[] முருகன் பாடல்கள் ஸ்ரீதரன் முருகன் பாடல்கள் Copyright © 2014 by Creative commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0). This book was produced using PressBooks.com. Contents - முருகன் பாடல்கள் - 1. வேதமவை தேடுபதம் - 2. குருபர சரண மையா - 3. வேண்டும் வேண்டும் - 4. மலைநின்ற மகனே - 5. மலையவை நின்றுள மருகா - 6. முருகா உரைநீ - 7. எண்ணும் எண்ணம் - 8. இன்றுடன் தா - 9. சோலையனே முருகேசா - 10. உள்ளம் கோயில் - 11. நானுன் குழவி - 12. சரணமையா - 13. செந்தூர் வேலன் - 14. இதம் அவன் பதம் - 15. அழைக்கிறான் அடைவம் - 16. பதமிரண்டு துணை - 17. அருளேன் அரசே - 18. தமிழின் தலைவன் - 19. வருவாய் முருகா - 20. பண்ணிய புண்ணியம் - 21. வருவாய் அழகா - 22. வாழ்வு தருவாய் - 23. அறுபடை நின்ற அழகே - 24. பிரணவ வடிவன் - 25. வந்தமர்வாய் வடிவேலா - 26. சொல்லிடவும் சாத்தியமோ - 27. அணைக்கின்ற கரம் - 28. உடனும் அருளேன் - 29. பேரவை கோடி ஓதி - 30. பாடிடச் சொல் - 31. வந்தமர்வாய் உள்ளமதில் - 32. சண்முக வடிவே - 33. வாஉடனும் என்னுளமேல் - 34. உளமேல் எழு - 35. மனமே மயில் - 36. மனமிதும் ஏற்பாய் - 37. இருபதங்கள் சரணமையா - 38. மனமதெலாம் நிறை - 40. அருளிட வருவாய் - 39. ஆறுமுகமான குரு - 42. சரணம திரண்டு - 41. அணைத்திட்டாய் அப்பா - 43. சரணவை துணை - 44. உன் மகனே - 45. அருளிட நின்றனை - 46. படையதில் திரு - 47. கருணைக் கடலே - 48. பிரணவப் பொருளோனே - 49. அறுபடை அடைய - 50. பதத்தினிலே சேர்த்தருளும் - ஆசிரியர் பற்றி - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 முருகன் பாடல்கள் [Murugan Paadalgal(2)] தமிழ்த் தெய்வம் முருகன் தன்னைப் பற்றி எழுதும் போதும் படிக்கும் போதும் உள்ளத்தில் வந்து நின்று விடும் எளிய தெய்வம். இன் தமிழில் எழுதுவது அவனுக்குச் செய்யும் நிவேதனம். எழுத வேண்டும் என்று எண்ணிய உடனே அவனே வந்து எழுதிக் கொள்வான் என்பதை உண்மையில் அனுபவித்தவர்கள் பலர் இருப்பர். எழுதியதைப் படிக்கும் அடியார்களின் அனுபவமும் உன்னதமே. இலக்கணம் பாராமல் என் வழியே அவன் எழுதிக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு தான் இங்கே அவனுடைய அடியார்களுக்காகத் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் – ஸ்ரீதரன் sudhadhar@yahoo.com அட்டைப் படம் – மூலம் – http://www.flickr.com/photos/lingeswaran/8348700228/sizes/o/in/photolist-dHKgHo/ அட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com உரிமை – Creative commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0) படிக்கலாம், பகிரலாம் ஓம் படம் - http://commons.wikimedia.org/wiki/File:Om-tamil.png மின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com வெளியீடு – FreeTamilEbooks.com [pressbooks.com] 1. வேதமவை தேடுபதம் வேதமவை