[] [] மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்    கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com  கோலங்கள் - C.M. உதயன் udhayan.chn@gmail.com    அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம் - த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com    மின்னூல் வெளியீடு - FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை   உரிமை - Creative Commons Attribution Non Commercial 4.0 international license யாவரும் படிக்கலாம். பகிரலாம். பொருளடக்கம் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 01 6  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 02 9  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 03 16  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 04 22  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 05 28  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 06 34  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 07 37  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 08 44  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 09 48  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10 54  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11 60  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12 64  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 13 68  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 14 71  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15 75  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16 79  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17 83  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 18 86  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19 91  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20 94  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21 99  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 22 102  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23 107  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24 111  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25 117  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26 122  மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27 127  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28 133   மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 29 137  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30 142  FreeTamilEbooks.com 147  கணியம் அறக்கட்டளை 154  தொலை நோக்கு – Vision 154  பணி இலக்கு  – Mission 154  தற்போதைய செயல்கள் 154  கட்டற்ற மென்பொருட்கள் 155  அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள் 155  வெளிப்படைத்தன்மை 156  நன்கொடை 157  UPI செயலிகளுக்கான QR Code 157  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 01   மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!     [] முதல்நாள் நோன்பு ஆரம்பிக்கையில் அழகாக தீபக் கோலம் போட்டு ஆரம்பிக்கலாம்.  ஆண்டாளின் காலத்தில் முழுநிலா வீசும் நாளில் ஆரம்பித்தித்திருக்கிறது.  காலம் செல்லச் செல்லப் பருவங்கள் மாறுபட மாறுபட இதுவும் மாறி இருக்கிறது.  மதிநிறைந்த நன்னாளில் நீராடித் தூய்மையுடன் நந்தகோபன் குமாரன் ஆன அந்தப் பரந்தாமனை, சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்துடையானைப் போற்றிப் பாடினால் அவன் நமக்கு அந்த வைகுண்டப் பதவியையே கொடுத்துவிடுவான் என்கிறாள் ஆண்டாள். பட்டர்பிரான் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள், கண்ணனோடு இரண்டறக் கலக்கவேண்டி பாவை நோன்பு ஆரம்பிக்கிறாள். நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்து ஆரம்பிக்கிறாள். மார்கழி மாதம், பூரணச் சந்திரன் நிறைந்து தோன்றும் நன்னாளாம் அது. அனைவரையும் நதியில் நீராடிப் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம் என அழைக்கிறாள். ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை அழைக்கும் ஆண்டாள் நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறுகிறாள். கொடுந்தொழிலன் என்பது இங்கே கொடுமையான தொழிலைச் செய்பவன் என்ற பொருளில் வராது. கொடுக்கின்றவன் என்ற பொருளிலேயே நான் பார்க்கிறேன். கூர்வேலால் காளைகளையும், மாடுகளையும் அடக்கி ஆளும் நந்தகோபன் தன் ஈகைத் தன்மையால் சிறந்து விளங்குவதை ஆண்டாள் இங்கே சுட்டிக்காட்டுகிறாள். அத்தகைய நந்தகோபனின் குமாரன் ஆன கண்ணன், ஏரார்ந்த கண்ணியான யசோதையின் இளம் சிங்கம் என்றும் கூறுகிறாள். ஏரார்ந்த என்றால் வடிவான, அழகிய கண்களை உடைய அல்லது அழகிய தோற்றத்தை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்.  அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே? இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான். இப்போது நாரயணீயத்தில் பட்டத்திரி கூறுவதைப் பார்க்கும் முன் பட்டத்திரி பற்றிய ஒரு சிறு அறிமுகம். கேரளத்தைச் சேர்ந்த மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி தனது குருவான அச்சுத பிஷாரடிக்கு வந்திருக்கும் வாத நோயைத் தனக்கு அளிக்குமாறு விரும்பிப் பெற்றுக்கொண்டவர் . பின்னர் நோயின் கடுமை தாங்காமல் குருவாயூரில் இறைவன் சந்நிதியில் 100 நாட்கள் தங்கி ஒரு நாளை ஒரு தசகம் வீதம் 1036 ஸ்லோகங்களை இயற்றினார். ஆரம்பிக்கும் முன்னர் எதில் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்தவரைத் துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் "மச்சம் தொட்டு உண்" என்று கூற எழுத்தச்சனின் கல்வி ஞானத்தையும் எல்லாவற்றுக்கும் மேல் அவரின் பக்தியையும் அறிந்திருந்த பட்டத்திரி முதலில் குழம்பினாலும் பின்னர் தெளிந்தார். பகவானின் மச்சாவதாரம் அவர் மனக்கண்களில் தோன்றியது . பத்து அவதாரங்களையும் பூரணமாக எழுதி நிறைவு செய்ய எண்ணம் கொண்டு முதலில் தன் பிரார்த்தனைகளை பகவத் வைபவம், செளந்தர்யம்,பக்தி லக்ஷணம் ஆகிய முறைகளில் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கிறார். முழுதும் அத்வைதக் கருத்துக்களாகவே காணப்படும் இந்த நாராயணீயம் மிக உயர்ந்ததொரு வேதாந்தமாகக் கருதப் படுகிறது. மேலும் இது முடிவடைந்த நூறாம் நாள் பட்டத்திரியின் வாத நோயும் நீங்கி ஆண்டவனும் தலையசைத்து இவரின் கவிதைகளைப் பாராட்டி திவ்ய தரிசனமும் அளித்தான்.   இதையே நாராயண பட்டத்திரி நாராயணீயத்தில் கூறுவது எப்படி எனில்,  "படந்தோ நாமாநி ப்ரமதபர ஸிந்த்தெள நிபதிதா: ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூந் அஹம் தந்யாந்மந்யே ஸமதிகத ஸரவாபிலஷிதாந்" அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இத்தகைய ஆநந்தமயமான வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும்பொருட்டன்று. ஆசைகளே அற்ற பாக்கியசாலிகள் அவர்கள் என்கிறார். ஒரு அசட்டுத் தனமான முயற்சி. திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு எழுத முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு அந்தப்பொருள் வரும் நாராயணீயப் பாடல்களாய்த் தேடி எடுத்திருக்கேன். இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மேலே தொடரும். நன்றி.   மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 02 வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு (ச்) செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.       [] இறைவனை அர்ச்சிக்கப் பூக்கள் தேவை.  ஆகவே இன்று பூஜைக்கு உகந்த மலர்க்கோலம் போடலாம். நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்னும் விதிமுறைகளை இங்கே ஆண்டாள் சொல்கிறாள்.  எந்நேரமும் ஈஸ்வர தியானமாக அந்தப் பாற்கடலுக்குள் யோகநித்திரை செய்து கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடையவேண்டுமெனில் தினந்தோறும் நீராடித் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது.  மையிட்டுக் கொள்ளாமல் பூக்களைச் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல், தீய சொற்களைச் சொல்லாமல், தீய செயல்களைச் செய்யாமல் ஞானியர்க்கும், மற்றும் இல்லாதவர்க்கும் அவரவருக்கு வேண்டியவற்றை தானம் செய்தும் இவ்வுலகம் உய்யுமாறு மட்டுமின்றி நம்மால் மற்றவரும் மனம் உகந்து மகிழ்ச்சியுடன் இருக்குமாறும் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.    வையத்து வாழ்வீர்காள் என்று விளிக்கும் ஆண்டாள் இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதாகக் கூறுகிறாள். இங்கே இவ்விதம் கூறுவதன் காரணம் பரமனோ பூமியில் வந்து ராமனாக அவதரித்து மனித வாழ்க்கையில் உள்ள எல்லாக் கஷ்டங்களையும் அநுபவித்திருக்கிறான். அதே போல் கண்ணனாக வந்து ஒரு சின்னஞ்சிறு குழந்தை எப்படி எல்லாம் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் ஆநந்தத்தைத் தருமோ அப்படிக் கொடுத்திருக்கிறான்.அதோடு மட்டுமா?? கோபிகைகளின் தாபத்தைத் தீர்க்கிறான். []   ஒவ்வொரு கோபியும் கண்ணனைத் தங்களுடனேயே இருக்கிறவனாய்க் காண்கின்றார்கள். ஒருத்தியிடம் விளையாடினால், இன்னொருத்தியிடம் கோவிக்கிறான். மற்றொருத்திக்கு மாடுகறக்க உதவினால், வேறொருத்தியின் மாடுகளை மேய்க்கிறான். ராதையுடனோ கேட்கவே வேண்டாம். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு ஆடிப் பாடிக் களிக்கிறான்.அவனுடைய ராஸக்ரீடையின் முதல் []   ரஸிகேஸ்வரியாக ராதையும் இருக்கிறாள். இப்படி அந்தப் பரந்தாமனே வைகுந்தம் வேண்டாம், பூமிக்கு வந்தால் அங்கே என் அடியார்களோடு ஆடிப்பாடிக்கொண்டு []   அவர்கள் சொன்னவண்ணம் கேட்டுக்கொண்டு இருக்கிறதே சுகம் என்று ஓடோடி []   வந்துவிடுகிறான் அல்லவா?அதனாலேயோ என்னமோ ஆண்டாள், வையத்து வாழ்வீர்காள் என்று கூப்பிடுகிறாள். மேலே அவள் கூறுவது எல்லாம் விரத நியமங்கள். விரதம் இருப்பது என்பது வெறும் வயிற்றுக்கு உண்ணாமல் பட்டினி இருப்பது மட்டுமல்ல. உடல் மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் பெறவேண்டும். அதற்கு ஆண்டாள் சொல்லும் விரத நியமங்களைப் பாருங்கள்: பாற்கடலில் பையத் துயிலுகிறானாம் பரமன்.  பாற்கடலில் அவன் என்ன தூக்கம் தூங்குகிறான்?? அது யோக நித்திரை அல்லவா?? கீழே ஆதிசேஷன் எதுக்கு? குண்டலினி எப்படி உறங்குகிறதோ அதைச் சுட்டத் தானே. ஐந்து இந்திரியங்களையும் ஐந்து முகங்களாய்க் கொண்ட ஆதிசேஷன் மேல் ஆண்டவன் யோகநித்திரை கொண்டிருக்கிறான். ஆக நம் மனம், வாக்கு, காயம் அனைத்துக்கும் அதிபதியான அவன் பைய=மெல்லத் தான் துயிலுகிறானாம். அடியாருக்கெல்லாம் ஓடோடி வந்து அருள் செய்யும் பரமன் மெல்லத் தானே தூங்க முடியும்?? அவனுடைய திருவடித் தாமரைகளை நினைந்து பாடுவோம் என்னும் ஆண்டாள், நோன்பு நூற்கும் நியமங்களாய் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், என்றும் நெய்க்கும், பாலுக்கும் தடை விதிக்கிறாள். ஆஹா, இது என்ன??? கண்ணனுக்குப் ப்ரீதி நெய்யும், பாலும் தானே? ஆமாம், கோகுலத்திலும் நெய்யும், பாலும் தானே ஓடும்??ஆம், ஆனால் அதை நாம் தான் உண்ணக் கூடாது. கண்ணனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். தூய்மையான உள்ளத்தோடு நெய்யும், பாலும் சேர்க்காமல் நம்மிடம் இருப்பதை அந்தக் கண்ணனுக்கே எனக் கொடுத்துவிடுவோம். இங்கே பாற்கடலில் இருக்கும் பரமனைப் பார்த்த கண்களுக்கு அதன் பின்னரும் உணவில் நாட்டம் இருக்குமா என்றும் கொள்ளலாம்.  பெண்களாகிய நாம் ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்வதில் நாட்டம் உடையவர்கள். ஆனால் இப்போது கண்ணனுக்காக அதையும் நாம் தியாகம் செய்யவேண்டும். காலை சீக்கிரமே எழுந்து குளித்து, கண் மை இட்டு கண்களில் எழுதாமல், மலர்களால் நம்மை அலங்கரித்துக்கொள்ளாமல், நெய், பால் சேர்க்காமல் உணவு அருந்தி அந்தப்பரமனின் திருவடி தரிசனத்தை நினைத்து அவன் புகழ் பாடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் நாட்களில் நாம் செய்யாதன எதுவும் செய்யோம். அதாவது நற்செயல்களையே செய்யவேண்டும், நல் எண்ணங்களையே சிந்திக்கவேண்டும். நல் வார்த்தைகளையே கூறவேண்டும். தீங்கு நினையாமல் இருக்கவேண்டும். நல் சொற்களைப் பேசவேண்டும், தீய சொற்களைப் பேசக் கூடாது. இதைத் தான் ஆண்டாள் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். உடல் மட்டும் சுத்தமாய் இருப்பது விரதம் இல்லை, உடலோடு மனமும் சேர்ந்து சுத்தமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆண்டவனிடம் நம்மையே நாம் அர்ப்பணித்தால் அவன் நமக்கு மோக்ஷத்தைக் கொடுப்பான்.  அது மட்டும் போதாது. ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்று மேலும் சொல்கிறாள். ஐயம் என்பது ரிஷிகள், துறவிகள் , பிரமசரிய விரதம் இருக்கும் பிரமசாரிகள் போன்றோருக்குப் போடும் பிக்ஷை என்று கூறலாம். ஐயம் இங்கே சந்தேகம் என்ற பொருளில் வரவில்லை. "ஐயமிட்டு உண்" என்பதும் உயர்ந்ததொரு கருத்தைத் தான் கூறுகிறது. துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், பிரமசாரிகள் போன்றோருக்கு நாம் தினமும் பிக்ஷை அளிக்கவேண்டும். அவர்களைத் தேடிப் போயாவது அளித்தல் நம் கடமை என்பார்கள். பிரமசாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ணவேண்டும் என்பது ஒரு காலகட்டத்தில் கட்டாயமாய் இருந்தது. ஒரு முறை பிக்ஷை கேட்ட வீட்டில் மறுமுறை போயும் கேட்கக் கூடாது. அதே போல் ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டே நிற்கக் கூடாது என அதற்கும் பல நியமங்கள் உண்டு. அத்தகையதொரு உயர்ந்த தருமத்தை நாம் தேடிப் போய்ச் செய்யவேண்டும் என்கிறாள் ஆண்டாள். பொதுவாய் பிக்ஷையையே கேவலமாய் எண்ணும் இந்தக் காலத்தில் இதென்ன ஐயமும், பிச்சையும்னு இரண்டு தரமும் ஒண்ணையே சொல்லி இருக்காளேனு தோணும்.  மேற்கண்டவர்கள் மட்டுமின்றி ஏழைகள் இருப்பார்களே அவங்களுக்கு உணவு அளிப்பதைத் தான் இரண்டாம் முறை சொல்லி இருக்கும் பிச்சை என்ற வார்த்தை குறிக்கும். ஏழைகள், முதியவர்கள் என்று சாப்பிட உணவில்லாமல் பிச்சை கேட்டு வரும் நபர்களுக்கும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும் என்கிறாள் ஆண்டாள். இவை எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாம் உய்யுமாறு கண்ணன் அருள் நமக்குக் கிடைக்கும். நாம் அனைவரும் உவப்புடன் இருப்போம் பெண்களே.  இங்கும் அதே பக்தி தான். ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது. நாராயண பட்டத்திரி கண்ணனை வேண்டுகிறார் இவ்விதம்: "பவத்பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத் கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோதய மிலந் மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத; ப்ரார்த்யம் அபரம்" பரமனின் செலுத்தும் பக்தியானது அவனுடைய கருணையால் அடியார்களுக்கு என ஓடோடி வந்து அருளும் தயாள குணத்தால் இனிமையாக இருப்பதாயும், அனைவரின் மனத் தாபங்களையும் அடியோடு அகற்றும் சக்தி படைத்தும், உள்ளத்தில் ஞாநத்தை உண்டாக்குவதாயும், கடைசியின் அவனோடு ஒன்றாய்க் கலக்கும் பேரானந்தத்தைத் தருவதாயும் இருக்கிறதாம். அதோடு மட்டுமா?? அவன் இருக்குமிடம் வைகுந்தம் என்றாலும் இங்கே பட்டத்திரியோ க்ஷேத்திராடனம் செய்யவேண்டும் என்றும் ஆசை கொள்கிறார். வாத நோயால் பீடிக்கப் பட்டவருக்கு க்ஷேத்திராடனம் செய்யவேண்டுமாம். ""விதூய க்லேஸாந் மே குரு சரணயுக்மம் த்ருத ரஸம் பவத்க்ஷேத்ர ப்ராப்தெள கரமபி ச தே பூஜந விதெள பவந்மூர்த்யாலோகே நயநம் அத தே பாததுலஸீ பரிக்ராணே க்க்ராணம் ஸ்ரவணமபி தே சாருசரிதே" பக்திக் கடலில் மூழ்கித் திளைக்கும் பட்டத்திரி தன் கால்கள் பகவானின் திவ்ய க்ஷேத்திரங்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும், கைகள் பகவானின் வழிபாட்டையே செய்யவேண்டும் எனவும், நாசிகள் பகவானுக்கு அர்ப்பணம் துளசியைத் தவிர மற்றப் பொருட்களின் மணத்தை நுகரவேண்டாம் எனவும், கண்கள் எப்போதும் அந்த திவ்ய மங்கள சொரூபத்தையே காணவேண்டும் எனவும், காதுகள் பகவானின் சரித்திரத்தை அல்லாது மற்றவற்றைக் கேட்கவேண்டாம் என்றும் விதியைச் செய்யுமாறு பகவானை வேண்டிக் கொள்கிறார். ஆண்டாளோ நாமே கட்டுப்பாடாக இருக்கவேண்டும் என்று கூற, பட்டத்திரியோ, பகவான் கிட்டேயே போய் என் மனம், நா, கண், காது, மூக்கு, கைகள், கால்கள் என அனைத்தையும் வேறொரு விஷயத்தை நினையாமல், காணாமல், பேசாமல், கேட்காமல், நுகராமல், நடக்காமல், செய்யாமல் இருக்கும்படி நீயே அருள் புரிந்துவிடு என் அப்பனே எனக் கேட்டுவிடுகிறார். இது கொஞ்சம் யதார்த்தமாய்த் தெரியுது எனக்கு. பட்டத்திரி என்னை மாதிரி ஆளோ??    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 03 []   ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்   இன்றைய தினம் பசுக்களுக்கும், மற்ற கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக காமதேனுக் கோலம் போடலாம். அல்லது மீன் கோலம் போடலாம்.   [] வாமனனாக வந்து அவதரித்த மாயவன், திரிவிக்கிரமனாக மூவுலகையும் தன் பாதங்களால் அளந்தவன் பெயரைச் சொல்லிப் போற்றிப் பாடினோம் ஆனால், கீழ்க்கண்ட நன்மைகள் விளையும் என்கிறாள் ஆண்டாள். மாதம் மும்மாரி பொழிவதோடு காலத்தே பெய்யும் மழையால் செந்நெல் செழித்து வளர்வதோடு மீன்களும் நீர் நிறைந்த வயலுக்குள்ளே புகுந்துவிளையாடும். பசுக்கள் பாலைப் பொழியும்.  பொறிவண்டு எனப்படும் புள்ளி போட்ட வண்டுகள் குவளை மலர்களில் வந்து தேனை உண்டு மயங்கிக் கிடக்கும். இப்படி அனைவருக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் நாமம் நாராயணா என்னும் நாமம்.  முதல் பாடலில் கிருஷ்ணாவதாரத்தைக் குறித்துச் சொன்ன ஆண்டாள் இங்கே உத்தமன் என்னும் பெயரால் வாமன அவதாரத்தையும், திரிவிக்கிரம அவதாரத்தையும் குறிப்பிடுகிறாள். அத்தகைய உத்தமனின் பாதம் பட மஹாபலி எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்! அருமையான பாடல். வைணவர்களின் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் வாழ்த்திப்பாடும்போது இந்தப்பாடல் தவறாமல் பாடப்படும். அத்தகையதொரு உலகளாவிய நன்மைக்கான வேண்டுதல் இந்தப் பாடலிலே அடங்கி இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஆண்டாள் பரமனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைக்கிறாள். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அறிவோம். ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒவ்வொருத்தரை மஹாவிஷ்ணு அழித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அந்த அரக்கர்களைக் கொல்லவென்றே அவதாரம் செய்திருக்கிறார். ஆனால் வாமன அவதாரம் அப்படி அல்ல. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், அப்படித்தான். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் அதுவும் அந்த நரசிம்ம அவதாரத்தில் எதிர் எதிர் சிந்தனைகளான + - ஒன்று சேரவும் ஈசன் தோன்றி நரசிம்மனை அழித்தான். கடுமையான கோபம் கொண்ட அவதாரம், மஹாலக்ஷ்மியே பக்கத்தில் போக அஞ்சினாளாம். அதுக்கடுத்து இந்த வாமன அவதாரம். சின்னஞ்சிறு பிரமசரியப் பிள்ளை. பிரமசரிய விரதம் இருக்கிறது. பிரமசாரி ய விரதத்தில் பிக்ஷை எடுத்துத் தான் சாப்பிடணும். இந்தப் பிள்ளையும் வந்து பிக்ஷை கேட்கிறது. மஹாபலிச் சக்கரவர்த்தி யாகங்கள் செய்து இந்திர பதவியை அடையப் போகிறான். இதுவோ கடைசி யாகம், இதை முடித்தால் இந்திரனை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். ஆனால் அவனுக்கோ மோக்ஷம் காத்திருக்கிறது. சிரஞ்சீவி பதவி காத்திருக்கிறது. ஆகவே யாகத்துக்கான முன்னேற்பாடுகளாய் தானங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டான் மஹாபலி. எல்லாம் முடிஞ்சாச்சுனு நிச்சயமாத் தெரிஞ்சுண்டு சாவகாசமா நம்ம ஆள் போறார் நமட்டுச் சிரிப்போடு. சின்னத் தாழங்குடையைப்பிடிச்சுண்டு, காலிலே கட்டைச் செருப்போடு வரும் சின்னப் பிள்ளையைப் பார்த்த பலிக்கு சந்தோஷம், ஆகா, இந்தப் பிள்ளையின் தேஜஸ் என்ன?? யாரோட பிள்ளை இவன்?? அதுக்குள்ளே சுக்ராசாரியாருக்கு மூக்கிலே வேர்க்க அவரோ பலியிடம் எச்சரிக்கிறார். அப்பா, உன் யாகத்தைக் கெடுக்க வந்த பிள்ளை இவன். காசியபரின் புத்திரன் என்ற பெயரில் வந்திருக்கும் இவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே. நீ பாட்டுக்கு அவசரப் பட்டு வாக்குக் கொடுத்துவிடாதேனு சொல்றார். ஆனால் மஹாபலியோ , "குருவே, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கும்போது கேட்பதைக் கொடுப்பது என் அரச தர்மம். அரச தர்மத்தை நான் மீற மாட்டேன்." என்று சொல்லிவிடுகிறான். வந்துட்டார் வாமனனும். யாசகமும் கேட்டாச்சு.  "குழந்தாய், என்னப்பா வேண்டும்?" அரசே, என் காலடியால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்!" குழந்தை தானே? தன் சின்னஞ்சிறு காலைக் காட்டுகிறது. அது பென்னம்பெரிய காலாகப் போறதுனு பலி கண்டானா? ஆனால் சுக்ராசாரியார் கண்டுவிட்டார். குறுக்கே போக, பலியோ வாக்குக் கொடுக்கிறான். பூமி தானம் சும்மா சரினு சம்மதிக்கிறதோடு போயிடாது. சாஸ்திரோக்தமா தாரையும் வார்க்கிறான் பலி. அப்போவும் சுக்ராசாரியார் வண்டாய் மாறி நீர் விடும் கெண்டியின் கண்ணை அடைத்துக்கொள்ள, ஒரு தர்ப்பைக்குச்சியால் அவர்கண்ணையே குத்துகிறான் வாமனச் சிறுவன். பின்னர் தாரையும் வார்த்து, சின்னஞ்சிறு கால் பென்னம்பெரிய []   காலாக ஆகிறது. ஒரு கால் மேலே, மேலே, மேலே போக, அங்கே தேவாதிதேவர்கள் அந்தக் கால் விஷ்ணுவின் கால்னு தெரிஞ்சு பாதபூஜை செய்ய அந்த நீர்தான் , அழகர் மலையில்,"நூபுரகங்கை"னு வந்துட்டு இருக்கு. எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன்?? அட?? திருப்பாவை எங்கே போச்ச்ச்ச்???  ம்ம் பிடிச்சாச்ச். இங்கே பலியை வாமனன் சம்ஹாரம் செய்யவில்லை. அவனைப் பாதாளத்துக்கு அதிபதியாக்கிச் சிரஞ்சீவியாக வாழ வழி செய்கிறான். அதனால் இங்கே வாமனனை ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஆண்டாள் சொல்கிறாள். அதோட பகவான் மூன்றடி எடுத்து வைத்ததில் சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அவரது ஸ்பரிசம் கிடைத்திருக்கிறது. எப்படி பிட்டுக்கு அடிவாங்கிய பரமனின் அடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பட்டதோ அப்படியே. அப்பாடி ஒருவழியா விட்ட இடத்தைப் பிடிச்சாச்ச்.. நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்= நதிக்கரையில் பாவை நோன்புக்கு என அம்மனைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். அந்த அப் பாவைக்கு மலர்கள் சாற்றி வழிபடுவதற்காக நீராடிவிட்டு வரவேண்டும். அதற்காக நாம் நீராடச் செல்வோம் தோழியரே. இந்த அருமையான பாவை நோன்பை நாம் நூற்பதால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து= நாட்டிலே தீமை என்பதே இராமல் அனைத்தும் ஒழிந்து போய் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை முறையே மழை பெய்து நீர் வளம், சிறந்து, அதன் மூலம் நில வளமும் செழிக்கும். ஒவ்வு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள்= செந்நெல் செழுத்து ஓங்கி வளரும், வயலில் பாய்ச்சி இருக்கும் நீரில் குளத்து நீரோ என மயக்கம் கொண்ட மீன்கள் பாய்ந்தோடி மகிழ்ந்து விளையாடும் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப= குவளைப் பூக்களின் மகரந்தத்தில் {போது=மகரந்தம்) வண்ண விசித்திரமான வண்டுகள் தேன் குடிக்க வந்து கண்கள் செருகி மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி =தயங்காமல் வந்து செழிப்பான கறவைப்பசுக்களின் பெருத்த மடியில் இருந்து இரு கைகளாலும் பாலைக் கறக்கக் கறக்க அவையும் வஞ்சனை என்பதே இல்லாமல் வள்ளலைப் போல் குடங்களை நிறைத்துக்கொண்டே இருக்குமாம். ஆகவே என்றும் வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் இந்த விரதத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்கலாம் வாருங்கள் பெண்களே. இதை பட்டத்திரி, கூறுவதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இங்கே ஆண்டாள் கூறி இருப்பது நாடு செழித்து இருப்பது குறித்து. பட்டத்திரியோ, நிலையற்ற செல்வத்தை நாடுவதை விட, பகவான் திருநாமத்தைப் போற்றுவதே நிலையான செல்வம் என்று கூறுகிறார். "நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தை ரநப்யர்த்திதாந் அப்யர்த்தாந் காமாநஜஸ்ரம் விதரதி பர்மாநந்த ஸாந்த்ராம் கதிஞ்ச இத்தம் நிஸ் ஸேஷலப்ப்யோ நிரவதிக பல; பாரிஜாதோ ஹரே த்வம் க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி வ்யர்த்த மர்த்தி வ்ரஜோயம் மக்கள் தங்கள் மனோ ரதங்கள் ஈடேற அதுவேணும் இது வேணும்னு கேட்கிறார்கள்; அதோடு சொர்க்கத்தில் இருக்கும் கற்பக விருக்ஷம் மாதிரி இருந்தால் நல்லதுனு நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஹரி, நீரோ அந்த கற்பக விருக்ஷத்தை விடவும் உயர்ந்தவர் அன்றோ. உம்மை வணங்கியவர்களுக்கு அள்ளி அள்ளிக் கருணை என்னும் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அன்றோ நீர். வேண்டியதற்கு மேல் பரம ஆநந்தத்தையும், முக்தியையும் கொடுக்கும் வள்லல் நீர். மேலும் உம்மை அனைவரும் எளிதில் அடைய முடியும். எல்லையற்ற பலன்களை அள்ளித்தருபவர் நீர். இங்கே செல்வமாக அவர் குறிப்பிடுவது பகவானையே. மேலும் பகவான் என்ற சொல்லுக்கு உள்ள விசேஷ குணங்களாக, ஐச்வர்யம், தேஜஸ், கீர்த்தி, லக்ஷ்மீகரம், ஞாநம், வைராக்யம் ஆகிய ஆறுகுணங்களும் நிரம்பியவர்கள் எனப்பொருள்.      மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 04 []   ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!     வில் கோலம் அல்லது சங்குக் கோலம்,  வலம்புரிச் சங்கைக் குறிப்பிட்டிருப்பதால் சங்குக் கோலம் பொருத்தம். [] அல்லது சக்கரமும் சங்கும் சேர்ந்த கோலமும் பொருத்தம். மழைப் பிறப்பைக் குறித்து அந்தக் காலத்திலேயே கூறி இருக்கும் ஆண்டாள் இங்கே கண்ணனை அழைக்கிறாளா, மேகத்துக்கு அதிபதியான இந்திரனை அழைக்கிறாளா என்பது குறித்துக் கருத்து வேறுபாடு இருந்தாலும் எல்லாவற்றிலும் கண்ணனின் கரிய திருவுருவையே கண்ட ஆண்டாள் மழையைப் பொழிவிக்கும் கருமேகக் கூட்டங்களிலும் கண்ணனையே காண்கிறாள். ஆகவே கண்ணனின் கைச்சக்கரம் போலவும், அவன் ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் போலவும் இடியையும் மின்னலையும் ஒப்பு நோக்குகிறாள்.  சக்கரம் மின்னுவதைப் போன்ற மின்னலும் பாஞ்சஜன்யத்தின் ஒலியைப் போன்ற இடி முழக்கமும் கேட்கும்படி மழையைப் பொழிவித்து இவ்வுலகின் நீராதாரத்தைப் பெருக்கி அனைவரையும் வாழ வைப்போம் என்கிறாள் ஆண்டாள்.         []        [] ஆழி மழைக்கண்ணா= ஆழி இங்கே கடலையும் குறிக்கும், வருணனையும் குறிக்கும், பரமன் கைச்சக்கரத்தையும் குறிக்கும். ஆனால் இந்த முதல் ஆழி என்பது வருணனைக் குறிக்கிறது. நாட்டில் மழை சரிவரப் பருவம் தப்பாமல் பொழிந்தாலே நிலவளம் செழிக்கும். அதற்கு மழை பொழிய வேண்டுமெனில் எப்படி?? பள்ளியிலே படிச்சதை ஆண்டாள் சர்வ சாதாரணமாக அப்போவே சொல்லிட்டுப்போயிட்டாள். கடல் நீர்தான் ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து மழையாகப்பொழிகிறது என்பதைச் சின்ன வயசிலேயே படிச்சிருக்கோம் இல்லையா?? அதனால் முதல் ஆழியை வருணன் என எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்த ஆழியைக் கடல் என எடுத்துக்கணும்."ஆழி மழைக்கண்ணா!" வருணணைக் கூப்பிட்டு = இங்கே ஏன் கண்ணா என்கிறாள் என்றால் மழை பொழியும்போது வருணன் கண்ணனின் அருள் மழையை நினைவூட்டுவதாயும் கொள்ளலாம். கண்ணனின் கரியநிறத்தைப் போன்ற மேகங்கள் அவன் நிறத்தை நினைவூட்டுதலையும் கொள்ளலாம். ஆண்டாளே வேண்டுகிறாள் இதே பாடலில், "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து" என. ஒன்று நீ கை கரவேல்= ஏ, வருண பகவானே, உன் கருணையை நிறுத்திவிடாதே. என்கிறாள்.  அந்த ஆழி மழை எப்படிப் பொழிகிறது? ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி= கடலினுள் புகுந்து மேலெழும்பி ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாய் இடியோசையுடன் வேகமான பெருமழையாகப்பொழிந்து எங்கள் மேல் பொழிவாயாக.  வருணனை மழைபொழியுமாறு வேண்டும் ஆண்டாள் அதற்கு அவனை எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறாள். மழைமேகங்கள் கருத்து இருப்பவை கண்ணனின் நிறத்தைக் குறிக்கின்றன. கண்ணனின் சங்கு இடியோசை போல் எழுந்து []   தீமைகளை ஒழித்து அடியார்களுக்குக் கருணை என்னும் மழையைப் பொழிகிறது. அவன் கைச்சக்கரமோ தீயவற்றை வேரோடு அறுத்துத் தள்ளுகிறது. அந்தச் சங்கையும் சக்கரத்தையும் போல் வருணனின் இடியும், மின்னலும் இருக்கவேண்டுமாம். இடியோசையும், மின்னலும் அவன் கைச் சக்கரத்தையும், சங்கையும் குறிக்கும். இந்த மழைமேகங்களையும் அவை நீருண்டு கன்னங்கரேல் எனக் கருத்து இருப்பதையும் பார்க்கும் ஆண்டாளுக்குக்கண்ணன் உருவமும் அவன் கரிய திருமேனியும் நினைவில் வருகின்றன. ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து= மஹா பிரளயத்துக்கும் முந்தையவனாய் ஆதி முதல்வனாய் இருக்கும் அந்த நாராயணனைப் போலவே அவனுடைய நிறம் போலவே நீயும் கருமை வண்ணத்தோடு வருவாய் என்பது இங்கே பொருள்,  பாழியம்தோளுடைய பற்பநாபன் கையில்= அழகான தோள்களை உடைய பத்மநாபன் என்று பொருள். பரமன் தன் நாபியிலிருந்து பிரம்மாவை சிருஷ்டிக்கிறான். அதுவும் பத்மம் என்னும் தாமரை மலரில் தோன்றச் செய்து அதில் பிறப்பிக்கிறான். அந்தப்பிள்ளையைத் தன் திருத்தோள்களால் ரக்ஷிக்கவும் செய்கிறான். அத்தகைய பற்பநாபன் கைகளில்  ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து= ஆழி இங்கே சக்கரம் என்னும் பொருளில் வரும். நாராயணனின் கைச்சக்கரம் எப்படி மின்னுகிறது?? அத்தகைய சக்கரத்தைப் போல் ஏ, வருணனே, நீயும் உன் மின்னலை மின்னச் செய்வாயாக. அவனுடைய வலம்புரிச்சங்கின் நாதம் எவ்வாறு ,பூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என வருகிறதோ அதே போல் இடியை இடிக்கச் செய்வாயாக.  [] தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்= சார்ங்கம் இங்கே வில்லைக் குறிக்கும். சிவன் கையில் இருப்பது சாரங்கம். விஷ்ணுவிற்கோ சார்ங்கம். இரண்டுக்கும் ஒரு சின்னப் புள்ளியில் வேறுபாடு என்பதையும் கவனிக்கவும். இங்கே சார்ங்கம் என்பது வில். வில்லை ஏந்தியவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் வில்லானது அம்பை மழையாகப் பொழியும். பகைவரை அழிக்கும். ஸ்ரீராமனின் வில்லில் இருந்து வரும் சரமழைபோல் அப்படி மழையை நீயும் பொழியச் செய்வாய் வருணனே என்று வேண்டுகிறாள் ஆண்டாள். அடுத்தது பிரார்த்தனை, தனக்கு மட்டுமா?? அனைவரும் வாழப் பிரார்த்திக்கிறாள். வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் நாங்களும் வாழ உலகினில் பெய்திடமாட்டாயா வருணனே.  இப்போது நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து எம்பிரானைக் கும்பிட்டுப் பிரார்த்தனைகள் செய்கிறோம். உன் கொடையை எண்ணி நாங்களும் மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். ஆண்டவனின் உதார குணத்தை இங்கே சுட்டுகிறாள் ஆண்டாள். பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும். இதற்கு பட்டத்திரி கூறுவது என்னவென்றால், சகல செளபாக்கியங்களையும் கொண்ட பகவானை நாம் வழிபட்டால் பக்தர்களுக்கு அவன் தன்னையே கொடுப்பான் என்பதுவே. "காருண்யாத் காம மந்யம் தததி கலு பரே ஸ்வாத்மதஸ்த்த்வம் விஸேஷா ஐஸ்வர்யாதீஸதேந்யே ஜகதி பரஜநே ஸ்வாத்மநோபீஸ்வரஸ்த்வம் த்வய்யுச்சை ராரமந்தி ப்ரதிபத மதுரே சேதநா: ஸ்ப்பீத பாக்யா: த்வம் சாத்மாராம ஏவேத்யதுல குணகணாதார ஸெளரே நமஸ்தே. அனைத்துக் கல்யாண குணங்களையும் கொண்ட பரமனை வழிபட்டால் அவன் தன் பக்தர்களுக்குத் தன்னையே கொடுத்துவிடுகிறான். இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நிலையற்ற செல்வங்களை மட்டும் அவன் கொடுப்பதில்லை. வெறும் ஐச்வரியங்களை மட்டும் அளிப்பதில்லை. ஐஸ்வரியங்களின் மூலம் பக்தர்கள் மனதையும் ஆள்வதில்லை. மேலான தன்னையே கொடுத்து பக்தர்களை ஆட்கொள்கிறான். பக்தர்களின் பாக்கியம் தான் என்ன?? அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆநந்தம் தான் என்ன?? ஆஹா இதைவிடவும் உயர்ந்ததொரு ஆநந்தம் தேவையா பக்தர்களுக்கு?? பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்..    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 05 [] மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்!      [] [] மலர் தூவி எம்பெருமானைத் தொழப் போவதால் மலர்க்கோலம் பொருத்தம். மலர் தூவி எம்பெருமானைத் தொழச் சொல்லுகிறாள் ஆண்டாள்.  ஆயர் குலத்தின் அணி விளக்கைத் தன் பிறப்பின் மூலம் தேவகியின் கருவறையில் பத்துமாதங்கள் இருந்ததால் அதன் மூலம் அவளைப் பெருமைப் படுத்தியவனும், பின்னர் கோகுலம் வந்து யசோதையிடம் வளர்ந்தவனுமான கண்ணனின் புகழை நாம் எப்போதும் வாயினால் பாடுவதோடு மட்டுமில்லாமல் மனதில் வேறு சிந்தனை இல்லாமல் கண்ணனைக் குறித்தே சிந்திக்க வேண்டும் என்கிறாள். ஆண்டாள் இந்தப் பாடல்களை எல்லாம் கோகுலத்துப் பெண்களை நோக்கியே பாடுவதாக அமைந்திருக்கிறது. தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆண்டாள் []   கோகுலமாய் நினைத்திருக்கலாம். என்றாலும் கண்ணன் இடைக்குலம் என்பதால் தன்னையும் ஒரு இடைப்பெண்ணாக நினைத்துக்கொண்ட ஆண்டாள் இன்னொரு இடைப்பெண்ணின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்தப்பாடல் உள்ளது. அந்த இடைப்பெண்ணோ மிகச் சாதாரணமானவள். தத்துவங்களோ, வேதமோ, வேதாந்தமோ, எதுவுமே தெரியாது. சாஸ்திர சம்பிரதாயங்கள் சரிவரத் தெரியாது, புரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் நம்முடைய பாப, புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல் அனைத்தும் நடக்கிறது என்பதே. அப்படி இருக்கையில் இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்?? பிழையுள்ள நமக்கு இதனால் தடை ஏதும் ஏற்படாதா? நம் கர்மவினை நம்மைச் சும்மாவிட்டுவிடுமா?? என்றெல்லாம் கேட்கிறாள். அதற்கு ஆண்டாள் அளிக்கும் விடையே இந்தப்பாடல் ஆகும். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை= மாயன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனை வடமதுரையின் மைந்தனை,  கண்ணன் பிறந்தது வடமதுரையில் அன்றோ. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே இருந்த மதுரை தென்மதுரை. ஆகவே வடமதுரை எனக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் ஆண்டாள். வடமதுரையில் பிறந்த வசுதேவனின் மைந்தன் ஆன கண்ணன், தூயபெருநீர் யமுனைத் துறைவனை= புனிதம் நிறைந்த யமுனைக்கரையில் பிறந்தவனை யமுனைக்கரையில் பிறந்ததோடு ஆயிற்றா?? அந்த யமுனையைக் கடந்து []   கோகுலத்துக்கு அல்லவோ வந்தான்?? ஆகவே அடுத்த வரியில் கண்ணன் கோகுலத்துக்கு வந்ததைச் சொல்கிறாள். ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை= யமுனையைக் கடந்து தகப்பன் தலையின் மேலே ஒரு கூடையில் வைத்துக் கொண்டு வந்து ஆயர் குலத்தினரிடம் நம்பிக்கையோடு தன் குலவிளக்கை ஒப்படைக்கிறான் வசுதேவன். எல்லாம் வல்ல அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு நிலை! பிறந்தது சிறையில். பிறந்ததுமே தாயைப்பிரிந்தான். சில மணி நேரத்திலே தந்தையையும் பிரிந்தான். ஆனால் அதனால் தாயும், தந்தையும் இன்னொரு குடும்பத்தில் அல்லவோ விளக்கேற்றிவிட்டனர்? ஆயர்குலத்தில் அவர்களின் ஒளிவிளக்காய்த் தோன்றிய கண்ணனை தாயைக்குடல்விளக்கம் செய்த தாமோதரனை= தேவகி பெருமைப்படும்படியாக அவள் வயிற்றில் பிறந்திருந்தாலும் கண்ணனின் லீலைகள் அனைத்தும் கோகுலத்திலே யசோதையே கண்டு அநுபவிக்கிறாள் அல்லவா?? தேவகித் தாயின் கர்ப்பத்தைப் பெருமைப்படுத்தும்படியாகப் பிறந்திருந்தாலும், ஆயர்குலத்தில் வளர்ந்து அங்கே யசோதை கையால் கட்டுண்டு கிடந்தவன் அன்றோ! கண்ணனின் விஷமம் பொறுக்கமாட்டாமல் கண்ணனைக் கட்டிவிடுகிறாள் யசோதை. அதனால் கண்ணனின் உதரம்=வயிற்றுப்பாகம் வடுவிழுந்துவிடுகிறதாம். அதனால் அவன் தாமோதரன். யசோதை கட்டினால் தான் என்ன?? அவனால் விடுவித்துக்கொள்ள இயலாதா? எனினும்தன் சக்தியை மறைத்துக்கொண்டல்லவோ இங்கே குழந்தையாய்க் காட்சி தருகிறான் கண்ணன்.  இத்தகைய எளிமையான கண்ணனை நாம் தூயோமாய் வந்து நாம் தூமலர்கள் தூவித் தொழுது= இங்கே தூயோம் என்பது குளித்து நீராடி வருவதையும் குறிக்கும் அதே சமயம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் சுத்தமாய்க் கண்ணனை மட்டுமே மனதினால் கண்ணனை ஒருமுகமாய்ச் சிந்திப்பதையும் கூறும்.  வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்= நம் மனம், வாக்கு, காயம் என அனைத்தினாலும் கண்ணன் ஒருவனையே சிந்திப்போம், அவனையே தொழுவோம், என்றும் கொள்ளலாம், அல்லது நம் கைகளால் மலர் தூவி அர்ச்சித்து, வாயினால் இனிய கீர்த்தனைகளைப் பாடி, மனதினால்கண்ணனை நினைக்கலாம் என்றும் கொள்ளலாம். ஆனால் இவற்றில் எதைப் பின்பற்றினாலும் அனைத்தும் கண்ணனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யவேண்டும். பூசலார் நாயனார் மனதிலேயே ஈசனுக்குக் கோயில் கட்டினார். கோயில் கட்டியதோடு மட்டுமின்றிக் கும்பாபிஷேஹமும் செய்ய நாளை நிச்சயித்தார். அதே நாள் பல்லவனும் கோயில் ஒன்றை உண்மையாகவே கட்டிக் கும்பாபிஷேஹம் செய்ய நாள் நிச்சயித்தான். ஈசனோ மன்னன் கனவிலே சென்று , "பூசலாரின் கோயில் கும்பாபிஷேஹத்திலேயே தான் உறையப் போவதால் மன்னனின் கும்பாபிஷேஹத்துக்கு வர இயலாது." என்று கூறுகிறார். மன்னன் திகைத்துப்பூசலாரின் கோயிலைத் தேடிப் போக ஏழையான அவர் பொருளில்லாமல் மனக் கோயில் கட்டியது தெரியவருகிறது. அப்போது தான் மன்னனுக்கு உண்மையான பக்தி என்ன என்பதும் புரியவருகிறது. அப்படி நாமும் கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருக்கவேண்டும்.  போயப் பிழையும் புகுதருவான் நின்றனவும்= இத்தனையும் செய்தால் நம் பிழைகள் எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விடுமே. குழப்பமே அடைய வேண்டாம். எத்தனையோ ஜென்மங்களில் சேர்த்த பாவங்கள் அனைத்துமே தொலைந்து போம். அதுக்காகப் பாவம் செய்துட்டே இருக்கணும்னு அர்த்தம் இல்லை. எப்போப் பாவம் பண்ணி இருக்கோம், இது கர்மவினைனு புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போவே இறைவன் மேல்நிலைக்கு அழைத்துச் செல்ல முன் வந்துவிடுவான். பாவங்களைத் தொலைக்கவும் அவனே வழிகாட்டுவான். அவனை நினைத்தால் பாவங்கள் தொலைந்தும் போகும். அதுவும் எப்படி? தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்= தீயில் இட்ட தூசைப் போல ஆகும், பெண்ணே. ஆகவே நீ சீக்கிரம் வா, நாம் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம். இங்கே ஆண்டாள் கூறும் பக்தி யோகத்தையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில், "ஏவம் பூத மநோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம் த்வத்ரூபம் பரசித் ரஸாயநமயம் சேதோஹரம் ஸருண்வதாம் ஸத்யா ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞயத்யங்ககம் வ்யாஸிஞ்சத்யபி ஸீதபாஷ்ப விஸரை: ஆநந்த மூர்ச்சோத்பவை:" பரமனின் அழகான செளந்தர்யமான ரூபம் என்றும் புத்தம்புதியதாய் கண்ணுக்கு இனியதாய் அமுதத்தைச் சொரியும் தன்மையோடு கூடியதாய் விளங்குகிறது. அந்த திவ்யமங்கள சொரூபத்தைப் பற்றிக் கேட்டால் மேலும் கேட்கத் தூண்டும், மனம் எல்லையற்ற ஆநந்த பரவசநிலையை அடைகிறது. உடல் சிலிர்த்து, கண்கள் ஆநந்தக் கண்ணீரைச் சொரிய மனமும் மட்டுமின்றி உடலும் குளிர்கிறது. ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ யோக: ஸயோகத்வயாத் கர்மஜ்ஞாந மயாத் ப்ருஸோத்தமதரோ யோகீஸ்வரைர் கீயதே ஸெளந்தர்யைக ரஸாத்மகே த்வயி கலு ப்ரேனப்ரகர்ஷாத்மிகா பக்திர் நிஸ்ரமமேவ விஸ்வ புர்ஷைர்லப்யா ரமாவல்லப" ஆகவே பக்தியோகமானது கர்ம யோகத்தையும், ஞாந யோகத்தையும் விடச் சிறந்து விளங்குவதோடு அல்லாமல், பலரும் பாராட்டவும் செய்கின்றனர். ஏ, ரமாகாந்தனே, இவ்வுலகத்து அழகெல்லாம் உள்ள நீர் உம்மிடத்தில் அடியார்கள் காட்டும் ப்ரேமையான இந்த பக்தியை அனைவரும் எளிதாக அடையும்படியல்லவோ செய்திருக்கிறீர்!      மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 06 புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ! பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! பறவைகளின் கீச்சொலி கேட்டு எழச் சொல்வதால் பறவைகளைக் கோலத்தில் வரையலாம்.  கிளி, மயில், புறா போன்றவற்றைக் கோலத்தில் கொண்டு வரலாம்.   []            []   புள்களுக்கெல்லாம் அரையன் ஆன கருடன், பறவைகளின் அரசன் என்கிறாள் ஆண்டாள் கருடனை. அத்தகைய கருடனைத் தன் வாகனமாகக் கொண்ட எம்பெருமான் கோயிலில் சங்கங்கள் ஆர்த்தன!  பூதகி என்னும் அரக்கியின் நச்சுப்பாலை உண்டு அவளுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தவனும் சகடாசுரனை வதைத்து அவனுக்கும் மோக்ஷம் அளித்தவனும் ஆன பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானை முனிவர்களும் யோகிகளும் "அரி" என்று அழைக்கின்றனர்.  அந்தக் குரலைக் கேட்டாவது எழுந்திரு தோழி எனத் தோழியை எழுப்புகிறாள் ஆண்டாள்.  இப்போது ஆண்டாள் தன்னுடன் கண்ணன் புகழைப்பாட மற்றப் பெண்களையும் அழைக்க ஆரம்பிக்கிறாள். ஒரு மாதிரியாகத் தடங்கல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் பரமனின் புகழையும், செளந்தர்யத்தையும் அவன் கருணையையும் விவரித்துக் கூறி அவனைச் சரண் என அடைந்தால் நம் அனைத்துப் பாவங்களும் தீயில் எரிந்த தூசைப் போல் எரியும் என்றவள், இப்போது மற்றப் பெண்களையும் கூப்பிடுகிறாள். ஒரு வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை எழுப்புகிறாள். பெண்ணே எழுந்திரு என்கிறாள். அதுவும் எவ்வாறு? புள்ளும் சிலம்பின காண்= அடி பெண்ணே, விடிந்துவிட்டதே? இங்கே புள் என்பது பறவைகளைக் குறிக்கும். பறவைகள் விடியலைக்கண்டு சந்தோஷத்தில் கத்திக் கூச்சல் போடுகின்றனவே! அதற்கு என்ன அழகான ஒரு தமிழ்ச்சொல்! சிலம்பின!  புள்ளரையன் கோயில்= புள்ளரையன் இங்கே கருடனைக் குறிக்கும் என்று சிலர் கூற்று. எப்படி ஆனாலும் அனைத்துக்கும் தலைவன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனையே இது சொல்கிறது. புள்ளரையன் பக்ஷிராஜாவான கருடனின் தலைவன் ஆன ஸ்ரீமந்நாராயணனின் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ = விடிந்து வெள்ளை வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகச் சங்கு ஊதுகிறார்களே அந்தச் சத்தம் கேட்கவில்லையா உனக்கு?? பிள்ளாய்! எழுந்திராய்! ஏ பெண்ணே! எழுந்திரு. தென் தமிழ்நாட்டில் இப்போதும் பெண்குழந்தைகளைப் பிள்ளை என அழைக்கும் வழக்கம் உண்டு. அது அந்நாட்களிலும் இருந்திருக்கிறது தெரிய வருகிறது. பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,= பால கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்பட்ட பூதனையின் நஞ்சு கலந்த பாலை உண்டானே கண்ணன், அது மட்டுமா? சகடாசுரன் வண்டிச்சக்கரத்துக்குள்ளே புகுந்துகொண்டு கண்ணனைக் கொல்லப் பார்த்தானே? கண்ணன் இதுக்கெல்லாம் அஞ்சவே இல்லையே? தன்னைக்கொல்ல வந்த பூதனையைக் கொன்றும், சகடாசுரனை அழித்தும் அவர்கள் மூலம் மேலும் நமக்குக் கஷ்டம் வராமல் காத்தானே அதை மறந்துவிட்டாயா பெண்ணே! ஆனாலும் அந்தப்பெண் அதான் எல்லாம் முடிஞ்சாச்சே, அதனால் என்னனு மேலும் கேட்கிறாள். வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை=ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும் மூலவித்தான பரமனை. பரமன் ஒருவனே ஆதிவித்து, மூலவித்து, சகலமும் அவன் மூலமே வந்தது. அவன் ஒருவனே நிரந்தரம். அத்தகைய மூலவித்தான பரமன் வெண்மையான பாற்கடலில் அரவத்தின் மேல் துயில் கொண்டிருக்கிறான் என்றும் கொள்ளலாம். அல்லது யோக மார்க்கத்தில் உள்ளே இருக்கும் குண்டலினியை எழுப்பும் மூலகர்த்தாவாய் இருக்கிறான் என்றும் கொள்ளலாம்.  உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் =அத்தகைய மூலவித்தைத் தியானித்துத் தவமும், யோகமும் இருக்கும் முனிவர்களூம், யோகிகளும் மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்= "ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி" என்று கோஷிக்கிறார்களே, அந்த ஓசை உனக்குக் கேட்கவில்லையா? எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டதே! அந்தப்பேரொலி கேட்டே நாங்கள் உன்னை எழுப்ப வந்தோம். எழுந்திரு பெண்ணே! பரந்தாமனின் குணவிசேஷங்களைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ, சொன்னாலோ உள்ளம் மயக்கம் கொள்ளும், என்றாலும் சிலரால் மட்டுமே விரைவில் அத்தகைய மோன நிலைக்குச் செல்ல முடிகிறது. சிலரால் அவரவர் கர்மவினையைப் பொறுத்து மெல்லத் தான் செல்ல முடிகிறது. ஆகவே கர்மவினையிலிருந்து சீக்கிரம் விடுபட நாம் சீக்கிரமாகவே அவன் திருவடியில் சரணடையவேண்டும். அதற்கு நமக்குத் தேவைப்படுவது எளிய பக்தியே.  இதையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில், த்வத்பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரீ நிர்மஜ்ஜநேந ஸ்வயம் ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம் அக்லேஸதஸ்தந்வதீ ஸத்ய: ஸித்திகரீ ஜயட்யயிவிபோ ஸைவாஸ்துமே த்வத்பத ப்ரேம ப்ரெளடி ரஸார்த்ரதர த்ருதரம் வாதாலயாதீஸ்வர' பரந்தாமனின் திவ்ய சரித்திரங்களைக் கேட்டாலோ, பாராயணம் பண்ணினாலோ, அவை அமுதபானம் செய்தற்கு ஒப்பாகும். அமுதமான அவற்றில் மூழ்கித் திளைக்கும் அடியார்கள் பரமனை நினைந்து பக்தியில் பொங்குகிறார்கள். இந்த எளிய பக்தி ஒன்றே அவர்களுக்கு ஞாநபோதத்தை அளிக்கவல்லதாகிறது. பிறவிப்பயனையும் அளிக்கிறது. ஆகையால் இத்தகைய பக்தியே சிறந்தது. ஏ, பகவானே, உம்மை நான் வேண்டுவதே இத்தகைய பக்தியில் நான் மூழ்கி எந்நேரமும் உன் திருவடிகளிலேயே திளைத்திருக்கவேண்டும் என்பதே.    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 07 [] கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே! காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ! நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ! தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!       []     புள்ளி வைத்த  விளக்குக் கோலம் எதானாலும் போடலாம். இந்தக்கோலம் நன்றி உதயன். 2,3 வருடங்கள் முன்னர் மின் தமிழ்க் குழுமத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் உதயன் வரையப் பாட்டின் பொருள் கொண்டு  துணை செய்திருக்கிறேன். அப்போது போடப் பட்ட கோலங்கள் தாம் இவை. உதயன்  இந்தச் சுட்டியில் உதயனின் கோலங்களைக் காணலாம்.    ஆனைச் சாத்தன் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும் ஆண்டாள் அடுத்து காசும், பிறப்பும் என்கிறாள். யார் கிட்டே எல்லாம் காசும், அதற்கேற்றாற்போன்ற பிறப்பும் இருக்குமோ அங்கெல்லாம் பேச்சும் ஜாஸ்தியாத் தான் இருக்கும் என்பது நாம் அறிந்ததே!  இங்கே குறிப்பிடுவது அது அல்ல. ஆயர்பாடிப் பெண்கள் இரு வகையான தாலியை அணிந்திருந்தார்களாம்.  ஒன்று பொற்காசுகளால் செய்த அச்சுத் தாலியும் இன்னொன்று முளைகளாக அமைத்துச் செய்த ஆமைத் தாலியும் [] அணிந்திருந்தார்களாம்.  அந்தத் தாலிகள் அவர்கள் தயிர் கடையும்போது ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்படுத்திய சப்தத்தையே ஆண்டாள் இங்கே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து என்கிறாள்.  ஆனால் இதையே தத்துவரீதியாகப் பார்த்தால் திவ்யப் ப்ரபந்தங்களையும், பெருமானைக் குறித்த ஸ்லோகங்களையும் அவன் திருக்கோயிலில் அடியார்கள் ஒன்று சேர்ந்து சொல்லும் சப்தத்தையும் குறிக்கிறது என்பார்கள்.  அந்த நாராயண மூர்த்தி கேசவனின் திருநாமத்தை ஒரு தரம் சொன்னாலும் போதுமே.  அதைக் கேட்டபின்னருமா நீ உறங்குகிறாய்? எனத் தன் தோழியைக் கேட்கிறாள் ஆண்டாள்.    ஆனைச்சாத்தன் என்பது ஒரு குருவி வகை. எப்போவும் கிளுகிளுனு பேசிக்கொண்டே இருக்கும், அதோட கொஞ்சம் சோம்பேறியும் கூட. குயில் காலங்கார்த்தாலே எழுப்பி விட்டதுன்னா, இது மெதுவா காக்கைக்கும் அப்புறமா எழுந்திருக்கும், அத்தகைய []   ஆனைச்சாத்தன் கூட எழுந்துவிட்டது, கீசு கீசுனு பேச ஆரம்பிச்சுட்டதுனு இங்கே   []   சொல்றாள் ஆண்டாள். கீகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!= இந்த ஆனைச்சாத்தன் கூட எழுந்து கொண்டு கீசு கீசுனு சொல்றது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்றாப்போல் இருக்காம். ஆ, அவைகளின் பேச்சொலி கேட்கவில்லையா பெண்ணே,  காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ= ஆய்ச்சியர்கள் எல்லாரும் எழுந்திருந்து தயிர் கடைகிறார்கள்.    பானையில் மத்து மோதும் ஓசை, தயிர் சிலுப்பும்போது எழும் ஓசை, ஆய்ச்சியர்களின் கை வளைகளின் கிண்கிணி நாதம், அவர்கள் கழுத்து ஆபரணங்கள் அங்குமிங்கும் அசையும்போது எழும் ஒலி என ஒரே சத்தமாய் இருக்கே! இது எதுவுமா உனக்குக் கேட்கவில்லை, அடி பெண்ணே, என்ன இப்படி ஒரு பெருந்தூக்கம் தூங்குகிறாயே? உனக்கு என்ன பேய்க்குணம் வந்துவிட்டதோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ! தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!= நீ அருமையான நாயகப்பெண்ணாயிற்றே, நாங்கள் கேசி என்ற அரக்கனைக்கொன்றதன் மூலம் கேசவன் என்ற பெயர் பெற்ற கண்ணனைப்பாடிப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருக்கிறாயே? ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இதுவும் ஒரு சுகம்தான் போலிருக்கு. இவர்கள் கேசவனின் புகழைப்பாடப் பாட அதைப் படுத்துக்கொண்டே கேட்பதில் பெரும் ஆநந்தம் கொள்கிறாளோ என்னமோ.  ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே, வா, வந்து கதவைத் திறப்பாய் என்கிறாள். நாராயண பட்டத்திரி,சொல்லுவது என்னவெனில் வெறும் வறட்டுத் தர்க்கத்தில் சிரமப்பட்டு சித்தி அடைவதில் தாமதம் அடையாமல் பக்தி மார்க்கத்தின் மூலம் ஈசனை விரைவில் அடையலாம் என்கிறார். "பவத் பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத் கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதாதய மிலந் மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத: ப்ரார்த்யம் அபரம் ஆரம்பத்திலிருந்து பகவானிடம் நாம் வைக்கும் பக்தியானது அவனுடைய லீலா விநோதங்களாலும், பகவானின் குண விசேஷங்களாலும் இனிமையானதாய் உள்ளது. வளர்ந்துவிட்டாலோ நம் மனத்தின் அனைத்துத் தாபங்களையும் அறவே நீக்குகிறது. அதோடு உள்ளத்தில் மாசற்ற தெளிவான ஞாநத்தையும் உதிக்கச் செய்கிறது. பக்தியானது இவ்வளவு செய்கிறதே இதற்கும் மேல் வேறேன்ன வேண்டும்??     மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 08 []   கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!   []     கோவிலை நினைவூட்டும் வண்ணம் கோபுரக் கோலம் போடலாம். அல்லது மணைக்கோலம் போட்டு கோபுரம் போல் அழகு செய்யலாம். கீழ்வானம் வெளுத்ததோடு அல்லாமல் எருமைகள் கூடக் கறக்கப்பட்டு மேய்ச்சலுக்கும் போய் விட்டன.  ஆனால் இந்தப் பெண்ணரசி இன்னமும் எழுந்திருக்கவில்லை.  இங்கு கூடியுள்ளவர்களோ அவள் வரும்போது வரட்டும் நாம் போய் விட்டு வரலாம்னு அவசரப் படுத்துகிறார்கள்.  அவர்களைச் சமாதானம் செய்து நிறுத்தி வைத்திருக்கிறேன். தேவாதி தேவனாகிய எம்பெருமானைச் சென்று சேவித்தால், ஆஹா, இத்தனை பேரும் வந்திருக்கிறார்களே என எண்ணிக் கொண்டு அவன் நமக்கு அருள் பாலிப்பான் என்கிறாள் ஆண்டாள்.  இங்கே தேவாதி தேவன் என்றும் மாவாய் பிளந்தான் எனவும் மல்லரை மாட்டியவன் என்றும் கூறி இருப்பது குதிரை வடிவில் வந்த கேசியைக் கொன்றதையும், கம்சனின் படைவீரர்களான மல்லர்கள் முஷ்டிகன் ஆகியோரைக் கொன்றதையும் குறிக்கும்.  இவ்வளவு வீரம் நிறைந்த செயல்களைச் செய்ததால் பெருமானை தேவாதி தேவன் என அழைக்கிறாள் ஆண்டாள். இப்போ வானமோ வெளுத்துவிட்டது. எருமைமாடுகளும் கறவை முடிந்து மேயக்கிளம்பிவிட்டன. நீ இன்னுமா எழுந்திருக்கவில்லை என்கிறாள் ஆண்டாள். அவள் அழைக்கும் பெண்ணோ கண்ணன் மனதுக்கு நெருங்கியவளாய் இருக்கணும். அதனால் அவளைக் கோதூகலமுடைய பாவாய் என அழைக்கிறாள். [] கோதூகலமுடைய பாவாய், கீழ்வானம் வெளுத்து எருமைகள் எல்லாம் புல் மேயக் கிளம்பிவிட்டனவே. நீ என்ன இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? இங்கே வானம் என்பது ஆகாயத்தைக் குறித்தாலும் நம் உள்ளத்தையும் குறித்துச் சொல்லப் பட்டிருக்கலாம். நம் உள்ளம் தூய்மையாக வெளுத்து எந்தவிதமான தோஷங்களும் இல்லாமல் நிர்மலமாய் இருத்தலையே இங்கே சொல்லி இருக்கவேண்டும். அதேபோல் எருமையும் இங்கே நம் அறியாமையைக் குறிப்பதாய் இருக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி மூழ்கி நாம் ஆங்காங்கே தடங்கித் தடங்கி மெல்ல மெல்ல இறைவன் திருவடியை நோக்கிப் பயணிக்கிறோம். எருமை மாடுகள் மேயப் போனாலும் மேய்ச்சல் நிலத்துக்கு நேராய்ப் போவதில்லை அல்லவா? அதே போல்! வழியில் அதுபாட்டுக்குப் படுத்துக்கும், நிற்கும், தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம். (இது எல்லாமே என்னையே சுட்டுவது போல் இருக்கே! ) மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை= ஆனால் இங்கே வந்திருப்பதோ பரமனுக்குப் ப்ரீதியான பிள்ளைகள் அன்றோ, அவன் மனதுக்கு அண்மையில் இருப்பவர்கள் அன்றோ. இவர்கள் வெகுவிரைவில் அவர்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுவார்களே, அதுவரையிலும் அவர்களைப் போகாமல் உனக்காகத் தடுத்து நிறுத்தி உள்ளேன்.  கூவுவான் வந்து நின்றோம்!  பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்! =  பெண்ணே, நீ கண்ணனுக்கு மிகவும் பிடித்தவள் அன்றோ? நாங்கள் முன்னாலேயே இது இது செய்யவேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இப்போது உன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்றால் கண்ணன் நீ வந்திருக்கிறாயா எனக் கேட்டால்?? என்ன சொல்வோம் பெண்ணே! கண்ணனைப் பாடி அவன் புகழைப் பாடி வாழ்த்துவோம். கண்ணன் கம்சன் சபையில் மல்லர்களை வென்றான், கேசி என்ற அசுரனை வென்றான். பகாசுரன் என்னும் கொக்கசுரனை வென்றான். இப்படி அனைத்து அரக்கர்களையும் வென்ற தேவாதிதேவனாகிய கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.  இதையே நாராயண பட்டத்திரி கண்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் விதமாய்க் கூறுகிறார். பரப்ரம்மம் என்பது எல்லையைக் கடந்து நிலை பெற்றிருப்பது என்கிறார். மேலே ஆண்டாள் அவன் மனதுக்குப் ப்ரீதியானவர்களை எவ்விதம் விட்டுச் செல்வது என அனைவரையும் கூட வருமாறு அழைக்கிறாள். பட்டத்திரியோ நிறைந்திருக்கும் இந்தப் பரம்பொருள் சகலமாகவும் இருக்கிறானே என ஆச்சரியப் படுகிறார்.  "நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தெள கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹூஸ் ததாத்மா கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந் தெளிந்த கடல் போன்ற ஆழமான எங்கேயும் நிறைந்திருக்கும் எல்லைகளே இல்லாத பரப்ரும்மம் ஆனது பரமாநந்தம் என்னும் அமுதக் கடலாகும். அசைவற்றிருக்கும் இது ஒரு சமயம் அசையவும் செய்யும். ஆழ்கடலில் அடியில் காணப்படும் நல்முத்துக்களைப் போல இங்கே பக்தர்கள் இந்த அமுதக் கடலில் மூழ்கித் தங்களை மறந்து பகவத் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். எல்லா நலன்களையும் தன்னில் மூழ்கிய பக்தர்களுக்குத் தரும் இந்தக் கடலில் பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஓர் பேரலையைப் போல் தோன்றுகிறது. பக்தர்கள் அதைக் கண்டு பரவசம் அடைகின்றனர்.    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 09 [] தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!      மணிமாடம் கோலம் அல்லது மாடக் கோலம் போடலாம். [] இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களான பஞ்சு மெத்தை, தூப, தீபங்கள் போன்றவற்றைப் போட்ட வண்ணம் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் மக்களைக் கண்ணன் கழலடியை நினைக்குமாறு தட்டி எழுப்புகிறாள் ஆண்டாள்.  இவ்வுலகத்து சுகங்கள் எல்லாம் நிலையாதவை.  அவன் கழலடி ஒன்றே நிலையானது  அவன் நாமம் பலவும் நாம் சொல்லிக் கொண்டே இருந்தோமானால் அவனருளால் நமக்கு வைகுண்டம் கிடைக்கும் என்பது உறுதி.      [] இந்தப்பெண்ணை எழுப்பச் செல்லும் ஆண்டாளுக்கு அவள் உறவு போல் தெரிகிறது. இல்லை என்றாலும் கண்ணனுக்கு நெருங்கியவளாயும் இருக்கலாம். கண்ணனுக்கு நெருங்கியவள் தனக்கும் அணுக்கமானவள் என்ற பொருளிலேயே கோதை நாச்சியார் சொல்லி இருக்கலாம். கோபிகைகள் அனைவருமே பகவானின் பக்தர்கள், பாகவதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த உரிமையாலும் இருக்கலாம். அந்தப் பெண்ணோ தூமணி மாடத்தில் தூங்குகிறாளாம். சுற்றும் விளக்குகளும் எரிய, தூபம் கமழத் துயிலணை மேல் துயில்கிறாள்.  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய = பகவானுக்கு நாம் மட்டுமில்லாமல் தேவாதிதேவர்களும் நவரத்தினங்களையும் அர்ப்பணிக்க அவற்றில் உள்ள அனைத்துத் தோஷங்களையும் நீக்கிய பகவான் அவற்றால் ஒரு அழகான மாடம் மணிகளால் ஆன மணிமாடம் கட்டிக் கொடுக்கிறன் பாகவத சிரோன்மணிகளுக்காக. அதிலே பாகவத சிரோன்மணிகளிலேயே கண்ணனுக்கு மிகவும் அண்மையில் இருப்பவள் ஆன இந்தப் பெண்ணரசி, ஆனந்தமாய்த் தூங்குகிறாள். தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்= இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களிலே மட்டும் கண்வளர்வது பற்றிக் கேள்விப் படுகிறோம். அக்காலங்களில் தூங்குவது என்றெல்லாம் சொல்லாமல் கண் வளர்தல் என்றே வழங்கி வந்திருக்கிறது. அழகான பல தமிழ்ச் சொற்களை நாம் இழந்துவிட்டோம். துயிலணை மேல் படுத்துக்கொண்டு தூக்கம் வர நறுமண தூபம் போட்டுக்கொண்டு சுற்றிலும் விளக்குகளும் ஜகஜ்ஜோதியாய் எரிய (ம்ஹும் என்னால் முடியாது வெளிச்சத்தில் தூங்க) தூங்கறாளாம் இந்தப் பெண். நிஜமாவே தூங்கறாளா அல்லது கண்ணன் நினைவில் ஆழ்ந்து போயிருக்காளா? தெரியலை. சரி, மாளிகைக்குள்ளே நுழைந்து பார்க்கலாம் என்றால் அவள் எழுந்து வந்து கதவைத் திறக்கவேண்டாமோ? அடம் பிடிக்கிறாள்! மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?=மாமன் மனைவியை மாமி என அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திலேயே இருந்திருக்கிறது பாருங்க! அந்தப் பெண்ணின் தாயை உறவுமுறைசொல்லி அழைத்து மாமி, அவளை எழுப்புங்கள், உங்க பொண்ணு என்ன பேசவே மாட்டேங்கிறாளே? ஊமையா? இல்லைனா காதிலே விழவில்லையா?? காது செவிடா? அடுத்து அனந்தலோனு கேட்கிறாள், அனந்தல் இந்த இடத்திலே மயக்கம் என்ற பொருளில் வருதுனு நினைக்கிறேன். ஒரு சிலர் கர்வம், பெருமைனும் சொல்வாங்க. இங்கே எப்படிப் பொருள் கொண்டாலும் சரியாய் இருக்கும். கண்ணன் எனக்கு நெருங்கியவன் என்ற மயக்கத்தில் இருக்கிறாளா எனக் கேட்பதாயும் கொள்ளலாம். கர்வம் கொண்டு விட்டாளோ என்று கேட்பதாயும் கொள்ளலாம்.  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?= சாதாரணமாய்ப்பார்த்தால் யாரானும் இவளை மயக்கிட்டாங்களோனு அர்த்தம் கொள்ளவேண்டும். இங்கே ஆண்டாள் கண்ணன் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் அவன் நாமத்தின் மகிமையில் மயங்கிவிட்டாளோனு கேட்கிறாள் என்று கொண்டால் சரியாய் இருக்கும். ஸ்ரீகிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து உச்சரித்து மனம் கசிந்து அந்த ஆழ்நிலைத் தூக்கத்துக்குப் போயிட்டாளோனு கேட்கிறாள் என்று கொள்ளவேண்டும். மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!= மாமாயன், அந்தக் கண்ணன் மாயக்கண்ணன் மட்டுமல்ல, நம்மைப் பிறப்பு, இறப்பு போன்ற கர்மவினைகளிலிருந்தும் காப்பாற்றி மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய மாதவன் என்று சொல்லும் ஆண்டாள், அதையே மா என்னும் லக்ஷ்மியின் கணவன் என்ற பொருளிலும் கூறி இருக்கிறாள்.  வைகுந்தன்=வைகுந்த வாசியான அந்தப் பர வாசுதேவன் நாமங்களைச் சொல்லி அவன் புகழைப்பாடிப் பரப்புவோம் வா பெண்ணே! [] இந்த மாமாயன், மாதவனின் குணாதிசயங்களைப் பட்டத்திரி சற்றே வேறுவிதமாய்க் கூறுகிறார். அதாவது மஹாவிஷ்ணுவையே இந்த உலகின் ஆதிபுருஷர் எனக்கூறும் பட்டத்திரி, இவ்வுலகில் புதிது புதிதாய்த் தோன்றும் அனைத்துக்கும் அதிபதியான மஹாவிஷ்ணுவுக்கு வழிபாடுகளும், யாகங்களும் செய்வதோடு நில்லாமல் அவருடைய திவ்ய சரித்திரங்களை முக்கியமாய்க் கிருஷ்ணாவதாரத்தைப் பாடி, வர்ணித்து ஆநந்தம் அடைந்து, மற்றவரையும் ஆநந்தம் அடையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் மோக்ஷம் நமக்கு வெகு எளிதாய்க் கிட்டும் என்கிறார். அத்யாயாஸேஷக்ர்த்ரே ப்ரதிநிமிஷ நவீநாய பர்த்ரே விபூதே: பக்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதிஸதி ஹவிராதீநி யஜ்ஞார்ச்ச்நாதெள: க்ருஷ்ணாத்யம் ஜந்ம யோவா மஹதிஹ மஹதோ வர்ணயேத் ஸோயமேவ ப்ரீத: பூர்ணோயஸோபிஸ்த்வரித மபிஸரேத் ப்ராப்யமந்தே பதம் தே    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10 []   நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ! ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!     []   இது உதயனின் கோலங்கள் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.         []          []       இது கூகிளார் கொடுத்தது. துளசிமாடம் கோலத்தில் போடலாம். மேலே காட்டி இருக்கும் இரண்டுமே துளசி மாடக் கோலத்தின் இருவகைகள் தான்.  இதைத் தவிரவும் இன்னொரு முறையும் உள்ளது.    முன்பிறவியில் நூற்ற நோன்பின் பயனை இப்பிறவியில் அனுபவிக்கிறாளாம் இந்தப் பெண்!  போன ஜென்மத்துப் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டு இருந்தால் போதுமா! இப்போதும் நாராயணன் நாமாவைப் பாட வேண்டாமா?  கும்பகர்ணனை விட மோசமாகத் தூங்காதே பெண்ணே!  வா எழுந்து வந்து கதவைத் திற என அழைக்கிறாள் ஆண்டாள். நம் வாழ்நாளை வீணே கழிக்காமல் பலனுள்ளதாக மாற்ற வேண்டிச் சொல்கிறாள் ஆண்டாள். திருமாலின் பத்து அவதாரங்களில் முன் சொல்லப்பட்ட கண்ணன் அவதாரம், வாமன அவதாரம், தவிர ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமனையும் குறித்துச் சொல்லி இருக்கிறாள் ஆண்டாள்.  இங்கேயோ பண்டொருநாள்  போற்றப் பறைதரும் புண்ணியனால் கும்பகர்ணன் அழிந்ததைச் சொல்வதால் இங்கே ஶ்ரீராமாவதாரத்தைச் சொல்கிறாள் என்பதும் புரிகிறது.  மார்கழி மாசம் காலையில் எழுந்திருக்கிறதுன்னா எல்லோருக்கும் கஷ்டமாய்த் தான் இருக்கு போல! :( தினமும் நான் பார்க்கிறேனே, காலங்கார்த்தாலே விளக்கை ஏத்தி வாசலில் வச்சுட்டு நான் மட்டுமே வாசல் தெளிச்சுக் கோலம் போட்டுட்டு இருப்பேன். தெருவில் சத்தமே இருக்காது. கோயில்களின் பாடல் ஓசையும் கூட ஐந்தரைக்குப் பின்னாலேயே கேட்கிறது. இப்போ இப்படி இருக்க ஆண்டாளின் காலத்திலும் இப்படித் தான் எழுந்திருக்கச் சோம்பல் பட்டுக்கொண்டு ஒரு பெண்ணரசி உள்ளே படுத்திருக்கிறாள். தோழிகள் அனைவரோடும் ஆண்டாள் அங்கே போயாச்சு! அவளைக் கூப்பிட்டுப் பார்க்கிறாள். ம்ஹும், அசைவே இல்லை!  நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்= இந்தப் பெண் முதல்நாள் தான் பாவை நோன்பைப் பற்றியும் அதன் மகிமை பற்றியும் அனைவரோடும் பேசிக்கொண்டிருந்தாள். மறுநாள் சீக்கிரம் எழுந்து நோன்பிற்குச் செல்லவேண்டும் என்றாள். ஆனால் இப்போத் தூங்குகிறாள். அதுவும் எவ்வாறு?? "கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?"= இங்கே ஸ்ரீராமாவதாரம் பேசப் படுகிறாது. நோன்பு நூற்று அதன் மூலம் இந்தப் பெண்ணரசி சுவர்க்கத்தில் புகுந்து கொண்டிருக்கிறாள். ஆகவே அவளை நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய், என அழைக்கும் ஆண்டாள், என்ன இது? கும்பகர்ணன் தூங்கறாப்போல் தூங்கறயே என்று கேட்கிறாள். நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்ற=கிருஷ்ணனோடு பக்தி செலுத்தும் அற்புத அநுபவத்தை விட்டு விட்டு இந்தப் பெண் இப்படித் தூங்கினால் என்ன அர்த்தம்?? ஒருவேளை கண்ணனே உள்ளே இருக்கிறான் போல! அதான் இப்படி ஒரு தூக்கம் தூங்கறாள். ஆண்டாள் கண்ணனை அங்கே தேடிக் குரல் கொடுக்க, அந்தப் பெண்ணோ கண்ணன் இல்லைனு சொல்லி விடுகிறாள். என்னது கண்ணன் இல்லையா? என்றால் அவன் மாலையாகச் சூடும் துழாயின் நறுமணம் எங்கிருந்து வந்தது?? புரிந்தது, புரிந்தது, உள்ளே கண்ணனோடு நீ கிருஷ்ணானுபவத்தை அநுபவித்துக்கொண்டு சுவர்க்கம் போகிறாய். அதனால் தான் வெளியேயும் வரவில்லையா?? [] தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ! = ஆஹா, உனக்குத் தெரியாமல் கண்ணன் எங்கே வருவான்? என்றாள் அந்தப் பெண். இல்லை, இல்லை, சகலத்திலும் தானாக நிறைந்திருக்கும் பரம்பொருள் அல்லவோ கண்ணன்?? அவன் இங்கே இருப்பான். எதனுள்ளும் இருப்பான். என்று ஆண்டாள் கூற அந்தப் பெண்ணிடம் இருந்து பதிலே இல்லை. சரியாப் போச்சு, மறுபடியும் கண்ணனை நினைத்துக் கனவு காணப் போய்விட்டாளா?? ஏ கும்பகர்ணி, கும்பகர்ணன் தான் தவம் செய்துவிட்டு, ஒரு சொல்லில் வாய் பிறழ்ந்து நித்திரைத்துவம் கேட்டு வாங்கி வந்தான் என்றால், நீயுமா?? ஸ்ரீராமன் தன்னை அழிக்க வந்த மாபெரும் சக்தி என்பது தெரிந்தே கும்பகர்ணன் அவனை எதிர்த்தான் அல்லவோ? அப்படிப்பட்ட கும்பகர்ணனைப் போல் நீயும் நித்திரையில் ஆழ்ந்துவிடாதே! ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் = அல்லது உன்னுடைய பெரும் ஆற்றலினால் கண்ணன் உன் கைக்குள்ளே வந்துவிட்டானோ? அந்த கர்வத்தில் நீ இருக்கிறாயோ?? பெண்ணே, சீக்கிரம் எழுந்து வா, எழுந்து வரும்போது படுக்கையில் இருந்து அப்படியே எழுந்துவராமல் உன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு எழுந்து வா.  இங்கே பட்டத்திரியும் பகவானின் வைபவத்தைப் பாடுகிறார். அவனே சிருஷ்டி கர்த்தா என்னும் பட்டத்திரி அந்த சிருஷ்டியே அவனுக்கு ஒரு விளையாட்டாகும் என்றும் கூறுகிறார். பகவானின் அநுகிரஹப் பார்வை ஒன்றாலேயே சகலமும் தோன்றுகிறது. அதையே இல்லை என்று அவரே மறைக்கவும் செய்கிறார். பின்னர் நம்மிடம் காட்டியும் விளையாடுகிறார். பரம்பொருளின் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டின் அதி அற்புதத்தை எவரால் வர்ணிக்க முடியும்? கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா பஹூதரபவ கேதாவஹா ஜீவபாஜாம் இத்யேவம் பூர்வமாலோசிதம் அஜித மயா நைவமத்யாபிஜாநே நோ சேஜ்ஜீவா: கதம் வா மதுரதரமிதம் த்வத்புஸ் சித்ரஸார்த்ரம் நேத்ரை: ஸ்ரோத்ரைஸ்ச பீத்வா பரமரஸ ஸூதாம்போது பூரே ரமேரந்" இறைவனை எவரால் வெல்ல முடியும்?? எவராலும் முடியாத ஒன்று. நம் அன்பும், மனப்பூர்வமான பக்தியுமே அவனை வெல்லும் சக்தி உள்ளது. அந்தப் பரம்பொருளின் சிருஷ்டி விளையாட்டு முதலில் ஜீவர்களுக்குத் துன்பங்களை விளைவிப்பது போல் தோன்றினாலும் பரம்பொருளின் அர்ச்சாவதாரத் திருமேனியின் அழகைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும் பேறு இந்த ஜீவர்களுக்குத் தானே வாய்க்கிறது? அதோடு மட்டுமா?? பரம்பொருளின் திவ்ய சரித்திரத்தையும் அவன் மேன்மையையும் பாடி, ஆடவும் ஜீவர்களால் தானே இயலும் ஒன்று??  என் குருவாயூரப்பா, எத்தனை பிறவி எடுத்தாலும் உன் புகழைப் பாடியும், ஆடியும், உன்னை மறவாமலும் இருக்கும் பேறு ஒன்றே எனக்குப் போதும்.(சொந்த வேண்டுகோள்)  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11 கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய்! சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! உதயனின் கோலப் பக்கம் திறக்கவில்லை.  திறந்தப்போ கோலங்களைக் காப்பி, பேஸ்ட் பண்ணி இருந்திருக்கணும்.  தோணலை! :)       [] []       பசுக்களைக் குறித்துச் சொல்லி இருப்பதால் காமதேனுக் கோலம் போடலாம். கொடிக் கோலமும் போடலாம்.  கொடிக்கோலம் கிடைக்கலை. மயில் கோலமும் போடலாம். [] மிக முயற்சி செய்து தன் தோழியை எழுப்புகிறாள் ஆண்டாள்.  ஏன் அவள் மட்டும் இருக்கிறவங்களோட போகக் கூடாதா? இல்லை; மனசு வரலை. சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்று கொண்டு தோழியின் முற்றத்தில் கூடி நின்று முகில்வண்ணனாகிய பெருமானின் புகழைப் பாடுகிறார்கள்.  அப்படி எல்லாம் நடந்தும் இன்னமும் மாயையாகிய உறக்கத்திலேயே ஆழ்ந்து கிடக்கிறாளே!  இவ்வுலகத்து நித்திரை மட்டுமின்றி மாயை என்னும் உறக்கத்திலிருந்தும் தோழியை எழுப்பி பெருமான் பால் அவள் மனதைத் திருப்புகிறாள் ஆண்டாள்.  கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து= கற்றுக்கறவை இங்கே இளங்கன்றுடன் கூடிய பசு மாட்டைக் குறிக்கும். பசுமாடு மிகச் சின்ன வயசிலேயே கன்றை ஈன்று பால் கொடுக்குமாம். அத்தகைய கற்றுக்கறவையில் இருந்து இன்னும் வயது அதிகம் ஆன பல பசுக்கள், அதுவும் எப்படி கணங்கள்னு சொல்கிறாள் ஆண்டாள். இங்கே கூட்டம் னு பொருள் கொள்ளலாம். அத்தகைய பசுக்கள் நிரம்பிய கூட்டங்கள், எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்குப் பசுக்கள். அப்படிப்பட்ட பசுக்களிடம் இருக்கும் பாலையெல்லாம் கறக்கும் ஒரு கோபனின் பெண்ணைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுகிறாள் ஆண்டாள்.  அந்த கோபன் பசுக்களிடம் பால் தாராளமாய் இருக்கிறதேனு கறக்கவில்லை. கன்று குடிச்சும் பால் மடியில் நிரம்பிப் பால் கட்டிக்குமாம் பசுக்களுக்கு. அது அவற்றுக்குத் தரும் துன்பத்தை நீக்கவே பாலைக் கறக்கிறானாம். செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்= செற்றார் இங்கே அசுரர்களைக் குறிக்கும். பொதுவாய் எதிரிகள் என்று கூறினாலும் இங்கே அந்த கோபருக்கு எதிரிகள் யார்னு கேட்டால் கண்ணனை அழிக்க வரும் அசுரர்களே எதிரிகள் ஆவார்கள். ஆகவே தேடித் தேடிக் கண்ணனின் எதிரிகளை அழிக்க இவரும் கிளம்பிடுவாராம். கண்ணனின் எதிரிகள்னு தெரிஞ்சாலே போதுமாம், அவர்களை அழிக்கக் கிளம்பிடுவாராம். குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே= அத்தகைய நற்குணங்கள் நிரம்பிய குற்றம் ஒன்றுமே கூறமுடியாத அளவுக்குக் கடமை வீரராய் இருந்து கண்ணன் தொண்டே நம் முதற்கடமை என்றிருக்கும் கோபனின் பெண்ணாகிய கொடி போன்ற பெண்ணரசியே, இங்கே கொடியைக் குறிப்பிட்டிருப்பது மேலாகப் பார்த்தால் மெல்லிய தேகத்தைச் சுட்டுவதாக இருந்தாலும், கண்ணன் என்ற நாமத்தைச் சொன்னாலேயே இவள் உயிர்வாழ்கிறாளன்றி அவன் நாமம் இல்லையெனில் இவள் கொழுகொம்பில்லாத கொடிபோல் வாடுகிறாள் என்பதையும் கூறும். புற்றர வல்குல் புனமயிலே போதராய்= புற்றரவு அல்குல் =இடுப்பிலே மேகலை, ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் தரிக்கும் இடம், தொப்புள் னும் சொல்லலாம். அது எப்படி இருக்கிறது என்றால் பாம்பு புகுந்து புறப்படும் புற்றைப் போல் சிறுத்து இருக்கிறதாம். இங்கே சிறுத்து இருப்பது இடையைனு நேரடி அர்த்தம் வந்தாலும் கண்ணன் நாமத்தைச் சொல்பவர்களுக்கு ஆசைகளும் சிறுத்துக் கண்ணனின் நாமம் ஒன்றே பெரும் செல்வம் என்ற எண்ணம் வரவேண்டும் என்பதையும் குறிக்கும். பொதுவாய் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றிய இந்தக் குறிப்புக்கள் உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்தவை என்பதை மனதில் கொண்டு படிக்கவேண்டும்.  அடுத்துப் புனமயிலே போதராய்= மயில் தோகை விரிந்தாற்போல் விரிந்த கூந்தலை உடைய பெண்ணே சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட= இங்கே இருக்கும் நம் சுற்றம், நண்பர் வட்டம் அனைத்துத் தோழிகளும் சேர்ந்து வந்து உன் வீட்டு முற்றத்தில் இந்தக் குளிரில் பனியில் நின்று கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோமே, உன் காதில் விழவில்லையா?? இங்கே நாங்கள் கண்ணன் பேரைச் சொல்லிப் பாடிக்கொண்டிருக்க உள்ளே நீ அதைக் கேட்டு ஆநந்தித்துக்கொண்டு இருந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கிறாயே? சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!= என்னடி இது பெண்ணே, இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?? செல்வம் நிறைந்த பிராட்டியாக நீ இருந்தால் எங்களுக்கு என்ன வந்தது?? இதுதான் கண்ணனிடம் நீ வைத்திருக்கும் பக்திக்கு அழகா? இது அத்தனையையுமா கேட்டுக்கொண்டு இன்னமுமா நீ உறங்குகிறாய்? சீக்கிரமாய் வா பெண்ணே! மேலே கூறியது பாகவத லக்ஷணங்கள் என்று கூறலாம். கண்ணனை நினையாத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு என ஆண்டாள் கேட்கிறாள். அதையே நாராயண பட்டத்திரி எவ்வாறு கூறுகிறார் எனில், தாரம் அந்தர் அநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயும் அபியம்ய நிர்மலா இந்த்ரியாணி விஷயாத் அதாபஹ்ருத்யாஸ்மஹே பவத் உபாஸ்நோந்முகா: இங்கே பட்டத்ரி குறிப்பிடுவது ப்ராணாயாமம் பற்றி. சாதாரணமாய் அன்றாடம் செய்யும் மூச்சுப் பயிற்சிக்கும் இதுக்கும் வேறுபாடு உண்டு. என்றாலும் அன்றாட முறையான மூச்சுப் பயிற்சியின் மூலம் இதையும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாம். பிரானாயாமம் என்பது வெறும் சுவாசக் காற்று மட்டுமல்ல, அது நம் பிராணனைக் கட்டுப்படுத்தி அக ஆற்றலையும் மேம்படுத்தும் பிரபஞ்ச நுட்பமானதொரு தத்துவம். அத்தகைய பிராணாயாமம் செய்கையில் பிரணவ மந்திரத்தை, (பிரணவ மந்திரத்துக்கு இந்தப் பெயர் ஏன் வந்ததுனு இப்போப் புரியுதா?) உள்ளுக்கு ஸ்மரித்து, அதாவது நினைத்துக்கொண்டு (இதுதான் அஜபா மந்திரம்னும் சொல்லலாம், இதோடு கூடச் சொல்லும் மந்திரமும் இருக்கிறது, குருமூலம் உபதேசம் கேட்டுக்கணும்) நம் உள்ளத்து மாசுக்களைத் தீயிலிட்டுப் பொசுக்குவது போல் பொசுக்கிக்கொண்டு நம் பஞ்ச இந்திரியங்களையும், அதாங்க, கண், காது, மூக்கு, வாய்னு எல்லாம் இருக்கே அதுங்களையும் அதன் மூலம் கட்டுப்படுத்தி இவ்வுலகத்து அநுபவங்களிலிருந்து அவற்றை மெல்ல மெல்ல விலக்கி, பகவானின் நாமத்தை மனதுக்குள் உச்சரிப்பது ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு பக்தி செலுத்துவோம். இந்தப் பிராணாயாமத்தைத் தினசரி செய்து வந்தாலே மனதில் தன்னடக்கமும், உடலில் நலனும் வந்து சேரும்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!               []                                []     வீட்டு மாடம், அல்லது வீடு மாதிரிக் கோலமோ போடலாம். இல்லத்தைக் குறித்துச் சொல்லி இருப்பதால் மாடக் கோலமும் போடலாம். செழிப்பாக வளர்ந்ததால்  பால் தானாகச் சொரிந்து இல்லத்தையே சேறாக்குகின்றனவாம் எருமைகள். ஆகையால் வீட்டுக்குள் நுழைய முடியாமல், வீட்டின் வாசல் நிலைக்கட்டையைப் பிடித்துக் கொண்டு பனியில் தொங்கும் பெண்கள் விடாமல் தோழியை எழுப்புகின்றனர்.  இங்கேயும் ராவண வதம் புரிந்த ராமனைக் குறித்தே மனதுக்கு இனியான் எனச் சொல்கிறாள் ஆண்டாள்.  அத்தகைய இனியானைப் பாடக்கூட வாய் திறக்கமுடியாமல் தூங்குகிறாயா?  என்ன ஒரு பெருந்தூக்கம், கும்பகர்ணன் தோற்கும்படியாக என வசை பாடுகிறாள் ஆண்டாள்.  கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!