[] 1. Cover 2. Table of contents ரொமான்டிக் குற்றம் ரொமான்டிக் குற்றம்   அ.இம்ரான் ஹக்   imranhak78@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - சென்றாயன் குமார் -   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/romantic_kutram மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: சென்றாயன் குமார் மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Sentrayan Kumar Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/romantic_kutram This Book was produced using LaTeX + Pandoc என்னுரை ஆதாமின் தவறுக்கும் நியாயமுண்டு,இந்த உலகம் அணுக்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது போலவே உயிர்கள் அனைத்துமே அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அந்த அன்பினை பாசம் நேசம் கருணை என ஆயிரம் பேர் கொண்டு அழைத்தாலும் காதல் என்ற உச்சத்தில் அது உயர்ந்து நிற்கிறது. அந்த காதலின் பின்னணியில் கோர்க்கப் பட்ட கதைதான் இது. எல்லாப் படைப்புக்கும் பின்னே ஏதோவொரு சிறிய உண்மை மறைந்திருக்கும். அப்படி இந்த கதைக்கு பின்னேயும் சில உண்மைகளும் உண்டு பல பொய்களும் உண்டு. நம்பிக்கை அழியும் போது காதல் உடைகிறது. உடைந்த காதலை உருப்பெறச் செய்வது 90% சாத்தியமற்றது மீதமுள்ள அந்த 10% வாய்ப்பை பயன்படுத்தத் துடிக்கிற ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கதை பாதிப்பை ஏற்படுத்தும். அந்த இளைஞனின் சிரைகளின் வழியே வெளியேறிக் கொண்டிருக்கும் குருதியின் கசப்பை இந்தப் படைப்பு படம் பிடித்துக் காட்டும். எனது எழுத்துலகஆசான் தாய் கல்லூரியான பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஐயா பேரா. மீனா சுந்தர் அவர்களுக்கும் எமது நேசத்துக்குரிய அம்மா பேரா ராஜாத்தி செல்வக்கனி அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். என் படைப்பையும் பயணத்தையும் நேர் படுத்தி நெறிப்படுத்துகிற உடுமலை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் குறிப்பாக தமிழ்த் துறைத் தலைவர் பேரா. மதியழகன் ஐயா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசத்திற்குரிய சகோதரி எஸ்தர் க்ரேஸி, நேசமிகு சகோதரர் போகராஜ், இனிய நண்பர்கள்மா.சதீஷ்குமார், கோகுலகிருஷ்ணன், முத்தரசு, செல்வராஜ், ராஜாமுகமது, மணிகண்டன் மற்றும் அறிமுகவுரை நல்கிய அவர்களுக்கும்அட்டைப் படத்தை கதைக்கு ஏற்ற வகையில் கற்பனை நயத்துடன் வடிவமைத்துத் தந்து சென்றாயன் குமார் ஆகியோர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் அ.இம்ரான் நூன்முகம் அனைவராலும் எழுத முடியும் ஆனால் ஒருவனுக்கு எதை எழுதவேண்டும் என்பதை கற்றுத் தரக்கூடிய ஒரு சிறந்த களம் சமூகம். இச்சமூகம் கற்றுக் கொடுத்தவற்றை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்றவைகளை கருவிகளாகக் கொண்டு சொற்களை ஆயுதங்களாக்கி எழுத்துக்களை நூலாக்கி சமூகத்திற்குள் புதுபோராட்டக்களத்தை உருவாக்க துணை நிற்பவர்கள் எழுத்தாளர்கள்.உலகிற்கு புத்துணர்வூட்டக் கூடிய அனைவராலும் சுவைக்கக் கூடிய ஒரு இலக்கிய வகை சிறுகதை குறைந்த கதை அமைப்பில் நிறைவு பெற்ற பல எண்ணற்ற தகவலை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய கருவூலம் சிறுகதைரொமான்டிக் குற்றம் என்ற இந்த நெடுங்கதையோ அழகிய சொல்லாட்சியில் 7 தலைப்புகளோடு சமூக அவலங்களை வெளிக்கொணரும் படைப்பு. ரொமான்டிக் குற்றம் என்ற படைப்பை இவ்வுலகிற்கு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வாளர் ஆருயிர் நண்பர் அ.இம்ரான் ஹக் கவிதை,சிறுகதைகளில் ஆற்றல் மிக்கபடைப்பாளர். இவர் எழுதிய இந்த படைப்பானது கந்தபுரத்து வழக்கு, இளம்பெண் கொலை, மாரிமுத்து தற்கொலை, துருப்புச்சீட்டு, சாரு ஆயிஷா, ஐயம் கண்ணன், நினைவுத் திருட்டு போன்ற ஏழு தலைப்புகளில் ஒத்துமுறைவைப்பு, தொகுத்துச் சுட்டல் என்ற நன்னூலின்உத்திகளோடு எழுதப்பட்டுள்ளது. இயற்கையின் அழகையும் ஆற்றலையும் மிக அழகுடன் வர்ணித்து ஒரு சில கதாபாத்திரங்களை கொண்டு காவல் துறையின் மெத்தனப் போக்கையும் அவர்களது செயல்களையும் காவலர்களுக்கு கொடுக்கக் கூடிய மன அழுத்தம் போன்றவை முதல் தலைப்பான கந்தபுரத்து வழக்கு என்பதில் அழகுற கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இருக்கக்கூடிய இளம்பெண் கொலை என்ற தலைப்பில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார் கொலை செய்யப்பட்ட பெண்ணை தார்ப்பாய் சுற்றி வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட அடையாளங்கள் அழிக்கப்பட்டு வேறு மதம் சார்ந்த சமூகத்தின் மீதுதிசைதிருப்ப செய்த பல வேலைகள் போன்றவையும் இக்காலத்தில் நடக்கக்கூடிய இதே போன்ற பல கொலைகளை திசை திருப்பப்பட்டு இன்று வரை விசாரணை என்கிற பெயரில் அவை எதுவும் முடிவுக்கு வராமலேயே தொடரும் அவல நிலை போன்றவை இத்தலைப்பில் பதியப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள மாரிமுத்து தற்கொலைகுற்றவாளி தான் செய்த தவறை திசை திருப்ப வைக்கக்கூடிய ஒரு சிறிய வித்தை அதுமட்டுமல்லாது காவல்துறையும் திசை திருப்பக் கூடிய ஒரு ஆயுதம் மற்றொரு கொலை இந்த கொலையை தான் செய்தான் என்று ஊர்ஜிதம் ஆக கணித்த காவல்துறையினருக்கு பேரிடியாக அவர்கள் நினைத்தவரையே கொலை செய்திருப்பது இன்றளவும் நிகழும் ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாது இதே கதையில் மற்றொரு நிகழ்வும் பதியப்பட்டுள்ளது அதுவே முதல் பதிவு ஆம் காவல்துறையினர் விபச்சார வழக்கில் அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்தில் கைது செய்து கொண்டு வரும் பெண்களை தங்களது உடல் சுகத்திற்கு அவர்களை மிரட்டி அடிபணிய வைத்து தவறான செயலுக்கு பயன்படுத்தி தங்கள் உடல் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் மிகப்பெரிய அவலத்தை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறார். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பர் சான்றோர் ஆம் அது வெற்று வார்த்தை இல்லை துருப்புச்சீட்டு என்ற கதையில் கொலையை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் தனக்குகிடைத்த ஒரு பேருந்துச் சீட்டை வைத்து அந்தக் கொலையைச் செய்தவர் யார் கொலை எதற்காக நிகழ்த்தப்பட்டது அது குறித்தான பல தரவுகளுக்கு விடை தெரியும் ஒன்றாக பதியப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள சாரு ஆயிஸா என்ற தலைப்பில் காவல்துறையால் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துவரப்பட்ட சல்மானை விசாரணை என்ற பெயரில் அடித்தும் கடுமையான சொற்களால் தாக்கியும் மனவேதனைக்கு கொண்டு செல்வது இக்காலகட்டத்தில் காவல்துறையினர் செய்யும் மோசமான செயலை படம் பிடித்துக் காட்டுகிறது. அடுத்ததாக உள்ள மெஸ்மரிசம் இந்த தலைப்பிற்குதேடவே நிறைய மணி நேரங்களானது. மெஸ்மரிசம் என்பதைசுருக்கமாக சொல்வதென்றால் கணிப்பொறியில் உள்ள பழைய மென்பொருட்களை அழித்து புதிய மென்பொருள்களை நுழைப்பது போல நமது மூளையில் உள்ள பழைய நினைவுகளை அழித்து புதிய நினைவை செலுத்துவது. இப்படியாக பலபல புதிய தகவல்களோடும் திகில் நிறைந்த குற்றப்பின்னணியோடும் எதார்த்த மொழிநடையில் விரிகிறது இப்படைப்பு. வருங்காலத்தில் அ.இம்ரான் திரைப்பட கதையாசிரியராக மெருகேற எனது வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் அசார்தீன் முனைவர் பட்டஆய்வாளர் கந்தபுரத்து வழக்கு   மிதமிஞ்சிய காற்றின் வேகம் ரப்பர் துண்டுகளைப் போல தென்னை மரங்களை அசைந்தாட்டிக் கொண்டிருந்தது.  பளீரென்று வெட்டிய மின்னலில்  தென்னங்குழைகளும், பனைமரங்களும்தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. திடுதிடுவென இறங்கிய மழை கந்தபுரத்தின் சந்து பொந்துகளில் இருந்த மணற்துகள்களை அடித்திழுத்துக்கொண்டு சிறு வெள்ளம் போல பழனி உடுமலை தேசிய நெடுஞ்சாலையோர வடிகாலில் நீந்திக் கொண்டிருந்தது. இலேசான காற்று அடித்தாலே மின்சாரத்துறை தன் பாதுகாப்பு நலன் கருதி துண்டித்துக் கொள்ளும் இப்போது சொல்லவா வேண்டும். கும்மிருட்டு தாயின் கருவறையைப்போல இல்லை,இல்லை. கல்லறையைப் போல இரண்டையும் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை சரி,  அமாவாசை இரவொன்றில் மின்சாரம் இல்லாத போது நீங்கள் மொபைல் போனும் இல்லாமல் உங்கள் கழிவறையில் மாட்டிக்கொண்டது போலிருந்தது. கனமழையிலும் போக்குவரத்து வாகனங்கள் எப்போதும் போலவே விரைந்தோடிக்கொண்டிருந்தன சொல்லப்போனால் வாகனங்களின் ஹாரன் சப்தமே கந்தபுரவாசிகளுக்கு ஒரு ஆசுவாசம் தந்தது எனலாம் அப்படிப்பட்ட கும்மிருட்டு. சேகரும்,கணேசும் முருகன் கோவில் திண்ணையில் நின்று கொண்டிருந்தனர் .  