தேடுபதம் தேவனுடை யாமிதமும் பேர்நலமும் தானளிக்கும் பேரகிலத் துள்ளபடை வாழிறைவன் வேலவனின் பேர்புகழைப் பாடிடவே நாளும்பொழு தேகணமும் நாதனவன் ஈர்பதத்தைத் தான்கரத்தா லேயணைத்துக் கோடிமுறை தான்வணங்கிச் சேவலனின் பேரவைகள் சொல்லிடவே போமனமே ஆறுபடைவாழிறைவன் கூப்பிடுகின் றானுடனே தாமதமும் செய்யாமல் [] 2. குருபர சரண மையா திருவுடைப் படைகள் ஆறில் பதமவை இட்ட குருவே கருணையின் உருவ மாகி அருளிடும் அழகு முருகா குருவென நின்று பிரணவப் பொருளது சொன்ன சிறுவா ஒருசுரன் வேண்டி நிற்க அருளிய அழகு வீரா வருவினை யாவும் போக்கி நலமவை சேர்க்கும் குழவி ஒருகனி பெறவே என்று சினமுமே கொண்ட பழனி குறமகள் வள்ளி யுடனே ஒருதே வானை யுற்றே நிலையிரு பதமே துணையாய் வருமடி யார்க்கு இதமும் நலமுடன் குணமும் பலவும் தரவென நின்ற மூர்த்தி உனைமற வாதிருக் குமென் ஒருளம் சேர்வா யப்பா சிறுவனு முனது மகனே குருபர சரண மையா [] 3. வேண்டும் வேண்டும் உன்புகழ் என்றும் உள்ளம் நின்றிட வேண்டும் உன்பதம் இரண்டே கரமும் பற்றிட வேண்டும் உன்படை தனிலே உடலும் கிடத்திட வேண்டும் உன்னழ கதுவே உளமும் கண்டிட வேண்டும் உன்னுடை கோயில் பதமும் சுற்றிட வேண்டும் உன்னுடை பிரணவம் அதுவே கேட்டிட வேண்டும் உன்னைவிட் டகலா வகையே என்றும் வேண்டும் உன்குற மகளின் அருளும் இன்றுடன் வேண்டும் நற்றே வானை யவளும் கண்டிட வேண்டும் என்றுமே உன்றன் மகனாய் நின்றிட வேண்டும் சென்னியும் பணிந்தே என்றும் குனிந்திட வேண்டும் [] 4. மலைநின்ற மகனே பழமில்லை என்று சினந்து மலைநின்ற மகனே பிரணவத்தின் பொருளை அறியா பரமர்க்குக் குருவே குறவள்ளி தனையே மணக்க மரமான வடிவே ஒருதேவா நையுடனே சேர்ந்த இந்திரமரு மகனே சுரனையும் கொன்று கொடி ஆக்கிட்ட திருவே வருகின்ற அடியர்க் கிதம் தருகின்ற பதனே கனியொன்று கிழவிக்காய்ச் சுடவே வைத்திட்ட சிறுவா அறுபடையி லமர்ந்து அருள் திருவுள்ள முருகா உருவுனதே உள்ளமிது முயிரும் உடலும் சேர்ப்பாய் கருவதனைத் தாய்போல் காக்கும் அழகுடை பழனி [] 5. மலையவை நின்றுள மருகா மலையவை நின்றுள மருகா குமரா குருவே அடியன் மனமிதி லும்வரு வாயென உளனே கலைபல நிறைந்த தமிழின் தலைவா முருகா உனைநிதம் உளமிது பாடிடச் சொல்லும் தாநீ சிலையென நின்றுள குருவே வள்ளிக் கணவா உனையுணர்ந் திடுமறி வதுவளி எனக்கும் உடனே தலையவை இருமூன் றெடுத்து அருளிடு மழகா உனதறு படையவை வளநற் கோயில் தனிலே அடியனின் உடலும் உளமும் உயிரும் கிடக்க அருளிடு முருகா குருவே சரணம் திருவே [] 6. முருகா உரைநீ உனைவேண்டி அடையாத வருமுண்டோ முருகா உரைநீ உனைப்பாடிக் காணாத கண்ணுண்டோ குமரா அழைநீ உனைக்கண்டு மகிழாத உளமுண்டோ கந்தா திருவழகா உனக்காக உயிர்வாழு மடியாரின் உளமீதி லமரீசா எனக்காக ஏனின்னும் தாமதமே சோதனையு மேன்தானோ உனைத்தேடிப் படைசேரும் பதங்களவை உதிர்த்திட்ட தூளதுவே தினமென்றன் முகமேற்கும் திருநீறாய் உளவழ்வு அளியப்பா உனைமறவா திருந்திட்டு