= எருமை மாடுகள் கறக்க ஆளில்லாமல் பால் கட்டி அவஸ்தைப் படுகின்றனவாம். அதோடு கன்றுக்கு ஊட்டவும் முடியாமல் மாடுகள் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன. இங்கே கட்டுதல் என்பது அறியாமையில் நாம் கட்டப் பட்டிருப்பதையும் சொல்லலாம். எருமையும் அறியாமையின் அடையாளமே என முன்னரே பார்த்தோம். அப்படிக் கட்டிப் போட்டிருக்கும் எருமைகள் பால் கனம் தாங்க முடியாமல் தானாகவே பாலைச் சொரிகின்றன. அந்தப்பாலெல்லாம் கீழே விழுந்து கோபர்களின் இல்லமெல்லாம் பாலும், மண்ணும் கலந்து சேறாகிவிட்டதாம். இந்த கோபன் இல்லை போலும், அதான் பால் கறக்க ஆளில்லை!  அவன் எங்கேயும் போகவில்லை. நற்செல்வன் ஆச்சே! வெறும் பொருளால் ஆகிய செல்வம் மட்டும் இல்லை அவனிடம், அவனிடம் சிறந்த பக்திச் செல்வமும் இருப்பதாலேயே கோதை அவனை நற்செல்வன் என்று கூறுகிறாள். அத்தகைய நல்ல பக்திச் செல்வம் நிறைந்தவனின் தங்கை வீட்டிற்கு இப்போது போயிருக்கிறாள் ஆண்டாள். அவளை எழுப்புகிறாள்.  பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! = பனி கொட்டுகிறது. அதுவும் கோகுலத்தில் கேட்கவும் வேண்டுமா?? கொட்டும் பனியில் நனைந்து கொண்டு கீழே நிற்கலாம் என்றால் கீழேயும் பால் கொட்டிச் சேறு. இத்தனை அமர்க்களத்தில் நாங்கள் நிற்க முடியாமல் உன் வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். என்கிறாள் ஆண்டாள். அப்படியும் அவள் அசைந்தே கொடுக்கவில்லை.  சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற = சினம் என்ன சாதாரண சினமா? தன் மனைவியைச் சிறைப்பிடித்த சினம். சிறைப்பிடித்தவனும் சாமானியன் அல்லவே. சிறந்த சிவபக்தன். நவகிரஹங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றைத் தான் மிதிக்கும் படியாகப் போட்டுக்கொண்டவன். தன் அண்ணனாகிய குபேரனின் செல்வத்தைக் கொள்ளை அடித்து அவனை லங்காபுரியிலிருந்து அலகாபுரிக்கு விரட்டி அடித்தவன். ஈசனிடமே சரிக்குச் சரியாக நின்று அவரை ஆட்டி வைக்கப் பார்த்துப் பின்னர் அவர் கால்விரலின் கனம் தாங்காமல் கத்தோ கத்துனு கத்தி அதனால் ராவணன் என்ற பெயரும், சந்திரஹாசம் என்ற வாளும் பெற்றவன். இப்படிப் பட்ட ராவணனைத் தோற்கடித்தவன் யார்??  மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்! =வேறே யாரு? நம்ம மனதுக்கு இனியவனே என்கிறாள் ஆண்டாள். ஆமாம், இந்தக் கண்ணன் படுத்தற பாடு தாங்கலை தான். கோபியர்களை அங்கேயும், இங்கேயும் அலைக்கழிக்கிறான். திடீர்னு ஒருத்திக்குப் பூச்சூட்டுகிறான் இன்னொருத்திக்குத் தலை வாரிவிடுகிறான். வேறொருத்தியின் வீட்டில் வெண்ணெய் சாப்பிடுகிறான். சரினு பார்த்தால் நம் வீட்டு முற்றத்திலே நிற்கிறான். புல்லாங்குழல் பாட்டிசையைக் கேட்டுப் போனால் ஒளிஞ்சுக்கறான். ஆனால் ஸ்ரீராமன் அப்படி இல்லை. கருணாமூர்த்தி! தனக்குத் தீமை செய்தவர்களுக்குக் கூட நன்மையே செய்பவன், ராவணனைக்கூட இன்று போய் நாளை வா என்றே பெருந்தன்மையாய்க் கூறினான் அன்றோ! ஆகவே ஏ, பெண்ணே இந்தக் கண்ணன் நாமம் வேண்டாம், சரியா, ராவணனுக்கே சரணாகதி கொடுக்கத் தயாராய் இருந்த ஸ்ரீராமன் நமக்கும் கொடுப்பான். அத்தகைய மனதுக்கு இனிய நற்குணங்கள் நிரம்பிய ஸ்ரீராமனைப் பாடுவோம் வா, நாங்களும் அவன் புகழைப் பாடுகிறோம். நீ என்னன்னா இன்னும் தூங்குகிறாயே! எழுந்திரு பெண்ணே! இனியாவது எழுந்திரு! அக்கம்பக்கம் எல்லாம் பார்க்கிறாங்க பார்! எங்களுக்கு ஒண்ணுமில்லை அம்மா, உனக்குத் தான் அவமானம், இப்படியும் ஒரு பெண் இத்தனை பேர் இத்தனை நேரம், இத்தனைப் பாட்டுப்பாடியும் தூங்கறாளேனு சொல்லுவாங்க. வா, வா சீக்கிரமாய்! இத்தகைய பக்தியைப் பற்றி நாராயண பட்டத்திரி சொல்வது: "ஸோயம் மர்த்யாவதாரஸ்தவ கலு நியதம் மர்த்ய ஸிக்ஷார்த்தமேவம் விஸ்லேஷார்த்தி: நிராகஸ்த்யஜநமபி பவேத் காமதர்மாதி ஸக்த்யா: நோ சேத் ஸ்வாத்மாநுபூதே: க்வ நு தவ மநஸோ விக்ரியா சக்ரபாணே ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவந புரபதே வ்யாதுநு வ்யாதிதாபாந் குருநாதரின் வாதநோயைத் தனதாக்கிக்கொண்ட பட்டத்திரி மஹாவிஷ்ணுவின் திவ்ய சரித்திரத்தைப் பாடுவதன் மூலம் தன் வாத நோய் தீரும் எனத் தீர்மானத்தோடு மஹாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதார மகிமை பற்றியும் பாடி வந்தார். அதிலே ஸ்ரீராமாவதாரத்தின் மகிமை பற்றிக்கூறுகையில் ஸ்ரீராமாவதாரமானது சாமான்ய மக்களுக்குப் படிப்பினை சொல்லுவதற்காகவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், தர்மம் என்பது எந்த எந்த சமயங்களில் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும் என்பதைக்கூறுவதாயும் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அன்பிற்குரியவர்கள் கொஞ்ச நேரம் கண்கள் எதிரே இல்லைனாலும் மனம் சஞ்சலம் அடையும், கவலை அடையும், வருத்தம் கொள்வோம். ஆனால் ஸ்ரீராமரோ தன் கண்ணுக்கும் மேலாக அன்பு செலுத்தி வந்த மனைவியை முதலில் ஸ்ரீராவணன் அபகரித்துச் சென்றபோது பிரிந்தார். பின்னர் அரச தர்மத்தைக் காக்கவேண்டி, நாடு முழுதும், தன் நல்லாட்சியைப் பாராட்டும் அதே சாமான்யக் குடிமக்கள் ராவணன் ஊரில் அசோகவனத்தில் சிறை இருந்த சீதையைத் தான் திரும்ப ஏற்றுக்கொண்டது சரியில்லை என்ற கோணத்தில் பேசிக்கொள்வதையும், இனி தாங்களும் அவ்வாறுதான் இருக்கவேண்டுமோ என்றும் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை நிரந்தரமாய்ப் பிரிகிறார். குடிமக்களின் நல்வாழ்க்கைக்காகவும், அவர்களுக்கு ஒரு சரியான முன்னுதாரணமாய் இருக்கவேண்டியும் தன் அன்பு மனைவியைப் பிரிந்தார் ராமர். இவ்வாறு திவ்யச் செயல்கள் புரிந்த ஸ்ரீராமர் குற்றமற்ற சீதையை எப்படிப் பிரிந்தார்?? தர்மத்தின் மேல் வைத்த அதீதப் பற்றா?? இவ்வளவு புகழ் வாய்ந்த ஸ்ரீராமர் இப்போது குருவாயூரப்பன் உருவில் வந்து இறங்கி இருக்கிறாரே, அவரே என் வாத நோயைப் போக்கி அருளவேண்டும் என்கிறார்.  ஆண்டாள் கண்ணனை விடுத்து ஸ்ரீராமனை மேற்கோள் காட்டியவாறு பட்டத்திரியும் மஹாவிஷ்ணுவின் அளப்பரிய லீலைகளை நினைத்து ஆநந்தம் அடைவதோடு நம்மையும் அடையச் செய்கிறார். சதா விஷ்ணுவின் லீலைகளைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும்படியும் கூறுகிறார்.    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார் வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!    புள் எனப் பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளைக் கோலமாக வரையலாம். ஆனால் இங்கே சொல்லி இருக்கும் பறவை அரக்கனாக இருந்து பறவை வடிவில் வந்த பகாசுரனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. [] இந்த மாதமே கண்ணனையும் அவன் லீலைகளையும் குறித்து நினைந்து ஆனந்திக்கும் மாதம்.  அத்தகைய தண்மையான மாதத்தில் குள்ளக் குளிரக் குடைந்து தண்ணென்ற நீரில் நீராடாமல் இருக்கும் தோழியைத் தூக்கமாகிய இருட்டிலிருந்து விழிப்பு என்னும் வெளிச்சத்திற்கு வரச் சொல்கிறாள் ஆண்டாள். இங்கே தூக்கம் அறியாமை என்னும் இருளையும், ஞானம் என்னும் வெளிச்சத்தை விடிவெள்ளியாகவும் மறைபொருளாகச் சுட்டப்படுகிறது. ராவணனை வதம் செய்த சாக்ஷாத் அந்த மஹாவிஷ்ணு என்னும் நாராயணனை, பறவை வடிவெடுத்து வந்த அரக்கனையும் பிளந்து தள்ளிய கண்ணன் அவதாரத்தில் வந்த நாராயணனின் நாமத்தைச் சொல்லாமல் தூக்கம் என்னும் பெரும் இருட்டில் ஆழ்ந்திருக்கும் தோழியை அதோ பார், வெள்ளி முளைத்தது, வியாழம் உறங்கப் போயிற்று.  நீயும் எழுந்திரு என்கிறாள் ஆண்டாள்.  புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்= ஆண்டாள் பாட்டுக்கு முந்தைய பாட்டில் ஸ்ரீராமனைப் பற்றிப் பாட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள், சில கோபியருக்குக் கோபம் வந்திருக்கு போல! அவங்க இங்கே மறுபடியும் கிருஷ்ணனைத் துதிக்க ஆரம்பிச்சாச்சு! புள்ளின் வாய்க் கீண்டானை என்பது இங்கே பகாசுரன் கொக்காய் வந்து கிருஷ்ணனைக் கொல்ல வந்தபோது அந்தக் கொக்கின் வாயைக் கண்ணன் பிளக்க முயன்றதைக் குறிக்கும். அதைக் குறித்துச் சில கோபியர்கள் பாட, ஆண்டாளோ விடாமல் ஸ்ரீராமனையே குறித்துச் சொல்கிறாள். நாலு பெண்கள் சேர்ந்தாலே பேச்சு அதிகம். இங்கேயோ பாகவதர்களின் விசேஷம் வேறே. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று ப்ரீதி. அது போலத் தான். ஆண்டாள் பாட்டுக்குப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை அப்படினு முந்திய பாடலின் தொடர்ச்சியாக ராவணனின் பத்துத் தலைகளையும் ஸ்ரீராமன் அறுத்ததைக் குறிப்பிடுகிறாள். அப்படிப் பட்ட பரம்பொருளின் கீர்த்திகளைப் பாடிக்கொண்டே போவோம். பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார் வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!= இங்கே பிள்ளைகள் என்று கூறி இருப்பது மீண்டும் பாவை நோன்பு நூற்கும் பெண்களையே. தென்மாவட்டங்களில் இன்றும் பெண்குழந்தைகளைப் பெண்பிள்ளை என்று கூறுவதும், ஏ, பிள்ளே, என அழைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. மேலே ஒருத்தி ஸ்ரீகிருஷ்ணனையும், மற்றொருத்தி ஸ்ரீராமனையும் பாட ஆரம்பிக்கவும், ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டால் வேலைக்காகாது என இன்னொருத்தி, சரி, சரி, எல்லாப் பெண்பிள்ளைகளும் பாவை நோன்புக்காக நதிக்கரைக்குப் போய்ப் பாவையைப் பிடித்து வைத்து வழிபாட்டுக்கு ஆரம்பிக்கப்போகிறார்கள். அதோடயா?? ஆச்சரியமான வாநிலை அறிக்கையும் தருகிறாள் ஆண்டாள் இங்கே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று என்கிறாள். சுக்கிரன் உதயம் ஆகி வியாழ கிரஹம் அஸ்தமனம் ஆகிவிட்டதாம். ஆகையால் பொழுது விடிந்துவிட்டதே? இன்னுமா நீ தூங்குகிறாய்?? அந்தக் காலகட்டங்களிலே பெண்கள் கிரஹ சஞ்சாரங்களை எல்லாம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்பவர்களாய் அறிவு நிரம்பி இருந்திருக்கின்றனர். மற்றப் பறவைகளும் காச், மூச்சென்று கத்த ஆரம்பிச்சாச்சு, ஏ பெண்ணே, மலர் போன்ற கண்களை உடையவளே,  குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்! = சீக்கிரம் வந்து நதியில் ஆழ்ந்து அமுங்கிக் குளிரக் குளிரக் குளித்தால் குளிரெல்லாம் போய்விடும். அதாவது ஸ்ரீகிருஷ்ண பக்தி அநுபவம் என்ற நதியில் மூழ்கி முங்கி எழுந்தால் நம் பாவங்களாகிய குளிர் போய்விடும். மேலும் தாமதம் ஆவதற்குள்ளாக சும்மாக் குளிருது, குளிருதுனு பொய் சொல்லி நடிக்காமல் வா, பெண்ணே! இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.  பட்டத்திரியோ முக்குணங்களால் கிடைக்கும் வெவ்வேறு பலாபலன்களையுமே பகவானைச் சேவிப்பதும், பகவானின் க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதுமாகிய செயல்களை நிர்பலனாக நிஷ்களங்கமாகப்பரிபூரண மனதோடு செய்து வந்தால் அதிலேயே முக்தி அடையலாம் என்கிறார். த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி புவனே ஹீநமத்யோத்தமம் யத் ஜ்ஞாநம் ஸ்ரத்தா சகர்த்தா வஸதிரபி ச ஸுகம் கர்ம சாஹார பேதா: த்வத் க்ஷேத்ர த்வந்நிஷேவாதி து யதிஹ புநஸ் த்வத்பரம் தத்துஸர்வம் பராஹூர் நைர்குண்ய நிஷ்டம் ததநு பஜநதோ மங்க்ஷு ஸித்தோ பவேயம்  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 14 []   உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!   தாமரைப் பூக்கோலம் போடலாம். சங்கு, சக்கரம் இரண்டும் வரும்படியான கோலமும் போடலாம். [] [] தோழிப் பெண்ணை எழுப்பும் ஆண்டாள் அவள் முன்னர் சொன்ன வாக்கை நினைவூட்டுகிறாள்.  தானே சீக்கிரம் எழுந்து எல்லோரையும் அழைத்துச் செல்ல வருவதாய்க் கூறியவள் இப்போது அது குறித்த வெட்கமில்லாமல் தூங்குகிறாளே எனக் கூறும் ஆண்டாள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள் அனைவரையும் இங்கே மறைமுகமாய்க் கடிகிறாள்.  இறைவன் எண்ணத்தில் அவன் நாமத்தையே எந்நேரமும் பேசுவேன், கூறுவேன் என்றெல்லாம் சொல்லி விட்டு இப்போது அந்த அறிகுறியே இல்லாமல் உலக வாழ்க்கையின் மாயா இன்பங்களில் மூழ்கி இருப்பவர்களை நினைத்து ஆண்டாள் வருந்துகிறாள். உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!  அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.  செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா?? சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள். இப்படிப் பரம்பொருளுக்கே அடிமையாய் இருப்பதைப் பற்றிய பக்தி யோகத்துக்கு பட்டத்திரி கூறுவது: த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம் குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம் த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ: டஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம் இவ்வுலகிலுள்ள புழு, பூச்சிகளில் இருந்து மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதர் வரை அனைவருமே , உயிரற்ற மரம், மலை போன்ற ஜடப் பொருட்களும் கூட பரமாத்மாவின் அம்சம் என்ற நினைப்பே வரவேண்டும். அவ்வாறு நினைக்க எத்தனை நாட்கள் ஆனாலும் அதுவரை நான் தங்களை ஆராதித்துக்கொண்டே இருப்பேன். எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!     மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15 எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக. ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!             []     []         [] தோழியைக் கடுமையாக அழைத்தும் அவள் வரவில்லை.  ஆகையால் கிளியைப் போல் மழலை பேசுபவளே என அழைக்கிறாள்.  ஆனால் இப்போது தான் கண் விழித்த அந்தத் தோழி இதையே கடுமையாகப் பேசுவதாய்க் குறை கூறிவிட்டு, என்னை மட்டும் தான் எழுப்புகிறீர்கள்.  எல்லோரும் வந்துவிட்டனரா எனக் கேட்க வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளச் சொல்கின்றனர் தோழியர். இங்கே வல்லானைக் கொன்றானை என்பது குவலயாபீடம் என்னும் யானையைக் கண்ணன் கொன்றதைக் குறிக்கும்.  மாற்றாரை மாற்றழிக்க என்பது தன் எதிரிகளை எல்லாம் கண்ணன் அழித்ததைக் குறிக்கும். தீமையை அழித்து உலகுக்கு நன்மையைத் தந்தான் கண்ணன் என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள்.  அதோடு இரு தரப்பாரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த இந்தப் பாடலுடன் தோழியை அழைப்பது முடிந்தும் விடுகிறது.  எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?= எலேய் னு அழைப்பது இப்போவும் உண்டு. ஆனால் ஆண்குழந்தைகளையும், நெருங்கிய ஆண் சிநேகிதர்களை மற்ற ஆண் சிநேகிதர்களும் மட்டுமே அழைக்கின்றனர். ஆண்டாளின் காலத்தில் பெண்பிள்ளைகளைக் கூட அழைத்திருக்கின்றனர். அதுவும் இந்தப் பெண் சின்னக் குழந்தையாய் இருக்கவேண்டுமோ? கிளியே என அழைத்திருக்கிறாள். குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளையும் செல்லமாய்க் கிளி எனக் கூப்பிடுவது உண்டு. அல்லது இந்தப் பெண்ணின் பேச்சுக் கிளியின் மழலை மாதிரி மிழற்றலாய் இருக்கவேண்டும். கிளி கொஞ்சுகிறது என்பார்கள் அல்லவா?? அப்படி!  சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே, இன்னுமுமா நீ உறங்குகிறாய்? என்று கேட்கின்றனர் இந்தப் பெண்ணை அழைக்கவந்த தோழிகளும், ஆண்டாளும். சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்= உள்ளே அந்தப்பெண் என்ன செய்யறாளோ தெரியலை, ஒருவேளை சீக்கிரம் எழுந்து குளிக்கச் செல்லத்தயாராகிக்கொண்டிருக்கலாமோ? அல்லது ஏற்கெனவே கண்ணனின் நாமாக்களை நினைந்து நினைந்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் சப்தம் அவளுக்கு இடைஞ்சலாய் இருந்ததோ?? தெரியலை, உள்ளே இருந்து உடனே பதில் வருகிறது. கொஞ்சம் மெல்லத்தான் அழையுங்கள், பெண்களா? நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒண்ணும் தூங்கவில்லை என்கிறாள். இதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறாள். வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்= அவள் அப்படிச் சொல்ல வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே அவள் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்கிறாள் எனத் தோன்ற, அடி, நீ ரொம்பக் கெட்டிக்காரிதான், உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் சொல்லுவாய், வரேன் வரேன்னு, ஆனால் நீ இதுக்கு முன்னாடியெல்லாம் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தாய்? எங்களுக்குத் தெரியாதா என்ன உன்னைப் பத்தி? என்று கேலி பேசுகிறார்கள்.  வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.= உள்ளே அவளுக்குக் கோபம் அதிகம் ஆக, ஆமாம், ஆமாம், நானே பொல்லாதவளாய் இருந்துட்டுப் போறேனே, நீங்களெல்லாம் நல்லவங்களாவே இருங்க என்று கூறுகிறாள். ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை= சரி, சரி, சீக்கிரமாய்க் கிளம்பு, உனக்குன்னு தனியாவா பாவை நோன்பு நூற்க முடியும், எல்லாரும் சேர்ந்து தானே செய்யணும்னு கூப்பிடுகிறார்கள்.  எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்= உள்ளே உள்ள பெண்ணோ விடாமல் எல்லாரும் வந்துட்டாங்களா என்று கேட்க, நீ முதல்லே வெளியே வா, வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கோ என்கிறார்கள். மேலும்,  வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க= வல்லானை கொன்றானை என்பதை இங்கே வலிய ஆனையாகிய குவலயாபீடத்தைக் கண்ணன் அடக்கியதையும் குறிக்கும். வல்லவன் ஆன கம்சனைக் கொன்றதையும் குறிக்கும். மேலும் அசுரர்களை அழிப்பதோடல்லாமல் நம்மிடையே இருக்கும் அசுரக் குணங்களையும் கண்ணன் நாமம் அடியோடு ஒழிக்கும் இந்த இடத்தில் அந்தப் பொருளே மிகவும் பொருந்தி வரும்.  வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்= வல்லவன் ஆன மாயக்கிருஷ்ணனைப் பாடி ஆடலாம் வா பெண்ணே. இங்கே பகவானின் நினைவில் ஒரு கோபி அமிழ்ந்து இருப்பதையும், அவளை மற்றக் கோபிகள் வழிபாட்டுக்குக் கூப்பிடுவதைக் கூட இடைஞ்சலாக எண்ணுவதையும் மேல்பார்வைக்குக் கண்டாலும் உள்ளே இருந்த கோபியின் பணிவான பதிலில் அவள் கண்ணனின் அடியார்கள் அனைவரையும் தன் மனதுக்கு உகந்தவர்களாய்க் கண்டாள் என்பதும் புரியவருகிறது.  இப்படி பகவான் நாமத்தின் மகிமை பற்றி பட்டத்திரி கூறும்போது இவ்வுலகையே படைத்த விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லாமல் அவனிடம் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்கிறார். ஹே லோகா விஷ்ணுரேதத் புவநமஜநயத் தந்ந ஜாநீத யூயம் யுஷ்மாகம் ஹ்யந்த்ரஸ்த்தம் கிமபி ததபரம் வித்யதே விஷ்ணுரூபம் நீஹார ப்ரக்க்ய மாயா பரிவ்ருத மநஸோ மோஹிதா நாமரூபை: ப்ராணப்ரீத்யைக த்ருப்தாஸ்சரத மகபரா ஹந்த நேச்சா முகுந்தே இந்த உலகை சிருஷ்டித்தது அந்த மஹாவிஷ்ணு தான், மக்களே, இதை யாருமே புரிந்துகொள்ளவில்லையே; அவன் உருவம், ரூப செளந்தர்யம் இத்தகையது என எவராலும் விளக்கமுடியாமல் இருக்கிறது. அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஜீவனாக இருக்கிறான். அவன் உங்கள் உள்ளே உறைவதைத் தெரிந்து கொள்ள முடியாமல் உங்கள் உள்ளம் மாயை என்ற மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கிறதே; வெறுமே உண்டு, உடுத்து உயிர்வாழ்வதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களே, அந்த விஷ்ணுவின் நாமரூபங்களை மட்டுமே பார்த்து மயங்கி இருக்கிறீர்களே, அவன் உங்களுள்ளே இருப்பதை அறியாமல் இருக்கிறீர்களே; ஏ ஜனங்களே, உங்கள் ஆடம்பரமான முறையிலான வழிபாடுகளை நிறுத்திவிட்டு, வெறும் வயிற்றுக்காக மட்டுமல்லாமல் முகுந்தனிடம் முழு ஈடுபாடு கொண்டு பக்தி செய்யுங்கள்.    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16 நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்! ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான், தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.   கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.                                                                                          [] [] கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும்,  அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும்  வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.  துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.  கண்ணனின்  இருப்பிடமோ வைகுந்தம்.  அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.  வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன்.  நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள்.  குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான்.  ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள். கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள். மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ! அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள். தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.  நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான். கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார். மூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம் தத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி பூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ் வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே!    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17 அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்! அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்! செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!   பொங்கல் பானை கோலம் போடலாம்.  ஏனெனில் இங்கே தண்ணீரும், சோறும் கொடுத்து அறம் செய்யும் நந்தகோபன் என அழைப்பதிலிருந்து அன்னதானத்தின் முக்கியத்துவம் புரியவருகிறது.  அந்தக் காலத்திலேயே நந்தகோபன் அனைவரும் திருப்தி என்னும் அளவுக்கு உணவளித்து தர்மம் செய்திருக்கிறான்.  அவன் மனைவியான யசோதையைக் குல விளக்கு என அழைக்கிறாள்.  குத்துவிளக்குக் கோலமும் போடலாம்.     []               [] ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன அவதாரத்தைப் பாடிய ஆண்டாள் மீண்டும் இங்கு வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் மாறி உலகளந்த பெருமானைக் குறித்துப் பாடி இருக்கிறாள்.  மஹாபலி தான் நல்லாட்சி புரிவதால் கர்வம் கொண்டு மூவுலகையும் அடக்கி ஆள முற்படவே அவனை கர்வபங்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.பக்தி இருந்தால் மட்டும் போதாது. கர்வம் கொள்ளக் கூடாது.  இங்கே கண்ணனின் மூத்தவன் ஆன  பலதேவனையும் அழைத்துக் கண்ணனோடு நீயும் எழுந்திரு என்கிறாள். அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!= அம்பரம் என்றால் வானம் என்ற பொருள் மட்டுமில்லாமல் கடல், ஆடை, படுக்குமிடம் என்றும் வருகிறது. இங்கே எது பொருத்தம் என்று பார்த்தால் ஆடை பொருந்தும்னு நினைக்கிறேன். நந்தகோபன் அறம் செய்கிறானாம். அதுவும் எப்படிப்பட்ட அறம்? ஆடை, ஆபரணங்கள், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், பசித்தவருக்குச் சோறு அளித்தல் என பலவகைப்பட்ட தானங்களையும் அளிக்கிறான். அதுவும் மனிதருக்கு முக்கியமான நீர், உணவு, ஆடை மூன்றையும் அளிக்கிறான். இப்படிப்பட்ட திவ்யமான கொடைகளைச் செய்யும் நந்தகோபனே , எழுந்திரப்பா என்கிறாள் ஆண்டாள்.  கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!= ஆயர்குடிப் பெண்கள் அனைவருமே வஞ்சிக்கொடி போன்ற மென்மையான தேகம் படைத்தவர்கள் அவர்கள் அனைவரிலும் கொழுந்தைப்போன்ற மிக மென்மையான தேகம் படைத்த யசோதையே, அவளை குல விளக்கு என்றும் கூறுகிறாள். ஆயர் குலமே அவளால் பெருமை அடைந்ததன்றோ? ஆயர் குலத்து விளக்கான கண்ணனைப் பாலூட்டித் தாலாட்டி, குளிப்பாட்டிச் சீராட்டி வளர்த்தவள் அன்றோ? பெற்றவள் ஆன தேவகிக்கும் கிடைக்காத மாபெரும் பேறைப் பெற்றவள் குலவிளக்கல்லாமல் வேறு என்ன? எங்கள் பெருமாட்டியே, யசோதா, அதென்ன அறிவுறாய்?? கண்ணனின் தாயல்லவா அவள்? கண்ணன் அவளுக்கு எத்தனை முக்கியம்? அத்தகைய கண்ணனை ஆயர்குலப் பெண்களுக்காகத் தரச் சொல்லிக் கேட்கிறாள். எங்கள் கஷ்டத்தைப் பெண்ணான நீயே புரிந்து கொள்ளவேண்டாமா தாயே! கண்ணனை எங்களோடு அனுப்பி வைப்பாய்! அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!= இங்கே வரும் அம்பரம் வானத்தையே சுட்டும். அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமான் என்கிறாள் ஆண்டாள். மஹாபலியிடம் தானம் கேட்ட கதை ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? தானம் தந்தேன் என்று மஹாபலி தாரை வார்க்கும் நீரைப் பெற்றுக்கொள்ளும் முன்னே ஒரு காலானது விண்ணையும் தாண்டி ஏழு உலகங்களையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி ஓங்கிக் காலை வைத்து உலகளந்த உத்தமன் என்று கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய உத்தமனே எழுந்திரப்பா! என்கிறாள். ஆனால் கண்ணனோ பலராமன் அருகே படுத்திருக்க அண்ணனைக் கட்டிக்கொண்டல்லவோ படுத்திருக்கிறான்?? அடடா? மறந்துட்டோமே,  செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!