[] []                         ஸ்பீனிக்ஸ் பெண்கள் கார்த்திகா சுந்தர்ராஜ்   அட்டைப்படம் : க சாந்திபிரியா - gkpriya246@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                    பொருளடக்கம் என்னுரை 4  நூலுரை 5  ஸ்பீனிக்ஸ் பெண்கள் 6   1. பூலான் தேவி 6  2. மலாலா யூசுப்சாய் 8  3. இளவரசி டயானா 9  4. முனிபா மசாரி 10  5. அன்னை தெரசா 12  6. கல்பனா சாவ்லா 14  7. மர்லின் மன்றோ 15  8. பெனசிர் பூட்டோ 16  9. இந்திரா காந்தி 18  10. ஜெயலலிதா 20  11. ஜெ.கே ரெளலிங் 22  12. முத்துலட்சுமி ரெட்டி 24  13. சுனிதா வில்லியம்ஸ் 26  14. சரோஜினி நாயுடு 27  15. மேரி கோம் 28  16. ஹிலரி கிளின்டன் 30  17. மேரி கியூரி 32  18. இந்திரா நூயி 34  19. புளோரன்ஸ் நட்டிங்கேல் 36  20. ஹெலன் கெல்லர் 38          என்னுரை     []         வணக்கம்! என் நீண்ட நாள் எண்ணங்களை இந்நூலின் வாயிலாக வெளிக்கொணர்ந்துள்ளேன். நான் எழுதியதிலேயே என்னை மிகவும் கவர்ந்த படைப்பு இது. பெண்ணியத்தில் எனக்கான ஒரு சிறு பங்களிப்பினை நிகழ்த்திவிட்டதாகக் கருதிக் கொள்கிறேன். இது மிகையில்லை எனினும் ஒரு சிறு மாற்றத்திற்க்கான பாதையாக இதனை எண்ணிக்கொள்கிறேன். இப்படிக்கு, ப்ரியமுடன் உங்கள், கார்த்திகா சுந்தர்ராஜ் karthikapandian2221997@gmail.com      நூலுரை   பெண்கள் இயற்கையிலேயே சாதனையாளர்கள் தான். பெண்ணாகப் பிறத்தலே சாதனைதான் எனக் கூறினான் பாரதி. ஒரு பெண் பிரசவத்தின் போது மரணத்தோடு போராடி தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சமூகத்தில் தனக்கான மாற்றத்தினை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். குடும்ப அளவிலும் சரி சமூகத்தின் பார்வையிலும் சரி இன்றளவிலும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே உள்ளனர். தனிப்பட்ட துரோகம், ஆணாதிக்கம், போன்ற சமூகவிரோத செயல்களால் இன்றளவும் பெண்கள் சிதைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். “அவன் கூப்பிட்டா நீ ஏன்டி போன?” என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாதாடும் இந்த சமூகம் “அவன் ஆம்பள அப்பிடித்தான் இருப்பான்” என்று கூறுவதில் வியப்பில்லை. தந்தையாக, சகோதரனாக, காதலனாக, கணவனாக ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு விதத்தில் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆயிரம் தடைகள் இருப்பினும் அனைத்தையும் களைந்தெறிந்து தனக்கான பாதைக்கு அடித்தளமிட்டு வரலாற்றை தன்வசமாக்கிய பெண்களும் இங்கு ஏராளம். அத்தகைய சில பெண் சாதனையாளர்களைப் பற்றியதே இப்படைப்பு. இவர்கள் அனைவருமே தன் அனைத்து நிராகரிப்புகளையும் கடந்து தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள். முயற்சியை முகாந்திரமாகக் கொண்டு தன் இலச்சியத்தை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இப்படைப்பு ஒரு ஊக்க மருந்தாகும். --கார்த்திகா சுந்தர்ராஜ்                                         ஸ்பீனிக்ஸ் பெண்கள்    1. பூலான் தேவி   []     1981 பிப்ரவரி 14, உத்திர பிரதேஸத்தின் மேவாய் எனும் கிராமம், 22 நபர்கள் ஒரு பதினெட்டு வயது பெண்ணின் முன்பாக வரிசையாக நிற்க்க வைக்கப்படுகின்றனர். அவள் தலை அசைத்தவுடன் ஒவ்வொருவராக சுட்டுக் கொள்ளப்படுகின்றனர். சாதியின் பெயரால் தன்னை சீரழித்த அனைவரையும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி சமூகத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் துணிச்சலைத் தேடித்தருகிறார் அந்த பெண். “பூலான் தேவி (பாண்டிட் குயின்)”, இப்பெயரைக் கேட்டால் முதலில் நினைவுக்கு வருவது உத்திர பிரதேஸத்தின் சம்பல் இன கொள்ளைக் கூட்டம் தான். ஆண் ஆதிக்கம், சாதியக் கொடுமை, பெண்களுக்கு எதிராகப் இழைக்கப்பட்ட சமூகக் கொடுமைகளைக் களைந்தெடுத்த பெண் புலி. பெண்ணாய் தனக்கு இழைக்கப் பட்ட அனைத்து கொடுமைகளையும் தாண்டி “நான் தோற்க்க மாட்டேன்” என்ற கர்ஜிப்புடன் தனக்குத் தேவையான நீதியைத் தானே தேடிக் கொண்டவர். 1963-ல் இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான உத்திர பிரதேஸத்தில் ‘கோர்கா பூர்வா’ எனும் கிராமத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் தேவித் மற்றும் மூலா தம்பதியினருக்கு இரண்டாவது பெண்ணாகப் பிறந்தார். பெண் கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், சாதியக் கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் அனைத்துக் கொடுமைகளையும் சிறு வயதிலே அனுபவித்தவர். சாதிய வன்மம், பண பலம் போன்றவற்றால் சமூகத்தால் தனக்கு மறுக்கப் பட்ட நீதியை தன் அதிகாரத்தால் தானாய் மீட்டெடுத்தவர். 1984 பிப்ரவரி 12 தானாகவே அரசாங்கத்திடம் சரணடைந்தார். 1994  வரை டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 1991 ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1993 மற்றும் 1996-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் வென்று இரு முறை எம்.பி-யாக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்குக் குரல் கொடுத்தார். இத்தகைய துணிவு மிக்கவர் 2001 ஜூலை 25-ல் உடனிருந்தவர்களின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார். இன்றளவும் பெண்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த முன்னுதாரனமாக விளங்குகிறார். 2. மலாலா யூசுப்சாய்     []     2012 அக்டோபர் 9, சுவாத் பள்ளத்தாக்கு, பாக்கிஸ்தான், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறாள் அந்த மாணவி, திடீரென ஒரு ஜீப் அவள் வந்த வாகனத்தை வழி மறிக்கிறது. அதிலிருந்து இறங்கிய சில துப்பாக்கி ஏந்திய தாலிபானிய தீவிரவாதிகளால் தலை மற்றும் முகத்தில் கண்மூடித்தனமாக சுடப்படுகிறாள் அவள், இருப்பினும் இந்த உயிர் அவ்வளவு எளிதில் சென்று விடாது என மரணத்தை வென்று அமைதிக்கான நோபல் பரிசினை தன் வசம் ஆக்கிக் கொண்டாள். மலாலா யூசுப்சாய் பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் மிங்கோரா எனும் சிற்றூரில் 1997 ஜூலை 12-ல் பிறந்தார். தாலிபானின் பல்வேறு தடைகளையும் மீறி பள்ளி சென்று வந்த மலாலா தன் பகுதியில் பெண் கல்வி எதிர்ப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 2009-ம் ஆண்டு வரை பி.பி.சி யின் உருது மொழி வலைதளத்தில் தாலிபான்களால் தங்கள் வசிக்கும் பகுதியில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். தொலைக்காட்சி நேரலை ஒன்றில் இவர் ஆற்றிய உரையின் மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவரது செயல்கள் அனைத்தும் இவரின் மீதான தாலிபானின் சினத்தை அதிகரிக்கச் செய்தன. 2012-ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிருக்குப் போராடிய நிலையில் கிரேட் பிரிட்டனில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது நாடு முழுவதும் உள்ள பெண்கள் அனைவரும் மலாலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் துவங்கினர். இருப்பினும் பாக்கிஸ்தானில் வசிக்கும் ஆண்கள் மலாலா இசுலாமிய கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதாகவே எண்ணினர். உயிர் பிழைத்து வந்த மலாலா பெண் உரிமைகள் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே வருகிறார். தன் தந்தையுடன் சேர்ந்து பெண் கல்விக்கான அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலமாக பெண் கல்விக்கு உதவி வருகிறார். மலாலாவின் இத்தகைய எழுச்சி மிகு செயல்களுக்காக 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இளம் வயதில் நோபல் பரிசு பெற்றதோடு மட்டுமல்லாமல் பாக்கிஸ்தானின்  அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபர் எனும் பெருமையும் இவருடையதே.               3. இளவரசி டயானா   []                                1997, ஆகஸ்டு 31, போன்ட் டி அல்மா சுரங்கப்பாதை, பேரிஸ், பிரான்ஸ்,  மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பறந்து வந்தது அந்த பென்ஸ் கார், வேகத்தை தாக்குப்பிடிக்க இயலாததால் சுரங்கப்பாதையின் 13 வது தூணில் மோதி நிலை குழைந்து நின்றது. உள்ளே இறந்த நிலையில் ஒட்டுனரைத் தவிர ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்தனர். “டயானா” இன்றளவும் இப்பெயரைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது வேல்ஸ் இளவரசி டயானா தான். 1961 ஜூலை 1-ல் இங்கிலந்தில் உள்ள நோர்க்போக் எனும் இடத்தில் பிறந்தார் டயானா. டயானாவின் குழந்தைப் பருவம் மிகவும் மோசமானதாக இருந்தது.  டயானாவின் எட்டு வயதில் அவள் பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்திற்குப் பின் டயானா தன் தாயுடன் தங்கியிருந்தார். அக்காலங்களில் டயானா அன்பிற்காக மிகவும் ஏங்குபவராக இருந்தார். தனது 17-ம் வயதில் அலெக்ஸான்றா எனும் பெண்ணிற்க்கு செவிலித் தாயாக இருந்தார். 1981 ஜூலை 24-ம் தேதி டயானா வேல்ஸ் இளவரசர் சார்லஸை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வாழ்வும் பல்வேறு சோகங்கள் நிறைந்ததாகவே இருந்தது. இத்தம்பதியினருக்கு வில்லியம், ஹென்றி எனும் இரு குழந்தைகள் பிறந்தனர். பல்வேறு காரணங்களால் 1996-ம் ஆண்டு டயானா சார்லஸ் இருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது. தன் வாழ்வில் பல்வேறு துயரங்களைக் கடந்து வந்த டயானா, மணமுறிவிற்குப் பின் மக்களுக்கு சேவை செய்வதையே தனது பிரதான இலக்காகக் கொண்டிருந்தார். எளிமையின் மறு உருவமாய் விளங்கிய டயானாவை மக்கள் அனைவரும் தன் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணினர். இங்கிலந்தின் வேறு எந்த இராணிக்கும் இல்லாத அங்கிகாரம் டயானாவிற்கு மக்களால் வழங்கப்பட்டது. விவாகரத்திற்க்குப் பின் பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்ட டயானா தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தன் நேரத்தை செலவிட்டு அவர்களை கவனித்துக் கொண்டார். பத்திரிக்கை நேர்காணலில்  நிருபர் ஒருவரின் கேள்விக்கு “ஆம் நான் என்றும்  இராணியாகத்தான் இருக்க விரும்புகிறேன், இங்கிலந்து இராணியாக அல்ல, மக்கள் மனதில் என்றும் இராணியாக இருக்க விரும்புகிறேன்”  என புன்னகையுடன் பதிலளித்தார் டயானா.  