[]     ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்  (தமிழ் விளக்கத்துடன்)   - ஆன்மீகம்   - ஷக்திப்ரபா  prabha2talk2@yahoo.com  அட்டைப்படம் : ஷக்திப்ரபா -  -prabha2talk2@yahoo.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution -NonCommercial-ShareAlike     உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்பனை கூடாது          பொருளடக்கம் 1. முன்னுரை 4  2. தியான ஸ்லோகங்கள் 6  3. ஸ்ரீ மாதுரவதாரம் 13  4. கேசாதி பாத வர்ணனை 17  5. ஸ்ரீ நகர வர்ணனை 30  6. பண்டாசுர வதம் 33  7. மந்திர ரூபம் 40  8. பக்த அனுகிரஹம் 47  9. நிர்குண உபாசனை 51  10. சகுண உபாசனை 61  11. பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம் 71  12. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம் 91  13. பீடங்களும் அங்க தேவதைகளும் 97  14. யோகினி நியாஸம் 116  15. விபூதி விஸ்தாரம் 128  16. சிவசக்த்யைகரூபம் 209    1. முன்னுரை   பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர், பெருங்கருணை கொண்டு லலிதா சஹஸ்ர-நாமத்தை நமக்கெல்லாம் விளக்கியருளினார். அகஸ்திய முனிவருக்கும் ஹயக்ரீவருக்கும் நடைபெரும் உரையாக, சம்பாஷணையாக சஹஸ்ர நாமம் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டது.   தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பரமசிவன் மன்மதனை உயிர்பித்த போது, கூடவே பண்டாசுரன் என்ற அசுரனும் தோன்றினான். ஈடு இணையற்ற சக்தி கொண்டவனாக, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்து கொடுங்கோல் புரிந்து வந்தான். தேவர்கள் கடுந்தவம் புரிந்து அவனை அழிக்க வல்ல சர்வசக்தியான ஆதிபராசக்தியை துதித்து வழிபட்டனர். யக்ஞத்திலிருந்து ஜகத்தை ஆளும் சக்தியானவள், பேரழகு பொருந்திய லலிதா தேவியாக அவதரித்தாள்.   ஆதியில், லலிதையின் ஆணைக்கு இணங்க, வாக்தேவிகளால் அன்னையைப் போற்றி ஓதிப்பட்ட திருநாமங்களே பின்னர் பிரம்மாண்ட புராணத்தில் வியாசருக்கு ஹயக்ரீவரால் உபதேசிக்கப் பட்டது.   முதல் 84 ஸ்லோகங்கள் லலிதா தேவியின் அங்க வர்ணனையாகவும் இக்கதையின் ஸ்லோக வடிவாகவும் திகழ்கிறது. சஹஸ்ர (ஆயிரம்) நாமங்களை கொண்ட லலிதாம்பிகையின் நாமங்கள், 'ரஹஸ்ய நாமங்கள்' என்றும் வழங்கப்படுகிறது. இந்த நாமாக்களின் அர்த்தம் உணர்ந்து தியானிக்க முற்பட்டால், பல கேள்விகளுக்கு விடையாக திகழலாம் என்ற எண்ணத்தால், இந்த நூலில், நாமங்களை தனித்தனி வார்த்தையாக பதம்-பிரித்து பொருள் குறிப்பிட்டு, பின்னர் ஒவ்வொரு நாமமும் வரி-விளக்கமாக கொடுக்க முற்பட்டுள்ளது.     அகராதி குறிப்புகளுக்கு உதவிய வலைதளங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் https://www.sanskritdictionary.com/ ; http://spokensanskrit.org ; https://www.manblunder.com/   நாமங்களுக்கு தொடர்புடைய விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள், மேலும் தகவல் தெரிந்து கொள்ள ஏதுவாக சில வலைதளங்களை குறிப்பிட்டிருக்கிறேன். குறிப்பிடப்பட்ட அனைத்து வலைதளங்களுக்கும் நன்றி.   சான்றோர்களும் ஆன்றோர்களும் எழுத்துப்பிழைகளையும், பொருட்பிழைகளையும் பொறுத்தருள வேண்டும். இந்நூல் எவருக்கேனும் சிறு உதவியாக இருந்தால் அதுவே நூல் ஆக்கியதன் பயனென கருதுகிறேன்.   நூல் வரைய பெரிதும் ஊக்கமளித்து மகிழ்ந்த என் குடும்பத்திற்கு அன்பும் நன்றியும் என்றென்றும் உரித்தாகும்.   எனது வலைதளத்திலும் முகநூலிலும் சிறு பகுதிகளாக எழுதியதைப் பகிர்ந்த பொழுது படித்து ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் மிகுந்த நன்றியுடனும் அன்புடனும்,   ஷக்திப்ரபா   2. தியான ஸ்லோகங்கள் ஸ்லோகம்-1 []     அன்னையின் கருணையும் அழகும் நிறைந்த வடிவத்தை முதலில் தியானித்து அவள் பெருமையை உணரத் துவங்கினால், உணர்வு பூர்வமாக ஈடுபடலாம். நான்கு ஸ்லோகங்கள் த்யான ஸ்லோகமாக சொல்லப்படுகிறது. முதலாவது ஸ்லோகம்  வாக்தேவிகளால் அருளப்பட்டது.   சிந்தூராருண விக்ரஹாம்; த்ரி நயனாம்; மாணிக்ய மௌலிஸ்புரத்; தாரா நாயக சேகராம்; ஸ்மிதமுகீம்; ஆபீன வக்ஷோருஹாம்; பாணிப்யாம் அளிபூர்ண ரத்ன சஷகம்; ரக்தோத்பலம் பிப்ரதீம்; சௌம்யாம்; ரத்ன கடஸ்த ரக்த சரணாம்; த்யாயேத் பராம் அம்பிகாம்|| *****   சிந்தூராருண விக்ரஹாம் = குங்குமத்தின் நிறத்தையொத்த உதிக்கும் சூரியனை போன்ற உருவம்   திரி நயனாம் = முக்கண்களை உடையவள்   மாணிக்ய மௌலி-ஸ்புரத் = மாணிக்கத்தை சிரசில் தரித்தவள்   தாரா நாயக சேகராம் = நட்சத்திரங்களின் நாயகனான சந்திரனை உச்சியில் தரித்தவள்   ஸ்மிதமுகீம் = புன்னகை சிந்தும் முகமுடையாள்   ஆபீன வக்ஷோருஹாம் = திண்மையான மார்பகத்தை உடையவள்   பாணிப்யாம் = கைகளில்    அளிபூர்ண-ரத்ன-சஷகம் = தேன்-நிரம்பிய ரத்தின கிண்ணத்தை ஏந்தியிருக்கிறாள்   ரக்தோத் பலம் பிப்ரதீம் = சிவந்த மலர்களை ஏந்தியிருக்கிறாள்   சௌம்யாம் = அழகு பொருந்தியவள்   ரத்ன கடஸ்த = ரத்னக் குடத்தில்   ரக்த சரணாம் = தன் சிவந்த பாதத்தை இருத்தியிருக்கிறாள்.   த்யாயேத் பராம் அம்பிகாம் = இப்படிப்பட்ட அம்பிகையை நான் வணங்குகிறேன்.   பொருள்: குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் சூரியனைப் போன்ற திருமேனி கொண்டவளும், முக்கண்ணுடையவளும், சிவந்த மாணிக்கத்தை சிரசிலும், நட்சத்திரத்தின் தலைவனான சந்திரனை உச்சியில் தரித்தவளும், மந்தஹாச புன்னகை சிந்துபவளும், திண்மையான மார்பகத்தை உடையவளும், கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தையும், சிவந்த மலர்களையும் கொண்டவளும், சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளும், சௌந்தர்யம் பொருந்தியவளுமான அம்பிகையை தியானிக்கிறேன்.   (மூன்றாவது கண் என்பது ஞானத்தை குறிக்கும்)   தியான ஸ்லோகம்-2 இரண்டாம் தியான ஸ்லோகம் தத்தாத்ரேயரால் அம்பிகையை துதித்து பாடப்பட்டது. []     அருணாம்; கருணா தரங்க்கிதாக்ஷிம்;  த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்; அணிமாதிபிராவ்ருதாம்; மயூகை-ரஹமித்யேவ விபாவையே பவானீம்|| *****   அருணாம் = சூரிய அருணோதயம்   கருணா = கருணை கொண்டவள்   தரங்கி = அலை   அக்ஷி = கண்கள்   த்ருத = சுமந்து, தரித்து அல்லது கொண்டிருப்பவள்   பாச = பாசம் என்னும் சூக்ஷ்ம பிடிப்பு-ஜீவனை பந்தப்படுத்தியிருப்பது   அங்குசம்= ஜீவனை தன்னிடத்தில், தன்-வசத்தில், கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளம்    புஷ்ப பாண = மலர்களாலான அம்பு   (பாண) சாபாம் = கரும்பு வில்   அணிமாதி = அஷ்ட சித்திகளின் வடிவ தேவதைகள்   அணிமாதிபிராவ்ருதாம் = அஷ்டமாசித்தி தேவதைகளால் சூழப்பட்டவள்   மயூகை = ஒளிக்கதிர்   அஹம் = நான்    இத்யேவ = இப்படிப்பட்ட   விபாவயே = மஹத்துவத்தை உடைய   பவானீம் = தேவி பவானீ   பொருள்:  சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளும், அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும், பாசம், அங்குசத்தை தரித்தவளும், புஷ்பத்தாலான அம்புகளையும் கரும்பு வில்லையும் சுமந்தவளும், அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளும், ஒளிக்கதிரென மிளிர்பவளும்,  பெரும் மஹத்துவத்தையுடையவளுமான பவானியை நான் தியானிக்கிறேன்.     தியான ஸ்லோகம்-3 (பாடியவர் பற்றிய தகவல்கள் இல்லை) []   த்யாயேத் பத்மாசனஸ்தாம்; விகசித வதனாம்; பத்மபத்ராயதாக்ஷீம்; ஹேமாபாம்; பீதவஸ்த்ராம்; கரகலித-லசத் ஹேம பத்மாம்; வராங்கீம்; சர்வாலங்கார யுக்தாம்; சததம் அபயதாம்; பக்த நம்ராம்; பவானீம்; ஸ்ரீவித்யாம்; ஷாந்தமூர்த்திம்; சகல சுரனுதாம்; சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்; **** பத்மாசனஸ்தாம் = தாமரையில் வீற்றிருப்பவள்   விகசித வதனாம் = ஒளிரும் வதனம்   பத்ம பத்ராய = தாமரை இதழ்கள்   அக்ஷீ = கண்கள்   ஹேமாபாம் = பொன்னென ஜொலிப்பவள் (ஹேம= தங்கம்)   பீத வஸ்த்ராம் = பிரகாசிக்கும் ஆடை தரித்தவள்   கரகலித = கைகளில்   லசத் = மின்னும்   ஹேம பத்மாம் = தங்கத் தாமரை   வராங்கீம் = வரபூஷணி - வரங்களின் வடிவமாகவே இருப்பவள்.   சர்வ = சகலவித   அலங்கார யுக்தாம் = ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவள்.   சததம் = எப்பொழுதும்   அபயதாம் = பாதுபாப்பு அளிப்பவள்   பக்த நம்ராம் = பக்தர்களுக்கு இரங்கி செவிசாய்ப்பவள்   ஸ்ரீ வித்யாம் = வித்யையின் ரூபிணி. ஞானத்தின் இருப்பிடம்   ஷாந்த மூர்த்திம் = அமைதியின் ரூபம்   சுர-(அ)னுதாம் = சுரர்கள் எனப்படும் தேவர்களால் (தெய்வங்கள்) வணங்கப்படுபவள்   சர்வ = அனைத்து விதமான   சம்பத் ப்ரதாத்ரீம் = செழிப்பும் வளமையும் தந்தருள்பவள்   த்யாயேத் பவானீம் = பவானியை தியானிக்கிறேன்.   (ரூபத் தியானம்) பத்மத்தில் வீற்றிருப்பவளும், ஒளிரும் திங்களென முகமுடையாளும், தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளும், பொன்னென ஜொலிப்பவளும், பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளும், கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளும், சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளுமான பவானியை தியானிக்கிறென்.   (பவானியின் குணங்கள்) எப்பொழுதும் பக்தர்களுக்கு அபய கரம் நீட்டுபவளும், அவர்கள் கோரிக்கைகளுக்கு இரங்கி செவிசாய்ப்பவளுமான பவானியை தியானிக்கிறேன்.   (அன்னையின் அம்சங்கள்) ஞானமாகியவளே, வரங்களையே வடிவமாக்கிக் கொண்டவளே, அமைதியின் ரூபமானவளே, சுரர்கள் எனப்படும் ஏனைய தேவதைகளால் வணங்கப்படுபவளே, செழிப்பும் செல்வமும் வழங்குபவளே அன்னை பவானியே உன்னை நான் தியானிக்கிறேன்.   குறிப்புகள்: சம்பத்து என்பது இவ்வுலக பொருள்-சார்ந்த விஷயங்கள் மட்டுமே அல்ல. செழிப்பு செல்வம், மன அமைதி, அறிவு, பண்பு, ஞானம், வைராக்கியம், பக்தி போன்ற கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம செல்வத்தையும் குறிக்கும்.    பீத வஸ்த்ரம் போன்ற பட்டாடை தரிப்பதும், பொன்னென ஒளிர்வதும், தங்கத்தாமரையை ஏந்தியிருப்பதும்  பகட்டைக் குறிப்பிடுபவை அல்ல. அழுக்குகள் அற்ற பூரண பரமாத்மா எப்படி ஒளிருமோ, அப்படி ஒளிர்கிறாள். ஜோதி வடிவமாக இருக்கும் பரமாத்மா என்பதால் மிளிர்கிறாள். தியான ஸ்லோகம் 4 இந்த ஸ்லோகம் ஆதிசங்கரர் அம்பாளை துதித்து இயற்றியது. ஸகுங்கும விலேபனாம்; அளிகசும்பி கஸ்தூரிகாம்; ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ச-சர சாப பாசாங்குசாம்; அசேஷ ஜன மோஹினீம்;  அருணா மால்ய பூஷாம்பராம்; ஜபா குசுமபாசுராம்; ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்; ***** விலேபனாம் = பூசியிருப்பவள்   அளிக சும்பி = நெற்றியில் முத்தமிட்டிருக்கும்   கஸ்தூரிகாம் = கஸ்தூரி திலகம்    மந்த ஹசிதேக்ஷணாம் = மிருதுவாக புன்னைத்திருக்கிறாள்    சர சாப = அம்பு, வில்    பாசம் = ஜீவனை பந்தப்படுத்தியிருக்கும் பிணைப்பு   அங்குசம் = ஜீவர்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளச் சின்னம்    அசேஷ = எல்லாமும், எல்லோரும், அனைத்தும்    ஜன மோஹினீம் = ஜனங்களால் மோஹிக்கப்படுபவள்    அருண மால்ய = செந்தூர மாலை    பூஷாம்பராம் = அணிசெய்யும் அலங்காரங்களை உடுத்தியிருக்கிறாள்    ஜபா குசும = செம்பருத்தி மலர்    பாசுராம் = மின்னுதல்    ஜப விதௌ = ஜபத்தின் பொழுது (அதன் விதிகளின் படி)    ஸ்மரேத் = ஸ்மரிக்கிறேன் / தியானிக்கிறேன்    குங்குமத்தை பூசியிருப்பவளும், நெற்றியில் கஸ்தூரி திலகம் கொஞ்சத் திகழ்பவளும், மென்மையான புன்னகை சிந்துபவளும், அம்பு-வில்-பாசாங்குசம் ஏந்தியவளும், எல்லா ஜீவனையும் தன்னிடத்தில் மோஹத்திருக்கச் செய்பவளும், சிகப்பு மாலை, செம்பருத்தி மலர் சூடி, அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜொலிப்பவளுமான அம்பிகையை ஜபத்தின் பொழுது தியானிக்கிறேன்.                   3. ஸ்ரீ மாதுரவதாரம் []     (1 – 12) ஸ்ரீ-மாதா; ஸ்ரீமஹாராஜ்நீ;  ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி; சிதக்னி-குண்ட சம்பூதா; தேவகார்ய சமுத்யதா; உத்யத்பானு சஹஸ்ராபா ; சதுர்பாஹு சமன்விதா; ராகஸ்வரூப பாஷாட்யா ; க்ரோதாகாரங்க்குசோஜ்வலா; மனோரூபேக்ஷு கோதண்டா; பஞ்சதன்மாத்ர சாயகா; நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா;   ஸ்ரீ= பெயருக்கு முன் மரியாதை நிமித்தமாக சேர்க்கப்படுவது மாதா = அன்னை. - 1 ஸ்ரீ மாதா = தாயாகியவள். உலக சேதன அசேதன தோற்றத்திற்கெல்லாம் ஆதாரமான அன்னை.      மஹா = பெரிய – அளப்பரிய ராஜ்ஞீ = அரசி - 2  ஸ்ரீ மஹாராஜ்ஞீ = பிரபஞ்சம் என்னும் ராஜ்ஜியத்தை ஆளுபவள்.. தோற்றுவித்த அனைத்தையும் ஆளுபவள்.    ஸ்ரீமத் = மதிப்பிற்குகந்த சிம்ஹ = சிம்மம் ஆசன = இருக்கை - பீடம் ஈஸ்வரி = இறைவி - 3 ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி = சிம்ம வாஹினி. சிம்மத்தை ஆசனமாக கொண்டு வீற்றிருக்கும் மஹாதேவி.      சித் = சித் என்ற சேதனம் (அறிவு-ஆன்மா) அக்னிகுண்ட = அக்னிகுண்டம் சம்பூதா = தோன்றுதல் - 4 சிதக்னி-குண்ட சம்பூதா = 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வேளிப்பட்டவள். சுயம்புவாக தோன்றியவள். 'சித்' என்பது சேதன்மாகிய ஆன்மாவை குறிக்கும்.   தேவ = தேவர்கள் கார்ய = செயல் சமுத்யதா = வழங்குதல்-ஈடுபடுதல் - 5 தேவகார்ய சமுத்யதா = தேவர்களுக்கு உதவுபவள். தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்.     உத்யத் பானு = உதய சூரியன்  சஹஸ்ர = ஆயிரம்  ஆபா = பிரகாசம் - 6 உத்யத்பானு சஹஸ்ராபா = ஆயிரம் உதய சூரியனின் பிரகாசத்துடன் பிரகாசிப்பவள்   சமன்விதா = இருப்பவள் / உடையவள்  பாஹு = கைகள்  சதுர் = நான்கு - 7 சதுர் பாஹு சமன்விதா = நான்கு கைகளை உடையவள்   ராக ஸ்வரூபா = ராகம் என்றால் ஆசைகள், அபிலாஷைகள்  பாஷாட்யா = பாசம் என்னும் கயிறு - 8 ராக ஸ்வரூப பாஷாட்யா = ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள் * ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்பது புரிதல். மற்றொரு பார்வையில், கருணையின் காரணமாக, அன்னையானவள், ஆசைகளின் வேரை அறுத்து ‘வீடு-பேறு’ என்னும் முக்திக்கு வழி செய்பவள் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.   க்ரோதாகார = ஆக்ரோஷம், கோபம் கோண்டு  அங்குச = அங்குசம் என்ற ஆயுதத்தை (அம்பு) க்ரோதத்தின் வெளிப்பாடாக சுமந்திருக்கிறாள்  உஜ்வலா = பிரகாசிப்பவள் - 9 க்ரோதாகார-அங்குசோஜ்வலா = க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள் *   சினத்தின் வெளிப்பாடு, ஜீவராசிகள் மீது அன்னை கொண்டுள்ள ஆளுமையின் அடையாளமாகவோ அல்லது அதர்மத்தை அழிக்க ஏற்றுள்ள உக்கிர ரூபமாகவும் பொருள் சொல்லப்படுகிறது.   மனோரூப = மனத்தின் வடிவாக இக்ஷு = கரும்பு கோதாண்ட = வில் - 10 மனோரூபேக்ஷு கோதண்டா = மனதையே கரும்புவில்லாக தரிப்பவள்   பஞ்ச தன்மாத்ர = ஐந்து பூதங்ளான நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ஆகிய வற்றின் நுட்ப பண்புகளான - சுவை, ஊறு, நாற்றம், ஒளி, ஓசை என்பன சாயக = அம்பு - 11 பஞ்சதன்மாத்ர சாயகா = ஐம்பூதங்களின் நுட்ப வெளிப்பாடுகளான தன்மாத்திரைகளை தன் அம்புகளாக்கி கொண்டவள்   நிஜாருண = நிரந்தரமான சிவப்பு ப்ரபா = ஒளிர்வு / பிரகாசம் பூர = முழுமையாக மஜ்ஜத் = மூழ்குதல் ப்ரம்மாண்ட மண்டலா = அண்டசராசரத்தின் மண்டலம் - 12 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா = அண்டசராசரத்தின் மண்டலம் முழுவதையும் செந்நிற ஒளிர்வில் மூழ்கச் செய்திருப்பவள்* பிரபஞ்சத்தையே தன் ரூபமாக்கியவள். அதன் தோற்றம், இயக்கம் ஒடுக்கத்தியே அன்னை அம்பிகா, வில் அம்புகளாக தரித்து தன்னுடைய லீலைக்கு உட்படுத்தி விளையாடுகிறாள் என்பது புரிதல். (இதுவரை அன்னையின் அவதாரம் பற்றி படித்தோம். இனி  கேசத்தில் துவங்கி பாதம் வரையிலான அம்பிகையின் அங்க-அழகின் வர்ணனையைத் தொடர்வோம்)                                           4. கேசாதி பாத வர்ணனை []   (13-24) சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா; குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா; அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா; முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா; வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா; வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா; நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா; தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா; கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா; தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா; பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ: நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா; ***   சம்பகா - அஷோகா - புன்னாக - சௌகந்திக =  அன்னைக்கு பிடித்தமான பலவித மலர்கள் லசத் = மின்னும் கச = கேசம் - 13 சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா  = ஷெண்பகப்பூ, விருக்ஷி, சுகந்திப் புஷ்பம், புன்னைப் பூ முதலிய மலர்களை, மிளிரும் எழில் கூந்தலில் சூடியிருப்பவள் [] [] [] []   (இடமிருந்து வலமாக அசோக, சௌகந்திக,ஷெணக, புன்னாக, மலர்கள்)   குருவிந்தமணி = மாணிக்க கற்கள் ஸ்ரேணி = சரம் கனத் = பளபளக்கும் கோடீர = உச்சி / மகுடம் மண்டிதா = அலங்கரித்திருக்கிறது - 14 குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா = மாணிக்க பரல்கள் பளபளக்கும் சரத்தால் மகுடத்தை அலங்கரித்திருப்பவள்   அஷ்டமி சந்திர = அஷ்டமியில் வரும் பிறைச் சந்திரன் விப்ராஜ = உள்-ஒளிர்தல் அலிக = நேற்றி ; ஸ்தல = பிரதேசம் / மேடு  ஷோபிதா = அழகுடன் அமைந்திருத்தல் - 15 அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா = அஷ்டமியின் சந்திரப்பிறையைப் போன்ற ஒளிரும் நெற்றிப்பிரதேசத்தை அழகுடன் அமையப்பெற்றவள்.   முக சந்திர = சந்திர வதனம் (ஒப்புமை) கலங்க = கறை  ம்ருகநாபி = கஸ்தூரி (musk)  விசேஷ = தனித்துவம் / சிறப்பு - 16 முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா = முழுமதியென ஜொலிக்கும் முகத்தில், நிழற்குறியாய் கஸ்தூரி திலகத்தை சிறப்புற தரிப்பவள்   வதன = முகம்   ஸ்மர = தியானித்தல் / கவனித்தல் மாங்கல்ய = மங்களமான க்ருஹ = வீடு; தோரண = தோரணம் வாசலை அலங்கரிக்கும் தோரணம் சில்லிகா = புருவம் - 17 வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா = எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றவள்.* வர்ணிப்பிற்கு அப்பாற்பட்ட எழில் பெற்றிருப்பதாலும், உலகத்து உயிர்களுக்கெல்லாம் சுரக்கும் அமுதமென அன்பு பொங்குவதாலும்,  கருணை விழிகொண்டு  நமையெல்லாம் அழைத்து வீடுபேறு அருளுவதாலும், மன்மதனின் மன்றம்(வீடு) என்று அவளது வதனம் உருவகப்படுத்தப் படுகிறது . மன்மதனின்  கோவிலே அவள் வதனமாக, விழிகளே வாசலாக, புருவங்கள் அதன் தோரணமாக அலங்கரித்திருப்பதாக காட்டியருள்கிறது இந்நாமம். வக்த்ர = முகம் ;  பரீவாஹ = நீர் நிலை, பாயும் நீர் நிலை  லக்ஷ்மி பரீவாஹ = ஸ்ரீலக்ஷ்மிக்குரிய நீர் நிலை சலன் = நகர்தல்  மீனாப லோசன = மீனையொத்த விழிகள் (உவமை) - 18 வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா = முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகள் கொண்டவள்.* ரூப அழகிற்க்காக மட்டுமின்றி, தன்னின்று தோன்றிய சிருஷ்டியை இமைவிலகாது கடைக் கண்ணால் காப்பாதால்,  விழிகள் அங்கும் இங்கும் அலைபாயும் மீன்களுக்கு உவமையாகிறது. நவ = புதிய; சம்பக புஷ்ப = ஷெண்பக மலர் ஆப = ஒளிர்வு;  நாஸ = நாசி / மூக்கு; தண்ட = தடம் விராஜிதா = அமைதிருக்கிறது - 19 நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா =  புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள்   தாராகாந்தி = நட்சத்திர பிரகாசம் (தார= நட்சத்திரம்; காந்தி = பிரகாசம்) திரஸ்காரி = மிஞ்சிய / மீறிய / அதிகரித்த நாஸ = நாசி ஆபரண = ஆபரணம் / நகை பாசுரா = மினுனினுப்பு - 20 தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா = நட்சத்திரங்களின் சோபையை மங்கச் செய்யும் மூக்குத்தியுடன் ஜொலிப்பவள்   மஞ்சரி = கொத்து  க்லுப்த = சீராக / தயாராக / அணிவகுத்து கதம்ப மஞ்சரி க்லுப்த = சீராக மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்து  கர்ணபூர = காதுகளை சுற்றி அணியும் அணிகலன் மனோஹர = ரம்யமாக - 21 கதம்ப மஞ்சரி க்லுப்த கர்ணபூர மனோஹரா = சீராய் மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்துக்களால் காதுகளை அலங்கரித்திருப்பவள் *   தாடங்க = காதணி யுக = ஜோடியாக பூத = இருப்பது / உள்ளது தபன = சூரியன் உடுப = சந்திரன் மண்டல = உருண்டையான / சந்திரசூரியர்களின் ஒளிவட்டம் என்றும் பொருள் கொள்ளலாம் - 22 தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா = சந்திரனையும் சூரியனையும்   இரு காதணிகளாக்கியிருப்பவள்.   (பத்மராக = மாணிக்கத்தின் வகை  ஷிலா = (மாணிக்க) கற்கள் தர்ஷ = பார்வைக்கு  பரிபாவி = மனத் தோற்றம்  கபோல = கன்னம் - 23 பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ: = பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள்   நவ = புதிய ; வித்ரும = பவழம் / பவளம் பிம்ப = ஒப்பிட்டால் / பிரதிபலிப்பு  ஸ்ரீ = காந்தி ந்யக்கார் = தரம் தாழ்த்துதல் ரதனச்சதா = இதழ்கள் / உதடுகள் - 24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா = பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள்.* சிலர், பிம்ப எனும் சொல் கோவைப்பழத்தை குறிப்பிடுவதாக பொருள் உணர்கின்றனர். (கேசாதி பாத வர்ணனை) []   (25-40) ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா ; கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா; நிஜ சல்லாப(Saṃlapa) மாதுர்ய விநிர்பர்த்சித கச்சபி; மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா; அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா; காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா; கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா; ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா; காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி; நாப்யாலவால ரோமாலி லதா ஃபல குசத்வயீ; லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா; ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா; ***   ஷுத்த = தூய  ; வித்யா = மெய்யறிவு ஆகார் = தோற்றம் / வெளிப்பார்வை த்விஜ = பற்கள் பக்க்தி = அணி / வரிசை த்வய = ஜோடி உஜ்வலா = மின்னுதல் - 25 ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா = ஒளிரும் பல்வரிசைகள்  இரண்டும், ஞான மொட்டுகள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.   கற்பூர = கற்பூரம்   வீடிகா = வெற்றிலையுடன் மெல்லக்கூடிய பாக்கு மற்றும் இதர நறுமணப் பொருட்கள்   மோத = நறுமணம்  சமாகர்ஷி = பரவலாக மணம் கம்ழதல்  திகந்தரா = பிரபஞ்சம்  - 26 கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா =  நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும்  சுகந்தம் பரப்புபவள்    சல்லாப (Saṃlapa) = சம்பாஷணை, உரையாடல் *குறிப்பு கச்சபி = சரஸ்வதி வாசிக்கும் வீணை மாதுர்ய = இனிய, மதுரமான நிஜ = எப்பொழுதும் விநிர்ப = விமர்சித்தல் - இகழ்தல் ஸ்தித = இருப்பு - இருத்தல்  - 27 நிஜ சல்லாப(Saṃlapa) மாதுர்ய விநிர்பர்த்சித கச்சபி = சரஸ்வதி இசைக்கும் வீணாகானத்தையும் பழிக்கும் மதுர-சம்பாஷணி   மந்த ஸ்மித = நளின புன்னகை, கனிவான சிரிப்பு ப்ரபா = பிரகாசம் பூர = பொங்கும் பிரவாக நதி அல்லது கடல் மஜ்ஜத் = மூழ்குதல் காமேஷ மானஸா = காமேஷ்வரனின் மனம் - 28 மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா = தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்   அனா-அகலித - மதிப்பிடமுடியாதபடி - ஒப்பிட முடியாத சாத்ருஷ்ய = ஒப்புமை - சாயை  சிபுக = தாடை ஸ்ரீ விராஜிதா = அழகுற அமைந்திருத்தல் - 29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா =  விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்   காமேஷ = ஈஸ்வரன் இறைவன் பத்த = கட்டிய, கட்டுதல் மாங்கல்ய சூத்ர = தாலிக் கயிறு ஷோபித = மின்னும் கந்தரா= கழுத்து  - 30 காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா = காமேஷ்வரன் (ஈஸ்வரன்) அணிவித்த மங்கலநாணுடன் சோபிக்கும் கழுத்தை உடையவள்   []     கனகாங்கத = தங்க வளையல் - கனக என்றால் தங்கம் கேயூர = வங்கி (புஜங்களில் அணியும் அணிகலன்)  கமனீய = ரம்யமான புஜ = கைகள் அன்விதா = அதனுடன் - கூடிய - 31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா = தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள்   ரத்ன = ரத்தினங்கள் / மணிகள் க்ரைவேய = பதக்கமாலை - ஹாரம் சிந்தாக = ஓயாது / அலைகழிக்கப்படுவது லோல = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல் முக்தபல் = முத்துகள் அன்விதா = சேர்ந்த - கூடிய - 32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா = முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள். "லோல" என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள். "லோலக" என்றால் பதக்கம் என்று கொள்ளலாம். ‘லோலக' என்று பொருள் கொண்டு முத்துமாலையுடன் கூடிய ரத்தினங்களாலான பதக்கம் அசைந்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.   காமேஷ்வர ப்ரேம = காமேஷ்வரனின் அன்பு - ப்ரேமை ரதன-மணி = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற ப்ரதிபண = ப்ரதியாக - பரிமாற்றம் ஸ்தனி = மார்பகம் - 33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி = காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள்   நாப்யாலவால = தொப்புள்கொடியிலிருந்து  ரோமாலி = முடி லதா = கொடி ஃபல = கனிகள் குச த்வயீ = இரு மார்பகங்கள் - 34 நாப்யாலவால ரோமாலி லதா ஃபல குசத்வயீ = தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள்   லக்ஷய = கண்ணுக்கு புலப்படும் ரோம = முடி லதா = கொடி தாரத = புறப்படுதல்  சமுன்னேய = முடிவுக்கு வருதல் மத்யமா = இடுப்புப் பகுதி - இடை - 35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா = கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள்   ஸ்தனபார = கனக்கும் மார்பகங்கள் தலன் = ஒடிவது  மத்ய = வயிற்றுப்பகுதி - இடை பட்டபந்த = ஒட்டியானம் வலித்ரயா = மூம்மடிப்புகள் - 36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும், மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்.  ஸ்தனங்களின் அழகையும் பாரத்தையும்  குறிப்பிடும் இடங்களில் பிரபஞ்சத்திற்கே அமுதூட்டும் கனத்த மார்பகத்தின் அழகை, உலகன்னையின் பரந்த அன்பின் அம்சமாகக் காணலாம்.   அருணருண = உதயசூரியனின் சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு கௌசும்ப = கௌசமபப்பூவின் இளஞ்சிவப்பு (safflower)  வஸ்த்ர = ஆடை பாஸ்வத் = மிளிரும் கடி = இடை தடீ = இடைச் சரிவு - 37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; = இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்   ரத்ன = ரத்தினங்கள் பதிந்த  கிண்கிணிகா = சிறு மணிகள்  ரம்யா = ரம்யமாக - இதமாக  ரஷனா = ஒட்டியானம் - அதை அணியும் இடை தாம = மாலை - சங்கிலி பூஷிதா = அணிந்திருத்தல் - அலங்கரித்திருத்தல் - 38 ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா; = சிற்றிடையில் சிறுமணி கிண்கிணிக்கும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியானத்தை அலங்காரமாக அணிதிருப்பவள்   காமேஷ = ஈஸ்வரன் - மஹாதேவன்  ஞாத = அறிந்த - உணர்ந்த சௌபாக்ய = மங்கலமான - அழகான மார்தவ = மென்மை - கனிவான ஊரு - தொடைப்பகுதி த்வய = இரண்டு - ஜோடி  அன்விதா = அழகாய் அமைந்திருத்தல் - 39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; = அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள்   மாணிக்ய = மாணிக்கம்  முகுட = கிரீடம் ஆகார = தென்படுதல் ஜானு = முழங்கால் த்வய = இரண்டு - இருமை விராஜிதா = எழிலுடன் விளங்குதல் - 40 மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா; = இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்பெறுபவள்    (கேசாதி பாத வர்ணனை) []   (41-54)  இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா; கூட குல்ஃபா; கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா; நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா; பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா; சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா; மராலீ மந்தகமனா; மஹா லாவண்ய ஷேவதி;  ஸர்வாருணா ; அனவத்யாங்கீ ; ஸர்வாபரணபூஷிதா; ஶிவ காமேஷ்வராங்கஸ்தா;  ஶிவா;  ஸ்வாதீனவல்லபா *** []     இந்திரகோப = சிவப்பு பூச்சி இனம், பரிக்ஷிப்த = சிதறப்பட்டிருத்தல் ஸ்மர= காமதேவன் தூண = அம்பறாத்தூணி - அம்புக்கூடு ஜங்கிகா = முன்னங்கால் - 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா; = காமதேவனின் அம்பறாத்தூணி பொன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள் *   இந்திரகோபம் ஒரு வகை பூச்சி. பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்திரகோபம். சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு. சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.   கூட = மறைக்கப்பட்ட குல்ஃபா = கணுக்கால்கள் - 42 கூட குல்ஃபா = பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள்   கூர்ம = ஆமை ப்ருஷ்ட = பின்புறம் ஜயிஷ்னு = வென்ற - வெல்லுதல் - விஞ்சுதல் ப்ரபதா = பாதத்தின் வளைவு  அன்விதா = அழகுற விளங்குதல் - 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா; = ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள்   நக = நகங்கள் தீதிதி = மினுமினுப்பு  ஸஞ்சன்ன = மறைந்திருக்கும் ந = அல்லாத  மஜ்ஜன = மூழ்குதல் - நரகத்தில் மூழ்குதல் தமோ = இருள் / அஞ்ஞானம் குணா = குணம் - 44 நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா; = நகங்களின் காந்தியாலேயே மண்டியிருக்கும் இருளென்ற அஞ்ஞானத்தை போக்க வல்லவள்  (பக்தர்களின் புத்தியை மூடி,  நரகத்தில் மூழ்கச் செய்யும் அஞ்ஞானம்)   பத = பாதம் த்வய = இரு - இரண்டு ப்ரபா = பளபளப்பு ஜால = பிணைப்பு - வலை பராக்ருத = எள்ளி நகையாடுதல், ஒதுக்குதல் சரோருஹ் = தாமரை - 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா; = தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள்   சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும் மணி = முத்துகள் - மணிகள் - ரத்தினங்கள் மஞ்ஜீர = கொலுசு மண்டித = அழகூட்டும் ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள்  அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற - 46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா; = பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்.   மராலீ = அன்னப்பறவை மந்த = மெதுவான = மென்மையான கமனா = நடை - நடையழகு - புறப்பாடு - 47 மராலீ மந்தகமனா; = அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள்.   மஹா = மஹத்துவம் பொருந்திய லாவண்ய = லாவண்யம் = எழில் ஷெவதீ = பொற்கிடங்கு - 48 மஹா லாவண்ய ஷேவதி; = பேரழகின் பொற்கிடங்காக விளங்குபவள்    ஸர்வ = எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும்  அருண = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு - 49 ஸர்வாருணா = ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள்   அன் = மறுக்கும் - அல்லாத  அவத்ய = கீழ்மை - தரமற்ற அங்க = உடல் - அங்கம் - 50 அனவத்யாங்கீ = நிகரில்லாத உன்னத தேகத்துடன் திகழ்பவள்    ஸர்வ = எல்லாமும் ஆபரண = ஆபரணங்கள் பூஷிதா = அணிதிருத்தல் 51 ஸர்வாபரணபூஷிதா; = அனைத்து ஆபரண அலங்கார பூஷணங்களும் தரித்திருப்பவள்   ஷிவ காமேஷ்வர = ஶிவன் - ஶிவகாமேஷ்வரன் அங்கஸ்தா = அங்கமானவள் - அங்கம் - மடி (தொடை) - 52 ஶிவ காமேஷ்வராங்கஸ்தா; = சிவனின் அர்த்தாங்கினியானவள் - அவனின் பாதியை கொண்டவள். சிவனின் அம்சமாக விளங்குபவளாகிய அன்னை அர்த்தாங்க்கினி அதாவது அங்கத்தின் பாதியைக் கோண்டவள் எனவே  "சிவகாமேஷ்வர அங்கஸ்தா" - 'அவனின் அங்கமானவள்' என்று  உணரலாம். அங்கம் என்பதை மடி (lap) என்று பொருள் கொண்டால், சிவகாமேஸ்வரனின் மடியில் அமர்ந்து அருளுபவள் என்றும் விளங்கிக்கொள்ளலாம்.   ஷிவா = சிவபெருமான் - 53 ஷிவா = சிவனுமானவள் – சிவத்துடன் ஐக்கியமானவள், அதனின்று வேறுபாடற்றவள் ஸ்வாதீன = சுதந்திரம் = சுயச்சை - சார்பற்ற வல்லபா = மணாளன் - காதலன்   - 54 ஸ்வாதீனவல்லபா; = தனித்தன்மையுடன் விளங்குபவள் - எதனையும் அல்லது எவரையும் சாராது தனித்து இயங்குபவள் * சுவாதீன எனும் சொல், ‘சுதந்திரம்’ என்று பொருள் கொண்டு மேலே விளக்கப்பட்டிருக்கிறது. பராசக்தி தன் சுயஇச்சையின் வெளிப்பாடாகவே     உலகத்தை இயக்குகிறாள். சிவத்துவம் அதன் உட்புகுந்து இயங்குகிறது. எனவே சிவத்துவத்தை தன் வசம் வைத்திருந்து அதனை ஆள்பவளாகவவும் (controlling shiva) பொருள் பிரித்துணரலாம். சிவத்துவம் இருப்பு நிலையைக் குறிக்கும். பராசக்தியானவள் இயங்கு-நிலையைக் குறிப்பவள்.                                              