[] [யார் அந்த தாவணி] யார் அந்த தாவணி ப.மகாராஜா உரிமை –  Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம் This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - யார் அந்த தாவணி - Main Body - 1. உன் நிழலும் கூட என்னை...... - 2. ஜன்னல் - 3. நானும் ஒரு கவிஞனாய்.... - 4. பாலாடை - 5. அவள் பாதத்தில்..... - 6. தீண்டல் - 7. இதயத்தை உரசாதே - 8. அழகின் அருகே - 9. என்னை ஏன்? - 10. தாகம் - 11. கொட்டும் தேனே... - 12. ஆயுள் கைதி - 13. வினா விடை - 14. விரட்டாதே விழிகளால் - 15. கட்டில் கவிதை - 16. கவிதை விழிகள் - 17. காதல் மொழி - 18. நிலவும் நினைவும் - 19. இயக்குகிறாய் - 20. ஆசைகள் அடங்கிடுமே - 21. பாத தாமரை - 22. அதிசய நிலா - 23. பிழை - 24. இரவல் - 25. என் வீட்டு காதலி - 26. இமைகளின் காதல் - 27. சூடாமலர் - 28. பதிப்பதற்கு இடமில்லை - 29. அவளின் பாதப் பதிவுகள் - 30. மலரின் மலரே.... - 31. அவளோடு - 32. சங்கதிகள் - 33. இதழ்களின் பரிசு - 34. நனையும் கவிதைகள் - 35. தென்றலின் இன்பம் - 36. முத்தத்தால்..... - 37. என்னை மயக்கிய பூவே - 38. கண்டதும் தடுமாற்றம் - 39. இதழில் எப்போது? - 40. உயிருள்ள கவிதைகள் - 41. தீண்டாமல் நுகற்கிறாய் - 42. தேகம் - 43. அணுக்கள் - 44. “இச்”கள் - 45. வானில் வண்ணங்கள் - 46. கரைந்தோடும் பொழுதுகள் - 47. “கேமரா” இமைகள் - 48. இம்சைகள் இனிக்குதே - 49. ஆடை கண்காட்சி - 50. குளிர் காய்ச்சல் - 51. இசை - 52. அமுதம் - 53. சோம்பல் - 54. இரகசியங்கள் - 55. யுத்தம் - 56. கயல் - 57. தமிழ் - 58. பொய் - 59. அழகாய் நனைகிறேன் - 60. அல்லி விழி - 61. என்(அவள்) அருகினில்... - mahapoem.blogspot.in - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 யார் அந்த தாவணி   யார் அந்த தாவணி ப.மகாராஜா maharaja22@live.com   உரிமை –  Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்   மின்னூலாக்கம் – ப.மகாராஜா மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com       இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் யாவும் என் மனதை ஈர்த்த ஓர் பெண்நிலவிடம் நான் கொண்ட காதலின் பிம்பங்கள். இன்று என்னுடன் அவள் இல்லை, காலத்தின் கட்டாயத்தால் என்னவளாள் நான் புறக்கணிக்கபட்டேன், எனினும் என் மனப்புத்தகத்தில், காதல் பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் அவளின் நினைவலைகள். என் முதல் தொகுப்பை என்னை நேசித்த நிலவுக்கு அர்பணிக்கிறேன். இப்படிக்கு என்றும் பிரியமுடன் மகாராஜா [Signature_001] [pressbooks.com] 1 என் காலை நிலவாய் என் காலை நிலவாய் நீயானாய், உன் சேலை துணையாய் நான் வரவா! [thumb (2)] 1 உன் நிழலும் கூட என்னை......   