இன்றளவும் இவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நீடித்தாலும் உளக அளவில் தனக்கான வரலாற்றை சிறந்த முறையில் பதிவு செய்து விட்டு தான் சென்றிருக்கிறார் “த லேடி டயானா பிரான்செஸ் ஸ்பென்சர் (ப்ரின்சஸ் டயானா)”. 4. முனிபா மசாரி     []     2007, ரஹிம்யர்கான், பாக்கிஸ்தான், ஒரு இரவு நேரம் 20 வயதான அந்தப் பெண் தன் கணவனுடன் காரில் தன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கார் ஓட்டிக் கொண்டிருந்த அவளது கணவன் தூக்கத்தில் கண் அயர கார் நிலை தடுமாறி ஓர் கால்வாயில் விழுந்தது. நிலமை அறிந்த அவளின் கணவர் உடனடியாக வாகனத்திலிருந்து  வெளியே குதித்து தப்பித்துவிடுகிறார். ஆனால் அவளால் ஏதும் செய்ய இயலாமல் காரினுள் சிக்கிக் கொண்டாள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவளை அங்கேயே விட்டுவிட்டு அவளது கணவன் அங்கிருந்து சென்று விட்டார்.  நீண்ட நேரம் உதவிக்கு யாருமில்லாமல் அப்பெண் காருக்குள் சிக்கிக் கிடந்தார்.   ஒரு மணி நேரத்திற்க்கு பின்பு அந்த வழியே வந்தவர்கள் சிலர் அப்பெண்ணை மீட்டெடுத்து அம்புலன்ஸ் கிடைக்காததால் ஜீப்பிலேயே அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்குப் போதுமான வசதி இல்லாததால் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பின்பு உயிருக்குப் போராடும் நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இன்னும் சில நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறிவிட்டனர். மூன்றாவதாக கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் அவர். அங்கு அவருக்கு சிகிச்சை தொடர்கிறது. தீவிர சிகிச்சைக்குப் பின் ஒரு வழியாக அவள் காப்பாற்றப்படுகிறாள். நீண்ட நேரத்திற்க்குப் பின் கண் விழித்த அவரிடம் மருத்துவர் கூறியது, உங்களுடைய இரு கால்களிலும் தீவிர எலும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளதால் உங்களால் இனி எப்பொழுதும் எழுந்து நிற்க்க முடியாது என்று கூறுகிறார், இதனைக் கேட்ட அப்பெண் மிகுந்த மனவருத்தத்திற்க்கு உள்ளாகிறார். மறுநாள் மீண்டும் அந்த மருத்துவர் அவளை சந்திக்கிறார். விபத்தில் உங்களது முதுகெழும்பு சேதமடைந்துள்ளதால் அதனை கட்டாயம் அகற்ற வேண்டும் ஆகவே உங்களால் இனி குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டபின் அவள் மிகவும் துயரடைகிறாள். மறுநாள் அவளது கணவன் அவளைக் காண வருகிறான். அவனைக் கண்டதும் சிறிது ஆறுதல் அடைகிறாள் அவள். ஆனால் அவனோ இனி எனக்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை என விவாகரத்துப் பத்திரத்தை அவள் கையில் திணிக்கிறான். அவள் தன் வாழ்வையே முழுதுமாக வெறுத்து ஒரு கணம் இனி நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்? என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறாள். அப்பொழுது அருகிலிருந்த அவள் தாய் அவளிடம் கூறியது, நீ உன்னுடைய வாழ்வில் இவ்வளவு துயர்களைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய், இதை நீ இவ்வுலகத்திற்க்கு உன்னை நிரூபிப்பதற்க்காக கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பாக நினைத்துக் கொள் என்றார். அன்று அவள் தாய் கூறிய  வரிகள் தான் பிற்காலத்தில் அவள் வாழ்வையே மாற்றி அமைத்தன.   முனிபா மசாரி, பாக்கிஸ்தானின் இரும்பு பெண் என அழைக்கப்படுபவர். 1987 மார்ச் 3-ம் தேதி,  பாக்கிஸ்தானின் ரஹிம்யர்கான் மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். 18 வயதிலே திருமணம் 20 வயதிலே விவாகரத்து என பல இன்னல்களைக் கடந்து வந்து இப்பொழுது ஓவியத்துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்து வருகிறார். கண்காட்சியில் வைக்கப்படும் இவரது ஓவியங்கள் விரைவாக விற்றுத் தீர்கின்றன. தன்னால் தாயாக இயலாது எனும் நிலையை மாற்றி ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் முனிபா.    2015-ம் ஆண்டின் சர்வதேச நாடுகளில் பாக்கிஸ்தானுக்கான தூதராக அறிவிக்கப்பட்டார். அதே ஆண்டில் பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் முதலிடம் பெற்றார் முனிபா மசாரி. தான் கடந்து வந்த சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிய இவர் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு சிறந்த முன்னுதாரனம் என்பதில் ஐயமில்லை.                             5. அன்னை தெரசா     []     1997, செப்டம்பர் 5, கல்கத்தா, மேற்க்கு வங்காளம், அந்த கருணை இல்லத்தில் ஒரு நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டுள்ளார் அந்த அன்பின் தேவதை, கண்களில் கண்ணீரும் கைகளில் பூங்கொத்துமாய் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒட்டு மொத்த கல்கத்தாவே கூடி நிற்க்கிறது அந்த இல்லத்தின் வாயிலில். இவை எவற்றையும் கண்டு கொள்ளாது நிரந்தர நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார் அந்த கருணையின் ஒளி. 1910 ஆகஸ்டு 26-ல் அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். தனது எட்டாம் வயதில் தந்தையை இழந்த அன்னை தெரசா அதன்பின் தன் தாயால் வளர்க்கப்பட்டார். சிறந்த நினைவாற்றல், அதீத நகைச்சுவை உணர்வு போன்றவற்றால் இளமையிலேயே அனைவரையும் கவரும் திறன் பெற்றார். தன் இளம் வயதில் கிரிஸ்தவ மறைப் பணியாளர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு சமூக சேவைகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.   சிறு வயதில் தன்னால் இயன்ற சேவைகளை செய்து வந்த அன்னை தெரசா தனது 18வது வயதில் குடும்பத்தாரின் சம்மதத்துடன் முழுநேர சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். குடும்பத்தை விட்டு விடுபட்டு துறவறம் பூண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சேவை புரிய தொடங்கினார் அன்னை தெரசா. 1929-ம் ஆண்டு இந்தியாவின் மேற்க்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். பிரன்சு நாட்டின் சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கு சேவை புரிவதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார் இருப்பினும் தனது 24 வது வயதில் உயிரிழந்தார் அவரது நினைவாகத் தன் பெயரினை தெரசா என மாற்றிக் கொண்டார் அன்னை தெரசா. கல்கத்தா வந்த அவர் இந்தியாவின் வறுமையையும் கல்வியின்மையையும் கண்டு மிகவும் வருந்தினார். பின் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகத் திகழ்ந்தார். பின் பள்ளி முதல்வரானார். 17 ஆண்டுகளில் கல்வித்தொண்டில் சிறந்த அனுபவங்களைப் பெற்றார். பின் மீண்டும் கொல்கத்தா சென்ற அவர் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தொண்டாற்றினார். 1948-ல் செவிலியர் பயிற்சியை முடித்துக்கொண்டார். 1950 ‘பிறர் அன்பின் பணிமனை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்து ஏழைகளுக்கும் ஆதரவற்றோர்களுக்கும்  உதவினார்.  1955 ‘சிசு பவன்’ எனும் இல்லத்தை ஏற்படுத்தி ஆதரவற்ற, நோயுற்ற, ஊனமுற்ற மற்றும் குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு உதவினார். இவரது தீராத் தொண்டினால் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 1980-ல் இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். 1985-ல் அமெரிக்காவின் விடுதலைக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. தாயுள்ளம் கொண்ட மக்கள் சேவையினால் இவர் அன்னை என்ற பட்டத்துடன் திகழ்ந்தார். அன்பின் மறுவுறுவாய் விளங்கிய அன்னை தெரசா கருணைக் கடலில் என்றும் ஓர் சாதனைப் பெண்மணியே.                                                                   6. கல்பனா சாவ்லா     []     2003, ஜனவரி 16, டெக்சாஸ் மாகாணம், அமெரிக்கா, கொலம்பியாவின் எஸ்-டி-எஸ்-87 விண்கலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வின்வெளி விஞ்ஞானியாகிய ஒரு பெண் உள்பட 7 விஞ்ஞானிகளுடன் சிறிது நேரத்தில் தரையிறங்கக் காத்துக் கொண்டிருந்தது. தரை பரப்பினை நெருங்க கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் உள்ள போதே வானில் வெடித்துச் சிதறுகிறது அந்த விண்கலம். 1961, ஜூலை 1, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் எனும் ஊரில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நடுத்தர குடும்பத்தில் பிறந்து சாதாரண பள்ளியில் பயின்றாலும் அதீத புத்திக் கூர்மையுடனும் சிறந்த படிப்பறிவுடனும் விளங்கினார். 1982-ல் சண்டிகரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வானூர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், 1984-ல் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986-ல் பொளல்தேரில் உள்ள “கோலொரோடா பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் பெற்றார். பிறகு 1988 விண்வெளி பொறியியல் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார். 