[] உன்னைக் கரம்   பிடித்தேன்  ~நாவல்~    உஷாதீபன்   மின்னூல் வெளியீடு :   www.freetamilebooks.com         ஆசிரியர்     : உஷாதீபன், ushaadeepan@gmail.com   அட்டைப்படம்  : மனோஜ்குமார்,  socrates1857@gmail.com    மின்னூலாக்கம் : பிரசன்னா, udpmprasanna@gmail.com       உரிமை     : Creative Commons Attribution - ShareAlike 4.0 International License.      பொருளடக்கம் அத்தியாயம் 1  அத்தியாயம் 2  அத்தியாயம் 3  அத்தியாயம் 4  அத்தியாயம் 5  அத்தியாயம் 6  அத்தியாயம் 7  அத்தியாயம் 8  அத்தியாயம் 9  அத்தியாயம் 10  அத்தியாயம் 11  அத்தியாயம் 12  அத்தியாயம் 13  அத்தியாயம் 14  அத்தியாயம் 15  அத்தியாயம் 16  உஷாதீபன் - தன் குறிப்பு  எங்களைப் பற்றி  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே  அத்தியாயம் 1 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~  படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் மாதவன். இங்கு வந்த நாளிலிருந்து இப்படித்தான் தொடர்கிறது. அப்பா, அம்மாவிற்குத் தெரியாது. அவர்கள் சாதாரணமாய் இருக்கிறார்கள். என்னவோ, வந்திருக்கான்…என்று. ஆனாலும் அம்மாவுக்கு எதோ உறுத்தியிருக்கும் போலிருக்கிறது. நேற்று கேட்டே விட்டாள். என்னடா இது, நீ, நீபாட்டுக்கு இங்க வந்துட்டே…காமினி என்னடான்னா அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்கிறே? எதுக்கு இப்டி? ஏம்மா, இதிலென்ன இருக்கு? என்னடா, என்னருக்குங்கிறே? ரெண்டு பேரும் சேர்ந்து வருவாங்க, போவாங்கன்னு இருக்கு…நீ தனியா, அவ தனியா? இதென்ன விளையாட்டு? விளையாட்டெல்லாம் இல்லே…கல்யாணம் பண்ணின்டா எப்பவும் சேர்ந்தேதான் சுத்தணுமா? அவ, அவுங்க அம்மாப்பாவைப் பார்க்கணும்னா, சரி போன்னேன். நான் உங்களைப் பார்க்க இங்க வந்துட்டேன்… ஏன், நீயும் அங்க போக வேண்டிதானே? ஆமா, அவ பின்னாடியே அலையணும்ங்கிறியா? அது என்னால முடியாது. அவுங்க வீட்டுக்குப் போயி என்னால சுதந்திரமா சாப்பிட்டு இருக்க முடியாது. நம்ம வீடு மாதிரி சகஜமா இருக்க முடியாது அங்கே… உங்க ரெண்டு பேருக்கும் ஏதும் சண்டையா? அதெல்லாமில்லே… மறைக்காமச் சொல்லு…நீங்கதான் விடாம அடிச்சிப்பேளே…எங்கள மாதிரியா இருக்கேள்… நீ அப்பாவுக்குத் தணிஞ்சு போவே…இவ அப்படியா? எதிர்த்துப் பேசுவா…அது எனக்குப் பிடிக்காது… அப்படிப்பட்டவாளை அன்பாலதான் திருத்தணும்…அன்புக்கு அடிபணியாதவா இந்த உலகத்துல யாருமே இல்லை…சர்க்கஸ்ல கூட சிங்கம், புலியை அடக்கிடறாளே…எப்டி? சவுக்கை வச்சிண்டு சர்க்கஸ் காண்பிப்பான்…அது வேறே…அது ஜனங்க மத்திலே…ஆனா உள்ளே…அதைப் பட்டினி போட்டு, மயங்க வச்சி, பசிக்க வச்சி, தடவிக் கொடுத்து, தடவிக் கொடுத்து, தன்னோட ஸ்பரிசத்தை உணர வச்சி, அதோட ஆதுரத்தை அறிய வச்சி வச்சித்தான் பணிய வைப்பான். அப்டித்தான் அதை வழிக்குக் கொண்டு வந்திருப்பான்…மிருகங்களுக்கே அப்டீன்னா, மனுஷாளுக்கு அது சாத்தியமில்லியா? நீ அவகிட்டே அன்பாப் பேசியிருக்க மாட்டே…அதான்…! நீ எப்பவுமே என்னத்தாம்மா சொல்லுவே…அன்பாயிரு, அன்பாயிருன்னு…அப்டியேயிருந்தா அதை அடிபணியறதா அவ நினைக்கிறா…அது தெரியுமா உனக்கு? அடி பணியேன்…அதிலென்ன தப்பு? பொண்டாட்டிதானே…அவதானே இனிமே உனக்கு எல்லாம்…? நாங்க இன்னும் எத்தனை நாளைக்கோ…எங்களை நம்பியா வந்திண்டிருப்பே…கல்யாணம் பண்ணிக் கொடுத்தாசுன்னா அப்புறம் கட்டின பெண்டாட்டிதாண்டா சாஸ்வதம்… அது போல அவளும் நினைக்கணும்ல…நான் மட்டும் அவளைப் போயி போயித் தடவச் சொல்றியா? வார்த்தையே சரியில்லை. ஒரு அம்மாட்டப் பேசுற வார்த்தையா இது? சரி, அப்டியே வச்சிப்போம்…காலைத் தடவு, கையைத் தடவு…முதுகைத் தடவு…உன் அன்பை நாளடைவுல அவ உணர்றாளா இல்லையா பாரு…உனக்கு அடிமையாகுறாளா இல்லையா பாரு… அவளை நானும் அடிமைப் படுத்த வேண்டாம்…என்னை அவளும் அடிமைப் படுத்த வேண்டாம்…எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை…வாய் பேசாம இருந்தாப் போதும்… அப்டீன்னா ஊமையா இருக்கச் சொல்றியா? அது இந்தக் காலத்துப் பொம்மனாட்டிகளால ஆகுமா? நாலு வார்த்தை பேசத்தான் செய்வா…கேட்டுக்கத்தான் வேணும்… அப்போ நான் பேசினா அவளும் கேட்டுக்கணும்தானே…? பேசு…நீ பேசு…அவ பேசட்டும்…அப்புறம் நீ திரும்பப் பேசு…அவ பேசட்டும்…இப்டியே போனா முடிவுதான் என்ன? யாராச்சும் ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போனாத்தான் இதெல்லாம் சரியாகும்…இல்லன்னா பொழுது பொழுதாச் சண்டை போட்டுட்டே இருக்க வேண்டிதான்… அவதான் விட்டுக் கொடுக்கணும்…நான் ஆம்பளை…என்னால விட்டுக் கொடுக்க முடியாது… பொம்பளைதான் விட்டுக் கொடுக்கணும்னு எதுல இருக்கு? சொல்லு பார்ப்போம்… காலங் காலமா நம்ம சமூகம் அப்டித்தானே இருந்து வந்திருக்கு…பொம்பளையை வச்சிதானே குடும்ப அமைப்பு…ஆம்பளைங்க உஷ்ணத்தைத் தணிக்கிற அருவி அவுங்கதானே…உறவுகள் அவுங்களாலதானே பலப்படும்…அவுங்களே முறிச்சிக்கிட்டு நின்னா? சொல்றதெல்லாம் சரிதான்…ஆனா ஒண்ணை நினைச்சிப்பாரு…நீயே சதம்னு வந்தவ அவ. அவ சொல்றதை நீ கேட்டாத்தான் அவளுக்கு இந்தக் குடும்பத்துல ஒட்டும்…இல்லன்னா பொறந்த வீட்டு நினைப்பு வந்திட்டேதான் இருக்கும்…அந்த ஒட்டுதலை ஏற்படுத்த வேண்டியது உன் பொறுப்பாக்கும்…அதுக்கு உன் ஆதரவு அவளுக்கு ரொம்ப அவசியம். ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் பெற்றவங்களோட, கூடப் பொறந்தவங்களோட வாழ்ந்திட்டு, ஒரு கட்டத்துல அப்டியே இடம் பெயர்ந்து சுத்தமா சம்பந்தமில்லாத வேறொரு இடத்துக்கு, தன்னை சம்பந்தப்படுத்திக்கிட்டு, வர்ற பெண்ணோட மனசு எப்டியிருக்கும்னு என்னைக்காவது நீ நினைச்சுப் பார்த்திருக்கியா?  நீயும் எத்தனை தங்கைகளோட பிறந்திருக்கே…அவுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கேல்ல…. மாதவன் அமைதி காத்தான். என்னவோ அவ போயிட்டாளாம், இவன் வந்துட்டானாம்…கதையளக்கிறான்…நீபாட்டுக்குத் தனியா இருந்து பார்க்க  வேண்டிதானே…அப்பத் தெரியும் வண்டவாளம்… ஏன் இங்கே வந்தேங்கிறியாக்கும்? சொல்லாமச் சொல்றே…அதானே? வேணும்னா சொல்லு, போயிடறேன் இன்னைக்கே… எப்பவும் இப்டி விபரீதமா எடுத்துக்கிறதுதானே உன் புத்தி…நான் அதுக்கா சொன்னேன்… பின்ன எதுக்காம்? இப்டிச் சொன்னா என்ன அர்த்தமாம்? அதுக்கில்லடா கிறுக்கா? காமினி தனியாப் போய் நின்னா அவுங்க வீட்டுல சந்தேகப்பட மாட்டாங்களா? சண்டை போட்டுட்டு வந்திருக்காளோன்னு நினைக்க மாட்டாங்களா? இப்டி நினைப்பாங்க, அப்டி நினைப்பாங்கன்னு நாமே ஏன் கற்பனை பண்ணிக்கணும்…அதை அவஇல்ல நினைக்கணும்…எனக்கென்ன வந்தது, என்னடா இப்டிப் பேசற? எல்லாமே இனி உனக்கு அவதானேடா…. அதுனால? அவ சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடச் சொல்றியா? திடுதிப்னு நான் எங்கப்பாம்மாவப் பார்க்கணும்ங்கிறா…நான் என்னடான்னா ரெண்டு பேருமாச் சேர்ந்து எங்கயாவது வெளியூர் கோயிலுக்குப் போயிட்டு வரலாம்னு நினைச்சிருந்தேன்…அதை அவகிட்ட சொல்லவாவது முடியுமா? இல்ல சொன்னாத்தான் கேட்பாளா? அவ நினைச்சதுதான் அவளுக்கு…ஒத்தைக்கால்ல நிப்பா…என் வார்த்தை அங்க எடுபடாது…என் கூட ஊர் சுத்தணும்ங்கிறதுல அவளுக்கு சந்தோஷம் இருந்தாத்தானே? அதெல்லாம் இயற்கையா வரணும்மா…வலிய வரவழைச்சு, இல்லைன்னா கட்டாயப்படுத்தி என்ன பிரயோஜனம்? அதான் சரி, தொலையட்டும்னு விட்டுட்டேன்… அப்டிச் சொல்லாதடா…அபசகுனமாப் பேசாதே….சமயங்கள்ல பலிச்சிடும்….அது கூடாது…ஏற்கனவே உன் தங்கை அப்டியிருக்கிறது உனக்கு நினைவில்லையா? யாரும் கண்கொண்டு தன்னைப் பார்க்க வேண்டாம்னு ஒதுங்கிக் கிடக்காளேடா அவ…அதை நினைச்சியா? மாதவன் அத்தோடு தன் பேச்சை நிறுத்தினான். அவன் நினைவுகள் தங்கை மேகலாவின் சோகம் கவிழ்ந்த வாழ்க்கையை நோக்கித் திரும்பிற்று.     அத்தியாயம் 2 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    எந்தப் பையனைப் பார்த்தாலும் பிடிக்கலை, பிடிக்கலைன்னு சொன்னா என்னடி அர்த்தம்? பிடிக்கலைன்னு அர்த்தம்…. என்ன, திமிரா? – மாதவன் கையை ஓங்கிக்கொண்டு போனான். அம்மா தடுத்தாள். அதென்னடா, வயசுக்கு வந்த பெண்ணை நோக்கி கையை ஓங்குறது? அடிக்கிற வேலையெல்லாம் வச்சிக்காதே ஆம்மா? யாரும்மா அடிச்சா ஒம்பொண்ணை…என்னவோ பதறிட்டு வர்றியே…? சும்மா கையை ஓங்கினேன். அப்டியே அடிச்சிட்டாலும், உன் பொண்ணு சும்மா இருப்பான்னு நினைச்சியா? திருப்பி அடிச்சாலும் அடிப்பா…அண்ணன்னுகூடப் பார்க்க மாட்டா…அது தெரியுமில்லே… நீ தங்கைன்னு பார்த்தாத்தானே…இத்தனை பெரிய பொண்ணை அடிக்கக் கையை ஓங்கினீன்னா என்ன அர்த்தம்? அடிச்சனா? இல்ல அடிச்சனான்னு கேக்குறேன். அவளோட ஓடியாடி விளையாண்டவன் நான். அந்த உரிமைல என்னடி சொல்றன்னு கையை ஓங்கினேன். அது ஒரு தப்பா? தப்புத்தாண்டா…உங்களுக்குக் கடமை இருக்கு..நான் மறுக்கலை…ஆனாலும் பெண் பிள்ளைகளை அடிக்கிறதை என்னால கண்கொண்டு பார்க்க முடியாதுப்பா…அதுனாலதான் தடுத்தேன். எங்கே நீ அடிச்சிறுவயோன்னு பயம். அதுதாம்ப்பா…மத்தப்படி உனக்கு அவமேல எல்லா உரிமையும் இருக்கு…அதப்பத்தி நான் எதுவும் சொல்லலை…அவ உன் தங்கை…அவளைக் கண்டிக்க உனக்கு நகல உரிமையும் உண்டு…என் கண்காண அடிக்கிறது மட்டும் வேண்டாம்ப்பா…அம்மாவின் கண்கலங்கல் இவனை உலுக்கிவிட்டது. இவன் அமைதியாகக் கூறினான். “இனிமே ஜாதகம் எடுக்க எதுவுமேயில்லை. அந்த சமாஜத்துல பதிவு பண்ணியிருக்கிற எல்லா ஜாதகமும் எடுத்து வந்தாச்சு. உன் பொண்ணுக்குப் பொருத்திப் பார்த்தாச்சு…நல்லா எட்டுப் பொருத்தமும் அமைஞ்சதா இதுவரைக்கும் பத்துப் பேர் வந்து போயிருக்காங்க…அதுல நாலு பேரை இவ வேண்டாம்னிருக்கா…மீதி ஆறு பேர் பதிலே போடலை…நாலு பேர்ல ஒருத்தன் கூடவா பிடிக்கலை…இவ என்னதான் நினைச்சிட்டிருக்கா மனசுல? பேரழகிங்கிற நினைப்பா? ஆம்பிளைங்கல்லாம் பெரும்பாலும் சுமாராத்தான் இருப்பாங்க…எல்லாரும் அந்தக்காலத்து ஜெமினிகணேசன் மாதிரியா இருப்பாங்க…ஒரு ஆணுக்குள்ள பர்சனாலிட்டி இருக்கா, நல்ல வேலையா, சம்பளமா, நல்ல குடும்பமாங்கிறதை மட்டும்தானே பார்க்கணும்? இவ என்ன பெரிய அப்சரஸா? அலங்காரம் பண்ணாம, சமையக்கட்டுல வேர்வையோடு வேலை செய்திட்டிருக்கிறபோது ஒருத்தன் இவளைப் பார்க்கட்டும், சரின்னு சொல்லிடுவானா? நம்ம நிலமையையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்க வேணாம்? அப்டி என்னதான் வர்றவன்கிட்ட எதிர்பார்க்கிறா? இவ என்ன கல்யாணம் பண்ணிட்டு, சினிமாவுல வர்றமாதிரி பார்க்குல டூயட்டா பாடப் போறா? சினிமா வேறே, யதார்த்தம் வேறேங்கிறது தெரிய வேண்டாம். இப்போ அண்ணன்மார்களெல்லாம் நீங்க பார்த்து வச்ச பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கலையா? இது வேண்டாம், அது வேண்டாம்னா சொன்னாங்க? எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க…அதே மாதிரி நீயும், அப்பாவும் பார்த்து, தேர்வு செய்து சொல்றதை ஏன் மாட்டேங்கிறா? உங்க அனுபவத்தை ஏன் மதிக்க மாட்டேங்கிறா? உங்க மேலே அவளுக்கு மதிப்பில்லே, மரியாதையில்லை. அதான்…எங்களை மாதிரி வீட்டுக்கு அடங்கினவ கிடையாது…அவளுக்கு மனசுல ஆயிரம் கற்பனை…ஏதோ வானத்துல பறக்குற மாதிரி…தேவதை மாதிரித் திரியணும், பறக்கணும்னும்ங்கிற நினைப்பு போலிருக்கு…ஆட்டுக்கு வாலை ஏன் ஆண்டவன் அளந்து வச்சான்…அதை நாம உணரணும்…நம்ம பொசிஷன் தெரிஞ்சு நடந்துக்கணும்…இல்லன்னா அது எங்க போயி முடியும்னு யாராலேயும் சொல்ல முடியாது. கொட்டித் தீர்த்த மறுநாள் ஒரு வரனுக்கு சம்மதிக்கத்தான் செய்தாள். அப்பாடா…என்று அடுத்த வண்டியிலேயே கிளம்பி விழுப்புரம் போனான் இவன். ஆனால் மேகலாவின் துரதிருஷ்டம் யாரை விட்டது? தம்பி, நீங்க பதில் சொல்லுவீங்க…அல்லது நேருலயாவது வருவீங்கன்னு நானும் ஒரு வாரமா எதிர்பார்க்கத்தான் செய்தேன்…எந்தத் தகவலும் இல்லை. இன்னைக்குக் காலைலதான் தம்பி பாண்டிச்சேரி போயி ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணிட்டு வர்றோம். நேத்து வந்திருந்தீங்கன்னாக் கூடப் பரவாயில்லே. யோசிச்சிருப்போம்…எதாச்சும் செய்ய முடியுமான்னு பார்த்திருப்போம்….இப்ப வர்றீங்களே…..உங்க தங்கைக்கு அதிர்ஷ்டமில்லையா? அல்லது என் பையனுக்கு யோகமில்லையா? மனசு தடுமாறுதே தம்பி…உங்க குடும்பத்தை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது…மனசு நிறைஞ்சு திரும்பினோம்…இப்டி நேரத்துக்கு பதில் போடாம இருந்திட்டீங்களே? அதனாலென்னம்மா…உங்க பையன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்…எங்களோட வாழ்த்துக்கள்….எங்கம்மா, அப்பாவோட ஆசீர்வாதம் எப்பவும் அவருக்கு உண்டு…நான் வர்றேம்மா…. – கண்கள் கலங்க அங்கிருந்து புறப்பட்டு வந்தான் மாதவன். அடுத்த இரண்டு மாதங்களிலேயே மேகலாவுக்கும் திருமணம்  முடியத்தான் செய்தது. அவள் சம்மதம் முழு மனதோடேயே வந்ததா, அல்லது விரக்தியில் வெளிப்பட்டதா? இன்றுவரை புரியாத புதிர்தான் அது. எப்படி அவள் சம்மதித்தாள் இதற்கு? நல்ல செல்வமும், செல்வாக்கும் உள்ள அந்தப் பையனுக்கு இரண்டாந்தாரமாகச் செல்லப் பிடிவாதமாய் சம்மதித்து விட்டாளே…? அதுவும் எங்கிருந்து எங்கு சென்று விட்டாள்? இன்று மும்பையில் அவள் எங்கிருக்கிறாள் என்று யாராலையுமே கண்டு பிடிக்க முடியவில்லையே? ஏன் அப்படித் தன்னை மறைத்துக் கொண்டாள்? ஏன் தன்னின் இருப்பிடம் தெரிவிக்க மறுக்கிறாள்? போலீஸ், கோர்ட், கேஸ் என்று அரசல் புரசலாக மாப்பிள்ளையின் உறவினர்கள் வழி வந்த செய்திகள் வீட்டிலுள்ளோரை எப்படி நடுநடுங்க வைத்தன? இன்றுவரை அவர்களில் ஒருவரைக் கூடத் தொடர்பு கொள்ள முடியவில்லையே, ஏன்? மும்பை சென்று எந்த இடம் என்று தேடுவது? ஒரு முறை கூட  தானோ, தன் பெற்றோரோ அங்கு சென்றதில்லையே? சிந்தனைகள் ரொம்பவும் பின்னோக்கி இவனைத் தள்ளிவிட்ட போது தலையே வெடித்து விடும்போல் இருந்தது மாதவனுக்கு. அத்தியாயம் 3 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை? என்று கேட்டு விடுவாள். வந்த அன்று நடந்த விவாதம் மனதில் ஓடி முடிந்தது. இப்போது நாட்கள் ஆன இந்தப் பொழுதில் எதுவும் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையா? அல்லது இன்னும் நாள் போகட்டும் பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா? அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு? என்று விட்டு விட்டாளா?   