[]     மரப்பாச்சி கவிதைகள்   - தி.தினேஷ்(எ)பண்பரசு  sadayappathinesh@gmail.com         அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : CCA    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.            மரப்பாச்சி  கவிதைகள்   []                                 இயற்பெயர் : தி.தினேஷ் (எ) இரமேஷ் பெயர் : தி. பண்பரசு பிறப்பு : 03.02.1997 பெற்றோர் : திருசங்கு - பாஞ்சாலை உடன்பிறந்தோர் : சுரேஷ், எழில்மதி, தேவி, சதீஷ்   கல்வி : இளங்கலை இலக்கியம் (தமிழ்) முகவரி : 423, புதுத்தெரு, இராஜேந்திரப்பட்டிணம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம். தமிழ்நாடு. மின்னஞ்சல் : sadayappathinesh@gmail.com    முதற்பதிப்பு   நூல் பெயர் : மரப்பாச்சி கவிதைகள்   ஆசிரியர் : தி.தினேஷ் (எ) இரமேஷ்   நன்றியோடு என்றும் மறவாத தோழர்கள் : 1. தோழர். தமிழ்புலவர் 2. தோழர். கருணாமூர்த்தி DME., 3. தோழர். சிந்தனைச்செல்வன் ITI., 4. தோழர். சிவமணிகண்டன் BE., 5. தோழர். ராஜ்குமார் DME., 6. தோழர். தமிழ்வாணன் 7. தோழர். அரவிந்தன் BE., 8. தோழர். தெய்வபுலவர் DME., 9. தோழர். சிவானந்தம் 10. தோழர். கிள்ளிவளவன் 11. தோழர். சின்னராசு DME., 12. தோழர். சஞ்சய்மாறன் DME., 13. தோழர். சதீஷ் 14. தோழர். அஜித் 15. தோழர். நிஷாந்த் BE., 16. தோழர். நடனசபாபதி DME.,   1. நன்றியோடு என்றும் மறவாதவர்கள்: 1. புவனேஷ்வரி BE., (கனிணி பொறியாளர்) 2. தோழியர். லட்சுமி பிரியா B.Com.,             வாசகர்களே : ஆண்டாண்டு காலமாய் கல்வியின் வாசனையற்ற குடியில் பிறந்து முதன் முதலாக பள்ளிச்செல்லும் வாய்ப்பினை பெற்ற எனக்கு கற்றலின் பயனையும், என்னையும் இந்த உலகில் கல்வி பெற்றோர் பட்டியலில் இணைத்துக்கொள்ள உதவிய எனது மேலான ஆசிரியர்கள் ....   1. திருமதி. எழில்மலர் (எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்).   1. திருமதி. அருள்மொழி (என்னை அரவணைத்த ஆசிரியர்).   1. திருமதி. சிவகாமிசுந்தரி (எனக்கு ஆளுமைகளை கற்றுத்தந்தஆசிரியர்).   1. திருமதி. சுதா (என்னை மனிதனாக்கிய ஆசிரியர்).   1. திருமதி. கவிதா (எனக்கு துணிவு கொடுத்தஆசிரியர்).   1. திருமதி. சுபாஷினி (என்னை கவிஞனாக்கிய ஆசிரியர்).   1. திரு. தெய்வநேசன் (எனக்கு வெளியுலகை அறிமுகம் செய்த ஆசிரியர்).   ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் பொற்பாதங்களுக்கு இந்த கவிதை நூலினை சமர்ப்பிக்கின்றேன்.   இவண் :             தி.தினேஷ் (எ) பண்பரசு பி.ஏ.                   என் கவிதைகள் : அன்புடையவர்களே, வணக்கம். என்னுடைய இந்த கவிதை நூல் மானுடம் மனம் திறக்கவே எழுதப்பட்டதாகும். ஆனால் மனிதன் மனம் திறக்கும் முன்னே இந்த மரப்பாச்சி மனம் திறந்துவிட்டது என்றே மனம் மகிழ்கிறேன்....   இவண் :             தி.தினேஷ் (எ) பண்பரசு பி.ஏ.                                                   உள்ளடக்கம் 1. மண் 8  2. தாய்மொழி 11  3. கடிதம் 14  4. விசாவுக்காக 17  5. அமுதத்தாய் 20  6. செப்டம்பர் - 5 23  7. மறக்க முடியாத அவள் 25  8. அணையட்டும் தீ 33  9. நண்பா 37  10. வாழ்க செம்மலரே 43  11. பாலியல் 45  12. அவளுக்கு பிறந்த நாள் 47  13. ஸ்டெர்லைட் 50  14. சமத்துவ பொங்கல் 53  15. வாழும் பெரியார் 56  16. வங்கப் புயல் 58            .               