1995-ல் நாசா விண்வெளி வீரர்களின் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996-ல் கொலம்பிய விண்கலமான எஸ்.டி.எஸ்-87 ல் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த முதல் இந்தியப் பெண் எனும் பெருமையைப் பெற்றார்.   1997-ல் கொலம்பிய விண்கலமான எஸ்.டி.எஸ்-87-ல் முதன்முதலாக  விண்வெளிக்கு பயணம் செய்தார். 2000-ல் எஸ்.டி.எஸ்-107-ல் விண்வெளி பயணத்திற்க்கு தேர்வு செய்யப்பட்டார். 2003-ல் எஸ்.டி.எஸ்-107 நடுவானில் வெடித்துச் சிதறியது. இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள ஒரு தெருவிற்க்கு ‘கல்பனா வே’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2004லிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் பொருட்டு கல்பனா சாவ்லா விருது வழங்கி கெளரவிக்கிறது கர்னாடக அரசு. நாசா ஸ்பேஸ் ப்ளைட் மெடல், நாசா டிஸ்டிங்குவேட் மெடல், கங்கிரேசனல் ஸ்பேஸ் மெடல் ஆகியவை இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக வழங்கப்பட்டன. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீராங்கனை எனும் பெயருடன் இன்றளவும் தன் வரலாற்றின் வாயிலாக கல்பனா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.      7. மர்லின் மன்றோ     []     1962, ஆகஸ்டு 5, வெஸ்ட்வுட் வில்லேஜ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா, அந்த பிரபலமான 36 வயதுடைய கவர்ச்சி நடிகை தன் படுக்கையறையில் சுயநினைவற்ற நிலையில் இருக்க மருத்துவர்கள் அவரை சோதித்த பின் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். அமெரிக்காவின் அனைத்து இரசிகர்களையும் கவர்ந்திழுத்த அந்த நடிகை தற்சமயம் அசைவற்றுக் கிடக்கிறார். 1926, ஜூன் 1-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த மர்லின் மன்றோவின் இயற்பெயர் நோர்மா ஜூன் பேக்கர். மர்லினின் இளமைப் பருவம் மிகவும் பரிதாபமானது. தன் குழந்தைப் பருவத்தை சில வளர்ப்பு வீடுகளிலும் அநாதை ஆசிரமத்திலும் கழித்தார். மர்லின் தன் 16 வது வயதில் முதல் மணம் முடித்தார். பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட இந்த முதல் திருமணம் மர்லினுக்கு மகிழ்ச்சிகரமானதாய் அமையவில்லை. மர்லினின் சொந்த வாழ்க்கை மிகவும் துன்பமானதாய் அமைந்தது.  பொருள் இழப்பு, மனச் சோர்வு, கவலை ஆகியவற்றுடன் அவர் போராடினார். ஓய்வு பெற்ற பேஸ்பால் நட்சத்திரமான ஜோ டிமா ஜியோ மற்றும் நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லர் ஆகியோருடனான அடுத்தடுத்த திருமணமும் அவருக்குத் தோல்வியில் முடிந்தது.   இது போன்ற அனைத்து துயர்களையும் கடந்து மர்லின் திரைப்படத் துறையில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் அக்காலங்களில் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகையாகவும் மாடலிங் துறையிலும் புகழ் பெற்று விழங்கினார். அழகின் இளமையின் காமத்தின் குறியீடாக இன்றளவும் முன்னிறுத்தப்படும் மர்லின் மித மிஞ்சிய காமத்தை வெளிப்படுத்தும் வேடத்தை ஏற்று நடித்தாலும் ஒருபோதும் காமத்தை நாடிச் சென்றதில்லை மாறாக காமுகர்களால் குதரப்பட்ட வாழ்க்கையாக அவரது வாழ்க்கை திகழ்ந்தது. தனது எட்டு வயதில் வயதான ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதை நினைவு கூர்ந்த அவர் வளர்ப்பு பெற்றோர்களே சில சமயங்களில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறியிருக்கிறார். மர்லின் சிறந்த பாடகியாகவும் திகழ்ந்தார் ‘லேடிஸ் ஆப் திஸ் கோரஸ்’ படத்தில் இவர் பாடிய மூன்று பாடல்களும் சிறந்த இடத்தைப் பிடித்தன. மேலும் 30 பாடல்களைப் பாடியிருந்தார் மர்லின். அது மட்டுமின்றி உலகின் தலைசிறந்த நூலாசிரியர்களின் படைப்புகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இத்தகைய பல திறமைகளை கொண்ட மர்லின் தன் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார் எனக் கூறினால் அது மிகையாகாது. அவை அனைத்தயும் தாண்டி இன்றளவும் எளிதில் அடையளம் கண்டு கொள்ளப்படும் நிலையில் இருப்பதே அவரின் வியத்தகு சாதனையாகும்.      8. பெனசிர் பூட்டோ     []     2007, டிசம்பர், 27, லியாகுவாட் நேசனல் பார்க், ராவல்பன்டி, பாக்கிஸ்தான். பாக்கிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. 54 வயதான பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் அதிபரின் மகளுமான அந்த பெண் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பரபரப்பாக உரை ஆற்றிக் கொண்டிருந்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனது காரில் ஏறியவர் தன் காரின் மேற்கூரை வழியே ஒரு கணம் தன் தொண்டர்களை நோக்கி கை அசைக்கிறார். அடுத்த சில  மணித்துளிகளில் துப்பாக்கி குண்டுகள் அவரது நெற்றியை முத்தமிடுகின்றன. ஒரு கணம் அந்த இடமே ஸ்தம்பித்து விட அடுத்த சில நிமிடங்களில் உயிருக்குப் போராடும் நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரங்களுக்குப் பின்பு சிகிச்சைப் பலனின்றி அவர்  இறந்து விட்டதாகக் கூற நாடே அதிர்ந்தது. 1953, ஜூன், 21, பாக்கிஸ்தானின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவரும் முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமருமான சுல்பிக்கர் அலி பூட்டோவின் மூத்த மகளாகப் பிறந்தார் பெனசிர். தனது பள்ளிப்படிப்பை பாக்கிஸ்தானில் முடித்த பின்பு தன் உயர்கல்வியை அமெரிக்கவிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் “கும் லவ்டு” (ஹார்வேர்டு மாணவர்களில் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது)    விருதுகளுடன் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.  டொரன்டோ பல்கலைக்கழகத்தின் மதிப்பு மிக்க எல்.எல்.டி பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதரம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பின் சர்வதேசச் சட்டம் மற்றும் இராஜாங்கத்திலும் பட்டம் பெற்றார். 1976 டிசம்பரில் ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவரே ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் ஆசிய பெண் எனும் பெருமையைப் பெற்றார். பெனசிர் தன் இளமைக்காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினார். 1997-ல் பாக்கிஸ்த்தானில் ஏற்ப்பட்ட இராணுவ புரச்சியால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இவரது தந்தையும் முன்னால் பாக்கிஸ்தான் பிரதமருமான சுல்பிக்கர் அலி பூட்டோ ராவல்பன்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு 1979 ஏப்ரல் 4-ல் தூக்கிலிடப்பட்டார். அவரின் மறைவிற்க்குப் பின் பெனசிரின் ஒட்டுமொத்த குடும்பமும் கட்சியும் கதிகலங்கிப் போனது. பெனசிரினின் குடும்பம் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது. சொந்த நாட்டில் தங்க அனுமதி மறுக்கப்பட்டு இங்கிலந்திற்க்கு நாடு கடத்தப்பட்டார் பெனசிர். தன் இரு சகோதரர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட நோயுற்ற தன் தாயினை எண்ணி மனம் கலங்கினார் பெனசிர். 1998-ல் நடந்த பாக்கிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் தன் கட்சியின் சார்பில் பல்வேறு தடைகளுக்குப் பின்னும் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் களம் இறங்கினார் பெனசிர். இவளால் என்ன செய்ய முடியும்? என எண்ணியவர்களின் முன் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றி தேர்தலில் வென்று தன் 35 வது வயதில் பாக்கிஸ்தானின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் பெனசிர். தந்தை மற்றும் சகோதரர்களின் மறைவிற்க்குப் பின் பல்வேறு எதிர்ப்புகளை மீறி அழிந்துவிடும் நிலையில் இருந்த தன் கட்சிக்குப்  புதிய பலத்தினைத் தேடித் தந்தார் பெனசிர். ஆட்சிக்கு வந்த பெனசிர் தேசிய சீர்திருத்தம், நவீனமயமாக்கல் போன்றவற்றிற்க்கான பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியதுடன் பெண்களின் முன்னேற்றத்திற்க்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இருமுறை பாக்கிஸ்தான் பிரதமராக இருந்த பெனசிர் பெண்கள் சீர்திருத்தக் கோட்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளால் தாலிபானின் சினத்திற்க்கு ஆளாகி 2007-ம் ஆண்டு ராவல்பன்டியில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் தாலிபான்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார். பெனசிர் இறந்த பின்பு அவரது பிறந்தநாளன்று இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்க்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. மேலும் அவரது பிறந்தநாள் மரண தண்டனைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் தினமாக மாற்றப்பட்டது. எத்துனை சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் இருப்பினும் அனைத்து தடைகளையும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து ஒரு பெண்ணாய் தனித்து நின்று பொதுவாழ்வில் தனக்குறிய முத்திரையைப் பதித்துச் சென்ற பெனசிர் பெண்மையின் பெருமை என்று கூறினால் அது மிகையாகாது.                                                 9. இந்திரா காந்தி     []     1984, அக்டோபர் 31, காலை 9.20, சப்தர்ஜங் தெரு, புதுதில்லி. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் அயர்லந்து நாட்டுத் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருந்த பிரித்தனிய நடிகர் பீட்டர் உஸ்தோனாவிற்க்கு பேட்டி அளிப்பதற்க்காக தன் வீட்டுத்தோட்டத்தின் அருகில் உள்ள அலுவலகத்திற்க்குச் சென்று கொண்டிருந்தவர் அந்த சிறுவாயிலை அடைந்த போது அங்கிருந்த தன் பாதுகாவலர்களான சத்வந்த் சிங், பீண்ட் சிங் இருவரும் அவரை சுடத்தொடங்கினர். சுமார் 33 முறை சுடப்பட்ட பின்பு இருவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே எறிந்தனர். 