[] 1. Cover 2. Table of contents மருவக்காதல் கொண்டேன் மருவக்காதல் கொண்டேன்   அஹமத் இப்ராஹிம்   ahmdibarhim02@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/maruvakadhal_konden மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/maruvakadhal_konden This Book was produced using LaTeX + Pandoc தொடர்புக்கு Email : ahmdibarhim02@gmail.com Facebook : https://www.facebook.com/profile.php?id100052841227167 பதிப்பு  : மே 2021 மருவக்காதல் கொண்டேன் என்பது பாரதியின் கவிதை வரிகளாகும். ‘மீளாக்காதல் கொண்டேன்’ என்று இதன் பொருள். ஒரு தற்போதைய காதல் , அவர்களின் குடும்பம், மற்றும் 90’களின் கல்லூரி வாழ்க்கை என நிறைய கிளைக்கதைகள் கொண்ட குடும்ப தொடர்கதையின் முழு தொகுப்பு காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான மொழி.  பழகிய மாத்திரத்திலேயே மருவக்காதலா மன்மதக்காதலா என்றெல்லாம் சொல்லி விட முடியாது. பல காதல்களை சொல்லிய இக்கதையில் கை கூடாத ஒரு காதலையும் எடுத்து எழுதுவதை எண்ணி துவண்டு போய் நின்றேன்.  நினைவுகளை விட காதலில் பொக்கிஷம் உண்டோ ? அதனால் நான் அதையும் முழு மனதாக எடுத்துக்கொண்டேன்.   உரைநடையில் கதை சொல்வது சிறுகதையில் எனக்கு பிடிக்கும். ஆனால் புதினத்திற்கு அது வேண்டாம் என்று தான் எழுத தொடங்கினேன். இருந்தும் முதல் சில பாகங்களில் என்னால் அவற்றை தவிர்க்க முடியவில்லை இருந்த போதும் பிற பாகங்களில் அதை முடிந்த அளவிற்கு சுருக்கி கொண்டேன்.  மித்ரா அருண் , பத்மா திலக் , பத்மா ஆதித்யா , லீலா பாட்டி ஸ்ரீராம் தாத்தா என்று பலர் இக்கதையில் நம் வாழ்வியலோடு ஒன்றி வந்தாலும் மீசைக்காரர் கதாபாத்திரமும், பத்மாவின் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எந்நிலை வந்தாலும் சிரிப்பை தன் வசம் வைத்து இருக்கும் மீசைக்காரர் , ஆண் துணை இல்லாமலும் வாழ்க்கையை நடத்தலாம் என்று வாழும் பத்மாவும் இக்காலத்திற்கு தேவையானவர்களே.   வாழ்க்கையை நான் அவ்வாறே  பார்க்கிறேன். பொறுமையோடு படிக்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து ஏதேனும் ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி கொள்வீர்கள் என நம்புகிறேன்.  வாசகர்கள் , விமர்சகர்கள் , நண்பர்கள், நலவிரும்பிகள்  அனைவருக்கும்  அள்ளித்தருகிறேன் நன்றி ! அஹமத் இப்ராஹிம் எனக்குள் இருக்கும் கற்பனை திறனை வெளிக்கொணர்ந்த என் உடன்பிறவா இரத்தம் அமீராவிற்க்கு சமர்ப்பணம். அத்தியாயம்-1 “ஃஉப்” என்ற முகத்துடன் நடு வீட்டில் உட்கார்ந்து இருந்தான் அருண். கடை தெருவிற்கு போய் விட்டு வந்தவள் மகனின் செருப்பை கண்டதும் சந்தேகத்துடன் உள்ளே நுழைந்தாள். “என்னடா அருண் கிரிக்கெட் மேட்ச் இருக்குனு சொன்னே? வழியில மகேந்திரன பாத்தேன் அவன்மட்டும் போறான். நீ போகலையா ?” “தெரியலடி பத்மா . நானும் நாலஞ்சு தறோம் கேட்டுட்டேன் உள்ள வர்றப்ப ‘அம்மாவே எங்கன்னு கேட்டவன்’ அதுக்கு அப்புறம் வாயே திறக்கல நீயே என்னனு கேளுடி” என்றாள் அத்தை லீலா. “என்ன நடந்து போச்சுன்னு இப்ப இப்படி உட்கார்ந்து இருக்க?” என அருகே வந்து தோளில் கை பதித்தவளை, “ஹ்ம்ம்” என்ற கோபம் கொண்ட மூர்க்கசப்தத்துடன் உதறி விட்டான். அனைத்தையும் பார்த்துவிட்டு பேப்பர் படித்து கொண்டிருந்த மாமா ஸ்ரீ ராமை நோக்கி ‘என்னவென?’ கைகளை அருண் தலை மேல் பதித்து கேள்வி எழுப்பினாள் பத்மா! தனக்கு எதுவும் தெரியாது என்பதை இரு கரம் கூப்பி மேலே கை காட்டி மீண்டும் படிப்பை தொடர்ந்தார் மாமா. “சரிவா உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வந்துருக்கேன்” என்றாள். “சாப்பிட போற நேரத்தில எதுக்கடி ஜூஸ்! அவன் சாப்டட்டும் அப்புறம் குடு!” தலையை வருடி நின்றவளை உதறிவிட்டு எழுந்து சென்று வீட்டின் பின்வாசலில் வந்து அமர்ந்தான் அருண். “அத்தை அவனை நான் பாத்துக்றேன். நீங்களும் மாமாவும் ரெடி பண்ணிட்டு சாப்டுங்க நான் அப்புறம் சாப்பிடறேன்” “என்னமோ பண்ணுடி. வர வர அருண் சரி இல்ல!காலேஜ்ல போன் பண்ணி கேளு. சேர்ந்து நாலு மாசம் கூட ஆகலை என்னமோ பிரச்சினை போல” “சரி.நான் கேட்கிறேன் நீங்க சாப்பிட போங்க” என்றவள் அருணை நோக்கி நடந்தாள்… “என்ன ஆச்சுடா ஏன் இப்படி இருக்க? பாரு டீ-சர்ட் பின்னால அழுக்கேரி  எழுத்தெல்லாம் மறைஞ்….” “கொஞ்சம் என்ன தனியா விடுறியா நீ! போவேன் அந்த பக்கம்” என சத்திமிட்டான். “ஏன் இப்படி கத்துற.  என்னை எங்கே போக சொல்ற ?” “அதான் ஒருத்தன் பைக்ல விட்டுட்டு போரான்லே அவனோட போ” “அறைஞ்சனு வை!” “அடி. நல்ல அடி அதுக்கு முன்ன அவன் யாருன்னு சொல்லு. ஒரு மாசமா நீயும் அவன் கூடவே தான சுத்திட்டு இருக்க. நான் ஏதும் கேட்டனா?” “அவன்,இவன்னு சொன்ன மரியாதை கெட்டுரும் பாத்துக்க.” “அப்டித்தான் சொல்வேன். யாருன்னு தெரியதவனுக்கு சப்போர்ட் பண்ணி என்ன அடிக்க வேற வந்துட்டல்ல நீ?” சத்தம் அதிகமாக மாமா வந்து விட்டார் “பத்மா! நீ உள்ள போமா.எதுக்கு சின்ன பையன் முன்னே கண்ண கசக்கிட்டு இருக்க” “உங்களுக்கு என்ன தாத்தா நான் எங்க அம்மாகிட்ட சண்டை போடுறேன் நீங்க போய் உங்க வேலைய பாருங்க” “டேய் என்ன பெரியவங்க முன்னே மரியாதை இல்லாம பேச்சு” “உனக்கு என்ன என்கிட்டல்ல கேக்குறாங்க.  ஒரு மாதிரியா இருக்கும்மா . மொதல்ல அது யாரு! நீ எதுக்கு அந்த ஆளுகூட சுத்திட்டு இருக்க ?” கண்ணை கசக்கியவள் தொடர்ந்தாள் “இதோ நிக்குறாரே உன் தாத்தா. அவருகிட்ட கேளு சொல்வாரு” என விசும்பி கொண்டே நிற்க சொல்லியும் காது கேளாதவளாக மாடிக்கு சென்று விட்டாள் . “உனக்கென்ன  அருணு! அது யாருன்னு தெரியனும். தெரிஞ்சா சந்தோசமா. அவர் தான் உன் அம்மாவ ரெண்டவதா கட்டிக்க போறவர் போதுமா! இப்ப சந்தோஷமா! இன்னும் சொல்ல போன உனக்கு அப்பாவா வர போறவரர்” “ஹா!!!” என கோபத்தின் உச்சியில் அலறியவன் ஆத்திரத்தில் சமையல் அறைக்கு ஓடி கத்தியை எடுத்து “அந்த ஆளா, எனக்கு அப்பா.சொல்லு அந்த ஆளு கிழவன் மாதிரி இருக்கான் நீயும் சப்போர்ட் பண்றியா”. “போடா!உங்கம்மா மட்டும் என்ன குமரியா , காய்கறிலாம் நறுக்கிட்டோம் கத்திய வச்சுட்டு வந்து சாப்பிட உட்காரு?” இன்னும் கோபம் அதிகமானவன் மா என மாடிக்கு சென்றான். பத்மா உன் மகன் கத்தியோட வரான் பாரு என கீழிருந்து குரல்… “என்னங்க இதுல என்ன விளையாட்டு! ஆத்திரத்தில குத்திட்டானா என்ன பண்ணுவிங்க?” “அடி போடி இவளே! அது உன்னை விட சுமாரா தான் அறுக்கும். நீ சோத்தை போடு. பத்மாகிட்ட போனா அடங்கிருவான்.” மேலே வந்தவன் அம்மாவை நோக்கி வேகமாக வந்தான்… மா! மா என அருகில் வந்தவன் கத்தியை போட்டுவிட்டு முன்னரை விட சத்தமாக தாத்தாவை அழைத்தான். மயங்கிய நிலையில் இருந்தவளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்தனர். “வாய வச்சுட்டு சும்மா இருந்துருக்கலாம்லடா அருண்!” என பாட்டி ஒரு பக்கம், பதற்ற விழிகளில் தாத்தாவின் கண்கள்,மனமோ மருத்துவர் என்ன சொல்ல போகிறார் என்பதில் கவனம் இருந்தது. வெளிய வந்த மருத்துவரை நோக்கி “சார் என்ன ஆச்சு?என்ன ஆச்சு?” என பதறினார். “சீ” என புன்முறுவலுடன் சொன்னார் டாக்டர் .“மிஸ்டர் நீங்க யாரு பேஷண்ட்க்கு?” “டாக்டர் நான் அவளோட மாமா! சொல்லுங்க டாக்டர்  என்ன ஆச்சு என் மருமகளுக்கு?” (எப்போதும் பக்குவாமக இருக்கும் அவரின் பேச்சு பதறியதை கவனித்து இருந்தனர் அருணும், பாட்டியும்) எதுக்கு இவ்ளோ எமோஷன் . “ஷி இஸ் ஆல் ரைட். காலைல சாப்பிடல போல,பிரஷர் லோ ஆகிருக்கு இன்ஜெக்சன் போட்ருக்கேன். டிரிப் முடிஞ்சதும் கூட்டிட்டு போங்க” என தாத்தா கையின் தசையை அழுத்திவிட்டு சென்றார். ‘ஹப்பா’ என  மூவரின் மூச்சும் திரும்பி வந்தன. உள்ளே சென்றவர்கள் பத்மாவிற்கு டியூப் வழி சார்ஜ் ஏறி கொண்டிருந்ததை பார்த்து அருகில் இருந்தனர். “என்னடி ஆச்சும்மா டயத்துக்கு சாப்பிடாலனா எப்டிம்மா ! என்னமோ ஏதோணு பயந்து போய்ட்டோம், உங்க வீட்டுல கேட்டா என்ன பதில் சொல்லுவோம்” என கூந்தலை வருடினாள். இடது கை இடுப்பின் ஓரம் இருந்த நாற்காலியில் அமர்ந்த அருண் தன் அம்மாவின் கைகளை தலை மேல் வைத்து பெட்டில் தலையை புதைத்தான் . பத்மாவின் பார்வையோ தரையை நோக்கியும்,கண்ணின் கீழ்  துளிவைரம் போன்ற தேங்கி நின்ற கண்ணீருடன் . உடல் மட்டும் அங்கேயும் மனது முழுக்க 2000ல் பி.காம் முதல் வருட அட்மிஷன் அன்று நின்று கொண்டு இருந்த விருதுநகர் பஸ்  நிலையத்திலும்…     அத்தியாயம்-2 மருத்துவமனையில் இருந்து மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் நால்வரும்.   அனைவரும் சாப்பிட உட்கார அமர்ந்து கொள்ள பத்மா மட்டும் தனியாக விலகி நின்றாள். " பத்மா வா வந்து உக்காரு. அத்தையும் நானும் கூட பாதிலேயே எந்திச்சுட்டோம் சேர்ந்து சாப்பிடலாம் இன்னைக்காவது" “இல்ல!மாமா எனக்கு பசிக்கல நான் அப்புறம் சாப்பிடுறேன்” சொல்லியவாறே மேல் மாடிக்கு ஏறி சென்றாள். “மாத்திரை போடணும்லடி வெறும் வயித்துலயா போடுவ” “அருண் நீ உட்காருடா” என்றார் ஸ்ரீராம். “இல்ல தாத்தா நானும் அப்புறம் சாப்பிடுறேன்” “சொன்னா கேளு மணி முணு ஆச்சு உக்காரு” என்று கட்டாயப்படுத்தி அமர வைத்தார். “குடுங்க நான் மேல போய் சாப்பிடுறேன்” என மேலே அம்மா முன் வந்து இருந்தான். “மா! ஊட்டி விடு !” வாடிய முகத்தோடு நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் தெரிந்தது தாய் பாசம். தட்டை  வாங்கியவள் ’பெரிய மனுசன் மாதிரி கேள்வி கேட்க வயசு வந்தாச்சு" என் மகனுக்கு என  ஒரு கவளைத்தை எடுத்தாள்.அதற்குள் வீட்டிற்கு வந்தார் திலகர். “வாங்க தம்பி” “நல்லா இருக்கீங்கலா ?” “நான் நல்ல இருக்கேன் தம்பி. பத்மா மேல இருக்கறா” “டாக்டர் என்ன சொன்னாங்க ?” “பிரஷர் லோ! காலையில சாப்பிடலையாம் . டிரிப் போட்டு மாத்திரை குடுத்து இருக்காங்க” மேலே சென்றவன் ஒரு வித தயக்கத்தோடு அருணை நோக்கினான். “உள்ள வாங்க திலக்” என சிரித்தவள். “உட்காருங்க. டீ காபி ஏதும் கொடுக்க சொல்லவா” “இல்ல!இல்ல வேணாம்” “நீங்க இருங்கம்மா நான் கீழ போய் தாத்தா கூட சாப்பிடுறேன்” . இனம்புரியாத உணர்வு அவனுக்குள் இருந்தாலும் , வயது பக்குவம் லேசாக எட்டி பார்த்தது. மின்விசிறி சத்தம் மட்டும் அவ்விடம் கேட்க, இருவரும் புன்னகைத்து கொண்டனர். யாருமில்லா அறையிலும் திலகரின் கூச்சம். இருக்கையில் பாதி நிலையில் அமர்ந்திருந்தான். கைகள் படுக்கையின் ஓரத்தில் விரலால் கோலம் போட்டு கொண்டு இருந்தன. “சோ” என்று இழுத்தவள் “சாப்டியா!” “ம் அப்பவே.” “உனக்கு யார் சொன்னா ?” ’உங்க மாமா தான்" “அவர் பேசுறத கேட்டு பயந்து போய் ஓடி வர்றேன் என்ன ஆச்சோன்னு” “பயந்து போயா!” “ஆமா! பயந்து போய்” “நீ பயந்த!” “ஆமா!” “கிட்டவாயேன்” “எதுக்கு?” “ச்ம் கிட்ட வா! சொல்றேன்” “கைய குடு” “ஏய் என்ன பண்ற?” முழுக்கை சட்டையின் கை பட்டனை திறந்தவள் “பத்மா” என பச்சை குத்தபட்டு இருந்ததை பார்த்தாள். “இன்னும் அழியலயா? இது நியாபகம் இருக்கா உனக்கு திலக்?”  “எப்படி மறக்கும்” “2001,10ம் தேதி வியாழக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு உன் ஊர் திருவிழால குத்துனேன்.அந்த ஹிந்திகாரன் கூட உன்னயும் குத்த சொன்னான்ல” ஆண்டு 2000 மாதம்  மிட் புதிதாக வரும் மாணவர்களை ராக்கிங் செய்ய ஒரு கூட்டம், அட்மிஷன் அன்று இன்டெர்வல் கேப்பில் பத்மாவை சந்தித்த திலக்கின் கண்கள் அவளை தேடி ஒரு பக்கம், என ஆங்காங்கே சீனியர்ஸ் நின்று கொண்டு இருக்கின்றனர். திலக் மட்டும் வருங்கால பாஸ்வேர்டை தேடியவனாய்…. புதிதாக எடுத்து வைக்கும் மழலையின் நடை போல் முதல் நாள் கல்லூரிக்குள் நுழைகிறாள் பத்மா. “ஹே இங்க வா…” தலையில் ஒற்றைக்காலில் ரோஜா,நெத்தியில் சந்தன பொட்டு பாதி செ.மீ,மூச்சு விட முடியாதபடி கட்டி அணைத்து இருக்கும் நோட் “எந்த ஊரு நீ என்றான் பாண்டி?” “திண்டிவனம்” “டேய் மச்சான் இங்க பாருங்கடா வெளியூர்ல இருந்து இங்க வந்து படிக்கிறாளாம். அதுவும் இந்த பீத்த காலேஜ்ல.கேட்டியா” திலக் என்றான் . காலை வெயிலிலும் உறைந்து போய் நின்ன திலக்,அவனின் கன்றாவி ரியாக்சன் காட்டி குடுத்தது  பாண்டிக்கு. “அது சரி என்ன டிப்பார்ட்மெண்ட்?” என்றான் பாண்டி “பி.காம்” என்றாள் பத்மா “அட நம்ம டிப்பார்ட்மெண்ட்” “வெளியூர்ன்னு சொன்னே ஹாஸ்டல் இல்லையா நீ?” “இல்லை. அக்கா வீட்ல தங்கி இருக்கேன்” “எங்க இருக்கு அது” ’அல்லம்பட்டி அண்ணா." “டேய் அலெக்ஸ் உங்க பக்கத்து ஊர்கார பொண்ணுடா” “டேய் அவ திண்டிவனம்” என்றான் கணபதி “இல்ல இல்ல அல்லம்பட்டி” என்றான் அலெக்ஸ் “ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க நீ சொல்லுமா அல்லம்பட்டியா?திண்டிவனமா?” இடைமறித்த திலக் “நீங்க போங்க” என்றான். “ஏய் திண்டிவணம் போகத இரு” அலெக்ஸ்-“அல்லம்பட்டின்னு கூப்பிடுடா நின்னுக்கும்” “நீ போமா கிளாஸ்க்கு டைம் ஆச்சு” “டேய் என்னடா இவன்” “அவளை விட்ரா பாண்டி.அந்த ஒரு சோடா புட்டி சைக்கிள்ள வாரான் அவன பிடி” ரிஷப்ஷன் வரை திரும்பாமல் சென்று கொண்டு இருந்தவளை பார்த்து கொண்டே இருந்தான். “ம்ஹும்!திரும்பவே இல்லை” மெளனமாக அவனுடைய சைக்கிள் மேல் அமர்ந்து எதையோ யோசித்து கொண்டே இருந்தான். நண்பர்கள் அனைவரும் புதிதாக வருவோரை ரேக்கிங் செய்து கொண்டு இருந்தனர். பாண்டிக்கு மட்டும் விஷயம் புரிந்தது. “என்ன மச்சான் ஏழா இல்ல எட்டா” “என்னதுடா ?” “அல்லம்பட்டி” “எப்டி மச்சி” “யாய்..” என திலக் சட்டை பையிக் கை வைத்தவன் காசு இருப்பதை உறுதி செய்து கொண்டான். “டேய் டவுசர் போட்டதுல இருந்து ஒண்ணா சுத்துறோம் டை கட்டினா மாறிருமா என்ன?அதெப்படிடா பார்த்தவோனே லவ்!” சத்தம் கேட்டதும்  “என்னது லவ்வா” என அலெக்ஸும்,கணபதியும் பேரும் ஓடி வந்ததனர்  .நாலும் கடைசி பெஞ்ச் கன்றுகுட்டிகள்,திலக் மட்டும் ராஜா வீட்டு க.கு “தே சீ போங்கடா இது மட்டும் உங்க காதுல கேக்குதா! வா மச்சா நாம கேண்டின்ல போய் பேசலாம் இவனுங்க கிடக்கிறாங்க” என இழுத்து சென்றான் பாண்டியும், திலக்கும் சிறுவயது முதலே நண்பர்கள். எந்த அளவுக்கு என்றால் கேண்டின் சென்றால் திலக் தான் பில் கட்டனும் என்று தெரிஞ்சு செல்கிறான் அல்லவா . அதான்  ஃபாண்ட். திலக் மாநிறம்.வசதியான வீட்டு பையன் என்பதால் கல்லூரிக்கு சமயத்தில் பைக்கில் கூட வருவான் . சொத்து நிறைய இருந்தாலும் பெயருக்கு பின்  டிகிரி வேணும் என படிக்கிறான். பாண்டி எல்லாவற்றிலும் நேர் எதிர். என்ன ஒன்று அவனை பார்த்தால் மட்டும் அவன் வாங்கும் ரேஷன் கடை பெயர் கேக்க தோணும். ஃபேட் போற வழியில் சீனியர் பொண்ணுங்களிடம் மாட்டிய பத்மாவை பார்த்து நின்றான் திலக். “டேய் பாண்டி போய் அவள விட சொல்றா!” “மச்சா அங்க நிக்குறது அலெக்ஸ்,கணபதி இல்லடா. சூனியக்காரி சுபத்ரா நம்ம தான் அவளுக்கு ஜுனியர் பேசாமா வா போலாம்.” “அதெல்லாம் இல்ல நான் போய் காப்பத்துறேன்” என சட்டையை மடக்கி விட்டு நடந்தான் போ மச்சான் போ..பெல்ட் போட்டுருக்கியா? போன வருஷம் பேண்ட கழட்டி விட்டவ அவ. “போன வேகத்தில் திரும்பியவன்… பேசாம நாம இங்க நிப்போம் வர்றப்ப அவகிட்ட ஒன்னு சொல்லணும்” “என்னடா சொல்ல போற?” “வெயிட் அண்ட் சி” பின்னப்பட்ட கூந்தலை முன்னால் மூக்கின் மேல் போட்டு  “குட் மார்னிங்” என தலையை வேகமாக நிமிற  ஜடையை  பின்னால் கொண்டு சொல்ல வேண்டும். அவ்வாறாக அங்கு இருந்த ஆறு பேருக்கும் “குட் மார்னிங்” வைத்து விட்டு சென்றாள். அந்த ஒற்றைக்கால் ரோஜா இப்போது தரையில் கால் வெட்டுப்பட்டு விழுந்தது, சந்தன பொட்டு கொஞ்சம் அழிந்த நிலையில்  . விளையாட்டாகவே அதை எடுத்து நடந்த பத்மா திலக்கை நெருங்கினாள்,சாலை கடப்பது போல் கடந்து விட்டாள். ஆனால் திலக் பேசவில்லை. திலக்கை ஒரு உளுக்கு உளுக்கியவன் “அவ போறாட ஏதோ சொல்ல போறேன்னு சொன்னே சீக்கிரம் போடா” என்றான். நினைவு வந்த கோமா நோயாளி போல் விழித்து கொண்டு சென்றவன் “ஏங்க ஒரு நிமிஷம்” என்றான் “என்ன ?” “ஊரு பேரு சொல்றப்ப வெளியூர்ன்னு சொல்லாதீங்க. எங்க ஊரு பேரு சொன்னா ரேக்கிங் பண்ணமாட்டாங்க” “ஆ !ஓகே” என்றவள் அங்கிருந்து நழுவ நினைத்தாள் “என்னோட ஊர் பேரு கேட்க மாட்டிங்களா?” “சொல்லுங்க” என்றாள் மனம் இல்லாமல்.. “ஃபுரபசர்ஸ் காலணி” “சரிங்க தேங்க்ஸ்” என நகர்ந்தாள். “அதை மட்டும் சொல்லி பாருங்க ஒரு பய உங்ககிட்ட வரமாட்டான்” என துள்ளி குதித்தான். வகுப்புக்கு  தாமதமானதால் “டீ வாங்கி சாப்பிடலாம்” என நினைத்த பாண்டிக்கு முதல் நாளே ஸ்டாப் வைத்த அல்லம்பட்டியை நினைத்து எரிச்சல் வந்தது, கூடவே அந்த நாளின் வகுப்பின் மணியும் அடுத்தது . அத்தியாயம்-3 கடந்த காலத்தின்  யோசனையில் ஓடிக்கொண்டு இருந்த பத்மாவை நிகழ்கால திரைக்கு இழுத்து வந்ததும் என்னவென கேட்டான் திலக். “ஒன்னும் இல்லை உன்னை மொத மொத காலேஜ்ல பாத்தா நியாபகம். ஏதேதோ ஓடுது மனசுல!” “மனசு மட்டுமா ஒடுச்சு, நாம கூட தான்…” “எத நியாபகபடுத்துறான் பாரு”  “சரி நான் கிளம்புறேன் நீ யோசிச்சுட்டே இரு!” “ஏ! என்ன இப்ப தான வந்தே?” “வேலையிருக்கு பத்மா” “சரி. உடம்பு சரி இல்லாதவங்களை பார்க்க வந்தா கையில ஏதும் வாங்கிட்டு வர பழக்கம் இல்லையா” “ஏய் அப்டிலா எதுமில்ல. அடுத்த தறோம் கண்டிப்பாக வாங்கிட்டு வரேன்” “அப்ப இன்னொரு தரமும் நான் மயங்கி விழனும் அதானே உன் ஆசை” “சீ சீ அப்டி சொல்லல. அடுத்த தறோம் வீட்டுக்கு வர்றப்ப ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன் போதுமா” “சரி நான் கிளம்புறேன். உடம்ப பாத்துக்க,ஏதும் ஒன்னுன்னா கால் பண்ணு” திலக் சென்றதும் பத்மா கீழ் இறங்கி வந்தாள். அருண் பப்ஜியில், தாத்தா ஸ்ரீ ராம் ஆழ்ந்த யோசனையில் சுடோகு ஆடி கொண்டு இருந்தார். அருண் சாப்டியா என்றாள் பத்மா ம்ம் என்ற ஒரு சொல்லில் வந்த பதிலை கேட்டு கொண்டே ’என்ன கோவமா சார்க்கு?" “டேய் டேய் எல்லாரும் சேஃப் ஸொன் போங்க ஒரு நிமிஷம் தா இருக்கு” போனில் அவன் மூழ்கி கொண்டது தெரியாமல் அவனோடு பேசியது வீண் என்பது அவளுக்கு தெரியவில்லை . அவன் கிடக்குறான் நீ சாப்பிடும்மா என  தட்டை வைத்தாள் அத்தை “டேய் சுடுறானுங்கடா எவனாச்சும் வாங்க” என்றவன் தலையில் புல்லட் பட மொபைலின் ஆப் செய்து விட்டு அம்மாவின் அருகே வந்து அமர்ந்தான். “காலையில கத்தி எதுக்கு எடுத்துட்டு வந்தே ?” என்றாள் பத்மா கோவம் என்றவாறே முகத்தை கீழ் நோக்கினான் அருண் என்ன அப்படி கோவம் இந்த வயசுல என்றவள்! தட்டில் இருந்த பிரட்டை அவனிடம் கொடுத்து தபரா செட்டில் பாலை ஊற்றி அவனிடம் தள்ளினாள். “கோவம்லா இல்லமா!” “தாத்தா ஏதும் சொன்னாரா?” சட்டன பேசியவன் “மா!  நீ அவரை கல்யாணம் பண்ணிக்க” “யார?” “இப்ப வந்துட்டு போனார்ல அவர” சத்தமாக சிரித்தவள் “அப்ப அவரு ஒயிப்பை போட்டு தள்ளிட்ரியா?” “என்னமா சொல்ற அவருக்கு கல்யாணம் ஆகிட்டா” “கல்யாண ஆகிருச்சாவா உன் வயசுல குழந்தையே இருக்கு” “என்னமா சொல்றே நிஜம்மாவா?” என்றான் ஆச்சரியமாக “ஆமாடா. பிராமிஸ்” “உனக்கு என்ன இப்படி விபரித ஆசை?” “தாத்தா காலைல சொன்னாரு நீ அவரை ரெண்டாம் தராமா கட்டிக்க போறேன்னு” மீண்டும் ஓட்டம் எடுத்த சிரிப்பு இம்முறை தாத்தாவும் பாட்டியும் சேர்ந்தே சிரிக்க ஆரம்பித்தனர். சத்தம் அடங்க இரண்டு நிமிடம் ஆகி இருக்கும்.  நின்ற பின் மீண்டும் இன்னொரு முறை தொடங்கினாள் பத்மா. கடுப்பு மூக்கில் ஏற தாத்தவை நோக்கி முறைத்தான். அவர் மெதுவாக நியூஸ் பேப்பரை எடுத்து முகத்தை மூடி கொண்டார். “மா! போதும் சிரிச்சது. எல்லாத்துக்கும் காரணம் அந்த பூவும் பனானா தான் .   ஒரே நிமிஷத்துல குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ண பாத்தார்.” ’டேய் தாத்தாவலா அப்டிலா பேச கூடாது" “பின்ன என்னமா எதுல எதுல விளையாடனும்னு விவஸ்தை இல்லையா .” “சரி.உன்கிட்ட என்ன சொன்னாரு?” ’நீ அவர கட்டிக்க போறியாம் எனக்கு அவர் அப்பாவாம்." ’உன்ன பத்தி என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா" “’என்ன?” “போனவாரம் யாரோடையோ பைக்ல போனியாம் !” மனதில் கொஞ்சம் சஞ்சலம் ஏற்பட்டாலும் மறைத்து கொண்டே கேட்டான் “யாரோட?” “பின்னால ஏதோ பொண்ணாம்” “இல்ல இல்ல தாத்தாவுக்கு வயசு ஆகிட்டு கண் பார்வை போகிருக்கும். வேணும்னா மகேந்திரன்கிட்ட கேளு போன வாரம் ஒன்னாதா இருந்தோம்” என்று அவன் சடசடவென பேச தொடங்க இடைநிறுத்துவது போல்  “நான் இப்ப ஒன்னும் உன்கிட்ட கேட்கலையே. அவர் எப்பவும் அப்படித்தான் கிண்டலா பேசுவாரு. இருந்தாலும் கத்தியை தூக்கினது ஓவர்” “என்ன ஓவர் அவர உனக்கு ரெண்டாம் தறோம் கட்டிக்க சொன்னா கோவம் வருமா? வராதா?” “ஏன் அவருக்கு என்ன குறைச்சல்?” “பார்த்த வயசான ஆளு மாதிரி இருக்காரு கோவம் வராதா?” “பின்ன எனக்கு மட்டும் என்ன வயசு ஆகலையா?” “உனக்கே அடுத்த மாசம் 21 ஆக போது” “அட ஆமல்ல. சாரி மாதாஜி” “எதுக்குடா?” “என்னால தான் மயங்கி விழுந்த” “உன்னாலயா .  ஆளப்பாரு . நீ திட்டி நான் ஏண்டா கீழ விழ போறேன்.அது அசதில விழுந்தேன்” என்றதும் தாத்தா பாட்டி பத்மா சிரிப்பில் வீடு மீண்டும் கலகல மோட் . “சரி சரி ரொம்ப ஓட்டாத காசு குடு நான் போய் ஷூ வாங்கிட்டு வரேன்” “போய் பர்ஸ்ல எடுத்துக்க” சரி என்று சென்றான் நீ இருக்க பாரு,தென்கச்சி மாதிரி புது புது கதையா சொல்லிட்டு என்று தாத்தாவை நோக்கி “அருண்” "மா’ “மூஞ்ச கழுவிட்டு போ” “ஓவ்” “மா ஆயிரம் எடுத்து இருக்கேன் . நைட் வர பத்து ஆகும் பாய்” டேய் இர்ரா. ஹெல்மட் யாரு உங்க தாத்தா ,,,,, (சொல்லிய மாத்திரம் தாத்தா ஹெல்மட்டுடன் அருணை நோக்கி) காக்கா பெயின்ட் பண்ணிட்டு அதான்பா கழுவி வச்சேன் “சம்டைம்ஸ் ஈவில்ஸ் ஆர் குட்” என தாத்தா வயிற்றை தட்டி விட்டு வெளியே சென்றான்.     ‘லெட்சுமி அம்மாள் பிரைவேட் ஹாஸ்டல்’ வாசலில் நின்றவன் போனை எடுத்தான்… “ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வைப்ரேட் ஆன போன் ஒலித்து நின்றது. 8 மிஸ்ட் கால் என்ற நிலையில். “டேய் லூசுபயலே, கஸ்மாலம்,சோத்த தான தின்ற போன் பண்ணா எடுக்க மாட்டியா” - மித்ரா “ஹேய் சாரிடி போன் சைலன்ட்ல இருந்த்தால பாக்கல” - அருண் “ஆன்.அப்டியே வீட்டுல இருந்துற வேண்டியது தான எதுக்கு வந்த?” “மஞ்ச சுடி நல்ல இருக்குடி , மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா” பாட்டை அவிழ்த்து விட்டான் அருண் “செம காண்டுல இருக்கேன் மரியாதயா மூடிரு” “ஹன்ரட் டைம் சாரிடி. அம்மாக்கு உடம்பு சரி இல்லை அதான்.” ’ஏன் என்னாச்சு?" “ஒன்னுமில்ல இப்ப ஆல்ரைட். நீ வந்து ரொம்ப நேரம் ஆகிட்டோ?” “ஆங்..வாயில வருது மணி என்ன?” “வாட்ச் கட்டல” “போன பார்த்து சொல்லு” “நாலு நாற்பத்தி மூணு” “நாலு மணிக்கு நான் வாசல் வந்தேன். எனக்கு பின்னால ரெடி ஆன வைஷு கிளம்பிட்டா” “அந்த ஜோடி எங்க போயிருக்கு” “ஈஸிஆர் னு நினைக்கிறேன்” “அப்ப நாம பெசன்ட் நகர் போலாம்” “மொதல்ல வண்டிய எடு போறப்ப பேசிக்கலாம்” “எங்க போக” ’ஹான் மாமியார் வீடு" “பார்ரா.. ஜெயில்ல இருந்து மாமியார் வீடா” தலையில் குட்டியவள் , எங்க வீட்டை விட இந்த ஹாஸ்டல் ஜெயில் இல்லை .  மொதல்ல இந்த இடத்தை காலி பண்ணு.கம் ஆன்" “டேய் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” ஒன்னு சொல்லணும் என்றால் அவள் அகராதியில் குண்டு தான் நினைத்துகொண்டே “என்னவென்றான் ” பயத்தோடு “அடுத்த புதன் ஊர்க்கு போறேன்” “எங்க பம்மலா?” “அங்க இல்லடா நேட்டிவ்” ’போய்ட்டு" “மண்டே வருவேன்” “ம்ம்” (கியருடன் ஃபுட்பால் வலுவாக) “என்ன ஆச்சு?” “இல்ல சிக்னல் போட்டு இருக்கு” “சிவப்புக்கு மிதிச்சியா?மஞ்சைக்கா?” “எனக்கு ஒரு ஷூ வாங்கணும் அங்க போலாமா மொதல்ல.” ’நான் கேட்ட கேள்விக்கு பதில்" ’ரெண்டு கலர்க்கும் தான்!" “எங்க போய் வாங்கணும்” “ரைட்ல பாரு” (யுடர்னில்) உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆச்சர்யம். பல காதல் ஜோடிகள் செருப்பு கடையில்! “பேபி!சொல்லு எந்த மாதிரி ஷூ” “டேய் அப்டியே வெளியே வா! நைசா” கடைக்குள் பயாரோ தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் அருணுக்கு இதெல்லாம் பழகியா ஒன்று என்பதால் எதுவும் கேட்காமல் வெளியேறினான் “எங்க போனாலும் பாதில வெளிய வந்துட்ரோம் பெரிய ரோதனை உன்னோட.” “அதுக்கு, வீட்டுல நீயா பதில் சொல்லுவ?” “மாட்டினா என்ன பிஎப்னு சொல்லு. பிஎப்னா என்ன தெரியுமா ?” “டபுள் மீனிங்கா!வண்டிய எடுடா டுபுக்கு என்றவள் முகத்தில் துப்பட்டாவை கட்டியதும் மெல்ல கிளம்பியது TN76 AF0725.” அத்தியாயம்-4 சூரியன் வீடு செல்லும் நேரம் இருவரும் பெசன்ட் நகர் கடற்கரையை அடைந்தனர். மித ஈரமான மணல் ,லேசான வெப்பம் கலந்த உப்புக்காற்று,அலையின் ஓசை,கடற்கரைக்கே உண்டான மக்களின் சத்தம், இளஞ்சிவப்பு நிற சூரிய ஒளி அவர்கள் முகத்தில் பட்டு மின்னியது. கடல் அலையின்  எல்லையில் இருந்து இரண்டடி தள்ளி அமர்ந்தனர் அலையை பார்த்தவாறே. “என்ன ஆச்சு ஊர்க்கு போறேன்னு சொன்னப்றம் மூஞ்சில பிராகசம் இல்லையே ஏன்?” என்றாள் மித்ரா “ஒன்னும் இல்ல . உன் ஊர்க்கு நீ போற ! எனக்கு என்ன அதில்” என்றான் சாந்தமான குரலில் அருண். காதலிக்க ஆரம்பித்த இரண்டு மாதத்தில் முதல் தடவை விட்டு செல்கிறாள் என்ற ஒரு வருத்தம் இருந்தது அருணுக்கு, அவன் குரலில்  மித்ராவுக்கும் கூட அர்த்தம் புரிந்தது. "ஏய் என்ன லூசு மாறி பேசுற? “ஒன்னும் இல்லப்பா. எப்ப போற?” “அதுக்குள்ள மறந்துட்டியா கமிங்க் வெட்னஸ்டே” “புதன்கிழமை” “ஆமா புதன்” “பொண்ணு கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதுன்னு சொல்வாங்க பெரியவங்க.” “அதுக்கு…” என இழுத்தாள் மித்ரா ஒன்னுமில்லை என்றவன் மணலை எடுத்து கையால் சலித்து மீண்டும் தரையிலேயே வைத்தான். குறுகிய கால பிரிவு தான் என்றாலும் அவளுக்கும் தாங்கி கொள்ள முடியவில்லை. அவன் முகத்தையும் கண்களையும் பார்த்தாள், அவனோ கடல் அலையை பார்த்து கொண்டு இருந்தான் பின்னால் இரண்டு கைகளையும்  தரையில் வைத்து உடம்பை தாங்கியவாறே. மெதுவாக உடம்பை தாங்கி நின்ற அவன் விரல் மேல் கையை வைத்தாள் மித்ரா. ஒரு உணர்வும் இல்லாமல் அவனோ தொடர்ந்து கடலை பார்த்து கொண்டு இருந்தான். “ஹே அங்க பாரு உங்க அம்மா” என்றாள் மித்ரா “ஹே எங்கடி” என்றவன் சட்டென திரும்பினான். திரும்பிய கணம் கன்னத்தில் சட்டென்று இதழை பதித்தாள் மித்ரா. ஆம்! முதல் முத்தம். அக்கணமே உடம்பை தாங்கி கொண்டு இருந்த தன் கையை நழுவியது அந்த மணலிலேயே மல்லாந்து சாய்ந்தான். “கோவமா இருக்கேன்னு சொல்லாததற்கு இப்டின்னா , அப்ப கோவமா இருக்கேன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப” என விட்டத்தை பார்த்து கொண்டே ஓவியம் வரைந்தான் . “போடா இடியட்” என தொடை சதையை கிள்ளி "எந்திரி’ என்றாள் “ஹே முதல் தறோம் கிஸ் பண்ணி இருக்க கொஞ்சம் படுத்துக்கறேன்.” “டேய் எல்லாரும் பாக்கிறாங்க எந்திரிச்சு உக்காரு” “நிமிர்ந்தவனை நோக்கி ஏதாச்சும் வாங்கி கொடு ” “என்ன வேணும் அந்த கடல் ! அந்த அலை!” என்று கைகளால் கடலை அளந்தான். “ஹேன். மன்னாங்கட்டி. பசிக்குது சாப்பிட ஏதாச்சும் வாங்கி குடு” தூரத்தில் ஏதோ விற்று கொண்டு இருந்த பையனை அழைத்து கேட்டான் . “சுண்டல் இருக்கு,வேர்க்கடலை இருக்கு அண்ணா.  என்ன வேணும்?” “இதெல்லாம் வேணா தம்பி. உன்கிட்ட பட்டாணி இருக்கா” “கிளிஞ்சது போ” என்றான் அந்த சிறுவன் “எது ?” என்றான் அருண் “கொஞ்சம் இருங்க அண்ணே” “மாமே ஒவ்” என யாரையோ ஏலம் விட்டான்."இந்தான்ட வாடா ’ என்றவன் நகர்ந்தான் “சொல்லுங்க அண்ணே எத்தினி வேனும்” என்றான் புதிதாக வந்தவன். “ஒன்னு எவ்ளோபா” “பத்துண்ணே” “ரெண்டு கொடு” என இருபது ரூபாயை நீட்டினான் “இந்தா மித்ரா. தம்பி எனக்கு அப்டி வேணாம். அந்த மாங்கா இருக்குல்ல அதை தூவி,கொஞ்சம் மிளகா பொடி,வெங்காயம் வச்சு குடு” என்றான் அருண் அச்சிறுவன் சென்றதும், கடலை ரசித்துக்கொண்டு இருந்தவளை “ஹே அங்க பாரு அந்த கப்பலை” - அருண் “மித்ரா திரும்பவில்லை” “என்ன?” என புருவத்தை உயர்த்தி மீண்டும் தொடையை கிள்ளினாள் “சரி போலாமா மித்ரா லேட் ஆச்சு” “இரு ஒரு தரோம் கால் நனைச்சுட்டு வரேன்” என்றவள் செருப்பை கழற்றி சிறு பிள்ளை போல் ஓடினாள் “போலாம் அருண்” ’இரு" என்றவன் இரண்டொரு நிமிடம் அதே இடத்தில் நின்று கொண்டு மொபைலில் பிசி ஆனான். பின்னர் ஃபோனை அணைத்தவன் போலாம் என்றான் மித்ராவின் செருப்பு அருணின்  வலது கையிலும், இடது கையில்  கொறித்து கொண்டே நடந்தான். “ஹேய் நாளைக்கு காலேஜ்ல.ச்சை! நினைச்சாலே எரிச்ச வருது” - மித்ரா “நல்ல வேலை காலேஜ்னு சொன்னவுடன் நியாபகம் வருது ஷூ வாங்கணும் சீக்கரம் வா” ’எங்க போய் வாங்கணும்" “அது நான் போய் வாங்கிக்கிறேன் நீ வர வேணாம்” “ஏன் நான் வந்த என்ன.நாம ஒண்ணா போலாம்.” “முடியாது உன்னை கூட்டிட்டு போனா அப்பா பிரண்ட், அம்மா ஸ்கூல்மேட்னு சொல்லி எடுக்க விட மாட்டே. உன்னை நம்பினா நாளைக்கு நான் செருப்ப போட்டு தான் காலேஜ் போனும். பேசாம சாப்பிட போலாம் அப்புறம் உன்னை ஹாஸ்டல்ல  விட்டுட்டு நான் போய் வாங்கிக்கிறேன்.” “சாப்பிடவா ? இன்னிக்கு ஹாஸ்டல்ல சிக்கன்” என்றாள் “அடியே வந்தா பிரியாணி வாங்கி தரேன். சிக்கனா? பிரியாணியா?” என்றான் அருண். “போலாம் ரைட் நமக்கு பிரியாணி தான் முக்கியம்” ’’ஆமா எங்க போறோம்?" என்றாள் மித்ரா “அமைதியா பேசாமா வாடி” “ரெண்டும் ஒன்னு தானடா” அத்தியாயம்-5 வண்டி எண் TN76 AF0725 அண்ணா சாலையில் உள்ள பிரியாணி கடையின் வாயிலில்,தன் சூடான மூச்சில் கரி புகையை வெளியிட்டு கொண்டு இருந்தது.  முன்னர் வந்துள்ளாயா என்று கேட்டு கொண்டே உள்ளே அழைத்த சென்றான் அருண். புதிதாக வருவதாக சொல்லி உடன் சென்ற மித்ராவிற்கு அது புதியதோர் அனுபவம். கீழ் புறம் உள்ள இருக்கை மொத்தமும் நிரம்பி வழிய, வேறு வழியின்றி மேல் மாடியில் உள்ள ஏசி இருக்கைகளுக்கு சென்றனர் .இருளில் திளைத்து இருந்த அந்த குளிர் அறையில்  தளிர் மஞ்சள் நிறம் குறைந்த அளவு வெளிச்சம் மட்டுமே அவ்விடமெங்கும் நிறைந்து இருந்தது. “இனிமே எங்க ஊரு பேரு சொல்லுங்க யாரும் ராக்கிங் பண்ண மாட்டாங்க” என்றதும் “ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தாள் பத்மா முன்பின் யாரென்றே தெரியாத பெண்ணிடம் திலக் தைரியமாக பேசியதும் பாண்டி கேட்டான் “என்னடா பயம் இல்லாம பேசிட்ட ?” “எதுக்கு டா பயப்பிடனும்” - திலக் “அப்ப உனக்கு பயம் கிடையாது” “அப்ஃகோர்ஸ் நான் ஏன் பயப்பிடனும்?” “கொஞ்ச நேரத்துக்கு முன்ன சுபத்ராகிட்ட பேச காலர தூக்கிவிட்டுட்டு போயிட்டு ஏன் திரும்ப வந்த” “டேய் என்ன? கலாக்ரியா?” என்றான் திலக் “நான் உன்னை கலாய்ப்பனா மச்சான்!எப்படிடா பார்த்தோனே லவ் வருது உனக்கு மட்டும்” - பாண்டி “டேய் நான் அவளை முன்னாலே பார்த்துடேன்டா” “முன்னாலயா எங்க வச்சுடா?” என்று இரட்டை அரத்ததில் பாண்டி கேட்டவுடன் பிறங்கையால் சுளீர் என அவன் வாயில் அடித்தான் திலக். “அலையாதே! முன்னால அட்மிஷன் அப்ப அவ பாட்டி கூட பாத்தேன்” “நானும் அதை தான் கேட்டேன் ஏண்டா அடிச்ச?” “சரி.உன் ஆளு பேரு என்ன” - பாண்டி “என்ன சொன்னே?” - திலக் “உன் ஆளுன்னு” இன்டெர்வெல்ல நாம கேண்டின் போகலாம்  என்று தன் பையை தடவினான். “அதெல்லாம் தேவையில்ல என்ன பார்த்தா தீனிபண்டாரம் மாதிரி இருக்கா. பேர சொல்லுடா” என்று கடுகடுத்தான் பாண்டி “பத்மா மச்சி!”பத்மராஜன் சந்திரவள்ளி" எவ்ளோ அழகா இருக்குள்ள ?" மேலும் கீழும் ஒருமுறை சோதிப்பதை போல் பார்த்தான் பாண்டி “என்னடா ?” “போன வருஷம் எங்க பக்கத்து வீட்டு வானதிய பார்த்து இதே தான் சொன்னே. அவ அப்பன்கிட்ட மாட்னதும்  ஓடி வந்துட்ட. இது எத்தனை நாளைக்கு” “சின்ன வயசுல தெத்துப்பல் மகேஸ்வரி கூட நீ கண்ணாம்பூச்சி விளையாடரப்ப….” - திலக் அவள் வீட்டை பற்றி பேசி கொண்டே வகுப்பு அறை வாசலுக்கு வந்தனர். உள்ளே தனம் சார் வகுப்பை ஆரவாரமாக நடத்தி கொண்டு இருந்தார் “சார்!மே ஐ கம் இன்” நடு மூக்கில் மேல் தனது வலது ஆட்காட்டி விரலை வைத்து சிறு நிமிடம் அவர்களை பார்த்தார். அவ்வாறு அவர் செய்வதால் கோபம் குறையும் என அவரின் நம்பிக்கை.  கோபத்தை குறைத்து கொண்டவர். ம்ம் என உள்ளே அழைத்தார் உள்ளே வந்தவர்களை அழைத்து கிசுகிசுக்கும் குரலில் “டேய் மச்சான் இங்க பாருங்கடா” என்றான் அலெக்ஸ் “யாரோட போன்டா இது” - பாண்டி “டேய் உள்ள வைடா மாட்னோம் செத்தோம்” என்றான் கணபதி “டேய் முட்டா பயலுகளா உள்ள வைங்கடா அடுத்த பீரியட் பார்க்கலாம்” - திலக் முன்னால் இருந்த இசக்கி கண்ணீர் வராத குறையாக “டேய் போன குடுங்கடா” என்று கதறினான் “டேய் தாத்தா . அடுத்த பீரியட் வாங்கிக்க” என முதுகில் குத்தி அவனை திருப்பிவிட்டான்  பாண்டி எதையோ அமுக்கிய அலெக்சின் விரலால் “ந நன நானேன் நன நன நானேன்” என்ற ஏ.ஆர் ரஹ்மானின் பழைய ஏர்டெல்  ரிங்டோன் வகுப்பில் பூதகராமாய் ஒலித்தது.  உண்ட களைப்பில் அந்த ஏசியி இருந்து வெளியே வந்த அருணிற்கும்,மித்ராவிர்க்கும் வியர்த்தே இருந்தது. மித்ராவுக்கு அதன் சுவை நாக்கில் நடனம் ஆடியதால் புகழ்ந்து தள்ளினாள் .  “தெரியும்டி உனக்கு பிடிக்கும்னு அதா இங்க வந்தேன். போலாமா மேடம்” என்றான் அருண் இருவரும் அங்கிருந்து கிளம்பி மித்ராவின் ஹாஸ்டலுக்கு வந்தனர். சரிடா பாக்கலாம் நாளைக்கு-மித்ரா “அவ்ளோ தான” என்று ஏக்கமாக கேட்க  “பின்னே?” என்றாள் மித்ரா ஏதாச்சும் நியபகார்த்தமா ,,,,, என்று  இரு கன்னத்தையும் மாறி மாறி அசைத்துக்காட்டினான் அருண். என்ன என்று கேட்காமலே இமையை முழுதும் உயர்த்தினாள் மித்ரா. அவள் கண்கள் இருட்டிலும் திராட்சையாக உருண்டது. பரிதாபபட்டவளோ என்னவோ “கொஞ்சம் இறங்கேன் அருண்” என்றாள் “ஏன் கட்டி பிடிக்க போறியா, ஹாஸ்டல் வாசல் யாராச்சும் பாத்துட்டா” “ப்ச்ம் இறங்கு சொல்றேன் உனக்கு ஒண்ணு தரணும்” ரொம்ப ஆவலாக இறங்கினான் அருண் இப்டிவா என கையை இழுத்து கொஞ்சம் மேற்கே பார்க்க, தன் முகத்தின் முன் நிறுத்தினால் ‘சடார்’ என மூட்டை ஒரு ஏந்து எந்தினாள் மித்ரா ‘க்ஃப்ப்’ என பைக்கில் விழுந்தவன் “நான் என்னடி பண்ணேன்?” என்றான். “சாப்பிடுறப்ப எதுதாப்பல இருந்த பொண்ண பதிமூனு தறோம் பார்த்த நீ,” - மித்ரா “அடிப்பாவி எண்ணதும் மட்டும் இல்லாம பனிஷ்மென்ட் வேறையாடி” “மரியாதையா ஓடிரு. என்னதவிர யாரையும் பார்த்தா இதான் உனக்கு” “அப்பவே போயிருக்கலாம்” என்று அருண் தனக்குள் சொல்லி கொண்டான் “ஆன்.