[] முள்வேலிக்குப் பின்னால் (குறு நாவல்)     பொன் குலேந்திரன்   கனடா      மின்னூல் வெளியீடு :    http://FreeTamilEbooks.com          படைத்தவர் : பொன் குலேந்திரன்  மிசிசாகா – கனடா   kulendiren2509@gmail.com     அட்டைப்படம்,மின்னூலாக்கம்  :  பிரசன்னா,   udpmprasanna@gmail.com        உரிமை:  Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.  பொருளடக்கம் சமர்ப்பணம்  இக்குறு நாவலைப் பற்றி...  முள்வேலிக்குப் பின்னால் – 1 : பத்திரிகையாளன் வருகை  முள்வேலிக்குப் பின்னால் – 2 : முள்வேலி முகாம்  முள்வேலிக்குப் பின்னால் – 3 : பொன்னம்மாவும் அன்னம்மாவும்   முள்வேலிக்குப் பின்னால் - 4 : மஞ்சுளா  முள்வேலிக்குப் பின்னால் – 5 : டாக்டர் இராஜதுரை   முள்வேலிக்குப் பின்னால் – 6 : நேர்ஸ் சாந்தி  முள்வேலிக்குப் பின்னால் - 7 : இராமசாமி   முள்வேலிக்குப் பின்னால் - 8 : மார்க்கண்டு  முள்வேலிக்குப் பின்னால் – 9 : விடுதலை   எங்களைப் பற்றி  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே  சமர்ப்பணம்   இந்நூல்  ஈழப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், போர் அகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்காக  உலகில் குரல் எழுப்பிய  இயக்கங்களுக்கும் என் சமர்ப்பணம். இது வரலாற்று பதிவாக இருக்க வேண்டும் என்பதே என் நோககம்.     பொன் குலேந்திரன் - மிசிசாகா - கனடா ஆசிரியர் 01 பெப்ரவரி 2017       இக்குறு நாவலைப் பற்றி...  இக்குறுநாவல் உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. ஒரு பாவமும் அறியாத ஈழத் தமிழர்கள்.; அகதிகள் முகாமில் பட்ட அவலங்களை இக்கதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. பலர விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் பல குடும்பங்கள் திரும்பவும்; தாம் வாழந்த வாழ்வுக்கு திரும்பவில்லை. பரமபரையாக வெகு காலம் வாழ்ந்த அவர்களது காணியும், வீடும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.  சில காணிகளில் சிங்களவர்கள் குடியேறி விட்டனர். புத்த விகாரைகள் தொன்றிவிட்டன.  அகதிகளுக்கு அவர்களது சொந்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தாலும் நடைமுறையில் அது மெதுவாகவே செயல்படுத்துப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி இராணுவம் ஆக்கிரமித்த சில காணிகளில் இருந்து வெளியேறவில்லை, அதற்கு ஈடாக காணி இழந்தவர்களுக்கு, அவரகள் வெகு காலம் வாழந்த உரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊரில் காணி வழங்கப்படது.   ஒரு யுத்தத்தின் முடிவு, தோழ்வியை தழுவியவர்கள், அடிமைகளாக நடத்தப்பட்டதை வரலாற்றில் காணலாம். ஈழத் தமிழ் அகதிகள் அதற்கு விதிவிலக்கல்ல.  இந்நூல் அவ்வகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கு என் சமர்ப்பணம் .   முள்வேலிக்குப் பின்னால் – 1 : பத்திரிகையாளன் வருகை   []   ஜோன் வைட் (John White), டொராண்டோ, கனடாவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்றின் பத்திரிகையாளன். பல நாடுகளின் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை அலசி ஆராய்ந்து எழுதி விருதுகளையும், பாராட்டுக்களைப் பெற்றவர். ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் , இரான் , இராக் சீரியா போன்ற நாடுகளுக்குச் சென்று ஆபத்தான நிலையிலும் முக்கியமானவர்களை நேர்கண்டு, அவர்களின் கருத்துக்களை பக்கச் சார்பற்ற வகையில் எழுதியவர். சிறிலங்காவினது இனக்கலவரங்கள் காரணமாக கனடாவிற்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சமிருக்கும். கனடாவுக்கு சிறீலங்காவின் இனப்பிரச்சினையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மீது ஜோனுக்கு அக்கரை அதிகம்.  மனித உரிமை மீறல்களுக்குப் பிரசித்தம் பெற்ற நாடு சிறீலங்கா. ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், அரசினால் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு அருகேயுள்ள செட்டிக்குள்ப் பகுதிக்கு அகதிகளாக முள்வேலிகள் சூழ்ந்த திறந்த வெளி சிறைக்குள் அரசினால் முகாம்களில் வைக்கப்பட்டார்கள். அதைப்பற்றி ஆராய்ந்து அவ்வேலிக்குப் பின்னால் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியவும், பல அகதிகளை நேரில் கண்டு அவர்களின் உண்மை நிலையை அறிந்து எழுதும் நோக்கத்தோடு ஜோன் சிறீலங்காவுக்கு டொராண்டோவிலிருந்து லண்டன் சென்று, அதன் பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு சிறீலங்கன் எயர்லைனில் பயணமானார்.  இதற்கு முன்னரும் 1983 ஆம் நடந்த இனக்கலவரவத்தைப் பற்றி அறிந்து எழுதிய அனுபவம்; ஜோனுக்குண்டு. அதன் பின்னர் ஐபிகேஏப் (IPKF) என்ற இந்திய அமைதிப்படை 1987 முதல் 1990 வரை வடமாகாணத்தில். இருந்த காலகட்டத்தில் தோன்றிய பிரச்சனைகளைப் பற்றியும், அதன்பிறகு 1993 நொவெம்பரில் விடுதலைப் புலிகளின் பூனகரி தாக்குதலைப் பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பற்றியும், எழுதியவர் ஜோன். விடுதலைப் புலிகள் எவ்வாறு ஈழத்தமிழர்களின் முழு ஆதரவைப்பெற்று அவர்களின் உரிமைகளுக்காகப் போராடிவருகிறார்கள் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.  1948 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு சுதந்திரம் கிடைக்க முன்னர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அதற்குப் பின்னர் சிங்கள மொழி மாத்திரம் என்ற சட்டத்தை 1958இல் அரசு, அமுல் படுத்தியதைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நடந்த இனக்கலவரங்கள் பற்றியும் ஜோன் நன்கு அறிந்து வைத்திருந்தார்.  பல வருடங்கள் வன்னிப பகுதி, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதனால் பெரும் தொகையான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறியது மட்டுமன்றி இயக்கத்திலும் சேர்ந்து தமிழ் ஈழத்தின் விடுதலைக்காகப் போர் புரிந்தனர். ஜோனுக்கு சிறிலங்காவில் லலித் வீரசேகரா என்ற சிங்கள ஊடகவியலாரனிதும், மகேஷ்வரநாதன் என்ற தமிழ் ஊடாகவியலாரினதும் தொடர்பு இருந்தது. அதுமட்டு மல்லாமல், லலித்தின் தாய் மாமனான மேஜர் விஜயரத்தினாவின் அறிமுகமும் கிடைத்தது. சிறீ லங்காவில் தனக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அதைச் சந்திக்கும் தயாரான நிலையிலேயே ஜோன் பயணத்தை மேற்கொண்டார்;. ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரத்தில் தலீபன்கள் தன் உயிருக்கு ஏற்படுத்திய ஆபத்துகளைச் சந்தித்த அனுபவம் ஜோனுக்கு உண்டு. கனடா பத்திரிகைக்கு புனைப்பெயரில் பல அரசியல் கட்டுரைகளை ஜோன் எழுதியவர்.  சிறீலங்கா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் வருகையை வரவேற்பதில்லை என்பதையும் ஜோன் நன்கு அறிவார். பத்திகையாளர்களைச் சந்தேகக் கண் கொண்டே சிறீலங்கா அரசு பார்த்தது. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகள் பெற்றாலும் அங்கிருந்து வரும் ஊடகவியலாளர்களை மரியாதையாக சிறீலங்கா அரசு நடத்துவது கிடையாது. ஊள்நாட்டில் நடக்கும் உண்மை நிலையையும் , மனித உரிமை மீறல்கள் பற்றியும் உலகுக்குப் பத்திரிகையாளர்கள் எடுத்துச்சொல்லி விடுவார்கள் என்ற பயம் சிறீலங்கா அரசுக்கு இருந்தது.  விமானம் பண்டாரநாயக்கா விமானநிலையத்தை அடைய அரைமணி நேரம் இருப்பதாகப் பைலட் அறிவித்தபோது ஜன்னலினூடாக ஜோன் தன் பார்வையைச் செலுத்தினார். எங்கும் தென்னை மரங்களின் பச்சை நிறமானக் காட்சி. இலங்கைத் தீவு இயற்கை அழகு நிறைந்த சொர்க்கப் பூமி என்று நண்பர்கள் சொல்லி ஜோன் கேள்விப்பட்டார்.. நீண்ட வரலாறு உள்ள தீவு இலங்கை என்றும் நூல்களில் வாசித்து அறிந்தவர். சீட்டில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தபோது பெரும்பாலோர் வெளிநாட்டுச் சுந்றுலாப் பயணிகள் இருப்பதைக் கண்டார். தீவின் அழகால் கவரப்பட்டு அதைக்கண்டு இரசிக்க வருபவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு அத்திவீன் உள்நாட்டுப் பிரச்சனையை பற்றியோ, மனித உரிமை மீறல்கள் பற்றியோ எங்கே தெரியப்போகுது. இனப்பிரச்சினை மட்டும் தீவில் இல்லாது இருந்தால் இலங்கைத் தீவானது சிங்கப்பூரிலும் பார்க்க முன்னேறிய நாடாக வளர்ந்திருக்கும். எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பின்னர், நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் வழங்கிச் சென்றபோது, இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் பிரிக்கப் பட்டபோது ஏற்பட்ட இந்து முஸ்லீம்; இனக்கலவரத்தை தெரிந்திருந்தும், இலங்கையில் சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் நடந்தது போல் இனக் கலவரம், எப்போதாவது வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து அதற்கு முன்னெச்சரிக்கையாகத் தீர்வுகாணாமல் போனது மிகப் பெரிய தவறு. பிரித்தானியர் தம் ஆட்சி செய்த தேசங்களை விட்டுப் போகும் போது வரும் நாட்களில் ஒரு பிரச்சனை தொடரக் கூடிய சூழலை உருவாக்கி விட்டே சென்றார்கள். “இறைவன் கொடுத்த இந்த சொர்கத்தீவை எதற்காக அரசியல்வாதிகள் சீரழிக்க வேண்டும்”? என வாயுக்குள் முணுமுணுத்துக் கொண்டார் ஜோன். பக்கத்துச் சீட்டில் இருந்த பயணி பிரசாத், இந்தியன் என்று அவரின் ஆங்கில உச்சரிப்பில் இருந்து ஜோன் அறிந்து கொண்டார்.  “உண்மை. இத்தீவு ஒரு காலத்தில் சொர்க்க பூமி தான். ஆனால் இப்போது அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் தீவாக நைஜீரியாவைப் போல் மாறிவிட்டது. 1948 ஆம் கிடைத்த சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தீவை நரகத்தீவாக மாற்றிவிட்டது. 1956ஆம் ஆண்டுக்குப் பின் பல இனக்கலவரங்கள தமிழர்களைக் குறிவைத்தே இடம்பெற்றன”, என்றார் பிரசாத். அவர் பேச்சில் இருந்து அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை ஜோன் ஊகித்தார்.  “நீங்கள் வட இந்தியரா”? என்று பிறசாத்தை நேரடியாகவே ஜோன் கேட்டு விட்டார்.   ஆம் நான் உத்திரபிரதேசத்தில் உள்ள அமேத்தி என்ற ஊரைச் சேர்ந்தவன்.” “ ஓகோ அப்படியா. அது ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்ற இடமாச்சே. அப்போ நீர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளரா? ஜோன் கேட்டார்.  “ நான் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே காங்கிரஸ்தான். தாயைப்போல ராஜீவ் தானாகவே தனக்கு மரணத்தைத் தேடிக்கொண்டார். விடுதலைப் புலிகளை அடக்க நினைத்து அவர் எடுத்த முடிவுகளே அவருக்கு யமனாயிற்று” என்று சொல்லி பிரசாத் கவலைப்பட்டார்.  “ இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்ப ராஜீவ் காந்தி எடுத்த முடிவு பிழையானது ” ஜோன் பதில் அளித்தார்.  “ அதை எப்படிச் சொல்லமுடியும்? இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனா கேட்டதற்காகவே அவர் அந்த முடிவை எடுத்தார்” என்றார் பிரசாத்.  “ஆனால் ஜெயவர்தனா ராஜீவை விட அனுபவம் வாய்ந்த அரசியல் சாணக்கியன். தான் திட்டமிட்டபடி இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைத்து, தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பித்துவிட்டார். நான், அமைதிப் படை வடக்கில் இருந்த காலத்தில் ரிப்போர்டராக யாழ்ப்பாணம் போயிருந்தேன். அங்கு நடந்த பல மனித உரிமை மிறல்களைப் பற்றி எனக்குத் தெரியும். அமைதியைக் காக்க போன படை அதற்குப் பதிலாக மக்களிடையே பீதியை உருவாக்கியது. ஒரு இந்திய இராணுவ அதிகாரி எனக்குச் சொன்னார், “ யாழ்ப்பாணத் தமிழர்கள் வீடு வாசல்,டிவி, பிரிட்ஜ், மைக்கிரோவேவ், வோஷங் மெசின் ஆகியவையோடு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். இதை விட வேறு என்ன அவர்களுக்குத் தேவை” என்று. அதற்கு நான் அவருக்குச் சொன்னேன், “அவர்களுக்குத் தேவை விலை மதிக்கமுடியாத சுதந்திரம். எப்படி இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்களோ அதே போன்று தான் அவர்களும் சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கும், இனத்துவேசக் கொள்கைகளுக்கும் எதிராகப் போராடுகிறார்கள்”, ஜோன் சொன்னார்.  “அரசுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளையும், புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டாம் என்று மக்களுக்கு இந்தியப் படை விட்ட எச்சரிக்கையாகவும், எடுத்த நடவடிக்கையாக இருக்கலாம் அல்லவா?” பிரசாத் சொன்னார்.  “ அதற்காக அமைதியை நிலைநாட்டவே வந்திருக்கிறோம் என்று சொல்லிப் பெண்களைக் கற்பழித்தும், மக்களைக் கொலை செய்து இருக்கவேண்டியதில்லை. இந்தியப்படைக்கும்; சிங்களப்படைக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றே:” ஜோன் சொன்னார்.  “ அப்போ நீர் சொல்லுகிறீரா அமைதிப்படையை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியதால் தான் ராஜீவ் காந்தி கொலை செயப்பட்டார் என்று”?  “நீரே தெரிந்துகொள்ளவேண்டும். அவரின் தாய் இந்திரா தங்க கோயிலைத் தாக்கியதால் சீக்கியர்களால் கொலை செய்யப்பட்டார். அதேமாதிரி இவருக்கும் நடந்திருக்கு”, ஜோன் சுருக்கமாக பதில் அளித்தார்.  “ ஆனால் இப்பொது பார்த்தீரா ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துக் கண்டது தான் என்ன? முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் எல்லோரும் இப்போது திறந்த வெளி முகாம்களில் அகதிகளாக இருக்கிறார்கள்”, என்றார் பிரசாத. அதைப்பற்றி உண்மை அறிந்து எழுதத் தானே நான் சிறீ லங்காவுக்குப் போகிறேன் என்பதை இவருக்கு நான் ஏன் சொல்லவேண்டும் என்று ஜோன் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்,  “உங்கள் சீட் பெல்ட்டுகளை இறுகக் கட்டிக் கொள்ளுங்கள். விமானம் சில நிமிடங்களில் தரையில் இறங்கப்போகிறது” விமானக் கெப்டனின் அறிவித்தல் அவர்களுடைய சூடு பிடித்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  “மிஸ்டர் பிரசாத் உம்மைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நேரம் போனது கூடத் தெரியவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பவும் சந்திப்போம்” என்று பிறசாத்தோடு கைக்குலுக்கி ஜோன் விடைபெற்றார்.         