1917, நவம்பர் 19, புதுதில்லியில் புகழ்பெற்ற ஆனந்தபவனில் முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் மகளாகப் பிறந்தார் இந்திரா பிரியதர்சினி, சிறுவயது முதலே விடுதலைப் போராட்டத்திலும், அரசியலிலும், நாட்டு விவகாரங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார் இந்திரா. சுதந்திரப் போராட்டத்தில் இந்திராவின் பங்கு முக்கியமானது. 12 வயதிலே தன்னைப் போன்ற சிறார்களை சேர்த்துக் கொண்டு கடிதங்கள் மற்றும் இரகசிய ஆவணங்களை காவல் துறையின் அடக்குமுறைகளை மீறி தலைவர்களிடம் கொண்டு சேர்த்தார். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் காயங்களுக்கு மருந்திடுவது போன்ற பணிகளையும் மேற்க்கொண்டு வந்தார்.   தன் பள்ளிக்கல்வியை முடித்த இந்திரா ஆக்ஸ்போர்டில் நவீன வரலாற்றில் பட்டம் வென்றார். அங்கு பயிலும் போது பெரஸ் காந்தியை காதலித்து 1942-ல் திருமணம் செய்து கொண்டார் இந்திரா. திருமணமான ஆறே மாதத்தில் “வெள்ளயனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு இருவரும் சிறை சென்றனர். இந்தியா விடுதலை அடைந்த புதிதில் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினைகளில் காயமடைந்தவர்களுக்கு காந்தியுடன் சேர்ந்து உதவுதல், தன் தந்தையுடன் அரசாங்க ரீதியிலான வெளிநாட்டுப் பயணங்களை மேற்க்கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார் இந்திரா.   இந்திரா தன் வாழ்நாளில் பல்வேறு வகையான சவால்களையும் எதிர்ப்புகளையும் பெற்றிருந்தார். நேரு இறந்த பின் ஆனந்தபவனம் தேசத்தின் சொத்தாகியது. இருப்பதற்க்கு வீடு கூட இல்லாத நிலையில் தான் நேரு இந்திராவை விட்டுச் சென்றார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு 13 மாதங்களே இருந்த நிலையில் சாஸ்திரி இறந்து விட காமராஜரால் பதவி மறுக்கப்பட்டு இந்திரா கை காட்டப்பட்டார். காங்கிரஸில் நேருவிற்க்கு இருந்த மக்கள் செல்வாக்கினால் ஜனவரி, 16, 1966-ல் இந்தியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்திரா. பதவியேற்க்க ஒரு கி.மீ தூரத்தில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்குச் செல்ல மக்கள் வெள்ளத்தால்  வெகு நேரமானது இந்திராவிற்கு. இந்திராவின் அரசியல் பயணம் மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. மூன்று ஆண்டுகளில் சீனா மற்றும் பாக்கிஸ்தானுடனான அடுத்தடுத்த போர்கள், நேரு, சாஸ்திரி போன்ற நாட்டின் தலைசிறந்த தலைவர்களின் மரணங்கள்,  மழையின்மை, வறுமை, பஞ்சம், அந்நிய செலாவணி கையிருப்பின்மை, உலகச் சந்தையில் உணவுப்பொருட்களை வாங்க இயலாத நிலை, தானியங்களுக்கு அமெரிக்க பொதுச்சட்டம் என பல்வேறு நெறுக்கடிகளுக்கிடையே தான் இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றார்,   அத்தகைய கடுமையான சூல்நிலையிலும் வியத்தகு திட்டங்களை திறம்பட செயல்படுத்தினார் இந்திரா. வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மாநியத்தை ரத்து செய்தது, பசுமைப்புரட்சியின் மூலம் அமெரிக்காவைச் சார்ந்திருந்த இந்தியாவை உணவு உற்ப்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்தது, துணிச்சலோடும் இராஜதந்திரத்தோடும் பாக்கிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரித்து தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, அறிவியல் தொழில்நுட்பத்துறையை வளர்த்தெடுத்தது என இந்திராவின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவசர நிலைப் பிரகடனம் அவரது வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக இருந்தது ஆனால் தன் தவறை உணர்ந்த இந்திரா மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்டு அப்பிரகடனத்தை ரத்து செய்தார். 1984-ல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பொற்க்கோவிலில் பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்கும் பொருட்டு நடந்த “ஆப்பரேசன் ப்ளூ ஸ்டார்” சாசனத்தில் கையெழுத்திட்ட அவருக்கு அது தனக்கான மரண சாசனம் என்றும் தெரிந்திருந்தது. பொற்க்கோவிலுக்குள் இந்திய இராணுவம் புகுந்தது. “ஆப்பரேசன் ப்ளூ ஸ்டார்” வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் பொற்கோவில் சேதமடைந்தது. தங்களது புனிதத்தை இந்திரா சீர்குலைத்து விட்டதாகக் கருதி சீக்கியர்கள் இந்திராவை வெறுக்கத் தொடங்கினர். இதுவே பிற்க்காலத்தில் அவரது உயிருக்கு உலை வைக்கும் செயலாகவும் அமைந்தது.  அவரது உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையிடமிருந்து  வந்த தகவலை பெரிதுபடுத்திக் கொள்ளாத இந்திரா, தன் மரணத்திற்க்கு முந்தைய நாள் ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கீழ்கண்டவாறு கூறினார் இந்திரா. “இந்த நாட்டின் சேவையில் என் வாழ்வு முடியுமானால் அதற்க்காக நான் கவலைப்பட மாட்டேன்”. “இன்று நான் மரணித்து விட்டால் என் ஒவ்வொறு துளி இரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும்” எனக் கூறினார். பல முறை பாதுகாவலர்களை மாற்ற அறிவுறுத்தப்பட்டும் மதத்தின் அடிப்படையில் தன் பாதுகாவலர்களை மாற்ற இந்திரா மறுத்துவிட்டார். இறுதியில் அவருக்கு மிகவும் பிடித்த தன் பாதுகாவலராகிய சத்வந்சிங் வாயிலாகவே அவரது உயிர் பறிக்கப்பட்டது. இன்றளவும் “இந்திரா” எனும் பெயரைக் கேட்கும் பொழுது சவால் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வும் சாதிக்கத் துணிந்த அவருடைய அறிவாற்றலுமே நம் நினைவுக்கு வருகிறது.                             10. ஜெயலலிதா     []     டிசம்பர், 5, 2016, அப்பல்லோ மருத்துவமனை, சென்னை. பல்லாயிரக்கணக்கான மக்களும் கட்சித் தொண்டர்களும் அம்மருத்துவமனையின் முன் குவிந்துள்ளனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் கடுமையான பாதுகாப்பிற்க்கு உட்பட்டுள்ளது. இரவு 11.30 தமிழகத்தின் கிட்டத்தட்ட இரு மாதங்களாக உடல்நலக்குறைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போதைய தமிழக  முதல்வரான அந்த இரும்புப் பெண்மணி சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனையின் உயர் அதிகாரிகளும் தலைமை மருத்துவரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை வெளியிடுகின்றனர். 1948, பிப்ரவரி, 24, கோமலவள்ளி எனும் செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெயராம் வேதவள்ளி தம்பதியினருக்கு மைசூரில் மகளாகப் பிறக்கிறார். ஜெயலலிதா தன் இரண்டு வயதிலே தந்தையை இழந்தார். பின் பெங்களூரில் உள்ள தன் தாய்வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டார். பெங்களூரின் பிஸப் காட்டன் பள்ளியில் சிறிது காலம் கல்வி பயின்ற அவர் பின் சென்னையில் உள்ள சர்ச் பார்க் ப்ரசென்டேசன் கான்வென்டில் தன் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்பு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.  அவருக்கு சட்டக் கல்வியின் மீது மிகுந்த ஆர்வமிருந்தது இருப்பினும் தன் தாயின் கட்டளைக்கு இணங்க தன் 15 வயதில் திரைப்படத் துறையில் நுழைந்தார். புத்தகங்களைப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார் ஜெயலலிதா. சங்கர்.வி.கிரி இயக்கிய  “எபிலிஸ்” எனும் ஆங்கிலப் படம் மூலமாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல் கன்னடத்தில் வெளியான “சின்னடெ கொம்பே” எனும் திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினைத் தேடித் தந்தது. தமிழில் அவர் நடித்து முதன்முதலில் வெளியான “வெண்ணிற ஆடை” எனும் திரைப்படம் அவருக்கு பெரும் இரசிகர்களைப் பெற்றுத் தந்தது. பின் தெலுங்கிலும் அவர் தன் நடிப்பினைத் தொடர்ந்தார். அவர் நடித்த படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. எம்.ஜி.ஆர் உடனான இவரது ஜோடி அனைவரையும் கவர்ந்தது. ரவிச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் போன்றவர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். 1968-ல் தர்மேந்திரா நடித்த “ஜிமாத்” எனும் இந்தி படத்திலும் நடித்தார். அரசியலில் இணையும் முன் தன் கடைசி திரைப்படமான “நதியைத் தேடி வந்த கடல்” எனும் படத்தில் நடித்தார். இப்படம் 1980-ல் வெளியானது. 1972-ம் ஆண்டு “பட்டிக்காடா பட்டணமா” எனும் படத்தில் நடித்ததற்க்கான சிறந்த நடிகைக்கான “பிலிம் பேர்” அவார்டு பெற்றார். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மிகுந்த சவால்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாக இருந்தது. முன்னாள் தமிழக முதல்வரும் நடிகருமான திரு.எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. 1980-ம் ஆண்டு அ.தி.மு.க வின் பிரச்சார செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா. 1984-ல் மக்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப் பட்டார். 1987-ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவு ஜெயலலிதாவிற்க்கு மிகுந்த பின்னடைவை தேடித்தந்தது. அவரை விரும்பாத கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அவருக்கு பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் தேடித் தந்தனர் இருப்பினும் மனம் தளராமல் அவை அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்த்து நின்று போராடினார் ஜெயலலிதா. 