சளார் சளாரென  வீசிய காற்றில் சாரல் தெளித்து தரையெல்லாம் ஈரம் படிந்திருக்க ஒரு டீ சாப்பிட்டலாம் போலிருந்தது. ஆனால் அங்கு ஒரு கடை கூட இல்லை. கந்தபுரம் மிகச் சிறிய கிராமம் மன்னிக்கவும் அதை கிராமம் என்று கூட சொல்ல இயலாத ஒரு பகுதி பழனி  உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் முருகன்மில்லை  ஒட்டிய ஒரு இருபது இருபத்தைந்து வீடுகள் அடங்கிய பகுதி. விவசாய நிலங்கள் விலை நிலங்களாக்கப்பட்ட போது பழனி நகரில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விலை குறைவாக இருந்ததால் ஆளுக்கு ஒரு நிலத்தை வாங்கி அவர்களுக்கான உறைவிடத்தை உருவாக்கிக் கொண்டனர் அப்படி உருவானதுதான் இந்தப் பகுதி  இதன் நுழைவாயிலின் வலதுபுறம் தான் முருகன் மில்  இருக்கிறது. ஏதோ தொழிலாளர் பிரச்சினையால் வழக்கு நடக்க அது சீல் வைக்கப்பட்டுள்ளது.   கந்தபுர பேருந்து நிறுத்தத்திற்கான அடையாளமே அந்த மில்தான் அந்தப் பகுதிக்குள் நுழையும் போது இடது பக்கம் ஒரு வாய்க்கால் தொலைதூர தென்னந்தோப்பு வரை நீண்டு பயணிக்கும். அதன் மேலுள்ள  பாலம்தான் கந்தபுரத்தையும்      மில்லை  ஒட்டி நகரும் மண்சாலையையும் இணைக்கும் பாலம் அந்தப் பாலத்தைக் கடந்தால் அழகே உருவான  சிறு கந்தன் கோவில்  அவ்வளவேதான் அந்தப் பகுதியின் அடையாளம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூடஅருகிலுள்ள ஊருக்குத்தான் போக வேண்டியிருக்கும் அங்கும் இல்லாவிட்டால்  ஐந்து கிலோமீட்டர் தூரம்தான் பழனி மாநகரம். மெயின்ரோட்டிலிருந்து விலகிய காவல் கண்காணிப்பு வண்டி சிக்னலை போட்டவாறே    கந்தபுரத்திற்குள் நுழைந்து முருகன் கோவிலுக்கும் மண் சாலைக்கும் இடையே இருந்த பாலத்தின்  மேலே நின்றது. சேகரும் கணேசும் சில்வர் நிற கோப்பை தூக்கிப் பிடித்தவாறே ஓடி வந்து வேக வேகமாக காரில் ஏறிக் கொண்டனர்.  என்னயா ஏதாவது தகவல் கிடைத்ததா ??       சார், இந்த ஏரியால இருக்கிற எல்லா வீட்லயும் விசாரிச்சாச்சு  சந்தேகப் படற மாதிரி யாரும் வர்லங்கராங்க  சரி, கேமரா ஏதாவது இருக்கா செக் பண்ணியா? இந்த முருகன் கோயில்லயும் அந்தப் பக்கம் ஒரு பெரிய வீட்டில் மட்டும்தான் கேமரா இருக்கு வீட்ல செக் பண்ண வரைக்கும் எதுவும் இல்ல   ஆனா  இந்த கோவில் கேமரால சரியா மதியம்  மூணு மணிக்கு யாரோ அதை திருப்பி வச்சிருக்காங்க   அந்த  நேரத்தை வைத்துத் தான் விசாரிச்சுட்டு    இருக்கோம்.  சீக்கிரமா கண்டுபிடிங்க    அவங்க சொந்தக்காரன்  சுகாதாரத் துறை அமைச்சருக்கு வேண்டியவன் போல காலையிலிருந்து ஒரே பிரஷர் அவங்க வீட்ல விசாரிச்சு ஏதாவது தகவல் கிடைச்சதா??? இல்ல, சார். எந்த தகவலும்சொல்ற மன நிலைல அவங்க இல்ல காலையில தான் விசாரிக்கணும்.   சரி, காலையில விசாரிப்போம்.  வண்டிய ஸ்டேஷனுக்கு விடு . மழையின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே போனது மின்னல் மட்டுமே வழிகாட்டியாகவெளிச்சம் தந்து கொண்டிருந்தது. சளார்,சளார் என சாரல் தகரச் சீட்டுகளில் விழுந்து   ஒருவித அச்சத்தை பரப்பி இருந்தது.  சார்,  இல்லை சார், எங்காவது வெளியே போய் இருப்பாங்க வீட்டில் ஏதாவது பிரச்சனையா இருக்கும்னு நாங்க விட்டுட்டோம்.       என்ன சோசியமா பாக்கற, கேஸ் கொடுத்தால் உடனே விசாரிக்கனும்  ரெண்டு நாளா தூங்கிட்டு இப்ப காரணஞ் சொல்ற??   “இல்ல சார் எதாவது காதல் பிரச்சினை  என நீட்டினார்  இன்ஸ்பெக்டர்” எல்லாம் நீ தானே விசாரிக்கணும் என்கிட்ட கேட்கிற    இன்னும் 24 மணி நேரத்துல நீதான் கண்டு பிடிக்கணும் இல்ல அப்புறமா பார் என போன் கட் ஆனது. ச்சை   கண்ட நாய்கள்டலாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு. என்ன பொழப்புடா இது இவளுக எவனோடயோ ஓடிப் போயிட்டதுக்கு  நம்ம உயிரை வாங்கிட ராணுவ ஆள்யாருனு தெரிந்த உடனே சாதி,மதம்னு சொல்லி போட்டுதள்ளிட்டு அரசியல் பண்ணிக்குவாங்க அதுவரைக்கும் நாம தேவைப்படுவோம் . நாரப்பயலுக குட் மார்னிங், சார்.  வாங்க சேகர் இப்பதான்  சு.அமைச்சரோட பி.ஏ   பேசனான். அவன் வீட்டு வேலைக்காரன் ட வேல வாங்ர மாதிரி பேசரான்.  ஏதோ நமக்கு ஒரு விதத்துல அந்த அமைச்சர் உதவி செஞ்சான் . அதுக்காக   இப்படி நம்ம பாடா படுத்துறான் சரி நாம அந்த கந்தபுரம் போய் விசாரிப்போம். சரி, சார் என சேகர் கிளம்பினார். ஆமா,   கணேஷ் எங்க?? சார்,   அவர் ஏற்கனவே அங்க போயிட்டார் அந்த ஏரியாவுக்கு எதிர்ல ஒரு ஊர்   இருக்கு அதுவும் சின்ன ஏரியா தான் அங்க  விசாரிக்க போயிருக்கார்.  அங்க பாரு அந்த காலேஜ் நுழைவாயில்ல ஒரு  கேமரா இருக்கு அதை நோட் பண்ணிக்கங்க அதே மாதிரி கந்தபுரம் தாண்டி ஏதாவது லேன் மார்க்  இருக்கா ??? ஒரு காலேஜ்  இருக்கு,  ஒரு  ஏடிஎம்  இருக்கு. ரெண்டயும் நோட் பண்ணி விசாரீங்க.    சரிங்க சார்,     கந்தபுரத்திற்குள்  நுழைந்ததுமே இரண்டு நாய்கள் போலீஸ்  ஜீப்பை  பார்த்துக் குறைத்தன இரண்டு வயதானவர்கள் காம்பவுண்டு சுவர் பக்கமாய்   நின்று பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்று மறைந்தனர்.  சன்னல் வழியே திரைச்சீலையின் மறைவில்  போலீஸையும் சாருவின் வீட்டையும்  மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண் . பேண்ட் பெல்ட்டை தூக்கியேத்தியவாறு இன்ஸ்பெக்டர்  கனைத்தார்.  சாருவின் அண்ணன்  மூன்று நாற்காலிகளை எடுத்து வெளியே போட்டான். வாங்க சார்,  உங்க பேர் என்ன தம்பி? பிரேம்குமார் சார், காணாமல் போவதற்கு முன்னாடி வீட்ல ஏதாவது சண்டையா? இல்ல, சார் அப்படி எல்லாம் இல்ல எப்பவும் போலதான் இருந்தா அவளுக்கு மாப்ள பார்த்து பேசி  கூட முடிச்சாச்சு சார்,   இந்த நேரத்துல  என தேம்பினான்  ப்ரேம். மாப்ளய பிடிச்சிருந்ததா இல்ல நீங்க கட்டாயப்படுத்தி ஏதாவது? இல்ல, சார் அவளோட முழு சம்மதத்தோட தான்  நிச்சயம் பண்ணோம்  அவன்  கூட சந்தோசமா பேசிகிட்டு தா இருந்தா அந்த பையன் பேரு?   கார்த்தி என்ன வேல செய்ராரு?   பனியன் கம்பெனி சார், திருப்பூர் படிக்கரப்பவே ஏன்  திடீர்னு கல்யாணம்? படிப்ப முடிச்சிட்டு தான் சார் கல்யாணம் வயசு புள்ளய ரொம்ப நாள் வீட்ல வக்க முடியாதுங்கள்ள    சாரு எந்த காலேஜ் படிக்கிறாங்க?  பொன்மகள் காலேஜ்  அங்க நண்பர்கள்ட விசாரிச்சீங்களா,     காலேஜ்ல ஏதாவது மன அழுத்தம் இல்லை  காதல் மாதிரி ஏதாவது   சார், காலேஜில எந்த பிரச்சினையும் இல்லை.  அப்ப காதல் பிரச்சனை?  அதலாம் எதுவும்  இல்ல சார்,  எதையும் மறைக்காதீங்க உண்மைய மட்டும் சொல்லுங்க அப்பத்தான் தேடுவதற்கு எங்களுக்கு சுலபமா இருக்கும். வயசு பொண்ணுனாவே ஏதாவது இருக்கும் தயங்காம சொல்லுங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்கார பையன காதலிச்சிட்டிருந்தா அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேனு அடம் புடிச்சா தற்கொலை முயற்சி கூட பண்ணி  ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல  வச்சிருந்தோம்.  அப்புறமா  அவனே இவள  வேணாம்னு சொல்லிட்டான் . கொஞ்ச நாள்லயே மனசு மாறி நல்லாதான்  இருந்தா  அந்தபையன் பேரு??  மாரிமுத்து சார்,  எந்த ஏரியா?  எங்க வேலை செய்றான்? தாளையம்  பழனி ட்ரென்ஸ்  ல கட்டிங் மாஸ்டர்.  சேகர்,  அந்த கடையோட நம்பரை வாங்கி சாயங்காலம் அந்த பையனை ஸ்டேஷன் வரச்சொல்லு.  சரிங்க சார்,  ஆமா, அந்த பொண்ணோட போன் எங்க?   அதுவும் காணோம் சார்,  சாருவின் அம்மா முந்தானையால் கண்களை கசக்கி அழுதபடி அமர்ந்து இருந்தார். அவரைப் பார்த்தபடி  பிரேமிடம் நீங்க யார் மேலயாவது சந்தேகப்படரீங்களா எனக் கேட்டார்   இன்ஸ். இல்ல, சார் யார் மேலயும் எங்களுக்கு சந்தேகமில்ல. ம்ம்..   சரி,  with your permission உங்க வீட்ட கொஞ்சம்  சோதனை போடலாமா. தாராளமா சேகர் go on  கவலைப்படாதீங்க  அம்மா,  உங்க  பொண்ணுக்கு எதுவும் ஆகாது எல்லாம் வயசுக் கோளாறு தான் சீக்கிரம் கண்டு பிடிச்சுடலாம்  அந்த பொண்ணோட கிளாஸ் டீச்சர்  நம்பர் இருக்கா.  இல்ல சார் இங்கிருக்க ஒரு பொண்ணு அவளோட  க்ளாஸ் மேட் தான் அந்த பொண்ண கேட்டா தெரியும்.  சரி அந்த பொண்ண வரச்சொல்லுங்க.  சரிங்க சார், என மொபைலை தேய்த்தான் பிரேம். சேகர் சில காகிதங்களோடு வெளியே வந்தார்.  என்ன சேகர் ஏதாவது கிடைச்சிதா?   இந்த புக் இந்த பேப்பர் எல்லாத்துலயும் ஆயிஷா ஹக் னு எழுதிருக்கு இந்த பேப்பர பாருங்க சாரினு இரத்தத்தாலே எழுதி ஆயிஷா ஹக்னு    கையெழுத்து  போட்டிருக்கு. இதையும்  பாருங்க சார், இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பக்கத்துக்குப் பக்கம் ஆயிஷானு  எழுதி இருக்கு. ம்ம் என  உருமினார்  இன்ஸ்பெக்டர்.  சார் “இந்த பொண்ணு தான்”  வாம்மா உன் பேரென்ன?  பிரவீனா, சார்.  பயப்படாதே உனக்குத் தெரிந்ததை மட்டும்  மறைக்காம சொல்லு   அந்தப் பெண்ணோடு கேரக்டர் எப்படி?  லவ் ஏதாவது,   இல்ல அந்த பொண்ணு பின்னாடி யாராவது சுத்தனாங்களா?  ஜாலியா இருப்பா சார்,    அவ பின்னாடி  சங்கர் னு ஒருத்தன்  லவ் பண்றேன்னு சுத்திக்கிட்டு இருந்தான் ஆனா அவ கண்டுக்கல.  ஏதாவது டார்ச்சர் பண்ற மாதிரி நடந்துக்கிட்டானா?  இல்ல சார், அப்படி எல்லாம் இல்ல சும்மா பின்னாடியே வருவேன் அங்க  இங்க நின்னு  பார்ப்பான் அவ்வளவுதான்  அந்த பொண்ணுக்கு யார் மேலாவது  லவ்?   அப்படி எல்லாம் இல்ல  சார் ஆனா அவ அடிக்கடி அவங்க மாமா பத்தி சொல்லுவா.  மாமாவா யாரது??  “மாரிமுத்து”  பிரேம் குறிக்கிட்டு முதலிலேயே சொன்னேனே அவன் தான் சார்  சரி, வேற ஏதாவது பிரச்சனை இருந்ததா மா? இல்ல சார் ,அப்படி எல்லாம் இல்ல  சரிம்மா  நன்றி .   சேகர் என்னோட நம்பர இந்த பொண்ணுக்கு கொடுத்துடுங்க உனக்கு  யார் மேலயாவது சந்தேகம் வந்தா எனக்கு கால் பண்ணுமா  . அப்படியே உங்க டீச்சர் நம்பர் கொடுத்துட்டு   போம்மா.  சரிங்க சார்.   பிரேம் ,சீக்கிரமா உங்க தங்கச்சிய கண்டுபிடிச்சடலாம்  கவலைப்படாதீங்க  நான் போயிட்டு வரேன் இந்த பேப்பரை மட்டும் எடுத்துட்டு போறேன். சுற்றும்முற்றும் பார்த்தவாறே இன்ஸ்பெக்டர் காரை நோக்கி நடந்தார் . சேகர் கட்ண்ட்ரோல் ரூம்ல  சொல்லி மொபைல ட்ராக் பண்ண சொல்லுங்க.  சொல்லியாச்சு சார், ஆனால் அது வீட்டிலேயே சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு  ரீசென்  கால் லிஸ்ட் எடுத்தாச்சா ? ஏதாவது தகவல் கிடைச்சதா?  அதுல கார்த்திக் நம்பர்க்கு தான் அதிகமா பேசி இருக்காங்க, காணாமல் போன அன்னைக்கு மட்டும் ஒரு புது நம்பரில் இருந்து மூணு தடவை கால் வந்து இருக்கு. அது யாருன்னு செக் பண்ண போக  அந்த பொண்ணோட காலேஜ் ஃபிரண்ட் ஆனந்தி அந்த பொண்ணு கிட்ட விசாரிச்சதுல  நல்லா சந்தோஷமா தான் பேசினா பேசுறப்போ எந்த பிரச்சனையும் இருந்த மாதிரி தெரியலைன்னு சொல்றா.  ஒருவேளை இந்த கார்த்தியோடு ஏதாவது பிரச்சினையா இருக்குமோ!  அவனை விசாரிச்சாச்சா?   இல்ல சார்,     எந்த ஊர்ல இருக்கான்.   “திருப்பூர் சார்”  நேரில் வரச் சொல்லி விசாரீங்க. கேமரா செக் பண்ணியாச்சா சந்தேகப்படர  மாதிரி ஏதாவது  இல்ல சார், அப்படி எதுவும்  சிக்கல. என்ன யா  ஓடிப்போகல  வீட்லயும் எந்த பிரச்சனையும் இல்ல அப்புறமென்ன மாயமா மறஞ்சிட்டாலா  சார், ஒரு  வேளை  காலேஜில ஏதாவது பிரச்சனையா  இருக்குமோ  என்கிட்ட கேட்காத அந்த கிளாஸ் டீச்சர போன் பண்ணி விசாரி  கோடை காலம் ஆரம்பிக்கும் முன் இயற்கையின் கரிசனை இரண்டாவது தடவையும் மலை முகடுகளில் இருந்து இறங்கிய மேகங்கள் பழனி சுற்றுவட்டார த்தில் பரவி  குடை போல கவிழத்  தொடங்கின. பழனி மலையில் இருந்து பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருந்தது. பச்சை பசேலென்ற இயற்கையின் மார்புக்கு மேல் விழுந்த கூந்தல் போல கரிய மேகங்கள் மாலைப்பொழுதில் சூழ்ந்து நின்றன ஸ்டேஷனுக்கு பக்கத்தில் இருந்த டீக்கடையில் இன்று மட்டும் கட்டஞ்சாயாவை  ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார் இன்ஸ்பெக்டர். கணேஷ் உள்ளே நுழைந்து சல்யூட் வைத்தார்.  ஏதாவது தகவல் உண்டா? அந்த மாரிமுத்து போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்  சார், ஆனா அவ அந்தப் பொண்ணுட்ட பேசியே  ஒரு வருசம் ஆகுது னு சொல்றான் சரி நீ ஸ்டேஷன் வா பேசிக்கலாம்னு வர சொன்னேன். இப்ப வெளியூர்ல இருக்காணாம்  வரேன்னு சொல்றான் சார்.  அந்த கார்த்திக்  அவங்களுக்குள்ள  எந்த பிரச்சினையும் இல்லை,  காணாமபோறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கூட போன்ல பேசி இருக்காங்க. சேகர், சார்என முன்னே வந்து நின்றார்.  சேகர்,அவங்க டீச்சர் என்ன சொல்றாங்க.  சார், நல்லா படிக்கிற பொண்ணு தான் எந்த பிரச்சனையும் இல்லேன்னு தான் சொல்றாங்க. ஆனா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி கார்த்திங்கர பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க மேல படிக்க விடமாட்ராங்கனு  அழுதிருக்கு, அந்த டீச்சரும் வீட்ல பேசி கல்யாணத்தை தள்ளிப் போட உதவி செஞ்சிருக்காங்க. அப்ப எந்த வழியிலேயும் போக முடியல,  இருவரும் தலைகவிழ்ந்து நின்றனர். சரி, அந்த ஆயிசா யார்னு விசாரிச்சீங்களா?  காலேஜ்ல அந்த பெண்ணோட பிரண்ட்ஸ் யாரும் இல்ல சார்  . ஒருவேளை ஸ்கூல் பிரண்டா  இருக்கலாம் இன்னைக்கும் நாளைக்கும் ஸ்கூல் லீவு திங்கட்கிழமை தான்   விசாரிக்க முடியும். ஏற்கனவே அந்த பொண்ணு காணாம போய் நாலு நாள் ஆச்சு இன்னும் ஏழு நாள் கழிச்சு விசாரியேன்,   அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர கூப்பிடு கிளாஸ் டீச்சர் போன் நம்பர் வாங்கி  அந்த  ஆயிசா யாருன்னு கண்டுபிடி   இப்போதைக்கு அது தான் ரொம்ப சந்தேகமான விஷயமாயிருக்கு . சரிங்க சார்  , என இருவரும் சல்யூட் அடித்து வெளியேற சூடான கட்டஞ்சாயாவும் மிளகாய் பஜ்ஜியும் இன்ஸின்   மேசையில் அமர்ந்தன. இளம்பெண் கொலை       மாலை 7 மணியிருக்கும்  கும்மிருட்டு கரை உடைந்த அணை போல  மழை பெய்து கொண்டிருந்தது கால்களோடு கால்கள் பின்னிப் பிணைந்திருந்தன மஞ்சள் நிறப் போர்வையொன்று இரு உடல்ளையும்  இறுகச் சுற்றி  இதம் அளித்துக் கொண்டிருக்க அவளின்  உதடு வழி உஸ்னம் உள்ளேர    கோவை இதழ்களை உறிஞ்சி சாப்பிட்டுக் கொண்டே அவள் அழகை வர்ணித்து கண் இமைகளில் முத்தமிட்டான் அதை வாங்கிக்கொண்ட அவளும் பதிலுக்கு நெற்றியில் முத்தமிட்டாள் அவள் மீது பாரம் ஏறாமல்  ஒரு கைஅவன் சுமையைத் தாங்க  மறு கை அவள் உடலை த் தடவி  மார்புகளில் விளையாடிக் களைத்தது.   ஹலோ, வணக்கம் சார்.     என்ன சேகர்,  சொல்லுங்க அந்த பொண்ண கொல பண்ணிடாங்க சார்  , என்ன யா சொல்ற? ஆமா, சார் பாடி அவங்க வீட்டு வாசல்ல இருக்கு.  சரி, நீ அங்க போய் பார்மாலிட்டி பாத்துக்க நான் பின்னாலேயே வரேன். அப்படியே ஸ்டேஷன்  வண்டிய வீட்டுக்கு அனுப்பி வை. கந்தபுர மக்களெல்லாம் சாருவின் வீட்டைச் சுற்றி நின்றிருந்தனர் சாருவின் அம்மா தரையில் அடித்தபடி கதறிக்கதறி அழுது கொண்டிருந்தாள். அவள் பெரியம்மாவும் பக்கத்து வீட்டாரும் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தனர். சேகரும் கணேசும் பைக்கை விட்டு இறங்கி நடந்து வந்தனர். ப்ரேம் அவர்கள் அருகில்  வந்தான். சார், பாருங்க சார்  இப்படி பண்ணிட்டானுங்க என தேம்பித் தேம்பி அழுதான். இன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார்.   யாரு முதல்ல பார்த்தது.  அம்மா தான் ஏதோ தார்பாய் போட்டு மூடி வெளியே கெடக்கு வந்து பாரு னு சொன்னாங்க நான் போய் பார்த்தேன் சார். என  கதறி அழுதான். தென்ன  ஓலய விரிச்சி மேல பாடிய  வச்சு அது மேல தார்பாய் போட்டு மூடியிருக்கு சார்,  பாடி ப்ரெஸ்ஸாயிருக்கு   ரெண்டு மூணு மணிக்கு தான் இங்கே கொண்டு வந்திருக்கணும். அதே மாதிரி பாடில சென்ட் வாசனை அடிக்குது கண்ணுல மை தீட்டி இருக்கு உடம்பு மேல மஞ்சள்  தூவியிருக்காங்க பாரன்சிய வர சொல்லு ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பார்ப்போம் . சரிங்க, சார்.  என்றைக்கும்  இல்லாது 2,3 வாகனங்கள் அணிவகுத்து கந்தப்புரத்திற்குள் நுழைந்தன. ஒன்றிலிருந்து போலீஸ் நாய் தரையை மோந்தவாறு இழுத்துக் கொண்டு வெளியே குதித்தது. மற்றொன்றில்  தடயவியல் துறையினர் தங்கள் சூட்கேசுடன் இறங்கி நடந்தனர். மூன்றாவது வாகனத்தில் மைக்கும் கேமிராவுமாக பத்திரிக்கை துறை  இன்ஸ் முன் கேள்விகளை தொடுத்தது. சார், இளம் கல்லூரி மாணவி  மர்மமாக கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்காங்க இதுக்கு நீங்க என்ன  நடவடிக்கை  எடுக்க போறீங்க, நாலு நாளா இந்த கேஸ் தான்   தீவிரமா போயிட்டு இருக்கு  தேடிட்டிருக்கோம்   சீக்கிரமா குற்றவாளியை கண்டுபிடிச்சிடுவோம். இது காதலால் நடந்த கொலையா?? விசாரிச்சா தான  தெரியும். இப்போதைக்கு தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ் என இன்ஸ்பெக்டர் வண்டியில் ஏறி கிளம்பினார். தடயவியல், மோப்ப நாயின் வேலைகள் முடிய  சாருவின் பிணம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது பிரேத பரிசோதனைகள் துவங்கின .   சேகர் சோகத்தோடு உள்ளே நுழைந்தார் . இன்ஸின் கையில் சிகரெட்     சாம்பல்  விழக் காத்து  நிற்க மேசை மீதிருந்த கிண்ணத்தில் லேசாக தட்டியதில் மணலாய்  உதிர்ந்தது . சொல்லுங்க சேகர்,   அந்த மோப்ப நாய்  வாய்க்கால் ஓரத்துலயே  கொஞ்சதூரம் போயி நின்னுரிச்சு அங்க பார்த்தா இந்த சென்ட் டப்பா மூடி தான் கிடைச்சது. பாரன்ஸிலிருந்து உங்களுக்கு போன் பண்றேன்னு சொல்லியிருக்காங்க..  இன்ஸின் அலைபேசி ஒலித்தது சார் சொல்லுங்க, சார்.  சம்பவ இடத்தில எங்கயுமே கைரேகைகள் இல்ல  ஒரே ஒரு எவிடென்ஸ் மட்டும் கிடைச்சிருக்கு ஒரு பத்து சைஸ்   கால்தடம்  பந்தல் பக்கத்துல தார்ப்பாய் எடுக்கும்போது அது பதிஞ்சிருக்கு வெளியில மழை பெஞ்சாதால வேற எதுவும் கிடைக்கல  ஓகே. சார், ரொம்ப தேங்க்ஸ் அத எனக்கு அனுப்பி வைங்க.   அந்த ப்ரேம்க்கு ஷீ சைஸ் என்ன இருக்கும் அவனோட  உயரத்த  வச்சு பார்த்தா   எட்டு இருக்கும்.  சரி , மாரிமுத்து,கார்த்தி ரெண்டு பேரையும் சீக்கிரமா வரச்சொல்லுங்க  தனித்தனியா விசாரீங்க.. அப்புறம் அந்த பொண்ணு சொன்னாலே சங்கர்   அவனையும் விசாரீங்க.  சரிங்க சார், சார், ஒரு பிரச்சன என்றவாரே உள்ளே நுழைந்தார்.  பாரூக் குற்றவாளிய கண்டுபிடிக்காம பாடிய வாங்கமாட்டோம்னு அவங்க சாதிகாரங்க  ஒண்ணு சேர்ந்து போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க  . உயிரோடு இருந்தா ஒரு பய எட்டிக்கூட பார்க்க மாட்டாங்க,    இந்த மாதிரி சின்ன சந்தர்ப்பம் கிடைச்சா போதும் தன் சாதி பவர விளம்பரம் பண்ண வந்துருவானுக பிணந்திண்ணிப்பயக.    