன்; அவனும் வளர்கிறான் - ஒரே இடத்தில்…..! அவன் திமில் பிடிக்கும் திமிர்       எனக்கு மட்டுமே என்று கர்வம் கொள்ள; அவனோ, பொங்கல் வைத்து படையலிட்டு வாடிவாசல் வந்துபார் – எவனுக்கு திமிர்       என்று… புன்முறுவலாய் சொல்ல….!!   மீசையை முறுக்கியபடி – நானும்       வந்து நிற்கிறேன் வாடிவாசலில் அவனை எதிர்(பார்)த்தபடி……!   விண்ணுக்கும் மண்ணுக்குமாய் துள்ளிக்குதித்து சீறிப்பாய்கிறான் எவனுக்கும் அடங்காமல்….!   நானும் பிரயத்தளித்து அவன் திமிலை தழுவினேன்       அவனும் அடங்கினான் தழுவியவன் – வீரத்தை உலகுக்கே எடுத்துரைத்த       தமிழன் என்பதால்….!! அம்புலிக்கே வெட்கமா….?   கார் இருளாய் நிறைந்திருக்கும் இரவொன்றில் அம்புலியும் அழகாய் வருகிறான்;   அவன் வரும் வேலையில் நானும் காத்திருக்கிறேன் உன் தரிசனம் காண……!   ஊழைத் தென்றல் ஊமையாய் வீச நீயும் வருகிறாய் காதல் தென்றல் வீச……!!   ஏனோ நீ வந்தவுடன் – அம்புலியும் அழகாய் மறைகிறான் மேகங்களில்; காரணம் அறிய வேண்டிக் கேட்டேன் அவனும் சொன்னான் “சூரியன் வந்துவிட்டான் நான் செல்கிறேன்” என்று….       உன் முகத்தைக் கண்டவுடன்……!!!   ஏவுகனை நாயகனே.....!   அனுவினை தகர்த்து அண்டத்தை நடுங்கவைத்தாய் அன்னையின் மகுடத்தில் வைரத்தை பதித்தாய்   அன்பின் சக்தி கொண்டு அன்னையின் புகழ் ஏற்றிட வலிமையான மாணவர் படைகளை ஒன்றிணைத்தாய்   'கனவு காண்' என்று கூறி - அது நனவாகும் வரை உழைத்திட ஆணைகளும் இட்டாய்.....!   ஏனோ உன் கனவு நிறைவேறும் முன்னே உன் படைகளை தவிக்கவிட்டுச் சென்றாய்.....!   உலகத்தின் மத்தியில் நம் இந்தியத் தாயை உயர்த்திவிட்டு, நீ தலை சாய்ந்து உறங்குகிறாயோ.....!   தனையனின் நிலைகண்டு வானை நோக்கிய பார்வையை விலக்கி சற்றே உன்னை தழுவிகிறாள் மூவண்ணக் கொடிகளால்  - உன் மீது   சற்றே எழுந்து பார் அவளின் பாசத்தை.....!!!                                        இவண்                             உன் படைகளிருந்து ஒருவன்   அடுத்த தலைமுறைக்கான கல்வி   வெட்கப்பட வேண்டிய விடயம்….! எம் தேசத்தில் மாபெரும் வியாபாரமாய் கல்வி இருப்பது…..!   இது அரசின் பிழையா; இல்லை மக்களின் பிழையா…..? கல்வியில் அரசியலா; இல்லை கல்வியே அரசியலா….?   நமது நாட்டின் மேதைகளை மறைத்து அயல் நாட்டு தத்துவங்களை கற்றுக்கொடுப்பது எதற்கு…..?   கல்வியின் தரத்தை மேம்படுத்தவா…..? இல்லை நமது நாட்டின் தரத்தை குறைக்கவா……?   எத்தனை கேள்விகள் கேட்டிடினும் பதில் ஒன்றே இதுவும் சர்வதேச அரசியல் தான்……!   எம் அடுத்த தலைமுறைக்கு தேவையில்லை உங்களின் தரமான கல்வி…..!   போதும் மறைத்த எம் இனத்தின் சாதனைகள்; சுக்கு நூறாகும் உங்களின் தரமான கல்வி……!   எடுத்துக் கூறுகிறேன் – கேளுங்கள் எம் தரமற்ற கல்வியின் சில தரத்தை….!   “பதினாறாம் நூற்றாண்டில் தொலைநோக்கியை கண்டுபிடித்தான் கலிலியோ” என்கிறது அறிவியல்…. எம் சங்க இலக்கியத்தில் கிமுவிலேயே மூதாட்டி ஓளவையதை கண்டறிந்தால் பனித்துளியின் தொலைநோக்கியை……! மாற்றியமைத்ததா அறிவியல்…….!!   