[] மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/iyothee_dass_thoughts_society மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : வள்ளுவர் வள்ளலார் வட்டம் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Valluvar Vallalar Vattam Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation அயோத்திதாசர் சிந்தனைகள் PART I (சமூகம்) தொகுப்பாசிரியர் ஞான. அலாய்சியஸ் [] மின்னாக்கம் தமிழ்த்தேசியன் திரு.இங்கர்சால், நார்வே வள்ளுவர் வள்ளலார் வட்டம் உள்ளடக்கம் 1. தமிழ்பாஷையிலுள்ள நான்குவகைத் தொழிற்களின் பெயரும் அதன் சிறப்பும் 5 2. வடமொழியிலுள்ள நான்குவகைத் தொழிற்பெயர்களும் அதன் சிறப்பும் 8 3. வடமொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும் தென்மொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும், சகல தேச சகலபாஷைக்காரர்களுக்கும் பொருந்துமென்பது 10 4. மேன்மக்கள் கீழ்மக்கள் விவரம் 13 5. ஒருமனிதனைத் தீண்டலாம் தீண்டக்கூடாதென்னும் விவரம் 15 6. ஜெனானா லேடிகளும் இந்துப் பெண்களும் கல்வியில்லாமங்கை கணவனுக்குச்சங்கை ஏன் விவேகக்குறைவினாலேயாம் 17 7. ஏழு கடல்களின் விவரம் 19 8. மதுரை செந்தமிழ் 21 9. வேஷப் பிராமண வேதாந்த விவரம் 22 10. யதார்த்தபிராமண வேதாந்த விவரம் 38 11. மோசேயவர்களின் மார்க்கம் 76 12. பறையரென்று இழிவு படுத்தல் 114 13. மேருமந்திரபுராணம் 120 14. ஆரியன் என்னும் ஓர் மனிதன் இருந்ததுங் கிடையாது அவன் மறைந்ததுங் கிடையாது 122 15. ஏழைகளின் எக்காளத்தொனி 126 16. ஏமாற்றி திரவியம் சேகரிப்போரோர் சாதியார் ஏமார்ந்து செலவு செய்வோர் பலசாதியார் 131 17. புரபசர் ஆன்கினும் சாதியும் 133 18. இந்துக்களென்போர் மதத்திற்கு சாதியாதரவா அன்றேல் சாதிக்கு மதம் ஆதரவா 135 19. நாளும் கிழமையும் 138 20. இந்திரர் தேச சரித்திரம் 140 21. வீட்டிற்கோர் விருட்சம் வளர்த்தல் வேண்டும் 258 22. கல்வி கைத்தொழில் பயிடுரிந்தொழில் வியாபாரத்தொழில் 260 23. பஞ்சமுண்டாவதற்குக் காரணம் பூமியின் விருத்தி குறைவேயாம் 263 24. மழையில்லாதக்காரணமோ மக்கள் அதன்மமேயாம் 265 25. கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் 267 26. கூட்டத்தால் தேட்டமும் வாட்டமும் உண்டாம் 269 27. மநுமக்களில் தீண்டாதவர்களென்றால் யார். 272 28. கிறீஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா 275 29. தன்முயற்சியில்லாத் தலைமகனுக்கும் தலைகணையில்லா நித்திரைக்கும் சுகமுண்டோ 278 30. யதார்த்தவாதி வெகுஜன விரோதி 280 31. குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளார்கள் 282 32. கைம்பெண்களை வீட்டில் வைத்து கண்குளிரப் பார்க்கும் கனவான்களே! 284 33. சாதி 286 34. கம்மாளர் பறையர், சக்கிலியர் 289 35. மனிதனென்பவன் யார் 291 36. இந்தியதேய ஸ்திரீகளின் கேட்டிற்குக் காரணஸ்தர் யார் இந்திய தேசப் புருஷர்களேயாவர் 292 37. சாதிபேதமே ஊரைக்கெடுப்பதற்கு ஆதாரம்! சாதிபேதமே ஒற்றுமெய் கேட்டிற்கு ஆதாரம்!! சாதிபேதமே கற்றவித்தைகளைக் காட்டாது ஒளிப்பதற்கு ஆதாரம்!!! 294 38. இந்திய புருஷர்களின் இஷ்டமும் பெண்களின் கஷ்டமும் 296 39. மனிதன் எனப்படுவோனுக்குரிய உயர்சத்து 298 40. எத்தேசம் சீரும் சிறப்பும் பெறும் எத்தேசமக்கள் சுகமும் ஆறுதலும் பெறுவார்கள் 299 41. முற்கால யுத்தமும் தற்கால யுத்தமும் 302 42. வித்தியாவிருத்தியில் கண்டுபடிப்பது படிப்பா காணாது தன் பெண்டு பிள்ளைகளைமட்டிலுங் காப்பாற்ற படிப்பது படிப்பா 305 43. எவ்வகையால் ஓர் குடும்பம் சுகவாழ்க்கைப்பெறும்! எவ்வகையால் ஓர் இராஜாங்கம் சுகவாட்சியையுறும்! 308 44. வித்தியாகர்வம் தனகர்வம் மதகர்வம் சாதிகர்வம் பெருகும் தேசத்தில் சுகச்சீர் பெருகுமோ? 311 45. மாடுகளால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டாவதுபோல மனிதர்களால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டோ 315 46. இந்தியதேசங்கெட்டு சீரழிவதற்குக் காரணமெவை சாதிகள் வேஷமும் சமயக்கூட்டங்களுமேயாம் 317 47. மனிதனென்போன் எவற்றிற் பழகவேண்டும் 320 48. இந்திரர் தேச முற்கால சிறப்பும் தற்கால வெறுப்பும் 329 49. ஓர் மனிதன் தான் சுகம்பெற வேண்டுமாயின் பிறர் சுகத்தை முன்பு கருதல் வேண்டும் 332 50. இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிகளாலும் மதங்களாலும் மநுக்களுக்கு சீர்திருத்த சுகம் ஏதேனும் உண்டோ 334 51. நூதன சாதிகள் தோன்றியது முதல் இந்தியதேசப் பூர்வ வைத்தியம் முக்காலேயரைக்கால் அழிந்துபோக நீக்குள்ள அரைக்கால் பாகமும் அழிய நேர்ந்தது போலும் 338 1. தமிழ்பாஷையிலுள்ள நான்குவகைத் தொழிற்களின் பெயரும் அதன் சிறப்பும் முன்கலை திவாகரம் – வேளாள ரறுதொழில் வேளாளரறுதொழிலுழவு, பசுக்காவ, ரெள்ளிதின் வாணிபங், குயிலுவங், காருகவினை, யொள்ளிய விருபிறப்பாளர்க் கேவல்செயல். 1-வது வேளாளரென்னும் பயிரிடுந் தொழிலாளரின் சிறப்பு. ⁠விவேக மிகுத்த ஞானிகள் விளங்குதலும் மாதவர் விருத்தியாதலும், சுபசோபனாதிகள் சிறத்தலும், செங்கோல் பிரகாசித்தலும், மநுக்கள் நெறிமுறை தவிரா வாழ்க்கையும், வர்த்தகர் விருத்தியும், சூரர் வலிமெயும், தன்மதானங்களின் பெருக்கும், ஆகம சிறப்பும், சகல கலா பெருக்கமும், மங்கையர் இன்பமும், உண்மெய் உணர்ச்சியும், கீர்த்திப்பிரதாபமும், குலங்களின் உயர்த்தியும் ஆகிய சிறப்புக்கள் யாவும் மேழிச் செல்வம் என்னும் பூமியை உழுது சீர்படுத்தி தானியங்களை விருத்திசெய்து சகலரையும் கார்க்கும் வேளாளர் செய்கை உபகாரச் செய்கையாதலின், வேளாளர் சிறப்பை விளங்கக் கூறினர். ஏறெழுபது வெங்கோபக் கலிக்கடந்த / வேளாளர் விளைவயலுட் பைங்கோது முடிதிருந்த / பார்வேந்தர் முடிதிருத்தும் பொங்கோலக் களியானைப் / போர்வேந்தர் நடத்துகின்ற செங்கோலைத் தாங்குங்கோ / ஏறடிக்குஞ் சிறுகோலோ. முன்கலை திவாகரம் - வணிக ரறுதொழில் வணிகரறுதொழி. லோதல், வேட்டல், யீதல், உழவு, பசுக்காவல், வாணிபம். ⁠2-வது வாணிபரென்னும் வியாபாரத் தொழிலாளரின் சிறப்பு. ⁠பல தேசங்களுக்குச் சென்று தன்தேசப் பொருளுக்கும் பரதேசப் பொருளுக்குமுள்ள ஆதாயங்களைக் கண்டு மயங்காமலும் செட்டு நிலை தவிராமலும் பல சரக்குகளைக் கொண்டுவந்து முதல் வழுவாது லாபத்தினின்று சிலவுகளை சுருக்கி, நாணமில்லார்க்கும் மரியாதை அற்றோர்க்கும் கடனீயாமலும், நாணமும் நீதியும் உள்ளோர்க்குக் கடநீதலும் ஏராளப்பொருள் வளரினும் கணக்கில் ஒருகாசு வழுவாமலும் வீண் டம்பத்தில் விரயமில்லாமலும் தேசத்திற்கு ஆபத்து நேரிடுங்கால் அநந்த பொருட்களை சிலவுசெய்தலும் வட்டியாம் லாபத்தைக் குவியாமலும் மோசத்தாற் பொருளை சேர்க்காமலும் தராசு நிரையை சத்தியக் கோலாகக் கொள்ளுதலும், வியாபாரச் சிந்தையை விடாமுயற்சியில் நாட்டுதலும், லாபத்தை விரையமாகாமல் கார்த்தலும் ஆகிய இச்செய்கையுள்ளவர்களை வணிகரென்று கூறப்படும். இத்தகையத் தராசுநிரைச் செயலை வணிக சிறப்பென்பர். முன்கலை திவாகரம் - அரசு ரறுதொழில் அரசரறுதொழி, லோதல், வேட்டல், புரை தீர்த்தல், யீதல், கறையறுபடைக்கலம், கற்றல் விசயம். ⁠3-வது அரசர்களென்னும் தேசமாள்வோர் சிறப்பு ⁠குடிபடை விசேஷமும், தோள்வலிமெயும், மதிமந்திராசங்கமும், சத்தியவசனமும், கொடையிற் சாந்தமும் சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயமும் தளகர்த்தர் நியமநிதானமும் தன்பல எதிரிபல நோக்கமும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் காத்தலும் துட்டரை சிட்டை செய்தலும் கொடுங்கோல் அகற்றி செங்கோல் நிருத்தலும் அரணையும் அகழியையும் சீர்பெற வைத்தலும் அம்பையும் வில்லையும் சுத்தத்தில் நிருத்தலும் தானிய விருத்திக்காம் ஏதுக்களை நோக்கலும் குடிகளை ஓம்பலும் மந்திராலோசனை சங்கத்தில் பொருளாசை, பொய்ச்சாப்பு, தற்புகழ்ச்சி, குடிகெடுப்பு அமைந்துள்ள குணத்தோரை சேர்க்காமல் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த விவேகிகளைச் சேர்த்தலும், விவேகமிகுத்த ஞான சங்கங்களைக் கார்த்தலும் குடிபடைக் கேட்டில் மத்திய விசாரமின்றி தானே முன்சென்று விசாரித்தலும் காலதேச பேதங்களை அறிந்த சேனாபதிகளை நிறுத்தலும் யுத்தத்தில் தன்னைக் கார்க்கும் அநுபவம் வாய்ந்த ரத, கஜ, துரக, பதாதிக என்னும் சதுரங்கச் சேனைகளைச் சேர்த்தலும் ஆகிய செய்கையை உடையவர்களோ அரசர்களாம். இத்தகைய செயல்களின் நிறைவே அரசர்களின் சிறப்பு எனப்படும். குறள் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் / நின்றது மன்னவன் கோல். முன்கலை திவாகரம் - அந்தண ரறுதொழில் ஓதல், வோதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்றிரு மூவகை. 4வது அந்தணரென்னும் உண்மையாளர் சிறப்பு. சாந்தம், அன்பு, ஈகை என்னும் சற்குண நிறைவால் ஓதல், ஓதுவித்தல், வேட்டல் வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களைச் செய்வதில் நீதி, நெறி, வாய்மை இவற்றை உலகத்தில் நிறுத்தி தன்மநிறைவால் அகிம்சா தன்ம யாகாதி கன்மங்களைச் செய்து காலமழைகளைப் பெய்வித்து குடிகளை சிறப்படையச் செய்தலும் ஆதுலர்க்கு அன்னம் ஈய்ந்து ஆதரிக்கச் செய்தலும், மெய்ப்பொருளாசையை பெருக்கச் செய்தலும் பொய்ப் பொருளாசையை வெறுக்கச்செய்தலும் நன்மெய் குணத்தை நாட்டுதலும், தின்மெய் குணத்தை ஓட்டுதலும் உலகத்தாருக்கு அறத்தின் வழியை ஊட்டுதலும் திரத் தீவினைகளை ஓட்டுதலும் ஆகிய உண்மெயில் தண்மெயுற்றவர்களை அந்தணர்கள் என்னப்படும். இத்தகைய நற்கருமச் செயலின் ஒளியை அந்தணர் சிறப்பு என்று கூறுவர். குறள் அந்தணரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்கும் / செந்தண்மெய்ப் பூண்டொழுகலால் காக்கைபாடினியம் -3-வது சூத்திரத் தொடர் தொழிற் பெயர் நான்கினுட் யோது செய் / வயப்படு மூவெண்...... - 1:2; சூன் 26, 1907 - 2. வடமொழியிலுள்ள நான்குவகைத் தொழிற்பெயர்களும் அதன் சிறப்பும் 1-வது, சூத்திரர் அல்லது சூத்திர ரென்னப்படும் ஒவ்வோர் மனிதனும் தங்கள் கைகால்களை ஓர் இயந்திரம்போல் கொண்டு தொழிற்புரிவதினாலும் கலப்பை, பரம்புகோல், ஏற்றம் முதலிய சூஸ்திரக் கருவிகளைச் செய்து பூமியின் பலன்களை விருத்தி செய்வதினாலும் மண் முதலிய பாண்டங்களை சிருட்டி செய்தலினாலும் வெண்கலம், வெள்ளி, பொன் முதலிய உலோகங்களால் சூடல்செய்வதினாலும் தோல்கருவி துளைக்கருவி, நரம்புக் கருவிகளால் வாஜ்ஜிய காருகவினைகள் உண்டு செய்வதினாலும் இவர்கள் உலகலங்காரர், உடல் சிறப்பீவோர், சூத்திரர் சிற்றறி சூஸ்த்திரரென்னும் சிறப்புப் பெயர் பெற்றார்கள். 2-வது, வைசியர் இவர்களில் கோவைசியரென்றும், பூவைசியரென்றும், தனவைசியரென்றும் மூவகை வைசியர் உண்டு. இதில் கோவைசியரென்போர் தங்களிடமுள்ள பால், தயிர், நெய், கோரோசினம், தோல், நரம்பு முதலியவைகளைக் கொண்டுபோய் பூவைசியர்களிடம் கொடுத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஐங்காய முதலிய தானியங்களை வாங்கிக்கொள்ளுகிறதும், பூவைசியர் தங்களிடமுள்ள தானியவர்க்கங்கள் ஐங்காய வர்க்கங்கள் எண்ணெய் வர்க்கங்கள் முதலியவைகளை தனவைசியரிடங் கொண்டுபோய்க் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுகிறதும், தனவைசியர் தங்கள் பணங்களைக் கொடுத்து வாங்கிய பொருட்களை தக்கலாபத்திற்கு விற்று செட்டை நிலைநிறுத்தி ஒன்றை கொடுத்து மற்றொன்றை வாங்குவோருக்கு வைசியர் என்னும் சிறப்புப் பெயர் அளித்தார்கள். 3-வது, க்ஷத்திரியன் என்பது புஜபல பராக்கிரம சஷாத்திரியன் என்னப்படும். அதாவது தனது புஜ பல வலிமெயாலும் மன்னு திடத்தினாலும் துட்ட மிருகங்களுக்கு அஞ்சாது வேட்டையாடி துண்டித்தலும், எதிரிகளின் ரத, கஜ, துரக, பதாதீகள் ஏராளமாக நிற்கினும் மன்னு திடங்குறையாமலும் பின்முதுகு காட்டாமலும் முன்மார்பு கொடுத்து போர்புரியும் க்ஷாத்திரியன், க்ஷத்திரியன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். 4-வது, பிராமணம் அல்லது பிராமணன் என்னும் விவேக மிகுத்த வர்களின் பெயர்கள் அன்பின் பெருக்கத்தினாலும் சாந்தரூபத்தினாலும் ஈகையின் குணத்தினாலும் உண்டான பெயர்களாம். அதாவது பாலிமொழியில் சமணாளென்றும் சமஸ்கிருத மொழியில் சிரமணாளென்று வழங்கப் பெற்ற ஞானசாதனர்கள் உபநயனம் என்னும் உதவி விழியாகும் ஞானக்கண் ஆசிரியனால் அளிக்கப்பெற்று இடைவிடா உள் விழிநோக்கத்தால் தன்மன நின்று சின்மாத்திரமடைந்த சாந்தஸ்வரூபிகளை பாலி மொழியில் அறஹத்துக்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் பிராமணர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள். அதுவுமன்றி தாயுமானவர், ‘வேதமொழி யாதொன்றைப் பற்றுனதுதான் வந்து முற்றுமெனலால் ஜகமீதிருந்தாலும் மரமுண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை’ என்றார். வேதமொழிகளாகிய, பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்களிருதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மும்மொழியில் யாதொன்றை யேனுமிடைவிடாது பற்றியதுவே முற்றி முத்திக்கு ஆளாவனேல் மரணஜெயம் பெற்று தென்மொழியில் காலகாலன் என்றும் வடமொழியில் பிராமணா எமகாதகாவென்றும், இயமனை ஜெயித்தவன் என்றும் மாளாசிறப்புப் பெயர் பெற்றான். - 1:3; சூலை 3, 1907 - 3. வடமொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும் தென்மொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும், சகல தேச சகலபாஷைக்காரர்களுக்கும் பொருந்துமென்பது சூத்திரர் வடமொழி வேளாளர் தென்மொழி சூத்திரரென்றும், வேளாளரென்றும் வகுக்கப்பட்டத் தொழிற்பெயர்கள் ஐரோப்பியனாயிருக்கினும், அமேரிக்கனாயிருக்கினும், சீனனாயிருக்கினும், பர்மியனாயிருக்கினும், எவனொருவன் பூமியை உழுது பண்படுத்தும் தொழிலையும், தானியங்கள் விருத்தியடையுந் தொழிலையுஞ் செய்வதுடன் கையையுங்காலையும் ஓர் இயந்திரமாகக்கொண்டு பலவகைக் கருவிகளை உண்டு செய்தலும், அக்கருவிகளினால் மரக்கலங்கள் செய்தலும் இரதங்கள் செய்தலும், இருப்புப் பாதைகள் வகுத்தலும், தூரசெய்திகளறிதலும், ஆடைகள் நெய்தலும், ஆபரணங்கள் செய்தலும், பலமதத்தோர் தொழும் சுவாமிகளை சிருஷ்டித்தலுமாகிய உலக சீர்திருத்தத்தொழில்களை விடா முயற்சியால் விருத்திசெய்து சகலருக்கும் உபகாரியாய் விளங்குகின்றானோ அவனையே சூஸ்திரனென்றும் வேளாளனென்றுங் கூறப்படும். இதுவே நம் மூதாதைகள் வகுத்த சிறந்தத் தொழிற்பெயர்கள். வைசியர் வடமொழி வணிகர் தென்மொழி வைசியனென்றும், வணிகனென்றும் வகுக்கப்பட்ட தொழிற்பெயர்கள் ஆசியனாயிருக்கினும். ஆஸ்தரேலியனா யிருக்கினும், இந்தியனாயிருக்கினும், ஈஸ்டின்டியனாயிருக்கினும், எவனொருவன் அரிசிவிற்கினும், ஆட்டுத்தோலை விற்கினும், மாணிக்கம் விற்கினும், மாட்டுத்தோலை விற்கினும், கந்தகஸ்தூரி விற்கினும், கள்விற்கினும், சாந்துசவ்வாதுவிற்கினும், சாராயம் விற்கினும், மிட்டாய் கடைவிற்கினும், மீன் கொணர்ந்து விற்கினும், நவரத்தினங்களிழைத்த நகைகள் விற்கினும், நண்டுகடைவைக்கினும், ஆடையாபரணாதிகள் நிறைந்த அலங்கிருதக்கடை வைக்கினும், ஆட்டிறைச்சி விற்கினும், முத்தாபரணங்களை விற்கினும், மூசுவுருண்டைகடை வைக்கினும், ஆகியச் செயல்களை செய்கின்றானோ அவன் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாற்றிக்கொள்ளுஞ் செயலினால் அவனை வைசியனென்றும், வணிகனென்றுங் கூறப்படும். இதுவே நம் மூதாதைகள் வகுத்திருந்த வியாபாரத்தின் தொழிற்பெயர்கள். க்ஷத்திரியர் வடமொழி அரசர் தென்மொழி க்ஷத்திரியன் அரயனென்னுஞ் சுத்தவீரர் பெயர்கள், மங்கோலியனா யிருக்கினும், சிங்கலியானா யிருக்கினும், இந்துதேசத்தானா யிருக்கினும், சிந்து தேசத்தனாயிருக்கினும் எவன் ஒருவன் தேசம் ஆள்வோனென்னும் பெயரை வைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறாமல் ஆளைவிட்டு சண்டை செய்பவனுக்கு க்ஷத்திரியனென்னும் பெயரும், அரயனென்னும் பெயரும் பொருந்தாது. புஜபல பராக்கிரமமும், க்ஷாத்திரிய குணமும், அரயவீரமும், மன்னு திடமும், ஆயபுஜமும், வாகுவல்லபமும். விற்போர் மார்பும், பின்முதுகு கொடாதீரமும் பொருந்தி தன் பிராணனை துரும்பு போலெண்ணிய - ஜப்பானியரைப் போன்றவன் எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் அவனையே நம் மூதாதைகள் க்ஷத்திரியனென்றும் அரயனென்றுங் கூறி தேசமாள்வோர் தீரத்தை விளக்கி வைத்தார்கள். பிராமணர் வடமொழி அந்தணர் தென் மொழி பிராமணன் அந்தணனென்று வகுக்கப்பெற்றச் செயலின் பெயர்கள் தென்னிந்தியனாயிருக்கினும், வட இந்தியனாயிருக்கினும், தென் ஆபிரிக்கனாயிருக்கினும், வடஆபிரிக்கனாயிருக்கினும் எவனொருவன் தேகசுத்தம், வாக்கு சுத்தம், மனோசுத்தமென்னும் திரிபொறி சுத்தமுடையவனாய் நூற்றியெட்டு ரூபவாசைகளற்று சாந்தம், யீகை, அன்பென்னும் முப்பேரின்பங்களைப் பெருக்கி காமம், வெகுளி, மயக்கமென்னும் முச்சிற்றின்பங்களை அகற்றி சருவ உயிர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து சீவர்களுக்கு உண்டாகும் பிணிப் பீடைகளை அகற்றி காலமழைகளைப் பெய்யவைத்துக் குடிகளுக்கு செல்காலம், நிகழ்காலம், வருங்காலமென்னும் முக்காலச் செயல்களையும் நான்கு வகை வாய்மெகளையும் நெறிகளையும் புகட்டி சீர்பெறச் செய்யுங் குளிர்ந்த தேகியை தென்மொழியில் அந்தணனென்றும், பிரமமணம் வீசுதலென்னும் அவர்களுக்குள்ள நன்மெயின் செயல் பரவுதலை வடமொழியில் நம் மூதாதைகள் பிராமணனென்றும் வகுத்திருக்கின்றார்கள். இதுவே விவேக விருத்தியால் மனதையாளுஞ் செயல் பெயர்களாம். இந்த நான்குவகைத் தொழிற்பெயர்களையும் விளக்கிக்காட்டவேண்டிய காரணம் யாதெனில்:- நமது சுதேசிகளுக்கு சுரணைதோன்றி சீர்திருத்த ஏதுக்களைத் தேடுகின்றமையால் அவ்வகை ஏதுக்களில் அவன் சாதி பெரியசாதி, இவன்சாதி சின்னசாதி, அவன்சாதி முதற்சாதி, இவன்சாதி நடுசாதி, உவன்சாதி கடைசாதியென ஒருவருக்கொருவரை தாழ்த்தியும், ஒருவருக்கொருவரை உயர்த்தியும் மனம் புண்படச்செய்யும் சாதிகட்டுடையோரிதனை நோக்குவார்களாயின் தொழிற்பெயர்கள் யாவையும் மேல்சாதி கீழ்சாதியென வகுத்துக் கொண்டு ஒற்றுமெயைக் கெடுத்துக்கொண்டது அக்கிரமமென்றெண்ணி சுதேச சீர்திருத்தக்காரர்களுடன் சேர்ந்து ஒத்து உழைப்பார்கள் என்பதேயாம். - 1:4; சூலை 10, 1907 - 4. மேன்மக்கள் கீழ்மக்கள் விவரம் உலகத்தில் தோன்றியுள்ள சீவராசிகளில் உயர்திணை வகுப்பாகும் தேவர், மக்கள், நரரென்னு முத்தோற்றங்களில், வானரர் வால்நரர் என்னும் குரங்குகளில் செங்குரங்கு, கருங்குரங்கு, காட்டுக்குரங்கு, நாட்டுக்குரங்கு என்று வருண பேதத்தார் கூறியபோதிலும் குரங்கென்னும் பெயரும் வானரமென்னும் பெயரும் ஒரு சீவனைக் குறிக்கும் என்பது நிலையாம். மக்கள் மனிதர் என்று கூறும் வகுப்பில் சீனனாயினும், பர்மியனாயினும், ஆங்கிலேயனாயினும், ஆபிரிக்கனாயினும், இந்தியனாயினும், சிந்தியனாயினும் கருப்புவருணம், சிவப்பு வருணம், சிவப்பும் கருப்பும் கலந்த வருணம், மஞ்சளுங் கருப்புங் கலந்தவருணமெனக் கண்ணினாற் காணும் நிறபேதங்களையும் சீனபாஷை, பர்ம பாஷை, ஆங்கில பாஷை, வங்கள பாஷை, ஆந்திரபாஷை, திராவிடபாஷை என செவியினாற் கேட்கும் சப்தபேதங்களை உணர்ந்தபோதிலும் மக்களென்னும் பெயரும் மனிதனென்னும் பெயரும் வாலற்ற ஒரு சீவனைக் குறிக்குமென்பது நிலையாம். இவ்வகை மநுடசீவர்களின் பேதம் அந்த தேச சீதோஷ்ணங்களுக்குத் தக்கவாறு பலவகை வருண தேகங்களைப் பெற்றிருந்த போதிலும், ஒவ்வோர் தேகமும் மயிர், தோல், எலும்பு, மாமிஷம், நரம்பு, மூளை முதலியவைகளால் அமைந்திருப்பதுடன் மலமூத்திராதிகளின் மணமும் நிறமும் ஒன்றாகவே இருக்கும். மலமூத்திரங்களை அடக்கியுள்ள தேகி மரணமடைந்தால் அதைப் பிணமென்பார்கள். அதில் நாற்றமெழும்பிவிட்டாலோ சகல துர்நாற்றங்களை விட இதை பிணநாற்றமென்று சகல சீவன்களும் அகன்று நிற்கும். தன்னாற்றம் தானேசகிக்கா தேகத்தை தகனஞ்செய்து அச்சாம்பலைக் கொண்டுபோய் விருட்சங்களுக்கிட்டால் அதுவும் நசிந்துவிடுவது அநுபவமாம். இத்தகைய துன்னாற்றமும் நீச்சமும் அமைந்த தேகிகளாகிய நாம் மேன்மக்களென்று உயர்த்திக் கொள்ளுவதினால் ஒருக்காலும் உயரமாட்டோம். நம்மை உயர்த்துவதற்குந் தாழ்த்துவதற்கும் குணமுஞ் செயலுமே காரணமாம். அதாவது, நியாயச் செய்கையை உடைவர்கள் நியாயரென்றும் தீயச்செய்கையை உடையவர்கள் தீயரென்றுங் கொடுந்தமிழ் கூறுவதுபோல் குணத்தையும் ஆராய்வோம். முன்கலைதிவாகரம் சாத்துவித ஞானந், தவ, முண்மெய், நல்ல பாளார்த்தமோனடே டைம்புலனடக்கல் சத்துவமாகும். தானந்தவமே, தருமம்பேணன், ஞானக்கண் நலநிவை தெரித வீணமில்லாவிராசத குணமே. தாமத, நிறைபே, ருண்டி, வஞ்சங், காம, பீதி கேடுமுறக்கம் நாமே வடிவ தாமத மாகும். உண்மெய் உணர்தல், நல்லருளாய்தல், நூல் தேடல், கற்றாரை அணுகல், தவத்தைப் பேணல், தானமீதல், ஐம்பொறியடக்கல், மோனவிழித்தல், சாந்தனிரப்பல், பல்லுயிர்க்கிரங்கல், பொருளாசையற்றல், நல்லுணருற்றல், நற்கடைபிடித்தல், நல்வாய்மெ கூறல், தண்மெய் நிருத்தல் ஆகிய நற்குணத்தையும் நற்செய்கையும் பெற்றமக்கள் யாரோ அவர்களை மேன்மக்களென்றும், மேதாவியரென்றும், மேலோரென்றும் கூறுவதுடன் மேலான சாதன சதுட்டயத்தால் மேற்சாதி என்று கூறப்படும். பின்கலைநிகண்டு ... வர் மிக்கோர் நல்லோர் தகுதியோருண் மெயாய்வோர் உலகமேதாவியாருள் ஞானமீவோ....... (சில வரிகள் தெளிவில்லை) பொறியிலார், கயவர், கள்ளர், வஞ்சகர், தூர்த்தர், மிடியர், சிறிய சிந்தையர், குடிகெடுப்போர், பேராசையோர், தீயச்செயலோர், தீக்குணர், பொறாமெயாளர், பொய்ச்சாப்பர், மூர்க்கர், முசுடர், மிலேச்சர், அற்பர், வெறியர், ஆரியரென்னும் நீச்சகுணமும் நீச்சச்செயலும் உள்ளவர்களை இழிவான சாதனசம்பத்தால் இழிந்தசாதி என்றும் கூறப்படும். பின்கலை நிகண்டு பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர் சிறிய சிந்தையர் பொச்சாப்பர் தீக்குணர்குடி கேடர்ப்பெண் .... முசுடர் மூர்க்கருள் சுரவடர்மிலேச்சர் லார் கள்வர் காமர் வஞ்சுராரியருங் கீழோர். - 1:5; சூலை 17, 1907 - 5 5. ஒருமனிதனைத் தீண்டலாம் தீண்டக்கூடாதென்னும் விவரம் பெருந்திரட்டு தன்னதுநெஞ்சந் தனக்கு சான்றது வாய்த்/தத்துவநன்குணராதே வன்னெஞ்சனாகி கூடமேபுரிவோன்/ வஞ்சகக் கூற்றினுங் கொடியோன் பன்னுங்காலவன்தன் தெரிசனம் பரிசம் / படிற்வழு தைய வேதுவுமாம் புன்னெஞ்சாலவனும் போய்நரகெய்திப் / பூமியுள்ளளவு மேரானால். மக்களின் குணானுபவத்தைக் கொண்டு தீயச் செயல்களையும் நியாயச் செயல்களையும் அநுசரித்து சில மனுக்களைத் தீண்டலாம் சில மனுக்களைத் தீண்டலாகாதென விவேகமிகுத்த மேன்மக்கள் வகுத்திருக்கின்றார்கள். அதாவது வஞ்சினத்தாலும் பொறாமெயாலுங் குடிகளைக் கெடுத்து துன்புறச்செய்யும் ஓர் கொடியவனை, நன்மெய் பயக்கும் சீலமுள்ளோன் ஒருவனணுகி பரிசிக்கவும் நேசிக்கவுமிருப்பானாயின், துர்ச்சனனின் குணச்செயல்கள் இவனையும் பற்றி சீலங்கெட்டு தாழ்ந்தபிறவிக்கேகித் தவிப்பானென்னும் பரிதாபத்தால் வஞ்சகர், பொறாமெயோர், கள்வர், தூர்த்தர், மிடியர், சிறியசிந்தையர், காலடர், பேராசையோர், கபடராகுந் தீயச்செயலுள்ளவர்களை தீண்டலாகாதென்றும் அவர்களையடுத்து நேசிக்கலாகாதென்றும் கூறியிருக்கின்றார்கள். மூதுரை தீயாரைக் காண்பனவுந் தீதேதிருவற்ற/தீயார் சொற் கேட்பனவுந் தீதே - தீயார் குணங்களுரைப்பனவுந் தீதே யவரோ/டிணங்கியிருப்பனவுத் தீது. நீதிநூலோர் இவ்வகையாகக் கூறினபோதிலும் வைத்திய நூலோர்களில் அகஸ்தியர், கன்மகாண்டம் குட்ட நோய் குறிகி நிற்போர் கொம்பனால் பேதிகண்டோர் வெட்டை வைசூரிகண்டோர் மேலெங்கும் பிளகையுண்டோர் அட்டதுற் கன்மநோய்க ளணுகிய விவரைத்தீண்டில் துட்டவாதனைகள் சேருந்தூரவே யகல்வீர்கண்டாய். மநுக்களுள் தோன்றும் நாலாயிரத்தி நானூற்றி நாற்பத்தியெட்டு வகை வியாதிகளில் எட்டுவகை வியாதி கண்டவர்களை தீண்டலாகாதென்றும் அத்துற்கந்தங்களை நாசியில் முகரலாகாதென்றுங் கூறியிருக்கின்றார். வியாதிகளாவன: குறை குஷ்டம் படையிற் பிளவை...... (சில வரிகள் தெளிவில்லை) தற்காலம் (பிளேக்கென்று வழங்கும் மாறியும் பனைமுகிறி என்னும் ஓர்வகை வைசூரியேயாம். இவ்வைசூரி கண்டதுண்டங்களில் கட்டிகளாக எழும்பிக்கொல்லும். இதனை வன்னெஞ்சங்கொண்டு வாசிப்போருட்சிலர் எங்கள் சாதியாசாரப்படிக்கும், சமையாசாரப்படிக்குங் மற்றவர்களைத் தீண்டப் படாதென்றுங் கூறுவர். அவர் கூற்றும் அவலமேயாம். அதாவது சாதிபேதங்களையும் சமைய பேதங்களையும் ஒழித்தவர்களுக்கே ஆசாரமென்னும் வார்த்தைப் பொருந்துமேயன்றி சாதிசமயங்களைக் கவிழ்ந்துநிற்போருக்கு ஆசாரமென்னும் வார்த்தைப் பொருந்தாவாம். தேவிகாலோத்திரம் சமையா சார சங்கற்பலிகற்பமும் அமையாதாங்குவ வாசாரமானதும் இமையாதாரும் விடாத லில்வாழ்க்கையும் அமையார் தோளாய் விடுத லாசாரமே. சாதன பேதத்தால் சாதி யென்னும் மொழியும், காலபேதத்தால் சமையமென்னும் மொழியும் உதித்துள்ள மையான் ஆசாரம் என்னும் மொழி அவற்றைத் தழுவாவாம். ஆ - சாரம், ஆ - லயம், ஆ - காயம் - 1:6; சூலை 24, 1907 - 6. ஜெனானா லேடிகளும் இந்துப் பெண்களும் கல்வியில்லாமங்கை கணவனுக்குச்சங்கை ஏன் விவேகக்குறைவினாலேயாம் ஓர்கால் கல்வியில்லா புருடனுக்கும் கல்வியில்லா மனைவிக்குங் குடும்பபாவனை அநுடாவத்தில் நிகழ்ந்துவந்தது. தற்காலப்புருடர்களோ சொற்பக் கல்வியிற் பயின்றிருக்கின்றபடியால் மனைவியும் சொற்பக் கல்வியிற் பயின்றிருப்பாளாயின், வாழ்க்கைத்துணை நலமென்று கருதி விவேகிகள் தங்கள் பெண் மக்களை கல்விகற்க விடுகின்றார்கள். இவ்வகை சிறந்த எண்ணமுறும் பெரியோர்கள் ஆயிரம் பெயர்கூடி ஆளொன்றுக்கு 10 பத்து ரூபாய் நன்கொடை அளித்து பத்தாயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் அதன் விருத்தியைக்கொண்டு தையல் வேலையிலும், கல்வியிலும் பழகியுள்ள இந்துப்பெண்களுக்கு பத்து பதினைந்து ரூபாய் சம்பளங்கள், நியமித்து வீடுகடோருஞ் சென்று பெண்களுக்கு விவேகவிருத்தி செய்விப்பார்களாயின் கவலையுங் கலகமுமில்லாமற் சுகமடையலாம். உதாரத்துவ குணமில்லாதவர்களும் உண்மெயில் ஊக்கமில்லாதவர்களும் உலோபமே குடிகொண்டவர்களுமாகிய நாம் நமது பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எண்ணம் கொண்டவுடன் ஓர் ஜனானா லேடி வருவாளாயின், தொரைசாணியம்மா வந்தாங்கோ, தொரைசாணியம்மா வந்தாங்கோ என்னுங் குதூகலத்தால் கொண்டாடுவதுடன் மூன்றாவது, நான்காவது வீட்டுக்காரிகளைக் கண்டவுடன், எங்கள் வீட்டுக்கு தொரைசாணியம்மா வந்தாங்கள் என்று டம்பித்து தான் கெடுவதுமன்றி அடுத்த வீட்டுக்காரியையும் முடிபோட்டு விடுவார்கள். (சில வரிகள் தெளிவில்லை) இத்தகைய முடி விவேக முடியா என்பதை கவனிப்பதில்லை. டம்பத்திற்கு தொரைசாணியம்மாளைத் தருவித்து அம்பலத்திலாடுவது அநுபவத்திற்கண்டும் ஆராயலின்மை ஆச்சரியமேயாம். ஒவ்வோர் கிறிஸ்தவப் பாதிரிகளும் ஜெனானாக்களை வீடுகடோரும் அனுப்பி கல்வி கற்பிக்கச்செய்வது தங்கள் மத போதனைகளையூட்டி கிறிஸ்தவர்களாக்கவேண்டுமென்பது முன்னோக்கம் கல்வி கற்பிப்பது பின்னோக்கம். பாதிரிகளின் வருஷாந்த விசாரணையில் ஜெனானா லேடிகளைத் தருவித்து எத்தனைப் பெண்களை கிறிஸ்தவ மார்க்கத்திற் சேர்த்தீர்களென்னும் விசாரணையேயன்றி எவ்வளவுக் கல்வி அதிகரிக்கச் செய்தீர்களென்னும் விசாரணைக் கிடையாது. அவர்கள் தங்கள் பணங்களை விரயப்படுத்தி செய்துவருஞ் செயல்கள் அத்தியந்த நன்மெயைப் பயக்கக்கூடியதாய் இருப்பினும் பலாத்காரச் செய்கை பழிப்புக்கிடமேயாம். அவர்களைப் பழிக்கும் நாம் தற்காலம் புரசை வாக்கத்தில் நடந்துள்ள பலாத்காரத்தைப்போல் இதற்கு முந்தியும் இச்சென்னையில் பலாத்காரமாக எத்தனையோ பெயர்களைக் கிறிஸ்தவர்களாக்கி விட்டார்கள். அவைகளை நன்குணர்ந்தும் அதற்குத்தக்க ஏதுக்களைத் தேடாமல் எறுமெய்மேல் மழைபொழிவதுபோல் ஏங்கிநிற்பது இழிவுக்கிடமேயாம், தாழ்ந்தசாதியோரை கிறிஸ்தவர்களாக்கிவிட்டால் நமது தேவனாகிய கிறீஸ்து தாழ்ந்த சாதியாகிவிடுவார். உயர்ந்தசாதியோரைக் கிறிஸ்தவர்களாக்கி விட்டால் நமது தேவனாகிய கிறிஸ்து உயர்ந்த சாதியாகிவிடுவாரென்னும் எண்ணத்தினால் உபாயக் கிறிஸ்தவர்களாக்க முயன்றவர்களுக்கு அபாயம் நேரிட்டது அழிவுக் கிடமேயாம். அவர்கள் செய்கை அவர்கள் அழிவுக்குக் காரணமாயிருந்தபோதிலும் நமது ஏழை எளியோர்களை அதிகாரிகள் முன்னிலையில் காட்டிக் கொடுத்து அவர்களை துன்பத்திற்கு ஆளாக்குவதுடன் அதிகாரிகளுக்கும் குடிகளுக்கும் மனத்தாங்கலை உண்டு செய்துவிடுவது அபாயத்துக் இடமேயாம். ஆதலின் அன்பர்கள் ஒவ்வொருவரும் சுருசுருப்பினின்று இந்து பாலிகா போதனா ஸ்திரீகளைக் கண்டெடுங்கள். அவர்களைப் போஷிக்குந் திரவியங்களை ஈய்ந்தருளுங்கள். ஆதரிக்குங் கூட்டத்தை அமர்த்திவையுங்கள், அமர்த்திவையுங்கள் இதுவே சுதேச முதற் சீர்திருத்த மென்னப்படும். - 1:8; ஆகஸ்டு 7, 1907 - 7. ஏழு கடல்களின் விவரம் முன்கலை திவாகரம் உவ ரொடு கரும்பு மது நெய், தயிர் பால் புனன் மாகட வேழென வகுத்தனர் புலவர். பூர்வ புத்தமார்க்க வித்துவான்கள் கடல் ஏழெனும் பெயரை எவ்வகைப் பொருட்களுக்களித்துள்ளார் என்றால், பூமியின் மீது விட்டவுடன் மடைபிரண்டோடும் சலனங்களெவையோ அவைகளுக்கேயாம். அதாவது - உப்பு நீரை பூமியின்மீது விட்டால் அதுவும் மடைதிரண்டோடும், உவர்நீர் கடலென்றார்கள். கரும்பின் சாற்றை பூமியின் மீது விட்டால் அதுவும் மடைபிரண்டோடும், கரும்பஞ்சாற்றுக் கடலென்றார்கள். மதுவென்னுங்கள் தேன் இவற்றை பூமியின்மீது விட்டால் அதுவும் மடைதிரண்டோடும், மதுக்கடலென்றார்கள். எள் நெய், ஆமணக்கு நெய், பசுநெய், தெங்குநெய் முதலிய நெய்களை பூமியின் மீது விட்டால், அவைகளும் மடைபிரண்டோடும், நெய்க்கடல் என்றார்கள். தயிராகும் புளிச்சாரங்களை பூமியின்மீது விட்டால் அவைகளும் மடைதிரண்டோடும், தயிர்க்கடல் என்றார்கள், ஆட்டுப்பால், மாட்டுப்பால், மதுப்பால், மரப்பால் முதலியவைகளை பூமியின்மீது விட்டால் அவைகளும் மடை திரண்டோடும், பால்கடல் என்றார்கள். இளநீர், பனைநீர், மழைநீர், புனநீராகும் சுத்தநீர்களை பூமியின்மீது விட்டால் அதுவும் மடைதிரண்டோடும், புனல் கடல் என்றார்கள். இவ்வகையாக, பூமியின்கண் ஜலம்போல் ஊடுருவி திரண்டோடும் வஸ்துக்களுக்குக் கடல்கள் என்றார்கள். உலகத்தில் கண்ணுக்குத் தோற்றமாய் மடைபிரண்டோடும் உப்புநீர், சுத்தநீர், கள், கருப்பஞ்சாறு, பால், தயிர், நெய் ஆகிய ஏழு வழு வஸ்துக்களையும் எழுகடலென வகுத்திருக்கின்றார்கள். விவேக மிகுத்த மேன்மக்கள், உலகத்தில் தோன்றும் கூட்டத்தொருபெயர், ஒரு சொற்பல பொருட்பெயர், ஒலிபற்றியபெயர், செயல் பற்றிய பெயர், பண்பு பற்றிய பெயர், செயற்கை வடிவப்பெயர், பல் பொருட் பெயர், இடப் பெயர், மரப்பெயர், விலங்கின் பெயர், மக்கட்பெயர், தேவர்கள் பெயர் என்னும் ஒவ்வோர் தோற்றங்களுக்கும் பெயர்கள் அளித்துள்ளவற்றுள் எழுவகைக் கூட்டத்திற்கும் எழுகடல் என்னும் ஒருவகைப் பெயர் கொடுத்துள்ளார்கள். இதனந்தரார்த்தம் அறியாதோர் கல்வியற்றோரை வஞ்சித்துப் பொருள் பறிப்பான் வேண்டி பொய்ப்புராணமாங் கட்டுக்கதைகளை வரைந்து பால்கடல் என்னும் ஒரு சமுத்திரம் உண்டென்றும் அதில் ஓர் பரமன் படுத்திருப்பாரென்றும் பரக்கக் கூறுகின்றனர். இன்னும் இப்பொய்ப் புராணங்களைப் புரட்டிப்பார்க்கும் போதகர்கள் தோற்றாவிடின் அவர்கள் பரமன் பால்கடலில் படுத்திருப்பதுபோல் தயிர்கடலில் பரமன் தவிழ்ந்திருக்கும் புராணம் ஒன்று, நெய்கடலில் பரமன் நிமிர்ந்திருக்கும் புராணம் ஒன்று, உப்புக்கடலில் பிரமன் உட்கார்ந்திருக்கும் புராணம் ஒன்று, கருப்பஞ்சாற்றுக் கடலில் பரமன் கவிழ்ந்திருக்கும் புராணம் ஒன்று, மதுக்கடலில் பரமன் மகிழ்ந்து நிற்கும் புராணமொன்று, நல்லத்தண்ணீர்க்கடலில் பரமன் நகைத்திருக்கும் புராணம் ஒன்று எழுதி மற்றவர்களையும் இருளில் நுழைத்து மடியவைத்திருப்பார்கள். ஆதலின் நமதன்பர்கள் ஒவ்வொருவரும் பால் கடல் ஏதோ ஓரிடமிருக்கும் என்று திகைக்காமல் நமக்குள் வழங்கும் தயிர், பால், நெய், கரும்புசாறு, தேன், உப்புநீர், நல்ல நீர் என்னும் இவ்வத்துக்களுக்கே கடல்கள் என்னும் பெயர்களை அளித்துள்ளார்கள் என்று அறிந்துக் கொள்ளுவீர்களாக. - 1:9; ஆகஸ்டு 15, 1907 - 8. மதுரை செந்தமிழ் ம-அ-அ-ஸ்ரீ மதுரை செந்தமிழ் பத்திராதிபருக்குப் பட்சமான வந்தனம்:- ஐயா தாம் பராபவ வருஷம் சித்திரைமீ வெளியிட்டுள்ள பகுதி-6 தொகுதி-4 பக்கம் 223-ல் பழந்தமிழ் குடிகள் என முகப்பிட்டு அவற்றுள் காலவரையின்றி மிகு பழயகாலமெனக் கண்டு இந்தியாவின் வடபாலில் ஆரியர் படிப்படியாகக் குடியேறி இத்தேசத்தோருடன் பெரும் போர்புரிந்து ஜெயம்பெற்றதாகக் குறித்திருக்கின்றீர். அவ்வகைக் குறிப்பிற்கு எத்தகைய சரித்திர ஆதாரங்களும் கிடையாது. ஆரியர்கள் இத்தேசத்தோருடன் போர்புரிந்து ஜெயம் பெற்றார்கள் என்னும் சரித்திராதாரம் ஏதேனும் இருக்குமாயின் அதன் காலவரை வம்மிஷாவளி முதற் கண்டெழுதுவீராக. ஈதன்றி 426-ம் பக்கத்தில் பாணன், பறையன், துடியன், கடம்பனென்னும் நான்கு வகுப்பினரைக் குறிப்பிட்டு அன்னோர் ஆயிரத்தி எண்ணூறு வருஷங்களுக்கு முன்பே இத்தேசத்தில் இருந்துள்ளார் என்றும் வரைந்திருக்கின்றீர். அத்தகையக் காலவரைக்கும் அப்பெயர்கள் இருந்ததென்பதற்கும் ஆதாரமென்னை. பாணரென்னும் பெயர் கலிவாணர் என்னும் வித்துவச் செயலால் தோன்றியவை. அவற்றுட் செய்யுள் அமைப்போரைப் பாணர் என்றும், யாழுடன் இசைபாடுவோரை யாழ்ப்பாணரென்றும் கூறுவர். பாணர் என்பதும் யாழ்ப்பாணரென்பதும் கவிபாடுவோருக்கும் இசைபாடுவோருக்கும் உரிய பெயர்களாம். இப்பெயர் வித்துவத்துக்குரிய எப்பாஷைக்காரனுக்கும் பொருந்தும். பறையன் என்பதில் பறை - பகுதி, யகரமெய் சந்தி, அன் ஆண்பால் விகுதியாகக் கொண்டு பறையடிப்போருள் வாய்ப்பறை அடிப்பவனும் பறையனாகின்றான். தோற்பறை அடிப்பவனும் பறையனாகின்றான். இவ்விருதிரத்தாருள் ஆரியரிலும் வாய்ப்பறை, தோற்பறை அடிப்பவரும் உண்டு. அநாரியரிலும் வாய்ப்பறை, தோற்பறை அடிப்பவரும் உண்டு. அவர்களைக் கருதாது பறையர்கள் என்னும் ஓர் கூட்டத்தார் இருந்ததாகக் குறிப்பிடும் காரணம் யாது. “பாணன், பறையன், துடியன், கடம்பன்” என்று தாம் குறிப்பிட்டுள்ள பாடல் எக்காலத்தில் யாவரால் எழுதியது. புறப்பாட்டாலுணரலாம் என்று வரைந்திருக்கின்றீர். அப்புறப்பாட்டென்னும் ஓர் நூலுண்டா, அது யாவரால் இயற்றியது. எக்காலத்தது. அஃதெங்குளது. அவற்றை விளக்கும்படி வேண்டுகிறேன். - 2:5; சூலை 15, 1908 - 9 9. வேஷப் பிராமண வேதாந்த விவரம் அதாவது ஓர் தேயத்தைக் குடிபடை- அமைச்சுடன் ஆண்டுவரும் அரசனை மன்னனென்றும், இறைவன் என்றும் கொண்டாடி குடிபடைகள் யாவும் அவனடைக்கலத்தில் மடங்கினிற்பார்கள். அவனே யதார்த்த ராசனாவன். ஓர் எழிய குடும்பத்தோன் அவ்வரசனைப் போல் நடையுடை பாவனைக்காட்டி அரசனென்று சொல்லி நடிப்பானாயின் அவனை வேஷராசனென்று கூறுவர். இலட்சம் பொன்னுக்கு ஏற்பட்ட திரவியம் உடையவளை இலட்சுமி என்பார்கள். உடுக்கக் கந்தைக்குங் குடிக்கக் கூழுக்கும் இல்லாதாள் இலட்சுமீயென்று அழைக்கப்படுவாளே யாயின், அவள் நாம லட்சுமியேயாவள். அதுபோல் நீதியும், நெறியும், வாய்மெயும், தண்மெயும் நிறைந்த பிராமணனை மற்றும் விவேகிகள் பிராமணர் என்று அழைப்பார்களன்றி தங்களுக்குத் தாங்களே பிராமணர் என்று சொல்லித் திரியமாட்டார்கள். அவர்கள் செயலோ, தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகாத்தலும் சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று சமணநிலை கடந்து பிரமமணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள். இவர்களையே எதார்த்த பிராமணரென்று கூறப்படும். இந்நியாயர்களை மகட் பாஷையில் பிம்மணரென்றும், சகட பாஷையில் பிராமணர் என்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைப்பார்கள். பாலி : பிம்மதேயதேபிம்மண. சமஸ்கிருதம் : பிரம்ம சம்பத்தே பிராமண. தமிழ் : திரிக்குறள் அந்தணரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மெய் பூண்டொழுகலால். நல்லாப்பிள்ளை பாரதம் நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் / நிறுத்தினோன் வேதியனன்றி வேதியனேனு மிழுக்குறி னவனை / விளங்கு சூத்திர னெனவேத மாதவர் புகன்றா றாதலாலுடல / மாய்ந்த பின் பாவதோர் பொருளோ கோதிலாவிந்தப் பிறவியில் வேதக் / குரவநீயல்லையோகுரியாய். சமண நிலை கடந்து அறஹத்துக்களால் உபநயனமென்னும் ஞானக்கண் பெற்று உள்விழி பார்வை மிகுதியால் உண்மெய் உணர்ந்து புறமெய் அகற்றி தானே தானே தத்துவ சுயம்பிரகாச பரிநிருவாண சுகமடைவானாயின் அவனையே இருபிறப்பாளனென்று கூறப்படும். அதாவது தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும் பரிநிருவாண பிறப்பொன்றுமேயாம். இத்தகைய உபநயனமென்னும் ஞானவிழி பெற்று ஞானசாதன மிகுதியால் இருபிறப்பாளனாகும் பரிநிருவாணத்திற்கு உரியவனெவனோ அவனே யதார்த்த பிராமணனாவான். ஞானபோதம் ஊனக்கண் அன்றென் றுளக்கண் அளித்தபின் ஞானவநுபவ முரையென் றுரைத்தது. கைவல்யம் அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் - பராமுக மாகினாய் நிசத்தி உள்விழி பார்வை - யிப்படி நிறந்தர பழக்கத்தால் வசத்தி லுன்மன நின்று - சின்மாத்திர வடிவமாகிடில் மைந்தா கசத்த தேகத்தி விருக்கினும் - ஆனந்தக்கடல் வடிவாவாயே. பட்டினத்தார் நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் ஏற்றிக்கிடக்குது யெழுகோடி மந்திரம் என்ன கண்டாய் ஆற்றிற் கிடந்துத் துறைதெரியாம வலைகின்றயே. அங்ஙனமின்றி பெண்டு பிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு தன்னவர்களை ஏற்றியும் அன்னியர்களைத் தூற்றியும் சீவகாருண்ணிய மற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று பத்துக்குடிகள் நாசமடைந்த போதிலும் தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயே ஒருருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களை பிராமணரென்று சொல்லித்திரிவது வேஷபிராமணமேயாகும். பெளத்த தன்மத்தோரால் பிரமமென்னும் சாந்தம் நிறைந்தவர்களுக்கு பிராமணர் என்றும் புஜபல க்ஷாத்திரியமுடையவர்களுக்கு க்ஷத்திரியரென்றும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறுகிறவர்களுக்கு வைசியர் என்றும் கையையுங் காலையும் ஓர் சூஸ்திரமாகக் கொண்டு பல சூஸ்திரங்களைச் செய்து பூமிகளின் விருத்திகளையும் கைத்தொழில் விருத்திகளையுஞ் செய்வோர்களுக்கு சூத்திரரென்றும் அவரவர்கள் தொழில்களுக்கும் விவேக விருத்திக்கும் வல்லபத்திற்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். அத்தொழிற்பெயர்கள் யாவையும் வேஷபிராமணர்கள் சாதிப் பெயர்களாக மாற்றி மதுப்பிரஜாபதி நான்கு வருணாசிரமங் கூறியுள்ளார் என்னும் மநுஸ்மிருதியில் ஒவ்வொரு சாதியோனும் அவனவன் பெயர்களிற்றில் இன்னின்ன வருணத்தானென்று அறிந்து கொள்வதற்கு தொடர்மொழிகள் வகுத்திருக்கின்றார்கள். அதாவது:- மநுஸ்மிருதி சாதக கர்மாதி சம்ஸ்காரம் நுக-ஙஉ ம் வசனங்களில் ஒரு பிராமணன் இராமசாமி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை பிராமணரென்று மற்றவர் அறிய இராமசாமி சர்மா என்னும் தொடர் மொழி சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒரு க்ஷத்திரியன் முத்துசாமி என்னும் பெயர் வைத்துக்கொண்டிருப்பானாயின் அவனை க்ஷத்திரியனென்று மற்றவர் அறிய முத்துசுவாமிவர்மா என்னும் தொடர்மொழியை சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒரு வைசியன் பொன்னுசாமி என்னும் பெயரை வைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை வைசியன் என்று மற்றவர் அறிய பொன்னுசாமி பூதி என்னும் தொடர் மொழியைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். யீதன்றி சச-ம் வசனத்தில் இவர்கள் வருணாசிரம விதிப்படி பிராமணன் பஞ்சு நூலினாலும், க்ஷத்திரியன் சணப்ப நூலினாலும் வைசியன் வெள்ளாட்டு மயிரினாலுந் திரித்த பூ நூலணைதல் வேண்டும். (மநு) மாமிஷத்தின் விதிவிலக்கு ஙக-வது வசனம். பிராமணன் செய்யும் எக்கியத்திற்கே பசுக்களை பிரம்மா உண்டு செய்திருக்கின்றார். (மநு) அநித்தியயனம் கக-வது வசனம். சூத்திரன் சமீபத்திலிருக்கும்போது வேதத்தை வாசிக்கப்படாது. (மநு) யூகிதாக்கினி விஷயம் எக - ம் வசனம். ஒரு பிராமணன் பதிதர், சண்டாளர், புழுக்கையர், வண்ணார், செம்படவர் இவர்களுடன் ஒரு மரத்திலடியிலேனும் வாசஞ் செய்யப்படாது. (மநு) சங்கர்சாதியா னுற்பத்தி ச-ம் வசனம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு வருணந்தவிர ஐந்தாவது வருணங் கிடையாது. (மநு) உதாஹரணம் அஉஉ-ம் வசனம். ஒரு சூத்திரன் மோட்சம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுதுவரவேண்டும், ஜீவனம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுது கொண்டு வரவேண்டும். - 2:6: சூலை 22, 1908 - பராசஸ்மிருதி முதலத்தியாயம். 22-ம் வசனம். எக்கியத்திற்காகப் பசுக்களைக் கொல்லலாம். பராசஸ்மிருதி முதலத்தியாயம். 177-ம் வசனம். பிராமணரென்றும் வேதியரென்றும் அழைக்கப்பெற்றோரை கடவுள் வேள்விசெய்வதற்கே படைத்தார். பராசஸ்மிருதி ஆசாரகாண்டம். 164-ம் வசனம். எந்த பிராமணனாயினும் வேதத்தை ஓதாமல் வேறு நூற்களை போதிக்கின்றானோ அவன் சூத்திரனுக்கொப்பாவான். இத்தகைய மநுஸ்மிருதி கட்டளைகளையும் பராசஸ்மிருதி கட்டளைகளையும் குறிக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல், பெளத்த தன்மசாஸ்திரிகள் ஏற்படுத்தி இருந்த தொழிற்பெயர்கள் யாவையும் மேற்சாதி கீழ்ச்சாதி என்று ஏற்படுத்தி அவர்கள் செய்துவந்த பிராமணர்கள் செய்கைக்கு மாறுபாடுடையோரை வேஷப் பிராமணர் என்று கூறினும், இக் கீழ்சாதி மேற்சாதி என்னும் சாதிகளுக்கு ஆதாரமாக ஏற்படுத்திக் கொண்ட மநுஸ்மிருதி பராசஸ்மிருதி இவ்விரண்டிலும் வரைந்துள்ளபடிக் கேனும் இவர்கள் வேஷப்பிராமணர்களா அன்றேல் யதார்த்த பிராமணர்களா என்பதை இன்னும் விளக்க வேண்டியதற்கேயாம். (மநு) பத்தாவது அத்தியாயம் 86, 87, 88, 89, 92 பிராமணன் இரச வஸ்துக்கள், சமைத்த அன்னம், எள்ளு, கெம்புக்கல், உப்பு, மனிதர், பசுக்கள், சிவந்த நூல், வஸ்திரம், சணப்பு, பட்டு, கம்பளம், பழம், கிழங்கு, மருந்து, ஜலம், ஆயுதம், விஷம், மாம்ஸம், கருப்பூரம், வாசனா திரவியம், பால், தேன், தயிர், எண்ணெய், மது, வெல்லம், தருப்பை, யானை, குதிரை, சிங்கம், பட்சி, சாராயம், அவுரி, அரக்கு, இவைகளில் ஒன்றையேனும் விற்கப்படாது. அங்ஙனம் மாம்ஸம், அரக்கு, உப்பு, விற்பவன் பதிதனாக மாறிவிடுவதுமன்றி பால் விற்பவன் மூன்று தினத்தில் சூத்திரனாகிவிடுகின்றான். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு சாதிகளுக்குமேல் ஐந்தாவதுசாதி வேறு கிடையாதென்று கூறியுள்ள சாஸ்திரத்துள், சங்கரசாதி, அநலோமசாதி, பிரிதிலோமசாதி, அபோகவசாதி, க்ஷத்தாசாதி, உக்கிரசாதி, வைதேகசாதி, அந்தராளசாதி, அபீரசாதி, திக்குவணசாதி, மாகதசாதி, சூதசாதி, புல்கசசாதி, குக்குடசாதி, வேணசாதி, விராத்தியி சாதி, வாடாதானசாதி, புஷ்பதன்சாதி, சைகன்சாதி, நிச்சுவிசாதி, நடனசாதி, கறணன்சாதி, கஸன்சாதி, காரூசசாதி, விஜன்மாசாதி, மைத்திரசாதி, பாகியசாதி, தகயுசாதி, சையின்திரிபசாதி, மைத்திரேயனசாதி, மார்க்கவசாதி, காருவாரசாதி, வைதேகசாதி, பாண்டுசாதி, சோபாகசாதி, ஆகிண்டிசாதி, அந்தியாவசாதி, என்னும் முப்பத்தியேழு சாதிப்பெயர்களைக் குறித்திருக்கின்றார்கள். ஆயினும் பௌத்தர்கள் தொழில்களுக்கென்று வகுத்திருந்த பெயர்களே தற்காலம் வழங்கிவருகிறதன்றி இன்னூதன மதுசாஸ்திரத்தில் ஏற்படுத்தியுள்ள மேற்கூறிய சாதிகள் ஏதேனும் தற்காலம் வழங்கிவருகின்றதா, அதுவுமில்லை. மநுஸ்மிருதியினுள்ளும் பராச ஸ்மிருதியினுள்ளும் பிராமணரென்றும், வேதியரென்றும் வழங்கும்படியானவர்களை கடவுள் வேள்வி செய்வதற்கே உண்டு செய்தாராம். அங்ஙனம் வேள்விசெய்துவரும் பிராமணர்கள் தற்காலமுண்டோ அதுவுமில்லை. எந்த பிராமணன் வேதத்தை யோதாமல் வேறு நூல்களை ஓதுகின்றானோ அவனை சூத்திரனென்று அழைக்கக் குறிப்பிட்டிருக்கின்றது. ஆதலின் வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிராமணர்களுண்டோ அதுவுமில்லை. பிரம்மா பசுக்களை எக்கியத்திற்காகவே சிருட்டித்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதன் ஆதரவைக் கொண்டு தற்கால பிராமணர்கள் பசுக்களைச் சுட்டுத் தின்று வருகின்றார்களா அதுவுமில்லை. ஓர் சூத்திரனுக்கு மோட்சமாயினும், சீவனுமாயினும் வேண்டுமானால் பிராமணனையே தொழுதுவரவேண்டுமெனக் குறிப்பிட்டிருக்கின்றது. அதுபோல் சூத்திரர்கள் பிராமணனை தொழுது கொண்டு வருகின்றார்களா அதுவுமில்லை. பிராமணர்கள் செம்படவர்களுடன் ஓர் மரத்தடியிலேனும் வாசஞ் செய்யப்படாதென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் செம்படவர்களுக்கு அருகே வாசஞ் செய்யாமலிருக்கின்றார்களோ அதுவுமில்லை. சூத்திரன் அருகிலிருக்கும்போது வேதத்தை போதிக்கலாகாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுபோல் சூத்திரர்கள் அருகே வேதத்தைப் போதிக்காமலிருக்கின்றார்களோ அதுவுமில்லை. பிராமணனுக்கு சர்மாவென்றும், க்ஷத்திரியனுக்கு வர்மாவென்றும், வைசியனுக்கு பூதி என்றும் அவரவர்கள் பெயர்களினீற்றில் இத்தொடர் மொழிகளை சேர்த்து வழங்கிவரவேண்டும் என்று ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வகையேனும் வழங்கிவருகின்றனரோ அதுவுமில்லை. பிராமணனுக்கு பருத்தி நூலும், க்ஷத்திரியனுக்கு சணப்ப நூலும், வைசியனுக்கு வெள்ளாட்டுமயிரினால் திரித்த நூலையும் அணைத்துக் கொள்ள வேண்டுமென்று குறித்திருக்கின்றார்கள். அதுபோல் க்ஷத்திரியர்கள் சணப்ப நூலையும், வைசியர்கள் வெள்ளாட்டுமயிரையும் பூநூலாக அணைவதுண்டோ அதுவுமில்லை. - 2:7; சூலை 29, 1908 - மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம், 11-வது வசனம். 87 வசனங்களில் பரமாத்துமா பிரம்மாவை சிருஷ்டித்தார், பிரம்மாதன் முகத்திலிருந்து பிராமணரை சிருஷ்டித்தாரென்றும் வரைந்திருக்கின்றார்கள். பிரம்மா முகத்தில் பிறந்தபடியால் பிராமணரென்று சொல்ல ஆதாரமிருந்தபோதினும் தற்கால பிறப்பு மாறுபட்டுள்ளதுமன்றி பிராமணத்தில் பிறந்த வழியே தெரியாததினால் மநுசாஸ்திரத்தின்படி யாதார்த்த பிராமணன் இல்லை என்றே விளங்குகின்றது. தொழிற்பெயர் செயற் பெயர் யாவையுஞ் சாதிகளாக ஏற்படுத்தி அதற்கு ஆதரவாக மநுசாஸ்திரம் என்பதை நூதனமாக ஏற்படுத்தி வகுத்துள்ளக் கட்டளைபடிக்கு செயலுந் தொழிலும் பொருந்தாமல் அகன்றுள்ளது கொண்டு அவ்வாதரவாலும் எதார்த்த பிராமணரில்லை. விவேக மிகுதியாலும் ஞானமகத்துவத்தினாலும் புத்தபிரானை “ஆதிகாலத் தந்தண” என்று காவியங்களில் கூறியுள்ளவாறு விவேகமிகுதியும், அன்பின் மிகுதியும், சாந்த மிகுதியும் திரிகால உணர்ச்சிமிகுதியும் உற்று சருவ சீவர்களையுந் தன்னுயிர்போல் கார்த்து அறஹத்துக்கள் என்றும், பிராமணர்கள் என்றும், அந்தணர்கள் என்றும் பெயர் பெற்ற மகாஞானிகளாகும் மேன்மக்கள் ஒருவரேனும் இவ்விந்துதேசத்தில் இல்லை என்பது திண்ணம் திண்ணமேயாம். இவ்விடம் யதார்த்தபிராமணரையும் வேஷப்பிராமணரையும் விசாரித்துணரும் காரணம் யாதென்பீரேல் சகல சாதியோரிலும் தங்களை உயர்ந்தசாதி பிராமணர்கள் என்று ஏற்படுத்திக் கொண்டு இத்தேசப் பூர்வக் குடிகளுந் திராவிட பௌத்தர்களுமாகியத் தமிழர்களை சகல சாதியோரிலுந் தாழ்ந்தசாதிப் பறையர்கள் என்று கூறி பலவகைத் துன்பங்களைச் செய்து பதிகுலைத்ததுமன்றி இவ்விடம் நூதனமாகக் குடியேறுகிறவர்களுக்கும் போதித்து அவர்களால் இழிவடையச் செய்கிறபடியால் வேஷப்பிராமணர் எவ்வகையால் உயர்ந்தசாதிகளாயினர் என்றும் திராவிட பெளத்தாள் எவ்வகையால் தாழ்ந்த சாதி பறையர்களாயின ரென்றும் விளக்குவதற்கேயாம். தங்களுக்குத் தாங்களே பிராமணரென்று சொல்லித் திரிவோர்களை விசாரித்தோம். இனியவர்களின் வேதோற்பவங்களையும் அதன் பலன்களையும் விசாரிப்போமாக. நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்தாக கூறியிருக்கின்றது. மநுதருமசாஸ்திரம் முதலத்தியாயம் 23 - வசனம். பிரம்மா அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன், இம்மூவர்களிடத்தினின்று வெளிப்படுத்தியதாகக் கூறியிருக்கின்றது. மற்றோரிடத்தில் நாயின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும், கழுதையின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், மனிதர்கள் பிறந்து வேதங்களை எழுதியதாக வரைந்திருக்கின்றது. இருக்கு வேத 2-3-4 வது வாக்கியங்கள். வேதங்களை சிலரிஷிகளும், சில அரசர்களும் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கின்றது. இந்நான்குவகை வேதோற்பவத்தில் எவை மெய்யென்றும், 67வை பொய் என்றும் ஏற்பது விவேகிகளின் கடனாம். இத்தகைய வேதங்களை வாசிப்பதால் மநுக்கள் சீரடைவார்களா சீர் கெடுவார்களா என்பதை ஆலோசிப்போமாக. இருக்கு வேதம் 20 - வது வசனம். வசிஷ்டர் வருணன் வீட்டில் தானியம் திருடுவதற்குப் போனதினால் அவ்விடமிருந்த நாய் கடிக்கவரவும் அதைத் தூங்கும்படி மந்திரஞ் செய்திருக்கின்றார். இஃது அன்னியன் பொருளை அஞ்சாமல் திருடலாம் என்னும் சீர்கேட்டின் முதற்படியேயாம். இருக்குவேதம் 24 - வசனம். இயமனென்பவன் தன் புத்திரி யமுனா என்பவளை கற்பழிக்க எத்தனித்த போது அவள் மதிகூறல். யசுர் வேதம் 95 - வசனம், முதல் மநு தன் புத்திரியை மணந்திருக்கின்றான். இஃது அன்னியர் தாரங்களை ஆனந்தமாக இச்சிக்கலாம் என்னும் சீர்கேட்டின் இரண்டாம்படியேயாம். யசுர்வேதம் 117 - வசனம். அதர்வணவேதம் 160 - வது வசனம் எக்கியமாகிய நெருப்பில் சுட்டுத்தின்பதற்கு ஆயிரம் பசுக்களை தானஞ்செய்ய வேண்டும் என்றும், தனக்கு சத்துருவாக யார் தோன்றுகிறார்களோ அவர்கள் யாவரையும் அழிப்பதற்கு குசப்புல்லுக்கு மந்திரஞ் சொல்லப்பட்டிருக்கிறது, இஃது அன்னியர்களையும் அன்னிய சீவப்பிராணிகளையும் இம்சை செய்யலாமென்னுஞ் கொலைபாதக சீர்கேட்டின் மூன்றாம் படியேயாம். யசுர்வேதம் 111 - வசனம். சோமபானஞ் சுராபானம் என்னும் மயக்க வஸ்துக்களை உண்டுசெய்யும் பாகங்களையும் அதை உட்கொள்ளும் பாகங்களையும் கூறுகின்றது. இஃது மனிதன் சுயபுத்தியிலிருக்கும் காலத்திலேயே அனந்த கேட்டுக்குள்ளாகி அவத்தைப் படுகின்றான். அவ்வகை அவத்தையுள்ளோன் தன்னை மயக்கத்தக்க மதுபானங்களை அருந்தி இன்னும் மயங்குங்கோள் என்னும் சீர் கேட்டின் நான்காம் படியேயாம். யசுர்வேதம் 72 - வசனம். இதர மனிதர்களும் இருக்குவேதம் 5 - வது வசனம் விரகங்கர் என்னும் அரசனுடைய ஐந்து பிள்ளைகளும் வேதத்தின் கிரந்தகர்த்தர்களாய் இருந்ததாய் குறிப்பிட்டிருக்கின்றது. அதே யசுர்வேதம் 112 0- வது வசனத்தில் இவ்வேதம் எழுதியவர்களில் நர மநுஷியராகிய கிரந்தகர்த்தாக்கள் இல்லை என்று கூறியிருக்கின்றது. இஃது கண்ணைக் கேட்டால் மூக்கைக் காட்டுவதும், காதைக் கேட்டால் வாயைக் காட்டுவதுமாகி சகலமுந் தேகந்தானே என்பது போல சமயத்திற்குத் தக்க மாறுகோட்களால் வேறுபட பேசற்கு பொய்யாம் சீர்கேட்டிற்கு ஐந்தாம் படியேயாம். - 2:8: ஆகஸ்டு 5, 1908 - இத்தகைய விபச்சாரம், கொலை, களவு முதலிய பஞ்சபாதகங்களை தினேதினே செய்யினும் பாதகமில்லையாகும். வேதத்தின் நீதிபோதத்தை விசாரித்தோம். இனி இவ்வேதம் யாவரால் எக்காலத்தில் எவ்விடத்தில் தோன்றியது என்பதையும் விசாரிப்போமாக. இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் இந்நான்கு வேதத்தை சங்கராச்சாரியேனும் பூர்த்தியாக வைத்திருந்து இன்ன கண்காட்சி சபையில் சேர்த்திருந்தார் என்னும் ஓர் சரித்திராதாரங் கிடையாது. மாதவாச்சாரியேனும் இவ்வேதங்கள் முழுவதும் வைத்திருந்து இன்ன மடத்தில் கிடைத்தது என்றேனும் ஓர் சரித்திராதாரமும் கிடையாது. இந்நான்கு வேதமும் இன்னின்ன வம்மிஷ வரிசையோரால் இன்னின்ன மடங்களில் இருந்துள்ளதாகுஞ் செப்பேடுகளேனுஞ் சிலாசாசனங்களேனும் ஏதொன்றும் கிடையாது. மற்றும் எவ்வகையால் யாவரால் எப்பாஷையில் வெளிவந்தது என்பீரேல், பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இத்தேசத்தில் வந்து குடியேறிய சிலகாலங்களுக்குப் பின் சகலசாதியோருக்கும் தாங்களே பெரியசாதிகள் என்று சொல்லித்திரியும் சில வேஷபிராமணர்களை சில ஐரோப்பியர்கள் தருவித்து உங்களுக்கு வேதமுண்டா அவற்றைப் பார்க்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். அதினால் தற்காலமுள்ள வேதத்தில் அரைபாகத்தை அக்கினியைத் தெய்வமாகத் தொழும் பாரீசுசாதியோருள் ஒருவராகிய தாராஷ்கோ என்பவர் பாரீசுபாஷையில் கொண்டுவந்து கொடுத்திருக்கின்றார். இப்பாரீசு சாதியாரால் பாரீசுபாஷையில் தற்காலமுள்ள வேதத்தின் பாதிபாகம் முதலாவது வெளிவந்து கல்கத்தா கண்காட்சி சபையில் வைக்கப்பட்டது. இவ்வேதங்களிலுள்ளப் பெரும்பாகங்களையும் பாரீசுசாதியார் வேதமாகும் ஜின்டவிஸ்பா என்னும் நூலிலுள்ளவைகளையும் ஒத்திட்டுப் பார்ப்போமாயின் இருவர் அக்கினியின் தொழுகைகளும் மந்திரங்களும் பிராமணங்களும் பொருந்தக் காணலாம். பாரீசுசாதியார் தாராஷ்கோ என்பவரால் வந்த பாதி வேதக்கதைகளுடன் பௌத்ததருமச் சரித்திரங்களில் சிலதையும் நீதி நெறி ஒழுக்கங்களில் சிலதையும் வேஷபிராமணாள் கிரகித்து கர்னல் போலியர் அவர்களிடத்தில் சிலரும், சர். ராபர்ட் சேம்பர்ஸ் அவர்களிடத்தில் சிலரும், ஜெனரல் மார்ட்டீன் அவர்களிடத்தில் சிலரும், சர். உல்லியம் ஜோன்ஸ் அவர்களிடத்தில் சிலரும், மிஸ்டர் கோல்புரூக் அவர்களிடத்தில் சிலரும் கொண்டுபோய்க் கொடுக்க அத்துரை மக்கள் இவர்கள் கொடுத்த கையேட்டுப் பிரிதிகள் யாவையும் மொழிபெயர்த்து ஒன்றுசேர்த்து அச்சிட்டுப் பெரும்புத்தகமாக்கி இந்துக்கள் வேதமென்று சொல்லும்படியான ஓர் உருவமாக்கிவிட்டார்கள். புத்ததர்ம்ம வாக்கியங்களும் அதன் சரித்திரங்களும் அதில் எவ்வகையில் சேர்ந்துள்ளது எனில், புத்தபிரான் அரசமரத்தடியில் உட்கார்ந்து ஐயிந்திரியங்களை வென்றபடியால் ஐந்திரரென்றும் இந்திரர் என்றும் அவருக்கோர் பெயர் உண்டாயிற்று. அப்பெயரைக் காரணமில்லாமல் இவர்கள் நூதன வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். புத்தபிரானாகும் இந்திரர் தேவர்களில் ஆதியாகத்தோன்றி, மற்ற மக்களுக்கும் தேவராகும் வழிகளை விளக்கி வானில் உலாவும்படிச் செய்தவராதலின் பௌத்த சரித்திரங்களில் அவரை வானவர்க்கு அரசன் என்றும், வானவர் கோன் என்றும், தேவேந்திரன் என்றும், இராஜேந்திரன் என்றும் வரைந்திருக்கின்றார்கள். வானவர்க்கரசன் இந்திரன் என்னும் சரித்திரத்தையும் இவர்கள் நூதனவேதத்தில் வரைந்திருக்கின்றார்கள். மற்றும் பெளத்தமார்க்க அரசர்களில் சிலருடையப் பெயர்களையும் அறஹத்துக்களுடைய பெயர்களையும் இவர்கள் நூதன வேதத்தில் வரைந்து வைத்திருக்கின்றார்கள். இன்னும் புத்தமார்க்கத்தைத் தழுவிய அனந்தம் பெயர்களையும் சரித்திரங்களையும் அதில் காணலாம். சரித்திரக்காரர்கள் எழுதியுள்ள ஆதாரங்களின் படிக்கு கிறீஸ்து ‘பிறப்பதற்கு அறுநூறு வருஷங்களுக்கு முன்பும் அவர் பிறந்த எழுநூறு வருஷங்களுக்குப் பின்பும் இந்துதேசம் முழுவதும் புத்தரது திவ்விய சரித்திரங்களும் அவருடைய சத்தியதருமங்களும் நிறைந்திருந்ததன்றி வேறுமதஸ்தர் வேதங்களேனும் மார்க்கங்களேனும் இருந்ததென்னும் சரித்திரங்களுஞ் சிலாசாசனங்களும் கிடையாது. கிறீஸ்துபிறந்து எழுநூறு வருஷங்களுக்குப் பின்பு பிராமணமதந் தோன்றியுள்ளதென்றும் அதன்பின் திரிமூர்த்தி மதங்களாகும் விஷ்ணு மதம் சிவமதங்கள் தோன்றியது என்றும் சரித்திராதாரங்களுண்டு. அவைகள் தோன்றியது புத்தமார்க்க சரித்திரங்களையும் தன்மங்களையும் ஆதாரமாகக் கொண்டே தோன்றியதென்னும் பாகுபாடுகளும் உண்டு. இவ்வேஷபிராமணர்கள் புத்தர்காலத்திலேயே இருந்ததாக பிராமஜால சூத்திர முதலிய பௌத்த நூற்கள் கூறுகிறதென்று நடிப்பார்கள். அஃது பொய் நடிப்பேயாம். எங்ஙனமென்னில்:- திருவள்ளுவநாயனாராகும் அறஹத்துவின் காலத்திலேயே, இவ் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்று கூறுவதற்கு கபிலர் அகவல் என்னும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்தியிருக்கின்றார். அஃது தோன்றிய அந்தரங்கம் அறியாதோர் அதனை மெய் சரித்திரம் என்றும் படித்து வருகின்றார்கள். இவ்வகவல் தோன்றிய காரணம் யாதென்பீரேல் வேஷ பிராமணர்களும் பறையர்களும் பூர்வக்காலத்தில் இருந்தவர்கள் என்று தங்கட்பொய்யை பிலப்படுத்துவதற்கேயாம். அதுபோல் சீனதேச பௌத்தர்களும், சிங்களதேச பௌத்தர்களும் பிரமதேச பௌத்தர்களும் இந்திர தேசம் வந்து இவ்விடமுள்ளவர்களிடம் புத்தரது சரித்திரங்களையும் அவர் தருமங்களையும் கேட்டு எழுதிக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. அக்காலங்களில் இவ்விடம் குடியேறி பெளத்ததருமங்களைப் பாழ்படுத்தி வேஷ பிராமணத்தை விருத்திசெய்து வந்தக் கூட்டத்தார் சகட பாஷையிலிருந்து புத்ததன்மங்களுடன் புத்தபிரான் சில பிராமணர்கள் கோட்பாடுகளைக் கண்டித்து அவர்களை புத்தமார்க்கத்தில் சேர்த்துவிட்டதுபோல் எழுதி அனுப்பி விட்டிருக்கின்றார்கள். அவ்வகையால் தங்களைத் தாழ்த்தி புத்தரை உயர்த்தி எழுதிக்கொடுக்க வேண்டியக் காரணம் யாதென்பீரேல், அவர்களைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் பெரிதல்ல. இப்பிராமணர் என்று சொல்லித் திரியும்படியான கூட்டத்தார் புத்தர் காலத்திலேயே இருந்தார்கள் என்னும் ஓர் ஆதாரம் நிலைத்துவிடுமாயின் அதைக் கொண்டே தங்களை இத்தேசப் பூர்வக்குடிகள் என விளக்குவதற்கேயாம். சிலர் உபநிடதங்களை வாசித்து புத்தர் தெளிந்திருக்கின்றார் என்று மாக்ஸ்முல்லர் கூறுகின்றாரே அதினால் இப்பிராமணமதம் முன்பே இருந்ததல்லவா என்பாரும் உண்டு. இவ்வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உரியவர்களாகிய பிராமணர்கள் அறியாமல் மாக்ஸ்முல்லர் சொல்லுகிறார் நானும் அவற்றை சொல்லுகிறேன் என்பது ஏனவாயன் கதையேயாகும். மாக்ஸ்முல்லர் அவர்களோ புத்தர்கால பாஷையையும் அவர் கண்டடைந்த மார்க்கத்தையும் அவரால் உண்டு செய்துள்ள பாஷைகளையும், பௌத்த சங்கத்தோர் உபநிடதங்களையும் அதனதன் காலவரைகளையும் சீர்தூக்கிப்பாராமலும் தன்னிடம் கிடைத்துள்ள உபநிடதம் முந்தியதா புத்ததன்மங்கள் முந்தியதா என்று உணராமலும் ஆதாரமற்ற அபிப்பிராயம் அளித்திருக்கின்றார். - 2:9; ஆகஸ்டு 12, 1908 - அவர் ஒருவர் அபிப்பிராயத்தைக்கொண்டு சரித்திரங்களையும் செப்பேடுகளையுஞ் சிலாசாசனங்களையும் அவமதிக்கப்போமோ ஒருக்காலுமாகா. புத்தபிரானுக்கு முன்பு வேதங்கள் இருந்ததென்பதும், உபநிஷத்துக்கள் இருந்ததென்பதும் இந்துதேசப் பூர்வ விசாரிணையற்ற பொது அபிப்பிராய மன்றி அஸ்த்திபாரமற்றக் கட்டிடமுமாகும். இந்நான்கு வேதங்களும் திரண்டு புத்தகருபமாய் வெளிவருவதற்குக் காரணம் யாவரென்றும் எப்பாஷையிலிருந்து யாவரால் கொடுக்கப்பட்டதென்றும் எக்காலத்தில் தோன்றியதென்றும் அறிந்தோம். இனி ஒருவன் அதை வாசிப்பதினாலும் அதைக் கேட்பதினாலும் யாது பயனடைந்து யீடேறுவானென்பதையும் விசாரிப்போமாக. இருக்குவேதம் 13-ம் பக்கத்தில் அக்கினி, வாயு, சூரியனென்னும் மூன்று கடவுளர்கள் உண்டென்று கூறி அவற்றுள் யதார்த்தமாக ஒரே கடவுளாகிய மகாத்மா உண்டென்றும் அம் மகாத்மாவே சூரியனென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இத்தகைய வேதத்தை ஒரு கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து, பிரம்மா முனிவர்களுக்குப் போதித்து அவர்கள் சிஷியர்களுக்குப் போதித்ததாகக் கூறி அதே கடவுள் வேதங்களிலுள்ள சில பாகங்களை நேரில் முநிவருக்கே போதித்திருப்பதாகவே பாயிரத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. இதைப் பின்பற்றிய ஒருவன் கடவுள் என்னும் வார்த்தையை நம்புகிறதா, பிரம்மாவை நம்புகிறதா, முநிவர்களை நம்புகிறதா, அக்கினியை நம்புகிறதா, வாயுவை நம்புகிறதா, சூரியனை நம்புகிறதா, சூரியனே மறுபெயர் கொண்ட மகாத்மாவை நம்புகிறதா, அன்றேல் அச்சூரியனைக் காலம் பார்த்து விழுங்கும் இராகு என்னும் பாம்பை நம்புகிறதா என்னும் விவரம் யாதும் விளங்கவில்லை. இவற்றை யாரொருவர் நம்பி இன்ன சுகமடைந்துள்ளார் என்னும் பலனும் விளங்கவில்லை. இத்தியாதி கடவுளர்களும் நீங்கலாக யஜுர்வேதம் 120-வது பாகத்தில் பிரம்மத்தைத் தெளிவிக்கவேண்டும் என்று புத்திரன் பிதாவைக் கேட்கின்றான். அதற்குப் பிதா சருவமும் பிரம்மமென்றார். 121-வது பாகத்தில் புசிக்கும் பொசிப்பு அல்லது தேகமே பிரம்மமென்றார். 122-வது பாகத்தில் உயிர்ப்பாகிய பிராணனே பிரம்மமென்றார். 123-வது பாகத்தில் அறிவே பிரம்மமென்றார். 124-வது பாகத்தில் ஆனந்தமே பிரம்மமென்றார். இவ்வகையாய் ஆனந்தமே பிரமம், அறிவே பிரமம், உயிர்ப்பே பிரமம், பிராணனே பிரமம் தேகமே பிரமம் உண்டியே பிரமமென்று கூறுவதானால் பிரம்மம் என்னும் வார்த்தைக்கே பொருளற்று இன்ன வஸ்து என்னும் நிலையற்று இருக்கின்றது. இவ்வகை நிலையற்ற பிரம்மத்தை வேதம் கூறுமாயின் மக்கள் எவ்வகையால் அவற்றைப் பின்பற்றி ஈடேறுவார் என்பதும் விளங்கவில்லை. பிரம்மமென்னும் வார்த்தையின் பொருளும் அதன் தோற்றமும் அதினால் உண்டாகும் பயனும் நிலையற்றிருப்பதை விசாரித்தோம். இனி சாமவேதம் 144-வது பக்கத்தில் சருவபரிபூரண ஆத்துமக் கியானத்தை அசுவாதி என்னும் அரசனிடம் சென்று விறகுகட்டை ஏந்திய மாணாக்கர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அவற்றுள், சாமவேதம் 146-வது பாகத்தில் வானத்தையே ஆத்துமா என்று கூறியுள்ளார்கள். 147-வது பாகத்தில் சூரியனையே ஆத்துமாவாக வரைந்திருக்கின்றார்கள். 148-வது பாகத்தில் வாயுவையே ஆத்துமாவாகக் கூறியிருக்கின்றார்கள். 149-வது பாகத்தில் ஆகாயப் பரமாணுவே ஆத்துமா என்று கூறியிருக்கின்றார்கள். 150-வது பாகத்தில் உதகமே ஆத்துமா என்று குறித்திருக்கின்றார்கள். 151-வது பாகத்தில் பிரிதிவியாகிய மண்ணே ஆத்துமா என்று குறித்திருக்கின்றது. இவ்வகையாக ஆத்துமா என்னும் வார்த்தைக்குப் பொருள் ஏதும் அற்று அதன் நிலையற்று இருப்பதால் ஒருமனிதன் வானத்தையும் மண்ணையும் காற்றையுஞ் சூரியனையும் ஆத்துமமாக எண்ணுவதால் என்ன பலன் அடைவான் என்பதும் விளங்கவில்லை. இந்நான்கு வேதங்களில் கூறியுள்ள பிரம்மம் என்னதென்றும் ஆத்துமா இன்னதென்றும் நிலையாதிருப்பதை தெரிந்துக் கொண்டோம். இத்தகைய பிரமத்தையும் ஆத்துமாவையும் அறியக்கூடிய வேத அந்தத்தையும் விசாரிப்போமாக. - 2:10; ஆகஸ்டு 19, 1908 - அதர்வணவேதம் 165-வது பக்கத்தில் உபநிடதங்கள் என்பது வேதாந்த சாஸ்திரங்கள் எனக் குறிப்பிட்டிருகின்றது. 167-வது பக்கத்தில் வேதாந்த சாஸ்திரங்கள் எல்லாம் உபநிடதங்களின் பேரில் ஆதாரப்பட்டதென வரைந்திருக்கின்றது. இவற்றினாதரவாலும், நான்கு வேதங்களில் கூறியுள்ள மந்திரங்கள், பிராமணங்கள் உபநிடதங்கள் என மூன்று பிரிவில் உபநிடதங்களைக் கடை-பாகமாகக் கொண்டு வேத அந்தங்களென வகுத்துக் கொண்டார்கள். வேதம், வேத அந்தம் எனும் இருவகுப்பில் வேதத்தில் கூறியுள்ள பிரமமும், ஆத்துமமும் நிலையற்றிருப்பதை தெரிந்துக்கொண்டோம். இனி வேத அந்தமாகும் உபநிடதங்களில் கூறியுள்ள பிரம்மத்தையும் அதன் நிலையையும் அதன் பலனையும் விசாரிப்போமாக. உபநிடதங்களில் 52 வகை இருந்ததாக அதர்வண வேதத்தில் கூறியிருக்கத் தற்காலம் இரு நூற்றிச்சில்லரை உபநிடதங்களுள்ளதாய் விளம்புகின்றனர். அத்தகைய விளம்பல் உளதாயினும் இலதாயினுமாகுக. முண்டகோப உபநிஷத்து இரண்டாமுண்டகம் முதலத்தியாயத்தில் ஜவலிக்கின்ற அக்கினியினின்று ஆயிரம் பக்கங்களில் பொறிகள் எப்படி உண்டாகின்றனவோ அதுபோல் அழிவற்ற பிரமத்திடத்தினின்று பலசீவாத்மாக்கள் உண்டாகி மறுபடியும் அதிலடங்குவதாகக் குறிப்பிட்டிருக்கின்றது. தலவகார் உபநிஷத்து இரண்டாவது காண்டம் 3-4-5 வாக்கியங்களில் பிரமத்தை அறியேனென்பவன் அறிவான், அறிவேன் என்பவன் அறியான் பிரமந் தெரியும் என்பவர்களுக்குத் தெரியாது. தெரியாது என்பவர்களுக்குத் தெரியும் என்று கூறியிருக்கின்றது. கடோபநிஷத்து நான்காவது வல்லி 11-வது வாக்கியத்தில் மனதினால் மாத்திரமே அப்பிரம்மத்தை எட்டக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கின்றது. கேனோபநிஷத்து முதல்கண்டகம் மூன்றாம் வாக்கியமுதல் எட்டாம் வாக்கியம் வரையில் அதைக் கண்ணாவது, வாக்காவது, மனமாவது எட்டுகிறதில்லை. அதை நாம் அறியோம். அதை தெரிவிக்கும் வழியும் நமக்குத் தெரியாதென வகுத்திருக்கின்றது. வாஜகாநேய உபநிஷத்து எட்டாவது வாக்கியத்தில் பிரமம் எவ்வித சரீரமும் அற்றவர், ஒளி பொருந்தியவர், பாபமற்றவர், விவேகி, மனதை ஆள்பவரெனக் குறித்திருக்கின்றது. முண்டகோபநிஷத்து இரண்டாவது முண்டகம் எட்டாவது வாக்கியத்தில் கண்களாலாவது வாக்காலாவது கர்மத்தினாலாவது பிரமத்தைக் கிரகிக்கப்படாதென்று குறித்திருக்கின்றது. அதே உபநிஷத்து பத்தாவது வாக்கியத்தில் இப்பரமாத்துமா அணுவைப்போல வெகு சிறியவனாகவும் மனதினால் அறியத்தக்கவனாயும் இருக்கின்றான் என்று கூறியிருக்கின்றது. அதே உபநிஷத்து இரண்டாவது முண்டகம் இரண்டாவது அத்தியாயம் ஏழாவது வாக்கியத்தில் விவேகபரிபூரணனும், சர்வக்யனனும், பிரும்மபுரமெங்கும் பரவி மகிமையுள்ளவனுமாகிய ஆத்மா ஆகாசத்தில் இருக்கின்றானென்றும் குறித்திருக்கின்றது. சுவேதாசுவத உபநிஷத்து முதலத்தியாயம் மூன்றாம் வாக்கியத்தில் தியானத்தையும் யோகத்தையும் அநுசரித்தவர்கள் காலாத்துமாக்களோடு அமைந்த தேவாத்தும் சக்த்தியைக் கண்டார்கள் என்று குறித்திருக்கின்றது. அதே அத்தியாம் 13-வது வாக்கியத்தில் புருஷன் அந்தராத்துமாவாகி விரலளவுடைய ஜனங்களின் இருதயத்தில் இருக்கின்றான் என்று குறித்திருக்கின்றது. இவ்வகையுள்ள மற்றும் உபநிடதங்களை வரைய வேண்டுமானால் வீணே வாக்கியங்கள் வளருவதுமன்றி ஈதோர் பயித்தியக்காரன் பாட்டுகள் என்றும் பரிகசிப்பார்கள். விசாரிணைப் புருஷர்களே வேஷப்பிராமணர்கள் வேதங்களில் கூறியுள்ள பிரம்ம விவரமும் ஆத்தும் விவரமும் நிலையற்றிருப்பது போலவே இவ்வேத அந்தமாகும் உபநிஷத்துக்கள் யாவும் ஒன்றுக்கொன்று அப்பிரமத்தின் நிலையையும், ஆத்துமநிலையையும் ஆதாரமின்றி கூறி பிள்ளைகள் விளையாட்டில் கண்ணைக்கட்டியடிக்க ஆள் தெரியாது தடவி அவ்விடம் உள்ளவர்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லித்திரிவதுபோல் வேத அந்தங்களை வாசித்தும் விழலுக்கிறைத்த நீராய் விருதாவடைகின்றன. வேதத்திலுள்ள பொருளும் வேத அந்தத்திலுள்ள பொருளும் இன்னதென்று விளங்காதிருக்க சருவமும் விளங்கியவர்கள் போல் நடித்து வேதாந்த குருக்கள் என வெளி தோன்றியும் தருக்க சாஸ்திரம் பெருக்கக் கற்றுள்ளோம் நீங்களும் அவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் பிரம்மத்தின் பின்னும் முன்னும் எமக்குத் தெரியாது நான் சொல்லுவதைக்கொண்டு நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் இன்னும் வருந்திக் கேட்பீர்களானால் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கின்றது. ஆனால் பறையனிடத்தில் மட்டும் இல்லை என்பது போல் அவனை தூரம்வைத்துப் பாடஞ் சொல்ல வேண்டியதென்பர். இத்தகைய வேஷபிராமணர்கள் வேதாந்தத்தைப் பின்பற்றிய வேஷ வேதாந்திகளை விடுத்து கண்டதைக் கண்டவாறும் உள்ளதை உள்ளபடி உரைக்கும் மேன்மக்களைப் பின்பற்ற வேண்டுகின்றோம். “சாதி குலம் பிறப்பிறப்பு பந்தமுத்தி யருவுருவத் தன்மெய் நாமம்” ஆம், துவிதமற்ற அத்துவித விசாரிணைப் புருஷரை நாடுங்கள். விவேகிகளால் ஓதியுள்ளக் கலைநூல்களைத் தேடுங்கள். சகலசீவர்களும் விருத்திபெறக்கூடிய நீதிபோதங்களைப் பாடுங்கள். ஏனென்பீரேல், உலகத்தில் தோன்றியுள்ள மக்களுள் ஒரு விவேகமிகுத்தோன் தோன்றுவானாயின் உலகம் சீர்பெறுவதுமன்றி மக்களும் அசத்திய தன்மங்களை விலக்கி சத்திய தன்மத்தைக் கைக்கொள்ளுவார்கள். சத்தியதன்மத்தைக் கைக்கொள்ளுவதால் சகல சுகமும் வாய்க்கும் என்பதே. - 2:11; ஆகஸ்டு 26, 1908 - 10. யதார்த்தபிராமண வேதாந்த விவரம் வேதமென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், சுருதியென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், மறையென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், அதனதன் பொருட்களையும், அவைகளின் உற்பவத்திற்குக் காரணம் யாவரென்பதையும் முன்பு விசாரித்து பின்பு பிரம்மோற்பவத்தையும், பிராமணோற்பவத்தையும் விசாரிப்போமாக. வேதம் என்னும் மொழி பேத மென்னும் மொழியினின்று மாறியது. அதாவது பாலிபாஷையில் பரதனென்பது வரதனென்றும், பைராக்கி என்பது வைராக்கி என்றும், பாண்டி என்பது வண்டி என்றும், பாலவயதென்பது வாலவயதென்றும் வழங்குதல்போல் பேதவாக்கியங்கள் என்பதை வேத வாக்கியங்கள் என்றும் வழங்கிவருகின்றார்கள். அத்தகைய பேதவாக்கியங்கள் யாதென்பீரேல்: ஜெகந்நாதனென்றும், ஜெகத்திரட்சகனென்றும், ஜெகத்குரு என்றும் வழங்கும் புத்தபிரானால் ஓதிய முப்பிடகம் என்னும் திரிபீட வாக்கியங்களே திரிபேத வாக்கியங்கள் என வழங்கலாயிற்று. அப் பேதவாக்கியங்கள் யாதெனில்:- சௌபபாபஸ்ஸ அகரணம் குஸலஸ உபுசம்பந்தா சசித்த பரியோபனம் ஏதங் புத்தானுபாஸாஸனம் அதாவது:- பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கோளென்னும் மூன்று வாக்கியங்களும் மூன்று பேதமாய் இருந்தபடியால் திரிபேத வாக்கியங்கள் என்றும், பகவன் மூன்று வேதவாக்கியங்களை ஓதுங்கால் அட்சரங்கள் உடைத்தாய வரிவடிவில்லாமல் ஒலிவடிவாம் மகடபாஷையாகும் பாலிபாஷை வழங்கிவந்தபடியால் மேற்கூறியுள்ள மூன்று பேதவாக்கியங்களையும் ஒருவர் நாவினால் ஒதவும், மற்றோர் செவியினால் கேட்கவும் இருந்தது கொண்டு அவற்றை சுருதி வாக்கியங்கள் என வழங்கிவந்தார்கள். கரோத்திராதித்தே சுருதி. வரிவடிவாம் அட்சரபாஷையிராது ஒலிவடிவில் இருந்ததால் சுருதி வாக்கியங்களின் அந்தரார்த்தம் விளங்காது மறைந்திருந்தது கொண்டு மறை என்றும் வழங்கிவந்தார்கள். இம்மூன்று பேதவாக்கியங்களின் உட்பொருளாம் பாபஞ்செய்யாமல் இருங்கோளென்பதை கர்ம்மபாகை என்றும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்பதை அர்த்தபாகை என்றும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பதை ஞானபாகை என்றும் வழங்கிவந்தார்கள். இம்முப்பாகையும் தன்தேகத்துள் நிகழ்வனவாதலின் இவற்றை அறம், பொருள், இன்பம் என்னும் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்றும் வழங்கி வந்தார்கள், சீவகசிந்தாமணி ஆதிவேதம் பயந்தோய் நீ / யலர்பெய்மாரி யமர்ந்தோய் நீ நீதிநெறியை யுணர்ந்தோய் நீ / நிகரில் காட்சிக்கிறையோய் நீ நாதனென்னப்படுவோய் நீ / நவைசெய் பிறவிக்கடலகத்துன் பாதகமலத் தொழிவெங்கள் / பசையாப்பவிழப் பணியாயே. திருக்கலம்பகம் ஒதாதுலகிற் பொருளனைத்துமுடனே / யுணர்ந்தா னுணர்ந்தவற்றை வேதாகமங்களா றேழால் / விரித்தான் விமலன் விரித்தனவே கோதார் நெஞ்சத்தவர் பிறழக் / கொண்டேதாமே கண்டார்போற் பேதா, பேதம், பேதமெனப் / பிணங்கா நின்றார் பிரமித்தே. மணிமேகலை சுருதி சிந்தனாபாவனா தெரிசனை. திருக்கலம்பகம் போற்றுமிதுவென்கொல் பொய்ந்நூல்களைப் புலவீர் சாற்றுமனந்த சதுட்டயத்தா - னேற்றுத் துளக்கப்படாத சுருதியாலல்லா வளக்கப்படுமோ வறம். பாபஞ் செய்யாமல் இருங்கோள் என்பது ஓர்வகையும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்பது ஓர் வகையும், இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்பது ஓர் வகையுமாக மூன்றுவகை வாக்கியங்களானது கொண்டு மூன்று பேர் வாக்கியங்கள் என்றும், திரிவேதவாக்கியங்கள் என்றும் வழங்கலாயிற்று. இவ்வாக்கியங்களை ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்டுக் கொள்ளும் சுருதி வாக்கியங்களாய் இருந்தபடியால் அவைகள் மறதிக்கு வந்து விடும் என்று எண்ணிய அவலோகிதராம் புத்தபிரான் வடமொழியென வழங்கும் சகடபாஷையையியற்றி பாணினியார் வசமும், தென்மொழி என வழங்கும் திராவிடபாஷையை இயற்றி அகஸ்தியர் வசமும் அளித்து சுருதி வாக்கியங்கள் என்னும் திரிபேதவாக்கியங்களையும் அதன் பிரிவுகளாம் அதனதன் அந்தரார்த்த விரிவுகளையும் வரிவடிவாம் அட்சரங்களில் பதிவுபடப் பரவச் செய்தார். - 2:12; செப்டம்பர் 2, 1908 - வீரசோழியம் பதிப்புரை வடமொழியை பாணினுக்கு வகுத்தருளியதற்கிணையாய் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த கு முநிக்கு வற்புறுத்தார் கொல்லேற்று பாகர். வீரசோழியம் மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந்தமிழ்மரபும் முதத்திற் பொவியேழை சொற்களின் குற்றமு மோங்குவினைப் பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்கப்பன்னூறாயிரம் விதத்திற்பொலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே. ஆயுங் குணத்தவ லோகிதன்பக்க வகத்தியன்கேட் டேயும் புவனிக்கியம்பிய தண்டமி ழீங்குரைக்க நீயு முனையோ வெனிற் கருடன்சென்ற நீள்விசும்பி லீயும்பறக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே. சிலப்பதிகாரம் தண்டமிழாரான் சாத்தன்ஃதுரைக்கும் சகல இலக்கணங்களிலும் சாற்றுதற்குரிய சாத்தன் வந்தான் சாத்தன் சென்றான் என்னும் இலக்கண உதாரண வாக்கியங்களைக் காணலாம். வீரசோழிய பதிப்புரை இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்லாய்ப்ப இருமொழியும் வழிபடுத்தார் முநிவேந்த ரிசைபரப்பும் இருமொழியு மான்றவரே தழீஇனா ரென்றாலிங் கிருமொழியு நிகரென்னுமிதற்கைய முனதேயோ சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாந் தமிழையும், புத்தபிரான் இயற்றி பாணினியார் வசமும் அகஸ்தியர் வசமும் அளித்து திரிபீடவாக்கியம், திரிபேத வாக்கியம் என வழங்கிவந்த சுருதிவாக்கியங்களாம் ஒலிவடிவை வரிவடிவில் பதிந்து சகலர் மனதிலும் பதியச்செய்து ஞான பாகையாம் இதய சுத்தத்தால் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பந் தோன்றி பரிநிருவாணமுறும் நிலையை நான்காவது மறைமொழியாகக் கொண்ட நான்கு மறைமொழி என்றும், நான்கு வேதவாக்கியங்கள் என்றும் வழங்கலாயினர். முதன் மும்மொழியையே முதன்மொழி என்றும் வரையாக் கேள்வி என்றும் வழங்கி, வரிவடிவாம் அட்சரங்கள் ஏற்பட்ட போது அவற்றை ஆதி பீடம் என்றும், ஆதி நூல் என்றும், ஆதி வேதம் என்றும் வழங்கலாயினர். முன்கலை திவாகரம் ஆதிநூ லெழுதாக்கேள்வியாரண மொத்துசாகை யேதமில் சுருதி தன்னோடிருக்கிவை யேழும் வேதம் வேதநூற் பொருளினாமம் விதித்திடு ஞானபாகை ஆதியாங் கருமபாகை அறுத்தபாகையுமாமென்ப. மெய்தெரி யாரணந்தான் வேதத்தின் ஞானபாகை மையலுட் பொருளினாம மற்றுப நிடதமென்ப வைதிக வேதமுற்ற மார்க்கமே பார்க்குங்காலை பையம லிருக்கினோடு பிடகமே யாதிவேதம். பாபஞ் செய்யாதிருங்கோள் என்னும் வேத வாக்கியத்தின் உட்பொருளே கன்மபாகை என்றும், அவையே மெய்யற விசாரமும், நன்மெய்க்கடை பிடியுங்கோள் என்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே அறுத்தபாகை என்றும், அவையே மெய்ப்பொருள் நிலையும், இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே ஞானபாகை என்றும், அவையே மெய்யின்ப சுகமாதலின் வீடுபேறு என்றும் பேரின்ப நிலை என்றும், முத்தி என்றும், நிருவாணம் என்றும் வகுத்தார்கள். கன்மபாகை, அறுத்தபாகை, ஞானபாகையாம் வேதத்தின் உட்பொருளை விளக்குவான் வேண்டி, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேத வாக்கியங்களாக வரைந்து அவற்றையே நான்கு வேதவாக்கியங்கள் என்றும் நான் மறை என்றும் வழங்கலாயினர். திரிபீடம் என்றும், சதுர்மறை என்றும் பாலிபாஷையிலும் சமஸ்கிருதத்திலும் வழங்கியுள்ள முதனூலுக்கு திராவிடபாஷையில் திருவள்ளுவநாயனார் இயற்றிய வழி நூலாந் திரிக்குறளுக்கு தமிழ் வேதம் என்னும் பெயரையும் அளித்துள்ளார்கள். நான்கு பேதவாக்கியங்களும் போலுமேலும் தெளிந்துக் கொள்ளற்கு உட்பொருளாம் உபநிட்சயார்த்தங்களை பேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிட்சயார்த்தங்களாக நான்கு பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிட்சயார்த்தங்களை வகுத்துள்ளார்கள். அவைகளுக்கே பாலிபாஷையில் உபநிடதங்கள் என்றும், உபநிஷத்துக்கள் என்றும், உபநிட்சய அருத்தங்கள் என்றும் வகுக்கப்பெற்றது. - 2:13; செப்டம்பர் 9, 1908 - புத்தபிரான் ஓதிய மும்மொழி விளக்கத்தை முதநூல் என்றும், ஆதி நூல் என்றும் வழங்கி வந்தார்கள். நன்னூல் விளக்கம் வினையீனீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும். ஆதி நூலென்றும் முதநூலென்றும் வழங்கிய திரிபீட வாக்கியங்களையே வேதநூல் என்றும் வழங்கி வந்தார்கள். முன்கலை திவாகரம் ஆதிநூலென்பது - வேதநூற்பெயரே. இத்தகைய வேதநூலின் உட்பொருள் நுட்பங்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதங்கள் என்று வழங்கலாயினர். முன்கலை திவாகரம் உபநிடதம் வேதத்தினுட்பொருள் நுட்பம். வேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிடத உட்பொருள் நுட்பங்களைக் கூறி நான்குவகை பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிடத உட்பொருள் நுட்பங்களைக் கூறியுள்ளார்கள். அதாவது:- 1. அன்னியப் பிராணிகளின் மீது கோபங் கொண்டு அவைகளைத் துன்பஞ்செய்தலால் உண்டாகும் கெடுதிகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு காலாக்கினி உபநிடதம் என்றும், 2. அன்னியர்கட்பொருளை அவர்கள் அநுமதியின்றி அபகரித்தலால் உண்டாகும் கெடுதிகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு காத்தியாயன் உபநிடதம் என்றும், 3. அன்னியரைக் கெடுக்கவேண்டும் என்று தீங்கு நினைத்தால் தனக்குண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு முண்டிர உபநிடதம் என்றும், 4. அன்னியர் தாரத்தை அபகரித்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு ஆர்ணிக பகுவபஞ்சக உபநிடதம் என்றும், 5. அன்னிய சீவப்பிராணிகளைக் கொலைச் செய்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பெளண்டரீக உபநிடதம் என்றும், 6. அன்னியர் மனம் புண்பட வார்த்தைப்பேசுதலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சுரோர்த்தாக்கினிய உபநிடதம் என்றும், 7. அன்னியர்களை வஞ்சித்துத் துன்பப்படுத்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பாராக உபநிடதம் என்றும், 8. அன்னியர்கள் அறிவை மதுவூட்டி, மயக்கச் செய்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சுராபாநீய உபநிடதம் என்றும், எட்டு கன்மபாக அஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள். 1. அன்னியர்களுக்கு உண்டாகும் துன்பங்களை அகற்றி தண்மெய் அடையச் செய்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு நாராயண உபநிடதம் என்றும், 2. அன்னியருக்கில்லா பொருளீய்ந்து ஆதரித்துத் தன்னைப்போல் சுகம்பெறக்கருதிச் செய்யும் நன்மெயால் உண்டாகும் சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பிரமபிந்து உபநிடதம் என்றும், 3. அன்னியர்களைத் தன்னைப்போல் நேசித்து ஆதரிக்குஞ் செயலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு தேசோபிந்து உபநிடதம் என்றும், 4. அன்னியர் தாரங்களைத் தங்கள் தாய் தந்தையர்களைப் போல் கருதி ஆதரிக்கும் நன்மெய் செயலால் உண்டாகும் பயனை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வாசிராயநீய உபநிடதம் என்றும், 5. அன்னிய சீவப்பிராணிகளை ஆதரித்து அவைகளுக்கோர் தீங்கு வராமலும் காத்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு அங்கிச உபநிடதம் என்றும், 6. அன்னியர் மனமும், உடலும் பூரிக்கத்தக்க மிருதுவான வார்த்தைப் பேசுதலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு போதாயநீய உபநிடதம் என்றும், 7. வார்த்தைப் பேசுவதில் அன்னியர்கள் பலனடையக்கூடிய வார்த்தைகளைப் பேசுவதில் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வார்ச்சியநீய உபநிடதம் என்றும், 8. அன்னியர்கள் அறிவை வளரச் செய்யும் வாய்மெய்களைப் போதித்து அமுதுண்ணும் பாதையில் ஏறச் செய்தலால் உண்டாகும் நன்மெய்களை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சாங்கியாயநீய உபநிடதம் என்றும், எட்டு அர்த்தபாகை யஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள். 1. தன்னிடத்து உண்டாகும் கோபத்தை தங்கவிடாமல் அகற்றி சாந்தத்தை - நிறப்பச்செய்தலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரம் உபநிடதம் என்றும், 2. தன்னிடத்து உண்டாகும் காமத்தை தங்க விடாமல் அகற்றி அன்பைப் பெருகச் செய்தலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு கடம் உபநிடதம் என்றும், 3. தன்னிடத்து உண்டாகும் மயக்கங்களை அகற்றி அறிவை வளர்த்து விழிப்பு நிற்பதினால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரமசாபல்ய உபநிடதம் என்றும், 4. தன்னிடத்துண்டாகும் வஞ்சினம், பொறாமெய் முதலிய துற்குணங்களை அகற்றி சகலர் சுகத்தையும் விரும்புதலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரகதாரண்ய உபநிடதம் என்றும். 