பொழுது முடிஞ்சாலும் விடிவெள்ளி விடிஞ்சாலும் கள்ளுக்கடை தானு கதியற்று நிற்கையில..... திரிஞ்சது போதுமென திருந்தித்தான் வாழ திருமணந்தான நான்  செஞ்சேன்   அய்யா, அதன் பிறகு; குடியை நிறுத்திப்புட்டேன் சீட்டாட்டம் மறந்துட்டேன் லாட்டரி பழக்கத்தையும் அறவே தொலைச்சுப்புட்டேன்   புத்தி பொறந்துடுச்சி” பொறுப்பு வந்துடுச்சி” பொட்டப்புள்ள பொறந்தாக்கா பொன்னு சேர்த்து வைக்கனும்னு பொத்தப் பானையில போட்டு வந்த பணத்தை வச்சு பொட்ட மண்ணு காட்டோரம் போக்கியந்தான் நான் புடிச்சேன்...   உழைச்சி ஒழப்பறிச்சி வேர்வ சொட்ட சொட்ட வெயில்ல விதை விதைச்சி அறுத்து எடுக்கும் முன்னே அறுத்துக்கிட்டு போனதென்ன ...?   பார்த்து பார்த்து நான் விதைச்சி சேர்த்துவச்சி நீர் தெளிச்சி பச்சை முளை கட்டுமுன்னே பட்டமரம் ஆனதென்ன... ?   ஒன்னை நம்பித்தானே ஓட்டுமேடுகாரன் கிட்ட ஒரு லட்சம் வாங்கிருக்கேன்....?   ஒன்னை சொல்லித்தானே பத்து பவுனு போடுறேன்னு பலிங்கமேடு மாப்பிள்ளையிடம் பக்குமாய் சொல்லியிருக்கிறேன்....   என்னடா சாமி என்.....வைத்தில் நீ அடிக்க...   பட்டம் படிச்சவுக பவுசு பெருத்தவுக பட்டணந்தான் வந்திருக்க....   கருகிய எம் பயிரின் காரணந்தான் நான்....அறிய கட்டவண்டி நான் பூட்டி காரைக்குடி போயி வாரேன்….   அய்யா, வணக்கமய்யா அரசு ஆபிசரே.... நீங்க சொன்னது தவறாம சொன்னபடி செஞ்சிருக்கேன்...   பட்டமும் தவறவில்ல... பாத்தியிலும் தப்புமில... நட்டதிலும் தவறில்ல... இனி நான் செய்ய என்ன சாமி ? கையில இருந்ததெல்லாம் இந்த மண்ணை நம்பி போட்டுப்புட்டேன்...   பொண்ண கரைசேர்க்க – ஒரு பொட்டுகாசு இல்ல சாமி... கரும்பு நான் போட கடன் நெறையா வாங்கிப்புட்டேன் கடைவீதி தெருமேல – என்ன கண்டபடி பேசுறாக...   மண்ணுல போட்டதெல்லாம் பொன்னான காலம் போச்சோ...? மண்ணுல நாம்போட்டு மண்ணாகப் போறேனோ...?   இறக்கம் இருந்தாக்க இழப்பீடு தாங்க சாமி கருணையிலாக்கா...   எங்க அஞ்சுபேர் உடலையும் அரசு ஆபிசரே.... அனாத பொணமுன்னு அடக்கந்தான் செஞ்சிடுங்க...   வாழவேண்டும் தமிழ் ! வளர வேண்டும் தமிழ் !   கடல் வற்றிப்போகும் காற்று நின்று போகும் சூரியன் குளிர்ந்து போகும் மொத்தத்திலும் வேறுபடும் இருப்பவையெல்லாம் மாறுபடும்...   மூத்தக்குடியின் பிறப்பு தமிழ் ... ! ஆதிமனிதனின் வளர்ப்பு தமிழ் ... ! உயிரோடு சேர்ந்த தமிழ் ... ! உடலோடு பிணைந்த தமிழ் ... ! அமுதம் கொண்டது தமிழ் ... ! ஆக்கம் கொண்டது தமிழ் ... !   புலமை கொண்டது தமிழ் ... ! புகழ்மை கொண்டது தமிழ் ... ! செம்மை கொண்டது தமிழ் ... ! செம்மொழி கொண்டது தமிழ் ... !   உலகம் பரவியது தமிழ் ... ! உறவைப் பெருக்கியது தமிழ் ... ! தேனினும் தெவிட்டியது தமிழ் ... ! செவிக்கு தெவிட்டாத தமிழ் ... !   உயர்வைக் கொண்டது தமிழ் ... ! உணர்வைக் கொண்டது தமிழ் ... ! பரவி கிடந்தது தமிழ் ... ! பண்பில் சிறந்தது தமிழ் ... !   நாகரீகம் தோன்றியது தமிழ் ... ! நாடுகளே அறிந்தது தமிழ் ... ! இயற்கை பேசியது தமிழ் ... ! இயற்கையே சுமந்தது தமிழ் ... ! ..8.. பனையில் உறங்கியது தமிழ் ... ! பானை கல்வெட்டு சொல்கின்றது தமிழ் ... ! சிந்தையில் சிறந்தது தமிழ் ... ! சிறப்பின் பெருந்தகை தமிழ் ... !   மூச்சில் கலந்த தமிழ் ... ! பேச்சில் சிறந்த தமிழ் ... ! இருக்கும் வரை தமிழ் ... ! இறக்கும் வரை தமிழ் ... !   செவ்வானத்தின் அபூர்வ ஒளி செந்தமிழ் ... !   