=கருநீல நிறக் கண்ணனை அணைத்துப் படுத்திருக்கும் பலராமனோ சிவந்த நிறம் படைத்தவன். செம்பொன்னைப் போல் சிவந்த அவன் திருப்பாதங்களைப் பார்த்துக்கொண்டே அத்தகைய பொலிவு படைத்த பாதங்களை உடைய பலராமா, பலதேவரே, எங்கள் செல்வரே, உன் தம்பியோடு தூங்குகிறாயே? தம்பியையும் எழுப்பிட்டு நீயும் எழுந்திரப்பா என்கிறாள். இங்கே கண்ணனே உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என ஏற்கெனவே ஆழ்வார் கூறியபடி கண்ணனே எங்களுக்கு ஆடை, கண்ணனே எங்களுக்குச் சோறு, கண்ணனே எங்களுக்குத் தண்ணீர் என்று கூறி இருப்பதாயும் பொருள் கொள்ளலாம். இப்படி அனைத்திலும் கண்ணனைக் காணும் ஆண்டாளைப்போல் பட்டத்திரி கூறுவது: த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமயமிதம் த்ரயக்ஷரஸ்யைக வாச்யம் த்ரீஸாநாமைக்ய ரூபம் த்ரிபிரபி நிகமைர் கீயமாந ஸ்வரூபம் திஸ்ரோவஸ்த்தா விதந்தம் த்ரியுகஜநிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்த விஸ்வம் த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபிரஹமநிசம் யோக பேதைர்பஜே த்வாம் மஹாவிஷ்ணுவே முக்குணங்களின் வடிவானவர். மூவுலகையும் அவரே தோற்றுவிக்கிறார். ஓங்காரப் பொருளும் அவரே. மும்மூர்த்திகளும் அவருள்ளே அடக்கம். மூன்று வேதங்களும் அவரைப் போற்றுகின்றன. மூன்று அவஸ்தைகளையும் அவரே அறிவார். மூன்று யுகங்களிலும் அடுத்தடுத்து அவதரிப்பவரும் அவரே. இவரே மூன்று அடிகளால் இவ்வுலகையும் அளந்தார். மூன்று காலங்களிலும் மாறுபடாதவர் இவரே. இப்படி மூன்று என்ற எண்ணிக்கையுடன் கூடிய இவருக்கு என் மூன்று யோகங்களாலும் நமஸ்காரம்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்! கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்! வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!   யானையைக் குறிப்பிட்டிருப்பதால் யானைக் கோலம் போடலாம்.  செந்தாமரைக் கைகளைக் குறிப்பிட்டிருப்பதால் செந்தாமரைக் கோலமும் போடலாம். குயில், கோழி போன்ற பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளையும் கோலத்தில் வரையலாம். [] []                                           இறைவனை ஒரு கோரிக்கைக்கு அழைத்தால் முதலில் அவன் சக்தியைத் துதிக்க வேண்டும்.  அந்த சக்தி தான் இங்கே உந்து மத களிற்றனாகவும், ஓடாத தோள்வலியனாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.  நம் புராணங்களின்படி இறைவனின் சக்தியைப் பெண்ணாக உருவகம் செய்திருப்பதால் இங்கே நாராயணனின் சக்தியைத் தாயாராக நினைத்துக் கொண்டு முதலில் தாயாரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.  நம் வீட்டில் அப்பாவிடம் நேரடியாகச் சொல்ல பயந்தால் அம்மா மூலமாக நிறைவேற்றிக் கொள்வது உண்டல்லவா?  அது போலத் தான் இங்கேயும்.  தாயாரிடம் போனால் அவள் கடைக்கண் பார்வையின் மூலம் எவ்விதமான கஷ்டமான காரியங்களும் சிரமமின்றி நிறைவேறும்.  ஆகவே இங்கே கண்ணனின் அருளை வேண்டித் துதிக்கும் ஆண்டாள் அதற்கு முதலில் கண்ணனின் மனைவியான நப்பின்னையை வேண்டுகிறாள்.  நப்பின்னை திருப்பாவையில் மட்டுமே குறிப்பிடப் படுகிறாள் என எண்ணுகிறேன். ஸ்ரீராமாநுஜர் துறவறம் வாங்கிக் கொண்டதும் தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்தே உணவு உண்டு வந்தார். தினமும் எல்லாப் பாசுரங்களையும் பாடிக்கொண்டே உஞ்சவ்ருத்தி எடுப்பது வழக்கம். மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம். ஆண்டாளின் திருப்பாவைக்குத் தான் முன்னுரிமை. தினந்தோறும் எல்லாத் திருப்பாவைகளையும் பாடினாலும் அந்த அந்த நாளுக்குரிய திருப்பாவையை விஸ்தாரமாக அநுபவித்துப் பாடி வந்தார். அன்றும் அப்படித்தான், இந்த" உந்துமதகளிற்றன்" பாடலைப் பாடிக்கொண்டே பிக்ஷைக்கு வந்தார். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வீடாக பிக்ஷை எடுக்கிறார். அப்போது, "பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட" முடிந்து அடுத்து "செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப" என்னும் அடி பாடிக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். சந்நியாசிகளுக்கே உரிய நிதானத்தோடும், கண்ணியத்தோடும் குனிந்த தலை நிமிரவில்லை. காதுகளில் சீரார் வளை ஒலிக்கும் சப்தம் கேட்கிறது. மீண்டும் செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப எனப் பாடுகிறார். செக்கச் சிவந்த தாமரை வண்ணக் கை ஒன்று கதவைத் திறக்கிறது. கையில் பிக்ஷை போட வைத்திருக்கும் பாத்திரம். பதினாறு வயது கூட நிரம்பாத ஒரு அழகிய மங்கை வந்து தன் செந்தாமரைக்கைகளால் சீரார் வளை ஒலிப்ப பிக்ஷை இட வந்தாள். ராமாநுஜர் பார்த்தார். பார்த்த கண்கள் நிரம்பின. பிக்ஷா பாத்திரம் கீழே நழுவிற்று. "என் அம்மா, என் தாயே!" என்றாராம். அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுந்துவிட்டார். அந்தப்பெண் பதறிப் போக உள்ளிருந்து வந்தார் அந்தச் சிறுமியின் தந்தை. அவர் வேறு யாரும் இல்லை. திருக்கோஷ்டியூர் நம்பி என்னும் ஸ்ரீராமாநுஜரின் குருவே ஆவார். ஆசாரியர் வந்து பார்த்துவிட்டுச் சீடன் இருக்கும் நிலை புரிந்ததும், புன்னகை புரிந்தார். கூட வந்தவர்களைப் பார்த்து, "உந்து மத களிற்றனில், சீரார்வளை ஒலிப்ப " என்ற வரிகளில் அநுசந்தானமோ?" என்று கேட்டாராம். உடன் வந்தவர்கள் ஆச்சரியத்தால் திகைத்துப் போய் ஆமெனத் தலை அசைக்க, திருக்கோஷ்டியூர் நம்பி விளக்குகிறார். "இந்தப் பாடல் ஆண்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் கண்ட நிகழ்வைப் பற்றிப் பாடியது. அதுவும் அவள் தன் பதியோடு சேர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவள் கருணா கடாக்ஷம் இருந்தாலே நமக்கு உய்வு என்பதை உணர்ந்து பாடியது. கண்ணனை யாசித்த ஆண்டாள் அவனைத் தனக்குத் தரக்கூடிய வல்லமை கொண்டவள் ஸ்ரீயாகிய மஹாலக்ஷ்மித் தாயே என்பதை உணர்ந்து அவளிடம் விடுத்த வேண்டுகோள் இது. அத்தகைய பாடலை உணர்ச்சியோடு பாடி வந்த ஸ்ரீராமாநுஜர் இங்கே என் பெண்ணைப் பார்த்ததும், ஸ்ரீயையே நேரில் கண்ட உணர்வைப் பெற்றிருக்கிறார். அதனால் வந்த மயக்கம் இது." என்று கூறிவிட்டு சீடரை ஆசுவாசப் படுத்தி எழுப்பினாராம். அத்தகைய அபூர்வமான பாசுரம் இது. உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!= நப்பின்னைப் பிராட்டி நந்தகோபனுக்கு மருமகள் என்றும் ஏழு எருதுகளை அடக்கிவிட்டுக் கண்ணன் அவளை மணந்தான் என்றும் செவிவழிச் செய்திகள் பல கூறுகின்றன. பாகவதத்திலோ, மற்றக் கண்ணன் கதைகளிலோ இது பற்றிக்குறிப்புகள் இல்லை எனினும் தமிழ்நாட்டு மரபை ஒட்டி ஆண்டாள் நப்பின்னையைப் பற்றிக் கூறி இருக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். யசோதையின் அண்ணன் ஸ்ரீகும்பன் என்பவரின் மகள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் குறிப்பதாயும் பொருள் கொள்வார்கள்.  இது வரைக்கும் தோழிகளை எழுப்பிக்கொண்டு, பின்னர் நந்தகோபன் அரண்மனைக்கு வந்து வாயில்காப்போனிடம் அநுமதி பெற்று உள்ளே நுழைந்து நந்தகோபனை எழுப்பிப் பார்த்து யசோதையையும் எழுப்பிப் பார்த்தாயிற்று. ம்ஹும், ஒண்ணும் அசையலை. பலராமனுக்கும் அசையவே இல்லை. ஒரே வழி, கண்ணனின் மனைவி காலில் விழுவது தான். நப்பின்னையின் கருணை துளி கிடைத்தால் போதுமே! நம்ம வீட்டிலேயே நமக்கு ஏதானும் வேணும்னா நேரடியா அப்பாகிட்டே கேட்பது வெகுசிலர்தான் இருப்பார்கள். எல்லாருமே அம்மா மூலமாத் தானே அப்பாவிடம் விண்ணப்பம் வைப்போம். பலமுள்ள பல களிறுகளை, யானைகளை அடக்கும் தோள்வலிமை கொண்ட நந்தகோபனின் மருமகள் ஆன நப்பின்னைப் பிராட்டியே கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்! வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்= நல்ல நறுமணமுள்ள பூக்களைச் சூடி, வாசனாதித் திரவியங்களைப் பூசிக்கொண்டதால் எப்போதுமே மணம் வீசும் குழலைக் கொண்டவளே, அல்லது எந்நேரமும் கண்ணனைப் பிரியாமல் இருப்பதால் கண்ணனின் அருளாகிய நறுமணம் பூராவும் உன்னிடமும் நிறைந்திருப்பதால் நீயே நறுமணமுள்ளவளாய் இருக்கிறாயே என்றும் கொள்ளலாம். வாசல் கதவைத் திற அம்மா, எனக் கேட்க, அவளோ என்ன அவசரம் விடிந்துவிட்டதா? என்று கேட்கிறாள். ஆஹா விடியாமல் என்னம்மா? கோழிகள் கத்துகின்றனவே, தெரியலையா? உன் வீட்டு மாதவிக்கொடி படர்ந்து இருக்கும் மாதவிப் பந்தல் மேல் பலவேறு விதமான தொனிகளில் குரல் கொடுக்கும் குயிலினங்கள் கூவிக்கொண்டிருக்கின்றனவே கேட்கவில்லையா? பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= எல்லாம் சொல்லியும், கேட்டுக்கொண்டு இருக்கும் அவளிடமிருந்து பதிலே இல்லை. கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார்கள். அவள் ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் கண்ணனை அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள். அவள் எழுந்து கண்ணனை அனுப்பவேண்டும். கண்ணனும் வரவேண்டும், அவளும் வரவேண்டும். என்ன செய்யலாம்?? பந்தை வைத்துக்கொண்டு கண்ணனோடு விளையாடிக்கொண்டிருந்துவிட்டு அப்படியே தூங்கிட்டாள் போல, "அடி பந்தை வைத்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் மைத்துனன் ஆகிய பலராமன் சிறப்பையும், கூடவே கண்ணனின் சிறப்பையும் பாடவேண்டி, நீ உடனே வா. உன் அழகான செந்தாமரை மலர்போன்ற கைகளால் உன் கைகளில் நீ அணிந்திருக்கும் வளைகள், ஜல் ஜல் என ஒலி எழுப்ப, ஓடி வந்து கதவைத் திறந்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம் அம்மா. உன் கருணா கடாக்ஷம் ஆகிய கதவைத் திற. பகவானின் திவ்ய செளந்தரியத்தில் அதன் அழகில் நாங்கள் எங்களை மறந்து பாடி ஆடுகிறோம். இதை பட்டத்திரி கூறுவது எப்படி எனில், கண்ணனிடம் மாறாத பக்தி பூண்டவன் தனக்குத் தானே துணைவன் ஆவான் என்கிறார். க்ஷூத் த்ருஷ்ணா லோபமாத்ரே ஸததக்ருத தியோ ஜந்தவ: ஸந்த்யநந்தா: தேப்யோ விஜ்ஞாநவத்த்வாத் புருஷ இஹ வரஸ்தஜ்ஜநிர்துர்லபைவ: தத்ராப்யாத்மாத்மந: ஸ்யாத்ஸூஹ்ருதபி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தசேதா: தாபோச்சித்ருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்மவைரீ ததோந்ய: ஆடு, மாடுகளிலிருந்து எல்லாருக்கும் பசி, தாகம் உண்டு. தாவரங்கள் கூட நீர் ஊற்றினாலோ, எருக்கள் போட்டாலோ தான் பலன் தரும். ஆகவே இந்தப் பசி, தாகம், மற்ற உணர்வுகள் என்று இந்த உலகத்தில் வாழும் அனைத்துவிதமான ஜீவராசிகளும் அதைத் தீர்த்துக்கொள்வதிலேயே முயல்கின்றனர். அவங்க நேரமும், கவனமும் அதிலேயே இருக்கின்றன. இவர்களுக்குள்ளே மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆறாம் அறிவு உண்டு. அந்தப் பகுத்தறிவினால் மனிதன் எது நன்மை, எது தீமை என்பதைப் புரிந்து கொள்கிறானா? இல்லை. கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை மனிதன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொண்டு தனக்குத் தானே சத்ருவாகிறான். நன்மை செய்துகொண்டால் நண்பனும் ஆகிறான். ஆகவே நாம் பகவானிடம் உண்மையாகவும், ஒரே தியானமாகவும் மனதைச் செலுத்தி, இந்தப் பிறவியாகிய மாபெருங்கடலில் இருந்து அதைக் கடக்கும் வித்தையை, உபாயத்தை ஆலோசித்துக் கேட்டுக்கொண்டு அதன் படி நடந்தால் மனிதன் தனக்குத் தானே துணைவனும் ஆவான். இல்லை எனில் அவனுக்கு அவனே பகைவன்.    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19 குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்! மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல் தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!   குத்துவிளக்குக் கோலமும், பூக்களால் ஆன கோலமும் போடலாம். []        [] அன்னத் தூரிகை குறித்து ஒரு திரைப்படப் பாடலில் கூடக் கேட்டிருக்கோம். அத்தகைய அன்னத்தின் தூரிகை, நல்ல சுத்தமான இலவம்பஞ்சு, மயில் தூரிகை, பூக்கள், கோரை நார் ஆகியவற்றால் ஆன மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் நப்பின்னையுடன் வெகு அந்தரங்கமாக உறங்கிக் கொண்டிருந்த கண்ணனுக்கு கோபியரின் அழைப்புக் கேட்கிறது.  ஆனால் நப்பின்னை அவனை விட வேண்டுமே.  ஆகவே வாய் திறக்கவே இல்லையாம்.  ஆகையால் நேரடியாக நப்பின்னையையே அந்தப் பெண்கள் வேண்டுவதாக ஆண்டாள் சொல்கிறாள். மணாளனைப் பிரிய மனமில்லாமல் இருக்கும் நப்பின்னையைக் கண்ணனிடம் தாங்கள் வந்திருப்பதை எடுத்துச் சொல்லித் தங்களுக்கு அவன் அருட்பார்வை கிட்டுமாறு செய்ய வேண்டுகிறாள். நம் மனோபலத்தை ஒருமுகப்படுத்தி இறைவன் அருளை வேண்டுகையில் இல்வாழ்க்கையின் சுகங்கள் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடும்.  அவற்றைத் தாண்டிக் கொண்டு அத்தகைய எண்ணங்களை நம் மனதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி அனைத்தும் நாராயணன் செயலே என நினைத்து ஒருமுகமாக அவனையே நினைக்க வேண்டும்.  அதற்கு அருள்பவளே பெருமானின் பத்தினியான சக்தி.   சக்தியை நல்ல முறையில் பிரயோகம் செய்ய வேண்டும்.     குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= இங்கே பகவானின் குழந்தைகளாக ஆண்டாள் தங்களை முன்னிறுத்துகிறாள். அப்பா, அம்மா நம்மைக் கவனிக்காமல் தூங்கினால் நாம எல்லாம் என்ன சொல்வோம்? எங்களைக் கவனிக்காமல் தூங்கறீங்களேனு கேட்க மாட்டோமா?? இங்கேயும் கண்ணனின் அநுகிரஹம் வேண்டுமெனில் அதற்கு முன்னார் தாயார் ஆன நப்பின்னைப் பிராட்டியின் அநுகிரஹம் தேவை. அவள் உடனே வந்து பக்தர்களுக்குத் தன் கருணா கடாக்ஷத்தைத் தரச் சித்தமாய் இருக்கிறாள் தான். ஆனால் இங்கே இருவருக்கும், நீ முந்தி, நான் முந்தி எனப்போட்டி வந்துவிடுகிறது போல! கண்ணன் அவளை எழுந்திருக்கவிடாமல் அவள் தோள்களைப் பற்றி அங்கேயே நிறுத்திவிட்டுத் தானே குழந்தை போலாகிறான். இங்கே கொங்கைகள் என மார்பகத்தைச் சுட்டி இருப்பது, தாயினும் பரிந்தூட்டும் அன்னையின் பெருமையைச் சுட்டுவதற்கே அன்றி வேறொரு பொருளில் அல்ல. ஆகவே கவனமுடன் பொருள் கொள்ளவேண்டும். குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் = அழகாய்க் குத்துவிளக்கு முத்துப் போல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க தந்தத்தினால் ஆன நான்கு கால்கள் பொருத்திய கட்டிலில் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= மெத் மெத்தென்ற பஞ்சால் நிரப்பப் பட்ட பட்டு மெத்தை போட்ட சயனத்தின் மேலே ஏறிப் படுத்துக்கொண்டு கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா!= அழகான மணம் பொருந்திய மலர்களைச் சூடிய நீண்ட கூந்தல் உடைய நப்பின்னைப் பிராட்டியின் மார்பின் மேல் படுத்துக்கொண்டு அவளை எழுந்திருக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் தாமரை மலர்கள் அணிந்த மார்பை உடைய கண்ணனே!  வாய் திறவாய்= வாயைத் திறக்கமாட்டாயா? மைத்தடங்கண்ணினாய்= அழகாய் மை எழுதப் பட்ட விழிகளால் உன் பார்வை ஒன்றாலேயே செய்யவேண்டிய கருணையைச் செய்யாமல் இருக்கிறாயே அம்மா! நீ உன்மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்= தாயே என்ன இது?? நீயே எழுந்து வந்து எங்களுக்கு அனுகிரஹம் செய்வாய் என நாங்கள் உன்னை வேண்டிக் காத்திருக்க நீயோ உன் மணாளன் ஆன அந்தப்பரம்பொருளையும் எழுந்திருக்க விடாமல் இருக்கின்றாயே? அம்மா என்ன இது? உன் கடைக்கண் பார்வையால் எங்களுக்கும் உன் கருணா கடாக்ஷம் கிட்டச் செய்வாய்!  எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல் தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!= தாயே நீ உன் மணாளனைப் பிரிந்துவிடுவாய் என நினைக்கிறாயா? இல்லை அம்மா, இல்லை, நீயும் அவனும் சேர்ந்து வந்தே எங்களுக்கு வேண்டிய அநுகிரஹம் செய்யவேண்டும். உன்னிடம் சரணாகதி என நாங்கள் வந்தபின்னரும் எங்களுக்குப் பிரியமானதையே நீ செய்வாய் என்றல்லவோ நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் உங்கள் இருவரின் குழந்தைகள் அன்றோ?  இங்கே ஆண்டாள் பகவானை மட்டுமின்றித் தாயாரின் கருணா கடாக்ஷமும் வேண்டும் எனச் சொல்கிறாள். இருவருமே பரபிரம்ம சொரூபமாய்க் கண்ட பட்டத்திரி சொல்வதோ அவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம் தத்து ஸுத்தைகஸத்த்வம் வ்யக்தஞ் சாப்யேததேவ ஸ்ப்புடமம்ருத ரஸாம்ப்போதி கல்லோலதுல்யம் ஸர்வோத்க்ருஷ்டாமபீஷ்டாம் ததிஹ குணரஸேநைவ சித்தம் ஹரந்தீம் முர்த்திம் தே ஸ்ம்ஸ்ரயேஹம் பவநபுரபதே பாஹிமாம் க்ருஷ்ண ரோகாத் பகவானின் ரூபம் வெளிப்படையாகத் தோன்றாத ஒன்று. அத்தகைய ரூபத்தின் உண்மையான தத்துவத்தை அறிதல் கடினம். சுத்தமான ஸத்வமே பகவானின் ரூபம், அது ஸகுண ரூபம், தெள்ளத் தெளிவாய் விளங்கும் ரூபம். அனைத்து உயிர்களிலும் விளங்கும் ஜீவசக்தியான இந்த பிரம்மானந்த சாகரத்தின் ஒரு சின்ன அலையே இந்தக் கிருஷ்ண ரூபமாக வந்து வாய்த்திருக்கிறது. நாம் அனைவரும் மகிழவேண்டி வந்துள்ள இந்த கிருஷ்ணரூபத்தின் குணமாகிய ரஸம் நம் மனதைக் கவர்கின்றது. அதன் பல்வேறுவிதமான விளையாடல்களால் நம் மனம் மகிழ்கிறது. இந்தக் கிருஷ்ணத் திருமேநியை நான் வழிபடுகிறேன். ஏ, கிருஷ்ணா, பரந்தாமா நீயே சரணம், என்னை ஆட்கொண்டு காத்தருள்வாய்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்! உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!     [] [] இங்கே உக்கம், தட்டொளி எனக் குறிப்பிட்டிருப்பது விசிறியையும் கண்ணாடியையும்,  கண்ணாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும்.  ஆகவே மயிலிறகினால் விசிறி செய்வதால் மயில் கோலம் போட்டு வண்ணம் தீட்டலாம். இங்கே தட்டொளி என்ற கண்ணாடியாக நப்பின்னையின் முகத்தையே சுட்டி இருக்கிறது.  எப்படி எனப் பார்ப்போமா?  இங்கேயோ நப்பின்னையும், கண்ணனும் இணை பிரியாது இருக்கின்றனர். அத்தகைய கண்ணன் நப்பின்னைக்கு மட்டும் உரியவன் அல்ல;  அனைத்து கோபியர்க்கும் உரியவன் எனச் சொந்தம் கொண்டாடும் ஆண்டாள் நப்பின்னையையே அவனை எழுப்பித் தங்களுடன் நீராட அனுப்பி  வைக்குமாறு சொல்கிறாள். இங்கே கோபியருடன் கண்ணன் நீராட வருமாறு அழைப்பது ராஸக்ரீடையைக் குறிப்பது. கணவன் காலை எழுந்ததும் விழிக்க வேண்டியது மனைவியின் முகத்தில் தான் என்றே பொதுவாகச் சொல்வது. ஆகவே அவனை விட்டு இணை பிரியாது இருக்கும் நப்பின்னைப் பிராட்டி அவனைத் துயிலெழுப்பி, அவன் முகத்துச் சிறு வியர்வையைத் தன் முந்தானையால் விசிறி மலர்ந்த தன் முகமாகிய கண்ணாடியைக் காட்டிப் புன்முறுவலுடன் அவனை கோபியருடன் நீராட அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறாள் ஆண்டாள்.  தாய் தன் குழந்தைக்கு வியர்த்தால் தன் முந்தானையால் தான் துடைத்து விடுவாள்.  அதோடு முந்தானையே விசிறியாகவும் ஆகும்.  அப்படியே இங்கே நப்பின்னையையும் அவள் சேலையின் முந்தானையால் கண்ணன் முகத்தில் விசிறச் சொல்கிறாள் கண்ணாடி உள்ளதை உள்ளபடியே காட்டும்.  அதற்கென எவ்விதமான சுயமான உணர்வுகள் கிடையாது.  நாம் கோபமாகப் பார்த்தோமானால் கோபத்தை அதுவும் காட்டும்.  சிரித்தால் அதுவும் சிரிக்கும். இப்படி எதுவும் ஒட்டாமல் இருக்கும் கண்ணாடியைப் போல் நாமும் பற்றற்று இருத்தல் வேண்டும். நப்பின்னையும் இங்கே கண்ணன் இவ்வுலகுக்கே சொந்தம் தனக்கு மட்டும் சொந்தமல்ல என்ற உணர்வோடு சிரித்த முகத்தோடு  அவனை அனுப்பி வைக்க வேண்டும். ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவன். ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல.  ஆண்டவனின் அன்பும் அனைவருக்கும் பொதுவான ஒன்றே. உலகப் பற்றை விடுத்து எல்லோரிடமும் சீராக ஒரே மாதிரி அன்பைக் காட்டும் பெருமானிடம்  நம் பற்றை வைத்தோமானால் நமக்கு ஞானம் கிட்டி வைகுந்தப் பதவியும் கிட்டும். முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!= கண்ணன் தனக்கென வாழாதவன், பிறர்க்கு அருளும்பொருட்டே தோன்றிய பூர்ணாவதாரம் கண்ணனுடைய அவதாரம். அவனோ முப்பத்து மூன்று தேவாதி தேவர்கள் கஷ்டப்படும்போதெல்லாம், அவர்களுக்குத் தீங்கு நேராமல் காக்கும் பொருட்டுச் செல்வதையே தன் தொழிலாய்க் கொண்டிருக்கிறான். அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் போரில் இவனே முன்னின்று அரக்கர்களை ஒழிப்பதைத் தன் கடமையாய் கொண்டிருக்கிறாய். இத்தகைய கஷ்டத்தை ஓடி ஓடி வந்து ஏற்கும் பரமாத்மாவே, எங்கள் துயர் தீர்க்க இப்போது நீ எழுந்து வரமாட்டாயா?? இங்கே பரமாத்மா துயில்கின்றான், அவனை எழுப்ப இத்தனை பாடா என்றெல்லாம் எண்ணினோமானால் அது இந்தப் புற உலகில் நாம் தினசரி தூங்கும் தூக்கத்தைக் குறிப்பதாய் அமையும். ஆண்டாள் கூறுவதோ நம் மனம் விழித்துக்கொண்டதையும், அது பரமாத்மாவோடு ஒன்றுபடக் காத்திருப்பதையும், பக்தியாகிய பொய்கையில் முழுகி நீராடி, மனம் முழுதும் தூய்மையான எண்ணங்களோடு பகவத் பக்தி ஒன்றே குறியாக வந்திருப்பதையும் குறிக்கும். தங்களை ஆட்கொள்ளுமாறு கேட்பதுவே துயில் எழுப்புவது என்ற பொருளில் ஆண்டாள் கூறுகிறாள்.  செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!= செப்பம் என்பது இங்கே பரமாத்மாவின் பாரபட்சம் பார்க்காத தன்மையைக் குறிக்கும். அவனுடைய ராஜ்ஜியத்தில் ஏழை, பணக்காரர் என்பதோ கீழோர், மேலோர் என்பதோ கிடையாது. அவனுக்குத் தேவையானது பரிபூரண அன்பைச் செலுத்தும் பக்தர்களே. ஆகவே அவனுக்கு எவரிடமும் எந்தவிதமான வேறுபாடுகளையும் காட்டத் தெரியாது என்கிறாள். திறல் இங்கே வெற்றியைக் குறிக்கும். மேன்மேலும் வெற்றி அடைந்தவன் பரம்பொருள். அவன் அனைத்தையும் கடந்தவன் என்றாலும் பக்தர்களின் மனத்தைத் தன்பால் ஈர்த்து அவர்களை ஆட்கொள்கிறானே. அடுத்து வெப்பம் கொடுக்கும் விமலா என அழைக்கிறாள். காக்கும் அவனே சிலசமயம் சிக்ஷிக்கவும் செய்கிறான். தண்டிக்கவும் வேண்டி இருக்கிறதே. பிரஹலாதனுக்காக நரசிம்மமாய் வந்து ஹிரண்யனைத் தண்டித்தான். மஹாபலியைத் தண்டிக்க இஷ்டமில்லாமல் அவனைச் சிரஞ்சீவியாக்கினான். அதே பரசுராமனாக வந்து க்ஷத்ரிய குலத்தையே பூண்டோடு அழித்தான். ஸ்ரீராமனாக வந்து பல அரக்கர்களையும், அனைத்துக்கும் மேல் ராவணனையும் சம்ஹரித்தான். அதே சமயம் அதே ராவணனை ஆயுதம் இன்றி இருந்தபோது, "இன்று போய் நாளை வா!" என்று சலுகையும் காட்டினான். இப்படி அவனால் தேவைப்படும் நேரம் கோபம் கொண்டு தண்டிக்கவும் முடியும், அதே சமயம் தன் பக்தர்களுக்குக் குற்றங்களை மன்னித்து ஆட்கொள்ளவும் தெரியும். செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!= எழுப்பி எழுப்பிப் பார்த்தோம் அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, திருவே, லக்ஷ்மிதேவியே, உன் கணவன் எழுந்திருக்கவில்லை. ஆஹா, என்ன காரணம் என யோசித்தோம், நீ அல்லவோ முதலில் எழுந்து உன் திருமுகத்தைக் காட்டி அவனை ஆசுவாசப் படுத்தி எழுப்பி அனுப்பவேண்டும். முதலில் நீ துயிலில் இருந்து எழுந்திரு அம்மா. பரமாத்மாவிடம் நேரிடையாக விண்ணப்பம் வைத்தும் பலன் இல்லை என்பதால் தாயாரிடம் விண்ணப்பம் வைக்கிறாள் ஆண்டாள். அம்மா, தாயே, உன் கணவனை நீ இன்முகம் காட்டி எழுப்பு என்கிறாள். பொதுவாய்க் கணவன் காலை எழுந்ததும் மனைவியின் முகத்தைப் பார்ப்பது நன்மை பயக்கும் என்பார்கள். ஆனால் அந்த நேரமும் மனைவியும் தூங்கி வழிந்த முகத்தோடு இருந்தால் எப்படி?? அதனால் தான் நப்பின்னையை முதலில் எழுப்பித் தன்னைச் சீர் செய்து கொண்டு, அவள் கணவனை எழுப்பி அவனை விசிறியால் விசிறி ஆசுவாசப் படுத்தித் தன் முகமாகிய கண்ணாடியில் அவனைப் பார்க்க வைத்து, அவனுக்கு இன்முகம் காட்டி அனுப்பச் சொல்கிறாள். உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!= கணவன் எழுந்ததும் மனைவி முகத்தைப் பார்த்தால் மட்டும் போதாது. மனைவி முகம் இன்முகமாயும் இருக்கவேண்டும். அதுவும் தூங்கும் கணவனை எழுப்பும்போது மனைவிக்குப் பொறுமை வேண்டுமே. ஆகவே அவள் இன்முகத்தோடு இருந்தால் தான். அப்போது தான் அதன் பிரதிபலிப்பு கணவனிடத்தில் தெரியும். மனைவியின் இதயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி கணவன் அல்லவா? கண்ணாடி உள்ளதை உள்ளபடி காட்டும் அல்லவா?? இல்லாததைக் காட்டாது. ஆகையால் நீ உன் இன்முகத்தைக் காட்டி உன் மணாளனை எங்களோடு அனுப்பி வைத்து எங்களுக்கும் முக்தியைக் கொடுப்பாய். அவன் வந்து எங்களை ஆட்கொள்ளுமாறு செய்வாய் என தாயாரிடம் வேண்டுகிறாள். இன்னொரு பொருளில் விசிறி தானம் செய்வார்கள், கண்ணாடியும் வெற்றிலை , பாக்கு, மஞ்சளோடு வைத்துக்கொடுக்கப் படும். அதனால் நோன்பிற்கு வேண்டிய பொருட்களைக் கேட்டுப் பெற்றாள் என்றும் கூறலாம்.  