அப்டி கிளம்பு” - மித்ரா “ஹப்பா.. என்றவன் வண்டியில் ஏறினான்..எம்மே ஏற கூட முடியலையே” “கிகிகி . ஆட்காட்டி விரலை அசைத்து கொண்டே நல்ல வேணும் உனக்கு இடத்தை காலி பண்ணு” என்றாள் அவன் கிளம்பிய பின் அருணிற்கு திரும்ப கால் செய்தாள் மித்ரா. “பேபி எங்க இருக்க?” “இங்க தாண்டி பக்கத்துல என்ன ஆச்சு?” “ஒரு எமர்ஜென்சி, உடனே கிளம்பி ஹாஸ்டல் வா.” அத்தியாயம்-6 மித்ரா அழைப்பை ஏற்று மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்தவன் ’நைட்டி’யில் பார்த்ததும் அசடு வழிந்தான் அருண். சிறிது நேரத்திற்கு முன்னர் விட்ட உதை நினைவுக்கு வர  “எதுக்கு கூப்ட அடிச்சதுக்கு சாரி கேட்கவா அதெல்லாம் வேணாம்” அவனாகவே பேசினான் . “அய்யே!ஆள பாரு” மித்ரா தன் கையில் பொத்தி வைத்து இருந்த செய்தித்தாளில் அருணிற்கு திருநீற்றை வைத்து நெற்றியில் ஊதினாள். “இப்ப எதுக்கு இத வைக்கிற அம்மாகிட்ட வெளியே போறேன்னு சொல்லிட்டு வந்தேன். திரூநீறு எப்படின்னு கேட்டா என்ன சொல்வேன்” “ப்ச்ம். சும்மா ஏன் பொலம்பிட்டே இருக்கே வீட்டுக்கு போறதுக்குள்ள அழிஞ்சுரும்.” “இதுக்கு தான் கூப்டியா?” “பின்னே வேற எதுக்கு கூப்பிடுவாக” ’நான் கூட வேற என்னமோ நினைச்சேன்" “சரி. அனுக்கு பெயின். கடை எல்லாம் பூட்டி இருக்கு.  மெடிக்கல் போய் ..” “நிறுத்து. நீ சொல்லவே வேணாம்,காச குடு.” “ம்ம். குட் பாய்” செல்லபிராணியை தட்டுவது போல் அவன் தலையில் தட்டினாள் மித்ரா “நீயும் வரியா! ரெண்டு பேரும் போலாம்” “இப்படியேவா. சீ ! நான் வரல நீ போய்ட்டு வா நான் இங்க இருக்கேன்” -மித்ரா “சரி இரு. பைவ் மினிட்ஸ்ல வரேன்”  -அருண் பத்மாவின் விவரங்களை சேகரித்து வர பாண்டியையும், கணபதியையும் அல்லம்பட்டிக்கு  அனுப்பி இருந்தான் திலக்.  ஆடி அசைந்து வரும் அவர்களை கண்டதும் “தூரத்துல வரது அவங்க தான” என்றான் அலெக்ஸை நோக்கி. அலெக்ஸ்ம் அவர்களை கண்டு கொள்ள ஆமாம் என தலையசைத்தான். சைக்கிளை விட்டு இறங்கியவர்கள் சிரித்து கொண்டே இருவரை நோக்கி வந்தனர் . கட்டுக்கடங்கா சிரிப்பை அடக்கி வரும் அவர்களை பார்த்ததும் “எதுக்குடா சிரிக்கிரிங்க” என்றான்  திலக் “நீயே சொல்லு பாண்டி” - கணபதி மீண்டும் சிரிப்பை தொடர்ந்த பாண்டி, திலக்கின் கடுகடுப்பான முக பாவனையில் சிரிப்பை நிறுத்தினான் கல்லூரி வாசலில் நின்றவர்களை உள்ளே அழைக்கும்படி திலக் தோளை அணைத்து “உள்ளே போகலாம்” என்றவாரு அவனை இழுத்தான் பாண்டி. தோளில் படர்ந்த அவனின் கைகளை உதறிவிட்டு சொன்னான் “மொதல்ல எதுக்கு சிரிச்ச அத சொல்லு” “வீட்டை கண்டுபிடிச்சியா நீ?” என்று அவன் பேசிக்கொண்டே நடக்கையில் கணபதி சிரிப்பை வயிற்றில் தம் கட்டினான். “டேய் சிரிச்ச கொன்றுவேன் , நீயாது  என்னனு சொல்றா குண்டுபயலே” என கணபதியை கடிந்தான் திலக் வளாகத்தில் நுழைந்தும் கூட கணபதியும் , பாண்டியும் ஒருவருக்கு ஒருவர்  பார்த்தால் சிரிப்பு வரலாம் என நினைத்ததால் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நடந்து வந்தனர். “சொல்லுடா பாண்டி!வீடு கண்டுபிடிச்சியா இல்லையா”  இம்முறை அவசரத்தில் கேட்டான் திலக் “டேய் ! நான் ரெகார்ட் எழுதணும் கிளம்புறேன்” என்று அவ்விடத்தை விட்டு நழுவினான் கணபதி.  குண்டு என்று சொன்னதில் அவனுக்கு பிடிக்கவில்லை என்பது போல் அவனின் செயல் இருந்தது. கணபதி சென்றால் என்ன பாண்டி இருக்கிறான் என்று அவனை சமாதானம் செய்யவும் திலக்கிற்கு மனம் வரவில்லை. “டேய் இருடா நானும் வரேன்” என்று அவனோடு அலெக்ஸ்ம் சேர்ந்து கொள்ள திலக் தனியாக சிக்கியதும் “காசு இருக்கா கேண்டின் போலாமா ?” என்றான்  பாண்டி “மொதல்ல சொல்லு. வீடு கண்டுபிடிச்சியா? ஏதாச்சும் டீடைல்ஸ் கிடைச்சுதா?” “வாடா சொல்றேன்” “அண்ணே ரெண்டு டீ” - பாண்டி “எனக்கு வேணாம்.  ஒன்னு போதும்” “அந்த பிஸ்கட் குடுங்க” “டேய் இப்பயாச்சும் சொல்றா . என்ன ஆச்சு போன காரியம்?” “வீடு மட்டும் இல்லை ஜாதகமே தெரியும். உன் ஆளு அக்காவை அவ சொந்த மாமாக்கு கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதான் அவ அக்கா கூட இருக்கா. அப்ரோம் அவ வெஜிடேரியன்” “எப்டி சொல்றே” - திலக் “உனக்கு செட் ஆகாதுடா விடு” “ஏன்” என குடைந்து கேட்டான் திலக். “டேய் நம்ம அல்லம்பட்டில முத்தாரம்மன் கோவில் இருக்குல்ல,  அதுக்கு அவங்க மாமா தான் நிர்வாகி. கேள்விபட்டு இருப்பியே சுப்பு ஐயங்கார்” “ஆமா தெரியும்” ’ம்ம். பெரிய இடம் மச்சான். நீயும் வசதியான பையன்தான். ஆனா ஜாதி வித்தியாசம் . வேணாம் விட்டுரு " மனதில் கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டாலும் பேச்சை தொடர்ந்தான் “இதுக்கு ஏன்டா சிரிச்சீங்க ரெண்டு பேரும்” “உனக்கு இது நாலாவது லவ்ல அதான்” -பாண்டி “அங்க பாரு உன் ஆளு. இங்க தான் வர்றா போல!” “வரட்டும். எனக்கென்ன. அப்றம் அவனுங்க முன்ன இனி அவள என் ஆளுன்னு சொல்லாத கொன்றுவேன்.” “ம்ம்ம்ம்” என்று சிரித்தவாறே பிஸ்கட்டை டீயில் அமிழ்த்தினான் கேண்டின் உள்ளே வந்து அங்கு நின்றவள் , கூடி நின்ற கூட்டத்தை பார்த்து விழித்து கொண்டு இருந்தாள் பத்மா கேண்டின் நுழைவு வாசலில் இருந்த திலக் கண்டும் காணாதது போல் சில நிமிடங்கள் கண்களை சுழற்றி,   “என்ன ஆச்சுங்க ஏதும் வேணுமா?” - திலக் “இல்ல ஒன்னும் இல்ல” சற்று தொலைவாக  ரெக்கார்ட் நோட்டை கிறுக்கி கொண்டு இருந்த சீனியர்களிடம் சென்று கொண்டாள் “அண்ணா லஞ்ச் டோக்கன் எங்க வாங்கணும்”? “பர்ஸ்ட் இயரா நீ ?” ’ஆமாண்ணா" “மணி ஒன்பது ஆச்சுல ரிஷப்ஸன்ல இருக்காது . எம்.பி.ஏ பிளாக் போ அங்க இருக்கும்” “அது எங்க இருக்கு?” “சுத்தம்! லேடீஸ் ரெஸ்ட் ஏரியாக்கு எதுர்த்தாப்ல மேல இருக்கும்” “ஏன் என்கிட்ட கேட்டா சொல்ல போறேன் . சரியான திமிர் மச்சான்” என்றான் பாண்டியிடம்  திலக் .அவள் திரும்பி அருகே  வர வழி  மறைத்து இருக்கையில் இருந்தே கால்களை கதவின் இடிக்கில் நீட்டினான். முகத்தை தரையில் வைத்து கொண்டே “வழி விடுங்க நான் போனும்” “போமா தாயே ! போ !” டீ,பிஸ்கெட்டிடம் மூழ்கி இருந்த பாண்டியை பார்த்தான். ம்ஹும் அவனை அழைத்து சென்றால்  வேலை ஆகாது. “டேய் பாண்டி நீ கிளாஸ் போய்ரு நான் வரேன்” என ஓடினான் பத்மாவை நோக்கி “ஹலோ மேடம்!பேசமாட்டீங்களா” என்று அவள் பின்னால் ஓடினான் “கிளாஸ்க்கு டைம் ஆச்சு நீங்க போகலயா?” நெருங்கி நடந்து கொண்டே அவளோடு கேட்டான் “எம்.பி.ஏ பிளாக் தெரியுமா உங்களுக்கு?. இன்னைக்கு புதன்கிழமை நான்_வெஜ் தான் இருக்கும். இப்ப கேண்டின் போனா சப்பாத்தி வாங்கலாம் இல்லன்னா மதியம் அதுவும் கிடைக்காது” என்றான் திலக். திலக்  பேசி வருவதை பார்த்து ஒரு நிமிடம் நின்றாள் பத்மா “என்ன ஆச்சுங்க . நீங்க வெஜ்னு எனக்கு எப்டி தெரியும்னு தான பாக்றீங்க” நின்றவள் மீண்டும் மெளனமாகவே நடக்க “ஹலோ ஏன் அப்ப நீங்க நான்_வெஜ்ஜா. இல்ல நியூ அட்மிஷன்ல அதான் ஜஸ்ட் இன்பர்மேஷன்”  “ரொம்ப தேங்க்ஸ்” என்று கேட்காமல்  படிக்கட்டில் ஏறி போய்க்கொண்டு இருந்தாள் பின் தொடர்ந்தே மாடிவரை வந்தவன் “அப்டியே போனீங்கனா அடுத்த படில இறங்க வேண்டியது தான்” என்ன என்பது போல் அவன் முகத்தை பார்த்தாள் “கொஞ்சம் ரைட்ல பாருங்க” நீல நிற பெயிண்ட்ல் சுவரில் எழுதி இருந்தது “எம்.பி.ஏ பிளாக்” நான்கு ஐந்து பேர்கள் நின்ற வரிசையில் தன்னையும் இணைத்து கொண்டாள். “லஞ்ச் என்ன இருக்கு மேடம்?” ’பிரியாணி டோக்கன் இருக்கு" “திலக்கை ஏற பார்த்தால் அவனோ கடிகாரத்தை பார்த்து மெல்ல நிமிர்ந்து , தனக்குள் சொல்லி கொண்டான் மணி 8.58” அவள் எதுவும் சொல்லாமல் அடுத்த படியில் இறங்கினாள்.திலக் இம்முறை நின்றுவிட்டான். ஒரு படி இறங்கியவள் திரும்பி பார்த்து “ஏன் என்ன ஆச்சு நின்னுடீங்க?” “ஹப்பா!இப்பயாச்சும் பேசினிங்களே” “ஹலோ மிஸ்டர்.கிளாஸ் போகாம இருக்கீங்கலே அதான் கேட்டேன்” “அந்த படில இறங்குனா பீட்டி சார்க்கு லெட்டர் தான் எழுதணும்” “ஏன் . அங்க என்ன?” “அது லேடீஸ் ரெஸ்ட் எரியாக்கு போற படி” “நிறைய லெட்டர் எழுதி இருப்பீங்க” போலயே என்றதும் சிரித்தான். “அட அதெல்லாம் இல்லைங்க” “சரிங்க பாய். லேட் ஆச்சு” என்று பத்மா நகர மணி அடித்தது . காதலுக்கு மணி அடித்து விட்டதுபோல் சாவோ/நல்ல சகுணமோ என்ற யோசனையில் எதிர் திசையில் வகுப்புக்கு ஓடினான் திலக். அத்தியாயம்-7 TN76 AF0725 லெட்சுமி அம்மாள் ஹாஸ்டலில் வந்து நின்றது. அருணை பார்த்ததும் செல்போனில் ஒலித்த பாட்டை அணைத்து அவனை நோக்கி சென்றாள் மித்ரா. வைஷுவுக்கு உடம்பு முடியவில்லை என்பதால் உன்னை அழைத்ததாக சொல்லியதும்  “தொந்தரவு பண்ணிட்டனோ சாரி பேபி” என்றாள் "த சீ என்ன இது லூஸு மாதிரி. நாளைக்கு நான் இல்லன்னா உனக்கு எதும்னா அவங்க தான் பாக்கணும்,அதான் போனேன்’ -அருண் கையில் ஆப்பிள் பழத்தை தின்று கொண்டு இருந்தவளை பார்த்ததும் அருண் சொன்னான் “ஏவாள் ஆப்பிள் சாப்டுது. அடடே ஆச்சரியகுறி” “அப்ப நீ ஆதாமா பேபி” என்றாள் பதிலுக்கு “ஆமா” “அப்ப நீ தொலைஞ்சுருவல்ல” “ரொம்ப பேசாத அத குடு ஒரு கடி கடிச்சுட்டு தறேன்” “இந்தா மொத்தத்தயும் நீயே தின்னு. நான் போறேன் நாளைக்கு பாக்கலாம்” - மித்ரா “ஹேய் இரு போகாத” "வெறுப்பில் என்னடா__ஆ__ஆ__ஆ!எழுதனும், சீக்கிரம் சொல்லு " என்று அவன் பக்கம் திரும்பினாள். “நீ பாட்டுக்கு போற” - அருண் “பின்ன வேற என்னடா” வெக்கத்தில் தரையை நோக்கி கொண்டே கைவிரல் நகத்தை கடித்தான் அருண் “அது சரி. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறைவதுண்டோ” என்று சொல்லி “கீழே இறங்குங்க சார் உன்கிட்ட பேசனும்” ஆள் யாரும் இல்லை அந்த சந்தில், தெருவின் ஓரத்தில் வளைவான அந்த முனையில் உள்ள மின்கம்பியில் விட்டு விட்டு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. “என்ன அங்கயே பாக்ற? கிளம்ப சொன்னே உன்னை” -மித்ரா “அந்த லைட் பின்னால பாரேன்” -அருண் தூரத்தில் இருந்த அந்த மின்கம்பம் அவள் புறத்தில் இருந்து தெரியவில்லை. தன் இரு கைகளையும் பைக்கின் பெட்ரோல் டேங்கில் உந்தி கொண்டு சற்று எட்டி பார்த்தாள் மித்ரா. “அங்க என்ன இருக்குடா?” மின்கம்ப விளக்கு நின்ற நான்கு நொடிகளில் உதட்டை பதம் பார்த்தான் ‘ஹ்ஹ்ஹ்’ என உதட்டை துடைத்து கொண்டே சொன்னாள் மித்ரா “பொறுக்கி! ராஸ்கல்.தெரியும் இதுக்கு தான் நீ பாக்க சொன்னேன்னு” என கையின் வைத்திருந்த செய்தித்தாள் சுற்றிய நாப்கின்ஸ் கொண்டு அவன்  மேல் அடித்தாள். “லூஸுப்பலே! வீட்டுல கறி சாப்பிடிமாட்டியாடா நீ ? இந்த கடி கடிச்சு வச்சுட்ட. ஓடிரு” “பேபிமா! சாரி,  அந்த ரோட்டு கடைய பாரேன்” -அருண் “சாவு” என்றவள் கிளம்பினாள் , தலையில் தன்னை தானே அடித்தும்,தன்னுள் சிரித்தும் . “போகாத , இருடி” என்று அவன் கேட்டுக்கொள்ள,  அவள் மெல்ல நகரும் வேளையில் அந்த அடர் இருட்டில் எங்கோ ஒலித்து காற்றில் மிதந்து கொண்டு இருந்த பாடலை இடைமரித்தது அந்த ஆட்டோ சத்தம். “இருங்கண்ணா வரேன்” என்று ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண் ஒருத்தி வேகமாக ஹாஸ்டல் நோக்கி வந்தாள். வாசலில் நின்ற மித்ராவை “என்னடி வெளிய நிக்கிற இந்த நேரத்துல” “அது…அது. வந்து கடைக்கு போய்ட்டு வந்தேன் அதான்” என்றாள் பதற்றமாக . மித்ராவை, பவி வேகமாக கிளம்ப சொல்லி எத்தனிக்க “எங்கே” என்றாள் மித்ரா. (பவி, மித்ராவின் அப்பாவுடைய தங்கை.  தன்னை விட நான்கு வயது பெரியவள் என்றாலும் நண்பர்கள் போல் தான் அவர்களின் பேச்சும் பழக்கமும்.) வந்தவள் கோயம்பேட்டுக்கு செல்லுமாறு அவசரப்படுத்த, ஏன் என்று இடைமறித்த மித்ராவின் கேள்விக்கு பதிலாக அண்ணனும், அண்ணியும்  ஊர்க்கு செல்ல அழைத்து வர சொன்னதாக பவி கூறினாள். புதன் கிழமை போவதாக சொன்னதை மித்ரா எடுத்து கூற பவி சற்று எரிச்சலுடன் தொடரந்தாள். “நீ வேற ஏன்டி நிலைமை புரியாம.அங்க வீடே ரணகளமா இருக்கு.” பவ்வியமாக பவியிடம் கேட்டாள் “என்ன ஆச்சு”  “நம்ம லீலா எவனயோ கூட்டிட்டு போயிட்டாலாம்டி. தாத்தாவ ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க. அதான் அண்ணன் அவசரமா கிளம்பறான்” “அய்யயோ!எப்ப நடந்துச்சு இது.” “இன்னைக்கு தான்” “எங்க போனாலாம்?”-மித்ரா “அது என்னமோ திருப்பூரோ எங்கயோ சொல்றாங்க நீ வேகமா கிளம்பு போலாம்” என்றவர்கள் உள்ளே நுழைந்தனர் “ஹாஸ்டல் என்னடி வீடு மாதிரி இருக்கு?” “பின்ன பிரவைட் ஹாஸ்டல் அப்டித்தான். மொத்தமே இருபது பேரு தான்.” “வாட்ச்மேன்ல கிடையாதா?” “அதெல்லாம் கிடையாது. ஆண்டி அங்கிள் மட்டும்தாம்.” “சொல்லாம போலாமா?” “இல்ல கீழே ஆண்டி அங்கிள் இருப்பாங்க, போறப்ப அவங்க கிட்ட சொல்லிட்டு போலாம்” இதே போல் சுதந்திரம் பவிக்கு கிடைக்கவில்லை. அண்ணனோடும் அண்ணியோடு அவர்கள் வீட்டில் தங்க சொல்லி அப்பா கறாராக சொல்லி இருப்பதால் அவளுக்கு இது புதிய அனுபவம். “ஃபிரியா இருக்க போல?”-பவி “ஆமா ரொம்பவே!சரி மேல வா ரூம் போலாம்” -மித்ரா “இல்லடி நான் இங்கேயே இருக்கேன். நீ திங்க்ஸ் எடுத்துட்டு வா சீக்கரம்” என்று போனை எடுத்தாள் பவி. மித்ராவின் ஹாஸ்டல் பார்பதற்க்கு நான்கு மாடி வீடு போல் , குளிர்ந்த காற்று,பக்கத்து சுவரின் பின் புறம் இருந்த மாங்காய் மரம் ஹாஸ்டலில் வாடகை குடுக்காமல் கொஞ்சம் உள்ளே தஞ்சம் புகுந்து இருந்தது. அதை அடுத்து சிறிய  கோவில்  என அந்த சந்து அமைதியான சூழளோடு , பொறாமையும் கொடுத்தது பவிக்கு. நடப்பது அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த அருண் என்னவென்று புரியாமல் முழித்து கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் கையில்  லக்கேஜ் எடுத்து வந்தாள் மித்ரா. “போலாமா ?” “ம்ம். போலாம் இரு பவி. சொல்லிட்டு வரேன்” என்று கீழ் இருந்த அறைக்கு நுழைந்தாள் மித்ரா.இரண்டு பேரும் ஆட்டோவில் ஏறினர். நடக்கும் அனைத்தையும் அவன் சற்று  தூரம் நின்று பார்த்து கொண்டு இருந்தான்.  மித்ராவோ அருணை பார்த்து எதுவும் பேச முடியாமல் நின்றாள். மூன்றாம் மாடியில் இருந்து வந்த அனுவின் எப்ப வருவ என்ற கேள்விக்கு “தெரியலடி போயிட்டு ஃபோன் பண்றேன்டி. உடம்ப பாத்துக்க” . அந்த பதில் அருணுக்கும் சேர்த்து தான் என்பது ஆட்டோகார அண்ணனுக்கும் புரிந்து இருக்கும்.  கடந்து சென்ற ஆட்டோவை பின் தொடரவா? வேண்டாமா? என்ற கேள்வியுடன் அருண் நின்று கொண்டு இருந்தான். ஆட்டோவில் இருந்து வந்த மித்ராவின்  வளையல் கொண்ட கை அசைப்பை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது, செல்போன் சினுங்கல் வாட்சப்பில் வந்தது  “பாய் பேபி. மிஸ் யூ. சி யூ சூன்”.  அவன் பார்த்து சிரித்ததும் அவள் வளையல் கை அசைப்பு நின்று ஆட்டோ அந்த சந்தில் புள்ளியாகி மறைந்தது. திலக், பத்மாவிடம் பேசிய சந்தோஷத்தில் வகுப்புக்கு வந்தான்.  அலெக்ஸ், கணபதி,இசக்கி மூவரும் வாசலில் நின்று கொண்டு இருந்தனர் அருகே துறைதலைவருடன்  தனம் சார் மற்றும் ராஜன் சார் நிற்க பாண்டி மட்டும் அந்த கூட்டத்தில் இல்லை. “வாங்க சார்!கிளாஸ்க்குள்ள ஏ.ஆர். ரஹுமான் பாட்டு கேட்குதா” என்றதும் திலக்கிற்கு புரிந்தது நேற்று செய்த விஷமம். “மொத்தம் நாலு பேரு தானடா?” என்றார் தனம் சார் “அவ்ளோதான் சார்” - இசக்கி உள்ளே அனைவருடைய பையிலும் சீனியர்கள் மூலம் செக்கிங் நடந்து கொண்டு இருந்ததை பார்த்தான் திலக். “நாலு பேரும் கீழ வாங்க என்று சென்றுவிட்டார்” துறை தலைவர். கேண்டினில் விட்டு வந்த பாண்டியோ  திலக் வந்து சேர்ந்த பின் மெல்லமாக அசைந்து வந்தான்  . நான்கு பேரும் வாசலில் நிற்பதை பார்த்ததும் சாப்பிட்டது வெளியில் வரும்போல் இருந்தது பாண்டிக்கு. “என்ன பாண்டி சார் ? கிளாஸுகுள்ள ஃபோன் வச்சு எப்.எம் கேட்கிறியாமே, வந்து லைன்ல நில்லு” என்றார் ராஜன் சார். பதற்றத்தில் சொன்னான் “சார்!அதெல்லாம் இல்லை சார்”  “தம்பி நீ உள்ளே போ” என்று தனம் சார் சொல்ல , “ஏ பாண்டி, பை பெருசா இருக்கேடா, உள்ள ரேடியோ கீடியோ வச்சு இருக்கியா.இருந்தா குடுத்துடுடா” என்றார் ராஜன் சார் நக்கலகா. “சார் சாப்பாடு தான் இருக்கு” என்று தான் தப்பித்த சந்தோசத்தில் ஆணை போல் அசைந்து உள்ளே சென்றான் பாண்டி.  அவன் போவதை சிரித்துகொண்டே பார்த்தனர் ராஜன் சாரும் தனம் சாரும் . " தளுக்கு மொழுக்கா இருக்கான் பாருங்களேன். அரிசி எங்க வாங்குவான்னு கேட்கணும் சார்" என்றார் ராஜன் சார். சிரித்து கொண்டே வெளியில் நின்றவர்களிடம் “உங்க பெஞ்ச் தானே அவன் கிடையாதா” என்றார் தனம் சார் “இல்ல சார் அவனுக்கு தெரியாது” என்றனர் அலெக்ஸும்,கணபதியும் கோரசாக . போன் அவனுடையது என்பதால் இசக்கி கையை பிசைந்து கொண்டு இருந்தான் . திலக் காதல் மயக்கத்தில் இன்னும் தன்னிலைக்கு வரவில்லை. “அவ்ளோ தான் சார் என்று உள்ளே” இருந்து சீனியர்ஸ் சிலர் வெளியேறி வந்தனர். “சரி நீங்க எல்லாரும் கிளாஸ் போங்க. எப்.எம் ரேடியோ. நீங்க நாலு பேரும் கீழ வாங்க” - ராஜன் சார்  தனம் சார் வகுப்பு எடுப்பதற்கு உள்ளே செல்ல  “சார்!தனம் சார். பசங்களை என்ன பண்ணலாம் சொல்லுங்க!” - ராஜன் சார் “என்ன பண்ண டீசிய குடுங்க” என்றார். “டீசியா” என அலெக்ஸ் பின் சட்டையை இழுத்து முனங்கிய இசக்கியை பார்த்து, “டேய் இதுக்கெல்லாம் டீ.சி குடுக்க மாட்டாங்க பதராமா வாடா பார்த்துகலாம்” என்றான் மெல்லிய குரலில் அலெக்ஸ் கீழே செல்கையில் ஜன்னல் வழி பாண்டியை பார்த்தனர் நால்வரும். அந்த கடைசி பெஞ்சில் தன் பெஞ்ச் நண்பர்கள் விடுப்பில் இருப்பது போன்றும்,  தனக்கு எதுவுமே தெரியாதது போலும் தனம் சார் வகுப்பு எடுப்பதை கவனித்து கொண்டு இருந்தான் பாண்டி. அத்தியாயம்-8 எதையோ நினைத்து ஏங்கி , தாலாட்டும் இரவின் மடியினில் தனி ஒரு மகளாய் பத்மா வாசலில் இருக்க அருணின் ராட்ஷஸ பைக் சத்தம் உள்ளே நுழைந்து மனதை உசிப்பி தட்டியது. வாசலில் இருந்த அம்மாவை பார்த்ததும் தூங்கவில்லையா என விசாரித்து கொண்டு உள்ளே நுழைந்தான் அருண்.  அவனுக்காக தான் காத்திருப்பதை சொல்லி எங்கே சென்று வருவதால் இவ்வளவு தாமதம் என்று கேட்டாள் பத்மா.  எதற்கும் அசராதவன் போல் பொய்யை சொன்னான் " பிரெண்ட்ஸ் கூட வெளியே போயிருந்தேன் " யார் கூட போயிருந்தே என குறுக்கு விசாரணை செய்தாள் பத்மா. “மகேந்திரன் கூட தான்மா” அவன் சொல்வது அப்பட்டமான பொய் என்பதை அவன் புத்திக்கு எட்டும்படி சொன்னாள்  “கொஞ்ச நேரத்துக்கு முன்ன மகேந்திரன் உன்ன வந்து கேட்டுட்டு போறான்” “ஸ்ஸ்ஸ்” என வெறும் உதட்டில் காற்றை உள் இழுத்து கொண்டான் அருண் ஒற்றை மகன் என்பதாலோ அல்லது தகப்பன் இல்லா மகன் என்பதாலோ அவளுக்கு அவனை கடிந்து பேச மனம் வரவில்லை.வீட்டிற்குள் நடந்து கொண்டே சொன்னாள் “அருண் வரவர நீ சரியில்ல உன் மேல கம்ப்ளைன்ட் நிறைய வருது” “என் மேலயா என்ன கம்ப்ளைன்ட்” என ஷூவை கழட்டியபடி கேட்டான் “எங்க போற எங்க வரன்னு தெரியல. நமக்கு வேண்டப்பட்ட ஆள் உன்னை யாரோ பொண்ணு கூட பார்த்திருக்காங்க. நான் நீயா இருக்க மாட்டாங்கன்னு சொல்லி இருக்கேன். நம்பிக்கையை காப்பாத்து” “மா! அதெல்லாம் இல்ல , உனக்கு யார் சொன்னா” “சரி அது இருக்கட்டும் நீ இப்ப எங்க போயிட்டு வர்றே?” “சினிமாவுக்கு போயிட்டு வரேன்மா! போதுமா.உனக்கு தெரிஞ்சா திட்டுவேன்னு சொல்லலை.” எதுவும் பேசாமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் பொய் சொல்லுமா என்ன அவன் கண்களை உருட்டிக்கொண்டு சந்தேக பார்வையில் பார்க்கும் அம்மாவை “மா” என்றான்  பத்மாவின் கண்ணில் லேசாக நீர் தேங்கியிருந்தது. “என்னமா ?” “அப்படி அந்த ஆளு சொன்ன மாதிரி இருந்ததுன்னா இப்பவே என் கிட்ட சொல்லிரு. உங்க அம்மா ஒன்னும் காதலுக்கு எதிரி இல்லை. ஆனா சொல்லாம கொள்ளாம உன் அப்பா மாதிரி என்னை தனியா விட்டுட்டு போகணும்னு..” என்றதும் தேங்கியிருந்த கண்ணீர் பொங்கும் அரிசியை போல் பொலபொலவென வழிந்தது. “மா! ஏன்மா இப்டிலாம் பேசுற அதெல்லாம் எதுவும் இல்லைமா” “சரி” என்று கண்ணைத் துடைத்தவள் “ஷூ வாங்கினியா?” “இச்ச்! பைக்லயே விட்டுட்டு  வந்துட்டேன் இரு வரேன்” என்று வாசல் நோக்கி சென்றவன் “அம்மாவிடம் சொல்லி விடலாமா” என  தனக்குள் யோசித்து கொண்டு ‘ஷூ’ எடுத்து தயக்கத்தோடு உள்ளே வந்தான் “மா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” "என்ன? என்ன சொல்லணும் என்றதும் அருணின் மொபைல் வைப்ரேட் ஆனது. வாட்ஸாப்பில் வந்த குறுஞ்செய்தியில் ‘ஆர் யூ ரீச்சுடு ?’ என்கிறது கள்வனின் காதலி “இல்லம்மா இன்னொரு நாள் சொல்றேன்” என்றவன் மாடிக்கு ஓடினான் . “டேய் இருடா சாப்டியா?” “அதெல்லாம் அப்பவே முடிஞ்சது. குட் நைட் மா” கை,கால்களை கழுவி சென்று படுக்குமாறு அவள் அறிவுரை சொல்ல மேலே சென்று கொண்டே பதில் உரைத்தான் “இப்ப தூங்கலாமா. லேட் ஆகும் . அப்புறம் கழுவிக்கறேன்”  சோஃபாவில் தொப்பென விழுந்தான். “வந்துட்டியா அருண்” - தாத்தா “நீங்க இன்னும் தூங்கலையா தாத்தா” “உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு தான் முழுச்சிட்டு இருந்தேன்.” “ரீச் ஆகிட்டேன். நீ என்ன பண்ற?வண்டி ஏறிட்டியா?” என அவன் வேலையை தொடர்ந்தான் கேட்காமல் அனுப்பிய இரண்டு புகைப்படத்தில் ஒன்றில் பூந்தமல்லி ரோட்டில் பேருந்து பறந்து கொண்டு இருந்தது,இன்னொன்றில் கிளம்பும் முன் எடுத்த செல்பி கையில் வாட்டர் பாட்டிலுடன் அருகில் பவி “சரி.பார்த்து போயிட்டு வா. எப்ப வர்ற?” “பேபி - லாஸ்ட் ஸீன் 10.12 PM” திலக் அலெக்ஸ் கணபதி இசக்கி நால்வரும் பிரின்சிபல் அறை வாசலில் நின்று கொண்டிருந்தனர் கையில் லெட்டர் உடன், “மச்சான் இந்த ஆள் சைக்கோ டா” என்று ஆரம்பித்து வைத்தான் அலெக்ஸ் “பேசாம இருடா யார் காதுலாயாது விழுந்தற போது” என்றான்  கணபதி பறிகொடுத்த நிலையில் பாவமாக கேட்டான் “டேய் என் போன் திருப்பிக் குடுத்துருவங்களா ?” இசக்கி இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க திலக் மட்டும் அமைதியாக இருந்தான். “என்ன தம்பி எதுக்கு இங்க நிக்கிறீங்க?” என்றார் பியூன். “பிரின்சிபல் சார பாக்கணும்” என்றார்கள் கோரசாக. “அவர பாக்கணும் சரி. என்ன விஷயமா பார்க்கணும் இங்க வர்ற எல்லாரும் அவரை பார்க்க தான் வராங்க .என்ன விஷயம் சொன்னா தான உள்ளே சொல்ல முடியும்.” ஏற்கனவே அங்கு வந்து சென்ற பல ஆசிரியர்களிடம் சொன்னதை மீண்டும் பியூனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, உள்ளே இருந்து வந்தார் பிரின்சிபல். “குட் மார்னிங் சார்” - கோரஸ் “என்ன மணி இங்க வந்திருக்காங்க?”- பிரின்சிபல் “இவங்கதான் அந்த ரேடியோல பாட்டு கேட்டது” - பியூன் மணி “சரி நீ போய் எனக்கு காபி வாங்கிட்டு வா” “கையில் என்ன லெட்டர்” - பிரின்சிபல் “அப்பாலஜி லெட்டர் சார்” என்று முந்தி கொண்டு சொன்னான் கணபதி “குடு இங்க.சரி இருக்கட்டும் என்ன பாட்டு கேட்டீங்க” -பிரின்சிபல் “சார் அதுவந்து….” - கணபதி “சும்மா சொல்லு தம்பி. யூ க்னோ . எனக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்கும்” “அப்டியா சார்” என்ற குஷியில், ’ரோஜா படத்திலிருந்து புது வெள்ளை மழை பாட்டு போட்டாங்க சார் அதான் கேட்டுட்டு இருந்தோம்" “அப்டியா யாரு மியூசிக் டைரக்டர்” என சுவாரஸ்யமாக கேட்டார் “ஏ.ஆர் ரஹ்மான் சார்” “யாரது ஹிந்திகாரான?” “சார் இல்ல சார் நம்ம தமிழ் பையன்தான்” ’ஹான்" என ஆச்சரியபட்டு வியந்த பிரின்சிபல் கையில் வாங்கிய லெட்டரை கிழித்தார். திடீரென அவர் சீரியஸானதும் “சாஆஆர்” என்றான் கணபதி லேசாக சிரித்தவர் லெட்டர் தேவை இல்லை தம்பி நீங்களும் கிழிங்க என்றார் . அவர்கள் சொன்னதால் மூவரும் கிழித்து கையில் வைத்தனர். “சரி எதுக்கு இங்க வந்தீங்க?” என்று கேட்டு கொண்டே அவர் கிழித்த பேப்பரில் இருந்தே ஒரு துண்டை சுருட்டி காதில் திருகி கொண்டார். “சா ஆஅர்…” ’என்னடா எதுக்கு இங்க வந்தீங்கனு கேட்டேன்ல ?" என்றார் கறாராகா “லெட்டர் எழுதி உங்க சைன் வாங்கணும் அப்பதான் உள்ள அனுப்புவேன்னு சொல்லிட்டாங்க” - அலெக்ஸ் “சரி லெட்டர் எங்க” - பிரின்சிபல் ’சாஆஅர்" என்றனர் மீண்டும் கோரஸாக “என்னடா பதில் சொல்லுங்க” ’’நீங்க தானா சார் கிழிக்க சொன்னிங்க" -இசக்கி “ஆமா நான் தான் கிழிக்க சொன்னேன். அந்த பேப்பர் எங்க  எடுத்தீங்க?” ’’ நோட்ல இருந்து கிழிச்சோம் சார்"- அலெக்ஸ் “அதான் நானும் கிழிச்சேன்.ஓடி போய் ஸ்டோர்ல புது பேப்பர் வாங்கி எழுதிட்டு வா” என மூஞ்சியில் எரிந்து விட்டு உள்ளே சென்றார். தூரத்தில் பியூன் புது மனைவியை போல் அலுங்காமல் காபியை எடுத்து வந்து கொண்டு இருந்தான். “நான் சொன்னேன்ல மச்சான் அவரு சைக்கோன்னு”-அலெக்ஸ் ஸ்டோருக்கு நடந்தனர் மூவரும். அத்தியாயம்-9 காலை வேளையை அழகாக்கி கொண்டு இருந்த பாடலுடன் கல்லூரிக்கு ரெடி ஆகிக்கொண்டு இருந்தான் அருண். ’பெட்டி’ல் இடது கையில் காஃபியுடனும், வலது கையில் பேப்பர் படித்து கொண்டு இருந்த தாத்தாவின்  பக்கம் சென்று பெட்டை தடுவிக்கொண்டு இருந்தான். “என்னடா தேடுற” என்றார் தாத்தா. “என் பர்ஸ் பார்த்தியா” - அருண் “நேத்து ஊரு சுத்திட்டு வந்த அழுக்கு ஜீன்ஸ் பேண்ட்ல பாருடா. என்கிட்ட கேக்ற” “சோ சுவிட்! கண்டிப்பா அதுல தான் இருக்கும் .சரி நைட்  என்னமோ கேக்கணும்னு சொன்ன என்ன?” “பரவாயில்லை! நியாபகம் ஆச்சும் வச்சுருக்கியே” “ஹலோ மிஸ்டர் ஸ்ரீராம்.. சொல்லுங்க என்னனு, காலேஜ் போனும் லேட் ஆச்சு” இரு வரேன் என்றவர் . கிப்ட் செய்யப்பட்ட ஒன்றை தூக்கி கொண்டு வந்தார்.அருண் கல்லூரிக்கு சேரும்போது அவனுக்கு கண்டிப்பாக ஏதாவது கொடுப்பேன் என்று அவர் பத்மாவிடம் சொன்னவர் இரண்டு மாசம் கழித்து ஏதோ ஒன்றை எடுத்து கொண்டு வருகிறார். கண்டிப்பாக மொபைல் இல்லையென்றால் ஆசையாக  அவன்  கேட்ட புளுடூத் தான் என நினைத்து கொண்டு இருந்தான் அருண். “இந்தா இது உனக்குத்தான்” “உள்ளே என்ன இருக்கு” என்ன ஆவல் ஆனான் அருண் “பாருடா. அப்புறம் உன்கிட்ட இன்னோரு விஷயம் பேசணும் உங்க அம்மாகிட்ட சொன்னேன் அவ உன்கிட்டயே பேசிக்க சொல்லிட்டா” “ஹ்ஹ்ம்மம்.முதல்ல அதை என்னனு சொல்லு கேப்போம்” - அருண் “அது எப்படி சொல்லனு தெரியல”. “என்ன எனக்கு ஏதும் பொண்ணு பாத்துட்டியா? பொண்ணு பேரு என்ன?” “ச்ச். சும்மா இருடா எப்ப பாரு விளையாட்டு உனக்கு” “அப்ப சொல்லு என்னன்னு”? “உங்க அப்பன் நேத்து ஃபோன் பண்ணான்” “என்னவாம் உன் பையனுக்கு ? ஹேய்!அந்த ஆளு வாங்கிக் குடுத்தது தான் இப்ப நீ என்கிட்ட குடுத்தியா” என்றான் கோவத்தில். “இல்லடா அருணே! இது என்னுடைய சொந்த காசில் வாங்கினேன்” “அதான பார்த்தேன் என்ன வேனுமா உன் பையனுக்கு . அதுக்குத்தான் காலையில என்னை பிடிச்சு வச்சிருக்கியா?” “ஒன்னுமில்ல அவனுக்கு உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சாம். இப்ப பாக்கணும் போல இருக்காம்.அதான் அடுத்த வாரம் சென்னை வர்றப்ப உன்னையும் பாத்துட்டு போலாம்னு என்கிட்ட போன்ல கேட்டான்.நான் உங்க அம்மாகிட்ட சொன்னேன் அவ உன் கிட்டயே கேட்டுக்க சொல்லிட்டா” “உன்கிட்ட ஒரு சிம்பிள் கொஸ்டின். நான் ஏன் அந்த ஆளை பாக்கணும்?” “அவரு உன் அப்பாடா?” பீரோ கண்ணாடியில் தலைவாரி கொண்டே “மன்னிக்கனும்! எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும் தான். நீ வேற ஏதாவது பேசணும்னா சீக்கிரம் சொல்லு எனக்கு காலேஜ்க்கு லேட் ஆச்சு”. “உனக்கு தான் அப்பா இல்ல எனக்கு  பையன் இருக்கானே.” “தாத்தா இங்க பாரு அவரேலாம் என்னால இனி பார்க்க முடியாது . அவர்தான் எங்க அம்மா வேண்டாம்னு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிட்டார்ல்ல , இப்ப என்ன வேணுமா அவருக்கு. நீ வேணும்னா ஒன்னு பண்ணு உன் பையனுக்கு கூட்டி வச்சுக்கோ புது மருமகளையும் கூட்டி வச்சுக்கோ, நாங்க வெளிய கிளம்புறோம்” “உனக்கு யாருடா இவ்வளவும் சொன்னா” கோபமே இல்லாமல் கேட்டார். “அதெல்லாம் எங்க அம்மா  அப்பவே சொல்லிட்டாங்க” காலில் விழுந்தான் அருண் , “எனக்கு ஓடிப்போன என் பையனும் வேண்டாம் புது மருமகளும் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்க அது போதும்.” எழுந்தவன் சொன்னான் “அப்படி சொல்லுவியா அதை விட்டுட்டு தூதுவர் வேலை பார்த்துட்டு இருக்க” “அய்யாசாமி எனக்கு  அவன் போன் பண்ணான். ஆயிரம் இருந்தாலும் அவன் என் பையன். இந்த நூறு ரூபா வச்சுக்க உங்க அம்மா இல்ல ஆபீஸ் கிளம்பிட்டா” பணத்தை அவன் பையில் வைத்து அவன் பாக்கெட்டை தடவி விட்டவர் “நூறா இருந்தாலும் நீ என் பேரன். உங்க ரெண்டு பேர் தொப்புள்கொடியை நான் ஏன் கட் பண்ணனும் அதுக்குதான் சொன்னேன் நீ அவனை பார்க்கவும் வேணாம் பேசவும் வேணாம். அவன் போன் பண்ணா நான் சொல்லிக்கிறேன்.” “ம்ம்ம்ம்!இப்பதான் குட் பாய் மாதிரி நடந்துக்கிற. சரி காசு குடு” “டேய் படவா! இப்பத்தான நூறு ரூபா குடுத்தேன்”. “அது எனக்கு. பெட்ரொல் போட யாரு உன் ஓடிப்போன மகன்கிட்ட போய் வாங்கிக்கவா?”-அருண் “அடிங்க ராஸ்கல். பேச்ச பாரு. என்கிட்ட உங்க அம்மா ஒன்னும் கொடுத்துட்டு போகல. போய் கீழ பாட்டி இருக்கும் போய் வாங்கிக்க”. அவரின் கன்னத்தை தட்டியவன் “டேக் கேர் ப பாய்” என்றான். “டேய் அருணே வேலை முடிஞ்சோனே கழட்டி விட்ற பார்த்தியா.பிரிச்சு பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்றா!” -தாத்தா “அய்யோ..சாரி” என்றவன் கிப்ட்டை பிரித்தான். அவ்வளவு பெரிய கிப்ட் பாக்ஸ்ல் மொபைல் இல்லை.  “ஏதோ கோட் மாதிரி இருக்கே தாத்தா , ஹை!!! டிராவல் கோர்ட், பார்ரா கண்ணாடி வேற” “எப்டி இருக்கு சார்?” என்றார் தாத்தா குஷியில் “தெறி பேபி. ரொம்ப நாளா வாங்கனும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஓசில கிடைச்சிருக்கு. நல்லா இருக்கு தாத்தா உண்மையாவே. ம்ம்ம்… உனக்குள்ளையும் என்னமோ இருந்துருக்கு பாரேன்.சரி நான் கிளம்பிறேன் பாய். உன் மகன் போன் பண்ணா ரொம்ப கேட்டேன்னு சொல்லு வரட்டா.” “போடா டேய் பெரிய மனுஷா” என்றார் தாத்தா வீட்டில் இருந்து கிளம்பியவன் வண்டியை ஒரு பார்க் வாசலில் நிறுத்தினான். பேபி ஆன்லைன் “என்னது பேபி ஆன்லைனா”!இந்த வரேன் இருடி என போன் செய்தான். முதல் ரிங்கிலே அவள் எடுத்து விட்டாள். “ஓய் மேடம் போயிட்டு ஒரு மெசேஜ் பண்ண மாட்டியா”-அருண் “உங்க ஆயா.நான் என்ன மறு வீட்டுக்கா வந்துருக்கேன் போனோனே போன் பண்றதுக்கு” “அதுக்கு ஒரு மெசேஜ் பண்ணிருக்கலாம்ல” “நான் இப்பதான் போன் எடுக்கிறேன். உனக்கு தான் மெசேஜ் பண்ணி இருக்கேன் வரும் பாரு” என்றதும் வைப்ரேட் ஆனது அருண் மொபைல் “வந்துடுச்சு!வந்துடுச்சு! என்ன ஆச்சு உங்க வீட்ல” “அட ஒன்னும் இல்லப்பா சப்ப மேட்டர்” “சரி யாரது ஓடிப்போனது?” - அருண் “டேய் ராஸ்கல் உனக்கு எப்படிடா தெரியும். ஒட்டு கேட்டியா ?” மித்ரா “நான் ஏண்டி ஒட்டு கேட்க போறேன் அந்த பனமரம் தான் ஹாஸ்டலுக்கே கேக்குற மாதிரி சத்தமா சொல்லுச்சே. அது இருக்கட்டும், ஹு இஸ் ஸீ?” “டேய் சொன்னேன்ல அன்னைக்கு அவதான் பவி. சரி காலேஜ் கிளம்பிட்டியா நீ?” “போயிட்டே இருக்கேன். நீ என்ன பண்ற? சாப்டியா?” ’அதெல்லாம் அப்பவே ஆச்சு கோவில் வந்து இருக்கோம் நானும் பவியும்." “சரி மேட்டருக்கு வா . வீட்ல என்ன ஆச்சு?” “விடாமாட்டான் போலயே! அடுத்த வீட்டு கதை உனக்கு ஏன்டா?” “ஹலோ ! அடுத்த வீட்டு கதையா? என் மாமனார் வீட்டு கதை. நான் கேக்காம யாரு கேப்பா?” “சரி சரி நைட்ல கால் பண்ணு பவி வர்றா நான் அப்புறம் கூப்பிடறேன்”. “டேய் இருடி!” “என்னடாஆஆஆ! வேணும் ,ஊர்க்கு வந்தாலும் விட மாட்டியா சனியனே” “எனக்கு உன்னை பாக்கணும். போட்டோ அனுப்பு” “என்னமோ ஸ்டூடியோகாரன்மாரி எடுத்து வச்ச மாதிரி கேக்குற முடியாது ப்பே”-மித்ரா “அனுப்பலனா, நான் காலேஜ் போக மாட்டேன்” “போகாதே!உன் அட்டனன்ஸ் கம்மியாகும் எனக்கென்ன?” -மித்ரா “ஓ.”. - அருண் என்ன ஓ. கிளம்புடா அவ வர்ரா!-மித்ரா “நீ இப்ப அனுப்பல நான் கால் பண்ணிட்டே இருப்பேன்.எப்டி வசதி?” -அருண் “ஐயோ படுத்துறானே . இருடா அனுப்பி தொலைறேன் தயவு செஞ்சு போன் மட்டும் பண்ணிடாத.” “அந்த பயம் இருக்கனும்.” நீல நிற சுடிதாரில் கோபுர வாசலில் நின்று செல்பி. அவளை இன்னும் மெருகேற்ற அவள் வைத்திருந்த நெற்றியின் சந்தன பொட்டு இன்னும் அழகு ஊட்டியது புதிய பேப்பரில் லெட்டரை எழுதிவிட்டு இன்டர்வல் தாண்டியும் நின்றுகொண்டிருந்தனர் நால்வரும். சோகம் ஒன்று திலக்கிடம் தஞ்சம் கொண்டது . காரணம் அவன் பரிதாப நிலையை பத்மா பார்த்துவிட்டாள். “மச்சான் இவனுங்க இன்னைக்கு முழுக்க இங்கே நிக்க வச்சுவானுங்க போல” என்றான் கணபதி. “அண்ணே சார் எப்ப வருவார்?” - இசக்கி “நான் உனக்கு அண்ணனா ?” என்றார் அந்த வயதான பியூன் “பின்ன தம்பியா நீ ?” - திலக் காதில் சரிவர அவருக்கு விழவில்லை , அல்லது இவர்களோடு மல்லுகட்ட அவருக்கு திடம் இல்லை என்பதால்  “என்னது ?” என்றான் பியூன் “இல்ல சார்! சார் எங்க போய்ருக்கார்?” - திலக் “தெரியாது . சாப்பிட இங்கதான் வருவார்” - பியூன் “திங்க நீ எங்க போவே” என்றான் - அலெக்ஸ் இம்முறை நன்றாகவே காதில் விழுந்தது “தம்பிங்களா அவ்ளோதான் மரியாதை” - பியூன் “ஹேய்.அண்ணனே நம்மள தம்பினு சொல்லிட்டாருடா” - கணபதி “டேய் சும்மா இருங்கடா ஏற்கெனவே போன் மாட்டிக்கிட்டு! இப்ப இவனை வம்பு இழுத்து பேசி இன்னொரு லெட்டர் எழுத வச்சுராதிங்கடா” என்றான் போன் பறிகுடுத்த இசக்கி காலையில் பிரின்சிபலை சைக்கோ என்றவன் இப்போது பியூனை பார்த்து சொன்னான் “டேய் மச்சா இவன் ஒரு அரை லூசுடா” - கணபதி “டேய்.. பிரின்சிபல் வராறு பேசாமா இருங்கடா” - இசக்கி அங்கு வந்த பிரின்சிபல் முதலில் அவர்களை தனம் சாரிடம் செல்ல சொல்லினார். காலையில் இருந்து நின்று கொண்டவர்கள் பாட்டு பாடி கொண்டே கிளம்பினர். “காலேஜ் வந்தா பிரின்சுபல் தொல்லை” என பாடினான் அலெக்ஸ் “ஆமாட ராமு ஆமாடா சோமு” என்று எதிர் பாட்டு பாடினான் கணபதி. இம்முறை வலது பக்கம் வந்த இசக்கியை அடுத்த வரி பாடச்சொல்லுவது போல் அவனை பார்த்து பாடினான் அலெக்ஸ் “கிளாஸுக்கு போனா தனம் சாரு தொல்லை” “ஆமாடா ராமு ஆமாடா சோமு” இந்த பாட்டு கச்சேரியை சிரித்து கொண்டே கேட்டு வந்தான் திலக். அவனை பார்த்ததும் அடுத்த வரி பாடினான் அலெக்ஸ் “கேண்டினு போனா லவ்வர்ஸ் தொல்லை” அவர்கள் கோரசாக ஆமாம் பாட , தன்னை தான் ஜாடையாக சொல்வதாக நினைத்தவன் “ஏய்” என்றான் திலக்.  