5. தன்னிடத்தில் உண்டாகும் பொய்ப்பொருளாசையை அகற்றி மெய்ப்பொருளை உசாவுவதால் உண்டாகும் இதயசுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சுவேதாசுவதாம் உபநிடதம் என்றும், 6. தன்னிடத்து உண்டாகும் சிற்றின்பச் செயல்களை அகற்றி பேரின்பத்தை நாடுதலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு ஆசுவலாயாநீய உபநிடதம் என்றும், 7. தன்னிடத்து உண்டாகும் டம்பச் செயல்களை அகற்றி அடக்கத்தில் நிற்றலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு மாண்டூகா உபநிடதம் என்றும், 8. தன்னை வஞ்சித்து துன்பப்படுத்துவோர் துற்செயலுக்கிதங்கி அவர்களை அன்புடன் ஆதரித்தலால் உண்டாகும் இதயசுத்தத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சிவசங்கற்ப உபநிடதம் என்றும், எட்டு ஞானபாகை யஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள். - 2:14: செப்டம்பர் 16, 1908 - 1. தன்னிடத்து உண்டாகும் பற்றுக்களற்று நீதிநெறியின் பற்று நிறைவாம் நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வல்லி உபநிடதம் என்றும், 2. தன்னை மறைக்கும் நித்திரையை ஜெயித்து சதாவிழிப்பாம் இரவு பகலற்ற நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்குக் கைவல்லிய உபநிடதம் என்றும், 3. தன்னை மாறிமாறி பிறவிக்கு ஆளாக்கும் மரணத்தை ஜெயித்து காலகாலனென்னும் நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பராமாம்ஸ உபநிடதம் என்றும், 4. தன்னை சதாதுக்கத்தில் ஆழ்த்தும் காமவெகுளி மயக்கங்களை அறிந்து சதானந்த நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு அமுர்தபிந்து உபநிடதமென்றும், 5. தானே தோன்றுகிறதும் கெடுவதுமாகிய மனதைத் தோன்றாமலும் கெடாமலும் அலையற்ற கடல்போல் அமர்ந்த நிருவாண சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பாஷ்கர உபநிடதமென்றும், 6. தனக்குள் எழும் மரணபயம் ஜெநநபயமற்று கலங்காமல் நிற்கும் அசைவற்ற தீப நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சௌனகீய உபநிடதம் என்றும், 7. தன்னுள் தானாய் திரளும், சாந்தம், ஈகை அன்பென்னும் உண்மெய் உருவின் பேரின்ப நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்குக் கிம்புரோட்சய உபநிடதம் என்றும், 8. தானே தானே தசநாதமுற்று சுயம்பிரகாச உருவ அகண்ட பார்வையாம் சதாநித்திய சித்தின் நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சிறவாண உபநிடதம் என்றும், எட்டு வீடுபேறாம் அஷ்டகப்பொருளை விளக்கியுள்ளார்கள். மனிதனுக்கு உண்டாகும் சதாதுக்கங்கள் அற்று சதானந்தத்தில் லயிக்கும் ஏகமாம் வீடுபேறு இதுவேயாகும். தன்னிற்றானே தோன்றும் சிற்றின்ப துற்செயல் விருத்தியால் தேகம் கெட்டு சதாதுக்கத்தில் ஆழ்வதுபோல் தன்னிற்றானே தோன்றும் பேரின்ப நற்செயல் விருத்தியால் உண்மெய் உணர்ந்து சதானந்தத்தில் இருக்கின்றான். மனிதன் தனக்குள் அடைந்த இவ்வானந்த நிலைக்கே அமுதமென்றும், கேவலம் என்றும், பருவம் என்றும், வீடென்றும், சிவமென்றும், கைவல்யமென்றும், சித்தியென்றும், மீளாக் கதியென்றும், பரகதி என்றும், முத்தி என்றும், மோட்சம் என்றும், நிருவாணம் என்றும் வகுத்துள்ளார்கள். முன்கலை திவாகரம் - மோக்கத்தின் பெயர் அமுதங் கேவலம் பருவம் வீடு / சிவங் கைவல்லியஞ் சித்தி மீளாகதி பரகதி யோடுமெய் முத்தி பஞ்சமகதி / நிர்வாணா மோக்கமென நிகழ்த்தினரே. இத்தியாதி ஞானபோதமாம் துக்கநிவர்த்திக்கும் சுகநிலையாம் நிருவாணத்திற்கும் புத்தபிரானருளிய முதநூலே ஆதாரமாகும். அதாவது:- முன்கலை திவாகரம் - நூலின் பெயர் பிடகத் தந்திரம் - நூலின் பெயரே. புத்தபிரான் அருளிய பிடகத்தையே நூலென்று வகுத்துள்ளார்கள். அந்நூல் ஆதியில் போதிக்கப்பட்டதாதலின் அதனை முதநூலென்றும், ஆதிநூலென்றும் வழங்கிவந்தார்கள். பிடகமென்னும் மொழி தோன்றிய காரணம் யாதென்பீரேல், முப்பேத வாக்கியங்களாகும் செளபபாபஸ்ஸ அகரணம், குஸலஸ உபசம்பதா, ஸசித்த பரியோதாபனங், ஏதங் புத்தானசாசனம் என்னும் பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பவை, இத்தேசப் பிராகிருத பாஷையாகும் பாலி வரிவடிவாம் அட்சரங்களின்றி ஒலிவடிவ சுருதியாய் உலக சீர்திருத்த ஆதிபீட வாக்கியமாய் இருந்ததுகொண்டு அவைகளை பிடக வாக்கியங்கள் என்றும் கமலாசனன் வீற்றிருந்த கல்லால பீடத்திற்கு பீடிகை என்றும் வழங்கிவந்தார்கள். இத்தகைய ஆதிபீடமாகும் முதலாம் வேதத்தின் உட்பொருளின் நுட்பத்தையும், அதனந்தத்தையும் விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதவாக்கியங்கள் என்றும், வேத அந்த வாக்கியங்கள் என்றும் வழங்கலாயினர். இவ்வேதவாக்கியங்களையும், வேதாந்த வாக்கியங்களையும், ஆராய்ந்து அருள்பெறவேண்டியவர்கள் காட்டிற்கும், நாட்டிற்கும் மத்தியில் இந்திர வியாரங்களைக் கட்டுவித்து இல்லந்துறந்த மேன்மக்களாகும் அறஹத்துக்கள், பிராமணர், அந்தணரெனும் விவேகமிகுத்த ஞானிகளிடம் பொன்னிறவாடையும் கபோலமும் ஏந்தி சீலந்தாங்கி சித்திபெறல் வேண்டும். - 2:15: செப்டம்பர் 23, 1908 - இந்திரவியாரமாகும் புத்தரங்கத்தில் சேர்ந்து மகடபாஷையில் சமணரென்றும், சகடபாஷையில் சிரமணரென்றும், திராவிடபாஷையில் தென்புலத்தார் என்றும், புலன் தென்பட்டவர்கள் என்றும், வழங்கும்படியான விசாரிணைப்புருஷர்கள் மகடபாஷையில் பஞ்சஸ்கந்தமென்றும், திராவிட, பாஷையில் ஐம்புலன் என்னும் படுத்தல், எழுதல், நடத்தல், அணிதல், துய்தலாம் ஐங்கூறினுள் நினைத்தல், மறத்தல், அறிதல், அன்பு, ஆசை, பயம், மரணம், நிறை, பொறை, ஓர்ப்பு, மையல், கடைப்பிடி, வெறுப்பு, விருப்பு, உவப்பு, இரக்கம், நாணம், பயம், முறிவு, அழுக்காறு, அருள், பீடை, இன்பம், துன்பம், இளமெய், முதுமெய், இகல், வெற்றி, பொய்ச்சாப்பு, ஊக்கம், மறம், மதம் எனும் முப்பத்திரண்டு செயலுடைத்தாய உருவகத்தை மகடபாஷையில் ஆன்மமென்றும், சகடபாஷையில் புருஷனென்றும், திராவிடபாஷையில் மனிதன் என்றும் வழங்கிவந்தார்கள். இத்தகைய ஒருமெய் உருவகம் ஒன்றாகத் தோற்றினும் செயலால் உண்மெய்யும், தோற்றத்தால் புறமெய்யுமாக உடலுயிர் இரண்டென வகுத்துள்ளார்கள். இவ்விரண்டினுள் உருவகத் தோற்றச் செயல்களாகும் தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், யீதல் என்னும் இத்தொழிலாகுந் தோற்றத்தையே உயிருடல் இரண்டிற்கும் ஒத்தகுணமென்று வகுத்துள்ளார்கள். உயிரில்லா பொருட்குணமாகும் இருகோணம், முக்கோணம், வட்டம், சதுரமென்னும் வடிவங்களையும், துற்கந்தம், நற்கந்தம் என்னும் நாற்றங்களையும், வெண்மெய், கருமெய், செம்மெய், பொன்மெய், பசுமெய் என்னும் ஐவகை வருணங்களையும், கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு, என்னும் அறுசுவைகளையும், வெம்மெய், தண்மெய், மென்மெய், வன்மெய், நொய்மெய், சீர்மெய், இழிமெய் என்னும் எட்டு ஊறுதளையும் உயிரல் பொருட்குணமென வகுத்துள்ளார்கள். உடல் உயிர் என்னும் இரண்டினுள் உயிர் என்னும் செயலற்றவிடத்து உடல் அசையாமலும், உடல் தோற்றி அசையா இடத்து உயிரென்னும் பெயரற்றுப்போவதால் ஒற்றுமெய் நயத்தால் ஒன்றென்றும், வேற்றுமெய் நயத்தால் இரண்டென்றும் வழங்கிய உரூவக மனிதனை ஆன்மன் என்றும், புருஷன் என்றும் பொதுப்பெயரால் வழங்கி வந்தார்கள். பஞ்சஸ்கந்தங்களால் அமைந்துள்ள புருஷனுக்கே ஆன்மனென்றும், ஆத்துமனென்னும் பெயருண்டாயிற்று. மனுட உருவக தோற்றம் உண்டாயவிடத்து ஆத்துமமென்னும் பெயருண்டாயதன்றி தோற்றமுண்டாகாவிடத்து ஆன்மமென்னும் பெயரில்லை. இத்தகைய உடலுயிரென்பவற்றுள் தான் கற்றவைகளையும், கண்டவைகளையும் சிலகால் சென்று சிந்தித்தபோது கொடுக்குங் குணத்திற்கு உள்ளமென்றும், அவ்வுள்ளமே விரிதலும், மறைதலுமாகிய குணத்திற்கு மனமென்றும், அவ்வகையால் விரியும் மனதை சற்று தடுத்தாளும் குணத்திற்கு மதி என்றும், அம்மதியைப் பெருக்கி இஃது நன்கு தீதென்று தெளிந்து தேறுங்குணத்திற்கு அறிவென்றும், அவ்வறிவின் பெருக்கத்தால் உடலுயிர் இரண்டிற்கும் நிகழும் பிணிமூப்புச் சாக்காட்டினால் உண்டாகும் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவ காரணம், துக்க நிவாரணமாகும் நான்கு வாய்மெய்களை உணர்ந்து, காக்கைபாடியம் உடலுயிர்பொருத்தா லுள்ளந்தோன்றி / கடலுளவிரிவே மனமென வாய்ந்து வடவிரிமனமாள் மதியெனப்பெருகி / திடம்பெரு வறிவாற் றேவராகினரே. நல்வாய்மெய், நற்காட்சி, நல்லூற்றம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நல்லுள்ளமாம் அஷ்டாங்கமார்க்கத்தில் சென்று ஞானவாசிரியராகும் அறஹத்துவை அடுத்து உபநயனம் என்னும் உதவி விழியாம் ஞானக்கண் பெற்று ஊனக்கண்ணற்று உள்விழி பார்வையால் சுழிமுனைக் கனலேறி ஜாக்கிரத்தில் சுழுப்த்தியாயபோது தசநாதமுண்டாகிதானே தானே சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான். இந்நிலையையே மெய்கண்டோனென்றும், மெய்யன் என்றும் கூறப்படும். இம்மொழியையே பாலிபாஷையில் தானே தானே சுயம்பாதலை ததாகதரென்றும், மெய்யனை புத்தரென்றும், அழைக்கலாயினர். மெய்கண்டவுடன் பஞ்சஸ்கந்த விவகார ஆன்ம பற்றற்று புளியம்பழத்தின் ஓடுபோல் உடலுயிர் என்னும் பெயரற்று அநித்திய அனாத்தும் நிருவாணநிலை அடைகின்றான். தாயின் கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அதன் மூச்சானது உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது சுவாபம். - 2:16; செப்டம்பர் 30, 1908 - தாயினது கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அது முட்டுவதும், உலாவுவதும் சகலருக்கும் தெரிந்த விஷயம். அவ்வகை உலாவும் குழவிக்கு அதன் மூச்சானது உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது இயல்பாம். அஃதெவ்வகையால் உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது என்பீரேல் உந்தியாகும் கொப்புழை ஆதாரமாகக் கொண்டு இடதுபுற மார்பின் உள்ளுக்கே மேலேறி இருகண்களின் மத்திய நாசிமுனையைத்தாவி சிரசின் உச்சியைக் கடந்து பிடரிவழியில் இறங்கி வலது முதுகின்புறம் இழிந்து கொப்புழென்னும் உந்தியில் கலந்து நிற்கும். அந்நாடிக்கு குண்டலி என்றும் அதன் குழலுக்கு பிரம்மரந்தினம் என்றும் கூறப்படும். குண்டலி என்னும் பெயர் வாய்த்தக் காரணம் யாதென்பீரேல், குழவி கருப்பையில் அடங்கியிருக்குங்கால் உள்மார்பிற்கும், முதுகிற்கும் ஓடிக் கொண்டிருந்த மூச்சானது கருப்பையைவிட்டுக் குழவி வெளிவந்து விழுந்தவுடன் வாய்திறந்து கா - கூ என்று கூச்சலிடுங்கால் நாசியுந் திறந்து உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த மூச்சு உள்ளுக்கும் வெளிக்கும் ஓடும்படி ஆரம்பித்துக்கொள்ளுகின்றது. அவ்வாரம்பத்தால் முன்பு உள்ளுக்கு ஓடும் வழி கொடுத்திருந்த நாடியானது குளிர்ச்சியால் மண்டலமிட்டு சுருண்ட பாம்புபோல் உந்தியினிடமாக வளைந்து அவ்வழியை அடைத்துவிடுகின்றது. கருப்பையில் நீண்டோடிக் கொண்டிருந்த நாடி குழவி வெளிவந்து விழுந்தவுடன் சுருண்டு அவ்வழி அடைந்தபடியால் அதற்கு குண்டலி நாடி என்று பெயரிட்டார்கள். அக்குழலுக்கு பிரம்மரந்தினமென்னும் பெயர் வந்த காரணம் யாதென்பீரேல், அக்குழலின் வழியே மூச்சை மறுபடியும் உள்ளுக்குத் திருப்பிக் கொண்டவனுக்கு மாளாப்பிறவி துக்கமற்று நிருவாணசுகம் உண்டாகிறபடியால் அதின் நற்செயலுக்காய் அக்குழலுக்கு பிரம்மரந்தினம் என்னும் பெயரை அளித்துள்ளார்கள். அப்பிரம்மரந்தினக் குழலுள்ள நாடி இடது மார்பிற்கும், வலது முதுகிற்கும் சுற்றி நிற்கின்றபடியால் அப்புலனைத் தெரிந்துக் கொள்ளும் உபநயனமாம் உள்விழி கண்டசாதனனென்று உலகோரறிந்து வேண்வுதவி புரிந்து வருவதற்காக மதாணி பூணுநூலென்னும் முப்புரி நூலை இடது மார்பிற்கும், வலது முதுகிற்குமாக அணைத்துக் கொள்ளும்படிச் செய்து அவனை இல்லறவாசிகளுக்குக் காண்பித்து இந்நூல் அணைந்த அடையாளம் பெற்றவன் ஐம்புலனடக்குந் தென்புலத்தானாதலின் நீங்கள் யாவரும் அவனுக்கு வேண்டிய உதவிபுரிந்து கடைத்தேறச் செய்ய வேண்டும். உங்கள் உதவியால் அவ்வொருவன் கடைத்தேறுவானாயின் உயர்ந்தோனால் உலகமும் கடைத்தேறும். ஆதலின் மதாணிப்பூநூல் மார்பிலணைந்துள்ள ஒவ்வொரு ஞானசாதகர்களுக்கும் புத்தசாங்க வியாரங்களுக்குச் சென்று இல்வாழ் மக்கள் வேண உதவி புரிந்து வந்தார்கள். மண்டலமிட்ட குண்டலநாடி அறிந்தோனென்று மக்கள் அறிந்து கொள்ளுமாறு மதாணி பூணூல் மார்பில் அணையும் ஓர் அடையாளம் இட்டுள்ளார்கள். இப்பூணுநூல் அடையாளம் ஞானசாதகர்க்கு புத்தபிரான் காலத்திலேயே அளித்துள்ளதாகும். பின்கலை நிகண்டு காப்புக்கு முன்னெடுக்குங் / கடவுடான் மாலேயாகும் பூப்புனை மலரின் செவ்வி / புனைபவ னாதவானும் காப்பவ னாதலானுங் / கதிர்முடி கடகத்தோளில் வாய்ப்பதா மதாணி பூணூல் / வரிசையிற் புனைதலானும். மணிமேகலை புரிநூன் மார் பிற்றிரி புறவார்சடை மரவுரியாடையன் விருட்சிகனென்போன். இத்தகையப் பூணுநூலுக்கு ஆதாரமாகும் குண்டலி என்றும், பிரம்மரந்தினம் என்றும் வழங்கும் நாடியின் மகத்துவத்தை அடியில் குறித்துள்ள பாடலால் காணலாம். சிவவாக்கியர் உருதரித்த நாடிதன்னி லோடுகின்றவாயுவை கருத்தினாலிருத்தியேகபாலமேற்றவல்லிரேல் விருத்தர்களும் பாலராவர் மேனியுஞ்சிவந்திடும் அருள்தரித்த நாதனாணை அம்மையாணை யுண்மெயே. ஞானாசிரியரால் அருளப்பெற்ற உபநயனமென்னும் உதவி விழியாகும் ஞானக்கண் பெற்று புருவமத்திய சுழிமுனை நாடியை அழுத்தி சதா விழித்து சருவ பாசபந்தங்களையும் ஒழித்து நனவினில் சுழித்தியாகி தூங்காமல் தூங்குங்கால் தசநாடிகளின் தொழிலொடுங்கி குண்டலி நாடி நிமிர்ந்து தசநாதங்கள் தோன்றி கலங்கச்செய்யும் என்றும், தாயுமானவர் ஆங்கார முள்ளடக்கி / ஐம்புலனை சுட்டறுத்து தூங்காமற்றூங்கி / சுகம்பெருவதெக்காலம். திரிமந்திரம் அற்றார் பிறவி யவரிருகண்களை / வைத்தார் புருவத்திடையே நோக்கி ஒத்தேயிருக்க வுலகெலாந் தெரியும் / எத்தாலுஞ்சாவில்லை இறையாவனாமே. அகஸ்த்தியர் ஞானம் விழித்து மிகுபார்த்திடவே பொறிதான்வீசும் முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும் சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால் சத்தமென்ற நாதவொலி காதிற் கேழ்க்கும் இழுத்ததென்று நீகூடத் தொடர்ந்தாயானால் எண்ணொண்ணா பிறப்பிறப்பு யெய்தும்பார் அழுத்திமனக் கேசரத்தி னின்று மைந்தா அப்பனே லலாடத்தில் தாங்குவாயே. - 2:17: அக்டோபர் 7, 1908 - பாம்பாட்டி சித்தர் ஒங்காரக்கம்பத்தின் உச்சிமேலே / உள்ளும் புறம்பையும் அறியவேண்டும் ஆங்காரகோபத்தை யடக்கிவிட்டே / ஆனந்தவெள்ளத்தைத் தாங்கிக்கொண்டே போங்காலஞ்சாங்காலம் ரண்டு மறவே / புருவமைய சுழிமுனைதனிலே தூங்காமற்றூங்கியே சுகம்பெறவே / தொந்தோம் தொந்தோ மென் றாடாய்பாம்பே. அகஸ்தியர் பரிபாஷை அமுதமிழியோகமது செய்யவென்றால் அப்பனே கால்நீட்டி படுத்துக்கொண்டு மமதையில்லாவலக்கையை முடி மேல்வைத்து வழுத்துப்பூரணத்தை சுழிமுனையைமேவி சமரசமா வாசியை நீ யிழுத்துக் கொண்டு சமர்த்தாகக் கேசரத்தில் மனதைவைத்தே அமதியொடு பராபரத்தை தரிசித்தேதான் அப்பனே லலாடத்தில் தூங்குவாயே. தாயுமானவர் தூங்கிவிழித் தென்பைலன் / தூங்காமல் தூங்கினிற்கும் பாங்குகண்டா லன்றோ / பலன்காண்பேன் பைங்கிளியே. நனவினில் கழுத்தியாகி நன்மகன் பேறுபெற்றான் என்னும் மனத்தின் கண் சொற்பக் களங்கமேனும் அணுகாவண்ணம் ஜாக்கிரா ஜாக்கிரத்தினின்று சாந்தம், யீகை, அன்பென்னுஞ் செயல்களே பெருகி ஜாக்கிரா சொற்பனத்திலும் அதுவாய் சதா உள்விழியாம் உபநயன பார்வையால் சுழிமுனையை விழித்துநோக்கி ஜாக்கிரா சுழித்தியடைந்தபோது தசநாதங்களும் எழுந்தடங்கி சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான். அச்சுயம்பு ஒளியாம் தேயுவின் அகமே இராகத்துவேஷ மோகங்களால் சூடுகொண்டழிப்பது தவிர்ந்து சாந்தம், ஈகை, அன்பென்னும் பெருக்கத்தினால் தேயுவின் அகம் குளிர்ந்து தன்னை உணர்ந்து புளியம்பழம்போலும் ஓடுபோலும் பிரிந்து மனிதனென்னும் பெயரற்று குளிர்ந்த தேய்வகமாம் தெய்வமென்னும் ஏழாவது தோற்றப்பெயர் பெறுகின்றான். பூமியிலிருந்து புற்பூண்டுகள் தோன்றி புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்சீடாதிகளினின்று மட்சம், பட்சிகள் தோன்றி, மட்சம், பட்சிகளினின்று மிருகாதிகள் தோன்றி, மிருகாதிகளினின்று மக்களாம் மனுக்கள் தோன்றி, மனுக்களினின்று தேவர்களாகத் தோன்றும் ஏழாவது தோற்றத்து இயல்பு இதுவேயாகும். மனிதனுக்குள்ள தேயுவின் அக்கினியாம் துற்செயல்கள் யாவையும் அகற்றி நற்செயலாந் தேயு குளிர்ந்து சாந்தம் நிறைந்தவிடத்து தேவன் என்னும் பெயரும், சருவ சீவர்களின் மீதும் அன்பு பாராட்டி ஆதரிக்கும் குளிர்ந்த நிலை அடைந்தவிடத்து அந்தணனென்னும் பெயரும் பெறுகின்றான். சீவகசிந்தாமணி ஊன்சுவைத் துடம்புவீக்கி / நரகத்திற் புகுதனன்றோ யூனறினா துடம்புவாட்டித் / தேவரா யுரைதனன்றோ யூன்றியிவ்விரண்டினுள்ளு / முறுதிநீ யுரைத்தி யேன்ன வூன்றினா தொழிந்து புத்தே / ளாவதே யுறு தியேன்றான். திரிக்குறள் அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண மெய்ப்பூண்டொழுகலால். பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடைபிடியுங்கள், உங்களிதயத்தை சுத்தி செய்யுங்கள் எனும் மும்மொழிகளே திரிபேதவாக்கியங்கள் என வழங்கும் அருமொழி மூன்றையும் சிரமேற்கொண்டு தங்களுக்குள் உள்ளப் பாபச்செயல்களையும், குணங்களையும் பற்றற அறுத்தும் இனிசேரும் பாபச்செயல்களையும், பாபகுணங்களையும் சேரவிடாமல் அகற்றியும், தங்களுக்குள் உள்ள நன்மெய்ச்செயல்களையும், நன்மெய்க் குணங்களையும், நாளுக்குநாள் விருத்தி செய்தும், இனிசேரும் நன்மெய்க்குணங்களையும், செயல்களையும் நாளுக்குநாள் சேர்த்தும், தங்களுள்ளமாம் இதயத்திலுள்ளக் களங்கங்களை அகற்றி நாளுக்குநாள் சுத்தி செய்துக் கொண்டும், இனி இதயத்துள் வந்தணுகும் களங்கங்களை அணுகவிடாமல் அகற்றிக்கொண்டும் வரும்படியான சாதனங்களையே இடைவிடாது சாதிப்பதினால் கண்ணினாற் பார்த்த வஸ்துக்களை மனம் நாடிச்செல்லுவதும், நாவினால் உருசித்த பதார்த்தங்களை மனம் நாடிச்செல்லுதலும், செவியால் இனிதாகக் கேட்ட வார்த்தையை மனம் நாடிச் செல்லுதலும், நாசியால் சுகந்த கந்தத்தை முகர்தவிடத்தை மனம் நாடிச்செல்லுதலும், தேகம் சுகித்தவிடத்தை மனம் நாடிச்செல்லுதலுமாகிய ஐம்புலச் செயல்களற்று பொறிவாயலில் ஐந்தவித்த பலனே வேதமொழியின் மார்க்கப்பலன்கள் எனப்படும். பேதவாக்கியங்களாகும் மூன்று அருமொழியின் பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று பெண்ணிச்சையற்று காமத்தை ஜெயிக்கின்றான். சீவகசிந்தாமணி ஆசைஈயர்வமோ டையமின்றியே / யோசைபோயுல குண்ணநோற்றபி னேசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார். இத்தகைய பற்றுக்களற்று உபநயனமாம் உள்விழியால் புருவமத்திய சுழிமுனையை நாடிய நிலைக்கே வேதமுடிவு என்றும், வேத அந்தமென்றும் கூறப்படும். சுத்த இதயத்தினின்று தன்னைபார்க்குங்கால் உனது, எனது என்னும் பின்னபாசங்களற்று சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கவும் உயிர்களால் யாதொரு துன்பம் தனக்கணுகினும் அவற்றிற்கு பிரதி துன்பம் அளிக்காது காக்கும் குணத்திற்கு பிரம்மமென்று பெயர். பூமியை ஓர் மனிதன் கொத்திப் புழுதியாக்கி பண்ணியங்கலைக்கிய போதும் அஃது பெரும்பலனைக் கொடுத்து வருவதுபோல் மனிதனும் பலரால் துன்பப்படினும் அவர்களுக்கு நற்பலன் அளித்தே வருவானாயின் அந்த சிரேஷ்ட செயலுக்கு பிரமனென்னும் பெயரை அளித்திருக்கின்றார்கள். மச்சமுனியார் ஞானம் நித்தமுநி சுத்தமதாய் நின்றுபார்த்தால் நின்தேகம் பிரம்மமடா நீ தான் காண்பாய் சுத்தமுடன் சோதிமனக் கண்ணாவந்த சுருதிமுடிவானசுட ரொளியைக்கண்டால் பத்தியுள்ள தேகமது சுத்தமாச்சி பாலகனே யவமிருத்து பரந்துபோச்சு வெத்தியுள்ள வஷ்டசித்துங் கைக்குள்ளாச்சு வேதாந்தப்புருவமதை மேவிநில்லே. மூன்று அருமொழிகளாம் பேதவாக்கியங்களின் பலனாகும் சுழிமுனையில் காணும் சுயஞ்சோதியாம் தோற்றத்திற்கே சுருதி முடிவென்றும், வேதமுடி என்றும், வேத அந்தமென்றும் கூறியுள்ளார்கள். இதுவே வேதாந்தமாகும். இத்தகைய சாதனமுற்றவனை யமகாதகனென்றும், காலகாலனென்றும், மரணத்தை ஜெயித்தோனென்றும் கூறியுள்ளார்கள். - 2:18; அக்டோபர் 14, 1908 - பாம்பாட்டி சித்தர் வேதப்பொரு ளின்னதென்றும் வேதங்கடந்த மெய்ப்பொருளைக்கண்டு மனமேவிவிரும்பி போதப்பொளின்னதென்று போதனைசெய்யும் பூரணசற்குருதான் கண்டாடாய்பாம்பே. திரிபேத வாக்கியங்களாகும் மூவருமொழியாம் பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடை பிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மும்மொழிகளுள் பாபஞ்செய்யாதிருங்கள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்தொழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான். நன்மெய்க் கடைபிடியுங்கள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்து ஒழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான். இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்னும் ஓர் மொழியைக் கடைபிடித்து ஒழுகுவானாயினும் மரணத்தை ஜெயிப்பான். தாயுமானவர் சந்ததமும் வேதமொழி யாது வொன்றை பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் ஜகமீதிருந்தாலு மரணமுண்டென்பது ச தா நிஷ்டர் நினைவதில்லை. இடைகாட்டுசித்தர் சாகாதிருப்பதற்குத் தான்கற்குங்கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன் மனமே. அகப்பேய்சித்தர் பாவந்தீரவென்றால் அகப்பேய் / பற்றற தில்லுமடி சாவதுமில்லையடி யகப்பேய் / சற்குரு போதநிலை. ஒளவை ஞானக்குறள் துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு. கடுவெளி சித்தர் மெய்ஞ்ஞான பாதையிலேறு, சுத்த / வேதாந்த வெட்டவெளி தனைத்தேறு அஞ்ஞானமார்க்கத்தைத் தூறு, உன்னை / அண்டினோர்க் கானந்தமா அறங்கூறு. பேதவாக்கிய மார்க்கத்தில் நடந்து பேத அந்தமாம் வேதாந்தத் தினிலைத்தவன் தன்னையறியும் உண்மெயுற்று திரிகாலங்களையும் உணர்ந்து பிரமமணமாம் நற்செயல்வீசி சருவசீவர்களுக்கும் உபகாரியாய் விளங்கி அறஹத்தென்றும், பிராமணனென்றும், அந்தணனென்றும், விவேகிகளால் அழைக்கப்பெற்று சருவசீவர்களுந் தேவனென்று வணங்கத்தக்க ஏழாவது தோற்றத்தில் இருந்து தனது சங்கத்தோர் யாவரையும் அழைத்து தான் பரிநிருவாணமடையும் காலத்தை விளக்கி புளியம் ஓடுபோலும், பழம்போலும் புழுக்களினின்று விட்டில் வெளிவருதல் போலும் பயிர அங்கமாம் தேகத்தினின்று அந்தர அங்கமாம் உண்மெயொளியாய் வெளிவந்துவிடுவான். தாயின் வயிற்றுநின்று பயிரங்கமாய் பிறந்த பிறப்பு ஒன்றும், பயிரங்கமாந் தேகத்தினின்று அந்தரங்கமாய் சோதிமயமாய்ப் பிறந்த பிறப்பொன்றும் ஆக இரு பிறப்பானது கொண்டு பிராமணர் அந்தணரென்னும் மகாஞானிகளை இரு பிறப்பாளர் என்று வழங்கிவந்தார்கள். இதுவே புத்தசங்க அறஹத்துக்களிடம் பெற்ற உபநயனத்தின் பயனும், சுருதி முடிவின் பயனும், வேத அந்தத்தின் பயனுமாகும். பட்டினத்தார் நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீ மனமே மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் ஏற்றிக்கிடக்குது யெழுகோடி மந்திரம் என்னகண்டாய் ஆற்றிற்கிடந்துந் துறைதெரியாமலலைகின்றயே. நெஞ்சறி விளக்கம் காட்டினில் மேவுகின்ற / கனபுழுவெல்லாம் பார்த்து வேட்டுவ கெடுத்துவந்து / விரும்பிய கிருமிதன்னை கூட்டினி லடைத்துவைத்து / குளவிதன் னுருவாய்செய்யும் நாட்டினி நீதா நாகை / நாதரை வணங்கு நெஞ்சே. இத்தகைய தேகத்திலிருப்பதை அறுவெறுத்து புறமெய் வேறு, அகமெய் வேறாகக் கழட்டிக் கொள்ளுவோர்களை ஜீவன் முத்தர்கள் என்று கூறப்படும். இஃதை அநுசரித்தே பட்டினத்தார் தனது சற்குருவாகும் புத்தபிரான் அரசனாகவிருந்து குருவாகத் தோன்றி விளக்கிய மகத்துவத்தைப் போதிக்கின்றார். பட்டினத்தார் மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வான் குருவும் கோனாகி யென்னை குடியேற்றுக்கொண்டனன் குற்றமில்லை போனாலும் பேரிருந்தாலு நற் பேரிது பொய்ன்றுகா ணானாலு மிந்த வுடம்போ டிருப்பதறுவெறுப்பே. இத்தகைய அறஹத்துக்கள் ஆதியாகிய குருநாதனுக்கு சமதையாய் சம - ஆதி, சமாதியாகிப் புறமெய் அகற்றி உண்மெயொளியாய் அகண்டத்துலாவி நட்சேத்திரம் பெற்றிருக்கின்றார்கள். அகஸ்தியர் மாணாக்கனை சுழிமுனையாம் வேத அந்தத்தில் நிறுத்தி சாதனத்தை போதித்த பாடல் பண்ணினால் ஜடம்போக தெத்தனைநாளாய் பலவாகமெளனத்தை விரித்துச்செல்வேன் ஒண்ணினால் மௌனத்தில் ரவியைப்பாரு உறுகியுல்லோவகண்டத்தின் வெளியைக்காட்டும் கண்ணினால் ஜடங்காணும் பிடிக்கப்பொய்யாம் கற்பூர தீபம்போல் ஒளியாய் நிற்கும் தண்ணினால் சாய்கையில்லை யகண்டமாவாய் சச்சிதானந்தமென்ற தேகமாமே. தேய்வக்கதி - இதுவே தெய்வகதி யென்னப்படும். சீவகசிந்தாமணி திருவிற் பொற்குலாய தேர்ந்தார் / தேவர் தன் தண்மெய் செப்பிற் சுருவத்துசென்று தோன்றார் / கானிலந் தோய்தல் செல்லா குருவமே லெழுதலாகா / வொளியுமிழ்ந் திலங்குமேனி பரிதியி னியன்றதொக்கும் / பன்மலர் கண்வாடா. மச்சமுனியார் ஞானம் கேட்டறிந்துக்கொள் வீடென்ன காடென்ன கெட்டிப்பட்ட மெளனத்திலே நின்று மாட்டறிந்துக்கொள் வஸ்துவை யுண்டுநீ மனதைத்தாண்டி யறிவுக்குள்ளேச் செல்லப் பூட்டறிந்துக்கொள் பொன்போலதேகமாம் புத்தியோடு மகண்டத் துலாவலாம் ஆட்டறிந்துக்கொள் கற்பூர தேகமாம் அகண்ட சோதியும் சித்தியுமாச்சுமே. ஒளவையார் ஞானக்குறள் வெள்ளி பொன் மேனியதொக்கும் வினையகன் / உள்ளுடம்பினாய வொளி. - 2:19; அக்டோபர் 21, 1908 - புத்தசங்கத்தோருள் சமணநிலை கடந்து அறஹத்துக்கள் என்னும் அந்தணநிலை அடைந்து இருபிறப்புண்டாய் சுயம்பிரகாசமாய் அந்தரத்தில் உலாவுகின்றார்கள். இவர்களையே சீவன்முத்தர்கள் என்றும், சீவகர்கள் என்றும் கூறப்படும். சிலப்பதிகாரம் தண்ணலம் பெருந்தவத் தாசீவகர்முன் / புண்ணியதானம் புரிந்தறங்கொள்ளவும். கீடாதிகளாம் புழுக்களானது ஓர் இலையால் தன்னைமூடி திரண்டுருண்டு சிலகால் தொங்கலாடி வெடித்து இறகுகளுண்டாகி பறந்து போவது போல் புத்த சங்கத்தைச் சேர்ந்த அறஹத்துக்களாகும் அந்தணர்கள் தாங்கள் இரு பிறப்படைய ஓர் திங்களிருக்குங்கால் சங்கத்தோர்களுக்கும், அத்தேசவரசனுக்குந் தெரிவித்து தங்கள் வியாரத்துக்கருகில் ஓர்கல் அறைக்கட்டி அதற்குத்தக்க சதுரரைக்கல் மூடியொன்று செய்வித்து கல்லறையில் சாம்பலையும், கற்பூரத்தையும் கொட்டி அமாவாசையிலேனும் பெளர்ணமியிலேனும் அறறத்துவானவர் அதில் உட்கார்ந்து சதுரக்கல்லால் மூடிவிடச் செய்து ஆதிக்குச்சமமாய் சுயம்பிரகாசமாக வெளிதோன்றி இருபிறப்பாளனாவர், இதுவே சம ஆதி, சாமாதி என்று கூறப்படும். புத்தராம் ஆதிக்குச் சமமான நிலையாம். இத்தகையச் சமாதியடைந்தவர் அரசனேயாயினும் அன்றேல் அரசவங்கத்துள் சேர்ந்த ஒருவராகவேனும் இருந்திருப்பாராயின் அவரது தன்மகன்மக்கிரியைகளுக்கு உரியவர்கள் யாவரும் பதினைந்தாநாள் மாலை வாகனமின்றி நடந்துவந்து கல்லறையணுகி அறஹத்தோ, அறஹத்தோ எனும் சப்தம் இட்டு அறையின்மேல் மூடியுள்ள கல்லை எடுப்பார்கள். அக்கால் அவருடைய சிரசின் உச்சிவெடித்து பீடங்கலையாமலுஞ் சிரங்கவிழாமலும் இருக்குமாயின் சகலரும் அறத்தோ எனும் பெருங்கூச்சலிட்டு ஆனந்தம் கொண்டாடி கற்பூரத்தாற் குழியை மூடி முன்சதுரக்கல்லால் அடைத்து பீடிகையை கட்டிவிட்டு கன்மத்தின் ஆதியாய தன்மகன்மமாகும் ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானம் முதலியவை செய்வதுமன்றி வருடந்தோரும் அவர்பெயரால் அத்திதியன்று தன்மகன்ம அன்னதானஞ் செய்துவருவார்கள். இவ்வகையாய் இல்லத்தைவிட்டு சமாதி அறைவறையிலும் வாகனமின்றி நடந்துசெல்லுவதை நடப்பென்றும், அறையின்மீது மூடியுள்ளக் கல்லை எடுப்பதை கல்லெடுப்பென்றும் வழங்கப்படும். இத்தகையக் கல்லெடுப்பு சோதனையால் சிரசின் உச்சி வெடிக்காமல் முடிசாய்ந்து துஞ்சிகிடக்குமாயின் மைந்தனும் மக்களும் தங்கள் தந்தை சமாதி என்னும் மரணத்தை ஜெயித்த ஆனந்தத்திற்கு வராமல் இறந்தார் என்னும் இழிவுக்கு வந்தோம் என்று துக்கித்து கல்லறையை மூடிவிட்டு இல்லஞ்சேர்ந்து தங்கள் முடிகளைக் கழட்டி எறிந்துவிட்டு நமது தந்தை ஞானவீரனாகும் ஆண்பிள்ளையாகாமல் விழலாய்ச் சங்கஞ்சார்ந்த வீண்பிள்ளை ஆயினரென்று தங்கடங்கள் மீசைகளையுஞ் சிறைத்துவிட்டு துக்கத்திலிருப்பார்கள். ஞானவானாகாமல் யீனவான் ஆனாரென்னும் துக்கத்தை ஆற்றுதற்கு தங்கள் குடும்பத்தோர் யாவரும் வந்துசேர்ந்து உங்கள் தந்தை மரணத்தை ஜெயிக்காமல் பிறவி துக்கத்திற்கு ஆளாயினர் என்னும் கவலையால் முடியைக் கழட்டி எறிந்துவிட்டும், மீசையை சிறைத்துவிட்டும் இருப்பது சரியல்ல. பதினாறாவது நாள் நாங்கள் யாவரும் கூடி உன் தந்தை தறித்த முடியை மறுபடியும் தறிக்கின்றோம் நீவிரதைத் தறித்துக் கொண்டு இராட்சியந்தாங்கி உன்மைந்தனுக்கு முடிசூட்டிவிட்டு புத்தசங்கஞ்சார்ந்து சமணநிலைக்கடந்து அறஹத்துவாகி மரணத்தை ஜெயித்து மகாபரிநிருவாணம் அடைவாயாக வென்று ஆசீரளித்துப் போவார்கள். இதுவே மரணமடைந்த இழிவுக்காய் மீசைசிறைத்து முடியை கழற்றியெறிந்து நீராடி இழிவுக்குப் போனோம் என்னும் கல்லெடுப்பு எனப்படும். இல்லறத்தோர்க்குள்ளும், துறவறத்தோர்க்குள்ளும் உண்டாகும் செயல்களில் இறந்தார் என்னும் இழிவையும், துறந்தார் என்னும் மகிழ்வையும் கொண்டாடி சகலருக்கும் ஞான உற்சாகத்தை உண்டாக்கிக் கொண்டு வந்தார்கள். அத்தகைய தன்மகன்ம உற்சாகங்களானது அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதற்கு இணங்க புத்தமார்க்க அரசர்கள் எவ்வகையில் நடந்துவந்தார்களோ அதனைப் பின்பற்றி அநுசரித்து வந்தக் குடிகள் தற்காலம் நூதனமாகத் தோன்றியுள்ள சிவமதம், விஷ்ணுமதம், பிரமமதம், ஆரிய மதங்களைத் தழுவிக் கொண்டபோதிலும் பூர்வ புத்தசங்க மந்திரவாதிகளின் தன்மகன்மங்களையே அனுசரித்து வருகின்றார்கள். புத்தசங்கத்தைச் சார்ந்த சமண முநிவர்களுள் உபநயனம் பெற்று வேத அந்தத்தில் நிலைத்து அறஹத்துக்களாம் அந்தணர்களாகி தேகத்தைக் கழற்றி இருபிறப்படையும் ஜீவன்முத்தர்களாம் சீவகர்களானோர் நீங்கலாக அஷ்டசித்தின் அந்தத்திற்கும், வேத அந்தத்திற்கும் மத்தியில் நிலைத்து தேகத்தை நீருடன் நீராய்கலத்தலும் நெருப்புடன் நெருப்பாய்க்கலத்தலும், காற்றுடன் காற்றாய் கலத்தலும், மண்ணுடன் மண்ணாய் கலத்தலும், விண்ணுடன் விண்ணாய் கலத்தலுமாகிய எண்பத்தொன்பது சித்துக்களும் விளையாடி அந்தரத்து உலாவுகின்றார்கள். இவர்களையே விதேகமுத்தர்கள் என்றும், சாரணர்கள் என்றும், சித்தர்கள் என்றும் கூறப்படும். பின்கலை நிகண்டு நீரினில் பூவில் வானில் / நினைந்துழி யொதுங்குகின்ற சாரண் ரெண்மராவர் / சமணரிற் சித்திபெற்றோர். மணிமேகலை நிலத்திற்கலத்து நெடுவிசும்பேறிச் / சலத்திற்றிரியுமோர் சாரணன்றோன்றி. சிலப்பதிகாரம் இந்திரவியார மேழுடன்புக்காங் / கந்தரசாரிக ளாறைம்பதின்மர். அந்தர சாரிகள் மறைந்தனராற்று / இந்திரவியார மேழுடன் போகி. சீவகசிந்தாமணி இலங்கு குங்கும மார்பனேந்துசீர் / நலங்கொள் சாரணர் நாதன்கோயிலை வலங்கொண்டார் மலர்ப்பிண்டி மாநிழற் / கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான். பாம்பாட்டிசித்தர் வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்குமாயினும் வல்லுடம்புக் கோர்குறைவு வாய்த்திடாது மெய்ச்சசட முள்ளவெங்கள் வேதகுருவை வேண்டித் துதித்துநின் றாடு பாம்பே. மூண்டெறியு மக்கினிக்குண் மூழ்கிவருவோம் முந்நீரி லிருப்பினு முழுகிநிற்போம் தாண்டி வரு வெம்புலியைத் தடுத்தாளுவோம் தார்வேந்தர் முன்புநின் றாடாய்பாம்போ. - 2:20; அக்டோபர் 28, 1908 - சீவக சிந்தாமணி நலத்திரு மா மக ணயந்த தாமரை / நிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோ லுலப்பருத் தவத்தினா லோங்கு சாரணர் / செலத்திரு விசும்பொளி சிறந்ததென்பவே. சுருதி முடிவென்றும், மறைமுடி வென்றும், வேத அந்தமென்றும் வழங்கும் வேதாந்தத்திற்கும், அஷ்டசித்துக்களின் அந்தமாம் சித்தாந்தத்திற்கும் மத்தியில் தேகத்துடன் அந்தரத்துலாவுவோர்களே சித்தர்களென்றும், சாரணர்களென்றும் அழைக்கப் பெற்றார்கள். இதை யநுசரித்தே தாயுமானவர்சித்தர்களை தியானிக்குங்கால் ‘வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே’ என்றுங் கூறியுள்ளார். இத்தகைய வேதாந்திகளும் சித்தாந்திகளும் தற்கால முளரோவென்று உசாவுவாறுமுண்டு. அவர்கள் அந்தரத்தில் நட்சேத்திரம் பெற்று அகண்டத் துலாவுகினும் நமது அஞ்ஞானம் நிறைந்த ஊனக்கண்ணிற்குப் புலப்படாமல் இருக்கின்றார்கள். சாந்தம், ஈகை, அன்பெனும் காருண்ய முகத்தினின்று உபநயனமாம் உள்விழிப் பார்வையால் அவர்களைக் காணக் கூடும். தாயுமானவர் ஞானசுகுணாகர முகங்கண்போதிலோ திலோ நவனாதசித்தர்களு முன் னட்பினைவிரும்புவார் சுகர்வாமதேவர் முதன் ஞானிகளு முனை மெச்சுவார். இதயசுத்தத்தாலும், வேதாந்தமாம் உபநயன பார்வையாலும், காமனையும் வென்று மரணத்தை ஜெயித்து அறஹத்து, பிராமணர், அந்தணரென்னும் பெயர்பெற்று புளியம்பழம் போலும், ஓடுபோலும் தேகத்தினின்று மறுபிறப்படைகின்றவர்க ளெவரோ அவர்களே இருபிறப்பாளரென்னும் யதார்த்த பிராமண வேதாந்திகளாவர். இத்தியாதி சத்தியதன்மங்களையும் தெள்ளற விளக்கி உலக சீர்திருத்தத்திற்கு ஆதியாகவும் மக்களின் தெய்வத்தோற்றத்திற்கு ஆதியாகவும் மனவமைதியால் மரணத்தை ஜெயிக்கும் மார்க்கத்திற் காதியாகவும் சாந்த நிலையமைதியால் அந்தணர்களென்று பெயர்பெற்றவர்களுக்கு ஆதியாகவும் நல்லொழுக்கத்தில் உண்டாகும் சகல சித்துக்களினுட்பொருட் ஆதியாகவும் விளங்கி ஆதிதேவனென்றும், ஆதிகடவுளென்றும் ஆதிவேதமென்றும், ஆதிநாதனென்றும் ஆதிபிரமமென்றும், பெயர்பெற்றவர் ஜெகத்குருவாம் புத்த பிரானேயாகும். சக்கிரவர்த்தித் திருமகனாகும் சாக்கையமுனிவர் உலகெங்குஞ் சுற்றி பேரானந்த சத்திய தன்மத்தை ஊட்டி சீர்திருத்தியுமிருக்கின்றார். மணிமேகலை எண்ணருஞ் சக்கரவான மெங்கணும் / அண்ணறைக் கதிர் விரிக்குங்காலை. சிலப்பதிகாரம் விரிகதிர்பரப்பி யுலகமுழுதாண்ட / வொருதனித் திகிரி யுரவோற்காணேன். சூளாமணி தெருளாமெயால் வினவற்பாலதொன்றுண்டு திருவடிகள் செம்பொனாரற சாரறறிந்தமேந்த விருளாழிளேழுலகுஞ் சூழொளியின்மூழ்க விமையாமதசெங்கண்ணி மொளிமணி னிமையோர் வந்தேத்த வுருவாழியானு அழியாது. மொ மணி முடி மேற்குகைவைத் தொருபாலில் வரவுலக நின்னுழையாதாக வருளாழி முன்செல்லப்பின் செவ்வதென்னோ வடிபடாதாய் ஈதாய் நின்ற வகன்ஞால முண்டோ பின்கலை நிகண்டு உலகெலா மிறைஞ்சி யேத்த / வுலகெலா முணர்ந்தமூர்த்தி இவ்வகையாய் புத்தபிரான் உலகெங்குஞ் சுற்றி சத்தியதன்மத்தை மக்களுக்கு விளக்கினாரென்னும் சரித்திராதாரங்களுள்ளதன்றி அவரது நிஷ்டாசாதன உருவத்தைக் காட்டுஞ் சிலைகளும், அவர் சின்முத்திரை முதலிய பதினாறு முத்திரைகளைக் காட்டிய உருவச்சிலைகளும், நிருவாணமடைந்த அறப்பள்ளி உருவம் போன்ற சிலைகளும், உலகெங்குங் காணப்படுவதை அந்தந்த தேச மீயூஜியங்களிலும், ஆர்ச்சலாஜிகல் சர்வே புத்தகங்களாலும் தெரிந்துக் கொள்ளலாம். இருப்பிறப்பாளராகிய அந்தணர்கள் யாவருக்குத் தந்தையும் ஆதி அந்தணருமாக விளங்கிய வரும் புத்தபிரானேயாம். திரிக்குறள் அறவாழியந்தணன்றாள் சேர்ந்தார்கல்லார் / பிறவாழி நீந்தலரிது. சீவகசிந்தாமணி திருமறுமார்பினை திலகமுக் குடையினை / யருமறை தாங்கிய வந்தணர் தாதையை யருமறை தாங்கிய வந்தணர் தாதைதின் / னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும். சாதிப்பைம் பொன்றன் னொளிவெனவித்தகைகுன்றா நீதிச்செல்வம் மேன்மேணீந்தி நிறைவெய்தி போதிச்செல்வம் பூண்டவரேத்தும் பொலிவின்னால் ஆதிக்காலத் தந்தணன் காதன் மகனொத்தான். சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் கார்த்து சாந்தனிறைவால் ஆதியந்தணராகவும், அந்தணர்களுக்குத் தாதையாய துமன்றி உலக சீர்திருத்தக்காரருள் ஆதியாக விளங்கினவரும் புத்தபிரானோம். மணிமேகலை ஆதிமுதல்வன் அறவாழியாள்வோன் / பாதபீடிகை பணிந்தனளேத்தி. வீரசோழியம் போதிநிழலிற் புநிதன் பொலங்கழல் / ஆதி யுலகிற்காம். சிலப்பதிகாரம் கோதைதாழ் பிண்டி கொழுநிழலிருந்த / ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கி. ஒவ்வோர் மக்களும் நான்குவாய்மெயுணர்ந்து நீதிநெறியின் ஒழுக்கங்களால் தீவினையை அகற்றினோர்கள் யாரோ அவர்களையே தேவர்கள் என்று அழைக்கப்படும். சீவகசிந்தாமணி யாவராயினும் நால்வரைப்பின்னிடில் / தேவரென்பது தேறுமிவ்வையகங் காவன்மன்னவர் காய்வன சிந்தியார் / நாவினும் முரையார் நவையஞ்சுவார். வேறு கற்றவைம்பதங்கணீராக் / கருவினைக் கழுவப்பட்டு மற்றவன் தேவனாகி / வானிடு சிலையிற்றோன்றி யிற்றதனுடம்புமின்னா / விடரொழித்தினியனாகி யுற்றவ னிலையுமெல்லா / மோதியி னுணர்ந்துகண்டான். இத்தகைய தேவராகவேண்டிய செயலுள் மனிதனென்னும் பெயருற்று ஏழாவது தோற்றமாகி ஆதிதேவனாக விளங்கியவரும், ஆதிதேவனெனப் போற்றப்பெற்றவரும் புத்தபிரானேயாம். பின்கலை நிகண்டு தருமராசன் முன்னீந்திரன் சினன் பஞ்ச தாரைவிட்டே அருள் சுரந்த வுணர்க்கூட்டுந் நதர்கதன் ஆதிதேவன் - 2:21: நவம்பர் 4, 1908 - தேகத்தால் உண்டாகுந் தீவினைகள் மூன்றும் வாக்கால் உண்டாகுந் தீவினைகள் நான்கும், மனதால் உண்டாகும் தீவினைகள் மூன்றையும் ஒழித்து சீலந்தாங்கி நிற்பவர்களே தேவர்கள் என்றும், மக்கள் என்றும், பிரமரென்றும் கூறியுள்ளவைகளில், ஆதியந்தணரென்றும், ஆதிதேவரென்றும் புத்தபிரானைக் கொண்டாடியது போலவே பிரமமென்றும் அவரையே துதித்திருக்கின்றார்கள். மணிமேகலை சொல்லியபத்தின் றொகுதியுநீந்து சீலத்தாங்கி தானந்தலைநின்று மேவெனவகுத்த வொருமூன்றுதிரத்து தேவரும் மக்களும் பிரமருமாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயனுகர்வர். மருளுடைமாக்கள் மனமாசு கழுவும் / பிரம தருமனை பேணினராதி. மக்களுள் நன்மெய்க்கடைபிடித் தொழுகுஞ் சாதனத்தால் கடவு ளென்னும் பெயரைப் பெறுகின்றார்கள். பின்கலை நிகண்டு ககனம் விண்படை காடென்ப / கடவுடே முநிநன் மெய்ப்பேர். சீவகசிந்தாமணி தணக்குறப்பறித்தபோதுந் / தானனை விடுத்தல்செல்லா நிணப்புடை யுடம்பினாரை / யாதின நீங்கலாகு மணப்புடை மாலைமார்ப / னொருசொலே யேதுவாக கணைக்கவி வழித்தகண்ணார் / துறந்துபோய்க் கடவுளானான். இத்தகைய மக்களே கடவுளென்னும் பெயர் பெறும் பாகத்தில் ஆதி கடவுளாகப் போற்றப் பெற்றவரும் புத்தபிரானேயாம். சூளாமணி ஆதியாங் கடவுளை யருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசையொதிங்கினை போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய சேதியொன்செல்வநின் திருவடி வணங்கினம். மணிமேகலை கடவுள் பீடிகை தொழுதனளேத்தி சீவகசிந்தாமணி காதிக்கண்ணறிந்து வென்ற / வுலகுணர் கடவுள் காலத் தாதிக்கண் மரங்கள் போன்ற / வஞ்சொலீ ரிதனினுங்கள் காதலிற் காணலுற்ற / விடமெலாங் காண்மினென்றா திக்கணின்ற செங்கோ / னிலவுவீற்றிருந்த பூமான். இவைகளுக்கு முதலாதரவாகத் திருவள்ளுவ நாயனார் தானியற்றியுள்ள திரிக்குறள் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தென்று கூறி அப்பத்து பாடலிலும் புத்தபிரானையே சிந்தித்திருக்கின்றார். மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவித்து காமனை வென்றார்கள் என்னும் பெண்ணிச்சையை ஒழித்தவர்களை ஐந்திரரென்றும், இந்திரரென்றும் அழைக்கப்பெற்றார்கள். சீவகசிந்தாமணி ஆசையார்வ மோடைய மின்றியே / யோசைபோ யுலகுண்ண நோற்றபி னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார். மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்ற வரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரரென்னும் பெயர்பெற்று அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமானாகக் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம். திரிக்குறள் ஐந்தவித்தானாற்றவகல்வி சும்புளார்க்கோமான் / இந்திரனே சாலுங்கரி. அருங்கலைச்செப்பு இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோடாரம்ப / முந்தி துறந்தான் முநி மணிமேகலை இந்திரரெனப்படு மிறைவகம்மிறைவன் / றந்தநூற் பிடகத் தாயாமுன்முதலா, சீவகசிந்தாமணி ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம்பாகி / நீத்தவரு விந்திரவை நின்று தொழுதிமரர் நாத்தழும்ப வேத்திதவ நங்கைவர் நண்னித் / தோத்திரங்களோதிதுகண்மாசு துணிக்கின்றார். சூளாமணி மந்திர மாந்தர் மொழிதலும் வாணிடை / யந்தரம்வாழு மமரர் வழிபடுந் தந்திரஞான்ற தவத்திற் சுரசனா / மிந்திர னன்னாற் கெடுத்துரைக்கின்றான். மநுக்களுள் காம, வெகுளி, மயக்கங்களாம் முக்குற்றங்களையும் அகற்றி அன்பை பெருக்கி இறவாநிலையாகும் நிருவாணத்தை அடைகின்றார்களோ அவர்களையே சிவனென்றும், மக்கள் கதியிற் சிறந்து தேவகதியாம் சிவகதி அடைந்தோரென்றுங் கூறியுள்ளார்கள். திருமூலநாயனார் - திரிமந்திரம் அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார் / அன்பே சிவமாவதி யாருமறிகிலார் அன்பே சிவமாவதி யாருமறிந்தபின் / அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே. சிவயோகசாரம் தானோவசத்தல்ல வென்றறிந்தாற் றாரணியி லேனோபிழைத்திடுவானேழைதான் - றானே யிறவாவதுணீகா ணிற்கவருளின் மறவாதிரு சிவமாவை. சீவகசிந்தாமணி வலம்புரிந்துடம்புநீங்கா தகுந்தவ முயன்மின் யாருஞ் சிவம்புரி நெறியைச்சேர செப்புமிப் பொருளுங்கேண்மிண் காசிக்கலம்பகம் வல்லாண்டகண்டத் தெம்மாதிப் பிரானவி முத்தத்திலே சில்லாண்டிருந்து சிவமாய் செலுஞ் சில செந்துக்களே. இத்தகைய அன்பின் மிகுதியால் ஆதிசிவனென்றும் சகலருக்கும் நிருவாணமார்க்கத்தை ஊட்டியவராதலால் சிவகதிநாயகன் என்றும் ஆதியில் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம். அறநெறிச்சாரம் அவன்கொலிவன்கொ வென்றையப்படாதே சிவன்கண்ணேசெய் மின்கள்சிந்தை - சிவன்றானும் நின்றுக்கால்சீக்கு நிழறிகழும் பிண்டிக்கீழ் வென்றிச்சீர் முக்குடையான்வேந்து. சீவகசிந்தாமணி இன்பமற்றென்னும் பேரானெழுந்து புற்கற்றைத்தீற்றித் துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியெனுந்தொழுவிற்சேர்த்து நின்ற பற்றார்வநீக்கி திருபலன்பாதஞ்சேரி னன்புவிற்றுண்டுபோகிச் சிவகதியடையலாமே சூளாமணி மணிமலர்ந்துமிழொளி வனப்புஞ்சந்தனத் / துணிமலர்ந்துமிழ்ந்தருந்தண்மெய்த்தோற்றமு தணிமலர்நாற்றமு மென்னவன்னதா / லணிவரு சிவகதி யாவதின்பமே. - 2:22: நவம்பர் 11, 1908 - ஆசியாகண்ட முழுவதும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் புத்த பிரானை சிவனென்றும் சிவகதி நாயகன் என்றும் கொண்டாடி வந்ததுமன்றி அவரையே மாலென்றும், திருமால் என்றும், செங்கணெடுமாலென்றும் சிந்தித்து வந்தார்கள். பாலிபாஷையில் மால் என்னும் மொழிக்கு வட்டம், சக்கிரவாளமென்னும் பொருளைக் குறித்திருக்கின்றார்கள். மணிமேகலையிற் கூறியுள்ளவாறு “எண்ணருஞ் சக்கிரவாளமெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை” உலகெங்கும் சுற்றி தருமத்தை நிறப்பினவராதலின் நெடுமான் என்றும், ஞானவிழியால் சகலமும் உணர்ந்த செவ்வியக் கண்ணராதலின் செங்கணெடுமால் என்றும், பெருங்கூட்டங்களில் நிறைந்திருந்த ஒவ்வோர் மதுக்களுள்ளங்களிலுமுள்ள சங்கைகளை நிவர்த்தி செய்துவந்தவராதலின் சகலமும் உணர்ந்தார் என்றும், ஆயிரம் கண்ணனென்றும், தாமரைக் கண்ணனென்றும் வழங்கிவந்தார்கள். தேவர்களுக்குள் சிறந்தவராகவும், ஆதிதேவனாகவும் விளங்கியவர் புத்தபிரானாதலின் திருவள்ளுவ நாயனார் இயற்றியுள்ள திரிக்குறளுக்கு சாற்றுக்கவி கொடுத்துள்ள, கவிசாகரப் பெருந்தேவனார். பூவிற்கு தாமரையே பொன்னுக்கும் சம்புனத மாவிற் கருமுனியா யானைக் - கமரரும்ப றேவிற் திருமாவெனச் சிறந்ததென்பவே பாவிற்கு வள்ளுவர் வெண்பா எண்ணூற்காப்பு நெடுமாற் றிருமருகா னித்தன் முதலாய் / கொடுமால் வினையகற்றுங் கோவே பாலிபாஷையில் சக்கிரவாளம் எங்குமுலாவியவர் என்னும் பொருளையும் தமிழ் பாஷையில் மயக்கம் என்னும் பொருளையும் தழுவி மேற்குறித்த வெண்பாவை முடித்திருக்கின்றார்கள். ஒவ்வோர் நூற்களின் முகப்பிலுமுள்ள காப்பு செய்யுட்களில் புத்தபிரானாகும் மாலையே சிந்திக்கும்படியாய் சூத்திரமும் விதித்துள்ளார்கள் பின்கலை நிகண்டு காப்புக்கு முன்னெடுக்குங் / கடவுள்தான் மாலேயாகும் பூப்புடை மலரின் செவ்வி / புனைபவ னாதலானும் காப்பவ னாதலானுங் / கதிர்முடி கடகத்தோடு வாய்ப்பதா மதாணி பூணூல் / வரிசையிற் புனைதலானும். ஞானவிழியாற் சகலமுமறியக் கூடியவர்களை செவ்வியக் கண்ண ரென்றும், செங்கண்ணார் என்றும் சமண முனிவர்கள் வகுத்திருக்கின்றார்கள். சூளாமணி கருமாவை வெவ்வினைகள் காறளர நூறிக் கடையிலாவிண் ஞானக்கதிர் விரித்தாயென்று மருமாலைநன்னெறியை முன்பயந்தாயென்று மடியே முன்னடி பரவுமா றறிவதல்லாற் றிருமாலே தேனாரு மறவிந்த மேந்துந் திருவணங்கு சேவடியாய் தேவாதிதேவ பெருமானே நின்பெருமெய் நன்குணரமாட்டார் பிணங்குவார் தம் மெய்வினைப் பிணக்கொழிக்கலாமே. செங்கணெடு மாலை செறிந்திலங்குசோதித் திருமுயங்குமூர்த்தியாய் செய்யதாமரையி னங்கணடி வைத்தருளு மாதியா யாழி யறவரசேயென்று நின்னடிபணிவதல்லா லெங்கணிட றகலுமாறிந் நிலைமெய்யெய்தி யிருளுலக நீக்கும் அருடருகநீயென்று வெங்க ணிருளினையை யறவென்றாய் முன்னின்று விண்ணப்பஞ்செய்யும் விழுத்தகமெயுண்டோ சீவகசிந்தாமணி மாட்டார்பூம் பிண்டிவளங்கெழுமுக்குடைக்கீழ்மாலே கண்டீர் முட்டாத வின்பக் கதிதிறக்குந் தாளுடைய மூர்த்திபாதம். பின்கலை நிகண்டு எண்ணிற் கண்ணுடையோன் வாமன் / யேற்ற புண்ணியத்தின் மூர்த்தி. திரிக்குறள் தாம்வீழ்வார் மென்றோட்டுயிலினினிதுகோ / றாமரைக்கண்ணோண் விழாக்கோல்கொள்கென. மணிமேகலை மாயிருஞாலத் தரகதலை யீண்டு / மாயிரங்கண்ணோன் விழாக்கோல்கொள்கென. வீரசோழியம் புத்தன் காரணப்பெயர் - கண்ணன் காரியப்பெயர் புத்தன், கண்ணனை உய்வித்தான் என்புழிக் கருத்தா, கிரியைக்குக்கா / ரணமாய்நிற்றலிற் கார்ன கருத்தாவாயிற்று. இத்தகைய மாலென்றும், திருமாலென்றும், செங்கநெடுமாலென்றும் வழங்கிய புத்தபிரானே உலகெங்கும் சுற்றி தன்ம சக்கிரமாம் அறவாழியை உருட்டி சங்கங்களை நிறப்பிவந்தபடியால் அவரையே உலகளந்தோனென்றும், சங்கசக்கிரத்தானென்றும் வழங்கிவந்தார்கள். சீவகசிந்தாமணி ஒங்குமால்வரை வரையாடுழக்கவி / னுடைந்துகு பெருந்தேன் றாங்குசந்தனத் தளரத்தழுவி / வீழ்வனதகைசா லாங்கண்மா லுலகளந்தா / னாழி சங்கமோடேந்தி தேங்கொண்மார்பிடைத் திளைக்குஞ் / செம்பொனார மொத்தனவே. - 2:23, நவம்பர் 18, 1908 - சங்கசக்கிரத்தான், அறவாழியான், உலகளந்தானென்றும் புத்தபிரானைக் கொண்டாடியதுமன்றி சகல மக்களினிதயங்களில் எண்ணும் எண்ணங்களை அறிந்து சொல்லுவதும் பலதேச சங்கதிகளை உள்ளுக்குள் அறிந்து போதிப்பதுமாகிய கியான திருஷ்டியின் செயலைக் கொண்டு உலகத்தையே உண்டு உமிழ்கின்றவர் என்றும் உலகுண்டோனென்றும் கொண்டாடி வந்தார்கள். சீவகசிந்தாமணி முழங்குகடநெற்றி / முளைத்தெழுந்த சுடரேபோ லழுங்கல் வினையலற நிமிர்ந் / தாங்குலக மூன்றும் விழுங்கில் யுமிழாது குணம் / வித்தியிருந்தோய் நின் னிழுங்கில் குணச் சேவடிக / ளேத்தித் தொழுதும் யாம். கடவுளென்றும், பிரமமென்றும், சிவனென்றும், தேவனென்றும், திருமாலென்றும், புத்தபிரானையே கொண்டாடி வந்ததுமன்றி சுவாமி சாமியென்றும் அவரையே சிந்தித்து வந்தார்கள். சீவகசிந்தாமணி பான்மிடை யமிர்தம்போன்று / பருகலாம் பயத்தலாகி வானிடை முழக்கிற் கூறி / வாலற வமுதமூட்டித் தேனுடை மலர்கள் சிந்தித் / திசைதொழச் சென்றபின்னாட் டானுடை யுகலங்கொள்ளர் / சாமி நாட் சார்ந்ததன்றே. கமல சூத்திரத்தில் சகஸ்திரநாம பகவனென்றும், மணிமேகலையில் ஆயிரநாமத்தாழியன் திருவடி, என்றும் கொண்டாடப்பெற்ற புத்தபிரானுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நாமங்கள் அளித்து ஆனந்தங்கொண்டாடியக் காரணங்கள் யாதென்பீரேல்:- பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பங்களையும் தன்னிற்றானே ஓதாமல் உணர்ந்து மறுபிறவிக்கு ஆளாகாமலும், பிணியினும் உபத்திரவந் தோன்றாமலும், மூப்பென்னும் தளர்ச்சியும், நரை திறையும் தோன்றாமலும், மரணத்தில் உண்டாகும் பஞ்ச அவஸ்தைகட்கு உட்படாமலும், தனது அதி தீவரபக்குவத்தால் காமனையும் காலனையும் செயித்து நிருவாணத்தைத் தானடைந்ததுமன்றி ஏனைய மக்களையும் ஈடேற்றுவான் வேண்டி உலகெங்கும் கற்றி சத்தியதன்மத்தை ஊட்டித் தன்னைப்போல் மற்ற மக்களும் காமனையும் காலனையும் வென்று நிருவாணம் அடையும்படிச் செய்தபடியால் அப்பேரின்பத்தை அநுபவித்தவர்களும், நித்தியானந்தத்தைக் கொண்டவர்களும், சித்தின் நிலையைக் கண்டவர்களும், தங்களுக்குள் எழும் ஆனந்தக் கிளர்ச்சியால் ஜெகத்குருவை அனந்தானந்தப் பெயர்களால் அழைக்கலானார்கள். மணிமேகலை பிறப்பே பிணியை மூப்பே சாவென / மொழிந்திடு துன்பமெனவிலை. மாரனைவெல்லும் வீரனின்னடி. / காமற்கடந்த யேமமாயோர். சூளாமணி காமனைக்கடிந்தனை காலனைக் காய்ந்தனை / தேமலர் மாரியை திருமறு மார்பனை தேமலர் மாரியை திருமறு மார்பனை / மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம். சீவகசிந்தாமணி சுறவுக்கொடிக்கடவுளொடு காலற்றொலைத்தோயெம் பிறவியறுகென்று பிறசிந்தையிராகி நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித் துறவுநெறிக் கடவுளடி தூமமொடு தொழுதார். புத்தபிரான் காமனையும் காலனையும் செயித்து நிருவாணமடைந் ததுமன்றி மற்றவர்களது மரணதுக்கத்தையும் செயிக்கும் தன்மத்தை ஊட்டியிருக்கின்றார். மணிமேகலை சாதுயர்நீக்கிய தலைவன் றவமுனி / சங்க தருமன் றாமெனக் கருளிய சீவகசிந்தாமணி கோதையுங் குழலும் பொங்கக் / குவிமுலைக் குழாங்கன்மாலைப் போதுகப் பொருது நாணும் / பொருகடன் முந்து மூழ்க காதலுங் களிப்பு மிக்குங் / கங்குலும் பகலும் விள்ளார் சாதலும் பிறப்பு மில்லாத் / தண்மெய்பெற்றவர்களொத்தார். யமகாதகன் என்றும், இயமனை வென்றோன் என்றும், மரணத்தை ஜெயித்தோன் என்றும் கொண்டாடப்பெற்ற புத்தபிரானையும் அவரோதியுள்ள முதநூலாகும் சத்தியதன்மத்தையும் உணர்ந்தவர்கள் எவரோ அவரே பிறவியை அறுத்து மரணத்தை ஜெயித்து நிருவாணமடைவார்கள் என்று மகாஞானிகளும், சித்தர்களும் வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள். சித்தாந்தக்கொத்து அருணெறியாற் பாரமிதை யாறைந்துமுடனக்கிப் பொருள் முழுதும் போதிநிழ னன்குணர்ந்த முநிவரன்ற னருள்மொழியா நல்வாய்மெய யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாற் பிறநூலு மயக்கறுக்குமாறுளதோ. இடைக்காட்டு சித்தர் ஆதிபகவனையே பசுவேயன்பாய்துதிப்பாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்தமதாகாதோ. வீரசோழிய உதாரணச் செய்யுள் தோடாரிலங்கு மலர்கோதிவண்டு வரிபாடு நீடு துணர்சேர் வாடாதபோதி நெறிநீழன்மேய வரதன்பயந்த வறநூல் கோடாதசீல விதமேலிவாய்மெய் குணனாக நாளுமுயல்வார் வீடாதாவின்ப நெறிசேர்வர்துன்ப வினைசேர்த நாளுமிலரே. சீவகசிந்தாமணி வீங்கோதவண்ணன் விரைத்தும்புபூம்பிண்டித் தேங்கோதமுக்குடைக்கீழ் தேவர்பெருமானைத் தேவர்பெருமானைத் தேனார்மலர்சிதறி நாவினவிற் பாதாம் வீட்டுலகநண்ணாரே. இத்தகைய பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பத்திற்கு ஆளாகாது மரணத்தை ஜெயித்த யமகாதகன் எவனோ அவனையே யதார்த்தபிராமணன் எனப்படும். ஆதியந்தண அறவாழியான் துணை முற்றும். - 2:24; நவம்பர் 25, 1908 - 11. மோசேயவர்களின் மார்க்கம் மோசே என்பவர் கிறிஸ்துமார்க்கத்தைச் சார்ந்தவர் அவரை பிராமண ரென்று கூறலாமோ என்பர் வேஷபிராமண மார்க்கவகுப்பார். மோசே என்பவர் எங்கள் கிறிஸ்துமார்க்கத்தவராயிருக்க அவரை பிராமணரென்று கூறுவது அற்புதமே என்பார் அவர் மார்க்க வகுப்பார். பிராமணனென்பவன் பூணூலணைந்திருப்பான், குடிமிவைத்திருப்பான் என்னும் குறிப்பையும், அடையாளத்தையும் காட்டும் வேஷத்தை பிராமணரென்று ஏற்பவர்களுக்கு அச்சங்கை தோன்றுமேயன்றி எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் பிராமணனென்னும் பெயர் அவனவன் நற்செயலுக்குரியட் பெயரென்று அறிந்துள்ளார்க்கு அச்சங்கை தோன்றாவாம். தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறந்த பிறப்பொன்றுமாகிய இரு பிறப்பைக் கொண்டு வடமொழியில் பிராமணரென்றும், சருவவுயிர்களையும் தன்னுயிர்போல் கார்க்குந் தண்மெயுள்ளோர்களை தென்மொழியில் அந்தணர்கள் என்றும், அவரவர்கள் நற்செயல்களுக்குரிய கியானப் பெரும்பெயர்களை புத்தசங்கத்தோர் வகுத்து வைத்திருக்கின்றார்கள். அதற்குப் பகரமாய் மோசே என்னும் மகாஞானியானவர் தன் தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பொன்றும், தனது முடிவுகாலத்தில் யாதோருதவியுமின்றி தேகத்தைப் பள்ளத்தாக்கிலடக்கி சோதியுருவாக மாற்றி பிறந்து கிறீஸ்து பிறந்த முப்பத்திரண்டாவது வயதில் சீன பருவத்தில் அவருடன் சோதியுருவாகத் தோன்றிய உருவைக் கொண்டும் அவரை இருபிறப்பாளனாகிய யதார்த்தபிராமணனென்றும் கூறியுள்ளோம். இத்தகைய பிறப்பையே கிறீஸ்துவும் தனது போதகத்தில் ஒரு மனிதன் மறுபடியும் பிறவாமல்படிக்குப்போனால் பரலோகராட்சியத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மோசே என்பவருக்கு ஞானதெளி விளக்கம் மோசே குமரபருவம் பெற்றிருக்குங்கால் தனது தமயனை மற்றொருவன் அடிக்கச் சகியாது அவனைத் தானடிக்க அவன் உயிர் துறந்தான். கொல்லவேண்டுமென்றடியாது கோப மீண்டு அடித்தவராதலின் அவன் இறப்பினால் பயந்து சுதேசம்விட்டுப் புற தேசம் ஓடிப்போய்விட்டார். இவ்வகைப் புறதேசஞ்சென்றும் தான் செய்துவந்த கொலைக்குற்றத்தைப் பெருந்தீவினை என்று எண்ணித் திரிந்தவராதலின் அவர் பயந்துலாவிய மலையில் கொலைச்செய்யா திருப்பாயாக என்னும் கட்டளையே அவருக்குக் கிடைக்கப்பட்டது. அக்கட்டளையைக் கண்டவுடன் மென்மேலும் அச்சந்தோன்றி நன்மார்க்கத்தைக் கடைபிடித்தார். அவற்றுள் பெரும்பாலும் இத்தேசத்தார் சத்திய தன்மத்தைப் பின்பற்றி மாதா, பிதா, குரு இம்மூவரையும் தெய்வம் எனத் துதித்து அவர்களைக் கனஞ்செய்து வந்தவர்களாதலின் மோசேயுந் தனது குருவை தெய்வமெனத் தொண்டு பூண்டு அவர் போதித்த சத்தியதன்மத்தினின்று ஞானத்தெளிவுண்டாகி லாமா என்னும் புத்தகுருவாகவும் விளங்கினார். எத்தேசத்தோருக்கு குருவாகினாரென்னில் மோசே எகிபேத்தியனாயிருந்தபோதிலும், தீபேத்தியனா இருந்த போதிலும் பெரும்பாலும் இவர் வாசம் சீனபருவதமாகவே விளங்குகிறபடியால் வடநாட்டாரால் சீனர்கள் என்றும், இசரேலர்கள் என்றும் தென்னாட்டாரால் நாகர்குலத்தொரென்றும், பெருகி பலுகும் ஆசீர்பெற்ற கூட்டத்தாருக்கே குருவாக விளங்கினார். லாமாவென்னும் பெயரால் மோசேயை அழைக்கப்பெற்ற விவரம் நாளது வரையில் தீபேத்தில் வாசஞ்செய்யும் புத்தகுருக்களை லாமா, லாமா என்று வழங்கிவருவது சகலசரித்திரக்காரர்களும் அறிந்த விஷயமே. அவ்வகைப் பெயரைக்கொண்டே முன்னனுபவங்களை நோக்குங்கால், சோதிரூபமுள்ள மோசே, எலியா, கிறீஸ்து இம்மூவரும் சீனபருவதத்திற் கிறீஸ்துவின் பாட்டைப்பற்றி பேசியபின்னர் கிறிஸ்துவிற்கு சிலுவையில் அறையுண்ணும் பாடுநேர்ந்தது. அப்பாடுபடுங்காலத்தில் மோசேயை லாமா என்றும், எலியாவை ஏலி என்றும் அழைப்பதற்காய் ஏலி, ஏலி லாமா சபக்தானியென்றழைத்தவுடன் அடங்கிவிட்டார். அந்த சப்தத்தைக் கேட்ட அப்பாஷைக்குரியோனும் எலியாவை அழைக்கின்றார் அவர் வருகின்றாரோ பார்ப்போமென்றும் கூறியுள்ளான். இத்தகைய அநுபவ ஆதாரங்களால் லாமா என்னும் மொழியானது புத்தகுருக்களுக்கே பொருந்தும் என்பது திண்ணமாம். அதாவது ஏனோக், எலியாவென்ற இருபெரியோரும் விதேகமுத்திப் பெற்றவர்கள். மோசேயோவெனில் ஜீவன்முத்தி பெறுவர். இவற்றுள் தேகத்தை சுமந்து திரிவது பயனில்லை என்று வெறுத்து புளியம்பழம் போலும் ஓடுபோலும் சுயம்பிரகாச உருவைப் பிரித்துக் கொள்ளுதல் ஜீவன்முத்தியாகும் தேகத்தைக் காற்றுடன் காற்றாக மறைக்கவும், நீருடன் நீராக மறைக்கவும், மண்ணுடன் மண்ணாக மறைக்கவும் கூடிய சித்திபெற்று சாரணர்களாகி அந்தரத்துலாவுதல் விதேகமுத்தியாகும் இவ்விருவகை முத்திச் சுகமும் ஒன்றேயாம். இத்தகைய சித்திமுத்தி நிலையில் மோசேயும், எலியாவும் கிறீஸ்துவுடன் கலந்து பேசிச்சென்ற சொற்பதினத்தில் அவருக்குப் பாடுநேர்ந்ததும் அக்காலத்தில் இவ்விருவரையும் அவர் அழைத்ததும் அவர் பாஷைக்குரியவர் வாக்கால் தெள்ளற விளங்குகிறபடியால் ஏலிஏலி லாமா சபக்தானி என்னும் சிறந்தவாக்கியத்தினால் புத்தகுருவாக விளங்கிய லாமா என்னும் மோசேயையும் அவர் ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒழுகிய எலியாவையும் அழைத்தவிவரமும் அவ்வார்தையொலித்தப்பின் சீனபருவத்தில் பேசிய அந்தர அங்கவொடுக்கப் பலனேயாம். - 2:25; டிசம்ப ர் 2, 1908 - மோசே இருபிறப்படைந்த சார்பு மோசே என்பவர் பாபத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயித்து நித்தியசீவனைப் பெற்று இருபிறப்பாளனாகி உலாவுவதற்கு ஆதாரம் யாதென்பீரேல்: சுருதியென்றும், வரையாக் கேள்வியென்றும், மூவரும் மொழியென்றும், ஆதிவேதமென்றும், ஆதிமறையென்றும், மூன்று வேதவாக்கியங்கள் என்றும் வழங்கிவந்த முக்கட்டளையாகும் திரிபீடங்களேயாம். அதாவது, சப்பபாபஸ்ஸ அசுரணம் / குஸலஸ உபசம்பதா. சஸித்தசரி யோதபனங் /ஏதங்புத்தானுசாஸனம். பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மூன்று பேதவாக்கியங்களாகும் கட்டளைகளே மோசேயின் நித்தியசீவனுக்கு வழியாயிருந்தது. அவரோ அவ்வார்த்தையை சிரமேற்கொண்டு நீதியின் பாதையில் நடந்து நீதியின் ஒழுக்கத்தினின்று நீதியின் நீரை அருந்தி நித்திய சீவனைப்பெற்றார். ஆதியில் இவ்வருமொழியாம் வார்த்தையான வரிவடிவிலில்லாமல் ஒலிவடிவ மாத்திரமாய் இருந்தது கொண்டு யோவான் என்பவர் எழுதியுள்ள சுபவிசேஷத்தில் ஆதியில் வார்த்தையிருந்தது, அவ்வார்த்தை தேவனிடத்திருந்தது. அவ்வார்த்தையே தேவனென்று ஆதிதேவனின் நன்மெய் சொரூபத்தையும் விளக்கியிருக்கின்றார். மேசேயநுசரித்த வேதமொழிகளாகும் நீதி மொழிகளை அவர் வழிபட்டொழுகும் தாவீதரசனும் யாது கூறியுள்ளாரென்னில்:- கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவ்வேதத்திற் கியானியாயிருக்கப்பட்ட மனிதன் பாக்கியவான். அத்தகைய கியானமிகுத்த பாக்கியவானின் அடையாளம் யாதெனில் - நீர்வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு காலத்திற் கனியைத்தந்து இலையுதிராதிருக்கிற மரத்திற் கொப்பாவான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அதற்குப்பகரமாய்க் கிறீஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில் நீதியின் பேரில் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்க்ள. அவர்கள் பரலோக ராட்சியத்தை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதை அநுசரித்தே மார்க்கென்பவர் எழுதியுள்ள சுபவிசேஷத்தில் விசுவாசத்தினால் ஞானஸ்தானம் பெற்றவனின் அடையாளம் யாதெனில் பலபாஷைகளையும் பேசுவான், விஷத்திற்கு ஒப்பான அவுடதத்தைப் புசித்தாலும் சாகமாட்டான், பாம்புகளைக் கையிற் பிடித்துக் கொள்ளுவான், அவன் கை வியாதியஸ்தர்கள்பேரில் பட்டால் சொஸ்தமடையும் என்றும் பின்னும் பின்னும் தாவீதரசனின் நீதிவாக்கியங்களில் அவருடைய கட்டளையே விளக்கென்றும் அதன்மேறை நடத்தலேபிரகாசமென்றும், அதன்வழியே ஜீவ வழியென்றும் கூறி ஞானத்தைக் கண்டடைகின்றவனும், புத்தியை சம்பாதிக்கின்றவனும் பாக்கியவான். அவன் வலதுகையில் தீர்க்காயுளும், இடதுகையில் செல்வமும், கனமுமிருக்கிறதென்று கூறியுள்ளார். இத்தகைய நீதியின் பாதையிலும், ஞானத்தின் நோக்கத்திலும் மோசேயவர்கள் இரவும் பகலும் இடைவிடாது விழித்திருந்த கியானத்தால் மரணத்தை ஜெயித்து நித்தியசீவனை அடைந்து இருபிறப்புக்காளானதினால் தானடைந்த நித்தியபலனை மற்றவர்களும் அடைய வேண்டும் என்னும் கருணையால் பிண்டோற்பவத்தை எழுதி அதன்பின் நித்திய வழியை விளக்கும் மார்க்கத்தை ஆரம்பித்தார். அதாவது - புத்ததன்ம சாஸ்திரிகள் யாவரும் உலக உற்பவத்தையும், அதன் மடிவையும் ஆராயாமல் உடலையும், அதனுற்பவத்தையும் உண் மெய்யையும் ஆராய்பவர்களாதலின் ஆதியிற் பிண்டோற்பவ தத்துவத்தை விளக்குவதே அவர்கள் அனுபவமாயிருந்தது. அவரருட் பெற்றருளிய மோசேயென்னும் மகாஞானியாரும் பிண்டோற் பவமாகும் கருப்பையின் விளக்கத்தையும், அதன் வளர்ச்சியையும், முடிவையும் வகுக்கலானார். மோசேயவர்களெழுதிய கர்போற்பவம் தாயின் கருப்பை இருளடைந்து விடாதீநீராகும் ஜலம்நிரைந்திருக்குங் காலத்தில் வினைக்கீடாய் சுக்கிலசுரோணித கிருமி திரண்டு கருப்பாயாச ஜலத்தின் போஷிப்பால் அசைவாடிவளர்ந்து அண்டம்போல் உருண்டு பிரிந்து முதல் மாதம் உண்டாகின்றது. கருப்பையிலுள்ள ஜலமானது இரண்டாகப் பிரிந்து ஒருபாகம் மேனோக்கி மார்பிற் சேர்ந்து பாலுக்காதாரமாவதும், ஒருபாகங் கீழ்நின்று சப்தமாகும் அக்கினிக்கும், சுவாசமாகும் காற்றுக்கும், வெளியாகும் இடம்புரிந்து பிண்டம் வளருவதற்காதாரமாகி 2-மாதம் உண்டாகின்றது. ஜலம் பிரிந்து பூமிதோன்றியபோது அதனினின்று புற்பூண்டுகளும், விருட்சங்கள் வளருவதுபோல் கருப்பை ஜலம் பிரிந்து பிண்டந் திரண்டு கரசரணங்கள் பிரிந்து உரோமங்களுக்கு ஆதாரமாகும் சருமந்தோன்றி 3மாதம் உண்டாகின்றது. வாயுவின் ஆதாரத்தால் சுவாசங்கள் தோன்றுவதுபோலும், சூரியனின்று பிரகாசத்தோன்றுவது போலும், பிண்டத்தில் நோக்குதற்காதாரமாகும் கண்களும், கேட்டலுக்கு ஆதாரமாகும் செவிகளும் பிரிந்து 4-மாதம் உண்டாகின்றது. பூமியின் ஆதரவால் விருட்சங்களும், விருட்சத்தின் ஆதரவால் ஜெந்துக்களுந்தோன்றி பறப்பன பறந்து, தவிழ்வன தவிழ்ந்து சீவிப்பது போல் தாயார் புசிக்கும் அன்ன சாரமானது பிண்டத்தின் தொப்புழ்வழியே சென்று உடல்பருத்து வளர்ந்து 5-மாதம் உண்டாகின்றது. சாந்தமே சருவசீவர்களைக் காக்கும் உருவாகவும், அன்பே சருவசீவர்களையும் வளர்க்கும் உருவாகவும், ஈகையே சருவசீவர்களையும் போதிக்கும் புசிப்பின் உருவாகவுமுள்ள சீவன் தாயின் வயிற்றில் கட்டுப்பட்டுள்ள உடலெங்கும் பரவி தன்னைப்போல் தன் வயிற்றில் ஒருரு துள்ளிவிளையாடும் 6-மாதம் உண்டாகின்றது. தாயின் உள்ளம் போலும், தாயின் உடல்போலுந் தனக்குள் துள்ளி விளையாடும் மற்றோர் உடலின் வளர்ச்சிக்கும் வேறு தொழில் ஒன்றுமில்லாமல் ஓய்ந்து 7-மாத முண்டாகின்றது. தாயின் வயிற்றில் ஓர்குறைவுமின்றி வளர்ந்து பத்தாமாதத்தில் வெளியில் தோன்றும் அந்தர அங்க விசேஷத்தை வர்ணனையால் விளக்குகின்றார். அதாவது புத்ததன்ம சாஸ்திரிகள் தங்களை விட்டு தங்களுக்கு அப்புறமாக வேறுபொருள் இல்லையென்றும், தங்களை சீர்திருத்தி நித்திய சீவனுக்காளாக்கும் சிரேஷ்டமென்னும் பரம்பொருளாம் நற்செயல்கள் தங்களுக்குள்ளாகவே இருக்கின்றதென்றும், தங்களை சீர்கெடுத்து பாபத்தை அதிகரிக்கச்செய்து பிணி, மூப்பு, சாக்காடென்னும் மரணத்திற்குக் கொண்டுபோகும் மதிகேடாம் துற்செயல்களுந் தங்களுக்குள்ளாகவே இருக்கின்ற தென்றறிந்து தங்களுக்குள் எழும் பொல்லாங்கென்பவை யாவையும் அகற்றி நன்மெய்க்கடைபிடித்து நித்தியசீவனை அடைகின்றார்கள். மோசேயவர்களுந் தானெழுதியுள்ள பிண்டோற்பவத்தில் உடல் வெளிதோன்றியவுடன் அதன் அந்தரங்கமாம் உள்சிரேஷ்டத்தை அதி சிரேஷ்டமாக உலகத்தோர் அறிந்து ஒழுகுதற்கு ஓர் வர்ணனையாகக் களிமண்ணினால் உருவு பிடித்து கடவுளென்னும் சிரேஷ்ட வஸ்துவே தனது சீவசுவாசத்தை நாசியிலூதி உயிர்ப்பித்தாரென்று உடலுக்குள் உள்ள அறிவையும், சாந்தத்தையும், அன்பையும் சிறப்பித்து எழுதியிருக்கின்றார். - 2:26; டிசம்ப ர் 9, 1908 - மோசே எழுதியுள்ள களிமண்ணின் வர்ணனையும் உருபிடித்தூதிய விவரமும் தேவனென்னும் சிரேஷ்ட தேகி தன்னைப் போல் களிமண்ணினால் ஓர் உரு பிடித்து தனது சீவசுவாசத்தை அக்களிமண்ணுருவின் நாசியிலூதியப்பின் உயிர்ப்பித்தாரென்னும் வர்ணனைவிளக்கம் யாதெனில்: மநுடவுருதோன்றி உலாவுதற்கு தேவனென்னுஞ் சிரேஷ்ட வஸ்த்வே அன்பு, ஈகை, சாந்தம், அறிவென்னும் பெயர் வைத்துக் கொண்டு அவ்வவ் உடலில் கட்டுப்பட்டிருக்கின்றபடியால் அந்த சிரேஷ்ட பொருள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அன்பினுருவாகவும், சாந்தவுருவாகவும், அறிவுருவாகவும் அமர்ந்துள்ளது என்று உணர்ந்து தன்னைத்தானறிந்து அன்பை பெருக்கியும், சாந்தத்தைப் பெருக்கியும், அறிவைப் பெருக்கியும் நித்தியசீவனுக்கு ஆளாவான். அங்ஙனமின்றி தனக்குப் புறம்பாக ஓர் சிரேஷ்ட, பொருள் இருக்கின்றதென்று எண்ணிக் கொள்ளுவானாயின் தனக்குள்ள காமம், வெகுளி, மயக்கமென்னும் முக்குற்றங்களாம் துற்செயல்களைப் பெருக்கிக் கொண்டு துன்பமுண்டாயகாலத்து தனக்குப் புறம்பாயுள்ள சிரேஷ்ட வஸ்து தன்னைக் காக்கும் என்று இரைஞ்சி மாளாதுக்கம் பெருகி பாபத்தின் சம்பளமாகும் மரணாவத்தையை அநுபவிப்பான். ஆதலின் ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் தேனென்னும் சிரேஷ்ட வஸ்துவின் சுவாசமென்னும் அறிபொருளிருக்கின்றது. அஃதறியா மறைப் பொருள் ஒன்றுமில்லை. நாம் அன்னியதாரத்தை இச்சித்தலையும், அன்னியர் பொருளை அபகரித்தலையும், அன்னியரை வஞ்சித்துத் துன்பப்படுதலையும், அன்னியரைக் கெடுக்க எண்ணுதலையும் அஃதறிந்து பாபத்தின் சம்பளத்தைக் கொடுத்து மாளாதுன்பத்திற்கு ஆளாக்கிவிடும் என்றும், ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் தேவனென்னும் சிரேஷ்ட வஸ்துவின் சுவாசமென்னும் அறிபொருள் இருக்கின்றதென்று பயந்து பாபத்தின் பீடமாகும் காம, வெகுளி, மயக்கங்களைப் பீடமிடவிடாமல் அகற்றி அறிவையும், அன்பையும், சாந்தத்தையும், ஈகையையும் பெருக்கி நீதியின் பாதையில் நடந்து நீதியினீரை அருந்தி புண்ணியத்தின் சம்பளமாம் நித்தியசீவனைப் பெற்று நீர்வாய்க்காலின் ஓரமாக நடப்பட்ட விருட்சம் இலையுதிராது காலத்திற் கனியைத்தந்து நீடித்திருப்பதுபோல் சருவசீவர்களுக்குத் தான் பெற்ற பலனாஞ் சீவகனிகளை அளித்து சுகம்பெறச்செய்து தானும் நித்திய சுகத்தில் இருப்பானென்றும் விளக்கி ஒவ்வொருமக்களும் சீர்பெறுவான் வேண்டி களிமண்ணுருவையே மநுட சீவர்களாகவும், சீவசுவாசத்தையே உண்மெய்ப்பொருள் என்று உணர்ந்து உலகப்பொருளை வெறுத்து தானேதானாம் சிரேஷ்டப்பொருளை சிந்திப்பதற்கேயாம். இதன் சார்பாய் கிறீஸ்துவும் பராபரன் என்னிலேயும், நான் அவரிலேயும், அதுபோல் உங்களுக்குள்ளாக நிறைந்திருக்கின்றான் என்றும் பேசுகிறவர்கள் நீங்களல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவரென்றும் அதனை அநுசரித்தே கொருந்தியரும் நீங்கள் பராபரனுடைய ஆலயமாயிருக்கின்றீர்கள் என்றும் வரைந்திருக்கின்றார். இத்தகையக் களிமண் வர்ணனையைப்போன்ற காமியவர்ணனையும் மற்றொன்றை வரைந்திருக்கின்றார். அதாவது இஸ்திரீயையே பரிமளிக்கும் நந்தவன கந்தவிருட்சமாகவும், அவளல்குலே இன்ப சுகமாம் நன்மெய் தின்மெய் யீயத்தக்கக் கனியாகவும், அக்கனியைப் புசிப்பதால் நன்மெயென்னும் புத்திரபாக்கிய விருத்தியும், தின்மெயாகும் அதேயிச்சையால் தேகம் க்ஷீணமடைந்து மரணமடைவான் என்றும் வகுத்திருக்கின்றார். இதையே புத்ததன்ம சாஸ்திரிகள் இஸ்திரீயின் தேகமத்தியபாகத்தில் அல்குல் என்னும் சர்ப்பசிறமுள்ளதென்றும் அதனிடத்தில் மாணிக்கத்திற் கொப்பாகிய தற்பலனென்னும் புத்திரபாக்கியமும் விஷத்திற்கொப்டாகிய தீயபலனென்னும் பிணி, மூப்புச், சாக்காடும் உண்டு என்று வகுத்திருக்கின்றார்கள். அதை அநுசரித்தே மோசே என்னும் மகாஞானியாரும் வர்ணனையால் இஸ்திரீயையே ஓர் நந்தவனமாகவும், அவள் மத்தியபாகத்தை நன்மெய், தினமெய் அறியத்தக்க விருட்சமாகவும், இன்பத்தையே ஓர் கனியாகவும் வர்ணித்து அக்கனியைப் புசிப்பதினால் நன்மெயென்னும் புத்திரசந்தான விருத்தியும் அக்கனியினின்பத்தை சதா கருதுவானாயின் சாவவே சாவானென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளார். தோட்டத்தின் மத்தியபீடமே அரையென்பதற்குப் பகரமாய் இஸ்திரியானவள் நிர்மானமுடையவளாயிருந்து மானமுண்டாய் தனது மத்தியதானமாம் அரையை இலைகளால் மூடிக் கொண்டதே போதுஞ் சான்றாம். பாம்பு வஞ்சித்ததென்னும் வர்ணனை யாதென்பீரேல்-பெளத்த சாஸ்திரிகள் இஸ்திரீகளின் மத்தியதானத்தை அல்குலென்றும், சர்பமென்றும் குறித்திருக்கின்றார்கள். அதினால் இஸ்திரீயும் தனக்குள்ள இன்பஸ்தானமாம் அல்குலென்னும் சர்ப்பம் தன்னை வஞ்சித்ததென்றுங் கூறியிருக்கின்றார்கள். இதற்குப் பகரமாகவே கிறீஸ்துவும் தாயின் வயிற்றினின்று பிறந்ததுமுதல் அண்ணகர்கள் என்னும் விவாகமில்லாமல் இருப்பவர்களும் உண்டு மற்றவர்களால் விவாகஞ்செய்யாமலிருக்கச் செய்வதும் உண்டு. பரலோக ராட்சியத்தினிமித்தம் விவாகஞ் செய்யாமல் இருப்பவர்களும் உண்டு என்றும் கூறியுள்ளார். கொருந்தியரும் நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாயிருக்கலாம் என்று கர்த்தருக்கு உரியவைகளுக்காக கவலைப்படுகின்றான் என்றும், இஸ்திரீயைத் தொடாமலிருப்பதே நல்லதென்றுங் கூறியிருக்கின்றார். ஏனெனில் புத்திரசந்தானம் வேண்டும் என்னும் நன்மெயைக் கருதியவிடத்து சதா இன்பத்தைக் நாடி தின்மெய் அடைவார்கள் என்பதேயாம். இத்தகைய நன்மெயாம் பேரின்ப விருட்சத்தையே பெளத்த சாஸ்திரிகள் ஜீவவிருட்சம் என்றும், கற்பகத்தருவென்றும் வரைந்துள்ளார்கள். - 2:27; டிசம்பர் 16, 1908 - மோசே யென்னும் மகாஞானியார் இருந்த இடவிவரமும் சென்ற இடவிவரமும் கால விவரமும் நமதன்பருள் சிலர் தருமோற்பவ போதத்தையும், அதன் பலனையும் உணராது மோசேயவர்கள் எகிப்த்தைவிட்டு அரேபியாவுக்கு அப்புறம் வரவில்லையே இவருக்கு புத்ததன்மம் எங்ஙனம் வரக்கூடும் என்பாரும் உண்டு. சீனா மலை எகிப்த்திற்குக் கிழக்கு. அரேபியாவுக்கு வடக்கு. இவ்விரண்டிற்கும் கரைவழிகளும் போக்குவருத்தும் உண்டு. அவ்வழியாய்ப் போக்குவருத்துள்ள விஷயங்களை சிலது எழுதியும், சிலதை விட்டும் இருக்கலாம். அதாவது மோசேயவர்கள் 39 வயதளவும் ஏகிபத்திலிருந்தாரென்றும், 79 - வயது வரை டையர் போன்ஷியா என்னும் நாடுகளில் இருந்தார் என்றும், 80 - வயதில் எகிபத்திலிருந்து இஸ்ஸரவேலரை விடுதலைச் செய்தாரென்றும், பின்பு ஜெரிகோ பட்டணத்தை இஸ்ஸரவேலருக்குக் காட்டிவிட்டு ஓர் மலையில் சமாதியாகி விட்டபடியால் இவர் எவ்வழியாய் சீனாமலைக்குப் போயிருப்பார் என்றுஞ் சங்கிப்பாரும் உண்டு. புத்தபிரானால் ஓதி விம்பாசாரனால் கல்மலையில் அடித்திருந்த கற்பலகையோடெடுத்துச் சென்றவர் மோசேயே ஆதலின் அவரெவ் வழி சென்றார், எங்குபோனார் என்று விசாரிக்கவேண்டிய அவசரமில்லை. ஈதன்றி கிறீஸ்த்து பிறப்பதற்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு திபேத்து பெளத்தமிடங்களில் உபயோகித்திருந்த ஜெபமாலை, பொதுக் கோரிக்கை, வீதிவலம், பரிசுத்த ஜலம், தீபதூபப் பாடல், குருக்கள் உச்சி சவரம் முதலியவைகள் யாவையும் பரிசுத்த அகஸ்தீன் காலத்தில் எகிபத்து மார்க்கமாகக் கொண்டுபோயிருப்பதாக (சிட்னி) அமேரிக்கா டாக்டர் ஹென்றி என்சால்ட் பிரசுரித்த “ஓரியன்ட் அன்ட் ஆக்ஸிடென்ட்” என்னும் பத்திரிகையில் தெளிவாக வரைந்திருக்கின்றார். கிறிஸ்து பிறப்பதற்கு இருநூற்றி அறுபது வருஷங்களுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தி அவர்கள் பௌத்த குருக்களை காபூல், கண்டாஹார், ஆப்கானிஸ்தான், சிரியா, மாசிடன், சிரீன் எபிராஸ், கிரீஸ், எகிப்து முதலிய இடங்களுக்கு அனுப்பி சத்திய தன்மத்தைப் பரவச் செய்ததாய் அவரது சரித்திரத்தாலும் சிலாசாசனங்களாலும் அறியலாம். கிறிஸ்து பிறப்பதற்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த குருக்கள் சிரியாவிலும், பாலஸ்தானாவிலும் தன்மத்தைப் பிரசங்கித்து வந்ததாக அங்கு கிடைத்துள்ள சிலாசாசன ஆதரவால் பிரபஸர் மகாபிஸ் என்பவர் கூறியுள்ளவற்றை சரித்திரக்காரர் ஆர்.சி. டட் என்பவர் தனது சரித்திரத்தில் தெளிவாக வரைந்திருக்கின்றார். அசோக சக்கிரவர்த்தி அநுப்பிய பெளத்தகுருக்கள் தீபேத், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பர்ம்மா, கிரீக் தேசங்களுக்குச் சென்று தன்மத்தைப் பரவச் செய்துள்ள சிலாசாசன ஆதாரங்களைக் கொண்டு அதார் சந்தர் முகர்ஜி எம்.ஏ.பி.எல். அவர்களுந் தனது சரித்திரத்தில் விளக்கியிருக்கின்றார். சிலர் கிறிஸ்துவுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு மோசே இருந்ததாக அவர் சரித்திரத்தால் விளங்குகிறபடியால் பௌத்த தன்மத்தை அவர் எவ்வகையால் அநுசரித்திருக்கக் கூடும் என வினவுவாறும் உண்டு. மோசேயவர்கள் எழுதிய தன்மங்கள் முதல் வெளிபடுத்திய சுபவிசேஷம் வரையிலும் சிலதை தள்ளுபடி யாகமங்களென்று பார்த்து இவர்களே நீக்கிவிட்டதுபோக மற்றவைகள் யாவையும் ஒன்றுதிரட்டி பிபலிக்கல் என்று அப்புத்தகத்திற்குப் பெயர் கொடுத்த காலம் கிறீஸ்த்து பிறந்த நூற்றியைன்பது வருஷங்களுக்கு பின்பேயாகும். மோசே முதல் வெளிபடுத்திய சுவிசேஷ வரையில் ஒன்றுதிரட்டி புத்தகரூபமான காலம் கிறீஸ்துவுக்குப் பிற்பட்டகாலமாதலின் கிறிஸ்துவுக்கு இரண்டாயிர வருஷத்திற்கு முற்பட்டது மோசேயின் காலமென்று கூறுதற்கு தக்க சிலாசாசன ஆதரவுகளேனும், செப்பேடுகளின் ஆதரவுகளேனும், கணித ஆதாரங்களே கிடையாது. மோசேயவர்களின் சீவியக்கணக்கு சரிவர இருக்குமாயின் கிறிஸ்த்துவின் கணக்கு மாறுபட்டிருக்காது. அஃதெவ்வகையதென்னில் தற்காலம் அனுசரித்துவரும் இங்கிலீஷ் கணக்கின்படி கிறீஸ்த்துப் பிறந்து இன்று புதன் வரையில் ஆயிரத்தித் தொளாயிரத்தி ஏழுவருடம் பதினோரு மாதம் இருபத்தி மூன்று நாளென்று கூறுவார்கள். அதாவது 1907 வருஷம் 11 மாசம் 23 நாள். இக்கணிதம் ஜனவரி மாத முதல் நாளை ஆரம்பமாகக் கொண்ட கணிதமாகும். ஆனால் கிறீஸ்துவோ டிசம்பர் மாதம் இருபத்தியைந்தாம் தேதியில் பிறந்திருக்கின்றார். அக்காலவரை கணிக்குங் கால் வருஷங்களும் மாறுபட்டுவிடுமென்பது திண்ணம். இக்கணிதமானது மோசேயின் பிறந்த நாளை தழுவாமலும் கிறிஸ்த்துவின் பிறந்தநாளை தழுவாமலும் பொதுவில் அனுசரித்து வருகின்றபடியால் வருஷங்களை வகுத்துவருங் கணிதங்களே புத்ததன்ம கணிதங்கள் எனப்படும். எவ்வகையதென்னில்,ஞாயிறென்னும் சூரியனை முதனாளாகவும், சந்திரனை இரண்டாம் நாளாகவும், செவ்வாய் என்னும் பூமியை மூன்றாம் நாளாகவும், புதனென்னும் நீரை நான்காம் நாளாகவும், வியாழமென்னுங் காற்றை ஐந்தாம் நாளாகவும், வெள்ளியென்னும் ஆகாயத்தை ஆறாம் நாளாகவும், சனியென்னும் இரவை ஏழாம் நாளாகவும் வகுத்துள்ளவர்கள் சாக்கையர்கள் என்னும் பௌத்தர்களேயாவர். இத்தகைய வாரகணிதங்கொண்டேசகலதேச சாஸ்திரிகளும் வருடங்களைப் பெருக்கி வருவது பிரத்தியட்ச அனுபவமாகும். - 2:28; டிசம்பர் 23, 1908 - மோசே யென்னும் மகாஞானியாரின் இடபேத விவரம் மோசே அவர்களை நாம் எகிபத்தியனென்ற போதிலும், தீபேத்தி யனென்றபோதிலும் அவர் ஆசியாகண்ட வாசியேயாவர். உலகொளியாய் விளங்கும் புத்தபிரானை அவர் ஜெனனித்த காண்டக் குறிப்பால் (லயிட் ஆப் ஆஷியா) ஆசியா கண்டத்து ஒளியென்றே அருகனைக் கூறி ஆர்னால்ட் ஒயிட்டென்றும் ஆங்கில வித்துவான் எழுதியிருக்கின்றார். அவ்வொளியில் நடந்தவர்களே மகாஞானிகளாகவும், செல்லல் நிகழல் - வருங்கால மூன்றினையுஞ் சொல்லுந் தீர்க்கத் தெரிசிகளாகவும் விளங்கினார்கள். ஈதன்றி புத்தபிரான் பரிநிருவாணமாம் மாற்றிப் பிறக்கும் சுயஞ்சோதி பிரிந்தவுடன் அவர் தேகத்தை தகனஞ்செய்வதாய் அறிந்த ஏழு அரசர்கள் ஆசியாகண்டத்தின் பல பிரிவுகளிலுமிருந்து மிக்க சந்தனக் கட்டைகளைக் கொண்டுவந்து தனித்து அஸ்திகளையும், சாம்பலையும், பாகித்துக் கொண்டுபோய் ஏழு இந்திரவியாரங்களைக் கட்டிவிட்டதுமன்றி கோபாலர்களாகிய அரசபுத்திரர்கள் அச்சாம்பலைச் சிறு பெட்டிகளில் வைத்துக் கொண்டு அவற்றை நெற்றியில் வைத்து குலகுருவை சிந்தித்து வந்தவர்களும், மடத்தில் தங்கி சமணநிலை பெற்றவர்கள் சாம்பலை வாரிக்கொண்டுபோய் பத்திரமாகவைத்துக் கொண்டு அச்சாம்பலின் பேரில் வஸ்திரத்தை விரித்து அதன்மீது தங்கள் மொட்டைத் தலையுடன் உட்கார்ந்து ஞானசாதனங்களை சாதித்து சிறு வாசலில் சென்று முத்திபேறாம் நிருவாணதிசை அடைந்திருக்கின்றார்கள். அதையநுசரித்த மோசே என்னும் மகாஞானியாரின் கியானபரம்பரை ஓர் கேட்டுக்குக் கொண்டுபோகும் பேராசையாம் விசாலவழியில் செல்லாமல் நீதிநெறியாம் சிறுவாசலில் சென்று மேற்கூறிய சாம்பலை பரப்பி அதன்மீது ரெட்டை விரித்து தாங்களும் உழ்க்கார்ந்து ஞானசாதன சித்திபெற்றதை இதே மோசேயவர்களின் பரம்பரை நூலால் அறிந்துக் கொள்ளலாம். காசிக்கலம்பகம் முத்திக்குவேட்டவர் மோட்டுடற் /பாரமுடைத்தலையோ டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பினரா / லிவையன்றி யாப்பாற் சித்திப்பது மற்றிலைபோலுங் / காசிச் சிவபெருமான் பத்திக்குக் சேவலமே பலமாகப் / பலித்ததுவே. நிகழ்காலத்திரங்கல் அத்தியுஞ் சாம்பலையும் அடியிலிட்டுப் பூரித்து / முத்தியாம் மோனம் முடித்த ததிசயமே. சாம்பலின் சித்தியோ சற்குருவின் பேரன்போ / ஆம்பல் அடிபோ லமைந்த ததிசயமே. இத்தகைய ஞானசாதன ஆதாரங்களால் புத்தாகமத்தைத் தழுவியதே மோசே யாகம் என விளங்கினபோதிலும் புத்தபிரானே உலகெங்கும் சுற்றி சங்கங்களை நாட்டியுள்ளவைகளை சரித்திரங்களாலும், சிலா சாசனங்களாலும் அறியலாம். சங்கங்களை நாட்டி சகல சங்கங்களுக்குத் தலைவராயிருந்தபடியால் சங்கமித்தர், சங்கதருமர், சங்கரர், விநாயகர், சபாநாயகர், சபாபதி, கணநாயகர், கணபதியென்னும் பெயர்களையும் அவருக்களித்துள்ளார்கள். அதே சங்கங்களுக்கு மோசேயின் ஆகமத்தோர் திருச்சபைகள் என்னும் பெயரைக் கொடுத்து ஒரு சபையோருக்கு மற்றொரு சபையோர் எழுதியுள்ள ஞானசாதனங்களையும், நீதி மொழிகளையும் ஒன்றுசேர்த்து தற்காலத்துள்ள பைபிலென்னும் புத்தகரூபத்திற்கு ஆதாரமாயிருக்கின்றது. உலகத்தில் தோன்றியுள்ள மநுகுலச் சீர்திருத்தக்காரருள் சற்குணரென்றும், நல்லவரென்றும் உலகம் முழுவதும் கொண்டாடியவரும் தற்காலமுள்ள விவேகமிகுத்தவர்களால் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரான் என்னும் சிரேஷ்டப் பரம்பொருளே ஆதலின் அத்தகைய சற்குணரை அறியவேண்டிய நாம் சற்குணத்தைப் பெறவேண்டிய சாதனங்களையும் அவைகளுக்கான ஒழுக்கங்களையும் அநுட்டிக்கவேண்டுமே அன்றி வீண்காலம் போக்குவதினாலும், வீண்வாதம் புரிவதினாலும், சற்குணம் நிலைபெறாது. சற்குணம் பெற்று நித்தியசீவனாம் நிருவாணமடைவதே மாநுஷீக தன்மமாதலின் நாம் ஒவ்வொருவரும் தன்மதம் புறமதமென்னும் சினமுறாமலும், தன்னினம் புறவினமென்னும் பேதம் பாராமலும், களங்கமற்ற விசாரிணையினின்றும் நீதியின்னது அநீதியின்னது நீதியின் வழி நடத்தலால் உண்டாகுஞ் சுகமின்னது அநீதியின் வழியில் நடத்தலால் உண்டாகும் துக்கம் இன்னதென்று உணர்ந்து சுகவழிகளைக் கண்டு நடப்பதே சத்திய தன்மமாகும். அத்தகைய சத்தியதன் விதையை கற்பாறை என்னும் மந்தபுத்தியுள்ளோருக்கும், முட்செடிகள் அடர்ந்த பூமி என்னும் மதுபானப் பிரியம், வேசிகாந்தம், கள்ளவுள்ளம் உள்ளோருக்கும் போதிக்காமல் பண்படுத்தியுள்ள சுத்தபூமியென்னும் சீலமிகுத்தவர்களுக்கே போதித்து சீர்பெறச் செய்யவேண்டும் என்று கிறீஸ்துவும் போதித்திருக்கின்றார். ஆதலின் விசாரிணைப் புருஷர்கள் ஒவ்வொருவரும் வஞ்சநெஞ்சம் உள்ளோர் வார்த்தைகளையும் பொறாமெய் உள்ளோர் போதங்களிலும் செவிகொடாது, சத்தியதன்ம போதங்களாகும் மோசே, தாவீது, கிறீஸ்து முதலிய மேதாவிகளின் வாக்கியங்களை சிரமேற்கொண்டு சன்மார்க்கத்தில் நடந்து சுகம் பெறவேண்டியதே கிறீஸ்துவை பின்பற்றியவர்களின் ஒழுக்கமாகும். - 2:29; டிசம்பர் 30, 1908 - மோசே என்னும் மகாஞானியார் தெளிந்த தேசஞான விவரம் நாம் ஒவ்வொருவரும் சீருஞ் சிறப்பும் பெற்று மேனோக்க வேண்டிய சரித்திரங்களை ஆராய்ச்சி செய்யவேண்டுமேயன்றி கற்பனா கதைகளை மெய்யென்று நம்பிக் காலம் போக்குவோமாயின் தினேதினே துக்கத்திலாழ்ந்து முற்றுஞ் சீர்கெட்டுப்போவோம். ஆதலின் நமதன்பர்கள் சரித்திர ஆராய்ச்சியினின்று சகலவற்றையும் உசாவ வேண்டுகிறேன். அதாவது எங்கும் கீர்த்திபெற்ற ஆங்கில வித்துவான் கோல்புரூக் என்பவர் தான் எழுதியுள்ள சரித்திரத்தில் அடியில் குறித்துள்ளவாறு வரைந்திருக்கின்றார். “தற்காலத்துப் புலமையைக் கொண்டு புராதன இந்தியாவைப்பற்றி ஆராயுங்கால் மிகப் பழமைதங்கிய அத்தேசத்தின் நாகரீகம் இணையற்ற லட்சணம் உடையதென்ற பெரும் விஷயம் தெளிவாய் ஏற்படுகின்றது. இந்தியர்களிடத்திலிருந்து கிரேக்கர்கள் எவ்வளவோ விஷயங்களைக் கிரகித்ததுமாத்திரமன்றி அவர்களுடைய மதங்கூடச் சரித்திரகாலத்துக்கு முன்பு முதற்றொட்டுவரும் தேசத்தாராகிய இந்தியர்களின் மதத்தையே முக்கியாம்சங்களில் ஆதாரமாகக் கொண்டதாயிருந்தது. இனி ரோமியர்கள் கிரேக்கர்களிடமிருந்து ஞானோதயம் பெற்று அதன்மூலமாய் ரோமநகரம் உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தனிநாயகமாய் விளங்கி அரசு செலுத்தி வந்ததென்பதும் அந்நகரத்தின் ஆதிபத்தியத்திற்குட்பட்ட தேசத்தாரனைவரும் ஆதியில் இந்தியாவிலிருந்து பரவிய தத்துவஞானப்பிரகாசத்தையும், சமயநெறிகளையும் அந்த ரோமநகரத்தின் வாயிலாகப் பெற்றார்கள் என்பதும் உலகப் பிரசித்தம்.” கனங் கோல்புரூக்கவர்கள் கூறியுள்ளவற்றிற்கு சார்பாய் மைசூர் அரண்மனை டாக்ட்டர் ஜெகநாத நாயுடு அவர்கள் தானியற்றியுள்ள பைஷஜ கல்ப்பமென்னும் ஆயுருசாஸ்திரத்தில் அடியிற்குறித்தவாறு வரைந்திருக்கின்றார். “நாம் வாசஞ்செய்கிற இந்த பரதகண்டமாகிய இந்தியாவில் பூர்வத்தில் ஆயுர்வேதம் பிரபலப்பட்டிருந்தது. அப்போது அநேக சிறந்த வைத்தியர்களும் சீவித்திருந்தனர். இந்தத் திவ்விய வைத்தியவித்தையை அக்காலத்தில் அராபியர், யுதேயர், எகிபத்து தேசத்தார், ஜினோவா, வெனிஸ், கிரேக்கர் முதலானவர்கள் கற்றுத் தெளிந்ததாக சரித்திரக்காரர்கள் செப்பினதன்றியில் சாலோமோன் அரசன் முதலானவர்களும் கற்றுச் சென்றதாக ஓர் அமேரிக்கன் சாஸ்திரிவரைந்துள்ளாரென்று குறித்திருக்கின்றார்.” இவைகள் யாவும் சரித்திர ஆராய்ச்சிகளின் தெளிவுகளேயாகும். இந்திரரென்னும் புத்தபிரான் பரத்துவாசரென்னும் ஓர் பிணியாளனுக்கு ஆயுருவேதமென்னும் தேக குணாகுணங்களையும், உபரச குணாகுணங்களையும், மூலிகை குணாகுணங்களையும், வியாதியின் குணாகுணங்களையும் கற்பித்து சிகிட்சாநிலையில் விருத்தி செய்தவற்றுள் ஈரத்தில் இஞ்சியென்றும், காய்ந்தபோது சுக்கென்றும் வழங்கும் ஓர் மூலிகையை உபயோகப்படுத்துப்வற்றுள் இந்துக்களால் சுக்கை கஷாயரூபமாகவும், சூர்ண ரூபமாகவும், வடக்ரூபமாகவும், தைலரூபமாகவும் உபயோகித்து வருகின்றார்கள். ஆங்கிலேயர்கள் சுக்கை திராவகரூபமாக உபயோகித்து வருகின்றார்கள். யூனானிசாஸ்திரிகள் சுக்கை முரப்பா ரூபமாக உபயோகித்துவருகின்றார்கள். இத்தகைய சுக்கின் குணாகுணங்களைக் கண்டறிந்து சொன்னவரின் சத்தியமும் ஒன்றே. சருவசீவர்களுக்கு உபயோகமாகும் சுக்கென்னும் தர்ம்மமும் ஒன்றே. அந்த சுக்கை வேறு வேறு பெயர்களால் இந்தியர்களும், ஆங்கிலேயர்களும், யூனானியர்களும் அழைத்து மாறுபட உபயோகித்துக் கொண்ட போதிலும் அதன் பலனாம் பிரயோசனம் ஒன்றேயாகும். அதுபோல் உலகத்தில் தோன்றியுள்ள மனுக்களுள் யாதோர் வழிகாட்டியும் இன்றி போதகருமின்றி நல்வாய்மெய், நல்லூக்கம், நற்கடைபிடியால் நற்பரனாக விளங்கி ஓதாமல் உணர்ந்த முனிவன் என்றும், ஆதியங்கடவுளென்றும், ஆதிதேவன் என்றும், ஆயிரநாமங்களால் அழைக்கப்பெற்ற அருகனாம் புத்தபிரானையே சத்தியமென்றும், அவரால் உலக சீர்திருத்ததிற்காதியாகவும், மக்களின் மனத்துயராற்றவும், ஓதியுள்ள வாக்கியங்களுக்கு தர்ம்மமென்றும், அந்த தர்ம்மமாம் நீதிநெறி ஒழுக்கங்களில் நடந்து இதயசுத்தம் உண்டாகி நித்தியசீவனாம் நிருவாணம் அடைவதே அதன் பலனாகும். ஆதலின் சத்தியசங்கத்தோர்கள் யாவரும் சத்தியமாம் உண்மெய்ப் பிரகாசத்தைப் பலப்பெயர்களால் அழைத்து ஒழுக்கத்தினின்றது போல் திருச்சபை என்று பெயர் வைத்துள்ளவர்களும் அதே சத்தியத்தில் அன்பு கொண்டு அதே தன்மமாம் நீதிநெறியினடந்து அதேநித்தியசீவனைப் பெற்றுவந்ததுமன்றி நாளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இத்தகைய சத்திய தன்மத்தையும், அதன் பலனையும் இறந்தபின் காண்போமென்பது அசத்தியம் என்னும் பொய்யேயாம். இவற்றிற்குப் பகரமாய் பௌத்த சாஸ்திரிகள் “இறந்துபோனவர்க்கென்ன மெய்ஞ்ஞானங்காண் ஏச்சியேச்சி இகத்துள்ளோர் தூஷிப்பார்” என்றும், கிறீஸ்துவும் “பாபத்தின் சம்பளம் மரணம் என்றும் புண்ணியத்தின் சம்பளம் நித்தியசீவனென்றுங்” கூறியுள்ளார். - 2:30; சனவரி 8, 1908 - மரணம் அல்லது இறப்பு, நிருவாணம் அல்லது நித்தியசீவனென்னும் இவற்றின் விவரம் ஆ! ஆ! ஈதேது மனிதன் மரணமடைவதில்லையோ என்பாரும் உண்டு. இத்தகைய வினாக்கள் எழுஉமென்றே கியானவள்ளல் தாயுமானவரும் “ஜகமீதிருந்தாலு மரணம் உண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை” என்றும் கூறியுள்ளார். சருவசீவர்களுக்கும் உள்ள இறப்புப்பிறப்பென்னும் இருவகைச்செயலுள் இம்மெய் அகன்று மறுமெய் தோற்றாமலிருப்பதே மரணஜெயம் எனப்படும். இவற்றை அநுசரித்தே சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தியவர்கள் மநுபுத்திரனாகத் தோன்றியும் ஐயிந்திரியங்களை வென்று காமனென்னும் பெண்ணிச்சையையும், காலனென்னும் மரணத்தையும் ஜெயித்தாரென்று கூறியுள்ள பௌத்தசாஸ்திரிகளாகும் சமணமுனிவர்களும் சமணர்களில் சித்திபெற்ற சித்தர்களும் காலனை ஜெயித்து மரணஜயம் அடைந்துள்ளார்கள். அருங்கலைச்செப்பு - துறவுபத்து அரணதனைத்தாண்டி யைம்புலன வித்து / மரணனனை வென்றான் முனி. சீவகசிந்தாமணி காமனைவென்று காலத்துலைத்தோய் இடைக்காட்டுசித்தர் சாகாதிருந்திடபால்கர / சமயபற்றற்றிடபால்கர பாம்பாட்டி சித்தர் காலனென்னும் மரணக் கொடும்பகையை / கற்பமெனும்வாளினாற் கடிந்து விட்டோம் தாலப்பிறப்பினைத் தான்கடந்தோம் / தற்பரங்கண்டோமென் றாடாய்பாம்பே. இதை அனுசரித்தே மோசே என்னும் மகா ஞானியாரும் தான் மரணத்தை ஜெயித்த சாதனத்தை வர்ணனையால் சிற்றனின்பமாம் கனியை சதா இச்சித்தலால் சாவவே சாவான் என்னும் மொழிக்கு மறுப்பாய் சிற்றின்பமாம் கனியை இச்சியாதவன் சாகவே சாகானென்பது சான்றாயிற்று. தாவீதரசனும் தன் சங்கீதத்தில் நீர் மவுனமாயிருந்தால் நான் குழியிலிறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேனென்றும், கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டென்றும், ஏசாயா தீர்க்கதரிசியும் பாதாளம் உம்மை துதியாது, மரணம் உம்மைப் போற்றாது. குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை என்றும், கிறீஸ்துவும் பாபத்தின் சம்பளம் மரணமென்று கூறியுள்ளதுமன்றி தனது மாணாக்கரிலொருவன் தன் குடும்பத்தோரில் இறந்துபோனவனை அடக்கஞ்செய்து வருவதற்கு உத்திரவு கேட்டபோது கிறீஸ்துவும் அவனை நோக்கி மரித்தோரை இனி மரிப்போர் அடக்கம் பண்ணட்டும் நீ என்பின் தொடர்ந்து வாவென்று சொல்லிப்போய்விட்டார். அதினந்தரார்த்தம் யாதெனில், உலகப்பொருளின் இச்சையால் அலைபவர்கள் பிறப்பதும், இறப்பதும் சுவாபமாகும். கிறீஸ்துவைப் பின்பற்றி அவர் போதகமேறை நடப்பவர்கள் உலகப்பொருட்களின் மீது பற்றற்றவர்களாதலின் இறந்தோர் தொழில்களுக்கு அவர்களை வேகவிடாது மரணத்தை ஜயிக்கும் சிறந்தவோர் தொழிலுக்கு நிறுத்திவிட்டார். மனத்தின் செயலையும், அதன் சிறப்பையும் அறியா அன்பர்களில் சிலர் ஈதேது நூதனார்த்தமாயிருக்கின்றது கிறீஸ்தவர்கள் யாவரும் கிறிஸ்து தங்களுக்காக மரணமடைந்தார் என்று கூறியிருக்க இத்தமிழன் பத்திராதிபர் கிறீஸ்து மரணத்தை ஜெயிக்கும் வழிகாட்டியாயிருக்கின்றார் என்று கூறுவது விந்தையேயென விளம்புவாரும் உண்டு. மனமணியின் மகத்துவம் அறியாதோர்க்கீதோர் விந்தையேயாகும். ஆயினுமாகுக கிறீஸ்துவாகிய மகான் குணதீட்சை பெற்று நாற்பது நாள் சாதனை புரிந்து அதன் பலனைப் பெற்று அதினானந்தத்தால் உலகத்தையாளலாமென்னும் இச்சையால் பைசாசந் தோன்றிற்று. அப்பைசாசமாகும் உலகயிச்சையை அகற்றி தான் கண்ட காட்சியை தான் மட்டிலும் சுகித்துக்கொள்ளாது ஏனைய மக்களுக்கும் அருள்செய்ய வேண்டும் என்னும் இதக்கத்தால் சத்தியதன்மத்தை அங்குள்ள சகலருக்கும் போதிக்கவாரம்பித்தார். இவர் போதித்த சத்தியதன்மமானது அவ்விடத்திருந்த அசத்தியர்களாகும் சதுசேயர், பரிசேயரென்னும் வஞ்சகர்களுக்குப் பொருந்தாது. அவரைக் கொல்ல வழித்தேடினார்கள். அதற்கநுசரணையாய் “2. கொரிந்தியரில் கூறியவாறு அவரது பலயீனத்தால் சிலுவையில் அறையுண்ணும்படி நேர்ந்தது.” பலயீனமாவது முற்கன்ம பலனேயாகும். அக்கன்மத்தை ஜெயித்து பிழைத்திருக்கின்றதுமன்றி.. “நாங்களும் அவருக்குள் பலயீனராயிருக்கிறோம் உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனே கூடப் பிழைத்திருப்போமென்றும் கொரிந்தியர் வரைந்திருக்கின்றார். அசத்தியர்களாம் சத்துருக்களின் மித்திரபேதத்தால் வினையின் பாடுவந்து நேர்ந்தும் மெய்ஞானிகளின் சேர்க்கையாலும், தனது வித்தை மிகுதியினாலும் அப்பாட்டை ஜெயித்து தனக்குள் அடக்கிக்கொண்டு விதேக முக்த்தியடைந்தார். விவேக மிகுத்தோர்களின் ஜெயம் சரமழைகள் நெய்தல் மலர் மழையையொக்கும் தழற்பள்ளி பனினீரிற் சயனமொக்கும் சிரமறிதல் சுகமுரு நித்திறையை யொக்கும் தெகமறிவ துக்கலவை செரிப்புச் சொக்கும் நிரவரிய நாராச மருமம் பாய்தல் விரகறிய வினையினூழ் பலன்கள் யாவும் விவேகமிகுத்தவர்க்கலால் விலக்கொணாதே. விசுவாச மிகுத்தோர்களின் ஜெயம். மாற்கு சுவிசேஷம்: விசுவாசத்தினால் ஞானஸ்னானம் பெற்றவன் விஷத்திற்கு ஒப்பான ஒன்றைப் புசித்தபோதினும் சாகமாட்டானென்று வரைந்துள்ளபடியால் விசுவாசத்தின் ஞானிகளுக்கே அஃது வெள்ளென விளங்கும். அத்தேசத்தோர் கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டாரென்பதும் சத்தியமேயாம். அதாவது, கிறீஸ்துவானவர் தானடைந்த பேரானந்தத்தை தன்மட்டிலும் அனுபவித்துக் கொள்ளாமல் ஏனையோர் படுந்துக்கத்திற்கு இதங்கியத் தேயத்துள்ளோர் யாவருக்கும் போதிக்க ஆரம்பித்தபடியாலுந் தன்னூழ் பயனாலும் அப்பாடு நேர்ந்தது. அதை உணர்ந்த அத்தேச விவேகிகள் நமக்கு நல்லறம் போதிக்க ஏற்பட்டு பொல்லார்கள் கையால் நமக்காகப் பாடுபட்டாரென்று கூறியுள்ளார்கள். அம்மொழி அத்தேயத்தோருக்குப் பொருந்துமேயன்றி ஏனைய தேயத்தோர்க்குப் பொருந்தாவாம். - 2:31; சனவரி 13, 1909 - புத்ததன்மத்தைத் தழுவிய ஞானானந்தம் உலகத்தில் ஆதி சீர்திருத்த செல்வனாகத் தோன்றிய அவலோகித ஈசன் தன்னிற்றானே கண்டடைந்த ஞானானந்த சுகத்தை தன்மட்டில் அனுபவிக்காமல் மணிமேகலையில் “எண்ணருஞ் சக்கிரவாள மெங்கணும் அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை” என்று கூறியுள்ளவாறு பூவுலகெங்குஞ் சுற்றி புண்ணிய மீதென்றும், பாவமீதென்றும் விளக்கி பாப பெருக்கத்தால் உண்டாகும் பிறவிபெருக்கமாம் மரணதுக்கங்களையும், புண்ணிய பெருக்கத்தால் உண்டாகும் பிறவியற்ற மரணஜெயமாம் நிருவாண நித்திய நிலையையும் அருளிச்செய்து சுருதியாயிருந்த வாக்கியங்களை வரிவடிவாம் வடமொழி, தென்மொழி என்னும் அட்சரங்களையும் ஏற்படுத்தி என்றும் அழியாது மலைகளின் சிலாசாசனமாக தனது சத்தியதன்மத்தைப் பதிவுசெய்துவிட்டார். அவரது தன்மத்தைத் தழுவிய பரம்பரை அரசருள் அசோகச் சக்கிரவர்த்தி தனது ஆளுகைக்கு உட்பட்ட தேசங்களெங்கும் சுருதியாகவும், முதநூலாகவும் விளங்கிய முன்பதிப்பாம் சத்தியதன்மத்தை மற்றுமுள்ள மலைகளிலும், கம்பச் சிலைகளிலும் பதிவுசெய்து பரவச்செய்தார். அந்த சிலாசாசனப் பதிவுகளில் சிதைந்துள்ளவைகளை நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் மேலுமேலும் சீர்திருத்தி அந்த தன்மவாக்கியங்கள் அழியாவகைகளைச் செய்து வருகின்றார்கள். அந்த சத்தியதன்ம விளக்கங்கள் யாதெனில், உலகத்தில் தோன்றியுள்ள மநுமக்கள் ஒவ்வொருவரும் பாவச்செய்கை யீதென்றும், புண்ணியத் தவச்செய்கை ஈதென்றும் உணருமாறு நற்காட்சியில் நிலைத்தும், துற்காட்சியை அகற்றியும், நற்சிந்தையில் நிலைத்தும், துற்சிந்தையை அகற்றியும், துற்போதங்களைப் போக்கியும், நற்குடி என்று வாழ்தலும், துற்குடியென்னும் பெயர் அகற்றுதலும், நல்லூக்கத்தினிலைத்தலும் துன்முயற்சியை அகற்றுதலும், நல்லெண்ணங்களை விருத்தி செய்தலும், துன்னெண்ணங்கள் அணுகாவகைத் தேடலும், நல்லமதியில் வீற்றிருத்தலும், துன்னமதியில் நிலையாதிருத்தலும் ஆகிய துற்செயலை அகற்றி நற்செயலில் நிலைத்தலே மகாஞானிகளின் நற்கடைபிடியாகும். இத்தகைய வாக்கியத்தையும், செயலையும் சிரமேற்கொண்ட நமது ஞானத்தாயாகி அம்பிகை என்னும் ஔவையும் தனது முதல்வாசக நூலுள், அறன் செயல் விரும்பென்றுங் கூறியுள்ளாள். அதாவது, அறன்-தன்மச்சக்கிர பிரவர்த்தனனின், செயல் செய்கையை, விரும்பு - நீ ஆசை கொள்ளு என்பதேயாம். ஆசை கொள்ளும் செயலாகிய பற்று யாதெனில் உலக பந்த பாசப்பற்றுக்களாகும் துற்செயல்களற்று உலகம் துறந்த பற்றற்றோன் பற்றாகும் நற்காட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம் நல்லெண்ணம், நல்லமதியாகிய சுத்தஞானமே ஆகும். திரிக்குறள் பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றை / பற்றுக பற்று விடற்கு. நாயனார் கூறியுள்ளவாறு துற்கரும் பற்றுகள் யாவையும் அகற்றி நாதன்பற்றி வழிகாட்டிய நற்கரும் பற்றினையே பற்றி நித்திய நிலை அடைய வேண்டியதாகும். இத்தகைய நிருவாண சுகமென்னும் நிருவாண சீவனை அடைதற்கு பஞ்சசீலமே முதற்படிகளென்னப்படும். சீவகசிந்தாமணி (பஞ்ச சீலம் பற்றிய ஐந்து பாடல்கள் தெளிவில்லை) - 2:32: சனவரி 20, 1909 - பஞ்சசீலமென்னும் பஞ்சபாவங்களை அணுகவிடாமல் காப்பதே முத்தியென்னும் நித்தியசீவனுக்கு வழியாம் சீவகசிந்தாமணி கற்றவைம் பதங்கணீராக் கருவினைக் கழுவப்பட்டு மற்றவன் றேவனாகி வானிடு சிலையிற்றோன்றி யிற்றத னுடம்புமின்னா விடரொழித்தினியனாகி யுற்றவ நிலையுமெல்லா மோதியு முணர்ந்துங்கண்டான். இத்தகைய பஞ்சசீல பாக்கியத்தைப் பெற வேண்டுமென்றே மகாஞானிகளாகும் மோசே, தாவீது அவர்கள் கூறியுள்ளதுமன்றி கிறீஸ்துவானவரை ஒரு வழிப்போக்கன் அணுகி போதகரே, நான் நித்தியசீவனை அடையவேண்டுமானால் யாது செய்யவேண்டம் என்று வினவினான். அதற்கு மாறுத்திரமாகக் கிறிஸ்து கற்பனைகளை கைக்கொள்ளுமென்றார். கற்பனைகளென்றால் என்னை என்றான். பொய் சொல்லக்கூடாது விபச்சாரஞ் செய்யக்கூடாது கொலை செய்யக்கூடாது களவு செய்யக்கூடாது. என்று கூறினார். அவற்றை வினவியவன் இக்கட்டளையை என் சிறுவயதிலிருந்துக் கைக் கொண்டு வருகின்றேனென்றான். இவனது பொய்மொழியை உணர்ந்தக் கிறீஸ்து நீர் சிறுவயது முதல் கற்பனயைக் கைக் கொண்டு நடத்துவது மெய்யாயின் உனது செல்வங்கள் யாவையும் தாரித்திரர்களுக்கு அளித்துவிட்டு என் பின் சென்றுவா என்று அழைத்தார். பொருளாசை மிக்கவனாயிருந்து கற்பனையைக் கைக்கொள்ளுகிறேனென்று பொய் மொழி கூறியவனாதலின் மறுமொழி ஒன்றும் கூறாமல் திரும்பிப்போய்விட்டான். இத்தகையப் பொய்யர்களின் மொழியை அறிந்து இரண்டெஜ மானனுக்கு ஒரு ஊழியன் உதவானென்றும் கூறியுள்ளார். இதன் கருத்தோ யாதெனில்;- உலகத்தில் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமாக வாழ வேண்டும் என்று ஓர் எஜமானனிடத்திலும் பற்றற்ற நித்திய சீவனை அடையவேண்டும் என்று மற்றோர் எஜமானனிடத்திலும் ஊழியஞ் செய்வதினால் இருவருக்குமுள்ள மாறுபட்டக் கருத்திற்கு இசைந்து ஊழியஞ்செய்து ஒரு எஜமானனுக்கும் தக்க திருப்த்திசெய்து பலனடைய மாட்டான் என்பதாம். இதற்குப் பகரமாகவே உலகப்பொருளை நாடி ஊழியஞ்செய்பவன் கற்பனைகளைக் கைக் கொண்டு வருகிறேனென்று பொய்மொழி கூற அதனை விளங்க வரவைத்தபோது புறம்பே ஓடிவிட்டான். ஆதலின் நித்தியசீவனை அடையவேண்டி பஞ்சசீலத்தின் வழியாக நடப்பது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதுபோலும். உலகப்பொருளின் இச்சை மிகுதியால் பஞ்சபாவ வழியாக நடப்பது வழி விசாலமா இருக்கின்ற தென்றும் கூறியுள்ளார். நித்தியசீவனாம் முத்தியடைய வேண்டியவர்கள் பஞ்சசீலத்தில் நடந்து பஞ்ச புலன்களை அடக்க வேண்டும் என்பதாம். ஆதியங் கடவுளாகக் கொண்டாடும் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி பெருமான் பஞ்சசீல பாதையில் நடந்து ஐயிந்திரியங்களை வென்று இந்திரனென்னும் பெயரும் பெற்று அவருக்குப்பின்பு தெய்வகதி அடைந்த யாவரும் அவரை தேவர்கட்கு அரசன் என்றும், வானவர்கோனென்றும், அண்டர்கோனென்றும் கொண்டாடப்பெற்றார். அத்தகைய தெய்வகதி அடையவேண்டியவர்கள் அண்டர்கோன் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கோளென்று நாயனாரும் கூறியுள்ளார். திரிக்குறள் பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வர். ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்க்கோமான் இந்திரனே சாலுங்கரி அருங்கலைச்செப்பு இந்தியத்தை வென்றான் றொடர்பாட்டோ டம் / முந்திதுறந்தான் முநி. சிவவாக்கியர் பேசுவானு மீசனும் பிரம்மஞான மும்முளே ஆசையான ஐவரும் அலைந்தலைச்சல்படுகிறார் ஆசையான ஐவரை யடக்கி யோரிடத்திலே பேசிடாதிருப்பீராகி லீசன்வந்து பேசுமே இவற்றை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் உன் அரை வீட்டை சாத்தி உன் அந்தரங்கத்திருக்கும் பரமபிதாவை உன்முழு இருதயத்தோடும் தியானஞ்செய். அப்போது உன் அந்தரங்கத்திருக்கும் பரமபிதா வெளியரங்கமாய்ப் பலனை அளிப்பாரென்றும், பராபரன் ஆவியா இருக்கின்றார் அவரை தியானிக்கப்பட்டவர்கள் ஆவியினாலும், உண்மெயினாலும் தியானஞ் செய்யுங்கோளென்றும் உங்கள் பிதா பூரண சற்குணராயிருப்பதுபோன்று நீங்களும் சற்குணராயிருக்கக் கடவீர்களென்றும், உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால் பரலோக ராட்சியத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், சுத்தயிதயம் பராபரனுடைய ராட்சியமென்றும், அசுத்தவிதயம் கல்லரைக் கொப்பாய் எலும்பையும் மயிரையும், நாற்றத்தையும் உடையதென்றும் கூறியிருக்கின்றார். - 2:33: சனவரி 27, 1909 - பஞ்சபுலனடங்குங்கால் தூங்காமற்றூங்கும் விழிப்பின் சாட்சி அவலோகிதர் கூறியுள்ள அஷ்டாங்க மார்க்த்தின்படிக்கு கண்பார்த்த இடங்களில் எல்லாம் மனம் போவது அடங்கியும், செவிகேட்டயிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும், நாவு உருசித்தவிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும், சுகந்தம் முகர்ந்தவிடங்களில் எல்லாம் மனம்போவது அடங்கியும் சதாவிழிப்பாஞ் சாதனத்திற்கு வருவானென்றும் கூறியிருக்கின்றார். அதாவது:- தூங்கினேனென்னும் மரணத்திற்குச் செல்லாமல் சதாவிழிப்பிலும் ஜாக்கிரதையிலும் நின்று நிருவாணமாம் நித்தியசீவனை அடையவேண்டியதாகும். அருங்கலைச்செப்பு - விழிப்பின் பத்து விழிப்பில் விழித்து வினைகடந்தமாற்றஞ் / சுழித்தி துறந்தான் சுகம். தாயுமானவர் ஆங்காரமுள்ளடக்கி ஐம்புலனைச்சுட்டறுத்து / தூங்காமற்றூங்கி சுகம் பெறுவதெக்காலம். அகஸ்தியர் பரிபாஷை அமைதியொடு பராபரத்தை தரிசித்தேதான் / அப்பனே லலாடத்தில் தூங்குவாயே. பாம்பாட்டி சித்தர் தூங்கா மற்றூங்கியே சுகம்பெறவே / தொந்தோம் தொந்தோமென்றாடாய்பாம்பே. இவைகளை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் விழித்திருந்து செபம் பண்ணுங்கள், விழித்திருந்து செபம் பண்ணுங்கோளென்றுங் கூறியுள்ளார். அப்போஸ்தலர்களும் தங்கள் நிருபங்களில் விழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கோளென்றும் வரைந்திருக்கின்றார்கள். நாதவொலி விவரம் இத்தகைய ஐம்புலன் ஒடுக்க சதாவிழிப்பின் ஜாக்கிரதையால் தசவாயுக்கள் ஒடுங்கி தசநாதங்கள் எழுவுமென்று ததாகதர் அஷ்டாங்க மார்க்க மன அமைதியில் விளக்கியிருக்கின்றார். அருங்கலைச்செப்பு - தசநாதப்பத்து விழிப்பின் விழிப்பால் வளர்நாதந் தோன்றி / சுழித்திக் கெடுமென்றறி. சுழித்திக் கெடுதல் சுத்தஞானத்தில் / விழித்தப் பலனென்றறி. சுத்தஞானத்தாற் றோன்றிய நாதம் / முத்தியின் வாயன் முனை. மச்சமுனியார் விழித்து மிக பார்த்திடவே பொறிதான்வீசும் / முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும் சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால் / சத்தமென்ற நாதவொலி காதிற்கேட்கும். மனிதன் உலக இச்சையை அகற்றி ஞான இச்சையைப் பெருக்கி தானடையும் பலனுக்கு இதைதான் கடைநாளென்று கூறப்படும். இதை அனுசரித்தே கிறீஸ்துவானரும் தனது மாணாக்கர்களுக்கு ஞானசாதகக் கடைசிநாளில் எக்காளந் தொனிக்கும் என்று கூறியிருக்கின்றார். அஃது மனிதனின் ஞானத்தெளிவாம் கடைசி நாளாதலின் புலன்களும் தசவாயுக்களும் ஒடுங்கி தசநாதங்களாம் எக்காளமென்னும் நாதவொலிகள் எழும்புகின்றது. இதையே அப்போஸ்தலர்கள் சுரமண்டல் தொனிகளென்று வரைந்திருக்கின்றார்கள். அக்காலத்தில் தேகங்கூர்ச்சி, உரோமஞ் சிலிர்த்து, இதயம் படபடத்து, இரத்த வியர்வை பொழிவதாகும். கிறீஸ்துவுக்கு பாடுநேருஞ்சமயத்தில் கெத்திசேமென்னுந் தோட்டத்தில் மேற்கூறிய குறிகள் நேர்ந்தது. இத்தகைய சாதனத்தையே தாயுமானவரும் தெள்ளற விளக்கி இருக்கின்றார். உடல்குழைய என்பெலா நெக்குருகவிழிநீர்களூற்றென வெதும்பியூற்ற ஊசிகாந்தத்தினை கண்டணுகல்போலவே ஒருரவும் உன்னி வுன்னி படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குரப்பாடி யாடிக் குதித்து இத்தகைய மோனசாதனம் முதிர்ந்து செல்கால சங்கதிகளையும், நிகழ்கால சங்கதிகளையும், வருங்கால சங்கதிகளையும் நித்திரையை செபித்து சதா விழிப்பினின்று சொல்லுவான். ஒளவையார் ஞானக்குறள் செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் / சொல்லு மவுனத் தொழில். இவ்வகையாகவே கிறீஸ்துவும் நித்திரையை செயிக்கவேண்டும் என்றும், விழித்திருக்கவேண்டும் என்றும் கூறி மறுரூபமடைந்தும் காண்பித்திருப்பதுமன்றி செல்லல், நிகழல், வருங்கால மூன்றினையுஞ் சொல்லுந் தீர்க்கதரிசியாகவும் இருந்தபடியால் தன்னை சுட்டியும், சுதேசத்தை சுட்டியும் சில உவமைகளை வெளியிட்டும் இருக்கின்றார். அவற்றை அனுசரித்தே கொரிந்தியரும் தனது நிருபத்தில் நித்திறையை அடையக்கூடாத விஷயங்களையும், எக்காள தொனியின் விஷயங்களையும், மறுரூபம் அடையும் விஷயங்களையும் விளக்கியிருக்கின்றார். இத்தகைய ஞானநிலையைக் கண்டடைந்தவர்களையே ஞானத்தானம் பெற்றவர்கள் என்று கூறப்படும். அந்த ஞானத்தானத்தை விசுவாசத்துடன் பெறுவார்களாயின் பலபாஷைகளைப் பேசுவார்கள் என்றும், அவர்கள் கைபட்டவுடன் மற்றவர்களின் வியாதி விலகுமென்றும், விஷத்திற்கொப்பான அவுடதங்களைப் புசித்தாலும் சாகமாட்டார்கள் என்றும், பாம்புகளைக் கையில் பிடித்துக் கொள்ளுவார்கள் என்றும் மார்க்கு சுவிசேஷத்தில் கூறியுள்ளவற்றிற்குப் பகரமாய் கொருந்தியரும் விசுவாசத்தினின்று பலபாஷைகள் பேசவேண்டிய விஷயங்களையும், தீர்க்கத்தரிசன விஷயங்களையும் தெள்ளற விளக்கியிருக்கின்றார். - 2:34; பிப்ரவரி 3, 1909 - இன்னிலையடைந்தோனை உபநயனமாம் முக்கண்ணன் என்றும், ஆரூடனென்றும், ஞானக்கண்ணினாலறிந்து சொல்லுபனென்றும், தீர்க்கதரிசியென்றும் கூறுவர். உலகத்தோருக்கு நேரிடும் சுகதுக்கங்களையும் விளக்கி துக்கநிவர்த்தியாம் வழிகளையும் போதிப்பார்கள். மற்றவர்களுடைய கண்களுக்குப் புலப்படாமலும் உலாவுவார்கள். எதிரில் தோன்றியும் நீதியின் வழியைப் போதிப்பார்கள். மண், நீர், காற்று, நெருப்பென்னும் நான்கு பூதங்கள் திரண்டு கன்மபந்தத்தால் பஞ்சஸ்கந்தமானிடரூபியாய்த் தோன்றி தனக்குள்ள நெருப்பாகும் தேயுவால் எழும் இராகத் துவேஷமோகங்களாகும் காம, வெகுளி, மயக்காக்கினிகளை நற்கருமப் பெருக்கத்தினாலும், நீதியின் ஒழுக்கத்தினாலும் சாந்தம், அன்பு, யீகை, என்னும் தண்ணீரால் அவித்து, நெருப்பு தேயுவென்னுஞ் சுடுகை அவிந்து தெய்வகம் தெய்வமென்னுந் தண்மெய் தோன்றி சகலராலும் துதித்துக் கொண்டாடப்படுவார்கள். இன்னிலை வாய்த்த மேன்மக்களையே பாலியென்னும் மகடபாஷையில் அறஹத்துக்களென்றும், சமஸ்கிருதமென்னும் சகடபாஷையில் பிராமணர்கள் என்றும், தமிழென்னும் திராவிட பாஷையில் அந்தணர்கள் என்றும் அழைக்கப்பெற்றார்கள். இத்தகைய மேன்மக்களென்னும் சிறப்புப் பெயர்பெற்ற காரணம் யாதென்பீரேல் சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்குந் தண்மெய் நிறைவுகண்டேயாம். திரிக்குறள் அந்தணரென்பே ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மெய்ப் பூண்டொழுகலால். இத்தன்மெய்ப் பெற்ற மேன்மக்கள் தங்கள் உருவை மண்ணுடன் மண்ணாகவும், நீருடன் நீராகவும், காற்றுடன் காற்றாகவும், நெருப்புடன் நெருப்பாகவும் கலந்து மறைவதுடன் சீவர்களுக்கு உபகாரிகளாகவும் விளங்குவார்கள். இவர்களையே விதேகமுத்தர்களென்றும், சித்தர்களென்றும், சாரணர்கள் என்றும் கூறப்படும். பின்கலை நிகண்டு நீரிற் பூவில் வானில் நினைத்துழி யொதுங்குகின்ற சாரண ரெண்மராவர் சமணரிற் சித்திபெற்றோர். இம்முதிர்ந்த முத்திநிலையில் ஒன்றாம் விதேகமுத்தியை எலியா, ஏனோக், கிறீஸ்து முதலிய மேன்மக்கள் பெற்றும் மற்றவர்களுக்கும் அவ்வழியைப் போதித்தும் இருக்கின்றார்கள். இதையே சித்துநிலை எனப்படும். பரிபூரணமாம் பரிநிருவாண முத்தநிலை யாதெனில்- உலகத்திலுள்ள வரையில் மக்களுக்கு உதவியாயிருந்து நன்னெறிகளைப் போதித்து சகலரையும் யீடேறும் பாதையில் விடுத்து புளியம் பழமும் ஓடும்போலவும், புழுவும் விட்டில்போலவும் தங்கள் தேகத்தை உதிரிவிட்டு சோதி உருவாய் அகண்டத்துலாவுவார்கள். இச்சிறந்த மார்க்கத்தை தன்னிற்றானே கண்டடைந்து ஆதிதேவ னென்றும், ஆதிகடவுளென்றும், ஆதிபகவனென்றும், பெயர்பெற்ற புத்தபிரான் உலகப்பற்றுக்கள் யாவையும் நீக்கி போதிநீழலில் நிருவாணம் பெற்று உலகெங்குமுள்ள மக்களுக்கு இம்மார்க்கத்தைப் போதித்து நல்வழியில் விடுத்து தன் தேகத்தை தகனிக்க உத்திரவு கொடுத்துவிட்டு சுயம்பிரகாச சோதியானது தேகமுழுவதும் வாள்போல் பரவி வெளிதோன்ற அசரீரியாய் அநித்திய வனாத்துமம் என்னும் நாமரூபமற்ற பரிநிருவாண நிலை அடைந்தார். - 2:35; பிப்ரவரி 10, 1909 - பரிநிருவாண நிலையாம் சுயம்பிரகாச லட்சணம் வீரசோழியம் கூரார் வளையுகிர் வாளெயிற்றுச் செங்கட் கொலையுழுவை காய்பசியாற் கூர்ந்தவென்னோய் நீங்க வேராயிரங்கதிர் போல்வாள் விரிந்தமேனி யுவம் விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீயென்றாற் காரார் திரைமுளைத்த செம்பவள மேவுங் கடிமுகிழ்தண்சினைய காமருபூம்போதி யேராம் முநிவரார் வானவர்தங் கோவே யொந்தாயரோ நின்னை யேத்தாதார் யாரே. மேற்கண்டபடி, திருமேவு பதுமஞ்சேர் திசைமுகமு முதவாகி வுருமேவி யவதரித்த வுயிரனைத்து முயக் கொள்வா னிவ்வுலகுந் கீழுலகு மிசையுல மிருள்நீங்க வெவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்தசெழுஞ் சுடரென்ன விலங்குகதி ரோரிரண்டும் விளங்கி வலங்கொண்டுலல வலங்குசினைப் போதினிழ லறமமர்ந்த பெரியோய் நீ புளியம் ஓடு நீக்கிய பழம்போலும், புழுவின் செட்டை நீக்கிய விட்டில் போலும், நெல்லின் உமிநீக்கிய அரிசிபோலும், நான்குபூத சரீரவுருபோக்கிய அசரீரியாய் நற்சேத்திரம்பெற்று அகண்டத் துலாவுகின்றார்கள். சீவகசிந்தாமணி - தேவர்கள் இலட்சணம் திருவிற்போற் குலாய தேந்தார் / தேவர்தன் தண்மெய் செப்பிற் கருவத்து சென்று தோன்றார் / கானிலந் தோய்தல் செல்லா குருவமே யெழுதலாகா / வொளியுமிழ்ந் திலங்குமேனி பரிதியி னியன்றதொக்கும் / பன்மலர் கண்ணிவாடா. இவர்களது தோற்றம் ஓர் பிரபுவை பிரபுசென்று தெரிசனங்கொடுப்பது போலும், அரசனை மற்றோர் அரசன் கண்டு தெரிசனைக் கொடுப்பது போலும், சுயம்பிரகாச தேவர்கள் யாவரும் ஞான கருணாகர முகம் கொண்டவர்களுக்கே தெரிசனம் ஈவது இயல்பாகும். தாயுமானவர் ஞான கருணாகரமுகங் கண்டபோதிலோ நவநாத சித்தர்களுமுன்னட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர்முதன் ஞானிகளு முனை மெச்சுவார். இடைகாட்டுசித்தர் ஆதிபகவானையே பசுவே அன்பாய்துதிப்பாயேல் சோதிபரகதிதான் பசுவே சொந்தமாதாகாதோ. ஒளவையார் ஞானக்குறள் வெள்ளிப்பொன் மேனியதொக்கும்வினையுடைய உள்ளுடம்பினாய வொளி. தாயுமானவர் பந்தமெல்லாந்தீர பரஞ்சோதி நீகுருவாய் வந்தவடிவை மரவேன் பராபரமே. இத்தகையதாய் ஆதிதேவனின் அருள்மொழியைப் பின்பற்றிய மோசே என்னும் மகா ஞானியாரும், ஏனோக் - எலியா - கிறிஸ்து என்னும் மேன்மக்களும், தங்கள் உள்ளொளியைப் பிரகாசிக்கச் செய்ததுமன்றி நித்திய சீவிகளாகவும் வாழ்கின்றார்கள். அதாவது - கற்பகவிருட்சக் கனியென்றும், ஜீவவிருட்சக் கனியென்றும் வழங்கும் அமுத்தாரணைப் புசிப்பின் பேரின்பத்தினாலேயாம். தேவன் வொளியாயிருக்கின்றார் என்றும், கிறிஸ்து வொளியாயிருக்கின்றாரென்றும், ஒளியை வெளிபடுத்துதற்கேகி கிறீஸ்துவந்துள்ளாரென்றும், அப்போஸ்தலர்களால் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றது. 