இப்படி ஆண்டாள் கேட்டுக்கொண்டிருக்க பட்டத்திரி என்ன கூறுகிறார் என்றால் திருவடி சேவையே போதும் என்கிறார். பெருமாள் கோயில்களுக்குப் போனால் இந்தத் திருவடி சேவை மிக முக்கியம். எத்தனை பேர் பார்த்திருக்கீங்க?? பட்டாசாரியார்கள் கற்பூர ஆரத்தி எடுக்கையில் நின்று, இருந்து, கிடந்த எல்லாக் கோலங்களிலும் பர வாசுதேவனின் திருவடியைக் காட்டி ஆராதிப்பார்கள். அதுவே பக்தர்களுக்கு முக்கியமாகும். அவர்கள் திருவடியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டாலே போதுமே. அப்பா, உன்னை விடமாட்டேன், உன் கால்களில் விழுந்துவிட்டேன், சரணாகதி அடைந்துவிட்டேன் என், கிருஷ்ணா, நீயே கதி என்று விழுந்தவர்களை அந்தக் கால்கள் எட்டியா உதைக்கும்? குனிந்து தன் கைகளால் நம்மைத் தூக்கி உட்கார வைத்து ஆசுவாசம் செய்து தன்னோடு சேர்த்துக்கொள்ளும் அல்லவோ? யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ பக்தாநாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாததே பாத மூலம்: நித்யம் சித்தஸ்த்திதம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ ஹ்ருத்வா நி:ஸ்ஸேஷ தாபாந் ப்ரத்ஸது பரமாநந்த ஸந்தோஹ லக்ஷ்மீம் பரந்தாமா, கருணாசாகரமே, யோகிகளாகட்டும்,,ஞாநிகளாகட்டும், எவராயிருந்தாலும் அனைவருக்கும் பிடித்தவை, ப்ரீதியானவை உன் பாதாரவிந்தங்களே ஆகும். ஜீவன் முக்தர்களின் வாசஸ்தலங்கள் அந்தப் பாதாரவிந்தங்கள். கற்பக விருக்ஷம் அவையே. பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி வழங்குகிறதே. என் க்ருஷ்ணா, அத்தகைய உன் பாதாரவிந்தத்தை என் சிரசிலே தாங்கி என் சித்தத்திலே இருத்தி, எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பரம ஆநந்தமான மோக்ஷ சாம்ராஜ்யம் என்னும் ஐஸ்வர்யத்தை அருளுவாய்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்! ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!     []       மீண்டும் பசுக்களைக் குறிக்கும் பாடல்.  அதிலும் எப்போது கலங்களை எடுத்துக் கறந்தாலும் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள். ஆகவே காமதேனுக் கோலமோ, பசுவும் கன்றுமாகவோ கோலம் போடலாம். உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என பெருமானைக் கூறுகிறாள் ஆண்டாள். இருளை நீக்கும் ஆதவனைப் போல் நம் மனமாகிய காட்டில்  எந்நேரமும் காணப்படும்  துர் எண்ணங்களாகிய இருட்டை அங்கே பெருமானைக் குடியேற்றுவதன் மூலம் ஒளி பொருந்தியதாக மாற்றலாம்.  இதயத்தினுள் சுடராக ஒளிவீசிப் பிரகாசிப்பவன் பெருமானே.  அதை அறியாமல் நாம் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறோம்.  உலகினில் தோற்றமாய் நின்றவன் நம்முள்ளும் சுடராய் ஒளி வீசுகிறான். அவன் திருவடிகளைப் புகழ்ந்து பாட வேண்டும். அதுவும் எப்படி?  எதிரிகள் கண்ணனின் பலத்தைக் கண்டு அவனுக்கு சேவை செய்ய வேண்டி அவனடிகளைப் பணிந்து வணங்குவது போலவா?  அவர்கள் அடி பணிவதில் அச்சம் கலந்திருக்கிறது கண்ணா!  எங்களுக்கு என்ன அச்சம்? நாங்கள் உன்னைக் கட்டி இருப்பது எங்கள் பக்தியாகிய அன்பெனும் கயிற்றினால்.  இதற்கு தாமோதரனாகிய நீ கட்டுப்பட்டே தீர வேண்டும்.  உன்னிடம் நாங்கள் எங்களை ஒப்படைத்து விட்டோம்.  நீ எங்களை ஒதுக்க முடியாது.  அதே போல் நீயன்றி நாங்களும் இல்லை.  உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகிவிட்டோம். உன்னைப் புகழ்ந்து ஏத்துவது ஒன்றே எங்கள் வேலை.  இது வரைக்கும் பிராட்டியையும், பரமாத்மாவையும் சேர்த்து எழுப்பினாங்க. இப்போப் பிராட்டி எழுந்து வந்துவிடுகிறாள் போலும். ஆகையால் இந்தப் பாசுரம் பிராட்டியும் சேர்ந்தே பகவானை எழுப்பியதாய் ஐதீகம்.  ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்= ஏற்கெனவேயே நந்தகோபன் வீட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை எண்ணிமுடியாது என்பதைப் பார்த்தோம். இங்கே அவைகள் அனைத்தும் கறக்கும் பாலைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. எத்தனை பாத்திரங்கள் எடுத்து வந்தாலும் அவை எல்லாமே நிரம்பி வழியும்படியாகப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். அவற்றை வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறாள். அப்படி பாலைப் பொழியும் பசுவைப்போல நீயும் உன் கருணை மழையைப்பால் போல் எங்கள் மேல் சொரிந்துவிடு என் அப்பா என்றே கேட்கிறாள்.  ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்! ஊற்றமுடையாய்! பெரியாய்! = இவ்வளவு பெருந்தன்மை பொருந்திய நந்தகோபனின் மகனே, நீ எங்களை மறந்தாயோ? நீயல்லவோ இந்த உலகின் படைத்துக் காத்து, ரக்ஷித்து என அனைத்தையும் இடைவிடாது செய்து வருகிறாய்?? அதிலே நீ சற்றேனும் அயரவில்லையே? உற்சாகமாய்ச் செய்து வருகிறாயே? நீ எவ்வளவு பெரியவன்?? இவ்வுலகில் முதன் முதல் தோன்றியவனே நீயன்றோ. எண்ணி அடங்க முடியாத அநாதிகாலம் தொட்டே இருக்கும் எப்போது தோன்றினாய் என்றே சொல்லமுடியாதபடி இருக்கும் பெரியவனே. உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்= ஏ பரம்பொருளே, ஜோதிவடிவானவனே, நீ இருக்கிறாய் என்பதை எல்லாரும் சொல்கிறார்கள் என்று மட்டும் நாங்கள் நம்பவில்லை. நீயே எங்கள் மத்தியில் வந்து எங்கள் குலத்தில் வந்து தோன்றினாயே? நாங்கள் அணுகுதற்கு எளிமையாக எங்களிடையே வந்து தோன்றிய அருள் பெரும் சுடர் வடிவானவனே. துயிலில் இருந்து எழுந்திரு. மாற்றார்களான அரக்கர்கள் கூட உன்னெதிரில் தங்கள் வலிமையைத் தொலைத்துவிட்டு உன்னிடமே அடைக்கலம் ஆகின்றனரே. அவர்களையும் நீ உன் அடிபணியச் செய்தாயே.  ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!= உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்தாலும் கடைசியில் உன் வீரத்துக்கு அடிபணிந்து உன்னிடமே அடைக்கலம் ஆனார்கள். உன் பக்தர்களான நாங்களோ உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு, உன் கருணைக்குத் தோற்றுப் போய் உன்னிடம் நீயே சரண் என்று வந்திருக்கிறோம். உன்னையே நாங்கள் எந்நாளும் போற்றிப் பாடி வந்திருக்கிறோம். உன்னை நினையாமல் எங்களால் இருக்கமுடியாது. உன் புகழைப்பாடாமல் இருக்க இயலாது.  பட்டத்திரி கண்ணன் புகழை எவ்வாறு கூறுகிறார் என்றால் அவன் எல்லையற்றவன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன் என்கிறார். யத்து த்ரைலோக்ய ரூபம் தததபி ச ததோ நிர்க்கதோநந்த ஸுத்த ஞாநாத்மா வர்த்தஸே த்வம் தவ கலு மஹிமா ஸோபி தாவாந் கிமந்யத் ஸ்தோகஸ்தே பாக ஏவாகிலபுவநதயா த்ருஸ்யதே த்ர்யம்ஸ்கல்பம் பூயிஷ்ட்டம் ஸாந்த்ர மோதாத்முகமுபரி ததோ பாதி தஸ்மை நமஸ்தே எல்லையில்லாதவனே, இந்த மூவுலகின் ரூபமே நீர்தானே, இன்னும் இம்மூவுலகுக்கும் அப்பாற்பட்டு பரிசுத்த ஞான ஸ்வரூபியும் நீரன்றோ. உம்முடைய இந்த மஹிமை சாமானியமானதா? உமது இந்த திவ்ய ரூபத்தின் ஒரு சிறுதுளியே இந்தப்ப்ரபஞ்சமாய்ப் பரிணமித்திருக்கிறது. மற்றப் பாகங்கள் அனைத்துமே பரமாநந்த ஸ்வரூபமாக அனைத்துக்கும் அப்பால் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. உம்மை நமஸ்கரிக்கிறேன்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 22 அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்! கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ! திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!     []                                                   []                                                                    []          மணி, தீபம் கலந்த கோலமோ அல்லது தாமரைப்பூக்கோலமோ போடலாம். மணி, தீபம், தாமரை மூன்றும் சேர்ந்திருக்கும் கோலமும் போடலாம். கண்ணனிடம் சத்சங்கத்திற்காக இவ்வுலகத்து அரசர்கள் அனைவரும் வந்து கூடி நின்று காத்திருப்பது போல் கோபியரும் அவன் தலைமாட்டில் கண்ணன் தன் செந்தாமரைக் கண்களைத் திறந்து தங்களைப் பார்க்கமாட்டானா எனக் காத்திருக்கின்றனர்.  கண்ணனின் கண்களை இங்கே சூரிய, சந்திரருக்கு ஒப்பிடுகிறாள் ஆண்டாள்.  சூரிய, சந்திரர் கோலமும் போடலாம்.  அத்தகைய பெருமை வாய்ந்த கண்களால் கண்ணன் நம்மைப் பார்த்தான் எனில் ஜன்ம ஜன்மங்களுக்கெல்லாம் தொடர்ந்து வரும் சாபங்கள் அனைத்தும் தீயினில் தூசு போல் மறைந்துவிடும். இறைவனின் நாமங்களான நாராயணா, கோவிந்தா என்பவற்றைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலே அவன் பார்வை நம் மீது பட்டு நமக்கு முக்தி கிட்டும். அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!= இங்கே ஆண்டாள் கண்ணன் ஒரு அரசனாக இல்லாதிருந்தபோதும் பல பெரிய சாம்ராஜ்யத்தின் அரசர்கள் அனைவரும் அவன் உதவி வேண்டி, அவன் ஆற்றலை வேண்டி அவனிடம் வந்து இறைஞ்சியதை நினைவூட்டுகிறாள். மஹாபாரதத்திலேயே பார்க்கலாம் இதை. கண்ணன் யாருக்கு உதவி செய்கிறானோ அவர்பக்கமே வெற்றித் திருமகள் இருப்பாள் என்ற எண்ணம் தோன்றிய துரியோதனன் கண்ணனின் படைவீரர்களின் உதவி முழுதும் தனக்கே கிடைக்கவேண்டும் என்று வந்து காத்திருக்கிறான். முதலில் கண்ணனின் காலடியில் அவன் கண்பார்வை படும் வண்ணம் அமர்ந்திருந்தான் துரியோதனன். ஆனால் பின்னர் செருக்கு மீதூறக்கண்ணன் தலைமாட்டில் வந்து அமர்கிறான். தூங்கும் கண்ணன் நம்மைத் தான் முதலில் கவனிப்பான் என்று எண்ணி அவனிடம் உதவியைக் கேட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு. அடுத்து வந்தான் அர்ஜுனன். கண்ணன் தூங்குவதைக் கண்டான். அவன் சிவந்த பாதங்கள் சற்றே வெளியே தெரிந்தன. செந்தாமரை மலர்கள் போன்ற அந்தத் திருப்பாதங்கள் தங்கள் ஐவருக்காகவும் கால் நோக தூது நடந்ததை நினைத்தான். அவன் கண்களில் நீர் பெருகிற்று. கண்ணன் மேல் பாசமும், அன்பும் மீதூறக் காலடியில் அமர்ந்து அவன் கால்களைப்பிடித்துவிட ஆரம்பித்தான். கண்ணனின் முகத்தில் குறுநகை துலங்கக் கண்விழித்தான். துரியோதனன் நினைத்தது போலவே அருகே அமர்ந்திருந்தஅவனைக் கண்ணன் முதலில் பார்க்கவில்லை. முதலில் பார்த்தது அர்ஜுனனைத் தான். எனினும் துரியோதனனும் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்த கண்ணன் அவனிடம் என்ன வேண்டும் துரியோதனா என்று கேட்க துரியோதனனுக்கு உள்ளூற மகிழ்ச்சி. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் வேண்டுதலைக்கூறுகிறான் துரியோதனன். "இரு துரியோதனா, காலடியில் அமர்ந்திருப்பது யார்? நான் கவனிக்கவில்லையே? அவரையும் என்னவெனக் கேட்கிறேனே! மேலும் முதலில் நான் பார்ப்பவருக்கு அன்றோ முதலில் என் உதவியைத் தரமுடியும்? அது தானே நியாயமும் கூட?" என்றான் கண்ணன். துரியோதனன், "ம்ம்ம்ம்" என்று கோபத்தோடு உறுமினான்.  "கண்ணா, பேச்சு மாறாதே! நீ முதலில் எவரைக் காண்பாயோ அவருக்கே உதவி செய்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாய்!" துரியோதனன் கோபத்தோடு உறுமினான். "ஆம், துரியோதனா, ஆனால் என் கண்கள் கண்டது முதலில் அர்ஜுனனை அன்றோ?"  "இரு அப்பா, இவன் சொல்வதையும் கேட்டுவிடுகிறேன், உனக்கே நான் முதலில் உதவி செய்வேன்." என்று கூறிய கண்ணன் காலடியில் அமர்ந்திருப்பது அர்ஜுனன் எனத் தெரிந்து கொள்கிறான். அவனுக்குத் தெரியாததா? புரியாததா? எனினும் அப்போதுதான் தெரிந்தாற்போல் காட்டிக்கொண்டான். "அர்ஜுனா, நீயா? ம்ஹும் தாமதம் செய்துவிட்டாயே! துரியோதனன் முதலிலேயே வந்துவிட்டானாமே? என்னால் என் படை வீரர்களை ஒருவருக்கும், நான் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் இன்னொருவருக்கும் உதவ முடியும். இந்த இரண்டு உதவிகளில் உனக்கு எது வேண்டும்?? " அர்ஜுனன், "கண்ணா, எனக்கு நீ ஒருவனே போதும், உன்னையன்றி எனக்கு வேறு துணை எதற்கு?" என்று கூற, கண்ணனும் குறுநகை மாறாமல், "அப்படியா? எனில் துரியோதனனுக்கே என் படை மொத்தமும் பணி செய்யும்! நீ காலடியில் அமர்ந்திருந்ததால் தெரியவும் இல்லை. மேலும் முதலில் வந்ததும் துரியோதனன் அன்றோ?" "கண்ணா, எனக்கு உன் படையோ, உன் வீரர்களோ, உன் ரதங்களோ, உன் யானைப்படை, குதிரைப்படைகளோ தேவை இல்லை. எனக்குத் தேவை நீ ஒருத்தன் மட்டுமே. நீ மட்டும் எனக்கருகே இருந்தால் போதும்!" அர்ஜுனன் வேண்டுகோள்.  "அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, ஆனால் நான் ஆயுதமே எடுக்க மாட்டேன், வேண்டுமென்றால் ( என்ன குறும்பு பாருங்க) உனக்கு ரத சாரதியாக ஊழியம் செய்கிறேன். (அர்ஜுனனைப் போல் கொடுத்து வச்சவங்க யாரு?) நான் நிராயுதபாணியாகத் தான் உனக்குத் துணை இருப்பேன். என் படைகள் மொத்தமும் துரியோதனனுக்கு ஊழியம் செய்யும்." கண்ணன் கூற அர்ஜுனன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான். கண்ணனின் அருகாமை ஒன்றே தனக்கு வேண்டியதைத் தனக்குப் பெற்றுத் தரும் என முழுமையாக நம்பினான் அர்ஜூனன். வெறும் ஆட்களின் எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்தான் துரியோதனன்.  வென்றவர் யார்னு சொல்லவே வேண்டாம் இல்லையா? அது போல்தான் இங்கேயும். இவ்வுலகில் உள்ள அனைத்து அரசர்களும் கண்ணனின் ஆற்றலையும் வீரத்தையும் வேண்டிக் கேட்டுக் கண்ணனின் கட்டிலருகே காத்திருந்தால் ஏ, கண்ணா, என்னப்பா, நாங்கள் அனைவரும் உன் கருணைப்பார்வைக்காக அன்றோ வந்திருக்கோம். உன்னிடம் எதையும் எதிர்பார்த்து நாங்கள் வரவில்லை அப்பா. எங்களைக் கண் திறந்து பார்த்து எங்களை ஆட்கொள்வாய் எனக் காத்திருக்கோம். கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ= கிண்கிணி என்பது குழந்தைகளுக்குக் கட்டும் ஒரு சிறிய மணி. குஞ்சுமணி என்றும் சொல்வார்கள். அந்த மணியின் வாயைப் போல் சின்னதாய் செப்புப் போல் இருக்கிறதாம் கண்ணனின் திருவாய். அவனது கண்களோ எனில் செவ்வரியோடிய செந்தாமரைப் பூக்களைப் போல் மெல்ல மெல்ல மலர்க்கின்றனவாம். அந்தக் கண்களினால் நீ எங்களைக் காண மாட்டாயா? நீ கண் விழிக்கும்போது உன் அருட்பார்வை எங்கள் மேல் முதலில் படவேண்டும்.  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!= சூரியனும், சந்திரனும் போன்ற உன்னிரண்டு கண்களினால் எங்களை நீ கருணையுடன் பார்த்தாயானால் ஜென்ம ஜென்மமாய் நாங்கள் செய்த பாவங்களின் மிச்சங்கள் அனைத்தும் கரைந்து போய் நாங்கள் உய்வோமே. உன் கருணையாலே நாங்கள் இதுவரை சேர்த்திருந்த கர்ம பலன்கள் அனைத்தும் விலகி உன்னோடு நாங்கள் ஐக்கியம் ஆகி விடுவோம். என்கிறாள் ஆண்டாள்.  பட்டத்திரி எப்படி வேண்டுகிறார் என்று பார்ப்போமா? தேவர்ஷீணாம் பித்ரூணாமபி ந புநர்ருணீ கிங்கரோ வா ஸ பூமந் யோஸெள ஸர்வாத்மநா த்வாம் ஸரணமுபகத: ஸர்வக்ருத்யாநி ஹித்வா தஸ்யோத்பந்நம் விகர்மாப்யகில மபநுதஸ்யேவ சித்தஸ்த்திதஸ்த்வம் தந்மே பாபோத்த தாபாந் பவநபுரபதே ருத்த்தி பக்திம் ப்ரணீயா! ஏ, கிருஷ்ணா, நாங்கள் அனைவரும் உனது பக்தர்கள், உன்னைச் சரணடையவே வந்திருக்கிறோம். மற்ற எல்லாச் செயல்களையும் விட்டு விட்டு முற்றியும் நீயே கதி எனச் சரண் அடைகிறோம். இனி நாங்கள் தேவர்கள், ரிஷி, முனிவர்கள், பித்ருக்கள் என எவருக்கும் கடன்பட்டவர்களாய் ஆகமாட்டோம். நீரன்றோ அனைவரின் மனதிலும் இருந்து கொண்டு அவரவர் கர்மாக்களை விட்டதால் உண்டான பாவங்களை எல்லாம் நீக்கி விடுகிறீர் அன்றோ! அவ்வளவு பெருமையும் சக்தியும் வாய்ந்த நீரன்றோ என்னுடைய துர் எண்ணங்களாலும், துர் நடத்தைகளாலும் உண்டான பாவங்களையும் தாபங்களையும் போக்கி எனக்குப் பக்தியை மேலுறச் செய்யும்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23 மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!       பூவைப்பூ வண்ணன் எனக் கண்ணனை அழைத்திருப்பதால் பல்வேறுவிதமான பூக்களைக் கோலத்தில் வரையலாம். மழைக்காலம் முழுதும் குகைக்குள் உறங்கிக் கிடக்கும் சிங்கமானது கண் விழிக்கையில் அதன் பிடரி மயிர் சிலிர்க்குமாறு கர்ஜனை செய்து குகையை விட்டு வெளிக்கிளம்பும்.  அதைப் போலக் கண்ணா!  நீயும் உன் அரண்மனையை விட்டு வீரநடை நடந்து வெளியே வந்து உனக்கான சிம்மாதனத்தில் அமர்ந்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்வதாய்ச் சொல்கிறாள் ஆண்டாள். வந்த காரியம் ஆராய்ந்து அருளுமாறு ஆண்டாள் ஏன் கேட்கிறாள்?  இவ்வுலகத்து இன்பங்களையே துய்க்கும் நம் போன்றவர் ஆண்டவன் சந்நிதியில் கேட்பதும் பொன், பொருள், நம் ஆசைகள் நிறைவேறுமாறு வேண்டுதல், புத்தாடைகள்,  புது வீடு என்றே கேட்கிறோம். அதனால் தான் ஆண்டாள் கோரிக்கைகள் நியாயமாய் இருந்தால் மட்டுமே நிறைவேற்றித் தருமாறு கேட்கிறாள்.  ஆண்டவன் சந்நிதியில் நமக்கென எதுவும் வேண்டாமல் இவ்வுலக சுபிக்ஷத்திற்காக வேண்டுவதே சிறப்பு.                                                                                               [] []                                                                                  [] []       மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து= நல்ல மாரிக்காலத்தில் மலையின் குகையில் வெளியே வராமல் தன் குடும்பத்தோடு அடைபட்டுக்கிடக்கும் சிங்கமானது மழை முடிந்துவிட்டது என்பது தெரிந்ததும், பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து கர்ஜனை செய்யுமாம். அவ்வளவு நாட்கள் தூங்கிக்கொண்டிருந்ததில் அதன் கண்களும் சிவந்து நெருப்புப்போல் இருக்குமாம்.  வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலே நீ =பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு தன் சோம்பலை உதறிக்கொண்டு கர்ஜித்துக்கொண்டே வேட்டைக்கு ஆயத்தமாகும் சிங்கம் போல் இருக்கிறானாம் கண்ணன். இங்கே கண்ணனைச் சிங்கம் என்றது அவன் ஆற்றலைக் குறித்தே. சிங்கத்தைப் போல் ஆற்றல் மிகுந்தவன் அவன். கம்பீரம் நிறைந்தவன். மற்றபடி அவன் மென்மையான தன்மை வாய்ந்தவன். அதை அடுத்த அடியிலே சொல்கிறாள் ஆண்டாள்.  பூவைப்பூவண்ணா! உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய= பூவண்ணன் போன்றவனே, பூவைப் போன்றவனே, இப்படிப் படுத்துக்கொண்டிருக்காமல் நீ எழுந்து இங்கே உன் சபைக்கு வந்து  சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!=சிங்காதனத்தில் அமர்ந்து கொள்வாய். நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து எங்களுக்கு அருளுவாய், எழுந்திருந்து வா கண்ணா, இங்கே அரிதுயில் கொண்டிருக்கும் பரமாத்மாவின் நடையழகைக் காண வேண்டி ஆண்டாள் கூறி இருப்பாள் போலும், அது மட்டுமில்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு எதற்கு வந்திருக்கிறோம் என்பதையும் அவனுக்குச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். தாங்கள் வேண்டுவது அவன் கருணா கடாக்ஷம் ஒன்றே. அது எங்களுக்குக் கிட்டவேண்டும் என்பதே ஆண்டாளின் மறைமுகப்பிரார்த்தனை.  பட்டத்திரியின் பிரார்த்தனையோ வேறுவிதமாய் உள்ளது. இறைவனைப் பரிபூர்ண ஸ்வரூபி என்னும் அவர் தாம் எதையும் அறிந்திருக்கவில்லை என்றும், பரமாத்மாவைத் தியானிப்பதையே தாம் விரும்புவதாயும் கூறுகிறார். யோ யாவாந் யாத்ருஸோ வா த்வமிதி கிமபி நைவாவகச்சாமி பூமந் ஏவஞ் சாநந்ய பாவஸ்த்வதநு பஜநமேவாத்ரியே சைத்யவைரிந் த்வல்லிங்காநாம் த்வதங்க்ரி ப்ரியஜந ஸதஸாம் தர்ஸநஸ்பர்ஸநாதி: பூயாந்மே த்வத் பூஜா நதி நுதி குண கர்மாநு கீர்த்யாதரோபி பரிபூர்ண ஸ்வரூபியே, பரம்பொருளே, தாங்கள் யாரோ, எப்படிப்பட்டவரோ, எதற்கு ஒப்பானவரோ அவை எதையும் நான் அறிந்தேன் இல்லை. அப்படி அறியாதவனான நான் விரும்புவது வேறொன்றையும் மனதில் கொள்ளாமல் தங்கள் தியானம் ஒன்றே செய்ய விரும்புகிறேன். உம்முடைய அர்ச்சாமூர்த்தித் திருமேநிகளிலும் உமது சரணங்களைப் பக்தி செய்யும் மக்களின் நடுவிலும், உமது தரிசனம், ஸ்பரிசனம், வழிபாடு, வணங்குதல், ஸ்தோத்ரம் சொல்லுதல், உமது கல்யாண குணங்களையும் லீலைகளையும் பற்றி விவரித்துக் கீர்த்தனம் செய்தல், உமது திவ்ய சரித்திரத்தைப் பற்றிப் பேசுதல் ஆகியவற்றிலே எனக்கு ஈடுபாடு உண்டாகும்படி செய்யும்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24 அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி ! சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி ! பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி ! கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி ! குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி ! வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி ! என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!                                                                                                                                               [] []                                                                                                                                                           [] []     சகடாசுரனைக் குறிக்கும் வரிகள் வந்திருப்பதால் சக்கரக் கோலம் போடலாம்.  குன்றைக் குடையாய் எடுத்த பெருமானுக்காக மலையைக் கோலத்தில் வரையலாம்.  ஶ்ரீராமாவதாரத்தையும் இங்கே தென்னிலங்கைச் செற்றதாய்க் குறிப்பிட்டிருப்பதால் சஞ்சீவி மலைக் கோலமும் போடலாம்.  இந்தப் பாடலில் வாமன, திரிவிக்கிரம, ஶ்ரீராம, கண்ணன் ஆகிய அவதாரங்களைக் குறிப்பிட்டிருப்பதோடு பகை கெடுக்கும் கண்ணன் கையில் வேல் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளாள் ஆண்டாள்.  பொதுவாக வேல் முருகப் பெருமானுக்கு உகந்தது எனினும் இங்கே கண்ணனும் கையில் வேல் வைத்திருப்பதாயும் அதன் மூலமே பகையை ஒழிப்பதாயும் கூறி இருப்பதால் வேலும், தீபமும் கலந்த கோலமும் போடலாம். இந்தப் பாடல் முழுவதுமே கண்ணன் புகழைச் சொல்லி அவனைப் போற்றித் துதிக்கும் பாடலாய் உள்ளது.  ஆகவே இந்தப் பாடலைப் பாடிப் பெருமானை எப்போதும் வாழ்த்தலாம்.  கண்ணனின் வீரத்தைப் புகழ்ந்து பாடி அவன் சேவைகளில் ஆழ்ந்து அவனை ஏத்தி வணங்குவதற்கு வந்துள்ள தங்களைப் பார்த்துக் கருணை காட்டுமாறு கேட்கிறாள் ஆண்டாள் பகவான் சேவை செய்கிறானா என்று கேட்டால், ஆம். தன்னை  நாடி, தன்னையே சரணம் என நம்பி வந்த பக்தர்களுக்குப் பெருமான் சேவை செய்கிறான்.  பிரஹலாதனுக்கு நரசிம்மமாக வந்து சேவை செய்தார். அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி != இந்தப் பாடல் முழுவதும் கண்ணனின் கல்யாண குணங்கள் பற்றியும், அவன் வீரத்தைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாடலைப் பாராயணம் பண்ணச் செய்யலாம் என்பது பெரியோர் கூற்று. வாமனனாய் வந்து இவ்வுலகம் முழுதையும் மண்ணை மட்டுமல்லாது, விண்ணையும், பாதாளத்தையும் அளந்து மஹாபலிக்கு மோக்ஷத்தைக் கொடுத்து அவனை நித்ய சிரஞ்சீவியாக்கிய அவதாரத்தைத் திருப்பாவையில் மூன்றாம் முறையாகக் கூறி உள்ளாள் ஆண்டாள்.  முதலில் மூன்றாம் பாடலில் "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று இந்த அவதாரத்தை உத்தமமான ஒரு அவதாரமாய்ச் சொன்னவள், பின்னர் பதினேழாம் பாசுரத்தில் "அம்பரமே, தண்ணீரே, அறம் செய்யும்" பாடலில் "அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!" என்று மீண்டும் பாராட்டிச் சொல்கிறாள். மற்ற அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை சம்ஹாரமே செய்ய இந்த அவதாரத்தில் கண்ணன் மஹாபலிக்குச் செய்து வைத்த மோக்ஷ சாம்ராஜ்யப் பதவியும், நித்ய சிரஞ்சீவிப் பட்டமுமே ஆண்டாளைக் கவர்ந்திருக்கிறது போலும். அடுத்து [] சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி != சீதையை அபகரித்துச் சென்ற தென்னிலங்கைக் கோமான் ஆன ராவணனைக் கொன்றான் அன்றோ?? ராவணனையும் உடனே எல்லாம் கொன்றுவிடவில்லை. அவன் திருந்தச் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்துவிட்டுப்பின்னர் அவன் எல்லை மீறவே அவன் இருக்கும் இடம் சென்று அவனோடு முறைப்படியும் யுத்த தர்மப் படியும் சண்டையிட்டு அவனைத் தோற்கடித்துக் கொன்றான். உன்னுடைய இந்த வீரத்துக்குப் போற்றி! பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி != சக்கரமாய் வந்து கண்ணனை அழிக்க வந்தான் சகடாசுரன். அந்தச் சகடாசுரனைத் தன் கால்களால் உதைத்தே கொன்றாயே, அந்த உன் திருவடிகளுக்குப் போற்றி. கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி != எல்லா விதத்திலும் முயன்று பார்த்த கம்சன், வத்சாசுரனையும் கபித்தாசுரனையும் கோகுலத்துக்கு அனுப்ப, அவர்கள் கன்றுக்குட்டியாக ஒருத்தனும், விளாமரமாக இன்னொருத்தனும் நின்று கண்ணனைக் கொல்ல முயல அந்தக் கன்றையே கோலாய்க் கொண்டு விளாமரத்தை அடித்து வெட்டிச் சாய்த்து அழித்தான் கண்ணன். அவனுக்குத் தான் சிறு வயது முதலே எத்தனை எத்தனை தொந்திரவுகள், இடர்கள், தடங்கல்கள், எதிரிகள்?? பிறக்கும்போதே சிறையில் பிறந்தான், பிறந்த உடனே தாயைப் பிரிந்தான், பிறந்த சற்று நேரத்துக்கெல்லாம் தந்தையைப் பிறந்தான். வேறொரு இடத்தில் வளர்ந்தான். அங்கேயானும் நிம்மதியாக வளர்ந்தானா என்றால் இல்லை! எனினும் அவன் முகத்தின் முறுவல் மாறவில்லை. எதுக்கும் சலித்துக்கொள்ளவில்லை, அலுத்துக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும், எல்லாரையும் வென்றான். சுழன்று, சுழன்று கன்றைத் தூக்கி அடித்துக் கொன்றான் இரு அசுரர்களையும் கண்ணன். அத்தகைய வலிமை பொருந்திய கண்ணா உன் திருவடிகளுக்குப் போற்றி. குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி != ஆஹா, இங்கே தான் மாமன் இவ்வாறு தொந்திரவு கொடுத்தானெனில் இந்த இந்திரனுக்கு என்ன வந்ததாம்?? எல்லாம் கிடக்கத் தனக்கே அனைவரும் வழிபாடுகள் செய்யவேண்டும் என எதிர்பார்த்த இந்திரன் கண்ணன் கோவர்த்தனத்துக்குச் செய்த பூஜையால் கோபம் அடைந்தான். விடாத பெருமழை! பேரிடிகளையும் அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கச் செய்தான். வஜ்ராயுதத்தை வீசி பெரிய மின்னல்களை விண்ணின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப்பாயச் செய்தான். மழை அடர்த்தியாகப் பெய்தது. கண்ணனோ அசரவில்லையே!