[] [உயிருடன்...] உயிருடன்... இரா.சுப்ரமணி http://freetamilebooks.com/ உயிருடன்... இரா.சுப்ரமணி மின்னூல் வெளியீடு : http://freetamilebooks.com/ உரிமம் : CC BY-NC-ND ஆசிரியர் : இரா.சுப்ரமணி அட்டைப்படம் : சார்லஸ் ஏ.பி 1       ------------------------------------------------------------------------  அன்புடன் அம்மாவுக்கு ------------------------------------------------------------------------   உள்ளே - - முன்னுரை - 1. கவிதை - 2. கடவுள் - 3. கண்ட நாள் முதல் - 4. அந்த நாள் - 5. அழகி - 6. நானும் நானும் - 7. நூலகம் - 8. அடையாளம் - 9. ஈர்ப்பு விசை - 10. கலைடாஸ்கோப் - 11. இடி, மின்னல், கொலுசு - 12. விழிகளும், செவிகளும் - 13. இரவில் மழை - 14. எதிர்வீட்டு ஜன்னல் - 15. உயிருடன்... - 16. இறப்பு - 17. தற்கொலை - 18. ஏனோமி - 19. நிலமகள் காதலன் - 20. காரிருள்விடுதூது - 21. சோற்றுப்பருக்கை - 22. கலப்படம் - 23. நீ - 24. பாரதி - 25. யுரேகா - 26. ராசிபலன் - 27. முப்பது நாட்களில் ... - 28. ஒரு துளி மை - 29. வறுமைக்கோடு - 30. சிட்டுக்குருவி - 31. நிழல் தேடல் - 32. சக்வாரோ - 33. வானம் தொலைவில் இல்லை - 34. நீள்வானம் - 35. சாயங்காலம் - 36. வான்மேகம் - 37. இரயிலும் நிலவும் - 38. கால்பிறை - 39. காற்றாடியின் இறக்கைகள் - 40. கட்டற்ற மென்பொருள் - FreeTamilEbooks.com 2 முன்னுரை வலைப்பதிவுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘உயிருடன்…’. ஒரு வட்டத்துக்குள் நில்லாமல், காதல், நட்பு, நம்பிக்கை, மூடநம்பிக்கை, வானம், மேகம், நிலவு, இரவு, மழை … எனப் பல்வேறு பாடுபொருட்களை வகை தொகையில்லாமல் தன்னுள் அடைத்து வைத்திருக்கிறது இத்தொகுப்பு. எழுத்து வாகனத்திற்கு வாசிப்பு எரிபொருள் அவசியம் என்று பற்ற வைக்க, வாசிப்பு என்னை பற்றிக் கொண்டது. எழுத்து, வாசிப்பைத் தொடர்ந்த எழுத்து முயற்சி, புதிய முயற்சிகளுக்காக வாசிப்பு என நீண்ட பயணத்தில், நான் நடை பழகியதன் தொகுப்பு இம்மின்னூல். நன்றி! அன்புடன், இரா.சுப்ரமணி  MANIதன் | https://rsubramani.wordpress.com/ 14 08 2017 1 கவிதை பொய் சொல்வது எனக்குப் பிடிக்காது – ஆனால் எழுதப் பிடிக்கும், கவிதை. 2 கடவுள் நீர் நெருப்பு நல்வாடை நீலவானம் நிலம் நீ நின் நிழல் நான் கடவுள்; நம்பிக்கை தான் கடவுள்.   3 கண்ட நாள் முதல் உன் பெயர், முகவரி, ஊர் … என ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னைக் கண்ட நாள் முதல், தொலைந்து போன என்னை. 4 அந்த நாள் நாட்கள் ஓடிக் கொண்டிருப்பதே, தெரியவில்லை. உன்னைக் கண்ட அந்த நாள் மட்டுமே, எனக்குள் ஓடிக் கொண்டிருப்பதால். 5 அழகி அமாவாசையன்று, மங்கலாய்த் திரியும் விண்மீன்களில், நன்றாகத் தெரியும், ஒளிரும் ஏதோ ஒன்றை, “வெண்ணிலவே!” என்றழைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது, ஆங்காங்கே போட்டிகள் நடத்தி, யார், யாரையோ “உலக அழகி” என்று பட்டங்கள் தந்து கொண்டிருப்பது, அன்பே! அழகியே! நீ இங்கிருக்கும் போது. 