1 தீமோத்தேயு, 6-ம் அதிகாரம், 15-ம் வசனம். “அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலத்தில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கிராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும் ஒருவராய் சாவாமெய் உள்ளவரும், சேரக்கூடாதவரும், ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாய் இருக்கிறவர் அவருக்கே கனமும், நித்தியமும், வல்லமெயும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” - 2:36: பிப்ரவரி 17, 1909 - அதற்குப் பகரமாயுள்ள புத்தர் தியானத்தைக் காணலாம். வீரசோழியம் அருளாழி பயந்தோய் நீஇ அறவாழி நிறைந்தோய் நீஇ மருளாழி துறந்தோய் நீஇ மலையாழி புரிந்தோய் நீஇ மாதவரின் மாதவநீஇ வானவருள் வானவநீஇ போதனரிற் போதன நீஇ புண்ணியரிற் புண்ணிய நீஇ. ஆதிநீஇ அமலநீஇ அயனுநீஇ அறியுநீஇ சோதிநீஇ நாதநீஇ துறைவநீஇ இறைவ நீஇ அருளுநீஇ பொருளுநீஇ அறிவநீஇ அநகநீதி தெருளுநீஇ திருவுநீஇ செறிவுநீஇ செம்மரீஇ. இத்தியாதி உத்தமநிலை வாய்த்து உலகநாதனென்றும் ஜெகத்து இரட்சகனென்றும் பெயர் பெற்ற ஏகச்சக்கிராதிபதி சித்தார்த்தியவர்கள் தனது முப்பதாவது வயதில் கல்லாலவிருசத்தினடியில் வீற்றிருந்து ஓதாமலுணர்ந்து உள்ளத்துறவடைந்து சுகவாரியாம் நிருவாணநிலை அடைந்தார். அருங்கலைச்செப்பு - நிருவாணப்பத்து ஆறைந்த தாண்டி லைம்புலனை வென்றான் / கூறுகல்லாலத்தின் கீழ் தூயநிலைமந் துறவுஞ் சுகநிலையும் / ஆயவகநிலையதாம். உலகுணர்ந்தான் வேந்த னுள்ளத்திருந்து / பலகலையு மீய்ந்தான் பரன். இறையா யிறைகவர்ந்தா னேகசக்ராதி / துறவாய் துணை யகன்றான் றோள். ஏகசக்கிராதிபதியாகிய புத்தபிரான் முப்பதாமாண்டில் மண், பெண், பொன்னென்ற முப்பொருளாசையை அறுத்து மெய்ப் பொருள் அன்பில் நிலைத்து நிருவாணம் பெற்றது போல் அவரால் உலகெங்கும் நாட்டிய புத்தசங்கத்தோரும் அதே முப்பதாவதாண்டில் சகல பற்றுக்களையும் ஒழித்து நிருவாணத்திற்கு ஏதுவாம் சமண நிலையாம் ஞானத்தானத்தைப் பெற்று நன்மார்க்கத்தினின்றார்கள். சீவகசிந்தாமணி ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் / கலைகள் படைநவின்றார் கொய் பூமாலை குழன்மின்னுங் / கொழும்பொற்றோடுங் குண்டலமு மையன்மார்கள் துளக்கின்றி / யாலுங்கலிமா வெகுண்டூர்ந்தார் மொய்யாரலங்கன் மார்பர்க்கு / முப்பதாகி நிறைந்தே. சிவயோகசாரம் முப்பதும் வந்தால் முடியும் முப்பதுஞ் சென்றாலி ருளு மப்படியேயேது மறிநெஞ்சே - எப்பொழுது மாங்கால மவ்வினையு மாகுமது துலைந்து போங்கால மெவ்வினையும் போம். நல்வழி முப்பதாமாண்டளவின் மூன்றற் றொருபொருளைத் தப்பாமற் றன்னுட் பெறானாயின் - செப்புங் கலையளவேயாகுமாங் காரிகையார் தங்கண் முலையளவே யாகுமா மூப்பு. இதை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் தனது முப்பதாவது வயதில் காட்டில் லோகஸ்ட் கூர்மமென்னும் கிழங்கும், தேனும் புசித்துலாவி யோவானென்னும் மகாஞானியாரிடம் ஞானதானம் பெற்று குகையிலடங்கி நார்ப்பது நாளையில் ஞானவிழி திறந்து நிருவாணம் பெற்றார். புத்தசங்கங்களைச் சேர்ந்த ஒவ்வொருவரும் முப்பதாவது வயதில் ஞானத்தானம் பெற்று பாவத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயிக்கும் காரணம் யாதென்பீரேல், - 2:37, பிப்ரவரி 24, 1909 - ஞானத்தானபலன் ஆடு, மாடு, கழுதை, குதிரை, இவைகளின் முன்பு வைக்கோல், கொள்ளு, புல்லு, தவிடு முதலிய உணவு பொருள் இருக்கக் காண்கின்றோமன்றி வேறில்லை. மனிதர்களுக்கோ எனில் நான்கு வேதம், ஆறுசாஸ்திரம், பதினெண் புராணம், அறுபத்திநாலு கலைக்கியானங்களும், திருச்சபைகளென்றும், திருச்சபைக் கட்டளைகளென்றும், பெரியகுரு - சின்னகுருவென்றும், பெரியபூசை - சின்னபூசை என்றும் இத்தகையக் கூட்டத்தில் சேருவதற்கு ஞானத்தானமென்னும் அறிவினிலை அடைந்தோ மென்றும் சொல்லுவதற்குரிய வாக்கியங்களை பிரயோகிக்கும் ஆதாரங்களை அளிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய ஆதாரங்களைப் பெற்றுள்ள மக்களோவெனில் புல்லையும், கொள்ளையும் முன்னிலையில் பெற்றுள்ள விலங்குகளுக்கு ஒப்பாய் நோய்கொண்டும், கபமீண்டும், பாபத்தின் சம்பளமாகும் மரணத்திற்கு ஆளாகின்றோம். அதனினும் விலங்குகளேனும் சுகசீவிகளாக உலாவி நீடித்த ஆயுளுடனிருப்பதைக் காண்கின்றோம். வேதத்தை ஓதுகின்றவன் என்றும், குருபட்டம் பெற்றவன் என்றும், ஞானதீட்சை பெற்றவன் என்றும், ஞானஸ்தானம் பெற்றவன் என்றும் குட்டி வேதாந்திகளல்ல பெரிய பெரிய வேதாந்திகள் என்றும், பெயர் பெற்ற மக்களோ நல்ல பாலியத்தில் கபமடைத்து செத்தான், கண்ணிருண்டு செத்தான், வாய்குழைந்து செத்தான், மெய்மறந்து செத்தான் என்று சொல்லும் மொழியைக் கேட்கின்றோம். அநுபவக் காட்சியால் மக்களினும் விலங்குகளே மேலாக விளங்குகின்றது. பூர்வகாலத்தில் சத்தியதன்மத்தினின்று ஞானஸ்தானமாம் அறிவிநிலை அடைந்த மக்கள் சருவ விஷசெந்துக்களையும், கொடிய விலங்குகளையும் தங்கள் ஏவல்களுக்கடக்கியும், தங்களுடன் உலாவியும் இருந்ததாக ஞானநூற்கள் கூறுகின்றன. தாயுமானவர் கானகமிலங்கு புலிபசுவொடு குலவ நின் / கண்காண மதயானையுங் கைகாட்டவுங் கையாநெட்டுடுத்துப் பெரிய / காட்டை மிக வேந்திவருமே. அருங்கலைச்செப்பு - ஞானமகத்துவப்பத்து ஞானத் தெளிவில் நனவலிழ்ந்து நின்றாரை / கானக் குடி வணங்குங் காண் முற்றுந் துறந்து மூதுணர்ந்த மேலோரை / யுற்றவிலங்குந் தொழும். மெய்ப்பொருட்கண்ட மேலவர்க்கென்றுந் / துய்ப்பனக் கேடொன்று மில் துணிபுற்று வுள்ளத் துறவடைந்தோர்க்கு / பிணி மூப்பு சாக்கா டறும். இவற்றை அனுசரித்தே யோவான் என்னும் மகாஞானியும் கானகத்தில் கிழங்குந் தேனும் புசித்து கொடிய விஷசெந்துக்களுடனும், துஷ்ட மிருகங்களுடனும் உலாவித்திரிந்தார். சிம்மக்குகையில் அடைக்கப்பட்ட சிம்சோனும் சுகமாக வெளிவந்தார். இத்தியாதி செயல்கள் யாவும் பற்றற்றகுணத்தாலும், அன்பின் மிகுதியாலும் பெறும் ஞானஸ்னானம் ஞானத்தானமென்னும் அறிவினிலையின் பலன்களேயாம். இதையே விவேகமிகுத்த மகாஞானிகளாம் அறஹத்து, பிராமணர், அந்தணர், தீர்க்கதரிசிகளெனப் பெயர்பெற்ற மடாதிபதிகளிடம் பெறும் ஞானதீட்சை ஞானத்தானம் எனப்படும். இத்தகைய புத்தசங்க குருக்களாகும் சமணமுனிவர்களின் பெயரற்றுப் போய்விட்டபடியால் மதக்கடைகளைப் பரப்பி வயிறுபிழைக்கும் வேஷபிராமணர்களும், வேஷ வேதாந்திகளும் போலி ஞானிகளும் தங்களை மெய்ஞ்ஞானிகளென வகுத்துக் கொண்டு மற்றவர்களை அஞ்ஞானிகளெனத் தூற்றி குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவதுபோல் அஞ்ஞானிகளுக்கும் அதியஞ் ஞானிகளே தோன்றி சத்திய ஆதாரங்களை தங்கள் சீவனத்திற்கு அதன் ரகசியார்த்தம் உணராமல் புரட்டி போதிக்குங் குருக்களும் மிக்கப் பரவிவிட்டபடியால் அநித்தியசீவன் இன்னதென்பதும், நித்தியசீவன் இன்னதென்பதும், ஜீவவூற்று இன்னதென்பதும், அஜீவவூற்று இன்னதென்பதும் கற்கபவிருட்சம் இன்னதென்பதும், அகற்பகவிருட்சம் இன்னதென்பதும், - 2:38; மார்ச் 3, 1909 - உணராமலே தங்கள் ஜீவனோபாய தந்திரார்த்தங்களையும் தங்களுக்கே புலப்படா விஷயங்களையும் மாறுபடக்கூறி பேதைமக்கள் வசம் பணம் சம்பாதிப்பதே பொய்க்குருக்களின் போதனையாகிவிட்டது. இத்தகையப் பொய்க்குருக்கள் தோன்றி புவனமாக்களைக் கெடுப்பார்கள் என்று தெரிந்தே புத்தபிரானவர்கள் மக்களுக்கு மயக்கத்தை உண்டுசெய்யும் வாக்கியங்களைப் போதிக்காமல் மலைவுபடா வாக்கியமாகும் அன்பை வளர்த்துங்கோளென்று வற்புறுத்திக் கூறிவந்ததுமன்றி அன்பே ஓருருவாக நின்று சருவசீவர்களுக்கும் அன்பின் ஒழுக்க வழியில் நடந்தும் தனது சத்தியதன்மத்தைப் போதித்தும் வந்தார். அதினால் மகடபாஷையில் அவரை ஸிவனென்றும் சகடபாஷையில் காருண்யனென்றும் திராவிடபாஷையில், அருகனென்றும் வழங்கிவந்தார்கள். மணிமேகலை தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பும் மன்னுயிர் முதல்வன் அறமும் தென்றான். அருங்கலைச் செப்பு - அமுதப்பத்து அன்பே யுருவா மறவாழி யான்ற னின்பவமு தென்றறி. திருமூலர் திருமந்திரம் அன்பும் சிவமும் இரண்டென்ப ரறிவிலார் / அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் / அன்பே சிவமாய மாந்திருப் பாரே. இதை அனுசரித்தே கிறீஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில், சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், நீதியின் பேரில் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்றும், இவ்விதமாய் மனுஷர், உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பு பிரகாசிக்கக்கடவது, என்றும் கூறியுள்ளார் இதை அநுசரித்தே அவர்கள் போதனைக்குட்பட்ட 1 கொரிந்தியர், 13 அதிகாரம், 13 வசனத்தில் “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கின்றது இவைகளில் அன்பேபெரியது” இப்பேரானந்த அன்பைப் பெருக்குவதற்கு இல்லறத்திருத்தல் கூடாது துறவறமாம் புத்தசங்கமென்று ஆதிதேவனாலருளியக் கட்டளைபடிக்கு இல்லறவாசிகள் சிறுவர்களில் சீலமும் ஒழுக்கமுமிகுத்த ஒவ்வொரு பிள்ளைகளை மடத்திற்சேர்த்து அவர்களுக்கு வேண்டிய உணவுக்கும் உடைக்கும் உபகாரஞ்செய்து ஞான சித்திபெறும் அன்பைப் பெருக வைப்பார்கள். அவ்வன்பின் பெருக்கத்தால் சாந்தம் நிறைம்பி நிருவாணமென்னும் நித்திய சீவனையடைவார்கள். இவர்களை 1-வது உத்தமக்கள், 2-வது விதரணமக்கள், 3-வது உள்விழிமக்கள், 4-வது விஞ்சைமக்கள், 5-வது ஐந்திரமக்களென்றுங் கூறுவதுடன் சங்கரர், சமணர், சாரணர், சித்தர், அறஹத்துக்களென்றும் கூறப்படும். இத்தகைய பாக்கியம் பெற்றவர்களையே பதுமநிதி, தர்ம்மநிதி, சங்கநிதி பெற்றோரென்று கூறப்படும். இப்பேரானந்த ஞானபாக்கியத்தையடைதற்கு இல்லறத்திருந்து பொருளுதவி செய்து வந்தவர் புருஷனாயின் அவரை மகடபாஷையில் உபாசகனென்றும், திராவிட பாஷையில் ஞானதகப்பனென்றும், சங்கத்திற் சேர்த்து ஞான உபகாரியாயிருந்தோர் இஸ்திரியாயின் மகடபாஷையில் உபாசகியென்றும் திராவிட பாஷையில் ஞானத்தாயென்றும் கூறப்படும். அழிந்து போகத்தக்க வீடுகட்டிக் கொடாமலும் விவாகஞ்செய்து வைக்காமலும், அழியா பேரின்பமாகும் ஞானத்தானத்தை பெற்று நல்லன்பில் நிலைத்து நித்திய சீவனைப் பெற உதவிபுரிந்தவர்களாதலின் அவர்களை ஞானத்திற்கு தாயும் ஞானத்திற்குத் தகப்பனும் என்று வழங்கி வந்தார்கள். இதை அநுசரித்தே 1. கொரிந்தியர் அதிகாரம், 28 வசனத்தில் தேவனானவர் சபையிலுள்ளோருக்கு சகல பாஷைகளையும் ஈய்ந்து அவரவர்கள் சாதனத்திற்குத் தக்கவாறு 1-வது அப்போஸ்தலர்களென்றும் 2-வது தீர்க்கதரிசிகளென்றும், 3-வது போதகர்கள் என்றும், 4-வது அற்புதங்களை அருளுவோர்கள் என்றும், 5-வது வியாதியஸ்தர்களை குணமாக்கும் வரங்களையுடையார்களென்றும் 6-வது சருவ சீவர்களையும் ஏவலாளருக்கும் வல்லபமுடையவர்களென்றும், 7-வது சகல ஆலோசனையும் செய்ய வல்லவர்களென்றும்" ஞான வரங்களுக்குரிய அழியாத்திரவியங்களாகும் தேவத்திரவிய உபகாரங்கள் ஏழையும் அளித்துள்ளார்கள். தெய்வசபையில் சேர்த்து தேவதிரவியமாம் ஞானத்தைப் பெறச்செய்யும் புருஷனை ஞான தகப்பன் என்றும் இஸ்திரியை ஞானத்தாயென்றும் கூறத்தகும். - 2:39; மார்ச் 10, 1909 - உலகத்தில் யீன்றதாய், அமுதூட்டியதாய் செவிலிதாய், அநாதையை வளர்த்ததாய், ஈன்றதந்தை, அமுதுக் காதரை செய்த தந்தை அநாதையை வளர்த்த தந்தை, கல்வி விருத்திக்கு ஆதரை தந்தை, கல்வியை ஊட்டிய தந்தை ஓர் தலை மகனையேனும் தலைமகளையேனும் புத்த சங்கமாகுந் தெய்வ சபையில் சேர்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து ஞானத்தானம் பெறவைத்து அன்பு பெருகியக்கால், இரசோகுண தமோகுணம் இரண்டும் நசிந்து சாந்தகுண சுயம்புவாய், (அதே சம்மா சம்புவாய்) நல்லவனென கொண்டாடுவதற்காய் உலகத்தில் தோன்றியுள்ள சருவ சீவராசிகளுக்கும் உபகாரியாக விளங்கச் செய்த உபாசகா, உபாசகி, தாயகாநாயகி அதாவது ஞானத்தாய் ஞானத்தகப்பனென விளங்குகின்றவர்களே உலகத்தில் தோன்றியுள்ள மக்களில் மிக்க சிறப்புற்றவர்கள் என்று கூறப்படும். புத்த சங்கமாம் தெய்வசபைச் சேர்ந்து சீலமும் ஒழுக்கமும் மிகுத்தக் கொள்கையால் வானம் பெய்யென்றால் பெய்யத்தக்க அதிகாரியாகின்றான். இதை அனுசரித்தே மக்களுக்கு ஞான அமுதூட்டியா ஒளவையும். “நல்லாரொருவ ருளரேலவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யுமழை - என்றும் புறநானூறு மலைவான் கொள்கெனவுயர் பலியேற்போர் / மாதிரியான்றுழைமேக்கு யர்கெனக் ம கடவுட்பேணிய குறவர்மாக்கள் / பெயர்கண் மாரியின் உவகைகண்டாற்று என்னும் நீதிமான்களின் வாக்கானது மழையை வாவென்றால் வரவும் போவென்றால் போகவும் உள்ளச் செயல்கள் ஞானத்தானம் பெற்றவர்களுக்கேயாம். இத்தகைய நீதிமான்களின் செயல்களினால் சருவ சீவர்களுஞ் சுகத்தைப் பெறுகின்றார்கள். ஒழுக்கத்திலும் சீலத்திலும் நடைபெற்றுவரும் சிறுவன் ஒருவனை புத்த சங்கமாம், தெய்வ சபையில் சேர்த்து அவன் ஞான சித்தியடையும் அளவும் வேணவுபகாரஞ் செய்பவனை ஞானத்தகப்பன் என்றும், செய்பவளை ஞானத்தாய் என்றும் சிறப்பித்து வந்தார்கள் நாளது வரையில் பர்ம்மா, தீபேத், முதலிய பௌத்தராட்சியங்களில் சிறப்பித்தும் வருகின்றார்கள். அத்தேச பௌத்த சங்கவாசிகள் நாளது வரையில் மழையைப் போவென்றால் போகவும் வா என்றால் வரவும் செய்து வருகின்றார்கள். அதுபோலவே பூர்வகால மகாஞானியும் நீதிமானுமாகிய எலியா தீர்க்கத்தெரிசியானவர், மக்களுக்குண்டாயிருந்த அகங்கார மிகுதியையும் வஞ்சகக் கூத்தையும் கண்டு, அவர்கள் செருக்கை அடக்குமாறு மூன்று வருடம் ஆறு மாதம் மழைப் பெய்யாமலிருக்கச் செய்ததும் மறுபடியும் மழையைப் பெய்யும்படிச் செய்ததும் ஆகியச் செயல்களை (யாக்கோபு) எழுதியுள்ள நிருபத்தாலறியலாம். பூர்வ இல்லற மக்களுள் இஸ்திரிகளும் சீலநெறி நின்று தங்கட் கணவர்களையே கடவுளாக சிந்தித்து கற்புநிலையினின்று செல்வாக்குடையவர்களாய் வாழ்ந்து வந்தார்கள். அதாவது மழைப் பெய் என்றால் பெய்யும் வாக்கு செல்லக் கூடியவர்களாயிருந்தார்கள். திரிக்குறள் தெய்வந்தொழா அள் கொளு நற்றொழுதெழுவாள் / பெய்யெனப் பெய்யுமழை மணிமேகலை தெய்வந்தொழா அள் கொழுநற்றொழுமவள் பெய்யெனப் பெய்யும் பொருமழையென்றவப் பொய்யில் புலவன் பொருளுரைதேறாய் என்று புத்ததன்மத்தைத் தழுவியே ஆபிரகாமின் மனைவியாகிய சாராளென்பவள் தன் கணவன் ஆபிரகாமையே கடவுளாக சிந்தித்து நற்கிரியைகளில் நிலைத்து சகல சீவிகளுக்கும் தாயாக விளங்கி சகலராலும் கொண்டாடப்பெற்றாள். (சில வரிகளும் அருங் கலைச்செப்பு - விவேகமிகுதி பத்து பாடலும் தெளிவில்லை) - 2:40; மார்ச் 17, 1909 - மோசேயின் வம்மிஷவரிசா பழையேற்பாடு, யாத்திராகமம் 18 அதிகாரம் ஆயிரம் பேருக்காயினும் ஐந்நூறுபேருக்காயினும் நூறுபேருக்காயினும் அதிபதியாயும் குருவாயுமிருந்து அவர்களை சீர்திருத்தும் ஆசான் எவ்வகையுள்ளவனாயிருக்க வேண்டும் என்றால். “சனங்களுக்குள் தேவனுக்கு பயந்து நடக்கின்றவனாகியும், உண்மையுள்ளவனாகியும் பொருளாசை அற்றவனாகியும் இருத்தல் வேண்டும். புதியேற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபம் 1. அதிகாரம். கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய் குற்றஞ்சாட்டப்படாதவனும் தன் இஷ்டபடி செய்யாதவனும் முற்கோபமில்லாதவனும், மதுபான பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாபித்தை யிச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், பரிசுத்தவானும், இச்சையடக்கம் உள்ளவனுமாயிருத்தல் வேண்டும். வினயபிடகம் உலகத்தில் சுகசீவிகளாக வாழவேண்டிய மக்கள் பஞ்ச சீலத்தினின்று ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி ஒற்றுமெயுற்று நெறுங்கி வாழ்கவேண்டியது. இல்லறபற்றற்று துறவறவிருப்பமுற்று இறப்பும் பிறப்பும் அற்ற நிருவாணமாம் மோட்சயிச்சையுள்ளவர்கள் காட்டிற்கும் நாட்டிற்கும் மத்தியில் புத்தவிகாரமாம் அறப்பள்ளியென்னும் கூடங்களைக் கட்டுவித்து அங்கு சேர்ந்து ஞானசாதனங்களைச் செய்து முத்திபேறு பெறல் வேண்டும். அங்ஙனமின்றி இல்லறத்திலிருந்து முத்திபேறு பெறவேண்டுமாயின் இல்லறச் செயல்கள் யாவும் தொல்லறமாகுங்கால் நல்லறமும் பொல்லறமாகி நட்டாற்றில் விட்டநாணல்போல் முடியும். ஆதலின் நிருவாணமாம் மோட்ச இச்சையுள்ளவர்கள் சகலபற்றுக்களையும் அறுக்கும் தெய்வ சபையாகும் இந்திரவியாரத்தில் சேரல் வேண்டும். அருங்கலைச் செப்பு - பற்றறும் பத்து அழியும் பொருளின் ஆசையறுத்தல் / வழியின் சுகமென்றுணர். திரிக்குறள் பற்றற்றக் கண்ணேபிறப்பறுக்கும் / மற்றும் நிலையாமெய்க்காட்டிவிடும். இதை அநுசரித்தே கிறிஸ்துவின் போதனை (மத்தேயு 19. அதிகாரம்,) நீபூரணசற்குணனாக இருக்கவிரும்பினால் உனக்குள்ள ஆஸ்திகள் யாவற்றையும் தாரித்திரர்களுக்கு கொடுத்துதவு, அப்போது பரலோக ராட்சியபொக்கிஷம் உனக்குச் சேரும். “ஐசுவரியவான் பரலோகராட்சியத்தில் சேரப்போகிறதில்லை. “என்னிமித்தியம் ஒருவன் தனது வீடுவாசல்களையும், தாய்தந்தைகளையும், சகோதிரன் சகோதிரிகளையும், பெண்சாதி பிள்ளைகளையும் நிலங்களையும் விட்டொழிப்பானாயின் அவனே நித்திய சீவனையடைவான். மத்தேயு 16 அதிகாரம். “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்யலாகாது இரண்டெஜமானனுக்கு ஊழியஞ் செய்பவன் இருவருக்குந்திருப்த்தி செய்யமாட்டான். இத்தகைய பேரானந்த ஞானமும் பரிபூரணகியானமும் அமைந்துள்ள மோசேயின் ஆகமம் முதல் கிறீஸ்துவின் போதம் யீறாகவுள்ள ஞான மொழிகளை உணர்ந்து ஞானத்தானம் அளிக்கும் குருக்களும் ஞானத்தானம் பெற்றுக்கொள்ளும் விவேகிகளும் கிறீஸ்துவின் போதகரும் “என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம், என்னத்தைப் பானம் பண்ணுவோம் என்று கவலைப்படாதிருங்கள் அப்படியார் நினைப்பர்களென்றால் அஞ்ஞானிகள் நினைப்பர்கள் என்று கூறியிருக்கின்றார். ஆதலின் ஞானத்தானம் அளிக்கும் குருக்கள் பொருளாசைவிரும்பும் அஞ்ஞானிகளாயிராமல் பொருளாசையற்ற மெய்ஞ்ஞானிகளாய் இருத்தல் வேண்டும். ஞானத்தானம் பெற்றுக்கொள்ளவிருப்பம் உள்ள விவேகிகளும் பொருளாசையில் விருப்பற்று பெறல்வேண்டும். பொருளாசையும் வேண்டும் அருளாசையும் வேண்டும் என்போருக்கு இருளேயிருப்பிடமாகும். கிறீஸ்துவானவர் தன்னுடைய போதகங்களைப்போய் மற்ற ஜனங்களுக்கு போதிக்க அனுப்பிய காலத்தில் வழிக்கு ஒருபையையேனும் அப்பத்தையேனும், ஒரு காசையேனும் எடுத்துப்போகலாகாதென்று கூறியிருக்கின்றார், (மாற்கு அதிகாரம் 6) இத்தகைய பற்றற்ற போதகங்களுக்குரிய குருக்கள் என்று வெளிவந்து இருபது ரூபாய் சம்பளம் போதாது ஐம்பது ரூபா சம்பளம் வேண்டும் என்றும் ஐம்பது ரூபாய் சம்பளம் போதாது நூறு ரூபா சம்பளம் வேண்டும் என்றும் பொதுவாகிய பூமிக்கு குழிக்குப் பணம் வேண்டும் என்றும் மணியடிக்கும் பணம் வேண்டுமென்னும் பெரிய பூசைக்குப் பணம் வேண்டுமென்றும் சின்ன பூசைக்குப் பணம் வேண்டுமென்று பொருளாசையுற்ற அஞ்ஞானிகளாயிருந்து கொண்டு தங்களை மெய்ஞ்ஞானிகளைப்போல் நடித்து நாளது வயிற்று சீவனத்திற்கு வழிகாட்டத்தெரிந்தவர்களும் பொய்யைச் சொல்லிப் பொருள் சம்பாதிப்பவர்களும், மோட்சத்திற்கு வழிகாட்டிகள் என்றும் வெளிவந்திருப்பது முழுமோசமேயாம். கிறிஸ்துவின் போதகத்திற்கும் அவற்றை தற்கால் போதிப்பவர்களுக்கும் அக்காலத்திலளித்து வந்த ஞானத்தானத்திற்கும், தற்கால ஞானத்தானத்திற்கும் யாதாமோர் சம்மந்தமும் கிடையாது இஃது சத்தியமேயாம். மோசேஞான முதலாக கிறீஸ்துவின் ஞானமீறாக முற்றும். - 2:41; மார்ச் 24, 1909 - 12. பறையரென்று இழிவு படுத்தல் வினா : பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும்படியான யாவரேனும் க்ஷத்திரியர், வைசியரை பறையரென்று கூறி இழிவுபடுத்தியிருக்கின்றார்களா, அவ்வகை கூறியுள்ள பழைய நூலாதாரங்களிலேனும், செப்பேடு, சிலாசாசனங்களேனும் உண்டா, உண்டாயின் எமக்கும் எமது நேயருக்கும் உண்டாய சந்தேகம் தெளிய தனது சிறந்த தமிழன் பத்திரிகையில் வெளியிடவேண்டுகிறேன். பி. சேஷகிரிராவ், சேலம். விடை : பெரும்பாலும் பௌத்தர்களின் கொள்கையானது தங்களது அனுபவத்திற்குங் காட்சிக்குத் தெரிந்தவரையில் கூறுவார்கள். தெரியாதனவற்றைத் தெரியாதென்பார்கள். ஆயினும் தாம் வினவிய வினாவிற்குத் தெரிந்தவரையில் விடை பகர்வோமாக. சிலகாலங்களுக்கு முன்பு அதாவது இத்தேசம் எங்கும் பெளத்தவரசர்கள் ஆளுகையும் பௌத்தகுடிகள் நிறைந்துள்ள காலமும் வேஷபிராமணர்கள் தோன்றிய காலமுமாகும். அக்காலத்தில் சீயமாபுரமென்னுந் தேசத்தில் சீயமாசேனனென்னும் அரசனும், இராமதத்தையென்னும் இராக்கினியும் இருந்தார்கள். பெளத்தவரசர்கள் யாவரும் புத்தசங்கங்களில் சேர்ந்து நீதியொழுக்கமும் விவேகமிகுதியும் உள்ளவர்களை தெரிந்தெடுத்து தங்களுக்கு மந்திரிகளாகச் சேர்த்துக் கொள்ளுவது வழக்கமாகும். அதுபோல் வேதியசாதியென்னும் சத்தியகோடனென்பவனை அவன்மாறு வேடமறியாமல் சீயமாசேனனென்னும் அரயன் மந்திரியாக எடுத்துக் கொண்டிருந்தான். மந்திரியும் பஞ்சசீலமாம் நீதிமார்க்கங்களைக் குடிகளுக்குப் போதித்து தானுமோர் பெளத்த குருபோலவே நடித்தும் வந்தான். இத்தகைய நடிப்பால் அரசனும் இவனை நீதிமான் என்று எண்ணி சகலகாரியாதிகளிலும் நம்பிக்கை வைத்திருந்தான். அக்காலத்தில் பத்திரமித்திரன் என்னும் ஓர் வணிகன், நவரத்தின வியாபாரஞ்செய்துக் கொண்டு சீயமாபுரஞ் சேர்ந்து தன் காலைக்கடன் கழித்து புசிப்பெடுத்துக் கொண்டு வருவதற்காய் இத்தேசமந்திரி சத்தியகோடனை நீதியானென்று எண்ணி அவனை அடுத்து தன்னிடமுள்ள இரத்தின கரண்டகமாஞ் செப்பை அவனிடம் ஒப்பிவைத்து நான் மறுபடியும் இதைவந்து கேட்கும்போது என்னிடம் கொடுக்கவேண்டும் நீதிமானேயென்று வேண்டினான், மந்திரியும் வேண்டிய நீதிகளைச் சொல்லி செப்பை வாங்கி வைத்துக் கொண்டான். வணிகன் பத்திரமித்திரனும் ஆற்றங்கரை சென்று தனது காலைக்கடனை முடித்துவிட்டு அன்னசத்திரஞ் சென்று புசிப்பெடுத்துக் கொண்டு மறுபடியும் மந்திரியிடம் வந்துசேர்ந்து தனது இரத்தினச் செப்பைக் கொடுங்கோளென்று கேட்டான். மந்திரி வணிகனைநோக்கி (இங்கு பத்து வரிகள் தெளிவில்லை) வேதங்களை வாசித்தவனும், மெய்யுரையாட வேண்டியவனும் சகலவிருதுகளமைந்தவனும், அமைச்சனானவனும் வெண்குடைப்பெற்ற சீயவனின் காயமரையுற்றவனும் நீதிநெறிகளை ஆராய்ந்து மற்றவர்களுக்குப் போதிக்கும் மதியூகியுமாகிய நீர் நம்பி வைத்த பொருளை அபகரிக்கலாமோ அவ்வகை அபகரித்தலாகியச் செயலால் உம்மிடம் அமைந்துள்ள திருவாகிய கருணைநிதி நீங்கிவிடுவாளேயென்று கதரினான். வணிகன் மரத்தின் மீதேறிக்கொண்டும் கூறிய நீதிவாக்கியங்கள் யாவையும் கேட்டிருந்த ராணியானவள் வேவுகரை அழைத்து மரத்தின் மீதேறியுள்ள வணிகனை வரச்செய்து சங்கதிகள் யாவையும் ஆழ்ந்து விசாரித்து அரயனுக்கு விளித்து மந்திரியையும் வரவழைத்து சூதுக்களையும் வஞ்சகத்தையும் அறியக்கூடிய வழிகளால் விசாரித்தபோது மெய்விளங்கி மந்திரி அபகரித்திருந்த செப்பையுங் கொண்டுவந்து அரணியிடம் கொடுத்துவிட்டான். அரணியும் அரயனைவிளித்து செப்பை பார்த்தீர்களா என்றாள்? அரயனும் சற்று நிதானித்து மந்திரியின் மணிகள் சிலதையும், வணிகனது மணிகளையும் அவன் செப்பிலிட்டு வணிகனை வரவழைத்து இம்மணிகள் உம்முடையவைகளோ என்றான். வணிகனும் செப்பிலிலுள்ள மணிகள் யாவையும் வெளியிலிட்டு தன்னுடைய மணிகள் ஒன்று தவிராமல் எடுத்துக் கொண்டு மற்றமணிகளை நீக்கிவிட்டான். இவைகளைக் கண்ணுற்ற அரசனும் அரணியும், வணிகன் செப்பிய வார்த்தைகள் யாவும் மெய், மந்திரியானவன் அன்னியன் பொருளை அபகரிக்கவேண்டிய இத்தியாதி பொய்களையுஞ் சொல்லி வணிகனை வஞ்சித்துவிட்டான். இத்தகைய வஞ்சகனை கொலைகளம் அனுப்பி குற்றமுள்ளோரை தெண்டிக்கத்தக்க ஏதுவை செய்துவிட்டு வணிகனாகிய பத்திரமித்திரனுக்கு மந்திரிபட்டம் அளித்துவிட்டு தாங்கள் துறவடைந்து புத்தசங்கஞ் சேர்ந்து விட்டார்கள். இக்கதையினால் வேதியனென்னும் வேஷம் பூண்டும் அவனுக்குள்ள பொருளாசை அவனை விட்டு நீங்காது வணிகன் பொருளை அபகரித்துக் கொண்டும் அவனையே பறையனென்று இழிவுகூறியுள்ளதை, மேருமந்திரபுராணம் பத்திரமித்திரன் கேள்விச் சருக்கத்தில் பரக்கக் காணலாம். 227-வது பாடம் செப்பிய நகர்க்குநாதன் சீயமாசேன் னென்பான் வெப்பயனின் றறாதவேலான் வேந்தரைவென்ற வெற்றிக் கொப்பமெ யின்றிநின்றா னாதலிற் கற்பகத்தை யொப்பான் துப்புரம் தொண்டைவாயார் தொழுதெழு காமன் கண்டாய் 228 ஊனுமிழ்ந்திலங்கும் வைவேல் மன்னவனுள்ளத்துள்ளா டேனுமிழ்ந் திலங்குழைம்பாற் றேவிதானிராமதத்தை வானுமிழ்த் திலங்குமின்போல் வருந்துதுண்ணிடையாள் வாரி தானுமிழ்ந் தமிழ்தம் பெய்த கலசம்போல் முலையினாளே. 229 வேதனான கங்குமாறும் புராணமும் விரிக்குஞ் சொல்லில் தீதிலா சத்தியகோப னாமஞ்சீ பூதியென்பான் போதிலர் முடியுனானுக் கமச்சனாய் புணர்ந்துபின்னை தீதெலா மகற்றிவையுஞ் செவ்வியாற் காக்குநாளில் வேறு 233 சுரந்த கார்முகில்போல் சுதத்தனன் / றிரந்தவாக்குயர் நீரவளித்தவன் பரந்துலாம்பெயர் பத்திரயித்தனெம் / மரந்தை தீர்த்தலி னாமென வோதினார் 239 மணியு முத்தும் வைரமுஞ் சந்தனத் / துணியும் நல்லமிலுந் துகிலும்புர மணயுந் தூரியுங் கொண்டு வரும் வி / சாரிணையில் சீயபுரம் துறவெய்தினான். 351 (ஐந்து பாட்டுகள் தெளிவில்லை) 260 பிறர்பொருள் வைத்தல் கேட்டல் பிறர்தமக் கீய்தன்மாற்றன் மறமென வன்றுசொன்ன வாய்மொழி மறந்திட்டீரோ திறமல துரைக்கல் வேண்டாஞ் செப்புக்கொண் டிருப்பதன்றி முறைமுறை பித்தராகி முடிந்தன மோகத்தாலே. என்றலு மெழுந்துகோபத் தெறியெறி யென்னவோடிப் பொன்றுமா ரடித்துநின்றார் புறப்படத் தள்ளப்போந்திட் டன்றவ னடிந்துச்செப்புக் கொண்டதற் கவலமுற்றுச் சென்றவன் றெருவுதோருஞ் சிலபகல் பூசலிட்டான். சத்தியகோட னென்னுஞ் சாதியால் வேதியன்றான் வித்தத்தாற் பெரியன்றூய னென்றியான் மிகவுந்தேறி வைத்தவென் மணியைக்கொண்டு தருகிலன் மன்னகேண்மோ பித்தனு மாக்குமென்னைப் பெருபொருளடக்குவானே. இவ்வகையாக வணிகன் அரயனிடம் முறையிட்டபோது மந்திரி இவ்விடம் வந்து ஐயா, இவனோர் பறையன் மறையவன்போல் வேடமிட்டுக் கொண்டு பொய்யைச் சொல்லுகிறானென்று கூறி அரயனை அனுப்பிவிட்டான். 267 பறையனிக் கள்வன்றன்னைப் பார்த்திப னென்னைப்போல மறையவனென்று கொண்டான்சபதத்தால் வஞ்சிப்புண்டு பிறரவன் செய்கை யோரா னென்னையே பித்தனென்னக் குறையுண்டோ வென்றுபின்னுங் கூப்பிட்டான் நீதியோதி. மந்திரி வார்த்தையை மெய்யென்று நம்பி அரசன் சென்றவுடன் வெறி நாய்களையும், மதயானைகளையும் விட்டு வணிகனை துறத்த ஆரம்பித்தான். வணிகனும் பயந்து மரத்திலேறிக் கொண்டு நீதிகளை ஓத ஆரம்பித்தான். 269 படுமத யானைவிட்டும் பாசத்தி னாயைவிட்டுங் கொடிக்கரப் பேயன்றன்னைக் கடிக்கவென் றமைச்சன்கூறி கடியவர் படியிற்கண்டு செய்தவற் கஞ்சிக்காவை நெடியதோர் மரத்தினேறி நித்தமா யழைத்திட்டானே. 270 தூயநல் வேதநான்குஞ் சொல்லிய சாதியாதி மேயநல் லமைச்சனென்னும் விருதுமெய் யுரைத்தலென்னுந் தீயிலாத் தொழில்னென்றுந் தேறியான் வைத்தசெப்பை மாயநீ செய்து கொண்டால் வரும்பழி பாவமன்றோ. 271 கொற்றவெண் குடையுஞ்சீ வனையுஞ்சாய மரையுமுற்றால் வெற்றிவேல் வேந்தனென்ன நீயென்ன வேறிலாதாய் குற்றமென் றறிந்துமென்ன குறையிலென் செப்பைகொண்டாய் மற்றிதோ பூதிமாய மாகுமிவ் வையத்தையா. 272 மறம்பழி வருமேநிந்தை வந்தெய்த மணியைவவ்வி அறம்புகழ் பெருமெய் கீர்த்தி யறிவொடு செறிவிலாய்க்கும் பிறந்துவைத்தூறுதொட்டு வைப்பினை வவ்வுவாரை துறந்திடுந் திருவென்றோதுஞ் சுருதியும் விருதுமாய்த்தே. நாய்களுக்கும் யானைகளுக்கும் பயந்து மரத்தேறி அவ்வணிகன் கூறிவந்த நீதிவாக்கியங்களை இராணியார் செவ்வனே உணர்ந்து வேவு கரை விட்டு வணிகனை அழைத்து அவன் மெய்வாக்கையும் வேஷவேதியனாம் மந்திரியின் பொய் வாக்கையும் கண்டறிந்து செப்பைக் கொண்டு வரும்படியான ஏதுவைத் தேடி மந்திரியை தண்டித்துவிட்டு பறைபானென்று கூறப்பட்ட வணிகனுக்கே மந்திரிபட்டம் கொடுத்துள்ள சங்கதிகள் யாவையும் மேருமந்திர புராணத்தில் தெளிவாகத் தெரிந்துக் கொள்ளலாம். - 2:49; மே 19, 1909 - 13. மேருமந்திரபுராணம் வினா : அதாவது - பெரியபுராணம், கந்தபுராணங்களைக் கண்டுமிருக்கின்றோம், கதைகளைக் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் மேருமந்திர புராணம் என்பதைக் கண்டதுமில்லை. கதைகளைக் கேட்டதுமில்லை ஆதலின் பத்திராதிபர் அன்புகூர்ந்து அப்புராணம் ஓலையிலெழுதப்பட்டிருக்கின்றதா, அச்சிட்டிருக்கின்றார்களா, அது எங்கு கிடைக்கும் கண்டெழுதக் கோருகிறோம். இரண்டாவது, ஓர் கூட்டத்தோரை பெளத்த மார்க்கத்தோரென்று மனப்பூர்வமாகத் தெரிந்தும் அக்கூட்டத்தோரைப் பறையர்கள் என்று கூறியிருக்கின்றார்களா, அவ்வகையான ஆதாரங்கள் ஏதேனுமிருந்தாலும் அதையும் தெரிவிக்கும்படி மிகக் கேட்டுக் கொள்ளுகிறோம், பி. சேஷகிரிராவ், சேலம். விடை: மேருமந்திர புராணம் புதுக்கோட்டை சமஸ்தான வித்துவான் பனையஞ்சேரி முருகேச கவிராயரவர்கள் சகோதிரராகிய அரங்கசாமி கவிராயரவர்களால் திருத்தப்பட்டு நூலாக்கியோன் பெயரின்றி ம-அ-அ-ஸ்ரீ சக்கிரவர்த்தி நாயனாரவர்களால் புஷ்பரதச் செட்டியாரவர்கள் அச்சுக்கூடத்தில் பிரசுரப்படுத்தி இருக்கின்றார்கள் வேண்டுவோர் பெற்றுக் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் எழுதியுள்ள வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது வாக்கியத்தில் கூறியுள்ளவை யாதெனில்:- அனுமாரானவர் இலங்காதீவத்திற்கு சென்று சீதாபிராட்டியை எங்கும் தேடிக் காணாமல் ஆரண்ணியத்திலுள்ள ஓர் கோபுரத்தின்மீது உட்கார்ந்து இது பௌத்தர்களின் சிறப்புப்பெற்ற மடமென்று கூறியதாக வரைந்திருக்கின்றது. அனுமாரின் வாக்கியத்தைக் கொண்டே அஃது பௌத்தர்களின் நாடென்று திட்டமாக வாசித்துணர்ந்த அருணாசல கவிராயரவர்கள் தானியற்றியுள்ள ராமநாடகம் சுந்தரகாண்டச் செய்யுளில், சீதை புலம்பல் நிறை தவச்சுக்கு குறை யிவளென்று நினைத்து கைவிடுவாரோ பறையர் வூரிலே சிறையிலிருந்த வென்னை பரிந்துகை தொடுவாரோ என்னுஞ் செய்யுளாதாரத்தால் பௌத்தர்களைப் பறையர்கள் என்று கூறியுள்ளாரென அறியலாம். - 2:51: சூன் 2, 1909 - 14. ஆரியன் என்னும் ஓர் மனிதன் இருந்ததுங் கிடையாது அவன் மறைந்ததுங் கிடையாது ஆரியமென்னும் ஓர்பாஷை இருந்ததுங் கிடையாது, அதன் அட்சரமுங் கிடையாது, அவற்றால் வரைந்துள்ள நூற்களுங் கிடையாது. ஆரியமென்னும் ஓர் மதமுங் கிடையாது, அதன் ஆக்கியோனுங் கிடையாது, அதன்தருமம் இன்னது இனிய தென்பதுங் கிடையாது. ஆரியமென்னும் பெயர் எத்தகையாய் தோன்றியதென்பீரேல், 1,500 வருடங்களுக்குப் பின் இந்திரர்தேசமாகும் இந்திய தேசத்துள் மிலேச்ச அல்லது நீசச்செய்கெயுள்ள ஓர் கூட்டத்தார் வந்துசேர்ந்து கொல்லா விரதமுள்ள தேசத்தில் பசுமாடுகளையும், குதிரைகளையுஞ் சுட்டுத்தன்று சுறாபானமென்னும் மயக்கவஸ்துவைக் குடிப்பதை அறிந்த மேன்மக்களாம் பௌத்தர்கள் இவர்களை ஆரியர்களென்றும், மிலேச்சர்களென்றுங் கூறியுள்ளதை, பௌத்தர்கள் முன்கலை நூலாகும் திவாகரத்திலும், பின்கலை நூலாகும் நிகண்டிலும், பெளத்தவரச சீவகன் சரித்திரமாகும் சீவகசிந்தாமணியிலும், மணிவண்ணன் என்னுங் கிரீடினன் சரித்திரமாகும் சூளாமணியிலும் தெரிந்துக்கொள்ளலாம். நிகண்டு - திவாகரம் மிலேச்சாரியார் மிலேச்சராமாரியர்ப் பேர் மிலைச்சரென்றுரைக்கலாமே. சீவகசிந்தாமணி செங்கட்புன் மயிர்த்தோல் திரைச்செம்முக / வெங்கணோக்கிற் குப்பாய மிலேச்சனை செங்கட்டீவிழியாற் றெரித்தான்கையு / ளங்கட்போது பிசைந்திடு கூற்றனான். சூளாமணி தேசமிலேச்சரிற் சேர்வுடையாரவர் / மாசின் மனிதர் வடிவினராயினுங் கூசின் மனத்தச் கொடுந்தொழில் வாழ்க்கையர் / நீசரவரையு நீரினிழிப்பாம். மத்திய ஆசியாகண்ட முழுவதும் ஆதியாகவிருந்தது மகடபாஷை என்னும் பாலிபாஷை ஒன்றேயாம். அதன்பின் சாக்கையச் சக்கிரவர்த்தித் திருமகனாகும் புத்தபிரானால் இயற்றியது சகடபாஷை என்னும் சமஸ்கிருதமும், திராவிடபாஷை என்னும் தமிழுமாகும். இத்தமிழ் பாஷையை புத்தபிரான் வடநாட்டில் இயற்றிய ஆதாரங் கொண்டு மகதநாட்டருகே தமிழுக்கென்னும் நாடு நாளதுவரையிலுள்ளதுமன்றி மகதநாட்டுள் தமிழர்ச் சேரியென்று வழங்கிவந்ததையும் உதயணன்காதையிற் காணலாம். மகடபாஷையாம் பாலியினின்றே பதிநெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது. முன்கலை திவாகரம் மகதங், கோசல, மராட்ங், கொங்கணஞ், சிந்து, சோனகந், திராவிட, சிங்களம், அங்கம், வங்கங், கலிங்கம், கெளசிகந் துளுவஞ், சரவகஞ், சிநங், கம்போஜ, மருணம், பப்பிர, பதிநெண்பாடையாம். இவற்றுள் ஆரியமென்னும் பாஷையேனும் சப்தமேனுந் தோன்றியது கிடையாது. பாலிபாஷையாம் மகடத்தினிற்றே சகலபாஷைகள் தோன்றிய ஆதாரத்தால் திராவிட பாஷையாந் தமிழ் மொழிகள் பலபாஷைகளிலுங் கலப்புற்றிருக்கின்றது. அவலோகிதராம் புத்தபிரானால் இயற்றி அகஸ்தியர் வசமளித்து தென்னாடெங்கும் மிக்க பரவியபடியால் தமிழை தென் மொழியென்றும், சாவகஞ் சகடமென வழங்கும் சமஸ்கிருத பாஷை வடநாட்டில் வழங்கிவந்தபடியால் வடமொழியென்றும் வழங்கலாயினர். தமிழ்பாஷையிலுள்ள உண்டி யென்னும் மங்கலபொருத்தத்தில் அமுதவெழுத்தென்றும், நஞ்செழுத்தென்றுமுள்ள அட்சரங்களின் ஆதாரங் கொண்டு, அமுதவெழுத்தால் தமிழென்றும், தீராவிடமாகும் நஞ்செழுத்தால் திராவிடமென்றும் அப்பாஷைக்குப் பெயருண்டாயிற்று. மற்றப்படி திராவிடபாஷையை ஒருவன் துரத்தியதுங்கிடையாது. அது ஓடியதுங்கிடையாது, அதற்குக்காரணசரித்திரமுங்கிடையாது. ஆரியரென்னும் மிலேச்சர்களை திராவிடர்களென்னுந் தமிழர்கள் துரத்தப்பட்ட சரித்திரங்களை காவியங்களால் அறிந்துக்கொள்ளுவதுடன் நாளதுவரையில் துரத்தியடித்து சாணச்சட்டி உடைப்பதை அநுபவத்திலும் அறிந்துக்கொள்ளலாம். பண்டைகாலம் இத்தேசத்தில் பெரும்பாலும் வழங்கிவந்த பாலி பாஷையில் அரியவேத, அரியதன்ம, அரியகுண, அரியதேவனென்னுமொழிகள் வழங்கிவந்ததாக புத்தாகமங்களால் விளங்குகின்றதன்றி ஆரியரென்னு மொழி வழங்கியது கிடையாது. பெளத்தசாஸ்திர கலை நூற்களாலும், பெளத்த அரசர்கள் சரித்திரங்களினாலும், நீதி நூற்களினாலும், அநுபவங்களினாலும், ஆரியர்களென்னும் மிலேச்சர்கள் இத்தேசத்துளிருந்ததாக விளங்குகிறதன்றி ஆரியர்களென்னும் சிறந்தோர்கள் இருந்ததாக் வேறாதாரமுங் கிடையாது. சிலப்பதிகாரத்துள் இல்லாத சில ஆரியரென்னு மொழிகளை அதனுட் சேர்த்து அச்சிட்டிருக்கின்றார்கள். அத்தகைய மொழிகளை சேர்க்கையில்லா முன்னூற்களையும், சேர்த்துள்ள பின்னூற்களையும் விசாரிணை வருங்கால் விளக்கக் கார்த்திருக்கின்றோம். ஈதன்றி தற்கால சரித்திரக்காரர்கள் எழுதுவது யாதெனில்:- கர்னல் சைக்ஸ் என்னும் சரித்திரக்காரர் சீனர்களுடைய (ரிகார்ட்டுகளை) ஆதாரமாகக்கொண்டு பௌத்தர்களுடைய தருமங்களுக்கு முன்பு பிராமணர்களுடைய சரித்திரங்கள் யாதொன்றுங் கிடையாதென வரைந்திருக்கின்றார். பிஷப்மினுயஸ் என்பவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் யாத்திரையாக வந்தகாலத்தில் இந்தியாவெங்கும் புத்ததர்மம் பரவியிருந்ததாகக் கூறுகின்றாரன்றி இந்த பிராமணர்கள் கூட்டமேனும் இவர்கள் சரித்திரங்களேனும் இருந்ததாகக் கூறவில்லை. சீன யாத்திரைக்காரராகும் பாஹியான் என்பவர் இந்தியாவில் வந்து புத்தருடைய தன்மங்கள் யாவையும் பாலிபாஷையிலேயே எழுதிக் கொண்டு போயதாக கர்னல் ஸைக்ஸ் என்னுஞ் சரித்திரக்காரர் கூறுகின்றார். (Buddhism, Page 493.) உலக சீர்திருத்தத்திற்கு உழைத்தவர்களின் அஸ்திகளின் பேரில் கட்டிடங்கள் கட்டியிருப்பது பழையத் தோப்புகளில் காணப்படுகிறதன்றி பிராமண குருக்களைப் பற்றியேனும், அவர்கள் சரித்திரங்களைப்பற்றியேனும் ஒன்றும் அகப்படவில்லை. (Buddhist India, Page 82.) புத்தர்காலத்தில் ஜாதி உண்டென்று பேசுவது அதேகாலத்தில் இடலி அல்லது கிரீஸில் ஜாதி இருந்ததென்பதை ஒக்கும். ஜாதி என்பதற்கே பதமும் வார்த்தையுங் கிடையாது. (Buddhist India, Page 62.) இத்தகைய சரித்திர ஆதாரங்களால் புத்தபிரானுக்கு முன்பு ஆரியர்களேனும் பிராமணரென்று சொல்லித்திரியுங் கூட்டத்தோரேனும் அவர்களின் வேத உபநிஷத்துக்களேனும் அவர்கள் ஜாதிகளேனும் இருந்தது கிடையாது. ஆதாரங்கள் இன்னும் வேண்டுமேல் பின்னும் எழுதக் கார்த்திருக்கின்றோம். - 3:2; சூன் 23, 1909 - 15. ஏழைகளின் எக்காளத்தொனி உலகின்கண் பற்பல காண்டங்களிலுள்ள மக்களுள் ஏழைகள் யாரென்பீரேல் சோம்பேரிகளும், விவேக மற்றவர்களும் யாதொரு வித்தையும் விரும்பா வீணர்களுமே ஏழைகளாக உலாவுவார்கள். இந்திரரென்னும் புத்தரது தர்மம் வளர்ந்தோங்கிய வித்தேசத்திலோ இந்திரதன்மத்தைப் பின்பற்றி இந்தியர்களென்றழைக்கப்பெற்றப் பூர்வக்குடிகள் யாவரும் வித்தையிலும், புத்தியிலும், சுறுசுறுப்பாலும் மிக்க முயற்சியுள்ளவர்களா யிருந்தும் இவர்களே மிக்க எளிய நிலையை அடைந்திருக்கிறார்கள். காரணம் யாதென்பீரேல் நூதனமாக இத்தேசத்துள் குடியேறி நூதன பிராமணவேஷமிட்டு நூதனவேதங்களை ஏற்படுத்திக்கொண்டு வயிறுபிழைக்க ஆரம்பித்தவர்கள் தங்களது நூதனபிராமணவேஷத்திற்கும், நூதன பொய் வேதங்களுக்கும், எதிரடையாயிருந்து கண்டித்து வந்த பௌத்தர்களாம் இந்தியர்களை பறையர்களென்னும் தாழ்ந்த சாதியாக வகுத்துக் கொண்டதுமன்றி பௌத்தர்களை இன்னுந் தலையெடுக்கவிடாமல் கெடுப்பதற்கு மநுதர்ம்ம சாஸ்திரமென்னும் நூதன சாதி நூலையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். பாம்பாட்டி சித்தர் பொய் மதங்கள் போதனைசெய் பொய்க்குருக்களை புத்திசொல்லி நல்வழியில் போகவிடுக்கும் மெய்ம்மதந்தா னின்னதென்று மேவவிளம்பும் மெய்க்குருவின் பாதம்போற்றி யாடாய் பாம்பே. ஞானவெட்டி ஓதுகின்ற வேதமது பிறந்ததெங்கே / வுன்னியநீ ரிரைக்குமிட முயிருமெங்கே வாதுகள்செய் மந்திரமும் பிறந்ததெங்கே / மறைவேத சைவர்களும் பிறந்ததெங்கே சூதுகள விலையறிந்தால் குருக்களாகுந் / தொல்லுலகி லறியாதார் நம்மிலொன்று எதுமில்லா பொய்களவு சொல்வார்தானும் / இவைராஜ யோகியென்றுமியம்பலாமே. வேஷப்பிராமணர்களால் பறையர்களென்று தாழ்த்தப்பட்ட பௌத்தர் பொய்க் குருக்களையும், பொய்மதங்களையும், பொய் வேதங்களையும் கண்டித்துவந்ததுமல்லாமல் பொய்சாதிகளையுங் கண்டித்த விவரம். சிவவாக்கியர் சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ போதுவாசமொன்றலோ பூதமைந்து மென்றவோ ஒதுவேதகீதமு மூணுரக்க மொன்றாலோ சாதியாவதென்பதேது சாவுவாழ்வுதிண்ணமே பறைச்சியாவதேதடா பாணத்தியாவதேதடா விறைச்சி தோலெலும்பிலே லக்ககிட்டிருக்குதோ பறைச்சி போகம் வேறதோ பாணத்திபோகம் வேறதோ பறைச்சியும் பாணத்தியும் பரிந்துபாரு மும்முளே. வேஷபிராமணர்கள் பௌத்தர்களைப் பறையர்களென்றும், தாழ்ந்த சாதி என்றுங் கூறிவந்ததின்பேரில் பௌத்தர்கள் சாதியேதடாவென்றும், பறையர் யாரடாவென்றுங் கண்டித்துவந்ததின்பேரில் சாதிக்கு ஆதாரமாகும் மநுதன்ம சாஸ்திரம் என்னும் நூதனசாதி நூல் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் சகல சாதிகளிலும் உயர்ந்த சாதி பிராமணசாதியென்றும், சகல சாதிகளுக்குத் தாழ்ந்தசாதி பறையர் சாதிபென்றும் வகுத்து எழுதிவைத்துக்கொண்டார்கள். பிராமணன் சிறப்பை முதலத்தியாயம் 92, 93, 94 - ம் சுலோகங்களில் காண்க. பறையனின் இழிவை 5-வது அத்தியாயம் 85, 86 ம் சுலோகங்களில் காண்க. பறையன், தூமையானவள், பதிதன், பிரசவித்தவள், பிணம் இவர்களைத் தெரியாமல் தொட்டு விட்டால் ஸ்னானஞ் செய்தால் பரிசுத்தனாகின்றான் என்றும் ஸ்னானாதி காலத்தில் பறையன் முதலிய அபரிசுத்தம் உடையவர்களைக் காணில் ஆசமனஞ்செய்து காயத்திரி மந்திரம் முதலியவைகளைச் செபிக்கவேண்டும். அப்போதுதான் பறையனைக் கண்ணினாற் பார்த்ததோஷம் நீங்கிவிடுமென்று எழுதிவைத்திருக்கின்றார்கள். இத்தகைய மநுதன்ம சாஸ்திரத்தில் தற்காலம் வழங்கிவரும் முதலியார், நாயுடு, செட்டி, நாயடு, ஐயங்கார், சிங்கு முதலியவர்களின் பெயர்கள் யாதொன்றுமின்றி உயர்ந்தசாதி பிராமணனென்பவனையும் காமந்தசாதி பறையனென்பவனையும் மட்டிலும் குறித்து எழுதியுள்ளபடியால் பூர்வ பௌத்தர்களை பறையர்களென்று தாழ்த்தித் தலையெடுக்காமல் அவர்களை நசிப்பதற்கே இம்மனு தன்மசாஸ்திர மென்னும் நூலை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும். ஆதலின் இவ்விந்தியதேசத்தில் சாதிவைத்திருப்பவர்களெல்லாம் கனவான்களாகவும், பூர்வ பௌத்தன்மத்தை அநுசரித்து சாதியில்லாமல் உழைப்பாளிகளாய் இருப்பவர்களெல்லாம் ஏழைகளாகவும், நாளுக்குநாள் நசிந்துவருவது காரணம் பொய்சாதிவேஷமும், பொய்ம்மதகோஷமுமேயாகும். இச்சாதிபேத எக்காளதொனியைக்கேட்கும் விவேகிகளும், கனவான் களும், மற்றகாண்டங்களிலுள்ள ஏழைகளைப்போல் இந்து தேசத்திலுள்ள ஏழைகளைக் கவனிக்காமல் இவர்கள் யாவரால் நசுக்கப்பட்டு எழியநிலையை அடைந்து வருகின்றார்கள். அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள விரோத மென்னையென்று விசாரிப்பீர்களாயின் விஷயம் விளங்கும். - 3:8; ஆகஸ்டு 4, 1909 - பூர்வத் தமிழர்களே, திராவிட பௌத்தர்களென்னும் பெயர்பெற்று சாதிபேதமென்னுங் களங்கமற்று சகலரும் ஒற்றுமெயுற்று வாழ்ந்து வந்ததுபோல் நாளதுவரையில் சாதிபேதமற்று வாழ்ந்துவருகின்றார்கள். பூர்வத்தமிழ்க்குடிகள் சாதிபேதமற்று வாழ்ந்து வந்ததற்கு ஆதாரம் யாதென்பீரேல், ஓர் திராவிட அரசன் புத்திரிக்கு சுய அரமென்னும் வில்வளைப்பேனும், மாலை சூடலேனும் ஒன்றைக் குறித்து சீனராஜன், சிங்களராஜன், வங்களாராஜன்,காம்போஜ ராஜனென்னும் ஐன்பத்தாறு தேசத்து அரசர்களையும் வரவழைத்து சீனராஜன் என்ன சாதி, சிங்களராஜன் என்ன சாதி என்னும் விசாரிணையின்றி யாருக்கு மாலை சூட்டப்படுகிறதோ, யாவர் வில்லை வளைப்பவர்களோ அவர்களுக்கே விவாகம் நிறைவேறிவந்தது வழக்கமாகும். அரசர்கள் யாவரும் சாதிபேதமென்னுங் களங்கமின்றி வாழ்ந்து வந்ததுபோலவே குடிகளும் சாதிபேதமென்னுங் களங்கமின்றி சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள். அத்தகைய சுகசீவ வாழ்க்கைக்குக் காரணம் யாதென்பீரேல், மெய்வேதங்களென்னும் புத்த தன்மத்தைத் தழுவி வித்தையிலும், புத்தியிலும் விருத்தியைக் கருதி சகலபாஷையோரும் ஒற்றுமெயுற்று ஒருவருக்கொருவர் உபகாரிகளாய் இருந்தபடியால் சகல மக்களும் சுகசீவ வாழ்க்கை பெற்றிருந்தார்கள். அத்தகைய சுகவாழ்க்கைப் பெற்றிருந்தவர்கள் தற்காலம் பறையர்களென்று தாழ்த்தப்பட்டு அசுகவாழ்க்கைப்பெற்ற காரணங்கள் யாதென்பீரேல், மிலேச்சரென்றும், ஆரியரென்றும், பூர்வம் வழங்கிய ஓர் கூட்டத்தார் இவ்விடம் வந்து குடியேறி யாசகசீவனஞ் செய்துகொண்டே சகடபாஷையிற் சிலதைக் கற்று அறஹத்துக்களைப்போல் பிராமணவேஷமிட்டு பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் மேற்சாதி கீழ்ச்சாதியென ஏற்படுத்திக் கொண்டு தங்களது பொய் வேதத்திற்கும், பொய் மதத்திற்கும், பொய்ச்சாதி கட்டிற்கும், உட்பட்டவர்கள் யாவரையுந் தங்களை ஒத்த உயர்ந்த சாதிகளெனச் சேர்த்துக் கொண்டு தங்களது பொய்வேதங்களுக்கும், பொய் மதங்களுக்கும், பொய்ச்சாதி கட்டுகளுக்கும், அடங்காது அப்புறப்பட்டு சத்தியதன்மத்தில் நிலைத்திருந்த விவேகிகள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென வகுத்து தலையெடுக்கவிடாமற் செய்துவந்தார்கள், நாளதுவரையில் செய்தும் வருகின்றார்கள். இந்துதேசத்திலுள்ள சருவபாஷைக் குடிகளையும், தாழ்ந்த சாதியென எவ்வகையால் வகுத்தார்கள். அவர்கள் யாவரென்பீரேல், வடயிந்தி (சில வரிகள் தெளிவில்லை) - 3:9: ஆகஸ்டு 11, 1909 - புத்ததன்மத்தை அநுசரித்து வந்த விவேகிகள் யாவரும் அபுத்ததன்மத்தோர்களாகிய பொய்ப் பிராமணம், பொய் வேதம், பொய்ச் சாதி, பொய் மதங்களைக் கண்டித்து அவர்களது வேஷபிராமணத்தையும் விளக்கிக்கொண்டு வந்தார்கள். பௌத்தர்களுக்குள்ள விவேகிகள் யாவரும் பொய்ப்பிராமண மதத் தோரைக் கண்டித்து அவர்களது சாதிவேஷத்திற்கும், மதவேஷத்திற்கும் உட்படாமல் விலகினின்றபடியால் அரசர்களையும், கல்வியற்றப் பெருங்குடிகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு வட நாட்டிலுள்ள பௌத்த விவேகிகளை சண்டாளர்களென்றும், தென்னாட்டிலுள்ள கொடுந்தமிழ் வாசிகளைத் தீயர்களென்றும், செந்தமிழ் வாசிகளை பறையரென்றும், தாழ்ந்தசாதிகளென்றும் வகுத்து அவற்றிற்கு உதவியாய் சாதி நூலையும் ஏற்படுத்திக் கொண்டு பௌத்தர்களின் மடங்களையும், அவர்களது சுயாதீன நிலைகளையும் மாறுபடுத்திவிட்டு, பௌத்தர்களை தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்து தலையெடுக்கவிடாமல் செய்துவந்ததுமன்றி நாளதுவரையிலுந் தலையெடுக்கவிடாமற் செய்தும் வருகின்றார்கள். ஈதன்றி பௌத்தர்களை கழுவிலுங் கற்காணங்களிலும் வதைத்துக்கொன்றதாக கொலைபாதகர்கள் புராணங்களே கூறுகின்றது. இத்தகையக் கஷ்டங்களை பூர்வ பௌத்தர்கள் இதுவரையிலும் அநுபவித்து வந்திருப்பார்களாயின் இவர்கள் உருதோன்றியுள்ள இடங்களில் எலும்புங் காணாமல் மறைந்துபோயிருக்கும். புத்ததன்மச் செயல்கொண்டு இவர்கள் அடைந்திருந்த பூர்வபுண்ணிய பலத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி உயிர்ப்பிச்சைபெற்றார்கள். பூர்வம் புத்ததன்மத்தைத் தழுவி விவேகவிருத்தியிலிருந்தவர்களாதலின் வேஷபிராமண சத்துருக்களின் மித்திரபேதங்களால் பலவகையானும் நசிந்திருந்தபோதிலும் கருணைதங்கிய மிஷநெரிமார்கள் கலாசாலை வகுத்து கல்வி கற்பிக்க ஆரம்பித்தபோது சத்துருக்கள் தாழ்ந்த சாதியென்று கூறிவந்தபோதினும் தங்கள் பூர்வ விவேகவிருத்தியால் B.A., M.A., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றார்கள், பெற்றும் வருகின்றார்கள். இவற்றுள் கருணைக்கடலாய் விளங்கும் பிரிட்டிஷ் மிஷநெரிமார்கள் வடநாட்டில் சண்டாளரென்று வகுக்கப்பெற்றோர் மத்தியிலும், தென்னாட்டில் தீயரென்று வகுக்கப்பெற்றோர் மத்தியிலும் நிலையாக நின்று கல்வியை விருத்தி செய்து வந்தபடியால் மேலுமேலும் கலாவிருத்தி பெற்று சத்துருக்களை மேற்கொண்டு விட்டார்கள். தென்னிந்தியாவிலுள்ளப் பறையர்களென்போர் மத்தியில் நிலையாக நின்று கல்வியின் விருத்தியை செய்யாமல் சாதிக் கிறீஸ்தவர்களென்னும் டம்ப விருத்தியைக் கருதியபடியால் கிறீஸ்துமத விருத்தியுங் குறைந்து இவர்கள் கல்வி விருத்தியுமில்லாமல் திகைத்து நிற்கின்றார்கள். இத்தகைய திகைப்போர் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளாதலின் இவர்கள் யாவரும் சாதிவிரோதத்திலும், சமய விரோதத்திலும் எழியநிலையடைந்து முன்னேறும் வழியற்றிருக்கின்றபடியால் புருஷோத்தம் தயாநிதிகள் யாவரேனும் இவர்களின் எழிய எக்காள தொனிக்கிறங்கி கல்வியின் விருத்தியையுங் கைத்தொழில் விருத்தியையும் அளித்து ஆதரிக்க வேண்டுகிறோம். - 3:10: ஆகஸ்டு 18. 1909 - 16. ஏமாற்றி திரவியம் சேகரிப்போரோர் சாதியார் ஏமார்ந்து செலவு செய்வோர் பலசாதியார் ஏமாற்றி திரவியம் சேகரிப்போர் நூறு பெயர்களிருந்து ஏமார்ந்து செலவு செய்வோர் பத்தாயிரம் பெயரிருப்பார்களாயின் அத்தேசம் எவ்வளவு நாகரீகமும், எத்தகைய விவேக விருத்தியும், என்ன சுகமும் பெற்றிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். அதாவது நூறு பெயர் வார்த்தையை பத்தாயிரம் பெயர் தழுவி நடப்பது எவ்வகையில் என்பீரேல், நான் தாய் தகப்பனின்றி அந்தரத்தினின்று பிறந்தவன் எனக்கு சகலரும் உதவி செய்ய வேண்டுமென்பானாயின் தாய் தகப்பனின்றி ஓர் மனிதன் பிறப்பானா அவ்வகைப் பிறப்பது ஏதேனும் அனுபவம் உண்டாவென விசாரித்தறியாமல் சொன்னவனுக்கு உதவி புரிவதே சுவாபமாகும். ஒருவன் என் தேவனுக்கு ஐன்னூறு தலைகளுண்டு, ஆயிரங் கைகளுண்டு, அதைத் தொழுது வேண சிலவுபுரிவீர்களாயின் தனவிருத்தி, தானியவிருத்தி அடைவீர்களென்று கூறுவானாயின், தேவனென்னும் பொருளென்னை அது எவ்வகையாயிருக்கும் ஐன்னூறுதலை, ஆயிரங்கையுள்ள தேவன் தானே பாடுபட்டுத் தின்னாமல் நம்மிடம் ஆட்டுக்கிடாய், அவலுகடலை, வாழைப்பழம் தட்சணைக் கேழ்ப்பானேன். அத்தகைய தேவதையை சிறப்பித்தும் அவற்றைத் தொழுவதால் சுகமடைவீர்களென்று கூறுகிறவர்கள் எவ்வளவு தனசம்பத்து, தானியசம்பத்து பெற்றிருக்கின்றார்கள். அச்சம்பத்துக்கள் யாவும் நம்மால் கொடுக்கப்பெற்றதா, ஆயிரங்கை தேவனால் கொடுக்கப்பட்டதாவென்று ஆராய்ச்சி செய்யாது ஐந்து ரூபாய் செலவு செய்து ஆயிரங்கை தேவனைத் தொழல்வேண்டும், பத்துரூபா செலவு செய்து தொழல் வேண்டுமென்று சொல்லுவோர் வாக்கைப் பின்பற்றித் திரிவதே சுவாபமாகும். மற்றொருவன் எங்களுடைய மோட்சம் ஒன்றுண்டு அதில் எங்கள் தேவன் உட்கார்ந்திருப்பார் நீயும் அவரை எதிரில் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம் அந்த மோட்ச சுகம் வேண்டுமானால் நாங்கள் என்ன செலவு சொல்லுகின்றோமோ அவற்றிற்குத் தடைசெய்யாது உங்கள் மரணபரியந்தம் செலுத்திக்கொண்டே வரவேண்டியது. அவ்வகை செலுத்திக் கொண்டும் நான் சொல்லுகிறவர்களைத் தொழுதுக்கொண்டும் வருவீர்களாயின் முன்பு சொல்லியுள்ள மோட்சத்திற் சேருவீர்கள் என்று சொல்லுவானாயின், மோட்சமென்னுங் கட்டிடம் எங்குளது அது எக்காலத்து யாவரால் கட்டப்பட்டது, செங்கல் கட்டிடமா, கருங்கல் கட்டிடமா, அங்கு உட்கார்ந்திருக்குந் தேவன் மாமிஷ ரூபியா, மர ரூபியா, அங்கு போய் அவரை எதிரில் பார்த்துக் கொண்டிருப்பதினால் யாது சுகம். இறந்தபின் மண்ணில் புதைந்த போது பார்க்குங் கண்கள் அழிந்து போகின்றது, பேசும் காது மழிந்துபோகின்றது, சுகிக்குந் தேகமு மழிந்து போகின்றது. ஆன்மா என்பது ஒன்று போய் சுகிப்பதென்னில் கண்ணில்லாது ஆன்மங் காணுமா, காதில்லா தான்மங் கேட்குமா, நாவில்லா வான்மா உட்காருமா, சுகிக்குமா வென்றாராயாது காணாத மோட்சக்கவலையும், பாராத மோட்ச பாக்கியமும் பெற்றதைப் போலெண்ணி சொல்லுகிறவன் வாக்கை மெய்யென்று நம்பி கஷ்டப்பட்ட சொத்தை அவனுக்களித்து வருதே செய்கையாகும். இவ்வகையாய் நூறு பெயர் வார்த்தைகளை யாதாமோர் விசாரிணையுமின்றி பத்தாயிரம் பெயர் நம்பி நடக்குந் தேசத்தில் சகலகுடிகளுங் சுகம் பெறவேண்டிய சட்டதிட்டங்களையும், ஒழுக்கங்களையும் இராஜாங்கத் தோர் அருள் செய்வார்களாயின் நூறுபெயர்களால் தேவ கதைகளையும், மோட்ச கதைகளையுங் கேட்டு நடந்து வந்தவர்கள் இராஜாங்கத்தோர் நீதி நெறிகளை உணர்வார்களா ஒருக்காலும் உணரமாட்டார்கள். காரணம், அந்தரத்திற் தோன்றியவர் வாக்கை அற்புதவாக்காக ஏற்று நடப்பவர்களாதலின், அரசநீதி அவர்கள் ஆயுளளவும் விளங்காது என்பதேயாம். - 3:15; செப்டம்பர் 29, 1909 - 17. புரபசர் ஆன்கினும் சாதியும் பிரபசர் இ.எச். ஆன்கின் என்பவர் இந்தியர் ஏற்படுத்தியிருக்கும் சாதி வித்தியாசப் பிரிவினையானது மிக்க மேலானதென்றும் அதினால் அனந்த சுகாதாரங்கள் உண்டென்றுங் கூறியுள்ளதாய் சென்னை இஸ்டாண்டார்ட் பத்திராதிபர் வெளியிட்டிருக்கின்றார். அங்ஙனம் பிரபசர் கூறியுள்ளது யாது சுகாதாரமென்று விளங்கவில்லை, இத்தேசமெங்கும் பௌத்ததன்மம் பரவியிருந்தகாலத்தில் சாதிபேதமென்னும் வஞ்சகச்செயலின்றி வேறுவகை சுகாதாரங்களை விளக்கியுள்ளார்கள். அவைகள் யாதெனில்:- குஷ்டரோகிகளையும், வைசூரி கண்டவர் களையும், விஷபேதி கண்டவர்களையும், வஞ்சம், பொருளாசை, குடி கெடுப்பு, கொலை, களவு முதலிய துற்கிருத்தியம் அமைந்த தீயர்களையும் தீண்டலாகாது. அவர்களை நெருங்கி நேசிக்கவுமாகாதென்று சுகாதாரம் விளக்கியிருக்கின்றார்கள். அத்தகைய சுகாதாரங்களை விடுத்து நமது பிரபசர் சாதிபேதமிருப்பது சுகாதாரத்திற்கு ஓரேதுவென்று கூறியுள்ளது விந்தையேயாம். அதாவது, பிரபசர் பிறந்து வளர்ந்த தேசத்தில் சக்கிலிவேலைச் செய்பவர்களின் புத்திரர்கள் கௌன்சல் மெம்பர்களாகவும், அந்தஸ்துள்ள உத்தியோகஸ்தர்களாகவும் இருப்பதாக விளங்குகின்றது. சக்கிலித்தொழில் செய்யுங்கால் சுகாதாரத்திற் கிடங்கொடாது கிருமிகள் சேர்ந்து ரோகோற்பத்திக்கு ஆதாரமாகின்றதாயின். அதே சக்கிலியன்மகன் அத்தொழிலைவிட்டு நீங்கி அந்தஸ்தான உத்தியோகம் பெற்றிருக்குங்கால் சக்கிலியைப் பற்றியிருந்த கிருமி அந்தஸ்துள்ள உத்தியோகம் பெற்ற அவன் மகனைவிடாமல் தொடர்ந்துநிற்குமோ. அன்றேல் சக்கிலியன் மகன் சக்கிலி வேலைதான் செய்யவேண்டுமோ. நமது பிரபசர் விளக்கிய சாதிவிஷயம் விளங்கவில்லை. பிராமண சாதியென்று சொல்லிக்கொள்பவனை உயர்ந்த சாதியென்றும், சக்கிலித் தொழில் செய்வோனை தாழ்ந்தசாதி என்றும் ஏற்றுக்கொள்ளுவதாயின் ஓர் சக்கிலியன் குஷ்டம்பிடித்த பிராமணனிடம் புசிக்கப்போமோ, அவனைத் தீண்டலாமோ. அங்ஙனம் அவனிடம் புசிக்கினுந், தீண்டினும் உயர்ந்தசாதி பிராமணனாதலின் சுகக்கேட்டைத் தரும் கிருமிகள் அவனிடத்தில் அணுகாதென்று கூறுவரோ. தோல் தைக்கும் மற்றுமோர் சக்கிலியன் தோல் ஷாப்பிற்குத் தலைவனாயுள்ள பிராமணனிடஞ் செல்லுவானாயின் சக்கிலியனிடமுள்ளக் கிருமிகள் பிராமணனைமட்டிலும் பற்றிக்கொள்ளும், தோல் ஷாப்பு பிராமணனிடமுள்ளக் கிருமிகள் சக்கிலியனை பற்றாதென்று கூறுவரோ. ஒருவன் பிராமணனென்னும் பெயரை வைத்துக் கொண்டிருந்த போதினும் துற்குணமும், துற்பிணியும் பெற்றிருப்பானாயின் அவனை அணுகுவோர் சகல சுகாதாரங்கெட்டு அழிவார்கள். ஒரு சக்கிலியன் நற்றேகமும், நற்குணமும் பெற்றிருப்பானாயின் அவனை அணுகுவோர் நற்சுகமும், நற்குணமும் வாய்த்து சுகமடைவார்களென்பது திண்ணம். இவைகளே சகல சுகாதாரங்களுக்கும் பொதுவழியும், முதுமொழியு மென்று கூறப்படும். அங்ஙனமின்றி பொய்யனாயிருந்தாலும் பிராமணன், களவாளியாய் இருந்தாலும் பிராமணன், விபச்சாரியாயிருந்தாலும் பிராமணன், குடியனாய் இருந்தாலும் பிராமணன், கொலைஞனாயிருந்தாலும் பிராமணன். உயர்ந்த சாதியினனென்று சொல்லிக்கொள்ளுவதும் பஞ்சபாதகங்கள் அற்றிருப் போனைத் தாழ்ந்தசாதியானென்று கூறுவதுமாகிய இத்தேசத்தின் சாதி வித்தியாசங்களை சுகாதாரத்திற்கு முக்கியமானதென்று பிரபசர் இ.எச்.ஆன்கின் துரையவர்கள் கூறியுள்ள விஷயம் விளங்கவில்லை. ஆதலின் நமது பிரபசரவர்கள் அடியிற் குறித்துள்ள சுகாதார வினாக்களுக்கு விடைபகர்வாராக. தேகசுத்தம், மனோசுத்தமுடையவன் சுகாதாரமடைவானா அன்றேல் தேக அசுத்தன், மனோ அசுத்தன் சுகாதாரமடைவானா. பிராமணனென்று சொல்லிக்கொள்ளுவோனுக்குக் குஷ்டம் பிடித்திருந்திருக்குமாயின் சுகக்கேட்டைத் தருங் கிருமிகளவனை அணுகாதா, சுகதேகமும், சுகாதாரமும் விரும்பும் சக்கிலியனை சுகக்கேட்டைத்தருங் கிருமிகளணுகுமோ என்பதேயாம். - 3:18; அக்டோபர் 13, 1909 - 18. இந்துக்களென்போர் மதத்திற்கு சாதியாதரவா அன்றேல் சாதிக்கு மதம் ஆதரவா தொன்னைக்கு நெய்யாதரவா நெய்க்கு தொன்னையாதரவாவென்று ஆராயுங்கால் நெய்க்கு தொன்னையே ஆதரவாகத் தோற்றுவதுபோல் இந்துக்களென்போர் தங்கள் சீவனத்திற்கு ஆதரவாக மதங்களையும், மதங்களுக்கு ஆதரவாக சாதிகளையும் வகுத்து வைத்திருக்கின்றார்கள். எங்ஙனமென்பீரேல், சைவன் அல்லது வைணவன் ஒருவன் விபச்சாரத்தாலேனும், கொலையாலேனும், குடியாலேனும், களவாலேனும், குற்றஞ்சாட்டி அதிகாரிகளால் தண்டனை அடைந்து சிறைச்சாலையேகிக் காராக்கிரகம் பெற்று சகலசாதியோரிடம் சம்மந்தித்திருந்து வீடுசேருவானாயின் அவனது உற்றோர் பெற்றோர் உரவின் முறையோர் யாவரும் அழைத்துவந்து சமயக்கோவிலும் சென்று தேங்காயுடைத்து ஐயருக்கு தட்சணை அளித்துவிடுவார்கள். அவன் எத்தகைய பாதகஞ் செய்திருப்பினும் கோவிலுக்கு வந்து குருதட்சணைக் கொடுத்துவிடுவானாயின் அவன் சாதியுங் கெடுவதில்லை, மதமுங் கெடுவதில்லை என்று சேர்த்துக்கொள்ளுவார்கள். வைணவமதம் சைவமதத்தைச் சேர்ந்த மற்றொருவன் B.A., M.A., முதலிய கெளரதா பட்டம் பெற்று அந்தஸ்துள்ள உத்தியோகமும் அமர்ந்து சகலராலும் நன்குமதிக்கப்பெற்றவனாயிருந்து முன்பு தான் தொழுதுவந்த விஷ்ணுவென்னுஞ் சுவாமியை மறந்து கிறிஸ்துவென்னுஞ் சுவாமியைத் தொழுவதற்குப் போய்விடுவானாயின் அவன் சாதிகெட்டுவிட்டானென்று புறம்பே நீக்கி சாவு வாழ்வு முதலியவைகளிற் சேர்க்காமலும், உண்பினைக்கூட்டத்திற்கு அழைக்காமலும், அவனை மரித்தோர்களில் ஒருவனாக எண்ணி நீக்கி விடுகிறார்கள். முன்பொருவன் பஞ்சபாதகங்களுக்கு உள்ளாகி சிறைச்சாலை, சேர்ந்து சகலசாதியோருடன் உழைத்து வீடுவந்து கோவிற்சேர்ந்து குருதட்சணைக் கொடுத்தவுடன் சாதிகெடாது சகலருடன் சேர்ந்துவிட்டான். இரண்டாவது கூறியுள்ளோன் நன்குவாசித்து கெளரதாபட்டம் பெற்று அரசர்களாலும், குடிகளாலும் நன்குமதிக்கப்பட்டு சிறந்த உத்தியோகத்திலிருந்து விஷ்ணுவைத் தொழாது கிறிஸ்துவைத் தொழ ஆரம்பித்தவுடன் சகல சாதியோருடனும் நீக்கப்பட்டான். இவ்விருதிரத்தோரின் செயலால் சாதிக்காக மதந் தோன்றியுளதா அன்றேல் மதத்திற்காக சாதி தோன்றியுளதா என்பதை எளிதில் அறிந்துக் கொள்ளலாம். அதாவது புத்தரென்னும் ஒருவர் தோன்றியிருந்தார். அவரைச் சார்ந்தவர்கள் பௌத்தர்களென்று அழைக்கப் பெற்றார்கள். கிறிஸ்து என்னும் ஒருவர் தோன்றியிருந்தார். அவரைச் சார்ந்தவர்கள் கிறிஸ்தவர்களென்று அழைக்கப்பெற்றார்கள். மகமதுவென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரைச்சார்ந்தவர்கள் மகமதியரென்று அழைக்கப்பெற்றார்கள். அவர்கள் மூவரும் பிறந்து வளர்ந்த தேசங்களையும், சரித்திரங்களையும் காணலாம். முன் மூன்றுக்கும் மாறாக சிலர் இந்துமதத்தோரென்பார்கள். இந்து என்பவர் எங்கு பிறந்தவர் எத்தேசவாசி சரித்திரமுண்டா கிடையாது. சிலர் ஆரியமதமென்பார்கள். ஆரியரென்பவர் யார், எங்கு பிறந்தவர் எத்தேசவாசி, சரித்திரமுண்டா கிடையாது. இவ்வகை ஆதாரமற்ற இரண்டு மதங்களுக்குப் பின்பு சிலர் சைவமதத்தோர் என்பார்கள். சைவரென்பவர் யார், எங்கு பிறந்தவர் எத்தேசவாசி சரித்திரமுண்டா கிடையாது. சிலர் வைணவ மதத்தோரென்பார்கள், வைணவரென்பவர் யார், எங்கு பிறந்தவர், எத்தேசவாசி, சரித்திரமுண்டா கிடையாது. இத்தகைய சரித்திரமற்றதும், ஆதாரமற்றதுமாகிய மதங்களை ஏற்கப்போமோ என்றால் எங்கள் மதம் அனாதியாயுள்ளதென்பார்கள். அனாதியாயின் இந்துவென்றும், ஆரியனென்றும், சைவனென்றும், வைணவனென்றும் ஆதியாய்ப் பெயர்கள் தோற்றியக் காரணம் யாதெனில், அப்பெயர்களும் அனாதியென்பார்கள், ஆதியாய் ஓர் மனிதனின்றி அப்பெயர்கள் தோன்றுவதற்கு ஏதுவில்லையெனில் அதுவும் அனாதியினின்றே தோன்றிற்றென்பர். இல்லாததினின்று உள்ளபொருள் தோன்றுமோ, காணாததினின்று காட்சி விளங்குமோ, மலடியென்று கூறி அவளுக்கு மைந்தனுண்டென்னலாமோ அவைபோல் அனாதியென்று கூறி அதிலோர்மதந் தோன்றிற்றென்னில் அம்மதம் சகலருக்கும் சம்மதமா தம்மதமாவென்னில் சகலருக்கும் சம்மதமே என்பார்கள். சகலருக்கும் சம்மதமாயின் ஓர் மகமதியர் தங்களை அடுத்து உங்கள் வைணவ கடவுளே மேலானவர் சைவக்கடவுளே மேலானவர் அவரையாசித்து தொழுதற்கு தங்களை அடுத்துவந்திருக்கின்றேன் என்னையுந் தங்கட் கோவில்களினுள் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பாராயின் உங்கள் அனாதியாய மதத்தில் சேர்த்துக்கொள்ளுவீர்களோவென்றால் மதத்தை வாசித்தறிந்துக் கொள்ளும்படி செய்வோம். கோவிலுள் சேர்க்கமாட்டோமென்பார்கள். உங்கள் அனாதிமதம் கோவிலுக்குள்ளிருக்கின்றதா வெளியிலிருக்கின்றதா எனில் விழிப்பார்கள். உங்கள் அனாதி மதம் உன் சுவாமிப் பெரிது என்சுவாமி பெரிதென்னும் சண்டையிடுமோவென்னில் அதற்கும் விழிப்பார்கள். இத்தியாதி மொழிக்குமொழி பேதங்களாக தங்கள் தங்கள் சீவனத்திற்கு மதங்களையும், அதற்காதரவாக சாதிகளையுந் தற்காலம் ஏற்படுத்திக் கொண்டவர்களாதலின் தங்கள் மதங்களை நிலைக்கச் செய்து சீவிப்பதற்கே சாதிகளை ஆதரவாக நிலைக்கவைத்திருக்கின்றார்கள். சாதிகளெப்போது ஒழியுமோ மதங்களும் அன்றே அனாதியாக ஒழிந்துபோம் என்பது திண்ணம். மதங்களுக்கு வரம்பு சாதிகளேயாம். அச்சாதிகளே கற்பனையாயின் சாதியுள்ளோர் மதங்கள் எத்தகையத்தென்பதை எளிதில் அறிந்து கொள்ளுவீர்களாக. அவர்கள் கூறுவது போல் இந்து மதம் ஆதியற்ற அநாதிமதமாதலின் நாளுக்கு நாள் அநாதியாக வழிந்து ஆட்களும் குறைந்தே வருகின்றார்கள். - 3:20; அக்டோபர் 27, 1909 - 19. நாளும் கிழமையும் வினா : பூமலிந்தோங்கும் இப்படியின்கண் பல்வேறு சமயங்கள் ஏற்படுத்திக்கொண்டு பல தெய்வங்களைக் கொண்டாடி முறண்பட்டு ஒன்றை ஒப்பாது ஒழுகு மாந்தர்கள் கிழமை 7-என்றும், 7 கிழமைக்கொண்டது ஒரு வாரமென்றும், 4-வாரங்கொண்டது ஒரு மாதமென்றும், 12-மாதம் அல்லது 365-நாள் ஒரு வருஷமென்றும், 15 நாள் கொண்டதை ஒரு பட்சமென்று ஒப்புக்கொண்டு நடக்கிறார்கள். இவைகளை மட்டும் ஒப்புக்கொண்டதின் காரணம் என்ன? இவைகளை ஆதியில் எச்சமயத்தார் கணித்தார்கள்? சமணகுலதிலகன், மாரிகுப்பம் விடை : தாம் வினவிய கணிதத்தை சோதிடம் பார்த்து நிமித்தங் கூறுதலென்பர். அதாவது, சோதிகள் தங்கியிருக்கும் இடபேதங்களைக் கண்டு கூறுதலுக்கு சோதிடமென்றும், அதன் காலத்தை வகுத்தலை நிமித்தம் என்றும், அதன் கணிதத்தால் செல்காலம் நிகழ்காலங்களை விளக்குதலை சாக்கை என்றும், சகலர் சுகத்தையுங் கருதிய தன்மகன்மச் செயலை வள்ளுவமென்றும் வகுத்துள்ளார்கள். இவற்றை அநுசரித்தே “வருநிமித்தகன் பேர் சாக்கை வள்ளுவனென்று மாகு” மென்று பின்கலை நிகண்டிலும், “வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க்குள்படு கருமத்தலைவர்க்கொக்கு” மென்று முன்கலை திவாகரத்திலுங் கூறியுள்ளார்கள். இவற்றுள் மத்திய ஆசியா கண்டத்து சக்கிரவர்த்தியாகும் கலியனெ ன்பவர் வாகுவல்லபத்தால் கலிவாகுவென்றும், கணிதவல்லபத்தால் சாக்கையரென்னும் பெயர்பெற்று சாக்கையகுல கலிவாகு சக்கிரவர்த்தியென்னும் பெயர் பெற்றிருந்தார். அவருடைய காலத்தில் பாலிபாஷையில் சகல வாக்கியங்களையும் வழங்கிவந்த போதிலும் வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே வழங்கி வந்தார்கள். வரிவடிவமின்றி சோதிகளிருக்கும் இடங்களின் நிலைகளையும், அதன் குணாகுணங்களையும் ஆராய்ந்து உலகத்தின் சீவராசிகளுக்கு முதற்பலனளிப்பது சூரியனாக விளங்கியபடியால் அவற்றிற்கு ஆதிவாரமென்றும், இரண்டாவது பலனளிப்பது சந்திரனாதலின் சோமவாரமென்றும், செவ்வாயென மூன்றாம் பலனளிப்பது பூமியாதலின் அவற்றிற்கு மங்களவாரமென்றும், புதனென நான்காம் பலனளிப்பது நீர் ஆதலின் அவற்றிற்கு புதவாரமென்றும், வியாழமென ஐந்தாம் பலனளிப்பது காற்றாதலின் அவற்றிற்கு குருவாரமென்றும், வெள்ளியென ஆறாம்பலனளிப்பது ஆகாயமாதலின் சுக்கிரவாரமென்றும், சனியாகிய ஏழாம்பலனளிப்பது இருளாதலின் சனிவாரமென்றுங் கூறி இத்தகைய பதினான்கு வாரங்கொண்டதை பட்சமென்றும். அமரவாசி, பூர்வவாசியாம் அமரபட்சம் பூர்வபட்சம் இரண்டு கொண்டதை மாதமென்றும், இம்மாதம் ஒவ்வொன்றிலும் சூரியன் தங்கி நிற்கும் நிலையை மேஷராசி என்றும், இரிஷபராசி என்றும் பன்னிரண்டு ராசிகளை வகுத்து அதன் மொத்த பெயர் வருடமென்றும் இவ்வகை வருடம் அறுபதுவரையில் அரசாண்டு கலியுலகமென்னும் பெயரால் தான் இருபதாவது வயதிற்குமேல் இராட்சியபாரந்தாங்கி ஒவ்வோர் வருடமுங் கண்டறிந்த பலனை கணித்து தருதியாகவே விளக்கி, அட்சய-பிரபவ-விபவ என்னும் அறுபது நாமங்களளித்து அறுபதாவது வருட முடிவில் இறந்துவிட்டபடியால் கலிவாகுச் சக்கிரவர்த்தி அரசுக்கு வந்தவருடமுதல் மரணமடைந்த அறுபதுவருடத்தையே பீடமாகக் கொண்டு சாக்கை வம்மிஷவரிசையோரால் கலியுலக மென்னும் பெயரளித்து அதன் கணிதவட்டம் இந்த செளமிய வருடத்துடன் ஐயாயிரத்து பத்து வருடமாகின்றது. இதன் விவரங்களை பாலிபாஷையினின்று வரைந்து திரியாங்கமென்றும் பஞ்சாங்கமென்றும் வழங்கும்படியான கணித விவரங்களை தீபேத் தேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், சீனதேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், பிரம்ம தேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், தெரிந்துக்கொள்ளலாம். பௌத்தர்களாகிய சாக்கையர்களே இக்கணித நூற்களை வகுத்தும், விருத்திசெய்தும் வந்தவர்களாதலின் இக்கணித முதநூற்களாம் திரியாங்கம், பஞ்சாங்கம் முதலியவைகளைப் பெரும்பாலும் பௌத்ததேசத்தோர்களே வழங்கிவருவதைக் காணலாம். அவற்றை அநுசரித்தே மற்றதேசத்தோர்களும், பாஷைக்காரர்களும் காலங்களை வழங்கிவருகின்றார்கள். இதன் விவரங்களை சாக்கையர் கணிதகரண்டகம் வெளிவருங்கால் காலக்குறிப்புகளை எளிதில் அறிந்துக்கொள்ளலாம். - 3:33; சனவரி 26, 1910 - 20. இந்திரர் தேச சரித்திரம் இந்திரம் என்னும் மொழி ஐந்திரம் என்னும் மொழியின் திரிபாம். அதாவது, மகதநாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று (ஐ-இ) யாகத் திரிந்து இந்திரரென வழங்கி அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திரவியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடுங் காலத்திற்கு இந்திரவிழாநாள், இந்திரவிழாக்கோலென்றும், இந்திரவிழாக் கொண்டாடுங் காலங்களிலெல்லாம் மழைப் பெய்வதின் அநுபவங்கண்டு மழைக்குமுன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கிவந்தார்கள். பூர்வம் இத்தேசத்தை பரதகண்டம் என்று வழங்கியதும் உண்டு. காரணமோவென்னில், ஆதியில் இத்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடிவந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறவரத்தை ஓதியது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதநூலுக்கு “வரதன் பயந்த வற நூலென்றும்” அவரைக் கொண்டாடிய இத்தேசத்திற்கு வடபரதம் தென்பரதமென்றும் கொண்டாடி வந்தார்கள். இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் விசேஷமாகக் கொண்டாடாமல் இந்திரரென்னும் பெயரினாலேயே, விழாக்களையும், வியாரங்களையும், விசேஷமாகக் கொண்டாடி வந்தபடியால் இத்தேச மக்களை இந்தியர்களென்றும், இத்தேசத்தை இந்தியதேசமென்றும் வழங்கிவந்தார்கள். அதுகொண்டு வடயிந்தியமென்றும், தென்னிந்தியமென்றும் பிரபலப்பெயர் உண்டாயிற்று. அருங்கலைச்செப்பு இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோ டாரம்ப / முந்தி துறந்தால் முநி. மணிமேகலை இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன் / றந்தநூற்பிடகம் மாத்திகாயமதென். சூளாமணி மாற்றவர் மண்டில மதனுளூழியா / லேற்றிழி புடையன விரண்டுகண்டமாந் தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது / பாற்றரும் புகழினாய் பரதகண்டமே. வேறு கந்துமு மணித்திரள் கடைந்த செம்பொனீன்சுவர் சந்துபோழ்ந்தியற்றிய தகடுவேய்ந்து வெண்பொனால் இந்திரன் றிருநக ருரிகெயோடு மிவ்வழி வந்திருந்தவண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. இந்திரதேயத்தின் ஆதிபாஷையாகும் மகிடபாஷையென்னும் பாலியை வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அக்கால் ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதிவைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமாய் இருந்த படியால் சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்ட மாதவன் சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாம் தமிழையும் வரிவடிவாக இயற்றி ஜினனென்னும் தனது பெயர்பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறத்தை வரைந்து சகலமக்கள் மனதிலும் பதியச் செய்ததுமன்றி இன்னும் அவ்வரிவடிவ பாஷையை, தான் நிலைநாட்டிவரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்தியதன்மமானது மேலுமேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி இவர்களுக்கு சகடபாஷையையும், அகஸ்தியருக்கு திராவிடபாஷையையும் கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வடபுரத்திலும், அகஸ்தியரை தென்புரத்திலும், திருமூலரை மேற்புரத்திலும், சட்டமுனிவரை கீழ்புரத்திலும் அநுப்பித் தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று வரிவடிவமாம் பாஷையை ஊன்றச் செய்து மெய்யறமாம் புத்த தன்மத்தையும் பரவச்செய்தார். வீரசோழியப் பதிப்புரை - சிவஞானயோகியார் இருமொழிக்குங் கன்ணுதலார் / முதற் குரவ ரியல் வாய்ப்ப இருமொழியும் வழிபடுத்தார் / முனிவேந்த ரிசை பரப்பும் இருமொழியு மான்கிறவரே / தழீஇனா ரென்றாலிங் கிருமொழியும் நிகரென்னு / மிதற்கைய முளதேயோ. திடமுடைய மும்மொழியார் / திரிபிடக நிறைவிற்காய் / வடமொழியை பாணினிக்கு (...) தொடர்புடையத் தென்மொழியை / யுலகமெலாந் தொழுதேத்த குடமுநிக்கு வற்புருத்தார் / கொல்லாற்றுபாகர். முன்கலை திவாகரம் வடநூற்கரசன் றென்றமிழ்க் கவிஞன் / கவியரங்கேற்று முபயக்கவி புலவன் செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த / னறிவுகரியாக தெரிசொற் றிவாகரத்து முதலாவது தெய்வப்பெயர் தொகுதி. வீரசோழியம் பாயிரம் ஆயுங்குணத்தவலோகிதன்பக்கல் அகத்தியன்கேட் டேயும்புவனிக் கியம்பியதண்ட மிழீங்குரைக்க நீயுமுளையோவெனிற்கருடன்சென்ற நீள்விசும்பி லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே. தொல்காப்பியம் மயங்கா மரபி னெழுத்து முறைகாட்டி / மங்குநீர் வரைப்பி னைந்திரர் சிலப்பதிகாரம் கண்கவி மயக்கத்துக் காதலோடிருந்த / தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு. பதஞ்சலியார் ஞானம் வசனசத்தி சுபிலாதி மாமுனிவர் / மகிதமான ஜனகாதியும் வாமரோம முனிநந்தி தேவன் வ / பாஷை யோதினர்கள் வண்மெயே மேருலாவுவட வீதிதோருமுயர் / வேதஞானா ஜனகாதியர் மேலைவீதிதிரு மூலவர்க்கமிக / வேயிருந்து விளையாடினார் பாருங்கீழ்திசையி லையர்சட்டமுனி / பானுமாமலையி லாகினார் பன்னு தென்றிசையி லேயிருந்து தமிழ் / பாஷை யோதினன் அகத்தியன். அவற்றை விடாமுயற்சியில் அநுசரித்துவந்த சங்கத்தோர்கள் தென்னிந்திரதேசம், வடயிந்திரதேசமெங்கும் உள்ள சங்கத்தோர்களுக்கு சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் கற்பித்து அவ்விரு பாஷைகளில் திரிபேத வாக்கியங்களாம் திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து உலக மக்கள் கல்விகற்று அறிவின்விருத்தி பெருவதற்காகக் கலைநூற்களை வகுத்தும், மக்கள் ரோகங்களைப் போக்கும் ஓடதிகளின் குணாகுணங்களை அறிந்து பரிகரிப்பதற்கு சரகசூசரகமாம் வைத்திய நூற்களை வரைந்தும், மக்கள் காலமாறுதல்களையும் அதன் குணாகுணங்களையும் அறிந்து பூமிகளை சீர்திருத்திப் பலனடைவதற்கு அந்தந்த சோதிகளின் நிலையங்களையறிந்துக் கொள்ளுவதற்காக சோதிட நூற்களை வரைந்தும் வைத்ததுமன்றி மக்கள் பூமிகளின் குணாகுணங்களை அறிந்து ஆகார சீர்திருத்தங்களையும், தேக போஷணைகளையுங் கண்டறிந்து சுகம்பெருவதற்கு கடற்கரைகளைச் சார்ந்த நிலங்களை நெய்தநிலமென்றும், நாடுகளைச்சார்ந்த நிலங்களை மருத நிலமென்றும், காடுகளைச் சார்ந்த நிலங்களை முல்லைநிலமென்றும், மலைகளைச்சார்ந்த நிலங்களை குறிஞ்சிநிலமென்றும், படுநிலங்களை பாலைநிலங்களென்றும் வகுத்து அந்தந்த நிலங்களில் விளையக்கூடியப் பொருட்கள் இன்னின்னவைகளென்றும், அப்பொருட்கள் இன்னின்னவைகளுக்கு உபயோகமுள்ளதென்றும் விளக்கி ஐந்துவகைபூமிகளின் பலன்களை அடைவோர் ஒருவருக்கொருவர் அவரவர்கள் பூமிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி சூத்திரங்களையும் கண்டுபிடித்து தங்கட் கைகளையும் கால்களையும் ஓரியந்திர சூத்திரம்போற் கொண்டு தொழில் புரிவோர்களுக்கு வடமொழியில் சூத்திரர் சூஸ்திரரென்று அழைக்கப்பெற்றார்கள். இத்தகைய பூமிகளை உழுது பண்படுத்தி தானிய விருத்தி செய்து சருவசீவர்கள் புசிப்புக்கும் வேள்வியின் விருத்திக்கும் ஆதார் பூதமாக விளங்கினோர்கள் தென் மொழியில் வேளாளர்களென்றும் பூவாளர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள். இவர்களுள் காடுகளைச் சார்ந்த முல்லை நிலவாசிகள் தங்களால் வளர்க்கப்பட்ட ஆடுமாடுகளினின்று கிடைக்கும் பால், தயிர், நெய், மோரிவைகளைக் கொண்டுபோய் மருதநிலவாசிகளிடம் கொடுத்து தானியம் பெற்றுக்கொள்ளுகிறதும், மருதநிலத்தோர் தங்கள் தானியங்களை கொண்டு போய் முல்லைநிலத்தாருக்குக் கொடுத்து, நெய், தயிர், பால் பெற்றுக்கொள்ளுகிறதுமாகிய ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்றுக்கொள்ளுவோருக்கு வடமொழியில் வைசியரென்பராதலின் பசுவின் பலனை யீவோர் கௌ வைசியரென்றும், பூமியின் பலனை யீவோர் பூவைசியரென்றும் நாணயப் பொருட்களாம் தனத்தைக்கொடுத்து முன்னிருபொருள் கொண்டு விற்போர் தனவைசியரென்றும் வடமொழியில் அழைக்கப்பெற்றார்கள். இவர்களுள் எண்ணெய், வெண்ணெய், பசுநெய் விற்போர் எண்ணெய் வாணிகரென்றும், கோலமாம் தானியங்களைவிற்போர் கோலவாணியரென்றும், சீலைகளாம் வஸ்திரங்களை விற்போர் சீலைவாணியரென்றும், நகரமாம் கோட்டைக்குள் பலசரக்குகளைக் கொண்டுவந்து மிக்க செட்டாக விற்பனைச் செய்வோர் நாட்டுக்கோட்டை செட்டிகளென்றும், தேசத்தின் ஆயத்துறையில் உட்கார்ந்து செட்டாக சுங்கம் வசூல் செய்வோர் தேச ஆயச்செட்டிகளென்றும் தென்மொழியில் அழைக்கப்பெற்றார்கள். தேசத்துக் குடிகளுக்கோர் இடுக்கம் வாராமலும், ஆடுமாடுகளாம் சீவராசிகளுக்கோர் துன்பம் வாராமலும் சத்துருக்களாகத் தோன்றும் மிருகாதிகளையும், எதிரி மக்களையும் வெல்லும்படியான வல்லபமும், புஜபல பராக்கிரமமுமாகிய ஷாத்திரிய மிகுத்தோனை வடமொழியில் க்ஷத்திரியனென்றும், எதிரிகளாம் துஷ்டர்களையும் துஷ்ட மிருகங்களையும் சம்மாரஞ் செய்யக்கூடிய வல்லபனை தென்மொழியில் அரன் அரயன் அரசனென்றும் அழைக்கப்பெற்றார்கள். மகடபாஷையாகும் பாலியில் சமணர்களென்றும், சகடபாஷையாம் சமஸ்கிருதத்தில் சிரமணரென்றும் அழைக்கப்பெற்று புத்த சங்கங்களாம் சாது சங்கங்களிலுள்ளவர்கள் தங்கள் இடைவிடா சாதன முயற்சியால் சித்திப்பெற்று காலமென்னும் மரண உபாதையை ஜெயித்து யமகாதகரானபோது வடமொழியில் பிராமணன் என்றழைக்கப்பெற்றார்கள். சகட பாஷையில் சிரமணநிலை கடந்தவர்களை பிராமணர்களென்றும், மகடபாஷையில் சமணநிலை கடந்தவர்களையே அறஹத்துக்களென்றுங் கூறப்படும். சாதுசங்கத்திலிருந்து சாதன முதிர்ந்து தண்மெயாம் சாந்தம் நிறைந்து சருவவுயிர்களையுந் தன்னுயிர்போற் கார்த்து சீவகாருண்ய அன்பில் நிலைத்தவர்களை திராவிட பாஷையாகும் தமிழ்மொழியில் அந்தணர்களென்று அழைக்கப்பெற்றார்கள். ஈதன்றி புத்தசங்கங்களாம் சாதுசங்கங்களில் சேர்ந்துள்ளவர் தங்கடங்கள் ஞானசாதன மிகுதியால் கட்புலனும் அதனிலையும், செவிபுலனும் அதனிலையும், நாவின்புலனும் அதனிலையும், நாசியின் புலனும் அதனிலையும், உடற்புலனும் அதனிலையுமாகும் புலன் தென்பட்டோர்களை திராவிடமாம் தமிழ்மொழியில் தென்புலத்தோரென்றும் அழைக்கப்பெற்றார்கள். முன் கூறியுள்ள மூன்றுவகை வைசியருள் பூவைசியருக்கு மறுபெயர் உழவர், மேழியர், உழவாளர், வேளாளரென்றும்; கோ வைசியருக்கு மறுபெயர் கோவலர், கோவர்த்தனர், இப்பரென்றும்; தன வைசியருக்கு மறுபெயர் வணிகர், நாய்க்கர், பரதரென்றும்; உப்பு விற்போருக்குப் பெயர் உவணரென்றும்; கல்வியில் தேறினோர்க்குப் பெயர் கலைஞர், கலைவல்லோரென்றும்; சகல கலை தெரிந்து ஓதவல்லோர்க்குப் பெயர் மூத்தோர், மேதையர், கற்றவர், அவை விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞரென்றும்; தேகலட்சணமறிந்து வியாதிகளை நீக்குவோர்க்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர் மாமாத்திரரென்றும்; மண்ணினாற் பாத்திரம் வனைவோர்க்குப் பெயர் குலாலர், குயவர், கும்பக்காரர், வேட்கோவர், சக்கிரி, மடப்பகைவரென்றும்; கரும் பொன்னாகும் இரும்பை யாள்வோருக்குப் பெயர் கன்னாளர், கருமார், கொல்லர், மருவரென்றும்; மரங்களை யறுத்து வேலை செய்வோருக்குப் பெயர், மரவினையாளர், மயன், தபதி, தச்சரென்றும்; பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற் கொல்லர், தட்டார், சொர்னவாளர் அக்கரசாலையரென்றும்; கல்லினும் மண்ணினும் மனை யுண்டுசெய்வோர்க்குப் பெயர் மண்ணீட்டாளர், சிற்பாசாரியரென்றும், வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் அதாவது தூசி நீக்கி தோய்த்துக் கொடுப்போர்க்குப் பெயர் தூசர், ஈரங்கோலியர், வண்ணாரென்றும்; கிழிந்த ஆடைகளைச் செட்டைகளைத் தைத்துக் கொடுப்போர்க்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்; உயிர்வதையாகியக் கொலை புரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும்; மாடுபூட்டிச் செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கார், நந்திகளென்றும்; கள் விற்போர்க்குப் பெயர் சவுண்டிகர், துவசர், பிழியர், பிடியரென்றும்; கடற்கரை வாசிகளுக்குப் பெயர் கரையார், பட்டினவர், மீன்வாணியரென்றும்; கடற்கரைவாசப் புருஷர்களுக்குப் பெயர் பரதவர், நுளையர், பஃறியர், மிதிலர், சாலர், கடலர், கழியரென்றும்; இஸ்திரீகளுக்குப் பெயர் பறத்தி, நுளத்தி, அளத்தி, கடற்பிணாவென்றும்; மருதநிலவாசப் புருஷர்களின் பெயர் களமர், தொழுவர், வள்ளர், கம்பளர், உழவர், விளைஞரென்றும்; இஸ்திரீகளின் பெயர் கடைச்சியர், ஆட்டுக்காலாட்டியரென்றும்; பாலைநிலவாசப் புருஷர்களின் பெயர் எயினர், புள்ளுவர், மறவர், இறுக்கரென்றும்; இஸ்திரீகளின் பெயர் எயிற்றியர், பேதையர், மறத்தியரென்றும்; முல்லைநிலவாசப் புருஷர்களின் பெயர் முல்லையர், அண்டர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையரென்றும்; இஸ்திரீகளின் பெயர் தொறுவி, பொ துவி, ஆய்ச்சி, குடச்சி, இடைச்சியென்றும், குறிஞ்சிநிலவாசப் புருஷர்களின் பெயர் குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனிவர், இறவுனரென்றும்; இஸ்திரீகளின் பெயர் குறத்தியர், கொடிச்சியரென்றும்; மதகரி யாள்வோர்க்குப் பெயர் யானைப்பாகர், ஆதோணரென்றும்; அரண்மனைக் காப்போர்க்குப் பெயர் மெய்க்காப்பாளர், காவலர், கஞ்சுகி என்றும்; மரக்கலம் ஓட்டுவோர்க்குப் பெயர் மாலுமி, மீகாமன், நீகானென்றும்; இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்; தோல்களைப் பதனிடுவோர்க்குப் பெயர் இயவர், தோற்கருவியாளரென்றும்; நரம்பு முதலியவைகளைக் கொளுத்தித் தோற்பறைக் கொட்டி துளைக்குழலூதுவோர்க்குப் பெயர் குயிலுவரென்றும்; ஓர் சங்கதியை மற்றவர்க்கு அறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும்; இஸ்திரீபோகத்து அழுந்தினோர்க்குப் பெயர் பல்லவர், படிறர், இடங்கழியாளர், தூர்த்தர், விலங்கர், காமுகரென்றும்; மனம்வருந்த வருத்துவோர்க்குப் பெயர் அறுந்துநர், வேதனை செய்வோரென்றும்; பொறாமெயுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சிகரென்றும்; பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோரென்றும்; அன்னியர் பொருளை அபகரித்து சீவிப்போர்க்குப் பெயர் கரவடர், சோரர், தேவர், பட்டிகர், புறையோர், கள்ளரென்றும்; கொடையாளர்க்குப் பெயர் புரவலர் ஈகையாளர், வேளாளர், ஈசர், தியாகி, வேள்வியாளர், உபகாரரென்றும்; தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர் அகிஞ்சர், பேதையர், இல்லார், வறியர் ஆதுலர், ஏழை, உறுகணாளர், மிடியரென்றும்; மாணாக்கர்க்குப் பெயர் கற்போரென்றும்; ஆசாரியர்க்குப் பெயர் ஆசான் தேசிகர், உபாத்தியாயர், பணிக்கரென்றும்; அரசர் முதல் வணிகர், வேளாளர்வரை முக்குலத்தோர்க்குங் கருமக் கிரியைகளை நடத்துவோருக்குப் பெயர் சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், கருமத்தலைவரென்றும்; விவேகமிகுத்தோர்க்குப் பெயர் விவேகி, அறிஞர், சான்றோர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலக மேதாவியரென்றும்; அவிவேகிகளாம் அறிவிலார்க்குப் பெயர் பொறியிலார், கயவர், நீசர், புள்ளுவர் புல்லர், தீயோர், சிறிய சிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேறார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவரென்றும்; இவ்வகையாய் பஞ்சபூமிகளின் விளைபேதத்திற்கும், பொருள் பேதத்திற்குத் தக்கப் பெயர்களையும், மனுக்களின் குணபேதங்களுக்கும், தொழில் பேதங்களுக்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்து புத்ததன்மத்தில் நிலைத்து ஒற்றுமெயுற்ற சுகவாழ்க்கையில் நிலைக்கச் செய்தார்கள். வட இந்தியமென்னும் ஆசியா மத்திய கண்டமுதல் தென்னிந்திய கடைகோடி வரை எங்கும் புத்த சங்கங்களையே நாட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்து புத்ததன்ம அரசர்கள் யாவரையும் நீதிவழுவா நெறியிலும் அன்பின் மிகுத்தச் செயலிலும் நிலைத்து ஓரரசனுடன் மற்றோர் அரசன் வீணேமுனைந்து தீராப்பகையை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர்க்கொருவர் சமாதானமும் சாந்தமும் நிலைக்கும் படியாக அவரவர்கள் அரண்மனைமுகப்பில் பிடிப்பது வெள்ளைக்குடையும், ஏறுவது வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானையும், அணிவது வெண்பிறைமுடியும், வெள்ளையங்கியும், வீசுவது வெண்சாமரையுமாக வகுத்து எக்காலும் ஆனந்தச்செயலில் வீற்றிருக்கச்செய்ததுமன்றி புத்ததன்மத்தைச் சாராத அரசர்கள் எதிர்ப்பார்களாயின் அவர்களுடனும் வீணே எதிர்த்துப் போர்புரியாமல் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்தைக் கையாடி அரசுபுரியும் வழிகளையும் வகுத்துவைத்தார்கள். இத்தகைய புத்ததன்ம அரசர்களுக்குள் விம்பாசாரன், உதையணன், காளகூடன், அசோகன், சந்திரகுப்தன், நந்தன்முதலிய அரசர்கள் தங்கடங்கள் அரசை நீதிநெறியில் நடத்தியதுமன்றி சத்திய தன்மங்களையும் பரவச்செய்துவந்தார்கள். சித்தார்த்தி சக்கிரவர்த்தியாம் புத்தபிரானுக்கு முன்பு மண்முகவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, கலிவாகு என்னும் நவச்சக்கிரவர்த்திகள் கபிலை நகருக்கும், மகதநாட்டிற்கும் தலைத்தார்வேந்தர்களாயிருந்திருப்பினும் புத்தபிரான் பரிநிருவாணத்தின் நெடுங்காலத்திற்குப் பின்னர் தோன்றிய அசோக சக்கிரவர்த்தியே முக்கிய முயற்சியுடையவராயிருந்து சத்தியதன்மங்களை இந்திரதேசம் எங்கணும் மேலுமேலும் பரவச்செய்ததுமன்றி சகட பாஷையாம் சமஸ்கிருதத்திலும், திராவிட பாஷையாம் தமிழிலும் புத்ததன்ம திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து கணிதங்களையும் வரிவடிவாக்கி எங்கும் பரவச்செய்தார். இவ்வசோக சக்கிரவர்த்தியின் காலத்திலேயே தென்னிந்திய தேசம் தெளிவடைந்ததாகும். அவரது ஏவலால் வேலூரில் வினயலங்கார வியாரமும் அதுவரையில் நிருமித்துள்ள நேர் பாதையையும் இஸ்தம்பங்களில் வரைந்துள்ள லிபிகளையும் நாளதுவரையிற் காணலாம். இச்சக்கிரவர்த்திக்கு அசோகன் என்னும் பெயர்வாய்த்த காரணம் யாதெனில் கல்லாலடியில் வீற்ற கங்கையாதாரன் இராகத்துவேஷ மோகமாம் சோகத்தை அம்மரத்தடியில் வீற்று நீக்கியபடியால் அம்மரத்திற்கு அசோக விருட்ச மென்னும் ஓர்பெயரை அளித்திருந்தார்கள். அது கொண்டே சக்கிரவர்த்திக்கு அசோகனென்னும் பெயரை அளிக்கப்பட்டது. அப் பெயருக்குத் தக்கவாறே சகல சோகங்களையும் வெல்லத்தக்க சத்திய தன்மத்தை இந்திரதேசமெங்கும் பரவச்செய்து தனது அசோகனென்னும் பெயரையும் கீர்த்தியையும் என்றுமழியாது நிலைநாட்டிவிட்டார். இவற்றுள் நவகண்டங்களென்னுங் கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம் தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திம கண்டமென்னும் ஒன்பது பிரிவில் வடபரத கண்டத்திற்கு கானிஷ்கா சக்கிரவர்த்தியார் ஏகச் சக்கிராதிபதியாகவும், தென்பரத கண்டமாகிய தென்பாண்டி, குடம், கற்கா, வேண், பூமி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ் நாடெனும் பதின்மூன்று தமிழ் நாட்டுள் வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியாகுமரிக்கு வடக்கு, பெருவழிக்குக்கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, இந்தச் சதுர மத்தியில் ஐன்பத்தாறு காதம் பாண்டியன் அரசாட்சியும், கோட்டைக் கரைக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற்றிற்குத் தெற்கு இந்தச் சதுரமத்தியில் இருபத்துநாலு காதம் சோழனரசாட்சியும், கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, தென்காசிக்கு மேற்கு, பழனிக்குத் தெற்கு, கடற்கரைக்கு வடக்கு இந்தச் சதுர மத்தியில் எண்பது காதம் சேரன் அரசாட்சியமாக விளங்கியதில் இம்மூவரசர்களும் மதுரைபுரம், காஞ்சிபுரம், திரிசிரபுரம், மாவலிபுரம், சிதம்பரம் முதலிய இடங்களெங்கும் புத்த வியாரங்களைக் கட்டிவைத்து சமணமுநிவர்களை நிறப்பி சகடபாஷையாம் சமஸ்கிருத பாஷையை மிக்கப் பரவச்செய்யாமல் திராவிட பாஷையாம் தமிழ் பாஷையிலேயே அனந்தங் கலைநூற்களை வகுக்கச்செய்து தென்னாடு எங்குமமைத்துள்ள அறப்பள்ளிகளாம் வியாரங்களுள் சிறுவர்களுக்குக் கலாசாலைகளை அமைத்து சமணமுநிவர்களால் இலக்கிய நூல், இலக்கண நூல், கணித நூல், வைத்திய நூல் யாவற்றையுந் தெள்ளறக் கற்பித்துவந்தார்கள். இவைகளுள் அரசர்களால் அன்பு பாராட்ட வேண்டியவர்களும், அரசர்களுக்கோர் ஆபத்துவராமல் காக்கத்தக்க அன்புடைய சுற்றத்தோரை ஐந்து வகையாக வகுத்திருந்தார்கள். அதாவது, சத்திய சங்கத்துச் சமணமுநிவர்களில் தண்மெய்ப்பெற்ற அந்தணர்கள் 1. வருங்காலம் போங்காலங்களை விளக்கி கருமக்கிரியைகளை நடாத்திவரும் நிமித்தகர்கள். 2. அறுசுவை பதார்த்தங்களை பாகசாஸ்திரக் குறைவின்றிச் செய்து அன்புடன் அளித்துப் புசிப்பூட்டிவரும் மடைத் தொழிலாளரென்னும் சுயம்பாகிகள், 3. தேகலட்சணங்களையும் வியாதிகளின் உற்பவங்களையும், ஒடதிகளின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து பரிகரிக்கும் மாமாத்திரராம் வைத்தியர்கள் 4. அரசரது சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கம்போற் கருதி அவரது நட்பை நாடிநிற்கும் சுற்றத்தார். 5. காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து மதிகூறும் மந்திரவாதிகளாம் அமாத்தியர். 6. கணிதவழிகளை ஆராய்ந்து வேள்விக்கு உறுதி கூறும் புரோகிதர், 7. சருவ சேனைகளுக்கும் சேநாபதியர். 8. அரசர்களுக்கு இல்லறப்பற்றின் கேடுகளையும், துறவறப்பற்றின் சுகங்களையும் விளக்கக்கூடிய தவற்றொழிற்றூதர். 9. வேள்வி யாகங்களுக்கு மதி யூகிகளாகும் சித்தர்களாம் சாரணர்கள். 10. நெருங்கியக் குடும்பத்தோர். 11. மேலாலோசனைக்குரிய கன்மவிதிக்காரர். 12. ஆடையாபரண அலங்கிரத சுற்றத்தாராகும் கனக சுற்றம் 13. அரண்மனைவாயல் காக்கும் கடைக்காப்பாளர். 14. தனது நகரத்தில் வாழும் விவேகக் குடிகளாம் நகரமாக்கள். 15. வீரர்களுக்கு அதிபதியாகும் படைத்தலைவர். 16. எதிரிகளுக்கு அஞ்சாத வீரர்களாம் மறவர்கள். 17. யானை பாகரும் சுத்தவீரருமான யானைவீரர். 