பாடிக்கொண்டே அவர்கள் தனம் சார் அறைக்கு வந்து நின்றனர். “டேய்!உங்கள பிரின்ஸ்பல் தான பார்க்…” ’சார் அவர்தான் உங்ககிட்ட முதல்ல வாங்க சொன்னார்" என்றான் இசக்கி “காலேஜ் வந்தா படிக்கணும்,தேவையில்லா…” “சார்! சார்!காலையில இருந்து தண்ணி கூட குடிக்கல. ஒண்ணுக்கு முட்டிட்டு வருது சார். சீக்கிரம் சைன் பண்ணுங்க சார். பிரின்ஸ்பல் இப்ப கிளம்பிருவாராம்” என்று சைன் வாங்கிவிட்டு பறந்தனர். “ஒண்ணுக்கு போயிட்டு அங்க  போலாம்டா.” என்றான் கணபதி “மொதல்ல சைன் வாங்கலாம்டா” என்றவர்கள் ஒரு வழியாக  வாங்கி வந்துவிட்டனர். அத்தியாயம்-10 மித்ரா வீட்டில் லீலாவின் தாத்தா, பவியின் அண்ணன்கள் என மூவரும் சூழ்ந்து ஒன்றாக பேசி கொண்டு இருந்தனர். அறைக்குள் இருந்த பவியை டிவி சத்தத்தை குறைக்க சொல்லி மித்ரா கேட்க “எதற்கு” என்றாள் பவி. வெளியே லீலா விஷயமாக பேசுவதாக சொல்லவும், அதை கேட்பதில் அவளுக்குள் ஏன் இவ்வளவு ஆர்வம் என்பதில் பவிக்கு விளங்கவில்லை. அவளும் மித்ராவோடு வந்து ஜன்னல் பின் அமர்ந்து மனதில்பட்டதை கேட்டாள் பவி. “உனக்கு என்ன அவ விஷயத்தில அவ்ளோ ஆர்வம் . மேடம்க்கு ஏதும் ஐடியா உண்டோ ?” “அப்டியும் வச்சுக்கலாம்” என்று சிரித்து கொண்டே சொன்னாள் மித்ரா. “ஆத்தி!இந்த ஆட்டத்துக்கு நான் வர்ல. தாத்தா உனக்கு நம்ம ஊர்ல தான் மாப்ளை பார்க்கணும்னு இருக்கார். ஏதும் மெட்ராஸ்காரன் மேல ஆசை இருந்தா அந்த ஆசைய குழி தோண்டி புதைச்சுறு”   என்றாள் பவி. “சும்மா இரு பவி மொதல்ல அங்க என்ன செய்ய போறாங்கன்னு பார்க்கலாம்.” நேற்று நெஞ்சை பிடித்து விழுந்ததாக சொன்ன தாத்தா மனோதிடம் சரியாகி கோபத்தில் உட்கார்ந்து இருக்கிறார். மகன்களோடு , இப்போது மனைவி மற்றும் மருமகள்களும் முன் வந்து நின்றனர் .  குரல்களை மெல்ல செருமிக்கொண்டு தாத்தா பேச தொடங்கினார். “இத பார்ரா வாசு, பேசாமா போய் லீலாவ கூட்டிட்டு வாங்க. ஊர்க்காரங்க கேட்டா ரெண்டு நாளு கல்யாண வீட்டுக்கு போய்ட்டானு சொல்லிக்கலாம்” சில கெட்ட வார்த்தைகளை மாரியாக பொழிந்தவர் “முடிஞ்சா அவனை அங்கயே அடிச்சு கொன்னுட்டு வா.நமக்கு நம்ம புள்ள வேணும்.என்னடா சொல்றது புரியுதா ?” என்றார் தாத்தா “என்னங்க!” - பாட்டி வீரியமான வார்த்தைகளை மனைவி மீது விட்டெரிந்தார். பின் அவரே மருமகள்கள் முன் வார்த்தையை  விட்டதால் அவரின் கண்கள் பதற்றத்தில் உருட்டி கொண்டார். குறுக்கே பேச வந்த மனைவியை தடுத்து நிறுத்தும் பொருட்டு  “போடி உள்ள”என்றார் தாத்தா. அவர் அப்படி சத்தமிட மருமகள்கள் இருவரும் சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர் . அண்ணனும் தம்பியும் பலமான யோசனையில் இருந்தனர். “எங்க அப்பா யோசிக்கிறத பார்த்தா நிஜமாவே அந்த பையன போட்டு தள்ளிட்டு லீலாவ கூட்டிட்டு வந்துருவாராடி பவி” என்றாள் மித்ரா “யாரு எங்க அண்ணனுங்க? கொலை?, அடி போடி!வாசுவை கூட சேர்த்துக்கலாம்  ஆனா உங்க அப்பா ரத்தினம். சு உ உ த்தம்” - பவி “ஏன்? எங்க அப்பாக்கு என்ன? அவர் கோபம் வந்தா என்ன பண்ணுவாரு எனக்குதான் தெரியும்” “அதை சொல்லலடி நம்ம குடும்பத்திலேயே முதல் முதல்ல வேற ஒரு ஜாதியில கல்யாணம் பண்ணது உங்க அப்பா தான். ரெண்டு பேரையும் பிரிச்சிட்டு வேணா வருவாங்க தவிர கொலை பண்ற அளவுக்கு ஒர்த் இல்லடி”- பவி அப்படியானால் எப்படியும் தம் காதல் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் “ஹப்பா!” என பெரு மூச்சு விட்டாள் மித்ரா. “டேய் வாசு உன் முடிவு என்ன”? என்றார் அண்ணன் ரத்தினம் “நான் என்ன சொல்றதுனா. அதான்  அப்பாவை சொல்லிட்டாரு கூட்டிட்டு வர வேண்டியதுதான்”  - வாசு “அப்ப ஒன்னு பண்ணு , அவங்க கால் வந்துதுன்னா நீயே நல்லவிதமா பேசி எங்க இருக்காங்கனு கேளு.மத்தத நாம பாத்துக்கலாம்” என்றார் ரத்தினம் “ஆசை ஆசையா கவனிச்சு, என் வாயாலேயே பேரு வச்சி, செல்லம் குடுத்து செல்லம் குடுத்து வளத்ததுக்கு, நல்ல காரியம் பண்ணிட்டாடா உன் மக” என வாய்க்குள் முனகி கொண்டார் தாத்தா. அவர் முனகுவதை அவர்கள் இடைமறிக்கவில்லை. காரணம் அவர் போகிற போக்கில் ரத்தினத்தையும் சாடி பேசினார். “டேய் நீங்க இரண்டு பேருமா நைட்டு மொத பஸ்ஸ புடிச்சு நேரா திருப்பூர் போயிருங்க,நம்ம ஜாதி கட்சிக்காரங்க ரெண்டு பேருகிட்ட சொல்லி இருக்கேன். நீங்க அங்க போறதுக்குள்ள அவ எங்க இருந்தாலும் உங்களுக்கு தகவல் கிடைச்சிடும். நேரா போய் கூட்டிட்டு வாங்க, அந்த பய கைல கிடைச்சா..” கைகளை கழுத்தை நெறிப்பது போலாக பாவனை செய்து , பற்களை கடித்து , கையை இருக்கையில் குத்தி பலமாக மூச்சை விட்டுகொண்டார். “அதெல்லாம் வேணாம் மாமா ! எனக்கு என் மகள மட்டும் கூட்டிட்டு வர சொல்லுங்க. போதும்! சின்ன பொண்ணு ஏதோ குழம்பிட்டா. நாமளும் வேகத்துல ஏதும் பண்ண போய் குடும்பம் மானம் சந்தி சிரிச்சுறும்” என்றாள் லீலா அம்மா அனுபல்லவி “நீ சும்மா இரும்மா!அந்த பய படியேறி வந்தப்பவே வெட்டி இருக்கணும்.விட்டது தப்பா போச்சு. இன்னும் என்ன நிக்கிறீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றார் . அன்றைய நாள் முடிந்து மதிய இடைவேளையில் மர நிழலில் அமர்ந்தார்கள் பாண்டியுடன். பிற கல்லூரிகளில் கலை அறிவியல் பிரிவிற்கு பாதி நாள் தான் கல்லூரி .  ஆனால் இவர்களுக்கு மதிய உணவு இடைவெளிக்கு பின் ஒரு மணி நேர வகுப்பு உண்டு.  பாடத்திட்டத்தில் இல்லாத அந்த வகுப்பில், கணினியில் ஏதேனும் மென்பொருள் சம்மந்தமாக படிப்பார்கள். “குண்டுபயலே உன்னால நாங்க லெட்டர் எழுதிட்டு வந்துருக்கோம்” என்று கணபதி அவனை காலால் உதைத்து விட்டு அமர்ந்தான். எந்த கோபமும் இல்லாமல் அவன் சிரித்துக்கொள்ள அவர்களின் டிபன் பாக்ஸ் சத்தம் மட்டும் அங்கு கேட்டு கொண்டு இருந்தது. “மச்சா !  உன் ஆளு!பின்னால இருந்து சாப்பிடுரா பாரு” என்றான் பாண்டி அவர்களை அங்கேயே அமர வைத்துவிட்டு பத்மாவை நோக்கி அவளுடன் சேர்ந்தான். அவனோடு பின் தொடர்ந்து பாண்டியும் இணைந்து கொண்டான். பத்மா தனியாக இருந்தாள். அவளோடு வந்தவர்கள் டிபன் பாக்ஸை கழுவ சென்று இருக்கலாம் என்று நினைத்து கொண்டான் திலக். திலக் அங்கு வந்து உட்கார்ந்ததை பார்த்ததும் கண்ணை லேசாக அவன் புறம் உயர்த்திவிட்டு மீண்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள் . “என்ன ஆச்சு, நீங்க பிரின்சிபல் வாசல்ல நின்னிங்க” என்று பேச்சை தொடங்கினாள் பத்மா “எல்லாம் உங்களால தாங்க” என்றான் - பாண்டி “என்னாலயா? நான் என்ன பண்ணேன்?” “டேய் சும்மா இருடா” என அவனை தடுத்தான் திலக் “நா பாத்துக்கறேன் மச்சி ம்ம்..” என்று கண்ணை சிணுங்கள் அடித்தான் பாண்டி. “உங்களுக்கு டோக்கன் வாங்கி குடுக்க வந்தான்ல,அப்றம் லேட்டா கிளாஸ்க்கு வந்தான்.அதான் பிரின்சிபல் கிட்ட லெட்டர் எழுதி சைன் வாங்க கிகிகி..” என அப்பளத்தை கடித்தான் பாண்டி. “அது நேத்துள்ள? இன்னைக்கு ஏன் போனும்?” - பத்மா “குண்டுபயலே” என மனதில் நினைத்து தலையில் அடித்தவன் “கேக்றாங்கள்ள சொல்லு” என்றான் திலக். “அது நேத்து பிரின்சிபல் லீ…..லீவு..லீவு அதான் இன்னைக்கு” அவள் நம்பிவிட்டாளா இல்லையா என தெரியவில்லை  “ஓ” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு எழும்ப தயாரானாள். அத்தியாயம்-11 கல்லூரி முடிந்த பின் அன்றைய இரவு திரும்பி வந்த அருணிடம் ஏதோ பேச வேண்டும் என்று பத்மா சொல்ல அதற்குள் அவன் காலையில் தாத்தா சொன்னதை நினைவூட்டினான்.    ‘மேன் சர்ச் ஃபார் மீனிங்’ என்ற ஆங்கில புத்தகம் பத்மா கையில் இருந்தது , புதிதாக அவள் கண்ணாடி அணிந்து இருந்தாள். பத்மாவுக்கு கண் பார்வை நன்றாகவே இருந்தாலும் வாசிக்கும் பொழுது அவள் மூக்கில் கண்ணாடி அனிச்சையாக குடியேறிக்கொள்ளும் . ‘எக்ஸ் லவ்வர்’ என்று தன் அப்பாவை கேலியாக குறிப்பிட்டு பேசியவனுக்கு தனக்கு அவர் ‘எக்ஸ் தான் ஆனால் அவர் இரத்தம் தான் உனக்கு ஓடுவதாக’ பதில் சாட்டையடி கொடுத்து கையிலிருந்த புத்தகத்தை கீழே வைத்தாள் பத்மா. “மன்னிக்கவும் மாதாஜி’ என்றவன்”என் பெயர் பி. அருண் தெரியும்ல உனக்கு ?" என்றான் தனக்கு தெரியாமல் தன் பெயரை எப்போது சேர்த்து கொண்டாய் என்று சிரித்து கொண்டே  கேட்ட பத்மா தன்னை அறியாமலேயே கொஞ்சம் சஞ்சலம் ஆகினாள். அவர் சென்ற பின்னும் அத்தை மாமாவோடு இருப்பதாலோ , அல்லது அவர் மேல் கொண்ட விருப்பத்தினாலோ  அவள் இன்னும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆதித்யா என்ற அவரின் பெயரை நீக்கவில்லை.     அவருக்கு ஆதரவாக பேச  வேண்டாம் என பத்மாவை தடுத்தான்.  ஆதரவுக்கு சொல்லவில்லை என்றும் , விவரம் தெரிந்த நாள் முதல் அருண் அவரை புகைப்படத்தில் தான் பார்த்துள்ளான் என்பதால் அவள்  அவரை ஒருமுறை பார்க்க போகும்படி  தன் சார்பாக கோரிக்கை வைத்தாள் . காரணம் , அவர் நினைத்திருந்தால் தன் புது மனைவியுடன் மீண்டும் வந்து தன் வீட்டில் அவர் இணைந்து இருக்கலாம் . மகனையும் அவர் வசம் கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கலாம் என்று அவள் தன்னகத்தே நினைத்துக்கொண்டாள் .  அவள் கோரிக்கை வைக்கவும் அருண் சடாரென சொன்னான். “கன்ஃபார்ம்” “என்னடா கன்ஃபார்ம்” ? என்றாள் பத்மா “ஆதித்யானு போன வாரமே பேஸ்புக்ல ரிக்யூஸ்ட் வந்துச்சு, எனக்கு அவர் தானனு தெரியல உன்கிட்ட கேக்கலாம்னு வச்சு இருந்தேன். இப்ப தெரியுது அந்த ஆளு தான் ரிக்யூஸ்ட் குடுத்து இருக்காருன்னு” என்றான் அருண். அவளுக்கு நினைப்பு எங்கோ சென்றது. சற்று முன் தான் நினைத்தது போல் அவர் தன் மகனை கேட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என நினைத்து கொண்டே அவனிடம் சாதாரணமாக கேட்டாள் “பேஸ்புக்ல இருக்காரா?” . “ஆமாம்மா அவரு தான்னு நினைக்கிறேன்.” சப்பாத்தி மாவை பிரிட்ஜில் இருந்து ஆறு மணிக்கே எடுத்து வைக்காதவருக்கு விழுந்த வசவை கேட்டுக்கொண்டே  ‘போடி! போடி! உங்கிட்ட படுறபாடுக்கு அந்த எமனே தேவல’ என்று பாட்டியிடம் சண்டை போட்டுவிட்டே பத்மா,அருண் முன் ஆஜரானார் தாத்தா ஸ்ரீ ராம். “உன்ன எப்டி அவருக்கு தெரியும். பிரண்ட் ரிக்யூஸ்ட் வேற அனுப்பி இருக்காரா ?” - பத்மா சப்பரம் தன் பக்கம் வருவதாக சுதாரித்து கொண்ட தாத்தா, எதற்க்கும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை முடிவு செய்யும் முன் அமைதியாக சோபாவில் இருவர் முகத்தையும் பார்த்து கொண்டு இருந்தாள் “அட ஆமாம்மா! எனக்கு எப்டி தெரியும் அவரா தான் அனுப்பினார்” என்றான் அருண் அருண் “எங்க காட்டு, போட்டோ பார்த்து நான் சொல்றேன்” என்று அவளுக்கும் அவரை பார்க்கும் ஆவல் தொத்தி கொண்டது. விஷயம் நன்றாக புரிய “சும்மா இரு பத்மா நீ! உன்னை விட்டுட்டு இன்னொரு சிறுக்கிய இழுத்துட்டு போனான் அவன ஏன் பார்க்கணும். நீ போ! உள்ள அத்தை கூப்டரா” என்று ஆட்டத்தை கலைத்து உள்ளே அனுப்பி வைத்தார் தாத்தா. அவள் உள்ளே செல்ல, அத்தனையும் புரிந்த அருண், “ஏஏஏய் மிஸ்டர்-ஸ்ரீராம் நீ தான் என் போட்டோவ உன் மகனுக்கு அனுப்புறியா ?” சத்தம் வேணாம் என கைகளால் ‘உஷ் உஷ்’ என்று சொல்லி கொண்டே  “அடேய் சண்டாளா! உங்க அம்மா காதுல விழுந்தர போகுதுடா கொஞ்சம் சும்மா இருடா. இந்த வீட்ல என்ன ஒழுங்கா கவனிக்கிறது பத்மா மட்டும் தான் அதுல மண் அள்ளி போட்டுறாத” “ஐயா பெரியவரே உன் மயன்ட சொல்லும், எதிர்வீட்டு அமர்நாத் அங்கிள் ரிக்யூஸ்ட் கூட ஏத்துப்பேன்.உங்க மவன் ரிக்யூஸ்ட் ஏத்துக்க மாட்டேன்னு, வரட்டா” என்றவன் ஷாக் அடித்தவன் போல் குலுங்கினான் . “என்னடா குலுங்குற ?” “போன் தாத்தா” என்றவன் சட்டையை கழற்றி கொண்டே மாடிக்கு சென்றான். “ஏன்?அத இங்க இருந்து பேச வேண்டியது தானே”. “சில பல டிஸ்டர்ப் வருதுங்க தாத்தா” என்றான் மரியாதையாக ’யாருடா டிஸ்டர்ப்?" - மித்ரா “நீங்க இல்லைங்க இங்க. இங்க பேசிட்டு இருந்தேன் மேடம்” -அருண் “வீட்டுக்கு போய்ட்டியா ?” “ம்ம். இப்ப தான் வந்தேன், நல்ல வேளைடி இவ்ளோ நேரம் அம்மா பக்கத்துல இருந்தாங்க . மகராசி போனதுக்கு அப்புறம் கால் பண்ணியே. நீ வாழ்க! உன் குலம் வாழ்க!” - அருண் “ச்ச. கொஞ்சம் நேரத்துக்கு முன்ன கால் பண்ணி இருக்கலாம்” - மித்ரா “அய்யே ஆசையா பாரு. சரியா சொல்லி இருப்பேன் ராங் நம்பர்னு” “சொல்லுவடா சொல்லுவ.ஹாஸ்டல் வாசல்ல குடுத்தது என்ன காந்தி கணக்கா?” “அடியே! ஏன்டி அதுலயே நிக்கிற,ஒரு முத்தம் குடுத்துட்டு நான் படுற பாடு இருக்கே, ஐயோ,சரி என்ன ஆச்சு” என்றான் அருண் “என்னது என்னாச்சு?” “ச்ம்ம். அதான் அந்த லவ் பேர்ட்ஸ்” “ராஸ்கல் ! என்ன என் குடும்பத்த பாத்தா கேலியா இருக்கா உனக்கு?” “ஏன்டி கேக்க தான செய்றேன்” “உனக்கு பேசுறதுக்கு ஒரு கதை வேணும். அதுக்கு இப்ப லீலா தான் கிடைச்சாலா” “நீயும் இப்ப கிடைச்சா நல்லா தான் …” “என்னதே ?” - மித்ரா “இல்ல”  “ஹலோ  ஹலோ” என்று செல்போனை காதை விட்டு நகற்றி மீண்டும் அருகே கொண்டு வந்தான் “லைன் கிளியர் இல்ல” - அருண் “லூஸுப்பயலே! சரி காலேஜ் எப்டி போச்சு?” “அது அங்கே தான் இருந்துச்சு நான் தான் …” விபத்தில் தப்பியது போல் சத்தமாக  “ஷ்ஷூஊஊஊ …” என்றாள் மித்ரா “ஆமா! புது ஷூ தான் நேத்து வாங்குனேன்ல.” “அருண்!வர வர ரொம்ப மொக்க பண்ற பேபி. நல்ல டாக்டரா போய் பாரு ?” “பரவாயில்ல. நீ எப்ப வர்ரே ?” “தெரியலடா அப்பாவும் சித்தப்பாவும் திருப்பூர் போயிருக்காங்க வந்தா தான் தெரியும். சரி இரு வரேன் ஏதோ கார் வருது எங்க வீட்டுக்குள்ள” “என்ன கார் ரிமோட் கா..?” சாப்பிட்டு முடித்து கையை கழுவ போய் விட்டாள் பத்மா. எப்படியோ இரண்டு பேரையும் பேச வைத்தாயிற்று , வகுப்பில் செய்த  ரேடியோ விஷயத்தை   மன்னித்திருப்பான் என்ற குஷியில் இருந்தான் பாண்டி. அவள் கண் பார்வைக்கு அப்பால் சென்றதும் “குண்டு பயலே! லூசாடா நீ” என்றான் திலக் “நான் என்னடா பண்ணேன் அவ தா நம்பிட்டால்ல” “சாப்பிடுரப்ப டீசண்டா சாப்பிட மாட்டியா ? அதென்ன அப்பளத்தை அந்த கடி கடிக்கிற? அவ என்ன பத்தி என்ன நினைப்பா” “சாரிடா” என முகம் வாடினான் பாண்டி சிறிது நேரம் பின் “நல்ல வேளை ..” என இழுத்தான் “என்ன நல்லவேளை ?” “அவ கீரை கூட்டையும் கேட்கலாம்னு இருந்தேன் திலக். என்ன இருந்தாலும் அவளா தருவானு பாத்தேன் தரல.” “அய்யோ ! டேய் தடி பயலே” “டேய் உனக்கும் சேர்த்து தான் கேட்டுருப்பேன்.” “டேய்” என கடுப்பான திலக்கை நோக்கி “டேய்! என்ன அதான் ரெண்டு பேரையும் பேச வச்சுட்டேன்ல, நியாயப்படி பார்த்தா நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லிருக்கணும்” என்றான் பாண்டி வாஸ்தவமான பேச்சு தான் என்றாலும் இனி நாளை தான் அவளோடு பேச முடியும் என நினைத்தவன் . “அப்…” என அவன் பேச தொடங்க “நிறுத்துடா கைல காசு இருக்கா?” - பாண்டி “இருக்கு. ஏன்” - திலக் “டீ வாங்கி குடு” “டேய் ஆத்தரத்தை கிளப்..” “எனக்கு இல்லடா. உன் ஆள நைஸா கூப்பிட்டு பாரு” “வருவாளாடா பாண்டி ?” “வருவான் மச்சான். யூ ஆர் ஏ ஹேண்ட்ஸம்” “ம்ம்ம்?” என கேள்வியை தொடுப்பது போல் கேட்டான்  திலக் “ஆமடா. பாரு! சாப்பிடறப்பவும் டக்_இன் பண்ணி பெல்ட் வேற போட்டு இருக்க” . பாண்டியும் , திலக்கும் இன்னும் இருந்த இடம் விட்டு எழுந்திரிக்கவில்லை. ஒருவேளை நாம் கை கழுவும் நேரத்தில் நாம் இல்லையென அவள் சென்று விடக்கூடாது என்பதில் திலக் கவனமாக இருந்தான்.  டிபன்பாக்ஸை கழுவி விட்டு வந்தவள் தோழிகள் முன்னே செல்ல தான் விடைபெறுவதாக சொல்லிவிட்டு, இன்று முழுவதும் கல்லூரி உண்டா என்று கேட்டாள். “இல்லைங்க ஒரு மணி நேரம் தான். உங்களுக்கு?” என்றான் திலக் “எனக்கும் தான்” அவள் மெல்ல கிளம்ப திலக் சட்டையை பிடித்து இழுத்து கொண்டே “மச்சி!மச்சி கூப்டுடா” என்றான் பாண்டி. திலக் தயங்கி கொண்டே இருக்க , அவள் அங்கிருந்த தோழிக்கள் கூட்டத்தில் இணைந்து கொண்டாள் பத்மா. “சரியான லூசுடா திலக் நீ” என்றான் பாண்டி “டேய். கூப்ட்டு வரலனு சொன்னா அசிங்கம்டா” என்றான் திலக் "ஆமா ஆமா. காலைல பிரின்சிபல் ரூம்ல பட்டத விடவா,… “மச்சா திலக் சீக்கிரம் கிளம்புடா” என்றான் பாண்டி. அவன் புரியாதது போல் பாண்டியை பார்த்தான். நேராக சென்று கொண்டு இருந்த அவர்கள் கேண்டின் நோக்கி போகிறார்கள் என்பதை திலக் தலையை ரோபோ போல் திருப்பி விட்டு காட்டினான் பாண்டி. “பெல் அடிக்க இருபது நிமிஷம் இருக்கு மச்சான்” என்றதும் டிபன்பாக்ஸை பாண்டியின் வசம் கொடுத்து சாப்பிட்ட கையோடு எழுந்து ஓடினான். கேண்டீனில் டீ குடிக்க அவ்வளவு கூட்டம் நின்றது. அதனை பார்த்து மலைந்து போய் நின்றது பத்மாவின் கும்பல். திலக் ஓடி வர பத்மா எதாச்சையாக திரும்புவதும் சரியாக இருந்தது. “என்ன ஆச்சுங்க. அதுக்குள்ள சாப்ட்டு வந்துட்டிங்க?” - பத்மா “நீங்க இங்க என்ன பண்றிங்க?” என்றான் திலக் “இவளுங்க தான் காபி சாப்பிடலாம்னு கூப்ட்டு வந்தாளுங்க. கூட்டத்தை பார்த்தா பெல் அடிச்சுரும் போல” என்றாள் பத்மா “காபி தான வேணும் இப்ப பாருங்க” என்றவன் சீனியர் கெத்தொடு காசை வாங்கி உள்ளே சென்றான். கூட்டத்தை பிரிக்காமலேயே ஒருவனின் இடுப்புக்கு இடையில் கிடைத்த இடைவெளியில் " மணி அண்ணா" என்றதும் உள்ளே இருந்த ஒருவர் “என்னப்பா திலக்” என்றார்.  “நாலு காபி அண்ணா” என்று சில்லறையை நீட்டினான். அவர்கள் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்க கிசு கிசுத்து கொண்டே குழுவில் ஒருத்தி கேட்டாள். “பத்மா அந்த அண்ணாவ உனக்கு தெரியுமா ?” “தெரியாதுப்பா இங்க வந்து தான் பழக்கம்” “அப்ப இனி அவன் தான் உன் மன்னவன்” “என்னடி சொல்றிங்க ?” “சரி தான். அவர் உன்னை ட்ரை பண்றார்டி . இது கூட தெரியலையா?” என்றதும் மூன்று பேரும் சிரித்தனர் சிறிது நேரத்திலேயே உள்ளே இருந்த ஒருவரிடம் காபியை கொடுத்து அனுப்பினார் மணி . தட்டோடு வந்தவரை அவங்களுக்கு என கையை காட்டி அனுப்பினான். “இருப்பதற்க்கு இடம் தேடி சென்றனர்” பத்மாவின் தோழிக்கள் . ஆனால் அங்கே நின்ற பத்மா திலக்கை நோக்கி வந்தாள், “உங்கள ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே?” “பரவாயில்லை கேளுங்க.” “நீங்க என்னை ட்ரை பண்றிங்களா?” என்றாள் சடாரென. பக்கென ஆன திலக் நிதானம் தவறி “ஆம்” என்றான். “ச்ச்ச் ! இல்ல இல்ல” என்றான் ஏதோ புரியாமல் “ம்ம்ம். சரி” என நகர்ந்து சென்றவளை மீண்டும் அழைத்தான் திலக். “என்ன ?” - பத்மா “உங்களுக்கு முறைமாமா  யாரும் இருக்காங்களா?” என்றான் திலக் “இல்ல. எதுக்கு கேக்குறிங்க ?” நாளைக்கு சொல்றேன். “பாய்” என ஓடி சென்றான் . மீண்டும் புரியாததை போல் அவர்களுக்கு கொடுத்தது போக அவளுக்கு கொண்டு வந்த ஒரு காபியை மட்டும் ஏந்தி அன்ன நடையில் குழுவுக்கு வந்தாள் பத்மா. அத்தியாயம்-12 காரில் இருந்து வந்த மூன்று நபர்கள் மித்ராவின் வீட்டிற்குள் வந்தனர். அதில் ஒரு வயதானவர் மட்டும் உருவத்திலும்,மீசையிலும் பெரிய அளவில் இருந்தார். அவர் நடக்கும் பொழுது கூட அடிக்கடி மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு  வீட்டிற்குள் வந்தார்.  “வணக்கம் சார்!” என்ற கடா மீசைகாரர் வீட்டினுலுள் இருந்த தாத்தாவை நோக்கி வந்தார் . “வாங்க உட்காருங்க”என அவர்களை அமர வைத்தார் தாத்தா. யாரென்றே தெரியாத நபர்கள் இந்த இருட்டிய வேளையில் வந்தது அவருக்குள் கேள்வியை கொடுத்தது. அவராக கேட்கும் முன்னரே மீசைக்காரா தாத்தா தொடர்ந்தார். “என் பேரு ஆறுமுகம் இது என் பெரிய பையன் விக்னேஷ்,இது மாணிக்கம். இங்கதா விருதுநகர்ல இருக்கோம். சொந்தமா இரும்பு கடை , ரைஸ் மில் வச்சு நடத்திட்டு இருக்கோம்” “சரிங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க?” என்றார் தாத்தா “உங்க பேத்தி லீலா விஷயமா பேச வந்துருக்கோம்” என்றதும் தாத்தாவுக்கு ஓரளவுக்கு புரிந்தது அவர்கள் வந்த நோக்கம் .  லீலாவோடு சென்றவன் பற்றி கேட்க அவர்கள் வீட்டிலிருந்து வந்திருக்கலாம் என யூகித்து இருந்தார். தம் மக்கள் லீலாவை தேடி திருப்பூர் நோக்கி சென்றதையும் அவர்களுக்கு கூறினார். “தெரியும் சார்” என குறுக்கிட்டான் அவரின் பெரிய மகன் விக்னேஷ் “இரு விக்னேஷ் நாங்க பேசிட்டு இருக்கோம்ல” என்றார் கடா மீசை காரர். “ஐயா மன்னிக்கனும்! எங்க பையன் மேலதான் தப்பு இருக்கு அதான் உங்கள நேருல பார்த்து ,,,…” “இங்க பாருங்க அறியா பசங்க தெரியாம பண்ணிருப்பாங்க. கல்யாணம், கில்யாணம்னு ஏதும் தட்… யாரது வாசல்ல?” - தாத்தா “வாடி உள்ளே !” என்ற மீசைக்காரார் “அது என்னோட மனைவி லதா, அவங்க ரெண்டும் என் மருமகளுங்க” வீட்டில் உள்ள அனைவரும் ஹாலில் வந்து நிற்க தாத்தா பார்த்த பார்வைக்கு மருமகள்கள் சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டனர். பாட்டி கதவோரம் நின்று கொண்டாள். மித்ராவும் , பவியும் முன்னர் இருந்த அதே அறையில் அமர்ந்து கொண்டனர்.  கையில் தட்டுடன் உள்ளே வந்த இன்னும் மூன்று பேரையும் வெறிக்க வெறிக்க மித்ராவின் குடும்பமே பார்த்து கொண்டு இருந்தனர். தட்டை வாங்கி மேஜையில் வைத்தவர் " சங்கடப்பட வேண்டாம். கல்யாண விஷயமா தான் பேச வந்துருக்கோம்" என்றார் மீ.கா . சுளீரென வெகுண்டெழுந்த தாத்தா “யோவ்! நைட்ல தட்ட தூக்கிட்டு வந்துருக்கிங்க அக்கம் பக்கத்துல பார்த்தா என்ன நினைப்பாங்க?” - தாத்தா “அதான் சார் சொல்றோம். விஷயம் வெளிய தெரியுரதுக்கு முன்ன நாம பேசிக்கலாம்னு மத்தியானமே கெளம்பிட்டோம் வர லேட் ஆகிட்டு” - என்றான் சின்ன மகன் மாணிக்கம் வந்தவர்கள் அனைவரின் கழுத்து சங்கிலிகள் அவர்களின் பொருளாதார நிலையைக் கூறியது. விக்கிற விலை வாசியுலும் தட்டு கூட நயம் செம்பாக  இருக்க கூடும். (மித்ராவின் அப்பா ரத்தினமும், லீலா அப்பா வாசுவும் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்தனர். அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் வந்த வாசுவை என்ன செய்யலாம் என கேட்டான் ரத்தினம். “கூட்டிட்டு வந்துடலாம்னா” என்பதோடு பேருந்தை தேடுவதில் வாசுவின் கண்கள் திணறிக்கொண்டு இருந்தது. தன் பங்குக்கும் பேருந்தை தேடி கொண்டே ரத்தினம் கேட்டான் “அந்த பையன் வீடு ஏறி பொண்ணு கேட்டு வந்தானா ?” “ஆமாண்ணா. நான் ஆபிஸ் போயிருந்தேன் தாத்தா தான் பேசி அனுப்பி இருக்கார்” “என்ன பேசினாராம்?” “முடிஞ்சா என் பேத்திய கட்டிக்கணு சவால் விட்டு….” “சுத்தம். அவ்ளோ பேரும் சேர்ந்து, நல்ல வேலைய பாத்துட்டு என்ன ஃபோன் பண்ணி கூப்பிட்டு இருக்கீங்க பாரு! அங்க நிக்குற நீங்க!” “நான் என்ன பண்றது அப்பா பேச்சை மீறி?” தீப்பந்தம் பார்த்து பயந்து ஓடும் யானையின் பிளிறலைப்போல்  சத்தம் எழுப்பி கொண்டே உள்ளே வந்த பேருந்தை பார்த்தவர் “பஸ் வருது இடத்தை பிடி” என்றான் ரத்தினம்) “லூசாயா நீங்கலாம்? காலேஜ் போன பொண்ணு காணோம்னு வயத்திலே புளிய கரைச்சுட்டு இருக்கோம் தட்ட தூக்கிட்டு வந்து நிக்கிறீங்க” - தாத்தா “என்னங்க” என்றாள் அவரின் மனைவி அவர் கண்கள் அறையின் வாசலில் நின்ற அவரின் மனைவிக்கு செல்ல வந்தவர்களுக்கு டீ,காபி ஏதும் செய்வதா என்பதை போல் அறையில் இருந்தே சைகை காட்டினாள் மனைவி.   மேஜை மேலிருந்த சொம்பு, அகத்தில் இருந்த தண்ணீரோடு பறந்து அறைக்குள் சென்றது.  அவரின் கோபத்தை கண்டும் கூட மீசைகாரர் குடும்பம் தங்களுக்குள் முகம் பார்த்து கொண்டு, அங்கேயே இருந்தது. அதனை தொடர்ந்து உள்ளே சென்ற தாத்தாவும் லீலாவின் அம்மாவிடம் “போன போட்டு குடு உன் புருஷனுக்கு” என்றார். (தன் கல்யாணத்தின் போது அப்பா செய்த பிரச்சினை அவனுக்குள் மறைந்திருக்க  “அந்த பையன் நம்ம ஜாதிகாரனா வாசு ?” என்றார் ரத்தினம். “ஆமா அப்படித்தான் நினைக்கிறேன்”. “அப்புறம் ஏண்டா கட்டிகுடுக்க வேண்டியது தான?”- ரத்தினம் “இத அப்டியே அப்பாகிட்ட கேளு . தைரியமா என்கிட்ட கேக்கிறல்ல .அது இருக்கட்டும்.அவரு சொன்னாருன்னு ரெண்டு பேரும் கிளம்பி போறமே அந்த ஊர்ல நாம எங்க போய் தேட ?” -  வாசு “ஏன்டா உன் பொண்ணா காணோம். கொஞ்சமாவது பயம் இருக்காடா உனக்கு?” என்றான் ரத்தினம் “எதுக்கு பயம். நிழலையே வித்து படம் காட்டிருவா லீலா. ஆனாலும் கொஞ்சம் பயம். அதான் உனக்கு ஃபோன் பண்ணேன். நீ வந்துட்டேல்ல அதான் பயம் போய்ட்டு” என்றான் வாசு. வீட்டில் இருந்து வந்த அழைப்பு கேட்ட பின் பேருந்தில் இருந்து இறங்கினர்  . அடுத்த நாளில் கல்லூரி முடிந்த பின்னும்  கேண்டினில் சந்தித்து கொண்டனர் இருவரும். திலக் கேண்டின் வரவும் அவனை கண்டதும் சேர்ந்து அமர்ந்திருந்த பத்மாவின் குழு , பண்பாக அவளை தனியாக விட்டு விட்டு கிளம்பி சென்றனர் . இரவெல்லாம் தூங்காமல் நினைத்தது போல் அவனை கண்டதும் கேட்டாள் “நேத்து எதுக்கு முறை மாமன் இருக்கான்னு கேட்ட?” “ஆமா சும்மா ஒரு ஜி.கே” என்று அசடு வழிய அவனுக்குள் கொஞ்சம் கேள்வியோடு, வெக்கமும் எட்டிப்பார்த்தது. அவனின் அந்த வெக்கத்தை ரசித்துக்கொண்டே இருந்தாள் பத்மா. திலக் பத்மாவின் முகம் பார்க்க , அவள் கண்கள் திலக்கை தின்று கொண்டு இருந்தது. உதட்டில் இருக்கும் அவளின் இழைய புன்னகைக்கு,  திலக் மீண்டும் தரையை நோக்கினான்.  கொஞ்சம் பயத்தோடும், ஆசுவாசமாகியும் முதல் நாள் பேசிய துணிவோடு கேட்டான். “பத்மா? லவ் பத்தி என்ன நினைக்கிற?” ஆசிரியர்களுக்கு குடுத்து விட்டு வந்த பாதி நிறைந்திருந்த டீ கேனை ‘டமால்’ என கை தவறவிட்டார் மணி அண்ணன். உள்ளே இருந்த மிச்சம் இருந்த ‘டீ’  கேண்டின் தரையில் படுத்து கொண்டன. வகுப்பு நேரம் ஆரம்பமாக இருப்பதால் ஒரு சிலரே அங்கு மீதம் இருந்தனர். “பாத்து! மணி அண்ணா! என்ன ஆச்சு” என்றான் திலக் பதில் கொடுக்காமல் தவறி விழுந்த கோபத்தில் அவர் கேண்டின் உள்ளே சென்று கொண்டார். கைப்பிடி விடுபட்ட கேன் மட்டும் அங்கும் இங்கும் உருண்டு கொண்டு இருந்தது. டீக்கேனை பார்த்து கொண்டு இருந்தாள் பத்மா அவளை இவன் பார்க்க ,“நல்ல சகுனம்டா சாமி” என மனதுக்குள் எண்ணியவனை நோக்கி “என்ன சொன்ன” என்றாள்? “அய்யோ வெளிய கேட்ருச்சா!” “இல்ல என்னமோ சொன்ன சரியா கேக்கல.” “ஹான். அது லவ் பத்தி என்ன நினைக்குறிங்கனு … ?” அவளுக்கு திலக் மனதின் எண்ணம் நேற்றே புரிந்தது , இருந்தும்  சற்று மவுனமாக இருந்தாள் “ஹேய். சாரி தெரியாம கேட்டுட்டேன்” “நேத்து தானே உங்கிட்ட கேட்டேன்?” “என்ன கேட்ட?” என்றான் திலக் “என்ன ஃபாலோ பண்றியானு?” என ஒருமையில் பேசினாள். இவ்வளவு நேரம் அவள் ஒருமையில் பேசியும் இப்போது தான் அவன் புத்திக்கு எட்டியது. “ஹலோ! ரெஸ்பெக்ட்டா பேசுங்க , நான் சும்மா கேட்டேன் . என் மனசுல ஒன்னும் இல்ல?” என்று வேகமாக பேசினான். அவள் எதுவும் பேசாமல், கேண்டின் மேஜையில், இருவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த திலக்கின் மூடிய புத்தகத்தை எடுத்தாள். “ஏய்.அது செகண்ட் இயர் புக்” என்றான் திலக் “இதென்ன ?” என்று அவள் வினவ, திலக் பெயருக்கு பின் கொஞ்சம் பெரிதாக ஹார்டின் விட்டு பத்மா என ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. “ஷ்ஷ்ஷ்ஷ் . . .” என புகைவிட்டான் திலக் பத்மாவின் பெயருக்கு அவன்  “ஹச்” இல்லாமல் எழுதி இருந்தான். பத்மாக்கு ‘ப்பி.ஏ.ட்டி.ஹச்.எம்.ஏ’ என புத்தகத்தை கொண்டு அவன் தலையில் அடித்தவள் வெளியேறி ஓடினாள். “மச்சாஆஆஆஆ” என சுவரின் பின்புறம்  வந்த குரலில் ,  கும்பலகா பாண்டி தலைமையில் கடைசி பெஞ்ச் ராஜாக்கள் வெளியே வந்தனர் “நீங்க என்னடா பண்றிங்க இங்க?” - திலக் அவனுக்கு முன்னரே கேண்டின் வந்தவர்கள் மித்ராவுக்கும் அவளின் குழுவுக்கும் அவன் வந்தமரும் பொழுது அவன் புத்தகத்தை  பார்க்கும்படி சொல்லி இருந்தார்கள். “கண்டிப்பாக இது காதல்” என்று தான் குழுவில் அனைவரும் பவ்வியமாக, பத்மாவை தனியாக விட்டு சென்றிருக்க வேண்டும் என்று தன்னிலை விளக்கத்தை கொடுத்தனர் .   “அடபாவிகளா! ஒன்னும் சொல்லாம போறாடா என் ஆளு” பாண்டி  சத்தமாக கேட்டான் “அலெக்சு யாரோ அன்னைக்கு ஆளுன்னு சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க  அவங்கள பாத்தியா” .  கேண்டீனில் மின்சார தடையால் சற்று முன் நின்ற மின் விசிறியும் இவர்களின் சிரிப்பால் உயிர் பெற்று சுழல தொடங்கியது… அத்தியாயம்-13 கடல் அலை காற்றுடன் முட்டிக்கொள்ளும் சத்தம்,சூரியன் பணியை முடித்த பின் கிளம்பும் நேரம் வழக்கமாக சந்திக்கும் மெரினாவில் சந்திக்கின்றனர் அருணும் மித்ராவும். ஊருக்கு சென்று வந்தவள் “வீட்டில் வரன் பார்க்கிறார்கள்” என குண்டை தூக்கி போட்ட பின் கூடியுள்ளது காதல் ஜோடி.  ஏன் உனக்கு திடீர்   கல்யாண பேச்சு என்பதை கேட்டான்  அருண். தன் சித்தப்பா மகள் லீலாவின் விஷயம் அவனுக்கும் தெரிந்த போதிலும் அதனையே மீண்டுன் அவனுக்கு காரணமாக சொல்லினாள் மித்ரா. “சரி அதுக்கென்ன!  நான் வேணும்னா உங்க வீட்டுல வந்து பேசவா” “வேணாம்டா !” என்ற அவளின் பதில் கையெடுத்து அவனை கும்புடுவதை காட்டிலும் அது வீரியாமகவே இருந்தது.  “கண்டிப்பா வெளியூர்  பையனுக்கு கட்டி வைக்க மாட்டாரு! லீலா விஷயம் நடக்காம இருந்து இருந்தா கூட நீ வந்து பேசி இருக்கலாம் ஆனா இப்ப …” “ப்ச்ம். நான் எங்க அம்மாவ கூப்பிட்டு வந்து உங்க வீட்டுல பேசுரேன்டி. ஃபிரியா விடு” என்று தோளை இறுக பற்றி கொண்டான். “வேணாம்டா.ஒருவேளை அசிங்கப்படுத்தி அனுப்பிட்டா  என்னடா பண்ணுவ? பாவம் உங்க அம்மா நிலைமையை நினைச்சு பார்த்தியா?” என்றாள் அவள். “இப்ப என்னடி செய்ய சொல்ற?” அவள் அவனையும் , தரையையும் மாறி மாறி பார்த்து கொண்டே தபக்கமாக சொன்னாள் “லெட்ஸ் பிரேக் அப் டா” வீட்டில் இருந்து வந்தவளின் பேச்சும் , செயலும் மாறுதல் ஆவதை அவன் கண்டான். அதற்கு ஏற்றார் போல் தோளில் இருந்த அவன் கைகளை தட்டி விட்டாள். “என்னடி சொல்றே ? லூசா பிடுச்சு இருக்கு உனக்கு?” “ஆமாடா லூசு தான்டா” என்றவள் கட்டிய கூந்தலை அவிழ்த்து காற்றில் சிலிப்பி கொண்டே  “நான் லூசு தான், நான் லூசு தான்” என கத்தி கூச்சலிட்டு அழ தொடங்கினாள். “நிறுத்து மித்ரா,  யாராச்சும் பார்த்தா என்ன நினைக்க போறாங்க” “என்ன நினைப்பாங்க லூசுன்னா. நினைக்கட்டும் . அதானே உனக்கு வேணும்” “அருண்” என்றது எங்கிருந்தோ வந்த குரல் முகம் பார்க்காமலே " த சீ போ" என்றான் அருண். அக்குரல் “அருண்” என்றது மீண்டும் சத்தமாக அந்த நபரை பார்த்த மித்ரா “உங்க பையன் சொன்னது போல நான் லூசு தான் ஆண்டி” என்றாள் “ஆண்டியா” என்றவன் திரும்பி பார்க்க அவன் அம்மா பத்மா அங்கு நின்று கொண்டு இருக்கிறாள். பதறி எழுந்தவன் கைகளை உதறிவுட்டு  கடற்கரை மணலை சிதற செய்தான். “அய்யோ அம்மா இந்த பொண்ணு லூசும்மா! யாருன்னு தெரியல அழுதுட்டு இருந்துச்சு, அதான் என்னனு கேக்க வந்தேன். என்ன நம்புமா! சத்தியமா இவ யாருன்னே தெரியாது, நீ வேணும்னா கேளு! ஹே எந்திருச்சு போடி அந்தான்ட …” என புலம்ப ஆரம்பித்தான் “அருண்! அருண்!” என கூடிய சத்தத்தில் பின் லேசாக கடல் சத்தம் மறைந்து வீட்டின் முதல்தளம் கண் முன்னால் வந்தது. “என்னடா ஆச்சு? புலம்பிட்டு இருக்க?” என்றது அம்மாவின் குரல். “ஓ…” என்று விவரம் தெளிய “ஒன்னுமில்லமா கனவு” என்றான் தலையை சொறிந்து கொண்டு, “எட்டு மணிக்கு என்னடா கனவு ? வா வந்து சாப்பிட்டு வந்து படு” “ஹுஊஊஊம்ம்ம்” என பலமான சத்தத்ததில் சோம்பல் முறித்தவன் கண்ணை கசக்கி கொண்டே மெல்ல எழுந்தான். சாப்பாடு அறைக்கு வந்து இரண்டு கைகளையும் உரசிக்கொண்டே கேட்டான். “என்னமா சாப்பாடு?” “சப்பாத்தி ! அது இருக்கட்டும்  யாரு அது பவித்ரா?” “யார் பவித்ரா?” “அதான் தூக்கத்தில புலம்பினியே” தூக்கத்தில் பெயர் கேட்டு இருப்பதை அவன் உணர்ந்து கொண்டே ‘கனவுமா என்றவன் பிளேட்டை மாத்தினான்’ பேச்சிலும், சாப்பாட்டு மேஜையிலும். ஏறிய பேருந்தில் இருந்து பாதியில் இறங்கிய ரத்தினமும், வாசுவும் வீடு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே வீட்டில் இருந்த அந்த குடும்பத்தை பார்த்ததும் உள்ளுக்குள் பற்றிக்கொண்டு எரிந்தது வாசுவிற்க்கு. வந்திருந்தவர்களை எதற்கு இருக்க வைத்துள்ளீர்கள் என்று அவர்கள் முன்னரே திட்டி தள்ளினான். ரத்தினத்தின் பக்குவமான பேச்சு.  வாசுவின் ஏடாகுட பேச்சு. இடை இடையில் வந்த கல்யாண பேச்சு. தாத்தாவின் ஆதங்கம் என்று அந்த வீட்டின் சுவர்களுக்குள் அப்படி ஒரு கூக்குரல்கள். கடைசியில் அறையை விட்டு வெளியே வந்து பொறுமையாக இருக்க சொன்ன லீலாவுடைய அம்மாவின் வார்த்தைகளால் சிறுது நேரத்திற்க்கு பின் அமைதியானது மித்ராவின் வீடு. “என்னங்க கொஞ்சம் உள்ள வாங்க” என அழைத்து சென்றாள் லீலாவின் அம்மா. “வந்துருக்குவங்களும் பெரிய இடம் தான் , லீலா மேலயும் தானே தப்பு இருக்கு, இரண்டு இராத்திரி நம்ம மகளை காணோம்” என நிலைமையை வாசுவுக்கு விளக்கினாள். “யாரா வேணா இருக்கட்டும்.  லீலா சின்ன பொண்ணுடி! எவ்ளோ தைரியம் இருந்தா இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் வீடு ஏறி வந்துருப்பாங்க” “சரி விடுங்க. இப்ப அவங்களை இங்க இருந்து கிளம்ப சொல்லுங்க. மத்த விஷயத்த நாளைக்கு பேசிக்கலாம். நீங்க போடுற சத்தத்துல அக்கம் பக்கத்துல உள்ளவங்க வந்துர போறாங்க” என்றாள் அவள் மனைவி அனுபல்லவி “சரி” என தலையாட்டி வெளியே வந்தவன் நிதானமாக பேசினான். “சார்! எங்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க. முதல்ல திருப்பூர்ல இருக்குற எங்க பொண்ணயும், உங்க பையனையும் வர சொல்லுங்க . பிளீஸ்! இப்ப தயவு செஞ்சு இந்த இடத்தை விட்டு கிளம்புங்க” என்றான் “எம்மாடி! அவங்க பொண்ண விட்டுட்டு வந்துடுங்க. சார்! உங்க பேச்சை நம்பி தான் விட்டுட்டு போறோம். இப்ப அவ எங்க வீட்டு பொண்ணு. ஏதாச்சும் பிளான் கிளான் பண்ணிங்கனா போலீஸ்கிட்ட போய்டுவோம்” என்றார் கடா மீசை காரர். “போவயா போவ! என் பிரண்டும் போலீஸ் தான், நான் சொல்றேன். சின்ன பொண்ண ஆசை காட்டி ஏமாதிட்டானுங்கன்னு. குடும்பத்தோட உள்ளே போக வேண்டியது தான்”  என்றார் தாத்தா. அதுவரை காரில் இருந்த லீலாவை அழைத்து கொண்டு வந்தாள் அவள் அத்தை. அனைவரும் ஸ்தம்பித்து பார்க்க திருப்பூரில் இருப்பதாக சொன்ன லீலா இங்கே எப்படி வந்தாள் என்று மீசைக்காராரே அதற்கு பதிலும் சொன்னார்.  “நான் தான் ஃபோன்ல சொல்ல சொன்னேன். அதான் வந்துட்டால்ல. தம்பி நாங்க அப்ப கிளம்புறோம். யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க” என்று அந்த குடும்பம் கிளம்பியது. தினமுன் தன் கண் முன்னே பம்பரம் போல் சுற்றும் லீலாவை இரண்டு நாள் கழித்து சந்திக்கிறார் தாத்தா. குடும்ப மொத்தமும் சுற்றி நிற்க, அனுபல்லவி அடிக்க கை ஓங்கி வர , வாசு தடுத்தான்.  “என்ன காரியம்டீ பண்…” என  ஆரம்பித்த பாட்டியை “ஷூ ! மொதல்ல அவளை சாப்ட சொல்லு . மத்தத காலைல பேசிக்கலாம்” என்று வெளியே எழுந்து நடந்தார் தாத்தா. கையில் பையோடு நின்றவளை பார்த்த  அப்பாவும் அம்மாவும் அதன் பின் எதுவும் பேசவில்லை. அவரவர்கள் தத்தம் அறைக்கு செல்ல ,  அடுத்த அடி வைக்க தைரியமற்று அதே இடத்தில் நின்ற லீலாவை மித்ராவும்,பவியும் அரவணைத்து புது பொண்ணை போல் கூட்டிக் கொண்டு சென்றனர். சில மாதங்களுக்கு பின் வி.ஹச்.என்.எச் கல்லூரியின் பாழடைந்த கட்டிட கேண்டீனில் நடந்த  பேச்சரவம். “போன மாசம் வந்த ஜீன்ஸ் படம் பார்த்தியா அலெக்ஸ்”  பாண்டி “நான் எங்க பார்த்தேன். எங்க வீட்ல காசு கேட்டதுக்கு எங்க அய்யா சூடு வச்சுட்டாறு, பாரு!” என்று பேண்ட்டை சுருட்டி தொடையை காட்ட ஆயத்தம் ஆனான். “டேய் மூடுடா! நீ பார்த்தியா இசக்கி ?” “எங்க ஐயாட்டா சினிமாக்கு காசு கேட்டா சூடு கிடையாது நேரா சுடுகாடுதான்” “கடைசி வர உங்களுக்கு காதல்னா என்னனு தெரிய வாய்ப்பில்லைடா சில்லரைங்களா”  என்றான் பாண்டி “ஆமா இவர் பெரிய கமலஹாசன். காதல்னா இவருக்கு மட்டும் தான்  தெரியும் பாரு” - அலெக்ஸ் “அந்த படத்துல என்ன? சீக்கரம் சொல்லுடா பாண்டி” என்றான் இசக்கி “அடச்சீ அலையாதே! அதுல இப்படி தான் ஹீரோவும் ஹீரோயினும் பேசிட்டு இருப்பாங்க. இப்ப திலக்கை பார்க்குறப்ப அந்த சீன் நியாபகம் வந்துச்சு” - பாண்டி பாண்டியால் தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்று அவன் நினைத்து கொண்டே தினமும் பெருமையில் பூரிப்பான். “ஆமாடா பாண்டி எல்லா காதலுக்கும் ஹெல்ப் பண்றியே! உனக்கு ஒரு ஆளு கிடைக்க மாட்டுதேடா” என்று நக்கலாக கேட்டான் இசக்கி. டீ சுடுகிறதா என சோதித்து அதை கீழே வைத்துக்கொண்டே அலெக்ஸ் சொன்னான் “செனைபன்னி மாறி இருந்தா …” மணிக்கட்டின் முனையை வைத்து ’டக்’கென அலெக்ஸ் நாடியில் அடித்தவன் “நான் கோச். விளையாட மாட்டேன் சொல்லி மட்டும் தான் கொடுப்பேன்” அதிகாரமாக ஒரு ஜுனியர் பையனை ஒருமையில் அழைத்தான் பாண்டி.    “சொல்லுங்கண்ணே” என்றான் அவன். “அந்தா அங்க இருக்காங்கள்ல.” “ஆமா! நம்ம திலக் அண்ணன்” “ஆமா உங்க திலக் அண்ணன். அவன்கிட்ட போய் ஏதும் வேணுமானு கேட்டு வாங்கி குடு” “சரின்னே” “டேய் இருடா! அப்டியே அண்ணி நல்ல இருக்குனு சொல்லிட்டு ஒரு குட் மார்னிங் வச்சுட்டு போ” அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்க இடையில் புகுந்து கொண்டான் . “அண்ணே! சாப்பிட ஏதும் வாங்கி தரனுமா?” “ஒண்ணு வேணாம் தம்பி நீ போ!” “யாருன்னே இது அண்ணியா?” பத்மா அவனை பார்த்த பின், திலக்கை பார்க்க, திலக் அவனை பார்த்து  “தலையை திருகிடுவேன், ஓடிரு” என்பது போல் சமிக்ஞை செய்தான். அவன் போன பின்னர் திலக்கும் , பத்மாவும் கண்களுக்கு நேர் பார்த்து சிரித்து கொண்டனர். அத்தியாயம்-14 விடிந்து கொண்டிருந்த அந்த வேளையில் சிரிப்பும் , பரிகாசங்களுக்கும் மத்தியில் மித்ராவின் வீடும் தன் விடியலை தொடங்கியது. இரண்டு நாளாக எங்கோ சென்று வந்தவளிடம் இருந்த தயக்கத்தை விட்டும் ஒரே இரவில் மித்ராவும் பவியும் அவளை மீண்டும் வீட்டின் சூழலுக்குள் கொண்டுவந்தனர்.   ரத்தினமும் வாசுவும் லீலா விடயத்தின் அடுத்த முடிவுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் கல்யாணத்திற்கு சம்மதம் தான் என்றாலும் அப்பாவின் பேச்சை மீற முடியாது என்ற ஒரு தடை மட்டும் முட்டுக்கட்டையாக இருந்தது, என்ற போதிலும் , வாசுவுக்கு ஒரே செல்ல மகள் தான் என்பதால் மகளின் சந்தோஷமே முக்கியம் என்று அவளுக்கு பிடித்த பையனோடு கட்டிவைத்து விடலாமென இருவரும் தீர்மானித்து கொண்டனர். அதற்கு முன்னர் யாரேனும் ஒருவர் அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்க செல்லலாம் எனவும் பேசிக்கொண்டனர்.  மறுமுனையில்  தன் நண்பர்களிடம் பேத்தியின் விஷயத்தைக் கூறி வேறு ஒரு பையனை தேடிக்கொண்டிருக்கிருந்தார் தாத்தா. போனவள் தாலியை கட்டிக்கொண்டு வரலாம் என்றும் , எந்த நம்பிக்கையில் இவர்களை நம்பி திரும்பி வந்தாய் என்று பேச்சுக்கொடுத்தாள் பவி. ஏற்கெனவே லீலா மனது இன்னும் நிலை கொள்ளவில்லை , இந்த கேள்வி அவசியாமா என்பதை போல் பவியிடம் வேண்டாம் என்று தடுத்தாள் மித்ரா “நீ இருடி! ஒருவேளை ஏடாகுடமா ஏதும் ஆகிட்டுனா என்ன பண்ண? எதுக்கும் தயாரா இருக்கணும்ல ?” என்றாள் பவி பவி சொல்வதை ஆமோதித்து கொண்ட லீலா “ஒரு வேளை ஏதாவது ஏடாகுடம் ஆகிட்டுன்னா என்ன பண்ண”  என்று அதே கேள்வியை அவளிடமே கேட்டாள் லீலா. “ஆமா! என்ன பண்ணன்னு என்கிட்ட கேளு என்கிட்ட சொல்லிட்டா போன?” காதல் , கல்யாணம் , வெளியூர் மாப்பிள்ளை என்று பேச்சு எடுத்தாலே அவளின் காதல் நிலையை நினைத்து மித்ராவுக்கு இப்போதெல்லாம் பயம்தான்  வருகிறது.  அதனால் வேறு ஒன்றை பேச சொல்லி பேச்சை திசை திருப்ப முயற்சித்ததும் தோல்வியில் முடிந்தது. “ச்ச்! இவ வேற போடி அங்க. இதான் இன்னைக்கு ஹாட் டாபிக். இதை பத்தி தான் பேசனும்.  நீ ஒன்னும் கவலை படாத லீலா ,  இரண்டாவது முறை ஓடுனா சென்னையில் இருக்கிற மித்ராவோட ஆள் பார்த்துப்பான் இல்லடி_இ_இ”  என்று மித்ராவை நோக்கி கிண்டலாக கேட்டாள் பவி. “போங்கடி லூசுங்களா, நான் போறேன்” என்றவள் அவ்விடம் விட்டு மாடிக்கு சென்றாள் “ஏனோ வானிலை மாறுதே …” என்று அருணின் காலர் டியூன் ஒலித்தது ரொம்பஅஅஅ முக்கியம் என்று தனக்குள் சொல்லி கொண்டாள் மித்ரா. முழுமையாக அது ஓடி முடித்த பின்னரும் அவன் போனை எடுக்கவில்லை .  பத்மாவிடம் ஏதோ சொல்ல வந்தவனை பேச்சை மற்ற வைத்து சென்றான் அந்த ஜூனியர் தம்பி. பின்னர் அவளாகவே அவன் கேட்காமல் விட்டதை தொடர அவனோ நாம் காதலிக்க ஆரம்பித்து என்று சொல்லும் முன் பாண்டியும் , குழுவினரும் புகுந்தனர். “ஐந்து மாதம் ஆகி விட்டன! ஆதலால் கொஞ்சம் இடம் கொடுத்தால் நாங்கள் எங்கள் நண்பரோடு பேசிக்கொள்ள வசதியாக இருக்கும்” என்று மன்னர்கள் காலத்து உரையாடலை போல் சீண்டினான் பாண்டி “டேய் பாண்டி” என்று திலக் சத்தமிட , “எம்மா தங்கச்சி அங்க பாரு! உன் ஃபிரண்ட்ஸ் உன்ன விட்டுட்டு கிளம்பிட்டாங்க”  என்று பாண்டி அவளை அனுப்பி வைக்க முயன்றான். அதிக நேரம் இங்கேயே இருந்ததை  நியாபகத்தில் ஏற்றி கொண்டவள்,  “சரி திலக் நாளைக்கு பார்க்கலாம்”  என்று வெளியேற “நாளைக்கு இல்ல ரெண்டு நாள் கழிச்சு பார்க்கலாம். ஆர்வத்துல சனி ,ஞாயிறு வந்துட்டு போயிடாதா” என்றான் பாண்டி. அவள் வாயை பொத்தி கொண்டே சிரித்து வெளியேற “நீங்கள்லா பிரண்ட்ஸ்ஸா? லவ்வர்ஸ பிரிச்சு பாக்குறதுல அப்டி என்ன சந்தோசம்?” - திலக் இருக்கையின் விழும்பில் இருந்த கணபதி , பாண்டிக்கு மட்டும் கேட்பது போல் முனகினான் “எப்படியும் ஊத்திக்க தான் போது”   “சேர்த்து வைக்க தான் உங்க அப்பன் அரிசி மண்டி இருக்குல்ல அத வித்து எங்கள சேர்த்து வச்சுர மாட்டீங்க” என்றான் திலக். “கண்டிப்பாக மச்சான்! யாரு வரலானாலும் நான் இருக்கேன்டா! நீ வாங்கி குடுத்த பப்ஸ்க்காக எவ்ளோ அடினாலும் வாங்குவேன்” அத்தியாயம்-15 இரண்டு முறை மித்ராவின் தவறிய அழைப்பு மூன்றாம் முறையாக  ஏற்கபட்டது. மித்ரா சென்னைக்கு வருவதாக சொன்ன நாளில் தான் அருண் அப்பா ஆதித்யாவும் சென்னை வருவதாக அம்மா சொல்லி இருந்தாள். தொடர்ந்து அருண் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் உரையாடலுக்கு மத்தியில் இடைமறித்த அம்மாவை வழி அனுப்பி விட்டு போனை தொடர்ந்தான் அருண். ஒருவர் மேல் பிரியம் கொள்ள இன்னொருவரின் அனுமதி வேண்டுமா என்ன ?   யெளனத்தில் தாம் செய்ததை மகன் செய்கிறான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பத்மா  ‘மருமகள் தேட வேண்டிய வேலை மிச்சம்’ என்பதோடு நிறுத்திக்கொண்டாள் . கடந்த வாரம் ஷூ வாங்க செல்லும் பொழுது அவள் திலக்கை பார்த்து மறைந்து கொண்டது அவனுக்கு நீண்ட நாளாக மனதில் ஓடியது. தற்போது அதையும் கேட்டு கொண்டான். “போன வாரம் ஷூ எடுக்க போனப்ப ஒரு ஆள பார்த்து ஒளிஞ்சல்ல யாரு அவர்”  - அருண் “யாருடா திலக் மாமாவை சொல்றியா” என்றாள் மித்ரா. “யெஸ்! யெஸ்! அவரே தான்” “அவரு எங்க அப்பாக்கு தெரிஞ்சவர்” “நாசமா போச்சு போ!” “ஏன்டா என்னாச்சு?” கேலி செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு அருண் சொன்னான் “அவரு, எங்க அம்மாவோட முன்னாள் காதலராம்” அருண் அம்மா அவனிடம் எதையும் மறைக்காமல் பேசுவார் என்பது அவளுக்கு ஏற்கெனவே சொல்லி இருந்தான். இருந்தும் இதை கூடவா ஒளிவு மறைவற்று பகிர்வது என்று யோசித்தவாறே கேட்டாள் “இது எப்ப?” “அது எப்பயோ அம்மா சொன்னாங்க , ஆனா அவருக்கு கல்யாணம் ஆகிட்டாம்” “அப்ப உங்க அம்மாவும் லவ் ஃபெயிலரா. என்னடா எல்லாரும் பயம் காட்ரீங்க. இதெல்லாம் கேட்டா தலையே சுத்துது” “அடியே எல்லாருக்கும் ஒரு பாஸ்ட் இருக்கும். ஏன் உனக்கு முன்ன கூட…” அவசரத்தில் அவன் வாய் உளறிக்கொட்ட , சூதானமாக சொன்னான்  “அ ய் ய ய் யோ !” “அடப்பாவி நான் தான் முதல்லனு சொன்ன? புழுகுனி நாயே! எவள எந்த சந்துல வச்சு உதட்ட கடிச்சு வச்ச?” அருண் எதையெல்லாமோ பேசி பேச்சை மாற்றினான் . அவளும் கூட அவன் கேள்விக்கு பதில் கொடுத்து கொண்டே கடைசியில் கேட்டாள் ’யாரது எனக்கு முன்ன?" “அய்யோ விடமாட்டா போலயே” காலை ஆறு மணி விளக்கின் வெளிச்சம் இல்லை. பிராதன அறையின் ஷோபாவில் தாத்தா வீற்றீருக்க வாசுவும் , ரத்தினமும் உடனிருந்தனர்.   “நம்ம முத்துகிருஷ்ணன் மகன் ஒருத்தன் மும்பைல இருக்கானாம். வரதட்சணை ஒன்னும் வேணாம்னு சொல்றான்” என கல்யாண பேச்சை ஆரம்பித்து வைத்தார் தாத்தா “எந்த முத்துகிருஷ்ணன்?”என்றான் மூத்த மகன்  ரத்தினம் “நம்ம எம்.எஸ் மரக்கடை வச்சு இருக்கார்ல அவர் பையன். நல்ல படிப்பு கை நிறைய சம்பாதிக்கிறான். கல்யாணம் முடிச்சுட்டு நம்ம பொண்ணையும் மும்பை கூட்டி போயிடுவானம். மாமியார் தொந்தரவு இல்ல, போன வருஷம் தான் மகராசி போய் சேந்தாலாம் ஒரே பையன், என்ன சொல்ற?” என்று ரத்தினத்தின் கேள்விக்கு விடை சொல்லி வாசுவை கேட்டார்.    “அப்பா! வெளியூர்னு தான இந்த பையனை வேணாம்னு சொன்னோம் இப்ப நீங்களே மும்பைனு சொல்லிட்டு…” ரத்தினம் ஏற்கனவே காதல் கல்யாணம் செய்தது அவருக்கு இன்னும் கூட மனதில் அரித்துக்கொள்ளும் ஒரு சம்பவம்.  லீலா விஷயத்தில் அவன் மூக்கை நுழைத்தால் வாசுவும் அவன் பேச்சுக்கு இசைவான் என்பதில் அவருக்கு சந்தேகம் உண்டு என்பதால், “ரத்தினம் பேசாம இரு ! இது வாசு மக வாழ்க்கை. நீ குறுக்கால வராதே” என்று கறாராக சொன்னார். தேநீரை வைத்து விட்டு ஓரமாக நின்று கொண்டாள் பாட்டி. “அப்ப என்னை எதுக்கு ஃபோன் போட்டு கூப்பிட்டிங்க? நீங்களே பாத்துக்க வேண்டியது தானே” என பதிலுக்கு அவன் கடிந்து கொண்டே முகத்தை மாற்றினான். சத்தம் அதிகமாக மருமகள்களும் தத்தம் அறை போர்வையின் கதகதப்பில் இருந்து வெளியேறி வந்தனர்.  பவி, மித்ரா, லீலாவிற்கு ஒரே அறை தான் என்றாலும் அவர்களின் அறை இன்னும் திறக்கப்படவில்லை. மித்ரா எழுந்து மாடிக்கு சென்று கொண்டாள் , லீலா முன்னமே எழுந்து கொண்டவள் ஜன்னல் பின் நின்று ஒட்டுக்கேட்டு  அமைதியாக காதலனுக்கு ‘ஃபோன்’ செய்தாள். “ஏங்க பொண்ணு இங்கதான் இருக்கா. காதிலே விழுந்தா ஏதாச்சும் பண்ணிக்க போறா !  பேசாம வெளிய அனுப்பிட்டு நாம பேசிக்கலாம்” என உள்ளே புகுந்தார் பாட்டி. அதுவே சரி எனப்பட அவர்கள் பேச்சை நிறுத்திக்கொண்டனர். மித்ரா அம்மா கஸ்தூரி அவர்களின் கதவை தட்டினார். அந்த கதவு மூடி இருக்குமே தவிர  உள் பக்கம் திறந்தே வைக்க வேண்டும் என்பது அவ்வீட்டின் கட்டளை. கதவு திறந்ததும் உள்ளே சென்றார். பவி படுக்கையிலிருந்து எழுந்தவாறு  கட்டிலில் அமர்ந்து இருந்தாள்  “நீயும், லீலாவ கூட்டிட்டு கோவில் போயிட்டு வந்துடுங்க” என்று பவியிடத்தில் சொன்னார். லீலா ‘ஃபோன்’ பேசிவிட்டு தேமே என துணிகளை அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள். “எங்க மித்ராவ?” என்றாள் கஸ்தூரி “மொட்டைமாடில இருக்குறா அண்ணி” என்றாள் பவி (அருண் அவளின் முந்தைய கேள்வியை மறக்க வைத்து பேச்சு வேறெங்கோ சென்று கொண்டு இருந்தது “பார்த்து ரொம்ப நாளாச்சு” என்றான் அருண் “அதுக்கு என்ன செய்ய சொல்ற?” -மித்ரா “வீடியோ கால் வாயேன்” "கீழ அம்மா இருக்காங்க பார்த்தா தொலைஞ்சேன்’’ “அஞ்சு நிமிஷம் தான்டி பேசிட்டு போ”) “கூட்டிட்டு வரனுமா” என்றாள் பவி “இந்நேரம் என்ன செய்றா மேல! இரு நான் போறேன்.” “இருங்க அண்ணி நான் போய் அனுப்பி வைக்கிறேன்” என்று அவள் அண்ணிக்கு முன்னர் நடந்தாள். "இரு மாடில துணி கிடக்கு நானும் வரேன்.  என்ன நின்னுட்ட?’’ “நீங்க போங்க அண்ணி போன் அடிக்கிற மாதிரி இருக்கு” (“தூங்கு மூஞ்சி! இன்னுமா குளிக்காம இருக்க? புருஷனை மாதிரி பொறுப்பு இருக்கா பாரு” “ஆமா!யாரு புருஷன்?” “வேர யாரு.நீ யாருக்கிட்ட பேசுறியோ அவன் தான்” “மறந்துட்டேன்னு நினைக்காத! மரியாதையா சொல்லு யார் அவ?”) மாடிக்கு ஏறியவள் மித்ரா ஃபோனில் குறுக்கே நெடுக்கே நடப்பதை பார்த்து சப்தமில்லாமல் வந்தாள். ‘ஹாஹாஹா…’ என்று பலமாக சிரித்து கொண்டு இருந்தாள் மித்ரா. “என்னடி தனியா சிரிச்சிட்டு இருக்க”? என்றாள் கஸ்தூரி “இங்க பாரும்மா பவி வீடியோ அனுப்பிருக்கா” பசிப்பதாக சொல்லி வேடிக்கையாக அழுத சிறுவனை பார்த்து தானும் சிரித்து விட்டு “சரி கீழ போய் ரெடி ஆகு ரெண்டு பேரும் லீலாவ கூட்டிட்டு எங்கயாச்சும் போயிட்டு வாங்க” “என்னாச்சும்மா?” “ஒன்னும் இல்லடி அவ கல்யாணம் விஷயமா பேச போறோம்.அதான். போ! கீழ போ!” அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என குளிக்க சென்றவரை வழி மறித்தான் ரத்தினம். ஆட்காட்டி விரலை உயர்த்தி காட்டாமாக சொன்னார். “லீலா விஷயமாக இருந்தா பேசாத , மத்த விஷயம்னா சொல்லு” “ஒன்னும் இல்ல, நான் இனி இங்கயே இருக்க போறேன்” “இங்கயா?” “ஆமப்பா” “அப்ப மெட்ராஸ் உத்தியோகம்?”  “அது அடுத்த மாசத்தோட நிப்பாட்ட போறேன் இங்க ஒரு நகைகடை வைக்கலாம்னு ஐடியா” “ஏது ரூவா?” “இல்ல நானும் பிரண்டும் சேர்ந்து பார்டனர்ஷிப்ல வைக்க போறோம்” “இந்த விஷயத்தை உன் பொண்டாட்டிக்கு சொன்னீரா?” “இல்லப்பா! நீங்க சரினு சொன்னா தான் அடுத்த வேலைய பாக்கணும்” “போய் வூட்டுக்காரிகிட்ட சொல்லு. எங்கிட்ட சொல்லிட்டா மெட்ராஸ் வேலைக்கு போனிரு. இப்ப ரெண்டு நாள் ஊர் சாப்பாடு பாத்ததும் சுகத்துல பேசுற. போய் பொழப்ப பாரு! பிசினஸ் பண்ண போறாராம்! பிசினஸ்” என துண்டை மாட்டி சென்றவர் டாய்லெட் கதவை டமார்! என மூடினார். சொந்தமாக ஊரிலேயே தொழில் தொடங்கி , மித்ரா படிப்பையும் மதுரைக்கு மாற்ற நினைத்துள்ளார் ரத்தினம். அத்தியாயம்-16 அன்று சனிக்கிழமை மாலை. வழக்கம்போல் காதலர்கள் சந்தித்துக்கொள்ள அன்றைய இடமாக சத்தியம் சினிமாஸ் தேர்வு செய்தான் அருண்  . புதிதாக வந்த பிரபல தமிழ் படத்திற்கு கிடைக்காத டிக்கெட்டால் ஏதோ ஒரு ஆங்கில பேய் படத்துக்கு அழைத்துச்சென்றான் அருண். உள்ளே நுழைகையிலேயே அவள் ஆங்கில படத்தின் விளம்பரங்களை பார்த்து கேட்க குற்ற உணர்வு ஏதுமற்று “டிக்கெட் கிடைக்கலடி, அதான்” என்றான். சின்ன பொய்தான் என்றாலும் அவளுக்கு அப்போதைய மனநிலையில் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது.  உள்ளே நுழைந்ததில் இருந்து எதுவும் பேசாமல் இருந்தவளின் விரலை மெல்ல பற்றினான் அருண். ’உச்’சென்று அவள், உதறி விட கோபமாக இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டான்.  அவனை கண்டுகொள்ளாமல் இருக்கும் பொருட்டு,  படம் ஆரம்பிக்கும் முன் வந்த விளம்பரங்களை கூட அவள் ரசித்து கொண்டு இருப்பது போல் பாவனை செய்தாள். “ஓய் ! ஓய் ! உன்ன தான்” என சொல்லிக்கொண்டே கையை கண் முன் அசைத்தான்  . அவள் சற்று எரிச்சலாக என்னவென்று கேட்டாள் “கோபமா?” “ஆமா அதுக்கு என்னன்ற?” “டிக்கெட் கிடைக்கலப்பா அதான் அவசரமா கிடைச்சத போட்டேன்” “அதுக்கு முதல்லயே என்கிட்ட சொல்லி இருக்கலாமே?” “சொன்னா நீ வரமாட்டியோன்னு தான் சொல்லல” கண்களில் கோபம் தெரிய , “ஹ்ம்ம்ம்!” எனச்சொல்லி விட்டு திரைக்கு தன் பார்வையை திருப்பினாள் . அவள் அவ்வாறு உதாசீனப்படுத்த , அருண் தன் இருக்கையில் வயிற்று வலிக்காரனைப்போல் உருண்டு கொண்டு இருந்தான் . "இப்ப என்ன செய்ய? பாப்கார்ன்  ஏதாச்சும் வாங்கிட்டு வரவா? “டி உன்னத்தான்” என மீண்டும் கையை கண்முன் குறுக்கிட்டான். “என்ன?” என மீண்டும் எரிச்சலை வெளிப்படுத்திய மித்ராவிடம் “என்ன செஞ்சா கோவம் போகும் மேடத்துக்கு?” என்றான் “சொன்னா செய்வியா?” “செய்வேன் என்ன சொல்லு?” “இண்டர்வல் வரை பேசாம இரு, அப்புறம் என்ன ஹாஸ்டல்ல விட்டுடு!” "பாதில போகவா ! லூசா நீ 250 ரூபா குடுத்து இருக்கோம்’ “என்கிட்ட கேட்டுட்டா புக் பண்ண?” ’கிசுகிசு’வென பேசியவர்களை அருகில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க  அருண் அமைதியாகி படத்தை கவனித்தான். சிறுது நேரம் கழித்து தானாகவே அருண் கை விரலை பற்றிய மித்ராவை நோக்கி “எக்ஸ் கியூஸ் மீ உங்க கை என்மேல படுது!” “அதுக்கு என்னடா?” “டாவா?” “ஆமாடா” பேயின் வருகைக்கு முன்னமே கோபம் குறைந்து வலது மற்றும் இடது இருக்கைகளின் கைகள் ஊடல் கொள்ளும் பாம்பை போல் பின்னி கொண்டன. இன்று கல்லூரி செல்லும் முன் ஒலித்த தமிழ் பாடலில் பழைய நியாபகத்தில் நின்ற அருண் செல்போன் சிணுங்க அதை எடுத்தான்.  எந்த இடங்களில் கேட்டாலும் சில பாடல்கள் நம்மை சில நியாபகங்களுக்கு எடுத்துச்செல்லும் தானே . அன்று அவனும் அவர்கள் கண்ட சினிமாவின் பாடலை சொல்லி அவளுக்கும் நியாபகப்படுத்தினான் அவளும் கூட அப்பாடலுக்கு உன் நினைவு வருவதாக சொல்லி “செம எக்ஸ்பிரியன்ஸ்ல, அந்த நாளு என்னால மறக்கவே முடியாது” என்றாள் “ம்ம். எனக்கும்டி அந்த பாட்டு வர்றப்பல்லாம் எனக்கு உன் நினைப்பு தான்” “வரும்! வரும்!” “என்ன ?” “உனக்கு எந்த நியாபகம்னு எனக்கு தெரியாதா?” “எந்த நியாபகம்?” அன்றைய தினம் படம் முடிந்து வெளியேறும் பொழுது அந்த ஆங்கில படத்தை புரிந்ததா? என கேட்டாள் மித்ரா. அவனோ  புரியவில்லை என்றான் ஒற்றை வார்த்தையில். அவள் அரிசி பற்கள் சத்தத்துடன் சிரிப்பை காட்ட “சப்டைட்டில் இருந்துச்சே” என்றாள். அதுவோ அவன் வாசிக்கும் முன்னர் வேகமாக சென்றதாக சொல்லி அவனும் சிரித்தான். “ஹிஹிஹி. இங்கிலிஷ் மீடியம் தான படிச்ச நீ?” “நான் எங்க படிச்…” என்று சொல்லி கொண்டே கண்ணாடியை அணிந்து கொண்டவன் , இறுகிய மஞ்ச நிற உடையில் உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்து ஏதோ பாடிக்கொண்டே  செல்ல , மித்ரா நடக்காமல் அதே இடத்தில் நின்று கொண்டாள். அவன் இரண்டடிகள் நகர்ந்த பின் திரும்பி பார்த்தான். மித்ரா இவனை புருவம் உயர்த்தி பார்த்து   “பிராடு, நான் இருக்கும்போதே சைட் அடிக்கிறியா”  எனச்சொல்ல அவன்  நாக்கை கடித்து கொண்டு தன்னிலை அறிந்து வேகமாக நடந்தான்.  “சார் கொஞ்சம் நில்லுங்க” என செருப்பை ஒரு கையில் கழற்றி துரத்தினாள் மித்ரா. பைக் முன்னால் அவன் நின்றதும் கையிலிருந்த செருப்பை  மாட்டி கொண்டாள். ‘சனியனே! சனியனே!’ என  குட்டுகளும், அடியும் சடசட வென விழ அவனோ சிரித்து கொண்டே அவளின் வலது தோளினை பக்கவாட்டில் கட்டி அணைத்தான். “சரி கோவம் போயிடுச்சா?” என்றான் “பொறுக்கி” என்று அவள் பைக்கில் சாய்ந்து கொண்டே அவன் பற்றிய கையை எடுத்து  சாலையை பார்த்து கொண்டு இருந்தாள். “இருக்கட்டும்” “சூடு சொரணை இல்ல உனக்கு” “இல்ல” “ச்சி நாயே”" “நச்” என கண்ணத்தை எச்சியாக்கிவன். “அடி செருப்பால,போயி அந்த  பவுடருக்கு குடு” “எந்த பவுடர்?” “இப்ப ஆஆன்னு பார்த்தியே அவளுக்கு” “அழகா இருந்தாடி அழக ரசிக்க கூடாதா?” செல்லக்கோவத்தில் அவளிருக்க “அந்த பையன் ஹீரோ மாறி இருக்கான்ல?” என்று அவள் ஒருவனை காட்டினாள். “யாரு அந்த சோத்து மூட்டையா ?” என்றான் “உனக்கு பொறாமை, எவ்வளவு அழகா இருக்கான் பாரு . அவன் தாடியும்,கண்ணாடியும்” “அம்மா தாயே போலாமா?” என்றான் அருண் “இருடா அவன் உள்ள போகட்டும்” “அடியே இதெல்லாம் ஓவர்” “என்ன ஓவர், நீ பார்த்தல்ல,  வாழ்க்கைல உடனுக்குடன் பழி வாங்கிரனும் பேய் மாதிரி” அவன் அவசரமாக மித்ராவை கிளப்ப,  இருவரும் எக்பிரஸ் அவென்யூ சென்றனர். அவளும் அவன் அங்கு அழைத்து வரும் வரை அமைதியாக வந்தாள்.  “என்ன சார் இங்க? மறுபடியும் ஷூ வாங்கனுமா?” “ஆமடி பேசாம வா” “டேய் எங்கடா ஓடுற நைட் 12 மணி வரை கடை இருக்கும் நில்லுடா!” “ஓடி வாடி” “அடேய் இருடா! ஓட முடியல” “இப்பவே முடியலையா எல்லாம் பிராக்டிஸ்டி பியூச்சர்ல ஓடணும்ல” என நகரும் படிக்கட்டில் மேலே  சென்றவன் சொல்ல “எடு செருப்ப என துரத்தி கொண்டு நில்லுடா” என அவன் பின் ஓடினாள் “ஹப்பாடா இன்னும் படம் போடல லைன் நிக்குது” “படமா?” “ஆமா” என அவன் முன்னர் அழைத்து செல்வதாக சொன்ன படத்திற்கு வாங்கிய டிக்கெட்டை போனை அசைத்துக்காட்டி சிரித்தான்.  எப்படி என மித்ரா ஆச்சரியமாக கேட்க ,  தியேட்டரில் அவளின் செய்கை  வருத்தம் கொடுத்ததால் முகநூலில் வாங்கியதாக அலாதி பிரியத்தோடு அருண் சொன்னான். திகைப்பிலும் , மகிழ்ச்சியிலும் அவர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.  கருப்பு நிற உடையிட்ட பெண் , டிக்கெட்டை பரிசோதித்துக்கொண்டு இருந்தாள். “படம் முடிச்சுட்டு 12 மணிக்கு போனா வாட்ச்மேன் உள்ள விட மாட்டான்டா” என புலம்பினாள் மித்ரா “எங்கம்மா அப்பவே சொல்லுச்சு!” என்றான் அருண் “என்னனு” சார் டிக்கெட் என கேட்ட பெண்ணிடம் “ட்டூ பெர்சன்ஸ்” என போனின்  ‘கியூ.ஆர் கோடை’ நீட்டினான். “எஸ்க்யூஸ் மீ மேடம்”  என்று அப்பெண்ணை விழித்தான். “யெஸ் சார்” என்றாள் அவள். “நத்திங் , நீங்க எப்ப வீட்டுக்கு போவீங்க” “சாரி சார் பாடேன்” “இல்ல. இவளுக்கு 12 மணிக்கு போனா ஹாஸ்டல் உள்ள விட மாட்டங்களாம் பேசாம இவளை உங்க கூட கூட்டிட்டு போயிருங்க, நல்ல பாடுவா , உங்களுக்கு நைட் தூக்கம் வரலன்னா …” பின்னால் இருந்து அவன் முதுகை கிள்ளிய மித்ரா “என்னை அசிங்கபடுத்த முதல் ஆளா நின்னு” என மெல்லிய குரலில் சொல்லி “நடடா” என்று  துப்பாக்கி முனை கைதியை போல் முன் தள்ளினாள் “சாரி சிஸ்டர் ஹீ இஸ் கொஞ்சம்”, என ஆட்காட்டி விரலை கண்ணின் வலப்புற ஓரத்தில் சுழற்றினாள். “உனக்கு எந்த நியாபகம்னு எனக்கு தெரியாதா?” என்று இன்று கேட்டாள் மித்ரா “எந்த நியாபகம்?” என்றான் அருண் தியேட்டரில் சந்தித்ததை நினைவில் வைத்து கொண்டே சொன்னாள்  “அந்த பவுடர் மூஞ்சி தானே” “ச்ச்சி இல்லப்பா. எனக்கு உன் நினைப்பு தான்” “டேய் தெரியும்டா உன்ன பத்தி, அடங்கு” “சரி நான் போகனும் வை, நைட் பேசலாம்” “எங்க போறெ?” “உன் மாமியார் வீட்டுக்கு வரியா?” “ஹான் வரேன் அட்ரஸ் சொல்லு” “ஹே ஐ யம் சீரியஸ்” “நானும் தான் சொல்லு சொல்லு சீக்கிரம்” என்றான் அருண். ஒரு வேளை தன்னை பார்க்க ஊர் வந்துவிடுவானோ என்று நினைத்து கொண்டே அவள் தொடர்ந்தாள். “சரி எழுதிக்க” “சொல்லு” என்றான் மிகப்பரவசமாக “நம்பர் 1” “டேவிட்சன் தெரு” “பார்ரா சென்னை மாதிரி அங்கயும்”டேவிட்சன் தெருவா , அப்புறம் கொத்தவன் சாவடி தானே" என்றான் அருண். “எப்டிடா தங்கம் கரெக்ட்டா சொன்ன” “அந்த போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸ் எழுதுனதே நான் தான்” “ஹிஹிஹி ஒரு பேச்சுக்கு வர சொன்னா வந்துடுவியா பொறுக்கி ராஸ்கல் வை” என அழைப்பை துண்டித்தாள். முன் ஒரு மாலையில் எங்கோ சென்று திரும்பும் பொழுது முகவரி கேட்ட ஒரு நபருக்கு, மித்ராவுடன் பந்தயம் செய்து அந்நபருக்கு போலிஸ் ஸ்டேஷன் முகவரியை எழுதிக்கொடுத்து பந்தயத்தில் ஜெயித்தான் அருண் அத்தியாயம்-17 கோவிலுக்கு சென்ற மூவரும் தரிசனம் முடித்து வெட்டி கதை பேச அமர்ந்து கொண்டனர்.  மித்ரா தனியாக ஓரிடம் அமர்ந்து ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தாள் . பவியும் லீலாவும் சேர்ந்து அமர்ந்திருந்தனர். லீலா எதுவுமே பேசாமல் ஆழ்ந்த யோசைனையில் இருந்தாள். அவளுக்கு தெரியாமல் இருப்பதாக வீட்டில் நினைத்துக்கொண்டு செய்யும் விஷம காரியங்கள் அனைத்தும் அவளுக்கு தெரிந்தே அரங்கேறுகின்றன. நேற்று இரவு கிளியாய் பேசிய லீலாவின் பேச்சு காலையில் ஏனோ கூண்டில் ஏறிக்கொண்டது. அவளின் மெளனத்தை அகற்றி, புன்னகைக்கு மாற்ற  பவி முயற்சித்தும் அவள் தெளிவாகவே பேசினாள். பருவம் வந்த பெண்ணவள் . வயதின் அடிப்படையில் தான் கல்யாணம்  என்றொரு வரைமுறை இருப்பது தெரியாதோ லீலாவிற்கு.  தன்னை விட பெரியவள் பவி. அதன் பின் மித்ரா.  அவர்களுக்கு முன்னர் எப்படி திருமணம் செய்து வைப்பர் என்று யோசித்து கொண்டாள் . வீட்டில் வேறு ஒரு மணாளனை தேடுவதும் , குமரனை மறக்க செய்ய தந்திரம் செய்வதும் , அவர்களின் சுதந்திர பேச்சுக்கு இயடைய நம்மை வெளியே அனுப்பிய பின் பேசிக்கொள்வதும்  அவளின் எண்ண குமுறல்களாக  கலசம் வரை தொட்டது. நடக்கும் விஷயம் அனைத்தையும் குமரனிடம் சொல்லும்படி பவி சொன்னாள். “சொல்லிட்டேன்!அவங்க குடும்பத்தோட திருப்பதி போய் இருக்காங்க நாளைக்கு நேரா நம்ம வீட்டுக்கு தான் வராங்க” “ஒன்னும் நினைக்காதடி எல்லாம் சரி ஆகிடும்.” என்று ஆற்றுப்படுத்தினாள் பவி “என்ன சரி ஆகும் பவி .  உனக்கு முன்ன எனக்கு எப்டி கல்யாணம் பண்ணி வைப்பாங்க?” “அதெல்லாம் பண்ணி வைப்பாங்க. ஏன் எனக்கு மாப்ளை வராமலா இருக்கு? வந்த நாலு பேரையும் வேணாம்னு சொல்லிட்டாங்க பேத்திக்கு இவ்ளோ பாக்குறாரே மகளுக்கு எப்டிபட்ட பையன எதிர்பார்ப்பார் சொல்லு” “அதெல்லாம் வொரி பண்ணிகாதடி, எல்லாம் சரி ஆகிடும். அவள பாரு ரெண்டு நாள் நம்ம முன்ன பம்புனா இப்ப நம்ம முன்னே லவ் பண்ணிட்டு இருக்கா, ஊமை குசும்பு” என சிறு கல்லை தூக்கி மித்ரா மேல் எறிந்தாள் பவி. “ஈஈஈ” என சிரிப்போடு தொடர்ந்து பேசி கொண்டு இருந்தாள் மித்ரா “எனக்கு தலை லைட்டா சுத்துது வீட்டுக்கு போலாமா” என லீலா சொல்ல “போலாம்” என்றவாறே மெல்ல எழுந்தாள் பவி. அவளோடு லீலாவும் எழுந்து கொண்டாள். “ஹே! மித்ரா போதும்டி வா போகலாம்” பவி அழைக்க, “வீட்டுக்கு போனா பேச முடியாது பிளீஸ் ப்ளீஸ்டி” என கெஞ்சியவளின் மொழிக்கு  வேறு வழியின்றி மீண்டும் அமர்ந்தனர். “நீ மட்டும் ஏன் சும்மா இருக்க நீயும் பேசு லீலா” “ஹ்ம்ம்ம்.  பவி இப்ப நீ என்ன வேலை பாக்குற பார்த்தியா?” “உங்க கூட சேர்ந்ததுக்கு அது ஒன்னு தான்டி பாக்கி” “அதெல்லாம் சரி. சட்டுனு பாக்காத பின்னால ஒரு பையன் உன்னையே பாக்றான்” என்று லீலா ஒரு செய்தியை சொல்ல , எது கூடாது என்பமோ அதை செய்வது மனித மனம் என்பது போல் “என்னய்யா” என கேட்டவள் வெடுக்கன திரும்பி “அட இவரா” என அலட்டிக்காமல் சொல்லி விட்டு முகத்தில் விழுந்த கூந்தலை காதிற்கு ஒத்திக்கொண்டாள். “ஏன் உனக்கு முன்னாலே தெரியுமா?” “அவரு போலீஸ்டீ” என்றாள் பவி “அப்படியா” ’’ஆமா என்னை பொண்ணு கேட்டு வந்தாரு நாலஞ்சு மாசம் முன்ன" “பார்ரா அதா வெக்கமா” “சீச்சீ!  இல்லடி அதான் வேணாம்னு சொல்லிட்டமே” “வேணாம்னு தானே சொன்னோம்,பொண்ணு பிடிக்கலனு சொல்லுச்சா” “டிங்!டிங்!டிங்” என மூன்று முறை ஒலித்த கோவில் மணியோசையை கேட்ட லீலா “பாத்தியா பவி மணி கூட அடிக்குது” “பொறுக்கி கோவில்னு கூட பாக்காம வச்ச கண்ணு வாங்கம பாக்குறான் பாரு கண்ணுல கொள்ளி வைக்க” என்று இரண்டு கையையும் இறுக்கி சுடுக்கி கொண்டு சாபமிட்டாள் லீலா “திட்டாதடி ஏன் உங்களை மட்டும் தான் சைட் அடிக்கணுமா? நான்லா பியூஸ் போனதா?” என்றாள் பவி “ச்சே! ச்சே! அப்டி இல்ல உண்மையா சொன்னா மூனு பேர்லயும் நீ தான் செம ஃபிகர்” “சீ என்ன பேச்சு பேசுற கோவில்ல” “அடே அப்பா , இவ்ளோ நேரம் அவனை பார்த்து வெக்கப்பட்டது தெரியாதுன்னு நினைச்சியா” “அவன் இவன்னு பேசாதடி நாளைக்கு அவரே என்ன கல்யாணம் பண்ணிக்கலாம் அப்ப என்ன செய்வ?” “கல்யாணமா. அதெல்லாம் நடக்குறப்ப பாத்துக்கலாம்” என்று நகைத்தாள் லீலா “அடிப்பாவி எனக்கு 27 தான் ஆச்சு கிழவி இல்லடி. கல்யாணம் ஆகாதுன்னு முடிவே பண்ணிட்டியா” - பவி “அப்டினு பொதுவா சொல்ல முடியாது” “உத விழும் உனக்கு” வருடம் 2000.  வி.ஹச்.என்.எச் கல்லூரி கேண்டீனில் காபியை  தாங்கி கொண்டு இருந்த அந்த இருக்கையில்    கரைந்து கொண்டு இருந்த பேச்சு சத்தம்  “ஸ்கூலிங் பண்றப்ப பழைய காதல்?” என்று திலக் கேட்டான் “ஏய் என்ன அங்க சுத்தி இங்க சுத்தி,  அப்படி எல்லாம் ஒன்னுமில்ல” என்று தலையை கீழே குனிந்தவள் கண்கள் பொய் சொல்லின. “பரவால்ல சொல்லு கண்டிப்பா உன் பின்னால நாலு பேரு சுத்தி இருப்பாங்க” என்று மீண்டும் துளைத்து கேட்டான் திலக் “இல்லன்னு சொல்றேன்ல பின்ன என்ன?” “அப்போ உனக்கு முன்னால என்னமோ இருந்திருக்கு,  அதை என்கிட்ட சொல்லணும் அதுக்கு நீ என்ன டெஸ்ட் பண்ற” “யாருக்கு இவனுக்கா காதலர் தினம் படத்த கூட என்னோட தான் பார்த்தான்” என்று வெளிப்புற இருக்கையில் இருந்த பாண்டி சொன்னான். “குண்டு பயலே , ஒட்டு கேக்குறியா அங்கிட்டு போடா” என மெல்லிய குரலில் திட்டியவன் “மச்சா என் மேட்டர்” என கெஞ்சினான் பாண்டி அவனை காத்திருக்க செய்வது போல் சமிக்கை செய்தவன் திரும்பி கொண்டான். பத்மா சொன்னாள்   “இல்லன்னு சொல்ல முடியாது இருக்குன்னு சொல்ல முடியாது”  பத்மா “அப்ப கண்டிப்பா இருந்திருக்கு சொல்லு சொல்லு கேட்போம்” என்று ஆவலாக கேட்டான் திலக். “அதெல்லாம் சொல்ல முடியாது போ, நீ சொல்லு நான் சொல்றேன்” - பத்மா “எனக்கு இரண்டு இருந்துச்சு ஒன்னு சொல்றேன் இன்னொன்னு நீ சொன்னதுக்கு அப்புறம் சொல்றேன்” என்றான் திலக் “அவ பேரு ஹேமா நாங்கல்லாம் இந்து மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தோம்” “ஷூ அப்பவே வா” என்று கேலியாக கேட்டாள் பத்மா. “ஆமா கேளு அவ ஃப்ரண்டு ஒருத்தி உண்டு அவ பேரு, அவ பேரு” என்று தலையில் விரலை சொறிந்தவன் “மறந்து போச்சே” என்றான் “மச்சி பாண்டி” என்று அவன் பின்னால் இருந்த பாண்டியை அழைத்தான் “கேக்குது!கேக்குது” என டீயை உறிஞ்சிக்கொண்டே “சங்கர சுப்புலட்சுமி ச.சு” எனச்சொன்னான். அப்பொழுது பாண்டி தனியாக அமர்ந்து இருந்தான். நாணமே இல்லாமல் காதலர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவர்கள் பேசுவதை கேட்பதெல்லாம் பாண்டிக்கு நிகர் பாண்டியே என நினைத்தாலும் அவனுக்கு இன்று ஒரு காரியம் ஆக வேண்டியுள்ளது என்பதால் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தான். “சரி மேல சொல்லு திலக்” என்றாள் பத்மா “அவளுக்கு எங்க கேங்ல மகேந்திரன்னு ஒரு பையன் இருந்தான் அவனுக்கும் இவளுக்கும் லவ்வு” “அப்புறம்” “எங்க குரூப்லயே முதல் காதல் அவனுக்கு தான்” “சரி அப்புறம் என்னாச்சு” - பத்மா “அந்தப் பொண்ணோட பிரண்டு தான்  ஹேமலதா” “இரு!இரு! ஹேமானு சொன்ன?”  “அது செல்லமா” என்று வெக்கமாக சொன்னான் திலக் “த்த்தூ! சரி மேல சொல்லு” “ஹேமா என்ன லவ் பண்றான்னு இவனுங்க ஏத்தி விட்டாங்க, மகேந்திரன் ஆளு சசு மூலமா அவகிட்டயும் நான் அவளை லவ் பண்றேன்னு ஏத்தி விட்டானுங்க. அவளும் அதை நம்பிட்டா” "ஆன கூத்து என்னன்னு தெரியுமா? “என்ன?” என்று கேட்டாள் மித்ரா “நாங்க ரெண்டு பேருமே யாரையுமே லவ் பண்ணல எல்லாம் அந்த மகேந்திரன் செஞ்ச வேலை” “சரி அப்புறம் என்னாச்சு” “அப்புறம் என்ன டெய்லி அவளை ஃபாலோ பண்ணுனேன். முதல் நாளு என்ன அழகா ஜோடிச்சு அவ தெருவுக்கு கூட்டிட்டு போனாங்க. சத்தியமா சொல்றேன் அவதான் ஹேமானு அப்பதான் எனக்கே தெரியும். அப்படியே ஆறு மாசம் பின்னாலேயே சுத்தின” “லவ் சொன்னியா” “ஒரு டைம் கோவில் வாசல்ல வச்சு சொன்னேன்” “என்ன சொன்னா” என்று அவன் விரலை தொட்டு அவசரமாக கேட்டாள் பத்மா “அப்போ அவ என் அண்ணன் கிட்ட கேட்டுக்கொன்னு சொன்னா” என்று மின்சாரம் நின்று போனது போல் தோய்ந்த குரலில் சொன்னான் திலக். “மறுநாள் அவன் அண்ணன் வந்தான்பா. கோவில்ல வச்சு என் தங்கச்சியை வழி மறிக்கிறியாணு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சான். இவனும் பக்கத்தில தான் நின்னான்” என்று கையை பின்னால் காட்டி சொன்னான். “அடிக்கல பிரிச்சு மேஞ்சுட்டான்” என எடுத்துக்கொடுத்தான் பாண்டி “அவ தான் உன்ன லவ் பண்ணால்ல பின்ன ஏன் அண்ணங்கிட்ட போட்டு விட்டா” எனக்கேட்டாள் பத்மா “லவ் பண்ணல. அவளும் பதிலுக்கு லுக்கு வுட்டா அவ்ளோதான்” என்று சொல்லி மேலும் தொடர்ந்தான். “மகேந்திரன் இருக்கான்ல , அவன் ’சசு’வ ஆத்து பக்கம் கூட்டிட்டு போய் என்னமோ பண்ணிட்டான்” “என்னமோவா” என்று விவரமாக கேட்டாள் பத்மா. பின்னர் அவளே ‘ஓ ஹோ ஹோ ஹோ’ என்று சொல்லி கொண்டே புரிந்தது என்றாள். “அது ஸ்கூல் வர தெரியும். அப்பறம் சசு வேற ஸ்கூல் போயிட்டா, அதுல பயந்தவ தான் நானும் அந்த கேங் தானே. அதான் அண்ணன்கிட்ட சொல்லி” “கிகிகிகிகி புரிஞ்சுது!புரிஞ்சுது நீயும் ஆத்து பக்கம் கூட்டிட்டு போய்டுவேணு பத்த வைச்சுட்டா” என்று அவள் பரிகாசம் செய்தாள். “போதும் சிரிச்சது உன் கதை சொல்லு” என்றான் திலக் “ரெண்டு கதை இருக்குன்னு சொன்னே? இன்னொன சொல்லு சொல்றேன்” “சொல்றேன் அதுக்கு முன்ன நீ நீ சொல்லு சொல்றேன்” “இல்ல நீ பர்ட்ஸ்ட்” “அது இருக்கட்டும் பாண்டி உங்கிட்ட ஒன்னு சொல்ல சொன்னான்” “என்னவாம்” “சொல்லவா?” என பாண்டியை பார்த்து கேட்க பாண்டி ஆர்வத்தோடு பின்னால் இருந்து எழுந்து அருகே வந்து உட்காந்து கொண்டான். கோவிலில் பேசி கொண்டு இருக்க “என்னமோ பண்ணுது பவி” என சொல்லி மறுகணமே மயங்கினாள் லீலா “ஐயோ கடவுளே என்னடி ஆச்சு, அடியே பேசினது போதும் ஓடி வாடி, இவ மயங்கி  விழுந்துட்டா”என அழ ஆரம்பித்தாள். சுருண்டு கிடந்த லீலாவை பார்த்து விட்டு “அடேய் இருடா!”