ஒரு கையில் கைப்பெட்டியும் மறுகையில் பயணப் பையோடும், தோள் பட்டையில் கமெராவோடு; குடிவரவு அதிகாரிகள் இருக்கும் மேசைக்குப் போனபோது இரு கண்கள் தன்னை அவதானித்ததைக் கண்டும் காணாதது போல் ஜோன் இருந்தார். அதிகாரி ஜோனிடம் இருந்து பாஸ்போரட்டை வாங்கிப் பார்த்து அவர் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாக ஜோன் பதில் அளித்தார். தான் ஒரு கனேடிய ஊடகவியலாளர் என்று அதிகாரி கேட்டதிற்கு பதில் சொன்னார். அரசியல் கலக்காமல் அமைதியாக அதிகாரி கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார். ஜோனின் பாஸ்போர்ட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு “பல நாடுகளுக்குப் போய் இருக்கிறீர் போல் தெரிகிறது” என்றார் அதிகாரி.  “ ஆம்.” சுருக்கமாகப் பதில் சொன்னார் ஜோன்.”  இருகிழமைகளுக்கு விசாவுக்கான சீல் அடித்து பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுத்தபடி “இந்த அழகிய தீவில் இரு வாரங்களைச் சந்தோஷமாக களிக்க என் வாழ்த்துக்கள்”, என்றார் அதிகாரி.  “நன்றி சேர். ஏற்கனவே பலதடவை சிறிலங்காவுக்கு வந்திருக்கிறன்” என்று புன்முறுவலோடு பதில் அளித்துவிட்டு சுங்கப் பகுதிக்குச் சென்றார் ஜோன்.. சுங்க அதிகாரி ஜோனின் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்துவிட்டு கனேடியன் என்று அறிந்தவுடன் ஒரு விதச் செக்கிங்கும் செய்யாமல் “நீர் போகலாம்”, என்றார்.  வரும் பயணிகளைச் சந்திக்க வருபவர்கள் நிற்கும் பகுதிக்கு ஜோன் போனபோது தனது பெயர் பலகையைத் தூக்கியபடி ஒருவர் டையோடு நிற்பதைக் கண்டார். அவரிடம் நேரே போய், “ நான் தான் டொரண்டோவில் இருந்து வரும் டொரண்டோ ஸ்டார் பத்திரிகையின் ஜேர்னலிஸட் ஜோன்;” என்று பெயர்ப் பலகையைத் தூக்கிக்கோண்டு நின்றவரிடம் தன்னை அறிமுகப்படுத்தினார்.  “வெல்கம் டு சிறீலங்கா ஜோன். என் பெயர் மகேஷ். நானும் உம்மைப் போல் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வேலை செய்யும் ஊடகவியலாளன்”, என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார்.  “உமது பெயரில் இருந்து நீர் ஒரு சிறீலங்கன் டமில் என நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா” ஜோன் மகேஷைக் கேட்டார்.  “முற்றிலும் சரி ஜோன். எல்லாச் சிறிலங்கங்களின் பெயர்களைப் போல் என் பெயரும் நீண்டது. என் முழுப்பெயர் மகேஸ்வரநாதன். அதைச் சுருக்கி எல்லொரும் என்னை மகேஷ் என்று கூப்பிடுவார்கள். நீரும் என்னை அப்படியே கூப்பிடலாம்” மகேஷ் சொன்னார். “மகேஷ்; எவ்வளவு காலம் ஊடகவியலாளராக இருக்கிறீர்”? “நான் இந்தப் பத்திரிகையில் சேர்ந்து 12 வருடங்கள். பேராதனை பல்கலைக்கழகத்தில், ஊடகத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவன். அதனால் என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, என்னைப்போல் ஊடகவியலாளராக வேலை செய்யும் லலித் சோமரத்தினா என்பவரைத் தெரியும். அவர் என் உற்றான்மை நண்பர். அவரின் தாய் மாமன் விஜயரத்தினா என்பவர் ஒரு ரிட்டையரான மேஜர் ஜெனரல். பல காலம் ஆர்மியில் வேலை செய்தவர்” என்று மேலதிக விபரங்களை மகேஷ் ஜோனுக்குச் சொன்னார்.  “ உமக்கு முக்கிய சிங்கள உயர் மட்டத்துப் புள்ளிகளோடு தொடர்பு இருப்பதையிட்டு மகிழ்ச்சி. இது எனது வேலைக்கும் உதவும்”.  “ எனக்குப் பல சிங்கள, முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பல்கலைக்கழகத்தில் என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்கள். சிலர் உயர் அரச பதவிகளில் இருக்கிறார்கள். இலங்கையில் யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியம். அதனால் எந்த வேலையையும் விரைவாகத் தடைகள் ஏதுமின்றி செய்ய உதவும்”, மகேஷ் சொன்னார்.  “ நான் சிறீலங்காவுக்கு சுனாமி பற்றி நடந்ததை ஆராய்ந்து எழுத 2005 ஜனவரியில் வந்தனான். அப்போது ஐலணட் என்ற ஆங்கில ஊடகத்துக்கு வேலைசெய்த லலித் என்ற ஊடகவியலாளரை சந்தித்தனான். ஒரு வேலை அவரைத் தான் உமது நண்பர் என்கிறீரோ தெரியாது” என்றார் ஜோன்.  “ அவரே தான் நான் சொல்லும் லலித் சோமரத்தினா என்பவர். லலித் என்று கூப்பிடுவோம்”.  “ அது நல்லதாய் போச்சு. ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் என் வேலைக்கு உதவலாம்.” ஜோனின் சூட்கேசுகளை வானில் கொண்டு போய் வைக்கும்படி சிங்களத்தில் பக்கத்தில் நின்ற டிரைவருக்கு மகேஷ் சொன்னார்.. “எந்த ஹோட்டலுக்குப் போயாக வேண்டும் ஜோன்”? மகேஷ் கேட்டார்.  “கலதாரி ஹோட்டல். நான் இங்கு வரும்போது அங்குதான் தங்குவேன். ஹோட்டலின் ஜெனரல் மனேஜர் சொயிசா என் நண்பராகிவிடார். அதாலை ஹோட்டலில் நல்லாக என்னைக் கவனிப்பார்கள்” என்றார் ஜோன்.  இருவரையும் சுமந்து கொண்டு வான் கலதாரி ஹோட்டலை நோக்கிப் பயணித்தது.     முள்வேலிக்குப் பின்னால் – 2 : முள்வேலி முகாம்   கலாதாரி ஹோட்டலை ஜோனும் மகேசும் அடைந்தபோது காலை 9.00 மணியாகிவிட்டது.  “ நான் ரூமுக்கு போனவுடன் டொராண்டோவுக்குப் போன் செய்து என் பிரதம ஆசிரியரோடு பேசவேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகு குளித்துவிட்டு ஒரு சிறுதூக்கம் அவசியம் எனக்குத் தேவைப்படுகிறது. உம்மைப் பகல் பதின்ரெண்டு மணிக்கு ஹோட்டல் பார்வையாளர்களுக்கான லவுஞ்சில் சந்திக்கிறேன். திறந்த வெளி முகாமைப் பற்றிய விபரங்களும், அங்குப் போவதற்கான ஒழுங்குகளைப் பற்றிப் பேசுவோம். உமது பகல் போசனம் இன்று என்னோடு. அதை மறந்துவிடாதையும்” என்றார் ஜோன்.  இருவரும் ஒன்றாகக்  கோப்பி அருந்திய பிறகு தங்கள் பிஸ்னஸ் கார்டுகளை பரிமாறிக் கொண்டார்கள்.  ஜோன் நான் வரும்போது லலித்தையும் என் கூடவே அழைத்துவரவா? முகாமில் கடமையாற்றும் இராணுவத்தினர் பலருக்குச் சிங்களத்தை தவிர வேறு பாஷை தெரியாது. அதே போல் முகாமில் இருக்கும் அகதிகள் அனேகருக்க தமிழ் மட்டுமே தெரியும். நாங்கள் மூவரும் மெனிக் முகாமுக்குப் போவது நல்லது. மொழிபெயர்ப்புக்கு உமக்கு உதவியாக இருப்போம்;.   எங்கள் பகல் போசனத்துக்குப்பின் நாங்கள் மூவரும் ரிட்டையர்ட் மேஜர் ஜெனரல் விஜயரத்தனாவை சந்திக்கப் போகலாம். எங்களுக்குத் திறந்தவெளி முகாமைப் பார்க்க போவதற்கான உதவியை அவரிடம் கேட்கலாம். சிறீலங்காவில் எதைச் செய்வதானாலும் உயர் இடத்தில் யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம்.” என்றார் மகேஷ.  “நீர் சொல்வது உண்மை. லலித்தும் எங்கள் குழுவில் இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. மேஜர்; விஜய்யை அவர் வீட்டில் போய் சந்தித்து  எமது பிளானைப் பற்றிச் சொல்லுவோம். மேஜரை நான் ஒரு தடவை இங்கு வந்திருந்தபோது  யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன். நல்ல உதவி செய்யக் கூடிய மனிதர் ஆனால் கண்டிப்பானவர். அவருக்கு எல்லாம் சொன்ன நேரத்தில் நடக்க வேண்டும்.  நேரத்துக்கு மதிப்புகொடுப்பவர்   என்று அப்பவே நான் கணித்துவிட்டேன்” என்றார் ஜோன்.  “ நீங்கள் சரியாகவே மேஜரை கணித்திருக்கிறீர். அப்பச் சரி ஜோன். பிறகு பகல் நாம் சந்திப்போம்” என்று விடைபெற்றார்; மகேஷ்.  தனக்கு மூன்றாம் மாடியில் தரப்பட்ட 304 இலக்க  அறையை நோக்கிப் போர்டர் பொதிகளோடு முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தார் ஜோன்.  சரியாகப் பகல் பதின்ரெண்டு மணிக்கு ஜோன் லவுஞ்சுக்கு போன போது மகேசும் லலித்தும் அவருக்காக ஏற்கனவே வந்து காத்துக் கொண்டுடிருந்தார்கள். ஜோனைக் கண்டவுடன் “வெல்கம் பாக் டு சிறீலங்கா ஜோன்” என்று கை குலுக்கி வரவேற்றார் லலித்”.  “தங்கியூ லலித்.எப்படி இருக்கிறீர். போன தடவை உம்மைப் பார்த்ததை விட  நீர் வெயிட் போட்டிருக்கிறது போல் எனக்குத்  தெரிகிறது. வேலை அதிகமோ”? லலித்தைப் பார்த்துச் சிரித்தபடி ஜோன் கேட்டார்.  “ஜோன், இப்போது லலித் அவர் வேலை செய்யும் பேப்பரின் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். . அவருக்குத். தேகப்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. வேலை அதிகம். நாட்டுப் போர் செய்திகளைப் பற்றி எழுதுவது அவர் பொறுப்பு.” என்று லலித்துக்கு பதிலாக மகேஷ் பதில் அளித்தார்.  மூவரும் ஆளுக்கு ஒரு லயன் லாகர் பியருக்கு ஓடர் செய்துவிட்டுத் திறந்த வெளி முகாமைப் பார்க்கப் போகும் பயண ஒழுங்குகளைப்பற்றிப்  பேச அமர்ந்தார்கள்.  “நான் போனதடவை வேலையாக வந்து  யாழ்ப்பாணம் போனபோது பல தடைகளைக் கடந்து A9 பாதையில் போக வேண்டியிருந்தது, தாண்டிக்குளத்துக்கு வடக்கே எல்டிடி யின் ஆட்சி, தெற்கே சிறீலங்கா அரசின் ஆட்சி. ஆனால் இப்போது போர் முடிந்ததால் அந்த நிலமை மாறிவிட்டது என்பதால் தடைகள் இருக்காது என நினைக்கிறேன்”, ஜோன்  இருவரையும் பார்த்துக் கேட்டார்.  “ அதிகமாக இருக்காது. ஆனால் திறந்த வேளி முகாமுக்குள் போய் சுற்றிப் பார்க்க  எவரும் உத்தரவு இன்றி போகமுடியாது. அதற்குத் தான் மேஜர் விஜய்யின்; உதவி எங்களுக்குத் தேவை.” மகேஷ் பதில் சொன்னார்.  “முகாமுக்குப் போகும் ரூட் தெரியுமா மகேஷ்” , ஜோன் கேட்டார்.  “நாங்கள் போகப் போவது வவனியாவுக்கு அருகேயுள்ள செட்டிக்குளம் என்ற பகுதிக்கு. அங்கு இரு வழியாகப் போகலாம். ஒன்று மதவாச்சியில் இருந்து ஏ 14 மன்னாருக்குப் போகும்  பாதை வழியாகவும், மற்றது வவுனியாவில் இருந்து  மன்னாருக்குப போகும் ஏ30 பாதை வழியாகவும்; போகலாம் வவுனியாவில் இருந்து சுமார் 30 மைல் தூரத்தில் செட்டிக்குளம் இருக்கிறது. மாதவாச்சியில் இருந்து போவதானால் 15 மைல்கள் குறைவு.  செட்டிக்குளத்தில்,  ஒரு காலத்தில் விவசாயப் பண்ணையாக இருந்த இடத்தில் தான் இப்போது திறந்த வெளி முகாம் இருக்கிறது” லலித் பதில் சொன்னார்.  “ அப்படியா? அரசின் காணியா அது? ஜோன் இருவரையும் பார்த்துக் கேட்டார்.  “ இல்லை ஜோன். அது மானிக்கம் என்ற ஊர்காவற்துறையில் உள்ள சுருவில் கிராமத்தைப் பிறப்பிடமாக கொண்ட பிரபல தமிழ் பிஸ்மன்னின்  காணி. அதனால் தான் அவரின் பெயரில் மணிக் திறந்த வெளி முகாம் என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலை என்ற வார்த்தையை அரசு பாவிக்க விருப்பப் படவில்லை. காரணம் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி வரும் என்பதால், போரினால் உள்னாட்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கு ஐடிபி (IDP) என்று நாமம் இட்டு திறந்த வெளியில் முற்கம்பிகள் சூழ சிறைவைத்தாலும்; அந்த நலன்புரி முகாமை,  வெல்பியார் சென்டர் ( Welfare Center)  என்றே சாதுர்யமாக அரசு அழைக்கிறது” என்றார் லலித்.”  “எத்தனை பேர் சிறைக்குள் இருக்கிறார்கள்”  “நான் நினைக்கிறேன் சுமார் 30,000 முதல் 40,000 வரை 4 முகாங்களுக்குள் இருக்கிறார்கள்.” என்றார் லலித.  “அங்கு போவதற்கு எவ்வளவு தூரப் பயணம் செய்யவேண்டும்”  “ வவுனியாவுக்குப் போய் அங்கிருந்து போவதானால் சுமார் 180 மைல்கள் வரை இருக்கும். மதவாச்சிக்குப் போய் அங்கிருந்து போவதானால் 160 மைல் தூரம். ஆறு அல்லது ஏழு மணித்தியாலங்களில் போய்விடலாம்” லலித் சொன்னார்.  “காலை ஐந்து மணிக்குப் பயணத்தை கொழும்பில் இருந்து ஆரம்பித்தால் பகல் பதினொரு மணிக்குள் குருநாகல். தம்புள்ள,  அனுராதபுரம் வழியாகப் போய்விடலாம். போகும் போது குருநாகலில் காலை உணவு எடுக்கலாம்” என்றார் மகேஷ்.  “ அது சரி போகும் வாகனத்தைப் பற்றி சொல்வில்லையே.” “ யோசிக்க வேண்டாம் ஏற்கனவே ஏவிஸ் (AVIS) என்ற வாடகைக்கு கார் விடும் கொம்பெனியில் புது பேஜோ 404 கார் ஒன்றை ஓட்டுநரோடு புக் செய்து விட்டேன்” மகேஷ் சொன்னார்.  “ இனி அப்ப மேஜரிடம் போய் பேசி அவர் மூலம் மெனிக் முகாமுக்குள் போய் அங்குள்ளவர்களைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தரும்படி கேட்போம். என்ன லலித் சொல்லுகிறீர்”?.  “ இப்போமணி இரண்டாகிவிட்டது.  நான் அவரிடம் மூன்று மணிக்குச் சந்திக்க வருவதாகப் போன் செய்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். வாருங்கள் சொன்ன நேரத்துக்கு நாம் அவரிடம் போயாக வேண்டும்” என்று லலித் சொன்னார். மூவரும் பேசி முடிந்து, பகல் போசனத்தை; உண்ட பின் கொழும்பு 7 யில் உள்ள ஹோர்டன் பிளேசில் இருக்கும் மேஜர் விஜய்யின் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்.       எதுவும் சொன்ன நேரத்துக்கு நடக்கவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர் மேஜர் விஜேய். ஆறடி மூன்று அங்குலம் அவர் உயரம் இருக்கும். திரண்ட தோல்கள். ரிட்டையராகியும் ஆர்மி மீசை மறையவில்லை. அகண்ட சிரிப்பு. முகத்தில் போரின் சின்னமாக ஒரு தளும்பு.  கொழும்பு 7 இல் உள்ள ஹோர்டன் பிலேசில், அவருடைய பங்களா இருந்தது, வீட்டுக்கு முன்னே சிறு மலர் தோட்டம். காரை தலைவாயிலில்; நிறுத்தி விட்டு ஜோன், மகேஷ், லலித் மூவரும் கரைவிட்டு இறங்கிய போது மேஜரும் மனைவியும் ஏற்கனவே அவர்களின் வருக்கைக்காக வாசலில் காத்துநின்றனர்.  மேஜர் விஜய்யும் அவர் மனைவி அனோஜாவும் சிரித்து முகத்தோடு மூவரையும் வரவேற்றார்கள். பிரதான ஹாலுக்கு எல்லோரும் போய் அமர்ந்தனர். ஹாலின் சுவரில் இரு பெரிய படங்கள். ஒன்று மேஜர் ஆர்மி யுனிபோர்மோடு காட்சி அளித்தார். அவரது உடையில்  இருந்த 2 நட்சத்திரங்கள் அவரை  மேஜர் ஜெனராலாக அவர் வகித்த பதவியை எடுத்துக்காட்டிய கம்பீரமாக நிற்கும் படம். மற்றது மேஜரும் மனைவியும் திருமணத்தின் போது எடுத்தப்படம்.  “மேஜர் விஜய் நான் கடைசியாக ஒரு வருடத்துக்;கு முன் பார்த்தபிறகு இப்போது தான் உம்மைச் சந்திக்கிறேன். உங்கள் தோற்றத்தில் அவ்வளவாக மாற்றமில்லை” ஜோன் சொன்னார்.  “ தினமும் காலை இரண்டு மைல் கோல்பேசில் (Galle Face) நண்பர்களோடு நடப்பேன். அவர்களோடு கோலப் விளையாடுவேன். ஓட்டரஸ் (Otters)  சுவிம்மிங் பூலுக்குப் போய் நீந்துவேன். தினமும் அரைமணித்தயாலம் மெடிட்டேட் பண்ணுவேன். உணவில் நான் கவனம். அது தான் தேகம் வெயிட் போடாமல் பார்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.” என்றார் விஜய்.  “உங்களுக்கு என்று சிவாஸ் ரீகல் போத்தல் ஒன்று அன்பளிப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன்”, என்று தான் கொண்டுவந்த விஸ்கி போத்தலை மேஜரிடம் ஜோன் கொடுத்தார்.  “ஜோன், நீர் என்னை நினைத்துக் கொண்டு வந்த அன்பளிப்புக்கு  என் நன்றி. நான் இப்போது தினமும் குடிப்பதை எவ்வளவோ குறைத்துவிட்டேன். எப்போதாவது ஒரு நாள் நண்பர்களைச் சந்திக்கும் போது  இரண்டு கிலாஸ் விஸ்கி மாத்திரம் எடுப்பேன்” என்றார் விஜய்.  “அது நல்லது. நண்பர்கள் வந்தால் இது அவர்களோடு சேர்ந்து சுவைக்கத் தேவைப்படும்”  “ அது சரி முகாமுக்குப் போகும் ஒழுங்குகளைச் செய்து விட்டீர்களா?” மேஜர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.  ” அதெல்லாம் செய்தாகிவிட்டது. ஏவிஸ் ரெனட் கார், ஓட்டுநரோடு புக்செய்தாச்சு,  முக்கியமான ஒன்றைத் தவிர” என்றார்; லலித்.  “ என்னது  லலித்”.?  “ முகாமுக்குள்ளே போய் பார்த்து அங்குள்ளவர்களோடு பேசுவதற்குத் தேவையான அனுமதி.”  “ அதைப் பற்றி யோசிக்கவேண்டாம். அதைப்பற்றி ஏற்கனவே முகாமுக்குப் பொறுப்பாக உள்ள மேஜர் வின்சென்ட்டோடு கதைத்து விட்டேன். அவர் எல்லாம் கவனித்துக் கொள்வார்; . எனக்கு பலாலியிலை அசிஸ்டன்டாக வின்சென்ட இருந்தவர். நல்ல மனுசன். என் நண்பரும் கூட. அவருக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவரிடம் கொடுங்கள். உங்களுக்குத் தேவையானதை அவர் கவனித்துக்கொள்வார்;” என்றார் விஜய்.  “ மிகவும் நன்றி சேர்”. மகேஷ் சொன்னார்.  “ஒன்று மட்டும் உங்கள் மூவருக்கும் சொல்ல விரும்புகிறேன் அங்கு இருக்கும் மட்டும் இயன்றளவு எல் டி டி (LTTE) யுக்கு ஆதரவாகக் கதைக்கவேண்டாம் “.  “ நாங்கள் அப்படிக் கதைத்து உங்களைச்  சிக்கலில் மாட்டி விட மாட்டோம். அது சரி படம் எடுப்பதில் பிரச்சனை இருக்காதே?” என்று தன் சந்தேகத்தை ஜோன் கேட்டார்.  “அதைப் பற்றி வின்சென்டோடு பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் அங்குத் தங்கமுடியாது. முகாமைச் சுற்றிப் பார்க்க  இரண்டு நாட்கள் தேவை. அதனால்  ; ஒரு இரவுக்கு வவுனியாவில் உள்ள ஹோட்டலில் நீங்கள் தங்கலாம்”, அறிவுரை சொன்னார் மேஜர் விஜய்.. “முகாமுக்குப் போவது அவ்ளவு இலகுவல்ல. பல செக்போஸ்டுகளைத் தாண்டிச் செல்லவேண்டும். மெனிக் முகாமைப் போல் இன்னும் 3 முகாம்கள் இருக்கிறது அவற்றிற்கு அருணாச்சலம், கதிரகாமர், இராமநாதன்  என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அம்முகாங்களில் பெரியது மெனிக் முகாம். . இந்த முகாமைச் சுற்று முற்கம்பி வேலி . இலகுவில்; முகாமுக்குள் இருப்பவர்கள் தப்பி ஓட முடியாது. மெனிக்முகாமுக்குள்  ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் , குழந்தைகள் வலம் குறைந்தவர்கள் போன்று பல தரப்பட்ட மக்கள் செய்யாத குற்றத்துக்குக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். தம் சொந்த நாட்டிலேயே, உள்ளூல் புலம் பெயர்ந்தவர்கள் ஐடிபி என்ற பெயரில்  திறந்த வெளி சிறையில் பரிதாபத்துக்குரிய வாழ்வு வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் செய்த குற்றம் ஈழத்தில் தமிழனாகப் பிறந்தது மட்டுமே, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது யூதர்கள் எப்படி  நடத்தப்பட்டார்களோ அதே போன்ற நிலை. துவக்கும் கையுமாக இராணுவம் அவர்களைக் கண்காணித்தபடியே இருக்கிறது. வரிசை வரிசையாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் ஒரு முடங்கிய வாழ்க்கை. அக்கூடாரங்கள் துணியாலும், அலுமினியத்தகடுகளாலும்  வேயப்பட்டிருக்கின்றன..  தண்ணீர் வசதி, மலம் சலம் களிக்கும் வசதிகள் மிகக் குநைவு. ஒரு கூடாரத்துக்குள் இரு குடும்பங்கள் வாழ்கின்றன. வாகனம் போனால் அல்லது பலத்த காற்று வீசினால் மண்ணை வாரிக் கூடாரத்துக்குள் கொட்டும்.  அடிக்கடி இராணுவத்தின் வாகனங்கள் ஒரு முகாமில் இருந்து மற்றைய முகாம்களுக்குப் போய் வரும். முகாமில் இருப்பவர்கள் சுதந்திரமாக ஒரு முகாமில் இருந்து மற்றைய முகாம்களுக்குப் போய் வரமுடியாது. 3 சக்கர வண்டியில் பயணிப்பதென்றால் ஒன்று அல்லது இரண்டு கி.மீ தூரத்துக்குப் பயணிப்பதற்கு அதிக பணம் கொடுக்க வேண்டி வரும்” , மகேஷ் முகாம்களைப் பற்றிய விபரங்கள் சொன்னார்.  “ அது சரி மகேஷ் உமக்கு இதெல்லாம் எப்படித் தெரியும். நீர் அங்கு எப்போதாவது போனீரா? ஜோன் மகேஷைக் கேட்டார்.  “ நான் போகவில்லை. அங்குப் போய்வந்த எனது  நண்பரான சிங்கள உடகவியாலர் ஒருவர் சொன்னதைத் தான் சொன்னேன். அதுவுமில்லாமல் இந்த விபரம் சில பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது”.  “ மகேஷ் மேலும் முகாமைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் சொல்லும்” .  அகதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் அறை மிகச் சிறியது. நூற்றுக் கணக்கானவர்கள் தம் இனித்தவர்களைச் சந்திக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும். வேகு நேரம் காத்திருந்துவிட்டு சந்தித்தவர்களோடு நீண்ட நேரம் பேச  மெய்க்காப்பாளர்கள் விடமாட்டார்கள். “வெகு நேரம் கதைத்துவிட்டீர். மற்றவர்களும் கதைக்க நேரம் வேண்டும்”’ என்று கட்டுப்படுத்தி விடுவார்கள்.  பொருட்கள் அல்லது கொண்டு வந்த உணவை வந்திருந்தவர்கள் கொடுப்பது அவ்வளவு இலகுவல்ல. கடும் பரிசோதனைக்குப் பின்னரே அப் பொருட்களை அவர்கள் கொடுக்க முடியும்,” லலித் சொன்னார்.  நீண்ட பணத்தின் பின் ஜோன், மகேஷ், லலித் ஆகிய மூவரும் மெனிக் முகாமை அடையும் போது பகல் ஒரு பதின்ரெண்டாகிவிட்டது. வரும் வழியில் இரு தடவை அவர்கள் இராணுவத்தடைகளை தாண்டவேண்டியிருந்தது, லலித் இருந்தபடியால் தாங்கள் மூவரும் பத்தி;ரிகையாளர்கள் என்பதையம் முகாமில் வாழும் அகதிகளைப் பற்றிக் கண்டு அறிய வந்ததாகச் சிங்களத்தில் விளக்கம் கொடுத்தார்.  “யாரைக் காம்பில் சந்திக்கப் போகிறீர்கள்”?, வவுவனியாவில் உள்ள இராணுவக் செக போஸ்ட்டுக்குப் பொறுப்பாய் இருந்த சார்ஜன்ட் ஒருவர், அவர்களைச் சிங்களத்தில் கேட்டார். “நாங்கள் மேஜர் ஜெனரல் வின்சனட் பெரெராவைச் சந்தித்து அனுமதி பெற்று காம்பை பார்க்கப்போகிறோம்” என்றார் லலித்.  “ உங்களுக்கு ஏற்கனவே அவரைத் தெரியுமா?” சார்ஜன்ட் கேட்டார்.  “ அவருக்கு ரிட்டையரான மேஜர் ஜெனரலாக இருந்த விஜயரத்தினா கடிதம் தந்திருக்கிறார்”.  “ ஓ நீங்கள் மூவரும்; மேஐர் ஜெனராலாக இருந்த  விஜயரத்தினாவின் ஆட்களா. அவர் தான் எனக்கு டிரெயினிங் தந்தவர். நல்ல மனிதர். அது சரி இவர் எந்தத் தேசத்தவர்” ஜோனைக் காட்டி கேட்டார் சார்ஜன்ட்.  “ இவர் பெயர் ஜோன். கனடா டொரண்டோவில் வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றின் ரிப்போர்டர்.” மகேஷ் தனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதில் அளித்தார். மூவரது அடையாளப் பத்திரங்களைப் பார்த்துவிட்டு சரி நீங்கள் போகலாம்.;. இங்கிருந்து சுமார் 30 மைல்கள் போனால் மெனிக முகாம் வரும். முகாமைப் பரிபாலனம் செய்யும் ஓபீசுக்குப் போகும் திசையைக் காட்டியபடி ஒரு ரோட் இருக்கும். அந்த ரோட்டில் போனால் மெயின் விதியில் இருந்து சுமார் நூறு யார் தூரத்தில் மேஜர் வின்சனட் பெரெராவின் ஒபீஸ் இருக்கும். உங்கள் பயணம் நன்றாக இருக்கட்டும்;”, என்று வாழ்த்தி அனுப்பினார் சார்ஜனட்..  மேஜர் வின்சென்ட் பெரெராவின் ஒபீசை அடைந்தவுடன் அங்கிருந்து இராணுவச் சிப்பாயிடம்; தாங்கள் ஊடகவியலாளர்கள் எனவும்;,  மேஜர் வின்சர்டை  சந்திக்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.  “மேஜர் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார் இனடனும் பத்து நிமிடத்தில் மீட்டிங் முடிந்து விடும் அதன் பிறகு அவரை நீங்கள் சந்திக்கலாம்” என்றான் அந்த இராணுவச் சிப்பாய்.  மூவரும் தங்கள் பிஸ்னஸ் காரட்டுகளை மீட்டிங்கில் இருக்கும் மேஜரிடம் கொடுக்கும் படி இராணுவ சிப்பாயிடம் கொடுத்தார்கள்.  மீட்டிங் முடிந்து வெளியேவந்த வினசண்ட் மூவரையும் கண்டவுடன் “ஹலோ ஜோன், லலித்,  அண்ட் மகேஷ்  மெனிக் காம்புக்கு உங்கள் வருகை நல் வரவாகுக. உங்கள் மூவரையும் நான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனான். பயணம் எப்படி இருந்தது? ஆங்கிலத்தில் கேட்டார் மேஜர்.  “ பயணம் பரவாயில்லை. ஆனால் பாதை தான் சரியில்லை. குருணாகலிலும் அனுராதபுரத்திலும் சற்று இளைப்பாறி வந்தோம்” லலித் சொன்னார்.  “என்டை பிரண்ட், மேஜர் விஜய, ஏற்கனவே எனக்கு டெலிபோன் செய்து நீங்கள் காம்புக்கு வரப்போகும் விபரத்தைப்பற்றச் சொன்னவர்.; காம்பைச் சுற்றி பார்க்க எல்லா ஒழுங்குகளையும்  செய்து கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் நீங்கள் எது வித பிரச்சனையும் இல்லாமல் சுற்றிப்பார்க்கலாம். படம் எடுக்கலாம். ஆனால் ஒரு கட்டுப்பாடு”, வின்சன்ட் சொன்னார்.  “ என்ன கட்டுப்பாடு மேஜர்?”  லலித் மேஜரைக் கேட்டார்.  “ காம்புக்குள் இருப்பவர்கள் எவரோடாவது அரசியல் பேசுவதை முடிந்தளவு தவிர்க்கவும்;.  முக்கியமாக எல்.டீ.டி யைப்பற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது. “ நாங்கள் காம்பில் உள்ளவர்களோடு பேசும் போது கவனமாக அரசியல் கலக்காமல் பேசுவோம்.” ஜோன் சொன்னார்.  “ உங்களுக்குப் பயணக் களைப்பு இருக்கும். மணி ஒன்றாகிவிட்டது. பகல் போசன நேரம். என்னோடு பகல் போசனத்தைச் சாப்பிட்டு விட்டு காம்பை நீங்கள் சுற்றிப் பார்க்கத் தொடங்கலாம்” மேஜர் வின்செனட் சொன்னார்.  “ மிகவும் நன்றி மேஜர்.” மூவரும் மேஜருக்கு நன்றி தெரிவித்த பின்னர் போசனம் உண்ணச் சென்றார்கள். அவர்களின் வருகையை எதிர்பார்த்தோ என்னவோ உணவு பிரமாதமாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. திறந்த வெளி முகாமில் அகதிகள் நல்ல உணவு இல்லாமல் தவிக்கும் போது தாங்கள் இப்படியான உணவை உண்பது மூவருக்கும் என்னவோ மாதிரி இருந்தது மேஜரின் விருந்தோம்பலுக்கு மரியாதை கொடுக்கவேண்டியதால்; அவர்கள் சிறிதளவு உணவை உண்டபின் “ மேஜர் அன்று சில மணி நேரங்கள் தான் மிகுதி இருக்கிறது. முகாமை சுற்றிப்பாரத்து அகதிகளோடு உரையாட வேண்டி இருப்பதால் உணவு உண்பதில் நேரத்தை வீணாக்க எங்களுக்கு விருப்பம்  இல்லை. எங்களைக் குறை நினைக்க வேண்டாம் “ என்றார் ஜோன்.  “ உங்கள் நிலை எனக்குப் புரிகிறது.” என்றார் மேஜர் புன்னகையோடு.       முள்வேலிக்குப் பின்னால் – 3 : பொன்னம்மாவும் அன்னம்மாவும்   []     மெனிக் முகாமில் அகதிகளை அவதானித்தபடியே மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அகதிகளின் விரக்தியான முகங்கள் அவர்ளை பரிதாபப்படவைத்தது. சிறுவர்கள் விபரம் தெரியாது அங்கும் இங்கும் ஓடி விளையாடினார்கள். எவரோடு முதலில் உரையாடுவது என்பதை அவர்கள் முடிவு எடுக்க வேண்டிய நிலை. அகதிகள் முகாமில் மூவர்களது பார்வையில் முதலில் அவர்களுக்குத் தென்பட்டது வெள்ளை நிறச் சேலைகளட அணிந்த இரு பெண்கள். அவர்கள் திறந்த வெளியில் தங்கள் கூடாரத்துக்கு முன்னால் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென தனிப்பட்ட சமையல் அறை கிடையாது. அவர்களுக்கு அருகே இரு சிறுவர்கள் அவர்களுக்கு உதவி செய்துகொண்டு இருந்தார்கள்.. பெண்களின் கணவன்மாரைக் காணவில்லை . இரு பெண்களும் வெள்ளை சேலை அணிந்திருந்தபடியால் அவர்கள் விதவைகளாக இருக்கலாம் என்பது மகேஷின் ஊகம். ஜோனுக்கு தான் ஊகித்ததை மகேஷ் சொன்னார்.  “ மகேஷ் எதற்கும் அவர்களோடுப் பேசிப்பார்ப்போம். அப்போது உண்மை தெரியும்” என்றார் ஜோன்.  அவர்கள் இருவரையும்  பார்த்து “ எப்படி அம்மா இருக்கிறீர்கள். முகாம் வாழ்வு பிடித்துக் கொண்டதா”? மகேஷ் அவர்களிடம் கேட்டார்.  பதில் சொல்வதற்கு முன் யாராவது இராணுவத்தினர் தாங்கள் பேசுவதை கவனிக்கிறார்களா என்று இரு பெண்களும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.  “ அம்மா பயப்படாதீர்கள். முகாமிற்குப் பொறுப்பான  மேஜரிடம் இருந்து உங்களோடு  பேச அனுமதி பெற்றுத்தான்  நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் பயப்படாமல் எங்களோடு பேசலாம்.  ”அது சரி நீங்கள் மூவரும் யார்”? இரு பெண்களில் ஒருத்திகேட்டாள்.  “அம்மா நாங்கள் ஊடகவியலாளர்கள். முகாமில் இருப்பவர்களின் நிலைபற்றி அறிய வந்திருக்கிறோம். இவர் ஜோன் என்ற கனடா தேசத்துச் செய்தியாளர். மற்றவர் பெயர் லலித். என் பெயர் மகேஷ். நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா.”?  மகேஷ் இரு பெண்களில் ஒருத்தியைக் கேட்டார்.  “ எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது  ஐயா.  தமிழ் மட்டுமே தெரியும்”, பதில் சொன்னாள்  அந்தப் பெண்.  “பரவாயில்லை. தமிழில் பேசுவோம். பிறகு அதை ஜோனுக்கும், லலித்துக்கும் மொழிபெயர்த்து நான் சொல்லுகிறேன். உங்கள் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா”?  இருந்த பெண்களில் ஒருத்திசொன்னாள், “என்பெயர்  அன்னம்மா. இவ என் தங்கை பொன்னம்மா”.  “ உங்களுடைய முகங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறதே நீங்கள் இரட்டையர்களா?”  “ ஓம் சேர். பொன்னம்மா நான் பிறந்து அரை மணித்தியாலத்துக்குப் பிறகு பிறந்தவள் என்று என் அம்மா அடிக்கடி  சொல்லுவா. அம்மாவும் என் அப்பாவும் இப்போது இல்லை. குண்டு வீச்சில் சாவகச்சேரியில் பலியாகிவிட்டார்கள். நாங்கள் தப்பியது கடவுள் புண்ணியம். எங்கள் குடும்பம் நல்லாய் இருந்த குடும்பம்.”  “உங்கள் இருவரது கணவன்மாரோடு நாங்கள் பேச முடியமா”?, என்று மகேஷ் கேட்டார். உடனே இருவரும் ஓப்பாரி வைத்து ஓ வென்று அழத்தொடங்கினார்கள். உடனே தான் ஊகித்தமாதிரி  அவர்கள் இருவரது கணவன்மார்களும் உயிரோடு இல்லை என்பது மகேசுக்கு உர்ஜிதமாகிவிட்டது. “ ஏன் அழுகிறீர்கள். என்ன நடந்தது அவர்கள் இருவருக்கும்.”?  “ என் கணவன் பெயர் முருகையா. என் தங்கை பொன்னனம்மாவின்  கணவன் பெயர் செல்லையா. அவர்கள் இருவரும் எங்களைப்போல் இரட்டையர்கள்”. அன்னம்மா சொன்னாள்.  “ கேட்க அச்சரியமாக இருக்கிறதே இரட்டையர்கள், இரட்டையர்களைத்   திருமணம் செய்வது மிக அருமை. அது சரி மேலே என்ன நடந்தது அவர்களுக்கு”?  “முருகையா நல்ல மொட்டார் மெக்கானிக். அவருடைய தம்பி  செல்லையா திறமையான டிங்கர் வேலைக்காரர். அவர் எந்தப் பழைய காரையும் புதுக்காராக மாற்றிவிடக் கூடியவர் இருவரும் சேர்ந்து உருத்திரபுரத்தில் “செல்லமுருகன்” என்ற பெயரில் வாகனங்கள் ரிப்பெயர் செய்யும் கராஜ் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு உதவியாக இருவர் வேலை செய்தார்கள். விவசாயிகள் எல்லோரும் தங்கள் டிரக்டர், ஜீப், கார் போன்ற வாகனங்களைப் திருத்துவதற்கு காராஜுக்கு கொண்டு வருவார்கள்.  நல்ல வருமானம் வந்தது. எங்கடை பிள்ளைகள் ருத்திரபுரம் அரசினர் பாடசாலையில் படித்தார்கள். நாங்கள் ஒரு பெரிய வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தோம். அடிக்கடி விடுதலைப்புலிகள் தங்கள் வாகனங்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கராஜுக்கு கொண்டு வந்து திருத்திக்கொண்டு போவார்கள். அவர்களின் வாகனங்களை, எங்கள் கணவன்மார் மறுக்காமல் திருத்திக் கொடுப்பார்கள். அவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அதை விட எங்கள் குடும்பத்துக்கு இயக்கத்தோடு வேறு ஈடுபாடு இல்லை”, அன்னம்மா சொன்னாள். “ அப்போது அவர்கள் இருவரும் மனிக் முகாமுக்கு உங்களோடு வந்தார்களா?  “ நாங்கள் குடும்பத்தோடு வந்து ஒரு மாதத்துக்குள் தலையாட்டிகள் தலையாட்டியதால் இருவரையும் ஆர்மி விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அதன் பிறகு அவர்கள் திரும்பவே இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது “.  “ நீங்கள் முறையிடவில்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லையா”?  “ எத்தனையொ தடவை கேட்டுவிட்டோம் அவர்களுக்கு என்ன நடந்தது என்று. இன்னும் விசாரணை நடக்கிறது என்ற பதில் தான் கிடைத்தது. நான் அறிந்தமட்டில் இப்படித் தலையாட்டிகளால் அடையாளம் காட்டி கொடுத்து விசாரணைக்கு என்று அழைத்துச் செல்பவர்கள் ஒரு போதும் திரும்பி வருவதில்லை என்று. உடலைக் கூட தர மாட்டார்கள். பொன்னம்மா சொல்லி விம்மி அழுதாள்.  “ உங்களுடைய குடும்பத்தை அவர்கள் விடுதலை செய்தால் திரும்பவும் ருத்திரபுரம் போவீர்களா?”.  “ இல்லை. பழைய வீட்டுக்குப் போய் நாங்கள் வாழ்ந்த வாழக்கையை நினைத்துக் கவலைப்பட வேண்டும். அதோடு நாங்கள் வாழ்ந்த ருத்திரபுர வீட்டில் யார் இப்போது இருக்கிறார்களோ தெரியாது. நாங்கள் பிறந்த ஊரான சாவகச்சேரிக்குப் போவதாகத் தீர்மானித்துள்ளோம்”, என்றாள் அன்னம்மா.  “உங்களுக்கு இந்த முகாம் வாழ்க்கை பிடித்துக்கொண்டதா”?  “எப்படிப் பிடிக்கும்? நாங்கள் இலங்யில் பிறந்து வளர்ந்த பிரஜைகள். எங்களைக் கைதிகளாக நடத்துகிறார்கள். ஒரு கூடாரத்துக்குள் இரு குடும்பங்கள் வாழ வேண்டியிருக்கு. குளிக்கவும் மல சலம் கழிக்கவும், சமையல் செய்யவும் வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்குப் படிக்க வசதிகள் இல்லை. மஞ்சுளா தான்  சில மணி நேரம் பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறா. நோயென்று வந்தால்; நேர்ஸ் சாந்தியும்,; டாக்டர ராஜதுரையரும் எங்களைக் கவனிக்க இருக்கிறார்கள். சுதந்திரமாகத் திரியமுடியாது. எங்களை  எப்போதும் கண்காணித்தபடியே  இருக்கிறார்கள். இப்படியும்; ஒரு வாழ்க்கையா? என்ன குற்றம் நாங்கள் செய்தோம்? பொன்னம்மாவும் அன்னம்மாவும் அழுதபடி குறைபட்டார்கள்;.  “ எங்களுக்கு உங்கள் பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னதுக்கு நன்றி. இதைப்பற்றி நாங்கள் எங்கள் பத்திரிகையில் எழுதி உங்களுக்கு விரைவில் விடுதலைக் கிடைக்க முடிந்ததைச் செய்வோம்”, மகேஷ் அவர்களுக்கு வாக்குறதி அளித்துவிட்டு அவ்விடத்தை விட்டு  முகாமில் உள்ள மற்றவர்களைச் சந்திக்கப்போனார்கள். நகர முன் தான் தமிழில் பேசியதை ஜோனுக்கு மொழிபெயர்த்து மகேஷ் சொன்னார். ஜோனும் குறிப்பெடுத்துக்கொண்டார். அதன் பின் இருபெண்களையும் அவர்களின் அனுமதியோடு ஜோன் படம் எடுத்தார். ஜோன் படம் எடுப்பதைக் கண்டவுடன் இரு சிறுவர்களும் தமது தாய்மார் அருகே வந்த நின்று கொண்டனர். முள்வேலிக்குப் பின்னால் -  4 : மஞ்சுளா []     நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும்  ஆக்கிரமித்த நீர்த் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த  அழுக்கு நீரில் நான்கு சிறுவர்களும் இரு சிறுமிகளும் காகிதத்தில் ஓடங்கள் செய்து மிதக்கவிட்டு விளாயாடிக் கொண்டிருந்தார்கள்;. அவ்விளையாட்டால் ஏற்படும் ஆபத்தை அறியாத பிஞ்சு உள்ளங்கள். அதைக் கண்ட ஜோன் சிறுவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்ந்தார். உடனே மகேஷிடம் ”மகேஷ் இந்தப் பிள்ளைகளுக்கு விளையாட இடமில்லாமல் இந்த அசுத்த நீரிலா விளையாட வேண்டும். இதனால் வரும் ஆபத்தைத் தெரியாத பிள்ளைகள். நீர் போய் அவர்களுக்கு இந்த நீரில் விiயாடுவது ஆபத்து என்று விளங்கப்படுத்தி அவர்கள் சாக்கடை நீரில் விளையாடுவதை நிற்பாட்டும் “  என்றார் ஜோன். மகேசுக்கு ஜோன் சொன்னதை அருகில் நின்ற இளம்பெண்ணொருத்தி கேட்டுவிட்டு ஜோனிடம் வந்தாள்.  “ சேர் அந்தப் பிள்ளைகளுக்கு விளையாட போதிய வசதிகள் முகாமில் இல்லை.  அதனால் அவர்கள் அந்தச் சாக்கடை நீரில் விளையாடுகிறார்கள். தயவு செய்து அவர்களைத் தடுக்காதீர்கள்”, என்று ஆங்கிலத்தில் ஜோனுக்கு அப்பெண் சொன்னாள்.  ஜோனுக்கு அந்தப் பெண் நல்ல ஆங்கில உச்சரிப்போடு பேசியது ஆச்சரியமாக இருந்தது.  “அது சரி நீர் நலலாக ஆங்கிலம் பேசுகிறீரே. ஸ்கூலில் ஆங்கிலம் கற்றீரா? உம் பெயர் என்ன?” ஜோன் அந்தப் பெண்ணைக் கேட்டார்.  “ என் பெயர் மஞ்சுளா. இந்த முகாமிலை என்னை எல்லோரும்; மஞ்சு என்று கூப்பிடுவார்கள். நான் முல்லைததீவு அரசினர் ஸ்கூலில் படித்த போது எனக்கு பிடித்தமான பாடம் ஆங்கிலம். படிக்கும் போதே ஆங்கில நூல்கள் வாசிப்பேன். எனக்கு அகத்தா கிறிஸ்டியின் நாவல்கள் என்றாலே விரும்பி வாசிப்பேன். ஆங்கிலத்தில் கட்டுரைகள் கூட எழுதியிருக்கிறான். இந்த முகாமில் தான் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்காதே”, அவள் சொன்னாள்.  “ உமது பெற்றோர் உம்முடன் இந்த முகாமிலா இருக்கிறார்கள்”?  “இல்லை சேர். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமியில் என் தாய் தந்தையரையும் இரு தங்கைமாரையும் இழந்துவிட்டேன். நான் தப்பியது கடவுள் புண்ணியம்”, அழுகையோடு பதில் சொன்னாள் மஞசுளா.  “ அது எப்படி நீர் மட்டும் தப்பினீர்”?  “ நான் ஸ்கூல் லீவின் போது நெடுங்கேணியில் உள்ள  என் சித்தாப்பா வீட்டுக்குப் போயிருந்தேன். ஆதனால் என் உயிர் தப்பியது”  “ முல்லைத்தீவில் எத்னையாம் வகுப’பு வரை படித்தனீர்”?  “ நான் ஏ லெவல் முதலாம் ஆண்டு மட்டும் படித்தனான். யுத்தம் முடிந்தபின், நான் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தேன் என்ற சந்தேத்தினால் என்னை இங்குக் கொண்டு வந்து விசாரணைக்காக வைத்திருக்கிறார்கள். அது சரி நீங்கள் கனடாவைச் சேர்ந்த ஜேர்னலிஸட்டா சேர்?” மஞ்சுளா ஜோனைப் பார்த்துக் கேட்டாள்.  “  அது எப்படி உமக்குத் தெரியும்:?  “ உங்கள் ஆங்கில உச்சரிப்பு பிரிட்டிஷ்; உச்சரிப்புப்போல் இல்லை. அதோடு உங்களிடம் இருக்கும் கமெராவும், கையில் உள்ள நோட் புத்தகமும் காட்டிக் கொடுத்துவிட்டது நீங்கள் ஜேர்னலிஸ்ட என்று”, மஞ்சுளா சொன்னாள்.  “மஞ்சுளா, உமக்கு ஏற்கனவே கனடாவைப் பற்றி தெரியமா”?, ஜோன் மஞ்சுளாவைக் கேட்டார்.  “ஏன் தெரியாது. எனது பேனா நண்பர் பீட்டர் வோட்டர்லூ யூனிவர்சிட்டியில் சொப்ட்வெயர் என்ஜினியரிங் கடைசி ஆண்டு படிக்கிறார். அவர் பெற்றோர் இருப்பது மிசிசாகாவில். எனக்கு கனடா ஒன்றாரியொ மகாணத்தில் உள்ள சில ஊர்களைப் பற்றி பீட்டர் எழுதுவார். அப்பெயர்களை வாசித்தபோது அதிகமானவை இங்கிலாந்தில் உள்ள லண்டன் , கேம்பிரிட்ஜ், பிரம்டன், பாத், மன்செஸ்டர் நியூமார்க்கட் போன்ற ஊர்களின் பெயர்களைக கொண்டவையாக இருக்கிறது”  “ கனடா கொமன்வெல்த்த நாடுகளில் ஒன்று என்று உமக்குத் தெரியும் தானே. 1763 ஆண்டு முதல் 1867 வரை கனடா பிரிட்டிஷ்; ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அதனால் பிரிட்டிஷ் ஊர்களின் பெயர்கள் கனடாவில் எல்ல மகாணங்களிலும் இருக்கிறது. அதில் ஒன்றாரியோ மாகாணத்தில் தான் அப்பெயர்கள் அதிகம் உள்ளது. அது சரி மஞ்சுளா உமது பேனா நண்பர் பீட்டர் என்ன படிக்கிறார்?”, ஜோன் கேட்டார்.  “ சொபட்வெயர் (Software) என்ஜினியரிங் கடைசி ஆண்டு”  “ எவ்வளவு காலமாக அவர் உமக்கு அறிமுகமானவர்”?  “ சுமார் மூன்று வருடங்கள். நான் இந்தக் காம்புக்கு வரமுன்பு இருந்தே தெரியும்”.  “ மஞ்சுளா நீர் காம்பில் இருந்து வெளியே வந்தபின் நீர் உமது படிப்பைத் தொடரவேண்டும்” , மகேஷ் சொன்னார்.  “படிப்பை நான் தொடருவதா இல்லையா என்பதை நான் சிந்திக்க வேண்டும்” மஞ்சுளா விரக்தியோடு பதில் அளித்தாள்.  “ஏன் அப்படிச் சொல்லுகிறீர் மஞ்சுளா:” ஜோன் கேட்டார்.  “இல்லை சேர், நான் படித்துப் பட்டம் பெற்றாலும் எனக்கு உத்தியோகம் கிடைக்குமா என்பது சந்தேகம். பல்கலைக்கழகத்துக்குப் போவதென்றால் அதிலும் தரப் படுத்தல் என்று சொல்லி தமிழ் மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுகிறது அரசு. ஒரு காலத்தில் இந்தப் பாகுபாடு இல்லாத போது பல தமிழ்மாணவர்கள் படித்து டாக்டராக, என்ஜினியராக, எக்கௌண்டனாக ஆசிரியராக வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நிலமை வேறு. தமிழ் இளைஞர்களின் முன்னேற்றத்தைக் கண்டு சிங்கள அரசுக்கு வயிற்றெரிச்சல். அதுவே தரப்படுத்தும் திட்டம் வரக்காரணம். இப்போது அரச சேவையில் தமிழர்கள் குறைவு. இதுவும் விடுதலைப் புலிகளின் போராட்டத்;துக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.  “இல்லை மஞ்சு காலத்தோடு நிலமை மாறி வருகிறது. நீர் பாசிட்டிவ்வாகச் சிந்தித்துச் செயல்படும். வேற்றி பெறுவீர். அரசில் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதில்லை. திறமை இருந்தால் தனியார் துறையிலும் வேலை செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் சொந்தமாகத் தொழிலும் ஆரம்பிக்கலாம். எனக்கு உமது பேனா நண்பர் பீட்டரின் விலாசத்தையும், போன் நம்பரையும் தாரும். கனடா போனவுடன் நான் அவரோடு தொடர்பு கொண்டு உமது நிலமையை விளக்கி, உமக்கு ஏதாவது வழியில் அவரை உதவி செய்யச் சொல்லுகிறான்” , ஜோன் சொன்னார்.  “ மிஸ்டர் ஜோன்  உங்களோடு   தமிழ் இளைஞர்களின் பிரச்சனைகளைப் பற்றி என் கருத்தைச் சொன்னதுக்கு என்னை மன்னிக்கவும். உங்களிடம் ஒரு வேண்டுகோள்”.  “ என்ன அது? சொல்லும். என்னால்.  முடிந்தால் செய்கிறேன்”.  “ தமிழ் இளைஞர்களின் விரக்திகளைப் பற்றி கனடா போனதும் உங்கள் பத்திரிகையில் விபரமாய் எழுதுங்கள். இந்தக் காம்பிலும் மற்ற மூன்று காம்புகளிலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்படுகிறார்கள்;. பலர் தலையாட்டிகளால் அடையாளம் காணப்பட்டு சாவைத் தழுவியுள்ளார்கள்.”.  “ யார் இந்த தலையாட்டிகள்?. பொன்னம்மாவும் சொன்னவர்களா அவர்கள்”, ஜோன் கேட்டார்.  “ விடுதலைப் புலிகளின் இயக்கத்துக் எதிராக இயக்கங்களைச் சார்ந்தவர்கள். பழி வாங்கும்; எண்ணத்தோடு ஆர்மியோடு சேர்ந்து ஒற்றர்களாகச் செயல் படுகிறார்கள். சந்தேகப்படும் இளைஞர்களைத் தலையாட்டிகள் முன் நிறுத்தி இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களா இல்லையா என்று ஆர்மி அதிகாரிகள் கேட்கிறார்கள். அவர்கள் தலையாட்டுவதன் மூலம் தம் தீரப்பை சொல்லுகிறார்கள். அதற்கு பணமும் வாற்குகிறார்கள். தமிழனே தமிழனைக் காட்டிக் கொடுக்கிறான். வீரபாண்டிய கட்டபபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன்னைப் போல்;” மஞ்சுளா நடப்பதைத் தமிழர் வரலாற்றோடு ஒப்பிட்டு பதில் சொன்னாள்.  அவளின் பதிலை மூவரும் எதிரபார்கவில்லை. “நன்றாகத் தமிழர் வரவாற்றை அறிந்து வைத்திருக்கிறாள்” என்றார் மகேஷ். ஜோனும் அவர் சொன்னதை ஆமோதித்தார்.  “மன்னிக்கவும். தொடர்ந்து காம்புக்குள் அரசியல் பேச நான் விரும்பவில்லை.” என்றார் ஜோன்.  “ நீங்கள் என்னோடு பேசியதற்கு மிகவும் நன்றி. நீங்கள் எழுதப் பொகும் அறிக்கை எதாவது ஒரு வகையில் தமிழர்ளுக்கு உதவினால் நான் உங்ளைப் பாராட்டுவேன்”  மஞ்சுளா சொன்னாள்.  “இன்னம் பலரை நாம் சந்திக் வேண்டும். நேரம் போய் கொண்டிருக்கிறது:” என்று ஜோனுக்கு நினைவூட்டினார் லலித்.  அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர் நொண்டியபடி அழுது கொண்டே கையில் பையொன்றோடு மஞ்சுளாவை நோக்கி வருவதை மூவரும் கண்டார்கள். வந்தவர் முகத்தில் காலிலும்  ஒரே இரத்தம்.  