[] 1. Title Page 2. Cover 3. Table of Contents ஹெர்க்குலிஸ் ஹெர்க்குலிஸ்   தியாகி ப.ராமசாமி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/hercules மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/hercules This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (./media/பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (./media/http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Deepa arul kaniyam - Guruleninn - Deepa arul - Arularasan. G - Rabiyathul - Patricknoddy-commonswiki - Rocket000 - Mecredis - Info-farmer - Fleshgrinder - Be..anyone - HoboJones - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (./media/CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (./media/ https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (./media/ http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (./media/CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (./media/ https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy (./media/ http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. இளமைப் பருவம் பண்டைக் காலத்துக் கிரேக்க வீரர்கள் பலரிலும் முதன்மையாகப் போற்றப்படுபவன் ஹெர்க்குலிஸ். உடல் வலிமையிலும், வீரத்திலும், ஆற்றலிலும் அவனுக்கு நிகரானவரேயில்லை. மகாபாரதக் கதையில் வரும் பீமனைப் போல, அவன் கையிலே எப்பொழுதும் ஒரு கதாயுதத்தை வைத்துக்கொண்டிருப்பான். அதைக் கண்டாலே எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள. அவன் பல கொடிய மிருகங்களை அடக்கியும், அழித்தும் மக்களுக்கு உதவி செய்தவன். பல போராட்டங்களில் ஈடுபட்டு அவன் வெற்றி பெற்றவன். ஆகவே , அவனைப்பற்றிக் கிரீஸ் நாட்டில் பற்பல, கதைகள் தோன்றியிருந்தன. கிரேக்கர்கள் அவனைப் பெரிதும் போற்றி வந்தனர். கிரேக்கப் பாணர்கள் அவனுடைய வரலாற்றை மக்களுக்குப் பாடல்களாகப் பாடிக் காட்டுவதில் சலிப்படைந்ததேயில்லை. அந்தக் காலம் முதல் இன்றுவரை உலகில் மிகுந்த பலமும் விரமும் கொண்டு விளங்கும் மனிதனை, ‘அவன் ஒரு ஹெர்க் குலிஸ்!’ என்று பெருமையாகப் பேசுவது வழக்கமாகிவிட்டது. வீரர்களைத் தவிர, உறுதியாக அமைந்த பொருள்களுக்குக் கூட அவன் பெயரை வைக்கிறார்கள், ஹெர்க்குலிஸின் தாய் ஆர்கோலிஸ் நாட்டு அரசனுடைய மகளான அல்க்மினா என்பவள்: தந்தை, தேவர்களின் தலைவரான சீயஸ் கடவுள். ஏற்கெனவே அல்க்மினா அம்பிட்ரியன் என்ற மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அம்மன்னன் போர்களில் ஈடுபட்டுத் தீப்ஸ் நகருக்குச் சென்றிருந்த சமயத்தில், சீயஸ் கடவுள் அவளிடம் சென்று, அவள் கருவுற்று, வல்லமை மிகுந்த ஒர் ஆண் மகனைப் பெற வேண்டு மென்று ஆசியளித்தார். அந்தக் குழந்தை, மனிதர்கள். மட்டுமன்றி, தேவர்களையும் காக்கக்கூடிய வல்லமை, பெற்றிருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். சீயஸ் கடவுளின் தேவியான ஹீரா, அவருடைய ஏற்பாட்டைப்பற்றிக் கேள்வியுற்று, அவரிடம் கோபமடைந்தாள் இதனால், அல்க்மினா கருவுற்றதிலிருந்தே அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தன்னால் இயன்ற கேடு செய்ய வேண்டுமென்று ஹீரா தீர்மானித்துக் கொண்டு, அவ்விதமே செய்து வந்தாள். உரிய காலத்தில் அல்க்மினா இரட்டைக் குழந்தைகளாக இரு பையன்களைப் பெற்றாள். முதலாவது பிறந்த குழந்தைக் குச் சீயஸ் கடவுளின் விருப்பப்படி ஹெராக்கிளிஸ் என்று பெயர் வைக்கப்பெற்றது: இரண்டாவது குழந்தையின் பெயர் இபிக்ளிஸ். ‘ஹெராக்கிளிஸ்’ என்றால் கிரேக்க மொழியில் ஹீராவின் புகழ்’ என்று பொருள். ஹெராக்கிளிஸைப் பிற்காலத்தில் ரோமானியர் ஹெர்க்குலிஸ் என்று கூறி வந்தனர். அந்தப் பெயரே உலகில் அதிகமாய்ப் பரவிவிட்டது. ஹொர்க்குலிஸுக்கு ஒரு வயது கூட நிரம்பவில்லை- ஒரு நாள் இரவில் அல்க்மினா, அவனுக்கும் அவன் தம்பிக்கும் பால் புகட்டிவிட்டு, அரண்மனையிலிருந்த வெண்கலக் கேடயம் ஒன்றில் அவர்களைப் படுக்க வைத்திருந்தாள். இரவில் நெடுநேரம்வரை அவள், தாலாட்டுப் பாடி அவர்களைத் தூங்க வைத்துவிட்டு, அவர்களுடைய அறைக்குப் பக்கத்திலிருந்த பள்ளியறைக் குச் சென்று உறங்கிக் கொண்டிருந்தாள். அரண்மனையிலும் வெளியிலும் ஒரே அமைதியாயிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் இருந்த அறையில் எங்கிருந்தோ இரண்டு நாகங்கள் உள்ளே ஊர்ந்து வந்தன. இரண்டும் கேடயத்தின் அருகே சென்று, தங்கள் படங்களை உயரமாகத் தூக்கி விரித்து ஆடிக்கொண்டு, இரண்டு குழந்தைகளையும் கொத்துவதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. அவைகளின் சீறலைக் கேட்ட பையன்கள் இருவரும் விழித்து எழுந்துவிட்டனர். ஹெர்க்குலிஸ், நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, இரண்டு கைகளாலும் மின்னல் வேகத்தில் இரண்டு பாம்புகளையும் இறுகப் பிடித்து, அவைகளின் கழுத்துகளை நெரிக்கத் தொடங்கினான். அவனுடைய பிடியினால் வேதனையுற்ற நாகங்கள் தங்கள் வால்களால் தரையில் ஓங்கியடித்துத் துடித்துக்கொண்டிருந்தன. இபிக்ளிஸ், நாகங்களைக் கண்டவுடனே பதறி நடுங்கித் துள்ளியதில், கேடயத்திற்கு வெளியே தரையில் போய் விழுந்தான். அறையில் ஏற்பட்ட ஓசையையும் , குழந்தை இபிக்ளிஸின் அலறலையும் கேட்டு, அல்க்மினா, துயில் கலைந்து எழுந்து அம்பிட்ரியானை எழுப்பினாள். அவன் உடனே சுவரில் மாட்டியிருந்த தன் உடைவாளை எடுத்துக்கொண்டு, குழந்தைகள் இருந்த அறைக்குள் ஓடினான். அந்த நேரத்தில் அரண்மனைக் காவலர்கள் சிலரும் தீவர்த்திகளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, அங்கு வந்து கூடிவிட்டனர். அல்க்மினாவும் பதைபதைத்துக்கொண்டே அந்தப் பக்கமாக ஓடிச் சென்றாள். [] ஹெர்க்குலிஸ் இரண்டு கைகளிலும் இரண்டு கொடிய நாகங்களை இறுகப் பிடித்துக் கொண்டு காட்சியளித்தான். அவனை அந்தக் கோலத்தில் கண்டதும் அரசனும் இராணியும் திடுக்கிட்டு நின்றனர். உடனே ஹெர்குலிஸ் உயிரிழந்த இரண்டு பாம்புகளையும் அவர்களுக்கு அருகில் தரையிலே வீசினான். அங்கே கூடியிருந்தவர் அனைவரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. மறுநாள் காலையில் அல்க்மினா, அறிவாளரான ஒரு பெரியவரிடம் சென்று, தன் மைந்தனுடைய வைபவத்தைப்பற்றித் தெரிவித்தாள். பத்து மாதக் குழந்தையான ஹெர்க்குலிஸ், இரண்டு கொடிய நாகங்களை வெறும் கைகளாலேயே நெரித்துக் கொன்ற அதிசயத்தின் பொருள் என்ன என்று அவள் அப்பெரியவரிடம் கேட்டாள். அவர் சிறிது நேரம் ஆலோசனை செய்து கூறியதாவது: “உன் மகன் ஹெர்க்குலிஸ் மகா வல்லவனாக விளங்குவான். அவனுக்கு ஈடாகவோ, மேலாகவோ எந்த மனிதனும் இருக்க முடியாது. அவன் அரும்பெரும் செயல்கள் பன்னிரண்டில் வெற்றி பெற்று, பின்னால் ஒலிம்பிய மலையில் தேவர்களுடன் தானும் ஒரு தேவனக வாழ்ந்து வருவான்.’ இதற்குப் பின்னால் அவள் ஹெர்க்குலிஸைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தாள். அவன், குழந்தைப் பருவத்திலேயே உடல் பருத்து, மிகுந்த வலிமையுடன் விளங்கினான். இளமையிலிருந்தே அவனுக்கு வில்வித்தை மல்யுத்தம், ஈட்டி எறிதல், வாள் போர் முதலியவைகளைத் தேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்து வந்தார்கள். ஜேஸன் முதலிய புகழ்பெற்ற அரசிளங்குமரர்கள் பயிற்சி பெற்று வந்த ஆசிரியர் கிரான் என்பவரின் பள்ளியிலும் அவன் பல ஆண்டுகள் கற்று வந்தான் முரட்டுக் குதிரைகள் பூட்டிய தேர்களை ஓட்டுவதிலும் அவன் பயிற்சி பெற்று வந்தான். சிறு தேரின்மீது நின்றுகொண்டே குதிரையை ஓட்டிப் பந்தயங்களுக்குச் செல்வது கிரீஸ் நாட்டில் வழக்கம். ஹெர்க்குலிஸ் எந்தக் குதிரையையும் அடக்கிச் செலுத்துவதில் திறமை பெற்று விளங்கினான். இரவு நேரத்தில் அவன் அரசனுக்கு அருகில் ஒரு கட்டிவில் படுத்து உறங்குவது வழக்கம். அவனுடைய வீரத்திற்கு அறிகுறியாக, அந்தக் கட்டிலின்மீது ஒரு சிங்கத்தின் தோல் விரிக்கப்பெற்றிருக்கும். காளைப் பருவத்தில் ஒரு சமயம், ஹெர்க்குலிஸ் மலைகளில் ஏறி, அங்கிருந்த மலைவாசிகளுடன் ஆசித்து வந்தான். அப்பொழுது ஒரு நாள், வெயிலின் கொடுமையால் அவன் களைப்புற்று, ஒரு மரத்தடியில் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் அவன் கண்ணயர்ந்து விட்டான். உறக்கத்தின் நடுவில், கனவிலே அவன் சில காட்சிகளைக் கண்டான். முதலில் ஒரு நெடிய சாலையும், அதன் முடிவில் அழகிய மாளிகைகள் நிறைந்த ஒரு பெரிய நகரமும் தென்பட்டன. மற்றொரு புறத்தில் மலைமீது செல்லும் ஒரு பாதை தெரிந்தது. ஹர்குலிஸ் தனக்கு முன்பு தோன்றிய இரண்டு பாதைக்களில் எதிலே செல்லலாம் என்று யோசிக்கலான். அப்பொழுது நகரப் பாதையில் ஓர் இளம் பெண் தோன்றி, அவனைக் கூவி அழைத்தாள். ‘இந்தப் பாதையில் வந்து நீ நகரத்தை அடைந்து இன்பமாக வாழலாம். இது இசையும் கலைகளும் நிறைந்த நகரம். சுகமாக வாழ்வதில் உனக்கு விருப்பமிருந்தால், நீ இந்தப் பக்கமாக வருவாயாக!’ என்று அவள் கூறினாள். அவன் திகைத்து விழிப்தைக் கண்டு, அவள் அவனை மேலும் உற்சாகப்படுத்திப் பேசினாள்: ‘இந்த நகரில் நீ, ஒரு வேலையும் செயாயாமல், இன்பமாக வாழலாம்: புழுதியில் நிற்க வேண்டியதில்லை; வெயிலில் வாட வேண்டியதில்லை. மலர்கள் நிறைந்த பூந்தோட்டங்களில் நீ பொழுதைப் போக்கலாம்: எந்த நேரத்திலும் யாழும் வீணையும் வாசிக்கக் கேட்கலாம். மாட மாளிகைகள் நிறைந்த, இந்நகருக்கு ஈடே கிடையாது!’ அவள் இவ்வாறு பேசும்பொழுதே நகரிலிருந்து இனிய இசை வருவதை ஹெர்க்குலிஸ் கவனித்துக் கேட்டான். அது அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. நகரின் நந்தவனங்களும், சோலைகளும், அங்கிருந்து வந்த இளந்தென்றலும் அவனைக் கூவி அழைப்பவை போல் இருந்தன. அவனுக்கு நகரைப்பற்றிய ஆவலும் தோன்றிற்று. அதே சமயத்தில் மலைப்பாதையில் வேறொரு நங்கை நிற்பதையும் அவன் கண்டான். முதலில் கண்ட நங்கையைப் போலில்லாமல் அவள் முற்றிலும் மாறுபட்டிருந்தாள். அவள் துாய வெண்மையான ஆடைகளை அஎனிந்திருந்தாள். அவளுடைய கண்களில் சோகம் இருப்பினும், அவை வீரச் சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன. அவளும் ஹெர்க்குலிஸைப் பார்த்துப் பேசலானாள்: ’ஹெர்க்குலிஸ்! உன்னை என் சகோதரி ஏமாற்றப் பார்க்கிறாள். நகரில் வாழ்க்கை சுகமாகத்தான் தோன்றும். ஆனால், அதற்காக நீ செலுத்த வேண்டிய விலை மிக அதிகமாயிருக்கும். அங்கே உள்ளது சோம்பேறி வாழ்க்கை. நீ அங்கே செல்ல வேண்டா. என்னுடன் இந்த மலைப்பக்கம் வா! இந்த மலைமீது ஏறுவது கடினந்தான். மேலே செல்லச் செல்ல. மேலும் கடினமாயிருக்கும். ஆயினும், மலையின் உச்சியை அடைந்துவிட்டால், தெவிட்டாத இன்பத்தைப் பெறலாம். இந்த மலையின் மாருதமே உன்னை நிகரற்ற வீரனாக்கிவிடும். அச்சமில்லாமல், இடைவிடாமல் நடந்து, இந்த மலைமீது ஏறிவரத் துணிந்தால், இறுதியில் நீ ஒலிம்பிய மலைச்சிகரத்தையும் அடைந்து, தேவர்களுடன் வாழும் பேற்றையும் பெறுவாய்! கனவிலே கண்ட காரிகைகளில் ஹெர்க்குலிஸ் இரண்டாவது காரிகையையே பின்பற்றிச் செல்லத் துணிந்தான். கஷ்டங்கள் நிறைந்த மலைப்பாதையே தனக்கு உகந்தது என்று அவன் தீர்மானித்தான். அவன் நித்திரை கலைந்து எழுந்த பின்னும் அவனால் தான் கண்ட கனவை மறக்க முடியவில்லை. தன் வாழ்க்கையை எந்த நெறியில் செலுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவே அந்தக் கனவு தோன்றியதாக அவன் எண்ணிக்கொண்டான். உடல் வருந்தாமல் சுக வாழ்வு வாழ்வதில் உண்மையான இன்பம் எதுவுமில்லை என்றும், எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு ஏற்று, வீர தீரத்துடன் அரும்பெரும் காரியங்களைச் செய்து, மக்களுக்குத் தொண்டு செய்வதே தன் வாழ்வின் குறிக்கோளாயிருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். அவனைப் போன்ற வீரனுக்கு வெறும் உயிரைக் சுமந்துகொண்டு உலவுவது வாழ்க்கை ஆகாது என்று அவனுக்குத் தெளிவாகிவிட்டது. மன்னன் யூரிஸ்தியஸின் கட்டளை ஹெர்க்குலிஸூக்கு வயது பதினேழாயிற்று. அவன் கிரானுடைய பள்ளியை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினான். மக்களைத் தொந்தரவு செய்து வந்த விலங்குகளை வதைப்பதும் வலியோர் மெலிந்தவரை வருத்தாமல் காப்பதும் அவனுக்குத் தொழில்களாயின. இவற்றால் மக்களிடையே அவனுடைய புகழ் வளர்ந்து வந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவன் வேறு ஒருவனுக்கு அடிமை போலிருந்து சில ஆண்டுகள் பணியாற்ற நேர்ந்தது. அவன், பூமியில் தோன்றியதிலிருந்தே தேவர்களின் அரசியான ஹீரா தேவி அவனுக்கு எதிரியாக இருந்து வந்தாள் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. அவளைச் சமாதானப்படுத்துவதற்காகச் சீயஸ் கடவுள் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். அதாவது, ஹெர்க்குலிஸ் தக்க வயது வந்ததும், மைசின் நகரத்து மன்னனான யூரிஸ்தியஸிடம் கட்டுப்பட்டுச் சிறிது காலம் அவன் ஏவிய பத்துப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டுமென்றும், அதற்குப் பின்னால் அவன் ஒலிம்பிய மலைக்கு வந்து ஒரு தேவனாக வசிக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். அவர் குறித்திருந்த காலம் வந்துவிட்டது. யூரிஸ்தியஸ் ஹெர்க்குலியசின் சிற்றன்னையின் மைந்தன். அவனுக்கு ஹெர்க்குலிஸிடம் அச்சமும் பொறாமையும் அதிகம். ஆகவே, காலம் விட்டது என்பதை அறிந்து, அவன் ஹெர்க்குவிஸுக்குத் தூதர்களை அனுப்பிக் தன்னிடம் வந்து பணிபுரிய வேண்டுமென்று அவனை அழைத்தான். முதலில் ஹெர்க்குலிஸ் மறுத்துவிட்ட போதிலும், பிறகு, சீயஸ் கடவுளின் கட்டளை என்பதால், அவன் மைசீன் நகருக்குச் சென்று யூரிஸ்தியஸைக் கண்டான். ஆறடிக்குமேல் உயரமாயும், உலகிலேயே மிகப் பெரியவனாயும் ஒரு வீரன், ஒரு தோளிலே வில்லும், வலக்கரத்திலே ஒரு கதையும் தாங்கி, வீதி வழியாக அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந்தான் என்பதைக் காவலர் முன்னதாகவே மன்னனுக்குத் தெரிவித்திருந்தனர். ‘கதை’ என்ற சொல்லிலிருந்து வருகின்றவன் ஹெர்க்குலிஸ்தான் என்று அவன் தெரிந்து, தன்னைச் சுற்றிலும் பலசாலிகளான பல வீரர்களை நிற்க வைத்துக் கொண்டு. அவன் தன் கொலுமண்டபத்தில் விற்றிருந்தான். ஹெர்க்குலிஸ் மண்டபத்துள் வந்ததும் , அரியனையில் அமர்த்திருந்த யூரிஸ்திஸ் பாதி அச்சத்தோடும், பாதி வெறுப்போடும் அவனை ஏறிட்டுப் பார்த்தான். அந்த வீரர் திலகத்தின் அகன்ற மார்பும், திரண்ட தோள்களும், நெடிய உருவமும், வீரத் திருவிழிப் பார்வையும் அவனுடைய உள்ளத்தை உருக்கிவிட்டன. இவன் மானிடனா, மானிட மடங்கலா? என்று அவன் அஞ்சி நடுக்கமுற்றான். ஹெர்க்குலிஸும் அவனை ஒரு முறை பார்த்தான். இருவரும் முகமனாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஹெர்க்குலிஸ், வரவேற்புரைக்காகக் காத்திராமல், தான் வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லத் தொடங்கினான். ‘மானிடர் அனைவருக்கும். தேவர்களுக்கும் முதன்மையானவர் சீயஸ். அவரை எதிர்த்து நிற்க நான் விரும்பவில்லை. ஆகவே, அவர் கட்டளைப்படி எனக்கு அளிக்கப்பெறும் எந்தப் பணியையும் ஏற்று நிறைவேற்றுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்!’ என்று அவன் கூறினான். அதைக் கேட்ட மன்னன், சிறிது தைரியமடைந்து பேசத் தொடங்கினான்: ‘சகோதர! சீயஸ் கடவுளின் ஆணையை நாம் அனைவரும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நானும் நீ செய்ய வேண்டிய பணியைப் பற்றிக் கட்டளையிட வேண்டியிருக்கிறது. உனக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்படியான பணியே விதிக்க நான் விரும்புகிறேன். ஆர்கோலிஸ் நாட்டில் நிமீ என்ற வனத்தில் ஒரு சிங்கம் ஒளிந்து திரிந்துகொண்டிருக்கின்றது. அதனால் குடியானவர்களுக்கும் மற்ற மக்களுக்கும் எந்த நேரமும் திகில் ஏற்பட்டிருக்கிறது. ஆயர்களையும் ஆடுகளையும் அது அடித்துத் தின்றுவிடுகின்றது. அந்தச் சிங்கத்தை,நீ போய்க் கொன்று விட்டு வர வேண்டும்!’ சிங்கத்தை வேட்டையாடச் செல்லும் ஹெர்க்குலிஸ் அதற்கே பலியாகிவிடுவான் என்று யூரிஸ்தியஸ் கருதினான். இது ஹெர்க்குலிஸுக்கு அவன் இட்ட முதல் பணி. இத்தகைய கடுமையான பன்னிரண்டு பணிகளை அவனுக்காக ஹெர்க்குலிஸ் செய்ய வேண்டியிருந்தது. அவற்றை வரிசையாகக் கவனிப்போம். மன்னனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, ஹெர்குலிஸ் சரேலென்று மண்டபத்தை விட்டு வெளியேறி, நகரத்தின் கோட்டை வாயிலையும் கடந்து சென்றான். நிமீ வனத்துச் சிங்கம் நிமீ வனத்துச் சிங்கம் என்று நாடெங்கும் பயங்கரமானதாகக் கருதப்பெற்று வந்த விலங்கு அவ்வனத்தில் ஒரு குகையிலே வாழ்ந்து வந்தது. கல், இரும்பு, வெண்கலம் ஆகியவற்றில் செய்த கூரிய ஆயுதம் எதுவும் அதன் உடலில் பாய முடியாது; அதன் தோல் அவ்வளவு கடினமுள்ளது. இரவு நேரங்களில் அது தன் குகையை விட்டு வெளியே கிளம்பி, நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளைக் கடித்துக் கொன்றுவிடுவது வழக்கம். சில சமயங்களில் அது பகலிலும், சுற்றியிருந்த கிராமங்களுக்குச் செல்லுவதுண்டு. வழியில் மனிதர்களோ குழந்தைகளோ அதனிட சிக்கிவிட்டால், அவர்கள் உடனே அதற்கு இரையாகிவிடுவார்கள். நிமீ நகரில் சீயஸ் கடவுளின் ஆலயத்தைச் சுற்றியிருந்த வனம் முழுதிலும் அதுவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனவே அவ்வனத்தை ஒட்டியிருந்த கிராமங்களில் மக்கள் அல்லும் பகலும் அச்சிங்கத்தைப்பற்றிக் கிலி பிடித்து மறைந்து வாழ்ந்து வந்தனர். நிமீ நகரிலிந்து இரண்டு மைல் தொலைவில் இப்பொழுதும் ஒரு குகை இருந்து வருகின்றது. அதில்தான் அந்தக் கொடிய சிங்கம் வசித்து வந்தது என்று நகர மக்கள் கூறுகின்றனர். மைசீன் நகரை விட்டு வெலியே சென்ற ஹெர்க்குலிஸ், நேராக நிமீ வனத்தை நோக்கி நடந்து சென்றான். நெடுந்தூரம் சென்ற பின், நண்பகலில் வெயிலின் கொடுமை அதிகமாயிருந்ததால், அவன் ஓர் ஆயனின் குடிசையை அடைந்து, அங்கே சற்று நேரம் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பினான். அந்த வீட்டிலிருந்த ஆயன், அவனை அன்புடன் வரவேற்று, குடிப்பதற்கு அவனுக்கு நிறையப் பால் அளித்தான். கொஞ்சம் பலகாரமும் உண்டு, பாலைக் குடித்த பின், ஹெர்க்குலிஸ் குடிசையில் சற்றே தலை சாய்த்திருக்க எண்ணினான். ஆனால், குடிசையின் கூடம் போதிய அளவு நீளமாயில்லாததால், அவன் தன் கால்களை வாயிற்படிக்கு வெளியே நீட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அவனுடைய உடல் அவ்வளவு உயரமாயிருந்தது! குடிசையில் அவன் நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், நிலையைத் தாண்டும் பொழுதும் தலை குனிந்து, உடலையும் வளைத்துக்கொள்ள வேண்டியிருந்தது! அவன் சிறிது நேரம் தூக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தான். அது அந்தி மாலை. அப்பொழுது குடிசையில் ஆயனும் அவன் தாயும் ஏதோ வருத்தமுற்றுப் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கவனித்த ஹெர்க்குலிஸ், என்ன விஷயம் என்று விசாரித்தான். ஆயனின் தாயான கிழவி, ‘இரண்டு மாதங்களுக் முன்னாள் இவனுடைய மனைவி வனத்திலிருந்து எங்கள் பசுக்கள் இரண்டைப் பற்றிக்கொண்டு வருவதாகப் போனவள் பிறகு மீண்டு வரவேயில்லை!’ என்று சொன்னாள். ஆயன் கண்ணிர் பெருக்கி அழுதுகொண்டிருந்தான். கிழவி தன் மகனையும் சமாதானம் செய்தாள். ’நீ ஆண் பிள்ளை, இப்படி அழலாமா? நடந்தது நடந்துவிட்டது. காலிஸ்தை போய்விட்டால், அவளைப் போல் வேறொரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் என்று அவள் தேறுதல் சொன்னாள். ஆயன் இனி அவள் வரப்போவதேயில்லை! நட்சத்திரங்ளைப் போல் மின்னிக் கொண்டிருந்த அவள் கண்களை நாம் இனிமேல் காணப்போவதேயில்லை! பதினாறு வயது - அதற்குள் அவளுடைய விதி முடிந்து விட்டது! அவளைக் கொன்ற அந்த மிருகம் இன்னும் நாசமாய்ப் போகவில்லையே!’ என்று துக்கத்தோடு பேசினான். ‘என்ன மிருகம்?’ என்று ஹெர்க்குலிஸ் அவனைப்பார்த்து ஆவலுடன் கேட்டான். ஆயன், ’நிமீ வனத்துச் சிங்கம், ஐயா! அதன் குகை அங்கேதான் இருக்கிறது. நாள்தோறும் அது பல உயிர்களைப் பழி வங்கிவிடுகின்றது. அதனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இங்கே அஞ்சி நடுங்கிக் கொண்டி ருக்கிறோம். அதன் கர்ச்சனையைக் கேட்டு ஆடு மாடுகள் கூடச் சரியாகத் தீனி தின்பதில்லை. அவை களெல்லாம் மெலிந்து நலிந்து போய்விட்டன! என்று சொன்னான். ஹெர்க்குலிஸ் எழுந்து நின்றுகொண்டு, ‘அதை வதைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்!’ என்று கூறினான். அதைக் கேட்டதும், ஆயனும் கிழவியும் வியப்புற்று எழுந்து, அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஹெர்க்குலிஸ் மெதுவாகக் குடிசைக்கு வெளியே இறங்கினான். அவர்களும் அவனைத் தொடர்ந்து சென்று. அவன் குளித்துவிட்டு, திராட்சை ரசம் முதலியவை பருகிச் செல்லலாம் என்று அவனை வேண்டிக்கொண்டனர். ஆனால், அவன் மேற்கொண்டு அங்கே தாமதிக்க விரும்பவில்லை. யூரிஸ்தியஸைலப் பற்றிய நினைவோ, சீயஸ் கடவுளின் கட்டளையோ அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தானாகவே ஒரு பெருஞ்செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆவேசமுண்டாகிவிட்டது. கொடிய விலங்கின் பிடியிலிருந்து மக்களை எப்படியாவது விடுதலை செய்தாக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். வானமே கருத்துவிட்டது. விண்ணில் மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவன் பல திராட்சைத் தோட்டங்களைக் கடந்து, மலைச்சாரலின் மேலே ஏறி நடந்து நிமீ வனத்தை அடைந்தான். அங்கே சென்றதும். அவன் சிறிது நேரம் அமைதியாக நின்று கவனித்தான். அப்பொழுது வெகு தொலைவில், கடல் அலைகள் கரையிலுள்ள பாறைகளின்மீது மோதுவது போன்ற ஓசை அவன் செவிகளில் ஒலித்தது. சிங்கத்தின் உறுமல்தான் அது என்பதை அறிந்து, அவன் சிரித்தான். வனத்தில், சீயஸ் தேவனின் கோயிலருகில், ஒரு பெரிய மரத்தடியில் அவன் நெடுநேரம் காத்திருந்தான். தன்னுடைய வில்லில் நாண் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து, அவன் கையில் ஓர் அம்பினையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்டான். வலத் தோளிலே கயிற்றில் கட்டியிருந்த அவனுடைய கதையும் தொங்கிக்கொண்டிருந்தது. நீண்ட நேரமாக ஓசை எதுவும் கேட்கவில்லை. வானத்தில் சந்திரன் உதயமாவதையும் எதிர்பார்த்துக்கொண்டு, அவன் நின்ற இடத்திலேயே நிலையாக நின்றான். சிறிது நேரத்திற்குப்பின் நிலவொளியில் ஒரு நிழல் அசைவதை அவன் கண்டான். நிமீ வனத்துச் சிங்கம் அவன் கண் முன்பு வந்துவிட்டது! பருத்துக் கொழுத்த உடல், கறுப்பும் பழுப்பும் கலந்த நிறம், தரையிலே புரண்டுகொண்டிருந்த வால் ஆகியவற்றுடன் அந்தச் சிங்கம், தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பிப் பார்த்துக்கொண்டும் , மேப்பம், பிடித்துக்கொண்டும் நடந்து வந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸ் உடனே வலிமை மிகுந்த ஒரு பானத்தை வில்லிலே தொடுத்து, அவ்விலங்கின் மீது விடுத்தான். அது சிங்கத்தின் விலாப்புறத்தில் பாய்ந்தது. ஆனால், அதன் தோலில் ஊருவிச் செல்லாமல், நழுவி, ஆடிக்கொண்டே தரையில் விழுந்து விட்டது. சிங்கம் அவன் நின்ற திசையைத் திரும்பிப் பத்துவிட்டுக் தரையில் கிடந்த அம்பை முகர்ந்து பார்த்தது. அதற்குள் ஹெர்க்குலிஸ் இரண்டாவது அம்பு ஒன்றை அதன் மீது ஏவினான். அது ‘விர்ர்ர்’ என்று ரீங்காம் செய்துகொண்டே வேகமாகப் பாய்ந்தது. ஆனால், சிங்கத்தின்மேலே அது தாக்கியதும், இரண்டாக முறிந்து கீழே வீழ்ந்துவிட்டது. அப்பொழுது சிங்கம், காடே அதிரும்படி கர்ச்சனை செய்துகொண்டு, அம்பு வந்த திசையை நோக்கிப் பாய்ந்து சென்றது. ஹெர்குலிஸுக்கும் போராட வாய்ப்பு வந்து விட்டதென்ற மகிழ்ச்சியுடன் தன் மறைவிடத்திலிருந்து குதித்து, வெளியே சிங்கத்தை எதிர்கொண்டு ஓடினான். மக்களிலே தலைசிறந்த வீரனும், விலங்குகளிலே தலைசிறந்த சிங்கமும் எதிர் எதிராகத் தோன்றியக் காட்சி வியக்கத்தக்கதாயிருந்தது. சில விநாடிகள் சிங்கம் அவனை உற்றுப் பார்த்தது, அவனும் அதைக் கவணித்துக்கொண்டான். அவன்மீது பாய்வதற்காக அது பதி போட்டது. அதற்குள் அவன் தன் கதையை எடுத்து அதன் மண்டைக்கு நேராகக் குறிபார்த்து எறிந்துவிட்டான். ஆயினும், பிடரி மயிர் அடர்ந்திருந்த சிங்கத்தின் தலையில் தாக்கிய கதை அதற்கு ஒரு கேடும் விளைவிக்காமல் கீழே விழுந்துவிட்டது. எனினும், வல்லான் ஒருவன் தன்னை. எதிர்க்க வந்திருக்கிறான் என்பதைச் சிங்கம் உணர்ந்துகொண்டது. அதுவரை எந்த மனிதனும் அந்த அளவுக்கு அதை எதிர்த்து ஆயுதங்களை உபயோகித்ததில்லை. ஆகவே, அது மெதுவாகப் பின்னடைந்து புதர்களிலே பாய்ந்து மறைந்துவிட்டது. ஹெர்க்குலிஸுசும் தன் கதையையும். முரிந்து கிடந்த அம்புகளையும் எடுத்துக்கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்று சென்றான். அன்றிரவு அவன் மேற்கொண்டு சிங்கத்தை நாடிச் செல்லவில்லை. அவன் இரவுப்பொழுதை ஒரு குடியானவன் விட்டிலேயே கழித்தான். அவன் யார் என்பதையும், அவன் மேற்கொண்டுள்ள பணியையும் தெரிந்து கொண்ட குடியானவன், மிக்க அன்புடன் அவனை உபசரித்தான். அங்கிருந்த பொழுது ஹெர்க்குலிஸ் நிமீ வனத்துச் சிங்கத்தின் கொடுமைகளைப் பற்றி மேலும் பல செய்திகளைக் கேள்விப்பட்டான். மறு நாள் காலை அவன் குடியானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லி, விரைவிலே சிங்கம் விண்ணுலகை அடையுமென்றும் தெரிவித்தான். பிறகு; அவன் வெளியே சென்று, ஆற்றில் நீராடிவிட்டு வந்து உணவருந்தினான்; பிறகு, ஒரு யாழ் கொண்டுவரச் சொல்லி, அதை மீட்டி, அருமையாக வெகுநேரம் பாடிக்கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கும். அவனுடைய இசையைக் கேட்பதற்குமாக மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். இசைக்குப் பின் அவன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான். அவன் ஓடுவதும், சாடுவதும், துள்ளுவதும், தாவுவதும், இரும்புச் சக்கரங்களை வீசுவதும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் கன்னியர்களுக்கும் ஆனந்தக் காட்சியாக இருந்தது. அன்று நண்பகலுக்குப் பின் சிறிது நேரம் கழிந்து, ஹெர்க்குலிஸ் வனத்தை நோக்கிக் இளம்பினான். வழியிலே அவன் விசாரித்ததில், முந்திய நாள் இரவிலும் சிங்கம் ஒரு மனிதனைக் கொன்று தின்றதாகத் தகவல் தெரிந்தது. ஒரு மைல் தூரத்திற்கு அப்பால், ஒரு குன்றின்மேல், சிங்கம் மனித உயிரைப் பலி வாங்கிய இடத்தைச் சில ஜனங்கள் அவனுக்குக் காட்டினர். அங்கிருந்து அவன் சிங்கத்தைத் தேடிக்கொண்டு தனியாக நடந்து சென்றான். செடிகளும் கொடிகளும் பின்னி அடர்ந்திருந்த வனத்தில் அவைகளை ஊடுருவிக் கொண்டு அவன் வேகமாக மேலேறிச் சென்றான். அன்று மாலை நேரத்தில் அவன் சிங்கத்தின் குகையைக் கண்டுகொண்டான். மலையில் முன்புறமாக நீண்டிருந்த ஒரு பெரும்பாறையின் அடியில் அந்தக் குகை அமைந்திருந்தது. அதற்கு மேலும் கீழும் மரங்கள் அடர்ந்த வனம் பரவியிருந்தது. குகையைச் சுற்றிப் பல எலும்புகள் சிதறிக் கிடந்தன. அந்த இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. சிங்கம் குகையிலிருப்பதைக் கண்ட ஹைர்க்குலிஸ், மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டு, தன் கதையைக் கையிலெடுத்து அதன் நெற்றியை நோக்கிக்கி வீசினான். எழுத்தாணிக் கொண்டைகள் போல முடிச்சுகள் அமைந்திருந்த அந்தக் கதை சிங்கத்தின் புருவங்களை ஒட்டி பலமாகத் தாக்கியது. அதனால் அதிர்சியடைந்த சிங்கம், கடுஞ்சிற்றத்துடன் அவன் மீது பாய்ந்து வந்தது. அதை எதிர்பார்த்துத் தயாராயிருந்த வீரனும் சரேலென்று அதை நோக்கிப் பாய்ந்தான். சிங்கம் கால்களால் தன்னை பற்றிக்கொள்வதற்கு முன்னால் அவன் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக்கொண்டு, அதன் பிடரி மயிருக்குள் செலுத்தி, அதன் குரல் வளையை இறுகப் பிடித்துக்கொண்டான். அம்பும், வாளும் கதையும் வதைக்க முடியாத அந்த மிருகத்தைக் கைகளின் பலத்தாலேயே வதைக்க வேண்டும் என்று அவன் முன்பே திட்டம் செய்திருந்தான். அதன்படியே அப்போது குரல் வளையைப் பற்றிக்கொண்டுவிட்டான். அந்த நேரத்தில் அவனுக்கும் சிங்கத்திற்கும் மிகக் கோரமான யுத்தம் நடந்தது. சிங்கம் கால் பாதங்களால் அவனைத் தாக்கி நகங்களால், பிறாண்டிற்று. அவனுடைய உடலில் பலபகுதிகளிலிலிருந்து உதிரம் உதிரம் வடியத் தொடங்கியது. எனினும். சிங்கத்தின் உறுமலுக்கு ஏற்றபடி ஹெர்குலிஸும் உறுமுனான். வயிரம் பாய்ந்த பனைகளைப் போன்ற அவனுடைய கைகள், சிங்கத்தின் கழுத்தின் பிடியை விடவேயில்லை. இவ்வாறு நெட்நேரம் வனராஜனுக்கும் மானிட திலகத்துக்கும் மற்போர் நடந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸ் நீண்ட பெரு முச்சுவிட்டுக் கொண்டு, மிகவும் பலமாக அழுத்தி மடங்கலின் குரல்வளையை நெரித்துவிட்டான்! சிங்கத்தின் மூச்சு ஒடுங்கி, அதன் அங்கங்கள் சோர்ந்து, விழுதுகள் போல் தொங்கிவிட்டன! மாண்டுபோன சிங்கத்தை அப்படியே தன் தோள்களின்மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, ஹெக்குலிஸ் வனத்தைக் கடந்து, மலையிலிருந்து இழே இறங்கினான். திராட்சைத் தோட்டங்களின் வழியாக அவன் நடந்து செல்லுகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவனைச் சூழ்ந்துகொண்டனர். ஆடியும், பாடியும், கூக்குரலிட்டும் அவர்கள் மகிழ்ச்சியோடு எழுப்பிய ஒலி செவிடுபடச் செய்வதாயிருந்தது. பெண்கள் ஆனந்தப் பெருக்கினால் அழுதனர். பலர் அவனை வழி மறித்து, ‘ஹெர்க்குலிஸ்! எங்களுடன் தங்கியிரு! பாலும், பணிகாரர்களும், திராட்சை மதுவும் ஏராளமாயிருக்கின்றன. அவைகளை அருந்திவிட்டுச் செல்லலாம். உன் உடலிலுள்ள புண்களுக்கும் மருந்து வைத்துக் கட்டுகிறோம்!’ என்று வேண்டினார்கள். ஆனால் ஹெர்க்குலிஸ் தன் நடையை நிறுத்தவில்லை. ‘அன்பர்களே! நான் நேராக மைசீனுக்குச் செல்ல வேண்டும்! சீயஸ் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதே இப்பொழுது என் கடமையாயுள்ளது! இடையில் எனக்கு ஒய்வென்பதில்லை!’ என்று அவன் கூறினான். எனினும் மக்கள் அவனைப் பிரிய மனமில்லாமல், அவனைத் தொடர்ந்து சென்றனர். அவன் ஒரு நாள் மாலை மைசீன் நகரத்துக் கோட்டை வாயிலை அடைந்தான். உடனே கோட்டைக் காவலன், மேள தாளங்களுடனும் புல்லாங்குழல்கள், எக்காளங்கள் ஊதிக்கொண்டும் பெருந்திரளான ஜனங்கள் வருவதாயும். அவர்களுக்கு நடுவே கோளரி ஒன்றைத் தோள்களிலே சுமந்துகொண்டு ஹெர்க்குலிஸும் நடந்து வருவதாயும் யூரிஸ்தியஸுக்குச் செய்தி அனுப்பினான். அவசர அவசரமாக யூரிஸ்தியஸ், தன் படைவீரரை அழைத்துப் பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு, அரியணை மீது அமர்ந்து, வெற்றி வீரனை வரவேற்க ஆயத்தமானான். திறந்திருந்த அரண்மனைக் கதவுகளைத் தாண்டி, ஹெர்க்குலிஸ் உள்ளே நுழைந்து, கொலுமண்டபத்தை அடைந்தான். அவன் தோள்களிலிலும், உடலின் விலாப்புறங்களிலும் சிங்கம் நகங்களால் கிழித்த வடுக்களிலிருந்து உதிரம் பெருகிக் கொண்டிருந்தது. சூட்டினாலும், அவன் எடுத்துக் கொண்ட சிரமத்தினாலும், வழி நடையாலும் அவனுடைய முகம் காய்ந்து சிவந்து போயிருந்தது. அவன் கண்கள் வெறி பிடித்தவை போல உருண்டு கொண்டிருந்தன. இப்படி உக்கிரமான தோற்றத்துடன் விளங்கிய அவனைக்காட்டிலும் அதிக உக்கிரமாக தோன்றிற்று அவன் தோள்களிலே தொங்கிக் கொண்டிருந்த நிமீ வனத்துச் செத்த சிங்கம். அரியணையில் அமர்ந்திருந்த யூரிஸ்தியஸ் பயத்தால் நடுங்கினான். அவன் முகம் வெளிறிப் போய்விட்டது. அவன் மெதுவாக எழுந்து, பின்னால் இருந்த படை வீரர்களிடையே சற்று மறைவாக நின்று கொண்டான். அந்தக் கோழையின் மனநிலையை அறிந்து, ஹெர்லிலிஸ் இடியிடிப்பது போல் நகைத்தான். சபா மண்டபத்தின் நடுவிலே நின்றுகொண்டு அவன் தன் தன் இரு கைகளிலும் சிங்கத்தின் உடலை மேலே தூக்கிக் கீழே வீசியெரிந்தான். எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்! உயிரோடு கர்ச்சனை செய்துகொண்டிருந்த எந்த சிங்கத்தோடு நான் மல்லாடினேனோ, சீவன்ற்ற அதன் உடலைக் கண்டு இனி நீங்கள் அஞ்சிக்கொண்டிருங்கள் என்று அவன் உரக்கக் கூவினான். தரையில் தடாலென்று விழுந்த சிங்கத்தைக் கண்டதும், யூரிஸ்தியஸ் சபா மண்டபத்தை விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான். யூரிதியஸ், ஹெர்குலிஸ்…. இருவரில் நார் அரசன், யார் அடிமை? யூரிஸ்தியஸ் உலக முறைப்படி தலையில் மகுடம் அணிந்து அரசனாக விளங்கிய போதிலும், ஆலன் தன் கோழைத்தனத்தால் அடிமையைவிடக் கேவலமான நிலையை அடைந்தான். ஹெர்க்குலிஸ், தேவ கட்டளையால் அவனுக்குத் தொண்டு செய்ய நேர்ந்திருப்பினும், தன் வீரத்தாலும் பெருந்தன்மையாலும் அரண்மனையிலும், வெளியிலும், நாட்டிலுமே புகழ் பெற்று அரசனுக்கும மேலான பெருமையுடன் விளங்கினான். எவராலும் வதைக்க முடியாத சீயத்தை இரு கைகளாலேயே வதைத்துத் துாக்கி வந்த மானுட மடங்கலாகிய ஹெர்க்குலிஸுக்கு யூரிஸ்தியஸ் எப்படி நன்றி செலுத்தினான்? ‘இனிமேல் ஹெர்க்குலிஸ் கோட்டைக்கு வெளியே சென்றுவிட்டுத் திரும்ப வருகையில், அவனைக் கோட்டைக்குள்ளே வர அனுமதிக்க வேண்டாம்!’ என்று அவன் தன் காவலருக்குக் கட்டளையிட்டான்! நினைவிலும் கனவிலும் அவனுக்கு ஹெர்க்குலிஸைப்பற்றியே திகிலாயிருந்தது. அந்த வீரன் கோட்டைக்குள் வந்தாலே தனக்கு என்ன நேருமோ என்று அவன் கதிகலங்க வேண்டியிருந்தது. எக்காரணத்தாலாவது ஹெர்க்குலிஸ் நகருக்குள் புகுந்து கொலு மண்டபத்திற்கு வந்துவிட்டால், தான் ஓடி ஒளிந்து கொள்வதற்காக அவன் பூமிக்குள் பித்தளைத் தகடுகள் பதித்த ஓர் அறையை அமைக்கும்படியும் ஏற்பாடு செய்துகொண்டான். மண்டபத்திலிருந்து அந்தப் பித்தளை அறைக்குச் செல்ல ஒரு சுரங்க வழியும் அமைக்கப்பட்டது.  ஒன்பது தலை நாகத்தை வதைத்தல் ஹெர்க்குலிஸ் நிறைவேற்ற வேண்டிய இரண்டாவது பணியாக லெர்னா வனத்திலிருந்த ஒன்பது தலை நாகத்தை, வதைக்க வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டான். இந்தத் தடவை ஹெர்க்குலிஸ் நிச்சயமாகத் திரும்ப மாட்டான் என்று அவன் எண்ணிக்கொண்டான். லெர்னா என்பது ஆர்கோஸ் நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள ஒரு பெருந்தோட்டம். அது கடற்கரையை ஓட்டியிருந்தது. பான்டினஸ் மலைக்குக் கிழக்கில் அது கடல்வரை பரவியிருந்தது. அதற்கு அருகில் பான்டினஸ் என்ற பெயரையே கொண்ட ஓர் ஆறு அமிமோன் என்ற ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பிரதேசம் மிகவும் செழிப்புள்ளது. அங்கே தேவர்களுக்குரிய ஆலயங்களும் இருந்ததால், அது புனிதத் தலமாகவும் கொண்டாடப்பெற்று வந்தது. அமிமோன் ஆற்றின் உற்பத்தித் தலத்தில்தான் முற்காலத்தில் ஒன்பது தலை நாகம் ஒன்று வசித்து வந்தது. அந்த நாகம் கொடிய விஷமுள்ளது. லெர்னா தோட்டத்துக் காற்றை ஒருவர் சுவாசித்தாலும் மரணமடைவர் என்னும்படி, அதன் விஷம் சுற்றிலும் காற்றிலே பரவியிருந்தது. தோட்டத்தின் நடுவில் ஆழங்காண முடியாத சேறு நிறைந்த மடு ஒன்று இருந்தது. அதிலே இருந்துகொண்டு அந்நாகம் செய்து வந்த ஆர்ப்பாட்டத்துக்கு அளவேயில்லை. அது எத்தனையோ ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கி யிருந்த்தால் மக்கள் அதைப்பற்றி அஞ்சிக்கொண்டேயிருந்தனர். அதை எவராலும் அதுவரை வதைக்க முடியவில்லை. ஏனெனில், அதன் ஒன்பது தலைகளில் ஒரு தலையை வெட்டினால், உடனே ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தலைகள் முளைத்துவிடும்! மேலும், ஒன்பது தலைகளில் ஒரு தலை சாகாவரம் பெற்றது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நிலத்தின்மீது நீண்ட குன்று கிடப்பது போல், மடுவிலே கிடக்கும் அந்த நாகத்தைத்தான் ஹெர்க்குலிஸ் வதைக்க வேண்டியிருந்தது. லெர்னாவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஹெர்க்குலிஸ் தான் நிறைவேற்ற வேண்டிய இந்த இரண்டாவது பணியைப்பற்றி நெடுநேரம் ஆலோசனை செய்தான். தன்னோடு தன் சகோதரன் பையனான அயோலஸ் என்பவனையும் அழைத்துச் செல்லுவது நலமென்று அவன் தீர்மானித்தான். அயோலஸ் இளைஞன் : வீரமுள்ளவன் : கடமை உணர்ச்சியுள்ளவன்; எதிலும் உறுதியாக நிற்கக்கூடியவன். ஆதலால் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஹெர்க்குலிஸ் ஆர்கோஸ் நகரை நோக்கிப் பயணமானான். இந்தத் தடவை அவன் கையில் உடைவாள் ஒன்றும் இருந்தது. வழக்கம் போல் ஹீரா தேவி, அவனுக்கு எதிராகவும், நாகத்திற்கு உதவியாகவும் இருந்தாள். ஆனால், அதீனா தேவி அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து உதவி வந்தாள். அவளுடைய உதவியால்தான் அவன் நாகம் இருந்த இடத்தை எளிதில் கண்டு கொள்ள முடிந்தது. அவனும் அயோலஸும் லெர்னா தோட்டத்தை அடைந்ததும், மடுவிலே நாகத்தைப் பார்த்தனர். ஒன்பது தலைகளும் படம் விரித்து ‘உஸ், உஸ்’ ஸென்று சீறி ஆடிக்கொண்டிருந்தன. ஒன்பது வாய்களும் பெருங்குகைகளைப் போல் திறந்திருந்தன. அவைகளிலிருந்து நச்சுக் காற்று வெளியே வீசிக் கொண்டேயிருந்தது. நாகத்தைக் கண்தும், ஹெர்க்குலிஸ் மூச்சை அடக்கிச் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டு, தன் வில்லில் அனல் உமிழும் அக்னி அஸ்திரங்களைத் தொடுத்து, நாகத்தின் ஒன்பது தலைகளின் மீதும் பாயும்படி விடுத்தான். ஓர் அம்பு கூடக் குறி தவறவில்லை. அவை அத்தலைகளைத் துண்டித்துத் தள்ளிவிட்டன. ஆனால் கீழே விழுந்த ஒவ்வொரு தலைக்கும் பதிலாக இரு தலைகள் வீதம் உடனே முளைத்திருப்பதை அவன் கண்டு திகைத்தான். உடனே அவன் தன் கதையைக் கையில் எடுத்துக் கொண்டு நாகத்தின் மீது பாய்ந்து, அதன் தலைகளை தையப் புடைத்தான். நாகமும் இடிபோல் குமுறிக் கொண்டு அவனைத் தாக்க முயன்றது. ஆனால், அவன் அதற்குப் பிடிகொடுக்காமல், பம்பரம்போல் சுழன்று சுழன்று அதைத் தாக்கிக்கொண்டேயிருந்தான். இக்காட்சியைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அயோலஸுக்கு எதுவும் தெளிவாய்த் தெரியவில்லை. அத்தனை வேகத்துடன் ஹெர்க்குலிஸ் நாகத்தின் தலைகளை அடித்து வதைத்துக்கொண்டிருந்தான். ஆயினும், புதிய புதிய தலைகள் முளைத்துக்கொண்டேயிருந்தன. அந்த நேரத்தில் ஹீரா தேவியின் ஏவலால், கடல் ஆமை போன்ற பெரிய நண்டு ஒன்று அவனுடைய பாதம் ஒன்றைப் பற்றிக் கொண்டு கடித்தது. அவன் அதைக் கவனிக்காமலே துள்ளிக் குதித்ததில் அந்த நண்டு அவன் காலடியில் அகப்பட்டுச் சடசடவென்று உடைந்து நசுங்கிப் போய்விட்டது. ஹீரா தேவி அந்த நண்டுக்கு நன்றி செலுத்துதுவதற்காக அதை வானத்தில் ‘கர்க்கடக’ நட்சத்திர ராசியாக நிறுத்தி வைத்தாள் என்று கிரேக்கக் கதைகள் கூறுகின்றன. அன்று அம்புகளாலும் கதையாலும் நாகத்தை வதைக்க முடியாதென்று கண்ட ஹெர்க்குலிஸ், அயோலஸுடன் வனத்திற்குத் திரும்பிச் சென்று, ஓரிடத்தில் தங்கியிருந்தான். அங்கே சிறிது நேரம் அமர்ந்து ஆலோசனை செய்து, அவன் ஒரு பெரிய மரத்ததை, வெட்டிச் சாய்த்தான். அதன் கிளைகளையெல்லாம் தனித்தனியாக முறித்து அடுக்கி வைக்கும்படி அயோலஸிடம் சொல்லிவிட்டு, அவன் கிராமப்புறதிலிருந்த ஒரு கருமானிடம் சென்று, இரண்டு நீண்ட இரும்புக் கம்பிகள் தயாரித்து வாங்கி வந்தான். அவைகளின் முனைகள்மட்டும் தட்டையாக அடிக்கப்பெற்றிருந்தன. மறு நாள் காலையில் அயோலஸ் கொப்புக்களையும் குச்சிகளையும் குவித்து, அவற்றில் தீ மூட்டினான். இரும்புக் கம்பிகளின் தட்டையான பகுதிகளைத் தீயில் வைத்து, அவன் அவைகளை நன்றாகப் பழுக்கக் காய்ச்சினான். அவைகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அவனைத் தன்னோடு வருமாறு ஹெர்க்குலிஸ் அழைத்துச் சென்றான். நாகத்துடன் இரண்டாம் நாள் போர் தொடங்கி விட்டது. ஹெர்க்குலிஸ் நாகத்துடன் போராடி, அதன் தலைகளில் ஒவ்வொன்றாகத் துணித்துத் தள்ளினான். [] அவன் ஒவ்வொரு தலையாக வெட்டியதும், அயோலஸ் தான் வைத்திருந்த காய்ந்த இரும்புக் கம்பியை வெட்டுப்பட்ட கழுத்தில் வைத்துத் தேய்த்துப் புதிதாகத் தலை உண்டாகாதபடி அந்த இடத்தைப் பொசுக்கி வந்தான். அன்று பகல் முழுதும் ஹெர்க்குலிஸ் நாகத்தைத் தாக்கிக்கொண்டேயிருந்தான். அயோலஸ் ஒவ்வொரு கம்பியாகக் காய்ச்சிக் கொணர்ந்து தன் பொசுக்கல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தான். நாகத்தின் விஷ மூச்சினால் அவர்கள் இருவருடைய கண்களும் பாதி கருகிப் போய்விட்டன. ஆயினும், அவர்கள் சிறிதுகூட அயரவில்லை. அயர்ந்திருந்தால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும். மாலைக் கதிரவன் மறையும் நேரத்தில், நாகத்தின் அழிவில்லாத தலை என்று சொல்லப்பெற்ற கடைசித் தலையையும் ஹெர்க்குலிஸ் வாளால் அரிந்து தள்ளினான். அது கீழே விழுந்தவுடன் அவன் அத்தலை மீது ஒரு பெரும்பாறையை உருட்டி, அதை மடுவுக்குள் ஆழ்த்திவிட்டான். பிறகு அவன் நாகத்தின் உடலையும் பிளந்தெறிந்தான். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால், அவன் தன் அம்புகள் அனைத்தையும் எடுத்து நாகத்தின் விஷத்தில் நன்றாக, தோய்த்துக் கொண்டான் . பின்னால் அந்த அம்புகள் எந்தப் பிராணி மீது பட்டாலும் அது மாய்ந்துவிடும்படி அவற்றில் விஷம் தோய்ந்திருக்கட்டும் என்பதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். லெனா தோட்டமும், அங்கிருந்த மடுவும் ஆயிக்கணக்கான போர் வீரர்கள் நின்று போராடிய களம் போலக் காட்சியளித்தன. ஒரு கொடிய நாகத்தை, வதைக்க அவ்வளவு பெரிய போராட்டம் அவசியமாயிருந்தது. மன்னன் யூரிஸ்தியஸ் பணித்த இரண்டாவது வேலை இவ்வாறு இனிது முடிந்துவிட்டது. ஹெக்குலிஸ், பையனை அழைத்துக்கொண்டு நல்ல நீருள்ள ஒரு பொய்கையை அடைந்தான். அங்கே இருவரும் தங்கள் உடல்களைச் சுத்தம் செய்துகொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் அடையாளம் தெரியாதபடி அவ்வளவு மாறியிருந்தனர். இருவரும் களைப்புற்றிருந்ததால், இரவில் வனத்திலேயே படுத்து உறங்கினார்கள். மறுநாள் காலை லெர்னா தோட்டத்தைச் சுற்றியிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஹெர்க்குலிஸைப் பலபடப் பாராட்டி வணங்கினார்கள். லெர்னா நாகத்தை வீழ்த்திய மகத்தான வெற்றியை அவர்கள் வாயாரப் புகழ்ந்து, வீரன் ஹெர்க்குலிஸ் நெடுநாள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினார்கள். அவனோடு, அயோலஸையும் அவர்கள் மறக்காமல் போற்றினார்கள். பிற்காலத்தில் அந்தப் பக்கத்து மக்கள் தாங்கள் ஏதாவது சபதம் செய்வதாயிருந்தால், ‘அயோலஸ்ஸைப் போல் விசுவாசமாக இருந்து நிறைவேற்றுவோம்!’ என்று சொல்லுவது வழக்கமாயிற்று. அயோலஸின் பெயரால் லெர்னாவுக்கு அருகில் ஒரு கல் தூணூம் நாட்டப் பெற்றது. நாகத்தை வதைத்த வெற்றிச் சின்னங்களுடன் ஹெர்க்குலிஸ், மன்னனைக் காண விரைந்து சென்றான்.  கலைமான் கொணர்தல் யூரிஸ்தியஸ் ஹெர்க்குலிஸ்க்கு விதித்த மூன்றாவது பணி பேரழகுள்ள ஒரு கலைமானை உயிருடன் கொண்டு வர வேண்டும் என்பது. அந்த மான் ஆர்க்கேடிய நாட்டுக்கப்பால், மரங்கள் அடர்ந்த ஒரு குன்றின் அடிவாரத்திலிருந்த ஈனோ என்ற கிராமத்தின் அருகில் வனத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது. அதன் கொம்புகள் பொன்மயமானவை. அதனால் கதிரோளியிலும் நிலவொளியிலும் அவை மின்னிப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அதன் கால்களின் குளம்புகள் பித்தளையினால் ஆனவை. அதன் நிறம் பனிக்கட்டி போன்ற வெண்மை. ஆகவே அதன் அழகு சொல்லும் தரமன்று. கண்டவர் அனைவரும் அதை விட்டுப் பிரிய மனமில்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். ஆனால், அது மனிதர்களுடைய கண்களுக்கு எளிதில் புலப்படுவதில்லை. அந்த மானைப் பிடிப்பது எவருக்கும் இயலாத காரியம். முதலில் அதைத் தொடர்ந்து ஓட முடியாது. துள்ளி ஒடுவதிலும், புதர்களுக்குள் மறைவதிலும் மலைகளில் ஏறுவதிலும், கடலில் நீந்துவதிலும் அது வல்லமை பெற்றிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆர்ட்டிமிஸ் என்ற தேவதையின் உடமையாகவும் இருந்தது. அதற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அவள் அதற்குக் காரணமானவரைச் சபித்து அழித்துவிடுவாள். ஆர்ட்டிமிஸ் சந்திரனின் ஒளிக்கு அதிதேவதையானவள். அவள் அந்த மானிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தாள். பொற்கொம்புகளும் பித்தளைக் குளம்புகளும் கொண்ட அந்த அற்புத மானைத் தேடி ஹெர்க்குலிஸ் ஈனோ வனத்திற்குச் சென்றான். அங்கே ஆர்ட்டிமிஸ் தேவியின் ஆலயம் ஒன்றிருந்தது. அந்த ஆலயத்தைச் சுற்றியே மான் அலைந்துகொண்டிருக்கும் என்று கேள்வியுற்று, அவன் கோயில் அருகிலேயிருந்த பாதைகளைக் கவனித்துக்கொண்டு காத்திருந்தான். அந்தப்பக்கத்தில் தங்கியிருப்பதே மிகவும் கஷ்டமாயிருந்தது. ஈக்களும் வண்டுகளும் இடைவிடாமல் கடித்துத் துன்புறுத்தின, பருத்துக் கொழுத்திருந்த பல்லிகள் அவன் கால்களின்மேலும், உடலின்மீதும் ஊர்ந்து சென்றன. ஆந்தைகளின் அலறலைக் கேட்கச் சகிக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பின் ஹெர்க்குலிஸ் மானைக் கண்டு கொண்டான். அதன் அழகைக் கண்டதும், அவன் தான் அடைந்த துயரையெல்லாம் மறந்து, அதைத் தொடர்ந்து ஓடலானான். மானைப்பற்றிய செய்திகளை முன்னதாகக் கேட்டறிந்திருந்த ஹெர்க்குலிஸ் தானும் தன் கால்களில் பித்தளைத் தகட்டிலே செய்த செருப்புகள் அணிந்திருந்தான். அவை அக்கினி தேவனால் அவனுக்கு முன்பு பரிசாக அளிக்கப் பெற்றவை. அவைகளைப் பாதங்களில் அனிந்துகொண்டு எந்தப் பாறையிலும் வனாந்தரத்திலும் அதிகக் களைப்பில்லாமல் ஓடிச் செல்ல முடியும். மேலும் மானைப் பிடிப்பதற்குப் போராட்டம் எதுவும் தேவையிராது என்பதால், அவன் தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்புகளுக்குப் பதிலாகச் சாதாரண அம்புகளையும் வில்லையுமே எடுத்து வந்திருந்தான். இரண்டு நாள்களாக மான் தனக்குப் பழக்கமான ஏரியைச் சுற்றியுள்ள காட்டிலேயே ஓடிச் சென்றது. ஹெர்க்குலிஸும் ஓய்வில்லாமல் அதைப் பின்பற்றி ஓடினான். மானின் வேகத்தையும், தந்திரங்களையும் கண்டு, அவனே வியப்படைந்தான். ஆனால், அது எங்கிருந்தாலும், பொன்னால் முடி செய்து தலையில் வைத்தது போன்ற அதன் கொம்புகளின் ஒளியாலும், உடலின் வெண்மை நிறத்தாலும், அதனைக் கண்டு கொள்வது எளிதாயிருந்தது. அதுவும், தன்னைத் துரத்தி வருபவன் விடாக் கண்டன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன் வனத்தை விட்டு வெளியே பாய்ந்து, மேற்குத் திசையில் ஓடத் தொடங்கிற்று. காற்றுதான் வேகமாக வீசும் என்று சொல்லுவார்கள்; ஆனால், அது காற்றினும் கடிய வேகத்தில் ஓடிச் சென்றது. அதன் பித்தளைக் குளம்புகளும், ஹெர்க்குலிஸ் பித்தளைச் செருப்புகளும் பாறைகளின் மீது மோதும் பொழுதெல்லாம் ‘டனார், டனார்’ என்று ஒலித்துக் கொண்டிருந்தன. மலைப்பாதைகளிலும், பாறைகளிலும், கழனிகளிலும் ஓடியதில் மான் களைப்படையவில்லை. ஹெர்க்குலிஸும் சளைக்கவில்லை. இரவு நேரத்தில் மட்டும் அவனும் மானும் ஓய்வெடுத்துக் கொண்டனர். மறு நாள் பொழுது புலர்ந்ததும், மான் அவனைத் திரும்பிப் பார்த்தது. அவனும் அதைப் பார்த்து ஓடலானான். இவ்வாறு நாள்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி விட்டன; ஆயினும், மான் வேட்டை முடிந்தபாடில்லை. மான் கடலோரமாக ஓடிச் சென்றது. கடலைக் கண்டதும் அது அதிலே பாய்ந்து நீந்திச் சென்றது. வில்வீரனும் அவ்வாறே குதித்து நீந்தத் தொடங்கினான். ஒன்றிலிருந்து மற்றொன்றாகப் பல கடல்களிலே, மானும் மனிதனுமாக நீந்திச் சென்றார்கள். ஓங்கியெழுந்து வீசிய அலைகளும், காற்றும், அவர்களைத் தடை செய்ய முடியவில்லை. ஐரோப்பாக் கண்டத்தை ஒரு வளையம் சுற்றிவிட்டு, இறுதியில் கலைமான் கிரீஸ் நாட்டுக்கே திரும்பி வந்தது. ஹெர்க்குலிஸும் அங்கேயே வந்து கரையேறினான். மான் வேட்டையில் ஓர் ஆண்டு கழிந்துவிட்டது. அதுவும் மீண்டும் ஈனோ வனத்தை அடைந்துவிட்டது. ஹெர்குலிஸ், மேற்கொண்டும் காலத்தை வீனாக்காமல் அதைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, மெல்லிய அம்பு ஒன்றை எடுத்து, மானின் முன்கால்கள் இரண்டையும் தளை செய்யும் முறையில் அதைச் செலுத்தினான். ஆகவே அதனால் மேற்கொண்டு ஓட முடியவில்லை. அது உடனே துள்ளிக் குதித்துக்கொண்ட ஆர்ட்டிமிஸின் கோயிலுக்குள் புகுந்து, தேவியின் சிலையடியில் விழுந்து சரணடைந்தது. அதன் கண்களில் இருந்து முத்துகள் போன்ற கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. அது மிகவும் களைப்புற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஹெர்க்குவிஸ் ஆலயத்திலேயே அதைப் பிடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அந்தப் புனிதமான இடத்தில் அதைத் துரத்திச் செல்ல வேண்டாம் என்று கருதி, அவன் சிறிது நேரம் வெளியே தங்கியிருந்தான். அந்த நேரத்தில் திடீரேன்று மேகமண்டலத்திலிருந்து முழு மதி வெளியே வந்ததை அவன் கவனித்தான். கண் மூடித் திறப்பதற்குள் ஆர்ட்டிமிஸ் தேவியே தலையில் இளம்பிறை சுடர்விட, அவன் எதிரில் வந்து நின்றாள். அவள் கோபத்தால் கொதித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய காலடியில் கலைமான் படுத்திருந்தது. அவளுக்குப் பின்னால் வேட்டை நாய்களைப் பற்றிக்கொண்டு அவளுடைய பணிப் பெண்களாகிய மோகினிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர். ஆர்ட்டிமிஸ் ஹெர்க்குலிஸைப் பார்த்து, ‘ஆகா, நீதானா என் மானை வேட்டையாட வந்திருக்கிறாய்? வேட்டைக்கு நானே அதிதேவதை என்பதையும் மறந்து, என் அருமை மானையே பிடிக்கத் துணிந்துவிட்டாயா நீ? நான் ஓர் அம்பைக் கையிலெடுத்தாலே போதும், உன் ஆவி பிரிந்துவிடும்!’ என்று படபடப்பாகப் பேசினாள். அந்த இடத்தில் வீரத்தைக் காட்டிலும் மதியைப் பயன்படுத்த வேண்டுமென்று உணர்ந்த ஹெர்க்குலிஸ், உடனே தரையில் முழந்தாளிட்டுத் தேவியை வணங்கிப் பேசலானான்: ’நானாக இந்த மானைப் பிடிக்க வருவேனா? என் அங்கங்களை இழப்பதாயினும், இதைத் துரத்துவதற்குத் துணிவேனா? சீயஸ் கடவுளின் கட்டளைப்படி மன்னன் யூரிஸ்தியவின் பணியை நிறைவேற்றுவது என் கடமையாயிற்று. தெய்வ சாபத்திற்கு அஞ்சி வந்த என்னைத் தாங்களும் வெறுத்துப் பேசினால் எனக்குப் புகலிடம் ஏது? அதைக் கேட்டதும் தேவி எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டாள். அந்த வீரனிடம் அவள் கொண்டிருந்த கோபம் அருளாக மாறிவிட்டது. ’சரி, மானை எடுத்துக்கொண்டு போய் யூரிஸ்தியஸிடம் காட்டிவிட்டு, மறுபடி இங்கே எனது ஆலயத்தில் அதைச் சேமமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடு என்று அவள் பரிவுடன் கூறினாள். ஹெர்க்குலிஸ் அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மானை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். தேவி யும் மோகினிகளும் ஒரு கனத்தில் மாயமாக மறைந்து விட்டனர். வெள்ளைக் கலைமான் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு வீரனைத் தொடர்ந்து சென்றது. [] அவன் மைசீனை அடைந்ததும், யூரிஸ்தியஸ் கோட்டைக்கு வெளியே சென்று, அவனையும் தங்கக் கொம்புடன் விளங்கிய மானையும் பார்த்தான். அந்த மானை திரும்ப விடுவதற்கே அவனுக்கு மனமில்லை. ஆயினும், ஆர்ட்டிமிஸ் தேவியின் ஆணையை அவனால் எதிர்க்க முடியாத நிலையில், அவன் பேசாமல் இருந்துவிட்டான். அடுத்தாற்போல ஹெர்குலிஸுக்கு பயங்கரமான ஒரு பணியை விதிக்க வேண்டும் என்பதில் அவன் மனம் ஈடுபட்டிருந்தது. எரிமாக்தஸ் மலைப்பன்றி நான்காவது பணிக்காக ஹெர்க்குலிஸ் ஆர்கோலிஸ் நாட்டுக்கு வெளியே போக நேர்ந்தது. ஆர்க்கேடியாப் பிரதேசத்தில் எரிமாந்தஸ் என்ற மலையில் முரட்டுக் காட்டுப் பன்றி ஒன்றிருந்தது. அதை உயிருடன் பிடித்து வர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டான். எந்தக் கொடிய விலங்கையும் ஹெர்க்குலிஸ் எளிதில் வதைத்து விடுவான் என்று அம்மன்னன் கருதி, வதைப்பதைவிடக் கடினமான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பன்றியை உயிருடன் கொண்டு வரும்டி கூறினான். அந்தப் பன்றி யானைக் குட்டி போல் படுத்திருந்த போதிலும், அது குதிரைகளைவிட வேகமாக ஓடக் கூடியது. அது தன் தந்தங்களைக் கொண்டு குதிரை வீரர்களைத் தாக்குவதுடன், குதிரைகளையும் குத்தி வெல்லக்கூடிய வல்லமையுள்ளது. எந்த மனிதனும் அதன்மீது ஒரு காயத்தைக் கூட உண்டாக்க முடியவில்லை. எனவே, அது எரிமாந்தஸ் மலையடிவாரத்திலிருந்த நிலங்களில் கிழங்குகளையும், வேர்களையும், விதைகளையும், கொட்டைகளையும் தோண்டித் தின்று வந்ததுடன், கழனிகளையும் பாழாக்கிவிட்டது. அதற்கு அஞ்சிக் குடியானவர்கள் எவரும் அந்தப் பகுதியில் பயிரிடச் செல்வதேயில்லை. அருகேயிருந்த வனங்களிலும் மக்கள் நடமாடுவதில்லை. மும்முறை வெற்றி கொண்ட ஹெர்க்குலிஸ் இம்முறையும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுட்ன் மலைப் பிரதேசத்தை நோக்கிப் பயணமானான். வழியில் அவனுடைய விரச் செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த மக்கள் பலர் அவனை அன்புடன் வரவேற்று ஆதரித்தனர். அவனுடைய தோளிலே வில்லும், ஒரு கையிலே கதையும், முதுகிலே அம்பறாத்தூணியும், இடையிலே நன்றாக முறுக்கிய கயிறுக்ளும் இருந்தன. கயிறுகள் வலை பின்னுவதற்குரியவை. இரண்டு பெரிய வேட்டைநாய்களும் அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அவனுக்குத் தேவையென்றால், வழியிலே குடியிருந்த ஜனங்கள் நூற்றுக்கணக்கான வேட்டைநாய்களைக் கொடுத்து உதவியிருப்பார்கள். ஏனெனில், எல்லோருக்கும் அந்த மலைப்பன்றி தொலைய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வமிருந்தது. மலையின் அடிவாரத்தை அடைந்ததும், நாய்கள் இாண்டும் மோப்பம் பிடிக்கத் தொடங்கின. அவை பன்றியிருந்த திசை நோக்கிக் கிளம்பியதும், ஹெர்க்குலிஸ் அவைகளைத் தொடர்ந்து சென்றான். மலைப் பன்றி மதிய உணவுக்காக அலைந்துகொண்டிருந்தது. அன்று மாலை வரை நாய்கள் அதைத் தொடர்ந்து மிகுந்த வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தன. ஹெர்க்குலிஸும் தளராமல் ஓடினான். அன்று பன்றியைக் காண முடியவில்லை. மறு நாளும் பன்றி வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. அது ஓடவும், நாய்கள் துரத்தவுமாக மனிக் கணக்காகத் தொடர்ந்து அவ்வேட்டை நடந்தது. கடைசியாக அது ஓர் ஓடைக் கரையில் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. அதன் முன்புறம் ஓடை, பின்புறம் செங்குத்தான பாறை ஆகியவை இருந்தன. அந்த நிலையில் அது நடமாடும் குன்று போல விளங்கிய வீரனையும், யமதூதர்களைப் போல விளங்கிய இரு நாய்களையும் ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, பாறையில் தன் தந்தங்களைத் திட்டத் தொடங்கியது. அதன் கால்கள் தரையைப் பிராண்டி மண்ணை அள்ளி விக்கொண்டிருந்தன. அதன் வாய் வெண்மையான நுரையைக் கக்கிக் கொண்டிருந்தது. கோபத்தோடு விளங்கிய அக்கொடிய மிருகம் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. இயற்கையில் மிகுந்த வீரத்துடன் விவங்கிய வேட்டைநாய்கள் இரண்டும், கோரமான தந்தங்களையும். பன்றியின் உருவத்தையும் பார்த்தவுடன் துணுக்ககமுற்றன. ஹெர்க்குலிஸ் உரக்கக் கூவி அவைகளை உற்சாகப்படுத்தி அழைத்துச் சென்றான். பன்றி ஒரு நாயை முதுகில் கடித்துத் தள்ளிவிட்டு, மற்றதன் உடலைக் கிழித்து ஓடையிலே வீசிவிட்டது. ஒரே கணத்தில் இந்த அற்புதம் நடந்ததைக் கண்ட ஹெர்க்குலிஸ், மேற்கொண்டு தான் மட்டுமே தனியாக நின்று அதனுடன் போராட வேண்டும் என்று தீர்மானித்தான். பன்றி பாறையின் அடியிலிருந்த தன் குகையை விட்டு, வேறு புறமாகத் திரும்பி ஒரு பாதை வழியாக மலைமீது ஏறத் தொடங்கிற்று. மலைமேலே போகப் போகப் பணி அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. பனி பெய்ததால், பாதையும் பல இடங்களில் மறைந்துவிட்டது. ஆயினும், ஹெர்க்குலிஸ் பன்றியைத் தொடர்வதை நிறுத்தவில்லை. பன்றியும் ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டது. எங்குப் போய் விழலாம் என்று அதற்கு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிட்டன. அந்த நிலையில் ஹெர்க்குலிஸ் அதன் மீது பல பாணங்களை விடுத்தான். ஆனால், ஓர் அம்புகூட அதன் உடலுள் பாயவில்லை ; அதன் உடல் மீது, பட்டவுடன் எல்லாம் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டன. பன்முறை அவன் தன் கதையை வீசிப் பார்த்தான். கதையும் பயனற்று வீழ்ந்தது. பன்றி அளவற்ற உரத்துடன் வரமும் பெற்றிருந்தது. என்பதை அவன் கண்டான். எனினும், அது புதர்களுக்குள் மறைந்து சற்று ஒய்வெடுத்துக்கொள்ள முயன்ற பொழுதெல்லாம், அவன் வாயால் ஊளையிட்டு அதை வெளியே கிளப்பி வந்தான். அது அயர்ந்தால், அவன் விரட்டினான், அது வேகமாய்ப் பாய்ந்தால், அவன் சிறிது பின் தங்கிக்கொண்டான். இவ்வாறு அதன் தொடர்பு விட்டுப் போகாமல், அவன் நெருங்கிச் சென்றுகொண்டிருந்தான். பன்றி எப்படியும் மலைமீது ஏறிக் கொண்டேயிருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே அவன் யோசனை. இரவுப்பொழுதில் மலையிலே ஒரு வேடனுடைய குடிலில் அவன் தங்கியிருந்து, மறு நாள் காலையில் இரண்டு வேட்டை நாய்களை வாங்கிக் கொண்டு மீண்டும் பன்றியைத் தொடரலானான். நாய்கள் இரண்டும் இரண்டு பக்கங்களிலும் முன்செல்ல, நடுவில் ஹெர்க்குவிஸ் போய்க் கொண்டிருந்தான். பன்றியை அதிகமாய் விரட்டினால், அது திரும்பி மறுபடி சமவெளியான தரைக்கு இறங்கிவிடும் என்பகால், அவன் மெதுவாக அதைத் தொடர்ந்து சென்றான். தரையிலே அவனைவிட அதிக வேகமாகப் பன்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், மலைப்பகுதியிலே அதன் கால்கள் கட்டையாயிருந்தமையால், அதே வேகத்துடன் ஏறிச்செல்ல அதனால் முடியவில்லை. மலையில் பணி தேங்கியுள்ள குட்டங்களில் அது இறங்கிச் செல்லுகையில்தான் அதைப்பிடிக்க முடியும் என்று அவன் கண்டான். ஆகவே, அதைப் பிணித்துப் பிடிப்பதற்குரிய வலையையும், சங்கிகளையும் அவன் ஆயத்தமாகக் கைகளிலே எடுத்து வைத்துக்கொண்டான். வழியிலே பணி பெய்து நிரம்பியிருந்த ஒரு பெரிய குட்டத்திலே பன்றி தொப்பென்று விழுந்ததும், ஹெர்க்குலிஸ் ஒரே பாய்ச்சலாக அதன் மீது பாய்ந்து, அது என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பே, அதைச் சங்கிலிகளால் பிணித்துவிட்டான். வெள்ளையான பால் குளத்தில் கரிய யானைக்குட்டி மிதப்பது போல் கிடந்த அப்பன்றியை ஒரு கணத்திற்குள் அவன் வலையினுள் தள்ளி வலையைத் தன் தோள்மீது துக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான். வேட்டைநாய்கள் அக்கொடிய விலங்கைக் கடித்துப் பழி வாங்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தன. ஆனால், ஹெர்க்குலிஸுக்கு அதனிடம் மதிப்பும், இரக்கமுமே ஏற்பட்டன. அதற்கு வல்லமை இருந்தவரை அது ஓடிப் பார்த்தது. தன்னால் இயலாத நிலைமையில்தான் அது வீழ்ந்தது என்று அவன் அதைப் பாராட்டினான். காட்டு வராகத்தைச் சுமந்துகொண்டு மலையிவிருந்து இறங்கி வந்த ஹெர்க்குலிளைஸைக் கண்ட ஜனங்கள் உரக்க ஆரவாரம் செய்துகொண்டு, அவன் பின்னால் சென்றார்கள். மனிதர் எவராலும் முடியாத பெரும்பணியை அவன் நிறைவேற்றியதைக் கண்ட அவர்கள், எக்களிப்போடு அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள். அஉன் தோளிலே சாய்ந்திருந்த கரிய பிசாசை அவர்கள் அப்பொழுதுதான் நன்றாகப் பார்க்க முடிந்தது. கதிரவன் மறைந்து எங்கும் இருள் போர்த்துக் கொண்ட பிறகுதான் அவன் மக்களைப் பிரிந்து தனியாக நடக்க முடிந்தது.  மறு நாள் பொழுது புலரும் நேரத்தில் அவன் மைசீன் கோட்டை வாயிலை அடைந்தான். அங்கே கோட்டைக் காவலாளி சிறிது நேரம் வேறு வேலையாகச் சென்றிருந்ததால், ஹெர்க்குலிஸ் கோட்டைவாயிலைத் திறந்துகொண்டு, நேராக அரண்மனைக்குள்ளே சென்றான். தொலைவில் அவன் தோள்களிலே பன்றியைச் சுமந்துகொண்டு வருவதை யூரிஸ் [] தியஸ் அரண்மனை மாடியிலிருந்தே கவனித்திருந்தான் ஆனால், அவன் கர்ச்சனை செய்துகொண்டு, அந்தக் கோலத்துடனேயே தன் சபா மண்டபத்திற்கும் வந்து விடுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஹெர்க்குலிஸ் பன்றியை வலையோடு கீழே இறக்கி வைத்தான். உடனே பன்றி உடலை நெளித்துக்கொண்டு தன்கோரத் தந்தங்களை வெளியே நீட்டலாயிற்று. அதைக் கண்டவுடனேயே யூரிஸ்தியஸ் எழுந்து தனக்காக அமைத்திருந்த பித்தளை அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் ஹெர்க்குலிஸ், இடியிடிப்பது போல் உரக்கச் சிரித்து, அவனைப் பரிகாசம் செய்தான். அங்கே கூடியிருந்த அரண்மனை அதிகாரிகளும், ஊழியர்களும் மத யானை போன்ற பன்றியியையும் அதையும் அடக்கித் துாக்கி வந்த வீரனையும் பார்த்துப் பிரமிப்படைந்து நின்றனர். தனியான அறைக்குள்ளே ஆபத்தில்லை என்று மன அமைதியடைந்த யூரிஸ்தியஸ், மேற்கொண்டு ஹெர்க்குலிஸை எப்படி இழிவு செய்யலாம் என்று யோசனை செய்தான். அதுவரை அவன் ஏவியபணிகளில் ஹெர்க்குலிஸின் புகழ் அதிகமானதைத் தவிரக் குறைவடையவில்லை. இனி அருவருப்பான இழிவான வேலை ஒன்றை இவனுக்குக் கொடுத்துச் சிறுமைப்படுத்த வேண்டும்! என்று அந்த மதிகெட்ட மன்னன் முடிவு செய்நான்  ஆஜியஸ் மன்னனின் தொழுவங்கள் அந்தக் காலத்தில் ஈலிஸ் நகரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆஜியஸ் மன்னனிடம் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இருந்தன. அவைகளில் கறுப்புக் காளைகள் முந்நூறும், சிவப்புக் காளைகள் இரு நூறும் இருந்தன. வெள்ளியைப் போல வெண்மையான முரட்டுக் காளைகள் பன்னிரண்டும் இருந்தன. இநத மயிலைக் காளைகள் மற்றவைகளுடன் மலைகளிலே மேயும்பொழுது, சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் வந்தால், அவைகள் பன்னிரண்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அவ்விலங்குகளைக் கொம்புகளால் குத்திப் போராடும் அளவுக்குப் பலமுள்ளவை. ஆஜியஸ் மன்னனிடம் இருந்தவைகளைப்போல் அவ்வளவு அதிகமான கால்நடைகள் உலகிலே எவரிடமும் இருக்கவில்லை. அவைகள் எல்லாம் பகலிலே மலைக் காடுகளில் மேய்ந்துவிட்டுத் திரும்பி வந்தபின் இரவில் அவைகளை அடைத்துவைப்பதற்காக அம்மன்னன் வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான தொழுவங்கள் கட்டியிருந்தான். ஆஜியஸ் சூரிய தேவனான ஹீலியஸின் மைந்தன். அதனால் அவன் சில வரப்பிரசாதங்கள் பெற்றிருந்தான். அவனுடைய கால்நடைகளுக்கு நோய்நொடிகள் தோன்றுவதேயில்லை. நன்றாகக் கொழுத்து வளர்ந்த அந்த ஆடுகளும் மாடுகளும் அவனுக்கு வற்றாத செல்வத்தை அளித்து வந்தன. ஆனால், அவைகளுடைய தொழுவங்கள் மட்டும் பல ஆண்டுகளாகச் சுத்தம் செய்யப்படாமலே இருந்து வந்தன. ஒவ்வொரு தொழுவத்திலும் சாணமும், பிழுக்கையும், சண்டும், கூளமுமாகக் குப்பைகள் மலை மலையாகக் குவிந்திருந்தன. ஒவ்வொரு நாளும் அவைகளை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்வதானால், ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் தேவைப்படுவார்கள். அவைகளால் தொழுவங்களிலிருந்த கால்நடைகளுக்கு நோய் நொடிகள் ஏற்படவில்லையாயினும், சுற்றிலும் அக்கம் பக்கங்களில் மக்களுக்குப் பல வியாதிகள் ஏற்பட அவை காரணமாயிருந்தன. அவைகளின் நாற்றம் சுற்றிலும் பல காத தூரம்வரை வீசிக் கொண்டிருந்தது என்பார்கள். இத்தகைய துர்க்கந்தம் நிறைந்த தொழுவங்கள் அனைத்தையும் ஹெர்க்குலிஸ் ஒரே நாளில் சுத்தம் செய்ய வேண்டுமென்று யூரிஸ்தியஸ் பணித்தான். இது அவனுடைய ஐந்தாவது கட்டளை. தொழுவங்களில் பல்லாண்டுகளாகச் சேர்ந்திருந்த உரங்களை ஹெர்க்குலிஸ் கூடை கூடையாக அள்ளித் தலையிலே சுமந்து வெளியிலே கொண்டு போய்க் கொட்டுவான் என்று எதிர்பார்த்து, அவன் இந்த இழிவான பணியைக் கொடுத்திருந்தான். எந்த வேலையாயிருந்தாலும், சீயஸ் கடவுளுக்காக ஹெர்க்குலிஸ் செய்து தீரவேண்டியிருந்தது. எனவே, அவன் ஈலிஸ் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். இரண்டு நாள்களில் அவன் அங்கே போய்ச் சேர்ந்தான். மலைச் சாரலில் ஆஜியஸின் அரண்மனையையும், தனியான ஒரு பெரிய நகரம் போல அமைந்திருந்த அவனுடைய தொழுவங்களையும அவன் பார்த்தான். அங்கே ஒரு பாறையின்மேல் அார்ந்துகொண்டு, எல்லாத் தொழுவங்களையும் ஒரே நாளில் எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப்பற்றி அவன் சிறிது நேரம் சிந்தித்தான். அருகிலே ஓடிக்கொண்டிருந்த பீனியஸ் என்ற ஆற்றையும், மலைமேலும் அடிவாரத்திலும் மேய்ந்து திரிந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் அவன் கவனித்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றிவிட்டது. உடனே அவன் பறையை விட்டு எழுந்து அரண்மனைக்குச் சென்று அரசனைக் காண விரும்பினான். நீண்ட தாடி மீசைகளுடன், தொண்டு கிழவனாயிருந்த, ஆஜியஸ் மன்னனுடன் அப்பொழுது அவனுடைய குமாரர்கள் இருவரும் இருந்தனர். ஹெர்க்குலிஸ் மன்னனை மிடுக்குடன் பார்த்து, ஆண்டவன் சீயஸ் ஆணையால் உங்களுடைய தொழுவங்களைச் சுத்தம் செய்ய நான் இவ்விடம் வந்துள்ளேன். அரசே!’ என்று கூறினான். ஆஜியஸ் அதைக் கேட்டு ஆனந்தமடைந்து, ‘நல்லதுதான், வீர! ஆனால், அது ஒரு மனிதனால் செய்து முடிக்கக்கூடிய காரியமா என்பதுதான் சந்தேகம். நூற்றுக்கணக்கான ஆள்கள் பல மாதங்களாக அவைகளிலுள்ள குப்பைகளை அள்ளினாலும், இப்பொழுதுள்ளவைகளை விட அதிகக் குப்பைகளே குவிந்திருக்கும்!’ என்றான். எப்படியிருந்தாலும் நான் முயன்று பார்க்க விரும்புகிறேன். தொழுவங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொடுத்தால், தாங்கள் எனக்குப் பரிசாக என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டான் ஹெர்க்குலிஸ். ‘பரிசா என்னிடமுள்ள ஆடுகளிலும் மாடுகளிலும் பத்தில் ஒரு பகுதியை உனக்கு அளிக்கத் தயாராயிருக்கிறேன்; அதுவும் மனமுவந்து அளிப்பேன்! என் தொழுவங்கள் சுத்தமானால் போதும்!’ என்று ஆஜியஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். உடனே ஹெர்க்குலிஸ் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது ஒன்றுதான். தொழுவங்களிலுள்ள ஆடு மாடுகளையும், மலையடிவாரத்தில் மேய்ந்துகொண்டிருப்பவைகளையும். மேல் மலைக்கு ஓட்டிச் செல்லும்படி உங்களுடைய பணியாளர்களுக்கு உத்தரவு கொடுங்கள். ஏனெனில், ஹர்க்குலிஸ் சுத்தம் செய்யத் தொடங்கினால், பூமியே அதிரும்! அதனால்தான் முன் கூட்டியே சொல்லி வைக்கிறேன்!’ என்று சொன்னான் மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான். அப்பொழுது அவன் அருகிலிருந்த அவன் புதல்வர்களில் மூத்தவனான பைலியஸ் என்பவன் ஹெர்க்குலிஸிடம் ஓடிச் சென்று, அவன் கையைப் பிடித்துக்கொண்டு, தன்னை அவனுடைய நண்பனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டான். மாவீரனும் அவனை அன்புடன் அனைத்துக்கொண்டு தங்கள் நட்பு நல்ல முறையில் வளருமென்று நம்புவதாகக் கூறினான். ஹெர்க்குலிஸ், தனக்கு ஒரு கோடரியும் மண்வெட்டியும் வேண்டுமென்று சோல்லிவிட்டு, வெளியே வந்தான். அப்பொழுது ஆஜயஸின் பன்னிரண்டு காட்டு வெள்ளைக் காளைகளில் முதன்மையாக விளங்கிய காளை அவனைப் பார்த்துச் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது. அவன் எப்பொழுதும் சிங்கத்தோலையே ஆடையாகப் போர்த்திக் கொண்டிருப்பது வழக்கமாதலால் , அத்தோலின் வாசனையை அறிந்து, அவனையே சிங்கமென்று அந்த மாடு கருதிவிட்டது. வெள்ளைக் குன்று உருண்டு வருவது போல் தன்மேல் வந்து பாய்ந்த அக்காளையின் இடப் பக்கத்துக் கொம்பு ஒன்றை ஹெர்க்குலிஸ் இரு கைகளாலும் பிடித்து, அதன் கழுத்தை வளைத்து, தலை தரையில் தோயும்படி தன் உடல் வலியால் அழுத்திப் பிடித்துக்கொண்டான். அப்பொழுதுதான் அந்தக் காளை சிங்கத்தினும் சிறந்த விரன் ஒருவான் இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டது. சிறிது நேரத்திற்குப்பின், ஹெர்க்குலிஸ் அதை, விட்டு விட்டுத் தன் வேலையைக் கவனிப்பததற்காகப் புறப்பட்டான். அரண்மனைக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசனும், அவன் குமாாரகளும், ஏவலர்களும் ஹெர்க்குலிஸ் நோாகத் தொழுவங்களுக்குச் செல்லப் போகிறான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவன், கோடரியையும் மண் வெட்டியையும் எடுத்துக்கொண்டு, ஆற்றின் கரை வழியாக மலைவரை நடந்து சென்றான். பிறகு வழியில் தான் குறியிட்டிருந்த ஓர் இடத்திற்குத் திரும்பி வந்து, தான் அணிந்திருந்த சிங்கத்தோலைக் கழற்றி வைத்துவிட்டு, அவன் வேலை செய்யத் தொடங்கினான். முதலில் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டிச் சாய்த்து, அதன் கிளைகளையும், அடிமாத்தையும் நீண்ட உருளைக் கட்டைகளாக வெட்டி ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்தான். பிறகு மண் வெட்டியை எடுத்துக்கொண்டு, அவன் அவன் ஆற்றின் கரையில் ஒரு பகுதியை வெட்டி ஒரு வாய்க்கால் தோண்டத் தொடங்கினான். அந்தப்பக்கத்தில் முன்பு ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்த தடத்தை அவன் முதலிலேயே பார்த்துவைத்திருந்தான் தான் தோண்டிய வாய்க்காலை அந்தப் பழைய காலுடன் கொண்டு போய்ச் சேர்த்து, அதன் வழியாகத் தண்ணீர் ஓடும்படி செய்தான். அந்த நீர் தொழுவங்களில் பாய்வதற்கேற்ற சிறு ஓடைகளையும் அவன் விரைவிலே தொட்டுவிட்டான். அதற்கப்பால், அவன் மீண்டும் ஆற்றின் பக்கம் வந்து நின்றுகொண்டு, ஆற்றை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். ‘உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கும் பீனியஸ் தாயே! என்னை மன்னித்துக்கொள்ளவும்! தேவ கட்டளையை நிறைவேற்ற வந்துள்ள நான் உனக்கு எவ்விதக் கேடும் செய்ய விரும்பமாட்டேன். ஆயினும், சிறிது நேரத்திற்கு உன்னுடைய தெள்ளிய நீர் ஆஜியளின் தொழுவங்களில் வெள்ளமாகப் பாய்ந்து அவைகளைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கின்றது. அதற்காக நீரிலே கட்டைகளை அடுக்கி அனை அமைத்து நீரை இங்கேயே தேக்கிக்கொள்ள உன் அநுமதியை வேண்டுகிறேன்:’ என்று கூறி அவன் தொழுதுகொண்டே, கட்டைகளை வேகமாக எடுத்து ஆற்றில் அழுத்தி, அனையை அமைக்கத் தொடங்கினான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அல்லவா! தண்ணீர் அணைப்பக்கத்தில் தேங்கி வாய்க்கால் வழியாகப் பெருவெள்ளமாகப் புரண்டோடத் தொடங்கி விட்டது. தோழுவங்களுக்குள்ளே ஆற்று நீர் அலையும் நுரையமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது! அம்மட்டோடு நிற்காமல் சுற்றிலும் மலையடிவாரம் வரை ஒரே வெள்ளக்காடாகி விட்டது! மரங்கள் செடிகளெல்லாம் வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தன. வெள்ளத்தைப் பார்த்துப் பார்த்து, ஹெர்க்குலிஸ் எல்லையற்ற மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்துகொண்டிருந்தான். அன்று மாலைவரை வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸின் கையில் துளி அழுக்குக்கூடப் படாமலே, தொழுவங்கள் எல்லாம் துப்புரவாகி விட்டன. மேய்ச்சல் தரைகளும் பரிசுத்தமாக விளங்கின. சுற்றிலும் பூமியே குளிர்ச்சியடைந்து விட்டது. அப்பொழுது ஹெர்க்குலிஸ் ஆற்றில் இறங்கி, அணையை, அகற்றிவிட்டு, கரையை நன்றாக அடைத்து. நீர் முன்போல் ஓடும்படி செய்தான். பின்னர் ஆஜியஸைப் பார்ப்பதற்காக அவன் அரண்மனைக்குச் சென்றான். []  அதற்குள், அவன் யூரிஸ்தியஸின் ஏவலின் பேரிலேயே வந்து தொழுவங்களைச் சுத்தம் செய்தான் என்பதை எவரோ வழிப்போக்கர் மூலம் தெரிந்துகொண்டிருந்தான் ஆஜியஸ். ஹெர்க்குலிஸ் அவனைக் கண்டு, என் வேலை முடிந்தது. உங்கள் பரிசுதான் பாக்கி என்றான். பரிசை ஆற்றுக்குத் தான் கொடுக்க வேண்டும்! நீயா தொழுவங்களைச் சுத்தம் செய்தாய்? ஆறல்லவா சுத்தம் செய்தது?” என்று கேட்டான் மன்னன் சிறிது நேரத்திற்குப்பின் அவன் தான் பரிசுபற்றி ஹெர்க்குலிஸிடம் ஒப்பந்தம் எதுவுமே செய்து கொள்ளவில்லையென்றும் கூறிவிட்டான். ஹெர்க்குலிஸ், சில பெரியோர்கள் முன்பு விஷயத்தைத் தெரிவித்து, அவர்களை முடிவு கூறும்படி கேட்க வேண்டும் என்று தெரிவித்தான். அவ்வாறு சில நடுவர்கள முன்பு, மன்னன் தன் கால்நடைகளில் பத்தில் ஒரு பகுதியை ஹெர்க்குலிஸுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த வாக்குறுதியைப் பற்ற ஹெர்க்குலிஸ் பேசி முடிந்ததும், மன்னனின் மூத்த குமாரன் அது உண்மையென்றும், பேசும் பொழுது தான் சாட்சியாக இருந்ததாகவும் கூறினான். உடனே ஆஜியஸ், கடுங்கோபத்துடன் எழுந்திருந்து, அவனையும் ஹெர்க்குலிஸையும் தன் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுவிட்டு சபையிலிருந்து வெளியே போய்விட்டான். ஹெர்க்குலிஸ் அவனுக்குக் காதில் கேட்கும்படியாக ஆஜியஸ், இன்றிலிருந்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்! ஹெர்க்குலிஸையே எதிர்த்து விட்டீர்! இன்று கால்நடைகளில் பத்தில் ஒரு பகுதி உமக்கு ஆதாயம்தான். ஆனால் விரைவிலே நீர் இழக்கப் போவது உம்முடைய மகுடத்தையும், சிம்மாசனத்தையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்! என்று இடிபோல் முழங்கிக் கொண்டு கூறினான். பிறகு அவன் ஈலிஸ் நகரை விட்டுக் கிளம்பி மைசீனை நோக்கி நடந்து சென்றான். அவனுக்கு நண்பனாயிருந்த பைலியஸும் தந்தையின் கட்டளைப்படி அந்நாட்டைத் துறந்து வெளியேறினான். ஆனால், பிற்காலத்தில் ஹெர்க்குலிஸ், இந்த நிகழ்ச்சிகளை மறக்காமல், ஆஜியஸைத் தாக்கி, அவனைத் தன் வாளுக்கு இரையாக்கிவிட்டான் என்று அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன. அசுர பலமுள்ள பறவைகள் மனிதர்களையும் மிருகங்களையும் ஆகாயத்திலே துாக்கிச் சென்று கொன்று தின்னக்கூடிய அசுர வலிமை பெற்ற ஏராளமான பறவைகளை வெருட்டி ஓட்ட வேண்டும் என்பது ஹெர்க்குலிஸ்க்கு இடப்பெற்ற ஆறாவது பணி. அந்தப் பறவைகள் ஆர்க்கேடியா நாட்டில் ஸ்டிம்பேலஸ் என்ற சதுப்பு நிலத்தில் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அந்தச் சதுப்பு நிலத்தில் மனிதன் நடந்து செல்ல முடியாது. சேற்றில் கால்கள் பதிந்துவிடும். அதில் நீர் நிறையத் தேங்கியிருந்தால், ஓடத்திலாவது செல்ல முடியும். அதற்கும் வழியில்லை. அத்தகைய இடத்தில் ஸ்டிம்பேலஸ் என்ற ஓர் ஆறும் ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளிலேயே அசுரப் பறவைகள் கூடுகள் கட்டி வாழ்ந்துகொண்டு பல்கிப் பெருகி வந்தன. ஹெர்க்குலிஸ் அந்தப் பிரதேசத்தை அடைந்து, ஆற்றின் கரையில் நடந்து கொண்டே, ‘என்ன செய்யலாம்?’ என்று ஆலோசனை செய்தான். அவனைச் சுற்றி எங்கணும் மனித எலும்புகளும், ஆடு மாடுகளின் எலும்புகளும் சிதறிக் கிடந்தன. அசுரப் பறவைகள் சதைகளைத் தின்றுவிட்டு அந்த எலும்புகளை அங்கே விட்டிருக்கின்றன என்று அவன் எண்ணிக் கொண்டான். அங்கே நிண நாற்றம் சகிக்க முடியாமலிருந்தது. அந்த வேளையில் அதீனாதேவி அவன் முன்பு தோன்றி, பித்தளைத் தகடுகளால் செய்த பெரிய முறம் போன்ற இரு தகடுகளை அவனிடம் கொடுத்து, அவைகளை இடைவிடாமல் தட்டித் தாளம் போட்டுப் பார்க்கும்படி சொல்லிவிட்டு மறைந்தாள். அவன் அவ்வாறே அவைகளைத் தட்டிப் பேரோசை உண்டாக்கினான். புதிதாகப் பெரிய ஓசையைக் கேட்ட பறவைகள் திடீர் திடீரென்று மேலே கிளம்பி வானத்திலே பறக்கத் தொடங்கின. அவற்றின் உருவமும் தோற்றமும் பயங்கரமாயிருந்தன. ஆயிரக்கணக்கில் அவை பறந்ததால், கதிரவனை மேகங்கள் மறைப்பது போல், அவை மறைத்து, வானத்தையும் பூமியையும் இருளடையும்படி செய்தன. தோற்றத்தில் அவை நாரைகளைப் போலிருந்தன. அவற்றின் கால் நகங்கள் இரும்பு போன்றவை; இறகுகள் பித்தளை போன்ற உலோகத்தால் அமைந்தவை; மிகவும் கூர்மையானவை, அவை நினைத்த போது அந்த இறகுகளை எதிரிகள் மீது பாய்ச்சக்கூடிய வல்லமையும் பெற்றிருந்தன. அத்தகைய இறகுகளுடன் அவை பறக்கும் பொழுது வானத்திலே பறக்கும் முள்ளம்பன்றிகளைப் போலத் தோன்றின. அவற்றின் அலகுகள் இருப்புக் கவசங்களைக் கூடத் துளைத்துவிடக் கூடிய வலிமை பெற்றிருந்தன. கருமேகங்களைப் போல வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பறவைக்கூட்டங்களைக் கண்டு, ஹெர்க்குலிஸ் அவை அனைத்தையும் அம்புகளால் வதைக் முடியாது என்று கருதினான்; எனினும், சிலவற்றை அம்புகளால் அடித்துத் தள்ளினால், மற்றவை அஞ்சி ஓடிவிடக் கூடுமென்றும் அவனுக்குத் தோன்றிற்று. உடனே அவன், வில்லைக் கையிலேந்தி, தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த பாணங்களை உயரே பார்த்துத் தொடுத்து விடலானான். அவனுடைய வில் சிறிது நேரம் கணகணவென்று ஒலித்துக்கொண்டேயிருந்தது, அவன், பாணங்களை எடுப்பதும் விடுப்பதும் புலப்படாதவாறு, அப்பறவைகளின் மீது அம்புகளை மழையாகப் பொழிந்தான். அதனால் பல பறவைகள் மாண்டு எல்லாத் திசைகளிலும் போய் விழுந்தன. மாண்டவை போக்க எஞ்சியிருந்த பறவைகளுள் சில, கீழேயிருந்து அம்பு தொடுத்த ஹெர்க்குலிஸைக் கண்டு, அவனைப் பழி வாங்க வேண்டுமென்று, ஒரே கூட்டமாய் அவன்மேல் விழுந்து, சிறகுகளால் புடைக்கவும், அலகுகளால் கொத்தவும் தொடங்கின. அவன் உருவமே வெளியில் தெரிய முடியாதபடி அவை அவனை மொய்த்துக்கொண்டன. அந்நிலையில் அவன் மூச்சுத் திணறி, மிகுந்த முயற்சி செய்து தன் கதையால் அவற்றுள் சிலவற்றை அடித்துத் தள்ளினான். அப்போழுது அவன் இருந்த நிலையை அறிந்த அதீனா தேவி, மீண்டும் அவன் முன் தோன்றித் தன்னுடைய தெய்விகக் கேடயத்தை அவனுக்குக் கொடுத்து உதவினாள். அந்தத் தங்கக் கேடயத்தைக் கொண்டு அவன். பறவைகள் தன்னைத் தாக்க முடியாதபடி காத்துக்கொண்டு, வாளாலும், கதையாலும் அவற்றை எதிர்த்து மாறி மாறி நெடுநேரம் போராடினான். அவை பெரும்பாலும் மடிந்து வீழ்ந்தபின், அவன் மீண்டும் பித்தளைத் தகடுகளை [] எடுத்து, தன் முழு வல்லமையையும் பயன்படுத்தி, காடும் மலையும் அதிரும்படி அவற்றை இடைவிடாமல் தட்டத் தொடங்கினான். மறுபடி அவன் அம்புகளை எய்தான். இடையிடையே கதையையும் சுழற்றி வீசினான். அதற்குப் பின்புதான் பறவைகள் யாவும் அந்த வனத்தை விட்டகன்றன. உயிருள்ள ஒரு பறவை கூட அங்கே எஞ்சி நிற்கவில்லை. கிரீட் தீவின் காளையைக் கைப்பற்றுதல் கிரீட் தீவிலே அட்டகாசம் செய்து சுற்றிக் கொண்டிருந்த வெறி பிடித்த காளை ஒன்றைப் பிடித்துக்கொண்டு வர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் ஹர்க்குலிஸுக்குக் கட்டளையிட்டான். இது அவனுடைய ஏழாவது பணி. அந்தக் காலத்தில் அத்தீவை ஆண்டுகொண்டிருந்த மன்னன். மினோஸ் என்பவன். அவன் பட்டத்திற்கு வந்த சமயத்தில் சீயஸ் கடவுளுக்கு ஒரு விலங்கைப் பலி கொடுக்க வேண்டுமென்று கருதி, கடற்கரையில் கற்களால் ஒரு பலிபிடத்தைக் கட்டினான். பின்னர்ச் சமுத்திர ராஜனான போசைடானைத் தொழுது, தேவதேவனுக்கு ஏற்ற ஒரு மிருகத்தைத் தனக்குக் கொடுத்தருள வேண்டுமென்று அவன் பிரார்த்தனை செய்தான். அதன்படி கடலரசனின் அருளால், நடுக்கடலிலிருந்து துாய வெண்மையான அழகுள்ள காளை ஒன்று துள்ளி வெளி வந்தது. அதன் கொம்புகள் குட்டையாயும், வெள்ளியால் அமைந்தவையாயும் இருந்தன. பால் போன்ற நிறம், பனி போன்ற குளிர்ந்த பார்வை. சுழி எதுவுமின்றிக் கம்பீரமான தோற்றம், ஆடு போன்ற அமைதியான குணம் ஆகியவற்றுடன் விளங்கிய அந்தக் காளையைக் கண்டவர் அனைவரும் பாராட்டினர். உலகிலேயே அதைப் போன்ற அழகுள்ள மாடு வேறு இல்லையென்று சொல்லலாம். அத்தகைய காளையை அதற்கு முன் மினோஸ் மன்னனும் கண்டதேயில்லை. ஆகவே, அவன் அதைப் பலியிட விரும்பாமல், அதைத் தன் புல் தரைகளிலே மேயவிட்டுவிட்டு, சியஸுக்குச் சாதாரனமான ஒரு காளையைப் பலியிட ஏற்பாடு செய்தான். தெய்வங்களை ஏமாற்ற முடியுமா ? மினோஸ் மன்னன் சீயஸ் கடவுளின் பெயரைச் சொல்லி வாங்கிய காளையைத் தானே வைத்துக்கொண்டதை அறிந்த கடலரசன், மிகுந்த கோபமடைந்து, அந்த வெள்ளைக் காளைக்கு வெறி பிடிக்கும்படி சபித்துவிட்டான். உடனேயே அந்த உயர்ந்த காளைக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அது நாட்டுக்குள்ளே வந்து, நகரில் பல இடங்களையும் சுற்றத் தொடங்கிற்று. அது தனக்கு எதிர்ப்பட்டவர்களைக் கொம்புகளால் தாக்கியும் முட்டியும் வதைக்கத் தொடங்கிற்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் அதற்குப் பலியானார்கள் விளைநிலங்களில் அது புகுந்து, பயிர்பச்சைகளையெல்லாம் பாழாக்கி வந்தது. மன்னனும் அதை மேற்கொண்டு கட்டி வைக்க முடியாதென்று. அதை வெளியே விட்டு விட்டான். கிரீட் தீவில் அது பல இடங்களில் சுற்றித் திரிந்து. பெருவாரியான நஷ்டங்க உண்டாக்கிவிட்டது. முக்கியமாக, டெத்ரிஸ் என்ற நதியின் தீரத்தில் காவுகள் கழனிகளையெல்லாம் அது பாழாக்கியிருந்தது. அதை உயிரோடு பற்றி வருவதற்க ஹெர்க்குலிஸ் ஓர் ஓடத்தில் ஏறிக்கொண்டு, கடல் மார்க்கமாகக் கிரீட் தீவை அடைந்தான் அங்கே மினோஸ் மன்னன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராயிருந்தான். ஆயினும், ஹெர்க்குலிஸ், தான் மட்டுமே தனியாக அந்தக் காளையைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, வனங்களிலே அதைத் தேடிக்கொண்டு செல்லத் தொடங்கினான். அடிக்கடி அது சுற்றி வரக்கூடிய இடம் ஒன்றைப்பற்றிக் கேள்வியுற்று. அவன் அங்கே சென்று, ஒரு சுனைப்பக்கத்தில் காத்திருந்தான். அப்பொழுது மாடு கனைக்கும் பேரோசை ஒன்று அவன் செவிகளைத் தாக்கிற்று. சிறிது நேரத்தில் வெள்ளைப் பனிவரை போன்ற கானை ஒன்று மரங்களினிடையே வருவதை அவன் கண்டான். ஒரு கண நேரத்தில் அது தன் தலையை ஆட்டிக் கொண்டு, அவனை நோக்கி ஓடி வந்தது. உடனே அவன். தன் கையிலிருந்த கதையைக் கீழே போட்டு விட்டுத் துள்ளி எழுந்து, அதன் கொம்புகள் இரண்டையும் பிடித்துக்கொண்டான். தன்னை எதிர்த்துப் போராட வல்லமையுள்ள ஒரு மிருகம் கிடைத்த்தை எண்ணி, அவன் மகிழ்ச்சியோடு சிரித்து ஆரவாரம் செய்தான். மாட்டுக்கும் மானிட வீரனுக்கும் போராட்டம் தொடங்கிவிட்டது. காலையில் கதிரவன் உதயமானதிலிருந்து ஹெர்க்குலிஸின் [] வலிமையைக் காளை நன்றாக உணர்ந்துகொண்டது. இறுதியில் அது அவனுக்குப் பணிந்துவிட்டது. உடனேயே அதன் வெறியும் தணிந்து, அது அவனுக்குப் பின்னால் செல்லத் தொடங்கிவிட்டது. ஹெர்க்குவிஸ் கிரீஸ் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காகக் கப்பலில் ஏறிய சமயத்தில், அந்தக் காளையும் சிறு