நிலவின் அழகை கண்டு உருகினேன் சில நாள், உன் நிழலின் அழகை கண்டு உருகினேன் பல நாள்….. [10932446_605835136213961_1327663954_n] 2 ஜன்னல் கதவில்லா ஜன்னலும் கவிதை சொல்லுதடி, உன் நிழலின் அழகை வீதியில் கண்டதும். [images (23)]   3 நானும் ஒரு கவிஞனாய்.... ஷேக்ஸ்பியர் காலத்தில் நீ பிறக்கவில்லயே, பிறந்திருந்தால் அவர் எழுதிய கவிதைகளெல்லாம் உன்னை மட்டுமே சார்ந்திருக்கும், ஜுலியட் கதாபாத்திரம் பெயர் மாற்றம் கண்டிருக்கும், ரோமியோவை தவிர்த்து ஷேக்ஸ்பியரே கதை நாயகனாக நடித்துருப்பார், இன்னும் பல ஆயிரம் கவிதைகளை உனக்காக வடித்துருப்பார், அவரின் கற்பனைகள் யாவும் மறைந்திருக்க கூடும், உன் அழகை மட்டும் நினைத்திருத்தல் ஆகும், அழகான வார்த்தைகள் பலவும் பிறந்திருக்க வேண்டும்,   இப்படி நான் நினைத்தன யாவும் நடக்க பெற்றிருந்தால் நானும் ஒரு கவிஞனாய் உருவெடுத்திருக்கலாகாதே….. [tumblr_lwdpm89Rb51qirkq6o1_500] 4 பாலாடை நீ என்னை கடந்து செல்கையில், நான் அருந்தும் பாலும் கூட ஆடை கட்குதடா, தன் உடலை மறைப்பதற்கு. [images (14)] 5 அவள் பாதத்தில்..... அவளை நெருங்கும் பொழுதெல்லாம் பதட்டம் கொள்கிறேன், மிச்சப் பொழுதில் நேசம் கொள்கிறேன், தொலைவில் வந்தால் தாகம் கொள்கிறேன், தூரம் நின்றால் துயரம் கொள்கிறேன், சிரிக்கும் பொழுதில் மட்டும் சில்லரையாய் உதிர்கிறேனே அவள் பாதத்தில். [images (19)] 6 தீண்டல் ஓரமாய் நின்றாலும் உரசி செல்கிறதே உன் நிழல், என்னை வெல்வதில் தான் உனக்கு விருப்பம் என்றால், ஒரு போர் செய்து என்னை வென்றுவிடு அன்பே, உன் பார்வை வீசி என்னை கொன்றுவிடாதே, விஷப்பரீட்சை தானடி நீ என்னை கடக்கும் நொடியெல்லாம்….. [FPVF4B5FA190T5M.MEDIUM] 7 இதயத்தை உரசாதே உன் சொற்ப அழகை கண்டதும், அற்பமாகி போனேனே, நுட்பமாய் தாக்காதே பெண்ணே, கர்பமாக கூடுமே நெஞ்சமே…. [images (21)] 8 அழகின் அருகே தேம்ஸோரம் நைலோரம் கண்டதில்லை அழகே, உன் இதழோரம் இமையோரம் கண்டுகொண்டேன் அழகை. [images (12)] 9 என்னை ஏன்? உன் பார்வை பட்ட பொருளெல்லாம் பார்வை இழக்கிறதே கண்ணே, நானும் கூட இழந்துவிட்டேனே என்னை…. [images (22)] 10 தாகம் மேகத்துக்கும் உன் மேல் மோகம் அன்பே, அதனால் தான் என்னவோ! உன்னை வீதியில் கண்டாலே மழையாய் பொழிந்து உன்னை நனைத்து அழகை ரசித்து தாகம் தீர்க்கிறான். [images (18)] 11 கொட்டும் தேனே... பூவிதழ் தொட்டு தான் உன் புன்னகையை வரைந்தானோ! தேனிதழ் கொட்டியே என் கன்னங்கலும் சிவந்தனவே. [8222c6bd7764937dd663880a08598fa0] 12 ஆயுள் கைதி தேய்பிறையோ உன் கண் திரையி்ல் தெரிவது, சிறை பிடிக்க ஆடவரை தேடுகிராயோ! சிறை பிடித்தால் என்ன செய்வாய், அறை ஏதும் கொடுப்பாயோ உன்னில், அது மெய் என்றால் நானும் ஆகிறேன் ஆயுள் கைதியாய் உன்னிடம்…. [images (10)] 13 வினா விடை ஒரு வினா பல விடைகள், உன் அழகில் மட்டும்…… [large] 14 விரட்டாதே விழிகளால் காவியம் பேசும் உன் கண்கள் என்னிடம் பேச மறுப்பதேன்….. [emma__s_eyes_by_acjub-d4ev3lx] 15 கட்டில் கவிதை உன்னை கட்டி அணைத்து முத்தமிட்டால், கட்டிலும் கூட கவிதை சொல்லுமடி, நம் இருவரின் நெருக்கமும் மிச்சம் சொல்லுமடி. [kissing_sketch-106431] 16 கவிதை விழிகள் விழி எழுதுமோ! கவிதைகள்…. உன் விழிகள் சொல்லிதான் தெரிகிறதே… [maxresdefault] 17 காதல் மொழி ஒற்றை நொடியில் துடிக்க மறக்குதே மனம். உன் அசைவை கண்டதாலே! கவிதை பிறந்ததாலோ! கடல் நுரையில் சிலையாகிறேன், காதல் மொழியில் பிழையாகிறேன்.. [images (31)] 18 நிலவும் நினைவும் அந்த நிலவும் விழித்துருக்கிறது. உன் நினைவும் விழித்துருக்கிறது. பாவமடி என் இதயம் என்னதான் செய்யும்….. [19ea4a72b8be1ffff49723b2f6600fce-d6jtf8p] 19 இயக்குகிறாய் உன் கண்களால் இயக்குகிறாய் எனை, கவிதையாய் இயங்குகிறேன் நான்…. [images (11)] 20 ஆசைகள் அடங்கிடுமே ஆசைகள் ஆயிரம் உன் அசைவினில் அடங்கிடுமே…. [Pencil Sketches of Couples love, friends and Kiss by ZiZinG (13)] 21 பாத தாமரை ஒற்றை காகிதத்தில் கோடி கவிதைகள் உன் பாதம்…. சற்றே நோக்கினால் அதில் ஆயிரம் கிறுக்கல்கள் அழகான வெடிப்புகள…. கொஞ்சமாய் வருடினால் அழகழகாய் சிதறல்கள் உன் இதழ் வழியே…. உன் நாணமும் கவிதை தான் அதை நான் நோக்கினால்…. [086b7a37255b5a18db0819f351779138] 22 அதிசய நிலா அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது உனை காணும் பொழுதெல்லாம். தனிமையில் இருக்கும் பொழுதே இப்படி பிரகாசிக்கிறாயே, துணைக்கு யாரேனும் இருந்தால் என்னவாகியிருக்கும், விண்ணுலகிலும் காதலர் தினம் பிறந்திருக்குமே! [kevin2] 23 பிழை எழுத்துப் பிழை தான் உன் பெயரில்…. உடன் என் பெயர் இல்லாததால்… [sweet_kisses] 24 இரவல் பன்னீர் துளிகள் தான் அன்பே, உன் இமை கொட்டும் வியர்வைகள், அரிய வகை ஓவியம் தானடி உன் கன்னக் குழியில் நான் காண்பவைகள், இரவலாக உன் இதழ் கிடைத்தால் இந்திய பெருங்கடலையும் வற்ற வைத்துவிடலாம். [1456515] 25 என் வீட்டு காதலி கட்டி அணைத்தேன் மூச்சு முட்டுகிறதாம் என் தலையணைக்கு, இதுவே நீயாக இருந்திருந்தால் எனக்கல்லவா மூச்சிறைத்திருக்கும். [0bb8f9adeb99674fb5d782a9b73944ea] 26 இமைகளின் காதல் என் கண்ணீர் துளிகளுக்கும் காயமடி, உன்னை நினைத்து விழுந்தவுடன். [sketch-of-beautiful-woman-face-vector-illustration_zkc9PzO_] 27 சூடாமலர் பூக்களுடன் சேர்ந்திருக்காதே, பூக்களை பார்க்க பிடிக்கவில்லை, பூக்கள் அழகு தான், ஆனாலும் குறை இருக்கிறது, நீ உடன் இருப்பதால்…. [6438580545_0cd62f11a6] 28 