கணேஷ் அங்க தானே இருக்காப்ல.   ஆமா சார், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கியாச்சானு கேளு? வண்டி மெயின் ரோட்டில் இறங்கி மார்கெட்டை கடந்து பயணித்தது . TSS பேருந்து பாட்டொலியில்  பயணிகளை ஈர்க்க காத்திருந்தது.  பாரூக், அந்த டிரைவர கூப்பிடு நடுரோட்டில் நிற்கரதில்லாம பாரு   கச்சேரி நடத்தரான்.   யோவ் டிரைவர் வண்டிய எடுக்கரயா? நான் எடுத்துட்டு போகட்டா. சாரி ,  சார் இப்ப எடுத்திடறேன்   சார். செட்ட ஆஃப் பண்ணு மொதல்ல.  மருத்துவமனைக்குள்  நுழைந்ததும் இன்ஸ் டாக்டர் அறையை நோக்கி  விறைப்பாக நடந்தார் சேகரும், கணேசனும் போராட்டத்தில் ஈடுபடுவோரை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர்.  உள்ள வர்லாமா டாக்டர்.     வாங்க இன்ஸ்பெக்டர். குட் ஈவினிங், குட் ஈவினிங் சார். அந்த போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்,  இதோ இருக்கு சார்.  டாக்டர், கைரேகை தடையம் ஏதாவது கெடச்சுதா?  சாரி,  சார்  எதுவும் கிடைக்கல.  இந்தப் பொண்ணு கற்பழிக்கப்பட்டிருக்கிறாளா? உடலுறவு வச்சதுக்கான அறிகுறிகள் இருக்கு,   ஆனால் வல்லுறவு படுத்தப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. அந்த பொண்ணு விருப்பத்தோட தான் உடலுறவு வச்சுருக்கணும். ஆண்கள் நீண்ட நேர உடல் உறவுக்காக பயன்படுத்தும்  மாத்திரைகள  சாப்பிட்டதால   ரத்த அழுத்தம் ஏற்பட்டு இறந்திருக்கா.  அப்ப கண்டிப்பா அந்த ஆணோட உடல் ரீதியான ஏதாவது ஒரு தடயம் அந்த பொண்ணுகிட்ட இருக்கணுமே,  இருந்திருக்கணும் ஆனா அந்த குற்றவாளி கைதேர்ந்த மருத்துவன் போல அவ்வளவு  துல்லியமா  பாடிய சுத்தம் பண்ணியிருக்கான். மர்ம ஸ்தானங்கள், கண், மூக்கு உள்ளிட்டவற்றையும் நவ துவாரங்களையும்  கிருமிநாசினியால சுத்தம் பண்ணி அதுக்கு மேல  மஞ்சள்  பூசியிருக்கான். . பொதுவா ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு வச்சிகிட்டா  பெண்ணோட உடல்ல மூன்று மாதவிடாய் வரைக்கும் ஆணோட மரபணுக்கள் அருக்கும்  ஆனால்  இந்த பாடில இல்ல.   அவ்வளவு புத்திசாலித்தனமா நடந்திருக்கான்.   எனக்கு இதுல ஒரேயொரு சந்தேகம் தான் இன்ஸ்பெக்டர். சொல்லுங்க, டாக்டர். உடல  மூன்றுதுணியால மறைத்து  கழுத்திலிருந்து தொப்புள் வரை  தொப்புளிலிருந்து கால்வரை அப்புறமா முகத்தை மறைக்க தனியா ஒரு துணி அப்புறமா ஹாஸ்பிடல்ல பேக் பண்ற மாதிரி முழுசா ஒரு துணியால் கட்டி அதுக்கு மேல சென்ட்  தெளிச்சிருக்கான்  . கண்களில் மையிட்டு இருக்கு  மர்மஸ்தானம் அக்குள் முடிகள்  சிரைக்கப்பட்டிருக்கு   இதை பார்த்தாலே ஏதோ சடங்கு மாதிரி இருக்கு.  எனக்கும் அப்படித்தான் தோனுது,  டாக்டர்.  உங்களுக்கு ஒரு சின்ன தடையம் மட்டும் என்னால  கொடுக்க முடிஞ்சது இந்தாங்க  இந்த துணியில இருக்க வாசனை கரை இதுதான் இது மட்டும்தான் இப்போதைக்கு என்னால தர முடிந்தது.   ஓகே, டாக்டர் தேங்க்யூ எனக்கிளம்பினார். இன்ஸ்பெக்டர்.  சேகர், கணேஷின் பேச்சுவார்த்தை ஓரளவு பயனைத் தந்த போதிலும்  அவர்கள்  பின்வாங்குவதாக இல்லை. இன்ஸ்பெக்டர் கூட்டத்தின்  உள்ளே வந்து பேசத் தொடங்கினார். இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க சீக்கிரமா யாருன்னு கண்டுபிடிச்சடலாம்  இப்போதைக்கு ஆக வேண்டிய வேலைய பாருங்க.  இப்படியே  சொல்லிச் சொல்லி தானே  பல கேஸ்  குவிஞ்சு கிடக்கு நீங்களும் சமாதானம் சொல்லிட்டு அடுத்த வேலையப் பார்க்கப் போய்டுவீங்க. எங்களுக்கு நியாயம் கிடைக்காம வீட்டுக்கு போக மாட்டோம்.  உங்களோட ஆத்திரம் புரியுது ஆனா அவங்க குடும்பத்தோட மனநிலய புரிஞ்சுக்கங்க அவங்க அம்மா முகத்தைப் பாருங்க   சின்ன பொண்ண இழந்துட்டு எவ்வளவு வேதனையில இருக்காங்க.   தயவுசெய்து அடுத்த வேலைய போய் பாருங்க. எங்களுக்கு தொந்தரவு தராமல் உதவி செய்யுங்க ப்ளீஸ். என தனது காக்கித் தந்திரத்தை பயன்படுத்தினார் அவரின் பேச்சும் வெற்றி பெற்றது. சரி, என்றவாறு  கூட்டம் கலைய சாருவின் உடல் ஆம்புலன்சில் ஏறியது. மாலை 5 மணி இறுதிச்சடங்கு பாதுகாப்புக்கு யார் யார் போயிருக்கா??  கணேசன், கோபு  சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு பேண்ட் பாக்கெட்டில் லைட்டரை தேடினார்.  இன்ஸ்பெக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லயே .  இல்ல சார்,  அந்த மாரிமுத்து ,கார்த்தி ரெண்டு பேரும் வந்தாங்களா?  சார், கார்த்தி இங்கதா இருக்காமாரிமுத்து  நம்பர் சுவிட்ச் ஆப்னு வருது.  சம்திங் ராங் கோபுவ அவன் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரச்சொல்லு   சரிங்க சார்,   கந்தபுரத்தை விட்டு வெளியேறியது  சாருவின் ப்ரேதம் அவள் ஆடிப்பாடி சுற்றித் திரிந்த நிலம் அவளின் தொடுதலை  இழந்து ஈரம் கசிந்திருந்தது அக்கம்பக்கத்தினர்  அனைவரும் சோகம் வழிய பாலத்தின் இக் கரையில் நின்று வழியனுப்ப மெயின்ரோட்டை தொட்டு நெருங்கிய ஊர்லம் கண்டு  தூரத்தில் வந்த டி. எஸ். எஸ். பேருந்து அங்கேயே மரியாதை நிமித்தமாக நின்றுகொண்டது. ஆம்புலன்சில் பின்னாலேயே  ஏழெட்டு பைக்குகளும் இரண்டு கார்களும் அணிவகுத்தன அவள் அடிக்கடி நடக்கும் பாதைகளில் அவள் நினைவாக  மலர்தூவி அவளைத் தாங்கிய பூமிக்கு மரியாதை செய்தவாறே சென்று மறைந்ததுஆம்புலன்சு.   மாரிமுத்து தற்கொலை வீட்ல யாருங்க,  என்ன சார்,  யார் வேணும்.  மாரிமுத்து, எங்கய்யா?    அவன் மத்தியானமே வந்துட்டதா சொன்னான் இன்னும் வீட்டுக்கு வரல போன் சுவிட்ச் ஆப்னு வருது ஏதாவது பிரச்சனைங்களா??   அதெல்லாம் ஒண்ணுமில்ல சின்ன விசாரணைதான்  வந்த உடனே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லு  என்றவாரு சுற்று முற்றும் நோட்டமிட்டுக்கொண்டே  கிளம்பினார் கோபு.   சார், அந்த மாரிமுத்து  மிஸ்ஸிங் சார்  என்னய்யா   சொல்ற அவனோட நம்பர  ட்ரேக் பண்ணயா??   பண்ணியாச்சு சார் பழனி பஸ் ஸ்டாண்ட்லயே  சுவிட்ச் ஆஃப்.  கிழிஞ்சது போ சரி, நீ ஸ்டேசனுக்கு வா.  ஏட்டு ஸ்டேசன பாத்துக்க நான்  காலைல வரேன் என்றபடி தனது ராயல் என்ஃபீல்டில்  கம்பீரமாக கிளம்பினார் இன்ஸ்பெக்டர். சேகர், கோபு  ஏட்டு மூன்று  பேர் மட்டுமே அன்று  காவல் இருக்க மற்றவர்கள்  கண்காணிப்பு வாகனத்தில் ரோந்து  கிளம்பியிருந்தனர். அன்று மூன்று பெண்களை விபரச்சார வழக்கில் கைது பண்ணி இருந்தார்கள் கூடவே அவர்கள் மீது கஞ்சா வழக்கு வேறு. லதாவும் விமலாவும் விடுமுறையில் இருந்ததால் வேறு வழியும் இல்லாமல் ஸ்டேஷனிலேயே உட்கார வைத்திருந்தனர் கோபு காற்றாட வெளியேயுள்ள மேசையில் அமர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார் சேகர்  எப்படியாவது சாருவின் வழக்கை முடிப்பதற்கான தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தார்  ஏட்டின் கண்கள் நடுவில்  அமர்ந்திருந்த மஞ்சள் நிற சேலையே  மேய்ந்து கொண்டிருந்தது. இவனுக ரெண்டு பேரையும் எங்கேயாவது கிளப்பி விட்டுட்டா  நல்ல வேட்டை  ஆனா என்ன பண்றது என யோசித்திருந்த கண நேரத்தில்   வயர்லெஸ் துடித்தது ரயில்வே கேட்டுக்கு முன்னர் ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் இளவயது ஆணின் சடலம் கிடப்பதாக தகவல் வர ரோந்து வாகனம் ஆயக்குடி அருகில் நடந்த விபத்தை விசாரிக்க சென்றதால் கோபுவும் சேகரும்  கிளம்பினர். அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை காத்து நின்ற  ஏட்டய்யா  மஞ்சள் சேலைகாரியை கூப்பிட்டு லாக்கப்புக்குள் மறைந்தார்.  கீழே உட்காருடி…………..   செம கட்டை தான் நீ   சரி எழுந்துரு   அங்கிட்டு  திரும்பு சில வினாடிகளில் ஏட்டு பேண்ட்டை தூக்கியுயர்த்தி சிப்பை இழுத்தவாறு வெளியே வர  இரண்டு பெண்களும் தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தனர். பாத்ரூமுக்குள் போய் விட்டு கையை உதறியபடியே மேசையில் அமர்ந்தார் ஏட்டய்யா   சேலையை சரிசெய்துவிட்டு முடியை ஒதுக்கியபடியே மஞ்சள் சேலைகாரியும் வெளியே வந்தாள் அவள் நடை சற்று வித்தியாசமாகவே இருந்தது.  ஏய்  எங்க போற? சார் பாத்ரூம்    சீக்கிரம் போயிட்டு வா,   உதடைஅழுத்தித்  துடைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் போனாள் மஞ்சள் சேலைக்காரி.  ஹலோ, சொல்லுங்க  ஏட்டையா சார்,  இன்னும் வண்டி வர்லயா  பக்கத்துல வந்துட்டாங்களாம் அவங்க வந்த உடனே கிளம்பி வர்ரோம்.  ஓகே சார்,   ஆள் அடையாளம் தெரிஞ்சதா   ஆக்சிடென்டா? மர்டரா?? ஆக்சிடென்ட் மாதிரிதா  தெரியுது லாரி மேலே ஏறியிருக்கு முக அடையாளம் தெரியல!   சார்,  இங்க ஒரு மொபைல் கெடக்குது    சார்,    ஆதார் கார்டு மாரிமுத்து வயது 23   நாம தேடுன மாரிமுத்து தான் சார்.       சில வண்டிகள் மெதுவாக நின்று அதை  வேடிக்கை பார்த்தன  யோவ் இங்கே என்ன வித்தயா  காட்டுராங்க குழந்தைகளை வச்சிட்டு   இத பாத்துட்டு இருக்க சீக்கிரம் போய்யா,  சார் ,இன்ஸ் தகவல் கொடுக்கலாமா.  வேணா, வேணா இந்த நேரத்துல கூப்டா அந்தாளு காட்டு கத்துகத்துவான்.  