உலகில் முதல் தோன்றிய நாகரிகமாய் எடுத்துரைக்கின்றது வரலாறு – சிந்து சமவெளியை; எம் கீழடியில், அதற்கும் முற்பட்ட காலத்து நாகரிகம் இருந்ததற்கு சான்றுள்ளது…….! மாற்றியமைத்துக் கொள்ளுமா வரலாறு……!!   அண்டத்தையே தம் ஆளுமைக்குள் கொண்டு வந்து தோல்வியை அறியாதவனாய் வாழ்ந்து மறைந்த மாவீரர் அலச்சாண்டரை போற்றி புகழ்கின்றது உலகம்…..!   ஏனோ, எம் நாட்டு சேரர்களும், சோழர்களும், பாண்டியர்களும் உலகையே தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை மறந்துவிட்டதோ உலகம்…….!!   சிதைந்திருந்த பாரதத்தை ஒருங்கிணைத்து பார் போற்றும் நல்லாட்சி புரிந்த நாயகர்கள் அசோகருக்கும், அக்பருக்கும் கிடைத்த மகா கௌரவம்   ஏன் இராஜ ராஜனுக்கும், இராஜேந்திரனுக்கும் வழங்கப்படவில்லை என்று விளக்கமுடியுமோ…..!   இதுமட்டுமன்றி, சகல கலைகளிலும்; மருத்துவத்திலும்; நகர் மேலாண்மையிலும்; சோதிட சாத்திரத்திலும்; போர்களிலும்; அளப்பரியா சாதனைகள் புரிந்தவர்கள் எம் தேசத்து மறவர்கள்…..!   எம் அடுத்த தலைமுறைக்கு எடுத்தளிக்க நினைக்கிறேன் என் மண்ணின் மைந்தர்களின் சகல சாதனைகளையும்   இதுவே அவர்களுக்கு நான் அளிக்கும் மாபெரும் சொத்து……!!!   எவன் கடவுள்   கடவுள் இல்லை என்றுரைக்க – நான் நாத்திகனும் அல்ல; கடவுள் உண்டு என்றுரைக்க – நான் ஆத்திகனும் அல்ல; கடவுள் எவன் என தேடும் – அற்ப மனிதன் நான்….!   பட்டாடை உடுத்தி பார்க்கடலில் துயில் கொள்வானோ….! மேலாடை இன்றி – மேரு மலையில் வீட்டிருப்பானோ….!   கையில் ஆயுதங்கள் ஏந்தி சமர் புரிய காத்திருப்பானோ……! மகரந்த மலர்கள் கொண்டு சமரசம் புரிய விழித்திருப்பானோ….!   சிலுவையில் அறையப்பட்டு – இரத்தம் சிந்த இரட்சிக்க வந்திருப்பானோ....! உருவமேதுமின்றி பிறை வடிவாய் காட்சிதந்து வழிநடத்துவானோ…..!   இயற்கையின் அழகில் உறைந்திருப்பானோ…..! விஞ்ஞான அறிவைக் கொண்டு இயற்கையை உறைய வைப்பானோ…..!   அண்டம் முழுதும் நிறைந்திருப்பானோ…..! அண்டத்தையே தகர்க்கும் அணுவாய் வந்திருப்பானோ…..!   எண்ணற்ற இடங்களில் எண்ணி எண்ணி தேடுகிறேன்   எவன் கடவுள் என…………………………….   வாழ்வில், எந்நிலையில் இருப்பினும் தன்நிலை மாறாது, தன்நிறைவாய் இன்புற்று, பிற உயிர்களையும் மதித்து, நல்லோர் காக்க முன் நின்று, எளியோர் காக்க கரம் தந்து, வாக்கினை காக்க சிரம் தந்து, விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே முடித்து, வீடுபேறடைய காத்திருப்பவன் எவனோ…..   அவரே கடவுள்……!!!     வேண்டாத யுத்தம்   என் கண்கள் மட்டும் மௌனமாய் இருந்திருந்தால் மாபெரும் யுத்தத்தையே தவிர்த்திருக்கலாம் - உன் கண்களோடு……!!!     யார் அவள்   சூரியனும் கண்ணுறங்கும் நேரம் தொடங்குகிறேன் ஓர் இனிய பயணம்; கொங்கு மண்டலத்தின் மருத நிலம் நோக்கி…..!   தென்றலும் இனிமையாய் கானம் பாட நானும் அமைதியாய் இரசிக்கிறேன்…..!   