பூவுலகில் ஒரே பரபரப்பு செய்தது” திடுதிடுப்பு இதழ் விரிப்பு தேன் சொட்டும் பரிதவிப்பு ரீங்கார ஒலிபரப்பு அத்தனையும் அரங்கேறியது அகத்தியன் அறிவுலகத்தில்...   வகுத்தான் வள்ளுவன் வாய்த்தான் பாண்டியன் காத்தான் எலீசன் இன்று செவிக்கு நல்விருந்து ...!     கரும்பு கசக்கின்றது காப்பியம் இனிக்கின்றது...! பதிக்க வேண்டும் தமிழ் ...! படைக்க வேண்டும் தமிழ் ...! தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு ...   செவ்வந்தி பூ... அழுக செந்துறை சேர்ந்தழுக செக்கச் செவந்தவளே உன்னைச் சேருவது எக்காலம்...   காவேரி கனகனக்க கல்பாறை நீர் சுரக்க காணாத பெண்ணவளே உன்னைக் காணுவது எக்காலம்...   கூரச்சேலை நா உடுத்தி குங்குமந்தான் வகிட்டிலிட்டு கூட்டிவொன்ன போகுமுன்னே கோபுரம் தான் சாஞ்சதென்ன...?   தங்கத்துல தாலி செஞ்சி சீர்வரிசை தாளத்தோட தாலிவொன்ன கட்டுமுன்னே தாரமாகப் போனதென்ன ?   பொன்னே பூ... மயிலே பூவரசு பூங்குயிலே - நீ போனது தெரியாம”   நான் போக்கத்து நிக்கையிலே   காணத்தான் நா... விரும்பி கடுதாசி போட்டேனே...   கடிதம் தான் கருகாச்சி காதல் தான் கனலாச்சி...   இதுயென்ன சோதனையோ ? யார் சொன்ன போதனையோ ?   என்ன மறந்துபுட்டா என்... வாழ்க்கை தொலைச்சுபுட்டேன்...   எனன நீ பிரிய காரணம் நா அறிய கண்ணில் பட்டதெல்லாம் காரணம் ? இது அதுவோ...   பொறம்போக்கு வீட்டுக்காரன்... பொத்தல் வீடு குடிசைக்காரன்...   அணிவதெல்லாம் கிழிஞ்ச ஆடை... கண்ணுறங்கிய இடமெல்லாம்” கண்ணத்தூர் கழிவு வாடை...   என்கதை தெரிந்சும் தான என் கைய நீ புடிச்ச பழகினதுமா நீ – மறந்து பாதியில மணம் முடிச்ச...   எள்ளு எண்ணெய்க்கு காயுது புலி ஏன் புல்லுக்கு பாயுது இப்படியே என் பொழப்பு நிதந்தெனமும் ஒன்னெனப்பு...   வர்ணிப்பையெல்லாம் எடுத்துக்கொண்டு – எனக்கு வலியை மட்டும் தந்தவளே...   கடைசியாய் நானெழுதும் கடைசி கடுதாசி...   என்னை நினைக்காத நிதந்தெனம் துடிக்காத....   கண்ணவுருட்டாதே கனவுகளில் உருகாத...   தட்டும் தான் என் நினைப்பு தாழ்ப்பாளை திறக்காதே...   திறந்தால் என்னோடு திரும்பி வந்துவிடுவாய்...   மார்பு துடிக்கின்றது சிறகுகள்... உடைந்தது மரம் உடைந்தது மனம்... அறுந்தது கூடு அலைபாயுது பாரு...   இருண்டது மேகம் இரைப்பையின் தாகம்... மருண்டது கண்கள் மரணத்தின் பாகம்...   கூட்டுக் குருவிக்குள் குண்டுகள் விழுந்ததா ? குருவி குஞ்சுக்கள் குழப்பங்கள் ஆனதா ?   பொறுமையில்லா புயல் கணக்கா கரண்டோடு காற்றிருக்க கனிகள் இல்லா காடு சிறக்க அழிந்துக் கொண்டே வருகிறதாம் – ஓர் அரியவகை மனித விலங்கு...   அழிந்து கொண்டே பறவை இனம் அதில் அழிந்து விட்டது குருவி இனம்...   மார்பு துடிக்கின்றது சிறகுகள்....   ஒத்த பசி தீர்க்க ஒருசேர சேர்த்துவச்சேன்.... பாவத்த அது மறந்து குருவியும் குறு உமியும் காத்தோட பறந்து போச்சே....   இதுதான் கண்ணுக்கெட்டிய தூரம் கடைசி உச்சி....   தங்க இடமில்லை... தண்ணீருக்கு குளமில்லை... வயிறு நெறைய ஒரு கொத்து நெல்லில்லை...   பட்ட மரத்தில் கூடவா பட்டபுழு மிஞ்சாது பச்சை இலையில் கூடவா பருக்க சோறு எஞ்சாது....   அமுத பொய்க்குருவி ஆத்தங்கர நொய்க்குருவி இங்கு மரம் தான் எங்கிருக்கு... மனம் தான் எங்கிருக்கு....   பாரஸ்ட்டு எல்லாம் இங்கே எஸ்டேட் ஆகிவிட்டது எஞ்சி இருந்ததெல்லாம்”-இங்கே மாளிகையில் மாடங்களாக மாறிவிட்டது…   இருக்கட்டும் இந்தியர்களே” இருங்கள்….   