என அழைப்பை துண்டித்து வந்து மித்ராவும் அழ ஆரம்பித்தாள்.இவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் வந்த பக்தர்களில் அவரும் (அவன்) இணைந்து கொண்டு ஆட்டோவை பிடித்து ஏற்றி விட்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். கண்ணீரை சுமந்து  சென்ற அந்த ஆட்டோவின் பின்னால் ஓர் பொன்மொழி  இருந்தது “வாய்ப்புக்காக காத்திருக்கதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்” அத்தியாயம்-18 கேண்டின் பின்பக்கமாக இருந்த பாண்டி அருகே அமரவும் திலக் “சொல்லவா?” என பாண்டியை பார்த்து கேட்க பாண்டி வெட்கத்தோடு ‘சொல்லு’ என்றான். வயதோ, நிறமோ வேற்றுமை எதுவென இருப்பினும் அர்த்தமற்று வருவது தானே காதல். பத்மா குழுவில் மட்டுமல்ல அந்த கல்லூரியின் அநேக நபர்களும் நட்பாகி திரிய நட்புக்குள் ஒளிந்து கொண்டது சில காதல்கள்.  பாண்டிக்கு பத்மாவின் தோழி  கஸ்தூரி மேல் ஈர்ப்பு என்று திலக் தயங்கி சொல்ல  உடனே புரிந்து விட்டது பத்மாவுக்கு. அவன் பாதியில் நிறுத்த பத்மா சிரிப்பில் கன்னத்தில் குழி விழுந்தது.  “அடடா என்ன பாண்டிண்ணே ? ச்ச உங்க மேல ஒரு நல்ல மரியாதை வச்சுருந்தேன். நீங்களும் இந்த இடியட் கூட சேந்துட்டு லவ் அது இதுன்னு என்கிட்ட வந்து நிக்கிறீங்க!”  எந்த வகையிலும் பத்மா உதவி செய்யமாட்டாள் என திலக்கிற்க்கு தெரிந்தும் “பிளீஸ்! பத்மா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணு. ஜஸ்ட் அந்த பொண்ணுக்கு இவன் ஃபாலோ பண்றாணு தெரிஞ்சா போதும். மீதியை பாண்டி பாத்துப்பான் என்னடா பாண்டி?” என்றான் திலக் ஆமா! என்பதா இல்லை! என்பதா என என்ன சொல்வதென்று அவன் வசம் வார்த்தையில்லை , குத்துமதிப்பாக தலையசைத்தான். “சுத்தம் ! குரூப் மொத்தம் இதே வேலை தானா ? அந்த பொண்ணு என்னைவிட நாலு வயசு பெரியவ திலக். என்ன விடு  உங்கள விட மூனு வயசு கூட !” “மூனு வயசு கூடவா!” என அதிர்ந்துபோய் பாண்டியை திரும்பி பார்த்த திலக், “என்னடா?” என மெதுவான குரலில் கேட்டான். அவளோடு வருபவர்களில் இரண்டு கஸ்தூரிகள் உள்ளார்கள் என்பதால் குழம்பி இருப்பாள் என யோசித்த பாண்டி அவனே நேரடியாக கேட்டான். “நீங்க எந்த கஸ்தூரிய சொல்றிங்க ?” - பாண்டி “என்கூட காலேஜ் வருதுல்ல அந்த கஸ்தூரியா?” “ச்ச! அவ இல்லை அந்த நெடுமாட எவனாச்சும் லவ் …”  ‘ம்ம்ம்’ என கண்ணை உருட்டி முறைத்து பார்த்த மித்ராவிடம் “அய்யயோ சாரி மித்ரா” என்றான் பாண்டி. “அந்த பயம். என் ஃபிரண்ட் நெடுமாடா உங்களுக்கு?” என்று தண்ணீர் குடித்தவள் வாட்டர் பாட்டிலை நீக்கி கேட்டாள்  “ஹே இரு! இரு! நேத்து என் கூட வந்துச்சே சுபத்ரா தங்கச்சி அந்த கஸ்தூரியா?” “அவளே தான் மித்ரா”  என கோரசாக சொல்லினர் திலக்கும், பாண்டியும் கல்லூரி முதல் வருடம் வந்த திலக்கின் பெல்ட்டை உருவிய அந்த சூனியக்காரி எனும் சுபத்ராவின் சொந்தகாராப் பொண்ணு தான் இந்த கஸ்தூரி என்பது தெரிந்தும் கண்ணை மறைத்த காதலின் விதியால் காலைவிட்டு விட்டான் பாண்டி. “அதெல்லாம் முடியாது! சுபத்ரா அக்காகிட்ட மேட்டர் போச்சுன்னா என்ன செய்ய? என்னாலலாம் முடியாதுப்பா” என பின்வாங்கிய பத்மாவின் பயத்தை அடியோடு சுக்கு நூறாக்கியது  அடுத்த இரண்டு மாதங்கள். ஆம்! காதலை சொல்லாமல் நண்பர்களாகவே சுற்றி திரியும் காதலர்களின்  கூட்டங்களில் பாண்டியும் கஸ்தூரியும்  சிக்கி கொண்டார்கள். அன்று ஒருநாள் கல்லூரி ஆடிட்டோரிய அரங்கமே நிறைந்து வழிய அம்மா அப்பாவை ஒரு புறம் அமரவைத்துவிட்டு காத்திருந்தாள் மித்ரா. ‘தேவையில்லாமல் வாயை கொடுத்து இப்போது வசமாக மாட்டி கொண்டோம், போதோ குறைக்கு அருண் வேறு வந்திருக்கிறான் . சொதப்பினால் ஒரு வாரம் நாம் தான் அவனுக்கு பொழுது போக்கு’ என நினைத்து கொண்டு இருந்த மித்ராவின் ‘லப்டப்’ சத்தம் ‘டொக்டொக்’ என மைக்கை சரி செய்யும் சத்தத்தோடு ஒன்றிப்போனது. “தமிழ்த்தாய் வாழ்த்து” ஒலித்து முடித்த பின் வரவேற்புரை அளிக்க மேடை ஏறினாள் மித்ரா. “ஹலோ! ஆல் குட் ஈவினிங்” என ஆங்கிலத்தில் வரவேற்புரை தொடங்கிய மித்ரா “சடசடவென” பேச தொடங்கினாள்.  “மச்சா! என் ஆளு” என காலரை தூக்கி விட்டு சொன்னான் மகேஷிடம் “எப்டி பேசுறா பாரு என் ராங்கி! இவ்ளோ திறமைசாலி என்கூட இருக்குறா நான் ரொம்ப குடுத்து வச்சவன்ல” என்று மகேஷ் பார்த்து கேட்டான் அருண். சொதப்பலில்லா மித்ராவின் பேச்சு முடிவில் அரங்கமே கை தட்டி உற்சாகம் செய்தது. அருண் அந்த கல்லூரி கிடையாது. அவள் அழைத்ததாள் மகேஷோடு வந்தான். அவள் வாங்கி கொடுத்த ‘வி.ஐ.பி’ ஐடியில் முன்னால் நின்று கொண்டு இருந்தவன்  கீழே இறங்கிய மித்ராவை பார்த்தபின் “இவ நெஜம்மாவே நமக்குத்தானா?” என யோசித்தது மித்ராவிற்கும் கேட்டு இருக்கும். பின்னர் பேசிய பிரபல இயக்குனரின் பேச்சை அவர் மட்டுமே கேட்டு இருக்க முடியும்.  அவ்வளவு சத்தம் அந்த ஆடிட்டோரியம் முழுதும். கடைசியில் பேச்சை தொடங்கிய சிறப்பு பேச்சாளார் “தண்ணீரை ஜல்லடையில் அள்ள முடியுமா?” என்றார் கடைசியில் இருந்த பெண்ணை பார்த்து, முன்னால் தொங்கி கொண்டு இருந்த ஜடையை வாரி பின்னால் போட்டவள், “எம்மா ஜடையில் இல்லம்மா ஜல்லடையில்” என கலகலப்பு ஊட்ட “வேற யாராச்சும் சொல்லுங்க” என கேட்டவர் முன்னாடி நின்ற அருணிற்கு பாய்ந்தார். “தம்பி கட்டம் போட்ட சட்டை உன்னை தான் தண்ணீரை ஜல்லடையில் அள்ள முடியுமா?” என கேட்கவும் அடுத்த நொடி மேடையின் முன் நிற்கும் அருண் மீது எல்லோரின் கண்களும்  பாய்ந்தன.  அடுத்த பத்து நொடிக்கு அவன் படபடத்தான் . ‘போச்சு! வசம்மா வந்து மாட்னான்’ என கடைசி வரிசையில் இருந்த மகேஷ் மனதில் நினைத்து கொண்டான் .  ‘ஃபிரண்ட்ஸ் முன்ன நம்ம மானம் போக போது’ என எதிர் மூலையில் நின்ற மித்ராவும் தலையில் கை வைத்து யோசிக்க “முடியும் சார் !” என்றான் அருண் “என்ன முடியும்?” “தண்ணீரை ஜல்லடையில் அள்ள முடியும் அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால்!” “வெரி குட்!” இதான் நான் பேச வந்த தலைப்பு ‘பொறுமை’ . வழக்கமா என்னோட தலைப்ப நானே சொல்லமாட்டேன் இந்தமாதிரி கேட்டுதான் ஆரம்பிப்பேன் . உன் பேரு?" என கேட்டவரிடம் ‘அருண்’ என்றான் . அருணிற்கு மித்ரா கொடுத்த “போலி ஐடி கார்டை” கழற்றி உள்ளே வைத்தான் . “என் பேச்ச யாரு கேக்குறிங்களோ, இல்லையோ , தம்பி அருண் கேப்பான். அருணிற்கு ஒரு பெரிய கை தட்டல் குடுங்க” என அவர் தலைப்பில் நுழைந்தார் . எதிரே நின்ற மித்ராவை பார்த்து தன் தலையை ஸ்டைலாக கோதி விட்ட அருண் புருவம் உயர்த்தி ‘என்ன’ என கேட்க ‘ஒன்னும் இல்லை’ என்பது போல் தலையசத்தாள் மித்ரா. அந்த அசைப்பிற்க்கு அவள் ஜிமிக்கி அவ்வளவு ஆடியது.  சிரித்து கொண்டே கண்ணடித்தாள் மித்ரா. யாரேனும் பார்க்கிறார்களா என்று சோதித்து கொண்டு ,  வெட்கத்தில் தலைகுனிந்த அருண் வசமிருந்த காதல் துளிர்த்தது அந்த அறையில். இறுதியில்  கல்லூரி முதல்வர் முடிவுரை ஆற்றியதும் இரண்டு மணி நேரம் நடந்த நிகழ்ச்சி நிறைவுற்றது. கூட்டத்தில் சிக்கி கொள்ள கூடாது! என மெதுவாக மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள்   சென்ற பின் மெல்லக்கலைந்தது கூட்டம். “அழகா பேசுனடி” என முத்தம் வைத்து, நெற்றியில் கைகைளை வைத்து “என் கண்ணு பட்டுடும் போல” என புடவையில் இருந்த மித்ராவிற்கு திருஸ்டி கழித்தார் அம்மா கஸ்தூரி. கூட்டம் மெல்லக்கலைந்து செல்ல  மித்ராவுடன்  வெளியே செல்ல வேண்டுமென , தான் அழைத்து வந்த மகேஷை தனியாக கிளப்பி விட்டு மித்ராவிற்கு காத்திருந்தான். “ரெண்டு நாள் லீவு தானே எங்க கூடவே வீட்டுக்கு வா” என அழைத்த அம்மா கஸ்தூரியிடம் “இல்லம்மா இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு” “இன்னும் என்னமா வேலை?” - ரத்தினம் “அது வந்துப்பா கேக் வெட்டனும் ஒரு பொண்ணு பர்த்டே” என்றாள் மித்ரா அவர்களின் பேச்சை அருகே நின்று கேட்டு கொண்டு இருந்தான். “போச்சுடா! இன்னும் ஒரு மணி நேரம் இருக்கணும் போலயே” என நினைத்தவன் , நிகழ்ச்சிக்கு முன் அவள் கொடுத்த வேஸ்டி , சட்டையை திருப்பிக்கொடுத்து  தன் உடையை வாங்க காத்திருந்தான். “அம்மா இருங்க சாரியை மாத்தி குடுத்துடறேன் எடுத்துட்டுப்போங்க” என உடைமாற்றிவிட்டு வந்தாள். பார்வையாளர்கள் எல்லாம் செல்ல நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாணவர்களின் கூட்டமும் கடைசியாக வெளியேறியது . அதில் ஒருவன் கல்லூரி மரத்தின் கீழ் தனியே நின்று கொண்டு செல்போன் பார்த்து கொண்டு இருந்த அருணிடம் பேசினான். “பாஸ் நீங்க மித்ரா கெஸ்ட் அருண் தானே?” “ஆமா !” “நல்ல பேசுனிங்க.  என்ன படிக்கிறீங்க” “பி.காம்” “பைனல் இயரா?” “இல்ல ஃபர்ஸ்ட் இயர்” “பர்ட்ஸ் இயரா? மித்ரா செகண்ட் இயர்! நீங்க ஃபர்ஸ்ட் இயரா?” “பி.ஈ ரெண்டு வருஸம். டிஸ்கண்டினுயூ” “ஓ! சாரி சாரி பாஸ்!” என்று அவன் அருண் தோளை அழுத்தி விட்டு நகர, கண்ணில் “ம்ம்” என்று அவனை அனுப்பியதும் மித்ராவிற்கு ஃபோன் செய்தான். மித்ரா,  அருணை மீண்டும் ஆடிட்டொரியம் அழைத்தாள். “அங்க ஏன்டி?” “வாயெண்டா சொல்றேன்” “எம்மா! என் ட்ரெஸ்ஸ குடு ,வீட்ல கேட்ட நான் என்ன சொல்ல?” “அதுக்கு தான் சொல்றே வந்து வாங்கிட்டு போனு” “இல்ல! இல்ல நீ வெளிய வா மறுபடியும் கயிறு கட்டணும்னா கழுத்து தான் இருக்கு” கல்லூரி நுழையும் முன் அருணை தனியாக , டாய்லெட் வர சொல்லி கையில் அவளின் சக தோழிகள் சூழ அவன் கையில் ராக்கி கட்டி விட்டனர். அருண் மட்டுமில்லை அங்கு வந்த ஒரு சில காதலர்களின் அனைவருக்கும்  இதுவே நிலை. அங்கு வைத்தே அவனுக்கு வெள்ளை நிறத்தில் வேஷ்டி  , சட்டையையும் , போலி ஐடி கார்டையும் கொடுத்தாள் மித்ரா . அதனால் தனியாக அழைப்பதால் இம்முறை அவன் தயங்கினான். “லூசு யாரும் இல்லடா உள்ள வா!” ‘யாரும் இல்லையா’ என உள்ளே சென்றவன் மித்ரா சொன்னது போல் அங்கு யாரும் இல்லை. அங்கு இருந்த மித்ராவிட்ம் “பர்த்டே பார்ட்டி இருக்குன்னு சொன்னே போகலையா?” “இருக்கு , மேல நடக்கு. அம்மா கூட கிளம்புறேன்னு  அவங்ககிட்ட பொய் சொல்லிட்டு வந்துட்டேன்”  “பர்த்டே பார்ட்டி இருக்குன்னு அம்மாட்ட பொய்  சொல்லிட்டேன் .நம்ம போலாமா?” என்றாள் மித்ரா “என்ன ஒரு பொய்யிடி! ‘சரி இங்க என்ன பண்ற?’ என்றதும்”கிட்ட வா" என அழைத்து நெற்றியில் வைத்தாள் “இச்” “என்ன இது சில்லறையா?” “அவ்ளோ போதும் உனக்கு” “எல்லாரும் முன்ன உன் பேர் காப்பாத்துனேன்” என சொல்லி அவளின் மடியில் அமர்ந்தான் “என்னடா பண்ற? எருமமாடு! யாராச்சும் வந்துட போறாங்க” “இருடி!” என்றவன் உதட்டை கையால் இழுத்தான். பின் உதட்டு வரி பள்ளத்தில் தன் உதட்டை நிரப்ப மூச்சு காற்று பலமானது . அவன் கைகள் எங்கோ செல்ல “சனியனே! சனியனே!” என தள்ளி விட்டு  “வா போலாம்” என்றாள்.   அவள் கொஞ்சம் நடந்து சென்றாள். முதல் வரிசையில் நடக்கும்பாதையின் ஓரத்திலுள்ள  இருக்கையில் அவன் இன்னும் அசையாமல் இருந்தான்.   இருக்கை பின்னால் நின்று கொண்டு முகத்தை பின்பக்கம்  திருப்பி இதழை பதித்தாள். இடுப்பினை வளைத்து மெதுவாக இழுத்தவன் தன் மடிமீது அமரவைத்து மீண்டும் அவள் உதட்டின் பள்ளத்தில் குதித்தான்.  மூச்சுக்காற்று பலமாகியது. உடல் பலவீனமானதால் மயக்கமானதாக சொல்லி லீலாவை  வீட்டிற்கு அழைத்து வந்த பின், அவள் நிலையை எப்படி தாத்தாவிடம் சொல்வது என குமுறிக்கொண்டு இருந்தனர் . விஷயம் தெரிந்த லீலா அம்மா அனுபல்லவியும், வாசுவும் என்ன செய்வதென்றே தெரியாமல் வெளியில் சென்ற ரத்தினத்தை எதிர் நோக்கி காத்து இருந்தனர். காலை லீலாவை மருத்துவமனையில் சேர்த்ததாக சொல்லும் பொழுதில் இருந்தே மூத்தவன் ரத்தினத்தை காணவில்லை.  இப்போது லீலா வீடு வந்து சேர்ந்தும் ரத்தினம் இன்னும் வரவில்லை என்பதாக எண்ணியே மற்றவர்கள் கவலையாக இருக்கிறார்களோ என்று தானும் நினைத்து கொண்டார்.  அவன் எங்கு சென்றான் என்பதை தெரிவுபடுத்த மனைவி அனுபல்லவியிடம் கேட்டார். “தெரியல மாமா , யாரையோ பாக்கணும்னு போயிருக்கார்” - அனுபல்லவி “அவனை எதுக்கு கூப்பிட்டோம். எதுக்கு போயிருக்கான் பாருடி உன் புள்ள” என்றார் பாட்டியை பார்த்து. பாட்டியும் லீலா விஷயத்தால் தான் பயந்த நிலையில் இருக்கிறார் இருந்தும் கைகளை பிசகி கொண்டே கேட்டார். “எங்க போயிருப்பான்” “வேற எங்க! உம் மகன் ஊர்ல  சொந்தமா தொழில் தொடங்க போறேன்னு சொன்னான் அதுக்கு போயிருப்பான்” தன் அப்பா வீட்டில் இல்லாததால் வாசலில் அமர்ந்த மித்ரா அருணுடன் பேசத்தயரானாள். ‘கீ கீ’ என்ற ஹாரன் சத்தத்த்தில் பெரிய வண்டி ஒன்று வாசலை நோக்கி வந்து நின்றது. “வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா!” என துள்ளி எழ  கெண்டைக்கால் பாவாடை காற்றில் பறந்து அமுங்க உள்ளே ஓடினாள். “யாருடிம்மா வந்துட்டா” என கேட்ட தாத்தாவிடம் “வாசல்ல பாருங்க” என்றதும் மீசைகாரக்குடும்பமே உள்ளே வந்து கொண்டு இருந்தது  . அத்தியாயம்-19 அருண் அப்பா ஆதித்யா வருவதாக இருந்த சேதி முழுதும் உறுதி ஆகிவிட்டது. “யாரையும் பார்க்க வேணாம்! என் மகனை மட்டும் பார்க்க வேண்டும்” என்று அவரின் அப்பாவிடம் வைத்த கோரிக்கையை  பற்றி பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது. ஆதித்யாவிற்கு அலுவலகத்தில் பணி புரிந்த தெலுங்கு பெண்ணோடு காதல் இருந்தது தெரிய , அந்த சம்மந்தத்தை தவிர்க்கும் பொருட்டு அவசரமாக கல்யாணம் செய்து வைத்தது ஸ்ரீராம்_லீலா தம்பதிதான் . எல்லாருடைய பெற்றோர் போலும் ,  கல்யாணம் செய்து குழந்தை பெற்றால் மனம் மாறுவான் என நினைக்க ஆனால் நடந்தது வேறு. அருண் பிறந்த பின்னும் கூட அவன் மனம் மாறவில்லை. பத்மாவை ஏமாற்றினானா, வீட்டை ஏமாற்றினானா அல்லது தன்னையே ஏமாற்றிக்கொண்டானா யாவரும் அறியவில்லை. மூடிக்கிடந்த காதல் உள்ளூர ஊற , ஒரு இரவில் காதலித்த பொண்ணுடனேயே இடத்தை காலி செய்தான் . தாத்தா அவன் கோரிக்கையை சொல்ல “எது  எப்படியோ இப்பயாச்சும் பையனை பார்க்கணும்னு தோணுச்சுல்ல!” என மனதுக்குள் பெருமூச்சு விட்டாள் பாட்டி லீலா. “என்னமா சொல்றே பத்மா நீ ? அவன் மாறி மாறி ஃபோன் பண்றான்” என்றார் மாமா “அவனுக்கு யாருங்க புது நம்பர் குடுத்தா” என்றாள் அத்தை “தெரியலயேடி.  நான் எடுக்காம எத்தனை நேரம் தான் விடுறது” கொலையே செய்து வந்தாலும் தம் மகன் நல்லவன் எனப்பேசும் தாய்மார்கள் உள்ளனர்.  உள்ளுக்குள் பாசம் வைத்து கொண்டு நியாய தர்மம் பேசும் சில தாய்மார்களும் உள்ளனர்.  மனதில் ஒன்றை மறைத்துவிட்டு லீலா பாட்டி தொடர்ந்தாள்  “அவன் போய் பதினெட்டு வருஷமாச்சு. பத்மா வீட்ட  மறந்துட்டு நம்ம கூடவே இருக்கிறா. இப்ப புதுசா அவனுக்கு சப்போர்ட்டா?” என்று கணவரை கேட்டார். “சப்போர்ட் இல்லடி நமக்கு என்ன கோவம் இருந்தாலும் அருணுக்கும் அவனுக்கும் உள்ள தொப்புள் கொடியை கட் பண்ண நம்ம யாரு?” “நீங்க என்ன சொன்னாலும் சரி அவங்கிட்ட முடியாதுன்னு சொல்லிடுங்க” பெண்கள் ஆட்சி நடக்கும் அநேக வீடுகளுக்கு மத்தியில் தன் வீடும் அதே நிலை தான் என நன்கு தெரிந்தவர் என்பதால்  சொல்ல வருவதை சொல்லாமல் விழுங்கிக்கொண்டார். அவர் அவ்வாறு மவுனமாக இருக்க பத்மாவை பார்த்து சொன்னார் பாட்டி “இப்ப பாருடி இந்த வீட்ல பொம்பள ஆட்சி நடக்குன்னு சொல்வார் உங்க மாமா” என்று நக்கல் செய்தார். அதுவரை அமைதியாக இருந்த பத்மா சொன்னாள் “அத்தை அவர் சொல்றது சரிதான்” “எதடி சொல்ற?அப்ப நான் அராஜகம் பண்றேனா ? என்னடி நீயும் சேர்ந்துட்ட அவர் கூட” “அய்யோ அத்தை அதை சொல்லல அருணை  பார்க்க சொன்னதுக்கு சொன்னேன்” அவள் அவ்வாறு சொல்ல அறை எங்கும் நிசப்தம். தன் கழுத்தின் சங்கிலியை கைகளில் உருட்டிக்கொண்டே மேலும் சொன்னாள். “எனக்கும் வேணாம், உங்களுக்கும் வேணாம் அவனுக்கு விருப்பம் இருந்தா போயி பாக்கட்டும்”  “இந்த வீட்ல என் பேச்சே யாரு கேக்கறா” என சொருகி இருந்த தன் சீலையை எடுத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள் அத்தை . மூத்த மகன் ரத்தினம் வீட்டில் இல்லை என தெரிந்த பின்னர் கஸ்தூரியிடம் அவன் ஊரில் தொழில் தொடங்குவதாக சொன்ன விஷயத்தை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார் தாத்தா. தனக்கும் அதில் உடன்பாடு இருப்பதாக தெரிவித்த கஸ்தூரியும், இங்கே இருப்பது தனக்கும் பிடித்து தான் உள்ளது எனவும் தன் சம்மத்தோடே எல்லாம் நடக்கிறது என தெரிவித்தாள். அப்படியானால் மித்ராவும் பவியையும் என்ன செய்வது? என்ற கேள்விக்கு மட்டும் மவுனமாக இருந்தவள் மித்ராவை இங்கு உள்ள கல்லூரியில் சேர்க்கலாம். பவியை ஹாஸ்டலுக்கு அனுப்பலாம் என்றாள். சென்னையில் அண்ணனும் , அண்ணியும் இருந்தும் கூட அவர் ஹாஸ்டலில் தங்க வைக்க சம்மதிக்கவில்லை. இப்போது அவர்களும் இங்கே வந்துவிட்டதாலும் , லீலாவிற்கும் பவிக்கும் ஒருசேர  கல்யாணம் செய்து வைக்கலாம் என்றும் அவர் நினைத்து கொண்டு இருந்தார். “மம்மி!” “எங்கம்மா பவியும் லீலாவும்?” என்றாள் அறையில் இருந்து வந்த மித்ரா. அவர்கள் காலையிலேயே கோவில் சென்றதை சொல்ல , “இவ்ளோ சீக்கிரமே எந்திருச்சுட்டாங்க” என்றாள் மித்ரா. “அப்பா வீட்ல இல்லைனு , நீ லேட்டா எந்திருச்சுட்டு அவங்களை குறை சொல்றியாடி ராங்கி!” என்றாள் கஸ்தூரி “என்ன லேட்டு எட்டுமணிலா லேட்டா?”- மித்ரா “போயி பிரஸ் பண்ணுடி” என அனுப்பி வைத்த கஸ்தூரியிடம் “அவகிட்ட சொன்னியா?” எனக்கேட்டார் மாமா. “இல்ல அவரு வந்து சொல்லட்டும். தாங்காமட்டா ! ரெண்டு நாளாகவே எப்ப போறோம்? எப்ப போறோம்னு கேக்கறா போகலனு தெரிஞ்சா சாமி ஆடிருவா மாமா!” சிறுது நேரம் கழித்து வந்தவள், “மம்மி” “என்னடி” ஒரு வேளை அவள் காதில் கேட்டு விட்டதோ என பவ்வியமாக கேட்ட கஸ்தூரியிடம் , சமையல் அறைக்குள் தனியாக அழைத்தாள் மித்ரா. ஏதோ விஷயம் என்று தான் தனியாக அழைப்பதாக கஸ்தூரி உள்ளே செல்ல  “என்ன மாமனாரும் மருமகளும் காலைலயே ரகசியம் பேசுறீங்க?” எனக்கேட்க ,  இதற்காகவா அழைத்தாய் என்று அவளை கடிந்து கொண்டாள்.  அம்மா வசவு , அம்மா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் என்று சென்னையில் அனு அடிக்கடி சொல்வாள். ஆதலால் சிரித்துக்கொண்டே  “பேசினது போதும் காபி கொண்டு வாங்க” என வாசலில் போய் அமர்ந்து நகம் வெட்டி கொண்டு ஃபோனை காதில் வைத்தாள் .  பதினைந்து நிமிடம் கழித்து … ‘கீ கீ’ என்ற ஹாரன் சத்தத்த்தில் பெரிய கார் ஒன்று வீட்டு வாசலில் நின்றது. “வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா!” என துள்ளி எழுந்தவள் உள்ளே ஓடினாள். “யாருடிம்மா வந்துட்டா” என கேட்ட தாத்தாவிடம் “வாசல்ல பாருங்க” என்றதும் மீசைகாரக்குடும்பம் உள்ளே வந்து கொண்டு இருந்தது .இம்முறை அவரோடு அவரின் மகன்களும் , பேரனும் வந்திருந்தனர்.  ஷோபாவில் அவர் அமர மற்றவர்கள் அருகே நின்று கொண்டனர். யார் முகத்தையும் தாத்தா பார்க்கவில்லை. அவரின் கண்கள் கோலியை போல் தரையில் உருண்டு கொண்டு இருந்தது.  மீசைக்காரர் ஜிப்பா போல் ஒன்று அணிந்து இருந்தார் . கழுத்தில் காவி நிற சால்வை கிடந்தது. வயிறு சற்றே வெளியேறி நின்றது. செருமி கொண்ட மீசைக்காரர் “வணக்கம்” சொல்லினார். “ம்ம்” என்று கடமைக்கு பதில் சொன்னார் தாத்தா. மரியாதை இல்லாத அவரின் பதில் பேச்சுக்கு மேல் மீசைகாரர் பேசவில்லை.  பின்னர் " என்ன விஷயம் தடபுடலா வந்து இருக்கீங்க?" என்று அவரே கேட்டார். அதற்குள் பாட்டியும் , வாசுவும், அனுபல்லவியும் வந்து நின்றனர். “உங்களுக்கு விஷயம் தெரியாதா சம்மந்திகிட்ட யாரும் சொல்லலயா” என அங்கு நின்ற மொத்த குடும்பத்தையும் பார்த்தார். எல்லோர் கண்ணும் முழு சோற்றில் பூசணி மறைப்பது போல் முழித்து கொண்டு இருந்தது. பாட்டி யாரும் பார்க்காத சமயம் பார்த்து , தன் கைகளை மீசைக்காரரை ‘ஏனடா வந்தாய்’ என்பது போல் சைகை செய்தாள். தாத்தா தன் குடும்ப உறுப்பினர்களை திரும்பி பார்த்து கொண்டார். பாட்டி  கண்ணை கீழே வீற்றினாள். யாரும் எதுவும் சொல்லவில்லை எதுவும் நடந்திறா வண்ணம் “என்ன விஷயம்? என்னப்பா உங்கப்பா உளர்றாரு. தண்ணிய கிண்ணிய போட்டாரா? நான் சொன்னேன்ல வாசு இந்த குடும்பம் பாக்க ஒரு மாதிரி இருக்கு இவங்களுக்கெல்லாம் பொண்ணு கொடுக்க கூடாதுன்னு” என்றார் தாத்தா “சார் தண்ணியும் இல்ல ஒன்னும் இல்ல இவன்தான் என் பையன் குமரன்” என்றான் மூத்த மகன். “அதான் தெரியுமே” “இவன் அப்பாவாகிட்டான். அதை தான் அப்பா சொல்றார்” என்று அவரின் இளைய மகன் சொன்னான். “நல்ல ஆகட்டும்! சவுக்கியமா ஆகட்டும்”  என சொல்லி ஒரு நிமிடம் திடுக்கிட்டவர்  “என்ன சொல்றான் இவன்?” என தன் மனைவியை பார்த்தார் . “ஆமா சம்பந்தி நாம ரெண்டு பேரும் பூட்டன் ஆகிட்டோம்” என்று ‘கேகேகே’ என்று சிரித்தார் மீசைக்காரர். “என்ன சொல்ரீங்க புரியல” “நீங்க இருங்க நான் சொல்றேன்” என முந்தி கொண்ட இளைய மகன்   “நம்ம லீலா கர்ப்பம் ஆன விஷயம் உங்ககிட்ட சொல்லலையா?” என மொத்தத்தையும் போட்டுடைத்தார் “என்னது” என எழுந்தவர் “டேய் வாசு என்னடா சொல்றாங்க ?” என்று கர்ஜித்தார் . அவனும் பதில் சொல்லாமல் , உண்மை தான்! என்பது போல் வெக்கி தலை குனிந்தது வாசுவின் முகமும், இதற்கிடையில் காலில் விழ சொல்லி அப்பாவின் சைகையை ஏற்று “ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா!” என காலில் விழுந்தான் குமரன் “எந்திரிடா நாயே!” என அவர் அவன் சட்டையை பிடிக்க ‘அப்பா’ என வாசு அவரை பிடிக்க , ‘சம்மந்தி’ என குமரனை மீசைக்காரர் விலக்க, வாசலில் காரை பார்த்து உள்ளே நுழைந்தனர் பவியும்,லீலாவும். விலக்கி விட்டு அவரை மீண்டும் ஷோபாவில் அமர்த்த கெட்ட வார்த்தையில் ஏசிக்கொண்ட திடீரென நெஞ்சை பிடித்தார் தாத்தா. அவர் நிலை தடுமாறவும்   அழத்தொடங்கிய பாட்டியை பார்த்த குடும்பம் பத்து நொடியில் விஷயம் புரிந்ததும் “என்னடா குமரா பாக்கிற தூக்குடா” என மீசைக்காரர் சொல்ல அவரை பேரனும் , மகனும் தூக்கிக்கொண்டு காருக்கு வந்தனர். “ஹலோ! விடுங்க நாங்க பாத்துகிறோம் ஆட்டோ பக்கத்துல தான் இப்ப வந்துடும்” என வாசு அவர்கள் பின் ஓடினான்.  “அட என்ன சம்மந்தி விவரம் இல்லாம! ஆபத்துக்கு பாவம் இல்லை வாங்க” என அவனையும் சேர்த்து உள்ளே தள்ளினர்.  “எம்மாடி நீங்க எல்லாம் ஆட்டோ பிடிச்சு வாங்க!” என பாட்டி மட்டும் ஏறிக்கொண்டாள். “பொறுமையாக சொல்லிக்கலாமேனு நினைச்சனே” என ஒப்பாரி வைத்த பாட்டி, அவளுக்கும் “ஏற்கனவே விஷயம் தெரியுமா!” என படுத்து கொண்டு இருந்த தாத்தா பார்வையில் கப்சிப் ஆனாள் . “அப்பா, ஒன்னும் இல்ல சீக்கிரம் போயிடலாம்” என்றான் வாசு “ஆமா போக வேண்டியது தான் இதெல்லாம் பார்த்துட்டு நான் என் உயிரோட இருக்கணும்” என்றார் தாத்தா. “தாத்தா! அப்டிலா பேச கூடாது உங்க தலைமையில தான் எங்களுக்கு கல்யாணம்”  குமரன் கார் ஓட்டி கொண்டு சொன்னான்.  பின் இருக்கையில் படுத்து கொண்டவர் “டேய்! இவன்கிட்ட ஏன்டா வண்டிய குடுத்தீங்க. இவன் வேணும்னே கொன்றுவானே” “என் பேரன் தான் திருப்பதில இருந்து ஓடிட்டு வறான்” என அவருக்கும் பின்னிருந்து வந்தது மீசைக்காரர் சத்தம். “உங்களை எல்லாம் போலீஸ்கிட்ட  சொல்லாம விடமாட்டேன்” “ஆல்ரெடி போலீஸ் வருது நம்ம பின்னால” என்றான் குமரன் “போலீஸா!” என பாட்டி பார்த்ததும் பவியை பொண்ணு கேட்டு வந்த போலீஸ் மாப்பிள்ளை, காரை பின் தொடர்வது தெரிந்தது. இந்த விஷயத்தையும் சொன்னால் “தாலிக்கு ஆபத்து தான்” என நினைத்த பாட்டி  “வேகமா போ பா தம்பி” என்றாள். வேகமாக சென்ற வண்டி வளைவில் நின்ற பழைய காய்கறி வண்டியின் மேல் முட்டி  நின்றது அத்தியாயம்-20 இருதய அடைப்பு இருப்பது தெரிந்தும் அறுவை சிகிச்சை செய்வதற்கு  அனுமதிக்காமலேயே மாத்திரை மருந்தில் ஓட்டிக்கொண்டு இருந்தார் தாத்தா.  குமரன் ஓட்டிச்சென்ற கார் சாலையோர கைவண்டியில் முட்டியும் அது கேட்பாரற்ற வண்டி என்பதால் எந்த சச்சரவும் இல்லாமல் மருத்துவமனை வந்தது. நேற்று காலையில் லீலாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் தற்போது இவர் இங்கு வந்துள்ளார்  “ஹாஸ்பிடலுக்கு செலவு செய்தே மச்சானுங்க பூரா சொத்தும் அழிஞ்சுடும் போலயே!” என மனதில் நினைத்து கொண்டே தயக்கமாக உள்ளே வந்தார் போலீஸ் வினோ.   எல்லோரும் அறையின் வாசலில் நின்றனர். மீசைக்காரர் குடும்பத்தை முதன் முதலாக பார்க்கிறான் வினோ. பவியை தவிர அவரின் வரவை யாரும் கவனிக்கவில்லை. சொல்லப்போனால் , யாருக்கும் பவியை கேட்டு வந்த மாப்பிள்ளை என்று நினைவில் உண்டோ என்றும் கூட தெரியாது . ஆனால் பவி , வினோ வந்து நிற்கும் பொழுதே இங்கே எப்படி என்று  கேட்டாள். நிஜத்தில் பவியும்,லீலாவும் இன்று கோவில் போனதில் வினோவும் கூட ஒரு காரணம் . இவ்வுலகில் திரும்பும் பக்கம் எல்லாம் காதல் தான் . என்ன ஒன்று பழகிய மாத்திரத்திலேயே மருவக்காதலா அல்லது மன்மதக்காதலா என்றெல்லாம் அறிய முடியாது. கோவிலில் நேற்று மயங்கிய லீலாவை ஆட்டோவில் அழைத்துச்சென்றது முதல் மருத்துவமனையில் பவி வீட்டின் நபர்கள் வரும்வரை காத்துக்கொண்டு  இருந்ததால் பவியின் கலங்கிய மனதில் சிம்மாசன  இடம்பிடித்தான் வினோ.  இப்போது தெரியாதது போல் கேட்கும் பவி தான் சற்று முன்னர் வீடுவரை வினோ பின் தொடர்ந்து வந்த போது ஒன்றும் சொல்லாமலேயே  வந்தாள். வினோவுக்கு உண்மையை சொல்ல தோன்றினாலும் அருகில் அவளின் சொந்தங்கள் இருப்பதால் “அந்த வழியா வந்தேன் உங்க வீட்டு முன்ன பரபரப்பா இருந்துச்சு. எமர்ஜென்ஸி போல அதான் என்ன ஆச்சோன்னு..” என்றான் வினோ. மற்றவர்கள் அமைதி காக்க ,  கூச்சத்துடன் கண்களை தரையில் வைத்துக்கொண்டே பவி சொன்னாள் “அதெல்லாம் ஒன்னும் இல்லங்க லேசா பெயின்” இருவர் பேச்சையும் கேட்டு  மேஜையில் இருந்த மீசைக்காரர் பேசினார் “நோ! நோ! நோ! அவருக்கு ரொம்பவும் முடியல , நெஞ்சை பிடுச்சுட்டு பெருமாளை எனக்கு ஏன் இந்த சோதனைன்னு சொல்லிட்டே வந்தார்” “இவரு…?” என்று யார் எனக்கேட்கும்படி வார்த்தையை இழுத்த வினோவிடம் “நானா ஐ யம்  ஆறுமுகம். இவங்க” என்று தேடிக்கொண்டே சற்று தள்ளி நின்ற வாசுவை கைகாட்டினார்  “தோ! அவங்க பொண்ணு லீலாவ என் பேரனுக்கு தான் …” என்று சொல்லும் முன்னர் கடுப்பான வாசு “சார் கொஞ்சம் வெளியே போய் பேசிட்டு இருக்கிங்களா !” எனக்கடிந்தான் “அவரு தான் தம்பி கேட்டார் அதான் சொன்னேன்” என மீசைக்காரர் அமைதியானார். வாசு , அவனை முறைக்க வினோவிற்கு சங்கோஜ நிலை. “இட்ஸ் ஓகே! இது உங்க ஃபேமிலி மேட்டர் பார்த்துக்கோங்க நான் வரேன்!” என கிளம்பிக்கொண்டான். அவர் சென்றதும் ‘ரெஸ்ட் ரூம்’ செல்வதாக  கூறிவிட்டு பவியும்  வெளியில் வந்தாள்.  பாட்டி வாசுவின் அருகே நின்று கொண்டு பூட்டிய அறையின் கதவை பார்த்து கொண்டு இருந்தாள். மீசைக்காரரின் மகன்களும் , குமரனும் மாடிப்படியின் படிகளில் அமர்ந்து கொண்டனர். லீலாவும், மித்ராவும் சுவரில் சாய்ந்து  நின்று இருந்தனர். அனுபல்லவிக்கும் , கஸ்தூரிக்கும் வினோவை இன்னும் கூட நினைவில் உண்டு. பவி வெளியே செல்வதை பார்த்து கொண்டே இருவரும்  சிரித்தனர்  . ஏற்கனவே பல தொடர்பில் இருந்த வினோ அதில் ஏதோ ஒரு பெண்ணிடம் இருந்து வந்த அழைப்பில் பேசும் வேளையில் பவி வருவதை பார்த்ததும் பாதியில் அந்த பேச்சை துண்டித்தான்.   இதற்கிடையில் ரத்தினம் வாசுவை அழைத்தான்.  பலமுறை ரத்தினமும் சொல்லி கேட்கவில்லை என்பதால் இம்முறை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய சொல்லினான்.  பணம் விஷயமாக அம்மாவை நெருங்கிய வாசு, மீசைக்காரர் வீற்று இருப்பதை பார்த்துச்சொன்னான் “சார் ! உங்களுக்கு ஏன் ஷ்ரமம்! நீங்க வீட்டுக்கு போங்க நாங்க பாத்துக்குறோம்” “இல்ல தம்பி பரவாயில்ல!” என வலுக்கட்டாயமாக  அங்கேயே இருந்தார் . “அம்மா! அண்ணன் இருபது ஆயிரம்” என இளைய குரலில்  காதில் ஊத மெல்லமாக அவர்களுக்கு மத்தியில் சிறுபிள்ளை போல் லாவகராமாக தன் காதை திணித்தார் மீசைக்காரர். “சார் என்ன பண்றிங்க” என்றான் வாசு “இல்ல என்ன பேசுறீங்கனு கேட்கலை”  என்றான் கூச்சமின்றி. “பெர்சனல் மேட்டர் சார் ! கொஞ்சம் தள்ளி நில்லுங்க !” “ஓகே!  பேசுங்க நான் எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வரேன்” என்று உரிமையாக கிளம்பியவர், தம் மக்கள் மூவரிடமும் “என்ன வேணும்னு கேட்டுட்டு வாங்க” என சால்வை போன்ற பெரிய துண்டை எடுத்து உதறி அணிந்து ஒய்யாரமாக நடந்தார் . “அண்ணன் இருபது ஆயிரம் குடுத்தேனு சொன்னான்” என்றான் வாசு பாட்டி திருதிருவென முழித்து  “அதை உங்கப்பா செலவு ஆக்கிட்டாருப்பா” என்றாள் . “ரெண்டு நாள் தானே ஆச்சு அதுக்குள்ள எப்டிமா ?”என்றதும் ‘ஈ.சி.சி’ எடுக்க அறை கதவு திறக்கவும் வீல் சேரில் வந்தார் தாத்தா. “என்னடா ஆபரேஷன்க்கு பிளானிங்கா?” என கிண்டல் தோணியில் கேட்ட அவரின் கேள்வியில் குடுத்த மாத்திரை வேலை செய்தது தெரிந்தது. “இல்லப்பா!” என்றவன் “என்னமா ஆச்சு இருபதாயிரம் என்றதும்!” மூன்றடி  தூரம் சென்ற  வீல் சேரில் இருந்தவர் “அடியே” என்றார். “என்னங்க?” என பின்னாலே ஓடிய பாட்டி , தப்பித்துக்கொண்டாள். “ஷிட்! என் ஏ.டி.எம் கார்டை குடு பணம் எடுத்துட்டு வரேன்” என கிளம்பிய வாசுவை வாசலிலேயே  “சாப்பிட்டு போலாம் வாங்க” என மடக்கினார் . கை நிறைய வாழை இலைகள் , பின்னால் வந்தவர் அவரின் மக்கள் பெரிய பாலித்தீன் பார்சலோடு உள்ளே நுழைந்தனர். “அட்மிட் பண்ண அரைமணி நேரத்துல இவ்ளோ அராஜகம் ஆகாதுங்க” என வாயை பிளந்தாள் கஸ்தூரி வாசுவிடத்தில். “இந்த வீட்ல என் பேச்சே யாரு கேக்கறா” என சீலையை சொருவி கொண்டு சமையலுக்கு சென்றாள் அத்தை . “பாத்துக்கலாம் மாமா அதான் ரெண்டு நாள் இருக்குல்ல” என்றாள் பத்மா “வைப்ரேட்” ஆன மாமாவின் போனில் இருந்து அழைப்பு வந்தது. “பாத்தியா டி உன் மகனே! பேசி முடிக்கல அதுக்குள்ள போன் பண்ணிட்டான்” என சத்தமாக மனைவியிடம் சொல்லி ஃபோனை எடுத்தார் .  சமையல் அறை  சென்ற அத்தை மீண்டும் வந்து ஒட்டு கேட்க தயாரானாள். “அப்பா நாளைக்கு வந்திடுவேன். சண்டே அருண் வறான்ல?” “அதுவந்து.. ”  என்று அவர் மனைவியை பார்த்தார்  “இல்ல! இல்ல!” என மனைவி சைகை, “ஆமா! ஆமா!” என மருமகள் சைகை எதை சொல்வது என்று தெரியாமல் “ஆ வர்றான்பா” என்றார் . மறுமுனையில் அழைப்பை துண்டித்த  ஆதித்யா “உங்க அண்ணன் வரேன்னு சொல்லிட்டான் சந்தோஷமா?” என தன் மகளிடத்தில் கூறினான். கால்கள் நல்ல முறையில் இருந்தும்  நடக்கமுடியாத நிலையில் இருந்த தன் மகளின் வீல் சேரை தள்ளிகொண்டே நடந்தார் ஆதித்யா. “பாத்தியாடி!  பேருகச்சும் உன்னை பத்தி ஒரு வார்த்தை கேட்டானானு !   அவனுக்கு அக்கறை இருந்தா தானே!” என கடிந்து கொண்டாள் அத்தை. எதையும் மனதில் வாங்கது “மணி ஒன்பது ஆச்சு இன்னும் இவன் காலேஜ் போகாம மேல என்ன பண்றான்?” - பத்மா துண்டை உடுத்தி இருந்த அருண் ‘டீவி’ பார்த்து நகைச்சுவையாக பாடினான் ’அவளில்லாமல் நானில்லை ! நானில்லாமல் அவளில்லை ! லல லல்ல லல்லலா லல்ல லல்லலா லல்ல லால்ல லா..’ “டேய்! என்னடா காலங்காத்தால அரைகுறையா ஆடிட்டு இருக்க ?” என்றாள் பத்மா “அதுமா” என சவுண்டை குறைத்தவன் நாளை முதல் இரண்டு நாள் விடுமுறை. மட்டுமின்றி ஞாயிறு மித்ரா வருவது என்று அவனுக்குள் அலாதி ஆனந்தம். பத்மா அவனை நினைவுபடுத்தும்படி சொன்ன விஷயம் நினைவில் உண்டோ என கேட்டாள். “என்ன விஷயம்மா?” “தெரியாத மாதிரி கேட்கிற பாரு ! உங்க அப்பாவை பாக்க போறேன்னு சொன்னேன்ல ஞாபகம் இருக்கா?” “இருக்கு என்ன பண்ணட்டும்?” “இருந்தா சரி சண்டே போயி பார்த்துட்டு வா!” இடுப்பில் துண்டுடன் ஆடிக்கொண்டே சொன்னான்  “நீயும் வா மா?” “சாரி ! உங்க அப்பா என்னை கூப்பிடல” "எங்க அப்பா இல்ல உன் வீட்டுக்கார் !’ “என் வீட்டுக்கார் இல்ல இந்த வீட்டோட ஓனர்” “ஓனர் இல்ல ஓடியவர்” “ஸ்ஸ்ஸப்பா ! போதும் சீக்கிரம் ரெடியாகு தினசரி உன் பின்னாலே நிப்பாங்களா ?” பத்மா  செல்லவும் கல்லூரிக்கு தயாரனவன் போனில் குறுஞ்செய்தி அனுப்பினான் “அருண் பொண்டாட்டி எங்கு இருந்தாலும் ஆன்லைன் வரவும்” மருத்துவமனை சுவரில் சாய்ந்து கொண்டு மீசைக்காரர்கள் குடும்பத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள். செல்போன் சிணுங்க அருகில் அம்மா இருந்தும் அவனுக்கு எச்சரிக்கை செய்ய பதில் அனுப்பினாள். “உங்கிட்ட ஒன்னு சொல்லணும்” “என்ன ? சண்டே வரலன்னா ?” - அருண் “இல்ல !” “பின்ன சண்டே பஸ் ஸ்டாண்ட் வரணுமா?” “இல்ல ஐ யம் சீரியஸ் !” “சொல்லுடி என்னனு?” “அம்மா கேட்டாங்க?” “என்ன கேட்டாங்க?” “யாரு அருண்ணு?” அவனுக்குள் நடுக்கம்  “என்ன ஆச்சு? எப்டி தெரியும்? உங்க அம்மாவுக்கு” என்றான் “இன்னொன்னும் சொல்லனும்” “என்ன” “நான் இனி சென்னையே வரமாட்டேன்!” “என்னடி சொல்ற?” “பிளாக்” “என்ன ஆச்சுடி” “டி.பீ எங்கடி” “போயிட்டியா!’ ”இருக்கியா ?" “உன்னை தான்டி!” அருண் அவளின் எண்ணுக்கு அழைத்தான். அவள் ‘அன் பிளாக்’ செய்ய,  பதில் சொல்லும் முன் அருண் கேட்டான் “என்னடி ஆச்சு பிளாக் பண்ற, அன்பிளாக் பண்ற” “சாரிடா! நிலைமை சரி ஆனப்ரம்  பேசலாம். இப்ப பேச முடியாத நிலைமை பிளீஸ் ! அண்டர்ஸடெண்ட்” போன் செய்ய வேண்டாம் என்று காலில் விழும்படி அவனுக்கு வேண்டுகோள் வைத்தாள். “என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லு” காரணம் சொல்லவில்லை மீண்டும் அவள்  ‘பிளாக்’ செய்தாள் . அத்தியாயம்-21 எட்டு மாதங்களுக்கு முன் பொறியியல் படிப்பை பாதியில் விட்ட பின் கலைக்கல்லூரியில் அருண் சேர்ந்து கொண்ட நேரம் அது. ஆத்திரம் அதிகம் கொண்டதோடு எப்பொழுதுமே தன் பாதையை தெரிவு செய்வதில் திணறிக்கொள்வான். பள்ளியில் கணித குரூப் எடுத்து, இரண்டு வருட பொறியியல் படித்து பின் அதை விட்டுவிட்டு பி.சி.ஏ  படிக்கிறான் அருண்  அன்று தான் மித்ரா அருணை பார்க்கிறாள். அவளின் ஹாஸ்டல் வார்டனின் மகள் கல்யாணம் மிக பிரம்மாண்டமாக எழும்பூரிலுள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. ஹாஸ்டல் பெண்களுக்கு மத்தியில்  கோடி செலவு ஆகி இருக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது. காரணம் அந்த அளவுக்கு அலங்காரமும், சாப்பாடும் என மிக விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தனர். மண்டபத்தில் மித்ராவும், ஹாஸ்டல் நண்பர்களும் உட்கார்ந்துகொண்டு கேலி பேசிக்கொண்டு இருந்தனர்.  