உளத்தாலே உன்சந்நி தியில்சேர உடனேயு மழைவேலா குமரேசா குருவேனல் லழகன்நீ குறவள்ளி தேவானை யுடனேயுள் குழவிநீ பிரணவா [] 7. எண்ணும் எண்ணம் எண்ணும் எண்ணம் எல்லாம் உன்னைப் பற்றி சொல்லும் சொற்கள் யாவும் உந்தமி ழதுவே உன்பேர் என்றும் உள்ளம் நின்றிட வைநீ உன்னருள் தன்னைப் பெறவே என்னுயி ராக்கு உன்படை சுற்றியும் வரவே என்னுடல் சேர்நீ உன்னடி யார்நடு வினிலே நின்றிட அழைநீ உன்னழ கதனைக் கண்கள் கண்டிடச் செய்நீ இன்பிர ணவமே சொல்லும் என்னுடை சுவாமி நன்மலை தன்னில் நின்றே இவ்வகி லம்மாள் உன்னையே படிக்க என்று என்றனைச் செய்யரசே [] 8. இன்றுடன் தா வண்ட மரும் மலர் கொண்டு நின்ற முருகா உன்ப தங்க ளென்ற நுக்கு இன்று டன் தா தண்ட மிழின் தலைவ உனை என்றும் ப டிக்க என்ற மைத்து இன் த மிழும் தந்தி டப்பா கண்ண வைகள் பன்னி ரண்டு கொண்ட குருவே உன்ப டையில் உயிரும் உள்ளும் என்று முள்ள அந்த விதம் தந்தி டப்பா கந்த குருவே என்று முனை எண்ணு முளம் செய்தி ருத்தி சந்நி தியில் வந்த மர்ந்த இன்ன டியர் இன்ப தத்துத் தூளை யென்றும் ஏற்க வைத்து [] 9. சோலையனே முருகேசா அனவ ரதமு முனையு ளமிது மறவாமல் உளநல் லவ்வகை உடனு மளிக்க வருவாயே சினமெ டுத்த சிறுவன் கனியே பழநியனே பிரணவ முரைத்துப் பரம நையுமே ஆண்டவனே சுரனை வதைத்து இளைப்பு மாறும் செந்தூரா குறவள் ளியொடு தேவா நையுமே கொண்ட குன்றா அழகு மயிலி லமர்ந்து அருளும் சோலையனே அறுப டைகள் நிலைத்த குருவே முருகேசா சரணம் சரணம் சரண மென்று உரையுள்ளம் தனி ல மர்ந்து அருள தளிக்கு மழகீசா [] 10. உள்ளம் கோயில் உள்ளம் இதுவே உன்றன் கோயில் என்று மதில்நீ வந்தே அமர்வாய் கந்தா குமரா குருவே முருகா சிந்தை எல்லாம் உன்றன் னினைவு என்றும் நிலைக்க அருளும் உடனே செந்தில் தனிலே அமரும் கந்தா உன்பேர் உள்ளம் என்றும் பதித்து உன்படைப் படியில் உடலும் கிடத்தி உயிரும் இதமுள் மனமும் நிறைத்து நன்றே இருக்கக் கரவழி அருளீ [] 11. நானுன் குழவி வண்ண மயில் மீதில் அமர்ந்து நன்று பலவும் ஈயும் கந்தா உன்றன் படையில் உடலும் கிடத்தி உன்சந் நிதியில் உயிரும் இருத்தி உன்ப தத்தில் உளமே கிடத்தி உள்ளவ் வகை தரவும் அருளி இன்கனிக்காய்ச் சினமும் கொண்டு தென்ன கமலை தன்னில் கனிந்த செந்தில் நாதன் உன்றன் குழவி என்னை யும்தான் ஏற்ற ருள்வாய் [] 12. சரணமையா வளமுடை யறுபடை வீட்டினிலே வளரித மிகுதரும் குருவேநீ கனவெனு வாழ்விதி லேநிசமாய் நிதமும் நிலைக்கும் அருளீசா பிரணவப் பொருளே செவியேற்கப் பரமனுக் கெனவும் உரைத்தாயே தினமுனை நாடிடு மடியருளம் தனிலிடம் பெற்றிடும் அழகேநீ கருணையின் உருவம் குருபரனே சரணம் சரணம் சரணமையா [] 13. செந்தூர் வேலன் அலையவை மோதிடும் செந்தூர் தனிலிடம் பெற்றான் வேலன் மலையவை நின்றுள இடமெலாம் பதமிரண் டுற்றான் குமரன் கலையவை வாழ்ந்திடும் தமிழின் தலைவன் எனவே உளனே விலையெது மில்லா அருளைத் தரவென வந்தே நின்றான் சிலையென வள்ளிக் குமரன் இதமவன் பதமிரண் டேதுணை [] 14. இதம் அவன் பதம் சரண மென்று சொல்லி வந்தார் அடைவ ரிதம் அவனின் பதம் கருணை வடிவம் அவனி ருக்கும் அறுப டையில் அடியெ டுத்தால் அடுத்த சென்மம் அழியும் திண்ணம் திருவு முற்ற இருப தத்தை ஒருமனத்தி லேற்றி விட்டால் நலமு மிதமு முடனும் வருமே சரவ ணபவன் எனுனல் லழகன் அழைக்கி றானே அடைவ முடனே [] 15. அழைக்கிறான் அடைவம் அழகுள தமிழின் தலைவன் அறுமுகனென்னும் பெயரன் குறவள் ளியளின் கணவன் ஒருதே வானைக் குரியன் பிரணவப் பொருளும் இவனே ஒருபழ மாகியும் நின்றான் வருமடி யார்கள் அவரின் உறுதுணை ஆகவும் இருந்து வருவினை ஓட்டும் வேலன் அருகில ழைக்கிறான் அடைவம் [] 16. பதமிரண்டு துணை மலைநின்று அழைக் கின்றான் மால்மருகன் அலைவந்து அடிகள் தொழும் செந்தூரன் கலையுற்ற தமிழின்நற் றலைவன் குமரேசன் பலவருளும் தரவென்று பன்னிருக ரங்கொண்டான் சிலையாக நின்றவனைச் சிந்தையிலே கலையாமல் அமைத் திட்டால் அதுபோதும் இன்பம் பலவேயும் இயல்பாக வருமடைய நலமேற்கு வகையில் பதமிரண்டு துணையென்று உள்ளார் வாழ்வில் இதமடைய என்றிருக்கும் அவனுடைநல் அறுபடைகள் நடந்திடுவோ மவைநோக்கி மனதாலே உடன்நாமே [] 17. அருளேன் அரசே அனவர தமுமுனை உளமிதில் நினைத்து உனதறு படையினி லுடலினைக் கிடத்தி உளமொடு உயிரது முனக்கே யாக்கி உன் தமி ழில்லுனைப் படித்தே இருக்க அருளது தருவாய் அழகுடை முருகா சரணம திரண்டில் அடையும் அடியர் அடைவர் பேரருள் உளதாம் பதவியும் உனையே படித்து உனதாய் நினைத்து உளமேல் இருத்தி உயிரால் தழுவிட எனக்கே அருளேன் அரசே குமரா [] 18. தமிழின் தலைவன் மலைநின்ற மருகனை வேண்டி மனமிதில் வரவென அழைக்க உறவாய் அமைவான் தலையவை இருமூன் றெடுத்த குமரன் கலைபல வாழும் தமிழின் தலைவன் அலையவை மோதும் செந்தூர் தன்னில் நிலையது கொண்ட வடிவே லழகன் உனைத்தின முளமிது பணிந்தே இருக்கும் வகையது தருவாய் முருகா குமரா சரணம திரண்டி லென்றன் சிரமதும் உடலொடு உயிரும் உளமும் இருத்தேன் [] 19. வருவாய் முருகா அழகுடை மயிலின் மீதில் அமர்ந்து அறுபடை தனிலடை அடியர் அவர்க்கு இதமொடு நலமும் குணமும் தருமுன் இருபதம் துணையாய் எற்று வந்தேன் அயனே எனையும் உனதொரு மகனென எற்றே மனதில் நிலைத்த கனவை நினைவாக் கிடுவாய் அழகா குமரா எனையும் உனதாம் அடியில் ஏற்பாய் திருவும் நலமும் குணமும் தரவே வருவாய் முருகா குமரா குருவே [] 20. பண்ணிய புண்ணியம் உன் துணை வேண்டி வந்தால் உன்னையே தந்தி ருப்பாய் இன்முகம் ஆறும் என்றும் நன்றதே தருமாம் இதமே கண்ணவை பன்னி ரண்டும் உன்கரு ணையதைப் பெய்யும் பண்ணிய புண்ணியம் என்றும் உன்பதம் சேர்த்தி ருக்கும் வண்ணமா மயிலின் மீதில் நின்றுள வடிவே லழகா [] 21. வருவாய் அழகா உனதிரு பதமவை என்றும் உள்ளத் திருத்திட வைப்பாய் முருகா குமரா சரணம் சரவண பவனே குகனே அருளும் இதமும் நலமும் தருவாய் அறுமுக மவையே துணையென் றிருக்க அமைப்பா யழகா அறுபடை வடிவே கரமவை பன்னி ரண்டும் இதமே தரவென உளதே நலமுள