இன்று கிளம்புகிறோம் அகதிகளாக அயல் நாட்டிற்கு...   மரமில்லா வழியோட மார்பு துடிச்ச வலியோட விண்ணப்பத்தை பிடியுங்கள்....   காத்திருக்கிறோம் விசாவுக்காக....   கொதிக்கும் சூரியன் குளிரும் நிலா பரந்த வானம் பாசத்தின் ஞானம் மொத்தத்தின் உருவம் சுத்தத்தின் – தாய் ....   கருவிலே கனவு கால்பங்கே உணவு உதைக்கின்ற போதும் உதிராத சிரிப்பு வயிற்றில் இருக்கும் போதே வர்ணிக்கும் தாய்...   கொடூர மின்னல் கொந்தளிக்கும் நெருப்பு கொக்களிக்கும் இடியென அத்தனையும் அடிவயிற்றில் சுமக்கும் அடலேறு தாய்....   தூசுவிழ கண்ணில் துடித்து எழும் நெஞ்சு அணைத்து ஊதும் காற்றின் ஆழ்கடல் தாய்....   நடவண்டி நான் பழக நான்விழுந்தா நீ அழுக தத்தி நடந்ததை தந்தைக்குச் சொல்லும் தலையங்கம் தாய்.... முழங்காலிட்ட குதிரை தாவாரத்தில் தழுவிய உலா மடியில் சுமந்த மரப்பாச்சி மறக்க முடியாத பல்லக்கின் போர்படை தாய்....   வழகொழ என் பேச்சி வாயடைச்ச ஒம் மூச்சி கண்டவங்க கண்ணுபடுமுன்னு கன்னத்தில் மை பூசி மண்டி நான் துள்ளும் போது மாரில் அணைத்துக்கொள்ளும் ஆனந்தம் தாய்...   அழுகின்ற நினைவால அழுக நிறுத்தும் – ஒஞ்சேல தான் உறங்க தாலாட்டின் தனிப்பெருமை தாய்...   வியந்து போவீர் – இவர்களின் விருதுகளை காணும் பொழுது மழைக்கும் ஒதுங்காத மாண்பு கொண்ட தாய்களும் ஈன்றெடுக்கும் கணக்கில் இளங்கலை பட்டம்....   மருத்துவம் பயிலாத மழலை கொண்ட தாய்களும் முகம் பார்த்து மருத்துவம் செய்வதில் முதுகலைப் பட்டம்...   தாய் – கற்காலத்தின் கலியுகம் தாய் - அர்ப்பணிப்பின் அறிவகம்....   எதுவரை காற்றோ அதுவரை – உன் பாசம்....   எதுவரை நிலமோ அதுவரை – உன் தியாகம்....   ஆசிரியரின் பிறவி ஆச்சர்யமானது.... போதனை பிறவியின் பொக்கிசமானது....   ஆயிரம் பிள்ளைகளின் ஒவ்வொரு வருடத்தின் அம்மா என்னும் இரண்டாம் - தாய் ஆசான்...   மாணவனின் மனநிலை அறியும் உளவியலின் உச்சக்கட்டம் ஆசான்...   பாகுபாடு இல்லா பகுத்தறிவின் பயிற்சியின் பட்டறை ஆசான்....   அறிவின் அட்சய பாத்திரம் வைத்திருக்கும் இரண்டாம் யுகத்தின் மணிமேகலை ஆசான்   கண்டிப்பு தண்டிப்பு அரவணைப்பு அனைத்தின் அவதாரம் ஆசான்...   ஆயிரம் துயரங்கள் வாழ்வில் இருந்தாலும் அத்தனையும் மறந்து அக்கறை காட்டும் அறிவு உலகம் ஆசான்....   வயதானால் வாயிக்கு ஊட்டுவான் என்று ஊட்டி வளர்க்கும் தாய்க்கு மத்தியில்” உதவி பாராமல் உழைத்துக் கொடுக்கும் உன்னத – தாய் ஆசான்....   எப்போதும் சிந்தனை எந்நேரமும் போதனை ஆதாயத்திற்கு ஒன்றுமில்லை அத்தனையும் அறிவுக்காக அர்பணிக்கும் ஆசான்...   இரண்டாம் தாய்... கடவுளுக்கு – முன் முதலாம் – தாய்...   ஆசானை போற்றுவோம் அரும்பணி ஆற்றுவோம்.... உச்சி காயும் நிலவு நடுசாம இரவு ஊர் உறங்கும் பொழுது உனை தேடும் மனது....   கண் பேசும் கனவு காதல் கொள்ளும் நினைவு நீ – வரும் பொழுது நினைவுகள் மறக்கும் மனது....   மை வச்ச கண்ணழகி எட்டி வச்ச இடையழகி....   பொட்டு வச்ச பூவழகி பொத்தி வச்ச பேரழகி....   செஞ்சோலை உடலழகி செவ்வான நிறத்தழகி...   முத்தான முகத்தழகி செப்பான சிலையழகி....   சிங்கார சிரிப்பழகி பட்டான பல்லழகி....   கண்ணான கண்ணழகி கணையாழி காதழகி....   ஓத்திவச்ச உதட்டழகி கள்ளுபானை கழுத்தழகி....   அன்போடு எழுந்தவளே அழுகுலகில் ஆழ்ந்தவளே....   வீதியில் செல்கின்றேன் – உன் வீட்டைப் பார்தப்படியே – உன் விடைக்காக....   