கணேஷ், அங்க பாருங்க கேமரா அத  போட்டு பார்த்தால் தெரிஞ்ஞிடும் இது கொலையா விபத்தானு. பேட்ரோ  வந்தாச்சு.  என்ன சார், ஆக்சிடென்ட் டா,    இன்னும் கன்ஃபார்ம் பண்ணல  அந்த கேமராவ செக் பண்ண தெரிஞ்சிடும் அது நம்ம மெயின் ஸ்டேஷன் ல தான் இருக்கு செக் பண்ணிகலாம். சரி, நாங்க ஸ்டேசனுக்கு போறோம்   நீங்க ஆம்புலன்ஸ்ல ஏத்தி விட்டுறுங்க.  வண்டியை நிறுத்திவிட்டு இன்ஸ் உள்ளே நுழைய நீள பென்ஞ்சில்  மூன்று  பெண்களும் அமர்ந்திருந்தனர் காவலர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். பாரூக்,  இது என்ன கேஸ். விபச்சாரம், கஞ்சா.  லதா, கோர்ட்டுக்கு கூட்டிட்டு போங்க  கந்தசாமி, சதீஸ  கூட கூட்டிட்டு போங்க வேற ஏதாவது கேஷ் வந்ததா?   சார், அந்த சாரு கேஷ்   சம்பந்தப்பட்ட மாரிமுத்து ரயில்வே ட்ரேக்லருந்து அரை கி.மீ முன்னாடி செத்து கெடந்தான். அடக்கெரகமெ.  சேகர் உள்ளே வந்தார் நீ வீட்டுக்கு போகலையா   சார், அந்த பாடி கெடச்சதுக்கு  எதிர்ல ஒரு ஏடிஎம் அதுல போய் செக் பண்ணி பார்த்ததுல அவன் நல்லா குடிச்சிட்டு போதைல வேணும்னே உள்ள போய் விழுந்துட்டான். ஆனால் சார் சாரு, கொலைலயும்   இவனோட தற்கொலைலயும் ஒரு லிங்க் இருக்கு. சாரு கொலைல call list  எடுத்த மாதிரி  இதுலயும் எடுத்து பார்த்தேன்.     ரெண்டுலயுமே கஸ்டமர் கேர் நம்பர் மாதிரி ஒரு நம்பர் 15 நிமிஷம் ரிசிவ் ஆகி இருக்கு   ஒரு சின்ன வித்தியாசம் சாருக்கு வந்த கால்ல லாஸ்ட்  நம்பர் 7 மாரிமுத்துக்கு வந்ததுல  லாஸ்ட் நம்பர் 8  நம்பரை ட்ராக் பண்ண முடிஞ்சதா?     எவனாவது இந்த fack call app ல பேசி  ப்ளாக் மெயில் பண்ணிருப்பானுகளோ   இருக்கலாம், சார். ஆனால் அந்த  நம்பர சாதாரணமா ட்ரேக்  பண்ண முடியல.  இன்னைக்கு பூராமே  படிச்சவன்தானயா பெரிய பெரிய மொள்ளமாரித்தனம், கொலை, கொள்ளை, கற்பழிப்புனு   பண்றானுங்க. சைபர் கிரைம் லசொல்லி தேடுவோம். சேகர் உனக்கு புரோமோஷன் கன்பார்ம், சார், இன்னும் கண்டு பிடிக்கவே இல்லை  கண்டுபிடிச்சிடலாம்.   சரி,   அந்த நம்பர எனக்கு அனுப்பி வை.  சாருவின் மரணம் அந்தப் பகுதியை வெகுவாக பாதித்திருந்தது. அமானுஷ்ய கதைகள் பலவும் கட்டமைக்கப்பட்டு உலாவிக் கொண்டிருந்தன. முனி, மோகினி, ஆவி என பலவாறாக பேசிக்கொண்டனர் இருளும் காற்றும் மழையும் அவர்களுக்குள் அச்சத்தை ஊடுருவியது நிழலைக் கண்டும் நடுங்கிப் போயிருந்தது கந்தபுரம். கந்தபுரத்துக்கு வெளியேயும் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ரயில்வே ட்ரேக் நிறுத்தம் பழனி நகரில் சுவரொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் சாருவின் புன்னகைக்கும் படம் கண்ணீர் அஞ்சலி தலைப்போடு ஒட்டப்பட்டிருந்தது அதைக்கண்ட அவருக்குத் தெரிந்த அவளால் தெரிந்த பேருந்து ஓட்டுநர் முதலாக பள்ளியில் ஏதோ ஒரு நாள் சினேகிதி வரையாக உச்சுக்கொட்டி கடந்து சென்றனர்.   சிலர் அவள் வீட்டிற்கு வந்தும் துக்கம் விசாரித்துச் சென்றன.ர் சங்கருக்கும் வாட்ஸ்அப் வழியாக இந்த தகவல் கிடைத்திருந்தது தலையணை வழியே தன் கண்ணீரை வழியவிட்டு தனக்குத்தானே ஆற்றுப்படுத்தி கொண்டிருந்தான். இருக்காதா பின்னே அவனும் ஒரு வழியாக காதலித்துக்கொண்டிருந்தவன் தானே அதேசமயம் போலீஸைப்  பற்றிய  பயமும்  அவனுக்குள் இருந்தது. துருப்புச்  சீட்டு சாரு  இறந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையில் அவளது சிரித்த புகைப்படங்களை மாடுகள்  தின்று செறித்திருந்தன.    சிறுவர்களாலும் இளைஞர்களாலும் சில கிறுக்கப்பட்டும், கிழிக்கப்பட்டும் இருந்தன. . ரயில்வே கேட்  பஸ் நிறுத்த்திலிருந்த சுவரொட்டியைப்  பார்த்ததும்   குமாருக்கு நெருப்பைப் பற்ற வைத்தது போன்று நடுக்கமெடுத்தது .  காற்றின் வேகத்தில் வழிந்து தெரித்த கண்ணீர் பார்வையை மறைத்தது.  இதைத்தான் “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்”  என்றாரோ வள்ளுவர் கண்களைத் துடைத்துக் கொண்டே பயணித்தான் காற்றின் மோதலை விடவும் மனதின் வலியால் கண்ணீர் பொங்கி வழிய இடது புறங்கையால் கண்களை துடைத்துக்கொண்டே தொடர்ந்தான் . எதிரில் ஒரு இளைஞன் சோடாபுட்டி கண்ணாடியோடு  RX 100 பைக்கில் வந்து கொண்டிருந்தான். பால் வேனை முந்திக்கொள்ள நேராக டேக் செய்தான்  அவனது அதிவேகமும் சாருவின் நிறுத்தத்தை உணர்ந்ததுமாக  கியரை போடாமலேயே க்ளச்சை  சொடுக்க அவனை தூக்கி வீசியது மோட்டார் வாகனம்.  பஸ்ஸிலிருந்த  இளைஞர்கள் அனைவருமே தடதடவென வெளியே குதித்து குனிந்து பார்த்தனர். ஒருவர் ஆம்புலன்சுக்கு விஷயத்தைச் சொல்ல தனது மொபைலை தடவிக் கொண்டிருந்தார் . கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் சென்று சேர்ந்தது.  டி .எஸ். எஸ்ஸின் பேருந்து ஓட்டுனருக்கு நெற்றி வியர்த்திருந்தது கண்டக்டர் ஓனருக்கு போனடிக்க எரிச்சலோடு அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார் . கணேஷ் தனது மொபைலில் மும்முரமாக ரம்மி ஆடிக்கொண்டிருந்தார். . சேகர் பரபரப்போடு வெளியே வந்தார். கணேஷ், சார், சொல்லுங்க. அந்த முருகன் மில்ஸ்கிட்ட ஒரு ஆக்சிடெண்ட் என்னன்னு போய் பார்த்துட்டு  வரலாம் வாங்க.   சேகரும், கணேஷும்  விபத்து நடந்த இடத்தை அடைய சரியாக ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. போக்குவரத்தை சரி செய்ய அரை மணி நேரம் பிடித்தது  . இந்த ஏரியா  ல நடந்த கொல கேஸு பெண்டிங்லயே இருக்குல கணேஷ் ஆமா, சார் இன்ஸ்பெக்டர்  ட்ரான்ஸ்பர்  ஆனதுக்கு அப்புறம் அந்த கேஸ அப்படியே போட்டாச்சு வழக்கமா நடக்கிறதுதான், சார். ஆனால் இந்த கேஸ்ல ஏதோ மர்மம்   இருக்கு.  வீட்டுக்குப் போய் ஒரு விசாரணைய போடலாமா?  வேண்டாம் கணேஷ்  இப்பத்தான் கொஞ்சமாவது மறந்திருப்பாங்க  மீண்டும் போய்  நாம ஏன் பலச  நியாபகப்படுத்தனும்    இனி  வர இன்ஸ்பெகடர் அதுக்கு சப்போர்ட் பன்னுனா   அத ஓப்பன் பண்ணுவோம்.  சரி, வாங்க  இப்ப  கிளம்புவோம். என காரின் கதவை  சாத்த ஒரு பேருந்து டிக்கெட் பறந்து வந்து கண்ணாடியில் ஒட்டியது  அது TSS  பேருந்தின் பயணச்சீட்டு அதன் பின்னால் ஒரு மொபைல் நம்பரும், பெயரும் இருக்க சட்டென சேகருக்கு ஒரு நினைவு பளிச்சிட்டது . கணேஸ் வண்டிய கந்தபுரத்துக்குள்ள  விடுங்க  ஓகே, சார். சாருவின் அம்மாவும், பிரேமும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். மஞ்சள்  டெம்போ ஒன்று பீரோ ,பாத்திர பண்டங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு  புகையை கக்கியபடி காத்திருந்தது.  சார், வாங்க  ம்ம்    எங்கப்பா கிளம்பிட்டீங்க டவுன்ல  ஒரு வீடு பார்த்திருக்கோம் கொஞ்ச நாள் அங்க  இருக்கலாம் னு கிளம்பிட்டோம். சரி,அன்னைக்கு நான் வந்து  செக் பண்றப்போ    டிக்ஸ்னரிக்குள்ள டிக்கெட்  ஒன்ன பார்த்தேன் அது இப்ப எனக்கு வேணும். அவளோட புக் எல்லாம் கட்டி பரண் மேல தான் போட்டிருக்கு  . சரி,  வீட்ட திறங்க  என்றார் சேகர். பரண் மேல் இருந்து இறக்கப்பட்ட சாமான்களுக்குள் இருந்து இறங்கிய டிக்ஸனரியில் பல  பக்கங்களுக்கு இடையே அந்த  பயணச்சீட்டு ஒளிந்திருந்தது.. இங்க பாருங்க கணேஷ் .இதுவும் அத கொடுங்க  ரெண்டுமே  ஒரே ஐடியாலஜி. சின்ன பசங்க நம்பர் சேஞ்ச் பண்ண இப்படித் தான் செய்வாங்க,   சார். சின்ன தடையம்தா நமக்கு  பெரிய வழி. சரி,  ப்ரேம்  நீங்க உங்க புது அட்ரஸ கொடுத்துட்டு போங்க ஏதாவது விசாரணைனா நாங்க வருவோம். சரிங்க சார். அப்புறம், ப்ரேம் ஒரு நிமிசம் என  டெம்போவின் மறுபக்கத்திற்கு அழைத்துச் சென்றார் சேகர் ..   ப்ரேம்  சு.அமைச்சர் உங்களுக்கு என்ன ஆகுது.  சு.அமைச்சரோட  பி.ஏ எங்க மாமா பையன் தான் சார், ஆரம்பத்துல  இந்த  கேஷ்க்கு  ரொம்ப பிரஷர் கொடுத்தாங்க அப்புறமா   எந்த ரியாக்ஸனும் வரல அதான் கேட்டேன் . அவளே செத்ததுக்கு அப்புறம்  யார்னு தெரிஞ்சு என்ன பண்ணப்போறோம்னு அம்மாதா அத அப்படியே விட்டுட சொன்னாங்க . ஓஓ   சரி,  அவர் நம்பர் தரீங்களா  ம்ம்  இந்தாங்க, சார்.  இந்த ரெண்டு  டிக்கெட்டுமே     டி .எஸ். எஸ் பஸ்ஸோடதுதா    அந்த ஆபீஸ்ல போய் விசாரிச்சா லே  எந்த மாசம் வருசம்   நாளக் கூட     கண்டுபுடிச்சிடலாம்  இந்த போன் நம்பரையும் காண்டக்ட் பண்ணி பார்ப்போம்…  சரிங்க, சார்  சேகர் சார்,   சைபர் கிரைம் ல இந்த நம்பரை கொடுத்து விசாரிச்சேன். இப்ப இந்த நம்பர் ஆக்டிவேட்லயே  இல்லை ஆனால் இதை  முன்னாடி  பயன்படுத்தினவன் பேரு, சல்மான் ஹக். ஊருமடத்துக்குளம்.  சூப்பர்  இதோட கேஸ் முடிஞ்சது . சாரு  ஆயிஷா அவன் பேரு ஷல்மான் ஹக்   அந்த லெட்டர்ல எல்லாம் என்ன எழுதியிருந்தது. ஆயிஷா ஹக் அதாவது  சாருவுக்கு அவன் வச்ச முஸ்லீம் பேரு மடத்துக்குளம்  ஸ்டேசன்ல சொல்லி அவனைத் தூக்குங்க என கைகளை நீட்டி பத்து விரல்களையும் சேர்த்து முறுவலோடு  நெட்டியெடுத்தார் சேகர் . மணி எட்டைத் தொட்டிருந்தது மிதமான பனி  ரோந்து வாகனத்தின்  முன்பக்கம் சாய்ந்து சிகரெட்டை  இழுத்தப் புகைத்துக் கொண்டிருந்தார் சேகர் . ஏட்டய்யாவும் ,கணேசும்  சாலையில் நின்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காற்று மிக ரம்மியமாய் வீசியதில் சாலையோர இலைகளெல்லாம் அசைந்தாடி ஓவியமாய்  காட்சிதர அதற்கு அழகு தெளிக்கும் வெளிச்சமாக வாகன முகப்புகள் பளிச்சிட்டன. சேகரின் அலைபேசி சினுங்க பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார். ஆக்ரோசமான மிருகத்தைப் போல சீறிப்பாய்ந்தபடி லாரியொன்று  வந்துகொண்டிருந்தது     மொபைல் போனை தூக்கி எறிந்ததில் அது சில்லாய் தெறித்துச் சிதறி மின்னியது.   