[] ரதிவீதி ப்ரியமுடன் வசந்த் www.freetamilebooks.com Chennai Creative Commons Attribution-NoCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/ உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். ஆனால் விற்பதற்க்கும் உள்ளடக்கத்தை மாற்றுவதற்க்கும் உரிமை கிடையாது. This book was produced using PressBooks.com. மின்னூலாக்கம் : ப்ரியமுடன் வசந்த்   vasanth1717@gmail.com Contents - நூல் பற்றி - எழுதியவர் - 1. காதல் வீடு - 1 ப்ரியமுடன் வசந்த் - 2. காதல் வீடு - 2 ப்ரியமுடன் வசந்த் - 3. காதல் வீடு - 3 ப்ரியமுடன் வசந்த் - 4. காதல் வீடு - 4 ப்ரியமுடன் வசந்த் - 5. காதல் வீடு - 5 ப்ரியமுடன் வசந்த் - 6. காதல் வீடு - 6 ப்ரியமுடன் வசந்த் - 7. காதல் வீடு - 7 ப்ரியமுடன் வசந்த் - 8. மழை வீடு - 8 ப்ரியமுடன் வசந்த் - 9. மழை வீடு - 9 ப்ரியமுடன் வசந்த் - 10. காதல் வீடு - 10 ப்ரியமுடன் வசந்த் - 11. காதல் வீடு - 11 ப்ரியமுடன் வசந்த் - 12. காதல் வீடு - 12 ப்ரியமுடன் வசந்த் - 13. காதல் வீடு - 13 ப்ரியமுடன் வசந்த் - 14. காதல் வீடு - 143 ப்ரியமுடன் வசந்த் - 15. காதல் வீடு - 15 ப்ரியமுடன் வசந்த் - 16. காதல் வீடு - 16 ப்ரியமுடன் வசந்த் - 17. காதல் வீடு - 17 ப்ரியமுடன் வசந்த் - 18. கவிதை வீடு -18 ப்ரியமுடன் வசந்த் - 19. இதழ் வீடு - 19 ப்ரியமுடன் வசந்த் - 20. நன்றி - 21. freetamilebooks.com பற்றி நூல் பற்றி எழுதியவர் உரை உ ங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் தரும். இவற்றை வாசிக்கும் காதலர்களை, தம்பதியர்களை நிச்சயமாக இந்த மின்நூல் வசீகரிக்கும் . இம்மின்நூலைப்படிக்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுபவைதான் இவற்றிற்க்கு அணிந்துரைகள் . மேலும் இவை பெரும்பாலும் என்னுடைய இணையதளத்தில் நான் எழுதியவற்றின் கோர்வையான பக்கங்களே. இம்மின்நூலை வாசித்துவிட்டு நிறையோ குறையோ உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி ப்ரியமுடன்வசந்த் மின்நூல் வெளியீடு - www.freetamilebooks.com என்னுடைய இணைய தளம் : www.priyamudanvasanth.com என்னுடைய மின்னஞ்சல் : vasanth1717@gmail.com Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derivs 3.0 Unported License. எழுதியவர் அறிமுகம் [gg] ப்ரியமுடன் வசந்த் இணையதளத்தில் எழுதி வரும் ஒரு ’ஜில்’ வண்டு . சில வருடங்களாக வலைப்பதிவர் என்ற போர்வையில் எழுதிவரும் அசடு . இவருடைய இணையதளத்திற்க்கு சென்றால் பல்சுவைப்பதிவுகள் ஏராளம் காணக்கிடைக்கும் . தான் எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட பொழுது எழுத்துக்களால் அரவணைக்கப்பட்டவன் என்பதை அவரே  பெருமையுடன் கூறிக்கொள்கிறார். [pressbooks.com] காதல் வீடு - 1 ப்ரியமுடன் வசந்த் ப்ரியமானவளே .. [images (4)] நீ எப்படி இருப்பாய் எந்த வடிவில் இருப்பாய் என்றெதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு பிடித்தவிதமாய்த்தான் இருப்பாய் என்றொரு கிளி மனமரத்தினடியில் இருந்து ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறது . அந்தக்கிளியிடம் உன்னைப்பற்றி கேட்கும்பொழுதெல்லாம் அவளொரு பேரழகி என்ற பதில் மட்டுமே சொல்கிறது. எனக்கே தெரியாத உன்னைப்பற்றி இந்த மனமரக்கிளி இப்படி அடித்து கூறுவதன் ரகசியம் விளங்கவில்லை என்றபொழுதும் பேரழகிக்கு மணவாளனாய் ஆகப்போவதை நினைத்து மனது வானவில்வண்ண விளக்காய் பூரித்துதான் போகிறது. [images (4)] ஒ ரு வேளை இந்தக்கிளி கூறுவதெல்லாம் பொய்யாய் போய்விடுமோ என்று அஞ்சி நடுநிசி இரவுகளில் உறக்கம் கலைந்து விடுகிறது. உறக்கத்துடன் ஒரு பிரசங்கம் நடத்தி வெற்றி பெற்று வந்த கனவின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமாய் ஒரு புதிருடன் ஆரம்பித்தது. கனவின் புதிராய் நீ முக மூடியணிந்து என் மீது நீல நிற உடையுடுத்தி படர்ந்திருக்கிறாய் , என் முதுகுப்புறம் சில வளர்பிறை நிலவுகள் புதிதாய் உதயமாகியிருக்கின்றன, முகத்தில் முழுநிலவுகள் இரண்டு உன்னிலிருந்து என்னில் இடம் மாறியிருக்கின்றன. இதையெல்லாம்   மறுநாள் காலை   என் வீட்டு அழகப்பன்   என்னிடம் காட்டியபொழுது என் மீசைக்குள் வெட்கம் குடிகொண்டது. இவ்வளவு நடந்தும் எனக்கான உன் முகத்தை காணவே முடியவில்லை என்ற பொழுது மீசையிலிருந்த வெட்கத்தை துரத்தி துயரம் குடிகொண்டது , கனவும் கலைந்தது. [images (4)] மு ன்தினம் வந்த கனவை பற்றியும் உன்னை பற்றியும் எப்பொழுதும்போல் வண்ணத்துப்பூச்சியிடம் பகிர்ந்துகொண்டபொழுது , கவலைப்படாதே உன் ஆசைக்குரியவளை நான் காட்டுகிறேன் என்னுடன் வா என்று என்னை ஒரு பூங்காவனத்திற்கு அழைத்துச்சென்றது. பூங்காவனத்தில் புதுமலர்கள் பூத்துகுலுங்கி கொண்டிருந்தன ஒரே ஒரு மலர் மட்டும் பூத்து சிரித்துக்கொண்டிருந்தது அது என்ன மலரென்று பார்ப்போமென்று அருகில் சென்றால் அது நீ, எப்பொழுதுபோலவே முகம் காட்டாமல் கண்ணாமூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாய் நீ. அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியோ உன்னைக்காட்டி இவள்தான் உன் தேவதைப்பூ எடுத்துக்கொள் என்றது, முதல் முறை ஒரு மலர் எப்படி வெட்கப்படும் என்பதை நீ விளங்க வைத்துக்கொண்டிருந்தாய், சில நொடிகளில் மாயமாய் மறைந்தும் போனாய். [images (4)] இ ந்த முறை உன்னைப்பற்றிய ஏமாற்றம் விரக்தி இரண்டும் பன்மடங்கு பெருகியது . சதா சர்வ காலமும் உன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் முகத்தில் ரோமங்கள் தன் உச்சகட்ட வளர்ச்சியை காட்டி என்னை நோயுற்றவனாய் காட்டிக்கொண்டிருந்தது. நோய் முற்றிய நிலையிலிருப்பவானாய் நினைத்து , என்னை பார்த்து பரிதாபப்பட்ட காதல் வைத்தியன் ஒருவன் வந்து என்னை கைத்தாங்கலாய் நீயிருக்கும் பூவனதேசத்திற்கு அழைத்துச்சென்றான். இம்முறை நீ உன் சக தோழியருடன் கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்தாய் , லாவகமாய் பந்தை யாரிடமும் கொடுத்துவிடாமல் வலைக்குள் நீ அடித்த நேரம் சரியாய் என் உச்சி மண்டையில் நங்கென்று வலித்தது, வலைக்குள் விழுந்த பந்தை உற்றுப்பார்த்தபோது நீ விளையாடிக்கொண்டிருந்த கால்பந்து என் தலையாகவா இருக்க வேண்டும்?, நீ ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருக்கிறாய் உடன் வந்த காதல் வைத்தியன் ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருந்தான் பிறகுதான் தெரிந்தது அவன் உன்னால் நியமிக்கப்பட்ட காதல்தொண்டன் என்று. [images (4)] உ ன்னை பார்க்கும் பொழுதெல்லாம் எதுவுமே பேசாமல் கிறுக்கு பிடித்து திரிவதை விட உன்னிடமே உன்னைப்பற்றி கேட்டுவிடலாமென்று தைரியமாக உன் அருகில் வந்து ஏய் கந்தர்வப்பெண்ணே யார் நீ என்றதும் , சட்டென்று திரும்பி பார்த்த நீ மெல்லிய புன்னகையை பதிலாய் தந்துவிட்டு சிறிது தூரம் சென்றது ஒரு காகிதப்பந்தை என்னிடம் விசிறிவிட்டு சென்றாய். பித்து பிடித்த மனம் ஆவலாய் அதைப்பிரித்து படித்தது , அதில் ப்ரியமானவனே.. உ னக்கென்று பிறந்தவளே நான் உன்னை அடைவதற்கு முன் இந்த மலர் வனதேசத்திலிருக்கும் மலர்களின் தோழியாய் சிலகாலம் நியமிக்கப்பட்டிருக்கிறேன் இந்த மலர்களின் மனத்தையெல்லாம் வென்று அவற்றின் நறுமணத்தையும் , அழகையும், பொறுமையையும்,  எனக்குள் உள்வாங்கி அழகும் வனப்பும் மிகுந்த பேரழகியாய் மாறியதும் உன்னிடம் வந்து உன் துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவேன் , அதுவரை இப்படி கிளியிடமும், வண்ணத்துப்பூச்சியிடமும் பேசிக்கொண்டு அரைப்பைத்தியமாய்த் திரியாமல், என்னை அடக்கி ஆளும் வலுக்களை உனக்குள் தயார்படுத்தி வை , உடம்பிற்குள் ஒராயிரம் தினவை புதைத்து வை நான் வந்து அவற்றிற்கு உயிர்கொடுக்கிறேன், உன் வீட்டிலிருக்கும் மலர்களிடம் சொல்லிவை அவைகளின் தோழி ஒருத்தி வரப்போகிறாளென்று, உன் வீட்டாரிடம் சொல்லிவை அவர்களின் மனத்தை ஆளப்போகும் இளவரசி வரப்போகிறாளென்று, அதுவரை சமர்த்தா இருக்கணும் இளவரசே…. இப்படிக்கு ப்ரியமானவள்.. [pink-heart-sprinkles-hr] காதல் வீடு - 2 ப்ரியமுடன் வசந்த் ரதி வீதி [images (4)] “அ ழகி ,   பேரழகி ,   தேவதை ,   நிலா   இந்த வார்த்தைகளுக்கு   பொருந்திய உன்னுடைய   அழகை மேற்க்கொண்டு விவரிக்க   வார்த்தைகளற்று திரியும்   எனக்கும் நீ சரியாய்   பொருந்திப்போனதுதான்   ஆச்சரியம்… ! ” [images (4)] “கு ட்டிக்குட்டி   பெண் குழந்தைகளை   தன் மடியில் அமர்த்தி   தன்னுடைய இறக்கையிலிருந்து   ஒரு இறகை பிய்த்து   குழந்தைகளுக்கு தந்து   அவர்களையும் தேவதைகளாய்   ஆக்குகிறாள் தேவதையொருத்தி ,   என்னை உன் கையிலிருந்து   கோடாரி பெற்றுக்கொள்ளும்   விறகுக்காரனாவது ஆக்கிவிடு   என்ற மாத்திரத்தில் தன்னுடைய   இறகால் வருடிக்கொடுத்து என்னை   தேவதை தாசனாக்கிவிட்டாள்… ! ” [images (4)] “கா ய்ச்சல் இருமல் தும்மல்   போன்ற உணர்வுகளைப்போல் உன்னைப்   பார்க்கும்பொழுதெல்லாம்   வரும் ஒருவித மயக்க உணர்வுக்கு   பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன்   கிடைத்தபாடில்லை , நீயே   சொல்லிவிடு என்றால்  ‘ ஐ லைக் யூ ’ என்று சொல்லிப்போகிறாய்…! ” [images (4)] “க விதையில் உவமை சம்மனமிட்டு அமர்ந்து கவிதையோடு சேர்ந்து தானும் அழகாவது போல் உன் முகத்திலிருக்கும் மூக்குத்தியும் உன்னோடு சேர்ந்து அழகாகிறது… ! ” [images (4)] “பி ரிக்க முடியாதது எதுவென்ற உன் திருவிளையாடல் கேள்விக்கு உன்னையும் அழகையும் என்ற பதில் சொல்லி உன்னிடம் ஆயிரம் முத்தங்கள் வாங்கலாமென்று பார்த்தால் நெற்றியில் ஒற்றை முத்தமிட்டுவிட்டு நெற்றியிலிட்டாலும் முத்தம் முத்தமே   என்று ஏக வசனம் பேசுகிறாய்… ! ” [images (4)] “நா ளைக்கு சென்னை போகிறேன் என்றவளிடம் அப்போ நாளையிலிருந்து நீ இருக்கும் வரை அது சிங்காரச்சென்னையல்ல சிங்காரிச்சென்னை என்று சொல்லி ஒரு கட்டியணைப்பு பரிசில் பெற்றேன். .! ” [images (4)] “ஹோ ம்சிக் வந்து விடுமுறை கேட்டால் உடனே