6 நானும் நானும் அவன் சொல்வதில் இவனுக்கு விருப்பம் இருக்காது; இவன் சொல்வதில் அவனுக்கு உடன்பாடு இருக்காது. இவற்றிற்கு நேர்மாறாக, எனக்குள் இருக்கும் இருவருக்கும் போராட்டம் இன்றி, நானும் நானும் ஒத்துப்போன ஒரே விசயம், உன் மீது கொண்ட காதல் தான். 7 நூலகம் தினமும் படிக்கின்றேன், உன்னில் ஒரு புத்தகம். அதனால் என்னகம் ஆகி விட்டது நின் நூலகமாய். 8 அடையாளம் நினைவுகள் தான் உயிரின் அடையாளங்கள். உயிரே! நினைவெல்லாம் நிறைந்திருக்கும் நீ, என் அடையாளம்.   9 ஈர்ப்பு விசை நிற்பது, புவி ஈர்ப்பு விசையால். வாழ்வதோ, உன் ஈர்ப்பு விசையால். 10 கலைடாஸ்கோப் அவள் அணியும் வண்ண வண்ண கண்ணாடி வளையல்கள் எனக்குள் எதிரொளித்து வரைகின்றன வண்ண வண்ண கலைடாஸ்கோப் வடிவங்களை.   11 இடி, மின்னல், கொலுசு மின்னலுக்கு முன்னறிவிப்பு, அவள் வருகையை இடித் திசைக்கின்றன வெண்கொலுசுகள்.   12 விழிகளும், செவிகளும் “அன்று முதல் இன்று வரை, அவள் திருக்குரல் கேட்கும் பேறு உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. செவிகளே, நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். சில மாதங்களாய், தரிசனம் கிடைக்காமல், தவித்துக் கொண்டிருக்கின்றோம் நாங்கள்.” – என்று வருத்தத்துடன் கூறின விழிகள் செவிகளிடம், அவன், அவளுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது. 13 இரவில் மழை இரவில் மழை. பிடிக்கவில்லை, அது அவள் காலையில் வாசல் தெளிக்கும் போதும், கோலம் போடும் போதும் தரும் தரிசனத்தைக் கெடுத்து விட்டதால் 🙁 14 எதிர்வீட்டு ஜன்னல் வீதியையும், மடியிலிருந்த ஏட்டையும் மாறி மாறிப் படித்துக் கொண்டிருந்தான், வீட்டின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த அவன். ஒலி, ஒளியுடன் அடைமழை ஆரம்பித்தது. மழையை ரசித்துக் கொண்டிருந்தான் அவன். எதிர்வீட்டு ஜன்னலில், மின்னல் ஒளியில், மின்னும் விழிகள் … காட்சி தந்தாள், அவனது கனவு தேவதை. அவள் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்… மறுநாள் மழை இல்லை, திறந்திருந்தது எதிர்வீட்டு ஜன்னல். திறந்திருந்தது ஜன்னல் மட்டுமல்ல, மின்னல் அவளது இதயக்கதவுகளும் தான். தினமும் காதல்மழை பெய்து கொண்டிருந்தது, இரு வீடுகளின் ஜன்னல்களுக்கிடையே… ‘எப்ப ராசா வந்த?’ அம்மாவின் குரல், அவனது பழைய நினைவுகளைக் கலைத்தது. ‘எதுத்த வீட்டுப்பொண்ணோட குழந்தைக்குப் பேர் வெச்சாங்க. அங்க …’ அதற்கு மேல் அவன் காதுகளில் ஏதும் விழவில்லை. பல படங்களில் பார்த்திருக்கின்றான், கதைகளில் படித்திருக்கின்றான், ‘அவளது குழந்தையின் பெயர், தன் பெயராக இருக்குமோ?’ அவனுக்குள் பொங்கி வரும் ஆவலை அடக்கிக் கொண்டு, ‘என்ன பேரு? தமிழ்ப் பேரா?’ என சாதாரணமாய், கேள்வியைக் கேட்டு விட்டு, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டே, நிமிர்ந்து அமர்ந்தான். ‘குழந்தைக்கு ரெண்டு பேருப்பா,..’