இரையைக் கண்ட வேட்டைக்காரனாக  சேகர்,   அதன் முன்னே குதித்து நின்று கத்தினார். சர்ரென டயரை தேய்த்தபடி  லாரி பிரேக் அடிக்க பின்னால் வந்த   சீட் வேன் ஒன்று  லாரியின் பின்பக்கத்தில் மோதியதில்  பொலபொலவென  அதன் முன்பக்க   கண்ணாடி  உதிர்ந்தது. ஏட்டய்யாவும் ,கணேசும்  வேகமாக ஓடிவந்து சேகரை இழுத்துப் பிடித்தனர். என் மேல ஏத்துறா வண்டிய  ஏன்டா நிறுத்தன ஏத்துடா    என்றவாறு கத்திக் கூச்சலிட்டு   முரண்டுபிடிக்க  சாலையே ஸ்தம்பித்தது. என்ன செய்வதென்றே புரியாமல் ஆம்புலன்சை வரவழைத்து அவரை அழைத்துச்செல்ல அதிலிருந்தும் கீழே குதிக்க முயற்சி செய்ததில் கடைசியாக  குளோரோஃபார்ம்  அவரை  மயக்கியது. ஏட்டய்யா மருத்துவரோடு  பேசிக் கொண்டிருக்க கோபுவும், கணேஷும் அவரோடு  இணைந்து கொண்டனர். ரொம்ப டிப்ரஷன் ஸ்ட்ரெஸ் அதனால்தான் இப்படி பண்ணிருக்காரு வேற எதுவும் இல்ல.  ஆமா சார், அந்த  சாரு கொலையை துறுவித் துறுவி ஆராஞ்சிட்டிருந்தாரு  டாக்டர் ,   இந்த   கேஸ  முடிச்சிட்டா  அவருக்கு கண்டிப்பா புரோமோஷன் கிடைச்சிடும்  இன்ஸ்பெக்டர்   ஆகிடுவாரு அதனால   சரிங்க சார், ஒன்னும் பிரச்சனை இல்ல அவரு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் கூட்டிட்டு போங்க ஒன்னும் பிரச்சனை இல்லை . ஆனா ,ரொம்ப ஜாக்கிரதையா  பாத்துகங்க கணேஷ் ,   மடத்துக்குளம் ஸ்டேஷனிலிருந்து கூப்பிட்டாங்க அந்த  ஷல்மான் ஹக் அவன போய் இழுத்துட்டு வாங்க  சரிங்க  ஏட்டய்யா, என  கிளம்பினார் கோபுவும்,கனேஷும்.  சேகர்  ப்ரஸ்ஸாக எதுவும் நடக்காதது  போல   ஸ்டேஷனுக்குள்   நுழைய எல்லோரும் அவரிடம் ஒரு வித கரிசனத்தோடே நடந்து கொண்டனர். என்ன சார்,  வீட்டுல ரெண்டு நாள்  நல்லா ரெஸ்ட் எடுக்க வேண்டியதானே  அதுக்குள்ள  வந்துடீங்களே !   எங்க சார்,             நமக்கென்ன  பொண்டாட்டியா குட்டியா  நமக்கு  எல்லாமே இந்த வேலைதான்       ஏட்டய்யா   அந்த ஷல்மான் ஹக்க இழுத்துட்டு வந்தாச்சா  இப்ப தான் கணேஷூம்,  கோபுவும் போயிருக்காங்க.  லாக்கப்பில் ஒரே ஒரு விளக்கு மட்டுமே  இருந்தது.  காற்றின்   லேசான அசைவில்  மேலும் கீழும் ஆடியவாறு  எரிந்துகொண்டிருந்தது . சேகர் சல்மானின் கண்களில்  பயத்தை வடியவிட   லத்தியின்  முனையைத் தடவியவாறே மெல்ல பேச்சுக் கொடுத்தார். உங்கபேரென்ன?   ஷல்மான் ஹக். எங்க படிக்கிறீங்க ? படிக்கல சார்  இங்க பக்கத்துல ஒரு மில்லுல சூப்பர்வைசரா வேலை பார்க்கிறேன். என்ன படிச்சிருக்கீங்க?  பிஎஸ்.சி இ கம்ப்யூட்டர் சயின்ஸ்   கவர்மெண்ட் காலேஜ் உனக்கு  சாருவ  தெரியுமா?  தெரியும் சார்,   சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பொண்ணு   அந்த பொண்ணோட   உனக்கு நீண்ட நாள் பழக்கமாமே  ஷல்மான் எச்சில் விழுங்கினான். சார், நீங்க எங்க சுத்தி எங்க வரீங்கனு தெரியுது . மடத்துக்குளம் இன்ஸ்பெக்டரோட வேலை தானே என் மேல இருக்க பகையில  பொய் கேஷா   வெளிய தெரிஞ்சது பழனி  பைபாஸ் ஸ்தம்பிச்சிடும்  துலுக்கனுங்களா இழிச்சவாயங்களாயென்ன என்று கத்திப் பேசிக்கொண்டிருக்க …. உள்ளே வந்த   பாரூக் அவன் கன்னத்தில் பளாரென்று விட  சற்றும் எதிர்பார்க்காத  ஷல்மான்  நாற்காலியோடு  கீழே  சரிந்தான்.  ஏண்டா இருக்கர   மொல்லமாரிதனம், முடிச்சவிக்கிதனமெல்லாம் பண்ணிட்டு       மதத்து  பின்னால  போய் ஒளிஞ்சிக்கரது   நாலு பேர கூட்டி  போராட்டம் ,ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு   நல்ல புள்ளையா வெளியில காட்டிகிறது நாய்களா உண்மையை ஒத்துக்கல உடம்புல  உயிரைத் தவிர எதுவும் இருக்காது. சுதாரித்துக் கொண்டு எழுந்த சல்மான் நாற்காலியில் அமர்ந்து கொண்டு  பாருக்கையே முறைத்தான். சார் , விசாரணைனு  கூப்பிட்டு வந்துட்டு அடிக்கிறீங்க ஆமா எங்க வீட்டுக்கு  இன்பார்ம்  பண்ணீங்களா. சட்டப்படி நீங்க என்ன கடத்திட்டு வந்திருக்கீங்க என்ன விசாரிக்க பெர்மிஷன்  வச்சிருக்கீங்களா.  பெரிய மயிறு இவரு   சேகர் பிடரியில் ஓங்கி குத்தினார் தொப்பென  கீழே விழுந்த சல்மானுக்கு   எதுவும் புரியவில்லை   பரதேசி   சாருவோட  வீட்டுல  ஆயிஷா  ஹக்னு எழுதின லெட்டர்ஸ் இருக்கு அதோட கொலை நடந்த இடத்துல ஒரு அத்தர் பாட்டில் மூடி கிடைச்சிருக்கு இதோ இந்த நம்பர் உன்னோடதுதான ?  அந்த பாடி ஒரு முஸ்லிம் பிணத்தை அடக்கம் பண்ற மாதிரி அத்தனை சடங்குகளும் பண்ணப்பட்டு இருக்கு அது மட்டும் இல்ல இந்த நம்பர் உன்னோடது  தானே? கண்களில் நீர் தழும்ப சேகரயே மேல் நோக்கி பார்த்தான்  பின் கைகளை ஊன்றி   சுவரோரம் சாய்ந்து அமர்ந்தான் .  அந்த லெட்டர்ஸ் அந்த  நம்பர் என்னோடது தான் ஆனால் அந்த கொலையை நான் பண்ணல. சேகர், எரிச்சலில்  அவன் முகத்தை நோக்கி காலை எத்தனிக்க   வெளியே  ஒரே கூச்சலும் சத்தமும் கிளம்பியது.   எங்க சார் ,எங்க பையன் விசாரணைனு சொன்னீங்க  சட்டப்படி வீட்டுக்கு தகவல் கொடுத்தீங்களா??   என்ன பிரச்சனை என்றவாறே லாக்கப்பில் இருந்து கையை தேய்த்தவாறு  வெளியே  வந்தார்  சேகர். ஷல்மானோட ரிலேஸன்ஸ். நீங்கதா எஸ்.ஐ. யா எங்க சார் ,எங்க பையன். ஷல்மான் லாக்கப்பின் கம்பியை பிடித்துக் கொண்டு நின்றான்.  பாய் விசாரணைனு கூட்டு வந்து அடிக்கராங்க பொய் கேஷ் போட பாக்கராங்க. கோபு, அவன உள்ள இழுத்துட்டு போங்க  சார், என்ன சார் ஒரு அப்பாவி பையன  இப்படி பண்ணிட்டு இருக்கீங்க இதுக்கெல்லாம் உங்களை சும்மா விட மாட்டோம்.   அவன் பாவியா அப்பாவியானு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க. ஓஓ அப்படியா. அந்த வெள்ளை சட்டை கரை வேட்டிக்காரர்  வேகமாக நடந்து கொண்டே பலருக்கும் போன் செய்து கொண்டிருந்தார்.  ஒன்றிரண்டாக கூடிய கூட்டம் நூற்றுக்கணக்கில் திரண்டது கோசமும் கூச்சலுமாக அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டது ஊடகங்கள் வந்திறங்கின. சேகர் விழிபிதுங்கி நின்றார் . என்ன சார்  இது.    நாம ஒண்ணு நினைச்சா இப்படி நடக்குது.  இங்க ஒவ்வொரு தனிமனிதனுக்குப் பின்னாடியும்  ஒரு பெரிய கூட்டம் இருக்கு சார். சேகர் சார் , எம்எல்ஏ ஆபிசிலிருந்து போன்.  சார், இல்லை சார்,  அப்படிலாம் இல்ல சார்   விசாரிக்தான் கூப்ட்டு வந்தேன்  ஓகே சார்,  மண்டையை சொரிந்து கொண்டே சேகர் அங்கும் இங்கும் உலாவினார் அவன் மேல கைய வச்சதுக்கு  எம்எல்ஏ  திட்றான்.  இந்த மாதிரி ஸோர்ஸ பயன்படுத்தித் தான்  தப்பு மேல  தப்பு பண்றாங்க என்றபடி  பாருக் முணுமுணுத்தார்.  ஏட்டய்யா  மலர்ந்த முகத்தோடு உள்ளே நுழைய வாசலில் சேகரை  முறைத்தபடி அந்த வெள்ளைச் சட்டை க்காரரும் கூடவே இன்னொரு வரும் நின்றிருந்தனர். சார்,    எல்லாம் சொல்லி சமாதானப்படுத்திட்டேன் காலையிலக்குள்ள விசாரணை பண்ணி அனுப்பிடுவோம். சின்ன காயம் கூட படாதுனு சொல்லி இருக்கேன் ஒரு வழியா சரின்னு சொல்லி இருக்காங்க  ஆனா அவங்க வக்கீல் முன்னாடி தான் விசாரிக்கணுமாம். சரி,  வந்து தொலைய சொல்லுங்க. மூன்று நாற்காலிகள் முக்கோண வடிவில் போடப்பட்டன .  அதில் ஒன்றில் சேகர் அமர்ந்தார். எதிரே சல்மானும் பக்கவாட்டில் வக்கீலும் அமர்ந்திருக்க  விசாரணையை பாருக் எழுதிக் கொண்டிருந்தார்.  இந்த கொலைக்கும் உனக்கும் எந்த   சம்பந்தம் இல்லைன்னு சொல்ற சாரு வீட்ல   ஆயிஷா ஹக்னு  எழுதின லெட்டர்ஸ்,  உன்னோட நம்பர் எப்படி  வந்தச்சு ? அது வந்து, சார். நான்  ஆயிஷானு ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருந்தேன். அதற்கு சாரு அப்பப்ப உதவியா  இருந்தா அவ்வளவு தா.  அப்ப சாருவ உனக்கு தெரியும்  தெரியும். நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ அந்த பொண்ணு பிளஸ் டூ படிச்சிட்டிருந்தது.  நீ சொல்ரதுது உண்மைதானா  சத்தியமான உண்மை இப்பவே ஆயிஷாவுக்கு கூட போன் பண்ணி தரேன்.  இப்ப  ஆயிஷா எங்க இருக்காங்க???   ஆயக்குடி, பாரூக்  ஷல்மானோட  போனை எடுங்க   சரி, இந்த லெட்டர்ஸ் எப்படி சாரு  வீட்டில இருக்கு இது ஆயிஷாட தானே இருக்கணும்.  ஆமாம், ஆனா இது எப்படி அவகிட்ட போச்சுனு  எனக்கு தெரியல. நீ காலேஜ் போயிட்டு இருந்தப்ப வேற யாராவத அந்த பொண்ணு லவ் பண்ணுச்சா?  வேற……………..  சார், அதான் இவன் கொலை பண்ணலனு  கன்ஃபார்ம் ஆயிடுச்சுல.   என்ன சார் , ஒரு நிமிஷம் இருங்க வக்கீல்   நீங்களே இப்படி பேசினா எப்படி எங்களுக்கு ஏதாவது துப்பு கிடைச்சா தானே அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். ஐயம் கண்ணன்      சார், எனக்கு தெரிஞ்சு கண்ணனு ஒரு பையன் அப்ப அவன் எங்க காலேஜ்ல தான் படிச்சிட்டிருந்தான் மடத்துக்குளத்தில தா ரூம் எடுத்து தங்கியிருந்தான் அவனும் அந்த பொண்ணும் கண்ணுலயே காதல்  பண்ணிட்டு இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சு பேசிக் கிட்டதில்ல. என்ன படிச்சிட்டிருந்தான் ?? பி.