விடுப்பளித்துவிடும் மேலாளரிடம் உன்சிக் வந்திருப்பதை சொன்னால் மட்டும் முறைக்கிறார் , அவருக்கெப்படி தெரியும் இரண்டு சிக்கும் நீதான் என்று..! ” [images (4)] “கோ வில் பிரகாரத்தைச்சுற்றியிருக்கும் ரத வீதிகள் எல்லாம் நீ நடந்து வரும்பொழுது   ரதிவீதிகளாக மாறிப்போகின்றன ..! ”   [images (4)] “நீ ண்ட நாட்களாக பிரேமாவை பார்க்கவில்லையென்பதால் அவளைப்பற்றிய நினைவுகளை ஒரு கடிதத்தில் எழுதி அவள் படிக்கும் கல்லூரி முகவரிக்கு அனுப்பிவைத்து அவளின் பதில் கடிதத்திற்கு காத்திருந்த நேரம் தொலைபேசி அழைப்பு , அவள்தான் எடுத்ததும் ”என்னை பிடிச்ச பிசாசே கடுதாசி எழுதுறீங்களாக்கும் கடுதாசி , அதென்ன கடுதாசி முழுவதும் தமிழ்ல எழுதிட்டு ஆரம்பிக்கறப்போ மட்டும்   Dear Prema   அப்படின்னு எழுதாம ‘ a ’ வரவேண்டிய இடத்துல ‘ e ’ போட்டு   Deer Prema  அப்படின்னு இங்க்லீஷ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதியிருக்க , ஃப்ரண்ட்ஸ் எல்லாம் படிச்சுட்டு செம கிண்டல் பண்ணிட்டாங்க எப்பவும் போலவே ‘ப்ரிய பிரேமா‘ன்னு எழுதியிருக்கலாம்தானேடான்னு” கொஞ்சலாக கேட்டவளிடம் ”அவங்களுக்குத்தான் அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா தெரியுதுன்னா உனக்குமா புரியலை ? என்றதும், ‘ம்ஹ்ஹும் அப்படியென்ன இருக்கு அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல‘ என்று கேட்டவளிடம், ”துள்ளி ஓடுற மானுக்கு இங்க்லீஷ்ல Deerன்னு அர்த்தம்” என்றேன் புரிந்து கொண்டவளின் ‘இச்‘சை அப்படியே எனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தது தொலைபேசி..!” [images (4)] “டே ய் வர்ற நவம்பர் 09 செமஸ்டர்முடிஞ்சு ஊருக்கு வர்றேன்‘னு அவள் சொன்னதிலிருந்து மனது வானத்துக்கும் பூமிக்கும் ராட்டினம் ஆடிக்கொண்டிருந்தது, நவம்பர் 10  என் வீட்டிற்கு வந்தவள் என் அம்மாவிடம் ”அத்தை நான் ஊருக்கு வர்றேன்னு சொல்லியிருந்தும் உங்க புள்ளை என்னை கூட்டிட்டு வர்றதுக்கு பஸ் ஸ்டாண்ட் பக்கம் கூட வரலை என்னாச்சு உங்க புள்ளைக்கு ? என்னை நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துட்டாரா?”அப்படின்னதும் ‘அவன்கிட்டயே கேளும்மா‘ன்னு அம்மா சொன்னங்க,முகம் சிவந்த கோவத்துடன் என் பக்கம் திரும்பியவளிடம், ஹும் உன்னை கூப்பிடத்தான் பஸ் ஸ்டாண்ட் வந்தேன் அங்க இருக்குற டைம் கீப்பர்கிட்ட நீ வரும் பஸ் பேர் சொல்லி எப்போ வரும்ன்னு கேட்டேன் அப்படி ஒரு பஸ்ஸே இல்லைன்னுட்டான்னு அப்பாவியாக சொன்னேன் , அப்படி என்ன பஸ் பேர் சொன்ன அவன்கிட்டன்னு கேட்டவளிடம் அதுவா ”ரதி ட்ரான்ஸ்போர்ட் எப்போ வரும்ன்னுதான்” கேட்டேன் , அதுக்குத்தான் அவன் அப்படி ஒரு பஸ்ஸே இல்லைன்னு பதில் சொன்னான் கோவத்துல வீட்டுக்கு வந்துட்டேன்ன்னேன், நீயே சொல்லு ”நீ வரும் பஸ் ரதி ட்ரான்ஸ்போர்ட்டா மட்டும்தானே இருக்கும்”ன்னதும் சுத்தி முத்தி பார்த்துட்டு அம்மா சமையலைறைக்கு போயிட்டாங்கன்னதும் கன்னத்துல செல்ல முத்தம் கொடுத்துவிட்டு ஓடியே போய்விட்டாள்… ” [images (4)] “தி ருமணத்திற்க்கு பின்பு நானும் பிரேமாவும் குடியிருப்பதற்க்காக எங்கள் தெருவில் புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்டில் ஒரு மனை முன்பதிவு செய்திருந்தேன் , ஒரு நாள் அந்த அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் பிரேமாவிடம் , ‘நாங்க கட்டிக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்டில் மொத்தம் ஐந்து மனைகள் ப்ளான் பண்ணி கட்டிக்கொண்டிருக்கிறோம் நீங்கள் முன்பதிவு செய்த மனை தவிர மீதமிருக்கும் நான்கு மனைகளுக்கும் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல்ன்னு பெயர் வைத்துவிட்டோம் நீங்கள் வாங்கிய மனைக்கு எதாவது பெயர் சஜ்ஜெக்சன் கொடுங்களேன் என்று கேட்டிருப்பார்கள் போல என்னிடம் பிரேமா சொன்னதும் , ”மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி” , ”காடும் காடு சார்ந்ததும் முல்லை” , ”வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்” , ”கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்” அப்படியென்றால் ”நீயும் நீ சார்ந்த இடமும் தேன்கூடாய்த்தான் இருக்கமுடியும்” அதனால் ”தேன்கூடு” அப்படின்ற பெயர்வைக்கச்சொல்லி அவங்ககிட்ட சொல்லிடு பிரேமான்னதும் வாயடைத்துப் போய்விட்(டோம்)டாள்…! தேனும் கிடைத்தது …! ” [images (4)] “பி ரேமா ஒருநாள் காலை நேரம் அந்த புதிய வீட்டின் மொட்டை மாடியில்   துணிகளை துவைத்து காயவைத்துக்கொண்டிருந்தாள் நான் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்படியே பிரேமாவை பார்த்து அங்க பார் பிரேமா எப்பவும் நாந்தான் உன்னை சில்மிஷம் செய்வேன் ஆனா இங்க பார் ,”உன் புடவை என் சட்டையை சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறது”, என்றதும் நமுட்டு சிரிப்பு சிரித்தவளிடம் அவளைப்பற்றி எழுதிய சில கவிதைகளை காண்பித்தேன் படிப்பதற்க்கு முன்பு ”காலையில எல்லாரும் காலைக்கடன் வரும்ன்னா உங்களுக்கு கவிதைக்கடன் வருதாக்கும்” என்று நக்கல் பண்ணியவள் படிக்க ஆரம்பித்தாள்…! ” [images (4)] “உ டம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் ‘அலகு’ குத்தியிருப்பவர்களை பார்த்திருக்கிறேன் முதன் முறையாக உடம்பு முழுவதும் ‘அழகு’ குத்தியிருப்பவளை இப்பொழுதுதான் பார்க்கிறேன் ..! ” [images (4)] “து ணி உலர்த்துகையில் , தன் இறகுகளை தானே துவைத்து உலரவைக்கும் அதிசய மயிலாக நீ ..!” [images (4)] “வே டந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நீ அழகுகள் சரணாலயம் ..!” [images (4)] “அ மாவாசையன்று உன்னருகிலிருக்கும் தன் குழந்தைக்கு   நிலாச்சோறு ஊட்டுகிறாள்   அடுத்தவீட்டுப்பெண் ..!” [images (4)] “உ ன்னை   சந்திக்கும்பொழுதெல்லாம் அழகை அதன் குகையிலே சென்று சந்திப்பது போன்றுதானிருக்கிறது ..!” [images (4)] “ப ள்ளிக்கூடம் போனால் ஒரே படிப்பு படிப்பு உன்கூடம் வந்தால் ஒரே இனிப்பு இனிப்பு ..!” [images (4)] “கா மத்தை போஸ்டலிலும் முத்தத்தை கூரியரிலும் அனுப்பும்   சமயோசிதக்காரி நீ ..! ” [images (4)] [pink-heart-sprinkles-hr] காதல் வீடு - 3 ப்ரியமுடன் வசந்த் ரதி பதியன் [images (21)] “ஒ ரு நாள் வானவில்லை வரைந்து காட்டுகிறேன் வா என்று ஓவிய அறைக்கு கூட்டிப்போனான் அங்குள்ள சுவரில் வானவில்லை அழகாய் வரைந்தான் ஆனால் அவன் வரைந்ததில் ஆறு வண்ணங்கள்தான் இருந்தன என்னடா வானவில் வண்ணங்கள் ஏழுதானே நீ ஆறல்லவா வரைந்திருக்கிறாய் மஞ்சள் நிறம் எங்கே என்று கேட்டேன் அதுவா இப்படி கிட்ட வா என்று சொல்லியபடி மஞ்சள் நிற இடத்தில் என்னை நிரப்பி இப்பொழுது பார் ஏழு வண்ணமும் இருக்கிறதா இல்லையா என்றவனை கன்னாபின்னாவென்று கட்டிக்கொண்டேன். இவன் இப்பொழுது மட்டுமல்ல நிறைய முறை இப்படித்தான்   “அழகிய நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தை வரைந்துவிட்டு நிலவை வரையாமல் அதற்கு பதில் என்னை நிறுத்தி வைப்பான், வெறும் இலை , தண்டுடன் கூடிய செடியை வரைந்துவிட்டு மலருக்கு பதில் அங்கே என்னை நிரப்புவான் “   இப்படி இவனுடைய லூசுத்தனமான அழகான செயல்களாலயே எனக்கு இவனை நிறைய பிடித்துப்போகிறது… !” [images (21)] “அ ன்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகில் ஆற்றையொட்டி இருக்கும் சிவன் கோவிலுக்கு இருவரும் சென்றோம் . நான் பச்சைக்கலரில் பட்டுச்சேலை அணிந்திருந்தேன் அவனும் பட்டு வேஷ்டி பட்டுச்சட்டையுடன் கம்பீரமாகவே என்னுடன் வந்தான். கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஆற்றில் கை கால்களை அலம்ப வேண்டும் என்ற சாஸ்திரப்படி ஆற்றில் நான் இறங்கியதுதான் தாமதம் அருகிலிருந்த அவன்   “பச்சைப்பட்டு உடுத்தி அழகி ஆற்றில் இறங்கிவிட்டாள்”   என்று கத்தி கூப்பாடு போட்டதில் சுற்றியிருப்பவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க எனக்கோ வெட்கம் தாங்கமுடியாமல் அப்படியே அவனை ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டேன் தொப்பல் தொப்பலாக நனைந்துபோனான். நானும்தான் அவனுடைய அதீத அன்பில் தொப்பல் தொப்பலாக நனைந்து போயிருக்கிறேன் ..!” [images (21)] “இ வன் முகத்தில் ஓவியம் வரையும் கலை கற்றிருக்கிறான் என்பது எனக்கு வெகு நாட்களுக்கு பின்பு தெரிய வந்த பொழுது எங்கே என் முகத்தில் ஓவியம் வரையேன் என்றேன் . உன்னுடைய முகம் கொஞ்சம் தட்டையாக இருப்பதால் உலக வரைபடத்தை வரைகிறேன் என்று அட்லஸை என் முகத்தில் வரைய ஆரம்பித்தான் . வரைந்து முடித்ததும் என்ன்னை நிலைக்கண்ணாடி முன்னாடி முன் கூட்டிச்சென்று காட்டினான் .சும்மா சொல்லக்கூடாது அழகாக சின்ன சின்ன தீவுகள் முதற்கொண்டு எதுவும் விடாமல் எல்லாவற்றையும் மூக்கிலிருந்து மேற்புற பகுதிகளிலேயே வரைந்து முடிந்திருந்தான். ஒரே ஒரு தப்பு செய்திருந்தான் அண்டார்டிகா கண்டத்தை வரையாமல் அந்த இடத்தில் சின்ன சின்ன பென்குவின்களை வரைந்திருந்தான் . எங்கடா அண்டார்டிகா கண்டம் காணோம் ஒரே பென்குவினா இருக்கு என்றேன் மெல்ல சிரித்துக்கொண்டே   “உன் உதடும் அதற்கு கீழும் எல்லாமே குளிர் பிரதேசம்தானே”   அதான் அப்படியே விட்டு விட்டேன் என்றவனை என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுதே என் முகத்திலிருந்த ஒரு பென்குவின் அவன் முகத்திற்கு இடம் மாறியிருந்தது… !” [images (21)] “எ ங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இவனுடைய என் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் சிற்சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்திருந்தான். அதில் முதலாவதாக வீட்டின் முகப்பில் அவன் பெயர்போட்டு இல்லம் என்று இருந்த பலகையை எடுத்துவிட்டு ரதிவீடு என்று மாற்றியிருந்தான். வரவேற்பறையில் தேவதை உலாவும் இடம் என்று எழுதியிருந்தான்.   “   ரகு பதி என்ற அவன் பெயரை ரதிபதி என்று சட்டப்படி பெயர் மாற்றுவதற்குரிய விண்ணப்பங்களை வாங்கி வந்திருந்தான்”   . ஏண்டா இப்படி லூசுத்தனமா எதுனாலும் செய்துட்டு இருக்க என்றேன் எல்லாம் என் தலையெழுத்து என்று நெற்றியை பிடித்தவனின் கைகளை தட்டி விட்டேன் நெற்றியில் என் பெயரை எழுதி வைத்திருக்கிறான். இப்போ சொல்லுங்கள் இவனுக்காக என் உயிரை தரலாமா இல்லையா அதுதான் இவனுக்கு ஒரு குழந்தை பரிசாக தரலாமென்று முடிவெடுத்துவிட்டு அதை அவனிடம் சொன்னால்   ரோஜா பதியன் மாதிரி ரதி பதியன் போடலாமென்கிறாய் சரி வா என்று குதூகலப்படுகிறான் …!” [images (21)] இவன் ஓவியன் மட்டுமல்ல சிலநேரங்களில் அழகான கவிதைகளும் எழுதுவான் ஒரு நாள் இவனுடைய லூசுத்தனமான செயல்களை என் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை வாயில் வைத்து கடித்தபடி ரசித்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது அவன் எழுதிய கவிதை   [images (21)] “க ழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியை   வாயில் வைத்து   கடித்துக்கொண்டிருக்கிறாள்   இனம் இனத்தோடுதான்   சேரும் ” [images (21)] இப்படி என்னை மட்டுமே ரசிக்கும் என்னை மட்டுமே தன் உலகமாய் எண்ணி வாழும் இவன் எனக்கு கிடைக்க நான் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் ஏண்டா இப்படி இருக்க என்று செல்லமாய் கேட்டு அவன் நெற்றியில் மென் முத்தம் பதித்தேன்..! [Love-heart-wallpapers] காதல் வீடு - 4 ப்ரியமுடன் வசந்த் ஞாயிறு பொழுதும் உன்னோடு [images (1)] காலை 7 மணி “ஹே ய் மிர்து இங்க வாயேன் என்றேன் என்ன என்று கொஞ்சலாக வினவியவளிடம் , இல்ல இன்னிக்கு சண்டே தெரியும்ல என்றேன் கண் சிமிட்டியபடி , தெரியும் தெரியும் அதான் பயமா இருக்கு என்றபடி “வெட்கத்தை முக முழுக்காட்சியாக ரிலீஸ் செய்கிறாள்”. ம்ம் பின்ன ஆக வேண்டியதை பார்ப்போமே என்றேன் ஸ்ஸ்ஸப்பா இன்னிக்கு உன்னோட சமையலை சாப்பிடணும்ன்னு விதி வேற வழி ஆரம்பிடா ஆரம்பி இன்று உன்னுடைய மெனுவில் காலை டிஃபன் என்ன என்று வினவியவளிடம் “எனக்கு டிஃபன் நீதான்”,   உனக்கு சூடா நெய் தோசையும் , தக்காளி சட்னியும் , தேங்காய் சட்னியும் , தால் பவுடரும் வித் காஃபி ஒகேவா மிர்து? என்றதும் ‘ என் டிஃபன் ஒகே ஆனா உனக்கு சொன்ன டிஃபன் கிடைக்காது கிடைக்காது முதுகுல டின்னுதான் கிடைக்கும்’, ஆமா ஆளப்பார் ஆள, “சரி விடு லஞ்சா இருந்துட்டுப்போ” என்றேன்,  ‘ அட ராமா ’ என்று தலையில் கைவத்தவளிடம் ம்ஹ்ஹும் “அட காமா” ன்னு சொல்லிப்பார் அட்டகாசமா இருக்கும் என்றதும்   ரைட்டு இன்னிக்கு மதியம் டிவிடில “வாரணம் ஆயிரம்” படம் பார்க்கலாம்ன்னு இருந்தேன் நீ “தோரணம் ஆயிரம்”அப்படின்ற நடக்கட்டும் நடக்கட்டும் மகனே உன் சமர்த்து என்று வெட்கசிரிப்பு சிரிக்கிறாள்…! ” [images (1)] காலை 10 மணி “நா ன் சோஃபாவின் ஹேண்டில் பக்கம்   அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் , அருகில் வந்து அமர்ந்த மிருதுளா ‘தோசையில என்னடா கலந்த ஒரே கிறக்கமா இருக்கு’, என்றபடி என் மடியில் தலைவைத்து கால் நீட்டி சொகுசாக டிவி பார்த்தவளிடம் ஒன்னும் இல்ல ‘கொஞ்சம் அன்பு அதிகமா கலந்திட்டேன் போல’ அதான் என்றேன். டிவியில் சாமி திரைப்படத்தில் விக்ரம் த்ரிஷா நடித்த இவன்தானா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது விக்ரம் திரிஷா தக்காளிபழம் சீன் வந்ததும் ‘அய்யய்யோ’ என்றேன் , ஏண்டா என்னாச்சு என்று கேட்டவளிடம் , “இன்னிக்கு தக்காளி சட்னி வைக்கிறப்போ இந்த சீனை மிஸ் பண்ணிட்டேனே மிருதுளா மிஸ் பண்ணிட்டேனே”, என்றதும் ‘ச்சீய்ய் எப்போ பாரு இதே நினைப்புத்தானா உனக்கு’ சரி சரி இன்னிக்கு லஞ்ச் டின்னர் எதுலயுமே தக்காளி வாசமே இருக்கக்கூடாது புரிஞ்சதா? ரைட்டு தக்காளி இல்லைனா என்ன ட்ரம்ஸ்டிக் சேர்த்திடறேன் என்றதும்தான் தாமதம் என்ன நினைத்தாளோ தெரியவில்லை ஓடிச்சென்று ஃப்ரிட்ஜில் இருக்கும் ட்ரம்ஸ்டிக் அத்தனையையும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு ‘இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ’   என்று வக்கனை காட்டுகிறாள்..! ” [images (1)] பிற்பகல் 1 மணி “மி ருதுளா லஞ்ச் ரெடி சாப்பிடலாமா என்றேன் ம்ம் ஒரு மணி நேரத்துல குளிச்சிட்டு வந்திடறேன் என்றாள் ஏண்டி குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் அப்படின்றது உனக்கே ஓவரா இல்லையா ? என்றேன், என்னையென்ன உன்னை மாதிரி நினைச்சியா ‘தேவதையாக்கும் நான்’ ஒரு மணி நேரம் வெயிட் பண்ண முடிஞ்சா வெயிட் பண்ணு இல்லைனா துன்னுட்டு குப்புறபடுத்து தூங்கிடு ஐ டோண்ட் கேர்ன்னு சாதாரணமா சொன்னவளின் தந்திரம் வெகுவாகவே புரிந்தது , என்னை இந்த பகலில் தூங்க வைத்திட வேண்டுமென்ற அவளின் ஆசையை தகர்க்கவும் எனக்கும் தெரியுமென்பது அவளுக்கெப்படி தெரியும், இன்று இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போமே என்று நினைத்தபடி   தூங்குவது போல் பாசாங்கு செய்தேன் , உடை மாற்றிவிட்டு வந்தவள் என்னை நோக்கி வரும் சத்தம் கேட்கிறது கொரட்டை சத்தத்தை அதிகப்படுத்தினேன் கிட்ட வந்தவள்   என் தலையை கோதியபடி ‘சமர்த்து தூங்கிட்டான்’ என்று குதூகளித்தவளை, அப்படிலாம் நினைச்சுடாத என்றபடி எழுந்து வா சாப்பிடலாம் என்று அழைத்து சென்று திகட்ட திகட்ட அத்தனை உணவுகளை பரிமாறினேன். ‘நீ சாப்பிட்டயா? என்று கேட்டவளிடம், இல்லை நீ சாப்பிடாம நான் எப்படி சாப்பிடறதாம்’ என்றதும் நான் எதிர்பார்த்தபடியே லஞ்சாக ‘ப்ரஞ்சு முத்தம்’ கிடைத்தது..! ” [images (1)] மாலை 6 மணி “வா வெளில ஷாப்பிங் போகலாம் என்று அவளை பைக்கில் அழைத்து சென்றேன் அவள் நிறத்துக்கேற்ற இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள் என் ட்ரெஸ் எப்படிடா இருக்கு என்றவளிடம் , இப்போ நீ ‘தேவதை’, இந்த பைக் ‘தேர்’ , நான் ‘தேரோட்டுபவன்’, ‘தேவதையுலா வருகிறாள் வழிவிடுங்கள் என்றபடிதான் ஹாரன் ஒலிக்கிறது’, சாலைகளின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் உன்னிடம் அழகுபிச்சையேந்தி கையேந்தி நிற்கின்றன , செல்லும் வழியெங்குமிருக்கும் பாதைகளின் பெயர்களெல்லாம் தேவதைவீதி 1, தேவதை வீதி 2,   தேவதை வீதி 3 என்றபடி பெயர் மாறுகின்றன , துணிக்கடை பொம்மைகள் சந்தோஷப்பட்டுக்கொள்கின்றன தனக்கு பதில் இன்னொருத்தி வந்துவிட்டாளென்று , உன் வாசம் கலந்த காற்று ஊரெங்கும் உன் அழகை பரப்பி ‘உன் அழகுபரப்பு செயலாளர் தான் தான் என்று நிரூபிக்கிறது’ , இப்படி சொல்லி அவளின் அத்தனை வெட்கத்தையும் ஒரே நாளில் அனுபவித்தேன். வீட்டிற்கு வா உனக்கு இருக்கு மவனே என்றவளிடம் அதான் எனக்கு தெரியுமே தெரியுமே என்றதும் ‘எமகாதகன்டா நீ’, என்றவளிடம் இல்லை ‘காமகாதகன்’ என்றதும் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள் ..! ” [images (1)] இரவு 9 மணி “ம ணி 9 ஆச்சு சரி வா டின்னர் சாப்பிடலாம்‘, என்றேன். டின்னர்தான் வெளியில சாப்பிட்டோமே இன்னும் என்ன டின்னர் ? ஹும் அது என்ன டின்னர் அதுல ‘நிறமில்ல சுவையில்ல, திடமும் இல்ல’,   இப்போ நான் கொடுக்கிற டின்னர்ல   “நிறம் நீ இருக்க , சுவையாய் முத்தம் இருக்க, திடமாய் நான் இருக்க”, ‘இனிக்க இனிக்க பசியாறலாம் வா,   என்றேன் . எப்படிடா இப்படி எல்லாத்தையும் கவிதையாவே பேசற எனக்கு உன்னைப்பார்க்க பார்க்க பொறாமையா இருக்கு உனக்காக நான் ஒன்னுமே செய்யலை சொல்லலைன்றதும் வருத்தமா இருக்கு , என்றவளின் தலை கோதி அட லூசு “திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இரண்டு பேரில் யாராவது ஒருத்தர்தான் ரசிகனாக இருக்க முடியும்”, இப்போ இங்க நமக்குள்ள நடக்குற திருமண வாழ்க்கையில ‘நான் உன்னோட ரசிகன் எப்பவும் உன்னை மட்டுமே ரசிக்கும் ரசிகன்’, என்று விளக்கமளித்ததுதான் தாமதம் கையைப்பிடித்து விறு விறுவென்று இழுத்துச்சென்று ‘டின்னர்   பரிமாறினாள் ’..! ” [cute valentines day Cartoon Couple love (5)] காதல் வீடு - 5 ப்ரியமுடன் வசந்த் ஜம் ஜம் [images (20)] “ஹே ய் கிஷோர் என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீயென்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியான்னு ஜமுனா கேட்கவும் , ம்ஹ்ஹும்  ‘ உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது , பாவமா தெரியலியேன்னு’   கிஷோர் சொல்லவும் ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜமுனாவின் முகம் சிவந்தது , ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியுமா? என்று கிஷோர் சொன்னதும் நீ என்னை எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது ஐ ஹேட் யூ என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை பின் தொடர்ந்தபடியே சென்ற கிஷோர்  “ ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே ”   என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கிஷோர் சொல்ல , அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும் ஓஹ்  “ ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு ”   ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..! ” [images (20)] “ஹா லில் உட்கார்ந்திருந்த கிஷோர் ஹேய் ஜம்   இன்னிக்கு   ஜம்ம்னு இருக்க   என்னடி விசேஷம் என்றான் ஒன்னுமில்லை என்றவளிடம் இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா ? ஓஹ் அப்படியா? சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி என்று ஜமுனா ஓடி ஒழிய சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஷ்சும் பெற்றுக்கொண்டான்..!” [images (20)] “ஒ ரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்ப்பேன் என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும் என்ன விளையாட்டு என்று ஆர்வமாக கேட்டவளிடம்   “உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா?”   