ஒரு பெண்ணுக்கு ஒரு ‘நம்பர்’ , அந்த ‘நம்பரில்’ மண்டபத்தில் உள்நுழையும் நபர் தான் அவளுக்கு ஜோடியாக வைத்து பார்த்து பரிகாசம் . ஒருத்திக்கு வயதான தாத்தா, இன்னொருத்திக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி எனச்சென்ற விளையாட்டு கடைசியாக மித்ராவிடம் வந்து நின்றது.  ‘மூன்றாம் நம்பர்’ வழங்கப்பட்ட மித்ராவின் வரிசையில்  30 வயது மதிக்கத்தக்க ஆண் உள்ளே வருகிறார். மூன்றில் இருந்து நான்காம் எண் தாவி விடலாமா என நினைப்பதற்குள் அந்த ஆசாமி சட்டை பையில் கை வைத்து எதையோ விட்டு வந்தது போல் நினைக்க , வந்த வழியே திரும்பிக்கொண்டார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் , நல்ல உயரம், வாட்ட சாட்டமாக கல்லூரி பயிலும் மாணவன் போல் ஒருவன் மூன்றாவதாக வந்தான். அவன் உள்ளே வருகையில் நுழைவுவாயிலில் இருந்த ’ஏசி’காற்று அவன் பஞ்சு போன்ற கூந்தலை பறக்க செய்தது  .  மகேந்திரனை அழைத்து வந்த அருண் தான் மூன்றாம் எண்ணாக மண்டபத்தில் உள்ளே நுழைந்தான் .  “லக்கிடி நீ!” என்றாள் ஒருத்தி. “ரொம்ப ரொம்ப லக்கிடி இவ” என்றாள் இன்னொருத்தி.  இவ்வாறாக  புகழ்ச்சியின் வார்த்தையில் , இருவரையும் இணைத்து வைத்து பேச விளையாட்டு வினையாகியது மித்ராவிற்கு.  அதன்பின் அங்கே , இங்கே என உலாவும் போது மித்ரா அருணை பார்த்துக்கொண்டு இருந்தாள். திருமணம் முடிந்த பின் அருணை காணவில்லை. ‘பாதியில் வந்தவன் பாதியிலே போய்விட்டான்’ என அவள் நினைத்து கொண்டே ஹாஸ்டல் திரும்ப செல்கையில் பஸ் ஸ்டாப்பின் எதிரே நின்று கொண்டு ‘சைட்’ அடித்து கொண்டு இருந்த கூட்டத்தில் அருணும் நின்றான். இந்த நிறுத்தம் தான்  தினமும் கடந்து செல்கிறோம், ஆனால் இவனை பார்க்க மறந்து விட்டோமே என தனக்குள் நினைத்து கொண்டு அடுத்த நாள் ‘ஹாஸ்டல்’ செல்லும் ‘பஸ்ஸில்’ இருந்து வைஷுவுடன் அங்கேயே இறங்கிவிட்டாள். வாரங்கள் நாட்கள் இவ்வாறே செல்ல மகேந்திரனுக்கு மட்டும் மெல்ல புரிந்தது. அருண் செல்போனில் விளையாடிட்டு கொண்டு இருக்க மகேந்திரன் சொன்னான் “மச்சா சட்டுன்னு பாக்காத”  “என்னடா” என்றான் அருண் “எதிர்ல அந்த ரோஸ் சுடி உன்னையே லுக்கு வுடுது பாரேன்” “தெரியும்டா! நானும் நாலு நாளா கவனிக்கிறேன் , இங்கே இறங்குறா அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதே நம்பர் பஸ்ல ஏறிடுறா” “எனக்கென்னமோ” என தயங்கினான் மகேந்திரன் “என்ன உனக்கு என்னமோ ?”  - அருண் “உன்னை லவ் பண்ணுது போல” “பெரிய பைக் வச்சுருக்கேன்ல அதான். இதெல்லாம் காசு இருந்தா வர்ற கூட்டம் கண்டுக்காத” என அவளுக்கோர் முத்திரை பதித்தான் அருண் எத்தனை நாள் இப்படி தூரம் நின்று பார்த்துக்கொள்ள போவதாக  கேட்டாள்  வைஷு “அதுக்கு என்னடி பண்ண? கிட்ட போய் பேச பயமா இருக்கு !” - மித்ரா “லூசாடி நீ ! விட்டா அடுத்த செமெஸ்டர் வரை போயிடுவ போல, ஏற்கனவே  ஏன் இங்கயே இறங்குறீங்கன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க” “அதுக்கு என்ன செய்ய பயமா இருக்கு” “நான் வேணும்னா போய் சொல்லவா” ‘ஹான்’ என வேகமா தலை அசைத்தாள் மித்ரா. வைஷு ஒன்றும் பயந்தவள் இல்லை . ஏற்கனவே இரண்டு பேரை வைத்துக்கொண்டு சமாளிக்கும் அவளுக்கு இதெல்லாம் சில்லறை மாற்றும் காரியம் தான் . வைஷு எதிரே நடக்க முற்படும் வேளையில் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள்.  “நீயும் சொல்ல மாட்ட என்னையும் சொல்ல விட மாட்ற” என்றாள் வைஷு “இல்லடி நான் இப்ப வர்ற பஸ்ல போயி அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்றேன்  , நீ போய் சொல்லிட்டு என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு வா!” என்றாள் தந்திரமான வெக்கத்துடன். “அய்யடா ! இது நல்லா இருக்கே எது வந்தாலும் நான் இல்லன்னு கை தூக்கவா” “ஹே! ஹே! பிளீஸ்டி அவன் வேணாம்னு சொல்லிட்டா நாளைல இருந்து இங்க நிக்க வேணாம் போதுமா” “என்னமோ சொல்ற ! வர வர நீ சரி இல்லடி, வண்டி வருது கிளம்பு” என அனுப்பிவிட்டு அருண் மற்றும் அவன் நண்பர்கள் இருக்கும் எதிர் சாலைக்கு நடந்தாள் வைஷு ‘மச்சா! மச்சா!’ என மகேந்திரன் விழிக்க செல்போன் விளையாட்டை நிறுத்தி விட்டு வைஷுவை நோக்கினான் அருண். “கொஞ்சம் தனியா பேசனும்” என்றாள் வைஷு அவர்கள் நான்கு அடிக்கு அப்பால் நகர்ந்து கொண்டார்கள் “அவ என் ஃபிரண்ட்” என பேருந்து ஏறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்த மித்ராவை காட்டினாள். அவள் சட்டென பார்வையை திருப்ப நடத்துனர் விசிலால் பேருந்து நகர்ந்தது. “சரி. அதுக்கு” என்றான் அருண் "எப்டி சொல்லன்னு தெரியல!’ “சொல்லுங்க” “ஷு இஸ் இன்னொசன்ட்” “சரிங்க” “அவ உங்கள லவ் பண்றா அதான் என்னை விட்டு சொ..” என்று சொல்லும் முன் மகேந்திரன், மகேஷ் இன்னும் சிலரின் முனகல் அருண் காதுக்கு கேட்டது. ஒருகணம் பின்னால் பார்த்து விட்டு  சொன்னான்  “ஏன் அதை அவங்க சொல்லமாட்டாங்களா. அது இருக்கட்டும் அவ பேரு என்ன?” “மித்ரா” "உங்க மித்ராவ நாளைக்கு இதே நேரம், இதே இடத்துக்கு வர சொல்லுங்க சரியா இப்ப கிளம்புங்க’ வந்த வேலை முடிந்தது, என மறுபுறம் சென்று அடுத்த ‘ஸ்டாப்பில்’ மித்ராவை சந்தித்தாள். “மாமே” என நண்பர்கள் கூச்சலிட “டேய் சும்மா இருங்கடா நாளைக்கு தான் பேசவே போறேன்” என அவர்களை அமைதியாக்கினான். “லூசாடி நீ நாளைக்கு சண்டே , நா எப்டிடி அங்க போக?” “அடி ஆமாடி நானும் மறந்துட்டேன்” “ஹும் மண்ணாங்கட்டி” என்றாள் மித்ரா “சாரிடி ! சாரிடி ! நான் வேணும்னா திரும்பி போய் பார்க்கவா” “ஒன்னும் வேணா விடு பாத்துக்கலாம்” “பாத்துக்கலாமா ? டி நாளைக்கு பஸ்ஸே சரியா வராது நீ எப்டி போவ ?” “பார்த்துக்கலாம்டி” மறுநாள் மாலை அறை டவுசருடன் ‘ஃபுட்பால்’ ஆட சென்றவன் அந்த பஸ்ஸ்டாப்பை பைக்கில் கடந்தான் . வானம் மழைக்காக இருட்டி கொண்டு இருந்தது . அந்த ஓரம் இருந்த பழக்கடைக்காரர் கடையை பூட்டி கொண்டு இருந்தார்.  கரும்பு சாறு விற்பவன் கிளம்ப தயாராகி கொண்டு இருந்தான். “டமார்” என்ற இடியும் மழையின் வரவை ஒருமுறை  உறுதி செய்தது. தூரல் விழும் சாலையில் , பைக்கில் சென்று கொண்டே பின்னால் இருந்த மகேந்திரனிடம் சொன்னான்  அருண் “நான் சொன்னேன்ல அவ வரமாட்டான்னு எல்லாம் காசுக்கு தான்” . சொல்லி முடித்த பின் அவர்கள் எதிரே வந்த ’ஷேர்_ஆட்டோ’வில் இருந்து அப்பொழுது தான் தயாராகி வந்தவள் போல் வெள்ளை நிற சுடிதாரில் சிகப்பு நிற ரோஜாவை தலையில் சூடி கொண்டு தேவதையாய் மினிங்கி நின்றாள் மித்ரா. அருண் பைக்கின் கியரை உதைத்து குறைத்தான். ‘மனம்  கவரும் ஒன்றிற்கு பெண்கள் தாழ் படிவார்கள் ’ எனும் கூற்றை மித்ரா உறுதி செய்தாள் தாத்தாவிற்கு  ‘ஆஞ்சியோகிராம்’ சிகிச்சை முடிந்து நாளை வீட்டிற்க்கு திரும்ப ஆயத்தம் ஆகினர். சிகிச்சை அன்று ரத்தினம் வர தாமதம் ஆனதால் வாசு கையில் அவ்வளவு பொருளாதார சிக்கல். அந்த அவசர காலத்தில் பணம் கொடுத்து உதவியதால் மட்டும் இல்லை நிஜமாகவே மீசைக்காரர் குடும்பம் நல்ல குடும்பம் தான் என பாட்டி தன் சார்பில் இரண்டு நாட்கள் அவர்கள் காட்டிய அக்கறையை விவரித்தார் . அவர்களின் குடும்பம் தற்காலிகமாக அருகே ஹோட்டலில் தங்கி இருக்கிறார்களாம். குமரன் அப்பா விக்னேஷ்,  கல்யாணத்திற்கு முன் நம் தர்ம சங்கடமான விஷயம் அறிந்ததும்  குமரனை அறையில் பூட்டி கை நீட்டினாராம். குறுக்கே வந்த மனைவியிடமும் கூட கைகலப்பு நடந்ததாம்.  இன்றும் விக்னேஷ், தன் மகன் குமரனோடு பேசுவதில்லை. லீலாவும், குமரனும் கூட உங்கள் இந்த நிலைக்கு தாங்களும் ஒருவகை காரணம் என அழுத கதை என்று பாட்டி இன்ன பிற விவரங்களை மிகுந்த வருத்தத்தோடு சொல்லினார்.  தாத்தாவின் கண்கள் ஏதோ ஒரு உணர்ச்சியில் இருந்தது.   ‘இதய அறுவை சிகிச்சை’ தானே சொன்னார்கள், அப்படியானால் மனதையும் சேர்த்து மாத்தி விட்டார்களோ  என்னவோ ஒருவழியாக  லீலாவை குமரனுக்கு  திருமணம் செய்து வைக்க சம்மதித்தார் தாத்தா  . வினோ விஷயமும் சொன்னதால் பவிக்கும் ஒரு சேர கல்யாணம் செய்து வைக்கலாம் என்று பேசி கொண்டனர். மித்ராவிற்கு முன் பவிக்கு கல்யாணம் செய்து வைப்பதில் தவறான பேச்சு அடிபடும் என்று அவர்களுக்குள் நெருடல்.  ஆனால் ரத்தினம் இதற்க்கு மறுப்பு சொல்லமாட்டான் என்று தெரிந்தால் இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம், அதற்கான ஏற்பாட்டை தொடங்குமாறு  மனைவியிடம்  கூறி தன் தலையணையை நகர்த்தி படுக்கைக்கு தயாரானார். “வாசல்ல இருக்காங்க , எல்லாரையும் வர சொல்லவா!” என்றாள் பாட்டி. “இல்லடி யாரையும் நாளைக்கு வீட்டுக்கு போற வரைக்கும் வர சொல்ல வேணாம். நான் ஏதாச்சும்னு கூப்பிட்டா நீ மட்டும் வா” சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்த மீசைக்காரரின் குடும்பம் எந்த ஒரு சலனமுமின்றி மருத்துவமனையில் இருந்தது பெரிய ஆச்சரியம்தான். காலையில் கிளம்பும் முன் ரத்தினமும் , மீசைக்காரரின் மருமகள்களும் வந்து சேர்ந்தார்கள். நாணத்தால் தலை குனிந்த தாத்தாவின் மனது , வீடு திரும்ப தயாராக இருக்கும் பொழுது மீசைக்காரரிடம் மன்னிப்பு கேட்டார். பதிலுக்கு அவர் குடும்பமே மன்னிப்பு அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்றனர். லீலா தாத்தாவின் கால்களில் விழுந்து அவரின் நிலைக்கு தானும் காரணம் என்று மன்னிப்பு கேட்டு அழுக , அவளை தூக்கி விட்டு அவரும் கூட கண்கள் கலங்கினார் .   விக்னேஷ் , தன் மகன் குமரனை மிரட்டும் தோணியில் அழைத்து லீலாவோடு சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கும்படி பணித்தார். இத்தோடு சேர்த்து பவியும் , வினோவோடு சேர்ந்து  விழுந்தாள். மாலை மீசைக்காரர் குடும்பம்  ஊர் திரும்புவதால் லீலா வீட்டிலேயே பிரிவு உபசார விருந்து தயாராகி கொண்டு இருந்தது. வீடு மீண்டும் திருவிழா கோலம் பூண்டது. லீலா ஹோட்டலில் இருக்கும் குமரனிடமும், பவி வினோவிடமும் ஃபோனில்  இருக்க, ‘பிளாக்’ செய்யப்ப அருண் நம்பரை  ‘அன்பிளாக்’ செய்து அவன் முகப்பு படத்தை பார்த்து கொண்டு இருந்தாள் மித்ரா.  அதில் இருந்த புகைப்படத்தில் எப்போதோ அவர்கள் ஹோட்டலில் சாப்பிடும் போது அவள் எடுத்து கொடுத்த அருணின் புகைப்படமும் , ‘லாஸ்ட் ஸீன்’ நேற்றைய மாலை ஆறு மணியையும் காட்டியது. நேற்று மாலை அருண் அப்பா இன்று இரவு வருகிறார். ஏழு,எட்டு மாத காதல் தான் என்றாலும் மித்ராவை கணநேரமும் பிரியாதவன் அருண். இரண்டு நாளாக அவனின் நடை உடை பாவனையில் சன்னமாக மாற்றம். இரண்டு நாளும் அவன் ஃபோனில் தொடர்பு கொள்ள முயன்றும் பிளாக் செய்யப்பட்டு இருந்து. மகேந்திரன், மகேஷ் மற்றும் தாத்தாவிற்கு தெரியாமல் அவரின் போன் என அவன் தொடர்பு கொள்ள முயன்ற அனைத்து எண்களையும் பிளாக் செய்தாள். அருண் நிலையை இன்னும் கஷ்டப்படுத்திப்பார்க்க ‘காதல் அவ்வளவு தான்’ என்று மறக்கச்சொன்னான் மகேஷ். மித்ராவிடம் இருந்து எந்த தகவலும் வராத விரக்தியில் இருந்தான் அருண். அன்று மாலை புத்திமாறி ஒரு காரியம் செய்தான் . ‘சைட்டிஷ்’ சாப்பிட கூட இதுநாள் வரை போகதவன் “சும்மா உன் கூட வரேன்” என மகேந்திரனை கூட்டிகொண்டு ஒயின்ஷாப் சென்றான். மகேந்திரன் அவனின் பள்ளி தோழன் தான் என்றாலும் அவனோடு இருந்தவர்கள் அனைவரும் அவன் கல்லூரி நண்பர்கள் . “என்ன பாஸ் புதுசா இந்த பக்கம்?” என உள்ளே வந்தவனை ஆச்சரியத்தோடு பார்த்தனர் அதில் ஒருவன் "வெல்கம் பாஸ்! வெல்கம்!’ என தன் அருகே வைத்து கொண்டான் . அவன் பார்க்க எல்லோரை விடவும் வயதில் பெரியவன் போல் இருந்தான். “மூனு குவாட்டர் , ரெண்டு பிளேட் லிவர் ப்ரை” மட்டும் போதும் “ஆறு பேரு இருக்கோம்டா மூனு எப்படி பத்தும் அண்ணே நாலா கொண்டுவாங்க” என்றான் அந்த பெரியவன். “இல்ல இல்ல அருண் இல்லை , அவன் சும்மா வந்தான்” என்றான் மகேந்திரன் “பாஸ் ஒரு பியர்! அவங்க சொன்னதையும் சேர்த்து கொண்டுவாங்க” என அருண் சொல்ல ‘சப்ளை’ செய்பவனின்  காதில் படுத்து கொண்டிருந்த பென்சில் கையிலிறங்கி கிராபைட்டை கக்கியது. ஒரு பியர் மட்டும் அடித்தவன் விடை பெற்றுக்கொண்டு மகேந்திரனை அழைத்து கிண்டியில் இருந்த ஒரு நட்சத்திர  ஹோட்டல் முன்னால் வந்து நின்றான். அவன் மூக்கில் ஊதி கேட்டான் "மாமே ஸ்மெல் வருதா?’ - அருண் “டேய் பாதியிலே கூட்டு வந்துட்டு கடுப்ப கிளப்பாத” என்றான் மகேந்திரன் “உனக்கு தனியா நான் வாங்கி தறேன். ஸ்மெல் வருதா பாரு” என்றான் மீண்டும். ‘குவாட்டர் அடிச்ச நானே ஸ்டெடியா வண்டி ஓட்டிட்டு வந்துட்டேன், இவன் காசு கொடுத்த பாவத்துக்கு ரொம்ப சாகடிக்கறானே’ என மனதில் நினைத்தவன் “அதெல்லாம் வரல போ! போ!” என உள்ளே அனுப்பினான். “ஹலோ” என்றான் அருண் “வெல்கம் சார்!” என்றார்  கோட் அணிந்த பெண் ஒருத்தி. “அப்பா இருக்கார் உள்ள !” “நேம் சார்” பெயர் சொல்ல தடுமாறியவனை  மேலும் கீழும் பார்த்தாள் அவள். அவன் மேல் ஏதோ கெட்ட வாடை வந்ததை உணர்ந்து கொண்டவள் வெறுப்புடன்  “சரி ரூம் நம்பர் சொல்லுங்க சார்” என்றாள் “தெரியல” வெறுப்பில் ‘ஷிட்’ என்றவள் மறுநொடி சிரித்து கொண்டே ‘ஒன் மினிட்’ என்று அங்கு ஒலித்த டெலிபோனை எடுக்கச்செல்ல, வெளியே வந்தான் அருண். அத்தியாயம்-22 பெயர் சொல்ல தடுமாறி அருண் வெளியறி வந்து மகேந்திரனோடு நின்றான்.  ஆதித்யா என்பது இப்போது அவனுக்கு நினைவில் வந்துவிட்டது தான் என்றாலும் வீட்டில் இருக்கும் தாத்தாவிடம் சொல்லி அவரை கீழே வர செய்து நாம் உள்ளே செல்லலாம் என அவன் நினைத்து கொண்டான்.   அதே நேரம் அவனுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.  மறுமுனையில் பேசிய பெண் குரல் ‘எடுத்துவிட்டார்கள்’ என்ற சத்தத்தோடு போனை இன்னோரு நபருக்கு கைமாற்றியது. “அருண் நான் தான்!” என்றதும் அருண் சுதாரித்துக்கொண்டான். “ஹான் சொல்லுங்க” என யாருடனோ பேசுவது போல் பதில் கூறினான் அருண்.   “சாரி இவளுக்கு கே.எஃப்.சி போணும்னு சொல்லிட்டா அதான் வெளிய வந்துட்டோம் நீ ஒரு அரை மணி நேரம் கழிச்சு வரியா” எனச்சொல்லவும் , தான் ஏற்கனவே வந்த செய்தியை சொன்னான் அருண். “ஓ. சாரி சாரி , என் போன் சிக்னல் பிராப்ளம் நீ ஒன்னு பண்ணேன் நேராக எக்ஸ்பிரஸ் அவன்யூ செகண்ட் பிளோர்ல இருக்குற கே.எஃப்.சீ க்கு வாயேன்” என்றார் “ம்ம். சரி!” என்றவன் அழைப்பை துண்டித்தான். கைக்கடிகாரம் மாலை நேர 7 மணியை காட்டியது . “என்னடா ?” என்றான் மகேந்திரன் "அவர் இங்க இல்லையாம் ‘ஈ.ஏ’ல இருக்காராம், அங்க கூப்பிடுறார்’’. மகேந்திரனுக்கு கொஞ்சம் மனதில் எரிச்சல் தான் என்றாலும் போகலாம் என்றான். நிஜத்தில் அருண் பைக்கை ஓட்டிகொண்டு செல்வதில் அவனுக்குள் எப்போதும் ஓர் ஆர்வம் உண்டு. காரணம் அவ்வளவு விலை மதிப்பான வண்டி அவனிடம் இல்லை சொல்ல போனால் அவனிடம் சைக்கிள் கூட பள்ளியில் இலவசமாக கொடுத்தது தான். ஈ. ஏ வந்தடையும் பொழுது அருண் கண்கள் லேசாக சிவந்து இருந்ததை கேட்டான் மகேந்திரன்.  அவனும் கண்ணாடியில் பார்த்து கொண்டே , தூசி என்று சொல்லியவாறே  முகத்தை கைக்குட்டையால் துடைத்து,  தலைமுடியை கையால் சீவி விட்டு உள்ளே செல்ல தயாரானான் அருண். அவன் சிங்காரம் செய்வதை வேடிக்கையாக பார்த்த மகேந்திரன் கேட்டான்  “மொதல் தடவ பியர் குடிச்சிட்டு ஒன்னுமே ஆகல பாரேன் உனக்கு” "ஏன்டா முதல்ல குடிச்சா ஏதாச்சும் ஆகுமா என்ன?’’ என்றான் அருண். “ஆகாது. ஆன சில பேரு வாமிட் பண்ணுவாங்க உனக்கு அப்டி ஏதும் வரலையா” “எனக்கு அப்ப இருந்தே, குமட்டலா இருக்கு” என்றவன் வண்டிக்கு பின்னால் இருந்த செடிகளின் மேல் “வ்வேக்” என்றான் “நினைச்சேன் டேய்! டேய்! டேய் இருடா தண்ணி வாங்கிட்டு வரேன்” என எதிரில்  இருந்த கடைக்கு விரைந்தான்  அங்கு செல்லும் சிலர் அருணை பரிகாசமாக பார்த்தனர். அளவுக்கு மீறிய குடிகாரன் என்றும் சிலர் நினைத்து கொண்டு  கடந்து சென்றனர் . " நல்ல வேளை உள்ள போய் வாமிட் பண்ணாம போனியே, இந்தா முகத்தை கழுவிட்டு சீக்கிரம் போயிட்டு வா" என்றான். மீண்டும் ‘வ்வேக்’ என்றவன் தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்தான் “வ்வேக் வ்வேக்” “இன்னும் முடியலையாடி” என்றாள் பவி “போயி டவல் எடுத்துட்டு வா” என அசதி தோய்ந்த குரலில் பவியிடம் சொன்னாள் லீலா ஒரு கையில் இருந்த போனில் பேசினாள் “டேய் லூசு ! அப்ப நிஜமாவே கன்சீவ் ஆகிட்டனா நான்”    "ஆமா பின்ன ! மாமன் கொஞ்சம் மொறடன் ! ’’ என்றான் குமரன் “தூ நாயே ஃபோன வை.  மதியம் சாப்ட வர்றப்ப பாக்கலாம்”  என தண்ணீரால் முகம் கை கால்களை அலம்பி துடைத்துக்கொண்டு வெளியே வந்ததும் “மித்ரா எங்கே” என்றாள் லீலா “தெரியல ரூம்ல இருக்கா” - பவி நம்மோடு காலை முதலே பேசவில்லையே ஏன் என காரணம் கேட்டாள் லீலா. எல்லாவற்றிர்க்கும் காரணம் பவி தான்.  கஸ்தூரியிடம்,  அருண் மித்ரா காதலை உளறிவிட்டதால் தான் அவள் பேசவில்லை என்பதால் பவிக்கு அச்சமயம் என்ன சொல்வதென்று தெரியவில்லை . ‘தெரியல’ என அரை பேச்சோடு கஸ்தூரியிடம் போய் நின்றாள் பவி. பவி முகத்தை  தூக்கி வைத்துக்கொண்டு கோபத்தில் நின்று கொண்டு இருப்பதை சமையல் வேலையில் இருந்து கொண்டே கஸ்தூரியும் கவனித்தாள். ‘’அண்ணி நீங்க செஞ்சது தப்பு’’ என்றாள் பவி. சமையலில் உப்புகாரம் சரிபார்த்து கொண்டே கேட்டாள் கஸ்தூரி  “நான் என்ன தப்பு பண்ணேன்” "மித்ராகிட்ட கேட்க வேணாம்னு சொன்னேன்ல எதுக்கு கேட்டீங்க?’ "நான் கேட்கவே இல்லையே’ “பொய் சொல்லாதீங்க நீங்க கேட்காமலா அவ என்கிட்ட பேசாம போறா?” “அது இருக்கட்டும் போலீஸ் என்ன சொல்றாரு?” “எந்த போலீஸ்?” “அதான் போன வாரம் அந்த சந்துல நின்னு பேசுனியே அந்த போலீஸ்” "உங்களுக்கு எப்டி தெரியும்?’ “நான் தான் மாடில நின்னு பார்த்தேனே. என்னமா கொஞ்சல். ஆனா ஸ்மார்ட்டான கேடிடி நீ” “ஏன் ?” “இங்க நின்னு பேசிட்டு எதுவுமே தெரியாத மாதிரி ஹாஸ்பிடல்ல புதுசா பாக்கிற மாதிரி ஆக்டிங் . சான்ஸே இல்ல! சிவாஜியா , கமலா உன்கிட்ட தான் நடிக்க கத்துக்கணும்” அதற்கு மேல் அவள் திடம் அங்கு  தங்கவில்லை. சிரித்துக்கொண்டே தன் அறைக்கு திரும்பினாள்.  மறுபுறம் மித்ராவை தேடி சென்ற லீலாவிடம் நடந்ததை அவள் சொல்ல  “பவியா போட்டு குடுத்தது” என ஆச்சரியமாக கேட்டாள் லீலா "அவகிட்ட கேக்க வேணாம் பின்ன அதையும் அங்க போய் சொல்லிட போறா’’ அன்று மீசைக்காரர் சாப்பாடு வாங்கி வந்த நாளில்  பவி வெளியே செல்வதை இரண்டு அண்ணிகளும் பார்த்தது அவளுக்கு தெரியவில்லை. ஆனால் திரும்பி வந்த பொழுது அவர்கள் இருவரின் ஜாடை பேச்சுக்கும்,  சந்தேகம் வராதது போல் இருக்கவும் தற்காப்புக்காக அன்று அருண் விஷயத்தை போட்டுடைத்தாள் பவி.  மித்ரா சென்னையில் ஒரு பையனை காதலிக்கிறாள் என்பது மட்டுமே தவிர முழுதும் அல்ல. தன் மகளை இன்னொருவர் முன் விட்டு கொடுத்து பேச யாருக்கு தான் மனம் வரும். தனியாக இருக்கும் பொழுது சொல்லி இருக்கலாம். ஆனால் பவி சொல்லும் பொழுது ,  அனுபல்லவியும் உடன் இருந்ததால்   அவ்விஷயத்தை அவ்வளவு எளிதில் கஸ்தூரி விடவில்லை.  இரண்டே மணி நேரத்தில் மொத்த விவரத்தையும் பவிக்கு மூளை சலவை செய்து விட்டு  அறிந்து கொண்டாள் . அதன் பின்னர் தான் அருணிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தாள். இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது . அப்பாவை பார்க்க உள்ளே சென்றவனுக்கு போதை லேசாக தெளிந்து விட்டது தான் என்றாலும் அவன் மேல் அடித்த ‘பியர்’ வாடை, முதல் இரண்டு பட்டனை திறந்து போட்ட விதம் குடித்ததை சற்று வெளியே காட்டியது.   அந்த குமட்டலும் கூட இருந்து கொண்டே தான் இருந்தது. காபியை குடித்தால் வாந்தி வரலாம் என்று முன எச்சரிக்கையாக சொல்லி  கைக்குட்டையை கொடுத்து அனுப்பினான் மகேந்திரன் ‘கே.எஃப்.சி’ யில் உள்ளே நுழைந்தவன் ஆதித்யாவை கண்டுகொண்டான். அவன் சாயல்,  ஆம் அவன் சாயலே தான்.  இருபுறமும் நரைத்த முடி , கண்கள் சிறியது , நல்ல உயரம் , வெள்ளை நிற சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு அவனை பார்த்ததும் கையை உயர்த்தினார். அருகே வந்தவன் தயக்கமாக  ‘ஹாய்’ என்றான் மெல்லிய குரலில் . அவருக்கு எதிரே இன்னொரு பெண் இருந்தாள். அவளுக்கு எப்படியும் ஒரு பதின்ம வயது இருக்கும். சில நொடிகள் வரை அவன் நிசப்தமாக நின்று கொண்டு இருந்தான் ‘சிட்! சிட்!’ என்ற ஆதித்யா “என்ன சாப்பிடுற  பர்கர்,பீஸ்ஸா,கோக்” என அடுக்கி கொண்டே போல  “ஒன்னும் வேணாம்” என்றான் அருண் . “அட என்ன நீ கூச்சப்பட்டுகிட்டு” என்றவர் “வெயிட்டர்!” என்றார் “யாமிகா இது தான் அருண். நீ பார்க்கணும்னு சொன்னது” என்று அவளிடம் சொல்லியதும் அருணை பார்த்து சொன்னார் “இது யாமிகா. என் பொண்ணு” என்றார். அருணுக்கு அங்கு இருப்பது எரிச்சலாக பட்டாலும் தேவையில்லாமால் பேச வேண்டாம் என அம்மா சொன்னது நினைவிலேயே இருந்தது.  ஆதித்யாவின் காதில் யாமிகா ஏதோ ரகசியமாக சொல்லி சிரித்தாள் அருண் சங்கோஜமாக “என்னவாம்?” என அருண் புருவம் உயர்த்தி கேட்க “நீ என்னோட லைட் வெர்சனாம்” என்றதும் அவனும் லேசாக புன்னகைத்தான் “தாத்தா பாட்டி எப்டி இருக்காங்க” “எல்லாரும் நல்ல இருக்காங்க. தாத்தா உங்களை கேட்டார். வரணும்னு சொன்னார் பாட்டி தான் விடல” என்றான் அருண் “பரவாயில்லை இருக்கட்டும்” என்று கவலை தோய்ந்த முகத்தில் பார்வையை கீழ் நோக்கினார்.  “அம்மாக்கு இன்னும் கோபம் தான் போல” என்று சொல்லிவிட்டு ‘பத்மா’ என்றார் சற்று தயக்கமாக, “ம்ம். அம்மா நல்ல இருக்காங்க” “தாத்தா சொன்னார் இன்ஜினியரிங் படிச்சுட்டு இப்ப ஆர்ட்ஸ் படிக்கிறேன்னு” “ஆமா தெரியாம  போய் சேந்துட்டேன். ஆறு அரியர் அதான் படிக்க பிடிக்காம” சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர் ‘உக்காந்து இருந்தா எதுவும் வராது’ என திட்டிக்கொண்டே அந்த வரிசைக்கு சென்றார். அருணின் அவசர புத்திக்கான காரணம் அப்போது தான் தெரிந்தது. தனியாக இருந்த யாமிகா , கண்கள் மூடும் படி உதிர்க்கும்  அவள் சிரிப்பில்  “நான் இப்ப தான் பிளஸ் 2 முடிச்சேன் அப்ராடு போறோம்” “அப்படியா” என்றவனுக்கு  மறுமொழி வரவில்லை. பின்னர், தான் சரியாக பதில் சொல்லவில்லை என உணர்ந்து, சிறிது மவுனத்திற்கு பின் கேட்டான் “எங்க போறீங்க?” “ஆஸ்திரேலியாக்கு , டேடுக்கு இப்பதான் விசா கிடைச்சு இருக்கு சோ என் ஹையர் ஸ்டடி அங்கதான்” என பெருமூச்சுவிட்டாள் “அம்மா எங்கே?” எனக்கேட்டான் “அம்மா வரல” “வரலையா ஏன்” “அவங்க இப்ப இல்ல”  “என்னாச்சு” என கேட்க தோன்றினாலும் மனது வரவில்லை. இருந்த போதிலும் “சாரி” என்றான் அருண்.  அதிக நேரம் அவர்களோடு இருக்க வேண்டாம் என பாட்டியும், மகேந்திரனும் சொன்னது நினைவுக்கு வர, இதற்கு மேல் இருந்தால்  “அம்மாவை ஏன் விட்டு சென்றார் அவர்” எனக்கேட்டாலும் ஆச்சரியமில்லை என எழுந்தவன் ’கியூ’வில் நின்ற ஆதித்யாவிடம் போய் நின்றான். “என்னாச்சு பேசிட்டு இருக்க வேண்டியது தானே” “இல்ல இல்ல கிளம்பனும் கொஞ்சம் வேலை” என கடிகாரத்தை பார்த்தான். தன் உதிரமாக இருந்தாலும் இத்தனை வருடம் இல்லாத பாசம் இப்போது ஏன் என்று சட்டையை பிடித்து கேட்காமல் இருந்ததற்கே நன்றி சொல்ல தோன்றியது ஆதித்யாவுக்கு. கையில் பார்சலை வாங்கியதும் வீட்டில் கொடுக்க சொல்லி,  அவனுக்கும் காபியை நீட்டினார். விடைபெற அவன் நகர , “அவகிட்டயும் சொல்லிட்டு போ” என்றதும் அங்கு நின்று கொண்டே யாமிகாவிடமும் கடமைக்காக ‘பாய்’ என்றான் . அவர்கள் நடந்து கொண்டே பேசினர் “நான் கூப்பிட்டேன்னு வந்ததுக்கு தேங்க்ஸ் நாங்க நாளைக்கு ஆஸ்திரேலியா போறோம்” என்றார் ஆதித்யா “ம்ம் யாமிகா சொன்னாங்கா” “சித்தி எங்க” ’’அவ இல்லை இப்ப" “என்னாச்சு?” என கேட்டான் மூன்று வருடம் முன் மனைவியும் , மகளும் சந்தித்த கார் விபத்தில் மனைவி தவறியதையும், யாமிகா கால்கள் இழந்ததையும் கூறினார். கால்கள் இல்லையா என படபடத்தவன் யாமிகாவை நோக்கினான். அவர்கள் தூரமாக நின்று பேசி கொண்டிருக்க ஏதோ பட்டனை அழுத்த யாமிகா இருக்கை பின்னால் சென்று முன்னால் நகர்ந்து வந்தது. அவள் ‘வீல் சேரில்’ இருப்பதை அப்போது தான் காண்கிறான் அருண்.  அவள் வந்து கொண்டிருக்க அவளை பார்த்து கொண்டே “தாத்தாவை வேனும்னா நாளைக்கு காலையில ஹோட்டல் கூட்டிட்டு வா” என்றார் ஆதித்யா “சரி” என்று சென்றவனை  “யாமிகா தான் உன்ன பார்க்கணும்னு அடம்பிடிச்சா . நான் கூப்பிட்டேன்னு வந்ததுக்கு  தேங்க்ஸ் , நல்ல படி” என கட்டியணைத்து அனுப்பி வைத்தார். பியர்வாடை ஆதித்யாவின் நாசியில் ஏறி , தான் விட்டுச்சென்ற குற்ற உணர்வை குத்தி கிழித்தது. அத்தியாயம்-23 ஒருதடவை செய்தால் தவறு, மீண்டும்  செய்தால் அது திமிர் . வயதுக்கோளாறு , மித்ராவின் சில நாள் பிரிவு என மனதில் ஏற்பட்ட கசப்பால் ‘பியரின் வாடை நறுமணமாக தெரிந்ததோ என்னவோ’! ஆதித்யாவை பார்த்துவிட்டு திரும்பி செல்லும் பொழுது ,  மகேந்திரனை அதே டாஸ்மாக்கில் இறக்கி விட சென்ற அருணின் மனது மற்றொரு பியரை நாடியது .   மகேந்திரன் கல்லூரி நண்பர்கள் இன்னும் கூட அதே இடத்தில் தான் இருந்தனர். அருண்  மீண்டும் ஓரிரு மிடரில் மிதந்தவன் , வரம்பு எல்லைக்கு கொஞ்சம் முன்னால் நிறுத்தி வீட்டிற்கு கிளம்பினான்  . ஆதித்யாவை சந்தித்து வருபவனுக்காக பத்மா  வாசலில் காத்திருந்தாள் .  வாசல் வந்தவனை  பார்த்ததும் “என்ன சொன்னார்? எப்படி இருந்தார் ?”, என ஏ(க்)கப்பட்ட கேள்விகளால் அவனை துளைத்தாள் பத்மா.  அனைத்து கேள்விக்கும் பதில் இருந்தும் பேசினால் பியர்  வாடையில் மாட்டிக்கொள்வோமா? என பயந்து “உள்ளே வாம்மா சொல்றேன்”, என  நகர்ந்தான். அவன் செருப்பை கழற்றும் பொழுதே பத்மா கேட்டாள் “என்ன? உன்மேல ஏதோ ஸ்மெல்”.  “அதெல்லாம் ஒன்னும் இல்லை”, என்று சொல்லி  உள்ளே சென்றான்.  வேலைக்கு செய்து வந்த  அசதி போல் சோபாவில் தொப்பன விழுந்து விட்டத்தை பார்த்தான் அருண் .  அச்சமயம் ஸ்ரீ ராம் தாத்தாவும் , லீலா பாட்டியும் வந்தனர். அவன் அருகே அமரும் பொழுதே கண்கள் சிவந்து இருந்ததை கண்டார் அவர். சிகரெட் மற்றும் மதுவின் நாற்றம் அவன் மேல் சன்னமாக வீசியது. தாத்தாவுக்கு தெரியும் இதன் வாடையின் அர்த்தம் .  இருந்தும் அவன் நண்பர்களுடன் இருந்ததால் அவன் மேல் வந்திருக்கலாம் என மனதால் சமாதானம் செய்து கொண்டார்.   “என்ன சொல்றார் உங்க அப்பர் ?” என்றாள்  பாட்டி விட்டத்தை பார்த்து கொண்டே அவன் நெற்றி ஓரத்தில் பெரு விரலையும் , நடு விரலையும் மசாஜ் செய்வது போல் வைத்து இருந்து கொண்டே சொன்னான்  “பார்த்தேன்!” “அதுக்கு ஏன் இவ்ளோ லேட் எங்க போயிட்டு வர்ற . உடம்புக்கு ஏதும் செய்தா” என அவன் நெற்றியில் கை வைத்தாள் பாட்டி.  அவள் கைகைளை உதறிவிட்டவன் “அதெல்லாம் ஒன்னும் இல்லையே கொஞ்ச நேரம் நான் ரிலாக்ஸ் ஆக விடுங்களேன் அப்புறமா சொல்றேன்” என லேசாக எரிச்சலோடு கத்தினான். பத்மா அவன் நடந்து வந்ததை நினைவில் கொண்டு அவன் பைக்கை தேடி வந்தாள். அது வாசலில் இல்லை.  பின் உள்ளே வந்தவள் “அத்தை அவனை விடுங்க நீ போய் பிரஷ் ஆகிட்டு வா” என பத்மா ஒருபுறம் தள்ள, தப்பித்ததாக நினைத்து  நழுவி மாடி ஏறினான்.  முகத்தில் நீரை வாரி இரைத்து கண்ணாடிமுன் தன் முகத்தை பார்த்துக்கொண்டான். கண்கள் சிவப்பாக இருந்தது .  மீண்டும் நீரை அள்ள செல்கையில் சட்டையை ‘ஷோபா’வில் கழற்றி வைத்தது நியாபகம் வர,  சட்டையை துவைக்க எடுத்த அம்மாவின் கைகளில் ’டாஸ்மாக் பில்’ தஞ்சம் கொண்டது. பியர் என்றதும் அருணுக்கு  டாஸ்மாக்கில் வைத்தே மெரினா கடற்கரையில் நடந்த ஒரு சம்பவம் நினைவில் வந்தது.  “உனக்கு ஒன்னு வாங்கி வந்துருக்கேன் என்னனு சொல்லு” என்றாள் மித்ரா “என்ன?” - அருண் “நான் உன்னை கேட்டா நீ என்னை கேக்கறியா ‘கெஸ்’ பண்ணுடா” “தெரியலடி! நீயே சொல்லு”, " ‘ஸ்டுப்பிட்’ கொஞ்சம் மண்டைய கசக்குனா என்ன?" என்று அவன் தலையை தட்டினாள். “அதெல்லாம் எனக்கு வராது நீயே சொல்லு, இல்லன்னா க்ளூ’ குடு” “அஸ்கு புஸ்கு ! அதுக்கு நான் நேராவே சொல்லிடுவேன். சரி பொழைச்சு போ ! போன வாரம் நாம அதை பத்தி பேசுனோம் இதான் ‘க்ளூ’, போறவரைக்கும் உனக்கு டைம்  ‘கெஸ்’ பண்ணா நீ என்ன கேட்டாலும் தருவேன்.” “மொதல்ல இது என்னன்னே தெரியல இதுல இன்னொன்னு வேற தாரளாம்”, என மனதுக்குள் எண்ணியவனின் இடுப்பின் சதையை நிமிண்டினாள். “ஆஆஆஆ! என்னடி?” “நீ மனசுல என்ன நினைக்கிறேன்னு தெரியுது” “என்ன” “இவ இதையே என்னனு சொல்லல, இதுல இன்னொன்னு தானேனு தான யோசிக்கிற!” “வாரே வா! எப்டிடி இவ்ளோ கரெக்ட்டா சொல்ற?” “ஹேய், அய்யா, தம்பி , யாராச்சும் வாங்களேன்” எனும் கூக்குரல் கேட்டதும். இருவரும் எழுந்து ஓடினர் . போதையில் ஒருவன் கடலுக்குள் சென்று கொண்டு இருந்தான். இரண்டு பேர் அவனை பிடிக்க செல்ல கையில் கத்தியை காட்டி அவர்களை நகர சொல்கிறான். ‘காதல் தோல்வியாக இருக்கும்’ , ‘இல்லை, இல்லை பைத்தியமாக இருக்கும்’ என ஆங்காங்கே சத்தம். வேடிக்கை பார்த்து கொண்ட மித்ராவை கேட்டான் “ரெண்டும் ஒன்னு தானடி” . இரண்டு வாலிபர்கள் உள்ளே நுழைய அவர்களோடு உதவிக்கு அவனையும் போக சொன்னாள் . அருண் தன் ஜீன்ஸ் பேண்ட்டை முட்டிக்கு உயர்த்த , வேகமாக குதிரையில் வந்த   ரோந்துக்காவலர் அவனை பிடித்து கரைக்கு இழுத்து வந்தார். பளார்! பளார்! என கன்னங்கள் பதம் பார்க்கப்பட்டன ஆனால் அவனோ வலி தெரியாதவானக பித்து பிடித்தார் போல் சிரித்து கொண்டே கும்பிடு போட்டு அவரின் காலில் விழுந்தான். “பண்றதெல்லாம் பண்ணிட்டு கால்ல வேற விழுறியா?” என சட்டையை பிடித்து இழுத்துச்சென்றார் . அவனும் பேசாமல் சிரித்து கொண்டே செல்ல, கனைத்துக்கொண்டே குதிரை அவர் பின்னால் நடந்தது. மழை பெய்து ஓய்ந்தது போல் இந்த சம்பவம் நடந்து முடிய , அலைகளின் சத்தம், வேடிக்கை பார்த்த பஞ்சுமிட்டாய்காரரின் மணி சத்தம், மக்கள் சலசலப்பு என கடற்கரை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அவர்கள் மீண்டும் கரைக்கு நடக்க  “மால்க்கு போலாமா?” என்றான் அருண். “ஏன்டா அதான் இன்னும் இருட்டலயே” சொல்லிய மாத்திரம் “போகலாம் வா!” என்றாள் மித்ரா “என்ன உடனே போலாம்னு சொல்லிட்ட?” “போகுறப்ப கேட்பேனு சொன்னேன்ல அதான் ‘கெஸ்’ பண்ணிட்டியானு” “இல்ல,இல்ல வேணாம் இன்னும் இருட்டவே இல்லை உட்காரலாம்”, என மண் தரையில் சப்பென அமர்ந்தான் அருண். “ஹாஹாஹா! இந்த கதை எல்லாம் விட கூடாது நீ தான் போலம்னுனு சொன்னே” என் அவன் காலரை பிடித்து இழுத்தாள் மித்ரா “இல்லடி ! வேணாம் யாராச்சும் கிறுக்கன் வந்தா காப்பத்த ஆள் வேணாமா? இருப்போம் நாம” அவர்கள் மீண்டும் அமர , “என்ன வாங்கிருக்க போற பியரா?” என்றான் ஒரு ஆசையில். “சீ! பொறுக்கி உன் புத்தி” “என்னடி போன வாரம் அதை பத்திதானே பேசுனோம்,” “சரி இந்தா என ‘பர்ஸை’ நீட்டினான்” அருண் விலை அதிகமோ என அதை வாங்கி பார்த்து கொண்டு  பழைய பர்ஸில் இருந்த அனைத்தையும் உன் கையால் இதில் மாற்றிக்கொடு என்றான். பின்னிருந்து பார்க்கையில் கதிரவன் அவர்கள் தோள்களுக்கிடையில் சிவப்பாக மறைந்தான் . அருண் சட்டையில் இருந்து எடுத்த ‘டாஸ்மாக் பில்லை’ அத்தைக்கு தெரியாமல்  மாமாவிடம் நீட்டினாள். “ஸ்டார் டாஸ்மாக்” என மூன்று நட்சத்திரம் பொரித்த அந்த ‘பில்லில்’ புரியாத எழுத்தில் ஏதேதோ கிறுக்கி இருந்தன. ‘எனக்கென்னமோ அவன் அவரை பாக்க போகல அந்த காச கொண்டு போய்’ என தன் முந்தானையை வாயில் வைத்து கண்ணீரை அடக்கினாள் பத்மா. “ஷூ அவ காதுல கேட்டுட போகுது எடுத்த இடத்துல வை காலைல கேட்டுக்கலாம்” என்று அவர் காற்றின் மொழியில் சொல்ல ,  அருண் வந்து சட்டையை தேடினான். “என்னோட சட்டை எங்கம்மா?” என்றவன் சட்டை அம்மா கைகளில் இருந்ததை பார்த்துக்கொண்டு மெளனமாகி நின்றான். “என்ன சட்டையில?” என்றாள் மித்ரா. “இல்ல ரூவா இருக்கும்” என அதை வாங்கி கொண்டு தேடினான் உள்ளே எதுவும் இல்லை. “இல்லம்மா செலவு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்” சொல்லிவிட்டு மீண்டும் முகம் கழுவ சென்றுவிட்டான். " இப்டி ஆகிட்டானே என் மகன்?" என சொல்ல கண்ணீர்  மல மலவென கொட்டியது. அத்தியாயம்-24 நேற்று மாலை அருண் தன்னை  பார்த்து விட்டு சென்றபின், தன் அண்ணனை பார்க்க வேண்டும் என்ற யாமிகாவின் ஆசையை பூர்த்தி செய்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தார் ஆதித்யா . ‘’டேட் ! ஹி இஸ் லுக் லைக் யூ’’, என்றாள் யாமிகா. மனைவி இறந்தபின் , தன் அப்பா ஸ்ரீராமிடம் மட்டும் நடந்த விஷயத்தைக்கூறி தொடர்பில் இருந்ததையும் , அவளுக்காக அருண் போட்டோ கேட்டு அடிக்கடி நச்சரித்ததையும் கூறினார். “அப்பா அடிக்கடி சொல்வார் உன்னை உறிச்சுவச்ச மாதிரியே இருக்கான்டா, மூக்கு , கண் என எதுலையும் பத்மா சாயல் இல்லன்னு, யூ க்னோ ஒன் திங்?” ஸ்ட்ராவில் கோக் உறிஞ்சு கொண்டே  “என்னப்பா?” என்றாள் யாமிகா “நம்ம வீட்ல எல்லாரும் ‘வெஜ்’. பத்மா முதற்கொண்டு ! ஆனா நான் ‘நான்வெஜ்’. என்னைமாதிரி இப்ப அவனும் நான்வெஜ்” “முதல்ல இருந்தே நான்_வெஜ்ஜா?”   இல்ல ஸ்கூல் படிக்கிறப்ப ‘கேக்’ சாப்பிடுவேன். அப்புறம் ‘எக்’ அப்புறம் அப்டியே ‘நான்-வெஜ்ஜா’ மாறிட்டேன் என மூச்சை விழுங்கி , பின் “அவன்கிட்ட உன் அம்மா பத்தி ஏதும் சொன்னியா?” என்றார். “அம்மா எங்கன்னு கேட்டார் ,  நான் அம்மா வரலனு சொன்னேன்” என கபடம் இல்லாமல் ஒரு பொய்யை விட்டு எறிந்தாள்.  யாமிகாவுக்கும் , அப்பா தன் முன்னாள் மனைவியை கரம் பிடிக்க வேண்டும் , தாத்தா,பாட்டி, அண்ணன் என்று உறவுகள் சூழ வாழ வேண்டும் என ஆசை தான், ஆதலால் அருணிடம் சொன்னதை வாஞ்சையுடன் மறைத்துக்கொண்டாள். ஏற்கனவே அப்பாவிடம் " நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லுமாறு கேட்டுக்கொண்டதும் , சில சமயம் மன்னிக்கலாம்" எனச்சொன்னதும் யாமிகாவிற்கு நினைவில் இருந்தது.    