5. ஸ்ரீ நகர வர்ணனை   (கேசாதிபாத வர்ணனை முற்றுபேற்று, ஸ்ரீ-நகர வர்ணனை தொடர்கிறது)  []   (55-63) ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா; ஸ்ரீமன் நகர நாயிகா; சிந்தாமணி கிருஹாந்தஸ்தா; பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா; மஹாபத்மாடவி சம்ஸ்தா; கதம்பவன வாஸினி; சுதா சாகர மத்யஸ்தா; காமாக்ஷி காமதாயினி;   ஸுமேரு = ஸுமேரு மலை - மேரு மலை - உயர்ந்த - மேம்பட்ட மத்ய = நடுவில்  ஸ்ருங்க = மலையுச்சி ஸ்தா = இருப்பது - 55 ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா = உயர்ந்த ஸுமேரு மலையின் நடுச் சிகரத்தின் உச்சியில் குடிகொண்டிருப்பவள் * ******* மேருமலை எங்கு உள்ளது என்ற கேள்விக்கு பலதரப்பட்ட விடைகள் சொல்லப்படுகின்றன. மேருமலை இந்திய நாடிலுள்ள உத்தரகண்ட் மாநிலத்தின், கார்வல் இமாலய மலைத்தொடரில் உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.  மலைகளின் மூன்று சிகரங்களில் தொடுவதற்கு மிகக் கடினமாக இருந்த நடுச்சிகரத்தை "valery Babnov" என்ற ரஷ்ய மலைஏறுனர் 2001 ஆம் ஆண்டு ஏறியதாக குறிப்பு உள்ளது. இன்னும் சிலர் மேருமலையை காஷ்மீரத்தின் வடமேற்கிலுள்ள பாமிர் மலைத்தொடருடன் இணைத்து கூறுகின்றனர். வடக்கு தான்ஸேனியாவில் கிளிமஞ்சரோவிற்கு மேற்கே உள்ள மலையையும் மேருமலை என்று குறிப்பிடுகிறனர். இம்மலைச்சிகரம் எட்டுவதற்கும் ஏறுதற்கும் சற்றே எளிதாக இருக்கிறதாம். ஏறக்குறைய புவியியல் மையப்பகுதியாக இது விளங்குகிறது.   ஹிந்து - ஜைன- புத்தமத நம்பிக்கைகள்: புராண கூற்றுப்படி, மேருமலை ஐந்து சிகரங்களை உடையதாக நம்பபடுகிறது. இம்மலை சூக்ஷ்ம, ஸ்தூல, தேவ லோகங்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் மையப்பகுதியாக கருதப்படுகிறது.  மலையின் அமைப்பையொட்டி, அதனை அடிப்படையாகக் கொண்டு பல ஹிந்து ஜைன மற்றும் புத்தமதக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கடவுள்களும்  தேவர்களும் ஆற்றலின் மூலஸ்தானமாகவும் சக்தியின் ஆதாரமாகவும் விளங்கும் இம்மலையையே வசிப்பிடமாக கொண்டுள்ளனர். பிரகாசத்துடன் தங்கமாக மின்னும் தன்மையுடையதாக, பல உயர்ந்த பண்புகளையும் கொண்டதாக இம்மலை போற்றப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த மேருமலை பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதாகவும், எட்டக்கூடியதாகவும், மற்ற யுகங்களான துவாபர, த்ரேதா மற்றும் ஸத்ய யுகத்தில் இருந்துள்ளது. கலியுகத்தில் இம்மலை அறிவுக்கும் புலன்களுக்கும் புலப்படுவது துர்லபம். கிரேக்கர்கள் போற்றுதலுக்குரியதும் கிரேக்க கடவுளர்களின் இருப்பிடமாய் கூறப்படும் 'ஒலிம்பஸ் மலை' ஏறக்குறைய இதனை நினைவுபடுத்துகிறது. மேலும் படிக்க,  https://en.wikipedia.org/wiki/Mount_Meru, ********* ஸ்ரீமன் = மங்களமான - மேன்மைதங்கிய நகர = நகரம்  நாயிகா = நாயகி - எஜமானி - 56 ஸ்ரீமன் நகர நாயிகா = பெருமைக்குரிய 'ஸ்ரீ' என்ற நகரத்தின் அரசியாக விளங்குபவள் சிந்தாமணி = எண்ணங்களாலான ரத்தினக்கல் - அபிலாஷைகளின் ரத்தினம் க்ருஹா = வீடு அந்த - உள் - உட்புறம் ஸ்தா - இருத்தல் - 57 சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா = ‘எண்ணம்’ எனும் ரத்தினங்களான வீட்டின் உள்ளுரைபவள் - இச்சை என்ற ரத்தினங்களாலான இல்லத்தில்  உள் உறைந்து அவை நிறைவேற வரம் அருளுபவள். * சிந்தா என்பது எண்ணம் அல்லது இச்சையை குறிக்கும் சொல். எண்ணங்களே ரத்தினமாகி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவள். எண்ணங்களுக்குள்ளும் அபிலாஷைகளுக்குள்ளும் வசிப்பவள் என்றால் அவள் சர்வவியாபியாக இருக்க வேண்டும். தோற்றத்தின் அனைத்து அம்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். எண்ணங்களுள் அவள் வசிப்பிடம் இருந்தால் அவள் வசிக்கும் வீடு இச்சைகளை பூர்த்தி செய்யும் பேரருளாகவும் பெருவரமாகவும் விளங்கும் என்பது புரிதல்.   பஞ்ச = ஐந்து - ஐந்தாக ப்ரஹ்மாஸன = அரியணை = தலைமை பதவி - சிம்மாசனம் ஸ்திதா = இருத்தல் - 58 பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா = பிரபஞ்ச படைப்பின் லக்ஷணங்களை / அதன் ஐந்து தன்மைகளை அரியணையாக ஏற்று கொலுவிருப்பவள் * பஞ்சப்ரம்மத்தை ஆசனமாக கொண்டு ஆட்சி புரிகிறாள். பஞ்சப்ரம்மம் என்பது எதனைக் குறிக்கிறது என்பது புரிதலுக்கேற்ப மாறுபடுகிறது.  சிலர் பஞ்ச பூதங்களை ( நிலம், நீர், பூமி, காற்று மற்றும் ஆகாயம்) குறிப்பிட்டுள்ளதாக கூறுவதுண்டு. பிரபஞ்ச படைப்பு ஐந்து தன்மைகள் கொண்டதாக  விளக்கம். ஸ்ருஷ்டி (படைப்பு) - ஸ்திதி (காத்தல்) - ஸம்ஹாரம் (அழித்தல்) - மறைத்தல் மற்றும் அருளல், இவற்றை முறையே ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் என்பவர்கள் பிரதிபலிப்பதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவி காமாக்ஷி இந்த ஐந்து தன்மைகளை தன் ஆசனமாக ஏற்றதன் மூலம் அவற்றை ஆள்பவளாக சஹஸ்ர நாமம் உணர்த்துகிறது.  மஹா = பெரிய - மேன்மை பொருந்திய பத்ம = தாமரை அடவி = காடு - வனம் ஸம்ஸ்தா = இருப்பவள் - 59 மஹாபத்மாடவி சம்ஸ்தா = தாமரைமலர்கள் நிறைந்த பரந்த வனத்தில் குடியிருப்பவள் கதம்ப வன = கதம்ப மரங்களின் வனம் வாஸி = தங்கி இருத்தல்  - 60 கதம்பவன வாஸினி = கதம்ப மரங்களால் சூழப்பட்ட பூவனத்தில் வசிப்பவள்   சுதா = தேன் - சாறு ஸாகர = சாகரம் - கடல் - ஆறு மத்ய - நடுவில் - இடையே ஸ்தா = இருப்பவள் - 61 சுதா சாகர மத்யஸ்தா = தேனாற்றின்  நடுவில் வாசம் செய்பவள்   காம = ஆசை - இச்சை - அன்பு அக்ஷி = கண்கள் - 62 காமாக்ஷி = அன்பைப் பொழியும் விழியாள்   காம = விருப்பம் = இச்சை தாயி = கொடுப்பது - 63 காமதாயினி = இச்சைகளை பூர்த்தி செய்பவள்             6. பண்டாசுர வதம் (ஸ்ரீநகர வர்ணனை நிறைவு பெற்று பண்டாசுர வதம் தொடர்கிறது) []   (64-83) தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவா; பண்டாசுர வதோத்யுக்த ஷக்திஸேனா சமன்விதா; சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா; அஷ்வாரூடா திஷ்டி தாஷ்வ கோடி கோடிபிராவ்ருதா; சக்ரராஜ ரதாரூட சர்வாயுத பரிஷ்க்ருதா; கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிசேவிதா; கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா; ஜ்வாலாமாலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா; பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா; நித்ய பராக்ரமாடோப நிரீக்ஷண சமுத்சுகா; பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா; மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா; விஷுக்ர ப்ராண ஹரண வாராஹி வீர்ய நந்திதா; காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஷ்வரா; மஹாகணேஷ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா; பண்டசுரேந்த்ர நிர்முக்த ஷஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணி; கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருதி; மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா; காமேஷ்வராஸ்த்ர நிர்தக்த ச பண்டாசுர சூன்யகா; ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ சம்ஸ்துத வைபவா;   தேவர்ஷி = தேவ-ரிஷிகள் - இதரதேவதைகளும் ஞானிகளும் ரிஷிகளும்  கண = கணங்கள் - கணங்களின் பட்டாளங்கள் சங்காத = தொடர்பு - கூட்டம் - கழகம் ஸ்தூயமாந = போற்றுதல் புகழ்தல் ஆத்ம = ஆத்மா  வைபவா = வலிமை - பெருமை - 64 தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவா = தேவாதிதேவ கணங்களும் முனிவர்க்குழாமும் போற்றிப் புகழும் பெருமையும் உயர்வும் கொண்டவள்.   பண்டாசுர = பண்டாசுரன் வதோத் = அழிக்க - வதைக்க யுக்த = கூடி - சேர்ந்து  ஷக்திசேனா = வலிமை மிக்க சேனை சமன்வித = இருத்தல் - 65 பண்டாசுர வதோத்யுக்த ஷக்திஸேனா சமன்விதா = பண்டாசுரனை அழிக்க வலிமை பொருந்திய பெரும் சேனையுடன் திரண்டிருப்பவள்.   சம்பத்கரீ = ஷக்திசேனையின் தேவி சம்பத்கரீ (சம்பத் என்பது செல்வத்தைக் குறிக்கும்.; சம்பத்கரீ - செல்வத்தை அருளுபவள் )  சமாரூட = ஏற்றப்பட்டு - ஏறி அமர்தல் சிந்தூர = யானை வ்ரஜ = மந்தை (யானை) -சேனை  சேவிதா = சேவை செய்திருத்தல் - 66 சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா = சம்பத்கரீதேவி தலைமையில் திகழும் பெரும் யானைப்படையின் செவையை ஏற்றிருப்பவள்.   அஷ்வாரூடா = அஷ்வம் - குதிரை;  அஷ்வாரூட = குதிரையில் ஏறியிருத்தல் - குதிரை ஏறி அமர்தல் திஷ்டிதா = அமைந்திருத்தல்  கோடி = எண் கோடியை குறிக்கும் கோடி = உய்ர்வுடைய, உயரிய என்றும் குறிக்கும் ஆவ்ருதா = சூழப்பட்ட - 67 அஷ்வாரூட திஷ்டிதாஷ்வ கோடிகோடி பிராவ்ருதா= அஷ்வாரூடாதேவி ஆணையின் கீழ் கோடிக்கணக்கில் குழுமியுள்ள உயர்ந்த குதிரைப்படையால் சூழப்பட்டவள்    சக்ரராஜ = ஸ்ரீ லலிதாம்பிகையின் ரதம் ரதாரூட = ரதம் ஏறியிருத்தல் சர்வாயுத = எல்லா வித ஆயுதங்களும் பரிஷ்க்ருதா = சூழப்பட்டு = அலங்கரிக்கப்பட்டு - 68 சக்ரராஜ ரதாரூட சர்வாயுத பரிஷ்க்ருதா = அனைத்தாயுதங்களும் தாங்கி சக்ரராஜம் எனும் தனது தேரிலேறி பெரும் சேனையை அணிசெய்திருப்பவள்   கேயசக்ர = கேயசக்ரம் எனும் ரதம் ரதாரூட = ரதமேறி மந்த்ரிணீ = மந்த்ரிணீதேவி பரிசேவிதா = உயர்ந்த அன்பினால் பணிசெய்திருத்தல் - 69 கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிசேவிதா = கேயசக்ரம் எனும் ரதம் அமர்ந்த மந்த்ரிணீதேவியால் தொண்டு செய்யப்படுபவள்    கிரிசக்ர = கிரிசக்ரம் எனும் தேர் ரதாரூட = தேரில் ஏறி தண்டநாதா = தண்டநாதா - வாராஹீ எனப்படும் தேவி  புரஸ்க்ருதா = கவனிக்கபடுதல் - துணையிருத்தல் - 70 கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா = கிரிசக்ரம் எனும் தேரேறும் தண்டநாதா (வாராஹீ) எனும் தேவி புடைசூழ திரண்டிருப்பவள்   ஜ்வாலாமாலினி = ஜ்வாலாமாலினி தேவி க்ஷிப்த = அனுப்பிய -  வஹ்னி = அக்னி - அக்னி தேவதை ப்ராகார = அரண்  மத்யகா = நடுவில் - 71 ஜ்வாலாமலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா = ஜ்வாலாமாலினி-தேவியால் ஏற்படுத்தப்பட்ட அக்னிக்கோட்டையின் மத்தியில் அமர்ந்து படை நடத்துபவள் அன்னை லலிதாதிரிபுரசுந்தரி, தன் புத்தியிலிருந்து சியாமளா தேவியை ஸ்ருஷ்டித்து அவர்களை பிரதான மந்திரிணி பதவியில் அமர்த்தினார். சியாமளாதேவி, இசை, நாடகம், நடனம், முதலிய கலைகளின் அதிபதியாகவும், அதனை போஷிக்கும் கடவுளாகவும் அறியப்படுகிறார். அவர்களுக்கு ராஜமாதங்கி, மாதங்கி, மந்திரிணீ என்ற பெயர்களும் வழங்கப்படுகிறது.   அன்னையின் அகங்காரத்திலிருந்து (சுயத்திலிருந்து) வாராஹி தேவி சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு தண்டநாதா என்ற பெயரும் வழங்கப்படுகிறது.   அஷ்வாரூடா, தண்டநாதா, மந்திரிணீ, ஜ்வாலாமாலினி, சம்பத்கரீ முதலிய தேவதைகளும் இன்னும் பலப்பல வலிமையும் மேன்மையும் பொருந்திய தேவதைகளும் ஷக்திசேனையை வழி நடத்திச் சென்று அன்னையின் பண்டாசுர வதம் என்ற பெரும்பணிக்கு துணை புரிந்ததாக புராணம். **** பண்ட = பண்டாசுர சைன்ய = படை - சேனை வதோத் = அழித்தல் - நாசமாக்குதல் யுக்த = பணிசெய்திருத்தல் - செயலாற்றுதல் ஷக்தி = ஷக்தி சேனை விக்ரம = வலிமை - தைரியம் ஹர்ஷிதா = களிப்பு -களித்தல் - 72 பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா = பண்டாசுரனின் படைகளை துவம்சம் செய்த ஷக்திசேனையின் பராக்ரமத்தை கண்டு ஆனந்திப்பவள்    நித்ய = நித்யதேவிமார்கள் பராக்ரம = பராக்ரமம் - வீரியம் ஆடூப = பெருமை  நிரீக்ஷண = பார்த்திருத்தல் = காண் - கவனி சமுத்சுகா = ஆர்வமாக = ஆரவாரமாக - உணர்ச்சிப் பெருக்கு - 73 நித்ய பராக்ரமாடூப நிரீஷண சமுத்சுகா = நித்யதேவிகளின் ஆற்றலையும் பெருமையையும் கண்டு உணர்ச்சிப்பெருக்கில் ஆர்பரிப்பவள். நித்யாதேவிகள் திதி தேவதைகளாக பதினைந்து சந்திரக் கலைகளை ஆட்சி செய்கிறார்கள். ஸ்ரீ வித்யாவாக பிந்துச்சக்கரத்தில் வீற்றிருக்கும் அம்பிகை மஹா நித்யாவாக கொலுவிருக்கிறாள். அவளின் அம்சமாக பதினைந்து நித்யாதேவிகள் மூல முக்கோணத்தின் மூன்று பக்கங்களிலும் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். இத்தேவதைகளுக்கு மந்திரமும் யந்திரமும் இருக்கிறதென்று குறிப்பு. இது தாந்த்ரீக வழிபாட்டு முறையின் கீழ் அமையப்பட்டிருக்கிறது.   பண்ட புத்ர = பண்டாசுரனின் புத்ரன் வதோத் = வதைத்தல் யுக்த = புரிதல்- ஆற்றுதல் (செயலாற்றுதல்) பாலா = பாலாம்பிகை - ( பாலாம்பிகை திரிபுரசுந்தரியின் மகள் - சிறுமி ) விக்ரம = துணிச்சல் - பராக்ரமம் - வலிமை நந்திதா = குதூகலம் - ஆனந்தித்தல் - 74 பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா = பண்டாசுரனின் புதல்வனை வதம் செய்த பாலாம்பிகையின் துணிச்லால் அகமகிழ்பவள் பாலாம்பிகா-தேவி, அம்பிகையின் ஒன்பது வயது அம்சம். பாலாம்பிகை சிறுவயதிலேயே அளப்பறிய  பராகரமத்தை நிரூபித்து பண்டாசுரனின் முப்பது  பிள்ளைகளையும் அழித்தொழித்தாள்.   மந்திரிண்யம்பா = மந்திரிணீ அம்பாள் = மந்திரிணீ தேவி விரசித = செய்தல் - புரிதல் விஷங்க வத = விஷங்கன் எனும் அசுரனை வதை செய்தல் (பண்டாசுரனின் சகோதரன் விஷங்கன்) தோஷிதா = சந்தோஷப்பவள் - 75 மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா = மந்திணீதேவி விஷங்கனை அழித்தொழித்ததால் குதூகலிப்பவள்   விஷுக்ர = பண்டாசுரனின் சகோதரன் விஷுக்ரன் ப்ராண = ப்ராணன்- ஜீவன் ஹரண = நிறுத்துதல் - களைதல் வாராஹீ = தேவி வாராஹி (தண்டநாதா) வீர்ய = பலம் - வலிமை நந்திதா = அகமகிழ்தல் - 76 விஷுக்ர ப்ராண ஹரண வாராஹீ வீர்ய நந்திதா = விஷுக்ரனை வீழ்த்திய வாராஹியின் வீரச்செயலால் உவகை கொண்டவள்   காமேஷ்வர = காமேஷ்வரன் - ஷிவன் - இறைவன் முகா = முக ஆலோக = பார்வை - பார்த்தல் கல்பித = உருவாக்குதல் - செய்தல் ஸ்ரீகணேஷ்வரா = கணேஸ்வரர் - பிள்ளையார் - 77 காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணெஷ்வரா = இறைவன் காமேஷ்வரனின் முகலாவண்யத்தை கண்டு அவ்வாறே கணேஸ்வரரை ஸ்ருஷ்டித்தவள்   மஹாகணெஷ = மஹாகணபதி - பிள்ளையார் நிரபின்ன = அழித்து - உடைத்தெறிந்து   விக்ன = விக்னங்கள் - முயற்சித் தடை - காரிய தடை - பிரச்சனை விக்ன யந்த்ர = விஷுக்ரனால் உருவாக்கப்பட்ட யந்திரம் ப்ரஹர்ஷிதா = குதூகலித்தல் - மகிழ்தல் - 78 மஹாகணேஷ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா = விஷுக்ரன் உருவாக்கிய விக்னயந்திரத்தை மஹாகணபதி நிர்மூலமாக்கியதால் குதூகலித்தவள்   இந்திர = சிறந்தவன் - முதன்மையான - தலைவன் பண்டாசுரேந்திர - பண்டாசுரன் எனும் படைத்தலைவன் நிர்முக்த = இழப்பு - பிடி நழுவிப்போதல் ஷஸ்த்ர = ஷஸ்திரங்கள் - வாள், வேல் முதலிய ஷஸ்திரங்கள் (கையாளப்படும் ஷஸ்திரம்) ப்ரத்ய = ஒவ்வொரு அஸ்த்ர = அஸ்திரங்கள் - விட்டெறிந்து போரிடும் ஆயுதங்கள் - ஏவுகணைகள்   வர்ஷ = பொழிதல் - வர்ஷித்தல் - 79  பண்டாசுரேந்திர நிர்முக்த ஷஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணி = பண்டாசுரனின் ஒவ்வொரு சஸ்திர-அஸ்திரத்தையும் தனது ஆயுதமழையால் முறியடித்து  நிர்கதியாக்கியவள்.  வடஇந்தியர்கள் கார்த்திகேயன் என்ற முருகப்பெருமானை மூத்தவரென்றும் பிள்ளையாரை இளையவர் என்றும் கருதுகின்றனர். தெற்கில் இதற்கு நேர்மாறான கருத்து. அனைவரையும் மயக்கும் அழகு முகம் கொண்ட பாலகனாக விளங்கிய வினாயகரை சூலம் கொண்டு சிரசை சிவன் வீழ்த்திய போது அப்படையில் கார்த்திகேயன் என்ற முருகரும் இருந்ததாக கூறுவர். ஆயினும், விநாயகருக்கே “ஸ்கந்த பூர்வஜா” (ஸ்கந்தனுக்கு மூத்தவன்) என்ற பெயர் உண்டு. இருபெரும் புதல்வர்களும் அம்மை அப்பனை விஞ்சும் ஆற்றலும் கருணையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். மூத்தவர் யார் என்ற கேள்வியை அவரவர் பார்வைக்கு விட்டுவிடுவோம்.   கர = கைகள் அங்குலி = விரல்கள் நக = நகம்-நகங்கள் உத்பன்ன = அதனின்று தோன்றுதல்   நாராயண = ஸ்ரீ நாராயணன் தஷ = பத்து ஆக்ருதி = வடிவம் - அம்சம் - 80 கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருதி; = ஸ்ரீமன் நாராயணரின் பத்து அவதாரங்களை தனது நகங்களிலிருந்து உருவாக்கியவள்.   மஹாபாஷுபதாஸ்திர = சிவனின் பாஸுபத அஸ்திரம் / ஆயுதம் அக்னி = நெருப்பு நிர்தக்த = அழித்தல்   அசுர-சைனிகா = அசுர சேனை - 81 மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா; = மஹாபாசுபத அஸ்திரத்தின் தீப்பிழம்பில் மொத்த அசுர சேனையையும் சின்னாபின்னமாக்கியவள். மஹாபாசுபத அஸ்திரம் புராணக்கூற்றின் படி, பெரும் சக்திவாய்ந்த ஆயுதம். தீப்பிழப்புகளை பொழிந்து இலக்கையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுவதுமாக பஸ்பமாக்கும் வல்லமை படைத்தது.    காமேஷ்வர = இறைவன் காமேஷ்வரன் அஸ்த்ர = ஆயுதம் நிர்தங்க்த = முழுவதுமாக அழித்தல் ச-பண்டாசுர-சூன்யகா = பண்டாசுரனின் தலை நகரமான சூன்யகா ( 'ச' என்பது இவ்விடத்தில் "அதனுடன்" அல்லது "அதனுடன் சேர்த்து" என்று பொருள் படலாம் ) - 82 காமேஷ்வராஸ்த்ர நிர்தக்த சபண்டாசுர சூன்யகா; = காமேஷ்வர அஸ்திரத்தை எய்து, பண்டாசுரனையும்,. சூன்யகா எனும் அவனது தலைநகரத்தையும் பூண்டோடு ஒழித்தவள்.   ப்ரஹ்ம = பிரம்மதேவன் உபேந்திர = விஷ்ணு மஹேந்த்ராதி தேவ = இந்திரதேவன் முதலிய தேவர்கள் சம்ஸ்துத = புகழ்-புகழ்ச்சி வைபவா = வீரம் - ஆற்றல் - 83 ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ சம்ஸ்துத வைபவா; =   பிரம்மா, விஷ்ணு, இந்திராதிதேவர்களாலும் போற்றப்படும் வீரமும் ஆற்றலும் கொண்டவள். சிலர் மஹேந்த்ர என்ற சொல்லுக்கு 'சிவன்' என்ற பொருளுணர்த்துகின்றனர். மஹேந்திரன் சிவனின் ஒரு அம்சமாக புரிந்து கொள்ளப்படுகிறது. சமஸ்க்ருத வலைதளமும், இன்னபிற வலைதளங்களும்,  "இந்திரன்" வலியுறுத்துவதால் இந்நூலில் இந்திரன் என்றே அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது.                                  7. மந்திர ரூபம்   (பண்டாசுரவதம் நிறைவுற்றது. அடுத்து லலிதாம்பிகையின் மந்த்ரரூபம் தொடரும்) []   (84-98) ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி; ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா; கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி; ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ; மூல மந்த்ராத்மிகா; மூல கூடத்ரய கலேவரா; குலாம்ருதைக ரசிகா; குல சங்கேத பாலினி; குலாங்கனா; குலாந்த:ஸ்தா; கௌலினி; குல யோகினி; அகுலா; சமயாந்த:ஸ்தா; சமயாசார தத்பரா; *** ஹர நேத்ர அக்னி = ஹரனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட நெருப்பு   சந்தக்த = எரிந்த காம = காமதேவன்-மன்மதன் சஞ்சீவன = புனர் ஜீவனம் - மீண்டு உயிர்த்தெழுதல் ஔஷதி = மருந்து - 84  ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி = சிவனார் நெற்றிக்கண் நெருப்பினால் எரிந்த மன்மதனை, உயிர்த்தெழுப்பிய மருந்தானவள்.   ஸ்ரீமத் = மேன்மை மிகுந்த - மங்களமான வாக் = வார்த்தை - பேச்சு   பவ = தோன்றுதல் - பிறத்தல் கூட = முகடு - முகட்டின் இருப்பிடம்   ஸ்வரூப = ரூபம் - வடிவம் முக = முகம் பங்கஜா = தாமரை - 85  ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா = மேன்மை மிகுந்த 'வாக்பவகூட'த்தின் வடிவமாக முகத்தாமரை கொண்டவள் (வாக்பவ கூடம் – பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் முதல் அக்ஷரங்கள்)   கண்டி = கழுத்து அத = கீழே   கடி = இடுப்பு   பர்யந்த = முடிவுக்கு வருதல் - முடிய   மத்ய கூட = மத்ய-கூட வடிவாக அமைந்துள்ள நடுப் பகுதி ஸ்வரூபிணி = வடிவம் - 86  கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி = கழுத்திலிருந்து இடை வரையிலான சூக்ஷ்ம உடலின் நடுப்பகுதியை மத்யகூடத்தின் (பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் நடு ஆறு பீஜங்கள்) வடிவாக கொண்டிருப்பவள்   ஶக்திகூட = பஞ்ச தசாக்ஷர மந்திரத்தின் கடை நான்கு எழுத்துகள் ஷக்தி கூடம் எனப்படும் ஆபன்ன = பெற்றிருத்தல் கடி = இடை அதோ பாக = கீழ் பாகங்கள் தாரிணி = கொண்டிருத்தல் - 87  ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ = இடை முதல் கீழ்வரையிலான பாகங்களை ஷக்திகூடத்தின் ( பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் கடை நான்கு எழுத்துகள்) வடிவாக கொண்டிருப்பவள்   மூல மந்த்ர = மூலம் அல்லது அடிப்படையான மந்திரம் ஆத்மிகா = தனது தன்மையாக கொள்ளுதல் - 88  மூல மந்த்ராத்மிகா = மூல மந்திரத்தின் வடிவானவள் (பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் மொத்த வடிவம்)   மூல கூட = மூல மந்திரத்தின் இருப்பிடமாக த்ரய = மூன்று கலேவரா = உடல் - 89  மூல கூடத்ரய கலேவரா = மூல மந்திரத்தை (பஞ்ச தசாக்ஷரி மந்திரம்) தனது சூக்ஷ்ம உடலின் முப்பகுதிகளாக கொண்டுள்ளவள் **** வாக்பவ கூடம் பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் முதல் ஐந்து எழுத்துக்களை கொண்டுள்ளது. ‘வாக்’ என்பதை சமஸ்க்ருதத்தில் வாச என்று பொருள் கொள்ளலாம். வாச என்றால் பகருதல் அதாவது வார்த்தைப் ப்ரயோகங்களை குறிக்கும். பஞ்ச தசாக்ஷரி மந்திரம் பதினைந்து எழுத்துக்களின் கூட்டு. அதை மூன்று கூடங்களாக பிரித்து தனது சூஷ்ம உடலின் வடிவமாக ப்ரதிபலிக்கிறாள். இம்மந்திரம் முறையான குரு தீக்ஷை பெற்று தியானத்தல் சிறப்பு. உள்முகமான பஞ்ச தசாக்ஷரி மந்திரத்துடன் "ஸ்ரீம்" என்ற பதினாறவது எழுத்தும் சேர்த்தால் ஷோடசியாகி,  பார்வைக்கும் புத்திக்கும் புலப்பட்டு வெளிமுகமாகிறது.    பஞ்ச தசாக்ஷரி என்ற பதினைந்து அக்ஷர மந்திரம் மூன்று முகடுகளாக பிரித்து விளங்குகிறது. க – ஏ – ஈ – ல – ஹ்ரீம் ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம் ஸ – க – ல – ஹ்ரீம்   மூன்று கூடங்கள் மூன்று முகட்டின் இருப்பிடமாக அல்லது பிரிவுகளாக   உணரப்படுகிறது.  இம்மூன்று பிரிவுகள் வெவ்வேறு புரிதலின் அடிப்படையிலும் அறிய முற்படலாம்.     மேலும் படிக்க Thanks and credit :  https://sreenivasaraos.com/  *** குல- அம்ருத = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் அம்ருதம்  அம்ருதைக = அம்ருதத்திலிருந்து ரசிகா = விருப்பமுள்ளவள் - 90  குலாம்ருதைக ரசிகா = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் 'குல' என்ற அம்ருதத்தில் விருப்பமுள்ளவள்  (சஹஸ்ர சக்ரம் என்பது ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்டு உச்சந்தலையில் இடம்பெற்றுள்ளது)     குல =   இவ்விடத்தில் 'குல' என்பது பரம்பரை  அல்லது குலத்தை குறிக்கும் சங்கேத = பாதைகள் - வழிமுறைகள் பாலன் = பாதுகாத்தல் - 91 குல சங்கேத பாலினி  = தன்னை(மஹாசக்தியை)  அடைவதற்கான பாதையையும் வழிமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவள் (வழிபாட்டு நெறிமுறைகள் உயர்ந்த மஹான்களுக்கும்  ஞானிகளுக்கும் மட்டுமே புலப்படுபவையாக வைத்திருப்பவள்)     குல = குலம் ஆங்கனா = பெண்மணி   - 92 குலாங்கனா = குலத்திற்கு பெருமை சேர்க்கும் உயர்ந்த பதிவ்ரதை   குல = குலம் - குலம் என்பது இங்கு வேத-சாஸ்திரங்களையும் குறிக்கலாம் அந்த:ஸ்தா = உள் உறைபவள்   - 93  குலாந்த:ஸ்தா = சர்வ வியாபி- அனைத்திலும் உள்ளுறைபவள்- அனைத்து வித்யைகளிலும் உள்-உறைபவள்    கௌலினி = கௌலினி யோக முறைகள் - 94  கௌலினி = கௌலினி  வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவள்    குல = பரமாத்மாவிடம் மனம் ஒன்றுபடும் தன்மை யோகினி = யோக வழி நடப்பவள்   - 95  குலயோகினி = யோகத்தின்  மூல-வடிவானவள்   - 96  அகுலா = குலத்திற்கு அப்பாற்பட்டவள் - அனாதியானவள்  (முடிவும் தொடக்கமும் இல்லாதவள்) - வேத சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டவள்   (குலம் என்பது வேத சாஸ்திரத்தை குறிப்பதாகவும் பொருள்படும்) *     குல அம்ருதத்தை விரும்புபவளே, குலசங்கேதத்தை பாதுகாப்பவளாகவும் விளங்கி இறுதியில் குலத்திற்கு அப்பாற்பட்டவளாகவும் வெளிப்படுத்துகிறாள்.  "எல்லாமுமான, எதுவுமற்ற  பரப்பிரம்மம்" என்ற உபனிஷத் அர்த்தங்களை பிரதிபலிக்கின்றன.     சமயா = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும் அந்த:ஸ்தா = உள்ளுறைபவள் - 97  சமயாந்த:ஸ்தா = சமயாசாரத்தின் வழிபாட்டு முறைகளுள் உறைபவள் (ஸ்ரீவித்யா உபாசனை முறைகளில் சமயாசார முறையும் ஒன்று)   சமயா = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும் ஆசார = மரபாச்சார பழக்க வழக்கங்கள் தத்பரா = பிடித்தமான - 98 சமயாசார தத்பரா = சமயாச்சார வழக்க முறைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபாடு உடையவள்   (மந்திர ரூபம்) []   (99-111) மூலாதாரைக நிலையா; ப்ரஹ்மக்ரந்தி விபேதினி; மணிபூரந்தருதிதா; விஷ்ணுக்ரந்தி விபேதினி; ஆக்ஞா சக்ராதராலஸ்தா; ருத்ரக்ரந்தி விபேதினி; சஹஸ்ராரம்புஜாரூடா; சுதாசாராபி வர்ஷிணி; தடில்லதா  சமருசி: ;  ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா ; மஹாஷக்தி ;   குண்டலினி ; பிஸதந்து தனீயஸீ; *** மூலாதார = மூலாதார சக்கரம்   மூலாதாரைக = மூலாதாரத்தில் நிலயா = இருப்பவள் - 99 மூலாதாரைக நிலயா = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள் (மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)   க்ரந்தி = முடிச்சு ப்ரஹ்ம க்ரந்தி = மூலாதாரத்தின் ஆதார தேவதா தத்துவமாக பிரஹ்மா திகழ்கிறார். விபேதினி = துளைத்து - 100  ப்ரஹ்மக்ரந்தி விபேதினி = பிரம்மக்ரந்தி எனும் நாடி-முடிச்சுத் தளைகளை துளைப்பவள் (பிரம்மக்ரந்தி மூலாதாரத்திற்கும் சுவாதிஶ்டானத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது)   மணிபூர = மணிபூரக சக்கரம் அந்தர் = உள்ளில் உதிதா = எழுபவள் - 101 மணிப்புராந்தருதிதா = மணிபூரக சக்கரத்தில் எழுபவள் (மணிபூரகம் தொப்புளுக்கு மேல் அமைதிருக்கிறது)   க்ரந்தி = க்ரந்தி என்பது நாடிகளின் முடிச்சு விஷ்ணு க்ரந்தி = மணிபூரகத்தின் தத்துவ தேவதா ஸ்வரூபமாக விஷ்ணு திகழ்கிறார். விபேதினி = உடைத்து - துளைத்து - 102 விஷ்ணுக்ரந்தி விபேதினி = விஷ்ணுக்ரந்தி நாடி முடிச்சுத் தளைகளை உடைத்தெழுபவள் (யோக சாஸ்திரத்தின் படி, மணிபூரகத்திற்கும் அனாஹத சக்கரத்திற்கும் நடுவில் அமைந்திருப்பது விஷ்ணுக்ரந்தி)   ஆக்ஞா சக்ரா = ஆக்ஞை சக்கரம்- (நெற்றிக் கண் - ஞானக் கண் என்றும் சொல்லலாம்) அந்தரால = நடுவே அமைந்த = இடைவெளியில் அமைந்த ஸ்தா = இருத்தல் - 103 அக்ஞா சக்ராந்தராலஸ்தா = ஆக்ஞா சக்கரத்தின் நடுவிலிருப்பவள் ( ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியின் பின் நிலைகொண்டிருப்பது)   ருத்ர க்ரந்தி = ஆக்ஞை யின் தத்துவ விளக்க தேவதா ரூபமாக ருத்ரன் இருக்கிறார் விபேதினி = துளைத்தல் - ஊடுருவு - 104 ருத்ரக்ரந்தி விபேதினி = ருத்ரக்ரந்தி நாடி முடிச்சுத்தளைகளை ஊடுருவுபவள் (ருத்ரக்ரந்தி ஆக்ஞா சக்கரத்திற்கும் சஹஸ்ராரத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக நூல்கள் உரைக்கின்றன)   சஹஸ்ரார = சஹஸ்ரார சக்கரம்   அம்புஜா = தாமரை ஆரூடா = ஏறு - எழுதல் - 105 சஹஸ்ராராம்புஜாரூடா = சஹஸ்ரார பத்மத்தில் உயர்ந்தெழுபவள் (சஹஸ்ர சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட கமலமாக உச்சந்தலையில் திகழ்வதாக விவரிக்கப்டுகிறது)   சுதாசார = அமிர்த சொரிவு வர்ஷ = மழை - 106 சுதாசாரபிவர்ஷிணி = அம்ருத பிரவாகமாகப் பொழிபவள்  சக்கரங்களும்  நாடிக்ரந்திகளும்  ஸ்தூலமானவை  அல்ல,  அவை சூக்ஷ்மமானவை.  கவனிக்க: குண்டலினி  பயிற்சியை முறையாக தேர்ச்சி பெற்ற குருவிடமிருந்து கற்காமல் தானே முயல்வது ஆபத்தானது.    மேலும் தகவலுக்கு (Thanks and Credit): ஏழு சக்கரங்கள்     தடித் = மின்னல் லதா = கதிர் - கிரணம் சம = அதனையொத்த = சமமான ருசிர = வெளிச்சம் - ஒளி - 107 தடில்லதா சமருசி: = மின்னல் கிரணங்களுக்கு சமமான ஜோதி ஸ்வரூபமானவள்   ஷட்சக்ர = ஆறு சக்கரங்கள் உபரி = மேலே   சம்ஸ்திதா - இருத்தல் - நிலைபாடு - 108  ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா = ஆறு சக்கரங்களுக்கு மேலே நிலை கொண்டிருப்பவள் (மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரக, அனாஹத, விஷுத்தி, ஆக்ஞா ஆகிய சக்கரங்கள்)   மஹ  = விழா - கொண்டாட்டம் ஆசக்தி =  பிடித்தமான - 109  மஹாசக்தி = பண்டிகைக் கொண்டாட்டங்களில் விருப்பமுள்ளவள் ( சிவ தத்துவத்துடன் பராசக்தியின் ஐக்கியத்தின் விழா) (மஹா அல்ல மஹ  + ஆசக்தி என்று பொருளுணர வேண்டும்) - 109  மஹாசக்தி = பெரும் வலிமையும் மேன்மையும் மிக்கவள் - ப்ரபஞ்சத்தின் உயர்ந்த காரணகர்த்தா ( 'மஹாசக்தி' என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருள் பிரித்து உணரலாம்)   - 110  குண்டலினீ = குண்டலினீ சக்தியின் வடிவாகியவள் (மூலாதாரத்தில்  இருப்பவள்)    பிஸ-தந்து = தாமரை இழை தனீயஸ் = மெல்லிய - மிகச் சிறிய வடிவு - 111  பிஸதந்து தனீயஸீ = தாமரை இழை போன்ற நுண்மையும் மென்மையும் சிறந்த தன்மையும் கொண்டிருப்பவள்        8. பக்த அனுகிரஹம் (மந்த்ர ரூபம் நிறைவுற்றது. அடுத்து அம்பாளின் "பக்த அனுகிரஹ"த்தை வெளிப்படுத்தும் நாமங்கள்) []   (112-131) பவானீ; பாவனா கம்யா; பவாரண்ய குடாரிகா; பத்ர ப்ரியா; பத்ர மூர்த்தி; பக்த சௌபாக்ய தாயினி; பக்திப்ரியா; பக்திகம்யா; பக்திவஶ்யா; பயாபஹா; ஶாம்பவீ; ஶாரதாராத்யா; ஶர்வாணி; ஶர்மதாயினி; ஶாங்கரீ; ஸ்ரீகரீ; சாத்வீ; ஶரச்சந்திர நிபானனா; ஶாதோதரீ; ஶாந்திமதீ; ***   பவா = சிவன் - சிவனின் வடிவம்  112 பவானீ = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி (வேறு) பவா = செல்வம் - 112  பவானீ = நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்   பாவனா = சிந்தனை - ஒருமுகப்படுத்துதல் -கற்பனை கம்யா = அடையக்கூடியது - சாத்யமாவது - 113  பாவனாகம்யா = ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள், புத்திக்கு புலப்படுபவள்   பவ = உலக வாழ்வு - சம்சார சாகரம் ஆரண்ய = பெருங்காடு குடாரிகா = கோடாரி - 114  பவாரண்ய குடாரிகா = கடக்க அரிய பெருங்காட்டை கோடாரியால் அழிப்பது போல் உலக வாழ்வென்ற பெருவனத்தை அழித்து, பயணத்தை எளிதாக்குபவள் (பிறப்பு-இறப்பு என்ற தளைகளை அறுத்து, முக்திக்கு வழி வகுப்பவள் )   பத்ர = காருண்ய - கனிவான - அருள் நிறைந்த ப்ரியா= பிரியமான - பிடித்தமான - 115  பத்ரப்ரியா = அனுகூலமான யாவற்றிற்கும் அபிமானி   பத்ர = மகிழ்ச்சியான - மங்களமான மூர்த்தி = வடிவம் - 116  பத்ரமூர்த்தி = வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்   பக்த = பக்தர்கள் சௌபாக்ய = வளம் தாயின் = கொடுப்பவள் - 117  பக்த சௌபாக்ய தாயினி = பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருளுபவள்   ப்ரியா = பிடித்தல் – ப்ரியம் - 118  பக்திப்ரியா = மெய்யான பக்தியால் ப்ரீதி அடைபவள் - பக்தியால்  சந்தோஷிப்பவள்    கம்யா = அடையக்கூடிய - 119  பக்திகம்யா = பரிபூரண பக்தியால் உணரக்கூடியவள் /அடையக்கூடியவள்   வஶ்யா = கட்டுப்படுதல்  - 120  பக்திவஶ்யா = தூய களங்கமில்லாத பக்திக்கு வசப்படுபவள்   பய = பீதி  ஆபஹ = விலக்குதல் - 121  பயாபஹா = பயத்தை களைபவள் - அச்சத்தை அகற்றுபவள்   - 122  ஷாம்பவீ  = சிவனின் துணைவியானவள்-சாம்பவீ ( சிவனின் இன்னொரு ரூபம் 'சம்பு')   ஷாரத = கலைவாணி (அல்லது) ஷாரத = இலையுதிர்காலம், இலையுதிர்காலத்தின் இயல்புகள், அதனையொட்டி நிகழும்   சாரதா நவராத்திரி ஆராத்யா = பூஜிக்கத்தக்க - 123  ஷாரதாராத்யா = கலைவாணியின் பூஜைக்கு உகந்தவள்  - 123  ஷாரதாராத்யா = சாரதா நவராத்தியில் கோலாகலத்துடன் ஆராதிக்கப்படுபவள்    ஷர்வா = சிவனின் பஞ்சபூத அவதாரங்களில் "பூமி" ரூபத்தின் உருவகம் - 124  ஷர்வாணீ = ‘ஷர்வா’ என்ற சிவனின் பத்தினியானவள்   ஷர்ம = இன்பம் - மகிழ்ச்சி தாயின் - கொடுத்தல் - 125  ஷர்மதாயினி = நிறைவான ஆனந்தம் அளிப்பவள்   - 126  ஷாங்கரீ = இறைவன் சிவனின் ரூபமான சங்கரனின் மனையாள் (சங்கரீ)   ஸ்ரீ = தனம் - செல்வம்  கர = காரணமான - நிகழ்த்துதல் - 127  ஸ்ரீகரீ = செழிப்பையும் வளத்தையும் உண்டாக்குபவள்   - 128  சாத்வீ = நற்பண்புகளின் இலட்சணமானவள்   ஷரத் = இலையுதிர்காலம் - இலையுதிர்காலத்திற்கானவை ஷரச்சந்திர = இலையுதிர்காலத்தின் சந்திரன் நிப = ஒற்றுமை - சாயல் ஆனன = முகம் - 129  ஶரச்சந்திர நிபானனா = இலையுதிர்கால்த்து பூரண சந்திரனின் சோபையை போன்று ஜொலிக்கும் முகமுடையாள்   ஷாதோதர = மெலிந்த இடை - 130 ஷாதோதரீ = மெல்லிடையாள்   ஷாந்திவ = கருணை - சாந்தம்  மதீ = அறிவு - 131  ஶாந்திமதீ = அன்பையே தனது இயல்பாக கொண்டவள்                                     9. நிர்குண உபாசனை   (பக்த அனுகிரஹத்தை பிரதிபலிக்கும் பெயர்கள் நிறைவுற்றது. அடுத்த நாமங்கள் "நிர்குண" ரூபத்தை உணர்த்துகிறது) []   (132-151) நிராதாரா; நிரஞ்சனா; நிர்லேபா; நிர்மலா; நித்யா; நிராகாரா; நிராகுலா; நிர்குணா; நிஷ்கலா; ஶாந்தா ; நிஷ்காமா; நிருபப்லவா; நித்யமுக்தா; நிர்விகாரா; நிஷ்ப்ரபஞ்சா; நிராஷ்ரயா; நித்யசுத்தா; நித்யபுத்தா; நிரவத்யா; நிரந்தரா; ***   ஆதார = பிடிப்பு - அஸ்திவாரம் - 132  நிராதாரா = சுவாதீனமானவள் - தன்னிறைவுற்றவள்   ரஞ்சனா = வண்ணங்கள் - நிறங்களால் சாயம் பூசப்பட்டவை (புலன்களை ரஞ்சிக்க செய்பவை) - 133  நிரஞ்சனா = புலன்களின் பேதங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் - வர்ண / உருவ / மனோ பேதங்களுக்கு புலப்படாதவள்   லேபா = களங்கம் - 134  நிர்லேபா = களங்கமற்றவள்    மல = அழுக்கு - 135  நிர்மலா = தூய்மையானவள்   - 136  நித்யா = நிரந்தரமானவள்    ஆகார் = உருவம் / வடிவம் - 137  நிராகாரா = வெளிதோற்றத்திற்கு அப்பாற்பட்டவள் - அருவமானவள்    ஆகுலா = உளக்குழப்பம் - பதட்டம் - 138  நிராகுலா = ஆர்பாட்டமற்றவள் - தெளிந்தவள்    குணா = முக்குணங்களைக் குறிப்பது (சத்வம்- ரஜஸ்- தமஸ்) - 139  நிர்குணா = முக்குணங்களுக்கு ஆட்படாது அதற்கு அப்பாற்பட்டவள்   கலா = முழுமையின் ஒரு கூறு - 140  நிஷ்கலா = முழுமையின் வடிவம் - பூரணத்தின் தத்துவமானவள் குறிப்பு: "நிர்"- நிஷ் போன்ற பதங்கள் முற்சேர்க்கைகளாக (prefix) வரும் பொழுது, தொடர்ந்து வரும்  பெயரடை அல்லது வினைச்சொற்களின் பொருளை 'இல்லை' என மறுக்கும் கூற்றாக உணரப்படுகிறது.    - 141 ஷாந்தா = சாந்தம் பொருந்தியவள்   காம = அபிலாஷைகள் - இச்சை - 142 நிஷ்காமா = ஆசைகளின் பிடிகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் - தன்னில் நிறைவு காண்பவள்   உபப்லவா = நாசம் - பேரழிவு - 143 நிருபப்லவா = அழிவற்ற தன்மையுடையவள்   முக்தா = விடுதலை - சுதந்திரம் - 144  நித்யமுக்தா = சாஸ்வத நிலைபேறுடைய முக்தியில்  நிலைத்து நிற்பவள் (உலக இச்சை ஆசாபாசங்களைக் கடந்த முக்தி நிலையில் இருப்பவள்)   விகார = வடிவம், தன்மை இயல்பு முதலியவற்றின் மாறுதல் - 145  நிர்விகாரா = பேதமற்றவள் - மாறுதலுக்கு உட்படாதவள்    ப்ரபஞ்ச = விஸ்தரிப்பு - விரிவாக்கம் - அவதரிப்பு - உருவாக்கம் - 146  நிஷ்ப்ரபஞ்சா = ப்ரபஞ்ச தோற்ற-விரிவுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் (அதனை தன் வசம் வைத்துள்ளவள் என்று புரிந்து கொள்ளலாம்)   அஷ்ரய = சார்பு நிலை - சார்ந்திருத்தல் - ஆதாரமான - 147 நிராஷ்ரயா = சுயம்புவானவள் - எதனையும் சாராதிருப்பவள் - சுவாதீனமானவள்   ஷுத்த = நிர்மலமான - சுத்தமான - 148 நித்யசுத்தா = என்றென்றும் அப்பழுக்கற்று விளங்குபவள்   புத்தா = ஞானம் - அறிவு - 149  நித்யபுத்தா = நிரந்தர ஞானி = அறிவாகி நிற்பவள்   அவத்யா = குறைபாடு – தரம்தாழ்ந்த - 150 நிரவத்யா = உயர்வானவள் ; மேம்பட்டவள் ; முழுமையானவள்   அந்தரா = பிரிவு - பிரிவுக்குட்பட்ட - காலகதிக்கு உட்பட்ட - கால இடைவெளிக்கு உட்பட்ட - 151  நிரந்தரா = எங்கும் நிறைந்திருப்பவள்   குறிப்பு: நிஷ்காமா, நித்யசுத்தா, நிரவத்யா முதலிய பல பெயர்களின் அடிப்படை அர்த்தங்கள், ஆழ்ந்த கருத்துகள், மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை.  அன்னையானவள் ஆசைகளுக்கும் பாசங்களுக்கும் கட்டுப்படாது அதன் தன்மைகளை சாராது தனித்திருப்பவள். சுத்தம்-அசுத்தம் போன்ற இரட்டைகளுகளுக்கு எட்டாது விளங்குபவள். நேர கால கதிகளின் ஓட்டத்துக்கு அப்பால் திகழ்பவள். அவள்  தனித்துவத்தை, இயல்பை சில பெயர்களில் அடக்கி விட சாத்தியப்படாது. அம்பிகையின் பூரணத்துவத்தை எவ்வித சார்பு நிலையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. அவள் தாங்கும் நுண்மைத் தன்மையை எப்பெயர்களிலும், வார்த்தைகளிலும் வர்ணித்திட இயலாது.    (நிர்குண உபாசனை) []     (152-171) நிஷ்காரணா; நிஷ்களங்கா; நிரூபாதி; நிரீஷ்வரா; நீராகா; ராகமதனீ; நிர்மதா; மதநாசினீ; நிஷ்சிந்தா; நிர்அஹங்காரா; நிர்மோஹா; மோஹநாசினீ; நிர்மமா; மமதாஹந்த்ரீ; நிஷ்பாபா; பாபநாசினீ; நிஷ்க்ரோதா; க்ரோதஷமனீ; நிர்லோபா; லோபனாசினீ; நிஸ்ஸம்ஷயா; சம்ஷயக்னீ; ***   காரண = காரணம் - ஆதாரம் - 152  நிஷ்காரணா = முதன்மையானவள் - மூலமாகத் திகழ்பவள் (இருப்புக்கான காரணம் அற்றவள்)   களங்க = மாசு - கறைபடிதல் - 153  நிஷ்களங்கா = குறைபாடற்ற முழுமைத்தன்மை உடையவள்   உபாதி = தகுதி - நிர்ணயம் - வரம்பு - பண்பு - ஏற்றிக்கூறல் - 154  நிரூபாதி = வரையரையற்றவள் - எல்லையற்று எல்லாமாகவும் விளங்குபவள்   ஈஷ்வர = தலைவன் - முதலானவன் - இறைவன் - 155  நிரீஷ்வரா = தனக்கு அப்பாற்பட்ட தலைமை இல்லாதவள்   ராக = ஆசைகள் - அபிலாஷைகள் - புலனின்பத்திற்கு உரியவை - 156  நிராகா = புலன்களின் இச்சைகளுக்கு கட்டுப்படாதவள்   மதன = அழித்தல் - நாசமாக்குதல் - 157  ராகமதனீ = லோகாபிலாஷைகளை அழித்து ரக்ஷிப்பவள்   மதா = தற்பெருமை - ஆணவம் - கர்வம் 158  நிர்மதா = செருக்கு அற்றவள்    - 159   மதநாசினீ = கர்வத்தை அழித்தொழிப்பவள்   சிந்தா = கவலை - பதட்டம் - 160  நிஷ்சிந்தா = உளைச்சலற்ற தெளிந்த சிந்தனையுடையவள்   அஹங்கார = மமதை - 161  நிரஹங்காரா = அஹங்கார மமகாரங்கள் அற்றவள்   மோஹா = மாயை - குழப்பம் - கவனச்சிதறல் - 162  நிர்மோஹா = மாயைகளுக்கு அப்பாற்பட்டவள்   - 163  மோஹநாசினீ = மோக-மாயைகளை நாசம் செய்பவள் (அவளை சரண் புகுந்தவர்களுக்கு)   மம / மமதா - சுயம்-சுயம் சார்ந்தது- தன்னலம் - தான் /தனது - 164  நிர்மமா = தன்னலமற்றவள் ie. இருமையற்ற ஒருமைப்பாட்டின் தத்துவமாக     விளங்குபவள் என்பதால் 'மமகாரங்கள்' அர்த்தமற்றதாகிறது.   ஹந்த்ரீ = அழித்தல் - 165  மமதாஹந்த்ரீ = மமகாரங்களை ஒழிப்பவள்   பாபா = பழி-பாவம் - குற்றச்செயல் - 166  நிஷ்பாபா = பாபங்களுக்கு ஆட்படாதவள்   - 167  பாபநாசினீ = பாபங்களை நசுக்குபவள்   க்ரோதா = கோபம் - ஆத்திரம் - 168  நிஷ்க்ரோதா = சினத்திற்கு ஆட்படாதவள்     ஷமன = சாந்தபடுத்துதல் - தணிவித்தல் - 169  க்ரோதஷமனீ = சினத்தை தணிப்பவள் - அல்லது - சினத்தை அழிப்பவள் ஷமன என்றால் அமைதிப்படுத்துதல் அல்லது சாந்த்தபடுத்துதல், ஷமன என்பது நிறுத்துதல் அல்லது அழித்தலையும் குறிக்கும், அவரவர் கோணத்தில் அர்த்தம் மாறுபடலாம்     லோபா  =  பேராசை - 170  நிர்லோபா = பேராசைக்கு உட்படாதவள்   - 171  லோபநாசினீ = பேராசையை நாசமாக்குபவள் (பக்தர்களின் தவறான ஆசைகளை முறைப்படுத்துபவள்)   (நிர்குண உபாசனை) []     (172-192) நிஸ்ஸம்ஷயா; சம்ஷயக்னீ; நிர்பவா; பவநாசினீ; நிர்விகல்பா; நிராபாதா; நிராபேதா; நிர்பேதா; பேதநாசினி; நிர்-நாசா; ம்ருத்யு மதனீ; நிஷ்க்ரியா; நிஷ்பரிக்ரஹா; நி:ஸ்துலா; நீலசிகுரா; நிராபயா; நிரத்யாயா; துர்லபா; துர்கமா; துர்கா; துக்க ஹந்த்ரீ; சுகப்ரதா; ***   ஸம்ஷயா = சந்தேகம் - நம்பகமற்ற - 172  நிஸ்ஸம்ஷயா = ஐயங்களுக்கு அப்பாற்பட்டவள் இந்நாமத்தை பக்தர்களின் கண்ணோட்டதிலிருந்து புரிய முற்படும் போது அம்பாள் சந்தேகத்திற்கு இடமின்றி நித்ய-தத்துவமாக தன் இருப்பை நிலை நிறுத்துவதாக அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம்   - 173  ஸம்ஷயக்னீ = ஐயங்களை தகர்ப்பவள் (ஐயங்களை தகர்த்து தெளிவை உண்டாக்குபவள்)   பவ = மூலம் - ஆரம்பம் - 174  நிர்பவா = ஆரம்பமும் முடிவும் அற்றவள் - அனாதியானவள்    - 175  பவநாசினீ = பிறப்பு-இறப்பு சுழற்சியை தகர்ப்பவள் (பிறப்பு இறப்பின் காரணமான கர்மாவை தகர்ப்பவள்)   விகல்பா = இல்லாத ஒன்றின் கற்பனை (உதாரணம் 'கானல் நீர்') --தவறான புரிதல் - 176  நிர்விகல்பா = நகல் / பிரதிபிம்பங்களின் பொய்மைக்கு ஆட்படாதவள் நாம ரூப வடிவங்களின் பேதங்கள் அனைத்தும் பிரதிபிம்பங்கள் என்ற கருத்துக்கு உட்படுகிறது. உண்மையின் தத்துவம் பரப்பிரம்மம் மட்டுமே, அந்த உண்மையாக அவள் இருக்கிறாள் என்று பொருள் பண்ணிக் கொள்ளலாம்.    ஆபாதா = துன்பம் - இடர் - இடையூறு - 177  நிராபாதா = இடர்களால் நிலைகுலையாதவள்     பேதா = பேதம் - வேறுபாடு - 178  நிர்பேதா = எவ்வித வேறுபாடும் அற்றவள்  (சேதன - அசேதனத்தின் ஐக்கியமாக உணரப்படுபவள்)   - 179  பேதநாசினி = பேதங்களையும் அதனால் விளையும் வேற்றுமைகளையும் ஒழிப்பவள் (பேதங்கள் அஞ்ஞானத்தால் தோன்றுபவை)   - 180  நிர்நாசா = அழிவுக்கு அப்பாற்பட்டவள் (அமரத்துவம் வாய்ந்தவள்)   மதன = வீழ்த்துதல் ம்ருத்யு = மரணம் = முடிவு - 181  ம்ருத்யுமதனீ = பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியை தகர்ப்பவள்   க்ரியா = செயல் = கர்மா - 182  நிஷ்க்ரியா =   கர்மங்களுக்கு அப்பாற்பட்டு திகழ்பவள் (கர்மங்களாலான வினைகளால் தீண்டப்படாதவள்)   பரிக்ரஹா = ஆதரவு - சகாயம் - பெறப்படுவது - 183  நிஷ்பரிக்ரஹா = தேவைகள் அற்றவள் - எதனையும் சாராமல் விளங்குபவள்.   துலா = தராசு - அளக்கப்படுவது - பொருத்திப்பார்ப்பது - 184  நி:ஸ்துலா = ஈடு இணையற்றவள்    சிகுரா = கேசம் - 185 நீலசிகுரா = கருநீலவண்ண கேசமுடையவள் i.e. (கரு நீல கேசமுடையவளாக உருவகப்படுத்தபடுகிறாள்) * - 185 நீலசிகுரா = ஆக்ஞா சக்கரத்தின் உருவகம் (பிரபஞ்சத்தின் சூஷ்ம தொடர்புகள் கருநீல வண்ணத்தில் உருவக்கப்படுத்தபடும் ஆக்ஞா சக்கரத்தின் மூலம் ஏதுவாகிறது) (நிர்குண உபாசனையில் இப்பெயர் வரப்பெறுவதால்,  சூக்ஷ்ம-ரூப அர்த்தத்தை கருத்தில் கொள்ளுதல் சிறப்பு)    ஆபயா = அபாயம் அல்லது அழிவுக்கு உட்படுதல் - 186 நிராபயா = அழிவுக்கு ஆட்படாதவள் ...அழிவற்றவள்   அத்யாயா = வரையரை தாண்டுதல் - மீறுதல் - இறுதி அல்லது விளிம்பு - 187 நிரத்யாயா = வரையரையற்றவள் - எல்லையற்று நிரம்பியிருப்பவள் இந்நாமத்திற்கு "வரையரைகளை கடக்காதவள்”, அதாவது அவளே உருவாக்கிய சட்டங்கள் அல்லது எல்லைகளை மீறாதவள் என்றும் பொருள் கூறுகின்றனர். அத்யயா என்ற சொல்லுக்கு "இறுதி - விளிம்பு" என்றும் பொருள் உண்டு, அதனால் நிரத்யயா என்ற நாமத்தை வரையரையற்று நிரம்பியிருப்பவள் என்று நிர்குண உபாசனையாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.   துர்லப = அடைவதற்கு அரியது - கடினமானது - 188 துர்லபா = அடைதற்கரியவள் ; வெல்வதற்கரியவள்    துர்கம = தொடர்வதற்கு சிரமமானது - 189 துர்கமா = அணுகுதற்கு கடினமானவள்   துர்க = கோட்டை- அரண் - வலிமை வாய்ந்த பெண் தெய்வம் - 190 துர்கா = பாதுகாப்பவள் - (பக்தர்களுக்கு) கவசமானவள்; - துர்கா தேவி   ஹந்த்ரீ = அழித்தல் - 191 துக்க ஹந்த்ரீ = துயர் தகர்ப்பவள்    ப்ரதா = அளித்தல் - 192 சுகப்ரதா = ஆனந்தம் வழங்குபவள் *குறிப்பு: நிர்குணப் பெயர்கள், அம்பாளின் உன்னத ‘பரப்ரம்ம’ இருப்பை உணரந்து சொல்லக்கூடியவை. அவளே பரப்ப்ரம்ம ரூபிணி, காரண காரியமாக விளங்குபவள் என்ற நிலையில் உணரப்படுபவை.                                              10. சகுண உபாசனை   (நிர்குண உபாசனை முடிந்தது . இனி சகுண உபாசனா நாமங்களைப் படிப்போம்)   []   (193-214) துஷ்டதூரா; துராசார ஷமனீ; தோஷவர்ஜிதா; சர்வக்ஞா சாந்த்ர கருணா; சமானாதிக வர்ஜிதா; சர்வ ஷக்திமயீ; சர்வ மங்களா; சத்கதிப்ரதா; சர்வேஷ்வரீ; சர்வ மயீ; சர்வ மந்த்ர ஸ்வரூபிணீ; சர்வ யந்த்ராத்மிகா; சர்வ தந்த்ர ரூபா; மனோன்மனீ; மாஹேஷ்வரீ; மஹாதேவி; மஹாலக்ஷ்மீ; ம்ருடப்ரியா; மஹாரூபா; மஹாபூஜ்யா; மஹாபாதக-நாஷினீ; *** - 193 துஷ்டதூரா = கொடியவர்களிடமிருந்து தூர விலகியிருப்பவள்   துராசார் = கொடும் செயல்கள் - பாப காரியங்கள்  ஷமன = நிறுத்தல் - 194 துராசார ஷமனீ = தீவினைகளை வேரறுப்பவள்    தோஷ = தவறு - பிழை  வர்ஜிதா - இல்லாமலிருத்தல்  - 195 தோஷ வர்ஜிதா = மாசற்றவள்   - 196 சர்வக்ஞா = ஞானியானவள்    சாந்த்ர = மென்மை - அதிதீவிரம் - 197 சாந்த்ர கருணா = மிகுந்த இரக்கமுள்ளவள்   சமானா = சமமான அதிக = அதிகமான சமானாதிக = சரி நிகர் சமானம் வர்ஜிதா = இல்லாதிருத்தல் - 198 சமானாதிக வர்ஜிதா = ஒப்புயர்வற்றவள்; தன்னிகரற்றவள்   ஷக்திமயீ = ஆற்றல் நிறைந்த - 199 சர்வ ஷக்திமயீ = சகல வல்லமையும் பொருந்தியவள்   - 200 சர்வ மங்களா = அனைத்து அனுகூலங்களின் சாரமானவள்   சத்கதி = உத்தம வழி - உயர்ந்த கதி ப்ரதா = வழங்குதல் - 201 சத்கதிப்ரதா = நற்கதி அருளுபவள்   - 202 சர்வேஷ்வரீ = சகலத்தையும் ஆட்சி செய்பவள்   மயீ = உள்ளடக்கியிருத்தல் - 203 சர்வமயீ = அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவள்   ஸ்வரூபா = வடிவம் - குணம் - 204 சர்வ-மந்த்ர-ஸ்வரூபிணீ = அனைத்து மந்திரங்களின் உருவடிவானவள்   யந்த்ர = சாதனம் (மந்திர உருவேற்றப்பட்ட ‘தகடுகள்', ‘தாயத்துகள்’ முதலியவை) ஆத்மிகா - உள்ளடக்கிய - கொண்டிருத்தல் - 205 சர்வ-யந்த்ராத்மிகா = அனைத்து யந்திரங்களின் சக்தியாக நிறைந்திருப்பவள்   தந்த்ர = யுக்தி - நுணுக்கம் – போதனை (வழிபாட்டு முறைகளின் நுணுக்கங்கள்) - 206 சர்வ-தந்த்ர-ரூபா = அனைத்து தந்திரமுறைகளின் சாரமாக விளங்குபவள்   - 207 மனோன்மனீ =  உயர்ந்த மனோ-நிலையின் மகுடமாக தன்னை பிரதிபலிப்பவள். மனோன்மனீ என்ற நிலைபாட்டில் சஹஸ்ரமான சதாசிவத்திற்கு மிக அருகில் இருக்கிறாள். சஹஸ்ரத்திற்கு அருகில் இருப்பதால் சூஷ்ம நிலையில் மிக உயர்ந்த படியாக மனோன்மனீ என்ற நிலைப்பாட்டை குறிக்கலாம். கால-நேரம், அண்டவெளி முதலிய பரிமாணங்ளுக்கு அப்பாற்பட்ட ஸ்திதி.    - 208 மாஹேஷ்வரீ = ஈஸ்வரனான மஹேஸ்வரனின் சகதர்மிணி   - 209  மஹாதேவீ = ஈஸ்வரனான மஹாதேவனின் சகதர்மிணியானவள் - 209 மஹாதேவீ = தேவாதிதேவர்களும் போற்றும் தேவியாக, மஹாதேவியாக இருப்பவள்   - 210 மஹாலக்ஷ்மீ = சுபீஷம் நல்கும் மஹாலக்ஷ்மியாக திகழ்பவள்   மிருடா (Mrida) = சிவனின் நாமங்களில் ஒன்று - 211 மிருடப்ரியா = மிருடனின் நேசத்திற்குரியவள்; - மிருடனை நேசிப்பவள்  (இரு பொருளிலும் பொருந்தும்) சிவபுராணத்தில் மிருடன் என்ற பெயர் ஈஸ்வரனை விவரிக்கிறது. "மகிழ்ச்சியளிப்பவன்" என்பது புரிதல்   - 212 மஹாரூபா = பிரம்மாண்டமாய் பரந்து விரியும் உருவடிவத்திற்கு சொந்தமானவள்   பூஜ்யா = மேன்மை பொருந்திய - போற்றுதற்குகந்த - 213 மஹாபூஜ்யா = பூஜைக்குரிய அதிஉன்னத உயர்ந்த ஸ்தானத்திற்கு உரியவள்   மஹாபாதகம் = பெரும்பாபம் - 214 மஹாபாதக-நாசினீ = பெருங்குற்றத்தையும் அழித்து விடுபவள் (மன்னித்து அருளுபவள்)   (சகுண உபாசனை) []     (215-230) மஹாமாயா; மஹாசத்வா; மஹாசக்தி; மஹாரதீ; மஹாபோகா; மஹைஷவர்யா; மஹாவீர்யா; மஹாபலா; மஹாபுத்தி; மஹாசித்தி; மஹாயோகேஷ்வரேஷ்வரீ; மஹாதந்த்ரா; மஹாமந்த்ரா; மஹாயந்த்ரா; மஹாஸனா; மஹா யாக க்ரம-ஆராத்யா;   - 215 மஹாமாயா = மகா மாயையாக விளங்குபவள் * மகா மாயை என்பதை எல்லையற்ற முடிவில்லா மாயை என்று உணரலாம். இப்பிரபஞ்சத் தோற்றத்தின் முதற் காரணமாக விளங்குபவள்ழ, மகா மாயை. பிரக்ருதி பின்னிய மாயையே பிரபஞ்சத்தின் மூலம். இவளால் பின்னப்படும் மாயையை வெல்லும் முயற்சியில் பெரும் யோகிகளும் சமயத்தில் சிக்கிண்டு பிறழ்வதுண்டு. மாயை வென்று பரப்பிரம்ம ஸ்வரூபத்தின் இயல்பை உணர்தல் ஞானத்தின் இறுதி இலக்கு.    சத்வா = நற்குணங்கள் - ஞானம் - முக்குணங்களில் முதன்மையானது (சத்துவம் - ராஜசம் - தாமஸம்) - 216 மஹாசத்வா = தூயதும் நன்மையுமான அனைத்து சாராம்சங்களின் பிரதிநிதித்துவமானவள் ; பெரும் ஞானி    - 217 மஹாஷக்தி = அளப்பரிய ஆற்றல் உடையவள்   ரதீ = உவகை - மகிழ்ச்சி - 218 மஹாரதீ = பேரானந்தத்திற்கு உரியவள்   போகா = செல்வம் - வளம் - 219 மஹாபோகா = பெருஞ்செல்வமாக திகழ்பவள்   ஐஷ்வர்யா = மேலாண்மை - 220 மஹைஷ்வர்யா = சகலத்தையும் மேலாட்சி செய்பவள்   வீர்யா = சக்தி - ஆற்றல் - (ஒளி / காந்தி என்றும் குறிப்புள்ளது) - 221 மஹாவீர்யா = அளவிலா வல்லமை மிக்கவள்   - 222 மஹாபலா = திடபலம் பொருந்தியவள்   - 223 மஹாபுத்தி = ஞானத்தின் சிகரமாக ஜொலிப்பவள்   சித்தி = இலக்கை அடைதல் - பிறவியின் இறுதிக் குறிக்கோளை எட்டுதல் - 224 மஹாசித்தி = வீடுபேறு என்னும் இறுதி இலக்காக நிலைப்பவள் - பூரணத்துவத்தின் முடிவான ஆனந்தமாக திகழ்பவள்   யோகேஷ்வர் = யோகக்கலையில் தேர்ந்தவர் - 225 மஹாயோகேஷ்வரேஸ்வரீ = பெரும் யோகிகளுக்கெல்லாம் ஈஸ்வரியானவள்    தந்த்ரா = தந்திர சாஸ்திரங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் - 226 மஹாதந்த்ரா = தந்திர சாஸ்திரங்களின் இறுதி இலக்காக/ விளங்குபவள் *தந்திர சாஸ்திர வழிபாட்டு முறைகள், குண்டலினி சக்தியை எழும்பச் செய்து சஹஸ்ராரத்துடன் இணைக்கும் பயிற்சியில் கவனம் செலுத்துவதாக அமைகிறது. முக்தியை நோக்கிய பயண்த்திற்கான மற்றொரு யோக முறையாக சிலர் கருதுகின்றனர்.    - 227 மஹாமந்த்ரா = மந்திரங்களிலேயே அதி உன்னத மந்திரமாக திகழ்பவள்   யந்த்ரா = பூஜைக்குரிய வழிபாட்டு தகடுகள் / தாயத்துகள் முதலியன - 228  மஹாயந்த்ரா  = தலையாய முதன்மை யந்திரமாகியிருப்பவள் - 228  மஹாயந்த்ரா = அதி உன்னத ஸ்ரீசக்ரமாக வீற்றிருப்பவள் (யந்திரங்களில் தலையாயது)   ஆசனா = இருப்பு- தங்கியிருத்தல் - ஆசனம்- அமர்ந்திருத்தல் - 229 மஹா(ஆ)சனா = சிகரத்தில் அரியாசனமிட்டு கொலுவிருப்பவள் பிரபஞ்ச தோற்றப் படிநிலைகளின் முகட்டில் இருப்பவள்   யாக = யாகங்கள் யக்ஞங்கள் மூலம் நடத்தப்படும் தியாகம் - அர்ப்பணிப்பு  க்ரம = விதி முறைகள் - படிப்படியான முன்னேற்றம் ஆராத்யா = பூஜை - 230 மஹாயாக க்ரம-ஆராத்யா = முறையாக செய்யப்படும் மாபெரும் யாகங்களால் ஆராதிக்கப்படுபவள்    (சகுண உபாசனை) []   (231-248) மஹா பைரவ பூஜிதா; மஹேஷ்வர மஹாகல்ப மஹா தாண்டவ சாக்ஷிணி; மஹா காமேஷ மஹிஷீ; மஹா த்ரிபுர சுந்தரீ; சது: ஷஷ்ட்யுப சா-ஆராத்யா; சது: ஷஷ்டி கலா மயீ; மஹா சது: ஷஷ்டி கோடி யோகினீ கணசேவிதா; மனு வித்யா; சந்த்ர வித்யா; சந்த்ர மண்டல மத்யகா; சாரு ரூபா; சாரு ஹாசா; சாருச் சந்திர கலாதரா; சராசர ஜகன்னாதா; சக்ர ராஜ நிகேதனா; பார்வதீ; பத்ம நயனா; பத்மராக சமப்ரபா; ***   - 231 மஹா பைரவ பூஜிதா = மஹா பைரவரால் பூஜிக்கப்படுபவள் ( பைரவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார்)   - 232 மஹேஷ்வர மஹா-கல்ப மஹா-தாண்டவ சாக்ஷிணி = மஹாகல்ப முடிவில் நிகழும் மஹாப்ரளயத்தில் மஹேஷ்வரனின் தாண்டவத்திற்கு சாக்ஷியாக இருப்பவள் *** ஹிந்துக்களின் கூற்றுப்படி, கால அளவுகள் யுகங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மஹாகல்பம் என்ற கால அளவு முடிந்த பிறகு, பிரபஞ்சம் தனக்குள் சுருங்குவதும், அடுத்த சிருஷ்டியின் பொழுது விரிவதுமாக சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரிவும் சுருக்கமும், ஒரு மனிதனின் வாழ்விலும் தினம் நிகழும் உறக்கம் விழிப்புக்கு சமமாகும். உறக்கத்தில் வெளி உலகம் ஒடுங்கி நமக்குள் நிலைக்கிறது. இதையே ப்ரபஞ்ச அடிப்படையில் (macro) சிந்தித்தால் பேரழிவு என்ற மஹாப்ரளையம் பரப்பிரம்மத்தின் ஒடுக்க நிலை.   ஒரு கல்ப காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு நாள் ஒரு நாள் பிரம்மாவிற்கு 1000 சதுர் யுகங்கள் ஒரு சதுர் யுகம் 'சத்திய த்ரேதா துவாபர கலி' என்ற நான்கு  யுகங்களின் கூட்டுச் கணக்கு    பிரம்மாவின் இருப்பும் காலகதிக்கேற்பவே சுழல்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. நூறு வருடம் ஆயுள் கொண்ட பிரம்மாவின் ஆயுளும் பிரபஞ்ச பிரமாண்டத்தில் ஒரு நீர்க்குமிழியின் சிறிது கால-மாத்திரையில் நின்றுவிடும்.   பிரம்மாவின் ஆயுள் முடியும் பொழுது, மஹாப்ரளயம் நேருகிறது. வேறு சில யுகப் பிரளயங்கள் காலகதிக்கேற்ப அவ்வப்பொழுது சின்ன அளவில் நிகழ்கின்றன. 'ப்ராக்ருதிக ப்ரளயம்’ எனும் மஹாப்ரளயத்தில் நேரம் காலம், ஆகாசம், அனைத்து ரூப ரச தத்துவங்களைத் தவிர கர்மாவும் ஒடுங்கி பிரம்மத்தில் நிலைத்திருப்பதாக கூற்று.   இரு வேறு தத்துவங்கள் இதனையொட்டி கூறப்பட்டுள்ளன. அத்வைத தத்துவத்தின் படி, சிவம் மட்டுமே தனித்து பிரம்மமாக ஒடுங்கியிருக்கும் என்று புரிதல்.     துவைதம், விசிஷ்டாத்வைத தத்துவத்தின் படியும்,  அத்வைத தத்துவத்தின் மற்றொரு கோணத்திலும், பெரும்ப்ரளய  காலத்தில் அனைத்தும் ஒன்றுபோல் ஒடுங்கி இருக்கும். எனினும் மிக நுண்ணிய சூக்ஷ்ம வடிவில் அடுத்து நிகழும் சிருஷ்டிக்குரிய சாரம் பொதிந்திருக்கும் என்பது கருத்து.    அம்பாள் என்று வடிவம் தாங்கி நிற்கும் ரூபமற்ற பிரக்ருதி, ப்ரளய ஊழிக் கூத்தில் சிவத்தின் நடனத்திற்கு சாக்ஷியாக இருக்கிறாள் என்று நாமத்தின் பொருள். பரப்பிரம்மத்தின் ஒடுங்கிய நிலையின் சாக்ஷியாக பராசக்தியான பிரக்ருதி இருக்கிறாள் என்பது  தத்துவப் பொருள். 'ஆதியந்தமில்லாத அனாதி கர்மா' என்று சாஸ்திரம் இக்கருத்திற்கு உடன்பட்டிருக்கிறது. ***   மஹிஷீ = பட்டத்து மஹிஷீ - முதன்மை ராணி - 233  மஹா காமேஷ மஹிஷீ = மஹா காமேஸ்வரனின் ராணியாகப்பட்டவள்   த்ரிபுரா = புரம் என்றால் நகரம் - பட்டணம். திரிபுரம் முப்பெரும் நகரங்களைக் குறிக்கிறது. (ஸ்தூல, சூக்ஷும காரணங்களாலான மூவுலகங்கள் என்றும் பொருளுணரலாம்.) - 234  மஹா த்ரிபுர சுந்தரீ = மூவுலகிலும் அதி சௌந்தர்யத்துடன் சுந்தரியாகத் திகழ்பவள்   ஷஷ்டி = அறுபது  சது: சஷ்டி = அறுபத்தி நாலு உபசார = உபசரிப்பு -  சேவை சாதித்தல் -  ஆபரண அலங்காரங்கள் ஆராத்யா = வணங்குதல் - 235  சது:சஷ்ட்-யுபசாராத்யா = அறுபத்தி நான்கு விதமான பூஜா விதிகளால் ஆராதிக்கப்படுபவள் * உபாசாரங்களில் வஸ்த்ர சமர்பணம், பூமாலை அல்லது பூக்கள் சமர்ப்பித்தல், தூப தீப ஆராதனைகள் முதலியவை அடக்கம்.   கலா-மயீ - கலைகளை உள்ளடக்கியவள் - 236 சது:ஷஷ்டி கலா-மயீ = அறுபத்தி-நான்கு கலைகளின் அம்சமாக வியாபித்திருப்பவள்    யோகினீ = யோகத்தில் ஈடுபடும் பெண்கள் - யோகத்தின் மூலம் இறைவனின் அருகாமையில் இருப்பவர்கள் கண = அணிகள் - உப தெய்வங்களின் குழு யோகினீ கண = உப தெய்வங்கள் சேவிதா = சேவித்திருத்தல் - 237 மஹா சது:ஷஷ்டி கோடி யோகினீ கண சேவிதா = அறுபத்து-நான்கு கோடி உப தேவதைகளால் தொழுதேத்தப்படுபவள்   - 238 மனு வித்யா = மனுவினால் முன்னுரைக்கப்பட்ட ஸ்ரீவித்யா உபாசனையின் ஸ்ரீசக்கர வழிபாட்டு வடிவாகத் திகழ்பவள்.   - 239 சந்த்ர வித்யா = சந்திரனால் விவரிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா உபாசனையின் ஸ்ரீசக்கர வழிபாட்டு முறைகளின் வடிவாக திகழ்பவள் * வித்யா என்றால் ஞானம், அறிவு. ஸ்ரீவித்யா என்பது ஸ்ரீசக்கர வழிபாட்டு முறைகள், அதன் பாரம்பரியம், சம்பிரதாயம் விதிமுறைகள், அனுஷ்டானங்கள் முதலியன. இவ்வழிபாட்டினை மாமுனிகள், தேவர்கள், மனு,  சந்திரன், மன்மதன், விஷ்ணு, ஸ்கந்தன்,   லோபமுத்ரா, மற்றும் சிவன் உள்ளிட்ட கடவுளர்கள் உட்பட பனிரெண்டு பேர் விவரித்திருக்கின்றனர்..   மண்டலா = ப்ரதேசம் - வட்டாரம் - கண்டம் - வான்வெளி பிரதேசம் - கோள் சுற்று வீதி   - 240 சந்த்ர மண்டல மத்யகா = சந்திர மண்டலத்தின்(கோள் சுற்று வீதி) மத்தியில் வீற்றிருப்பவள் சந்திரன் மனதை ஆட்சி செய்வதால், மனம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மனவோட்டத்தின் இறுதி அடைக்கலாமாக மன ஒருமைப்பாட்டின் உயர்ந்த எண்ணமாக மாயை வென்ற மனத்தில் நடுநாயகியாக அவள் வீற்றிருப்பதாக உணரலாம். வேறு சிலர், சந்திர மண்டலத்தை சஹஸ்ராரத்துடன் ஒப்பிட்டு, அதன் மத்திய பகுதியான பிந்துவாக விளங்குகிறாள் என்று உணர்த்துகின்றனர்.   சாரு = அழகிய - மனதிற்குகந்த - 241 சாரு ரூபா = வசீகரமானவள்   ஹாச = சிரிப்பு புன்னகை - 242 சாரு ஹாசா = மயக்கும் எழில்நகை புரிபவள்   சந்திரகலா = பிறைச் சந்திரன் தர = அணிதல் - 243 சாருச்சந்திர கலாதரா = அழகிய சந்திரப்பிறையை தரித்தவள்   சராசர (சர-அசர) = அசையும் அசையாத (பொருட்கள் / சிருஷ்டி) - 244 சராசர ஜகன்னாதா = சிருஷ்டியின் பேராற்றல் அனைத்தையும் அடக்கி ஆளுபவள்  (நிலை சக்தி - இயக்க சக்தியாக விளங்குபவள் ) (static - kinetic energy)   சக்ர-ராஜ = சக்கரங்களில் மகுடமான ஸ்ரீசக்கரம் நிகேதன் = வசிப்பவள் - 245 சக்ர ராஜ நிகேதனா = ஸ்ரீசக்கரத்தில் நிலைகொள்பவள்.   - 246 பார்வதீ = மலைமகள் - பர்வதராஜனின் புத்திரி.   - 247 பத்ம நயனா = தாமரை இதழைப் போன்ற அழகிய நீண்ட கண்களை உடையவள்.   பத்மராக = பத்மராகம் எனும் ரத்தினம் - தாமரை வண்ணம்  சம = சமமான ப்ரபா = ஒளி - மிளிர்வு - 248 பத்மராக சமப்ரபா = சிவந்த பத்மராகத்தை போல் பிரகாசிப்பவள் (அல்லது) - 248 பத்மராக சமப்ரபா = சிவந்த தாமரை போன்று ஜொலிப்பவள்                           11. பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்   (சகுண உபாசனை முடிவுற்றது. அடுத்து பஞ்ச-ப்ரம்ம ஸ்வரூபத்தை குறிக்கும் நாமங்கள்) []   (249-270) பஞ்ச ப்ரேதாசனாசீனா; பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ; சின்மயீ; பரமானந்தா; விஞ்ஞான கன ரூபிணீ; த்யான த்யாத்ரு த்யேய ரூபா; தர்ம-அதர்ம விவர்ஜிதா; விஷ்வரூபா; ஜாகரிணீ'; ஸ்வபந்தீ; தைஜசாத்மிகா; சுப்தா; ப்ராக்ஞாத்மிகா; துர்யா; சர்வாவஸ்த விவர்ஜிதா; சிருஷ்டி கர்த்ரீ; பிரம்ம ரூபா; கோப்த்ரீ; கோவிந்த ரூபிணீ; சம்ஹாரிணீ; ருத்ர ரூபா; திரோதானகரீ; *** பஞ்ச = ஐந்து ப்ரேத = சவம் ஆசீனா = அமர்ந்திருத்தல் - 249 பஞ்ச ப்ரேதாசனாசீனா = ஐந்து சவங்களின் மேல் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவள் * பஞ்ச ப்ரமமாக்களைப் பற்றி முன்பே வேறொரு நாமத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பரப்பிரம்மத்தின் ஐந்து தத்துவத்தின் வெளிப்பாடாக சத்யோஜத, தத்புருஷ, அகோர, வாமதேவ மற்றும் ஈசானம் என்பவை அறியப்படுகிறது. சத்யோஜதத்திலிருந்து படைக்கும் கடவுள் பிரம்மா, வாமதேவத்திலிருந்து விஷ்ணு, அகோரத்திலிருந்து ருத்ரன், தத்புருஷத்திலிருந்து மஹேஸ்வரன், ஈசானத்திலிருந்து சதாசிவன் தோன்றியுள்ளனர்.    அவர்கள் முறையே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (ஞானம் மறைக்கப்படுதல்), அருளல் என்ற பிரபஞ்ச இயங்க்கங்களின் காரணம் ஆகிறார்கள்.   புருஷ-பிரக்ருதி, ஷக்தி-சிவன், நிலையாற்றல் இயக்க-ஆற்றல் என பல்வேறு விதமாக இருபெரும் தத்துவங்கள் அறியப்படுகிறது. இவ்விரண்டுமே ப்ரபஞ்ச பெருமண்டல இயக்கத்தின் ஆதாரம் ஆகும். அம்பிகை, சக்தி ஸ்வரூபமாக அறியப்படுபவள்.    இயக்கங்கள் அற்ற நிலையில் (பஞ்ச ப்ரம்மாக்களின் செயலற்ற நிலை) சக்தி ஸ்வரூபமான மாயாரூபிணி, இயக்கமற்ற பஞ்சப்ரமத்தின் மேலமர்ந்தபடி தன் இருப்பை வெளிப்படுத்துகிறாள். சக்தி ஸ்வரூபமும்,  சிவமான ஆத்ம ஸ்வரூபமும், இயக்கம் அற்ற நிலையிலும் அப்பாற்பட்டு விளங்கும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. சிவமாகிய ஈஸ்வரன்  தோற்றத்தின் ஆதாரம். அம்பிகையே   துணை காரணம் என்பது புரிதல். அவள் ஈடுபாடு அல்லது துணையின்றி எங்கும் ஸ்தம்பித்த நிலையே என்பது இந்த நாமத்தின் விளக்கம்.   ஸ்வரூப = தோற்றம் - ரூபம் - 250 பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ = பஞ்ச-பிரம்மத்தின் தோற்றவடிவாகத் திகழ்பவள்  அம்பிகையின் உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கும் விதமாக இந்நாமம் அமைந்துள்ளது. அவளே பிரபஞ்ச தோற்றத்தின் மூல காரணங்களில் ஒன்று. அவளே பஞ்ச-ப்ரம்மமாகவும் விரிந்திருக்கிறாள்.   - 251 சின்மயீ = சுத்த-சைதன்ய இருப்பாக i.e பிரக்ஞையாக விளங்குபவள்   - 252 பரமானந்தா = சச்சிதானந்தம் என்னும் சுத்த ஆனந்த மயமானவள்   விஞ்ஞானகன = தூய அறிவு - 253 விஞ்ஞானகன ரூபிணீ = தூய அறிவாற்றலின் வடிவாக வியாபிப்பவள்   த்யான = தியானம் த்யாத்ரு = சிந்தனையாளர் (இவ்விடத்தில் தியானிப்பவர்) த்யேய = தியானிக்கப்படும் பொருள் - 254 த்யான த்யாத்ரு த்யேய ரூபா = தியானமாகவும், தியானிப்பவராகவும், தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள்   விவர்ஜிதா = தவிர்த்து - விட்டு விடுதல் - அப்பாற்பட்டு - 255 தர்ம-அதர்ம விவர்ஜிதா = தர்ம அதர்ம வியவகாரங்களுக்கு அப்பாற்பட்டவள்..i.e. அதனால் பாதிக்கப்படாதவள்   விஷ்வ = அண்டம் - 256 விஷ்வரூபா = பேரண்ட ரூபமானவள்   ஜாகரித் - விழிப்புடன் - 257 ஜாகரிணீ = விழிப்பு நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவள் - விழித்திருப்பவள் விழிப்பு, கனவு, உறக்க நிலைகள் அதனை தாண்டிய துர்யம் என உணர்வு நிலைகள் நான்காக அறியப்படுகிறது. இந்த நாமாவில் அவள் விழிப்பு நிலையில் விரவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.    ஸ்வபந் = சொப்பனம் - கனவு - 258 ஸ்வபந்தீ = கனவு நிலையிலும் வியாபித்திருப்பவள்   தைஜஸ = ஒளிமயமான - பிரகாசமான- தேஜசுடன் - 259 தைஜசாத்மிகா = கனவு நிலையில் இயங்கும் சூக்ஷும சரீரத்தின் தைஜசமாக தன்னை வெளிப்படுத்துபவள் கனவு நிலையில் ஸ்தூல உடலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, சூக்ஷ்ம வடிவில் மனதின் துணை கொண்டு ஆத்மா ஈடுபட்டிருக்கிறது. தேஜோ மயமாக இருப்பதும், மனவோட்டத்துக்கு கட்டுப்பட்டு உள்முகமாக செயல்படுவது சூக்ஷும உடலின் தன்மை. அன்னை, தைஜச ஆத்மாவாக கனவு நிலையிலும் ஈடுபட்டிருக்கிறாள்.   சுப்த = உறக்கம் - ஆழ் உறக்கம் - 260 சுப்தா = ஆழ்ந்த உறக்க நிலையில் தன்னை இருத்திக்கொள்பவள்   ப்ராக்ஞா = ஞானம் = அறிவு - 261 ப்ராக்ஞாத்மிகா = ஆழ் உறக்க நிலையில் இயங்கும் காரண-சரீரத்தின் ஞானமாக மிளிர்பவள்  ஆழ்-உறக்க நிலையில் காரண சரீரம் இயக்கத்தில் இருக்கிறது. காரண சரீரத்தின் இயல்பு ஞானமயமானது. அறிவுமயமானது. அந்த நிலையில் அம்பிகை  ப்ரக்ஞா  என்றும் ப்ரக்ஞாத்மாவாகவும் அறியப்படுகிறாள்.    துர்ய = துரியம் - நான்காவது - ஒப்பற்று விளங்குதல் - 262 துர்யா = நிகரற்ற துரிய நிலையில் ஊடுருவியிருப்பவள்   சர்வ = எல்லாவற்றிலும் அவஸ்தா = ப்ரக்ஞை / உணர்வு நிலைகள்  விவர்ஜிதா = அதற்கு அப்பால் - அதனால் பாதிக்கப்படாத - 263 சர்வாவஸ்த விவர்ஜிதா = அனைத்து உணர்வு நிலைகளுக்கு அப்பாலும் விளங்குபவள் *** பிரக்ஞை அல்லது உணர்வு நிலைகளைப் பற்றிய சிறு விளக்கம்: மாண்டூக்ய உபநிஷத் நான்கு நிலைகளை குறிப்பிடுகிறது. ஜாக்ரத் எனும் விழிப்பு நிலை, ஸ்வப்னம் என்கின்ற கனவு நிலை, சுஷுப்தியின் ஆழ்-உறக்க நிலை, நான்காவதாக துர்யம் எனும் மூன்றுக்கும் அப்பாற்பட்ட உயர்நிலை.   விழிப்பு நிலையில், நம்மையும் நம்மைச் சுற்றி இயங்கும் உலகை நமது ஸ்தூல உடலைக் கொண்டு வெளிமுகமாக  அறிகிறோம்.   சொப்பன நிலையில், சூக்ஷ்ம சரீரம், தைஜச வடிவில் மனம் மற்றும் எண்ண ஓட்டங்களால் இயங்குகிறது. இது உள்முகமான உணர்தல்.   மூன்றாம் நிலையான ஆழ் உறக்க நிலையில் காரண சரீரம் இயங்குகிறது. சூக்ஷ்ம சரீரம் மற்றும் ஸ்தூல வடிவங்கள் ஆழ்ந்த நித்திரையின் போது இயங்குவதில்லை. காரண சரீரம் ஞானம் / அறிவைக் கொண்டு இயங்குகிறது. இவ்வியக்கம் நமது அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிப்பதால் சாதாரண மனிதனால் பிரக்ஞையை உணரமுடிவதில்லை.   நான்காம் நிலையான துர்யம், பரிபூர்ணத்துவம் வாய்ந்தது. சுத்த சைதன்யமானது. மூன்று நிலைகளைத் தாண்டி அதற்கும் மேலான ஒப்பற்ற நிலையில் வியாபித்திருப்பது. பரமானந்த நிலை என்பது, இருமைகள் நீங்கி ஒருமையெனப்படும் அத்வைத நிலை என்று அறியப்பட வேண்டும். ***   கர்தா = செயல் புரிபவர் - செய்பவர் - 264 சிருஷ்டி கர்த்ரீ = பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.    - 265 பிரம்ம ரூபா = சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவின் உருவானவள்.    - 266 கோப்த்ரீ = சகலத்தையும் ரக்ஷிப்பவள்.    - 267 கோவிந்த ரூபிணீ = பரிபாலிக்கும் திருமாலின் வடிவானவள்.    சம்ஹரண் = அழித்தல் - சிதைத்தல் - 268 சம்ஹரிணீ = சம்ஹாரம் புரிபவள்.    - 269 ருத்ர ரூபா = சம்ஹாரம் செய்ய ருத்ரனின் ரூபமாக எழுபவள்.    திரோதான = மறைதல் - மறைத்தல் - 270 திரோதானகரீ =  அகில புவனங்களையெல்லாம் ஒடுக்கி மறையச் செய்பவள் (மஹாப்பிரளய காலத்தில்)    (பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்) []     (271-295) ஈஸ்வரீ; சதாஷிவா; அனுகிரஹதா; பஞ்ச-க்ருத்ய பராயணா; பானு-மண்டல மத்யஸ்தா; பைரவி; பகமாலினீ; பத்மாசனா; பகவதீ; பத்மநாப சஹோதரீ; உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலீ; சஹஸ்ர ஷீர்ஷ வதனா; சஹஸ்ராக்ஷீ; சஹஸ்ர பாத்; ஆப்ரம்ம கீட ஜனனீ; வர்ணாஷ்ரம விதாயினீ; நிஜாக்ஞா ரூப நிகமா; புண்யா புண்ய ஃபலப்ரதா; ஸ்ருதி சீமந்த சிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூலிகா; சகலாகம சந்தோஹ ஷுக்தி சம்புட மௌக்திகா; புருஷார்த்த ப்ரதா; பூர்ணா; போகினீ; புவனேஸ்வரீ; அம்பிகா; *** - 271 ஈஸ்வரீ = பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவள் (ராணி)    சிவா = அன்பு நிறைந்த - கருணை மிக்க - 272 சதாசிவா = சர்வகாலமும் கருணா-சாகரத்தை பொழிபவள்    - 273 அனுகிரஹதா = சிருஷ்டிக்கெல்லாம் அருள் சொரிபவள்    க்ருத்ய = செயல் பராயண (பெயர்ச் சொல்) = முதலான பொருள் - முழுமை  பராயண (வினைச் சொல்) = ஈடுபாடுடன் கூடிய - 274 பஞ்ச-க்ருத்ய பராயணா = ஐந்தொழில்களின் மூலப்பொருளானவள் - ஐந்தொழில்களை இயக்கும் பூரணி  - 274 பஞ்ச-க்ருத்ய பராயணா = ஐமூலத் தொழில்களில் தன்னை ஈடுபடுத்தியிருப்பவள்  ‘பராயண’ என்ற சொல்லை பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் வேறுபடுத்தி புரிந்து கொள்ளலாம்.  பஞ்ச-க்ருத்யா எனும் ஐம்பணிகள் பிரபஞ்ச தோற்ற இயக்கங்களின் மூலமாகிறது என்று முந்தய நாமங்கள் விவரிக்கின்றன.  அவளே பஞ்ச-பிரம்மங்களாக ஐம்பணிகளை இயக்குகிறாள். அவளே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் என்று வடிவெடுத்து, முறையே படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அனுகிரஹம் புரிகிறாள்.   