இருக்கலாம். அவளுக்கும் வயசாயிற்று. எத்தனையோ பிரச்னைகளைச் சுமந்து, அனுபவித்து, கடந்து வந்தாயிற்று. பெண்டுகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறாள். இன்னும் எதை அவள் இழுத்துப் போட்டுக் கொள்ள? மனமும் உடலும் விச்ராந்தியாய் இருக்க வேண்டிய நேரம். ஆறு, ஏழு என்று பெற்றவர்கள் பாடே இப்படித்தான். எல்லாக்கும் எல்லாக் கடமைகளையும் செய்து முடிக்கையில் வயது அறுபதைத் தாண்டி விடுகிறது. எழுபதானவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். பிறகு வாழ்க்கை ஆயாசமாய்ப் போய் விடுகிறது. இந்த உலகத்தில் பிறந்ததே கல்யாணம் கட்டவும், பிள்ளைகளைப் பெறவும், அதுகளை வளர்த்து ஆளாக்கிக் கல்யாணம் கட்டிக் கொடுத்துப் பேரன், பேத்திகளைக் காணவும் என்று ஆகிப் போய் பிறகு மரணம் எய்தவும் என்று ஆகிப் போனதா? அம்மாவை நினைக்க நினைக்க அவளோடு நெருக்கமாய், அவள் மடியிலேயே கிடந்த நாட்கள் நினைவுக்கு வந்தன மாதவனுக்கு. எப்படிப்பட்ட நிம்மதியான நாட்கள் அவை. அம்மா மடிதான் எத்தனை சுகம்? எவ்வளவு கதைகள் சொல்லியிருப்பாள் எனக்கு. எனக்கு மட்டுமே கதைகள் பிடிக்கும் என்று அவளுக்கு எப்படித் தெரிந்தது? அண்ணன்மார்கள் யாருக்கும் சொல்லாத எத்தனை கதைகளை எனக்கு மட்டும் அவள் சொல்லியிருக்கிறாள்? அவர்களுக்குத் தெரியாத பல செய்திகளை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாளே? ஆஉறா…எவ்வளவு சுகமான நாட்கள் அவை….மனம் அப்படியே அம்மாவின் கதைகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தது மாதவனுக்கு. அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம். அந்த மாதிரி ஒரு அபூர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான மாதவன். அவன் அப்படி வளர்ந்தவன்.  வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி? சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்? கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த இடத்திலாவது அம்மா- வின் முகத்தில் தன்னையறியாத அல்லது தன்னை மீறிய புன்னகை வெளிப்பட்டதா? எத்தனையோ முறை தேடித்தான் இருக்கிறான். பார்க்க முடிந்ததில்லை. ஆனாலும் அம்மா தன் கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள். இவனும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். சிறு பிராயத்தில் அது அவள் வாழ்க்கைப்பட்ட கதை. அன்றிலிருந்து இன்றுவரை அவள் எதிர்நோக்கிய பிரச்னைகளின் கதை. வாழ்க்கை எவ்வளவு அவலமாகியிருக்கிறது அம்மாவுக்கு. மூழ்கி முத்தெடுத்து மீண்டிருக்கிறாள் அம்மா. “மாதவனை வரச்சொல்லு…எனக்கு அவனோட நிறையப் பேச வேண்டிர்க்கு…” “என்னத்தப் பேசப்போற…அதான் இத்தனை காலம் எல்லாம் பேசியாச்சே! வீடு போ போங்கிறது…காடு வா…வாங்கிறது…இன்னும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு…? சிவனேன்னு கிட…” ‘ஐயோ பாவம்…அம்மாவின் முகம்தான் எத்தனை வாடிப் போகிறது…எல்லோரும் போக வேண்டியவர்கள்தான். ஆனாலும் அதை வாய் விட்டுச் சொல்லலாமா? அதுவும் பெற்ற தாயாரைப் பார்த்து அந்த வார்த்தை சொல்ல எப்படி மனசு வருகிறது?’ “உன் பிள்ளைதானே…விடு…விடு…மேல போட்டுக்காதே…இத்தனை காலம் எல்லாத்தையும் மேல வழிய விட்டுண்டது போறாதா? இதோ நா வந்துட்டேன்…சொல்லு…சொல்லு…எங்கிட்டச் சொல்லு…உன் ஆசை தீரச் சொல்லு…உன் மன பாரம் அப்படியாவது நீங்கட்டும்…நா கேட்கிறேன் எம்புட்டு வேணாலும்…” ‘வெறும் கதைகளா அவைகள். வாழ்க்கையைப் புடம் போட்டு வடித்தெடுத்த சித்திரங்களாயிற்றே?’ அம்மா சொன்ன கதைகளையேதான் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறாள். சொல்லிக்கொண்டு- மிருக்கிறாள். ஆனாலும் அவை ஏன் அலுப்பதில்லை. எந்த ஜீவன் அதில் உயிரோட்டமாய்? எது இப்படி நாடியைப் பிடித்து உலுக்குகிறது? ஆச்சரியம்தான். சொன்ன கதைகளையே திரும்பத் திரும்பச் சொல்லி என்று அம்மாவின் மனபாரம் மொத்தமும் இறங்கும்? வறுமையும், துக்கமும், சோகமும் வாழ்க்கையாய் அமைந்துவிட்ட அம்மாவுக்கு ரத்தமும் சதையுமாய் உடம்போடே அவை ஊறிப் போய்க் கிடக்கின்றனவா? “ராமாயணமும், மகாபாரதமும் எத்தனையோ பேர் சொல்ல காலங்காலமா கேட்டுண்டிருக்கோம். அலுத்தா போயிடுத்து? கேட்கக் கேட்க எவ்வளவு புத்துணர்ச்சி ஏற்படறது மனசுல? அத மாதிரிதான் உன் கதைகளும். எனக்கு அலுக்கவே அலுக்காதாக்கும். நா இருக்கேன் கேட்கிறதுக்கு. நீபாட்டுக்குச் சொல்லு…” அந்த முகத்தில்தான் எத்தனை திருப்தி? இதமான வார்த்தைகளுக்காக இந்தப் பெரியவர்கள் எத்தனை ஏங்கிப்போய்க் கிடக்கிறார்கள்? வேளா வேளைக்கு சோறு தின்பதைவிட வயிற்றை நிரப்புவதைவிட அன்பு வார்த்தைகள்தானே அவர்களின் மனப்பசியை ஆற்றுகின்றன? வயிறு நிறைவதைவிட மனசு நிறைவது உயிரைப் புதுப்பித்துக் கொள்வதற்கு சமமல்லவா? இது கிடைக்காமல் ஏங்கி ஏங்கி புழுங்கிப் ;புழுங்கி துக்கம் நெஞ்சை அடைக்க வார்த்தைகள் வர இயலாமல் எப்படி வாயடைத்துக் கிடக்கின்றன எத்தனையோ ஜீவன்கள்? யாரேனும் ஆத்மார்த்தமாய் அறிவதுண்டா? உணர்வு பூர்வமாய் நுணுகி அறிந்து உயிரோட்டமாய் ஆறதலாய்ச் செயல்பட்டது யார்? “மாதவனை வரச்சொல்லு…எனக்கு ஆறுதலாப் பேச அவனுக்குத்தான் தெரியும். என் மனசறிஞ்சு பேசுவான். எத்தனை முறை என் கதைகளை அவன்ட்டச் சொன்னாலும் எத்தனை தடவை அவன் அதைக் கேட்டாலும், அலுப்புங்கிறதே கிடையாது அவனுக்கும் எனக்கும்…” “ஆமா…வெறும் வார்த்த சொன்னாப் போதுமா? எதிர்க்க உட்கார்ந்துண்டு வாயால வழிய விட்டா எல்லாம் ஆச்சா?” “அது வெறும் வாய் வழிசலா அல்லது ஆத்மார்த்தமான்னு எனக்குத்தானே தெரியும்…” “அந்த வார்த்தைக்குத்தானே மனசு கிடந்து இப்டி அடிச்சிக்கிறது? வீட்டில இருக்கிற பெரியவாளையும் கூட்டாக்கிப் பேசறதுக்கு எத்தனை பேருக்குத் தெரிஞ்சிருக்கு? முதல்ல மனசு வேணுமே இதுக்கெல்லாம்! அவா மனசு எதெதுக்கு எப்படியெப்படி ஏங்கும்…எதெதுக்கு நாமளும் நாமளும்னு அடிச்சிக்கும்னு உணரத் தெரியணுமே…எல்லாருக்கும் வயசு மட்டும் ஆயிடுத்து…மனசும் அதே அளவுக்கு முதிர்ந்திருக்கான்னா இல்லையே…யாரையும் குத்தம் சொல்ல வரல்லே நா…பொதுவா உள்ள நடப்பைச் சொல்றேன்…வேளா வேளைக்கு வெறுமே சோத்தைக் கொண்டுவந்து வச்சாப் போதுமா? வயிறு நிறைஞ்சா மனசு நிறைஞ்சதாகுமா? வாசல்ல கட்டிப் போட்டிருக்கே நாய்…அதுவும் நானும் ஒண்ணா? அதக்கூட Nஉறய்…ஏய்ய்ய்…ன்னுண்டு வெளியே சிநேகமா அழைச்சிண்டு போறேள்…அந்த நாயோட இருக்கிற நெருக்கம் கூட என்னோட கிடையாதா? அதுக்குக் கிடைச்சிருக்கிற அன்பு இந்த வீட்ல எனக்குக் கிடைச்சிருக்கா? அதத்தூக்கி நெஞ்சோட கட்டிண்டு முத்தா கொடுக்கிறேள்….கைக்குழந்தையாட்டம் வச்சிண்டு கொஞ்சித் தள்றேள்…” “அதப்போல உன்னையும் கட்டிண்டு முத்தம் கொடுக்கச் சொல்றியா? அப்பத்தான் உன் மேல அன்புன்னு அர்த்தமா? என்ன அபத்தமா இருக்கு?” “எது அபத்தம், எது அர்த்தம்னு எனக்கும்தான் தெரியும். உங்களுக்கும் தெரியும்தான்…ஆனா தெரியாத மாதிரி நடிக்கிறேள்…உங்களையே உங்க மனசையே நீங்க கேட்டுப் பார்த்துக்குங்கோ…முதல்; உங்க மனசுக்கு நீங்க உண்மையா இருக்கப் பழகுங்கோ…கஷ்டமோ நஷ்டமோ நாங்கள்லாம் அப்படித்தான் வாழ்ந்து முடிச்சிருக்கோம்…எங்க எண்ணங்களையும், எங்க மனசையும், ஏணி வச்சாக்கூட எட்ட முடியாது உங்களால…அவாவாளுக்குத் தாரம்னு ஒண்ணு வந்துட்டா இப்படியா மாறிப் போகும் எல்லாமும்? அந்தக் காலத்து வீட்டு ஆம்பளேள் கொடுமைக்காரான்னு சொல்லுவா…அவாளும் அதுக்குக் கட்டுப்பட்ட பொம்மனாட்டிகளும் அப்படிக் கட்டு செட்டா இருந்ததுனாலதான் குடும்பங்கள் சிதையாம இருந்தது…இன்னைக்கு அப்டியா இருக்கு? வயசானவாளை வச்சு போஷிக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கேளா? உண்மையிலேயே போஷிச்சது நாங்கதான்…போஷிக்கிறதுன்னா என்ன அர்த்தம்னு கேட்பே நீ? அது அர்த்தம் சொல்ற வார்த்தை இல்லை…வச்சு அனுபவிக்கிற வாழ்க்கை…; எங்களோட போச்சு அந்தப் புண்ணியமெல்லாம்…என்னவோ இருந்திண்டிருக்கு இன்னைக்கு. பட்டும் படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும்…” “போகட்டும்…நல்லா போகட்டும்…எங்களுக்கும் அந்தப் புண்ணியம் கிடைக்காமப் போகட்டும்…எங்களால இவ்வளவுதான் முடியும்…முடியறது…உங்கள மாதிரி உடம்புலயும் மனசுலயும் எங்களுக்குத் தெம்பில்லை…நீங்க தின்னு வளர்ந்த சாப்பாடு கூட சுத்தம் அன்னிக்கு…ஆனா இன்னைக்கு அப்படியில்லை…எல்லாமே கலப்படம்…அதனால நாங்களும் கலப்படமாப் போயிட்டோம்…” “நா ஒண்ணும் உங்களைக் குத்தம் சொல்லலை…நா என்னைக் குறைப்பட்டுண்டேன்…பகவானே இன்னும் என்னை வச்சிண்டிருக்கியேன்னு…வேறென்ன சொல்ல….” அம்மாவின் ஆதங்கங்கள் அனர்த்தம். இந்த ஆதங்கங்கள்தான் அவளிடம் கதை கதையாய் ஜனிக்கின்றன போலும்! எல்லா ஏற்ற இறக்கங்களும் அறிந்தவள் அவள். எல்லோரையும் அறிவாள் அவள். எல்லாவற்றையும் கடந்துதானே வந்திருக்கிறாள்? அவள் அனுபவத்தில் பத்தில் ஒரு பங்கு நமக்கு உண்டா? அம்மாதிரிப் பழுத்த அனுபவஸ்தர்கள் நம்மிடையே இருப்பது நமக்குப் பெருமையல்லவா? அவர்கள் நம்மின் சொத்தல்லவா? ஏற்ற இறக்கங்கள் என்றால் இறக்கத்தை மட்டுமே சந்தித்த, எதிர் கொண்ட வாழ்க்கை அவளுடையது. ஏற்றம் பெற்ற நாட்களில முதுமை ஆட்கொண்டது. இன்னொருவரின் துணை தேவைப்பட்டது. தான் பெற்ற செல்வங்கள் தன்னைக் கைவிட்டு விடுவார்களா என்ன? எல்லாரும் எல்லாமும் பெற்று இருக்கும் வேளையிலும் அம்மாவின் மனசு உழன்று கொண்டுதான் இருக்கிறது. “அது அப்படித்தாண்டா. அப்படித்தான். நாங்க கூட்டுக் குடும்பமா இருந்தோம். ஏற்றமோ, இறக்கமோ, நல்லதோ கெட்டதோ, இருந்ததோ இல்லையோ, எல்லாரும் சேர்ந்து அனுபவிப்போம். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம சங்கிலியாப் பிணைஞ்சிண்டிருந்தோம். இன்னைக்கு நீங்க அப்டியா இருக்கேள்? எல்லாரும் தனித் தனித் தீவா நின்னுண்டிருக்கேள்…மூணாவது மனுஷனுக்கு சொல்றாப்லே, உறவுகளுக்குள்ளயே சந்திக்கிற போதும், உறலோ சொல்லிக்கிறேள்…அதுக்கு மேலே ஈஷிண்டா எங்கே எதுக்காவது ஒட்டிண்டிடுமோங்கிற ஜாக்கிரதையோட பழகறேள்…உங்க எல்லாரையும் பணம்ங்கிற ராட்சஷன் பிரிச்சு வச்சிருக்கான்…அங்கிருந்துதான் கிளை பிரியறது எல்லாருக்கும்…வாழ்க்கைக்கு ஆதாரம் பணமாவும் இருக்கலாம்…ஆனா அது மட்டும்தான் வாழ்க்கைன்னு வாழ்ந்துண்டிருக்கேளே…அதத்தான் சகிக்க முடியலை…பணம்ங்கிற ஆதாரத்துல நின்னுண்டிருக்கிறதுனால மதிச்சுப் போற்ற வேண்டிய மேன்மையான விஷயங்களையெல்லாம் உதறிட்டேளே! அது நியாயமா? காலகாலத்துக்கும் அழியாதவைகள்ன்னு சிலது இருக்கு…அவைகளை மதிக்கத் தெரிஞ்சிக்கணும். அதையெல்லாம் பக்தி பண்ணிப் போற்றத் தெரியணும்…அப்பத்தான் நாமளும் நம்ப சந்ததிகளும் நன்னாயிருக்கும்…உங்க சந்ததிகள் உங்களை மதிக்கணும்னா ஆயுசுக்கும் உங்க மேலே அன்பு வச்சிருக்கணும்னா, உங்க காலத்துக்குப் பிறகும் நீங்க மதிக்கப்படணும்னா தொழப்படணும்னா, நீங்க இதையெல்லாம் செய்துதான் ஆகணும்…இந்த உலகத்துல சத்தியமான சில விஷயங்களை என்னைக்குமே அழிக்க முடியாதாக்கும்…ஏன்னா சிரஞ்சீவித்தன்மை  கொண்டதாக்கும் அதெல்லாம்…” எவ்வளவோ சொல்லி விட்டாள் அம்மா. எவ்வளவு கேட்டிருக்கிறான் அம்மாவிடம்! ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும். வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் நம் கூடவே வந்து நம்மை வழி நடத்தும். எதிரே படுத்துக் கொண்டிருந்த அம்மாவையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் இவன். இப்பொழுதெல்லாம் பேசிக் கொண்டிருக்கையிலேயே சட்டுச் சட்டென்று அம்மா படுத்து விடுகிறாள். படுத்த அடு;த்த நிமிடம் கண்ணயர்ந்து விடுகிறாள். அவயவங்கள் மெல்ல மெல்ல அடங்கி வருகின்றனவோ! “என்னா…உட்கார்ந்திண்டிருக்கியா? போய் நீயும் கொஞ்சம் படுத்துக்கோ…எத்தனை நேரம் இப்டி என் முன்னாடியே பழியாக் கிடப்பே? உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு நேக்கு…என் மனசு ஆறுதல் படணும்னு எவ்வளவு கேட்கறே நீ? இப்போல்லாம் இப்டித்தான் திடீர் திடீர்னு கண்ணசந்துடறேன்…எனக்கே தெரியறதில்லே…அப்டியே போய்ட்டாப் பரவாயில்லை…யாருக்கும் பாரமில்லாமப் போய்ச் சேரணுமேன்னு பகவானை வேண்டிக்கிறேன்…இன்னும் படுக்கைல விழுந்து அது இதுன்னு…மலம் ஜலம்னு வந்துடக்கூடாது பாரு…” – சொல்லும்போதே அம்மாவின் விழியோரங்களில் நீர். ஏதும் வார்த்தைகளின்றி இவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘பதினாலு வயசுலே நா உங்க அப்பாவுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டேன்…அன்னைலேர்ந்து எப்டியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்…மனுஷா எந்தக் கஷ்டம் வேணாலும் படலாம்…ஆனா தரித்திரக் கஷ்டம் மட்டும் படவே கூடாது…அது பெரிய கொடுமை…யாராலேயும் தாங்க முடியாதாக்கும்…எத்தனை நாள் பட்டினிச் சேதி அது? ஒரு வேளை ரெண்டு வேளைன்னு உங்களையும் காயப் போட்டு…அப்பப்பா…கொடுமை…கொடுமை…நீ பொறந்தப்புறம்தான் உங்கப்பா உள்ளுரோட வந்து இருக்க ஆரம்பிச்சார்…அதனாலதான் உம்பேர்ல அம்புட்டு இஷ்டம் நேக்கு…’ சென்ற முறை சந்தித்தபோது அம்மா சொல்ல ஆரம்பித்த கதைகளின் தொகையறா. அந்த வார்த்தைகள் இவன் மனதை அப்படியே ஆக்ரமித்திருக்கின்றன. எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிலிர்க்க வைக்கின்றன. இப்பொழுதும் அப்படியே… “கவலைப்படாதே…உன் மனசு போலவே ஆகும்…உன்னோட பிரார்த்தனை என்னைக்கும் வீண் போகாது. நீதான் சொல்லுவியே…உங்க எல்லாருக்காகவும் எவ்வளவு பிரார்த்தனை பண்ணியிருப்பேன் நான்னு…அது உனக்கு மட்டும் பலிக்காமப் போயிடுமா? மாதவன் அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த முறை அம்மாவிடம் கதைகள் இல்லை, வாழ்க்கை இருந்தது என்று தோன்றியது இவனுக்கு.   