அதற்கு ஆதித்யா சொன்னது  கண்டிப்பாக பத்மா தன்னை ஏற்று கொள்வாள் . தான் செய்த தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று எடுத்து கொள்கிறேன் ஆனால் அதற்காக  மீண்டும் அவளிடம் போய் நிற்க வேண்டுமா ? அப்படி சென்றால் அவளை ’ஆப்ஷ’னில் வைத்திருக்கும்படி ஆகிடாதா ? . ஒருவர் மேல் அன்பு வைத்து அவர் பிரிந்து சென்றதும் அதே அன்பை   நல்வாழ்க்கையில் இருக்கும் இன்னொருவரிடம் எதிர்பார்ப்பது முறையா ?  இவ்வளவு ஏன் உன் அம்மா உயிரோடு இருந்து இருந்தால் நாம் பத்மாவை நினைத்து இருப்போமா?" என எதிர்கேள்வி கேட்டு மடக்கியது தான் நியாபகம் வந்தது. “நாளைக்கு இந்நேரம் ‘பிளைட்’ ஏறி இருப்போம்லப்பா?” என்றாள் யாமிகா “ஆமா” “ஒன்னு சொல்லவா?” என்றாள் யாமிகா “என்ன?” “நீங்க ஏன் போறதுகுள்ள அவங்கள ஒரு ‘டைம்’ பாக்க கூடாது?” “யாரை?” என்றார் ஆதித்யா தெரிந்தும், புரிந்தும். " டேட்! கம் ஆன்.  நடிக்காதிங்க ! அம்மா எப்டி இருக்கானு அருண்கிட்ட கேட்டப்ப மூஞ்சில முக்கால் லிட்டர் வெக்கம் சிந்துச்சு நான் பாத்தேன்!" என்றாள் சக்கர வாகனத்தில் நகர்ந்து கொண்டே. “தே ஹ் ஹப்” என புரியாத பாஷையில் வெட்கமாக ஏதோ சொல்லி “போலாம் வா” என்றார். அருண் ‘சாப்பாடு வேண்டாம்’ என மேலுள்ள அவன் அறைக்கு செல்லவும் அவனுக்குள் ஏதோ ஓர் பிரச்சனை என உணர்ந்து கொண்டாள் பத்மா. கொஞ்ச நேரம் கழித்து மேலே வந்த ஸ்ரீராம் தாத்தா தன் தலையணையை மட்டும் எடுத்து கொண்டு சென்றார். வழக்கமாக அவனோடு தான் உறங்குவார் ஆனால் எதுவும் பேசாமல் தலையணையை எடுத்து செல்லவும்  அவன் அடிவயிற்றில் மாற்றம். ஒயின்சாப்  ‘பில்’ கிழித்து போடவில்லை , சட்டைப்பையில் தான் வைத்திருந்தோம் கண்டிப்பாக எடுத்திருப்பார்கள் என முடிவு செய்து கொண்டான். இருந்தும் மெல்லமாக சென்றவரை எங்கே செல்கிறீர்கள் எனக்கேட்டான் “ஒன்னும் இல்ல ! இங்க ரொம்ப கூலாக இருக்கு நான் கீழே பாட்டி கூட படுத்துகிறேன்”. “கூலா இருந்தா ‘ஏசிய ஆஃப்’ பண்ணிக்கலாமே?” “இல்ல,இல்ல உனக்கு எதுக்கு ஷ்ரமம் நான் கீழேயே படுத்துக்கிறேன்”. “நான் மட்டும் எப்டி தனியா படுக்க?” “உங்க அம்மா வரேன்னு சொன்னா”, என தடித்த குரலில் ஏப்பம் விட்டவர் பொடி நடையாக சென்றார்.  பல விஷயத்தில் காப்பாற்றி விடுபவர் இதில் ஏனோ நழுவினார். அருண் உறங்கிய பின் வந்த பத்மா  சிறு கம்பி போன்ற மெல்லிய இரும்பு ஒன்றை அவன் கைக்கு அருகில் வைத்து யோசித்துக்கொண்டு இருந்தாள். ஏசி காற்று அவன் முன் கூந்தலை வருடி சென்றது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை பார்த்துக்கொண்ட பத்மாவின் கண்ணில் கொஞ்சம் ஈரம் தேங்கி இருக்க யோசனை சற்றே பலமாக இருந்தது. சொகுசாக நெளிந்து படுத்தவனின் கையில் தானாகவே அது படவும், சூடான கம்பி கை மணிக்கட்டை பதம் பார்த்தது.  நொடியில் அவன் அலற கம்பியை தூக்கி எறிந்தவள் அழத் தொடங்கினாள். மித்ராவின் காதலை கஸ்தூரியிடம் போட்டு விட்டுவிட்டு கமுக்கமாக இருக்கும் பவியை கிடுக்குப்பிடி  பிடித்தாள் லீலா. எப்படியானாலும் தெரிய தான் போகிறது அதனால் என்ன என்று தான் சொன்னதாகவும் , மேலும் நான் உங்கள் இருவரை விடவும் பெரியவள் என்ற செருக்குடன் பேசினாள் பவி. ஆனால் லீலாவிற்கு மனது கேட்கவில்லை. மித்ரா போனில் பேசியதை அடிக்கடி அண்ணி நோட்டமிட்டார். நீ அண்ணியிடம் சொல்லிய விஷயத்தையாவது என்னிடம் சொல்லி இருக்கலாமே என்று வருத்தத்துடன் கூறினாள் லீலா. அன்று மருத்துவமனை வாசலில் வினோவிடம் பேசிவிட்டு உள்ளே வரும் பொழுது இரண்டு அண்ணிகளும் சந்தேகப்பார்வை பார்த்ததும் , அதில் இருந்து தப்பிக்கவே ஜாடையாக மித்ராவுக்கும் இதே நிலை தான் என்று சொன்னதை விவரித்தாள் பவி. “அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ? அவரையே பேசி முடிச்சுட்டாங்கள்ள , ஆனா அவளை நினைச்சு பார்த்தியா?” கைகைளை பற்றி கொண்டே சொன்னாள் “சாரிடி இவ்ளோ ‘இஸ்யூ’ ஆகும்னு தெரியல, அவ எங்க இருக்கா? நான் வேணா இப்ப போய் ‘சாரி’ கேக்குறேன்” “அதெல்லாம் வேண்டாம்” என்ற லீலா. தங்களை விட பெரியவள் , தங்களுக்கும் மேல் உனக்கு விவரம் இருப்பதாக பவி சொன்னதை மீண்டும் சொல்லி குத்தி காட்டினாள் லீலா மனம் நெருஞ்சி முள்ளாய் தைக்க  “நான் கொஞ்சம்தான் உளறினேன், அண்ணி அப்டியே போட்டு வாங்கிட்டாங்க நான் என்ன செய்ய ?” குமரனின் குடும்பம் கிளம்பி செல்கையில் நாமும் அவர்களோடு காரில் சென்று ‘சென்னை டெக்ஸ்டைல்ஸ்’ செல்லலாம். மித்ராவுக்கு அருணோடு பேச ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுக்கும் படி பவியை கேட்டாள் லீலா. ஹோட்டலில் தங்கி இருந்த மீசைகாரரின் மகன்களையும் , குமரனையும் வர சொல்லும்படி அவரிடம் சொன்னார் தாத்தா. “அதுக்குள்ளயா மணி பதினொன்னு தானே ஆச்சு ! அவர்களாக வருவார்கள் அதற்கு முன் ஒரு டீ மட்டும் போடுமாறு” சொன்னார்  மீசைக்காரர். கதி கலங்கிய தோணியில் கேட்டார் தாத்தா “இப்பதான குடிச்சோம்!” “இருக்கட்டும் சம்மந்தி ! அது சமையல் வேலைக்கு துணைக்கு நிக்கிற என் மருமகளுங்க போட்டதுல,”  “இப்ப என்னோட மருமகளுங்களை போட சொல்லவா?” என்று நக்கலாக கேட்டார் தாத்தா “இல்ல ! எம் மருமக லீலாவை போட சொல்லுங்க அவ கையாலே குடிக்கலாம்”. லீலாவிற்கு சுடு தண்ணீர் கூட நாம் தான் வைத்து கொடுக்க வேண்டும். இதில் எங்கிருந்து அவள் ‘டீ’ போடுவாள். மகளை காப்பாற்றும் பொருட்டு  “பால் காலி மாமா வாங்கிட்டு தான் வரணும்” என்றாள் லீலா அம்மா அனுபல்லவி. “இப்ப தானேம்மா ஒரு லிட்டர் வாங்கிட்டு வந்தே?” என்றார் தாத்தா “அதுதான் மாமா காலியாயிட்டு” மீசைக்காரர் ஆறுமுகம் இருக்கையில் இருந்து உந்தி எழுந்து கொண்டே சொன்னார் “நான் தான் சம்பந்தி தண்ணீ ஊத்தாம ‘டீ’ போட சொன்னேன்”என அவரின் சால்வையை உதறி மீண்டும் போட்டுக்கொண்டு, இருங்க நான் வாங்கிட்டு வரேன் என மோதிரத்தை தடவி கொண்டே ஒய்யாராமக வெளியேறி நடந்தார். சூடு வைத்த கையை உதறிக்கொண்டே அழுதவனுக்கு கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து நீரை தெளித்தாள் பத்மா. கீழே இருந்த லீலா பாட்டிக்கு அருண் சத்தம் கேட்டும் “காலையில பாத்துக்கலாம்டி படு” என மனைவியை சைகையால் படுக்க வைத்தார் தாத்தா “தகப்பன் இல்லன்னு செல்லம் கொடுத்தா எத்தனை நாளா இந்த பழக்கம்?” அருண் பதில் கூறவில்லை விளக்கின் வெளிச்சத்தில்  அவன் கையை சோதித்தாள்.  மணிக்கட்டில் பட்ட சூடு  பெரிதாக இல்லை என்றாலும் தீ பட்ட இடத்தில் கரிய நிறமாகி வெந்து இருந்தது. ஒருபுறம் அழுகை கலந்த பேச்சோடு மறுபுறம் பேசிக்கொண்டே கையில் மருந்தை இடுகிறாள். சூடு வைக்கும் முன்னே தண்ணீர் பாட்டில் , மருந்துகள் என எல்லாம் எடுத்து கொண்டு தான் வந்துள்ளது தாய்மையின் உணர்ச்சி. “எத்தனை நாளான்னு கேக்குறேன்ல,” “நான் ஒன்னுமே பண்ணல சும்மா தான் இருந்தேன்.” “சும்மா இருந்தியா அப்ப இது என்ன ராஸ்கல்?” என அந்த பில் பேப்பர் அவன் முகத்தின் மேல் விழுந்தது. “அதான் சொன்னேன்ல சும்மா தான் இருந்தேன்னு.” “அறைஞ்சேன்னு வை. சும்மா இருக்க வேற இடம் இல்லையா? அங்க ஏன் போய் இருக்கணும் பொய் சொல்லாம சொல்லு எத்தன நாளா இது?” அவன் பேசவில்லை. ஆனால் முனகியது பத்மாவுக்கு கேட்டது. “என்ன கேக்கல!” என்றாள் பத்மா. கீழே பார்த்து கொண்டு இருந்தவன் “இன்னைக்கி தான்மா ‘சாரி’” என கண்ணீர் மழையாய் பொழிந்தது. “யாரு அந்த மகேந்திரன் கூட்டு போனானா?” “கேக்குறேன்ல பதில் சொல்றானா பாரு” பொய்யாக கூட “இல்லை” என சொல்லி இருந்தால் என் மனம் சம்மதம் ஆகுமே. இனி இரவில் எப்படி உறங்க என யோசித்த பத்மா இடி விழுந்ததை போல் அவனை பார்த்தாள். “எதுக்கு இந்த தேவை? அப்டி என்ன அவசியம் அதுல ?” அருண் ‘கப்சிப்.’ ‘லவ்வு கிவ்வு’ எதாச்சும்? முகத்தை கீழே வைத்துக்கொண்டே அவன் “ஆமா”  என்றான் சொல்லி முடியும் முன். “அன்னைக்கு நான் கேட்டப்ப இல்லன்னு சொன்ன?” “அது பொய்.” “இப்ப இருக்க்குன்னு சொல்றே,” “இதான் நிஜம்.” “எவ்ளோ நாளா?” “அஞ்சரை மாசமா.” சிறுது நேரம் அழுகை  மற்றும் மவுனத்திற்கு பின், “நானும் திலக்கும் ஒரே காலேஜ் மேட்” என நாசியை உறிந்தாள் பத்மா . “யார சொல்றேன் தெரியுதா?” என்றாள் பத்மா “ம்ம் அன்னைக்கு வீட்டுக்கு வந்தாருல்ல.” “ம்ம் அவரு தான்” என தன் கடந்த கால கதையை அவனுக்கும் சொல்ல தொடங்கினாள் . அத்தியாயம்-25 கல்லூரி பயில்கையில் பத்மா ,  தன் அக்காவோடு தங்கி இருந்த அல்லம்பட்டியில் வீரபத்திரர் கோவில் திருவிழா பெருவிமர்சையாக நடைபெற்று கொண்டிருந்தது. மூன்றாவது நாள் விழாவிற்கு திலக்குடன் , பாண்டியும் வந்து இருந்தான். திலக்கை பத்மாவும்,பாண்டியை கஸ்தூரியும் முறையே அழைப்பு விடுத்துருந்தனர் . போன முறை அழைத்தபோது திலக்கால் தனியாக வர முடியவில்லை  இம்முறை இரண்டு பேராக வந்துவிட்டனர்.             மாலை நேர வெயில் இளஞ்சிவப்பு நிற கதிர்களை வீசிக்கொண்டு இருக்க, ஆங்காங்கே திருவிழா கடைகளில் விளையாட்டுப்பொருட்கள், பூ மாலை கடைகள் , தின்பண்டக்கடைகள் மற்றும் ஊஞ்சல்கள் என அவ்விடமே ஜோதியாய் மின்னியது.    திருவிழா கூட்டத்தில்  தொலைந்த குழந்தை ஒன்று கண்களை கசக்கி விசும்பி கொண்டு இருக்கிறது.   அதற்கு முன்னால் நின்ற திலக்கும், பாண்டியும் குழந்தையை கண்டுகொள்ளாமல் அவர்களை அழைத்தவர்களுக்காக காத்து கொண்டு இருந்தனர்.  வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் வந்த பாண்டி பார்ப்பதற்கு மணக்கோல  மாப்பிளை போல் இருந்தான். கஸ்தூரி சொன்னதால் இதற்காகவே கல்லூரிக்கு கொண்டு வந்த பையில் இரண்டையும் மடித்து எடுத்து வந்துள்ளான். திலக் பரிதாபமாக கல்லூரி சீருடையில் வந்திருந்தான். இருவரும் காத்து கொண்டிருக்க வீட்டில் இருந்து கிளம்பும் பத்மாவை “அக்கா அக்கா” என  தொற்றி கொண்டு வந்தாள் கஸ்தூரியும். தன்னை விட நல்ல உடைகளையும் ,  உடல்வாகும் , பனித்த ஜடையும் உள்ள அவளை ‘எப்படியாவது கழற்றி விடலாம்’ என பத்மா நினைத்து கொண்டாள்.  திருவிழா வீதிக்கு வந்தபின் திலக்குடன் வந்த பாண்டியை பார்த்த பின் தன் ஜோடித் துணைக்கு ஒரு ஜோடி கிடைத்த நினைப்பில் கொஞ்சம் தேற்றி கொண்டாள். நால்வரும் சந்தித்ததும் எதிரில் இருந்த மற்றோரு மைதானத்திற்கு அழைத்து சென்றாள் பத்மா.  அங்கு நடைபெற்ற பெண்களுக்கான  விளையாட்டை பார்த்து  கொண்டும் ,ஆங்காங்கே இருந்த கடைகளை சுற்றி கொண்டும் இருந்தனர்.  சிறுது நேரத்திற்க்கு பின் பத்மா திலக்கை , பாண்டி கஸ்தூரியிடம் இருந்து விலக்கி தனியாக அழைத்து  வந்துவிட்டாள். ஒலி பெருக்கியில் சாமி பாடல்களும் , கமிட்டியார்களின் அறிவிப்புகளும் ஒலித்து கொண்டிருக்க சத்தமான குரலில்  “லூசா நீ யூனிபார்ம்ல வந்து இருக்க? எந்த காலேஜ்னு மாட்டி விடவா?” என அவளின் ரேடியோ தொடங்கியது. “அதெல்லாம் சரி அதென்ன அவங்க முன்னால அண்ணானு சொன்ன அதுக்கு பதில் சொல்லு” என்றான் திலக் “பின்னே கஸ்தூரி இருக்கால, என்ன செய்ய சொல்ற?” “அதுக்கு அண்ணனா ? இதெல்லாம் ஓவர்!” “ரொம்ப பேசாம போய் எனக்கு சீவல் ஐஸ் வாங்கி குடு” என்றாள் பத்மா. அதன் விலை ஒரு ரூபாய் தான் என்று சொல்லிக்கொண்டே  “வாங்கிட்டா போச்சு” என திரும்பியவன் கூட்டத்தை பார்த்தான். எல்லோருக்கும் ஒரு பத்மா இருப்பார்கள் போலும் அத்தனை கூட்டம் ‘ஐஸ்’ விற்பவரை சுற்றி நின்றது.  அந்த கூட்டத்தில் அவரின்  அழுக்கு முண்டாசு அணிந்திருந்தது ’ஐஸ்’களை பெட்டியில் இருந்து எடுத்து கொடுக்கும்  அவர் தலை அசைப்பிலே கீழும் மேலும் போய் வருகையில் தெரிந்தது. கூட்டத்தை பிளந்தவனால் வாங்கிவர முடியவில்லை. பாதியில் வந்தவன், “பெண்கள் போனால் சீக்கிரம் தருகிறார் நீ வாங்கி வா” என பத்மாவை போக சொன்னான். அவளும் திலக் சொல்வது உண்மை என நம்பி உள்ளே சென்று தக்காளியாய் நசுக்கபட்டாள். அக்கா வைத்து விட்ட  மல்லிகைப்பூ வெளியே வரும் போது நியூட்டன் மேல் விளுந்த ஆப்பிள் போல் தரையில்  விழுந்தது.  ‘ஐஸ்’ வாங்கி வந்து சுற்று முற்றும் பார்த்தாள் திலக்கை காணவில்லை. அங்கும் இங்குமாக தேடி கடைசியில் ஒரு இடத்தில் தன் கல்லூரி ‘யூனிபார்மை’ கண்டு கொண்டாள். அங்கு இருந்த ஒரு இடத்தில் ஒரு வடநாட்டவரிடம் ‘ஜோசியம்’ பார்ப்பது போல் கைகளை நீட்டி பேசிக்கொண்டிருந்தான். நெருங்கி வந்த பத்மா திலக்கின் கையை பார்க்கிறாள், ஏதோ எழுத்தை பச்சை குத்திக் கொண்டிருந்தான். திலக்கை பெயர் சொல்லி  அழைத்த பத்மா அது அவன் தானா என உறுதி செய்து அருகில் வரவும் அந்த வடநாட்டவர் “இந்த பெண் தானா?” என ஹிந்தியில் கேட்டான். அரைகுறையில் பதில் சொல்லியவனை கையை உற்று பார்த்தாள். “ட்டீ” என்ற ஒற்றை ஆங்கில எழுத்து முடிந்து அதன் அடுத்த எழுத்து “பி” வடிவில் வரவும் ஒரு ஐஸ்கப்பினை அவனிடம் கொடுத்து  ‘லூசு’ என திலக் தலையை தட்டிவிட்டாள். ’’வீட்ல கேட்டா என்னடா பண்ணுவே ?" என்று சொல்லவும். “கேட்டா சொல்லிப்பேன் ’பி-ஃபார் பத்மான்னு”- திலக் இரண்டு ’ஐஸ்’களை வாங்கி சென்ற பத்மாவை பின் தொடர்ந்து வந்த அவள் அக்காவின் கணவர், பச்சை குத்துமிடத்தில் இருவரும்  பேசியதை  கேட்டுவிட்டு தெரியாதது போல் சென்றார். சில நிமிடங்கள் கழித்து வந்த பத்மாவின் அக்கா, பத்மாவை அழைத்து கோவிலுக்குள் போகும்படி சொல்லினார். “பிரண்ட்ஸ் வந்துருக்காங்ககா?” என்று சொல்லி கொண்டே திலக்கை அக்காவிடம்  அறிமுகம் செய்தாள் பத்மா. “சரி நீ போய்ட்டு வா, நான் இவரோட பேசிட்டு இருக்கேன்” என அவளை அனுப்பினார். அவன் சங்கட நிலையில் நின்று கொண்டு இருக்க கண்பார்வைக்கு அப்பால் அவக செல்ல  “எந்த ஊர், என்ன பெயர்?” என பல கேள்விகளை கேட்டு கையில் என்ன என்பதையும் விசாரித்தார் அக்கா. வசம்மாக மாட்டி கொண்டதும் “இது என் அம்மா பெயர்” என்றான் திலக். “ஊர்காரங்களுக்கு விஷயம் தெரியும் முன்னே கிளம்புங்க, என் மாமா உன்னை பார்க்கணும்னு சொன்னார், நான் தான் பேசி பார்க்கிறேன்னு வந்தேன்! இதுக்கு மேல உங்க இஷ்டம்” என ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு சென்று விட்டார். கூட்டத்தில் தொலைந்த பாண்டியை தேடி சென்றான் திலக். ‘மிளகா பஜ்ஜி’ கடையில் அவனை கண்டபின் மெதுவாக அழைத்து விஷயத்தை சொன்னான். இருவரும் தூரம் நின்று கிசுகிசுக்க,  பத்மாவின்  மாமா அவர்களை முறைத்து கொண்டு கடந்து சென்றார். திலக் நிலை அறிந்ததும் இதற்கு மேல் இருந்தால் ஊர் சண்டை ஆகிவிடும் என இருவரும் கிளம்பிவிட்டனர். பின்னாளில் பத்மா கல்லூரி வரவே இல்லை. அவளின் ஊர் வரை சென்று தேடியும் அவளை பார்க்கமுடியவில்லை. இரண்டொரு நாளில்  பத்மா இரயில் மார்க்கமாக ஊருக்கு செல்ல இருக்கிறாள் என்ற செய்தி மட்டும் கஸ்தூரி சொல்லி திலக்குக்கு தெரிய வந்தது. திலக் காதலை வீட்டில் சொல்ல பயந்து அதற்கு முந்திய நாளே இருவரும் எங்காவது சென்று விடலாம் என கஸ்தூரியிடம் தூது அனுப்பி வைத்தான் . முதலில் அதை கேட்டு பயந்த பத்மா , கஸ்தூரி தங்கை வயதுக்கு வரவும் அதை காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியே வந்து ‘இருவரும் எங்கே போவது?’ என தெரியாமல் வரவிருக்கும் இரயிலுக்கு  காத்திருந்தனர். அவள் கைகைளை பிசைந்து கொண்டு படபடத்தாள். ‘சென்னைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு நடக்கிறது’ என்பதை தவிர வேறு எதுவும் அவள் சொல்லவில்லை.  வண்டி  வரவில்லை ஆனால் அதற்கு முன்னரே ஊரின் ஆட்களோடு பத்மாவின் மாமாவும் , பத்மாவின் அக்காவும் அங்கு வந்தனர். அவர்கள் எதுவுமே பேசவில்லை. அதுவரை கையை இறுக்கி பிடித்த பத்மா கையை தளர்த்தினாள். “கூட்டு போமா” என்ற ஒற்றை வார்த்தை தான் , பத்மா பொம்மை போல் அக்காவோடு சென்றாள்.  செல்லும் பொழுது அவளின் அக்கா திலக்கை அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள். வந்தவர்கள் ஒருவன் கன்னத்தில் அறைந்தான். ஒருவன் தலையில் அடித்தான். அவர்களை விலக்கிவிட்ட பத்மாவின் மாமா  “அய்யனார் தம்பி தானே நீ?” என்றார். “அய்யனார்” திலக்கின் சொந்தக்கார அண்ணன். அவரோடு பள்ளியில் ஒன்றாக படித்தவர் . திலக் ‘ஆம்’ என்றதும் “இதான் கடைசி இனி வீட்டுக்கு வர வேண்டியது இருக்கும்” என சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். அவ்வளவுதான் நானும் அவனும் முற்றுபெற்றோம். இரண்டு வருட காதல். படிப்பு முடித்தவன் ஏழு வருடமாக சென்னையில் என்னை தேடி அலைந்தான். பின் கல்யாணமும் செய்து கொண்டான். அழைப்பிதழ் வைக்க என் வீட்டுக்கு சென்று கேட்டதற்கு அக்கா என் கல்யாண புகைப்படம் ஒன்றை காட்டியுள்ளார். இரு மாதம் முன் எதாச்சையாக ’சிக்னலி’ல் பார்த்து கொண்டோம் . பத்மா ஆதித்யாவாகவும் , திலக் ராஜலட்சுமி யாகவும். இன்று வரை பத்மா அந்த திருவிழாவிற்கு செல்கிறாள். திலக்கை பார்ப்பதற்கு இல்லை. தன் நியாபாங்களை மீட்டு எடுக்க. “இதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் பாத்தேன். உன்னோட இந்த அலங்கோலம் எனக்கு பயமா இருக்கு. அப்பா இல்லாத பையன்னு உன்னை பாவம் பாக்குறங்கன்னு தான்  நம்ம வீட்டு நிழல் கூட படாம பாத்துட்டு இருக்கேன். அப்பா அம்மா போனதுக்கு அப்புறம் சுத்தமா நானும்  எங்கயும் போறதும் இல்ல” கண்ணில் இருந்த அருண் கண்ணீர் அவன் உள்ளங்கையில் சொட்டியது. “சாரிம்மா” என்றான் அருண் அடைத்து கொண்ட நாசியை செருமி கொண்டே “கையை நீட்டு” என தீக்காயத்திற்ற்கு மீண்டும் மருந்தை வைத்தாள் பத்மா. பத்மா ஆவேசமாக அவனோடு ஒரு சேதி சொன்னாள்.  “ஒன்னும் பயப்புடாத எவளா இருந்தாலும் என்ன! நான் பேசி வைக்கிறேன். எவ்வளவோ நியூஸ் பாக்றோம் அதனால எங்களை தவிக்கவிட்டு தவறான முடிவு மட்டும்….” “மா! அப்படிலாம் பண்ணமாட்டேன்” என அம்மாவின் இரு உள்ளங்கையையும் சேர்த்து அதில் படுத்துக்கொண்டு அருண் , மித்ராவை பற்றிக்கூறினான். மறுநாள்  நடந்த தடல்,புடல் விருந்தில் மீசைக்காரர் ஆறுமுகம் குடும்பமும், மித்ராவின் குடும்பமும் பரஸ்பர அன்பை பரிமாறிக்கொண்டனர். போலீஸ் மாப்பிள்ளை வினோவிற்கு  மட்டும் தனி அழைப்பு வைக்கப்பட்டு இருந்தது. “இரண்டு பேத்தியும் பாதி கரை சேந்தாச்சு. அடுத்து ஒரு பேத்தி இருக்காளே அவளை எப்ப?” என்று குண்டக்க மண்டக்க கேட்டார் மீசைக்காரர். “இப்ப தான் மொத வருஷம் முடிக்க போறா அத்துக்குள்ளாயா” என்றார் தாத்தா “அப்ப என் மருமகள் மட்டும் என்ன படிச்சு பட்டமா வாங்கிட்டா?” என்று வேடிக்கையாக பேசினார் ஆறுமுகம் “வள்ளியூர்ல நமக்கு வேண்டிய ஒருவர் இருக்கார்”  என்று தாத்தா ரத்தினத்தை பார்த்துச்சொல்ல , தன் அப்பாவிற்கு தெரியாதது போல், மீசைக்காரரை  பார்த்து கை எடுத்து கும்பிட்டார் ரத்தினம். அதன் பின் அவரே மித்ராவின் பேச்சை  நிறுத்தினார். முதலில் சாப்பிட்டு எழுந்த குமரன், கை கழுவும் சாக்கில் லீலாவை பார்க்க சென்றான் . ‘ஹும் ஹும்’ என்ற பவியின் இருமல் ‘மருதாணி கோன்’ இட்டு கொண்டு இருந்த லீலா காதில் விழவும் எழுந்து தனது துப்பட்டாவை போட்டு கொண்டாள். மூன்று பேரிடமும் “சாப்டலையா நீங்கலாம்?” என்றான் குமரன் “நீங்க சாப்டு போனப்புறம் சாப்பிட சொன்னாங்க” என்றாள் லீலா “எனக்கும் ஒருத்தர் வந்துருக்கார் பாரு! இதுவரைக்கும் கோழியை பார்த்தது இல்ல போல அப்டி தின்றார்” என்று வினோவை திட்டினாள் பவி அதை கேட்டு சிரித்தவர்கள் “எங்க கூட வர போறதா அம்மா சொல்லுச்சு” என தொடர்ந்தான் குமரன். “உங்க கூடன்னா உங்க கூடவே வரல . எங்களை பத்திரமா அந்த முக்குல இருக்குற ’சென்னை டெக்டைல்ஸ்’ல இறக்கி விடனும். அன்னைக்கு மாதிரி எதுமேலயும் விட்டுட கூடாது” என்று பரிகாசம் செய்தாள் பவி . பெண்கள் கூட்டத்தில் சிக்கும் ஆண்கள் நிலையை  பற்றி அவன் அறிந்ததில்லை போலும் வெக்கமும், சுய மரியாதையும் காற்றாய் பறந்தது. கடைக்கு போகிற சாக்கில் அருணிடன் பேசலாம் என்ற திட்டத்தையும் சொல்லிவிட்டார்கள் என்பதால் பவியின் பரிகாச பேச்சுக்கு  மித்ராவும் கூட சிரித்துவிட்டாள். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம் போல்  ‘நான் வந்து இருக்கேன் வேற ரூம்க்கு போக மாட்டாளுங்களா!’ என குமரன் மனதின் வெளிப்பாடு அவர்களுக்கும் கேட்டு இருக்கும். இருவரும் இருந்ததால் அவனால் பேச்சை தொடர முடியவில்லை. “சரி நான் அவங்க கூட பேசிட்டு இருக்கேன் . நீ சாப்டு வா” என்றான் குமரன் “ம்ம்ம் சரி” என சொன்னாள் லீலா “நல்ல சாப்டு” என்றான் மீண்டும் “என்னவாம் ரொம்ப பாசம்?” என்று அவர்களுக்குள் பேசினாள் லீலா . ஆனால் அது பவியின் காதில் விழ அவள் சொன்னாள் “ஊரான் பிள்ளைய ஊட்டி வளத்தா தன் புள்ளை தானா வளரும்”. அவனுக்கு புரியவில்லை என்பது போல் திருதிருவென விழித்தான். பின் பவியே விடுகதை பதில் போல்  சொன்னாள். லீலாவை காட்டி  “இது ஊரான் பிள்ளை” , பின் அவள் வயிற்றை காட்டி “இது தன் பிள்ளை” என  கேலி செய்ய மூவரின் சிரிப்பு சத்தம் இடியாய் அலறவும் “எம்மாடி நான் இல்லை” என அவ்விடம் விட்டு நகர்ந்தான் வினோ. அத்தியாயம்-26 பத்மாவை சென்னை அனுப்பிய பின் பத்மாவின் வீட்டில், அக்காவின் வற்புறுத்தலால் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமானது.   நடந்த விஷயத்தை வீட்டில் அக்கா  சொல்லி இருக்கலாம் என பத்மா,  திலக் பற்றி பேசவில்லை. அதே நேரத்தில் பத்மாவின் அப்பாவிடம்  அவர் நண்பரான ஸ்ரீ ராம் , தன் மகன் ஆதித்யாவிற்க்கு பத்மாவை கேட்டு வந்த நேரமும் , அவள் வந்த நேரமும் ஒருசேர இருக்க அப்பாவும் கல்யாண வேலைக்கு தயாரானார் . ஆனால் நிஜத்தில் அல்லம்பட்டியில் நடந்த விஷயம் எதுவும் அப்பாவுக்கு தெரியப்படுத்தபடவில்லை. அதற்கு மறு வாரம் தான்  ஆதித்யா தான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு தெலுங்கு பெண்ணை காதலிப்பதாகவும் அவளை மணந்து கொள்ள விரும்புவதாகவும் வீட்டில் அனுமதி கேட்டு வந்து நின்றான் .  இதனை கேட்டதும் ஸ்ரீராம் அப்பெண் வேண்டாம் என மறுத்து தன் நண்பனின் மகள் பத்மாவிக்கு சம்மதம் தெரிவித்ததால் அவருக்கு கொடுத்த வாக்குப்படி பத்மாவுடன் ஆதித்யாவை கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார்.   அதோடு மட்டும் நில்லாமல் திலக்கை பெங்களூர் வேலையை விட்டு   சென்னைக்கு மாற்றாகி வரச்சொன்னார் ஸ்ரீ ராம். கல்யாணம் ஆன பின் பத்மாவிடம் தன் காதல் விவகாரத்தை ஆதித்யா மறைக்கவில்லை. அவளும் திலக்கை பற்றி கூறி என் அக்கா மற்றும் மாமாவின் வற்புறுத்தலின் பேரிலேயே அவசர திருமணம் நடந்தது என்றும் , தனக்கு இதில் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் விஷயத்தை போட்டுடைத்தாள் . காலங்கள் செல்ல ,  இருவரும் அவர்களுக்கு ஏற்பட்ட  முந்தைய காதலை மறந்தும் மறவாமலும் தத்தம் வாழ்க்கையை தொடங்கினர் . பத்மா அவரை ஏற்று கொண்டு வாழ்க்கையை தொடங்கினாலும், ஆதித்யாவிற்கு மட்டும் தொட்ட குறை  விட்ட குறையால்  தன் மீதான குற்ற உணர்ச்சி மட்டும் போகவில்லை . பத்மா ஆதித்யாவிற்கு அருண் பிறக்க, எல்லாம் மாறி தந்தை ஸ்தானம் சென்ற ஆதித்யா ஒரு வருடத்திற்கு பிறகு அலுவலக சம்மந்தமாக பெங்களூர் செல்லும் நிலை . மனதிற்குள் நெருஞ்சி முள் போன்று தன் காதலியின்  நினைவுகள் உறுத்தி கொண்டே இருக்க, விஜியை ஒரு முறை பார்த்து விட்டு ‘மன்னிப்பு கோரி விடலாம் என்று,  தான் பணிபுரிந்த பழைய அலுவலகம் சென்றான். ஆனால் ’விஜி’ அங்கு இல்லை. ஆதித்யா அவளை விட்டு சென்ற பின் இவர்கள் காதல் கை கூடாமல் சென்றதையும், அவள் மீதான வக்கிரமான கேலிகளும் , கிண்டல்களும் அலுவலகத்தில் இருந்து அவளை விலக செய்தது  . அந்த அலுவலகத்தில் பழைய நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே இருக்க , மீதி நபர்கள் சிதறிய ஈசல்கள் போல் காணாமல் போகினர். தான் முன்னொரு காலத்தில் இருந்த இருக்கையையும், விஜியின் இருக்கையும் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான் . தெரிந்த எல்லாரிடமும் சுப செய்திகளை கேட்ட பின் விஜி பற்றி மட்டும் யாருக்கும் தெரியவில்லை. அத்தனை விஷயமும் ’கிளினரா’க வேலை  செய்யும் மீனாட்சி அக்கா சொல்லி தெரிய வந்தது. அவர்கள் துளைத்த துப்பாக்கி தோட்டாவை போல் ஒரு செய்தி . விஜி  கருவுற்று இருந்த செய்தி. தவறு செய்துவிட்டதை  உணர்ந்தவன் அன்று மாலை வரை அலுவக வாசலிலேயே இருந்தான். வேலை முடிந்தபின் எல்லாரும் செல்ல இவன் மட்டும் அவ்விடம் விட்டு நகரவில்லை. காதலிக்கும் பொழுது எப்பொழுதும் கடைசியில் வெளியே வரும் விஜிக்காக தற்போது காத்திருந்தான். ஆனால் அவள் வரமாட்டாள் என்பதும் சில வருடத்தை சூனியமாக்கி தொலைத்து வந்து நிற்பதும் அவன் கண்களில் சிவப்பாய் கலங்கியது. மீனாட்சி அக்கா சொல்லி அவனுக்கு விஜியை பற்றி தெரிந்தது. வீட்டில் எவ்வளவோ சொல்லியும் குழந்தை வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தமையால் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டதாக சொன்னார் மீனாட்சி அக்கா. ஒரு நகை கடையில் ’சீனியர் கேஷுயரா’க அவளையும்,  உன்னையும் பார்த்த பின் நான் என்ன செய்து இருப்பேன் யாமிகா ?" என ஹோட்டலில்  தன் மகளிடம் கூறி முடித்து கண்கலங்கினார் ஆதித்யா. ஒரு மாதம் கழித்து தனது சொத்தின் பாகம் அனைத்தும் அருண் பெயருக்கும் , வங்கியில் உள்ள பணத்தை பத்மாவிடம் இழப்பீடாக கொடுத்து இன்னொரு வாழ்க்கை அமைத்து கொடுக்க மொட்டை கடிதாசி ஒன்று வந்தது. எல்லாம் மறந்து நல்லதோர் வாழ்கைக்கு செல்ல நினைத்த பத்மாவிற்கு இடி விழுந்ததை போல் சரீரம் சாய்ந்து அழுதாள்.   தாங்கள் செய்த வற்புறுத்தலால் தான் பத்மாவின் நிலை இப்படி ஆகியதே என்று குற்ற உணர்வு நெஞ்சை பிழிய  உள்ளுக்குள் அழுது தீர்த்தனர் ஸ்ரீராம் லீலா தம்பதியர்.   இனி அவரை தேடி செல்ல வேண்டாம் என்று மாமா அத்தைக்கு சொல்லி தன் ஒரு வயது பையனோடு  தாய்வீட்டிற்கே திரும்பினாள் பத்மா.  நிறைய செலவு செய்து நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து மொத்த  சொத்தினையும் இரண்டாக பிரிக்க நினைத்த பத்மாவின்  அக்கா மற்றும் தம்பியின் குடும்பத்திற்கு அவள் மீண்டும் வந்து நின்றது  ஆச்சரியம். வீட்டில் தம்பி மனைவியின் குத்திக்காட்டும் பேச்சும் , அடிக்கடி சென்னை வரும் அக்கா அருண் மீது சொல்லும் குறையும், அப்பா இல்லாதவன் என்ற பரிதாப பார்வையில் இருந்தும் விலகி கொள்ள சொத்தில் ஒரு பங்கும் வாங்காமல் ஸ்ரீராம் லீலா அழைப்பின் பேரில் மீண்டும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். அப்பா, அம்மா இறந்த பின் உறவை துண்டித்து தற்போது வரை மாமா அத்தை அரவணைப்பில் தான் வாழ்கிறாள் பத்மா. ‘பியர்’ குடித்த இரவும் , சூடு வைத்தபின் அழுத இரவும் கரைய, மதியம் மூன்று மணி வரை உறங்கியவன் மெல்லமாக எழுந்தான் அருண். காற்றில் எங்கோ பாடல் ஓடி கொண்டிருக்க ‘சென்னை டெக்டைல்ஸ்’ சென்ற மித்ராவின் அழைப்பு வந்தது . படுக்கை விட்டு எழுந்து அமர்ந்திருக்கும் அருண் செல்போன் சத்தமில்லாமல் ஒலித்தது. “என்னடி ஆச்சு?” என்றாள் லீலா கவலை தோய்ந்த குரலில் உதட்டை பிரித்து “எடுக்கல” என்றாள் மித்ரா “சரி. நீ திருப்பி கூப்பிடுட்டே இரு. நாங்க போய் ஏதாச்சும்  வாங்குறோம். வீட்டுக்கு சும்மா போனா கொலை தான்” என்றாள் பவி நான்கு முறை ஒலித்த பின் எடுத்தான் அருண்.  ஒரு நிமிடம் வரை இருவரும் பேசவில்லை. அருண் அழைப்பை துண்டித்தான். மீண்டும் முயற்சிக்க மித்ரா தொடர்ந்தாள் “கோவமா தங்கமே?” அருண் இப்பொழுதும் பேசவில்லை. “டேய் இருக்கியா” எடுப்பிலேயே அவன் பாணியில் கேட்டான் அருண் “கழட்டி விட்டுட்டேனு நினைச்சேன்” “ஆமா கழட்டிவிட்டு தான் திருப்பி திருப்பி ஃபோன் பண்றாங்களா?”லூசு மாதிரி பேசாத" என நடந்த எல்லா விஷயத்தையும் கூறினாள் மித்ரா. மன்னிப்பு கேட்டு மீண்டும் வந்துவிட்டாள் மித்ரா என்றதும் அவனும் தன் இயல்பிற்கு மீண்டு வந்தான்.  காரணங்களை அவள் சொல்லி முடிய “இவ்ளோ தானா. இது தெரியாமா நான் ..” என்றான் அருண் “என்ன பண்ண” - மித்ரா “ஒன்னும் இல்ல” “சரி வைக்கிறேன்” “அதுக்குள்ளயா?” “உன்கிட்ட தான் பேச  கடைக்கு வந்துருக்கேன் சொன்னேன்ல” “அப்ப ஏன் போற?” “வீட்டுக்கு போயிட்டு டெக்ஸ்ட் பண்றேன் போதுமா” - மித்ரா “வீட்டுக்கு போயிட்டு லொகேஷன் அனுப்பு” - அருண் "எதுக்கு?’’ “அம்மாவும் நானும் வர்றோம். உங்க வீட்ல பேச” “என்னது” “ஆமாடி . நானும் அம்மாவும் வறோம்.உங்க வீட்ல பேசனும்ல” “சரி நான் போய்ட்டு பேசுறேன் . கடைல ஒருமாதிரி பாக்கிறாங்க” “லொகேஷன் அனுப்பு சரியா” “லூசா நீ ! இங்க ஏற்கனவே கல்யாண வேலை பிசி” “போயிட்டு டெக்ஸ்ட் பண்ணுன்னு சொன்னேன். டாட்” நடந்தது ஏதும் தெரியாத மித்ராவோ “லூசா ஆகிட்டானா இவன்? எதுக்கு எங்க வீட்டுக்கு வறான்” என யோசித்தாவறே மேலே சென்ற பவி லீலாவின் கூட்டத்தில் ஐக்கியாமானள் மித்ரா. அத்தியாயம்-27 ‘ஆஸ்திரேலியா’ செல்ல ஹோட்டலில் தங்கி இருந்த ஆதித்யாவை தன் அப்பா,அம்மா  பார்க்க வரவில்லை என்ற சோகம் அவனுள் இருக்க, தாத்தா பாட்டி கடைசிவரை வரவில்லையே என யாமிகாவும் வருத்தமாக இருந்தாள். மதியம் நான்கு மணி. இன்னும் இரண்டு மணி நேரத்தில் விமான நிலையம் செல்ல வேண்டும் . அவர்கள் வரமாட்டார்கள்  என நினைத்தவர்கள் கனத்த இதயத்தோடு கிளம்ப தயாராகி கொண்டு இருந்தனர். நேற்று இரவில் மித்ராவின் விஷயத்தை கேட்ட பின் காலையில் மாமாவிடமும் , அத்தையிடமும் அதை பற்றி கூறினாள் பத்மா. நேற்று  குடித்துவிட்டு வந்தவனுக்கு கையில் சூடு வைத்ததையும் தாத்தாவிடம் சொல்லி வருந்தினாள் .  அந்த பெண்ணிற்கு கல்யாண வயது வர இன்னும் காலம் இருக்கிறது தான் என்றாலும், தன்னை படிப்பை பாதியில் நிறுத்தி கல்யாணம் செய்து வைத்தார்கள், அது போல் அந்த பெண்ணுக்கும் ஆகி விடுமோ? என தன் பயத்தையும் கூறினாள் . “என் வாழ்க்கை,  உங்களின் மகன் ஆதித்யா வாழ்க்கை, அருண் வாழ்க்கை இப்படி ஆக காரணம் ஒருவகையில் எங்கள் விருப்பம் இல்லாமல் செய்து வைத்த திருமணம் தான்” என்பதை சொல்லி மகனுக்கு அந்த பெண்ணையே கேட்டு செல்லலாம் என முடிவை அவர்கள் முன் தெரிவித்தாள் . ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் அருண் அதை தாங்கமாட்டான். இரண்டு நாள் பிரிவிற்கே ‘பார்’ வரை சென்றுவிட்டான். நிரந்தர பிரிவு நேர்ந்தால் என்ன நடக்குமோ? என்ற சிந்தனையோடு அன்று அவள் அலுவலகம் சென்றுவிட்டாள்.     “இந்த ரூம் தான் சார்” என சொல்லிவிட்டு அறை வாசலில் விட்டுவிட்டு சென்றான் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவன். கிளம்பி கொண்டு இருந்தவர்கள் அறையின் ‘காலிங் பெல்’ கேட்க அதை திறந்தார் ஆதித்யா. பல வருடங்கள் கழித்து அப்பா அம்மாவை பார்த்ததும் இனம்புரியாத ஓர் உணர்வு . வெள்ளை நிற கதர் ஆடையில் அப்பா, சிவப்பு நிற பட்டு உடுத்தி அம்மா இருவரும் தன் முன் நிற்கவும் டேய் கண்ணா என்றார் ஸ்ரீராம்.  “அப்பா” என அழுது கொண்டே கட்டி அணைத்தான் ஆதித்யா. அருணிடம் பேசி முடித்தபின் வீடு வந்தவளுக்கு பயம் கொஞ்சம் தூரம் செல்லவும் வீட்டுல் வந்ததும் அவனுக்கு செய்தி அனுப்பினாள். காணாமல் தேடுவதை போல் அவனுக்கு எமோஜியை அனுப்பி காத்திருந்தாள் மித்ரா. “பேபி லாஸ்ட் ஸீன் டுடே 3.45PM” என்றிருந்த அருண் தொடர்பு எண்கள் ,   ‘’டெலிவர்ட் (டபுள் டிக்)’’ “ஸீன் (புளு டிக்)” “ஆன்லன்” “டைப்பிங்…,” என வேகமாக உருமாறியது. அவன் வந்ததும் வராததுமாய் அம்மாவை அழைத்து கொண்டு வருவதாக சொன்ன தகவல் உண்மை தன்மையை கேட்டாள்  மித்ரா. ஆமா என்ற அருண் தன் அம்மாவிடம் கூறிய எல்ல விஷயத்தையும் சொல்லி , அம்மா உடனே ‘உன்னை பார்க்க வர வேண்டும்,’ என அவர்களே சொன்னதையும் கூறினான் . “பேபிமா! இப்ப வேணாம் கொஞ்ச நாள் போகட்டும் நான் சென்னைக்கு ‘டீ.சி’ வாங்க வருவேன் அப்ப பாக்கலாமே”- மித்ரா. “நோ நோ! இப்பவே உன் ‘லொகேஷன்’ அனுப்பு” என்றான் அருண். “சொன்னா கேளுடா, இப்பதான் எங்க தாத்தா ‘ஆபரேஷன்’ முடிஞ்சு நல்லா இருக்கார் அது உனக்கு பொறுக்கலையா?”- மித்ரா. அவன் பதில் ஏதும் கூறாமல் ஒரு நிமிடம் வரை இருவரும் பேசாமல் இருந்தனர். பின்னர் அருண் பேச்சை தொடர்ந்தான். “லொகேஷன் அனுப்புவியா மாட்டியா?”- அருண் “மாட்டேன்”- மித்ரா. “அப்ப பேசாத”- அருண். “சரி பாய்!” - மித்ரா “ஓய்” “போயிட்டியா? போ ! அப்டியே போய்டு” கண்மணி லாஸ்ட் ஸீன் டுடே 3.47PM என்று அவளின் தொடர்பு எண் உருமாற்றம் பெற்றது மகன் ஆதித்யாவும், பேத்தி யாமிகாவும்  தங்கியிருந்த ‘ஹோட்டல்’ வந்தவர்கள் யாமிகைவை ‘வீல் சேரி’ல் பார்த்த பாட்டி ’ஐயோ கடவுளே ! என்னடியாம்மா இது?’ என குழந்தையை போல் யாமிகைவை கட்டிக்கொண்டு அழ தொடங்கினார். எத்தனை முறை அழுது தீர்த்தாலும் காயத்தின் தடம் மாறுமோ ?   பாட்டி அழுவதை பார்த்த பின் தனக்குள் இருக்கும் குறை நினைவு வரவே யாமிகாவும் அழதொடங்கினாள். அழுகையை அடக்கி வைத்த ஸ்ரீ ராம் தாத்தாவும், ஆதித்யாவும் சமாதானம் செய்து வைத்தனர். முதல் தடவை பார்க்க வந்ததால் இருவரும் கோவிலுக்கு சென்று வர தாமதம் ஆகிவிட்டது என்று கூறி கையில் சுருட்டி வந்த செய்திதாளில் இருந்து ‘விபூதி’ வைத்தார் பாட்டி. அவர்கள் இருவரும் நாற்காலியில் அமர்ந்து இருக்க , படுக்கையில் இருந்து கொண்டான் ஆதித்யா. “எப்டி இருக்க கண்ணா? எங்களைவிட்டு போய்ட்டு ஒரு தடவை கூட தேடி வரலையயா ?” என்றார் லீலாம்மா . ’இருக்கேன்மா" என்று அவன் சொல்ல ஏகாந்த ஏக்கம் அவனுக்குள் தெரிந்தது. முக பாவனைகள் சோகம் செல்ல தலை குனிந்து சொன்னான் “எந்த மூஞ்சி வச்சுட்டு வர சொல்ற. பத்மா நல்லா இருக்காளா? கல்யாணம் பண்ணாம உங்க கூடவே இருக்கானு அப்பா சொன்னப்ப ஊசி வைச்சு குத்துற மாதிரி இருந்துச்சும்மா” “அவளுக்கு என்னப்பா மகள் இல்லாத  குறை எங்க வீட்டு மகளாயிட்டா ! எங்கடா உன் வூட்டுகாரி?” என்று தன் கண்களை அங்கும் இங்கும் அலை பாயவிட்டார் லீலாம்மா. அந்த சிறிய அறையில் அவர்களை தவிர வேறு நபர் இருக்கும் தடயம் இல்லை என்று நினைத்து கொள்ள லீலாம்மா முகம் வாடி வதங்கியது. அவன் அப்பாவை பார்க்க , அவர் அவனை பார்த்துவிட்டு மனைவியை பார்க்க ‘மா’ என கீழே தலை குனிந்தவனின் கண்களில் நீர் வைரமாய் ஜொலித்தது. “என்னடா . எங்க அவளை?” ஆதித்யாவின் கையை அழுத்தி அவனுக்கு ஆறுதல் சொன்னார் ஸ்ரீராம்.  