ஏ  இங்கிலீஷ்.   அவனோட  நம்பர் அட்ரஸ் ஏதாவது  இருக்கா.  இல்ல சார்,  காண்டாக்ட் ல இல்ல  சரி சரி    ரொம்ப தேங்க்ஸ்,    சாரி,  பரவால்ல ,சார் ஆனா இனிமேலாவது இப்படி நடக்காம சரியா விசாரிங்க என்றவாறு  வக்கீலும் ஷல்மானும்  எழுந்து வெளியேறினர்.   என்ன இந்த கேஷ் ஜவ்வா இழுத்திட்டே போகுது ச்சை கோபு காலைல காலேஜ்க்கு போய்  அந்த கண்ணனோட  அட்ரஸ் வாங்குங்க. ஆனா அவன் மேல….. சரி, விசாரிப்போம். எனபெருமூச்செறிந்தார்.  கோபுவும்,  ஏட்டய்யாவும் கல்லூரியின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தனர். அப்போது ஒரு  இளைஞன் சிகரெட்டை காலில்   நசுக்கி அணைத்து விட்டு புன்னகையோடு அவர்கள்  அருகில் வந்தான்.  ஹலோ ,சார் என கையை நீட்டினான். கோபுவும் பதிலுக்கு கைகளை குலுக்கி  புன்னகைத்தார்.  ஐயம், கண்ணன். கண்ணன்!! எஸ்,.  நீங்க தேடி வந்த கண்ணன் தான்.  நாங்க தேடி வர்ரது உனக்கு எப்படி தெரியும்  ?? நடந்தது எல்லாமே எனக்கு தெரியும் . ஷல்மான்  கான்டக்ட் பண்ணானா?   இல்லை, நாம ஸ்டேஷன்ல போய் பேசலாமா.     நான்தான் கண்ணனு நீங்க நம்பணும்ல. இது இந்த காலேஜ்ல படிச்சா  ஐடி கார்டு  இந்தாங்க ஆதார்  என ஒவ்வொன்றாக நீட்டினான்.    சரி, வாங்க. மூவரும் காரில் அமர்ந்து ஸ்டேஷனை அடைய  லதாவும் கமலாவும் மட்டுமே ஸ்டேஷனில் இருந்தனர். சேகர் சார் எங்க?? அந்த சாரு கேஷ விசாரிக்க அவங்க வீட்டுக்கு போயிருக்காரு.   அவர திரும்பி வரச் சொல்லுங்க கேஸ் முடிஞ்சதுன்னு சொல்லி  நீங்க யாரு??   நான்தான் அந்த கண்ணன் என லதாவைப் பார்த்து புன்னகைத்தான்.. லாக்கப்பிற்குள் எப்பொழுதும் போல மஞ்சள் விளக்கு மெதுவாக அசைந்து கொண்டிருக்க நிசப்தம் அறை முழுதும் பரவியிருந்தது .. சேகர்,  தனது குரலைக் கணைத்தவாறு விசாரணையை தொடங்க  கணேஸும் ,கோபுவும் கண்ணனையே  பார்த்து நின்று கொண்டிருந்தனர்.  நாங்க  தேடரது உங்களுக்கு  எப்படி தெரியும் ?? எனக்கு எல்லாமே தெரியும் சார் . சாருவோட கேஷ்ல நீங்க தேடர  குற்றவாளி நான்தான் என்னது!! சேகர் தன் கண்களை சுருக்கி முறைத்தார் . கணேஷும் கோபுவும் ஆச்சரியத்தில் திகைத்து நின்றனர் . என்ன, என்ன சொல்றீங்க ?? ஆமா சார்,   நான் நாலு கொல பண்ணிருக்கே  சரண்டர் ஆகறேன்.  என்ன விளையாடுறியா,  சத்தியமா, சார்  சரி,  உனக்கும் சாருக்கும்  என்ன தொடர்பு . ம்ம், சொல்றேன்   உங்க மொபைல்ல ரெக்காடிங் ஆன் பண்ணி வச்சிடுங்க இது   பெரிய கதை . சில சமயம்  உணர்ச்சிவசப்பட்டு  சிலத  எழுதாம விட்டுடுவீ்ங்க நாமலாம் சாதாரண மனுஷன் தானே ஆனா மெஷின் ரொம்ப நேர்மையாக இருக்கும்.. சேகர் தனது மொபைலில் ரெக்கார்டிங்கை  ஆன் செய்து மேசை மீது வைத்தார்.  என்னைப் பற்றி சொல்லிடறே . நான், மலேசியால சைக்காலஜி  phd  முடிச்சுட்டு திண்டுக்கல்  கமலம் பிரைவேட் காலேஜில்  வொர்க்  பண்ணிட்டு இருக்கேன். பழனீல படிக்கும் போதுதா எனக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதான் அந்த சல்மான் அவர்   ஆயிஷா அக்காவ  லவ் பண்ணாறு  அந்த  பொண்ணுக்கு  என் மூலமா தான் லெட்டர்ஸ், கிப்ட் எல்லாம் கொடுப்பார் .   அப்போ அந்த டி. எஸ். எஸ் .பஸ் காதலர் பூங்கா மாதிரி இருக்கும் . பழனியிலிருந்து  மடத்துக்குளம் போற கொஞ்ச நேரத்துக்குள்ள அத்தனை வண்ணத்துப்பூச்சிகள் மலர்ந்து சிறகடிக்கும் ஆனால், நா மட்டும் அப்போ  புழுவா நெளிஞ்சு கிடந்தேன் . ஒரு நாள் ஆயிஷாவோட  லெட்டர்ஸ என்கிட்ட கொடுத்து  ஷல்மான்ட தர சொன்னா ஆயிஷா அக்கா வசதியான  பெரிய இடத்துப்  பொண்ணு அவங்க ஒரே ஊர்ல இருந்தாலும் நேரடியாக தொடர்பு கொள்ள முடியல. இப்படி , அவங்க ரெண்டு பேரு  காதலுக்கும் உதவி செஞ்சபடியே எங்க    காதலும் உருவாச்சு எனக்கு அப்போ என்ன பண்றதுனே தெரியல உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, புது தெம்பு எதையும் என்னால் சாதிக்க முடியும்ங்கர உற்சாகம். இப்படியே   எங்க காதலும்  நல்லா போயிட்டு தான் இருந்தது.   நானும் அவளும் உயிரும் உடலுமா  வாழ்ந்தோம் அப்போதான் ஒருத்தன்  குறுக்க வந்தான். யாரு மாரிமுத்தா?? இல்லை,  குமார்.  குமாரா?? என்றார்  ஏட்டையா.  ரெண்டு நாள் முன்னாடி கந்த புரத்துல ஒரு ஆக்ஸிடென்ட் நடந்ததே அவனா என்றார், சேகர்.  அது ஆக்சிடென்ட் இல்லை கொலை. கொலையா சேகர் நாற்காலியின் நுனிக்கே நகர்ந்தார்.  ஆமா,  அவனதா ரொம்ப நாளா  தேடிட்டு இருந்தேன்.   அவனபற்றி விசாரிக்க பழனி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது அவனே வந்து சிக்கினான். எனக்கு முன்னாடி ஒரு வேன் அத ஓவர் டேக்  எடுக்கர மாதிரி நான் ஸ்பீடா வந்தேன். அத பார்த்துட்டு அவன் வண்டியை சுலோ பண்ண   நான் எனக்கு பின்னாடி வந்த  டி .எஸ். எஸ் பஸ் க்கு டேக் விட   டயர்ல விழுந்து நசுங்கிட்டான்.  அவன் உன்  காதலுக்கு நடுவுல எப்படி  வந்தான் என்று குறுக்கிட்டார் கணேஷ்.  நானும் அவளும் காதலிக்கிறக்கு முன்னாடியே அவளை இவன்  ஓன்ஸைடா   காதலிச்சிருக்கான் அவ என்ன காதலிக்கிறது தெரிஞ்சுட்டு சாரினு, சொல்லி பிரண்டா இருக்கலாம் சொல்லிட்டு பழகிருக்கான். அவன் கூட பேசறது,  பழகரது எனக்கு புடிக்கல பலதடவ சொன்னேன் . என் முன்னாடி சரி, சரின்னு சொன்னா எனக்கு தெரியாம அவன் கூட பேசிட்டு இருந்தா ஒரு நாள் அவளுக்கு உடம்பு சரியில்லன்னு அவன் கோவில் திருநீரு கொடுத்ததை வாங்கி வச்சுக்கிட்டா  அப்ப தா இன்னும் அவன்  இவள லவ் பண்றானு எனக்கு தெரிஞ்சது.            அது கொஞ்சம், கொஞ்சமா சண்டையா வளர்ந்து  ஒரு பெரிய விரிசலா மாறி  பிரேக்கப் வரைக்கும் போயிடுச்சு பெண் புத்தி பின் புத்தினெல்லாம் சொல்லமாசாட்டேன்   சார்  ,  அப்பா, அண்ணன் ,தம்பி, காதலன், கணவன், மகன், பேரன்னு   எதிர் பாலினத்தோட அக்கறைங்கர உணர்வுலதா அது இயங்குது   அந்த உணர்வு  அதிகமானாலும்  பிரச்சினை  குறைஞ்சாலும் பிரச்சினை. என்னால தூங்க முடியல, படிக்க முடியல, சாப்பிட முடியல   உள்ளுக்குள்ளயே  அழுது, அழுது கரைஞ்சேன் . அவள மறக்க முடியாமல் செத்து போகலாம்னு தோணிச்சு இருந்தாலும் என்னை நானே ஆறுதல் படுத்திகிட்டேன் சூழல் மாறுனா எல்லாம் சரியாயிடும்னு கோவைல எம் ஏ  சைக்காலஜி  பண்ணேன். அப்புறமா, எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சது . மலேசியா போய்  பிஹெச்டி  சைக்காலஜி படிச்சே   முதல் காதல் தந்த பாடமோ என்னவோ  என்னால வேற யாரையும்  நேசிக்கவோ,  இல்ல வேற யாராலும் அவளுக்கு ஈடா  இருக்க முடியும்னோ  தோணல. அடிக்கடி அவளை நெனச்சுப்பேன் இரும்ப காய்ச்சி  இதயத்துல வச்ச மாதிரி வலிக்கும்  அவன் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினான்.  நீயே ஒரு சைக்காலஜி படிச்சவன்  இதெல்லா உன்னால  புரிஞ்சுக்க முடியல? என்றார்,  கோபு  சார்,  நானும் மனுஷன் தானே டாக்டர் என்பதனாலே நோய் வராம இருக்கா? இல்ல, டாக்டர் எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா நூறு ,இருநூறு வருஷம் வாழ்றாங்களா அப்படித்தான் இதுவும்.  சரி, நீ இங்க இருக்கப்பவே அவள கொன்னிருக்கலாமே.   சார், நான் கொலைகாரன்  இல்லை அவள கொலை பண்ணனும்னு நான் அவளை சந்திக்கல . நான்  மலேசியால  இருக்கரப்ப  சோசியல் மீடியா மூலமா மறுபடியும் அவளோட  பேசனேன். அப்போதான் மாரிமுத்த லவ் பண்றது எனக்கு தெரிந்தது ஏளனப் புனனகையுடன் தரையை வெறித்தபடி சிரித்தான். கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு கூட சொன்னா இப்படி வாழனும் அப்படி வாழனும்னு   எண்ணங்களால கற்பனையாள எழுப்பப்பட்ட கோட்டைய  மொத்தமா  இடுச்சிட்டு நாம தவழ்ந்து நடந்து,  உருண்டு,  பிரண்ட இடத்த நம்ம முன்னாடியே  இன்னொருத்தன் அபகரிக்கரத யார்னால ஏத்துக்க முடியும்  இந்த உலகத்தயே நெஞ்சு மேல வச்ச மாதிரி   இருந்தது.  அவன அப்பவே போட்டு  தள்ளனும்னு தா தோனுச்சு.   ஒரு திருடனைப் பிடித்து பக்கத்து  லாக்கப்பில் அடிக்கும் ஓசை அறையில் உயிரோட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியது. சரி , உன்ன விட்டுட்டு போய்ட்டானு சாருவ  கொன்ன  குறுக்க  வந்ததற்காக குமாரையும்,   மாரிமுத்தையும்  கொன்னுட்ட நாலாவத யார கொன்ன? எதுக்காக கொன்ன?  இருங்க சார் இப்பதான ஆரம்பிச்சிருக்கேன்  ஏன் கொன்னேனு  சொன்னேன் எப்படி கொன்னேனு கேட்டீங்களா,  என சிரித்தான்.   அந்த மர்மம் புரியாம தான உன்னை மரியாதையா உட்காரவைத்து விசாரிக்கிறோம்  முணுமுணுத்தார்,   கோபு.   டேபிளின் முன்னே  முஷ்டியை ஊன்றி  விரல்களை  விரித்து  கன்னங்களை   அதில்  பொருத்தினான்.  செல்போனில் ரெகார்டிங் ஓடிக்கொண்டேயிருந்தது .  வந்து மூணு  மணி நேரமாச்சு எனக்கும் பசிக்கும்ல சாப்ட்டு பேசலாமா .  நாளு  கொலை பண்ணிட்டு என்ன தெனாவட்டுடா  உனக்கு  என சேகர், மெதுவாக அவன் அருகே  சென்றார். முழு விபரத்தையும் சொல்லு அப்புறம் உனக்கு பிரியாணியே  வாங்கித்தரேன்.  