எங்கு சென்றானோ என் இதயம் திருடிய கள்வன்....   அவனை கானவே ஆயிரம் புள்ளியில் ஒரு பூக்கோலம்.....   அவனைக்காணவே’’ நூறு நடைகள் குழாய்க்கும் – என் வீட்டு குடிசைக்கும்....   அவனை காணவே திறந்து திறந்து நான் மூடிய – என் வீட்டு கதவுகள் .…   அவனை காணவே ஆயிரம் பார்வைகள் சன்னலின் மேல் தலைசாய்ந்த படியே...   கள்வனை காத்திருந்தும் காணாததால்...   விழித்தப்படியே வீதியை பார்க்கிறேன் அவனின் விரல் பிடிக்கும் பதிலோடு...   எதிரதிரே மோதிக்கொண்ட மோதல் கதிரெதிரே கர்வம் கொண்டது காதலாக ....   கையெழுத்தாகிவிட்டது காதல் வாணிபத்தில் இன்னென்ன ஒப்பந்தத்திற்கும்....   முத்த பரிமாற்றம் மூச்சு பரிமாற்றம்....   இவைகளே இவர்களின் பொருளாதார வளர்ச்சி....   கல்வெட்டு பதிக்கும் வேளையில் கால்பதித்துவிட்டான் காதலன்.....   ஆலமரம் அத்திமரம் வகுப்பறைபெஞ்சு வார்த்தைகள் சுமக்கும் நெஞ்சு...   இவைகள் எல்லாம் இவர்களின் காதல் கோட்டத்தின் பெயர் பலகை....   மோகம் வளர்க்கும் வேளையில் மும்பாரம் செய்து விட்டாள் காதலி....   தொடராத தூக்கம் தொடர்கின்ற கனவு...   காத்திருந்த கழுத்து கட்டியணைத்த தலையணை…   இவைகள் எல்லாம் இவர்களின் காதல் மயக்கத்தின் காட்சிகள்...   உடலில் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு அர்த்தமென்று.... காதலித்த சில நாட்களில் கற்றுக்கொண்ட காதல் மொழி....   சந்திக்கும் சாம்ராஜ்யம் கள்ளிக்காடும் களத்துமேடும் வயல் வரப்பும் வாய்க்கால் மேடும்....   ஒரு நாள் எங்களின் முதல் சந்திப்பில் தயக்கம் நடுக்கம் பதட்டம் – மூன்றும் ஒரே நேரத்தில் மூச்சில் கலந்த தருணம்...   இருந்த பொழுதும் நெருங்கி வந்தான்... இருந்த பொழுதும் உலகம் மறந்தேன்.....   அவன் கொடுத்த – முதல் உதட்டு முத்தத்தில்....   ஒவ்வொரு வயிற்றிலும் வெவ்வேறு பிறவி காதல் வயிற்றில் மட்டும் ஒற்றை பிறவி....   காதலால் உறவு மறந்தவர்கள் நாங்கள்...   தந்தை மறந்தோம் தாய் மறந்தோம்....   அண்ணன் மறந்தோம் அக்கா மறந்தோம்.....   தம்பி மறந்தோம் மங்கை மறந்தோம்.....   நாங்களும் இந்தவகையில் நன்றி மறந்தவர்கள்தான்....   நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக....   சேர்த்து வைத்த ஆலங்காடே... சந்திக்க வைத்த களத்து மேடே.... சேதி சொன்ன தென்றல் காற்றே....   போயிட்டு வருகின்றோம் வாழ்க்கை என்னும் வழிப்பாதையைத் தேடி.,…   எட்டு திசைகளிலும் எரிகிறது... தீட்டாமையின் தீப்பிழம்பு....   அழுகுரல் கேட்கிறது அலறல்கள் கேட்கிறது....   கேட்டும் எரிக்கின்றது” அடக்குமுறையாளர்களின் ஆதிக்கம்....   இருப்பினும் சகிப்பு தன்மையோடு ஒரு சமூகம்....   ஒருவன் கொள்ளை உழுகிறான்.... ஒருவன் குழிவெட்டுகின்றான்.....   ஒருவன் மாடுமேய்க்கிறான்.... ஒருவன் மலம் அள்ளுகிறான்...   காதல் போடும் மந்திரத்தை யார் அறிய முடியும்,,,? காதல் செய்யும் தந்திரத்தை யார் உடைக்க முடியும்….? ..28.. இருப்பினும் ஆதிக்கத்தின் எத்தனையோ ஆணவக்கொலை....   எத்தனை பேருடைய தந்தையின் தன்மானம் பிறந்த மகளை விதவை ஆக்குவதில் இருக்கின்றது....   தீட்டு எப்படி இருக்கும் ?   குடிக்கும் தண்ணீரில் தீட்டு… உடுத்தும் உடையில் தீட்டு… பார்த்தால் தீட்டு… தொட்டால் தீட்டு.... தீட்டு” எப்படி இருக்கும் ? இருப்பினும் கண்டு பிடியுங்கள் தீட்டு நான் சுவாசிக்கும் காற்றில் நீங்கள் சுவாசிக்காமல்....   