என்றான் சரி என்றவளிடம் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து   கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் கேன் ஐ ஹெல்ப் என்றான் ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..! ” [images (20)] “அ ழகான விடியலுக்கு பின் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் , அறையில்  ‘ இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ ’   பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில்  ‘ மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு ’   என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர் அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான் அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..! ” [images (20)] “கி ஷோர்   ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன்  ‘ உப்பு மூட்டை சுமப்பேன் ’   என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான் பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன்   டொம்மென்று பெட்டில் விட்டான் செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள் ,   ‘ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்’   என்று பாட ஆரம்பித்திருந்தான் அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்…!” [images (15)] காதல் வீடு - 6 ப்ரியமுடன் வசந்த் மூடு பனி [images (22)]   “இ ருவரும் ஒருமுறை பக்கதிலிருக்கும்   மலைப்பிரதேசம்    மூணார் சென்றிருந்தோம் குளிரானது காற்றுடன் கைகோர்த்திருந்த வேளை நாங்களும் கைகோர்த்தபடி பனிமூட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தோம். ‘இவ்வளவு அருகில் நான் மூடுபனியை பார்த்ததில்லை’, என்றவளிடம் ‘நான் கிட்டதட்ட மூடு பனியோடதான் வாழ்க்கையே நடத்திக்கொண்டிருக்கிறேன்’, என்றேன் அவளுக்கு விளங்கவில்லை என்னது என்றாள் .   நீ என்கிட்ட இருக்கிறப்போ எனக்கு உன்னைத்தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை அதான் மூடுபனின்னு சொன்னேன் ,   என்றதும் என் கன்னத்தில் மென் முத்தமிட்டாள். இன்னொரு அர்த்தமும் இருக்கிறது சொல்லவா என்றேன் ம் என்றவளிடம்  ‘ நீ எப்பவும் குளிர்ச்சியா இருக்க , ஆனா இப்போகூட அந்த அந்த ஹிப் தெரியாம சேலை கட்டி எப்பவும் இழுத்துப்போர்த்திட்டு இருக்க இல்ல அதான் நீயொரு மூடுபனின்னு சொன்னேன்’, என்றதும் ச்சீய்ய் என்ற சின்ன சிணுங்கலுடன்  “ மூடுடா பன்னி ”   என்று நக்கலாய் கண்ணடித்து சிரிக்கிறாள் ..!” [images (22)] “ம ற்றொரு நாள் அலுவலகத்தில் லஞ்ச் டைமில் தலைவியின் மொபைலுக்கு அழைத்து ‘இன்றைக்கு நீ கொடுத்தனுப்பிய லஞ்ச் சூப்பர்டி என்று சொல்லிவிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?’ ,என்றேன். பதிலுக்கு,சும்மாதாங்க கார்ட்டூன் பார்த்திட்டு இருக்கேன் என்றவளிடம், என்னடி இது ஒரு குழந்தைக்கு தாயாக போற இன்னும் கார்ட்டூன் பார்த்திட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட ஷையா இல்லியா?, என்றேன். இல்லியே என்றவள், நீங்க இந்த Pooh கார்ட்டூன் பார்த்தா அப்படி சொல்ல மாட்டீங்க   என்றாள். ஓஹ் அப்படியென்ன இருக்கிறது அந்த   Pooh கார்ட்டூனிடம்?, என்றதும், அது அப்படியே உங்களைப்போலவே செம்ம க்யூட்ங்க அதானென்று இழுத்தாள்…. அடிப்பாவி என்னை ஒரு நிமிஷத்துல கார்ட்டூன் ஆக்கிட்டியேடி இரு இப்போவே பார்க்கிறேன் என்று இணையத்தில்   Pooh கார்ட்டூன் தேடி கண்டுபிடித்து வீடியோவை ஓடவிட்டேன் வீடியோ ஓடிய சில நிமிடங்களில் நான் சிரித்த சிரிப்பில் அலுவலகமே அதிர்ச்சியடைந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாலை அலுவலகம் முடிந்ததும் ரெடிமேட் ஷோரூம் சென்று   Pooh கார்ட்டூன் அணிந்திருந்த அதே கலரில் சட்டை இல்லையில்லை பிளவுஸ் பீஸ் வாங்கி சென்று அதே போல அணிந்து அவள் முன் நின்று இப்போ சொல் ஷையா இருக்கா இல்லியா என்றதும்தான் தாமதம் என்னை பார்த்ததும் குபீரென்று சிரித்துக்கொண்டே வெட்கத்தை வீடெங்கும் சிதறவிட்டுக்கொண்டிருந்தாள் நான் அதை சேகரித்துக்கொண்டிருந்தேன்…!” [POOH] [images (22)] “இ ன்னொரு நாள் மாலை நேரம் வீட்டில் இருந்த சமயம் குளித்துமுடித்து மல்லிப்பூவும் வாசமுமாய் வீட்டை அதகளப்படுத்திக்கொண்டிருந்தாள் நான்   ”மல்லிகமொட்டு மனசத்தொட்டு இழுக்குதடி மானே”   என்ற பாடலை பாட ஆரம்பித்திருந்தேன் அய்யடா ஆரம்பிச்சுட்டார்யா பாட்டு வாத்தியார் என்று நக்கலடித்தவளை இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிடுவது என்றபடி மேலும் பாட ஆரம்பித்திருந்தேன் இடையில் வரும் ’பாடி வச்சு பாடி வச்சு பதுக்கிவச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன’வென்று பாடியபடியே அவளைப்பார்த்து கண்ணடித்தேன் ச்சீய் என்றவள் இந்த கவிஞர்கள் சுத்த மோசம் எப்படிலாம் டபுள்மீன் பண்றாங்க என்றாள் எல்லாம் நம்மளைப்போன்றவர்களுக்காகத்தான் என்றதும் ம்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கென்று சொல்லுங்கள் என்றாள் அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றபடி ’பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு பூப்பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு’ மேற்கொண்டு பாடலை பாட ஆரம்பிக்கவும், அதற்க்குமேல் அங்கு நின்றால் ஒரு வழி பண்ணிவிடுவேனென்று நினைத்திருப்பாள் போலும் ஒரே ஓட்டமாய் உள் அறைப்பக்கம் ஓடியவளை விரட்டிப்பிடித்தேன் அறையெங்கும் வளையல் மெட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது..!” [images (22)] “இ ன்னொரு சமயம் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் . வாக்குவாதம் முற்றி பிறந்தவீட்டுக்கு பெட்டியும் கையுமாக கிளம்ப ஆரம்பித்திருந்தாள்   . நிலைமையை சமாளிக்க இறுதியில்   ‘நீ சரியான கல்நெஞ்சக்காரி அதான் என்னை விட்டு போற இல்ல’,   என்றேன். என் முகத்துக்கு நேரே வந்தவள் ’உங்க நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க நான் கல்நெஞ்சக்காரியா?’   என்றபடி கண்களில் கண்ணீர் மிதக்க கேட்டவளை நான் ஏன் என் நெஞ்சை தொட்டு சொல்லணும்   ’நீயே உன் நெஞ்சை தொட்டுப்பார்த்துக்கோ நீ கல் நெஞ்சுக்காரியா இல்லையாவென்றேன்’  சிரித்தபடியே.   புரிந்துகொண்டவள் ஆவேசத்துடன் உங்களை உங்களையெல்லாம் என்று சொல்லியபடி கையிலிருந்த பெட்டியை என் காலில் டொப்பென்று போட்டுவிட்டு இப்போ சொல்றேன்   ஆமா நான் கல் நெஞ்சக்காரிதான் என்றவளின் கோபம் பறந்து தாபமாகியிருந்தது… !” [images (22)] காதல் வீடு - 7 ப்ரியமுடன் வசந்த் காமன்வெல்த் [images (4)] “ஒ ரு நாள் இருவரும் வெளியிலிருக்கும் ஒரு பார்க்கில் சந்தித்து கொண்ட பொழுது அவள் கையிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிட்டு ஹைய்யோ இத எப்படி கவனிக்காமல் போனேன் எங்கே சொல் உன் உடம்பில் எத்தனை மச்சம் இருக்கிறதென்று ? என்று அவளிடம் கேட்டேன் ஏன் கேட்கறடா என்று வினவியவளிடம் சும்மா ஒரு லவ் நாலேட்ஜிற்க்குத்தான் சொன்னால்தான் என்னவாம் என்றேன் சிணுங்கியபடியே மொத்தம் பத்து இருக்கிறது என்றாள் எங்கெல்லாம் என்றேன் ஆச தோச நீயே கண்டுபிடிச்சுக்கோ என்றாள் பாவம் நீயாகவே சொல்லிவிட்டாயென்றால் உனக்கு நல்லது இல்லையென்றால் எனக்கு நல்லது ம்ஹூம் சொல்லமாட்டேன் என்றாள் அப்படியா மேடம் அப்போ நம்ம மேரேஜிற்க்கு பிறகு நானே கண்டுபிடித்துக்கொள்கிறேன் ஆனால்   ”நான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு மச்சங்களையும் வரிசையாக இணைக்கும்படி என் உதட்டால் உன் உடம்பில் மச்சக்கோடு வரைவேன் பரவாயில்லையா?”   என்றேன் ஆஆங் அதெப்படி முடியாது என்றாள் அப்போ சொல் என்றேன் ம்ஹூம் என்றாள் அப்போ மச்சக்கோடு ஒகேவா என்றேன் ஒகே என்றாள் கீழ் உதட்டை கடித்தபடியே… !” [images (4)] “தி ருமணத்திற்க்கு பிறகொரு நாள் புத்தம் புதிய ஒரு சேலை அணிந்துகொண்டிருந்தவள் என்னருகில் வந்து இந்த காட்டன் சாரி எனக்கு நல்லா இருக்கா என்று வினவினாள் சூப்பரா இருக்கு ஆனால்   ”உனக்கு கூந்தல் சேலைதான் கொள்ளையழகு”   என்றதும் கூந்தல் சேலையா ? என்று ஆச்சரியத்தோடு வினவியவளிடம் அதான் கண்ணே நேற்றைக்கிரவில்   ”உன் உடம்பெங்கும் விரவியிருந்த உன் கூந்தலைத்தான் சொன்னேன்”   என்றபடி அவளை கட்டியணைத்தேன் ச்சீய் சரியான காட்டான்டா நீ என்று என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியவளை கூந்தல் சேலை அணிவிக்க வெகு நேரமாயிருக்கவில்லை… !” [images (4)] “ம றுநாள் , குளித்துமுடித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட தலையை சிலுப்பியபடி சிணுங்கல்முகத்துடன் என்னிடம் வந்தவள் உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருந்தா இப்படிலாம் பண்ணுவியா நீ என்றாள் என்ன சொல்ற நீ ? ம் ஆமாம் உடம்புல சுடு தண்ணீர் விழுந்ததும் ஒரே எரிச்சல் என்னவென்று பார்த்தால் உடம்பெல்லாம் உன் நகக்கீறல் முதலில் உன் நகத்தை வெட்டிவிட வேண்டும் என்றாள் சிணுங்கலுடனே ஓஹ் அதுவா? அது ”நேற்றைக்கு நாம் கலந்துகொண்ட காமன்வெல்த் கேம்ஸில் நீ வாங்கிய பரிசுகள்”   கண்ணே என்றதும் இன்னும் வெட்கப்பட்டு சிரித்தாள் ஈரக்கூந்தல் அள்ளிமுடித்தவளை இன்னொரு காமன்வெல்த் கேம்ஸிற்க்கு தயார் படுத்தினேன்… !” [images (4)] “இ ன்னொரு நாள் பகல் பொழுதில் என் மடியில் தலை வைத்து படித்திருந்தவள் என்னிடம் , நான் சாரிகட்டுறது பிடிச்சிருக்கா இல்லை சுடிதார் போட்டிருப்பது பிடிச்சிருக்கா என்றாள் சாரிதான் என்றேன் ஏன் என்றாள் சேலையில்தான் உன் வனப்பான பிரதேசங்கள் என்னை இன்புறச்செய்கின்றன என்றபடி உனக்கெது சவுகர்யமாக இருக்கிறது என்று வினவினேன் சுடிதார் என்றாள் ஏன்? என்றதும் ,   ”உங்களோட ப்ராபர்டிஸ் எல்லாம் பத்திரமா பாதுகாப்பா இருக்க ஹெல்ப் பண்ணுதே ”   என்று வெட்கியவளை அடிக்கள்ளி என்றபடி அவள் உதட்டில் மென் முத்தமிட விடுங்க பட்டப்பகலிலேவா என்றாள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றதும் சிவந்த அவள் முகம் இன்னும் சிவக்க ஆரம்பித்தது… !” [images (4)] “ஒ ரு நாள் மாலைப்பொழுதில் நான் புத்தகம் படித்துக்கொண்டிருக்கையில் என் நெற்றியில் முத்தமிட்டவள் நீங்க எனக்காக எழுதிய கவிதைகள் அத்தனையும் ஏன் அந்த