18. இத்தியாதி அரச அங்கத்தினர் சூழ வாழும் வாழ்க்கையே அரசர்கட்கு இனியதென்று வகுத்து அரச ஆட்சிகளை நிலைக்கச்செய்தார்கள். அரச அங்கத்தினரது வல்லபத்தாலும் சமண முநிவர்களின் சாதுரியத்தாலும், மகட்பாஷை, சகடபாஷை, திராவிடபாஷை, அங்க பாஷை, வங்கபாஷை, கலிங்கபாஷை, கௌசிகபாஷை, சிந்துபாஷை, சோனகபாஷை, சிங்களபாஷை, கோசலபாஷை, மராடபாஷை, கொங்கணபாஷை, துளுவ பாஷை, சாவக பாஷை, சீனபாஷை, காம்போஜபாஷை, அருணபாஷை, பப்பிரபாஷை, முதலிய வரிவடிவங்களை இயற்றியும் விருத்தி செய்து வந்தவற்றுள் நவகண்டங்களுள் எங்கணும் புத்ததன்மமாம் சத்தியதன்மமே பரவி சிறுவர் முதல் பெரியோர்வரை வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமென்னும் நீதிநெறி வழுவா நிலையில் நின்று ஒற்றுமெயும், அன்பும் பாராட்டி சுகசீவ வாழ்க்கையில் நிலைத்திருந்தார்கள். இத்தகையவொழுக்கவிருத்திக்குக் காரணமோவென்னில் ஒவ்வொரு சிறுவர்களையும் அறப்பள்ளிகளாம் சங்கத்திற்கு விடியர்காலம் அனுப்பி சமண முநிவர்கள்பால் கலை நூற்களைக் கற்று அறிவின் விருத்தி பெற்றும் நீதி நூற்களைக் கற்று ஒழுக்க நெறியில் நின்றும் ஐந்துவயது முதல் பதினாறு வயதளவும் பள்ளிக்குச் செல்லுவதும், சமணமுநிவர்களை வணங்கி கல்வி கற்பதும், இல்லம் செல்வதும், தாய்தந்தையரை வணங்கி இனிதிருப்பதுமாகியச் செயலன்றி துர்சனர் சாவகாசமும் பேராசையுள்ளோர் பிறர் சிநேகமும் வஞ்சினத்தோர் சேர்க்கை வழிபாடுகளுமாகிய கேட்டுரவினராகும் கலப்பின் மெயே காரணமாகும். இத்தகைய நல்லொழுக்கக் காரணகாரிய விருத்தியிலிருந்தும் பகவனால் போதித்துள்ள சத்தியதருமமாம் மெய்யறத்தின் ஆதியும் அந்தமுங் கண்டடைவோர் கோடியில் ஒருவரேயன்றி சகலருந் தெரிந்துக்கொள்ளக்கூடாத பேரறிவின்படித் தறத்தினின்றது. அதுகண்டு சமணமுநிவர்களிற் சிலர் தங்கடங்கள் வசதிக்கும், தங்கடங்களறிவின் விருத்திக்கும், தங்கடங்கள் சாதனத்திற்கும், தங்கடங்கள் காலத்திற்குத் தக்கவாறு புத்தபிரான் தன்மபோதத்திற்கு மாறுபாடின்றி காலத்திற்குத் தக்க ஏதுக்களை மாறுபாடுசெய்து அவரவர்கள் மாறுபடுத்தியக் காலத்தையே சமயமெனக் குறிப்பிட்டு பிரகஸ்பதி கால் மாறுதலை பௌத்த சமயமென்றும், சினன் காலமாறுதலை உலோகயித சமயமென்றும், கபிலன் காலமாறுதலை சாங்கயசமயமென்றும் அங்கயாதன் காலமாறுதலை நொய்யாயிக சமயமென்றும், கணாதன் காலமாறுதலை வைசேஷிக சமயமென்றும், சைமினியின் காலமாறுதலை மீமகாம்ஸசமயமென்றும் மாறுபடுத்தி தங்கள் தங்கள் ஏதுக்களுக்குத் தக்கவாறு நிகட்சியில் விடுத்து ஆறுபெயரால் மாறுபடுத்திய அறுவகைக் காலக்குறிப்புகளை அறுசமயங்களென வழங்கிவந்தார்கள். புத்தபிரான் பரிநிருவாணமடைந்த நெடுங்காலத்திற்குப்பின்னர் சீவ காருண்யமும் அன்பும் மிகுத்து போதிக்குந் திடமுள்ள சமணமுநிவர்களிற்சிலர் தாங்கள் பெறுஞ் சுகத்தை ஏனைய மக்களும் பெற்று சுகமடையவேண்டும் என்னும் கருணையால் வெளிதோன்றி வருவதுண்டு, அவ்வகைத் தோன்றியவர்களின் காலக்குறிப்பையும் அவரவர்கள் முக்கியமாக வைப்புறுத்திக் கூறிய வாக்கையும் அதுசரித்து அந்நன்னோர் காலக்குறிப்பை அந்நோர் சமயமென வகுத்துவந்தார்கள். இவற்றுள் பௌத்தசமயம் யாதெனில் பிரகஸ்பதி முநிவர் வெளிதோன்றி சகலருக்கும் சத்தியதன்மத்தை விளக்கிவருங்கால் நாம் புத்தரது சமயதன்மத்தை அநுசரிப்பவர்கள் ஆயினும் நமக்குள்ளப் பொய், வஞ்சினம், சூது, பொறாமெய், நம்மெய்விட்டகலாதிருக்கின்ற படியால் நம்மெ நாம் புத்தசமயத்தோரென்றும், புத்தர்களென்றும் கூறுதற்கு இயலாதவர்களாய் இருக்கின்றோம். ஆதலின் நம்மெய் நாம், பௌத்தசமயத்தோரென்றும், பௌத்தர்களென்றுங் கூறி சத்தியதன்மத்தில் நடந்து துக்கத்தைப் போக்கிக்கொள்ளும் வழிகளை போதித்தகாலத்தையும், அவரது பிரதான மொழியையுங்கொண்டு பிரகஸ்பதி முநிவர் காலமாறாது பௌத்தசமயமெனக் கொண்டாடி வந்தார்கள். சின முநிவரது காலக் குறிப்பைக்காட்டும் உலோகயித சமயமாவது யாதெனில், சினமுநிவர் வெளிதோன்றி தனது அன்பின் மிகுதியால் சகல மக்களுக்கும் சத்தியதன்மத்தை விளக்கிவருங் காலத்தில் சக்கிரவர்த்தித் திருமகனாய் இருந்தும் உலோக யிதமாம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை முதலிய இன்பங்களாம் இதங்களைத் தவிர்த்து அவலோகித ரென்னும் பெயர்பெற்ற அறவாழியானது தன்மத்தைப் போதிப்பவர்களாகிய நாம் மண்ணாசைப், பெண்ணாசை, பொன்னாசை, மூன்றிலொன்றையேனும் விடாச்சிந்தையை உடையவர்களாயிருந்தும் நம்மெய் நாம் அவலோக இத சமயத்தோரென்றும், அவலோகித கூட்டத்தோரென்றும் சொல்லப்போமோ, ஒருக்காலும் சொல்லலாகாது. ஆதலின்மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இம்மூன்றும் நம்மெய்விட்டகலும் வரையில் உலோகயித சமயத்தோர்களென வழங்கி சத்தியதன்மத்தினின்று ஆசாபாசக் கயிறுகளை அறுத்து அவலோகிதராக வேண்டும். அதுவரையிலும் நாம் உலோகயித சமயத்தோரென்றே வழங்கவேண்டுமெனக் கூறி மூவாசைகளை அறுக்கத்தக்க வழிகளைப் போதித்தக் காலக்குறிப்பை மாறாது சின முநிவர் உலோகாயித சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். கபிலமுநிவரது காலக்குறிப்பைக் காட்டும் சாங்கிய சமயமாவது யாதெனில்; கபில முநிவர் வெளிதோன்றி பகவனது சத்தியதன்மங்களை விளக்கி வருங்கால் புத்தசங்கத்தோர் சாங்கியங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிலை பிறழ்ந்திருப்பதையுணர்ந்து சங்கத்தோர் சாங்கியங்களாகும் படுக்கைநிலையும், எழுந்திருக்குங்காலமும், மணற்கொண்டு தேகத்தைக் கழுவுஞ் செயலும், புசிப்பின் காலமும், பதார்த்த வகையும், ஆசன பீடமும், வாசிப்பின் நேரமும், போதிக்குங்காலமும், சாதன ஒழுங்கும் ஒரேவகையிலிருக்கவேண்டுமன்று போதித்து ஒவ்வோர் சங்கத்தினர்கள் படித்த சாங்கியத்தையும் ஒரேவழியில் நடாத்தும்படியாகப் போதித்தக் காலக்குறிப்பு மாறாது கபில முநிவரது சாங்கிய சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். அங்கபார முநிவர் காலக் குறிப்பைக் காட்டும் நொய்யாயிகம் அல்லது நையாயிக சமயமாவது யாதெனில்; நொய்யாம் அணுத்திரளாயிருந்த காலத்தாலும் இகமாம் பூமி அழிந்ததில்லையாகும். அணுத்திரள் யாவுந் திரண்டு அண்டம் போன்ற பூமியாகி அழியாதிருக்கின்றதென்பதும் அவ்வழியா நிலைகண்டு பூமிக்கு நிலமென்னும் பெயரளித்துள்ளதும் ஆகிய இகத்தில் வாழ்வோர்களாகிய நாமும் நையாது நித்தியநிலைப் பெறுவதற்காக இல்லந் துறப்பதே சிறப்பென்று கூறி இகத்தில் நையாயிதத்தை விளக்கியது கண்டு அங்கபாத முநிவர் காலக்குறிப்பு மாறாது நையாயிக சமயமென்று கொண்டாடி வந்தார்கள். கணாதமுநிவர் காலத்தில் தோன்றிய வைசேஷக சமயமாவது யாதெனில், கணாத முநிவர் கருணைகூர்ந்து சகலருக்கும் சங்க அறன் சத்தியபோதத்தை விளக்கிவருங்கால் இல்லறதன்மமும், துறவற தன்மமும் வையகத்தில் விசேஷமுற்றிருப்பினும் பொதுவாக சேஷித்துள்ளது சத்தியதன்மமே யாதலின் உலக மாக்கள் ஒவ்வொருவரும் வையகத்திற் கெடாது சேஷித்துள்ள சத்தியதன்மத்தில் நடந்து சதானந்தத்தைப் பெறவேண்டுமென்று கூறிவந்த கணாதமுநிவரின் காலக்குறிப்பு மாறாது வைசேடிக சமயமெனக் கொண்டாடிவந்தார்கள். சைமினி முநிவர் காலத்தில் தோன்றிய மீமாம்ஸ சமயமாவது யாதெனில், சைமினிமுநிவர் உலகமக்கள் மீது கருணை கூர்ந்து சத்தியதன்மத்தை விளக்கிவருங்கால் சிறந்த பிறப்பும், சிறந்த ஞானமும், சிறந்த அன்பும், சிறந்த சாந்தமும், சிறந்த செயலும், சிறந்தவுருவும். சிறந்த வாக்கும், சிறந்த போதனையுமமர்ந்த மகா அம்ஸ வுருவாம் புத்தபிரானுக்கு மீ, மேற்பட்டவர்கள் உலகத்தில் ஒருவருமில்லையாதலின் அவரது சத்தியதன்மபோதத்தில் ஒன்றைக் கூட்டவாவது குறைக்கவாவது கூடாதென்று அறவாழியான் மீ, மகா அம்சத்தை விளக்கிய சைமினிமுநிவர் காலக்குறிப்புமாறாது பகவன் மீமாம்ஸ சமயமெனக் கொண்டாடிவந்தார்கள். இத்தகைய ஆறு சமண முநிவர்களால் அறுவகை சமயபேதங் களுண்டாயினும் அறுசமயங்களுக்கும் ஆதார தன்மகாயமாம் புத்தரும், அவரது தன்மமும், அவரது சங்கமுமட்டும் பேதப்படாது அறுசமயத்தோர்க்கும் உபாசகர்கள் உண்டி அளித்து உதவிபுரிந்து வந்தார்கள். இவ்வாறு சமய விவரங்களை அருங்கலைச் செப்பு, அறுசமயப்பத்திலும், பெருந்திரட்டிலும் தெளிவாகக் காணலாம். இத்தகைய பௌத்தசங்கத்தோர்களாலும், பௌத்ததன்ம அரசர்களாலும், மற்றும் உபாசகர்களாலும் சீவராசிகளின் விருத்திகளையும், மநுமக்களின் சுகங்களையும் மேலாகக் கருதி சிறுபிள்ளைகளின் கல்வி விருத்திக்கு அறப்பள்ளிகளில் கூட்டங்களையும், பிணியாளர்களை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலைகளையும், ஒருசங்கத்தைவிட்டு மறு சங்கத்திற்குச் செல்லும் சமணமுநிவர்களுக்கும், சகல ஏழைகளுக்கும் அன்னதன்மசாலைகளையும், திக்கற்ற அனாதை குழந்தைகளுக்கு அமுத தன்ம சாலைகளையும் வகுத்து ஒருவருக்கு ஓர் ஆபத்து நேருங்கால் மற்றவர்கள் கூடி அத்துன்பத்தை நீக்குதலும், ஒருவருக்கோர் துன்பமுண்டாயின் மற்றவர்கள்கூடி அத்துன்பத்தை நீக்குதலுமாகியச் செயலால் சகலபாஷை மக்களும் பாஷை பேதமாயினும் தன்மத்தில் பேதமின்றி தன்னைப்போல் பிறரையும் நேசித்து ஒற்றுமெய் மிகுதியாலும், அன்பின் பெருக்கத்தாலும், திராவிடராஜன்மகளை சிங்களராஜன் விவாகம்புரிவதும், வங்காளராஜன் மகளை மராஷ்டகராஜன் விவாகம் புரிவதுமாகிய வொற்றுமெய் நயத்தைக் காணுங் குடிகளும் அரசர்கள் எவ்வழியோ குடிகளும் அவ்வழியெனக்கொண்டு தேச சிறப்பும், குடிகளின் சிறப்பும், கல்வியில் இலக்கிய நூற்களின் சிறப்பும், கலை நூற்களின் சிறப்பும், வைத்திய நூற்களின் சிறப்பும், சோதிடநூற்களின் சிறப்பும் எங்கும் பிரகாசிக்கத் தக்க நிலையிலிருந்ததுடன் சகலபாஷைக் குடிகளும் வித்தியா விருத்தியிலும், விவசாயவிருத்தியிலும், அறிவின் விருத்தியிலுமிருந்து சுகவாழ்க்கைப் பெற்றிருந்தார்கள், இத்தேசத்தோர் யாவருக்கும் புத்த தன்ம நல்லொழுக்கங்களாம் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்கள் நிறைந்து வருங்காலத்தில் வித்தைக்கு சத்துரு விசனம் தாரித்திரம் என்பதுபோல் இத்தேசத்தின் சத்தியதன்மத்திற்கே சத்துருவாக அசத்தியர்களாம் மிலைச்சர் மிலேச்சரென்னும் ஓர் சாதியார் வந்து தோன்றினார்கள். அவர்கள் வந்த காலவரையோ புத்தபிரான் பரிநிருவாணத்திற்கு ஆயிரத்தி எழுநூறு வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய பெளத்தமன்னர்களாம் சீவகன், மணிவண்ணன் இவர்கள் காலமேயாகும். அவர்களுடைய சுயதேசம் புருசீகதேசமென்றும், அவர்கள் வந்து குடியேறிய விடம் சிந்தூரல்நதிக் கரையோரமென்று அஸ்வகோஷர் அவர்கள் எழுதியுள்ள நாராதிய புராணசங்கைத் தெளிவிலும், குமானிடர் தேசத்தில் மண்ணை துளைத்து அதனுள் வாசஞ்செய்திருந்தார்களென்று தோலாமொழிதேவரியற்றிய சூளாமணியிலும் வரைந்திருக்கின்றார்கள். இவர்களது நாணமற்ற ஒழுக்கத்தையும், கொடூரச் செயலையும், மிலேச்ச குணத்தையும் உணர்ந்த சேந்தன் திவாகரதேவர், தனது முன்கலை நூலிலும், மண்டல புருடன் தனது பின்கலை நூலிலும் மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும், ஆரியரென்றும் இவர்களை அழைத்திருக்கின்றார்கள். இத்தகையாய் அழைக்கப்பெற்ற மிலேச்சர்கள் செய்தொழில் யாதுமின்றி இத்தேசத்தோரிடம் பிச்சையிரந்துண்பதே அவர்களது முதற்கிருத்தியமா இருந்தது. அவ்வகை யிரந்துண்ணுங்கால் இத்தேசக் குடிகள் பலபாஷைக்காரர்களாயிருப்பினும் சத்தியத்தில் ஒற்றுமெயுற்று வாழ்தலையும், அவர்களன்பின் பெருக்கத்தையும், மகடபாஷையில் அறஹத்தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற புத்தசங்கத்தலைவர்களை அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்கள் கண்டவுடன் அவர்களடிபணிந்து வேண வுதவிபுரிந்து வருவதையுங் கண்ணுற்றுவந்த மிலேச்சர்கள் சத்தியசங்க நூற்களுக்கு உறுதிபாஷையாகும் வடமொழியையும் தென்மொழியையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். பாஷைகளைக் கற்றுக்கொண்ட போதிலும் சமணமுநிவர்களின் சாதனங்கள் விளங்காமலும், அச்செயலிற் பழகாமலும் அவர்களது நடையுடை பாவனைகளையும் மகடபாஷை, சகட பாஷை, திராவிட பாஷைகளில் அவர்கள் ஏதேது மொழிகின்றார்களோ அம்மொழிகளைக் கற்றுக்கொண்டும் தங்கடங்கள் பெண்பிள்ளைகளுடன் பிச்சையிரந்துண்டு சிந்தூரல் நதியின் கரையோரம் போய் தங்கிக்கொள்ளுவதுமாகியச் செயலிலிருக்குங்கால் இத் தேசக்குடிகளின் பார்வைக்கு அவர்களுடையப் பெண்கள் கால்செட்டை அணிந்துகொண்டும், புருஷர் பெரும்வஸ்திரமும் செட்டையும் அணிந்து நீண்டவுருவும் வெண்மெ நிறமும் உள்ளவர்களாய்த் தோற்றுங்கால், நீங்கள் யாவரென்று கேட்க, யாங்கள் நதியின் அக்கரையோரத்தார், அக்கரை ஓரத்தாரென விடை பகர்ந்துக்கொண்டே வந்தவர்கள், கல்வியற்றப்பெருங் குடிகளையடுத்து மகடபாஷையில் யாங்களே அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் யாங்களே பிராமணர்களென்றும், திராவிட பாஷையில் யாங்களே அந்தணர்களென்றுங்கூறி தங்களுக்கே சகல தானங்களும் கொடுக்கும்படி வேதம் கூறுகிறதென்று மொழிந்து பயத்துடன் பிச்சையிரந் துண்டவர்கள் சில சகடபாஷை சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு அதிகாரத்துடன் பிச்சையிரக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். இவர்கள் இத்தேசத்தோர்களிலும் மிக்க வெண்மெய் நிறமுடையவர்களாயிருந்து சமணமுநிவர்களைப்போன்ற பொன்னிற ஆடையுடுத்திய வேஷமானது கல்வியற்றக் குடிகளின் கண்களை கவர்ந்துகொண்டதன்றி இவர்களே சங்கத்து அறஹத்துக்களென்றும் பயந்து சகல பொருட்களும் கொடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். இவ்வேஷப் பிராமணர்களோ சங்கத்தோர் அருகிலும் நன்கு வாசித்துள்ள உபாசகர்கள் வீடுகளுக்குஞ் செல்லாமல் கல்வியற்றக் குடிகள் வாசஞ்செய்யும் குக்கிராமங்களுக்கே சென்று தங்களதிகார பிச்சையாலிரந்துண்டு சீவித்து வந்தார்கள். இத்தகைய வேஷத்தால் பெருங் குடிகளை தங்கள் வயப்படுத்திக் கொண்டதுமன்றி புத்ததன்மத்தின் ஞானமும், அதனந்தரார்த்தங்களுமறியா சிற்சில அரசர்களையும் தங்கள் பிராமணவேஷத்திலடக்கிக்கொண்டார்கள். புத்தசங்கத்தில் அடங்கியுள்ள புருஷர்களை மகடபாஷையில் பிக்குகளென்றும், இஸ்திரீகளை பிக்குனிகளென்றும், சகடபாஷையில் புருஷர்களை பார்ப்பார்களென்றும் வழங்கிவந்தார்கள். பாலியில் “பாப்போ” “பாப்பா” “பாப்பு” வெனுமொழி தண்மெயாம் சாந்தகுணம் அமைந்தோரென்பதாம். பாப்பு, பாப்பா, பாப்பாரென்னும் பெயர் வேறு நோக்காது தன்னை நோக்குஞ் சாதனத்தால் தண்மெய்ப்பெற்றவர்களாதலின் பௌத்த சங்கத்தைச்சேர்ந்து சித்திபெற்ற புருஷர்கள் பார்ப்பார்களென்றும் பௌத்த சங்கத்தைச்சேர்ந்து சித்திப்பெற்ற இஸ்திரீகள் பாப்பினிகளென்றும் அழைக்கப்பெற்றார்கள். சாதுசங்கஞ்சேர்ந்து புருஷர்கள் வேறு இஸ்திரீகள் வேறாகத் தங்கி இராகத்து வேஷ மோகங்களால் உண்டாம் சகலப்பற்றுக்களையும் அறுத்து தண்மெயாம் சாந்தநிலைப்பெற்று பாப்பான், பாப்பினியெனப் பெற்ற சிறந்த பெயரை வேஷப்பிராமணர்களாம் மிலேச்சர்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் சுகித்திருப்பதுடன் பொருளாசை மிகுதியுற்று சகலபற்றுமுள்ளவர்கள் வைத்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளிடஞ் சென்று தங்களைப் பாப்பார், பாப்பிணிகளெனக் கூறி அதிகாரப்பிச்சை இரந்துண்டு நூதனமாக இத்தேசத்திற் குடியேறிய மிலேச்சர்கள் யாவரும் தங்கள் தங்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் யாவரையும் பிராமணர், பிராமணரென்று சால்லவாரம்பித்துக்கொண்டார்கள். பெளத்ததன்ம மகடபாஷையில் அறஹத்தென்றும் சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிடபாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்றப் பெயர் கோடி மனிதருள் ஒரு மனிதனுக்கு வாய்ப்பதரிது. ஏனெனில் புத்தருக்குரிய வாய்மெயும், புத்தருக்குரிய சாந்தமும், புத்தருக்குரிய அன்பும், புத்தருக்குரிய பற்றற்றச் செயலும், புத்தருக்குரிய யீகையும், சருவசீவர்கள்மீதும் பதிந்திருந்த புத்தரது கருணையும், தனக்கு சிலர் தீங்கு செய்யினுந் தானவர்களுக்குத் தீங்கு செய்யாது சுகமளித்த புத்தரதுச் செயலும், எக்காலும் யீகையே குடிகொண்டுள்ள புத்தரது குணமும் யாரிடத்தில் தோன்றுகிறதோ அவர்களையே பிராமணர்களென்றழைத்து வந்தார்கள். அதுகெண்டே புத்தபிரானை திருத்தக்கத்தேவர் தானியற்றியுள்ள சீவகசிந்தாமணியில் “ஆதிகாலத் தந்தணன்காதன்” என வரைந்திருக்கின்றார். காக்கைபாடியனாரும் தாமியற்றியுள்ள பாடியத்துள் “ஆதிகாலத் தந்தணன் அறவோ” னென்றும் வரைந்திருக்கின்றார். அத்தகையப் பற்றற்றச் செயலும் பரிபூரண நிலையும் அமைந்தவர்களையே அறஹத்தென்றும், பிராமணரென்றும், அந்தணரென்றும், பாப்பாரென்றும் சொல்லத்தகுமேயன்றி சகல பற்றுக்களும் நிறைந்துள்ளக் குடும்பிகளுக்கு அப்பெயர் பொருந்தவே பொருந்தாவாம். இத்தகைய பொருந்தா சிறந்த பெயரை மிலேச்சர்களாம் ஆரியர்கள் வைத்துக்கொண்டு பெளத்ததன்மமும் அதன் செயலுமறியாப் பெருங்குடிகளையும் மற்றும் சிற்றரசர்களையும் வஞ்சித்து பொருள்பறித்துண்டு உடுத்திவருங்கால்; இவர்கள் புருசீக நாட்டிலிருந்து நமது தேசம் வந்து குடியேறியவர்களென்று அஸ்வகோஷர் நந்தனென்னும் அரசனுக்கு விளக்கியிருக்கின்றார். அதாவது நந்த நந்தனா, இந்த வேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரல்ல. இவர்கள் புருசீக தேசத்தார்கள். அப்புருசீகதேசத்திற்கும், உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்கு திக்கில் 27-நாள் பிரயாணத்திலிருக்கின்றது. அவ்விடத்திற் சென்று இவர்களுடைய தேக நிறத்தையும், அவர்களுடைய தேக நிறத்தையும்; இவர்களுடைய முகக் குறிகளையும், இவர்களுடையப் புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், அவர்களுடையப் புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், இவர்களுடைய பெண்களின் நடையுடைச் செயல்களையும், அவர்களுடையப் பெண்களின் நடையுடைச் செயல்களையும்; இவர்கள் அக்கினியை அவியாமற் தொழுது வரும் செயல்களையும்; இவர்களுடைய பெண்களுக்கு சூதகங்கண்டவுடன் 7 நாள் புறம்பே வைத்துவிடும் செயல்களையும் அவர்களுடையப் பெண்களை சூதக்காலங்களில் நீக்கிவைக்கும் செயல்களையும் உமது கண்களால் காண்பீராயின் இவர்களது மாறுவேஷந் தெள்ளற விளங்குமென்று கூறியவுடன், நந்தன் கொலுமண்டபத்தில் வந்திருந்த வேஷபிராமணர் யாவரும் வெளியேறி நந்தனை தங்கள் தேசம் போய்ப் பார்க்காவண்ணம் சிதம்பச்சிலையமைத்து அரசனைக் கொன்றுவிட்டதாக அஸ்வகோஷர் அவர்கள் எழுதியுள்ளதற்கு ஆதரவாக நந்தனென்னும் அரசனை பிராமணர்கள் கொன்றுவிட்டதாக ரெவரெண்டு ரேனியஸ் என்பவர் தான் எழுதியுள்ள இந்துதேச சரித்திரத்திலும் எழுதியிருக்கின்றார். இவ்வகையாக மிலேச்சர்கள் தங்கள் மிலைச்ச செயல்களுக்கும், வஞ்சகத்திற்கும், மாறுவேஷத்திற்கும் பயந்து தாங்கள் கேட்பதை யாரார் கொடுத்துவருகின்றார்களோ அவர்கள் யாவரையுந் தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் மாறுவேஷத்தைக் கண்டித்தும், தங்கள் பொய்மொழிகளையும், பொய்ப்போதனைகளையும் நம்பாது மற்றவர்களையும் நம்பவிடாது விலக்கி வந்த விவேகிகளைக்கொன்றும், சத்திய சங்கங்களை அழிக்கத்தக்க உபாயங்களைச் செய்தும், அவர்கள் முன்னிலையிற் கிடைக்கும் தன்ம நூற்கள் யாவையும் பாழ்படுத்தியும் வந்தார்கள். இவற்றுள் பௌத்ததன்ம ஞானசாரமானது கோடி மக்களில் ஒருவருக்கு இருவருக்கு விளங்கக்கூடியதும் மற்ற அஞ்ஞான மிகுத்தோர்க்கு விளங்காதது மாயதால் பொருளாசையும் வஞ்சினமுஃமிகுத்த மிலேச்சர்களின் செயலை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பலராகிவிட்டார்கள். புருசீகதேசத்தோரின் பொய்யாகிய வஞ்சகவார்த்தைகளை மெய்யென நம்பி மோசம்போனவர்கள் பெருங்கூட்டமாகிவிட்டபடியால் ஆதியில், பயந்து இத்தேசத்தில் பிச்சை இரந்துண்ட மிலேச்சர்கள் பௌத்த சங்கத்திற் சித்திப்பெற்ற பிராமணர்களென வேஷமிட்டுக்கொண்டு இரண்டாவது, அதிகாரத்துடன் பிச்சை இரந்துண்ண ஆரம்பித்துக் கொண்டார்கள். மூன்றாவது, பௌத்த சங்கங்களை ஏற்படுத்தி அவைகள் அழியாதிருந்து சங்கத்தோரை போஷித்து வருவதற்கு அரசர்களாலும், குடிகளாலும் வேண உதவிபுரிந்து வருவதுபோல் தங்கள் வேஷபிராமணக் கூட்டங்களும் ஒவ்வோர் இடங்களில் தங்கி சுகமாக சீவிப்பதற்கு ஓர் கைம்பெண்ணை வஞ்சித்து தங்களுக்கென்று கட்டிக்கொண்ட விவரத்தை அஸ்வகோஷர் நன்குவிளக்கி யிருக்கின்றார். அதாவது இம்மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தோர் புருசீகதேசத்தோரென்று அறிந்துக்கொள்ளுவதற்காக இவர்கள் இத்தேசத்தில் கட்டியதுள்ள ஓர் கட்டிடத்தின் சாயலையும், புருசீக தேசத்தின் கட்டிடங்களின் சாயல்களையும் கண்டறிந்துக்கொள்ளும்படியாகப் போதித்துள்ள இடத்தில் புன்னாட்டிற்கு வடக்கே சகல சம்பத்தும் நிறைந்த மீனாட்சி என்னும் ஓர் கைம்பெண்ணிருந்ததாகவும், அவளிடம் இவ்வேஷபிராமணர்கள் அணுகி நாங்கள்தான் பிராமணர்களெனச் சில சகடபாஷா சுலோகங்களைச் சொல்லி, அம்மா, நீங்களிறந்துபோனால் உங்கள் பெயராலும் ஓர் பெரிய கட்டிடங்கட்டி பிராமணர்களுக்கு முப்பொழுது அன்னமிட்டு உங்கள் பெயர் என்றும் அழியாதிருக்கச் செய்கின்றோம், உங்கள் பூமிகளையும் சொத்துக்களையும் அக்கட்டிடத்தின் பெயரால் கற்களில் வரைந்துவைத்துவிடுங்கோளென்று வஞ்சித்தெழுதி அவள் மரணமடைந்தவுடன் மீனாட்சி என்னும் கைம்பெண்ணினுடைய சகல சொத்துக்களையும் வேஷ பிராமணர்கள் பற்றிக்கொண்டு தங்கள் கூட்டத்தோருடன் சுகம்பெற ஆரம்பித்துக் கொண்டார்களாம். பிச்சை இரந்துண்பதுடன் இஃது மிக்க மேலாய சுகமென்று அறிந்து மற்றுமுள்ள கல்வியற்ற பெருங்குடிகளிடமும் காமியமுற்ற சிற்றரசர்களிடமும் சென்று அவரவர்கள் சொத்துக்களைக் கொண்டும் மேற்கூறிய வகை போன்றக் கட்டிடங்களைக் கட்டி, சீவித்து வந்தவர்கள், தாங்கள் அடுத்துள்ள சிற்றரசர்களைக் கொண்டு புத்த சங்கத்தோர்களையும் அப்புறப்படுத்தி அவைகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு அவைகளாலும் தங்கள் சுகப்புசிப்பைத் தேடிக் கொண்டார்கள். இவ்வகையாகத் தங்களைத் தாங்களே பிராமணர் பிராமணரெனக்கூறி பெருங்குடிகளை வஞ்சித்து பொய்யைச்சொல்லி சீவித்துவந்த போதிலும் பௌத்தசங்க யதார்த்த பிராமணர்களின் செயலும், அவர்கட்செயல்களின் ஞானவாக்கியங்களும், அவ்வாக்கியங்களின் ஞானார்த்தங்களும் வேஷப் பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் இவர்களினும் முற்றுந் தெரியாக் கல்வியற்றக் குடிகள் பொய்குருக்களை அடுத்து பௌத்த சங்க ஞானகுருக்கள் உபநயனஞ் செய்வதாகக் கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். விரதம் நியமித்தலென்று அவுல்பிரசாதமளிப்பார்கள். நோன்பியற்றுதலென்று கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். யாகமியற்றலென்று கூறி அவுல் பிரசாதமளிப்பார்கள். ஆதிகன்மஞ் செய்தலென்று அன்னதானஞ் செய்வார்கள், பிறவியறுக்கும் சாதனாரம்பத்தில் அன்னதானம் அளிப்பார்கள். இந்திரவிழா காலங்களில் அன்னதானம் அளிப்பார்கள். இவைகளொன்றையுந் தாங்கள் செய்வதைக் காணோம். அவ்வகைச் செய்யாதக் காரணங்கள் என்னை என்று கேட்பார்களாயின் பௌத்த தன்ம ஞானரகசியங்களறியா அஞ்ஞானிகளாய் இருந்தபோதினும் மித்திரபேதத் தந்திரங்களினால் அதன் பொருளும் செயலும் தெரிந்தவர்கள் போல் நடித்து கல்வியற்றவர்களை வஞ்சித்து அந்தந்த வாக்கியங்களைக்கொண்டே பொருள்பறித்து சீவிக்கும் வழிகளைத் தேடிக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில், பௌத்த சங்கத்திலுள்ள சமண முநிவர்களுக்கு சிரமணர்களில் சித்திப் பெற்ற பிராமணர்கள் அஞ்ஞான விழியாம் ஊனக்கண் பார்வையை அகற்றி மெய்ஞ்ஞான விழியாம் ஞானக்கண் பார்வையில் நிலைக்கச் செய்வார்கள். அதாவது, ஊனக்கண்ணற்று ஞானக்கண் பெற்றபடியால் அவர்களை உபநயனம் பெற்றவர்களென்றுகூறி பேரானந்தவுபநயனம் பெற்ற பெரியோர்களென்று சகலரும் அறிந்து அவர்கள் சுகசாதனங்களுக்கு உதவிபுரிந்து வருவதற்காக மதாணிபூநூலென்னும் முப்பிரிநூற் கயிற்றினை அவர் மார்பிலணைந்து அவ்விடம் வந்துள்ளவரை சுட்டிக்காட்டி இவர் உபநயன சாதனத்திற்கு யாதாமொரு குறைவுநேரிடாமல் வேண்டியவைகளைக் கொடுத்துக் காக்கவேண்டுமென்று கூறி, வந்துள்ளவர்கள் யாவருக்கும் அவுல்பிரசாதங் கொடுப்பது வழக்கமாகும். சமண முநிவர்களில் உபநயனம் பெற்றோர் உலகத்தை நோக்கும் ஊனக்கண் பார்வையை அகற்றி உள்விழிப் பார்வையாம் ஞானக்கண் பார்வையில் நிலைத்து ஐம்புலபீடமுணர்ந்து அடங்கவேண்டியவர்களாதலின் மடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லாமல் ஞானசாதனங்களை செவ்வைப்படுத்திக்கொள்ளுவதற்காக உபாசகர்கள் அவர்களுக்கு வேண்டிய புசிப்பும் சாதனத்திற்குரிய பீடங்களும் கண்ணோக்கமிட்டு அளித்துவருவதற்காக உபநயனம் பெற்றோர் மார்பில் முப்புரி பூணுநூலை அடையாளமாக அணிந்து வைத்தார்கள். சமணமுனிவர் கூட்டங்களில் முப்புரி நூலணிந்துள்ளவர்களை உபாசகர்கள் கண்டவுடன் அவர்கள் அருகிற் சென்று வணங்கி அவர்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு உடனுக்குடன் கொடுத்துவருவது வழக்கமாகும். உபநயனமாம் உதவிவிழி பெற்றோர் உள்விழி பார்வையாம் ஞானசாதனத்தை யாதொரு கவலையுமின்றி சாதித்து கடைத்தேறுதற்கு ஈதோர் சுகவழியாகும். இத்தகைய பேரானந்த ஞானச்செயலின் ரகசியார்த்தம் விவேகமிகுத்த விசாரிணைப் புருஷர்களுக்கும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் விளங்குமே யன்றி ஏனையோருக்கு விளங்கமாட்டாது. விளங்கா கூட்டத்தோர் பெருகிவிட்டபடியால் வேஷப்பிராமணர்களை அடுத்து அவில் பிரசாதங் கேட்க ஆரம்பிக்குங்கால் வேஷப்பிராமணர்கள் உபநயனமென்னும் வார்த்தையின் பொருளும், அதன் செயலும் தெரியாதவர்களாய் இருந்தபோதினும் அவ்வார்த்தையைக் கொண்டே பேதை மக்களை ஏமாற்றி நான்பிராமணனானதால் என் பிள்ளைக்கு உபநயனஞ்செய்து என்னைப்போல் பூநூலணியப் பொருளுதவி செய்யுங்கோளென்று பொருள்பறித்துப் புசிப்பதற்கு இதையுமோர் வழியாகச் செய்துகொண்டார்கள். கல்வியற்றக் குடிகளோ வேஷப்பிராமணர்களைத் தடுத்து உபநயனமென்பதின் பொருளென்ன, முப்புரி நூலணிவதின் காரணமென்ன, அதற்காக நேரிடும் செலவென்ன, அவ்வகைச் செலவு தொகையைத் தங்களுக்குக் கொடுப்பதினால் எங்களுக்குப் பயனென்னவென்று கேட்காமலே பொருளுதவிச் செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். இவ்வுபநயன மென்னும் மொழியே வேஷப்பிராமணர்களின் தந்திரசீவனத்திற்கு நான்காம் ஏதுவாகிவிட்டது. பெளத்த உபாசகர்களின் விரதமாவது யாதெனில், சத்தியசங்க வியாரங்களுக்குச்சென்று புருஷர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் மனம்போனவழிப் போகவிடாமற் கார்ப்பது விரதம், இஸ்திரீகள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் தங்களது கற்புக்கு ஓர் பின்னமும் வராமற் கார்ப்பது விரதம், மைந்தர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் கலை நூற்களைக் கற்று அறிவை விருத்திசெய்து தேகத்தைக்கார்ப்பது விரதம். இவ்விரதத்தை சதா சிந்தனையில் கார்ப்பதற்கு அமாவாசி, பௌர்ணமி, அட்டமி இம்மூன்று தினத்தும் தாங்களணிந்துள்ள பட்டாபரணம், வெள்ளி பாபரணம், தங்க வாபரணம் யாவையுங் கழட்டிவீட்டில் வைத்துவிட்டு துய்ய வஸ்திரங்களை அணிந்து மடங்களுக்குச் சென்று யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக்களை வணங்கி புருஷர்கள் பஞ்சசீலம் பெற்று மனதைக் கார்ப்பதும், இஸ்திரீகள் பஞ்சசீலம் பெற்று கற்பைக்கார்ப்பதும், பிள்ளைகள் பஞ்சசீலம் பெற்று தேகத்தைக் கார்ப்பதுமாகிய விரதத்திலிருந்து அன்று முழுவதும் ஒரேவேளை அன்னம் புசித்து அவரவர்கள் இல்லஞ் சேர்வது இயல்பாம். விளங்காக் குடும்பங்கள் பெருகி வேஷப்பிராமணர்களை அடுத்துக் கொண்டபடியால் வேஷப்பிராமணர்களை விரதமென்னையென்று கேட்குங்கால், கார்ப்பது விரதமென்னும் சாராம்ஸமே அறியாதவர்களாயிருந்தும் வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தந்திரோபாயத்தால் மிக்க தெரிந்தவர்களைப் போல் கல்வியற்றக்குடிகளை மயக்கி பலவகைப் பொய் தேவதாப் பெயர்களைச் சொல்லி சோமவார விதம், மங்களவாரவிரதம், சனிவார விரதம், சுக்கிரவார விரதமெனும் உபவாசங்களை அநுஷ்டித்து எங்களுக்கு தானஞ்செய்து வருவீர்களாயின் சகல சம்பத்தும் பெருகி சுகசீவிகளாக வாழ்வீர்களென்று கூறி பொருள்பறித்து சீவிப்பதற்கு விரதமொழியே ஐந்தாவது ஏதுவாகிவிட்டது. பெளத்த உபாசகர்கள் செய்துவந்த நோன்பென்னும் செயல் யாதெனில், பஞ்சசீல தன்மத்தில் அகிம்ஸா தன்மமே விசேஷ தன்மமாதலின் ஒருயிரைக் கொல்லவும்படாது, அதன் மாமிஷத்தைப் புசிக்கவும் படாதென்னும் முதன் நோன்மெ அடையவேண்டி சங்கத்துள்ள அறஹத்துக்களை வணங்கி பஞ்சசீலத்தில் கொன்று தின்னாமெ யென்னும் முதல் நோன்மெ அளிக்கவேண்டும்மெனக் கேட்பது வழக்கமாகும். அவ்வகை வினாவிய மொழியை ஞானாசிரியர்க் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடையவராய் உபாசகனது வலதுபுஜத்தில் இனியொருகால் சீவர்களைக் கொல்லுவதுமில்லை, புசிப்பதுமில்லை என்னுங் கங்கணங்கட்டி வந்துள்ள உபாசகர்கள் யாவருக்கும் அவுல்பிரசாதம் ஈய்ந்து குருவினது ஆசிர்பெற்று இல்லஞ் சேர்ந்து நோன்பென்பதுக் கொன்று தின்னாமை என்னுங் குறியை புஜத்திற் கண்டு நோன்பின் நெறியினின்றார்கள். ஈதோர் அகிம்ஸாதன்ம அறநெறியாகும். இத்தகைய அகிம்சா தன்மத்தின் சிறப்பும் அதன் பலனும் அதற்குரித்தாய் பஞ்ச நோன்பென்னும் மொழியின் பொருளுமறியாத பெருங்குடிகள் வேஷப் பிராமணர்களை அடுத்து நோன்பின் விஷயங்களை வினவுங்கால் மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தோர்க்கு அம்மொழியின் பொருள் விளங்காதிருப்பினும் பெளத்த சங்கத்தோருள் கேசரி, பைரவி, சாம்பவி என்னும் மூன்று ஞானமுத்திரைகள் வழங்கி வருவதுண்டு. அப்பெயரை மூலமாகக் கொண்டு கேதாரி என்னும் பூதாரி அம்மனிருக்கின்றாள், அவளை சிந்தித்து வீடுகடோருங் கயிறுகளை வைத்து பூசித்து எங்களுக்கு தட்சணை தாம்பூலம் வைப்பீர்களாயின் அக்கயிறுக்கு மந்திர உச்சாடனம் செய்து கொடுப்போம், அதை நீங்கள் கட்டிக்கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெற்று சுகம் பெறுவீர்களென்று கூறி பொருள் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு நோன்பென்னும் மொழியே ஆறாவது ஏதுவாகிவிட்டது. பௌத்தர்களின் யாகவகைகள் யாதொனில்:- மகடபாஷையாம் பாலியில் யாகமென்றும், சகடபாஷையாம் வடமொழியில் வேள்வியென்றும், திராவிட பாஷையாம் தென்மொழியில் புடமென்றும் வழங்கிவரும் வார்த்தைகளில் பதிநெட்டுவகை யாகங்களைச் செய்துவந்தார்கள். அதாவது, குண்டமென்னுங் குழிவெட்டி அக்கினி வளர்த்தி மருந்துகளின் புடமிடுவதும், ஈட்டி, வாகுவல்லயம் இவைகளுக்குத் துவையலேற்றுவதும், அவைகளால் உண்டாம் மூர்ச்சைகளைத் தெளிவித்தலும், வானம் வருஷிக்கச்செய்தலும், ஓடதிகளைக்குடோரித்தலும், பஸ்பித்தலும், அரசர்களுக்கு தாமரைப்புட்ப சுன்னம் முடித்தலும், தேகபல ஓடதிகளமைத்தலும், நரருக்கு சுகபுகையூட்டி நீதிநெறிகளைப் புகட்டி மக்கள் கதிபெறச்செய்தலும், மக்களுக்கு சுகபுகையூட்டி ஞானநெறிபுகட்டி பிரமகதி பெறச்செய்தலுமாகிய சோதிட்டோமயாகம், அக்கினிட்டோமயாகம் மத்தியாகினிட்டோமயாகம், வாசபேயயாகம் மத்திராத்திரயாகம், சேமயாகம், காடக யாகம், சாதுரமாகி யாகம், சாவித்திராமணியாகம், புண்டரீக யாகம், சிவகாமயாகம், மயேந்திர யாகம், மங்கிக்கஷே யாகம், இராசசுக யாகம், அச்சுவதே யாகம், விச்சுவதித்து யாகம், நரமித யாகம், பிரமமித யாகம் என்பவைகளேயாம். இவற்றினுள் முக்கியமாக சருவ மக்களுக்கும் அவுல்பிரசாதம் அளித்துவரும் நான்கு யாகங்கள் யாதெனில்:- ஈட்டியாகம், எச்சயாகம், ஓமயாகம், கிருதயாக மென்பவைகளேயாம். ஈட்டியாகமாவது மிருகங்கள்மீது மக்கள் மீதும் பட்டவுடன் மூர்ச்சையுண்டாகச் செய்தல், எச்சயாகமென்பது அம் மூர்ச்சையைத் தெளிவிக்கச்செய்தல், கிருதயாகமென்பது ஆயுதம்பட்ட காயங்கள் ஆறாதிருக்குமாயின் அவற்றை ஆறச்செய்தல், ஓமயாகமென்பது மழையில்லாத காலத்தில் வருவிக்கச்செய்தல் இவற்றை இந்திரயாகமென்றுங் கூறப்படும். இந்நான்கு யாகங்களும் சகலகுடிகளுக்கும் அவுல்பிரசாதம் ஈய்ந்து செய்யும் யாகமாதலின் இதனந்தரார்த்தமறியா பெருங்குடிகள் வேஷப்பிராமணர்களை அடுத்து சங்கத்து பிராமணர்கள் யாககுண்டம் வெட்டி திரைகட்டி அவுல்பிரசாதம் அளிப்பார்கள். நீங்களேன் அவ்வகைச் செய்வதில்லையென்று கேட்டபோது யாகமென்னும் பெயர்களையும், அதன் செயல்களையும் வேஷபிராமணர்கள் அறியாதவர்களாய் இருந்தபோதினும் சற்று நிதானித்து திரைட்டி அக்கினி வளர்த்தலில் ஓர் புசிப்பைத்தேடிக்கொண்டார்கள். அதாவது, தங்களுடைய புருசீகதேசத்தில் ஆட்டின்மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் தினேதினே புசித்து வளர்ந்தவர்கள் இந்திரர்தேசம் வந்து யாகசீவனஞ் செய்து வருங்கால் தங்கள் பிராமண வேஷத்திற்காக மாமிஷப்புசிப்புக்கு ஏதுவிலாமல் சருகு காய் கிழங்கு பட்சணத்தை புசித்து திருப்தியில்லாது இருந்தவர்கள் திரைகட்டி யாகஞ்செய்தல் என்றவுடன் அம்மொழியையே பரீடமாகக்கொண்டு கல்வியற்றப் பெருங்குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வரவழைத்து யாங்கள் ஓர் பெரும் யாகஞ் செய்யப்போகின்றோம், அந்த யாகத்தின் சாம்பலைக் கொண்டுபோய் உங்கள் வீடுகளிற் கட்டிவைத்துக் கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெருகி வாழ்வதுடன் உங்களுக்கு யாதொரு வியாதியும் அணுகமாட்டாது, அதற்காய யாககுண்டசெலவுதொகை இத்தனைப்பொன் பணமும், கொழுத்தப் பசுக்கள், கொழுத்த குதிரைகளைக் கொண்டு வருவதுடன் அவுல், கடலை, தேங்காய்ப் பழமும் கொண்டு வருவீர்களாயின் தேவர்களுக்கு சீவர்களை ஆவாகனஞ் செய்வதுடன் அவுல்பிரசாதமுங் கொடுக்க வேண்டுமென்று கூறியபோது பேதை மக்கள் வேஷப்பிராமணர்கள் வார்த்தைகளை மெய்யென நம்பி வேண பணவுதவியும், சுகங்களையும் குதிரைகளையும் அவல், கடலை, தேங்காய்பழம் முதலியவைகளையும் கொண்டுவந்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு யாககுண்டத்தை சுற்றி திரைகட்டிவிட்டு மிலேச்சர்களாம் ஆரியகூட்டங்கள் மட்டிலும் உள்ளுக்கிருந்து மாடுகளையும், குதிரைகளையும், சுட்டுத் தின்பதுடன் அவுல், கடலை முதலியவைகளையும் வேறோருவருக்குங் கொடாது தாங்களே பாகித்துக்கொண்டு, மாடுகள் குதிரைச்சுட்டச் சாம்பல்களை வாரி பேதைகள் கைகளில் கொடுத்துவிட்டு அவரவர் இருப்பிடஞ் செல்லுங்கால் கல்வியற்றகுடிகள் அவுல்பிரசாதங் கேட்பார்களாயின் அவுல்பிரசாதம் தேவர்களுக்கேயன்றி ஏனையோருக்குக் கொடுக்கப்படாதென்று கூறி தங்கள் சுகத்தைப் பார்த்துக்கொள்ளுவதில் பிரியமான மாமிஷங்களைச் சுட்டுத் தின்பதற்காக யாகமென்னு மொழியே ஏழாவது ஏதுவாகிவிட்டது, அவுல் பிரசாதத்தைக் கேட்டக் குடிகள் ஏதுங்கிடையாது கைநிறம்ப மாமிஷஞ் சுட்டச் சாம்பலைப்பெற்றேகுவதையே ஓர் பலனெனக் கருதி பலவகையாலும் விசாரிணையற்றுப் பாழடைந்தார்கள். கோவிலென்பதின் விவரம். கோ - இல், கோவில் என்பது அரசன் வாழ் மனையின் பெயர். அதாவது சித்தார்த்தி சக்கிரவர்த்தி திருமகன் கோவிந்தமென்னும் துறவு பூண்டதும் துறவினது விந்தையால் அரசன் விந்தமென்னும் மலையில் வீற்றிருக்க கோவிந்தம், கோவிந்தமென்றும் அழைக்கப்பெற்ற மொழிகள் யாவும் அரசனே துறவு பூண்டு பெற்ற நான்கு வாய்மெயின் மகத்துவமே பேரானந்த நித்திய சுகத்தில் இருத்தியதை காட்சியாய் கண்டவர்களும், அநுபவத்தில் உணர்ந்தவர்களும் மகத நாட்டில் சித்தார்த்தி சிறுவருக்கு அமைத்திருந்த இராஜகிரகத்தை தெரிசிக்கப் போவோர் யாவரும் கோவில் கோவிலென வழங்கிய ஆதாரங்கொண்டு சித்தார்த்தர் புத்தநிலை அடைந்து அவர் பரிநிருவாணம் அடைந்த பின்னரும் அவரைப்போன்ற உருவங்களை ஸ்தாபித்துள்ள வியாரங்கள் யாவற்றையும் கோவிலெனவழங்கி வந்த மொழி மாறாது நாளதுவரையில் வழங்கி வருகின்றார்கள். சித்தார்த்தி அரசரது மனையை அவர்மற்ற மக்களுடன் உலாவிக் கொண்டிருக்குங்காலும் கோவிலென வழங்கியவர்கள் அவர் பேரானந்தமாம் பரிநிருவாணமுற்றும், அவரைப்போன்ற உருக்கள் அமைத்துள்ள வியாரங்களையும் கோவிலென்றே அழைத்து வந்ததுடன் பௌத்த காவியங்களிலும் நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, கோவிற்சிறப்பென்றும்; நாட்டுவருணனை, நகர வருணனை, கோவில் வருணனையென்றும் பாயிரங்களுள் விளக்கியிருக்கின்றார்கள். பௌத்த அரசர்களும், பெளத்த உபாசகர்களும் வியாரமென்னும் மடங்களைக் கட்டுவித்து மகதநாட்டிற்கும், கபிலை நகருக்கும் அரசரான சித்தார்த்தர் போதனாவுருவம் போலும், ஞானசாதன உருவம் போலும், பரிநிருவாணத்திற்குப் பின்னரமைந்த யோகசயனவுருவம்போலும் அமைத்து சுத்த சாதுக்களாம் சமணமுநிவர்களை வீற்றிருக்கச்செய்து அவர்களது கலைநூல் விருத்திகளுக்கும், ஞானசாதன விருத்திகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பகவன் போதித்தவண்ணம் சாதித்துக் கடைத்தேறுமாறு வேண பொன்னுதவியும் பொருளுதவியுஞ் செய்துவந்தார்கள். இவ்வகையாக ஓர் சமணமுனிவரை சாதுசங்கத்திற் சேர்த்து அவர் முத்தநிலை பெறும்வரை வேண உதவிபுரிந்து வருவோர் புருஷர்களாயின் அவர்களை ஞானத் தந்தையர்களென்றும், இஸ்திரீகளாயின் அவர்களை ஞானத்தாயார்களென்றும் வழங்கிவந்தார்கள். அங்ஙனம் மடங்களாம் கோவில்களில் தங்கி ஞானசாதனஞ் செய்யும் சமண முநிவர்களுக்கு ஞானதந்தை, ஞானத்தாயென்போர் ஏன் உதவிபுரிய வேண்டுமென்பீரேல், ஞானசாதகர்களுக்கு யாதொரு குறைவுங் கவலையுமின்றி உதவிபுரிவதால் அவர்களெடுக்கும் ஞானசாதன முயற்சிக்கு யாதோர் இடுக்கமுமின்றி ஈடேற்றம் அடைவார்கள். அத்தகைய ஈடேற்றமாம் விவேகவிருத்திப் பெற்றோர் ஒருவர் அத்தேசத்திலுளரேல் அத்தேசத்துள்ள சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெருவார்கள். அவர்களது ஞானசாதனத்தால் இராகத்துவேஷ மோகங்களை அகற்றி தண்மெயாம் சாந்தநிலை பெற்று அந்தணர்களான படியால் அவர்கள் பார்வை பெற்றோரும், அவர்களை தெரிசித்து ஒடுக்கம் பெற்றோரும் துக்கநிவர்த்திக்கேதுவாய பலன்களைப் பெறுகுவதுடன் நீதி நூல், ஞானநூல், கணித நூல், வைத்திய நூல், இலக்கிய நூல், இலக்கண நூல்களையும் ஏற்படுத்தி மக்கள் சீர்திருத்தத்திற்காய நன்மார்க்கத்தில் ஞானசாதனர்கள் பெருகி அவர்களால் மக்கள் சீர்திருத்தமடைதல் வேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் அவர்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து வருவது வழக்கமாயிருந்தது. இத்தகையக் கோவில்களென்னும் வியாரங்கள் கட்டியுள்ள விஷயங்களும் அவ்வியாரங்களில் அரசர் உருவங்களை அமைத்துள்ள விவரங்களும் அதனுள் சமணமுநிவர்களை சேர்த்து வேண உதவிபுரிந்துவரும் விவரங்களும் கல்வியற்றப் பெருங்குடிகளுக்கும் வேஷப்பிராமணர்களுக்கும் விளங்காதிருந்தபோதினும் புத்தபிரானுக்குரிய ஞானசாதன செயலுக்குத் தக்கவாறு அளித்துள்ள ஆயிரநாமங்களில் ஒவ்வொன்றை தாங்களும் எடுத்துக்கொண்டு அப்பெயரால் ஒவ்வோர் கோவில்களைக் கட்டிக்கொண்டு அப்பெயர்களுள்ள சிலைகளையும் அதனுள்ளமைத்து, அப்பெயர்களையும் அதன் செயல்களையும் சிலதையொட்டிப் பொய்க்கதைகளையும் அதினந்த ரார்த்தம் அறியாமலே வரைந்து வைத்துக் கொண்டு வியாபாரக் கடைகளைப் போல் கோவில்களினுள் வேஷப்பிராமண மதக்கடைகளைப் பரப்பி சீவிப்பதற்கு எட்டாவது ஏதுவாகிவிட்டது. பெளத்த தன்மங்களை எங்கும் பரவச் செய்துவரும் திராவிடர்களில் விவேகமிகுத்தோர் மிலேச்சர்களாம் ஆரியர்களின் பொய் வேஷங்களையும், நாணமற்ற ஒழுக்கங்களையும், பலசீவன்களை நெருப்பிலிட்டு சுட்டுத் தின்னுங் காருண்யமற்ற செயல்களையுங் கண்டு மனஞ்சகியாது மிலேச்சக்கூட்டங்களைக் காணும் இடங்களிலெல்லாம் அடித்துத் துரத்தி இவர்களது வஞ்சகக்கூற்றையும் பொய்வேஷங்களையுங் குடிகளுக்கு விளங்க பறைந்து வருவதுடன் தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளுக்குள் வருவார்களாயின் தங்கடங்கள் சீலங்களும், நல்லொழுக்கங்களுங் கெட்டுப்போமென்று வீதிக்குள் நுழைந்தவுடன் அடித்துத் துரத்தி சாணத்தைக் கரைத்து அவர்கள் வந்தவழியில் தெளித்துக் கொண்டு போய் சாணச்சட்டியையும் அவர்கள் மீதிலுடைத்து வருவது வழக்கமாயிருந்தது. சுரணையற்ற சீவனமும், நாணமற்ற குணமும், ஒழுக்கமற்ற செயல்களுள்ளதுடன் கருணையற்றச் செயலால் பசுக்களையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு அதன் புலாலைத் தின்று மதுவென்னும் சுராபானத்தை அருந்துங் கூட்டத்தோரின் நீச்சச்செயல்களை நாளுக்குநாள் கண்டுவந்த திராவிட பெளத்தர்கள் அவர்களை மிலேச்சர்கள் ஆரியர்களென்று கூறி தங்களது சீலம் நிறைந்த ஆச்சிரமங்களிலும், தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளிலும் வரவிடாமல் அடித்துத் துரத்திக்கொண்டே வந்தார்கள். இவ்வகையாகத் துரத்துண்டு வந்த மிலேச்சாரம் வேஷப்பிராமணர்கள் இன்னுஞ் சிலநாள் திராவிட பௌத்தர்களால் துரத்துண்டிருப்பார்களாயின் ஆரியர்களின் கூட்டமுழுவதும் தங்கள் சுயதேசம் போய் சேர்ந்திருப்பார்கள். அக்கால் இத்தேசத்திற் பரவிநின்ற ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென்னும் நான்குபாஷைகளை சாதித்து வந்தவர்களுள் சிலர் கல்வியும் ஞானமுமற்றவர்களாய் ஆரியர்களின் வேஷப்பிராமணத்தையும் அதனால் அவர்கள் சுகமாக சீவித்துவருஞ் செயல் களையும் நாளுக்குநாள் கண்டு இவர்களும் அத்தகைய பிராமண வேஷத்தை ஆரம்பித்துக் கொண்டார்கள். சுதேசபாஷைக் குடிகள் பிராமணவேஷமிட்டுக் குடிகளை வஞ்சித்து சோம்பேறி சீவனஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டதினால் மேலும் மேலும் கல்வியற்றக் குடிகள் அவர்கள் வார்த்தைகளை நம்புவதற்கும், அவர்கள் கேட்டுக்கொள்ளும் வண்ணம் நடந்துக்கொள்ளுவதற்கும் ஆரம்பித்தபோது வேஷப் பிராமணர்களின் கூட்டங்கள் நாளுக்கு நாள் பெருகிவரவும் அவர்கட் சொற்படி நடக்குங் கல்வியற்றக் குடிகளின் கூட்டம் அதனினும் பெருகவும் நேர்ந்து யதார்த்த பிராமண பெளத்த சங்கங்களை அழிக்கவும், பௌத்த சாஸ்திரங்களையும், பௌத்த மடங்களையும், பௌத்த உபாசகர்கள் யாவரையும் நிலைகுலையச் செய்யவும் ஆரம்பித்துக்கொண்டார்கள். மிலேச்சர்களாம் ஆரியர்களின் பிராமணவேஷம் பெருகுவதற்கும் அவர்களது மிலேச்சம் நீங்கி கனமடைவதற்கும் இத்தேசத்தோர்களின் பிராமணவேஷமே மிக்க அநுகூலமாகிவிட்டது. அதனால் திராவிட பெளத்த உபாசகர்கள் ஆரியர்களைக் காணுமிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திக் கொண்டே வரும் வழக்கங்களுக்கு சிற்சில தடைகளுண்டாகி தாங்கள் வாசஞ் செய்யும் வீதிகளில் மட்டிலும் வரவிடாமல் துரத்தி சாணந்துளிர்த்து வந்தார்கள். பழைய வேஷப் பிராமணர்களுடன் புதிய வேஷப்பிராமணர்களும் மேலும் மேலும் பெருகுவதினால் ஒருவருக்கொருவர் புசிப்பற்றும், ஒருவருக் கொருவர் பெண் கொடுக்கல் வாங்கலற்றும், ஒருவரைக் கண்டால் ஒருவர் முறுமுறுத்துக்கொண்டு போவதே வழக்கமாயிருந்ததன்றி நீங்களெவ்வகையால் பிராமணர்களானீர்களென்று கேட்பார்களானால் தாங்கள் எவ்வகையில் பிராமணர்களானீர்களென்னும் வினா எழுவுமென்றெண்ணி அந்தந்த பாஷைக்கார வேஷப்பிராமணர்கள் அவரவர்களுக்குள்ளடங்கி கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப்பொருள் பறித்துண்ணும் சோம்பேறி சீவனத்தை விருத்திக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். மிலேச்சர்கள், பெளத்த சங்கத்திலுள்ள அறஹத்துக்களாம் யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு சோம்பேறி சீவனஞ் செய்ய ஆரம்பித்துக் கொண்டதும் அவர்களின் சுகசீவனங்கண்ட ஆந்திரர்களும், கன்னடர்களும், மராஷ்டகர்களும், திராவிடர்களும் தங்கள் தங்கள் பெண் பிள்ளைகளுடன் பிராமணர்களென வேஷமிட்டு கல்வியும் விசாரிணையுமற்றப் பெருங் குடிகளையும், ஞானமற்ற அரசர்களையும் வஞ்சித்து சீவிக்க ஆரம்பித்த செய்கையால் ஆந்திரசாதி யரசன், கன்னட சாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், சிங்களசாதி யரசன் மகன் திராவிடசாதி அரசன் மகளை விவாகம் புரிவதும், வங்காள சாதி யரசன் மகன் சீனசாதி அரசன் மகளை விவாகம்புரிவதும், அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியெனும் ஒற்றுமெயும் அன்பும் பாராட்டி அபேதமுற்று வாழ்ந்துவந்த இந்திர தேசத்தாருக்குள் பேதமுண்டாகி ஒருவருக்கொருவர் பொசிப்பிலும், ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுவினையிலும் பிரிவினைகளுண்டாகி வித்தியா கேடுகளும், விவசாயக் கேடுகளும் பெருகி தேசமும் தேசத்தோர்களும் கெடுதற்கு இவர்களது பிராமண வேஷமே அடிப்படையாயிற்று. மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்கள் ஆந்திர வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதும், ஆந்திர வேஷப்பிராமணர்கள் கன்னட வேஷப்பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதுமாகியப் பொறாமெயால் உள்ளத்தில் வஞ்சினத்தை விளைவித்துக்கொள்ளுவதேயன்றி நீங்கள் எப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டீர்கள், அவர்களெப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டார்கள் என்னுங் கேழ்விகளில்லாமல் அரசன் கெட்டாலென்ன குடிகள் கெட்டாலென்ன வித்தைகள் கெட்டாலென்ன, விவசாயங் கெட்டாலென்ன தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பிராமணவேஷத்தோர் பிழைத்துக் கொண்டால் போதுமென்னும் சுயப்பிரயோசனத்தைக் கருதி சகலரையுங் கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். புத்தரது தன்மத்தின் சிறப்பையும், அவரது அளவுபடா ஞானத்தின் களிப்பையும் அநுபவத்திற் கண்டுணர்ந்த சமணமுநிவர்கள் ஞானத்தின் செயல்களுக்கும், வித்துவத்தின் செயலுக்கும், தொழில்களின் செயல்களுக்கும் தக்கவாறு வடமொழியிலும், தென்மொழியிலும் சிறந்த பெயர்களை அளித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், செயலுக்குத்தக்க மேதை மரியாதையுடன் உலகமக்கள் ஒழுகும் ஒழுக்கங்களை வகுத்து வைத்திருந்தார்கள். அத்தகைய சிறப்புப் பெயர்கள் தோன்றுதற்கு ஆதாரபூதமாக விளங்கியவர் புத்தபிரானேயாதலின் அவரது தன்மச்செயலுக்கும் குணத்திற்கும் அளித்துள்ள ஆயிர நாமங்களில் பிரம்மமென்னும் பெயரையும், பிதாமகன், பிதாவிதாதா என்னும் பெயரையும் நிலைபடக்கொண்டு மற்றும் பெயர்களையும் சிறப்பிக்கலானார்கள். சித்தார்த்தருக்கு பிரம்மமென்னும் பெயரை அளித்தக் காரணம் யாதெனில், அஃதோர் சாந்தத்தின் பூர்த்தியடைந்த பெயராகும். அதாவது, பூமியை ஒருவன் கொத்தி பலவகைத் துன்பப்படுத்தி பழுக அழுகக்கலக்கி பண்ணையாக்கினும் அப்பூமி நற்பலன் அளிக்குமேயன்றி தன்னை துன்பஞ்செய்தார்களே என்று துற்பலனளிக்காவாம். அதுபோல் ஒருமனிதனை மற்றொரு மனிதன் வைது துன்பப்படுத்தி பல வகையானக் கெடுதிகளைச் செய்யினும் அஃதொன்றையுங் கருதாது அவனுக்கு நற்பலனளித்து தன்னைத் துன்புறச் செய்தோனுக்கு மேலும் மேலும் இன்புறச் செய்து காக்குங் குணநிலைக்கு பிரம்மமென்னும் பெயரை அளித்துள்ளார்கள். அதையே, உண்மெயில் தண்மெநிலையுற்ற சுயஞ்சோதியென்றுங் கூறப்படும், மகடபாஷையில் பிம்பமென்றும், சகடபாஷையில் பிரம்மமென்றும் சுயஞ்சோதியென்றும் திராவிட பாஷையில் உள்ளொளியென்றும் சித்தார்த்தரது குணநிலையை சிறப்பித்திருந்தார்கள். பிதாமகன் பிதாவிதாதவென்னும் பெயரோவென்னில், சுத்தோதய சக்கிரவர்த்திக்கு மகனாகப் பிறந்து தனது தந்தைக்கே குருவாக விளங்கி ஞான உபதேசஞ் செய்துள்ளபடியால் பிதாவுக்கு மகனும் பிதாவுக்கு தாதாவுமென்று அழைத்துள்ளார்கள். பிரமன் மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா என்றும் உலக சீர்திருத்த ஆதிபகவனென்றும், ஆதி தேவனென்றும், ஆதி கடவுளென்றும், ஆதிமுநிவனென்றும், ஆதி பிரம்மமென்றும் அழைக்கப்பெற்ற புத்தபிரானை மற்றும் வீணை நான்முக விளிப்பாலும், நான்கு சிறந்த வாய்மெயாலும் நான்முக பிரமமென்றும் அழைத்துவந்தார்கள். உலகத்தின் ஆதி சீர்திருத்த உலகநாதனாக விளங்கி சருவ கலைகளுக்கும் நாயகனாகி என்றுமழியா பேரானந்த ஞானத்தை விளக்கி முத்திபேருக்கு முதல்வனான பிரமனின் நான்குவாய்மெ யுணர்ந்து தண்மெயடைந்து பிரம்ம மணமுண்டானபோது அவனது ஞானவல்லபத்தை சிறப்பிப்பதற்காய் புத்தபிரானாம் பிரம்மனின் முகத்திற் பிறந்தவனென சிறப்பித்துக்கூறி சங்கத்தோர்களுக்கு அதிபதிகளாக்கிவைத்தார்கள். பகவனது தன்மநெறிகடவாது சித்திபெற்றவர்களை பகவன் முகத்திற் பிறந்தவர்களென அவரது அளவுபடா சிறப்பைக்கொண்டே பிரம்மமணமடைந்தோரை சிறப்பித்து மகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும், தென்புலத்தோரென்றும் சிறப்பித்துக் கொண்டாடிவந்தார்கள். ஞானிகளாம் பிராமணர்களின் சீர்திருத்தத்தால் உலகமக்கள் சுகம்பெற்று வாழ்ந்தபோதினும் மக்களது இடுக்கங்களைக் கார்த்து ரட்சிக்கும் நீதியும், வல்லமெயும் புஜபல பராக்கிரமமும் அமைந்த க்ஷாத்திரியவான் ஒருவன் இருக்கவேண்டியது அவசியமாதலின் அவனும் புத்தபிரானாம் பிரம்ம நீதிநெறி தவராது குடிகளை ஆண்டு ரட்சித்துவருவானாயின் பிரம்மனது ஷாத்திரிய மிகுத்த புஜத்திற் பிறந்தவனாகக் கொண்டாடும்படி சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறப்புற்றோனை மகடபாஷையில் அரயனென்றும், சகடபாஷையில் க்ஷாத்திரியனென்றும், திராவிடபாஷையில் மன்னவனென்றும் சிறப்பித்து வந்தார்கள். மன்னன் மக்களை நீதிவழுவாது ஆண்டு வந்தபோதினும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்று வியாபாரம் நடத்துவோர் பிரம்மனாம் பகவனது தன்மநெறிகடாவாது துடையானது ஒன்று மாறி மற்றொன்று நடப்பதுபோல் தராசுநிரை பிறழாது துரோகசிந்தனை அற்று ஒன்றைக் கொடுத்து ஒன்றை மாறி வியாபாரம் நடத்தி தானும் லாபம் பெருவதுடன் குடிகளுக்கும் பலப்பொருள் உதவுவோர்களை பகவானின் நீதிநெறியின் சிறப்பை முன்னிட்டு தராசு நிரை பிறழா வியாபாரியை பிரம்மனின் துடையிற் பிறந்தவனென சிறப்பித்துக் கூறி அவர்களை மகடபாஷையில் வைசியரென்றும், சகடபாஷையில் வியாபாரிகளென்றும், திராவிடபாஷையில் வாணிபரென்றும் சிறப்பித்துவந்தார்கள். மநுமக்களுக்கு வாணிபர் பலபொருள் உதவி புரிந்துவரினும் அப்பொருட்களை விளைவித்தும், சீர்படுத்தியும், பூமியைப் பண்படுத்தியும் தங்கள் பாதத்தையும், கைகளையும் ஓர் சூஸ்திரக் கருவியெனக் கொண்டு இயந்திரங்களை நிருமித்து உலகோபகாரமாகப் பலப் பொருட்களை யுண்டுசெய்தும், தானியங்களை விளைவித்தும், பகவனாம் பிரம்மனது தன்மநெறி பிறழாது ஈகையினின்று சருவ உயிர்களுக்கும் உணவளித்து காப்போர்களை பிரம்மனது சிறப்பு மாறாது அவரது பாதத்திற் பிறந்தவர்களென சிறப்பித்துக்கூறுவதுமன்றி மகடபாஷையில் சூஸ்த்திரரென்றும், சகட பாஷையில் சூத்திரரென்றும், திராவிடபாஷையில் வேளாளர் ஈகையாளரென்றும் சிறப்பித்து வந்தார்கள். உலகமாக்கள் ஒவ்வோர் தொழில்களையும் அறநெறி வாய்மெயினின்று நடாத்துங் குறிப்பிற்கு உறுதியாக அறவாழியானாம் பிரம்மனின் முகத்தில் பிராமணனாம் அந்தணன் பிறந்தானென்றும், அவரது புஜத்தில் க்ஷாத்திரியனாம் அரயன் பிறந்தானென்றும், அவரது துடையில் வைசியனாம் வணிகன் பிறந்தானென்றும், அவரது பாதத்தில் சூஸ்த்திரனாம் வேளாளன் பிறந்தானென்றும் சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில்கள் யாவையும் அறவாழியானை சிந்தித்து அறநெறியினின்று நடாத்தும் வழியாக வகுத்திருந்தார்கள். அத்தகைய அறநெறித் தொழிலில் பிராமணர்களாம் அந்தணர்களுக்கு அறுவகைத்தொழிலை வகுத்துவைத்தார்கள். அவ்வகை யாதெனில் நிற்கினும் நடக்கினும் படுக்கினும் கலை நூற்களை வாசித்து தங்களெண்ணத்தையும், செயலையும் நீதிவழுவா நெறியிலும், வாய்மெயிலும் நிலைக்கச் செய்து நற்சாதனமாம் இடைவிடா ஓதலிலாம் வாசித்தலில் நிற்ப தொன்று தான் புரியும் நற்சாதனங்களாம் நீதிநெறி வழுவாச் செயல்களை உலகமக்களுக்கு ஓதிவைத்தலும், பொன்னாசை, பெண்ணாசை மண்ணாசையாம் அவாக்களை முற்றும் ஒழித்தலாம் வேட்டுதலும், அவ்வகை பேரவாக்களினால் உண்டாங் கேடுகளைக் குடிகளுக்கு விளக்கி வேட்பித்தலும், ஏழை மக்களுக்கு தானமீய்ந்து ஆதரித்தலும், உபாசகர்களாலீயும் தானங்களை தானேற்றுக்கொள்ளுதலுமாகிய அறுவகைத்தொழில்களைக் குறைவற நடாத்திவரவேண்டியதே அந்தணர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். க்ஷாத்திரியர்களாம் அரசர்கள் தொழிலாவது யாதெனில், அந்தணர்களாம் மகாஞானிகளால் ஓதிவைத்துள்ள நீதி நூற்களை ஓதியுணர்தல், தனக்குள் எழுங் காமவெகுளிகளை அடக்கிக்கொண்டுவருதல், குடிகளால் உண்டாங் குற்றங் குறைகளை நிவர்த்தித்தல், தனது தேசத்திற்கும் குடிகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பாரந்தாங்கி ஈதல் நிலையினிற்றல், படைகளுக்காய வித்தைகளையும், புஜபலபராக்கிரம க்ஷாத்திரிய சாதனங்களைக் கற்றல், பலதேச யாத்திரைச் சென்று புறதேசங்களின் சீர்திருத்தம் கண்டு தன்தேசத்தை சீர்திருத்தும் விஜயஞ்செய்தல் ஆகிய அறுதொழிலும் அரசர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். வைசியர்களாம் வாணிபர்களின் அறுவகைத் தொழில்கள் யாதெனில், மகாஞானிகளால் ஓதிவைத்துள்ள நீதிநெறியில் நிலைத்துக் கலை நூல்களை வாசித்துணர்தல், வாசித்தவண்ணம் அடங்கி காம வெகுளி மயக்கங்களினின்று விடுபடுதல், புலன் தென்பட்டோராம் தென்புலத்தோரென்னும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் ஈதல், பசுக்கள் விருத்தியடையத்தக்க வழிகளைத் தேடுதல், உழவுக்கு வேண முதலுந் தானியமும் அளித்துக் காத்தல், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறும் வியாபாரத்தை விருத்திச்செய்தல் ஆகிய அறுதொழிலும் வணிகர் செய்ய வேண்டிய தொழில்களென்னப்படும். சூஸ்த்திரர்கள் என்னும் வேளாளர்கட்தொழில்கள் யாதெனில், பூமியை உழுது பண்படுத்தி தானியங்களாம் பலவளம் பெருகச்செய்தல், பசுக்களுக்கு சேதம்வராது காத்தல், வியாபாரத்திற்கான தானிய விருத்தி உதவல், பட்டு பருத்தி முதலியவற்றை விருத்திசெய்து ஆடைகளாங்காருகவினைசெய்தல், தோற்கருவி துளைக்கருவி முதலிய சூஸ்திரங்களியற்றி குயிலுவத்தொழிற் செய்தல், தாய் வயிற்றிநின்று பிறக்கும் பிறப்பொன்றும், ஞானசாதனம் முதிர்ந்து நிருவாணம்பெற்று பரிநிர்வாணமாம் தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகிய இருபிறப்பாளராம் அந்தணர்களுக்கு வேண்டிய ஏவல்புரிதல் ஆகிய அறுதொழிலும் வேளாளர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். இத்தகைய நீதிநெறிவழுவா அறுதொழில்களினை நடாத்துவோர் தேசத்தில் பொன்பொருள், விளைவு, பற்பலதானியவிளைவு, கொலைபாதகச் செயலற்று வாழ்தல், களவு முதலிய வஞ்சகமற்ற வாழ்க்கை, கொள்ளை நோய் உபத்திரவமற்ற சுகம், ஆற்றலும் அமைதியமாகிய ஆனந்தத்தில் வாழ்வார்களென்று அறுவகை நன்னாட்ட மதியையும் வகுத்துள்ளார்கள். நீதிவழுவா புத்தராம் பிரம்மனிநின்று தோற்றியவர்களெனக் கூறுவோர் செய்யுந் தொழிற்பெயர்கள் யாவும் நன்மார்க்கத்தில் நடந்து நன்முயற்சியிலிருந்து நல்லூக்கம்நிலைத்து நன்மெய்க்கடைபிடித்து சகல மனுக்களும் சுகச்சீர்பெற்று நித்தியானந்த வாழ்க்கை அடைவதற்காக வகுத்திருந்தார்கள். அத்தகையப் பேரானந்த ஞானத்தின் கருத்தும் நித்தியானந்த வாழ்க்கையின் செயலும், தொழில்களுக்காய சீர்திருத்த சிறப்பின் பெயரும் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்க்கு விளங்காதிருப்பினும் வேஷப்பிராமணர்களால் ஒற்றுமெய்க்கெட்டு பிரிவினைகளுண்டாய கேடுகள் போதாது தொழில்களுக்கென்று சமணமுநிவர்களால் வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் சாதிப் பெயர்களாக மாற்றி அதில் தங்களை சகல சாதிகளுக்கும் மேலாய உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு தங்களது பொய்போதகங்களுக்கும், மாறுவேஷங்களுக்கும் உட்படாது பராயர்களாக விலகி இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்க்குரு போதங்களையும் குடிகளுக்குப் பறைந்துவந்த விவேகமிகுத்த மேன்மக்களாம் பெளத்த உபாசகர்களை சகல சாதிகளுக்கும் தாழ்ந்தசாதி பராயரென்றும் பறையரென்றுங் கூறி பலவகையாலுங் கெடுக்கத்தக்க ஏதுக்களைச் செய்துக்கொண்டார்கள். ஒவ்வொருவர் தொழில்களையும் நீதிவழுவாமல் நடத்துவதற்கு புத்தபிரானாம் பிரம்மனின் உருவையே பீடமாக்கி அவரது முகத்திலும், புஜத்திலும், துடையிலும், பாதத்திலும் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில்களையும் நீதிவழுவா சிறப்புடன் நடத்துவதற்கும், குடிகள் சுகம்பெற்ற வாழ்க்கை அடைவதற்கும் வகுத்திருந்த தொழிற்பெயர்களை வேஷப்பிராமணர்கள் தங்களது சுயப் பிரயோசனத்தைக் கருதி தங்கள் வேஷத்தை சிறப்பித்து அதிகாரப் பிச்சை ஏற்றுண்பதற்காகக் கல்வியற்றக் குடிகளிடம் நீதி வழிகளில் நடப்பதற்காக வகுத்திருந்தத் தொழிற்பெயரை அநீதிவழியாம் சாதிப்பெயரென மாற்றி அதில் தாங்கள் பிரம்மாவின் முகத்திற் பிறந்த உயர்ந்த சாதியென்று வகுத்துக்கொண்டு பிள்ளை பெண்டுகளுடன் சோம்பேறி சீவனத்தைப் பெருக்கிக்கொண்டார்கள். ஆரியர்களாம் மிலேச்சர்கள் எடுத்துக் கொண்ட பிராமண வேஷங்களைப்போல் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதிகளென வகுக்கப்பட்டிருந்த இத்தேசத்திய சோம்பேறிகளிற் சிலரும் பிராமணவேஷமெடுத்துக்கொண்டபடியால் பௌத்தபோதகர்களின் போதனையால் கேட்டிருந்த பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடையாம் சிறப்பு மொழிகளை மெய்யாகவே ஓர் பிரம்மாமுகத்திற் பிறந்தவர்களென்னும் கட்டுக்கதையை போதித்துக் கல்வியற்றக் குடிகளிடம் சகல வேஷப் பிராமணர்களும் சிறப்பைத் தேடிக்கொண்டார்கள். பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடை மொழியையும் சிறப்புப்பெயரையும் அறியாக் கல்வியற்றக் குடிகளும் அவற்றை நம்பி வேஷப்பிராமணர்களையே மிக்க சிறப்பிக்கவும் அவர்களுக்கே தானம் ஈய்யவும் ஆரம்பித்துக்கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களையே மிக்கநம்பவும் அவர்களது போதனைகளுக் குட்படவும் பூர்வ பௌத்ததன்மத்தையும், யதார்த்த பிராமணர்களையும் மறந்து அவர்களுக்கு எதிரிகளாகவும் சீலங்களை மறக்கவும் நேரிட்டக் காரணங்கள் யாதெனில், பௌத்த உபாசகர்களுக்குள் ஒரு மனைவியன்றி மறு மனைவியை சேர்க்கப்படாதென்றும், தன் மனைவியையன்றி அன்னியர் மனைவியை இச்சிக்கப்படாதென்றும் சீலநிலையை வகுத்திருந்தார்கள். அத்தகைய சீலத்திற்கு எதிரடையாக வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தேவதைகளுக்கு இரண்டு பெண்சாதிகளை உண்டு செய்துள்ளதுமன்றி பெண்ணிச்சையற்று பிராமணநிலை யடையவேண்டிய செயல்களை அகற்றி இரண்டு பெண்சாதி மூன்று பெண்சாதியுள்ள பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் உபாசகர்களும் தங்கள் இச்சையைப்போல் எத்தனைப் பெண்சாதிகள் வைத்துக்கொண்டாலும் குற்றமில்லையென்னும் போதனையையும், காமவிச்சைக்கேற்ற வழிகளுக்குமோர் ஏதுவாயிற்று. பௌத்ததன்ம உபாசகர்கள் மதுவென்னும் லாகிரிவஸ்துக்களை யருந்தாமலும், மாமிஷமென்னும் புலாலை புசியாமலும் மிக்க சீலமாய் புத்ததன்மத்தைத் தழுவிவந்தார்கள். வேஷப் பிராமணர்களோ மாடுகளையும், குதிரைகளையும் சுட்டு அதன் புலாலை புசிப்பவர்களாகவும், மதுவென்னும் சுராபானம் அருந்துபவர்களாகவும் இருப்பதைக் கண்டுவருங் கல்வியற்றக் குடிகள் தங்கள் இச்சையைப்போல் சுராபானம் அருந்தவும், புலால் புசிக்கவுமாகிய வழிகளுக்கும் ஓர் ஏதுவாயிற்று. பெளத்த உபாசகர்கள் பொய்யாகிய வார்த்தைகளைப் பேசாமலும், பொய்சொல்லுவோர் வார்த்தைகளை நம்பாமலும் யாவரிடத்தும் மெய்யைப் பேசவேண்டுமென்னும் சீலமாம் சத்தியதன்மத்தில் நிலைத்திருந்தார்கள் வேஷப்பிராமணர்கள் உலக ஆசாபாச பந்தத்திலும், பேராசையிலும், வஞ்சினத்திலும், ஒழுக்க மற்ற நடையிலும், நாணமற்றச் செயலிலும் இருந்துக்கொண்டு தங்களை பிராமணர் பிராமணரெனத் தாங்களே சொல்லித் திரிவது முதற்பொய்; ஓர் பிரம்மாவின் முகத்தினின்றே பிறந்தவர்களென்று கூறித்திரிவது இரண்டாவது பொய்; தங்கள் தேவதைகளைக் காண்பதற்கும், தெய்வகதி பெருவதற்கும் தங்களைக்கொண்டே மற்றவர்கள் பெறவேண்டும் என்பது மூன்றாவது பொய்; இந்தசாமி அவர்களுக்கு மோட்சங்கொடுத்தார், அந்தசாமி இவர்களுக்கு மோட்சங்கொடுத்தார், இந்தசாமி பூலோகத்தினின்று வானலோகம் போனார், அந்தசாமி வானலோகத்தினின்று பூலோகத்திற்கு வந்தாரென்பது நான்காவது பொய்; இத்தகைய தேவகதைகளையே பெரும் பொய்க் கதைகளாகக் கேட்டுத்திரியும் கல்வியற்றக் குடிகளுக்கு உலகவாழ்க்கையிற் பொய்ச் சொல்லுவதால் யாதுகெடு மென்னும் அச்சமற்று பொய்யை மெய்யைப்போற் பேசவுமோர் ஏதுவாயிற்று. பெளத்த உபாசகர்கள் கொல்லாவிரதத்தை சிரம்பூண்டு அகிம்சா தன்மத்தில் நிலைத்து சீவப்பிராணிகளைத் துக்கத்திற்கு ஆளாக்காமலும், துன்பஞ் செய்யாமலும் ஆதரித்து வந்தார்கள். வேஷப்பிராமணர்களோ பசுக்களையும், குதிரைகளையுங்கொன்றுத் தின்பதுடன் தங்கள் சாமிகளில் இந்தசாமி அவன்தலையை வாங்கிவிட்டார் அந்தசாமி இவன் தலையை வாங்கிவிட்டார் என்னுங் கொலைத்தொழிலை ஓர்வகைக் கொண்டாட்டத் தொழிலாக நடாத்தி வந்தவிஷயம் கல்வியற்றக் குடிகளுக்கு இச்சையுடன் கொன்றுத் தின்னவும், அஞ்சாதக் கொலைச் செய்யவுமோர் ஏதுவாயிற்று. பெளத்தம நீதியில் ஒடுக்கமாக நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் வேஷப்பிராமண அநீதியில் விசாலமாக நடக்கும் வழிகள் ஏற்பட்டு அஞ்சாது பொய் சொல்லவும், அஞ்சாது மதுவருந்தவும், அஞ்சாது கொலை செய்யவும், அஞ்சாது புலால் புசிக்கவுமாய ஏதுக்களுண்டாகி விட்டபடியால் கல்வியற்றக் குடிகள் யாவரும் பௌத்தன்ம இடுக்கமாகிய வழியில் நடவாது வேஷ பிராமணர்களின் விசால வழியில் நடக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அவற்றை உணர்ந்த வேஷப்பிராமணர்களும் இன்னுமவர்களை மயக்கித் தங்கள் போதனைக்குள்ளாக்கி தங்கள் வேஷ பிராமணச் செய்கைகளையே மெய்யென்று நம்பி உதவிபுரிவதற்கும், தங்கள் மனம் போனப் போக்கின் விசாலவழியில் நடந்து வித்தையையும், புத்தியையும், யீகையையும், சன்மார்க்கத்தையும் கெடுக்கத்தக்க சாமியக் கதைகளையும், பொய்ச்சாமிப் போதனைகளையும் ஊட்ட விருத்திகெடச் செய்ததுமன்றி கிஞ்சித்துக் கல்வி கற்றுக்கொண்டால் தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் உணர்ந்துக்கொள்ளுவார்களென்றறிந்து பூர்வக் குடிகளைக் கல்விகற்க விடாமலும், நாகரிகம் பெறவிடாமலும், இருக்கத்தக்க ஏதுக்களையே செய்துக் கொண்டு தங்கடங்கள் வேஷப்பிராமணச் செயல்களை மேலுமேலும் விருத்தி அடையச் செய்வதற்காய் பெளத்த தன்மத்தைச்சார்ந்தப் பெயர்களையும், பௌத்ததன்மத்தைச்சார்ந்த சரித்திரங்களையுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு அவைகளில் சிலதைக் கூட்டியும், குறைத்தும், அழித்தும், பழித்தும் தங்கட் பொய்ப்போதகங்களை நம்பத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டார்கள். அத்தகைய ஏதுக்கள் யாதெனில்:- புத்த பிரானை சங்கஹறரென்றும் சங்கதருமரென்றும், சங்கமித்தரென்றும் கொண்டாடிவந்தார்கள். அவற்றுள் சங்கறர் உலக எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் தனது சத்திய சங்கத்தை நாட்டி அறத்தை ஊட்டிவந்ததுகொண்டு அவரை ஜகத்திற்கே குருவென்றும், உலக ரட்சகனென்றும், சங்கஹற ஆச்சாரியரென்றும் வழங்கிவந்ததுடன் அவர் பரிநிருவாண மடைந்த மார்கழிமாதக் கடைநாள் காலத்தை “சங்கஹறர் அந்திய புண்ணியகால” மென்றும் சங்கரர் அந்திய பண்டிகையென்றும் வழங்கிவந்தார்கள். இவ்வகையாக வழங்கிவந்த சங்கறரென்னும் பெயர்மட்டிலுங் கல்வியற்றக்குடிகளுக்குத் தெரியுமேயன்றி அப்பெயர் தோன்றிய காரணங்களும் சரித்திரபூர்வங்களுந் தெரியமாட்டாது. அவர்களுக்கு குருவாகத் தோன்றிய வேஷப்பிராமணர்கள் சங்கறரென்னும் பெயரையே ஓராதாரமாகக்கொண்டு சங்கர விஜய மென்னும் ஓர்க் கற்பனாக்கதையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதாவது வேஷப்பிராமணர்கள் தோன்றி நீதிநெறி ஒழுக்கங்களும் சத்திய தன்மங்களும் அழிந்து அநீதியும் அசத்தியமும் பெருகிவருவது பிரத்தியட்ச அநுபவமாயிருக்க பௌத்தர்களால் நீதிநெறி தவறி அசத்தியம் பெருகுகிறதென்றும் அதற்காக சிவன் சங்கராச்சாரியாகவும் குமாரக்கடவுள் பட்டபாதராகவும், விஷ்ணுவும் ஆதிசேடனும் சங்கரிடணர் பதஞ்சலியாகவும், பிரமதேவன் மாணாக்கனாகவும், அவதரித்து பௌத்தர்களை அழித்து விட்டதாக வியாசர் சொன்னாரென்று எழுதிவைத்துக்கொண்டு தங்களுக்குள் ஒவ்வொருவரை ஜகத்குரு சங்கராச்சாரி பரம்பரையோரெனப் பல்லக்கிலேற்றி பணஞ்சம்பாதிக்கும் எளிதான வழியைத் தேடிக்கொண்டார்கள். சித்தார்த்தி சக்கிரவர்த்தி அவர்களின் தேகநிறம் அதிக வெளுப்பின்றியும், அதிகக் கருப்பின்றியும் மேகநிறம் போன்ற தாயிருந்தது கொண்டு மேகவருணனென்றும், கருப்பனென்றும், நீலகண்டனென்றும் வழங்கிவந்தது மன்றி அன்பே ஓருருவாகத் தோன்றினாரென்று அவரை சிவனென்றும் சிவகதி நாயகனென்றும் வழங்கிவந்தார்கள். புத்தபிரான் பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தை தகனஞ் செய்தபின்னர் அச்சாம்லை புத்த சங்கத்தோர்களும் பெளத்த அரசர்களும், பௌத்த உபாசகர்களும் எடுத்துவைத்துக்கொண்டு அவற்றிற்கு மகாபூதி என்னும் பெயரளித்து அதிகாலையிலெழுந்து குருவை சிந்தித்து நீதிவழுவா நடையில் நடப்பதற்காகத் தங்கள் தங்கள் நெற்றிகளில் புத்த, தன்ம, சங்கமென மூன்று கோடுகள் இழுத்துப் பூசிவந்ததுடன் அவரது ஏகசடையையுங் கத்தரித்து வெள்ளிகூடுகளிலும், பொன் கூடுகளிலும் அடக்கிவைத்து லய அங்கமென்றும், அங்கலயமென்றும், இலங்கமென்றுங் கூறி தங்கள் கழுத்துகளிலுங் கட்டிக்கொண்டார்கள். சித்தார்த்தரை தகனஞ் செய்த மகாபூதியென்னுஞ் சாம்பல் முகிந்துவிட்டபோது அவ்வழக்கம் மாறாது நெற்றியிலிடுவதற்கு எங்குங் கிடைக்கக் கூடிய சாணச்சாம்பலை விபூதியென்று வழங்கிவந்தவற்றை சில பெளத்த உபாசகர்கள் எங்கும் கிடைக்கக்கூடிய சாம்பலை நெற்றியில் அணைவதும் பல பெளத்த உபாசகர்கள் மகாபூதியென்னும் சாம்பல் தீர்ந்துவிட்டவுடன் நெற்றியில் ஒன்றும் பூசாமலும் நிறுத்திவிட்டார்கள். இவற்றைக் கண்ணுற்றுவந்த வேஷப்பிராமணருள் ஒருவர் நீலகண்ட சிவாச்சாரியென்று தோன்றி சிவனென்னும் ஓர் தெய்வமுண்டென்றும், அவருக்கு மடியிலோர் மனைவியும், சிரசிலோர் மனைவியும் உண்டென்றும் என்றுந் துடைமீதிருக்கப்பட்ட மனைவிக்கு யானைமுகப்பிள்ளையொன்றும், ஆறுமுகப் பிள்ளையொன்றும் தனது வியர்வையினால் உண்டு செய்த வீரபத்திரனென்னும் பிள்ளை ஒன்றும் உண்டென்னுங் கதைகளை வகுத்துக்கொண்டு காலத்தைக் குறிப்பதற்கு சமயங்களென்று வகுத்துள்ள மொழியையும் தன்னையறிந்து அடங்குவதற்கு சைவமென்று வகுத்த மொழியையும் எடுத்துக்கொண்டு சிவனைத் தொழுவோர்கள் யாவரும் சைவசமயத்தோரென வகுத்து நூதனசமயமொன்றை உண்டு செய்து அதனாதரவால் சில சோம்பேறி சீவனங்களை உண்டு செய்துக் கொண்டார்கள். அது எத்தகைய சீவனங்களென்னில்:- இந்திரர்தேச முழுவதும் இந்திரராம் சித்தார்த்தரது உருவம் போன்ற யோகசயன நிருவாண சிலைகளும், யோகசாதன சிலைகளும், போதனாரூப சிலைகளுஞ் செய்து அந்தந்த மடங்களில் ஸ்தாபித்து வைத்துக்கொண்டு தங்கள் தங்கள் தாய்தந்தையர் இறந்துவிட்டபின் அவர்களது அன்பு மாறாது அவர்களது இறந்தநாளைக் கொண்டாடி வந்ததுபோல் சத்திய சங்கசமண முநிவர்களும், உபாசகர்களும் மற்றும் பௌத்த குடிகளும் புத்தபிரான் பிறந்தநாளையும், அவர் அரசை துறந்த நாளையும் அசோகமரத்தடியில் சோகமற்று நிருவாணமுற்ற நாளையும், காசி கங்கைக்கரையில் சுயம்பிரகாசப் பரிநிருவாணம் பெற்ற நாளையும் மிக்க அன்புடனும் ஆனந்தத்துடனுங் கொண்டாடி அவரது போதனாவுருவங்களை நோக்குங்கால் நீதிபோதனைகளை சிந்தித்தும், அவரது யோகசாதன உருவங்களை நோக்குங்கால் தங்கள் தங்கள் யோகசாதனங்களில் நிலைத்தும், நீதிநெறி ஒழுக்கங்களில் சுகித்திருந்தார்களன்றி அவரது உருவச்சிலைகளை நோக்கி, எங்களுக்கு தனங் கொடுக்கவேண்டும், தானியங் கொடுக்கவேண்டும், சந்ததி கொடுக்கவேண்டும், பிணிகளை நீக்கவேண்டும், மோட்சமளிக்கவேண்டுமென சிந்தித்து அச்சிலைகளுக்குப் பூசை நெய்வேத்தியஞ் செய்யமாட்டார்கள். காரணமோவென்னில், புத்த தன்மத்தின்படி தனம் வேண்டியவர்கள் வித்தையையும், புத்தியையும் பெருக்கி தங்களது விடாமுயற்சியால் தனம் சேகரிக்கவேண்டுமேயன்றி எந்த தேவனுந் தனங்கொடுக்க மாட்டார். தானியம் வேண்டுவோர் விடாமுயற்சியால் பூமியைப் பண்படுத்தி நீர்வள வழிகளைத் தேடி பயிர்களைப் பாதுகார்த்து கதிருகளை ஓங்கச் செய்து தானியத்தைப் பெறவேண்டுமேயன்றி எந்ததேவனுந் தானியங் கொடுக்கமாட்டார். சந்ததி வேண்டுவோர் புருஷர்களுக்குள்ள சுக்கில தோஷங்களையும், இஸ்திரீகளுக்குள்ள சுரோணித தோஷங்களையும் நீக்கிக்கொண்டால் சந்ததியுண்டா மேயன்றி எந்த தேவனும் சந்ததி கொடுக்கமாட்டார். தங்களுக்குத் தோன்றும் பூர்வ கன்ம வியாதியாயினுந் தங்களாலேயே தாங்கள் தேடிக்கொண்ட வியாதியாயினும் அவற்றின் செயல்களையுந் தோற்றங்களையும் உணர்ந்து தங்களுக்குள் ஒடுங்கித் தாங்களே அப்பிணிகளை ஒடதிகளால் நீக்கிக்கொள்ள வேண்டுமேயன்றி எந்த தேவனும் பிணிகளை நீக்கமாட்டார். துக்கமென்னும் நரகத்தை ஒழித்து சுகமென்னும் மோட்சமடைய வேண்டியவர்கள் தங்களுக்குள்ள இராகத் துவேஷமோகமென்னும் காம வெகுளி மயக்கங்களை ஒழித்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் முப்பற்றுக்களை அறுத்து சாந்தம், அன்பு, யீகை என்னும் பற்றற்றான் பற்றுக்களில் நிலைத்தவர்களுக்கே மோட்ச சுகமாம் நித்திய வாழ்க்கைக் கிடைக்குமேயன்றி எந்ததேவனும் மோட்சங் கொடுக்கமாட்டார். இஃது பௌத்ததர்மப்பிரியர்கள் ஒவ்வொருவர் உள்ளத்தும் நிறைந்துள்ள தன்மமாதலின் வேஷப்பிராமணர்கள் நூதனமாக வெவ்வேறு சிலைகளமைத்துள்ள சிலாலயங்களில் பூர்வக்குடிகளை வந்து பூசைநெய்வேத்தியம் செய்யும்படியாகவும், தொழும்படியாகவும் போதிக்குங்கால் எக்காலும் அவ்வகை பூசை நெய்வேத்தியஞ் செய்யாதவர்களாதலின் திகைத்து நிற்பதும், வேஷப்பிராமணர்கள் கூறிய வண்ணம் தேங்காய் பழம் தட்சணைக் கொண்டுவராதிருப்பதுமாகியக் குடிகளின் குணானுபவங்களை அறிந்த ஆரியர்கள் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சிலாலயங்களுள் பூர்வகாலத்தில் புண்டரீக பூரியென்றும், தற்காலம் பூரியென்றும் வழங்கும்படியான வியாரத்துள் தங்கியிருந்த சமணமுநிவர்களை தங்கள் வலைக்குட்பட்ட சிற்றரசர்களைக்கொண்டு விலக்கிவிட்டு அவற்றுள் தங்களுக்குப் பிரியமான சிலைகளை அடித்து கூடமத்தியிலமைத்து அதனடியிற் காந்தக்கற்களைப் புதைத்து இரும்பு தகடுகளினால் தட்டுகள் செய்து குடிகளை தேங்காயும் கனிவர்க்கங்களும் தட்சணை தாம்பூல புட்பமும் கொண்டுவரச் செய்து தாங்கள் செய்துவைத்துள்ள இரும்புத்தட்டில் வைத்து குடிகளின் கைகளிற்கொடுத்து நீங்கள் இத்தேவனை நோக்கி வேண்டியவற்றைக் கேளுங்கள், உங்கள்மீது பிரியமில்லாவிடின் இழுத்துக்கொள்ள மாட்டாரென்று வேஷப் பிராமணர்கள் கூறவும் அவற்றைக் கேட்டுக்கொண்ட குடிகள் இருப்புத் தட்டில் வைத்துள்ள தேங்காய்ப் பழம் முதலியவைகளை எடுத்து காந்தம் புதைத்து வைத்துள்ள சிலாரூபங்களின் அருகிற் செல்லுவதற்குமுன் காந்தக்கல் இரும்புத் தட்டுகளை இழுத்துக் கொள்ளும்போது கல்வியற்றப் பேதைக் குடிகள் பயந்து வேஷப்பிராமணர்கள் வாக்கை தெய்வவாக்கென்று எண்ணி பூர்வ சத்தியச் செயல்களை மறந்து அசத்தியச்செயல்களில் ஆழ்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு சுட்டுத் தின்னும் படுபாவிகளின் சேர்க்கையால் கொலைத்தொழிலைக் கூசாமற் செய்யவும், அகிம்சாதன்மத்தை மறக்கவும் ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் வரைந்துவைத்துக்கொண்டுள்ள கட்டுக்கதைகளில் அவர்களுடைய ரிஷிகள் திருடுவதற்குப் போம்போது நாய்குலைக்குமானால் அதன் நாவைக் கட்டுவதற்கு மந்திரஞ்செய்வதாகக் குறிப்பிட்டு வழங்கிவந்தவர்களாதலால் அவர்களை யடுத்த இத்தேசக் குடிகளுங் கூசாமல்திருட ஆரம்பித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள தேவதாக் கதைகளில் தேவர்களே அன்னியர் தாரங்களை ஆனந்தமாக இச்சித்தக் கதைகளை எழுதிவைத்துக் கொண்டுள்ளவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசத்தோரும் அன்னியர் தாரமென்னும் அச்சமின்றி துற்செய்கையிற் பிரவேசிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். பொய்யைச் சொல்லியே வஞ்சிப்பதும் பொருள் பறிப்பதுமாகிய சோம்பேறி சீவனத்தையே மேலாகக் கருதி செய்துவந்தவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசக் குடிகளும் தங்களுக்குள்ளிருந்த யாவையும் மறந்து வஞ்சினத்தாலும், சூதினாலும், பொய்யாலும், கஷ்டப்படா சோம்பலாலும் பொருளைச் சம்பாதித்து சீவிக்கும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். ஆரியர்கள் சுறாபானமென்னும் மயக்கவஸ்துவை அருந்தி மாமிஷங்களைச் சுட்டுத்தின்று பௌத்தர்களால் மிலேச்சரென்னும் பெயரும் பெற்றவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசக்குடிகளும் மதுமாமிஷம் அருந்தி மதோன்மத்தராகும் வழிகளுக்குள்ளாகிவிட்டார்கள். ஆரியர்களின் பிராமணவேஷங்கண்டு இத்தேசத்து ஆந்திரர்கள் பிராமணவேஷங்கொள்ளவும் ஆந்திரர்களைக்கண்டு மராஷ்டகர்கள் பிராமணவேஷங்கொள்ளவும், கன்னடர்களைக்கண்டு திராவிடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும் ஆகிய மாறுபாடுகளால் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும், கொள்ளல் கொடுக்கலற்றும், உண்பினம் உடுப்பினமற்றும், ஒருவரைக்கண்டால் ஒருவர் சீறும் வேஷப்பிராமணப் பிரிவினை விரோதங்கள் போதாது, தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக மாற்றி வித்தியா விரோதங்களாலும், விவசாய விரோதங்களினாலும் ஒன்றுக்கொன்று சேராததினாலும், ஒருவர் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காததினாலும் பலவகைப் பிரிவினைகளும் ஒற்றுமெய்க் கேடுகளும் உண்டாகி பௌத்தசங்கங்கள் அழியவும், பௌத்த தன்மங்கள் மாறுபடவும், பௌத்ததன்மத்தை சிரமேற்கொண்டு நீதிநெறி ஒழுக்கத்தினின்ற மேன்மக்கள் இழிந்த சாதியோர்களென்று தாழ்த்தப்படவும், நாணமற்ற வாழ்க்கையிலும், ஒழுக்கமற்றச் செயலிலும், காருண்யமற்றபுசிப்பிலும், பேராசை மிக்க விருப்பிலும் மிகுத்த மிலேச்சக் கீழ்மக்கள் உயர்ந்த சாதிகளென்று ஏற்படவுமாகிவிட்டபடியால் இந்திரரது தேசசிறப்புங் குன்றி ஒற்றுமெய்க் கெட்டு வித்தைகளும் பாழடைந்துவருங்கால் இத்தேசக் குடிகள் இன்னுங் கெட்டுப் பாழடைவதற்கும் வேஷப்பிராமணர்கள் விருத்தி பெருவதற்கும் கல்லுகளைக் கடவுளெனத் தொழுது கற்ற வித்தைகள் யாவையும் மறந்து கற்சிலைகளே தங்களுக்கு மோட்சம் கொடுக்கும், கற்சிலைகளே தங்களுக்கு சீவனங்கொடுக்கும், கற்சிலைகளே தங்கள் பிணிகளைப் போக்குமென்னும் அவிவேக நம்பிக்கையில் நிலைத்து இன்னும் அவிவேகிகளாவதற்கு மற்றுமோர் தந்திரஞ் செய்ததாக அஸ்வகோஷரே வரைந்திருக்கின்றார். அவை யாவெனில், சோணாட்டில் ஓர் சிலாலயங் கட்டி குழவிபோற் கல்லிலடித்து மத்தியரந்தனமிட்டு கட்டிடமேற்பரப்பில் தொளாந்திரங்கட்டி அதனுள் நீர்வார்த்தால் குழவி போன்ற கல்லிலுள்ள ரந்திரத்தின் வழியாக வெளி தோன்றும்படி செய்து இனிப்பும், வாசனையும், பொருந்திய ரசங்கூட்டி தொளாந்திரத்தில் வார்த்து குடிகளை நோக்கி, இதோபாருங்கள் சுவாமியின் சிரசினின்று அமுதம் வடிகின்றது. அவற்றைப் புசிப்பீர்களாயின் உங்கள் தேகத்தில் வியாதியற்று வாழ்வதுடன் சகல வசிகரமுண்டாகி எங்கு சென்றாலும் சுகம்பெற்று வாழ்வீர்கள். நீங்கள் கேட்ட யாவுங் கிட்டும், சுருக்கத்தில் மோட்சமும் பெறுவீர்களென்று கூறியவுடன் கல்வியற்றக் குடிகளுக்கு தளத்தின்மீதே தொளாந்திரத்தினின்று இனிய நீர் வரும் உபாயந்தெரியாது அவ்வுருசியாய நீரை அருந்தினோர் யாவரும் அதன் இனிப்பான ருசியைக் கண்டும் அவையெக்காலும் வடிந்துக்கொண்டேயிருக்கும் ஆட்சரியத்தைக் கொண்டும் அங்குள்ளக் குடிகள் யாவரும் மயங்கி கற்சிலைகளில் யாவோ சிரேஷ்டமுள்ளதென்று கருதி மேலும் மேலுங் கல்லை பூசிக்கவும், விழுந்து விழுந்து தொழுவதற்கு ஆரம்பிக்கவுமாகிய அசத்தியச்செயலும், மூட பக்தியும் பெருகி தாங்களே கற்சிலைகளை உண்டு செய்ததுமல்லாமல் தாங்களே அதை மெய்க் கடவுளென்றும் நம்பி தொழுவதற்கும் ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்களோ காமியமுற்ற சிற்றரசர்களை தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திசெய்துகொண்டதுபோல் நந்தனென்னும் அரசனையும் வஞ்சிக்க அவன் தேசத்தை நாடி, புருஷர்கள் பூணு நூலும் காவியுமுள்ள பிராமணவேஷ மணிந்தும், இஸ்திரீகள் தங்கள் சுயதேயத்தில் கால்செட்டையணிந்தவர்கள் இத்தேசத்தில் வந்து குடியேறி இத்தேசத்துப் பெண்கள் கட்டும் பிடவைகளைப் போல் கட்டிக்கொண்ட போதினும் அதைக் காற்செட்டைக்குப் பதிலாக கீழ்ப்பாச்சிட்டுக் கட்டிக்கொண்டு பெண்டுகளுடன் செல்லுங்கால் தங்களில் ஓர் மூப்பனைப் பல்லக்கிலேற்றிக்கொண்டு புனநாட்டிற்குக் கிழக்கே வாதவூரென்னும் தேசத்தை அரசாண்டுவந்த நந்தனென்னும் அரசனிடம் வந்து சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி ஆசிகூறினார்கள். அவர்கள் அம்மொழிகளைக் கேட்டவுடன் ஏதோ இவர்கள் விவேக மிகுத்தப் பெரியோர்களாயிருக்க வேண்டுமென்று எண்ணி திவ்யாசனமளித்து வேண உபசரிப்பு செய்துவருங்கால் சமண முநிவர்களும் உபாசகர்களுமறிந்து அரசனிடஞ் சென்று இராஜேந்திரா தற்காலந் தங்களிடம் வந்திருக்கும் பிராமண வேஷதாரிகளை யதார்த்த அறஹத்துக்களென்றாயினும் சமணமுநிவர்கள் என்றாயினும் தென்புலத்தாரென்றாயினும் கருதவேண்டாம். சில காலங்களுக்கு முன் இவர்கள் சிந்தூரல் நதிக்கரை ஓரமாக வந்துக் குடியேறி இத்தேசத்தோரிடம் யாசக சீவனஞ் செய்துக்கொண்டே இத்தேச சகடபாஷையாம் சமஸ்கிருதங் கற்றுக்கொண்டு பூர்வக் குடிகள், அந்தணர், தென்புலத்தார், சமணமுநிவரென்று வழங்கப்பெற்றப் பெரியோர்களைக் கண்டவுடன் பயபக்த்தியுடன் ஆசனமளித்து வேண உதவிபுரிந்துவருவதை யாசகஞ்செய்துக்கொண்டே நாளுக்குநாள் பார்த்துவந்தார்கள். சமணமுநிவர்களுடையவும், அந்தணர்களுடையவும் செயல்கள் யாதென்று அறியாதிருப்பினும் அவர்களைப்போல் வேஷமிட்டு தங்கள் சீவனத்திற்காய சுலோகங்களை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளை பெண்சாதிகளின் சுகத்தை அநுபவித்துக்கொண்டே தங்களை அந்தணர்களென்றும், தென்புலத்தோரென்றும் பொய்யைச்சொல்லிக் கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து தந்திரசீவனஞ் செய்து வருகின்றார்கள். தாங்களும் இவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீரென்று சொன்னவுடன் அரசன் திடுக்கிட்டு மிக்க ஆட்சரியமுடையவனாகி பெண் மாய்கையிற் சிக்காதிருந்தவனாதலின் அவர்களை ஓர் ஆச்சரிய உருவமாகக் கொள்ளாமல் அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவனாகி புருசீகர்களின் அருகில் சென்று யதார்த்த அந்தணர்களைக் கண்டவுடன் கைகூப்பி சரணாகதி கேட்பதுபோல் வணங்கினான். அரசன் கைகூப்பி சரணாகதி கேட்பதின் ரகசியார்த்தமறியா வேஷப் பிராமணர்கள் தங்கள் கூட்டத்தோர்களுடன் எழுந்து ஒருகரந் தூக்கி ஆசீர்வதித்தார்கள். புலன் தென்பட்டோராகும் தென்புலத்தார்போல பெண்சாதிபிள்ளைகளுடன் யாவரும் ஒரு கரந்தூக்கியதைக் கண்ட அரசன் சற்று நிதானித்துத் தாங்கள் யார், யாதுகாரணமாக இவ்விடம் வந்தீர்களென்று வினவ, நாங்கள் பிராமணர்கள் தங்களுடையப் பெயருங் கீர்த்தியும் இத்தேசத்தில் என்றும் விளங்கும்படி செய்வித்தற்கு வந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட அரசன் அவர்களை நோக்கி வந்துள்ள நீங்களெல்லவரும் பிராமணர்களா அன்றேல் தனிமெயாக பல்லக்கில் உட்கார்ந்திருக்கின்றாரே அவர் மட்டிலும் பிராமணரா என்று வினவினான். அவற்றிற்கு மாறுத்திரமாகப் புருசீகர்கள் நாங்கள் எல்லவரும் பிராமணர்களேயென்று கூறினார்கள். நீங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சகல சுகபோகங்களையும் அநுபவித்துக்கொண்டு எல்லவரும் பிராமணர்களென்றால் உங்கள் வார்த்தைகளை எவ்வகையால் நம்புகிறது. இதனந்தரார்த்தங்களை ஏதேனும் சாஸ்திரங்கள் விளக்குகின்றதாவென்று கேட்க பூர்வத்தில் எங்களைப்பற்றி ஓர் பெரியவர் சில ரிஷிகளுக்கு மனுதன்மசாஸ்திரமென்னும் ஓர் இஸ்மிருதி சொல்லி வைத்திருக்கின்றார். அதில் உலக உற்பத்தியைப்பற்றி பிரமத்தினிடமிருந்து தங்கவடிவமான ஓர் முட்டை உதித்து இரண்டு பாகமாகி மேற்பிரிவு வானமாகவும், கீழ்ப்பிரிவு பூமியாகவும் தோன்றி அதை ஆளுதற்கு பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணனும், புஜத்திலிருந்து க்ஷத்திரியனும், துடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் பிறந்தார்களென்று குறிப்பிட்டிருக்கின்றவைகளில் முகத்திற்பிறந்த பிராமணர்களாகிய நாங்களே சிறந்தவர்களென்று கூறியதை அரசன் கேட்டு, இதனந்தரார்த்தத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று மடாதிபர்களாம் சமணமுநிவர்களைத் தருவித்து புருசீகர்கள் சொல்லிவந்த சகல காரியங்களையுங் கூறி அவைகளின் அந்தரார்த்தத்தை வினவியபோது மடாதிபர்கள் சந்தோஷமடைந்து இராஜேந்திரா, மற்றுமுள்ள தேசத்தரசர்களும் இத்தகைய விசாரிணைப்புரிந்திருப்பார்களாயின் புருசீகர்களின் பிராமணவேஷம் சகலக் குடிகளுக்குத் தெள்ளற விளங்கி விடுவதுமன்றி இம்மிலேச்சர்களுந் தங்கள் சுயதேசம் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அத்தகைய விசாரிணையின்றி அவர்களது ஆரியக் கூத்திற்கு மெச்சி அவர்கள் போதனைக்கு உட்பட்டபடியால், வேஷப்பிராமணம் அதிகரித்து யதார்த்தபிராமணம் ஒடுங்கிக்கொண்டே வருகின்றது. ஆதலின் தாங்கள் கிருபைகூர்ந்து பெரும் சபைக்கூட்டி இவ்வாரியக்கூத்தர்களையும் மடாதிபர்களாம் சமண முநிவர்களையுந் தருவித்து விசாரிணைப்புரிந்து யதார்த்த பிராமணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றார்கள். அவ்வாக்கை ஆனந்தமாகக்கொண்டவரசன் பௌத்த சங்காதிபர்களையும் புருசீகர்களையும் சபாமண்டபத்திற்கு வந்துசேரவேண்டுமென ஆக்கியாபித்தான். நந்தனென்னும் அரசன் உத்திரவின்படி வாதவூர் கொலுமண்டபத்திற்கு சங்காதிபர்களும், புருசீகர்களும் வந்து கூடினார்கள். அரசனும் விசாரிணைபுருஷ சபாபதியாக வீற்றிருந்தான். அக்கால் பேதவாக்கியங்களை கண்டுணர்ந்த சாம்பவனார் என்னும் பெரியவர் ஒருவரையுங் கூட்டிவந்து சபையில் நிறுத்தினார்கள். அப்பெரியோனைக் கண்டப் புருசீகர்கள் யாவரும் கோபித்தெழுந்து நந்தனைநோக்கி அரசே, இச்சபையில் இதோ வந்திருப்பவர்கள் பறையர்கள். சுடுகாட்டிற் குடியிருந்துக்கொண்டு பிணங்களுக்குக் குழிகள் வெட்டி சீவனஞ் செய்துவருவதுமல்லாமல் செத்த மாடுகளையும் எடுத்துப்போய் புசிப்பவர்கள். இவர்களை சபையில் சேர்க்கவுங்கூடாது தீண்டவுமாகாதெனப் புருசீகர்கள் யாவருங் கூச்சலிட்டபோது அரசன் கையமர்த்தி புருசீகர்களை நோக்கி இத்தேசத்துப் பூர்வ மடாதிபர்களும் கொல்லா விரதம் சிரம்பூண்டவர்களுமாகிய பெரியோர்களை நீங்கள் யாவரும் ஒன்றுகூடி கேவலமாகப் பேசுவதை நோக்கில் சிலர் சடை முடி வளர்த்தும், சிலர் மொட்டையடித்துக் கருத்த தேகிகளாய் சாதனத்தால் சாம்பல் பூர்த்துள்ளபடியால் அவர்களை இழிவாகப் பேசித் தூற்றுவதுடன் செத்தமாட்டைப் புசிப்பவர்களென்றுங் கூறும் உங்கள் மொழிகளைக் கொண்டே நீங்கள் உயிருள்ளமாடுகளை வதைத்துத் தின்பவர்களாக விளங்குகின்றது. இத்தகைய விஷயங்களைப்பற்றி எமக்கோர் சங்கையுங் கிடையாது. குழிவெட்டுவோனாயிருப்பினும், அரசனாயிருப்பினும், ஏழையாயிருப்பினும், கனவானாயிருப்பினும் பேதமின்றி சமரசமாக இச்சபையில் வீற்று எமக்குள்ள சங்கையை நிவர்த்தித்தல் வேண்டும். அவை யாதெனில், பெண்சாதிப் பிள்ளைகளுடன் பெருங்கூட்டத் தோராகிய நீங்கள் யாவரும் பிராமணர்களா, பெண்சாதிபிள்ளைகளுடன் சுகபோகங்களை அநுபவித்துக்கொண்டு பொருளிச்சையில் மிகுத்தவர்களை பிராமணர்கள் என்று கூறப்போமோ. உலக பாசபந்தத்தில் அழுந்தியுள்ளவர்களுக்கும் பிராமணர்களென்போருக்கும் உள்ள பேதமென்னை, எச்செயலால் நீங்கள் உயர்ந்தவர்களானீர்கள். இவற்றை தெளிவாக விளக்கவேண்டுமென்று கூறினான். அவற்றை வினவியப் புருசீகருள் சேஷனென்பவன் எழுந்து சாம்பவனாரை நோக்கி, நீவிரெந்தவூர் எக்குலத்தாரென்றான். அதற்கு சாம்பவனார் மாறுத்திரமாக வந்தவூர் கருவூர், சொந்த குலம் சுக்கிலமென்றார். இதனந்தரார்த்தம் வேஷப்பிராமண சேஷனென்பவனுக்கு விளங்காமல் கடலையில் குழிவெட்டித் தொழிலும், சாங்கையன் குலமுமல்லவா என்றான். அதற்கு சாம்பவனார் நான் குழி வெட்டியானல்ல ஞானவெட்டியான். சாங்கைய குலத்தானல்ல சாக்கையகுலத்தானென்றார். சாக்கையர் குலத்தாரென்றால் அவர்களுற்பத்தி எவ்வகையென்றான். கலிவாகு சக்கிரவர்த்தியால் ஒலிவடிவாக வகுத்துள்ள கணிதங்களை ஆதிபகவனருளால் வரிவடிமாக இயற்றி வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய சோதிடர்களை வள்ளுவரென்றும், சாக்கையரென்றும், நிமித்தகரென்றும் வகுத்துள்ளவர்களின் வம்மிஷ வரிசையோன் என்றார். அக்கால் அரசன் சேஷன் என்பவனை நோக்கி, ஐயா மடாதிபதிகளைத் தாங்கள் சாங்கையகுலத்தவர்களல்லவா என்றீர்களே அதன் காரணமென்ன அவற்றை விளக்குவீராக என்றான். சேஷனென்பவன் எழுந்து ஒரு சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி, கலைக்கோட்டார் மான் வயிற்றிலும், கௌசிகர் காசிராஜனுக்கும், ஜம்புகர் நரியின் வயிற்றிலும், கெளதமர் பசுவின் வயிற்றிலும், வால்மீகர் வேடச்சி வயிற்றிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வியாசர் செம்மடத்தி வயிற்றிலும், வசிட்டர் தாசியின் வயிற்றிலும், நாரதர் வண்ணாத்திவயிற்றிலும், கெளண்ட்டன்னியர் முண்டச்சி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சிவயிற்றிலும், மாண்டெளவியர் தவளை வயிற்றிலும், சாங்கையர் பறைச்சி வயிற்றிலும், கார்க்கேயர் கழுதை வயிற்றிலும், சௌனகர் நாயின் வயிற்றிலும் பிறந்தவர்களென்பதாக மனுஸ்மிருதி கூறுகிறபடியால் இவர்களை பறைச்சி வயிற்றிற் பிறந்த சாங்கியகுலமல்லவாவென்று கேட்டடேனென்றான், உடனே அச்சபையிலிருந்த நத்தனாரென்பவரெழுந்து இராஜேந்திரா இந்த புருசீக தேசத்தார் சோழபதியில் பிராமணவேஷம் அணிந்து குடிகளை ஏமாற்றிக் கொண்டு வருவதை மடாதிபர்களும் அவர்களைச்சார்ந்த உபாசகர்களும் அறிந்து இவர்களை அடித்துத் துரத்துவதுமல்லாமல் இவர்களணைந்துள்ள பிராமணவேஷ விவரங்களையும் பறைந்து வந்ததினால் தங்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் மடாதிபர்களைக் காணும் போது தங்களது பொய் வேஷங்களைக் குடிகளுக்குப் பறைகிறவர்களென்றும், தங்கள் பொய்ப் போதனைகளுக்குள் சேராதப் பராயர்களென்றும், பகர்ந்து வந்தவர்கள் மடாதிபர்களைத் தங்கள் முன்னிலையிற் கண்டவுடன் பறையரென்றும், வெட்டியாரென்றும் இழிவுபடுத்த ஆரம்பித்துக்கொண்டார்கள். அதாவது இவர்களது பிராமண வேஷங்களையும், தந்திர உபாயங்களையும், குடிகளுக்குப் பறைவர்கள் பறைபவர்களெனக் கொடுந்தமிழில் பறைந்துகொண்டே திரிந்தார்கள். இரண்டாவது, பறைவோர், பறையோரென வழங்கிவந்தார்கள். மூன்றாவது, பறையர்கள் பறையர்களென்று சொல்லித் திரிந்ததுடன் மடாதிபர்களையும், சாக்கையர்களையும், பறையர்களென்று இழிவுபடக்கூறும்படித் தங்களை சுவாமி சுவாமியெனத் தொழுதுத் திரியும் அறிவிலிக் குடிகளுக்குக் கற்பித்து இழிவுபடுத்தி வந்தார்கள். அவற்றைக் கேழ்வியுற்ற மடாதிபர்கள் மிலேச்சர்களாம் ஆரியர்களை கர்வ பங்கஞ் செய்யுமாறு ‘பறையனாவதேதடா பறைச்சியாவதேதடா இறைச்சிதோலெலும்பிலே யிலக்கமிட்டிருக்குதோ’ என்னும் வேண்டியப் பாடல்களைப் பாடி மிலேச்சர்களுடன் சம்மந்தப்பட்டுள்ள கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற அரசர்களுக்கும் விளங்கும்படி செய்து வருங்காலத்தில் பௌத்தர்கள் யாவருக்கும் இப்பறையர்களென்னும் பெயரை அளித்து பாழ்படச் செய்துவிட்டு ஆரியர்களது பிராமண வேஷத்தையும் அவர்களது பொய்மதக் கோஷத்தையும் பெருக்கிக்கொள்ளுவதற்காகத் தங்களை அடுத்தக்குடிகளை அடுத்துப் பறைப்பாம்பு பாப்பாரப்பாம்பென்றும், பறைமயினா பாப்பார மயினாவென்றும், பறைப் பருந்து பாப்பாரப் பருந்தென்றும் சீவர்களுக்கில்லாப் பெயர்களை வழங்கச் செய்ததுமன்றி நாய்களிற் பறைநாய்ப் பறைநாயென மட்டிலும் வழங்கச்செய்து பறை நாயென்பதற்கு எதிர்மொழியாய பாப்பாரநாயென வழங்கினால் தங்களுக்குத் தாழ்ச்சியுண்டாமெனக் கருதி பறைநாயென்னும் மொழியைமட்டிலும் வழங்கச்செய்துவருகின்றார்கள். ஈதன்றி பெளத்த அரசர்களும், பௌத்த குடிகளும் சேர்ந்து வாசஞ்செய்துவரு மிடங்களுக்கு சேரி, சேரி என வழங்கிவருவது இயல்பாம். அம்மொழியையே ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வாசஞ்செய்யும் இடங்களுக்கும் பறைச்சேரி என்னும் பெயரைக் கொடுத்து தங்களைச்சார்ந்தவர்களால் வழங்கச்செய்துவிட்டுத் தாங்கள் சிந்தூரல் ஆற்றின் அக்கரையோரமாக வந்து மண்ணைத் துளைத்துக் குடியிருந்துக்கொண்டு இவ்விடம் வந்து பிச்சையிரந் துண்ணுங்கால், தங்களை நீவிர் யாவரென்று கேட்போருக்கு அக்கரையோரத்தார், அக்கரையோரத்தார் என வழங்கிவந்த மொழியையே ஆதாரமாகக்கொண்டு இப்போது இவர்கள் இங்குவந்து வாசஞ்செய்யும் இடங்களுக்கு அக்கரையோரத்தாரென்னு மொழியை மாற்றிவிட்டு அக்கிர ஆரத்தார், அக்கிர ஆரத்தா ரென வழங்கி வருகின்றார்கள். இத்தியாதி மாறுபாடுகளில் இப்பறையர்களென்னும் பெயர் சத்துருக்களாகியத் தங்களால் கொடுத்ததல்ல. பூர்வத்திலிருந்தே வழங்கிவந்ததைப்போல் ஓர் சமஸ்கிருத சுலோக மொன்றை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு சமயம் நேர்ந்த இடங்களில் அதை சொல்லிக்கொண்டே திரிகின்றார்கள். அவற்றை தாங்களே சீர்தூக்கி விசாரிக்கவேண்டியதென்று சொல்லிவிட்டு சேஷன் என்பவனைநோக்கி, ஐயா தாங்கள் சொல்லிவந்த சுலோகத்தின்படி மக்களாகும் மனிதர் உற்பவம் மானின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும் உற்பவிப்பதுண்டோ. அத்தகைய உற்பவங்கள் தற்காலம் ஏதேனு முண்டா, எங்கேனுங் கண்டுள்ளாராவென்று உசாவியபோது ஏதொன்றும் பேசாமல் மௌனத்தி லிருந்துவிட்டான். உடனே நத்தனார் அரசனைநோக்கி, ஐயனே இவர்கள் கூறியுள்ள சுலோகத்தின் கற்பனை எவ்வாரென்னில் ஜம்புகனென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை நரியின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கௌதம னென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை பசுவின் வயிற்றிற் பிறந்தவனென்றும், மாண்டவ்யனென்னும் பெயருள்ளவன் ஒருவனிருப்பானாயின் அவனை தவளை வயிற்றிற் பிறந்தவனென்றும், கார்க்கேய னென்னும் பெயருள்ள ஓர்மனிதனிருப்பானாயின் அவனை கழுதைவயிற்றிற் பிறந்தவனென்றுங் கற்பித்துக் கூறியக் கட்டுக்கதை சுலோகத்துள் சாங்கயமென்னும் மொழி அறுசமயங்களில் ஒன்றாதலின் அவர்களையும் பௌத்தர்களென்றறிந்து இவர்கள் கொடுத்துள்ளப் பெயரை மாறுபடுத்தி சாங்கயர் பறைச்சி வயிற்றிற் பிறந்தவரென்னும் மொழியையும் அதனுட் புகட்டி, பறையனென்னும் பெயரைப் பரவச்செய்துவருகின்றார்கள். இவ்வாரியர்கள் தற்காலங் கூறிய வடமொழி சுலோகம் முற்றும் பொய்யேயாம். அதாவது மண்முகவாகு சக்கிரவர்த்திக்கும் மாயாதேவிக்கும் பிறந்தவர் கெளதமரென்றும், சௌஸ்தாவென்னும் அரசனுக்கும், கோசலையென்னும் இராக்கினிக்கும் பிறந்தவர் மச்சமுனியாரென்றும், பாடுகியென்னுங் குடும்பிக்கும், சித்தஜியென்னுமாதுக்கும் பிறந்தவர் அகஸ்தியரென்றும் சரித்திரங்களில் வரைந்திருக்கக் கழுதை வயிற்றிலும், நாய்வயிற்றிலும், தவளை வயிற்றிலும் மனிதர்கள் பிறந்தாரென்னில் யார் நம்புவார்களென்று நகைத்தபோது அரசன் கையமர்த்தி சேஷனென்பவனை நோக்கி, ஐயா, இருஷிகளின் உற்பவங்களைக்கூறினீர்களே அவர்களுடைய சரித்திரங்களிலும் சிலதைச் சொல்லவேண்டுமென்று கேட்டான். புருசீகர்களாம் மிலேச்சர்கள் எழுந்து பிறந்தபோதே இருஷிகளென்னும் பெயர் கொடுக்கத் தகுமா, பிறந்து வளர்ந்து ஞானமுதிர்ந்தபோது கொடுக்கத் தகுமா என்பதை உணராமல் உளற ஆரம்பித்த சங்கதிகள் யாவும் அரயன்மனதிற்கு ஒவ்வாதபடியால் நத்தனாரைநோக்கி, இவைகளுக்குத் தாங்களென்ன சொல்லுகின்றீரென்றான். உடனே நத்தனார் எழுந்து இராஜேந்திரா, ஞானம் இன்னதென்றும், ஞானிகள் இன்னாரென்றும், யோகம் இன்னதென்றும், யோகிகள் இன்னாரென்றும், குடும்பம் இன்னதென்றும், குடும்பிகள் இன்னாரென்றும், இருடிச் சரம் இன்னதென்றும், இருஷீஸ்வரர் இன்னாரென்றும், முனைச்சரம் இன்னதென்றும் முநீச்சுரர் இன்னாரென்றும், பிரம்மணம் இன்னதென்றும், பிராமணாள் இன்னாரென்றும், மகத்துவம் இன்னதென்றும், மகாத்மாக்கள் இன்னாரென்றும், பார்ப்பவை யின்னதென்றும், பார்ப்போர்க ளின்னாரென்றும் இவர்களுக்குத் தெரியவேமாட்டாது. அதற்காய சாஸ்திரங்களை வாசித்தவர்களுமன்று. அத்தகைய