… ‘என்னது ரெண்டு பேரா?’ – ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தான், அடுத்த வார்த்தைக்காக… ‘ஒண்ணு, செவகாமி – அவங்க பாட்டி பேரு… இன்னொன்னு …’ அதற்கு மேல் அவன் காதுகளில் எதுவும் விழவில்லை. ஏமாற்றத்துடன் எட்டிப் பார்த்தான், இப்போது அந்த, எதிர்வீட்டு ஜன்னல் மூடியிருந்தது.   15 உயிருடன்... உயிருடன் வாழ்கிறது, என்னுள் புதைக்கப்பட்ட காதல்… 16 இறப்பு இறப்புகள் எல்லாம் அன்றாட நிகழ்வுகளாகத் தெரிந்தன, யாருக்கோ, எங்கேயோ நடந்த போது. இறப்புகள் எல்லாம் இழப்புகளாகத் தெரிந்தன, நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த போது. … தெரிந்த முடிவுகள் தான் என்றாலும், புரியவில்லை, ஏன்? எதற்கு? ??? என்று. 17 தற்கொலை எமனுக்கு மட்டுமின்றி வேறு எவனுக்கும் வேலை கொடுக்க மனமில்லாமல், தானே தன் வாழ்விற்கு வைக்கும் முற்றுப்புள்ளி. 18 ஏனோமி அலறி அழைத்த கைபேசி, அதிர்ச்சியான அந்த செய்தியை என் காதில் போட்டது. தற்கொலை… இது அவனது மூன்றாவது தற்கொலை முயற்சியாம். அழைத்துக் கொண்டே இருந்ததால், இம்முறை இழுத்துச் சென்றிருக்கிறான் காலன், இவனை. ஆனால் எதற்காக? விளைச்சலின்றி மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி அல்லன்; தேர்வுத் தோல்விகளால் வழி தவறிச் சென்ற மாணவன் அல்லன்; கணிப்பொறியாளன் அவன். அழுத்தமில்லாத அலுவல்; நிறைவான ஊதியம். மரணம் தேடிச் செல்லுமளவுக்கு, காரணங்கள் அவனுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பின் எதற்காக எடுத்தான் இந்த முடிவை? என் கேள்விகளுக்கான பதில்களை, அவன் எழுதிய கடைசிக் கடிதம் உரக்கப் படித்தது. உயிர்த்தோழனுக்கு, உயிராக இருந்தாய்; என் உலகாக இருந்தாய் இதுவரை. உனக்கென்று ஒருத்தி வந்தவுடன், எனை மறந்தாயே! பிரிந்தாயே! உயிர் பிரிந்த பின் உடலிருந்து என்ன பயன்? என்னுலகம் நீ இல்லையேல், எனக்கென்று யாருண்டு இவ்வுலகில்? உயிர்த்தோழன் உனக்காக, அவ்வுலகில் காத்திருக்கும், – மெய்த்தோழன் கடிதம் முடிந்த பின், என் கேள்விகள் கேட்டுக் கொண்டன, ‘இதெல்லாம் ஒரு காரணமா?’. ‘ஏனோமி’ இவற்றிற்கெல்லாம் பதிலானது. அவனது இருவர் உலகம் விரிசல் கண்டது அவன் தோழன் பிரிவால். தோழன் இல்லையென்றாலும், தான் ஒரு சமூகத்தின் அங்கமென்பதை மறந்தான், சமூக அநாதையாக உயிரைத் துறந்தான். அவனுக்குச் சொல்ல முடியவில்லை… உணர்த்த வேண்டும் நாம் மற்ற சமூக அநாதைகளுக்கு, ‘பரந்த உலகில் வழியெங்கும் மரங்களாய் நிறைந்து இருப்பார்கள் தோழர்கள். நீ மட்டும் அல்ல உலகம்.’ என்று.   19 நிலமகள் காதலன் வருகின்றாய், வளர்கின்றாய், மறைகின்றாய், ஒளிர்கின்றாய், நிலவல்ல நீ, நிலமகள் நின் – காதலன் – நான்.   