வாழ்வு கருணா கரனே முருகா சரணம் வருவாய் அழகா அடியேன் உளமேல் [] 22. வாழ்வு தருவாய் அனவர தமுமுனை உளமிதில் இருத்தி இனியத மிழதனில் கவிதைகள் புனைந்து உனதறு படையினில் உடலிதும் கிடத்தி மனமொடு உயிரிதும் உனக்கென விடுத்து உனதழ கதனையும் விழிகளில் வடித்து உன்பெய ரவையே செவிகளில் மடுத்து உன்னடி யரையே உறவென அமைத்து உன்பத மிரண்டே கரமவை தழுவி உளதொரு வாழ்வு தருவாய் அரசே குருபர குமரஓ முருகா சரணம் [] 23. அறுபடை நின்ற அழகே வனமதில் அமர்ந்த வள்ளிக் குறவளை மனமதில் பிணைத்த முருகா குமரா பகையது கொண்ட சுரனை வென்று அபயமும் அளித்த வடிவே லழகா பழமது பெறவே சினமும் எடுத்துப் பழமென மலையில் கனிந்த குருவே கனியது பசிக்காய்ச் சுட்டுக் கிழவிக் கெனவுமே அளித்த சிறுவா பரனே அறுபடை நின்ற அழகே வடிவேல் கரமது கொண்ட முருகா சரணம் [] 24. பிரணவ வடிவன் அறுமுக மிதமே தருமே நிதமே குருபரன் அருள்வான் அதுவும் நிசமே கருணைச் சிகரம் குமரன் இவனே அறுபடை நின்ற இருபதக் குழவி ஒருகனி அதுவே சுடவைத் தவனே சரவண பவனாம் எனும்பெய ருடையன் சிறப்புள தமிழின் தலைவன் அழகன் வருமடி யவர்க்கு இதமும் தருவன் பிரணவ வடிவன் தகப்பன் சாமி அருள தளிக்கி றானுடன் அடைவம் [] 25. வந்தமர்வாய் வடிவேலா உனையன்றி உலகிதனில் துணையில்லை மனதிலுடன் வந்தமர்வாய் வடிவேலா கணமுமுனை மறவாமல் வாழுமந்த ஒருவாழ்வு தான் தருவாய் குருபாலா சரணமவை இரண்டுதுணை ஆக்கிடுவாய் சரவணனே உனதுபுகழ் படித்திடவே கருணையதன் திரு உறுவே கந்தகுகா மறக்கருணை பொழிகின்ற அருட்தாயே மலையதனில் வீற்றுள நல் லொருகுழந்தை உனதுகுழ வியனுமிங் கருளளி நீ [] 26. சொல்லிடவும் சாத்தியமோ பதமிரண்டு போதுமென வருவோரை கரம்பன்னி ரண்டாலும் அணைத்தேற்று அருளதெலாம் அளிக்குமுன தின்பெருமை புலையனெனால் சொல்லிடவும் சாத்தியமோ தருமமிகு கந்தகோட்டம் வாழரசே அறுபடைகள் வீற்றிருக்கும் அழகுருவே சரவணனே சண்முகனே குருபரனே பிரணவனே பரமனையும் குட்டியனே கருணைமிகு கண்ணொளிதான் வேண்டுமையா அருளிடுவாய் அடியனையும் பொருட்டாக்கி [] 27. அணைக்கின்ற கரம் அடைதற்கு வருகின்ற அடியாரை அணைக்கின்ற கரம்பன்னி ரண்டாமே படைக்கின்ற பிரமனையும் குட்டியவன் படையாறில் நிலைத்திட்ட வடிவேலன் கலைவாழும் தமிழிற்குத் தலைதாங்கி கவிகோடி வாங்கிட்ட வேலவனே மலைநின்று மயிலோடு சேவலதும் குறவள்ளி யுடனுமொரு தேவானை சகமிருக்க வீற்றிருக்கும் சண்முகவா உனைச்சேர அடியனுக்கும் அருளேதா [] 28. உடனும் அருளேன் வளமுடை படைகள் ஆறினிலே வளரும் குமரக் கோமானே அடியனு முனையே அழைத்திட்டு அடைதற்கு வழியும் கேட்டேனே பிரணவம் அருளிய பெருமானே சிறுவனுக் கும்மது சொல்வாயே ஒருகனி பெறவெனச் சினந்தவனே கருணைக் கிடமாய் வீற்றவனே உனையே உளமும் நாடிடவே உடனும் அருளேன் குருபரனே [] 29. பேரவை கோடி ஓதி வேலதெ டுத்த குமரன் உனக்காய்க் காவடி எடுத்து ஆடும் அடியர் கோடியர் பலரும் உனதாம் படையில் பேர்தமிழ் தனிலே பாடியும் உன்றன் பேரவை