கருப்பு வண்ணத்திலிருக்கும் டயரியில் எழுதினீர்கள் எல்லோரும் வெள்ளை டயரியில்தானே எழுதுவார்கள் என்றாள் அதுவா   ”நீ இந்த விமானத்தில் இருக்கும் கருப்புப்பெட்டி கேள்விப்பட்டிருப்பாய் விமானம் விபத்துக்குள்ளானால் அந்தகருப்புப்பெட்டியிலிருக்கும் ரகசியத்தை அனைவரும் தெரிந்துகொள்வார்கள் அதுபோலவே நான் உன் மேல் வைத்திருக்கும் அத்தனை காதலையும் இந்த கருப்புடயரி ரகசியமாய் வைத்திருக்குமென்றேன்”   , உணர்ச்சிவசப்பட்டவள் மிக தைரியமாக ஃப்ரெஞ்ச் கிஸ் ஒன்று கொடுத்தபடி என்னை வாரியணைத்தாள்…!” [images (4)] “ம ங்கிய நீல நிற இரவு விளக்கில் இருவரும் ஆதாம் ஏவாளாய் இருக்கையில் சின்ன சின்னதாய் காதல்ஸ்வரங்களாய் அவளின் கொலுசும் வளையல்களும் சத்தங்கள் எழுப்பிக்கொண்டிருந்தன இந்த கொலுசும் வளையலும் ஏன் சத்தம் போடுகிறதென்று தெரியுமாவென்றேன் இல்லையே என்றாள் நான் உன்னிடம் சரணடைந்துவிட்டதை பார்த்த கேலிச்சிரிப்புதான் அது என்றேன் ஓஹ் அப்படியா என்றவளிடம் , கலைந்து போடப்பட்ட ஆடைகளை காட்டி ‘ அவங்க நம்ம மேல கோபமா இருக்காங்கபோல‘ என்றேன் சிரித்தபடி ஏன் அப்படி சொல்றீங்க என்றாள் அவங்கள நம் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையே அதுதான் காரணமாயிருக்கும் என்றதும் க்ளுக்கென்று சிரித்தவளும் நானும் மீண்டுமோர் கள்ளாட்டம் விளையாட ஆரம்பித்திருந்தோம்…!” [pink-heart-sprinkles-hr] மழை வீடு - 8 ப்ரியமுடன் வசந்த் அது ஒரு மழை நாள் [images (11)] ந ம்மை சேர்த்து வைக்கும் வேலையை மழை பார்த்துக்கொள்ள சேர்ந்திருக்கும் வேளையை குடை பார்த்துக்கொள்கிறது …! [images (11)] நே ற்றைய மழைக்குப்பின் முளைக்கும் இன்றைய குப்பைக் காளான்களுக்கு மத்தியில் இன்று பெய்யும் மழையில் இன்றே ஆடும் நடனக்காளான் நீ ..! [images (11)] உ ன்னிடம் கெஞ்சிக்கூத்தாடி நான் பெற்ற வரங்களையெல்லாம் உன்னிடம் கேட்காமலே பெற்றுக்கொள்ளும் வரம் வாங்கி வந்திருக்கிறது மழை ..! [images (11)] வா னம் பெய்விக்கும் சொய்யென்ற பெருமழையில் நனைவதைவிட நீ பெய்விக்கும் சில்லென்ற மரமழையில் நனைவதே பிடித்திருக்கிறது ..! [images (11)] குடையானந்தா உ ன்னில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற மழைத்துளிகளை காப்பாற்றியதிலிருந்து ஞானியாகிவிட்டது குடை ..! [images (24)] மழை வீடு - 9 ப்ரியமுடன் வசந்த் நானும் நீயும் மழையும் [download (2)]   “உ னக்கு எப்பொழுதும் மழை பிடிக்குமென்கிறாய் ! மழைக்கும் உன்னைப்பிடித்திருக்கும்போல, நீ சொன்னதும் படபடவென்று வந்து சில்லென்று வீசிப்போகிறது உன்னைப்போலவே” [download (2)] “இ ந்த மழை உன்னை சீண்டும் பொழுதெல்லாம் வானம் வைடு ஜூமில் மின்னல் என்னும் ஃப்ளாஷ் அடித்து உன்னைப் புகைப்படமாய் சேமித்துக்கொள்கிறது கேட்டால் கார்மேகம் இதுவரை சேமித்துவைத்திருந்த உன்மீதான காதலின் சாட்சியாய் இருக்கட்டுமாம் நான் எப்பொழுதும்போல் அவுட் ஆஃப் ஃபோகஸில் ” [download (2)] “நா னும் நீயும் உன் குடையில் நனையாமல் இருந்தோமென்றால் நம் காதல் பொதபொதவென்று நனைந்திருந்தது மழை விட்டதும் நனைந்திருக்கும் இலைபோல ” [download (2)] “இ ப்பொழுதும் மழை வரும்பொழுதெல்லாம் உன் நினைவுகள் உயிர்பெற எத்தனிக்கின்றன மீட்டெடுக்க இன்னொரு மழையாய் நீ வருவாய் என்ற நம்பிக்கையில் ” [download (2)] காதல் வீடு - 10 ப்ரியமுடன் வசந்த் Love & Love Only [images (4)] “ ஒ ரு நாள் உனக்கு ஒரு பாலிசி போட்ருக்கேன் சைன் பண்ணுடா என்றபடி என் முகத்துக்குநேரே ஒரு பாரத்தை நீட்டியவளின் கைகளிலிருந்த பாரத்தை பிரித்து பார்த்தால் MIC பாலிசி என்றிருந்தது, என்னடியிது என்றால் என் மீசைக்கு பாலிசியெடுத்திருக்கிறாளாம்..!” [images (4)] “எ ன்னைப்பிரிந்திருக்கும்பொழுது எப்படியிருக்கும் உனக்கு என்றவளிடம் ஒரு இமையில் தேனையும் ஒரு இமையில் வலியையும் தடவி தூங்கும்பொழுது வரும் கனவைப்போன்று இருக்கும் என்றேன் ,கட்டிப்பிடித்துக்கொண்டாள்..!” [images (4)] “எ ன்னோட அழகை வர்ணித்து சொல்லேன் என்றவளிடம் கவிஞர் கண்ணதாசன் போதையில் இருக்கும்பொழுதுதான் அருமையான கவிதைகள் எழுதுவாராம் அதுபோல பிரம்மனும் உன்னை எழுதும்போது போதையிலிருந்திருக்கவேண்டும் என்றதும் வெட்கப்பட்டு எனக்கு போதையேற்றுகிறாள்.. !” [images (4)] “உ ன்னோட லைஃப்ல யாரெல்லாம் இன்ஸ்பிரேசனா இருக்காங்க என்ற கேள்விக்கு , முயற்சிகளுக்கு கஜினியும், சினத்திற்க்கு கட்டபொம்மனும் ,கவிதைக்கு தபூசங்கர், முத்தத்திற்க்கு மட்டும் கமலஹாசன் என்று சொன்னதும் ஒரு எட்டு பின் வைக்கிறாள்..!” [images (4)] “உ னக்கு முன்னாடியே நான் செத்துப்போயிட்டா என்னடா செய்வ என்று கொஞ்சம் கூட பயமில்லாது கேட்டவளுக்கு உன்னை புதைத்த கல்லறைக்கு அருகிலே உன்னுடைய கல்லறையை பார்க்கும்படியான சாளரம் வைத்த கல்லறையை எனக்கும் கட்டி விழிமூடா சாவை எமனிடம் வாங்கிக்கொள்வேன் என்றது கண்ணீரோடு காதல் பொங்க கட்டிக்கொண்டாள். .!” [images (4)] “ஒ ரு நாள் உன் மடியில் படுத்து அழணும்ன்னு ஆசையா இருக்குடா என்றவளை அப்போ வா கட்டுமரம் கட்டி கடலுக்குள்ளே கூட்டிப்போகிறேன் நன்றாக அழு என்றேன் ஏன் கடலுக்குள்ள போய் அழணும் என்று எதிர் கேள்விக்கு ,   இல்லை கடலுக்குள்ள உன்னுடைய கண்ணீர்த்துளி விழுந்தால் முத்தாக மாறிவிடும் அதையெடுத்து விற்றுவிடலாமே என்றதும் புன்னைகைக்கிறாள்.. !” [images (4)] “நா ன் உன் கைகளுக்குள் சிக்கிக்கொண்டால் என்னை என்ன பண்ணுவாய் என்று ரொமாண்டிக் லுக்கோட கேள்வி கேட்டவளிடம் நான் காதலமைப்பாளர் ஆகிடுவேனே என்றதும் எப்படி எப்படின்னு பதில் கேள்விக்கு இசைய மீட்டுனா இசையமைப்பாளர்ன்னு சொல்றாங்க இல்லியா அதுமாதிரி காதலிய மீட்டுனா காதலைமப்பாளார்தானே என்றதும் ஹைய்யோ கடிக்காதாடா என்றவளின் உதட்டை கடித்து நிஜமாகவே அவளை மீட்ட ஆரம்பித்திருந்தேன்.. !” [images (4)] “ஒ ரே காதல் மூடோடவே இருக்கியே காதல்ல எதுவும் பிஹச்டி வாங்கப்போறியா என்று எடக்கு மடக்கு கேள்விக்கு நானும் எடக்குமடக்காகவே ஆம் காதல் கல்லூரியில் பேச்சலர் ஆஃப் கிஸ் எனும் பட்டப்படிப்பில் முத்தவியல் பாடத்தில் பிஹச்டி பண்ணுவதற்க்காக உன்னை ஆராய்ச்சி செய்து காதலரேட் வாங்கப்போகிறேன் என்றதும் மயக்கமடைந்துவிட்டாள். .!” [pink-heart-sprinkles-hr] காதல் வீடு - 11 ப்ரியமுடன் வசந்த் மனசெல்லாம் மார்கழி தெருவெல்லாம் கார்த்திகை [images (1)] “இ ருபத்தேழை நானும் இருபத்தைந்தை நீயும் கடந்து விட்டபிறகு இது வரையிலும் நமக்குள் வராத காதல் எப்படி நமக்குள் வந்தது என்று நான் கேட்டதற்க்கு பல வருடங்களாக குழந்தையில்லாதவர்கள் குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்வது போல நம்மிருவரையும் காதல் தத்தெடுத்துக்கொண்டிருக்கிறது என்கிறாய் ” [images (1)] “கா தலைக்காட்டியோ இதயத்தைக்காட்டியோ நான் கேட்ட கேள்விகளுக்கு பெரும்பாலும் மவுனத்தையே பதிலாக தரும் நீ பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கும்பொழுது ஜன்னல் வழியே தென்படும் முச்சந்தி பிள்ளையாரையோ வேப்பமரத்து அம்மனையோ காட்டி கேள்வி கேட்கும் உன் ஆட்காட்டி விரலுக்கும் மட்டும் முத்தம் கொடுக்கிறாய் ஏன் ?” [images (1)] “ஓ ர் மார்கழி மாத அதிகாலையில் அரிசி மாவு கோலம் போட்டுக்கொண்டிருந்தபொழுது ஆவென கதறிய உன்னிடம் என்னாச்சு என்றேன் ? நீயோ மாவுக்கும் காலுக்கும் வித்தியாசம் தெரியாத ஐந்தறிவு எறும்பு என் காலை கடித்துவிட்ட்து என்றாய், உனக்கு தெ யாதா எறும்புக்கு இனிப்பறிவு இருப்பது?” [images (1)] “ ஒ ரு நாள் நாம் இருவரும் பாட்டுக்கு பாட்டு போல் ஒருவர் பாடி முடித்த பாடல் வரியின் இறுதி வார்த்தையை அடுத்தவர் அடுத்த பாடலுக்கான ஆரம்ப வரியாய்கொண்டு பாடல் பாட வேண்டும் என்று விதி முறை வைத்து விளையாடினோம் நீ முத்தம் என்ற வார்த்தையுடன் பாடலை முடிக்க நான் அதே வார்த்தையை கொண்டு பாடலை ஆரம்பித்தேன் நீயோ இசைக்க ஆரம்பித்திருந்தாய் ” [images (1)] “உ ன் காதல் எப்படியிருக்கும் ? என்றாய் , ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்க்கு கம்பி வழிச்செல்லும் மின்சாரம், அதே கம்பியை உரசி செல்லும் காற்று இவற்றை கேட்டு தெரிந்து கொள் என்றேன் அதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே பிறகெப்படி கேட்பது என்றாய் அப்படியென்றால் மின்சாரத்தில் இயங்கும் இசைக்கருவி , தலையசைத்து ஆடும் மலர் இவைகளிடம் உணர்ந்துபார் என் காதலை” [images (1)] “ம ற்றொரு நாள் வீட்டு வாசலை தெளித்து கொண்டிருந்தாய் எதற்க்கு வீட்டு வாசலை தெளிக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு தேவதைகள் நம் வீட்டிற்க்குள் வருவதற்க்குத்தான் என்றாய் அப்போ ஏற்கனவே இருக்கும் தேவதையை என்ன செய்ய என்றேன் நான் , நீயோ கீழ் உதட்டை கடித்து ராஸ்கல் என்கிறாய் ” [Love-heart-wallpapers] காதல் வீடு - 12 ப்ரியமுடன் வசந்த் கவிதைப்பந்து [images (21)] “எ னக்கு உன் மீதான காதல் கொஞ்சம் அதிரசமும் முறுக்கும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது என்றதும் கொல்லென சிரித்துவிட்டாள் ‘போடா தின்னிப்பண்டாரம்’ என்றவாறே, ஆம் உன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் நான் உன்னை மட்டுமே தின்னும் தின்னிப்பண்டாரமென்று!” [images (21)] “கா லை டிபன் பரிமாறிக்கொண்டிருந்த உன்னிடம் ’உனக்கு ஏன் தாலிகட்டுனேன்னு நினைச்சு நினைச்சு வருத்தமா இருக்குடி’ என்றேன் நான் , ‘ஏன் இப்போ நான் உன்னை என்ன கொடுமை பண்ணேன்னு இவ்ளோ சலிச்சுக்கிற என்றாய்’முகவாயை சிலிப்பியபடி ‘இல்லை நானும் தினமும் அவுட்டாகிகிட்டே இருக்கேன் இந்த தாலி மட்டும் அவுட்டே ஆகாம நாட் அவுட் பேட்ஸ்மேனா விளையாடிகிட்டே இருக்கே அதான்’ என்றேன், ‘ச்சீ போடா வெட்கங்கெட்டவனே’ என்கிறாய்!” [images (21)] “க விதை எழுதி எழுதி எதுவும் சரிவராமல் அதை கசக்கி தூரத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுக்கொண்டிருந்தாய் நான் அதை நான் வீடியோவாக என் கேமிராவில் படம்பிடித்துக்கொண்டிருந்தேன் ‘ஏண்டா இதெல்லாம் படம்பிடிக்கிற’ என்றாய் கொஞ்சம் சிணுங்கலாக, இல்லை ‘பிற்காலத்தில் நம் மகனிடம் உன்னோட அம்மா ஒரு   கவிதைப்பந்து வீராங்கனை என்று போட்டுக்காட்டவேண்டுமே அதுதான் ’என்றேன் நீயோ ‘போடா பொறுக்கி’ என்றாய்!” [images (21)] “ தி ருமணத்திற்கு முன் இருக்கும் காதலுக்கும் திருமணத்திற்க்கு பின் இருக்கும் காதலுக்கு என்ன வித்தியாசம் என்றதும் நானாக பெறும் முத்தத்திற்கும் நீயாக தரும் முத்தத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் என்று கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!! ” [7134792-781804-hand-drawing-cartoon-love] காதல் வீடு - 13 ப்ரியமுடன் வசந்த் Bachelor of Love [images (11)] “நீ என்னடா படிச்சுருக்க என்று கேட்டவளிடம் நான் பி.