1989-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆருக்குப் பின் கட்சியை நிர்வகிக்கும் தலமைப் பொறுப்பு ஜெயலலிதாவிடம் வந்தது. 1991-ம் ஆண்டு முதல்முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 2002-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 2011 மற்றும் 2016-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தல்களிளும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. தன் ஆட்சிக்காலங்களில் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவை அனைத்தும் மக்கள் மத்தியில் இருந்த அவரது நன்மதிப்பினை உயர்த்திக்காட்டின. பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் ஜெயலலிதா. இவரது வாழ்வில் சர்ச்சைகளுக்கும் வழக்குகளுக்கும் பஞ்சமில்லை என்று கூட கூறலாம். சொத்துக் குவிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஜெயலலிதா அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் கடந்து சென்றார். ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் இன்றளவும் இவரது சகாப்தம் எவராலும் திகைக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. இரும்புப் பெண்மணியின் துணிச்சலும் நம்பிக்கையும் பெண்ணினத்தால் கட்டாயம் தொடரப்படக்கூடியதாகவே இருக்கிறது.     11. ஜெ.கே ரெளலிங்       []     அந்த பெண் தான் எழுதிய முதல் கதையின் பிரதிகளுடன் பல்வேறு புத்தக வெளியீட்டு நிறுவனங்களை நாடிச் செல்கிறார் இருப்பினும் அனைவரும் அவருக்கான ஒரு சிறு வாய்ப்பினைக் கூட வழங்க மறுக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முயன்று கொண்டே இருக்கிறார் அவர். ஒரு கட்டத்தில் அவரது “ஹரிபாட்டர்” எனும்  புத்தகம் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிவருகிறது. வெளிவந்த சில மணி நேரங்களிலே அனைத்து புத்தகங்களும் விற்றுத் தீர்கின்றன. 1965, ஜூலை, 31, பிரிட்டனில் பிறந்தார் ஜெ.கே.ரெளலிங். இவரது தந்தை பீட்டர் ஜேம்ஸ் ரெளலிங் ரோல்ஸ்ராய்ஸ் கம்பேனியில் பொறியாளராகப் பணியாற்றினார். தாய் ஆனி ரெளலிங் அறிவியல் தொலில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி வந்தார். ரெளலிங் 23 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது தங்கை டயானா பிறந்தார். ரெளலிங் நான்கு வயது குழந்தையாக இருக்கும் போது அவருடைய குடும்பம் வின்டென்பர்க் கிராமத்திற்கு குடிபெயர்ந்தது. அவர் புனித மைக்கேல் ஆரம்பப்பள்ளியில் பயின்றார். அந்த பள்ளியானது அடிமை ஒழிப்புப் போரளியான வில்லியம் வில்பர் போர்ஸ் மற்றும் கன்னாமோர் ஆகியோரால் துவங்கப்பட்டது. ரெளலிங் பின்னாளில் எழுதிய புத்தகமான “ஹரிபாட்டர்”-ல் இடம்பெற்ற கதாபாத்திரமான ஆல்பஸ் தம்பில்தோர் அவரது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஆல்பிரட்டன் என்பவரைச் சார்ந்ததாகும். சிறுவயதிலே ரெளலிங் அடிக்கடி கற்பனைக் கதைகளை எழுதுவார். அவற்றைத் தன் தங்கையிடம் வாசித்துக் காட்டுவாராம். அவர் தன் இடைநிலைக் கல்வியை வைடின் எனும் பள்ளியில் பயின்றார். செசிகா மிட்போர்டின் சுயசரிதையான “கான்ஸ்” மற்றும்” ரிபெல்ஸ்” எனும் புத்தகத்தை படித்த பிறகு ரெளலிங் செசிகாவின் தீவிர இரசிகையாகவே ஆகிவிட்டார். அதன் பின் ரெளலிங் செசிகாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தார். ஸ்டிவ் எடிவ் என்பவர் ரெளலிங் கிற்கு ஆங்கிலம் கற்பித்தார். ரெளலிங் ஆங்கிலம், ஜெர்மன், பிரென்சு ஆகிய மொழிகளில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார்.     ரெளலிங் தன் இளம் வயதில் பல்வேறு துயரங்களால் பாதிப்படைந்திருந்தார். அவரது தாய் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது தந்தை அவரிடம் பேசாமல் இருந்தார். ரெளலிங் தன் 21 வயதில் எக்செட்டர் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது காதல் தோல்வி மற்றும் கருக்கலைப்பு போன்றவற்றால் அவதியுற்றார். மேலும் அவரது முதல் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. பல்வேறு மனச்சோர்வுகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ரெளலிங் தன் புத்தகங்களை வெளியிட்டார். ஆயிரம் தடைகள் இருப்பினும் அவை அனைத்தையும் தகர்த்தெரிந்து ஒரு புதின எழுத்தாளராக, தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக தன் வெற்றிமிகு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ரெளலிங்  தன்னம்பிக்கையின் ஊற்றாகவே கருதப்படுகிறார்.   12. முத்துலட்சுமி ரெட்டி       []     1907, மெட்ராஸ் மெடிகல் காலேஜ், சென்னை. புதுக்கோட்டையைச் சார்ந்த அந்த மாணவி முதன்முறையாக மருத்துவக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கிறார். அக்காலகட்டங்களில் பின்பற்றப்பட்ட பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளால் அவர் அக்கல்லூரியில் பயில்வதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இருப்பினும் அனைத்து தடைகளையும் கடந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையத் தட்டிச் சென்றார் அப்பெண் 1886, ஜூலை, 30, புதுக்கோட்டை. அந்த நடுத்தர குடும்பத்தில் பிறக்கிறார் ஒரே பெண்ணாகப் முத்துலட்சுமி ரெட்டி. அக்காலத்தில் இருந்த இந்து மத வழக்கப்படி முத்துலட்சுமியின் கல்வி தொடக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் அவர் மிகவும் புத்திக் கூர்மைமிக்க மாணவியாக இருந்ததால் அவரது ஆசிரியர் பாலையா கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது எனக்கருதி அவரை மிகவும் ஊக்குவித்தார்.. இருப்பினும் மரபை மீற முடியாத நிலையில் முத்துலட்சுமி வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார். மெட்ரிகுலேசன் தேர்வில் தனியே பங்கேற்று வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் அதுவரை எந்த பெண்ணும் அனுமதிக்கப்பட்டதில்லை. பின்பு அங்கு இன்டர்மீடியேட் கோர்ஸில் சேர்ந்து பயின்றார். 1907-ல் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி  சென்னை வந்து புதுக்கோட்டை மகாராஜாவின் உதவியுடன் மருத்துவக்கல்லூரியில் இணைந்தார். மெட்ராஸ் மெடிகல் கல்லூரியில் எம்.பி. அன்ட் சி.எம் பயின்ற முதல் பெண் இவரே. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானார் பின் எழும்பூரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ந்து இந்தியாவின் முதல் பெண் ஹவுஸ் சர்ஜன் ஆனார். 1917-ல் இந்திய பெண்கள் சங்கத்தில் உறுப்பினராகி பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்காற்றினார். பின் 1926-1930 வரை சென்னை சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினராக இருந்தார். 1926-ல் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். 1933-ல் சிகாகோவில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். 1927, நவம்பர், 5-ல் சட்டமன்றத்தில் தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சத்யமூர்த்தியிடம் வெகுண்டெழுந்து உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? உங்கள் அக்கா தங்கைகளை இந்த தொழிலுக்கு அனுப்புவீர்களா? என்று கேட்டபோதுசட்டமன்றத்தில் இருந்த அனைத்து ஆண் உறுப்பினர்களும் தலை குனிந்தனர். அது மட்டுமின்றி விலை மாதர்களின் விடுதிகளை மூடி ஆயிரக்கணக்கிலான இளம்பெண்களுக்கு வாழ்வளித்தார். அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவ்வை இல்லத்தை தோற்றுவித்தார். 1947-ல் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியில் இவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 1985-ல் அவரது திருவுறுவச் சிலை நிறுவப்பட்டிருந்தது. இத்தகு சாதனைகளைப் படைத்த முத்துலட்சுமி ரெட்டி தன் இளம் வயதில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். பிறக்கும்போதே நோயுடன் பிறந்தவர். பள்ளியில் பயிலும் போது கிட்டப்பார்வை குறைபாட்டினால் கண்ணாடி அணிந்திருந்தார். நாளடைவில் இரத்தசோகை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலால் தூங்க இயலாமல் அவதியுற்றார். குழந்தை பிறந்தபோது பாலூட்டக் கூட தெம்பில்லை. பிறந்த இரு குழந்தைகளும் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். தன் வாழ்வில் ஏற்ப்பட்டிருந்த பல்வேறு நிராகரிப்புகளையும் தடைகளையும் மீறி தன் இலச்சியத்தை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் சமூகத்திற்க்கு மிகச்சிறந்த முன்னுதாரனமாக விளங்கினார்.                                                                            13. சுனிதா வில்லியம்ஸ்     []     2006, டிசம்பர் 9, டிஸ்கவரி விண்வெளிக்கலத்தில் 14 விண்வெளி வீரர்களுடன் இணைந்து எஸ்.டி.எஸ் எனும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லவிருக்கிறார் அந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த விண்வெளி வீராங்கனை. அப்பயணத்தின் முடிவில் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் எனும் சிறப்பினைப் பெற்றார் அப்பெண். 1965, செப்டம்பர் 19, இந்தியத் தந்தைக்கும் சுலவீனியத் தாய்க்கும் ஒஹையோவில் மகளாய்ப் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். 1983-ல் நீடாம் உயர்நிலைப் பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை அக்தெமியில் அறிவியல் துறையில் 1987-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1995-ல் ப்ளூரிடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். 1987-ல் அமெரிக்க கப்பற்படையில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றினார். 