பானு = சூரியன் மண்டல = கோளப் பாதை - 275 பானுமண்டல மத்யஸ்தா = சூரியக்கிரக சுற்றுப்பாதையின் மையத்தில் மலர்ந்திருப்பவள்*    புவி மண்டலத்தின் ஆதாரமாக செயல்படுபவள் என்றும் உணர்ந்து கொள்ளலாம் - 276 பைரவி = சிவனின் வடிவான பைரவரின் துணைவி   பக = சுபீட்சம், மேன்மை, அழகு, அன்பு, புகழ், உயர்வு போன்ற தன்மைகள் பக = அறுபெரும் பண்புகள் மாலா = மாலை மாலினீ = மாலை அணிந்திருப்பவர் மாலினீ = தேவ மங்கை = அன்னை துர்காதேவி - 277 பக-மாலினீ = பெருஞ்சிறப்புகள் உடையவள் - 277 பகமாலினீ =  கொண்ட சிறப்புகளை மாலையாக அணிந்திருப்பவள்   பத்ம = தாமரை ஆசனா = இருத்தல் - இருக்கை பத்மாசனா = தியானத்தின் பொழுது அமர்ந்திருக்கும் பாங்கு - 278 பத்மாசனா = தாமரை மலரில் வீற்றிருப்பவள்  - 278 பத்மாசனா = பத்மாசனம் எனும் யோக நிலையில் அமர்ந்திருப்பவள்   - 279 பகவதீ = இறைவி - துர்கா தேவி  - 279 பகவதீ = அனைத்து உயர்வுகளையும் தாங்கியிருப்பவள்   நாபி = தொப்புள் பத்மநாப = விஷ்ணு (விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து மலர்ந்த தாமரையில் தோன்றியவர் பிரம்மா என்பது குறிப்பு) - 280 பத்மநாப சஹோதரீ= பத்மநாபனான விஷ்ணுவின் தங்கையாகப்பட்டவள்   உன்மேஷ = திறப்பு நிமிஷ = கண் மூடுதல் - நொடிப் பொழுது  உத்பன்ன = தோன்றுதல் விபன்ன = மறைதல் - அழிவு  புவன = புவனம் - அண்ட சராசரம் ஆவலீ = தொடர் - 281 உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவானவலீ = அவளது விழி சிமிட்டும் நொடிப்பொழுதுகளில் பேரண்டங்களை தோன்றி மறையச் செய்பவள் விழி மலரும் பொழுது இச்சா சக்தியாக அண்டங்கள் தோன்றுவதும், கண்மலர் மூடி தன்னுள் உரையும் பொழுது பிரளயகாலத்தில் புவனங்கள் மறைந்து போவதுமாகிய அசாதாரண செயல்பாடுகளின் காரணகர்த்தா   சஹஸ்ர = ஆயிரம் - ஆயிரமாயிரம் சாஹஸ்ர = கணக்கற்ற ஷீர்ஷ = தலை வதன = முகம் - 282 சஹஸ்ர ஷீர்ஷ வதனா = ஆயிரமாயிரம் சிரங்களையும் முகங்களையும் உடையவள்      அக்ஷீ = கண்கள் - 283 சஹஸ்ராக்ஷீ = கணக்கற்ற கண்களையுடையவள்    பாத் = கால்கள் - பாதம் - 284 சஹஸ்ரபாத் = எண்ணற்ற பாதங்களை உடையவள் அம்பாளின் பரபிரம்ம ஸ்வரூபம் எங்குமாகி பரந்து விரிந்திருக்கிறது என்பதை இந்த நாமங்கள் படிப்பிக்கின்றன. அவளே அண்டசராசரமாக பரந்திருக்கிறாள். அவளே எங்கும் கால்களையும் சிரங்களையும் முகங்களையும் உடையவளாகி  வியாபித்திருக்கிறாள். ****** பகவத்கீதையின் 13 அத்தியாயம் ஸ்லோகம் 14:   சர்வத: பாணி பாதம் தத் சர்வ தோஷி ஷிரோ முகம் | சர்வத: ஷ்ருதி மல்லோகே சர்வமாவ்ருத்ய திஷ்டதி ||   கைகளும், கால்களும், கண்களும், சிரங்களும், முகங்களும், காதுகளுமாக பிரபஞ்சமெங்கும் விரிந்திருக்கிறது என்று பொருள். பரபிரம்மத்தின் இவ்விளக்கமே சஹஸ்ர நாமத்தின் சில நாமங்களாகப்  பார்க்கிறோம். ******   ஆபிரம்ம = பிரம்மாவுடன் சேர்த்து  கீட = பூச்சி - புழு - கிருமி ஜனனீ = தாய் - 285 ஆபிரம்ம கீட ஜனனீ = பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா   வர்ணாஷ்ரம = குல வேற்றுமை (அல்லது) வாழ்வின் நிலைகள்  விதாயினி = ஏற்படுத்தியிருத்தல் - நியமித்தல் - 286 வர்ணாஷ்ரம விதாயினீ = வர்ணாசிரம முறைகளை வகுத்திருப்பவள் ** *** வர்ணம் என்றால் குலம். குலப் பிரிவுகள், தனிமனிதனின் ஆர்வம், திறன், புத்தி, குணம், நாட்டம் முதலியவற்றால் ஏற்படுகிறது. நான்கு பிரிவுகள் தோராயமாக அவரவர் ஆற்றும் கடமைகளை ஒட்டியும், வாழ்கை முறைகளை ஒட்டியும் விவரிக்கப்பட்டுள்ளன. தனி மனிதனை குலத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கு அவரவர் நாட்டம் ஆர்வம், திறன் போன்றவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.   குலப்பிரிவுகள் எந்தவித ஏற்றத் தாழ்வுக்கும் உட்படுத்தப்படுவது இல்லை. எக்குலமும் உயர்குலமே. எக்குலத்தின் பங்களிப்பும் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. அவரவர் தம் கடமைகளை தமது மனவிருப்பப்படியும் தர்மப்படியும் செய்வதொன்றே அத்தியாவசியம்.   பிராம்மணர்கள் என்ற பிரிவில் அடங்குபவர்கள், மெய்ப்பொருளைப் பற்றிய தேடலில் ஈடுபட்டவராகவும் அதற்கான தாகம் கொண்டவராகவும்  இருப்பர். தியானம், பூஜை, பிரார்த்தனை யாகங்கள் முதலியவற்றில்  நாட்டமுடையவராக இருப்பது இயல்பு. பிரபஞ்ச உண்மைகளை உணர்பவர்களாகவும், அதனை தெளிவுற  விரும்பியோருக்கெல்லாம் எடுத்துரைப்பவராகவும் இருப்பவர்கள். உண்மை, எளிமை, அஹிம்சை முதலியவைகளை இவர்கள் குண நலன்களாக பெற்றிருப்பர்.   க்ஷத்திரியர்கள் பிறர் நலனிலும் பொது நலனிலும் அக்கறை கொண்டவர்கள். பிறர் நலனுக்கும், அவர்கள் உரிமைக்கும் போராடும் உன்னத நல விரும்பிகள். தைரியம், பாகுபாடு அற்ற சம-நோக்கு, வலிமை முதலியவை அமையப்பெற்றிருப்பர்.   வைசியர்கள் வியாபாரம், வேளாண்மை, உழவு, நெசவு, கலை முதலியவற்றை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களின் பங்களிப்பின்றி உணவு உற்பத்தி முதல் அன்றாட வாழ்விற்குரிய எதுவும் சாத்தியமில்லை.  திறமை, இலட்சியம், உழைப்பு, நேர்மை முதலியவை அத்தியாவசிய குண நலன்கள்.   சூத்திரர்கள் என்ற பிரிவில் வருபவர்கள்  மக்கள் -சேவையில் ஈடுபட்டவராக  இருப்பர். பிறருக்கு உழைப்பதிலும், பிறருக்காக தம் வாழ்வை அர்ப்பணிக்கும், உயர் குணம் கொண்டவராக இருப்பர். பிறர் துன்பம் தாளாதவராகவும் அவர்கள் துயர் துடைப்பவராகவும் இருப்பது இவர்கள் இயல்பு. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்வர். இவர்களின்  கருணையும், பரோபகாரமும்,  உபசரிப்புமின்றி இவ்வுலகம் அன்பும் அர்ப்பணிப்பும்  இழந்து வாடும் வறண்ட வாழ்வுக்கு  தள்ளப்படும். கருணை, அன்பு,  தன்னலமற்ற சேவை மனப்பான்மை, தியாகம் முதலியவை அடிப்படை குணங்களாக கொண்டவர்கள்.   ஒவ்வொரு மனிதனும் இவ்வத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்றிருப்பான்.  அவனிடம் எக்குணம் அல்லது எதன் ஈடுபாடு அதிகம் என்பதைப் பொருத்தே குலம் வரையறுத்து கூற இயலும். எக்குலமும்  மற்ற குலத்தினின்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஒவ்வொருவரின் பங்களிப்பும் சமூகத்தின் சுமூகமான ஓட்டத்திற்கும் ஊட்டத்திற்கும் இன்றியமையாதது.   வர்ணாசிரமம் என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளை சிந்திக்கலாம். வர்ணாசிரமம் வாழ்கையின் நான்கு நிலைகளைக் குறிக்கும் சொல்.   பிரம்மச்சரியம் =  மாணவன் - கல்வி கற்பவன் - பிரம்மச்சாரி கிருஹஸ்தம் = இல்லம் கொண்டு மண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவன் வானப்ரஸ்தம் =  இல்லற கடமைகளைப் பூர்த்தி செய்து, பற்றின்றி இருத்தல். சன்னியாசம் = அனைத்து விருப்பு வெறுப்பையும் துறந்து, சத்தியத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுதல்.   மனிதப்பிறவி போற்றுதற்குரியது, அதனை நல்வழியில் பயன்படுத்தாமல், நம்மில் சிலர், எந்த பருவத்திலும் சரியாக கடமையாற்றாமல் தோற்றுவிடுகிறோம். நம்மில் பலரோ கடைசி பருவமென்ற  விருப்பு வெறுப்பற்ற  துறவு நிலைக்கு எத்தனிப்பதே இல்லை. அதற்கு முன் மரணம்  நம்மை வரவேற்று வேறு பரிணாமத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. 'வர்ண' என்ற சொல் குலத்தை குறிப்பதாகவும் 'ஆசிரம' என்ற சொல் வாழ்கை நிலைகளை குறிப்பதாகவும் புரிந்துணரலாம்.    *** நிஜ = உள்ளுரையும் - இயல்பான ஆக்ஞா = ஆணைகள் ரூப = ரூபம் கொண்டு நிகமா = வேதங்கள் - வேத சாஸ்திரங்கள் - 287 = நிஜாக்ஞா ரூப நிகமா = தன்னுள் உள்ளுரையும் ஆணைகளையே பிரபஞ்ச வேதத்தின் ரூபமாக்கியவள்.   அபுண்யா = பாபங்கள் ஃபல = பலன்  ப்ரதா = வழங்குதல் - 288 புண்யாபுணய ஃபலப்ரதா = புண்ய பாப கார்யங்களின் பலன்களை பங்கிட்டுக் கொடுப்பவள்.   ஷ்ருதி = வேதம் (வேத வடிவான வேத-மாதா)  சீமந்த = உச்சி வகிடு  சிந்தூர = குங்குமம் க்ருத = பெறப்பட்ட பாதாப்ஜ = தாமரைப் பாதம் தூலிக = தூசி - 289 ஷ்ருதி சீமந்த சிந்தூர க்ருத பாதாப்ஜ தூலிகா = தனது பாதத்தாமரைத் தூசியால் வேதமாதாவின் வகிட்டு சிந்தூரத்தை அலங்கரிப்பவள் * நான்கு வேதங்களை தேவதைகளாக உருவகப்படுத்தி, அவர்கள் அன்னையை தொழுதெழும்போது, அவள் பாதத்தின் தூசி (சிவந்த நிறம்)  சிந்தூரமாக வேத-தேவதைகளின் வகிட்டை அலங்கரிப்பதாக நாமம் உரைக்கிறது.   சகல = முழுவதும் - சர்வமும் ஆகம = வேத சாஸ்திரங்கள் சந்தோஹ = அபரீமிதம் - முழுமை - அனேகம் ஷுக்தி = முத்துச்சிப்பி  சம்புட = உறை - தொகுப்பு மௌக்திக = முத்து - 290 சகலாகம சந்தோஹ ஷுக்தி சம்புட மௌக்திகா = சிப்பியென விளங்கும் ஆகம நியமங்களின் உள்ளுரையும் முத்தாக திகழ்பவள் * ஆகம நியமங்கள் அனைத்தும் முத்தை சுமந்து நிற்கும் சிப்பியைப் போன்றதே. அதனுள் உறையும் பரம்பொருளே சாரமானவள்.  பரம்பொருளை அடைவதற்கான வழிகளே நியம சாஸ்திரங்கள். பக்தியினாலும் ஞானத்தாலும் பரம்பொருளின் அருகாமையை உணர்ந்தவனுக்கு சாஸ்திரங்களும் ஆகம நியமங்களின் முக்கியத்துவமும் அதிக ஈர்ப்புடையதாக இருக்காது.   புருஷார்த்த = மனித இலக்குகள்  ப்ரதா = வழங்குபவள் - 291 புருஷார்த்த ப்ரதா = மனிதக் குறிக்கோளுடன் தொடர்புடைய தேடல்களின் பலா-பலன்களை அருளுபவள் மனிதனின் செயல்கள் நால்வகை நோக்கங்களுடன் அமைகிறது. தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நால்வகைக்குள் அவை அடங்கிவிடுவன.   தர்ம- புண்ய காரியங்களின் ஈடுபடுவது, கொண்ட கடமைகளை ஆற்றுவது  அர்த்த - பொருளீட்டுதல், சொத்து சேர்த்தல் காம - ஆசைகள், அபிலாஷைகள், இன்பத்திற்காக முனைவது மோக்ஷ - வீடுபேறு என்ற இறுதி இலக்கிற்குரிய பயணம் (இவை அனைத்தையும் அருளுபவள். )   - 292 பூர்ணா = முழுமையானவள் (குறைபாடு அற்றவள்) - பூர்ணத்துவம் நிறைந்தவள் *** (பூர்ணத்தைப் பற்றிய வேத மந்திரம்)   ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதஸ்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே  //   அது பூரணமானது-முழுமையானது. இதுவும் பூரணமானது. அதனிலிருந்து இது தோன்றியது.  அதனிலிருந்து இதனை எடுத்தாலும், கழித்தாலும் எஞ்சி இருக்கும் அது, சாஸ்வதப் பூர்ணமாகவே விளங்கும். அது என்பது பிரம்மத்தையும், இது என்பது சிருஷ்டி, பிரபஞ்சம் மற்றும் ஜீவாத்மாவையும் குறிக்கிறது.  *** - 293 போகினீ = துய்ப்பவள் ; அனுபவிப்பவள்; நுகர்பவள் சுகிப்பது என்பது சுகபோகங்களில் திளைப்பது என்றல்லாது, அனைத்து அனுபவங்களிலும் திளைப்பது என்ற பொருளில் வரும். அவள் விளையாட்டை உருவாக்குகிறாள். ஆடுகிறாள். அவளே வெற்றி கொண்டாடுகிறாள். துவண்டு தோற்கிறாள்.  பிரபஞ்ச விளையாட்டில் மூழ்கித் துய்க்கிறாள். அவளே இந்த லீலைகளை அவதானிப்பவளாகவும் இருக்கிறாள்.   - 294 புவனேஸ்வரீ = சகல புவனங்களையும் ஆளுபவள்   - 295 அம்பிகா = பிரப்ஞ்சத் தாயானவள் (பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்) []   (296-320) அனாதி நிதனா; ஹரிப்ரம்மேந்திர சேவிதா; நாராயணீ; நாத ரூபா; நாம ரூப விவர்ஜிதா; ஹ்ரீம்காரீ; ஹ்ரீமதீ; ஹ்ருத்யா; ஹேயோபாதேய வர்ஜிதா; ராஜ ராஜார்ச்சிதா; ராஜ்ஞீ; ரம்யா; ராஜீவ லோசனா; ரஞ்சனீ; ரமணீ; ரஸ்யா; ரணத் கிண்கிணி மேகலா; ரமா; ராகேந்து வதனா; ரதி ரூபா; ரதிப்ரியா; ரக்ஷாகரீ; ராக்ஷஸக்னீ; ராமா; ரமண லம்படா; *** அனாதி = ஆதி இல்லாத நிதனா = இருப்பு - 296 அனாதி நிதனா = ஆதி-அந்தம் இல்லாத சாஸ்வத இருப்பை உடையவள்   - 297 ஹரி ப்ரமேந்திர சேவிதா = ஹரி, பிரம்மா, இந்திரர்களால் தொழுது வணங்கப்படுபவள்   - 298 நாராயணீ = நாராயண அம்சத்தின் பெண்வடிவம் * நர எனும் சொல் மனிதனைக் குறிக்கும்.  ஆயன என்றால் தோன்றுதல் / வருதல் என்றும் பொருள். அவளிலிருந்து புறப்பட்டு வந்த இந்த சிருஷ்டிக்கு அவளே அன்னை. அவள் நாராயணீ.    - 299 நாத ரூபா = ஒலி (நாதம்) வடிவானவள் (பிரபஞ்சத்தின் முதல் ஒலி, ஓம் என்னும் நாதம்) .   நாம = பெயர் / அடையாளம் ரூப = வடிவங்கள் விவர்ஜிதா = அற்ற - இல்லாத - 300  நாம ரூப விவர்ஜிதா = வடிவ அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவள்   - 301 ஹ்ரீம்காரீ = ஹ்ரீம் எனும் மந்திரமானவள் ஹ்ரீம் என்பது பீஜாக்ஷர மந்திரம். பீஜம் என்றால் விதை. பீஜ-அக்ஷரங்கள் ஆன்ம தத்துவத்துடன்  தொடர்புடையது. பீஜாக்ஷர பிரயோகத்தில் மந்திரசக்தி பன்மடங்கு உயர்கிறது. ‘ஓம்’ என்ற பீஜாக்ஷரம் பெரும்பாலும் த்ரிமூர்த்திகளின் மந்திர உச்சாடனத்தில் வரும்.  ‘ஹ்ரீம்’ எனும் பீஜம் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரிக்கு உச்சரிக்கப் படுகிறது.   ஹ்ரீமத் = அடக்கமான  - 302 ஹ்ரீமதீ = அடக்கமானவள்; ஆர்பபாட்டமற்ற சாந்தம் நிறைந்தவள்   - 303 ஹ்ருத்யா = ஹ்ருதயத்தில்(இதயத்தில்) வசிப்பவள் - ஹ்ருதய வாசினி   ஹேய = கழித்தல் - விலக்குதல் உபாத்யேய = தேர்ந்தெடுத்தல் அல்லது அனுமதித்தல் வர்ஜிதா = இல்லாத - 304 ஹேயோபாதேய வர்ஜிதா = எதனையும் தள்ளி விலக்குதற்கும் விரும்பி ஏற்பதற்கும் அப்பாற்ப்பட்டவள் * பிரம்மம் என்ற உயர்ந்த தத்துவமாக ஸ்திரம் கொண்டிருப்பதால் எப்படிப்பட்ட நியதி நியமங்களாலும் கட்டுப்படாதவள். எப்பொருளின் தள்ளலையும் கொள்ளலையும் தாண்டி நிற்ப்பவள். பூர்ணத்தின் இயல்பாக இருப்பதால் அவளை எதுவும் கட்டுப்படுத்துவதில்லை.   - 305 ராஜ ராஜார்ச்சிதா = மஹாராஜனாலும்(பேரரசர்களால்) அர்சிக்கப்படுபவள்; துதிக்கப்படுபவள்   - 306 ராஜ்ஞீ = மஹாராணி (பிரபஞ்சத்தின் பேரரசனான சிவனின் அர்தாங்கினி என்பதாலும் மஹாராணி என்று புரிதல்)   - 307 ரம்யா = அழகு நிறைந்தவள் - வனப்பு மிகுந்தவள்    ராஜீவ = நீலத் தாமரை மலர் - தாமரை மலர் - மான்வகைகளில் ஒன்று - மீன் வகைகளில் ஒன்று - 308 ராஜீவ லோசனா = தாமரை விழியாள் ( மான்விழி - மீன்விழி)   அன்னையின் பேரெழிலைக் குறிக்கும் சொற்களாக நாமங்கள் வருகின்றன. ஒரு சொல்லுக்கே பல பொருள்கள் கற்பிக்கப் படுகின்றன. அவள் எழில் விழியை மான்விழிக்கும் மீன்விழிக்கும் கூட உவமை கொள்ளலாம்.   - 309 ரஞ்சனீ = (ஜீவனை) சந்தோஷத்திற்கு உட்படுத்துபவள் - ஆனந்தப்படுத்துபவள்   - 310 ரமணீ = மகிழ்ச்சியானவள்-இன்பமானவள் ( மகிழ்விப்பவள் - இன்பம் தருபவள் )   ரஸ = சாறு - சாரம் - 311 ரஸ்யா = சாரமானவள் (உயிர்ப்பின் சாரம், ப்ரபஞ்சத்தின் சாரம்)   ரணத் = சப்தமிடும் - ஒலிக்கும் கிண்கிணி = சிறு மணி மேகலா = ஒட்டியாணம் - இடையாபரணம் - 312 ரணத் கிண்கிணி மேகலா = கிண்கிணிக்கும் சிறுமணிகள் கோர்த்த ஒட்டியாணம் அணிபவள்.    - 313 ரமா = ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீலக்ஷ்மியுமானவள்.   ராகா = முழு நிலவு இந்து = நிலவு - 314 ராகேந்து வதனா = முழுமதியைப் போன்ற முகமுடையாள்   - 315 ரதிரூபா = ரதியைப் பொன்ற எழில் கொண்டவள் (மன்மதனின் துணைவி)   - 316 ரதிப்ரியா = ரதியிடம் பிரியமுடையவள். ரதியும் மன்மதனும் ஆசை, அழகு, காதல், காமம் முதலியவற்றின் உருவகங்கள்.  இவர்களின் இயக்கம் பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு வகை செய்கிறது. அம்பிகை, ரதியின் பால் கருணை கொண்டு, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தீக்கிரையான ரதியின் துணைவனான மன்மதனை உயிர்ப்பிக்கச் செய்தாள். தாக்ஷாயணியாக அவதரித்த பொழுது, அம்பிகை ரதியின் சகோதரி, எனவே ரதியின்பால் பிரியம் கொண்டவள் என்று அனுமானிக்கலாம்.   மற்றொரு கோணம்: ஆசை, மாயைக்குக் கட்டுப்படுதல் முதலியவை பிரபஞ்ச துவக்கத்திற்கும் சுழற்சிக்கும் அடிப்படை. அம்பிகையே மாயா ஸ்வரூபிணி, எனவே பிரபஞ்ச சுழற்சிக்கு முதல் காரணமாக அறியப்படுகிறாள். அதற்கு துணை நிற்கும் ரதியின் ரூபமாகவும், அதனை போஷிக்கும் ரதியிடம் பிரியமானவளாகவும் விளக்கப்படுகிறாள்.   ரக்ஷா = பாதுகாப்பு  - 317 ரக்ஷாகரீ = ரக்ஷிப்பவள் - போஷிப்பவள்    ராக்ஷஸ = அரக்கன் - அசுரகுணம் - அசுபம் - கேடு அக்னி = நெருப்பு - 318 ராக்ஷசாக்னீ = அரக்கர்களை / அரக்க குணங்களை அழிப்பவள் (தீயிட்டு பொசுக்குபவள்)   - 319 ராமா = வசீகரிக்கும் நளினம் கொண்டவள்   ரமண = மனதிற்கினிய = காதலி லம்பட = கவர்ச்சி - வசீகரிக்கும் தோற்றம் - 320 ரமண லம்படா = இன்பமூட்டும் அன்பிற்கினியவள் (ஈஸ்வரனின் அன்பிற்குரியவள் )   (பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்) []   (321-340) காம்யா; காமகலா ரூபா; கதம்ப குசுமப்ரியா; கல்யாணீ; ஜகதீ கந்தா; கருணாரஸ சாகரா; கலாவதீ; கலாலாபா; காந்தா; காதம்பரீ-ப்ரியா; வரதா; வாம நயனா; வாருணீ மத விஹ்வலா; விஷ்வாதிகா; வேத வேத்யா; விந்த்யாசல நிவாசினீ; விதாத்ரீ; வேத ஜனனீ; விஷ்ணு மாயா; விலாசினீ; *** - 321 காம்யா = விரும்பத்தக்கவள் சில நாமங்கள் இச்சை, காதல், காமம் முதலியவற்றை குறிப்பிடுகின்றன. இதன்மூலம் பிரபஞ்ச  இயக்கத்தின் மூலக்காரணமான 'இச்சா-சக்தி' யாக லலிதாம்பிகை செயல்படுவது சுட்டிக்காட்டப் படுகிறது.  முடிவில் அவளே 'ஞானசக்தி'யாகி ஆட்கொள்ளும் போது மனதிற்கும் அறிவுக்கும் இனியவளாகி அருள்கிறாள்.   - 322 காமகலா ரூபா = காதல் கலையின் உருவகமானவள் * ஆசை மற்றும் காமங்களின் உருவகம் என்றும் உணரலாம்.  காமம் ஆசை இச்சை முதலியவையே ஜகத்தின் சிருஷ்டிக்கு காரணம். அதனை சூக்ஷ்ம வடிவில் தன் கர்பத்தில் சுமந்திருப்பவள்.   கதம்ப = கதம்ப மரம்  குசும = மலர் - 323 கதம்ப-குசும ப்ரியா = கதம்ப மலர்களை நேசிப்பவள்   கல்யாண = அதிர்ஷ்டம் - நன்மை நிறைந்த - 324 கல்யாணீ = சுபீஷமும் நல்வளமும் நல்கக்கூடியவள்   ஜகத் = உலகம் - உலகங்கள் - பிரபஞ்சம் கந்தா = முடிச்சு = குமிழ்வடிவான வேர் - வேர் - 325 ஜகதீகந்தா = ஜகத்தின் துவக்கத்திற்குக் காரணமானவள்; அதன் படைப்புக்கு வேரானவள்   சாகர = கடல் ரச =  'பாவம்' (bhavam) அல்லது பொருள் நயம் என்று கொள்ள வேண்டும் - 326 கருணாரச சாகர = கருணைக் கடலாக விளங்குபவள்   கலா = கலை வத் = ஒற்றுமை - ஒன்று போல - அதே வகை - 327 கலாவதீ = அனைத்து கலைகளின் சாரமானவள் - அனைத்து கலைகளையும் தன்னகத்தே கோண்டவள்   ஆலாப் = உரை - பேச்சு - 328 கலாலாபா = கலைநயத்துடன் உரையாடுபவள் (மனதுக்கு ரம்யமாக- அலங்காரமாக- இசையாக)    காந்த = வனப்பு நிறைந்த - அழகான - 329 காந்தா = வசீகரமானவள்   காதம்பரீ = கலைவாணி - பெண் தெய்வம் காதம்பரீ = கதம்ப மலர்களிலிருந்து வடிக்கப்பட்ட மது - 330 காதம்பரீப்ரியா = கலைவாணியிடத்து அன்பு கொண்டவள் - கதம்ப மலர்களின் மதுவை விரும்புபவள் * இந்நாமம் கலைவாணியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். முந்தைய நாமங்கள் கலைகளைப் பற்றியும், கலைவடிவாக அன்னையே விளங்குவதாகவும் குறிப்பிடுவதால், கலைகளின் பிரதிநிதி, ஞானம், இசை, வாக்கு மேலும் அனைத்து கலா-வடிவங்களாகவும் திகழும் சரஸ்வதியிடத்தில் அன்பு கொண்டவள் என்று அர்த்தம் உணர்ந்து கொள்ளலாம்.   வரத = ஆசி வழங்குதல் - பிரார்த்தனைக்கு செவி சாய்த்தல் - 331 வரதா = வரமருள்பவள்   வாம = அற்புதமான - 332 வாம நயனா = எழில் விழியாள்   வாருணீ - ஒரு வகை மது (அமிர்தம்) விஹ்வலா = உணர்ச்சி வேகத்துக்கு உட்பட்டு - பரவசம் மத = தன்னிலை மறந்த உற்சாகம் - 333 வாருணீ மத விஹ்வலா = வாருணீ என்ற அமிர்தத்தினால் தன்னிலை மறந்த உற்சாகத்திற்கு உட்படுபவள் * பேரானந்தம் என்ற அமிர்த நிலையைக் குறிப்பிட்டு, அதனால் வரும் பரவச நிலை உணர்த்தப்படுகிறது. பரவசமும் பேரானந்தமும் உணர்ச்சிக்கு உட்பட்டது. அந்நிலையின் உணர்ச்சி மிகுதியினால் பெருகும் உற்சாகம் பேசப்பட்டுள்ளது. ஞானத்தின் படிக்கட்டுகளில், உணர்ச்சி மிகுதியாலும் அன்பின் பெருக்கினாலும் ஏற்பட்டுப் பெருகும் உவகை, ஒரு கட்டத்தில் பேரமைதியில் நிலைக்கிறது.  பேரமைதியில் நிலைக்கும் அந்த நிலையே ஆனந்தமும் அமைதியும் கலந்த ‘வீடுபெறு நிலை’ என்பது புரிதல்.   விஷ்வ = ஜகம் - ஜகத் - உலகம் - பிரபஞ்சம்  அதிக் = அதை விட - அதிகமாக - மேம்பட்ட - அசாதாரணமான - 334 விஷ்வாதிகா = ஜகத்திற்கு அப்பாற்பட்டவள் - (அறிவுக்கு புலப்படாதவள் - புலனுக்கெட்டாதவள்)    வேத்யா = அறியப்படுவது - அறிவினால் உணரப்படும் பொருள்  வேத = மெய்ப்பொருள் - மெய்யறிவு - 335 வேத வேத்யா = வேதத்தினால் உணரப்படுபவள் * வேதம் என்பது மெய்யறிவைக் குறிக்கும். மெய்ப்பொருளை உணர்ந்து உய்வதை உணர்த்துகிறது. இப்பயணம் கர்மம், பக்தி, ஞானம் போன்ற எவ்வழியிலும் உணரப்படலாம்.   அசல = மலை - 336 விந்தியாசல நிவாசினீ = விந்திய மலைத்தொடர்களில் வாசம் செய்பவள்   விதாத்ரீ = தாய் – சிருஷ்டிப்பவள் - 337 விதாத்ரீ = அன்னை (பிரபஞ்சத்தை சிருஷ்டித்து பரிபாலிக்கும் மஹாமாதா)   ஜனனீ = பிறப்பிக்க செய்பவள் - மாதா - 338 வேத ஜனனீ = வேதத்தை சிருஷ்டித்தவள்   மாயா = மாயை - 339 விஷ்ணு மாயா = விஷ்ணுவின் மாயா சக்தியாக விளங்குபவள். மஹாவிஷ்ணு பிரபஞ்சத்தை பரிபாலிப்பவர், அதில் லலிதாம்பிகையே மஹாமாயையாக உட்புகுந்து பிரபஞ்ச செயல்பாட்டுக்குத் துணைபுரிகிறாள்.   விலாஸ் = விளையாட்டு - 340 விலாசினி = விளையாட்டில் ஈடுபடுபவள் - கேளிக்கைகளில் களிப்பவள் (சிருஷ்டியுடனான கேளிக்கை) மாயத் திரையிட்டு பிரபஞ்சத்தை ஊடுருவி, மெய்யறிவை ஜீவாத்மாக்களிடமிருந்து மறைத்து, கண்ணாமூச்சி ஆடுவதையே அம்பிகையின் கேளிக்கை என்று குறிப்பதாகக் கொள்ளலாம்.                                               12. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம் (இனி க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபத்தை விளக்கும் நாமங்கள் தொடரும்) []   (341-365) க்ஷேத்ர ஸ்வரூபா'; க்ஷேத்ரேஸி; க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ; க்ஷய விருத்தி நிர்முக்தா; க்ஷேத்ர பால சமர்ச்சிதா; விஜயா; விமலா; வந்த்யா; வந்தாரு-ஜன வத்ஸலா; வாக்வாதினீ; வாமகேசி; வஹ்னி மண்டல வாசினீ; பக்திமத் கல்ப-லதிகா; பஷுபாஷ விமோசனீ; சம்ஹ்ருதா ஷேஷ பாஷாண்டா; சதாசார ப்ரவர்த்திகா; தாபத்ரயாக்னி சந்தப்த சமாஹ்லாதன சந்திரிகா; தருணீ; தாபஸ-ஆராத்யா; தனுமத்யா; தமோபஹா; சிதி: தத்பத லக்ஷ்யார்த்தா; சிதேக ரச ரூபிணீ; ஸ்வாத்மானந்தால வீபூத ப்ரமாத்யானந்த சந்ததீ; *** க்ஷேத்ர = உடல் - தேகம் - சரீரம் ஸ்வரூப = வடிவம் - ரூபம் - 341 க்ஷேத்ர ஸ்வரூபா = ரூப-வடிவாகவும் தன்னை வெளிப்படுத்துபவள் உடல் என்பது சூக்ஷும / ஸ்தூல / காரண சரீரங்களைக் குறிக்கும்   ஈஷா = இறைவன் - எஜமானன்- ஆள்பவன் ஈஷி(த்வா) = ஆளுமை- இறைவி - தலைவி - இறையாண்மை க்ஷேத்ரேஷா = சிவன் - 342 க்ஷேத்ரேஷி = அனைத்து ரூப-வடிவ காரணிகளை (அதன் தத்துவங்களை) ஆளுபவள்  - 342 க்ஷேத்ரேஷி =  க்ஷேத்ரேஷனாக விளங்கும் சிவனின் துணைவி   க்ஷேத்ரக்ஞா = அறிவு - அறிபவன் - ஜீவன் - ஆத்மா - 343 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினி = ரூப நாம வடிவங்களாகவும், அதன் அறிவாகவும் - அறிபவனாகவும் விளங்கும் அனைத்தையும் பரிபாலிப்பவள்   க்ஷய = தேய்கின்ற = தாழ்ச்சி  விருத்தி = வளர்கின்ற = வளர்ச்சி = பெருக்கம் நிர்முக்தா = விடுபடுதல் - 344 க்ஷய விருத்தி நிர்முக்தா = உயர்வு வீழ்வுக்கு அப்பாற்பட்டுத் திகழ்பவள்   பாலன = பரிபாலனம் - பராமரிப்பு சமர்ச்சித = போற்றுதல் - அலங்கரித்து வழிபடுதல் - கௌரவித்தல் க்ஷேத்ரபால = சிவனின் குழந்தை வடிவம் - 345 க்ஷேத்ரபால சமர்ச்சிதா = ஜீவாத்மாக்களால் அர்ச்சிக்கப்படுபவள் (க்ஷேத்ரம் என்ற ரூப நாமத்தை பராமரிக்கும் ஜீவன்)  - 345 க்ஷேத்ரபால சமர்ச்சிதா = தேவதைகளால் ஸ்துதி செய்யப்படுபவள் ( ரூப நாம வடிவங்களை தாங்கும் ஜீவனை பரிபாலித்து காக்கும் தேவதைகள்)  - 345 க்ஷேத்ரபால சமர்ச்சிதா = ஈசனால் போற்றப்படுபவள் *அவரவர் புரிதலின் கோணத்திற்கு ஏற்ப பொருள் உணரப்படும்   விஜய = வெற்றி - 346 விஜயா = அனைத்திலும்-அனைத்தையும் வெற்றி கொள்பவள்.   விமல = சுத்தம் – களங்கமில்லாத - 347 விமலா = அப்பழுக்கற்ற பரிசுத்த வடிவானவள்; தூய்மையின் சாரமானவள்  (களங்கம் என்று கற்பிக்கப்பட்ட  இருமைத்தன்மை, மாயை, அறியாமை முதலியவற்றிலிருந்து விடுபட்டவள்.)   வந்த்ய = வணக்கத்துக்குரிய - துதிக்கத்தகுந்த - புகழ்மிக்க  - 348 வந்த்யா = போற்றி தொழுவதற்குரியவள்   வந்தாரு = மதிப்பளிக்கும் – புகழ்பாடும் ஜன = பிரஜைகள் - மக்கள் வத்ஸலா = வாத்ஸல்யம் - அன்பு - கனிவு - பாசம் (தாயன்பு) - 349 வந்தாரு-ஜன வத்ஸலா = பக்தர்களின் பால் தாய்மையின் கனிவை பொழிபவள் ‘வந்தாரு-ஜன’ எனும் சொல்  பக்தர்களைக் குறிக்கிறது.  அன்னையை தொழுதேத்தும் பக்தர்கள். அத்தகைய பக்தர்களே அவளுக்குப் பிள்ளைகள்.  தாய் சேயிடம் கொண்ட கருணையை, அன்பை பக்தர்களிடத்தில் பொழிபவள் .     வாக் = (கங்கை என்னும் சொல்லில் வரும் "க" உச்சரிப்பு.  பொதுவாக இப்பதம் இதன் இணைச்சொற்களோடு இணைந்த கூட்டு சொல்லாக பயன்படுத்தபடுகிறது. ) வாத = பேசும் - உரைக்கும் - சொல்லாடல் - 350 வாக்வாதினீ = சொல் அல்லது வாக்கின் ஆதாரமாகத் திகழ்பவள் (அவற்றின் மூல காரணம்  )   வாம = அழகிய - எழில் நிறைந்த கேஷ = கேசம் - 351 வாமகேஷி = வனப்பான கேசத்தையுடையவள்   வஹ்னி = நெருப்பு மண்டல = கோள வீதி - பிரந்தியம் - பகுதி வாசினீ = வாசம் செய்பவள் - 352 வஹ்னி-மண்டல வாசினீ = மூலாதாரத்தில் நிலைகொண்டிருப்பவள் (குண்டலினியாக மூலாதாரத்தில் நிலைத்திருப்பவள்)    பக்திமத் = பக்தர்கள் கல்ப = எண்ணம் / நோக்கு / சிந்தனை லதிகா = இளம் கொடி கல்ப-லதிகா = இச்சைகளை பூர்த்தி செய்யும் / வரமருளும் தெய்வீகக் கொடி - 353 பக்திமத் கல்ப-லதிகா = பக்தர்களுக்கு இச்சா பூர்த்தி அனுக்ரஹிக்கும் கல்பலதிகக் கொடியானவள்   பஷுபாஷ = லௌகீக விஷயார்த்தங்களின் ஈடுபாடு ; பந்தபாசங்கள் விமோசன = விடிவு, விடுதலை - 354 பஷுபாஷ விமோசனீ = அஞ்ஞானத்தினால் விளையும் தளைகளிலிருந்து முக்தியருள்பவள்   சம்ஹ்ருதா = அழித்தல் - அழிவு ஷேஷ = மிகுதி – எஞ்சியது பாஷாண்ட = தவறான கோட்பாடுகள் உடையோர் -heretic - 355 சம்ஹ்ருதா ஷேஷ பாஷாண்டா = தவறியோரை தண்டிப்பவள் * பாஷாண்டா எனும் சொல்லுக்கு பொதுவாக, ‘இறைமறுப்பாளர்கள்’ என்று அர்த்தம் கற்பிக்கலாம். இவ்விடத்தில் 'heretic' என்ற சொல்லுக்கு, "அற நூல்கள் கூறும் நல்லவைகளில் நம்பிக்கை அற்றவர்" அல்லது அதை பின்பற்றாதவர் என்று பொருள் கொள்வது சிறப்பு.  நற்சிந்தனை  அல்லதவர். நற்செயல்  புரியாதவர் என்று புரிதல்.    சத = சத்துவம் - சத்தியம் - உண்மை ஆசார = ஒழுக்கம் - நன்னடத்தை ப்ரவர்திக = காரணமாதல் - ஊக்குவித்தல் - 356 சதாசார ப்ரவர்த்திகா = நல்லொழுக்க சிந்தனைகளுக்கு காரணமாகி அதனைத் தூண்டுபவள்   தாப = வலி (மனம் அல்லது உடல் சார்ந்த உபாதை) - துன்பம் த்ரயாக்னி = மூன்று வகை அக்னி (த்ரய = மூன்று) சந்தப்த = அவதியுற்ற - துயருற்ற சம = இணை - சமமான ஆஹ்லாதன = திருப்தியுறச்செய்தல் - மகிழ்வூட்டல் சந்திரிகா = நிலவொளி - 357 தாபத்ரயாக்னி சந்தப்த சமாஹ்லாதன சந்திரிகா = முப்பெரும் அக்னியால் அல்லலுறுவோருக்கு நிலவொளியின் குளுர்ச்சியைப் போல் ஆறுதலளிப்பவள் * மூன்று வகை தாபங்கள் என்பன: ஆதிபௌதிக: இயற்கை சீற்றத்தாலும், பிற உயிர்களாலும் நேரும் இன்னல்கள்  ஆதியாத்மிக:   மனம் மற்றும் உடல் உபாதைகளால் விளையும் இன்னல்கள்  ஆதிதைவிக: நுண் சக்தி / சூக்ஷ்ம சக்தியால் விளையும் இன்னல்கள்    - 358 தருணீ = சாஸ்வத இளமைப் பொலிவை உடையவள்   தாபஸ் = தபஸ்விகள் ஆராத்யா = ஆராதிக்கப்படுபவள் - 359 தாபஸாராத்யா = தபஸ்விகளால் ஆராதிக்கப்படுபவள்   தனு = மெலிந்த மத்ய = நடுபாகம் - இடை 360 தனுமத்யா = மெல்லிடையாள்    தாம = தாமஸம் - இருள் - அறியாமை தமோபஹா = இருள் நீக்குதல் - 361 தமோபஹா =  அறியாமை எனும் இருளை போக்குபவள்   சித் = எண்ணம் - சிந்தனை - அறிவு - ஆத்மா - 362 சிதி: = அறிவாகிய ஆத்ம-வடிவானவள்   தத் = அது ie பிரம்மம் - மெய்ப்பொருள் பத = சொல் - பிரயோகம் - கருத்து லக்ஷ்யார்த்த = அதன் மறைபொருளாகுதல் - 363 தத்பத லக்ஷ்யார்த்த = மெய்ப்பொருளானவள் (தத் என்னும் சொல்லின் மறைபொருள் ie அவளே மெய்ப்பொருள்)   சித் = அறிவு - ஆன்மா - எண்ணம் ஏகரஸ = ஒருமுனைப்பாடு - ஒருமுக சிந்தனை அல்லது ஈடுபாடு சிதேகரஸ = அறிவின் ஒருமுனைப்பாடு ரூபிணி = அதன் ரூபம் - 364 சிதேகரஸ ரூபிணி = சுத்த சைதன்ய (சுத்த அறிவு) வடிவாகியவள்   ஸ்வாத்மா-ஆனந்த = ‘சுயம்’ எனும் ஆன்மவின் பேரின்ப நிலை ஆல = மிகுதியாக – அற்புதமாக (அல்லது) லவ = ஒரு துளி – சிறிய விபூத = சிறந்து விளங்குதல் பிரம்மாத்யா = பிரம்மாவில் துவங்கி (படைப்பு கடவுள் பிரம்மா) ஆனந்த = மகிழ்ச்சி சந்ததி = படைப்பின் படி நிலை சந்ததி (பிரம்மா முதலான அனைத்து படைக்கப்பட்ட ஜீவராசிகளும்) - 365 ஸ்வாத்மானந்தால விபூத பிரம்மாத்மானந்த சந்ததி = பிரம்மாமுதல் படைப்பின் அனைத்து ஜீவராசிகளின் ஆனந்த நிலையைக் காட்டிலும் உயர்ந்த பரமானந்த நிலையில் வீற்றிருப்பவள் (அல்லது) 365 ஸ் வா த்மா ன ந் தா லவி பூ த பிரம்மா த்மா னந் த ச ந் த தி = அவளது பேரானந்தத்தின் ஒரு துளியே, பிரம்மாமுதல் படைப்பின் அனைத்து ஜீவராசிகளின் ஆனந்த நிலையைக் காட்டிலும் உயர்ந்தது                                          13. பீடங்களும் அங்க தேவதைகளும் (க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம் நிறைவு) []   (366-390) பரா; ப்ரத்யக்-சிதீ ரூபா; பஷ்யந்தீ; பரதேவதா; மத்யமா; வைகரி ரூபா; பக்த மானஸ ஹம்ஸிகா; காமேஷ்வர ப்ராண நாடீ; க்ருதக்ஞா; காம பூஜிதா; ஷருங்கார ரச ஸம்பூர்ணா; ஜயா; ஜலந்தர ஸ்திதா; ஒட்யாண பீட நிலயா; பிந்துமண்டல வாசினீ; ரஹாயாகக்ரம ஆராத்யா; ரஹஸ் தர்பித தர்பிதா; சாத்ய ப்ரசாதினீ; விஷ்வ சாக்ஷிணீ; சாக்ஷி வர்ஜிதா; ஷடங்க-தேவதா யுக்தா; ஷாட்குண்ய பரிபூரிதா; நித்யக்லின்னா; நிரூபமா; நிர்வாணசுக தாயினீ; ***   பரா = அதி உன்னத நிலை பரம = அதி உயர்ந்த பரா = நாமரூபமற்ற அரூப முதன்மை நிலை (ஸ்வாதிஷ்டானத்தில் உறைந்திருக்கும் சப்தத்தின் முதல் நிலை) - 366 பரா = ஒப்புயர்வற்றவள்    ப்ரத்யக் = எதிர் திசையில் ப்ரத்யக்சேதன = எண்ணங்கள் உள்முகமாகத் திருப்புதல் சித் = அறிவு - ஆன்மா - 367 ப்ரத்யக்சிதீ ரூபா = உள்முகமாக்கிய பிரக்ஞையின் ரூபமானவள்   - 368 பஷ்யந்தி = சப்த மாற்றத்தின் இரண்டாம் நிலையை குறிப்பவள் * முதல் நிலையில் பரா என்ற அரூபத்தில் உறையும் சப்தமானது, இரண்டாம் நிலையில் பஷ்யந்தியாக உரு கொள்கிறது    பரா = உன்னதமான தேவதா = கடவுள் - 369 பரதேவதா = அனைத்து தேவதா ரூபங்களைக் காட்டிலும் உன்னதமான உயர் நிலையில் கொலுவிருப்பவள் (ஆதிபராசக்தி )   மத்யமா = நடு - மத்தியம் - 370 மத்யமா = சப்த மாற்றத்தின் நடுநிலையை குறிப்பவள் i.e அரூபத்திற்கும் வார்த்தைக்கும் இடைபட்ட நிலையையும் குறிப்பவள் *இரண்டாம் நிலையான பஷ்யந்தி மற்றும் நான்காம் நிலையான சப்தம் வெளிப்படும் நிலைக்கும் நடுவில் மூன்றாம் நிலையில் மத்யமா என்று அவளை அடையாளப்படுத்துகிறாள்.    வைகரி = உச்சரித்தல் - சப்தம் - வார்த்தை - 371 வைகரி ரூபா = சப்த வடிவானவள் - வார்த்தையாக வெளிப்படுபவள் (இறுதி நிலையில் சப்தமாக தன்னை வெளிப்படுத்துகிறாள்)   ஹம்ஸிகா / ஹன்சிகா = அன்னப்பறவை மானஸ = மனதுள் - மனம் சார்ந்த - 372 பக்த மானஸ ஹம்ஸிகா = பக்தர்களின் மனதுள் அன்னப்பறவையைப் போல் வாசம் செய்பபவள் * அன்னப்பறவை புனிதத்துவத்தை உணர்த்தப் பயன்படுகிறது. எவ்வாறு அன்னமானது தேவையானதை மட்டும் பகுத்தெடுத்துக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாள் தனது பக்தர்களின் சிந்தனை செயல்பாடுகளில் நல்லனவற்றை எடுத்து அல்லாதவற்றை ஒதுக்கி ரக்ஷிக்கக்கூடியவள்     நாடி = துடிப்பு - சுவாசம் - 373 காமேஷ்வர ப்ராண நாடி = ஈசனான காமேஸ்வரனின் ஜீவநாடியாக (உயிர்மூச்சாக) விளங்குபவள்   க்ருத = பெறுதல் - கிடைக்கப்பெற்ற ஞா = அறிவு - 374 க்ருதக்ஞா = அனைத்து நிகழ்வுகளையும் அறிந்தவள் - அவற்றை கடந்து நிற்பவள்*   - 375 காம பூஜிதா = காமதேவனால் பூஜிக்கப்படுபவள்    - 376 ஷ்ருங்கார ரஸ சம்பூர்ணா = சிருங்கார வெளிப்பாடுகளின் சாரமானவள். *ஷ்ருங்கார என்பதற்கு ‘அலங்காரத்துடன் கூடிய வனப்பு’ என்று பொருள் கொண்டு, ‘பேரழகின் சாரம்’ என்பதும் பொருந்தும் .    ஜய = வெற்றி - 377 ஜயா = வெற்றி வடிவானவள்.   ஜாலந்தர = அனாஹத சக்கரத்தை குறிக்கிறது (சமயாசாரம் / தாந்திரீக / சக்கர வழிபாட்டு முறை) - 378 ஜாலந்தர ஸ்திதா = ஜாலந்தர பீடத்தில் ஸ்திரமாகியிருப்பவள் (அனாஹதத்தில் வீற்றிருப்பவள் )   ஓட்யாண பீட = ஆக்ஞா சக்கரம், (சமயாசார/ தாந்திரீக / சக்கர வழிபாட்டு முறை) - 379 ஓட்யாண பீட நிலயா = ஓட்யாண பீடத்தில் நிலைகொண்டிருப்பவள் (ஆக்ஞா சக்கரத்தில் நிலைகொண்டவள்)   பிந்துமண்டல = ஸ்ரீ சக்கரத்தின் மத்தியிலுள்ள பீடம் - 380 பிந்துமண்டல வாசினீ = ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் உறைபவள்   ரஹோ(பாவம்) = ரஹஸ்யம் யாக = யாகம் - அர்ப்பணிப்பு ரஹோயாக = ரகசிய யாகமுறை க்ரம = முறை அல்லது கோட்பாடு ஆராத்யா = ஆராதனை - 381 ரஹோயாகக்ரம ஆராத்யா = அகமுகமான யாகங்களினால் முறைப்படி அடையப்படுபவள் (சூக்ஷ்ம வழிபாடு)* அகமுகமான / உட்புற வழிபாடு மற்றும் யாகங்கள், புறவடிவானவை அல்ல என்பது புரிதல்.   ரஹஸ் = ரகசிய (உட்புற) தர்பண = எரிபொருள் / ஆகாரம் / பலி தர்பிதா = திருப்தியடைதல் - 382 ரஹஸ் தர்பண தர்பிதா = அகமுகமாக செய்யப்படும் சடங்குகளில் சந்தோஷிப்பவள்.  அகமுகமாக அல்லது உட்புற சடங்குகளில், மனக் கட்டுப்பாட்டை தமக்குள் விதைத்து, அவரவர் ஆசைகளை . அபிலாஷைகளை ஆன்ம சுத்தீகரிப்பின்  பொருட்டு பலியிட்டு தேடலின் உட்பொருளை நெருங்குதல் என்பதே மறைபொருள்.   சாத்ய = அக்கணத்தில் / விரைவாக / உடன் ப்ரசாதினீ = சலுகை / வரம் / உதவி - 383 சாத்ய ப்ரசாதினீ = நொடிப்பொழுதில் திருப்தியுறுபவள் ( வரமருள்பவள்)    விஷ்வ = புவனம் சாக்ஷி = சாக்ஷி - 384 விஷ்வ சாக்ஷிணீ = பிரபஞ்சத்தின் சாக்ஷியாக விளங்குபவள் (படைப்பு) *  அவள் ஒருவளே சாக்ஷி. மற்றெல்லோரும் அவரவர் பக்குவத்தின் படி படைப்பின் அங்கமாக விளங்குபவர்கள். பங்கேற்பவர்கள். அவள் தனது படைப்பை தானே எட்ட நின்றும், ஒட்டி நின்றும், வெறும் சாக்ஷியாக மட்டும் பார்க்கிறாள்.    வர்ஜிதா - இல்லாமல் - 385 சாக்ஷிவர்ஜிதா = சாக்ஷி அற்றவள் - சாக்ஷிக்கு அப்பாற்பட்டவள் * பரம்பிரம்மமான அவள் இயக்கமும், இருப்பும், இன்னொரு வஸ்து இல்லாததால், சாக்ஷி ஏதுமின்றியும்; எல்லையற்ற அவள் இருப்பு விளங்குதலுக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது.      ஷட் - அங்க (ஷடங்க) = ஆறு அங்கங்கள் உடைய (ஷட் என்றால் ஆறு) யுக்தா = இணைக்கப்பட்ட - ஒருங்கிணந்த – நிரப்பப்பட்ட - 386 ஷடங்க-தேவதா யுக்தா = ஷடங்க தேவதைகள் என்னும் ஆறு தேவதைகளால் உபசரிக்கப்படுபவள்  (மந்த்ர தேவதைகள்) * மந்திரங்கள் ஆறு பகுதிகளைக் கொண்டது. அவை ஆறு தேவதா ஸ்வரூபமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன. இந்த அதிதேவதைகள், இதயம், கேசம், சிரசு, கண்கள், கவசம் மற்றும் ஆயுதம் என்ற ஆறு அங்கங்களை ஆள்பவர்கள்.  