கோடியும் ஓதியும் நிற்பார் வேதமே தேடிடும் பாதமே கொண்ட உன் சீர்படை ஆறதில் தானிடம் கொண்டுமே வீற்றனை சேவலுட் கொடியனே குமரனே ஓர்பிர ணவமதன் பொருளனே குருபரா சீர்பெரு கும்வகை நானெழு திடவும்வை [] 30. பாடிடச் சொல் என்றும் உன்றன் பெயரைச் சொல்லி உள்ளவ் விதமொரு வாழ்வே தருவாய் எப்பொழு தும்முனை என்மனக் கண்ணில் கண்டிடும் வகையும் செய்தே யருள்வாய் உன்புக ழதனையே என்றும் தமிழில் நன்றாய்ப் பாடிடச் சொல்லும் தருவாய் எண்ணம் எல்லாம் உன்னைச் சுற்றும் அந்நன் நாளே தந்திடு கந்தா செந்நியு முடலும் உயிரும் உளமும் என்றும் உன்னைப் பணிந்திட வைத்தே [] 31. வந்தமர்வாய் உள்ளமதில் உன்னழகே உள்ளம் எண்ணிவிட என்றுமிதம் வருமாம் தன்னாலே கண்ணவைகள் பன்னி ரண்டவையே கொண்டவனே குமர குருபரனே சண்முகனே சரவண பவகுஹனே தென்னகத்து மலைகள் நின்றவனே அன்றுகனி இல்லை என்றுசினம் கொண்டவனே சிறுவன் இன்பழநி தன்னிலருள் தெய்வத் திருமணியே வந்தமர்வாய் என்றன் உள்ளமதில் [] 32. சண்முக வடிவே சண்முக வடிவே சரவண பவனே இன்முக உருவே தென்னக மன்னா கண்ணவை பன்னி ரண்டும் கொண்டு என்றும் இதமே தருநல் லழகா இன் தமிழிற்குத் தலைவன் எனவே நன்றுள் கவிஞர் நாவில் வாழும் சின்னவனேபழ நியதில் நின்றும் நன்றவை பலவும் தந்தரு ளீசன் உன்பத மிரண்டு என்றும் துணையாய் உள்ளவ் வகைநீ தந்தாள் குருவே [] 33. வாஉடனும் என்னுளமேல் ஆறுபடை வீடமர்ந்த தேவனுமே வேண்டிடுவர் உளமிருக்க வேவருவன் பாரிதனில் முளைத்தமலை தனில்நிலைத்த ஈர்பதங்கள் அடியருளம் கோடியுளும் தானிருந்து பேரருளைப் பொழியுமிது ஊரறிந்த ஓருண்மை சேவலனே சூரனையும் வென்றபினே ஏற்றனையே நானொருவன் தன்னையினும் ஏலலையேன் தேவகுரோ பேரரசே பாத்தமிழா வாஉடனும் மாமயிலில் என்னுளமேல் [] 34. உளமேல் எழு திருப்புகழ் முருகாற் றுப்படை யுடனும் அனுபூ தியொடு சஷ்டி கவசம் எனப்பல நூலில் வாழும் பெருமை முருகன் எனுமுன் பெயரைச் சொல்ல உளமேல் எழுந்து இனித்தே நிற்கும் விதமது செய்யும் உன்றன் படையில் உளமும் உடலும் உயிரும் கிடத்த வருநல் லடியர் நடுவிற் புலையன் எனையும் வரவைத் தருளீ குருவே சரணம் சரணம் சரவண பவனே [] 35. மனமே மயில் உனதாம் பெயரே உறுதுணையாய் உளதோர் வாழ்வு தந்தருள்நீ மனமே மயிலென ஏற்றிட்டு மயிலோய் வருவாய் அதில்வாழ கணமே கழியும் முனதாக உனதாம் பதத்திற் சேர்த்துவிடு குருவே முருகா சரவணனே திருவே நிறைந்த குருபரனே சரணம் சரவண பவகுகனே சதமும் இதமே தருமீசா [] 36. மனமிதும் ஏற்பாய் மனமிது உன்றன் மயிலா யாக்கி அதிலுடன் உனையே அமரச் செய்து அனவர தமுமே நினையே படித்து மனமெலா முனதா யாக்கி யிருந்து கணமுமே இதமும் தரவே வேண்டி இனியநற் றமிழில் இதமாய்க் கவிதை புனைந்திட வைப்பாய் அழகா முருகா கனவெனு வாழ்வா மிதனில் நிசமாய் நிறைபெறு மழகா குருவே சரணம் மனமிதும் ஏற்பாய் ஏழாம் படையாய் [] 37. இருபதங்கள் சரணமையா உனையன்றி உலகிதிலோர் துணையில்லை நினைவெல்லம் நிறைந்திட்டு