1989-ல் கப்பல் படை விமானியாக நியமிக்கப்பட்டார். நாசாவால் ஜூன் 1998-ல் விண்வெளி பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஆகஸ்டு 1998ல் பயிற்சியைத் தொடங்கினார். 2008-ல் நாசா விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருமுறை விண்வெளிப் பயணம் மேற்க்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் தன் முதல் விண்வெளிப் பயணத்தின் போது 195 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்ததன் வாயிலாக அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றார். இருமுறை “நேவி கமண்டேசன்”  விருதினைப் பெற்றார். நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது மற்றும் மனிதாபிமானத்திற்கான சேவை விருதுகளையும் பெற்றுள்ளார். விண்வெளித் துறையில் இவர் பெற்ற சாதனை சாதிக்கத் துடிக்கும் இளம் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.                    14. சரோஜினி நாயுடு     []     1922, பிப்ரவரி 5, செளரிசெளரா, உத்திரப்பிரதேசம், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் முதல் ஆளாய் துடிப்புடன் கலந்து கொள்கிறார் அந்தப் பெண். சுதந்திரத்தின் மீதுள்ள ஈடுபாட்டாலும் துணிச்சலான செயல்களாளும் பிற்காலத்தில் இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் எனும் பதவியும் தனக்கே உரிய கவித்திறனால் இந்தியாவின் கவிக்குயில் எனும் பட்டமும் பெற்றார் அப்பெண். 1879, பிப்ரவரி 13, ஹைதராபாத்தில் நான்கு பேர் கொண்ட ஒரு வங்காள குடும்பத்தில் இரண்டாவது பெண்ணாகப் பிறக்கிறார்  சரோஜினி நாயூடு. 12 வயதில் சரோஜினி நாயூடு அவரது மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றார். 1895-ல் இலண்டனில் உள்ள கிங்ஸ் மற்றும் கேம்பிரிஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றார். உருது, தெழுங்கு, பாரசிகம், ஆங்கிலம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேசக் கற்றுக் கொண்டார். 1915-1918 வரை இந்தியா முழுதும் தேசப்பற்று, பெண் கொடுமை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். 1919-ல் இங்கிலந்திற்கான ஹோம் ரூல் தூதரானார். 1925-ல் அவர் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.  1931-ல் நடந்த வட்ட மேசை மாநாட்டிலும் 1942-ல் நிகழ்ந்த வெள்ளயனே வெளியேறு இயக்கத்திலும் பங்கு பெற்றார். 1947-ல் நடந்த ஆசிய உறவுகள் மாநாட்டில் பங்கு பெற்றார். சுதந்திரத்திற்க்குப் பின் நாட்டின் முதல் பெண் ஆளுனராக உத்திரப்பிரதேசத்தில் பணியாற்றினார். தன் வலிமைமிக்க செயல்களால் காந்தி உட்பட நாட்டின் பல்வேறு தலைவர்களின் பாசத்திற்க்கு பாத்திரமாக விளங்கினார் சரோஜினி நாயூடு.   சரோஜினி நாயூடு கவித்துறையில் அதிக ஈடுபாடு மிக்கவராக இருந்தார். அவரது கவிதைத் தொகுப்புகள் “தி கோல்டன் திரசோல்டு” எனும் பெயரில் வெளிவந்தது. மேலும் “தி போர்டு ஆப் டைம்ஸ்”, “தி புரோக்கல் விங்”, “தி பெதர் ஆப் டான்”, “தி கிப்ட் ஆப் இந்தியா” போன்ற நூல்களையும் எழுதினார். இன்றளவும் சரோஜினி நாயூடு தன் சுதந்திரப் போராட்டங்களின் வாயிலாக விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்.         15. மேரி கோம்     []     பல்வேறு பயிற்சிகளுக்குப் பின் தன் கடின உழைப்பினாலும் திறமையினாலும் 2012-ல் இலண்டனில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுகிறார் அந்த வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை. இதில் 51 கிலே எடைப்பிரிவில் பங்கு பெற்று வெண்கலப்பதக்கத்தை தன் வசமாக்குகிறார் அவர். 1983, மார்ச் 1, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள கங்காதேய் எனும் ஊரில் பிறக்கிறார் மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம். நடுத்தர குடும்பத்தில் பிறந்த மேரி கோம் தன் திறமை மற்றும் கடின உழப்பினை மட்டுமே சொத்தாகக் கருதி விளையாட்டுத்துறையில் கால்பதித்தார். இவரின் குத்துச்சண்டை கனவுக்கு இவர் தந்தையே முக்கிய காரணமாவார். இவரது தந்தைக்கு குத்துச்சண்டையின் மீது இருந்த ஆர்வமே இவரை அவ்விளையாட்டில் பெரியளவில் சாதிக்கத் தூண்டியது. மேரி கோமின் முதன்மைப் பயிற்சியாளர் அவரது தந்தைதான். சிறுவயது முதலே தன் தந்தையின் வாயிலாக  தீவிர குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் மேரி கோம். 2001 முதல் தற்போது வரை இவருடைய வெற்றிப்பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2003, 2005, 2010, 2011 மற்றும் 2012 களில் நடைபெற்ற ஆசிய பெண்கள் குத்துச்சண்டைபோட்டிகளில் முதலிடம் பெற்றார் மேரி கோம். பின் 2008-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய பெண்கள் குத்துச்சண்டைபோட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். 2004 மற்றும் 2006 களில் நடைபெற்ற உலக பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் முதலிடம் பிடித்தார் மேரி கோம். 2008 மற்றும் 2010 களில் நடந்த எ.ஐ.பி..எ உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் முதலிடம் வென்றார் மேரி கோம். 2012 மற்றும் 2014களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களைக் கைப்பற்றினார்.    மேரி கோமின் சாதனைகள் இந்திய மற்றும் உலகளவில் மிகவும் பெருமைப்படத்தக்கது. குறிப்பாக உலக குத்துச்சண்டைப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து முறை தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றினார். இது இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் இவர் படைத்த மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. மேலும் சர்வதேச குத்துச்சண்டை மையத்தின் தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார் மேரி கோம். மேரி கோம் 2013-ம் ஆண்டு தன் சுயசரிதையை வெளியிட்டார். அதற்கு “அன்பிரேக்கபில்” எனப் பெயர் சூட்டியிருந்தார். மேலும் அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருது, இராஜீவ் காந்தி ஹேல் ரத்னா விருது, சஹாரா விளையாட்டு விருது எனப் பல்வேறு விருதுகளை தன் திறமையின் வாயிலாக வென்று குவித்துள்ளார் மேரி கோம். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலமொன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று வியத்தகு வெற்றிகளைப் பறித்துக் கொண்டிருக்கும் மேரி கோம் எளிய பெண்களின் கனவுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரனமாக உள்ளார் என்பதில் ஐயப்பாடில்லை.    16. ஹிலரி கிளின்டன்     []     2016, அமெரிக்க ஐக்கிய நாடுகள், அந்த ஆண்டு நடைபெறவிருந்த பொதுத்தேர்தலுக்காக  நாட்டின் இருவேறு கட்சிகளும் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அப்போதைய ஆளும் கட்சியான அமெரிக்க மக்கள் கட்சியின் அப்போதைய அமெரிக்க குடியரசுத்தலைவரான பாரக் ஒபாமா மீண்டும் குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் போட்டியிட மறுத்துவிட யாரை வேட்பாளராக அறிவிப்பது எனத் தீவிர உட்கட்சி விவாதங்களை மேற்க்கொண்டிருந்தது “அமெரிக்க மக்கள் கட்சி”. தற்போதைய அமெரிக்க அதிபரான ரொனால்டு டிரம்ப்பினை அதிபர் வேட்பாளராகக் களமிறக்குகிறது “அமெரிக்க மக்கள் கட்சி”. மறுமுனையில் அமெரிக்காவின் மற்றொரு பெரிய கட்சியான “அமெரிக்க குடியரசுக் கட்சி” ஒருவழியாக அனைத்துவித ஆலோசனைகளின் முடிவில்  டிரம்பிற்கு எதிராக ஒரு பெண் வேட்பாளரைக் களமிறக்குகிறது. அப்பெண் போட்டியிடுவது தெரிந்த ஒட்டு மொத்த நாடும் சற்று தினங்கள் அதிர்ச்சியில் உறைகிறது. 1947, அக்டோபர் 26 அமெரிக்காவில் உள்ள , சிகாகோவில் பிறக்கிறார் ஹிலரி கிளின்டன். இலினாய் மாநிலத்தைச் சேர்ந்த ஹிலரி 1973-ல் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று முடித்து ஒரு வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடர்கிறார். 1975-ல் முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்திற்க்கு இடம் பெயர்கிறார் ஹிலரி. அங்கு காங்கிரஸ் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். 1979-ல் ரொசு சட்ட நிறுவனத்தின் முதல் பெண் பங்காளராக அறியப்பட்டார். 1992-ல் அமெரிக்காவின் முதல் 100 பலமிக்க வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்தார். 1979-1989 மற்றும் 1983-1992 ஆண்டுகளில் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதல் குழந்தை பராமரிப்புத் தொடர்பான நிறுவனங்களில் பணியாற்றும் முதல் பெண் எனும் சிறப்பினைப் பெற்றார்.   மேலும் இவர் 1993-2001 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்காவின் முதல் பெண் மேலவை உறுப்பினராக இருந்தார். பின்  2001-2009 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் எனும் பெருமையைப் பெற்றார். 2016-ல் குடியரசுக்கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தலில் ரொனால்டு டிரம்ப்பிற்கு எதிராக போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தான் மேலவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் சுகாதாரத் திட்டம், அரச குடும்பக் குழந்தைகள் காப்புறுதித் திட்டம், தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம்  போன்ற பல்வேறு திட்டங்களை செயற்படுத்தினார் ஹிலாரி. ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஆதரவாக முதலில் வாக்களித்த ஹிலாரி பின்பு தன் ஆதரவினை விலக்கிக் கொண்டு தன் எதிர்ப்பினைப் பதிவு செய்தார்.   