சாதனங்களிற் பழகினவர்களுமன்று. தந்திரோபாயமாக யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு பிராமணர், பிராமணரென தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொண்டு வரும்படியான வார்த்தையும் அதற்குத்தக்க நடிப்பும் தங்கள் சீவன ஏதுக்களுக்குத் தக்க வடமொழி சுலோகங்களையும் ஏற்படுத்திக்கொண்டு கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பிச்சையேற்றுண்பதுமன்றி இருஷிகளின் உற்பத்தியை எவ்வாறு வரைந்துகொண்டனரென்னில் பூர்வ மெய்ஞ்ஞானிகளாகும் கௌதமர், கலைக்கோட்டார், மச்சமுனி, கார்க்கேயர், சௌனகர் முதலியவர்களின் பெயர்களைக்கொண்டே கெளதமர் பசுவின் வயிற்றிலும், கலைக்கோட்டார் மான்வயிற்றிலும் பிறந்தார்களென்னும் வடமொழி சுலோகங்களை வகுத்துக்கொண்டு மக்கள் சந்ததியில் புருடவகுப்பை முதற்கூறுவதொழித்து பெண்களை முதற்கூறி வண்ணாத்தி வயிற்றிலும், வேடச்சி வயிற்றிலும், பறைச்சி வயிற்றிலும் பிறந்தார்களென்று ஏற்படுத்திக்கொண்டு வண்ணாத்தியென்னும் பெயரும், வேடச்சியென்னும் பெயரும் பூர்வத்திலிருந்து வழங்கிவருவதுபோல இப்பறையன் பறைச்சி யென்னு மொழியும் பூர்வமுதல் வழங்கிவருகிறதென்று ரூபித்து பௌத்த சங்கத்தோர்களையும், உபாசகர்களையும் இழிவுபடக்கூறி விவேகமிகுத்த மேன்மக்களைக் கீழ்மக்களாகவும், நாணாவொழுக்கினராகி பிச்சையேற்றுண்ணும் மிலேச்சக்கீழ் மக்களாந் தங்களை உயர்த்தி தங்களது பிராமணவேஷத்தை மெய்ப்படுத்திக் கொள்ளுவதற்கே இந்த சுலோகத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்களென்று கூறியவுடன், அரசன் திடுக்கிட்டு சேஷனென்பவனைநோக்கி, ஐயா தாம் கூறிய “ஸம்சம்பூதோ” வென்னும் வடமொழிக்கு தென்மொழியில் “பறைச்சி” யென்னும் பொருள் எவ்வகையாற் பெற்றிருக்கின்றது, அவற்றை விவரிக்க வேண்டுமென்று வினவினான். அவற்றை வினவிய புருசீகர்கள் மூலைக்கொருவராக எழுந்து பலவாறு உளறுங்கால் சங்காதிபர் சாம்பவனார் எழுந்து நந்தனைநோக்கி அரசே, தன்னை ஆய்ந்தறியா அறிவிலிகளும், நிலையற்றவர்களும், வேதமொழியின் விவரமறியாதவர்களும், சீலமற்றவர்களும், நாணா ஒழுக்கினர்களுமாகிய மிலேச்சர்கள் எம்மெய் நோக்கிப் பறையனென்றும், வெட்டுவோனென்றும் இழிந்தோனென்றுங் கூறிய விடும்பு மொழிகள் அவர்களது பொறாமெயாலும், பகுத்தறிவற்றப் பாங்கினாலுங் கூறினார்களன்றி வேறன்று. சுக்கில சுரோணிதத்தால் உதித்த ஒவ்வோர் மனிதனும் தனக்குறைவால் குழிவெட்டவும், தனமிகுதியால் பல்லக்கேறவும், தனமும் பலமு மிகுத்தால் அரயனாகவும், தனமும் விவேகமு மிகுத்தால் ஞானியாகவும் விளங்குவான். அங்ஙனமின்றி பிச்சையேற்று நாணமறத் திரிவோனைப் பெரியோனென்றும், நாணமும் ஒழுக்கமும் உழைப்பும் மிகுத்தோனைத் தாழ்ந்தவனென்றும் கூறும்படியான அவிவேகச் செயலால் பஞ்சஸ்கந்தங்களின் பாகுபாடுகளும், பஞ்ச இந்திரியக் கூறுகளும், திரிகரண சுத்தங்களும், முக்குணத்தின் ஒழிவுகளும், சகல மனுக்களுக்கும் பொருந்தவிருக்குமேயன்றி ஒருவருக்கொருவர் மாறுபட விளங்காது. இவற்றுள் ஒவ்வொரு மனிதனும் தனது துஷ்டச் செயலால் துட்டனென்றும், நற்செயலால் நல்லோனென்றும் அதாவது தீச்செயலால் தீயனென்றும், நற்செயலால் நியாயனென்றும் அழைக்கப்படுவான். தீயச்செயலுள்ளவர்களை நியாயரணுகார்கள். நியாயச்செயலுள்ளோருக்குத் தீய ரஞ்சுவார்கள். இது நீதி நூற்களின் போதனையும் சம்மதமுமாகும். அங்ஙனமின்றி நீதியும், நெறியும், வாய்மெயுமிகுத்தப் பெரியோர்களை தீயரென்றும் நீதியற்றும், நெறியற்றும், வாய்மெயற்றும் பொருளாசை மிகுதியால் நாணா வொழுக்கினராயுள்ள மிலேச்சர்களை நாயரென்றுங் கூறித் திரியும் மாறுபாடுகளை விளக்கிவந்தும் அரசனுக்கு அவைகள் சரிவர விளங்காததினால் நத்தனாரைநோக்கி ஐயா இச்சபையில் தத்துவோற்பத்தி யோகசாதனம், பஞ்சகல்ப முதலியவைகளை நான் தெரிந்துகொண்டபோதினும் வடமொழியில் பிராமணனென்று சொல்லும்படியான வார்த்தையின் உற்பவமும் அக்கூட்டத்தோரின் செயலும் எமக்கு விளங்காததினால் அவற்றை விளக்கவேண்டுமென்று வேண்டினான். உடனே நத்தனார் எழுந்து இராஜேந்திரா, அவைகள் யாவும் வடமொழியில் தெளிவாக வரைந்து வைத்திருக்கின்றார்கள். யாங்கள் யாவரும் தென்மொழிற் பழகிவிட்டபடியால் வடமொழியிலுள்ள பிராமணனென்னும் மொழிக்குத் தென்மொழியில் அந்தணனென்று வகுத்திருக்கின்றார்கள். அவ் வந்தணனென்னும் மொழியின் பெயரோவென்னில் காமக்குரோத லோபமற்று சாந்தம் நிறைந்து, தண்மெயுண்டாகி, சருவசீவர்கள்மீதும் கருணை கொண்டு, காக்கும் அறமிகுத்தோர்களையே அந்தணர்களென்று வகுத்திருக்கின்றார்கள். அத்தகையகுணசாதனன்கோடியில் ஒருவன் தோன்றுவதே மிக்க அரிதாம். இதுவே தென்புலத்தாராம் அந்தணர்களின் செயலென்னப்படும். ஆனால் வடமொழியிலுள்ள பிராமணனென்னும் பெயர் பெண் பிள்ளைகளென்னும் பெரும் பற்றற்று இருபிறப்பாளர்களாகி மறுபிறப்பற்று பிரமமணம் வீசும் பெரியோர்களுக்கே பிராமணர்களென்னும் பெயர் பொருந்துமேயன்றி ஜீவகாருண்ய மற்று சகல பற்றுக்களும் பெற்று, அன்பென்பதற்று தீராவஞ்ஞானமுற்று, வஞ்சகம் வெளிவீகம் பஞ்சைகள் யாவரையும் பிராமணர்களென்று சொல்லுவதற்காகாது. இவர்களோ பெண்டு பிள்ளைகளுடன் பிராமண வேஷமிட்டு பேதைமக்களைவஞ்சித்து பொருள்பறித்துத் தின்றுவருகின்றார்கள். இவர்களது கூட்டுறவையும் இவர்கள் இத்தேசத்திற் குடியேறிய காரணங்களையும், வங்கரால் முறியடிப்பட்டு, சிந்தூரல் நதிக்கரையோரமாக வந்துக் குடியேறி, குமானிடர்தேசம் வந்தடைந்து, யாசகசீவனத்தால் ஆரியக் கூத்தாடி பிச்சையேற்றுண்டு பிராமணவேஷமடைந்த வரலாறுகளையும் தெள்ளறத் தெளிந்துக்கொள்ளவேண்டுமாயின் பாண்டிமடத்தின் பூர்வமடாதிபர்களில் அஸ்வகோஷர் என்பவரும், வஜ்ஜிரசூதரென்பவரும் பொதியைச் சாரலிலிருக்கின்றார்கள் அவர்களுக்குப் பல்லக்கையும் வேவுகர்களையும் அனுப்பி வரவழைத்து இப்புருசீக தேசத்தோராம் ஆரியர்களின் பூர்வங்களை விசாரிப்பீர்களாயின் சருவ சங்கதிகளும் தெரிந்துக்கொள்ளுவீர்களென்று கூறியவுடன் அரசன் சந்தோஷித்து வேவுகர்களுக்கு வேண்டிய பொருளளித்து பல்லக்கு எடுத்து போய் பொதியைச்சாரலிலுள்ள பெரியோர்களை அழைத்துவரும்படி ஓலைச்சுருள் அளித்தான். வேவுகர்கள் ஓலைச்சுருளையும், பல்லக்கையும் எடுத்து பொதியைச் சாரலைச் சார்ந்து உத்தரமடத்தின் முகப்பில் வீற்றிருந்த பெரியோனாம் அஸ்வகோஷரைக் கண்டு வணங்கித் தாங்கள் கொண்டுசென்ற ஓலைச்சுருளை அவரிடங் கொடுத்தார்கள். அச்சுருளை வாங்கி வாசித்த அஸ்வகோஷர் எழுந்து அவ்விடமுள்ள தனது மாணாக்கர்களுக்குப் போதிக்கவேண்டிய போதனைகளை பூட்டிவிட்டு பல்லக்கிலேறி நந்தனது சபாமண்டபத்திற்கு வந்துசேர்ந்தார். அதனை உணர்ந்த அரசனும் அமைச்சர்களும் எதிர்நோக்கி வந்து அஸ்வகோஷரை வணங்கி அரசாசனம் ஈய்ந்து ஆயாசஞ்தீரச்செய்து சங்கதி யாவற்றையும் விளக்கி மறுநாள் காலையில் புருசீகர்களாம் ஆரியர்கள் யாவரையும் சபாமண்டபத்திற்கு வரும்படி யாக்கியாபித்தான். அரசன் உத்திரவின்படி மறுநாட் காலையில் ஆரியர்கள் யாவரும் வந்து கூடினார்கள். அஸ்வகோஷரும் சபாநாயகம் ஏற்றுக்கொண்டார். அப்பால் நந்தன் எழுந்து ஆரியர்களை நோக்கி ஐயா பெரியோர்களே, தாங்களும் தங்களுடன் வந்த பெண்களும் பிள்ளைகளுமாகிய தாங்கள் யாவரும் பிரமணர்களா, உங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர்வந்த காரணமென்னை, நீங்கள் எத்தேசத்தோர், இவ்விடம்வந்த காலமெவை, அவற்றை அநுபவக் காட்சியுட் பட விளக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். அதனைக் கேட்டிருந்த புருசீகர்கள் தங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர்வந்த காரணமறியாது பலருங்ககூடி வடமொழியை சரிவரப்பேசத் தெரியாமலும், தென்மொழியை சரிவரப் பேசத்தெரியாமலும் உளறுவதைக் கண்ட அஸ்வகோஷர் கையமர்த்தி ஆரியர்களே தங்களிவ்விடம் எப்போது வந்து சேர்ந்தீர்கள். நீங்களெடுத்துக்கொண்ட பிராமணவேஷத்தால் சீவனம் சரிகட்டி வருகின்றதா வென்றார் அதற்கு யாதொரு மாறுத்திரமுஞ் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொண்டார்கள். அவர்களின் மெளனத்தைக்கண்ட அஸ்வகோஷர் நந்தனைநோக்கி அரசே, இவர்கள் எடுத்துள்ள பிராமண வேஷமானது ஞான நூற்களைக் கற்று நன்குணர்ந்த மேன்மக்களுக்கு விளங்குமேயன்றி, ஞானமின்னது அஞ்ஞானமின்னதென்று விளங்காதவர்கள் இவர்களது வேஷத்தைக் கண்டறிவது மிக்க அரிதேயாகும். காரணமோவென்னில் உலக ஆசாபாசப் பற்றுக்களில் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையென்னும் மூவாசைகளற்று தமோகுணம், ரசோகுணமிரண்டும் நசிந்து தண்மெயுண்டாகி சருவுசீவர்களுக்கும் உபகாரியாய பிரம்மணம் வீசியபோது பிராமணனென சகலருங் கொண்டாடுவதுடன் அரசர்கள் முதல் பெரியோர்வரை அவருக்கு வந்தன வழிபாடுகள் செய்து அவரது வேணச் செயலுக்குரியப் பொருளும் உதவி செய்து வருவது வழக்கமாகும். அவரது தெரிசனமாயினும், பரிசனமாயினும் உண்டாயவுடன் சகல் உபாதைகளும் நீங்கும்படியான சிறந்த செயலாம் பிரம மணத்தால் பிராமணரென்றும் பெயர் தோன்றியதுமன்றி, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகியப் பரிநிருவாண இரு வகைப் பிறப்பினைக்கொண்டு இருபிறப்பாளரென்றும் அழைக்கப்பெற்றார்கள். உலகத்தில் தோன்றியுள்ள சகல சீவர்களும் பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடென்னும் நான்வகைத் துக்கத்தில் வாதைப்படுவது பிரத்தியட்ச அனுபவமாதலின் அத்தகைய நான்குவகைத் துக்கத்தினின்று விடுபட்டு சதா விழிப்பிலும், நித்தியானந்தத்திலும் இருப்பவர்களாதலின் பாசபந்தத்திற் கட்டுபட்டுள்ள மதுக்கள் யாவரும் அவர்களை மகட பாஷையில் அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் பிராமணர்களென்றும் திராவிட பாஷையில் அந்தணர் அழைத்து அவர்களது அழியா சிறப்பால் அடிபணிந்தும் வந்தார்கள். இதோ உமதெதிரில் பெருங்கூட்டமாகப் பெண்டுபிள்ளைகளுடன் வந்து நின்று கொண்டு தங்கள் யாவரையும் பிராமணர்களென்று பொய்யைச் சொல்லி புலம்பித்திரியும் இக்கூட்டத்தோர் யாவரும் புருசீகதேசத்தோர்களாகும். சிலநாட்களுக்கு முன்பு வங்கருக்கும், புருசீகருக்கும் பெரும் போருண்டான போது வங்கரால் புருசீகர் முறியடிப்பட்டு சிந்தூரல் நதிக்கரையோரமாம் குமானிட தேசஞ் சார்ந்து கரையோர மண்ணைத் துளைத்து அவைகளிற் குடியிருந்துகொண்டு இக்கரைக்கு வந்து ஆந்தரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு வகுப்பார்களிடம் யாசகஞ் செய்துக் கொண்டுபோய் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றிவந்தார்கள். இத்தேசத்தோருள் பெரும்பாலும் வருணத்தில் கருப்பும், மானிறமும் பெற்றவர்களாதலின் புருசீகர்களின் மிக்க வெளுப்புள்ள தேகத்தைக் கண்டவுடன் ஆட்சரியமாகப் பிச்சையளிப்பதுடன் பெண்டு பிள்ளைகளுடன் மாறிமாறி ஒருகாலைத் தூக்கியாடும் ஆரியக்கூத்திற்கும் ஆனந்தித்து அல்லவரும் பிச்சையளித்து ஆதரித்துவந்தார்கள். இத்தகைய ஆரியக்கூத்தாடி பிச்சையேற்பினும் காரியத்தின் மீது கண்ணுடையவர்களாய், தங்களுடைய தேசத்தில் பேசிவரும் துளுவ பாஷையைப் பேசுவதைவிட்டு சகடபாஷையாம் வடமொழியும், திராவிட பாஷையாந் தமிழினையும் பேச ஆரம்பித்துக் கொண்டவுடன் அப்பாஷைகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு வடமொழியின் சுலோகங்களைப் பொருளறியாமற் சொல்லித் தங்கள் பிராமணவேஷத்தைப் பெருக்கிக்கொண்டே வருவதுடன் காரியமுற்ற சிற்றரசரை வசப்படுத்திக்கொண்டு அவர்களது பூமியில் அவ்வரசர்கள் உயிருடன் இருப்பினும் இறப்பினும் அவர்கள் பெயரால் ஒவ்வோர் கட்டிடங்களைக் கட்டி கற்களினால் அவர்களைப்போன்ற சிலைகளைச் செய்து அவர்கள் குடும்பத்தோரை வந்து தொழும்படிச் செய்வதுடன் ஏனையோரையுந் தொழும்படிச்செய்து பிச்சையேற்றுப் பொருள்பறிப்பதுடன் தொழூஉம் தட்சணையாலும் பொருள் சம்பாதித்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். இத்தேசக் குடிகளின் மயக்கத்திற்கும் ஏமாறுதற்குங் காரணம் யாதெனில், சகட பாஷையாம் வடமொழியை சகலகுடிகளும் கற்று பேசுதற்கேலாது வியாரங்களிலுள்ள சமணமுநிவர்களும் பிராமண சிரேஷ்டர்களும் மட்டும் பேசவும் வாசிக்கவும் இருந்தார்கள் மற்றயக் குடிகள் யாவரும் கற்பதற்கும், பேசுதற்கும் எளிதாயுள்ள திராவிடபாஷையாம் தமிழினையே சாதித்து வந்தார்கள். அத்தகைய சாதனையில் இவ்வேஷப்பிராமணர்கள் கற்றுக்கொண்டு உளறும் வடபாஷையின் சப்த பேதமும், பொருள் பேதமும் அறியாது குடிகள் மோசம்போயதுமன்றி சிற்றரசர்களும் இவர்களது மாய்கைக்குட்பட்டு மயங்கிவருகின்றார்கள். இத்தகைய மாய்கையில் தாமும் உட்பட்டிருப்பீராயின் பூர்வ மெய்ஞ்ஞானச்செயல்களும் அதன் சாதனங்களும் அழிந்து அஞ்ஞானமே மேலும் மேலும் பெருகுமென்பதற்கு ஐயமில்லை. இத்தேசத்திய பெளத்த தர்ம அரசர்கள் யாவரும் தமது விசாரம்போல் விசாரித்துத் தெளிவடைந்திருப்பார்களாயின் இவ்வேஷப்பிராமண மிலேச்சர்களின் வார்த்தைகளும், செயல்களும் புருசீ்கமிலேச்சர்களின் பொய் வேஷங்களென விளங்கி மெய்ஞ்ஞானபோதமாம் புத்த தன்மமின்னது அஞ்ஞான போதமாம் அபுத்ததன்ம மின்னதென ஆராய்ந்து சத்தியதன்மத்தில் நிலைத்திருப்பார்கள். தங்களைப்போன்ற விசாரிணையும் காமியமற்ற அரசர்களுமாய் இல்லாதபடியால் நாணமும் ஒழுக்கமுமற்ற மிலேச்சர்களின் மாய்கையினுக்கு உட்பட்டு மயங்கி தங்களையும் தங்கள்தேசக் குடிகளையும் கெடுத்துக் கொண்டதன்றி பௌத்த மடங்களுக்கும், பௌத்த மடாதிடர்களுக்கும் இடஞ்சல்களைத் தேடிவைத்துவிட்டார்கள். அத்தகைய இடஞ்சல்களால் எம்மெய்ப்போன்ற விசாரிணைப்புருஷர்கள் யாவரும் தங்கள் தங்கள் வியாரங்களையும், அதனதன் ஆதாரங்களையும் விட்டகன்று பலதேச சஞ்சாரிகளாகவும் போய்விட்ட படியால் ஆரியர்களாம் அஞ்ஞானிகளின் செல்வாக்கதிகரித்துக் கொண்டே வருகின்றது. யதார்த்த பிராமணர்கள் குறைந்து வேஷப்பிராமணர்கள் பெருகி வருவதுடன் யாதார்த்த வியாரங்களாம் அறப்பள்ளிகளின் சிறப்புகளுங் குன்றி இறந்த அரசர்களைப்போல் சிலாவுருவஞ் செய்துவைத்துள்ள இடங்களும், சிலையாலயம், சிலாலயமென வழங்கி வந்தார்கள். அம்மொழியை மாற்றி சிவாலயம் சிவாலயமென வழங்கி வருகின்றார்கள். ஆண்குறியும் பெண்குறியுமே சிருஷ்டிகளுக்கு ஆதாரமெனக் கூறி கற்களினால் அக்குறிகள் செய்தமைத்து சிலைலிங்கம் சிலாலிங்கமென வழங்கி அம்மொழியையே சிவாலிங்கமெனமாற்றி சிறப்பித்து மக்களுக்குக் காமியம் பெருகிக் கெடும் வழிகளையுண்டுசெய்துவருகின்றார்கள். ஆரியர் தங்கள் புருசீக தேசபாஷையை மறந்து சகடபாஷையாம் வடமொழியைப் பேசுவதற்கு ஆரம்பித்துக்கொண்டபடியால் பெளத்த வியாரங்களில் தங்கியுள்ள யதார்த்தபிராமணர்களால் வழங்கிவரும் வடமொழியென்றெண்ணி தங்களுக்குள்ளெழுஞ் சந்தேகங்களைத் தாங்களடுத்துள்ள வேஷப்பிராமணர்களை வினவுவதால் அவர்களுக்கு உலகவிவகார மொழிகளே தெள்ளற விளங்காதவர்களாதலின் வடமொழியுள் ஞானவிளக்க மொழிகளை கண்டுரைக்க யேலாது மிக்கத்தெரிந்தவர்கள்போல் ஏழைமக்களுக்கு மாறுபடு பொருளற்ற மொழிகளைப் புகட்டி பொய்யை மெய்யெனக்கூறி பொருள் பறித்துத் தின்று வருகின்றார்கள். அவை யாதெனில்: அறவாழி அந்தணனாம் புத்தபிரானால் ஆதியில் போதித்துள்ள “செளபபாபஸ்ஸ அகரணங், குஸலஸ வுபசம்பதா, சசித்த பரியோதபனங், யேதங் புத்தானசாசன” மெனு முப்பீட வாக்கியத்தை மகடபாஷையில் முச்சுருதிமொழியென்றும், முப்பேத மொழியென்றும், முவ்வேத மொழியென்றும், மூவருமொழியென்றும், திரிசுருதி வாக்கியமென்றும், திரிமந்திர வாக்கியமென்றும் வழங்கி வந்த மும்மொழியும், தன்மகாய ரூபகாயங்களை விளக்கி நித்திய சுகத்திற்கு ஆளாக்கு மொழிகளாதலின் அவற்றை பிரதம திரிகாய மந்திரமென்றும்; வாக்குசுத்தம், மனோசுத்தம், தேகசுத்தம் இவற்றை துதிய திரிகாய மந்திரமென்றும் வழங்கிவந்தவற்றுள் இவ்விரு திரிகாய மந்திரங்களையும் பொதுவாக காயத்திரி மந்திரமென வழங்கிவந்தார்கள். அதாவது எடுத்த தேகம் சீர்குலைந்து மரணதுக்கத்திற்காளாகி மாளாபிறவியிற் சுழலாது மும்மந்திரங்களாம் மேலாய ஆலோசனையில் நிலைத்து பாபஞ்செய்யாமலும், நன்மெய் கடைபிடித்தும், இதயத்தை சுத்தி செய்தும், மாளா பிறவியின் துக்கத்தை யொழித்து நித்தியசுகம் பெரும் பேரானந்த ஆலோசனையாதலின் அம்மும் மந்திரங்களையும் திரிகாயமந்திரமென்றும் காயத்திரி மந்திரமென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் மந்திரமென்பது ஆலோசனையென்றும், மந்திரியென்பது ஆலோசிப்பவனென்றுங் கூறப்படும். இதனந்தரார்த்தமும், காயத்திரி என்பதின் அந்தரார்த்தமும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. இத்தகைய வேஷப்பிராமணர்களிடம் உபாசகர்கள் சென்று காயத்திரி மந்திரம் அருள வேண்டுமென்னுங்கால் வியாரங்களிலுள்ள யதார்த்த பிராமணர்கள் போதிக்கும் திரிகாய ஆலோசனைகள் இவ்வேஷபிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் அவற்றைக் காட்டிக் கொள்ளாது அவைகளை மிக்கத்தெரிந்தவர்கள் போல் நடித்து காயத்திரி மந்திரம் மிக்க மேலாயது. அவற்றைச் சகலருக்கும் போதிக்கப்படாது, எங்களையொத்த ஆயிரம் பிராமணர்களுக்கு பொருளுதவி செய்து தொண்டு புரிவோர்களுக்கே போதிக்கப்படுமெனப் பொய்யைச்சொல்லி பொருள்பறித்து வடமொழி சுலோகங்களில் ஒவ்வோர் வார்த்தையை யேதேனுங்கற்பித்து அதையே சொல்லிக்கெண்டிருங்கள் இம்மந்திரத்தை மார்பளவு நீரினின்று சொல்லிவருவீர்களாயின் கனசம்பத்து, தானியசம்பத்துப் பெருகி சுகமாக வாழ்வீர்களென்று உறுதிபெறக் கூறி ஆசைக்கருத்துக்களை அகற்றி மெய்ஞ் ஞானமடையும் வழிகளைக் கெடுத்து, ஆசையைப்பெருக்கி அல்லலடையும் அஞ்ஞானவழிகளில் விடுத்து மநுமக்களின் சுறுசுறுப்பையுஞ் செயல்களையும் அழித்து சோம்பலடையச்செய்வதுடன் அவர்களது விவேக விருத்திகளையுங் கெடுத்து வருகின்றார்கள். விருத்தியின் கேட்டிற்கு ஆதாரங்கள் யாதெனில் தங்களையே யதார்த்த பிராமணர்களென்று நம்பி மோசத்திலாழ்ந்துள்ள அரசர்களையும், வணிக தொழிலாளர்களையும், வேளாளத் தொழிலாளர்களையும் கல்வியைக் கற்கவிடாது அவனவன் தொழிற்களை அவனவனே செய்துவர வேண்டுமென்னுங் கட்டுபாடுகளை வகுத்து இவர்களையடுத்துள்ள அரசர்களைக் கொண்டே சட்டதிட்டப்படுத்தி கல்வியின் விருத்தியையும், தொழில் விருத்தியையும் பாழ்படுத்திவருகின்றார்கள். அவற்றிற்குக் காரணமோவென்னில் கல்வியின் விருத்தி அடைவார்களாயின் தங்களது பிராமணவேஷமும், பொய்க்குருச் செயலும், பொய்ப்போதங்களும் உணர்ந்து மறுத்துக்கேழ்க்க முயலுவார்கள். வித்தைகளில் விருத்தி பெறுவார்களாயின் தங்களை மதிக்கமாட்டார்கள், தங்கள் பொய்ப் போதனைகளுக்கும் அடங்கமாட்டார்கள் என்பதேயாம். இவர்களது வயிற்றுப் பிழைப்பிற்காக இத்தேசத்து சிறந்த மடங்களையும், சிறந்த ஞானங்களையும், சிறந்த கல்விகளையும், சிறந்த வித்தைகளையும், சிறந்த நூற்களையுமழித்து தங்களது வேஷப்பிராமணத்தை விருத்திசெய்து வருவதுடன், அரசே, இந்திரவியாரங்களாகும் அறப்பள்ளிகளில் தங்கியுள்ள அந்தணர்கள் மார்பிலணைந்திருக்கும் முப்புரிநூல் அதாவது மதாணி பூநூல் மேலாய அந்தரங்கஞானத்தை அடக்கியுளது. அதனை அணிந்து கொள்ள செய்வித்ததும், அணிந்துகொள்ளும் பலனும் இந்த வேஷப்பிராமணர்களுக்குத் தெரியவேமாட்டாது. அதன் அந்தரங்க விளக்கமாகும் உபநயனமென்னும் பெயரும் அதனது பொருளும் இவர்களுக்கு விளங்கவேமாட்டாது. அதன் பேரானந்த ஞானரகசியம் யாதெனில் சத்தியசங்கத்துள் சேர்ந்துள்ள சமணமுநிவர்கள் திரிகாய மந்திரமாம் காயத்திரி மந்திரத்துள் நிலைத்து கொல்லா விரதம், குடியா விரதம், பிறர்தாரம்நயவா விரதம், பிறர்பொருளை இச்சியா விரதம், பொய் சொல்லாவிரதமாகிய பஞ்சசீலத்தில் லயித்து பற்றறுத்த செயலுங் குணங் குறிகளும் ஞானாசிரியர்களாகும் அறஹத்துக்களுக்குத் தெரிந்தவுடன் அம்மாணாக்கனை வியாரத்தைவிட்டு நிலைபேராது செய்து வெளியிற் பார்க்கும் ஊனக்கண் பார்வையை நீக்கி தனக்குள் பார்க்கும் ஞானக்கண் பார்வையை அளிப்பார்கள். இவற்றையே உள்விழியென்றும், உதவிவிழியென்றும், உபநயனமென்றுங் கூறப்படும். உலகப்பொருளை நோக்குவது ஊன்னயனமும், உண்மெய்யை நோக்குவது உபநயனமுமாம். உபநயனம் பெற்ற மாணாக்கர்கள் முன்போல் பிச்சாபாத்திரமேந்தி வெளிபோகாமலும், மற்றும் உலகவிவகாரங்களிற் பிரவேசியாமலும் தங்கள் உள்விழிப்பார்வையில் இருக்கவேண்டியவர்களாதலின் அத்தேச அரசர்களையும், உபாசகர்களையும் வரவழைத்து இம்மாணாக்கன் சமணமுநிவருள் சித்திபெறவேண்டிய உபநயனம் பெற்றுக்கொண்டபடியால் கடைத்தேறுமளவும் இவனுக்கு வேண்டிய பொருளுதவியும் புசிப்புதவியும் அளித்துவர வேண்டியதென்றும் உபநயனம் பெற்றோன் அதாவது உள்விழி கண்டோனென்றும் அடையாளத்தை மற்றவர்களறிந்து வேண உதவிபுரிந்துவருவதற்காக மதாணி பூநூலென்னும் முப்புரிநூலை மாணாக்கன் வலதுபுறத்திற்கும் இடது இடுப்பிற்கும் சுற்றி நிற்கும்படி அணைந்துவிடுவார்கள். அந்நூலணைந்துள்ளோரைக் கண்டவுடன் சகலரும் வணங்கி வேணப் பொருளளிப்பது வழக்கமாகும். முப்புரிநூலை அவ்வகை யணையம் அந்தரார்த்தம் யாதெனில் குழந்தையானது தாயின் வயிற்றில் கட்டுப்பட்டிருக்குங்கால் மூச்சோடிக்கொண்டிருக்கும் ரத்தினமானது உந்தியாகிய கொப்புழுக்கும் இடது புறவுள் விலாவிற்கும்சுற்றி வலமுதுகிலேறி பிடரிவழியிற்சென்று நாசிமுனை வழி வந்து மார்பிலிரங்கி உந்தியிற் கலந்திருக்கும் வழியைத் திறந்து மூச்சு உள்ளுக்குள்ளடங்கி உண்மெய் யுணரவேண்டியததுவாதலின் அதனிருப்பையும் உபநயன விழிப்பையுங் கண்டறிவதற்கும் திரிமந்திரமாம் மூவருமொழியை சிந்திப்பதற்கும் முப்புரிநூலை மார்பில் அணைந்து வைத்திருக்கின்றார்கள். முப்புரி நூலணையும் விவரமும் அதன் ஞானார்த்தங்களும் இவ்வேஷ பிராமணர்களுக்குத் தெரியாது, கல்வியற்றக் குடிகளுக்குத் தெரியாது. அதன் ஞானக்கருத்து தெரியாதிருப்பினும் சமணமுநிவர்களுக்கு உபநயனம் அளிக்குங்கால் சகலகுடிகளையுந் தருவித்து உபநயனம் பெற்றோரை சுட்டிக் காட்டி வேண வுதவி செய்யும்படிக் கேட்டுக்கொண்டவுடன் அவுற்பிரசாதமளித்து ஆனந்தமுடன் அனுப்புவதுமட்டிலும் அவர்களுக்குத் தெரியும். அவற்றைத் தெரிந்தவர்கள் இந்த வேஷப்பிராமணர்களை அடுத்து வணங்கி வியாரங்களிலுள்ள பிராமணர்கள் உபநயனமளிக்குங்கால் அவுற்பிரசாத மளித்து சகலரையும் ஆனந்திக்கச் செய்வார்கள். அவ்வகையாக நீங்கள் செய்யாதகாரணமென்னவென்று வினவியவுடன் அதனந்தரார்த்தம் இவர்களுக்குத் தெரியாதிருப்பினும் கல்வியற்றக் குடிகளிடத் தங்களுக்குத் தெரிந்தவைபோல் அபிநயித்து தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனஞ் செய்விக்கப்போகின்றோம் அவற்றிற்குத் தேங்காய், பழம், அவுல்கடலை கொண்டுவருவதுடன் பணவுதவியுஞ் செய்யவேண்டுமென்று பெற்று, தங்கள் பெண் பிள்ளைகளுடன் புசித்துத் தங்கள் பிள்ளைகளும் அத்தகைய நூலை யணிந்துவருகின்றார்கள். ஏழைக் குடிகள் அவுற்பிரசாதங் கொடுக்கவில்லையேயென்று கேட்டால் தேவர்களுக்கு அளிக்கும் அவுல் பிரசாதத்தை உங்களுக்கு அளிக்கலாகா தென்றேய்த்து பணம் பறித்துவருவதுமல்லாமல் அவுற்பிரசாதங் கொடாது தாங்களே தின்று கொழுத்துலாவுவதற்கு உபநயனமென்னும் மொழியும் சீவனத்திற்கு ஓர் வழியைக் கொடுத்துவிட்டது. புல்லினின்று புழுக்களும், புழுக்களினின்று விட்டிலும் மாறி இரு பிறப்படைவதுபோல் சமணமுநிவர்கள் உபநயனமாம் ஞானக்கண் பெற்று உண்மெ யுணர்ந்து புளியம்பழம் போலும், ஓடுபோலும், உடல்வேறு உண்மெய் ஒளிவேறாகப் பரிநிருவாண மடைவதை ஓர் பிறப்பாகவும், தாயின் வயிற்றிற் பிறந்தபிறப்பை யோர் பிறப்பாகவுங் கொண்டு அவர்களை இருபிறப்பாளரென சமணமுநிவர்கள் கொண்டாடித் துதித்து வந்தார்கள். அதனது சிறந்த காட்சியோவெனில் மனிதன் தாய்வயிற்றிநின்று பிறந்து வளர்ந்து பல பற்றுக்களால் தீயச்செயலை வளர்த்து தீயச்செயலில் நிலைத்துவிடுவானாயின் தீராப்பிறவியிற் சுழன்று மாறிமாறி துக்கத்தையனுபவித்து வருபவனாவான். மனிதன் தாய்வயிற்றிநின்று பிறந்து வளர்ந்து பாசபந்த பற்றுக்களற்று நியாயச்செயலை வளர்த்து நியாயச்செயலாம் நன்மெய்க்கடைபிடிப்பானாயின் பற்றற்ற பலனால் புளியம்பழம் போலும் ஓடுபோலும் அந்தரங்கம் வேறு பயிரங்கம் வேறாக நிருவாணமடைவான். அத்தகைய நிருவாணமடைந்தோன் தேகத்தினின்று சுயம்பிரகாசமாக மாற்றிப் பிறக்க எண்ணுவானாயின் தன்மகாய ஒளி வுருவாய்ப் பரிநிருவாண மடைவான். அன்றுமுதல் மாறிமாறி பிறக்கும் பிறப்பின் துக்கமற்று சதாவிழிப்பில் நித்தியானந்த சுயம்புவாய் அகண்டத் துலாவுவான்; இத்தகையாய்த் தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், ரூப காயத்தினின்று தன்மகாய ஒளியுருவாய் மாற்றிப் பிறந்த பிறப்பொன்றும் ஆகிய இருபிறப்படைந்தவர்களையே சமணமுநிவர்களும் உபாசகர்களுந் துதித்துக் கொண்டாடுவது இயல்பாதலின் அதின் அந்தரங்கப் பிறப்பும் பயிரங்கப்பிறப்பும் இவ்வேஷப்பிராமணர்களுக்கு இன்னது இனியதென்றே விளங்கமாட்டாது. அவ்வகை விளங்காதிருப்பினும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்குத் தங்களை இருபிறப்பாளர்களென்றும் கூறி இப்பிறவியென்னும் மொழியையும் ஓராதரவாகக்கொண்டு பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள். அதாவது, அறஹத்துக்கள் வகுத்துள்ள பிறவியின் ரகசியம் யாதெனில்; ரூபகாயத்தின்படி ஓர் மனிதன் தன்னை மறந்து தூங்கி விழிப்பதே பிறப்பு. தன்மகாயத்தின்படி ஒன்றை எண்ணுவதே பிறப்பு, எண்ணி மறப்பதே இறப்பு இவ்விரண்டின் செயலே கர்மத்துக்கு ஈடாய பற்றினால் பிறப்புண்டாகி சமுத்திரத்தின் அலையானது தோன்றி தோன்றி கெடுவதுபோல கன்மத்தின் செயலே பற்றி மாளா பிறவியில் தோன்றிதோன்றி சுழல்காற்றில் அகப்பட்ட செத்தைபோல் சுற்றி சுற்றி மாளா துக்கத்திற் சுழன்றுதிரிகிறதென்றும் பாசபந்தப் பற்றானது பெருங்கடலுக்கொப்பாயதென்றும் பாசபந்தக் கடலுள் ஆழ்ந்திருக்குமளவும் பிறவியின் பெருந்துக்கமானது விடாது தொடர்ந்தே நிற்குமென்றும்; அவ்வாசாபாச கன்மபந்தப் பற்றுக்களை பற்றாது அறுத்துவிடுதலே நிருவாணமென்றும், அந்நிருவாணமே பிறவியற்ற முத்திப்பேறென்றும், அம்முத்திப்பேறே சதானந்த தன்மகாயமென்றும், அதுவே இரவுபகலற்ற ஒளியென்றும் தங்கள் தங்களனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்த வரைந்து வைத்துள்ளார்கள். அத்தகைய பிறவியினாலுண்டாந் துக்கமும் அப்பிறவியை அறுத்தலினால் உண்டாம் சுகமும் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்கவேமாட்டாது. அவ்வகை விளங்காவிடினும் கல்வியற்றக் குடிகள் இவர்களை அடுத்து பிறவியை அறுக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுகின்றார்களே அதன் வழி எவ்வகை என்று கேட்பார்களாயின் உன் தந்தை இறந்த திதியை அறிந்து வைத்துக்கொண்டு அத்திதி வருங்காலங்களில் எல்லாம் எங்களையொத்த பிராமணர்களுக்கு அரிசி பருப்பு, ஐங்காயம், நெய், வேஷ்ட்டி புடவை, குடை, பாதரட்சை, தட்சணை, தாம்பூலங் கொடுத்துவருவீர்களானால் இறந்த உன் தந்தையே வந்து பிண்டப்பிரசாதம் பெற்றுப் போவான். இவ்வகையாக சிலகாலம் பெற்றுப் போவானாயின் திரவிய சம்மந்தனாகப் பிறப்பான். இதுபோல் புருஷன் இறந்துபோவானாயின் பெண்சாதியானவள் வேறுவிவாகஞ் செய்துக்கொள்ளாமல் புருஷன் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை வருஷந்தோரும் எங்களை யொத்த பிராமணர்களுக்கு தானமளித்து வருவாளாயின் அவள் புருஷன் மோட்சத்தை அடைவான். அப் பெண்ணானவள் விருத்தாப்பியம் அடைந்துவிடுவாளாயின் மிகுந்துள்ள சொத்துக்கள் யாவையும் எங்கள் உத்திரவினால் கட்டிவைத்துள்ள சிலாலயத்தின் பெயரால் சிலாசாசனஞ் செய்துவைத்துவிடுவாளாயின் அவளிறந்தபின் மறுபிறவியுண்டாகி தன்புருஷனுடன் சேர்ந்துவிடுவாளென்றும், எங்களை ஒத்த பிராமணர்களுக்கே தானியமளித்து பிராமணர்களுக்கே பொருளீய்ந்து வருகிறவன் மறுபிறவியில் பூமிசெல்வத்தையும், தானியமளிப்பவன் தானிய சம்பத்தையும், பொருளளிப்பவன் தனசம்மந்தனாகப் பிறப்பான். எங்கள் வாக்கையே தெய்வவாக்காகவும், எங்களையே தெய்வமாகத்தொழுது எக்காலமும் எங்கள் பெண் பிள்ளைகளுக்கு தானமளித்து வருவீர்களாயின் பிறவியின் துக்கமற்று முத்திப் பெறுவீர்கள். எனப் பிறவியின் பேதாபேதங்களும் அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கவாறு நிகழும், பிறவியினது தோற்றங்களும் இவ்வேஷப்பிராமணர்களுக்கு விளங்காவிடினும் பிறவி என்னும் வார்த்தையைக் கொண்டே கல்வியற்றக் குடிகளை வஞ்சித்தும் பயமுறுத்தியும் பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள். இத்தகையப் பொய்க்குருக்களின் செயலால் நாளுக்குநாள் விவேக விருத்தியற்று அவிவேக மிகுத்துக் குடிகள் சீரழிந்துவரவும் வேஷப் பிராமணர்கள் விருத்தியுற்றோங்கவுமுள்ளதன்றி வீடுகடோருங் கூழாங்கற்களைக் கும்பிட்டுக்கெடும் ஏதுக்களையுஞ் செய்துவிட்டார்கள். அதாவது, வேஷப்பிராமணர்களை அடுத்த அரசர்கள் மடிந்தபோது அவர்களைப் போன்ற கற்சிலைகள் அமைத்து அவர்களைத் தொழுதுவரும் சிலாலயங்களை அமைத்து வருவது போதாமல் வீடுகடோருங் கூழாங்கற்களைத் தொழும் வகையை எவ்வகையாய்ச் செய்துவிட்டார்களென்னில், வியாரங்களில் தங்கியுள்ள அறஹத்துக்களை நாடிச்சென்ற உபாசகர்கள் அவர்களை வணங்கியவுடன் திராவிட பாஷையில் “அறிவு பெருகுக” வென்றும், மகடபாஷையில் “சாலக்கிரம” மென்றும் ஆசிர்வதிப்பது இயல்பாம். சாலக்கிரமம் என்னும் மொழியின் பொருள் யாதென்னில் எக்காலும் நீதிவழுவா நெறியில் நில்லுங் கோளென்பதேயாம். இம்மொழியை யதார்த்த பிராமணர்களிடம் கேட்டிருந்தக் கல்வியற்றக் குடிகள் இவ்வேஷப் பிராமணர்களை அடுத்து சாலக்கிரமங் கூறுவீர்களே இதை ஏன் கூறுகிறதில்லையென்று கேட்பார்களாயின் அம்மொழியின் சப்தமும் அதன் பொருளும் அறியாதவர்களாயிருப்பினும் மிக்க அறிந்தவர்போல் அபிநயித்து வந்தவர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று அவ்விடந் தேய்ந்து பளபளப்புற்று சிவந்த கோடுகள் பரந்துள்ள சிறிய குழாங்கற்களை எடுத்துவந்து மிக்க தனமாக புஷ்பத்திற் சுருட்டி கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் அடுத்து, இதோ பார்த்தீர்களா இதற்குதான் சாலக்கிரமமென்று கூறுவது, இதனை வீடுகளில் வைத்து பூசிப்பீர்களானால் நீங்களெண்ணும் பொருட்களெல்லாம் உங்களுக்குக் கிடைப்பதுடன் கோரியவண்ணம் முடியும். சகசம்பத்தாக வாழ்வீர்கள், இதற்கு மதிப்பு சொல்ல ஒருவராலும் இயலாது, எவ்வளவு திரவியத்தைக் கொட்டினுங் கிட்டாது. சாலக்கிரமங்களில் இது விசேஷித்த சாலக்கிரமமெனக்கூறி பொருள் பறித்து தின்பதற்கு சாலக்கிரமமென்னும் வாழ்த்தல் மொழியும் சீவனத்திற்கோர் வழியாகிவிட்டது. கிராமங்கடோரும் சிலாலயங்களை வைத்து பூசிப்பது போதாது வீடுகடோருங் குழாங் கற்களை வைத்துப் பூசிக்கும் ஏதுக்களை செய்துவிட்டு வீடுகடோருஞ் சென்று பொருள்பறிக்குமோர் ஏதுவையும் உண்டு செய்துக் கொண்டார்கள். “சாலக்கிரமம்” எக்காலுங் கிரமமான வாழ்க்கைப் பெற்றிருங்கோளென்னும் வாழ்த்தல் மொழி கூழாங்கல்லாகிவிட்டதென்ற உடன் சபாமண்டபத்திலிருந்து புருசீகர்கள் யாவரும் திடுக்கிட்டெழுந்து போய் விட்டார்கள். அஸ்வகோஷர் நந்தனென்னும் அரசனைநோக்கி அரசே இந்த வேஷப்பிராமணர்களாம் பொய்க்குருக்கள் தங்கள் பத்து பேர் சீவனத்திற்கு பத்தாயிரம் பொன் விலைப்பெற்ற வியாரங்கள் அழிந்தாலும் அவர்களுக்கு தாட்சண்யங் கிடையாது. தங்கள் பத்துபேர் சீவனத்திற்காக பதினையாயிரம் பொன் விலைப்பெற்ற சாஸ்திரங்கள் அழியினும் அவர்களுக்கு ஞானமிராது. இத்தகைய ஞானமற்றவர்களும், நாண மற்றவர்களும் ஒழுக்கமற்றவர்களுமாகிய இக்கூட்டத்தோரென்று சொல்லுங்கால் வெளியிற் சென்ற புருசீகர்கள் யாவரும் வந்து சபையில் உட்கார்ந்தார்கள். அஸ்வகோஷர் அவர்களை சுட்டிக்காட்டி தங்களுடைய நாட்டிற்கு வடமேற்கே புருசீக நாடென்னும் ஒன்றுண்டு. அவ்விடத்தியப் பெண்கள் சூதக்காலங்களில் ஏழுநாள்வரை வெளியிற் கிடப்பார்கள். துடையினின்று கால்தெரியாது செட்டையணைந்திருப்பார்கள். புருஷர்களும் சிரசில் நீண்ட குல்லாசாற்றி பெரும்வேட்டி சுற்றிக் கொள்ளுவார்கள். அக்கினியை தெய்வமாகத் தொழுவார்கள். அக்கூட்டத்தோர்களே இவர்களாயினும் அப்பெண்கள் இவ்விடம் கால்செட்டை அணையாமல் இவ்விடத்திய சேலையைக் கொண்டே கீழ்ப்பாச்சிக் கட்டிக்கொள்ளுகின்றார்கள். அவ்விடம் அக்கினியைத் தொழுத போதினும் இவ்விடம் அக்கினிகுண்டத்தைக் கையுடன் கொண்டு வந்திருக்கின்றார்கள். அக்கினியைத் தொழுதுவருஞ் செயலால் சீவகாருண்யமற்று உயிருடன் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளை அக்கினியிலிட்டுச் சுட்டுத் தின்பதுடன் புருஷனற்ற விதவைகளையும் அவ்வக்கினியிற்போட்டுக் கொன்று வருகின்றார்கள். காரணங் கேட்டோமாயின் அவள் விதவையாகிவிட்டபடியால் அக்கினியாய தேவனிடம் ஒப்படைத்துவிட்டோமென்று கூறுவதுடன் அக்கினி அவியாதிருக்குமாறு சகல சுகதுக்க காரியாதிகளிலும் அக்கினியை வளர்த்துக் கொண்டே வருகின்றார்களென்று சொல்லிவரும்போது அரசன் திடுக்கிட்டெழுந்து, அஸ்வகோஷரை வணங்கி, யோகேந்திரா இவர்கள் நம்முடைய தேசத்தாரன்று. புருசீக தேசத்தோரென்பதும் சிலாலயங்களென்பதை சிவாலயங்களென்றதும், புலாலை யந்தரங்கத்தில் புசித்தலும், இஸ்திரீகளை அக்கினிக்கு இரையாக்குதலுமாகியச் செயல்களை விளக்க வேண்டுமென்று வணங்கினான். அவற்றை வினவிய அஸ்வகோஷர் அரசனைநோக்கி, நந்தா, எனக்கு காலதாமதமானாலுமாகட்டும் நீர் கேட்குஞ் சங்கைகளை நிவர்த்திச் செய்ய வேண்டியது முக்கியக் கடனாதலின் தெரிவிக்கின்றோமென்று கூறி இப்பிராமணவேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரன்று. புருசீக நாட்டாரென்று அறிந்துகொள்ள வேண்டுமாயின் உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்குத் திக்கிலுள்ள புருசீகநாட்டிற்கும் இருபத்தியேழுநாட் பிரயாணமிருக்கின்றது. அவ்விடஞ்சென்று இவர்களுடைய தேகநிறங்களையும், அவர்களுடைய தேகநிறங்களையும், இவர்களுடைய குணக்குறிகளையும், அவர்களுடைய குணக்குறிகளையும், இவர்களது சுராபான புலால் பேருண்டிகளையும், அவர்களது சுராபான புலாலின் பேருண்டிகளையும், இவர்களுடையப் பெண்களின் நாணமற்றச் செயலையும், அவர்களின் தந்திரோபாயங்களையும், இவர்கள் தங்களவர்களைமட்டும் பாதுகாத்துவருஞ் செயலையும், அவ்விடமுள்ளவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்குமட்டிலும் உபகாரஞ்செய்துக் கொண்டு ஏனையோர்களைக் கருணையின்றி விரட்டுங் கூற்றையும், இவர்களுடைய பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது, பெயரிட்டழைக்கும் சப்தங்களையும், அவ்விடத்தியப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது பெயரிட்டழைக்கும் உல்லாசங்களையும், இவர்களுடைய பெண்கள் ருது சூதகங் கண்டதுமுதல் எழுநாள் வரை வெளியிற் கிடப்பதும், அவ்விடத்தியப் பெண்கள் சூதகங்கண்ட ஏழுநாள் வெளியிற் கிடப்பதும், அந்தரங்கத்தில் இவர்கள் அக்கினியை வளர்த்துவருந் தந்திரங்களையும், அவ்விடத்தோர் அக்கினியைத் தொழுதுவருஞ் செயல்களையும் உமது கண்களால் நோக்குவீராயின் இவர்கள் யாவரும் நம்முடைய தேசத்தோரன்று, புறதேசத்தோரென்பது தெள்ளற விளங்கும். ஈதன்றி நம்முடைய தேசக் கட்டிடப் போக்குகளையும், அவர்களது தேசக் கட்டிடச் சாயல்களையுங் கண்டறியவேண்டுமாயின் புன்னாட்டிற்கு வடகிழக்கே இவர்களே கூடி ஓர் கட்டிடங் கட்டிவருகின்றார்கள். இதன் சாயலையும், அவ்விடத்திய கட்டிடத்தின் சாயலையுங் காண்பீராயின் இக் கட்டிடச்சாயலே அக்கட்டிடச் சாயலென்றும், இவர்களே அவர்களென்பதும், அவர்களே இவர்கள் என்பதும் தெள்ளற விளங்கிப்போவதுடன் இத்தேசப் பூர்வ பௌத்தர்களுக்கும் இவ்வேஷப்பிராமணர்களுக்கும் உள்ளத் தீராப்பகையினாலும் இவர்களைப் புறநாட்டாரென்றே துணிந்து கூறல் வேண்டுமென சொல்லிவருங்கால் அரசனெழுந்து அஸ்வகோஷரை வணங்கி, அறஹத்தோ, இத்தேசப்பௌத்தர்களுக்கும் இப்புருசீகர்களுக்கும் தீராப்பகை உண்டாயக் காரணமென்னை, மத்தியிலெவரும் அவற்றை நீக்காதச் செயலென்னை, அவைகளை விளக்கி யாட்கொள்ளவேண்டுமென்றடி பணிந்தான். அவற்றை வினவிய அஸ்வகோஷர் ஆனந்தமுற்று பகையுண்டாய தன் காரண காரியங்களை சுருக்கத்தில் விளக்க ஆரம்பித்தார். அரசே, சகல உற்பத்திக்குக் காரணமும் சகல தோற்றத்திற்கு மூலமும், சகல மறைவுக்கு ஆதாரமுமாயிருப்பது ஏதுக்களுக்குத் தக்க நிகழ்ச்சிகளேயாம். அத்தகைய நிகழ்ச்சியில் வானம் பெய்து பூமியிற் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்கிடாதிகளினின்று மட்சம், பட்சிகள் தோன்றி, மட்சம் பட்சிகளினின்று ஊர்வனத் தவழ்வன தோன்றி, ஊர்வனத் தவழ்வனத்தினின்று வானர விலங்காதிகள் தோன்றி, நரர் மக்களின்று புலன் தென்பட்ட தென்புலத்தார் தேவர் தோன்றி உலக சீர்திருத்தங்களைச் செய்துவருதலில் ஒவ்வொரு சீவராசிகளும் நாளுக்குநாள் மேலுக்குமேல் உயர்ந்து கொண்டே வருவதை அறியாது அவைகளைத் துன்பப்படுத்தியும், கொலைச் செய்தும் வருவதாயின் அவைகளின் மேன் நோக்க சுகங்களற்று மாளா துக்கத்தில் சுழல்வதன்றி அவைகளைத் துன்பஞ் செய்வோரும், கொலைச் செய்வோரும் மாளாப் பிறவியிற் சுழன்று தீராக்கவலையில் ஆழ்வரென்று பகவன் போதித்துள்ளபடியால் அம்மொழிகளை சிரமேற்றொழுகும் பௌத்த உபாசகர்கள் முன்னிலையில் இவ்வேஷப் பிராமணர்கள் ஆடுகளையும், மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டுக் கொன்றுத் தின்னுங் கொடூரச் செயல்களைக்கண்டு சகியாது இவர்களை மிலைச்சரென்றும், புலால் புசிக்கும் பிலையரென்றுங் கூறி பெளத்தவுபாசகர்கள் சேர்ந்து வாழும் சேரிகளுக்குள் இவர்களை வரவிடாது சாணச்சட்டியையுடைத்து அடித்துத் துரத்துவது ஓர் விரோதமாகும். இரண்டாவது விரோதமோவென்னில், பெளத்த உபாசகர்கள் பகவனது போதனையின்படி இராகத் துவேஷ மோகங்களை மீறவிடாது மிதாகாரம் புசித்து மாமிஷ பட்சணங்களை விலக்கியும், மதியை மயக்கும் சுராபானங்களை அகற்றியும் சுத்த சீலத்திலிருப்பவர்களாதலின் அவர்களது மத்தியில் இவ்வேஷப் பிராமணர்களாம் புருசீகர்கள் சுராபானமருந்தி மாமிஷங்களைப்புசித்து சுத்தசீலமற்று நாணாவொழுக்கத்திலிருப்பதுமன்றி சிற்றரசர்களையும் கனவான்களையும் அடுத்து இஸ்திரிகளும் புருஷர்களும் நாணமின்றி ஒரு காலைத் தூக்கி மறுகாலைத் தாழ்த்துவதும், மறுகாலைத் தூக்கி மற்றொருகாலைத் தாழ்த்தி கைகொட்டி ஆடுவதுமாகிய ஆரியக் கூத்தென்னுமோர் கூத்தாடி அவர்களை வசப்படுத்திக் கொள்ளுவதுடன் தங்கள் வேஷப்பிராமணக் காரியத்திலுங் கருத்தாயிருப்பதைக் காணும் பௌத்த உபாசகர்களுக்கு மனஞ்சகியாது இவ்வாரியக் கூத்தர்களாகிய மிலேச்சர்கள் இன்னுமித்தேசத்துள் பெருகிவிடுவார்களாயின் சுராபானமும் மாமிஷ பட்சணமும் பெருகி இத்தேச சுத்தசீலர்கள் யாவரும் அசுத்தசீலமுற்று நாணாவொழுக்கினராகி நாளுக்குநாள் அறிவு குன்றி நாசமடைவார்களே என்னுமோர் கருணையால் இவர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே ஓர் சாதனமாக வைத்துக்கொண்டார்கள். முன்றாவது விரோதமோ வென்னில், அறப்பள்ளிகளில் தங்கியிருக்கும் சமண முநிவர்கள் தங்களைத் தாங்களே ஆராயும் சாதனங்களில் இராகத் துவேஷ மோகங்களை அகற்றி சாந்தம், ஈகை, அன்பு இவைகளைப் பெருக்கி தங்கள் ஆவியும், மனமும் லயப்படும் நிலைக்கு ஆலயமென வழங்கிவந்தார்கள். அம்மொழியின் உச்சரிப்பும் அதனந்தரார்த்தமும் இவ்வேஷப் பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது. ஆலயமென உபாசகர்களால் வழங்குமொழியைக் கற்றுக்கொண்டு தங்களால் கற்சிலைகளடித்துத் தொழுதுவருமிடத்திற்குச் சிலையாலயமென வழங்கி அவற்றிற்குத் தேங்காய், அவுல், கடலை, வாழைப்பழம், தட்சணை, தாம்பூல முதலியவைகளைக் கொண்டுவரச்செய்து, சிலைகள் முன்னிலையில் வைத்துத் தொழுதுக் கொள்ளுவீர்களாயின் நீங்கள் கோரியவைகள் யாவுங் கிட்டும், கண்டுள்ள வியாதிகளும் நீங்கும். புத்திரசம்பத்து உண்டாவதுடன் தானிய சம்பத்தும் தன சம்பத்தும் பெருகி பிறவியின் துக்கங்களற்று சுகம் பெருவீர்களென்னும் பொய்யைச் சொல்லி பொருள் பறித்தும் அச்சிலைகளையே மெய்ப்பொருளென்று நம்புதற்கு காந்தங்களைப் புதைத்து இரும்புத் தட்டுக்களை இழுக்கச்செய்து தொள்ளாந்தரங்கட்டி இனிப்புள்ள ரசங்களை வடியச்செய்து அதுவே தேவாமிர்தமென்றுங்கூறி வஞ்சித்ததினால் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற அரசர்களும் வேஷப் பிராமணர்களாம் பொய்க் குருக்களின் போதகங்களை மெய்க்குருக்கள் போதகங்களென்றெண்ணி தங்களுடைய கைத்தொழில்விருத்திகளையும், பூமியின் தானியவிருத்திகளையும், கலை நூல் விருத்திகளையும், நீதி நூல் விருத்திகளையும் மறந்து கல்லைத் தொழுவதால் கைத்தொழில் விருத்தி பெறலாமென்றும், கல்லைத்தொழலால் தானியவிருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழலால் கலைநூல் விருத்திப் பெறலாமென்றும், கல்லைத்தொழலால் ஞான நூல்விருத்திப் பெறலாமென்றும், கல்லைத்தொழலால் நீதிநெறி நூலில் விருத்திப் பெறலாமென்றுங் கருதி தங்களது சுயமுயற்சிகளை விடுத்து சோம்பேறிகளாகி சகலசுகங்களும் கற்சிலைகளால் கிடைக்குமென்றெண்ணி, கற்சிலைகளையும், மண் சிலைகளையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக் கொண்டாடி அஞ்ஞானத்தில் ஆழ்ந்து முழு மூகைகளாகுவதை பெளத்த உபாசகர்கள் கண்டு மனஞ்சகியாது சகல குடிகளுக்கும் தெய்வமென்னும் மொழியின் சிறப்பையும், அதன் செயலையும் நன்கு விளக்கிவருவதுமன்றி கற்சிலைகளையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக்கருதி நாளுக்குநாள் கேட்டை விளைத்து நாசடையும் விவரங்களையும் விளக்கி வந்தார்கள். அதாவது ஒவ்வோர் மநுக்களும் தங்கள் தங்கள் அறிவுக்குத் தக்கவாறு வேளாளத் தொழிலிலும், வாணிபத்தொழிலிலும், அரசத் தொழிலிலும், அந்தணத் தொழிலிலும் முயலாமல் கற்சிலைகளிடத்தும் மரச்சிலைகளிடத்துஞ் சென்று வணங்கி தங்கள் செல்வக்குறைகளை நீக்கவேண்டுமென்றும், தேக உபத்திரவங்களைப் நோக்கவேண்டுமென்றும், கற்சிலைகளிடத்தில் முறையிட்டு தீர்த்துக்கொள்ளவேண்டுமென்னுங் கருத்தால் தங்கள் சுயமுயற்சிகளையும், கைத்தொழில்களையும் விடுத்து கற்சிலைகள் தங்கள் துக்கங்களைப் போக்கி விடுமென்றெண்ணி அதனிடஞ்சென்று விழுந்து விழுந்து தொழுதுவரும் வழக்கம் பெருகிவருகிறபடியால் கவலையொன்னுங் குப்பை மேலும் மேலுஞ் சேர்ந்து துக்கவிருத்தி அதிகரிப்பதினால் அறிவு மயங்கி சுயமுயற்சிகள் யாவுங் கெட்டு தாங்கள் செய்துள்ள தீவினைகளை நீக்குவதற்கு கற்சிலைகள் ஆதரவாய் இருக்கின்றதென்றெண்ணி தினேதினே தீவினைக்குள்ளாகிப் பாழடைவார்கள் என்னும் பரிதாபத்தால் சிலையைக்காட்டி சீவனஞ்செய்துவரும் பொய்க் குருக்களையும் அவர்கள் போதனைக்குட்பட்டு பாழடைந்துவரும் பேதை மக்களையுங் கண்டித்துவருவதும் விரோதத்திற்கு ஓர் ஏதுவாயிற்று. காமியமுற்ற சிற்றரசர்கள் முன்னிலையிலும் மற்றுங் கல்வியற்றக்குடிகள் முன்னியிலும் ஆரியக்கூத்தாடி காரியத்தின் பேரில் கண்ணோக்கம் உடையவர்களாயுமுள்ள மிலேச்சர்களின் வெண்தேகமும் நாகரீக உடையும் சகடபாஷா சுலோகங்களும் இத்தேசத்தோரை மயக்கி அவர்கள் சீவனோபாயத்திற்காகப் பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள்பறிக்கும் வழிகள் யாவையும் இத்தேசக் குடிகள் மெய்யென நம்பி மோசம் போய் விட்டார்கள். அவர்களுள் பெளத்ததன்ம போதங்களும் அவைகளின் செயல்களும் வியாரங்களில் தங்கியுள்ள ஞானகுருக்களாம் சமணமுநிவர்களுக்கும், கன்ம குருக்களாம் சாக்கையர்களுக்கும் விளங்குமேயன்றி வேறொருவருக்கும் அதனந்தரார்த்தம் விளங்கவேமாட்டாது. அவ்வகை விளங்காக் குடிகள் யாவரும் இம்மிலேச்சர்களின் பொய்ப்போதகங்களுக்குட்பட்டு வருகின்றார்கள். மற்றும் இவ்வாரியக் கூத்தரின் பொய்ப்போதகங்களையும் இம்மிலேச்சர்களின் நாணாவொழுக்கங்களையும் விளக்கி அறிவுறுத்திவந்த பெளத்தசங்கத்தோர்களுக்கும் வேஷப் பிராமணர்களாம் பொய்க் குருக்களுக்கும் மாளாவிரோதம் பெருகி புருசீகர்களைக்காணும் இடங்களிலெல்லாம் பௌத்தர்களைத் துரத்தவும், பௌத்தர்களைக் கண்டவுடன் ஓடுவதும் வழக்கமாயிருந்தது. பௌத்தர்கள் புருசீகர்களை அடித்துத் துரத்துவதும் அவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய் போதகங்களையும் விளக்கும்படியானவர்களாய் இருக்கின்றார்களன்றி புருசீகர்களைக் கெடுக்காமலும் துன்புற்றுந் துன்பப்படுத்தாமலும் புத்திப்புகட்டி வருகின்றார்கள். ஆரியர்களாம் மிலேச்சர்களோவெனில் தங்கள் வசப்பட்டுள்ள சிற்றரசர்களைக்கொண்டு சமணமுனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கழுவிலுங் கற்காணங்களிலுமிட்டு வதைக்கத்தக்க ஏதுக்களைத்தேடி அறப்பள்ளிகளை விட்டகற்றியும் தன்மநூற்களைக் கொளுத்தியும் சத்திய சங்கத்தையும், சத்தியதன்மத்தையும் பாழ்படுத்திவந்ததன்றி இத்தேயத்தோர் வழங்கிவந்த தொழிற்பெயர்களில் சிலதை சாதிப்பெயர்களாக மாற்றி அதிற்றங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென ஏற்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குட்படாது பராயர்களாயிருந்தவர்களும் தங்கள் பொய்க்குருக்கள் வேஷங்களையும் தங்கள் பொய்ப்போதகங்களையும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பறைந்துவந்த பௌத்த விவேகிகளைத் தாழ்ந்தசாதி, பராயர்கள், பறைபவர்களென்று கூறி தற்காலம் பறையர், பறையரென வழங்கி, பௌத்தர்களைக் கண்டவுடன் அவர்களது அடிக்கும் உதைக்கும் பயந்தோடும் புருசீகர்களை அவர்களைச் சார்ந்தக் குடிகள் ஏன் ஓடுகின்றீர்களென்று கேட்பார்களாயின் அடிக்கு பயந்தோடுவதைச் சொல்லாமல் அவர்கள் தாழ்ந்த சாதி பறையர்கள், அவர்கள் எங்களைத் தீண்டலாகாது, நாங்களவர்களைத் தீண்டலாகாதென்றும் பெரும் பொய்யைச்சொல்லி, பௌத்தர்களைப் பாழ்படுத்தி அவர்களது சத்திய தன்மங்களையும் மாறுபடுத்திக் கொண்டுவருகின்றார்கள். அதாவது புத்தபிரானால் ஆதியிற் போதிக்கப்பட்ட திரிபீடங்களாம் முதநூலுக்கு வழிநூற்களும் சார்புநூற்களும் இயற்றினவர்கள், பிரிதிவு, அப்பு, தேயு, வாயுவென்னும் நான்கு பூதங்களே முக்கியமானவைகள் என்றும், வெளியவை நான்கு பூதங்களுந் தோற்றுதற்கிடமென்றும், அப்பூதங்களுக்கு வடமொழியில் பிரிதிவு - பிரம மென்றும், தென்மொழியில் நிலம், மண், பூமி - என்றும் வடமொழியில் வாயு மயேசம் என்றும் தென்மொழியில் காற்று, மாயுலவி என்றும் வடமொழியில் ஆகாயம், சதாசிவமென்றும், தென்மொழியில் வெளி, மன்றுள் என்றும் பெயர்களைக் கொடுத்துள்ளது மன்றி தோன்றும் பொருட்களின் தோற்றத்திற்கு எக்காலுமுள்ளது பூமியாதலின் அவற்றுள்தாழ்ந்திருக்கும் நிலையை கீழ் அக்கு, கிழக்கென்றும், உயர்ந்து நிற்கும் நிலையை மேல் அக்கு, மேற்க்கென்றும், கண்ணுக்கு எட்டியவரையில் போய் பார்க்கக்கூடிய நிலையை தென் அக்கு தெற்க்கு என்றும் கண்ணுக்கு எட்டியவரைப் போய் பார்க்கக்கூடாத பூமியை வூடா அக்கு வடக்கென்று நான்கு திக்குகளை வகுத்ததுமன்றி, நீராகிய ஜலத்திற்கு நெகிழ்வு, குளிர்ச்சி, வெண்ணிறமாகிய முக்குணங்களும், நெருப்பாகிய அக்கினிக்கு சுடுகை, சிவப்பு, புடைப்பாகிய முக்குணங்களும், வாயுவாகிய காற்றுக்கு மோதல், ஆதலாகிய இரு குணங்களும், வெளியாகிய ஆகாசத்திற்கு சருவசீவப் பிராணிகளின் சுவாசத்திற்குள்ள வூட்டல், தேட்டலாகிய இரு குணங்களும், என்றும் நிலையாயுள்ள நிலத்திற்கு யாதொரு குணமுமின்றி உருவத்தோற்றங்களுக்கும் ஆதரவாயிருந்து மோனநிலை கொண்டிருக்கின்றபடியால் பிரமம் இரணிய கருப்பமென்றும் நீராகிய ஜலமானது பூமியின்கீழும் ஆகாயத்திலும் மத்தியிலும் கருப்பையைப்போல் சூழ்ந்து வட்டமிட்டிருக் கின்றபடியால் மால்-நாராயணமென்றும், நெருப்பாகிய அக்கினியானது முகத்தணுகிப் பார்க்கக்கூடாத சுவாலையைப் பெற்றிருக்கிறபடியால் ருத்திரம் அனலவமென்றும், வாயுவாகியக் காற்றானது சகல பிராணிகளின் சுவாசாதாரமா யிருக்கின்றபடியால் மயேஸ்வரம், துருத்தி என்றும், வெளியாகிய விசும்பானது சகல பூதங்களையும் நிறப்பி விளிப்பதற்கு இடங்கொண்டிருக்கின்றபடியால் சதாசிவம் பெருவெளியென்றும் அதனதன் குணத்திற்கும் செயலுக்கும் நிறத்திற்குத் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். பௌத்த மடங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களால் பூதங்களுக்கு இத்தகையப் பலப்பெயர்களைக் கொடுத்திருந்ததுமன்றி நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவும் பூமியிற் தோன்றியுள்ள சீவராசிகளிடத்து யாதொரு பலனையுங் கருதாது தாங்களே சகல பலன்களையும் கொடுத்துவருகின்றபடியால் அப்பூதங்கள் யாவற்றையும் தெய்வப்பெயரில் சேர்த்து வரைந்து வைத்துள்ளதுமன்றி வழங்கியும் வருகின்றார்கள். இத்தகையக் காரணக் காரியப் பெயர்களின் விவரங்கள் இப்புரு சீகர்களாகும் வேஷப்பிராமணர்களுக்குத் தெரியாதிருப்பினும் மிக்கத் தெரிந்தவர்கள்போல் அபிநயித்து பூதங்களுக்கென்று வைத்துள்ள தேவர்களென்னும் பெயர்களில், நெருப்புக்கு வைத்துள்ள ருத்திரமென்னும் பெயரை ருத்திரனென்னும் ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு ருத்திரியென்னும் ஓர் பெண் சாதியும், நீருக்கு வைத்துள்ள நாராயணமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு சிவணியென்னும் பெண்சாதியும், மண்ணுக்குக் கொடுத்துள்ள பிரமமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு பிரம்மணியென்னும் பெண்சாதியும் ஏற்படுத்தி கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் போதித்து இத்தேவர்களை வணங்கிவருவீர்களாயின் தனசம்பத்து, தானிய சம்பத்து, புத்திர சம்பத்து, பெற்று வாழ்வீர்களென மயக்கி சிலா வணக்கங்களைப் பெருக்கிக்கொண்டே வரவும் அவற்றைக் காணும் பெளத்த உபாசகர்களுக்கு மனஞ்சகியாது மிலேச்சராம் ஆரியர்களை அடித்துத் துரத்தவுமுள்ளச் செய்கைகளே இருவகுப்பாரையும் பெரும்விரோதத்துக் குள்ளாக்கிவருகின்றது. ஆரியராகிய மிலேச்சர்கள் பிராமணவேஷ மணிந்து பௌத்தர்களுக்குள்ள யதார்த்தபிராமணர்களது மகத்துவங்களைக் கெடுக்கவும், அதன் சாதன சிறப்புகளை அழிக்கவும், அவர்களது தன்மசாஸ்திரங்களைக் கொளுத்தி தங்களது அதன்மசாஸ்திரங்களைப் போதிக்கவும், பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் கீழ்ச்சாதி மேற்சாதியென்று மாற்றியும், பௌத்தர்களின் ஞானச்செயல்கள் யாவையும் அஞ்ஞானச்செயல்களாக்கியும், ஒற்றுமெயுற்று வாழ்ந்துவருங் குடிகளை சாதிபேதமென்னும் பொய்யாகிய கட்டுப்பாடுகளினால் ஒற்றுமெய்க் கெடச் செய்து புத்தியிலும், யீகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்து சதா உழைப்பிலும், நிதா சுறுசுறுப்பிலும் மிகுத்தக் குடிகளை, கல்லுகளையுங் கட்டைகளையும் தெய்வமெனத் தொழுது கடைச்சோம்பேறிகளாக விடுத்துவருவதைக் கண்ணுற்றுவரும் பௌத்ததன்ம விவேகிகள் புருசீக தேசத்தோர் பொய்வேஷங்களினாலும், பொய்ப் போதகங்களினாலும் இந்திரதேசக் குடிகள் சீரழிவதையும் இன்னும் மேலும் மேலும் சீரழிந்துவருவதையுங் கண்டு மனஞ்சகியாது இம்மிலேச்சர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே பெளத்ததர்மக் கூட்டத்துள் விவேகமிகுத்தவர்களின் செயலாயிருக்கின்றது. இவ்வாரியரென்னும் மிலேச்சர்களோ தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குப் பராயரானவர்களும், எதிரடையானவர்களும், பொய் வேஷங்களை சகலருக்கும் பறைகிறவர்களுமான பெளத்ததன்ம விவேகிகளைத்தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை அடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசிக்கத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்களது பொய்பிராமணவேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுபெறச் செய்துவருகின்றவர்கள் உம்மெயும் உமது அரசாட்சியையும், உமது தேசக் குடிகளையுந் தங்களது பொய்வேஷங்களால் வசப்படுத்திக்கொண்டு பெளத்த தன்மங்களை அழிப்பதுடன் பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனத் தாழ்த்திப் பாழ்ப்படுத்துவதற்கு வந்திருக்கின்றார்கள். நீவிர் இவர்களது பொய்வேஷங்களுக்கும், பொய்ப்போதகங்களுக்கும் உட்படாது விசாரிணையில் ஏற்பட்டதுபோல் மற்றய இத்தேச அரசர்களும் விசாரிணையால் தெளிந்திருப்பார்களாயின் நெடுங்காலங்களுக்கு முன்பே இப்பிராமண வேஷத்தை விடுத்து தங்கள் சுயதேசத்திற்போய் சேர்ந்திருப்பார்கள். தங்களைப்போன்ற இத்தகைய விசாரிணை யிராது மற்றுமுள்ள அரசர்கள் இப்புருசீகரது ஆரியக் கூத்திற்கும் பிராமண வேஷத்திற்கும் உட்பட்டு அவர்களது போதனைகளை நம்பி மோசம் போனபடியால் பலதேசங்களிலுமுள்ள பெளத்த தன்மங்களும் அழிந்து பௌத்தர்களுந் தாழ்ந்த சாதிப் பறையர்களென நிலைகுலைந்து வருகின்றார்கள். தாங்கள் இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் நம்பாது அவர்களையும் விரோதித்துக் கொள்ளாது யாசகமாகக் கேழ்க்கும் பொருட்களை ஏதேனு மீய்ந்து உமது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும்படியான ஏதுவைத்தேட வேண்டியது. அங்ஙனமின்றி விஷப்பூச்சுகளை அடிமடியிற் கட்டிவைத்திருப்பது போல் இம்மிலேச்சர்களை உமது நாட்டிற் குடிக்கொள்ளவைத்து விடுவீராயின் அவர்கள் பொய்யைச் சொல்லி வஞ்சிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் நீர் பொருளளித்து போஷித்துவருவீராயின் தங்களையுத் தங்களரசையும் மிக்கக் கொண்டாடி பொருள் சம்பாதிக்கும் ஏதுவில் நிற்பார்கள். அவ்வகைப் பொருளளிக்காமலும் அவர்களை மதியாமலும் அவர்கள் வார்த்தைகளை நம்பாமலும் இருந்து விடுவீராயின் எவ்விதத் தந்திரத்தினாலும் உமதரசைப் பாழ்படுத்தி உம்மெயுங்கெடுத்து ஊரைவிட்டோட்டும் வழியைத் தேடிவிடுவார்கள். இவ்வகையாகவே சிற்சில அரசர்களைக் கொன்றும் பௌத்ததன்மப் பள்ளிகளில் சிலதை அழித்தும், சில அறப்பள்ளிகளை மாறுபடுத்தியும் அவ்விடமிருந்த சமணமுநிவர்களையும் அகலவைத்து பொருள்வரவுள்ள இடங்களில் தாங்கள் நிலைத்தும் பொருள்வரவில்லாப் பள்ளிகளை நாசப்படுத்தியும் வந்திருக்கின்றார்களென மிலேச்சர்களின் பொய்க்குரு வேஷங்களையும், வஞ்சகக்கூத்துகளையும், கருணையற்ற செயல்களையும், நாணமற்ற உலாவலையும் நந்தனுக்கு விளக்கிக்காட்டிவிட்டு அஸ்வகோஷர் பெளத்தபீட பொதியையைச் சேர்ந்தவுடன் நந்தன் தனது வேவுகர்களைத் தருவித்து சிந்தூரல் நதியின் குறிப்பும், புருசீக நாட்டின் எல்லையும் எவ்விடம் இருக்கின்றதென்றும், எவ்வழியேகில் சுருக்கமாகக் கண்டுபிடிக்கலாமென்றும் தெரிந்துவரும் படி ஆக்கியாபித்ததின்பேரில் வேவுகர்கள் சென்றிருப்பதை மிலேச்சர்களாம் ஆரியர்களறிந்து ஒ, ஓ, ஏது நம்முடையதேசத்திற்குச் சென்று அவ்விடமுள்ளவர்களால் நமது மித்திரபேதங்களை அறிந்து இவ்விடமுள்ள சிற்றரசர்களெல்லோருக்கும் தெரிவித்து விடுவார்களானால் நம்முடைய பிராமண வேஷத்திற்கு பங்கமுண்டாமென்றெண்ணி, நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரைக்காத வழியிலுள்ள ஓர்க்காட்டில் மண்மேட்டை தகர்த்து அதன் மத்தியில் கற்றூண்கள் அமைத்துப் பழயக் கட்டிடம் உள்ளதுபோற்பரப்பி மத்தியில் சிதம்பச் சூத்திரம் நாட்டிவிட்டு ஒன்றுமறியாதவர்கள்போல் அரசனிடம் ஓடிவந்து அரசே நாங்கள் ஏதோ இத்தேசத்தில் பிராமணவேஷமணிந்து சிலாலயங்களைக் கட்டி குடிகளுக்குப் பொய்யைச் சொல்லி பொருள்பறித்துத் தின்பதாய் ஓர் பெரியவர் சொல்லிக்கொண்டுவந்த வார்த்தைகளைத் தாங்கள் எவ்வளவும் நம்பவேண்டாமென்று கோருகிறோம். காரணம் யாதென்பீரேல் தங்கள் அரண்மனைக்கு மேற்க்கே வோர்க் காட்டிலுள்ள மண்மேட்டை வெட்டி வீடு கட்டுவதற்காக மண்ணெடுக்கும்போது அதனுள் சில கற்றளங்கள் தோற்றப்பட்டன. அதை முற்றிலும் பரித்து சோதிக்குமளவில் பழயக் கட்டிடங்களும் அதனுட் கற்சிலைகளும் அமைக்கப்பெற்றிருப்பதை அறிந்த யாங்கள் அதிசயமுற்று தங்களுக்குத் தெரிவிக்கவந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு நம்முடைய தேசத்துள்ளும் சிலாலயங்கள் இருக்கின்றதாவென்று ஆச்சரியமுடையவனாய் வேவுகர்களை அழைத்து பரிக்கு சேணமிட்டு வரச்செய்து அதன்மீதேறி புருசீகர்களையும் அழைத்துக்கொண்டு காட்டிலுள்ள மண்மேட்டை அணுகி கல்லுகள் விழுந்துகிடக்கும் இடத்தில் இறங்கி சற்று நிதானித்து அரசனாகையால் துணிகரமுண்டாகி அருகிற்சென்று சூத்திரப் பாவையிற் கால்களை வைத்தவுடன் திடீலென்று கல்லுக்குக்கல் மோதவும், நந்தனது தலைக் கீழாகவும், கால்மேலாகவும் நசிய சிதம்பித்துக் கொன்றுவிட்டது. உடனே வஞ்சநெஞ்சமிலேச்சர்களாகிய ஆரியர்கள் ஊருக்கு சென்று குடிகளெல்லோரையுங்ககூவி, பார்த்தீர்களா, நந்தன் எவ்வளவு பக்தி உடையவனாயிருந்தான், சுவாமி அவன்மீது மிக்கப் பிரீதியுடையவராகி விழுங்கிவிட்டார்; பாதங்கள்மட்டிலுந் தெரிகிறதென்று காண்பித்தவுடன் ஒவ்வொருவரும் பயந்து தூர விலகிநிற்குங்கால் அறப்பள்ளிகளாம் மடங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களும், மற்றுமுள்ளோரும் அவ்விடம் ஓடிவந்து பார்த்து ஆ! ஆ! இம்மிலேச்சர்களாகிய ஆரியர் சிதம்பக்கல்லை நாட்டி நந்தனைக் கொன்றுவிட்டார்களென்றறிந்து துக்கிக்குங்கால், புருசீகர்கள் நந்தனை சுவாமி விழுங்கிவிட்டார், விழுங்கிவிட்டா ரென்று கொண்டாடி குதிப்பதை யறிந்த வுபாசகர்களுக்குக் கோபமீண்டு பலவாரடித்து சிலரைக் கொன்றது போக மீதமுள்ளோர் தங்களுடையப் பொய் வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் மெய்யென நம்பி மோசம் போயுள்ள தஞ்சை வாணோவென்னும் அரசனை அணுகி அவனிடம் பெரும் பொய்யைச் சொல்ல ஆரம்பித்துக் கொண்டார்கள். அவை யாதெனில், அரசே யாங்கள் சிலகாலத்திற்கு முன்பு தங்களுடைய நாட்டிற்கு வடகிழக்கே அரசாண்டுவந்த நந்தனென்னும் அரசனை யடுத்து அவருடைய பூமியிலுள்ள ஓர் மண்மேட்டை வெட்டும்போது பழய ஆலயமொன்று காணப்பட்டது. அவற்றை முற்றிலுஞ் சோதித்து அரசனிடம் சென்று தெரிவித்ததினால் அவரும் மிகுந்த ஆவலுடன் வந்து ஆலயத்துள் நுழைந்து சுவாமி தெரிசனஞ்செய்து ஆனந்தமாக நிற்குங்கால் சுவாமிக்கு அவர்மீது மிக்க அன்புண்டாகி தாங்களெல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரை அடுத்து விழுங்கிவிட்டார். அச்சங்கதிகளைக் குடிகளுக்குத் தெரிவித்ததின் பேரில் அவர்களும் ஆனந்தமாக வந்து சுவாமியை தியானித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில் பறையர்களென்னுந் தாழ்ந்த சாதி கூட்டத்தோர் நந்தனுடைய தேசத்தை அபகரித்துக்கொள்ள வேண்டுமென்னும் ஆசையால் அரசனை அடுத்திருந்த பிராமணர்களாகிய எங்களை அடித்துத் துரத்திக் கொண்டுவருகின்றார்கள். காரணம் யாதெனில், அத்தேசம் நீர்வளம், நிலவளம் நிறைந்த விசேஷித்த நஞ்சைபூமிகளுள்ளதும், சுவாமி ஆவாகனஞ் செய்துகொண்ட நந்தனுக்கு வேறு சந்ததிக ளில்லாததுமே காரணமாகும். அது கண்டு இந்த பறையர்களெல்லோரும் ஒன்றுகூடி தங்களை மடாதிபர்களென்று சொல்லிக் கொண்டு குடிகளை மாற்றி அரசன் மனைவியைக் கைப்பற்றிக்கொள்ளும்படி ஆரம்பித்துவிட்டார்கள். ஆதலின் தாங்கள் தாமதமில்லாமல் எழுந்து சொற்பசேனைகளுடன் வந்து பறையர்களின் கூட்டத்தை அவ்விடம் விட்டுத்துரத்தி, தேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கோளென்று கூறியதை அரசன் கேட்டு நீர்வளம் நிறைந்த பூமியை அபகரிக்கவேண்டுமென்னும் ஆசையால் காலாட் படை வீரர்களிற் சிலரை யழைத்துக்கொண்டு புருசீகருடன் சென்று நந்தன் அரண்மனையைக் கைப்பற்றி முற்றுகையிட்டு தன் இளவல் இலட்சுமணரெளவிடம் ஒப்பவித்து ஆளுகை செலுத்திவரும்படிச் செய்து தனது தேசத்திற்குப் போய்விட்டான். மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமண வேஷம் அணிந்துகொண்டபோது மராஷ்டகர்களுக்குள்ளும், பிராமணவேஷம் அணிந்துக்கொண்டவர்களிருக்கின்ற படியால் அப்பாஷைக்குரிய இலட்சுமணரெள அரசுபுரிகிறதை அறிந்து அவர்கள் வந்துவிடுவார்களாயின் நமக்கு யாதோர் அதிகாரமும் இல்லாமற் போய்விடும் என்றெண்ணி தம்மெச்சார்ந்த புருசீகர்கள் யாவரையும் இவ்விடந் தருவித்துக்கொண்டு நந்தனைச் சிதம்பித்த இடத்தை ஆலயமெனக் கட்டி அதனைச்சுற்றிலுங் குடியிருக்கத்தக்க வீடுகளைக் கட்டிக்கொண்டு அதன் புறம்பிலுள்ள பூமிகளைப் பண்படுத்திக் கோவிலைச்சார்ந்ததென்று ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பிராமண வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் விளங்கப் போதித்து அடித்துத் துரத்திவரும் பௌத்தர்களின் பயமில்லாமல் வாழலாம். அங்ஙன மிராது அஜாக்கிரதையி லிருந்துவிடுவோமாயின் நம்முடைய வேஷத்தை சகலரும் அறிந்துக்கொள்ளுவார்களென்று ஒருவருக்கொருவர் கலந்து தங்கள் சுற்றத்தோர்களில் பெருங்கூட்டத்தோர்களை அவ்விடம் வருவித்துக்கொண்டு இலட்சுமண ரெளவென்னும் அரசனால் தங்களுக்கு வேண்டிய இல்லங்களைக் கட்டிக்கொண்டதுமன்றி வேண்டிய பூமிகளையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கை சுகத்திலிருந்தார்கள். அக்காலத்தில் தங்கள் பூமிகளை சீர்திருத்தி பயிர்செய்வதற்கு அரசனைச் சார்ந்த மராஷ்டக பாஷைக்குடிகளைச் சேர்த்துக் கொண்டால் தங்களுக்கடங்கி ஏவல் செய்யமாட்டார்களென்றுகருதி திராவிட பாஷையில் கல்வியற்றவர்களும், சீலமற்றவர்களுமாய் இல்லமின்றி காடே சஞ்சாரிகளாக மலையடிவாரங்களில் திரிந்திருக்கும் சிலக் குடிகளைக் கொண்டுவந்து தங்கள் பண்ணை வேலையில் அமர்த்தி வேண்டிய ஏவலை வாங்கிக்கொள்ளுவதுமன்றி மற்றுமோர் பேரிழிவையும் சுமத்திவிட்டார்கள். அவை யாதெனில், மராஷ்டகக் குடிகள் உங்களை யாரென்று கேட்பார்களாகில் நாங்கள் பறையர்கள், பறையர்க \ளென்று துணிந்து கூறுங்கள். அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமென்று கூறிய மிலேச்சர்களின் வார்த்தையை கல்வியற்றக்குடிகள் பேரிழிவென்று அறியாமலும் இழி பெயரென்றுணராமலும் மராஷ்டக் குடிகள் நீங்கள் யாவரென்றுக் கேட்குங்கால் பறையர் பறையரென்றே பறைய ஆரம்பித்துக் கொண்டார்கள். அதன் காரணம் யாதெனில், பௌத்தர்களுக்குள் விவேகிகளும், வருங்காலம் போங்காலங்களை அறிந்துக்கொள்ளக்கூடிய மந்திரவாதி களானோர் மிலேச்சர்களாம் ஆரியர்களை அடித்துத் துரத்தி பௌத்தக்குடிகள் யாவருக்குமிவர்கள் வேஷவிவரங்களைப் பறைவதினால் பறையரென்றும், தாழ்ந்த சாதியென்றுங்கூறி இழிவுபடுத்தி வருவதை அவர்கள் ஒப்புக்கொள்ளாதுக் கண்டித்தும் வருகிறபடியால் அப்பறையனென்னும் பெயரைப் பட்சிகளைக் கொண்டும், மிருகங்களைக் கொண்டும் பரவச்செய்வதுடன் மக்கள் வாக்காலும் பரவச்செய்ய வேண்டுமென்னுங் கெட்ட எண்ணத்தினால் கல்வியற்றவர்களும், தங்கயில்லமற்றவர்களும், செல்வமற்றவர்களுமாகி காடேசஞ்சாரமும் மலையேசஞ்சாரமுமாயுள்ள ஏழைக்குடிகளைக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பறையர்களெனப் பறையும் வழியைத் தேடிக்கொண்டார்கள். அதற்குதவியாக பௌத்தர்களால் தங்களது ஞானசாதனங்களில் தங்களுக்குள் காண்பான் காட்சியென்றும், ஆண்டான் அடிமையென்றும் சாதித்து வந்த மொழிகளின் அந்தரார்த்தம் இம்மிலேச்சர்களுக்குத் தெரியாதிருப்பினும் அம்மொழிகளையே பேராதரவாகக் கொண்டு தங்களை ஆண்டைகளென்றும் தங்கள் பண்ணை வேலைச் செய்யும் ஏழைக்குடிகளை அடிமைகளென்றும் வகுத்துக்கொண்டதுமன்றி வழங்குதலிலும் ஆரம்பித்துக் கொண்டதுடன், இவர்களைக்கொண்டே சமணமுநிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அத்தேசத்தைவிட்டு துரத்தும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். மிலேச்சர்களாகிய ஆரியர்கள் அவ்வகைப் போதிக்கினும் திராவிடபாஷை ஏழைக்குடிகள் பூர்வபக்திக்கொண்டு சமணமுநிவர்கள்பால் நெருங்காமலும், அவர்களைத் துரத்தாமலும் தூரவே விலகி நின்றுவிட்டார்கள். அவற்றைக் கண்டபுருசீகர்கள் ஓ! ஓ! இவர்கள் சுயபாஷைக் குடிகளாதலால் பூர்வ பயங்கரத்தை மனதில் வைத்து நெருங்காமலிருக்கின்றார்கள் என்றறிந்து திராவிடக் குடிகளை சமண முனிவர்கள்பாலே வர விடாது மராஷ்டகக் குடிகளில் கல்வியற்ற காலாட்சேனையாரை அடுத்து இத்தேசத்தில் மஞ்சட் காவிதுணியை யணிந்து கையில் ஓடேந்தி பிச்சையிரந்துண்ணுங் கருத்த தேகிகள் களவுசெய்வதில் மிக்க சாமார்த்தியமுடையவர்கள். அவர்களை மட்டிலும் இத்தேசத்தில் தங்கியிருக்கும் படி செய்துக் கொள்ளுவீர்களாயின் உங்கள் காவல்காப்பில் விழித்துக் கொண்டிருப்பதுமல்லாமல் அரசனது கோபத்திற்கும் உள்ளாகிவிடுவீர்கள். ஆதலால்வர்களை இத்தேசத்தில் நிலைக்கவிடாது ஓட்டிவிடுவீர்களாயின் சுகம் பெறுவீர்கள். அவ்வகை துரத்தாமல் விட்டுவிடுவீர்களாயின் நீங்களே துன்பப்படுவீர்களென்று கூறிய மொழியை மராஷ்டர்கள் மெய்யென்று நம்பி சமணமுனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பலவகைத் துன்பப்படுத்தி அறப்பள்ளிகளை விட்டகற்றியதுமன்றி மற்றும் வருத்துப் போக்கிலுள்ள சமணமுனிவர்களையும் அவ்வழிப் போகவிடாமல் தடுத்துப் பாழ்படுத்தி வந்தார்கள். விவேகமிகுத்த அரசர்களின் ஆதரவில்லாமல் சமணமுனிவர்களும் விவேக மிகுத்த உபாசகர்களும் பறையர், பறையரென நிலைகுலைந்து பல தேசங்களுக்குச் சென்று சோதிடம், வைத்தியம், விவசாயம் முதலியவற்றால் சீவித்து அக்கஷ்டத்திலும் உலக உபகாரிகளாகவே விளங்கினார்கள். மிலேச்சர்களோ நந்தனை சிதம்பித்துக் கொன்றவிடத்தைச்சுற்றிலும் வீடுகளைக் காட்டிக்கொண்டு அவற்றிற்குப் புறம்பேயுள்ள பூமிகளைப் பண்படுத்தி தங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துவருங்கால் மராஷ்டக பாஷையில் பிராமணவேஷ மணிந்துள்ளவர்களறிந்து தங்களது சுய பாஷைக்குரிய அரசனாகிய இலட்சுமணரௌவை அடுக்கவேண்டுமென்றெண்ணி ஒவ்வொருவராக வந்து சேருவதற்கு ஆரம்பித்துக்கொண்டார்கள். அவர்களைக் கண்ட முதல் வேஷப்பிராமணர்களாகிய புருசீகர்களுக்கு அச்சமுண்டாகி ஓ! ஓ! ஏது நம்முடைய வீடுகளுக்கும், பூமிகளுக்கும் மோசம் நேரிடும் போலிருக்கின்றது. மராஷ்டக்குடிகளோ நம்மெய்ப்போன்ற பிராமண வேஷ மணிந்திருக்கின்றார்கள் அவர்களுடைய கூட்டமும் அவர்களைச் சார்ந்தவர்களும் இவ்விடயம் பெருகிவிடுவார்களாயின் அவர்களது வாக்கையே அரசன் நம்புவானன்றி நம்முடைய வார்த்தையை நம்பமாட்டான். ஆதலால் இத்தேசத்தைவிட்டு அவனை அகற்றிவிடவேண்டுமென்று ஆலோசித்திருக்குங்கால் வேங்கடத்திலிருந்து மலையனூரானென்னும் ஓர் பெருத்த வியாபாரி தனது கூட்டத்தில் காசிகுப்பி, வளையல், கீரைமணி, சந்தனப் பேழை, தந்தமோதிரம், ஆணிக்கோர்வை, பச்சை முதலியப் பொருட்களைக் கொண்டுவந்து அரசனிடம் இரட்டித்தப் பொருள் சம்பாதிக்கலாம் என்னும் ஆசையால் அவ்விடமுள்ள ஓர் சோலையில் வந்து தங்கியிருந்தான். அவற்றை அறிந்த புருசீகர்கள் அவ்விடஞ்சென்று அவர்களுடைய தேககாத்திரத்தையும், பாஷை மாறுதலையுமறிந்து, இத்தேசத்தில் ஆந்திர பாஷையை ஓர் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு ஆந்திரசாதியோரென்றும், கன்னட பாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு கன்னடசாதியோரென்றும், மராஷ்டக பாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு மராஷ்டக சாதியோரென்றும், திராவிடபாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு திராவிடசாதியோரென்றும் வழங்கிவந்தவற்றுள் மலையனூரான் கூட்டத்தோர் சாதிக்கும் பாஷையானது இம்மிலேச்சர்களுக்கு விளங்காது விழிக்குங்கால் மலையனூரான் திராவிட பாஷையில் பேசும்படி ஆரம்பித்தான். அவற்றையறிந்து ஆனந்தமுற்று அவனைத் தனித்தழைத்துபோய் நீங்களெல்லவரும் ஒரு பெருங்கூட்டமாக இவ்விடம் வந்ததை ஆலோசிக்குமளவில் உங்களுக்கு நல்லகாலம் பிறந்ததென்று எண்ணத்தகும். அவை யாதென்பீரேல், இத்தேசத்தரசனை சுவாமி ஆவாகனஞ் செய்துக்கொண்டவுடன் இந்நாட்டை ஆளுதற்கு வேறு அரசனில்லாமல் சொற்பக் குடியானவனொருவனைக் கொண்டுவந்து அரசாளும்படி வைத்திருக்கின்றோம் அவனால் இதையாளக்கூடிய சக்தியில்லாதபடியால் உங்கள் வியாபார மூட்டைக ளெல்லாவற்றையும் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களெல்லோரும் யுத்தமுகத்தராய் நின்று ஒவ்வொருவர் கையில் கோலுங் குண்டாந்தடியும் ஏந்தி நாளையுதய மூன்றேமுக்கால் நாழிகைக்கு மேல் ஒரே கூட்டமாகவந்து அரசன் மனையில் நுழைந்துவிடுவீர்களானால் உங்களுடன் அவனை எதிர்க்காமல்படி வோட்டிவிடுகின்றோம். நீங்களோ தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டு உங்கள் வியாபாரங்களைச் செவ்வனே நடத்திக் கொள்ளுவதுடன் அரசாங்க அதிகாரச்செயல்கள் யாவற்றையும் எங்களுத்தரவின் படி நடத்திவருவீர்களானால் நீங்களெல்லோரும் சுகசீவிகளாக வாழ்வீர்களென்று சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் மலையனூரானுக்கு ஆனந்தம் பிறந்து அரசனிடம் வியாபாரத்தாய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வந்த நமக்கு அரசாட்சியும், அரண்மனையுங் கிடைப்பதோர் வியாபார யோகமென்றெண்ணி, தாங்கள் கூறியபடி நாளை உதயத்தில் நாங்கள் வருகின்றோமென்று கூறி அனுப்பிவிட்டார்கள். புருசீகர்கள் யாவரும் சோலையை விட்டகன்று அரண்மனைச் சேர்ந்து அரசனை அணுகி, அரசே, நமது மனைக்கு வடமேற்கேயுள்ள மாஞ்சோலையில் பெருத்தக் கூட்டமாக சில அன்னியதேசத்தோர் வந்திறங்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு வகையில் வியாபாரக் கிருத்தியமாகவும் மறுவகையில் யுத்தசனனதராகவும் கான்பதை அறிந்த யாங்கள் அவர்களை நெருங்கி அந்தரங்கச் செயலறிந்து வந்திருக்கின்றோம். அதாவது யுத்தத்தில் வல்ல தேகிகளும், யுக்தியில் பேரறிவாளரும், பக்தியில் பரமதியானிகளுமாயிருக்கின்றபடியால் நீங்களவர்களை எதிர்த்துப் போர் புரிவதை நிறுத்தத் தங்கள் அரண்மனை முகவாயலில் தங்கப்பாத்திரத்தில் நீரும் தங்கவட்டிலில் புஷ்பமும், துளசியுங் கொண்டுபோய் வைத்துவிட்டு சூரியன் மறைந்தவுடன் குடும்பத்தோரையும் காலாட் படைகள் யாவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் தமயனிடம் போயிருப்பீரானால் நாளை யுதயம் அவர்கள் யுத்தத்திற்குவந்து அரண்மனை முகவாயலிலுள்ள புஷ்பம், துளசி நீரிவற்றைக் கண்டவுடன் அடங்கித் தங்கள் சுயதேசந் திரும்பிப்போய் விடுவார்கள். உடனே தாங்கள் வந்து தேசத்தை ஆண்டுகொள்ளலா மென்று கூறியவஞ்சகர்களின் மித்திரபேதவார்த்தைகளை அரசன் மெய்யென நம்பி தங்கப்பாத்திரங்களில் புட்பமும் நீருங் கொண்டு வைத்துவிட்டு குடும்பத்தோர் யாவரையும் அழைத்துக்கொண்டு காலாட்படையினாதரவால் வாணோரெளவின் அரண்மனையைச் சேர்ந்துவிட்டான். மலையனூரானென்னும் வியாபாரியோ உதய மெழுந்து தன் கூட்டத்தோர் யாவரையும் யுத்தத்திற்குச் செல்லுவதுபோல் திட்டப்படுத்திக் கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றபோது தங்களை எதிர்ப்போர் ஒருவருமில்லையென்னும் ஆனந்தத்தால் மனையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். புருசீகர் முன்பிருந்த அரசனின் சொத்துக்கள் யாவையும் அபகரித்துக் கொண்டதுடன் வாயற்படியில் வைத்துள்ள தங்கப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு தங்களில்லங்களில் சேர்த்துக்கொண்டதுடன் மலையனூரானை ஓர்பிண்டமாகப்பிடித்து வைத்துவிட்டு இராஜாங்க சகல காரியாதிகளையுந் தாங்களே நடாத்திவந்தார்கள். இத்தியாதி சங்கதிகளையுங் கண்ணுற்ற மராஷ்டக வேஷப்பிராமணர்கள் தங்களுக்கு ஏதேனுங் கெடுதி உண்டாகுமென்றெண்ணி அவர்களும் விலகிவிட்டார்கள். மராஷ்டக அரசனும், மராஷ்டகக் குடிகளும், மராஷ்டகக் காலாட்படைகளும், மராஷ்டக வேஷ பிராமணர்களும் அவ்விடம்விட்டகன்றவுடன் மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு ஆனந்தம் பிறந்து பௌத்தர்களால் அவரவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறு சகட பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூஸ்திரனென்றும், திராவிட பாஷையில் அந்தணன், அரசன், வணிகன், வேளாளனென்றும் வகுத்திருந்த தொழிற் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி என வழங்கச்செய்து தங்களை சகலருக்கும் உயர்ந்த சாதி பிராமணர்களென சொல்லிக்கொண்டு அறப்பள்ளிகளையும், விவேகமிகுத்த சமணமுநிவர்களையும் அழித்துப் பாழ்படுத்தத்தக்க ஏதுக்களைச் செய்துவந்ததுமன்றி அறப்பள்ளிகளில் சமணமுநிவர்களால் பெரும்பாலும் வழங்கி வந்த சகடபாஷையின் சப்தம் நாளுக்குநாள் குறைந்து திராவிடபாஷை விருத்தியாகிவிட்டபடியால் கன்னடம், மராஷ்டக முதலிய பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரனென்னும் சாதிப்பெயர்களை வகுப்பதற்கு ஏதுவில்லாமல் மராஷ்டக பாஷையிலுள்ள சில வல்லமெயுற்றோரை க்ஷத்திரியராகவும், மிலேச்சர்களாகிய தங்களை பிராமணர்களாவும் ஏற்படுத்திக்கொண்டு திராவிட பாஷையில் மருத நிலமாகும் பள்ளியப்பதிகளை ஆண்டுவந்த சிற்றரசர்கள் சமணமுநிவர்களை ஏற்று இவ்வேஷப் பிராமணர்களை அடித்துத் துரத்தி பெளத்த தன்மத்தை நிலைநிறுத்தி வந்தபடியால் அவர்களையும் அவர்களுடைய அரசாங்கங்களையும் நாடுகளையும் பாழாக்கி அவர்களையும் பள்ளிகள் பள்ளிகளெனக்கூறிப் பலவகையாலும் பாழ்படுத்தி விட்டார்கள். சகடபாஷையில் வைசியன், சூஸ்திரனென்றும், திராவிடபாஷையில் வணிகன் வேளாளனென்றும் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களுக்கு சாதிகளேற்படுத்த வழி இல்லாததால் திராவிட பாஷையிலுள்ளப் பெருந் தொகையினரை வேளாளரென்று சொல்லிவரும்படிக் கற்பித்துவிட்டு தானியங்களை மரக்கால்களில் நியாயமாக வளர்ந்து வாணிபஞ்செய்வோர்களுக்கு நியாயளக்கர், நியாயக்கர், நாய்க்கரென்று வழங்கிவந்த வியாபாரிகளுக்குள்ள பெயரை மலையனூரானென வந்து நந்தன் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்ட பப்பிரபாஷைக்காரனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தங்கள் தங்கள் பெயர்களினீற்றால் நாய்க்கர், நாய்க்கரென்னுந் தொடர்மொழிகளை திருமலை நாய்க்கன், குருமலை நாயக்கனென சேர்த்து வழங்கச்செய்து வியாபாரத் தொழிலில் ஒரு பொருளைக்கொடுத்து மறுபொருளை இரட்டித்து வாங்குகிறவர்களுக்கு ரெட்டிகளென்றும், பலசரக்குகளை சிதராது செட்டுசெய்து காப்போர்களை செட்டிகளென்றும் வழங்கிவந்த தொழிற்பெயர்களை முத்துரெட்டி, முத்துச்செட்டி என்னும் சாதிகளாக்கியும், புருசீகவேஷப் பிராமணர்களாகியத் தாங்கள், குண்டாச்சாரி, பீட்மாச்சாரி திம்மாச்சாரி, என்றும் திராவிடர்களுக்குள் வேஷமணிந்துக்கொண்டவர்கள் குண்டையர், புட்டையர், திம்மையரென்றும், மராஷ்டக பாஷையில் பிராமண வேஷம் அணிந்துக்கொண்டவர்கள் குண்டரெள, புட்டோரெள, திம்மாரெளவென்றும், கன்னடபாஷையில் பிராமணவேஷம் அணிந்துக் கொண்டவர்கள் குண்டப்பா, பட்டப்பா, திம்மப்பா என்றும் வழங்கும் ஏதுக்களைச் செய்துக்கொண்டார்கள். இத்தகையத் தொடர்களை சகல பாஷைக்காரருள் பெருந்தொகையினர் சேர்த்துக்கொள்ளாது வழங்கியது கண்டு சிற்றரசர்களைக்கொண்டு ஒவ்வோர் தொடர்மொழிகளை சேர்த்துவரும்படி பயமுறுத்தியதுமன்றி கல்வியைக் கற்கவிடாமலும், சமணமுநிவர்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவிடாமலுமே மிக்கத் துன்பப்படுத்தி வந்தார்கள். வட இந்திரதேச வங்கபாஷைக்காரருள் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமண முநிவர்கள் ஓதல், ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலென்னும் அறுவகைத் தொழிற்களை யாதொரு குறைவுமின்றி சரிவர நடாத்திவந்தபடியால் அரயனும் உபாசகர்களும் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சிறப்பைக்கண்டு பாலி மொழியில் சண்ணாளர் சண்ணாளரென சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறந்த கூட்டத்தோர் மத்தியில் மிலேச்ச வேஷப்பிராமணர்கள் சென்று தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப்போதகங்களையும் மெய்போல் விளக்கியும் அவர்கள் நம்பாது உபாசகர்களைக்கொண்டு வேஷப் பிராமணர்களை அணுகவிடாது துரத்தி வந்ததினால் அங்குள்ள கல்வியற்ற குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் நாளுக்குநாள் வசப்படுத்திக் கொண்டு தங்களது பொய்யை மெய்யென நம்புதற்காய ஏதுக்களைச் செய்துக் கொண்டு சமணமுநிவருள் சண் ஆளாக விளங்கினோரைக் கண்டவுடன் ஓடுவதும், ஒளிவதும் வேஷப்பிராமணர்களது வேலையாயிருந்தது. அவற்றைக் காணுந் தங்களைச்சார்ந்த கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களை நோக்கி அறப்பள்ளியிலுள்ள சமணமுநிவர்களாம் சண் ஆளர்களைக் கண்டவுடன் ஓடி ஒளிகின்றார்களே அதன் காரணம் யாதென்று கேட்பார்களாயின் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சண் ஆளரென்னும் சிறந்த பெயரை சண்டாளர் சண்டாளரென்னும் இழிபெயரென மாற்றி அவர்கள் மிக்க தாழ்ந்த வகுப்போர் அவர்களை நெருங்கப்படாது, தீண்டப்படாதென்று கூறி தாங்கள் வழங்கிக்கொண்டே நாடோடிகளாகத் திரிந்ததுமன்றி தங்களைச் சார்ந்தவர்கள் நாவிலும் சண் ஆளரை சண்டாளர் சண்டாளரென இழிவுபடக்கூறி முநிவர்களின் சிறப்பைக் கெடுத்துக்கொண்டே வருவதுமன்றி அவர்களது அறப்பள்ளிகளிலுந் தீயிட்டு நீதிநூற்களையும் ஞான நூற்களையும் பாழ்படுத்தி அவர்களது சீரையும் சிறப்பையுங் கெடுத்துக்கொண்டே வருகின்றார்கள். ஈதன்றி வடமேற்கு தேயத்தில் திராவிட பாஷையை கொடுந்தமிழென்றும், செந்தமிழென்றும் வழங்கியவற்றுள் கொடுந்தமிழ் வழங்கும் மலையாளுவாசிகள் முதனூல் ஆராய்ச்சியில் மிக்க சிறந்தவர்களும், அகிம்சாதன்மத்தில் பசுவினது பாலைக்கறப்பினும், அதனது கன்றினை வதைத்ததற்கு ஒப்புமென்றெண்ணி பால், நெய் முதலியதைக் கருதாது தெங்கும் பால், தெங்கு நெய்யையே புசிப்பிக்கும் மேற்பூச்சுக்கும் உபயோகித்துக்கொண்டு கொல்லா விரதத்திலும், சத்தியசீலத்திலும், அன்பின் ஒழுக்கத்திலுமே நிலைத்திருந்தார்கள். அத்தகைய மேன்மக்கள் மத்தியில் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்கள் சென்று பேதை மக்களை வஞ்சித்து கல்வியற்றக் குடிகளை அடுத்து தாங்களே யதார்த்த பிராமணர்களென்றும், தங்களுடைய சொற்களுக்குக் குடிகள் மீறி நடக்கப்படாதென்றும் பயமுறுத்தி பிராமணனென்னும் பெயர் வாய்த்தோன் செய்யத்தகாத வக்கிரமச்செயல்கள் யாவையும் செய்து உத்தம ஸ்திரீகளை விபச்சாரிகளாக்கி அவர்களது நல்லொழுக்கங்கள் யாவையும் கெடுத்து வருவதை மலையாள வாசிகளாம் கொடுந்தமிழ் விவேகிகளறிந்து சத்தியதன்மத்தைக் கெடுக்கும் அசத்தியர்களாம் மிலேச்ச வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தி தங்கள் தேயத்தை விட்டு அப்புறப்படுத்தும் ஏதுவையே பெரிதென்றெண்ணி அவர்களைத் தலைக்காட்டவிடாது துரத்தி சத்தியதன்மத்தை நிலைநிறுத்தி வந்தார்கள். வேஷப்பிராமணர்களாய மிலேச்சர்களோ ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின்மீது கண்ணென்னும் நோக்கம் மாறாது தாங்கள் அனுபவித்துவந்த சுகபுசிப்பும், சுகபோகமும் அவ்விடம் விட்டேகவிடாது சுழண்டுகொண்டே திரிந்து அத்தேய சிற்றரசர்களையும் பேரரசர்களையும் தங்களது வயப்படுத்திக் கொள்ளத்தக்க முயற்சியிலிருந்து அரயர்கள் வயப்பட்டவுடன் தங்களை அடித்துத் துரத்தி தங்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப்போத கோஷங்களையும் பலருக்கும் பறைந்து பதிவிட்டகலச்செய்துவந்தப் பேரறிவாளராம் பெளத்த உபாசகர்களைத் தீயர்களென்றும் மிலேச்ச வஞ்சநெஞ்சம் மிகுத்தக் கொடும் பாபிகளாகியத் தங்களை நியாயரென்றும் மேற்படுத்திக்கொண்டு அரசர்களது மதியை மயக்கி தீய சாதியோரென்றும், நியாய சாதியோரென்றும் இரு பிரிவினைகளை உண்டு செய்து தங்களை அடித்துத் துரத்தி தங்கள் துற்கிரித்தியங்களை சகலருக்கும் விளக்கிவந்த மேன் மக்களாம் விவேக மிகுத்தோரை, தீய சாதிகளென வகுத்து அவர்களை தேசத்துள் வரவிடாமலும் குடிகளிடம் நெருங்கி பேசவிடாமலும் குடிகளைக் கண்டவுடன் தூர விலகி ஓடிவிடும்படியான சட்டதிட்டங்களை வகுத்துவிட்டு மிலேச்சர்களாகிய தங்களை நியாயநம்பிகள், நியாயனார், நியாய பிராமணர்களென்றும் கொடுந்தமிழ் விவேகமிகுத்த மேன்மக்களை தீயசாதிகளென வகுத்து தேசத்துள் நுழையவிடாத ஏதுக்களை செய்து வருகின்றார்கள். இத்தகைய வஞ்சனெஞ்ச மிகுத்த மிலேச்சர்கள் தங்களை யாரடிக்கினும் தங்களை யார் வையினும் அவைகள் யாவையுங்கருதாது சிற்றரசர்களையும், பெருங்குடிகளையும் தங்கள் வயப்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலேயே ஊக்கமுடையவர்களாயிருந்து இத்தேச விவேக மிகுத்தவர்களைத் தாழ்ந்த சாதிகளென்றும் மிலேச்சர்களாகியத் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த சாதிகளென்றும் ஏற்படுத்திக்கொண்டு தங்கள் சுயப்பிரயோசனத்தையே மேலெனக் கருதிச் செய்துவரும் செயல்களைக் கண்டுவரும் இத்தேசத்திய மராஷ்டக வேஷப் பிராமணர்களும் ஆந்திர வேஷப் பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும் தங்கள் சோம்பலைப் பெருக்கிக்கொண்டு வஞ்சினத்தாலும் சூதினாலும் பொய்யாலும் சீவிக்கத்தக்க ஏதுக்களில் நின்றுவிட்டபடியால் பெளத்த தன்மத்தை சார்ந்த யதார்த்த பிராமணர்களாம் அரஹத்துக்களுக்கும். சங்கங்களிற் சேர்ந்துள்ள சமணமுனிவர்களுக்கும், பௌத்தக் குடும்பிகளுள் விவேகமிகுத்திருந்த உபாசகர்களுக்கும் பலவகை இடுக்கங்களுண்டாகி சத்தியதன்ம சாதனங்களும், சத்தியதன்ம போதகங்களும், சத்தியதன்ம நூற்களுமழிந்து பாழுற்று அசத்தியசாதனங்களும், அசத்திய போதங்களும், அசத்திய நூற்களுந் தோன்றுதற் கேதுவாய்தன்றி இவ்வேஷப் பிராமணர்களுள் மாறுதல்களையும், வேஷப்பிராமணர்களின் பொய்ப் போதங்களையும், வேஷப்பிராமணரது நாணமற்றச்செயல்களையுங் கண்டறிந்து குடிகளுக்குப் பறைந்துவரும் விவேகமிகுத்தவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்ததுமன்றி அவர்களை அரசாங்கத்தோரிடத்தும் அந்தஸ்த்துள்ளக் குடிகளிடத்தும் நெருங்கவிடாமலும், பேச விடாமலும் தங்கள் பொய் வேஷப்பிராமணத்தைப் பரவச்செய்யும் முயற்சியிலும், தங்கள் பொய்வேஷங்களைச் சகலருக்கும் பறைந்துவரும் விவேகமிகுத்த மேன்மக்களை தாழ்ந்த சாதியென்று கூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமற் செய்துவரும் ஏதுக்களிலும் முயற்சிகளிலுமிருந்தபடியால் அறப்பள்ளிகளில் சமணமுனிவர்களால் கற்பித்துவந்தக் கல்விகளும் சீரழிந்து கைத்தொழில்களும் பாழடைந்து தேசமக்கள் ஒவ்வொருவருக்கும் சோம்பற் பெருகி அஞ்ஞானத்தில் ஆழ்ந்துகிடக்கும்வழி நேர்ந்துவிட்டது. இதற்கு உபபலமாக தாங்கள் சுகசீவ வாழ்க்கைப் பெருவதற்கும் இத்தேசக்குடிகள் தங்கள் தங்கள் முயற்சியாம் முன்னேறுவதை விடுத்து, சுவாமி கொடுப்பார், சுவாமி கொடுப்பாரென்னுஞ் சோம்பலால் சீரழிவதற்கான சில மதங்களையும் உண்டு செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதாவது, புத்தபிரான் புழுக்கீடாதி முதல் மனிதரீராக சருவசீவர்கள்மீதிலும் அன்பு பாராட்டி, ஆதரிக்கும் அகிம்சாதன்மத்தைப் போதித்தவராதலின் பாலிபாஷையில் ஸிவனென்னும் ஓர் பெயராலும் அவரை சிந்தித்துவந்தார்கள். ஈதன்றி அவரது ரூபாகாயமாய பயிரங்கத் தை தகனஞ்செய்தபோது அஸ்தியையும் சாம்பலையும் ஏழு அரசர்கள் எடுத்துச்சென்று தங்கள் தேசங்களது பூமிகளிற் புதைத்து அங்கங்கு ஏழு இந்திர வியாரங்களாம் அறப்பள்ளிகளைக் கட்டிவிட்டதுமன்றி சிறந்த தேகசாம்பலாதலின் தேகத்தை தகனஞ்செய்த சாம்பலின்மீதும் ஓர்க் கட்டிடங்கட்டி அதற்கு மகாபூதி என்னும் பெயரை அளித்ததுமன்றி வங்கவரசன் எடுத்துச்சென்ற அஸ்தியை அவனது பூமியிற் புதைத்து தங்கள் குரு நாதனஸ்தியாதலின் அன்றுமுதல் அத்தேசத்திற்கு அஸ்திநாதபுறமென்றும் ஆனந்தசிந்தனை செய்துவருகின்றார்கள். சங்கங்களிலிருந்த சமணமுநிவர்கள் அச்சாம்பலை வாரிக்கொண்டுபோய் தங்கடங்கள்வியாரங்களில் வைத்து அதன்மீதுசெட்டுகளைப் பரப்பி தங்கள் ஞானசாதனங்களை சாதித்துவந்தார்கள். மற்றுமுள்ள கோபாலர்களாம் அரசபுத்திரர்கள் குருவைச் சுட்டு கோபாலர் பெட்டியில் வைத்துள்ளாரென்று கூறுமாறு அரசபுத்திரர்களும் அவரது குடும்பத்தோரும் அன்பார்ந்த குல குருவை ஆனந்தமாக சிந்திக்குமாறு காலைக்கடன் முடிந்து சுத்தமானவுடன் பேழையிலுள்ள மகாபூதியாம் சாம்பலைக் கையிலேந்தி நெற்றியில் மூன்று பிறிவாய் கோடுகளிழுத்து புத்த, தன்ம, சங்கமென்னும் முத்திர மணியை சிந்தித்து வந்தார்கள். மற்றுமுள்ள குடும்பத்தோர் அவரது ஏக சிரமுடியாம் சடைமுடியைக் கத்திரித்து பொன்னினாலும், வெள்ளியினாலுங் கூடுகள் செய்து அதிலடக்கி கழுத்திலணைந்து இதயத்திலிடைவிடா சிந்தனை சீலத்தினின்றார்கள். இத்தகைய மகாபூதியென்னும் சிறந்த சாம்பலிருக்குமளவும் மகாபூதியென வழங்கிவந்தவர்கள் அவை முடிந்தபின்னர் சிலர் விட்டு விட்டார்கள். சிலர் எங்குங் கிடைக்ககூடிய சாணச்சாம்பலை விபூதியென்றேற்று பூர்வ சிந்தனையிலிருந்தார்கள். இவைகளை நாளுக்கு நாளுணர்ந்து வந்த சிவாச்சாரி என்பவர் தங்கள் கூட்டத்தோர் சம்மதத்தால் சிவமத மென்னுமொன்றை ஸ்தாபித்தார். அத்தகைய சிவமதமென்னும் நூதனத் தொழுகையை ஆரம்பித்தவர்கள் தங்களிஷ்டம்போல் சகலத்தையும் நூதனமாகச் செய்துவிட்டால் பௌத்தர்கள் யாவரும் அவற்றை நம்பமாட்டார்களென்றெண்ணி பௌத்தர்களுக்குள் புத்தபிரானை சிந்தித்துவந்தச் செயல்களைக்கொண்டும் அவருக்களித்துள்ள வெவ்வேறுப் பெயர்களைக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டார்கள். அஃதெவ்வாறென்னில் புத்தபிரான் புலியால் பிடிபட்ட மானைக்கார்த்து புலிக்கு சாந்தங்கூறி விடுத்தவுடன் புலி காட்டுக்குள் செல்லவும் மானானது மாதவனைப் பின்பற்றியதுகண்டும் கம்மாளனது உலக்கணத்தில் உருகிய மழுவை கரத்திலேந்திய காரணங்கண்டும் அவரை மான்மழுவேந்தியென வழங்கி வந்தார்கள். அப்பெயரையே சிவாச்சாரி தாமேற்படுத்திக்கொண்ட சிவனென்னும் பெயருக்களித்துக்கொண்டார். புத்தபிரான் சதுரகிரியென்னும் ஓர் மலையில் குடிகளை வருவித்து அன்பைப்பற்றியும் ஒழுக்கத்தைப்பற்றியும் பிரசங்கித்துவருங்கால் சகல சீவர்களின் உள்ளங்களும் உருகி சத்தியதன்மத்தில் லயித்தது, பகவன் பாதப்படி அழுந்தியிருந்தக்கல்லும் உருகி அவரது கமலபாதம் அழுந்தியதாக சரித்திரம். அக்காலத்தில் உச்சிபொழுதேறி சூரியனது வெப்பத்தால் தாகவிடாயதிகரித்து மலையில் நீரின்றி சீவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்த பகவான் தனது ஏகசடையை உதறி நீட்டியவுடன் கங்கையாம் புனல் புரண்டோடி சகல சீவர்களின் தாகவிடாயைத் தீர்த்து தணியச்செய்து அரித்துவாரம் நுழைந்து பகவனது சடாபார கங்கை நதியென்னும் பெயரும் பெற்று கங்கைக்காதாரனென்றும் அவரையழைத்து வந்தார்கள். சிவாச்சாரிக்கு கங்காதர னென்னும் பெயர் மட்டுந் தெரியுமேயன்றி அதன் சரித்திரங்களறியாராதலின் தாங்களேற்படுத்திக்கொண்ட சிவனது சிரச்சடையில் கங்கையென்னும் ஓர் பெண்ணை வைத்துக்கொண்டிருக் கின்றாரென்றும், தனது துடையின்மீது ஓர் பெண்ணை உழ்க்காரவைத்திருக் கின்றாரென்றும் சர்பங்கள் புத்தபிரான் தாளிலும் தோளிலும் ஏறிவிளையாடிக் கொண்டிருந்த அன்பின் பெருக்க சரித்திரமறியாது தங்களது சிவன் சர்பங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்தாரென்றும், பெளத்த உபாசகர்களும், சாக்கையர்களும் சித்தார்த்தரது மாபூதியென்னும் சாம்பலை புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்று பிரிவாக நெற்றியில் பூசுவதுடன் அவரை தகனஞ்செய்த மிகுதியாய சந்தனக்கட்டைகளில் ஒவ்வொன்றைக் கொண்டுபோய் இழைத்து பொட்டிட்டு அறவாழியானை சிந்தித்துவந்த அன்பினிலையை சிவாச்சாரி யாரறியாராயினும் வெறுமனே கிடைக்கும் சாணச்சாம்பலை விபரீதப் பொருளெனப் பகட்டி தங்களை அடுத்தவர்களைப் பூசிக்கச்செய்வதுடன் அதற்கோர் தீட்சையுண்டு, அதை நீங்கள் பெற்றுக் கொண்டபோதுதான் விபூதி அணியலாகும், மற்றப்படி அணிவது பெருந்தோஷமெனக் கூறி அதற்காயப் பொருள்பறித்துக்கொண்டு நெற்றியிலிடும் சாம்பலுக்கு நேர்ந்த கதைகளெல்லாங் கற்பித்துவந்ததுடன் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுனிவர்கள் உலக விவகாரங்களற்று தன்னை யறியுங் காலமே காலமெனக் கூறுமொழிக்கு பாலிபாஷையாம் மகடபாஷையில் சைவசமயமே சமயமென சிறப்பித்துக் கூறுமொழியின் அந்தரார்த்தத்தை சிவாச்சாரியறியாது தங்களை சிறப்பித்து சுகசீவனஞ் செய்துகொள்ளுமாறு சிவமதத்தோரென்பதுடன் தங்களை சைவசமயத்தோர் சைவசமயத்தோரென்றுங் கூறற்குத் தலைப்பட்டார். பௌத்தர்களுக்குள் புத்தரை என்றும் அழியா பதுமநிதியென்றும், அவரது தன்மத்தை என்றுமழியா தன்மநிதியென்றும், அவரது சங்கத்தை யென்றுமழியா சங்கநிதியென்றும் வழங்கிவந்து அவைகள் எக்காலும் தங்கள் சிந்தையில் நிலைப்பதற்காக அரசமரக் கட்டையில் சிறுமணிகள் செய்து துவாரமிட்டுக்கயிற்றில் கோர்த்து வைத்துக்கொண்டு ஒழிந்த நேரங்களில் புத்த, தன்ம, சங்கமென உருட்டிவருவது வழக்கமாகும். அம்மணிக்கு தன்மகாயத்தை சிந்திக்கும் மணியென்றும், உருதிரட்டு மணியென்றும் உரு திரட்டுங் கட்டையென்றும் வழங்கி வந்தார்கள். சிவாச்சாரியாரோ, அம்மணிக்கு மாறுதலாக பேரிலந்தைக் கொட்டைகளைக் கொண்டுவந்து உருதிரட்டு மணியென்னும் பெயரை மாற்றி உருதிராட்ச மணியென வழங்கும்படிச் செய்துகொண்டார். பௌத்தர்கள் மணியைக்கொண்டு உருபோட்டு சிந்திப்பதற்கோர் உபாயஞ்செய்துக்கொண்டிருக்க அதன் கருத்தறியா சிவாச்சாரியார் உருதிரட்டுங் கொட்டையாலேயே தங்களுக்குத் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அனந்த சுகங்களுண்டெனக் கூறி சிலாரூபங்களாலும், கொட்டைகளாலும் சாணச்சாம்பலாலும் மக்களுக்கு சுகமுண்டென்னும் சோம்பலையும், மதி மயக்கையும் உண்டு செய்துவிட்டார். ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் செயல்களைக் கண்டுவரும் திராவிடவேஷப்பிராமணர்கள் பௌத்தர்களால் வழங்கிவரும் தேகதத்துவப் போகங்களைக் கேட்டிருந்தவர்களாதலின் அதே பாகமாக சிலாலயங்களைக் கட்ட ஆரம்பித்துக் கொண்டார்கள். அதாவது ஒவ்வோர் மனுக்களின் தேகத்துள்ளும் அடிவயிற்றிற்குங்கீழும், மூலத்திற்கும் உள்ளது மண்ணினது பாகமென்றும், தொப்புலில் உள்ளது நீர்பாகமென்றும், மார்பிலுள்ளது அக்கினிபாகமென்றும், கழுத்திலுள்ளது காற்றின் பாகமென்றும், நெற்றியிலுள்ளது ஆகாயபாகமென்றும் வகுத்து தங்கடங்கள் மனதைப் புறம்பே செல்லவிடாது தேகதத்துவ ஆராய்ச்சியில் நிலைத்திருந்த சமண முநிவர்களின் கருத்தையொட்டி தங்கள் சிலாலயங் கட்டுங்கால் அதனுள் நுழையும் வாயிற்படியில் ஓர் சதுரக்கல் எழுப்பி அதன்மீது கோசமும், பீஜமும், யானையின் தலையுந் துதிக்கைபோலும் கற்களிற் செய்து இதுவே மனிதனின் மூல ஆதாரபீடமென்றும், இதுவே பிள்ளை ஈவோர் பீடமென்றும், தேகத்தைக் கெடுத்துப் பாழடையச் செய்வதற்கு இதுவே விக்கினபீடமென்றும் முதற்பீடங் கட்டிவிட்டு; அதற்குமேல் இதுவே மண்ணினது பீடமென்றும், இதுவே உற்பத்திகளுக்கும் ஆதாரபீடமென்றும் அடிவயிற்றின் சுய அதிட்டானபீடமென்றும் சதுரமாய் இரண்டாவது பீடங் கட்டிவிட்டு; அதற்குமேல் இதுவே நீரின் பீடமென்றும், இதுவே தேகமெங்கும் பரவிக்குளிரச்செய்யும் பீடமென்றும், தொப்பிழ்வழியே அன்னாகாரஞ் செல்லும் மணிபூரக பீடமென்றும் பிறைபோன்ற மூன்றாவது பீடங் கட்டிவிட்டு; அதற்குமேல் இதுவே அக்கினியின் பீடமென்றும் தேகமெங்கும் அனலீய்ந்து காக்கும் பீடமென்றும் மார்பின் பாகவிசுத்தி பீடமென்றும் முக்கோணமாக நான்காவது பீடம் கட்டிவிட்டு; அதற்குமேல் இதுவே காற்றின் பீடமென்றும், தேகத்தின் சகல ஒட்டங்களையும் பரவச்செய்யும் பீடமென்றும், அனாகத பீடமென்றும் கழுத்தில் அறுகோணமாய் ஐந்தாவது பீடம் கட்டிடங்கட்டிவிட்டு; அதற்குமேல் இதுவே ஆகாயபீடமென்றும், சகலமுந் தன்னுளறியும் பீடமென்றும் சகலத்தையுந் தனதாக்கினைக்குள் நடத்தும் ஆக்கினை பீடமென்றும் வட்டமாக ஆறாவதுபீடங்கட்டி சுற்றுமதில்கள் எழுப்பிவிட்டு சகல மனுக்களையுந் தருவித்து இதுதான் மனிதனுக்குள்ள ஆறாதாரபீடமென்றும், அறுமுகக் கோணமென்றும் இதனை வந்து இடைவிடாது சிந்திப்பவர்கள் சகல சுகமும் பெற்று ஆனந்தவாழ்க்கையைப் பெறுவார்களென்றுங் கூறிய மொழிகளை கல்வியற்றக் குடிகளும் கல்வியற்ற சிற்றரசர்களும் மெய்யென நம்பி ஒவ்வோர் பீடங்களுக்கும் தட்சணை தாம்பூலங் கொண்டுவந்து செலுத்தி தொழுகையை ஆரம்பித்ததின்பேரில் பெருங் கூட்டத்தோர் திராவிட வேஷபிராமணர்களின் சிலாலயங்களுக்குப் போகும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். அதனால் ஆரிய வேஷப் பிராமணர்கள் பொருள் வரவு குன்றி கஷ்டமுண்டாயதால் அவர்கள் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடி நாம் ஒரேயிடங்களில் சிலாலயங்களைக் கட்டி சீவிப்பதால் கஷ்டமேயுண்டாகும் ஊர்வூராக சுற்றி பொருள் சம்பாதித்துவந்து ஓரிடத்தங்கி சுகம் அனுபவிக்க வேண்டுமென்னும் ஓர் ஆலோசனையை முடிவுசெய்துக்கொண்டு பௌத்தர்களுக்குள் புத்தபிரானுக்குரியப் பெயர்களில் எப்பெயரை முக்கியங் கொண்டாடுகின்றார்கள் அவரை எவ்வகையாக முக்கியம் சிந்திக்கின்றார்களென்று ஆலோசித்து சுருக்கத் தெரிந்துக்கொண்டார்கள். அதாவது புத்தபிரான் சருவ சங்கங்களுக்கும் அறத்தைப் போதித்து வந்தபடியால் அவரை சங்க அறரென்றும், சங்க தருமரென்றும், சங்க மித்தரரென்றும் வழங்கிவந்ததுமன்றி அவர் எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும் அறக்கதிர் விரித்துவந்தபடியால் ஜகத்குருவென்றும் ஜகன்னாத னென்றுங் கொண்டாடிவந்தார்கள். இதனைத் தெரிந்துகொண்ட ஆரிய வேஷப் பிராமணர்கள் தங்களுக்குள் நல்ல ரூபமுடையவனாகவும், ஆந்திரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு பாஷைகளிற் சிலது பேசக்கூடியவனாகவும், கோகரணங் கஜ கரணங் கற்றவனாகவும் உள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு அவனுக்கு வேஷ்ட்டி அங்கவஸ்திரம் முதலாயதும் பட்டினால் தரித்து காசிமாலை, முத்துமாலை முதலியதணிந்து தலையில் நீண்டகுல்லா சாற்றி, ஓர் வினோதமான பல்லக்கிலேற்றி சில யானைகளின் பேரிலும் ஒட்டகங்களின்பேரிலும் தங்கள் புசிப்புகளுக்கு வேண்டிய தானியங்களை ஏற்றிக்கொண்டு தங்கள் சுயசாதியோர்களே பல்லக்கை தூக்கிச் செல்லவும், தங்கள் சுயசாதியோர்களே சூழ்ந்து செல்லவுமாகப் பலயிடங்களுக்குச் சென்று ஜகத்குருவந்துவிட்டார், சங்க அறர் வந்துவிட்டார், சங்கற ஆச்சாரி வந்து விட்டார், கிராமங்கடோரும் தட்சணை தாம்பூலங்கள் வரவேண்டும், யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் வரவேண்டுமென்று சொல்லி ஆர்பரிக்குங்கால். அவர்களது பெருங்கூட்டத்தையும் பகரு மொழிகளையும் கேட்டப் பூர்வ பௌத்தக்குடிகளிற் சிலர் ஜகநாதனென்பதும் ஜகத்குருவென்பதும், சங்கறரென்பதும், சங்கதருமரென்பதும் நமது புத்தபிரான் பெயராதலின் அவர்தான் வந்திருப்பாரேன்றெண்ணி பேராநந்தங்கொண்டு வேணதட்சணை தாம்பூலங்களை அளிப்போரும் யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் அளிப்போரும் வந்திருக்குங் கூட்டத்தோரைக் காப்போருமாக உதவிபுரிய ஆரம்பித்துக்கொண்டார்கள். விவேகமிகுத்த சிலக் குடிகளோ இவர்களை வேஷப்பிராமணப் பொய்க்குருக்களென்றறிந்து துரத்திய போதினும் அவிவேகிகளின் கூட்ட மிகுத்திருக்குமிடங்களில் விவேகிகளின் போதம் ஏற்காமல் அவர்களைத் தங்களுக்கு விரோதிகளென்றுகூறி அருகில் நெருங்கவிடாமற் செய்துகொண்டு தங்களது பொய்க்குரு வேஷத்தை மெய்க்கும்போல் நடித்து தேசங்களை சுற்றிவருங்கால் விவேகமிகுத்த பௌத்தக் கூட்டத்தோர்களால் யானை ஒட்டக முதலியவைகளைப் பறிகொடுத்து பல்லக்கு முடையுண்டு பொய்க்குருவும் மடியுண்டு ஓடியபோதினும் ஜகத் குருவென்று பொய்யைச் சொல்லி பல்லக்கிலேற்றித் திரிவதால் மிக்கப் பொருள் சேகரிப்பதற்கு வழியும் சுகசீவனமுமாயிருக்கின்றபடியால் மறுபடியும் பல்லக்கு ஒட்டகம் யானை முதலியவைகளை சேகரித்துக்கொண்டு தென்னாடெங்குஞ் சுற்றி பொருள் பறிக்கும் ஏதுவில் நின்றுவிட்டார்கள். ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் படாடம்பப் பொய்க்குரு வேஷத்தால் திராவிட வேஷப்பிராமணர்கள் செய்துவரும் சிலாலய வரவு குன்றி கஷ்டம் நேரிட்டபடியால் தங்களாசிரியனாகும் சிவாச்சாரியன் பெயரை நீலகண்ட சிவாச்சாரியென நீட்டி இவர்தான் ஜகத்குரு, இவர்தான் சிவாச்சாரி, இவரால் போதித்துக் கட்டியுள்ள அறுகோண பீடமே முக்கியம் அவ்விடங் கொண்டுவந்து தட்சணை தாம்பூலம் ஈவதே விசேஷமெனக் கூற ஆரம்பித்துக் கொண்டதுமன்றி சங்கரராகிய ஜகத்குரு வடக்கே மகதநாட்டின் சக்கிரவர்த்தித் திருமகனாகப் பிறந்து சகலப் பற்றுக்களையுந் துறந்து நிருவாணமுற்று நித்திய சுகம் பெற்றதுடன் தானடைந்த சுகத்தை உலகில் தோன்றியுள்ள சகல மக்களும் பெற்று துக்கத்தை நீக்கிக் கொள்ளுவதற்காகத் தரணியெங்கும் சாது சங்கங்களை நாட்டி மெய்யறத்தையூட்டி மத்திய பாதையில் விடுத்துவிட்டு பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தையும் தகனஞ்செய்து நெடுங்காலமாகி விட்டது. அவரது சங்கறரென்னும் பெயரையும் ஜகத்குருவென்னும் பெயரையும் இவர்கள் சொல்லிக்கொண்டு பொருள்பறித்து வருகின்றார்கள். இவர்களது பொய்க்குருவேஷத்தை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் நீலகண்ட சிவாச்சாரியின் கொள்கைகளையும் அவரது சிலாலயங்களையும் பூசிப்பதே விசேஷமெனக் கூறிவந்தார்கள். திராவிட வேஷப்பிராமணர்களது கூற்றையறிந்து ஆரிய வேஷப் பிராமணர்கள் சங்கங்களுக்கு அறத்தைப் போதிக்காது ஜனசமூகத்தில் பொருள் பறிப்பவர்களாயிருக்கின்றபடியாலும், சாதியில் பெரிய சாதியென்னும் பெயரை வைத்துக்கொண்டு தாங்கள் இருக்குமிடங்களை விட்டு வெளிதேசங்களுக்குப் போகாமலிருக்கின்ற படியாலும் தங்களை சங்கறரல்லவென்றும் ஜகத்திற்கே குருவல்லவென்றும் பெரும் பொய்யர்களென்றும் சொல்லி வருகின்றார் களென்று அறிந்துகொண்டு தங்களது பொய்யாய ஜகத்குருவை பல்லக்கிலேற்றி செல்லுங்கால் பெருங்கூட்டங்களும் கனவான்களும் நிறைந்துள்ள இடங்களில் இறக்கி மரத்தடியில் உட்காரவைத்து யானையைப் போல காதையாட்டும் கஜகரணவித்தையையும், பசுவைப்போல் தேகமெங்குந் துடிப்பெழச்செய்யும் கோகரண வித்தையையுஞ் செய்யவிட்டு மக்களை மதிமயக்கி திகைக்கச்செய்து பொருள்பறிப்பதுமன்றி அவர் யாரெனில் சிவனே சங்கராச்சாரியாக வந்து பிறந்திருக்கின்றார் இவரையே நீங்கள் சிவனென்றெண்ணியும் இவரையே ஜகத்குருவென்று பாவித்தும் தட்சணை தாம்பூலம் அளிப்பீர்களாயின் சகல சம்பத்தும் பெற்று உலகத்தில் வாழ்வதுடன் உங்கள் மரணத்திற்குப்பின் சிவனுடன் கலந்துக்கொள்ளுவீர்கள். மற்றப்படி உருதிராட்டும் உருத்திராட்சக் கொட்டை யென்னும் பேரிலந்தை விதையாலும் சாணச்சாம்பலாலும், அறுகோணத்திற்குச் செலுத்தும் தட்சணையாலும் யாதொரு பலனையும் அடையமாட்டீர்களென சொல்லிக்கொண்டே அங்கங்கு சென்று பொருள் பறிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். சிலபேரிவர்களை அடுத்து அவர்கள் அறுகோணத்தில் சிவனை அர்ச்சிக்கின்றோமென்கிறார்கள். தாங்களோ சிவனே சங்கராச்சாரியாக வந்ததாகக் கூறுகின்றீர்கள் உங்களிருவருக்குள்ளும் பேதமுண்டாயக் காரணம் யாதென வினவுவார்களாயின் எங்களுக்குள் சிவனேசங்கறராக வந்துள்ளபடியால் நாங்கள் வேதத்திற்கு மேற்பட்ட வேதாந்திகள் எனக்கூறி திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிவைத்துள்ள சிலாலயங்களைக் கண்டித்தும் சிலாலயப் பீடங்களைத் தொழுவதில் யாதொரு பயனுமில்லை யென்று கூறியும் அவர்கள் சீவனத்தைக் கெடுத்துவருவதுமன்றி தங்கள் ஜகத்குருவேஷத்தை இன்னும் படாடம்பப்படுத்தி யானை அலங்கிரதம், குதிரை அலங்கரதம், பல்லக்கலங்கிரதம், குருவலங்கிரதம் முதலிய சிறப்பால் பேதமெயமைந்த சிற்றரசுகளையும் குடிகளையும் மயக்கி ஜகத்குரு வந்தார், சங்கரர் வந்தார், பாத காணிக்கைக் கொண்டுவாருங்கோளெனப் பொருள்பறித்து தேசங்களை சுற்றிக் கொண்டு முதுகாஞ்சியை அரசாண்டுவந்த இரண்யகாசியபனிடம் வந்து சேர்ந்தார்கள். இரண்யகாசியபனின் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகள் யாவரும் இந்திர விழாக் கொண்டாடுவதில் விசேஷ சிரத்தையுடையவர்களும் அத்தேசமெங்கும் சங்கங்களும் நிறைந்து அறமும் பரவியிருந்தது கொண்டு குரு விசுவாசத்தில் லயித்திருந்தவர்களுமாதலின் ஜகத்குரு வந்தார், சங்கறர் வந்தாரென்றவுடன் ஜனகோஷத்தின் படாடாம்பத்திற்கு பயந்தும் தங்கள் மெய்க்குருவின்மீதுள்ள அன்பின் பெருக்கத்தால் பொய்க்குருவின் வேஷத்தை மெய்க் குருவென நம்பி வேண தட்சணைகளும் யானை குதிரை முதலியவைகளுக்கு தீவனங்களும் அளித்து அதி சிறப்பு செய்துவந்தார்கள். ஜகத்குரு வந்துள்ளாரென்று கேழ்வியுற்றவரசன் அவர்களை தனதரண்மனைக்கு அழைத்துவரும்படி ஆக்யாபித்தான். அம்மொழியைக் கேட்ட ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு மிக்க ஆனந்தம் பிறந்து பல்லக்கின் கோஷத்துடன் ஜகத்குரு வருகின்றார், சங்கறர் வருகின்றாரென்னுங் கூச்சலுடன் அரயன் சமுகஞ் சேர்ந்தார்கள். இவர்கள் படாடம்பத்தைக் கண்ட வரயன் புன்னகைக்கொண்டு அவர்களுக்கு கைகூப்பி சரணாகதி கேளாது, நீவிர் யார்காணும் எங்கு வந்தீர்கள் என்றான். இரண்யகாசியபன் தங்களைக் கண்டு வணங்காமலும் ஆசனத்தை விட்டெழாமலும், யார் எங்கு வந்தீர்களென்ற மொழி நாராசங் காச்சிவிட்டது போலிருந்தும் காரியத்தின்பேரிற் கண்ணுடையவர்களாதலின் சிவனே சங்கறராகத் தோன்றியிருக்கின்றார் அவரை தெரிசிக்கும்படி தங்களிடம் அழைத்து வந்துள்ளோம் என்றார்கள். அவற்றை வினவிய இரண்யகாசியபன் இவ்வேஷப்பிராமணர்களின் மித்திரபேதங்களையும், இவர்களது துற்செயல்களையும் முன்பே அறிந்துள்ளவனாதலின் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவரைநோக்கி, ஐயா, சிவனென்றால் அவர் யார், சங்கறராக யெவ்விதமாகப் பிறந்தார், அதை விளக்கவேண்டுமென்று கேட்டான். சிவனென்னும் பெயரும் அதனந்தரார்த்தமும் சங்கறரென்னும் பெயரும் அதன் தோற்ற காரணமும் அறியாதவர்களாதலின் ஏதொரு மாறுத்திரமுங் கூறாது குருதட்சணை யுண்டா, வில்லையாவென்று ஆர்ப்பரித்தார்கள். அதனை வினவிய அரசன் நந்தனென்னும் அரசனை கற்சிதம்பத்தால் சிதம்பித்துக் கொன்றவர்களும், புரூரவனை மண்குழிவெட்டி மாய்த்தவர்களுமாகியக் கூட்டத்தோர் நீங்களல்லவோ என்றான். அம்மொழியைக்கேட்ட குருவேஷக் கூட்டத்தோர் பின்னுக்கே பல்லக்கைத் திருப்பிக்கொண்டு மாளவபதிக்குப் போய்சேர்ந்தவர்கள் நீங்கலாக மற்றுமுள்ள சிலர் முதுகாஞ்சியில் தங்கி எவ்விதமாயினும் அரசனை மாய்த்து சுகசீவனத் தேடிக்கொள்ளவேண்டுமென்னும் பேராசையால் பிச்சையேற்று தின்றுக்கொண்டே அரண்மனையிலுள்ளவர்களை வசப்படுத்திக்கொண்டு அரசபுத்திரன் பிரபவகாதனை நேசிக்கவும் தங்கள் சொற்படி கேட்கவுமான சில தந்திரோபாயங்களைச் செய்துக்கொண்டு, அப்பா நீர் அறப்பள்ளிக்குச் செல்லும் போதும், அரண்மனையிலிருக்கும் போதும் நாராயணாநம, நாராயணநமவென்று சொல்லிக்கொண்டேயிருப்பாயாயின் உன் தகப்பனும் மற்றுமுள்ளோரும் அஃதென்னை என்று கேட்பார்கள் அவர்தான் எங்களுடைய தேவன், அவர்தான் எல்லோரையுங் கார்ப்பவரென்று கூறுவாயாயின் அரசனும் மற்றுமுள்ளோரும் சந்தோஷப்பட்டு உன்னை மெச்சிக்கொள்ளுவார்களென உற்சாகப்படுத்தி விட்டார்கள். பிரபவகாதனும் யாதொன்றுமறியா சிறியனாதலின் அம்மொழியை மெய்யென நம்பி அரண்மனையில் விளையாடும் வேளையிலும், அறப்பள்ளியில் கல்விகற்கும் வேளையிலும், சயனிக்கும் வேளையிலும் நாராயணநமா, நாராயணநமா என்னும் மொழியையே ஓர் விளையாட்டாக உச்சரித்திருந்தான். அம்மொழியை அறப்பள்ளியில் வசிக்கும் சமண முநிவர்கள் அறிந்து பிரபவகாதனை அருகிலழைத்து, அப்பா நீரென்ன சொல்லுகிறீரென்றார்கள். அவன் யாதொன்றும் வேறு மறுமொழி கூறாது நாராயணநம, நாராயணநமவென சொல்லிக் கொண்டே ஓடிவிட்டான். அறியா சிறுவனும் அரசபுத்திரனும் ஆதலின் அவனை ஒன்றுங் கவனிக்காமல் மகட பாஷையில் (நரோவா) நரோயண்யோ வென்னு மொழிக்கு நீர் என்னும் பொருளுள்ளபடியால் நீரே நமவென்று சிறுவன் கூறுமொழி யாதும் விளங்கவில்லை. அதையே ஓர் விளையாட்டாக சொல்லித் திரிகின்றான். கேட்கினும் மறுமொழி கூறுவதைக் காணோம். அம்மொழி விளையாட்டே அவன் சட்டமெழுதுவதையும், பாட்டோலையையுங் கெடுத்துவருகின்றது. அரசன் கேட்பாராயின் ஆயாசமடைவார். ஓலைச் சுருள் விடுக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். இச்சங்கதிகள் யாவையும் அறிந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் பிரபவநாதனை அழைத்து உம்மெ யாவர் கேட்கினும் பதில் கூறவேண்டாம் அரசன் கேழ்ப்பாரேயானால் நாராயணன்தான் சகலரையுங் காப்பவர் ஆதலால் நாராயணநம வென்று சொல்லுகிறேனெனத் திடம்படக் கூறுவீராயின், உமது தந்தையும் மற்றுமுள்ளோரும் ஆனந்திப்பதுடன் உமது விவேகத்தைப் பற்றியும் மிக்கக் கொண்டாடுவார்கள். அங்ஙனம் அவர்கள் ஆனந்தங்கொள்ளாது சீற்றமுடையவர்களாகி நாராயணன் என்றாலென்ன, அவன் எங்கிருக்கின்றான், அவன் எத்தேசத்தான், என்னிறத்தான், என்னபாடையானென விசாரிப்பார்களாயின், அவற்றை மாலை அந்திநேரத்தில் காண்பிக்கின்றேன், தந்தையாகிய நீவிர்தவிர மற்றவர் யாரும் இங்கிருக்கப்படாதென்று தெரிவித்து அவ்விடம் நடந்த வர்த்தமானங்களை எங்களுக்கும் அறிவித்துவிடுவீராயின், நாராயணனை கொலுமண்டபத்திலுள்ள ஓர் தூணினின்று வரச்செய்து தமக்கும் தமது தந்தைக்கும் தரிசனங்கொடுக்கச் செய்கின்றோம், தாங்கள் யாதொன்றுக்கும் பயப்படாது நாராயணன் எங்கிருக்கின்றானெனக் கேட்குங்கால், இதோ தூணிலுமிருக்கின்றான் துரும்பிலுமிருக்கின்றானெனப் பெருங்ககூச்சலிடுவீராயின், உடனே நாராயணன் தரிசனம் ஈவாரென்று சொல்லி பிரபாவகாதனை அனுப்பிவிட்டு அந்திபொழுதாகி ஆள்முகம் ஒருவருக்கொருவர் தெரியாது மறைவுண்டாம் நேரங்கண்டு வேவுகர்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு யாருமறியாது அரண்மனைக்குள் பிரவேசித்துத் தூண்களின் மறைவில் மறைந்திருந்தான். பொழுது அஸ்தமிக்குங்கால் புத்திரன் பள்ளியிலிருந்து வந்தவுடன் சமணமுநிவர் அளித்திருந்த ஓர் ஓலைச்சுருளை தந்தையிடங் கொடுத்து நாராயணநம என்றான். அம்மொழியைக் கேட்டு ஓலைச்சுருளைக் கண்ட அரயனுக்கு ஓர்வகை ஆயாசமுங் கோபமும் பிறந்து, அடா பிரபவகாதா, நமது வம்மிஷவரிசையில் தாய்தந்தையரை தெய்வமெனக் கொண்டாடும் பாலபருவத்தில் இரண்யகசிபநமாவென்று சொல்லவேண்டியதிருக்க ஐலத்தை நோக்கி நாராயண நமவென்று கூறுவதை யோசிக்கில் பிரபவளு புரட்டாசிமீ பிற்பூரணை பிற்பகலில் பிறந்தவன் பிதாவிற்கே சத்துருவாவான் என்னுங் கணிதப்படி உனது பிறவியின் காலதோஷம் தந்தையை மறந்து தண்ணீரை சிந்திக்குங் காலமாச்சு போலுமென்று துக்கித்து, உங்கள் நாராயணன் எங்கிருக்கின்றான் என்றான். அதைக்கேட்ட பிரபவகாதன் தூணிலுமிருப்பான், துரும்பிலு மிருப்பானென்று பெருங் கூச்சலிட்டான். அக்கால் தூணில் மறைந்து சிம்மத்தோலை தலையில் போர்த்திருந்த ஆரிய வேஷப்பிராமணன் திடீரென எழுந்து நிராயுதபாணியாயிருந்த அரசனை தன் கைவல்லியத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிட்டு வெளியோடி விட்டான். பெரும் அரவங் கேட்ட அரச அங்கத்தவர்கள் யாவரும் ஓடிவந்து பார்க்குங்கால் அரசன் பிரேதமாகக் கிடக்கவும் அருகி நிற்கும் மைந்தன் யாதொன்றும் தோன்றாமல் திகைக்கவுங் கண்டவர்கள், அரசனைக் கொன்றவர்கள் யாரென்று கேழ்க்குங்கால் மனிதரூபமாக ஓர் சிம்மம் வந்து கொன்றுவிட்டதென்று கண்டவர்கள் கூச்சலிட்டலற பிரபவகாதனும் அவ்வகைசொல்ல ஆரம்பித்தான். அவற்றைக் கேட்ட விவேகிகள் மனிதனைப்போன்ற சிம்மமும் உலகத்திலுண்டோவென விசாரித்ததுடன் பிரபவகாதனையும் சரிவர விசாரிக்க ஆரம்பித்தார்கள். பிதா இறந்தபின் ஆரிய வேஷப்பிராமணர்களால் நடந்துவந்த சங்கதிகள் யாவற்றையும் சொல்லும்படி ஆரம்பித்ததின்பேரில் மந்திரிப் பிரதானிகளுக்கும், சமணமுநிவர்களுக்கும் சந்தேகம் தோன்றி அவ்விடம் வந்து குடியேறியுள்ள ஆரிய வேஷப்பிராமணர்கள் யாவரையுந்தருவித்து வஞ்சினத்தால் அரசனைக் கொன்றவர்கள் யாரென விசாரித்தார்கள். அவற்றை வினவிய ஆரியர்கள், தாங்களும் அரசனது மரணத்திற்காகத் துக்கிப்பதுபோல் மிக்கத் துக்கித்து நாங்கள் இவ்விடம் வந்தபோது சில பெரியோர்கள் நாராயணனும், நரசிம்மனும் ஒன்றே யென்று சிந்தித்துக் கொண்டதுமன்றி எங்களையும் சிந்திக்கும்படி செய்துவிட்டுப்போனார்கள். அவ்வகையில் யாங்கள் சிந்தித்திருக்கும்போது அரசபுத்திரனும் அவ்விடம் வருவதுண்டு. யாங்களும் அவற்றை சொல்லும்படி செய்வதுண்டு. அரசனுக்கு ஏதோ குலதெய்வ தோஷத்தால் இத்தகைய மரணம் நேரிட்டிருக்குமேயன்றி மற்றொருவராலும் நேர்ந்திருக்க மாட்டாதென்று கூறியவுடன் சமணமுநிவர்கள் பகவனது சகஸ்திர நாமங்களை ஆராய்ந்து அசோதரையாம் மலையரசன் புத்திரி பகவனை நாரசிம்மமென்றழைத்த ஓர் பெயருண்டு. ஆயினும் அகிம்சா தன்மத்தை போதித்த அறவாழியான் இத்தகையச் செயலைச் செய்வரோ ஒருக்காலுஞ் செய்யமாட்டார். இவைகள் யாவும் ஆரிய வேஷப்பிராமணர்களின் மித்திரபேதமேயென்று முடிவுசெய்தார்கள். அத்தகைய முடிவிற்குப் பகரமாய் வேவுகரில் ஒருவன் ஓடிவந்து சமணமுநிவரை வணங்கி தேவரீர் இதோ நிற்குங் கூட்டத்தோரில் ஒருவன் மாலையில் வந்து அரசனிடம் போகவேண்டுமென்று கேட்டான். நான் வெளியிற்போகும் சமயமானபடியால் போகலாமென்று சொல்லிவிட்டுப் போகும்போது அவன் அக்குளில் ஏதோ ஓர் மூட்டையுள்ளதைக் கண்டேன், அது யாதென்றறியேன், ஆயினும் அவனை மட்டும் எனக்குத் தெரியுமென்றான். சமணமுநிவர் மந்திரிக்குத் தெரிவித்து மந்திரியும் வேவுகர்களை விடுத்து அவனைப் பிடிப்பதற்குமுன் ஊரைவிட்டோடிப் போய்விட்டான். அதன்பின்னர் அரசவங்கத்தவர் யாவரும் ஒன்றுகூடி நூதனமாய் இவ்விடங் குடியேறியுள்ளக் கூட்டத்தோரை துரத்திவிடவேண்டுமென்று ஆலோசித்து ஆரிய வேஷப் பிராமணர்கள் யாவரையும் அத்தேசத்தைவிட்டு துரத்திவிட்டார்கள். இவர்களும் ஒவ்வோர் சிறுமலைகளைக் கடந்து சிற்றூர்களை அடைவதும், அடர்ந்த காடுகளைக் கடந்து மறுதேசங்களைச் சேர்வதுமாகியக் கஷ்டங்கள் அதிகமாயிருக்கினும் வஞ்சித்தும், பொய் சொல்லியும் பொருள்பறித்து தின்றுவந்த சுகங்களானது அந்தந்த தேசங்களைவிட்டு அகல்வதற்கு மனமிராது அங்கங்குள்ள விவேகமிகுத்தக் கூட்டத்தோர்களை அழிக்கவும் துன்பப்படுத்தவுமானச் செயலையே முன்கொண்டு தங்களை வேஷப்பிராமணர்களென்று தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பறைகிறவர்களென்று கூறவும் அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசித்து தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச் செய்து வருவதே அவர்களேதுவாயிருந்தது. மாளவதேசத்திற் சேர்ந்த ஆரியவேஷப்பிராமணர்கள் சோகெனென்னும் மன்னனை அடுத்து அவனது காமியவிச்சைக்கு உடன்பாடாகி சகல போதனைக்குள்ளும் வயப்படுத்திக்கொண்டார்கள். அதனை உணர்ந்த சங்கத்து சமணமுநிவர்களும், விவேகமிகுத்தவர்களும் அரசனையடுத்து யாது மதி கூறினும் விளங்காது வேஷப்பிராமணர்களின் பொய்ப்போதங்களையே மெய்யென நம்பி மதோன்மத்தனாயிருந்துவிட்டான். சமணமுநிவர்களைப் பாழ்படுத்துவதற்கு இதுவே நல்ல சமயமென் றுன்னி வேஷப்பிராமணர்கள் யாவரும் ஒன்றுகூடி ஆலோசித்து அரசனுடைய முத்துமாலையைக் கொண்டுபோய் அறப்பள்ளியில் வீற்றிருக்கும் சமணமுநிவர்களது ஓலைச் சுருட் பேழையில் ஒளித்துவைத்துவிட்டு முத்துமாலையைத் தேடுங்கால் வேஷட்பிராமணர் அரசனை அணுகி ஐயா, தங்களது தேசத்தில் சங்கத்தோர் முநிவர்கள் என சொல்லிக்கொண்டு திரிகின்றார்களே அவர்களையே மிக்கக் கள்ளர்களென்று சொல்லுகின்றார்கள். அனந்தம்பெயர்கள் வாக்கினாலும் கேழ்விப்பட்டோம். ஆதலின் தாங்கள் அவர்கள் வாசஞ்செய்யும் இடத்தை சோதிப்பீர்களாயின் யாதார்த்தம் வெளிப்படுமென்று வேவுகர்களை விடுக்கத் தக்க ஏதுவைத் தேடிவிட்டார்கள். வேவுகர்களும் வேஷப் பிராமணர்களின் போதனைக் குட்பட்டு நூற்றிச் சில்லரை சமணமுநிவர்கள் வீற்றிருந்த வித்தியோதன அறப்பள்ளியில் நுழைந்து ஓலைச்சுருளுங் காயாசமும் வைத்துள்ளப் பேழைகளை சோதிக்குங்கால் அரயனது முத்துமாலை அகப்பட்டது. வஞ்சகமற்ற சமணமுநிவர்களோ திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்களுள் விவேகமிகுத்தவர்களோ இஃது வேஷப்பிராமணாள் சத்துருத்துவச் செயலென்றறிந்துகொண்டார்கள். வேவுகர்களோ மன்னனது முத்துமாலைக் கிடைத்தவுடன் அக்கால் அவ்விடமிருந்த அறுபத்தேழு சமண முநிவர்களையும் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு முத்துமாலையைக் கொண்டுபோய் மன்னனிடம் காண்பித்து சங்கதியை தெரிவித்தார்கள். மன்னனும் தனது செங்கோல் நிலைதவறி காமியத்தில் ஆழ்ந்துயிருந்தவனாதலின் யாதொன்றையுந் தேற விசாரியாது கள்ளர்களைக் கழுவிலேற்றிவிடுங்கோளென்று ஆக்கியாபித்தான், இவற்றை அறிந்த வேஷப்பிராமணர்கள் பழயக் கழுவேற்றிகளை அநுபுவதாயின் பயந்து அவர்களை ஓட்டி விடுவார்கள், முநிவர்களென்றறியா மூழைகள் சிலருக்கு அவ்வேலையைக்கொடுத்தால் அஞ்சாமல் முடித்துவிடுவார்களென்னும் எண்ணத்தால் தங்களை மெய்ப்பிராமணர்களென்றெண்ணி மயங்கியுள்ள அவிவேகிகளைக் கொண்டு சமணமுநிவர்களை கழுவிலேற்றும்படி செய்து விட்டார்கள். அவர்களுள் எழுவர் சித்து நிலைக்கு வந்துள்ளவர்களாதலின் அவர் கண்களுக்குத் தோன்றாது மறைந்துவிட்டார்கள். சமணமுநிவர்களில் எழுவர் மறைந்து போய்விட்டதை கண்ட வேவுகர்கள் அரசனிடந் தெரிவிக்காது வேஷப்பிராமணர்களிடஞ் சென்று நடந்த வர்த்தமானங்களைக் கூறி யாது செய்வோமென்று திகைத்துநின்றார்கள். இதன்மத்தியில் புத்ததன்மக் குடிகளுக்கும், உபாசகர்களுக்கும் சமணமுநிவர்களைக் கழுவிலேற்றிய சங்கதிகள் தெரிந்து இவைகள் யாவும் வேஷப்பிராமணர்களால் நடந்த பாவங்களென்றறிந்து வேஷப்பிராமணர்கள் எங்கெங்கிருக்கின்றார்களோ அவர்களை அடித்துத் துரத்துங்கால் அரசனிடஞ்சென்று அபயமிட அரசனும் படைகளை அழைத்துக் குடிகளை அடக்கும்படி ஆரம்பித்தான். படைகளுக்கும் சமண முநிவர்களைச் செய்துள்ள பாபச்செயல் தெரிந்து அவர்களது கைகளிலுள்ளக் குண்டாந்தடிகளாலும், அம்புகளாலும் வேஷப் பிராமணர்களையே வதைத்து ஊரைவிட்டோடும்படிச் செய்துவிட்டார்கள். அரசன் ஆழ்ந்து விசாரிக்காது சமண முநிவர்களைச் செய்தப் பாவச் செயல்களைப் பின்னிட்டுணர்ந்து ஆற்றலற்ற உன்மத்த நிலையை அடைந்தான். இவ்வகையாக வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்கள் சென்ற இடங்களில் தங்களது பொய்வேஷங்களையும், போதகங்களையும் சொல்லிக்கொண்டே பிச்சையேற்றுண்ணுங்கால் அவர்கள் வார்த்தைகளை நம்பியக் குடிகள் யாவரையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு தங்கள் சீவனங்களை விருத்தி செய்துக்கொள்ளுவதும், தங்களுக்கு எதிரடையாயிருந்து தங்கள் பொய்வேஷங்களையும் பொய் போதங்களையுங் குடிகளுக்குப் பறைகின்றவர்களை தங்களுக்குத் தாழ்ந்த சாதியோரென்று கூறி அவர்களைப் பாழ்படுத்தும் ஏதுவிலேயே யிருப்பது இயல்பாம். இவ்வாறு செய்துக்கொண்டே வேஷப் பிராமணர்கள் கங்கைக்கரை யென்னும் வடகாசியை அடைந்தபோது அவ்விடமுள்ளக் குடிகள் யாவரும் புத்தபிரானை கங்கை ஆதாரனென்றும் காசிநாதனென்றும் காசி விசுவேசனென்றுங் கொண்டாடி வருவதுடன் பகவன் ஆதிசங்கத்தை அவ்விடம்நாட்டி ஆதிவேதமாம் முதநூலையும் அதனுட்பொருளாம் உபநிடதங்களையும் மறைவற விளக்கிய சிறப்பும் அதேயிடத்தில் பரிநிருவாணமுற்ற சிறப்பும், வடகாசியில் விசேஷமுற்றிருந்தபடியால் இந்திரதேசவாசிகளாழ் சகல மக்களும் அவ்விடஞ்சென்று கங்கையில் மூழ்கி காசிநாதன் அறப்பள்ளியடைந்து சங்கஞ்சார்ந்து தவநிலை பெறுவதும் சென்ற சிலர் அவ்விடத்தங்கி ஆனந்த விசாரிணைப் புரிந்துவருவதுமாகியக் கூட்டங்களின் வரவே மிகுந்திருந்தது. இவைகள் யாவையுங் கண்ணுற்ற வேஷப்பிராமணர்கள் யாவருக்கும் ஓர்வகைப் பேராசை உண்டாகி இத்தேசத்தரசனை நமது வயப்படுத்திக் கொண்டால் நம்மவர் ஆயிரங்குடிகள் சுகமாக வாழலாம், இது விசேஷ வரவுள்ள நாடாயிருக்கின்றது இங்கு சிலநாள் தங்கி அரசனது குணாகுணங்களையும் அவனது இன்பச்செயல்களையும் ஆழ்ந்தறிந்து நெருங்கவேண்டுமென்னுங் கருத்தால் காசி வியாரத்தையும், அரண்மனையையும் சுற்றி சுற்றி தங்களது யாசக சீவனத்தை செய்துக்கொண்டு வந்தார்கள். அக்கால் அக்காசியம் பதியை ஆண்டு வந்த அரசனின் பெயர் காசிபச் சக்கிரவர்த்தி என்னப்படும். அவனது குணாகுணங்களோவென்னில் பெண்களை தனது சகோதரிகள் போலும் புருஷர்களை சகோதரர்கள்போலும் பாவித்து குடிகளுக்கு தன்மம் போதிப்பதையே ஓர் தொழிலாகக்கொண்டு யாவரையும் நன்மார்க்கத்தில் நடத்தி தனது செங்கோலை சிறப்பிக்கச் செய்துவந்தான். அதனால் தேசக்குடிகள் அரசன் மீதன்பும், அரசனுக்குக் குடிகள்மீதன்பும் பொருந்தி வாழ்ந்துவந்தார்கள். அதனால் இவ்வாரிய வேஷப்பிராமணர்களின் தந்திரங்களும், மித்திரபேதங்களும் செல்லாது எவ்வித உபாயத்தேனும் அரசனைக் கொன்று விட்டு தேசத்திற் குடிக்கொள்ளவேண்டுமென்னும் எண்ணத்தால் காலம் பார்த்திருந்தார்கள். அக்கால் காசிபச் சக்கரவர்த்தி மைந்தனில்லாக் குறையால் மந்திரிகளையும் நிமித்தர்களையுந் தருவித்து தனக்கு நாற்பது வயது கடந்தும் புத்திரனில்லாக் காரணம் தெரியவில்லை அவற்றைக் கண்டாராயவேண்டுமென்று தனது சாதக ஓலையை நீட்டினான். நிமித்தகர்களாகுங் காலக்கணிதர்கள் சாதகவோலையைக் கண்ணுற்று அரசருக்கு நான்காவது சனிதிசை நடப்பும், மாரகாதிபுத்தியும் நடப்பதால் திடுக்கிட்டு அரயனுக்கு யாதொன்றும் கூறாது இதன் கணிதங்களை நன்றாராய்ந்து நாளை பகர்வோமெனக் கூறி அவரவர்கள் இல்லஞ் சேர்ந்து மாலையில் மந்திரிப் பிரதானிகளுடன் கலந்து அரசனது மிருத்துவின்காலத்தை ஆலோசித்தார்கள். ஒவ்வொருவருங்கூடி ஆலோசித்த காலகணிதத்தில் அரசனது மிருத்தியு பட்சத்திற்கு உட்பட்டிருப்பதினால் அவற்றை அவருக்கு எப்படி சொல்லுவதென்றச்ச முற்றிருக்குங்கால் பிரதம மந்திரி நிமித்தகரை நோக்கி பெரியோய், இசசங்கதிகள் யாவையும் அரசனுக்கு அறிவிக்காமலிருக்கப்படாது, அரசனுந் தனது மரணத்திற்கஞ்சமாட்டார், செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் செவ்வனே முடித்து அரசுக்கு வேண்டிய அதிபதியானையும் நியமித்துவிட்டு அறஹத்துகளை யடுத்து மறுமெயின் சுகத்திற்கு வழிதேடிக்கொள்ளுவார்கள். இச்சங்கதியை நாம் அடக்கலாகாது, உடனே சொல்லவேண்டுமென்று முடிவுசெய்து உதயமெழுந்து அரசனிடஞ்சென்று தாங்கள் ஆராய்ந்துள்ள கணிதத்தை விவரித்தார்கள். அரசனும் புன்னகைக் கொண்டு நிமித்தகர்களே, சென்ற சுக்கிரவாரம் இரவு ஐயன் அறப்பள்ளியில் யானுறங்குங்கால் எனதரிய தந்தை சொற்பனத்தில் வந்து காசிபாவென்னு மோர் சத்தமிட்டு மிலேச்சர்களாகிய சத்துருக்கள் உன்னைக் கொல்லுதற்கு வட்டமிட்டிருக்கின்றார்கள், விழித்திருமென்று கூறி மறைந்துவிட்டார். யானும் விழித்து வெளிவந்து ஆகாயவிரிவை நோக்குங்கால் நட்சேத்திர சுழலால் ஐந்தாவது ஜாமம் விளங்கிற்று. அக்கால சொற்பனம் மறைவின்றி யதார்த்தமாதலின் தங்களை தருவித்து ஜாதகவோலையைத் தந்தேன். தாங்களும் எனது மிருத்தியுவின் கணிதத்தைக் கண்டீர். ஆனந்தமே ஆயினும் எனது பட்டத்திற்கு தம்பி காங்கேயனை நியமிக்க உத்தேசித்திருக்கின்றேன் அவன் கால கணிதம் எப்படியோ அதையும் ஆராயுங்கோள் என்று சொல்லி அவனது ஓலையையும் ஈய்ந்தான். அதைக் கண்ணுற்ற நிமித்தகர் அவனது காலவோலையின் சுகத்தைக்கண்டு பட்டமளிக்கலாமென்று கூறினார்கள். உடனே அரசனுந் தனதரசவங்கத்தோர்களுக்கு அறிக்கைவிட்டு காங்கேயனுக்கு அரசையளித்து விட்டடான். அதனை அறிந்த வேஷப்பிராமணர்கள் யாசகத்திற்கு வந்து நின்றார்கள், இவர்களைக் கண்ட அரசனுக்கு சந்தேகம் தோன்றி, இவர்கள் யார், இவர்கள் தேசமெது நன்றாய் உழைத்துப் பாடுபட்டு சீவிக்கக்கூடியவர்களாயிருந்தும் நாணமில்லாது பிச்சையேற்றுண்ணுங் காரணம் யாதென விசாரித்தான். அரசனது மொழியைக் கேட்ட வேஷப்பிராமணர்கள் தங்களை பிராமணர்களென்று கூறினால் அரசன் நம்பமாட்டான் அன்னியதேசத்திலிருந்து வந்துவிட்டோம், சீவனமில்லாததால் யாசகத்திற்கு வந்தோமென்று கூறினார்கள். அவ்வகைக் கூறியும் அரசன் அவர்களது மொழியை நம்பாது இவர்கள் தான் மிலேச்சர்களாகிய சத்துருக்களாயிருக்கவேண்டுமென்றெண்ணி வேவுகர்களை அழைத்து அவர்கள் யாவரையுந் தனது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும் படி ஆக்கியாபித்துவிட்டான். அவற்றை உணர்ந்த வேஷப்பிராமணர்கள் யாவரும் ஊரைவிட்டகன்றும் ஆசை வெழ்க்கமறியாது கல்வியற்றக் குடிகளிடஞ்சென்று தங்களை பிராமணர்கள் பிராமணர்களெனக் கூறி வஞ்சித்துப் பொருள் பறித்துவந்தார்கள். அக்கால் காசிபச் சக்கிரவர்த்தியும் கபாதிக்கக் கள்ளவியாதியால் மரணமடைந்தான். அதனைக் கேழ்வியுற்ற வேஷப்பிராமணர்களுக்கு மிக்க ஆனந்தமுண்டாகி முன்போல் நகருள் நுழைந்து தங்கள் யாசக சீவனத்தை செய்துக் கொண்டே காங்கேயச் சக்கிரவர்த்தி தங்கள் போதனைக்கு எப்போது வயப்படுவானென்னும் உத்தேசத்திலேயே காலங்கழித்து வந்தார்கள். தென்காசியைச் சேர்ந்து வாழ்ந்த ஆரிய வேஷப்பிராமணர்களும், மராஷ்டகவேஷப்பிராமணர்களும், கன்னடவேஷப்ப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும் ஒருவருக்கொருவர் கண்டு உட்சினம் எழுவிய போதினும் வெளிக்குக் காட்டிச்கொள்ளாமல் ஒருவர்வீட்டிலொருவர் புசிப்பெடுக்காமலும், ஒருவர் பெண்ணை மற்றொருவர் கொள்ளாமலும் முறுமுறுத்துக்கொண்டே தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச்செய்து வந்ததுடன் தாங்கள் ஏற்படுத்திவரும் சிலாலயங்களிலும் வெவ்வேறு தேவர்களை சிருட்டிசெய்துக் கொண்டு அதற்குத் தக்கப் பொய்ப்புராணங்களையும் வரைந்து பேதை மக்களுக்குப் போதித்து பொருள்பறிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில் இவ்விந்திரதேசமெங்கணுமுள்ள இந்திரக் குடிகள் யாவரும் இந்திரராம் புத்தபிரானையே ஆதியங்கடவுளாக சிந்தித்து அறநெறியில் நின்றொழுகுங்கால் அறப்பள்ளிகளிலுள்ள சமணமுநிவர்கள் வரிவடிவ கல்வியாரம்பம் செய்யுங்காலங்களிலும், வித்தை ஆரம்பம் செய்யுங்காலங்களிலும், இலக்கிய நூல், இலக்கண நூல், ஞானநூல், நீதிநூல் முதலியவைகளை எழுதுங் காலங்களிலும் விநாயகராம் புத்தபிரானைக் காப்புக்கு முன்னெடுத்து துதிக்குங் கடவுளாக சிந்தித்து வித்தியாராம்பஞ்செய்வது இயல்பாம். புத்தபிரானுக்கு விநாயகரென்னும் பெயர் தோன்றிய காரணமோ வென்னில் ஒவ்வோர் சங்கங்களுக்கு சபாநாயராகவும் கணநாயகராகவும் இருக்கும்வரையில் அவரை சபாநாயகரென்றும், கணநாயக ரென்றும் வழங்கிவந்தவர்கள் உலககெங்கும் நாட்டிய சத்தியசங்கங்கள் யாவற்றிற்கும் அவரே நாயகராக விளங்கியதுகொண்டு புத்தபிரானை விநாயகர், விநாயகரென வித்தியாரம்ப காலங்களிலெல்லாம் விசேஷமாகக் கொண்டாடி வந்தார்கள். அக்கால் இவ்வேஷப்பிராமணர்கள் தோன்றி யதார்த்த பிராமணர்களும் சங்கங்களும் நிலைகுலைந்து வருங்காலத்தில் கல்வியற்ற குடிகள் ஆரியவேஷப் பிராமணர்களையடுத்து விநாயகரை போஷித்து அவிற்பிரசாதங் கொடுக்காமலிருக்கின்றீர்களே, காரணமென்னையென்று கேட்க ஆரம்பித்தபோது விநாயகரென்னும் பெயரும் அப்பெயரின் உற்பவமும் அப்பெயர் யாவர்க்குரியவை என்றும் அறியாத வேஷப்பிராமணர்கள் திகைத்து அவரவர்கள் மனம் போன்றவாறு ஒவ்வோர்கட்டுக்கதைகளை உண்டுசெய்து கல்வியற்றவர்களை ஏய்த்துவிட்டார்கள். அதாவது கல்வியற்றக் குடிகள் ஆரிய வேஷப்பிராமணர்களை அடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் ஓர் காட்டில் ஆண்யானையும் பெண் யானையும் மறுவுங்கால் சிவனும் உமையவளுங் கண்டு தாங்களும் மறுவ, யானைமுகக் குழந்தையொன்று பிறந்து சகல மக்களுக்கும் அட்சரவித்தை பயிற்று வித்தபடியால் அவரைதான் வித்தைக்கு முதலாக சிந்திக்கவேண்டுமென்று அவர்கள் தொடுக்குங் காரியாதிகளுக்கெல்லாம் அவுல், கடலை, தட்சணை, தாம்பூலங் கொண்டுவரும் ஏதுவைத் தேடிக் கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் திராவிட வேஷப்பிராமணர்களை அடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்கள் யாதுகூறி பொருள் பரிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள் என்னில் பார்வதி கருப்பந்தரித்திருக்குங்கால் சிவனுக்கு விரோதியாய ஓரசுரன் கருப்பையில் காற்றுவடிவாக நுழைந்து குழந்தையின் சிரசைக் கொய்துவிட்டதாகவும் அதற்கு மாறுபட ஓர் யானையின் தலையை வைத்து உயிர்ப்பித்ததாகவுங் கூறி சகல ஆரம்பங்களிலும் அவ்விநாயகரை சிந்திக்க அவுல், கடலை, தேங்காய், தட்சணை தாம்பூலங் கொண்டுவரவேண்டி சீவனாதாரத்தைத் தேடிக்கெண்டார்கள். கல்வியற்றக் குடிகள் ஆந்திர வேஷப்பிராமணர்களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்களும் விநாயகப்பெருமானின் விசேஷம் அறியாதவர்களாதலின் தங்களுடைய சிவனென்னுங் கடவுள் தக்கனென்னும் அசுரனின் யாகத்தையழிப்பதற்கு தனது முதற்பிள்ளையை அநுப்பியதாகவும், அப்பிள்ளையின் சிரம் யுத்தத்தில் வெட்டுண்டு காணாது போனதாகவும் அவருக்குப்பின் சென்ற இரண்டாவது பிள்ளை சுப்பிரமணியர் சென்று இறந்துகிடந்த ஓர் யானையின் சிரசை வைத்து உயிர்ப்பித்ததாகவுங் கூறி அதை பூசிக்கவும் தட்சணை தாம்பூலம் பெறவும் ஆரம்பித்துக்கொண்டார்கள். மற்றுஞ் சில கல்வியற்றக் குடிகள் கன்னடவேஷப்பிராமணர்களை யடுத்து விநாயகரை சிந்திக்கும் விஷயங் கேழ்குங்கால் பார்வதி நீர் விளையாடிக் கொண்டிருக்கும்போது தன் தேகவழுக்கைத் திரட்டி ஓர் குழந்தையை உண்டு செய்து வாயில்காக்கும்படி செய்ததாகவும், சிவன்வந்தபோது அவருக்கு வழிவிடாதபடியால் அக்குழந்தையை வெட்டிவிட்டு உள்ளே நுழைந்தபோது பார்வதிக்குத் தெரிந்து துக்கித்ததாகவும், சிறுவன் வெளிவந்து சிவன் சிரசைத் தேடியுங் காணாததால் அங்குள்ள ஓர் யானையின் சிரசைக் கொய்து அப்பிள்ளையின் உடலில் சேர்த்து உயிர்பித்ததாகவும் அப்பிள்ளையே விநாயகனென்றும், அதையே சகல வித்தியாராம்பங்களிலும் தொழ வேண்டும் என்றுங்கூறி பொருள்பறிக்கும் வழியைத் தேடி அக்கற்பனைகளை ஓலைச் சுருட்களிலும் எழுதி மெய்க்கதைகளென்று ரூபிக்கும் புராணங்களையும் வரைந்துக்கொண்டார்கள். விநாயகரை சிந்திப்பதற்கு யானையின் முகத்தையே ஒவ்வோர் ஆதரவாக கொண்டு கற்பனாகதைகளுண்டுசெய்துகொண்டக் காரணங்கள் யாதென்பீரேல்; மகதநாட்டுச் சக்கிரவர்த்தி யென விளங்கிய மண்முகவாகின் மனைவி கருப்பமடைவதற்குமுன்பு தனது சொர்ப்பனத்தில் சுயம்பிரகாசமாய் ஓர் வெள்ளையானையின் குட்டிவயிற்றுள் நுழைந்ததுபோற் கண்டு விழித்தவுடன் பத்தாவை அணுகி தனது சொர்ப்பனத்தில் கண்ட விஷயங்களை வெளியிட்டவுடன் மண்முகவாகு அசித்த சாக்கையரென்னும் பெரியோனை வரவழைத்து சொர்ப்பனத்தை வெளியிட்டான். அசித்த சாக்கையரும் சற்றாலோசித்து உமக்கு யானையின் உறத்தைப்போன்ற ஓர் ஆண்குழந்தை பிறக்கும், அதற்குள்ள சுத்தஞானத்தாலும், சுத்த போதத்தாலும் சுத்தச் செயலினாலும் உம்மெய்க் காண்போர் சுத்தயிதயனென்றும், சுத்தயிதயன்பெற்ற சுப்பிரதீப்னென்றுங் கொண்டா டுவார்களென்று கூறிப்போய்விட்டார். அதன்பின் சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் பிறந்து வளர்ந்து சுத்தஞானமுற்று சுயக்கியான போதகராயபோது தன்னை சுராபான மயக்கத்தால் உபத்திரவஞ் செய்த ஓர் யானையை உபத்திரவமில்லாமல் ஒருகரத்தா லேந்தி எறிந்தவற்றைக் கண்ணாரக் கண்டோர், யானையுறத்தோன் யானையுறத்தோனெனக் கொண்டாடிவந்தவற்றிற்குப் பகரமாக திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிய சிலாலயத்துள் அறுபீடங்களை வகுத்து முதற்பீடமே விக்கின பீடமென்று கூறி கோசத்தையும் பீஜத்தையுமடித்து பீடத்தில் வைத்து சிந்தித்தவற்றுள் யானையின் துதிக்கைபோலும், முகம்போலும் பிரிந்திருந்தபடியால் யானைமுக விக்கினவிநாயகனெனக் கொண்டாடிவந்தார்கள். அதை அநுசரித்தே கற்பனா கதைகளை உண்டு செய்த வேஷப்பிராமணர்கள் அவரவர்கள் மனம்போனவாறு கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப் பொருள்பறிப்பதற்காய யானைமுக விநாயகனை உண்டு செய்துக்கொண்டார்கள். ஈதன்றி தென்காசிக்குமேல் கார்வெட்டிநகரை அரசாண்டுவந்த பௌத்த தன்ம அரசனொருவனிருந்தான். அவனது மனைவி பூம்பாவை யென்னுமோர் இராக்கினியுமிருந்தாள். மயிலை புத்தவியார பிச்சையாண்டி வேஷ உற்சாகங் காணவேண்டிவந்து பாம்புகடித்து இறக்கவும் சாக்கையர் துக்கங்கொண்டாடி தகனஞ் செய்யப்பட்டவளுமவளேயாம். அவளது கணவனாகிய மணிவண்ணனென்னும் அரசனோமிக்க அதிரூபமும் வல்லமெய் புருடனுமாயிருந்ததுடன் ஓர் திடகாத்திரமுள்ள மனிதனுக்கு இரக்கை சூஸ்திரம் ஒன்று செய்து அவன்மீதேறி ஆகாயத்திலு லாவவும், கீழிறங்கவும், அம்பேந்தி யுத்தகளங்களுக்குப் போகவும், சத்துருக்களை ஜெயிக்கவுமாய கருடவாகனனென்னும் பெயரும் பெற்றிருந்தான். அக்காலத்தில் கார்வெட்டி நகரத்திற்கு வடமேற்கேயுள்ள மலையடிவாரக் குகையில் ஓர் பெரும் மலைசர்ப்பம் இருந்துகொண்டு அருகில் செல்லும் ஆடுமாடுகளையும் மக்களையும் தனது வலுத்த சுவாசத்தால் இழுத்து புசித்துக்கொண்டே வாழ்ந்திருந்தது. இவற்றைக் கண்ணுற்றுவரும் அத்தேச மக்கள் ஈதோர் காளிசர்ப்பம் என பயந்து அவற்றிற்கு ஆடுமாடுகளைக் கொண்டுபோய் விடுத்து மக்களைத் தொடாமலிருக்கப் பூசித்துவருவது வழக்கமாகும். அவ்வகைப் பூசித்தும் அதன் துற்குணம் மாறாது ஆடுமாடுகளைப்போல் மக்களையும் புசித்துவந்தபடியால் அத்திக்குநோக்கி ஆடுமாடுகளை மேய்ப்பதும் மக்கள் நடப்பதுமில்லாமற் போய்விட்டது. அதனை உணர்ந்த மணிவண்ணன் சூஸ்திரகருடனை வரவழைத்து அம்பிராதூணியுடன் அதன்மீதேறி மலைசர்ப்பம் வீற்றிருக்குங் குகையைநாடி சென்றபோது அக்காளி சர்ப்பமும் வெளி கிளம்பிற்று, உடனே மேனின்று பாணப் பிரயோகஞ் செய்தபோது சர்ப்பங் குகையினின்று வெளிதோன்றி ஓர் சிறுங்குன்று உருளுவதுபோலுருண்டெழும்பியது. உடனே மணிவண்ணன் சுத்தவீரனாதலின் கருடனைவிட்டு சர்ப்பத்தின்மீது பாய்ந்து உடைவாளையுருவி அதன் சிரத்தைப் பிளந்து அதன்மீது நின்றான். காளிசர்ப்பங் கொல்லப்பட்ட சங்கதியைக் கேழ்விப்பட்ட அத்தேசத்தோர்கள் யாவரும் ஓடிவந்து அரசனைக் கொண்டாடி ஆனந்தக்கூத்தாடினார்கள். அவ்வழியே செல்லுவதற்கு பயந்து வேறுவழி சென்றிருந்தவர்களும், ஆடுமாடுகளை விடுவதற்கு பயந்திருந்தவர்களும் அன்றே ஆனந்தமாக செல்ல ஆரம்பித்துக் கொண்டார்கள். மணிவண்ணன் வீரத்தில் வல்லமெயுள்ளவனாயிருந்தும் ஏழைகளுக்கு ஈவதில் வரையாது கொடுக்கும் வள்ளலாகவு மிருந்தான். ஜலக்கிரீடையில் எண்ணாயிரம் முல்லைநில ஸ்திரிகளைக் கொண்டுபோய் நீர் விளையாடுவதுடன் அவர்களை அறியாது வஸ்திரங்களைக் கொண்டுபோய் புன்னை மரத்திற் கட்டிவிட்டு கெஞ்சி விளையாடச் செய்வதுமாய லீலா வினோதனாகவும் இருந்தான். மணிவண்ணன் கொண்டல் வண்ணல், கருடவாகனனென வழங்கப் பெற்றவன். கிரீடை வல்லபத்தால் கிரீட்டினன் கிரீட்டினனென்னும் மறு பெயரையும் பெற்று சில நாள் சுகித்திருந்தான். அவனது ஈகையின் குணத்தையும் அன்பையுங் கண்ட குடிகள் யாவரும் அவனை மணிவண்ண தெய்வமென்றுங், கருடவாகன தெய்வமென்றும், கிரீட்டின தெய்வமென்றுங் கொண்டாடி வருங்கால் மணிவண்ணனும் மற்றுமுள்ளோரும் அறப்பள்ளி அடைந்து ஆனந்த விசாரிணையில் ஆழ்ந்துவிட்டார்கள். அவர்கள் அறத்து நிலையடைந்த முன்னூறு வருடங்களுக்குப்பின் அதே கார்வெட்டி முல்லை நிலத்தில் வந்துசேர்ந்த ஆரியவேஷப்பிராமணர்களுள் வியாசாச்சாரி என்னப்பட்டவன் தங்களுக்கென்று சில பூமிகளைக் கைப்பற்றி முல்லை நிலத்தோர் வைத்துள்ளப் பாடியென்னும் பெயரைப் போல் அப்பூமிக்கு வியாசர்பாடி என்னும் பெயரைக்கொடுத்து சகலராலும் வழங்கச்செய்து அவ்விடமே யாசகசீவனஞ் செய்துவருங்கால் அத்தேச பௌத்தர்கள் மணிவண்ணனென்னுங் கிரீட்டினனைக் கொண்டாடிவருவதைக்கண்டு கிரீட்டினனென்னும் பெயரை கிருட்டன் கிருஷ்ணன் என மாற்றி வேறோர் கற்பனையை உண்டு செய்து அக்கிருஷ்ணனும் கருடன் மீதேறினான், அக்கிருஷ்ணனும் ஓர் சர்ப்பத்தைக் கொன்றான், அக்கிருஷ்ணனும் பன்னீராயிரம் ஸ்திரீகளுடன் லீலைபுரிந்து அவர்கள் ஆடைகளை புன்னைமரத்திற் கட்டினானனென வரைந்து அத்தேசப் பூர்வ சரித்திரம்போற் காட்டி மேலும் மேலுங் கற்பனை கதைகளை வரைந்து தங்களை சிறப்பித்துக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில்:- பெளத்தருக்குள் கர்ணராஜன் சரித்திரமொன்று எழுதிவைத்திருந்தார்கள். கர்ணராஜனது ஈகையின் மகத்துவத்தையும் அதன்பின் பங்காளிகளுக்குள் பாகவழக்கு நேரிட்டு ஒருவருக்கொருவர் அஸ்திநாதபுறமென்னும் குருவின் க்ஷேத்திரத்தில் கலகமிட்டுத் தாங்கள் மடிந்ததுமன்றி தங்களை அடுத்த அரசர்களையும் அவர்களது சந்ததியோர்களையுங் கூட்டி மடித்துவிட்டார்கள். அக்கதையை பெளத்த உபாசகர்கள் குடிகளுக்குப் போதித்து ஈகையில் கர்ணராஜனைப் போலிருக்கவேண்டிய நிலையை விளக்கி வந்ததுமன்றி பேராசையால் பெருந்துக்கம் நேரிடுமென்பதை விளக்குவதற்காக பூமியின் பாகவாசையால் சகோதிரர் களுக்குள் நேரிட்ட கலகத்தையும் அதனால் சகலரும் மடிந்த கோரத்தையும் விளக்கி லோபகுணத்தை நீக்கி ஈகையைப் பெருக்கும்படியான வழியில் நிலைக்கச்செய்துவந்தார்கள். அதே கதையை இவ்வியாசாச்சாரி பீடமாகக்கொண்டும், பகவன் சைன பர்வதத்தில் எழுதிவைத்திருந்த தசபார மிதையென்னும் தச சீலத்தைப் பெயராகக் கொண்டும் இக்கதை வினாயகனால் மலையிலெழுதியிருக்க, பாரதமென்றுங் கூறி, கர்ணராஜன் சரித்திரத்தையும் அவனது பிறப்பு வளர்ப்பையும் இயற்கைக்கு விரோதமாகக் கூட்டியுங் குறைத்தும் எழுதி அக்கதைக்கு ஆதார புருஷன் கிருஷ்ணனென்றும் வரைந்து கார்வெட்டிநகர் கிரீட்டினன் கதையைக் கால்மாடு தலைமாடாக மாற்றிவிட்டான். கார்வெட்டிநகர் அரசனின் சரித்திரத்தை நன்குணர்ந்துள்ள பௌத்தர்கள் ஈதேது புதுசரித்திரமாகக் காணப்படுகின்றது, பூர்வசரித்திரத்திற்கும் இதற்கும் மாறுபடுகின்றதேயென்று கூறுவார்களாயின் வியாசாச்சாரி அவர்களுக்கு யாது மாறுத்திரங் கூறிவந்தானென்னில் அவரைப்போன்றே இவரோர் அவதாரமாக வந்தவர், அவரைப்போன்ற அவதாரமாக வந்தபடியால் சில சரித்திரங்கள் மாறுபட்டிருப்பினும் சிலது பொருந்தியே இருக்குமென்று விவேகிகளுக்கு விடையளித்துவிட்டு கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பெளத்தமார்க்க மணிவண்ணன், பெளத்தமார்க்க கருடவாகனன், பெளத்தமார்க்கக் கிரீட்டினனெனக் கூறி முல்லைநில வாசிகளாம் இடையர்கள் யாவரையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பால், தயிர், மோர், நெய் முதலியவைகளை இலவசமாகப் பெற்று சீவிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அதன் காரணமோ வென்னில், ஆரிய வேஷப்பிராமணர்கள் இத் தேசம்வந்து குடியேறிய பின்னர் பௌத்தர்கள் முன்னிலையில் மிருகாதிகளின் புலாலைப் புசிப்பதற்கு பயந்துகொண்டு மாடுகளையுங் குதிரைகளையும் நெருப்பிலிட்டு யாகம், யாகமெனச் சுட்டுத்தின்றுகொண்டே வந்தபடியால் இவர்களைக்காணும் பௌத்தர்கள் யாவரும் புலால் புசிக்கும் மிலேச்சர் மிலேச்சரெனக் கூறி துரத்திக்கொண்டே யிருந்தபடியால் சகலருங்காணுங்கால் புசிப்பதை விடுத்து மறைவில் புலால் உண்டுகொண்டு, முல்லைநிலவாசிகளுக்கு கிரீட்டினன் கதையை மிக்க வர்ணனையாகக்கூறி இக்கிரீட்டினன் உங்கட்குலத்தில் அவதாரப் புருஷனாகத் தோன்றி பூமிபாரந்தீர்த்தவர். இக் கதையோ மிக்கப் புண்ணியகதை. இதனை மிக்க பயபக்தியுடன் கேட்பவர்கள் யாரோ அவர்கள் யாவருமேலாய பதவியை அடைவீர்களென்று முல்லை நிலவாசிகள் யாவரையும் அக்கதையைப் புண்ணியக் கதையென்று கேட்கும்படிச் செய்து பொருள்பறிப்பதுடன் தயிர், நெய் முதலியவற்றையும் இலவசமாகப் பெற்று சுகிக்க ஆரம்பித்து கர்ணராஜன் கதையில் எங்கெங்கு கிரீட்டினன் கதையை சிறப்பிக்கவேண்டுமோ அங்கங்கு மிக்க சிறப்பித்து, அவரோர் அநாதாரபுருஷன், அவரோ பூமிபாரந் தீர்த்தவர், முல்லைநில கோபிகா ஸ்திரீகளுடன் விளையாடினவர் இவரே மகாதேவன். இவரது சரித்திரத்தைக் கேட்போர் யாவரும் புண்ணியபலனை அடைவீர்களென்று முல்லை நிலமெங்கணும் இக்கதையைப் பரவச்செய்து தென்காசிமக்களை மருட்டி விட்டதுமன்றி வடகாசிமக்களுக்குச்சென்று கர்ணராஜன்கதையைக் கொண்டு சீவிக்குமிடத்தில் அவர்களுக்கும் அக்கதையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்காய் புத்தரே கிருஷ்ணன், கிருஷ்ணனே புத்தர், கிருஷ்ண அவதாரமாக வந்த அவரது கதையைக் கேட்போர் புண்ணியப்பலனைப் பெருவரென்றுகூறி கல்லினால் நெருப்பில் தீய்ந்த முகமும் தீய்ந்த காலுங்கையும் போலடித்து ஓர் விக்கின வுருவொன்று செய்து ஓர் நூதனக் கட்டிடத்தில் வைத்து இவர்தான் அக்கிரிஷ்ணன் இவரை நெருப்பிட்டுச் சுட்டும் இத்தேகம் அழியாமலிருந்த இவர்தான் ஜகநாதன், விட்டோவென்னுங் கல்லுருக்கொண்டுள்ளபடியால் இவரே விட்டுணு, இவரே விஷ்ணு அவதாரபுருஷனாக வந்தவரென மருட்டி கிஞ்சித்து சரித்திரம் தெரிந்த பௌத்தர்களையும் சமணமுநிவர்களையும் மயக்குதற்கு இயலாவிடினுங் கல்வியற்றக் குடிகளை வசப்படுத்திக் கொண்டார்கள். அத்தகைய வகைப்பட்டுள்ளபோதினும் காசியரசனும் ஒன்பதினாயிரம் சமணமுநிவர்களும் வயப்படாமல் வேஷப் பிராமணர்களை விரட்டித் துரத்தவும் அவர்களது பொய்வேஷங்களைப் பகருவதுமாயிருந்தார்கள். தென்காசிக்கு வடமேற்குதிக்கில் குடியேறியிருந்த ஆரியவேஷப் பிராமணர்களுள் இராமாநுடாச்சாரி என்பவன் வடகாசியில் அமைத்துள்ள விட்டுணு வென்னுங் கற்சிலை தெய்வாதாரத்தைக்கொண்டு புத்தரது சரித்திரத்தை அநுசரித்த ஓர் கூட்டத்தை ஏற்படுத்தி அதனால் சீவிக்க ஆரம்பித்துக்கொண்டான். அவை யாதெனில், புத்தபிரான் கமலபாதம் இரத்திதீவகற்பாறையில் பதிந்துள்ளதை சந்தனத்தாலும் மெழுகினாலும் பதித்துவந்து சங்கங்களில் வைத்து பூசிப்பதுடன் புத்தரது சத்தியசங்கத்தையும் புத்தரது தன்மச்சக்கரத்தையும் சிந்தித்து நீதிவழுவா நிலையில் நின்றொழுகும் பெளத்தர்களது செயலினை அறிந்து வந்த இராமனுடாச்சாரி, புத்தபிரான் பாதப்படியை விட்டுணு பாதப்படியென மாற்றி தாமரை புட்பத்திலிருப்பது போல் வரைந்து சிந்தாவிளக்கென்னும் அம்மனின் சோதியை மத்தியில் வரைந்து சத்தியசங்கத்தை சங்குபோல் வரைந்து தன்மச்சக்கரத்தை சக்கரம்போல் வரைந்து அம்முக்குறிகளாம் சின்னங்களே விட்டுணுவின் சின்னங்களெனக்கூறி விட்டுணுசமயமென்னும் ஓர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டான். பதுமநிதி, தன்ம நிதி, சங்கநிதியாம் புத்த, தன்ம, சங்க மும் மணிகளையே இரண்டாவது சமயத்திற்கோரடிப்படையாக்கிக்கொண்டார்கள். ஆரிய வேஷப்பிராமணர்கள் புருசீகதேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறி யாசகசீவனஞ்செய்து பிழைப்பதுடன் பௌத்த சரித்திரங்களையும் செயல்களையுமே பீடமாகக்கொண்டு சிவசமயமென்றும், விட்டுணு சமயமென்றும் அவரவர்கள் மனம்போனவாறு பெளத்த தன்மத்தைக் குறைத்துங் கூட்டியும் வரைந்துவைத்துக் கொண்டுள்ளவற்றை விவேக மிகுத்தோர் அச்சமயசார்புக்குப் பராயர்களாயிருந்துக் கண்டித்துக்கொண்டேவரவும், கல்வியற்றக் குடிகளுங் காமியமுற்ற அரசர்களும் பௌத்தமதத்தைச் சார்ந்தப் பெயர்களையும் அதனதன் செல்களையுங் கேட்டவுடன் இஃது யதார்த்த பௌத்ததன்மமென நம்பி ஆடு கசாயிக்காரனை நம்பிப் பின்னோடுவதுபோல் இத்தேசப் பூர்வக்குடிகள் வேஷப்பிராமணர்களின் போதத்தை மெய்யென நம்பி அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துக்கொண்டார்கள். இத்தகைய மதக்கடைப் பரப்பி சீவிக்கும் ஆரிய வேஷப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும், மராஷ்டக வேஷப்பிராமணர்களும், கன்னட வேஷப்பிராமணர்களும், ஆந்திர வேஷப்பிராமணர்களும், வங்காள வேஷப்பிராமணர்களும், பப்பிர வேஷப்பிராமணர்களும், தேகவுழைப்பின்றி கஷ்டப்படாத சோம்பேறிசீவனங்கொண்டு நாளுக்குநாள் பெருகிவிட்ட படியாலும், அவர்களது பொய்ப் போதங்களை மெய்யென நம்பித் திரியும் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற சிற்றரசர்களும், பெருகிவிட்டபடியாலும், பெளத்த உபாசகர்களாம் மேன்மக்களின் மெய்ப்போதங்கள் மயங்கியதுடன் சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றும், கீழ்மக்களாகவும் பாவிக்கநேர்ந்துவிட்டது. சாதுசங்கங்கள் பாழ்படவும், சமண முநிவர்கள் நிலைகுலையவும், சத்தியதன்மம் அழிந்து அசத்தியர்களும் அசப்பியர்களும் துன்மார்க்கர்களும் பரவிவிட்டார்கள். இத்தகைய துன்மார்க்கர்கள் பரவி சன்மார்க்க சங்கங்களும் நிலைகுலைந்ததன்றி அறப்பள்ளிகளில் சிறுவர்களுக்குப் போதித்துவந்த கல்விசாலைகளும் அழிந்து கைத்தொழில் விருத்தியும் ஒழிந்து நூதனசாதிபேதச் செயல்களால் ஒற்றுமெக்கேடே மிகுந்து சமயபோராட்டத்தால் சாமி சண்டைகளே மலிந்துவருங்கால் மகமதிய துரைத்தனம் வந்து தோன்றிவிட்டது. இந்திரர்தேய வடபாகத்தில் வந்து குடியேறிய மகமதிய அரசர்களுக் குள்ளும், புருசீகதேச வேஷப்பிராமணர்களே பிரவேசித்து அவர்களுக்கு வேண ஏவல்புரிந்தும் இத்தேசத்தின் போக்குவருத்துகளை உரைத்தும் தங்களுக்குரிய சிற்றரசர்களை நேசிக்கச்செய்தும் தங்களுக்கு எதிரிகளாயுள்ள பௌத்த அரசர்களையும் விவேகமிகுத்தக் குடிகளையும் பெருஞ் சங்கங்களாயிருந்த சமண முனிவர்களின் கூட்டங்களையும் அழிக்கத்தக்க ஏதுக்களைத் தேடிவிட்டார்கள். அதாவது சமணமுனிவர்களின் கூட்டத்தோர்கள் யாவரும் ஒரே மஞ்சள் வருண ஆடைகளைக் கட்டிக்கொண்டு சிரமொட்டையாயிருந்த படியால் மகமதியர்களுக்கு ஈதோர் படை வகுப்பென்று கூறி அவர்களுக்குக் கோபத்தை மூட்டிவைத்துக்கொல்லும் வழியைச் செய்து அந்தந்த அறப்பள்ளிகளில் தாங்கள் நுழைந்து சிலைகளையே தெய்வமெனத் தொழும்வழியாம் மதக்கடைகளைப் பரப்பிப் பொருள்பறித்து சீவிக்கும் வழிகளை உண்டு செய்து வருங்கால் சண்டாளர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும், தாழ்த்தப்பட்டுள்ள விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் முயன்று கல்லுகளையும் கட்டைகளையும் தெய்வமென்று தொழுவது அஞ்ஞானமென்றும், அத்தகையத் தொழுகையால் கல்லைத் தொழூஉங் கர்ம்மமே கனகன்மமாக முடியுமென்றும் அதனால் கல்வியின் விருத்தியும் கைத்தொழில் விருத்தியுங் குன்றிப்போமென்றும் இம்மெயில் ஒருக்கல்லை வைத்துப் பூசித்து சீர்கெடுவோன் மறுமெயில் பத்துக்கல்லைவைத்துப் பதமழிவானென்றும் போதித்து வருவனவற்றைக் கேட்டுணர்ந்து சில விவேகிகள் வேஷப்பிராமணர்களையடுத்து எக்கருமத்தை இம்மெயில் செய்துவிடுகின்றானோ அக்கருமமே அவனை மறுமெயிற் தொடருமென்பது முன்னோர்கள் போதமாயிருக்க, இக்கற்சிலைகளைத் தொழலால் பிணிநீங்குமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் சம்பத்துண்டாமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் புத்திரபாக்கியமுண்டாமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் முத்தி பேறுண்டாமென்றுங் கூறுவதும் அவ்வகைக்கூறியே பொருள்பறிப்பதுமாயச் செயல்களையும் போதகங்களையும் நோக்குங்கால் அச்செயல்கள் யாவும் தங்களுக்காய சுயப்பிரயோசனச் செயல்களாகக் காணப்படுகிறதன்றி எங்களுக்காயப் பிரயோசனம் ஒன்றையும் காணோமேயென்று கேட்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அக்கேள்விகளை உணர்ந்த வேஷப்பிராமணர்கள் சற்று நிதானித்து பகவனாம் புத்தபிரானால் போதித்துள்ள தன்மங்களில் உங்களுக்குள்ள துற்கன்மங்கள் நற்கன்மங்கள் யாவையும் நன்காராய்ந்து உங்களுக்குள் நீங்களே துற்கன்மங்களை அகற்றி நற்கன்மங்களை பெருக்கி உங்களுக்குள்ள உண்மெயில் அன்பை வளர்த்துங்கள். அத்தகைய உண்மெய்யுணர்ச்சியில் உங்களுக்குள்ள இராகத்துவேஷமோகங்களை நீங்களே அகற்றி உங்களுக்குள்ள பேரின்ப சுகத்தை நீங்களே அநுபவிப்பீர்களென்னும் வாக்கியத்தைக்கொண்டு தன்மபாத மென்னும் இருசீரடி பெளத்த போதங்களையே ஓராதாரமாகக் கொண்டும் புத்தரது பெயரையே பீடமாகக் கொண்டும் பகவத்கீதை என்னும் ஓர் நூலை வரைய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதாவது, பன்னீராயிரம் கோபிகா ஸ்திரீகளின் லீலா வினோதனும், அர்ச்சுனனுக்கு சுபுத்திரை, பவழவல்லி, அல்லி யரசாணி முதலிய ஸ்திரீகளைக் கூட்டி வைத்தவருமாகிய பாரத கதாபுருஷன் கிருஷ்ணனுக்கு புத்தருக்குரிய பகனென்னும் பெயரைக்கொடுத்து, அப்பகவனாற் போதித்த பகவத்கீதையென வகுத்து, பூர்வ சத்தியதன்மத்தில் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் தன்னை போஷிக்கவேண்டும், தன்னை ஆராயவேண்டும், தன்னை சிந்திக்கவேண்டும் மென்னுந் தன்மங்களை என்னை போஷிக்கவேண்டும், என்னை ஆராய வேண்டும், என்னை சிந்திக்கவேண்டுமெனக் கிருஷ்ணன் கூறியதுபோல் ஆரம்பித்து சிலைகளைத் தொழுது முத்திபேறுபெற விருப்பற்றவர்கள் கிருஷ்ணனாகிய என்னைத் தொழுவீர்களாயின் சகலமும் நானாதலால் நானே முன்னின்று சுகமளிப்பேனென்பதுடன் கொல்லவைப்பவனும் நானே, கொல்லுபவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே யென வரைந்துவைத்துக் கொண்டு, இஃது பாரத யுத்தாரம்பத்தில் அர்ச்சுனன் வில்லை வளைத்து குணத்தொனிசெய்து படையை நோக்கியபோது சகல சேனைத்தலைவர்களும் தனது பந்துமித்திராகத் தோன்றியபடியால் வளைத்த வில்லை நிமிர்த்தி சோர்வடைந்தானாம். அதைக்கண்ட கிருஷ்ணன் இக்கீதையை அர்ச்சுனனுக்குப் போதித்து யுத்தவுச்சாகம் உண்டாக்கியதாகப் பாயிரம் ஏற்படுத்திக் கொண்டார்கள். இக்கீதையை முற்றும் வாசிப்பவர்கள் சற்று நிதானித்து வில்வளைத்து குணத்தொனி செய்தபின் இக்கீதையை சொல்லிமுடிக்கும் வரையில் எதிரியின் சேனைத் தலைவர்கள் பொறுத்திருப்பார்களா என்பதை ஆலோசிப்பார்களாயின் இஃது யுத்தகாலப் போதனா கீதையன்று, காலத்திற்குக்காலம் சாவகாசத்தில் வரைந்துக் கொண்ட கீதையென்றே தெள்ளற விளங்கும். பௌத்தரிடமுள்ளக் கர்ணராஜன்கதையில் கிருஷ்ணன் பெயருங் கிடையாது, இக்கீதையுங் கிடையாது. ஈதன்றி பெளத்த தன்ம சாஸ்திரிகள் உடலுயிர் பொருந்தும் செயலுக்குரிய புருஷனுக்கு ஆன்மனென்னும் பெயர்கொடுத்து அப்பெயரை ஓர் புருஷன் பற்றற்ற நிலையாம் அநித்திய, அனாத்துமன், நிருவாணமடையும் வரையில் வழங்கிவந்திருக்கின்றார்கள். பஞ்சஸ்கந்தங்க ளமைந்த புருஷனே ஆன்மன், ஆன்மனே புருஷனென்றுணராதும் அதனந்தரார்த்தம் அறியாதும் தேகத்தினுள் பரமாத்துமனென்றும், சீவாத்துமனென்றும், இரண்டிருக்கின்றதாகவும், அவைகளே தேகத்தை ஆட்டிவைக்கின்றதென்றும் தாங்கள் மங்கிக்கெடுவதுடன் அவற்றை வாசிப்பவர்களுங் கெட்டு மயக்குறும்படி எழுதிவைத்துள்ளதுமன்றி அவற்றை எழுதியவர் யாவரென வரைந்துள்ளாரென்னில் உலகெங்கும் சுற்றி சத்தியதன்மத்தை விளக்கிய ஜகத்குருவாம் புத்தபிரானுக்குரிய சங்கமித்தர், சங்கதருமர், சங்க அறரென்னும் பெயரையே பேராதாரமாகக்கொண்டு வேஷப்பிராமணர்களுக்குள் வாட்டஞ்சாட்டமுடைய ஒருவனுக்கு நீண்டகுல்லா சாற்றி இவரே ஜகத்குரு, இவரே சங்கராச்சாரியெனக் கூறி வேண பொருள் பறித்துத் தின்றவர்கள் அக்கதாபுருஷ சங்கராச்சாரி ஒருவன் பிறந்து வளர்ந்து ஆன்ம போதத்தை வரைந்துள்ளானென்னும் ஓர் காரணமற்ற கற்பனாகதையை வரைந்துக் கொண்டு, கற்சிலைகளே சுகச்சீரளிக்கும் கற்சிலைகளே மோட்சமளிக்குமென நம்பாதவர்கள் இவ்வான்மபோதத்தை நம்பி ஜகத்குரு பரம்பரையோருக்குப் பொருளளித்து வரவேண்டுமென்னும் தங்கள் போதத்தை நிலைக்கச்செய்துகொண்டார்கள். இவற்றுள் நீலகண்ட சிவாச்சாரி கற்சிலைகளையே சிவமெனத் தொழவேண்டுமென்று ஓர்வகையும் இராமானுடாச்சாரி ஸ்ரீபாதத்தையும், சங்குசக்கிரத்தையுமே விட்டுணுவெனத் தொழவேண்டுமென மற்றோர்வகையும், ஆளில்லா சங்கராச்சாரியின் ஆத்மபோதம் ஓர்வகையும் உள்ளக் கிரீட்டினன் சரித்திர மற்று அவதாரப் புருஷக் கிருஷ்ணன் பகவத்கீதை ஓர் வகையுமாகப் பரவி புத்தபிரான் சத்தியதன்மம் மாறுபட்டுக்கொண்டேவந்துவிட்டது. சத்தியதன்மம் மாறுபட்டு நிலைகுலையவும் அசத்தியதன்மம் பரவி நிலைநிற்கவுமாயக் காரணம் யாதெனில், பெளத்ததன்மம் கன்மத்தையே பீடமாக கொண்டதாதலின் தன்னை மற்றொருவன் பொய்யைச் சொல்லி வஞ்சிக்காதிருக்கப் பிரியமுள்ளவன் மற்றொருவனைப் பொய்யைச்சொல்லி வஞ்சிக்காதிருக்கவேண்டியது. தன்தேகத்தை மற்றொருவன் வருத்தி துன்பஞ் செய்யாதிருக்க எண்ணுகிறவன் அன்னியப்பிராணிகளைத் தான் துன்பஞ் செய்யாமலிருக்கவேண்டியது. தன்தாரத்தை அன்னியர் இச்சிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் தாரத்தை தானிச்சிக்காதிருக்க வேண்டியது. தன் பொருளை அன்னியர் அபகரிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் பொருளை தானபகரிக்காதிருத்தல் வேண்டும். எக்காலும் ஜாக்கிரத்திலும் நிதானத்திலுமிருக்கப் பிரியமுடையவன் மதியை மயக்கும் மதுவை அருந்தலாகாதென்று கூறி பெளத்தர் யாவரையும் நீதிநெறி ஒழுக்கமாம் நெருக்கபாதையில் நடந்து வாழ்க்கையிலிருக்கும்படி போதித்து வந்தார்கள். வேஷப் பிராமணர்களோவென்னில், தாங்களேற்படுத்திக் கொண்ட தெய்வங்களுக்கு இரண்டு பெண்சாதியென்றும், மூன்று பெண்சாதியென்றும், தங்கள் தெய்வங்களே அன்னியர் தாரங்களை இச்சித்ததென்றும் பொய்க் குருக்களாகிய தாங்களே உயிருடன் மாடுகளைச் சுட்டுத்தின்றவர்களும், உயிருடன் குதிரைகளை சுட்டுத் தின்றவர்களும், மயக்கத்தை உண்டு செய்து மதியைக் கெடுக்கும் சுராபானங்களை அருந்துகிறவர்களும் அன்னியர் பொருளை திருடித்தின்றவர்களுமாய்க் கூட்டத்தோர் நாளுக்குநாள் பெருகிவிட்டபடியால், புத்ததன்மத்தின் கடினமாய நீதிமார்க்க ஒடுக்கவழிகளுக்கு பயந்து தேச சீர்கேட்டிற்கும், மக்கள் சுகக்கேட்டிற்குமாய அநீதியாம் பெருவழியில் பிரவேசிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் புத்ததன்மம் நாளுக்குநாள் குறையவும், அபுத்ததன்மமாகியப் பொய்சமயங்களும், பொய்ச் சாமிகளும், பொய் போதகங்களும் பெருகி பொய்யிற்குப் பொய் மூட்டுக்கொடுத்து பொய்ப்புராணங்களை வரைந்து, பேதை மக்களாம் கல்வியற்றக் குடிகளை மயக்கி, தங்களை தேவிகளுக் கொப்பானவர்க ளென்றும் மற்றவர்கள் மநுமக்களே என்றும் அம்மனுக்களில் தங்கள் பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய்ப்போதகங்களையும் பொய்மதக் கடைகளையுங் குடிகளுக்கு விளக்கி விவரித்துவந்த விவேகமிகுத்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளெனக் கூறியும் தங்களையொத்த வேஷப்பிராமணர்கள் யாவரையும் உயர்ந்த சாதிகளெனக் கூறியும் தங்கள் தங்கள் மித்திரபேதங்களினாலும் மகமதிய துரைத்தனத்தார் உதவியைக் கொண்டும் பௌத்தர்களின் அறப்பள்ளிகளையும் சமணமுனிவர்களையும் சீர்கெடுத்து நிலைகுலையச் செய்துவிட்டதுமன்றி, வேஷப்பிராமணர்களுக்கு எதிரடை யாயிருந்த விவேகமிகுத்த பௌத்தக்குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளென வகுத்து, நிலைகெடச்செய்யும்படி ஆரம்பித்து பலவகையிடுக்கங்களாலும் பலவகைத் துன்பங்களாலும் நசித்து விவேகமிகுத்த மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றுந் தாழ்த்தி பலவகையாலும் இம்சித்து வதைத்துவருங்கால் இவர்கள் செய்துவந்த பூர்வ புண்ணிய வசத்தால் மேல்நாட்டு ஐரோப்பிய விவேகக்கூட்டத்தோர் வந்து தோன்றினார்கள். அவ்வகை வந்து தோன்றியவர்களுக்குள் சிலர் வியாபார விசாரிணை யிலும், இராஜகீய விசாரிணையிலும் இருந்தபோதிலும் சிலர் வடகாசியில் வழங்கிவந்த வேதம் வேதமென்னு மொழியிலேயே ஊக்கமுடையவர்களாகி அதன் ஆராய்ச்சியிலிருந்தார்கள். காரணமோவென்னில் புத்தபிரான் ஆதிசங்கத்தை நாட்டியதுங்காசி, சமணமுநிவர்களை நிறப்பியதுங் காசி, ஆதிவேத மொழிகளாம் திரிபீடவாக்கியங்களை பரவச்செய்ததுங்காசி, அம்மூவரு மொழிகளாம் பேதவாக்கியத்தின் அந்தரார்த்த உபநிடதங்களை விளக்கியதுங் காசி, அவர் பரிநிருவாணமுற்றதுங் காசியாதலின் அங்குள்ள மக்களும் கங்கையாதாரனாம் காசிநாதன் வியாரத்தை தரிசிக்கவரும் மக்களும் திரிபேதவாக்கியங்களையே சிரமேற்கொண்டேந்து மொழியைக் கேட்கும் ஐரோப்பிய விவேகிகள் வேதமென்பதென்ன, அஃதெங்குளது, அதன் பொருளென்னையென விசாரிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அக்காலத்திலும் பௌத்ததன்ம விவேகிகள் ஒருவரும் ஐரோப்பியர்களிடம் நெருங்காது வேஷப்பிராமணர்களே முன்சென்று வேணசங்கதிகளைக் கூறவும் தேசசங்கதிகளை விளக்கவுமுடையவர்களாயிருந்ததுடன் மகமதியர்கள் வந்து குடியேறியபோதே அவர்களது உதவிகொண்டுந் தங்கள் கெட்ட எண்ணங்களினால் காசியிலுள்ளப் பெருங் கட்டிடங்கள் யாவையுந் தகர்த்து புத்தரைப்போன்ற சிலைகள் யாவையும் அப்புறப்படுத்தியும், மண்களிற் புதைத்தும், தங்களெண்ணம்போற் செய்துக் கொண்ட விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தாங்களே இத்தேசத்துப் பூர்வக்குடிகள்போல் அபிநயித்து பௌத்தர்களை அவர்களிடம் பேசவிடாமலும் நெருங்கவிடாமலும் செய்துகொண்டிருந்த காலத்தில் இந்திரரை சிந்திக்கும் இந்திரதேசக் குடிகளை இந்தியரென்று வழங்கிவந்தப் பெயரை மாற்றி மகமதியர்களால் (இந்து லோகா) வென வழங்கி நாளுக்குநாள் இந்து இந்துவென வழங்கிக்கொண்டே வந்துவிட்டார்கள். அவ்வழக்க மொழியைக் கேட்டுவந்த ஐரோப்பியர்களும் வேஷப்பிராமணர்களை இந்து வென்றழைத்து, உங்கள் இந்து வேதமென்பதென்னை, அதன் கருத்தென்னை யென வினவ ஆரம்பித்தபோது, வேதமென்னு மொழியை அறியாதவர்களும் அனந்தரார்த்தந் தெரியாதவர்களுமாதலின் சிலகால் திகைத்தே நின்றார்கள். காரணமோவென்னில், புத்தசங்கங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் புத்தபிரானால் ஆதியில் போதித்த அருமொழிகளாம் செளபாபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபசம்பதா, சசித்தபரியோதானம் எனும் மூன்று சிறந்த மொழிகளும் முப்பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்கவுமாயிருந்தபடியால் திரிசுருதிவாக்கியங்களின் உபநிட்சை யார்த்தங்களை விளக்கும் தெளிபொருள் விளக்கம் முப்பத்திரண்டுக்கும் உபநிடதங்களென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் பண்டி என்பதை வண்டி என்றும், பரதன் என்பதை வரதன் என்றும், பைராக்கி என்பதை வைராக்கி என்றும், பாணம் என்பதை வாணம் என்றும் பாலவயது என்பதை வாலவயது என்றும் வழங்கிவருவதுபோல் திரிபேதவாக்கியங்களென்பதை திரிவேத வாக்கியங்களென சிலகால் வழங்கி வீடுபேறாம் ஒரு மொழியையுஞ் சேர்த்து நான்கு பேதவாக்கியங்களென்றும், நான்கு வேதவாக்கியங்களென்றும் வழங்கி வந்தார்கள். இதன் பேரானந்த அந்தரார்த்தமும். ஞானரகசியார்த்தமும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணமென்னும் பாகைப்பொருளின் பகுப்பும், இவ்வேஷப்பிராமணர்கள் அறியாது தங்கள் தங்கள் மனம்போனவாறு அக்கினியைத் தெய்வமெனத் தொழும் புருசீகர்களின் சரிதைகளிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் பௌத்தர்களாம் இந்தியர்களின் சரித்திரங்களிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும், இருக்கு, யசுர், சாம, அதர்வண, சாகை பாகங்களாம் நான்குபேதமொழிகளை நான்கு வாக்கியங் களென்று உணராமலும், அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறை பொருளாயுள்ளதுகண்டு ஒவ்வொரு மொழியின் உட்பொருளை தெள்ளற விளக்குமாறு வேதமொழிகளின் உபநிட்சயார்த்தமென்னும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை அறியாமலும் வேதமென்னு மொழியை பெரியக் கட்டுபுத்தகமென்று எண்ணி முதல் வேதத்திலுள்ளது புத்தகங்கள் பத்தென்றும், காண்டங்கள் இருபது என்றும் வாக்கியங்கள் ஆராயிரத்துப் பதினைந்தென்றும் அநுவாகங்கள் நூத்தியெட்டென்றும், சூக்தங்கள் எழுநூற்றி அறுபதுக்கு மேற்பட்டதென்றும், பிரபாதங்கொண்டது நார்ப்பதென்றும் முதல்வேதமென்பதுள் வரைந்துள்ளது போலவே மற்ற மூன்று வேதமென்பதையும் பெருங் கட்டுகளாக வரைந்துவிட்டார்கள். இவ்வகை வரைந்துள்ள வேதங்களை கடவுள் பிரம்மாவுக்குப் போதித்தாரென்றும், பிரம்மா முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் ஓர்புறங் காணலாம். சிற்சில அரசர்களே வேதங்கள் எழுதினார்களென்பதை மற்றோர் புறங் காணலாம். பிரஜாபதியாலும், சந்திரனாலும் அக்கினியாலும் வேதங்கள் எழுதப்பட்டதென்பதை இன்னோர்புறத்திற் காணலாம். அதர்வணன்பிள்ளை எழுதினான் தேவர்கள் எல்லோரும் எழுதினார்களென்பதை வேறோர்புறத்திற் காணலாம். இவ்வகை மாறுதலாக இன்னார்தான் அப்பெருங்கட்டாகிய வேதத்தை எழுதியவர்களென்பது புலப்படாமலிருப்பதற்குக் காரணம் அவர்கள் மனம்போனவாறு பலரும் எழுதி பல துரைகளிடம் வேதம், வேதமென வரைந்துக்கொண்டுபோய்க் கொடுத்துள்ளதாயின் அவர்கள் வேதத்தின் ஆக்கியோன் இன்னானேயென்று ரூபிக்கப்பாங்கில்லாமல் போய்விட்டது. இவ்வேதத்தின் ஆக்கியோன் இல்லாத படியால்தான் அசுரன்திருடி கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளித்துவைத்த வேதத்தை இன்னொரு கடவுள் அதிப் பிரயாசையுடன் மச்சாவதாரமெடுத்து சமுத்திரத்திற் சென்று கொண்டு வந்திருக்கின்றார். ஆக்கியோன் ஒருவரிருந்திருப்பாராயின் உடனுக்குடன் வேறொரு வேதக்கட்டை எழுதிக்கொடுத்துவிட்டிருப்பார். மட்சாவதாரம் வேண்டியிருக்காது. அசுரனுடன் போர்புரியும் அவசரமுமிராது. அவ்வேதத்துள் எழுதிவைத்துள்ள சங்கதி யாவும் அக்கினியையே தெய்வமாகத் தொழுஉங் கூட்டத்தோர் சங்கதிகளும் புத்ததன்மத்தைச்சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை ஒன்றுங் கிடையா. அவ்வேதத்துள் புத்ததன்ம சரித்திரங்களிலுள்ளப் பெயர்களும் ஞானங்களும் அடங்கியிருந்த போதினும் அதன் தன் பொருட்களையும் செயல்களையும் உணராமலே வரைந்து வைத்துவிட்டார்கள். இவ்வேதத்துக்கு உரியவர்கள் இத்தேசத்தவர்களாயிராது அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறி தங்கள் தங்கள் சுயப் பிரயோசனத்திற்காய்ப் புத்ததன்ம அறஹத்துக்களைப்போல் பிராமண வேஷம் அணிந்துக் கல்வியற்றக் குடிகளை வஞ்சித்து வந்தபோதிலும், புத்த தன்மத்தைச் சார்ந்த சிரமணர்கள் செயல் யாது, சிரமணர்கள் மகத்துவமென்னை, பிராமணர்கள் மகத்துவமென்னை என்றுணராமலே வேஷத்தைப் பெருக்கி பொருள் சேகரிக்கும் நோக்கத்திலேயே இருந்தார்கள். சமணமுநிவர்களுக்குள் உபநயனமென்பது ஞானக்கண் உள்விழி திறத்தலென்னுங் குறிப்பிட்டு ஞானத்தானம் பெற்றோன், ஞானக்கண் பெற்றவனென்னும் அடையாளத்திற்காக மதாணிப் பூணு நூலென்னும் முப்பிரி நூலை மார்பிலணிந்துவந்தார்கள். இவ்வேதத்திற்குரிய வேஷப்பிராமணர்களோ அதனந்தரார்த்தம் அறியாது என் பெரிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப்போகின்றேன் பொருள் வேண்டும், சிறிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப்போகின்றேன் பொருள் வேண்டு மென்னும் சுயப்பிரயோசனத்தையே நாடிநின்றார்கள். சமண முநிவர்கள் புத்ததன்ம சங்கமென்னும் மும்மணிகளை, மனோ வாக்கு காயமென்னும் மும்மெயில் வணங்கி அவற்றை திரிகாய மந்திரமென்றும், காயத்திரி மந்திரமென்றும், வழங்கிவந்தார்கள். அதனந்தரார்த்தம் தெரியாது இவ்வேஷப்பிராமணர்கள் விசேஷமான காயத்திரி மந்திரஞ் செய்யப் போகின்றோம், காயத்திரி மந்திரஞ் செய்யப்போகின்றோம் என்னும் இரண்டொரு வடமொழி சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே பொருள் சம்பாதிக்கும் ஏதுவில் நின்றுவிட்டார்கள். அறஹத்துக்கள் சமண முநிவர்களாகியத் தங்கள் மாணாக்கர்களை சாலக்கிரமம், சாலக்கிரமமென ஆசீரளிப்பது கண்டு அதனந்தரார்த்தம் அறியா இவ்வேஷப்பிராமணர்கள் சமுத்திர ஓரங்களில் உருண்டுகிடக்கும் சிறியக் கூழாங்கற்களில் சிவப்பு நிறக்கோடுகளுள்ளதை எடுத்துவந்து கல்வியற்றக் குடிகளிடம் இதுதான் சாலக்கிராமம் இதைப் பூசிப்பவர்கள் மேலான பாக்கியம் பெறுவார்களென வஞ்சித்து அதனாலும் பொருள் சம்பாதித்து வந்தார்கள். இவை போன்றே சமண முநிவர்களுள் பேதமென்னு மொழியை வேதமென்றும் வழங்கிவந்ததும், திரிபேத வாக்கியமென்னும் மொழியை மூன்றுவகையான மொழியென்பதையும், வரிவடிவு அட்சரமில்லாதகாலத்தில் இவ் அருமொழி மூன்றினையும் ஒருவர் ஓதவும் மற்றொருவர் கேட்கவும் சிந்திக்கவுமாய் இருந்தபடியால் திரிகருதிவாக்கியங்களென்றும், மும்மொழியும் பொருள்மயங்கிநின்றபடியால் மும்மறை மொழிகளென்றும் வழங்கிவந்ததுடன் அதன் சாதன சித்தியால் வீடுபேறு கண்டவுடன் வீடுபேறென்னும் மொழியையும் ஓர் வாக்கியமாக்கி சதுர்வேதவாக்கியமென்றும், நான்கு சுருதிவாக்கியமென்றும், நான்கு மறைபொருளென்றும் வழங்கி வந்த ரகசியார்த்தத்தை இவ் வேஷப்பிராமணர்கள் அறியாதும், பேத மொழிகளென்பதே வேத வாக்கியங்களென வழங்கிவருவனவற்றை நான்கு பேதமொழிகளென்றும், நான்கு வகையாய வாக்கியங்களென்றும் உணராது, பெரியபெரியக் கட்டுபுத்தகமென்றெண்ணியும் இப்பேதமொழிகள் மூன்றும் வரிவடிவ அட்சரம் இல்லாத காலத்தில் புத்தபிரானால் ஓதவும் மற்றவர்கள் தங்கள் தங்கட் செவிகளாற் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்தது கொண்டு வரையாக் கேள்வி யென்றும் திரிசுருதி வாக்கியங்களென்றும், சொல்லவுங் கேட்கவுமாயிருந்த மொழிகளை உணராது பத்தாயிரஞ் சுலோகம், பன்னீராயிரஞ் சுலோகம், எட்டு புத்தகம், பத்து புத்தகமென வரைந்துள்ள கதைகள் யாவையும் ஒருவன் மனதிற் பதியவைத்துக் கொண்டு மற்றவனுக்கு போதிக்கவும், மற்றவனவற்றை தனது செவிகளாற் கேட்டு சிந்தனையில் வைக்கவும் கூடுமோ என்றறியாதும் பெரியக் கட்டுபுத்தகத்தை சுருதியென்றுங்கூறி தங்கள் அறியாமெயால் மற்றவர்களையும் மயக்கி ஜோராஸ்டிரரால் வரைந்துவைத்துள்ள ஜின்ட்டவஸ்த்தாவிலிருந்த சரித்திரங்களிற் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும், புத்ததன்மங்களிலிருந்த சரித்திரங்களிலும், பெயர்களிலும் ஞானங்களிலும் சிலவற்றைக் கூட்டியுங் குறைத்தும், நாலைந்துபேர் தங்கள் தங்கள் மனம்போனவாறு எழுதிக் கொண்டுபோய் கனந்தங்கிய துரைமக்களிடங் கொடுத்து இவைகள்தான் வேதவாக்கியம், இவைகள் தான் சுருதி வாக்கியமெனக் கொடுத்து அதனாலும் பொருள் சம்பாதிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். இத்தியாதி விஷயங்களையும் ஆரியவேஷப்பிராமணர்களே வரைந்து காலத்திற் குக்காலங் கடந்துவந்த துரைமக்களுக்கு எழுதிக்கொண்டு போய் கொடுத்திருந்த போதினும் அவ்வேதத்தை சிக்கறுத்து சீர்திருத்தியவர் வியாசரேயெனத் தங்கள் மரபினர் பெயரையே சிறப்பித்து எழுதிக் கொண்டார்கள். காரணமோவென்னில் தங்களுக்கு எதிரியாக வேஷமிட்டுள்ள மராஷ்டக வேஷப்பிராமணர்களேனும், திராவிட வேஷப்பிராமணர்களேனும், கன்னட வேஷப்பிராமணர்களேனும் தங்களுடையதென வலுபெறச் செய்துக்கொள்ளுவார்களென்னும் பீதியால் வேதத்தை சிக்கறுத்தவரும் வியாசர், புராணங்களை எழுதியவரும் வியாசர், பாரதக்கதையை வரைந்தவரும் வியாசர் சங்கராச்சாரிக்கு குருவாகவந்தவரும் வியாசரென வரைந்து வைத்துக் கொண்டு, தங்கள் சுயகாரியவிருத்திகளைச் செய்துவந்தபோதினும் மற்றுமுள்ள வேஷப்பிராமணர்கள் தங்கள் தங்களுக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் புசிப்பு முதலியவைகள் அற்றிருப்பினும் சுயகாரிய சீவனங்களுள் ஆரிய வேஷப் பிராமணர்களை அடுத்தே நடத்திக்கொண்டார்கள். சமணமுநிவர்களால் மநுமக்களுள் அவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறும், செயல்களுக்குத் தக்கவாறும், குணங்களுக்குத் தக்கவாறுங் கொடுத்திருந்தப் பெயர்களை ஒற்றுமெய்க் கேடாம் அறிவிலிப் பிரிவினைகளுண்டுசெய்து அதில் தங்களை உயர்ந்த சாதிப் பிராமணர்களென வகுத்துக்கொண்டு தங்களுக்கு எதிரிகளாகவிருந்து தங்கள் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் சகலக் குடிகளுக்கும் பறைந்து அடித்துத் துரத்தி சாணந் துளிர்க்கச் செய்துவந்த பெளத்த உபாசகர்களாம் மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்று இழிவுகூறி சொல்லிவந்த சங்கதிகளை மகமதிய அரசர்களும் குடிகளுங் கேட்டுக் கேளாதது போலிருந்தகாலத்தில் சில பெண்மக்களுடன் மகமதியர்கள் புருஷகலப்பால் புத்திரவிருத்தி உண்டானபோது மகமதிய புருஷ நிறை ஒன்றும், இப்பெண்மக்கள் நிறை அரையுமாகக் கூட்டி அப்பிள்ளையை தமிழில் ஒன்றரை சாதிக்குப் பிறந்த பிள்ளையென்றும், துலுக்கில் “தேடென்னும்” வழங்கி வந்த பெயர் தங்களை அவமதிக்கின்றது என்றெண்ணி, தாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் “தேடென்றால்” பறையர்களைக் குறிக்கும் பெயரென்றுகூறி அவற்றாலும் இழிவடையச் செய்துவந்தார்கள். பிரிட்டிஷ் துரைத்தனத்தார்வந்து தோன்றிய காலத்தில் மகமதியர்களைப் போல் சும்மாயிராது நீங்கள் பிராமணர்களென்றால் எவ்வகையால் உயர்ந்து போனீர்கள், சண்டாளர்களென்றால் அவர்கள் எவ்வகையால் தாழ்ந்து போனார்களென்று கேழ்க்கும் படி ஆரம்பித்துக்கொண்டதினாலும் இத்தேசப் பூர்வக் குடிகளில் கம்மாளரென்போர் வேஷப்பிராமணர்களுக்கு எதிரடையாகத் தோன்றி இவர்களை ஜோதி சங்கமர்களுக்கு சமதையானவர்களென்றும், எங்களது சுப அசுப காரியங்களுக்கு இவர்கள் குருக்களல்லவென்றுங் கண்டிக்க ஏற்பட்டதினாலும் தங்களை சிறப்பித்துக்கொள்ளத்தக்க ஓர் புத்தகத்தை எழுத ஆரம்பித்துக்கொண்டார்கள். அப்புத்தகத்தையும் தங்களிஷ்டம்போல் வரைந்துக்கொண்டால் இத் தேசத்தோரங்கீகரிக்க மாட்டார்களென்றெண்ணி அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் தாபர சாஸ்திரங்களும், வானசாஸ்திரங்களும், பூமி சாஸ்திரங்களும், அஸுவ சாஸ்திரங்களும், இரிடப சாஸ்திரங்களும் வரைந்து வைத்த காலத்தில் மநுமக்களுக்கென்று நீதிசாஸ்திரங்களும், ஞான சாஸ்திரங்களும், பொதுவாய உலகநீதி சாஸ்திரங்களையும் வரைந்து வைத்திருந்தார்கள். அதனுடன் வேதமொழி நான்கிற்குந் தெளிபொருள் விளக்க முப்பத்திரண்டு உபநிடதங்களுக்கும் சார்பாய் அறஹத்துக்களின் சரித்திரங்களாம் பதிநெட்டு ஸ்மிருதிகளையும் வரைந்து வைத்திருந்தார்கள். இவற்றுள் சுருதியென்னும் மொழி பாலிபாஷைக்கு வரிவடிவ அட்சரமிராது ஒலிவடிவாக பேசிவந்தகாலத்தில் மூவருமொழியாம் திரிபேத வாக்கியங்களை ஒருவர் ஓதவும், மற்றவர் செவிகளிற் கேழ்க்கவுமாயிருந்தது கொண்டு திரி கருதி வாக்கியங் ளென்றும் வரையாக் கேள்விகளென்றும், வழங்கிவந்தார்கள். அதன் பின்னர் புத்தபிரான் பாலியாம் மகடபாஷையையே மூலமாகக்கொண்டு, சகடபாஷையாம் வடமொழியையும், திராவிட பாஷையாம் பேதவாக்கியங்களை செவியாறக் கேட்கவும், மனமாற சிந்திக்கவும், அறிவாறத் தெளிவும் உண்டாகி சாந்த ரூபிகளாய் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காட்டை ஜெயித்த அறஹத்துக்களின் சரித்திரங்களையும் அவரவர்கள் சாதனங்களையும் ஆசிரியர் போதனங்களையும் விளக்கி ஓர் சரித்திரம் எழுதியுள்ள நூற்களுக்கு இஸ்மிருதிக ளென்றும் வகுத்திருந்தார்கள். இவற்றுள் அன்னமீவது ஓர் தன்மமும், ஆடையீவதோர் தன்மமுமாயிருப்பினும் மக்களுக்கு நீதியையும் நெறியையும் ஓதி துன்மார்க்கங்களை ஒழித்து, நன்மார்க்கங்களில் நடக்கும் போதனைகளையூட்டி, துக்க நிவர்த்திச்செய்து சுகம்பெறச் செய்யுந் தன்மம் மேலாய் தன்மமாயிருக்கின்ற படியால் அத்தகைய போதனைகளைப் போதிப்பவர் பெயரையுங் அவற்றைக் கேட்டு நடப்பவர் பெயரையும் கண்டு தெளிவுற எழுதியுள்ள நூலுக்கு இஸ்மிருதியென்றும் தன்மநூலென்றும் எழுதியிருந்தார்கள். அதாவது, வாசிட்டம், பிரகற்பதி, கார்த்திகேயம், திசாகரம், மங்குலீயம், மனு, அத்திரி, விண்டு, இமயம், ஆபத்தம்பம், இரேவிதம், சுரலைவம், கோசமங், பராசரம், வியாசரம், துவத்தராங்கம், கவுத்துவம், கிராவம் என்பவைகளேயாம். இவைகளுள் வசிட்ட ரென்னும் மகாஞானி இராமனென்னும் அரசனுக்கு புத்தரது வாய்மெகளையும் அவரது சாதனங்களை மற்றும் பரிநிருவாணமுற்ற அரசர்களின் சரித்திரங்களையும் அவர்களது சாதனங்களையும் விளக்கிக் கூறியுள்ள நூலுக்கு வசிட்ட ஸ்மிருதியென்றும், வசிட்ட தன்ம நூலென்றுங் கூறப்படும். பிரகற்பதியென்னும் மகாஞானி சந்திரவாணனென்னும் அரயனுக்குப் போதித்த நீதிநெறி ஒழுக்கங்களையும் ஞானசாதனங்களையும் வரைந்துள்ள நூலுக்கு பிரகற்பதி ஸ்மிருதியென்றும், பிரகற்பதி தன்மநூலென்றுங் கூறப்படும். கார்த்திகேயராம் முருகக்கடவுள், கமலபீடனாம் மணிவண்ணனுக்குப் போதித்த நீதிநெறி ஒழுக்க சாதனங்களையும் அதனதன் பலன்களையும் விளக்கிக்காட்டிய நூலுக்கு கார்த்திகேய ஸ்மிருதியென்றும், கார்த்திகேயர் தன்ம சாஸ்திரமென்றும், கூறப்படும். மதுவென்னும் மகாஞானியார், பிரஜாவிருத்தி யென்னும் அரயனுக்குப் போதித்த சத்திய தன்மமும் அதை அநுசரித்து நடந்ததினால் டைந்த சுகபலனையும் விளக்கிய நூலுக்கு மநுஸ்மிருதியென்றும், மநுதன்ம சாஸ்திரமென்றுங் கூறப்படும். இத்தகையாய் வழங்கிவந்த பெளத்ததன்ம நூல்களும் அதனதன் சாராம்ஸங்களும் அஞ்ஞானிகளாகிய இவ்வேஷப்பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் தங்கள் தங்கள் வேஷப்பிராமணச் செயலைவிருத்திசெய்து சுயப்பிரயோசனத்தில் கசிப்பதற்கு மேற்கூறிய பதிநெட்டு இஸ்மிருதிகளாம் தன்மசாஸ்திரங்களின் சாராம்ஸங்களை முற்றும் அறிந்தவர்கள்போல் மதுஸ்மிருதியென்றும், மநுதன்ம சாஸ்திரமென்றும் ஓர் அதன்மநூலை ஏற்படுத்திக்கொண்டார்கள். இத்தகைய அதன்மநூல் தோன்றியகாலத்தில் சமணமுநிவர்களும், சாது சங்கங்களும் அழிந்து அறப்பள்ளிகளின் பெயர்களும் ஒழிந்து வேஷப் பிராமணர்களைத் தட்டிக் கேழ்க்கும் நாதர்களில்லாது போய்விட்டபடியால், வேஷப் பிராமணர்கள் தங்களை உயர்ந்த சாதி தேவர்களென வகுத்துக்கொண்டு மற்றவர்களைத் தங்கள் மனம்போனவாறு தாழ்த்தத்தக்கவைகளை வரைந்து கொண்டும், பௌத்தர்களுடைய ஸ்மிருதிகளேதேனும் வெளிவருமென்னும் பயத்தினால் தங்களுடைய மநுதன்ம சாஸ்திரத்தின் முகவுரையில் “பதிநெட்டு ஸ்மிருதிகளுள் மநுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்றப் பதினேழு ஸ்மிருதிகளும் ஒரேவாக்காய் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று.” தங்களுடைய அதன்ம நூலையே தன்ம நூலாக ஒப்புக்கொள்ள வேண்டுமென்னும் அட்டவணையைப் போட்டுக்கொண்டு தங்கள் சுயசீவனத்திற்கான வழிகளையெல்லாம் எழுதிவைத்துக்கொண்டார்கள். அவற்றுள்ளும் வருணமென்னு மொழி நிறத்தைக் குறிக்கக்கூடியவை என்றுணராது அவைகளையே ஒவ்வோர்சாதிகளாக எழுதியுள்ளார்கள். இந்திரர்தேச முழுவதும் சத்தியதன்மம் நிறைந்திருந்தகாலத்தில் அவனவன் சாதிக்கும் பாஷையையே சாதனமாகக் கொண்டு நீரென்னசாதியென வினவும் மொழிக்கு ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென அவரவர்கள் சாதிக்கும் பாஷையையே மொழிந்து வந்தார்கள். காணாதோன் நிறத்தை அறிவதற்கு அவனென்ன வருணமென்று கேட்பார்களாயின் கருப்பும் சிவப்புங் கலந்த வருணம், வெள்ளையும் சிவப்புங் கலந்த வருணமென அவனவன் நிறங்களை வழங்கிவந்தார்கள். சாதித்தலாலுண்டாய சாதியென்னு மொழியின் அந்தரார்த்தமும், நிறத்தினால் உண்டாயவருணமென்னு மொழியின் அந்தரார்த்தமும் தொழிற்பெயர்களின் அந்தரார்த்தமும் அறியாது ஆதாரமற்ற அதன்ம நூலை உண்டு செய்துக்கொண்டு அதையே தன்ம நூல் தன்மநூலென்னும் வழக்கத்தில் கொண்டுவந்துவிட்டார்கள். தன்ம நூலென்றும், தன்மசாஸ்திரமென்றும் இஸ்மிருதிகளென்றும் வழங்கிவந்த மொழிகளானது சங்கங்கள் தோருமுள்ள சமணமுனிவர்களாலும் பெளத்த உபாசகர்களாலும் வழங்கி வந்துள்ளவைகளாதலின் இவர்கள் கூறிவரும் மநுதன்ம நூலும் அதுவாக்கும் என்றெண்ணி கல்வியற்றக்குடிகள் அநுசரித்துக்கொண்ட போதினும் தட்டிக் கேழ்க்கும் சமணமுனிவர்களிராது வடமொழிக்குந் தாங்களே அதிபதிகளென்னும் சாய்க்காலையும் வெட்டிக் கொண்டார்கள். அத்தகைய வடமொழி சாய்க்காலோ சட்டம் சிலருக் கெழுதப்படிக்கக் கூடியதாயினும் பௌத்ததன்ம ஞானார்த்தங்களும் பௌத்ததன்ம சாதனங்களும், பெளத்த தன்ம அநுபவங்களும் அவர்களுக்கு விளங்கவேமாட்டாது. அங்ஙனம் விளங்கியிருக்குமாயின் இவர்களது சுயப்பிரயோசனத்துக்காக எழுதிவைத்துக் கொண்ட அதன்ம நூலை தன்மநூலென மறந்தும் வழங்கமாட்டார்கள். பெளத்தர்களின் மநுதன்மநூலானது மநுக்கள் மதுவை அருந்தி மதிமயங்கி கெடாமலும், பொய்யைச் சொல்லி மெய்ப் பொருளுணராமலும், அன்னியர் பொருளை வவ்வி அவாவைப் பெருக்காமலும், சீவர்களை வதைத்துக் காருண்யத்தை அழிக்காமலும், அன்னியர் தாரங்களை இச்சித்து தேகத்தைப் புண்படுத்தாமலும், தங்களைப் பாழ்படுத்திக்கொள்ளாது மானியாய் உலகத்திலுலாவி மநுபுத்திரன் மானிடனென்னும் பெயரைப் பெறுவதுடன் தனது நல்வாழ்க்கை, நந்நெறி, நல்வாக்கு, நற்சேர்க்கை, நற்பழக்கம், நற்கேழ்வி முதலியச் செயல் விருத்தியால் தேவர்களெனக் கொண்டாடப்பெற்று பரிநிருவாணமுற்று வானவர்க்கு அரசனாம் நற்சேத்திர புத்தேளுலகும் பெறுவார்களென்பதும் சத்தியம். இத்தகைய அரியச்செயல்களை அடக்கியுள்ளதும் ஞானாசிரியர்களால் நன்மாணாக்கர்களுக்குப் போதித்து ஞான நிலைப்பெறச்செய்வதுமாய இஸ்மிருதிகளாம்தன்ம நூற்களின் மகத்துவங்களை உணராது மநுமக்களின் ஒற்றுமெக்குக் கேடாய வருணாசிரமங்களை சொல்லும்படி ஓர் ரிஷியைக் கேட்டதாகவும் அவர் வருணாசிரம தன்மங்கள் ஓதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும், அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருணாசிரம் தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேழ்க்கவும், மற்றவன் சொல்லவு மேற்பட்டது மிக்க விந்தையேயாம். ஈதன்றி தன்மமென்னும் மொழியானது சீவராசிகளீராக மநுமக்கள்வரை பொதுவாயுள்ளதேயாம். அத்தகைய தன்மமெனும் மொழியின் சிறந்த கருத்தினையறியாது அவர்களெழுதி வைத்துக்கொண்ட மநுதன்மத்தைப்பாருங்கள். ஓர் சூத்திரனெனவகுக்கப்பட்ட மனிதன் பிராமணனென வகுத்துக்கொண்ட மனிதனின் ஆசனபீடத்தில் உட்கார்வனாயின் அச்சூத்திரனுக்கு இடுப்பில் சூடுபோட்டேனும் அவனது ஆசனத்தில் சிறிதறுத்தேனும் ஊரைவிட்டு துரத்தி விட வேண்டியது இதுவுமோர்மநுதன்மம். ஓர் சூத்திரனென்போன் பிராமணனென்போனைப் பார்த்துக் காரியுமிழ்ந்தால் அவன் இரண்டு உதடுகளையும் அறுத்துவிட வேண்டியது. சிறுநீரை யூற்றி பங்கஞ்செய்தால் அவனது ஆண்குறியை அறுத்தெறிந்துவிடவேண்டியது. மலத்தை எரிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தை சோதிக்க வேண்டியது, இதுவுமோர் மநுதன்மம். பிராமணனென்போன் பிரம்மாவின் முகத்திற் பிறந்தது யதார்த்தமாயின் பாதத்திற் பிறந்த சூத்திரன் காரியுமிழவும், சிறுநீரை யூற்றவும், மலத்தை மீதெறியவுமாய அலட்சியமுண்டாமோ. இவர்களால் சூத்திரரென வகுத்துள்ள மக்களது மனத்தாங்கலாலும் இவர்கள் யதார்த்த பிராமணர்களல்ல வென்னும் அலட்சியத்தினாலும் மேற்கூறியச் செயல்கள் நிறைவேறவும் அதற்கென்றே இவர்களது அதன்ம சட்டம் தோன்றவும் வழியாயிற்று. பிராமணனென்னும் வகுப்போரை மிக்க சிறந்தவர்களென்றும், தன்னை சூத்திரனென்றுந் தெரிந்துகொண்டவன் பிராமணனென்போன் தலைமயிரையும், தாடி மயிரையும், ஆண்குறியையும் பிடித்திழுப்பனோ. இத்தகைய சட்டமுந் தோன்றுமோ இல்லை. இச்சட்டந் தோன்றுங்கால் பிராமணனென்னும் உயர்வும், சூத்திரனென்னுந் தாழ்வும் இல்லை என்பதே சான்று. சூத்திரன் துவிஜாதிகளின் மனைவிகளைப் புணர்ந்தால் அவன் கோசபீஜம் இரண்டையும் அறுத்துவிடவேண்டியது. பிராமண னென்போன் எந்த ஜாதியோரிடம் புணர்ந்தாலும் ஒன்றுஞ் செய்யப்படாது. இதுவுமோர் மநுதன்மம். பிராமணனென்போன் கொலைக் குற்றஞ் செய்தால் அவனது தலையின் மயிரை சிரைத்துவிடுவதே அவனுக்கு மரணதண்டனையாகும். மற்ற சாதியோர் தொலைக்குற்றஞ் செய்தால் அவர்களது சிரமுண்டனமே கொலை தண்டனையாகும். இதுவும் ஓர் மநுதன்மம். இம்மனுதன்ம சாஸ்திரமானது பௌத்தர்களின் பதிநெட்டு தன்ம சாஸ்திரங்களுக்கும் நேர் விரோதமானதும், இத்தேசத்து மக்கள் யாவருடைய சம்மதத்திற்கும் உட்படாததும், நீதி நூல் யாவற்றிற்கும் எதிரிடையானதும், தங்களது பிராமண வேஷத்திற்கே உரித்தானதுமாகத் தங்களது மனம்போனவாறு வரைந்து வைத்துக்கொண்டபடியால் அதிற் கூறியுள்ள அநுலோமசாதி, பிரிதிலோமசாதி, அந்தராளசாதி, பாகியசாதியானோர் ஒருவருந்தோன்றாமல் அன்னூலிற் கூறியில்லாத முதலியார் சாதி, நாயுடு சாதி, செட்டியார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோற்றிவிட்டார்கள். இவ்வகைத் தோற்றியவர்களுக்கும் ஓர் நூலாதாரங் கிடையாது. இவற்றைத் தடுத்துக் கேட்பதற்கும் வருணாசிரமம் வகுத்துக்கொண்டவர்களுக்கு வழி கிடையாது. வருணாசிரமம் வகுத்துள்ள மநுதன்மநூலோர் நாலு சாதிகளுக்கு மேற்பட்ட சாதி கிடையாதென்று வரைந்திருக்க இப்போது தோன்றியுள்ள ஐந்தாவது சாதிகளுக்கு ஆதாரமே கிடையாது. பிராமணன் பஞ்சிநூலும், க்ஷத்திரியன் சணப்பநூலும், வைசியன் கம்பிளி நூலும், பூணுநூலாகத் தரித்துக்கொள்ளவேண்டுமென தங்கள் தன்மசாஸ்திரத்தில் வரைந்துவைத்திருக்கின்றார்கள். அதை ஒருவருஞ் சட்டைச் செய்யாது பிராமணனென்போன் பஞ்சு நூலணிந்துக்கொள்ளுவதுபோல க்ஷத்திரியனென் போனும் பஞ்சு நூலை அணைந்துக்கொள்ளுகின்றான். வைசியனென்னும் எண்ணெய் வாணியனும் பஞ்சுநூலணைந்துக்கொள்ளுகின்றான். அவர்களைத் தடுத்தாள்வதற்கு இம்மநுதன்ம சாஸ்திரத்திற்கும் அதிகாரங்கிடையாது. அதன் அதிகாரிகளுக்கும் அதிகாரங்கிடையாது. இந்த வருணாசிரமதன்ம சாஸ்திரத்தில் பிராமணனென்போனுக்குத் தொடர்மொழி சர்மா வென்றும், க்ஷத்திரியனென்பவனுக்குத் தொடர்மொழி வர்மாவென்றும், வைசியனுக்குத் தொடர்மொழி பூதியென்றும், சூத்திரனுக்குத் தொடர்மொழி தாசென்றும் வைத்துக்கொள்ள வேண்டுமென்னும் நிபந்தனையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அதாவது முத்து சாமி என்னும் பிராமண னென்போனாயின் அவன் முத்துசாமி சர்மாவென்றும், முத்துசாமி யென்னும் க்ஷத்திரியனாயின் அவன் முத்துசாமி வர்மாவென்றும், முத்துசாமி என்னும் வைசியனாயின் அவன் முத்துசாமி பூதியென்றும், முத்துசாமி என்னும் சூத்திரனாயின் அவன் முத்துசாமி தாசென்றும் தங்கள் தங்கட் பெயர்களினீற்றில் வருணாசிரமத்திற்குத் தக்கத் தொடர்மொழிகளை சேர்த்து வர வேண்டுமென்னும் நிபந்தனைகளை வரைந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வகை எழுதியுள்ள சட்டதிட்டங்களை ஒருவருஞ் சட்டைசெய்யாது தங்கள் தங்கள் மனம்போனவாறு ஐயரென்றும், அய்யங்காரென்றும், பட்டரென்றும், ராவென்றும், சிங்கென்றும், நாயுடென்றும் முதலி யென்றும், ரெட்டி யென்றும், செட்டி யென்றும், வெவ்வேறு தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டார்கள். இத்தகையப் பெயர்களை சேர்த்துக்கொண்டதற்கு இவர்களுக்கோர் ஆதாரமும் கிடையாது. நான்கு வருணாசிரமத்திற்கும் நாங்கள் வைத்துள்ள பெயர்களை வையாது நீங்கள் வெவ்வேறு பெயர்களை வைக்கலாமோவென்று கேட்பதற்கு அம்மனுதன்மசாஸ்திரத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் அதிகாரங் கிடையாது. கொழுத்தப் பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு எதேஷ்டமாகத் தின்பதற்கு பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக் கின்றாரென்று இம்மநு நூலில் எழுதிவைத்துக்கொண்டவர்கள், பௌத்தர்களது தேசத்தில் பசுவைக் கொல்லும் எக்கியத் தொழிலை மறந்தே விட்டுவிட்டார்கள். இவர்கள் எழுதியுள்ள படி பிரம்மாவானவர் எக்கியத்திற்கென்றே பசுக்களை சிருஷ்டித்துள்ளது எதார்த்தமாயின் இவர்களும் விட்டிருப்பார்களோ. பிரம்மசிருட்டி கருத்தும் பழுதாமோ, இல்லை. தங்கள் புசிப்பின் பிரியத்தை பிரமன் மீதேற்றி வரைந்து வைத்துக் கொண்டபோதினும் கொன்றுத் தின்னாமெயாகும் பௌத்தர்களது மத்தியில் அந்நோர் பிரமத்தின் கருத்தும் அடியோடழிந்துபோய்விட்டது. பல பாஷையோருள்ளும் பல தேசத்தோருள்ளும் பலமதத்தோருள்ளும் வேஷப்பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் அவரவர்கள் மனம்போல் எழுதிக்கொண்ட வேதங்களும், மனம் போல் எழுதிக்கொண்ட வேதாந்தங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட புராணங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட தன்மங்களும், மனம்போல் எழுதிக்கொண்ட கடவுளர்களும் ஒருவருக்கொருவர் ஒவ்வாது மாறுபட்டுள்ளபடியால் ஒருவருட்பார் எழுதிக்கொண்ட கட்டளைகள் மறுவகுப்பாருக்கொவ்வாமலும், ஒருவகுப்பார் தெய்வம் மறுவகுப்பாருக்கொவ்வாமலும் கலகங்களுண்டாகி வேறுபடுவதுடன் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட மநுதன்ம சாஸ்திரத்தையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாதும், சாதி தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொள்ளாதும், சணப்பனார் பூணுநூல், ஆட்டுமயிரின் பூணுறூற்களைத் தரித்துக்கொள்ளாதும் அதனுள் விதித்துள்ள தண்டனைகளை ஏற்றுக்கொள்ளாதும் நீக்கிவிட்ட போதினும் மநுதன்ம நூல் மநுதன்மநூலென்னும் பெயரினை மட்டிலும் வழங்கிவருகின்றார்கள். தன்மதத்திற்குரிய எதார்த்த நூலாயின் இத்தேசத்தோரொவ்வொருவருங் கைசோரவிடுவார்களோ, ஒருக்காலும் விட மாட்டார்கள். புத்ததன்மத்தை அநுசரித்துக் காலமெல்லாம் நிதிமார்க்கமாம் ஒற்றுமெயிலும், அன்பிலும் இருந்தோர்களை அதன்மத்தில் நடக்கும்படி ஏவுவதாயின் அத்தன்மத்துள் சம்பந்தப்பட்டவர்களே சம்மந்திப்பார்களன்றி ஏனைய தன்மப்பிரியர்கள் ஒருக்காலும் ஏற்காரென்பது திண்ணம். அவ்வகை ஏற்கா விஷயத்தை எவ்வகையால் அறிந்துகொள்ளவேண்டும் என்னில் வடமொழியாம் சகடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தென்மொழியாம் திராவிடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கொடுந்தமிழாம் மலையாளுபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். மராஷ்டகபாஷையில் பிராமணன்யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார், கன்னடபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தெலுங்குபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். வங்காள பாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யாரென்னும் ஆள் அகப்படாது திகைப்பதே போதுஞ்சான்றாம். மலையாளமென்னுங் கொடுந்தமிழ்நாட்போரை வஞ்சித்து அவர்கள் மத்தியிலிருந்துகொண்டு வருணாசிரம தர்மசாஸ்திரம் எழுதும்படி ஆரம்பித்தபடியால் அங்கு வழங்கும் வர்ம, சர்ம, பூதி என்னும் தொடர்மொழிகள் மற்றெங்கும் வழங்குவதற்கு ஏதுவின்றி அவரவர்கள் மனம்போனவாறு வெவ்வேறு தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொண்டு தங்கடங்கள் மனம் போல் பெரியசாதிகள் என்னும் பெயர்களை மநுதன்ம சாஸ்திரத்திற்கு ஒவ்வாமலே வைத்துவருகின்றார்கள். அவைகள் யாவும் சாதித்தலைவர்களுக்கு அவசியமில்லை. சாதித்தலைவர்களது போதனைப்படி தங்கள் சாதிக்கட்டுக்குள் அடங்கி இந்துக்களென்போர்க்கு உட்பட்ட எந்த சாமிகளைத் தொழுதுக் கொண்டாலுஞ் சரி, எச்சாதித் தொடர்மொழிகளைச் சேர்த்துக் கொண்டாலுஞ்சரி, தங்களுக்கு மட்டிலும் அடங்கி தங்களை பிரம்மா முகத்திலிருந்து வந்தவர்களென்று ஒடிங்கி, தங்களையே பிரம்ம சாமியென்று வணங்கி, அமாவாசை தட்சணை, கிரஹண தட்சணை, நோம்பு தட்சணை, உபநயனதட்சணை, பூசாரி தட்சணை, புண்ணியதான தட்சணை, சங்கராந்தி தட்சணை, சாவுதோஷ தட்சணை, பிள்ளை பிறந்த தட்சணை முதலியவைகளைக் கொடுத்துக் கொண்டே வந்தால் போதும். மற்றப்படி அந்தசாதி இந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளை பெற்றால் அநுலோமம் பார்க்கவேண்டியதில்லை. இந்த சாதி அந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளைபெற்றால் பிரிதிலோமம் பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் வரைந்துக்கொண்டுள்ள மநுதர்ம சாஸ்திரத்தில்மட்டிலுங் காணலாமேயன்றி அநுபவத்தில் ஒன்றுங் கிடையவே கிடையா. அதன் காரணமோவென்னில் அவரவர்கள் மனம்போல் சாஸ்திரங்கள் எழுதிக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதிப்பெயர் ஏற்படுத்திக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதித் தொடர் மொழிகளை சேர்த்துக்கொள்ளுவதுமாய செயலை உடையவர்களாதலின் சாஸ்திரத்திற் கொற்ற அநுபவமும், அநுபவத்திற் கொற்ற சாஸ்திரங்களும் அவர்களிடம் கிடையாவாம். இவற்றிற்குப் பகரமாய் “யாரடா விட்டது மானியமென நான்தான்விட்டுக் கொண்டேன்” என்னும் பழமொழிக்கு ஒக்க அவனவன் மனம்போனவாறு ஒவ்வோர் சாதிப்பெயர்களை வைத்துக்கொண்டபடியால் அப்பெயரை அவனே சொன்னால்தான் வெளியோருக்குத் தெரியும். அதைக் கண்டே இத்தேசத்தோருக்குள் நீவிரென்னசாதி என்று வினவுவதும் அதற்கவன் வைத்துக்கொண்ட சாதிப்பெயரைப் பகருவதும் வழக்கமாம். அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப் பெயர்களை அவனவன் சொன்னாலே தெரியுமன்றி சொல்லாதபோது தெரியாது. வீதியில் மாடு போகிறது, நாய்போகிறது, மனிதர்கள் போகின்றார்களென்று கூறலாம். மற்றப்படி அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப் பெயர்களை அவனவனைக் கேட்டே தெரிந்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அவனவன் பிரியத்திற்கும் மநுதன்ம சாஸ்திரத்திற்கும் யாதொரு சம்மந்தமுங்கிடையாது. புருசீக தேசத்தினின்று வந்து குடியேறிய ஆரியர்களும், இத்தேசத்திருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிட, வங்காள, காம்போஜர்களும் பௌத்த தன்ம அந்தணர்களைப்போல் பிராமண வேஷமணிந்து அவ்வேஷங்களுக்கு ஆதரவான வேதங்களையும், புராணங்களையும். ஸ்மிருதிகளையும், அதிற் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் ஆசாரங்களையும், சிலாலயப் பூசைகளையும், அவரவர்கள் மனம்போல் ஏற்படுத்திக்கொண்டு, மதக்கடைபரப்பி சீவிக்குங்கால் இவர்களது பொய் வேதங்களையும், பொய்க்குரு உபதேசங்களையும், சமணமுநிவர்களாகும் பாம்பாட்டி சித்தர் முதலியோர் கண்டித்தும் இவர்களது பொய்ச்சாதி வேஷங்களையும் பொய்லிங்க பூசைகளையும், சிலாலிங்கத் தொழுகைகளையும், சமணமுநிவர்களாம் சிவவாக்கியர், பட்டினத்தார், தாயுமானவர், சாம்பவனார், கடுவெளி சித்தர், குதும்பை சித்தர் மற்றுமுள்ள மகாஞானிகளாலுங் கண்டித்து அனந்த நூற்கள் எழுதியதுமன்றி பெளத்த தாயகர்களாம் விவேகிகளால் வேஷபிராமணர்களைக் காணுமிடங்களிலெல்லாம் தங்கவிடாமல் அடித்து துரத்தவும் பௌத்தர்கள் வாசஞ்செய்யும் சேரிகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து நுழைந்துவிடுவார்களானால் கிராமத்திற்கும் சேரிக்கும் ஏதேனும் தீங்குண்டாமென்று பயந்து அவர்களை அடித்துத் துரத்தி அவர்கள் நடந்தவழியே சாணத்தைக் கரைத்துத் துளிர்த்துக்கொண்டேபோய் சாணச்சட்டியை அவர்கள் மீதே யுடைத்து வருவதுமாகிய வழக்கத்திலிருந்தார்கள். ஆரியர்கள் மாடுகளையுங் குதிரைகளையும் உயிருடன் சுட்டுத்தின்னக் கண்ட பௌத்தர்கள் அவர்களை மிலேச்சரென்றும் புலால் புசிக்கும் புலையரென்றும். இழிவுகூறி அகற்றிவந்தச் செயல்களானது, கன்னட வேஷப் பிராமணர்களுக்கும், மராஷ்டக வேஷப்பிராமணர்களுக்கும் திராவிட வேஷபிராமணர்களுக்கும் மனத்தாங்கலுண்டாகி பௌத்தர்களுக்கு எதிரிடையாய் பெருங்கூட்ட விரோதிகள் பெருகிவிட்டார்கள். அத்தகையப் பெருக்கத்தால் வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்களே சகலருக்கும் பெரியசாதிகள் என்று ஏற்படுத்திக் கொண்டு தங்களது பொய்வேஷத்தையும் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்ப் புராணங்களையும் சகலருக்கும் விளங்கப் பறைந்து வந்தவர்களும் அவர்கள் கட்டுக்குள் அடங்காத பராயர்களுமாகவிளங்கிய மேலோர்களாம் பௌத்தர்களை சகலருக்குந் தாழ்ந்த சாதிப் பறையரென்றும் வகுத்து, தங்களை அடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், கல்வியற்ற பெருங்குடிகளுக்கும் போதித்து இழிவடையச் செய்துவந்ததுமன்றி பௌத்தர்கள் எங்கேனும் சுகத்திலிருப்பார்களாயின் தங்களுடைய நாணமற்ற ஒழுக்கங்களையும், மிலேச்சச் செயல்களையும், பிராமண வேஷங்களையும் சகலருக்கும் பறைந்து தங்கள் கெளரதையை கெடுத்துவிடுவார்க ளென்னும் பயத்தால் பௌத்தர்கள் யாவரையும் எவ்வகையால் கெடுத்து எவ்வகையால் நாசஞ் செய்து எவ்வகையாற் பாழ்படுத்தலாமோவென்னுங் கெடு எண்ணத்தையே குடிகொள்ள வைத்துக்கொண்டார்கள். காரணமோவென்னில் பௌத்தர்கள் சுகச்சீருடனிருப்பார்களாயின் பௌத்தர்களது வேதவாக்கியங்களையும் பௌத்தர்களது வேதாந்தங்களாம் உபநிஷத்துக்களையும் அறஹத்துக்களாம் பிராமணர்களது செயல்களையும் விளக்கிக்கொண்டே வருவார்கள். அதனால் தங்களது பொய்ப் பிராமண வேஷங்களும், பொய்ச்சாதி வேஷங்களும், பொய்போத வேதங்களும், பொய் வேதாந்த கீதங்களும் பரக்க விளங்கிப்போமென்னும் பயத்தால் மேன்மக்களாம் பௌத்தர்களை கீழ்மக்களாம் பறையர்களெனத் தாழ்த்தி நிலைகுலைக்கும் நோக்கத்திலேயே இருந்துவிட்டார்கள். எத்தகைய நிலைகுலைவென்னில் மடங்களில் தங்கியிருந்த சமண முநிவர்களை அவ்விடங்களிலிருந்து ஓட்டுவதும், அந்தந்த மடங்களிற் சிறுவர்கள் வாசிப்புக்கென்று ஏற்படுத்தியிருந்த பள்ளிக்கூடங்களைக் கலைத்தும், தங்களது போதனைக்குட்பட்ட அரசர்களை விடுத்தும், தங்களது பொய்ப் போதனைகளுக்கு மயங்கா விவேக அரசர்களை மித்திரபேதங்களாற் கொன்றும் தேசங்களை விட்டோட்டியும் புத்த தன்மங்களை மாறுபடுத்திக்கொண்டு வந்ததுமன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்ம குருக்களாகவிருந்து தன்மகன்மக் கிரியைகளை நடாத்தி வந்த சாக்கையர், வள்ளுவர், நிமித்தர்களென்போர்களை வள்ளுவப் பறையர்களெனத் தாழ்த்தி அரசர், வணிகர், வேளாளரென்னும் முத்தொழிலாளருக்கும் செய்துவந்தக் கன்மக்கிரியைகளை செய்யவிடாதகற்றி வேஷப் பிராமணர்களே அக்கிரியைகளை நடாத்துவதற்கு ஆரம்பித்துக்கொண்டதுமன்றி கல்வியற்ற அரசர்களிடத்தும், வள்ளுவர்களைப் பறையர்களென்றுகூறி இழிவுபடுத்தியது மன்றி அருகில் நெருங்கவிடாமலுஞ் செய்து அவர்களது தன்மகன்மக் கிரியைகளைத் தாங்களே அநுபவித்துக்கொண்டதுமன்றி அவர்களை எங்குந் தலையெடுக்கவிடாமல் செய்து மற்றும் யாது விஷயத்திலும் சீவிக்கவிடாது தாழ்த்தி நிலைகுலையச் செய்து ஊருக்குள் பிரவேசிக்கவிடாமலும், சுத்தநீர்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும் மற்றுங் கனவான்களாயுள்ளக் குடிகள் வாசஞ்செய்யும் வீதிகளிற் போகவிடாமலும், அவர்களிடம் நெருங்கிப் பேசவிடாமலும், தடுத்துப் பலவகையாலும் பௌத்த குருக்களையும் பௌத்த உபாசகர்களையுமே கொல்லத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்கள் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ப்புராணங்களையும், பொய் ஸ்மிருதிகளையும், சிலாலயங்களாம் பொய்மதக்கடைகளையும் பரப்பி பொய்க்குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் யாவரும் மெய்க்குருக்கள் போல் நடித்து கல்வியற்றக் குடிகளையுங் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு பெளத்ததன்மத்தில் பிறழாது சுத்த சீலத்திலிருப்பவர்கள் யாவரைந் தாழ்ந்த சாதிகளென்று கூறி எவ்வெவ்வகையில் எவ்வெவ்வரிடத்து தாழ்ச்சிபெறக்கூறி நசிக்கக் கூடுமோ அவர்கள் யாவரையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு, பௌத்தசிகாமணிகளாம் மேன்மக்கள் யாவரையுங் கீழ்மக்களெனத் தாழ்த்தி எங்கும் எவ்விதத்திலும் எச்சீவனங்களிலும் நெருங்கவிடாமல் துரத்தி நசித்துக்கொண்டே வந்தார்கள். பௌத்த தாயக மேன்மக்களோ வென்னில் சாதிபேதங்களால் உண்டாங் கேடுகளை விளக்கி அவைகளைக் கண்டித்தும், மத பேதங்களையும் அதன் கேடுகளையும் விளக்கி, அவைகளைக் கண்டித்தும் வேண்டியப் பாடல்களைப் பாடி நீதிமார்க்கங்களைப் பறைந்திருக்கின்றார்கள். ஆரிய மிலேச்சர்களோ கொண்டிருப்பது பிராமணவேஷம், போர்த்திருப்பது பொறாமெப்போர்வை, உள்ளத்துறைந்திருப்பதோ வஞ்சினக்கூற்று, நாவுரையோ நஞ்சுண்ட வாள், குடிகெடுப்பே குணசிந்தை யுள்ளவர்களாதலின் பெளத்த சிகாமணிகளின் நீதிபோதங்களைத் தங்கட் செவிகளிற்கேளாது தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதிபேதங்களுக்கும் பொய்மத பேதங்களுக்கும் உட்படாதவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பலவகையாலும் பரவச் செய்துவந்ததுமன்றி அன்னியதேசங்களிலிருந்து இவ்விடம் வந்து குடியேறியவர்களுக்கும் இழிவாக போதித்து அவர்களாலுந்தாழ்ச்சியடையச் செய்தும் இப்பறையனென்னும் பெயரை பட்சிகளுக்கும், மிருகங்களுக்குக் கொடுத்துப் பரவச்செய்து, இப்பறையனென்னும் பெயரை அரிச்சந்திர னென்னும் பொய்க்கதையிலும், நந்தன் சரித்திரமென்னும் பொய்க்கதையிலும், கபிலர் அகவலென்னும் பொய்க்கதையிலும் பரவச்செய்து கல்வியற்ற சாதிபேதமுள்ளோர் சகலர் நாவிலும் இழிவுபெற வழங்கவைத்துவிட்டார்கள். இவ்விழி பெயரால் பள்ளிக்கூட சிறுவர்களும் நாணமடைவதை அறிந்த கருணை நிறைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பஞ்மர்களென்றேனும் அவர்கள் பெயரை மாற்றிவிடலாமென்று பள்ளிக்கூடங்களெங்கணும் மாற்றிவிட்டார்கள். அதையறிந்த சாதிபேத வஞ்சகர்கள் வீதிகளிலடித்துள்ள முநிசபில் போர்டுகள் யாவற்றிலும் முன்பவற்றிலில்லாத பறைச்சேரிவீதி பறைச்சேரி வீதியெனப் பலகைகளில் வரைந்து அப்பெயர் மாறாதிருக்கும் வழியைச் செய்திருக்கின்றார்கள். பறையர்களென்னும் பெயரை அதிற் பரவச்செய்ததும் போதாது டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகின்றோ மென்னும் படாடம்பமடித்துக் கூட்டங்கூடுவதில் டிப்பிரஸ்கிளாஸ் யாரென்றால் பறையர்களென்போரும், சக்கிலிகளுமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தியாதி பொறமெச்செயல்கள் யாவும் பௌத்தர்களைத் தாழ்த்தித் தலையெடுக்கவிடாமற்செய்த வஞ்சினக் கூற்றாதலால் அவற்றை சகல நீதிமான்களுக்கும் விளக்கி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கி யாதரிப்பதற்கே இவ்விந்திரர்தேச சரித்திரத்தை வெளியிட்டுள்ளோம். அந்தந்த சரித்திரக்காரர்கள் காலவரசர்களையும், அவரவர்கள் ஆண்டுவந்த தேசங்களையுங் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நாம் அவைகள் யாவற்றையும் விடுத்து இத்தேசத்துள் நிறைந்திருந்த வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங் குறைந்து சாதிபேத மதபேதத்தால் வஞ்சினம் பொறாமெ நிறைந்து நாளுக்குநாள் தேசம் பாழடைந்துவருதற்குக் காரணமாய் சரித்திரம் ஏதுண்டோ அவைகளை மட்டிலும் இவ்விடம் வரைந்துள்ளோம். வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த மேன்மக்கள் கீழ்மக்களாகத் தாழ்ந்த குறைவே இந்திரர்தேசத்தின் சிறப்புங் குன்றி சீர்கெடுவதற்கு ஏதுவாகிவிட்டது. யதார்த்தத்தில் தேசத்தையும் தேசமக்களையும் சீர்திருத்த முயலுங் கருணைதங்கிய பெரியோர்கள் இச்சரித்திரத்தையும் ஆய்ந்து சீர்திருத்தும்படி வேண்டுகிறோம். (இத்தொடர் கட்டுரை புத்தகம் 4, இலக்கம் 12இல் தொடங்கி புத்தகம் 5, இலக்கம் 23இல் நிறைவு பெறுகிறது) 21. வீட்டிற்கோர் விருட்சம் வளர்த்தல் வேண்டும் ஒவ்வோர் குடும்பத்தோரும் தங்கள் காதலினால் பிள்ளையைப் பெறல் வேண்டும், அதனை வளர்த்தல் வேண்டும், அதனால் சந்ததி பெருகி பலனடையவேண்டு மென்பதுபோல் ஒவ்வோர் மனையிலும் பலன் தரக்கூடிய விருட்சங்களை வைத்து வளர்த்து அதன் பலனை அடைதல் வேண்டும். அவற்றுள் பலா விருட்சமும், மா விருட்சமும், தெங்கு விருட்சமும் மிக்கப் பிரயோசனத்தைத் தரும். அதனையும் பெற்றப் பிள்ளைகளைப்போலவே பாதுகாத்தல்வேண்டும். சிலர் உடனுக்குடன் பலன் தரக்கூடிய வாழை, கத்திரி, வெண்டைமுதலிய விருட்சங்களை வளர்ப்பார்களன்றி நாள்சென்று பின்னுக்குப் பலன்தரக்கூடிய பெரு விருட்சங்களை வளர்ப்பது கிடையாது. காரணம், அப்போதைக் கப்போதே தாங்கள் சுகமனுபவித்துக் கொண்டால் போதும். பின் சந்ததியின் பலனைக் கருதுவது கிடையாது. மனிதனாகத் தோற்றிய ஒவ்வொருவரும் தங்கடங்கள் பின் சந்ததியோர் விருத்தியையும் அவர்கள் சுகத்தையுமே கருதல் வேண்டும். அத்தகையப் பொதுசுகத்தைக் கருதாது தன் சுகத்தையே கருதுவோர் குடும்பமும், மனையும், அவர்கள் வாழ்க்கையும் நாளுக்குநாள் க்ஷீணமடைந்துபோகும். அவர்கள் செயலைப் பின்பற்றியக் குடும்பமும் அதேகதியடையும். ஆதலின் மனுக்கள் சீரும் சிறப்பும் சுகமும் பெறவேண்டிய முயற்சிகளில் ஒவ்வொரு மனைகள் தோரும் விருட்சங்களை வைத்து வளர்ப்பதும் ஓர்சுகமாம். தேக சுகாதார விளக்கங்களில் வாயற்படி அருகிலேனும் புறக்கடை முதலிலேனும் ஓர்விருட்சம் பரவியிருக்குமாயின் அந்தக் கெட்ட நாற்றங்களையும் சாமளைப் புழுக்கூட்டங்களையும் தான் கிரகித்துக் கொண்டு அம்மனையில் வாழும் மநுக்களைக் கார்ப்பதுடன் காலந்தவிராது அதன் கனியையுங் காயையும் சருகையுந் தந்து காப்பாற்றும். அதிக வெய்யகாலத்தில் வெப்பத்தை தான் கிரகித்துக்கொண்டு மக்களை குளிரச்செய்யும். மனத்திலெழுவும் ஆயாசத்தையும் அசதியையும் போக்கும். தாங்கள் பெற்று வளர்த்தப் பிள்ளைகளேனும் தன்தன் பெண்சாதி பிள்ளைகளின் சுகத்தைப் பார்த்துக்கொண்டு பெற்று வளர்த்தோருக்கு யாதொருபலனையுந் தராதிருப்பதைப் பார்த்துவருகின்றோம். ஆனால் தங்கள் தங்கள் மனைகளில் வைத்து வளர்த்த விருட்சங்களின் பலனை தாங்களே அனுபவிப்பார்களென்பது அநுபவசித்தமாகும். “மனையுள் விருட்சமும் மக்கள் கல்வியும்மாறா சுகந்தரு” மென்னும் பழமொழிக்கிணங்க ஒவ்வொருவர் மனையிலும் சொற்ப துண்டு காலிபூமிகளிருந்தபோதினும் அதை வெறுமனேவிடாது ஓர்விருட்சத்தை வைத்து வளர்க்க வேண்டுகிறோம். - 4:2; சூன் 22, 1910 - 22. கல்வி கைத்தொழில் பயிடுரிந்தொழில் வியாபாரத்தொழில் இந்திய தேசத்தின் கல்வியை முதலாவதாராய்வோமாக. கலாசாலை களெனக் குறிப்பிட்டு ஆதியிற் கல்வியையூட்டி சிறுவர்களுக்கு விவேக விருத்தி செய்துவந்தவர்கள், சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களேயாகும். மற்றொருவராலுங் கல்விவிருத்தி பெற்றது கிடையாது. அதற்குப் பகரமாய் பெளத்தர்களே கல்வி விருத்திக்கு மூலமென்பதை நாளது வரையில் கலாசாலைகளுக்கு பள்ளிக்கூடங்களென வழங்கும் பெயரே போதுஞ்சான்றாம். அதாவது, புத்தவிகாரமாங் கூடங்களுக்கு, திராவிட மொழியில் அறவோர் பள்ளியென்றும், அறப்பள்ளியென்றும், புத்தர் பள்ளியென்றும் வழங்கி வந்தவற்றை ஒவ்வோர் பெளத்த சரித்திர புத்தகங்களிலும் காணலாம். புத்தசங்கத்தோராம் சமண முநிவர்கள் வாசஞ்செய்திருந்த அறப்பள்ளிகளிலேயே, சிறுவர்களுக்குப் பாடங் கற்பித்துவந்ததுகொண்டு பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமென பூர்வத்திலும் வழங்கி நாளதுவரையிலும் வழங்கி வருகின்றார்கள். ஈதன்றி தற்காலம் இத்தேசத்தோர் கல்வி கற்று விவேகவிருத்தி பெற்று வரும் கலை நூற்களாம் இலக்கிய நூற்களும், வைத்திய நூற்களும் மக்கள் விவேக விருத்தி பெறவேண்டுமென்னுங் கருணை கொண்ட புத்தரங்கத்தோராகும் சமண முநிவர்களால் வரைந்துள்ளவைகளே அன்றி மற்றொருவராலும் வரைந்துள்ள விவேக விருத்தி நூற்கள் கிடையாது. ஆதலின் இத்தேசத்தோருக்குக் கல்வியைக் கற்பித்து நீதியின் விருத்தியையும் ஞானத்தின் விருத்தியையும் பெறச்செய்து குருவின் பக்தியிலும் இராஜ விசுவாசத்திலுங் குடிகளை நிலைக்கச்செய்து வந்தவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களேயாவர். இரண்டாவது, கைத்தொழில் விருத்தியை ஆலோசிப்போமாக. இத்தேச மெங்கும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் கைத்தொழில் விருத்தி பெற்றோருக்கு வடமொழியில் சூஸ்திரரென்னும் பெயரை அளித்திருந்தார்கள். அதாவது, தங்கள் கைகளையுங் கால்களையும் ஓர் சூஸ்திரக் கருவிகளாகக்கொண்டு மரக்கருவி சூஸ்திரங்களையும், இரும்புக் கருவி சூஸ்திரங்களையும் விருத்திசெய்து அதனாதரவால் மாடமாளிகைகளையுங்கூட கோபுரங்களையுங்கட்டி பலவகைவருண சித்திரங்களால் கண்களிக்கச்செய்தவர்களும் அழியாத உலோகபாத்திரங்களை விருத்தி செய்தவர்களும் வஸ்திரங்களை நெய்து பலதேசங்களுக்கும் அனுப்பிக் கீர்த்திப் பெற்றவர்களும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பௌத்தர்களே யாவர். அவைகளுக்குப் பகரமாய் தற்கால ஆர்ச்சலாஜிக்கல் சர்வேயர்களால் கண்டுபிடித்து வரும் புத்த வியாரக்கட்டிடங்களும் அவைகளுள் வரைந்திருக்கும் வருண பதுமெய்களும் பஞ்சலோகப் பாத்திரங்களும் சந்தன, தந்த பெட்டகங்களும் மேல் நாட்டிற்குச் சென்று கீர்த்திபெற்றுள்ள பட்டாடைகளும் தற்காலம் மகமதியர்களால் மஃமல்லென வழங்கிவருவதுமானவை திராவிட மல்லர்களால் நெசியப்பெற்று மேல் நாடுகளெங்கும் புகழப்பெற்ற சல்லா வஸ்திரங்களுமே போதுஞ் சான்றாம். மூன்றாவது, வியாபார விருத்தியை ஆலோசிப்போமாக. இந்தியதேச முழுவதும் புத்த தன்மம் பரவியிருந்த காலத்தில், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறி வியாபாரஞ் செய்பவர்களுக்கு வடமொழியில் வைசியரென்றும், தென் மொழியில் வாணிபரென்றும், செட்டியென்றும், ரெட்டியென்றும், வியாபாரக் காரணப் பெயர்களைப் பெற்றிருந்தார்கள். அதாவது, பால், நெய் வியாபாரஞ்செய்வோரை கௌ வைசியரென்றும், தானிய வியாபாரஞ் செய்வோரை பூவைசியரென்றும், பொருட்களைக் கொடுத்து பணம் பெற்று வியாபாரஞ்செய்வோர்களை தனவைசியர்க ளென்றும், வடமொழியில் வழங்கியதுமன்றி தென் மொழியில் எண்ணெய், ஆமணக்கு நெய், தென்னெய் வியாபாரிகளை எண்ணெய் வாணியர், எண்ணெய் வாணிபரென்றும், சுங்கச்சாவடிகளில் உட்கார்ந்து சுங்கமாம் ஆயம் வாங்குவோர்களை தேச ஆயச்செட்டிகளென்றும் நாடுகளிலுள்ள கோட்டைக்குள்ளிருந்து வியாபாரஞ்செய்பவர்களுக்கு நாட்டுக்கோட்டைச் செட்டிகளென்றும், ஒரே இடத்திற்றங்கி நவரத்தின வியாபாரஞ் செய்வோர்களுக்கு ரெட்டிகளென்றும் பலதேசங்களுக்குச்சென்று பலசரக்கு வியாபாரம் செய்வோர்களுக்கு பரதரென்றும் வழங்கி வந்தார்கள். பூர்வ திராவிடர்கள் தற்கால சாதிபேதமென்னுங் குரோதச் செயலைப் பெற்றவர்களாயில்லாமல் சகல தேசங்களுக்குஞ் சென்று தங்கள் வியாபாரங்களை விருத்தி செய்துவந்ததுமன்றி புத்ததன்மமாம் நீதிநெறி ஒழுக்கங்களையும் பரவச்செய்து புத்த சங்கங்களையும் நாட்டியிருக்கின்றார்கள். இவற்றிற்கு ஆதாரமாகக் கொளம்போசுக்கு முன்பு அமெரிக்காவுக்கு திராவிடர்கள் சென்று புத்தரங்கத்தை நாட்டியுள்ள ஆதாரம் அவ்விடம் வழங்கிவரும் சாக்கையபுரம், கெளதமாலயம் என்னும் பெயர்களே போதுஞ் சான்றாம். நான்காவது, பயிரிடுதல் என்னும் வேளாளத்தொழிலை ஆலோசிப்போமாக. பூர்வகாலத்தில் சாதிபேதமற்ற திராவிடர்களே பூமியை உழுது சீர்திருத்தி பயிரிட்டு சருவ சீவராசிகளுக்கும் உபகாரிகளாகவும் உதவியாளராகவும் இருந்தபடியால், வேளாளரென்றும், காராளரென்றும், சீராளரென்றும், பூபாலரென்றும், பண்ணைக்காரரென்றும், வழங்கப்பெற்றிருந்தார்கள். சாதிபேதமற்ற திராவிடர்களே வேளாளரென்னுந் தொழிற்பெயர் பெற்று பூமியை உழுது, சீர்திருத்தி, தானியங்களை விளைவித்து, சகலருக்கும் உபகாரிகளாக விளங்கியவற்றை க்ஷ யாரால் இயற்றியுள்ள இராமாயண காவியத்திலும், ஏரெழுபதிலும் வரைந்துள்ள சடையன், சடையப்பன் என்பவன் சரித்திரத்தால் அறிந்துக்கொள்ளுவதுடன் தற்காலம் பூமியை உழுது பண்படுத்தி தானியங்களை விளைவித்து விருத்தி செய்வதற்காய் உழைத்து இரவும் பகலும் பாடுபடுகின்றவர்கள் யாரென்றுங் கண்ணாரக்கண்டு தெரிந்துக்கொள்ளலாம். ஆதலால் இந்திய தேசத்தின் பூர்வசீர்திருத்தக்காரர்களும், சீர்திருந்தியவர்களும் சாதிபேதமற்ற திராவிடர்களாகவே விளங்கி தற்காலத் தோன்றியுள்ள சாதிபேதத் தலைவர்களின் மித்திர பேதத்தாலும் சத்துரு நாசத்தாலும் பூர்வநிலை குலைந்து, நசிந்து இந்தியதேச சிறப்புமழிந்து பாழடைந்துவருங்காலத்தில் “காய்ந்துபோம் பயிறுக்குத் திதிமழைப் பெய்து” கார்த்ததுபோல் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி மறுபடியும் இந்திய தேசத்தை சீர்படுத்திவருவதினால் சாதிபேதமற்ற திராவிடர்களும் சொற்ப சீர்பெற்று வருகின்றார்கள். இத்தகைய பெருங்கருணை கொண்டு இந்தியாவையும் இந்தியர்களையும் சீர்திருத்தி செவ்வைசெய்ய முயன்று கைத்தொழிலையும், விவசாயத்தையும் விருத்தி செய்துவரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தார் கிருபாநோக்கம் வைத்து பூர்வத்தில் கைத்தொழிலிலும், விவசாயத்திலும் விருத்திப்பெற்ற உழைப்புள்ளக் கூட்டத்தார் யாரென்று கண்டறிந்து அக்கூட்டத்தில் வாசித்துள்ளவர்களையும் உழைப்பாளிகளையுமே தெரிந்துதெடுத்து கைத்தொழிற்சாலை, விவசாயசாலை இவைகளின் உத்தியோகஸ்தர்களாகவும் உழைப்பாளிகளாகவும் நியமிப்பார்களாயின் பிரிட்டிஷார் எடுத்துள்ள வித்தை, விவசாய முதலியது விருத்திப்பெற்று நாளுக்குநாள் சிறப்படைவதுடன் சாதிபேத சத்துருக்களால் நசுங்குண்ட ஏழைகளும் சுகம்பெற்று நன்றியறிதலாய் தங்கள் விருத்திக்காக இராஜாங்க விருத்தியை மென்மேலுங் கோரி இராஜவிசுவாசத்தில் நிலைத்து எங்கும் இராஜவிசுவாசத்தைப் பரவச்செய்வார்கள். - 4:3; சூன் 29, 1910 - 23. பஞ்சமுண்டாவதற்குக் காரணம் பூமியின் விருத்தி குறைவேயாம் நமது தேசத்தார் தங்கள் கைப்பொருளை பூமியைப்பண்படுத்தி தானியவிருத்தி விருட்சவிருத்திகளைச் செய்யாது ஒவ்வொருவரும் பி.எ., எம்.எ. பட்டங்களைப்பெற்று விடவேண்டும், இராஜாங்க உத்தியோகங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும் சுயராட்சியம் செய்யவேண்டுமென்னும் பேரவாவில் இருக்கின்றார்கள். எத்தேசமாயினும் பூமியின் விருத்தி நோக்கமற்றிருக்குமாயின் அத்தேசம் ஒருக்காலும் சிறப்புப்பெறாதென்பது திண்ணமாம். அதற்குப் பகரமாய் அமேரிக்கா, ஜப்பான், டிபேத், பர்ம்மா முதலிய தேசங்களே போதுஞ் சான்றாம். அத்தேசத்தோர் தங்கள் திரவியங்களை பூமியின் விருத்திக்கேசெலவிட்டு அதன்பலனால் குபேரசம்பத்துடையவர்களாய் இருக்கின்றார்கள். அமெரிக்கா தேசத்திய கோதுமைமாவும் பர்மா தேசத்திய அரிசியும் நமது தேசத்தில் வந்து ஏராளமாக இறக்குமதி செய்வதைக் காண்கின்றோம். அத்தகைய பர்மியர் அமேரிக்கர் முதலானோர் முயற்சிகளைப்போல் நமது தேயத்தோர் இல்லாமல் பாழடையுங் காரணமோவென்னில் பூமியில் உழைத்துப்பாடுபடும் மக்களை தாழ்ந்தசாதியாக வகுத்துவிட்டு சோம்பேரிகளெல்லாம் பெரியசாதிகளென ஏற்படுத்திக்கொண்டபடியால் பூமியின் விருத்தியற்று தானியங்களுங் குறைந்து பஞ்சமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. பெரியசாதிகளெனப் பெயர்வைத்துக் கொண்டவர்கள் தங்கள் பணங்களை தாராளமாக செலவு செய்து ஏழைக் கூலியாட்களுக்கு பசியாற அன்னமளித்தேனும் பூமிகளை விருத்திச்செய்கின்றார்களா அதேனுங்கிடையா. எப்போதும் உழைத்துப் பணம் சம்பாதிக்காதவர்களின் கரங்களில் சொற்பப் பணங் கிடைத்துவிடுமாயின் அதையே தெய்வமாக பாவித்து ஒரு காசேனும் செலவிட மனம்வராது தகுந்த புசிப்பெடுக்காமலும், சுத்தவாடைகள் அணையாமலும் மேலுமேலும் அப்பணத்தைப் பெருக்கி அதன்பேரில் படுத்துக்கொண்டிருப்பார்கள். இவ்வகை ஒருகாசேனுஞ் செலவிட மனமெழாது மரணகாலம்வரில் அப்பணத்தை இழைத்து வாயில் வார்த்தால் தான் அப்பிராணன் நீங்கும் அல்லாவிடில் இரண்டு நாள் மூன்றுநாளேனும் அப்பண ஆசையின் பற்றால் பிராணன் இழுத்துக் கொண்டே கிடக்கும். இதுவே தற்காலம் இத்தேசத்தில் தோன்றியுள்ளப் பிரபுக்களின் சுவாபமாகும். இத்தகையக் கனவான்கள் தங்கள் பணங்களைச் செலவிட்டு பூமியின் விருத்தி செய்வார்களோ, ஏழைக்குப் பசியாற அன்னமளித்து ஏவல்வாங்குவரோ ஒருக்காலுமில்லை. பூர்வம் இத்தேசத்தில் மிக்க உழைப்பாளிகளாயிருந்து பணம் சம்பாதித்து அச்சமின்றி செலவிட்டு பூமியின் விருத்தியும், வித்தியா அபிவிருத்தியும் செய்து வந்தவர்கள் எழியநிலை அடைந்தும் சோம்பேரிகளும் பணம் சம்பாதிக்கத் திறமெயற்றவர்களும் பிரபுக்களாக பெருகிவிட்டபடியால் வித்தியா விருத்திகளுங் கெட்டு பூமியின் விருத்திகளும் நாசமுற்று நாளுக்குநாள் பஞ்சமதிகரித்துக்கொண்டே வருகின்றது. இத்தகைய பஞ்சத்தின் அதிகரிப்பைக் கண்ட கவர்ன்மென்டாரும் விவசாய விருத்திக்கென்று வேண்டிய முயற்சிகளும் அதற்காய சாதனங் கருவிகளும் அமைத்து பணவுதவியும் செய்துவருகின்றார்கள். அத்தகையச் செயலிலும் நமது தேசத்தார் மேல்போக்குக் காட்டிக்கொண்டு அதன் வழியாகப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கின்றார்களன்றி பூமிகளில் உழைக்கவும் தங்கடங்கள் பணங்களைச் செலவு செய்து தானியங்களை விருத்திசெய்யவும் முயற்சியற்றே இருக்கின்றார்கள். ஆதலின் நமது தேய்த்துக் கனவான்களென்போர் இனியேனும் லோபத்துவத்தையும், சோம்பலையும் பெருக்காது இராஜாங்கத்தோர் முயற்சியையும் செயலையும் பின்பற்றுவார்களென்று நம்புகிறோம். - 4:8; சூலை 20, 1910 - 24. மழையில்லாதக்காரணமோ மக்கள் அதன்மமேயாம் அதன்மத்திற்குக் காரணமோ, சாதியாசாரமாகும். சாதியாசாரத்திற்குக் காரணமோ தங்களைப் பெரியசாதிகளென்று உயர்த்திக்கொண்டு பெருஞ் சோம்பேரிகளாயுலாவி எளியோர்களை ஏய்த்து வேலை வாங்குவதற்கேயாம். இத்தகையோர் வஞ்சக வரட்சி ஏய்ப்பினால் வானஞ் சுருங்கி பூமி வரண்டு போகின்ற காரணங்கொண்டே அதன்மமேயென்று கூறியுள்ளோம். எங்கும் தன்மம் நிறைந்திருக்கின்றது. சிலக்கனவான்கள் தன்மசத்திரங்கட்டிவேண்டிய வரையில் அன்னதானஞ் செய்து வருகின்றார்களென்று கூறினுங்கூறுவர். அஃது சத்தியதன்ம மார்க்கத்தை அறிந்து செய்யா அசத்திய தன்ம மார்க்கமேயாகும். சத்தியதன்ம மார்க்கமானது ஏழைகளுக்கு இதங்கி அவர்கள் பசிதீர அன்னமளிப்பதும் ஞானவிசாரிணைப் புருஷர்களாகும் துறவிகளுக்கும் இல்லந் துறந்தவர்களுக்கும் பெண் பிள்ளைகளை வெறுத்துப் பேரின்பந் தேடும் பெரியோர்களுக்கு அன்னமளிப்பதுமாகும். அசத்திய தன்ம மார்க்கமோவென்னில் தடிச் சோம்பேறிகளுக்கு அன்னமளிப்பதும் பெண்டு பிள்ளைகளை வளர்க்கும் பேராசையால் தங்களைப் பெரியோர்களென்றும் மேலார்களென்றும் பொய்யைச்சொல்லி பொருள்பரிப்போருக்கு அன்னமளிப்பதுவேயாம். இத்தகைய தன்மத்தை சத்தியதன்ம வழியிற் செய்வதாயின் வானம் மும்மாரிபெய்து வரப்புயர்ந்து பயிறுகளோங்கி குடிகள் செழித்து அரசரும் ஆறுதலடைவர். அங்ஙனமின்றி பொருளாசை மிகுத்த அசத்தியர்களுக்குச் செய்யுந் தன்மத்தினால் மழைபெய்யாது பூமியும் வரண்டு காருண்யமற்ற பாபிகள் பார்வையால் பயிறுகளுந் தீய்ந்து தானியங் கிடையாது குடிகளும் நசிந்து அரசர்களும் ஆறுதலற்றிருக்கின்றார்கள். வானத்தை நோக்கி மழைப் பெய்யவில்லையென்பதினும் பூமியில் வாழும் ஏழைகளைநோக்கி இதக்கம் வைப்பரேல் மாதம் மும்மாரி பெய்யும். தங்களைப் பார்த்து நிற்கும் ஏழைகளைப்பாராதவர்கள் வானத்தை நோக்கிப்பார்ப்பதால் தாங்கள் பயனடைவார்களோ, ஒருக்காலும் அடையார்கள். அளந்ததே அளக்கப்படும், கொடுத்ததே கொடுக்கப்படுமாதலின் ஒவ்வொரு கனவான்களும் பணத்தை வளர்ப்பது போல் ஏழைகள்மீது தங்கள் கருணையையும் ஈகையையும் வளர்ப்பரேல் தாங்களும் சுகச்சீர்பெற்று ஏழைகளும் ஆனந்தமுற்று அரசும் ஆறுதல் பெற்று சுகமுண்டாகும். கற்புமிகுந்தோரும் காருண்யம் அமைந்தோரும் வானத்தை நோக்கி பெய்யென்றால் பெய்யுமழை என்பது சத்தியமொழியேயாம். - 4:6; சூலை 20, 1910 - 25. கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் இது பூர்வ விவேகக் குடிகளின் சம்மதம். அதாவது அரசன் வாழ்க்கையில்லா தேசத்தில் வாசஞ்செய்யும் குடிகளுக்கு எவ்வகையானுங் கேடுண்டாம் ஆதலின் அரசன் மனையில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று கூறியிருக்கின்றார்கள். அரசன் மனை இருக்குமாயின் தனது நீதிவழுவா செங்கோலினால் குடிகளுக்கு அன்னிய அரசர்களால் உண்டாகும் இடுக்கங்களை நீக்கி ஆதரிப்பதற்கும் துஷ்டமிருகங்களால் உண்டாகுங் கேடுகளை அகற்றிக் காப்பதற்கும், கள்ளர்களால் உண்டாம் பயங்களைப் போக்கிப் பாதுகாப்பதற்கும் பேருதவியாகும். ஓர் தேயத்திற்குப் பாதுகாப்பிட்டுக் காக்கும் அரயன் மனை அவ்விடம் இல்லாமற் போமாயின் வேற்றரசர்களின் இடுக்கமும் மிருகாதிகளின் துன்பமும் கள்ளர்களின் உபத்திரவமும் குடிகள் ஒருவருக்கொருவர் உண்டாங் கலகங்களும் பெருகி விசாரிணையற்று தேசக் குடிகளின் வித்தியாவிருத்தியும் விவசாயவிருத்தியுங்கெட்டுப் பாழடைந்து போவது அநுபவமாகும். ஆதலின் அரசனும் அரசன் மனையுமாகும் கோவில் இல்லாவூரில் குடியிருக்கவேண்டாமென்று கூறியிருக்கின்றார்கள். இத்தகைய அரசருள் தன்சாதியோர் புறசாதியோரென்னும் பேதமின்றியும் ஏழைகள் கனவான்களென்னும் தாட்சண்ணியமின்றியும், தன்மதம் பிறர்மதமென்னும் பற்றன்றியும், நீதிநெறி வழுவாது பாதுகாத்து சுகசீரளிக்கும் செவ்வியக்கோலாம் செங்கோல் நடாத்தும் அரசனையே அடுத்து வாழ்வதழகாகும். அங்ஙமின்றி தன்சாதி பெரிது புறசாதிசிறிதென்னும் பேதா பேத சாதிகர்வமும் தானே கனவான் மற்றவர்கள் ஏழையென்னும் மதோன்மத்த தனகர்வமும், தன்மதம் பெரிது ஏனையோர் மதம் சிறிதென்னும் மதோன்மத்த மதகர்வமுடையவனாய் கொடிய கோலென்னும் கொடுங்கோலரசுபுரிவோனை அண்டிவாழ்தலினும் கொடிய மிருகங்கள் வாசங்செய்யுங் காடுகளில் வாழ்தலே மிக்க மேலாயதாகும். தற்காலம் இவ்விந்தியதேசத்தில் சாதி பேதமில்லாது வாழ்ந்தவர்கள் சாதி ஒன்றை நூதனமாக ஏற்படுத்திக்கொண்டவுடன் சாதி கர்வத்தையும் மதபேதமில்லாமல் வாழ்ந்து வந்தவர்கள் நூதனமாகிய மதங்களை ஏற்படுத்திக்கொண்டவுடன் மதகர்வத்தையும், வித்தையறியாத வீணர்களாய்த் திரிந்து நூதனமாக சொற்ப வித்தைகளைக்கற்றுக்கொண்டவுடன் வித்தியா கர்வத்தையும், என்றும் பணம் படைத்தறியாது நூதனமாக சொற்ப பணம் படைப்போரெல்லாம் தனகர்வத்தை யுங்கொண்டு ஒற்றுமெயற்று பாழடைந்து போகின்றார்கள். இத்தகைய பேதமுற்றக் கூட்டத்தோரை ஆண்டு ரட்சிக்க வேண்டிய அரசர்கள் தன்சாதி புறசாதியென்னும் பேதம்பாரா சாதிகர்வமற்றவர்களும் தன்மதம் புறமதமென்னும் பேதம்பாரா மதகர்வமற்றவர்களும் தன்வித்தை மேலானது பிறர்வித்தைத் தாழ்வானதென்னும் பேதம் பாரா வித்தியாகர்வ மற்றவர்களும் தாங்கள் கனவான்கள் மற்றவர்கள் ஏழையென்னும் தனகர்வ மற்றவர்களும் ஆகியோர்களே இத்தேசத்திற்கு அரசர்களாக நிலைக்க வேண்டுமென்பதே சாதிபேதமற்ற இத்தேசப் பூர்வக்குடிகளின் சம்மதமாகும். அவர்கள் எண்ணப்படி பூர்வபுண்ணிய வசத்தால் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்றி செங்கோலோச்சும் ஆங்கில அரசாட்சியே தோன்றி நிற்கின்றது. அவர்களாட்சியே நீடிநிலைத்து சகலசாதியோரையும் சகல மதத்தோரையும் சகல பாஷையோரையும் தங்களோர் குடைக்கீழ் கார்த்து ரட்சிக்கவேண்டி நிற்கின்றார்கள். - 4:8; ஆகஸ்டு 3, 1910 - 26. கூட்டத்தால் தேட்டமும் வாட்டமும் உண்டாம் தற்காலத்தில் நமது தேசத்தோர் சிற்சிலக்கூட்டங்கள் கூடுவதியல்பாம். அக்கூட்டங்களிற் சிலர் எங்கள் பிரமம் அரசனாகப் பிறந்து அழிக்குந்தொழில் நடாத்துகிறதென்றால் தேட்டம். சிலர் அங்ஙனமில்லை எங்கள் பிரமம் பன்றியாகப் பிறந்து மலத்தைத் தின்பதென்றால் வாட்டம். மற்றுஞ்சிலர் எங்கள் பெரியோர் நால்வர், அவர்கள் மேலோகத்திற்குப்போய் கீழ்லோகத்திற்கு வருகிறவர்கள், கீழ்லோகத்தினின்று மேலோகத்திற்குப் போகின்றவர்கள் என்னில் மிகுதேட்டம். சிலர் அடடா, மேலோகத்தினின்று கீழ்லோகத்திற்கு வந்தவர்களைக் கண்டவர்கள் யார் கீழ்லோகத்தினின்று மேலோகத்திற்குப் போனவர்களைக் கண்டவர்கள் யாரென்றால் வெகு வாட்டம். சிலர் எங்கள் தேவனை நம்பினால்தான் மோட்சம்பெருவீர்கள், எங்கள் தேவனை நம்பாதவர்கள் நரகத்தில் வாதனைப்படுவீர்களென்றால் தேட்டம், அதிற் சிலர் மோட்சம் எங்குளது, நரகம் எங்குளது மோட்சம் பெறுவான் என்பதின் முன்னடையாளமும் குணக்குறிகளும் என்ன, நரகத்திற் சேருவானென்னும் முன்னடையாளமும் குணக்குறிகளுமென்ன. உன் தேவனென்பதற்கு உனக்குள்ள சுயாதீனப்பட்டயமென்னவென்று கேட்டால் வாட்டம். இத்தகையத் தேட்டங்களும் வாட்டங்களும் உண்டாகக்கூடியக் கூட்டங்கள் கூடி போட்டியிட்டு கைகளை நீட்டிவிட்டுப் பேசுவதால் யாதுபயன். மதச்சண்டைக் கூட்டங்களால் மாளா துக்கமும் சமயச்சண்டைக் கூட்டங்களால் சால துக்கமும் பெறுகி ஒற்றுமெய்க்கேடுண்டாகி, உள்ள சுகமுங் கெடவேண்டியதேயாகும். கூட்டங்கள் கூடி உலகமக்களுக்கு யாதொரு பயனுமிறாது வாட்டமுந் தேட்டமும் உண்டாகத்தக்கச் செயலால் தேசம் சீர்கெடவேண்டியதாகும். ஆதலின் கூட்டங்கள் கூடுவோர் தங்கள் ஆசிரியனும் அறியாது தாங்களுங் கண்டறியாத விஷயங்களைக் கண்டதுபோல் மனப்புர்த்தியானப் பொய்யைச் சொல்லிப் பொருள் சம்பாதித்து சிவிப்பதிலும் கூட்டங்கள் கூடி மெய்யைச்சொல்லி உழைத்து சம்பாதித்து உண்பது உத்தமமாகும். பிரமமென்னும் மொழிதோன்றிய காரணமென்னை. அப்பெயர் வடமொழிப்பெயரா, தென்மொழிப்பெயரா. அப்பெயர் காரணப்பெயரா, காரியப்பெயராவென்றாய்ந்துணராது வீண்சங்கங்கள் கூட்டி காண்பவர் தங்களை மெச்சக்காட்டிப் பேசுவதினால் வாட்டமுந் தேட்டமும் பெருகி வாணாட்கள் யாவும் வீணாட்களாகக்கழிகின்றது. நாம் மநுகுல மேல்வகுப்பினராகத் தோன்றியும் மற்றதேச மனுக்கள் வித்தைவிருத்தியிலும் புத்தி விருத்தியிலும், ஈகை விருத்தியிலும், சன்மார்க்க விருத்தியிலும் முன்னேறுவதைக் கண்டுணராது, நாங்கள் வேதாந்திகள், எங்களுக்கு வித்தையு மித்தை, புத்தியு மித்தை, ஈகையு மித்தை, சன்மார்க்கமு மித்தையெனக் கூறி சதா சோம்பேறிகளாய், பெண்டுகள் கூறுவது போல், அக்குத்துக்கில்லா ஆணவமும் வெழ்க்கஞ்சிக்கியில்லா வீராப்புங்கொண்டு, வித்தையுள்ளோர் பொருளுக்கும், புத்தியுள்ளோர் பொருளுக்கும், ஈகையுள்ளோர் பொருளுக்கும், சன்மார்க்கமுள்ளோர் பொருளுக்குங் கையேந்தி பெண் பிள்ளைகளைக் காக்குங் கூட்டம் பெருங்கூட்டமாகிவிடுமாயின் வித்தையும் புத்தியு மிகுத்தோர் கூட்டம் நாளுக்குநாள் குறைந்து தேசமும் சீரழிந்துபோம். வேதமின்னது, வேதத்தின் அந்தமின்னது, வேத விசாரிணை யாருக்குரியது, வேத அந்தத்தின் விசாரிணை யாருக்குரியது, சித்துக்களெது, சித்துக்களின் அந்தமெது, சித்துக்குரியச் செயல்களெவை, சித்தின் அந்தத்திற்குரிய செயல்களெவை எனும் விசாரிணையற்று வேதாந்திகளென்றும் சித்தாந்திகளென்றுங் கூட்டங்கூடி வாட்டங்களுந்தேட்டங்களும் அடையாது சருவஜனவிருத்திகூட்டங்கள் கூடி பொய்சொல்லுவதினால் உண்டாங்கேடுகளையும், மெய்பேசுவதினால் உண்டாம் சுகங்களையும், அன்னியப் பொருட்களை அபகரிப்பதால் உண்டாங்கேடுகளையும், அன்னியருக்கு உபகாரஞ் செய்வதினால் உண்டாகும் சுகங்களையும், அன்னியர் தாரத்தை இச்சிப்பதனால் தனக்கும் தன்சந்ததியோருக்கும் உண்டாகும் கேடுகளையும், அன்னியர் தாரத்தை தாய் தந்தையர் போல் கருதி ஆதரிப்பதினால் தனக்கும் தன்சந்ததியோருக்கும் உண்டாஞ்சுகங்களையும், சீவிப்பிராணிகளை வதைத்து துன்பஞ் செய்வதினால் உண்டாங் கேடுகளையும், சீவப்பிராணிகளை தன்னுயிர்போல் காப்பதினால் உண்டாம் சுகங்களையும், இலாகிரி வஸ்துக்களைப் பானஞ்செய்து மதிகெட்டு அதினாலுண்டாங் கேடுகளையும், இலாகிரி வஸ்துக்களை அகற்றி நிதானத்திலும் ஜாக்கிரதையிலுமிருக்கும் சுகங்களையும் யாதாமோர் உழைப்பின்றி சோம்பேறிகளாய்த் திரிவோர் கேடுகளையும், சதா உழைப்பிலும் சுருசுருப்பிலும் உள்ளவர்களின் சுகங்களையும், வித்தையிற்பயிலாது வீணர்களாய்த் திரிவோர் கேடுகளையும், வித்தைகளில் விருத்தி பெற்றுள்ளோர் சுகங்களையும் குருநிந்தை அரச துரோகமுள்ளோர் கேடுகளையும், குருபக்தி இராஜவிசுவாசமுள்ளோர் சுகங்களையும் விளங்கக்கூறி சரியையாம் நேரான வழியிற் சென்று கிரியையாம் தொழில்களைப் புரிவதாயின், யோகமாம் அதிர்ஷ்டபாக்கியந் தோன்றி சுகச்சீருண்டாகி ஞானமாம் அறிவின் விருத்தித் தானே தோன்றி சிற்றறிவால் வித்தியாவிருத்தி சுகங்களையும் பேரறிவால் மனம் என்னும் பெயரொழிந்து பரிநிருவாண சுகத்தையும் அடையலாம். இதுவே சாதுசங்கக்கூட்டத்தின் பயனாகும். - 4:10; ஆகஸ்டு 17, 1910 - 27. மநுமக்களில் தீண்டாதவர்களென்றால் யார். பூர்வ நீதி சாஸ்திரங்கள் யாரைத் தீண்டக்கூடாதென்றுக் கூறுகிற தென்னில், வஞ்சகர்களைத் தீண்டப்படாது, உறவாடி குடிகெடுப் போரைத் தீண்டப்படாது, கொலைஞர்களைத் தீண்டப்படாது, அவர்களது தெரிசனமுங் காணப்படாதென வரைந்துள்ளார்கள். பெருந்திரட்டு தன்னெஞ்சந் தனக்குச் சான்றதுவாகத் / தத்துவனன் குணராதே வன்னெஞ்சனாகிக் கூடமே புரிவோன் / வஞ்சகக் கூற்றினுங் கொடி யோன் பன்னுங் காலலன்றன் றெரிசனம் பரிசம் / பழுது நீரைய வேதுவுமாம் புன்னெஞ்சாலவனும் போய்நர கெய்தி / பூமியுள்ளளவு மேறானால். இவற்றை அநுசரித்து வைத்திய சாஸ்திரிகள் யாரைத் தீண்டப் படபாதென்று கூறுகின்றார்களென்னில், குஷ்டரோகிகளையும், விஷபேதி கண்டவர்களையும், விஷமாறி கண்டவர்களையும் நெருங்கவும்படாது தீண்டவும்படாது என வரைந்து வைத்திருக்கின்றார்கள். இத்தகைய செயலே மநுகுல ஒழுக்கத்திற்கும் செயலுக்கும் விவேக மிகுத்தோர் கருத்திற்கும் பொருந்தியதாகும். அங்ஙனமின்றி இத்தேசத்துப் பூர்வக் குடிகளும், விவேகமிகுத்தவர்களும் எக்காலும் தேகத்தை வருத்தி சம்பாதித்துப் புசிக்கக்கூடிய ரோஷமுடையவர்களுமாகிய அறுபது லட்சங் குடிகளை தீண்டாதவர்களென்பது விவேகக்குறைவும் பொறாமெய் மிகுதியுமேயாம். காரணம் ஓர் குஷ்டரோகி தன்னை உயர்ந்த சாதியோனென சொல்லிக்கொண்டு சுகதேகியைக் கண்டவுடன் அவனைத் தீண்டாதவனென்று விலகுவானாயின் சுகதேகியை குஷ்டரோகி தீண்டலாகாதென்று விலகினானா அன்றேல், சுகதேசி குஷ்டரோகியை. தீண்டலாகாதென்று விலகினானா என்பதை சீர்தூக்கி ஆலோசிக்குங்கால் குஷ்டரோகி பெரிசாதியென்று சொல்லிக்கொள்ளுவோனாயிருப்பினும் அவனை ஓர்சுகதேகி அணுகவுமாட்டான் தீண்டவுமாட்டானென்பது திண்ணம். இதற்குப் பகரமாய் பார்ப்பார்களென்போர் வீட்டில் சகலரும் புசிக்கலாமென்று ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருந்த போதிலும் அவ்வீட்டுப் பார்ப்பான் குஷ்டரோகியாயிருப்பானாயின் அவனை தெரிந்தோர் அவ்வீட்டிற்குப் போகவுமாட்டார்கள், அவனிடம் பலகாரங்களை வாங்கி புசிக்கவுமாட்டார்கள். இஃது சாதியால் விலகியச் செயலா, குஷ்டத்தால் விலகியச்செயலா. அவன்வீட்டுள் செல்லாதற்கும், புசிக்காததற்கும், தீண்டாததற்கும் குஷ்டமே காரணமாயிருக்கின்றதன்றி பெரியசாதியெனப் பெயர் வைத்திருப்பினும் பிரயோசனமில்லையென்பதே பிரத்தியட்சமாகும். ஓர் மனிதன் தன்னைபிராமணனென்று உயர்த்திக்கொண்டு சாதித்தலைவனாயிருப்பினும் அவனிடம் குடி, விபச்சாரம், களவு முதலிய துற்செயல்கள் நிறைந்திருக்குமாயின் அவனை பிராமணனென்று எண்ணி சகலர் வீட்டிலும் சேர்ப்பார்களோ, சகலரும் அவனை நெருங்குவார்களோ, ஒருக்காலும் சேர்க்கவுமாட்டார்கள், நெருங்கவுமாட்டார்கள். இவற்றிற்கு சாதி காரணமா, செயல் காரணமாவென நோக்குங்கால் தீண்டுவோர் தீண்டப்படாதோர் என்பதற்கு அவனவன் செயலும் ரோகமுமே காரணமன்றி சாதி காரணமல்ல என்பது பரக்க விளங்கும். ஆதலின் சாதியென்னும் பொய்ம்மொழியால் ஒருவனைத் தீண்டலாகாதென்பது பொய், பொய்யேயாம். அவனவன் துற்செயல்களினாலும் அவனவனுக்குத் தோன்றியுள்ளக் கொடிய ரோகங்களினாலும் தீண்டலாகாதென்பது மெய், மெய், மெய்யேயாம், இங்ஙனமிருக்க சிலக் கூட்டத்தோர் தங்கள் பொறாமெய் மிகுதியால் ஆறுகோடிக்கு மேற்பட்ட மநுமக்களை தீண்டாதவர்களென்று கூறித் திரிகின்றார்களே அதன் காரணம் யாதென்பீரேல் கூறுதும், இந்திரதேயமெங்கணும் புத்த தன்மம் நிறைந்திருந்தகாலத்தில் சில அன்னியநாட்டார் இத்தேசத்தில் குடியேறி புத்தசங்க அறஹத்துக்களாம் அந்தணர்களைப்போல் வேஷமிட்டுக்கொண்டு சொற்ப சகட பாஷையாம் சமஸ்கிருதமுங் கற்று தங்களை பிராமணர் பிராமணரென சொல்லிக் கொண்டு காமியமுற்ற சிற்றரசரையும், கல்வியற்றப் பெருங்குடிகளையும் வஞ்சித்தும் பொருள் பறித்தும் தின்றுவருவதை நாளுக்குநாள் கண்டுணர்ந்த பௌத்ததன்ம விவேகிகள் வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தவும் சாணத்தைக் கரைத்து அவர்கள்மீது வார்த்துத் துரத்துவதுமாயிருந்தார்கள். இத்தகைய சாணச்சட்டிக்கும் அடிக்கும் பயந்து ஓடிக்கொண்டே பிச்சையிரந்து தின்று வளர்ந்தவர்களுக்கு பெருங்குடிகள் வசப்பட்டு அதிகாரப் பிச்சைக்கு ஆளாகிவிட்டவுடன் பௌத்தர்களைக் காணுமிடத்து சாணச்சட்டிக்கும் அடிக்கும் பயந்து ஓடுங்கால் வேஷபிராமணருக்குரியவர்கள் கண்டு ஏனையா ஓடுகின்றீர்களென்று கேட்பார்களாயின் அடியின் பயத்தையும், சாணச்சட்டியின் பயத்தையும் வெளிக்குப் பகராது அவர்கள் நீச்சர்கள் அவர்களைத் தீண்டப்படாதென்று சொல்லிக்கொண்டே ஓடிவிடுவது வழக்கமாயிருந்தது. அவ்வடி பயத்தால் கூறிவந்த வழக்க மொழியையே வலுபெறச்செய்து வேஷப்பிராமணர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பராயர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தோர்களை தீண்டாதவர்களென்றும், சண்டாளர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும் பலவகையாலும் இழிவுகூறிப் பாழ்படச்செய்துவிட்டார்கள். சாணச்சட்டியின் அடியையும், அதன் செயலையும் நாளதுவரையிற் குக்கிராமங்களிற் காணலாம். மநுக்களைத் தீண்டாதவற்றிற்கு சகல சாதியோருக்குரிய தீச்செயலும், ரோகமுமே காரணமன்றி தற்காலம் ஏழைகளாயுள்ள ஆறுகோடி மக்கள் ஒருக்காலும் தீண்டாதவர்களாக மாட்டார்கள். - 4:15; செப்டம்பர் 21, 1910 - 28. கிறீஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா வினா : ஐயா, செப்டம்பர் மாதம் வெளியான “நல்லாயன்” பத்திரிகையில் “ஜனத்தொகைக் கணக்கெடுக்கவரும் சென்ஸஸ் உத்தியோகஸ்தர்கள் உங்கள் மதத்தைக் கேட்கையில் “கத்தோலிக்கு மதம்” என்றும், ஜாதியைக் கேட்பார்களானால் உங்கள் உங்களுடைய ஜாதியையும் சொல்லுங்கள்” என்று வரைந்திருக்கிறது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வெளியான “திரு இருதயத் தூதன்” பத்திரிகையில், “பலஸ்தீனுக்கும் ஐரோப்பாவுக்கும் திரு யாத்திரையாய்ச் சென்ற இரண்டு இந்தியர்கள்” என்ற தலைப்பின்கீழ் “உரோமை நகர் வத்திக்கான் அரண்மனையில் துரைசாமி ஐயர் கிறீஸ்துவ பிராமணர்களின் தொகை அதிகரிக்கும் படியாகவும், அவர்களின் குடும்பங்கள் செழித்திருக்கும்படியாகவும் அர்ச். பாப்பானவர் ஆசீர்வதிக்கும்படி மன்றாடினார்” எனக் கண்டிருக்கிறது. இதனால் எனக்குத் தோன்றிய சந்தேகங்களாவன: முதலாவது, கிறீஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா? இந்து மதத்திற்கே சொந்த பொருளாயுள்ள ஜாதியைக் கிறீஸ்தவர்கள் அநுசரிக்கலாமா? அப்படி அநுசரிப்பவர்கள் கிறீஸ்தவர்களாவார்களா? இரண்டாவது, பிராமணனாயிருந்தவன் கிறீஸ்தவனானபோது அவனைப் பிராமணனென்று அழைக்கலாமா? அப்படிப்பட்டவன் பூணூல் தரித்துக்கொள்ளலாமா? தன் குடும்பங்கள் செழித்திருக்க பாப்பாண்டவரின் ஆசீர்வாதத்தைக் கேட்டவர்கள் மற்ற குடும்பங்களை நினையாமற் போனதென்னை? ஜாதி கிறீஸ்தவர்களாகிய இந்த இரண்டு யாத்திரைக்காரரும் பலஸ்தீனாவிலும் ஐரோப்பாவிலும் யாரிடத்தில் போஜனஞ் செய்திருப்பார்கள்? அப்போது ஜாதி கெடவில்லையா? பி.கே, சென்னை. விடை : அதாவது, ஓர் இந்து மதத்தைச்சார்ந்தவன் கிறிஸ்தவனாகிவிடுவானாயின் அவன் முன்பு அநுசரித்துவந்த சாதியாசாரமும், சமயாசாரமும் அன்றே ஒழிந்துவிட்டது என்பது திண்ணம். அங்ஙனமின்றி சாதியாசாரமும், சமயவாசாரமும் விடுவதில்லை என்றால் அவனுக்குக் கிறீஸ்தவனென்னும் பெயர் பொருந்தவே பொருந்தாது. அல்லது சாதியாசாரத்தை மட்டிலும் ஒழிக்காது சமயாசாரத்தை ஒழித்த கிறிஸ்தவன் என்பாராயின் சமயத்திற்குக் கிறீஸ்துவைப் பற்றிக்கொண்டும், சாதிக்கு மநுதன்மசாஸ்திரத்தையும் பிராமணனையும் பற்றிக்கொண்டுள்ளவராதலின், அவர் முழுக் கிறிஸ்தவராகமாட்டார். அரைக் கிறீஸ்தவரே ஆவர். அதாவது, மநுதன்ம சாஸ்திரக் கட்டுப்பாடும் வேண்டும், சாதியாசாரமும் வேண்டும் என்பதில் அரை இந்துவாகவும், கிறீஸ்துவமத ஆசாரமும் வேண்டும் என்பதில் அரைக் கிறீஸ்தவனாகவும் விளங்குகின்றார். “கீற்றில் வேண்டாம் சாற்றில் வாருங்கோ” என்னும் பழமொழிக்கிணங்க நான் கிறீஸ்தவனாகிவிட்டேன் இந்துக்களது மதாசாரம் வேண்டாம் சாதியாசாரம் மட்டும் வேண்டும் என்பதினால் அவர் சாதியில் இந்துவும், மதத்தில் கிறீஸ்தவனுமாய் இருக்கின்றார். ஆதலின் அவரை அரைக் கிறீஸ்தவனென்பதே துணிபாம். ஓர் சாதியாசாரமுள்ள இந்து மகம்மதுமதத்தைச் சார்வாராயின் அன்றே அவர் முழு மகமதியனாகிவிடுகின்றார். காரணம், அவர் தன்னைப் பிராமண மகமதியன் என்றாயினும் கூறமாட்டார். தன்னை மகமதியன் என்றே கூறுவார். அதாவது, அவர் இந்துவாய் இருக்குங்கால் அநுசரித்துவந்த சாதியாசாரம், சமயாசாரம் இரண்டையும் ஒழித்து மகமதியனானபடியால் யதார்த்தத்தில் அவர் தன்னை முழு மகமதியன் என்றே கூறுவதுடன் அம்மத வைராக்கியத்திலும் குரு விசுவாசத்திலும், கூட்ட ஒற்றுமெயிலும் நிலைத்து அவர்களுடன் பொருந்தி வாழ்கின்றார். இது ஓர் மத சார்பின் பெருக்கத்திற்கும், விருத்திக்கும், ஒற்றுமெய்க்கும் அழகாகும். அங்ஙனமின்றி சகல மநுக்களையும் ரட்சிக்கக் கிறீஸ்து பிறந்தாரென்று சொல்லும்படியானவர்கள் அக்கிறீஸ்துவின் பெயரை வைத்துக் கொண்டே நான் சாதிக் கிறீஸ்தவன், அவன் சாதியில்லாக் சிறிஸ்தவன் என்பார்களாயின் இவர்களுள் யாரை ரட்சிக்கக் கிறீஸ்து பிறந்தார், சாதித் கிறீஸ்தவர்களை என்பாராயின் சாதியுள்ளோரை ரட்சிக்க மநுதன்ம சாஸ்திரமும் பிராமணரும் இருக்கின்றார்கள். சாதியில்லாக் கிறீஸ்தவர்களை, என்பாராயின் அம்மொழி சமேரியா இஸ்திரீயை சாதிகேளாது நீரை வினவியவரின் ஆசாரம் பொருந்தும். ஆதலின் சாதிபேதமில்லாக் கிறீஸ்தவர்கள் முழுக்கிறிஸ்தவர்களும், சாதிபேதமுள்ளக் கிறிஸ்தவர்கள் அரைக் கிறீஸ்தவர்களேயாவர். அத்தகைய அரைக் கிறீஸ்தவர் சாதிபேதமில்லா முழுக் கிறீஸ்தவர்களை நோக்கி உங்கள் சாதியை ஒளியாது கூறுங்கோள் என்பார்களாயின் சாதியில்லாக் கிறீஸ்தவர்கள் எங்களுக்கு எக்காலும் சாதியில்லை என்று துணிந்து கூறுவதே சிறப்பாகும். அங்ஙனமின்றி அரைக்கிறீஸ்தவர்கள் மோசம்போவது முற்றும் இழிவைத்தரும். பாப்பானவரிடஞ் சென்றுள்ள இரு பிராமணர்கள் குடி, விபச்சாரம், திருட்டு, கொலை முதலியக் கிரியைகளில் பிரவேசிப்பார்களாயின் பாப்பானவர் பிராமணரை உயர் குலத்தோர் உயர் குலத்தோரென சிறப்பிப்பரோ, ஒருக்காலும் சிறப்பிக்கமாட்டார். காரணம், அவனவன் நற்செய்கைகளால் உயர்ந்தவனென்றும் தீச்செயல்களால் தாழ்ந்தவனென்றும் அழைக்கப்படுவான். இத்தகையத் தீயோரையும் நல்லோரையுங் கண்டு திருத்தவேண்டியதே கற்றவர்ச் செயலாகும். அங்ஙனமின்றித் தன்னை உயர்ந்தவன் என்று ஒருவன் கூறுவதும், மற்றொருவன் அவன் கூறுதலை மெய்யென்று நம்பி அவனை உயர்த்தி விடுதலும் கல்லார் செயலாகும். பிரம்மா முகத்திற் பிறந்த பிராமணனுக்கு மண்ணிற்பிறந்த பாப்பானவர் ஆசீர் கனந் தருமோ. கல்லார்செயலாகும் ஆசீரும் உயர்வில்லார் மொழியாகும் பொய்ம்மொழியும் ஒருக்காலும் சிறப்படையாதென்பது துணிபு. சாதிபேதமில்லா முழுக் கிறீஸ்தவர்களே சற்று கவனியுங்கள். நமது கருணை தங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் ஜனத்தொகை எடுக்கத் தோன்றியுள்ளாரன்றி அவர்களுக்கு சாதித் தொகை அவசியமன்று. இதை அடுத்தே முன்பெடுத்துள்ள சென்சஸ் ரிப்போர்ட்டர்கள் யாவரும் இந்துதேசத்திலுள்ளக் கிறீஸ்தவர்கள் யாவரையும் பொதுப்பட (நேட்டீவ் கிறிஸ்டியன்ஸ்) என வரைந்திருக்கின்றார்கள். கிறீஸ்தவப் பிரிவினைக்காரர்களுக்குக் கணக்கு வேண்டுமாயின் கத்தோலிக்குக் கிறிஸ்தவர்களென்றும், புரோடெஸ்டான்ட் கிறிஸ்தவர்களென்றும் கூறலாமேயன்றி இன்னசாதிக் கிறீஸ்தவன் இனியசாதிக் கிறீஸ்தவன் என வரைவதாயின், கிறிஸ்துவினது போதனைக்கும், செயலுக்கும் வழுவாகும். கிறிஸ்துவைக் கனஞ்செய்ய வேண்டியவர்கள் இந்தியர்களின் சாதியாசாரத்தையும், மதாசாரத்தையும் ஒழித்து கத்தோலிக்குக் கிறீஸ்தவன் அல்லது புரோடெஸ்டான்ட் கிறிஸ்தவனெனக் கூறுவதே கனமாகும். அங்ஙனமின்றி மநுதன்ம சாஸ்திரத்தையும், பிராமணரையும் கனஞ்செய்வதற்காய் செட்டிக் கிறீஸ்தவன், நாயிடு கிறீஸ்தவனெனச் சொல்லுவதாயின் கிறீஸ்துவை அவமதிப்பதாகும். இந்துக்களின் சாதியும் வேண்டும், கிறிஸ்துவின் மதமும் வேண்டுமென்னும் இரண்டாட்டிற்கு ஒரு குட்டிபோலும், இரண்டெஜமானனுக்கு ஒரு ஊழியன்போலும் திகைத்து கெடாது ஒரே எஜமானனைநாடி உறுதியும் சுகமும் பெற வேண்டுகிறோம். “கிறீஸ்தவன்” என்பதினிலக்கணம், அவன் கிறீஸ்து எனலாகும். அதாவது, கிறிஸ்துவினது கிரித்தயத்திற் பொருந்தியவன் என்பதாம். அத்தகைய சிறந்த பெயருடன் பொய்யாகிய சாதியாசாரப் பெயரைச் சேர்ப்பது மாணிக்கத்துடன் மண்ணாங்கட்டியைப் பொருந்தலொக்கும். - 4:16; செப்டம்பர் 28, 1910 - 29. தன்முயற்சியில்லாத் தலைமகனுக்கும் தலைகணையில்லா நித்திரைக்கும் சுகமுண்டோ ஒருக்காலும் இல்லையென்பது துணிபு. சிலக் கடைச்சோம்பேறிகளுக்கும், சொன்னதைச்சொல்லுங் கிளிபோல் சொல்லித்திரியும் மந்தமதி யினருக்கும் அஃதோர் சுகமென விளங்கினும் விளங்கும். ஆயினும் விவேகிகள் அவற்றை சுகமென்று கருதவேமாட்டார். விவேகிகள் கருதும் சுகங்கள் யாதெனில், ஒருவர் சொல்லும் சொற்களையும் ஏற்கமாட்டார்கள். ஒருவரெழுதிவைத்துள்ளக் கட்டுக்கதைகளை உடனுக்குடன் நம்பமாட்டார்கள். அவிவேகிகளின் சொற்களை ஏற்கமாட்டார்கள். அவிவேக சங்கத்தை சேரமாட்டார்கள். அத்தகையத் தெளிவான விசாரிணையினின்று தாங்கள் யெடுத்து செய்யும் காரியத்தால் தங்களுக்கும் தங்களை அடுத்தோருக்கும் தங்கள் கிராமவாசிகளுக்கும் தங்கள் தேசத்தோருக்கும் பிரயோசனத்தை உண்டுசெய்யுமெனக் கண்டறிவார்களாயின் அக்காரியத்திற் பிரவேசிப்பார்கள். அக்காரியத்தால் தங்களுக்கும் தங்களை அடுத்தோருக்கும் யாதொரு பயனும் இல்லையென்றுணர்வார்களாயின் உடனுக்குடன் கட்டோடேவிட்டொழிப்பார்கள். இது தன்முயற்சியுள்ள தலைமக்கள் செயலாகும். தன்முயற்சியில்லாத் தலைவர்களும் பகுத்தறிவில்லாப் பேதைகளும் யாரெனில் அப்பா, இந்த சாணச் சாம்பலிருக்கின்றதே இஃது மிக்க மேலானது. இந்தச் சாம்பலிற் புரண்டெழுந்த கழுதையும் மோட்சம் போய்விட்டதென்று கூறுவானாயின் அவ்வார்த்தையை குருவார்த்தையென ஏற்று உச்சிமுதல் உள்ளங்கால்வரை சாம்பலைப் பூசிக்கொள்ளுவானன்றி அதன் காட்சியையும் அநுபவத்தையும் விசாரித்தறியமாட்டான். அதாவது, சாணச் சாம்பலில் என்ன மகத்துவமிருக்கின்றது, சாம்பலிற் புரண்ட கழுதை மோட்சத்திற்குப் போயிருக்குமாயின் நிதம் சுடுகாட்டுச் சாம்பலில் உலாவும் வெட்டியார்களெல்லோரும் மோட்சத்துக்குப் போயிருக்க வேண்டுமன்றோ. அத்தகைய எளிதான வழி மோட்சத்திற்கிருக்க நந்தனென்பவனை நெருப்பிலிட்டு சுட்டு (அதாவது ரோஸ்ட்டுபோட்டு) மோட்சத்திற்கு அனுப்புவானேன். அதனுடன் குப்பைகளிலுள்ள சாம்பலிற்புரளும் காகங்களும், நாய்களும் மோட்சம் பெற்றிருக்க வேண்டுமன்றோ. அத்தகைய மோட்சந்தான் எங்குளது. இடிந்துள்ள வீடுகளும் குட்டைச்சுவர்கள் எங்குளதோ அங்குதான் கழுதைகள் ஒண்டிநிற்பது சுவாபம். மோட்சத்தில் அவ்வகை இடிந்துள்ளக் குட்டிச்சுவருகளுண்டோவென்று கேட்கும்படியான பகுத்தறிவில்லாதவனானபடியால் விசாரிணையில் தன் முயற்சி அற்றவனென்றும் நித்திய சுகத்திற்கு யோக்கியதை இல்லாதவனென்றும் வகுத்திருக்கின்றார்கள். மற்றொருவன், அப்பா, இந்தக் கொட்டையைக் கட்டிக் கொள்ளுவாயாயின் சகல சம்பத்தும் பெற்று சுகமடைவாயென்று கூறுவானாயின் இக்கொட்டையின் மகத்துவத்தைக் கூறியவர் இக் கொட்டையை கழுத்திற் கட்டிக்கொண்டுதான் ஏதேனுஞ் சுகத்திலிருக்கின்றாரா. அவர்சுகிப்பதற்கு நம்மிடம் வந்து துட்டு கேட்கின்றாரா என்று கண்டறியான். நமக்கும் அவரது கதிதானென்று உணரமாட்டான். தன்னுடைய முயற்சியால் தனக்கோர் மகத்துவமில்லாமல் இக் கொட்டையால் மகத்துவமுண்டாமென்று கூறுவது என்ன மதியென்று பகுத்தறியவுமாட்டான், இத்தகைய பகுத்தறிவற்ற மக்களும் தன்முயற்சியற்று பிறர் முயற்சியை நாடும்பேதைகளும் சுகம்பெறமாட்டார்களென்றுணர்ந்த பெரியோர்கள் “தன் முயற்சியில்லாத் தலைமகனுக்கும், தலைகணையில்லா நித்திரைக்கும்” சுகமில்லையென வகுத்துவிட்டார்கள். - 4:17; அக்டோபர் 5, 1910 - 30. யதார்த்தவாதி வெகுஜன விரோதி எனும் பழமொழிக்கிணங்க சாதிவேஷ சமயவேஷக்காரர்களும், சிற்சில பத்திராதிபர்களும் நமது பத்திரிகையின் மீது பழிகூறுவதாக விளங்குகின்றது. காரணமோவென்னில் அவர்களது பொய்யாகியக் கட்டுப்பாட்டின்படி நீங்கள் புறசாதியாரென்று கூறியவுடன் ஆமாம் நாங்கள் புறசாதியாரென்று ஒதுங்கியும், புறசமயத்தாரென்றவுடன் ஆமாம் யாங்கள் புறசமயத்தாரென்று அடங்கியும் பேசுவதாயின் நமது பத்திரிகையைப் போற்றுவார்கள். அங்ஙனமின்றி புறசாதியான் யார் புறசமயத்தான் யாரென்றவுடன் தூற்றுகின்றார்கள்போலும். அந்தோ, இத்தேசத்துள் வந்து குடியேறியவர்களும் இத்தேசத்து வகையற்றக் குடிகளும் ஒன்றுசேர்ந்துகொண்டு இத்தேசத்துப் பூர்வக் குடிகளை புறசாதியாரென்றால் பொருந்துமோ. இத்தேசத்துப் பூர்வதன்மத்தைப் புறச்சமயமென்றால் பொருந்துமோ ஒருக்காலும் பொருந்தாவாம். அத்தகையப் பொருந்தாவகைகளை நமது பத்திரிகையில் திருந்த எழுதிவருகிறபடியால் நூதன சாதிபேதத்தோருக்கும், நூதன சமயபேதத்தோருக்கும் அருவெறுப்புண்டாகி நமது பத்திரிகையைத் தூற்றினும் ஓரிழிவாகக் கொள்ளோம். போற்றினும் புகழாகக்கொள்ளோம். அதன் காரணமோவென்னில் இத்தேசத்து மக்கள் சகலரும் சீர்பெற்று சுகமடையவேண்டுமென்னும் அவாவின் மிகுதியால் நமது பத்திரிகை வெளிவந்துலாவுகிறபடியால் தனது சாதியோர் சீர்பெற வேண்டும். ஏனைய சாதியோர் சீர்கெட வேண்டுமென்றும் தனது சமயத்தோர் பெருகவேண்டுமென்றும், ஏனைய சமயத்தோர் குறுக வேண்டுமென்றும் பொறாமெய் மிகுத்தோர் தூற்றுவதும் போற்றுவதும் பயனற்றதென்றெண்ணி அன்னோரிழிவையும் புகழையும் ஏற்காது ஒழித்தோம். நமது பத்திரிகையையும் நம்மெயுந் தூற்றுவோர் சாதியாசாரம் மெய்யாயின், சோற்றுக்கடை காப்பிக்கடைகளிலுள்ள சாதிக்கட்டுபாடுகள், சாராயக்கடை, கள்ளுக்கடைகளிலும் உண்டா, (ரிப்ரஷ்மென்ட்ரூம்) தாசிவீடுகளிலும் உண்டா. இல்லையே, தாங்கள் சீவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் சாதி யாசாரங் கிடையாது. ஏழைகள் சீவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் சாதியாசாரம் உண்டென்பது நியாயமாமோ. விவேகிகள் இவற்றைப் பொதுநலமெனக் கொள்வரோ, ஒருக்காலுங் கொள்ளார்கள். தள்ளுவரேயாம். அன்னோர் சமயம் எச்சமயமாகியும் அவர்கள் குருக்கள் மெய்க் குருக்களாகவும் இருந்து தங்கள் சமயத்தைப் பெருகவைப்பது மெய்யாயின், ஓர் மகமதியன் அவர்கள் குருவையடுத்து ஐயா தங்கள் விஷ்ணுசாமி சிவன் சாமியை விசேஷசாமிகளென்றறிந்தேன். அவர்களைத் தொழவேண்டுமென்னும் அவாக் கொண்டு வந்தேன் என்னைப் புறம்பாக்காது உங்களில் ஒருவனாக சேர்த்துக் கோவிலுள்ளே சென்று தொழும்படியான உத்திரவைக் கொடுங்கோளென்று கேட்பானாயின் அவனை சேர்த்துக்கொள்ளுவரோ, இல்லை. ஏனையோரை சேர்க்கா கூட்டம் பெருகுமோ. தங்களைப்போல் சகலரும் முத்திப் பெறவேண்டுமென்னும் பொதுநலச் செயலில்லா சமயமும் ஓர் சமயமாமோ, இத்தகைய ஒற்றுமெயற்ற சமயங்களினாலும் ஒற்றுமெய்க்கேட்டிற்கு உறுதிபீடமாகும் சாதிபேதங்களினாலும் தேசங் கெட்டுப் பாழடைவதுடன் தேசத்தோரும் சீரழிந்து வருவதை விளக்கும் பத்திரிகையை விரோதிப்பதுந் தூற்றுவதும் வீணேயாம். - 4:19; அக்டோபர் 19, 1910 - 31. குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளார்கள் இஃதே அநுபவம். ஆய்ந்தெழுதும் பெளத்தசாஸ்திரிகளின் சம்மதமன்றி தற்காலம் உலகத்தில் தோன்றியுள்ள மநுக்களில் வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்ககமும் நிறைந்து விவேகமிகுத்த வித்தியாபுருஷர்களாக விளங்கும் ஆங்கில வகுப்பாருக்கு உட்பட்ட டார்வினென்னும் துரைமகனின் சம்மதமும் அதுவேயாம். பூர்வ பௌத்த சாஸ்திரி சம்மதம் யாதெனில், உலக தோற்றத்துள் தேவர், மக்கள், நரர் உயர்திணை என்றும்; மற்றவை அஃரிணையென்றும் வகுத்துள்ளவைகளில் வால் நரர் வானரரென்னுங் குரங்கினின்று வாலற்று, கிஞ்சித்து சீலமுண்டாகி நரரென்னும் பெயர்பெற்று மானமுண்டாகி மக்களிற் சேர்ந்து விவேக முதிர்ந்து தேவர்களானார்களென்பதேயாம். இதுவே காட்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்தியதாகும். வித்தியாபுருடராகிய டார்வினென்னும் துரைமகனின் சம்மதமோ வென்னில், வானின்று மழைபெய்தவுடன் பூமியியின்று புற்பூண்டுகள் தோன்றுவதும், புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றுவதும், புழுக்கீடாதிகளினின்று மட்சம் பட்சிகள் தோன்றுவதும், மட்சம் பட்சிகளினின்று ஊர்வன மிருகாதிகள் தோன்றுவதுமான காட்சியில் குரங்கென்னும் சீவனுள்சிலதுக்குவாலிருந்தும் ஒராங்கடானென்னும் குரங்கிற்கு வாலற்றும் நாளுக்குநாள் உரோமங்களுதிர்ந்து சருமத்திறந்து நாணமுதிர்ந்து மக்கள் சாயலடைவதுமாய தோற்றங்களை ஆய்ந்து குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளாரென வற்புறுத்திக் கூறியிருக்கின்றார். அதற்குப் பகரமாக வடமேற்கு மாகாணங்களில் வோராங்டன் என்னும் வாலற்றக் குரங்குகளே உரோமங்கள் உதிர்ந்து காட்டுமனிதர்களென உலாவுவதை யாத்திரா சரித்திரங்களிற் காணலாம். இத்தகைய அநுபவங்களையும், காட்சிகளையும், கண்டறியாதோர் உலகதோற்றக் காலவரைகளையும், மநுக்கள்தோற்றக் காலவரைகளையும் கணிக்கற்பாலதோ இல்லை. ஐரோப்பிய சாஸ்திரிகளும் அமேரிக்கா சாஸ்திரிகளும் தங்களது கணிதவாராய்ச்சியால் உலகத்தோற்றமுண்டாகி 1,000,000 இப்பத்துலட்சம்போல் எத்தனையோ 10 லட்சவருடமிருக்க வேண்டுமென வரைந்திருக்க உலகமுண்டாகி 6,000 வருடமாயிற்று என்றால் விவேகமிகுத்த தத்துவ சாஸ்திரிகளும் கணிதசாஸ்திரிகளும் ஏற்பார்களோ. அவ்வருடத்தையே ஏற்காதோர் அக்காலந்தோற்றியவர்களையே ஆதிமக்களென்று அங்கீகரிப்பர்களோ, ஒருக்காலும் அங்கீகரிக்கமாட்டார்கள், அங்ஙனம் விவேகமும், பெருந்தகைமெயு மிகுத்த சாஸ்திரிகள் சம்மதிக்காதபோது மற்றவர்கள் சம்மதிப்பது மதிமயக்கேயாகும். அத்தகைய மதிமயக்கத்தால் நரர் இன்னா ரென்றும், மக்கள் இன்னாரென்றும், தேவர் இன்னாரென்றும் ஆய்ந்தறியும் அருளற்று இருளினின்றே தூஷிப்பர். அத்தகைய தூஷிப்பிற்கும் பற்பல சேஷ்டைகள் செய்வதற்கும் பெரியோர்களைத் தூற்றி பல்லிளித்து பரிகசிப்பதற்கும் காரணமாயுள்ளது முன்தோன்றியக் குரங்கின் குறைகளேயாகும். மக்கள் வகுப்பில் தோன்றியுள்ளதாயினும் அதனதன் விவேகமற்ற சேஷ்டைகளைக் கண்டு ஈதென்ன குரங்கின் குட்டிகளோவென வழங்குவாரும் உண்டு. இத்தகையக் காரியச் செயல்களைக்கொண்டே காரணமாய்க் குரங்கின் தோற்றத்தைக் கண்டுக்கொள்ளலாம். புழுக்களினின்று பறவைகள் தோன்றுவதென்னில் அதன் விவரமறியாதவர்களுக்கு விந்தையாகவே விளங்கும் விவரங் தெரிந்தபின் இயல்பென்றுணர்வர். பாலை ஓர் பாத்திரத்திலும் நெய்யை ஓர் பாத்திரத்திலும் வைத்து இப்பாலில் தான் இன்னெய் யுௗதென்னில் அப்பாகங் கண்டறியாதோர் நம்புவதரிது. அதன் பாகங்களைக் கண்டறிந்த பின்னர் இயல்பென்றுணர்வர். அதுபோல் மக்களது தோற்றத்தில் நரரென்றும், மக்களென்றும், தேவரென்றும் வகுக்கப்பெற்ற காரணங்களைக் கண்டறிவரேல் வால்நரரென்னுங் குரங்கினின்றே நரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பது நன்கு விளங்கும். - 4:28; டிசம்பர் 21, 1910 - 32. கைம்பெண்களை வீட்டில் வைத்து கண்குளிரப் பார்க்கும் கனவான்களே! சற்று கவனிப்பீர்களாக. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 12 ½ - மணிக்கு திருச்சினாப்பள்ளி ரெயில்வே ஜங்ஷன் ஸ்டேஷனில் மதுரையிலிருந்து வந்த வண்டியின் பெண்பிள்ளைகள் பிரிவிக்கு ஒதுங்குங் கக்கூசில் அப்போதுதான் பிறந்து இறந்திருக்கும் ஓர் பெண் குழந்தையைக் கண்டெடுத்தார்கள். அதனை ஈன்ற தாய் அகப்படவில்லை. ஆதலின் ஈது சரியான நம்மநாட்டுப்பிள்ளையா அன்றேல் கைம்மனாட்டிப்பிள்ளையா என்பதைக் கலைவல்லோர்களே தெரிந்துக் கொள்ளல் வேண்டும். பெற்றவளுருப்பிடி தெரியாது பிரிவியில் போட்டுக் கிடப்பது கள்ளப்புருஷனுக்கு ஈன்றக் கைம்பெண் பிள்ளையாகும். இத்தகையக் கள்ளப்புருஷர்கள் தோணுதற்கும், கைம்பெண்கள் பிள்ளைகளை ஈணுதற்கும், செத்துக்கிடக்கும் அநாதியற்றப் பிள்ளைகளைக் காணுதற்குக் காரணஸ்தர்கள் யாவரெனில், விதவைகளை மறுவிவாகஞ் செய்யலாகாதெனத் தடுத்து அதற்காய சிலத் திருட்டு சாத்திரங்களையும், குருட்டு சாத்திரங்களையும் வரைந்து வைத்துக்கொண்டு கைம்பெண்களால் வருஷாந்திரம், திதி, தட்சணையும், அரிசி பருப்பும் பெற்று சீவிப்பதற்கு தோன்றியுள்ளப் பொய்க்குருக்களே ஆவர். அவர்களால் ஏற்படுத்திக்கொண்ட சாத்திரங்களானது அவர்களைப் பின்பற்றியுள்ளப் பேதைமக்களை வாதிப்பதுமன்றி தங்களையும் தங்கட் குடும்பத்தோரையும் நகைக்கத்தக்கச் செயலால் நசித்து வருகின்றது. தாங்கள் வெட்டியக் குழியில் தாங்களே விழுந்து மடிவதுபோல் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட சாத்திரங்களால் தங்கள் சந்ததியோர்களே கொலைப்பாதகர்களாகி சீரழிவதுடன் தங்களையும் பேரழியச் செய்துவிடுகின்ற படியால் விதவைகளை விவாகஞ் செய்யலாகாதென்னுங் கட்டுகளை அகற்றி தங்களைச் சேர்ந்த சகலசாதியாசாரமுள்ளவர்களும் வாழ்கவேண்டும் என்றும், விதவா விவாகம் நடைபெற வேண்டும் என்றும் கண்டிப்பான உத்திரவை இராஜாங்கத்தாரைக் கொண்டே சட்ட திட்டங்களில் வகுத்துவிடுவார்களாயின் கைம்பெண்களும் அதிகப்பட மாட்டார்கள். களவு பிள்ளைகளும் பிரேதமாகக் கண்களிற் காணமாட்டாது. ஆதலின் கட்டுக்கழுத்திகளைப் பார்ப்பதே கண்குளிர்ச்சியாகவும், கைம்பெண்களைக் காண்பது கண்ணெரிச்சலாகவுங் கண்டு அரியப் பெண்மக்களை அல்லல் அடையவிடாமல் ஆதரிப்பார்களென்று நம்புகிறோம். - 4:38; பிப்ரவரி 15, 1911 - 33. சாதி இச்சாதியென்னும் மொழி சாதித்தோர் சாதிப்போரென்பதில் சாதியெனக் குறுகி தமிழ்பாஷையாகிய திராவிடத்தை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக்கொண்டு “திராவிடசாதியாரென்றும்” கன்னடபாஷையை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக் கொண்டு “கன்னடசாதியாரென்றும்” மராஷ்டக பாஷையை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக்கொண்டு “மராஷ்டக சாதியாரென்றும்” ஆந்திரபாஷையை ஓர்கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக்கொண்டு “ஆந்திரசாதியாரென்றும்” பூர்வத்தில் வழங்கிவந்தார்கள். இதனிலக்கணமோவென்னில் “சாதிப்போர் என்பதில் சாதி-பகுதி, ப்-சந்தி, ப்-இடைநிலை, ஆர் - விகுதியாகி சாதிப்போ” ரென முடிந்தது. நன் நூல் சூத்திரம், 353. சாதியாரென்பதில் சாதி-பகுதி, ய்-சந்தி, ஆர்-விகுதியாகக்கொண்டு சாதியாரென முடிந்தது. பூர்வத்தில் ஆந்திரசாதி, கன்னடசாதி மராஷ்டகசாதி, திராவிடசாதியென அவரவர்கள் சாதிக்கும் பாஷையை வழங்கிவந்தார்கள். நீரென்னசாதி யென்னும் வினாவிற்கு கன்னடசாதி, மராஷ்டக சாதியென தாங்கள் சாதிக்கும் பாஷையை விடை பகர்வதற்கும்; நீரென்ன குலமென்னும் வினாவிற்கு வைசியகுலம், சூத்திரகுலமெனத் தன் குடும்பத் தொழிலை விடைபகர்வதற்கும்; அவனென்ன வருணமென்னும் வினாவிற்கு கறுப்பு வருணம், கறுப்பும் வெள்ளையுங் கலந்த வருணமெனக் காணாதோன் நிறத்தை விடை பகர்வதற்கும்; நீரென்ன சமயமென்னும் வினாவிற்கு தன்மபோத காலத்தைக் குறிப்பதாயின் பௌத்த சமயமென்றும், அருங் கலைகளை வகுக்குங்காலமாயின் அருகசமயமென்றும், தன்னையாயும் சாதன காலமாயின் சைவசமயமென்றும் வியாரங்களாம் அறப்பள்ளிகளில் தங்கியுள்ள சமணமுநிவர்கள் தங்கடங்கள் ஞானசாதன காலங்களையும், போதனசாதன காலங்களையும், கலை நூல் வரையுஞ் சாதன காலங்களையும் குறிப்பிடுவான்வேண்டி பௌத்த சமயமென்றும், அருகசமய மென்றும், சைவசமயமென்றும் வழங்கிவந்தார்கள். அதன்பின்னர் வேஷபிராமணர்கள் அதிகரித்து யாதார்த்த பிராமணர்கள் நசிந்தபோது வேஷப்பிராமணர்கள் பௌத்தர்களை நசித்து தங்கள் வேஷப் பிராமணத்தை நிலைக்கச்செய்துகொள்ளுவதற்கு தங்களை உயர்ந்தசாதி பிராமணர்களென்றும், தங்களது பொய்வேஷங்களையும், பொய்மதங்களையும் அறிவிலிகளுக்கு உணர்த்திவரும் விவேகமிகுத்த பௌத்தர்களைத் தாழ்ந்த சாதி பறையரென்றும் வகுத்துவிட்டு பூர்வத்தில் பௌத்தர்களால் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களாம் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரரென்பவற்றை பிராமணசாதி, க்ஷத்திரிய சாதி, வைசிய சாதி, சூத்திரசாதியென வழங்கியபோது இத்தேச பௌத்தர்கள் பிராமணசாதனத்தை சாதிப்போர்களை பிராமண சாதியாரென்றும், க்ஷாத்திரியசாதன சம்மாரகர்த்தர்களை க்ஷத்திரிய சாதியாரென்றும், வைசிய சாதன வியாபாரஞ் சாதிப்போர்களை வைசியசாதியாரென்றும், சூஸ்திரசாதன வேளாளஞ் சாதிப்போர்களை சூஸ்திரசாதியார் என்றும் அவனவன் சாதிக்கும் சாதனப்பெயரென்று எண்ணி ஆந்திர சாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதியென பாஷைகளை வழங்கி வந்ததுடன் அவரவர்கள் சாதிக்குந் தொழில்களையும் பிராமணசாதி, க்ஷத்திரியசாதி, வைசியசாதி, சூத்திரசாதியென வழங்கிவந்தவற்றுடன் வடமொழியில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் சூத்திரனென்றும் தென்மொழியில் அந்தணன், அரசன் வணிகன் வேளாளனென்றும் பூர்வ பௌத்தர்களால் வகுத்திருந்தத்தொழிற்பெயர்கள் இவ்வேஷப் பிராமணர்களுக்கு விளங்காததினால், பிராமணனொருசாதி அந்தணனொரு சாதியென்றும், க்ஷத்திரியனொருசாதி அரசனொருசாதியென்றும், வைசியனொருசாதி வாணியனொருசாதி யென்றும், சூத்திரனொருசாதி வேளாளனொரு சாதியென்றும் வழங்கிக்கொண்டுவந்ததுமன்றி நாளதுவரையிலும் வழங்கி வருகின்றார்கள். இவ்வேஷப்பிராமணர்களுக்கு மற்றசாதியோர்களைப்பற்றி யாதொரு அக்கரையும் முயற்சியுங் கிடையாது. தங்களுக்கு எதிரிகளாக நின்று தங்கள் வேஷப்பிராமண தந்திரங்களையும் தங்கள் பொய்மதப் போதகங்களையும் விவரமாக சகலருக்கும் பறைந்துவந்த பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களென்று தாழ்த்தி அவர்களைத் தலையெடுக்க விடாமலும் அவர்கள் எவ்வழியாற் சீர்பெறுகின்றார்களோ அவ்வழிகளுக் கெல்லாம் இடுக்கங்களை உண்டு செய்துவருவதுமல்லாமல் அன்னிய தேசத்திலிருந்து இவ்விடங் குடியேறிவருபவர்களுக்கும் இவர்களைப் பற்றி இழிவாகக் கூறி இன்னும் தாழ்ச்சியடையச் செய்துவருகின்றார்கள். தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென்றும், தங்களுக்கு எதிரிகளாய பௌத்தர்களை தாழ்ந்தசாதிப் பறையர்களென்றுங் கூறிவழங்கிவந்தபோதிலும் சாதியென்னும் மொழி தோன்றிய விவரமும் அதன் பொருளும் இவர்களுக்கு இன்னுந் தெரியவேமாட்டாது. மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் பொய்க்கதைகளை ஏற்படுத்தி தங்கள் சொல்வல்லபத்தால் மெய்போலும்மே மெய்ப்போலும்மே சொல்லிவந்த போதிலும் இம்மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் பொருளற்றக் கற்பனாகதைகள் விவேகிகள் தோன்றுங்கால் பொய் பொய் பொய்யெனப் பொருந்த விளங்கிப்போம். சாதி, சாதியென்பது அவர்கள் சாதனத்தைக் குறிக்கும் மொழியேயாம். தற்காலம் அம்மொழியை ஜாதி ஜாதியென வழங்கி பொருள்கெட்டு மயங்கச் செய்திருக்கின்றார்கள். - 4:39; மார்ச் 8, 1911 - 34. கம்மாளர் பறையர், சக்கிலியர் வினா : பூர்வபௌத்த சக்கரவர்த்திகளின் வமிஷவரிசையோரும் பௌத்த சிகாமணிகளுமாயிருந்து தற்காலம் பறையரென்று அழைக்கப்படுவோர்களுமாய ஏழை மாக்கள் விசுவபிரம்ம குலத்தாரென்னும் கம்மாளரிடம் ஜலபானஞ் செய்யாதுஞ், சாதமுதலியது உண்ணாதுந் தங்களைவிட கம்மாளர் கீழானவர்களென்றுக் கொண்டுள்ள வைராக்கியம் யாதுக்கு? கோசிங்கிகள் என்றழைக்கப்படுஞ் சக்கிலியரை பறையரென்போர் மாமன் மைத்துனன் உறவாய் முறை கொண்டாடி, உண்பன, கொள்வன, கொடுப்பனவைகளிற் சம்பந்தப்படாமனிற்பதோ ஒருவருக்கொருவர் வீதிகளில் ஒருவர்க்கொருவர் பாதரட்சையணிந்து ஏகாது உறுதிசெய்துக்கொண்டு, இவ்விருதரத்தாருள் யாரேனுந் தெரிந்தோ அல்லது தெரியாதோ வீதிகளில் பாதரட்சை அணிந்தேகினால் இருவருப்பாரும் பஞ்சாய சபைக்கூட்டி தவறு செய்தவனிடம் அபராதம் முதலியவைகள் வாங்கிவருவதெற்றுக்கு? பறையரென்று அழைக்கப் பெற்றோரிற் சிலர் தங்களை முத்திரை தானம் பெற்றோர்களென்று கூறி தங்களில் இறந்துபோகும் ஆண்பெண் பாலாரின் சவத்தை சப்பளித்து உட்கார வைத்து இருகைகளுங் கூப்பியபடி நிற்க இரு புறமுங் கொம்புகள் நாட்டி அதிற் பிணித்துப் பந்தினர் யாவரும் அடியேம் தாரையா சுவாமி என்று மும்முறை பிணத்தெதிர் பணியுங்கால் அவர்களுளோர் முதியவர் ஏதோ சிலமந்திரங்கட் கூறி “அடியார் கொப்பனையா, அல்லது ஆசாரியர்க் கொப்பனையா” யென்று வினவ யாவரும் ஆசாரியர்க் கொப்பனையென்று கூறியபின் ஓர்மங்கிலியமாது யாருடனும் பேசாது மெளனமாய் சமைத்த சாதமதை யாவரும் உண்டானதும் பிரேதத்தை அதற்கென்று ஏற்படுத்திய ஓர்பாடையில் ஒட்கார்ந்தபடியாகவே வைத்து அடக்கஞ் செய்து இல்லமேகும் விவரங்களையும் அடியார்கட்பேரில் மிகுந்த தயை புரிந்து விளக்குவிப்பீர் ::சி. முத்துகுமாரசுவாமி, நாதமுனி, தீர்த்தகிரி, உபாத்தியாயர், ஜோலார்பதி. விடை: ஜோலார்பதி உபாத்தியாயர்களே! சற்றுநோக்குவீர்களாக. தாங்கள் வினவியுள்ள சங்கைகள் யாவும் மத்தியில் தோன்றி மறைந்தவைகளேயாம். அதாவது பிராமணர்களென்போருக்கும், கம்மாளரென்போருக்கும் சித்தூர் ஜில்லாவில் நேரிட்ட வழக்கில், கம்மாளர் ஜெயம்பெற்றபோது பிராமணர்களென்போர் பறையர்களென்று அழைக்கப்படுவோரை வலங்கையரெனத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு இவர்களுக்குக் கற்பித்த விரோதச் செயலால் அவ்வகை உண்பினையைத் தவிர்த்து வீண் விரோதிகளாகி விட்டார்களன்றி வேறில்லை. மற்றப்படி இவர்கள் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல அவர்கள் இவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல. பிராமணர்களென்போர் செய்த விரோதச் செயல்களேயாம். வசிஷ்டரைச் சக்கிலிச்சு மகனென்று கூறியுள்ள ஓர் சரித்திரத்தைக் கொண்டும் விஸ்வாமித்திரப் பரம்பரையைக்கொண்டும் மைத்துனர் முறைக் கொண்டாடிவந்த சில சரித்திரங்களை ஒட்டி பேசிவந்தபோதிலும் அவர்களது அசுத்தச் செயலை ஒட்டி உண்பினையற்றிருப்பதுடன் வாசஞ்செய்யும் வீதிகளில் பாதரட்சை அணைந்து வரப்போகாதென்றுந் தடுத்து வந்தார்கள். வைஷ்ணவ மதத்துள் சிலர் தோன்றி முத்திரை தானமென்னும் சூடுபோட்டுவிடுகின்றார்கள். அவ்வகை சூடுபோட்டுக் கொண்டவர்களுக்குள் நூதனமானச் செயல்களை அனந்தமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் யாவும் பூர்வ சாஸ்திரங்களுக்கு ஒவ்வாதவைகளேயாம். சூடுண்டப்பூனை அடுப்பங் கரையேறா தென்னும் பழமொழிக்கிணங்க இவர்கள் சூடுபோட்டு நாமமிட்டுக் கொண்டவுடன் சுயசாதியோரை நெருங்காமலும், அவர்களிடம் உண்ணாமலும் தூரவே விலகிவருவதுடன் பந்து விரோதிகளுமாகி நாலு நாளையில் கெட்டு நடுத்தெருவில் நின்றுவிடுகின்றார்கள். இதுவுமோர் நூதன வேஷக் கேடுபாடுகளேயாம். - 5:34, சனவரி 31, 1912 - 35. மனிதனென்பவன் யார் மனிதர்களை மனிதர்களாக பாவிப்பவன் எவனோ அவனே மனிதன். பர்ம்ம பாஷையினனாயினும் மனிதனே, சீனபாஷையினனாயினும் மனிதனே, ஆங்கிலபாஷையினனாயினும் மனிதனே, திராவிடபாஷையினனாயினும் மனிதனே கன்னட பாஷையினனாயினும் மனிதனே, மராஷ்டக பாஷையினனாயினும் மனிதனே, இத்தகைய மனிதன் பாஷைபேதமுடையவனாயினும் உருவத்தில் மனிதன் மனிதனேயாவன். மனிதவுருவம் அமையினும், சருவ உயிர்களையுந் தன்னுயிர்போற்காப்பவன் மனிதன், தன்னைப்போல் பிறரை நேசிப்பவன் மனிதன். தனக்கு ஓர் துன்பம் வரினும் ஏனையோர்க்கோர் துன்பம் வராமற் காப்பவன் மனிதன். தான் பசியுடனிருப்பினும் ஏனையோரை பசிதீர்த்து ரட்சிப்பவன் மனிதன். தான் சுகிக்க விரும்புவதுபோல் ஏனையோரையும் சுகிக்கவிரும்புகிறவன் மனிதன். தான் சுத்தநீரைமொண்டு குடிக்க விரும்புகிறவன் ஏனையோரையும் சுத்தநீரை மொண்டுகுடிக்க விரும்புகிறவன் மனிதன். தான் சுத்த ஆடைகளை அணைந்து ஏனையோரும் சுத்தவாடை அணைந்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவன் மனிதன். தான் மெத்தை மேடைகள் கட்டி வாழுங்கால் ஏனையோரும் மெத்தைமேடை கட்டி வாழவேண்டுமென விரும்புகிறவன் மனிதன். தான் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்று வாழ்வது போல் ஏனையோரும் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்று வாழ்கவேண்டுமென்று எண்ணுகிறவன் மனிதன். இத்தியாதி மனிதனென்னும் மானமும், சீவகாருண்யமும் அமைந்த மக்களிற் சிறந்த ஆறாவது தோற்றம் மனிதனென்று கூறப்படும். அவனே ஏழாவது தோற்ற தெய்வநிலை அடைபவனுமாவன். இவற்றிற்கு மாறாயச் செயலுடையோரை நரரென்றே தீர்க்கப்படும். - 5:45; ஏப்ர ல் 17, 1912 - 36. இந்தியதேய ஸ்திரீகளின் கேட்டிற்குக் காரணஸ்தர் யார் இந்திய தேசப் புருஷர்களேயாவர் எவ்வகையில் என்னில், அறுப்புகாலத்தில் எலிக்கும் இரண்டு பெண்சாதிகள் என்பது போல் இந்திய தேசத்தவர் ஒருவர் ஆபீசு உத்தியோகத்தில் அமர்ந்து விடுவாராயின் அவர் வீட்டில் ஓர் மனைவியும், வெளியில் ஓர் மனைவியும் இருத்தல் வேண்டும். அம்மனைவிகள் இருவருமோ வீட்டைவிட்டு வெளிவரப்படாது. ஐயா ஆபீசிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கூத்தியார் வீட்டிலிருப்பான் என்பதே குறிப்பு. இத்தகையப் புருஷானந்தத்தால் இஸ்திரீகள் இருவரும் தங்களை அலங்கரித்திருப்பதே வேலையன்றி வேறு வேலை கிடையாது. இம்மாதரது மகிழ்னன் மடிந்துவிட்டாலோ வேறோர் மகிழ்னனைத் தேடித்திரிய வேண்டியதே அவர்களது வேலையன்றி வேறு வேலையால் சீவிக்க அவர்களுக்கு வித்தையுங் கிடையாது புத்தியும் கிடையாது என்பதே. ஆதலின் இத்தகைய வித்தையின் கேட்டிற்கும், புத்தியின் கேட்டிற்கும் வியாதியால் மெலியுந் தேககேட்டிற்கும் அவரவர்கள் புருஷர்களே காரணஸ்தர்கள் என்பது சொல்லாமல் விளங்குமன்றோ. அவ்வகை விளங்கினும் புருஷருக்குள்ள சுயநலம் பெண்களுக்கு அளிக்கலாது என்னும் பொறாமெய் சாஸ்திரங்களும் அந்தபுறத்துக் கதைகளுமே அதற்குச் சான்றாகும். பெண்களை அடிமைத்தனத்தாளாக்கி அவர்களை சீர்பெற விடாமற் செய்து வருகின்றவர்கள் புருஷர்களேயாதலின் மற்றுமுள்ள சீர்கேடுகளுக்கு இவர்களே காரணஸ்தர்கள் என்பதுமாகும். இப்புருஷர்கள் - ஜப்பானிய தேசப் பெண்களின் வித்தை புத்தியையும், பர்மியதேசப் பெண்களின் வித்தை புத்தியையும் சற்று நோக்குவார்களாயின் இந்திய தேச ஸ்திரீகளின் சீர்கேட்டிற்கும், தேச சீர்கேட்டிற்குத் தாங்களே மூலகாரணங்கள் என்பது தானே விளங்கிப்போம். அத்தேசப் பெண்களின் உழைப்பும், அவர்கள் அணைந்துலாவும் பட்டாடைகளின் செழிப்புந் தங்கள் தங்கள் புருடர்கள் இறப்பிலும் மாறாது சுகநிலை பெற்றிருப்பதற்குக் காரணம் அவரவர் புருஷர்கள் அவர்களுக்கு அளித்துள்ள சுயாதீனமும் வித்தை புத்தியுமேயாம். ஓர் மனிதன் தனது எதிரியை எப்போதும் நம்பாமல் காரியாதிகளை நடத்திவருவானாயின் அவர்களை எதிரி நம்பானென்பது பிரத்தியட்ச அநுபவமாதலின் இஸ்திரீகளைச் சீர்கெடச்செய்யுஞ் செயல்களே புருஷர்களைச் சீர்கெடச் செய்துவிடுகின்றது. மற்றும் இத்தேசத்தோருள் பெரும்பாலார் பெண்களுக்குப் படிப்பு கற்பிக்கலாகாதென்றே தடுத்துவருகின்றார்கள். சிலர் அத்தகையக் கல்வி கற்றும் பழைய சோம்பலுடன் கலந்து அக்கல்வியையும் பாழாக்கித் தாங்களும் பாழடைந்து போகின்றார்கள். கற்றப் பெண்கள் யாவரும் வித்தையையும் வியாபாரத்தையும் ஏந்தி வெளிவருவார்களாயின் பழிச் சொற்களும் இழிச்சொற்களுமற்று சகலராலும் நன்கு மதிக்கப்படுவதுடன் தங்கள் மரணபரியந்தம் சுகசீவ வாழ்க்கையைப் பெறுவார்கள். கல்விகற்றும் வித்தியாமுயற்சியற்றிருப்பதால் விபச்சாரமே பெருந்தொழிலாகவும் அதனால் கொலைக்கேதுவான கொடூர நிகழ்ச்சிகள் எழவும் குடும்பிகள் கூடியழவும் நேரிடுகின்றது. அதில் சில பொருளுள்ள கைம்பெண்கள் தோன்றுவார்களாயின் அவர்களது பொருள் பறிக்க அரைமூட கால்மூட முக்கால்மூட முழுமூடச் சோம்பேறிகள் தோன்றி அவர்கள் பொருள்களைப் பறித்து பெருமுதலாளிகள் ஆகிவிடுவதுடன் முற்றும் அப்பெண்களைப் பாழாக்கி நடுத்தெருவில் அலையவும், நான்குபேர் நங்கவும் விட்டுவிடுகின்றார்கள். இத்தகைய கருணையற்றவர்களும், வித்தையற்றவர்களுமாயப் பெருஞ் சோம்பேறிகள் மத்தியில் பெண்கள் படும் பெருங்கஷ்டங்கள் ஒவ்வொன்றையும் வரைவோமாயின் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமற்றப் புருஷர்கள் யாவருக்கும் கோப தாபங் குறுக்கிடுமென்று அஞ்சி விடுக்கினும் “பெண்களுக்குப் பேயு மிதங்கு” மென்னும் பழமொழிக்கிணங்கி பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதுடன் கைத்தொழிலையும், வியாபாரத்தையுங் கற்பிப்பதே மிக்க மேலாம். - 6:4; சூலை 3, 1912 - 37. சாதிபேதமே ஊரைக்கெடுப்பதற்கு ஆதாரம்! சாதிபேதமே ஒற்றுமெய் கேட்டிற்கு ஆதாரம்!! சாதிபேதமே கற்றவித்தைகளைக் காட்டாது ஒளிப்பதற்கு ஆதாரம்!!! அதாவது பொய்யாய சாதிகட்டுப்பாட்டினால் உண்டாய பொறாமெயும் பற்கடிப்புமேயாம். தங்களுக்குத் தாங்களே பாப்பானென்று வகுத்துக் கொண்டுள்ள வகுப்பாருள், அவன் மொட்ரசாதி, நான் குட்ரசாதி, அவன் குருக்குபூசு சாதி, நான் நெடுக்குபூசு சாதி, அவன் வீட்டில் நான் பெண் கொள்ளமாட்டேன், என் வீட்டில் அவன் பெண் கொள்ளமாட்டான், அவன் வீட்டில் நான் சாப்பிடமாட்டேன், என் வீட்டில் அவன் சாப்பிடமாட்டான், என்னும் ஒற்றுமெய் கேட்டுரையும் வீண்வாதமுமே தொடுத்து நிற்பார்கள். ஐயா! பாப்பாரென்றாலும் ஒரு மொழி பிராமண னென்றாலும் ஒரு மொழியாயிருக்க இவற்றுள் நூற்றி யெட்டுப் பிரிவினைகளுண்டாவதற்குக் காரணம் என்னை என்றாலோ எங்கள் தேச ஆசாரமென்பார்கள். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் வேஷம் போட்டுக்கொண்ட விவரங்களை வெளியிடமாட்டார்கள். வேளாளர் என்போரிடத்தேனும் ஒற்றுமெய் உண்டா என்று ஆராயுங்கால் சிலர் காரைகாட்டு வேளாளரென்பர், சிலர் துளுவ வேளாளரென்பர், சிலர் கொண்டைகட்டிவேளாளரென்பர், இவர்கள் ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது உண்பனை தின்பனை கிடையாது. ஐயா வேளாளன் என்பது ஒரு மொழியாயிருக்க அவற்றுள் முப்பத்தி எட்டுப் பிரிவினைகள் யாதுக்கென்றாலோ அது எங்கள் சாதியாசார மென்பார்கள். வேளாளர் என்போருள் முதலியார் என்னுந் தொடர்மொழியும், பிள்ளையென்னுந் தொடர்மொழியுஞ் சேர்த்துள்ளோரைக் கண்டு ஐயா! தங்களுக்குள்ளேனும் ஒற்றுமெயுண்டோ வென்னில் இல்லை, நான் வேளாள முதலி, அவன் அழும்பிடைய முதலி, இவன் நட்டுவ முதலி, உவன் தோட்டக்கார முதலி, அவன் பள்ளி முதலி, இவன் பறைமுதலி யென்பார்கள், பிள்ளைகளிலோ நான் வேளாளப்பிள்ளை, அவன் இடைப்பிள்ளை, இவன் கணக்கன் பிள்ளை, அவன் பள்ளிப்பிள்ளை, இவன் பறைப்பிள்ளை யென்பார்கள். முதலியென்றாலும் ஒருமொழி, பிள்ளை யென்றாலும் ஒருமொழியாயிருக்க இவற்றினுள்ளும் இருபத்தெட்டுப் பிரிவினைகள் ஏதென்னிலோ தங்களுக்குத் தாங்களே நூதனமாக வைத்துக்கொண்ட சாதிப்பெயர்களை வெளிக்குச் சொல்லாது அது எங்கள் குலமரபு என்பார்கள். நாயுடு என்பது ஒரு மொழியாச்சே அதனினும் பிரிவுகளுண்டோவெனில் நாங்கள்தான் சரியான நாயுடுக்கள் இப்போது சில தெலுகுபேசும் இடையர்கள் எல்லவரும் நாயுடாகிவிட்டார்கள். நெல்லூரிலிருந்தும், பந்தரிலிருந்தும் வந்துள்ள சில தெலுகுபாஷைக்காரர்கள் எல்லவரும் நாயுடாகிவிட்டார்கள் அவர்கள் வீடுகளில் நாங்கள் பெண்கொள்ளமாட்டோம், கொடுக்கமாட்டோம் என்னும் ஒற்றுமெய் கேட்டிலே யிருக்கின்றார்கள், இவ்வகையாக ஒவ்வொருவரும் நூற்றியெட்டுப் பிரிவினைகளை உண்டாக்கிக்கொண்டு பொறாமெய் சிந்தையிலும் பொய்ச்சாப்பிலுமே நிறைந்துள்ள படியால் தேசத்தின் சீரைக் கெடுப்பதற்கும் இச்சாதிபேதங்களே ஆதாரமென்றும், ஒருவருக்கொருவர் ஒற்றுமெய் கேடு அடைவதற்கும் இச்சாதிபேதங்களே ஆதாரமென்றும், ஒருவருக்குத் தெரிந்த வித்தைகளை மற்றவர்களுக்குக் காட்டாது ஒளிப்பதற்கும் இச்சாதிபேதங்களே ஆதாரமென்றுங் கூறியுள்ளோம். இதனது விளக்கம் கருணைமிகுத்தோருக்கும், விவேகிகளுக்கும் பொது நலப்பிரியர்களுக்கும் விளங்குமேயன்றி கருணையற்ற லோபிகளுக்கும், அவிவேகிகளுக்கும், சுயநலப் பிரியர்களுக்கும் விளங்கவேமாட்டாது. அவ்வகை விளங்காதுள்ளோர் பெருந்தொகையினராகவும், விளங்குவோர் சிறுந்தொகையினராகவும் உள்ளபடியால் சீர்திருத்தக்காரர்களின் போதகங்கள் செவிடன்காதில் சங்கு ஊதுவது போலாகிவிடுவதுமன்றி சாதித் தொடர் மொழியில்லாதவர்களும் தொடர்மொழிகளைச் சேர்த்து வருகின்றார்கள். அதாவது “பச்சையப்பன்” என விகுதியாயிருந்த பெயரை பச்சையப்ப முதலியென பகுதியாகவும், இராமமூர்த்தியென விகுதியாயிருந்த பெயரை இராமமூர்த்தி நாயுடெனப் பகுதியாகவும் சேர்த்துவருகின்றார்கள். ஆதலின் இந்நூதன சாதிவேஷங்களே தேச சீர்கேட்டிற்கும், ஒற்றுமெய் கேட்டிற்கும், வித்தியா கேட்டிற்கும் ஆதாரமெனக் கூறியுள்ளோம். - 6:6; சூலை 17, 1912 - 38. இந்திய புருஷர்களின் இஷ்டமும் பெண்களின் கஷ்டமும் பெண்கள் பிறந்து மங்கை பருவமடையும் வரையில் பெற்றோர்களிடம் சுகமடைவார்களென்பது திண்ணம். அதன் பின்னர் கலியாணம் முடிந்து கட்டையில் அடக்கும் வரையில் கவலையேயாம். எங்ஙனமென்னில் மாமியார் கொண்டாட்டங்களையும் மறுமக்கள் திண்டாட்டங்களையும் வீடுகடோரும் அறியலாம். புருஷன் இறந்துவிடுவானாயின் அவன் பெண்சாதியும் இறந்தே தீரல்வேண்டும். அல்லது இருந்தாலோ அவளது ஆடை ஆபரணங்கள் யாவையும் பறித்துக்கொண்டு மொட்டை அடித்து வெள்ளை வஸ்திரங் கொடுத்தாலுங் கொடுத்துவிடலாம். மொட்டையடிக்காது வெள்ளை வஸ்திரங் கொடுத்தாலும் கொடுத்துவிடலாம். புருடனோ பெண்சாதியிருக்குங் காலத்திலும் நூறு பெண்களை விவாகஞ் செய்துகொள்ளலாம். பெண்களோ புருடனிறந்தபின் வேறுபுருடனை விவாகஞ் செய்யலாகாது. இதனை விளங்கக் கூறும் சாஸ்திரங்களுக்கு தன்மசாஸ்திரங்களென்று பெயர். அறுத்துவிட்ட முண்டச்சி என்னும் அடையாளத்தை இவர்களே ஏற்படுத்திவிட்டு சுபகாரியங்கள் யாதுக்கேனும் அவள் எதிரில் வந்துவிடுவாளாயின் முண்டச்சி எதிரில் வந்தாள் எடுத்த காரியங் கெட்டுப்போச்சுதென்று அதனாலும் அவளை இழிவடையச் செய்வார்கள். சுபகாரியங்களுக்கு எதிரில் ஒரு யூரேஷியப் பெண்ணேனும் மகமதியப் பெண்ணேனும் வந்துவிடுவாளாயின் அவளை அமங்கலி சுமங்கலியென்றறியாது சகுன சாஸ்திரம்பாராது போய்விடுவார்கள். அமங்கலியானவளை நல்ல தலையணையிட்டுப் படுக்கவிடாது மணைக்கட்டை போட்டு படுக்க வைப்பார்கள். அவள் தலைமயிரை மொட்டையடிக்கமாட்டேன் என்றாலும் அவளைப் பலவந்தமாகப்பிடித்து மொட்டையடித்து விடுவார்கள். கைம்பெண்களை எதிரிற் கண்டவுடன் இழிவு கூறுவதுடன் எச்சுபகாரியங்களிலும் அவர்களைச் சேரவிடாது மேலுமேலுந் துக்கத்தை உண்டு செய்வார்கள். புருடர்கள் காலமெல்லாம் தங்களிஷ்டம்போல் சுகத்தை அநுபவிக்கலாமென்றும் பெண்கள் காலமெல்லாம் கஷ்டத்தையே அநுபவிக்கவேண்டுமென்று வகுத்துக்கொண்டிருப்பது தற்கால இந்தியர்களின் கொள்கைகளாகக் காணப்படுகின்றது. முற்கால இந்தியர்களோ புத்ததன்மத்தைச் சார்ந்து சீவகாருண்யமுற்று சாதிபேதமற்று ஒற்றுமெய் பெற்று வாழ்ந்தவர்களாதலின் அரசப்பெண்கள் செண்டாடலும், முல்லைப்பெண்கள் மலராடலும், மருதப்பெண்கள் குரவையாடலுமாகிய ஆனந்தத்தில் இருந்ததுடன் அரசருக்குள் விதவா சுயம்வர விவாகங்கள் இருந்ததினால் அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியாக விதவாவிவாகங்களையநுசரித்துப் பெண்கள் ஆனந்த சுகத்திலிருந்தார்கள். மற்றும் பெண்கள் கல்வியிலுங் கைத்தொழிலிலும் வியாபாரத்திலும் பயிரங்கமாக வெளிவந்து கற்புநிலைநின்று சதா சுகத்திலிருந்தது அன்றி கியான மணிகளாகவும் விளங்கினார்கள் என்பதை பெளத்த காவியங்களாலும் சரித்திரங்களாலும் அறியலாம். அக்காலத்தியப் பெண்களின் சுதந்திரங்கள் யாவும் தற்காலப் பெண்களுக்கு இல்லாக் குறைவால் இல்லறவாழ்க்கைச் சுகமற்றுப் போயதுடன் துறவறக் கியானமுங்கெட்டு கற்பின் நிலையும் விட்டு சீரழிந்துபோகின்றார்கள். ஆதலின் நம்தேயப் புருடர்கள் பூர்வசரித்திரங்களை ஆய்ந்து பெண்களின் கஷ்டங்களை நீக்குவார்களென நம்புகிறோம். - 6:7; சூலை 24, 1912 - 39. மனிதன் எனப்படுவோனுக்குரிய உயர்சத்து மனித வகுப்போரை மனிதவகுப்பாராக பாவிப்பது உயர்சத்து. அம்மனித வகுப்போருக்குள்ளக் குறைகளை அகற்றி சீர்தூக்கி ஆதரிப்பது உயர்சத்து. மற்றய மனிதவகுப்போருக்குற்றத் துன்பங்கள் யாவையுந் தங்களுக்கு வந்த துன்பம் போற்கருதி அவர்கள் துன்பத்தை நீக்கி ரட்சிப்பது உயர்சத்து. மனுமக்களை தன்னவர் அன்னியரென்னும் பேதம் பாராதலே உயர்சத்து, எம்மக்களையுந் தம்மக்களுக்கு சமதையாய் அன்புபாராட்டல் உயர்சத்து. சருவசீவர்களையும் தன்னுயிர்போல் பாதுகாத்த லுயர்சத்து, மனிதனுக்கு சீவகாருண்யம் நிறைந்திருத்தலே உயர்சத்து, மனிதனுக்கு குருவிசுவாசம், இராஜவிசுவாசம் நிறைந்திருத்தலே உயர்சத்து. சகலமக்களும் சுகம்பெற்று வாழ்கவேண்டும் என்று எண்ணுவது உயர்சத்து. மனிதனுக்குரிய சாந்தசத்துவே சுயவுருவென்றும், தன்மகாயமென்றும், உண்மெயென்றும், அந்தரங்கமென்றும் வழங்குதலால் மேற்கூறியுள்ள உயர்சத்துக்குரியச் செயல்களே தெய்வ நிலையுமாதலின் அச்செயல் மிகுத்தோரே மேன்மக்கள் என்றும், பெரியோர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். ஞான நூற்களும், நீதி நூற்களும் இவைகளையே தழுவி நிற்கும். இதற்கு எதிரடையாய்ச் செய்கைகளை உடையவர்கள் யாரோ அவர்கள் யாவரையுங் கீழ்மக்கள் என்றும் சிறிய சிந்தையரென்றுங் கூறப்படும். இத்தகையக் கீழ்மக்களும் சிறியச் சிந்தையை உடையவர்களுமாகிய மனுக்கள் எத்தேசத்தில் வாசஞ்செய்கின்றார்களோ அத்தேசத்தின் சிறப்பு நாளுக்குநாள் கெடுவதுடன் தேசவாசிகளும் சீரழிவார்களென்பது திண்ணம். ஆதலின் மனுக்களுள் சீர்திருத்தக்காரர்களேனும் மேற்கூறியுள்ள நல்லெண்ணத்துடனும் செய்வார்களாயின் எடுக்கும் சீர்திருத்தங்கள் யாவும் செவ்வனே முடியும் முடியுமென்பது சத்தியம். - 8:8; சூலை 31, 1912 - 40. எத்தேசம் சீரும் சிறப்பும் பெறும் எத்தேசமக்கள் சுகமும் ஆறுதலும் பெறுவார்கள் வித்தியா விருத்தியும் விவசாய விருத்தியுமுள்ள தேசம் சீரும் சிறப்பும் பெறும். வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் நிறைந்த மக்கள் சுகமும் ஆறுதலுமுற்ற வாழ்க்கைப் பெறுவார்கள். அதாவது தேசமக்கள் தங்கள் தங்கள் முயற்சியை நீர்வளம் நிலவளம் முதலியவற்றில் செலுத்த வேண்டும். ஆகாயத்தை நோக்கி மழையைப் பார்ப்பதுடன் அந்தந்த பண்ணை பூமிகளினருகே நீர் தோன்றுமிடங் கண்டு கருணை தங்கிய கவர்ன்மென்றாரால் கண்டுபிடித்துள்ள நீர் இயந்திரங்களைக் கொண்டு நீர்வளத்தைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். அதனால் வளம் பெற்ற பூமிகளை வரப்புயரச் செய்யல் வேண்டும் அவ்வகைச் செய்தும் எத்தேசத் தானியம் இத்தேசத்தை சீரும் சிறப்பும் பெறச்செய்யுமெனக் கண்டறிந்து அவைகளை விதைத்தல் வேண்டும். இத்தியாதி விவசாய விருத்திக்கும் நாளொன்றுக்கும் முக்காலணா கூலி ஓரணாகூலிக்கு ஏனவாயப் பறையன் அகப்படுவான் இளிச்சவாயப்பள்ளன் அகப்படுவான் என்னும் உலோபத்துவமும் சாதிகர்வம் வையாது பண்ணை பூமியானது பாப்பானுடைய தாயினும் அவன் பெரியசாதியின் போர்வையைப் பூராவாக அப்புறப்படுத்திவிட்டு அவனே ஏர்பிடித்து உழுது பூமியைப் பழுக்கவழுகக் கலக்கி விதைவிதைத்து பிள்ளைகளை வளர்ப்பதுபோல் விளையும் பயிறுகளையுங் கண்ணுங் கருத்துமாகக் கார்த்து விருத்தி செய்யல் வேண்டும். அத்தகைய விருத்தியால் தேச செழிப்புண்டாவதுடன் சாதிபேத நாற்றமற்ற பர்ம்மா தேசத்தோர் அரிசியும், சாதிபேத நாற்றமற்ற அமேரிக்கா தேசத்தோர் கோதுமையும், உலகெங்குஞ் சென்று உண்ண உதவுவதுடன் தங்கள் தேசங்களின் பெயரையுஞ் சிறப்படையச் செய்வதுபோல் இத்தேசத்துள் விருத்திபெறுந் தானியங்கள் மற்றய தேசங்களுக்கு உபகாரமாவதுடன் இத்தேசப் பெயரும் உலகெங்கும் விளங்கும். ஒவ்வோர் மனிதனும் பூமியின் விருத்தியை நாடிப் பணங்களைச் செலவு செய்வதுடன் தங்கள் கண்ணையுங் கருத்தையும் அதனிடம் நிறுத்தல் வேண்டும், அதுவே விவசாய விருத்தியின் சிறப்பென்னப்படும். வித்தியாவிருத்தியாங் கைத்தொழில்களிலோ மண்ணினாற் செய்யுங் கைத்தொழில்களும், கல்லினாற் செய்யுங் கைத்தொழில்களும், மரத்தாற் செய்யுங் கைத்தொழில்களும், உலோகங்களாற் செய்யுங் கைத்தொழில்களும், பஞ்சினாற் செய்யுங் கைத்தொழில்களும், தோலினாற் செய்யுங் கைத்தொழில்களும் அனந்தமுண்டு. அத்தகைய வித்தியா விருத்திகளுக்குப் பணங்களை செலவிட்டு ஒவ்வோர் தொழிலையும் விருத்தி செய்ய வேண்டும். அவ்வகை விருத்தியை நாடுவோர் சாதியாசாரம் இல்லாதவர்களை மட்டிலும் அதில் சேர்க்கப்படாதென்பாராயின் அதனழிவிற்கு அடிப்படை அப்பொறாமெயென்றே அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனஞ் சேர்த்துக் கொள்ளினும் பெரியசாதிகள் என்போரே பெரிய பெரிய காக்காய் பிடிக்கும் பெரியதன உத்தியோகத்திலிருத்தல் வேண்டும். சிறியசாதிகள் என்று அழைக்கப்படுவோர் சிறியத்தொழிலையே பெறவேண்டும் என்பாராயின் அதுவுங் கைத்தொழில் விருத்திக்குக் கேடாக முடியும். அதாவது காக்காய் பிடிக்கும் வேஷதாரிகள் கைத்தொழில் செய்வதற்கும், அதன் மேற்பார்வை இடுவதற்கும் உதவவே மாட்டார்கள். காரணமோ என்னில், ஒவ்வோர் தொழிலாளியும் அந்தந்தத் தொழிலில் சிறுவயதினின்று உழைத்து விருத்தி பெற்று விவகாரம் அறிந்தவனே அந்தந்த தொழிலுக்கதிகாரியும், அந்தந்தத் தொழிலைப் பார்வையிடுபவனுமாய் இருத்தல் வேண்டும். அதனால் வேலையின் நுட்பமும், வேலைகள் செய்வோர் முன்னேற்றமும் கண்டு வித்தியாசாலையை விருத்திக்குக் கொண்டுவருவான். அதனாற் சகல கைத்தொழில்களும் விருத்தியடைவதுடன் விருத்தி பெற்ற பொருட்கள் பலதேசங்களுக்குஞ் சென்று தேசத்தின் வித்தியா சிறப்பு விளங்கும். இத்தகையாய் விருத்திபெறும் விவசாயமும், சித்திபெறும் வித்தையுமே அத்தேசத்தை சீருஞ் சிறப்பும் பெறச்செய்யும். எத்தேச மக்களாயினும் தங்கள் எண்ணங்களையும் நோக்கங்களையும் வித்தியா விருத்தியினிடத்திலேயே வைத்தல் வேண்டும். அஃது கோவில் சுற்றும் வித்தையல்ல, குளமுழுகும் வித்தையல்ல, குறுக்குபூசும் வித்தையல்ல, நெடுக்குப்பூசும் வித்தையல்ல, சந்தன பொட்டு வித்தையல்ல, சாந்துபொட்டு வித்தையல்ல, மஞ்சள் திருசுன்ன வித்தையல்ல, சிவப்பு திருசுன்ன வித்தையல்ல, பேரிலந்தங் கொட்டை வித்தையல்ல, துளசிக்கட்டை வித்தையல்ல, குடுமி வைக்கும் வித்தையல்ல, நூல்போடும் வித்தையல்ல, மந்திரம் பண்ணும் வித்தையல்ல, மணிகுலுக்கும் வித்தையல்ல, அவனை வேண்டிக்கொள்ளும் வித்தையல்ல, இவனை வேண்டிக்கொள்ளும் வித்தையல்ல, பெரியபூசை வித்தையல்ல, சிறியபூசை வித்தையல்ல, ஆட்டிக்கும் வித்தையல்ல, கோழியறுக்கும் வித்தையல்ல, இத்தியாதி வித்தைகளும் மதக்கடைபரப்பி வஞ்சித்தும் பொய் சொல்லியும் பொருள் பறித்தும் சீவிக்கும் மதக்கடை, சாமிக்கடை, சோம்பேரிகளின் வித்தைகளாகும். அத்தகைய மதக்கடை சாமிக்கடை சரக்குகளை நம்பிப் பின்பற்றுவோர் அவர்களிலும் சோம்பேரிகளாகி அல்லலடைய வேண்டியவர்களேயாவதுடன் அத்தகையோர் தேசமும் பாழடையுமென்பது சத்தியம். ஆதலின் சுகமும் ஆறுதலும் அடைய வேண்டிய மக்கள் மண்வித்தையிலும், உலோகவித்தையிலும், மரவித்தையிலும், பஞ்சுவித்தையிலும், சித்திரவித்தையிலும், ஓடதிவித்தையிலும், வியாபார வித்தையிலுங் கருத்தை இருத்தி விடாமுயற்சியிலிருப்பார்களாயின் அம்மக்கள் சுகமும் ஆற்றலும் பெறுவார்கள். அத்தகையோர் தங்கள் தங்கள் புத்தியையும் விருத்தி செய்துக்கொண்டு ஈகையாம் தன்ம சிந்தையுடையவர்களாகி, சன்மார்க்கத்தைப் பின்பற்றுவார்களாயின் அத்தேசத்தோர் குருவிசுவாசமும், இராஜவிசுவாசமும் பெருகி சதா சுகமும் ஆறுதலும் பெற்று ஆனந்தத்தில் லயிப்பார்கள். ஆனந்தத்தில் லயிப்பார்கள். - 6:13; செப்டம்பர் 4, 1912 - 41. முற்கால யுத்தமும் தற்கால யுத்தமும் முற்கால யுத்தங்களை யதார்த்த சரித்திரங்களைக்கொண்டு ஆராயுங்கால் வில்லினால் யுத்தமும், வாகுனால் யுத்தமும், தடியினால் யுத்தமும், கத்தியினால் யுத்தமும், கேடயத்தால் யுத்தமும், கையினால் யுத்தமும், மல்யுத்தமும் செய்துவந்தார்கள் என்று விளங்குகிறதேயன்றி வேறில்லை. அத்தகைய யுத்தங்களும் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு செய்து வந்தார்களன்றி குடிகள் இடங்களில் செய்துவந்தது கிடையாது. அதுகொண்டே யுத்தபூமியென வழங்கும் மொழி நாளதுவரையில் வழங்கியும் வருகின்றது. அவ்வகையான யுத்தங்களில் அதிக சேனைகள் மடிந்தது என்றாயினும் குடிகள் அழிந்தது என்றாயினும் வரைந்துள்ளது கிடையாது. கிருத யூகம், துவரயூகம், திரிதயூகம், சதுர்யூகம், பஞ்சயூகம், சட்டயூகம், சப்தயூகம், அட்டயூகம், நவயூகம், தசயூகமென்னும் அணிகளை வகுத்து அவரவர்களுக்குரிய போர் புரிந்து ஜெய அபஜெயத்திற்குத் தக்கவாறு பூமிகளை யடைவதும், மாடுபிடி அடைவதும் தேசத்தை அடைவதும் அரசை அடைவதுமாய யுத்தங்களை செய்து வந்தார்கள். மிக்கப் பேரரசர்களோ தங்கள் தங்கள் ஆளுகைகளில் சாம தான பேத தண்டமென்னும் சதுர்வித உபாயங்களைக் கையாடி வந்ததாகவும் விளங்குகின்றது. அதாவது அரசர்கள் ஒவ்வொருவருக்கும் யுத்தா யுத்தம் நேருமாயின் வேவுகர்களைக்கொண்டு தன்பலத்தையும் எதிரியின் பலத்தையும் ஆய்ந்து எதிரியின் பலம் பெருகக்காணில் உடனே சமாதானத்தைக் கோறி வேணதை அளித்து விடுவார்கள். இரண்டாவது உபயோகமுறும் பூமிகளேனும், நதிகளேனும் இருக்குமாயின் அவற்றை தானமாகப் பெற்று தனது தேசத்தை சீர்திருத்திக்கொள்ளுவார்கள். மூன்றாவது அன்னியவரசனிடமிருந்து தான் இச்சித்தப்பொருள் ஏதேனுங் கிட்டாவிடில் படையெடுப்பதுபோல் பேதித்தும் பயமுறுத்தியும் தனக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளுவதுடன் அன்னியர்களுக்குத் தனது பொருள் வேண்டியிருக்கினும் அவனை பேதித்து பயமுறுத்துவதுமாகிய உபாயத்தைச் செய்து குடிகளுக்கும் படைகளுக்குந் துன்பம் வராதுகாத்துக்கொள்ளுவார்கள். நான்காவது தங்களால் கூடிய சாம முயற்சியும், தான முயற்சியும், பேத முயற்சியுஞ் செய்துப் பயன்படாவிடின் தண்டமுயற்சியாகிய யுத்தத்திற்கே முயன்று தங்கள் கோபாவேஷத்தை அதிகரிக்கவிடாமலும் குடிகளுக்கும் படைகளுக்கும் அதிக துன்பம் அணுகாமலும் யுக்த்தியின் விருத்தியைக்கொண்டே ஜெயம் பெற்று தன் படைகளைப்போலவே எதிரியின் படைகளையுங் காத்து ரட்சிப்பார்கள். இதுவே முற்கால யுத்த இயலாகும். ஆனால் மலைபோல மூக்குகளும், அலைபோல் நாக்குகளும் உள்ள ராட்சசர்கள் இருந்தார்களென்றும், ஒரு அம்பை விட்டால் ஆயிரம் அம்புகள் புறப்படுகிறதென்றும், குதிரைகளைச் சுட்டுத் தின்பதற்குக் கோடி