மஞ்சுளா வந்தவரிடம் தமிழில் கேட்டாள். ”சுந்தரம் எதற்காக அழுகிறீர். என்ன உமக்கு நடந்தது?. முகத்திலும் காலிலும் ஒரே இரத்தமாக இருக்கிறதே. அதோடு வரும்போது ஏன் நொண்டிக் கொண்டு வந்தனீர்”. மஞ்சுளா தமிழில் சுந்தரத்திடம் கேட்டதை ஆங்கிலத்தில் ஜோனுக்கு மொழிபெயர்த்து மகேஷ் சொன்னார்.  “ மஞ்சுளா நான் ஓபீடி (OPD) கிளினிக்கில் இருந்து மருந்துகளை பையுக்குள் வைத்து குறுக்குவழியில் இந்தக் காம்புக்குள் ஒரு குடும்பத்துக்கு எடுத்துச் சென்றபோது இரு ஆர்மிக்காரர்கள் கண்டுவிட்டார்கள். அவர்கள் நினைத்தார்கள் நான் பையுக்குள் ஏதோ போதை மருந்துகள் விற்பதற்கு எடுத்துச் செல்கிறேன் என்று. இப்படி சந்தேகப்பட்டவர்களைச் சரிவர விசாரணை செய்யாமல் உடனே குற்றவாளி என்று முடிவுக்கு வந்தது மட்டுமல்லாமல் காலிலும் கன்னத்திலும் அடி போட்டார்கள். நான் எவ்வளவோ மன்றாடிச் சொல்லியும் அவர்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை. தொடர்ந்து எனக்கு அடித்தார்கள். எனக்குத் தமிழ் மட்டுமே பேசத்தெரியும். அவர்கள் சிங்களவர்கள். சிங்களம் மட்டுமே தெரியும். நான் சொன்னது அவர்களுக்கு விளங்கியிருக்காது. அவர்கள் சிங்களத்தில் சொன்னது எனக்கு விளங்கவில்லை. அதன் விளைவே இந்தக் கோலம் எனக்கு” அழுதபடி சுந்தரம் சொன்னார்.  “ பிறகு என்ன நடந்தது சுந்தரம்”?:  “என்னை அடித்துவிட்டு என் பையுக்குள் இருந்ததை பரிசோதித்துப் பார்த்தார்கள். பையுக்குள் மருந்துகள் இருப்பதைக் கண்டார்கள். தாங்கள் தவறு செய்து விட்டோம் என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது. மருந்துகளையும் என் பையையும்  என்னிடம் திருப்பித் தந்து விட்டு தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கூட சொல்லாமல் அதிகாரத் தொரணையில் தங்களுக்குத் தெரிந்த அரை குறைத் தமிழில்.  “ சரி சரி.  நீ இப்படி இனி குறுக்குப் பாதையில் போகாதே. நீ பார்த்த பார்வை எங்களை உன்னைச் சந்தேகிக்க வைத்துவிட்து. அதனால் தான் அடித்தோம். இதைப்பற்றி கெப்டனிடம் முறையிடாதே. அப்படி நீ செய்தால் உனக்குத்தான் ஆபத்து”: என்ற சொல்லிவிட்டு இருவரும் போய்விட்டார்கள்”. சுந்தரம் மஞ்சுளாவுக்கு நடந்த விபரத்தைச் சொன்னார். அவர்கள் இருவரும் பேசியதை மகேஷ் ஜோனுக்கு மொழியெயர்த்துச் சொன்னார்.  “ சுந்தரம் நடந்ததை ஒபிசில் போய் கெப்டனுக்கு ஏன் நீ முறையிடக் கூடாது” மஞ்சுளா சுந்தரத்தைக் கேட்டாள்.  “ ஐயோ வேண்டாம் பிள்ளை. இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்த எனக்கு விருப்பம் இல்லை. அப்படி நான் முறைப்பாடு செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எனக்குத் தெரியும்” என்றார் சுந்தரம்.  ஜோன் மகேஷின் உதவியோடு சம்பவத்தைப் பற்றி குறிப்பு எடுத்துக்; கொண்டார்.  “பிள்ளை, என்னை நேர்ஸ் சாந்தியிடம்; கூட்டிப்போம்;. அவவுடைய கை பட்டாளே காயம் மாறிவிடும். அவ்வளவுக்கு கைராசிக்காரி”, சுந்தரம் சொன்னார்.  ஜோன், மகேஷ், லலித் ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள. “மஞ்சுளா, யார் அந்த நேர்ஸ் சாந்தி. உமக்கு அவவைத் தெரியுமா”? ஜோன் கேட்டார். “ நேர்ஸ் சாந்தியை இந்தக் காம்பில் இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். நல்ல மனிதாபிமானம் உள்ளவை. கைராசிக்காரி. அவ கை வைத்தால் உடனே நோய் சுகமாகி விடும். அவவின் தகப்பன் டாக்டர் இராஜதுரை கூட இந்த முகாமில்  தான் இருக்கிறார். சாந்தி தந்தையைப் போல மூன்று மொழிகளும் சரளமாகப் பேசுவா. அவ முகாமில் இருப்பவர்களுக்கு உதவுவது பல இராணுவ சிப்பாய்களுக்கு பிடிக்காது. ஆனால் அவவை அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது.” மஞ்சுளா சொன்னாள்.  “ ஏன் அப்படி”, ஜோன்’ கேட்டார்.  “ மேஜர் வினசன்ட் பெரெராவுக்கு நேர்ஸ் சாந்தி மேலும், டாக்டர் ராஜதுரை மேல் நல்ல மதிப்பு. தனக்கு எதாவது வருத்தம் என்றால் அவர்களைத் தான் நாடுவார். இந்த மேஜர் வின்சென்ட்டின் நட்பால்  அவர்கள் இருவரையும் ஒருவராலும் ஒன்றும் செய்யமுடியாது.  ஒருநாள் ஒரு இராணுவ சிப்பாய்; சாந்தியைக் கட்டி அணைத்து முத்தமிடப் பார்த்தார். அந்தச் சம்பவம் மேஜர் காதுகளுக்கு எட்டியது. அவர் அந்த இராணுவச் சிப்பாயை தன் ஒபீசுக்கு அழைத்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பினார். நேர்ஸ் சாந்தியை  புளொரன்ஸ் நைட்டிங்கேலோடு ஒப்பிடுவேன் ” என்றாள் மஞ்சுளா.  “யார் என்று நீர் சொல்லும் புளொரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்?” தனக்குத் தெரியாத மாதரி ஜோன் மஞ்சுளாவைக் கேட்டார்.  “ என்ன சேர் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். “லேடி வித் த லாம்ப் (Lady with the lamp) ”; என்ற வசனத்தைப் பலர் அறிந்ததே. 1853 முதல் 1856 வரை  நடந்த கிரிமியன் போரில் காயமடைந்தோரை மனிதாபிமானத்தோடு கவனித்து சிகிச்சை அளித்தவர். இரவில் வைத்தியர்கள் தூங்கியபின்,; கையில் ஒரு சிறு விளக்கோடு காயமடைந்தவர்கள் படுத்திருக்கும் கட்டில்களுக்கு சென்று அவர்கள்; எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து, தேவைப்பட்டால் சிகிட்;சையும் செய்துவந்தவ” என்றாள்  மஞ்சுளா. மஞ்சுளாவின் அறிவை வியந்து மூவரும் அவளைப் பாராட்டினார்கள்.  ஜோன், மகேசையும் லலித்தையும் கேள்விக் குறியோடு பார்த்தார். அவரின் புன்முறுவல் சுந்தரத்தைத் தான் சந்திக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது. லலித்தும் சாந்தியைச் சந்தித்து அவருடைய சேவையைப் பற்றி தன பத்திரிகையில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தார். “ மஞ்சுளா, நாங்கள் சுந்தரத்தை சாந்தியிடம் அழைத்துச் செல்வோம். அவவை நாங்களும்; சந்தித்தாகவும் இருக்கும். உங்களுக்கு அவவை நன்கு தெரிந்தால் எங்களைச் சாந்திக்கு அறிமுகப்படுத்துவது உங்கள் பொறுப்பு” ஜோன் சொன்னார்.  மகேஷ் ஜோனுக்கு எதோ சொல்ல வாயெடுத்தவர், பிறகுத் தன் பேச்சை நிறுத்திவிட்டார்.  “ ஓகே ஜோன். உங்கள் விருப்பப்படியே செய்வோம். நான் அதிக நேரம் அங்கிருக்க முடியாது. எனக்குச் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலை இருக்கிறது. நான் போகவேண்டும். சாந்தி அக்கா சுந்தரத்துக்கு சிகிட்சை செய்த பின் உங்களோடு பேசுவா”, மஞ்சுளா சொன்ளாள்.  “உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி மஞ்சுளா, என்று; மஞ்சுளாவுக்கு மூவரும் நன்றி தெரிவித்துவிட்டு அவர்கள் நேர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் போனார்கள்.; முள்வேலிக்குப் பின்னால் – 5 : டாக்டர் இராஜதுரை   []   டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர். செல்லத்துரையருக்கு மூன்று மகன்கள், அதில் இராஜதுரை மூத்தவர். இராஜதுரையின் இரு தம்பிமார்களும் சிறுவயதிலேயே ஹார்ட அட்டாக்கால் இறந்ததினால் அவர்களின் பிள்ளைகளை கவனிக்கும் பொநுப்பு  இராஜதுரையின் தலையில் விழுந்தது.  செல்லத்துரையருக்குத் தன்னைப்போல தன் மகன் இராஜதுரையும் படித்து வைத்தியத் துறையில் ஈடுபட வேண்டும் என்பது அவர் கனவு. இராஜதுரையை ராஜா என்றே நண்பர்கள் அழைத்தார்கள். பருத்தித்துறை ஹார்ட்டிலி கல்லூரியில் ஏ லெவல் படித்து, அதன் பின் கொழும்பு மருத்துவக் கல்லூரியில்  பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர். சொந்தத்துக்குள் கரைவெட்டியில் பிரபல வழக்கறிஞர் மகேஸ்வரனின் மகள் ஈஸ்வரியைத் திருமணம் செய்து, சாந்தி என்ற பெண் குழந்தைக்குத் தந்தையானார். சாந்தி பத்து வயதுச்சிறுமியாக இருந்தபோது புற்றுநோயால் தாயை இழந்தாள். டாக்டர் ராஜா எவ்வளவோ பணம் செலவு செய்தும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற அவரால் முடியவில்லை.  ஆரம்பத்தில், கொழும்பு பெரிய வைத்தியசாலையில் ஒரு வருடப் பயிற்சி பெற்று, அதன் பின்னர் கலுபோவில, இரத்தினபரி வைத்தியசாவைகளுக்கு மாவட்ட மருத்துவ அதிகாரியாக சென்றவர். அதைத் தொடர்ந்து ரம்புக்கன, மாத்தறை, காலி, நீர்கோழும்பு. மாறவில, சிலாபம், புத்தளம் ஆகிய இடங்களில்; உள்ள வைத்தியசாலைகளில் சேவைபுரிந்து, மக்களின் அன்பைப் பெற்றவர். ரிட்டடையராக முன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் மாவட்ட மருத்துவ அதிகாரியாக வேலை செய்தவர். அங்கு ஈழத் தமிழ் மக்களுக்குத்  தன் மருத்துவ அனுபவத்தை மனதிருப்தியோடு பயன் படுத்தியவர். முல்லைத்தீவில் வேலை செய்தபின் ஓய்வு பெற்று ருத்திரபுரத்தில் ஒரு சிறு மருத்துவகத்தை ஆரம்பித்தார். அவருக்கு உதவியாக நேர்சாக பயிற்சிபெற்ற அவர் மகள் சாந்தியும், அப்போதிக்கரி மாணிக்கமும் இருந்தனர். அவர்களுடைய  வைத்தியசாலையில் , முகுந்தன் என்ற மருந்து தயாரிப்பவரும், சேந்தன் என்ற ஆண் நேர்சும் வேலைசெய்தார்கள். அவர்கள் இருவரும், அப்போதிக்கரி மாணிக்கமும், டாக்டர் ராஜாவோடு கிளிநொச்சியிலும் , முல்லைத்தீவிலும் வேலை செய்தவர்கள். அதனால் டாக்டர் ராஜாவின் திறமையை நன்கு அறிந்திருந்தார்கள். கைராசிக்காரன் என்று ராஜதுரையருக்கு வேலைசெய்த வைத்தியசாலைகளில் பெயர் கிடைத்தது. அவரது அன்பான குணமும், நோயாளிகளை நேசத்தோடும், அக்கரையோடும், பரிவோடும் அவர் கவனிக்கும் விதம், அவரோடு தொடர்ந்து வேலை செய்யும் விதத்தில் அவர்களை ஊக்குவித்தது. அதனால் டாக்டர் ராஜா ருத்திரபுரத்தில்; “சாந்தி மருந்தகம்”; என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்றை நிறுவி ருத்திரபுரத்தை சற்றியுள்ள  பல கிராமமக்களுக்கு சேவை செய்தார். மாங்குளம்,  நெடுங்கேணி, கிளிநொச்சி, பரந்தன, பூனகரி ஆகிய இடங்களில் இருந்து கூட நோயாளிகள் அவரின் மருந்தகத்துக்குச் செல்வதுண்டு. விடுதலைப்புலிகள் அவரது சேவையை அறிந்து, அடிக்கடி காயப்படட் தமது போராளிகளுக்கு சிகிட்சை பெறச் சாந்தி மருந்தகத்திற்கு போவதுண்டு. மருத்துவ  உதவி என்று தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் வைத்தியம் பார்க்க முடியாது என்று கூறாமல் அதன் விளைவைத் தெரிந்திருந்தும்  வைத்திய நெறிமுறைப் படி காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியம் செய்தார் டாக்டர் ராஜா.  டாக்டர் ராஜாவின் முதல் தம்பியின் மகன் மகாதேவன் பல வருடங்களுக்கு முன் கனடாவுக்கு புலம் பெயர்வதற்கு தேவையான முழு நிதி உதவியைச் செய்தவர் டாக்டர் ராஜா. அதனால் டொரண்டோவில், பிரபல்ய ரியல் எஸ்டேட் புரோக்கரானார் மகாதேவன். இலங்கையில் வாழும் தன்  பெரியப்பாவையும், அவர் மகள்  சாந்தியும் கனடாவுக்குப் புலம் பெயர்வதற்குத் தான் ஸ்பொன்சர் செய்வதாகக் கடிதம் எழுதினார்.. அக்கடிதத்தில்.  “ பெரியப்பா உங்கள் போன்ற மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்த   வைத்தியர்கள்; கனடாவுக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் இங்கு வந்தால் பல தேசத்து வைத்தியர்களுடைய அனுபவங்களைப்  பயன் படுத்துவது மட்டுமன்றி புதிய வைத்திய முறைகளையும் கற்கலாம். அதோடு சாந்தியும் கல்வியைத் தொடரலாம். பெரியம்மாவின் மறைவிற்குப் பின் நீங்களும் சாந்தியும் தனித்துவிட்டீர்கள். அதோடு இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர் சூழலில் வேலை செய்வது கடினமும் ,  ஆபத்தும். இங்கு வந்தால் உங்களுக்கும், சாந்தியின் வருங்காலத்துக்கு நல்லது. உங்களை நான் ஸ்பொன்சர் செய்யமுடியும். நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் என்ற படியால் என் வருமானம் உங்களையும் சாந்தியையும் ஸ்பொன்சர் செய்ய  போதுமானது” என்று  மகாதேவன் எழுதியிருந்தான்.  ஆனால் டாக்டர் ராஜாவுக்கு இலங்கையை விட்டு கனடாவுக்குப் போக விருப்பம் இருக்கவில்லை. “மகாதேவா, எனது மருத்துவ அறிவையும் அனுபவத்தையும் ஈழத்தமிழ்; மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் பயன் படுத்தவே விரும்புகிறேன். நீர் எனக்கு எழுதிய கடிதத்தைச்  சாந்திக்குக் காட்டினேன். அவளுக்கும் இலங்கையை விட்டு வெளிநாடு போக விருப்பமில்லை. நீர் எங்கள் இருவர் மீதும்; கரிசனை காட்டி கடிதம் எழுதியதுக்கு மிகவும் நன்றி”, என்று பதில் அளித்து மகாதேவனுக்குக் கடிதம் எழுதினார் டாக்டர் ராஜா.  தென்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளிலும் வடமேற்கு வைத்தியசாலைகளிலும், வன்னியிலும் கடமையாற்றியவர். அதனால் சிங்களமும் சரளமாகப் பேசக்கூடியவர். இவ்வாறு ஜோன் டாக்டர் ராஜாவைச் சந்திக்க முன்பே அவரைப் பற்றிய விபரங்களை ஜோனுக்கு மகேஷ் சொன்னார்.  மகேஷைக்கண்ட டாக்டர் ராஜா “ மகேஷ் உன்னை இங்கு கண்டது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காரியமாக மெனிக் முகாமுக்கு வந்தனி. இவர்கள் இருவரும் உனது நண்பர்களா”? ராஜா கேட்டார்.  “ ஓம் பெரியப்பா. உங்களுக்குத் தெரியும் நான் ஒரு பத்திரிகையாளன் என்று. அவர் ஜோன். கனடாவில் இருந்து மெனிக் முகாமில் அகதிகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்தும், விசாரித்தும் அறிந்து எழுத வந்தவர். மற்றவர் லலித். இவர்  கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியர்.” இருவரையும் டாக்டர் ராஜாவுக்கு மகேஷ் அறிமுகப் படுத்தினார்.  “உங்கள் இருவரையும் சந்தித்தற்கு  மகிழ்ச்சி. உங்களைப் போல் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களும், இராஜதந்திரிகளும் இங்கு வந்து போயிருக்கிறார்கள். ஐநா சபை செலயலார் நாயகம் கூட முகாமுக்கு வந்து போனார். அவர்கள் என்ன எழுதினாலும் இலங்கை அரசு தான் நினைத்ததைத் தான் செய்யும். வெளிநாட்டில் இருந்து நிதி உதவியாகத் தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக இலங்கை அரசுக்குக் கிடைக்கும்  பணம் எங்கு போகிறது என்பது புரியாத புதிர். நான் நினைக்கிறேன் இங்குச் செயற்படும் அரச சார்பற்ற ஸ்தாபனங்கள், தங்களுக்குக்  கிடைக்கும் நிதியில் இருந்து பெரும்; பகுதியைப் பரிபாலன செலவு எனக் காரணம் காட்டி, விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கியும், தமது ஊழியர்களுக்கு நல்ல வீடு வசதிகளுக்காகவும் செலவு செய்கிறார்கள். அது சரி மகேஷ் சாந்தியைச் சந்தித்தீரா? ராஜா கேட்டார்.  “சாந்தியை நாங்கள் மூவரும் சந்தித்துப் பேசினோம்;. காயப்பட்ட ஒருவரைச் சிகிச்சைக்காக மஞ்சுளாவின் உதவியோடு சாந்தியிடம் அழைத்துப் போனோம். உங்களைப் போல் சாந்தி அகதிகளுக்குச் செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. உங்களது சேவையைப், பற்றி மாத்தறையில் வாழும் எனது சித்தி வெகுவாக பாராட்டினார். அவாவுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்பிராயம்” என்றார் லலித்.  “மாத்தறையில் உள்ள உங்கள் சித்திபெயர்  என்ன? சில சமயம் எனக்கு அவவைத் தெரிந்திருக்கலாம்” என்றார் டாக்டர் ராஜா.  “ அவவுக்கு நீண்ட பெயர். சந்திரலேக்கா வர்ண்குலசூரியா. பெண்கள் கல்லூரி ஒன்றில் தலைமை ஆசிரியையாக வேலை செய்கிறா. அவவை சந்திரா ஆண்டி என்று கூப்பிடுவேன்” லலித் சொன்னார்.  “ சந்திராவை எனக்கு நல்லாய் தெரியும். நல்ல அன்பாக எல்லோரோடையும் பழகுவா. மிகவும் நன்றி லலித் உம்மைச் சந்தித்ததில். நீர் என் சகோதரனின் மகனோடு நண்பராக இருப்பதையிட்டு மகிழ்ச்சி. அவரைக் கவனித்துக்கொள்ளும். அவர் ஒரு நல்ல எழுத்தாளர். அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவருக்கு ஆங்கிலத்தில் நல்ல மொழி ஆளுமை இருக்கிறது. அவர் நல்ல நகைச்சுவையாகவும், வாசிப்பவர்களின் மனதைத் தொடும் விதத்தில் எழுதுவார். ஆனால் அவர் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.  “ ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள் டாக்டர்?” லலித் கேட்டார். “ அவர் ஒரு தமிழ் ஊடகவியலாளர் என்பது தான் பிரச்சனை. அவர் எதை எழுதினாலும் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக எழுதுகிறார் என்றே அரசு கருதலாம். அன்மையில் நான் அறிந்தேன், ஒரு தமிழ் ஊடகவியலாளருக்கு, செய்யாத குற்றத்துக்கு கடும் ஊழியச் சிறைத்தண்டனை கிடைத்தது என்று. சர்வதேச நாடுகளினதும், இயக்கங்களினதும்; எதிர்ப்;பால் சிறைத்தண்டனை இரத்து செய்யப்பட்டதென்றும், அதனால் மேலும் இங்கு வாழப் பிடிக்காமல்  வெளிநாடொன்றுக்குப் புலம் பெயர்ந்தார் என்றும் அறிந்தேன். அதுவல்லாமல் அரசின் போக்கைக் விமர்சித்து  எழுதிய ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் மர்மமான முறையில் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார்”.  “ டாக்ட்ர் நான் அவரைக் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் பயப்படவேண்டாம்” லலித் சொன்னார். சாந்தி அவ்விடத்தை விட்டு நோயாளிகளைக் கவனிக்கப் போனபின்.  “ சித்தப்பா எப்போ சாந்திக்குத் திருமணம் செய்து வைக்கப்போகிறீர்கள் அவவுக்கு வயதும் கூடிக்கொண்டே போகிறது”, மகேஷ் பெரியப்பாவைக் கேட்டார். “ மகேஷ் நீர் நினைக்கிறீரா எனக்குச் சாந்தியின் திருமணத்தில் அக்கரை இல்லை என்று? எனக்கும் பேரப்பிள்ளைகளைக் காண ஆசை தான். திருமணத்தைப்பற்றி அவவோடு நான் சில மாதங்களுக்கு முன் நான் பேசியபோது இப்போ அவசரம் இல்லை அப்பா என்று விட்டாள்.; ஆனால் இப்போது ராமின் வருகையால் அவளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதைக் கண்டேன். அவர்களுக்கிடையே ஒரு நல்ல உறவு வளர்வiதைக் கண்டேன் மகேஷ்;”  ”என்ன நீங்கள் சொல்லுகிறீர்கள் பெரியப்பா”?  “உமக்குள் வைத்துக்கோளளும், அவர்களுக்கிடையே ஒரு பரஸ்பர நட்பு வளருகிறது. அவர்கள் இருவரும் தீர்மானித்து திருமணம் செய்;ய ஒப்புதல் தந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்றார் டாக்டர் ராஜா.  “ ஆனால் பெரியப்பா” என்று வார்த்தைகளை அழுத்திச் சொன்னார் மகேஷ்.  “ மகேஷ்  நீர் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்குத் தெரியும். ராம் ஒரு கால் இல்லாதவர். சாந்தி அந்தக் குறையோடு அவரை ஏற்றுக்;கொள்வாளா என்பது தானே உம் மனதில் தோன்றிய கேள்வி”?  “ஆம் பெரியப்பா”  “ சாந்தி ஒரு முற்போக்குச் சிந்தனைகள் உள்ளவள். சாதி, மதம், அந்தஸ்தது, அங்கக் குறைகள் பாராதவள். தன் மனதில் ஒருவரைப் பிடித்துக்கொண்டால் பிறகு அவள் மனதை மாற்றமுடியாது” என்றார் டாக்டர் ராஜா. மகேஷ் ஜோனைப் பார்த்தார். அவருக்குச் சாந்தியைப் பற்றிய தங்கள் இருவரது பேசியது புரிந்துவிட்டது என்பதை தன் புன்முறுவல் மூலம் காட்டினார்.  “என்ன ஜோன் உமக்கு டாக்டர் ராஜாவும் நானும்; சாந்தியைப் பற்றி பேசியது புரிந்து விட்டதா?” மகேஷ் ஜோனைக் கேட்டார் ஆங்கிலத்தில்.  “ஓரளவுக்கு ஊகித்துவிட்டேன்.;மகேஷ், சாந்திக்கு எது விருப்பமோ, அவவின் விருப்பப்படி செய்யட்டும். எனக்கு ராமைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. திறமைசாலி. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலை சாந்தியோடு ராமுக்கு நல்லாக ஒத்துப்போகும்” என்றார் ஜோன். முள்வேலிக்குப் பின்னால் – 6 : நேர்ஸ் சாந்தி []   மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; அவள் கூடவே வருவதாக ஜோன், லலித், மகேஷ் சொன்னார்கள்.  “நீங்கள்  என்னோடு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களை அவவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு நான் திரும்பிவந்துவிடுவேன்” மஞ்சுளா சொன்னாள். அவர்கள் சாந்தி இருக்கும் இடத்தை அணுகும் போது துர்நாற்றம் வந்ததை எல்லோரும்; உணர்ந்தார்கள்.  “ மஞ்சுளா எங்கருநது அந்த துர்நாற்றம் வருகிறது? இதை எப்படி சகித்துக் கொண்டு இங்கிருப்பவர்கள் இருக்கிறார்கள்”, ஜோன் கேட்டார்.  “ மலசலக் கூடம் இங்கிருத்து சிலமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் எல்லோரும் மலசலம் கழிக்கப்போவார்கள். தண்ணீர் பற்றாதலால் மலசல கூடத்தைத் தினமும் துப்பரவு செய்வதில்லை. உணவு, உடல் நலம் ஆகியவையோடு அதுவும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. முகாமில் இருப்பவர்கள் மலசல கூடத்தைத் துப்பரவாகப் பாவிக்காததால் மலம் எல்லாம் சிதறிக் கிடக்கும். அதனால் தொற்று நோய்கள் வர ஏதுவாகிறது” என்றாள் மஞ்சுளா.  “ இவ்வளவு இளையான்களையும், கொசுக்களையும் நான் ஒரு போதும் கண்டதில்லை. அதோபாருங்கள் அந்த பிள்ளைகள். அவர்கள் சாப்பிடும்போது மலசலக் கூடத்தில் இருந்து வரும் இலையான்களை கையால் துரத்தாமல் உணவு உண்பதை”.  “இரவு வந்ததும் கொசுக்ளுக்;கு ஒரே கொண்டாட்டம். விதம் விதமான இரத்தங்களைச் சுவைக்க அவை கூடாரத்துக்குள் படையெடுக்கும். அகதிகளை கொசுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கொசு வலைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. நுளம்புகளின்  தாக்குதல் அகதிகளுக்கு போதிய தூக்கம் கிடைப்பதில்லை.  எதிர்பாராத விதமாக அகதிகள் பலர் சிற்றாற்றை நோக்கி ஓடுவதை நால்வரும் கண்டார்கள். மஞ்சளாவுக்கு அவர்கள் அப்படி ஏன் ஓடுகிறார்கள் என்பது தெரியவில்லை. அங்கு நின்ற பெண்ணொருத்தியிடம் எதற்காக அவர்கள் ஓடுகிறார்கள் என்று மஞ்சுளா கேட்டபோது,  “ தங்கச்சி, அந்த சிறு ஓடையில் மூன்று பிரேதங்கள் மிதக்கின்றன. அவர்கள் ஒரு கிழமைக்கு முன் முகாமில் இருந்து புலிகளுக்கு எதிரான இயக்கமான தலையாட்டிகலால் அடையாளம் காணப்பட்டு,  கடத்தப்பட்டவர்கள். இது முகாமை பரிபாலனம் செய்வோருக்கும் தெரியும். அவ்வியக்கத்தில் உள்ளவர்கள் தான் தலையாட்டிகளாகச் செயற்பட்டு இராணுவத்துக்கு ஆட்களைக் காட்டி கொடுக்கிறார்கள்” என்றார்; அதில் நின்ற ஒருவர் தாழ்ந்த குரலில்.  “ மஞ்சுளா இது போன்று இங்கு அடிக்கடி நடப்பதுண்டா” ,ஜோன் கேட்டார்.  “இது போன்று பல உடல்கள் அந்த ஓடையில் அடிக்கடி மிதக்கும். அவர் சொன்ன மாதிரி இது தலையாட்டிகளின் வேலை என்று தான் நினைக்கிறேன்” என்றாள் மஞ்சுளா.  சுந்தரம் ஒரு பெண்ணைக சுட்டிக்காட்டி, “ மஞ்சுளா, அதோ நேர்ஸ் சாந்தி, ஒருவருக்கு வைத்தியம் செய்து கொண்டு இருக்கிறா”,  என்றார். அப்பெண்ணுக்குச் சுமார் இருபத்தைந்து வயதிருக்கும்.  சுந்தரம் சுட்டிக் காட்டியத் திசையில் மகேஷ்; பார்த்த போது தன் பெரியப்பாவின் மகள் சாந்தி நிற்பதைக் கண்டார். சாந்தியை முகாமில் மகேஷ் எதிர்பார்க்கவில்லை.  உடனே மகஷே; ஜோனைப் பாரத்து, “ஜோன் நிட்சயமாக அது என் பெரியப்பா டாகடர் இராஜதுரையின் மகள் சாந்தி தான்” என்றார்.  “ சாந்தி உமக்கு இனத்தவளா?” ஜோன் கேட்டார். அவர் அதை மகேஷிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. மௌனமாக ஆம் என்று தலையாட்டினார் மகேஷ்.  “ அதை ஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை மகேஷ்” ஜோன் கேட்டார்.  “ எனக்குச் சாந்தி இவரது பெரியப்பா மகள் என்பது ஏற்கனவே தெரியும். மகேஷ் எனக்கு முகாமுக்கு வரமுன்பே சொன்னவர்” என்றார் லலித்.  “ ஜோன் நாங்கள் நேரடியாக சாந்தியைச் சந்திக்கும்; போது சொல்லுவோம்  என்று இருந்தனான்” என்றார் மகேஷ்.  தான கவனித்தவருக்கு காயத்துக்குச் சிகிச்சையை முடித்த பின்னர் சாந்தி தலை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு மகேஷைக் கண்டதும் அதிர்ச்சி.  “ மகேஷ் நீர் எப்ப காம்புக்கு என்ன விஷயமாக வந்தனீர். உம்மோடு நிற்கும் இவர்கள் இருவர் யார்”? சாந்தி  கேட்டாள்.  “ மன்னிக்கவும் சாந்தி. வேலை நிமித்தம் ஊடகவியலாளர்களான இவர்களோடு வந்தனான். என் நண்பர் லலித்தின் உதவியால் முகாமைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைத்தது” என்று சொல்லி ஜோனையும் லலித்தையும் சாந்திக்கு அறிமுகம் செய்து வைத்து, தாங்கள் அகதிகள் முகாமுக்கு வந்த காரணத்தையும் மகேஷ். சாந்திக்கு விளக்கினார்.  பதிலுக்குத் தான் யார் என்பதையும், மகேஷ் தன் தந்தை டாக்டர்ராஜாவின் இரண்டாவது சகோதரனின் மகன் என்றும் சாந்தி சொன்னாள்.  “ஹலோ சாந்தி உம்மை சந்தித்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. எப்படி இருக்கிறது முகாமில் உமது வாழ்க்கை. உமது சேவையைப் பற்றி மஞ்சுளா ஏற்கனவே எங்களுக்கு சொன்னவ. உம்மைபோல் சுயநலம் பாராது பொதுசனச் சேவையில் ஈடுபடும் பெண்கள் மிகக் குறைவு. நீர் புளொரன்ஸ நைட்டிங்கேர்ல் போன்றவர். பலனை எதிர்பாராது உறுதியோடு செயல் புரிகிறீர். உமது தந்தை டாக்டர் ராஜாவை ஏற்கனவே சந்தித்தோம்; ” என்றார் ஜோன்.  “ மிகவும் நன்றி ஜோன்.  நான் பலனை எதிர்பார்த்து சேவை புரிபவள் அல்ல . இந்த சேவையில் இன்பம் காண்கிறேன். மனித உரிமை மிறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற சேவை செய்கிறேன். பல பெண்கள் தற்கொலை செய்யும் நிலைக்குக் கூடப் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து அவர்கள் விரக்தியை மாற்றவேண்டும். அதோ பாருங்கள், அந்த மூலையில் தலையில் கைவைத்துக் கொண்டு அழும் பெண்ணை. அப்பெண் பெற்றோரை இழந்தவள். அவளுடைய தந்தை விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து, தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர். தாய் குண்டு வீச்சில் பலியானவள். புதினெட்டு வயதான அந்தப் பெண் விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்கு எதிரான இயக்கத்தினரால் கடத்தச் செல்லப்பட்டு கற்பழிக்கப் பட்டவள். இது போன்று பலர் என்னிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். ஜோன் உங்களைப்போல் பல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வந்து பேட்டி கண்டு போய் பக்கம் பக்கமாக தமது பத்திரிகைகளில் எழுதியும் ஒரு வித பயனும்  இல்லை. அரசு தான் நினைத்ததைத் தான் செய்யும். இரு வாரங்களுக்கு முன் ஐநா சபை செயலாளர் நாயகம் முகாமுக்கு வந்து பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு சிலரோடு பேசிவிட்டுப் போனார். ஏன் இந்த கண்ணாம் மூஞ்சி ஆட்டமோ தெரியாது. அப்பாவி அகதிகளோடு அரசியல் விளையாடுகிறார்கள்”, என்றாள் சாந்தி விரக்தியான தொனியோடு.  “ சாந்தி இப்பொ எனக்குப் புரிகிறது எவ்வளவுக்கு அகதிகளின் நிலமையைப்; பற்றி நீங்கள்; கவலைப்படுகிறீர்கள் என்று. இவர்களுக்கு விடுதலைகிடைத்து, தேவையான நிவாரணம் கிடைத்து, திரும்பவும் புது வாழ்வு வாழ என்னால் இயன்றதை எனது அறிக்கை மூலம் நிட்சயம் செய்வேன்”, ஜோன் சாந்திக்கு உறுதியளித்தார். “ மிகவும் நன்றி ஜோன். ஒவ்வொரு அகதிக்குப் பின்னால் ஒரு பரிதாபப் படக்கூடிய கதையுண்டு. அகதிகள் பலரில், படித்தவர்களும், திறமைசாலிகளும் இருக்கிறார்கள்;. அதோ பாருங்கள் அந்த ஒரு கால் இல்லாது கைக்கோலுடன் பேசிக் கொண்டிருக்கும் இளைஞனை. அவர் பெயர் இராமசாமி. ராம் என்று கூப்பிடுவார்கள். மலைநாட்டுத் தமிழரான அவர் டிக்ஒயாவில் உள்ள ஒரு பெரிய தெயிலைத்தோட்டத்து தொழிற்சாலையில் எலக்ட்ரீசனாய் வேலைசெய்தவர். மூன்று மொழிகளும் பேசக் கூடியவர். தமிழ்மேல் அளவற்ற பற்றுக் கொண்டவர். கவிதைகள் கூட எழுதுவார். தமிழ் இனத்தின் உரிமைக்காகத் தான் ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும் என்று முடிவு செய்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியவர். பாவம் ஒரு விபத்தினால்  இந்த நிலைக்கு உள்ளானார். அவரோடு பேசி பாருங்கள் அப்போது தெரியும்” சாந்தி சொன்னாள்.  “ நிட்சயம் அவரைச் சந்தித்துப் பேசுவோம். உங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றி. நீங்கள் இங்கிருந்து விடுதலையானதும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தாவது நீங்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்வு வாழ  வேண்டும்”, என்றார் ஜோன்.  “ அதைப் பற்றி விடுதலையாகி வெளியேறிய பிறகு சிந்திக்கிறேன்”. என்றாள் சாந்தி சிரித்தபடி.  