அம்பிகை இத்தேவதைகளின் ஒருங்கிணைந்த உருவகமாகவும் அவர்களின் உபசரிப்புக்கு ஆட்படுபவள் என்று பொருள் கொள்ளலாம்.    ஷாட்குண (ஷட் - குண) = ஆறு குணங்கள் பரிபூரிதா = நிரப்பப்பட்ட - உடைய - 387 ஷாட்குண்ய பரிபூரிதா = ஆறு மகத்துவம் வாய்ந்த குணங்கள் அமையப்பெற்றவள்.   (வளம், செல்வம், வல்லமை, புகழ், மெய்ஞானம், துறவு)     நித்ய = அன்றாடம் - நிரந்தரம் க்லின்னா = காருண்யம் - ஈரம் - 388 நித்யக்லின்னா = நித்திய கருணாசாகரமாக கடாட்சிப்பவள் ( நாடி வரும் அன்பர்களுக்கு)    - 389 நிரூபமா = ஈடுஇணையற்றவள் - ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவள்   நிர்வாண = வீடுபேறு சுக = நிறைவு - மகிழ்ச்சி - 390 நிர்வாணசுக தாயினீ = பேரின்பமான வீடுபேற்றை அருளுபவள் (பீடங்களும் அங்க தேவதைகளும்) []   (391-410) நித்ய ஷோடஷிகா ரூபா; ஸ்ரீகண்டார்த்த சரீரிணீ; ப்ரபாவதீ; ப்ரபா ரூபா; ப்ரசித்தா; பரமேஷ்வரீ; மூல ப்ரக்ருதி; அவ்யக்தா; வ்யக்தா அவ்கய்த ஸ்வரூபிணீ; வியாபினீ; விவிதாகாரா; வித்யா அவித்யா ஸ்வரூபிணீ; மஹா காமேஷ நயன குமுதஹ்லாத கௌமுதி; பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி:; ஷிவதூதி;   ஷிவாராத்யா;   ஷிவமூர்த்தி: ஷிவங்கரீ; ஷிவப்ரியா; ஷிவபரா; *** ஷோடஷீ = பதினாறு - பதினாறு அம்சம் அல்லது பதினாறு அங்கங்கள்  உடைய - 391 நித்ய ஷோடஷிகா ரூபா = பதினாறு வயது சிறுமியின் வடிவானவள் * பதினாறு வகை ஆசைகளைக் குறிக்கும் வகையில் அன்னை, பதினாறு வயது  சிறுமியின் வடிவம் தாங்கியிருக்கிறாள் .   - பதினைந்து சந்திரக் கலைகளின் திதி தேவதைகளையும், பதினாறாவதான தேவதையாக அம்பாளே அனுகிரஹிக்கிறாள் என்பது மற்றோரு கோணம். (நித்திய தேவிகளைப் பற்றி  முன்பே 72-75 நாமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) நித்திய தேவதைகள், பஞ்சதசாக்ஷரி மந்திர வடிவங்களாகின்றனர்.  பதினாறாவது அசையாக(மாத்திரை) அம்பாள் லலிதா திரிபுரசுந்தரி பூர்த்தி  செய்வதால் ஷோடஷீ மஹா மந்திரமாகிறது. லலிதாவிற்கு ஷோடஷீ  என்ற பெயரும் உண்டு.    ஷ்ரீகண்ட் = சிவன் (சிவனின் தொண்டை - கண்டம் - கழுத்து)  அர்த்த = பாதி ஷரீர = உடல் - 392 ஷ்ரீகண்ட-அர்த்த ஷரீரிணீ = அர்த்தாங்கினியாக விளங்குபவள் i.e. சிவனின் அங்கத்தில் ஒரு பாதியைக் கொண்டவள் ie (ஷிரீகண்ட் எனப்படும் சிவனார் இங்கு அர்த்தாரீஸ்வரராக உருவகப்படுகிறார்)   ப்ரபாவத் = பிரகாசம் - சக்திவாய்ந்த - 393 ப்ரபாவதீ = பேராற்றலுடன் பிரகாசிப்பவள் * அஷ்டமாசித்திகளுக்கு பிரபா என்று பெயர். அன்னை அஷ்ட சித்திகளால் சூழப்படுகிறாள். பிரபாக்களால் சூழப்படுவதால் பிரபாவதீ என்றும் புரிதல். Thanks and Credit : https://www.manblunder.com    ப்ரபா = ஒளி - 394 ப்ரபா ரூபா = ஒளிவெள்ளமாக ஜ்வலிப்பவள்   ப்ரசித்தி = பிரபலம் = புகழ்மிகுந்த - 395 ப்ரசித்தா = வெகுவாக கொண்டாடப்படுபவள்   பரம = உயர்ந்த ஈஷ்வர் = ஈஸ்வரன் - எஜமானன் - 396 பரமேஷ்வரீ = ஒப்புயர்வற்ற பேரரசி - பெருந்தேவி   மூல = ஆதாரம் = வேர்  ப்ரகிருதி = மூல வஸ்து - ஆதி நிலை - 397 மூலப்ரக்ருதி = பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள் ; தோற்ற-நிலையின் சாரம்.   - 398 அவ்யக்தா = விளங்குதலுக்கு அப்பாற்பட்டவள்; புலன்களுக்கு எட்டா நிலையில்   இருப்பவள்.   வயக்த = புரிதலுக்கு உட்பட்டு = தெளிவான - 399 வ்யக்தா அவ்யக்த ஸ்வரூபிணீ = புரிதலுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டுமுள்ள அனைத்துமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்பவள்.   வியாபின் = பரந்த- விரிந்த - 400 வியாபினீ = அனைத்திலும் வியாபித்திருப்பவள்; எங்கும் நிறைந்தவள்.   விவித = பல விதமான  ஆகார = உருவம் - 401 விவிதாகாரா = பல்வேறு தோற்ற-நிலைகளை,வடிவங்களை, தாங்கியிருப்பவள்   அவித்யா = அறியாமை - 402 வித்யா அவித்யா ஸ்வரூபிணீ = அறிவாகவும் அறியாமையாகவும், எதிலும், எந்நிலையிலும் நிறைந்திருப்பவள். விழிப்புநிலை-உறக்கநிலை, உணர்வுநிலை–மயக்கநிலை என எல்லா நிலைகளின் செயல்பாட்டிலும் அம்பாளே மறைபொருளாக விளங்குகிறாள் என்ற புரிதலுக்கும் இடமுண்டு.    குமுத = சிவப்புத் தாமரை - அல்லி ஆஹ்லாத = ஆனந்தமளித்து  கௌமுதி = நிலவொளி நயன = கண்கள்  மஹா காமேஷ = சிவன் - 403 மஹா காமேஷ நயன குமுதஹ்லாத கௌமுதி = மதியொளியைப் போன்ற தனது இருப்பினால் மகிழ்வூட்டி, சிவனின் தாமரையொத்த கண்களை மலரச்செய்பவள்    ஹார்த = அன்பு - பிரியம் தம / தமஸ் = தமோ குணம் பேத = வித்தியாசம் - பேதம் பானுமத் = சூரியன் - பிரகாசம் சந்ததி: = சர வரிசைத் தொடர் - சூரியக்கதிர் - 404 பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி: ; = பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள்   தூத் = தூதன் - தூது செல்பவன் - 405 ஷிவதூதி = சிவனை தன் பிரதிநிதியாக்கியவள்   - 406 ஷிவ-ஆராத்யா = சிவனால் வணங்கி ஆராதிக்கப்படுபவள்   - 407  ஷிவமூர்த்தி = சிவஸ்வரூபமானவள்   கர = வழங்குதல் - அளித்தல் - செய்தல் ஷிவ = சௌபாக்கியம் - 408 ஷிவங்கரீ = சௌபாக்கியம் அருளுபவள் - சுபமங்களங்களுக்கு காரணமானவள்   - 409 ஷிவப்ரியா = சிவனுக்கு ப்ரீதியானவள் - சிவனை நேசிப்பவள் (பரஸ்பர அன்பு)   பரா = வேறான – இன்னொன்று - அப்பாற்பட்ட அபரா = இன்னொன்றில்லாத = ஒன்றான ஷிவ-அபரா = சிவனிலிருந்து வேறானவள் அல்ல * - 410 ஷிவபரா = சிவனிடம் ஒருமித்த பரிபூரண பக்தியை செலுத்துபவள் *  லலிதாம்பிகையை பர-சிவனாகக் கருதி, அவளே சிவத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பவளான பூரண ப்ரம்மம் என்று சிலர் உணர்கின்றனர். (பீடங்களும் அங்க தேவதைகளும்) []   (411-430) ஷிஷ்டேஷ்டா; ஷிஷ்ட பூஜிதா; அப்ரமேயா; ஸ்வப்ரகாஷா; மனோ வாச-மகோசரா; சித்-ஷக்தி; சேதனா ரூபா; ஜட ஷக்தி; ஜடாத்மிகா; காயத்ரீ; வியாஹ்ருதி: ; சந்த்யா ; த்விஜ-வ்ருந்த நிஷேவிதா ; தத்வாசனா ; தத் ; த்வம்: ; அயி: ; பஞ்ச கோஷந்த்ர ஸ்திதா ; நி:ஸ்ஸீம மஹிமா; நித்ய யௌவனா; ***   ஷிஷ்டா = நேர்மையானவன் - கட்டுபாடு உடையவன் இஷ்டா = பிடித்தம் - விருப்பம்  - 411 ஷிஷ்டேஷ்டா = பண்பாளர்களின் பிரியத்துக்குரியவள்; அவர்களிடம் அன்பு செலுத்துபவள்.    - 412 ஷிஷ்ட பூஜிதா = சீலம் மிகுந்தோரால் பூஜிக்கப்படுபவள்.   அப்ரமேயா = முடிவில்லாத - கணக்கில்லாத - 413 அப்ரமேயா = எல்லையற்றவள்; அளவிட முடியாதவள்; புலன்களால் உணரமுடியாதவள்.   ஸ்வ = சுயமாக - சுயத்தால் - 414 ஸ்வப்ரகாஷா = ஸ்வயம் பிரகாசமானவள்; தானே உள்ளோளியாக ஜ்வலிப்பவள்.   மனோ = மனதால்- எண்ணத்தினால் - சிந்தனை அல்லது கற்பனை சார்ந்த வாசம் = வார்த்தைகளால் - பேச்சு அகோசரம் = அடையமுடியாத - எல்லைக்கு அப்பாற்பட்ட - 415 மனோ வாச-மகோசரா = மனதின் புரிதலுக்கும் வாக்கின் கருத்துக்கும் அகப்படாமல் எல்லையற்று விரிபவள். புலன்களின் திறனுக்கு அப்பாற்பட்டவள்.    சித் = புத்தி - ஆன்மீக - அகத்தாய்வு சார்ந்த - 416 சித்-ஷக்தி = பரிசுத்த அறிவின் ஆற்றலானவள்   சேதனா = அறிவு - தன்னுணர்வு - தன்னறிவு - 417 சேதனா ரூபா = தூய அறிவானவள் ; ie சைதன்யமானவள் - ஞானமானவள்   ஜட = அறிவற்ற - ஆன்மவிழிப்பற்ற - உயிரற்ற - 418 ஜட ஷக்தி = ஜடவஸ்துக்களிடத்தில் உணர்வற்ற இருப்பாக வெளிப்படுபவள்   - 419 ஜடாத்மிகா = ஜடரூபத்தில் ஊடுருவி இருப்பவள்   - 420 காயத்ரீ = தேவீ காயத்ரி வடிவானவள்   வியாஹ்ருதி = வார்த்தைகள் - உரை - பேச்சு வியாஹ்ருதி = ஏழுலகங்களின் திவ்யப் பெயர்களின் உச்சரிப்பு (பூ: புவ: சுவ: மஹ ஜன: தப: சத்யம்) *முதல் மூன்று உலகங்களின் பெயர்களே காயத்ரி மந்திரத்தின் முதல் மூன்று வார்த்தைகள். "ஓம் பூர் புவ: சுவஹ” என்பது காயத்ரி மந்திரத்தின் துவக்கம். - 421 வியாஹ்ருதி: = காயத்ரி மந்திரத்தின் தெய்வீக உச்சரிப்பில் உள்ளுரைபவள் - 421 வியாஹ்ருதி: = தெய்வீக சொற்களின் ஆற்றலாகத் திகழ்பவள்.   சந்த்யா = அந்தி அல்லது சந்தி எனும் பொருள் வழக்கு . இவ்விடத்தில், சந்தித்தல் - கூடுதல் - கலப்பு என்று பொருள் கொள்ளலாம் - 422 சந்த்யா = ஜீவ-பரமாத்ம ஐக்கியத்தின் சாரமாகியவள்* (ஜீவ-பரமாத்ம சங்கமத்துக்குக் காரணமாக விளங்குபவள்.)   த்விஜ = இரு பிறப்புடையோர் வ்ருந்த = கூட்டம் நிஷேவிதா = கௌரவிக்கப்படுதல் - உபசரிக்கபடுதல் - 423 த்விஜ வ்ருந்த நிஷேவிதா = உயர்ந்தோரால் துதித்தேத்தப்படுபவள் * த்விஜ என்பது இரு பிறப்புடையவர்களைக் குறிக்கும். ஒரு ஜீவன் பூவுலகில் கொணரும் ஸ்தூல உடலுக்கான பிறப்பை முதற் பிறப்பென்றும், பின்னர் இறைப்பாதையை நிர்ணயித்து அதன் வழி நடக்குங்கால் அதனை இரண்டாம் பிறப்பென்றும் கொள்வது மரபு. த்விஜ-வ்ருந்த எனும் சொல், பிறந்து பின் ஆன்மீகப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெரியோர்களைக் குறிக்கும்.    தத்வ = தத்துவங்கள் ஆசனா - இருத்தல் - 424 தத்வாசனா = தத்துவங்களில் நிலைபெற்றிருப்பவள்  பஞ்ச பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், பஞ்ச-தன்மாத்திரைகள், அந்தகரணம் நான்கு (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்) இவையே 24 ஆன்ம தத்துவங்களாக சொல்லப்படுகிறது     தத் = அது - 425 தத் = அது(வும்) ஆனவள் - அதுவாக இருப்பவள் (உயர் தத்துவமான பிரம்மம்) அது என்பது சுட்டிக்காட்டபடும் "எதையும்" சார்த்தவள் - எல்லாமுமானவள் - உயர்ந்த தத்துவமான பரப்பிரம்மத்தைக் குறிக்கும்.   த்வம் = நீ - 426 த்வம் = உன்னிலும் உள்ளொளிர்பவள் - நீயாகவும் இருப்பவள் * உன்னிலிருப்பவள். 'நீ' எனும் சொல் அனைத்து ஜீவராசியையும் விளிக்கும் சொல். ஆகவே அனைத்துமானவள்   அயி = மாதா - 427 அயி = பிரபஞ்சத்தின் அன்னையாகி அருளுபவள் *  பிரபஞ்சமே அவளிலிருந்து புறப்பட்ட துகளென்பதால், அனைத்திற்கும் தாய்   பஞ்ச = ஐந்து கோஷ = உறை - கோசம் அந்தர = உள்ளில் ஸ்திதா - நிலைபெற்று - 428 பஞ்ச கோஷாந்தர ஸ்திதா = பஞ்ச கோசங்களை ஊடுருவி உறைபவள். அன்னமய கோசம் (ஸ்தூல சரீரம்) ப்ராணமய கோசம், மனோமய கோசம் (சூக்ஷ்ம சரீரம்) விஞ்ஞானமய கோசம் , ஆனந்தமய கோசம் (காரண சரீரங்கள்) என்பனவாம்.   நி:ஸ்ஸீம = எல்லையில்லாத மஹிமா = மகிமை - 429 நிஹ்ஸ்ஸீம மஹிமா = அளவற்ற மகிமையுடையவள்   - 430 நித்ய யௌவனா = நித்திய இளமையுடன் திகழ்பவள்   (பீடங்களும் அங்க தேவதைகளும்) []   (431-450) மத ஷாலினீ; மத கூர்ணித ரக்தாஷீ ; மத பாடல கந்தபூ: ; சந்தன த்ரவ திக்தாங்கி; சாம்பேய குசுமப் ப்ரியா; குஷலா; கோமலாகாரா; குருகுல்லா; குலேஷ்வரீ; குல குண்டாலயா; கௌல-மார்க தத்பர சேவிதா; குமார கண நாதாம்பா; துஶ்டி: ;  புஶ்டி: ;  மதி: ;  த்ருதி: ;  ஷாந்தி: ;  ஸ்வஸ்திமதி ;  காந்தி: ;  நந்தினி ;  **    மத = களிப்பு - குதூகலம் ஷாலினீ = ஷாலதே என்றால் மின்னுதல் - (ஷாலினீ என்ற பெயர் ஷாலதே என்ற வார்த்தியிலிருந்து தோன்றிய பிரயோகம்) or ஷாலினீ = அடைதல் - கொள்ளுதல். (முன் பிரயோகிக்கும் சொல்லைப் பொருத்து பொருள் வேறுபடும்) - 431 மத ஷாலினீ = பெருமகிழ்ச்சியில் மிளிர்பவள்    கூர்ணித = சுழற்றுதல் - உருட்டல் - நகர்த்தல் ரக்த = சிவந்த நிறம் அக்ஷி = கண்கள் - 432 மத கூர்ணித ரக்தாஷீ = பிரம்மானந்தத்தின் உவப்பு மேலிட, சிவந்த கண்களை சுழற்றுபவள்   பாடல = இளஞ்சிவப்பு கந்த = கன்னங்கள் பூ: = இருக்கபெற்ற - உடைய - 433 மத பாடல கண்டபூ = பேருவகையினால் மெருகேறிய ரோஜா-நிறக் கன்னங்களை உடையவள் திரவ = களிம்பு / திரவம் திக்த = தடவியிருத்தல் அங்க = உடலின் ஒரு பாகம் - 434 சந்தன த்ரவ திக்தாங்கீ = சந்தனத்தை மேனியெங்கும் பூசியிருப்பவள்   சாம்பேய = சம்பக மரம் குசும = மலர் - 435 சாம்பேய குசுமப்ரியா = சம்பக மலர்களை நேசிப்பவள்    குஷல் = தேர்ச்சி - வல்லமை - 436 குஷலா = திறன் மிகுந்தவள்    கோமல் = மென்மை - எழில் ஆகார் = உருவம் - 437 கோமலாகாரா = நளின மேனியுடையவள்   - 438 குருகுல்லா = குருகுல்லா எனும் தெய்வத்தின் வடிவானவள்.  குருகுல்லா எனும் தேவதை சிவந்த மேனியுடையவளாக, மலர்களாலான வில் அம்பை ஒரு கையில் தாங்கி, மறு கையில் பாசங்குசத்தை தரித்திருக்கிறாள். ஆன்மீகப் பயணத்திற்கு மிகுந்த சவாலாகவும் கடப்பதற்கு அரிதாகவும் இருக்கும் காம இச்சையை பிரதிபலிப்பவளாக, சற்றே ரௌத்ர ரூபிணியாக காட்சி தருகிறாள்    குல் = குழு - கூட்டம் - 439 குலேஷ்வரீ = குலத்தை ஆளுபவள் (ஆழ்ந்த கண்ணோட்டத்தில், குலம் என்பது - அறிபவன், அறியப்படுபவன், அறிவு என்ற மூன்றைக் குறிக்கும்)   குலகுண்டா = மூலாதாரத்தின் அமைதிருக்கும் சிறு பிளவு - 440 குலகுண்டாலயா = குலகுண்டா எனும் துவாரத்தில் உரைந்திருப்பவள்   கௌல-மார்க = கௌல மார்க்கம் தத்பர் = அர்ப்பணித்திருப்பது - 441 கௌலமார்க தத்பர சேவிதா = கௌல மார்க்கத்தவர்களின் வழிபாட்டிற்கு உரியவள் * கௌல-மார்க்க அல்லது ‘குல-மார்க்க’ வழிமுறைகளை கடைப்பிடிப்பவர்கள், தந்திர வழிபாட்டினையோட்டி மூலாதாரத்தை எழுப்பும் முறைகளை கையாளுகிறாரக்ள்.    குமார = முருகனார் - கார்திகேயன் (சிவன் பார்வதி மைந்தன்) கணநாத = கணபதி - கணேஷ் - பிள்ளையார் (சிவன் பார்வதி மைந்தன்) அம்பா = அன்னை - 442 குமார கண நாதாம்பா = பிள்ளையார், முருகக் கடவுளரின் அன்னை   443 துஶ்டி: = சதா திருப்தியுற்றிருப்பவள்    புஶ்டி = ஊட்டம் நிறைந்த - ஆரோக்கியமான - 444 புஶ்டி: = செழுமை, வளம், வளர்ச்சி ஆகியவற்றின் ஆதாரமானவள்    - 445 மதி: = புத்தி, ஞானம் மற்றும் அறிவாக வெளிப்படுபவள்   - 446 த்ருதி: = வலிமை, துணிவாற்றலின் ஊற்றாக விளங்குயவள்   - 447 ஷாந்தி: = சாந்தம் நிறைந்தவள்    ஸ்வஸ்திம்த் = மகிழ்ச்சியும் வளமையும் வழங்குதல் * - 448 ஸ்வஸ்திமதி = நிரந்தர இன்பம் (பேரின்பம்) அருளுபவள் - நிரந்தர இன்பத்தின் வடிவானவள்   - 449 காந்தி: = ஸ்வயம்-ப்ரகாசமானவள் - ஸ்வயம் ஜோதியாக விளங்குபவள் (தானே ஜோதிப்ரகாசமாக ஜ்வலிப்பவள்)   நந்தினி = மகிழ்வூட்டுதல் - ஆனந்தப்படுத்துதல் * - 450 நந்தினி = பேரின்பம் அருளுபவள் (பீடங்களும் அங்க தேவதைகளும்) []   (451-475) விக்ன நாஷினி ;  தேஜோவதீ; த்ரிநயனா; லோலாக்ஷீ- காமரூபினீ; மாலினீ; ஹம்ஸினீ; மாதா; மலையாசல வாசினீ; சுமுகீ; நளினீ; ஷுப்ரு; ஷோபனா; சுர நாயிகா; காலகண்டி; காந்திமதி; க்ஷோபிணீ; சூக்ஷ்மரூபிணீ; வஜ்ரேஷ்வரீ; வாமதேவீ; வயோவஸ்தா விவர்ஜிதா; சித்தேஷ்வரீ; சித்த-வித்யா; சித்த-மாதா; யஷஸ்வினீ; *** விக்ன = தடங்கல் - விக்னம். - 451 விக்ன நாஷினி = தடைகளை அகற்றுபவள்    தேஜோவத் = பிரகாசம் - 452 தேஜோவதீ = ஓளிமயமானவள்   - 453 த்ரிநயனா = முக்கணுடையவள் * மூன்றாம் கண்ணானது அறிவின் பரிபூர்ணத்தை, ஞானத்தைக் குறிக்கும்      லோல-அக்ஷி = உருட்டும் கண்கள்  காம-ரூபிணீ = ஆசையின் வடிவம் - 454 லோலாக்ஷீ காமரூபிணீ =  ஆசையினால் அலைபாயும் அழகிய கண்களை உடையவள் (சிருஷ்டியின் ஆதாரம்) ஆசை ஆர்வம் வேட்கை முதலியன சிருஷ்டிக்கு ஆதாரம். ஆசைகளின் வடிவம் எடுப்பவளாக அவற்றின் உருவகமாக, சிருஷ்டியின் காரணமாகவும் ஆகிறாள்.   மாலா = மாலைசூடுதல் - அட்டிகை - 455 மாலினீ = மாலைகள் தரித்தவள்   - 456 ஹம்ஸினீ = அன்னப்பறவையைப் போன்று, தவம் வைராக்கியம் நிஷ்களங்கத்தை பிரதிபலிப்பவள்.*  ஹம்ஸ எனும் சொல் புனிதத்துவம், வைராக்கியத்தைப் பிரதிபலிக்கும் அன்னப்பறவையைக் குறிக்கும். ஹம்ஸ சன்யாஸிகள் என்ற வகையினர் தவத்தின் பால் ஈடுபாடு உடையவர்கள்.   - 457 மாதா = பிரபஞ்சத்தின் அன்னை    மலைய = மலயம் - மலய பர்வதம் - மலபார் பகுதி - (தற்போதைய கேரளா) ஆசல = நிலைத்திருத்தல் = மலைத்தொடர் - 458 மலையாசல வாசினீ = மலய பர்வதத்தில் வசிப்பவள்   - 459 சுமுகீ = எழில் மிகுந்தவள் - இன் முகத்தாள்   நளினி = தாமரை - 460 நளினி = மென் தாமரையொத்த வனப்புடைய தளிர் மேனியாள்   ப்ரு = புருவம் - 461 ஷூப்ரூ = அழகிய புருவம் உடையவள்   - 462 ஷோபனா = சோபை பொருந்தியவள்   சுர = தேவர்கள் - கடவுளர்கள் - 463 சுரநாயிகா = அனைத்து தெய்வங்களின் தலைவி   கண்டா = தொண்டை கால = கரிய காலகண்ட் = கருநீலக் கழுத்தையுடைவன் (பிரபஞ்சத்தை ரக்ஷிக்க ஆலகால விஷத்தை அருந்த முற்பட்டு, அதனால் கருநீல தொண்டையுடைய சிவன்)  - 464 காலகண்டீ = சிவனின் பத்தினியானவள்    - 465 காந்திமதீ = சோபையினால் மின்னுபவள்    க்ஷோப = கலக்கம் – அசைவு - 466 க்ஷோபிணீ = படைப்பின் துவக்கமான ஆதார சலனம்.     சூக்ஷ்ம = சிறிய - நுட்பமான - 467 சூக்ஷ்ம ரூபிணீ = நுண்ணிய வடிவுடையவள் - ஐம்பூதங்களாலான புலன்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள்    - 468 வஜ்ரேஷ்வரீ = நித்தியதேவிகளில் ஆறாமவளான வஜேரேஸ்வரி (ஆறாம் நித்தியதேவி வஜ்ரேஷ்வரி, விஷுத்தி சக்கரத்தில் வீற்றிருப்பவள்)    - 469 வாமதேவி = வாமதேவனான சிவனாரின் பத்தினி (வாமதேவன் காக்கும் தொழிலின் பிரதிநிதித்துவம்)    வயோவஸ்தா = பருவங்கள் - குழந்தைப்பருவம், இளமை, மூப்பு என்ற நிலைகள் - 470 வயோவஸ்தா விவர்ஜிதா = பருவநிலைகள், காலங்கள் போன்ற   எல்லைகளைக் கடந்தவள் - அதன் தாக்கத்திற்கு ஆட்படாதவள்   - 471 சித்தேஸ்வரீ = சித்தர்களின் ஈஸ்வரி / தலைவி - சித்தர்களால் வணங்கப்படுபவள்*  அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்று ஆன்மீக முதிர்ச்சியுற்றவர்கள், சித்தர்கள் என்று   வணங்கப்படுகிறார்கள்    - 472 சித்தவித்யா = சித்த வித்யையின் சாரமானவள் * சித்தவித்யா எனும் பஞ்சதஸி மந்தரம் பதினைந்து பீஜங்களைக் கொண்டது.   - 473 சித்தமாதா = சித்திகளின் ஆதாரம் - மூலம் - சித்தர்களின் மாதா    யஷஸ்வின் = பிரசித்தி - புகழ் - பிரபலம் - 474 யஷஸ்வினீ = பெருங்கீர்த்தியுடையவள்                                            14. யோகினி நியாஸம்   (இனி "யோகினி நியாஸம்" என்ற தலைப்பில் நாமங்கள் தொடரும்) []   (யோகினி  நியாசம் என்ற தலைப்பின் கீழ் நாம் தியானிக்கவிருக்கும் நாமங்கள், குண்டலினி சக்கரத்தை பிரதிபலிக்கும் 'யோகினி' தேவதைகளை விவரிக்கும் பெயர்கள் . கீழிருக்கும் நாமங்கள் விஷுத்தி சக்கரத்தை வழி நடத்தும் "டாகினீஸ்வரி" என்ற யோகினியைத் துதிக்கிறது, தொடர்ந்து ஒவ்வொரு சக்கரத்தை ஆளும் தேவதைகளையும் தியானிக்கவிருக்கிறோம்)   (475-503) விஷுத்திசக்ர நிலயா; ஆரக்தவர்ணா; த்ரிலோசனா; கட்வாங்காதி ப்ரஹரணா; வதனைக சமன்விதா; பாயசான்ன ப்ரியா; தவக்ஸ்தா; பஷுலோக பயங்கரீ; அம்ருதாதி மஹா ஷக்தி சம்வ்ருதா; டாகினீஶ்வரீ; அனாஹதாப்ஜ நிலயா; ஷ்யாமாபா; வதனத்வயா; தம்ஷ்ரோஜ்வலா; அக்ஷ-மாலாதி தரா; ருதிர சம்ஸ்திதா; கால ராத்ர்யாதி ஷக்த்யூக வ்ருதா; ஸ்னிக்தௌதன்ன ப்ரியா; மஹா வீரேந்த்ர வரதா; ராகின்யம்பா ஸ்வரூபிணீ; மணிபூராப்ஜ நிலயா; வதனத்ரய சம்யுதா; வஜ்ராதிகாயுதோபேதா; டாமர்யாதிபி ராவ்ருதா; ரக்த வர்ணா; மாம்ஸ நிஷ்டா; குடான்ன ப்ரீத மானஸா; சமஸ்த பக்த சுகதா; லாகின்யம்பா ஸ்வரூபிணீ; *** விஷுத்தி சக்ர = ஐந்தாம் குண்டலினி சக்தி கேந்திரம் - தொண்டையில் இருக்கும் நீல நிற சக்தி கேந்திரம் - 475 விஷுத்தி சக்ர நிலயா = விஷுத்தியில் நிலைபெற்றிருப்பவள்   ஆரக்தா = செஞ்சந்தனம் (i.e. சிவப்பு சந்தனம் - அடர் சிவப்பு இல்லாத இளஞ்சிவப்பு என்றும் கொள்ளலாம்)  - 476 ஆரக்தவர்ணா = செஞ்சந்தன நிறம் உடையவள் (அடர் சிவப்பு அல்லாத மிதமான சிவப்பு)    - 477 த்ரிலோசனா = மூன்று கண்களையுடையவள்   கட்வாங்க = மண்டையோட்டுடன் கூடிய தண்டாயுதம் ஆதி = இத்யாதி - இதைப் போல  ப்ரஹரணா = ஏந்தியிருத்தல் - போராயுதங்கள் கொண்டிருத்தல் - 478 கட்வாங்காதி ப்ரஹரணா = கட்வாங்கம் போன்ற தண்டாயுதமும் மற்றைய ஆயுதங்களையும் (கபாலம், சூலம்) ஏந்தி ஆயுத்தமாயிருப்பவள்   வதனைக = வதன-ஏக - ஒரு முகம் சமன்விதா = கொண்டிருத்தல் - 479 வதனைக சமன்விதா = ஒரு முகமுடையவள்    பாயஸ = பாலில் வெந்த அரிசிச்சோறு - 480 பாயஸான்ன ப்ரியா = பாயசம் என்ற இனிப்பை விரும்பி ஏற்பவள் (பால் அன்னம்)    த்வசா - தவக் = தோல் ஸ்தா = இருத்தல் - 481 த்வக்ஸ்தா = சருமத்தை, தொடு உணர்வை ஆக்ரமித்து வழிநடத்தும் தேவதை   பஷு = மிருகம் - மிருகத்தையொத்த - மிருக குணம் லோக - மனிதர்கள் - உலகம் - மனிதகுலம் பயங்கரி = பயங்கரமாக இருப்பவள் - 482 பஷுலோக பயங்கரி =  மிருக குணைத்தை உடையவர்களுக்கு பயங்கரமானவள் ie. அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கும் இகலோக சுகங்களில் மூழ்கியிருப்பவர்களுக்கும் மருட்சியளிப்பவள்.    சம்வ்ருதா = சூழப்படுதல் - பாதுகாத்தல் - மூடியிருத்தல் - 483 அம்ருதாதி மஹாஷக்தி சம்வ்ருதா = அம்ருதா, கரிஷிணி முதலிய மஹாஷக்திகளை வழிநடத்தி பாதுகாப்பவள் - அவர்களால் சூழப்பட்டிருப்பவள் * மஹாஷக்திகள் அம்ருதா, கர்ஷிணி, ஊர்த்வா, உமா, இந்திராணி, ஈசானி, கேசி முதலியவர்களை வழிநடத்தும் யோகினி   - 484 டாகினீஶ்வரீ = விஷுத்தி சக்கரத்தின் தேவதை, டாகினீஶ்வரீ   (மேற்கண்ட நாமங்கள் டாகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு, பெருமைகளை தியானிக்கிறது) []   அனாஹத = அனாஹத சக்கரம் எனும் இதயச் சக்கரம், பச்சை நிறமுடைய நான்காம் குண்டலினி சக்தி கேந்திரம். அப்ஜ = தாமரை - 485 அனாஹதாப்ஜ நிலயா = அனாஹத சக்கரத்தில் நிலைத்திருப்பவள்.   ஷ்யாம = கருமை - கரும்பச்சை - 486 ஷ்யாமாபா = கரும்பச்சை நிறத்தவள்   த்வயா = இருமை - இரட்டை - இரண்டு - 487 வதனத்வயா = இரு முகம் கொண்டவள்   தம்ஷ்ரா = பெரிய பற்கள் - தந்தம் உஜ்வலா = மின்னுதல் - 488 தம்ஷ்ரோஜ்வலா = தந்தத்தைப் போன்ற பிரகாசமான பெரிய பற்களை உடையவள்.   அக்ஷமாலா = ஜப மணிகளாலான மாலை. ஆதி = முதலியவை - போன்றவை  தரா = கொண்டிருத்தல் - 489 அக்ஷ-மாலாதி தரா = ஜபமணிகளாலான மாலைகளை தரித்தவள் (ருத்ராக்ஷம் போன்ற ஜபமாலைகள் பலவும்) அக்ஷ என்றால் எழுத்துகள் என்றும் பொருளுணரப்பட்டு, சமஸ்க்ருத மொழியின் 'அ' முதல் 'க்ஷ' வரையிலான  எழுத்துக்களையும் குறிக்கும்.  அவ்வெழுத்துக்களால் அணியப்பட்ட மாலை என்பதும் சிலரின் கருத்து.    ருதிர = உதிரம் = ரத்தம் ஸம்ஸ்தித் = இருத்தல் - 490 ருதிர சம்ஸ்திதா = உதிரத்தில் உறைந்திருந்து வழி நடத்துபவள்   காலராத்ரி = அனாஹத சக்ர யோகினியை சூழ்ந்துள்ள  சக்திகளுள் ஒருவர் ஆதி = முதலியவை - போன்றவை  யுக = குழு ஷக்த்யுக = சக்திகளின் குழு வ்ருதா = சூழப்பட்ட - 491 கால ராத்ர்யாதி ஷக்த்யூக வ்ருதா = காலரத்ரி முதலிய சக்திகளால் சூழப்பட்டவள் * அனாஹத சக்கரத்தின் யோகினி பனிரெண்டு இதழ் கொண்ட தாமரையால் பிரதிபலிக்கப்படுகிறாள். ஒவ்வொரு இதழும் ஒரு சக்தி ஸ்வரூபத்தால் ஆளப்படுகிறது. பனிரெண்டு சக்திகளால் சூழப்பட்டு, அவர்களை ஆள்பவளும் ஆகிறாள்.   ஸ்னிக்த = கொழுப்பு நிறைந்த = கொழுப்புடன் கூடிய ஓதன = சமைத்த அரிசி - அரிசிச்சோறு ஔதன = பால் மடி - (அதிலிருந்து பெறப்படும் நெய், வெண்ணை முதலிய பொருட்களையும் குறிக்கும்) - 492 ஸ்னிக்தௌதன ப்ரியா = நெய்யுடன் கூடிய (அல்லது கொழுப்பு சத்து நிறைந்த) அன்னத்தை விரும்பி ஏற்பவள்   மஹாவீர = வலியவர்கள் - வீரன் - வீரத்தனம் இந்த்ர = முதலாவதான - பிரதான - மேலான - 493 மஹாவீரேந்திர வரதா = வீரர்களுக்கு அற்புத அரிய வரங்கள் அருளுபவள் * மஹாவீரேந்திர என்ற சொற்பதத்திற்கு, புலனின்பங்களை வெற்றி கண்ட ஞானிகள், யோகிகள் என்று பொருள் உணரலாம்.   ராகின்யம்பா = ராகினி என்ற அம்பிகை - 494 ராகின்யம்பா ஸ்வரூபிணீ = ராகினி என்ற யோகினி தேவதை (அனாஹத சக்கர தேவதையின் பெயர்)   (மேற்கண்ட  நாமங்கள்  ராகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவைகளை தியானிக்கிறது []   மணிபூர = மணிபூர சக்கரம் மூன்றாம் சக்தி கேந்திரம். பத்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறத் தாமரையைக் கொண்டு பிரதிபலிக்கப்படுகிறது ஆப்ஜ = தாமரை - 495 மணிபூராப்ஜ நிலயா = மணிபூர சக்கரத்தில் நிலைகொள்பவள்    வதன = முகம் த்ரய = மூன்று சம்யுதா = தாங்கியிருத்தல் - 496 வதனத்ரய சம்யுதா = மூன்று முகங்கள் தாங்கியிருப்பவள்    வஜ்ர = வஜ்ராயுதம் (இந்திரதேவன் தாங்கியிருக்கும் ஆயுதம்) (இடியேறு) ஆதிக = முதலியன - போன்றவை ஆயுத = ஆயுதங்கள் உபேத = தாங்கியிருத்தல் - 497 வஜ்ராதிகாயுதோபேத = வஜராயுதம் முதலிய ஆயுதங்கள் தரித்திருப்பவள் (தாங்கியிருப்பவள்)    டாமரி = மணிபூர சக்கர யோகினியை சூழ்ந்துள்ள தேவதைகளில் ஒருவர் ஆதிபி = மற்றோராலும் ஆவ்ருதா = சூழப்பட்டு - 498 டாமர்யாதிபிராவ்ருதா = டாமரி முதலிய தேவதைகளால் சூழப்பட்டிருப்பவள்    - 499 ரக்த வர்ணா = இரத்த நிறத்தவள்    மாம்ஸ = ஊன் நிஷ்ட = இருத்தல் - 500 மாம்ஸ நிஷ்டா = ஊனில் நிறைந்திருந்து வழி நடத்துபவள்    குட = வெல்லம் ப்ரீத = விருப்பமான - பிரியமான ப்ரீத மானஸா = மன மகிழ்ச்சி - 501 குடான்ன ப்ரீத மானஸா = வெல்லம் கலந்த அன்னத்தை விரும்பி ஏற்பவள் (வெல்லம் கலந்த அல்லது வெல்லத்தில் சமைத்த அன்னம்)    சமஸ்த = முழுவதுமான - மொத்தமும் சுகதா = சுகமளித்தல் - 502 சமஸ்த பக்த சுகதா = அனைத்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பவள் - சுகம் அனுக்ரஹிப்பவள்    - 503 லாகின்யம்பா ஸ்வரூபிணீ = லாகினியின் வடிவாகிய யோகினி / லாகினி என்ற பெயருடைய யோகினி    (மேற்கண்ட படமும்  நாமங்களும் லாகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவைகளை தியானிக்கிறது) (யோகினி நியாஸம்) []   (504-534) ஸ்வாதிஷ்டானாம்புஜகதா ; சதுர் வக்த்ர மனோஹரா; ஷூலாத்யாயுத சம்பன்னா; பீத வர்ணா; அதி கர்விதா; மேதோ நிஷ்டா; மதுப்ரீதா; பந்தின்யாதி சமன்விதா; தத்யன்ன சக்த ஹ்ருதயா; காகினி ரூப தாரிணீ; மூலாதாராம்புஜாரூடா; பஞ்ச வக்த்ரா; அஸ்தி சம்ஸ்திதா; அங்குஷாதி ப்ரஹரணா; வரதாதி நிஷேவிதா; முத்கௌதனா சக்த சித்தா; சாகின்யம்பா ஸ்வரூபிணீ; ஆக்ஞாசக்ராப்ஜ நிலயா; ஷுக்ல வர்ணா; ஷடானனா; மஜ்ஜா சம்ஸ்தா; ஹம்ஸவதீ முக்ய ஷக்தி சமன்விதா; ஹரித்ரான்னைக ரசிகா; ஹாகினி ரூப தாரிணீ; சஹஸ்ரதள பத்மஸ்தா; சர்வ வர்ணோப ஷோபிதா; சர்வாயுத தரா; ஷுக்ல சம்ஸ்திதா; சர்வதௌ முகீ; சர்வௌதன ப்ரீத சித்தா; யாகின்யம்பா ஸ்வரூபிணீ;   ஸ்வாதிஷ்டான= இரண்டாம் சக்தி கேந்திரம்- ஸ்வாதிஷ்டான ie செம்மஞ்சள்(ஆரஞ்சு) நிற சக்கரம் அம்புஜ = தாமரை (ஸ்வாதிஷ்டானம் ஆறு இதழ்களுடன் கூடிய தாமரை) கதா = இருத்தல் - இணைந்து அல்லது தொடர்பு கொண்டிருத்தல் - 504 ஸ்வாதிஷ்டானாம்புஜகதா = ஸ்வாதிஷ்டானத்தில் நிலைபெற்றிருப்பவள்    சதுர்வக்த்ரா = நான்கு முகங்களுடைய மனோஹர = ஈர்ப்புடைய - சோபையுடன் கூடிய - 505 சதுர்வக்த்ர மனோஹரா = அழகிய நான்கு முகங்கள் கொண்டவள்    ஷூல = சூலாயுதம் ஆதி = முதலியன - போன்றவை ஆயுத = ஆயுதங்கள் சம்பன்னா = உடைத்தாயிருத்தல் - வழங்கப்பெற்றிருத்தல் - 506 ஷுலாத்யாயுத சம்பன்னா = சூலம் முதலிய ஆயுதங்கள் தாங்கியிருக்கிறாள்    பீத = மஞ்சள் – பொன் - 507 பீத வர்ணா = மஞ்சள் / பொன்னிறத்தவள்    - 508 அதிகர்விதா = மிகுந்த செருக்கு / கர்வம் உடையவள்    மேத = உடலின் கொழுப்பு நிஷ்ட = நிலையிருத்தல் - 509 மேதோ நிஷ்டா = உடலின் கொழுப்பு படலங்களில் நிலைத்து ஆளுகிறாள்.    மது = தேன் - 510 மதுப்ரீதா = தேனை மிகப் பிரியமாக விரும்பி ஏற்பவள்    பந்தினி = ஸ்வாதிஶ்டான யோகினியை சூழ்ந்துள்ள சக்திகளுள் ஒருவர் ஆதி = போன்ற - முதலியவை - முதலியவர்கள் சமன்வித் = தொடர்புடன் கூடிய - கூடியிருத்தல் - 511 பந்தின்யாதி சமன்விதா = பந்தினி முதலிய தேவதைகளால் சூழப்பட்டிருப்பவள்    தத்ய = தயிர் தத்யன்ன = தயிர்சாதம் சக்த = ப்ரியமான ஹ்ருதயா = இதயம் - உள்ளம் - 512 தத்யன்னா சக்த ஹ்ருதயா = தயிருடன் கலந்த அன்னத்தை உளம் விரும்பி ஏற்பவள்    ரூப = உருவம் - தாரிணீ - தாங்கிய – கொண்டுள்ள - 513 காகினீ ரூப தாரிணீ = காகினி என்ற ரூபம் தரித்திருப்பவள் – காகினியாகப்பட்டவள்    (மேற்கண்ட நாமங்கள் காகினி என்ற யோகினியின் புறத்தோற்றம், இயல்பு முதலியவற்றை தியானிக்கிறது) []   மூலாதார = மூலாதார சக்கரம் - முதல் சக்தி கேந்திரம் - சிவப்பு நிறச் சக்கரம் அம்புஜ = தாமரை (நான்கு இதழுடைய தாமரை) ரூடா = முளைத்தல் – படர்ந்திருத்தல் - 514 மூலாதாரம்புஜாரூடா = மூலாதாரத்தில் நிலைபெற்றிருப்பவள்   பஞ்ச = ஐந்து வக்த்ர = முகங்கள் - 515 பஞ்ச வக்த்ரா = ஐந்து முகங்கள் உடையவள்   அஸ்தி = எலும்பு ஸம்ஸ்தித் = இருத்தல் - 516 அஸ்தி சம்ஸ்திதா = உடலின் எலும்புகளை வழிநடத்தி ஆளுபவள்   அங்குச = அங்குசம் எனும் ஆயுதம் ஆதி = முதலியவை - போன்றவை ப்ரஹரணா = ஆயுதங்கள் (முதலிய ஆயுதங்கள்) - 517 அங்குசாதி ப்ரஹரணா = அங்குசம் முதலிய ஆயுதங்கள் தாங்கியவள்   வரதா = மூலாதாரத்து யோகினியை சூழ்ந்திருக்கும் தேவதா ரூபங்களுள் ஒருவர் ஆதி = முதலிய - முதலியவர்கள் நிஷேவித் = உபசரிக்கப்படுதல் - 518 வரதாதி நிஷேவிதா = வரதா முதலிய தேவதைகளால் சூழப்பட்டு பணிசெய்யப்படுபவள்   முத்க = பயறு வகை - பச்சை பயறு - உளுந்து முதலியன ஓதன = சமைக்கப்பட்ட அரிசி - சாதம் - சோறு சக்த = பிடித்தமான சித்தா - சிந்தை - மனம் - 519 முத்கௌதன சக்த சித்தா = பயறுடன் கூடிய அன்னத்தை சிந்தைக்குகந்து விரும்பி ஏற்பவள்   - 520 சாகின்யம்பா ஸ்வரூபிணீ = சாகினி என்ற யோகினி - சாகினி என்ற ரூபம் தரித்தவள்*   (மேற்கண்ட நாமங்கள் சாகினி என்ற யோகினியின் தோற்றம், பெருமைகளை விவரிக்கின்றன) []   ஆக்ஞா சக்கரம் = ஆக்ஞா சக்கரம் ஆறாம் படிநிலை சக்தி கேந்திரம் - நெற்றிக்கண் சக்கரம்- ஞானச் சக்கரம் - புருவ மத்தியில் உள்ளது ஆப்ஜ - தாமரை (இரண்டு வெளிர் நிற இதழ்கள் கொண்ட தாமரை- ஒளி ஊடுருவம் தன்மையுடையது (transparent) - 521 ஆக்ஞா-சக்ராப்ஜ நிலயா = ஆக்ஞா சக்கரத்தில் நிலைபெற்றவள்    ஷுக்ல = வெண்மை - 522 ஷுக்ல வர்ணா = வெண்ணிறம் கொண்டவள்    ஷட = ஆறு ஆனன = முகம் - 523 ஷடானனா = ஆறு முகங்கள் உடையவள்    மஜ்ஜா = மஜ்ஜை (எலும்பு மஜ்ஜை)   ஸம்ஸ்தா = இருத்தல் - 524 மஜ்ஜா சம்ஸ்தா = எலும்பு மஜ்ஜைகளை வழிநடத்தி ஆளுபவள்    ஹம்ஸவதி = ஆக்ஞா சக்கரத்தின் யோகினியை சூழ்ந்துள்ள சக்தி தேவதை   முக்ய = பிரதான ஷக்தி = சக்திகள்- தேவதைகள் சமன்வித் = இணைந்திருத்தல் - தொடர்புடன் இருத்தல் - 525 ஹம்ஸவதீ முக்ய ஷக்தி சமன்விதா = ஹம்ஸவதீ மற்றும் க்ஷமவதீ எனும் சக்திகளால் சூழப்பட்டவள்*  இரு இதழ்களிலும் ஹம்ஸவதீ மற்றும் க்ஷமவதீ எனும் சக்தி தேவதைகள் இணைந்திருக்க, அவர்களை வழி நடத்துபவளாகிறாள்   ஹரித்ரா = மஞ்சள் ஹரித்ரான்ன = மஞ்சள் கலந்த அரிசிச் சோறு   ரசிகா = விருப்பமுடைய – கொண்டாடப்படும் - 526 ஹரித்ரான்னைக ரசிகா = மஞ்சள் கலந்த அன்னத்தை பிரியத்துடன் ஏற்பவள்    ரூப = ரூபம்- வடிவம் தாரண = தாங்கிய - 527 ஹாகினி ரூப தாரிணீ = ஹாகினி என்ற வடிவம் தாங்கியவள்*  (மேற்கண்டபடமும்  நாமங்களும்  ஹாகினி என்ற யோகினியின் தோற்றம் மற்றும் பெருமைகளை விவரிக்கின்றன.) []   சஹஸ்ர = ஆயிரம்  தள = இதழ் சஹஸ்ரதள = ஆயிரம் இதழுடைய பத்ம = தாமரை ஸ்தா = நிலைத்தல் = நிலைபாடு - 528 சஹஸ்ரதள பத்மஸ்தா = சஹஸ்ரார சக்கரத்தில் நிலைபெற்றிருப்பவள்* சஹஸ்ரார சக்கரம் என்ற ஏழாம் படிநிலை சக்கரம், ஆயிரம் இதழுடைய தாமரையைக் கொண்டு பிரதிபலிக்கப்படுகிறது.   சர்வ வர்ண = அனைத்து வர்ணமும் ஷோபிதா = சோபித்தல் - அழகுற ஜொலித்தல் - 529 சர்வ வர்ணோப ஷோபிதா = அனைத்து வர்ணமாக சோபிப்பவள்   ஆயுத = ஆயுதங்கள் தரா = கொண்டிருத்தல் - 530 சர்வாயுத தரா = அனைத்து வித அஸ்திர ஆயுதங்களையும் தாங்கியிருப்பவள்    சுக்ல = சுக்கிலம் - விந்து  ஸம்ஸ்தித் = இருத்தல் - 531 ஷுக்ல சம்ஸ்திதா = சுக்கிலத்தை வழிநடத்தி ஆளுபவள்* உடற் சிருஷ்டி உற்பத்தியை பிரதிபலிக்கிறாள். அதனை வழிநடத்துபவளாகிறாள்   சர்வதோ = எங்கும் - கணகற்ற முகீ = முகம் - 532 சர்வதோ முகீ = எவ்விடத்திலும் எத்திசையிலும் வியாபித்திருக்கும் முகமுடையவள் *   *எல்லையில்லாத, முடிவற்ற முகமுடையவள் ஓதன = சமைக்கப்பட்ட அரிசி - உணவு ப்ரீத = பிரியமான சித்தா = சித்தம் - மனம் - 533 சர்வௌதன ப்ரீத சித்தா = அனைத்து உணவையும் பிரியமாக ஏற்பவள்   - 534 யாகின்யம்பா ஸ்வரூபிணீ = யாகினி எனும் யோகினியானவள் - யாகினி என்ற வடிவம் தாங்கியவள் *    (மேற்கண்ட படமும் நாமங்களும்  யாகினி என்ற யோகினியின் தோற்றம் மற்றும் பெருமைகளை விவரிக்கின்றன) இனி அம்பாளின் விபூதிகள் தொடரும்                   15. விபூதி விஸ்தாரம் []   (535-550) ஸ்வாஹா; ஸ்வதா; அமதி; மேதா; ஶ்ருதி; ஸ்ம்ருதி; அனுத்தமா; புண்ய-கீர்த்தி; புண்ய-லப்யா; புண்ய-ஷ்ரவண-கீர்த்தனா; புலோமஜார்ச்சிதா; பந்த மோசனி; பர்பராலகா; விமர்ஷ ரூபிணீ; வித்யா; வியதாதி-ஜகத்-ப்ரசு; *** ஸ்வாஹா = யாகத்தின் பொழுது உச்சரிக்கப்படும் துதி / போற்றுதல் - 535 ஸ்வாஹா = யாகத்தின் மந்திர உச்சாடனமும், செய்யப்படும் அர்ப்பணிப்புமாகியவள்   ஸ்வதா = தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்யப்படும் யக்ஞ கார்யங்களில் ஓதப்படும் மந்த்ர உச்சாடனம். - 536 ஸ்வதா = பிரார்த்தனையில் வரும் ஸ்வதா எனும் உச்சாடனமாக இருப்பவள்   - 537 அமதி = அஞ்ஞானத்திலும் இருப்பவள்    - 538 மேதா = ஞான வடிவமானவள்    - 539 ஷ்ருதி = வேதங்களில் இருப்பவள்   540 ஸ்ம்ருதி = வேதங்களை விவரித்து கொண்டாடும் சாரங்களில் இருப்பவள்*    (இதிஹாச புராணம், உபநிஷதங்கள் முதலியவை)    - 541 அனுத்தமா = அதிஉன்னத நிலையில் இருப்பவள்    புண்ய = பாக்கியம் - புனிதம்  கீர்த்தி - புகழ் - மேன்மை - 542 புண்ய-கீர்த்தி = அவளது பெருமையே புண்ணியம் நல்குவது அவளது பெருமையை நினைந்திருப்பதே பக்தர்களின் புண்ணியப் பலனாகிறது.   லப்யா = பெறக்கூடிய - 543 புண்ய-லப்யா = புண்ணியத்தினால் அடையக்கூடியவள் -ஞானிகளால் உணரப்பெறுபவள் - நற்காரியங்களினால் எட்டக்கூடியவள்    ஶ்ரவண = காது - கேட்பது - கவனித்தல் கீர்த்தன = புகழ்ச்சி - கொண்ட்டம் - 543 புண்ய ஶ்ரவண கீர்த்தனா = தனது கீர்த்தியைப் கேட்போருக்கும் பாடிக் கொண்டாடுவோருக்கும் பாக்கியம் அளிப்பவள்.   