20 காரிருள்விடுதூது கதிரவனை வழியனுப்பி விட்டு, கரியதொரு போர்வையை விரித்து, – அதில் கரையும், வளரும் ஒளிர்மதியையும், கண் சிமிட்டும் விண்மீன்களையும் பரப்பி, கருவிழிகளைப் பூட்டி மாந்தரை கனவுலகிற்கு அழைத்துச் செல்லும், காரிருளே! இரவே! கரும்பினும் இனியவள், என் கண்மணி தனிமையில் வாடும் இந்நேரம், அவள் கலக்கத்தைப் போக்கி, நான் திரும்பும் காலம் தொலைவில் இல்லை என்றுரைத்து அவள் கண்ணீர் கழித்து, களிப்பைக் கூட்ட காடுகள், மலைகள், கடல்கள் கடந்து காரிருளே! நீ தூது செல்வாயாக! 21 சோற்றுப்பருக்கை எத்தனையோ பேர், எனக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, தடைகள் பல தாண்டி, வந்து சேர்ந்தேன் உன்னிடம். – ஆனால் தோழா நீயோ! என்னைப் பிறவிப் பலன் அடைய விடாமல், இப்படி தவிக்க விட்டுச் செல்கிறாயே! உழவர்களின் வியர்வையில் வளர்ந்த நான், பசியால் வாடும் வறியவர்களைச் சென்றடையாமல், என்னையும் அறியாமல் வந்தேன் உன்னிடம். வருந்துகின்றேன், யாருக்கும் பயனில்லாமல், உன்னால் இப்படி வழி தவறி விட்டேனே என்று… — புலம்பிக் கொண்டிருந்தது, அவன் சாப்பிடும் போது கீழே சிதறி விழுந்திருந்த ஒரு சோற்றுப்பருக்கை.   22 கலப்படம் அரிசியில் கல், கடுகில் ஆர்ஜிமோன் விதைகள் – தே இலையில் மரப்பொடி… – இப்படி எங்கும் எதிலும் கலப்படம். தான் வாழ பிறரை வதைக்கும், மனதில் நஞ்சு கலந்த, பொருளாசை கண்களை மறைத்த கள்வர்களின் கறை படிந்த வாழ்க்கைப் படலம், கலப்படம். உணவுப் பொருட்களில் கலப்படம் – கவலைக்கிடம். 23 நீ உன் கனாவிற்கும், எதிர்காலத்திற்கும், எழுத்தும், இயக்கமும், நீ.   24 பாரதி எண்ணங்களுக்கு எழுத்துக்களால் வண்ணம் தீட்டி, கவிப்புரட்சி செய்து மறைந்தான், தமிழன்னையின் தாகம் தீர்த்த நதி, தவப்புதல்வன் பாரதி. 25 யுரேகா ‘தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் காகம் ஒன்று அலைந்து கொண்டிருந்தது. உண்பதற்கு உணவை வைத்தவர்கள், ஏனோ அருந்துவதற்கு நீரை வைக்கவில்லை. நெடுநேரத்திற்கு பின், குறைகுடம் ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. அலகிற்கு எட்டாத அந்நீரைக் குடிக்க, அருகில் கிடந்த சிறு கற்களை ஒவ்வொன்றாக அந்த குடத்திற்குள் போட்டது. கற்களால் மேல் எழும்பி விளிம்பு வரை வந்த நீரை அருந்தி விட்டு, தாகம் தணிந்த மகிழ்ச்சியில் ‘கா கா’ என கரைந்து கொண்டே பறந்தது அந்த புத்திசாலி காகம்.‘ கதையைப் படித்த மாத்திரத்தில் ‘யுரேகா யுரேகா’ என்று கூவியபடி வீதியில் இறங்கி ஓடினார் ஆர்க்கிமிடிஸ். 26 ராசிபலன் விழித்ததும், நாட்காட்டியில் பழைய தேதியைக் கிழித்து விட்டு நாள்தோறும் அன்றைய ராசிபலனை வாசிப்பது வழக்கம். மேஷம் – விருப்பம், ரிஷபம் – மறதி, மிதுனம் – சினம், கடகம் – போட்டி, சிம்மம் – லாபம் … சாலையில் கிடந்த ஒரு ரூபாய் நாணயம், காலையில் கண்ட பலனை, நனவாக்கியது. இப்படியாக அவ்வப்போது நடந்த நிகழ்வுகள் அவன் நம்பிக்கையை பலமாக்கின. நாட்கள் நகர்ந்தன… அன்று – அவன் பிறந்தநாள். அர்ச்சகரிடம் அவன் அம்மா சொன்னாள், ‘சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி.’ அதிர்ச்சியுடன் ‘அப்போ சிம்மம்’ என்று கர்ஜித்தான் அவன். ‘அது உன் லக்னம்டா, கும்பம் உன் ராசி’ என்று அவனுக்கு எடுத்துக் கூறினாள் அன்னை. வீட்டுக்குள் நுழைந்தவுடன், அன்றைய ராசிபலனைப் பார்த்தான். ‘… சிம்மம் – அமைதி … கும்பம் – குழப்பம் …’ இப்போது அவனுக்கு தெளிவு பிறந்தது. அடுத்தநாள் எழுந்தவுடன் பார்த்தான் கும்ப ராசிக்கான பலனை. ராசிபலனுக்கு மேல் பறந்து கொண்டிருந்த அன்றைய பொன்மொழி, ‘மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்’ .   27 முப்பது நாட்களில் ... பதுங்கி பின் பாய வேண்டும். தாக்கும் முன்பு இரைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். பெரிய இரை வேட்டையின் போது, தொண்டையை முதலில் கடிக்க வேண்டும்… ‘முப்பது நாட்களில் மான் வேட்டை‘யைப் புரட்டிக் கொண்டே, இராக்கனாவில் மூழ்கியிருந்தது, எதிரே விளையாடிக் கொண்டிருந்த எலிகளைக் கூட கண்டு கொள்ளாமல், அந்த பூனைக்குட்டி.   28 ஒரு துளி மை நேற்று முதல் காணவில்லையாம். என் தம்பியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினார், அவர் தம்பியை மை போட்டு கண்டுபிடிக்க. நீண்ட வரிசையில் காத்திருந்த பின் அந்த முதியவரை சந்தித்தனராம். வெற்றிலையில் மையைத் தடவி, சிறிது நேரம் எதையோ முணுமுணுத்து விட்டு, என் தம்பியிடம் கேட்டிருக்கிறார், ‘அனுமார் தெரிகிறாரா?’. ஒன்றுமறியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்க, குரலை உயர்த்தி மீண்டும் கேட்டிருக்கிறார். வேறு வழியின்றி அவன் தலையசைத்திருக்கிறான். ‘ஆஹா! இதோ தெரிகிறான் காணாமல் போனவன்.’ மீண்டும் என் தம்பியிடம் காட்டி கேட்டிருக்கிறார். இப்போது ‘தெரிகிறான்’ என்றிருக்கிறான். இல்லையென்றால் அம்முதியவர் விடுவதாக இல்லை. ‘வடக்கே திரிந்து கொண்டிருக்கிறான். வந்து விடுவான் ஒரு வாரத்திற்குள்.’ (மூட)நம்பிக்கையை வளர்த்தன அவர் வார்த்தைகள். தேடல் மீண்டும் தீவிரமானது. ஒரு வழியாக நான்காவது நாள் அவர்களது தேடல் முடிவுக்கு வந்தது. தம்பி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சொன்னார், ‘சாமி சொன்ன மாதிரியே தம்பி கிடைச்சுட்டான்’ தேடிக் கிடைத்தவனை, சாமியால் கிடைத்தான் என்றது வேடிக்கையாக இருந்தது எனக்கு. பல லட்சம் பேரை சிந்திக்கவும் வைக்கிறது, சிலரை இப்படி சிந்திக்க விடாமலும் செய்கிறது, ஒரு துளி மை.   29 வறுமைக்கோடு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறைந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததினால் அல்ல. வறுமைக்கோட்டை, குறைவான வருமான வரம்புகளால் வரைந்ததினால். 