சாந்தியின் அனுமதியோடு அவள் அகதிக்கு சிகிட்சை செய்யும் காட்சியைப் படம் எடுத்தார் ஜோன்.  அதன் பின்னர் மூவரும் இராமசாமியை சந்திக்கச் சென்றார்கள்.   முள்வேலிக்குப் பின்னால் -  7 : இராமசாமி [] “ராம் நாங்கள் மூவரும் ஊடகவியலாளர்கள். என் பெயர் மகேஷ். எங்களோடு இருக்கும் ஜோன் கனடா தேசத்தில் வேலை செய்யும் ஊடகவியலாளர். மற்றவர் பெயர் லலித். அவர் கொழும்பில் வெளியாகும்; ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் துணை ஆசிரியர்.  நாங்கள் உம்மோடு பேசவே வந்திருக்கிறோம். எங்களுக்குச் சில நிமிடங்கள் தயவு செய்து ஒதுக்க முடியுமா”, மகேஷ் கேட்டார்.  “ நிட்சயமாக”  “ ஏற்கனவே நேர்ஸ் சாந்தி எங்களுக்கு உம்மைப் பற்றி சொன்னவ. உமக்கு மூன்று மொழிகளும் தெரியும் என்றும் சொன்னவ. ஆதனால் ஜோன் உம்மிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகள் கேட்;க விரும்புகிறார்” என்றார் மகேஷ்.  “ தாராளமாய் கேட்கட்டும்” என்றார் ஆங்கிலத்தில் ஜோனைப் பார்த்து ராம்.  “ ராம் எங்கு இவ்வளவு தெளிவாக ஆங்கிலம் பேச எங்கள் கற்றுக் கொண்டீர்”? ஜோன் ராமைக் கேட்டார்.  “ நான்; எலக்ட்ரீசனாக வேலைசெய்த டிக்கோயா தெயிலைத் தோட்டத்து பெரியதுரை என்று அழைக்கப்படும் எஸ்டேட் சுப்பிரீன்டென்டன் வொட்சன் என்பவரே நான் ஆங்கிலம் பேச உதவியவர். அவர் மற்றையத் தோட்டத்துப் பெரியதுரைகளை விட முற்றிலும் வேறுபட்டவர். தமிழும் ஓரளவுக்குப் பேசுவர். தோட்டத் தொழிலாளிகளின் நலன்களை அக்கரையோடு பார்த்தவர். பல வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து  இலங்கை வந்தவர். அவர் இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பிப்போகமுன், என் தந்தையின் சேவையைப் பாராட்டி ஒரு சிறுவீடு வாங்கப் பணம் கொடுத்து உதவியவர் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்”.  “ அது சரி எப்படி உமக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது”?  “ அடிக்கடி என் தந்தை வொட்சன் துரையின் பங்களாவுக்குப் போய் அவர் தோட்டத்தை பராமரிப்பார். நான் சிறு வயதில் அவர் கூடவே சென்று அவருக்கு உதவுவேன். குழந்தைகள் இல்லாத வொட்சன் துரையும் அவர் மனைவியும் என்மேல் பாசம் காட்டினார்கள்;. அவரிடம் இருந்தே நான் ஆங்கிலம் பேசக் கற்றேன்”.  “ அது சரி எப்படி நீர் எலக்ட்ரீசனானீர்”?  “ அதுவும் வொட்சன் துரையின் உதவி என்றே நான் சொல்லுவேன். ஒரு நாள் எனக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது துரையின் வீட்டுக்கு நான் என் தந்தையோடு போயிருந்த போது அவர் வீட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டது. வீட்டு விளக்குகள் எரியவில்லை. அதைக் கண்ட நான் துரையின் அனுமதியோடு பியூசை மாற்றித் திரும்பவும் மின்சாரத்தை வீட்டில் எரியச் செய்தேன். அதைக் கண்ட துரை, என்னிடம் எலக்டடிரிக்கல் வேலை செய்யக் கூடிய திறமை இருக்கிறது என்பதைக் கண்டு என்னை தன் சொந்த செலவில் ஒரு டெக்னிகல் கல்லூரியில் பயிற்சி பெற அனுப்பி எலக்டிரீசனாகவர உதவிசெய்தார். அதுவுமலலாமல் அவரின் தொட்டத்துத் தொழிற்சாலையில் எலக்ட்ரீசனாக வேலையும் போட்டுக் கொடுத்தார்.. அதுவே என் ஆரம்பம். வொட்சன் துரை இங்கிலாந்து சென்றபின் தோட்டம் அரசுமயமாகப்பட்டதும் ஒரு சிங்களவர் தோட்டத் துரையானார். புதுத் துரை இனத்துவேசம் உள்ளவர். அவருக்கும் தொழிலாளிகளுக்கும் ஒத்துப்போனதில்லை. தமிழன் என்றாலே தொழிலாளிமேல் குற்றம் கண்டு பிடிப்பார். எனக்கு தோடர்ந்து தொழிற்சாலையில் வேலை செய்யப் பிடிக்கவில்லை அந்த நேரம் தான் விடுதலைப் புலிகள் தம் இயக்கத்தில் வேலை செய்ய ஒர எலக்ட்ரீசனைத் தேடுவதாக அறிந்;தேன். ஏற்கனவே நான் தமிழ் பற்றுக் கொண்டவன். அதனால் இயக்கத்தில் சேர்ந்து என் சேவையை வழங்க முடிவெடுத்தேன் “, ராம் சொன்னார்.  “ அப்போது உமது ஒரு காலுக்கு என்ன நடந்தது” ?  “ அதுவும் ஒரு கதை. ஒரு நாள் நான் இரு போராளிகளோடு அவர்களின் வாகனத்தில் போய் கொண்டிருந்த போது கண்ணி வெடி தாக்குதலுக்கு எங்கள் வாகனம் உற்பட்டது. என்னோடு வந்த இரு போராளிகளும் உயிர் இழந்தார்கள். நான் உயிர் தப்பியது நான் செய்த புண்ணியம். ஆனால் நான் அவ்விபத்தில் என் இடது காலை இழந்தேன். யுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகளுக்கு நான்; உதவியதாகப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான ஒற்றர் குழு என்னை இராணுவத்துக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது அதன் விளைவே அகதிகளோடு அகதியாய் இந்த முகாமுக்கு அழைத்துவரப்பட்டேன். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நான் பரந்தன சென்றிருந்ததினால் உயிர் தப்பினேன்”, ராம் தான் ஒரு காiலை இழந்த விபரத்தைச் சொன்னார்.  “ அப்போ நேர்ஸ் சாந்தியை எப்படித் தெரியும்”, ஜோன் கேட்டார்.  “ இந்த முகாமுக்கு வந்த பிறகு டாக்டர் ராஜா, நேர்ஸ் சாந்தி, மஞ்சுளா ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களைப்போல் படித்த சில திறமைசாலிகள் பலர் இந்த முகாமில் அகதிகளாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் எப்போது விடிவு காலம் கிடைக்குமோ தெரிரயாது . சாந்தி, டாக்டர் ராஜா போன்றோர் அகதிகளுக்குச் செய்யும் சேவையைப் பார்த்து பிரமித்துப்போனேன். மூன்று மொழிகளும் தெரிந்தபடியால் ஒரளவுக்கு இராணுவ சிப்பாய்களோடு பிரச்சனைப் படாமல் இருக்கிறேன். சாந்திககும் உதவியாளராக இருக்கிறேன்” , என்றார் ராம்.  “புலிகள் இயக்கத்தை ஆரம்பித்த இயக்கத்தின் தலைவர் எக்காரணத்தால் இதை ஆரம்பித்தார் என்று சொல்ல முடியுமா ராம்”? ஜோன் ராமை கேட்டார்.  “சிறீலங்காவுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் பல இனக்கலவரங்கள் அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன எனப்  பலர் சொல்லி;; நான் கேள்விப்பட்டேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் சிறுவனாக இருக்கும் போது அவர் இனத்தவர் ஒருவர் இனக்கலவரத்தால் உயிர் இழந்தார் எனவும், அந்த பாதிப்பே அவரை ஈழத்தமிழ இனத்தை அடக்குமுறையில் இருந்துகாக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார் என்று. அரசின் அடக்குமுறை சட்டங்கலால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் அவர் ஆரம்பித்த இயக்கத்தில் சேர்ந்தனர்” என்றார் ராம்.  “ஒரு கேள்வி ராம், எந்த விதத்தில் மலைநாட்டுத் தமிழர்களை இனக்கலவரங்கள் பாதித்திருக்கிறது என்று சொல்ல முடியமா?  “சிறிலங்காவில் தமிழன் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவனைத்  தங்கள் விரோதியாகவே சிங்களவர் கருதுகிறார்கள். 1977, 1980 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரத்தின் போது மலையகத் தமிழர்கள் வெகுவாகப் பாதிப்படைந்தனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகப் பல மலைநாட்டுத் தமிழர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். அதில் சிலர் வன்னியில் உள்ள காடுகளைத்  துப்பரவு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். 1983ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது கூட மலைநாட்டுத் தமிழர்கள் வெகுவாக பாதிப்படைந்தனர். பலர் தமிழ்நாட்டுக்குப் பாதுகாப்பு தேடி ஓடினார்கள்” , என்றார் ராம்.  “ராம் நீர் சொல்வது உண்மை. ஆனால் அரசுக்கு இது தெரியாமல் இல்லை. அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாகில் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு எற்ப அரசியல் நாடகம் ஆடவேண்டும்”.  “ எனது தலையெழுத்து நான் ஒரு காலை இழக்கவேண்டும் என்று இருந்தது. ஆனால் ஒன்று, இந்த முகாமுக்கு வந்தபின் பலவிதமான மக்களைச் சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னை விட மோசமான பிரச்சனைகள் உண்டு என்பதை அறிந்தேன். அது மட்டுமல்ல மக்களுக்காக சேவை செய்யும்; சில நல்ல மனிதர்களை  நான் சந்தித்தேன்” ராம் சொன்னார்.  “யார் அவர்கள் என்று குறிப்பாகச் சொல்லமுடியுமா ராம்” , ஜோன் கேட்டார்.  “வேறு ஒருவருமில்லை. டாக்டர் ராஜாவும் அவர் மகள் நேர்ஸ் சாந்தியும் தான். சாந்தியின் சந்திப்பு என்னைப் புதுமனிதனாக்கிவிட்டது. அவர் எனக்கச் சொன்ன ஆறுதல்களும், ஆலோசனைகளும்  என்னை எனக்கு நடந்ததை மறக்க வைத்துவிட்டது. சாந்தியோடு பேசினாலே மனதில் சாந்தி ஏற்படும். கவலைகள் மறந்துவிடும்.” அவர் கை வைத்து சிகிட்சை செய்தாலே நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அதே போல் தான் அவவின் தந்தை டாக்டர் ராஜாவும்;”. சாந்தியையும்,; டாகடர் ராஜாவையும் வெகுவாகப் ராம்  பாராட்டிப் பேசினார்.  “அது சரி ராம் வெளிப்படையாகவே உம்மை ஒன்று கேட்கிறேன், நீர் சாந்தியை விரும்புகிறீரா” ஜோன் சிரித்தபடி கேட்டார்.  “நான் விரும்பினாலும் அவவின் இனத்தவர்கள் என்னை ஏற்கவேண்டுமே. அவவோ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேளாளப் பெண். நானோ இந்தியாவில் இருந்து வந்து தெயிலைத் தொட்டத்தில் வேலை செய்த ஒரு கூலி ஒருவரின்   மகன்”, என்றார் ராம். “ நான் அறிந்தமட்டில் டாக்டர் ராஜாவும்; சாந்தியும் சாதி, மதம்,; இனம் பார்ப்பவர்கள் இல்லை. முற்போக்கு கொள்கை உள்ளவர்கள். அதனால் நீரும் சாந்தியும் மனம் ஒத்தால் திருமணம் செய்வதற்குத் தடையிருக்காது என நினைக்கிறேன்”, ஜோன் சொன்னார்.  “ ஜோன் முதலில் இந்த முகாமில் இருந்து விடுதலை பெற்றபின் திருமணத்தைப் பற்றி யோசிப்போம்” என்று சூட்சுமமாக ராம் பதில் அளித்தார்.  “ விடுதலை கிடைத்த பின்னர் மலைநாட்டுக்குப்  போக நினைத்திருக்கிறீரா?  “ ஆமாம். அது நான் பிறந்து வளர்ந்த இடம். எனக்குப் பலரைத் தெரியும்.”  “ அங்குப் போய் என்ன செய்வதாக உத்தேசம்”?  “ ஒரு எவக்டிரிகல் சொப் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன். என்னோடு இங்கு முகாமில் அறிமுகமான மார்க்கண்டு என்பவர் பிஸ்னஸ் பார்டனராகச் சேரச் சம்மதித்திருக்கிறார். அதோ ஒரு முதாட்டியோடு பேசிக் கொண்டு நிற்கிறாரே அவர் தான் மாரக்கண்டு. அவர் முன்பு எலக்எரிகல் சொப் பூனகரியில் வைத்திருந்தவர். அவருக்கு பிஸ்னஸ் அனுபவம் உண்டு. நல்ல நேர்மையான மனிதர். என்னை விட பதனைந்து வயது கூடியவர். போராளிகளான தன் இருமகன்களையும் இழந்தவர். அவரும்; அவர் மனைவியும் அகதிகளாக இந்த முகாமுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவரோடு பேசிப் பாருங்கள். அவர் ஓரளவுக்கு ஆங்கிலமும் பேசுவார்” ராம் சொன்னார். “ நல்லது. நீர் சாந்தியின் சேவைக்கு  உதவுவதால்; உம்மோடு அதிக நேரம் பேசி தாமதித்ததுக்கு என்னை மன்னிக்கவும்.” என்று கூறிவிட்டு மார்க்கண்டை  சந்திக்க நால்வரும் போனார்கள். முள்வேலிக்குப் பின்னால் - 8 : மார்க்கண்டு   []   “எனது நண்பர் மாரக்கண்டு இவர். முகாமுக்கு வர முன்பு கிளிநொச்சியில்; எலக்டிரிகல் கடை வைத்திருந்தவர். நான் ஏற்கனவே உங்களுக்கு இவரைப்பற்றிச் சொன்னதுபோல்  எங்களுக்கு விடுதலை கிடைத்து நாங்கள் வெளியே வந்ததும், என்னோடு சேர்ந்து பங்குதாரராக பிஸ்னஸ் செய்யப் போகிறார். நான் மேஜர் வின்சன்டை சந்திக்க வேண்டியிருக்கு. அவர் ஒபீசில் ஏதோ எலக்டிரிகல் பிரச்சனையாம். தன்னை உடனே வந்து பார்க்கச்சொல்லி செய்தி அனுப்பியிருக்கிறார். நீங்கள் மார்க்கண்டோடு பேசுங்கள். அவரும் என்னைப் போல் ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவார்” என்று கூறிவிட்டு மூவரோடும் கை குலுக்கி விடை பெற்றார் ராம். மூவரும் தங்களை மார்கண்டுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.  “ மாரக்கண்டு உமது சொந்த இடம் யாழ்ப்பாணமா”? ஜோன் கேட்டார்.  “இல்லை. நான் பிறந்து வளர்ந்தது பூனகரியில். எனது தந்தைக்கு ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரோடு தொடர்பு இருந்தது, அந்தப் பாதிரியார் தான் நான் ஆங்கிலம் கற்க உதவியவர். ஆனால் பூனகரி யுத்தத்துக்குப்பின் அங்கு வாழ விருப்பமில்லாமல் கிளிநொச்சிக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தேன். அதோடு எனக்குப்  பூனகரியில்; இருபது ஏக்கர் வயற்காணி உண்டு.  “ உமக்கு எத்தனை பிள்ளைகள்? முழு குடும்பமும் இந்த முகாமிலா இருக்கிறார்கள்;”?  “ இல்லை. நானும் என் மனைவிமட்டுமே முகாமிலை இருக்கிறோம்.”  “ அப்பப் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?”  “ எனக்கு இருந்தது இரண்டு மகன்கள்.. மூத்தவன் சீலன். இளையவன் பாலன். இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள். பல்கலைக்கழகத்துக்குப்போய் படித்துப் பட்டம் பெற்று என்ஜினியராவதே அவர்கள் இருவரதும் குறிக்கோள். ஆனால் அது நடக்கவில்லை” என்றார் மார்க்கண்டு.  “பிறகு என்ன நடந்தது”?  “ விரக்தியில் அவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் இயக்கத்தோடு சேர்ந்து போராளிகளாக இருந்தார்கள். பூனகரி யுத்தத்தில் அவர்கள் இருவரும்; இறந்து விட்டார்கள். அதுவும்ஒரு காரணம் நான் கிளிநொச்சிக்கு இடம் பெயர்வதற்கு.”  “ எதற்காக இராணுவம் உம்மையும் மனைவியும் இந்த முகாமுக்குக் கொண்டு வந்தது.”?  “ எனது மகன்மார் இருவரும் புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவம் அறிந்ததினால் எங்களுக்கு அவ்வியக்கத்தோடு தொடர்பு  இருக்கலாம் எனச் சந்தேகித்து, விசாரிக்க இந்த முகாமுக்குக் கொண்டுவந்தார்கள்.”  “உங்களை விசாரணை செய்தார்களா”?  “ விசாரணை என்ற பெயரில் என்னைத் துன்புறுத்தினார்கள். இதோ அதனால் என் தேகத்தில் ஏற்பட்ட காயங்கள்”. மார்க்கணடு தன் உடலில் உள்ள காயங்களைக் காட்டினார்.  “ உம்மையும் உடலில் உள்ள காயங்களையும் நான் படம் எடுக்கமுடியமா”?, ஜோன் கேட்டார்.  “ எனக்குப் பிரச்சனையில்லை. என் பெயரை மட்டும் போடாதீர்கள்”  மார்க்கண்டையும் அவரின் உடலில் உள்ள காயங்களையும் ஜோள் படம் எடுத்தார்.  “மார்க்கண்டு, நீர் விடுதலையானவுடன் இராமசாமியோடு பங்குதாரராக எலக்டிரிகல் கடை ஒன்றை அமைக்கப் போவதாக கேள்விப்பட்டேன். அதற்கான முதல் உம்மிடம் உண்டா”? ஜோன் கேட்டார்.. “எனது பூனகரி வயற் காணியை விற்று வரும் பணம் போதுமானது”, மாரிக்கண்டு சொன்னார்.  “ அப்போ உமது மனைவியின் திட்டம் என்ன”?  “ அவ பூனகரியில் தமிழ் ஆசிரியையாக இருந்தவ. டீக்ஓயாவுக்குப் போனபின் அங்கு தோட்டத்துப் பிள்ளைகளுக்கு தமிழ் வகுப்புகள் வீட்டில் நடத்த யோசித்திருக்கிற.”.  “ மார்க்கண்டு எங்களோடு பேசியதுக்கு நன்றி. முகாமில் உள்வர்களின் விடுதலையை வேண்டி நான் என் கட்டுரையில் எழுதுவேன் “ என்று சொல்லி ஜோன் விடைபெற்றார்.  அவர்கள் மூவரும் மேஜர் வின்சென்ட் நன்றி சொல்லும் நோக்கமாக போய்க்கொண்டிருக்கும் பொது சுமார் அறுபது வயது முதியவர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. வெர கைகூப்பி கண்ணீர் விட்டது அவர்களின் கவனத்தை கவர்ந்தது,  ” ஏன் ஐயா அழுகிறீர்கள் .இராணுவம் உங்களைத் துன்புறுத்தியதா”? மகேஷ் அந்த முதியவரைக் கேட்டார். அழுகையோடு தான் அழும் காரணத்தைச் சொன்னார்.  “ஐயா என் பெயர் சினனையன். நான் ஒரு விவசாயி. எனது இரண்டு ஏக்கர் காணியில் புதுக்குடியிருப்புக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் எனது மனைவியும் எனது  நான்கு குழந்தைகளும் வாழ்ந்து வந்தனங்கள். சேல்லாலும் கண்ணி வெடியாலும் என் இரண்டு பிள்ளைகளை இழந்தேன். என் மற்ற இரு மகன்களை இராணுவம் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு சென்றார்கள்.” சின்னையன் சொன்னார்.  “ அவர்கள் திரும்ப வரவில்லையா”?  “ எங்கே ஐயா அவர்கள் திரும்பி வரப்போகிறார்கள், இது போல கைதாகிப் போனவர்கள் போனவர்கள்தான்”.  “ ஒரு வேலை அவர்களை இன்னும் இராணுவம் விசாரித்துக் கொண்டிருக்கலாம்”.  “ அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களை விடுதலை செய்தால், எங்களை எங்கள் உருக்கு அனுப்பவேண்டும். ஆனால் அது நடக்காது போது போலத்  தெரிகிறது .”  “ ஏன் அப்படி சொல்லுகிறீர்கள். “? “ இந்த முகாமிலை எண்டை ஊரைச் சேர்ந்தவர்கள் என்னைப்போல் புதுக்குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் பல இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் எங்களுக்கு எங்கள் ஊருக்குத் திரும்பவும் போகக் கிடையாது எண்டு. கண்ணி வெடிகள் இல்லாமல் சுத்தம் செய்கிறோம் என்று காலம் தாழ்த்துகிறார்கள். அதுவுமல்லாமல் சில சிங்கள குடும்பங்களை அங்குக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கிறார்கள். அதோடு ஒரு புத்த விகாரை ஒன்றையும் எங்கடை ஊரில் கட்டுகிறார்கள். அவை  உண்மையானால் கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்று ஏன் பொய் சொல்லுகிறார்கள். என்னைப்போல் பல குடும்பங்களுக்கும் இதே நிலை”, சின்னையன் தனது ஆதங்கத்தைத் தமிழில் சொன்னார். மகேஷ் அவர் சொன்னதை ஆங்கிலத்தில் ஜோனுக்கு எடுத்துச் சொன்னார்.  “ஐயா, ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, விரைவில் உங்களுக்கு விடிவு கிடைக்கும்” என்றார் ஜோன். அதைத் தமிழில் முதியவருக்கு மகேஷ் மொழிபெயர்த்தார். முதியவரை அழுகையோடு படப்பிடித்துக் கொண்டார் ஜோன்.  இந்தச் சந்திப்புகளுக்குப் பின் நேரமாகிவிட்டதால் மெஜர் வின்சன்டை சந்தித்து நன்றி சொல்ல சென்றார்கள்.  “ எப்படி இருந்தது ஜோன், முகாம் பற்றிய உங்கள் பார்வை. பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் பலரைச் சந்தித்திருப்பீரே. ஆவர்களது கருத்துக்களை கேட்டறிந்தரா? படம் எடுத்தீரா”? மேஜர் கேட்டார்.  “மிகவும்; நன்றி மேஜர். உங்கள் உதவியால், முகாமுக்குள் நடப்பதைக் கண்டறிந்தோம். பலரோடு உறவாடினோம். அனேகர் தங்களுக்கு எப்போது விடுதுலை கிடைக்கும், தாங்கள் சொந்த ஊர்களுக்குப் போய் தங்கள் காணிகளில் வாழமுடியமா? என்று தான் என்னைக கேட்டார்கள்”.  “நீர் என்ன சொன்னீர் ஜோன்’?  “ நான் சொன்னேன் அவர்கள் அனைவருக்கும் வெகு விரைவில் விடுதலை கிடைக்கும், திரும்பவும் அவர்கள் புது வாழ்வு வாழ அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். போர் என்ற வந்தால் இது சகஜம் என்றேன்.” என்றார் ஜோன்.  “ நல்ல பதில். நானும் இந்த முகாமில் பல நல்ல மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். என் கைகள் கட்டப்பட்டுள்ளது. அரசின் கட்டளையின் படி நான் செயல்படவேண்டும். இனியும் தொடர்நது இராணுவத்தில் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் இந்த முகாம் மூடியவுடன் ரிட்டையராகத் தீர்மானித்துவிட்டேன்.” என்றார் மேஜர் வின்சென்ட்.. “ அது நல்ல முடிவு மேஜர். இங்கு வேலை செய்வதினால் சரியான மன அழுத்தம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்”.  “ சரியாக ஊகித்துள்ளீர் ஜோன். எனது பிளட் பிரசரை, முகாமில் இருக்கும் என் நண்பர் டாக்டர் ராஜா தினமும் இங்கு வந்து செக்பண்ணுவார்.”  “அவரை ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா மேஜர்”? “ ஏன் இல்லை. டாக்டர் ராஜாவை கொழும்பில் இருந்தே தெரியும். அவர் மகள் சாந்தியைச் சிறுமியாக இருக்கும் காலம் முதல் கொண்டே தெரியும். தகப்பனும் மகளும் நல்ல மனம் படைத்தவர்கள்” என்றார் மேஜர். மூவரும் அவர் சொன்னதை எதிர்பார்கவில்லை.  “ சரி மேஜர். நேரம் மாகிவிட்டது. இன்று இரவு அனுராதபுரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி விட்டு, நாளை காலை கொழும்புக்குப் போகிறோம். எங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தந்த உங்களுக்கும், உங்கள் ஊழியர்களுக்கும்  எங்கள் மூவர் சார்பில் நான் நன்றி தெரிவிக்கிறேன்”, ஜோன் சொன்னார். "அப்போ ஜோன் நீர் எப்ப திரும்பவும் கனடாவுக்கப் பயணம்” மேஜர் கேட்டார்.  “ இன்னும் மூன்று தினங்களில் கனடாவுக்குத் திரும்புகிறேன். நீர் கனடா வந்தால் என்னை மறக்காமல் சந்தியும்” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் ஜோன் . முள்வேலிக்குப் பின்னால் – 9 : விடுதலை     []     மெனிக் முகாமில் இருந்து அனுராதபுரம், புத்தளம் ஊடாக கொழும்புக்குத் திரும்பிய ஜோன் டொரண்டே திரும்ப முன் தனக்கு உதவியோருக்கு ஒரு இரவு விருந்து போசனத்தை கலதாரி ஹொட்டலில் கொடுக்கத் தீர்மானித்தார். அவரது அழைத்தவர்களின் பட்டியலில் கணவன்மாரும், மனைவிமாரும் அடங்கினர்.   கனேடிய ஊடகவியலாளர் ஜோன் தான் வந்த பணியைத் திருப்தியாகச் செய்து முடித்து, டொரண்டோ திரும்பியவுடன்  நீண்ட மூன்று நாள் தொடர் கட்டுரையைப் படங்களோடு “முள்வேலி; முகாமுக்குள்;” என்ற தலைப்பில் பத்திரிகையில் வெளியிட்டார் அதைப் பல மனித உரிமைமீறல்களைக் கண்காணிக்கும் ஸ்தாபனங்கள் பாராட்டி கருத்து தெரிவித்தது. அக்கட்டுரை சிறிலங்கா அரசின் கவனத்தை ஈர்ந்தது. அதனால் முகாம்களில் அகதிகளின் சுதந்திரமில்லாத நிலையை மேலும் தொடராமல், 2009 ஆண்டு மே மாதம் போர் முடிந்து  3 வருடங்களுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் அகதிகள் பொரும்பாலோரை விடுதலை செய்து 1750 ஏக்கர்கள் பரப்புள்ள முகாம்களை மூடியது. இவர்கள் பலர் முல்லைத்தீவு பிரதேசத்தில் குடியேறினர் .  அரசின் முடிவை ஐநா சபை மனித ஊரிமைமீறல்களுக்கு பொறுப்பான ஸ்தாபனம் வரவேற்றது. விடுதலை கிடைத்த 110 குடும்பங்கள் தங்களது சொந்த காணிகளுக்குப் போகமுடியாது இருந்தது  கண்ணி வெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதைக் காரணம் காட்டினார்கள். அவர்களைச் சொந்தக் காணிகளில் குடியமர்த்தாமல் வேறு காணிகளில் குடியமரத்தியது அரசு. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் அப்பகுதியில்  இயங்கிய தனது செயலகத்தின் செயற்பாடுகளை குறைத்தது.   2013 ஆகஸ்ட்டில் எதிர்பாராத விதமாக தனக்கு வந்திருந்த திருமண அழைப்பிதழை பார்த்தபோது, ஜோனுக்கு பெரும் மகிழ்ச்சி. அது இராமசாமி-சாந்தியின் திருமண அழைப்பிதழ். விலாசம் புதுக்குடியிருப்பு என எழுதப்பட்டிருந்தது. அதை அடுத்து சில தினங்களில் ஜோனுக்கு ஒரு தொலைபெசி வந்தது,   “ மிஸ்டர் ஜோன,; நான் மனிக் முகாமில் நீங்கள் சந்தித்த  மஞ்சுளா பேசுகிறன். என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா”?; போனில் பேசிய  பெண் குரல் கேட்டது.  “உம்மை எனக்கு நள்ளாக நினைவு இருக்கிறது. அது சரி எங்கிருந்து பேசுகிறர் மஞ்சுளா? டோராண்டோ நம்பர் போனில் விழுந்திருக்கிறதே. நீர் டோராண்டோவுக்கு வந்துவிட்டீரா?”  “ நான் கனடா வந்து சில நாட்கள் ஆகிறது ஜோன்” பதில் வந்தது.   “ அது சரி இப்போ எங்கு இருக்கிறீர். நான் உம்மைச் சந்திக்க விரும்புகிறேன்”.   “ மிசிசாகாவில் உள்ள என் பேனா நண்பர், மன்னிக்கவும் எனது வருங்காலக் கணவர் பீட்டரின் வீட்டில் இருந்து பேசுகிறான்;. பீட்டரின் பெற்றோரின் சம்மதத்தோடு எங்கள் திருமணம் இரு கிழமைக்குள் மிசிசாகாவில் நடவிருக்கிறது. பீட்டரும் அவரின் பெற்றோரும் என்னை கனடா வர ஸ்பொன்சர் செய்தவர்கள். நான் அகதியாக மெனிக் முகாமில் இருந்த படியால், அது எனக்கு கனடா வர உதவியது; திருமணத்தின் பின் நான் என்படிப்பைத் தொடர பீட்டர் சம்மதித்து விட்டார். அவர் இப்போ பெல் கனடாவில் பொறியியலராக வேலை செய்கிறார்” என்று தன் நிலையைப் பற்றிய விபரத்தை மஞ்சுளா சொன்னாள்.   ஜோனுக்கு அவள் சொன்னதைக் கேட்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி.   “ மஞ்சுளா, நான் எழுதிய கட்டுரையை வாசித்தீரா?”   “ ஓம் வாசித்தேன். நான் மட்டுமல்ல டாக்டர் ராஜா, சாந்தி, ராம் எல்லோருமே வாசித்து நீங்கள் எங்களின் விடுதலைக்காகச் செய்த சேவையைப் பாராட்டினார்கள். சாந்தி அக்கா ராமைத் திருமணம் செய்யப்போகிறா. அது தெரியுமா உங்களுக்கு ஜோன்”   “ தெரியும் மஞ்சுளா. எனக்கு அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்திருக்கு. சந்தர்ப்பம் கிடைத்தால்  அவர்களின்  திருமணத்துக்குப்  போகப் பார்க்கிறேன்.   “ நன்றி மிஸ்டர் ஜோன். நான் கனடாவுக்கு வந்ததை, உங்களோடு முகாமுக்கு வந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்து விட்டேன். எங்கள் விடுதலைக்கு உங்களோடு  அவர்களும் சேர்ந்து பங்கு  கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த உதவியையும் என்னால் மறக்கமுடியாது” என்றாள் மஞ்சுளா. அவள் பேச்சில் உணர்ச்சி காரணமாக விம்மல் தொனித்தது.     (இக்குறுநாவல் உண்மையையும் கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. கதையில் வரும் பெயர்கள் எவரையும் குறிப்பிடுபவையல்ல) எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.  சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.  எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.  சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.  எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது.  ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.  அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.  வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.  பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்.  வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.  FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT , இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.  அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:   - ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் - தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் - சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்  விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை.  இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.  ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.  1. www.vinavu.com 2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  and more - http://freetamilebooks.com/cc-blogs/   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.  <துவக்கம்>  உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].  தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/    நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.   e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks    G +: https://plus.google.com/communities/108817760492177970948          நன்றி.   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே  உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.  1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி  2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –  கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்  http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses    உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/     3.  மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.       நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)   இவற்றை freetamilebooksteam@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –  தமிழில் காணொளி offline method  – https://youtu.be/0CGGtgoiH-0   press  book  online  method     - https://youtu.be/bXNBwGUDhRs     A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/    எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum        நன்றி !