சார்,  இப்பக் கூட நான் செஞ்ச கொலைகளுக்கு   உங்ககிட்டே எந்த எவிடென்ஸும்  இல்லை என்ன  மிரட்டவோ,  அடித்துத் துன்புறுத்த வோ  உங்களால சுத்தமா முடியாது. ஏன்னா அந்த நாலு கொலைக்கும் என்ன ஆதாரம் அதை நான் சொன்னால்தான் உண்டு . டேய் வெண்ண அப்ப இதெல்லாம் என்னடா அந்த நோட்டுப் புத்தகத்தையும் சென்ட் பாட்டில் மூடி வாசனை துணியை மேசை மீது கொட்டினார்,  கோபு  சிரிப்பின் திரவத்தை முகர்ந்து பார்த்தவன் போல செயற்கையாக இரண்டு நிமிடம் விடாமல் சிரித்துவிட்டு அந்த செண்ட் பாட்டில் மூடியை எடுத்து நுகர்ந்தான் . இதெல்லாம் ஒரு சாட்சியா, சார்  சரி,  அந்த கொலைகளை எப்படி பண்ண?  எனக்கு சாப்பாடு வேணும் . மொதல்ல சோறு கோபு இவனுக்கு வாங்கிக் கொடுங்க  சார், ஒரு  வெஜ் பிரியாணி காலிப்ளவர் சில்லியோட    சார், எல்லாம்சொல்லிட்டானா.  இல்ல ஏட்டய்யா, இப்பத்தா அவனோட ப்ளாஸ்பேக்கையே  சொல்லி முடிச்சிருக்கான் அவனே வழிய வந்து சரண்டர் ஆயிருக்கான்  நம்மகிட்ட வேற வலுவான ஆதாரம் இல்லை அதனால தான் பல்ல கடிச்சுட்டு அவன்கிட்ட கதை கேட்டுட்டு இருந்தேன்.. நினைவுத் திருட்டு  {மெஸ்மரிசம்} மணி 3 வெயில் தனது   கனலை இதமாக்கிக் கொண்டது  மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஒரு மெல்லிய காற்று கீழ்நோக்கி இரைந்து விரவியது . கண்ணன் மேசையில்  தலையை கவிழ்த்து அமர்ந்திருக்க   சேகரும், ஏட்டய்யாவும் உள்ளே நுழைந்தனர்.   வாங்க சார்,  என கண்களை புறங்கையால் துடைத்து  சட்டையில் தேய்த்துக் கொண்டான்.   இந்த கொலைகள எப்படி பண்ணுன ?? வெதுவெதுப்பான வெயில்ல ,சார்  அதோட  லேசான காற்று     இந்த   க்ளைமேட் பழனியைத் தவிர எங்கேயும் இருக்காதுல இது என்னோட நினைப்பு .   நான் கேட்ட கேள்விக்கு பதில்.  சொல்றேன் சார் , மலேசியால பேசிகிட்டோம்ன்னு சொன்னேன்ல அது கொஞ்ச நாள்தான் அதுக்கப்புறம் வேறு சிலர் மூலமா  இவ மாரிமுத்துக்காக  சூசைட் அட்டென்ட் பண்ணது இவங்க வீட்ல சண்டையானது கார்த்திய இவளுக்கு பேசனது எல்லாமே தெரிஞ்சது . நான் இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறம் கிட்டத்தட்ட அஞ்சு வருசம் கழிச்சி அவ என்ன பண்றா எப்படி இருக்கானு பாக்கனும்னு  தோணுச்சு வீட்டுக்கு போனா நீ யார்?  எதுக்கு இங்க வர்ற னு கேட்டுடு வானு பயமா இருந்தது.  அவ வீட்ட கடக்கும் போதெல்லாம்  கண்ணுல படமாட்டாலானு ஏங்கினேன். அப்போ ஒரு நாள் சாயங்காலம் ஆறு மணிக்கு மகளிர் காலேஜ் வாசல்ல நின்றதுந்தா ஸ்கூல் ட்ரெஸ்ஸ விட அன்யூனிஃபார்ம்ல பார்க்க  அவை  எப்பவும் அழகா இருப்பா அதுலயும்  வெள்ளை சுடிதார் போட்டிருந்தா  பாருங்க !!  அந்த விரிந்த கண்கள் பரந்த நெற்றி ,  வளர்ச்சி அடைந்திருந்த தேகம்  முன்னவிட ரொம்ப அழகா தேவதை மாதிரி  இருந்தா. உன் காதல் வர்ணனையெல்லாம்  கேட்கல எப்படி கொலை செய்தேனு சொல்லு  என்று  தெரித்தார்,  ஏட்டய்யா . என்  போக்குல விடுங்க சார். அப்பத்தான் நடந்தத  கோர்வயா   சொல்லமுடியும் .. ஏட்டய்யா கொஞ்சம்  பேசாம இருங்க அவன் சொல்லட்டும் என்று தனித்தார் , சேகர் இதுதான் நல்ல சந்தர்ப்பம் னு அவ கிட்ட போயி பேசினேன். அவளை வீட்டுல ட்ராப் பண்றேன் னு சொன்னேன் ஆனா அவ   மறுத்துட்டா  போன் நம்பர் கேட்டேன் லவ் பண்றப்போ  வழிய வந்து  நம்பர் தந்தவ   ரேப் பண்ண  வந்த  மாதிரி மூஞ்சிய சுளிச்சு பயந்தா கெஞ்சிக் கூத்தாடி நம்பர் வாங்கினேன். ஆனா உன் நம்பர் அவ போன்ல இல்லயே    ஒரு  forign  நம்பர் த ரிசீவ் ஆகிருக்கு அதுவும் அந்த நம்பர ஃபாலோ பண்ண முடியாத படி.  முதல் தடவ பார்க்கரப்பவே அவள் மனசை நான்  ஹேக்  பண்ணிட்டேன். என்ன, என்றார் சேகர்.  “மெஸ்மரிசம்”  மெஸ்மரிசமா!!  என  ஆச்சரியத்தில்  கண்களைச் சுருக்கிப் பார்த்தார் பாரூக்.  அப்படின்னா என்ன என்று  ஏட்டையா பாருக்கை  நோக்கித் திரும்ப மயான அமைதி நிலவியது.  நான் மலேசியால  இருந்தப்ப   கத்துக்கிட்டேன், அதை வைத்து அடுத்தவங்க  ஆழ்மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் அத நாம நினைக்கிற மாதிரி பழசஅழிக்கவோ புதுச பதிவு செய்யவும் முடியும் . என்ற படி கொஞ்சம் தண்ணீரை மெதுவாக குடித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினான் .  ஆமா  இதெல்லாம் அமெரிக்காலயும் இஸ்ரேல்லயும் பயன்படுத்துரதா  கேள்விப் பட்டிருக்கிறேன், என்றார் பாரூக்.  ஆனா இதோட தோற்றுவாய் சீனா  என்று கண்களை மேல்நோக்கிப் புருவத்தை உயர்த்தி பார்த்தான்,  கண்ணன்.  சரி, அத வச்சி   அவள என்ன பண்ண.  அவளோட ஆழ் மனசுல மாரிமுத்துதா நிறைஞ்சிருந்தா கொஞ்சமா  என்னோட  நினைவுகள் தூசு போல நீந்திட்டிருந்தது   உடம்பெல்லாம் எரிஞ்சது   எதுலயாவது கொண்டு போய் மோதிடலாம்னு  தோணிச்சு . ஆனா அப்புறம் தான் அவளுக்கு இதய நோய்  இருந்தது தெரிஞ்சுச்சு அவ சாகப்போறா மட்டுமல்ல வெளிய  சிரிச்சுட்டே உள்ள எப்படா சாவு வரும்ன்னு காத்துட்டு இருந்தா  பாவம்ல, சார்    சரி, அப்புறம் என்ன பண்ண ?? அவளோட மனசுல இருந்த  மாரிமுத்த  முழுசா அழிச்சிட்டேன்.  அவள மீண்டும்  என்ன காதலிக்க வைச்சேன்.  அவளுக்கு செக்ஸ்ல ரொம்ப ஆர்வம் அதனால அன்னைக்கு மதியம்    முருகன் மில்ல  நீண்ட நேரம் சந்தோசமா, சந்தோசமா….  இருந்தேன். தலையை உயர்த்தி கத்தினான் போதும் டா        போதும் எனக்கு இப்ப  நான் செத்தாலும் பரவாயில்லைனு சொன்னா.  ஆனால் நாங்க அங்க  தேடி வந்தப்ப யாரும்   இல்லையே   நீங்க பூட்ட உடைக்கும்போதே  நாங்க கட்டடத்துக்கு மேல போயிட்டோம்.   நான் அவள  அங்கேயே தூங்க வச்சிட்டு  எங்க வீட்டிலயிருந்த அந்த லெட்டர்ஸ்ஸ எடுத்துட்டு வந்தேன்.   அத  ஒரு எவிடென்ஸ்ஸ   ரெடி பண்ணி வச்சுட்டு. அவளுக்கு செக்ஸ் மாத்திரை கொடுத்தேன் சாப்பிட்டுட்டு என்னோட உற்சாகமா , ஆனந்தமா என் மடிமேல உட்கார்ந்திருந்தா  கொஞ்சம் கொஞ்சமா வேலையை  காட்டுன மாத்திரையால என் மார்புல விழுந்து  துடிச்சா அவன் தன் மார்பையே பார்த்தான்.   திடீரென சட்டையை கிழித்து விட்டு நெஞ்சைத் தடவினான்.  இதோ இங்க  சாஞ்சிட்டே   காத்தோட காத்தா என் மூச்சுக்குள்ள போய்ட்டா ஈரக்காத்துல சோணு  பெய்த மழையோட  குளிர்ச்சீல  அவ கண்ணீர்  நெருப்பு மாதிரி என் மார்புல் வழிஞ்சது ரொம்ப சுத்தமானவ சார் அவ,   முழுசா சுத்தம் பண்ணி குளிக்க வச்சு அவ வீட்டிலேயே கொண்டு போய் பத்திரமா இறக்கி விட்டுட்டேன். அவன் கண்களில் நீர் தளும்பியது தலையைத் தொங்க விட்டபடி அழுதான். சாரி, சாரு என்ன மன்னிச்சிடு, அம்மு   நான் உன் நல்லதுக்காகத்தான் செஞ்சேன்., டேய், டேய்,  அவன் குரல் கரகரத்தது  சொல்லுங்க சார்,  மாரிமுத்த  எப்படி கொல செஞ்ச?   டம்ளரில்  இருந்த தண்ணீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடிக்க உதட்டில் வடிந்த தண்ணீர் கடைவாய் வழியாக அவன் நெஞ்சில் வடிந்தது . அவ செத்ததுமே முடிவு பண்ணிட்டேன்  அந்த மாரிமுத்து, குமார்,  மூர்த்தி மூன்று பேரையும் போட்டு தள்ளணும்னு  என்னோட சேஃப்டிக்காக சாரு வீட்டு பக்கத்துல ரெண்டு பேர  என்னோட மெஸ்மரிஸம்  மூலமா  கட்டுப்படுத்தி உளவாளிகளாக மாத்தினேன் . அவங்க  மூலமா சாரு வீட்டுல நடக்கர   விஷயங்களையும்  உங்களோட மூவிங்கையும் தெரிஞ்சுக்கிட்டேன். அவ குடும்பத்துக்கு பொலிட்டிகல்  பவர் இருக்கதால  நான் உங்கள ரொம்ப வாட்ச் பண்ணேன் மாரிமுத்த விசாரணைக்கு  கூப்ட்டது தெரிந்ததுமே  அவன பஸ் ஸ்டாண்ட்ல  சந்தித்தேன். போன் மூலமா அவன்ட பேசிப்பேசி தற்கொலை செய்ய வச்சேன். அடப்பாவி!!!!  இதுல இன்னொரு ட்விஸ்ட் இருக்கு , சார் இந்த கேஷோட ஆரம்பமே அவளோட பழைய வாழ்க்கை தான்னு  முன்னாடியே இன்ஸ்பெக்டர் கண்டுபிடிச்சிட்டார்.   அதனால தான் அவர ட்ரான்ஸ்பராக   வச்சேன். எப்படிடா??  என குறுக்கிட்டார். ஏட்டய்யா அவர் மனைவிட சாருவோட ஆவி  உங்க கணவரத்தா நம்பி சுத்துது  அதுனால உங்க பையன் உயிருக்கே  ஆபத்துனு சொன்னேன். அவங்க டார்ச்சர் தாங்காம அவரும் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டார்.  இந்த  மூணு கொல  ஓகே நாலாவதா யார எதுக்கு கொலை பண்ணை ??  எப்படி கொலை பண்ண??  மூர்த்தி, நான் பேசாம காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தவன. அவ என்ன பாக்கற லவ் பண்றானு  உசுப்பேத்திவிட்டான் . எங்க காதலும் சேர்ந்தது ஆனால் அது அவனுக்கு தெரியாது   அவனும் அவள்ட புரப்போஸ் பண்ணான்   கூடிருந்தே துரோகம் பண்ண  துரோகி. அவன எப்படி கொன்ன??  மடத்துக்குளம்  ஆத்துப்பாலத்திலிருந்து கீழே குதிச்சிட்டான்.   ஹா ஹா ஹா   எவ்வளவு பெரிய கேடிடா நீ.  ஸ்டேஷன் போன் ரீங்ரீங்கென ஒலித்தது. வெளியிலிருந்த கணேஸ்,  சேகரை அழைத்தார்.  சார், சார்,  சுகாதாரத்துறை அமைச்சர்   போன்ல  ஹலோ, சார் சொல்லுங்க சார், ஓகே சார்,  தேங்க்யூ சார்  மலர்ந்த முகத்தோடு திரும்பிய சேகர், லாக்கப்பை தொட்டவுடன்  முகத்தை  இருக்கிக்கொண்டார் . என்ன சேகர்,  சார்  கடைசியா  உங்க ஆழ்மனது ஆசையையும்  நிறைவேத்திடன்ல டேய் அப்ப அன்னைக்கு அவர்  வண்டியில விழப்போனது ,   என ஏட்டய்யா அவன் தோளை குலுக்க.   தலையை உயர்த்தியபடி  அரக்கனைப் போல சிரித்துக் கொண்டே  நாற்காலியோடு  பின்பக்கம் சரிந்தான்……….     FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.