அத்தியாயம் 4 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    அப்பாவைப் பொறுத்தவரை கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு அம்மா அமைந்தது பெரிய பொக்கிஷம். அவள் சொல்வதைச் சரி சரி என்று  கேட்டுக் கொண்டு அவர்பாட்டுக்குச் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார். அவள் எது செய்தாலும் அவருக்குச் சம்மதமே. திருமணம் ஆவதற்கு முன்பு மாதா மாதம் அப்பா தன் சம்பளப் பணத்தைத் தன் அம்மாவிடம் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் கொடுக்கிறார். அவ்வளவே. அதுவே ஒரு புருஷனுக்குப் பெரிய லட்சணமாயிற்றே! எத்தனை பேர் அப்படிச் செய்கிறார்கள்? இப்படி இருப்பதே போதும் என்று அம்மாவும் விட்டு விட்டாள் போலும்! அல்லது இப்படியான எதிர்பார்ப்பிலேயே அம்மாவும் வந்தாளோ என்னவோ? அம்மாவின்; ஆளுமைக்கு அப்பா கட்டுப் பட்டுத்தான் போனார். எல்லாமும் கச்சிதமாய் உள்ளன. பின் ஏன் பிணக்கிக் கொள்ள வேண்டும். அப்பா மறுப்புச் சொல்லியோ மாற்றம் சொல்லியோ இவன் பார்த்ததில்லை. எல்லாமும் அவன் பார்த்துப்பான் என்று மேலே கையைக் காண்பிப்பது போல அப்பாவுக்கு எல்லாமும் அவ பார்த்துப்பா. ஆதர்ச தம்பதிகள் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மட்டுக்கும் இப்படி ஒருத்தி கிடைத்தாளே என்று நிம்மதியாய்க் கழித்திருக்கிறார் அப்பா. இன்றைய வயதில் ஏதேனும் பெரிய பிரச்னைகள் என்று வந்தால் கூட அப்பாவுக்குச் சமாளிக்கத் தெரியுமோ என்னவோ? அதற்கான முன் அனுபவம் அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை. வாழ்க்கையில் பழுத்துக் கொட்டை போட்டவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் என்று சொல்லி விட முடியுமா?   பாத்ரூம் விளக்கு எரிந்தது. அம்மாதான். விளக்கைப் போட்டதும் சட்டென்று முழிப்பு வந்து ஒரு பார்வை பார்ப்போம் என்பதற்குக் கூட வழியில்லை. அப்படி உறங்கிக் கொண்டிருந்தார் அப்பா. ஏதேனும் திடீர் உடல் உபாதை என்றால்? அப்பாவுக்கும் அப்படித்தானே? சொன்னால் கேட்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த ஊர் போதும். நாங்க இங்கேயே இருந்து கழிச்சிடறோம் என்பார்கள். நான்கு பசங்கள் இருந்தும் ஏன் இப்படித் தனியே இருந்து கஷ்டப்படவேண்டும். ஆளுக்கு மூன்று மாதமோ நான்கு மாதமோ என்று சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே? என்னதான் அப்படிக் கௌரவமோ? அப்பாவுக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கலாம். ஆனால் அம்மாவின் விருப்பத்தை மீறி அவர் அடியெடுத்து வைக்கத் தயாரில்லை. தள்ளியிருந்தாத்தான் மதிப்பு. கிட்டே வந்தா ஒருநா இல்லாட்டா ஒரு நா கசந்து போயிடும். அப்டி ஒண்ணும் கதியில்லாம பகவான் எங்களை வைக்கலியே? உங்கப்பா பென்ஷன் போதும் எங்க ரெண்டு பேருக்கும். நாங்க இப்டியே கழிச்சிடுறோம். இதுதான் அம்மா வாயெடுத்தால் சொல்லும் வார்த்தைகள். நாளைக்கு நமக்கெல்லாம் இப்படி இருக்க முடியுமோ என்னவோ?   “ஏண்டா நானும் கவனிச்சிண்டேயிருக்கேன்…அதென்ன தூக்கமில்லாம அப்படிப் புரண்டுண்டேயிருக்க?” – பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டதும் அம்மா கேட்ட இந்தக் கேள்வியில் அதிர்ச்சியுற்றான் மாதவன். எவ்வளவு கவனம்? இவள் தூங்குகிறாள் என்று தான் நினைக்கப் போக இப்படிக் கவனித்திருக்கிறாளே?” “இல்லியே, நீ இப்போ லைட்டைப் போட்டதும்தான் முழிச்சிண்டேன்….”   “சும்மா சொல்லாதே….வந்ததுலேர்ந்து நானும் பார்த்துட்டேன் நீ சகஜமா இல்லை. திடீர்னு என்ன பயணம்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறே…சரி…சரி…தூங்கு, காலைல பேசிக்கலாம்…” – சொல்லிவிட்டு வந்து ஆயாசத்தோடு படுத்துக் கொண்டாள். அவள் சொன்னது கூடப் பெரிசாகத் தெரியவில்லை இவனுக்கு. அலுப்போடு அம்மா படுத்துக் கொண்டதுதான் மனதை அழுத்திற்று.   இப்படியானதொரு அலுப்போடும், அசதியோடும்தானே அவள் அங்கிருந்து புறப்பட்டு வந்தாள். அப்பாகூடத் தப்பித்துக்கொண்டு விட்டாரே? நான் இருந்து கொள்கிறேன்…நீ போயிட்டு வா என்று அம்மாவை மட்டும் அனுப்பி வைத்ததுதான் அதிசயம். ஒரு வேளை அப்பாவுக்குத் தெரிந்திருக்குமோ என் மனைவியின் லட்சணம்? அப்படித் தெரிந்திருந்தால் தன் ஆசை மனைவியிடம் சொல்லித் தடுக்காமல் இருக்க மாட்டாரே? போய்க் குட்டுப் பட்டுண்டு வந்து சேராதே என்று ஒரு வார்த்தையேனும் சொல்லியிருக்கக் கூடுமே? பாவம் அம்மாவுக்குத்தான் ஒரு நப்பாசை. அப்படிக் கூடச் சொல்லக்கூடாது. தான்தானே வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனது? அதெல்லாம் சரிப்படாதுடா! என்ற ஒரே பேச்சில்தானே அம்மா மறுத்தாள். தன்னால்தான் அம்மாவுக்கு இந்த இழிவு. அதையும் தாங்கிக் கொண்டு இன்னும் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எனக்கு அவர் இருக்கிற எடம்தாண்டா சொர்க்கம், என்னை அவர்ட்டக் கொண்டு விட்டிடு…எத்தனை நாசுக்காக விலகிக் கொண்டாள்.       அத்தியாயம் 5 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    “அம்மா ஏன் இப்படி அசந்து படுத்திருக்காங்க…கேட்டியா?”- காமினியைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது அவளிடமிருந்து.   “கேட்கல…” தான் அவளிடம் கேட்டதே தவறு. அவளென்ன கேட்பது? நானே கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு மனது அடித்துக் கொள்ளாதா? ஒரு வார்த்தை அவள் கேட்கவில்லையே என்று. சுமுகமாக இருக்க வேண்டுமென்றுதானே வந்திருக்கிறாள். நேரத்துக்கு சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறாளா? ஆறுதலாய்க் கேட்கும் நாலு வார்த்தைகள் மனதை ஆற்றுவது போல் வருமா? மாதவனுக்கு காமினியைப் பார்க்கவே பிடிக்கவில்லை.   பெண்கள் சக்தியின் சொரூபம்;, கருணையின் வடிவம் என்கிறார்கள். தாயாய், மனைவியாய், சகோதரியாய், குல விளக்காய் தன்னை விஸ்வரூபித்துக் கொள்பவள் என்கிறார்கள். அந்த அடையாளங்களெல்லாம் இவளிடம் கிடையாதா? தன் தாயும் அவளுக்குத் தாய் போன்றவள்தானே? வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களை ஏன் நிறுத்தி ஒதுக்குகிறார்கள்? உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே இப்படித்தான் இருப்பார்களா? நாளைக்கு இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்பது தெரிந்திருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்றைய பொழுது இப்படி, நாளைய பொழுது அப்படியென்றால் அதையும் சந்திக்கக் தயார் என்பதாகத்தான் எல்லாரும் இருப்பார்களா? இது என்ன மனநிலை? பட்டுப் பட்டு அனுபவித்துத்தான் எல்லாரும் திருந்த வேண்டுமா? அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகளின் மதிப்பறிந்து, அதன்படி தங்கள் வாழ்க்கையினைச் செம்மைப் படுத்திக் கொள்ளக் கூடாதா?   “ஆரம்பத்துலயே எங்கம்மா சொன்னாங்க…வேலை பார்க்கிற பெண் வேண்டாம்டான்னு…நாந்தான் கேட்கல…”   “இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகல…நீங்க உங்க இஷ்டப்படி இருந்துக்கலாம்…”   எத்தனை தைரியமாகப் பேசுகிறாள்? நமக்குத்தான் நாக்கு கூசுகிறது. என்ன சொல்கிறாள் இவள்? டைவர்ஸ் வாங்கிக் கொண்டாலும் அதற்கும் நான் தயார் என்கிறாளா? உண்மையிலேயே அவள் அப்படி விரும்புகிறாளா? அவள் விரும்பினாலும் அவள் தாய் தந்தையர் அதை விரும்புவார்களா? அவளின் சுதந்திரம்தான் எங்களுக்கு முக்கியம் என்பார்களோ? அவளின் சுதந்திரத்தை இப்போது யார் கெடுத்தது? அவளின் இஷ்டத்துக்குத்தானே இருக்கிறாள்? ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இப்படிப் பேச எத்தனை தில் வேண்டு;ம்?   எல்லாம் தானும் வேலை பார்க்கிறோம் என்கிற தைரியம்தான். வேலை பார்த்தால,; சம்பளம் வாங்கினால் எல்லா சுதந்திரமும் உண்டு என்று அர்த்தமா? குடு;ம்பம் என்கிற அமைப்பிலே இருக்கிறபோது சில கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதுதானே பொருள். கணவனாகட்டும், மனைவியாகட்டும் எல்லாருக்கும் பொதுவானதுதானே அந்த விதிகள். அதனால்தானே இந்திய சமுதாயம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது? இதெல்லாம் இவள் அறியமாட்டாளா?   “உன்னோட க்ராஸ் சேலரி என்ன?” – தற்செயலாக ஒரு நாள் கேட்டான் மாதவன்.   “முப்பத்தி ரெண்டு…”   உங்களோடது… என்று அவள் கேட்கவில்லை. தன்னை விட நிச்சயம் குறைவுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். இருபது வருஷம் சர்வீஸை முடித்த தனக்கு இப்பொழுதுதான் இருபதைத்தாண்டியிருக்கிறது. தெரிந்துதானே கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஒரு வேளை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ என்னவோ. அப்பொழுதுதான் தன் இஷ்டப்படி தான் இருக்க முடியும் என்று உறுதிப் பட்டிருக்கலாம். ஆனாலும் இவனுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. கொஞ்சமென்ன. அந்த விஷயம்தான் தன் மனதில் அடிக்கடி உதைத்துக்கொண்டேயிருக்கிறது. கல்யாணத்திற்கென்று பெண் பார்த்தபோது அத்தனை பெரிதாக இந்த விஷயம் தோன்றவில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் உதைக்கிறது. அவள் மத்திய அரசுப் பணியாளர் என்பது தெரியும்தான். கூடத்தான் இருக்கும் என்பதும் தெரியும்தான். ஆனால் இத்தனை வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் ஆயிரமோ ரெண்டாயிரமோதானே வித்தியாசம் இருந்தது. பின் எப்படி  இத்தனை விலகிப் போயிற்று. அவள் துறையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தன. திடீரென்று மெடிக்கல் அலவன்ஸ் அது இது என்று எதெதோ கொடுத்தார்கள். அதில் அவள் எங்கேயோ சென்று விட்டாள். அது கிடக்கட்டும். இத்தனை வித்தியாசத்திற்குப் பின்னால்தான் அவளிடம் இந்த மாற்றமா? முன்பிருந்தே அப்படித்தானே?   “கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்…இவ்வளவு ஸ்லோவாப் போனா நடந்து போற டைம் வந்துடும்…”   “இந்த பாரு என் ஸ்பீடு இவ்வளவுதான்…நல்லா வேகமா மாப்பிள்ளை ஸ்கூட்டர் ஓட்டுவாரான்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு நிச்சயம் பண்ணிருக்க வேண்டிதானே?”   “என்ன பண்றது, தெரியாமப் போச்சு…நார்மல் ஸ்பீடு இருக்கும்னு நா எதிர்பார்த்தேன்…இது அதுக்கும் குறைவா இருக்கு…அட்ஜஸ்ட பண்ணிக்க வேண்டிதான்…”   “என்னோட ஸ்பீடு முப்பதுலேர்ந்து முப்பத்தஞ்சுதான்…அதுக்கு மேல போனா நிச்சயம் எவனாலயும் கன்ட்ரோல் பண்ண முடியாது. இங்க இருக்கிற டிராஃபிக்குக்கு அதுதான் விதிச்ச விதி. அதுனாலதான் இன்னைவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் இல்லாம ஓட்டிட்டிருக்கேன்.    “அது சரி, ஓட்டுறது வேறே, உருட்டுறது வேறே…நீங்க ஓட்டுறீங்களா உருட்டுறீங்களான்னு உங்களுக்குத் தெரியாது. மத்தவங்களுக்குத்தான் தெரியும்…” சாதாரணப் பேச்சுத்தானே என்று கூட அவள் விட்டுக் கொடுத்ததில்லை. தன் பங்குக் கருத்து என்று ஒன்றை நிலை நாட்டாமல் விடமாட்டாள். இவன்தான் அமைதியாக இருந்து மேற்கொண்டு பேச்சு வளராமல் அதை முடித்து வைப்பான். ஒரு வேளை இந்த மாதிரித் தணிந்து போவதே அவளுக்குப் ப்ளஸ்ஸாகி விட்டதோ என்னவோ? கணவன் மனைவிக்குள் என்ன ப்ளஸ் மைனஸ்?   எல்லா வீடுகளிலும் ஆண்கள் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது மாதவனுக்கு. உறவுகளில் ஏற்படும் உரசல்களைப் புரிந்து கொண்டு அதன் வெம்மையை உணர்ந்து பெண்கள்தான் சிடுக்குகள் விழாமல் அவிழ்த்துக் செல்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறதே! அதனால்தான் இந்தக் குடும்ப அமைப்பே இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது என்று பெருமை பேசப் படுகிறதே! எத்தனை வீடுகளில் இப்படியான நிலமை இருக்கிறது? யார் உணர்கிறார்கள்?     அத்தியாயம் 6 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    நீ விரும்பித்தானே கல்யாணம் பண்ணினே? வேலை பார்க்கிற பொண்ணுதான வேணும்னே…அப்போ அட்ஜ்ஸ்ட் பண்ணிட்டுப் போய்த்தான் ஆகணும்… -ஆப்த நண்பன் சுந்தரத்தின் அறிவுரையைக் கேட்டு பதில் எதுவும் இன்றி நின்றான் மாதவன். அவனும் இவனும் ஒரே வருடத்தில் அரசுத் தேர்வுகள் எழுதி வேலைக்குச் சென்றவர்கள். இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு படித்தார்கள். நான் முந்தி, நீ முந்தி என்று ஓடினார்கள். கடவுள் நீங்கள் இருவரும் என்றும் சேர்ந்தேதான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டதுபோல் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலை கிடைக்கும்படி செய்தார். கிடைத்த வேலையும் ஒரே ஊரில் அமைந்ததுதான் மிகப் பெரிய சந்தோஷம். அதுவும் திருச்சியில். கை கோர்த்துக்கொண்டு கிளம்பினார்கள் இருவரும். ஒரே டிபார்ட்மென்ட்ல கிடைச்சிருக்கக் கூடாதா என்று வருத்தப்பட்டான் சுந்தரம். ஆமாண்டா, வேணும்னா நாம ரெண்டு பேரும் மெட்ராஸ் போயி, சர்வீஸ் கமிஷன் ஆபீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுப்போம். ஏன் இப்படி எங்க ரெண்டு பேரையும் பிரிச்சீங்கன்னு கேட்போம்… ஒரே ஊர்லதான போட்டிருக்கோம்னு சொல்வாங்களே…? எங்க ரெண்டு பேரையும் எப்டித் தெரியும் உங்களுக்கு? ன்னு கேட்போம். வாயுண்டானா வழியுண்டு…. உங்க ரெண்டு பேர் அப்ளிகேஷனும் ஒரே நேரத்துல ரீச் ஆச்சு. உங்க ரெண்டு பேர் விடைத்தாள்லயும், விடைகளெல்லாம் ஒண்ணாவே இருந்திச்சு…ஒரே ஊர்ல, ஒரே தெருவுல, அடுத்தடுத்த வீடுகள்லருந்து பரீட்சைக்கு அப்ளை பண்ணி வந்திருக்கீங்க…சரி, ஃப்ரென்ட்ஸா இருப்பீங்க போலிருக்குன்னு ஒரே ஊர்ல அப்பாய்ன்ட்மென்டை போட்டு விட்டோம்…ஒரே டிபார்ட்மென்ட் போட முடிலதான்…அதுல எங்களுக்கும் வருத்தம்தான்…ஒரு வித்தியாசம்…அவுரு க்ளார்க் போஸ்ட்டுக்கு எழுதியிருக்காரு…நீங்க சுந்தரம் ஸ்டெனோ போஸ்ட்டுக்கு எழுதியிருக்கீங்க…அப்டியும் ஒரே ஆபீஸ்ல வேகன்ஸி இருக்குதான்னு பார்த்தோம்….