தான் வழிபட்ட கோவர்த்தனகிரியையே போய் வணங்கி அதையே தூக்கிக் குடையாகப் பிடிக்க, கோபர்கள் அனைவருக்கும் அதனடியிலே அடைக்கலம் கிடைத்தது. கண்ணனின் அருளாகிய குடை அன்றோ அது? மேலும் இவ்வளவு கஷ்டம் கொடுத்த போதிலும் கண்ணன் இந்திரனை அழிக்கவே இல்லை. அவன் தவறை அவனே உணரச் செய்தான். அத்தகைய பெருந்தன்மையான குணத்துக்கு போற்றி. வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி != எல்லாரையும் வென்று பகைவர்களை அடியோடு ஒழிக்கும் கண்ணன் கையின் வேலை இங்கே ஆண்டாள் போற்றுகிறாள். கண்ணனுக்கு ஏது வேல்? என்றால் இருந்ததே?? நந்தகோபனே கூர்வேல் கொடுந்தொழிலன் ஆயிற்றே? தந்தையின் ஆயுதம் பிள்ளை கையில் ஏற்றிக் கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய பாதுகாப்புக்கொடுக்கும் வேலே நீ வாழ்க, உனக்குப் போற்றி! என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!= இவ்வளவு புகழ் வாய்ந்த வீரம் செறிந்த கண்ணனுக்குப் போற்றி பாடி அவனுடைய சேவகமே எங்கள் தொழில் என அவனைத் துதித்துப் பாடவேண்டியே அவனிடம் வீடு பேறு அடையவே,( இங்கே பறை என்பது மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்) இன்று நாங்கள் வந்திருக்கிறோம், கண்ணா, எங்களிடம் அன்பு கொண்டு எம்மைத் தடுத்து ஆட்கொள்வாய். இவ்வளவு நாட்கள் தோழிகளை எழுப்பியும், பின்னர் நந்தகோபனையும், யசோதையையும் எழுப்பியும், பின்னர் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பியும், அதன் பின்னர் கண்ணனையே எழுப்பியும் வந்த ஆண்டாள் இந்தப் பாடலில் கண்ணன் எழுந்து வந்து தங்களுக்குத் திருமுக தரிசனம் கொடுத்ததை மறைமுகமாய்க் காட்டுகிறாள். அதோடு அவனிடம் நேரிடையாகவே பேசி அவனுடைய அருளை வேண்டுகிறாள். கண்ணனின் வீரப் புகழைப்பாடி மகிழுமாறு ஆண்டாள் கூறுவது போலவே பட்டத்திரியும் என்ன கூறுகிறார் எனில்: மனம் குழைந்து மெய் சிலிர்த்துக் கண்களில் கண்ணீரும் இல்லாமல் எவ்வாறு நம் மனம் புனிதமடையும் எனக் கேட்கிறார். சித்தார்த்ரீபாவ முச்சைர் வபுஷிச புலகம் ஹர்ஷபாஷ்பஞ்ச ஹித்வா சித்தம் ஸுத்த்யேத்கதம் வா கிமு பஹூதபஸா வித்யயா வீதபக்தே: த்வத்காத ஸ்வாத ஸித்தாஞ்ஜந ஸதத மரீம்ருஜ்யமநோயேமாத்மா சக்ஷுர்வத்தத்வஸூக்ஷ்மம் பஜதி ந து ததாப்ப்யஸ்தயா தர்ககோட்யா காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை மெய்ப்பொருள் ஆக்குவதையே இங்கே குறிப்பிடுகிறார் பட்டத்திரியும். இறைவனிடம் மனம் ஒன்றி மனம் குழைந்து கண்களில் கண்ணீர் பெருகி உடல் சிலிர்த்து இறை அருளைப் புரிந்து கொண்டதன் காரணமான மகிழ்ச்சிக் கண்ணீரும் இல்லை எனில் இந்த மனம் எவ்வாறு சுத்தமடையும்? எவ்வாறு புனிதமடையும்?? பக்தி இல்லாதவர்கள் மனம் எங்கனம் புனிதமாகும்?? அவர்கள் என்னதான் தவம் செய்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும் அதனால் என்ன ஆகும்?? கண்களுக்குக் கோளாறு ஏற்பட்டால் கண்களில் சித்தாஞ்சனம் என்னும் மை தீட்டுவார்கள். கண்களின் ஒளி இவ்வுலகப்பருப்பொருட்களைத் தெளிவாய்க் காண ஆரம்பிக்கும். அதே போல் உங்கள் திவ்ய கதாசார அநுபவம் என்னும் அஞ்சனம் கொண்டு எங்கள் சித்தம் தெளிவடைந்தால் ஒழிய நுண்மையான மெய்ப்பொருளை எங்கனம் நாங்கள் உணரவோ அறியவோ முடியும்?? அதை விட்டு விட்டுப் பல்வேறு பயிற்சிகள் செய்தாலுமோ, பலருடன் பலவிதமான வாதப் பிரதிவாதங்களை முன் வைத்தாலோ வேறு எந்தவிதமான செயல்களைச் செய்தாலுமோ உணர முடியாது. எங்கள் பரமாத்மாவே, உன்னுடைய கருணா கடாக்ஷம் என்னும் அஞ்சனத்தால் எங்கள் சித்தம் தீட்டப்பட்டாலே ஞானமாகிய ஒளி பட்டு எங்களால் பரம்பொருளாகிய உன் மெய்ப்பொருளை உணரமுடியும்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25 [] ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!                                                                                                                                          [] []    நெருப்பன்ன நின்ற நெடுமாலைக் குறிக்கும் விதமாக ஒளி வீசிப் பிரகாசிக்கும் தீபக்கோலங்களைப் போடலாம்.  இங்கே கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நிகழ்வு சுட்டிக் காட்டப்படுகிறது.  தேவகியின் வயிற்றில் பிறந்து உடனேயே கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதையின் மகனாய் வளர்ந்த கண்ணனின் பிறப்பைச் சகிக்க முடியா கம்சனின் தீமைகளை அடக்கி ஒடுக்குவதற்காகக் கண்ணன் நெருப்பென்னும்படி நெடுமாலாக நின்றானாம்.  சாதாரணமாக சிவனையே நெருப்புப் பிழம்பு, ஜோதியாய் நின்றவன் என்போம் அல்லவா?  இங்கே கண்ணனையும் சுட்டி இருப்பதில் இருந்து அரியும், சிவனும் ஒண்ணு என்னும் தத்துவம் மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டப்படுகிறது.  அதோடு பக்தர்களின் பக்தியைக் கண்டு அவர்களுக்கு சேவகம் செய்யவும் ஆண்டவன் கீழே இறங்கி வந்துவிடுகிறானாம்.  பக்தியின் பெருமை அவ்வளவு உயர்ந்தது. ஶ்ரீயாகிய "திரு"வையே தன்னில் ஒரு அங்கமாய்க் கொண்டவனுக்கு, தன் மார்பில் இடம் அளித்தவனுக்குச் செல்வத்துக்குப் பஞ்சம் ஏது?  அத்தகைய உயர்ந்த செல்வத்தைக் கொண்டவனின் செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்கு அருளும் பெருமானின் சேவகக் குணத்தையும் புகழ்ந்து பாடினால் நம் வருத்தம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்போம். இங்கே செல்வம் எனக் குறிப்பிடப்படுவது சொத்து, சுகத்தைக் குறிப்பனவல்ல.  அளவற்ற எடுக்க எடுக்கக் குறையாத ஞானச் செல்வத்தையே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.  இறைவனுக்கு மாறாத அன்பு செலுத்தினாலே போதும் என்பது இதன் உட்கருத்து.  இங்கே கண்ணன் தேவகி வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்ததை ஆண்டாள் சுட்டுகிறாள். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்= தேவகியின் எட்டாவது குழந்தைதான் கம்சனுக்கு யமன் என்பது முன்பே தீர்மானித்த ஒன்று. என்றாலும் கம்சனோ தேவகிக்கு முதலில் வரிசையாய்ப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். அதன் பின்னரே பலராமனின் பிறப்பும் மாற்றப்பட்டு ரோகிணியிடம் போகிறது. கண்ணனோ பத்துமாதங்களும் தேவகி சுமந்து பெற்ற பிள்ளை. இந்தப் பிள்ளை தான் பிறந்து தங்களை ரக்ஷிக்கப் போகிறான். தங்கள் குலவிளக்கு இந்தப் பிள்ளைதான் என்பது தேவகிக்கும் தெரியும்.  ஆகவே அவள் பிள்ளையைக் காக்கத் துடித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறந்ததோ சிறைச்சாலை. அதுவும் துணைக்கு எவரும் இல்லாத நடு இரவு நேரம். கொட்டும் மழை. யமுனையோ பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தேவகி குழந்தையைப் பெற்றெடுக்க அந்தக் குழந்தையை உடனேயே ஒளித்து வளர்க்கத் திட்டமிட்ட பெற்றோர் பெற்ற தாயிடமிருந்து சற்றும் கருணையைக் காட்டிக்கொள்ளாமல் துறக்கத் தீர்மானித்து, அந்தக் குழந்தையைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்ற வசுதேவர் கோகுலத்தில் நந்தனிடம் ஒப்படைக்கிறார். [] இங்கே தான் அந்த மற்றொருத்தி வருகிறாள். மற்றொருத்தி வேறு யாரும் இல்லை. இவ்வுலகிலேயே மிகவும் புண்ணியம் செய்து அந்தப் பரமாத்மாவையே குழந்தையாகப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி, கடிந்து, அலங்கரித்து, ஓடி, விளையாடி அதன் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சிணுங்கலையும், ஒவ்வொரு விளையாட்டையும் அநுபவித்து அநுபவித்து வளர்த்த யசோதை ஆவாள். [] உண்மையாகவே அவளை நினைத்தால் பிரமனும், இந்திரனும் மட்டுமல்ல எந்தத் தாயாருக்குமே மனதில் பொறாமை உண்டாகும். அத்தகைய பாக்கியம் செய்த புண்ணியவதியான யசோதையிடம் போய்ச் சேர்கிறான் கண்ணன்.  தேவகியின் வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்து, தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே= கம்சனுக்கோ எவ்வாறோ தெரிந்து விடுகிறது. குழந்தை பிழைத்து எங்கேயோ வளர்கிறது என்று. யோகமாயையே பெண் குழந்தையாய் தேவகியிடம் கிடந்து கம்சனுக்கு உண்மையை உணர்த்திவிட்டு மறைகிறாள். அதோடு யசோதைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற விபரமும் தெரியவருகிறது. கம்சனுக்கு உடலும் , உள்ளமும் ஒரு இடத்தில் தரிக்கவில்லை. எப்படியானும் ஏதானும் தீங்கைச் செய்து அந்தக் குழந்தையை அழிக்கவேண்டும். அப்போதுதான் தான் உயிருடன் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி நினைந்து நினைந்து அவன் உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் பற்றி எரிந்ததாம்.  அதோடு யோகமாயா பிறந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல, சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்றும் கூறுகிறாளா? இந்த எண்ணம் அவன் மனதில் நெருப்பைப் போல் பற்றி எரிகிறது. நெடுமாலே வந்து நம்மை அழிக்க வந்துவிட்டானே என்று அவன் உருவமே நெருப்பாய்த் தெரிகிறது கம்சனுக்கு.  உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி= உன்னைப் பெறவேண்டி உன்னோடு நாங்கள் இணையவேண்டி, நீ எங்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டி உன்னை நாடி வந்திருக்கிறோம் எங்கள் கண்ணா, பிராட்டியான திரு தங்கும்படியான செல்வமாக எங்களுக்கு நீ இருக்கிறாய், உனக்கும் அவளுக்கும் நாங்கள் சேவகம் செய்து எங்கள் அன்பையும், பக்தியையும் காட்டி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= இதுவரை நாங்கள் எடுத்த பிறவிகளின் கர்மவினைகள் தீர்ந்து அதன் மூலம் ஏற்பட்ட வருத்தமும் தீர்ந்து நிலையான செல்வமாகிய மோக்ஷத்தைப் பெற்று மகிழ்ந்து இருப்போம்.  கண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவனைப் புகழ்ந்து பாடுவது அதனினும் பெருஞ்செல்வம் என்று கூறுகிறாள். இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போமா? நம் சரீரத்தில் இருக்கும் அளப்பரிய மோகத்தை நீக்கினாலேயே இறைவனின் திருவடிகளில் மனம் ஒன்றும் என்று கூறுகிறார். ஹீ ஹீ மே தேஹமோஹம் த்யஜ பவநபுராதீஸ யத்ப்ரேம ஹேதோ: கேஹே வித்தே கலத்ராதிஷூச விவஸிதாஸ் த்வத்பதம் விஸ்மரந்தி: ஸோயம் வஹ்நே: ஸுநோ வா ப்ரமிஹ பரத: ஸாம்ப்ரதஞ் சாக்ஷிகர்ண: த்வக்ஜிஹ்வாத்யா விகர்ஷந்த்யவஸமத இத: கோபி ந த்வத்பதாப்ஜே பரம்பொருளே, எனக்கு சரீரத்தின் மீது ஏற்படும் அதீதமான மோகத்தை நீக்கி அருளும். இந்த அதீதமான மோஹத்தால் மனிதர்கள் தம் வயமிழந்து பெண்ணாசையாலும், மனைவியர் மேலுள்ள ஆசையாலும் வீட்டிலும் மற்றப்பொருட்கள் மீதும் அதிக ஆசையை வைத்துக்கொண்டு உம்முடைய திருவடிகளை நினைப்பதையே மறந்து விடுகின்றனர். ஆனால் இந்த உடலோ இறந்த பின்னர் நெருப்புக்கோ அல்லது நாய், நரிகளுக்கோ உணவாகிறது. உயிருடன் இருக்கும்போது இந்த உடலை, மற்ற இந்திரியங்களான, கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால்கள் போன்றவை அங்குமிங்கும் இழுக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் சேர்ந்து என்னை உம்மிடம் இழுத்துவரவில்லையே, அந்தோ பரிதாபம்! உம்மிடம் என்னை இழுத்துவரச் செய்யும்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26 []     மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!         [] []    இங்கே கண்ணனின் சங்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் சங்குக் கோலம், சங்குச் சக்கரக் கோலம் போடலாம். அதோடு விரதம் முடிக்கையில் பெருமானைத் துதிக்க வேண்டி நாம் வைத்திருக்க வேண்டிய முக்கியப் பொருட்களான விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றையும் கண்ணனையே கொடுக்கச் சொல்கிறாள் ஆண்டாள். ஏனெனில் இவ்வுலகத்தின் அனைத்துப் பொருட்களும் இறைவன் நமக்குத் தந்த மாபெரும் கொடை.  இதில் நம்முடையது என எதுவும் இல்லை.  எல்லாம் அவன் கொடுத்தவை.  ஆகவே இந்தப் பொருட்களைச் சேகரம் செய்யும்போது கூட நம்முடையது என்னும் எண்ணம் வராமல் பெருமான் கொடுத்தவை என்னும் எண்ணத்துடனேயே சேகரம் செய்து அவனுக்கு அர்ப்பிக்க வேண்டும். ஆயிற்று. விரதம் முடியும் நாள் நெருங்கி விட்டது. பாஞ்சஜன்யம் என்னும் சங்கினால் எதிரிகளை எல்லாம் நடுங்க வைத்தான் கண்ணன்.  அந்தச் சங்கை எடுத்து அவன் ஊதினாலே எதிரிப்படைகள் நடுநடுங்கும்.  அத்தகைய பெரிய வலம்புரிச் சங்குகளையும், கொடி, விதானங்கள், தோரணங்கள் ஆகிய அனைத்தையும்  அவனிடமிருந்தே பெற்று பெருமானுக்குப் படைத்து அருளுமாறு வேண்டுகிறாள்.  அதோடு இல்லாமல் இவர்களுக்குத் துணையாகப் பெரியோரும் வந்து கண்ணன் மேல் பல்லாண்டு இசைக்கக் கேட்கிறாள்.  இந்தப் பாடலில் கண்ணனிடம் நோன்புக்குத் தேவையான பொருட்களை ஆண்டாள் கேட்டுப் பெறுவதாய் ஐதீகம். உண்மையில் அவள் நோன்புக்கான பொருட்களை யாசிப்பது என்பது முக்திக்கான வழிகளைக் காட்டித் தரும்படி கேட்பதே ஆகும். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா? மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்= ஆயிற்று, கண்ணனை எழுப்பியாயிற்று. நீ வந்து உன் சிங்காதனத்தில் அமர்ந்து கொண்டு எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருள் என்றும் வேண்டிக்கொண்டாயிற்று. கண்ணனும் வந்துவிட்டான். அவன், "பெண்களே, என்னவேண்டும் உங்களுக்கு?" என்றும் கேட்டுவிட்டான் போலும். அவனைத் தங்களுக்கு மிக நெருக்கமானவன் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அந்தப் பெண்களிடையே தோன்றிற்று. இது எல்லாருக்குமே இருக்கும் இல்லையா?? பல நண்பர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஓர் உயர்பதவியோ, அல்லது மேன்மையானவரோ நண்பர் எதிர்ப்பட்டால் அவர் நமக்கு மிகவும் தெரிந்தவர் எனக் காட்டிக்கொள்ள, அதுவும் அனைவருக்கும் முன்னால் அவருக்கும், நமக்கும் உள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்ட விரும்பமாட்டோமா?? அப்படியே இங்கே எல்லாப் பெண்களுக்கும் கண்ணன் தங்களுக்கெல்லாம் நெருங்கியவன் என்று காட்டிக்கொள்ளத் தோன்றிற்று. ஆகவே மாலே, மணிவண்ணா, என்றெல்லாம் கொஞ்சிக் கூப்பிடுகின்றனர். அதுவும் தங்களோடு ஆடி, ஓடிப் பாடிக் களித்தவன் என்ற பாவனை தோன்றும்படி கூப்பிட்டுக் கேட்கவே, கண்ணனும் என்ன வேண்டும் என்று மீண்டும் கேட்கிறான். நாங்கள் வேண்டுவதைக் கேள் கண்ணா!  இவை எல்லாம் எங்களுக்கு முன்னிருந்த எங்கள் முன்னோர்கள் செய்தவையே, அவர்களைப் பார்த்தே நாங்களும் அவ்வண்ணமே கேட்கிறோம்.  ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே= அப்பா, கண்ணா, உன் பாஞ்சசன்னியம் என்ற சங்கை எடுத்து நீ முழக்கினாயானால் இந்த அகில உலகமுமே நடுங்குமே? அப்படிப்பட்ட பாஞ்சசன்னியம் எங்களுக்கும் வேண்டும். நாங்கள் உலகை எல்லாம் நடுங்க வைக்கப்போவதில்லை. நீ அடைந்த வெற்றியை, எங்களை ஆட்கொண்ட சந்தோஷத்தை அதை முழக்கித் தெரிவிப்போம். எங்கள் கண்ணா, அதனால் எங்களுக்குப் பாஞ்சசன்னியம் வேண்டும்.  போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே= அதோடு மட்டுமா? மேலும் உன் புகழைப் பாடும்போது கூடவே முழக்கம் போடும் பறை, பேரிகைகள், வாத்தியங்கள், எக்காளங்கள், கொம்பு போன்றவையும் தேவை. இதன் மூலம் உன் நாம ஜபத்தை நாங்கள் செய்வோம். அது மட்டுமா? உனக்குப் பல்லாண்டிசைக்கும் சத்சங்கத்தைச் சேர்ந்த பெரியோர்களையும் எங்களுக்கு குருவாக ஆக்கிக்கொடுப்பாய். அவர்கள் மூலம் சத்குரு கிடைத்து உன்னருகே நாங்கள் நெருங்கிவர இயலும்.  கோல விளக்கே கொடியே விதானமே ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!= இது மட்டுமா?? இந்த மார்கழி அதிகாலையில் எழுந்து நாங்கள் நதிக்கோ, திருக்குளத்துக்கோ போய் நீராடிவிட்டு உன் நாமாவளியைப் பாடிக்கொண்டு வருகிறோமே? எங்களுக்கு வெளிச்சம் காட்ட ஒரு அழகான விளக்கைக் கொடுப்பாய். இங்கே விளக்காய் ஆண்டாள் கேட்பது அறியாமை என்னும் இருட்டை விலக்கி ஞானதீபமாகிய விளக்கைத் தரும்படிக் கேட்கிறாள். மேலும் எங்களுடன் கூட வரும், வந்து கொண்டிருக்கும் மற்றத் தோழியரும் அறியும் வகையில் நாங்கள் வருவதையும் நோன்பு நூற்பதையும் அனைவரும் அறியும் வகையில் ஒரு கொடியைக் கொடுப்பாய், எங்களை எல்லாம் மூடிக் காத்து அருளும் விதானத்தையும் கொடுப்பாய் என்றும் கேட்கிறாள். இந்தக் கொடியைக் கேட்பது, மஹாவிஷ்ணுவின் கருடக் கொடியில் இருக்கும் கருடனின் பாதார விந்தங்களைப் பற்றுவதன் மூலம் பகவானையும் பற்றலாம் என்பதற்காக. அவனைப் பற்ற அவனடியார்கள் அவனுக்கு நெருங்கியவர் மூலம் முயல்வதே நல்லதல்லவா? விதானமும் கேட்பது தங்களைக் காக்கப் பரம்பொருள் விதானம் போல் வந்து ஆட்கொள்ள வேண்டும் என்பதற்கு. ஒரு விதானம் (canopy)என்னும் கூரையானது எவ்விதம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் மூடிக் காக்கிறதோ அவ்வாறே கண்ணனின் அருள் என்னும் விதானம் தங்கள் பாவங்களை அகற்றித் தங்களை அறியாமையிலிருந்து அகற்றி மேலும் பாவம் செய்யாமல் காத்து அருளவேண்டும். மேலும் தங்களால் தங்கள் முயற்சியாலேயே எல்லாமும் நடக்கிறது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் அனைத்தும் அவன் கிருபையாலேயே, அவன் பாதுகாத்தலிலேயே நடந்தது, நடக்கும் என்பதையும் சுட்டுவதற்காக. இத்தனையும் சொல்லிவிட்டுக் கடைசியில் ஆலினிலையாய் என்று சொல்கிறாள். [] மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய நிலையில் ஈரேழு பதினாலு லோகங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு ஒரு சின்னஞ்சிறிய ஆலிலையில் கால் கட்டைவிரலைச் சப்பிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தையாக ஏதும் தெரியாதவனாய் நீ காட்சி கொடுத்தாலும், நீ அன்றோ அனைத்தையும் உள்ளடக்கியவன்? அனைத்தையும் உண்டு பண்ணுபவன்? அனைத்தையும் காத்து, ரக்ஷிப்பவன்?? நீ இல்லை எனில் உன் அருள் இல்லை எனில் எங்களால் ஏதுஇயலும்?? ஆகையால் உன் அருளே எங்களுக்கு வேண்டும் கண்ணா, எல்லாச் செல்வத்திலும் பெரிய செல்வம் அதுவே என்கிறாள். இப்படிக் கண்ணனிடமே மனதை வைத்து அவனிடம் அருள் ஒன்றையே யாசிக்கும் ஆண்டாளைப் போல் பட்டத்திரியும், அவனிடம் மனதை வைப்பது ஒன்றே சுகம் என்கிறார். த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுகமயி விசரந் ஸர்வ சேஷ்டாஸ் த்வதர்த்தம் த்வத்பக்தை: ஸேவ்யமாநாநபி சரிதசராநாஸ்ரயந் புண்ய தேஸாந் தஸ்யெள விப்ரே ம்ருகாதிஷ்வபி ச ஸமமதிர் முச்யமாநாவமாந ஸ்பர்த்தாஸூயாதி தோஷ: ஸததமகில பூதேஷு ஸம்பூஜயே த்வாம் ஈசா, பரம்பொருளே, உம்மைத் தவிர வேறு எதிலும், எவரிடமும் மனதை வைக்காதவனாய் நான் இருக்கவேண்டும். அவ்விதமான வாழ்க்கையே சுகமான வாழ்க்கையாகும். எல்லாக் கர்மாக்களையும் செய்தாலும் அவற்றை உமக்கே நான் அர்ப்பணமாக்கவேண்டும். உமது பக்தர்கள் சேவித்த அனைத்து திவ்ய க்ஷேத்திரங்களையும் அவர்கள் செய்த அனைத்து புண்ணிய திவ்யசெயல்களையும் நானும் செய்யுமாறு அருளவேண்டும். நீசமான மனிதர்களாய் இருந்தாலும் சரி, உயர்ந்த எண்ணமுடையவர்களாய் இருந்தாலும் சரி, அல்லது மிருகங்களானாலும், பறவைகளானாலும் அனைவரிடமும் நான் சமபுத்தி கொண்டவனாய் இருத்தல் வேண்டும். மானம், அவமானம், பொறாமை, துவேஷம், அஸூயை போன்ற துர்க்குணங்கள் நீங்கி அனைத்து உயிர்களிலும் உம்மைத் தவிர வேறொருவரையும் காண முடியாதவனாய் உம்மையே கண்டு வழிபடுபவனாய் இருத்தல் வேண்டும்.    மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27 கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!                                                                                                                                                                          [] []             இன்று விரதம் முடிந்து நெய், பால் சேர்த்துப் பொங்கல் படைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் நாள். ஆகையால் பொங்கல்பானைக் கோலம் போடலாம்.  பொங்கல் இன்னும் பண்ணவில்லை.  பண்ணினால் படம் எடுத்துப் போடுகிறேன். :)  இன்றைய தினம் மதுரைப் பக்கமெல்லாம் கூடாரவல்லித் திருநாள் என்று விழாவாக நடக்கும். அனைவருமே இன்று சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்து அனைவருக்கும் கொடுத்து உண்பார்கள். கூடாரை வெல்லும் என்பது இங்கே நாம் நம்முடன் சேர்க்கக் கூடாதவரான தீயோரைக் குறிக்கும்.  அதோடு நம்மிடம் இருக்கக் கூடாதனவான தீய எண்ணங்களையும் குறிக்கும். இவற்றை வெல்ல வேண்டுமானால் கண்ணன் அருள் வேண்டும்.  அவன் அனைத்தையும் கடந்தவன்.  அனைத்தையும் வென்றவன்.  ஆகவே அந்த கோவிந்தனைப் பாடிப் புகழ்ந்து ஏத்தினோமானால் நமக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.  கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவளையம் எனப்படும் அணிகலன், காதில் அணியும் தோடு, செவிப்பூ, காலுக்கு அணியும் பாடகம் எனப்படும் அணிகள் அனைத்தும் கிடைக்கும்.  இங்கே கைகளினால் தாளம் போட்டுக் கொண்டு, தோளுக்கு மேல் கைகளை உயர்த்திப் பெருமானைக் கும்பிட்டு, நாவினால் அவன் நாமாவைத் துதித்து, காதுகளினால் அவன் நாமாவைக் கேட்டு, கால்களினால் அவன் இருக்குமிடம் சென்று அவனையே சரணம் என அடைந்து முக்தி பெறுவதைக் குறிக்கும்.  அதோடு பால் சோற்றில் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் என்பது அனைவருமாகச் சேர்ந்து இறைவனின் பிரசாதத்தைப் பகிர்ந்து உண்பதையும் குறிக்கும்.  அதே சமயம் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் திருவடியை நினைத்து அவனையே சரணம் என அடைந்தோமானால் நமக்கு அமிர்தமே கிட்டும்.  அந்த அமிர்தத்தையும் நாம் நம்முடன் கூட வரும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டே பருக வேண்டும். என்ன தான் இவ்வுலகத்து சுகங்களான உணவு, உடை, பொருட்செல்வம் எல்லாம் அடைந்தாலும் கடைசியில் கண்ணன் திருவடிகளைச் சரணடைவதே நித்திய சுகம் என்கிறாள் ஆண்டாள்.    மனதுக்கு மிகவும் மகிழ்வைத் தரும் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடியபோது நோன்பு முடிகிறது. அதுவரையிலும், நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், நாட்காலும் நீராடி, மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த பெண்கள் இப்போது நெய்யும், பாலும் சேர்த்து கூடவே இனிப்பான வெல்லமும் சேர்த்து அக்கார அடிசில் செய்து கண்ணனுக்கு மட்டுமல்லாமல் அவர்களும் உண்டு, நமக்கும் கொடுக்கிறார்கள். கண்ணனின் பிரசாதம் அல்லவோ?? ஆகவே அனைவருமாய்க் கூடி இருந்து குளிரவேண்டும் என்கிறாள் ஆண்டாள். எது கொடுத்தாலும், என்ன கிடைத்தாலும் மனது திருப்தி அடையாது. போதும் என்ற வார்த்தை வாயில் இருந்து வராது. ஆனால் போதும்னு நாமே சொல்லும்படி வைப்பது ஒருவருக்கு அன்னம் படைக்கும்போதுதான். வயிறு கொள்ளும் அளவுக்குத் தானே உண்ணமுடியும்?? அதிகம் உண்ண முடியாதே? ஆகவே உண்பவர்கள் வெகு விரைவில் போதும் திருப்தி என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் வயிறைப்போல் அப்போது மனமும் குளிர்ந்து இருக்குமல்லவா?? அதான் கூடி இருந்து குளிர்ந்து அநுபவிப்பது. இந்தப் பொங்கலையும் பாவம் ஆண்டாளுக்கு அவள் காலத்திலே பண்ணி கண்ணனுக்குக் கொடுக்க அவளுக்கும் கொடுத்து வைக்கலை. கண்ணனுக்கும் கிடைக்கவில்லை. அதுவும் அழகர் மலை நம்பிக்கு. திருமாலிருஞ்சோலையின் பரமசாமிக்கு. அதுக்காக எத்தனை நூற்றாண்டுகள் காத்திருந்தார்கள் இருவரும். ஆண்டாள் தரப்போகிறாள் என்று வருஷா வருஷம் அழகர்மலைக்கள்ளர் எதிர்பார்க்க, ஆண்டாளோ ஒவ்வொரு வருஷமும் பாடலைத் தவிர வேறேதும் கொடுக்காமல் இருக்க, ஏமாந்து போய்க்கொண்டிருந்தார் திருமாலிருஞ்சோலை நம்பி. கடைசியில் இங்கேயும் ஆண்டாளுக்கு உதவிக்கு வந்தவர் ஸ்ரீராமாநுஜர் தான். முன்னொரு பாடலில் செந்தாமரைக்கையால் சீரார் வளை ஒலிப்ப அவர் கண்ட ஆண்டாளைத் தம் சகோதரியாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமாநுஜர் அவளின் நாச்சியார் திருமொழியின் இந்தப் பாடலைப் படித்துப் பார்த்து மனம் உருகினார்.  "ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (9:6)  நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்  நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;  நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்  எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?  