2016-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரொனால்டு டிரம்ப்பினை எதிர்த்து பல்வேறு பெண்களிடமிருந்து  டிரம்ப்பிற்க்கு எதிராக எழுந்த பாலியல் புகார்களை ஆதரவாகக் கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஹிலாரி. இது டிரம்ப்பிற்க்கு பின்னடைவைத் தந்தது. தன்னைப் பற்றிய வழக்குகளும் சர்ச்சைகளும் மாறி மாறி தொடர்ந்து கொண்டிருந்தாலும் அதெற்க்கெதிராக துணிவுடன் போராடிக் கொண்டுதான் இருந்தார் ஹிலாரி கிளின்டன். துணிவு மிக்க அமெரிக்கப் பெண்ணிற்க்குத் தன்னை ஒரு முன்னுதாரனமாகக் காட்டிக் கொண்ட ஹிலாரி கிளின்டன் இன்றளவும் தன் அரசியல் பயணத்தினை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.                                                       17. மேரி கியூரி     []     பெண்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாக மட்டுமே சமூகம் கருதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தன் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பினை மாத்திரம் முகாந்திரமாகக் கொண்டு இரு நோபல் பரிசுகளைத் தன் வசமாக்கினார் அந்த பெண் அறிவியளாளர் மேரி கியூரி. தன் வாழ்நாளில் இரு கதிரியக்கத்தனிமங்களைக் கண்டறிந்தார் மேரி.   மேரி கியூரி எனும் மரியா ஸ்க்லடவ்ஸ்கா 1867 நவம்பர் 7-ல் போலந்தின் வர்சாவில் ஒரு புகழ்பெற்ற ஆசிரியக் குடும்பத்தில்  பிறந்தார். தனது பத்தாவது வயதில் மேரி ஜே. சிகொர்ச்கா எனும் உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார். ஜுன் 12, 1883-ல் தங்கப்பதக்கத்துடன் வெளியேறினார் மேரி. பின் பிளையிங் பல்கலைக்கழகத்தில் பயின்றார். தன் தந்தையின் இறப்பிற்க்குப் பின் பாரிஸிற்க்கு குடிபெயர்ந்த மேரி அங்கு சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார். மேரி காலையில் படித்து மாலையில் பயிற்சி வகுப்புகள் மேற்க்கொள்வாராம். 1983-ல் அவர் இயற்பியலில் பட்டம் பெற்றார். பின் பேராசிரியர் காப்ரியலின் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். தனது இரண்டாவது பட்டத்தை 1894-ல் பெற்றார் மேரி. மேரி தன் ஆய்வுகளைப் பாரிஸில் தொடங்கினார். முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றிய ஆய்வுகளை மேற்க்கொண்டார். பாரிஸில் பயிலும் போதுதான் தன் வாழ்நாள் துணையான பியரியை சந்தித்தார் மேரி. அறிவியலின் மீது இருவருக்கும் இருந்த அதீத ஆர்வம் இருவரையும் ஒன்று சேர்த்தது. மேரியின் தூண்டுதலால் பியரி காந்தவியலில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அது அவருக்கு முனைவர் பட்டத்தைத் தேடித் தந்தது. மேரி ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக எக்ஸ்ரே கதிர்களை ஆராய்ந்தார். மேலும் அவர் யுரேனியத்தையும் ஆராய்ந்தார். பியரி பல ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரோமீட்டர் எனும் கருவியை மேம்படுத்தி இருந்தார். அதனை உபயோகித்து யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றிலிருந்து மின்சாரத்தை உண்டாக்குகின்றன என மேரி கண்டறிந்தார். யுரேனியத்தின் அளவைப்பொறுத்தே கதிரியக்கம் வெளிப்படும் என்பதை அறிந்தார். மேரியின் கதிரியக்க ஆய்வுகள் இரு யுரேனிய மினரல்களைப் பொறுத்தது. பிட்ச்பிளன்ட் மற்றும் சால்கோலைட். பிட்ச்பிளன்ட் யுரேனியத்தைவிட நான்கு மடங்கும் சால்கோலைட் யுரேனியத்தைவிட இருமடங்கும் அதிக கதிரியக்கத்தன்மை கொண்டது என மேரி கண்டறிந்தார். இதனால் அவர் கதிரியக்கத்தன்மை கொண்ட பிற தனிமங்களைக் கண்டறிய முயற்சி செய்தார். 1898-ல் தோரியம் கதிரியக்கத்தன்மை பெற்றிருப்பதைக் கண்டறிந்தார். மேரி தனது கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரையை அவரது பேராசிரியர் லிப்மன் வாயிலாக 1989-ல் அகடெமிக்கு அளித்தார். மேரி 1898-ல் ஒரு கட்டுரையை வெளியிட்டார் அதில் தான் ஒரு புதிய தனிமத்தைக் கண்டறிந்துள்ளதாகக் கூறினார். மேலும் தன் பிறந்த நாட்டினைப் பெருமைப்படுத்தும் விதமாக அதற்கு பொலோனியம் எனப் பெயரிட்டார் மேரி. கதிரியக்கம் எனும் சொல்லிற்க்கு ரேடியோ அக்டிவிட்டி எனப்பெயரிட்டார். தனது கண்டுபிடிப்புகளைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும் பொருட்டு தீவிர ஆய்வில் இறங்கினர் கியூரி தம்பதியினர்.  பிட்ச்பிளன்ட்டில் இருந்து பொலோனியத்தை பிரித்தெடுப்பது சற்று சுலபமாக இருந்தது ஏனெனில் அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. ஆனால் ரேடியத்தை பிரித்தெடுப்பது கடினமாக இருந்தது ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. 1902-ல் ஒரு டன் பிட்ச்பிளன்ட்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குலோரைடைப் பிரித்தெடுத்தார் மேரி. 1900-ல் “இகோலே நார்மொலே சுபீரியூரி” -ன் முதல் பெண் பேராசிரியை ஆனார் மேரி. 1903-ல் மேரி தனது முனைவர் பட்டத்தை பாரிஸ் பல்கலைகழகத்திலிருந்து பெற்றார். 1903-ல் மேரி ராயல் ஸ்வீடிஷ் அகெடமி நடத்திய இயற்பியலுக்கான நோபல் பரிசிற்க்கு பரிந்துரைக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற சாதனையை தன் வசமாக்கினார். 1906-ல் பியரியின் மறைவிற்க்குப் பின் மேரி சோர்போன் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியை ஆனார். பிற்காலத்தில் மேரி ரேடியம் நிறுவனத்தை இயக்கினார். 1911-ம் ஆண்டு மேரி தனது இரண்டாவது நோபல்பரிசினைப் பெற்றார். இது மேரி பொலொனியம், ரேடியம் ஆகிய தனிமங்களைப் கண்டறிந்து, பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததற்க்காக வழங்கப்பட்டது. 1914-ல் முதலாம் உலகப்போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப் பொறுத்த உதவி செய்தார் மேரி. முதல் உலகப்போரின்போது மேரி காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி அளித்தார். மேலும் பிரன்ஸின் இராணுவ மையத்தினை 1914-ல் நிறுவினார். மேரி தன் வாழ்நாளில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்துள்ளார். பிறக்கும்போதே காசநோயுடன் பிறந்தார் மேரி. தன் தந்தையின் மறைவிற்க்குப் பின் மேரி பேரிஸிற்க்குக் குடிபெயர்ந்தார். அங்கு தனது கல்வியைத் தொடர்ந்த மேரி வருமானம் ஈட்ட மிகவும் சிரமப்பட்டார். வாடகை வீடுகளில் தங்கியிருந்தார் மேரி. வருமானத்திற்க்காக வீட்டுவேலைகளில் ஈடுபட்ட மேரி தன் எஜமானியின் மகனுடன் காதல் கொண்டிருந்தார். இதனால் அவர் தன் எஜமானியால் வேலையைவிட்டு நீக்கப்பட்டார். அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. மேலும் தன் ஆய்வுகளுக்காக சொந்த ஆய்வுக்கூடத்தை அவர் பெற்றிருக்கவில்லை. சிதிலமடைந்த நீர்புகக்கூடிய காற்றோட்டமற்ற ஆய்வுக்கூடத்தையே அவர் தன் ஆய்வுகளுக்காக உபயோகித்தார். கதிரியக்கத்தின் கொடிய விளைவுகளைப் பற்றி அறிந்திராத மேரி கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு உள்ளானார். அவரது ஆய்வகம் முழுவதும் கடினமான கதிரியக்கத்திற்க்கு உள்ளாகி இருந்தது. கதிரியக்கபாதிப்புகளால் 1934 ஜூலை4-ல் அப்பிலாச்டிக் இரத்தசோகையால் உயிரிழந்தார் மேரி. தன் வழ்வில் பல்வேறு சோதனைகளைக் கடந்து இரு நோபல் பரிசுகளைத் தன் அறிவிற்க்கு இரையாக்கிய மேரி கியூரி அறிவியலில் கடின உழைப்பின் வாயிலாகத் தனக்கான தனி முத்திரையை பதித்துச் சென்றுள்ளார் எனக் கூறினால் அது மிகையாகாது.                   18. இந்திரா நூயி     []     சாதாரண ஒரு பெண் தன் சொந்த நாட்டில் முன்னோறுவதையே ஏற்றுக் கொள்ளாத இந்த சமூகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமெரிக்கா வரை சென்று குளிர்பானத்தொழிழில் பெரிய ஜாம்பவான் எனப்படும் பெப்ஸி நிறுவனத்தின் தலைமைச் செயளாலராகப் பணிபுரிந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 1955, அக்டோபர் 18-ல் சென்னையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் இந்திராகிருஸ்ணமூர்த்தி நூயி. தன் பள்ளிப்படிப்பினை ஹோலி ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கல்லூரிப் படிப்பினை சென்னை கிருஸ்த்தவக் கல்லூரியிலும் மேலாண்மைப் படிப்பினை 1976-ல் ஐஐஎம் கல்கத்தாவிலும் முடித்தார். பின் உயர்படிப்பிற்க்காக யேழ் மேலாண்மைப்பள்ளியில் சேர அமெரிக்கா சென்றார். பெப்சிகோ நிறுவனத்தில் சேரும் முன்பு அமெரிக்காவின் இந்திரா “பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப்” மற்றும் “ஆசியா ப்ரவுன் போவெரி” ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார் நூயி. உலகின் தலைசிறந்த குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சி இந்திரா நூயிக்கு வாய்ப்பளித்தது. 1994-ல் பெப்சியில் இணைந்தார் இந்திரா. ஒரு பெண் பெப்சியில் எக்ஸிக்யூட்டிவ் வேலைக்கு சேருவது அதுவே முதல் முறை. 2000-ம் ஆண்டு பெப்சியின் தலைமை நிதி ஆலோசகராக உயர்வடைந்தார். பின்னர் 2006-ல் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். கடந்த 24 வருடங்களாக பெப்சி நிறுவனத்தில் பங்காற்றிவரும் இந்திரா 12 ஆண்டுகளக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 2017ம் ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா 3 வது இடம் வகித்தார். ஃபார்டூன் பத்திரிக்கை வெளியிடும் வணிகத்தில் உலகின் மிக வலிமை வாய்ந்த பெண்களில் 2006-2010 வரையிலான ஐந்து ஆண்டுகளில் முதலிடம் வகித்தார் இந்திரா நூயி. 2007ம் ஆண்டில் இந்திய அரசு இந்திராவிற்கு பத்மவிபூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது. யூஎஸ்நியூஸ் மற்றும் வேர்ல்ட் ரிப்போர்ட் 2008ல் அமெரிக்காவின் சிறந்த தலைவர்களின் பட்டியலில் இந்திராவின் பெயரினை வெளியிட்டிருந்தது. 2008-ல் இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சிலின் சேர்மனாகவும் இந்திராவை அறிவித்திருந்தார்கள். 