30 சிட்டுக்குருவி மாடியில் காய வைத்திருந்த தானியங்களை அவை கொத்தித் தின்னும் போதும் விரட்ட மனமில்லாமல் பார்த்து ரசித்த நாட்கள்… வீட்டின் மூலையில் எப்போதாவது, அவை கூடு கட்டும் போது, அரிசிகளை அந்த கூட்டிற்குள் அள்ளிப் போட்ட நினைவுகள்… பல நாட்களுக்குப் பிறகு, நான் பார்த்த சிட்டுக்குருவி, பழைய நினைவுகளைக் கிளறிக் கொண்டிருந்தது. பார்த்துப் பழகிய அந்த சின்னஞ்சிறிய பறவைகள், அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறதாம். அரிய உயிரினமாகி விட்ட அந்தக் குருவியைப் படம் பிடித்துக் கொண்டிருந்த போது வந்தது ஓர் அலைபேசி அழைப்பு. வந்த அழைப்பை, ஒரு குற்ற உணர்வுடன் ஏற்று பேசத் தொடங்கினேன், அலைபேசியிலிருந்து வரும் நுண்ணலைகளும், சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு ஒரு காரணம் என்பதால்.   31 நிழல் தேடல் கொளுத்தும் வெயிலில் இளைப்பாற நிழல் தேடும் போது தான், விழிகளுக்குத் தெரிகின்றன, வழியிலிருந்து அழிந்து போன மரங்கள்.   32 சக்வாரோ அனல் வளி வீசும், இள வேனிற் காலத்தில், கானல் நீராற்றின் இரு புறமும், தீட்டிக் கொண்டிருந்தன சுடு மணலில் தம் நிழலோவியங்களை நெடு சக்வாரோ அழல் மரங்கள்.   33 வானம் தொலைவில் இல்லை வெண்நுரைகளை உடுத்திப் படுத்திருக்கும் விண்ணைத் தொட்டு வர ஆசை. பறந்தது… மேகங்களைத் தொட்ட போது தான் பறவைக்கு உறைத்தது, மேகங்களும் வானமும் அருகருகே இல்லை என்று 😮 … இன்னமும் வானம் அசையாமல் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது, அதே அறிவிப்புப் பலகையுடன், “வானம் தொலைவில் இல்லை”.   34 நீள்வானம் வெண்மேகப் போர்வையை விலக்கி, வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நீல விழிகள் கொண்ட பூதம். 35 சாயங்காலம் அழுது அழுது சிவந்த கண்களுடன் ஆதவன், விண்ணிடமிருந்து பிரியாவிடை பெறும் நேரம்.   36 வான்மேகம் நிறம் மாறும் பச்சோந்தி போல், நிமிடத்திற்கு ஓர் உருமாறினாலும், வெள்ளை மனம் கொண்ட அமீபா.   37 இரயிலும் நிலவும் இரவில் ஆரம்பித்தது பயணம். இரயிலும், நிலவும் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தன. இரயிலை விரட்டிக் கொண்டு நிலவு நகர்கிறதா? நிலவைத் துரத்திக் கொண்டு இரயில் ஓடுகிறதா? இரயிலா? நிலவா? … பொழுது விடிந்தது. மூச்சிறைக்க, இரயில் மட்டும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. நிலவைக் காணவில்லை!   38 கால்பிறை வாழ்க்கைத் தத்துவம் விளக்கும் யின்-யாங் சின்னம், கால்பிறை நிலவு.   39 காற்றாடியின் இறக்கைகள் சுற்றும் போது ஒற்றை வட்டமாகின்றன, காற்றாடியின் இறக்கைகள்.   40 கட்டற்ற மென்பொருள் தனியுரிம நிறுவனங்கள் விதிக்கும், நீ மட்டும் தான், இதற்கு மட்டும் தான் உபயோகிக்க வேண்டும் … போன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உரிமைகளின்றி, வெறும் உரிமத்துடன் வாங்கும் மென்பொருள்களுக்குப் பதிலீடாக எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தவும், தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மாற்றங்கள் செய்திடவும், செய்த மாற்றங்களை வெளியிடவுமென, பயனர்களுக்கு முழு சுதந்திரத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியையும் தருபவையே, கட்டற்ற மென்பொருள்கள்.   1 FreeTamilEbooks.com மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/