எதுக்கு நண்பர்களைப் பிரிப்பானேன்னு…காலியிடம் இல்லை…அதனாலதான் வௌ;வேற டிபார்ட்மென்ட் போடவேண்டியதாப்போச்சு….தப்பா நினைச்சிக்காதீங்க…. எப்டீங்க தப்பா நினைக்காம இருக்கிறது? என்னைப் போய் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்ல போட்டிருக்கீங்க…ஆர்.டி.ஓ. ஆபீஸ்லாம் என் குணத்துக்கு ஒத்து வராதுங்க…நான் நேர்மையானவன்…சம்பளத்தை மட்டும் நம்பி வாழறவன்….எனக்குக் கை நீட்டத் தெரியாதுங்க…அதெல்லாம் நமக்கு ஒத்து வராது. ஒழுங்கா வேலையைப் பார்த்தமா, போனமான்னு இருக்கணும்….அப்டியாப்பட்ட ஒரு செக்ஷன்ல போட்டாங்கன்னாப் பரவாயில்லே….எப்டிப் போடுவாங்க…எங்க போட்டாலும் ஸ்டெனோ ஆபீசருக்குப் பி.ஏ. மாதிரித்தானே…அப்போ அவுரு சொல்றதைக் கேட்டுத்தான ஆகணும்…அவருக்குரிய வசூலைக் கறந்து கொடுக்கிற வேலையை நாந்தான செய்யணும்….அடக் கடவுளே…இப்டி என்னைச் சோதிச்சிட்டியே…நான் என்ன பாடு படப்போறனோ…. ஒண்ணும் கவலைப் படாதீங்க…இந்த மாமா வேலையெல்லாம் என்னால செய்ய முடியாதுன்னு தைரியமாச் சொல்லுங்க…விட்ருவாங்க… விட்ருவாங்கன்னா? அப்டீன்னா, பிடித்தம்னா வச்சிக்குவாங்க…இல்லன்னா டிரான்ஸ்பர் பண்ணிடுவாங்க…அவ்வளவுதான்… அங்க போனாலும் இப்டித்தான இருக்கும்…. அதுக்கென்ன பண்றது….எல்லா எடமும் புழுத்து நாறத்தான செய்யுது…அப்போ அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கப் பழகிக்குங்க… சாக்கடைக்குள்ளயே நீயும் நீந்துன்னு  சொல்றீங்க… வேறே வழி…நம்மளால இந்த ஊர் உலகத்தைத் திருத்தவா முடியும்…நீங்க ஒருத்தரா நின்னு உங்க ஆபீசைச் சரி பண்ணிட முடியுமாக்கும்? ஆபீஸ் மொத்தத்தையும் சரி பண்ண முடியாதுதான்… ஆனா என்னைச் சரி பண்ணிக்க முடியுமே… உங்களைச் சரி பண்ணிக்கவா? அப்பன்னா இப்ப நீங்க சரியா இல்லியா? எப்டீங்க இப்பச் சரியா இல்லாம இருக்க முடியும்? இன்னமேத்தானங்க ட்யூட்டியே ஜாய்ன் பண்ணப் போறேன்… அப்போ அப்புறம் பாருங்க என்னைங்கிறீங்க…? பார்க்கிறதென்ன….நான் என்னளவுல கரெக்டா இருந்திட்டுப் போறேன்…அவ்வளவுதானே…. நீங்க இருப்பீங்க…ஆனா உங்க பேரைச் சொல்லிக் கறந்திடுவாங்களே…பரவால்லியா? அப்பவும் பேர் கெடுமே…? அப்டியா சேதி? அப்போ அதையும் நிப்பாட்டணும்னு சொல்லுங்க…. நிப்பாட்டறது என்னங்க…கூட்டத்தோட கூட்டமா நீங்களும் வாங்கிப் போட்டுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டிதான்…இல்லன்னா உங்களை ஏமாளியாக்கிடுவாங்க…கிறுக்கன்னுவாங்க…உங்க பங்குக் காசையும் உங்களுக்கே தெரியாம வாங்கி, பிரிச்சிக்கிடுவாங்க…இல்லன்னா உங்க பாஸ் ஆட்டையப் போட்ருவாரு… இவ்வளவு லோலாயத்தனம் இருக்கா இங்க…? இப்ப அப்டித்தான் தெரியும் உங்களுக்கு…உள்ளே நுழைஞ்சு பாருங்க….உங்க நிறம் உங்களுக்கே தெரியாம மாறிடும்…. அட என்னய்யா சொல்றீங்க….? நீங்களே இப்டிப் பேசினீங்கன்னா எப்டீ? என்னடா சுத்த கேப்மாரித்தனமா இருக்கு….? - பளீரென்று வாய்விட்டுச் சத்தம் போட்டு, சூழலை மறந்து, சிரித்தான் சுந்தரம். இவ்வளவு நேரம் கனவுலகில் எங்கெங்கோ சஞ்சரித்துவிட்டு நினைவுக்கு வந்திருந்தான். வேலைக்குச் சேரும்முன் கண்ட கனவு அப்படியே மனதில் திரைப்படம் போல் பதிந்திருந்தது. நண்பர்களெல்லாம் சேர்ந்து டயலாக் விட்டு ஒரு மாலை நேரம் இஷ்டத்துக்குச் சந்தோஷமாய் இருந்த பொழுதில் ஆளாளுக்குக் கற்பனை பண்ணிக் கொண்டு பேசித் தீர்த்ததில் ஒரு நீண்ட காமெடிப் பீஸே தயாராயிருந்தது அவர்களுக்குள். அதன் கதாநாயகன் தானாய் இருந்து அன்று விழுந்து விழுந்து சிரித்துப் பட்ட பாடு? இப்பொழுது நினைத்தாலும் அந்த காமெடிக் காட்சிகள் ஏதாச்சும் படத்தில் வைக்கலாம் போல் தோன்றும் சுந்தரத்திற்கு. என்னடா, பதிலே எதுவும் சொல்லாம இருக்க? என்றான் மாதவனைப் பார்த்து.     அத்தியாயம் 7 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    “உன்னைக் கரம் பிடித்தேன்…வாழ்க்கை ஒளி மயமானதடி… பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி….. – எங்கோ ஒலிக்கும் பாடல் காதுக்குள் மெல்ல வந்து இவன் மனதைத் தழுவியது. கரம் பிடித்தவள் வாழ்க்கையை ஒளி மயமாக்குவாள் என்று பார்த்தால்  அப்படியா அமைந்திருக்கிறது தனக்கு. மனதோடு கரம் பற்றினாலும் எலN;லாருக்கும் அவர்கள் நினைப்பதுபோலவேவா அமைந்து விடுகிறது? வேதனை அவன் மனதைப் பிடுங்கி எடுத்தது. மாதவன் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்தது வேறு. அவனுக்கு நடந்தது வேறு. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அடங்கின பெண்ணாய், அவர்களைப் போஷிக்கும், அன்பு செலுத்தும் மகாலட்சுமியாய், தன் மீது தாளாத அன்புடையவளாய், வரப்போகும் மனைவி இருக்க வேண்டும் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் வேலை பார்க்கும் பெண் வேண்டும் என்றும் முடிவு செய்திருந்ததால் மற்றவையெல்லாம் தானே மறைந்து பின்னுக்குப் போய் ஒளிந்துகொண்டு விட்டனவோ என்று இப்பொழுது தோன்றியது அவனுக்கு. காமினியை நெருங்கும்போதெல்லாம் அவள் தன்னை விடக் கூடச் சம்பளம் வாங்குபவள் என்கிற தாழ்வு மனப்பான்மை இவனை வதைத்தது. இதை நினைக்கக் கூடாது என்றுதான் அவன் நினைத்துக் கொள்வான். தன் சம்பளத்தையும் வேலையையும் சொல்லித்தானே அவர்கள் இணங்கினார்கள். அப்படிப்பார்த்தால் அவளுக்கும் இவனுக்கும் ஒரு பத்தாயிரத்துக்குள் வேறுபாடு இருக்கும். அது அவரவர் சர்வீசுக்கு வந்த வருடத்தைப் பொறுத்துக் கூட இருக்கலாம். கிடைக்கக் கூடிய அலவன்சுகளைப் பொறுத்தும் அமையலாம். சமீபத்தில் அவளுக்குக் கொடுக்கக் கூடிய மெடிக்கல் அலவன்சை உயர்த்தியுள்ளார்கள். வீட்டு வாடகைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளார்கள். பயணங்களுக்கான இலவசங்களை எடுத்துவிட்டு, பதிலாக அதற்கு ஒரு தொகையை நிர்ணயித்துக் கொடுத்துள்ளார்கள். இதெல்லாம் அவளின் சம்பளத்தை உயர்த்;தத்தானே செய்யும்? கிடந்து புழுங்கி முடியுமா? நான் எங்கக்காவுக்கு நாலாயிரம் பணம் அனுப்பப் போறேன்…. யாரு, சந்திரா அக்காவுக்கா? அந்த முதியோர் இல்லத்துல இருக்காங்களே அவுங்களுக்கா? ஆமாம்….  அனுப்பிட்டியா? இல்ல இனிமேத்தான் அனுப்பணுமா?  இன்னைக்கு அனுப்பப் போறேன்….அதான் சொன்னேன்… அனுப்பறதோ அனுப்புற…ஐயாயிரமா அனுப்பிட வேண்டிதானே…? – எப்படிச் சொன்னோம் இந்த பதிலை? மாதவனுக்கே வெளிச்சம். என் மனது தாராளம்தான் என்றும், வேண்டாம் என்று நான் என்றும் சொல்லப் போவதில்லை என்றும், என்னை மீறி நீ அனுப்பிவிட முடியாது என்று மறை பொருளாய் எச்சரித்தும் சொன்னோமோ? ஆகா…என்னவொரு குயுக்தி…..எனக்குக் கூடத் தந்திரமாய்ப் பேச வருகிறதே…? தந்திரம் வந்துவிட்டது. தைரியம் வந்ததா? அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…அவ ரெண்டாயிரம்தான் கேட்டா…நாந்தான் நாலாயிரமா அனுப்பறேன்னு சொன்னேன்…..அனுப்பிடறேன்… - சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள் காமினி. என்னவொரு அநியாயம்? ரெண்டாயிரந்தான் கேட்டாளாம். இவ நாலாயிரம் அனுப்பறாளாம்? அவ்வளவு தாராளமா? கேட்டத அனுப்பிச்சாப் போறாது? இங்க மாடி எடுக்க முடியாம நான் திணறிக்கிட்டுக் கெடக்கேன். பேங்க் லோன் போடுவோம்னா வேண்டாம்ங்கிறா? இந்த வீடு கட்டுறபோதே பத்தாக்குறையா இருந்தப்போ, நாந்தான் பிராவிடன்ட் பணம் அட்வான்ஸ் போட்டு எடுத்து முடிச்சேன்…அது பிடித்தம் அதிகமானப்போ மட்டும் கத்தினா…? இப்போ…? இதை யாரு கேட்குறது? மாசா மாசம் இப்டிப் பணத்தைத் தட்டி விட்டான்னா என்ன ஆகுறது? அவுங்களாக் கேட்குற போது கொடுக்கிறது. யாரு வேண்டான்னா? என் சம்பளப்பணத்தை நான் எத்தனை கரிசனையாச் செலவு செய்றேன். வீட்டுச் செலவு அத்தனைக்கும் என் பணந்தான் செலவாகுது….பத்தாம வர்றபோதுதான அவ பணத்தைத் தொடுறோம். அப்படிப் பார்த்தா இந்நேரம் எவ்வளவு சேவிங்ஸ் இருக்கணும். வெறும் பாங்க்ல வச்சிருக்கிறதுல என்ன பயன்? ஏதாச்சும் பிக்சட் டெபாசிட்டு, அது இதுன்னு போட்டு வைக்கலாம்ல…வட்டியாச்சும் வரும்தானே? எதத்தான் கேட்டா இவ? எல்லாம் அவ இஷ்டந்தான். எனக்குத் தெரியாம ஃபிக்சட் டெபாசிட்டுல போட்டிருந்தான்னா சிங்கிள் அக்கவுன்ட்லதான் போட்டிருக்கணும்…ஜாயின்ட்லதான போடணும்…எதாச்சும் இன்னைவரைக்கும் கேட்டிருக்காளா? இதென்ன சுத்த அநியாயமா இருக்கு? இவளோட குடும்பம் நடத்துறதே பெரிய லோலாயமா இருக்கும் போலிருக்கே…இங்க என்ன பொதுக் கணக்கா இருக்கு….ரெண்டுபேர் பணத்தையும் மாசா மாசம் ஒரே அக்கவுன்ட்ல இனிமே போட்டாத்தான் சரிப்படும்….நினைத்துக் கொண்டான். அதை எப்படி ஆரம்பிப்பது என்பதில்தான் அவனிடம் சிக்கல் இருந்தது. அவளுக்கு சம்பளம் வங்கியில்தான் சேருகிறது. இவனுக்கும் அப்படித்தான். ஒரு மாதம் கூட சம்பளம் வந்ததுபற்றி அவள் சொன்னதில்லை. அவள்பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பாள், வந்து கொண்டிருப்பாள். என்ன பழக்கம் இது? வீட்டுச் சாமான்களுக்கு லிஸ்ட் கொடுக்கும்போது மட்டும் கை நீளும். இவ்வளவுதாங்க இந்த மாத லிஸ்ட்…என்று ஏதோ சிக்கனமாய்த் திட்டமிட்டிருப்பதுபோல் நீட்டுவாள். கூடவே ஏ.டி.எம்.ல எடுத்திட்டு வந்தேன்…என்று ஒரு மாதமாவது பணத்தை நீட்டியிருக்கிறாளா? நீ கேட்க வேண்டிதானடா…ஏன் பயப்படுறே…பொண்டாட்டிக்கு பயப்படுவாளா? வாயைத் திறந்து கேளு… - அம்மா சொன்னாள். கேட்கத்தான் நினைத்தான் அன்று இரவு. ஆனால் கேட்டது வேறு. அவள் தந்தது வேறு. அப்பப்பா….எங்கோ சொர்க்கலோகத்திற்குத் தன்னை அழைத்துக் கொண்டு போய்விட்டாளே….அவள் காலடியிலேயே கிடந்தான் படுக்கையறையில். சே…நானும் ஒரு மனுஷனா? – மறுநாள் தன்னைத்தானே நொந்து கொண்டான் மாதவன்.       அத்தியாயம் 8 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    மனதில் வைராக்யம் பிறந்தது. அவள் எனக்கு அடங்கி நடக்கவேண்டுமென்பதில்லை. சுதந்திரமாய் இருக்கட்டும். ஆனால் ஒன்று. எப்போது இந்த வீட்டுக்கு வந்தாளோ அப்போது இனிமேல் இதுதான் அவள் வீடு. இங்கிருப்பவர்களிடம் அன்பு செலுத்துவதும், எல்லோரையும் அரவணைத்துப் போவதும் அவள் கடமை. அவளின் வாழும் வீடு இதுதான். இங்கிருப்போரின் உணர்ச்சிகளை அவள் மதிக்க வேண்டும். இந்த வீட்டின் இயல்புகளை அவள் நேசிக்க வேண்டும். தனது முழுமையான அன்பைச் செலுத்த வேண்டும். எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டும். இந்த வீட்டின் மேன்மைக்காக உழைக்க வேண்டும். எல்லோரின் அன்பை, பாசத்தைச் சம்பாதிக்க வேண்டும். தன் கணவனைப் போஷிக்க வேண்டும். அவனுக்காகத் தான் என்கின்ற எண்ணத்தை தன்னுள்ளே பலப்படுத்திக் கொண்டு, அவனின் நன்மைக்காக, அதன் மூலம் அவள் குடும்பத்தின் நல்வாழ்வுக்காகப் பாடுபட வேண்டும். அதுதான் அவள் கடமை. இன்னமும் பிறந்த வீட்டை நினைத்துக் கொண்டு, இங்கு ஒட்டாமல் அவள் இருப்பது நன்றன்று. அவள் வளர்ந்து வாழ்ந்த வீட்டை ஒரேயடியாக விட்டு ஒதுங்க வேண்டும் என்று இங்கு யாரும் சொல்லவில்லை. அப்படி ஒருத்தியை வற்புறத்துவதும் மனிதத் தன்மையன்று. ஆனாலும் அந்த நினைப்பிலேயே காலத்தைக் கழிப்பதும், இங்கிருப்போரிடம் முகம் கொடுத்துப் பேசாமையும், காரியங்களில் ஒன்றிடாமையும் நல்லதல்ல. இதை அவளிடம் தெளிவாகப் பேசியாக வேண்டும். அதன் மூலம் அவள் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்கியாக வேண்டும். அவளை இந்த வீட்டின் ஒரு பெண்ணாக, தலைமையேற்கும் ஒரு தாயாக உருவாக்க வேண்டும். குலவிளக்காக அவள் உருவெடுக்க வேண்டும். அதற்கு என் குடும்பத்தாரும் எல்லாவிதத்திலும் உதவி செய்தாக வேண்டும். இவர்களும் அவள் மேல் பாசத்தையும் பண்பையும், அன்பையும் நிலைநாட்டியாக வேண்டும். எல்லோரும் ஓர் நிறை. அன்பு ஒன்றே எல்லோரையும் பிணைத்திருக்கும் வலை. அந்த வலை அறுந்து போகலாகாது. முடிவு செய்து கொண்டான் மாதவன். அதற்கு முதல் படியாக அவன் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யத்தனித்தான். தன்னைப் பொறுத்தவரை இதுநாள்வரை அவளிடம் மாறுதலாக அவன் இருந்ததேயில்லை. கண்டிப்பு என்பதை நிலைநிறுத்தியதேயில்லை. ஆயினும் சொல்லவேண்டியதை, பேச வேண்டியதைப் பேச வேண்டிய நேரத்தில் பேசத் தவறியவன்தான். அதனால்தான் இன்றைய சிக்கலான நிலைமை. அதற்கு ஒருவகையில் தானும் காரணம்தான். ஆகையினால் தன்னிடமிருந்தே ஆரம்பிப்போம் இந்த அமைதி வழிப் பயணத்தை. முடிவு செய்து கொண்டான் மாதவன். காமினி, நாளைக்கு நாம வெளியூர் போறோம். வெளியூர்னா கோயில்களுக்கு. ஓ.கே….? – அவளுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்றுதான் ஆரம்பித்தான். திடுதிப்னு இப்டிச் சொன்னா எப்டி? அப்டியெல்லாம் எனக்கு லீவு போட முடியாது… அதான் இப்ப சொல்லிட்டேன்ல…நாளைக்கு ஆபீஸ் போ…வேலையைப் பாரு…சாய்ந்தரம் கிளம்பறபோது லீவு போட்டுட்டு வா…செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி…நாலு நாள்…சனி, ஞாயிறு லீவு….ஆறு நாளைக்கு இந்த சமையல் வேலை கிடையாது…அக்கடான்னு வெளில சுத்தியடிச்சிட்டு வருவோம்…ஓ.கே.யா? எங்க போகணும்ங்கிறீங்க…? தஞ்சாவூர் போவோம்…சுத்துவட்டாரத்துல நிறையக் கோயில் இருக்கு…பிறகு கும்பகோணம் போவோம்…அங்க ரூம் எடுத்துத் தங்குவோம்….கோயில்களாச் சுத்துவோம்…ஆறு நாளைப் பிரயோஜனமாக் கழிச்சிட்டுத் திரும்புவோம்…மனசுக்கு இதமா இருக்கும்….உனக்கும் ஒரு ரெஃப்ரெஷ்மென்ட் கிடைச்ச மாதிரி ஆகும்…ஓ.கே.