பிறக்கும் போதே பின் தொடருகின்றது வகுப்பறையிலேயே வகுப்பு வாதம்....   இனவெறி மொழி வெறி சாதி வெறி கொழுந்து விட்டு எரிகின்றது… கூரை ஒலையிட்டு அழுகின்றது…   அழுக்குகளாய் மாறுகின்றது.... மனம்.... அழிந்து போகின்றது.... தேசம்....   சமத்துவம் கிடையாது.... சகோதரத்துவம் கிடையாது....   சுயாட்சி கிடையாது... சோசலிசம் கிடையாது... இதுதான் இந்தியாவின் பெருமை....   இந்த ஒரு யுகத்தோடு ஒழியட்டும் இந்த பூமி....   சமத்துவமும் சகோதரத்துவமும் புதுமையோடு பிறக்கட்டும் புதிய பூமி....   பகிர்ந்து கொடுப்பதில் படைதளபதி படைப்புலகின் சேனாதிபதி....   கட்டுக்கு அடங்கா நினைவுகள் கற்பனையில் மிதக்கின்றன நட்புலகின் நடைபாதைகளில்....   நினைக்கின்ற பொழுது முதிர்ந்த வயது முன்னுக்கு இழுக்கின்றது அவனின் முகபாவனைகள்....   நண்பா இதயம் கனக்கின்றது நினைத்தால்....   சுருண்டு விழுந்தேன் சுருக்கென்று அழுதேன்....   அழாதே அவ்வளவுதான் என்றான் கண் விழித்து பார்த்தேன்....   அவனின் கடைவாயிலில் இருந்தது என் காலில் தைத்த கருவேல முள்.....   நினைக்க நினைக்க நம் நெஞ்சூரும் அனுபவங்கள்.....   மூன்றாம் உலகப்போரில் சிதறிய ஒன்றில் நம் சந்திப்பும் ஒன்று”   நான் சீனாவில் நீ ஸ்ரீ லங்காவில்....   எழுகடல் கடந்தாலும் எத்தனை கண்டங்களில் தொலைந்தாலும்….   எட்டி பிடிக்கும் தூரத்திலும் குறைவாகத்தான் இருக்கின்றது நமது தொடர் கதையின் அனுபவங்கள்....   எனது முழங்காலில் ஓர் இந்திய வரைபடம்”   கோனார் கொள்ளையில் கோட்டிபுள் குத்தியதில் மருத்துவர்கள் வரைந்த முழங்காலின் ஓவியம் அது....   நட்பு என்பது உலக ரகசியம்” அர்ப்பணிப்பில் அது – உலக அதிசயம்....   அரிசி ஒரு வீட்டில் அடுப்பு ஒரு வீட்டில் பருப்பு ஒரு வீட்டில் பாத்திரம் ஒரு வீட்டில்   ஆக்கிய சோறு உடைந்த குச்சு அம்மா அடித்த அடி   சிவந்த உடம்பு”   இன்னும் சிந்தையில் தோன்றுகின்றது....   விசித்திரமானது நட்புலகு அறிமுகம் இல்லாதவர்களுக்கு முகவரி கொடுக்கும்....   ஆதரவு இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்....   மாவோயிஸ்ட்டுகளை தேடும் முன்” கையில் தும்பைச் செடியுடன் முடிவில்லா தேடல்....   விழுந்து விழுந்து ஒட்டம்” ஒருசிலை இடங்களில் கிழிச்சல்....   கட்டி புரண்டோம் நானும் அவனும்...   ஆனாலும்” அகப்பட்டதா ? அந்த சிறப்பு நிற வண்ணத்துப்பூச்சி…..   இவன் இன்புற்றால் இவனும் இன்புறுவான் இவன் துன்புற்றால் இவனும் துன்புறுவான் இதுதான் நட்பின் இலக்கணம்...   இது யாரும் உருவாக்கியதில்லை உலகம் தோன்றிய முன்பே உருவான ஒன்றில் இதுவும் ஒன்று....   சமத்துவத்தின் சோசலிசம் நட்பு...   நட்பு மொழி பார்ப்பதில்லை... நட்பு இனம் பார்ப்பதில்லை...   நட்பு சாதி பார்ப்பதில்லை இதுதான் நட்பின் நிரந்தர அடையாளம்.....   நம் பெருமை பேசுகின்றேன் உனது கல்லறையில் – எனது கண்ணீரோடு ....   காதலித்ததால் கவிஞர் ஆனேன் காதல் பயணங்களில் கண்ணீர் ஆனேன்...   சோகமே என் இதயத்திற்கு சொந்தமானது...   இன்பங்களோ என் இதயத்திற்கு இடைவெளியானது...   அவள் உணர்வுகளெல்லாம் என் உடல் கிழித்தது...   கருவறையிலும் சுமந்த தாயும் காதல் நிழலில் கரைந்து போனது...   தாய்க்கு தருதலை ஆனேன்” காதலிக்கு கருவறை ஆனேன்…   உயிராய் இருந்தும் உதறிப்போனாள்” உயிர் இல்லாத ரோசாபோல உதிர்ந்தே போனேன்… அன்றாடம் சொன்னேன் காதலை அழுத்தமாக”” சொல்லிவிட்டாள் இல்லையென்று   முறையிட்டுப் பார்த்தேன் முறையில்லையென்றால்” கண்ணீர்விட்டு அழுதேன் கதியில்லை என்றாள்…   வாழ்க செம்மலரே வாழ்க.... எங்கிருந்தாலும் – நீ வளமோடு வாழ்க....       