2009-ல் இந்திராவை சிறந்த தலைமைச் செயல் அதிகாரி என்று குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் அமைப்பு அறிவித்தது. தமிழகத்தில் சென்னையை பூர்விகமாகக் கொண்டு ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்திரா நூயி தன் விடா முயற்சி மற்றும் கடின உழைப்பினை மையமாகக் கொண்டு ஒரு பெண்ணாகத் தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளார் என்பது மிகையாகாது. இவரது வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு உந்துதலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 19. புளோரன்ஸ் நட்டிங்கேல்     []     கைவிளக்கேந்திய காரிகை என்று அனைவராலும் அன்புடன் போற்றப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த போதிலும் தன் தாதிப்பணியின் மூலமாக அவர் புரிந்த சேவை அவரைக் கருணையின் மறுவடிவாகத் திகழச் செய்தது. 1820, மே, 12-ல் இத்தலியில் உள்ள புளோரன்ஸ் எனும் இடத்தில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார் வில்லியம் நைட்டிங்கேல். இவர் பிறந்த இடத்தைக் கருத்தில் கொண்டு இவரது தந்தை இவருக்கு புளோரன்ஸ் நைட்டிங்கேல் எனப் பெயரிட்டார். அவர் சிறுவயது முதலே தாதிப்பணியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1837-ல் ஏற்ப்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. தாயாரின் எதிர்ப்புக்கு மத்தியில் தாதியர் பணியில் ஈடுபட வேண்டும் என்று தன் முடிவை 1845-ல் வெளியிட்டார் புளோரன்ஸ். புளோரன்ஸ் வறியவர்கள் மீதும் இயலாதவர்கள் மீதும் அதிக அக்கறை கொண்டிருந்தார். ஆதரவற்றோர் இல்லங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்த கடுமையாகப் போராடினார் புளோரன்ஸ். 1846-ல் ஜெர்மனி பயணத்தின் போது கண்ட கெய்சர்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் கவனிப்பும் மருத்துவ சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன. தாதியர் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டுத் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.   இரஷ்யா மற்றும் பிரன்சு நாடுகளுக்கிடையே 1854-1856 களில் நடைபெற்ற கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார். போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவசேவை புரிவதுடன் தொற்றுநோய் பாதிப்பை தடுக்கும் பணியையும் தன் தாதியர் குழுவுடன் இணைந்து மேற்க்கொண்டிருந்தார். போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் மக்களால் ஒரு சாதனைப் பெண்மணியாக வரவேற்க்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக பி.பி.ஸியால் அதிகம் அறியப்பட்ட பெண்ணாக இருந்தார். துருக்கியிலிருந்த போது 1855-ல் இவரது பணியினை கெளரவிக்கும் பொருட்டுத் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. 1860-ல் புனித தோமையர் மருத்துவமனையில் நைட்டிங்கேல் தாதியியர் பயிற்சிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இலண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிப்பள்ளி செயல்படுகிறது. 1869-ல் எலிசபெத் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி ஒன்றைத் தோற்றுவித்தார். 1882-ல் நைட்டிங்கேல் தாதியர் உலகளவில் பரவலாகச் சேவை புரிந்தனர். நைட்டிங்கேல் 1883-ல் விக்டோரிய அரசிடமிருந்து செஞ்சிலுவை விருது பெற்றார். 1907-ல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருது பெற்ற முதல் பெண்ணாவார்.  இத்தகைய சிறப்பினையுடைய நைட்டிங்கேல் குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் எனும் நோயால் பாதிக்கப்பட்டு 1910, ஆகஸ்டு 13ல் தனது 90 வயதில் மரணமடைந்ததாகக் கருதப்படுகிறார்.   இவரது சேவைகளைக் கருத்தில் கொண்டு உலகத் தாதியர் தினம் இவரது பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் பெயரினைக் கொண்ட பல தாதியியல் நிறுவனங்கள் மற்றும் கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக அறியப்படும் குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் பற்றி ஆராய்கிறது. தனது வாழ்வில் பல்வேறு இன்னல்களைக் கடந்து தனது வாழ்நாள் முழுவதையும் தாதிய சேவைக்கு அற்ப்பணித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் மக்கள் மனதில் கருணையின் சிகரமாகவே அறியப்படுகிறார்.                                         20. ஹெலன் கெல்லர்     []     `பார்க்க இயலாது, பேச இயலாது, பிறர் கூறுவதைக் கேட்க இயலாது இருப்பினும் தன் எழுத்துக்களால் உலகத்தையே தன்னை ஊற்றுநோக்கச் செய்தார் அப்பெண். ஹெலன் கெல்லர் 1880, ஜூன், 27, அமெரிக்கவின் அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்தார். பிறந்து 19 மாதங்களில் ஏற்ப்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். 1887ல் ஹெலன் கெல்லரின் பெற்றோர் அலக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலக்சாண்டர் ஹெலன் கெல்லரை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். மேலும் அவர் ஆன் சல்லிவன் எனும் ஆசிரியரை ஹெலனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த 49 ஆண்டுகளைக் ஹெலனும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர். பிறர் பேசும் போது அவர்களின் உதடசைவினை வைத்து பேசுவதை புரிந்து கொள்ளும் கலையை சல்லிவன் ஹெலனுக்கு கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு பொருளையும் தொட்டுத் தொட்டு உணர்ந்து கற்றார் ஹெலன். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக் கொண்ட ஹெலன் கண் பார்வையற்றோருக்கான பிரெய்லி எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறமை ஹெலனுக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிரம்புவதற்க்கு முன்னரே ஹெலன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இலத்தின் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளை பிரெய்லி முறையில் கற்றுத் தேர்ந்தார்.    1904-ல் ஹெலன் சல்லிவனுடன் நியூயர்க் சென்று அங்குள்ள காது கேளாதோருக்கான ரைட் ஹூமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு ஹெலனுக்கு சாராபுல்லர் எனும் ஆசிரியை பேசக்கற்றுக் கொடுத்தார். பல ஆண்டுகள் பயிற்சி செய்தும் ஹெலனால் தெளிவாகப் பேச இயலவில்லை. இருப்பினும் மனம்தளராத ஹெலன் மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களைக் கற்றுக் கொண்டஹெலன் 1900-ல் மிகுந்த தயக்கத்துடன் ராட்கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தொய்வின்றி உழைத்த ஹெலன் 1904-ல் தனது 24 வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கண் பார்வையற்று, காது கேளாமல் ஒரு பெண் பட்டம் பெற்றது அதுவே முதல் முறையாகும். ஹெலன் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஆஸ்திரிய தத்துவவியளாலரான வில்லம் ஜெருசலேம் என்பவர் ஹெலனின் எழுத்தாற்றலை வெளிக்கொணர பெரிதும் உதவினார்.  தனது கல்லூரி நாட்களிலேயே 1903-ல் “தி ஸ்டோரி ஆப் மை லைப்” எனும் தனது சுயசரிதையை வெளியிட்டார் ஹெலன். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார் ஹெலன். “தி ஸ்டோரி ஆப் மை லைப்” எனும் அவரது சுயசரிதையை மராத்தி உட்பட உலகின் ஐம்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஹெலனின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தன்னம்பிக்கை- ஓர் கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம் மற்றும் ஆன் சல்லிவன் மேஸி- என் ஆசிரியர் போன்றவை அவரின் படைப்புகளாகும். இது தவிர காதுகேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும் மாதந்திர மற்றும் வாராந்திர பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிய வண்ணம் இருந்தார். உழைப்பாளர் உரிமைகளையும் சோசலிச தத்துவங்களையும் குறித்து பல்வேறு கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதினார் ஹெலன். தன் பெயரிலே பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோருக்காக லாப நோக்கமற்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 39 நாடுகளுக்குச் சென்று திரட்டிய நிதித் தொகை 1.5 கோடியை பார்வையற்றோர் பள்ளிக்கு நிதியாக வழங்கினார். பார்வையற்றோருக்கான நூலகத்தை உருவாக்கினார். இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்து அவர்களது உரிமைகளுக்காக போராடினார். 1915-ல் ஜார்ஜ் கெஸ்லர் என்பவருடன் இணைந்து ஹெலன் “ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு” தோற்றுவிக்கப்பட்டது. இது காதுகேளாதோர் மற்றூம் கண் பார்வையற்றோருக்கு உதவுவதற்க்காக தோற்றுவிக்கப்பட்டது. 1920 அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் ஒன்றினைத் தொடங்கினார் ஹெலன். 1965-ல் நியூயர்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஹெலன் 1961-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1968, ஜூன் 1-ல் தூக்கத்திலேயே உயிரிழந்தார். 1999-ல் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண்ணாக அறியப்பட்டார் ஹெலன், 2003-ல் அலபாமா மாகாணத்தின் சிறப்புமிக்க குடிமகளாக அறியப்பட்டார். 2009, அக்டோபர் 7-ல் அலபாமாவில் இவரின் வெண்கலச்சிலை நிறுவப்பட்டது. தன் வாழ்நாளில் பல்வேறு தடைகளையும் நிராகரிப்புகளையும் தாண்டி சாதாரண மனிதருக்குத் தான் எந்த விதத்திலும் இழைத்தவள் அல்ல என்பதை தன் தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் சரித்திரத்தில் தன்னம்பிக்கையின் ஊற்றாகவே கருதப்படுகிறார்.