யா? பதிலே சொல்லவில்லை காமினி. கடுப்பாகியது மாதவனுக்கு. அதுதான் அவள் குணம். அது அவளின் பிறவிக் குணமா அல்லது அவனுக்கென்று அவள் ஏற்படுத்திக் கொண்டதா என்று சந்தேகம் வரும் இவனுக்கு. வழக்கம் போல் மறுத்தாள். அவள் மறுக்கத்தான் செய்வாள் என்பதை இவனும் அறிவான். இதுநாள்வரை ஒரு விஷயத்தில் கூட இவன் சொன்னதை அவள் கேட்டதில்லை. எதைச் சொன்னாலும் மறுப்பாள். பார்ப்போம் என்பாள். அவளுக்காய் மனசு வரும் அன்று செய்வாள். இவன் சொன்னவுடனே, சொன்ன அன்றே செய்தாள் என்று ஒரு காரியம் கூட இன்றுவரை இல்லை. தாங்க முடியாமல் கேட்டே விட்டான் இவன். கல்யாணம் ஆன நாள்லேர்ந்து, இன்னைக்கு வரைக்கும் நான் சொன்ன எதையாவது நீ கேட்டிருக்கியா? உடனே செய்திருக்கியா? இல்லை….செய்ததில்லை… - ஆணித்தரமாய் பதில் வந்தது. அப்போ தெரிஞ்சேதான் நீ மறுத்திருக்கே…வேணும்னே மாட்டேன்ருக்கே…அப்டித்தானே… நீங்க சொல்றது எனக்குப் பிடிச்சிருந்தாத்தானே செய்ய முடியும்? கண்ணை மூடிட்டுச் செய்திட முடியுமா? கண்ணை மூடிட்டுச் செய்யிற காரியமா நான் உன்கிட்டே சொன்னேன். கண்ணை மூடிட்டுக் கிணத்துல குதின்னேனா? என்ன உளர்றே? அநாவசியமாப் பேசாதீங்க…எனக்குப் பிடிக்கலைன்னு தெரியுதில்ல…அப்ப நீங்களே செய்துக்க வேண்டிதானே…? நான் சொன்னது இந்தக் குடும்பத்துக்கானது…நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறமே, இந்த வீட்டுக்கானது…நானா செய்யக் கூடியதுன்னா உன்கிட்டே சொல்லிட்டிருக்கமாட்டேன்…செய்து முடிச்சிட்டு, சிவனேன்னு இருப்பேன்…இது நீ செய்ற காரியம்…அதுனாலதான் உன்கிட்டே சொன்னேன்…முடியுமா, முடியாதா? அதை மட்டும் சொல்லு… நீங்க சொல்லிட்டீங்கன்றதுக்காக செய்திட முடியுமா? எனக்கும் பிடிச்சிருக்கணுமில்ல…? உனக்குப் பிடிக்காட்டாலும், நான் சொன்னதுக்காகச் செய்யமாட்டே…அப்டித்தானே…? அது எப்படிச் செய்ய முடியும்? நாளைக்கு அது தப்பாப் போயிடுச்சின்னா அது சம்பந்தமாப் பேச வேண்டியிருக்கும்…நமக்குள்ள சண்டை வளரும்…வீணான பணச் செலவு, மனக்கஷ்டம்…எல்லாம் இருக்குல்ல….? நீ யோசிக்கிற இதையெல்லாம் நானும் நினைச்சிப்பார்த்திருப்பேன்னு உனக்குத் தோணலியா? என்னை என்ன மடையன்னு நினைச்சியா? யோசிச்சிருந்தீங்கன்னாத்தான் சொல்லியே இருக்க மாட்டீங்களே? நான் செய்ற காரியம் எப்பவும் நூறு சதவிகிதம் ப்ளஸ்ஸாத்தான் இருக்கணும் எனக்கு…ஏற்ற இறக்கம் கூடாது. பரவால்லேன்னு ஒரு காரியத்தை என்னால செய்ய முடியாது…அதுனாலதான் செய்யலை….. அவளிடம் பேசிப் புண்ணியமில்லை என்ற முடிவுக்கு வந்தான் மாதவன். இதற்கு ஒரே வழி அவளோடு பேச்சை சுத்தமாய் நிறுத்திக் கொள்வது ஒன்றுதான். அவள் வீட்டில் இருக்கிறாள் என்று இம்மியும் கண்டுகொள்ளவே கூடாது. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாக வேண்டும். இப்பொழுது அவளே அப்படித்தானே இருக்கிறாள். சாப்பாட்டைக் கொண்டுவந்து டேபிளில் வைக்கிறாள். எடுத்துப் போட்டுக் கொண்டுதானே சாப்பிட்டாக வேண்டியிருக்கிறது? என்று அவள் அன்போடு பரிமாறியிருக்கிறாள்? அப்போதுதானே சமையல் ருசிக்கும் என்பது அவளுக்கு என்று தெரிவது? இவளை என்ன இப்படி வளர்த்திருக்கிறார்கள்? இவளிடம் அன்பு, கருணை, பாசம், நேசம் என்று இம்மாதிரியான உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமே இல்லையா? ஜடமா இவள்? வாழ்க்கை கொஞ்சங் கொஞ்சமாய் நரகமாகிக் கொண்டு வருவதுபோல் தோன்றியது இவனுக்கு. இப்படித்தான் பிரிந்திருக்கிறார்கள் இன்றுவரை. அவளோடு மாதவன் சேர்ந்தது ஒன்றிரண்டு முறைதான். அதுவும் அவளின் முழு ஈடுபாட்டோடு நிகழவில்லை. என்னவோ யந்திரம் போல இயங்கினாள். அது இவனுக்குப் பிடிக்கவில்லை. ரசனை இல்லாத முண்டம் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். அவன் மனம் மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. கூடவே இன்னொன்றும் தொற்றிக் கொண்டது அவன் மனதில். வேறு யாரையேனும் மனதில் நினைத்துக் கொண்டிருப்பாளோ? காதலித்துக் கை விட்டவன் மனதில் குடியிருப்பானோ?   ஆனால் ஒன்று. அப்படி எதுவும் விபரீதமில்லை என்று மட்டும் மனம் உறுதி சொன்னது. அதுவே பெரிய நிம்மதியாய் இருந்தது இவனுக்கு. சிலரின் குணாதிசயங்கள் இப்படி நம்மைப் பலவாறாக நினைக்க வைத்து விடுகிறது என்றுதான் தோன்றியது. வலிய ஒருத்தியின் மேல் பழியைச் சுமத்துவதா? அது தகுமா? அவனால் அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க முடியவில்லைதான்.       அத்தியாயம் 9 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    “காமினி, நீ இப்டித் தனியா வந்திருக்கிறது கொஞ்சங்கூடச் சரியில்லைம்மா…அதுவும் மாப்பிளைக்குத் தெரிவிக்காம வந்திருக்கேங்கிற…என்னம்மா இது? உனக்கே மனசுக்குத் தோணலை?”   காமினி அமைதி காத்தாள். சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்கிறாளா? அல்லது சொல்வது பிடிக்கவில்லையா?   இரண்டு நாட்களாக இருந்த அமைதி இன்றுதான் கலைந்திருக்கிறது. அதுவும் சித்தப்பா மூலம். அப்பா கூட ஒன்றும் கேட்கவில்லை. அதற்காக அப்பாவுக்கு ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா? அம்மா பேசவேயில்லை. அது ஒன்றே போதும். அவளின் எதிர்ப்பின் அடையாளமாய். தரையில் உட்கார்ந்திருந்த காமினி அப்படியே சித்தப்பாவின் மடியில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தார் அவர்.  உலகில் அன்பு ஒன்றுக்குத்தான் எல்லா சக்திகளும். அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லைதான். அது சித்தப்பாவுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோ என்னவோ? எத்தனை ஆழமாக உட் புகுவதற்கு இந்தத் தலை வருடல்?   பிறந்ததிலிருந்து இருபது இருபத்திரெண்டு ஆண்டுகள் வரை தாய் தந்தையா,; உற்றார் உறவினர் சுற்றத்தாரோடு வாழ்ந்து விட்டு, திடீரென்று வேறொரு வீட்டிற்குப் போ என்று சொன்னால் உடனடியாக ஒரு பெண்ணால் அப்படிப்போய் எப்படி ஒன்றி விட முடியும்? மனம் அப்படியும் இப்படியுமாகத் தவிக்கத்தான் செய்கிறது. ஒரேயடியாக அறுத்துக் கொண்டும் வர முடியாதே? அப்படியல்லவா கட்டிப் போட்டு விடுகிறார்கள்? இந்தத் திருமண பந்தம் அப்படித்தானே மனிதர்களை முடக்கிப் போட்டு விடுகிறது! வாழ்வின் ஆதாரமே அதுதான் என்பது போலல்லவா கோலோச்சுகிறது? அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆளுமையே அதுதான் என்றிருக்கும்போது! அது ஏன் இப்படி இடையிடையில் கட்டறுத்துக் கொள்ளத் தவிக்கிறது? கட்டறுத்துக் கொள்ளவா அல்லது அம்மாதிரியான நிகழ்வுகளின் ஆரம்பக் கட்டத்தில் கால் வைத்து ஒருவருக்கொருவர் மானசீகமாய் மிரட்டிக் கொள்வதிலே ஒரு திருப்தியா?   தாய் தந்தையர்களின் குண விசேஷங்களிலிருந்து அத்தனை எளிதாய் விலகிப் போய் விட முடியுமா? அதுநாள்வரை தனது பிறந்தகத்தில் தன் பெற்றோரோடு தான் கண்ட வாழ்க்கை தனக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது?  எல்லாம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் இதில் ஏதோ சுவை இருக்கிறது.   மென்மையாகச் சிரித்துக் கொண்டார் சாம்பசிவம். “என்னம்மா, ஊருக்குப் போகணும்போல இருக்கா?”   இந்த மனுஷன் தன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? தன் மனதில் ஓடும் எண்ண அலைகள் இவருக்கு எப்படித் தெரிகிறது? ஒரு வருடலில் அத்தனையையும் துல்லியமாகப் புரிந்து கொள்வாரோ? இதுதான் அனுபவம் என்பதோ? “உடனே என்னை ஊருக்கு அனுப்பறதுலயே இருங்க…உங்க எல்லாரையும் பார்த்துட்டு, கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போகலாம்னு வந்திருக்கேன் நான். நீங்க என்னடான்னா என்னை விரட்டுறீங்க?”   “நா ஏன்மா விரட்டுறேன் உன்னை. இது உன் வீடு. நானே ஓசிக்கு இருக்கிறவன். உன்னை நா அப்படிச் சொல்ல முடியுமா?”   அதிர்ந்தாள் காமினி. “சித்தப்பா! என்ன சொல்றீங்க? நீங்கதான் எனக்கு எல்லாம். எங்க அப்பாவை விட உங்க மடிலதான நா நாள் பூராவும் கிடந்திருக்கேன். அப்புறம் எதுக்கு இப்டிப் பேசுறீங்க?” “சும்மாச் சொன்னேம்மா…என்னதான் ஆனாலும் நா எனக்குன்னு ஒண்ணு இல்லாதவன்தானே! கல்யாணம் காட்சின்னு எதுவும் பார்க்காதவன். நீங்களே சதம்னு இருந்திட்டவன். அது எப்பவாவது தவறோன்னு மனசுக்குத் தோணும். அப்போ ஏதாச்சும் மனசு பிரண்டு இப்படி வார்த்தைகள் வரும். நீ ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதே!”   “சின்ன வயசுலேர்ந்து நீங்கதான் எனக்கு எல்லாம். என்னை பள்ளிக்கூடத்துல  கொண்டுவிட்டுக் கூட்டிவருவீங்களே தினமும்…அப்போயிருந்து உங்களத்தான் என் அப்பாவா நினைச்சிட்டிருக்கேன்…என் அப்பா கூட எனக்கு அப்புறந்தான்…”   “சரி, இப்போ இதை எதுக்குச் சொல்றே? என்ன செய்யணும் உனக்கு? அதைச் சொல்லு முதல்ல…”   “எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்…என்னை எதுவும் கேட்காம இருந்தாப் போதும்…” “அது எப்டிம்மா? திடீர்னு நீபாட்டுக்குத் தனியா வருவே…கேட்டா அவர் அவுங்க வீட்டுக்குப் போயிட்டார், நா இப்டி வந்துட்டேன்னு சொல்லுவே…என்ன எதுன்னு காரணமில்லாமே நீங்கபாட்டுக்கு இருப்பீங்க…இதுல ஏதாச்சும் பிரச்னை இருக்குமோன்னு பெரியவங்களுக்குத் தோணுமாயில்லியா?”   “இந்தமாதிரி ஒவ்வொண்ணையும் தூண்டித் துருவுறதுதான் இந்தப் பெரியவங்க வேலையாப் போச்சு…வேறே போக்கிடம் இல்லாமே அக்கடான்னு கிடப்போம்னு இங்க வந்தா நீங்க என்னடான்னா இப்படிப் போட்டுத் தொணத்துறீங்க…”   “சரிம்மா…ஸாரிம்மா…போதுமா? உனக்கு எப்போ மனசு வருதோ அப்போ சொல்லு போதும். இப்போ சித்தப்பா உன்னை வற்புறுத்தலே…இதை இந்த வீட்ல நாந்தான் உன் கிட்டே கேட்டாகணும். நா இருக்கேன் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்ங்கிறதுதான் உன் அப்பா அம்மாவோட கணிப்பு. ஆகையினால நீ இன்னைக்கில்லாட்டாலும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சாவது விஷயத்தை என்கிட்டே சொல்லித்தான் ஆகணும்…சரிதானா? ஓ.கே. இப்போ உன் விருப்பம் போல இருக்கலாம் நீ…நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்…”   “எங்கே சித்தப்பா…நானும் வரட்டுமா?”   “அய்யய்ய…இதுக்கெல்லாம் நீ வரக் கூடாதும்மா…இது அலைச்சல் வேல…” “அது என்ன அப்படி அலைச்சலானது?”   “தெரியாதா உனக்கு? நமக்கு விமான நிலையம் பக்கம் ஒரு ப்ளாட் கிடக்கு தெரியுமோ? அதை விக்கச் சொல்றான் உங்கப்பன்…அதுக்காகத்தான் புறப்பட்டேன்…..”   “விக்கப் போறீங்களா? அதுபாட்டுக்குக் கிடந்துட்டுப் போகுது…இன்னும் விலை ஏறுமில்லியா? எதுக்கு விக்கணும்?”   “எதுக்கு விக்கணுமா? உன் கல்யாணக் கடன்களை  அடைக்க வேண்டாமா? கடன் கொடுத்தவங்க சும்மாவா இருப்பாங்க…?”   அதிர்ந்தாள் காமினி!       அத்தியாயம் 10 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    இன்று வரை ஒரு வார்த்தை சொல்லவில்லை அப்பா. தன் கல்யாணத்துக்குக் கடன் ஆகிப்போனதுபற்றி. லோன் போட்டுத் தருகிறேன் என்று சொன்னபோது கூட மறுத்துவிட்டார். நீ உன் புருஷன் வீட்டுக்குப் போறபோது பாங்க் பேலன்ஸ் துடைச்சு இருக்கக் கூடாதும்மா. அப்புறம் அதுவே அவங்களுக்கு ஒரு வெறுப்பாயிடும்… என்னப்பா நீங்க பேசுறது அபத்தமா இருக்கு. கல்யாணம் முடியறவரைக்கும் என்னுடைய சம்பாத்தியம் இந்த வீட்டுக்குத்தான் சொந்தம். அவுங்க யாரு கேட்குறதுக்கு?   அதான் இத்தனை வருஷம் கொடுத்திருக்கியேம்மா…கொஞ்சமாச்சும் பணத்தோட போனேன்னாத்தான், உன் சொந்தச் செலவுகளுக்கே கூட அவங்க கையை எதிர்பார்க்காமா இருக்கலாம். அதுக்குத்தான் மாதா மாதம் சம்பளம் வரப்போகுதில்லப்பா…என்ன பேசுறீங்க நீங்க…? அதத்தான் கணக்குப் பண்ணிடுவாங்களே அவுங்க…இந்தப் பணம் உன்கிட்டயே இருக்கட்டும்…உன்னோட அவசரச் செலவுகளுக்கு உதவும். நான் அனுபவஸ்தன்…புரிஞ்சிதான் சொல்றேன். அப்பா பேச்சைத்தான் கேளேன்… மறுத்தே விட்டார் அப்பா.  இவளும் தன் வங்கிக் கணக்கை மாதவனிடம் இன்றுவரை சொல்லவில்லை. சொல்லவில்லை என்பதைவிட அவன் இன்றுவரை கேட்கவில்லை. அது பெரிதில்லையா? ரகசியமாய் ஏதும் தெரிந்து கொண்டிருப்பானோ? அவளாய்ச் சொல்கிறாளா பார்ப்போம் என்று காத்திருப்பானோ? காத்திருந்தால்தான் என்னவாம்? சம்பாதிப்பவளுக்கு இதைக் கூடச் சொந்தமாய் வைத்துக் கொள்ள உரிமையில்லையா என்ன? உரிமை இல்லை என்று யார் சொன்னார்கள்? ஆனால் அதை மறைப்பதுதானே தவறு. மாதவன் என்றாவது தன் வரவு செலவுகளை மறைத்திருக்கிறானா? பொதுவாய்த்தானே வைத்திருக்கிறான். வீட்டுச் செலவுகளுக்கு என்று தான் எடுத்துக் கொள்வதைக் கூட ஒருநாளும் அவன் கணக்குக் கேட்டதில்லையே…? அவன் வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் கூட எந்த நேரமும் யாரும் பார்த்துக் கொள்ளலாம் என்பதுபோல் மேஜை டிராயரில்தானே போட்டு வைத்திருக்கிறான்? அது திறந்தமேனிக்கேதானே இருக்கிறது இன்றுவரை. ஆனால் தான் அப்படி இருக்கிறோமா? அவனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்திருப்பதுபோல், அவனும் தன்னை முழுமையாய் நம்பித்தானே இருக்கிறான். நம்ம ரெண்டுபேருக்கும் மத்திலே  ரகசியம்ங்கிறது இருக்கவே கூடாது. அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாலே நம்மளோட இருப்பையெல்லாம், இதுநாள்வரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையையெல்லாம் சொல்லித்தான் ஆகணும்னு நான் சொல்ல வரலை…இப்போ, இனிமே அந்த நல்லதை மெயின்டெய்ன் பண்ணனும்னு சொல்றேன்…எனக்கு நீ…உனக்கு நான்….நமக்குள்ளே எந்த பேதமும் இல்லே….ஆனா அது நாம ரெண்டுபேரும் இருக்கிறதைப் பொறுத்து இருக்கு…பி ஃப்ராங்க்…அவ்வளவுதான்…. ஒரு நாள் அவன் சொன்னது இவள் மனதில் அப்படியே. நம்ம வாழ்க்கை ஒளிமயமா இருக்கணும்…அதுக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யணும்…வேணுங்கிறதைச் செய்யத் தவறக் கூடாது. அதே சமயம் வேண்டாங்கிறதை ஒதுக்கவும் தயங்கக் கூடாது. வேணுங்கிறதும், வேண்டாங்கிறதும் உனக்கும் எனக்கும் இடையிலே வித்தியாசப்படலாம். ஆனால் அதைப் பேசித் தீர்த்துக்கணும்…சண்டை போடக் கூடாது. ஒருத்தர் கருத்தை இன்னொருத்தர் மதிக்கிற குணம் வேணும்…மிதிக்கிற குணம் ஆகாது. என்னடா இவன் இப்டியெல்லாம் என்னென்னவோ சொல்லி அடுக்கிட்டே போறானேன்னு உனக்குத் தோணலாம்…இதையெல்லாம் இப்படித் தத்துவார்த்த ரீதியாப் பார்த்தா புரியாது. அனுபவிச்சுப் பார்க்கணும்…நடைமுறைலதான் அந்த அனுபவம் கிடைக்கும். அப்பத்தான் நம்மளோட மெச்சூரிட்டி அதிகரிக்கும். அது நம்ம ரெண்டு பேரையும் பக்குவப்படுத்தும்….