பதிப்பதற்கு இடமில்லை படித்த பாடத்தை மனதில் பதிக்க முயல்கிறேன், இடம் கொடுக்க அவள் மறுக்கிறாள். [8330455-beautiful-girl-blue-eyes--Stock-Vector-eyes-drawing-eye] 29 அவளின் பாதப் பதிவுகள் மென்மையான கடல் மணலில் காதல் கடிதங்கள். [fig20-drawing-girls-feet] 30 மலரின் மலரே.... சாலையோர புக்களை கவிதையாக்கினாள் அவள் விரல்களால்…. [dsc00827] 31 அவளோடு படுக்கையில் புரல்கிறேன் புத்தகத்தோடு, புத்தகத்தில் அவள் பெயர் [images (24)] 32 சங்கதிகள் மூடிய ககதவும் சங்கதிகள் சொல்லுமடி நீயும் நானும் உள்ளிருந்தால். [images (32)] 33 இதழ்களின் பரிசு என் கன்னங்களுக்கு வண்ணம் சேர்க்கிறாள் அவள் இதழ்களின் சாயத்தால். [kiss_on_the_forehead_by_annakoutsidou-d5xdbz0] 34 நனையும் கவிதைகள் என்னவளின் உடலில் கவிதைகள் இருப்பதே, பாரியின் பேச்சில் நனையத் தானோ! [il_fullxfull.410962636_ijj7]   35 தென்றலின் இன்பம் தென்றலிடம் வினவுகிறேன் என்னவளை உரசினாயே இன்பத்தை ருசித்தாயா என்று… [eye_drawing_by_katepowellart-d4v2alw] 36 முத்தத்தால்..... இதழ்கள் எதற்கடி, உன் இமைகள் போதுமே என்னை வாசிப்பதற்கு.. [download (1)] 37 என்னை மயக்கிய பூவே இதழ்களை வருடித் தான் பூக்களை ரசித்துருக்கிறேன் ஆனால், இன்று தானடி இமைகளை படர விட்டு பூவை ரசிக்கிறேன். [i love you Sketch] 38 கண்டதும் தடுமாற்றம் அவள் பார்வையை கண்டாலே தடுமாறும் இதழ்கள் ஏனோ! அவள் கன்னத்தை சுவைக்க மட்டும் நாணம் கொள்வதில்லை. [images (31)] 39 இதழில் எப்போது? சத்தம் இல்லாமல் வருகிறாள் ஆனால், முத்தத்தை மட்டும் சத்தத்தோடு கொடுக்கிறாள், அதுவும் கனவில் மட்டும். [sweet_kisses] 40 உயிருள்ள கவிதைகள் அவளின் அசைவுகள் ஒவ்வொன்றும், என்னை வாழச் சொல்லி வற்புறுத்துகின்றன, அவளோடு. [images (22)] 41 தீண்டாமல் நுகற்கிறாய் சைவ பூக்களோ நீ சூடியவை, என் உடலை தீண்டாமல் என் மூச்சை மட்டும் நுகர்கிறதே. [8222c6bd7764937dd663880a08598fa0] 42 தேகம் தேகம் பேசும் அழகினை மோகம் கொண்டு தாக்கினேன் தாகம் இன்னும் தீரவில்லயே! [images (9)] 43 அணுக்கள் உன் பார்வை மட்டும் எந்தன் வசமானால், உன் புன்னகைக்கு என் செல்களும் பாட்டெழுதுமே. [emma__s_eyes_by_acjub-d4ev3lx] 44 “இச்”கள் மேக உடலில் “இச்” சத்தங்கள், பறவைகள் இரகசியம் பேசிக் கொள்கின்றனவோ! [images (31)] 45 வானில் வண்ணங்கள் வானவில்லை வரைந்தவன் நானாக இருக்கக்கூடாதா, இருந்திரிந்தால், அங்கு ஒரு கதவு அமைத்திருப்பேனே என் தேவதை வந்து சுற்றிபார்க்க. [images (18)] 46 கரைந்தோடும் பொழுதுகள் என் செவிகள் இரண்டுமே, என்னவளின் புன்னகை சாரலில் தான் பொழுதை கழிக்கின்றன. [6438580545_0cd62f11a6] 47 “கேமரா” இமைகள் அன்பே! நீ என்ன “கேமரா” வா