ஆட்டுக்குட்டிபோல், தானாக அதில் ஏறிக்கொண்டு சென்றது. அவனும் அதை அன்புடன் போற்றி அழைத்துச் சென்றான். திரேஸ் நாட்டுக் குதிரைகள் அக்காலத்தில் திரேஸ் நாட்டில் கொடிய மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தயோமிடிஸ். அவனிடம் நான்கு முரட்டுப் பெண் குதிரைகள் இருந்தன. அவை புல்லே தின்பதில்லை. மனித உடல்களைக் கிழித்து நரமாமிசத்தை உண்பதே அவைகளுக்குப் பழக்கம். அரசன் அவைகளை அவ்வாறு பழக்கியிருந்தான். திரேஸ் பிரதேசத்துக் கடற்கரை அருகில், கப்பலுடைந்து உயிர் தப்பி வரும் மாலுமிகளைப் பிடித்து அவைகளுக்கு உணவாக அளிப்பது அவன் வழக்கம் மற்றும் தன்னை நாடிவரும் விவரம் தெரியாத மக்களையும் அவன் அக்குதிரைகளுக்கு இரையாகத் தள்ளி வந்தான். அந்தக் குதிரைகள் நான்கையும் ஹெர்க்குலிஸ் பிடித்து வரவேண்டுமென்பது யூரிஸ்தியஸின் எட்டாவது கட்டளை. அதன்படி வீரன் ஹெர்க்குலிஸ் கப்பலேறித் திரேஸ் நாட்டை அடைந்தான். அங்கே குதிரைகளைப் பற்றியும், தயோமிடிஸின் கொடுமைகளைப் பற்றியும் அவன் பலரிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டான். குதிரைகளைப் பிடிப்பதுடன், கொடுங்கோலனான அம்மன்னனையும் தீர்த்துக் கட்டிவிட வேண்டு மென்று அவன் முடிவு செய்தான். ஆதலால், தனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவன் கிரேக்க வீரர் சிலருக்குச் செய்தி அனுப்பினான். அவர்கள் அனைவரிலும் அவனே மேலான விரனாயிருந்ததால், அத் தலைவனின் சொற்படி கிரேக்க வாலிபர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுள் ஒருவனாக அயோஸ்ஸும் வந்திருந்தான். வீரர்கள் தேவையான ஆயுதங்களையும் கொண்டு வந்திருந்த னர். குதிரைகள் திரிடா என்ற நகரில், ஒரு பெரிய கட்டாந்தரையில், ஒரு கோட்டைக்குள் அடைக்கப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பித்தளையால் அழிகள் அமைக்கப்பட்டிருந்தன. தயோமிடிஸ் அவைகளை இருப்புச் சங்கிலிகளில் கட்டி வைத்திருந்தான். ஹெர்க்குலிஸும் அவனுடைய தோழர்களும் கோட்டைக் காவலர்களை எதிர்த்து வென்று. கோட்டைக்குள்ளே சென்று குதிரைகளைக் கண்டார்கள். குதிரைகள் மிகப்பெரியவையாக இருந்தபோதிலும், அவை மெலிந்திருந்தமையால், அவற்றின் எலும்புகள் எல்லாம் வெளியே தெரிந்துகொண்டிருந்தன. ஹெர்க்குலிஸும் வீரர்களும் ஆளுக்கு ஒரு கதையும், சுருக்கிடக் கூடிய நீண்ட கயிறும் வைத்திருந்தனர். அவர்கள் முதலில் குதிரைகளின் சங்கிலிகளைக் கழற்றிவிட்டனர். உடனே அவை அவர்கள்மீதே பாயத் தொடங்கின. ஆயினும், கதைகளின் அடிகளைத் தாங்கமுடியாமல், அவை எளிதில் அடங்கிவிட்டன. வீரர்கள், தாங்கள் தயாராக வைத்திருந்த கயிறுகளைக் கொண்டு, நான்கு குதிரைகளையும் கட்டி வெளியே கொண்டுசென்றனர். தயோமிடிஸும். அவனுடைய போர் வீரர் சிலரும், அந்த நேரத்தில் திடீரென்று அங்கே வந்து அவர்களை எதிர்க்க முற்பட்டனர். மன்னன், ஹெர்க்குலிஸின் வல்லமையை உனராமல், முதலில் அவனைப் பிடித்துத் தன் குதிரைகளுக்கு இரையாகப் போட வேண்டுமென்று விரும்பியிருந்தான். ஆனால், கிரேக்க வீரர்கள் அதிகச் சிரமப்படாமலே அவனுடன் வந்த படைவீரர்களை விரட்டியடித்துவிட்டு மன்னனைப் பிடித்துக் கட்டி வைத்தனர். தயோமிடிஸ் இளவயதினன் : உடல் வலிமையுள்ளவன்; ஆனால் கொடியவன். கயிறுகளால் கட்டப்பட்டிருந்த நிலையில் ஹெர்க்குலிஸ் அவனைக் கண்டான். அப்பொழுது நகரத்திலிருந்து சில மக்கள் அங்கே வந்து கூடியிருந்தனர். ஹெர்க்குலிஸ், மன்னனைத் தண்டிப்பதற்கு முன்னால், மக்களை பார்த்து, ‘இந்தக் கொடியவனுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று யாராவது விரும்புகிறீர்களா?’ என்று கேட்டான். எவரும் வாய் திறந்து பேசவேயில்லை. எவரும் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டுமென்று கேட்கவும் முன்வரவில்லை. ஹெர்க்குலிஸ் மேலும் பேசத் தொடங்கினான்: தயோமிடிஸ் மற்ற மனிதர்களுக்கு எப்படி இரக்கம் காட்டி வந்தானோ, அதே முறையில் அவனுக்கும் இரக்கம் காட்ட வேண்டியது அவசியம். இவன் தன் குதிரைகளுக்கு இரையாக மனிதர்களைக் கோட்டைக்குள் தள்ளி வந்தான் என்று நான் இதுவரை கேள்விப்பட்டு வந்தேன். ஆனால், அது உண்மையாயிருக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மைதானா என்பதை நேரில் சோதனை செய்ய இப்பொழுது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவனுடைய குதிரைகளிடம் இவனையே தள்ளிப் பார்ப்போம் ! அவை மனிதத் தசையைத் தின்னுகின்றனவா என்பதை நம் கண்களாலேயே பார்த்துவிடுவோம்!’ அவன் பேசி முடித்தவுடன், கிரேக்க விரர்கள் தியோமிடிஸைக் கட்டவிழ்த்துக் குதிரைகளின் பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். அவனைக் கண்டதும் குதிசைகள் நான்கும் அவனைச் சுற்றி வட்டமாக [] நின்று நாட்டியமாடுவன போல், துள்ளிக் குதித்தன. உடனே உரக்கக் கனைத்துக்கொண்டு. அவை கால்களின் குளம்புகளால் அவனைக் கீழே தள்ளிச் சவட்டத் தொடங்கின. அன்று தமக்கு நல்ல இரை கிடைத்துவிட்டதென்ற களிப்புடன், அவை தங்கள் பற்களை வெளியே காட்டிக்கொண்டு, அவனைக் கடித்து, அவன் உயிரோடிருக்கும் பொழுதே அவனுடைய தசைகளைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தன. கொடுங்கோலன் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. ஹெர்க்குலிஸும், வீரர்களும் குதிரைகளைப் பிடித்துக்கொண்டு, தங்கள் நாட்டை அடைந்தனர். அங்கே மிகுந்த பாதுகாப்புடன் யூரிஸ்தியஸ் வந்து அக்குதிரைகளைப் பார்வையிட்டான். அப்பொழுது ஹெர்க்குலிஸ் அவனைப் பார்த்து, ‘யூரிஸ்தியஸ்! இயற்கைக்கு மாறான இத்தகைய மிருகங்களை உயிருடன் வைத்திருப்பது தகாது. உன் கட்டளைப்படி இவைகளை உயிருடன் கொண்டுவந்தேனே ஒழிய, இவைகளைத் திரேஸ் நாட்டிலேயே சுட்டுச் சாம்பலாக்கியிருப்பேன் இப்பொழுது இவைகளை ஒலிம்பிய மலைக்கு நீ விரட்டிவிட வேண்டும். அங்கே இவை கோரமான விலங்குகளுக்கு இரையாகட்டும் அல்லது தலைகளிலே இடி விழுந்து மடியட்டும்!’ என்று கூறினான். யூரிஸ்தியஸ் அவ்வாறே செய்துவிட்டு, அவனுக்கு விதிக்க வேண்டிய அடுத்த பணியைப்பற்றி எண்ணமிட்டான்.  அமெசான் இராணியின் ஒட்டியாணம் ஐரோப்பாவில் கருங்கடலுக்கு அருகிலுள்ள காகேசிய மலைகளின் அடிவாரத்தில் முற்காலத்தில் அமெசான்கள் என்று அழைக்கப்பெற்ற வீரப் பெண்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் ஆடவர்களின் உதவியில்லாமல் தாங்களே தனி ராஜ்ஜியங்கள் அமைத்துக் கொண்டு அவைகளைப் பாதுகாத்து வந்தார்கள். அமெசான் நாட்டில் ஆடவர்கள் வீட்டு வேலைகளைத்தாம் கவனித்துச் செய்து வந்தார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கவோ, போர் செய்யவோ முடியாதபடி, அமெசான் பெண்கள் அவர்களை இளவயதிலேயே தடுத்து வந்தார்கள். ஆண் குழந்தைகள் பிறந்தால், அமெசான்கள் அவைகளுடைய கைகளும் கால்களும் நன்றாக வளர்ச்சியடையாதபடி கட்டி வைத்திருந்தார்களாம்! அந்த நாட்டில் ஆட்சி செய்தது பெண்கள். போர் செய்தது பெண்கள். எல்லாப் பொதுக் காரியங்களையும் அவர்களே கவனித்து வந்தார்கள். இப்படி நெடுங்காலம் அவர்கள் ஆண்டு வந்ததுடன், அக்கம் பக்கத்திலிருந்த நாடுகளின் மீதும் படையெடுத்து வென்று, அவைகளையும் தங்கள் ராஜ்ஜியங்களோடு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அமெசான்கள் என்றால், ஆடவர்களுக்கு அச்சந்தான். அமெசான்கள் பித்தளையினால் செய்த விற்களை வைத்துக்கொண்டு போர் செய்வார்கள். அம்பு விடுவதில் அவர்களுக்கு இணையில்லை என்று பலரும் அவர்களைப் பாராட்டி வந்தார்கள். வீரம் மிக்க கிரேக்கர்கள் கூட உயர்ந்த வில் ஒன்றைக் கண்டால், அதை ‘அமெசான் வில்’ என்று சொல்லிப் பாராட்டுவார்கள். அமெசான்கள் குதிரையேற்றத்திலும் வல்லவர்கள். உலகிலேயே முதன் முதலாகப் போர்களில் அவர்களே குதிரைப் படைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஹெர்க்குலிஸின் காலத்தில் அமெசான்கள் தெர்மோடோன் நதிக்கரையில் மூன்று பெரிய நகரங்களை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அம்மூன்று நகரங்களிலும் மூன்று அரசிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுள் முக்கியமானவள் ஹிப்போலிதை என்பவள். அவள் தன் இடையில் நவரத்தினங்கள் பதித்த ஒட்டியாணம் ஒன்றை எப்பொழுதும் அணிந்திருந்தாள். அந்த ஒட்டியாணத்தைக் கொண்டுவர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டிருந்தான். அந்த ஒன்பதாவது பணியை நிறைவேற்றுவது ஹெர்க்குலிஸின் கடமையாயிற்று. அவன் அயோலஸையும், மற்றும் பல தோழர்களையும் அழைத்துக்கொண்டு, கப்பலில் ஏறிச்சென்று. சாகேசிய மலைகளை அடைந்தான். அங்கே இராணி ஹிப்போலிதையின் ஒட்டியாணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புவது எப்படியென்று அவன் ஆலோசனை செய்தான். அவன் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் போரே செய்வான் என்று யூரிஸ்தியஸ் எண்ணியிருந்தான். அமெசான்களின் அரசியிடமும் அவன் போராடத் தொடங்கி, அவளிடமிருந்து மீள முடியாமல் அழிந்துவிடுவான் என்பது அவன் நம்பிக்கை. ஆனால், ஹெர்க்குலிஸிடம் வேறு பல அரிய குணங்களும் அமைந்திருந்தன என்பது அவனுக்குப் புலப்படவில்லை. அமெசான் நாட்டில் ஹெர்க்குலிஸ் போர் செய்ய விரும்பவில்லை. போரிடாமலே தன் இலட்சியத்தை அடைய வேண்டும் என்று அவன் எண்ணினான். ஆண்களிலே அவன் அழகு மிகுந்தவன். அவன் உயர்ந்த உள்ளம் படைத்தவன்; நீதியிலும் நேர்மையிலும் ஆர்வமுள்ளவன். மாலை நேரங்களில் அவனுடன் உட்கார்ந்து அவனுடைய இனிய பேச்சையும், கதைகளையும் கேட்பதானால், பொழுது செல்வதே தெரியாது. மேலும், யாழ் வாசிப்பதிலும், இசை பாடுவதிலும் அவன் நிபுணன். பெண்களைக் கவர்ச்சி செய்வதற்கு இன்னும் வேறு என்ன வேண்டும்? தெர்மோடோன் நதியில் கப்பலை நிறுத்திக் கொண்டு, ஹெர்க்குலிஸ் அமெசான்களின் விசித்திரமான பழக்கவழக்கங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் எத்தனையோ ஆச்சரியங்களைக் கண்டான். அமெசான்கள் நெடிய உருவத்துடன், வெண்மையான உடைகளணிந்து, ஒவ்வொருவரும் வில்லும் தூணியும் தாங்கிச் செல்வதை அவன் கண்டான். அவர்களுடைய வில்லாளர் படைக்கு அடுத்தபடி இரண்டாவது அணியாக விளங்கிய குதிரைப் படையினரைக் கண்டு, அவன் வியப்படைத்தான். அப்படையினர் ஈட்டியும் கேடயமும் தாங்கியிருந்தனர். அவர்களுடைய கேடயம் அரைச் சந்திர வடிவில் அமைந்திருந்தது. அமெசான்களின் தலைநகராகிய தெமிஸ்கிராவில் இறங்கி, ஹெர்க்குவிஸ் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை நேரிலே கண்டறிந்துகொண்டான். அவன் இராணி ஹிப்போலிதையைக் காணச் செல்லுமுன், அவளாகவே அவனுக்கு அழைப்பு அனுப்பினாள். அனைக் கண்டதுமே அவள் தன் அன்பைத் தெரிவித்து, அவனுக்குத் தன்னால் இயன்ற உதவியெல்லாம் செய்வதாகாகவும் கூறினாள். அவளுடைய கொலுமண்டபத்தில் மூன்று பக்கங்களில் வீரப் பெண்மணிகள் தங்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தனர். ஹிப்போலிதை பேரழகும் பெருந்ததிறலும பெற்று விளங்கினான். அவள், கொஞ்சம் செருக்குடையவள் எனினும், ஹர்குலிஸைப் புன்னகையோடு வரவேற்று உபசரித்தாள். அவனுடைய வீரச் செயல்களைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்ததாகக் கூறி, அவள் அவனை மிகவும் பாராட்டினாள். அவனும் வெகுநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய அநுபவங்கள் சிலவற்றைக் கேட்டு அரசி மகிழ்ச்சியடைந்தாள். பேச்சின் இடையில் ஹெர்க்குலிஸ் தான் வந்த காரியத்தையும் அவளிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் அவள், ’இதுவரை நீங்கள் போராடிப் போராடியே ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றி வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்தத் தடவை போராட்டமில்லாமலே வெற்றி பெற்றுவிட்டீர்கள் ! நானாகவே மனமுவந்து விலை மதிக்க வொண்ணாத என் ஒட்டியாணத்தை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்!” என்று சொல்லி, அவள் அதைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். அவள் கையாலேயே வாங்கிக்கொள்வதில் அவனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். அது போர்க்கடவுளால் அவளுக்குப் பரிசாக அளிக்கப் பெற்றது. கண்னைப் பறிக்கும் ஒளியுடன், பல நிறங்களில் கற்கள்மின்னவும், தங்கம் ஒளி வீசவும் [] எழிலோடு விளங்கிய அந்த அரிய ஆபரணத்தை நாகரிகம் தெரியாத யூரிஸ்திஸிடம் கொடுக்க வேண்டியிருக்குமே என்றுதான் ஹெர்க்குலிஸ் வருந்தினான். பிறகு அவன், இராணியிடம் அரிதில் விடை பெற்றுக்கொண்டு கப்பலுக்குத் திரும்பினான். பின்னர் ஒரு முறை ஹிப்போலிதையும் அவனுடைடைய கப்பலுக்குச் சென்றிருந்தாள். ஹீரா தேவியின் சூழ்ச்சியால், அமெசான்கள் பலர், ஹெர்க்குலிஸ் தங்கள் இராணியைப் பிடித்துக் கப்பலில் ஏற்றிக் கிரீஸ் நாட்டுக்குக் கொண்டுசெல்லப் போகிறான் என்று கேள்விப்பட்டு, கப்பலை நோக்கி வந்து, அம்புகளை ஏவத் தொடங்கினர். சிரேக்க வீரர்களும் அவர்களை எதிர்த்துப் போராட நேர்ந்துவிட்டது. வெகு நேரத்திற்குப் பிறகுதான், சண்டை ஓய்ந்து எல்லோரும் உண்மையைத் தெரிந்துகொண்டனர். இனியும் கரையில் இறங்கித் தன் வீரப் பெண்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள். ஹெர்க்குலிஸ் திரும்பிச் செல்லும் வழியில் டிராய் முதலிய பல நகரங்களைப் பார்வையிட்டான். ஆங்காங்கே சில போட்டங்களிலும் அவன் ஈடுபட நேர்ந்தது. இறுதியில் அவனும், மற்ற கிரேக்க வீரர்களும் வெற்றி முழக்கம் செய்துகொண்டு, மைசீனை அடைந்தனர். அசுரன் ஜிரியனின் ஆடுமாடுகள் ஸ்பெயின் தேசத்தில் டார்ட்டசஸ் என்ற பிரதேசத்தை ஆண்டுவந்த ஜிரியன் என்பவன் ஓர் அசுரன். அவனுக்கு மூன்று தலைகள், ஆறு கைகள், இடுப்புவரை மூன்று உடல்கள் இருந்தன. ஆனால், இடுப்புக்குக் கீழே இரண்டு கால்கள் மட்டும் இருந்தன. சில வரலாறுகளில் அவனுக்கு இரண்டு சிறகுகளும் இருந்தனவாகக் கூறப்பட்டிருக்கிறது. வல்லமையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அவனுக்கு நிகரானவரேயில்லை என்று அவன் புகழ் பெற்றிருந்தான். அவனிடம் ஏராளமான ஆடுகளும் மாடுகளும இருந்தன. அவை யாவும் எளிதியா என்ற ஒரு தீவில் மேய்ந்துகொண்டிருந்தன. அவைகளிடம் என்ன விசேடம் என்றால், அவை யாவும் ஒரே சிவப்பு நிறமானவை, அழகில் அவைகளுக்கு ஈடான பிராணிகள் வேறில்லை. அவைகளை மைசீனுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது ஹெர்க்குலிஸுக்கு யூரிஸ்தியஸ் அளித்த பத்தாவது பணி. ஹெர்க்குலிஸ் இந்தத் தடவை நெடுந்தூரம் கடலில் யாத்திரை செய்ய வேண்டி இருந்தது; அத்துடன் ஏராளமான கால்நடைகளையும் கொண்டு வர வேண்டியிருந்தது. ஆகவே, அதற்கேற்ற பெரிய கப்பலை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, அவன் ஹீலியஸ் என்று அழைக்கப்பெறும் சூரிய பகவானிடம் இருந்த பொற்கிண்னம் ஒன்றை இரவலாக வாங்கிக் கொண்டு. அதைக் கடலில் மிதக்க விட்டு, அதிலேயே பயனம் செய்யத் தீர்மானித்தான். அந்தக் கிண்ணம் மகிமை மிகுந்தது. அதில் ஒருவர் ஏறிக்கொண்டால், அந்த அளவுக்கு அது பெரிதாகும்; பலர் ஏறிக்கொண்டால், அத்தனை பேர்களுக்கும் போதிய அளவு அது விரிந்து கொடுக்கும். அதில் எத்தனை கால்நடைகளாயினும் கொண்டுவர முடியும், ஹெர்க்குலிஸ் தன் நண்பர்கள், சீடர்கள் பலரையும் அதிலேயே ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். வழியில் பற்பல கஷ்டநஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டன. ஒரு சமயம், புயலால் பொற்கிண்ணம் மலை போன்ற அலைகளின் மீது தத்தளிக்க நேர்ந்தது. அப்பொழுது கடலரசன் மீதே அம்பு தொடுக்க முற்பட்டான் ஹெர்க்குலிஸ், அவ்வரசன் சிரித்துக்கொண்டே, அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பினான். ஆப்பிரிக்கவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலுள்ள ஒடுக்கமான கடல்வழியாகச் செல்லுகையில் ஹெர்க்குலிஸ் இரு கண்டங்களின் எல்லைகளிலும் இரண்டு கல் தாண்களைத் தன் நினைவுச் சின்னங்களாக நட்டுவிட்டுச் சென்றான். அவன் அபாஸ் மலையைக் கண்டதும், கரையில் இறங்கி அம்மலையில் ஏறிப் பார்த்தான். ஜிரியனுடைய ஆடுமாடுகள் எங்கெங்கு மேய்கின்றன என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கையில், அவ்வசுரனுடைய இரண்டு தலைகளுள்ள ஆர்திரஸ் என்ற முரட்டு நாய் அவன் மீது பாய்வதற்காக ஓடி வந்தது. அவன் உடனே தன் கதையை அதன் தலைகளைக் குறி