ஜா = பெண் - புத்திரி புலோமஜா = புலோமனின் மகள் - இந்திராணி (இந்திராணியின் தந்தையின் பெயர் புலோமன்) அர்ச்சிதா = அர்ச்சிக்கப்படும் = பூசனை - 544 புலோமஜார்ச்சிதா = இந்திராணியால்(புலோமஜா) துதிக்கப்படுபவள்   பந்த = கட்டுண்டிருத்தல் - கைதாகியிருத்தல் மோசனி = விடுதலை- சுதந்திரம் - 546 பந்தமொசனீ = பந்தத்திலிருந்து விடுவிப்பவள்*  சம்சார பந்தத்தில் கட்டுண்டிருப்பவர்களை விடுவிப்பவள்   பர்பரா = சுருள் முடி அலகா = சுருள் - கூந்தல் கற்றை - 547 பர்பராலகா = சுருண்ட கற்றைக் கூந்தல் உடையவள்.   விமர்ஷ = காரணம் - சிந்தனை - பிரதிபலிப்பு ரூபிணீ = வடிவான - 548 விமர்ஷ ரூபிணீ = பிரம்மத்தின் பிரதிபலிப்பானவள் * பிரம்மத்தின் பிரதிபலிப்பே சிருஷ்டி. பிரம்மம் பரமாக தனித்திருக்கும் போது சுத்த சைதன்யமாக விளங்குகிறது. அதன் காரண வடிவமே பிரபஞ்சம். பிரம்மத்தின் பிரதிபலிப்பே அண்டமாக விரிகிறது.   - 549 வித்யா = ஞானமயமானவள்    வியத் = ஆகாசம் வியதா = விரிவடைந்த - பரந்த ஆதி = முதலியன - இத்யாதி ஜகத் = நிலம் - பூமி ப்ரசு = கொள்ளுதல் - உண்டாக்குதல் - 550 வியதாதி-ஜகத்-ப்ரசு = சிருஷ்டியை உண்டாக்கியிருப்பவள் *  சிருஷ்டியின் ஆதாரமான பஞ்சபூதங்களில் ஆகாயம் தொடங்கி, நிலம் வரையிலான மூலகங்களை (elements) உருவாக்கியிருப்பவள் (விபூதி விஸ்தாரம்) []   (551-575) சர்வ-வ்யாதி ப்ரஷமனீ சர்வ ம்ருத்யு நிவாரணீ அக்ர கண்யா அசிந்த்ய ரூபா கலிகல்மஷ நாசினீ காத்யாயனீ காலஹந்த்ரீ கமலாஷ நிஷேவிதா தாம்பூல பூரித முகீ தாடிமீ குசும ப்ரபா ம்ருகாக்ஷீ; மோஹினீ; முக்யா; ம்ருடானி; (ம்ரிடானி) மித்ர ரூபிணீ; நித்ய த்ருப்தா; பக்த நிதி; நியந்த்ரீ; நிகிலேஷ்வரீ; மைத்ர்யாதி வாசனா லப்யா; மஹாப்ரளய சாக்ஷிணீ; பரா-ஷக்தி; பரா-நிஷ்டா; ப்ரக்ஞான கண ரூபிணீ; மாத்வீ பான லசா; *** ப்ரஷமன் = குணப்படுத்துதல் - ஆற்றுதல் - தணித்தல் - 551 சர்வ வ்யாதி ப்ரஷமனீ = அனைத்து ரோகங்களையும் ஆற்றக்கூடியவள். பருவுடல், நுண்ணுடல் முதலியவற்றின் ரோகத்தைப் போகக்கூடியவள். பிறப்பு இறப்பு என்ற பெருவியாதியை நீக்க வல்லவள்   நிவாரண் = தடுத்தல் - முறித்தல் - 552 சர்வ ம்ருத்யு நிவாரிணீ = மரணம் முதலான அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் தடுதாட்கொள்பவள்   அக்ர = முதலாவது  கண்யா = கணக்கெடுத்தல் - கவனித்தல் - 553 அக்ர கண்யா = பிரபஞ்ச சிருஷ்டியில் முதன்மையானவள், பிரதானமானவள் (அவளுக்கு முந்தைய நிலையில் எவரும், எதுவும் இல்லை)   அசிந்த்ய = சிந்தனைக்கு அப்பாற்பட்ட - 554 அசிந்த்ய ரூபா = அனைத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பவள் (மனம் , அறிவுக்கு எட்டா நிலையில் இருப்பவள்)    கலி = கலியுகம் ie தற்போதைய யுகம் கல்மஷ = அழுக்கு (பாபங்கள்) - 555 கலிகல்மஷ நாஷினீ = கலியின் கொடுமையை அழிப்பவள் பிரபஞ்சவியலின்படி, இந்து மத நம்பிக்கையானது, காலச்சக்கரம் நான்கு யுகங்களின் சுழற்சியாக வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது. அவை, சத்யயுகம், த்ரேதா யுகம்  துவாபர யுகம் மற்றும் கலியுகம்.  தற்போது நடைபெறுவது கலியுகம்.   - 556 காத்யாயனீ = காத்யாயன முனிவரின் புதல்வி (வழித்தோன்றல்) * ஆக்ஞா சக்கரத்தில், ஒட்யான பீடத்தின் தேவதா ரூபமான 'காத்யாயனி தேவி' என்றும்   இந்நாமத்தை தியானிக்கலாம்.   கால = காலம் - காலத்தால் நிகழும் மரணம் / மாற்றம்  ஹந்த்ரீ = அழிப்பவர் - 557 காலஹந்த்ரீ = காலத்தை (மரணத்தை) தகர்ப்பவள் (ie. அதனை கடந்து நிலைத்து நிற்பவள்) *  ஞானியர்க்கு ஜனன மரண சுழற்சியை ஒழித்து, காலத்தின் நிலையாமையை பொய்க்கச் செய்பவள்.   கமலாஷ = கமலம் (தாமரை) போன்ற கண்ணுடைய ( ஸ்ரீ விஷ்ணு )  நிஷேவிதா = உபசரிக்கப்படுதல் - 558 கமலாஷ நிஷேவிதா= பகவான் ஸ்ரீ விஷ்ணுவால் ஆராதிக்கப்படுபவள்   தாம்பூல = தாம்பூலம்  பூரித = முழுவதுமாக - பரவி முக = முகம் - வாய் - 559 தாம்பூல பூரித முகீ = தாம்பூலம் தரித்த வாய் உடையவள்  (தாம்பூலத்தின் நறுமணம் கமழும் சிவந்த வாய்)   தாடிமீ = மாதுளை குசும = மலர் ப்ரபா = ஒளிர்தல் - மிளிர்தல் - 560 தாடிமீ குசுமப்ரபா = மாதுளை மலரைப் போல் சோபிப்பவள் (சிவந்த நிறத்தில் மின்னுபவள்)   ம்ருக = மான் அக்ஷி = கண்கள் - 561 ம்ருகாக்ஷீ = மானையொத்த கண்களை உடையவள்   - 562 மோஹினீ = வசீகரிப்பவள்   - 563 முக்யா = பிரதானமானவள்; முதன்மையானவள்.    ம்ருடா = சிவனாரைக் குறிப்பது ம்ரிடதீ / ம்ருடதீ = மகிழ்வூட்டுதல் 564 ம்ருடானீ(ம்ரிடானீ) = இறைவன் சிவனின் பத்தினி  564 ம்ருடானீ = மகிழ்ச்சியளிப்பவள்    மித்ரா = தோழமை - நட்பு - 565 மித்ர ரூபிணீ = நட்பு வடிவானவள். பிரபஞ்சத்தின் ஜட-ஜீவர்கள் அனைவருக்குமான உற்ற தோழி.   த்ருப்தி = திருப்தி - போதுமென்ற மனம் - 566 நித்ய-த்ருப்தா = மாறாத நித்தியமான மன-நிறைவை உடையவள்   நிதி = செல்வம் - 567 பக்த நிதி = பக்தர்களுக்கான (மாபெரும்) பொக்கிஷம்   நியந்த்ரண = ஆளுதல் - கட்டுப்படுத்துதல் - 568 நியந்த்ரீ = புவனத்தை ஆளுபவள்   நிகில = பூரணமான - முழுவதும் - 569 நிகிலேஷ்வரீ = சர்வேஸ்வரீ - ஜகத்தின் இறைவி / அரசி   மைத்ர = நட்பு - தோழமை ஆதி = முதலிய - போன்றவை வாசனா = ஆசை - இயல்பு - குணம் லப்யா = அடையக்கூடிய (அவள் கருணையை பேறத் தகுந்த) - 570 மைத்ர்யாதி வாசனா லப்யா = மேன்மையான நற்பண்புகளால் அடைய  எளிதானவள்    மஹாப்ரளய = பேரழிவு - பிரபஞ்சத்தின் ஒடுக்கம்  சாக்ஷி = சாட்சி - கண்கூடான சான்று - 571 மஹாப்ரளய சாக்ஷிணீ = பிரபஞ்சத்தின் ஒடுக்கத்தை காணும் சாக்ஷியாக (ஒரே சாக்ஷியாக)  விளங்குபவள் . பிரபஞ்சத்தின் துவக்கமும் ஒடுக்கமும் நியதிப்படி மாறி மாறி நிகழும் நிகழ்வுகள்.  ஒடுக்கத்தின் போது மும்மூர்த்திகள் ( பிரம்மா விஷ்ணு மஹேஸ்வரன்) , காலம், கர்மா உட்பட அனைத்தும், ஒடுங்கி ப்ரபஞ்சப் பேராற்றலான பரப்பரம்மத்தில் இரண்டற கலந்து விடுகின்றன. மாயா எனும் பிரக்ருதியாளவள் மட்டுமே இப்பிரளயத்தை காணும் ஒரே சாக்ஷி.     பரா = அதி உன்னத - மிக உயர்ந்த  - 572 பரா-ஷக்தி = ஒப்புயர்வற்றவள்-  உன்னத சக்தியாக விளங்குபவள் - இறைவி    நிஷ்டா = ஆதாரம் - மூலம்  நிஷ்டா = உறுதியான பக்தி - 573 பரா-நிஷ்டா = ஜகத்தின் ஆதாரம் - அடையக்கூடிய லக்ஷியத்தின் சிகரம்  - 573 பரா-நிஷ்டா =  உறுதியான பக்தியால் அடையக்கூடியவள்   ப்ரக்ஞான = ஞானம்  கன = செறிவான- கனமான ப்ரக்ஞான கன = அடர்ந்த ஞானம் - ஞானத்தையன்றி வேறொன்றுமிலாத - 574 ப்ரக்ஞான-கன ரூபிணீ = சம்பூரண  ஞானவடிவானவள்    மாத்வீ = உற்சாகம் தரக்கூடியது - மதுபானம் போன்ற* (இவ்விடத்தில் மது என்பது களிப்பத் தரக்கூடியதான அம்ருத நிலையைக் குறிக்கும்) பான = பானம் - பருக்ககூடியது லசா = களிப்பு - பெருமகிழ்ச்சி  - 575 மாத்வீ பான லசா = பெருமகிழ்ச்சியுடன் கூடிய நிலையான ஆனந்தானுபவத்தினால் களிப்படைந்திருப்பவள்*  அம்ருதத்திற்கு ஒப்பான பெருமகிழ்ச்சி நிலையில் நிலைத்திருப்பவள் என்று கொள்வது தகும்    (விபூதி விஸ்தாரம்) []   (576-600) மத்தா; மத்ருகா வர்ண ரூபிணீ; மஹா கைலாச நிலயா; ம்ருணால ம்ருது தோர்லதா; மஹானீயா; தயா மூர்த்தி; மஹா சாம்ராஜ்ய ஷாலினீ; ஆத்ம வித்யா; மஹா வித்யா; ஸ்ரீ வித்யா; காம சேவிதா; ஸ்ரீ ஷோடஷாக்ஷரி வித்யா; த்ரிகூடா; காமகோடிகா; கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா ; ஷிர: ஸ்திதா சந்த்ர நிபா பாலஸ்தா இந்த்ரதனுப்ரபா ஹ்ருதயஸ்தா ரவி ப்ரக்யா த்ரி கொணாந்த்ர தீபிகா தாக்ஷாயிணீ தைத்ய ஹந்த்ரீ தக்ஷ யக்ஞ வினாசினீ *** மத்தா = ஆனந்தத்தில் மிதத்தல்  - 576 மத்தா = பெருமகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்ந்திருப்பவள்  (ஆனந்தானுபவம்)   மாத்ரிரு)கா = அம்பிகை - பெண் கடவுள்  மாத்ரு(ரி)கா  =  எழுத்து - அகரவரிசை வர்ண =  நிறம் - இயல்பு - 577 மாத்ருகா வர்ண ரூபிணீ = உலகத்தின் மூலம்- அன்னை - பிரபஞ்சத்தின் ஆதாரம்; - 577 மாத்ருகா வர்ண ரூபிணீ =  அகர எழுத்துகளாகியிருப்பவள் (எழுத்து, சொல் அதன் சப்தம் .`ie. சப்த ப்ரம்மம்)    - 578 மஹா கைலாச நிலயா = கைலாசத்தில் நிலை கொண்டிருப்பவள் (தனது நாதனுடன்)    ம்ருணால= தாமரைத் தண்டு ம்ருது= ம்ருதுவான தோர்லதா = கொடி போன்ற கை - 579 ம்ருணால ம்ருது  தோர்லதா = தாமரைத் தண்டினையொத்த ம்ருதுவான கொடி போன்ற இளங்கரங்களை உடையவள்    - 580 மஹானீயா = போற்றுதற்குரியவள்     - 581 தயா மூர்த்தி = பரிவே வடிவானவள்   ஷாலினி = உரிமையுடைய - சொந்தம் கொண்டாடும் - 582 மஹா சாம்ராஜ்ய ஷாலினீ = பிரபஞ்சமெனும் பெரும் சாம்ராஜ்யத்தின் பேரரசி - அதனை தனதாக்கியவள்     வித்யா = விஞ்ஞானம் - அறிவு 583 ஆத்ம வித்யா = ஆத்ம ஞானமாகியவள்    - 584 மஹா வித்யா = உன்னத ஞானமானவள் (பிரம்ம ஞானமெனும் சுயத்தை பற்றிய அறிவாகி இருப்பவள்)      - 585 ஸ்ரீ வித்யா = ஸ்ரீ வித்யையின் (லலிதாம்பிகை) வடிவானவள்.   ஸ்ரீ வித்யா உபாசனையாக விளங்கும் பஞ்சதசி மந்திரமாக விளங்குபவள்.     - 586 காம சேவிதா = மன்மதனால் வணங்கப்படுபவள்     ஷோடஷ = பதினாறுடைய (பதினாறு எண்ணிக்கை கொண்ட) அக்ஷர = அக்ஷரம் - எழுத்துகள் - 587 ஸ்ரீ ஷோடஷாக்ஷரீ வித்யா = ஷோடசி என்னும் உயர்ந்த  தத்துவமாக இருப்பவள். ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறைகளில் ஷோடசி எனும் சக்தி வாய்ந்த மந்திரம் பதினாறு அக்ஷரங்கள் கொண்டதாகவும் பஞ்சதசியை விட சூக்ஷுமமாக கருதப்படும்  மந்திரோபாசனை ஆகும்.     த்ரி =  மூன்று - மூன்றான - முப்பகுதிகள் கொண்ட  கூட = பரிமாணம் - முக்கியத்துவம்  - 588 த்ரிகூட = மூன்றாக i.e முத்தன்மையுடையதாக பரிமாணிப்பவள் * சிருஷ்டி ஸ்திதி லயம் ; அ-உ-ம்; சத்துவம், ராஜசம்,  தாமசம் எனும் முக்குணங்கள்;  முப்பகுதிகள் கொண்ட பஞ்சதசி மந்திரம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகள் என, நம்மால்  அடுக்க முடிந்த  உயர்ந்த தத்துவங்கள் பலவும் மூன்றாக வகுக்கத் தகுந்தவை.     காம = இச்சை - ஆசைகள் (அல்லது) காமேஸ்வரன் எனும் இறைவன் சிவன் * கோடி = உயர்ந்த இடம் - முடிவு  - 589 காமகோடிகா =  ஆனந்தத்தின் நிறைவானவள் (ஆசைகளுக்கு அப்பாற்பட்ட பூர்ணானந்தம்)   - 589 காமகோடிகா = சிவனின் அங்கமானவள் (அர்த்தனாரி எனும் சிவசக்தி ஐக்கியம் , அந்நிலையின் அபின்னம்)  காமேஸ்வரன் எனும் நாமம், காமத்தை கடந்தவரும், அதற்கு அப்பாற்பட்டவருமான இறைவன் சிவனாருக்கு உரியது.  சக்தியானவள் சிவத்துடன் இணைகையில் இரண்டறக் கலந்து இச்சைக்கு அப்பாற்பட்ட ஆனந்த, அபின்ன நிலையில் அறியப்படுகிறாள். சகுண பிரம்மத்தின் ஆரம்ப நிலை என்று உணரலாம்.     கடாக்ஷ = கடைக்கண் பார்வை - க்ஷண நேரப் பார்வை கிங்கரீ = சேவகிகள் - சேவைபுரியும் பெண்கள்  பூத = உடல் தாங்கும் உயிர் கமலா கோடி = தாமரை - தாமரையில் பிறந்த - செல்வம் - ஸ்ரீ லக்ஷ்மி  கமலா கோடி = கோடி லக்ஷ்மிகள் சேவிதா = துதிக்கப்படுபவள் - 590 கடாக்ஷ கிங்கரீ பூத கமலாகோடி ஸேவிதா =  தனது கடாக்ஷத்திற்கு ஏங்கும் கொடி லக்ஷ்மிகளால் ஆராதிக்கப் படுபவள்  - 590 கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா = கடைக்கண் பார்வையின் சமிக்ஞையாலேயே  கோடி லக்ஷ்மிகளால் உபசரிக்கப் பெறுபவள்     ஶிர = தலை - சிரம் - 591 ஷிர ஸ்திதா = சிரசில் குடியிருப்பவள் (சஹஸ்ராரத்தில் வெளிப்படுபவள்)    நிபா = ஒன்று போல் இருத்தல் (உவமை) - 592 சந்திர நிபா =  முழுமதியைப் போன்றவள்    பால = நெற்றி - 593 பாலஸ்தா = நுதலில் நிலைபெற்றவள் *  நெற்றியின் நடுவிலுள்ள ஆக்ஞா சக்கரத்தின் பிந்துவில் நிலைபெற்றவள்.   இந்த்ரதனு = வானவில் ப்ரபா = ஒளிர்வு - 594 இந்த்ரதனுப்ரபா = வானவில்லின் பொலிவானவள்    - 595 ஹருதயஸ்தா = இதயத்தில் வாசம் செய்பவள்    ரவி = சூரியன் ப்ரக்யா = தெளிவான - வெளிச்சமான - ஒளிரும் - 596 ரவிப்ரக்யா = சூரியனப் போல் ஒளிர்பவள்    த்ரிகோண = முக்கோணம் அந்தர = அதனுள் - உள்ளே தீபிகா = ஒளி - 597 த்ரிகோணாந்தர தீபிகா = முக்கோணத்தின் ஒளியானவள் (மூலாதார சக்கரத்தில் நிலைபெற்ற சக்தி).   - 598 தாக்ஷாயணீ = தக்ஷப்ரஜாபதியின் மகள்    தைத்ய = திதி(Diti)யின் புதல்வர்கள் - அசுரர்கள் ஹந்த்ரீ = அழித்தல்  - 599 தைத்ய ஹந்த்ரீ = அசுரர்களை(அசுரத்தன்மையை) வதம் செய்பவள்    - 600 தக்ஷ யக்ஞ வினாசினீ = தக்ஷ யக்ஞத்தை நாசமாக்கியவள்   தாக்ஷாயணீ தஷனின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை மணந்தாள். தக்ஷன் யக்ஞத்தை நடத்திய போது, இறைவனான சிவனுக்கு அழைப்பு விடுக்க மறுத்தான்.  அதனால் வருத்தமுற்ற தாக்ஷாயணீ தஷனின் மதியீனத்தை சுட்டிக்காட்ட முயன்று தோற்றதால் வெகுண்டெழுந்து யக்ஞத்தை அழித்து தானும் வெள்வித்தீயில் உடல் உகுத்தாள். இக்கதை இந்து மதத்தவர் பலரும் அறிந்தது.     (விபூதி விஸ்தாரம்) []   601-625) தராந்தோலித தீர்காக்ஷீ தாரஹாசோஜ்வலன் முகீ குரு மூர்த்தி குண நிதி கோமாதா குஹ ஜன்ம பூ: தேவேஷீ தண்ட நீதிஸ்தா தஹராகாஷ ரூபிணீ பிரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா   கலாத்மிகா கலா நாதா   காவ்யா லாப வினோதினீ சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா ஆதிஷக்தி அமேயா ஆத்மா பரமா பாவனாக்ருதி அனேஹ கோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ   திவ்ய விக்ரஹா; க்லீம்காரீ; கேவலா; குஹ்யா; கைவல்யபத தாயினீ; ** தர = கொண்டிருத்தல் ஆந்தோலித = அசைதல் = ஆடுதல் தீர்க = நெடிய - நீள் அக்ஷி= கண்கள் - 601  தராந்தோலித தீர்காக்ஷீ = அலைபாயும் (அசையும்) நீள் விழிகளைக் கோண்டவள் []   தர = கொண்டிருத்தல் ஹாஸ = சிரிப்பு - புன்னகை உஜ்வலன் = காந்தி - பிரகாசம் முக = முகம் - 602 தரஹாஸோஜ்வலன் முகீ =   ஒளிர் மந்தஹாசம் தவழும் வதனம் கொண்டவள்   மூர்த்தி = அவதாரம் - வடிவம் தாங்குதல் - உருவகம்  - 603 குரு மூர்த்தி =  ஆச்சாரிய  வடிவானவள் ie. பக்தர்களுக்கு குருவாகி போதிப்பவள்   நிதி = பொக்கிஷம் - களஞ்சியம் குண = மேன்மையான குணங்கள்  - 604 குண நிதி = நற்குணங்களின் களஞ்சியம்     கோ = பசு கோமாத்ரு = பசுக்களின் தாய் - 605 கோமாதா = பசுக்களுக்கெல்லாம் மாதாவாக விளங்குபவள் * மனிதர்களுக்கும் போஷாக்கு அளிப்பதால்,  ஹிந்து மதத்தில் பசு புனிதமாக மதிக்கப்படுகிறது. காமதேனு எனும் தெய்வீகப் பசு, உயர் லோகங்களில் வசிப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. லலிதாம்பிகை, அன்னையின் வாத்ஸல்யத்தோடு பிரபஞ்சத்தை போஷிக்கிறாள் என்பது நாமாவின் புரிதல்.    குஹ = ஸ்கந்தன் - முருகன் ஜன்ம = ஆதாரமான - பிறப்பிற்கு காரணமான பூ: = பூவுலகம் - 606 குஹ ஜன்மபூ: = ஸ்கந்தனின் பிறப்பிற்கு காரணமானவள் (அன்னை) *குஹ என்றால் குகை என்றும் பொருள் கொள்ளலாம். ஆதாரமான மூலப்ரக்ருதியானவள். ஜீவனின் மூலத்தை தன்னிடத்தே ஒடுக்கி (ஒளித்து) பின் பிரபஞ்சத்தை உருவாக்கும் அன்னையாகிறாள் என்பதும் கருத்து.     தேவ = கடவுளர் ஈஷி(ன்) = தலைமை - முதன்மை - 607 தேவேஷி = தேவர்களுக்குத் தலைவி; இறைவி   நீதி = நன்னடத்தை - ஒழுக்கம் தண்ட = தண்டனை - 608 தண்டநீதிஸ்தா = முறையான நடத்தையில்லாதவர்களை தண்டிப்பவள் - நீதியை நிலைநாட்டுபவள்.   தஹரம் = நுண்ணிய = இருதயத்தில் இருக்கும் ஆகாசம் - 609 தஹராகாஷ ரூபிணீ = இதயவெளியில் நுண்ணிய வடிவில் (ஜீவனாக) இருப்பவள்    ப்ரதிபத் = ஒவ்வொரு - வளர்பிறையின் முதல் நாள் முக்ய = முதலில் - ஆரம்பத்தில் ராக = முழு நிலவு திதி = பிறை நாட்களைக் குறிக்கும்  = பதினைந்து என்ற எண்ணிக்கை மண்டல் = குழு - குவியல்  - 610 ப்ரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா = வளர்பிறையின் முதல் நாள் துவங்கி பௌர்ணமி வரையிலான திதி நாட்களில் பூஜிக்கப்படுபவள்    கலா = கலா வடிவங்கள் - கலைகள்   ஆத்மிகா = ஆன்மா – உயிர் - 611 கலாத்மிகா = கலைகளின் ஜீவனாகியவள்  ie கலாம்சமானவள்     - 612 கலா நாதா = கலைகளின் அதிபதி i.e இறைவி    காவ்ய = காப்பியங்கள் - காவியங்கள் - கவிதைகள் ஆலாப / லாப = பேசுதல் - உரைத்தல் வினோத = ஆனந்தம் - 613 காவ்யாலாப வினோதினீ = காவியங்கள் உரைக்கப்படுவதைக் கேட்டு ஆனந்திப்பவள்     சசாமர = சாமரத்தினால் சேவை செய்யப்படுதல் – (அரச வம்சத்தினர்  இறைவனுக்கு வீசப்படும் சாமரம்)   ரமா = ஸ்ரீலக்ஷ்மி தேவி வாணீ = ஸ்ரீசரஸ்வதி சவ்ய = இடது - வலது தக்ஷிண = வலம் – தென்புறம் - 614 சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா = ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தேவியரால் இருபுறமும் சாமரம் வீசி துதித்தேற்றப்படுபவள்     - 615 ஆதிஷக்தி = பிரபஞ்சத்தின் மூலாதார சக்தி     அமேயா = அளக்க முடியாத - 616 அமேயா =  அளவற்றவள் - அளக்க முடியாதவள்    - 617 ஆத்மா = ஜீவனாகி இருப்பவள் (சகல ஜீவராசிகளிலும் உறைபவள்)     பரம = அதிஉன்னத = மிக உயர்ந்த - 618 பரமா = ஒப்பற்றவள்     பாவன = மாசற்ற க்ருதி = படைப்பு (இவ்விடத்தில் கொள்ளத்தக்க பொருள்)   - 619 பாவனா-க்ருதி = தூய்மையின் சாந்நித்தியம்    ஜனனீ = மாதா ப்ரம்மாண்ட = பிரபஞ்சம் கோடி = கோடி அனேக = பல- கணக்கற்ற - 620 அனேக கோடி ப்ரம்மாண்ட ஜனனீ = பற்பல கோடி ப்ரபஞ்சங்களை தோற்றுவித்தவள் (பிரம்மாண்டங்களின்  அன்னை).     திவ்ய =  தெய்வீகமான -  அழகு விக்ரஹ = அமைப்பு  - உடல் - 621 திவ்ய விக்ரஹா = தேய்வீக எழிலமைப்பை உடையவள்     க்லீம் = பீஜ அக்ஷரம் (பீஜ அக்ஷரம் என்பது சக்தி வாய்ந்த ஓரெழுத்து மந்திராக்ஷரங்கள். பீஜம் என்றால் விதை. ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும் பீஜாக்ஷரம் வேறுபடும். மந்திர சக்தியை ஓரெழுத்தில் அடக்கி விடும் அக்ஷர மந்திரங்களை பீஜாக்ஷரங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. பெரும்  நலன் பயக்கும் அபாரசக்தி மிக்க இம்மந்திரங்களை தீக்ஷை பெற்று ஜபிப்பதே சிறந்தது. ) - 622 க்லீம்-காரீ = க்லீம் எனும் பீஜாக்ஷர மந்திரத்தின் வடிவமானவள்     கேவலா = தனியொன்றாக- ஒன்று மட்டும் - 623 கேவலா =  எதனையும் சாராது, தன்னில் நிறைந்திருப்பவள் - முழுமையானவள்- பரப்பிரம்மம் -தன்னில் தானே உறைந்து, (அதனால்) எல்லாமுமானவள்.   குஹ = மர்மமான - அந்தரங்கமான - வெளிப்படாத - 624 குஹ்யா = மறைபொருளானவள் - அனைவராலும் எளிதில் உணரப்படாதவள் (அவளது வழிபாடு அனைவராலும் பின்பற்ற இயலாதது)    கைவல்ய = கைவல்யம் - மோக்ஷம்  பத = பதவி - ஸ்தானம் கைவல்ய பதம் = வீடுபேறு  தாயினி = வழங்குபவள்  - 625 கைவல்ய-பத தாயினீ = முக்தி நிலை அருளுபவள்    (விபூதி விஸ்தாரம்) []   (626-650)  த்ரிபுரா; த்ரிஜகத்-வந்த்யா; த்ரிமூர்த்தி; த்ரிதசேஷ்வரீ; த்ரயக்ஷரீ; திவ்ய கந்தாத்யா; சிந்தூர திலகாஞ்சிதா; உமா; ஷைலேந்திர தனயா; கௌரீ; கந்தர்வ சேவிதா; விஸ்வ-கர்பா; ஸ்வர்ண-கர்பா; அவரதா; வாகதீஸ்வரீ; த்யான-கம்யா; அபரிச்சேத்யா; ஞானதா; ஞான விக்ரஹா; சர்வ வேதாந்த சம்வேத்யா; சத்யானந்த ஸ்வரூபிணி; லோபமுத்ரா-அர்சிதா; லீலா க்ல்ருப்த ப்ரமாண்ட மண்டலா; அத்ரிஷ்யா; த்ரிஷ்ய ரஹிதா; ***   புர = முதன்மை - ஆரம்பம் - புராதனம் - 626  த்ரிபுரா = மும்முர்த்திகளைக் காட்டிலும் புராதனமானவள் ie அனைத்துக்கும் முதலான ஆதார சக்தி * முக்குணங்கள், முத்தேவர்கள் மும்மூர்த்தி), மூவகை சக்தி, மூன்று உலகங்கள், முத்தொழில்கள், முக்காலம் என மூத்தன்மை உடைய அனைத்துடனும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.   வந்த்யா = போற்றத்தக்க ஜகத் = ஜகம் - உலகம் - 627 த்ரிஜகத் வந்த்யா = மூவுலகிலும் புகழ்ந்து போற்றி வழிபடப்படுபவள் (பூ, புவர், சுவர் லோகங்கள்)    - 628 த்ரிமூர்த்தி = மூம்மூர்த்திகளின் ஐக்கிய வடிவமானவள்    த்ரிதஸா = தெய்வங்கள் - தேவர்கள் - கடவுளர்கள் - 629 த்ரிதசேஸ்வரீ = கடவுளர்களுக்கெல்லாம் ஈஸ்வரி  - சர்வேஸ்வரி (பிரபஞ்சத்திற்கு தலைவி)      அக்ஷ = எழுத்துகள் - அசை - 630 த்ரயக்ஷரீ = மூன்று அக்ஷரங்களின் வடிவானவள் ( அ - உ - ம் எனும் அக்ஷரங்களால் ஆன  ஓம் எனும் பிரணவ மந்திர வடிவம்)    திவ்ய = தெய்வீகம் கந்த = நறுமணம் கந்தாதக = நறுமணம் கொண்ட - 631 திவ்ய கந்தாதத்யா = தெய்வீக நறுமணம் கமழத் திகழ்பவள்     சிந்தூர = குங்குமம்  திலக = திலகம் ( நெற்றியில் இடும் குறியீடு) அஞ்சித = அலங்கரித்தல் - 632 சிந்தூர திலகாஞ்சிதா = சிந்தூர திலகத்தால்  நெற்றியை எழிலுற அலங்கரித்தவள்    - 633 உமா = பார்வதி தேவி (சிவபெருமானின் துணைவி)  * உமா எனும் நாமம் , சிருஷ்டி, லயம், ஸ்திதி உணர்த்தும் ( உ...ம்...அ ) ( அதாவது அகார உகார மகாரத்தை குறிக்கும்      ஷைல  = மலை இந்திர = தலைவன்  தனய = புதல்வன் / புதல்வி - 634 ஷைலேந்திர தனயா = மலையரசனின் புதல்வி (ஹிமவானின் புதல்வி)     - 635 கௌரி =  செந்நிறமுடையவள் (வெளிர்)    - 636 கந்தர்வ சேவிதா = கந்தர்வர்களால் வணங்கப்படுபவள் * கந்தர்வர்கள் இசை நாட்டியத்தில் வல்லுனர்கள். கோவில் சிற்பங்கள் ஓவியங்களிலும்  புராண இதிஹாசங்களிலும் பேசப்பட்டிருக்கிறார்கள்.  தேவலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடைப்பட்ட லோகங்களில் வசிப்பவர்கள்.  இயற்கை எழில் கொஞ்சுமிடங்கள், பூக்கள், நறுமணம் வீசும் சுத்தமான இடங்களில் கந்தர்வர்கள் விஜயம் செய்வதாக நம்பிக்கை உண்டு.     விஷ்வ = பிரபஞ்சம் கர்ப = கர்பம் - கரு உருவாகி கர்பம் திரித்தல் - 637 விஷ்வ-கர்பா = பிரபஞ்சத்தை தனது கருவில் சுமந்தவள். அகில லோகங்களுக்கும் அன்னை.     ஸ்வர்ண (சுவர்ண) = பொன் - ஹிரண்ய (பொன்)  கர்ப = கரு  - 638 ஸ்வர்ண-கர்பா =   ஹிரண்யகர்பா - முதல்கரு – முதல் சலனம் - பிரபஞ்ச வம்சாவளியின் மூலம்    வரத = வரம் தருதல் - உபகாரி அவரத = வரமருளாத - அபகாரம் செய்தல் (தீவினையாளர்களுக்கு)  அவரத் = தவறிழைத்தல் அவர = தடுத்தல் - தள்ளி வைத்தல் - 639 அவரதா = தீவினையாளர்களை தண்டிப்பவள்   வாக (வாச) / வாக்ய = பேச்சு = குரல் = மொழி (அதனைச் சார்ந்து) - வாக்கு  - 640 வாகதீஸ்வரீ = வாக்கின் அதிபதி     கம்யா = அடையக்கூடிய - 641 த்யான கம்யா = தியானத்தின் மூலம் அடையப்படுபவள்     அபரிதா = வரையறுக்க இயலாத - சூழப்படாத சேத்யா = பிளக்கப்பட்ட - வெட்டப்பட்ட அபரிச்சேத = தொடர்ச்சி  - 642 அபரிச்சேத்யா = வரையறுக்க முடியாதவள் - எங்கும் நிறைந்து நிரம்பியிருப்பவள்     தா = கொடுத்தல் - அனுக்கிரகித்தல்  - 643  ஞானதா =   ஞானம் அருளுபவள் (பிரம்ம ஞானம்)   விக்ரஹா = வடிவம் - உருவம் - 644 ஞான விக்ரஹா =  ஞானத்தின் மொத்தவடிவமாக திகழ்பவள் - ஞானமூர்த்தி    சம்வேத்யா = புரிந்துணர்தல் - கற்றல் - 645 சர்வ-வேதாந்த சம்வேத்யா = அனைத்து வேதாந்தங்களின் (உபநிஷதங்கள்) வழியே புரிந்துணரப் படுபவள்     - 646 சத்யானந்த ஸ்வரூபிணீ = மெய்ப்பொருளானவள் ; ஆனந்தத்தின் வடிவானவள்     அர்ச்சித்= புகழ்தல் - வணங்குதல் - 647 லோபமுத்ரா-அர்ச்சிதா = லோபமுத்ராவால் போற்றப்படுபவள் *  *லோபமுத்ரா அகஸ்திய மாமுனியின் துணைவி.  சாக்த வழிபாட்டுக்கு உறுதுணையாக இவரின் பங்களிப்பு அமைந்திருக்கிறது .   லீலா = விளையாட்டு  க்ல்ருப்த = படைத்த - அமைக்கபப்ட்ட ப்ரம்மாண்ட - மண்டலா = பிரபஞ்ச மண்டலம் (பிரபஞ்ச முழுமையும்) - 648 லீலா க்ல்ருப்த ப்ரம்மாண்ட மண்டலா = அண்ட பிரபஞ்சம் முழுவதையும் சிறுபிள்ளை  விளையாட்டென (சடுதியில்)   உருவாக்கியவள் (பிரபஞ்சப் படைப்பு அவளது தீரா விளையாட்டு)     த்ரிஷ்ய = பார்க்கும் - பார்க்கப்படும் - காட்சி அத்ரிஷ்ய = பார்க்கப்படாத - 649 அத்ரிஷ்யா = மறைபொருளானவள் (பார்வையின் புரிதலுக்கு அப்பாற்பட்டவள்)    ரஹிதா = இல்லாத-  விடுத்த - நீங்கிய - 650 த்ரிஷ்ய ரஹிதா = பார்வைக்கு புலப்படாதவள் (பார்வையின் பொருளுக்கு அகப்படாதவள்)* - 650 த்ரிஷ்ய ரஹிதா = பார்க்க ஏதுமற்றவள் (அவளே அனைத்துமாகி அத்வைதமாகி இருப்பதால், இன்னொன்று என எதுவுமற்ற நிலையில், பார்வைக்கு சர்வவியாபியான  அவளன்றி ஏதுமில்லை)    (விபூதி விஸ்தாரம்) []   (651-675) விஞ்ஞாத்ரீ; வேத்ய-வர்ஜிதா; யோகினீ; யோகதா; யோக்யா; யோகானந்தா; யுகந்தரா; இச்சா ஷக்தி ஞான ஷக்தி க்ரியா ஷக்தி  ஸ்வரூபிணீ;  சர்வாதாரா; சுப்ரதிஷ்டா; சத்-அசத் ரூப தாரிணீ; அஷ்ட மூர்த்தி; அஜா ஜேத்ரீ; லோக யாத்ரா விதாயினீ; ஏகாக்னீ; பூம ரூபா; நிர்த்வைதா; த்வைத வர்ஜிதா; அன்னதா; வசுதா; வ்ருத்தா; ப்ரம்மாத்மைக்ய ஸ்வரூபிணி; ப்ருஹதீ; ப்ராம்மணி; ப்ரம்மி; ***   விஞ்ஞான = விஞ்ஞானம் - அறிவு விஞ்ஞாத்ர்-(ர) - அறிபவன்  - 651 விஞ்ஞாத்ரீ = சகலமும் அறிந்தவள் - சர்வஞானி    வேத்யா = அறியப்படுதல் - அறிவு வர்ஜித் = புறம் தள்ளிய - விடுபட்ட  - 652 வேத்ய-வர்ஜிதா = அறிவு மற்றும் அறியப்படும் பொருள்களைக் கடந்தவள் – அறிதல்-அறியப்படாது இருத்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு விளங்குபவள்    யோகா - ஐக்கியம் (ஜீவனுக்கும் இறைவனுக்குமான ஐக்கியம்)  - 653 யோகினி = யோகக்கலையின் பிரதிபிம்பம் - சதாசிவனுடன் ஐக்கியத்தில் இருப்பவள்.    தா = வழங்குதல் - 654 யோகதா = யோகத்தைப் பற்றிய அறிவு, அனுபவம், ஆற்றலை அருளுபவள்.   யோக்யா = யோக்யதையுடைய - தகுதியுடைய - 655 யோக்யா = யோகத்தினால் அடையத்தகுந்தவள் .    ஆனந்தா = ஆனந்தம் - 656 யோகானந்தா = யோகத்தினால் அடையப்படும் பேரானந்தமானவள்    தரா = தாங்கியிருத்தல் யுக = யுகம் - சகாப்தம் -  கால அளவுகோல்  (சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலி என்ற நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மஹாயுகம்) - 657 யுகந்தரா = முடிவற்ற யுகங்களை(சகாப்தங்கள்)  ஆளுபவள் -  தரித்திருப்பவள்    இச்சா = சித்தம் - விருப்பம் க்ரியா = செயல் - ஆக்கம் ஞான  =  ஞானம் - 658 இச்சா ஷக்தி க்ரியா ஷக்தி ஞான ஷக்தி ஸ்வரூபிணீ =  சிந்தனை, செயல் மற்றும் ஞானமெனும் மூவகை ஆற்றலாக வெளிப்படுபவள் * பிரபஞ்சத்தின் எந்தவொரு நிகழ்வும் முதலில் சிந்தனையாக முளைத்து, அதனை செயல்படுத்தும் அறிவின் துணையுடன் ஆக்கமாக உருபெறுகிறது     - 659 சர்வாதாரா = அனைத்திற்கும் (பிரபஞ்ச முழுமைக்கும்) ஆதாரமாக விளங்குபவள்   ப்ரதிஷ்டா = உறுதியான நிலைபாடு - ஸ்திரமாக நிற்பது - 660 சுப்ரதிஷ்டா = (அனைத்திற்குமான) ஸ்திரமான அஸ்திவாரமென தன்னை நிலை நிறுத்துபவள்    சத் = உண்மை அசத் =  உண்மையல்லாத தாரணி = தரித்தல் - கொண்டிருத்தல் - 661 சத்-அசத் ரூப தாரிணீ =  நிலையானதான சத்தியத்தையும், சத்தியமில்லாத அனித்திய ரூபத்தையும் தரித்திருப்பவள்    மூர்த்தி = உருவம் - ஆகிருதி  - 662 அஷ்ட மூர்த்தி = எட்டு படிமங்கள் தரிப்பவள் * அன்னை பராசக்தியின் அஷ்ட வடிவங்கள்(சப்த வடிவம் என்றும் நம்பிக்கை உண்டு). முறையே பிரம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, சாமுண்டி, மஹேந்திரி எனும் எழுவருடன்,  நாரசிம்ஹி என்பது நம்பிக்கை. எழுவரோடு அஷ்ட தேவதையாக 'ரௌத்ரீ' என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.  மீனாட்சி மண்டபத்தில் அஷ்ட சக்திகளின் அவதாரமென எழுவருடன் சியாமளா தேவி வணங்கப்பெறுகிறாள்.    அஜதா = மடமை அஜானதா = அறியாமை ஜேத்ர்-(ரு) / ஜைத்ரியா = வெற்றி கொள்ளுதல் - 663 அஜா ஜேத்ரீ = அறியாமையை வெற்றிகொண்டவள் (ஞானத்தின் உருவானவள் என்பதால் அஞ்ஞானமோ அறிவீனமோ அவளை நெருங்குவதில்லை)    லோக யாத்ரா = உலகியல் விதாயினி = காரணமாகுதல் - 664 லோக யாத்ரா விதாயினீ = உலகியல் (லௌகீக - இம்மைக்கு உரிய) நடவெடிக்கைகளை நடக்கசெய்பவள் அதற்கு காரணமானவள்.    ஏகாகின் = தனித்திருத்தல் - 665 ஏகாகினி = ஏகாந்தமானவள் - தனித்திருப்பவள் -அத்வைதி (இன்னொன்று என இல்லாத ஒருமையானவள்)    பூம = பலவற்றின் தொகுப்பு - அனேகம்  - 666 பூம ரூபா = பூரணத்தின் திரள் -  பெருவடிவத்தின் மொத்தத் தொகுப்பு    நிர்- நிஸ்- நிஹ் = வினைச்சொற்களுக்கு முன் உபயோகிக்கப்படும் முன்னொட்டு (prefix) சொற்கள்.  "அது அல்லாத" - "அதனின்று விடுபட்ட" என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது. - 667 நிர்-த்வைதா = இருமையற்றவள் -  த்வைதம் இல்லாத அத்வைதி (ஜீவனும் பிரம்மமும் ஒன்று எனும் அத்வைத வடிவம் பூண்டவள்   வர்ஜிதா = விடுத்த - விலக்கிய - 668 த்வைத வர்ஜிதா = த்வைதமென்ற இருமைக் கோட்பாட்டை புறம்தள்ளியவள் (அத்வைதி)    - 669 அன்னதா = உணவளிப்பவள்*    - 670 வசுதா =  சுபீஷத்தை, செல்வத்தை வழங்குபவள்* பிரபஞ்ச இயக்கத்தின் அத்தியாவசியங்களை அருளி, அதனை போஷித்து ரக்ஷிக்கும் பணி செய்கிறாள் .     - 671 வ்ரு(ரி)த்தா =   புராதனமானவள் - மூத்தவள் (முதன்மை - வேர் - காரணமானவள்)    பிரம்மா = பரம்பிரம்மா - பரமாத்மா  ஆத்மா = ஜீவன் ஐக்ய = ஐக்கியம் - சங்கம் - 672 ப்ரம்மாத்மைக்ய ஸ்வரூபிணீ = ஜீவ- பிரம்மத்தின்  ஐக்கிய வடிவானவள்     ப்ருஹத் = பெரிய - அளவற்ற - 673 ப்ருஹதி = பிரம்மாண்டமானவள்    - 674 பிராஹ்மணீ = பிராஹ்மணத்துவத்தின் பெண் அமசம்   ஒரு சிலர் படைப்புக் கடவுள் பிரம்மாவின் மனைவி என்று புரிந்துணர்கின்றனர்.  பிராஹ்மண எனும் சொல் பிரம்ம தத்துவத்தை உணர்ந்தறிந்த ஜீவன் எனும் பொருளில் உணர்தல் வேண்டும்.    - 675 ப்ரம்மி = வாக்கின் அதிபதியானவள் (வாணி - படைப்புக்கடவுள் பிரம்மாவின் ஆற்றல் சக்தி) * பிரம்மி என்பவள் சப்த(அஷ்ட) சக்தி  அவதாரத்தின் முதன்மை வடிவம்  (விபூதி விஸ்தாரம்) []   (675-700) ப்ரம்மானந்தா; பலிப்ரியா; பாஷா-ரூபா; ப்ருஹ்த்சேனா; பாவாபாவ விவர்ஜிதா; சுகாராத்யா; சுபகரீ; ஷோபனா சுலபா-கதி; ராஜ-ராஜேஶ்வரி; ராஜ்ய தாயினி; ராஜ்ய வல்லபா; ராஜத் க்ருபா; ராஜபீத நிவேஷித நிஜாஷ்ரிதா; ராஜ்யலக்ஷ்மி; கோஷநாதா; சதுரங்க பலேஷ்வரி; சாம்ராஜ்ய தாயினி; சத்யசந்தா; சாகர-மேகலா; தீக்ஷிதா; தைத்ய ஷமனி; சர்வ-லோக வஷங்கரி; சர்வார்த்த-தாத்ரி; சாவித்ரி; சச்சிதானந்த ரூபிணி; *** - 676 ப்ரம்மானந்தா =  பிரம்மானந்தத்தில் சதா திளைத்திருப்பவள் (மூலப்ரம்ம நிலையின் பரமானந்தம்)    பலி = படையல்  - 677 பலிப்ரியா =   பக்தர்கள் தரும் காணிக்கைகளை விரும்புபவள்.  ஒவ்வொரு யக்ஞங்களிலும் கொடுக்கப்படும் நிவேதனம் வேறுபடுகிறது. தேவ யக்ஞத்தில் பூஜை வழிபாடே தேவர்களுக்கு அளிக்கும் காணிக்கை. பித்ரு யக்ஞத்தில்  சிரார்த்த வழிபாடே யக்ஞ நிவேதனம். விருந்தோம்பலும் பரஸ்பர  அன்பும் மனுஷ்ய யக்ஞத்தின் நிவேதனம். பிரம்ம யக்ஞத்தில் அனைவருக்குமாக வழங்கும் ஞானபோதனையும் (ப்ரம்ம ஞானம் , தர்ம-சாஸ்திரம் பற்றிய அறிவினை பகிர்தல்) பூத யக்ஞத்தில் அனைத்து ஜீவராசிகளிடம் கொள்ளும் கருணை காணிக்கையாகிறது (பட்சி மிருகங்களுக்கு உணவுளித்தல், தாகம் தீர்த்தல், அதனை பாதுகாத்தல் முதலியன பூத-யக்ஞத்தில் சேரும்     பாஷா = மொழி - 678 பாஷா ருபா = அனைத்து மொழிகளின் வடிவமாகத் திகழ்பவள் மொழிவழியே ஞானமும் அறிவும் போதிக்கப்டுவதால், அவள் மொழி வடிவானவள்     ப்ருஹத்  = பிரம்மாண்டமான சேனா = சேனை - 679 ப்ருஹத் சேனா = பிரம்மாண்டமான சேனையுடையவள் (பிரபஞ்சத்தையே ஆளத் தகுந்த சேனை)    பாவா-பாவ = இருத்தலும் இல்லாமையும் விவர்ஜித் = விடுபட்ட - இல்லாத - 680 பாவா-பாவ விவர்ஜிதா = இருத்தலுக்கும் இல்லாமைக்கும் அப்பாற்பட்டவள் - நிலையானது நிலையற்றது முதலியவற்றிற்கு மேலானவள்    சுக = சுகம் -  சௌகரியம் ஆராத்யா = போற்றுதற்குரிய - 681 சுகாராத்யா = சுலபமான முறையில் ஆராதிக்கத் தகுந்தவள் (சிரமமான முறைகளும் விதிகளும் அல்லாத சௌகரியமான எளிய முறை)    ஷுபகர் = நலம் நல்குதல் - 682 ஷுபகரீ = நன்மையும் சுபீட்சமும்  நல்குபவள்     ஷோபனா = நல்லது = மங்களம் சுலப = எளிதாக கதி = செல்லுதல்   சுலபா-கதி = எளிய பாதையில் அணுகுதல் - 683 ஷோபனா சுலபா-கதி = எளிமையான வழிபாட்டிற்கு(இரங்கி) அதீத மங்களம் அருளுபவள் (பக்தர்களுக்கு மங்களம் தரும் முக்தி அருளுபவள்)    - 684 ராஜ ராஜேஷ்வரி = மன்னாதி மன்னர்களையும் பேரரசர்களையும் ஆளுபவள்  (பிரபஞ்சத்தை  ஆள்பவர்களான மும்மூர்த்திகளையும் ஆளுபவள்)   - 684 ராஜ ராஜேஷ்வரி = ராஜ ராஜேஷ்வரரின் (சிவன்) பத்தினி   - 685 ராஜ்ய தாயினி = உயர்ந்த  ராஜ்ஜியங்களை அருளுபவள் (கைலாயம் வைகுண்டம் முதலிய உயர்-சாம்ராஜ்ய பதவி அளிப்பவள்)    வல்லபா =  பொறுப்பாளி வல்லபா = பிரபலமான -  (பலருக்கும்) பிடித்தமான  - 686 ராஜ்ய வல்லபா = ராஜ்யத்தின் அதிபதி-பொறுப்பாளி (ப்ரபஞ்சம் எனும் ராஜ்ஜியம்)  அனைவராலும் விரும்பப்படுபவள் என்ற பொருளும் இருந்தாலும், "ராஜ்ய வல்லபா" என்று,  ‘ராஜ்ஜியம்’ என்ற சொல்லுடன் இணைந்திருப்பதால் "அதன் பொறுப்பாளி" என்று பதம் பிரித்து உணர்தல் பொருத்தம்.     ராஜத் = ராஜ - அளவில் பெரிய - உயர்ந்த க்ருபா = கிருபை - 687 = ராஜத்-க்ருபா =  பெருங்கருணை கொண்டவள்     பீட = ஆசனம் ராஜபீட = சிம்மாசனம் நிவேஷிதா = பிரவேசிக்கச் செய்தல் ஆஷ்ரித் = பின்பற்றுபவர்கள் நிஜ = தொடர்ந்து - சாஸ்வதமாக - 688 ராஜபீட நிவேஷித நிஜாஷ்ரிதா = மெய்யான  பக்தர்களை அரியாசனம் ஏற்றுபவள்    - 689 ராஜ்யலக்ஷ்மி = பிரபஞ்சமெனும் ராஜ்ஜியத்தின் அனைத்து செல்வ வளங்களுக்கும் உரிமை உள்ளவள்    கோஷ = பொக்கிஷம் நாத் = தலைமை - முதலாளி  - 690 கோஷநாதா = பிரபஞ்சம் எனும்)பெரும் பொக்கிஷத்தின் முதலாளி - அதனை இயக்குபவள்    சதுரங்க = யானை, குதிரை, காலட்படைகள், ரதங்கள் ஆகிய நால்வகை பலேஷ = படைத்தலைவி - 691 சதுரங்க பலேஷ்வரி = நால்வகை படைகளின் தலைவி * நால்வகையை அக-நோக்கு சமத்காரங்களாக உருவகப்படுத்தினால், மனம், புத்தி, அஹங்காரம், ஜீவன் ஆகிய நான்கிற்கும் அதிபதி என்பது உணர்தல்.     