நிற்பாயே கலைவாழும் தமிழிற்குத் தலைவாநீ கருணைக்குப் பெயர்போன குரு ஈசா தருணமிது தவிர இனி வரலிலதே அறுமுகவா இருபதங்கள் சரணமையா திருவடியும் திரு திகழும் ஒருகோயில் அவையடைந்து அனவரதம் வாழ்விருக்க நலமொடுநீ பலவருளும் தருவாயே குருபரனே சரவணனே திருமுருகா [] 38. மனமதெலாம் நிறை அனவரதம் உனைநினைந்து இருக்கும் வகையதுவே தருவாயே குருவே மனமதெலாம் நிறைந்திருக்க வேண்டும் படையதனில் உயிரெனது சேர்த்துள் வகையதுநீ தருவாயென வந்தேன் கருணைமிகு குருபரனே சரவணனே தருணமிது தவிர இனி வரலிலதே திருப்படைகள் இருமூன்று அமையழகா குருபரனே சரவணனே குமரகுரோ சரணமதே தா உடனே தேவனும் நீ [] 40. அருளிட வருவாய் அறுமுக குகனே சரணம் முருகா சரவண பவனே சரணம் தரவா கருணையினுருவே கந்தா முதல்வா திருவுடை படைகள் இருமூன் றுடையோய் தருணமு மிதுவே தமிழே இதமே அருளிட வருவாய் அயனின் உளமேல் மலையவை நின்ற மருகா குழவிப் பழனியே பிரணவப் பொருள் ஆனவனே அறுபடை நின்ற அழகா வடிவேல் கரம தெடுத்த கருணா கரனே [] 39. ஆறுமுகமான குரு ஆறுமுக மானகுரு வேலவனே பேரகிலம் படைத்தவனே குருபரனே பாரிதனில் மலையமர்ந்த சேவலனே ஓர்பழமே கேட்டசிறு வன்நீயே பேர்பழமாய் ஆகிநிலைத் திட்டவனே பேரசுரன் தன்னையுமே போரில்வென்று கூடவுள சேவலென ஏற்றனையே நானுமொரு மகனுனக்கு வேல்முருகா ஏற்றருள்வா யேதினமும் காவலனே சீர்சிறப்பு தான் திகழும் மாப்படையோய் [] 42. சரணம திரண்டு அனவர தமுமுனை உளமேல் இருத்தி அருகினில் இருக்க அருள்வாய் அரசே அறுபடை தனிலே அமைந்த குருவே சரணம திரண்டு தரவே வரணும் கருணையின் உருவே கந்தா குகனே திரு உடை நலமும் குணமுள் மனமும் உனையே எழுதும் கரமும் பெறவை தருணம் இதுவே தமிழே முருகா வருவாய் அருள மயிலில் அமர்ந்து சரணம் சரணம் சரவண பவனே [] 41. அணைத்திட்டாய் அப்பா உனக்கென்று ஒருபோ தும் இங்கே உளமார நான் நன்றி சொல்லி உனைப் போற்ற வில்லை முருகா இருந்தாலு மெனக் கிங்கே நீயே அளித்திட்ட செல்வ மவை கோடி புலையனெனத் திரிந் திங்கு வந்தேன் உனதுபடைப் படிய தனில் நின்றேன் உடனழைத்து எனக் கருள என்று ஒருமயிலில் கர வேலும் கொண்டு அணைத்திட்டாய் அப்பா நீ வாழ்க [] 43. சரணவை துணை நலமுடை அறுபடை தனிலமர் இருபதம் அறுமுகம் பன்னிரு கரமவை அளித்திடு நலம்பல அனவர தமுமவன் பெயரவை உளமிதில் உயிருடன் இருத்திட வருவனே குருபரன் உள்ளிருந் தேயருள் செய்யவு மென்றுமே இனியநற் றமிழிலே படித்திட இதம்பல வும்தரு பவனிவன் சரணவை துணையென அடைவமே [] 44. உன் மகனே என்றுமெனை ஏற்றிருந்து அருளுமையா உன்மகனே நானுமொரு புலையனென மாறிவிட்டேன் என்னையும்நீ கூப்பிடப்பா வண்ணமயில் மீதமர்ந்த வடிவழகே தண்டமிழின் இனியசுவை ஆனவனே கண்ணவைகள் பன்னிரண்டு கொண்டவனே உன்னருளே என்றனுக்கு இதமுமாகும் உன்பதமே நானடையும் விதமதாக்கி இன்றெனையே உன்னடியர் உள்ளொருவ னென்றாக்கி விடுவாயே சாமிநாதா [] 45. அருளிட நின்றனை வனமதில் மரமாய் வளர்ந்து குறமகள் கரமது பற்றினை