பவுசு பெருத்தவர்களுக்கு – பரவும் பாலியலின் தொற்று நோய்....   இது இயற்கையில் தோன்றவில்லை” இப்போதுதான் – பரவுகின்றது இந்தியாவின் புதுநோய்.....   இது அறுபதை அடைந்தவர்களுக்கு   ஆசையை தருகின்றதாம்” ஆறுவயது சிறுமியர்களுக்கும் ஆபாசத்தை தருகின்றதாம்”   பணம் என்ன பெருத்து விட்டால் குணம் என்ன கெட்டுவிடுமா ?   மானம் என்ன இறந்துவிட்டால்” மனித – ஞானம் சொட்டுவிடுமா ? குப்பையானது குணம்… பாலியலானது பணம்…   இந்த அந்தரங்க அரங்கங்கள் எங்கேங்கே அரங்கேறுகின்றது…   சினிமா திரையரங்கம் இடம்பெயரும் பேருந்து” திடம்கத்தும் ரெயில்பெட்டி”     நடந்தேறும் இடங்களிலெல்லாம் நடமாடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் ஞானம் கெட்டவர்களை – இன்னும் ஏன் நடமாட விடுகின்றனர் ?   யாருக்காகவோ நடக்கின்றதுயென்று இழையில் நழுவவிடாதீர்....   நாளை நமக்கும் நடந்தேறும் – என்று அந்த நாய்களை விட்டுவிடாதீர்…   அப்போதுதான்” காமத்திமிறர்களின் முகம் கிழியும்… பச்சளம் குழந்தைகளின் ஆபாசத்தின் நிலை ஒழியும்....           மங்காத மாலையிலே மனம் வீசும் சோலையிலே…   தீண்டாத தீ நிலவாய் திசம்பரில் பிறந்தவளே…   நந்தவன கரையினிலே நங்கூற இதழினிலே…   சிங்கார சிறகொலியால் சிற்பிக்குள் வெடித்தவளே…   அல்லியோ ஏனோ ? மனம் விரிக்கின்றது நல்லியோ ஏனோ ? மனம் விரும்புகின்றது…   எட்டாத எழில் நிலவின் தொட்டாடும் ரசிகன் நான்...   புத்தாடை போத்த ஆசை... பூங்கொத்து கொடுக்க ஆசை...   இருந்தாலும்” இவ்வுலகில்” ஊரும் தடுக்கின்றது உறவும் வெறுக்கின்றது   பாசம் வைத்த பைங்கிளியே இருந்தாலும் – நீ விழி விரித்து விண்ணைப்பார்…   அந்த பால் நிலவே – உனக்கு நான் வாங்கி வந்த – பிறந்த நாள் பரிசல்லவா ....   புல்வெளியின் பனிரகமே” புன்னகையின் பூ ரதமே”   கார்த்திகையின் சாரனிலே கசையும் பனித்துளியே…   இந்த வாசம் சுமக்கும் தென்றலின் வழியே” வாழ்த்து அனுப்புகின்றேன்.   உனக்கு பிறந்த நாள் வாழ்த்து .…                                                             எத்தனை உயிர் போகுமோ – இது எங்கப்போயி முடியுமோ…   துயரத்தோடு வாழ்வியலேயே – தினமும் தூத்துக்குடியிலே வாழுறமே…   தூங்கக்கூட முடியாம- நோயால் தூக்குப்போட்டு சாகுறமே…   எத்தனை உயிர் போகுமோ – இது எங்கப்போய் முடியுமோ…   மரங்களும் – இங்கு மறைந்து போச்சி மண்ணுயிரும் – இங்கு பொதைஞ்சி போச்சி…   நதிகளும் – இங்கு நஞ்சுகளாச்சி ஊற்றுகளும் – இங்கு உள்ளேப் போச்சி…   எல்லாமே - இந்த வேதாந்தால எதுக்கு – இந்த ஸ்டெர்லைட் ஆலை....   நாள் முழுக்க போராட்டம்” அண்ணாடம் ஆர்ப்பாட்டம்” – இந்த ஆலையை மூடச்சொல்லி…   நொடி பொழுதும் சதியாட்டம்” – அணுதினமும் காக்கிச்சட்டையின் – அடக்குமுறையின் வெறியாட்டம்” – இந்த ஆலையை திறக்கச்சொல்லி…   நீ நினைக்கும் – பாலைவனம் இங்கு நிரந்தரம் ஆகாது....   அதற்கு” நீ அமைத்த உருக்கு ஆலை உறுதியாக நிலைக்காது....   அடிவயிற்றில் அடிக்காதே அணுதினமும் குத்தாதே…   திரும்பவும் துப்பாக்கி முனைகளை காட்டி எங்களைத் தூக்கியெறிய நினைக்காதே …   ஆதித்தமிழன் நாங்கள் ஆத்திரம் கொண்டால் அணுகுண்டுகளாக மாறிடுவோம்” அதை நீங்கள் மறக்காதே…   மூடிவிடு ஸ்டெர்லைட்டை…. வாழவிடு எங்கள் தமிழ்நாட்டை….       