சாம்ராஜ்ய = சாம்ராஜ்ஜியம் தாயின் = அருளல் - 692 சாம்ராஜ்ய தாயினி = பெரும் சாம்ராஜ்ஜியத்தை அருளுபவள் (ஆத்மஞானமெனும் பெரும் சாம்ராஜ்ஜியம் - கைலாயம் வைகுண்டம் போன்ற உயர்லோக ப்ராப்தி)    சந்தா = வாக்கு - சத்தியம் - 693 சத்ய சந்தா = வாக்குறுதிக்குக் கடமைப் பட்டிருப்பவள் (தனது வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டு,  பிரபஞ்சத்தை போஷிக்கிறாள்)    மேகலா = மேகலை (ஒட்டியாணம்)  சாகர் = கடல் - சமுத்திரம்  - 694 சாகர மேகலா = பெருங்கடலையும் தனது ஒட்டியாணமென அலங்கரித்திருப்பவள் (பேரண்டமும் அவளுக்கொரு பிள்ளை-விளையாட்டு)    தீக்ஷித் = ஆன்மீக தீட்சை (துவக்கம்)  தீக்ஷா = தீட்சை (அருளுரை)  தீக்ஷகா = ஆன்மீக குரு - 695  தீக்ஷிதா =   தீட்சை அளித்து கரையேற்றுபவள் (தானே குருவாகி பக்தர்களுக்கு தீட்சையளித்து,  நற்போதனை செய்து ஆட்கொள்கிறாள் )   தைத்ய = அசுர (திதியின் புதல்வர்கள்) ஷமன் = நிறுத்தல் - முடித்தல் - 696 தைத்ய ஷமனி = அசுரர்களை வதம் செய்பவள்    வஷங்கர் = அடக்கி ஒடுக்குதல் -  கீழ்படியச் செய்தல்  - 697 சர்வலோக வஷங்கரி = அனைத்துலகையும் அடக்கி ஆளுபவள்    அர்த = ஆசைகள் சர்வார்த்த = அனைத்து ஆசைகளையும் தாத்ரி = அருளல் - 698 சர்வார்த்த தாத்ரி = அனைத்து அபிலாஷைகளையும் பூர்த்தி செய்பவள்    - 699 சாவித்ரி = சாவித்ரி தேவியானவள் (சரஸ்வதி) புராணங்களின் சில நூல்களில் சாவித்ரி தேவி,  அன்னை சரஸ்வதியின் அம்சமாக சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி மந்தரத்தின் அதிதேவதைகளாக காயத்ரி, சாவித்ரி மற்றும் சரஸ்வதி தேவியை குறிப்பிடுகின்றனர்.     சத் = சத்தியம் (இருத்தல்)  சித் = ஆறிவு - சித்தம்  (ஆத்ம அறிவு) ஆனந்த = ஆனந்தம்  சச்சிதானந்த = இருப்பு-நிலையின் உண்மை, பிரக்ஞை(அறிவு) மற்றும் ஆனந்தம்  - 700 சச்சிதானந்த ரூபிணி = பேரின்ப வடிவானவள் (சாஸ்வதமான இருப்பு-நிலையின் பேரானந்தம்)    (விபூதி விஸ்தாரம்)  []     (701-725) தேஷ காலா அபரிச்சின்னா; சர்வகா; சர்வ மோஹினீ; சரஸ்வதீ; ஷாஸ்த்ர மயீ; குஹாம்பா; குஹ்ய ரூபிணீ; சர்வோபாதி வினிர்முக்தா; சதாஷிவ பதிவ்ரதா; சம்ப்ரதாயேஶ்வரீ; சாது ; ஈ; குரு மண்டல ரூபிணீ; குலோத்தீர்ணா; பகாராத்யா; மாயா; மதுமதீ ; மஹீ; கணாம்பா; குஹ்யகாராத்யா; கோமலாங்கீ; குரு-ப்ரியா; ஸ்வதந்த்ரா; சர்வதந்த்ரேஷீ; தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ ; ***   தேஷ = தேசம் - பிரதேசம் - வெளி கால = காலம் அபரிச்சின்னா = எல்லைக்கு உட்படாத - 701 தேஷ-கால அபரிச்சின்னா = பிரதேசம் காலம் முதலிய எல்லைகளுக்கு உட்படாதவள்.    - 702 சர்வகா = எங்கும் நிறைந்திருப்பவள் / சர்வவியாபி (701 ஆம் நாமத்தின் நீட்சி)   - 703 சர்வ மோஹினீ = அனைத்தையும் (ஜட-ஜீவராசிகள்) வசிகரிப்பவள் மயக்குபவள் (அனைத்தையும்,  அனைவரையும்  மாயையின்  பிடியில்  வைத்திருப்பவள்)   - 704 சரஸ்வதீ = ஞானத்தின், அறிவின் இறைவடிவான ஸ்ரீ சரஸ்வதி-தேவி (சரஸ்வதி வடிவானவள்)   ஷாஸ்த்ர = மதக்கோட்பாடுகள், வழிமுறைகள் -வேத விஞ்ஞான விளக்கங்கள் மயீ =  உள்ளடக்கியிருத்தல் - 705 ஷாஸ்த்ர மயீ = சாஸ்த்திரங்களின் உருவகம் – சாஸ்திரங்களால் ஆனவள் - சாஸ்திர-மயமானவள்   குஹா = முருகக் கடவுள் - சுப்பிரமண்யர் - குகன் அம்பா = அன்னை - 706 குஹாம்பா = (குகனாகிய) முருகக் கடவுளின் அன்னை. *   குஹா = மறைக்கப்பட்ட - ஒளிக்கப்பட்ட - குகை - இதயம் - ரகசியமாக இருப்பது - 706 குஹாம்பா = இதயக் குகையினுள் வசிக்கும் அன்னை * பந்தப்பட்ட ஜீவனிடமிருந்து மறைந்திருக்கும் சுத்த சைதன்யமாக விளங்குபவள்.* ( நாமம் 706க்கு இரு வகையாக பொருள் பிரிக்கப்பட்டிருக்கிறது     குஹ்ய = ரகசியமான - மறைந்திருக்கும் - 707 குஹ்ய ரூபிணீ = மர்மமானவள்; மறைபொருள் நிலை கொண்டவள் (அனைவராலும் அறிய முடியாதவள்)   சர்வ = அனைத்து உபாதி = கட்டுப்பாடு - தடை வினிர்முக்தா = விடுதலை பேறுதல் - 708 சர்வோபாதி வினிர்முக்தா = எவ்வித தடை தளைகளும் இல்லாதிருப்பவள்- அதற்கு அப்பாற்பட்டவள் (அதனால்  பாதிக்கப்படாதவள்)   சதாஷிவ = சிவபெருமானின் இன்னொரு வடிவம் பதிவ்ரதா = பதிவிரதை - பத்தினி - 709 சதாஷிவ பதிவ்ரதா = சதாசிவனின் தர்ம பத்தினி    சம்ப்ரதாய = சம்பிரதாயங்கள், ஆசார அனுஷ்டான பழக்க வழக்கங்கள் ஈஶ்வரீ = ராணி - ஆளுபவள் - 710 சம்ப்ரதாயேஷ்வரீ = வழமையான   பழக்க வழக்கங்களை,  சமய கோட்பாடுகளை, போஷித்து,  ஆட்சி செலுத்தும் அதிபதி.   - 711 சாது = சாது ie யோகி தெளிந்த அமைதியும், சீர்-நோக்கும் சம நிலையும் கொண்ட ஞானி.   - 712 ஈ =  ஈ -கார பீஜா மந்திரத்தை பிரதிபலிப்பவள் * ஈகாரம் தேவியின் காமகலா பீஜம். ஈகாரம், பேரண்டத்தினுடைய சிருஷ்டிக்கும் சித்தியுடன் (creation) தொடர்புடையது.  (சில விளக்கங்கள் "சாத்வீ" என்று சேர்த்து பொருள் அளிக்கின்றன. வேறு சில, 'சாத்வீ' எனும் நாமம் முன்பே பூஜிக்கப் பட்டிருப்பதால்(நாமம் - 128), சாது மற்றும் ஈ (ஈ-காரம்) என்று பிரித்து  பொருள் கூறுகின்றன.)     மண்டல = பாதை (வழி) - திரள் - 713 குருமண்டல ரூபிணீ = குருபரம்பரையின்(வம்சாவளி)  வடிவானவள்- அதன்  உருவகம் (ஆச்சார்ய அல்லது மதகுருக்களின் பரம்பரை).   குல = குழு - சமூகம் - கூட்டம் தீர்ணா = தாண்டியிருத்தல் - அப்பாற்படுதல் - 714 குலோத்தீர்ணா =   குறுகிய வட்டத்தினுள் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ளாதவள் (எல்லைகளற்று விரிபவள்) குல என்னும் சொல் பல விதங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. யோக வழிபாட்டு முறையின் படி "புலன்களின் கூட்டு" என்ற அர்த்தமும் கொள்ளப்படுகிறது. அதனால் இந்நாமத்தை புலன்களுக்கு அப்பாற்பட்டவள் என்று விளங்கிக்கொள்ளலாம். எவ்வகையில் பொருள் கொண்டாலும், "எல்லைகளற்று பரவியிருப்பவள்" என்ற ஆழ்பொருள் நிலைத்திருக்கிறது. நிர்குண பிரம்மத்தின் நிலைபாட்டிலிருந்து பேசப்படும் நாமம்.     பகா = சூரியன் பகா = மண்டலம் –தொகுதி- பகுதி (சூரிய மண்டலம் அல்லது பகுதி, அதன் வட்டப்பாதை) ஆராத்யா = வழிபடுதல் - 715 பகாராத்யா = சூர்ய குடும்பத்தினால் (சூரியனைச் சார்ந்தவற்றால்)  துதித்துப் போற்றப்படுபவள் பகா எனும் வார்த்தை ‘சூரிய-மண்டலம்’ என்றுணரப்படுகிறது. "சூரிய மண்டலத்தின் 'மத்தியில்' உறைபவளாக அன்னை, வணங்கப்படுகிறாள்" என்று சில விளக்கங்கள் உணர்த்துகிறது.     - 716 மாயா = மாயா சக்தியானவள் (அவளே மாயா-சக்தியாக விளங்கி சிருஷ்டிக்கு காரணகர்த்தாவாகிறாள்)   மது = தேன் மதி = அறிவு - ஞானம் - 717 மதுமதீ = மெய்ஞானத்தின் எல்லையில்லா பேரானந்தமாக விளங்குபவள் (உயர்ந்த ஞானத்தின் சாரத்தை இனிமையான தேனுக்கு உவமையாக்கி, அதன் பேரானந்தத்தை விளங்கச் செய்கிறது இந்நாமம்)   - 718 மஹீ = பூமிமாதா (அன்னையின் ஸ்தூல வடிவை விளக்கும் நாமம்)   கண = (சிவ)கணங்கள் - தொண்டர்கள் அம்பா = தாய் - 719 கணாம்பா =  சிவகணங்களின் அன்னையாகத் திகழ்பவள்   குஹ்யகா = குபேரன் - செல்வத்தின் அதிபதியான குபேரன் ஆராத்யா = வழிபடுதல் - 720 குஹ்யகாராத்யா = குபேரனால் துதிக்கப்படுபவள்   கோமல = மென்மையான - மிருதுவான - அழகான அங்க = உடல் - உடல் சார்ந்த பகுதிகள் - 721 கோமலாங்கீ = மென்மையான எழிலுடல் தரித்தவள்   குரு = மதிப்பு மிக்க - மதபோதகர் - குருமார்கள் - 722 குருப்ரியா =  ஆச்சாரியர்களிடம்(அற வழிகாட்டிகள்)  பிரியமானவள்   ஸ்வதந்த்ரா = கட்டுப்படுத்தப்படாத - 723 ஸ்வதந்திரா = சுதந்திரமானவள் ie சார்பற்றவள்     சர்வ = அனைத்து - எல்லாமும் தந்த்ர = தந்திரங்கள் (தந்த்ர வழிபாடு) ஈஷா(ஈஷ்வரீ) = தலைவன்(தலைவி) - 724 சர்வ தந்த்ரேஷீ = தந்த்ர வழிபாட்டு முறைகள் அனைத்திற்கும் அதிபதி.* ஸ்ரீ வித்யா உபாசனையின், தந்திர வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும், சுயத்தை உணர்த்தி  முக்திக்கு இட்டுச் செல்கிறது.    தக்ஷிணாமூர்த்தி = சிவபெருமானின் 'குரு' (ஆச்சாரிய) வடிவத் தோற்றம் - 725 தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ = தக்ஷிணாமூர்த்தி ரூபமாக விளங்குபவள். தக்ஷிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம், சிவனாரின் அம்சம். நவகிரஹங்களுள் ஒருவரான பிரஹஸ்ப்தி எனும் குருபகவான் என்பவர் வேறு என்று புரிதல்.   (விபூதி விஸ்தாரம்) []   (726-750) சனகாதி சமாராத்யா; ஷிவ-ஞான ப்ரதாயினீ; சித் கலா; ஆனந்த கலிகா; ப்ரேம ரூபா; ப்ரியம்(ங்)கரீ; நாம-பாராயண ப்ரீதா; நந்தி வித்யா; நடேஷ்வரீ; மித்யா ஜகததிஷ்டானா; முக்திதா; முக்தி ரூபிணீ; லாஸ்ய ப்ரியா; லயகரீ; லஜ்ஜா; ரம்பாதி வந்திதா; பவதாவ சுதா விருஷ்டி; பாபாரண்ய தவானலா; தௌர்பாக்ய தூல வாதூலா; ஜராத்வாந்த ரவிப்ரபா; பாக்யாப்தி சந்திரிகா; பக்த சித்த கேகி கனா-கனா; ரோக பர்வத தம்போலீ: ம்ருத்யு தாரு குடாரிகா; மஹேஶ்வரீ; *** சனகா = ரிஷி சனகர் - பிரம்மாவின் நான்கு புதல்வர்களுள் ஒருவர் * ஆதி = முதலியவை (வேறு சொல்லுடன் இணைக்கப்படும் பொழுது , முதலியவை என்று அர்த்தம் கொள்ளத் தகும்)  சமாராதன் = போற்றுதல், சேவை சாதித்தல்  - 726 சனகாதி சமாராத்யா = சனகர் முதலிய  ரிஷிகளால் தொழுதேத்தப்படுபவள்* சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புதல்வர்களும் பிரம்மாவின் மனத்திலிருந்து முதலில் உருவாக்கப்பட்டவர்கள். i.e. மூத்த தோன்றல்.   ஶிவ = சுபமான - நலம் பயக்கும் ஶிவ-ஞான= சிவனைப் பற்றிய அறிவு  ie மங்களம் நல்கும் நல்லறிவு ப்ரதான் = கொடை - பரிசு தாயின் = கொடுத்தல் - 727 ஶிவ-ஞான ப்ரதாயினீ =  நலம் தரும் சிவத்தைப் பற்றிய  நல்லறிவு நல்குபவள்    சித் = உணர்வு - சுத்த சைதன்ய உணர்வு கலா = பகுதி (பூரணத்தின் ஒரு பகுதி)  கலா = சைவ சித்தாந்தத்தின்படி, "எதையும் செய்யக்கூடிய ஆற்றல்" - பேராற்றல் - 728 சித்-கலா = சுத்த-சைதன்ய உணர்வாக ஜீவனிடத்தில் விளங்குபவள் - பேருணர்வின் அளப்பறிய ஆற்றலின் பகுதியாக ஜீவனிடத்தில் ஒளிர்பவள்   கலிகா = மொட்டு  - 729 ஆனந்த கலிகா = பேரானந்தத்தின் அவிழாத மொட்டாக விளங்குபவள் * ஞானம் பிறப்பதற்கு முந்தய நிலை. மலரப் போகும் மகிழ்வூற்றைக் கொண்டாட தயாராக நிற்கிறாள்.     ப்ரேம = பிரேமை- அன்பு  - 730 ப்ரேம ரூபா = தூய அன்பு வடிவானவள் * சிருஷ்டியிடத்தே, ஜீவர்களிடத்தே, அன்னை கொண்டிருக்கும் மேன்மையான அன்பு.   ப்ரிய(ம்) =  அன்பு - பிடித்தமான கர = செய்பவர் - நிகழ்த்துபவர் - 731 ப்ரியங்கரீ = பரஸ்பர அன்பை உண்டாக்குபவள்   - 731 ப்ரியங்கரீ = (பக்தர்களின்)  விருப்பத்தை பூர்த்தி செய்பவள்    பாராயண = தியானிக்கப்படும் பொருள் - தீவிரமான ஆர்வம் பாராயண = இடைவிடாத ஈடுபாடு  நாம = பெயரைக் கொண்டு - வணங்குதல் நாம-பாராயண = இறைவனின் நாமத்தை தியானித்திருதல் (ஜபித்தல்)  ப்ரீதா = மகிழ்வடைதல் - 732 நாம பாராயண  ப்ரீதா =  ஈடுபாட்டுடன் கூடிய நாமபாராயண ஜபத்தினால் பூரிப்படைபவள்    நந்தி = திருக்கையிலையில் வசிக்கும் சிவபெருமானின் சேவகர்- சிவனின் ரிஷபவாகனம் ( நந்திதேவர்) நந்தி = சிவபெருமானின் பெயர் நந்தி = ஒரு ரிஷியின் பெயர் வித்யா = மெய்ஞான அறிவு - மெய்ஞானத்திற்கு தொடர்புடைய அறிவு, தத்துவ விளக்கம், பாரம்பர்ய வழிமுறைகள் வித்யா = அன்னை துர்கை - 733 நந்தி-வித்யா =  வித்யை, ஞான-போதனை, மந்திரங்களைக் கொண்டு நந்திதேவனால் போற்றி வணங்கப்படுபவள்    நட = நடனமாடுபவர் நடேஷ்வர் = ஆடலரசர் நடராஜர் = சிவன் - 734 நடேஷ்வரீ = (சிவனின் ஆடல் ஸ்வரூபமான) நடராஜரின் துணைவி - நடனத்தின் ஈஸ்வரீ   மித்யா = மாயை ஜகத் = உலகம் - ஜகம் அதிஷ்டான = ஆதாரம் - 735 மித்யா-ஜகத் அதிஷ்டானா = மாயப்பிரபஞ்சம் நிலைகொண்டிருப்பதற்கு ஆதாரமானவள்      தா = கொடுப்பது முக்தி = வீடுபேறு - 736 முக்திதா = முக்தியளிப்பவள்    ரூபிணீ - வடிவான - 737 முக்திரூபிணீ = முக்தி வடிவானவள்    லாஸ்ய = நடனம் (இசையுடனும் பாடல்களுடனும்  கூடிய நடனம்) லாஸ்ய = பிரேம பாவங்கள் நிறைந்த நடனம் - 738 லாஸ்யப்ரியா  = லாஸ்ய  நடனத்தில் ஈடுபாடு கொண்டவள் (பாவங்களை வெளிப்படுத்தும் நடனம்)   லய = ஒடுக்கம் = கரைதல்  கர = செய்வித்தல்  - 739 லயகரீ = ஒடுக்கத்திற்கு காரணமானவள்* பிரபஞ்ச ஒடுக்கம் தோற்றம்  என்ற நிலைகளின் நடுவே உள்ள ஓய்வு நிலையே லயம்.  அதனை செய்விப்பவளாக   அன்னை போற்றப்படுகிறாள்.     - 740 லஜ்ஜா = அடக்கமானவள் (நாணம் நிறைந்தவள்)    ரம்பா = அப்ஸரஸ்களின் ராணி - தேவலோக மங்கை  ஆதி = முதலியன வந்திதா = கொண்டாடப்படுதல் - 741 ரம்பாதி வந்திதா = ரம்பை முதலிய அப்ஸரஸ்களால் போற்றி கொண்டாடப்படுபவள் * ஊர்வசி, ரம்பா, மேனகா, திலோத்தமா ஆகியோர் தேவலோகத்தில் வசிக்கும் அப்ஸர ஸ்த்ரீகளுள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.   பவ = லௌகீக வாழ்வு - சம்ஸார ஸாகரம் தாவ = துன்பம் = தகிப்பு சுதா = தேன்   வ்ருஷ்டி = மழை - 742 பவதாவ சுதா வ்ருஷ்டி = சம்ஸார சுழலின் தகிப்பை தணிக்கும் தேன்மழை போன்றவள் * ‘தேன்மழை’ என்பது  மெய்ஞானத்தைக் குறிக்கும்.  ஞானத் தெளிவு எனும் மழையை  பொழிந்து  உலக வாழ்கையின் அறியாமையை போக்குபவள் .    பாப = பாபங்கள்  ஆரண்ய = காடு தவா = நீக்குதல் ஆனல = நெருப்பு - 743 பாபாரண்ய தவானலா = பாபங்களெனும் பெருங்காட்டை அழிக்கும் நெருப்பானவள்      தௌர்பாக்ய = துர்பாக்கியம் தூல = பஞ்சு வாதூல = சூறாவளி - 744 தௌர்பாக்ய தூலவாதூலா = துர்பாக்கியம் எனும் பஞ்சுப் பொதிகளை ஊதித்தள்ளும் சூறாவளியைப் போன்றவள்        ஜரா = முதுமை த்வாந்த = இருள் ரவி = சூரியன் ப்ரபா = வெளிச்சம்  - 745 ஜராத்வாந்த ரவிப்ரபா = முதுமையின் அறியாமையை விலக்கும் சூரியவெளிச்சமானவள் *  பக்தர்களின் மனங்களில் அறியாமை எனும் இருளை நீக்கி தெளிவு எனும் வெளிச்சம் தோன்றக்  காரணமானவள். முதுமையில் உடல்சார்ந்த நோயின் தாக்கம்,  உடலின் மேல் கொண்ட பற்றுதலால்  தோன்றும் மரணபயம் முதலியவைகளால் எழும் அறியாமை.     பாக்ய = சௌபாக்கியம் - அதிஷ்டம் ஆப்தி = சமுத்திரம் சந்த்ரிகா =  நிலவோளி - 746 பாக்யாப்தி சந்திரிகா = சௌபாக்கியம் எனும் பெருங்கடலில் எழும் நிலவொளியைப் போன்றவள்.   பக்த சித்த = பக்தர்களின் மனம் கேகி = மயில் கனா-கனா = அடர்ந்த மேகம் - 747 பக்த சித்த கேகி கனாகனா = அடர்ந்த கருமேகத்தினைக் கண்டு மகிழ்ந்தாடும் மயில் போல், பக்தர்களின் சித்தத்தை மகிழச் செய்பவள்.    ரோக =  ரோகம் - நோய் பர்வத = மலை தம்போலா =  இடி-பேரிடி - 748 ரோக பர்வத தம்போலா = பெருமலைபோன்ற பிணியை தாக்கி நிர்மூலமாக்கும் பேரிடி போன்றவள்     தாரு = மரத்தினாலான - மரம் குடாரிகா = கோடரி ம்ருத்யு = மரணம் - 749 ம்ருத்யு தாரு குடாரிகா = மரணமெனும் மரத்தை வெட்டிச் சாய்க்கும் கோடாலியைப் போன்றவள்     - 750 மஹேஶ்வரீ = உயர்ந்தவள்- தலைவி - மகா ஈஸ்வரீ - மஹேஸ்வரனின் பத்தினி.      (விபூதி விஸ்தாரம்) []   (741-775) மஹாகாலீ; மஹாக்ராஸா; மஹாஷனா; அபர்ணா; சண்டிகா; சண்ட-முண்டாசுர நிஷூதினீ; க்ஷரா-அக்ஷர ஆத்மிகா; சர்வ லோகேஷீ; விஷ்வ தாரிணீ; த்ரிவர்க தாத்ரீ; சுபகா; த்ரியம்பகா; த்ரிகுணாத்மிகா; ஸ்வர்க-அபவர்கதா; ஷுத்தா; ஜபாபுஷ்ப நிபாக்ருதீ; ஓஜோவதீ; த்யுதிதரா; யக்ஞ ரூபா; ப்ரிய-வ்ரதா; துரா-ஆராத்யா; துரா-ஆதர்ஷா; பாடலீ குசுமப்ரியா; மஹதீ; மேரு நிலயா; ***   காலீ = துர்கையின் மற்றொரு பெயர் - அம்பிகையின் வடிவம் * (தமிழில் காளி என்று குறிப்பிடுகின்றனர்)  மஹா = பெரிய - மகத்தான (மஹா என்ற சொல் மஹத் என்ற சொல்லிருந்து உருவானது)  - 751 மஹாகாலீ = அன்னை மஹாகாலீயாக (மஹாகாளி) விளங்குபவள் * காலீ என்றால் கருமையான என்ற பொருள். அன்னை மஹாகாளி கருமை      நிறத்தவள்     க்ராஸா =  கபளீகரம் செய்தல் - முழுங்குபவது  - 752 மஹாக்ராஸா = அனைத்தையும் விழுங்கிவிடுபவள்*   ஆஶனா = உணவு - உண்ணுதல்  - 753 மஹாஶனா = பெரு-உணவு உண்ணுபவள்* பிரபஞ்சத்தின் ஒடுக்க நிலையை குறிக்கிறது . உணவு என்பது சிருஷ்டியைக் குறிக்கிறது.  ஒடுக்கத்தின் போது சிருஷ்டி அனைத்தும் அவளுள் அடக்கப்படும்.  அன்னை மஹாகாளி சிருஷ்டியின் லயத்திற்கு காரணமானவள்.     []     பர்ணா = இலைகளுடைய அபர்ணா = இலைகள்  இல்லாத   - 754 அபர்ணா  = இலைகளற்ற கொடி போல் பரப்பிரம்மத்தை சுற்றி படர்ந்திருப்பவள்*   *** அபர்ணா என்ற சொல்லுக்கு கீழ்காணும் விளக்கம் காஞ்சி மஹாஸ்வாமிகளால் கொடுக்கப் பட்டிருக்கிறது. சதாசிவமான பரப்பிரம்மா (படைப்பு கடவுள் பிரம்மதேவன் அல்ல), இலைகளும் பூக்களும் கிளைத்த பசுமரமாக  இருக்கும் போது லலிதை இளம் தளிரென படர்ந்திருக்கிறாள்.   --- கிளைக்காத ஒடுக்க நிலையில் பார்வைக்கு பட்டமரம் போல் சிருஷ்டியின்றி அமிழ்ந்திருக்கும் போது, மூலசக்தியானவள் உறங்கு நிலையில் இலைகளற்ற கொடியாக பிரம்மத்தை சுற்றி படர்ந்திருக்கிறாள் என்பது புரிதல்.   *** - 754 அபர்ணா = தேவி பார்வதி பார்வதி தேவி சிவபெருமானை மகிழ்விக்க உண்ணாது தவமிருந்தார்.  சிறு இலையைக் கூட உண்ணாமல்  கடும் விரதமும் தவமும் கடைபிடித்தவருக்கு, அபர்ணா என்று பெயர்.     சண்ட =  கோபம் - 755 சண்டிகா = சண்டிகா தேவி  (துர்கையின் மற்றொரு வடிவம்) * சினம் மேலோங்கியிருக்கும் அன்னையின் இவ்வடிவம், தீஞ்செயல் புரிபவர்களை தண்டிக்கும் அவதாரம்.    சண்ட-முண்ட = அசுரர்களின் பெயர்கள் (சாமுண்டீஸ்வரியாக அன்னை வதம் செய்த அசுரர்கள்)  நிஷூதித = கொல்லுதல்  - அழித்தல் - 756 சண்டமுண்டாசுர நிஷூதினீ = சண்ட முண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்தவள் * இருபெரும் அசுரர்களை வதம் செய்ததால் சாமுண்டீஸ்வரி என்று புகழப்படுபவள்.   க்ஷர = அழியக்கூடிய - நிலையற்ற அக்ஷர = அழிவற்ற - நிலையான ஆத்மிகா = ஆதாரமான - அடிப்படையாக கொண்ட - 757 க்ஷர அக்ஷாரத்மிகா = நிலையற்றதும் நிலையானதுமான தன்மை கொண்டவள்  (நிலையற்றதான மாயா சக்தி, நிலையானதான  பரப்பிரம்மம் இரண்டின் சாரம்ஸம் அவளே)   சர்வ = எல்லாமும் லோக = லோகங்கள் ஈஷீ = ஈஸ்வரீ - 758 சர்வ லோகேஷீ = அனைத்து புவனங்களிலும் தனது ஆட்சியை செலுத்தும் ஈஸ்வரீ.    விஷ்வ = பேரண்டம் - அகிலம் தாரண = தாங்கியிருத்தல்   - 759 விஷ்வ தாரிணீ = பிரபஞ்சத்தை தாங்கியிருப்பவள்;   ஆதாரமாக விளங்குபவள்.   த்ரி = மூன்று  வர்க = குழு - பிரிவு  த்ரி வர்க = மூவகை தாத்ரீ = வழங்குதல்  - 760 த்ரிவர்க தாத்ரீ = மூன்று வகையான குறிக்கோளுக்கு துணை நின்றருள்பவள் *  நான்கு புருஷார்த்தங்கள் (இலக்கு) ஜீவர்களுக்கு சொல்லுவதுண்டு.  தர்ம, அர்த்த, காம மோக்ஷம் என்பதே அவை. மோக்ஷத்தை முந்தைய நாமங்களில் பார்த்துவிட்டதால் அதை விடுத்து மூவகை லட்சியத்தை  நல்குபவளாக அன்னை போற்றப்படுகிறாள். தர்மம் என்பது நல்வழிப்பாதை, செயல்பாடு சிந்தனைகளையும், அர்த்தம் செல்வ வளத்தையும், காமம் அபிலாஷைகளையும் குறிக்கும்.     சுபகா =    நன்மை நல்கக்கூடிய - 761 சுபகா =  செழிப்பு,  நலம், பெருவளம்  முதலியவற்றின் ஜீவநாடியாக திகழ்பவள்     அம்பகா = கண்கள் த்ரி-அம்பகா = மூன்று கண்கள் (உடைய) - 762 த்ரியம்பகா = முக்கண் உடையவள் (மூன்றாம் கண் என்பது  சச்சிதானந்த நிலையையும் ஞானத்தையும் வலியுறுத்தும்)    த்ரிகுணா =  மூன்று குணங்கள் ஆத்மிகா = ஆதாரமாகக் கொண்ட - 763 த்ரிகுணாத்மிகா = முக்குணங்களின் சாரமாக விளங்குபவள் * சாத்வீகம், ராஜசம் தாமஸம் ஆகிய மூன்று குணங்களின் சாரம்.   சாத்வீகம்- சாந்தம், தயை, கருணை, பொறுமை முதலிய குணங்கள்  ராஜஸம் - சினம், பொறாமை, வேகம், ஆசை, புலனின்பங்கள்.  தாமஸம் - தூக்கம், சோம்பல், அசிரத்தை, மெத்தனம் முதலிய குணங்கள் அடங்கியது.     ஸ்வர்க = ஸ்வர்க லோகம் அபவர்க = முக்தி- பரமானந்தம் தா = தருதல் - 764 ஸ்வர்காபவர்கதா = சுவர்கலோகத்து இன்பமும்,  இறுதியில் முக்தியும் நல்குபவள்    ஷுத்த =  சுத்தம்  - 765 ஷுத்தா = தூய்மை,  புனிதம் முதலியவற்றின் உருவகமானவள்    புஷ்ப = பூ ஜபாபுஷ்ப = செம்பருத்திப்பூ நிப = ஒன்று போன்ற   - ஒரே சாயல் ஆக்ருதி - தொற்றம்  - 766 ஜபாகுஸும நிபாக்ருதீ  = செம்பருத்திப்பூவைப்  போன்றவள் (செந்நிறம் கொண்டவள் என்று தியான ஸ்லோகம் வர்ணிக்கிறது)     ஓஜஸ் = வலிமை - ஆற்றல் - உயிர்சக்தி ஓஜதி = வலிமையுடைய - ஆற்றல் நிறைந்த  - 767 ஓஜோவதீ = பேராற்றல்  பொருந்தியவள்    த்யுதி = காந்தி - பிரகாசம் தர = உடைத்தாகி இருக்கும் - கொண்டிருக்கும்  - 768 த்யுதிதரா = சுடரொளியென மிளர்பவள்    யக்ஞ = யக்ஞம் - அர்ப்பணிப்பு - யாகம் ரூப = வடிவம்  - 769 யக்ஞரூபா = யாக யக்ஞங்களில் நடைபெறும் வழிபாடு, பூஜை, நிவேதனம்  மற்றும்  உயர்ந்த காணிக்கைகளின் வடிவானவள்   ப்ரிய = பிரியமான வ்ரதா = விரதங்கள் - புனித அனுஷ்டானங்கள்  - 770 ப்ரியவ்ரதா = உயரிய விரதங்களினால் பிரீதியடைபவள்   ஆராத்ய = துதித்தல் - போற்றுதல்  துராராத்ய = துதிப்பதற்கு கடினமான - 771 துராராத்யா = வழிபடுவதற்கு அரியவள் (கிரகித்தற்கு அரிதானவள் ; எளிதில் வசப்படாதவள்)   ஆதர்ஷா = ஆளுதல்  - 772 துராதர்ஷா = வெல்லுதற்கு அரியவள் (கட்டுப்படாதவள்)    பாடலீ = பாதிரி  மரம் குசும = மலர் ப்ரியா = பிரியமான  - 773 பாடலீ குசுமப்ரியா = பாதிரி மலர்களை விரும்புபவள் - அம்மலர்களால் கவரப்படுபவள் “Bignonia Suaveolens" என்று தாவரவியலில் அறியப்படும் மரம்/மலர். இம்மலரையும் மரத்தையும் தமிழில் “பாதிரி” எனக் குறிப்பிடுகின்றனர்.    - 774 மஹதீ = பிரமாண்டமானவள் -அளப்பரியவள் *   சாங்கிய தத்துவத்தில், புருஷ பிரக்ருதியின் முதன்மை பரிமாணமாக "மஹத்" அறியப்படுகிறது. அன்னை, 'மஹத்' தத்துவமாகி நிற்பவள் என்றும் புரிந்து கொள்ளலாம்.    மேரு = மேரு மலை நிலயா = நிலைபெற்றிருப்பவள்  - 775 மேரு நிலயா = மேரு மலையில் வாசம் செய்பவள்   ( Mount Meru also recognized as Sumeru, Sineru or Mahāmeru, is the sacred five-peaked mountain of Hindu, Jain, and Buddhist cosmology and is considered to be the center of all the physical, metaphysical  and spiritual universes. Thanks and Credit: https://en.wikipedia.org/wiki/Mount_Meru) )    (விபூதி விஸ்தாரம்) []   (776-800) மந்தார குசுமப்ரியா; வீர-ஆராத்யா; விராட்ரூபா; விரஜா; விஷ்வதோமுகீ; ப்ரத்யக்-ரூபா; பராகாஷா; ப்ராணதா; ப்ராண-ரூபிணீ; மார்த்தாண்டபைரவ-ஆராத்யா; மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூ:; த்ரிபுரேஷீ; ஜயத்சேனா; நிஸ்த்ரைகுண்யா; பராபரா; சத்ய-ஞானானந்த ரூபா; சாமரஸ்ய பராயணா; கபர்தினீ; கலாமாலா; காமதுக்; காமரூபிணீ; கலா நிதி; காவ்யகலா; ரசக்ஞா; ரச-ஷேவதி; ***   மந்தாரா = மந்தார (மலர்கள்)  (botanical name: Erythrina Indica,  Common Name: Indian coral tree) * குசும = பூ  - மலர் ப்ரியா = ப்ரியமான - 776 மந்தார-குசும-ப்ரியா = மந்தார மலர்களை விரும்புபவள் சமஸ்க்ருதத்தில் மந்தார மலர் "Indian Coral tree" வகையை குறிக்கிறது.  நாம் தமிழில் குறிப்பிடும் மந்தாரை வேறு.     வீர = வீரம் - துணிவு ஆராத்யா = போற்றப்படும் - 777 வீர-ஆராத்யா =  வீரர்களால் ஆராதிக்கப்படுபவள்  * பெருந்துணிவோடு அகங்காரத்தை வென்று ஆத்ம நிறைவை பெற்றவர்களை இங்கு வீரர்கள் என்று குறிப்பிடத்தகும்.     விராட்(d) / விராஜ் / விராட்(t) = அண்டம் - உலகளாவிய ரூப = ரூபம் - 778 விராட் ரூபா = பிரபஞ்சத்தை ரூபமாகக் கொண்டவள் (மஹா ரூபம்)    ரஜ = அசுத்தம் - தூசு வி = தவிர்த்த - இல்லாமல் - 779 விரஜா = அப்பழுக்கற்றவள்    விஷ்வத: = எல்லா திக்குகளிலும் - எங்கும் முக = முகம் - 780 விஷ்வதோமுகீ = எத்திக்கும் நீக்கமற முகம் தாங்கியிருப்பவள் (எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவள்)   ப்ரத்யஞ்சா / ப்ரத்யக்ரா = உள்முகமாக - உட்புறம் ரூப = ரூபம் - 781 ப்ரத்யக்ரூபா = உள்முகமாக விளங்குபவள் (ஆத்ம விளக்கமானவள்) ie அந்தர்யாமி   பரா = இன்னொன்று பரம = உயர்ந்த ஆகாஷ் = வெளி - ஆகாசம் - 782 பராகாஷா = பரவெளியாக இருப்பவள் ( அண்டத்தின் சூக்ஷ்ம வடிவாக)   ப்ராண = உயிர் சக்தி - மூச்சு தா = வழங்குதல் - தருதல் - 783 ப்ராணதா = உயிரளிப்பவள் (அனைத்து ஜீவராசிக்கும்  உயிரளிப்பவள்; பிராணசக்தியாக விளங்குபவள்)   - 784 ப்ராண ரூபிணீ = பிராண வடிவானவள்   மார்த்தாண்ட பைரவா = அறுபத்துநான்கு பைரவர்களுள் ஒருவர் * ஆராத்யா = ஆராதிக்கப்படும் - 785 மார்த்தாண்ட பைரவ-ஆராத்யா = மார்த்தாண்ட-பைரவரால் துதித்தேத்தப்படுபவள்  அஷ்டாங்க பைரவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.  ஒரு பிரிவில் எட்டு பைரவர்கள் என எட்டு பிரிவுகளாக அறியப்படுகிறார்கள் (அறுபத்தி நாலு பைரவர்கள்). வேறு சில விளக்கங்களும் ஆதாரங்களும் பைரவர்களைப் பற்றி வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.    மந்த்ரிணீ = மந்திரி - அன்னையின் மந்திரிகளில் ஒருவர் ந்யஸ்த =  வரையறுக்கபடுதல்   ராஜ்ய = ராஜ்ஜியம் - 786 மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூ = பிரபஞ்சமெனும் ராஜ்ஜியத்தின் ஆட்சிக்கு மந்திரிணியை நியமித்திருப்பவள்     த்ரிபுரா = மூன்று உலகங்கள் ஈஷீ =  தலைவி - 787 த்ரிபுரேஷீ = மூவுலகை ஆளுபவள் (த்ரிபுரா) * த்ரிபுரா என்ற நகரம் அசுரர்களால் ஆளப்பட்டது. அதை சிவனார் அழித்து தர்மம் நிலைனாட்டினார். (அறியாமை என்பதன் உருவகமே த்ரிபுரா) . பிரம்மா, விஷ்ணு, சிவனின் ஆளுதலுக்குட்பட்ட மூவுலகத்தையும், திரிபுரா என்று குறிப்பிடுவதுண்டு.    ஜயத் - ஜயதி = வெற்றி கொள்ளல் - ஜெயித்தல் சேனா = சேனை - 788 ஜயத்சேனா = வெற்றி முழக்கமிடும் சேனையுடையவள்   நிஸ் = புறந்தள்ளி - ஒதுக்கி குணா = குணங்கள் த்ரிகுணா = முக்குணங்கள் , ie சத்வ, ராஜஸ, தாமஸ - 789 நிஸ்த்ரைகுண்யா = முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவள்; அவற்றுக்கு ஆட்படாதவள்   பரா = உன்னத - அதிஉன்னத அபரா = கீழ்மை - 790 பரா-(அ)பரா = பர தத்துவமாகவும் அபரமாகவும் இருப்பவள் (அபரம் என்பது ஞானம் மறைக்கப்பட்டிருக்கும்   அறியாமையைக் குறிக்கும்)  - 790 பராபரா = பராபர தத்துவமாக திகழ்பவள் * உயர்நிலையில்  ஞானத்தின் இருப்பாக  திகழ்வது பரம். அதுவே சிருஷ்டியின் படிநிலைகளில் இறங்கும் போது மட்டுப்படுகிறது. பரம் உயர் தத்துவம், அபரம் கீழான அஞ்ஞான நிலை (ஜீவனின் நிலை)  . இரண்டுக்கும் இடையே  தேவதைகளின் நிலைகளில் 'பராபரமாக' இருக்கிறாள். படிநிலைகளில்  நடுவாந்திர நிலை, உயர்வுமற்ற தாழ்வுமற்ற, பெரும் அஞ்ஞானத்திலும்  உழலாத இடைபட்ட நிலை.    சத்ய = உண்மை ஞான =  ஞானம் - சுத்த அறிவு ஆனந்த = பேரானந்தம் - 791 சத்ய ஞானானந்த ரூபா = சத்தியம், அறிவு மற்றும் ஆனந்தத்தின் உருவகமானவள்   பராயணா = மூழ்கியிருத்தல் - ஈடுபட்டிருத்தல் சாமரஸ்ய = யோகம்  -   இணக்கத்துடன் சங்கமித்தல் - 792 சாமரஸ்ய பராயணா = யோகமெனும் ஐக்கிய நிலையில் மூழ்கியிருப்பவள் (சிவனுடன் சமநிலையில் இணைந்திருத்தல்.   புருஷ பிரக்ருதியின் ஐக்கிய நிலை)    கபர்தின் = முடைந்த - சடாமுடி ie சிவன் - 793 கபர்தினீ = சிவனின்(கபர்தின்)  பத்தினி   கலா = கலைகள் (கலா வடிவங்கள்) மாலா = மாலை - 794 கலாமாலா = கலாவடிவங்களையே மாலைகளாக தரிப்பவள் (கலையம்சங்கள் அனைத்தும் அவளையே ஆராதிக்கின்றன)   காமதுக் = ஆசைகளை அருளுதல் (பூர்த்தி செய்பவள்) காமதுக் = சுபீஷத்தின் (சுபீஷம் நல்கும் ஆசைகள்) ஆதாரம்  - 795 காமதுக் = அபிலாஷைகளை அனுக்கிரகிபவள்   - 796 காம ரூபிணீ = (சித்த சங்கலபத்தினால்) விரும்பிய ரூபம் தரிப்பவள்    நிதி = பொக்கிஷம் = ஊற்று - 797 கலாநிதி = கலைகளின் இருப்பிடமானவள் - ஊற்று  (அனைத்து கலைகளின் ஆதாரம்   காவிய = கவிதை - காப்பியம் கலா = கலைகள் - 798 காவ்ய கலா =  கவி-காவிய வடிவங்களின் மூலமாக விளங்குபவள்   ரச = சுவை - சாரம் - மனோபாவம் *  க்னா =  ஞானம் - அறிவு - 799 ரசக்ஞா = மனோபாவங்களின் தன்மையை அறிந்தவள் (அதனை தன் வயப்படுத்தியவள்) சௌந்தர்ய லஹரி எட்டுவித மனோபாவங்களை(ரசம்) அறிவிக்கிறது. நாட்ய சாஸ்திரமும், சிருங்காரம், ஹாஸ்யம், கோபம், காருண்யம், வெறுப்பு, ஆச்சர்யம், வீரம், பயம் என்ற  எட்டு வகையான ரசங்களை அபினயிக்கிறது.    ஶேவதி =  கருவூலம்  - 800 ரச ஷேவதி = மனோபாவங்களின் கருவூலமானவள்    (விபூதி விஸ்தாரம்) []   (801-825) புஷ்டா; புராதனா; பூஜ்யா; புஷ்கரா; புஷ்கரேஷணா; பரம்ஜ்யோதி; பரம்தாம; பரமாணு; பராத்பரா; பாஷஹஸ்தா; பாஷஹந்த்ரீ; பரமந்த்ர விபேதினீ; மூர்த்தா; அமூர்த்தா; அனித்ய த்ருப்தாப; முனிமானஸ ஹம்சிகா; சத்யவ்ரதா; சத்ய ரூபா; சர்வாந்தர்யாமினீ; சதீ; ப்ரஹ்மாணீ; ப்ரஹ்ம; ஜனனீ; பஹுரூபா; புதார்ச்சிதா;   ***   - 801 புஷ்டா = நன்கு போஷிக்கப்பட்டவள்- வளமானவள் -செழுமையானவள் (சிருஷ்டியின் ஊட்டமான சாரத்தையுடையவள். பக்தர்களின் பக்தியால் செழித்திருப்பவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.    - 802 புராதனா = புராதனமானவள்- தொன்மையானவள்    பூஜா = பூஜை - 803 பூஜ்யா = பூஜைக்குரியவள்   - 804 புஷ்கரா = அதி உன்னதமான ஞானத்தையுடையவள் - பூர்ணமானவள் – முழுமையானவள். பூரண  அறிவு நிலையின் குறியீடாக தாமரை அறியப்படுகிறது. சிவனுக்கு புஷ்கர என்று பெயர் இருப்பதால், லலிதாம்பிகையே சிவனுமாகியவள் என்ற அர்த்தத்திலும் இந்நாமம் அறியப்படலாம்.     புஷ்கர = நீலத்தாமரை ஈக்ஷ = கண்கள் - பார்வை - 805 புஷ்கரேக்ஷணா = தாமரையொத்த கண்களையுடையவள் உலக அன்னையின் உயர்-பார்வையில்( ஞானப்பார்வை) உயிர்களனைத்தையும் பராமரிக்கிறாள்  என்றும் உணரலாம்.     பரம = சிறந்த - அதி உன்னத ஜ்யோதி = ஜோதி - ஒளி  - 806 பரம்ஜ்யோதி = பூரண ஒளியானவள்.    தாம = இருப்பிடம் - அதிஷ்டானம் - 807 பரம்தாம = உயர்ந்த அதிஷ்டானமானவள் - உயர் இருப்பிடமானவள்.    அணு = அணு - 808 பரமாணு =   நுண்ணிய  அணுவாகியவள் (ஆதாரமாக எங்கும் விரவியிருப்பவள்).    - 809 பராத்பரா = உயர்ந்தவற்றுள் உயர்ந்தவள் – ஒப்புயர்வற்றவள்.     ஹஸ்த = கைகள் பாஷ = பாசக்கயிறு (இணைக்கும் பந்தக் கயிறு)  - 810 பாஷஹஸ்தா = பாசக்கயிற்றை கையிலேந்தியவள்.    ஹந்த்ரீ = அழிப்பவர் - 811 பாஷஹந்த்ரீ = பந்தபாசத்தை வேரறுப்பவள் (பாசம் அறுத்து முக்தி நல்குபவள்)    பர (பரா அல்ல) = வெறு - இன்னொன்று (வேறான) மந்த்ரா = மந்திரம் விபேதின் = அழித்தல் - 812 பரமந்த்ர விபேதினீ= தீயசக்தியின் மந்திரப் பிரயோகங்களை அழிப்பவள்   - 813 மூர்த்தா = உருவம் தாங்கியவள்.   - 814 அமூர்த்தா = அருவமானவள் - உருவற்றவள் (பரம்பிரம்மம்).    அநித்யா = நித்தியமற்ற த்ருப்தா = திருப்தி அடைதல் - 815 அநித்ய த்ருப்தா = அநித்தியமாவற்றின் உபசாரத்திலும் திருப்தி அடைபவள் .   முனி - தவமுனிவர்கள் - யோகிகள் மானஸ - மனத்தில் ஹம்ஸ = அன்னபட்சி - 816 முனிமானஸ ஹம்ஸிகா = தவயோகிகளது மனத்துறையும்  அன்னப்பறவையாகியவள்* மனதை ஏரிக்கு ஒப்பிட்டால், எண்ணற்ற எண்ண நீர்குமிழிகள் தோன்ற வல்லது. ஞானிகளின் மனமோ எண்ணங்களற்ற தெளிந்த நீருக்கு ஒப்பாகும். தெளிந்த  நீரில் அன்னப்பறவை என வலம் வருகிறாள் அன்னை.     சத்ய = உண்மை வ்ரதா = விரதம் - 817 சத்யவ்ரதா = சத்தியத்திற்கே உறுதி பூண்டவள்   - 818 சத்ய ரூபா = சத்தியத்தின் வடிவமானவள்   சர்வ = எல்லாமும் -ஒவ்வொன்றும் அந்தர்யாமின் = ஆத்மா - உள்ளுறையும் ஆத்மா - 819 சர்வாந்தர்யாமினீ = அனைத்துள்ளும் உறையும் அந்தராத்மாவாக ஒளிர்பவள் (சர்வவியாபி)    - 820 சதீ = தக்ஷப் பிரஜாபதியின் மகளான தாக்ஷாயணி எனும் சதிதேவி * சதி என்றால் "சீலம் நிறைந்த துணைவி" என்பதால், சிவனின் பத்தினி என்பதும் விளக்கம்.     - 821 ப்ரஹ்மாணீ = பரப்ரம்மத்தின் சக்திஸ்வரூபமாக இருப்பவள் (சிருஷ்டிகர்த்தா, பரப்ரம்மா ie சிவன்)   - 822 ப்ரஹ்ம = சிருஷ்டி கர்த்ரீ (பரப்ரம்மா, சிவனுமானவள்)   - 823 ஜனனீ = ஜகன்மாதா (ஜகத்தை சிருஷ்டித்த மாதா)   பஹு = பல  - 824 பஹுரூபா = அனேக ரூபம் தரித்தவள்   அர்ச்சித = அர்ச்சித்தல்- வழிபடுதல் புத = பண்டிதன்  - 825 புதார்ச்சிதா = அறிவாளிகளால் வழிபடப்படுபவள்    (விபூதிவிஸ்தாரம்) []   (826-850) ப்ரசவித்ரீ; ப்ரசண்டா; ஆக்ஞா; ப்ரதிஷ்டா; ப்ரகடாக்ருதி:; ப்ராணேஷ்வரீ; ப்ராணதாத்ரீ பஞ்சாஷத்பீட ரூபிணீ; விஷுங்கலா; விவிக்தஸ்தா; வீரமாதா; வியத்ப்ரஸூ; முகுந்தா; முக்தி-நிலயா; மூலவிக்ரஹ ரூபிணீ; பாவக்ஞா; பவரோகக்னீ; பவசக்ர ப்ரவர்தினீ; சந்த:சாரா; ஷாஸ்த்ர-சாரா; மந்த்ர-சாரா; தலோதரீ; உதார கீர்த்தி:; உத்தாம வைபவா; வர்ண ரூபிணீ; ***   ப்ரசவித்ர் = பிரசவித்தல் - பிறப்பித்தல் - 826 ப்ரசவித்ரீ = பிரபஞ்சத்தை பெற்றெடுத்தவள், பிரசவித்தவள்   - 827 ப்ரசண்டா = ரௌத்திரம் கொண்டவள் - (அறச்)சீற்றமுடையவள்   ஆக்ஞா = ஆணை - கட்டளை - அதிகாரம்  - 828 ஆக்ஞா =   ஆக்ஞையானவள்; - அவளே 'ஆணை' ஆகிறாள்,  ஆணை பிறப்பிக்கும் அதிகாரியுமாகிறாள்   - 829 ப்ரதிஷ்டா = அகிலத்தின் அடிப்படையும் அஸ்திவாரமுமானவள்   ப்ரகடா = பார்க்ககூடிய - விளங்கக்கூடிய ஆக்ருதி = வடிவம் - 830 ப்ரகடாக்ருதி: = பிரத்தியட்சமான ஸாந்நித்யம் உடையவள் (மஹத் ரூபம் தாங்கி பிரத்தியட்சமாகிறாள்)   ப்ராண = பிராணன் - உயிர்சக்தி  ஈஶ்வரீ = இறைவி  - 831 ப்ராணேஷ்வரீ = ஆன்மாவை ஆளும் ஈஸ்வரீ   தாத்ர் = வழங்குதல் - 832 ப்ராணதாத்ரீ = உயிர்சக்தி தந்தருள்பவள் (ஊட்டமளிப்பவள்)    பஞ்சாஷ = ஐம்பது பீட = பீடம் - அரியாசனம் ரூப = வடிவம்-உருவம் - வடிவம் தாங்குதல் - 833 பஞ்சாஷத்பீட ரூபிணீ = ஐம்பது சக்தி பீடங்களில் நிலைபெற்றிருப்பவள்  ஐம்பது (அல்லது ஐம்பத்தியொன்று) அக்ஷரங்களுடன் (அ முதல் க்ஷ வரை) தொடர்புடையது. பராசக்தி இதனுள் வெளிப்படும் போது, ‘சப்த ப்ரம்மம்’ ஆகிறது   ஷ்ருங்கலா = சங்கிலி வி = இல்லாத - விலக்கி - 834 விஷ்ருங்கலா = (கால-நேர-தேச) எவற்றினாலும் பிணைக்கபடாதவள் ie எல்லைகளுக்கு அப்பாற்பட்டவள், சுதந்திரமானவள்    விவிக்த - தனிமையான - பரிசுத்தமான  - ஏகாந்தமான ஸ்தா = நிலை கொண்டிருப்பவள் - 835 விவிக்தஸ்தா = ஏகாந்தமான இடங்களில் வசிப்பவள். ஏகாந்தம் விரும்பும் ஞானிகளின் புனிதமான மனத்தில் வசிப்பவள்    வீர = வீரர்கள் - துணிவு மிகுந்தவர்கள் - 836 வீர மாதா =   நெஞ்சுரம் கொண்டோர்க்குத் தாயாக விளங்குபவள். அகங்காகர மமகாரத்தைத் துறந்த  பண்டிதர்களையும் மெய்ஞானிகளையும், மற்றும் தீயோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர்களையும், வீரர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.    