அழகான மணம் வீசும் மலர்கள் நிறைந்த பொழில்கள் நிரம்பிய மாலிருஞ்சோலை நம்பியான எம்பெருமானுக்கு நான் நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வைப்பதாய்ச் சொன்னாளாம். நூறு தடா என்பது நூறு அண்டாக்கள். இப்போதும் ( இப்போவுமானு தெரியலையே?) மதுரையில் பெரிய கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு அண்டாவில் தான் சாதம் வடிப்பார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் சாதம் வடித்துக் காடாத்துணி அல்லது வெள்ளை கதர் வேட்டியைக் கஞ்சி வடிய வாயில் கட்டி வடிய வைப்பார்கள். அந்தப் பழக்கம் ஆண்டாள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அம்மாதிரி நூறு அண்டாக்கள் நிறைய வெண்ணெயும், நூறு அண்டாக்கள் நிறைய அக்கார அடிசிலும் படைப்பதாய் வேண்டிக்கொண்டாளாம். பல ஆண்டுகள் நிறைவேறாமல் இருந்த இந்தப்பிரார்த்தனையைப் பற்றிப் படித்த ஸ்ரீராமாநுஜர் தாம் திருமாலிருஞ்சோலை சென்ற போது அங்கே உள்ள நம்பிக்கு ஆண்டாளின் பெயரில் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் சமைக்கச் சொல்லிப் படைத்து வழிபட்டார். பின்னர் அவர் சென்றது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு. அங்கே ஆண்டாளின் தனிக்கோயிலுக்குப் போனபோது, "வாருமையா, என் அண்ணாரே!" என்ற இனிமையான குரல் கேட்க, ஸ்ரீராமாநுஜரும், கூட வந்த சீடர்களும் குரல் எங்கிருந்து வருகிறதெனப் பார்க்க. மூலஸ்தானத்தில் இருந்த ஆண்டாள் விக்ரஹம் அவர்கள் கண்ணெதிரே நடந்து வந்து நின்று, மீண்டும், " வாருமையா என் அண்ணாரே", என அழைக்க, பின்னர் புரிந்ததாம் ஸ்ரீராமாநுஜருக்குத் தாம் ஆண்டாளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவளுக்காக நிறைவேற்றிக் கொடுத்ததால் ஆண்டாளுக்கே அண்ணனாகிவிட்ட கதை! அது முதல் திருமாலிருஞ்சோலை மட்டுமில்லாமல் தென்மாவட்டங்கள் அனைத்திலும், முக்கியமாய்ப் பாண்டியநாட்டுப் பெருமாள் கோயில்கள் அனைத்திலும் இந்தக் கூடாரைவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் படும். அன்று எல்லாக் கோயில்களிலும் நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல் தான் நிவேதனம். இன்னிக்கு எங்க வீட்டிலும்! :D ஆண்டாள் பிறந்த வீட்டுக்கு இதைத் தொடர்ந்து வருவதாகவும் ஐதீகம். இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போமா? கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்= கண்ணனோ நம் வேண்டுகோளுக்கு இணங்கி வந்துவிட்டான். அவன் சாதாரணமானவன் அல்ல. கூடாரை அதாவது மனதினால் அவனைக் கூடாதவர்களையும் அவன் வென்று ஆட்கொள்ளுவான். அவர்களும் ஒருவிதத்தில் கண்ணனைத் தானே நினைக்கின்றனர். அவன் அடியார்களான நாம் பக்தியினால் நினைக்கிறோம் எனில் அவர்கள் கண்ணனிடம் கொண்ட வெறுப்பால், அவனை எவ்வாறு வெல்வது என நினைக்கின்றனர். ஆனாலும் அவர்களையும் வென்று ஆட்கொள்கிறான் கண்ணன். அதுவும் இவனோ பசுக்களையும் ரக்ஷிக்கும் கோவிந்தன். வாயில்லா ஜீவன்களை ரக்ஷிப்பவன் வாய் பேசும் நம்மிடம் உள்ள மூடத்தனத்தைக் கண்டு நம்மை வெறுப்பானா? மாட்டான்! பசுக்கள் அவனிடம் போய் எங்களை ரக்ஷிப்பாய் என்றா கேட்டன? இல்லையே? ஆகவே இவனுக்குத் தொழிலே இது தான் ரக்ஷகன் இவன். அத்தகைய கோவிந்தனைப் பாடி நாம் அடைவது வெறும் முக்தி தானா?? இந்த நாடே அல்லவோ நம்மைப் புகழும்? உண்மைதானே? எப்போவோ ஆண்டாள் எழுதி வைச்ச இந்தப் பாடல்களின் மூலம் ஆண்டாளின் புகழ் பரவித்தானே இருக்கிறது?? நாடு புகழும் பரிசு வேறு என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம். ஆனாலும் ஆண்டாள் ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறாளே? சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்=சூடகம் என்னும் கைவளை, தோள்களில் பூட்டிக்கொள்ளும் தோள்வளை, காதில் அணியும் தோடு, மேல் செவியில் போட்டுக்கொள்ளும் செவிப்பூ போன்றவையும் கால்களில் அணியும் பாடகம் என்னும் அணியும் அணிந்து கொள்வார்களாம். கண்ணன் வரலை, வரலைனு காத்திருந்தது போய்க் கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்துவிட்டது. நிவேதனமாய்ச் சர்க்கரைப் பொங்கலும் பொங்கியாகிவிட்டது. குளித்து ஆடை அணிய நல்ல பட்டாடை வேண்டுமே? ஆகவே கண்ணனிடம் ஒவ்வொன்றாய்க் கேட்கிறாள் ஆண்டாள்.  வெளிப்படையாக இவை அணிகலன்கள் என்று தோன்றினாலும் உள்பொருளாக கைவளையல் கைக்குப் போடும் காப்பாகவும், தோள்வளைகள் என்பது வைணவர்கள் தங்கள் கைகளில் குத்திக்கொள்ளும் சங்கு, சக்ர முத்திரைகளாகவும், காதில் தோடாக அணிவது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதாயும் செவிப்பூவும் இரண்டு மந்திரங்களாயும் பாடகம் என்பது புகழ்ந்து கூறும் ஸ்லோகங்களாகவும் கூறுவர். ஆகவே இத்தனையும் கண்ணன் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டாள் எதிர்பார்த்ததில் வியப்பில்லையே? ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!= அணிகலன்கள் மட்டும் போதுமா?? ஆடை வேண்டாமா? ஆயிற்று, குளித்தாயிற்று, கண்ணனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கிறோம். ஆடைகள் அணிந்து அணிகலன்கள் அணியவேண்டியதுதான் பாக்கி. கண்ணனுக்குச் சாற்றிய துணிகளே இவர்களுக்குப் பிரசாதமாய்க் கிடைத்தாலும் சரி. இங்கே வெளிப்படையாய் ஆடை என்பது உள்பொருளில் கண்ணன் ஞானத்தை ஆடையாக அவர்கள் அறியாமைக்குக் கொடுக்கவேண்டும் என்றே கேட்கிறாள். இத்தனைக்கும் பின்னரே பால்சோற்றை மூட நெய்பெய்து, மூட நெய் பெய்து என்றால், அந்தப் பால் சோறு முழுதும் முழுகுமாறு நெய்யைக் கொட்டி, பின்னே? நூறு தடா வெண்ணெய் என்றால் சும்மாவா? அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்றால் கையால் அள்ளிச் சாப்பிடவேண்டும். என்னதான் ஸ்பூன் நாகரீகம் என்றாலும் கை நம்ம கை, பிறர் பயன்படுத்த முடியாத ஒன்று. நாம் மட்டுமே பயன்படுத்துவோம் நம்ம கைகளை. ஸ்பூனெல்லாம் அப்படி இல்லை. அந்தக் கைகளால் எடுத்துச் சாப்பிடும்போது முழங்கை வழியாய் நெய்யும், பாலும் வழிய வேண்டுமாம்.  சமைச்சதும் அவ்வளவு பெரியதாக. சாப்பிடுவதும் அவ்வளவு பெரியதாக. அதும் ஒருத்தர் ரெண்டு பேரெல்லாம் இல்லை. எல்லாருமாய்க் கூடி இருந்து குளிர்ந்து, சளசளனு உற்சாகப் பேச்சுப் பேசிக்கொண்டே சாப்பிடலாம் என்கிறாள். இங்கே உட்பொருளாகப் பாலும், நெய்யும், வெல்லமும், அரிசியும் கலந்த சோறு எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு கண்ணனின் கனியமுதில் நாமும் ஒன்றாய்க் கலந்து அவனருளாலே அவனோடு இணைந்து நித்ய சூரிகளாய்க் கூடி இருப்போம், இன்புற்று மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். இவ்வாறு கூடி இருப்பதை பட்டத்திரி என்ன சொல்றார்னு பார்ப்போமா? பரமாத்மாவின் சொரூபமே சத்தியம் வேறொன்றும் இல்லை என்கிறார். ஸத்யம் ஸுத்தம் விபுத்தம் ஜயதி தவ வபுர்நித்யமுக்தம் நிரீஹம் நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகில குணகண வ்யஞ்ஹநாதார பூதம் நிர்மூலம் நிர்மலம் த்ந்நிரவதி மஹி மோல்லாஸி ந்ரிலீனம்ந்தள் நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம பரமாநந்த ஸாந்த்ர ப்ரகாஸம் பரம சத்தியமான சொரூபம் உம்முடையது. சுத்தமான விழிப்புடன் கூடிய சொரூபம். மேலும் வெற்றியும் உமது சொரூபத்துக்கே. என்றாலும் எந்தவித பந்தங்களும் இல்லாதது. எந்தவிதமான ஆசைகளோ, வேட்கைகளோ அற்றது. எவரோடும், எதனோடு ஒப்பிட்டுக்கூற இயலாத ஒன்று. என்றும் மாறாத்தன்மை கொண்டது. அனைத்துக்கும் ஆதாரமானது, முக்கியமாய் அனைத்து குணகணங்களுக்கும், அவற்றின் அடையாளங்களுக்கும் ஆதாரம் அதுவே. காரணம் ஏதும் இல்லாதது. மாசு இல்லாத அளவற்ற மஹிமை கொண்டது. பற்றற்ற ரிஷிகளின் மனதிலும், முனிவர்களின் மனதிலும் நிச்சலனமாய் உள்ளது. எந்நேரமும் நிகரற்றப் பரமாநந்தத்தில் பிரகாசிக்கிறது. இத்தகைய பரமாத்மாவின் சொரூபத்தின் சிறப்புக்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை.    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28 கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச் சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!       காட்டைக் குறிக்கும் விதமான செடிகொடிகள், பூக்கள், பறவைகள் நிறைந்த கோலம் போடலாம். []     [] கண்ணனை இங்கே குறைவொன்றும் இல்லாத கோவிந்தா என அழைக்கிறாள் ஆண்டாள்.  அதோடு உன்னை நான் சிறுபேர் சொல்லி அழைத்ததால் கோபம் கொள்ளாதே என்றும் கூறுகிறாள்.  நாம் அனைவருமே ஆண்டவனைப் பெயர் சொல்லி அழைப்பதோடு , "என்னடா, வாடா, போடா," என்றும் அழைக்கிறோம்.  சில சமயம் உரிமையாகச் சண்டையும் போடுவோம்.  அப்படித் தான் இங்கே ஆண்டாளும் சொல்கிறாள். கண்ணன் அனைத்திற்கும் சாக்ஷி பூதமாக நிற்கிறான்.  அப்படி இருந்தும் நாம் பாவங்கள் செய்கிறோமே என்றால், அவன் இருப்பை நாம் நினைப்பதில்லை.  சூதாட்டத்தின் போது துரியோதனன் மிக சாமர்த்தியமாக நான் பணயம் வைக்கிறேன். ஆனால் என் இடத்தில் என் மாமா ஷகுனி ஆடுவார் எனச் சொல்கிறான். யுதிஷ்டிரனோ எனில் கண்ணனுக்கு நாம் சூதாடுவது தெரியக் கூடாது என்றே எண்ணினான்.  அவன் மட்டும் நாமும் பணயம் மட்டும் வைக்கலாம், நம்மிடத்தில் கண்ணன் ஆடட்டும் என நினைத்து அவனை அழைத்திருந்தான் எனில்! மஹாபாரத யுத்தமே நடந்திருக்காது அல்லவா?  கண்ணனை மீறி ஷகுனியால் வென்றிருக்க இயலுமா?  அவன் தான் அப்படி என்றால் அவன் சகோதரர்களும் தங்கள் வீரத்தையும், தங்கள் சாமர்த்தியத்தையுமே நினைத்தனர்.  திரௌபதியும் கூட கண்ணனின் இருப்பை உணராமல் முதலில் அனைவருடனும் வாதம் புரிந்தாள்.  அவளைத் துகிலுரியச் செய்த துஷ்சாசனன் செயல் அத்து மீறிப் போகும்போது தான் கண்ணன் நினைப்பே அவளுக்கு வந்தது.  கண்ணா, நீயே சரணம் எனச் சரணாகதி அடைந்தாள்.  அவனும் வந்தான். நாமும் இப்படித் தான் நடந்து கொள்கிறோம்.  நம் அருகிலே நின்றுகொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் பெருமானை மறந்துவிட்டு நாம் செய்ததாக நினைக்கிறோம்.  அந்த ஆணவம் மறைய வேண்டும்.  அனைத்தும் அவன் செயலே என்பதை உணர வேண்டும். அவனே கதி எனச் சரணடைய வேண்டும்.   நம் உடல், மனம் போன்றவை நன்றாக இருக்கையிலேயே அவனைச் சரணடைந்தால் வேண்டிய சமயத்துக்கு அவன் வருவான். கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம் கூறியதே இந்தப் பாடலின் உட்பொருள்.  அனைத்து சாதனங்களையும் விட்டுவிட்டு கண்ணனைச் சரணடைந்தால் அவன் உரிய சமயங்களில் வந்து அவற்றின் பலனை நமக்குக் கொடுப்பான். அவன் இருக்கையில் நமக்குக் கவலை ஏன்? கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்= அடியவர்களுக்குக் கேட்டதை எல்லாம் கொடுக்கும் கண்ணன் இங்கே ஆண்டாளிடமும், மற்ற கோபியரிடமும் என்ன கொண்டு வந்தீர்கள் எனக் கேட்கிறான் போலும். ஆண்டாள் நாங்க என்ன கொண்டு வருவோம் அப்பா?? நாங்கள் அனைவரும் சாதாரண இடைக்குலத்துப் பெண்கள் தானே? தினம் பொழுது விடிந்தால் பாலைக் கறந்துவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு மேயவிட்டுவிட்டுக் கையில் கொண்டு போகும் கட்டுச்சோற்றை உண்போம். எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் எதுவும் அறியமாட்டோம். சாதாரணமான அறிவு கூட எங்களிடம் இல்லை. எங்களிடம் இருப்பது உன்னிடம் நாங்கள் காட்டும் அன்பு மட்டுமே. அதுவும் இந்த ஆயர் குலத்தைத் தேடி வந்தல்லவோ நீ பிறந்திருக்கிறாய்?? இருந்திருந்தும் இந்தக் குலத்தை உய்விக்கவேண்டும் என்று தோன்றி உள்ளதே உனக்கு?  அடடா, இதைவிடப் பெரிய புண்ணியம் எங்களுக்கு வேண்டுமா?? வாராது வந்த மாமணியாக நீ எங்கள் குலத்திலெ எங்களுக்கு நடுவே பிறந்து, வளர்ந்து, இருக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோமே, அதுதான் அப்பா நாங்கள் செய்த பெரும்புண்ணியம்! குறைவொன்றுமில்லாத கோவிந்தா! = அப்பா, உனக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். நீ எங்களிடையே வந்து பிறந்து எங்கள் குலத்தைப்பெருமைப்படுத்தியதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே, குறை எதுவுமே இல்லை, கோவிந்தா! பாதாளம் வரை பாயும் அறியாமையுடையோராகிய நாங்கள் உன்னால் அன்றோ குறை அறியாமல் இருக்கிறோம்! எங்கள் அறியாமையைப்போக்கி உன் கருணையால் எங்களை உய்விக்க வந்திருக்கிறாயே, இதை விடவும் பெரும்பேறு வேறு என்ன வேண்டும்? எங்களுக்கு என்ன குறை அப்பா? எதுவும் இல்லை. உன் கருணை தான் வேண்டும். ஆனால் அதையும் நாங்கள் கேட்கும் வரையில் நீ காத்திருக்காமல் அள்ளி அள்ளிப் பொழிகிறாய்.  உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் = உன்னோடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த உறவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜென்ம ஜென்மங்களுக்கும் ஒழிக்க முடியுமா? அப்பா, நீ எங்களுக்கு ரத்த சம்பந்தமான உறவு மட்டுமல்ல. நீயே நாங்கள், நாங்களே நீ. இருவரும் ஒன்றே. எங்களைப்பிறக்கப் பண்ணிய நீ தேடிப்பிடித்து வந்து எங்களில் ஒருவனாயும் பிறந்து எங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் உறவாக்கிக்கொள்கிறாய். இதைவிட வேறு என்ன வேண்டும்? அப்பா, நாங்கள் ஏதுமறியாப்பிள்ளைகளாய் இருக்கிறோம்.  அன்பினாலுன்றன்னைச் சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்! = உன்னிடம் நாங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பினாலும், பாசத்தினாலும் ஏதேனும் உன்னைச் சொல்லி இருப்போம். உன்னைச் சீண்டி இருப்போம். உன்னை ஏ, கோவிந்தா, மாடு மேய்ப்பவனே என்றெல்லாம் கூப்பிட்டிருப்போம். உன்னைக் கடிந்து பேசி இருப்போம். இதெல்லாம் உன்னிடம் கொண்ட உரிமையால் அன்றி வேறல்ல. கண்ணா, எங்கள் இறைவா, எங்களிடம் இவற்றை எல்லாம் ஒரு குற்றமாய்க்கண்டு எங்களைச் சீறி வெறுத்து ஒதுக்கிவிடாதே. எங்களை உன்னோடு சேர்த்து ஆட்கொள்வாய். நாங்கள் அனைவரும் உனக்கே உரியவர்கள். உன் சொந்தம், உன் உடமை, உன் சொத்து. ஆகவே எங்களுக்கு மோக்ஷத்துக்கான வழியைக் காட்டி அருள்வாய். இதே மோக்ஷத்தை பட்டத்திரியும் வேண்டுகிறார். அனைத்து உயிர்களிடமும் இருப்பது பரம்பொருளே என்றே அவரும் கூறுகிறார். த்வத் பாவோ யாவதேஷு ஸ்ப்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம் குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம் த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிம்பி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ; தஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம் ப்ரபுவே, புழு, பூச்சிகளாகட்டும், மிருகங்களாகட்டும், மனிதர்களாகட்டும், மிக மிகத் தாழ்ந்த நிலையில் உள்ள உயிர்களாகட்டும், மிக மிக உயர்ந்த நிலையில் உள்ள உயிர்களாகட்டும், அனைத்தும் தங்கள் அம்சமே. இந்த பாவம் எனக்குள்ளே விளங்கித் தோன்றவேண்டும். ப்ரபுவே. எல்லா ஆத்மாக்களும் ஒன்றே. இந்த மெய்யறிவு எனக்கு ஏற்பட அருள் புரியவேண்டும். அந்நிலையில் "நீரும் நானும் ஒன்றே; வெவ்வேறில்லை" என்னும் வேறுபாடற்ற உணர்வோடு நான் இருத்தல் வேண்டும். இவ்விதம் ஆரம்பிக்கப் படவேண்டும் என்னுடைய பாகவத தர்மம். இதற்கு அழிவில்லாமல் காக்கவேண்டும். இத்தகையதொரு மனோநிலை எனக்கு நிலவ வேண்டிய பக்தி மார்க்கத்தைக் காட்டி அருள வேண்டும்.     மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 29 []   சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது. இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம் மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!                     []                                                                                                                                            [] []         கண்ணனோடு ஐக்கியம் அடைவதை இங்கே சொல்வதால் நம் இருதயவாசியான கண்ணனைச் சுட்டும் விதமாக இருதய கமலம் கோலம் போடலாம்.  எனினும் வாசலில் அனைவரும் மிதிக்கும் இடத்தில் பலரும் போடத் தயங்குவார்கள் என்பதால் வீட்டில் பூஜையறையில் போடலாம்.    வாசலில் மேலே ஏழு புள்ளி, ஏழு வரிசையில் கொடுத்திருக்கும் கோலம் போடலாம். தாமரைப்பூக்கள் கொடியோடு வரைந்து வண்ணம் தீட்டலாம். இந்தப் பாடலின் பொருளாவது:  கண்ணனின் பொற்பாதங்களை வணங்க வந்திருக்கும் காரணம் என்னவெனில் மாடுகளை மேய்க்கும் குலத்தில் வளர்ந்த நீ, நாங்கள் செய்யும் சிறு விரதத்தை ஏற்றுக் கொள்வாய்!  உன்னை ஆராதித்து நாங்கள் செய்து வந்த இந்தச் சின்ன விரதத்தைக் கண்டு கொள்ளாமல் போய்விடாதே! உன்னுடைய பரிசுகளான பாடகம், சூடகம் போன்ற பொருட்களுக்காக மட்டும் நாங்கள் விரதம் மேற்கொள்ளவில்லை.  இந்தப் பிறவி மட்டுமின்றி இனி வரப் போகும் பிறவிகளிலும் நாங்கள் உன்னை மறக்காமல் உனக்கு உறவினர்களாகவே பிறக்க வேண்டும்.  உனக்கே நாங்கள் எங்கள் தொண்டுகளைச் செய்து வருவோம். கண்ணா!  எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக் கொண்டு உன்னோடு எங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு எங்களிடம் இருக்கும் மற்ற உலக ஆசைகளை அடியோடு அழித்து ஒழித்துவிடுவாய்! பெருமானின் திருவடிகளையே அடைக்கலம் எனச் சரணாகதி அடைந்தோர்க்கு முக்தி நிச்சயம் என்பதே இந்தப் பாடலின் உட்பொருள்! சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்= கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்தாகிவிட்டது. கண்ணனைக் கண்ணார, மனமாரக் கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் கண்ணனிடம் கேட்பதற்கு வெறும் அணிகலன்களும், ஆடைகளும் மட்டுமா?? இல்லை, இல்லை அவை எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் ஆடம்பரமாக, அத்தியாவசியமாய் இருக்கலாம், நமக்கு வேண்டியது அதுவல்லவே/  அதிகாலையிலேயே கருக்கலிலேயே எழுந்து, தோழிகளையும் அழைத்துக்கொண்டு நீராடி நோன்பு வழிபட்டு, இப்போது நோன்பையும் முடித்துவிட்டு உன்னையும் கண்டு சேவித்துக்கொண்டோம் கண்ணா, உன் பொற்றாமரை அடியே எங்களுக்குக் கதி. வேறெதுவும் இல்லை அப்பா. அந்தப் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் என்ன தெரியுமா கேள் கண்ணா! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.= அப்பா, எங்களைக் கடைத்தேற்றவே இந்த ஆயர் குலத்தில் நீ பிறந்தாய். பசுக்களை நாம் ரக்ஷிக்கிறோமா, அவை நம்மை ரக்ஷிக்கிறதா? ஆயர்கள் எவருமே பசுக்களை மேய விட்டு அவற்றின் வயிறு நிரம்பாமல் உணவு உண்ண மாட்டார்கள். பசுக்களை அப்படி ரக்ஷிப்பார்கள். அத்தகைய குலத்தில் பிறந்து நீ எங்களை ரக்ஷித்து ஆட்கொள்ளாமல் இருப்பாயா? எங்களை உன்னுடன் ஐக்கியம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதுதான் நடக்கும் அப்பா, வேறு எதுவும் நடவாது.  இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு= கோவிந்தா, கோபாலா, நாங்கள் வந்தது வெறும் பறை என்னும் வாத்தியத்துக்காக மட்டும் அல்ல, எங்களுக்குத் தேவை மோக்ஷம், முக்தி. அதுவும் எப்படிப்பட்ட முக்தி?? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும், என்றைக்கும், எப்போதும், எந்தப் பிறவியிலும் உன்னோடு நாங்கள் உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!= உறவினர்களாகவே இருப்போம். நீ வந்து எங்கள் குலத்தைத் தேடிப் பிறந்துவிடு அல்லது எங்களை உன் குலத்தில் பிறக்கச் செய். உன்னைத் தவிர வேறொருவருக்கு நாங்கள் எந்தவிதத் தொண்டும் செய்ய மாட்டோம். உனக்கே நாங்கள் அடிமையாக இருப்போம். ஆகவே எங்களிடம் இருக்கும் மற்ற ஆசைகளை எங்களிடமிருந்து விட்டொழிக்க வேண்டி, எங்கள் மண்ணாசை, பொன்னாசை போன்ற எந்தவிதமான இவ்வுலக ஆசைகளும் எங்களிடம் ஒட்டாதபடிக்கு எங்களை மாற்றி அருள் புரிவாய் கண்ணா. எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம், நின்னருளே வேண்டும். உனக்கே நாங்கள் என்றென்றும் அடிமை. இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்த்தால்,பகவானின் சொரூபமே தியானிக்கத் தக்கது என்கிறார். பகவானின் செளந்தர்யமே நம்மை மகிழ்ச்சி பொங்க வைக்கும் என்கிறார். மேலும் அவர் பகவானின் செளந்தர்யத்தை எவ்விதம் வர்ணிக்கிறார் என்றால் ஸூர்யஸ்பர்த்திகிரீடம் ஊர்த்த்வதிலக ப்ரோத்பாஸி பாலாந்தரம் காருண்யாகுலநேத்ரம் ஆர்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம் கண்டோத்யந் மகராப குண்டலயுகம் கண்டோஜ்ஜ்வலத் கெளஸ்துபம் த்வத்ரூபம் வநமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே பகவானின் திவ்ய மங்கள சொரூபத்தைத் தியானிப்போம். அதில் அடங்கி இருக்கும் இனிமையான செளந்தர்யத்தை வர்ணிக்க வார்த்தைகளால் இயலாது. சூரியனைப் போல் பிரகாசிக்கும் கிரீடமும், நீண்ட கஸ்தூரித் திலகமும், அழகான அகன்ற நெற்றியும், அருள் பொழியும் செந்தாமரையை நிகர்த்த கண்களும், அன்பான புன்னகையும், நீண்ட நாசியும், காதில் போட்டிருக்கும் மகரகுண்டலங்களின் ஒளியானது கன்னங்களில் பட்டுப் பிரகாசிக்கும் அழகும், கழுத்தில் கெளஸ்துபமணியும், வனமாலையும், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு உள்ள மார்பும் அணிந்த பகவானின் திருவடிகளைத் தியானிப்போம். அது ஒன்றே நம்மைக் கடைத்தேற்றும்.  மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30 []   வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப் பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!       []      [] []     [] இன்று கடைசி நாள்.  போகிப் பண்டிகை.  ஆகவே படிக்கோலம் என்று சொல்லப்படும் மணைக் கோலம் போடலாம். விதவிதமாக அழகு செய்யப் பெண்களுக்குச் சொல்லியா தர வேண்டும்? வங்கம் என்றாலே கடலையே குறிக்கும் சொல்.  இங்கே அது பாற்கடலைக் கடைந்ததைக் குறிக்கும். கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால் கேசவன் எனப் பெயர் பெற்றான் கண்ணன்.  "மாதவன்" என்னும் பெயருக்குப் பல அர்த்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  "மா"என அழைக்கப்படும் ஶ்ரீ ஆகிய தாயாரின் கணவன் என்னும் பொருளிலும்,  மது வித்தை மூலம் உணரப்படும் பரம்பொருள் மாதவனாக ஆதி சங்கரராலும்,  மௌனம், தியானம், யோகம் ஆகியவற்றால் உணரப்பட்டு சித்தம் போன போக்கில் போகாமல் நிலைநிறுத்த உணரப்படுபவனாகப் பராசர பட்டராலும், "மா" எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவனாக ஹரி வம்சத்திலும் அறியப்படுகிறது. இத்தகைய மாதவனை, கேசவனை அழகிய திருமுகத்தை உடைய கோபியர்கள் ஆகிய தாங்கள் அனைவரும் அவன் திருவடிகளைச் சரணம் என்று சென்று அவனை தரிசித்து இறைஞ்சி பாவை நோன்பின் விரத பலன்களைப் பெற்று வந்த விபரங்களை ஶ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பட்டர் பிரான் ஆன பெரியாழ்வாரின் செல்வத் திருமகள் ஆன கோதையாகிய நான் சொன்ன இந்த இனிய தமிழ்ப்பாடல்கள் முப்பதையும் தவறாமல் இந்த தனுர் மாதத்தில் பாவை நோன்பு நூற்றுச் சொல்லுபவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் அழகிய உயர்ந்த அகன்ற தோள்களை உடைய செந்தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய திருமாலின் அருள் பெற்று அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.        மார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம். வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று, அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப் பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா?? இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.  சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூடிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது. இதைத் தினமும் சொல்லலாம். மார்கழி மாசம் எல்லாருமே திருப்பாவை பொருள் எழுதுவார்கள் அல்லது அதை ஒட்டி ஏதேனும் எழுதுவார்கள். அது வேண்டாம்னு இத்தனை வருஷமா எழுதாமல் வைத்திருந்தேன். இப்போ நாராயணீயம் தினம் அரை மணி படிக்கிறதாலே அதைலிருந்தும் சில பாடல்களைச் சொல்லலாம் என்று நினைத்தபோது இந்தத் திருப்பாவையையும் போட முடிவு செய்து எழுதினேன். நாராயணீயத்தில் பட்டத்திரி வேண்டுவதாவது "அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா: ஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத் த்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷூ ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந ஸ்ப்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா மாயுராரோக்ய ஸெளக்க்யம் ஏ பரமாத்மா, விஸ்வத்துக்கெல்லாம் அதிபதியே! உனது சரித்திரத்தையோ பிரபாவங்களையோ முழுதும் நான் அறிந்தேன் இல்லை. ஆகவே இங்கு நான் சொன்னதில் தவறு இருந்தால் பொறுத்து அருளவும். என் வர்ணிப்பு சரியாய் இல்லை எனில் மன்னித்து அருளவும். ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ள இந்த ஸ்தோத்திரத்துக்கு உமது அனுகிரஹம் உதவட்டும். வேதப்ரமாணமான லீலா அவதாரங்களின் ஸ்துதிகளே இந்த ஸ்தோத்ரத்தை வளர்த்து வந்தது. நாராயணனைப் பற்றியதாலும், நாராயணனாகிய நான் எழுதியதாலும் இது நாராயணீயம் என்றே அழைக்கப்படும். இதைப் படிக்கும் உன் பக்தர்களுக்கும், இந்த அகில உலகில் உள்ள பக்தர்களுக்கும் நீண்ட ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்யத்துடன் கூடிய தேகத்தையும், மற்றும் எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் தந்து அருளட்டும்.  நாராயணீயம் ஸ்லோகம் சம்ஸ்கிருதத்தில் போட நினைச்சுப் போட முடியவில்லை. சரியான ஃபாண்ட் கிடைக்கவில்லை. திடீர்னு ஆரம்பிச்சதாலே சில தளங்களில் சென்று தரவிறக்க முடியவில்லை. நான் எழுதி இருப்பதில் சில தவறுகள் இருக்கலாம். அவை என்னாலேயே ஏற்பட்டவை. மேலும் சொல்லி இருக்கும் பொருளும் பொதுவான பொருளையே எடுத்துக்கொண்டேன். மூலப் பொருளைச் சிதைக்காமல் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே. திருப்பாவை உரைக்குத் துணை செய்தவர்கள்  உபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள். உபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.    FreeTamilEbooks.com மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/    Supported by  கணியம் அறக்கட்டளை - http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை [] rect224   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்   - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.   []