ஆதித்யா கண் கலங்கியத்தை பார்க்கவும் , விசும்பிய குரலோடு யாமிகா தன் ‘வீல்சேரி’ல் ’பட்டன்’ அழுத்தி அதை திருப்பி கொண்டு போய் சற்று தூரம் சென்று வாயை பொத்தி கொண்டு அழதொடங்கினாள். அவளின் கலங்கிய குரல்கள் , ஊமையின் ஒப்பாரியை போல் அவ்வளவு சத்தமாக சுவரில் பட்டு எதிரொலித்தது. “என்னம்மா நீயும் அழற?” என எழுந்து ஓடிய லீலாம்மா , யாமிகாவை தன் மார்போடு அணைத்து கொண்டு அழுது கொண்டே சொன்னார். “சொல்ல வேணாம்மா யாரும் சொல்ல வேணாம்” . சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்கள்  “இப்ப எந்த ஊர் போற?” என்றார் அம்மா “ஆஸ்திரேலியாம்மா” “எத்தனை மணிக்கு பிளைட்” “எட்டு மணிக்குமா.  கிளம்ப போறோம். கரெக்ட்ட்டா  நீங்க வர்றீங்க” “ப்பா” ரெடி ஆகணும் என்று நினைவூட்டி யாமிகா முகம் கழுவ சென்றுவிட்டாள். அவள் தூரம் செல்ல , “என்னப்பா ஆச்சு அவளுக்கு? பொறக்கும் போதே பிரச்சினையா?” “இல்லம்மா இப்பதான் …” ‘காலிங் பெல்’ அடிக்கவும் அதை திறந்து ’காபி’யை வாங்கி கொண்டு உள்ளே வந்தான் ஆதித்யா. தட்டின் மேல் நான்கு காபி குவளைகள் இருந்தது.  “அப்பா உங்களுக்கு சுகர்?” “வேணாம்” “அம்மா உங்களுக்கு?” என்றான் "வேணாம். அப்டியே கொடுப்பா’ தனக்கு வந்த காபிக்கு மட்டும் ’சுகர்  பாக்கெட்’டை பிரித்து அதை கரண்டியில் கலக்கி கொள்வதில் ஆர்வமாய் இருந்தான்.  அக்கணம் அறையின் ஏசி சத்தமும், கரண்டியுடன் குவளை மோதும் சத்தம் மட்டும் நிலைத்து இருந்தது. மனைவியை பற்றிய கேள்விக்கு பதில் இல்லை . என்னதான் ஆயிற்று ? அவளுக்கு என அம்மா  அவனை வித்தியாசமாக பார்க்க “என்னம்மா அப்டி பாக்றீங்க?” என்றான் ஆதித்யா “அவ மூனு வருஷம் முன்னே  ’கார் ஆக்சிடன்ட்’ல போயிட்டாம்மா . யாமிகா உயிரோட வந்ததே பெரிய விஷயம்” என மிகுந்த பக்குவத்தில்  சொல்லிவிட்டு காபியை பருகினான். துணையில்லாமல் மூனு வருடம் இருந்த மகன் ஒன்றும், இருபது வருட துணை இல்லாமல் இருந்த பத்மாவை விட உயர்ந்தவன் இல்லை . இருந்தும் பத்மாவிற்கு சொந்தம் என நாம் இருந்தோம். ஆனால் இவனுக்கு? என கண்களில் நீர் சுரந்தது அம்மாவுக்கு. முந்தானையை முகத்தில் வைத்து கொண்டு கணவரை பார்த்தார்.  அவருக்கு தான் ஏற்கனவே தெரியுமே என்பதால் ‘ஆமாம்’ என்பது போல் வெறுமனாக தலையசைத்து கொண்டே  சங்கட நிலையில் அவரின் கண்கள் துடித்தது. “அப்பா” என்றாள் முகம் கழுவ சென்ற யாமிகா. “இருங்க வரேன்” என  யாமிகாவிற்கு வேண்டிய உதவியை செய்துவிட்டு வந்தான். ‘தன் மகனை இத்தனை வருடம் கழித்து இந்த கோலத்தில் பார்க்கவா வந்தோம்’ என நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர். “நீ வா நம்ம வீட்டுக்கு வா” என்றார் அம்மா அசடாக பேசும் அம்மாவை பார்த்து  “ம்மா ! நைட் பிளைட்” என சிரித்தான் “பரவாயில்ல வா ! ரெண்டு நாள் கழிச்சு போகலாம்”என்றாள் அம்மா “மா நான் வரல ! நான் வந்தா பத்மா எங்கே போவாள்?” என்றான் ஆதித்யா “அதெல்லாம் எங்கயும் போகமாட்டா. அவதான் எங்களை உன்னை பார்க்க வரசொல்லி கட்டாயப்படுத்துனா. நானும் உன் பொண்டாட்டிகிட்ட நாலு வார்த்தை கேட்டுட்டு போலாம்னு தான் வந்தேன். ஆனா உன்ன இந்த கோலத்தில பார்க்க மனசு கேட்கல” என்றாள் “இல்லம்மா வரல நான் அப்டியே  எங்கேயாது போயிட்றேன் . யாமிகாவும் அம்மாவ மறக்கனும்” மீண்டும் அவள் “அப்பா” என்றாள் “நீ இருடா ! நான் போறேன்” என  சென்றார் பாட்டி. “ஆதி நேத்து அருண் என்ன பண்ணான் தெரியுமா?” என்றார் ஸ்ரீராம் “என்னாச்சுப்பா?” “கழுதை எந்த பொண்ணையோ காதல் பண்ணிட்டு அவ போயிட்டான்னு கண்டதை குடுச்சுட்டு வந்து நின்னான்” ஆதித்யாவிற்கு நேற்றே தெரியுமே. சட்டையை பிடித்து அவனை கண்டிக்க நாம் என்ன அவனை தோளில் சுமந்தோமா. பதிலுக்கு அவன் நம் சட்டையை பிடித்தால் நம் நிலை என்ன ஆகும் என்று ஆதித்யா நேற்றே நினைத்து கொண்டார். “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே!” “சொல்லுங்கப்பா” அவர் சற்று தயங்கி கொண்டே சொன்னார் “காலைல பத்மா எங்ககிட்ட பேசுனா அந்த பொண்ண, நேர்ல போய் பார்க்கணும்னு” பயணத்தை ஒருவாரம் ஒத்திப்போட்டுவிடடு ஆதித்யாவையும் தங்களோடு அழைத்தார். “நானா? நெவர் !” என்றார் ஆதித்யா. “அருணை யாமிகா பாக்கணும்னு சொன்னா அவ்ளோதான். அவன் விஷயங்களில் மூக்கை நுழைக்க நான் யாரு?” “நீ யாரா ? உன் புள்ளடா அவன்” “அப்பா! கொஞ்சம் நியாயமா பேசுங்க. நீங்க சொல்றது உங்களுக்கே நல்லவா இருக்கு” “டேய் நான் என்ன பத்மா கூட சேர்ந்து வாழுன்னா சொன்னேன்? அவ, அவ பிரண்ட் ஒருத்தர் இருக்கான்ல.” “யாரு திலக்கா?” “உனக்கு எப்டி தெரியும்?” “அவருக்கிட்ட காலைல பேசுனேன் நான்” என்றார் ஆதித்யா “ஏன்?” “சும்மாதான். அவரும் என்னை துணைக்கு போக சொன்னார்” . அது தான் சரி என்றும் நினைத்து கொண்டவர் “அப்பா இல்லாம போய் பெண் கேட்கவா?” என்றார் ஆதித்யா கண்கள் மீண்டும் கலங்கியது. ‘பெட் ஷீட்’ ஓரத்தை கிள்ளிக்கொண்டே சொன்னார். “அப்பா ! எனக்கு கல்யாணம் பண்ணும் போது வேணாம் வேணாம்னு சொன்னேன். இப்ப என்ன நீங்க பண்ண தப்ப திருத்துறீங்களா?” “அட லூசு பயலே ! தாம்பத்தியம் இருபதில் இல்லை மவனே, ஐம்பதில் தான்” என சொல்ல அதற்கு முன் லீலாம்மாவும்,யாமிகாவும் வந்தனர். “இந்தா என் பேத்தி வந்துட்டா என அவளிடம் அனைத்தும் சொல்லி அண்ணனுக்கு போன் பார்க்க போறோம் நீ வறீயா? இல்லையா?” என்றார் தாத்தா. கொஞ்சம் யோசித்த யாமிகா ஆதித்யாவை பார்த்தாள்.  “அடுத்த மாசம் ஆஸ்திரேலியால இருப்பிங்க , அப்ப நினைச்சா கூட வரவா முடியும்” என ’சென்டிமெண்டா’க பேசி சம்மதிக்க வைத்தார்.  “யோசிச்சு சொல்றேன்” என ஆதித்யா சொல்ல,  தின்பண்டங்களை கொடுத்து விட்டு , வீட்டில் வந்து நடந்ததை சொல்லினார்கள். பரபரப்பாக ஹோட்டல் அட்மினுக்கு ‘கால்’ செய்து  இன்னும் ஒரு நாட்கள் இந்த அறையில் தங்க கால அவகாசம் நீட்டிக்கொள்ள வேண்டுகோள் வைத்தான். பத்மாவை பார்க்க போகும் அவன் மனம் ரணமாய் துடித்தது. காலையில் பத்மா அருண் விஷயம் சொல்லி சொல்லி திலக்கை அழைக்க திலக் தான் இப்படி ஒரு யோசனையை சொன்னான். பத்மாவிற்கு அவர் வருவதில் ஆட்சேபனை இல்லை ஆனால் அருண் சரியென்றால் அவரோடு போகலாம் என்றாள் பத்மா. பத்மா நேற்றே ஆதித்யா ஊர் வந்த விஷயத்தை திலக்கிடம் பகிர்ந்தாள். திலக் சென்று அவரை சந்திக்கையில் ஆதித்யா தன் மனைவியை இழந்த விஷயம் திலக்கிற்கும் தெரிந்தது. விஷயத்தை அவன் பத்மாவிற்க்கு  சொல்லவில்லை ,  மாறாக அப்பா, அம்மாவை ஆதித்யாவை பார்க்க அனுப்புமாறும், கல்யாண விஷயத்திற்கு அவரை அழைத்து பாருங்கள் என்றும் கூறினான் திலக். இப்போது வரைக்கும் பத்மாவிற்கு ஆதித்யா தன் மனைவி விஜியை இழந்த விஷயம் தெரியாது. மித்ரா பேச்சின் பாதியில் சென்றுவிட்டாள். “ஓய்” “போயிட்டியா? போ ! அப்டியே போய்டு” ‘கண்மணி ( லாஸ்ட் ஸீன் டுடே 3.47PM)’ மீண்டும் அவள் வந்தாள். செல்போன் சிணுங்க அவன் செய்தியை பார்த்தான். ‘கண்மணி சென்ட் லொகேஷன்’ “வர போறியா நெஜம்மாவே?” என்றாள் சிறு பிள்ளையை போல். காலையில் அருண் வீட்டு வாசலில் ஆதித்யாவின் கார் வந்து நின்றது. அத்தியாயம்-28 அதிகாலை மூன்று மணி.  “கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா ?” ’டிவி’யில் வரும் சினிமா நகைச்சுவையின் ’வால்யூ’மை வாசலில் வந்த கார் சத்தம் கேட்கவும் குறைத்தான் அருண் . மித்ரா வீட்டிற்க்கு , அவளுக்கே தெரியாமல், குடும்பத்தோடு அவளை பொண்ணு பார்க்க செல்வதெல்லாம் “ஒரு நியாயம் வேணாமடா?” என்று மனசாட்சி கேள்வி கேட்டிருக்கும் அருணுக்கு. ‘மா’ , ‘தாத்தா’, “வண்டி வந்துட்டு” என சுற்றுலா செல்லும் குழந்தை போல் அவர்களை கிளம்ப ஆர்வபடுத்தினான். வாசலில் வந்து நின்ற காரில் ஆதித்யா பல நாள் கழித்து தன் வீட்டை பார்த்தான். சிறிய அளவிலான இரும்பு ‘கேட்’ போட்டு இருந்த அந்த வீட்டில் ‘கேட்’ இல்லை. நேராக வீட்டின் முன் கதவு தான். தான் நிறுத்தும் ‘ஸ்கூட்டர்’ பக்கம், அருணின் பெரிய நீல நிற ‘பைக்’ மூடப்பட்டு  இளைப்பாறி கொண்டு இருந்தது.  ‘உள்ளே அழைப்பார்கள்’ என நினைத்து தவிர்க்கும் பொருட்டில் தான் தாமதமாக வந்தான் ஆதித்யா. நினைத்தது போல் வந்த உடனேயே அவர்களும் வெளியே வரவும் வீட்டில் நுழையாமலேயே கார் மெல்ல புறப்பட்ட தாயார் ஆனது.  அப்பாவை முன் சீட்டிலும் , பின் கதவு ஜன்னல் ஓரம் அருணும் , அதனை அடுத்து யாமிகாவும்,இடது ஜன்னல் ஓரம் பாட்டியும். பெரிய வண்டி என்பதால் அதற்கு பின்னால் காலியாக இருந்த இருக்கையில் தனியாக அமர்ந்து கொண்டாள் பத்மா. “இரண்டு பேருக்கு எதுக்குப்பா இவ்ளோ பெரிய கார்?” என பேச்சை தொடங்கிவிட்டே சிவனே என இருந்த ’ரேடியோ’வில் கை வைத்தார் ஸ்ரீராம் தாத்தா. “ஹரஹர சிவனே அருணாசலனே ” என சிவன் பாடல் ஒலிக்க தொடங்கியது.  சிவன் அருள் வேணும் தான், இருந்தாலும் நாம் செல்லும் காரியத்துக்கு ஒரு ஜாலியாக , அல்லது ஒரு காதல் பாடல்களை போட்டு விடாமல் இதை தட்டி விட்டுட்டுச்சே ‘பூவம் பனானா’ என மனதில் நினைத்தான் அருண். அருண் வேலையாய் போவதை விடவும் குடும்பமாக சென்று மீனாட்சி அம்மன் தரிசித்து வர போகிறோம்  என்ற சந்தோஷத்தில் இருந்தார்கள் ஸ்ரீராம் மற்றும் லீலா தம்பதியர்.  பஜார் சாலையில், இருந்த லாரிகளின்  ‘டிராஃபிக்’கில் இருந்து வண்டியை வெளியே கொண்டு வர படாதபாடுபட்டவன் ஒரு வழியாக ’மெயின் ரோட்டி’ற்கு வந்தான் ஆதித்யா.  நான்காம் ’கியர்’ அழுத்தவும் சீறிப்பாய்ந்தது வாகனம். “என்னப்பா கேட்டிங்க?” என்றார் ஆதித்யா . ரொம்ப வருடம் கழித்து  முதன் முதலாக ஆதித்யாவின் குரல் கேட்கிறாள் பத்மா. பின்னால் இருந்ததால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. அவனின் கிளி பச்சை நிற சட்டை மட்டும் தெரிந்தது. “நீயும் மகளும் தானே இவ்ளோ பெரிய காரு எதுக்குப்பானு கேட்டேன்?” அவன் சாலையில் கவனமாக இருந்து கொண்டே பதில் சொன்னான்  “என் கார் குடுத்தாச்சுப்பா! இது வாடகைக்கு எடுத்தேன்” மாமா இரண்டு பேர் என்று குறிப்பிடும் பொழுது “மகள் மட்டுமா” என நினைத்த பத்மாவிற்கு, “அட ஆமா அவர் மனைவியை காணோமே?” என்று புத்தியில் எட்டியது. அதிகாலை அசதியில் , முன்று மணி நேரத்தில் அனைவரும் தூங்கிவிட, சாய்பாபா பாடல் கேட்டு கொண்டு இருந்த ஸ்ரீராம் தாத்தா ஆழ்ந்த உறக்கத்தில் கதவின் ‘லாக்’ மேல் கை வைத்துவிட்டார். சீட் பெல்ட் அணியாத அவர் ‘படார்’ என திறந்த காரின் கதவு வழி சாலைக்குள் இடறி விழுந்தார். வேகமாக பிரேக் இட ,  சத்தம் கேட்டு பதறி எழுந்த அனைவரும் காட்சியை பார்க்கின்றனர். “மாமா! மாமா!” என முதலிலேயே பத்மா அழ தொடங்க, “என்னங்க” என லீலா பாட்டியும் அழுது கொண்டு இறங்கினார்கள். காலையில் அவ்வளவு ஆட்கள் இல்லை என்பதால் உதவிக்கு கூட யாரும் இல்லை. அப்பாவை அவசரமாக தூக்கியவன் ‘தண்ணீ! தண்ணீ!’ கொண்டு வா என்றான் அருணை பார்த்து, அருண் வேகமாக ஓடி சென்று எடுத்து வர, அப்பாவை தூக்கி “அடிபட்டு இருக்கா?” என்றான். நல்ல வேளையாக அந்த நேரத்தில் வண்டி மெதுவாகத்தான் சென்றது . அதுவும் நடு சாலையில் செல்லாமல் ஓரமாக வந்ததால் பெரிய சேதம் ஏற்படவில்லை. வெள்ளை வேஷ்டியில் , சாலைக்கு பின் இருந்த செடிகளின் நிறங்கள் ஒட்டி கொள்ள , முற்கள் உள்ளங்கையில்  லேசான கீறிவிட , தலையில் ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது.  தாத்தாவை சிரிப்பாகவே இதுவரை நடத்தியவன், அவர் கண்ணின் பதட்டமும், அவர் மேல் இரத்தத்தை பார்த்ததும் கட்டி அணைத்துக்கொண்டான் அருண். அவரின் வயது முதிர்ந்த தொள,தொள கை தசைகளையும் , தோளையும் பிடுத்துக்கொண்டு ‘ஹாஸ்பிடல் போலாம் பயப்படாத’ என தூக்கி விட்டான். ஆதித்யா தன் கையில் இருந்த கைக்குட்டையை அருணிடம் குடுத்து அடிபட்ட இடத்தை இறுக்கி கொள்ள சொன்னார். வண்டியில் ஏறிய பின் , அழுதவாறே கைக்குட்டையை அழுத்தி கொண்டு “எம்புட்டு ரத்தம் போகுது வேகமா போப்பா” என்றார் பாட்டி. அருண் முன் சீட்டில் ஜன்னலை திறந்து நடைபாதையில் சென்ற ஒருவரிடம் ஹாஸ்பிடலுக்கு வழி என கேட்டான். பத்மா உள்ளங்கையை பிசைந்து கொண்டு கலங்கி இருந்தாள். ‘அந்தா தெரியுது பாருங்க’ என  போர்டை காட்டினான் ஒருவன். ‘கல்யாணி மருத்துவமனை’ என்ற ‘போர்ட்’ ஒன்று , பத்து மாடி கட்டித்தின் மேல் இருந்ததை பார்த்து வேகமாக சென்றார்கள் . அவசரமாக இறங்கி தாத்தாவை கூட்டிக் கொண்டு சென்றனர். வாயில் துணியை வைத்து கொண்டு பயத்தோடு கூடிய முக ஜாடையில் பத்மா பின்னால் சென்றாள். அப்பாவை தோளில் தாங்கி சென்ற ஆதித்யா, வண்டியில் யாமிகாவை விட்டு வந்தது உள்ளே நுழைந்த பின்னே தெரிந்தது. ஆனால் இறங்கும் முன் அருண் யாமிகாவை பார்த்து கொண்டான். “வீல் சேர் எங்க?” என்றான் அருண் “பின்னால டிக்கில” என்றாள் யாமிகா. அதை எடுத்துகொண்டு வந்தவன் “எப்படி தூக்க!” என யோசித்து கொண்டு இருந்தான். தன் கைகளால் இருக்கையை உந்தித்தள்ளி கதவின் ஓரம் வந்துவிட்டாள். ‘வீல் சேரை’ பார்த்து சற்று அருகே நகர்த்த சொல்லி கேட்க அவன் அருகில் நகற்றிய பின், மெதுவாக காலை ஊனும் போது அருணை அழைப்பது போல அவன் கண்களை பார்க்க , அவன் அருகில் வந்தான். அருண் தோளை ஒரு அழுத்து அழுத்தி சீட்டில் அமர்ந்து கொண்டாள். தங்கையின் எடை ‘அறுபது பிளஸ்’ இருக்கும். அப்படி ஒரு அழுத்து அருண் மேல். ‘வீல் சேரில்’ இருக்கவும், அவளின் பின்னால் தள்ள சென்றவன் கையால் தள்ளும் முன்னரே ‘பட்டனை’ அழுத்தினாள் யாமிகா. தானாக அது நகர்ந்து செல்ல அருண் பின்பக்கம் தள்ளி கொள்ள வந்தது யாமிகாவிற்க்கு தெரிய வர பின்புறம் திரும்பினாள். அருண் வண்டியில் வைத்த கையை அசைக்காமல், “பாத்தீங்களா உங்க வேலை முடிந்தப்றம் கழட்டி விட்டீங்க” ‘ஸ் ஸா ஆ ஆ ஆ ரி’ என்றதும் அவள் முத்துப்பற்கள் பிரகாசித்தது. அப்பாவை உள்ளே ஒரு அறைக்கு அனுப்பி வைத்து வெளியே வரவும் அருணும் யாமிகாவும் உள்ளே வந்தனர். “என்ன ஆச்சுப்பா”என்றாள் யாமிகா “தெரியலமா தையல் தான் போடணும்னு நினைக்கேன். உள்ளே போயிருக்கார்” என்று அவள் தலையை தடவி கொடுத்தார். “ஒன்னும் இல்ல ! என்ன ஆனாலும் நாம மதுரைக்கு போய்டலாம்” என்றார் அருணை பார்த்து, அவன் பதில் சொல்லாமல் அளவாக சிரித்துவிட்டு, அம்மாவிடம் சென்று நின்று கொண்டான். பத்மா யாமிகாவை பார்த்து கொண்டே உறைந்து போய் நின்றாள்.  கொஞ்ச நேரத்தில் வெளியே வர ஸ்ரீராம் தாத்தா வலது தலை ஓரம்  ஒரு பஞ்சை சுமந்து கொண்டு வந்தார் . “பார்த்து ! பார்த்து வாங்க!  இப்ப எப்டி இருக்கு?” என்றான் அருண் அவன் காரியமாக செல்வதால் , ஒரு மாதிரி அவனை பார்த்து “சுகமா இருக்குப்பா! ரொம்ப சுகமா இருக்கு” என்று நக்கல் தோணியில் சொல்லி கிளம்ப ஆயத்தம் ஆகினார். அருண் வழக்கமாக தன் வீட்டில் பேசுவது போல், ‘’பில் யாரு ஓடி போன உன் மகனா கட்டு…?" என்று அவன் கேட்க ’ஸ்ஸ்ஸ்ஸ்’ என வெறும் காற்றை உள்ளே இழுத்தான் . பக்கத்தில் நின்ற ஆதித்யா , என்ன சொல்வதென்று என்று தெரியாமல் வெளியே ‘பில் கவுண்டர்’ நோக்கி நடந்தார். “வாய வச்சுட்டு சும்மா இருக்கமாட்டியா?” என அதட்டினாள் பத்மா “மா ! எப்போதும் சொல்றதுதானேனு” “பார்த்து  மெதுவா வாங்க , அவன் கட்டிட்டு வரட்டும்” என பாட்டி சொல்லவும், “அவர் ஏன் கட்டணும்,அருண் போய் கட்டிட்டு வா” என்றாள் பத்மா. ஏற்கனவே 2000 ரூபாயை நீட்டி பணத்தை செலுத்த நின்ற ஆதித்யாவை பார்த்து கொண்டு “அம்மா என்னை கட்ட சொன்னாங்க” என்று அருகில் கூச்சமாக நின்றான் அருண். “சார் ! 2000 சில்லறை இல்ல” என்று ஆதித்யாவிடம் பணிப்பெண் சொல்லவும் , அருண் தான் கொண்டு வந்த சில்லறையை நீட்டினான். அவர்கள் அனைவரும் வண்டியில் ஏறாமல் ஆதித்யாவிற்கு காத்திருக்க , ஆதித்யா வந்து காரை திறந்துவிட்டான். ஏறும் முன்னமே ‘நீங்க பின்னால ஏறுங்க அருண் முன்னால இருக்கட்டும்’ என்றாள் பாட்டி. ‘முதல்ல மீனாட்சி அம்மன தான் பார்க்க போறோம்’ என்பதால் வீட்டிற்கே திரும்பி விடலாமா! என்று யாரும் யோசிக்கவில்லை. ‘பில்’ கட்டிவிட்டு வந்த அருணும் மீதி காசை அம்மாவிடாம் கொடுத்து ஏறிக்கொள்ள ’கல்யாணி மருத்துவமனை’யில் இருந்து வண்டி கிளம்பியது. நேற்றைய இரவு ‘வாட்ஸாப்’ உரையாடலில் நிஜமாகவே வருவதாக கேட்டு மித்ரா திடுக்கிட்டாள். அருண் தெரியாததை போல் “எதுக்கு வரணும்?” என்றான் “நீ தானா சொன்ன எங்க வீட்டுக்கு அம்மாவ கூட்டிட்டு வரேன்னு” “அம்மாவ கூட்டிடு வர நீ என்ன டியூஷனா நடத்துற?” “டேய்! நீ தானே சொன்ன.” “என்ன சொன்னாலும் நம்புற ! அப்ராணியா இருக்கியே நீ” அவள் மித்ரா கோபமாக  ‘எமோஜி’ அனுப்ப நாளை ஆன்லைன்ல் இல்லாமல் போனால் அவளுக்கு சந்தேகம் வரலாம் என்று எண்ணியவன் சொன்னான். " நாளை நாங்க கல்யாண வீட்டுக்கு போறோம்" “நாளைக்கு முகூர்த்தநாளே இல்லையே?” மாட்டிக்கொண்டோமோ என எண்ணியவன் இல்லை நாளை முகூர்த்த நாள் தான் சரியாக பார் என்றான். குழப்பத்தில் அவளும் கூட சரி என்றாள். சரி பாக்கலாம் காலைல ‘கால்’ பண்றேன் - மித்ரா “நோ! நோ! கல்யாண வீட்டுக்கு போறேன் ‘கால்’ பண்ணாதா அம்மா இருப்பாங்க.” ‘டன்’ என்றாள் மித்ரா ஆனாலும் அவளுக்குள் சந்தேகம் தீர்ந்த பாடில்லை மீண்டும் கேட்டாள் “டேய் நெஜம்மா வரலைல?” “நான் ஏன்டி வர போறேன்? லூசா நீ ?” “வந்தேனு வை, நீ யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவேன்.” “சொல்லிக்க எங்கிட்ட போட்டோ இருக்கே.” “ஹேஏன் அது எல்லாம் ’எடிட்டிங்’னு சொல்லிப்பேன்.” “சொல்லுவ சொல்லுவ த ச்சீ போடி !” “நீ போடா தடிமாடு” “நீ போடி அருண் பொண்டாட்டி” ’இது என்ன ?" “புது கெட்ட வார்த்தை” “போகாதே” என்றான் அருண் கல்யாண வீட்டில் தனக்கும் சேர்த்து சாப்பிட சொல்லியதும் அருண் அனுப்பிய நக்கல் சிரிப்பு ‘எமோஜி’   பார்க்கும்முன் மித்ரா ‘ஆஃப்லைன்’ சென்றாள்.  காலை அதை பார்த்த பின் எதற்காக இவன் சிரித்து கொண்டு சென்றுள்ளான் என யோசித்தாள். பேபி ‘லாஸ்ட் ஸீன் டுடே 2.58’ அதிகாலை மூன்று மணிக்கு இவனுக்கு என்ன வேலை ? காலை சாப்பாட்டிற்கு வண்டியை நிறுத்தி சாப்பிட்டு கொண்டு இருந்தனர். நான்கு பேர் மட்டும் அமரும் இருக்கையில் அனைவரும் அமரவும், பத்மாவும் அருணும் அடுத்த டேபிளுக்கு தனியாக சென்று அமர்ந்தனர். “இரும்மா ஒண்ணா இருக்கலாம்” என அத்தை கூற, கடையில் இருந்த பணியாளன்  “டேபிளை சேர்த்து போடனுமா” என வந்தான். “இல்லை இல்லை இங்கயே இருக்கோம்” என்றாள் பத்மா. பாட்டி சிறிய புன்னைகையோடு ஆதித்யாவை நோக்கினார். பஞ்சால் கட்டு போடப்பட்டு இருக்கும் ஸ்ரீராம் தாத்தாவின் தலையில் இரத்ததின் தடம் இன்னும் தெரிந்தது. “ரெஸ்ட்ரூம் போனும்” என்றாள் யாமிகா. “வாம்மா நான் கூட்டி போறேன்” என பாட்டி நகர, “வா! கை கழுவிட்டு வரலாம்” என தாத்தா அருணை அழைக்க , “நான் கழுவிட்டேன்” என்றான் அருண். அவர் காற்றிலேயே பேசு “வாடா” என்று அழுத்தி கூற விவரம் புரிந்து எழுந்து சென்றான்.  அடுத்தடுத்த இருக்கையில் இருவரையும் தனியாக வைத்துவிட்டு சென்றதை உணர்ந்த பத்மா ‘ஃபக்’ என சொல்லிவிட்டு எழுந்து சென்றாள். அத்தியாயம்-29 ஆதித்யா காரில் இரவு நேரத்தின் பாடல் ஓடியது. வெடுக்கன பாட்டை மாற்றிவிட்டான் அருண். ‘வாடகை கார்’ என்பதால் ‘பாடல்கள் இல்லை’ என்று ஆதித்யாதான் அருணிடம்  அவன் போனிலுள்ள பாட்டை போட்டு கொள் என்று அருணிடம் சொன்னார். காலை சாப்பாட்டை முடித்துவிட்டு கிளம்பியவர்கள் அனைவருக்கும் உண்ட மயக்கம். விடிந்து விட்டது என்பதை அருண் போட்ட பாடலினால் ஒவ்வொருவராக கண் விழித்தனர். கண்ணை கசக்கி விட்டு முதலில் முழித்தார் ஸ்ரீராம் . பரபரப்பாக மடியிலும், கீழேயும் , மனைவி மடியிலும் என எதையோ தேடவும் அருகில் இருந்த லீலா பாட்டியும் விழித்து கொண்டார். “என்ன தேடுறீங்க” என்றார் லீலா “கைக்குட்டைய காணோம்” -ஸ்ரீராம் “இதுவா பாருங்க” என்றான் முன்னால் இருந்த அருண் “டேய் படவா என் கைக்குட்டை எதுக்குடா எடுத்த ? உனக்கு வேணும்னா நீ கொண்டு வரணும்?” “ஏன் சொல்லாமாட்ட, என் கைக்குட்டை வச்சு உன் ரத்தம் தொடச்சேன் பாரு. இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ” “இன்னும் எவ்ளோ நேரம்ப்பா ஆகும்? மணி ஒன்னு ஆகுது சாப்பிட வேணும்னா வண்டிய நிறுத்து” என்றார் ஆதித்யாவை பார்த்து. “இன்னும் அரை மணி நேரம்தான்பா சிட்டிக்குள்ள போய் பாத்துக்கலாம்” என்றார் ஆதித்யா ஊர் வர வர , அருண் வயிற்றில் ஒருவித மாற்றம். ஒருவேளை ராங்கி நேற்று சொன்னதை போல் “யாரென்றே தெரியாது” என்று சொல்லி அசிங்கபடுத்தி அனுப்பி விட்டால் என்ன செய்ய? அவன் மனதில் கலக்கம் . “மொதல்ல சாப்டுட்டு எனக்கு ஒரு சட்டை வாங்கிட்டு கோவிலுக்கு போகலாம்” என்றார் ஸ்ரீராம். “என்னா அருணே, சாமி கும்பிட்டு ஊருக்கு வந்துடலாம்ல, வேற எங்கும் போக்கு இடம் உண்டா?” என்றார் நக்கலாக. ஆதித்யா அருகில் இருந்ததால் மேற்கொண்டு அருணால் பேசமுடியவில்லை. “பத்து வருசத்துக்கு முன்னால ஒரு கல்யாணத்துக்கு நான் வந்தேன் என்று தன் பிளாஷ்பேக் சொன்னார்”. தாத்தா சொல்லும் கதைகள் கூட ஒரு பொக்கிஷம் தானே. அவரின் இடது புறம் இருந்த யாமிகா அதை கேட்டுக்கொண்டே வந்தாள். கையில் கைக்குட்டையை சுருட்டி வைத்து கொண்டே பேசினார் “லவ் பண்ணி கல்யாணம் . பையனுக்கு சொத்து கித்துன்னு எதுவுமே இல்ல , ரிஜிஸ்டர் ஆபிஸில கல்யாணம் முடிஞ்சு போச்சு, வேற வழியில்லைனு அதுக்கப்பரம் சம்முகம் கட்டி வச்சான் . ஒரே பொண்ணு இப்ப என்ன ஆச்சுனு தெரியுமா உனக்கு?” என்றார் யாமிகாவிடம். அதை மட்டும் ஆவலாக அருண் கேக்கவும், “முன்னால அருணை பார்த்தியா. இதுக்கு மட்டும் திரும்புறான் , கள்ளன்” என்று அவன் சீட்டை தட்டிவிட்டார் . “சரி சொல்லு தாத்தா சண்முகம் மகளுக்கு என்ன ஆச்சு?” என்றான் அருண் “ஆசை அறுபது நாளு மோகம் முப்பது நாளு. அது அம்புட்டு தான் ! ஹ்ம்ம்” என்று இழுத்தார். “அப்டியா விட்டுட்டு போயிட்டானா அந்த சண்டாளன்?” வியந்து போய் கேட்டார் லீலா. “அப்டிதான் நினைக்கேன் . சண்முகத்தை பாத்தப்ப அவன் மூஞ்சில சந்தோசம் இல்லை” " நீங்களா ஒன்னு சொல்லாதீங்க ஸ்ரீராம். அவருக்கு வேற ஏதாச்சும் பிரச்சினை இருக்கலாம்" என்றார் லீலா “நானா சொல்லல காதுல வந்துச்சி நியூஸ் அதான் சொன்னேன்” என்று சன்னமாக அமைதியானது. ’மதுரை சந்திப்பு!’என்ற பதாகையை கடந்து உள்ளே நுழைந்தனர் . மதிய நேரம் வந்துவிட்டதால் ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட இறங்கினர். வண்டியை சாலை ஓரம் நிப்பாட்டுவிட்ட பின், “எப்பா ஆதி , மொதல்ல ஒரு சட்டை, வேஷ்டி எடுக்கணும் இது அழுக்கா போச்சு , கடை எங்க இருக்கு பாரு” இவர்கள் செய்வதை  பார்த்தால் “சாப்டு சாயங்காலம் தேடலாமா” என்ற நகைச்சுவை நினைவில் வரவும் அவர்கள் அனைவரும் முன்னே செல்ல ‘அம்மா’ என்றான் மெல்லமாக.  அவன் எதற்கு அழைக்கிறான் என்று தெரியாமலா பத்மா இருப்பாள்.  “பொறு! பொறு! சாப்டு கிளம்பிறலாம்” “தாத்தா கோவில் போகணும் சொல்றார் இங்க இருந்து இன்னும் முக்கால் மணி நேரம் போகனும்மா” என்று அவசரப்படுத்தினான் அருண் “போயிக்கலாம்டா சாப்டு முடிச்சு கூப்டு போறது என் பொறுப்பு சரியா ! போய் நல்ல கடையா பாரு அவருக்கு சட்டைய தேடுவோம்” முன்னால் சென்ற கூட்டத்தில் சேர்ந்து கொண்டவன் “இந்த கடை நல்ல இருக்கே” என்று அதை நோக்கி திரும்பிய பின் ‘பட்டுக்கடை’ என்று சுதாரித்து வேகமாக நடந்தான். அவனை பின் தொடர்ந்து சென்ற குடும்பம் “இது பட்டுகடை மாதிரில இருக்கு” என்று லீலா பாட்டி சொல்லவும் அருணை பார்த்தார் ஸ்ரீராம் . அவன் முன்னால் தனியாக சென்று கொண்டிருந்தான். ஒரு வழியாக வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி வாங்கி அங்கேயே அதை மாற்றி கொண்டு வந்தார். சைவ ஹோட்டலில் நுழைந்தது தெரியாமல் அசைவம் கேட்டார்கள் அருணும் ஆதித்யாவும். “அருண்  எனக்கு அந்த லொகேஷன் அனுப்பு” - பத்மா “எதுக்கும்மா” “ஒரு ஆள் வரணும்” ‘லொகேஷன்’ அனுப்பி வைத்த பின் யாரிடமோ ஃபோனில் பேசிவிட்டு வந்தமர்ந்தாள் பத்மா. பின்னர் கோவில் கிளம்ப ஆயத்தம் ஆன மாமாவை, மித்ரா வீட்டிற்கு திருப்பிவிட்டாள். அரை மனதாக சம்மதித்தவர் “போகலாம்” என்றார் தாத்தா. அரை மணி நேரம் வண்டியில் பேச்சு பரபரப்பாக நடக்க , ஆதித்யா பேசினால் பத்மா பேசுவதில்லை. பத்மா பேசும் ‘டாபிக்’ ஆதித்யா பேசவில்லை. கடைசியில் இருவரும் பேசாமல் அருண் ‘லொகேஷன்’ சொல்ல சொல்ல மித்ரா வீட்டு வாசலுக்கு வந்துவிட்டனர். “இதுதானா வீடு”என்று யோசிக்க பத்மா யாருக்கோ ‘ஃபோன்’ செய்தாள். ஒரு ‘புல்லட்’ வண்டியில் மனைவியுடன் வந்து இறங்கினான் திலக். “இவர் எங்க இங்க?” ஆச்சரியமாக கேட்டார் ஸ்ரீராம் “திலக் நேத்தே ஊருக்கு வந்துட்டார் . மாமா! பக்கத்துல இருந்தா  வரேன்னு சொன்னார் அதான்” “பயணம் நல்லபடியா இருந்துச்சா ?”  என்ன அவருக்கு தலைல" என்றான் திலக். “அந்த கதையை அப்புறம் சொல்றேன்” - பத்மா. “இது என் மனைவி” என்று திலக் தன் மனைவியை அனைவரிடமும் அறிமுகபடுத்தினான். “இந்த வீடா!” "ஆமா இதான் காட்டுது ‘லோகேஷன்’’ “நம்ம பாண்டிகூட பக்கத்துல தான் வீடு வாங்கிருக்கறதா சொன்னான்  . சரி வாங்க போலாம்” என்று உள்ளே நுழைந்தனர். பெட் ரூமில் இருந்த செல்ல நாய் வாசலுக்கு வந்து எட்டி இரண்டு முறை குரைத்து விட்டு உள்ளே சென்றது. அருண் அந்நாயை போட்டோவில் பலமுறை பார்த்து இருப்பதால் ‘இந்த வீடுதான்மா’ என உறுதியாக சொன்னான். யாருமற்ற வீட்டில் ரத்தினம் மட்டும் சவரம் செய்து கொண்டு இருந்தார். உள்ளே நுழைந்தவர்களை கண்ணாடி வழி பார்க்கவும் யாரு என்று முகத்தை துடைத்து வந்தான். திலக்கும்,ரத்தினனும் ஒருவரை ஒருவர் பார்த்த பின் மூன்று நொடி அமைதியாக இருந்து , “ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏய்ய்”என அலறிக்கொண்டு கட்டிபிடுத்தனர். “நீ எங்கடா இங்க”  என்று தோளில் கை போட்டு பேசினான் திலக் “ஏன்டா என் வீட்டுக்கு வந்துட்டு என்னை என்ன இங்கன்னு கேக்கறே? நல்லா இருக்கியா ?” என்றான் ரத்தினம் “நல்ல இருக்கேன், நீ எப்டி இருக்கே”   “தோ பாரு ! எப்டி இருக்கேன்”  நடப்பது புரியாமல் அனைவரும் விழிக்கவும் ‘சாரி! சொல்ல மறந்துட்டேன்’ என அனைவரையும் அறிமுகம் செய்தான் திலக். ஆதித்யாவை சொல்லும் போது பத்மாவின் கணவர் என்று சொன்னான். “பத்மா இது யாருன்னு தெரியுதா?”என்று கேட்டான் திலக் “பத்மா, பத்மா, அல்லம்பட்டி பத்மாவா நீ?” என்றான் ரத்தினம் “உங்களுக்கு எப்டி தெரியும்” என வியப்பாக கேட்டாள் பத்மா வாசலில் நிறைய செருப்புக்களை பார்த்து உள்ளே வந்தார் தாத்தா. “என்ன ரத்தினம் யாரு இது?” " ‘ஃபிரண்ட்ஸ்பா’ நீங்க என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க ?" ‘பத்திரிக்கை முடிஞ்சு போச்சு’ என்று உள்ளே ஓர் அறைக்குள் சென்று எடுத்துவிட்டு வந்தார். “வாசுவை எங்க?” என்றான் ரத்தினம் “அவன் பைக்ல வாசல்ல இருக்கான்” என்று  வேகமாக வெளியே சென்றார். அனைவரிடமும் அது தான் ‘அப்பா’ என சைகையில் சொன்னான் ரத்தினம். “ஐயோ ! மறந்தே போயிட்டேன் எல்லாரும் நல்ல இருக்கீங்களா?”  என்று மீண்டும் உள்ளே வந்தவர் “நாளை மறுநாள் என் பேத்தி ரெண்டு பேருக்கும் நிச்சயம், அடுத்தவாரம் கல்யாணம் தவறாம கலந்துக்கனும்” என பத்திரிக்கையை ஆதித்யாவிடம் நீட்டினார். “அப்பா நீங்க வாங்குங்க” என்றதும் ஸ்ரீராமை நோக்கி "என்ன இவருக்கு தலைல?’’ என்றார். “அது சின்ன அடிபட்டிருச்சு” என்று வாங்கி கொண்டார் ஸ்ரீராம்.“இருங்க இன்னும் நாலு வீடு குடுத்துட்டு வரேன், காபி டீ குடுப்பா” என கிளம்பிவிட்டார் . லீலா,பவி,மித்ரா என யாரை கூப்பிடுவென்றே தெரியாமல் மூவரையும் அழைத்தார். “நீ போடி, டீ போட சொல்வார் .எத்தனை பேருக்கு நான் டீ போட” என்றாள் கடுப்புடன் பவி. “வறேன்பா” என்று மாடியில் இருந்து மித்ரா வரவும், அம்மாவிடம் தன் முட்டு கையினை அவர் தோளில் உரசி “அவ தான்”என கண்ணால் சமிக்கை செய்தான். ‘அப்பா’ என்று அருகில் வந்து நின்றவளிடம் “டீ போடுமா கெஸ்ட் வந்திருக்காங்க,இது என் பொண்ணு மித்ரா” என்றார். அப்போது தான் அனைவரின் முகமும் பார்த்து சிரிப்போடு வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தாள்.  இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு தான் கண்ட காட்சி நிஜம் தானா என திரும்பி பார்க்கையில் கடைசி ‘சோபாவில்’ அருண் அவளை பார்க்கதது போல் கீழ்உதட்டை கடித்து கொண்டே கீழே குனிந்து கொண்டான்  .  “ஆ” என வாயை பிளந்தவள் பேய் அறைந்தது போல் மேலே சென்றாள். “என்னடி உங்க அப்பா எதுக்கு கூப்ட்டார்?”  பவி பேசாமல் நின்ற மித்ராவை “உன்னைதான்டி கேக்றேன்” என்றாள் பவி கீழே அவர்களை பார்த்து மேலே வந்த லீலா “அது யாரு அருண் மாதிரி இருக்கு!” “அருணா ? அந்த மெட்றாஸ்காரணா?” என பரவசமாக கேட்டாள் பவி “ஆம , அவனே தான்”  மித்ரா “அவன் ஏன்டி இங்க வந்தான் ?” பவி “நேத்து சொன்னான் வீட்டுல வந்து பொண்ணு பேச போறேன்னு. நான் விளையாட்டுக்குனு நினைச்சேன்.” “வா ! வா ! அவனை பாக்கணும்” என்று ஆவலாக பவி கீழே சென்றாள். “தம்பி மகளுக்கும் , என் தங்கச்சிக்கும் கல்யாணம் அதான் யாரும் வீட்ல இல்ல” காதல் கதையையும் , அதற்கு ஒப்புகொள்ளாதா அப்பாவையும்,  பின்னர் அவர் சந்தித்த “ஹார்ட் அட்டாக்”கையும் பற்றி கலகலப்பாக  பேசிக் கொண்டு இருந்தான் ரத்தினம். அதே நேரம் கஸ்தூரியும், அனுபல்லவியும் உள்ளே நுழைய “டீ, போட சொன்னேன் என்னனு பாருங்க” என்றான். ‘இது ஃபிரண்ட்ஸ்’ என்று அறிமுகமும் படுத்தினான். “கஸ்தூரி இது யாருன்னு தெரியுதா?” “ஐ ! திலக் அண்ணே ! எம்புட்டு நாளாச்சு நல்ல இருக்கீங்களா” என குசலம் விசாரித்தவளை “அது யாரு சொல்லு?” என்றான் ரத்தினம். கொஞ்சம் யோசித்தவள் “பத்மா அக்கா!” என்றதும் “இது கஸ்தூரில்ல” என்று பத்மா இனம் கண்டு கொள்ளவும் கட்டி அணைத்துக்கொண்டார்கள் இருவரும். ஸ்ரீராம் லீலா தம்பதியர் காலில் விழுந்தாள் கஸ்தூரி. “பாண்டிய கல்யாணம் பண்ணி இருப்பேன்னு சொன்னாங்க” என கேட்டாள் பத்மா “சரியா போச்சு போங்க இவர் தான்க்கா பாண்டி. ஆள் வத்திட்டாருள்ள” “பாண்டி அண்ணனா?” இது என்றாள் ஆச்சரியமாக “எத்தனை பசங்க ?” - பத்மா “ஒரு பொண்ணு உங்களுக்குக்கா?”- கஸ்தூரி “ஒரு பையன், ஒரு பொண்ணுமா” என்று அவள் சொன்னவும் யாமிகா ஆதித்யாவை பார்த்தாள். “என்ன விஷயம்க்கா இவ்ளோ தூரம்” “உன் பொண்ணு பேரு தான் மித்ராவா?” “என்ன இவர் மறுபடியும் வந்துட்டார்?’ என்று ரத்தினம் கூறவும்”வண்டி பெட்ரோல் போட போவதாக சொல்லி  அமர்ந்தார் அப்பா. வந்த விஷயத்தை சொல்லிவிடலாம் என்று வாயை திறந்த ஸ்ரீராமிடம் , பேச்சை கவனிக்கும் பாண்டியின் அப்பாவை பார்த்துவிட்டு இதயத்தை  தொட்டு ‘லப்டப்’ என சைகை கொடுத்தாள் பத்மா  . ‘இன்னோரு நாள் வருகிறோம்’ என்று மித்ரா கொண்டு வந்த டீயை குடித்துவிட்டு நிச்சயம் முடியும் வரை மதுரையில் தங்கிவிட்டு செல்லலாம் என முடிவு செய்துவிட்டு சென்றனர். ‘’ரத்தினமணி பாண்டியன் யாருங்க?’ என்றான் வாசலில் வந்த போஸ்ட்மேன் ஒருவன். வழி அனுப்பும் போது “உனக்கு பொண்ணு குடுக்காம பாண்டி வேற யாருக்கு குடுக்க போறான்” என்று கடைசியாக பத்மாவிடம் பேசினான் திலக் அதன் பின் அவளோடு அவன் பேசுவதில்லை. ஏழு வருடம் கழித்து , சென்னையில், ஸ்ரீராம் தாத்தாவை மறைந்தபின் ,  அவர் போட்டோவை துடைத்து கொண்டு இருக்கிறாள் லீலா பாட்டி. மதுரையில், நடமாடும் நிலையில் இல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும் கணவணுக்கு பேசிக்கொண்டே விசிறி விடுகிறார் மித்ராவின் பாட்டி. திண்டுக்கல்லில், ஏதோ கல்யாண மண்டபத்தில் ஆட்டின் எலும்பை தட்டி உறுஞ்சிக்கொண்டு இருக்கிறார் ஆறுமுகம் (எ) மீசைக்காரர் . விருதுநகரில், இரண்டும் பெண் குழந்தை .  அடுத்தாவது ‘ஆண்வாரிசு வராதா!’ என்ற ஏக்கத்தில் பரிசோதனைக்கு சென்றுள்ளனர் குமரன் - லீலா. சிரித்து கொண்டே அவர்களை வெறுப்பேற்ற “ஏன் பெண் குழந்தை என்றாள் வேண்டாமோ” என்று பரிகாசம் செய்து கொண்டே நாசுக்காக உண்மையை சொன்னார் டாக்டர்.  சென்னையில் ஓர் சூப்பர்மார்க்கெட்டில், போலீஸ்காரன் மனைவி என்ற பட்டம் மட்டும் தான் அவளுக்கு செருக்கு. வினோ அடிக்கடி தாமதமாக வருவதும், பல பெண்ணோடு தொடர்பில் இருப்பதையும் கண்டும்  காட்டிக்கொள்ளாமல் இடுப்பில் பெண் குழந்தை சுமந்து எதையோ வாங்கி கொண்டு இருக்கிறாள் பவி.  மித்ரா வீட்டில்  ரத்தினமணிபாண்டியன் & வாசு இருவரும் நகை கடையில்  முன்னேற்றம் வர ,  பேக்கிங் வாட்டர் தொழில் சம்மந்தமாக யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலியாவில், கடைசி வரை அருணிடம் நெருக்கம் வேண்டாம் என்று மதுரையில் தங்கி இருக்கும் பொழுது பத்மா சொன்னதை ஏற்றுக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றுவிட்டார் ஆதித்யா. அங்கு ‘ஆர்க்கிட்டேட்’ படிக்கும் யாமிகா தமிழ்நாட்டு பையன் ஒருவனை காதலிக்கிறாள். மதுரையில் , " உங்களை பற்றியே எப்பொழுதும்  பெருமையாக பேசுகிறார், உங்கள் உறவில் தவறு இல்லைதான் , ஆனாலும் இனி என் கணவரோடு எந்த ஒரு பழக்கமும் வேண்டாமே " என்று தாலி பிச்சை கேட்ட பின் மதுரை அதிசயத்தில் கணவனோடும், பேத்தியோடும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் திலக் மற்றும் அவள் மனைவி. அல்லம்பட்டியில், ஆதித்யா கொடுத்த சொத்தில் ஒரு பைசா எடுக்காமல் ஒற்றை மகன் அருணை கரை ஈற்றிவிட்டு, திலக் பச்சை குத்திய அல்லம்பட்டி திருவிழா முடிந்த பின் , கோவில் மாடத்தில் சாய்ந்து எதையோ யோசித்து கொண்டு இருக்கிறாள் பத்மா. கேரளாவில், கல்யாணம் முடிந்த கையோடு கேரளா தனிநபர்களுக்கான கடற்கரைக்கு சென்றுள்ள அருண் கடற்கரை மணலில் அருத்ரா என எழுதி கொண்டு இருந்தான்.  பின்னால் இருந்து ஓடி வந்த மித்ரா அவன் மேல்  குதித்து இடுப்பில் ஏறி கால்களை அவன் கீழ்முதுகில் இறுக்கி கொண்டாள். அந்த நிலையிலேயே அவளை தன்னோடு சேர்த்து , இதழில் இதழ் வைத்து அலைகளுக்குள் மூழ்கினான்.   பொங்கி வந்த அலைகள் அருண் எழுதிய ‘அருத்ரா’ என்ற எழுத்தை பாதியாக அழித்துக்கொண்டு உள்ளே சென்றன.  இரவில் அருண் கனவில் வந்த தாத்தா  ‘இரட்டையர்கள் பிறப்பார்கள்’ என்று சொன்னார். - அஹமத் இப்ராஹிம் © FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.