வியத் = ஆகாயம்  ப்ரஸு = பிரசவித்தல் - 837 வியத்ப்ரஸு = அம்பரத்தை உருவாக்கியவள்    - 838 முகுந்தா = முக்தியைத் தருபவள்    முக்தி = விடுதலை நிலய = இடம் - வசிக்குமிடம் - 839 முக்திநிலயா = முக்தியின் இருப்பிடமானவள்    மூல = மூலம் - அடிப்படை விக்ரஹ =  தோற்றம் ரூப = வடிவம் உருவம் - 840 மூல விக்ரஹ ரூபிணீ = தோற்றவடிவங்களின் ஆதாரமானவள்  (சிருஷ்டியின் அடிப்படை- மஹத் முதல் பொருள்சார்ந்த அனைத்துக்கும் ஆதாரம்)    பாவ = ரசம் - உணர்வு - மனப்பாங்கு ஞா = அறிவு  - 841 பாவக்ஞா = அனைத்து உணர்வுகளையும்  எண்ண ஓட்டங்களையும் அறிபவள் (பந்தபட்ட ஜீவனின் உணர்வுகள்)   பவ = லோகாயதமான இருப்பு,  ரோக = வியாதி ரோகக்னா = வியாதி நீக்குதல் - 842 பவரோகக்னீ = உலகாயதமான பிறப்பு-இருப்பு-இறப்பு என்ற வியாதியை களைபவள் (முக்தி நல்குபவள்)    சக்ர = சக்கரம் பவ சக்ர = பிறப்பு இறப்பு எனும் லோகாயத சக்கரம்  ப்ரவர்தன் = நிகழ்த்துதல் - இயக்குதல் - 843 பவ சக்ர ப்ரவர்த்தனீ = பிறப்பு இறப்பு எனும் சுழற்சியை நிகழ்த்துபவள் .   சந்தஸ் = உயர்ந்த பாசுரங்கள் - வேத வாக்கியங்கள் சாரா = சாரம் - 844 சந்தஸ்-சாரா =  உயர்ந்த பாசுரங்கள், வேதம் கூறும் நல்வாக்கியங்களின் சாரம்ஸமாக விளங்குபவள். .    ஷாஸ்த்ர - சாஸ்திரங்கள்  - 845 ஷாஸ்த்ரசாரா = சாஸ்திரங்களின் சாரமானவள்.     மந்த்ர = மந்திரங்கள் - ஸ்லோகங்கள் - ஸ்தோத்திரபாடல்கள் - 846 மந்திரசாரா = மந்திரங்களின்  சத்தானவள் ie பொருளானவள்    தலின் = மெலிந்த உத்தன = இடை தலினோதரீ = மெலிந்த இடையுடையவள் - 847 தலோதரீ = மெல்லிடையாள்    கீர்த்தி = புகழ் - போற்றுதல் உதார = தாராளமான  - 848 உதார கீர்த்தி = பெரும் புகழுக்குரியவள்    வைபவ = மேன்மை - சிறப்பு உத்தாம = எல்லை கடந்த - 849 உத்தாம வைபவா = அளவற்ற மகிமை பொருந்தியவள்    வர்ண =  சப்தம் - அசை/சீர் - எழுத்துகள் (உயிரெழுத்து)  - 850 வர்ண ரூபிணீ = ஒலி (எழுத்து அதன் அசை, சீர்)  வடிவமானவள்    (விபூதி விஸ்தாரம்) []   (851-875) ஜன்ம-ம்ருத்யு-ஜரா-தப்த-ஜன-விஷ்ராந்தி தாயினீ; சர்வோபனிஷதுத்குஷ்டா; ஷாந்தியதீத-கலத்மிகா; கம்பீரா; ககனாந்தஸ்தா; கர்விதா; கான லோலுபா; கல்பனா ரஹிதா; காஷ்டா; அகாந்தா; காந்தார்த்த விக்ரஹா; கார்ய காரண நிர்முக்தா; காமகேலிதரங்கிதா ; கனத் கனக தாடங்கா; லீலா விக்ரஹ தாரிணீ; அஜா; க்ஷய வினிர்முக்தா; முக்தா; க்ஷிப்ர ப்ரசாதினீ; அந்தர்முக சமாராத்யா; பஹிர்முக சுதுர்லபா; த்ரயீ; த்ரிவர்க நிலயா; த்ரிஸ்தா; த்ரிபுரமாலினீ; *** ஜன்ம = பிறப்பு ஜர = வயோதிகம் ம்ருத்யு = இறப்பு தப்த = தாபம் - துன்பம் ஜன = ஜனங்கள் ie ஜீவன் விஷ்ராந்தி - ஓய்வு - நிறுத்தம் - இளைப்பாறுதல் தாயின் = கொடுத்தல் – வழங்குதல் - 851 ஜன்ம-ம்ருத்யு-ஜரா-தப்த-ஜன-விஷ்ராந்தி தாயினீ =   பிறப்பு, மூப்பு இறப்பு என்ற சுழற்ச்சியிலிருந்து ஜீவர்களுக்கு ஓய்வளித்து சாந்தியருள்பவள்     சர்வ = எல்லாமும் - ஒவ்வொன்றும் உபநிஷத் = உபநிஷதங்கள் உத்குஷ்ட = அறிவித்தல்   - 852 சர்வோபனிஷதுத்குஷ்டா = எல்லா உபநிஷதங்களாலும் பிரகடனப்படுத்தப்படுபவள்    ஷாந்தி = அமைதி - சாந்தி அதீத = அப்பாற்பட்ட கலா = கலை ஆத்மிகா = இயல்பை உடைய - 853 ஷாந்தியதீத-கலத்மிகா =  சாந்தி நிலைக்கு அப்பாற்பட்டு திகழ்பவள் (முக்தி நிலை)    - 854  கம்பீரா = புரிதலுக்கு அப்பாற்பட்டவள் - ஆழமானவள் - புதிரானவள்   ககன = ஆகாசம் - சுவர்கம் அந்த = உள் - நடுவில் ஸ்தா = வசிப்பவள்  - 855 ககனாந்தஸ்தா = அம்பரத்தில் இருப்பவள்    - 856 கர்விதா; = கர்வம் நிறைந்தவள்      கான = கானம் - பாடல் லோலுபா = இச்சை  - 857 கான லோலுபா = இசையில் பெரும் நாட்டமுடையவள்    கல்பனா = கற்பனை - புனைவு - அனுமானம்  ரஹிதா = இல்லாத - விடுவிக்கப்பட்ட  - 858 கல்பனா-ரஹிதா =அனுமானங்கள், கற்பனைகளிலிருந்து   நீங்கியிருப்பவள்  (கற்பனைகளற்ற சத்தியமானவள்)     காஷ்டா = உச்சி - முகடு - 859 காஷ்டா = அதிஉன்னத இலக்கானவள் (இறுதி இலக்கு)    அகா = அழுக்கு - பாபங்கள் அந்த = முடிவு  - 860 அகாந்தா = பாபங்களை நாசம் செய்பவள் - பாபநாசினி   காந்தா = அன்புக்குரியவர் - பதி (ஈஸ்வரன்) அர்த = பாதி விக்ரஹ =  தோற்றம் - 861 காந்தார்த்த விக்ரஹா = ஆகிருதியின் பாதியை ஈஸ்வரனுடன் பகிர்ந்திருப்பவள் (அதி சூக்ஷும அரூப பிரம்ம நிலையிலும், புருஷ-பிரக்ருதி சரிசமமாக இணை-விலகாமல் பின்னப்பட்டிருக்கிறது)   கார்ய = செயல் காரண = காரணம் கார்யகாரணம் = செயலும் விளைவும் நிர்முக்த = விடுதலை பெறுதல் - 862 கார்ய காரண நிர்முக்தா = காரிய காரணங்களால் பாதிக்கப்படாதவள் - அதற்கு அப்பாற்பட்டவள்    காம = காமேஸ்வரர் -  ஈஸ்வரன் கேலி = விளையாட்டு தரங்கித = அலைகள் - பெருக்கு - 863 காமகேலிதரங்கிதா = ஈஸ்வரனுடைய விளையாட்டில் (ஐக்கியத்தில்) வெள்ளமென பெருகும் இன்பத்தில் திளைப்பவள்     கனதி = மினுமினுப்பு கனக = தங்கம் - பொன் தாடங்க = காதணி - 864 கனத் கனக தாடங்கா  = ஒளிரும் பொற்காதணிகளை அணிந்திருப்பவள்   லீலா = விளையாட்டு - வேடிக்கை விக்ரஹ = தோற்றம் தாரண = தாங்குக்தல் - 865 லீலா விக்ரஹ தாரிணீ = பல்வேறு தோற்ற வடிவங்கள் தரிப்பதை விளையாட்டென கருதுபவள்   - 866 அஜா = பிறப்பற்றவள்    க்ஷய = முடிவு (இறப்பு) - சிதைவு விநிர்முக்த = விடுதலை பெறுதல்  867 க்ஷய வினிர்முக்தா = அழிவற்றவள்     - 868 முக்தா = அப்பழுக்கற்ற வெகுளி; கவர்ச்சியானவள்; அழகானவள்    க்ஷிப்ரத்-க்ஷிப்ரம் = விரைவில் - உடனே ப்ரசாதின் = மகிழ்தல் - 869 க்ஷிப்ர ப்ரசாதினீ = எளிதில் (கணத்தில்) அகமகிழ்பவள்    அந்தர்முக = உள்முகமாக சமாராதன் = திருப்திபடுத்துதல் - 870 அந்தர்முக சமாராத்யா = உள்முகமாக தியானிக்கும் ஆத்மஞானிகளால் திருப்திபடுத்தப்படுபவள் - ஆராதிக்கப்படுபவள்    பஹிர்முக = வெளிமுகமாக - புறசெயல்பாடு சிந்தனைகள் துர்லபா = அடைவதற்கு கடினமான - 871 பஹிர்முக சுதுர்லபா = உலகாய சிந்தனை-செயற்பாடுகளை உடையவர்களுக்கு கடினமான இலக்காகுபவள்    - 872 த்ரயீ = மூவேதமானவள் (ரிக், யஜுர், சாம வேதங்கள்)*   த்ரிவர்க = மூன்று நிலைகள் (தர்ம-அர்த்த-காம எனும் புருஷர்த்தங்கள்) நிலயா = நிலைத்திருத்தல் - 873 த்ரிவர்க நிலயா = மூன்று நிலைகளில் உறைபவள் (புருஷார்த்த நிலைகள்)   - 874 த்ரிஸ்தா; = திரித்துவத்தில் (திரி தத்துவம்) இருப்பவள் (மூன்றான பிரம்ம, விஷ்ணு மஹேஷ்வர,  மூவுலகங்கள், முக்குணங்கள், முக்காலங்கள் முதலியவை)    - 875 த்ரிபுர மாலினீ; = திரிபுரமாலினியாக ஸ்ரீசக்கரத்தின் ஆறாம் ஆவர்ணத்தை வழி நடத்துபவள் (ஸ்ரீசக்கரத்தின் ஆறம் ஆவர்ண தேவதாரூபம் திரிபுரமாலினி)  திரிபுரா என்பது ஜீவனின் மூன்று நிலைகளான விழிப்பு, கனவு, உறக்க நிலைகளையும் குறிக்கும். மாலினி என்பது துர்கையை குறிக்கும் பெயர். ... அவளே இந்நிலைகளை ஆளுபவள் என்பது கருத்து .    (விபூதி விஸ்தாரம்) []   (876-900) நிராமயா; நிராலம்பா; ஸ்வாத்மா ராமா; சுதாஸ்ருதி:; சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா; யக்ஞப்ரியா; யக்ஞ-கர்த்ரீ யஜமான ஸ்வரூபிணீ; தர்ம தாரா; தனாத்யக்ஷா; தன-தான்ய விவர்தினீ விப்ரப்ரியா விப்ர-ரூபா; விஷ்வ ப்ரம்மண காரிணீ; விஷ்வக்ராஸா; வித்ருமாபா; வைஷ்ணவீ; விஷ்ணு ரூபிணீ; அயோனி:; யோனி நிலயா; கூடஸ்தா;   குலரூபிணீ; வீரகோஷ்டிப்ரியா; வீரா; நைஷ்கர்ம்யா; ***   ஆமய = வியாதி - பிணி நிராமய = விடுபட்ட  - 876 நிராமயா; =  நோய் பிணி முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவள் (அதனால் பாதிக்கப்படாதவள்)    ஆலம்ப = துணை - சகாயம் - 877 நிராலம்பா=   எதனையும் சார்ந்திராதவள் (அவளே ஆதாரம், அடிப்படை)    ஸ்வாத்மன்  = சுயம்  - தானாக - தனியே நிற்கும் அகம் ஆராம = மகிழ்தல்  - 878 ஸ்வாத்மா ராமா = தன்னுள் மகிழ்பவள் (அவள் மகிழ்ச்சி எதனையும் சாராதது)    சுதா = அம்ருதம் ஸ்ருதி = பொழிதல் - சொரிதல் - 879 சுதாஸ்ருதி = தேனாக சொரிபவள். அம்ருதத்தை  வர்ஷிப்பவள் (சஹஸ்ராரத்தில் அம்ருதத்தை பொழிபவளாக சதானந்தத்தை அருள்வதாக "சுதாசாரபிவர்ஷிணீ" என்று முந்தைய நாமங்கள் குறிப்பிடுகின்றன)    சம்சார = லோகாயதமான வாழ்வு - பொருள் சார்ந்த உலகம் பங்க = மண் - அசுத்தம் - சகதி நிர்மக்ன = மூழ்கியிருத்தல் சமுத்தரண = களைதல் - நீக்குதல்  சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா; - 880 சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா =  நிரந்தரமற்ற சம்சார சேற்றில் உழலும் ஜீவனை,  சகதிலிருந்து தூக்கி நிறுத்திக் காப்பதில் வல்லவள்     யக்ஞம் = வேள்வி - 881 யக்ஞப்ரியா = வேள்விகளில் விருப்பமுள்ளவள் (யாகங்கள், அதன் சம்பிரதாயங்கள்)    - 882 யக்ஞ கர்த்ரீ = வேள்விகள் புரிபவள்    யஜமான = கர்த்தா - வேள்விக்கு காரணமான எஜமானர் ஸ்வரூபிணீ = ரூபம் தாங்கிய - 883 யஜமான ஸ்வரூபிணீ = (வேள்வி) கர்த்தாவாக விளங்குபவள்    தர்ம = தர்மம் (வாழ்வை முறைப்படுத்தும் அற நெறிகள்)  ஆதார = ஆதாரம் - 884 தர்ம-ஆதாரா = தர்மத்தின்  ஆதாரமாகத் திகழ்பவள்    தன = பொருள் - செல்வம் தனாத்யக்ஷ = பொருளாளர் - 885 தனாத்யக்ஷா = செல்வத்தை பாதுக்காக்கும் பொக்கிஷதாரி (பிரபஞ்சதைக் காப்பவள் ..பிரபஞ்சமே உயர் செல்வமென கருதப்படுகிறது)    தன = செல்வம் தான்ய  = தானியம் விவர்தன் = அதிகரித்தல்  - 886 தன-தான்ய விவர்தினீ = ஐஸ்வர்யத்தையும் தானியக் களஞ்சியங்களையும் அபிவிருத்தி செய்து,  சுபீட்சம் அளிப்பவள்    விப்ர = அறிவாளி - கல்விமான் - 887 விப்ரப்ரியா = அறிஞர், பண்டிதரிடம் பிரீதியுள்ளவள்* ஆன்ம அறிவை பெற்றவரே அறிஞர் என்பது புரிதல்     விஷ்வ = பிரபஞ்சம் ப்ரம்மண = சுழற்சி காரிண் = நடத்துபவள்  - 889 விஷ்வ ப்ரம்மண காரிணீ = பிரபஞ்சத்தின் சுழற்சி சக்கரத்தை நிகழ்த்தும் காரணகர்த்தா (சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற சுழற்சியை நிகழ்த்துபவள்)   க்ராஸ = விழுங்குதல் - அழித்தல் - 890 விஷ்வக்ராஸா = பிரபஞ்சத்தை விழுங்குபவள் i.e ஒடுக்குபவள்    வித்ரும = பவழம் ஆபா = ஒளிர்தல் - 891 வித்ருமாபா = பவழத்தைப் போல் ஜ்வலிப்பவள்*  செந்தூர நிறத்தவள் என்று முந்தைய நாமங்கள் பறை சாற்றுகின்றன (சிந்தூராருண விக்ரஹாம்     - 892 வைஷ்ணவீ = விஷ்ணுவின் ஆற்றல் சக்தியாகியவள்    - 893 விஷ்ணு ரூபிணீ = விஷ்ணு வடிவானவள்    யோனி = மூலம் - துவக்கம் - 894 அயோனி:  = துவக்கமற்றவள் (அவளே முழுமூலம்) - அனாதி (ஆதியற்றவள், சாஸ்வதமானவள்)    யோனி = மூலம் - ஆதி நிலய = இருத்தல் - 895 யோனி நிலயா = ஆதிமூலமாக நிலைபெற்றிருப்பவள்    - 896 கூடஸ்தா = நிலையானவள் - மாறுதலுக்கு உட்படாதவள்   குல = நற்பண்புகள் ஒழுகும் குலம், பரம்பரை ரூபிணீ = வடிவம்  - 897 குலரூபிணீ = நற்பண்புகளுடன் கூடிய குலத்தவர் வடிவில் இருப்பவள். குல எனும் சொல் கௌல மார்க்கத்தையும் குறிப்பதால், கௌல மார்க்கத்தின் பிரதிநிதி என்று மீண்டும் வலியுறுத்துவதாகவும் அர்த்தம் கொள்ளலாம்.     வீரகோஷ்டி = வீரர்களின் குழு, கோஷ்டி - 898 வீரகோஷ்டிப்ரியா = வீரம் நிறைந்தவர்களின் கூட்டணியை, சபையை விரும்புபவள்    - 899 வீரா  = கொற்றம் நிறைந்தவள்    நைஷ்கர்ம்யா = செயலின்மை - செயலற்ற   - 900 நைஷ்கர்ம்யா = செயலை விலக்கியிருப்பவள் (லயம் என்ற ஒடுக்க நிலை) பற்றற்ற  நிலையினால், செயல்- அதன் விளைவு முதலியவற்றால் பாதிக்கப்படாதவள், அதற்கு அப்பாற்பட்டவள், என்றும் புரிதல்.     (விபூதி விஸ்தாரம்) []   (901-925) நாத ரூபிணீ; விஞ்ஞான கலனா; கல்யா; விதக்தா பைந்தவாசனா தத்வாதிகா தத்வமயீ தத்வமர்த்த ஸ்வரூபிணீ சாமகானப்ரியா சௌம்யா சதாஷிவ குடும்பினீ சவ்ய-அபசவ்ய மார்கஸ்தா; சர்வாபத்-விநிவாரிணீ ஸ்வஸ்தா; ஸ்வபாவ மதுரா; தீரா; தீர சமர்சிதா; சைதன்யார்க்ய சமாராத்யா; சைதன்ய குசுமப்ரியா; சதோதிதா சதா-துஷ்டா தருணாதித்ய பாடலா தக்ஷிணா தக்ஷிணாராத்யா; தரஸ்மேர முகாம்புஜா கௌலினீ கேவலா; *** நாத = நாதம்  - 901  நாத ரூபிணீ = நாத வடிவானவள்* சிருஷ்டியின் முதல் நாதம். ஓம்காரம். ஒடுக்க நிலையில் இருந்த அரூபமான சிவசக்தி,  சிருஷ்டியைத் துவக்கும் ஆதி நாதம்.     விஞ்ஞான = அறிவு -  ஞானம் - விஞ்ஞானம் கலனா = நிகழ்த்துதல் - உந்துதல்  - 902 விஞ்ஞான கலனா = உயர் ஞானத்தை , மெய்யறிவை தூண்டுபவள், அதனை விழிக்கச் செய்பவள்.  மெய்யறிவே முதலறிவு, உயர் அறிவு, பேரறிவு. அதனின்று கிளைத்ததே ஏனைய கல்வி ஞானங்கள்.     - 903 கல்யா =  மங்களகரமானவள் - நலம் நல்குபவள் -  (படைத்தல் புரிய) தயாராகியிருப்பவள்    - 904 விதக்தா = நிபுணத்துவம் நிறைந்தவள்- பேரறிவாளி (பிரபஞ்சத்தை சிருஷ்டிகும் பேரறிவு)    பைந்தவ = பிந்து (புள்ளி - பொட்டு)  ஆசன = இருக்கை  - 905 பைந்தவ-ஆசனா = மஹாமேருவின் பிந்துவில் வீற்றிருப்பவள்* மஹாமேருவின் பிந்து உச்சியில் நடுநாயகமாக அமர்ந்து அரசாள்கிறாள்.  ஸ்ரீசக்கரம் மஹாமேருவை பிரதிபலிக்கும் யந்திரம். புருவங்களுக்கு மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்கப்படும் ஒளிக்கு பிந்து என்று பெயர்.     தத்வ = சத்தியம் - தத்துவம்(படைப்பின் மூல தத்துவங்கள் சாங்கிய முறைப்படி இருபத்தி நான்கு)  அதிக = அதிகமான - தாண்டிய - 906 தத்வாதிகா = தத்துவங்களைக் கடந்து நிற்பவள் (படைப்பின் மூலம் என்று  சொல்லப்படும் சாங்கிய தத்துவங்கள்)    மயீ = உள்ளடக்கி இருத்தல் - கொண்டிருத்தல்  - 907 தத்வமயீ = தத்துவமயமானவள் - தத்துவமானவள்    தத் = அது த்வம் = நீ அர்த்த= அர்த்தம் ஸ்வரூபிண் = வடிவம் - 908 தத்வமர்த்த ஸ்வரூபிணீ = "தத்-தவம்-அசி" என்ற மஹாவாக்கியத்தின் பொருளானவள் * தத்-தவம்-அசி என்றால் நீயே அதுவாகியிருக்கிறாய், ஜீவனே பிரம்மம் எனும் ஜீவ-பிரம்ம ஐக்கிய நிலையைக்  குறிக்கும் வாக்கியம்.     சாமகான = சாம வேதங்களின் கானம் (வேத மந்திரம்) - 909 சாமகானப்ரியா = சாமவேத பாராயணத்தில் பிரியமானவள். சாமவேதம் இசையுடன் கூடிய வேத பாராயணம்.     - 910 சௌம்யா = வெண்மதியைப் போன்று இதமானவள்; எழிலானவள்   குடும்பினீ = குடும்பத் தலைவி - மனைவி - 911 சதாஷிவ குடும்பினீ = சதாசிவனின் பத்தினி  பிரபஞ்ச தோற்றத்திற்குக் காரணமான பரம்பிரம்மம், ie சதாசிவன். அவரே பிரபஞ்ச உயிர்களின் தந்தை. லலிதாம்பிகையே தாய். பரமபுருஷனின் பத்தினி.     சவ்ய = வலம் சார்ந்த  அபசவ்ய = வலமிருந்து இடம் நகரும் - இடம் சார்ந்த மார்க்க = மார்க்கம் ஸ்தா = இருத்தல்  - 912 சவ்ய-அபசவ்ய மார்கஸ்தா = வலம் சார்ந்த வழிபாட்டு முறையிலும், வலம் சாராத இட வழிபாட்டு முறையிலும் பிரசன்னமாகியிருப்பவள்* வேத வழிபாட்டு முறையை வலம் சார்ந்ததென்றும் (வலக்கையை யாக-யக்ஞங்களில்   உபயோகிப்பதனால்),  தாந்திரீக முறையை    இடம்    சார்ந்ததென்றும் (இடக்கை உபயோகத்தினால்) என்றும் அறிகிறோம்.மேலும் தெரிந்து கொள்ள (Thanks and Credit): https://www.manblunder.com/articlesview/lalitha-sahasranamam-912    சர்வ = ஒவ்வொரு ஆபத் = ஆபத்து  விநிவாரிணீ = நீக்குதல் - 913 சர்வாபத்-விநிவாரிணீ  = (பக்தர்களின்) அனைத்து இடர்களையும் களைபவள்    - 914 ஸ்வஸ்தா =   தன்னில், தன் இயல்பு நிலை இருப்பில் நிறைவுகாண்பவள்.     ஸ்வபாவ = குணம் மதுர = இனிமை   - 915 ஸ்வபாவ மதுரா = இனிமையான இயல்புடையவள்    தீர = வீரம்- ஆற்றல்- அறிவு - 916 தீரா = கொற்றம் நிறைந்தவள் - அறிவுமயமானவள்    சமர்ச்சிதா = போற்றப்படுபவள்  - 917 தீர சமர்சிதா = சிறந்த பண்டிதர்களால், அறிவாளிகளால் போற்றப்படுபவள்    சைதன்ய =  சுத்த சைதன்யம் -  பெருவுணர்வு - தூய உணர்வு  அர்க்ய = அர்ப்பணிப்பு - காணிக்கை  சமாராத்யா = திருப்திபடுத்துதல் - 918 சைதன்யார்க்ய சமாராத்யா = சுத்த சைதன்யமாகிய பெருவுணர்வின் அர்ப்பணிப்பில் திருப்தி அடைபவள்     குசும = மலர் - 919 சைதன்ய குசுமப்ரியா = ‘சைதன்யம்’ எனும் வாடா மலரில் விருப்பமுள்ளவள்* சைதன்யம் மலராக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.     சதா = எப்பொழுதும் உதித = தோன்றியிருத்தல் - எழும்பியிருத்தல் - 920 சதோதிதா =  நித்தியமாக உதித்திருப்பவள் - எழுந்தொளிர்பவள் (பண்டிதர்களின் மனத்தில் எழுந்தருளியிருப்பவள்)   துஷ்ட = நிறைவுடன் - சந்தோஷத்தல் - 921 சதா-துஷ்டா = எப்பொழுதும் மகிழ்ந்திருப்பவள்    தருண = இளைய ஆதித்ய = சூரியன் தருணாதித்ய = உதய சூரியன் பாடல = இளஞ்சிவப்பு  - 922 தருணாதித்ய பாடலா = உதய சூரியனின் இளஞ்சிவப்பு நிறத்தினள்    தக்ஷிண = வலம் சார்ந்த – தக்ஷிணாசாரம் - வலம் சார்ந்த வழிபாட்டு முறையை பின்பற்றுவோர்  அதக்ஷிண = வலம் அல்லாத = வாமாசாரம் - இடம் சார்ந்த வழிபாட்டு முறையை பின்பற்றுவோர் ஆராத்யா = வழிபடுதல் - 923 தக்ஷிண-அதக்ஷிணாராத்யா = தக்ஷிணாசாரம் மற்றும் வாமாசாரத்தைப் பின்பற்றுவோரால் வழிபடப்படுபவள்.   தக்ஷிண = திறனாளி - அறிவாளி அதக்ஷிண = அஞ்ஞானி - 923 தக்ஷிண-அதக்ஷிணாராத்யா = அறிவாளிகளாலும் அஞ்ஞானிகளாலும் (அனைவராலும்) வழிபடப்படுபவள்.   தர = முகிழ்க்கும் ஸ்மேர = புன்னகத்த முக = முகம் அம்புஜ = தாமரை - 924 தரஸ்மேர முகாம்புஜா = அலர்ந்த அழகிய தாமரையைப் போன்ற புன்னகை தவழும் முகத்தினள்.   கௌலினி = கௌல மார்க்கம் (லலிதாம்பிகையை துதிக்கும் மார்கங்களில் ஒன்று) கேவலா = பிரம்ம ஞானம்  - 925 கௌலினீ கேவலா = கௌலமார்க்கத்தின் வழிபாட்டின் மூலம் அடையும் பிரம்ம ஞானமாக ஒளிர்பவள். (விபூதி விஸ்தாரம்) []   (926-950) அனார்க்ய கைவல்ய பத தாயினீ; ஸ்தோத்ரப்ரியா; ஸ்துதிமதீ; ஷ்ருதி சம்ஸ்துத வைபவா;   மானஸ்வினீ; மானவதீ; மஹேஷீ; மங்களாக்ருதி:; விஷ்வமாதா; ஜகத்தாத்ரீ; விசாலாக்ஷீ; விராகிணீ; ப்ரகல்பா; பரமோதாரா; பராமோதா; மனோமயீ; வ்யோம-கேஷீ; விமானஸ்தா; வஜ்ரிணீ; வாமகேஷ்வரீ; பஞ்சயக்ஞப்ரியா; பஞ்ச ப்ரேத மஞ்சாதி ஷாயினீ; பஞ்சமீ; பஞ்ச பூதேஷீ; பஞ்ச சங்க்யோபசாரிணீ; *** அனார்க்ய = விலைமதிப்பற்ற கைவல்ய = முக்தி பத = பதம் -  நிலை  தாயின் = வழங்குதல்  - 926 அனார்க்ய கைவல்ய பத தாயினீ = ஒப்பற்ற கைவல்யபதம் அளிப்பவள்.     - 927 ஸ்தோத்ரப்ரியா =  ஸ்தோத்திரத் துதிகளில் விருப்பமுள்ளவள்.   ஸ்துதி = போற்றுதல் மதி = மதி (அறிவு) - 928 ஸ்துதிமதீ = ஸ்துதி ஸ்தோத்திரங்களின் அறிவாக, அதன் சாரப் பொருளாக விளங்குபவள்.    ஷ்ருதி = வேதங்கள் சம்ஸ்துத = போற்றுதல் வைபவ = மகிமை  - 929 ஷ்ருதி சம்ஸ்துத வைபவா = வேதங்கள் கொண்டாடும் மகத்துவம் பொருந்தியவள்.   - 930 மனஸ்வினீ = தெளிந்த அமைதியான மனதுடையவள் – தனிச்சையானவள்.   - 931 மானவதீ = உயர்ந்த கௌரவம், புகழ், பெருமை  உடையவள்    - 932 மஹேஷீ = இறைவன் மஹேஸ்வரனின் துணைவியானவள்    மங்கள = மங்களம் தரும் ஆக்ருதி = வடிவம் - 933 மங்களாக்ருதி: =  சுபீக்ஷம் மற்றும் நன்மையின் உருவகமானவள்   விஷ்வ = பிரபஞ்சம்  - 934 விஷ்வமாதா = பிரபஞ்சத்தின் அன்னை   ஜகம் = பிரபஞ்சம் தாத்ர் = தாங்குபவர் - துணை நிற்பவர்  - 935 ஜகத்தாத்ரீ = பிரபஞ்சத்தை ரக்ஷிப்பவள் - காத்து துணை நிற்பவள்    அக்ஷி = கண்கள் விஷால = விசாலம்  - 936 விஷாலாக்ஷீ = அகண்ட விசாலமான விழிகளை உடையவள் (பிரபஞ்சத்தையே கடாக்ஷிக்கும் விழிகள்)    - 937 விராகிணீ = வைராக்கியமுள்ளவள் - இச்சைகளுக்கு அப்பாற்பட்டவள் - விருப்பு வெறுப்பற்றவள்   - 938 ப்ரகல்பா = உறுதியும் நம்பிக்கையும் நிறைந்தவள் - துணிந்தவள்    பரம = பெரிய - உயர்ந்த உதார = தாராளம் - 939 பரமோதாரா = பெரும் கொடையாளி;-  மிகப்பெரிய வள்ளல்   மோதா = இன்பம் - மகிழ்ச்சி பரா = உயர்ந்த - 940 பராமோதா = பேரின்பமானவள் (பேரின்பத்தின் இருப்பிடம்)    மனோ = மனம் மயீ = உள்ளடக்கி இருத்தல் - கொண்டிருத்தல்  - 941 மனோமயீ = மனோமயமானவள் = மனமாகி இருப்பவள்     வ்யோமன் =  ஆகாசம் - சுவர்கம்- வானம் கேஷ = கேசம் கேஷின் = நீண்ட கேசம் - 942 வ்யோம-கேஷீ = அம்பரத்தை கேசமெனக் கொண்டவள் (அண்ட ரூபம்)     விமான = ஆகாய-மார்க ரதங்கள்  - விமானங்கள் - தேவதா ரதங்கள் (அவர்களின் வாகனங்கள்)  ஸ்தா = இருத்தல்  - 943 விமானஸ்தா = ஆகாய- மார்க்கமான விமானத்தேரில் உலா வருபவள்   வஜ்ர = இந்திரனின் ஆயுதம்  - 944 வஜ்ரிணீ = வஜ்ராயுதம் தாங்கியவள்    வாமக = வாமகேஷ்வர தந்திரம் (ஸ்ரீவித்யா உபாசனையைச் சார்ந்தது) ஈஸ்வரீ = ஈஸ்வரீ - தலைவி  - 945 வாமகேஷ்வரீ = வாமகேஸ்வர தந்திரத்தின் உபாசனா தேவதையாக விளங்குபவள்    யக்ஞம் = பூஜை முறை  , வேள்வி  பஞ்சயக்ஞ =  பஞ்ச (ஐந்து) யக்ஞங்கள் ( தேவ,  பிரம்ம , பித்ரு மனுஷ்ய, பூத யக்ஞங்கள்)  - 946 பஞ்சயக்ஞப்ரியா = பஞ்ச யக்ஞங்களில் விருப்பமுள்ளவள்    பஞ்சப்ரேத = ஐந்து சவங்கள் மஞ்சாதி = படுக்கை ஷாயின் = சாய்ந்திருத்தல் - ஓய்வு  - 947 பஞ்ச ப்ரேத மஞ்சாதி ஷாயினீ =  ஐந்து பிரேதங்களைக் கால்களாகக் கொண்ட படுக்கையின் மேல் சயனித்திருப்பவள் i.e. ஓய்ந்திருப்பவள்* பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹாதேவன் நான்கு கால்களாகவும், சதாசிவனை இருக்கையாகக் கொண்ட அரியணையில் லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள் (ஓய்ந்திருக்கிறாள்). சக்தியின்றி இப்பிரபஞ்சத்தின் செயலிழப்பை இந்நாமம் உணர்த்துகிறது.    பஞ்சம; = ஐந்தாவதான - சதாசிவன்  பஞ்சமீ; = ஐந்தாவதான - சதாசிவனின் துணைவி - 948 பஞ்சமீ = ஐந்தாவதானவள் (சதாசிவனின் துணைவி) பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹாதேவன் முதலியவர்கள் மற்றைய நால்வர்.   பஞ்ச-பூத = ஐம்பூதங்கள் (நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்) ஈஷீ = ஈஸ்வரீ - 949 பஞ்ச பூதேஷீ = ஐம்பூதங்களை அடக்கி ஆளுபவள்    சாங்க்ய = மொத்தமாக - தொடர்புடைய  - உடன் சார்ந்த உபசார = உபசாரங்கள் - 950 பஞ்ச- சங்க்ய-உபசாரிணீ; = ஐந்துவிதமான உபசாரங்களை ஏற்பவள் (உபசாரங்களைக் கொண்டு துதிக்கப்படுபவள்) (தூபம், தீபம், சந்தனம், மலர், நைவேத்யம் முதலியன).   (விபூதி விஸ்தாரம்)  []   (951-975) ஷாஷ்வதீ; ஷாஷ்வதைஷ்வர்யா; ஷர்மதா; ஷம்பு மோஹினீ; தரா; தரசுதா; தன்யா; தர்மிணீ; தர்ம வர்த்தினீ; லோகாதீதா; குணாதீதா; சர்வாதீதா; சமாத்மிகா; பந்தூக குசுமப்ரக்யா; பாலா; லீலா வினோதினீ; சுமங்கலீ; சுககரீ; சுவேஷாட்யா; சுவாசினீ; சுவாசின்யர்சனப்ரீதா; ஆஷோபனா; ஷுத்த மானஸா; பிந்து தர்பண சந்துஶ்டா; பூர்வஜா; ***   ஷாஷ்வத் = சாஸ்வதம் - 951 ஷாஷ்வதீ = நிரந்தரமானவள்   ஐஷ்வர்ய = ஆதிபத்தியம் - நாயகம் - 952 ஷாஷ்வதைஷ்வர்யா = உயர்ந்த நிலையான அதிபதியாக கோலோச்சுபவள்    ஷர்மன் = பேரின்பம் ஷர்மத = இன்பம் தருதல் - 953 ஷர்மதா = பேரானந்தம் தருபவள்    ஷம்பு = சம்பு - சிவபெருமானின் நாமம் மோஹினீ = மோஹிப்பவள் - 954 ஷம்பு மோஹினீ = சிவனை வசீகரிப்பவள்     தர = பூமி - 955 தரா = பூமியைப் போன்றவள் ie  தாங்குபவள்  - துணை நின்று பாதுகாப்பவள்    தர = மலை  சுதா = புத்திரி - 956 தரசுதா = மலைமகள் (ஹிமவானின் புத்திரி)    - 957 தன்யா = தனங்களுக்கு   அதிபதி (அனைத்து வகை செல்வங்களும்)    - 958 தர்மிணீ = தர்மத்தின் வடிவானவள்    வர்த்தின் = பெருகுதல் - 959 தர்ம வர்த்தினீ= தர்மத்தை பெருகச் செய்பவள்     லோக = உலகம் அதீத = அப்பாற்பட்டு  - 960 லோகாதீதா = லோகங்களைக் கடந்து நிற்பவள் ( பதினான்கு லோகங்கள்)    - 961 குணாதீதா = குணங்களைக் கடந்தவள் (சத்துவம்- ராஜசம்-தாமசம் என்ற முக்குணங்கள்)   சர்வம் = அனைத்தும் - 962 சர்வாதீதா = அனைத்திற்கும் அப்பாற்பட்டவள்     சமாத்மக =  அமைதியான - நிதானமான  - 963 சமாத்மிகா =  நிதாமான அமைதியான போக்கை உடையவள் - சாந்தம் நிறைந்தவள்     பந்தூக = நாதப்பூ - Midday flower - (Pentapetes phoenicea  - Botanical name) குசும = மலர்  ப்ரக்யா = சிறப்பு - அமைப்பு - தோற்றம் - 964 பந்தூக குசுமப்ரக்யா = நாதப்பூவினைப் போன்ற மாட்சிமை பொருந்தியவள்   - 965 பாலா = பாலாம்பிகையாக அருளுபவள் * பாலா என்பவள் அம்பிகையின் பால (சிறுமி) அவதாரம். அவளுள் உறைந்திருக்கும் கள்ளமற்ற சிறுமியின் உருவகம்.     லீலா = பொழுதுபோக்கு- விளையாட்டு வினோதின் = கேளிக்கை - 966 லீலா வினோதினீ = லீலைகளில்  மகிழ்ந்திருப்பவள் - உலக சிருஷ்டி , ஸ்திதி, லயம் எனும் கேளிக்கையில் உவகையுடன் ஈடுபட்டிருப்பவள்    - 967 சுமங்கலீ = நலனையெல்லாம் அருளுபவள்    சுக = சுகம் கர = நிகழ்வித்தல்  - 968 சுககரீ =  சுகம் பயப்பவள்    சுவேஷ =  புனைந்திருத்தல் - அலங்கரித்திருத்தல் - 969 சுவேஷாட்யா = அழகிய அபரண-அலங்காரம் தரித்திருப்பவள்    - 970 சுவாசினீ = சௌமாங்கல்யத்துடன் திகழ்பவள் - நித்ய-சுமங்கலி []     அர்சனா = வழிபாடு ப்ரீதா = மகிழ்தல் - விரும்புதல்  - 971 சுவாசின்யர்சனப்ரீதா = சுமங்கலிகளின் பூஜையால் பெரிதும் மகிழ்பவள் .    ஆ= ('ஆ' எனும் எழுத்து அடுத்து வரும் சொல்லிற்கு வலிமை சேர்கிறது.) ஷோபனா = அழகு - பிரகாசம் - 972 ஆஷோபனா =  பிராசிப்பவள் - ஜொலிப்பவள் - மிகுந்த அழகுள்ளவள்.   - 973 ஷுத்த மானஸா = சுத்த சித்தமுடையவள்  (புலன்களால் மாசுப்படுத்தப்படாத பரிசுத்த மனம்) (சுத்த சைதன்யமாக மிளிர்கிறாள்) .   பிந்து = ஸ்ரீசக்கரத்தின் மத்திய பாகம் (அவள் வீற்றிருக்கும் அரியணை) தர்பண = காணிக்கை  சந்துஷ்ட = திருப்தியடைதல்   - 974 பிந்து தர்பண சந்துஶ்டா  = பிந்துவில் கொடுக்கப்படும் தர்ப்பண அர்ப்பணிப்பில் உவகையடைபவள்.    - 975 பூர்வஜா = பிரபஞ்ச சிருஷ்டிக்கு முந்தையவள் = ஆதி முதலானவள் - மூத்தவள்  (விபூதி விஸ்தாரம்) []   ( 976-989 ) த்ரிபுராம்பிகா;    தசமுத்ர சமாராத்யா;    த்ரிபுராஸ்ரீ வஷங்கரீ; ஞான முத்ரா; ஞான கம்யா;   ஞான ஞேய ஸ்வரூபிணீ;   யோனி முத்ரா; த்ரிகண்டேஷீ;   த்ரிகுணா;   அம்பா; த்ரிகோணகா;   அனகா;   அத்புத சாரித்ரா;   வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ;   *** - 976 த்ரிபுராம்பிகா = திரிபுராம்பிகையாக அவதரித்தவள் * *  திரிபுராம்பிகை ஸ்ரீ சக்கரத்தின் எட்டாவது ஆவர்ணத்தை ஆளும் தேவதை.   த்ரிபுரா' எனும் சொல் மூன்று நகரம் (அறியாமையின் உருவகம்) அல்லது மூன்று உலகம் குறிக்கும் சொல் என்பதை முந்தைய நாமங்களில் பார்த்தோம். அவற்றை ஆளும் அம்பிகை எனும் புரிதல் சரியானதே. இருப்பினும், அத்தகைய பொருளை முன்பே அறிந்ததினால், திரிபுராம்பிகை என்ற இந்நாமத்தை, எட்டாம் ஆவர்ண அவதார தேவதையை குறிப்பதாக புரிந்து கொள்வதும் முறையே.  இத்தேவதை மும்மைகளை தன் ஆட்சிக்கு உட்படுத்தும் அதி சூக்ஷ்ம தேவதை. (முக்குணங்கள், படைப்பின் மூன்று நிலைகள், மூன்று உலகங்கள் முதலியன).  ஒன்பதாவது ஆவர்ணத்தில் இவளே அனைத்தையும் உள்ளடக்கிய லலிதையாக அருள்பாலிக்கிறாள்.     தஷ = பத்து முத்ரா = யோக, நாட்டிய, ஆன்மீக, சாஸ்திரங்கள் கூறும் முத்திரைகள். கைவிரல்களைக் கொண்டு முத்திரைகளைப் பிரதிபலிக்கிறார்கள் *  - 977 தசமுத்ர சமாராத்யா =  பத்து-முத்திரைகளின் அபினய-சமிக்ஞைகளினால் துதிக்கப்படுபவள்    த்ரிபுராஸ்ரீ = ஸ்ரீ சக்கரத்தின் ஐந்தாம் ஆவர்ண(பிரிவு) தேவதை வஷங்கர் = கட்டுப்படுத்துதல் - 978 த்ரிபுராஸ்ரீ வஷங்கரீ = (ஐந்தாம் ஆவர்ண-தேவி) திரிபுராஸ்ரீயை தனது ஆளுகைக்கு உட்படுத்துபவள்   - 979  ஞான முத்ரா = ஞான முத்திரையின் வடிவானவள் (சின் முத்திரை)    கம்யா = அடையக்கூடிய - அடைய சாத்தியப்படுதல் - 980  ஞான கம்யா = ஞானத்தினால் அடையப்பெறுபவள்    ஞான = அறிவு ஞேய = அறியப்படும் பொருள் ஸ்வரூபிண் = வடிவம் - 981  ஞான ஞேய ஸ்வரூபிணீ = அறிவின் வடிவாகவும் அறியப்படும் பொருளாகவும் இருப்பவள்    - 982 யோனி முத்ரா;   = யோனி-முத்திரையானவள் (முத்திரைகளுள் ஒன்று)    த்ரிகண்ட = பத்தாம் முத்திரை ஈஷீ = ஈஸ்வரீ - 983 த்ரிகண்டேஷீ = 'த்ரிகண்டா' எனும் பத்தாம் முத்திரையை ஆளுபவள்     - 984 த்ரிகுணா = முக்குணங்களாக பரிமளிப்பவள் (ராஜஸ, தாமஸ, சத்துவ குணங்கள்).   அம்பா = அன்னை - 985 அம்பா = அம்பிகை - அன்னையாகி அருளுபவள்.    த்ரிகோண = முக்கோணம்  - 986 த்ரிகோணகா = திரிகோணத்தில் உறைபவள் ( ஸ்ரீசக்கரத்தின் மைய்யப்பகுதியில் உள்ள திரிகோணத்தின் பிந்து)    அகா = அழுக்கு - பாபங்கள்  அனாகா = பரிசுத்தம் - 987 அனகா =   மாசற்றவள்.    அத்புத= ஆச்சரியம் சாரித்ர= சரித்திரம்  - 988 அத்புத சாரித்ரா = அதியற்புத சரித்திரப் பெருமை வாய்ந்தவள்.    வாஞ்சிதார்த்த = இச்சை - விருப்பம்- ஆசை ப்ரதாயின் = வழங்குதல்  - 989 வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ = (பக்தர்களின்) அபிலாஷைகளை பூர்த்தி செய்பவள்.                                                  16. சிவசக்த்யைகரூபம் (விபூதி விஸ்தாரம் முற்றிற்று)  []   (990-1000) அப்யாசாதிஷய ஞாதா ஷடத்வாதீத ரூபிணீ அவ்யாஜ கருணா மூர்த்தி:; அஞ்ஞான த்வாந்த தீபிகா; ஆபால கோப விதிதா; சர்வானுல்யங்க்ய ஷாசனா; ஸ்ரீசக்ர ராஜ நிலயா; ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரீ; ஸ்ரீ ஷிவா; ஷிவ-ஷக்த்யைக்ய ரூபிணீ; லலிதாம்பிகா;   அப்யாஸ = அப்பியாசம் - பயிற்சி அதிஷய = ஏராளமான - அதிகமான  ஞாதா = அறியப்படும் பொருள் - புரிந்து கொள்ளப்படுதல் - 990 அப்யாசாதிஷய ஞாதா = முறையாக செய்யப்படும் அபரீமிதமான பயிற்சியால் அறியப்படுபவள்  (தொடர்து செய்யப்படும், முறையான பயிற்சியாலன்றி அறிய அரிதானவள்)    ஷட = ஆறு அத்வா = பாதை அதீத = அப்பாற்பட்டு ரூபிணீ = வடிவம் தாங்கிய - 991 ஷடத்வாதீத ரூபிணீ = ஆறு-பாதைகளுக்கும் அப்பாற்பட்ட ரூபம் தாங்கியவள் வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன முக்தியை நோக்கிய பயணத்திற்கான ஆறு அத்வாகள்(பாதைகள்).    அவ்யாஜ= உண்மையான -  நம்பகத்தன்மையுள்ள கருண = கருணை மூர்த்தி = ரூபம் - 992 அவ்யாஜ கருணா மூர்த்தி: =  பாரபட்சமற்ற பெருங்கருணையின் வடிவானவள்.    அஞ்ஞான = அஞ்ஞானம் த்வாந்த = இருள் தீபிகா = ஒளி = விளக்கு - 993 அஞ்ஞான த்வாந்த தீபிகா= அஞ்ஞானமெனும் இருளை நீக்கும் ஒளிவிளக்காக சுடர்விடுபவள்    ஆபாலம் = சிசுக்கள் உட்பட கோப = இடையன்(இடைச்சி) - மேய்ப்பவள் = பாதுகாப்பவள் *  * ஜீவர்களை மேய்ப்பவள் - பாதுகாப்பவள் இறைவி என்பது புரிதல்.  விதிதா = புரியக்கூடிய - உணரக்கூடிய - புரிந்த - 994 ஆபால கோப விதிதா = குழந்தைகளாலும் உணர்ந்துகொள்ளக்கூடிய   இரட்சகி    சர்வ = எல்லாமும் - அனைத்தும் அன் = (அது அல்லாத)  உல்லாங்க்ய = மீறுதல் - கீழ்படியாமை ஷாசன = ஆணை - சாசனம் - 995 சர்வானுல்யங்க்ய ஷாசனா = அவள் ஆணைக்கு உட்பட்டே அனைத்தையும் இயங்க வைக்கும் அதிவல்லமை பெற்றவள் (எவராலும் அவள் ஆணையை மறுக்கவும் மீறவும் முடியாது)    ஸ்ரீசக்ர = ஸ்ரீசக்கரம் (பிரபஞ்சத்தையும், மனித சரீரத்தையும் பிரதிபலிக்கும் மஹாமேருவின் யந்த்ர வடிவம்) நிலய = நிலையம் - குடியிருக்கும் கோவில்  - 996 ஸ்ரீசக்ர ராஜநிலயா = பேரரசியாக மஹாயந்திரமான ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருப்பவள்   - 997 ஸ்ரீமத் த்ரிபுரசுந்தரீ = ஸ்ரீ திரிபுரசுந்தரியாக அருளுபவள்*  பிரபஞ்ச ஆக்க, இயக்க ஒடுக்கத்திற்கு காரணமான சுந்தரி.     - 998 ஸ்ரீ ஷிவா = சதானந்த பரிபூரணமான சிவனுமானவள்    - 999 ஷிவ-ஷக்த்யைக்ய ரூபிணீ =  சிவ-சக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமானவள் சிவன் எனும் பரமாத்மாவின் ஆதிசக்தியாக உள்ளுரைபவள் சக்தி.  ஆதிசக்தியான ஆற்றல் இன்றி பிரபஞ்சம் உருவாவதில்லை. சிவன் என்றும் சக்தி என்றும் பிரிவு இல்லை. சிவசக்தியாக பிரியாது இணைந்திருப்பதே பிரம்மத்தின் உண்மை நிலை. சிவன் சச்சிதானந்தம்.  சச்சிதானந்தத்தை உணர்வது சக்தி நிலை. உணர்வின்றி உணரப்படும் பொருளில்லை. உணரப்படும் பொருளின்றி உணர்வில்லை.     - 1000 லலிதாம்பிகா = அவளே ஸ்ரீ லலிதாம்பிகா - தேவி லலிதாம்பிகையாகி உலகெல்லாம் ரக்ஷிப்பவள் *                                                   இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்டபுராணே உத்தரகண்டே ஸ்ரீ ஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.   []   இத்துடன் வாக்தேவிகளால் இயற்றப்பட்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முடிந்தது. வாக்தேவிகளுக்கும் இதனை எடுத்தியம்பிய ஸ்ரீ ஹயக்ரீவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்களைப் பணிந்து, அன்னை லலிதாம்பிகா-தேவி அனைத்துலக ஜீவராசிகளுக்கும் தனது இன்னருளையும் கருணையையும் வழங்க பிரார்த்திப்போம்.    அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையே சரணம். []   Thanks and credit: Inage Courtesy https://www.pexels.com/photo/focus-photo-pink-and-white-lotus-flower-1179861/ https://www.pexels.com/photo/photo-of-durga-statue-2462023/ https://www.pexels.com/photo/yellow-pink-and-orange-flower-bouquet-226145/ https://www.pexels.com/photo/hindu-god-statues-881824/ https://commons.wikimedia.org/wiki/File:Kalyanasougandhikam.JPG https://en.wikipedia.org/wiki/Calophyllum_inophyllum#/media/File:Starr_010309-0546_Calophyllum_inophyllum.jpg https://all-free-download.com/free-photos/download/ashoka-flower-locust-bean-plant_220040.html https://pxhere.com/cs/photo/969589 https://www.pexels.com/photo/green-tree-on-green-grass-field-under-white-clouds-and-blue-sky-1083386/ https://www.pexels.com/photo/goddess-lakshmi-617201/   குறிப்பு: சமஸ்க்ருத ஒலி உச்சரிப்புக்குத் தக்கவாறு சுலோகத்தில் வரும் சில அக்ஷர/வார்த்தைப் பிரயோகங்கள் (உதாரணம்: ஷ - Sha)  குறிக்கப்பட்டுள்ளது.