எல். முடிச்சுருக்கேன்னு சொன்னதும் ஓஹ் வக்கீலுக்கு படிச்சுருக்கியா பேஷ் பேஷ் என்றவளிடம் பி.எல்ன்னா பேச்சலர் ஆஃப் லவ்ன்னு சொன்னேன் , சைய் ரொம்ப கடிக்காதடான்னு சொல்லி என் கையப்பிடித்து கடித்து வைத்திட்டாள்   கடிகாரி …!” [images (11)] “பி .எல். முடிச்சுருக்கியே உன்னோட கோர்ஸ்ல என்ன என்ன சப்ஜெக்ட்டெல்லாம் இருந்துச்சு கொஞ்சம் சொல்லேன் நான் தெரிஞ்சுக்கிறேன்னு என்றவளிடம்   இதழியல் , இடையியல், காதலியியல், கண்ணியல்,கடைசியா காமவியல்ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே மொத்ததுல   நீ ஒரு டரியல்டா சாமி   ஆளவிடுன்னு ஓடியேவிட்டாள்… !” [images (11)] “நா ன் உனக்கு புதுசா ஒரு பெயர் வச்சுருக்கேன்டின்னதும் என்ன என்ன பெயர்ன்னு குதிச்சு ஓடி வந்தவளிடம் நீ நான் எப்போ முத்தம் கேட்டாளும் தரவேமாட்டேன்றியா அதனால முத்தம்தராதவள் என்பதை சுருக்கி   முத்ததாரா   என்று வைத்திருக்கிறேன்னு சொன்னதும் இச்சென்று ஒரு முத்தம் தந்துவிட்டாள்… !” [images (11)] “எ ப்பப்பாரு மிஸ்ட் காலா குடுக்குறியே ஒரு நாளைக்காவது உன்னோட காசு   போட்டு கால் பண்ணியிருக்கியாடி நீ , சரியான கஞ்சூஸ்டி நீ என்றேன். மிஸ்ட் கால்தான பண்ணேன்   மிஸ்ட் காதல் பண்ணலியே   என்று சொல்லி வார்த்தை விளையாட்டு காட்டுகிறாள்… !” [images (11)] “உ னக்கு சமைக்கத்தெரியுமா என்ன என்னல்லாம் சமைப்ப என்று கேட்டாள் ,எதுக்கு கேட்குற என்றேன் இல்லை கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே அதான் கேட்டேன், ஓஹ் அப்டியா இரு   சொல்றேன் எனக்கு   முத்தப்பொறியல் , இடைதோசை, காதல் குருமா   இதெல்லாம் நல்லா சமைக்கத்தெரியும் என்றதும் உன்னையெல்லாம் எதுனாலும் பாலைவனத்துல கொண்டுபோய் விட்டாத்தாண்டா நீ திருந்துவன்றாப்பா… !”  [img_girls-ly1381325183_603] காதல் வீடு - 143 ப்ரியமுடன் வசந்த் பிறந்தநாள் பரிசு [images (26)] “பி றந்த நாள் அதுவுமா கோவிலுக்குப்போய் சாமிகிட்ட ஆசீர்வாதம் வாங்காம ஏன் என் வீட்டு வாசல்ல வாட்ச்மேன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்குற என்றவளிடம் சாமிதரிசனத்துக்கு சிறப்புகட்டணம் கேட்குறான் உன் வீட்டு வாட்ச்மேன் என்றதும் சிரித்துவிட்டு சரி சரி அவன் கேட்குறதை கொடுத்துட்டு மறக்காமல் அர்ச்சனைக்கு முத்தசீட்டும் வாங்கிவா என்கிறாள்… !” [images (26)] “பி றந்தநாளுக்கு சாக்லேட் எங்கடா என்று உரிமையுடன் கேட்டாள் , சாக்லேட்தானே இருக்கே ஆனா அந்த சாக்லேட்டை ஒரே நேரத்தில் ரெண்டுபேர்   மட்டும்தான் சாப்பிடமுடியும்ன்னு சொன்னதும் அப்படியென்னடா வித்தியாசமான சாக்லேட் என்ன பேர் அதுக்கு என்றாள் , அந்த சாக்லேட்டுக்கு பேர் முத்தசாக்லேட் என்றதும் நான் கொடுப்பதற்க்கு முன்பே அவளே எடுத்துக்கொண்டாள்…!” [images (26)] “உ ன்னோட பிறந்த நாளுக்கு தங்க மோதிரம் பரிசா தர்றேன் கையை நீட்டு போட்டு விடறேன் என்றாள் , கையை நீட்டியதும் அவள் சுண்டுவிரலை என் மோதிரவிரலோடு கோர்த்துக்கொண்டு எப்படி என்னோட பரிசு பிடிச்சுருக்கா என்றாள், எங்கடி மோதிரத்தையே கண்ணுல காட்டல பிடிச்சுருக்கான்னு கேட்குற என்றேன்,நீதான் என்னை எப்போ பார்த்தாலும் தங்கம் பொன்னுன்னு கொஞ்சுவியே அப்போ என்னோட விரல் தங்கத்துல செஞ்ச மோதிரம்தானே என்று சொல்லிவிட்டு வக்கனை காட்டுகிறாள்…!” [images (26)] “பி றந்த நாள் அன்று எழுந்து என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன் உதட்டையொட்டி கீழே வடிந்திருந்த மீசையை முறுக்கிவிட்ட மாதிரி கண்மையால் வரைந்திருந்தது , இவளோட வேலையாகத்தான் இருக்கும் என்று சமையலைறையில் இருந்தவளிடம் என்னடி இது என்று வரைந்த மீசையை காட்டி கேட்டேன் உங்க பிறந்தநாளைக்கு நான் எழுதிய என்னோட கவிதை நல்லாருக்கா என்று வழக்கமாக முத்தத்தால் வாயை அடைப்பவள் அன்று வார்த்தையாள் என் வாயை அடைத்தாள்…!” [images (26)] “ச ரி பசிக்குது பிறந்தநாள் ட்ரீட் சாப்பிட எங்க போகலாம் சரவணபவன் , வசந்தபவன் இதுல எதுக்கு கூட்டிட்டு போகப்போற என்ன மெனு ஆர்டர் பண்ணப்போற என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவளிடம், காதல்பவன் போகலாம் முத்ததோசை வாங்கித்தர்றேன் என்றேன், காதல்பவனா அது எங்க இருக்கு என்றவளை அலேக்காக தூக்கி எங்கள் காதல்பவனான படுக்கையறைக்கு தூக்கிச்சென்று முத்ததோசை பரிமாறினேன்…!” [Pink_Heart_Fimo_Med] காதல் வீடு - 15 ப்ரியமுடன் வசந்த் வெட்கத்தை அடைகாப்பவள் [images (4)] “உ னக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டால் எனக்கு சாக்லேட் பிடிக்கும் , தனிமை பிடிக்கும், மழை பிடிக்கும் , என் குடும்பம் பிடிக்கும் , சாய்பாபா பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும் , எங்க வீட்டு மொட்ட மாடி பிடிக்கும், பக்கத்து வீட்ல இருக்கும் குட்டி குட்டி பசங்க பிடிக்கும்ன்னு நிறைய பிடிக்கும் சொன்னாயே தினமும் உனக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் வாங்கித்தர்றேனே என்னைப்பிடிக்காதா என்று கேட்டால் ‘நீ தான் என்னைபிடிச்சிருக்கியேன்னு’ ஹி ஹின்னு நக்கலாக சொல்கிறாள்…!!!” [images (4)] “அ ன்னிக்கு ஒரு நாள் உன்னுடைய மீசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாயே எங்கே மீசையைப்பற்றி ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்ன்னா , ‘என் முகத்தாளில் அன்போவியம் வரையும் தூரிகைன்னு’ சொல்லிட்டா, நான் கேட்டேன் அய்யய்யோ அப்போ கருப்பா இருக்குற என் மீசையை கலராக்கிடுவியான்னு, அட லூசே இதெல்லாம் ஒரு மீசைன்னு சொல்லி கவிதை சொன்னா கிண்டல் பண்றியான்னு சொல்லி மீசைய பிடிச்சு இழுத்திட்டா, படு பாவி வலிக்குதுடி இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா மீசைய வச்சே உனக்கு ஊசி போடறேன் இருன்னா வவ்வவ்வேன்னு வக்கனை காட்டறாங்க…!” [images (4)] “வெ ட்கப்பட்டிருக்கியான்னு ஒரு நாள் கேட்டேங்க அவகிட்ட , வெட்கப்பட்டிருக்கேன் ஆனா ஆம்பிளைப்பசங்கள பார்த்து வெட்கப்பட்டதே இல்லைன்னா ஏன்னு கேட்டா இது வரைக்கும் அவ மனசுக்கு பிடிச்ச யாரையுமே பார்க்கலைன்னா, ”ஏன் வெட்கத்தையெல்லாம் அடை காத்து வெட்ககுஞ்சு பொறிக்கப்போறியா” ன்னு கேட்டதும் ஆமான்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறா அப்போதாங்க கவனிச்சேன் எப்போவும் வெளீர்ன்னு இருக்கிற அவ முகம் அன்னிக்கு சிகப்பாகிருந்திச்சு…! ஹைய்யா முதல் வெட்ககுஞ்சு பொறிச்சிடுச்சேன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேனுங்க…!” [images (4)] “ஒ ரு நாள் என் ரூமுக்கு என்னைப்பார்க்க வந்தவளை கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்திருன்னு நான் குளிச்சிட்டு வந்திடறேன்னு அவளை ஹால்ல விட்டுட்டு நான் பாத்ரூம் போயிட்டேனுங்க உள்ள போனதுக்கப்பறம் வெளில இருந்து அவ யார் கூடவோ பேசிட்டு இருந்தது கேட்டுச்சு என்ன பேசுறான்னு ஒட்டுக்கேட்டா ”என்ன திமிர் இருந்தா எனக்கு முன்னாடியே அவனுக்கு நீ கிஸ் குடுப்ப இந்தப்பக்கம் உன்னை இனி பார்த்தேன் பிஞ்சிம்ன்னு” சொன்னது தெளிவா கேட்டுச்சு , ஹைய்யய்யோ நான் யாரையும் தொட்டு கூட பார்த்ததில்லையே இவ என்னடான்னா கிஸ்ஸடிச்சேன்னு சொல்றாளேன்னு பதறிப்போய் வெளில வந்து பார்த்தா வில்ஸ் பாக்கெட்டை எடுத்து அதுல இருக்குற சிகரெட்டெல்லாம் நச்சு நச்சுன்னு பிச்சு போட்ருக்கா…!” [images (4)] “அ ப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியா ன்னு மெதுவாத்தாங்க கேட்டேன் ஹேய் லூசே அதுக்குள்ள என்ன நம்ம கல்யாணத்துக்கு அவசரம் இப்போன்னு கேட்டாள் , அட லூசே நேத்து உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிருக்குன்னும் உன்னோட அப்பா அந்த வேலைக்கு போக விடமாட்டேங்கிறார் அப்படின்னு சொன்னியே ஞாபகம் இருக்கா? அந்த வேலைக்கு போகத்தான் அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டியான்னு கேட்டேன்.பின்ன உன்னையெல்லாம் எவன் கட்டிக்குவான் எனக்கு ராத்திரி கனவுல ஒருத்தி வருவான்னு சொல்லியிருக்கேனே அவளையே கட்டிக்குவேன்னதும், மகனே உனக்கு நிஜத்துல மட்டுமில்ல கனவுலயும் நான் மட்டும்தான் மனைவியா இருக்கணும்ன்னு மீறி யாராவது வந்த மாதிரி தெரிஞ்சதுன்னு சொல்லி ஓங்கி வயித்துல ஒரு குத்து விட்டுட்டாங்க … !!   