படையதில் திருவாய் வளர்ந்து மயிலுடன் வேலும் பெற்றனை அடியவர் மனதில் அமர்ந்து அருளிட என்றே நின்றனை அனவர தமுமுனை உளமேலே அமைத்திட அடியருக் கருளினை அயனை மட்டுமேன் சேர்த்தலே இலையென நின்றயோ தெரிகிலேன் [] 46. படையதில் திரு வனமதில் மரமாய் வளர்ந்து குறமகள் கரமது பற்றினை படையதில் திருவாய் வளர்ந்து மயிலுடன் வேலும் பெற்றனை அடியவர் மனதில் அமர்ந்து அருளிட என்றே நின்றனை அனவர தமுமுனை உளமேலே அமைத்திட அடியருக் கருளினை அயனை மட்டுமேன் சேர்த்தலே இலையென நின்றயோ தெரிகிலேன் [] 47. கருணைக் கடலே அனவர தமுமுனை உளமீதில் அமர்த்திட வைப்பாய் ஆறுமுகா கணமும் உனையே மறவாத மனமும் தருவாய் முருகேசா படைகள் இருமூன் றமரரசே இதமும் நலமும் தருமழகே கருணைக் கடலே முருகோனே சிறியன் எனையும் அணைத்தாளேன் தருணம் இதுவே தமிழரசே வருவாய் புலையன் உளமீதும் [] 48. பிரணவப் பொருளோனே உள்ளம் என்னும் கோயிலிலே என்றும் வந்தும் அமர்வாயே உடலென்னும்படை உனதாக உடனும் எற்பாய் முருகேசா உயிரே உன்றன் இடமேயே உடைத்தா யிருக்கச் செய்வாயே கணமும் மறவா நிலையினிலே அயனையும் அமர்த்தி விடுவாயே அருள்நற் பிரணவப் பொருளோனே தருவாய் இதமும் நலமும்தான் [] 49. அறுபடை அடைய வளமுடை படைகள் ஆறாம் வளர்கிற குமரன் தேனாம் அருளவை கோடி சேர்ப்பான் அடைந்திடு மடியர் கட்காய் திருவுடை நலமே பலவும் தருபவன் அறுமுக வடிவன் பிரணவப் பொருளா யாகி அருளிய சாமி னாதன் அடையவு மேன் தா மதமே நட உடன் அறுபடை அடைய [] 50. பதத்தினிலே சேர்த்தருளும் உனையன்றி உலகிதனில் ஒருதெய்வம் இலையென்று கண்டிட்டு வந்தேனையா எனைநீயும் வெறுத்திட்டு ஒதுக்காமல் உன்னிரண்டு பதத்தினிலே சேர்த்தருளும் பிரமனுக்கும் பிரணவத்துப் பொருள்சொல்லி சிரமதனிற் குட்டியநற் குமரகுரோ அயனையுமே அணைத்துத்தான் திருத்திட்டு அறுபடையில் அடையுமடி யார்நடுவில் உளனாக வைத்திடுவாய் ஆண்டவனே உளமார வேண்டினனே குருபரனே [] 1 ஆசிரியர் பற்றி [SRIDHARAN] நான் (ஸ்ரீதரன் 62) என்னுடைய எட்டாம் வகுப்புப் படிக்கையில் ஏதோ ஒரு பழைய நாட்காட்டியின் பின் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். எழுதியதைப் படித்துப் பார்த்த போது இன்னும் எழுத ஆவல் தந்தான் அவன். திருவிடைமருதூரைச் சேர்ந்த நான் படித்தது வேதியியல். வேலை பார்த்தது வெளி நாட்டில். அன்றும் இன்றும் என்றும் நிம்மதியும் சந்தோஷமும் திருப்தியும் பெருவது என்னவோ ஸ்ரீ சாமினாதனைப் பற்றி எழுதும் போதே. யான் பெற்ற இன்பம் பெறுக யாவரும். இதை வெளியிடுவதில் உதவிடும் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி Contact Details: 12-13-830/8/101, Srinivasa Apartments Gokulnagar, Street No. 1, Tarnaka, Secunderabad 500017. Andhra Pradesh. Mobile: 09959555486 / 07207846733 2 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org - இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/