நான் சொல்றதெல்லாம் புரியும்னு நினைக்கிறேன்…ரொம்பக் குழப்பமா இருந்திச்சின்னா ஒதுக்கிடு…அப்பப்போ காரியங்களை எதிர்கொள்றபோது பார்த்துக்கலாம். கவலையை விடு….. அவனின் பேச்சு அப்படியே இவள் மனதில். இவனை அன்பால்தான் வசப்படுத்த வேண்டும். அதற்காக ஒரேயடியாகத் தாழ்ந்தும் போய்விட முடியாது. வேலை பார்க்கும் நான், சம்பாதிக்கும் நான், எப்படி ஒரேயடியாய்த் தாழ்ந்து போக முடியும்? நான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கும் இவன், தானும் விட்டுக் கொடுக்கத் தயாராக வேண்டுமே? ஆனால் ஒன்று. இதுவரை அவனைப் பொறுத்தவரை அப்படியொன்றும் பிணங்குபவனாய்த் தெரியவில்லைதான். நான்தான் இன்னும் வெளிப்படையாய் இல்லை அவனிடம். எது என்னைத் தடுக்கிறது? அவனுக்குச் சமமாய் வேலை பார்க்கிறோம் என்ற நினைப்பா? அவனை விடச் சற்றுக் கூடச் சம்பளம் வாங்குகிறோம் என்ற கர்வமா? என்னை எதுக்கும் கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த எண்ணம் ஏன் வந்தது என்னிடம்? யோசிக்கத் தலைப்பட்டாள் காமினி. அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிற்கும் தலை சிறந்த மருந்து என்று அவள் எத்தனையோ புத்தகத்தில் படித்திருக்கிறாள். ஆனாலும் ஒரேயடியாய் இறங்கிப் போக மறுக்கிறது மனது. ஏனிப்படி? யோசிக்கத்தான் செய்தாள் அவளும்.     அத்தியாயம் 11 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    “சார், மாதவன் சார் லீவு…அவர் இருந்தாத்தான் அந்த சீட்ல எதுவும் எடுக்க முடியும்…நாம தொட்டுக் கலைச்சு வச்சிட்டம்னா அப்புறம் வந்து அவர் சத்தம் போடுவாரு…” – தயங்கியவாறே கூறினார் கணக்காளர் வேதாசலம்.   “நல்லாயிருக்கே, அதுக்காக அவர் திரும்ப வர்றவரைக்கும் அந்த சீட்டு வேலைகளை அப்படியே போட்டு வைக்க முடியுமா? நான் சொல்றேன் எடுங்க…” – மேலாளர் சூரியமூர்த்தி சாவியை எடுத்து டேபிள் மேல் போட்டார்.   “எதை எடுக்கிறீங்களோ அதே இடத்தில திரும்ப வச்சிடுங்க…அவ்வளவுதான்..ஏன்னா அவர் தன்னோட வசத்துக்கு ஏத்தமாதிரி அடுக்கியிருப்பார் இல்லையா…”   “ஆமா சார்…கொஞ்சம் கலைஞ்சாலும் அந்த மனுஷன் சத்தம் போடுவாரு…”   “சர்தான்யா…நல்லா வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் இருக்கிற குணம்தான் அது. அதை நாம மதிக்க வேண்டிதான். அதுக்காக அந்த சீட்ல வேலையை நிறுத்தி வைக்க முடியுமா? தந்தியும், ஃபாக்ஸ_மா வந்திட்டிருக்கு…இந்த மாதிரி நேரத்துல லீவைப் போட்டுட்டுப் போயிட்டாரு…என்னைக்கு வர்றாராம்?”   “ஒரு வாரம் போட்டிருக்காரு ஸார்…எக்ஸ்டன்ட் பண்ணினாலும் பண்ணுவேன்னாரு…” “எக்ஸ்டன்ஷனா? அது சர்தான்…அந்தாள் என்ன கிறுக்கனா? ஒரு மாதிரி எப்பவும் தனக்குத்தானே பேசிட்டேயிருக்காரு…ஏதாச்சும் பிரச்னையோ?”   “அவர் வீட்ல ஒய்ஃப்போட எதோ இருக்கும் போலிருக்கு சார்…”   “எப்டிச் சொல்றீங்க?”   “இப்ப அவர் ஊர் போயிருக்கிறதே அப்டித்தான் ஸார்…அவுங்க அம்மாவக் கொண்டு வந்து வச்சிட்டு இப்ப சமீபத்துலதான் கொண்டு விட்டாரு…அப்பருந்து இப்டித்தான் ஸார்…ஒரு வாட்டி சொல்லியிருக்காரு…”   “அட, எந்த வீட்லய்யா இல்லாம இருக்கு…எல்லாப் பொம்பளைங்களும் அப்டித்தான். அப்டி இருந்துதான் அவுகளும் மாமியாரா ஆகுறாங்க…அனுபவிக்கிறாங்க…”   “இப்பல்லாம் அப்டியில்லை ஸார்…இப்பல்லாம் வேலை பார்க்கிற மாமியார்கள்தான். தான் உண்டு தன் பென்ஷன் உண்டுன்னு தனியாவே இருந்துடறாங்க…இல்லன்னா அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சேவை விடுதில கொடுத்து தானும் அங்க வசதியா இருக்க ஆரம்பிச்சிடறாங்க…அதனால யாரும் யாரையும் மதிக்கிறதில்லை…உன் பணம் உன்னோட என் பணம் என்னோடன்னுட்டு தன் பையன் நல்லாயிருந்தாச் சரின்னு விட்டுடறாங்க…டேக் இட் ஈஸி பாலிஸி வந்திடுச்சு ஸார் இப்போல்லாம்…”- வேதாசலம் ரொம்பவும் கேஷ_வலாகச் சொன்னார். “அதப் போல இவரும் இருந்திட வேண்டிதான? ஏன் பொண்டாட்டிட்ட முரண்டிக்கிறாரு?” “அவுருக்கு அவுங்க அப்பா அம்மாவை வச்சிக்கணும்னு ஒரு ஆசை. அதுக்கு அவர் ஒய்ஃப் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாமில்ல ஸார்…”   “சரி விடுங்க…இந்தப் பேச்சு நமக்கெதுக்கு? அதுவும் ஆபீஸ் நேரத்துல? வேலையைப் பார்ப்போம்…அந்த பென்ஷன் ஃபைலை எடுங்க…இன்னிக்கு அதை டிஸ்போஸ் பண்ணிடணும்…அவர்ட்டயே சொல்லியிருந்தேன்…என்னவோ போட்டுட்டுப் போயிட்டாரு…எல்லா மனுஷனுக்கும் எல்லாச் சமயத்துலயும் மனசு ஒரே மாதிரியாவா இருக்கு? சொந்த வாழ்க்கை சரியா இருந்தாத்தான் ஆபீஸ் வேலைல கான்ஸன்டிரேட் பண்ண முடியும்…அது சத்தியமான விஷயம்…எத்தனபேர் மனசு நொந்து, குடிக்குப் பழகி, தானும் ஒழுங்கா இருக்காம, ஆபீஸையும் கெடுத்து எப்படியெல்லாமோ ஆயிடறாங்களே? அந்த மாதிரியெல்லாம் இவர் இல்லாம இருக்காரே அது மட்டும் சந்தோஷம்….”   “இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா இவரும் அப்படி ஆனார்னா ஆச்சரியப்படுறதுக்கில்லை ஸார்…பல சமயங்கள்ல இவர் பேச்சு அப்படித்தான் இருக்கு…இவருக்கு மனசுல ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கும் போலிருக்கு  ஸார்…தன் பெண்டாட்டி தன்னை விட அதிகச் சம்பளம் வாங்குறான்னு…அது அடிக்கடி அவர் பேச்சுலேர்ந்து தெரியுது…”   “இது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலயாமா? எம்புட்டு இருந்தா என்னய்யா? இந்தக் குடும்பத்துல நாம ரெண்டு பேரும் பார்ட்னர். நமக்காகவும் நம்ம குழந்தைகளுக்காகவும் எது சரியோ அதை விடாமச் செய்வோம்…”ன்னு பிரதிக்ஞை எடுத்தமாதிரி செய்திட்டுப் போயிட்N;டயிருக்க வேண்டிதானே?”   “அங்கதான் சார் வருது பிரச்னையே! அவுங்களுக்குக் குழந்தைகளே இல்லை இன்னிவரைக்கும்!” “அதான் தெரியுமே…கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமோ என்னவோதானய்யா ஆகும்…மெதுவாப் பிறக்கட்டும்…இப்ப என்ன கெட்டுப் போகுது…”   “அதுக்கில்ல ஸார்…அதுக்குள்ளேயும் இவுங்க காம்ப்ளக்ஸ் பிரச்னைல ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க போலிருக்கு…”   “இவருக்குத்தான் அதுன்னா அவுங்களுக்குமா?”   “அவுங்களுக்கு நாமதான் அதிகமா வாங்குறோம்னு எண்ணமிருக்கும் போலிருக்கு…” “அப்படியிருந்தாலே விளங்காதே…”   “அதான் படக்குன்னு லீவைப் போட்டுட்டு இவர் கிளம்பி;ட்டார் போலிருக்கு…”   “அப்போ அந்தம்மா மட்டும் தனியா இருக்கா?”   “அது தெரில ஸார்…”- சொல்லிவிட்டு சூரியமூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார் வேதாசலம். “நீ என்னய்யா சந்தேகமாப் பார்க்கிறே? நான் தேடிப் போகப்போறேன்னு நினைச்சிட்டியா?”   வாயைப் பொத்திக் கொண்டு  சிரித்துக் கொண்டார் வேதாசலம். அலுவலகத்தில் சூரியமூர்த்தியின் பேச்சுக்களை அறிவார் அவர். பெண் பணியாளர்கள் மத்தியில் அவர் ரெட்டை அர்த்தம் தொனிப்பது போல் பல சமயங்களில் பேசுவதும், சிலர் அதை ரசிப்பதும், சிலர் தாங்க மாட்டாமல் தலை குனிந்து கொள்வதும்….இந்த வயதில் இவருக்கு இது தேவையா? என்றுதான் தோன்றும் இவருக்கு. ஆனாலும் மேலாளரை ஒன்றும் சொல்ல முடியாது இவரால். ஏதாச்சும் லேசாகச் சொல்லப் போக மறுநாளைக்கு ஆபீஸ் வந்து டேபிளைப் பார்த்தால் மாறுதல் ஆணை இருக்கும் மேலே! அப்படி எத்தனையோ பேரை விரட்டியிருக்கிறார் அவர். அதை நினைத்தபோது மெலிதாக உடம்பு நடுங்கியது வேதாசலத்துக்கு. ஏன் மாதவனுக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறதே!       அத்தியாயம் 12 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    “மாதவன், அந்த கான்ட்ராக்டர் ஃபைல் என்னாச்சு? ரெண்டு நாளாச் சொல்லிட்டிருக்கேன் வைக்க மாட்டேங்கிறீங்க…”-சூரியமூர்த்தி சூடாகத்தான் ஆரம்பித்தார்.   இன்னும் கேட்கவில்லையே மறந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்திருந்த மாதவனுக்கு திடுக்கென்றது.   “இப்போ முதல்ல அதை மூவ் பண்ணுங்க…”-   “சரி ஸார்…” என்றுவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன். இப்படி வந்ததும் வராததுமாக சொல்லப்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதெல்லாம் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறதோ அப்படியான கோப்புகள்தான் இவருக்கு லட்டு போலும் என்று நினைத்துக் கொண்டான். சிக்கலான கோப்புகளை வைத்துக் கொண்டு அதில்தான் காசு பார்க்க முடியும். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலை முடிக்கப்பட்டிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெரிய வேண்டும். அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் அவர். இத்தனை ரிஸ்க் எடுத்து இந்தப் பணி என்னால் முடிக்கப்பட்டிருக்கிறது என்று புள்ளி வைத்து விடுவார். அங்கே மற்றவர் உழைப்பு எல்லாம் பஸ்பமாகி விடும். அப்படியான ஒன்றைத்தான் இப்பொழுது கேட்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மனத்திரையில் எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.   இந்த ஆபீசுக்கு அவன் விரும்பித்தான் வந்தான். வந்த பொழுதினில் சூழல் நன்றாகத்தான் இருந்தது. ஆறு மாதங்கள் நன்றாக, நிம்மதியாகத்தான் ஓடியது. திருமணம் ஆகி தான் மாற்றலாகி வந்த இடம் நன்றாக அமைந்ததில் பெருத்த நிம்மதி இருந்தது இவனுக்கு. தன் மனைவியின் அதிர்ஷ்டம் என்பதாகக் கூட ஒரு எண்ணம் ஏற்பட்டு அவள் மீது அன்பு பெருகியது. ஆனால் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த மனுஷன் இங்கே வந்து உட்காருவார் என்று யார் கண்டது. வந்த பிறகுதான் தெரிந்தது அவர் இங்கே விட்டுப் போய் சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது, மீண்டும் வந்து விட்டார் என்று. சபதம் செய்து விட்டுப் போனாராம். சரியா ஸிக்ஸ் மந்த்ஸ்…திரும்ப வரலேன்னா என் பேரு சூரியமூர்த்தி இல்ல…இதற்கு முன் இருந்த அலுவலரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போன சபதமாம் இது. தன் செல்வாக்கு அவரை விட மேல் என்று நிலை நாட்டுவதில் அத்தனை வெறி.   விருப்பு வெறுப்பற்று சமநிலையில் மக்களுக்கான பணிகளை செய்ய அமர்ந்திருக்கிறோம் இங்கே. மனித வக்கிரங்கள் எப்படியெல்லாம் நிர்வாகத்தைச் சீர் குலைக்கின்றன. நினைத்துப் பார்த்துக் கொள்வான் இவன். அவ்வளவுதான் முடியும். அதை வாய்விட்டுச் சொல்லக் கூட முடியாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது கூட சிக்கல்தான் இன்றைய நாளில்.   யோசனையிலேயே ஆழ்ந்து விட்டவன், அவர் சொன்ன கோப்பை எப்படி எழுதி வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான். மனதில் பல்வேறு விதமான தயக்கங்கள். வெறுமே அறிவுரைகள் கேட்டு கோப்பினை நகர்த்தி இவனுக்குப் பழக்கமில்லை. இது நான் எழுதுவது, இது பற்றி முழுமையாகச் சொல்ல எனக்குத் தெரியும் என்ற திமிர் இவனுக்கு எப்போதும் உண்டு. அந்தவகையில்தான் அதை எப்படி நகர்த்தலாம் என்பது இவனின் சிந்தனையாக இருந்தது.   பியூன் கபிலன் வந்து நின்றார்.   “சார், மானேஜர் உங்களக் கூப்பிடுறாரு, சீஃப் ரூம்ல இருக்காரு…அந்தக் கான்ட்ராக்டர் ஃபைலை எடுத்திட்டு வருவீகளாம்…”   “இந்தாங்க…நீங்களே கொண்டு கொடுத்திடுங்க…கேட்டா இதோ வர்றாருன்னு சொல்லுங்க…”   “அய்யய்யோ…நீங்கென்ன ஸார்…வம்புல மாட்டி விட்ருவீங்க போலிருக்கே…உங்களக் கொண்டுவரச் சொன்னார்னா நீங்க என்னக் கொண்டு கொடுங்கங்கிறீங்க…?”   “கபிலு…ஒண்ணும் தெரியாத மாதிரிப் பேசக் கூடாது…எல்லாம் எனக்குத் தெரியும்…இதில நா எழுதினா அது வேறே மாதிரிப் போயிடும்…அவுருக்கு வேணுங்கிறதை அவரே எழுதிக்கட்டும்…நா எதுவும் கண்டுக்கலே…ஆனா அவுரு நினைக்கிற மாதிரி என்னால எழுத முடியாது…”   “இத அவருட்ட நீங்களே நேர்ல சொல்லிட வேண்டிதான ஸார்…என்னை ஏன் ஸார் உள்ளே இழுக்குறீங்க?”   “யோவ், தெரியும்யா எல்லாம்…என்னமோ உனக்கும் ஒண்ணுமேயில்லாத மாதிரிப் பேசாத…எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான உட்கார்ந்திருக்கோம்…போய்யா…போய் சும்மாக் கொடு…அவருக்கே தெரியும்..நானே கொண்டு கொடுத்தாலும் நீங்க போங்கன்னு சொல்லப் போறாரு…இத யாரு கொடுத்தான்ன?”   “ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் ஸார்…”   “நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவனுக்கு அது ஒண்ணுதான்யா சொத்து…அதன் மூலமாக் கிடைக்கிற நஷ்டம் கூட அவனுக்குச் சுகம்தான்யா…” – வாயை மூடிக் கொண்டு கோப்பை எடுத்துக் கொண்டு போனார் கபிலன்.   முன்பே ஒரு முறை இந்தக் கோப்பு பற்றிப் பிரச்னை வந்திருப்பதை நினைத்துக் கொண்டான் மாதவன். அப்பொழுதே நீங்கள் நினைப்பது போல் என்னால் எழுதி வைக்க முடியாது அதற்கான ஆதாரமில்லாமல் எழுதுவது என்பது ஆகாது என்று மேலாளரிடம் முரண்டியிருக்கிறான். இத்தனை நாட்கள் அதனாலேயே நின்றிருந்த கோப்பு இன்று மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இதில் மாதவனுக்கு ஆச்சரியமாயிருந்த விஷயம் அலுவலரும் மேலாளரின் வார்த்தைகளைத் தட்டாமல் ஒப்புதல் அளிப்பதுதான். அது எப்படியோ நடந்து விடுகிறது. அந்த சாமர்த்தியம் இந்த சூரியமூர்த்திக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எது சரி என்று ஒன்று உண்டல்லவா? அதை மீறி ஏன் இப்படி நடந்து விடுகிறது? யோசித்து யோசித்து எப்படியோ போகட்டும், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று விட்டு விட்டான் அவனும்.   அப்படியான ஒரு நாளில்தான் திடீரென்று அவனும் ஒரு நாள் அந்த மாறுதலைச் சந்திக்க வேண்டியிருந்தது.   “என்னங்க இது அநியாயமா இருக்கு? நா இங்க வந்து ஒரு வருஷந்தான் ஆகுது…அதுக்குள்ள என்னை மாத்தினா என்னங்க அர்த்தம்?”   பொதுவான அவன் புலம்பலை எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பதில்தான் சொல்லவில்லை. யாரும் சாதகமாக வரமாட்டார்கள் என்பதை இவனும் அறிவான். ஆனாலும் இந்த அளவுக்கா பயந்தோளிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் வெட்கப்பட்டான் இவன். அந்த முறை தப்பித்தது இவனின் கடுமையான எதிர்ப்பினால்தான்.   ஆணையை எடுத்துக் கொண்டு நேரே அலுவலரின் அறைக்கே போனான். தன் மீது என்ன குறை இருக்கிறது என்று வினவினான். தன் பிரிவுப் பணியில் தான் என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பினான். அலுவலக நேரத்திலோ, விடுப்பு எடுப்பதிலோ, கூடுதல் வேலைகளைத் தாமதமின்றி முடிப்பதிலோ என்ன குறையைக் காண முடிந்தது என்றும், காரணமில்லாமல் அநாவசியமாக ஒருவனை மாற்றம் செய்வது அவனது கடமை உணர்வையே தாழ்த்தி எடை போடுவதற்கு சமம் என்று வெறி கொண்டவனைப் போல் அலுவலரிடம் வாதாடினான். தானா அப்படிப் பேசினோம் என்றும், எங்கிருந்து தனக்கு அம்மாதிரி ஒரு தைரியம் வந்தது என்றும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.   அன்று மாதவன் கொடுத்த அதிர்வு சூரியமூர்த்தியையே சற்றுக் கலங்கத்தான் வைத்து விட்டது. இந்த அளவுக்குப் பேசுபவன் என்னமும் செய்யத் துணிந்து விடுவான் என்பதாக நினைத்து பயந்து விட்டாரோ என்னவோ, அவரே சொல்லி அந்த மாறுதல் ஆணையைக் கான்ஸல் செய்து விட்டார் அன்றே! அதிலும் கூட தானே அவனுக்கு உதவியதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுதான் அவர் செய்த பெரிய அரசியல்.       அத்தியாயம் 13 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    தனது மாறுதல் ஆணையை ரத்து செய்ததிலிருந்து அலுவலகத்தில் மாதவனுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தன்னை ஒன்றும் அந்த அலுவலகத்தின் உறீரோவாக நினைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போலவே தன்னடக்கத்தோடு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனை வைத்து அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் ஒன்றும் தூக்கி அடிக்க முடியாது என்றெல்லாம் பேச்சு கிளம்பியிருந்தது. மனிதர்களில் அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது இவனுக்கு. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மூலமாகவாவது பாதுகாப்புக் கிடைக்காதா என்று நினைக்கிறார்களேயொழிய இது தவறு என்று நியாயமான விஷயங்களுக்குக் கூட நிமிர்ந்து நிற்பதில்லை. ஆனாலும் மாதவனுக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் எழவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை என்னும் ஓடம் பெரும்பாலும் மனிதர்களை அமிழ்த்தத்தானே பார்க்கிறது? அதில் அநாயாசமாக படகு விட்டுக் கொண்டு சுகமாகப் பயணிப்பவர் எத்தனை பேர்? ஒவ்வொரு மனிதர்க்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். எல்லாமும் உணர்ந்துதான் இருந்தான் மாதவன். அவனின் அந்த நல்ல குணமே அலுவலகத்தில் பலரையும் வியக்க வைத்திருந்தது. வேதாசலம் மாதவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவன் தன் வேலைகளில்; கன கச்சிதமாக இருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் வெளியூரில் இருந்த பொழுதே அவனை அறிவார். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக இவனைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அவனேயறியாமல் திருச்சிக்குச் சென்று அலுவலகப் பணியாக வந்தது போல் இருந்து, அவனைப் பார்த்து எடை போட்டு விட்டுத்தான் வந்தார். ஆனால் அவன் அமையாமல் போனது அவருக்குப் பெருத்த வருத்தமாகத்தான் போய்விட்டது. அதிகப் பொருத்தமில்லாததில் அவர் மனைவியின் கேள்விகளுக்கு அவரால் தக்க பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இன்றுவரை மாதவன் தனக்கு மாப்பிள்ளையாக வராதது அவருக்கு வருத்தம்தான். அதனாலேயே அவருக்கு அவன் மேல் என்றும் ஒரு கருணையான பார்வை இருந்து கொண்டேயிருந்தது.   அதற்குப்பின் மாதவனை சூரியமூர்த்தியால் நெருங்கவே முடியவில்லை. இந்தாளால் தனக்குத் தொடர்ந்து துன்பங்கள் வரக்கூடும் என்ற மாதவன் நினைத்தான். அத்தோடு மட்டுமில்லாமல் அந்தத் தலைமை அலுவலகத்தின் நகரக் கிளை அலுவலகங்கள் எல்லாவற்றையும் தன் உயர் அலுவலக இடத்;தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் மிரட்டி வைத்திருந்ததை அவன் கண்ணுற்றான். வெறுமே வேலை மட்டும் சரியாகப் பார்த்துவிட்டால் போதாது. அதற்கும் மேல் இங்கே ஒரு அரசியல் தேவைப்படுகிறது என்று தோன்றியது அவனுக்கு. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அது மிகவும் தேவைப்படும். அத்தோடு தன்னைப் போல் உண்மையான கடமையாற்றும் பிற பணியாளர்களையும் இவரிடமிருந்து காக்க வேண்டியது அவசியம் என்று ஏனோ அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. சூரிய மூர்த்திக்கு எதிராக இப்படி ஒரு அணி சேர்த்தால்தான் தானும், தன் சகாக்களும் நிம்மதியாகக் காலந்தள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தான் அவன். அப்படியான ஒரு நல்ல நாளில்தான் இவன் தன்னை அந்த ஊழியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டான். என்ன சார், நீங்கள்லாம் இப்டித் தனியாளா இருக்கலாமா? தன்னுடைய ட்யூட்டியை எவன் சரியாச் செய்றானோ அவங்கள்லாம்தான் சார் ஊழியர் சங்கங்கள்ல பங்கெடுக்கணும். அப்பத்தான் சார் நம்ம கோரிக்கைகளை நாம சரியான திசைல எடுத்து வைக்க முடியும். கொண்டு செல்ல முடியும். இத்தனை நாள் நீங்க எங்க கண்ணுல படாமப் போயிட்டீங்களே…வெறுமே சந்தாக் கொடுத்திட்டு சிவனேன்னு இருக்கிற ஆள் போலிருக்குன்னு எங்களையும்  நினைக்க வச்சிட்டீங்களே? என்று ஆதங்கப்பட்டனர் வந்தவர்கள். இருப்பதிலேயே அந்த சங்கம்தான் ஓரளவுக்குப் பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்கனவேயே தன்னுள் கொண்டிருந்தவன் மாதவன். அதனால் அன்று மனமுவந்து தன்னை அத்தோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு நண்பர்களையும் சேர்த்து விட்டான். இனி வரும் சங்கங்களுக்கெல்லாம் பச்சோந்தி மாதிரி சந்தா செலுத்தாதீர்கள் என்று அறிவுரை சொன்னான். பணியாளர்கள் மதிப்பான இடத்தில் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றான். லஞ்சம் பெறாத, அதனை மனதால் கூட நினைக்காத நான்கைந்து நண்பர்கள் அன்று அவனோடு கைகோர்த்தார்கள். அந்த நிமிடத்திலேதான் சூரியமூர்த்தியின் அடிவயிறு கலங்க ஆரம்பித்தது.   மாதவன் திரும்பியதும் அடுத்து என்ன செய்வாரோ?   இப்படித் திடீரென்று தன்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் லீவைப் போட்டு விட்டுப் போய்விட்டானே?  என்று வேதாசலம் நினைத்தாரேயொழிய அதனால் அவனுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் அவருக்கு அவரையறியாமலேயே ஒரு அக்கறை இருக்கத்தான் செய்தது. மனைவியுடன் பிணக்கிக் கொண்டுதான் பெற்றோரைத்  தேடிப் போயிருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக அவர் காதுக்கு எட்டிய போது அவர் மனம் சங்கடப் பட்டது.   இளம் தம்பதிகளிடையே திருமணமான புதிதில் முதல் ஓராண்டில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏற்படுவதும், பிணக்கிக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பதும், பின்னர் ஒரு நிதானத்துக்கு வருவதும் சகஜம்தான் என்று நினைத்துக் கொண்டார். அவர் பெண்ணுக்கும் இம்மாதிரி அனுபவம் உண்டு என்பதையும் நினைக்கையில் இதுவும் அந்தவகையிலானதாகத்தான் இருக்கும் என்று எண்ணம் போனது அவருக்கு. ஆனாலும் மாதவனின் நேர்மையும், ஒழுக்கமும், கடமையுணர்வும், தன்னடக்கமும், பெரியோர்களை மதிக்கும் பாங்கும், எதையும் அவன் எப்படியும் நேர் வழியில் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத்தான் இவருக்குக் கொடுத்தது. திரும்பவும் அவன் தன் விடுப்பினை நீட்டித்தால்கூட தான் இருந்து அவன் பிரிவினையும் சேர்த்து சமாளித்துக் கொள்வது என்றும் அவன் நற்பெயருக்கு எவ்வகையிலும் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் சற்று கவனமாகவேதான் இருந்தார். அப்படி இருப்பதில் அவருக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தான் அலுவலகப் பணிகளில,; சொந்த வாழ்க்கையில் எப்படி எப்படியோ இருந்து கொண்டாலும் ஒரு நல்லவன் சார்ந்து தன் நிலைகளைத் தளர்த்திக் கொள்வதில் ஏனோ அவருக்கு ஒரு ஆறுதல் இருந்தது.       அத்தியாயம் 14 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    மாதவனின் தந்தை கேசவமூர்த்தியும், காமினியின் சித்தப்பா சாம்பசிவமும் அப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேரிடும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கியபோதுதான் அது நிகழ்ந்தது.   “அடா, அடா, அடா…! என்ன ஒரு தற்செயல் பாருங்க…இப்படியுமா நிகழும்?”- மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டே வந்து கட்டிக் கொண்டார் சாம்பசிவம். பொது இடத்தில் அப்படியான ஒரு தழுவலை கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நிதானத்துக்கு வர அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.   “நீங்க என்ன நினைக்கிறீங்க…இந்தப் பிரச்னையை அவுங்களேதான் தீர்த்துக்கணும்…நாம எடுத்துச் சொல்றது அவ்வளவு நல்லாயிருக்குமா?”   இவர் எதைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்தார் கேசவமூர்த்தி. எடுத்த எடுப்பில் ஒருத்தர் எப்படி இப்படி ஆரம்பிக்கலாம். எதிராளிக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் இவரே முடிவு செய்து கொண்டு துவங்கி விடுவதா? அப்படியானால் தனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்வதில் எதிராளிக்கும் ஒரு தயக்கம் வராதா?   “எல்லாம் சின்னஞ்சிறுசுகதானே, அப்டித்தான் இருக்கும்…” என்று பொதுவாக ஒன்றை சொல்லி வைத்தார் பதிலுக்கு. அதன் மூலமாக ஏதேனும் புரிந்து கொள்ள அடுத்த தகவல் வரும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது.   “எதுவும் நானும் கேட்டுக்கல…இப்படியிருக்குமோங்கிற ஊகம்தான்…அப்படி ஒண்ணும் அவசரப் பட வேண்டியதில்லைன்னு வைங்க…ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையாச் சொல்லிக்க முடியாம, பரஸ்பரம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கிற அன்பினாலயும் மரியாதையினாலயும் இது நிகழ்ந்திருக்கலாமில்லியா?”   “சத்யம்…சத்யம்….” அப்படியே ஆமோதித்தார் கேசவமூர்த்தி. எதற்கு இப்படியெல்லாம் பேசிக் கொண்டு. நேரடியாக,  வெளிப்படையாக என்ன என்பதைத் தெரிவித்து விட வேண்டியதுதானே? அவருக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தது. தன் சம்சாரம் கூட இருந்தால் தேவலாம் போலிருந்தது. பேசாமல் அவளைக் கையைக் காண்பித்து விட்டு விலகிக் கொள்ளலாமில்லையா? அவள் பார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும், எல்லாரையும்,  ரட்சிப்பவள் அவள்தான். “நீங்க கிளம்புங்க, நான் எல்லாம் பாங்கா சொல்லி அனுப்பறேன். ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும்….” – சொல்லிவிட்டு எதிர்பார்த்த வண்டி வந்தவுடன் தாவி ஏறி அமர்ந்து டாடா காண்பித்து விட்டார் சாம்பசிவம்.   வந்ததிலிருந்து பூடகமாகவே பேசி, பூடகமாகவே விடைபெற்றுக்  கொண்டு விட்டாரே என்று இருந்தது இவருக்கு. அப்படியென்றால் மாதவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்னை? வெறுமே ஓய்விற்காக அவன் வரவில்லையா? ஓய்விற்காக வந்தவன் தன் மனையாளோடு வராமல் தனியாக வந்தது இப்படித்தானா? இப்பொழுதுதான் ஏதோ உரைப்பதுபோல்இருந்தது இவருக்கு. ஆனாலும் எல்லாம் தன் சகி பார்த்துக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவரைப் பதட்டம் அடையச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.   தன் பணிக்காலம் சார்ந்த சில பிரச்னைகளுக்காக வந்த இடத்தில் இப்படியொரு செய்தி தன்னை எட்டியது தெய்வாதீனம்தான் என்று நினைத்து உடனே இதைத் தன் மனைவியிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவருக்கு. ஒரு வேளை அவளுக்கும் இப்படியான ஒன்று தெரியாமல் இருந்திருந்தால்? என்ற எண்ணம் அவரிடம் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது.       அத்தியாயம் 15 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    “எல்லாம் வேணுங்கிற அளவுக்கு நான் அவன்டச்  சொல்லியிருக்கேன்…நீங்க கவலைப் படாம இருங்க…”   எடுத்த எடுப்பில் தன் பாரியாள் இப்படிச் சொன்னதே பெருத்த ஆறுதலாய் இருந்தது கேசவமூர்த்திக்கு. மேற்கொண்டு கேட்க எதுவுமில்லை என்று நினைத்தார் அவர்.   படிக்கும் காலத்திலிருந்தே அவன் அம்மா பையன். எல்லாவற்றையும் அவளிடம்தான் பகிர்ந்து கொள்வான். நியூஸ் பேப்பர் உண்டு தான் உண்டு என்று அமிழ்ந்து கிடப்பார் இவர். பொதுவாகப் பையன்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பன்களைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை. எதிரி போலப் பாவிக்கிறார்கள். சிவனே என்றுதான் இருக்கிறார்கள் என்றாலும் ஐயோ பாவம் என்றுகூட நினைப்பதில்லை. இத்தனைக்கும் தன் சம்பாத்தியத்தில்தான் தான் படித்து வருகிறோம் அதில்தான் இந்தக் குடும்பமே நடந்தேறுகிறது என்றாலும் அதெல்லாம் வாழ்வியல் கடமைகள் என்று நினைக்கிறார்கள் போலும்? ஏன் பெத்த? உன்ன எவன் பெத்துப் போடச் சொன்னான்? என்று கொச்சையாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். காலம் அப்படித்தான் மலிந்து கிடக்கிறது. எதை நினைத்து என்ன ஆகப் போகிறது? காலத்தால் எல்லாமும் மறக்கப்படும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர இந்த உலகத்தில் எல்லாமும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே? இப்படியாக ஆறுதல் படுத்திக் கொள்வதும் ஒரு வகையிலான முதிர்ச்சியின் அடையாளம்தான் என்று நினைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு கண்டு தனக்குத் தன்னையறியாமல் அந்த முதிர்ச்சி வந்து விட்டதோ என்று தோன்றியது.   