அய்யோ அம்மா கொலை பண்றா ..!” [images (4)] “எ ன்னடி இன்னிக்கு ரொம்ப லேட்டுன்னு கேட்டா வீட்ல நிறைய வேலை இன்னிக்கு துணி துவைச்சு அதை காயப்போட்டு மடிச்சு வச்சி , வீடு கிளீன் பண்ணி,குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு விளக்கேத்தி வச்சிட்டு வந்தேன் அதான் லேட்டாகிடுச்சுன்னு சொன்னாள் நான் சொன்னேன் உனக்குத்தான் வீட்டு வேலையெல்லாம் தெரியுதே யாரையாவது இளிச்ச வாயன சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்லன்னு , அவ சொல்றா எனக்கு இனிமேல் உன்னை மாதிரி ஒரு நல்ல இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்னு …!” [img_girls-ly1381325183_603] காதல் வீடு - 16 ப்ரியமுடன் வசந்த் காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம் [images (21)] “அ றையெங்கும் சந்தனமணத்தை பரப்பிக்கொண்டிருந்தது அந்த சாண்டல் அகர்பத்தி சந்தன வாசத்தை நுகர்ந்தவாறே மெத்தையில் உட்கார்ந்திருந்த என்னிடம் ”சுளுக்கெடுத்துவிடறேன் கொஞ்சம் காலை நீட்டுங்க” என்று சொல்லியவாறு என்னுடைய காலை எடுத்து அவளின் மடியில் வைத்து ஒவ்வொரு விரலையும் முன்னும் பின்னும் இழுத்து இழுத்து பார்த்து சுளுக்கு எதுவும் இல்லையென்றதும் , ”என்னங்க சுளுக்கே விழ மாட்டேன்னுது” என்றவளிடம் ”நீதான் நேற்றே சுளுக்கெடுத்துவிட்டாயே இன்றைக்கு எப்படி இருக்கும்” என்றேன் நமுட்டு சிரிப்புடன் , அதற்கு அவள் களுக்கென்று சிரித்துக்கொண்டே தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள், வெட்கமாம்…!” [images (21)] “த லையணையில் முகம் புதைத்தவளிடம் அட ரொம்பத்தான் வெட்கப்படுகிறாய் நீ , சென்ற மாதம் நீ ஊருக்கு போயிருந்த நேரத்தில் உன் தலையணை என்னிடம் நிறைய முத்தங்களை வாங்கி வைத்திருக்கிறது இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அந்த முத்தத்தையெல்லாம் உனக்கு மாற்றிவிடும் பரவாயில்லையா என்றதும் ச்சீய் தலையணைக்கு போய் யாராவது முத்தம் கொடுப்பார்களா என்று கண்களை அகலவிரித்து தலையணையை நோக்கி உன்னை பிறகு கவனித்துக்கொள்கிறேன் என்கிற மாதிரி ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தவள் முத்தமழை பொழிந்துவிட்டாள், கேட்டால் கட்டணமில்லா முத்த ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டது தலையணை என்கிறாள். ஆஹா தலையணை மந்திரம் வேலை செய்கிறதே என்று நினைத்துக்கொண்டேன் மனதிற்குள்…!” [images (21)] “ஆ மாங்க இந்த தலையணை மந்திரம் தலையணை மந்திரம் என்று சொல்கிறார்களே அது என்ன மந்திரம் என்று குப்புற படுத்திருந்த என் முதுகில் முட்டை முட்டையாக கை விரல்களால் கோலமிட்டுக் கொண்டே வினவியளை ஆச்சரியமுடன் பார்த்தேன் நாம் மனதிற்குள் நினைத்தது இவளுக்கு கேட்டுவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே அதுவா செல்லம் அதற்கு நீ என்னிடம் என்ன செய்கிறாயோ அதற்கு எதிர்பதமாக நான் உன்னிடம் செய்வேன் அதுதான் என்றதும் . என்னவோ புரிந்திருக்க வேண்டும் சட்டென்று விரல்களால் கோலமிடுவதை நிறுத்தி கோவத்துடன் என் இரண்டு கன்னங்களிலும் தன் ஐந்து கைவிரல்களும் பதியுமாறு ஓங்கி பளாரென்று அடித்துவிட்டு ஆளும் மூஞ்சியும் பாரு என்றவளின் கன்னங்களில் பதிலுக்கு முத்தமிட ஆரம்பித்தேன்.இப்பொழுது அவளுக்கு புரிந்துவிட்டிருந்தது முதலில் சொன்னது போலி தலையணை மந்திரமென்று… !” [images (21)] “அ ப்படியே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது காலையில் நான் படுத்திருந்த பொசிசனை பார்த்தவள் சிரித்துக்கொண்டே ”கால் நீட்டி தூங்கும் காண்டா மிருகம் அடடடே ஆச்சரியக்குறி” என்று நக்கலடித்த படியே காபி சாப்பிடுங்க ஆறிடப்போவுது என்று காபியை கொண்டுவந்து டீஃபாய் மீது வைத்துச்சென்றாள். நான்தான் நக்கல் பிடித்தவன் என்றால் இவள் நக்கலை குத்தகைக்கே எடுத்திருப்பாள் போல இன்னைக்கு இரவு இருக்கிறதடி உனக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே   அவள் குடுத்த காபியை குடித்துவிட்டு வழக்கம்போலே அன்றைய இரவு டின்னருக்கான மெனுவை ஸ்டிக்லேபிளில் எழுதி டீ கப்பின் அடியில் ஒட்டிவிட்டேன்… !” [images (21)] “அ ன்றைக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலையால் சோர்ந்து போய் வீடு திரும்பினேன். வீடு திறந்துதான் இருந்தது கவி , கவி என்றழைத்தபடியே வீடு முழுவதும் தேடினேன் ஆளையே காணோம் என்னை வெறுப்பேற்றுவதற்காக எங்கேயாவது ஒளிந்திருந்து   விளையாட்டு காட்டுவாளாக்கும் என்று நினைத்தபடிஉடை மாற்றிவிட்டு பெட்ரூமிற்குள் நுழைந்ததும் , நான் நினைத்தபடியே உள்ளே ஒளிந்திருந்த அவள் சட்டென்று கதவை சாத்திவிட்டு என்னை கட்டிப்பிடித்து முகம் நிறைய முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுக்க வெட்கப்படுபவள் இப்படி முத்தமழை பொழிவது   ஆச்சரியமாய் இருந்தது. இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு என்றேன் ? நீங்க இன்னிக்கு டின்னர்க்கு என்ன எழுதியிருந்தீங்க என்று கேட்டதும்தான் காலையில் அவளுக்கு விளையாட்டாய் மெனுவில் ”முத்த தோசை” என்று   எழுதிக்கொடுத்தது ஞாபகத்தில் வந்தது ,   அலுவலகத்தில் நடந்த அதிகப்படியான வேலை அழுத்தத்தில்   காலையில் அவளுக்கு எழுதிக்கொடுத்திருந்த மெனுவையும் மறந்திருந்தேன் நான்.   அவள் கொடுத்த டின்னரான முத்த தோசை முகத்தையும் மனத்தையும் நிறைத்தது.பதிலுக்கு காம டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்திருந்தேன் நான் ..!” [pink-heart-sprinkles-hr] காதல் வீடு - 17 ப்ரியமுடன் வசந்த் கர்ப்பகால காதல் [images (1)] “எ ன்னங்க நம்ம பையன் உங்களைப்போல் சாடையாக பிறந்தால் தான் உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்குமாம் உங்கம்மா சொல்றாங்க என்று சிணுங்கியவளை சே ! சே ! உன் சாடையாகப் பிறந்தால் தான் எனக்குப் பிடிக்கும் என்றதும் என் தோளில் கைகளை வைத்து முகம் புதைக்கிறாள் கர்ப்ப கால வெட்கத்தில் ..!” [images (1)] “ந மக்கு பொறக்கப்போற பையனுக்கு என்னென்ன பொம்மையெல்லாம் வாங்கி வைக்கப்போறீங்க என்றவளிடம் அழகான பார்பி பொம்மையான நீயும் யானை பொம்மையான நானும் இருக்க தனியே வேறு பொம்மை வேறு வாங்க வேண்டுமா என்ற என் குமட்டில் தன் கைகளால் செல்லமாக இடித்து குசும்பு என்கிறாள் ..!” [images (1)] “ஆ மா நமக்கு பொறக்கப்போறது பையன் தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க ? வயித்தில இருக்கும்போதே சரக்கடிச்சவனாட்டம் வாந்தியெடுக்கிறானே அதை வைத்துதான் சொன்னேன் என்றதும் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் நடுமண்டையில்..!” [images (1)] “ஏ ங்க நம்ம பையன் பொறந்ததும் அவனுக்கு எங்கண்ணா அஞ்சு பவுன்ல தங்கச்செயினும் எங்கப்பா தங்க மோதிரமும் வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்காங்க நீங்க என்ன வாங்கித்தரபோறீங்க உங்க பையனுக்கு ? ஒரு தங்கச்சி பாப்பா வாங்கித்தரலாம்ன்னு இருக்கேன் என்றுசொன்னதுதான் தாமதம் உங்கள உங்கள என்று சொன்னபடியே கையில் வைத்திருந்த தக்காளிப்பழத்தை என் மீது எறிந்தேவிட்டாள்..!” [images (1)] “எ ன்னடி உன்னோட வயிறு பெரிசாச்சுனா என் அம்மா பார்த்து பார்த்து பூரிச்சுப்போய் ஆப்பிள் ஜூஸ் கொடுத்து பாசத்தை பொழியுறாங்க! போன வாரம் நானும் என்னோட வயிறும் பெரிசாயிட்டே போகுதுன்னு சொன்னதுக்கு வாயக்கட்டு ராஸான்னு சொல்றாங்க உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாமா என்று செல்லமா கேட்டதற்க்கு எனக்குள்ள இருக்கிறது வாரிசு உங்களுக்குள்ள இருக்குறது தரிசென்றுச் சொல்லி சிரிக்கிறாள்   எமகாதகி ..!” [images (1)] “ ச மையலறையில் மிக்ஸி இருந்தாலும் கைமணம்போல் வராதென்று சொல்லி நின்று கொண்டே அம்மியில் கறி மசால் அரைத்துக்கொண்டிருந்தவள் என்னிடம் திடீரென்று நான் சாமியாம் உங்களுக்கு வரமொன்று தரலாம்ன்னு இருக்கேன் என்ன வரம் வேணும் என்று கேட்டாள் !   இவ்ளோ நாள் உன்னை மட்டும் கட்டிப்பிடிக்க என் கை போதுமானதாக இருந்தது இனி உன்னோடு நம் பிள்ளையையும் சேர்த்து கட்டிப்பிடிப்பதற்க்கு , உன் வயிறும் என் கைகளும் சேர்ந்தே வளரும் வரம் கேட்பேன் என்றதும் சிரித்துவிட்டாள்..!” [images (1)] “பி ரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு , பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே   நான் , பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய்   என் காதல் ” [Pink_Heart_Fimo_Med] கவிதை வீடு -18 ப்ரியமுடன் வசந்த் இவள் என்பது இடைச்சொல் [images (21)] பெ யர்ச்சொற்களில் கவிதை எழுதுகிறேன் நான் இடைச்சொற்களில் காவியம் படைக்கிறாய் நீ ..! நகரும் சொர்க்கம் [images (21)] நீ ஏறிய நிறுத்தத்திலிருந்து நீ இறங்கிய அடுத்த நிறுத்தம் வரை என்னையும் சேர்த்து உள்ளே இருப்போர் அனைவருக்கும் சொர்ப்ப நேர சொர்க்கமாகிப்போனது நகரப்பேருந்து ..!   ஹார்ட் கேன்சர் [images (21)] பூ மிப்பந்தில் பிறந்த அழகிகளுக்கு மத்தியில்   நீயோ அழகுப்பந்தில் பிறந்த பேரழகி..! [images (21)] உ ன்னை சுண்டினால்   இரத்தம் வருமோ வராதோ தெரியாது ஆனால் அழகு வரும்..! [images (21)] எ ன் இதயத்தில்   ஓட்டை விழுவதற்கு பதில் நீ விழுந்துவிட்டாய்..! [images (21)] உ னக்கு சிறுவயதில்   காது குத்துவதற்கு பதில் அழகை குத்திவிட்டார்கள் போல அழகை உரித்து வைத்திருக்கிறாய்..! [images (21)] த ராசு தட்டிலிருக்கும் எடைக்கற்கள் எடையை அளக்கும் என்றால் என் மனதட்டிலிருக்கும் காதல்கற்கள் உன் இடையை அளக்கிறது..! [images (21)] உ ன்னிடம் என் கோபம் பணிவன்புடன் இருப்பதற்கு காரணம் உன் ஆணவம் அழகன்புடன் இருக்கிறது…! [images (21)] பி ரம்மன் உன்னை   வரையும் பொழுது   அன்புடன்   என்று   ஆரம்பித்திருப்பான் போல   அதுதான் நீ   அன்போவியமாய் இருக்கிறாய்…! [images (21)] சி லருக்கு பிளட் கேன்சரோ பிரெயின் கேன்சரோ வரும் எனக்கு ஹார்ட் கேன்சர் வந்திருக்கிறது நீதான் காரணம்..! [images (21)] சா யம் போன சேலைக்கு வர்ணம் பூசுவதைப்போல காயமான மனதுக்கு   அன்பை பூசுகிறாய் நீ..! [images (21)] எ ன்னை இஞ்சி தின்ற மங்கி   என்ற உன்னிடம் இல்லையில்லை உன்னைக்கொஞ்சி தின்னும்   பக்கி   என்கிறேன் நான்..! [images (21)] சொப்பன சுந்தரி உ ன்னைப்பற்றிய கனவுகள் தொடங்கும்பொழுதுதான் என் இரவுகள் விடியத்தொடங்குகின்றன ..! [images (11)] எ ன் கனவு வானத்தின் அழகு நிலா நீ நட்சத்திரங்களாக உன் நறுமணங்கள் ..! [images (11)] கனவுகளில் உன்னுடைய வெட்க சாயத்தை முத்தக்குளோரைடு தெளித்து வெளுக்க வைக்கிறேன் நான் ..! [images (11)] உ ன்னை இதயத்தில் விதைத்தது மட்டும்தான் நான் செடியாக்கி பூப்பூக்க வைப்பதையெல்லாம் கனவுகள் பார்த்துக்கொள்கின்றன ..! [images (11)] அ ள்ள அள்ள குறையாத அன்னத்தை தருபவள் அன்னபூரணி காண காண மறையாத கனவுகளை தரும் நீ கனவு பூரணி ..! [images (11)]  எ ன் கனவுபாத்திரத்தில் தினமும் கவிதை கொட்டிப்போகும் கண்ணுளிப்பாம்பு நீ ..! [images (11)] க னவுகளில் வரும்பொழுதெல்லாம் என் ஆசைகளையெல்லாம் ஆடையாக அணிந்து வருகிறாய் நீ ..! [images (11)] ஊ ண் உறக்கம் இழந்து காதல் விரதமிருந்து நான் வாங்கிய கனவு வரம் நீ ..! [images (11)] மன்மத மாதம் [images (4)] உ ன் பாதங்கள் பத்து ஸ்வரங்கள் கொண்டு மீட்டப்படும் பாதஸ்வரம் ..! [images (4)] இ தழ்களால் காற்றில் வத்தி வைக்கிறாய் பற்றியெறிகிறது எனக்குள் காதல் ..! [images (4)] பா யசத்தில் மிதக்கும் முந்திரிப்பருப்பு போலவே உன் முகத்திலிருக்கும் மூக்குத்தியும் கொள்ளையழகு ..! [images (4)] எ ன் உதிரமேரூரிலிருக்கும் நெஞ்சு வெட்டுக்களில் செதுக்கப்பட்டிருக்கிறாய் நீ ..! [images (4)] தி சை தெரியாமல் பறக்கும் ஒரு பறவையின் இறகை கையில் பிடிப்பதைப்போலவே வானம் தாண்டிப்பறக்கும் என் காதலை நீ உன் இதயத்தில் பிடித்து வைத்திருக்கிறாய் ..! [images (4)] உ ன் விழி வீதியில் நடை பழகிக்கொண்டிருக்கும் குழந்தையாய் நான் நடை வண்டியாய் நம் காதல் ..! [images (4)] பா ர்வை எனும் விதை விதைத்து முளைத்த அன்புச்செடியில் பூத்த காதல் மலர் நீ ..! [images (4)] செ டிகொடிகளுக்கு அருகே நின்றுவிடாதே தேரென்று நினைத்து உன்மீது படர்ந்துவிடலாம் ..! [images (4)] நீ பேசும்பொழுது குயில்களும் உடன் கூவுவது எனக்கென்னவோ குயிலின் பின்னணி இசையில் நீ பாடுவது போன்றுதான் இருக்கிறது ..! [images (4)] உ ன்னை மையமாய் வைத்து சுற்றி அமைந்திருக்கும் வீதிகளின் பெயர் தெரியுமா? மேல ’அழகு’வீதி, கீழ ’சித்திர’வீதி வடக்கு ’சிற்ப’வீதி தெற்கு ’சாரட்’ வீதிகளென்றுதான்..! [images (4)] கிளியூர் [images (9)] உ ன் வெட்கத்தைக்காட்டு உன்னைப்பற்றி சொல்கிறேன் ..! [images (9)] உ ன்னை கிளிமாதிரி என்று சொல்லி என்னை ஜோசியக்காரன் ஆக்கிவிட்டார்கள் என் அம்மா ..! [images (9)] வா ழ்க்கை வாசலின் இரட்டைக்கதவு நாம் பூட்டிய வீடுகளே நம் இரவுகள் ..! [images (9)] எ ன் முகவரி கேட்டாய் எழுதிக்கொள் இரவு நிலவு மழைத்துளி நீ ..! [images (9)] எ ல்லோருக்கும் முப்பத்தியிரண்டு பற்கள் உனக்கு மட்டும் அவை முப்பத்தியிரண்டு அழகு ..! [images (9)]   த ற்சமயம் நமக்கான வாழ்க்கையை நம் இருவர் மனங்களும் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கின்றன நீயும் நானும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் ..! [images (9)] நீ இல்லாமலே என்னைச்சுற்றி லாவண்டர் வாசம் வீசுகிறது அதுதான் உன் வாசமாய் இருக்கலாம் ..! [images (9)] ப்ரிய சிறைகள் உ னக்கான ப்ரியங்களை என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டிருக்கிறேன் நீ மறுபடியும் அவற்றை சிறைபிடித்துக்கொண்டிருக்கிறாய் ..! [images (9)] டிட்டோ உ னக்கேற்றபடி நான் எனக்கேற்றபடி நீ நமக்கேற்றபடி காதல் முதற்க்கொண்டு அத்தனையும்..! [images (9)] முத்த பசை தா மரை இலை நீர் போல் சென்று கொண்டிருந்த நம் காதலையும் காமத்தையும் ஒட்டிய பசையாய் நீ கொடுத்த முதல் முத்தம் ..! [images (9)] இது மார்கழி மாதம் [images (21)] வீ ட்டு முற்றத்தில் சத்தமின்றி புன்னகை செய் இல்லாவிட்டால் சங்கீத ரசிகர்கள் கூடி விடுவார்கள் இது மார்கழிமாதம் ..! [images (21)] கோ விலில் சத்தமின்றி வேண்டிக்கொள் இல்லாவிட்டால் உன்னிடம் பொங்கல் கேட்டு சாமி கையேந்திவிடலாம் இது மார்கழி மாதம் [images (21)] ந டக்கையில் இடையைக்காட்டி நடக்காதே ஸ்வெட்டர் விற்பனை அதிகரித்து விடும் இது மார்கழிமாதம் ..! [images (21)] கோ லப்போட்டி நடக்கும் வீதி வழியே நடந்து செல்லாதே உன் அம்மாவிற்க்கு பரிசு தந்துவிடுவார்கள் இது மார்கழி மாதம் ..! [images (21)] ஆறாம் புலன் க விதைகளால் ஆகதெனினும் என் காதல் தன் மெய்வருத்த உன்னைத்தரும் ..! [images (21)] செ வி மடல்களுக்கு நாவிருந்திருந்தால் உன் குரலை ருசித்து சொட்டாய்ங்கென்று சப்தமிட்டிருக்கும் ..! [images (21)] உ ன் புன்னகையை முதலீடாய் வைத்து இன்றுமுதல் என்னுள்ளே புன்னகை வங்கியொன்று குதூகல ஆரம்பம் ..! [images (21)] ம யிலிறகைப்போலவே உன் சிணுங்கல்களும் என்னுள்ளே குட்டிபோட்டு குட்டிபோட்டு ஒரு முழு நீள சங்கீத ஆலாபனை நடத்துகின்றன ..! [images (21)] அ ன்பை வெளிப்படுத்த தெரியாமல் அதை உனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் நீயும் பதுக்கல்காரிதான் அன்பு பதுக்கல்க்காரி ..! [images (21)] இதழ் வீடு - 19 ப்ரியமுடன் வசந்த் இதழெதிரே தோன்றினாள் [download (3)] மு த்தமழையில் வெளுப்பதெல்லாம் வெட்கசாயம்..! [download (3)] கா மன் கோவிலுக்கு செல்லும் முன் முத்தநதியில் இதழ் நனைத்து செல்லவேண்டும் விரைந்துவா…! [download (3)] எ ப்பொழுதுமே ’இழு-பறி’நிலைதான் முத்தபட்ஜெட்டில்…! [download (3)] உ ன்னை என்னில் பூட்டிக்கொள்ள உதவும் பித்தான்களே இந்த முத்தங்கள்..! [download (3)] உ டலுக்கு உலர்பட்டும் உதட்டிற்க்கு உலராபட்டும் உடுத்தியிருக்கிறாள்…!   [download (3)] ந ம் வீட்டு பங்குசந்தையில் உன் முத்தபங்கின் மொத்த உரிமையாளன் நான்..! [download (3)] தி ரு ’வாய்’ தீண்டு’வாய்’ மெது’வாய்’ நுழை’வாய்’ மூழ்கு’வாய்’ தேடு’வாய்’ அடை’வாய்’ பணி’வாய்’ முத்த-’வாய்’ப்-பாடு [download (3)]   உ ன்னுடைய குடியிருப்பை கண்ணறை, இதழறை, மார்பறை,இடையறையென்று பிரித்து ஒவ்வொரு அறைக்கதவுக்கும் தனித்தனியாய் வெட்கப்பூட்டு போட்டிருக்கிறாய் அத்தனைப் பூட்டுக்கும் ’காமன்’ சாவி முத்தம்தானே..! [download (3)]   உ ன்னை தொட்டதும் சிவந்த முகத்தின் பின்னணியில் சட்டென உதித்துவிடுகிறான் நாணச்சூரியன்..!   [download (3)] உ ன்னுடைய பல ’அழகு’மாடிக் குடியிருப்பில் அத்தனை குடியிருப்பும் எனக்குத்தானே ஒதுக்கியிருக்கிறாய்…!? [download (3)] ம றைக்காமல் சொல் நாற்புறமும் கொழுப்பால் சூழ்ந்ததுதானே உன் தொப்புள் தீவு…!? [download (3)] கா தலும் கண்பழக்கம் முத்தமும் இதழ்பழக்கம்..! (சித்திரமும்கைப்பழக்கம்)   [download (3)] எ ப்பொழுதும் முத்தம் பற்றிதானா..? ஒரு ’’கிஸ்ஸா’’ விற்பனையாளனிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்…!?   [download (3)] உ தட்டுக்கூடையில் முத்தப்பழங்கள் விற்றுவரும் முத்தக்காரி உன்னிடம் அத்தனை பழங்களையும் காதல் கொடுத்து பெற்றுக்கொள்கிறேன் நான் ..!   [download (3)] கா தல் பாலில் முத்த டிக்காக்‌ஷன் கலந்து நீ கொடுத்த காமக்காபி நம் முதலிரவு ..! [download (3)] உ ன் உதட்டு பூமியில் முத்தசெங்கற்களைக்கொண்டு காமக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறேன் நான் ..! [download (3)] கா தல் கடலில் மிதக்கும் உன் உதட்டுக்கப்பலில் பயணிக்கும் முத்தப்பயணி நான் ..! [download (3)] எ னக்குப்பிடித்திருந்த காமதோஷத்தை முத்தப்பரிகாரம் மூலம் நீக்க வந்த காதல் சாமி நீ ..! [download (3)] உ ன் உதட்டுக்கடலின் முத்த அலைகளை சுவாசித்துக்கொண்டிருக்கும் காதல் கடற்கரை நான் ..! [download (3)] ந மக்குள் நடந்த கள்ளன் போலீஸ் விளையாட்டில் உன் கண்களை திருடிய என்னை உன் உதட்டு துப்பாக்கியால் முத்தகுண்டுகள் வீசி சிறைபிடித்த காதல் போலீஸ் நீ ..! [download (3)] 20 நன்றி [rrrr] நன்றியுரை இ துவரை பொறுமையாக இம்மின்நூலை வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான நன்றி கலந்த வணக்கங்கள். இந்த மின்நூல் உங்களுக்கு பிடித்திருந்தால், வடிவமைப்பு பிடித்திருந்தால் தவறாமல் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். படித்ததும் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி ப்ரியமுடன் வசந்த் freetamilebooks.com பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain -ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி ? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும் , பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா ? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் (download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா ? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து , அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor -ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார் ? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும் , அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம் ? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில் , அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் . நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா ? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2.www.badriseshadri.in 3.http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில் , பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”- ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் ? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும் . அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும் . நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம் . அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி -I பகுதி -II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம் . தவிர்க்க வேண்டியவைகள் யாவை ? இனம் , பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் . எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி ? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் . email: freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks GooglePlus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் ? Shrinivasan  tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, www.fsftn.org Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/