அத்தருணத்தில் அவளும் வருகிறாள் எம்முடனே பயணிக்க….! வெண்பனியின் நிறம் கொண்டு முத்துப் போல் புன்னகைக்கிறாள்; எம் விழிகளைக் கண்டவுடன்…..!   எம் அருகில் இடமொதிக்கி – அவள் அமர நானும் பணிக்கிறேன்; நாணத்தை முகவரியாக்கி அவளும் அழகாய் முகத்தினை மறைக்கிறாள் – வெண்திரைகொண்டு……!!   அவளின் ஒளித்திரை என் விழித்திரையில் எதிரொழிக்க மீண்டும் பணிக்கிறேன் என் அருகில் அமர….   “இவ்விடம் விட்டு – யான் அவ்விடம் வருகையில் இவ்விடம் இருந்து உன்னை இரசிப்பவள் யார்…..?” என அழகாய் உரைக்கிறாள்…..!   வட்டமென்னும் முகத்திரை கொண்டு ஞாயிறின் பிரகாசத்தை பிரதிபளிக்கின்றாயோ…! என நானும் வினவ…. மீண்டும் அழகாய் முகத்தினை மறைக்கிறாள் வெண்திரைகொண்டு……!   எமது இரசனை முடிவதற்குள் வந்தடைந்தேன் மருத நிலத்திற்கு; இறங்கும் தருவாயில், மீண்டும் வாய்பொன்று கிட்டுமோ உன்னை சந்திக்க – என வினவ அவளும் புன்னகைத்து, “சரியாய் ஒரு திங்கள் கழித்து வா” என்றால்….!!   நானும் குழப்பத்தில், அவளது பெயர் யாதென கேட்க “மதி” யவள் என்றாள்……!!!     கவிதைகளின் பிறப்பு   பெண்ணே நீ சிரிப்பதால் முத்துக்கள் மட்டுமே பிறக்கின்றது       என்று நினைத்தேன்…..!   உன் சிரிப்பை நேரில் கண்டபோதுதான் கவிதைகளும் பிறக்கின்றது       என்று உணர்ந்தேன்……!!       அரவணைப்பு   தோல்விகள் எனது தோழர்கள்; வெற்றிகள் எனது எதிரிகள்; எதிரிகளையும் அரவணைக்கும் அற்புதக் கலையை அறிந்தவன் நான்….!   துரோகிகள் எம்மருகில் நெருங்காதவரையில்……!!!   என் வரிகள்   வெள்ளைக் காகிதங்கள் முழுதும்       முத்தங்கள்……! எழுதுகோலில் மை நிரப்பி – எம்       இதலோடு உரசும் தருணத்தில்……!!     தீப ஒளித்திருநாள் வாழ்த்து   அண்டத்தின் இருளை போக்கி இரவையும் பகலாய் மாற்றும் அற்புதம் – தீபாவளி என்னையும் எம்மண்ணையும் சார்ந்த சொந்தங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க நினைத்தேன்; இருந்தும் சில சந்தேகங்கள்,   ‘தீபாவளி’ தமிழரின் பண்பாடு சார்ந்த திருவிழாவா? தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ குறிப்பிடபட்டுள்ளனவா? பண்டைய தமிழர்கள் இத்திருவிழாவை வழிவழியாய் கடைபிடித்தனரா? கதைகளாய் கூறப்பட்டவைகள் உண்மையென்று அறிவியலோ, அகழ்வாய்வோ நிருபித்துள்ளனவா?   இன்னும் பல கேள்விகள் என்னுள்……   எத்தனை கேள்விகள் இருந்திடினும் நானும் கொண்டாடுகிறேன் இத்திருவிழாவை…...! கலாசரத்தை பேணிக்காக்க அல்ல… எம் மக்களின் பொருளாதாரத்தை போற்றிக்காக்க…!   “தீபாவளி” இவ்வார்த்தையின் பின்இயங்கும் தொழிற் பட்டறைகள் ஏராளம்…...! கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ண வண்ண வெடிகளை உருவாக்கும் பட்டாசு ஆலைகள் ஒருபுறம்….!   உடுத்தும் உடையில் புதுமை புகுத்தி நவநாகரிகம் என்னும் பெயரில் உருவாக்கும் நெசவு ஆலைகள் ஒருபுறம்…...!   நாவிற்கு சுவையளிக்கும் இனிப்புகளின் விதங்களில் செய்முறை மாறுதல் உருவாக்கும் உணவகங்கள் ஒருபுறம்….!   