14. சமத்துவ பொங்கல்   தமிழரையே - இணைக்கும் ஒற்றை பெருவிழா… சமத்துவத்தையே – படைக்கும் தைப்பொங்கல் திருவிழா…   ஆதியிலே தோன்றிய – எங்கள் அர்த்தமுள்ள திருநாடு…   அத்தனையும் பெருமை கொண்டது எங்கள் வளநாடு…   விதைத்த விதையே அறுத்தெடுக்கும் மகிழ்ச்சிக்கு” இன்நாளில் – நாங்கள் மகுடம் – சூடுவோம்...   எங்களை காத்த இயற்கைக்கும்” உழுது உழைத்த மாட்டுக்கும்” இன்நாளில் – நாங்கள் நன்றி பாடுவோம்...   கண்ணிப் பெண்ணவள் கையாள்வைத்த பொங்கல் அழகை”   கண்டு ரசிக்காமல் கண்களுக்கு அழகேது”   அவள் அணுசரிக்கும் அன்புக்கும்” உபசரிக்கும் விருந்துக்கும்”   உதடு ருசிக்காமல் தித்திக்காத மொழியேது...   பச்சை மண்ணு பானை வச்சி – அவள் பாலும் சோறும் பொங்கல் வச்சி...   கருங்கரும்பை பக்கம் வச்சி – அவள் கருப்பட்டியும் சேத்துவச்சி – நாங்கள் எல்லோரும் பாடும் பொங்கல்”   எதையும் மறந்து நாங்கள் – கொண்டாடும் சமத்துவப் பொங்கல்”   அதைப் – பத்தி மறந்ததில்லை – எங்கள் தைப்பொங்கல் திருநாளை…   எந்த – வகையில் முரண்பாடு – இருந்தாலும் சத்தியம் மறந்ததில்லை – எங்கள் சமத்துவப் பொங்கல் பெருநாளை…   தமிழுக்கு தகுதியுடைய தனிப்பெரும் திருநாளே”   தமிழனுடைய பெருமைச் சொல்லும் தைப்பொங்கல் பெருநாளே”   தித்திக்கும் பாருங்கள் தைப்பொங்கல் தமிழ்நாடே…   திசைநாளும் பரவட்டும் –நம் தமிழர்களின் பண்பாடே…     ஈரோட்டில் பிறந்தவரே - எங்கள் இழிவுகளை துடைத்தவரே…   கருஞ்சட்டை அணிந்தவரே – மூடத்தன காவிகளை கிழித்தவரே…   பகுத்தறிவுகளை படைத்தவரே – சமூக படைத்திறளை திட்டியவரே...   துறவிகளை துரத்தியவரே – இன துரோகிகளை விரட்டியவரே....   பெண்ணுரிமை பெற்றவரே – எங்களின் வாழ்வுரிமை மீட்டவரே...   மூர்க்கமாய் எழுந்தவரே – மூட நம்பிக்கை நசுக்கியவரே...   தென்னை மரம் சாய்த்தவரே – தென்னகத்தை தீபிடிக்க வைத்தவரே...   கோத்திரம் அறுத்தவரே – எங்களை கோவிலுக்கு அழைத்தவரே... சுயநலம் மறந்தவரே – எங்களுக்கு சுயமரியாதை தந்தவரே...   விதவை சடங்கை வெறுத்தவரே – பெண்ணின் விடுதலைக்கு உழைத்தவரே...   சாதியை எதிர்த்தவரே – இந்து சாஸ்திரத்தை அறுத்தவரே...   உலக புகழின் பெரியவரே – உன்னத தலைவரே நம் பெரியாரே...   இன்றுவரை – உன் கொள்கையில் கொள்கைகொண்டு வாழ்கின்றோம்....   நீ பிரிந்துசென்ற இந்நாளில் பெரும் துயரம் அடைகின்றோம்...   ஒழிகவே” பார்ப்பன புராணம்... வளர்கவே” பகுத்தறிவின் மெய்ஞானம்....   ஊரழிjத்த புயலின் வேரருத்த – நீதி மனம் நொந்த வலியில் விலைபேசும் – வீதி...   எல்லாம் அழிந்தும்” எதற்கு உங்கள் – நிதி ஆதரவு” இல்லா – கதி அணுதாபம் பார்க்காத – நதி...   விடியவிடிய வீசிப்போச்சே” விடிஞ்சிப் பார்த்தா ஏங்கரை வீழ்ந்துப்போச்சே…   பரிக்கவிருந்த தென்னை மரம் படுத்துப்போச்சே” அறுக்கயிருந்த நெல்லுப்பயிறும் மூழ்கிப்போச்சே…   கருணை கொஞ்சம் இல்லையா ? கஜாப்புயலே”   கண்ணீர்விட்டு அழுகுறோமே வங்க புயலே”   நிம்மதியை இழந்தும் நிற்ககூட வீடு இல்லை... எல்லாத்தையும் இழந்தும் எங்களுக்கு நீதியில்லை... ..51.. வங்கப்புயலே” அடுத்தமுறை வருகின்ற பொழுது” எங்களை அடித்து நொருக்காமல் அடித்துக்கொன்றுவிடு...     தி.ரமேஷ் (எ) பண்பரசு இராஜேந்திரப்பட்டிணம்.     மீண்டும் வேறொரு படைப்புகளுடன்          சந்திக்கின்றேன்…               ...நன்றி... - தி. தினேஷ் (எ) ரமேஷ் பி.ஏ.,