பேரைக் கொன்றார்களென்றும், பகக்களைச் சுட்டுத் தின்பதற்கு பதினாயிரம் பேரைக் கொன்றார்களென்றும் ஒரு எதிரியின் உயிர் வயிற்றுள் இருந்ததென்றும், ஒரு எதிரியின் உயிர் துடையுள்ளிருந்ததென்றும், கருப்பையுள் கட்டுப்பட்டிருந்தக் குழவி கதைக்கேட்டுக்கொண்டிருந்ததென்றும், இயல்புக்கு விரோதமாகியக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திவிட்டு இதையும் முற்கால யுத்தங்களென்று கூறுவாறுமுண்டு. அவைகள் யாவும் பொய்க்கதைகளேயாம். இந்திரர்தேய முழுவதும் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் பெருத்த யுத்தங்கள் நடந்ததுங்கிடையாது குடிபடைகள் மிக்க அழிந்ததுங்கிடையாது. அரசர்கள் முதற் குடிகள் யாவரும் அன்பையுங் கருணையுமே பெருக்கி வாழ்ந்துவந்தவர்களாதலின் அதிக யுத்தத்திற் கிடந்தராது அரண்மனை முகப்பில் வெண் கொடிகள் நாட்டி சாமத்தையும் தானத்தையுமே கையாண்டு காலத்தைப் போக்கிவந்தார்கள். அதனாலேயே வஞ்சகமும் சூதுங் குடிகெடுப்பும் பொறாமேயு மிகுத்த அன்னியதேச மித்திர பேதச் சத்துருக்கள் மேற்கொள்ளுவதற் கிடமுண்டாகி இந்திரர் தேசம் பாழடைவதற்கு ஏதுவாகி விட்டது. ஆயினும் அப்பௌத்தர்கள் செய்துவந்தப் புண்ணியப்பெருக்கே பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி யாவையுஞ் சீர்திருத்தி வருகின்றது. தற்கால யுத்தங்களோ வென்னில் சிறு துப்பாக்கியை ஒருவன் ஏந்தி சுட்டவுடன் ஒருவரிருவர் மரிப்பதும், பெருந் துப்பாக்கியை ஒருவன் ஏந்தி சுட்டவுடன் எட்டு பேர் பத்து பேர் மரிப்பதும் பீரங்கியைக் கொண்டு சுட்டவுடன் ஐன்னூறு ஆயிரம் பேர் மரிப்பதும், மற்றும் பெரும் அவுட்டுகளையும் வெடிகுண்டுகளையும் வைத்து சுட்டவுடன் ஆயிரம் இரண்டாயிரம் பேர் மரிப்பதும் விலாமுரிந்தும், கால்கை உடைந்தும், குடல் சரிந்தும், எடுத்துக் காப்போரின்றி குத்துயிரில் கொடுந் துன்புற்று தவிப்போருமாகியக் கோரங்களைக் கேட்டும் ஏதோ மனம்பதருங்கால் அவர்களைக் கண்ணினால் காணும் மக்கள் எவ்வகைக் கதருவார்களோ விளங்கவில்லை. ஆடுகளைப்போலுங் கோழிகளைப்போலுந் தங்களை ஒத்த மக்களைக்கொண்டு போய் மடியவைத்து மன்னர்கள் என்ன சந்தோஷத்துடன் இராட்சியம் ஆளப்போகின்றார்களோ அதுவுந் தெரியவில்லை. சருவசீவர்களும் தங்களுயிர்களைக்காப்பாற்றிக்கொள்ள முயல்வது அநுபவக் காட்சியாகும். இவற்றுள் சருவசீவர்களிலும் சிறந்தவர்கள் மக்களென்றறிந்தும் அவர்களுள் குடிப்படை, கூலிப்படை யென வகுத்து அவர்களைக் கொண்டுபோய் வீணே மடித்துத் துன்புறச் செய்வதினும் அத்தகைய வரசாட்சியை இச்சியாமலிருப்பதே தன்மமன்றோ. கடவுளுண்டு, கடவுளுண்டு எனச் சொல்லித்திரிபவர்க்கு கருணையென்பது ஒன்றில்லாமற் போமாயின் உலகநீதி ஒழுங்குறுமோ, ஒருக்காலும் ஒழுங்குறாவாம். உன் கடவுள் என் கடவுளென்னும் வெறுஞ்செருக்கும், உன்மதம் என்மதமென்னும் மதச்செருக்குமே கருணையென்பதற்று, கோபவெறியேறி தாங்களேயாத்த வலையிலுந்துக்கத்திலும் வாதைப்படுவதன்றி தங்குடிப்படை களையுங் கூலிப்படைகளையுங் கொண்டுபோயழித்து மீளா துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றார்கள். இதுவே தற்கால யுத்தங்கள் என்னப்படும். - 6:25; நவம்பர் 27, 1912 - 42. வித்தியாவிருத்தியில் கண்டுபடிப்பது படிப்பா காணாது தன் பெண்டு பிள்ளைகளைமட்டிலுங் காப்பாற்ற படிப்பது படிப்பா வித்தியாவிருத்தியில் கண்டு படிக்கும் படிப்பு யாதெனில்:- தான் கற்றவளவில் நின்று உலகத்தில் அங்கங்குள்ள தேசத்தோர் உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும், உபரச சத்துக்களைக் கொண்டும், பஞ்சுகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும், அனந்தமான வித்தைகளைக் கண்டுபிடித்து தாங்களுந் தங்கள் மக்களும் சுகசீவனத்தை அடைவதுடன் ஏழை மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் சுகசீவனம்பெற்று சுகவாழ்க்கையிலிருப்பதை நோக்கி தாங்களும் அத்தகைய வித்தைகளை விரும்பி அறிவை பெருக்கி எடுத்த வித்தையை முடிப்பதே கண்டுபடித்ததின் செயலும் அதன் பயனும் சகல மக்கள் விருத்திக்கும் ஆதாரமுமாக விளங்கும். அதாவது டிராம்வே என்னும் மின்சார வண்டியையும் அதன் விருத்தியையும் அதன் பயனையும் ஆலோசிப்போமாக. மின்சார வண்டியைக் கண்டுபிடித்தவன் B.A. M.A. L.T வாசித்தவனன்று. தனது சுயபாஷையை சீராகக் கற்று வித்தையில் விவேகத்தை வளர்த்து உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் பண்டியை முடித்து உபாசங்களென்னும் மின்சாரங்களைச் சேர்த்து மாடு குதிரை ஏதுமின்றி உபரச சத்துக் களைக்கொண்டே இழுக்கவும் விடவுங்கொண்டு செய்துவிட்டபடியால் அதன் பயனால் தானுந் தனது குடும்பத்தோரும் சுகவாழ்க்கையைப் பெற்று வாழ்வதுடன் அதனை நடத்தும் பெருங்கூட்டத்தோர்களாகிய ஆட்களும் அவரவர்கள் பெண்டுபிள்ளைகளுங் குடும்பத்தோர்களும் சுகசீவனம்பெற்று சுகவாழ்க்கையில் இருக்கின்றார்கள். அதிற் சுகமாக ஏறிச்செல்லும் மக்களோ அனந்தம் அனந்தமாகும். இத்தகைய அரிய வித்தையைக் கண்டுபிடித்தவன் ஒரு மனிதனே. அவன் தான் கற்ற கல்வியினளவில் நின்று வித்தையில் விவேகத்தை வளர்த்து உலகமக்களுக்கோர் உபகாரியாகவும் விளங்குகின்றான். அவன் சாதித்துக் கண்டுபிடித்த சாதனம் உயர்ந்ததாக விளங்குகின்றபடியால் உலகமக்களில் அவனை ஓர் உயர்ந்த சாதியோன் என்றுங் கூறத்தகும். இதுவே வித்தியாவிருத்தியில் கண்டுபடித்த படிப்புமென்னப்படும். இவ்வரிய வண்டியைக் கொழும்பு தேசத்தோரும் இரங்கோன் தேசத்தோரும் விடும்படி ஆரம்பித்தபோது சிலர் கம்பனியாகச்சேர்ந்து இவ்வண்டியை எவ்விடங்களில் போட்டு நடத்தினால் வருமானம் அதிகம் கிடைக்குமென்றும் எந்தெந்த விதத்திற் செய்தால் செலவு குறைபடும் என்றும் எவ்வகையால் நடத்தினால் லாபம் அதிகரிக்குமென்றும் தங்கள் தங்கள் ஆலோசினைக்கு எட்டியவரையில் பேசி முடிவு செய்து வண்டியை நடத்தி லாபத்தை அடைந்து வருகின்றார்கள். நமது சென்னையில் இவ்வண்டியை நடத்தும்படி ஆரம்பித்தக் கம்பனியார்களோ கூட்டத்தைக்கூடி ஆலோசிக்கும்போதே டிக்கட்டுக் கலைக்ட்டர்களில் பறையர்களை வைக்கப்படாதென்னும் பேரறிவுள்ள ஆலோசனையை முந்தி பேச ஆரம்பித்தார்கள். இத்தகைய உலக்கை புத்தியுள்ளச் செய்கையால் எடுத்த நோக்கம் யாவும் சீரழிந்து சென்னையின் கம்பனியாருந் துலைந்து மேல்நாட்டாரே லாபமடைந்து வருகின்றார்கள். வித்தையை விரும்பாது சாதியை விரும்பும் உலக்கை புத்தியும் மாறாப்பொறாமெயுந் தீரா பற்கடிப்பு முள்ளோர் வாசஞ்செய்யுந் தேசமுஞ் சிறப்படையுமோ, தேச மக்களும் சீர்பெறுவர்களோ, தேசவித்தையும் விருத்திபெறுமோ, ஒருக்காலும் இல்லையென்று மொழி திண்ணம் திண்ணமேயாம். சென்னையில் டிராம்வே கம்பனியெனக் கூடி பறையர்களை டிக்கட்டு கலைக்ட்டர்களில் வைக்கப்படாதென சாதி கட்டுப்பாட்டைப் பேராலோசினையாகக் கொண்டு வந்தவர்களுள் பார்ப்பாரென்போர்களே தங்கள் தோள்களில் தோல்பைகளைப் போட்டுக்கொண்டு தோட்டிச்சி வந்து வண்டியிலேறினாலும் அம்மா துட்டுகொடு. சக்கிலி வந்து வண்டியிலேறினாலும் ஐயா துட்டுகொடு, இவர்கள் பொறாமெ கொண்டுள்ள பறைச்சி வந்து வண்டியிலேறினாலும் அம்மா துட்டுகொடுமென்று வாங்கி டிக்கட்டுகொடுக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அதனால் இவர்களது சாதிக்கட்டுப்பாட்டின் ஆலோசினையும் எத்தகைத்தென்பதை விவேகிகளே தெரிந்துக்கொள்ள வேண்டியதாக்கும். மற்றுங் கண்டுபடிக்கா படிப்பு யாதென்னிலோ நாவலர், பாவலர், சாஸ்திரிகள் என வெளிதோன்றுகிறவர்களும் B.A M.A பட்டம் பெற்றவர்களும் படித்துக்கொண்ட படிப்பினால் தாங்களுந் தங்கள் பெண்பிள்ளைகள் மட்டிலும் பிழைக்கும் வழியேயன்றி ஏனைய மக்கள் விருத்திக்கு ஏதுவழியும் இல்லாதபடியால் இதனைக் காணாபடிப்பென்றும் ஏனையோர் விருத்திக்கு ஏதுமற்றப் படிப்பென்றுமே கூறவேண்டியதாகின்றது. இத்தகைய பயனற்ற படிப்பை உய்த்துணராது தேசமக்கள் யாவரும் வித்தியாவிருத்தியையும், விவசாயவிருத்தியையும் விட்டொழித்து எல்லவரும் B.A M.A பட்டம் பெறவேண்டுமென்னும் முயற்சியில் குதூகலித்துநிற்கின்றார்கள். இக்கண்டுபடிக்கா படிப்பால் ஐயா B.A பட்டம் பெற்றவர் பொடிகடை போட்டுக்கொண்டார், ஐயா B.A பட்டம் பெற்றவர் கன்டிராக்ட் வேலைக்கு மேஸ்திரியாக இருக்கின்றார், ஐயா B.A பட்டம் பெற்றவர் காப்பிஷாப்பு வைத்துக்கொண்டார். ஐயா B.A பட்டம் பெற்று சுதேசிகடை வைத்துக் கொண்டார். ஐயா B.A பட்டம் பெற்று இன்ஷூவரென்ஸ் கம்பெனிக்கு ஏஜெண்டாகத் திரிகின்றார்களென்பதில் உத்தியோகங்கள் கிடைத்தவர்கள் மட்டிலும் தங்கள் பெண்சாதிகளுடன் சுகிப்பதும், கிடையாதோர் தங்கள் பெண்சாதி பிள்ளைகளுக்கும் சுகமின்றி ஊரூராய் அலைவதுமே பெரும்பயனாக விளங்குகிறபடியால் கண்டுபடிக்கும் படிப்பையே கருத்திலூன்றி நமது தேசத்தில் வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும் பெருக்கி தேச மக்களின் விவேகத்தை வளரச் செய்வார்களென்று நம்புகிறோம். - 6:26; டிசம்பர் 4, 1912 - 43. எவ்வகையால் ஓர் குடும்பம் சுகவாழ்க்கைப்பெறும்! எவ்வகையால் ஓர் இராஜாங்கம் சுகவாட்சியையுறும்! ஓர் குடும்பத் தலைவனுக்கு மனைவியாக வந்து சேரும்படியானவள் தனச்செல்வம் தானியச்செல்வம் குணச்செல்வமுடைய குலத்தில் பிறந்து விவேகமிகுந்தோர் சேர்க்கையில் வளர்ந்தவளாய் இருப்பாளாயின் தன் கணவனது குடும்பத்தையே தன் குடும்பமென்று எண்ணி மனைத்தொழில்களை நடாத்தி மாமன் மாதுலர்களுக்கு அன்புபொருந்த நடந்துவருவதுடன் தன் கணவனது வாய்சொற் கடவாமலும் தன் வாயற்படியில் நில்லாமலும் மிருது வார்த்தையையே பேசிக்கொண்டு கணவனை நாடிவரும் யாதார்த்த குருக்களுக்கும் அன்பாய நேயர்களுக்கும் யாதொரு தொழிலுஞ்செய்ய சக்தியற்ற ஆதுலர்களுக்கும் அன்னமளித்து தன்மாமன், மாதுலன் கணவன் முதலானவர்களுந் திருப்தியாகப் புசித்தபின் தானும் ஆனந்தமாகப் புசித்து தனது கணவன் குடும்பத்தோர் வரினும் தன் தாய்குடும்பத்தோர் வரினும் இருவரையும் சமமாக எண்ணி அவரவர் விருப்பிற்கிசைய தனது கணவன் உத்திரவு பெற்றளித்து தனது கணவனது சுகத்தையும் தன் கணவனது உரவின்முறையோரது சுகத்தையும் முதலாவது கருதி தன் உரவின்முறையோரது சுகத்தையும் மற்றும் ஏனையோர் சுகத்தையும் இரண்டாவதுமாகக் கருதி மனைச்சுத்தத்தை நோக்கித் தன் மனோசுத்தம் வாக்குசுத்தம் தேகசுத்தமுடைய வாழ்க்கையைப் பெறுவாள். இத்தகைய குலநலமும் குணநலமும் மிகுத்த வாழ்க்கையையுடையவள் குடும்பமே சுகவாழ்க்கையைப் பெறும். மற்றும் மோசத்தால் பணம் சம்பாதித்தும் குடிகெடுப்பால் பணம் சம்பாதித்தும் போஷிக்கப்பட்ட குணக்கேடான குடும்பத்திற் பிறந்து சீலமற்றவர் சேர்க்கையில் வளர்ந்தவளாய் இருப்பாளாயின் தன் கணவன் இல்லஞ் சேர்ந்தவுடன் தன் மாமி, மாதுலரை விரோதித்து, தன் கணவனையே தன் சொற் கடவாத மாயாமொழிகளால் மயக்கி, தன்னை பெற்றோர் குடும்பத்தையே போஷிக்கும் வழிதேடி, தனது கணவன் குடும்பத்தைத் தலைகாட்டாது விரட்டி தன் மனைத்தொழிலை நடத்த ஆரம்பிப்பாள். அத்தகைய குணக்கேட்டிற்கு அக்குடும்பத்தோர் இசையாவிடின் தன்கணவனையே அக்குடும்பத்தை விடுத்து அப்புறப்படுத்திக்கொள்ளும் வழியைத் தேடிவிடுவாள். அவ்வகை வழியைத் தேடியவள் வஞ்சினமும் பொறாமெ முதலிய துற்குணத்தையே பீடமாகக் கொண்டு வேறுமனை உண்டு செய்துக்கொள்ளுவதினால் தன் கணவன் ஏது சம்பாதனைப் பெறினும் அச்செல்வமானது வாழைப்பழத்தில் ஊசிநுழைவது போல் தங்களையும் அறியாது வரவுக்கு மிஞ்சிய செலவுண்டாகி தாங்களும் சீரழிவதுடன் மாறா துக்கத்திற்கு ஆளாகி அக்குடும்பமும் சீர்கெட்டுப்போம். ஆதலின் குடும்பியானவன் எக்காலும் பெண்வழி சேராது பொதுவாய தன்மவழி நடத்தலே குடும்பத்தின் சுகவாழ்க்கைக்கு அழகாம். ஓர் இராஜாங்கம் சுக ஆட்சியில் நயமுறும்வழி யாதெனில் அரச அங்கங்களாகும் மந்திரவாதிகளென்னும் மதியூகிகள் தக்க விவேகமிகுத்தக் குடும்பத்தில் பிறந்தவர்களாகியும் தனச்செல்வம் தானியச்செல்வம் நிறைந்த பாக்கியத்தில் வளர்ந்தவர்களாகியும் ஒழுக்கம், சீவகாருண்யம், விவேகமிகுதியை நாடும் நேயர்களுடன் உலாவியவர்களாகியும் இருப்பார்களாயின் தங்கள் அரசருக்குண்டாய கீர்த்தியே தங்களுக்குண்டாயதென்றும், தங்கள் அரசருக்குண்டாய அபகீர்த்தியே தங்களுக்குண்டாய்தென்றுங் கருதி ராட்சியபாரத்தைத் தாங்களே சிரமேற்று அரசவங்கத்தினர்களென்று உழைக்கும் சேனாபதியர், புரோகிதர், தொழிற்றூதுவர், கர்மவிதிக்காரர், காப்பாளர், காரண குருக்கள், காரிய குருக்கள் மற்றும் வேண்டிய அதிகாரத் தொழிலாளர்கள் யாவரையும் ஆய்ந்து அரசாங்கத்துக்காரியாதிகளை நடாத்துவதுடன் தேசமக்கள் சீருக்கும் சிறப்புக்கும் வரும் பூமியின் விருத்தியையே முதலாவதாக கருதி உழுது பண்படுத்தும் உழைப்பாளிகளின் மீது முழுநோக்கம் வைத்து அவர்களது குறைவு நிறைவுகளையே சீர்திருத்தி பூமிக்களைப் பண்படுத்தும் வழிகளைத் தேடுவார்கள். பூமியின் உழைப்பாளிகளின் சுகச்சீரைமட்டிலும் மந்திரவாதிகள் முக்கியமாகக் கவனிப்பது யாதுக்கென்னில் பண்ணைபூமிகளின் வரப்புயர் நீருயரும், நீருயர பயிறுயரும், பயிறுயர குடியுயரும், குடியுயர கோனுயரும். பூமிகளின் தானியங்களானது விருத்தியடையக் குடிகள் யாவரும் சுகசீவிய வாழ்க்கையைப் பெறுவார்கள். குடிகள் எப்போது சுகவாழ்க்கையில் இருக்கின்றார்களோ அரசரும் அரச அங்கத்தினரும் அரசரது சகல காரியாதிகளும் சுகமாகவே நடைபெறும். குடிகளின் சுகத்தைக் கருதி அரசை ஆநந்தநிலை பெறச்செய்யும் மந்திரவாதிகள் பூமிக்கென்று உழைக்கும் பண்ணையாட்களின் சுகத்தையும் விருத்தியையுமே மிக்கக்கருதி நிற்பார்கள். இத்தகைய மேலாயக் கருத்தமைந்த மந்திரவாதிகள் அரசருக்கரசர் யுத்தம் நேரிடுங் கலகங்களிலும் மதியூகத்தால் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயங்களைக் கையாடி அரசை நிலை நிறுத்துவார்கள். இவைகள் யாவுங் குடிகளை அல்லலடையவிடாமலும் அரசர் அதிகவலையுறாமலும் இராட்சியபாரம் தாங்குதற்கேயாம். இத்தகையாய கருணையும் மதியும் வல்லபமும்பெற்ற மந்திரவாதிகளிருக்கும் இராஜாங்கமே சுகவாட்சியுற்று ஆனந்தநிலையில் நிற்கும். இவற்றிற்கு மாறாக குடியாலும் வஞ்சத்தாலும் சூதினாலும் பொய்யாலும் பொருளாசையுற்றலையும் சோம்பேறிகள் குடும்பத்திற் பிறந்து வேளை புசிப்பு வேளைக்கின்றி வளர்ந்து ஈவோர்கரத்தையும் நேயத்தையும் நாடித்திரிந்து சொற்பக்கல்வியிற் பயின்று நான் இந்த சாஸ்திரத்தில் வல்லவன், நான் அந்த சாஸ்திரத்தில் வல்லவனெனப் பகட்டித்திரிவோர்களைக்கொண்டு இராஜாங்க மந்திராலோசனை சங்கத்துக்காரியாதிகளை நடத்துவதாயின் அவர்கள் ஏதுகல்வியில் விருத்திப்பெற்றிருந்த போதினும் தாங்கள் பிறந்த குடியினது செயலும் வளர்ந்த வளப்பின் பழக்கமும் பொருளாசையால் செல்வர்களைப்பின் தொடர்ந்து திரிந்த அநுபவங்களும் அவர்களைவிடாது தொடர்ந்து நிற்றலால் அரசர்கள் எப்போது மாறுவார்களோ அப்போதே அரசபீடத்தை அபகரிக்கலாம் என்றும், குடிகள் எப்போது மாறுவார்களோ அப்போதே குடிகளைக் கெடுக்கலாமென்றும், தங்கள் சுயப்பிரயோசனத்திலேயே நின்று அரசருக்குங் குடிகளுக்கும் அதிக உழைப்பாளிகளைப்போல் அபிநயித்துத் திரிவார்களன்றி பூமிகளின் விருத்திகளையும் தேசவிருத்திகளையும் மக்கள் விருத்திகளையும் தங்கள் கனவிலேனுங் கருதமாட்டார்கள். அத்தகையச் செயல்களால் தேசமும் பாழடைந்து மக்களும் சீரழிந்து அரசனும் சுகமிழந்து அல்லல் அடைந்துவிடுவான். ஆதலின் இராஜாங்கம் சுகவாட்சியுற்று ஆனந்தம் பெறவேண்டுமாயின் நற்குடும்பத்திற் பிறந்து சிறந்த செல்வத்தில் வளர்ந்து சீவகாருண்யம் முதிர்ந்து பரந்த விவேகம் நிறைந்துள்ளவர்களை மந்திரவாதிகளாய் நியமித்து அவர்களது ஆலோசனைக்கு உட்பட்டு அரசை நடாத்துவதே இராஜாங்க சுகவாட்சிக்கு அழகையும் ஆறுதலையுந் தருமென்பது சத்தியம். - 6:41; மார்ச் 19, 1913 - 44. வித்தியாகர்வம் தனகர்வம் மதகர்வம் சாதிகர்வம் பெருகும் தேசத்தில் சுகச்சீர் பெருகுமோ? முக்காலும் பெருகாவாம். காரணமோவென்னில் வித்தை என்பதை யாதென விரும்பாது காலையிலெழுந்தவுடன் குறுக்குப்பூச்சு பூசுவதே வித்தை. அக்குறுக்குப் பூசுவதிலுங் குழைத்துப் பூசுவதே வித்தை, நெடுக்குப்பூச்சு பூசுவதே வித்தை, அந்நெடுக்குப் பூச்சிலும் மஞ்சள் வருணம் பூசுவதோர் வித்தை, கொட்டைக்கட்டும் வித்தை அதிலும் ஆறுகீற்று ஏழுகீற்று பார்த்து கட்டும் வித்தை, இத்தகையாகத் தனக்கும் பலனற்று தன்தேசத்தோருக்கும் பலனற்றப் பாழுஞ் செய்கைகளாம் வித்தைகளே பெருகிவருகின்றதன்றி வேறொன்றுங் கிடையாவாம். பூர்வ பௌத்தர்கள் கண்டுபிடித்திருந்த நீரிரைப்பிற்குமேல் வேறு இரைப்புக்கிடையாது. பழைய கலப்பைக்கு வேறு கலப்பைச் செய்யும் வித்தை விருத்திகிடையாது. பழைய சம்பான் குடைக்கு மேல் வேறு குடை கிடையாது, நெருப்பை உண்டு செய்யும் சக்தியுக்குங் கல்லைப்போல் மற்றுஞ் சக்கிக் கிடையாது, பழைய கெந்தகக் குச்சிக்குமேல் வேறு குச்சு கிடையாது. இவைகளுக்கு மேலாய வேறு வித்தைக் கண்டுபிடிக்கும் விவேகங் குறைந்து கொண்டே போவதுடன் பூர்வத்தோர் நெசிந்துவந்த பட்டு வகைகளையும் பருத்தி வகைகளையும் விருத்திச் செய்யும் வித்தைகளையுங் கைநழுவ விட்டொழித்தார்கள். இத்தகைய வித்தைகள் விருத்திச்செய்யும் விவேகம் பாழடைந்து போனாலும் வித்தியாகர்வங்கள் மட்டிலும் எங்கு தோன்றுகிறதென்னில், ஐரோப்பியர்களால் நிலைநாட்டியுள்ள இருப்புப்பாதை சாலைகளிலும், நீராவி இயந்திர சாலைகளிலும், மரவேலை சாலைகளிலும், இருப்புவேலை சாலைகளிலும், மருந்து கிடங்கு சாலைகளிலும், மின்சார சாலைகளிலும் ஓர் பெரிய மேஸ்திரியாகி விடுவானாயின் நூதன ஆட்களைக் கண்டவுடன் அவனுக்குண்டாம் மார்புநெளிப்பும், முகசுளிப்புமாகியச் செயல்களினாலேயாம். ஏதுமற்றவிடத்தில் இத்தகைய வித்தியாகர்வம் தோன்றுமாயின் தனது சுய வித்தியாவிருத்தி எங்குபெறக்கூடும். தேசமெங்கும் சுகச்சீர் பெறலாகும் ஐரோப்பியர், அமெரிக்கர், சீனா, ஜப்பானியர் கண்டுபிடித்துவரும் வித்தியாவிருத்தியில் முந்திரி பாகம் விருத்தி பெற்றிருப்பார்களாயின் நாங்கள் பிரம்மா முகத்திற் பிறந்தவர்களல்ல கண்ணினின்று பிறந்தவர்கள் எனப் பெரிய பெரிய வேதங்களையும், பெரிய பெரிய புராணங்களையும் எழுதிவைத்துக் கொண்டு சகலசாதிகளினும் யாங்களே பெரியசாதிகளெனத் துள்ளித் தொப்பென்று விழுந்து குடிமிதட்டி நெளித்து நெளித்து வித்தியா கர்வத்தைக் காட்டுவார்கள். மற்றும் தென்னிந்திய தனகர்வத்தை ஆராய்வோமாயின் இலட்ச திரவியத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்களென்பதரிது. அவ்விலட்சத் திரவியமுள்ளோர் வித்தியா விருத்தியிலும் விவசாயவிருத்தியிலும் வியாபார விருத்தியிலும் சேகரித்துள்ளவர்கள் நூற்றில் மூன்று பேரல்லது நான்கு பேரிருப்பார்கள். மற்றும் நூற்றிற்குத் தொண்ணூறு பெயர் வஞ்சத்தாலும், இலஞ்சத்தாலும், குடிகெடுப்பாலும், வட்டியாலும், களவாலும், சூதினாலும், சொத்துள்ளக் கட்டுக்கழுத்திகளை இட்டோடுவதாலும், கைம்பெண்கள் சொத்தை மோசஞ்செய்வதாலும், பொய்யைச் சொல்லிப் பொருள்பரிப்பதாலும் இலட்சத்திற்குட்பட்ட தனவிருத்திப்பெற்றவர்களிருப்பார்கள். இத்தகைய சொற்ப விருத்தியின் கர்வத்தால் முன் பார்த்த நேயர்களைக் காணக் கண் தெரியாமற்போகிறதும், செவிக் கேளாமற்போகிறதும், கைநீட்டி வாட்டம் பேசுகிறதும் நாவானது உறத்து மறத்துப் பேசுகிறதுமாகிய கர்வமே நிறைந்திருக்கும்போது ஐரோப்பியர், அமேரிக்கர், சீனர், ஜப்பானியரைப்போல் இவர் ஐந்து கோடி தனமுடையவர், அவர் பத்துகோடி தனமுடையவர், இன்னொருவர் இருபதுகோடி தனமுடையவர், மற்றுமொருவர் ஐம்பது கோடி தனமுடையவர்கள் இருக்கின்றார்களென்னுந் தனபெருக்கமுள்ளோர் இருந்து விடுவார்களாயின் இவர்கள் தனஞ்சேர்க்கும் வழிவகைகளைக்கொண்டே தேசமக்கள் யாவரும் சுகச்சீரழிந்து பெருந்தனமுள்ளோர் வீதி உலாவிவருங்கால் வழியில் வருவோர் யாவரும் தங்கள் தங்கள் வஸ்திரங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு கைகூப்பி நிற்கவேண்டும் என்னுங் கட்டளையிட்டு தனக்கர்வக் கொடியை நாட்டிவிடுவார்கள். “இரந்துண்போனுக்கு தனம்பெருகில் ஏசாதெல்லாமேசுவான் பேசாதெல்லாம் பேசுவான்” என்னும் பழமொழிக்கு ஒக்க அற்பருக்கு தனஞ்சேரில் அதையடுத்தே கர்வமுஞ் சேருமென்பது கருத்து. அதை அநுசரித்தே தேசமுஞ் சீரழியுமென்பதுடைத்து. இனி மதகர்வத்தை ஆராய்வோமென்னில் தங்களுடைய மதத்தை இந்துமதமென இருமாப்புற்றிருப்பதைக் காண்கின்றோம். அவருள் ஒருவரை அணுகி நீவிர் இந்துமதத்தோரென்று கூறுகின்றீர். அவ்விந்து என்பவர் யார், எத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் அதை மறுத்து ஆரியமதமென்பார்; ஆரியரென்பவர் யார், அவரெத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் அதை மறுத்து பிரமசமாஜம் பிரமமதமென்பர்; அப்பிரமமென்பவர் யார், எத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் ஆ, ஆ, பிரமமென்பது தெரியாதா, வேதங்களிலும் வரைந்திருக்கின்றது உபநிடதங்களிலும் வரைந்திருக்கின்றது புராணங்களிலும் வரைந்திருக்கின்றது அதை நீர் வாசித்ததில்லையோ என்பார். வாசித்தும் அஃது ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. அப்பிரமம் அநுபவத்திற்கும் காட்சிக்கும் பொருந்தியதோவென்றால் அவரவர்கள் அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தியதாகும் என்பார். மறுத்து அஃதேனும் மற்றவர்களுக்குக் காட்சியாமோவென்னில் மாறு உத்தரம் இன்றியே அடங்கிவிடுவார். இத்தகைய அடிப்படையற்ற பீடத்தினின்று தோன்றிய சிவமதம் விஷ்ணுமதமென்பவருள் எங்கள் சிவமதமே மதமென கர்வித்து நிற்போரை அணுகி தங்கள் மதத்திற்குக் காரணராகிய சிவனென்பவர் யார், அவரெத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென்னிலோ எங்கள் மதம் அநாதியாயுள்ளது என்பார்கள் உங்கள் சிவமதத்திற்கு ஆதரவாயுள்ள இந்துமதம், ஆரியமதம், பிரமமதம் ஆதியற்ற அநாதிமதமாயிருக்க அவ்வநாதிமதத்திருந்தே மற்றுமோர் அநாதிமதந்தோன்றுமோவென்னில், அதனந்தரார்த்தம் விளங்காது எங்கள்சிவமே அநாதியாய் உள்ளது என்பார்கள். ஆதியற்ற சிவமதத்தைக் கொண்டு மற்றும் ஆதியாயுள்ள மதங்களைக் கண்டிக்குங் கர்வந்தோன்றலாமோவென்னில் மறுத்தும் எங்கள்சிவம் அநாதியே என்பார்கள், அநாதியாயுள்ள சிவனுக்குக் கல்யாணமுண்டோ பிள்ளை பெண்சாதிகளுண்டோவென்னில் அதுவோர் திருவிளையாட்டு என்பார்கள். திருவிளையாட்டு ஆடத் தோன்றிய உருவேனும் ஆதியாகாதோ, அதன் காலமிறாதோ, தோன்றிய தேசமிராதோவென்னில், உடைந்த மூங்கிலுக்கு முருங்கைக் கொம்பை முட்டுக்கொடுப்பதுபோல் பொய்யிற்குப் பொய்யைச் சொல்லிக்கொண்டே திரிந்தபோதினும் மதகர்வமட்டிலும் அவர்களை விட்டகலா. வைணவ மதத்தோரும் அவ்வாறேயாம். ஐரோப்பா, அமெரிக்கா, சைனா, ஜப்பான் முதலிய தேசத்தோர் அனுசரித்துவரும் சரித்திர ஆதாரமாய மதங்களைப்போலிருக்குமாயின் இன்னுமென்ன கர்வங்கொண்டு மதச்சண்டைக்கு மார்புகொடுப்பார்களோ என்பதை சரித்திரக்காரர்களே தெரிந்துக்கொள்ளவேண்டியதாகும். ஆதியற்ற அநாதியாயுள்ள மதத்தோருக்கே இத்தகைய கர்வமும் பற்கடிப்புத் தோன்றுமாயின் தேசமும் தேசமக்களும் சுகச்சீர்பெறுவதென்னவாம். வேறுமோர் சாதி கர்வத்தை ஆராயப் புகிலோ நெல்லரிசி சோற்றின் சுவை அறியாதவனாயிருப்பினும், வண்ணான் என்னும் பெயர் தெரியாதவனனா யிருப்பினும், மலோபாதைக்குச் சென்று காலலம்பாதவனாயிருப்பினும், தீபாவளி தீபாவளிக்குக் குளிப்பவனாய் இருப்பினும், மோசத்தினாலும் சூதினாலும் சீவிப்பவனாயிருப்பினும், களவினாலும் பொய்யினாலும் சீவிப்பவனாயிருப்பினும், சாராயக்கடை கள்ளுக்கடைகளையே குத்தகையெடுத்து குடித்து வெறிப்பவனாயிருப்பினும், பிள்ளையென்றும் பெண்சாதியென்றும் பராமரிக்காத பேமானியாயிருப்பினும் கல்வியென்பதே கனவிலு மறியாத கசடனாயிருப்பினும், ஊரார் சொத்துக்கே உலைவைத்துத்திரியும் உலுத்தனாயிருப்பினும், எக்காலும் பிச்சையிரந்துண்டே காலங்கழிப்பவனாயிருப்பினும் சாதிகர்வமட்டிலுங் களிம்பேறி அவர்களைவிட்டு அகல்வது கிடையாது. இத்தகைய கர்வங்கள் அகலாமலிருத்தற்குக் காரணமோ வென்னில் எக்காலும் வித்தையிலேயே ஒருவன் தனதறிவை செலுத்தி விடுவானாயின் அவனுக்கு வித்தியாகர்வந் தோன்றாது, தனத்திலே எக்காலும் சுகவாழ்க்கைப் பெற்றிருப்பானாயின் தனகர்வம் அவனுக்குத் தோன்றாது, நீதியின் சம்மதத்தையே மதமெனக் கொண்டுள்ளவனாயின் மதகர்வம் அவனுக்குத் தோன்றாது, சகோதிர வொற்றுமெயும் சீவகாருண்யமும் உள்ளவனாயிருப்பானாயின் சாதிகர்வம் அவனுக்குத் தோன்றாது, அறியாவித்தையும் நூதனச்செல்வமும், அநீதிமதமும் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளுமானதால் அதனதன் கர்வங்கள் விடாது தேசத்தையும் தேசமக்களையும் சீரழிப்பதுடன் தாங்களும் சீர்கெட்டே வருகின்றார்கள். இத்தியாதி கர்வங்கள் நீங்குமளவுந் தென்னிந்தியம் சுகச்சீர் பெறமாட்டாது என்பதே திண்ணம். - 6:45; ஏப்ரல் 15, 1913 - 45. மாடுகளால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டாவதுபோல மனிதர்களால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டோ மாடுகளால் மனிதர்களடையும் பயன், ஓர் பசுமாடு வீட்டிலிருக்குமாயின் அதன் சாணத்தாற் பல செடிவகைகளுக்கு எருவாகிறதுடன் எரு வராட்டியுந் தட்டி அடுப்பிற்கு உபயோகப் படுத்துகின்றார்கள். அதன் பாலைக் கறந்து குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் புசித்து சுகமடைகின்றார்கள். மற்றும் அதனால் உண்டாம் தயிர், மோர், நெய் முதலியவற்றால் இன்னுமனந்த சுகமடைந்தேவருகின்றார்கள். மக்கள் அப்பாவுக்குச் செய்யும் பிரதிபயனோ வைக்கோலை முன்னிற் போடுவதேயாம். எருதுகளோ ஏர் உழுவதற்கும், கவலை இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும், மற்றும் மனுக்களுக்கு அனந்த உதவியாயிருப்பதுடன் பசுவும் எருதும் மரித்த போதினும் அதன் தோலின் உபயோகத்தை நாவிட்டு சொல்லுவதற்கில்லை. அத்தோலினால் மனிதர்களுக்கு உண்டாகும் பயன்களை எழுதவேண்டுமாயின் ஓர் புத்தகமாகிப்போம். மாடுகளால் மனிதர்கள் பலவகையான சுகச்சீரும் அடைந்து வருகின்றார்கள் என்பதை அநுபவத்திலுங் காட்சியிலுங் காணலாம். இதுபோல் மனிதர்களில் மனிதர்களுக்குப் பிரயோசனமுண்டோ என்பதை ஆராய்வோம். உலகத்திலுள்ள சகல தேசங்களிலும் மனிதர்களுக்கு மனிதர்கள் பிரயோசன முள்ளவர்களாகவே இருந்து சகலமக்களும் சுகவாழ்க்கையும் சுகசீவனமும் பெற்றே வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் தென்னியாவில் மட்டிலுமோ மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்காது ஒருவன் பிழைக்க நூறுமனிதரைக் கெடுப்பதும், ஒருவன் சீவனஞ்செய்ய நூறுபெயர் சீவனத்தைக் கெடுப்பதும், ஒருகுடி பிழைக்க நூறு குடிகளை பாழ்படுத்தி வருவோருமாகிய பஞ்சமா பாதகங்களே பெருகிக்கொண்டு வருகின்றபடியால் மனிதர்களால் மனிதர்களுக்கு சீர்கேடுகளும் வித்தியா மோசங்களும் விவசாய நாசங்களும் உண்டாகி தேசமும் தேசமக்களும் சீரழிவதற்கே ஏதுவாகிவிட்டது. தேசத்தை சீர்திருத்தியும், தேசமக்களை நல்வழியிலாண்டும் சகல சுகச்சீரளித்துங் காத்துவரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்களையே வெடிகுண்டு எறிந்தும் துப்பாக்கிகளால் சுட்டும் வஞ்சினங்களால் வதைத்துங் கொல்லும்படியான நன்றிகெட்ட படும்பாவிகள் வாசஞ்செய்யுந் தேசத்திலுள்ள மனிதர்களுக்கு மனிதர்கள் பிரயோசனப்படுவார்களோ. இத்தகையக் கடுஞ்சினமுற்று கருணையென்பது அற்றுள்ள ஓர் கூட்டத்தோரை மனித வகுப்போர் என்றும் அழைக்கப்போமோ, யதார்த்தத்தில் மனிதர்களாக இருப்பார்களாயின் தங்களையொத்த மனிதர்களுக்கே உபகாரிகளாக விளங்குவதுடன் மனுபிறவிக்குத் தாழ்ந்த சீவராசிகளுக்கும் உதவியாயிருப்பார்கள். அங்ஙனம் மனுவுருவாகத் தோன்றினும் அவர்களுக்குள்ள மிலேச்ச குணமாம் பெறாமெயும் பற்கடிப்பும் வஞ்சினமும் அவர்களை விட்டகலாதுள்ளபடியால் மனிதர்களுக்கு உபகாரிகளாக விளங்காமல் அபகாரிகளாகவேயிருந்து, தம்மெ ஒத்த சகல மனிதர்களையுஞ் சீரழித்து தங்கள் சுகத்தை மட்டிலுமே கருதி முன்னேறுகின்றார்கள். இத்தகைய வஞ்சினக் கூட்டத்தோர்களையே ஓர் மனுக்கூட்டத்தோரென்றும், மிலேச்சப் போதகர்களையே மெய்ப்போதகர்களென்றும், சீவகாருண்யம் அற்றவர்களையே குருக்களென்றும், எண்ணித்திரியுமளவும் இத்தேசஞ் சீர்பெறப் போகிறதேயில்லை. ஏதும் பிரயோசனமற்ற மனிதன் உலகில் தோன்றியென்ன, தோற்றாமற் போயிலென்ன, அவ்வகை மனிதவுருவாகத் தோன்றியும் மனிதர்களுக்கு உபகாரியாக விளங்காமல் மனிதனையே சீரழித்தும் மனிதனையே குடிகெடுக்கும் அபகாரியாக விளங்குவானாயின் அத்தகையோன் முகத்தில் விழிப்பதினும் அகன்று நிற்பது அழகன்றோ. அத்தகையோன் கண்ணிற்கும் புலப்படாமலிப்பதே ஆனந்தமன்றோ. இதை அநுசரித்தே மாட்டின் பிரயோசனத்தை முன்பே விளக்கியுள்ளோம். ஓர் மிருகசீவனாகிய மாட்டினால் மனிதனுக்கு அனந்தமாயப் பிரயோசனமிருந்தும் மனிதனாகத் தோன்றியுள்ளவனால் மனிதனுக்குப் பிரயோசனமாகாமல் அவனுக்குக் கேட்டை விளைவிப்பவனாகவே விளங்குவானாயின் அவன் மனிதனல்ல, மனிதனல்ல, மனிதனல்லவென முக்காலுங் கூறுதற்கு ஏதுவாகிவிடும். அவன் எத்தகைய சீரும்சிறப்பும் பெற்றுவாழினும் தீய வினையால் கேடும் பாடும் நேர்ந்து கூடுங் குடும்பமும் அழிந்தே தீரும். ஆதலின் மாடுகளது பிரயோசனத்தையேனுங் கண்டு மனிதர்களென்போர் மனிதர்களுக்குப் பிரயோசனமுள்ளவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகிறோம். - 6:46; ஏப்ரல் 23, 1913 - 46. இந்தியதேசங்கெட்டு சீரழிவதற்குக் காரணமெவை சாதிகள் வேஷமும் சமயக்கூட்டங்களுமேயாம் இவற்றுள் முதலாவது, உலகிலுள்ள பல தேசங்களின் சீரையும் சிறப்பையும் ஆராய்ச்சி செய்வோமாக. ஐரோப்பியர், அமெரிக்கர், சீனா, ஜப்பானியர் முதலியவர்களின் சீரையும் சிறப்பையும் நோக்குங்கால் குறைவற்ற செல்வமும் நோயற்ற வாழ்வுமுற்று ஒருவருக்கொருவர் ஆனந்த சுகவாழ்க்கை யுற்றிருப்பது உலகறிந்த விஷயமேயாம். அவற்றிற்குக் காரணமோவென்னில் அத்தேசங்களுக்கு நூதனமாக ஓர் மனிதன் சென்றவுடன் நீவிர் எத்தேசத்தோர் எப்பாஷைக்குரியவர் உமக்கு என்னவித்தை தெரியுமென விசாரிப்பார்களன்றி வேறில்லை. அதாவது “வித்தையை விரும்பு” எனும் பௌத்தர்கள் போதனையின் படி அவர்சாதனமும் நிறைவேறிவருகின்றது. அவர்களது விசாரிணையுஞ் செயலுங் கண்ணுங் கருத்தும் வித்தியாவிருத்தியையும் விவசாய விருத்தியையும் நாடியிருக்குமேயன்றி வேறொரு நாட்டமுமில்லையாகும். எத்தேசத்தோனைக் காணினும் எப்பாஷையோனைச் சேரினும் சகோதிர ஐக்யமுற்று ஒருவர் வட்டித்த பதார்த்தங்களை மற்றவர் புசிக்கவும் அருந்தவுமான அன்பின் பெருக்கத்திலிருப்பார்கள். ஒருவருக்கொருவர் சீறலும் பொறாமெயும் வஞ்சினமும் அமைந்திருக்கமாட்டார்கள். அத்தகைய சிறந்த குணமும் மேலாய செயலும் அமைந்துள்ளபடியால் ஒருவர்கற்றுள்ளவித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், ஒருவர் செய்யும் விவசாயவிருத்தியை மற்றவர்களுக்குச் செய்யவும், ஒவ்வொரு பத்திரிகைகளை நடத்துவோரும் இத்தேசத்தோர் இன்ன வித்தை இதன் வழியால் சித்திப்பெற்று இன்ன சுகமளிக்கின்றதென்றும், இன்ன விவசாயம் இவ்வகையால் சித்திப்பெற்று இன்ன பலனை அளிக்கின்றதென்றும், இன்ன வியாபாரம் இத்தகைய வழியால் விருத்தி பெற்று இன்னலாபத்தைத் தருகிறதென்றும், வரைந்து வெளியிடுவார்களன்றி அப்பிரயோசன வார்த்தைகளை வெளியிடமாட்டார்கள். அதனை உணர்ந்துவருங் குடிகளும் வீடொன்றுக்கு இரண்டு பத்திரிகை மூன்று பத்திரிகைத் தருவித்து வாசிக்கவும், அதிலடங்கியுள்ள வித்தையின் கருத்துகளையும், விவேகவிருத்திகளையும், ஈகையின் சுகங்களையும், சன்மார்க்க நடைகளையும் வாசித்து நாளுக்குநாள் அறிவின் விருத்தி உண்டாகி வித்தியாவிருத்தி, விவசாய விருத்தி, வியாபார விருத்தியில் ஊக்கமுற்று உழைத்து வருகின்றபடியால் அத்தேசமும் தேசமக்களும் நாளுக்குநாள் சீருஞ் சிறப்பும் பெற்று கூடகோபுரங்களும் மாட மாளிகைகளும் உயர்ந்து சகலமக்களும் சுகபுசிப்பு, சுகவாடை, சுக ஆபரணமுடைய சுகவாழ்க்கையிலிருக்கின்றார்கள். இந்திய தேசமோ பெளத்தர்கள் நிறைந்து வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நிறைந்திருந்த வரையில் வித்தியா விருத்தியும், விவசாய விருத்தியும், வியாபார விருத்தியும் பெருகிநிற்பதைக் கண்டவர்களும் கேட்டவர்களுமாகிய அன்னியதேசத்தோர் இந்தியதேசம் வந்து அரிய வித்தைகளையும் அனந்த ஞானங்களையுங் கற்றுச் சென்றார்கள் என்பதை பூர்வ சரித்திரங்களாலும் பூர்வ சித்திரங்களாலுமே கண்டறியலாம். அத்தகைய சிறப்புற்றிருந்த வித்தேசத்தில் கருணை என்பது கனவிலும் இல்லா சில வகுப்போர் குடியேறி தங்கள் தங்கள் சுயபிரயோசனங்களுக்காக ஒற்றுமெய்க்கேடாய சாதிப்பிரிவினைகளையும் விவேகவிருத்திக்குக் கேடாய அஞ்ஞான சமயங்களையும் உண்டு செய்து சாதிக்குத்தக்கப் பொய்சாஸ்திரங்களையும் சமயத்திற்குத் தக்கப் பொய் வேதங்களையும், பொய்ப் புராணங்களையும் வரைந்துவைத்துக்கொண்டு தங்கள் வஞ்சினத்தாலும், பொறாமேயாலும் குடிகெடுப்பாலும் மித்திரபேதத்தாலும் பேதைமக்களை வயப்படுத்திக் கொண்டதுடன் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்திருந்த குடிகள் இவர்களது பொய்சாதி வேஷங்களையும், பொய்வேதங்களையும், பொய்ப் புராணங்களையும் கண்டித்துத் துரத்திக்கொண்டே வந்தபடியால் தங்கள் பொய் வேஷங்களும் பொய்ப்புராணங்களும் நிலைபெற்று தங்கள் காரியங்கைகூடும் வரையிற் கார்த்து நடந்து தங்கள் வாக்கு செல்லுங்காலமாம் செல்வாக்கு உண்டாயவுடன் தங்கள் பொய் கோட்பாட்டிற்கு எதிரிகளாயிருந்த விவேகிகள் யாவரையும் அவர்களைச் சார்ந்திருந்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்த சாதியோர்களென்றும், தீண்டப்படாதவர்கள் என்றுந் தாங்கள் புறக்கணித்து இழிவுகூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமல் பலவகையாலும் நசித்துவந்ததன்றி தங்கள் போதனைகளையே மெய்யென்று நம்பி மோசம் போயுள்ளக் குடிகளாலுந் தாழ்த்தும்படி செய்துவிட்டபடியால் வித்தையிலும் விவசாயத்திலும் விருத்திப்பெற்றிருந்த விவேகிகள் யாவரும் நசிந்து நிலைகுலைந்து விட்டபடியால் இந்திய தேசத்தின்வித்தையும் விவசாயமும் நசிந்தே போய்விட்டது. அத்தகை நசிவை கண்ணுற்ற கருணை தங்கிய ராஜாங்கத்தோர் அவைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்யும் வழிவகைகளுக்கு வேண பொருள் உதவியும், வேண போதனா உதவியுஞ் செய்துவந்தபோதிலும் அவ்வித்தைகளுக்கும் விவசாயத்திற்கும் உரியவர்கள் அதனிற் பெரும்பாலும் இல்லாதால் அவர்களது நோக்கம் சரிவராமலே நிற்கின்றது. இத்தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிவேஷ நாற்றங்களும் சமயபேத அஞ்ஞானங்களும் அகலுமாயின் அன்றே இந்தியதேசம் முன்போன்ற சீரையுஞ் சிறப்பையும் பெறும். அகலாவிடின் சீர்கேடு அடையும் என்பதே திண்ணம். - 6:50: மே 21, 1913 - 47. மனிதனென்போன் எவற்றிற் பழகவேண்டும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்திற் பழக வேண்டும். மக்களென்று வழங்கும் வகுப்பினர் மநுடரென்றும், மானிடர் என்றும், மனிதர் என்றும் வழங்கும் காரணம் யாதெனில்:- மற்றுமுள்ள ஐவகை சீவராசிகளைப்போல் நிருமானமாக நாணமற்று உலாவாது மானியாக உலாவுவோர் ஆதலின் மானிடர் என்றும், மனிதர் என்றும் அழைக்கப்பெற்றார்கள். அவ்வகை அழைக்கப் பெற்றோருள் மானியானவன் நிருமானியாகாது வித்தையில் முதலாவது பழகல் வேண்டும், அவ்வித்தையில் கல்வி வித்தையென்றும் கைத்தொழில் வித்தை என்றும், இரு வகையுண்டு. இவற்றுள் கல்வி வித்தையைக் கற்பதில் தனதறிவை வளர்க்கும் கலை நூற்களையே கற்றல் வேண்டும். கலை நூற்கள் எவை எனில் நிகண்டு, திவாகரம், திரிக்குறள் நாலடி, பஞ்சலட்சணம் முதலியவையாம். அவைகளுக்குக் கலைநூற்கள் என்னும் பெயர் வந்த காரணம் யாதெனில், கலை என்னும் சந்திரனானது நாளுக்கு நாள் வளர்ந்து பூரணமுற்று சுகவொளி வீசுவதுபோல், இந்நூற்களைக் கற்றவன் அறிவானது வளர்ந்து உலகத்தோருக்கு நல்லவன், உபகாரியென்று வழங்குவதுடன் பிறப்பு, பிணி, மூப்புச், சாக்காடு என்னும் நான்கு வகைத் துக்கங்களும் ஒழிந்து பூரணசுகமடைவான். இத்தகையக் கலை நூற்களை விடுத்து பொய்க்கதா நூற்களைப் படித்து எங்கள் சாமிக்கு இரண்டு பெண்சாதிகளுண்டு, அவன் சாமிக்குப் பன்னீராயிரம் பெண்சாதிகளுண்டு, எங்கள் சாமிக்குப் பெண்சாதி கிடையாது, எங்கள் சாமிக்கு கலியாணங்கிடையாது, உங்கள் சாமி கலியாணமில்லாது பல ரிஷிபத்தினிகளை சேர்த்துக்கொள்ளுவார், எங்கள் சாமி வெண்ணெயைத் திருடித்தின்பதில் மிக சாமார்த்தியமுடையவர், உங்கள் சாமி புட்டுகளை ஏமாற்றித் தின்பதில் மிக்க வல்லவர், எங்கள் சாமி பெண்சாதியை ஒருவன் எடுத்துக்கொண்டு போய்விட்டான், அவனையும் அவன் சந்ததியோரையுந் தேசத்தோரையுங் கொன்றுவிட்டார். இன்னொரு சகோதரர்கள் பாகவழக்கு நேரிட்டது அவர்களுள் ஒரு பக்கஞ் சேர்ந்துகொண்டு திரளான அரசர்களையுங் குடிபடைகள் யாவரையுங் கொன்று பாழ்படுத்திவிட்டார், உங்கள்சாமி திரிபுரமெரிக்கத் திரண்ட அரக்கர்களைக் கொன்று தீரமாக நின்றார், எங்கள் சாமி கணக்கற்ற கற்புடைய மாதர்களைக் கெடுத்துவிட்டுயானொன்றும் அறியேனெனக் கற்பூரம் ஏந்திக் கொண்டார், உங்கள்சாமி இரிஷிபத்தினிகளின் கற்புநிலையைக் கெடுத்துவிட்டு கோசமற்றுப்போனார் என்னும் அசத்தியமும், அசப்பியமும், துன்மார்க்கமும், பெருகி மக்களைக் கேட்டிற்குக் கொண்டு போகும் வழியை விசாலமாகத் திறந்து உள்ள அறிவுங் கெட்டு மானி என்னும் மனிதப்பெயரற்று மிருகத்திற்கு ஒப்பாவார்கள். இதனால் மேலய நூற்கள் கலை நூற்களாகா. நாவினாற் கற்கும் வித்தை இவ்வாறிருக்கக் கையையுங் காலையும் ஓர் இயந்திரமாகக் கொண்டு செய்யும் சூத்திரத்தொழிலாம் கைத்தொழில்களில் சிறுவர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன் தேகசுத்தம், உடைசுத்தமாயபின் மரங்களைக் கொண்டேனும், இரும்புகளைக் கொண்டேனும், தராக்களைக் கொண்டேனும், பஞ்சுகளைக் கொண்டேனும் ஒவ்வோர் வித்தைகளில் அறிவைசெலுத்தி நூதனமாயக் கைதொழில்களை விருத்திச் செய்வதுடன் தேச விவசாய விருத்தியில் அறிவை செலுத்தியும் வியாபாரத்தில் அறிவை செலுத்தியும் வித்தைகளை விருத்தி செய்து தாங்கள் சுகச்சீரடைவதுடன் தங்கள் தங்கள் சந்ததிகளையும் விருத்தி செய்து தேசத்தையுஞ் சிறப்படையச் செய்யவேண்டிய வித்தியா விருத்தியில் பழகவேண்டியதே அழகாம். அங்ஙனமின்றி சிறியோர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன், தேகசுத்தஞ்செய்ய நாலுநாழிகை, உடை துவைக்க ஐந்து நாழிகை, குறுக்குப்பூச்சு பூச ரெண்டு நாழிகை, கொட்டைகழுவி கட்ட மூன்று நாழிகை, நெடுக்குப்பூச்சு பூச நாலு நாழிகை, வெங்கலசாமி கட்டை சாமிகளைக் கழுவ மூன்றுநாழிகை, அவைகள் மீது புட்பங்களிரைத்து பாட்டு மந்திரங் கூட்டு மந்திரஞ் செபிக்க நாலு நாழிகை, மணிகுலுக்கி மந்திரஞ் செபிக்க இரண்டு நாழிகை என்னும் வீண் காலங்களைப் போக்கித் தங்கள் தங்கள் அறிவை மயக்கிக் கொள்ளுவதுடன் தடிச்சோம்பேறி வித்தைகள் பெருகுமாயின் தாங்களுங்கெட்டு தங்கள் சந்ததியோருங்கெட்டு தேசசீருமற்று பிச்சை இரந்துண்பதே போதுமான வித்தையெனப் புலம்பித்திரிவதாகும். காணும் உலகத்தில் சுகச்சீர்பெரும் வாழ்க்கையையும் அறிவை வளர்க்கும் வித்தையையுங் கருதாது காணாத சாமி கொடுப்பார் சாமி கொடுப்பார் என்னுந் தடிச்சோம்பேறிகள் என்னும் இழிமக்களாகாது வித்தியாவிருத்திகளாம் மேன்மக்கள் செயலில் பழகவேண்டும். இனி புத்தியையும், அதன் விருத்தியையும் ஆலோசிப்போமாக. - 7:5; சூலை 9, 1913 - வித்தியாவிருத்தியைக் கூறியுள்ளோம். இனி புத்தியின்விருத்தியாவது உலகத்திற் காணும் பொருளிலும் தன் அநுபவத்திலுஞ் செயலிலுங் கண்ட பொருளிலும் புத்தியை விசாலப்படுத்தி மனிதர்களுக்கு உபயோகமாகும் வஸ்துக்களை உண்டுசெய்தலேயாம். புத்தியை விசாலப்படுத்தி புகைக்கப்பல் ஒன்று உண்டுசெய்தான். அதனால் அனந்த மனிதர்களுக்கு உபயோகமாவதுடன் தானுங் குபேர சம்பத்தனானான். புகைரதத்தை ஒருவன் கண்டுபிடித்தான் அதனால் அனந்த மனிதர்கள் தேசம்விட்டு தேசம் போக்கு வருத்துக்குப் பேருபகாரமாயதுடன் தானுங் குபேரசம்பத்தனானான். பொட்டகிராப் ஒருவன் கண்டுபிடித்தான், அதுவும் அவ்வகையேயாம். டெல்லகிராப் ஒருவன் கண்டு பிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். லெத்தகிராப் ஒருவன் கண்டுபிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். போனகிராப் ஒருவன் கண்டுபிடித்தான் அதுவும் அவ்வகையேயாம். மற்றும் போகத் தற்காலம் பௌன்டென் பென்னென்னும் எழுதுகுழாய் ஒன்று கண்டுபிடித்தான். அதுவோ சகல ஆபீசர்களுக்கு உபயோகமாவதுடன் தற்காலம் இருபது லட்சத்திற்கு மேற்பட்ட திரவிய வந்தனாய் இருக்கின்றான். பிரிண்டிங் பிரஸ் கண்டுபிடித்தவனும் டைப் ரைட்டிங் கண்டுபிடித்தவனும், கம்பி இல்லா டெல்லகிராப் கண்டு பிடித்தவனும் ஆகாயரதம் விடக் கண்டுபிடித்தவனும் ஆகிய இவர்களே தங்கள் தங்கள் புத்தியை விருத்திச்செய்த மேன்மக்களும் பெருஞ் சாதனத்தால் பெரிய சாதியோர்களும் ஆவார்கள். இத்தகைய மேன்மக்களாம் பிரிட்டிஷ் துரை மக்களைப் பின்பற்றி அவர்களை வணங்கி அவர்களது புத்திவழியில் தங்களது புத்தியை விசாலப்படுத்தப் பழக வேண்டும். இத்தகைய புத்தியை விசாலப்படுத்தலால் தானுந் தனது சந்ததியோரும் குபேரசம்பத்தைப் பெற்று வாழ்வதுடன் தேசமக்களுஞ் சுகச்சீர்பெற்று தேசமும் சிறப்பைப்பெறும். இவ்வகையாய புத்தியை விருத்திச் செய்யாது ஒற்றுமெக் கேட்டையும் பொறாமெயையும் பற்கடிப்பையும் விருத்திச் செய்யும் பொய்வேதங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்ப்புராணங்களையும், பொய் வேதாந்தங்களையும் உண்டு செய்துக் கொண்டு தேசமக்களையும் தேசத்தையுஞ் சீர்கெட்டச் செய்வது புத்தியின் விருத்தியாமோ. ஓர் பொய்க்கதையின் பொறாமெவிருத்தியை இவ்விடம் ஆராய்வோமாக. உலகத்தை உண்டு செய்யப்பட்ட பிரம்மா ஒருவனுண்டு. அவன் முகத்திற் பிறந்த மக்கள் சிலருண்டு. அவர்கள் சிறந்த சாதியார். அவர்கள்தான் சகல மனுக்களுக்கும் மேலானவர்கள் என்பதாயின் பிரம்மா உலத்தையே உண்டு செய்தால் அவர் முகத்திற் பிறந்த மேலோர்களென்று சொல்லிக்கொள்ளும் படியானவர்கள் உலகமக்களுக்கு உபகாரமாய நூதனப் பொருட்களை இவர்களென்ன உண்டு செய்தார்கள். பழைய துடைப்புக்கட்டுக்குமேல் நூதன துடைப்புக்கட்டையுண்டு செய்தார்களா, பழையசம்மான் குடைக்குமேல் நூதன சம்மான்குடை உண்டுசெய்தார்களா, பழைய பனையோலை விசிரிக்குமேல் வேறு விசிரியுண்டு செய்தார்களா, பழய நீரேற்றத்திற்குமேல் நூதன வேறேற்றம் உண்டு செய்தார்களா, பழைய கலப்பைக்குமேல் நூதன வேறு கலப்பை உண்டு செய்தார்களா, பழைய நூல்தரிக்குமேல் நூதன வேறுதரி உண்டுசெய்தார்களா, மனுக்கள் சுகத்திற்கும் தேசசிறப்பிற்கும் ஏதோர் நூதனப் பொருட்களையும் உண்டு செய்யாது தேசமும் தேசமக்களும் சீரழிவதற்கு புத்தியின் விருத்திக்கெட்டு சோம்பல் விருத்தியும், பொறாமெ விருத்தியும் பெருகி வித்தை புத்திகள் கெடவும், விதரணைப் பாழாகவும், முகமலர்ச்சிக் கெட்டு சுடுகாட்டு மூஞ்சுகளாகும் வழிவகைகளை உண்டு செய்துவிட்டார்கள். சுடுகாட்டு மூஞ்சு யாதென்பரேல் மயாணத்திற்பிணங்களைச் சுடுங்கால் அப்புகையாலும் அனலாலுங்கண்ணைநிமிட்டவும்வாயை சுழிக்கவும், முகந்திருப்பலுமாயிருப்பதையே சுடுகாட்டு மூஞ்சுகளென்னப்படும். சுடு காட்டில் உண்டாம் மூஞ்சுகளை தேசமெங்கும் எவ்வகையால் உண்டு செய்து விட்டார்களெனில் நூதனமாய் சாதி பேதங்களையும் சமய பேதங்களையும் உண்டு செய்துவிட்டு பிரம்மாமுகத்தினின்று பிறந்த பிராமணரென்போர் ஒருவகுப்பினராயிராது பல வகுப்பினராக ஏற்படுத்திக் கொண்டு ஒரு வகுப்பு பிராமணன் மற்றொரு வீட்டுப் பிராமணன் வீட்டிற்கு புசிப்பிற்கும் பெண் கொள்ளற்கும் ஏதுவில்லா இடங்களில் சாதி பேதத்தாலும் அவன் குறுக்குப்பூச்சுப் பாப்பான் நான்நெடுக்குப் பூச்சுப்பாப்பான், அவன் வடகலைப்பாப்பான், நான் தென்கலைப்பாப்பானென்னும் சமய பேதத்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் கண்டவுடன் புத்தியின் விருத்தியற்று பொறாமெய் விருத்தியால் இருவரும் சுடுகாட்டு மூஞ்சுகளாகி விடுகின்றார்கள். இவ்வகையாக ஒருவகைப்பாப்பானைக்காணில் மற்றொரு பாப்பான் முகச்சுளிப்புண்டாகும் பலவகுப்புப்பார்ப்பார்தோன்றி பொறாமெவிருத்தியே நாளுக்குநாள் பெருகுமாயின் புத்தியின் விருத்தி எங்ஙனம் பெருகும். குடிமிவைத்து, நூல் போட்டுக் கொண்டு நான் பிராமணன் நான் பிராமணன் என்னும் வேஷமிட்டுக்கொள்வது மிக்க எளிதாய வித்தையாயுள்ளதாலும், சோம்பேறி சீவனத்திற்குச் சொந்தமாயுள்ளதாலும் பாப்பார் கூட்டம் பெருகி புத்தியினால் உண்டாம் வித்தைகள் கெடும் வழிகளைத் திறந்து விட்டார்கள். பார்ப்பார்களின் பல வகுப்புக்கள் தோன்றி சுடுகாட்டு மூஞ்சுகள் தோன்றுகிறதேயெனப் பரிதாபப்படினும் அவர்களையே குருவென்று பின்பற்றியுள்ள நாயுடு வகையாரேனும் முகமலர்ச்சியுடன் அன்பு பாராட்டி ஒருவரையொருவர் நேசித்துக் கொள்கின்றாரா என்று ஆராயுங்கால் தெலுகுமட்டும் பேசுவதொன்றுஅன்றி அவன்வளையல் விற்கும் நாயுடு, இவன் இடைய நாயுடு, உவன் நட்டுவநாடென்னும் பலவகைப்பிரிவுகளாக ஒருநாயுடுவின் வீட்டிற்கு மற்றொரு நாயுடுபுசிப்பதற்கு ஏகாமலும் பெண் முதற்கொள்ளாமலும் இருக்கின்றார்கள். அவ்வகை மீறிநாயுடுகள் தானே யென்றெண்ணி இடையநாயுடு வளையல் நாயுடுவீட்டிற்குப் போவானாயின் சுடுகாட்டுமூஞ்சி தோன்றுவதுடன் பொறாமெயும் பெருகி விடுகின்றது. இத்தகையப் பொறாமெவிருத்தியால் புத்தியின் விருத்திக்கு ஏதும் இல்லையென்றிரஞ்சி, முதலியார்கள் வகுப்பிலேனும் முகமலர்ச்சிக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்புபாராட்டி புத்தியைப்பெருக்கி, பொறாமெயை அகற்றியுள்ளாரா என்றாராயுங்கால், நான் கொண்டைகட்டி முதலி, அவன் தோட்டக்கார முதலி, இவன் அழும்பிடைய முதலி, உவன் நட்டுவ முதலி மற்றுங் கரையாரமுதலியென வகுத்துக்கொண்டு ஒருவர் வீட்டில் ஒருவர் புசியாமலும், பெண்கொள்ளாமலும் பிரிந்தேயிருப்பதுடன் ஏதோ பெண்கொள்ள புசிக்க வந்துவிடுவார்களாயின் சுடுகாட்டு மூஞ்சுகளாகி விடுவதுடன் பொறாமையைப் பெருக்கி புத்தியின் விருத்தியற்றே இருப்பதாக விளங்குகின்றது. மற்றுமுள்ள செட்டிகளென்று பிரிந்துள்ளவர்களேனும் ஒருவருக்கொருவர் முகமலர்ச்சிகொண்டு அன்பு பாராட்டி புத்தியின் விருத்தியில் இருக்கின்றார்களா என்றாராயுங்கால், நான் நாட்டுக்கோட்டைச் செட்டி, அவன் கோமுட்டிச் செட்டி, இவன் ஊளைச் செட்டி, உவன் கரையாரச் செட்டிஎனப் பலவகையாகப்பிரிந்து கொண்டு சுடுகாட்டு மூஞ்சுகளாகவே விளங்குகின்றார்கள் இத்தகையான சாதி பேதத்தாலும் சமயபோதத்தாலும் ஒற்றுமெயற்றுப் பொறாமெவிருத்தியே மேற்கொண்டு ஒழுகுமாயின் புத்தியின்விருத்தி எங்ஙனம்பெருகும். இத்தகைய நூதன சாதிபேதத்தையும் சமய பேதத்தையும் தங்களுக்குத் தாங்களே உண்டு செய்துக்கொண்டு புத்தியின் விருத்தியற்றிருப்போர்களால் தங்களுக்கு எதிரடையாக சாதி பேதமில்லாமலும் சமயபேதமில்லாமலும் வாழ்வோர்களாகியப் பெருங்கூட்டத்தோரைப் பறையரென்றும் பஞ்சமரென்றுந் தாழ்த்தி தங்கள் வகுப்புக்குள் மாறுபட்டவர்களைக் கண்டவுடன் கால் சுடுகாட்டுமூஞ்சு, அரை சுடுகாட்டுமூஞ்சு, முக்கால் சுடுகாட்டு மூஞ்சு கொண்டுள்ளவர்கள் தங்களால் தாழ்த்தியுள்ளவர்களைக் கண்டவுடன் முழு சுடுகாட்டு மூஞ்சுகளாகிவிடுகின்றார்கள். அதனால் அவர்களது புத்தியின் விருத்தியும் பாழடைந்துபோகின்றது. நூதனசாதிபேத வேஷத்தால் பிச்சையிரந் துண்போரை பெரியசாதியோரென்றும், பூமியை உழுதுண்போரை சிறிய சாதியோரென்றும், குடிகளிடம் பொய் சொல்லியும் வஞ்சித்தும் சீவிப்போரை பெரிய சாதியோர் என்றும், தேகத்தை வருத்திக் கஷ்டப்பட்டு சீவிப்போரை சிறியசாதியோரென்றும் வகுத்துள்ளவைகளே புத்தியின் விருத்திக் கேடாக முடிந்து பொறாமெ விருத்திப் பெருகி தேசத்தையும் தேசமக்களையும் சிறப்படையாமற் செய்துவிடுகின்றது. ஆதலின் தேசமனுக்கள் யாவரும் சாதிவேஷ சமயவேஷ விருத்தியிற் பழகாமல் பிரிட்டிஷ் துரைமக்களாம் மேன்மக்களின் புத்தியை அநுசரித்து புத்தியின் விருத்தியிற் பழகுவதே அழகாம். வித்தையை ஆராய்ந்தோம் புத்தியை ஆராய்ந்தோம் இனி ஈகையை ஆராய்வோமாக. - 7:6; சூலை 18, 1913 - இனி ஈகை என்பது யாதெனில் யாதொரு தொழிலுஞ் செய்ய சக்தியற்ற ஏழைகளுக்கு அன்னம் ஈதல், பிணியுற்று மெலிந்த ஆதுலர்களுக்கு மருந்து ஈய்தல், உடையற்ற எளியோருக்கு உடைகள் ஈய்தல் இல்லமற்ற ஏவலருக்கு இடமொன்று, ஈதல் உண்ண சோறற்று மடிவோருக்கு அன்னம் ஈதலாகிய செயல்களுக்கே ஈகையென்று பெயர். இத்தகைய ஈகை குணங்களில் ஒன்றேனும் ஓர்மனிதனுக்கு இல்லாவிடில் அவன் மனுபிறவியாகான் என்பது கன்மபாகை விதியாம். ஆதலின் மனிதனாகத் தோன்றினோனுக்கு ஈகையின் குணம் இருந்தே தீர வேண்டும். இதற்குப் பகரமாய் நம்மெ யாண்டுவரும் பிரிட்டிஷ் ஆட்சியின் துரைமக்களால் செய்துவரும் தன்ம வைத்தியசாலைகளும் பஞ்சகாலத்தில் தன்ம அன்னசாலைகளும் குடிகளின் இடுக்கங்களை நீக்கும் காவலாளர் கட்டங்களும் வைத்துக் காத்துவருவதே போதுஞ் சான்றாம். இவைகளை அநுசரித்தே பூர்வபௌத்தர்கள் கோதானம், பூதானம், வஸ்திரதானம், அன்னதானம் மற்றும் உண்டானவைகளில் நிதானமே பெரிதாகக் கொண்டு சங்கஞ்சேர்ந்து சமண நிலையுற்று புலன் தென்பட்போர்களாம் தென்புலத்தோர்க்கே முதலாவது ஈகையாம் தானமளித்து மற்றும் ஏழைகளை பேதமின்றி காத்து ரட்சித்துவரும் ஈகையின் குணத்தையே மிக்க உறுதியாகப்பற்றி தானத்தைப் பரவச் செய்துவந்தார்கள். அத்தானமாம் வித்தியா தானம் கைத்தொழில்தானம், ஞானதானம், நீதியின் தானம், பெற்ற மக்கள் யாவரும் குருவிசுவாசம், இராஜவிசுவாசப்பயனால் மக்கள் விசுவாச ஒற்றுமெயுற்று ஒருவர் கற்றக் கல்வியை மற்றொருவருக்குக் கற்பித்தலும், ஒருவர் கற்ற வித்தையை மற்றொருவருக்குக் காட்டுவித்தலும், ஒருவர்கற்ற ஞானத்தை மற்றவருக்குப் போதித்தாலும், ஒருவர்கற்ற நீதியை மற்றவரும் பரிபாலிக்கச்செய்தலுமாய ஈகையின் குணத்தால் சகல மக்களும் விவேகவிருத்திப்பெற்று தேசம் சீரும் சிறப்பும் பெற்றிலங்கியது. அத்தகைய ஈகையின் பெயரும் அதன் செயலுமற்ற தற்கால நூதன சாதிகள் வேஷத்தாலும், நூதன மதங்களின் மாறுபாடாலும் ஒற்றுமெயென்னும் பெயரற்று, வேற்றுமெயென்னும் பிரிவுற்று, ஒரு சாதியோனைக்கண்டால் மற்றொரு சாதியான் சீறுதலும், ஒருமதத்தானைக் கண்டால் மற்றொருமதத்தான் முகம் மாறுதலுமாகியச் செயல்களுண்டாகி யாவருக்கு ஈதல் வேண்டும், யாவருக்கு ஈதலாகாது என்னும் உணர்ச்சியற்று தானங்களின் நிலைகளையே மறந்து கருணையென்பதற்று இன்னசாதியோனுக்கு அன்னமிடப்படாது இனிய சாதிக்கே அன்னமிட வேண்டுமென்னும் பொய்ப் போதனைகளை நம்பிக்கொண்டு ஏதுமற்ற ஏழைகளுக்கு அன்னமிடாது பொருள்பெற்ற தடிச்சோம்பேறிக்கே அன்னமிட்டுக் கொழுக்கவைக்கின்றபடியால் தேசமும் சிறப்பழிந்து தேசமக்களும் சீர்குலைந்துபோவதற்கு ஏதுவாகிவிட்டது. ஆதலின் தேசமக்கள் யாவரும் மனிதனை மனிதனாகப் பாவித்து ஈகையைப் பொதுநிலையிலுன்னி சகலமக்களும் முன்னேறவேண்டுமென்னுங் கருணையை வளர்ப்பார்களாயின் வித்தை, புத்தி, ஈகை, மூன்றும் சிறப்புற்று தேசங் கீர்த்தி பெறுவதுடன் தேசமக்களும் சுகச்சீர் பெறுவார்கள். இவ்வீகையின் செயலை தொடர்ந்து பழகற்கு பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்கட் செயல்களையே பின்பற்றிவருவதாயின் ஈகையின் பெயரும் அதன் செயலும் அதனாலடையும் பயனும் வெள்ளிடைமலைபோல் விளங்கும். இவற்றை ஆய்ந்துணராது பிரம்மா ஒருவனிருந்தானென்னில் அவன் இப்போது உள்ளானோ வென்னும் எதிர்வினாக் கடாவாது அதனையேற்பது இகழ்ச்சி, பிரம்மாமுகத்தில் ஒருவன் பிறந்தானென்னில் அவனிப்போது எம்முகத்தில் பிறக்கின்றானென்னும் எதிர்வினாக்கடாவாது அதனை ஏற்பது இகழ்ச்சி, அவை போல் ஏதொரு தொழிலுமற்று உலாவுந்தடிச் சோம்பேறிகளுக்கு மட்டிலும் அன்னமிட வேண்டும் என்றபோது அதனால் யாதுபயனென்னும் எதிர்வினாக் கடாவாது ஏற்பது இகழ்ச்சியாதலின் ஈகையின் செயலை ஆய்ந்து செய்வோர் இனிய சுகமடைவார்களென்பது திண்ணம். வித்தை, புத்தி, ஈகை மூன்றையும் ஆராய்ந்தோம், இனி சன்மார்க்கத்தை ஆராய்வோமாக. - 7:7; சூலை 23, 1913 - சன்மார்க்கம் என்பது நல்வழி என்னப்படும். அதாவது சகல விஷயங்களையும் நிதானித்துத் தனது காரியாதிகளை நடத்துவதில் தான் சுகமடையச்செய்யும் செயல்களில் ஏனையோரும் சுகமடையக்கருதி செய்தல் வேண்டும். அவ்வகை ஏனையோர் சுகத்தைக் கருதி செய்தலே தன் சுகத்திற்கு பின்னமின்றி எடுத்த காரியங்கைகூடும். தான் சுகமான புசிப்பைப் புசிக்குங்கால் ஏனையோரும் சுகபுசிப்பைப் புசிக்கவேண்டும் என்னும் அன்பை பெருக்கல் வேண்டும், தான் சுத்தமான உடையை அணியுங்கால் ஏனையோரும் சுத்த உடையை அணியவேண்டும் என்னும் அவாவை வளர்த்தல் வேண்டும். சருவசீவர்களுக்கும் ஓர் துன்பமணுகாமற் கார்த்து சீவகாருண்யத்தை நிலைபடுத்தல்வேண்டும். தான் கற்ற வித்தைகளை ஏனையோருக்குக் கற்பித்து அவர்களை சோம்பலின்றிய சூஸ்த்திரர்களாக்கவேண்டும். தாங்கள் கற்ற வியாபாரவிருத்தியை ஏனையோருக்குக் கற்பித்து வைசியர்களாக்கவேண்டும். தனக்குப் பத்துரூபா சம்பாதனைக் கிடைக்குமாயின் அதைக்கொண்டே போதுமான திருப்தியுடன் சீவியத்தைக் கார்த்துக்கொள்ளல் வேண்டும். மதுபான மென்னும் லாகிரியானது தனக்குக் கேட்டை உண்டு செய்யுமெனக் கண்டவுடன் ஏனையோரும் அதனைப் பருகுதலைத் தடுத்தல் வேண்டும். விபச்சாரத்தினால் உண்டாங் கேடுகளைக் கண்டு தடுப்பதுடன் ஏனையோர்களையும் அவ்வழி செல்லாமல் தடுத்தல் வேண்டும். களவினால் உண்டாம் கேடுகளையுந் துக்கவிருத்திகளையுங் கண்டு அவைகளைத் தடுப்பதுடன் ஏனையோர்களையும் அக்களவுசெயலில் செல்லவிடாமல் தடுத்தல் வேண்டும். பொய்யிலுண்டாங் கேடுகளை உணர்ந்து பொய் பேசுவதை அகற்றுவதுடன் ஏனையோரையும் பொய்பேசவிடாமல் தடுத்து காத்தல் வேண்டும். சீவராசிகளை வதைப்பதினால் அவைகள் படுந்துன்பங் கண்ணாரக் கண்டும் மனந்தளராது அவைகளின் மாமிஷங்களைப் புசித்தலை அகற்றுவதுடன் ஏனையோரையும் அத்தகைய சீவஹிம்சை செய்யாமலும் மாமிஷங்களைப் புசியாமலுந் தடுத்தல் வேண்டும். இத்தியாதி நல்வழிகளாம் சன்மார்க்கத்திற் பழகி மனிதனானவன் தேகசுத்தம், வாக்கு சுத்தம், மனோசுத்தமடைந்தவனே மேன்மகன் என்றும் உயர்ந்த சாதியினன் என்றும் தேவன் என்றும் கொண்டாடப்படுவான். இதுவே சன்மார்க்கமும் சன்மார்க்கத்திலடையும் பயனும் என்னப்படும். இச்சன்மார்க்கமே உலகவாழ்க்கையில் சுகத்தைத் தருவதுடன் நித்தியானந்தத்தைப் பெருக்கும் நிருவாணத்திற்குக் கொண்டுபோம் வழியாம். இவற்றிற்பழகாது, பொய்ச்சாதி பொய் மதங்களை ஏற்படுத்திக்கொண்டு மனிதனை மனிதனாகப் பாவிக்காது அவனைத்தாழ்த்தி மனங்குன்றச்செய்து சீவகாருண்யம் அற்றிருப்பது சன்மார்க்கத்திற்கு எதிரடையாய துன்மார்க்கம். ஒருகுடிபிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பது துன்மார்க்கம். மனதாரப் பொய்யைச்சொல்லி பொருள்பறிப்பது துன்மார்க்கம். தாங்களே ககம்பெற வேண்டும் ஏனையோர் சுகம்பெறலாகாதென்று முறுமுறுத்தல் துன்மார்க்கம். தீட்டியமரத்திற் கூர்பார்ப்பதுபோல் தங்களைக் கல்வியிலும் உத்தியோகத்திலும் சீர்பெறச் செய்துவைத்த இராஜாங்கத்தையேனும் மக்களையேனுங் கெடுக்க முயல்வது துன்மார்க்கம். சுவாமிக்கு, சுவாமிக்கென்று பொய்யைச்சொல்லி பொருள்பறித்து சீவிப்பது துன்மார்க்கம் மதச்சண்டைகளை மூட்டிவிட்டு அதனாற் பொருளை சம்பாதிப்பது துன்மார்க்கம். சுவாமிகளுக்கும் லஞ்சம், குருக்களுக்கும் லஞ்சம், உத்யோகத்திலும் லஞ்சம், வீடு வாசலிலும் லஞ்சம், கூலியிலும் லஞ்சம், கும்பாபிஷேகத்திற்கும் லஞ்சமென ஏழைகளை ஏய்த்தும் பயமுறுத்தியும் பசப்பியும் பரிதானமென்னும் இலஞ்சம் வாங்குவது துன்மார்க்கம். பொய்சாதி வேஷத்தாலும், பொய்மதக் கோஷத்தாலும் பொய்யிற்கு பொய்யை முட்டுக்கொடுத்தே திரிவது துன்மார்க்கம். அன்னியனுடைய பொருளை அஞ்சாமல் எடுப்பதுவுங் களவு செய்வதுவுந் துன்மார்க்கம். சூஸ்திரத் தொழில்கள் யாவையுங் கைவிடுத்து சோம்பேறி தடியர்களாக்கி வைக்கும் பொய் சாஸ்திரங்களைப் படித்துத் திரிவதுந் துன்மார்க்கம், அன்னியர் தாரங்களை அஞ்சாமல் இச்சிப்பது துன்மார்க்கம். இத்தகையாக அன்னிய மக்களுக் கடாத செயல்கள் யாவையுஞ்செய்து தேசமக்களையுஞ் சீரழித்து தேசத்தையும் பாழ்படுத்தக்கூடியச் செயல்கள் யாவோ அவைகள் யாவையுந் துன்மார்க்கமென்றே சொல்லப்படும். இத்தகைய துன்மார்க்கச்செயல்கள் யாவையும் ஒழித்து நன்மார்க்கத்தில் பழகி சுகச்சீர் பெற வேண்டுமாயின் நம்மெயாண்டுவரும் பிரிட்டிஷ் துரைமக்களின் நன்மார்க்கங்களை ஏற்று மற்றும் நமது தேசத்தை சிறப்படையச்செய்யும் நன்மார்க்கங்கள் எவைகளோ அவைகளின்படி நடந்து சீர்பெறுவதே மானுஷீக தன்மமாகும். இவ்வகையாய வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமடையாதோர் மநுடரென்னும் பெயரற்று மிருகத்திற்கு ஒப்பானவர்களென்றே மதிக்கப்படுவார்கள். ஆதலின் மனிதனென்னும் வகுப்பிற் சேர்ந்தோனுக்கு வித்தையும் புத்தியும் ஈகையும் சன்மார்க்கமுமாகிய நான்கிலும் பழக வேண்டியதே அழகாம். - 7:8; சூலை 30, 1913 - 48. இந்திரர் தேச முற்கால சிறப்பும் தற்கால வெறுப்பும் இந்திரர் என்னும் புத்தபிரானது சத்திய தன்மம் வட இந்தியம் தென்னிந்தியமெங்கும் பரவியிருந்த காலத்தில் இந்தியர் என்னும் பௌத்தர்கள் யாவரும் குருவிசுவாசம் இராஜவிசுவாசம் மக்கள் விசுவாசம் மூன்றிலும் நிலைத்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களாகிய நான்கையுங் கையாடி வந்தவற்றுள் ஜெகத்குருவாகிய புத்தரை விசுவாசித்து நின்றபடியால் அவரால் போதித்துள்ள சத்திய தன்மத்தைப் பின்பற்றி நீதிநெறியிலும் ஒழுக்கத்திலும் பிறழாது மாதம் மும்மாரி பெய்து நீர்வளம் நிலவளமோங்கி பயிறுகள் விருத்தி பெற்று மக்கள் சுகமுற்று அரசர்கள் ஆனந்த சுகத்திலிருந்தார்கள். வட இந்திய, தென்னிந்திய மக்கள் இராஜவிசுவாசத்திலிருந்து அரசர்களுக்கு ஓர் துன்பம் வருமாயின் அத்துன்பம் தங்களுக்கு வந்தது போல் கருதியும், அரசருக்கு ஓர் பிராண ஆபத்து நேரிடுமாயின் தங்கள் பிராணனை முன்பு கொடுத்தும், சுகநிலை தேடுவார்கள். காரணமோ வென்னில் குடிகள் யாவரும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களாகிய நற்சிந்தையிலேயே நிற்பவர்களாதலால் தங்களுக்கு அன்னிய நாட்டரசர் இடுக்கம் வாராமலும் காட்டுமிருகங்களின் துன்பம் அணுகாமலும் கள்ளர்களின் பயமுண்டாகாமலுங் காத்து ரட்சித்து வருவதினாலேயாம். இராஜ விசுவாசமில்லாமற் போமாயின் தங்களது வித்தை புத்திஈகை சன்மார்க்கமாகிய நான்குவகை நற்செயல்களுக்குங் கேடுண்டாகிப்போகுமென்பதேயாம். வடயிந்தியர் தென்னிந்தியர் யாவரும் மக்கள் விசுவாசத்திலேயே மிக்க நிலைத்திருந்தார்கள். அதாவது அரசருக்குள் சீனராசன் மகளை வங்களராசன் கட்டுகிறதும், வங்கள ராசன் மகளை திராவிடராசன் கட்டுகிறதும், திராவிடராசன் மகளை சிங்கள ராஜன் கட்டுகிறதுமாகிய சாதிபேதக்கேடு மதபேதக்கேடுகள் இன்றி வாழ்ந்துவந்த ஒற்றுமையால் அரசர் எவ்வெழியோ குடிகளும் அவ்வழியென்னும் முது மொழிக்கிணங்கக் குடிகளும் சாதிகேடு மதகேடுகள் என்பதின்றி அவரவர்கள் அந்தஸ்திற்குத் தக்கவாறும் வித்தைக்குத் தக்கவாறும் ஒற்றுமெக்கேடின்றி ஒருவர் வித்தையை மற்றவருக்குக் கற்பிக்கவும் ஒருவருக்குள்ள பொருளை மற்றவருக்கு உதவி செய்யவும் பயனைக் கருதாது ஈகையில் நிலைத்து சகல மக்களும் தங்களைப் போல் சுகம்பெற்று வாழ்கவேண்டுமென்னும் கருணையும் அன்பும் பெருக வாழ்ந்து வந்தார்கள். அதனால் இந்தியமக்கள் யாவருஞ் சுகச்சீர் பெற்று வித்தியாவிருத்தியிலும் விவசாய விருத்தியிலுங் கண்ணோக்கமுடையவர்களாய் ஆனந்தத்திலிருந்தார்கள். அவ்வழிகொண்டு சகல வித்தைகளும் பெருகி மக்களும் சுகமுற்று தேசமும் சிறப்புற்றிருந்தபடியால் அக்காலத்திய அன்னியதேச விவேகிகள் யாவரும் இந்தியதேசம் வந்து அவரவர்களுக்கு வேண்டிய வித்தைகளைக் கற்றுக்கொண்டு போனார்கள் என்பதற்குப் போதிய சரித்திர ஆதாரங்களும் உண்டு. இவற்றுள் ஒருமனிதனின் பூர்வகுல சிறப்பை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவனுக்குள்ள நல்லொழுக்கம் நன்னீதி, நல்வாழ்க்கை சீவகாருண்யம் அன்பு குலாபிமானம் முன்னேற்றம் முதலிய செயல்களால் அறிந்துக் கொள்ளலாம். அதுபோல் ஒரு தேசத்தின் பூர்வ சிறப்பை அறிந்துக்கொள்ளவேண்டுமாயின் பூர்வக் கட்டிடங்களினாலும் பூர்வ முதநூல், வழிநூல், சார்புநூற்களாலும் எளிதில் அறிந்துக் கொள்ளலாம். அதுகண்டு கருணை தங்கிய ராஜாங்கத்தார் பூர்வ தட்டிட பரிசோதகர்களைக்கொண்டு சோதிப்பவற்றுள் சிற்பா சாஸ்திரிகளின் வல்லபமும் புத்தியின் விசாலமும் ஒற்றுமெயின் செயலும் எளிதில் விளங்கி வருகின்றது. அவற்றிற்குப் பகரமாய் பௌத்த சித்தர்களும் ஞானிகளும் வித்துவான்களும் வரைந்துள்ள வைத்திய நூற்களும் ஞான நூற்களும் நீதி நூற்களும் கலை நூற்களுமே போதுஞ் சான்றாம். இத்தியாதி வித்தையும் புத்தியும் ஈகையும் சன்மார்க்கமும் ஒற்றுமெயும் நிறைந்திருந்த இந்திரர் தேசத்தில் சோம்பலும் பொறாமெயுமே ஓர் உருவாகவும் பொய்யையே ஒரு வித்தையாகவும் குடிகெடுப்பையே ஓர் புத்தியாகவும் வஞ்சினத்தையே ஓர் ஈகையாகவும், ஒரு குடி பிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பதே சன்மார்க்கமாகவுங் கொண்டொழுகும் வஞ்சினக் கூட்டத்தோர் வந்து தோன்றி தேசத்தோரிடம் பிச்சையிறந்துண்டே சீவனைக் காப்பாற்றிக் கொண்டதன்றி தேசத்தோர் செய் நன்றியை மறந்து தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய பொய் வேதங்களையும் பொய்ப் புராணங்களையும், பொய் மதங்களையும், பொய் தேவதைகளையும், பொய் சாதிகளையும் ஏற்படுத்தி அதில் தங்களை உயர்ந்த சாதிகள் என வகுத்துக் கொண்டு தங்களது பொய்யாயச் செயல்கள் யாவற்றிற்கும் எதிரடையாயிருந்து கண்டித்தும் அடித்து துரத்தியும் வந்த விவேகிகளாய மேன்மக்கள் யாவரையும் தாழ்ந்த சாதியாக வகுத்து அவர்களை எவ்வகையாலுந் தலையெடுக்க விடாமற் செய்துவந்தபடியால் தேசத்தின் ஞான பீடங்கள் அழிந்தும் வித்தியா பீடங்கள் ஒடிங்கியும் விவசாயத் தொழில்கள் நாசமடைந்தும் கருணை அன்பென்னும் சன்மார்க்கங்கள் ஒழிந்து ஒற்றுமெய்கேடுற்று தேச சிறப்புக்குன்றியும் மக்களது விவேக விருத்திக்கெட்டு பாழடைந்துகொண்டே வந்தது. அத்தகைய சீர்கேட்டிலேயே இதுகாருமிருக்குமாயின் சகல மக்களுக்குமுள்ள வித்தைகளுமற்று விதரணைகளுமற்று மக்கள் சீரழிவதுடன் தேசமும் சிறப்பழிந்து நாசமுற்றே நிற்கும். ஏதோ இவ்விந்திர தேசத்தோரின் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி தேச சிறப்பும் மக்கள் சுகமும் பெறும்படியான வழிவகைகளுண்டாகிக் கொண்டே வருகின்றது. இது காலத்தில் பூர்வ இந்தியர்கள் யாவரும் ஒருவர் சொன்னதை நம்பித்திரியும் அஞ்ஞானத்தை ஒழித்து சுயக்கியானத்தில் நிலைத்து பிரிட்டிஷ் ஆட்சியே சகல அதிகாரங்களிலும் நின்று ஆண்டுவரவேண்டும் என்றாசித்து அவர்களே நம்மெக் காத்து ரட்சிக்கும் அரசர்களென விசுவாசித்துத் தங்கள் தங்கள் காரியாதிகளில் முன்னேறும் வழிவகையைத் தேடுவார்களாயின் பூர்வ இந்திய தேசம் இந்திரர் லோகமாகவே விளங்கும், இந்தியர்கள் யாவரும் சுகச்சீர் பெறுவார்கள். அங்ஙனமின்றி வஞ்சகர்கள் வார்த்தைகளை நம்பி ராஜதுரோக சிந்தையை வளர்ப்பார்களாயின் இப்போது நேர்ந்துவரும் சுகச்சீர்களுங் கெட்டுப் பாழடைய வேண்டியதேயாம், நம்புங்கள், நம்புங்கள். - 7:19; அக்டோபர் 15, 1913 - 49. ஓர் மனிதன் தான் சுகம்பெற வேண்டுமாயின் பிறர் சுகத்தை முன்பு கருதல் வேண்டும் ஓர் மனிதன் தம்மெப்போன்ற மனிதனை மனிதனாக பாவிக்காதவன் மனிதன் என்றெண்ணப்படமாட்டான். அவனை மிருகசீவர்களோடு ஒப்பினும் பொருந்தாவாம். எங்ஙனமென்பரேல் மாட்டினது கூட்டங்களில் சிவப்பு மாடேனும் கறுப்பு மாடேனும் வெளுப்பு மாடேனும் ஒன்றாகப் பொருந்தி வாழ்குமேயன்றி அவைகளிலொன்று போய் யானைக்கூட்டங்களிலேனும் குதிரைக் கூட்டங்களிலேனும் கலவாவாம். ஆதலின் மனித கூட்டங்களை மனிதர்களாக பாவிக்காதவன் மிருகத்தினுந் தாட்சியாய மிருகக் கூட்டமென்றே ஒப்பிடலாகும். அத்தகையக் கூட்டத்தோர் வாழும் தேசத்தில் விவசாய விருத்தி பெறுமோ, வித்தைகள் விருத்திபெறுமோ, நாகரீகம் விருத்தி பெறுமோ, சகல மனுக்களும் சீர்பெறுவார்களோ, தேசம் சிறப்படையுமோ, அவர்களெடுக்கும் முயற்சிகள் யாவும் முட்டின்றி முடியுமோ, ஒருக்காலும் ஆகாவாம். மனிதர்களை மனிதர்களாக பாவிக்காதவர்களும் கருணை என்பதே கனவிலுமில்லாதவர்களும் அன்பு என்பதே ஜென்மத்திலில்லாதவர்களும் ஆதரிப்பு என்பதே சாதனத்திலில்லாதவர்களுமாகிய மனுக்கள் எடுக்கும் முயற்சியும் தொடுக்கும் வேலையும் முடிவதுபோல் தோன்றி, உள்ளதும் நாசமடைந்து போமேயன்றி சுகவிருத்தியைக் கொடுக்காதென்பது சத்தியம், சத்தியமேயாம். இதன் சுருக்கம் அறிந்த இத்தேசத்திய பூர்வ பௌத்தர்கள் நீதியையும் நெறியையுங் கருணையுமே பெருக்கி சருவ சீவர்களின் மீதும் அன்பு பாராட்டி வந்ததனால் மாதம் மும்மாரி பெய்யவும் விவசாய விருத்திகள் பெறவும் வித்தியா விருத்திகள் அதிகரிக்கவும் மநுக்கள் யாவரும் சுகசீவிகளாக வாழ்கவும் நாடு நகரமென்னும் பெயரால் தேசஞ் சிறப்படையவும் அரசர்கள் ஆனந்த வாழ்க்கைப் பெறவுமாயிருந்தது. அத்தகைய நீதியென்பதும் அற்று நெறியென்பதும் தவறி கருணையென்னும் மொழியே மறைந்தும் சீவகாருண்யமென்னும் செயலே அற்றும் பொய் பொறாமெ வஞ்சினஞ் சூது குடிகெடுப்பு முதலியத் தீயச் செயல்களே அதிகரித்து விட்டபடியால் பஞ்சமும் பெருவாரி நோய்களுந் தோன்றி மநுமக்களும் மாடு கன்றுகளும் சுகக்கேடுற்றுவருவதே போதுஞ் சான்றாம். இல்லை, தேசமெங்கும் சிறப்புற்று மக்களும் சிறப்படைந்திருக்கின்றார்கள் என்று கூறுவோரும் உண்டு. அத்தகைய சிறப்புகள் யாவும் தற்கால மநுமக்கள் கொண்டாடும் தெய்வச் செயல்களும் அன்று அவர்கள் செயல்களும் அன்றாம். “நல்லாரொருவருளரேல் அவர்பொருட்டெல்லோர்க்கும் பெய்யுமழை” என்னு முதுமொழிபோல் நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ராஜரீக துரைக்களாம் சாமிகளின் செயல்களாலேயாம் அவர்களுக்குள்ள குணமும் செயலும் முயற்சியும் இத்தேசத்தோருக்கும் இருக்குமாயின் தேசமும் தேச மக்களும் ஆனந்த சுகச்சிரீலிருப்பார்களன்றோ. பிரிட்டிஷ் துரை மக்கள் சாமிகளால் ஏற்படுத்தியுள்ள மில்ஸ் முதலிய இயந்திர சாலைகளும், ஷாப்புகளும், அவுஸ்களும், கப்பல் துறைகளும், இரயில்வே துறைகளும், அச்சியந்திரசாலைகளும், கோர்ட்டுகளுங் கொத்தலங்களும் இல்லாமற் போய்விடுமாயின் நான்குபடி அரிசி விற்பனையில் தேச மக்கள் யாவரும் நாசமுற்றே போயிருப்பார்களென்பது. திண்ணம் திண்ணமாமன்றோ. இஃது அநுபவமுங் காட்சியுமன்றோ. ஆதலின் ஓர் மனிதன் சுகச்சீர் பெற வேண்டுமாயின் அவன் பிறர் சுகத்தை கருதல் வேண்டும். எவ்வகையாலென்னில் வண்டியேறி சுகமனுபவிக்க வேண்டுமாயின் ஓர் மாடையேனும் குதிரையையேனும் தேடல் வேண்டும். அவை வசதியாக வீற்றிருக்கக் கொட்டகையேனும் லயமேனும் நியமித்தல் வேண்டும் அவைகள் சீவிக்க ஆகாரத்தைக் காலமறிந்து ஊட்டி வளர்த்தல் வேண்டும். அப்போதே வண்டியேறுஞ் சுகத்தை இவனனுபவிக்கக்கூடும். அங்ஙனமாய மாட்டிற்குக் கொட்டகையின்றியுங் காலப்புசிப்பின்றியும் வண்டிகட்டி சுகமனுபவிக்க வேண்டுமாயின் நடுவழியில் மாடு விழுந்து ஏறிவந்த வண்டியை இவனே இழுத்துச் செல்லல்வேண்டும் அதுபோலவே சகல வித்தைகளிலும் சகல விவசாயங்களிலும் தான் சுகம்பெற வேண்டுமென்று கருதுகிறவன் முதலாகப் பிறர் சுகத்தைக் கருதுவானாயின் அவன் கருதுஞ் சுகந்தானே கைக்கூடும். பிறர் சுகத்தைக் கருதாதவன் தன் சுகமடையமாட்டான். அவைபோல் பிறர்களது சுகத்தை நாடாது அவர்களை கெட்டழிக்க முயலுவோர் ஒருவர் கெடுப்பாரின்றி தாங்களே கெட்டழிவார்களென்பது நிலவரமேயாகும். இத்தகைய நீதிநெறி ஒழுக்கங்களை நோக்காது தங்கள் குடி ஒன்று பிழைக்க நூறு குடிகளை கெடுத்து பாழ்படுத்தும் சில மாந்தர் ஏதோ தற்காலம் நம்முடைய மித்திரபேதச் செயலால் முன்னேறிவிட்டோம், இனி உள்ளவர்களையும் பாழ்படுத்தி விட்டால் இன்னும் மேலாய சுகத்தையடையலாம் என்று எண்ணித் திரிகின்றார்கள். அவ்வளவும் கேட்டிற்கே விதை போடுகின்றார்களென்பது முடிவாம். - 7:34; சனவரி 28, 1914 - 50. இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிகளாலும் மதங்களாலும் மநுக்களுக்கு சீர்திருத்த சுகம் ஏதேனும் உண்டோ ஏதுங்கிடையாவாம், சீர்கேடும் அசுகமும் என்றே கூறல் வேண்டும். தற்காலமுள்ள நாகரீகமும் சுகமும் எவற்றால் உண்டாயது என்னில் நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ராஜரீகத்தின் செயல்களினாலேயாம். நூதனமாய பெரிய சாதியென்போர் பெரிய பெரிய மாடமாளிகைகள் கட்டி வாழ்வதும் பிரிட்டிஷ் அருளேயாம். பெரிய சாதியென்போர் வண்டி குதிரைகள் ஏறிவுலாவுவதும் பிரிட்டிஷ் அருளேயாம். நாகரீகமாய உடைகள் தரித்து வீதி உலாவுவதும் பிரிட்டிஷ் அருளேயாம். குல்லாக்களிட்டு மூக்குக்கண்ணாடி பூண்டு கையில் தடி கொண்டு உலாவுவதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். கம்பஞ்சோறு சோளச் சோறு தின்போனல்லாம் நெல்லஞ்சோறு தின்ன நேர்ந்ததெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். பலவகை துன்னாற்றமடைந்துள்ள குட்டை நீர் குளத்து நீரைக் குடித்திருந்தோரெல்லாம் சுத்தநீரை மொண்டு குடிக்க நேர்ந்ததும் பிரிட்டிஷ் அருளேயாம். அவரவர்கள் சுயபாஷைகளையே சரிவரக்கற்காதவர்களுக்கெல்லாம் பலபாஷைகளையும் நன்கு வாசித்து சங்கங்களிலஞ்சாது பேசச்செய்வதும் பிரிட்டிஷ் அருளேயாம். பலவகை வியாதிகளால் பீடிக்கப்பட்டும் காலுடைந்து கையுடைந்தும் அங்கங்கு பாழடைவோரல்லவரையுங் கொண்டுவந்து சுகமளித்தாதரிப்பதும் பிரிட்டிஷ் அருளேயாம். கருப்புமணி கழுத்தில் அணைந்தோரை கண்டசரம் காசிமாலை அணையவைத்து வருவதும் (காஜில்போ) என்னுங் கறுப்பு வளையல்களைக் கையிலிட்டிருந்தோரெல்லாம் பொன்காப்பு கொலுசுகளணிந்து வருவதும் பிரிட்டிஷ் அருளேயாம். மண்கிண்ணியில் சோறும் மட்கலையத்தில் நீரும் அருந்தினோரெல்லாம் வெள்ளிக்கிண்ணியில் சோறும் வெள்ளி பாத்திரத்தில் நீரும் அருந்தவைத்து வருவதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம், காடாசீலை வெள்ளை சேலைகளைக் கட்டித் திரிந்தோரெல்லாம் காசிச்சீலை காம்பரச் சீலைக் கட்டும்படி செய்துவருதெல்லாம் பிரிட்டிஷ் அருளேயாம். இத்தியாதி மேடமாளிகைகளையுங் கூட கோபுரங்களையும் பொன்னாணயம் வெள்ளி நாணயம் பொன்னகைகள் வெள்ளி நகைகள் பட்டு வஸ்திரம் சரிகை வஸ்திரம் யாவையும் பயமின்றி வைத்துக்கொண்டு சுகமாய் அநுபவித்து வருவதற்குக் கள்ளர் பயமின்றி காப்பாற்றி வருவதும் பிரிட்டிஷ் அருளேயாம். நூதனமதக் கோவில்களுக்கோ எட்டு நாளைய உற்சவம், பத்துநாளய உற்சவம், யானை ஏற்ற உற்சவம், குதிரை ஏற்ற உற்சவம், ரத உற்சவம், காளஸ்திரி உற்சவமென்னும் போக்குவருத்துக்கும் அதனதன் செலவுகளுக்கும் பீடமாகவும் ஆதரவாகவும் உதவியாகவும் நின்று விளங்குவதும் பிரிட்டிஷ் அருளேயாம். சாமிகளுக்குப் பாலபிஷேகஞ் செய்வதும், அன்னாபிஷேகஞ் செய்வதும், பஞ்சாமுர்தம் பெய்வதும், வடையபிஷேகஞ் செய்வதும், சுண்டலபிஷேகஞ் செய்வதும் இவைகள் யாவையும் சேர்த்துப்பார்த்து உருண்டை பிடித்து பாகம் போட்டுண்பதுமாகிய செயல்கள் யாவற்றின் பணவிருத்திக்கே ஆதாரபீடமாக விளங்குவதும் பிரிட்டிஷ் அருளேயாம். ஈதன்றி நூதனமாயப் பெரிய பெரிய சாதிவேஷக்காரராலும் பெரிய பெரிய மதக்கோஷக்காரராலும் இத்தேசத்திற்கு யாதாமோர் சீர்திருத்தமேனும் சுகாதாரமேனுங் கிடையாதென்றே துணிந்து கூறுவோம். நூதன சாதித்தலைவர்களால் இத்தேசத் தோருக்குண்டாய கேடுபாடுகள் யாதென்னிலோ, சகல பாஷைக்காரரும் ஒற்றுமெyற்றும் அன்புபாராட்டியும் சுகசீவிகளாக வாழ்ந்துவந்தவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும் அன்புகெட்டும் அவன் பெரிய சாதி இவன் சின்ன சாதியென்னும் மானுஷீகச் செயலற்றும் பொறாமெயுற்றும் ஒருவனைக்கண்டால் மற்றொருவன் சீறிச் சினந்துக் கடிக்குஞ் செயலே விருத்தி பெற்று வந்தபடியால் ஒருவர் கற்றுள்ள வித்தைகளை மற்றவருக்குக் கற்பியாமலும் ஒருவர் கற்றுள்ள கல்வியை மற்றவருக்கு கற்பியாமலும் ஒருவர் கற்றுள்ள விவசாயத்தை மற்றவருணர்ந்து செய்யாமலும் பாழடையச்செய்ததே சாதி வேஷங்களின் பயனாம் நூதன மதங்களின் கேடுபாடுகளோ வென்னின் பாரதத்தைப் பரக்கப்படித்து துரோபதைக்கு கலியாணங் கட்டிவிடுவதே கல்வி விருத்தியென்றெண்ணி படிப்போருஞ் சோம்பேறி, கேட்போருஞ் சோம்பேறி யேங்கித்திரிவதோர் பயன். இராமாயணத்தைச் சிறக்கப் படித்து சீதைக்கும் ராமருக்குங் கலியாணங் கட்டிவிடுவதே வித்தியாவிருத்தியென்றெண்ணி படிப்போருஞ் சோம்பேறி கேட்போருஞ் சோம்பேறிக் கெட்டலைவதோர் பயன். பெரிய புராணத்தைப் பெருக்கப்படித்து முள்ளுச்செடிக்கு மோட்சங் கொடுப்பதையும் கழுதைக்கு மோட்சங்கொடுப்பதையும் உறுக்கக் கேட்டு ஆனந்திப்பதே விவசாய விருத்திபோலெண்ணி படிப்போருஞ் சோம்பேறி கேட்போருஞ் சோம்பேறி அறிவே கெட்டழிவதோர் பயன். இத்தகைய அறிவின் குறைவின் பயனாலும் சோம்பாற் செயலாலும் தங்கள் தங்கள் சாமிகள் இருட்டறையில் வெறுமனே வீற்றிருக்கிறார்கள், அவர்களை உற்சாகஞ் செய்யவேண்டுமென்று பத்துநாளய உச்சவஞ் செய்யப்பணம் வேண்டி புராணங்கேட்குஞ் சோம்பேறிகளை வஞ்சித்து பறித்து ஏஜன்ட்டுகள் இடுப்புக் கட்டிக்கொண்டு சாமிகளை வாகனங்களில் இருக்கக்கட்டி, சாத்துபடி செய், சாத்துபடி செய் என்று எடுப்பதற்கு ஆட்களை பிடிபிடி என்றும், தீவட்டி மத்தாப்பு புருசுகளைக் கொளுத்துங்கோள் என்றும், சாமிக்கு சரியான வெளிச்சமில்லை காஸ் லையிட்டுகள் போடுங்களென்று சுற்றி சுற்றி ஓடிவருவதே, டெல்லகிராப் வித்தை, போனகிராப் வித்தை, இரயில்வே வித்தை, டிராம்வே வித்தை, என்று எண்ணி விடிந்து வேலைக்குப் போகாமலும் விவசாயம் பாராமலும் வித்தை விரும்பாமலும் உறங்கிக் கிடப்பதோர் பயன். இத்தியாதி சோம்பலேறி பெரியாச்சாரியே பிச்சையிரந்து உண்பதைக் காணும் அவர்கள் சாதிமதத்தைத் தழுவிய மாணாக்கர்களுக்குஞ் சோம்பலேறி கொட்டை கட்டும் வித்தை, பட்டை பூசும் வித்தை, குடுமியில் பூமுடியும் வித்தை இடுப்பில் பட்டுகுட்டை கட்டும் வித்தை, காலில் கெச்சை கட்டும் வித்தை முதலியவற்றை பெருக்கிக்கொண்டு தம்பூரைக் கையிலேந்தி வீடுவீடாகச் சென்று, “இராமா யென்னைக் கையை விடலாமா” என்று பாடித்திரிவோனும், முருகாவுன்னைத் தேடித் தேடி முழிகளுருளுதே என்று பாடித்திரிவோனும் அவரவர்களுக்கு மேலும் மேலும் சோம்பலை ஊட்டிவிக்கும் பாவலர்களும் நாவலர்களும் சபாபிரசங்கிகளுந் தோன்றி அரோகரா போடுங்கோ, கோவிந்தோம் போடுங்கோ, குறுக்குப்பூச்சை விடாதேயுங்கள். நெடுக்குப் பூச்சை மறவாதேயுங்கள், எங்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்தொகையை குறைக்காதேயுங்கோள், உங்கள் கையை நாங்கள் பார்த்திருக்கின்றோம் எங்கள் வாயை நீங்கள் பார்த்திருங்கோள் என்னும் பெருஞ்சோம்பேறிகளைப் பெருக்கி விட்டதன்றி தாய் தந்தை சுற்றத்தோரைக் காப்பாற்றும் வித்தையற்று வேதாந்திகள் என்னும் வீண் சோம்பேறிகளும் பலுகிப்பெருகி கட்டுக்கழுத்திகள் பால் புஞ்சித்தும் கைம்பெண்களை வஞ்சித்தும் அவர்களை அடுப்போர்யாவரும் சாமியார் சாமியாரென்று கூறவும் சாமியென்னும் மொழிக்கே பொருளறியா போலிவேதாந்த குரு உலகம் பொய் யாவும் பொய், எனக்குக் கொடுக்கவேண்டிய தொகைகள் மட்டிலும் மெய், அதை மட்டிலும் ஆளுக்குக் கொஞ்சங் கொடுத்து வந்தால் போதுமென மூன்று வேளையுங் கொழுக்கத்தின்று உலகமும் பொய், விதத்தையும் பொய், புத்தியும் பொய்யென மயக்கி தேசவிருத்தியையும் மநுக்கள் விருத்தியையுங் கெடுத்துவருவது அநுபவமுங் காட்சியுமே யாதலின், நூதன சாதிச்செயல்களையும் நூதன மதப்போதகங்களையும் நம்பி வீண் மோசமடைந்து சோம்பேறிகளாகி சோம்பித்திரியாமல் விசாரிணை ஊக்கமென்னும் உறைக்கல் கொண்டறிந்து வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் முயன்று தற்காலம் இந்தியதேசத்தையும் இந்தியர்களையும் சீர்பெறச்செய்து சுகமளித்துவரும் பிரிட்டிஷ் சாமிகள் மீது விசுவாசத்தை வளர்த்து அவர்கள் செய்துவரும் நன்றியை மறவாது அவர்கள் மீது அன்பை வளர்ப்பதே அழகாம். அங்ஙனமின்றி பொய்சாதி வேஷங்களையும் பொய்ம்மதக்கோஷ்டங்களையும் பின்பற்றி அன்னமிட்டோர் வீட்டில் கன்னமிடுவது போல் இராஜ துரோகங்கொள்ளுவதாயின் தோன்றியுள்ள சீருங் கெட்டு நாசமடைவோமென்பது சத்தியம், சத்தியமேயாம். - 7:36; பிப்ரவரி 11,1914 - 51. நூதன சாதிகள் தோன்றியது முதல் இந்தியதேசப் பூர்வ வைத்தியம் முக்காலேயரைக்கால் அழிந்துபோக நீக்குள்ள அரைக்கால் பாகமும் அழிய நேர்ந்தது போலும் ஐயிந்திரியங்களை வென்று இந்திரரென்னும் பெயர்பெற்ற புத்தபிரான் நிருவாணம் பெற்று சகலமும் உணர்ந்து சத்தியதன்மத்தைப் பரவச்செய்ய வேண்டி வரி வடிவின்றி ஒலிவடிவிலிருந்த மகட பாஷையாம் பாலி பாஷையையே மூலமாகக் கொண்டு சகட பாஷையாம் வடமொழியையும் திராவிட பாஷையாம் தென்மொழியையும் வரிவடிவில் இயற்றி ஜனகர், வாம தேவர், பாணினி, நந்தி ரோமர், கபிலர், திருமூலர், அகத்தியர் முதலானோர்க்கு விளக்கியதுமன்றி பரத்துவாசர், மச்சர், தன்வந்திரி முதலியோருக்கு சத்தியதன்மத்தோடு சீவர்களுக்குண்டாம் வியாதியின் குணா குணங்களையும் மூலிகைகளின் குணா குணங்களையும், உப்பின் குணா குணங்களையும், உலோக குணா குணங்களையும், இரத்தின குணா குணங்களையும், பாஷாண உப்பின் குணா குணங்களையும் தெளிவுபட விளக்கி வாமர், நந்தி, ரோமர், ஜனகர், முதலியோர்களை வடதிசைக்கும், அகஸ்தியர், தன்வந்திரி மச்சர் முதலியோர்களை தென்திசைக்கும் சட்டர், சுந்திரர் முதலியோரை கீழ்திசைக்கும், திருமூலர் முதலியோரை மேல்திசைக்கும் அனுப்பி அங்கங்கு பௌத்த வியாரங்கட்டி உலகோபகாரமாகவும் மக்கள் சீர்திருத்த சத்திய தன்மத்தைப் பரவச் செய்யும்படி செய்ததுடன் புத்தபிரான் பரிநிருவாணம் அடையும் வரையில் ஐன்பத்தைந்து வருடகாலம் அவரவர்கள் சருவகலைகளுக்கும் நாதனாக விளங்கி உலகெங்கும் பரவச்செய்துள்ளார். அத்தகைய தன்மத்தில் உலகமக்கள் சகலருக்கும் பேருபகாரமாக விளங்கும் வைத்தியத்தையும் கல்வியையுமே மேலாகக்கொண்டு ஒவ்வோர் மடங்களென்னும் அறப்பள்ளிகளிலும் கல்வி விருத்தியையும் ஒடதிகளென்னும் அவுடத விருத்திகளையும் செய்து அவுடதம் கொடுப்பதுடன் சத்திர சிகிட்சையென்னும் அறுத்து குணமாக்கும் வழிவகைகளையும் விருத்திசெய்து வந்தவற்றுள் பல மூலிகைகளையும் ஒருங்குசேர்த்து விருத்திசெய்துவந்த, வைத்திய மலை என்பதை நாளது வரையில் காணலாம். இந்திய தேச வைத்திய சிறப்பை அறிந்து அரேபிய தேசத்தோரும் சாலோமோன் முதலிய அரசர்களும் இவ்விடம் வந்து வைத்திய பாகங்களைக் கற்றுச் சென்றார்களென்பதை சரித்திரங்களிலுங் காணலாம். இந்தியதேச வைத்தியம் உலகெங்கும் சிறப்புற்றிருந்ததற்குக் காரணமியாதெனில் அறப்பள்ளிகளென்னும் பௌத்த வியாரங்களில் தங்கியிருந்த ஒவ்வோர் அறஹத்துக்களும் தங்கள் தங்கள் பேரறிவை கொண்டு பஞ்சபூமிகளின் இலட்சணங்களையும் அந்தந்த பூமிகளில் வாசஞ்செய்யும் மனுக்களுக்குத் தோன்றி வதைக்கும் நாலாயிரத்தி நானூற்றி நாற்பத்தியெட்டு வியாதிகளின் பிரிவுகளையும் அந்தந்த பூமிகளில் விளையும் மூலிகைகளின் சுப வசுபகுணங்களையும் பாஷாணங்களின் சுபவசுகங்களையும், உலோகங்களின் சுபவசுகங்களையும், உப்பினங்களின் சுபவசுகங்களையும், நவரத்தினங்களின் சுபவசுகங்களையும் கண்டு தெளிந்ததுடன் மூலிகைகளுடன் பாஷாணங்களைச் சேர்க்கும் வகைகளையும், பாஷாணங்களுடன் உலோகங்களைச் சேர்க்கும் வகைகளையும் உலோகங் களுடன் உப்பினங்களைச் சேர்க்கும் வகைகளையும் உப்பினங்களுடன் இரத்தினங்களைச் சேர்க்கும் வகைகளையுந் தேறக் கண்டறிந்து ஓடதிகளை முடிப்பதுடன் மனுமக்கள் தேக லட்சணங்களையும் வியாதியின் பிரிவுகளையும் தோன்றும் காரணங்களையும் அவைகளைத் தெரிந்து செய்வதற்கு நாடி பரிட்சை முகபரிட்சை நீர்க்குறி, மலக்குறி, விழிக்குறி, சுவாசக்குறிகளை அறிந்து அவுடதம் ஈவதற்கும் மிக்க யூகையும் அதிநுட்பத்தில் வியாதிகளை அறிந்து செய்துவந்த வைத்திய வல்லபத்தைக்கண்டு பல தேசத்தோரும் மதிக்கவும் இவ்விடம் வந்து கற்றுச் செல்லவும் நாளது வரையில் சகல தேசத்தோரும் வயித்திய பாகத்தை விருத்தி செய்து வருவதற்கு இந்திய வைத்தியமே மூலபீடமன்றி வேறொன்றில்லை என்பதே துணிபு. இத்தகைய வைத்திய சிறப்பானது இந்திய தேசம் எங்கணும் அறப்பள்ளிகளாம் புத்த வியாரங்கள் நிறைந்திருந்த வரையில் அறஹத்துக்களும் சமண முனிவர்களும் தங்கள் காலங்களை வீண் சோம்பலிலும் வஞ்சினத்திலும் பொய்யிலும் பொறாமெயிலும் போக்காது தங்கள் வித்தை விருத்தியையும் புத்தி விருத்தியையும் ஓடதிகளாம் அவுடத கிருத்தியிலே வளர்த்து மனுமக்களுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உபகாரிகளாகவே விளங்கி வந்தார்கள். அதிலும் அவர்கள் எழுதி வைத்துள்ள வைத்திய பாகங்களை வசனமாக எழுதிவைப்பதாயின் தங்கள் மாணாக்கர் மனதில் சரிவரப் பதியாதென்று எண்ணி செய்யுட்களாகவும் பாடல்களாலுமே எழுதிவைத்தார்கள். அவற்றுள் புத்தபிரானால் ஏற்படுத்திய வடமொழி, தென் மொழியிரண்டினுள் வைத்திய பாகத்தை வடமொழியில் பிரபலமாக எழுதாமல் தென்மொழியிலேயே பிரபலமாக எழுதி வைத்திருந்தார்கள். அவைகளுள் அகஸ்தியர் மூலிகை குணாகுணங்களையும் அதனுற்பவங்களையும் மிக்க ஆராய்ந்து மூலிகைகளுக்கு மட்டிலும் நிகண்டு பதினாயிரம் செய்யுள் பாடிவைத்திருக்கின்றார். வியாதிகளின் விபரங்களையும் மருந்துகள் முடிக்கும் பாகங்களையும் மனிதன் கடைத்தேறும் ஞான போக்குகளையும் செளமியசருகாமென்னும் ஏழாயிரஞ் செய்யுள் பாடி இருக்கின்றார். மற்று, சரக்குகளின் சத்துரு மித்துருக்களையும் கூட்டுவகைகளையும் ஆயிரம் ஐந்நூறு எழுநூறு முந்நூறு நாநூறென்னும் செய்யுட்களைப் பாடி வைத்ததுடன் தன்வந்திரி, திருமூலர், ரோமர், வாமதேவர் இராமதேவர், இடைக்காடர், கொங்கணர், போகர், புலிபாணி, மற்றுமுள்ள சமண முநிவர்கள் யாவரும் ஏழாயிரம், நாலாயிரம், மூவாயிரம், ஈராயிரம், ஓராயிரமாக வைத்தியபாகச் செய்யுட்களையே வரைந்து ஓலைச்சுவடிகளை கட்டுக்கட்டாக அறப்பள்ளிகளிலடுக்கி பின் சந்ததியோர் ஈடேறும் வழிகளுக்கு வைத்திருந்தார்கள். அக்கால் இந்நூதன சாதிவேஷக்காரர்கள் வந்து தோன்றி நூதன மதங்களை ஏற்படுத்திக் கொண்டு பொய்யைச் சொல்லி சாதிவேஷத்தைப் பெருக்கியும், பொய்யைச் சொல்லி மதக்கடைகளைப் பரப்பிப் பொருள் சம்பாதித்தும், பொய்யைச் சொல்லி ஆடு,மாடு குதிரைகளை நெருப்பிலிட்டு வதைத்து தின்று வந்தவற்றை சமண முநிவர்களும் பௌத்தக்குடிகளும் ஆபாசமுற்று கண்டித்தும் துரத்தியும் வந்தகாலத்தில் நூதன வேஷ சாதியோர் மித்திரபேதத்தாலும் வஞ்சினத்தாலும் பொறாமெயாலும் அக்காலத்திருந்த சிற்றரசர்களையும் பெருந்தொகைக் குடிகளைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு சமணமுனிவர்களையும் அவரவர்கள் வீற்றிருந்தக் கட்டிடங்களையும் அழித்து வந்ததுடன் பெரும்பாலும் அவற்றுள் அடக்கி வைத்திருந்த சுவடிகளையே கொளுத்தி நாசஞ்செய்து விட்டார்கள். எதுக்கெனில் அச்சுவடிகள் யாவும் இருக்குமாயின் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சாதி வேஷங்களுக்கும் நூதனப் பொய் மதங்களும் நூதனப் பொய்வேதங்களும் நூதனப் பொய் சாஸ்திரங்களும் நூதனப் பொய்ப்புராணங்களும் பிரபலப்படாமற் போமென்று எண்ணி கண்ணிற் காணுஞ்சுவடிகள் யாவையும் நெருப்பிலிட்டு நாசஞ் செய்ததன்றி இவர்கள் பொய்வேஷங்களுக்கு யெதிரடையாயிருந்த பௌத்தக் குடிகள் யாவரையும் தாழ்ந்த சாதியோரென வகுத்து பலவகையாயத் துன்பங்களைச் செய்து தேசம் விட்டு தேசந் துரத்தியபோதினும் தங்கள் தங்கள் கையிருப்பிலிருந்த நீதி நூற்கள், ஞான நூற்கள், வைத்திய நூற்கள், சோதிடநூற்கள்யாவுமே தற்காலம் அச்சுக்கு வெளிவந்து பூர்வ வைத்தியத்தில் அரைக்கால் பாகம் தாழ்ந்த சாதியோரென்று வகுக்கப்பட்டக் கூட்டத்தோர்களாலேயே பரவி வருகின்றதன்றி பூர்வ நூற்களையும் அவர்களே அச்சிட்டு வெளிக்குங் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவற்றுள் எனது பாட்டனார் ஜர்ஜ் ஆரங்டியன் துரை பட்ளர் கந்தப்பனென்பவர் ஓலைப்பிரிதியிலிருந்து திரிக்குறளையும், நாலடி நாநூறையும் ஈஸ்ட் இன்டியன் கம்பனியார் காலத்தில் தமிழ்ச்சங்கங் கூட்டிவைத்த கனம் எலீஸ் துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளி வந்திருக்கின்றது. போகர் எழுநூறு, அகஸ்தியர் சிமிட்டு, ரத்தினச் சுருக்கம் புலிபாணி வைத்தியம் ஐந்நூறு, அகஸ்தியர் பரிபாஷை ஐந்நூறு, பாலவர் கீடம் மற்றும் நூற்களை எமது தமிழாசியர் தேனாம்பேட்டை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதரவர்களால் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார். இச்சென்னையில் பர்ஸூவேலையர் தமிழ்ப் பத்திரிகை வெளியிடுவதற்குமுன் புதுப்பேட்டையில் “சூரியோதயப்பத்திரிகை” யென வெளியிட்டுவந்த திருவேங்கட சுவாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும் ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்நூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார். - 7:38; பிப்ரவரி 25, 1914 - சென்னையில் அத்வைத பக்த சமாஜமென்னும் ஓர் சங்கத்தை நாட்டி சித்தர்கள் மகத்துவங்களையும் ஞானத்தின் தெளிவையுந் தெள்ளற விளக்கிவந்த உவேம்புலி பண்டிதரவர்களால் சித்தராரூடம், வைசூரிநூல், ஜீவாஜீவ குணவிளக்கமென்னும் மூலிகைகளின் பயனையும் விளக்கி அச்சிட்டு வெளிபடுத்தியிருக்கின்றார் உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுக்கொண்டு தாழ்ந்த சாதியொரென்று குறிப்பிட்டு தலையெடுக்காமல் நசிந்துவருங் கூட்டத்தோர்களே பூர்வ வைத்திய நூற்களை அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்ததுமன்றி வைத்திய பாகங்களையும் அவர்களே கையாடி வந்தார்கள். நாளது வரையிலுங் கையாடி வருகின்றார்கள். இத்தகைய பூர்வவைத்திய பாகத்தை கையாடிவந்தபோதினும் அவை சிறப்பிக்காமலும் விருத்தியடையாமலும் போயதேயன்றி வேறில்லை. அதன் காரணமோ வென்னில் வைத்திய விவேகக் கூட்டத்தோர் யாவரையுந் தாழ்ந்த சாதியோரென்றுந் தீண்டப்படாதவர்களென்றும் வஞ்ச நெஞ்சினர் வதைத்து வந்ததினால் அவர்கள் வைத்தியங்கள் சிறப்படையவும் விருத்தி பெறவும் வழியுண்டா என்பதை விவேகிகளே தெளிந்துக்கொள்ளுவார்கள். ஈதன்றி உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுள்ளோர் அநுபவத்திலுங் காட்சியிலும் இவ்வகையாக வைத்தியத்தை சித்திபெற விடாமற் செய்து வந்தபோதிலும் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ளுவதற்கும் சுயப்பிரயோசனத்திற்கும் மநுதர்ம சாஸ்திரமென்னும் ஓர் நூலையும் ஏற்படுத்திக் கொண்டு அதனுள் பயிரிடுந்தொழில் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டத் தொழில் என்றெழுதி விவசாய விருத்தியையே பாழ்படுத்தி விட்டதுபோல வைத்தியன் வீட்டில் அன்னம் புசிக்கப்படாது அவ்வகைப் புசிப்பது கூரைவீட்டிலிருந்து வடியும் நீரை அருந்துவதற்கு ஒக்குமெனத் தாழ்த்தி எழுதி வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமோ வென்னில் வைத்தியர் வீட்டு அன்னத்தைப் புசிக்கலாகாதென்றபோது அவ்வைத்தியர்களால் செய்யும் மருந்தையும் புசிக்கலாகாது என்பது கருத்தாம். நூதனசாதிவேஷத்தைப் பின்பற்றினோரும் மனுதர்ம சாஸ்திரத்தைக் கைக் கொண்டோரும் பலுகி பெருகிவிட்டார்கள். ஆதியில் பௌத்தர்களால் வைத்தியபாகம் ஆரம்பிக்கும் போதே சீவராசிகள் வியாதிகளால் படுந் துன்பங்களைக் கண்டு மனஞ் சகியாது கருணையும் பரோபகாரமுங் கொண்டே ஆரம்பித்தார்கள். வியாதியஸ்தரோ வைத்தியர்களை தெய்வம்போற் கருதி கண்டுள்ள வியாதியை எவ்வகையாலும் நீக்குவார்களென்னும் அவாவால் தேகத்தையே ஒப்புக்கொடுத்து வந்தார்கள். அதனால் வைத்திய சிறப்பு விருத்தியடையவும் மனுக்கூட்டங்கள் சுகம் பெறவுமாயிருந்தது. அத்தகைய கருணையும் பரோபகாரமாய தொழிலை, மனிதனை மனிதனாக பாவிக்காது மிருகங்களிலுந் தாழ்ச்சியாக நடத்தி வதைக்குங் கருணையற்ற நூதன சாதி வேஷக்காரர்கள் ஆரம்பிக்கும் எத்தனித்துக் கொண்டதால் வியாதியஸ்தனிடம் பணம் பறித்துக்கொண்டால் போதும் வியாதியஸ்தன் தேகம் எக்கேடு கெட்டாலுங் கெடட்டும் என்று வைத்தியஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதனால் உள்ள அரைக்கால்பாக வைத்தியமும் அழிவதற்கு ஏதுண்டாகிவிட்டது. அவை எவ்வகையிலென்னிலோ பூர்வ வைத்தியத் தொழிலை தற்கால நூதன சாதிவேஷக்காரர்கள் எடுத்துக் கொண்டு வைத்தியஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டதில் அவர்களுக்கோ பூர்வ வைத்திய சாஸ்திர பாடங்களும் கிடையாது, பரம்பரையாய அநுபவமுங் கிடையாது, மூலிகைகளிலோ எந்தெந்த மூலிகைகள் உள்ளுக்குக் கொடுக்க கூடிய தென்றும் எந்தெந்த மூலிகைகள் மேலுக்குப் பூசுகிறதென்றும், பாஷாண வர்க்கங்களில் எவ்வெவ்வை உள்ளுக்குக் கொடுக்கக் கூடியவையென அவைகளின் முறிவுகளும் சுத்திகளும் எவ்வகையென்றும் உலோகங்களின் போக்குகள் எவையென்றும், உப்பினங்களின் குடோரங்களெவையென்றும், உபாசங்களின் கூட்டுரவு எவை, அவைகளின் சத்துரு மித்துருக்கள் எவையென்றும், மனிதர்களுக்குத் தோன்றும் வியாதிகளிலோ இது சாத்தியரோகம் அது அசாத்தியரோகம் என்றறியாமலும், சுரமென்றால் வாதசுரம் இருபத்திரண்டு, சிலேத்துமசுரம் இருபத்திரண்டு, பித்தசுரம் இருபதுவகையாகத் தோன்றுவதில் அவைகளை எச்சுரமென்றறியாமலும், மாமிஷத்தைபற்றிய வியாதிகளீ தீதென்றும் உதிரத்தைப் பற்றிய வியாதிகளீதீதென்றும், சருமத்தைப்பற்றிய வியாதிகளீதீதென்றும், வாயுவின் குணமெது பித்தத்தின் குணமெது கிலேத்துமத்தின் குணம் யாதென்றறியாமலும், நீர்க்குறி, மலக்குறி, முகக்குறி, நாடிக்குறி முதலியவைகளை தெளிவற கற்காமலும், இரண்டொருயெண்ணெயைக் காய்ச்சக் கற்றுக்கொண்டும், சில மாத்திரைகள் உருட்டக் கற்றுக்கொண்டும் தோற்பைகளில் சிற்சில இங்கிலீஷ் மருந்துகளையும் தமிழ் மருந்துகளையும் வைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று அதிகம் கற்ற வைத்தியர்களைப்போலும் மிக்க அநுபவிகளைப் போலும் பாடம் படித்து பணம் சம்பாதிப்பதற்கிதுவும் ஓர் வித்தையென வெளிதோன்றி கனவான்களுடைய வீடுகளிலும் ஏழைகளுடைய வீடுகளிலும் மருந்துகளைக் கொடுத்து வாயை வேகவைப்பவர்களும் வயிற்றை வேகவைப்பவர்களும் பேதி அதிகரிக்குமாயின் அதை நிறுத்த வழியறியாதவர்களும், மருந்தை கொடுத்து வியாதி அதிகரித்து விட்டால் பணம் வாங்குதற்கு அவசரமாகப் போனவர்கள் பின்பு தலை காட்டாது ஒளிகிறவர்களுமாய போலி வைத்தியர்களே மிக்கப் பெருகிவிட்டபடியால் தமிழ் வைத்தியத்தினால் அனந்த மனுக்களுக்கு சுகக்கேடுண்டாகின்றதென்று எண்ணி சில விவேகிகள் தோன்றி இவ்வைத்தியத்தையே அடக்கிவிடவேண்டுமென்று இராஜாங்கத்தோர் முன்னிலையில் சில சட்டதிட்டங்களைக் கொண்டு வந்துவிட்டார்கள். இராஜாங்கத்தோரோ நீதியும் நெறியும் நிதானமுமைந்த பேரறிவாளராதலின் அவற்றை அவர்களேற்காது குடிகளின் சார்பாகவே ஒழித்து வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமோ வென்னில் இத்தேசத்தியப் பூர்வக்குடிகள் யாவரும் காணும் வியாதிகளுக்கு அநுபவத்தின் பேரிலேயே சிற்சில கியாழங்களையும் அறைப்பு மருந்துகளையுங் கொடுத்து குணமாக்கிக் கொள்ளுவதியல்பாம், தேர்ந்த வைத்தியர்களைக்கொண்டு சுகமடைவதுங் காட்சியாம். அவைகளைக் கண்டுவரும் இராஜாங்கத்தார் இத்தமிழ் வைத்தியத்தையும் மகமதிய வைத்தியத்தையும் நிறுத்திவிடுவதாயின் சென்னை முநிசபில் எல்லைக்குட்பட்ட மனுக்கள் யாவருக்கும் ஜெனரல் ஆஸ்பிட்டலைப்போல் பத்து ஜெனரல் ஆஸ்பிட்டல் கட்டியபோதிலும் இடம் போதாதென்பது அவர்களுக்குத் திட்டமாகத் தெரியும் ஆதலின் வைத்திய சட்டத்தை சற்று கவனித்து வருகின்றார்கள். ஈதன்றி சுகாதாரத்தை நாடியே சட்டங்கள் தோன்றுமன்றி வேறில்லை ஆதலின் பூர்வவைத்தியர்கள் யாவரும் ஒன்றுகூடி பூர்வ வைத்தியத்தை சீருக்குஞ் சிறப்புக்குங் கொண்டுவருவார்களென்று நம்புகிறோம்.