மாதவன் கிளம்பிப் போய் ஒரு நாள் கழிந்து விட்டது. எதற்கு வந்தான் என்ன செய்தான் என்றுதான் நினைத்துக் கொண்டார் இவர். வந்து இருந்த நாட்களில் அம்மா அம்மா என்று அவள் மடியில்தான் கிடந்திருக்கிறான். இன்னமும் அவன் அவளுக்குக் குழந்தைதான். தனக்கும்தான். என்றாலும் அம்மாவிடம் இருக்கும் பிரியமும் பாசமும் தனிதான். கொடுத்து வைத்தவள். தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் அவர். அவருக்கொன்றும் அவன் இப்படி இருப்பதில் பொறாமையெல்லாம் இல்லை. கண்காண நன்றாக இருந்தால் சரி என்பது ஒன்றே அவரது விருப்பமாக இருந்தது. அதற்கு பங்கம் வந்து விட்டதோ என்பதாக ஒரு மெல்லிய சோகம். அந்த நெருடலில்தான் இந்தச் சிறு பதட்டம். இருந்தாலும் மனைவியின் ஆதுரமான பதிலில் சமாதானமடைந்து விட்டார் கேசவமூர்த்தி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!  இதுவே அவர் எப்போதும் வேண்டுவதாக இருந்தது. வாசலில் சிந்தனா வயப்பட்டு அமர்ந்திருந்தவரின் பார்வை தெருவில் திரும்பிற்று. மனையாள் லட்சுமி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். கோயிலுக்குச் சென்று வருகிறாள். கையில் அர்ச்சனைக் கூடை. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை கடவுள் நம்பிக்கை? பிரார்த்தனையின் பலன்களை இவர்கள் எத்தனை தீர்க்கமாய் உணர்ந்திருக்கிறார்கள்? அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லை என்ற அசைக்க முடியாத இவர்களின் தீர்மானம் பக்தியின் மேல் இவர்களை எத்தனை ஆணித்தரமாய் அமர்த்தியிருக்கிறது? நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கேசவமூர்த்தி.   மாதவன் வீடு வந்து சேர்ந்து விட்டான். ஆனால் ஆபீஸ் போக மனமில்லை. இன்னும் லீவு நாட்கள் பாக்கியிருந்தன. நாலைந்து நாள் அதிகமாகவே எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தான். அம்மாவின் பேச்சின்படி அப்படியே கிளம்பிப் போய் காமினியை அழைத்து வர வேண்டியிருக்கலாம் என்பதே அவன் எண்ணமாயிருந்தது. எண்ணத்தை உடனே நிறைவேற்றவும் துணிந்தான் அவன்.       அத்தியாயம் 16 -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~    மாதவனின் மடியில் காமினி கிடந்தாள். மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது அவளிடமிருந்து. “என்ன,” என்றான்.   “உங்களுக்குக் கிளம்பணும்னு தோணியிருக்கிற அதே நேரத்தில எனக்கும் …அதை நினைச்சேன்…”   அதுக்கு என்ன அர்த்தம்? சொல்லட்டுமா…ரெண்டு பேருக்குமே மனசுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் அன்பு இருக்குன்னு அர்த்தம்… அதை வெளிக்காட்டிக்கிறதுல அநாவசியமான வீம்பும் இருந்ததுன்னு அர்த்தம்…அதையும் சொல்லு… வீம்பு யாருக்கு? ரெண்டு பேருக்கும்தானே? ஆம்பிளைக்கு ஏது வீம்பு? அவன்தான் சரண்டர் ஆச்சே…அதனாலதானே இந்தப் பொம்பளைங்களே இப்டி வீம்பு பிடிச்சி  அலையுறீங்க…? பாடாப் படுத்துறீங்க…இல்லன்னா இப்டி திடுதிப்னு கிளம்பிப் போவியா? நான் மட்டுமா போனேன்…நீங்களும்தானே  போனீங்க…? நீ கிளம்பிப் போனதனால்தானே நானும் போக வேண்டியதாப்போச்சு… அப்போ அதுக்குப் பேரு வீம்பு இல்லியா? என் பின்னாடியேவா தேடி வந்தீங்க? இல்லியே? அது எப்டி வீம்பாகும்? நீ வீம்பாப் போனதுனால, நான் போனேன். இல்லன்னா உன்கூடதானே இருந்திருப்பேன்…   நான் வேணும்னா உடனே கிளம்பி வந்திருக்க வேண்டிதானே…? அது எப்டி? பொண்டாட்டி கொடுக்கைப் பிடிச்சிட்டே பின்னாடி போயிட்டான்னுவாங்களே…அதை நான் விரும்பலே…அதுனால… அதுனால…? அதுனால என்ன? கொஞ்ச நாளைக்கு இருந்திட்டு வரட்டும், அப்பத்தான் புத்தி வரும்னு விட்டுட்டேன்…- செல்லமாய் அவள் கன்னத்தில் உதட்டைப்பதித்தவாறே சொன்னான் மாதவன். அப்போதே போதை ஏறிக்கொண்டிருந்தது அவனுக்கு. அப்பப்பா…! இந்தச் சின்னப் பிரிவே என்ன பாடுபடுத்தி விட்டது? அப்போ நான் புத்தி கெட்டுத்தான் போயிட்டேன்னு சொல்ல வர்றிங்க…அதானே…? நீயாப் புரிஞ்சிக்கிட்டா சரி….எதையும் முறையோட செய்தா நல்லாயிருக்கும்…அழகாயிருக்கும்…பெண் செய்ற காரியம் வேறே…ஒரு பொம்பளை செய்ற காரியம் வேறேல்ல…ஒண்ணும் வேணாம்…இதுக்கு மட்டும் பதில் சொல்லு……எங்கிட்டச் சொல்லாம நீ உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போகலாமா?” -   “நீங்க மட்டும் உங்க ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டு, “எங்க ஊருக்கு வந்திருக்கேன்னு போன்ல சொல்றீங்களே அது மட்டும் சரியா?”   “ஆனாலும்; இப்படி யாருக்கும் சொல்லாம வீட்டைப் பூட்டிட்டு போறது  தப்புதானே…”காமினிpயிடமிருந்து பதிலில்லை.   “இப்டி ஒருத்தருக்கொருத்தர் பதிலுக்குப் பதில் செய்திட்டுப் போனா நல்லாவா இருக்கும்…சுத்தியிருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா…சிரிக்க மாட்டாங்களா…அசிங்கமா நினைக்க மாட்டாங்க…?”   “நீங்க நினைக்காம இருந்தாச் சரி…”   “தப்புன்னு தோணினதுனாலதானே உடனே புறப்பட்டு வந்தேன்…”   எது? பிரிஞ்சிரிக்கிறதா? சொல்லாமப் போனதா?”   “ரெண்டுமேதான்…பெரியவங்களுக்கு இந்தப் பிரச்னை போயிடுச்சின்னா பெரிசாயிடும்னு திடீர்னு மனசுல ஒரு பயம்….நாமளே தீர்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு தோணிச்சு…அதனால கிளம்பி வந்துட்டேன்…”   தீர்த்துக்கிற அளவுக்கு இங்க என்ன நடந்திச்சு நமக்குள்ளே…? – மாதவன் கூர்மையாய்க் கேட்டான். அவள் சொல்லாமல் கிளம்பிப் போனதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இல்லாமல் இருக்க முடியாது என்று அவன் மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. கேட்குறேன்ல…பதில் சொல்லு…. அமைதியாயிருந்தாள் காமினி. இதிலேர்ந்து என்ன தெரியுது…எந்தக் காரணமும் இல்லேன்னுதானே…என்னவோ திடீர்னு முறுக்கிக்கத் தோணியிருக்கு…கிளம்பிப் போயிட்டே…பின்னாடியே வருவேன்னு எதிர்பார்த்திருக்கே….அது நடக்கல்லே….உனக்கே மனசுல என்னவோ பயம் தோண, கிளம்பி வந்திட்டே…அதானே… ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்கோ…எந்த விஷயமுமே அதோட நியாயத்துலதான் நிற்கும்…இல்லன்னா தானே அடிபட்டுப் போயிடும்…எதுவானாலும் மனசு விட்டுப் பேசு….உன் புருஷன்கிட்டத்தானே ;பேசப்போறே…வெளி ஆள்கிட்ட இல்லியே…மனசுக்குள்ளயே போட்டுக் குமையாதே…அது வியாதியை உண்டாக்கும்…ரெண்டு பேரும் படிச்சவங்க…நாமளே முட்டாத்தனமா நடந்துக்கிட்டா எப்படி? அப்புறம் நம்பளை நம்பியிருக்கிற நம்ப குடும்பத்துப் பெரியவங்களை எப்படித் திருப்திப்படுத்தறது? நாம சந்தோஷமா இருக்கோம்ங்கிற நம்பிக்கைலதான் அவுங்க வாழ்ந்துக்கிட்டிருக்காங்க…அதுக்காகத்தான் நமக்குக் கல்யாணம் பண்ணிவச்சு, அவங்க கடமையைச் சரியா முடிச்சிட்டதா நினைச்சிட்டிருக்காங்க…அந்த நிம்மதிதான் அவுங்களைக் கொண்டு செலுத்துது…அதுக்கே பங்கம் வந்தா எப்படிப் பொறுப்பாங்க…அவுங்க சந்தோஷம்தான் நம்ம சந்தோஷம். நம்ப சந்தோஷம்தான் அவுங்க சந்தோஷம்…கணவனாகட்டும், மனைவியாகட்டும் ரெண்டு பேரும் சமம்தான். ஏற்ற இறக்கமெல்லாம் கிடையாது. உன் தேவைகளை நீ என்கிட்டே பகிர்ந்துக்கோ…என் ஆசைகளை நான் உன் கிட்டே பகிர்ந்துக்கிறேன்…ரெண்டுலயும் எதெல்லாம் நியாயமா இருக்கோ அதை ஒத்த மனசோட செய்வோம்…அப்பத்தான் வாழ்க்கை சந்தோஷமா, நிம்மதியா இருக்கும். போதுமான பொருளாதாரத் தேவைகளும், அதைப் பூர்த்தி செய்துக்கிற பண வசதியும் நமக்கு இருக்கு…சுற்றிலும் உறவுகளும் வேணுங்கிற அளவுக்கு இருக்காங்க….எது நல்லது, எது கெட்டது, எது தேவை, எது தேவையில்லாததுன்னு பகுத்துப் பார்க்கிற அறிவு நமக்கு உண்டு…நிர்மலமான ஆறு போல ஓடக் கூடிய இந்த மிதமான வாழ்க்கையை வலிய ஏன் நாம கெடுத்துக்கணும்….? நான் சொல்றதெல்லாம் உனக்கும் தெரியாததா என்ன? நீயும் உன் புத்தியால எல்லாத்தையும் பகுத்துப் பார்த்து உணர்ந்துக்கிற திறன் படைச்சவதானே…அப்புறமென்ன? நமக்காகவும், முடிஞ்சவரைக்கும் மற்றவங்களுக்காகவும் வாழ்ந்து கழிச்சிட்டுப் போக வேண்டிதானே…..நாம மட்டும் வளர்ந்திட்டு, நம்ம அறிவு வளரலேன்னா எப்படி? - ஒரு நீண்ட உரையே நிகழ்த்திவிட்டு மென்மையான புன்னகையோடு அவளை ஆழமாகப் பார்த்தான் மாதவன்.   “நானும் அப்டித்தான்…” சுருக்கமாகச் சொன்னாள் காமினி. எத்தனையோ எடத்துல கேள்விப் பட்டிருக்கோம்…கடைசில அது நமக்கே வந்திடுச்சு…நம்மள அறியாமலே நடந்து போச்சு…நல்லவேளை இதோட முடிஞ்சிச்சேன்னு தோணுது…ஒரு சின்ன நெருடல். திருமணமான புதிய தம்பதிகளுக்குள்ளே ஏற்படுற தற்காலிகப் புரியாத விலகல்…. “இனிமே இந்தத் தற்காலிகப் பிரிவுகூட நமக்கு நடுவுல இருக்கக் கூடாது…சரிதானா?” -ஒப்புதலாயத் தலையசைத்தாள் காமினி. “நாம இன்னைக்கு சாயந்திரமே டாக்டர்ட்டப் போறோம்…”   “ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்? உடனே வேதாளம் முருங்கை ஏறிடுச்சாக்கும்…?”   “நா என்னைச் சொல்லிக்கிறேன்…நீ சொல்றபடி நானும் செக்கப் பண்ணிக்கிறேன்…எங்கிட்டயும் ஏதாச்சும் குறை இருக்கலாமில்லியா? இருந்தா இம்ப்ரூவ் பண்ணிட்டுப் போறது? எத்தனையோ வைத்திய முறைகள்தான் இருக்கே….மெடிக்கலி இம்ப்ரூவ்டு….தென் ஒய் ஷ_ட் வி பாதர்?   “அடேயப்பா…எவ்வளவு தாராளம்? இதத்தானே நான் முதல்லயே சொன்னேன்…? அத ஏன் அன்னைக்கு உங்களால ஆக்டிவ்வா எடுத்துக்க முடில? ஒரு வாரமாப் பேசாம இருந்து, பிறகு சொல்லிக்காம ஊருக்கு போயி, திரும்பி வந்து, இந்த நாடகமெல்லாம் தேவையா?”   “என்ன இருந்தாலும் நா ஆம்பிளை இல்லையா?”   “அதக் கன்ஃபர்ம் பண்ணத்தானே போவோம்ன்னேன்…”   “கழுத…கிண்டலா பண்றே…உன்ன பத்துப் பிள்ளை பெத்துப்போட வைக்கிறேன் பாரு…எங்கிட்டப் பட்டுட்டு போதும் போதும்னு அலறப் போறே நீ…!”- எல்லா நெருடல்களும் விலகிப் போய், சந்தோஷ சாகரத்தில் மூழ்கியது அந்த இளம் தம்பதியர் இல்லம். உஷாதீபன் - தன் குறிப்பு []     உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள், வெள்ளை நிறத்தொரு பூனை ஆகிய பதினோரு சிறுகதைத் தொகுப்புகள், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள்  என இரண்டு குறுநாவல் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 1987 ல் எழுத ஆரம்பித்த இவர்,தனது எழுத்துப்பணியை விடாது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அனைத்து வார, மாத இதழ்களிலும், இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும், இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னை, இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை சிறுகதை பரிசு பெற்றது.  கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள் ஆகும்.   2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா, பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் 'வாழ்க்கை ஒரு ஜீவநதி  சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. வாழ்க்கை ஒரு ஜீவநதி சிறுகதைத் தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.   தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்போட்டி 2011 ல் நினைவுத் தடங்கள் சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காகப்  பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடிப் புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.     இவரது ‘தவிக்கும் இடைவெளிகள்’; சிறுகதைத் தொகுப்பு 2014 ம் ஆண்டின் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது பெற்றது. குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து சமூக நாவல்களை சுவைபட  வழங்குவது   இவரது இடைவிடாத எழுத்துப் பணிக்குச் சான்றாகும். அந்த வகையில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்களை வாசகர்களின் உற்சாகமான வாசிப்புக்கு அடையாளமாகப் படைத்துத் தந்திருக்கிறார்.   முழு முகவரி:  உஷாதீபன், 8-10-6,'ஸ்ருதி”இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், ரிசர்வ் லைன் அஞ்சல், மதுரை-625 014. (ushaadeepan@gmail.com ) செல்:  94426 84188    எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.  எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT , இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:    - ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் - தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் - சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net and more - http://freetamilebooks.com/cc-blogs/ எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/     நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.     e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks    G +: https://plus.google.com/communities/108817760492177970948       நன்றி.   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி . 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம் மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? – தமிழில் காணொளி offline method – https://youtu.be/0CGGtgoiH-0 press book online method - https://youtu.be/bXNBwGUDhRs A4 PDF, 6 inch PDF கோப்புகளை Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/ எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum நன்றி !