வைத்து வீசினான். நாய் நசுங்கி வீழ்ந்துவிட்டது. அடுத்தாற்போல், அசுரனுடைய காவற்காரன் ஓடி வந்தான். அவனும் கதைக்கு இரையானான். பிறகு, ஹெர்க்குலிஸ், புல் தரைகளில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு மாடுகளை ஒன்றுசேர்த்து ஓட்டிக் கொண்டு வரச் சென்றான். அவனுடைய தோழர்கள் சிலரும் பல பக்கங்களுக்குச் சென்று. அவனுக்கு உதவியாகப் பணி செய்து வந்தனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, ஜிரியன் கோபாவேசத்துடன், தன் ஆறு கைகளிலும் ஆறு பெரிய கதைகளைத் துக்கிக்கொண்டு, ஹெர்க்குலிஸைத் தாக்க முன்வந்தான். அவனுடைய கண்களில் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாசிகளிலிருந்து புகை வந்தது. அவன் கிரேக்க மாவீரனைக் கண்டதும், அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான். ஒரே சமயத்தில் ஆறு கதைகளுக்குத் தனியே நின்று பதில் சொல்ல வேண்டுமே என்று யோசித்து, ஹெர்க்குலிஸ் அவனுக்கு எதிராகப் பாயாமல், அவனுக்கு விலாப்புறத்தில் ஓடி நின்றுகொண்டு, தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்புகளில் ஒன்றை வில்லிலே மாட்டி, அவனுடைய மூன்று உடல்களையும் ஒரே சமயத்தில் துளைக்கும்படியாக அதைச் செலுத்தினான். ஒரு கணத்திற்குள், என்ன நடந்த [] தென்று அசுரன் உணர்ந்துகொள்ளுமுன்பே, பாணம் அவன் உடல்களை ஊடுருவிப் பாய்ந்துவிட்டது! விஷம் அவனுடைய மூன்று தலைகளுக்கும் ஏறிவிட்டதால், அவன் தரையிலே உருண்டு விழுந்துவிட்டான். ஹெர்க்குலிஸும், நண்பர்களும் அசுரனுடைய ஆடுகளையும் மாடுகளையும் ஓட்டிக்கொண்டு, ஹீலியஸின் கிண்ணத்தில் முன் போல் ஏறித் தங்கள் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியிலே அவர்கள் பல நாடுகளைக் கடந்து சென்றனர். சில அரசர்கள் ஹெர்க்குலிஸின் உதவியை நாடியதால், அவன் அவர்களுக்காக அவர்களுடைய எதிரிகளை அடக்கி வெற்றி பெற்றான். இத்தாலியிலிருந்து ஒரு சமயம் அவன் வழி தவறி, வேறு திசையிலே சென்று விட்டான். வெகுதூரம் சென்ற பிறகுதான், அவன் அதைத் தெரிந்துகொண்டான்; பிறகு, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று, சரியான பாதையை அறிந்து அவ்வழியே சென்றான். மந்தை மந்தையாகச் சிவப்பு நிறமுள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு அவனும் அவன் தோழர்களும் மைசீனை அடைந்ததும் , மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஹெர்க்குலிஸ் அதுவரை நிறைவேற்றிய பணிகளையெல்லாம் நாடு முழுதுமே மக்கள் தெரிந்துகொண்டு பாராட்டிப் புகழ்ந்தார்கள். அவனுடைய ஆணைக்குப் பணிந்து தொண்டு புரிய ஆயிரக்கணக்கான வாலிப வீரர்கள் எப்பொழுதும் தயாராயிருந்தனர். மக்கள் அனைவரும் அவனைத் தேவனாகப் போற்றத் தொடங்கினர். அந்நிலையில் யூரிஸ்தியஸினால் எந்த நேரத்திலும் தனக்கு ஆபத்து விளையுமென்று அஞ்சி நடுங்கினான். தங்க ஆப்பிள் கனிகள் ஹெர்க்குலிஸ், மன்னன் ஏவிய பத்துப் பணிகளையும் நிறைவேற்றிவிட்டான்: இவைகளை முடிப்பதற்கு எட்டு ஆண்டுகளும் ஒரு மாதமும் ஆயின. பத்துப் பணிகள் முடிந்தவுடனேயே அவன் விடுதலையாகியிருக்க வேண்டும். ஆனால், வெர்னா வனத்து நாகத்தை வதைத்ததையும், ஆஜியஸ் மன்னனின் தொழுக்களைச் சுத்தம் செய்ததையும் முறையாக நிறைவேறிய பணிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று யூரிஸ்தியஸ் கூறினான். அவை முறையே ஹெர்க்குலிஸ் செய்து முடித்த இரண்டாவது, ஐந்தாவது பணிகள். நாகத்தை வதைக்கையில் ஹெர்க்குலிஸ் அயோலஸின் உதவியைப் பெற்றதால், அது அவ்வீரன் தானாகச் செய்ததன்று என்று மன்னன் வாதாடினான். தொழுக்களைச் சுத்தம் செய்ததற்கு, வீரன் ஆஜியஸ் மன்னனிடம் சம்மானம் பெற்றான் என்றும் அவன் குற்றம் சாட்டினான். இக் காரணங்களால் ஹெர்க்குலிஸ் மேலும் இரண்டு பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது. பதினோராவது பணியாக அட்லஸ் மலைச்சாரலிலிருந்த ஆப்பிள் மரத்திலிருந்து மூன்று தங்கக் கனிகளை ஹெர்க்குலிஸ் கொண்டுவர வேண்டுமென்று விதிக்கப்பட்டது. அந்த ஆப்பிள் செடி முற்காலத்தில் ஹீரா தேவியின திருமணத்தின்போது பூமிதேவியால் அவளுக்குப் பரிசளிக்கப்பெற்றதாகும். அதை ஹீரா அட்லஸ் மலைச்சாரலில் தன்னுடைய தெய்வீகத் தோட்டத்தில் நட்டு, அதற்குப் பாதுகாப்பாக ‘ஹெஸ்பிரைடுகள்’ என்ற தேவ கன்னியரை நியமித்திருந்தாள். அந்தக் கன்னியரும் ஆப்பிள் கனிகளைப் பறித்துவிடாமல் காப்பதற்காக மரத்தின் மீது எப்பொழுதும் ஒரு பெரிய நாகம் படுத்திருக்கவும் அவள் ஏற்பாடு செய்திருந்தாள். ஆனால், அட்லஸ் மலையும் அந்தத் தோட்டமும் எந்தத் திசையில் இருந்தன என்பது ஹெர்க்குலிஸுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் விஷயம் தெரிந்த எவரிடமாவது விசாரித்துத் தெரிந்துகொள்ள விரும்பினான். அதற்காக அவன் வடமேற்குத் திசையாக நடந்து சென்று இல்லிரிபாப் பிரதேசத்தின் வழியாகப் போ நதியை நோக்கிச் சென்றான். அந்த நதிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மோகினிகள் சிலர் நீரியஸ் என்ற பழைய கடல் தேவன் இருந்த இடத்தை அவனுக்குக் காண்பித்தார்கள். அவன் நீரியஸிடம் சென்று, அட்லஸ் மலைக்கு வழி கேட்டான். அத்தேவன் நெற்றியிலே குட்டையான இரு கொம்புகளையும், கடற் பாசிகளைப் போல் நீண்டு அடர்ந்து தொங்கிக்கொண்டிருந்த தாடி, மீசைகளையும் உடையவன். அவன் முதலில் முறையாகப் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், பின்னர் . வல்லமை மிகுந்த ஹெர்க்குலிஸிடம் உண்மையைச் சொல்லிவிடுவதே மேல் என்று கருதி, அவன் விவாங்களையெல்லாம் தெரிவித்தான். மேலும், தங்க ஆப்பிள்களை ஹெர்க்குலிஸ் தானே பறிக்காமல், அட்லஸின் மூலம் பெற்றுக்கொள்வது மேலென்றும் அவன் ஆலோசனை சொன்னான். அட்லஸ் மலை ஆப்பிரிக்க, கண்டத்திலிருந்தது. அதன்மேலேதான் அட்லஸ் என்ற அசுரன் வான மண்டலத்தைத் தன் தோள்களின் மீது சுமந்து நின்று கொண்டிருந்தான். தேவர்கள் அவனுக்கு விரோதமாயிருந்ததால், அவன் பல்லாண்டு பல்லாண்டாக வானத்தைச் சுமக்க வேண்டுமென்று விதித்திருந்தார்கள். ஹெர்க்குலிஸ் பல இடங்களைச் சுற்றிக்கொண்டு, ஆப்பிரிக்காவை அடைந்து, அட்லஸ் மலையைக் கண்டு, அதன் மீது ஏறிச் சென்றான். அதன் உச்சியில் அட்லஸ் தன் பெரும் பாரத்தைச் சுமந்துகொண்டிருப்பதை அவன் கண்டான்: அவனிடம் ஹீராவின் தோட்டம் எங்கேயிருந்தது என்பதுபற்றிக் கேட்டான். அட்லஸ், அவன் வந்த விவரத்தைத் தெரிந்து கொண்டு, தானே போய் மூன்று தங்கக் கனிகளையும் கொணர்ந்து தருவதாகச் சொன்னான். ஆனால், நான் போய்த் திரும்புகிறவரை, நீ இந்த வானத்தை உன் தோள்களின்மீது தாங்கிக்கொண்டிருக்க வேண்டும்!’ என்று அவனை அட்லஸ் கேட்டுக் கொண்டான். ஆனால், ஆப்பிள் மரத்திலிருந்த நாகத்தை ஹெர்க்குலிஸ் முதலாவதாகக் கொல்ல வேண்டியிருந்தது. ஆதலால், அவன், தோட்டத்தின் வெளியில் நின்று கொண்டே, தன் விஷ அம்புகளில் ஒன்றை அதன் மீது ஏவி, அதை வதைத்துவிட்டு, அட்லஸிடம் திரும்பிச் சென்றான். அட்லஸ் வானத்தை அவனுடைய பெருந்தோள்களில் வைத்துவிட்டுக் கனிகளைக் கொண்டுவரச் சென்றான். ஹீராவின் தோட்டத்தைக் காத்து வந்த மூன்று கன்னியரும் அட்லஸின் குமாரிகளே என்று சில கதைகளிலே கூறப்பட்டிருக்கிறது. அது எவ்வாறிருப்பினும், அவர்கள் அவனுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள். [] ஆதலால், அவர்களிடம் சொல்லி, அவன் ஆப்பிள் கனிகளை வாங்கி வந்தான். அவன் மூன்று கனிகளையும் ஹெர்க்குலிஸிடம் காட்டி, தானே யூரிஸ்தியஸிடம் சென்று அவைகளைக் கொடுத்துவிட்டு வருவதாயும், அதுவரை அவன் தன் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது நலமென்றும் சொன்னான். அவன் நெடுங்காலமாக வான மண்டலத்தைச் சுமந்துகொண்டிருந்ததில் சலிப்படைந்திருந்தான். அதைத் தாங்கக் கூடிய வேறு ஒரு வீரன் வந்துவிட்டதால், அவன் மீது அச்சுமையை வைத்துவிட்டுத் தான் ஓடிவிட வேண்டுமென்பதே அவன் ஆசை. அவனுடைய உட்கருத்தை எப்படியோ யூகித்துக்கொண்ட ஹெர்க்குலிஸ் எதற்கும் நீ ஒரு கண நேரம் இதை வாங்கி வைத்துக் கொள்! இது என் தோளை அழுத்துகின்றது. நான் தோள்களின் மீது சும்மாடு கட்டி வைத்துக்கொண்டால் சற்று எளிதாயிருக்கும். அதற்குப் பின் நீ போய்வாலாம்! என்று சொன்னான். உடனே அட்லஸ் கைகளிலிருந்த தங்கக் கனிகள் மூன்றையும் கீழே வைத்துவிட்டு அவனிடமிருந்து வானத்தைத் தன் தோள்களிலே ஏற்றுக்கொண்டான். ஹெர்க் குலிஸ், அந்தக் கனிகளை எடுத்துக் கொண்டு, திரும்பிப் பாராமலே ஓடத் தொடங்கினான். அவன் நேராகத் தாய்நாடு திரும்பாமல், ஆப்பிரிக்காவில் சில பிரதேசங்களைச் சுற்றிக் கொண்டு வந்தான். அப்பொழுது லிபியாவை ஆண்டுகொண்டிருந்த ஆன்டியஸ் மன்னன் அவனை மல்யுத்தத்திற்கு அழைத்தான். மாவீரனும் அதனை ஏற்றுக்கொண்டான். இந்த ஆன்டியஸ் சமுத்திர ராஜனுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன்; மிகுந்த வலிமை யுள்ளவன். லிபியாவுக்கு வரும் வெளிநாட்டவரை அவன் மற்போருக்கு அழைத்து அவர்களைக் களைப்படையச் செய்து, கடைசியாக வதைத்துவிடுவது வழக்கம் . அப்படி மடிந்தவர்களுடைய மண்டை ஓடுகளை அவன் சேர்த்து வைத்திருந்தான். தன் தந்தையாகிய கடலரசனுக்கு ஆலயம் அமைத்து. அதற்கு மேற்கூரையாக அந்த ஓடுகளை அடுக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். அவனை நெடுங்காலமாக எவரும் வெல்ல முடியவில்லை. அவன் அசகாய சூரன் என்று பெயர் பெற்றிருந்தான். உண்மை என்னவென்றால், அவன் பூமி தேவியின் புத்திரனாயிருந்ததால், அவளுடைய அருளால் அவன் அளவற்ற ஆற்றல் பெற்று வந்தான். அவன் பூமி மீது நின்றுகொண்டிருந்தால், அவனை எவரும் வதைக்க முடியாது. அவனுடைய உடலின் உறுப்புகள் பூமியைத் தீண்டுந்தோறும், அவை மேலும் மேலும் செழுமை பெற்று, வலுவடைந்துவந்தன. இரவு நேரத்தில் அவன் வெறும் தரை மேலேயே படுப்பது வழக்கம். அவனுடைய வலியை முழுதும் மண்ணின் சம்பந்தத்திலேயே இருந்தது. சிங்கங்களின் இறைச்சியையே அவன் உணவாக அருந்தி வந்தான். ஹெர்க்குலிஸைப் போலவே அவனும் சிம்மத் தோலையே ஆடையாகப் போர்த்தியிருந்தான் . இந்த விவரமெல்லாம் முதலில் ஹெர்க்குலிஸுக்குத் தெரியாது. வீரர் இருவரும் மற்போருக்குத் தங்களைத் தயாரித்துக்கொண்டனர். இருவரும் தங்களுடைய தோலாடைகளைக் கழற்றிவிட்டனர். ஹெர்க்குலிஸ், கிரேக்க முறைப்படி, தன் உடலில் எண்ணெய் தடவித் தேய்த் துக்கொண்டான். அதற்கு மாறாக ஆன்டியஸ், சூடான மணலை அள்ளி வந்து அதைத் தன் உடல் முழுதும் தேய்த்துக்கொண்டன். ஒவ்வோர் உரோமக் காவிலும் மண்ணின் தொடர்பு இருக்க வேண்டும் என்பது அவன் ஆவல். போர் தொடங்கியவுடன், ஹெர்க்குலிஸ், முதலில் தன் கை வரிசைகளைக் காட்டாமல் ஆன்டியஸே தன்மீது பாய்ந்து விளையாட அநுமதித்தும் கொண்டிருந்தான். நெடுநேரத்திற்குப் பிறகு அவன்களைப் படைந்த நிலையில், அவனை எளிதில் விழத் தட்டிவிடலாம் என்பது அவன் எண்ணம். அவ்வாறே இறுதியாக அவன் ஆன்டியஸைக் கட்டிக் கீழே கிடத்தினான். ஆன்டியஸ் தரையிலே சாய்ந்ததும். அவனுடைய அங்கங்கள் விம்மிப் புதுமையாக உரம் பெற்று விளங்குவதை ஹெர்க்குலிஸ் கண்டான். பின்னாள் சில சமயங்களில், ஹெர்க்குலிஸ் பிடித்துத் தள்ளாத நிலையிலுங்கூட ஆன்டியள்ஸ் தானாகத் தரையிலே விழுந்தெழுவதையும் அவன் கவனித்தான். அப்பொழுதுதான் அவன் ஆன்டியஸுக்கும் மண்ணுக்கும் உரிய தொடர்பைப்பற்றித் தெரிந்துகொண்டான். எனவே, அவன், அம்மன்னனைக் கைகளால் தலைக்கு மேலே தூக்கி வைத்துக்கொண்டு, அவன் எலும்புகளை உடைத்து, அவன் முச்சு நிற்கும்வரை அப்படியே கைகளில் வைத்துக் கொண்டிருந்தான்; பிறகுதான் அவனுடைய உடலைக் கிழே எறிந்தான்! இதற்குப் பின்பு ஹெர்க்குலிஸ் எகிப்து நாட்டுக்குச் சென்றான். அங்கே ஆன்டியஸின் சகோதரனான புசிரிஸ் ஆட்சி புரிந்து வந்தான். முன்பு ஒரு சமயம் அந்த நாட்டில் ஏழு, எட்டு ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டிருந்ததால், அவன் ஆண்டுதோறும் சீயஸ் கடவுளுக்கு ஒரு மனிதனைப் பலியிட்டு வந்தான். அவனுடைய பூசாரிகள் ஹெர்க்குலிஸைக் கண்டதும், அந்த ஆண்டில் அவனையே பலி கொடுத்துவிடலாம் என்று கருதினார்கள். அவனும், அதற்கு ஏற்றார் போல் ஏதும் அறியதவனாக நடித்தான். அவர்கள் அவனை எளிதில் கட்டிக்கொண்டு சென்று, பலி பீடத்திலே ஏற்றி வைத்தனர். மன்னனும், இளவரசனும் விழாக் காண வந்திருந்தனர். ஹெர்க்குலிஸ் ஒரு பூசாரி தன் தலைக்கு மேலே கோடரியை ஓங்கியதும், திடீரென்று தன்னைப் பினித்திருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டு வெளியே துள்ளினான். அங்கிருந்த பூசாரிகள் அனைவரையும் வதைத்துவிட்டு, அவன் அங்கிருந்து வெளியே சென்றான். இதற்கு அப்பால் அவன் ஆசியாவின் சில பகுதிகளைச் சுற்றிக் கொண்டு, கிரேக்க நாட்டுக்கு மீண்டு சென்றான். மைசீனில் அவன் மூன்று தங்க ஆப்பிள்களையும் யூரிஸ்தியஸிடம் சேர்ப்பித்தான். அவன் அவைகளை மீண்டும் ஹெர்க்குலிஸிடமே கொடுத்து விட்டான். அவன் அவைகளை அதீனா தேவி மூலம் ‘ஹெஸ்பிரைடுகள்’ என்ற ஹீராவின் காவல் கன்னியர்களுக்கு அனுப்பி வைத்தான். ஹீரா தேவியின் பொருள்களாகிய அக்கனிகளை அக்கன்னியர்களிடமிருந்து பறிப்பது பாவம் என்பதனாலேயே இவ்வாறு செய்யப் பெற்றது. பாதாள உலக யாத்திரை ஹெர்க்குலிஸுக்கு விதிக்கப்பெற்ற பன்னிரண்ரண்டாவது பணியில், அவன் பாதாள உலகமாகிய புளுட்டோவின் நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. கிரேக்கர்கள் யமனைப் புளுட்டோ என்று அழைத்து வந்தார்கள். அவனுடைய உலகில் சூரியனுடைய ஒளியே கிடையாது ; மங்கலான இருள்தான் படர்ந்திருக்கும். பூமி தேவியின் மகளான பெர்சிபோனி அவனுடைய இராணி. சுவர்க்கமும் நரகமும் அவனுடைய பாதாள உலகில்தான் இருந்தன. நரகத்திற்குக் காவலாக ஒரு பெரிய நாய் இருந்து வந்தது. அதன் பெயர் செரிபரஸ். அதற்கு மூன்று பெருந்தலைகளும், பாம்புபோல் நீண்டு, முள்கம்பிகளைப் போன்ற கூர்மையுமுள்ள ஆணிகள் நிறைந்த வாலும் உண்டு. பார்க்க அச்சம் தருவதாய், நரக வாயிலில் நின்றுகொண்டு. அது மாண்டவர் ஆவிகளைக் காத்து வந்தது. அந்த நாயைப் பிடித்து வர வேண்டும் என்பது யூரிஸ்தியஸ் கட்டளை. எல்லோரும் பாதாள உலகுக்குச் சென்று வர முடியாது. மகா வீரர்களுக்கும் அது அரிது. எனவே, ஹெர்க்குலிஸ் முதலில் தேவ ஆராதனைகளாலும், தவத்தினாலும், விரதங்களினாலும் தன்னைத் தயாரித்துக்கொண்டான். இவைகளுக்காக அவன் எலியுசிஸ் என்ற இடத்தில் சிறிது காலம் தங்கியிருந் தான். ஆர்க்கேடிய நாட்டிலுள்ள மலைகளினிடையே. பூமியிலிருந்து ஓர் ஊற்றுப் பெருகி ஆறாக ஒடுவதாயும், அது சிறிது தூரத்திற்கு அப்பால் மீண்டும் பூமிக்குள்ளேயே மறைந்துவிடுவதாயும், அது மறையும் இடத்திலிருந்து பாதாள உலகுக்குச் செல்ல முடியும் என்றும் அவன் கேள்வியுற்று, அங்கே சென்றான். அந்த ஆற்றின் நீர் கடுமையான விஷம் கலந்தது. அதில் இரும்புப் பாண்டங்கள் விழுந்தால் அவைகளைக்கூட உடைத்தெறியக் கூடிய ஆற்றல் அதற்கு இருந்ததாம். ஹெர்க்குலிஸ் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆற்று நீரில் குதித்துப் பாதாள உலகிலுள்ள மாபெரும் ஏரியை அடைந்தான். அந்த ஏரியை அங்கிருந்த ஓர் ஓடத்தில் கடந்து செல்ல வேண்டும். அந்த ஓடத்தைச் செலுத்தி வந்த கேரன் என்பவன், மாண்டு போனவர்களின் ஆவிகளை மட்டும் தன் ஓடத்தில் ஏற்றிச் செல்லலாம் என்பது புளுட்டோவின் உத்தரவு. வெள்ளைக்குன்று போல் நிமிர்ந்து உயிரோடு நின்றுகொண்டிருந்த ஹெர்க்குலிஸைக் கண்டு, அவன் திடுக்கிட்டான். ‘யார் ஐயா, நீர்? என் ஓடம் இறந்தவர்களுக்கு மட்டும் உரியது!’ என்று அவன் மாவீரனை நோக்கிக் கூறினான். ஹெர்க்குலிஸ், ‘நீ என்னை ஓடத்தில் ஏற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும்! சீயஸ் கடவுளின் கட்டளைப்படி நான் இங்குள்ள செரிபரஸ் நாயை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்!’ என்று சொன்னான். ‘இங்கே வர அநுமதி பெறாத உம்மை நான் எப்படி ஏற்றிச் செல்ல முடியும்?’ என்று ஓடக்காரன் சீறினான். ஹெர்க்குலிஸ் ஒரே பாய்ச்சலாக ஓடத்திற்குத் தாவி, அதில் அமர்ந்துகொண்டு. ’நீ ஒட்டுகிறாயா, இல்லையா? ” என்று உறுமினான். அவனுடைய பலத்தையும் உறுமலையும் மிடுக்கையும் கவனித்த கேரன், ஓடத்தை அக்கரை நோக்கிச் செலுத்தினான். புளுட்டோவின் கட்டடளையை மீறி அவன் இவ்வாறு ஓட்டியதற்காகப் பின்னால் ஓராண்டுச் சிறைத்தண்டனை அநுபவிக்க நேர்ந்தது. ஆயினும், அந்த நேரத்தில், ஹெர்குலிஸ் ஏரியைக் கடந்து விட்டான். பாதாள உலகிலிருந்த ஆவிகள் அவனைக் கண்டு வெருவி ஓடத் தொடங்கின. அவன் அவைகளுக்குத் திருப்தியுண்டாவதற்காக அங்கிருந்த மாடுகளில் ஒன்றைப் பிடித்துப் பலியிட்டான். மாடுகளின் காவற்காரன் அதைக் கண்டு ஹெர்க்குலிஸைச் சண்டைக்கிழுத்தான். ஹெர்க்குலிஸ், அவனை ஒரு கையால் மேலேதூக்கி, தன் விரல்களால் அவனுடைய நெஞ்சின் எலும்புகளை ஒடிக்கத் தொடங்கினான். அந்தநேரத்தில், புளுட்டோவின் இராணியான பெர்சி டோனி, அாண்மனையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். ஹெர்க்குலிஸைக் கண்டதும் அவள் அவனை வரவேற்று காவற்காரனை உயிருடன் விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாள். அவ்வாறே ஹெர்க்குலிஸ் அவனைக் கீழே எறிந்துவிட்டு, இராணியுடன் அரண்மனைக்குள்ளே சென்று, பாதாள உலக மன்னனான புளுட்டோவைக் கண்டான். வாழ்க மன்னா நான் அரசன் பூரிஸ்தியஸின் ஆணையின்மேல் இங்கு வந்திருக்கிறேன். உன்னிடமுள்ள ரெரிபரஸ் நாயைக் கொண்டு செல்ல அநுமதிக்க வேண்டும்! என்று அவன் புளுட்டோவிடம் கேட்டான். புலூட்டோ, ’ஹெர்க்குலிஸ் ! நீ மகா வீரன் என்று மட்டும் நான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். இப்பொழுது நீ ஒரு பைத்தியக்காரன் என்றும் தெரிகிறது! அந்த முத்தலை நாயைக் கொடுத்துவிட்டால், பிறகு இங்கே காவல் காப்பது யார்? என்று கேட்டான். மன்னவா! உனக்குப் பணி செய்ய இங்கே எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் தன்னந்தனியாக என் பணிகளை நிறைவேற்றி வருகிறேன். தேவாதி தேவனாகிய என் தந்தையாகிய யேஸ் கடவுளின் கட்டளைப்படியே நான் யூரிஸ்தியஸுக்குத் தொண்டு செய்கிறேன். இதுவரை பதினொரு பணிகளை நிறைவேற்றிவிட்டேன். இது இறுதிப் பணி. என் பணிக்காக நான் உலகின் பல பாகங்களைச் சுற்றி வந்துவிட்டேன். அகரன் அட்லஸ் சுமந்துகொண்டிருக்கும் வான மண்டலத்தை நானும் சுமந்து பார்த்துவிட்டேன். இப்பொழுது, நரக வாயிலைக் காத்து நிற்கும் நாயைக் கொண்டு வா! என்று எனக்குக் கட்டளையிட்டிருப்பதால், அதை நான் எப்படியாவது கொண்டுசெல்ல வேண்டும். அல்லது நான் இங்கேயே மடிய வேண்டும்!’ ‘அப்படியானால் செரிபாஸ் நாயை நீ கொண்டு செல்வதில் எனக்கு ஆட்சேபமில்லை. உன்னால் முடிந்தால், அதை பிடித்துக்கொண்டு போகலாம். ஆனால், விரைவிலே அதை நீ மீண்டும் இங்கே கொண்டுவந்துவிட வேண்டும்!’ இந்த உரையைக் கேட்டவுடன் ஹெர்க்குலிஸ் அவனையும் இராணியையும் வணங்கிவிட்டு, செரிபரஸ் நின்ற இடத்திற்குச் சென்றான, அது தன் மூன்று வாய்களாலும் பலமாகக் குரைக்கத் தொடங்கிற்று. அலன் தன் கை வலிமையை அதற்குச் சிறிதளவு காட்டி, அதைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பாதளத்தை விட்டு வெளியேறிச் சென்றான். []  செரிபரஸ் கதிரொளியையே அதுவரை கண்டதில்லை. கதிரொளியில் அதை எவரும் பார்த்ததுமில்லை. யூரிஸ்தியஸ் அதன் கோரமான உடலையும், மூன்று தலைகளையும், பாம்பு- வாலையும் பார்த்தவுடன், திகிலடைந்து, அதைத் திரும்ப யமலோகத்திற்கே கொண்டுசெல்லும்படி கூறினான். ஹெர்க்குலிஸ், செய்து முடிக்க வேண்டிய பணிகளை யெல்லாம் நிறைவேற்றிவிட்டதால், மேற்கொண்டு அவன் மைசீன் கோட்டைக்குள் துழையக்கூடாது என்றும் அவன் கட்டளையிட்டான். ஹெர்க்குலிஸ் நாயைத் தூக்கிக்கொண்டு பாதாளம் சென்றான். அங்கே படர்ந்திருந்த இருளைக் கண்ட பிறகுதான் செரிபரஸுக்கு மீண்டும் உயிர் வந்தது! பூமியிலுள்ள சூரியனின் ஒளி அதற்குக் சிறிதும் பிடிக்கவில்லை! ஹெர்குலிஸ் தெய்வமாதல் கிரீஸ் தேசத்தில் எல்லா ராஜ்ஜியங்களிலும், ஹெர்க்குலிஸின் புகழ் பரவி நின்றது. இனி அவன் யூரிஸ்தியஸ் மன்னனுக்கும். வேறு எவருக்கும் பணிகள் செய்ய வேண்டிய கடமையில்லை. அவன் சுதந்தரமாக வாழ்ந்து, பல அரசர்களுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த பல வனவிலங்குகளை அவன் வதைத்தான். அரசர்கள் போர்களுக்கும், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்களை அடக்குவதற்கும் அவன் உதவியை அடிக்கடி நாடினார்கள். அவனும் தக்கவர்களுக்கெல்லாம் உதவி செய்து வந்தான். அவனுக்கு ஓய்வென்பதே இல்லை. போராட்டமே அவனுக்கு மூச்சுக் காற்றாக இருந்தது. அக்காலத்தில் அவன் தீப்ஸ் நகரிலே தங்கியிருந்தான். அவனுடைய புகழ் பெற்ற பன்னிரண்டு பணிகளுக்குப் பின்னாலும் அவன் மகத்தான வெற்றிகளைப் பெற்று வந்தான் : ஒரு சமயம் படைகளை அழைத்துக் கொண்டு, டிராய் நகரின் மீதுபடையெடுத்து அதைச் சூறையாடினான். ஆசியாவில் லிடியா என்ற நாட்டில் ஓராண்டுக்கு மேலாக அவன் தங்க வேண்டியிருந்தது. அப்பொழுது அந்நாட்டு இராணியான ஒம்பேல் என்பவளுக்கு அவன் பல உதவிகள் செய்து வந்தான். ஈலிஸ் நகரில் ஆஜியஸ் மன்னன் தன்னை முன்பு ஏமாற்றியதற்காக அவன் மீது ஒரு முறை படையெடுத்து, அவனை வதைத்து. அவனுடைய மகன் பைலியஸை ஹெர்க்குலிஸ் அரசனாக்கினான். ஆனால், அந்தப் போராட்டத்தில் அவனுடைய சகோதரன் இலிகிளிஸ் காயமடைந்து, அதனால் பின்பு ஆர்கேடிய நாட்டில் உயிர் துறக்க நேர்ந்தது. ஹெர்க்குலிஸ் தன் பழைய மனைவி மிகாரை என்பவளை விலக்கிவிட்டு, ஓர் அரச குமாரியான தியனைராவை மணந்துகொள்ள விரும்பினான். அவளுடைய தந்தை அவனைப் பார்த்து, ‘உன்னை மணந்துகொள்வதால் என்மகளுக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்டான். உடனே அவன், ‘சீயஸ் தேவனின் மருமகள் என்ற பட்டம் கிடைக்கும்; உலகெங்கும் பரவியுள்ள என் புகழின் ஒளியில் அவள் வாழலாம்!’ என்று கணீரென்று மறுமொழி கூறினான். அவன், வில்வித்தையில் தன் ஆற்றலைக் காட்டி, போட்டிக்கு வந்த மன்னர்களையும் வீரர்களையும் வென்று, கடைசியில் தியனைராவை அடைந்தான். அவன் அவளை அழைத்துக் கொண்டு திரும்பும் வழியில், வெள்ளம் மிகுந்திருந்த ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் சென்டார் ஒருவன் வேகமாகப் பாய்ந்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். சென்டார் வகுப்பினருக்கு தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே நான்கு கால்களும் குதிரையின் உடலும் அமைந்திருக்கும். ஹெர்க்குலிஸைக் கண்ட சென்டார், தான் தியானராவைத் தன் முதுகில் அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதாயும், அவன் தனியே நீந்தி வரலா மென்றும் தெரிவித்தான். வீரனும் அதற்குச் சம்மதித்தான். எல்லோரும் அக்கரையை அடைந்தனர். அங்கே சென்றதும் சென்டார், தியனைராவைச் சுமந்து கொண்டே, நாற்கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான், அவனுடைய கபட நோக்கத்தை உணர்ந்துகொண்டான் ஹெர்க்குலிஸ். தியனைராவைக் கடத்திச் செல்லவே அவன் வந்திருந்தான். ஆகவே, நேரத்தை வீணாக்காமல், ஹெர்க்குலிஸ் தன் விஷ பாணங்களில் ஒன்றை அவன் மீது ஏவினான். அந்தக்கணத்திலேயே சென்டார் சுருண்டு வீழ்ந்துவிட்டான். அவன் உடல் முழுதும் லெர்னா வனத்து நாகத்தின் விஷம் பரவிவிட்டது. அவன் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அகதை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உடனே உயிர் துறந்தான். அவளும், அவன் பேச்சை நம்பி, அதை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டாள். உண்மை என்னவென்றால், சென்டார் தன்னைக் கொன்ற விஷத்தைக் கொண்டே ஹெர்க்குலிஸையும் கொல்வதற்காக ஆவளை அவ்வாறு ஏமாற்றி விட்டான். புது மணத்தம்பதிகள் வீடு திரும்பியபின் விருந்துகளும் கேளிக்கைகளும் பல நாள்கள் நடந்தன. தியனைரா சென்டாரிடம் பெற்றிருந்த மருந்தை ஒரு சிமிழில் அடைத்துப் பெட்டியில் வைத்திருந்தாள். நாள்கள் செல்வச் செல்ல, அவள் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அதை அடியோடு மறந்திருந்தாள். அவளும் ஹெர்க்குலிஸும் பல்லாண்டுகள் அன்புடன் இல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர். அவளுக்கு நான்கு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர். ஒரு சமயம் ஹெர்க்குலிஸ், தான் அடைந்த வெற்றிகளுக்காக, சீயஸ் கடவுளுக்குப் பலிகள் கொடுத்து யாகம் நடத்த வேண்டுமென்று, ஒரு மலை மேல் ஓம குண்டங்களும் பலி பீடங்களும் அமைத்திருந்தான். யாகத்திற்கு வேண்டிய சாமக்கிரியைகள் பலவும் தயாராயிருந்தன. அப்பொழுது ஹெர்க்குலிஸ் யாகத்தில் தான் அணிந்துகொள்ள வேண்டிய பட்டு உடையைத் தியனைராவிடம் போய் உடனே வாங்கி வரும்படி ஒரு தூதனை அனுப்பி வைத்தான். தூதன் சென்ற சமயத்தில், தியனரா ஹெர்க்குலிஸைப் பற்றித் திடீரென்று வருத்தமடைந்து புலம்பிக்கொண்டிருந்தாள் நாட்டிலே அழகு மிகுந்த பெண்கள் பலரும் அவனிடம் காதல் கொண்டிருந்தனர். அவனுடைய உடலமைப்பும் அழகும் பெண்களின் கண்களுக்குப் பெருவிருந்தாக இருந்தன. இக்காரணங்களால் அவன் முற்காலத்தைப் போல் அந்தச் சமயத்தில் தன்னிடம் அதிக அன்பு காட்டவில்லை என்பதே அவள் வருத்தத்திற்குக் காரணம். தூதன் உடை கேட்டு வந்ததும், அவள் உள்ளே ஓடி பெட்டியைத் திறந்து ஹெர்க்குலிஸ் அணியக்கூடிய புனித உடையை வெளியே எடுத்தாள். அப்பொழுது பெட்டியிலிருந்த மருந்துச் சிமிழை அவள் கண்டுவிட்டாள். உடனேயே சென்டார் சொல்லிய சொற்கள் அளுடைய நினைவுக்கு வந்தன. நாயகனைத் தன்னுடன் இனை பிரியாமலிருக்க வழி செய்துவிட வேண்டும்! என்று அவள் தீர்மானித்தாள். அவள், கையிலே கொஞ்சம் கம்பள ரோமத்தை எடுத்து. அதைச் சிமிழிலிருந்த மருந்தில் தோய்த்து பிறகு அதை நாயகன் அணிந்துகொள்ளக் கூடிய பட்டிலே தேய்த்தாள். அதற்குப்பின், பட்டு உடையை ஒரு பெட்டியிலே வைத்து, அதை அவள் தூதனிடம் கொடுத்தனுப்பினாள். தூதன் சென்று சிறிது நேரம் கழிந்ததும், அவள் வீட்டு முற்றத்தில் தான் வீசியெறிந்த கம்பளம் தீப்பற்றி எரிவதைக் கண்டாள். அது எரியும் பொழுது ஒரு விஷ வாடையும் வீசிற்று. உடனே அவளுடைய நெஞ்சில் இடி விழுந்தது போலாயிற்று. அவள் பதைபதைத்தாள், அழுதாள், துடித்தாள். தான் அனுப்பிய உடையால் ஹெர்க்குலிஸுக்கு என்ன நேருமோ என்று அவள் அஞ்சினாள். சென்டார் வேண்டுமென்றே தன்னை மோசம் செய்திருந்தான் என்பதை அவள் அப்பொழுதுதான் உணர்ந்துகொண்டாள்; உடனே ஒரு குதிரை வீரனை அனுப்பி தான் அனுப்பிய உடையை ஹெர்க்குலிஸ் அணிய வேண்டா என்று சொல்லும்படி செய்தாள். யாக சாலையில் ஹெர்க்குலிஸ் உடை வரவில்லையே என்று ஆத்திரத்தோடு காத்து நின்றான். தூதன் பெட்டியைக் கொணர்ந்ததும், அவன் அவசர அவசரமாக அதிலிருந்த ஆடையை எடுத்து அணிந்துகொண்டான். யாகம் தொடங்கிற்று. பலிக்குரிய மாடுகள் யாவும் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. ஓம குண்டங்களிலே அக்கினி கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. முதலில் ஹெர்க்குலிஸ் பன்னிரண்டு மாடுகளைப் பலியிட்டான். ஓம குண்டங்களிலே அவன் நிறைய மதுவையும் வார்த்தன். சுற்றிலும் தூப தீபங்களின் நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அப்பொழுது அவன் திடீரென்று உரக்கச் சத்தமிட்டு அலறினான். தியனைரா அவனுடைய உடையிலே தேய்த்திருந் விஷ் மருந்து உடையில் சூடேறியவுடன் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. அந்த விஷம் கொடிய வெர்னா நாகத்தின் விஷமல்லவா! அது அவனுடைய உடல் முழுவதும் பரவி விட்டது! அது அவன் அங்கங்களை அரித்து. எரித்துக் கொண்டிருந்தது. வெற்றி வீரனாகிய ஹெர்க்குலிஸ் அவ்விஷத்தின் கொடுமையையும், வேதனையையும் தாங்க முடியாமல் கதறினான். அவன் பட்டுச் சட்டையைக் கழற்றி எறியமுயன்றான். ஆனால், அதை இழுக்கும் பொழுது அவனுடைய உடலின் சதைகளும் சேர்ந்து வந்தன. உடலில் ஓடிக் கொண்டிருந்த இரத்தம் கொதித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த ஓர் ஓடையிலே குதித்து. நீருள் மூழ்கிப் பார்த்தான். அதனால் உடலின் எரிவு அதிகமானதைத் தவிர வேறு பயனில்லை. ஓடை நீரும் கொதித்து, அதிலிருந்து ஆவி வரத் தொடங்கிவிட்டது! அவன் எழுந்து சென்று. அங்குமிங்கும் ஓடினான் அப்பலிபீடங்களைத் தகர்த்தெறிந்தான்; வழியிலே தென்பட்ட மரங்களையெல்லாம் வேருடன் பறித்து வீசினான். வழியில் கூடியிருந்த பூசாரிகளும், மக்களும் அவனுடைய அவல நிலையைக் கண்டு துடிதுடித்தனர். ஆனால், யாருக்கும் என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது விளங்கவில்லை. தியனைரா இரண்டாவதாக அனுப்பிய குதிரை வீரன், யாக சாலைக்கு வந்து பார்க்கையில், காலம் தாழ்ந்துவிட்டது என்பதை உணர்ந்து அங்கு தான் கண்ட காட்சியை அப்படியே போய் அவளிடம் தெரிவித்தான். அவள் தானே தன் கணவனுக்கு யமனாகத் தோன்றியதை எண்ணி வருந்தி, அவனுடைய வாளாலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். ஹெர்க்குலிஸின் படைவீரர்கள் யாகசாலையிலிருந்து சிறிது தூரத்தில் வருந்திக்கொண்டே நின்றார்கள். அந்த நேரத்தில் அவன் அருகில் செல்ல எவரும் துணியவில்லை. ஹெர்க்குவிஸ், தன் மைந்தன் ஹில்லஸைக் கூவி அழைத்து, தன்னை அடிவாரத்தில் அமைதியான ஓரிடத்தில் கொண்டுபோய் விடும்படி கேட்டுக்கொண்டான். அவ்வாறே அவனைப் பல வீரர்கள் சேர்ந்து மலையடிவாரத்திலே கொண்டு போய் வைத்தனர். அப்பொழுது ஹெர்க்குலிஸை அழைத்து தன்னுடைய தாய் அல்க்மினாவையும், தன் குமாரர்கள் அனைவரையும். மகளையும் அங்கே வரவழைத்து, தான் அவர்களுக்குத் தன்னுடைய இறுதிச் செய்தியைக் கூற வேண்டுமென்று ஆசைப்படுவதாகக் கூறினான். ஹில்லஸ் தன் பாட்டியாரான அல்க்மினா டைரின்ஸ் நகரில் தன் சகோதரர்களை வைத்துக்கொண்டு தங்கியிருப்பதாகத் தெரிவித்தான். அத்துடன் தன் தாய் தியனைரா, ஹெர்க்குலிஸுக்கு நேர்ந்த விபத்தை அறிந்து தன் உயிரையும் துறந்துவிட்டாள் என்று செய்தி வந்திருப்பதாயும் அவன் கூறினான். அதுவரை ஹெர்க்குவிஸ் அவளைப் பற்றி நெஞ்சிலே குமுறிக்கொண்டிருந்தான். ஹில்லஸ் கூறிய வார்த்தைகளிலிருந்து அவனுக்ரும் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. அப்பொழுது ஹெர்க்குலிஸ், சீயஸ் தேவர் ஆதியிலே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருந்த வாக்கைத் தன் மகனுக்கு எடுத்துச் சொன்னான்: ‘உயிருள்ள எந்த மனிதனும் ஹெர்க்குலிஸை எந்தக் காலத்திலும் கொல்ல முடியாது இறந்து போன பகைவன் ஒருவனே, அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணமாயிருப்பான்!’ பின்னர்த் தன்னுடைய தகனக்கிரியைபற்றியும் அவன் மகனுக்குச் சொல்ல வேண்டிய விவரங்களைச் சொல்லி முடித்தான். அவனுடைய கட்டளைப்படி சிந்தூர மரக்கட்டைகளும், தேவதாரு மரக்கட்டைகளும் அடுக்கப்பட்டன. அயோலஸ் முதலிய உறவினர்கள் காட்டத்திலிருந்து சற்று விலகி நின்றுகொண்டனர். ஹெர்க்குலிஸ் தானாகவே அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு, யாராவது ஒருவர் காட்டத்தின் ஒரு மூலையிலே தீ முட்டும்படி வேண்டினான். அங்கேயிருந்தவர் எவருக்கும் தீ முட்ட மனம் வரவில்லை. அப்பொழுதும் ஹெர்க்குலிஸ், மாலையணிந்து கொண்டு விருந்துக்கு வருபவனைப் போல, இன்பமாகவே விளங்கினான். வீரம் தாண்டவமாடும் அவன் முகங்களை மாறவில்லை. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஆயன் ஒருவன், தன் மகனை அழைத்து. ஹெர்க்குவிஸ் விரும்புவது போலச் செய்யும்படி கூறினான். அந்த இளைஞன் அவ்வாறே காட்டத்திற்குத் தீ மூட்டினான் அவனுக்குப் பரிசாக ஹெர்க்குலிஸ் தன் வில்லையும், அம்புகளையும். துணியையும் கொடுத்து, அவனைப் பாட்டினான். பிறகு அவன் சிம்மத் தோலைக் காட்டத்தின்மீது விரித்து தன் கதையைத் தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு, தோலின் மீது படுத்துக்கொண்டான். அந்த நேரத்தில் ’சீயஸ் கடவுளின் ஆணையால், இடிகளும் மின்னல்களும் தோன்றின. காட்டம் ஒரு [] கனத்திலே சாம்பலாகக் காணப்பெற்து. பாம்பு சட்டையைக் கழற்றுவது போல ஹெர்க்குலிஸ் தன் பழைய உடலைக் கழிற்றிவிட்டு, தேசோமயமான தெய்வீகச் சரீரத்துடன் மேலே எழுந்து சென்றான். சீயஸ் கடவுளே தன் நான்கு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எதிர்கொண்டு வந்து, அவனை ஏற்றிக் கொண்டு, ஒலிம்பிய மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அதீனா தேவி, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கீழே இறங்கச் செய்து, அவனை மற்றைத் தேவர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அது முதல் மண்ணுலக வீரனான ஹெர்க்குலிஸ் தேவனாக விளங்கிக்கொண்டிருக்கிறான். அன்று போல் என்றும் அவனுடைய புகழும் பூவுலகில் நிலைத் திருக்கின்றது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.