மேற்கண்ட தொழிற் பட்டரைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பொருளாதாரமும் இத்திருநாளில் மறைந்துள்ளது….!   கொள்கையின் அடிப்படையில் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் போற்றுபவன் நான் – எனினும் மனிதநேயம் என்னும் சொல்லை முன்நிறுத்தி நானும் ஏற்கிறேன் – தீப ஒளித்திருநாளை   என்னையும் எம்மண்ணையும் என் தேசத்தையும் சார்ந்தா அனைத்து சொந்தங்களுக்கும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்….!!! மழை   மழையே நீ, இயற்க்கையின் கூற்றுபடி உயிர்களின் பரிசா….? இல்லை அறிவியலின் கூற்றுபடி வேதியலின் சமன்பாடா…..?   உயிர்களின் பரிசாய் உன்னை போற்றுமிடத்தில் எம் சேயாய் தவழ்ந்து விளையாட மறுப்பதேனோ…..? வேதியலின் சமன்பாடாய் கருதுமிடத்தில் அவர்தம் தாயாய் உருவெடுத்து எடுத்துரைப்பதேனோ…..?   நீயும் என்செய்வாய், உன் இடந்தனில் நானும் குடியேறினால் நீயும் என்செய்வாய்….!   எம்வழிகளை மறித்து அறப்போர் செய்கிறாய்…! என் இடம்தனை சூழ்ந்து எம்மை மூழ்கடிக்கிறாய்….!   கொற்றவன் உயிர்களை மதித்திருந்தால் நீயும் போர்புரிய அவசியமில்லை நானும் உந்தன் வரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை….!   ஈறாறு திங்களும், உன் இடம் உன்னிடமே இருந்திருக்கும்; என் இடம் என்னிடமே இருந்திருக்கும் – என்றும் பசுமையாய்….!   தவறு இழைத்தவர்கள் நீயும் எம் கொற்றவனும் அல்ல நானும் எம்முன்னோருமே…..! தகுதியுடைய தலைவனை தகுதியிழக்க செய்தது எம்முன்னோரின் மாபெரும் தவறு….! தகுதியுடைய தலைவனை தேர்ந்தெடுக்க தவறியது எம் தலைமுறையின் மாபெரும் தவறு….!   இவ்விரண்டில் ஒன்றேனும் திருத்தப்பட்டிருந்தால் நீயும் போர்புரிய அவசியமில்லை நானும் உனக்காக் காத்திருக்க வேண்டியதில்லை பங்காளிச் சண்டைகளும் நிகழ்ந்திருக்க தேவையுமில்லை….!   தவறுகள் நிரந்திரமல்ல என்றாவது ஒருநாள் விடியலும் விடியும் அதுவரை காத்திருப்போம் மனிதநேயத்தோடு – எல்லா உயிர்களிடத்திலும்……!!!   விதியா…! விளையாட்டா…!   கார்மேகம் சூழா ஒரு பங்குனி பகலில்…. தொலைதூரம் நோக்கிடும் ஒரு கூரிய பார்வையில்….. அன்பின் மொழிகேட்டு அவள் பக்கம் திரும்புகையில்….. கரம் தோளோடு இணைய தோழனாய் இருந்திருக்கையில்….. விதியின் விளையாட்டாய் கண்ணோடு கண்ணுரசி உறைந்திருக்கையில்….. கள்வி மகள் எம்மிதயத்தை பெயர்த்தே எடுத்துவிட்டால்…..!!!   காத்திருப்பு   பள்ளிச் சாலையில் பறவைகளாய் சிறகடித்து பறந்த தருணம் அது…! அழகிய பொழுதுகளில் நண்பர்களாய் பேசி மகிழ்ந்த தருணம் அது…! சற்றும் எதிர்பார்த்ததில்லை – வாழ்வில் இப்படியொரு தருணத்தில் மீண்டும் இணைவோம் என்று…! அன்றே இவ்வுண்மையை அறிந்திருந்தால் கணப்பொழுதும் தம்மை நீங்காது இருந்திருப்பேன் – தமது இனியவளாய்…! பரவாயில்லை; பிரிவும் காதலில் சுகமானதே…! பிரிவின் சுகமும் சில காலங்களே…! எம் விழி கொண்டு தம் மொழியறிய காத்திருக்கிறேன்;                         வேண்டுதல் நிறைவேருமா…?   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/