என்னை நீ கடக்கும் பொழுதெல்லாம் அசைய மறக்கிறேனே ஏனடி…. [il_fullxfull.410962636_ijj7] 48 இம்சைகள் இனிக்குதே மின்மினிப் பூச்சுகள் மொத்தமாய் வந்ததோ! நீ இச் கொடுத்த இடத்தை வெளிச்சம் போட்டு் காட்டுதே. [kevin2] 49 ஆடை கண்காட்சி என்னவளின் வீட்டு மாடியில் இன்றென்ன ஆடை கண்காட்சியோ! ஆண் பறவைகள் எல்லாம் கூடி நிற்குதே….. [sketch-of-beautiful-woman-face-vector-illustration_zkc9PzO_] 50 குளிர் காய்ச்சல் அன்பே! நீயோ குளிப்பதற்காக ஆடை கலைகிறாய், உன் வீட்டு தண்ணீருக்கோ குளிர் காய்ச்சல் வந்து விடுகிறது. [i love you Sketch] 51 இசை இடை வருடி இசை பயில்கிறேன், அரங்கேற்றம் எங்கே? முதல் இரவிலா! [0bb8f9adeb99674fb5d782a9b73944ea] 52 அமுதம் தினப் பொழுதும் உன் மடிப் படர்ந்தே சோறுண்ண விரும்புகிறேன், ஏன் தெரியுமா??? உன் இதழ்களிடம் கேட்டுப்பார் விடை கிடைக்கும். [sweet_kisses] 53 சோம்பல் அதிகாலையில் முத்தமிட்டு என்னை எழுப்புகிறாய், கலைவது உறக்கம் மட்டுமல்ல உன் சேலையும் தான். [19ea4a72b8be1ffff49723b2f6600fce-d6jtf8p] 54 இரகசியங்கள் எழுதாத பக்கங்கள் உன் சிவந்த கன்னங்கள், அதில் எழுத வேண்டிய வரிகள், என் இதழ்களின் இரகசியங்கள். [Pencil Sketches of Couples love, friends and Kiss by ZiZinG (13)] 55 யுத்தம் யுத்தம் அழகானதா? மிகவும் அழகானது. கட்டிலின் மேல் நாம் இடும் யுத்தங்கள். முத்தங்கள். [images (31)] 56 கயல் கிரகங்கள் காதல் கொள்ளுமோ! கொல்கிறதே உன் கயல்களின் கூடலால். [8330455-beautiful-girl-blue-eyes--Stock-Vector-eyes-drawing-eye] 57 தமிழ் இலக்கணம் இல்லை இலக்கியம் இல்லை ஆனாலும் ரசிக்கிறேன் தமிழை நீ பேசும் தமிழை. [6438580545_0cd62f11a6] 58 பொய் மெய்கள் யாவும் நீ சொல்லும் அழகான பொய்களில் கரைந்தே போய்விடுதே. [8222c6bd7764937dd663880a08598fa0] 59 அழகாய் நனைகிறேன் வருடம் ஒரு முறை மட்டும் அழகாய் நனைகிறேன் உந்தன் வாழ்த்து மழையில்…. என பிறந்தநாளில். [large] 60 அல்லி விழி அல்லி விழி பேசும் தூரலில் நனைந்தது நான் மட்டுமல்ல! என் தேகமும் தான். [eye_drawing_by_katepowellart-d4v2alw] 61 என்(அவள்) அருகினில்... நீ அருகினில் அமர்ந்தாலே அயராமல் உழைக்கிறதே என் கண்கள். [FPVF4B5FA190T5M.MEDIUM] 1 mahapoem.blogspot.in உன் அழகு என் கண்கள் வசம், அதனால் தான் என்னவோ! எந்தன் கற்பனை கூட உன்னால் காவியம் ஆகிறது. [kiss_on_the_forehead_by_annakoutsidou-d5xdbz0] நான் சிந்திப்பதெல்லாம் அவளை சந்திப்பதற்க்காகதான்….   மகாராஜா.ப maharaja22@live.com http://mahapoem.blogspot.in/   2 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/     3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !