[] 1. Cover 2. Table of contents மதரஸா பட்டினம் மதரஸா பட்டினம்   தாழை மதியவன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - மனோஜ் - manojopenworks@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/madharasapattinam மதரஸா பட்டினம் “மதரஸாபட்டினம்‌” நான்கு நூற்றாண்டுகளுக்குள்‌ சுருக்கப்பட்ட சென்னை மாநகரின்‌ வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்‌ நீள்கிறது. அந்த நீட்சியை ஆதாரங்களுடன்‌ ஆய்வு செய்கிறது இந்நூல்‌ மின்னூல் வெளியீடு : Kaniyam Foundation உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம் Author Correspondence, Scan, Ocr, Proof Reading & Acquisition of Creations: Anwar gnuanwar@gmail.com Cover Image: Manoj manojopenworks@gmail.com அச்சு பதிப்புரை சென்னை விருகம்பாக்கம்‌ பகுதியில்‌ உள்ள "அபுசாலி தெரு‘வின்‌ பெயர்‌ ’அப்புசாமி தெரு’ என பெயர்‌ மாற்றம்‌ செய்யப்படும்‌ அபாயம்‌ இருப்பதாக விடியல்‌ வாசகர்‌ ஒருவர்‌ சில ஆண்டுகளுக்கு முன்‌ அச்சம்‌ தெரிவித்திருந்தார்‌. **‘அபுசாலி** தெரு’ என்பது “ப்‌’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டு ‘அப்புசாலி தெரு’ என மாற்றப்பட்டு, நாளடைவில்‌”லி’ என்ற எழுத்துக்குப்‌ பதிலாக "அப்புசாமி தெரு’ என கால ஓட்டத்தில்‌ மாற்றம்‌ பெறும்‌ என தான்‌ அஞ்சுவதாக விடியல்‌ அலுவலகத்துக்கு அவர்‌ எழுதியிருந்த கடிதத்தில்‌ குறிப்பிட்டிருந்தார்‌. அந்த வாசகரின்‌ அச்சத்தில்‌ உண்மை இல்லாமலில்லை. சென்னை பரங்கிமலையை, பிருங்கி மலை என இந்து முன்னணி சொந்தம்‌ கொண்டாடுவதை பார்த்தால்‌ யாருக்கும்‌ இந்தச்‌ சந்தேகம்‌ எழவே செய்யும்‌. நாம்‌ ‘அபுசாலி தெரு’ என்றே இப்போதும்‌ தொடருவதை உறுதிப்படுத்தினோம்‌. “ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும்‌ என்றால்‌, முதலில்‌ அதன்‌ மொழியை அழிக்க வேண்டும்‌. பின்பு, அந்த இனத்தின்‌ வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்‌. மூன்றாவது, அவர்களை இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்‌. நான்காவது, அவர்கள்‌ நினைவுகளை அழித்து ஒழிக்க வேண்டும்‌.” - ஜாக்‌ லண்டன்‌ இந்திய முஸ்லிம்களின்‌ வரலாற்றை தடம்‌ தெரியாமல்‌ அழிக்கத்‌ துடிக்கும்‌ ஃபாசிஸ்டுகள்‌, இப்படி சிற்சில இடங்களில்‌ ஒட்டிக்‌கொண்டிருக்கும்‌ நினைவுகளையும்‌ விட்டுவைக்க விரும்பவில்லை. அடையாளமாக இருக்கக்‌ கூடிய ஒரு சில தடயங்களையும்‌ அழிப்பதால்‌, இந்த தேசத்தின்‌ கட்டமைப்பில்‌ முஸ்லிம்‌ என்ற ஒரு சமூகத்தின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என்பதைக்‌ கூட கணக்கில்‌ கொள்ள புதிய தலைமுறை தவறி விடுகிறது. இதனை சென்னை மாநகரின்‌ 375-ம்‌ ஆண்டு கொண்டாட்‌டத்தின்‌ போது காண முடிந்தது. சென்னையைப்‌ பற்றி பக்கம்‌ பக்கமாக எழுதியவர்களெல்லாம்‌, இந்த நகரின்‌ உருவாக்கத்தில்‌ முஸ்லிம்களின்‌ பங்களிப்பையும்‌, இந்த நகரின்‌ அடையாளமாக முஸ்லிம்கள்‌ விட்டுச்‌ சென்றுள்ள கலைப்‌ பொக்கிஷங்களையும்‌ நினைவு கூற தவறிவிட்டனர்‌. சிறப்பிதழ்களை வெளியிட்டவர்களும்‌ இதே போக்கை கையாண்டனர்‌. சென்னை வரலாற்றை நினைவுகூரும்‌ வகையில்‌ கடந்த அக்டோபர்‌ 2014-ல்‌ புதிய விடியலில்‌ தாழை மதியவனின்‌, ‘மதராஸ்‌ மனதே…’ என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தோம்‌. அது வாசகர்களிடம்‌ நல்ல வரவேற்பை பெற்றது. அதனை விரிவாக எழுதி நூலுருவில்‌ ஆவணப்படுத்த வேண்டும்‌ என்ற ஆசிரியர்‌ குழுவின்‌ விருப்பத்தை அவரிடம்‌ தெரிவித்த போது, கடும்‌ சிரத்தை எடுத்து இந்த நூலை எழுதிக்‌ கொடுத்தார்‌. சென்னை மாநகரின்‌ தொன்மையான வரலாற்றை பதிவு செய்யும்‌ முயற்சியின்‌ முதல்‌ மைல்கல்லாக இந்த நூலைக்‌ கருதலாம்‌. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின்‌ ஒவ்வொரு பகுதி யிலும்‌ முஸ்லிம்களின்‌ அடையாளங்கள்‌ ஏராளமாக உள்ளன. அப்பகுதிவாசிகள்‌ வரலாற்று உணர்வுடன்‌ அவற்றை ஆவணப்‌ படுத்த இந்த நூல்‌உத்வேகம்‌ கொடுக்கும்‌ என நம்புகிறோம்‌. எல்லாப்புகழும்‌ அல்லாஹ்வுக்கே உரியது. குறைகள்‌ எங்களைச்‌ சாரும்‌, நிறைகள்‌ எல்லாம்‌ நிறைந்த இறைவனைச்‌ சாரும்‌. இவண் மு. முஹம்மது இஸ்மாயீல் காப்பாளர் இலக்கியச்சோலை சாரிடபிள்‌ டிரஸ்ட் அணிந்துரை இந்திய வரலாற்றுப்‌ போக்கின மாற்றிக்‌ காட்டிய வரலாற்று நிகழ்வுகள்‌ பலவற்றிற்கு சொந்தமான பட்டினம்‌ இது. ஐரோப்‌பியரின்‌ வரலாற்றுக்‌ குறிப்புகளும்‌, ஆற்காடு நவாபுகளின்‌ ஆவணங்களும்‌ இதற்கான தரவுகளை நமக்கு அளிக்கின்றன. இவற்றை அசை போட்ட சிலர்‌ தாங்கள்‌ புரிந்து கொண்டவாறு இப்பட்டினத்‌தைப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டியுள்ளனர்‌. இதில்‌ ஐரோப்பியர்‌ முதல்‌ இன்று வரையிலான நமது ஊர்‌ எழுத்தளர்களும்‌ அடங்குவர்‌. இந்த வரிசையில்‌ ""மதரஸாபட்டினம்‌’’ என்ற இந்த நூலினை தாழைமதியவன்‌ நமக்கு அளித்திருக்கிறார்‌. சரளமான தமிழ் நடையில்‌ எழுதப்பட்டுள்ள இந்த நூல்‌, பட்டினத்தைப்‌ பற்றிய அனைத்து தரப்பு செய்திகளையும்‌ தரும்‌ எனத்‌ தோன்றிய போதிலும்‌ இதில்‌ முஸ்லிம்கள்‌, அதுவும்‌ குறிப்பாக தமிழகத்தின்‌ வரலாற்றுடன்‌ தொடர்பு கொண்ட முஸ்லிம்களைக்‌ குறித்த செய்திகளைத்‌ தொகுத்து அளித்துள்ளது. இதில்‌,அரேபியரின்‌ தொடர்பு முதல்‌ பல்வேறு காலங்களில்‌ பட்டினத்தைத்‌ தேடி வந்த நமது ஊர்க்காரர்கள்‌, இங்கு வாழ்ந்த வணிகர்கள்‌, தொழிலாளர்கள்‌, அரசியல்‌ வாதிகள்‌,சமுதாயத்‌ தலைவர்கள்‌ என அனைவரைப்‌ பற்றியும்‌ எழுதப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. மதரஸாபட்டினம்‌, சென்னப்பட்டினம்‌, மதராஸ்‌, மெட்ராஸ்‌ (இன்றைய) சென்னை என அழைக்கப்படும்‌ இப்பட்டினத்தின்‌ வரலாறு கி.பி. 15ஆம்‌ நூற்றாண்டிலிருந்து வெளிச்சம்‌ பெறுகிறது. இங்கு வணிகம்‌ செய்ய வந்த போர்ச்சுக்கீசியர்‌ தொடங்கி டச்சுக்காரர்‌, ஆங்கிலேயர்‌, பிரஞ்சியர்‌, டேனிஷார்‌ என ஐரோப்பிய வணிக நிறுவனங்கள்‌ இந்தப்பட்டினத்தைப்‌ பற்றி கூறும்‌ செய்திகள்‌ வண்டி வண்டியாய்‌!!! (மதரஸா - அரபி கல்வி சாலை இயங்கியதைக்‌ கொண்டு இப்பெயர்‌ என்பது ஒரு செய்தி) தொடர்ந்து வந்த ஆற்காடு நவாபுகளின்‌ கால ஆவணங்கள்‌, அவர்கள்‌ காலத்தில்‌ அவர்கள்‌ உருவாக்கிய மதரஸாபட்டினத்தின்‌ பன்முகத்‌ தோற்‌றங்களை, பெயர்களை இதற்கான காரணங்களைக்‌ கூறுகின்றன. இந்த ஆவணங்களில்‌ காணப்படும்‌ செய்திகள்‌ (பார்சி, அரபி மொழியில்‌) பெரும்பாலானவை படிக்கப்படாமலே உள்ளன. "மதரஸாபட்டினம்‌’’ (Mederasspatnam) என்னும்‌ பெயர்‌ முதன்‌ முதலில்‌ 1690ல்‌ தான்‌ ஆங்கிலேயரின்‌ குறிப்பில்‌ தென்படுகிறது. இந்தப்‌ பெயர்க்‌ காரணம்‌ குறித்து மாறுபட்ட கருத்துக்களும்‌ உண்டு. பொதுவாக தமிழக முஸ்லிம்கள்‌ குறித்து சான்றாவணங்களின்‌ அடிப்படையிலும்‌, வரலாற்று வரைவியல்‌ ரீதியாகவும்‌ வரலாற்று நூல்கள்‌ எழுதப்படவில்லை. அங்கொன்றும்‌ இங்கொன்றுமாக சில கட்டுரைகள்‌, சில புத்தகங்கள்‌. இவற்றில்‌ வரலாற்று ஆவணச்‌ செய்திகளை விட நாட்டு வழக்காறுகளும்‌, செவிவழிச்‌ செய்திகளும்‌ முதன்மை பெறுவதைக்‌ காணலாம்‌. எனினும்‌ ஆதாரப்பூர்‌வமாக நமது வரலாற்றை எழுதும்‌ முயற்சியும்‌ தொடங்கப்‌ பெற்றுள்ளது என்பது கூடுதல்‌ செய்தி. சரியான தருணத்தில்‌ நமது வரலாறு சரியாக எழுதப்படாவிட்டால்‌ எதிர்காலத்தில்‌ அவை கற்பனைக்‌ கதைகளாகவே மிளிரும்‌. மதரஸாபட்டினம்‌ என்ற இந்த நூலை எழுதுவதற்கு, இதற்கு முன்‌ இப்பட்டினத்தைக்‌ குறித்து வெளிவந்துள்ள நூல்கள்‌ பலவும்‌ தாழை மதியவனின் பார்வைக்கு வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றில்‌ கண்ட செய்திகளையெல்லாம்‌ அவர்‌ அலசி ஆராய்ந்துள்ள தோடு, களத்திலும்‌ இறங்கியுள்ளார்‌. காசி வீரண்‌ணா கட்டிய பள்ளிவாசல்‌ எது எனக்‌ கண்டுபிடிக்க சென்னை வீதிகளில்‌ வலம்‌ வந்திருக்கிறார்‌. முடிவாக அந்தப்‌ பள்ளிவாசல்‌ மைலாப்பூர்‌, அருண்டேல்‌ தெருவிலிருப்பதாகக்‌ கூறுகிறார்‌. (பக்‌கம்‌: 75-85). ஆனால்‌, வீரண்ணாவின்‌ சமகாலத்தில்‌ எழுதப்பட்ட ஆங்கிலேயரின்‌ குறிப்பு, காசி வீரண்ணா கட்டிய பள்ளிவாசல்‌ Black Townல்‌ (இன்றைய ஜார்ஜ்‌ டவுன்‌) மூர்‌ தெருவில்‌, பெருமாள்‌ கோவிலுக்கு கிழக்கே, கடற்கரைக்கு அருகில்‌ உள்ளது எனக்‌ கண்‌டுள்ளதும்‌ கவனிக்கத்தக்கதாகும்‌. (Tamilnadu Archives - Public Con- sultation vol xxi&3rd july 1694). இப்போது அந்தப்‌ பள்ளிவாசல்‌ அங்கு இல்லை போலும்‌! இந்த நூலில்‌ இடம்‌ பெறும்‌ இன்னும்‌ சில செய்திகளுக்குக்‌ கூட வரலாற்றுத்‌ தரவுகளைத்‌ தேட வேண்டியுள்ளது. ‘’கி.பி. 1310ல்‌ மாலிக்காபூர்‌ ராமேஸ்வரம்‌ வரை சென்று கிழக்குக்‌ கடற்கரை வழியாக திரும்பிச்‌ சென்றார்‌’’ எனக்‌ குறிப்பிடுகிறார்‌ ஆசிரியர்‌ (பக்கம்‌ 96). முஸ்லிம்களின்‌ வரலாற்றில்‌ கருப்பு பெயிண்ட்‌ அடிக்க காவிக்காரர்கள்‌ செய்து வந்து கொண்டிருக்கும்‌ மாயாஜாலம்‌ இது. தமிழகத்தில்‌ முஸ்லிம்களின்‌ வரலாறு இன்றும்‌ தெளிவாக்கப்‌ படவில்லை என்பதற்கு மாலிக்காபூர்‌ படையெடுப்பு குறித்து எழுதப்பட்டு வரும்‌ செய்திகள்‌ நல்ல எடுத்துக்காட்டு. மாலிக்கா பூரின்‌ படையெடுப்பு குறித்து கூறும்‌ ""கஸைனுல்‌ புஸ்த்‌ (௮) தாரிக்கி அலாய்‌’’ என்னும்‌ மூல நூலில்‌ இவ்வாறெல்லாம்‌ எழுதப்‌ படவில்லை. கர்நாடகா மாநிலப்‌ பகுதிக்குள்‌ நுழைந்த மாலிக்காபூர்‌ திருச்சி வழியாக மதுரை சென்று, அங்கிருந்தே மீண்டும்‌ டெல்லி திரும்பியதாக வரலாறு. மாலிக்காபூர்‌ தமிழகத்து எல்லையில்‌ நுழைந்தது முதல்‌ திரும்பியது வரைக்கான மொத்த நாட்கள்‌ 27 மட்டுமே. நம்மை பெருமைப்படுத்திக்‌ கொள்வதற்காக, நமது எழுத்தில்‌ நம்மையும்‌ அறியாமல்‌ தவழும்‌ பிழைகள்‌ போலும்‌ இதுபோன்ற செய்திகள்‌. இதேப்போன்று, வள்ளல்‌ சீதக்காதி குறித்த செய்திகள்‌ (பக்கம்‌ 161 - 162) அனைத்தும்‌ மேலாய்வுக்குரியவை. வள்ளல்‌ குறித்த நாட்டு வழக்காறுகளே ஏராளம்‌. டச்சுக்காரர்கள்‌ மற்றும்‌ ஆங்கிலேயரின்‌ பதிவேடுகள்‌ இவரைக்‌ குறித்து நிறைய செய்திகளைத்‌ தருகின்றன. நமது நாட்டு வரலாற்றுக்‌ குறிப்புகள்‌ மிக மிகக்‌ குறைவு. கீழக்கரை பெரிய தம்பி மரைக்காயர்‌ என்றும்‌ முன்னும்‌ பின்னும்‌, ஒரு பெரு வணிகர்‌, கப்பல்‌ உரிமையாளர்‌ வணிக இளவரசர்‌, (Prince of ports) அரசியல்‌ சக்தியாக விளங்கியவர்‌ என்ற புகழுக்குரிய தமிழ்‌ முஸ்லிம்‌ எவரும்‌ இருந்ததில்லை என்பது முன்னிலைப்படுத்த வேண்டிய செய்தியாகும்‌. கி.பி. 16 - 17ம்‌ நூற்றாண்டுகளில்‌ இந்தியாவை கதி கலங்க வைத்‌துக்‌ கொண்டிருந்த டச்சுக்காரர்கள்‌, ஆங்கிலேயர்‌ ஆகியோர்‌ மன்‌னார்‌ வளைகுடாப்‌ பகுதியிலும்‌ இலங்கையிலும்‌ தங்களது ஆட்சி அதிகாரத்தைத்‌ தக்க வைத்துக்‌ கொள்ள பெரியதம்பி மரைக்காயருடன்‌ இணக்கமாக, சமாதானமாகச்‌ செல்ல வேண்டியிருந்தது என அவர்களது ஆவணங்‌களில்‌ பதிந்து வைத்திருப்பது தமிழக முஸ்லிம்களின்‌ வரலாற்று ஏடுகளில்‌ பொன்னெழுத்துக்களால்‌ பொறிக்கப்பட வேண்டியவை. தாழை மதியவனின்‌ எழுத்தில்‌, எழுச்சி பெறாத இந்த சமுதாயத்தைக்‌ குறித்த கவலை தொணிப்பதைக்‌ காண முடிகிறது. சமுதாயத்தின்‌ விளிம்பு நிலை மக்களை “முறத்திற்குள்‌ முடங்கிப்‌ போன”,பீடி சுற்றும்‌ முஸ்லிம்‌ தொழிலாளர்களை சுட்டிக்காட்டி இவர்கள்‌ முன்னேறுவது எந்நாள்‌? எனக்‌ கேட்பது நமது நெஞ்சத்தை வருடுகிறது. நமக்குத்‌ தெரியாத,நமது தலைவர்கள்‌ பலரை நம்‌ கண்முன்‌ நிறுத்துகிறார்‌ மதியவன்‌. யாகுப்‌ ஹசன்‌ - சென்னை ராஜதானியின்‌ முதல்‌ முஸ்லிம்‌ அமைச்சர்‌ - சர்‌ உஸ்மான்‌ ஜமால்‌ முகமது, நவாப்‌ அப்துல்‌ ஹக்கீம்‌, காயிதே மில்லத்‌, அப்துல்‌சமது என பலரையும்‌ நினைவு கூர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நல்ல பணியல்லவா இது! நமது வரலாற்று நூல்கள்‌ இவ்வகையிலும்‌ அமைவது நமக்கு வலிமை,பெருமை! இது ஜனரஞ்சகமாக எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்‌. தமிழக முஸ்லிம்களைப்பற்றி அனைவருக்கும்‌ சில அறிய செய்திகளை இந்த நூல்‌ தெரிவிப்பதோடு இந்த பட்டினத்துவாசிகளைத்‌ திறனாய்வு செய்ய விரும்புவோருக்கு தூண்டுகோலாக அமையும்‌. மதியவனின்‌ இந்த முயற்சிக்கும்‌, எழுத்து முனைப்பிற்கும்‌ நமது பாராட்டுக்கள்‌. அவரது எழுத்து பணி தொடர இறையருள்‌ நிறையட்டும்‌!. […] முனைவர்‌ ஜெ. ராஜா முஹம்மது வரலாற்று ஆய்வாளர்‌ செல்‌: 94431 32922 jrajamohamed@yahoo.com முன்னுரை […] 1962-63-களில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்துவிட்டு நான் வேலை தேடி மதரஸாபட்டினத்திற்கு வந்தேன். எனக்கும் பட்டினத்திற்கும் உள்ள உறவு ஐம்பதாண்டுகள். தொடக்கத்தில் கிண்டி ஆலந்தூரில் இருந்தேன். அடுத்து வால்டாக்ஸ் சாலை தண்ணீர்த் தொட்டித் தெருவில் பழனியப்பா சரக்குந்து நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு அடுத்திருந்த பெத்து நாயக்கன் பேட்டையில் தங்கியிருந்தேன். பின்னர் வண்ணாரப் பேட்டையில் வசித்தேன்; சூளைமேட்டில் தங்கிக்கொண்டு மண்ணடியில் வேலை பார்த்தேன். 1975-இல் இடப்பெயர்ச்சி, திண்டிவனத்தில் வலம் வந்தேன். பின்னர் 1983 இல் மீண்டும் மதரஸாபட்டினம் வந்தேன். திருவல்லிக்கேணியில் உறைந்தேன்; திருவான்மியூரில் இருந்தேன். மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டையில் வாழ்ந்துவிட்டு போரூர் மதனந்தபுரம் போய்ச் சேர்ந்தேன். இப்போது மீண்டும் சைதாப்ட்டையில்…! மதரஸாபட்டினந்தான் என்றாலும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமானவை. உன்னிப்பாகக் கவனித்தால் மக்களிடையிலும் மாற்றத்தைக் காணலாம்! மொத்தத்தில் மதரஸாபட்டினம் மகத்தான நகரம். ஆங்கிலேயர் அமைத்த நான்கு, ஐந்து ராஜதானிகளில் மதராஸ் ராஜதானிதான் முதன்மையான ராஜதானி. இன்றைக்கும் மதராஸ்தான் இந்தியாவின் அறிவுசார் நகரம். இந்த நகரை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றில் எதுவும் முழுமையான சங்கதிகளைக் கூறுபவையாய் இல்லை. சில ஆங்கிலேயர் எழுதி வைத்ததை எடுத்துக் கூறுபவையாய் உள்ளன,முழு உண்மைகள் இல்லை. சென்னக்குப்பத்தை விலைக்கு வாங்கிய 1639ஆம் ஆண்டைக் கணக்கிட்டு சென்னை 375, சென்னை 376 என விழா நடத்துகிறார்கள். ஆங்கிலேயரின் சென்னைப் பட்டினத்திற்குத் தான் வயது 375. நமது மதரஸாபட்டினத்திற்கான வரலாறு ஆயிரம் ஆண்டுகள். மதரஸாபட்டினமாக உருவாகுவதற்கு முன் அது மண்ணடி கடல்ப்பாக்கமாக இருந்துள்ளது. மண்ணடியாகவே இருந்த கி.பி.630க்கு முன்பு வியாபாரம் செய்ய வந்த அரேபியக் குறைஷியர்கள் மக்கா வெற்றிக்குப் பின்பு முஸ்லிம்களாக வருகை தந்துள்ளனர். அதன்பின் யவனர் சேரியில் அவர்கள் மசூதியையும் மதரஸாவையும் அமைக்க முஸ்லிம் குடியிருப்பு மதரஸா பட்டினமாக மாறியுள்ளது. மதரஸாபட்டினம் உருவாகிய பின்தான், ஆங்கிலேயர் சென்னக்குப்பத்தை வாங்கி கோட்டை கட்டியிருக்கின்றனர். கடலோடிகள், உள்நாட்டு, வெளிநாட்டு வணிகர்கள், குடிமக்கள் பற்றியெல்லாம் கதைக்காமல் மதரஸாபட்டின வரலாறு முழுமையாகாது. நடுவில்சில பக்கங்களைக் காணோம் என்பதுபோல தொடக்கத்து பல பக்கங்களைக் காணோம் என வரலாறு எழுதியுள்ளார்கள். ‘மதரஸாபட்டினம்’ எனக் குறிப்பிட்டால் ஆய்வு செய்பவர்கள் “மதரஸா” என்பது முஸ்லிம்களின் பாடசாலை என முடிவுக்கு வந்துவிடுவார்கள் என அஞ்சி ‘மதராஸபட்டினம்’ என எழுதுகிறார்கள். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கோவில்களைப் பற்றி விரிவாக எழுதுவோர் மாற்று மத வணக்கத் தலங்களைப் பற்றி துணுக்குச் செய்திகளையே தருகிறார்கள். பெயரளவிற்கு தேவாலயங்களைப் பற்றியும் மசூதிகளைப் பற்றியும் எழுதியுள்ளோர் குறைவான தகவல்களையே தந்துள்ளனர். எடுத்துக்காட்டாக காசி வீரண்ணா எனும் பெருவணிகர் ஹஸன்கானாக மாறிய பின் கட்டிய பள்ளிவாசலைக் காணோம் என்கிறார் ஒருவர். மண்ணடியிலுள்ள மஸ்ஜிதே மஃமூரே ‘காஸா வெரோனா மசூதி (Casa Verana Masque)’ என்கிறார் இன்னொருவர். ‘வெரோனா’ எனும் பெயர் ஆங்கில, பிரெஞ்சு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காசி வீரண்ணா என்பதையும் அவர்ஹஸன்கானாக மாறி பள்ளிவாசலைக் கட்டினார் என்பதையும் கூறுபவர்கள் அப்பள்ளி எது என்பதைக்கூற முடியாமல் திண்டாடியிருக்கிறார்கள். அவர்கள் மயிலை மசூதித் தெருவைப் பார்க்காமலேயே விட்டுவிட்டார்கள். ‘காணாமல் போன பள்ளிவாசல்’ எனும் தலைப்பில்"Casa Verona Mosque’ பற்றி இந்நூலில் தனிக் கட்டுரையே உள்ளது. 2014-இல் “நம்ம மதராஸ்’ எனும்கட்டுரையை”சமநிலைச்சமுதாயம்’ இதழுக்காக எழுதினேன். "மதராஸ்மனதே’ எனும்கட்டுரையை ‘புதிய விடியல்’ இதழுக்காக எழுதினேன். புதிய விடியல்’ கட்டுரையை முடிக்கும்போது "மதராஸ்பட்டினத்தோடு நமக்குள்ள தொடர்பைப்பற்றி ஒரு நூலே எழுதலாம்’ என எழுதியிருந்தேன். இரண்டு இதழ்களிலும் வெளியான கட்டுரைகளைப் படித்து வாசகர்கள் சிலாகித்த நிலையில ‘புதிய விடியல்’ ஆசிரியர்குழு மதராஸ்பட்டினம் பற்றியும் முஸ்லிம்கள் உறவு பற்றியும் ஒரு நூலை எழுதும்படிக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்நூல் ‘மதரஸாபட்டினம்’ எனும்பெயரிலேயே எழுதப்பட்டுள்ளது. இந்நூலை முடிக்க ஓராண்டு தேவைப்பட்டது. மதரஸாபட்டினம் பற்றிய பல்வேறு நூல்களையும் அது தொடர்பான பல்வேறு நூல்களையும் படித்து அவற்றிலிருந்து பட்டினத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு, தொடர்பு, சம்பந்தம் எனத் தெரிவு செய்து நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்க கால மண்ணடித் தோணித் துறையிலிருந்து தொடங்கி மேற்காசிய வணிகர்கள் (யவனர்கள்- மூர்கள்) வருகைகள், வணிகங்கள் எனத் தொடர்ந்து மயிலாப்பூரின் சாந்தோம் தோணித்துறை- சுங்கத்துறை பற்றியெல்லாம்இந்நூலில் வரலாறுகள் பேசப்படுகின்றன. விஜயநகரப்பேரரசின் உதிரி ஆட்சியில் ஆங்கிலேயர் வந்தது, அதற்கு முன்பாக போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள் வந்து வணிகம் செய்தது என நீண்டு கோல்கொண்டா சுல்தான்களின்ஆட்சி, மொகலாயர்ஆட்சி, முந்தைய நவாப்கள்- பிந்தைய ஆற்காட்டு நவாப்களின் ஆட்சிகள், ஆங்கிலேயர்ஆட்சி என நூல்உங்களை 1940-கள் வரை அழைத்துச் செல்லும். ஆங்கிலேயருக்கு முன் ஆற்காட்டு நவாப்களே மதரஸாபட்டின ஆட்சியாளர்கள் என்ற பொதுவான பார்வையை கோல்கொண்டா - டில்லி இரண்டும் பட்டினத்தைப் பரிபாலித்துள்ளன என்ற கூரிய பார்வை புதிய வெளிச்சத்தைக் காட்டும். மதரஸாபட்டினத்தை ஆங்கிலேயர் சுவர் கட்டி இரண்டாக பிரித்திருந்தனர். அவை வெள்ளையர்பட்டினம் மற்றும் கருப்பர்பட்டினமாகும். கருப்பர்பட்டின எல்லைகள் எவை? தெற்கெல்லை இன்றைய நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ் சாலை, மேற்கெல்லை இன்றைய வால்டாக்ஸ் சாலை, வடக்கெல்லை மூலக் கொத்தளத்திலிருந்து கடற்கரை சாலை வரை நீளும்பழைய ஜெயில்ரோடு - இபுறாகீம் சாகிப்தெரு, கிழக்கெல்லை பர்ஸ்ட் லைன் பீச்சாக இருந்த இன்றைய ராஜாஜி சாலை - இவைதான் கருப்பர் பட்டினமாக விளங்கிய மதரஸா பட்டினத்தின் நான்கெல்லைகள். கருப்பர் பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் ‘ஜெண்டுகள்’ எனக் குறிப்பிடும் தமிழரும் தெலுங்கரும் வாழ்ந்துள்ளனர். கடலோரத்தில் கடலோடிகளும் முஸ்லிம்களும் இன்னும் பலரும் உறைந்துள்ளனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டையிருக்கும் பகுதிதான் வெள்ளையர்பட்டினம். அதற்கு தென் மேற்கேயிருக்கும் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகியவை பழம்பெரும் கிராமங்கள். திருவல்லிக்கேணியிலும் மயிலாப்பூரிலும் கணிசமான தொகையில் முஸ்லிம்கள் வசித்துள்ளனர். கருப்பர் நகருக்கு மேற்கில் பக்கிங்காம் கால்வாய்க்கு அப்பால்பழைய ஊர்களான பெரியமேடு, வேப்பேரி, பெரம்பூர் ஆகியவற்றிலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்துள்ளனர். ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, மீர் சாகிப் பேட்டையிலும் ஆயிரக்கணக்கில்… மொத்தத்தில் முஸ்லிம்களின் இருப்பு, வருகை, பெருக்கம், இனம், மொழி, பண்பாடு, பள்ளிவாசல்கள், தர்காக்கள், பெரிய மனிதர்கள் என நூல் பல்வேறு சங்கதிகளைச் சொல்லிச் செல்லும். பல நூற்றாண்டு கால வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நூல் ஆங்கில ஏகாதிபத்தியம் அகலும் வரையுள்ள நிகழ்வுகளைக் கூறுகிறது. கடலூர் செயின் டேவிட்கோட்டையில் பொறியாக கிளம்பிய ஆங்கிலேயரின் ஆட்சி - அதிகார எண்ணம் மதராஸ்பட்டின செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான்பெருந்தீயாக மூண்டுள்ளது. பின்னர் அது கல்கத்தாவின் முகத்து வாரத்தில் மய்யம்கொண்டு இந்துஸ்தானத்தையே சுட்டெரித்துள்ளது. அவர்கள் ஆட்சியதிகாரத்தை மட்டும் கைப்பற்றவில்லை. வரலாற்றையும் கைப்பற்றி திரித்து எழுதிவிட்டார்கள். அது காங்கிரஸ் ஆட்சியில் ஓரளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட தற்போது பார்ப்பனியர் ஆட்சியில் பங்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. காந்தி மகானையும்நேரு பிரானையும்மறைப்பவர்களுக்கு ஒளரங்கசீப் எம்மாத்திரம்? சமஸ்கிருத மொழிக்கு சாமரம்வீசிய சாம்ராட்களைக்கூட சனாதன சகதியில் புதைத்து விடத்தொடங்கிவிட்டார்கள். பச்சைப் புளுகுக் கதைகளை உண்மைபோல் உலவிடச்செய்ய கங்கணம் கட்டுகிறார்கள். ஆர்ய மாயைகளைக் கொண்டு சூர்யப் பிரகாசத்தை மறைத்துவிடத் துணிந்து விட்டார்கள். இந்நிலையில் மறைக்கப்பட்ட வரலாறுகளும் திரிக்கப்பட்ட சரித்திரங்களும் மக்கள் மத்தியில் உண்மை முகம் காட்ட வேண்டும். அப்பணியின் ஒரு பகுதியே இந்நூல். இச்சிறுப்பணி சிறக்க எம்மோடு சேர்ந்து உரத்துக்குரல் கொடுங்கள். 01.11.2015 சென்னை-15 தோழமையுடன், தாழைமதியவன் செல்: 97102 66971 மதரஸாபட்டினத்திரக்குள் நுழையும் முன்பு காசி வீரண்ணா casa verona என்னும் அசன் கான் மதரசபட்டணத்தில் கட்டிய பள்ளிவாசல் ஆங்கிலேயரின் கிபி 1694 ம் ஆண்டு ஆவணப்படி மண்ணடி மூர் தெருவில் இருந்தாக சொல்லபடுகிறது முஸ்லிம்களை குறிக்கும் பள்ளிவாசல் இருந்தாக மேலும் சிலரும் கூறுகின்றனர். இன்று வரை அங்கு எந்த பள்ளிவாசலும் இருந்தாக தெரியவில்லை அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிவாசல் (மஸ்ஜிதே மாஃமூர்) இருப்பது அங்கப்ப நாயக்கன் தெருவிலேயே.அங்கப்ப நாயக்கன் தெரு என்று பெயரிடபடாத காலத்தில் அடுத்துள்ள தெருவின் மூர் தெருவோடு இத் தெருவை குறிப்பிட்டு இருப்பார்களோ என்னவோ? ஆற்காடு நாவாப்கள் மதராசு பட்டணத்துக்கு வந்தது கிபி- 1756 அதற்கு முன்பே மஸ்ஜிதே மாஃமூர் கட்டப்பட்டு இருக்க அதை நாவாப்கள் கட்டியதாக கல்வெட்டு பள்ளிவாசலில் உள்ளது. அவர்கள் மஸ்ஜிதை மராமத்து பார்த்து இருக்கலாம். காயல்பட்டினகாரர்களும் கீழக்கரை காரர்களும், அதிராம பட்டினகாரர்களும் பிற முஸ்லிம்களும் அடர்த்தியாக வாழ்ந்து வந்த மண்ணடியில் நவாப்கள் பள்ளிவாசலை கட்டினார்களா அதற்கு முன்பு எங்கே தொழுதார்கள்?. ஓலை குடிசை ஓட்டு கட்டிடம் என உறு மாறிய மஸ்ஜிதே மாஃமூரின் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் மேற்படி மூன்று ஊர்க்காரர்களும் மண்ணடியில் வாழ ஆரம்பித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் இன்றும் கூட இப் பள்ளியின் நிர்வாகம் இந்த மூன்று ஊர்கார்களிடம் உள்ளது. மஸ்ஜிதே மாஃமூரை கட்டியவர் உறுதியாக காசி வீரண்ணாவாக இருக்க முடியாது. வீரண்ணாவுக்காப் பிந்தைய காலத்தில் (கிபி 1679 அளவில்) மண்ணடியில் கப்பல்களும் தோணிகளும் கொடிகளும் கரைபிடித்தாலும் சாந்தோம் அன்றைய ஏற்றுமதி இறக்குமதி துறைமுகம் இத்துறை முகத்தை தான் கோல் கோண்டா சுல்தானிடம் இருந்து ஏலத்தில் பெற்ற காசி வீண்ணா பள்ளிவாசல் கட்டி இருந்தால் மயிலை பகுதியில் கட்டி இருக்க வேண்டும் அவர் மண்ண்டிக்கு போய் கட்டி இருக்க வாய்ப்பு இல்லை. காசி வீரண்ணா பள்ளிவாசல் கட்டினார் என்பதே செய்தி அதனை எங்கு கட்டினார் என்று தெரியாமல் பதிவு செய்துள்ளார்கள் மூர் தெருவில் எந்த பள்ளிவாசலும் இருந்தாக தெரியவில்லை. ‘மதரசா பட்டின’ நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஜெ.ராஜா முகமது காசி வீரண்ணா கட்டிய பள்ளிவாசல் மயிலாப்பூர் மசூதி தெருவில் உள்ளது என பதிவு செய்து இருக்க அது மயிலாப்பூர் அருண் டேல் தெருவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் அருண் டேல் தெருவில் உள்ள பள்ளிவாசல் பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் அது வீரண்ணா கட்டியது இல்லை. மசூதி தெருவில் உள்ளதுதான் வீரண்ணா கட்டிய பள்ளிவாசல் இந்த மசூதி தெரு பள்ளிவாசல்தான் காசி வீரண்ணா கட்டியது என்று சொல்ல காரணங்கள் உள்ளன. 1. பள்ளிவாசல் வீரண்ணா வணிகம் செய்த சாந்தோம் மயிலாப்பூரில் இருப்பது 2. பள்ளிவாசலில் இருக்கும் பழைமையான ஸ்தூபிகள் 3. பள்ளி வாசலை இருப்பிடமாக ஆக்கிரமித்த சியா முஸ்லிம் குடும்பம். கோல்கொண்டா சுல்தான்கள் ஷியாக்கள் கோல்கொண்டா கடைசி சுல்தான் அப்துல் ஹசன் ஷியா என்பதால் அசன்கானாக மாறிய காசி வீரண்ணாவும் ஷியா ஷியா அசன்கான் கட்டிய பள்ளிவாசல் ஷியா பள்ளியே என்பது 1679 முதல் 1979 வரை 300 ஆண்டுகாலம் செவி வழி செய்தியாக கடத்தபட்டுள்ளது அதனால் தான் ஷியா முஸ்லிம் ஒருவர் குடியேறி உள்ளார் இவற்றை எல்லாம் ஆகா மொய்தீன் பள்ளிவாசல் நிர்வாகியும் (ஹாஜி ஜருக் அலி கலந்து பேசி உள்ளேன். இப்போது பள்ளிவாசல பலகையில் ஒரு புதிய சங்கதி பதிவு செய்யப்பட்டுள்ளது அது இதுதான். ஆலம் கீர் அவுரங்கசிப் தமிழகம் வந்து வேலூர் செல்லும் வழியில் தங்கி சென்ற பள்ளிவாசல் என்று எழுதி உள்ளார்கள். ஆலம் கீர் அவுரங்கசீப் தந்தை ஷாஜஹான் காலத்தில் தக்காணத்தின் ஆட்சியாளராக இருந்துள்ளார. அதன் பின்னர் முகலாய சக்கரவர்த்தி ஆன பின்பு தக்காணத்தை தாண்டி உள்ள செஞ்சியை மீட்டு எடுக்க மாபெரும் தளபதி ஜூல்பிகரை அனுப்பினார். ஆலம் கீர் முன்னும் பின்னும் தாக்காணத்தை கடக்கவில்லை என்பதே வரலாறு இச் சங்கதியை, ஆகா மொய்தீன் பள்ளிவாசல் நிர்வாகியும் சொல்லி விட்டேன் நூல்களின் வழியாகவும் கள ஆய்வுகள் செய்தும் ஒன்றும் ஒன்றும் இரண்டு, இரண்டும் இரண்டும் நான்கு என்ற மனக்கணக்குபடி ஆகாய முகைதீன் பள்ளி வாசல் காசி வீரண்ணா கட்டிய பள்ளிவாசலே . மதரஸாபட்டினம் [MADRAS about 1710, A.D.] […] Modern map (approximate) corresponding to the foregoing map. (1) Old black Town is no more. (2) the Fort was extended about 1750. To provide ground, the Cooum was diverted. (3) The sea has receded. அன்றைய மதரஸாபட்டினம்‌ வடக்கிலுள்ள திருவொற்றியூரிலிருந்து தெற்கிலுள்ள திருவான்மியூர்‌ வரை கிழக்குக்கரையோரமுள்ள பட்டினங்களில்‌ பேரும்‌ புகழ்மிக்க பெரும்‌ பட்டினமாகத் திகழ்ந்துள்ளது.‌ தமிழகத்தின்‌ கடலோரக்‌ குடியிருப்புகள்‌ பலதரப்பட்டவை. அவை ஊர்‌பாக்கம்‌, குப்பம்‌,மேடு, பட்டினம்‌ எனப்‌ பெயர்‌ பெற்று விளங்கியிருக்கின்றன. எடுத்துக்காட்டுகளாக கடலூர்‌, கடல்பாக்கம்‌, தாழங்குப்பம்‌, அரிக்காமேடு, சதுரங்கப்பட்டினம்‌ ஆகிய கடற்கரை ஊர்களைக் கூறலாம்‌.‌ இவை காலப்போக்கில்‌ பேரூர்களாகவும்‌ மாறியுள்ளன. சிற்றூர்களாகவே மாறாமலும்‌ இருந்துள்ளன. இட அமைப்பும்‌, தொழில்‌ துறைகளும்‌, போக்குவரத்து வசதிகளும்‌ சிற்றூர்களைப்‌ பேரூர்களாக்க வல்லவை. மதரஸாபட்டினத்தின்‌ இட அமைப்பும்‌, தொழில்‌துறைகளும்‌, போக்குவரத்து வசதிகளும்‌ அதன்‌ வளர்ச்சிக்கும்‌ உயர்வுக்கும்‌ காரணமாய்‌ அமைந்ததை நன்கு அறியலாம்‌. சோழமண்டலக்‌ கடற்கரையெனச்‌ சொல்லப்படும்‌ வங்காள விரிகுடா கடற்கரைக்கு மத்தியில்‌ மதரஸா பட்டினம்‌ அமைந்துள்ளது. அதன்‌ தொடக்க காலப்பெயர்‌ மண்ணடி. கடலோடிகள்‌ காலடியெடுத்து வைக்கத்‌ தகுந்த உயர்ந்த நிலப்பரப்பாய்‌ விளங்கிய காரணத்தால்‌ மண்ணடி எனப்‌ பெயர்‌ பெற்றது. கடலோடிகளின்‌ தோணித்துறையாக விளங்கிய மண்ணடி காலப்போக்கில்‌ கிரேக்க, ரோம, சீன, அரபு வணிகர்கள்‌ வந்திறங்கும்‌ துறையாக மாறியிருக்கிறது. புதுச்சேரி அரிக்காமேடு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதைப்போல்‌ மண்ணடி அகழ்வாராய்ச்சி செய்யப்‌ பட்டிருப்பின்‌ பன்னாட்டார்‌ தொடர்புகள்‌ வெளியுலகுக்குத்‌ தெரிந்திருக்கும்‌. மண்ணடியின்‌ பழமை வெளிவந்திருக்கும்‌. கி.பி.1500க்குப்‌ பின்னுள்ள மதரஸா பட்டினத்தின்‌ கதையைப்‌ பேசுபவர்கள்‌ முந்தைய நூற்றாண்டுகளின்‌ வரலாற்றைப்‌ பற்றிப்‌ பேசாமல்‌ இருக்கின்றனர்‌. மதரஸா பட்டினத்தின்‌ பெயர்க்‌ காரணத்தைப்‌ பேச மறுக்கும்‌ அய்யாக்களில்‌ ஒருவர்‌ மதரஸா என்ற சொல்லுக்கு எப்பொருளும்‌ கிடையாது என்கிறார்‌. "மத்ராஸ்‌’ என்றால்‌ பார்ஸி மொழியில்‌ ஊர்‌ என்றும்‌ பொருளுண்டு. தமிழர்களில்‌ அறிஞர்கள்‌ மட்டுமில்லை, ஒரு சிற்றூர்த்‌ தமிழர்கூட பொருள் பொதிந்த சொல்லை சொல்ல வல்லமை பெற்றவர்‌. இன்று புழக்கத்திலுள்ள "பாதாளச்சாக்கடை’ என்ற பொருள்‌ பொதிந்த சொல்லை சாதாரணமாகக்‌ கூறியவர்‌ ஒரு சிற்றூர்‌ பாமரர்‌. தமிழைக்‌ கற்ற ஒரு ருஷ்யர்‌, ஒன்றியம்‌ (Union) என தமிழ்ச்‌ சொல்‌ வரக்‌ காரணமானவர்‌. தமிழகத்தில்‌ மதரஸாவுக்குப்‌ பொருள்‌ தெரியாதவர்‌ மதரஸா பட்டினத்தைப்‌ பற்றி எழுத வருகிறார்‌. தெரிந்தும்‌ பொருள்‌ தெரிய வில்லை எனக்‌ கூறுவதற்குக்‌ காரணம்‌ ’மதரஸா’ என்ற அரபுச்‌ சொல்லில்‌ இருந்துதான்‌ பெயர்‌ வந்தது என ஆவணப்படுத்தினால்‌ முஸ்லிம்களின்‌ வரலாறும்‌ கீர்த்தியும்‌ தெரிந்துவிடும்‌ என்பதுதான்‌! ‘மதரஸா’ என்றால்‌ முஸ்லிம்களின்‌ தொழுகைப்‌ பள்ளியான மசூதியோடு இணைந்துள்ள கல்விச்சோலை. திருக்குர்‌ஆன்‌, நபிமொழிகள்‌ ஆகியவற்றைச்‌ சின்னஞ் சிறுவர்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுக்கும்‌ வேதபாடசாலை என்பது கற்றவர்க்குத்‌ தெரியாததல்ல. மைலாப்பூர்‌ கபாலீஸ்வரர்‌ கோவிலின்‌ தெப்பக்குளம்‌ ஆற்காடு நவாப்கள்‌ வழங்கிய "இறையிலி’ என்பதைத்‌ தெரிந்து வைத்திருப்‌பவர்களுக்கு மதரஸா என்பதன்‌ பொருள்‌ தெரியாததுதான்‌. பேனா பேசாததற்கு சனாதனம்‌ காரணமாக இருக்கலாம்‌. மதரஸா என்பது முஸ்லிம்களின்‌ கல்விக்கூடம்‌; மதரஸா பட்டினம்‌ என்பது மதரஸா இருந்த பட்டினம்‌. இஸ்லாத்தின்‌ தொடக்க காலத்தில்‌ கிழக்குக்‌ கடற்கரையோரப்‌ பட்டினங்களில்‌ கீரத்தியோடு விளங்கிய மண்ணடி பட்டினத்தில்‌ இருந்த மதரஸா சீரோடும்‌ சிறப்போடும்‌ ஒரே மதரஸாவாக செயல்பட்டு வந்ததால்‌ நூறு மைல்கள்‌ கடந்து வந்து தங்கி கல்வி கற்றிருக்கின்றனர்‌. புதுவையின்‌ வடக்கிலுள்ள கோட்டக்குப்பத்தில்‌ முஸ்லிம்கள்‌ பெருந்திரளாக வாழ்கின்றனர்‌. அவர்களுக்குக்‌ கடலோர ஊர்களோடு தொடர்புகள்‌ தொடர்ந்திருந்ததைப்‌ போல மதரஸா பட்டினத்தோடும் நீண்ட உறவு இருந்திருக்கிறது. புதுச்சேரியிலிருந்து தொடரும்‌ கோட்டக்குப்பக்‌ கடற்கரை சாலை இன்றும்‌ பழைய பட்டண சாலை எனவே அழைக்கப்படுகிறது. மதரஸா பட்டின சாலையே பழைய பட்டணசாலையாக உள்ளது. பட்டினம்‌ என்றால்‌ கடற்கரைப்பேரூர்‌; பட்டணம்‌ என்றால்‌ மிகப்பெரிய நகரம்‌. இன்று கோட்டக்குப்பத்தில்‌ ‘மதரஸதுல்‌ ரப்பானியா’ என்ற புகழ்பெற்ற மதரஸா உள்ளது. அன்று அங்கு மதரஸா இல்லாததால்‌ அங்கிருந்தவர்கள்‌ மதரஸாபட்டினம்‌ வந்து தங்கி வேதபாடங்களைக்‌ கற்றிருக்கின்றனர்‌. இன்று மதரஸா பட்டினத்தில்‌ பல மதரஸாக்கள்‌ இருந்தாலும்‌ மண்ணடியிலுள்ள மத்ரஸே நிஸ்வான்‌ - பெண்களுக்கான மதரஸா மிகப்‌ பழமை வாய்ந்தது. மதரஸாபட்டினத்தில்‌ அங்கப்பன்‌ தெரு பெரிய பள்ளிவாசலின்‌ பெயர்‌ மஸ்ஜிதே மஃமூர்‌. இதே பெயரில்‌ கோட்டைக்குப்ப கடலோரப்‌ பள்ளிவாசல்‌ விளங்குகிறது! மஸ்ஜிதே மஃமூர்‌ என்பதே அதன்‌ பெயரும்‌! மஸ்ஜிதே மஃமூர்‌ பள்ளிவாசலே மதரஸா பட்டினத்தின்‌ முதல்‌ பள்ளி வாசலாக விளங்கியிருக்கிறது. அதன்பின்‌ 1689- இல்‌ முத்தியாலுபேட்டையில்‌ ஒரு பள்ளிவாசல்‌ கட்டப்பட்டதாக கிளின்‌ பார்லோ தன்னுடைய “The Story of Madras”ல்‌ குறிப்பிட்டுள்ளார்‌. அப்போதே மண்ணடியும்‌ அதன்‌ மேற்குப்‌ பகுதிகளும்‌ வளர்ந்த ஒரு கிராமமாகவே இருந்திருக்கிறது. […] இன்றைய மண்ணடித்‌ துறைமுகத்தையும்‌ ரயில்வே நிலையத்தையும்‌ அழித்தெழுதி வெட்டவெளியாய்ப்‌ பாருங்கள்‌. அன்றைய மண்ணடித்‌ தோணித்துறை உங்கள்‌ மனக்கண்முன்‌ வரும்‌. அங்கு அலைகளில்‌ ஆடும்‌ பல்வேறு வகை மரக்கலங்கள்‌! கட்டுமரங்கள்‌, சிறிய - பெரிய படகுகள்‌, தோணிகள்‌, பாய்மரக்‌ கப்பல்கள்‌ நிற்கும்‌ தோணித்துறையின்‌ வானில்‌ கள்ளப்‌ பருந்துகள்‌, செம்பருந்துகள்‌, காக்கைகள்‌ இறக்கை விரித்த காட்சியைக்‌ காண்பீர்கள்‌. தொலைவில்‌ சில பாய்மரக்கப்பல்கள்‌, நடுவில்‌ தோணிகள்‌, கரையோரம்‌ கட்டுமரங்களும்‌, படகுகளும்‌ கடலின்‌ தாலாட்டில்‌ ஆடிக்கொண்டிருக்கும்‌ காட்சிகள்‌! காலை நேரப்‌ படகுகளிலிருந்து மீன்கள்‌ கூடைகளில்‌; படகுகளிலும்‌, தொடைதொடும்‌ கரைத்‌ தண்ணீரிலும்‌ மீனவர்கள்‌; கரைகளில்‌ மீனவப்‌ பெண்கள்‌, சிறுவர்கள்‌, வியாபாரிகள்‌, வேடிக்கைப்‌ பார்க்கும்‌ மனிதர்கள்‌! தோணித்துறையின்‌ மேற்கில்‌ மீனவர்க் குடில்கள்‌; குடில்களைத்‌ தாண்டி வண்டிகள்‌ தடம்பதித்த மண்சாலை; சாலைக்கு மேற்கில்‌ பன்னாட்டார்‌ தெரு! பல நாட்டு வணிகர்களும்‌ வந்து தங்கி வணிகம்‌ செய்யும்‌ செங்கற்கட்டிடங்கள்‌. பன்னாட்டார்‌ தெருவுக்கு மேற்கில்‌ பலவகை மனிதர்களும்‌ வாழும்‌ பேட்டை, பேட்டைக்கு வடக்கில்‌ உழைப்பாளிகள்‌, விளிம்பு நிலையினர்‌ வாழும்‌ சேரி! இன்றைய மண்ணடித்‌ தெருக்கள்‌ எல்லாமே ஆங்கிலேய வணிகர்களுக்குத்‌ தரகர்களாய்‌ விளங்கிய துபாஷ்களின்‌ பெயர்களைக்‌ கொண்டவை, சிலவற்றைத்‌ தவிர! அன்று தம்புச்செட்டித்‌ தெரு காளிகாம்பாள்‌ கோவில்‌ தெருவாகவும்‌, லிங்கிச்‌ செட்டித்தெரு மல்லிகார்ஜுனக்‌ கோவில்‌ தெருவாகவும்‌ இருந்திருக்க வேண்டும்‌! இன்று கிருஷ்ணன்‌ கோவிலிருக்கும்‌ தெருவும்‌, கந்தசாமி கோவிலிருக்கும்‌ தெருவும்‌ கோவில்‌ பெயரால்‌ அழைக்கப்படுவது போல்‌ அன்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்‌. இன்றைய அரண்மனைக்காரத்‌ தெருவான ஆர்மீனியன்‌ தெருவில்‌ பெரும்‌ வைர வணிகர்களான ஆர்மீனியர்களும்‌ வணக்கத்தலங்கள்‌ இருந்தன. பவழக்காரத்தெரு மிகவும்‌ பழமையான தெரு. அங்கு முத்து, பவழ வணிகர்களாக நாட்டுக்கோட்டைச்‌ செட்டியார்கள்‌ வாழ்ந்தனர்‌. பவழக்காரத்‌ தெருவுக்கு மேற்கே இன்று முத்தியால்பேட்டை என அழைக்கப்படும்‌ பகுதி. அப்போது போபாம்ஸ்‌ பிராட்வே கிடையாது; கிறிஸ்துவ தேவாலயங்கள்‌ கிடையாது. ஏழு கிணறு கிடையாது! இன்றைய ஏழு கிணறு அன்று விவசாயக்‌ கூலிகள்‌ வாழ்ந்த சேரி. இன்றைய ஏழு கிணறு மார்க்கெட்டை பறச்சேரி மார்க்கெட்‌ எனறே அழைக்கின்றனர்‌. இன்றைய ஏழுகிணறுக்கு மேற்கே பெத்துநாய்க்கன்‌ பேட்டை, வடமேற்கே கொண்டித்தோப்பு! தோப்பும்‌ பேட்டையும்‌ விவசாய பூமியாகவும்‌ ஆங்காங்கு தமிழர்களும்‌ தெலுங்கர்களும்‌ வாழும்‌ வசிப்பிடங்களாகவும்‌ விளங்கியுள்ளன. இந்த இரு இனங்களும்‌ மொழியால்‌ வேறுபட்டிருந்தாலும்‌ பிற்காலத்தில்‌ ஆங்கிலேயர்கள்‌ இவர்களை ஜெண்டுகள்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளனர்‌. மண்ணடித்‌ தோணித்துறையிலிருந்து இடங்களைக்‌ காட்சிப்‌ படுத்திக்‌ கொண்டுவரும்‌ போது பன்னாட்டார்‌ தெரு என ஒரு தெரு குறிப்பிடப்படுகிறதல்லவா? அதில்‌ கிரேக்கர்‌, ரோமர்‌, அரபுகள்‌ வந்து தங்கி தொடக்க காலத்தில்‌ வணிகம்‌ செய்திருக்க வேண்டும்‌. இவர்களைத்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌ ‘யவனர்‌’ எனச்‌ சுட்டிக்‌ காட்டுகின்றன. இன்று மதரஸாபட்டினத்தில்‌ ‘பன்னாட்டார்‌ தெரு’ எனப்‌ பெயர்‌ பெற்ற இடம்‌ கிடையாது எனினும்‌ தமிழகத்தின்‌ கீழைக்கரை, தொண்டி போன்ற கடற்கரைப்‌ பட்டினங்களில்‌ இன்றும்‌ பன்னாட்டார்‌ தெருக்கள்‌ உள்ளன. காலப்போக்கில்‌ சீனா போன்ற கீழைத்‌ தேசத்தினரும்‌ பங்குபெற்ற பன்னாட்டார்‌ தெருவில்‌ கிரேக்கர்‌, ரோமர்‌ வருகைகள்‌ குறைய அரபு தேசத்தினர்‌ மட்டும்‌ தொடர்ந்து வாழ்ந்துள்ளனர்‌. தொடக்கத்தில்‌ மேலை நாட்டினர்‌ யவனர்‌ எனப்‌ பொதுப்‌ பெயரில்‌ குறிப்பிடப்பட்டனர்‌. காலம்‌ கனிய கிரேக்கர்‌, ரோமர்‌ வருகை மறைய அரபுகள்‌ மூர்கள்‌ என அழைக்கப்பட்டனர்‌. கஃபாவில்‌ 365 சிலைகளை வணங்கிய காலத்திலிருந்து அரபு வணிகர்கள்‌ கீழைத்தேச தொடர்புகளை வளர்த்துள்ளனர்‌. மண்ணடி பன்னாட்டார்‌ தெருவிலும்‌ வணிகத்தில்‌ கோலோச்சியுள்ளனர்‌. கஃபாவில்‌ சிலைகள்‌ அழிக்கப்பட்ட பின்னர்‌ மதம்‌ மாறிய அரபுக்கள்‌ முஸ்லிம்‌ வணிகர்களாக மலபாரிலிருந்து மதரஸா பட்டினம்‌ வரை தம்‌ வணிகத்தைத்‌ தொடர்ந்துள்ளனர்‌. யவனர்‌ என அழைக்கப்பட்ட அரபுக்கள்‌ மூர்கள்‌ எனப்‌ பெயர்‌ பெற்றபின்‌ அவர்கள்‌ பெருந்திரளாகக்‌ குடியேறி வாழ்ந்த பகுதி இன்றும்‌ மூர்‌ தெரு என அழைக்கப்படுகிறது. மூர்‌ தெருதான்‌ முன்பு பன்னாட்டார்‌ தெருவாக விளங்கியிருக்க வேண்டும்‌. மூர்‌ தெருவில்‌ ஒரு பள்ளிவாசல்‌ இருந்ததாகச்‌ சொல்கிறார்கள்‌. பச்சைக்‌ கதிரவன்‌ பாலை நிலத்தில்‌ தோன்றியது ஏழாம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதி. மூர்‌ தெரு பள்ளிவாசல்‌ உருவானது ஏழாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதி. மூர்‌ தெரு பள்ளிவாசலில்‌ தொழுகை தொடர்ந்ததாகத்‌ தெரிய வில்லை. அது இன்றைய அங்கப்பன்‌ தெருவுக்கு இடம்‌ பெயர்ந்திருக்கிறது. அந்நிகழ்வு எட்டாம்‌ நூற்றாண்டில்‌ நடந்திருக்‌ கலாம்‌. கூரை, ஓடு, பைஞ்சுதை என மேம்பட்டிருக்கலாம்‌. இன்று சென்னை பட்டின வரலாற்றைச்‌ சொல்பவர்கள்‌ அங்கப்பன்‌ தெரு பள்ளிவாசல்‌ பதினெட்டாம்‌ நூற்றாண்டில்‌ ஆற்காடு நவாப்களால்‌ கட்டப்பட்டது. 19ம்‌ நூற்றாண்டில்‌ செப்பனிடப்பட்டது எனக்‌ கூறுகிறார்கள்‌. ஆற்காடு நவாப்கள்‌ மறுகட்டுமானத்திற்கு பொருளுதவி செய்திருக்கலாம்‌. ஆனால்‌ மஸ்ஜிதே மஃமூர்‌ மிகவும்‌ தொன்மையானது. பதினேழாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியிலேயே ஆற்காட்டு நவாப்‌ வகையறா மதரஸா பட்டினத்தில்‌ கால்‌ பதித்துள்ளார்கள்‌. அவர்களுக்கு முன்‌ ஆயிரம்‌ ஆண்டு காலமாக மண்ணடியும்‌ மதரஸா பட்டினமும்‌ அங்குள்ள தொழுகைத்தளமும்‌ இருந்துள்ளன. 8-ம்‌ நூற்றாண்டிலிருந்து இன்றைய அங்கப்பன்‌ தெருவில்‌ மஸ்ஜிதே மஃமூர்‌ இயங்கி வந்துள்ளது. மூர்‌ தெருவில்‌ பெருந் திரளாக வாழ்ந்த முஸ்லிம்கள்‌ மஸ்ஜித்‌ மஃமூர்‌ வந்து தொழ இன்றைய மண்ணடித்‌ மூன்று, நான்கு குறுக்குச்‌ சந்துக்களை உருவாக்கிக்‌ கொண்டிருந்தார்கள்‌. மஸ்ஜித்‌ மஃமூர்‌ இருக்கும்‌ தெரு ஆங்கிலேயர்‌ காலத்திலேயே அங்கப்ப நாயக்கன்‌ தெருவாக பெயர்பெற்றுள்ளது. தொடக்கத்தில்‌ அது பள்ளிவாசல்‌ தெருவாக இருந்திருக்க வேண்டும்‌. அங்கு பள்ளிவாசலோடு ஒரு பெரிய மதரஸா இயங்கியிருக்க வேண்டும்‌. மசூதியோடு மதரஸா… அன்று மதரஸா பட்டினத்தில்‌ வணிகர்களாய்‌ விளங்கியவர்களில்‌ கீழைக்கரை, காயல்பட்டின பிரமுகர்கள்‌ முக்கியமானவர்கள்‌. மஸ்ஜிதே மஃமூரை நிர்வகித்த அவர்கள்‌ இன்று வரை அப்‌பணியைத்‌ தொடர்கின்றனர்‌. […] பி.1690 அளவில்‌ மதரஸா பட்டினத்தில்‌ பெரும்‌ வணிகராக விளங்கிய சீதக்காதி மரைக்காயர்‌ பயன்படுத்திய பண்டகச சாலைதான்‌ இன்றைய தலைமை அஞ்சலகம்‌ (G.P.O.) அவருடைய வணிகம்‌ இலங்கையிலிருந்து வங்காளம்‌ வரை கிளை பரப்பியிருந்தது. ஏற்றுமதி, இறக்குமதியோடு முத்துக்‌ குளித்தலையும்‌ அவருடைய நிறுவனம்‌ செய்துள்ளது. இவர்தான்‌ கீழைக்கரையிலுள்ள கல்லுப்‌ பள்ளிவாசலைக்‌ கட்டியவர்‌; செத்துங்கொடுத்த சீதக்காதி! […] சில காலம்‌ மொகலாய மாமன்னர்‌ ஒளரங்கசீபின்‌ பிரதிநிதியாக வங்காளப்‌ பகுதியில்‌ தங்கி ஆட்சி செய்தவர்‌. சீதக்காதியின்‌ காலம்‌ பதினேழாம்‌ நூற்றாண்டு (கி.பி. 1640-1715). மஸ்ஜிதே மஃமூரைக்‌ கட்டியதாகச்‌ சொல்லும்‌ ஆற்காட்டு நவாபின்‌ காலம்‌ பதினெட்டாம்‌ நூற்றாண்டு (1723-1795). […] சீதக்காதியின்‌ காலத்திலேயே மஸ்ஜிதே மஃமூர்‌ பெரிய பள்ளியாக விளங்கியுள்ளது. ஆற்காட்டு நவாப்‌ வாலாஜா முகம்மது அலீ மஸ்ஜிதை புனர்நிர்மாணம்‌ செய்திருக்கலாம்‌. ஆனால்‌ அது தோன்றிய காலம்‌ எட்டாம்‌ நூற்றாண்டு என்றே கூற முடியும்‌. நாலு பேர்‌ குழுமினாலே கூட்டுத்‌ தொழுகையை வலியுறுத்தும்‌ இஸ்லாமிய மரபில்‌ வந்தவர்கள்‌ கட்டாயம்‌ மசூதியை உருவாக்கியே இருப்பார்கள்‌. காலப்போக்கில்‌ மஃமூர்‌ கொள்ளளவு போதாமல்‌ அதே தெருவில்‌ மஸ்ஜித்‌ அஸரஃப்‌ உருவாகியிருக்கிறது. அன்று மதரஸா பட்டினத்தில்‌ வாழ்ந்த முஸ்லிம்கள்‌ பெருநாட்களின்‌ போது தொழ அதே தெருவின்‌ வடக்கில்‌ ஈத்காவை உருவாக்கித்‌ தொழுகை நடத்தியுள்ளார்கள்‌. ஒரே தெருவில்‌ இரு பள்ளிவாசல்கள்‌ இருந்தும்‌ இடம்‌ போதாமையால்‌ ஈத்காவையும்‌ தொழுமிடமாக்கி மஸ்ஜிதே அஃஸம்‌ எனப்‌ பெயரிட்டுள்ளார்கள்‌. இவை மூன்றும்‌ போதாமல்‌ மேற்கில்‌ இன்றைய செம்புதாஸ்‌ தெருவில்‌ மஸ்ஜிதே மக்தூமி (1919) கட்டியுள்ளார்கள்‌. மதரஸா பட்டினத்தில்‌ உள்ள நான்கு பள்ளிவாசல்களும்‌ போதாமல்‌ மேற்கில்‌ மாஸ்கான்சாவடியில்‌ மஸ்ஜிதே மெளலா கட்டுவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பள்ளிவாசல்களைத்‌ தொடர்ந்து கொண்டித்தோப்பு பகுதியில்‌ வாழ்ந்த முஸ்லிம்கள்‌ அங்கு ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்துள்ளனர்‌. அதன்‌ பெயர்‌: மஸ்ஜிதே-கலீல்‌. ஆறு பள்ளிவாசல்கள்‌ மதரஸா பட்டினத்தில்‌ இருந்த நிலையில்‌ ஆற்காடு நவாப்‌ இன்றைய போர்த்துக்கீஸ்‌ சர்ச்‌ தெருவில்‌ தம்‌ நாவிதர்களுக்கும்‌ சலவைத்‌ தொழிலாளர்களுக்கும்‌ இரு பள்ளிவாசல்‌ களைக்‌ கட்டிக்‌ கொடுத்துள்ளார்‌. அவற்றின்‌ பெயர்கள்‌: மஸ்ஜிதே முஸ்தஃபா, மஸ்ஜிதே அக்பரி. பள்ளிவாசல்களின்‌ நிர்வாகிகளாகத்‌ தொழிலாளர்த்‌ தோழர்கள்‌ இருந்தாலும்‌ யாவரும்‌ தொழும்‌ இடமாகவே இரு பள்ளிவாச ல்களும்‌ விளங்கின. இன்று பல்வகை முஸ்லிம்களும்‌ இணைந்து இரு பள்ளிவாசல்களையும்‌ நிர்வகிக்கின்றனர்‌. பட்டினத்தின்‌ சைனா பஜார்‌ பகுதியில்‌ வணிகத்திற்காக குவிந்த முஸ்லிம்களுக்காக ஆண்டர்சன்‌ தெருவில்‌ ஒரு பள்ளியும்‌ கிடங்குத்‌ தெருவில்‌ ஒரு பள்ளியும்‌ நிர்மாணிக்கப்பட்டன. அண்மைக்‌ காலத்தில்‌ ஈவினிங்‌ பஜார்‌ சாலையில்‌ ஒரு பள்ளிவாசல்‌ தொடங்கப்‌ பட்டு மக்கள்‌ வெள்ளத்தில்‌ மூழ்கி வருகிறது. […] காசி வீரண்ணா எனும் ஹசன் கான் மதரஸா பட்டினத்து மயிலாப்பூர்‌ சாந்தோம்‌ பற்றிய ஆவணங்களில்‌ வெரோனா எனும்‌ பெயர்‌ உள்ளது. இது வீரண்ணா என்பதன்‌ திரிபு. அவருடைய முழுப்பெயர்‌ காசி வீரண்ணா. காசி வீரண்ணா அண்டு கம்பெனி பதினேழாம்‌ நூற்றாண்டில்‌ பெரும்‌ புகழோடு ஆங்கிலேயரோடு வணிகம்‌ செய்த நிறுவனம்‌. மதரஸா பட்டினத்து முதல்‌ ஜாயிண்ட்‌ ஸ்டாக்‌ கம்பெனி காசி வீரண்ணா உடையது. அவர்‌ சாந்தோம்‌ துறைமுகத்தையும்‌ சந்தையையும்‌ 1300 பகோடாக்களுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தார்‌. சென்னகுப்பத்தை ஆங்கிலேயருக்கு விற்பனை செய்த பூந்தமல்லி தெலுங்குச்‌ செட்டிகளின்‌ வம்சாவளி திம்மப்பாவின்‌ உறவினர்தான்‌ காசி வீரண்ணா. வீரண்ணாவுக்கு முந்தைய பெருவணிகர்‌ திம்மப்பா. திம்மப்பாவிடம்தான்‌ வீரண்ணாவும்‌ சுங்குராமச்‌ செட்டி போன்றோரும்‌ வேலை செய்தனர்‌. சந்தோமில் போர்த்துகீசியரின் குத்தகை முடிய வீரண்ணாவின் சாம்ராஜ்யம் கொடி கட்டி பறந்தது அப்போதைய ஆட்சியாளராக இருந்த கோல்கொண்டா சுல்தான்‌ அப்துல்‌ ஹஸன்‌ தானாஷாவின்‌ ஆட்கள்‌ வீரண்ணாவோடு நெருக்கமாக இருந்தார்கள்‌. வீரண்ணா கோல்கொண்டா சுல்தானோடு கொண்ட பேரன்பு அவரை ஹஸன்‌ கானாக மாற்றியது. ஹஸன்‌ கான்‌ சாந்தோமில்‌ ஓர்‌ அழகிய பள்ளிவாசலைக்‌ கட்டினார்‌. அது 1679-இல்‌ திறப்பு விழா கண்டது. (1680-இல்‌ ஹஸன்கான்‌ மரணமடைய அவரை இந்துக்கள்‌ எரிக்க பாடையில்‌ தூக்கிச்‌ சென்றனர்‌. காரணம்‌, வீரண்ணா மட்டும்தான்‌ இஸ்லாத்தைத்‌ தழுவியிருந்தார்‌. குடும்பம்‌ பழைய பாதையிலேயே இருந்ததுதான்‌. பாடைக்கு முன்‌ பெருந்திரளாக வந்து நின்ற முஸ்லிம்களும்‌ பக்கீர்ஷாக்களும்‌ எரிக்க எடுத்துச்‌ செல்வது தவறு. அவர்‌ முஸ்லிம்‌ என்பதால்‌ கபர்ஸ்தானில்‌ புதைக்கப்படுவதே சரியான செயலாகும்‌ என்றனர்‌. பிரேத ஊர்வலம்‌ தடைபட அப்போதைய ஆங்கிலேயக்‌ கவர்னரிடம்‌ முறையிடப்பட்டது. "அவர்‌ முஸல்மானாக இருந்திருக்கலாம்‌. அவர்‌ குடும்பம்‌ அவரைப்‌ பின்பற்றவில்லை. முதல்‌ மனைவி இறந்துவிட்டார்‌. அவருக்கு பதினோரு வயதான பெண்‌ பிள்ளை இருக்கிறது. இரண்டாவது மனைவி வேறு இருக்கிறார்‌. ஆண்‌ வாரிசு இல்லை. வெரோனாவின்‌ அண்ணன்‌ மகனை அவருடைய வாரிசாக்கிக்‌ கொள்ளுங்கள்‌’ என கவர்னர்‌ சொன்னபடி நடந்தது! ‘வெரோனா’ மறைவிற்காக கிழக்கிந்தியக்‌ கம்பெனி முப்பது குண்டுகளை வெடித்து மரியாதை செய்தது. அதுவரை இவ்வளவு குண்டுகளை வெடிக்காதவர்கள்‌ ’வெரோனா’வின்‌ பெருமையையும்‌ வற்றாத ஆற்றலையும்‌ கணக்கில்‌ எடுத்து மிக அதிகமான குண்டு களை வெடித்தனர்‌.) (இதில் குறிப்பிட்டதைபோல இந்த ஆன்டி இந்தியன் தமிழ் திரைப் படத்தின் கதை உள்ளது) இன்று சைனா பஜார்‌ அருகிலுள்ள காசிச்செட்டிதெரு காசி வீரண்ணா நினைவாக பெயரிடப்பட்ட தெருவாகும்‌. மதரஸாபட்டினமும்‌ மாநகர்‌ காஞ்சியும்‌ ஆங்கிலேயரின்‌ மேலாதிக்கத்திற்குப்‌ பிறகுதான்‌ மதரஸா பட்டினம்‌ தலைமைத்துவம்‌ பெற்றுள்ளது. அதற்கு முன்பாக பூந்தமல்லியும்‌ காஞ்சிபுரமும்‌ தலைமைத்துவம்‌ பெற்றிருந்தன. விஜயநகர ஆட்சியின்‌ எச்சமாக சந்திரகிரிக்குக்‌ கீழ்‌ வடதமிழ்‌ தேசம்‌ இருந்தபோது பூந்தமல்லிதான்‌ தலைமைக்கேந்திரம்‌. இங்கிருந்த சந்திரிகிரி அரசரின்‌ திவான்‌ (தாமர்லா) தான்‌ சென்னப்ப நாய்க்கன்‌ குப்பம்‌, மதரஸா குப்பம்‌, ஆர்க்குப்பம்‌ ஆகிய குப்பங்களை ஆங்கிலேயரின்‌ கிழக்கிந்தியக்‌ கம்பெனிக்கு பதினேழாம்‌ நூற்றாண்டில்‌ வழங்கினார்‌. 1639-இல்‌ மதரஸாபட்டினம்‌ ஆங்கிலேயருக்குக்‌ கிடைத்து எட்டாண்டு கழிய சந்திரகிரி அரசு கோல்கொண்டா அரசால்‌ வெல்லப்பட 1647-இல்‌ தெலுங்கர்‌ அரசு பெர்ஸியர்‌ கரங்களுக்கு வந்தது. அவர்கள்‌ ஏனோ பூந்தமல்லியைத் தலைமைப்பீடமாக்காமல்‌ காஞ்சிபுரத்தை தம்‌ தலைமைக்‌ கேந்திரமாக மாற்றினார்கள்‌. காஞ்சி மாநகர்‌ கி.மு.500-க்கு முன்னரே தோன்றி பல்வேறு சாம்ராஜ்யங்களைக்‌ கண்ட பல்கலை நகராகும்‌. இந்நகரம்‌ சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜீன (சமண) காஞ்சி, பெளத்த காஞ்சி எனப்‌ பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லும்‌ வரலாற்றாளர்கள்‌ அது மூஸ்லிம்களின் காஞ்சியாகவும் இருந்ததை எழுத மறுக்கிறார்கள் இங்கு பனிரென்டு மசூதிகள்‌ உள்ளதும் வலி முகம்மது பேட்டையில்‌ நிறைவாக முஸ்லிம்கள்‌ வாழ்வதும்‌ குறிப்பிடத்‌ தக்கவை. கோல்கொண்டா முஸ்லிம்களின்‌ தலைமை கேந்திரமாக மட்டும்‌ காஞ்சி மாநகரம்‌ விளங்கவில்லை; 1687-க்குப்‌ பின்‌ மொகலாயர்களின்‌ தலைமைப்பீடமாகவும்‌ அது இருந்துள்ளது. மொகலாயர்‌ களுக்குப்‌ பின்‌ வட தமிழகத்தை ஆண்ட நவாப்கள்தான்‌ காஞ்சிபுரத்தினின்றும்‌ தலைமைப்பீடத்தை ஆற்காட்டுக்கு மாற்றி ஆற்காட்டு நவாப்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்கள்‌. பின்னர்‌ தலைமைப்‌ பீடத்தை மதரஸா பட்டினத்திற்கு மாற்றி படிப்படியாய்‌ சரிந்தார்கள்‌. மொகலாயப்‌ பேரரசர்‌ ஒளரங்கசீப்‌ ஆட்சியில்‌ தக்காணத்தை பீஜப்பூரைத்‌ தலைநகராக்கி ஆலம்கீரின்‌ கடைசி மகன்‌ “கான்‌ பக்ஷ்” ஆண்டபோது கர்நாடகா எனக்‌ குறிப்பிடப்பட்ட வட தமிழகத்தை தளபதி தாவூத்கான்‌ நிர்வகித்து வந்தார்‌. அவரிடம்‌ சலுகை பெற ஆங்கிலேயர்‌, இத்தாலியைச்‌ சேர்ந்தவரும்‌ முகலாயர்களிடம்‌ பணியாற்றி மதராஸ்‌ வந்து வாழ்ந்தவருமான மருத்துவர்‌ நிக்கோலா மானுச்சியைத்‌ தூதுவராக காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்‌. […] தாவூத்கான்‌ மசியவில்லை. 1701-இல்‌ பத்தாயிரம்‌ வீரர்களுடன்‌ தாவூத்கான்மதராஸ்‌ வந்து புழுதியைக்கிளப்பினார்‌. புழுதியின்மேல்‌ நீரூற்ற ஆங்கிலேயர்‌ நிக்கோலோ மானுச்சியைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டனர்‌. விருந்து, பண முடிப்பு என உறவு கொண்டாடிய நிக்கோலோ மானுச்சி 1706-இல்‌ தன்‌ பரங்கிமலை வீட்டில்‌ தாவூத்கானைத்‌ தங்கச்‌ செய்து பசியாற்றும்‌ வரைக்கும்‌ அந்த உறவு நீண்டது. கோல்கொண்டா சுல்தானின்‌ பிரதிநிதிகள்‌ மதரஸாபட்டின கச்சேரி சாலையில்‌ கிளைவிட்டதைப்‌ போல்‌ மொகலாயரும்‌ கிளை விட்டனர்‌. காஞ்சிபுரம்‌ முதல்‌ கச்சேரி சாலை வரை ஆட்சியதிகாரம்‌ தங்கு தடையின்றி நடந்தது. அவர்கள்‌ பேரம்பாக்கம்‌ என இன்று அழைக்கப்படும்‌ பெரும்பாக்கத்தில்‌ ஒரு படை முகாமை அமைத்துக்‌ கொண்டிருந்தனர்‌. பேரம்பாக்கம்‌ காஞ்சிபுரத்திற்கு வடமேற்கே 22 கி.மீ. தொலைவில்‌ இருக்கிறது. பேரம்பாக்கத்தை விட்டால்‌ முஸ்லிம்‌ ஆட்சியாளர்கள்‌ மாங்காடு - பட்டூரில்‌ ஒரு பெரும்‌ படையை நிறுத்தியிருந்தனர்‌. அப்படைத்‌ தளபதிகளில்‌ ஒருவர்‌ சையத்‌ சாதிக்‌. அவருடைய அடக்கத்தலம்‌ மாங்காட்டில்‌ உள்ளது. அவர்‌ நினைவாக சையத்‌ சாதிக்‌ ஜும்மா மசூதி மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. மாங்காட்டிலும்‌ பேரம்பாக்கத்திலும்‌ பள்ளிவாசல்களும்‌ பெருந்திரளாக முஸ்லிம்‌ மக்களும்‌ இருப்பதற்கு பண்டைய இருப்பே காரணம்‌. பண்டைய இருப்போடு புதிய வரவாக இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக நெல்லை மேலப்பாளையத்துக்‌ காரர்கள்‌ மாங்காட்டில்‌ குடியேறியுள்ளனர்‌. அவர்கள்‌ புலம்பெயர்ந்து மாங்காட்டில்‌ மட்டும்‌ குடியேற வில்லை, காஞ்சி ஒலி முகம்மது பேட்டை, மதரஸாபட்டின ஐஸ்‌ அவுஸ்‌ பகுதியிலும்‌ குடியேறியுள்ளனர்‌. மாங்காட்டை விட்டுக்‌ கிழக்கே வந்தால்‌ காடுகள்‌ நிறைந்திருந்த காட்டுப்பாக்கம்‌. அதைக்‌ கடந்து மேலும்‌ கிழக்கே வந்தால்‌ ஆற்காட்டு சாலையின்‌ முகப்பில்‌ பல்வேறு போர்களைக்‌ கண்ட குருசேத்திரம்‌ போன்ற போரூர்‌. போரூரைக்‌ கடந்து மதரஸாபட்டினம்‌ நோக்கிவந்தால்‌ புலியூர்‌. புலியூரிலும்‌ படையணிகள்‌ குவிக்கப்பட்டிருந்தன. மிகப்பெரிய குதிரைலாயமும்‌ ஒட்டகப்‌ பண்ணையும்‌ இங்கிருந்துள்ளன. குதிரைலாயமிருந்த பகுதி கோடம்பாக்கமாகவும்‌ ஒட்டகமிருந்த பகுதி ஒட்டகப்பாளையமாகவும்‌ இன்றும்‌ பெயர்‌ சொல்லுகின்றன. கோல்கொண்டா சுல்தான்கள்‌, மொகலாயப்‌ பேரரசர்கள்‌ ஆட்சிக்குப்‌ பின்‌ மதரஸாபட்டினம்‌ ஆற்காட்டு நவாப்களால்‌ ஆளப்பட்டது. 1769-இல்‌ ஒருமுறையும்‌ 1780-இல்‌ இரண்டாம்‌ முறையும்‌ மைசூர்‌ மன்னர்‌ ஹைதர்‌ அலி மதராஸபட்டினம்‌ மேல்‌ படையெடுத்தார்‌. இரண்டாம்‌ முறை கர்நாடகப்‌ பிரதேசத்தைக்‌ கைப்பற்றிய ஹைதர்‌ அலீ காஞ்சி மாநகரில்‌ ஓர்‌ ஆயுதப்‌ பட்டறையைத்‌ தொடங்கினார்‌. அப்பட்டறையிருந்த தெரு இன்றும்‌ ஹைதர்‌ பட்டறைத்‌ தெரு என அழைக்கப்படுகிறது. […] சாந்தோமின்‌ வளம்‌! கி.பி.1680காசி வீரண்ணா எனும்‌ ஹஸன்கானின்‌ மரணத்திற்குப்‌ பின்‌ பெத்த வெங்கடாத்திரி பெருவணிகர்‌ இடத்தைப்‌ பிடித்தார்‌. இவருக்குக்‌ கீழே உதவியாளராக இருவரும்‌, அலுவலராக எழுவரும்‌ இருந்தனர்‌. சாந்தோம்‌ பள்ளிவாசலைச்‌ சுற்றியும்‌ அக்கம்பக்கங்களிலும்‌ முஸ்லிம்கள்‌ கணிசமாக வந்து குடியேறத்‌ தொடங்கினர்‌. ஏற்கெனவே இருந்த முஸ்லிம்களைவிட வந்த குடிமக்கள்‌ அதிகமாயினர்‌. 1687-இல்‌ முஸ்லிம்களின்‌ பெருக்கம்‌ வணிகம்‌ செய்ய வந்த பிரிட்டிஷ்‌ வந்தேறிகளை வதைத்தது. எங்கேயோயிருந்து கொண்டு கோல்கொண்டா சுல்தான்‌ ஆணையிட கச்சேரித்‌ தெரு சுல்தானின்‌ அலுவலர்கள்‌ சாந்தோமை ஆட்டுவிப்பது ஆங்கிலேயரின்‌ உள்ளங்களைச்‌ சிதைத்தது. முஸ்லிம்களின்‌ பெருக்கத்தைக்‌ கட்டுப்படுத்த விரும்பிய ஆங்கிலேயர்‌ சாந்தோமை குத்தகைக்கு எடுக்க விரும்பினர்‌. அதற்காக கவர்னர்‌ யேல்‌ சின்ன வெங்கடாத்திரி என்பவரை காஞ்சிபுரம்‌ அனுப்பி அங்கிருந்த கோல்கொண்டா பிரதிநிதியோடு பேசவும்‌ வைத்தார்‌. ‘வருட வாடகை 4000 பகோடாக்கள் குத்தகை காலம்‌ மூன்று வருடங்கள்‌. முன்‌ பணம்‌ 1000 பகோடாக்கள்‌. குத்தகைதாரர்‌ சின்ன வெங்கடாத்திரி’ என காஞ்சிபுர பிரதிநிதி மொழிய ஆங்கிலேயர்கள்‌ வாடகை அதிகமெனக்‌ கூறி பின்‌ வாங்கினர்‌. அதே சமயத்தில்‌ போர்த்துக்கீசியர்கள்‌ சாந்தோமின்‌ குத்தகையைப்‌ பெற கோல்கொண்டா பிரதிநிதியோடு பேசினர்‌. அவர்கள்‌ பேசிக்‌ கொண்டிருக்கும்போதே கோல்கொண்டா அரசை மொகலாய அரசு விழுங்கிவிட்டது. 1688-இல்‌ ஆங்கிலேயர்‌ மொகலாயப்‌ பிரதிநிதியோடு பேச்சு வார்த்தை நடத்தி 3800 பகோடாக்கள்‌ வருட வாடகையில்‌ சாந்தோமைப்‌ பெற்றனர்‌. அப்போது ஐரோப்பாவில்‌ ஆங்கிலேயருக்கும்‌ பிரெஞ்சுக்‌ காரருக்கும்‌ போர்மூள மதரஸாபட்டினத்திலும்‌ மோதல்‌ உருவாகும்‌ சூழல்‌. வங்காள விரிகுடாவில்‌ பிரெஞ்சுக்‌ கப்பல்கள்‌ வலம்‌ வந்து கொண்டிருந்தன. பழவேற்காட்டிலிருந்து மதராஸ்‌ வந்த டச்சுக்‌ கவர்னர்‌ லாரன்ஸ்‌ பிட்‌ ஆங்கிலேயருக்கு உதவுவதாக சொன்னார்‌. கவர்னர்‌ யேல்‌ கவலையில்‌ மூழ்கினார்‌. அப்போது கவர்னர்‌ யேல்‌ கவலையில்‌ மூழ்கினார்‌. அப்போது மராட்டியப்படை 2000 குதிரைப்படை வீரர்களுடன்‌ பூந்தமல்லியில்‌ புழுதியைக்‌ கிளப்பி காஞ்சிபுரத்தில்‌ கால்‌ பதித்தது. அப்படை மதரஸாபட்டினத்திற்குள்‌ நுழையலாம்‌ எனும்‌ கவலையைத்‌ தந்தது. கவர்னர்‌ படைக்கு ஆள்‌ சேர்த்தார்‌. மதரஸாபட்டின மனிதர்களில்‌ முஸ்லிம்களைத்‌ தவிர மற்றவர்கள்‌ படைவீரர்‌ ஆயினர்‌. போர்த்துக்கீசியர்கூட போர்ப்படை வீரராய்‌ மாறினர்‌. படைவீரர்‌ களுக்கு பயிற்சியளிக்க வங்காளத்திலிருந்த கம்பெனிச் சிப்பாய்கள்‌ கப்பலில்‌ வந்தனர்‌. இலண்டனிலிருந்து "டிஃபென்ஸ்‌’ என்ற பெரிய கப்பலில்‌ ஆங்கிலேயச்‌ சிப்பாய்கள்‌ அணியணியாய்‌ வந்தனர்‌. 1696-இல்‌ மொகலாயரின்‌ பிரதிநிதியான நவாப்‌ ஜுல்பிகார்‌ கானுடன்‌ சேர்ந்து போர்த்துக்கீசியர்‌ சாந்தோமைக்‌ கைப்பற்றத்‌ திட்டமிட்டனர்‌. மனம்‌ மாறிய நவாப்‌ போர்ச்சுக்கீசியரைப்‌ புறந்தள்ளிட கனவு கலைந்தவர்கள்‌ கைபிசைந்து நின்றார்கள்‌. 1697-இல்‌ மொகலாய அதிகாரிகள்‌ சாந்தோமிலிருந்த போர்த்துக்கீசியர்களின்‌ கட்டிடங்களை இடிக்கத்‌ தொடங்கினர்‌. நவாப் ஜூல்பிகருக்கு நவாப் தாவூத் கான் பிரதிநிதியாக வந்தார். இரண்டாவது நவாபுக்கு ஆங்கிலேயரைப்‌ பிடிக்கவில்லை. ஆங்கிலேயரும்‌ எச்சரிக்கையாகவே இருந்தனர்‌. 1699-இல்‌ நவாப்‌ ஜுல்பிகார்‌ கானின்‌ உதவியாளராக இருந்தபோதே தாவூத்கான்‌ மதரஸா பட்டினத்திற்கு கடற்புரத்தைப்‌ பார்க்க வருவதாகச்‌ சொல்லி பட்டினப்‌ பிரவேசம்‌ செய்திருந்தார்‌. அப்போதைய கவர்னர்‌ பிட்‌, தாவூத்கான்‌ வருகையைப்‌ பற்றி சந்தேகப்பட்டார்‌. திருவல்லிக்கேணியிலிருந்த ஸ்டைல்மேன்‌ தோட்ட மாளிகையில்‌ தங்கிய தாவூத்கான்‌, ஒரு வாரம்‌ சாந்தோமில்‌ நோட்டம்‌ பார்த்தார்‌. 1701-இல்‌ தாவூத்‌ கான்‌ ஆற்காட்டு நவாபானார்‌. நவாபைத்‌ தம்‌ நட்பு வட்டத்தில்‌ சேர்க்க ஆங்கிலேய கவர்னர்‌ பிட்‌, துபாஷ்‌ ராமப்பா என்பவருடன்‌ வெனிஸ்‌ நகரிலிருந்து வந்து மதராஸில்‌ வாழ்ந்து கொண்டிருந்த நிக்கோலோ மானுச்சி எனும்‌ மொழிபெயர்ப்‌ பாளரையும்‌ பரிசுப்‌ பொருட்களோடு அனுப்பி வைத்தார்‌. நிக்கோலோ மானுச்சி சகலகலா வல்லவர்‌. இத்தாலியிலிருந்து டெல்லி வந்து மன்னர்‌ ஷாஜஹான்‌ காலத்தில்‌ அவர்‌ மகன்‌ தாராவோடு பழகி ஆலோசகராகவும்‌ சில சமயம்‌ மருத்துவராகவும்‌ இருந்தார்‌. பார்ஸி மொழி தெரிந்த அவர்‌ சிறந்த மொழிபெயர்ப்‌பாளராகவும்‌ திகழ்ந்தார்‌. ஆலம்கீர்‌ ஒளரங்கசீப்‌ டெல்லி பட்டணத்தைப்‌ பிடித்தபின்‌ தாராவின்‌ நண்பரான நிக்கோலோ மானுச்சி நழுவி தென்னகத்தின்‌ கோல்கொண்டா வந்து பின்‌ மதரஸா பட்டினவாசியாகியிருந்தார்‌. ஆங்கிலேயரோடு கைகோர்த்து பிழைப்பை நடத்திக்‌ கொண்டிருந்தார்‌. நிக்கோலோவைப்‌ பார்த்த தாவூத்கான்‌ கொடுத்த பரிசுப்‌ பொருட்களை பெரிதாகக்‌ கருதவில்லை. "எம்‌ ஆட்சிப்‌ பகுதிக்குள்‌ மதரஸாபட்டினந்தான்‌ பொன்கொழிக்கும்‌ பூமி. எனவே அங்கு தனியான ஆட்சியதிகார மையத்தை அமைக்கப்‌ போகிறேன்‌’ எனச்‌சொல்லியனுப்பினார்‌. அதே ஆண்டில்‌ தாவூத்கான்‌ பத்தாயிரம்‌ படைவீரர்களுடன்‌ சாந்தோம் வந்து சேர்ந்தார்‌. பத்தாயிரத்தில்‌ ஆயிரக்கணக்கான குதிரை வீரர்களும்‌ இருந்தனர்‌. நவாபைக்‌ கண்டு பேச இரு ஆங்கிலேய அதிகாரிகள்‌ பரிசுப்‌ பொருட்களுடன்‌ வந்தனர்‌. நவாபோ பரிசை ஏற்க மறுத்தார்‌. செய்தி கேட்ட கவர்னர்‌ பிட்டுக்குக்‌ கோபம்‌ வந்தது. ‘உறவுப்‌ பயணமா? உதிரம்‌ சிந்தும்‌ பயணமா?’ எனக்‌ கேட்டு பிட்‌ ஓலை அனுப்பினார்‌. அப்போது ஆங்கிலேயரிடம்‌ படையும்‌ அதிகரித்திருந்தது. ஆயுதங்களும்‌ குவிந்திருந்தன. மோதிக்‌ கொண்டால்‌ இருவருக்குமே இழப்புத்தான்‌. ஆங்கிலேயப்‌ படை வீழ்ந்தால்‌ போர்த்துக்கீசியரோ பிரெஞ்சியரோ சாந்தோமைப்‌ பெறும்‌ வாய்ப்புள்ளது. ஒருவேளை நவாப்‌ படை வீழ்ந்தால்‌ இழப்பு மட்டுமல்ல, இழுக்கும்‌ வந்து சேரும்‌. இழுக்கு கர்நாடகாவைக்‌ கடந்து டெல்லி வரை போய்ச்சேரும்‌. மிரட்டி பெற வேண்டியதைப்‌ பெற்றுக்கொண்டு சென்றுவிட வேண்டியதுதான்‌!’ என முடிவுக்கு வந்த நவாப்‌ தாவூத்கான்‌ பரிசுப்‌ பொருட்களைப்‌ பெற்று விருந்தும்‌ உண்டு செஞ்சிக்கோட்டைக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தார்‌.‌ கவர்னர்‌ பிட்‌ அனுப்பிய கடிதம்‌ நவாபின்‌ கண்களில்‌ அவ்வப்‌ போது காட்சிப்‌ பொருளானது. ஆறு மாதங்கள்‌ ஆறு நாட்களாய்க்‌ கழிய நவாப்‌ மீண்டும்‌ தம்‌ படையுடன்‌ சாந்தோமுக்கு வந்தார்‌. அப்போது தற்காப்புக்காக கவர்னர்‌ சாந்தோமில்‌ ஒரு படையை நிறுத்தியிருந்தார்‌. அப்படையில்‌ 200 ராஜபுதனத்து வீரர்களும்‌ இருந்தனர்‌. சாந்தோமுக்கு வந்த நவாபைச்‌ சந்திக்க துபாஷ்‌ பாப்பா பிராமணி சென்றபோது சில முக்கியமான பரிசுகள்‌ கேட்கப்பட்டன. அவற்றைத்‌ தர கவர்னர்‌ மறுக்கவும்‌ நவாப்‌ திட்டத்தைச்‌ செயல்‌ படுத்த அணியமானார்‌. சாந்தோமில்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்பட்டது. முகத்துவாரம்‌ வெறிச்‌ சோடியது. கலங்கள்‌ காணாமல்‌ போயின; காகங்கள்கூட கடற்கரையில்‌ பறக்கவில்லை. மதரஸாபட்டினத்துக்‌ கரையோரங்களில்‌ கடற்கொள்ளைக்‌ காரர்கள்‌ அதிகமாகிவிட்டதாலும்‌ தேவையான பாதுகாப்பு இல்லாததாலும்‌ துறைமுகம்‌ மூடப்படுகிறது என நவாப்‌ 1702, நவம்பர் 16-ல் வாய்மொழியாகக் கூற ஏற்றுமதி இறக்குமதி நின்றன. 1702-பிப்வரி 6-இல்‌ ஆணையாக வெளிவர சாந்தோமின்‌ செயல்பாடுகள்‌ உறைந்து போயின. "போர்‌ தொடுக்க விரும்பவில்லை எனக்‌ கூறியிருந்தீர்கள்‌. இப்போது ஒரு மெளனமான போரை எங்கள்மீது தொடுத்துள்ளீர்கள்‌. எனவே நாங்கள்‌ உங்கள்மீது போர்‌ தொடுக்க ஆயத்தமாகி விட்டோம்‌’’ என கவர்னர்‌ பிட்‌ நவாபுக்கு ஓலை அனுப்பினார்‌. அப்போது மதரஸாபட்டினத்தில்‌ ஒரு வதந்தி எழ, மக்களிடையே குழப்பம்‌ உண்டானது. கவர்னரின்‌ ஓலை போய்ச்‌ சேரும்‌ முன்பே எழும்பூர்‌, புரசைவாக்கம்‌, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில்‌ கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு வதந்தி உண்‌டானதைத்‌ தொடர்ந்து மக்கள்‌ ஓடி ஒளிய ஆரம்பித்தனர்‌. சிலர்‌ நகரத்தை விட்டு வெளியேறினர்‌. பிப்ரவரி 12-இல்‌ நவாப்‌ கருப்பர்‌ பட்டணத்தையும்‌ தங்க சாலையையும்‌ ஆங்கிலேயரிடமிருந்து தாம்‌ எடுத்துக்கொள்ளப்‌ போவதாக அறிவித்தார்‌. போர்‌ தொடங்கப்படாமலேயே இடப்பறிப்புகள்‌. கவர்னர்‌ பிட்‌ நவாபின்‌ அடிக்கு எதிரடி கொடுக்க ஆசைப்பட்டார்‌. போர்ப்பாட்டுப்‌ பாட மேடையமைக்க விழைந்தார்‌. ஐரோப்பியப்‌ பாசம்‌ அதிகம்‌ முளைத்தது. டச்சுக்காரர்களையும்‌ டேனிஸ்காரர்‌களையும்‌ உதவிக்கு அழைத்தார்‌. டச்சுக்காரர்கள்‌ ஆங்கிலேயரின்‌ வலையில்‌ சிக்கவில்லை. டேனிஷ்காரர்கள்‌ ஒரு கப்பலை தேவையான பொருட்களுடன்‌ தரங்கம்பாடியிலிருந்து அனுப்பி வைத்தனர்‌. நவாப்‌ தாவூத்‌ கான்‌ மதரஸா பட்டின சங்கதிகளை மேலாவுக்கு அவ்வப்போது தெரிவித்துக்‌ கொண்டிருந்தார்‌. ஆங்கிலேயர்‌ படை திரட்டுவதைக்‌ கேட்ட நவாப்‌ கடலூர்‌ துறைமுகத்தைச்‌ செயலிழக்கச்‌ செய்தார்‌. தொடர்ந்து மசூலிப்பட்டினம்‌, சூரத்‌ துறைமுகங்களிலும்‌ தாழ்ப்பாள்‌ போட வைத்தார்‌. ஒத்தைத்‌ தாழ்ப்பாள்‌ போட்ட நவாப்‌ ரெட்டைத்‌ தாழ்ப்பாள்‌ போட்டார்‌. ஆங்கிலேயர்கள்‌ கைபிசையக்கூட முடியாமல்‌ காய்ந்த மரமாய்‌ நின்றனர்‌. போர்க்குரல்கள்‌ அவலக்குரலாய்‌ ஒலித்தன. பேச்சு வார்த்தைக்கு துபாஷ்களை அனுப்பினர்‌. பிப்ரவரி மாதம்‌ பிணக்கோடு கடந்து மார்ச்‌ மாதம்‌ மலர்ந்தது. ஒரே மாதத்தில்‌ ஆங்கிலேயரின்‌ வணிகத்திற்கு ஷயரோகம்‌ - எலும்புருக்கி நோய்‌. நோய்க்கான மருந்தை நவாப்‌ சொன்னார்‌. அதன்‌ விலை ரூபாய்‌ முப்பதாயிரம்‌! முப்பதாயிரம்‌ கொடுத்தால்‌ எல்லாத்‌ தடைகளும்‌ நீக்கப்படும்‌ என நவாப்‌ தரப்பு கூற ஆங்கிலேயர்‌ 25,000 கொடுக்‌கச்‌ சம்மதித்தார்கள்‌. நவாபின்‌ மனம்‌ அசைய, இதழ்கள்‌ சம்மதம்‌ தெரிவித்தன. தடைகள்‌ நீக்கப்பட்டன. 1702-இல்‌ செஞ்சிக்கோட்டைக்கு சென்ற நவாப்‌ 1706-இல்‌ மீண்டும்‌ மதரஸாபட்டினத்திற்கு வந்தார்‌. இம்முறையும்‌ அவர்‌ திரும்பும்போது பரிசுப்‌ பொருட்களோடுதான்‌ சென்றார்‌! மொகலாயரின்‌ ஆட்சியில்‌… ‘டெக்கான்‌’ எனும்‌ தக்காணத்தின்‌ கடந்தகால வரலாற்றை சிறிது பாடமாய்ப்‌ படிக்க அழைப்புவிடுக்கிறேன்‌. டில்லி துக்ளக்‌ பேரரசின்‌ கீழ்‌ ஆங்காங்கிருந்த மண்டலங்களின்‌ ஆளுநர்கள்‌ நிர்வாகத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌. டில்லியிலிருந்து தென்குமரி வரை துக்ளக்‌ ஆட்சி! வடக்கே முல்தான்‌, வடமேற்கில்‌ சிந்து, கிழக்கே வங்காளம்‌, மேற்கே குஜராத்‌, தெற்கே தக்காணம்‌, தென்‌ மேற்கே மலபார்‌, நேர்‌ தெற்கே மாபார்‌ (மதுரை) என ஆளுநர்கள்‌ துக்ளக்‌ ஆட்சியின்‌ கிளைகளாய்‌ விளங்கினர்‌. கியாசுதீன்‌ துக்ளக்கைத்‌ தொடர்ந்து முகம்மது பின்‌ துக்ளக்‌! கி.பி. பதினான்கின்‌ முதல்‌ பகுதியில்‌ ஆங்காங்கு புரட்சிகளும்‌ கிளர்ச்சிகளும்‌! டில்லியால்‌ ஆளுநர்களை கைக்குள்‌ வைத்துக்‌ கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு ஆளுநரும்‌ தனியரசை அமைத்துக்கொண்டனர்‌. அவ்வாறு தக்காணத்தில்‌ அமைந்த அரசின்‌ பெயர்‌ பாமினி அரசு. அபுல்‌ முஜப்பர்‌ அலாவுதீன்‌ பஹ்மன்ஷாதான்‌ அதன்‌ நிறுவனர்‌. பஹ்மன்‌ பாமினி ஆனது. குல்பர்காவைத்‌ தலைநகராக்கிக்‌ கொண்ட பாமினி அரசு குல்பர்கா, தவுலதாபாத்‌, பீரார்‌, பீதார்‌ என நான்கு மாநிலங்களாய்ப்‌ பிரிக்கப்பட்டன. அவை மாகாண சுயாட்சி கண்டன. பாமினி அரசு மூன்று நூற்றாண்டுகள்‌ நீடித்தது. அது தொடங்கப்பட்ட ஆண்டு கி.பி.1347. பாமினி ராஜ்யம்‌ தொடங்கப்படுவதற்கு முன்‌ அவர்களுக்கு அருகில்‌ துங்கபத்திரா நதிக்கரையில்‌ (1336) விஜயநகர அரசு அமைக்கப்பட்டிருந்தது. கி.பி.1357-இல்‌ விஜய நகரத்தாரோடு பாமினி ராஜ்யத்துக்கு ஏற்பட்ட மோதல்‌ தொடர்ந்து கொண்டிருக்க கி.பி.1547இல்‌ பாமினி ராஜ்யம்‌ உடைந்து ஐந்து குறுநிலங்களாயின. பீரார்‌, பீதார்‌, அகமத்நகர்‌, பீஜப்பூர்‌, கோல்கொண்டா என அவை பெயர்‌ பெற்றன. பாமினி அரசாக இருந்தபோது விஜயநகரத்தோடு ஏற்பட்ட மோதல்‌ ஐந்தாகப்‌ பிரிந்த பின்பும்‌ தொடர்ந்தது. ஐந்து அரசு களையும்‌ மோதவிட்டு விஜயநகரம்‌ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்தபோது பங்காளிகள்‌ ஐவரும்‌ பகையை மறந்து ஒன்றுபட்டனர்‌. கி.பி.1565-இல்‌ நடந்த தலைக்கோட்டைப்‌ போரில்‌ விஜயநகரப்‌ பேரரசு வீழ்த்தப்பட்டது. அதன்பின்‌ நடந்த பாமினி சுல்தான்களின்‌ ஆட்சி ஒன்றன்பின்‌ ஒன்றாக மொகலாயப்‌ பேரரசர்‌ ஒளரங்கசீபிடம்‌ வந்து சேர்ந்தன. இவற்றில்‌ கோல்கொண்டா கி.பி.1687-இல்‌ தில்லிப்‌ பேரரசோடு இணைக்கப்பட்டது. கி.பி.1647 முதல்‌ கர்நாடகாவில்‌ கால்பதித்திருந்த கோல்கொண்டா 1687-இல்‌ சென்ற இடம்‌ தெரியவில்லை. கி.பி.1687-இல்‌ தக்காணத்தின்‌ ஆட்சித்‌ தலைவராகவும்‌ ஆலம்கீர்‌ ஒளரங்கசீப்‌ ஆனார்‌. ஒரு காலத்தில்‌ தக்காணத்தின்‌ ஆளுநராக இருந்த ஆலம்கீர்‌ முக்கோணமாய்‌ இருக்கும்‌ தென்னகத்துக்குள்‌ நுழையாமல்‌ போய்விட்டார்‌. தக்காணம்‌ மொகலாயரின்‌ ஆளுநர்‌ மூலம்‌ ஆளப்பட்டது. தக்காணத்திற்கு தெற்கே கர்நாடகப்‌ பிரதேசம்‌. அங்கே செஞ்சியில்‌ பீஜப்பூரும்‌ காஞ்சிப்‌ பகுதியில்‌ கோல்கொண்டாவும்‌ ஆண்டு முடித்திருந்தன. பாமினி ராஜ்யங்கள்‌ ஐந்தையும்‌ வென்றெடுத்தபின்‌ மொகலாய சாம்ராஜ்யத்தின்‌ தெற்கெல்லை விரிந்தது. அது தஞ்சையைத்‌ தொட்டது. கோல்கொண்டா ஆகிய பிரதேசங்களில்‌ வெற்றிபெற்ற ஆலம்கீர்‌ தக்காணத்திலேயே தங்கினார்‌. கோல்கொண்டாவில்‌ ஓர்‌ ஆளுநரை நியமித்து அவர்‌ மூலம்‌ கர்நாடகாவையும்‌ கட்டுக்குள்‌ வைத்திருந்தார்‌. தமிழகத்தின்‌ வடக்குப்‌ பகுதிகளான பாலாற்றங்கரையிலும்‌ சங்கராபரணிக்‌ கரையிலும்‌ மராட்டியர்கள்‌ கொள்ளை, கொலைகள்‌ செய்தும்‌ கலவரங்கள்‌ புரிந்தும்‌ மக்களின்‌ நிம்மதியைக்‌ குலைத்தனர்‌. ஆலம்கீர்‌ ஒளரங்கசீப்‌ கொலை, கொள்ளைகளை முடிவுக்குக்‌ கொண்டுவர 1690-இல்‌ ஜுல்பிகார்‌ அலி கானை கர்நாடக நவாப்‌ ஆக்கினார்‌. ஒளரங்கசீபோடு சேர்ந்து மொகலாய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த மிகப்பெரும்‌ இரு தளபதிகளில்‌ ஒருவர்‌ ஜுல்பிகார்‌ அலி கான்‌, மற்றொருவர்‌ மீர்ஜும்லா. மீர்ஜும்லா இறந்த பின்பே ஒளரங்கசீப்‌ தக்காணம்‌ வந்தார்‌. தக்காணம்‌ வந்த ஒளரங்கசீபுக்குப்‌ பேருதவியாக இருந்த ஜுல்பிகார்‌ தட்சிண ஆட்சியாளர்‌ ஆக்கப்பட்டார்‌. கர்நாடகாவும்‌ அவரின்‌ கீழ்தான்‌ ஆளப்பட்டது. ஜுல்பிகாருக்கு உதவியாக தாவூத்கான்‌ ஆற்காடு நவாப்‌ ஆனார்‌. தாவூத்கான்‌ ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்‌. 1693-இல்‌ காசிம்கான்‌, நவாப்‌; போர்ப்‌ படைத்தளபதி செய்யது மூஸாகான்‌. 1707-இல்‌ ஒளரங்கசீப்‌ மரணமடைய மொகலாய மன்னர்‌ பதவியை அடைய நடந்த வாரிசுப்போரில்‌ முஆஜம்‌ எனும்‌ பகதூர்ஷா சிம்மாசனம்‌ ஏறினார்‌. துணை நின்றார்‌ ஜுல்பிகார்‌ கான்‌. ஒளரங்கசீப்‌ இறந்தபோது முஆஜம்‌, ஆஜம்‌, கான்‌ பக்ஷ்‌ ஆகிய மூவரும்‌ காபூல்‌, குஜராத்‌, தக்காண கவர்னர்களாக இருந்தனர்‌. டெல்லி சிம்மாசனத்தைப்‌ பிடிக்க ஏற்பட்ட போரில்‌ முதலிருவர்‌ மோதிக்கொள்ள ஆஜத்தின்‌ தலை வீழ்ந்தது; முஆஜம்‌ தலை தப்பியது. தப்பிய தலைக்குரிய முஆஜம்‌ பகதூர்ஷா எனும்‌ பெயரில்‌ சிம்மாசனம்‌ ஏற தக்காணத்தில்‌ இருந்த கான்பக்ஷ்‌ டெல்லி செல்ல முடியாததால்‌ கவர்னர்‌ பதவி வகித்த இடத்திலேயே டெல்லி பாதுஷாவாக முடிசூட்டிக்‌ கொண்டார்‌. அரியணை ஏறிய பகதூர்ஷா கான்‌ பக்ஷைத்‌ தீர்த்துக்கட்ட திட்ட மிட்டுக்‌ கொண்டே தக்காணத்தின்‌ அசைவுகளைக்‌ கண்‌ காணித்தார்‌. கான்‌ பக்ஷ்‌ ஆட்சியின்‌ கீழ்‌ மதராஸ்‌ இருந்ததால்‌ அவர்‌ ஒருவேளை கடல்‌ வழியாகத்‌ தப்பிக்கலாம்‌ என கணக்குப்‌ போட்ட பகதூர்ஷா ஆங்கிலேயருக்குத்‌ தூது அனுப்பினார்‌. ‘கான்‌ பக்ஷ்‌ மதராஸ்‌ பக்கம்‌ காலடி எடுத்து வைத்தால்‌ பிடித்துக்‌ கொடுக்கவும்‌, அவர்‌ கடல்வழி தப்பிச்‌ செல்லாமல்‌ பார்த்துக்கொள்ளவும்‌’ என ஓலை சொன்னது. கான்‌ பக்ஷ்‌ தெற்கில்‌ காலெடுத்து வைக்கவில்லை. வடக்கே படையுடன்‌ டில்லியை நோக்கிச்‌ சென்ற அவருக்கு பகதூர்ஷா கபர்ஸ்தான்‌ அமைத்துக்கொடுத்தார்‌. பகதூர்ஷாவின்‌ உதவியாளராக மதராஸ்பட்டினத்‌ தொடர்புடைய ஜியாவுதீன்‌ கான்‌ நியமனம்‌ பெற்றார்‌. அவருடைய மனைவி அப்போது சாந்தோமில்‌ இருந்தார்‌. மதராஸ்‌ பட்டின மாப்பிள்ளை ஜியாவுதீன்கான்‌. இவரை கியாசுதீன்‌ எனவும்‌ குறிப்பிடுகின்றனர்‌. ஜியாவுதீன்கான்‌ போர்ப்‌ படைத்தளபதி மட்டுமல்ல, அத்தாணி மண்டபத்து ஆலோசகர்‌. அப்போதைய மதரஸாபட்டின ஆங்கிலக்‌ கவர்னர்‌ பிட்டின்‌ நண்பர்‌. ஜியாவுதீன்கான்‌ மூலம்‌ ஆங்கிலேயர்‌ தம்‌ பழைய பிரமாணங்களை நீட்டித்துக்‌ கொண்டனர்‌. புதிய பிரமாணங்கள்‌ மூலம்‌ திருவொற்றியூர்‌, நுங்கம்பாக்கம்‌, பெரம்பூரை அடுத்த வாசலவாடா (வியாசர்பாடி), காடவாக்‌ (கத்திவாக்கம்‌), சாத்தங்காடு ஆகிய ஐந்து கிராமங்களை 1500 பகோடாக்களுக்குப்‌ பெற்றனர்‌. இதற்கு லஞ்சம்‌ 200 பகோடாக்கள்‌, மொகலாய அதிகாரிக்கு! 1708 டிசம்பரில்‌ வழங்கப்பட்ட இந்த பிரமாணத்தின்‌ போதுதான்‌ கான்‌ பக்ஷைப்‌ பிடித்துக்‌ கொடுக்கும்படியான ஓலையும்‌ வந்தது. - பிரமாணம்‌, கடிதத்தோடு இன்னொரு ஆணையும்‌ மதராஸ்‌ பட்டினக்‌ கவர்னர்‌ பிட்டுக்கு வந்தது. அந்த ஆணை டெல்லி பாதுஷாவுக்குரிய பரிசுப்‌ பொருட்களின்‌ பட்டியலாக இருந்தது. பட்டியலில்‌ இருந்த உயிர்‌ - உயிரில்லாதவை: பலவகைப்‌ பறவைகள்‌, நல்லதோர்‌ யானை, சிறந்த வங்கக்‌ குதிரைகள்‌ பாரய்ண்யல ஒபரா, பகா, அகமது ஈகா, பஜபடடா, பளிங்குக்‌ கிண்ணங்கள்‌, சீனப்‌ பாண்டங்கள்‌, அழகான ஓவியத்துடன்கூடிய பெட்டிகள்‌, தங்க - வெள்ளித்‌ தட்டுகள்‌ - கிண்ணங்கள்‌, ஐரோப்பியத்‌ துப்பாக்கிகளும்‌ - தோட்டாக்களும்‌, மணியடிக்கும்‌ கடிகாரங்கள்‌, கருப்பு - சிவப்பு முனை பென்சில்கள்‌யானையிலிருந்து குருவிவரை இவையெல்லாம்‌ கப்பலேறி மசூலிப்பட்டினம்‌ சென்று அங்கிருந்து டெல்லிப்‌ பட்டணத்திற்கு குதிரை வண்டிகளில்‌ சென்றதாக “லவ்‌” தனது நூலில்‌ கூறுகிறார்‌. (Vestiges of Old Madras) தாவூத்கான்‌ நவாபாக இருந்தபோது துன்பப்பட்ட ‘பிட்‌’ மொகலாய சாம்ராஜ்யத்தின்‌ முக்கிய பிரமுகரான ஜியாவுதீன்‌ மூலம்‌ பெற்ற பிரமாணங்களால்‌ நிம்மதியுடன்‌ இருந்தார்‌. பகதூர்‌ ஷாவின்‌ நம்பிக்கைக்குரியவராக விளங்கிய ஜியாவுதீன்‌ கானின்‌ புதல்வர்தான்‌ ஹைதராபாத்‌ நிஜாமிய அரசை உருவாக்கிய ஆஸிப்ஜா எனும்‌ நிஜாமுல்‌ முல்க்‌ என்பது குறிப்பிடத்தக்கது. மதராஸ்‌ மாதரசியின்‌ மகனார்‌. ஒளரங்கசீப்‌ பகதூர்ஷா காலங்களில்‌ கர்நாடகப்‌ பரப்பில்‌ காசிம்கான்‌, ஜுல்பிகார்கான்‌, தாவூத்‌ கான்‌ ஆகியோர்‌ ஆட்சியதிகாரத்தை மேற்கொண்டிருந்திருக்கின்றனர்‌. ஒளரங்கசீப்‌ ஆட்சியில்தான்‌ 1689 முதல்‌ 1697 வரை செஞ்சிப்‌ போர்கள்‌ நடைபெற்று சொருப்‌ சிங்‌ - ராஜா தேசிங்‌ ஆகியோரின்‌ சரித்திரம்‌ முடிக்கப்பட்டிருக்கிறது. 1707-இல்‌ ஒளரங்கசீப்‌ மரணமடைய பகதூர்ஷா ஆட்சி. தக்காண கவர்னராக நிஜாமுல்‌ முல்க்‌. அவரின்‌ கீழ்‌ 1710-இல்‌ சாதத்துல்லாகான்‌. தக்காண கவர்னராக இருந்த நிஜாமுல்‌ முல்க்‌ டெல்லி அமைச்சராகவும்‌ இருந்தார்‌. அப்போதைய டெல்லி அரசியல்‌ ஒவ்வாமையைத்‌ தர தக்காணம்‌ வந்த நிஜாமுல்‌ முல்க்‌ தனியரசாக 1724-இல்‌ நிஜாமிய அரசை உருவாக்கினார்‌. ஆற்காட்டு நவாப்களின்‌ பட்டினம்‌ […] கோல்கொண்டா சுல்தான்கள்‌, மொகலாயரின்‌ கீழ்‌ செயல்பட்ட தக்காண ஆளுநர்கள்‌ என நடைபெற்ற ஆட்சியில்‌ மதரஸா பட்டினம்‌ அங்கம்பெற்றிருந்ததால்‌ பாமினி அரசுகளின்‌ வரலாறு, மொகலாய மன்னர்களின்‌ வரலாறு, தக்காண ஆட்சியாளர்களின்‌ வரலாறு ஆகியவை நமக்குத்‌ தெரியவேண்டியுள்ளது. முந்தைய அத்தியாயத்தில்‌ ஒளரங்கசீப்‌, பகதூர்ஷா வரலாறுகள்‌ இடம்பெற்றன. அதன்‌ பின்‌ முகம்மது ஷா வரையுள்ள ஆட்சியும்‌ நிஜாமுல்‌ முல்க்கின்‌ செயல்பாடும்‌ சுருக்கமாக சொல்லப்பட்டன. மேலும்‌, இங்கே ஒளரங்கசீபின்‌ மரணத்திற்குப்பின்‌ நிகழ்ந்த வற்றை சிறிது விரிவாகக்‌ காண்போம்‌. 1707-இல்‌ ஆலம்கீர்‌ மரணத்திற்குப்‌ பின்‌ பங்காளிச்‌ சண்டைகள்‌! சண்டைகளில்‌ இரு சகோதரர்களையும்‌ கொன்றொழித்த முஆஜம்‌ பகதூர்ஷா எனும்‌ பெயருடன்‌ டெல்லி அரியணையைப்‌ பிடித்து ஆட்சி புரிந்தார்‌. பகதூர்ஷாவுக்குப்‌ பின்‌ அவருடைய மூத்த மகன்‌ ஜஹந்தர்ஷா பேரரசர்‌ ஆனார்‌; ஜஹந்தர்ஷாவுக்குப்‌ பின்‌ அவருடைய தம்பி அஜிமுல்ஜானின்‌ மகன்‌ பாரூக்‌ ஷியார்‌ ஆட்சிக்கட்டில்‌ ஏறினார்‌. பாரூக்‌ ஷியாருக்குப்‌ பின்‌ ஆறு மாதங்களில்‌ மூன்று ராஜகுல இளைஞர்கள்‌ அரியணையில்‌ ஏறி இறங்கினார்கள்‌. இறுதியாக, ஜஹான்ஷாவுககுப் பிறந்த பதினெட்டே வயதான ரோஷன அகதா, முகம்மது ஷா எனும்‌ பெயருடன்‌ ஆட்சிக்கட்டிலில்‌ அமர்ந்தார்‌. அனுபவமில்லாத முகம்மதுஷாவுக்கு நல்ல அனுபவமிக்க நிஜாமுல்‌ முல்க்‌ பிரதம அமைச்சர்‌ ஆனார்‌. ஷா - முல்க்‌ இடையே சையத்‌ சகோதரர்கள்‌ கொம்பு முளைத்தவர்களாக இருந்தார்கள்‌. இவர்கள்தான்‌ சிறைப்பட்டிருந்த முகம்மது ஷாவை தில்லி பாதுஷா ஆக்கியவர்கள்‌. பிரதம மந்திரியாய்‌ இருந்த நிஜாமுல்‌ முல்க்குக்கு சையத்‌ சகோதரர்களைப்‌ பிடிக்கவில்லை; சகோதரர்களுக்கு முல்க்கைப்‌ பிடிக்கவில்லை. முல்க்‌ இடம்பெயர்ந்தார்‌! நிஜாமுல்‌ முல்க்‌ தக்காண ஆளுநராகி மூஸி நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்‌. பின்னர்‌ டில்லியில்‌ நடந்த ஆரசியல்‌ சதுரங்க விளையாட்டில்‌ பெரும்புள்ளிகள்‌ சிறு புள்ளிகள்‌ ஆயினர்‌. சையத்‌ சகோதரர்கள்‌ இறுதியில்‌ மண்ணறைவாசியாய்‌ மாறினர்‌. 1722-இல்‌ டில்லி நிர்வாகத்தைச்‌ செப்பனிட நிஜாமுல்‌ முல்க்‌ அழைக்கப்பட்டார்‌. ஆட்சிக்‌ கட்டில்‌ செல்லரித்துப்‌ போயிருப்பதைக்‌ கண்ட முல்க்‌ திரும்பவும்‌ தக்காணம்‌ வந்தார்‌. முன்னோடும்‌ வாகனம்‌ பழுதுபட்டிருப்பதை அறிந்துகொண்ட நிஜாமுல்‌ முல்க்‌ தெற்கில்‌ கடைசி வாகனமாய்‌ நின்ற தக்காணத்தைத்‌ தனிமைப்படுத்தினார்‌. 1724-இல்‌ ஆறு மாகாணங்களுடன்‌ தக்காணம்‌ தனியரசு ஆனது. நிஜாமிய அரசை நிறுவிய நிஜாமுல்‌ முல்க்‌ இருபத்தைந்து ஆண்டுகள்‌ ஆண்டு 1748-இல்‌ மரணமடைந்தார்‌. ஆஸிப்ஜா என்பதே நிஜாமுல்‌ முல்க்கின்‌ இயற்பெயர்‌. பாதுஷா அளித்த பட்டமே நிஜாமுல்‌ முல்க்‌. ஆலம்கீர்‌ ஒளரங்கசீபின்‌ தளபதியாக இருந்த ஜியாவுதீனின்‌ புதல்வரே ஆஸிப்ஜா. ஆஸிப்ஜாவுக்குப்‌ பின்‌ அவருடைய வாரிசுகள்‌ நிஜாம்‌ மன்னர்‌ ஆனார்கள்‌. கோல்கொண்டா, பிரார்‌ சமாஸ்தானங்களை உள்ளடக்கிய நிஜாமின்‌ அரசு கர்நாடகம்‌, தமிழகம்‌ என வளர்ந்தது. ஆற்காட்டைத்‌ தலைமையிடமாகக்‌ கொண்ட தென்னக அரசு நிஜாமிய அரசின்‌ கீழ்‌ நவாப்களால்‌ ஆளப்பட்டது. நிஜாமிய அரசு உருவாகும்‌ முன்பே செஞ்சிப்‌ பகுதியில்‌ பீஜப்பூர்‌ தடம்பதித்துள்ளது. கி.பி.1690-இல்‌ ஒளரங்கசீப்‌ ஜுல்பிகார்‌ அலீ கான்‌ என்பவரை தம்‌ பிரதிநிதியாக நியமித்து மராட்டியரின்‌ ஊடுறுவலைத்‌ தடுத்தார்‌. 1710-இல்‌ கர்நாடக நவாபாக இருந்தவர்‌ சாதத்துல்லாகான்‌. இவர்தான்‌ செஞ்சிக்கோட்டையை ஆண்ட தேசிங்கு ராஜனை வென்றவர்‌. மராட்டியத்திலிருந்து வந்து ஆண்ட தேசிங்கு கப்பம்‌ கட்டாததால்‌ களப்‌ பலியானார்‌. ராஜா தேசிங்கை வென்ற சாதத்துல்லாகான்‌ 1732-இல்‌ மரணிக்க அவருடைய மகன்‌ தோஸ்த்‌ அலீ (1732 - 40) நவாப்‌ ஆனார்‌. தோஸ்த்‌ அலீ மராட்டியரோடு போரிட்டு மடிய அவர்‌ மகன்‌ ஸப்தர்‌ அலீயை (1740-42) வென்றவர்கள்‌ நவாபாக நியமித்துவிட்டு மருமகன்‌ சந்தாசாகிபை சிறைப்பிடித்துச்‌ சென்றனர்‌. நிஜாம்‌, ஸப்தர்‌ அலீயை நவாபாக ஏற்க மறுத்தார்‌. ஸப்தர்‌ அலீயோ அவருடைய மைத்துனர்‌ முர்தஸா அலீயால்‌ கொல்லப்பட்டார்‌. பின்னர்‌ ஸப்தர்‌ அலீயின்‌ மகன்‌ சையத்கான்‌ ஓராண்டு நவாபாக இருந்து 1744-இல்‌ கொலை செய்யப்பட்டார்‌. இந்நிலையில்‌ நிஜாம்‌ அசப்ஜா கர்நாடகத்தில்‌ படையோடு வந்து அன்வர்தீனை நவாபாக்கினார்‌. அன்வர்தீன்‌ ஸாதத்துல்லா கானின்‌ வம்சத்தைச்‌ சேர்ந்தவரல்லர்‌. எனவே சிறை மீண்டுவந்த முன்னாள்‌ நவாப்‌ தோஸ்த்‌ அலீயின்‌ மருமகன்‌ சந்தா சாகிப்‌ பிரெஞ்சுக்காரர்களின்‌ படை உதவியோடு போர்க்கொடி உயர்த்தினார்‌ போரில்‌ அன்வர்தீன்‌ மரணமடைய சந்தாசாகிப்‌ ஆற்காட்டைக்‌ கைப்பற்றினார்‌. அன்வர்தீனின்‌ மகன்‌ முஹம்மது அலீ திருச்சிக்கு ஓடிப்போக, அவருக்கு ஆதரவாக ஆங்கிலேயர்‌ களமிறங்க, சந்தாசாகிப்‌ மரணிக்க மீண்டும்‌ அன்வர்தீனின்‌ குடும்ப ஆட்சி. அதன்பின்‌ அன்வர்தீனின்‌ மகன்‌ நவாப்‌ முஹம்மது அலீ நட்பிற்காகவும்‌ பாதுகாப்பிற்காகவும்‌ கி.பி.1756-இல்‌ மதரஸா பட்டினம்‌ வர எண்ணினார்‌. ஆற்காடோ, சிற்றூர்‌, மதரஸா பட்டினமோ வளர்ந்துவந்த பேரூர்‌, பாலாறு மட்டுமே அங்கே கூவம்‌ எனும்‌ திருவல்லிக்கேணி ஆற்றோடு வங்காளப்‌ பெருங்கடலும்‌ இங்கே! சாதாரண அரண்மனையும்‌ சராசரி மனிதர்களுமே அங்கே. பெருங்கோட்டைக்‌ கொத்தளங்களும்‌ ஆங்கிலேயப்‌ பெரிய மனிதர்களும்‌ இங்கே! ஆற்காட்டு நவாப்‌ மதரஸா பட்டினம்‌ வந்து சேர்ந்தார்‌. இருக்க இடம்‌ வேண்டுமே, ஆங்கிலேயர்‌ கோட்டைக்குள்ளேயே இல்லம்‌ கொடுத்தனர்‌. அவ்வில்லம்‌ இருந்த கோட்டையின்‌ உள்‌ வீதி அரண்மனைத்‌ தெரு என அழைக்கப்பட்டது. ஒண்டிக்குடித்தனம்‌ எத்தனை நாளைக்கு? தனிக்குடித்தனம்‌ செல்ல நவாப்‌ மட்டுமல்ல, கவர்னரும்‌ ஆவன செய்தார்‌. அதன்பின்தான்‌ சேப்பாக்கம்‌ அரண்மனை உருவானது. கி.பி.1768-இல்‌ மொகலாய சிற்பக்கலை (sarcenic) பாணியில்‌ கட்டப்பட்ட அரண்மனையைச்‌ சுற்றி நெடிய சுவர்கள்‌ எழுப்பப்‌ பட்டன. ஆற்காட்டிலிருந்த தலைநகரம்‌ மதரஸா பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. வடக்கிலுள்ள நெல்லூரிலிருந்து வட தென்‌ ஆற்காடுகள்‌, திருச்சி, தெற்கிலுள்ள திருநெல்வேலி வரை நவாபின்‌ கொடி பறந்தது. தொடக்கத்தில்‌ வாலாஜாவைத்‌ தலைநகராக்கி நிஜாம்களின்‌ கீழ்தான்‌ நவாப்கள்‌ செயல்பட்டனர்‌. நவாப்‌ முகம்மது அலீதான்‌ தலைநகரை வாலாஜாவிலிருந்து ஆற்காட்டுக்கு மாற்றினார்‌. கர்நாடக நவாபாக வாலாஜாவிலிருந்த வாலாஜா முகம்மது அலீ ஆற்காடு நவாப்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌. இன்றைய சேப்பாக்கம்‌ எழிலகம்‌ கட்டிடம்தான்‌ அன்றைய சேப்பாக்கம்‌ அரண்மனை. அது இருக்கும்‌ இன்றைய தெருவுக்குப்‌ பெயர்‌ வாலாஜா சாலை. சேப்பாக்கம்‌ அரண்மனையைக்‌ கட்டிக்‌ கொடுத்த பொறியாளர்‌ பால்‌ பென்‌ஃபீல்ட்‌ நவாபுக்குப்‌ பெருந்‌ தொகையைக்‌ கடனாகக்‌ கொடுத்தவர்‌. தொடக்கத்தில்‌ பால்‌ பென்‌ஃபீல்ட்‌ கிழக்கிந்தியக்‌ கம்பெனியின்‌ பொறியாளராக இருந்து பிரச்சினையில்‌ மாட்டிக்‌ கொண்டவர்‌. பின்‌ கட்டிட ஒப்பந்தக்காரராகி பெரும்‌ பணக்காரர்‌ ஆனவர்‌. இவர்தான்‌ நவாபுக்கு அமீர்‌ மகாலை (1768)க்கட்டிக்கொடுத்தார்‌. அரண்மணையைக்‌ கட்டும்போதே கடன்பட்ட நவாப்‌ அமீர்‌ மகாலைக்‌ கட்டி முடிக்கும்போது பெருங்கடன்காரர்‌ ஆனார்‌. இக்கடன்களே நவாபை பல வழிகளில்‌ மூழ்கடித்தது. கடன்‌ கொடுத்த பென்‌ஃபீல்ட்‌ கடனைக்‌ கேட்க பிரச்சினையாகி நவாபின்‌ கடன்களை கிழக்கிந்தியக்‌ கம்பெனி ஏற்க 1801-இல்‌ ஆற்காடு அரசு தலை குனிந்தது. முகம்மது அலீயின்‌ அரசாங்கக்‌ கடன்‌ 30 லட்சம்‌ வராகன்‌; அவருடைய தனிப்பட்ட கடன்‌ 70 லட்சம்‌ வராகன்‌ என கணக்கிடப்பட்டது. தலைகவிழ்ந்த அரசு தாள்பணிந்த கதையாக நவாப்‌ ஆங்கிலேயரிடம்‌ மேலும்‌ 3.5 கோடி பவுண்டுகள்‌ கேட்டு கோரிக்கை வைத்தார்‌. 1795-இல்‌ வாலாஜா முகம்மது அலீக்குப்‌ பின்‌ அவருடைய குமாரர்‌ உம்தத்துல்‌ உமாரா நவாப்‌ ஆனார்‌. நவாப்‌ கடன்காரராயிருந்தும்‌ அவர்‌ மேல்‌ ஒருவித பயங்கலந்த மரியாதையிருந்தது. காரணம்‌ மைசூரை ஆண்ட ஹைதர்‌ அலீயும்‌ திப்புசுல்தானும்‌ ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள். 1769-இல்‌ ஹைதரும்‌ திப்புவும்‌ எழும்பூரிலும்‌ சாந்தோமிலும்‌ தம்‌ குதிரைப்படையில்‌ வந்ததும்‌ 1780-இல்‌ இரண்டாம்‌ முறையாக மதரஸா பட்டினத்திற்கு வந்து சமர்‌ புரிந்ததும்‌ ஆங்கிலேயரின்‌ கனவிலும்‌ நினைவிலும்‌ வந்து வந்து போனதுதான்‌ அச்சத்திற்குக்‌ காரணம்‌. அவர்களோடு ஆற்காட்டார்‌ ஒன்று சேர ‘மார்க்கம்‌’ போதும்தானே! ஆங்கிலேயரின்‌ அச்சத்தை 1799 அகற்றியது. கடைசி கர்நாடகப்‌ போரில்‌ திப்பு சுல்தான்‌ கொல்லப்பட ஆங்கிலேயர்‌ நிம்மதிப்‌ பெருமூச்சு விட்டனர்‌. நவாபின்‌ நடவடிக்கைகள்‌ கண்காணிக்கப்‌ பட்டன. ஆற்காட்டு அரசாங்க வரவு செலவுகள்‌ சரிபார்க்கப்பட்டன. திப்பு சுல்தான்‌ மரணமடைந்த பின்‌ அவருக்கும்‌ பிறருக்கும்‌ இருந்தகடிதத்‌ தொடர்புகள்‌ கண்டுபிடிக்கப்பட்டன. அக்கடிதங்களில்‌ ஆற்காட்டு நவாபின்‌ கடிதங்களும்‌ இருந்தன. அவற்றில்‌ ஆங்கிலேயர்‌ குறித்து நவாப்‌ எழுதியுள்ள பல தகவல்கள்‌ கிடைத்தன. நண்பனாய்‌ இருந்துகொண்டே எதிரிக்கு தகவல்‌ சொன்னதை ராஜ துரோகக்‌ குற்றமாகக்‌ கருதிய ஆங்கிலேயர்‌ கர்நாடகத்தை நவாபிடமிருந்து பிடுங்க முடிவு செய்தனர்‌. இதனிடையே நவாபுக்கு ஏதோ ஒரு புதுவகை நச்சுக்‌ காய்ச்சல்‌! உடனடியாக முடிவெடுக்காத ஆங்கிலேயர்‌ உம்தத்துல்‌ உமாரா அரண்மனையை தம்‌ வசமாக்கிக்‌ கொண்டனர்‌. நவாபின்‌ மகன்‌ தனது தந்தையின்‌ அரசுரிமையையும்‌ அரண்மனையையும்‌ ஆங்கிலேயர்‌ தம்‌ வசப்படுத்தியதை ஏற்க மறுத்தார்‌. ஆங்கிலேயர்‌ அவரை மிக துச்சமாக மதித்து அரண்‌ மனையை விட்டு வெளியேற்றினர்‌. அதற்குப்‌ பதிலாக நவாபின்‌ உறவினர்‌ ஒருவரைப்‌ பிடித்து நவாப்‌ நாற்காலியில்‌ அமர வைத்தனர்‌. அதற்குப்‌ பின்‌ கர்நாடக அரசில்‌ சில பொம்மைகள்‌! 1855-இல்‌ நாற்காலியில்‌ அமர்ந்த பொம்மை நவாபுக்கு வாரிசு இல்லை. அப்போது கவர்னர்‌ ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு வாரிசு இல்லாத இந்திய சமஸ்தானங்களை கிழக்கிந்தியக்‌ கம்பெனி கபளீகரம்‌ செய்துகொள்ளும்‌ சட்டத்தைக்‌ கொண்டு வந்திருந்தான்‌. அதன்படி கர்நாடகம்‌ கபளீகரம்‌ ஆனது! நவாப்‌ நாற்காலி காலியானது. மதரஸா பட்டினத்தில்‌ அன்று வாழ்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காலி நாற்காலி கவலைக்குள்ளாக்கியது. 1857-க்குப்‌ பிறகு மறைந்த நவாபின்‌ உறவினர்‌ ஒருவரை லண்டன்‌ பெயரளவில்‌ நவாப்‌ ஆக்கியது. 1868-இல்‌ தான்‌ லண்டன்‌ அமீரே ஆற்காடு - ஆற்காடு இளவரசர்‌ என அவருக்குப்‌ பெயர்‌ சூட்டியது. அவருக்கும்‌ அவரது சுற்றத்தாருக்கும்‌ ரூபாய்‌ 1,50,000-ஐ ஆண்டு மான்யமாக வழங்கியது. அமீர்‌ மகாலில்‌ அவர்கள்‌ வாழ்ந்துகொள்ள வகை செய்தது. சேப்பாக்க அரண்மனை விலை கொடுத்து வாங்கப்பட்டு ஓர்‌ அரசு அலுவலகமாக மாற்றப்பட்டது. பைகிராப்ட்ஸ்‌ (பாரதி) சாலையின்‌ மேற்குப்‌ பகுதியில்‌ 1798-இல்‌ கட்டப்பட்ட அமீர்‌ மகாலை 1870-இல்‌ நவாபுக்கு கொடுத்த போதிலும்‌ 1872 முதல்‌ 1875 வரை அங்கு ராயப்பேட்டை காவல்துறை இயங்கியதால்‌ நவாப்‌ குடும்பம்‌ மகாலுக்குக்‌ குடிபோகவில்லை. 1876-இல்தான்‌ நவாப்‌ குடும்பம்‌ அமீர்‌ மகாலில்‌ ஆரோகணித்துப்‌ படுத்துறங்கியது. அதுவரை குடும்பம்‌ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலிருந்த ஷாதி மகாலில்‌ சஞ்சாரம்‌ செய்தது. மாநில அமைச்சருக்குரிய மரியாதை பெற்ற நவாப்‌ இன்றும்‌ தனிக்கொடி கட்டிப்‌ பறக்கிறார்‌. தஞ்சாவூர்‌, கள்ளிக்கோட்டை, அவத்‌ ஆகிய ராஜ குடும்பங்களோடு அரசிடம்‌ மான்யம்‌ பெறும்‌ நான்காவது குடும்பம்‌ ஆற்காட்டு நவாப்‌ குடும்பம்‌. மைசூர்‌ புலிகளும்‌ மதரஸாபட்டினமும்‌ மைசூர்‌ புலிகள்‌ என அழைக்கப்பட்ட மாவீரர்கள்‌ ஹைதர்‌ அலீயும்‌ திப்பு சுல்தானும்‌ இருமுறை மதரஸா பட்டினத்திற்குள்‌ நுழைந்து ஆங்கிலேயரை ஆட்டங்காணச்‌ செய்திருக்கின்றனர்‌. 1767-இல்‌ ஹைதராபாத்‌ நிஜாமோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்த ஹைதர்‌ அலீ 1768-இல்‌ தனிமைப்படுத்தப்பட்டார்‌. நிஜாம்‌ ஆங்கிலேயரோடு நட்பு உடன்படிக்கை கண்டபின்பும்‌ மைசூர்‌ புலி ஓய்ந்து கிடக்கவில்லை. 1769-இல்‌ ஹைதரின்‌ குதிரைப்படை பாராமகாலைத்‌ துவம்சம்‌ செய்து கரூரைக்‌ கைப்பற்றியது. ஈரோட்டின்‌ ஆற்றங்கரையில்‌ கேப்டன்‌ நிக்ஸனைத்‌ தோற்கடித்தது. கர்நாடகப்‌ பிரதேசத்தையே கலக்கத்துக்கு ஆளாக்கியது. ஹைதரின்‌ குதிரைப்படை வருகிறதென்றால்‌ குதிரைகளின்‌ எண்ணிக்கையை எவரும்‌ கணக்கிட முடியாது. அது வந்து கொண்டேயிருக்கும்‌; புழுதி பறந்து கொண்டேயிருக்கும்‌. வருவதுதான்‌ கடைசிக்‌ குதிரை எனக்‌ கணித்தால்‌ சிறிய இடை வெளியில்‌ மறுபடியும்‌ குதிரைகள்‌ வந்துகொண்டேயிருக்கும்‌. அப்படையின்‌ சிறப்பு, வெல்ல முடியாத காரணம்‌ அது நின்று போரிடாது; வெட்டி வீழ்த்திக்‌ கொண்டு வில்லைப்‌ பிரிந்த அம்புபோல்‌ ’விர்‌’ரென்று போய்க்‌ கொண்டேயிருக்கும்‌. 1769-இல்‌ நடந்த போரைப்‌ பற்றி மக்கள்‌ 19ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதிவரை பேசிக்‌ கொண்டிருந்தார்கள்‌ என்றால்‌ ஹைதர்‌ அலீ எத்தகைய தாக்குதலைத்‌ தொடுத்திருப்பார்‌. ஹைதர்‌ அலீயின்‌ குதிரைப்படையோடு மதராஸ்‌ பட்டினம்‌ வந்த இளவல்‌ திப்பு சுல்தான்‌ எழும்பூரில்‌ நுழைந்து சாந்தோமைப்‌ பதற வைத்தார்‌. நிற்காமல்‌ ஓடிய குதிரைப்படையை வழிநடத்திச்‌ செ ன்ற திப்புவுக்கு மக்கள்‌ மேல்‌ பகைமையில்லை, வாலாஜா முகம்மதலீ மேல்தான்‌ அளவில்லா பகைமை. மைசூர்ப்‌ புலிகளைக்‌ கண்டு அச்சமுற்ற ஆங்கிலேயரும்‌ ஆற்காட்டு நவாபும்‌ அவர்களோடு சமாதானம்‌ ஒப்பந்தம்‌ செய்து கொண்டனர்‌. அவரவர்கள்‌ வென்ற பகுதிகளை விட்டுக்‌ கொடுக்க இருதரப்பினரும்‌ ஒத்துக்கொள்ள முதல்‌ மைசூர்‌ போர்‌ வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. காலம்‌ உருண்டது; ஞாலம்‌ புரண்டது; 1778 பிறந்தது. இரண்டாம்‌ மைசூர்‌ போர்‌ நடக்கத்‌ தொடங்கியது. ஆங்கிலேயர்‌ 1778-இல்‌ மாஹேயையும்‌ பாண்டிச்சேரியையும்‌ கைப்பற்றினர்‌. அப்போது மாஹே ஹைதர்‌ அலீயின்‌ பொறுப்பில்‌ இருந்தது. எனவே அவர்‌ ஆங்கிலேயரை அழித்தொழிக்க கர்நாடகத்தின்‌ மேல்‌ தாக்குதலைத்‌ தொடுத்தார்‌. கர்னல்‌ பெயிலியின்‌ படைகளை பேரம்பாக்கத்தில்‌ தோற்கடித்த ஹைதர்‌ அலீ ஆற்காட்டைக்‌ கைப்பற்றினார்‌. பக்ஸார்‌ போரில்‌ வெற்றிக்‌ கனி பறித்த சர்‌ ஹெக்டர்‌ மன்றோ மதரஸா பட்டினம்‌ நோக்கி ஓட்டம்‌ பிடித்தார்‌. ஹைதரின்‌ குதிரைப்படை மதரஸாபட்டினத்தை வலம்‌ வந்தது. நகரைச்‌ சூறையாடியது. கோட்டையின்‌ பக்கம்‌ செல்லவில்லை; அங்கு பீரங்கிகள்‌ வெடிக்கத்‌ தயாராக இருந்தன. அவை கருமருந்தை கழுத்தில்‌ வைத்தும்‌ துப்பாமல்‌ இருந்தன. பேரம்பாக்கத்தில்‌ சரணடைந்த கர்னல்‌ பெயிலியும்‌ மற்றும்‌ சிலரும்‌ […] ஸ்ரீரங்கப்‌ பட்டணம்‌ கொண்டுசெல்லப்பட்டு சிறைவைக்கப்‌ பட்டனர்‌. இந்நிகழ்ச்சி ஹைதரின்‌ அரண்மனையில்‌ வண்ண ஓவியமாகத்‌ தீட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில்‌ சிறை வைக்கப்பட்டவர்‌ களில்‌ ஒருவரும்‌ பிரிட்டிஷ்‌ அரசில்‌ பெரும்‌ பதவி வகித்வருமான ஜான்லின்சே ’Lives of the Lindays’ தன்‌ தன் வாழ்க்பை வரலாற்றில் பேரம்பாக்கத்துப்‌ போரைப்‌ நுணுக்கமாகச்‌ சித்தரித்துள்ளார்‌. தொடர்ந்து நடந்த போரில்‌ திப்புசுல்தான்‌ கர்னல்‌ லைட்டை கும்பகோணத்தில்‌ சிறைப்‌ பிடித்தார்‌. ஆங்கிலேயர்‌ மங்களூர்‌, பெட்னூர்‌ என வெற்றிபெற சமாதானம்‌ செய்துகொள்ள வேண்டி வந்தது. நீதிக்‌ கட்சியில்‌ முஸ்லிம்களின்‌ பங்கு […] பார்ப்பனரல்லாதார்‌ கூட்டமைப்பின்‌ முதல்‌ மாநாடு 1917, டிசம்பர்‌ 28-29 தேதிகளில்‌ மதராஸ்‌ பட்டின மவுண்ட்சாலையிலுள்ள வெலிங்டன்‌ திரையரங்கில்‌ நடந்தது. மாநாட்டில்‌ ஐந்நூறுக்கும்‌ மேற்பட்ட பிரதிநிதிகளும்‌ பார்வை யாளர்களும்‌ கலந்துகொண்டனர்‌. மேடையில்‌ அமர்ந்திருந்தோரில்‌ முக்கியமானவர்கள்‌: மதிப்பிற்குரிய ராமநாதபுரம்‌ ராஜா, பித்தாபுரம்‌ ராஜா, புதுக்கோட்டை இளவரசர்‌, சிங்கம்பட்டி ஜமீந்தார்‌, கடலூர்‌ ஏ.சுப்ராய ரெட்டியார்‌, பிட்டி.தியாகராய செட்டியார்‌, டாக்டர்‌ டி.எம்‌. நாயர்‌. இவர்களோடு டாக்டர்‌ ஜெயினுலாப்தீன்‌ சாகிப்‌, சர்‌. முகம்மது உஸ்மான்‌ சாகிபும்‌ மேடையிலிருந்தனர்‌. அக்கூட்டத்தில்‌ பல்வேறு தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன. வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை முன்மொழிந்து புதுக்கோட்டை இளவரசர்‌ பேசினார்‌. ராவ்‌ பகதூர்‌ கே.வெங்கட ரெட்டி நாயுடு வழிமொழிய இத்தீர்மானம்‌ ஒருமனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்தை ஆதரித்து தோழர்‌ முகம்மது உஸ்மான்‌ சாகிப்‌ உரையாற்றினார்‌: அக்காலகட்டத்தில்‌ முஸ்லிம்களுக்கு தனிச்‌ சமூகப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைத்திருந்தது. முஸ்லிம்‌ சமூகம்‌ பிற்றுருந்த உரிமையை பாாபபனரலலாதோரும பெறவே தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது. 1920, நவம்பரில்‌ நடந்த மதராஸ்‌ மாகாண தேர்தலில்‌ டாக்டர்‌ முகம்மது உஸ்மான்‌ சாகிப்‌ (மதராஸ்‌) நீதிக்கட்சியின்‌ சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்‌. முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 14 தொகுதிகளில்‌ நீதிக்கட்சி சார்பானவர்கள்‌ ஐந்து பேரும்‌ முஸ்லிம்‌ லீக்கினர்‌ ஒன்பதுபேரும்‌ வெற்றி பெற்றனர்‌. அப்போதைய மாகாண சட்டசபையின்‌ மொத்த எண்ணிக்கை: 132. நியமன உறுப்பினர்கள்‌: 34, தேர்ந்தெடுக்கப்‌ பட்டவர்கள்‌: 98. 98-இல்‌ முஸ்லிம்களுக்கானவை: 14. டில்லி சட்டசபை கவுன்சில்‌ என்றும்‌ அசெம்பிளி எனவும்‌ பிரிக்கப்பட்டிருந்தது. மதராஸ்‌ மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட கவுன்சில்‌ உறுப்பினர்கள்‌ ஐவராவர்‌. ஐவரில்‌ நால்வர்‌ முஸ்லிமல்லாதார்‌; ஒருவர்‌ முஸ்லிம்‌. அந்த ஓரிடத்தை நீதிக்கட்சி யைச்‌ சேர்ந்த நாகை அகமது தம்பி மரைக்காயர்‌ பெற்றார்‌. மத்திய அசெம்பிளிக்கு மதராஸ்‌ மாகாணம்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிரதிநிதிகள்‌ பதினாறு. பதினாறில்‌ முஸ்லிம்களுக்கான இடம்‌ மூன்று. அந்த மூன்றை சகோதரர்கள்‌ டி.எஸ்‌.முகம்மது உசேன்‌ சாகிப்‌, ஆஸாத்‌ அலீகான்‌ பகதூர்‌, முகம்மது சம்சத்‌ ஆகியோர்‌ வென்று டெல்லி பட்டணம்‌ சென்றனர்‌. இட ஒதுக்கீட்‌ டால்‌ பெற்ற பேறு இது! மாகாண சபைக்கான 98 பிரதிநிதிகளில்‌ 63 பிரதிநிதிகள்‌ நீதிக்கட்சிக்காரர்களாய்‌ இருந்தனர்‌. 1920, டிசம்பர்‌, 17-இல்‌ நீதிக்கட்சி ஆட்சியைப்‌ பிடித்தது. இடைக்கால அரசின்‌ முதல்‌ பிரதமர்‌ மாண்புமிகு கடலூர்‌ சுப்பராயலு ரெட்டியார்‌. அப்போதைய முதலமைச்சர்‌ பிரதமர்‌ எனவே குறிப்பிடப்பட்டார்‌. ஒரிஸா முதல்‌ மலபார்‌ வரை மதராஸ்‌ ராஜதானி! ஆட்சியாளர்களுக்கு உதவியாக ஆங்கிலேய நிர்வாகத்தால்‌ கவர்னரின்‌ நேரடிப்‌ பொறுப்பில்‌ ஒரு நிர்வாகக்குழு அமைக்கப்‌ பட்டது. உள்துறை, நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றை நிர்வகித்தவர்களில்‌ கான்‌ பகதூர்‌ எம்‌.ஹபிபுல்லா சாகிப்‌ கடைசித்‌ துறையைக்‌ கவனித்துக்‌ கொண்டார்‌. வேலூர்‌ நகராட்சித்‌ தலைவர்‌, வட ஆற்காடு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌, திருவாங்கூர்‌ திவான்‌ என முத்திரைப்‌ பதித்தவர்‌ கான்‌ பகதூர்‌ ஹபிபுல்லா. இவர்‌ பெயரால்‌ தி. நகர்‌ பகுதியில்‌ உள்ள அபிபுல்லா தெரு பெரும்‌ புகழ்‌ பெற்றுள்ளது. மன்றோ சிலையிலிருந்து பண்டித நேரு பிரான்சிலையைக்கடந்தும்… இன்றைய அண்ணா சாலையின்கிழக்கில்பிரமாண்டமாய்நிற்கிறது மன்றோ சிலை. இது ஆங்கிலேய ஆட்சியின்அடையாளம். இதன் தெற்கில் தீவுத்திடல், வடக்கில் கால்வாய்க்கரையில் மிக நீண்ட குடிசைப் பகுதிகளும்அதனையொட்டி ராணுவ முகாம்களும் ராணுவக்குடியிருப்பும். இராணுவ வளாகத்தைத்தாண்டி மேற்கில்சென்ட்ரலைநோக்கி நீள்கிறது பாடிக்கார்ட்சாலை. பாடிக்கார்ட் சாலைக்கு மேற்கில் மாநகரப் போக்குவரத்துக்கழகப் பணிமனைக்கட்டிடங்கள். அந்தக்கட்டிடங்களுக்குப் பின்பு ஒரு மிகப்பெரிய குடிசைப்பகுதி. அங்கு ஒரு பழைய பள்ளிவாசல், அதன் பெயர் பாடிக்கார்ட் பள்ளிவாசல். முந்தைய காலங்களில் பாடிக்கார்ட் சாலைப்பகுதியில் முகாமிட்டிருந்த படைவீரர்களின் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் இது. வெளிப்புறத்தின் எதிரில் படிக்காத மேதை காமராஜர் சிலையாய் நிற்கிறார். இச்சிலை காங்கிரஸ்கட்சி ஆட்சியின் அடையாளம் என்றாலும் இதை நிறுவியவர்கள் சென்னை மாநகராட்சியை ஆட்சி புரிந்த தி.மு.கழகத்தார். படிக்காத மேதையை அடுத்து சிம்சன் சந்திப்பின் பகுத்தறிவுத் தந்தை பெரியார்சிலை. மனிதர்களின் மூளைகளிலும் நாட்டின்மூலை முடுக்குகளிலும் சூழ்ந்திருந்த இருட்டை விரட்டிய பகுத்தறிவுப் பகலவனின் சிலை வீழ்த்தப்பட்டவர்கள் எழுந்து நிற்பதைக்காட்டும்அடையாளம்! பெரியார்சிலையைத் தாண்டினால் பெரியாரின் தளபதி அறிஞர்அண்ணா சிலை. அது கீழே கிடந்தவர்மேலே வந்ததற்கான . வரலாற்றைச் சொல்லாமல் சொல்லும் உன்னதச்சிலை. அப்படியே அண்ணா சிலையைக் கடந்தால் ஒரு முக்கியமான நான்கு சாலை சந்திப்பு. இங்கு எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்பாக ஒரு பிரமாண்டமான சிலை இருந்தது. அது திராவிடக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவருக்கு எழுப்பியிருந்த கருங்கல் சிலை. கலைஞர் கருணாநிதி அவர்கள் உயிரோடிருக்கும்போதே எழுப்பப்பட்ட அச்சிலை எம்.ஜி.ஆர் மறைவின்போது தகர்க்கப்பட்டது. இறந்தவர்களுக்கே எழுப்பப்பட்ட சிலைகளுக்கு மத்தியில் உயிரோடிருப்பவருக்கு எழுப்பப்பட்ட கலைஞர் சிலை தகர்ப்புக்கும் எம்.ஜி.ஆர் இறப்புக்கும் என்ன சம்பந்தம்! மறைந்துபோன சிலையிருந்த இடத்திற்கு வலப்புறத்தில் மவுண்ட்ரோடு தர்கா, தர்காவுக்கு அருகில் மக்கா மஸ்ஜித். மக்கா மஸ்ஜிதைக் கடந்தால் எதிர்ப்புறத்தில் நிற்கும் எல்.ஐ.சி.யின் பதினான்கு மாடிக்கட்டிடத்தின் வாயிலில் சட்டமேதை அம்பேத்கரின்சிலை. அதைக் கடந்தால் எதிரில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரிக்கு அருகில்பழங்கால வரலாற்றைச்சுமந்து நிற்கும் மதரஸாவும் அதனுள் ஒரு பள்ளிவாசலும் உள்ளன. கல்லூரியின் முனையில் ஸ்பென்சர்ஸ் சந்திப்பில் அன்றிருந்த add கொடுங்கோலன் நீலன்சிலை அகற்றப்பட்ட வரலாறு ஒரு முக்கிய சங்கதி. காலம் உருள காலியாக இருந்த அந்த முக்கிய சந்திப்பில் ஒரு முக்கியமானவருக்கு சிலை எழுப்பப்பட்டது. அது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்ன் ஆளுயர சிலை. அச்சிலையைக்கடந்தால்இந்தியன்ஓவர்சீஸ்வங்கியை நிறுவிய சர்.எம்.சிடி. சிதம்பரம் செட்டியார் சிலை. அதைக்கடந்தால்ஆயிரம்விளக்கு மசூதியும், அதன் எதிர்ப்புறமுள்ள கிரீம்ஸ்சாலை மசூதியும். சிலை நகராம் மதரஸாபட்டினத்தில் கடற்கரையெங்கும் சிலைகள். அதேபோல் அண்ணாசாலை யெங்கும் சிலைகள். அதன்முத்தாய்ப்பாக ஜெமினி பாலத்தின் கீழ் ரெட்டைச் சிலைகள். அவை குதிரை வீரர்சிலைகள். அவற்றைக் கடந்தால் பாலத்தின் தென்முனையில் தடியோடு நிற்கும் பெரியார் சிலை. சிலையின் எதிர்ப்புறம் ஒரு மசூதி; அதன்பெயர் சர்பு நிஷா டிரஸ்ட்மசூதி. ஜெமினி பாலத்தை விட்டால் தேனாம்பேட்டையில் சிலையோ மசூதியோ இல்லை. நந்தனம் முனையில்தான் தேவர்களின் தலைவர் முத்துராமலிங்கனாரின் சிலை. அதையடுத்து ஒய்எம்சிஏ உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்திற்கு எதிரில் ஒரு பள்ளிவாசல்; அதன் பெயர் பஜீரத்துல் நிஷா. நந்தனத்தை விட்டால் மர்மலாங் பாலம்வரை சிலையோ பள்ளிவாசலோ இல்லை. பாலத்தின் முடிவில் சின்னமலை சந்திப்பில்ராஜீவ்காந்தி சிலை. அதன் தெற்கில் படேல்சாலை நடுவில் சர்தார்வல்லபாய் சிலை! அதைக்கடந்து நேராக தெற்கில் சென்றால் கிண்டி ராஜ்பவன். அதனுள்’சமநிலைச் சமுதாயம்" மாத இதழ் நிறுவனர் வள்ளல் ஏ.வி.எம். ஜாஃபர்தீன் கட்டிக்கொடுத்த ஒரு மசூதி உள்ளது. ஆளுநர்பாத்திமா பீவி காலத்தில் கட்டப்பட்ட மசூதி அது. ராஜ்பவனைக் கிழக்கில் தள்ளி மேற்காக மீண்டும் அண்ணா சாலை சென்றால் செல்லம்மா கல்லூரிக்கு எதிர்ப்புறம் நிற்பது வன்னியர் தலைவர்எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் சிலை. படையாட்சியாரைக் கடந்தால் கிண்டி தொழிற்பேட்டை முன்தீரன் சின்னமலை சிலை. அதைத்தாண்டி இடப்புறம் சென்றால் ஆலந்தூர் சாலையில் ஒரு பள்ளிவாசல். அதைத்தொடர்ந்து ஆலந்தூர் நகருக்குள் சில பள்ளிவாசல்கள். இடப்புறம் செல்லாமல் தவிர்த்தால் கத்திப்பாறை முனையில் பண்டித நேரு பிரானின் பிரமாண்டமான சிலை. வலப்புறம் சென்றால் தாமஸ் மலைப்பகுதியில் ஒரு பள்ளிவாசல். அப்பள்ளிவாசல் உள்ள மவுண்ட்சாலை போரூர்- பூந்தமல்லி வரை செல்ல ஆங்காங்கு சில பள்ளிவாசல்கள்! வலப்புறம் பயணிக்காமல் தென் மேற்கில்திருச்சி நெடுஞ் சாலையில் பயணித்தால் மீனம்பாக்கம், பல்லவபுரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர்வரை சில பள்ளி வாசல்கள். […] காணாமல் போன பள்ளிவாசல்! இஸ்லாத்தைப் பற்றி எவரும் எவருக்கும் எடுத்துரைக்காத காலம். வணிகர்கள் வணிகம் செய்து கொண்டும் அலுவலர்கள் அலுவல் செய்து கொண்டும் காலம் கழித்துக் கொண்டிருந்த காலம். தொழுபவர்கள் தொழுது கொண்டும் தொழ வாய்ப்பேற்படுத்திக் கொள்ளாதவர்கள் தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த காலம். ஆள்பவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள். அவர்கள் தொழுதாலும் மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதை மறந்திருந்த காலம். அழைப்புப்பணி - தாவா முனை முறிந்து போயிருந்த காலகட்டம். அது கோல்கொண்டா சுல்தான்கள் மதரஸாபட்டினத்தை ஆண்டுகொண்டிருந்த (1647-1680) ஆண்டுகள்.அக்காலகட்டத்தில்கடைசி சுல்தானாக (1672 - 1687) அப்துல்ஹஸன்தானா ஷா கோல்கொண்டா கோட்டையில் தர்பார் நடத்திக் கொண்டிருந்தார். மதரஸா பட்டினத்திலும் கோல்கொண்டா சுல்தானின் ஆட்சி தானே கர்நாடக நவாப் நிர்வாகத்தின் கீழ் மதராஸ் இருந்தது. அப்போது மொகலாயர் ஆட்சி தக்காணத்திற்கு வரவில்லை. நிஜாமிய அரசும் ஏற்படவில்லை. கோல்கொண்டா சுல்தானின் கீழ் கர்நாடகா; கர்நாடக நவாபாக நேக்னம்கான். நேக்னம் கான் தான் மதராஸின் ஏற்றுமதி - இறக்குமதி - சாந்தோம் சந்தை ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டவர். சாந்தோமின் குத்தகை அப்போது போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது; ஆங்கிலேயர் சென்ன குப்பத்தில் குடியேறி 32 ஆண்டுகள் முடிந்திருந்தன. காசி வீரண்ணா அண்டு கோ எனும் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி போர்ச்சுக்கீசியரைப் பின்னுக்குத் தள்ளி சாந்தோமை குத்தகைக்கு எடுத்தது. அதன் உரிமையாளர் காசி வீரண்ணா, அக்காலத்தில் ‘ஜெண்டு’ எனக்குறிப்பிடப்பட்ட தெலுங்குக்காரர். 1300 பகோடாக்கள்கொடுத்து காசி வீரண்ணா சாந்தோமை குத்தகைக்கு எடுத்திருந்தார். 1665 அளவில் வீரண்ணா நீதிபதிகளில் ஒருவராகக் கூட ஆங்கிலேயரால்நியமிக்கப்பட்டிருந்தார். செல்வமும் செல்வாக்கும் மிக்க காசி வீரண்ணா ஆற்காட்டு நவாப் நேக்னம்கானோடும் கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹஸன்தானா ஷாவோடும் உறவை வளர்த்துக்கொண்டார். அவ்வுறவு உள்ளங்களைப் பிணைத்தது. தோளோடு தோள்நிற்கப் பணித்தது. இஸ்லாமிய உம்மாவாக இணைத்தது. காசி வீரண்ணா ஹஸன்கான் ஆனார். கோல்கொண்டா சுல்தானின் பெயரையே தன்பெயராகக் கொண்டார். விரிவாகச் சொல்லப்போனால் கோல்கொண்டா சுல்தான் பெயரிலிருந்து ஹஸனை எடுத்தவர் கர்நாடக நவாப்பெயரிலிருந்து கானை எடுத்தார். ஹஸன்கான்ஆனார். சுல்தான் அப்துல் ஹஸனும் நவாப் நேக்னம்கானும் எதிர்பாராத விதத்தில் காசி வீரண்ணா இஸ்லாத்தைத் தழுவி சிறு புள்ளியைப் பெரும் வட்டமாக்கினார். பெரும் வட்டத்தைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியது. பழைய முஸ்லிம்களும் புதிய முஸ்லிம்களும் ஒரே ஜமாத்தாய்மாறினர். உடன் பக்கீர்களும் கை கோர்த்தனர். 17-ம்நூற்றாண்டில் சாந்தோமும் மயிலாப்பூரும் முஸ்லிம்களின் பட்டினமாகியிருந்தன. ஹஸன்கான் ஒரு பள்ளிவாசலைக்கட்டி திறப்பு விழா நடத்தினார். பள்ளிவாசல் முக்கிய கேந்திரமானது. 1679 தொடக்கத்தில் அது திறக்கப்பட்டது. எதிர்பாராத விதத்தில் ஹஸன்கான் 1680 இறுதியில் மரணம் அடைந்தார். இறந்த அவரை புதைப்பதா எரிப்பதா எனப் பிரச்சினை எழுந்தது. காரணம் அவர் முஸ்லிமாகியிருந்தாலும் அவருடைய மனைவியும் மகளும் இஸ்லாத்தைத் தழுவவில்லை. கர்நாடக ஆளுநரின் கீழ்சாந்தோம் இருந்தாலும் நவாப், பட்டினத்தில் இருக்கவில்லை. மதரஸா பட்டினத்திற்கு வந்து செல்லும் நவாப் பெரும்பாலும் காஞ்சிபுரத்திலோ பேரம்பாக்கத்திலோ இருப்பார். பட்டினத்து நிர்வாகத்தை நவாபின் ஆட்கள் பார்த்துக் கொண்டாலும் சில முக்கிய பிரச்சினைகளை முக்கிய வணிகர்களாய்த் திகழ்ந்த ஆங்கிலேயரே தீர்த்து வைத்தனர். எனவே ஹஸன்கானைப் புதைப்பதா எரிப்பதா எனும்பிரச்சினை ஆங்கிலேயக் கவர்னர் முன் வந்தது. கவர்னர்சர்எட்வர்ட்விண்டர்""வீரண்ணா முஸல்மானாகியிருந்தாலும் அவருடைய குடும்பம் முஸ்லிம் ஆகவில்லை. அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாம் மனைவியும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள். பெண்பிள்ளைக்கு நாளை கல்யாணம் முடிப்பதில் பிரச்சினை வரக்கூடாது. எனவே ஜெண்டுக்களின் வழக்கப்படி எரித்துவிடலாம். வீரண்ணாவின் வாரிசாக அவருடைய சகோதரர் மகனை நியமிக்கலாம்’’ எனக்கூறி வெரோனா எனும் ஹஸன்கானின் மரணத்துக்கு மரியாதை செய்ய முப்பது குண்டுகளை வெடிக்கச்செய்தார். காசி வீரண்ணா எனும் வெரோனா 1679-இல்பள்ளி வாசல்கட்டியதை பதிவு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள் பள்ளிவாசல் இருந்த இடம் தெரியவில்லை என்கின்றனர். சிலர்மண்ணடி யிலுள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் தான் ஹஸன்கான் கட்டிய பள்ளிவாசல் என்கின்றனர். ஹஸன்கானின் சாந்தோம் பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்பே கூரைக்குடிலாய், சிறிய கட்டிடமாய், பெரிய மாளிகையாய் மாறி வந்த மஸ்ஜிதே மஃமூர்ஹஸன்கான் கட்டிய பள்ளி வாசலாக இருக்க முடியாது. அதே சமயம் சாந்தோமில் கட்டிய பள்ளிவாசல் காணாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை. வரலாற்றை படித்த நான் ஹசன்கானின் பள்ளிவாசலைத் தேடி சாந்தோமலும் மயிலாப்பூரிலும் சில நாட்கள் வலம்வந்தேன். தக்காணத்தின் தெற்கில் திருச்சி உறையூரில் கி.பி.734-இல்கட்டப்பட்ட முதல் பள்ளி வாசலே இன்றும் இருக்க 1679-இல் கட்டப்பட்ட பள்ளிவாசல் எங்கே மறைந்து போயிருக்கும்? ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னுள்ள பள்ளியே காவிரிக்கரையில் காட்சித் தந்து கொண்டிருக்க முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி காணாமல்போயிருக்குமா? முஸல்மான்களின் பட்டினமாகத் திகழ வேண்டிய மயிலாப்பூர் மாமிகளின் பட்டினமாகிப் போனபின் தான் ஹஸன் கானின் பள்ளிவாசல் காணாமல் போயிருக்கிறது. வரலாற்றைப் புதிதாக எழுத வந்தவர்களால் அப்பள்ளி காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பள்ளியைத்தேடி முதன் முதலில் கலங்கரை விளக்கத்தில் இறங்கி பாபநாசம் சிவன் சாலையில் பயணித்தேன். சாலையின் நடுப்பகுதியில்’ பச்சே வலி மஸ்ஜித்’ இருந்தது. மேற்கில் மஸ்ஜித், கிழக்கில் பச்சே வலி தர்கா! பழமையான பள்ளி வாசலும் தர்காவும் இதுதான் ஹஸன்கானின் மஸ்ஜித் வளாகம் எனக்கூறின. பச்சையாடையுடன் திகழும் மஸ்தானை பச்சை அவுலியா என்பார்களே, அதுபோலவே பச்சையுடைக்கார சூஃபியை குறிப்பிட்டிருப்பார்களோ அவரின் சமாதியையும் அவ்வாறே அழைத்திருப்பார்களோ என எண்ணியபடி பள்ளிவாசலில் இருந்த சகோதரர்களுடன் உரையாடத் தொடங்கினேன். கட்டப்பட்ட ஆண்டு வண்ணப் பூச்சால் மறைந்துள்ளது எனக் கூறியவர்கள் பச்சே வலிக்கு அர்த்தம் சொன்னார்கள். பச்சே என்றால் உருது மொழியில் சிறுவர்கள், சிறுவர்களோடு அவ்வப்போது விளையாடிக் கொண்டிருந்த வலியை ‘பச்சே வலி’ என அழைத்த கதையைச் சொல்லினர். நூறாண்டுகளுக்கு முன்வாழ்ந்த மகானின் ஏற்பாட்டால் மஸ்ஜித் கட்டப்பட்டதால் வலியின் பெயரால் அழைக்கப்படுவதாக அப்போது மசூதியில் இருந்தவர்கள் சொல்லினர். ஹஸன் கான் மரணித்தபோது பாடையில் அவர் உடலை கபர்ஸ்தான் கொண்டு செல்ல வழி மறித்தவர்களில் பக்கீர்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. "பெரும் வணிகராய் இருந்த ஹஸன் கானைச் சுற்றியிருந்த - பக்கீர்கள் அவருடைய மரணத்திற்குப் பின்பள்ளி வாசலை ஏற்று நிர்வகித்திருப்பார்கள் போலும். அந்தப் பக்கீர்களின் தலைவராக பச்சே வலி இருந்திருப்பார் போலும் என நான் ஏதேதோ எண்ணியபடி கற்பனையில் ஆழ்ந்தேன். “மயிலாப்பூரில் எத்தனை பள்ளி வாசல்கள் இருக்கின்றன?” என நான்கேட்டேன். "ஐந்து’’ என்றனர். “ஐந்தா! அவை யாவை?” "பச்சே வலி மஸ்ஜித் தவிர அருண்டேல் தெருவில் ஒன்றும் கச்சேரி சாலையில் ஒன்றும் உள்ளன. இவை தவிர அப்பு தெருவில் சார் சமன்மசூதியும் மசூதி தெருவில் ஒன்றும் உள்ளன’’ என்றனர். சார்சமன் மசூதியைப் பற்றிக் கூறும் போதே நான்கு தூண்கள் முன்னும் பின்னும் உள்ள மசூதி, ஆற்காடு நவாபால் கட்டப்பட்டது எனக்கூடுதலாக பச்சே வலி மசூதி சகோதரர்கள் செய்திகளைக் கூறினர். நான் தேடும் பள்ளி வாசல், கோல்கொண்டா சுல்தானின் கர்நாடக நவாப்கால பள்ளிவாசல். சார்சமன் மசூதி ஹைதராபாத் நிஜாமின்ஆற்காடு நவாப் காலப் பள்ளி. சார்சமன் பள்ளி வாசலைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் சென்றேன். அடுத்தடுத்த நாட்களில் என் எண்ணத்திரையில் ஹஸன் கான் கட்டிய பள்ளிவாசல் எதுவாக இருக்கும் என நிழற்படங்கள். ஒரு கிழமை கழித்து அருண்டேல் தெரு பள்ளி வாசலுக்குச் சென்றேன். நான்அங்கு சென்றபோது எனக்கு முன்பே அறிமுகமான இரு சகோதரர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பள்ளி வாசலின் நுழைவுப் பகுதி பழமையைப் பறைசாற்றியது. உட்புறம் புதிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டிருந்தது. என்றாலும் அதன் வடக்குப் பகுதியில் நிற்கும் சுவர் உயர்ந்தும் கட்டப்பட்ட காலத்தைச் சொல்லியும் சொல்லாமலும் சோகத்தோடு காட்சி தந்து கொண்டிருந்தது. அதன் உட்புறம் ஒரு வீடு! நான் அருண்டேல் தெரு பள்ளிவாசலுக்கு வருகை தந்த காரணத்தைச் சொன்னேன். அங்கிருந்தவர்கள் கதை கதையாய்ச் சொன்னார்கள். “பழமையான பள்ளி வாசல் தான் இது. உட்புறம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. கட்டிக் கொடுத்தவர் ஒரு ரியல் எஸ்டேட்காரர். மாற்று மதச் சகோதரரான”துனியா சுருட்டி’ நல்ல மனதோடு (சுற்றியுள்ள மசூதி நிலங்களை அபகரிக்கும் நல்ல மனதோடு) மசூதியைக் கவனித்துக் கொண்டிருந்தவருக்கும் வடக்குப் பகுதியில் தனித்திருக்க சுவர் அமைத்துக் கொடுத்து ஒரு நல்ல செயலைச்செய்துள்ளார்.’’ "இது பழமையான பள்ளி வாசல் என்பதால் தொல்பொருள் துறையினரும் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.’’ “இங்கு நடந்துள்ள வக்ஃப்நில அகபரிப்பு பற்றி ‘இந்து’ பத்திரிகையில் கூட செய்தி வந்துள்ளது.”’ அருண்டேல் தெரு சகோதரர்கள் செய்திகளைச் சொன்னபோது வக்ஃப்சொத்துக்கள் அபகரிக்கும் செயல்கள் நாடு முழுவதும் நடப்பதற்குக் காரணம் என்னவென யோசித்தேன். பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இறையச்சம் இல்லாமையே முதல் காரணமெனக் கூறத் தேவையில்லை. பள்ளிவாசல் விளம்பரப் பலகை அருண்டேல்தெரு பள்ளி வாசலுக்கும் வக்ஃப் போர்டின் நேரடித் தொடர்புக்கும் கட்டியம் கூறியது. பல்வேறு பள்ளி வாசல்கள் பல்வேறு பெயர்களில் இருக்க அருண்டேல் தெரு பள்ளிவாசல் தெருப் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது. ‘இதுதான் ஹஸன் கான்கட்டிய பள்ளி வாசலாக இருக்குமோ? தொல்பொருள் துறையினர் வந்து சென்றதாலும் நுழைவு வாயில் மிகப்பழமையாகக் காட்சியளிப்பதாலும் அருண்டேல்தெரு மசூதி பழைய வரலாற்றைப் பறைசாற்றுவதில் பெரும்பங்கு வகிக்குமோ’ என எண்ணியபடி புறப்பட்ட என்னை நண்பர் ஜாபர் கச்சேரித் தெருவின் தெற்கிலிருந்த மசூதித்தெருவுக்கு அழைத்துச்சென்றார். தேவடித்தெரு, சித்திரக்குளம்தாண்டி மசூதித் தெருவில் நெருக்கமான வீடுகளுக்கு நடுவில் பள்ளிவாசல் காட்சி தந்தது. மாமிகள் பட்டணத்தில்- கபாலீஸ்வரர்கோவிலைத் தரிசிக்கும் மக்கள்வாழும் இல்லங்களுக்கு நடுவில் ‘ஆஹா’ என எழுந்து நின்றது பள்ளிவாசல். பள்ளியின் பெயர் என்ன தெரியுமா? "ஆஹா முஹைதீன்மஸ்ஜித்! ‘பள்ளி வாசல் புதிதாக இருக்கிறதே! பழையப்பள்ளியைப் புதுப்பித்திருப்பார்களோ?’ என எண்ணியபடி வாசலைக்கடந்து வீதிக்கு வந்தோம். என்பார்வை வந்த திசையில் திரும்ப, நண்பர் ஜாபர் பள்ளிவாசலுக்கு இட, வலப்பக்கங்களில் நின்ற இரு ஸ்தூபிகளைக்காட்டினார். புதிய பள்ளிவாசல் கட்டிடத்தோடு சேர்க்கப்படாமல் ஐம்பதடி உயரத்தில் அந்த இரு ஸ்தூபிகள் விண்ணை நோக்கி உயர்ந்து நின்றதைக் கண்டு மலைத்துப்போனேன். ஸ்தூபிகள் இரண்டும் மினாராக்கள்தான். மினாராக்கள் பள்ளி வாசலின் மேல் எழுப்பப்பட்டிருக்கும். இவை தரையிலிருந்து எழுந்து நிற்கின்றன. அதன் வலிவும் பொலிவும் என்னை சில நூற்றாண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்றன. ஆங்கிலேயர் ஆற்காட்டார் காலங்களில் பயணித்து நான் ஹஸன் கான் காலத்தைத் தரிசித்து நின்றேன். பின்னோக்கிய பயணத்தில் பென்னம் பெரிய காட்சிகள்! ‘ஆஹா முஹைதீன்’ பள்ளி வாசல்தான் ஹஸன்கான் கட்டிய பள்ளிவாசலாக இருக்குமோ? துரும்பைப் பிடித்துக் கொண்டு நீந்த முடியாது, சிறு கட்டுமரமாவது வேண்டும். எனக்கு பல்வேறு வேலைகள், பல்வேறு பயணங்கள்; காணாமல்போன பள்ளிவாசலைக் காணும் பணி தடைப்பட்டது. ஒரு மாதம் கழித்தே பணியைத் தொடர முடிந்தது. மயிலாப்பூர் கச்சேரித் தெருவில் நடந்தவன் அங்கிருக்கும் பள்ளிவாசலில் நுழைந்தேன். அது காணாமல் போன பள்ளி வாசலாகத் தெரிய வில்லை. அது நிறுவப்பட்ட ஆண்டும் கிடைக்கவில்லை. மயிலாப்பூரிலுள்ள ஐந்து பள்ளி வாசல்களில் பச்சே வலி தர்கா பள்ளி வாசலும் அருண்டேல் தெரு பள்ளி வாசலும் மிகப்பழமையுடன் விளங்க என் குழப்பம் தீராமலேயே இருந்தது. சார்சமன் பள்ளி வாசலும் கச்சேரித் தெரு பள்ளி வாசலும் பழமை குறைவாகத் தெரிய மசூதித் தெரு பள்ளிவாசல் புதிதாய் எழுப்பப்பட்டிருந்தாலும் அதன்வாயிலிலுள்ள இரு பழைய ஸ்தூபிகள் என்னை ஹஸன்கான் காலத்துக்கு அழைத்துச்சென்றன. ஆஹா முஹைதீன்’ பள்ளிவாசல் நிர்வாகியைச் சந்தித்தால் குழப்பம் விலகும், உண்மை ஒளி கிடைக்கும் எனத்தேடி ஒருநாள் அப்பள்ளியின் செயலாளர் சகோதரர் ஜரூக் அலீ அவர்களைச் சந்தித்தேன். "பல ஆண்டுகளாய் பள்ளி வாசல் பயன்படாமல் இருந்தது. பள்ளி வாசல் வளாகம் 19.5 கிரவுண்ட் பரப்பளவுள்ளது. இதில் அரை கிரவுண்ட் நிலத்திலேயே பள்ளி வாசல் கட்டிடம் உள்ளது. மீதி 19 கிரவுண்ட் பொது மக்களின் ஆக்கிரமிப்பில் சின்ன சின்ன வீடுகளாய் உள்ளது. 1972-ல் ஒரு முறையும்1978-ல் மறுமுறையும் குடிசை மாற்று வாரியம் இங்கு வாழ்ந்த மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்ட முயன்றது. அப்போது இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் இது வக்ஃப் நிலம் என எடுத்துரைக்கத் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது’’ என்றார் சகோதரர் ஜரூக் அலீ. "இப்பள்ளி வாசல் தான் நான் தேடும் பள்ளிவாசல் என எண்ணுகிறேன். இது முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது எனத் தெரியுமா?’’ என நான் என் பணியைத் தொடங்கினேன். "இது இரு நூறு ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். ஒரு சமயத்தில் இங்கு முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைய படிப்படியாக தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நிர்வாகமே இல்லாத போது ஏழை எளிய மக்கள் இடத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். ஒன்பது டூம்களுடன்இருந்த பள்ளி வாசல் வழிப்போக்கர்கள், வேலையற்றவர்கள் தங்கும்மடமாகி இருக்கிறது’’ என சகோதரர் கூடுதல்தகவல்களைத் தர ஹஸன்கான் என் கண்முன் வந்தார். “ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டாலும்பள்ளிவாசலை சரி செய்து தொழலாம் என முஸ்லிம்கள் சிலர் முயன்றுள்ளனர். அப்போது ஷியா முஸ்லிம் ஒருவர் தன் மகளோடு வந்து பள்ளிவாசலில்குடியிருந்துகொண்டு”"இது எங்கள்மஸ்ஜித்’’ எனச் சொல்லி வம்பு தும்பு செய்துள்ளார். அவர்யாரையும்தொழ அனுமதிக்கவில்லை. பள்ளிவாசலை குடியிருப்பாக்கிக்கொண்டு குடிகாரர்களோடும் சூதாடிகளோடும்அவர்அங்கு ஆட்சி செலுத்தியுள்ளார். அவர்மகளைத் தேடியும் சம்பந்தமில்லாதவர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்’’ என சகோதரர் மொழிய "பள்ளிவாசல்தெருவுக்குப்பக்கத்தில்தானே தேவடித் தெரு உள்ளது’’ என்று புன்னகைத்தேன். "மயிலாப்பூர் பகுதியில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இபுறாகீம்எனும்சகோதரர்இஷாஅத்துல்இஸ்லாத்தின்தொடர்போடு முஸ்லிம்லீக்கிலும்அங்கம்வகித்தார். அவர்தான்இந்தப்பள்ளிவாசலை மீட்டெடுக்கப்பெரும்பாடு பட்டார். 1995-ல்பன்மொழிப்புலவர்அப்துல்லத்தீப்வக்ஃப்போர்டு சேர்மனாக இருந்தபோது மீட்டெடுக்கும்பணி முடுக்கி விடப்பட்டது. இப்பணிக்கு டாக்டர்.மஸ்தான் எம்.பி., மேல்மட்ட விவகாரங்களைப் பார்த்துக் கொண்டார். டாக்டர் இப்பணிக்கு பேருதவியாக இருக்க என்னைப் போன்றவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பாடாற்றினோம்’’ என சகோதரர்மிக விளக்கமாக செய்திகளை எடுத்துரைத்தார். எங்கள் உரையாடல் இடையே நான்காசி வீரண்ணா - வெரோனோ ஹஸன்கான் பற்றிய வரலாறுகளைக் கூறினேன். ஆங்கிலேயர் காலத்தில் மயிலாப்பூரில் பெருகிய முஸ்லிம்களின் எண்ணிக்கையை ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தியதையும் உரைத்தேன். "ஒன்பது டூம்கள்இருந்ததாகச்சொன்னீர்கள். இப்போது இரண்டே இரண்டு டூம்கள் மட்டுமே புதிய கட்டிடத்திற்கு முன்நிற்கின்றன. இது பள்ளிவாசலின் பழமையை எடுத்துரைக்கும் நல்ல ஏற்பாடு’’ என்ற என்னிடம் சகோதரர் பள்ளிவாசல் கட்டப்பட்ட ஆண்டைக்கேட்டார். "1679-ல் பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதன் முன்னூறு ஆண்டுகால பழமையை டூம்கள் சொல்லாமல் சொல்கின்றன. பள்ளிவாசலை மீட்டெடுத்து புதிய கட்டிடத்தை எந்த ஆண்டில்கட்டினீர்கள்?‘"’ "நாகூர்அனிபா வக்ஃப்போர்டு சேர்மனாக 1999-ல்இருந்தபோது பள்ளிவாசலை மீட்டெடுத்தோம். சிதிலமான கட்டிடம் பயன்பாட்டுக்கு சரிப்படவில்லை. 2005-இல் இதைக்கட்டி முடித்தோம். இதுவரை இப்பள்ளியின் வரலாற்றைப்பற்றித் தெரியாமல் தான் இருந்தோம். நீங்கள் சொன்னபின் தான் புதிர் அவிழ்ந்திருக்கிறது’’ என்ற சகோதரரை மனதார பாராட்டினேன். “மேலும்ஏதாவது செய்திகள்…” "2000 முதல்-2013 வரை இதன்நிர்வாகத்தை வக்ஃப்போர்டுதான்பார்த்துக்கொண்டது. 2014-ல்தான்எங்கள்ஜமாஅத்வசம்வழங்கப்பட்டது. தற்போது இதன்முத்தவல்லி டாக்டர்ஹாஜா கே. மஜீது, நான்செயலாளர்’’ என்ற சகோதரர்ஜரூக்அலீ நெல்லை திசையின்விளையைச்சேர்ந்தவர், ஆர்வமிக்க மக்கள்பணியாளர். “பள்ளிவாசலின்பெயருக்குக்காரணம்…”" 1954-ல் மதராஸின் மசூதிகளைக் கணக்கெடுத்த வக்ஃப்போர்டு ஆட்கள் உள்சுவற்றில்’ ஆகா மகான் மசூதி’ என எழுதப்பட்டிருப்பதைக்கண்டு அவர்களாகவே முடிவெடுத்து “ஆஹா முஹைதீன் மசூதி’ எனப்பெயர் சூட்டிவிட்டனர்.”’ மதராஸ்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களின் வரலாறுகள் அறியக் கிடைக்க வரலாறு தெரியாமல் மறைந்து கிடந்த பள்ளி வாசல்தான்ஆஹா முஹைதீன் பள்ளிவாசல். இது காசி வீரண்ணா கட்டிய பள்ளிவாசல் எனக் கண்டறிய முடியாதவர்கள் அதைக் காணவில்லை என்றனர். ‘மதராஸபட்டினம்’ எனும்நூலை எழுதிய ‘கடலோடி’ நரசய்யா அவர்களில்முக்கியமானவர். அவர்பள்ளி வாசலைக் காணவில்லை என்று மட்டும்பதிவு செய்யவில்லை. அது அங்கப்பன் நாயக்கன் தெரு ‘மஸ்ஜிதே மஃமூர்’ பள்ளிவாசலாக இருக்கலாம் எனவும் எழுதி வைத்துள்ளார். ‘சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Re-Discovered102 எனும் நூலை எழுதிய எஸ். முத்தையா காசி வீரண்ணா கட்டியெழுப்பிய ’காஸாவெரோனா பள்ளிவாசல்’ மண்ணடி முத்தியால்பேட்டையில் உள்ளதாக பதிவு செய்துள்ளார். மண்ணடி, ஏழு கிணறு, கொத்தவால்சாவடி எனத் தேடியும் வெரோனா மசூதி கிடைக்கவில்லை. 1689-ல்ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதாக "The Story of Madras கூறுகிறது. ஆனால் காசி வீரண்ணா 1679-ல்மசூதி கட்டியுள்ளார். நூல்களில் தேடியவர்கள் யூகத்தில் எதையோ உண்மையென்று பதிவு செய்துள்ளார்கள். களப்பணியில் இறங்கியிருந்தால் பள்ளிவாசலைக்கண்டெடுத்து இருப்பார்கள். சாந்தோமில் வணிகச்சக்கரவர்த்தியாய் விளங்கிய காசி - வீரண்ணா எனும் ஹஸன்கான் முத்தியால்பேட்டையில் பள்ளிவாசல் கட்டியிருக்க முடியாது. மயிலாப்பூரிலுள்ள நான்கு பள்ளிவாசல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்க, ஒரே ஒரு பள்ளி வாசல் செயல்படாமல் இருந்துள்ளது. அது ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த சிதைந்த பள்ளிவாசல் தான் காசிவீரண்ணா கட்டிய பள்ளி வாசலாகும். அது இருக்கும்மசூதி தெருவே அதன் பழமையைச் சொல்லும். 2005-இல்புதிய கட்டிடத்தோடு எழுந்து நிற்கும் "ஆஹா முஹைதீன்’ பள்ளிவாசல் முன்நிற்கும் இரு டூம்கள் காசி வீரண்ணா கதையை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இரு டூம்களின் காரையை எடுத்து தொல் பொருள் துறையினரிடம் கொடுத்தால் கட்டப்பட்ட காலம் மிகத் துல்லியமாக தெரியவரும்!   […] இங்குமங்கும் இறைநேசர்கள்! இறை நேசர்களின் கல்லறைகளைப் புறந்தள்ளிவிட்டு இஸ்லாமிய வரலாற்றைப் பேசமுடியாது. இஸ்லாம் ஒளிவீசத் தொடங்கிய போதே இஸ்லாமிய அழைப்பாளர்கள் இந்துஸ்தானத்துக்குள் வரத் தொடங்கி விட்டார்கள். அவர்கள், குஜராத்தின் கடல்புரத்திலிருந்து கொங்கணக் கடற்கரை, மலையாளக் கரையோரம், குமரி முனை வரை அரபு வணிகர்களோடு பாய்மரக் கப்பல்களில் வந்திறங்கினார்கள். அவர்களின் தோழர்கள் குளச்சல் துறைமுகத்தைக் கடந்து குமரி முனை வந்து கிழக்குக்கரையெங்கும்தங்கினார்கள். அஞ்சு கிராமம், காயல்பட்டினம், தூத்துக்குடி, கீழைக்கரை, தொண்டி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, நாகைப்பட்டினம், நாகூர், காரைக்கால், பூம்புகார், பரங்கிப்பேட்டை, கடலூர், புதுவை, கோட்டக்குப்பம், கூனிமேடு, கடப்பாக்கம், புதுப்பட்டினம், கோவளம், மதரஸா பட்டினம்வரை வந்து தங்கி இஸ்லாமிய சகோதரத்துவத்தை எடுத்துரைத்தார்கள். மதரஸாபட்டினத்தைத் தாண்டி புதுமனைக்குப்பம், பழவேற்காடு எனக்கால் பதித்தவர்கள் தெலுங்கு தேசத்தின்பெத்த பள்ளி, முத்துப்பள்ளி கடல் வெளியூர்களைக் கடந்து மசூலி பட்டினம், காக்கிநாடா, விசாகப்பட்டினம்வரை சென்று கல்கத்தாவில் கால்பதித்தார்கள். கடற்கரைப் பட்டினங்களைத் தொடர்ந்தே இஸ்லாமிய அழைப்பாளர்கள் காலப்போக்கில் இந்துஸ்தானத்தின் உட்புறங்களை அடைந்து இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். இஸ்லாத்தை எடுத்துரைக்கும் பணிக்கான ஓர்அணி இறைவனால் திட்டமிடப்பட்டு மக்காவில் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வணியினரே திண்ணைத்தோழர்கள். அழைப்புப்பணியை அண்ணலார்எவ்வாறு மேலெடுத்துச் செல்வது என்பதைக் காட்டவே அன்றைய அக்கம்பக்கத்து ஆட்சியாளர்களுக்கு அரிய முடங்கல்கள்எழுதினர். அதன் தொடர்ச்சியாகவே அழைப்புப் பணியாற்ற அணியமான தோழர்கள் திக் கெட்டும் பயணமானார்கள். அவ்வாறு இந்துஸ்தானத்தில் கால்பதித்த தோழர்கள் மதரஸாபட்டினத்திலும் தம்பணியைத் தொடங்கி வெற்றி பெற்று காலப்போக்கில் காற்றில் கலந்து போகாமல் அடையாளமாக நிற்க சமாதிகளாக காட்சி தருகிறார்கள். அத்தகைய சமாதிகளும் தர்காக்களும் மதரஸாபட்டினத்தின் பல்வேறு பாகங்களில் உள்ளன. அவை பற்றிய பார்வை இக்கட்டுரையில் உள்ளது. இறை நேசர்களின் சமாதிகளைப் பற்றிப் பேசாமல் இந்துஸ்தானத்தின் இஸ்லாமிய வரலாற்றை எடுத்துரைக்க முடியாது. கோவளத்தில் அடங்கியுள்ள தமீமுல் அன்ஸாரியும் மகபூப்பந்தர் எனும் பரங்கிப் பேட்டையில் அடங்கியுள்ள உக்காஸாவும் நபித் தோழர்கள் எனக் கூறப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இஸ்லாம் தமிழகக்கடற்கரை ஓரங்களில் கால்பதித்தது, கை குலுக்கியது, மெய்தழுவியது என்பதற்கு கோவளமும் பரங்கிப்பேட்டையும் சாட்சிகள்! அக்கால கட்டத்திலேயே மண்ணடியாய் இருந்த மதரஸா பட்டினத்தில் இஸ்லாமியர் வாழ்ந்ததும்அங்கு மதரஸா அமைத்த தும்வியப்புக்குரிய செயலல்ல! மதரஸாபட்டினத்தில்இருந்து இஸ்லாத்தை எடுத்துரைத்த சில இஸ்லாமிய இறைநேச செல்வர்களின் சமாதிகள் ஆங்காங்கு உள்ளன. பெரும்பாலும் மசூதிகளின் கபர்ஸ்தான்கள் அமைந்திருந்ததால் இறை நேச செல்வர்களின் நினைவில்லங்களும் அங்கு தான் அமைந்துள்ளன. சில தனியில்லங்களாக விளங்குகின்றன. சையித்ஃபத்ஹ்ஷா மஸ்தான்மஸ்ஜிதே மாமூரின் பின்புறம் சையிது ஃபத்ஹ்ஷா மஸ்தான், சையிது முகம்மது ஹஸன்காதிரி நினைவிடங்கள் உள்ளன. சையத்ஃபத்ஹ்ஷா மஸ்தான் காதிரி மதராஸ் சூளையில் வாழ்ந்த தாதாஷா வலியின்கலீபா ஆவார். இவர்நவாப் வாலாஜாவின் ஆன்மிக குருவும் ஆவார். ஃபத்ஹ்ஷா இறந்தபோது ஜனாஸா தொழுகைக்குத் தலைமையேற்றவர் நவாப்வாலாஜாவே! சையத்முகம்மது ஹஸன்காதிரி சையது முகம்மது ஹஸன்காதிரி பாக்தாதிலிருந்து டெல்லி வந்து பின்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இமாமாகப் பணியாற்றிய சையத் முகம்மது ரஷீத்காதிரியின் மூன்றாம் மகனாவார். மதீனாவில் பிறந்து இலங்கையில் மார்க்கப் பணி செய்த சையிது முகம்மது சாலிஹ்மெளலானா ஹைதராபாத் வந்த போது மாணவராக அழைத்துச் செல்லப்பட்டவர் ஹஸன்காதிரி. இலங்கை சென்ற ஹஸன்காதிரி சாலிஹ்மெளலானா மரணித்தபின்கெய்ரோ சென்று அங்கு கல்வி கற்றார். அகவை ஐந்தில் இலங்கை சென்ற ஹஸன்காதிரி 8 ஆண்டுகள் அங்கிருந்து 13-ம்வயதில்கெய்ரோ சென்று பதினெட்டாம் வயதில் படிப்பை முடித்தார். பின்னர் இருமுறை மக்கா சென்று ஹஜ்ஜை முடித்த ஹஸன்காதிரி ஹைதராபாத் வந்து சில ஆண்டுகள் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் அரபிப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆன்மிகத்தில் லயித்திருந்த ஹஸன்காதிரி ஒன்பதாண்டுகள் ஹைதராபாத்திலுள்ள பாபாஷர்புத்தீன் மலையில் தங்கியிருந்தார். அதன்பின் தமிழகத்தின் வாணியம்பாடி வந்த ஹஸன்காதிரி 1949 பிப்ரவரி நான்காம் நாள் மரணமடைந்தார். அவருடைய உடலம் அன்னாரின் இறுதி உரைப்படி மதராஸ் கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதே மஃமூரின் பின்புறம் நல்லடக்கம்செய்யப்பட்டது. மோத்திபாவா சையத் முகம்மது ஹஸன்காதிரியின் தந்தையார் சையத் முகம்மது ரஷீத்காதிரியின் ஆயிரக்கணக்கான ஆன்மிக மாணவர்களில் ஒருவரே மதராஸ் எழும்பூரில் அடங்கப் பெற்றுள்ள மோத்திபாபா. இவரின் இயற்பெயர் சையிது குலாம்தஸ்தகீர். யெமன் நாட்டில் பிறந்த மோத்திபாபா நாகூர் சென்று சாகுல்ஹ மீது நாயகத்தின்அடக்கவிடத்தைத் தரிசித்து விட்டு சிறிது காலம் நாகப்பட்டின செல்வரின் ஆதரவுடன் அங்கு வாழ்ந்தார். பின்னர் எழும்பூர் பாந்தியன் சாலையில் வந்து வாழ்ந்து 1959-இல் காலமானார். அவர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். சையித்து ராபுதீன்வலி ஸ்டான்லி மருத்துவமனையின் நுழைவாயிலுக்கு முன் அடங்கப்பட்டுள்ள இறை நேசர் சையித்து ராபுத்தீன்வலி. இவர் நாகூராரோடு மார்க்கப்பணி செய்ய வந்த பேரணியில் வந்தவர். தாதாஷா வலி மதராஸ் பட்டாளத்தில் தாஷாமகான் பகுதியில் அடங்கப்பட்டுள்ள ஆன்மிகச் செல்வர் தாதாஷா வலி. இவரின் முழுப் பெயர் செய்யது ஹுசைன்பியாரி ஜையினுல்லாஷா காதிரி. இவர் மஸ்ஜித்மஃமூரின் பின்பகுதியில் அடங்கப் பெற்றுள்ள ஃபத்ஹ்ஷா மஸ்தான் காதிரியின் மாணவர். சைகு படேஷா ஹளரத் மதராஸ் பெரம்பூர் செம்பியம் பள்ளிவாசல் வளாகத்தில் அடங்கியுள்ள ஷைகு படேஷா ஹளரத்1875 செப்டம்பரில் விழுப்புரத்தில் பிறந்தவர். இவர்களின் பூர்வீகம்கர் நாடகாவைச் சேர்ந்த பில்குண்டா. அண்மைக்கால ஆன்மிகச் செல்வரான இவர் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் 1923 வரை பணியாற்றியவர். பின்னர் நெல்லூர், கர்நூல் என பணி நிமித்தம் சென்று மதராஸ் தண்டையார்பேட்டையில் இறுதியாக அலுவல் செய்து 1928 டிசம்பரில் மரணமடைந்தார். சையத்மூஸா காதிரி அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் அருகில் அடங்கியுள்ள சையிது மூஸா காதிரி எக்காலத்தவர் எந்நாட்டவர் எனத் தெரியவில்லை. நகரின்நடுவில் அடங்கியுள்ளதால் பல்வேறு மக்களின் பார்வை மவுண்ட்ரோட் தர்காவைத் தொட்டு பிரபலப்படுத்தியுள்ளது. சையிது முர்த்தஸா பாஷா காதிரி கி.பி.1809-இல் மரணமடைந்த சையிது முர்த்தஸா பாஷா காதிரி திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அடங்கப்பட்டுள்ளார். இவருடைய அடக்கத்தலத்தின் அருகில்தான் மஸ்ஜிதே அன்வரி பள்ளிவாசல் உள்ளது. நடந்தே மார்க்கப் பணியாற்றிய இவருக்கு கர்நாடக நவாப் அளித்த பல்லக்கொன்றை புறக்கணித்து நடந்தே சென்றார். அப்பல்லக்கு பெரிய தெரு பள்ளிவாசலில் இன்றும் உள்ளது. அன்னாரின் நினைவாக இன்று அங்கு ஓர் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி உள்ளது. பஹ்ருல்உலூம் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதியின் முன்புறம் பல சமாதிகள் உள்ளன. அவற்றில் நவாப் குடும்பத்தினரோடு பல முக்கிய பிரமுகர்களின்அடக்கத் தலங்கள் காணப்படுகின்றன. முக்கியமான சமாதிகளில் மிக முக்கியமானது ‘பஹ்ருல்உலூம்’ என்பாரின் சமாதி. ஈரானிலிருந்து வந்து இந்துஸ்தானில் வாழ்ந்த பெரிய வம்சாவளியைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் அப்துல்அலீ முஹம்மது இப்னு நிஜாமுதீன்லக்னவி. இலக்னோவில் மார்க்கக் கல்வியைப்போதித்த பஹ்ருல்உலூம்ஷாஜஹான்பூர், ராம்பூர், வங்காளம் எனப் பணியாற்றி ஹிஜ்ரி 1204-ல்(கி.பி.1788) மதரஸாபட்டினம் வந்தார். நவாப்வாலாஜாவின்அழைப்பை ஏற்று அறுநூறு மார்க்க அறிஞர்களுடன் மதராஸ் வந்த பஹ்ருல்உலூம்மத்ரஸயெ - கலானில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் முதல்வராக நியமிக்கப்பட்டார். கல்வி கேள்விகளில் மிகச்சிறந்து விளங்கிய பேராசானைக் கண்டு வியந்த நவாப் அவருக்கு ‘கல்விக்கடல்- பஹ்ருல்உலூம்’ எனும் பட்டத்தை வழங்கினார் எனச் சிலரும் இப்பட்டத்தை பேரறிஞர்ஷா வலியுல்லாஹ் அளித்தார் என வேறு சிலரும் சொல்கின்றனர். ‘மலிக்குல்உலமா. மார்க்க விற்பன்னர்களின் தலைவர்’ எனவும் அழைக்கப்பட்ட பெருமகனார் கி.பி.1810 ஆகஸ்டில் மரணமடைந்தார். இவர் அரபி, பார்ஸி, உருது மொழிகளில் பெரும்புலமை பெற்றிருந்தார். இவர் மெளலானா ரூமி எழுதிய மஸ்னவீக்கு ஒரு விளக்கவுரையும் இப்னு அரபி எழுதிய புஸுஸுக்கு ஒரு விளக்கவுரையும் எழுதியதோடு மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார். பாக்கிர்ஆகா பஹ்ருல்உலூமுக்கு அடுத்தபடியாக மாபெரும் அறிஞராக விளங்கியவர் பாக்கிர்ஆகா ஆவார். இவர் உருதுவில் பன்னிரண்டு நூல்களும் அரபி, பார்ஸி மொழிகளில் பல நூல்களும் எழுதியுள்ளார். ஹிஜ்ரி 1220-ல்(கி.பி.1803) மரணமடைந்த பாக்கிர் ஆகா கிருஷ்ணாம் பேட்டையிலுள்ள தம் இல்லத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். தஸ்தகீர்சாவீ கிருஷ்ணாம் பேட்டையில் அடங்கியுள்ள இன்னொரு மாமேதை சையிது ஷாஹ்குலாம்தஸ்தகீர்சாவீ. ஷேக்மக்தூம் அப்துல்ஹக் என்ற இயற்பெயர் கொண்ட தஸ்தகீர்சாகிப், ஜாவாவில்வசித்த துருக்கிய குடும்பத்தைச்சேர்ந்தவர். பீஜப்பூரை ஆண்ட ஆதில்ஷா பரம்பரையுடன் உறவு கொண்டிருந்த தஸ்தகீர்சாகிப் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னகம்வந்து மார்க்கப்பிரச்சாரம்செய்து மதராஸில்தங்கினார். பின்னர் 1752-ல் ஹைதராபாத் சென்ற தஸ்தகீர்சாகிப்மூஸி ஆற்றங்கரையில் மரணம் அடைந்தார். செய்தியைக் கேள்விப்பட்ட நவாப் வாலாஜா அவரது உடலை மதராஸ் கொண்டுவந்து கிருஷ்ணாம்பேட்டையில் அடக்கம் செய்தார். 1789-ல்சமாதிக்கு மேல் பெரிய தர்கா கட்டப்பட்டது. சூஃபிசம்பற்றி இம்மகான் எழுதிய நூல்கள் கெளடியா மடத்துக்கு அருகிலுள்ள "திவான்சாகிப்பாக்’ நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. பீர்தாதா தஸ்தகீர்தர்காவுக்கு அருகில் சூஃபிதார்தர்கா உள்ளது. இங்கு அடங்கப் பெற்றிருப்பவர் பெயர்பீர்தாதா தஸ்தகீர்பாதுஷா, பாக்தாதைச்சேர்ந்த சூஃபி ஞானி. தர்காக்களைத் தவிர்த்து விட்டு முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்றைக் கண்டெடுக்க முடியாது. ஆங்காங்கு வாழ்ந்து இறை மார்க்கத்தைப் பரப்பி சமாதியாய் ஆனவர்களின் வரலாற்றை அகழ்ந்தெடுத்தால் மேலும்பல உண்மைகள் நமக்குக் கிடைக்கும். அடையாறில் குரஸானி தர்கா தொடங்கி சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், பல்லாவரம் என பல தர்காக்கள். முஸ்லிம்களின் சங்கமம்! மதரஸா பட்டினத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசுபவர்களோடு உருது மொழி பேசுவோரும் அதிகம் இருந்தனர். கன்னடம் பேசுவோர் குறைவாகவும் அதே அளவில் இந்தி, குஜராத் பேசுவோரும் வாழ்ந்தனர். தென்னக மொழியினர் நால்வரோடு வடக்கிலிருந்து வந்த உருது, இந்தி, குஜராத் மொழியினர் நீண்டகாலமாக வாழ விந்தியத்திற்கு அப்பாலுள்ள வேற்றுமொழியினர் இலைமறைக்காயாகவே காணப்பட்டனர். 1990-களில் வங்காளிகள் சேப்பாக்கம் பகுதியில் வந்து குடியேறத் தொடங்கினர். அவர்கள் அங்கு வரக்காரணமாயிருந்தது, அங்குள்ள வங்க மாநில சுற்றுலாத்துறை அலுவலகம். கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்தும் அவர்களுக்கு பலவித கண்நோய்கள்வரும். கண்நோயைத் தீர்க்க அவர்கள் சங்கர் நேத்ராலயா வரத் தொடங்கினர். நேத்ராலயா வரத் தொடங்கிய வங்காளிகள் படிப்படியாக சேப்பாக்க வாசிகளாக மாறினர். இன்று, அவர்கள் உணவு விடுதிகள் நடத்துவதோடு பல்வேறு வகை தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கொல்கத்தாவுக்கு தினந்தோறும் சொகுசுப் பேருந்துகளில் சென்று வருகின்றனர். வங்காளிகளைத் தொடர்ந்து ஒரிஸா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் தொழிலாளிகள் மதரஸாபட்டினத்தில் மட்டுமல்ல புறநகரங்களிலும்பெருவாரியாக வந்து குவிகின்றனர். ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் தெற்கும், வடக்கும், கிழக்கும் மும்பையில் குவிந்தன. இன்று கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகளுக்காக மதரஸாபட்டினத்தில் மற்ற மாநில மக்கள் வந்து குவிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக இன்று பல்வேறு மாநில மக்கள் மதரஸாபட்டினத்தில் குவிந்தது போல அன்று பல்வேறு நாட்டினர் வணிகத்துக்காக இங்கு வந்து குவிந்தனர். வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் கிரேக்க, ரோம, அரபு, பாரசீக வணிகர்கள் மேற்கிலிருந்தும் சீன, கிழக்காசிய வணிகர்கள் வங்கக்கடல் கடந்தும் வந்துள்ளனர். கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்குப்பின் அரபு, பாரசீக வணிகர்களே மண்ணடி பட்டினத்தின் மகத்தான வணிகர்களாய் விளங்கியுள்ளனர். குதிரைகளோடு வந்திறங்கிய அவர்கள்துணி மணிகளோடும் சீனத்துப் பொருள்களோடும் குமரிப் பெருங்கடல் கடந்து அரபுக்கடலில் பயணத்தை முடித்திருக்கின்றனர். அப்பயணத்தின் தொடர்ச்சியாய் தரைவழி வணிகர்கள் ஷாம் (சிரியா) வரை சென்று நிறைவு செய்திருக்கின்றனர். திமிஷ்க் (டமாஸ்கஸ்) சந்தை உலகச்சந்தையாகியுள்ளது. 7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபு தேசத்திலிருந்து மண்ணடிப் பட்டினம் வந்த பாய்மரக் கப்பலின் உச்சியில் ஒரு பச்சைப்புறா இருந்தது. கலம் நங்கூரமிடப்படுவதற்கு முன் அப்புறா பறந்து மேற்கு வானில் மறைந்தது. நங்கூரம் பாய்ச்சிய பின்குதிரைகள் அலைவாய்க் கரையில் நீந்தி கரையை அடைந்தன. குதிரைகளைக் கொண்டுவந்த அரபுக்களின் தோற்றம் இப்போது வேறுவிதமாக இருந்தது. கரையிலிருந்த மண்ணடிப்பட்டின வணிகர்கள் தோற்றத்தின் மாற்றம் பற்றிக் கேட்க அரபு வணிகர்கள் இஸ்லாத்தின் வருகையைப் பற்றிக் கூறினர். அண்ணலார் சமுதாயத்தைப் புரட்டிப் போட்ட வரலாறை பற்றி மொழிந்தனர். அரபு வணிகர்களோடு ஓரிரு இஸ்லாமிய அழைப்பாளர்களும் மண்ணடிப்பட்டினத்தில் கால்பதித்தனர். காலப்போக்கில் ஓரிருவரின் வருகை பலராகியது. அவர்கள் மேற்கு, தெற்கு, வடக்கு எனப்பயணம் மேற்கொண்டனர். ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய பயணம் அடுத்தடுத்த நூற்றாண்டுகளிலும் தொடர்ந்தது. அப்பயணத்தின் இன்னொரு கிளையாக வடக்கில் படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களைத் தொடர்ந்து இஸ்லாமிய அழைப்பாளர்கள் தென்னகம் வரை வந்தனர். கிழக்காசிய நாடுகளுக்கும் சென்றனர். இவர்களின் முன்னோடியாக கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே அழைப்பாளராக வந்தவர்தான் செயின்ட்தாமஸ். சாந்தோம் பகுதியில் கரையிறங்கிய பின்தம் அழைப்புப் பணியைத் தொடங்கிய போதுதான் தாமஸ் கொல்லப்பட்டார். மேற்கே அரபுக்கடல் பட்டினமான கோழிக்கோட்டின் கி.பி.1498-ல்வந்திறங்கிய போர்த்துக்கீசியர்கள் செயின்ட் தாமஸின் பணிகள், கொலை, கல்லறை பற்றித் தெரிந்து கொள்ள மயிலைப்பட்டினத்தின் சாந்தோம் கடற்கரைக்கு ஆட்களை கி.பி.1510-க்குமேல் அனுப்பினர். அதன்பின் அங்கு குடியேறி வணிகம் செய்தனர்; கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்தனர். 1516-ல்லஸ்சர்ச்கட்டப்பட்டது. போர்ச்சுக்கீசியர் சாந்தோம் வருவதற்கு முன்பே அங்கு முஸ்லிம் குடியிருப்புகள் இருந்துள்ளன. அங்கு வணிகம் செய்த முஸ்லிம்களும் மண்ணடிப்பட்டினத்தில் வணிகம் செய்த முஸ்லிம்களும் கிழக்குக் கரைப்பட்டினங்களைச் சேர்ந்தவர்கள். கோவளம், கூனிமேடு, கோட்டக்குப்பம், புதுச்சேரி, கடலூர், பறங்கிப்பேட்டை, நாகைப்பட்டினம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், தொண்டி, மரைக்காயர்பட்டினம், பெரியபட்டினம், கீழைக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களிலிருந்து கடல்வழியாக வந்து வாழ்ந்து வணிகம் செய்தவர்களே சாந்தோமிலும் மண்ணடியிலும் நிரம்பியிருந்தனர். இவர்கள் எல்லோரும் அரபகத்திலிருந்து வந்த வணிகர்களால் இஸ்லாத்தைத் தெரிந்து அங்கிருந்து வந்த அழைப்புப் பணியாளர்களால் சாந்தி மார்க்கத்தில் சங்கமித்தவர்கள். முஸ்லிம்களாய் மாறிப்போன தமிழர்கள் வணிகத்தை மட்டும் செய்யவில்லை, பல்வேறு தொழில்களையும் செய்தார்கள். போர்ப்படை வீரர்களாகவும் பணியாற்றினார்கள். அலாவுதீன்கில்ஜி காலத்தில் மதுரை வந்த தளபதி மாலிக்காபூர் பாண்டியர்களின் படையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பணியாற்றியதைக் கண்டதாக வரலாறு பேசுகிறது. கி.பி.1310இல்மாலிக்காபூர் ராமேசுவரம் வரை சென்று கிழக்குக்கடற்கரை சாலை வழியாகத் திரும்பினார். வணிகர்களாய்த் திரண்டிருந்த முஸ்லிம்கள் அரபு, பார்ஸிகளாகவும், தமிழர்களாகவும் திகழ்ந்தனர். கோல்கொண்டா அரசு மதரஸா பட்டினத்தில் கால் வைத்த பின் உருது மொழி பேசுவோர் மிக அதிகமாகத் தெரிந்தனர். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மீர்சாகிப்பேட்டை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு வரை அவர்கள் குவியத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலோர் ஷியாக்கள், காரணம் கோல்கொண்டா சுல்தான்ஷியா முஸ்லிம். உருது பேசும் முஸ்லிம்கள் பெரும்பாலும் சுல்தானின் ஆட்சியதிகார பணிகள் புரிவோராய் இருந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் உருது மொழி உரத்த குரல் எழுப்பியது. "ஏக், தோ, தீன், சார்’ எங்கும்கேட்டது. அதன் பின் மொகலாயர், நிஜாம்என ஆட்சியாளர்கள்! நிஜாமின் கீழ்ஆற்காடு; ஆற்காட்டு நவாபின் கிழக்குச் சீமையாக மதரஸா பட்டினக் கடலோரம்! அக்கடலோரத்தில் தமிழ், உருது முஸ்லிம்களோடு தமிழும்உருதுவும்கலந்து பேசும்ஆற்காட்டு முஸ்லிம்கள்! ஆற்காட்டு நவாப் மதரஸாபட்டினம் வருவதற்கு முன் விஜயநகர அரசின் எச்சமான சந்திரிகிரி ராஜாவிடமிருந்து ஆங்கிலேயர்கள் சென்ன குப்பத்தை விலைக்கு வாங்கியிருந்தனர். (1639) அதன் பின் கோல்கொண்டா சுல்தானின் பிரதிநிதிகள் மதரஸாபட்டினத்தை நிர்வகிக்கும் நிலை வந்தது சுல்தானுக்குப் பின் தான் ஆற்காட்டார் ஆட்சி. சாந்தோம் மிகச்சிறந்த துறை முகமாகவும் வணிகச் சந்தையாகவும் உயர்ந்திருந்தது. இவ்வுயர்வு ஆங்கிலேயருக்குப் பிடித்திருந்தாலும் இன்னொரு உயர்வு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்கியது. அது முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்வு! முஸ்லிம்கள் மைசூர் முஸ்லிம் ஆட்சியாளர்களோடு சேர்ந்து விட்டால் என்ன செய்வது? எனவே ஆங்கிலேயர்கள் சாந்தோமில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கமுக்கமாக கட்டுப்படுத்த முயன்றார்கள். அக்கட்டுப்பாட்டால் தான் அதுவல்ல, சாந்தோமும் மயிலாப்பூரும் மண்ணடியைப் போல் முஸ்லிம்களின் பாக்கமாக விரிவடைய வில்லை போலும். முஸ்லிம்களும் தோளோடு தோள் சேர்ந்து நிற்க புதிய தோழர்களைச் சேர்க்கவில்லை போலும்! ஆட்சி செய்த நவாப்களுக்கும் அந்த எண்ணம் அறவே பிறக்கவில்லை போலும்! ஆங்கிலேயரின் ஆட்சியின் போது மதரஸாபட்டின முஸ்லிம்கள் வீடு - பள்ளிவாசல் எனக் கழித்தனர். காந்தி காலத்தில் சிறிது எழுச்சி பெற்றனர். அதன் பின் கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டனர். மண்ணடியில் குடியேறியோர் பெரும்பாலும் நெல்லை, முகவை, தஞ்சை மாவட்டத்தினர். பெரியமேட்டில் வசித்தோர்வட ஆற்காடு, ஈரோடு, திண்டுக்கல் தோல்வ ணிகர்கள். புரசை வாக்கத்தில் வணிகம் செய்வோர்நெல்லை, முகவை, சிவகங்கை, மதுரை மாவட்டத்தினர். எழும்பூர் - புதுப்பேட்டையிலும் நெல்லை, முகவை மாவட்டத்தினர், உடன்குமரி மாவட்டத்தினரும். குறிப்பாக ஆளூர், முதுகுளத்தூர் பகுதியினர் கணிசமாக வணிகர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கத்தில் வாழ்வோர் முந்தைய காலகட்டத்தில் கோல்கொண்டாவிலிருந்து வந்து குடியேறியவர்கள், பெரும்பாலும் உருது மொழி பேசுபவர்கள். தென்தமிழக முஸ்லிம்களும் இங்குள்ளனர், குறிப்பாக இளையான்குடி பகுதியினர். தமிழ் பேசுவோர் தம் பூர்வீக ஊர்களோடு தொடர்புடன் வாழ உருது பேசுவோர் வாழும் இடத்திலேயே உறைந்து விடுகின்றனர். உருது மொழி பேசுவோர் ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை எனத்திரளாக உள்ளனர். நீலம்பாஷா தர்கா, பப்பு மஸ்தான்தர்கா என வாழும் விளிம்பு நிலை மக்கள்கலாச்சார கோளாறு களோடு வாழ்கிறார்கள். ஆயிரம் விளக்கில்ஷியா முஸ்லிம்கள் பெருந்திரளாக வாழ்கின்றனர். அஜீஸ்முல்க் தெருக்களில் தமிழ் பேசுவோரும் மிக அதிகமாக உள்ளனர். நுங்கம்பாக்கத்தில் கீழைக்கரை முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர். வள்ளுவர்கோட்ட சாலையிலுள்ள பள்ளிவாசலும் டிபிஐ அருகிலுள்ள மானா மூனா பள்ளிவாசலும் இவர்களை இணைக்கிறது. பட்டாளம், தாதாஷா மக்கான் பகுதிகளில் வாழ்வோர் பெரும்பாலும் உருது மொழி பேசுவோர். இவர்கள் பல தலைமுறைகளாய் இங்கு வாழ்கின்றனர். விளிம்பு நிலை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சகோதர பாசத்தோடு வாழ்கின்றனர். பெரம்பூரில் உருது - தமிழ்என இருமொழி பேசுவோரும் ஆங்காங்கு வாழ்கின்றனர். மதரஸாபட்டினத்தில் ஐந்து தலைமுறைகளைக் கண்டுவிட்ட ஜமாலியா குடும்பத்தினர் ஜமாலியா நகர் பகுதியில் பரந்து வாழ்கின்றனர். புளியந்தோப்புப் பகுதியில் வாழ்வோரைத்தான் அடிமட்ட முஸ்லிம்கள் எனக்கூற வேண்டும். சிலருக்கு வேர்கள் தெரிந்திருந்தாலும் பலருக்கு வேர்கள் தெரியாது. பள்ளிவாசல் தொடர்பில் வாழ்பவர் மிகச்சிலர்; கொடி மரக்கம்பங்களிலேயே பலரின் பிரார்த்தனைகள் பூட்டப்பட்டுள்ளன. ஜெண்டா கொடிமரங்களும் அவற்றில் வேண்டுதல்களுக்காகப் பூட்டப்படும் பூட்டுகளும் அகலும் வரை அவர்கள் ஆன்ம பலம் பெறப் போவதில்லை. ஏகத்துவத்தை நிலைநிறுத்த விரும்புபவர்கள் முதலில் புளியந் தோப்பிலுள்ள வறுமையை விரட்டியடிக்க முன்வர வேண்டும். அயனாவரம் பகுதியில் ஆங்காங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் கணிசமாக தெலுங்கு பேசும் முஸ்லிம்கள் நிறைந்துள்ளனர். பாடி, அம்பத்தூர், ஆவடி வரைதிட்டுத்திட்டாக முஸ்லிம்கள் உறைகின்றனர். சில இடங்களில் குறிப்பிட்ட மாவட்ட மக்கள் குழுமியிருந்தாலும் பல இடங்களில் பல்வேறு மாவட்ட மக்கள் வாழ்கின்றனர். சில பகுதியினர் தம்மின் பூர்வீகத்தைத்தெரிந்து வைத்திருந்தாலும் பல பகுதியினர் தெரியாமலேயே வாழ்கின்றனர். பிரிவுகளின்றி இஸ்லாமியர் என்ற உணர்வோடு இணைந்து வாழ்கின்றனர். அமைந்தகரை, எம்எம்டிஏ, சூளைமேடு வரை பரவலாக வாழும் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வரலாற்றை சூளைமேடு தெருக்கள் சொல்லிக் கொண்டுள்ளன. இங்குள்ள பாஷா தெரு, அப்துல்லா தெரு, வகாப் தெரு, மேலும் சில தெருக்களின் பெயர்கள் ஆய்வுக்குரியவை. கோடம்பாக்கம், வடபழநியில் வாழும் முஸ்லிம்களில் சிவகங்கை மாவட்ட காரைக்குடி, தேவகோட்டைப் பகுதியினர் அதிகம். காரைக்குடி ஏவி.எம்.செட்டியாரின் படப்பிடிப்பு நிலைய வருகை அப்பகுதி மக்களைக் கோடம்பாக்கத்தில் குடியிருக்க வைத்தது. வளசரவாக்கம் சாதிக் பாஷா நகரிலுள்ள முஸ்லிம்கள் அங்கு அண்மையில் குடியேறியவர்கள். பல்வேறு மாவட்ட முஸ்லிம்கள்ஒரு நல்ல ஜமாஅத்தாக பிணைந்துள்ளனர். போரூர் சந்திப்பிலுள்ள மஸ்ஜிதே முஹம்மதியாவின் பழமையும் புதிதாய்க் கட்டப்பட்டுள்ள மசூதியின் பிரமாண்டமும் இங்குள்ள முஸ்லிம்களின் நீண்ட வாழ்க்கையையும் பெருக்கத்தையும் சொல்லாமல் சொல்லும். போரூரைக் கடந்தால் மாங்காடு பட்டூர்; பட்டூரிலுள்ள ஆற்காடு நவாப்கால முஸ்லிம்களின் குடியிருப்பு பழமையைப் பறைசாற்றும். பூந்தமல்லி சென்றால்பூத்து நிற்கும் இஸ்லாமியப் பெருமை புத்துணர்வு வழங்கும். ஆற்காட்டு சாலைப் பயணத்தை நிறுத்தி திரும்பவும் கிழக்கிலுள்ள நூறடி சாலைக்கு வந்து தெற்கில் பயணம் செய்யுங்கள். அசோக்நகர், எம்ஜியார்நகர்சில செய்திகளைச்சொல்லும். ஆங்காங்கு வாழும் முஸ்லிம்களைப் பற்றி மொழியும். ஜாபர்கான்பேட்டை, செய்யதுகான்பேட்டை (சைதாப்பேட்டை) ஆகிய இரண்டு பேட்டைகளும் ஆற்காட்டு நவாப்கால முஸ்லிம்களின் குடியேற்றத்தைக் கூறுபவை. மாம்பலம், நந்தனம், தேனாம்பேட்டை, ஆலந்தூர் பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஆங்காங்கு வாழ்வதையும் அவர்கள் பல்வேறு வகையினர் என்பதையும் பெரும்பாலோர் வெளியிலிருந்து வந்திருந்தாலும் எந்தவொரு குறிப்பிட்ட மாவட்டத்தினர் அல்லர் என்பதையும் அறிய முடியும். மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு முதல் கிழக்குக் கடற்கரை சாலையோர ஊர்களில் குடியிருப்போரும் பலதரப்பட்டவரே. ஒரு காலத்தில் தம் ஊருக்குள், தம்பகுதிக்குள், தம் மாவட்டத்துக்குள் மணம் செய்து கொண்டோர் மதரஸாபட்டின வாசிகளானபின் பழைய எல்லையைச் சிறிதும் பார்ப்பதில்லை. மொழி, மாநில எல்லை களைக்கூட கடந்து செல்கிறார்கள். வடபகுதி எல்லையில் ஏழு கிணறு, தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், புதுமனைக்குப்பம், தாங்கல், திருவெற்றியூர் பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடாமல் தென்பகுதி வந்துவிட்டோம். வடபகுதியின் எல்லாப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்றனர். ஏழு கிணறு பகுதியில் தற்போது இளையான்குடியைச் சுற்றியுள்ள ஊர்க்காரர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். வண்ணாரப்பேட்டையில்லா லாகுண்டாவும் மொட்டைத் தோட்டமும் பெருவாரியான உருது பேசும் முஸ்லிம்கள் வாழும் இடங்கள். மற்ற பகுதிகளில் உருது - தமிழ் பேசும் முஸ்லிம்கள் கலந்து வாழ்கின்றனர். மக்கட் பெருக்கமின்றி வாழ்ந்த மதரஸா பட்டினம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெருக ஆரம்பித்தது. 1938-ல்மதார்ஷா துணிக்கடை வந்தது. 1943-ல்புகாரி ஹோட்டல்தொடங்கப்பட்டது. இக்காலகட்டங்களில் வெளிமாவட்ட முஸ்லிம்கள் பெரிய அளவில் எழும்பூரில் வந்து இறங்கியிருக்கின்றனர். நெல்லை எக்ஸ்பிரஸ் எழும்பூரை அடைந்த அரைமணி நேரத்தில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் மேலப்பாளையம் முஸ்லிம்கள் கையில் பெட்டியோடு காணப்பட்டனராம். 1960-களில் இலங்கையிலிருந்து தாயகத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதும் 1970-களில் பர்மாவிலிருந்து இந்தியர்கள் புலம் பெயர்ந்ததும் மதரஸாபட்டினப் பெருக்கத்திற்குரிய காரணங்களில் ஒன்று. இலங்கையிலிருந்து வந்தோர் மதரஸாபட்டினத்தின் தென்பகுதியிலும் பர்மாவிலிருந்து வந்தோர் வடபகுதியான கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியிலும் குடியேறினர். கொருக்குப் பேட்டையில் குடியேறியோர் அமைத்த நகரே நேதாஜி நகர். […] மேமன் முஸ்லிம்களின் பட்டினம்! நீண்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் மேமன் முஸ்லிம்கள். சிந்துஸ்தானை பூர்வீகமாக கொண்ட அவர்கள் இந்துக்களில் ஒரு பிரிவினரான வைஸ்யர்களாய் இருந்தவர்கள். அவர்கள்இஸ்லாத்தை தழுவிய பின் குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் வந்து குடியேறினார்கள். கி.மு.327-ல்மகா அலெக்ஸாண்டர் சிந்துஸ்தான் வந்தபோது அங்கு ஆண்டு கொண்டிருந்த மன்னன் பெயர் இந்து. இந்த இந்து மன்னனின் வம்சாவளியினரே ரோஹனாக்கள் என அழைக்கப்பட்ட வைஸ்யப் பெருமக்கள். இப்போது கி.மு.வைக் கடந்து கி.பி.க்கு வாருங்கள். கி.பி. ஏழாம்நூற்றாண்டு, சிந்துஸ்தானத்தின் மன்னன் சாஹசி, இவன் ராய் வம்சத்தைச் சேர்ந்தவன். இவனிடம் அமைச்சராக சேர்ந்த சதுர்புஜன் சதுரங்கத்தைக் கண்டுபிடித்தவன். இந்த சதுரங்கக்காரன் காய்களை நகர்த்தி மன்னனைக் கொன்றான்; மன்னனின் மனைவி சுபா தேவியை மணந்தான். பிராமணனான சதுர்புஜன் மூலம் சிந்துஸ்தான் ஆளப்பட்டது. ஆர்ய சிந்தியக் கலப்பில் ஒரு பெண்மகள், இரு ஆண்மக்கள். பெண்மகள் பெயர் பத்மினி, ஆண்மக்கள் பெயர்கள் திருஷ்ணன், உதயவீரன். பெற்றோர்கள் மறைவுக்குப்பின் மூத்தவன் பிராமணபரிக் கோட்டையின் பேரரசன் ஆனான். இளையவன் அல்வர் கோட்டையின் காவலன் ஆனான். காலம் உருண்டபோது பகைமைத் தீ பற்றி எரிய மூத்தவன் அழிக்கப்பட்டான். இளையவன் உதயவீரன் சக்கரவர்த்தியானான். இவன் மகா அலெக்ஸாண்டரைப்போல உயர ஆசைப்பட்டான். அக்கம்பக்க எல்லைகளில் கால் பதித்த உதய வீரன் முஸ்லிம் ராஜ்யத்தின் கிழக்கெல்லையிலிருந்த முக்ரானில் அவ்வப்போது மோதல்களை உருவாக்கிக் கொண்டிருந்தான். எனவே, அவனை அடக்கி வைக்க அப்போது சிரியாவை ஆண்ட கலீஃபா வலீது இப்னு அப்துல்மாலிக்பஸ்ராவின் ஆளுநர் ஹஜ்ஜாஜ்இப்னு யூசுபுடன் கலந்தாலோசித்தார். அவர்களின் முடிவுப்படி உதய வீரனை அடக்க படைத்தளபதியாக முஹம்மது இப்னு காசிம் அனுப்பப்பட்டார். பதினெட்டே வயதான இப்னு காசிம்உதய வீரனை வென்று சிந்துஸ்தானத்தின் ஆட்சியாளராய் ஆனார். இது நடந்தது கி.பி.712-ல்.முன்னூறு ஆண்டுகள் தொடர்ந்த முஸ்லிம்களின் ஆட்சியில் தொய்வு ஏற்பட சிந்துஸ்தானத்தில் வெவ்வேறு ஆட்சிகள். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்ஒரு இந்து மன்னர் சிந்துவை ஆண்டார், அவர் பெயர் ஜாம்ராய்தன். அப்போது பீர்ஸையித் யூசுப்தீன் எனும் பாக்தாதைச் சேர்ந்த ஞானி சிந்துஸ்தானுக்கு வந்து இஸ்லாமிய அழைப்புப் பணியாற்றினார். அவர் மன்னரைச் சந்திக்க ஆன்மிகச் சுடர் மன்னரைப் பற்றிக் கொண்டது. ஜாம்ராய் தன்மாக்கப்கான் ஆனார். மன்னர் மர்கப்கானைத் தொடர்ந்து வைஸ்யர்களாயிருந்த ரோஹனாக்கள் இஸ்லாத்தைத் தழுவினர். பத்தே ஆண்டுகளில் எழுநூறு ரோஹானாக் குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின. அவர்களின் எண்ணிக்கை 6178. ரோஹனாக்களை இந்துக்களிடமிருந்து பிரித்துக்காட்ட ஸையித்யூசுப்தீன்‘முஃமின்’ என அழைத்தார். அதுவே பிற்காலத்தில்‘மேமன்’ என மாறியது. ‘மேமன்’ என்பதற்கு பேறு பெற்றவர்கள் என்ற கருத்து உள்ளதென்றும் திருக்குர் ஆனின்90:18 வசனத்தில் குறிப்பிடப்படும் ‘மைமனா’ என்ற பதத்திலிருந்து வந்ததென்றும் சிலர் கூறுகின்றனர். சிந்துஸ்தானில் வாழ்ந்த மேமன்கள் காலப்போக்கில் புலம் பெயர்ந்து கட்ச், கத்தியவார், குஜராத் பகுதிகளில் குடியேறினார்கள். மேமன், சேத் என அழைக்கப்பட்ட இவர்களை அடையாளப்படுத்த சிந்துவில் தங்கி விட்டவர்கள் சிந்தி மேமன் எனவும் கட்ச்பகுதியில் உறைந்தோரை கட்ச்மேமன் எனவும் கத்தியவார் பகுதியில் வாழ்ந்தோரை ஹலாய் மேமன் எனவும் கூறுகின்றனர். ஆன்மிக குரு ஸையித்யூசுப்தீன்தம்கலீஃபாவாக ஆதம்கேத்எ ன்பவரை நியமித்துச் சென்றார். இந்நாள் வரை ஆதமின் வழித் தோன்றல்களே மேமன்களின் தலைவர்களாய் இருந்து வருகின்றனர். பெரு வணிகர்களான இவர்கள் இன்று கட்ச், கத்தியவார், குஜராத், பஞ்சாப், பம்பாய், பாகிஸ்தான் என பரந்து வாழ்கிறார்கள். இவர்களின் தாய்மொழி கட்ச் என்றாலும் குஜராத்தி, உர்து, பார்ஸி, அரபி, ஆங்கிலம் பேசுவதில் வல்லவர்கள். நீண்ட சட்டை, கால்சராய், வைஸ்ட்கோட், ஜாக்கெட், தலையில்டர்பன் ஆகியவை தான் விழாக்கால மேமன்களின் ஆடை அடையாளம். நல்ல ஆளுமையின் அடையாளமாய்த் திகழும் மேமன்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில் உதாரண புருஷர்கள். மார்க்கத்தில் மதிப்பச்சமும் மாண்புகளும் கொண்ட இவர்கள் கருணைப் பார்வையும் கொடை மனமும் கொண்டவர்கள். இவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினம் வந்தார்கள்; மலபாருக்கும் அடியெடுத்து வைத்தார்கள். பெரும் வியாபாரிகளான இவர்கள் துணி வணிகத்தில் துறை போனவர்கள். இவர்களின் வணிகம் சைனா பஜார் பகுதியில் விரிவடைய இருப்பிடம் அடுத்திருந்த ஆண்டர்ஸன் தெருவிலும் அதன் தொடர்ச்சியான சின்னத்தம்பி தெருவிலும் அமைந்தன. , இவர்கள் ஆண்டர்ஸன் தெருவில் கட்டிய பள்ளிவாசல் இன்று மேமன் பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. பல்வேறு அறக்கட்டளைகள் அமைத்து பல்வேறு பொதுப்பணிகளைச் செய்த மேமன்கள் கட்டுவித்த முஸாபர்கானா - வழிப்போக்கர் தங்குமிடம் இன்றும் பலருக்குப் பயன்பட்டு வருகிறது. ஜனாப் உமர் சோபானி எனும் பெருவணிகர் அன்னிபெஸன்டின் ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்று பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார். கிலாபத் இயக்கத்திலும் அங்கம்வகித்த உமர் சோபானி ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். சுயராஜ்ய நிதிக்காக காந்திஜியிடம் தொகை நிரப்பப்படா காசோலையை அளித்தார். அந்நிய நாட்டுப் பொருட்களை காந்திஜி ஒறுத்து ஒதுக்கச் சொன்னபோது அந்நியப் பொருட்களை விற்ற மேமன்கள் காந்திஜியோடு கைகோர்த்தார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்கள். விடுதலைப்போரில் கலந்து கொண்டார்கள். விடுதலைக்கு முன் அமைந்த இடைக்கால அரசில் 1916-இல் ஜனாப்யாக்கூப் ஹஸன்சேட் உறுப்பினராகவும் 1941-இல் அமைந்த ராஜாஜி மந்திரி சபையில் அமைச்சராகவும் அங்கம் வகித்தார். பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு யாகூப்ஹஸன் மதராசுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தைத் தெரிவு செய்தவர் ஆவார். யாக்கூப்ஹஸனின் மனைவி கதீஜா பீவி 1937-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கான தொகுதியில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினத்தில் கட்ச் மேமன் ஜமாஅத் அமைக்கப்பட்டது. அதன் முதல்தலைவராக ஹாஜி இபுறாகீம் சேட் இருந்தார்; அடுத்து ஹாஜி யூனுஸ்அப்பாஸ் சேட் தலைமையேற்றார். பெரு வணிகர் ஹாஜி எஸ்ஸா அப்பா சேட் 1917-ல் பொது நலத்திற்காக தம் மதரஸாபட்டின இடங்களை வழங்கினார். சின்னத்தம்பி தெருவிலுள்ள ஜமாஅத்கானா, முஸாபர்கானாவுக்கான இடங்களை அளித்த ஹாஜி ஆண்டர்ஸன் தெருவிலுள்ள மேமன் மஸ்ஜிதைக்கட்டுவித்தார். 1902-இல் மதரஸாபட்டினத்திற்கு வந்த ஜனாப் ஆதம்ஹாஜி முஹம்மது சேட்தான் ஆங்கிலேய அரசிடமிருந்து முதன்முதலில் கான்பகதூர் பட்டம்பெற்றவர். இவர் தென்னிந்திய வணிக அமைப்பின் தலைவராக இருந்ததோடு நகர ஷெரீபாகவும் ரிசர்வ்வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘கான்பகதூர்’ பெற்றவர்களில் ஜனாப்மூஸா ஹாஜி இபுறாஹீம், ஹாஜி யூசுப்ஹாஜி யூனுஸ்சேட் ஆகியோரும் அடங்குவர். ஹாஜி எஸ்ஸா அப்பா சேட்டின் மைத்துனர் ஜனாப்யூனுஸ் அப்பா சேட்டின் குடும்பமும் ஹாஜி அபூபக்கர் அன்டு சன்ஸ் குடும்பமும் அன்று துணிக்கடையைத் துணிக்கடல்களாக ஆக்கியவர் ஆவார்கள். வழக்கறிஞர் ஹமீத்ஹஸன்சேட் 1920-ல் மதராஸ் உயர்நீதி மன்றத்தில் புகழ்பெற்றவராய் விளங்கினார். இவருடைய மூத்த மகன் ஜனாப்மஹ்மூத்ஹஸன் உலகப்புகழ்பெற்ற அறிஞர் மர்மடியூக்பிக் தாலை மதரஸா மாணவர்களிடையே பேசவைத்தார். துணி வணிகத்தில் பெரும்பங்கு வகித்த இவர்கள் உயர்ந்த தையற் கலைஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர். 1905-ல் நிறுவப்பட்ட யூனுஸ்சேட்டின் கம்பளி ஆடைக் கடையிலிருந்த தையற்பிரிவு உயர்ந்த மனிதர்களின்ஆடைகளைத் தயாரித்துக் கொடுத்தது. 1884-ல் மதரஸா பட்டினத்தில் பிறந்த ஜனாப்ஜக்கரிய்யா அப்துல் ரஹீம்சேட் “மத்தீன்” எனும் புனைப்பெயரில் எழுத்தாளராக விளங்கியுள்ளார். 1926-ல் ‘கிராமபோன்ஹவுஸ்’ எனும் கடையை மவுண்ட் ரோட்டில் தொடங்கிய முஹம்மது இபுறாஹீம் சேட் இசைத்தட்டுகளையும் வானொலிப் பெட்டிகளையும் விற்றார். மெக்கோ குழுமம் எனக் குறிப்பிடப்படும் முஹம்மது இபுறாஹீம் கம்பெனிதான் விஜிபி நிறுவனம் வளரக் காரணமாயிருந்தது. மர்பி ரேடியோவைப் பார்த்தால் மெக்கோ ஹவுசும் விஜிபியும் நெஞ்சில் நிழலாடும். மெக்கோ குழுமத்தினர் தாம் வணிகம் செய்த மெக்கோ ஹவுசை விஜிபிக்குக் கொடுத்து விட்டு பிரிட்டனில் குடியேறி விட்டனர். மெக்கோ குழும வாரிசு ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தின் கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்தார். 1901-ல் பிராட்வேயில் பீங்கான், கண்ணாடிச் சாமான்களையும் விற்கத் தொடங்கிய பாப்பட் ஜமால் இப்போது அண்ணா சாலையில் உள்ளது. இவர்கள் தான் தண்டையார் பேட்டையில் கண்ணாடி புகைப்போக்கியை உற்பத்தி செய்தவர்கள். 1930-ல் இவர்களால் தொடங்கப்பட்ட கண்ணாடித் தொழிற்சாலை மதரஸாபட்டினத்தின் முதல் கண்ணாடி ஆலையாகும். ஹாஜி இஸ்மாயில் சேட்தான் அமெரிக்காவிலிருந்து மண்ணெண்ணையை இறக்குமதி செய்தவர். ஸ்பென்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்1889-ல் பெஸ்ட் அன்கோவால் முறையாக சந்தைப்படுத்தப்பட்டது. போரா முஸ்லிம்களின்துறைமுகப்பட்டினம்! மதரஸாபட்டினத்தின் பிராட்வேயிலும் அதைச் சுற்றியுள்ள தெருக்களிலும் வன்பொருள் (ஹார்டுவேர்) கடை வைத்திருப்பவர்கள் போரா முஸ்லிம்கள் ஆவர். மேமன்களைப் போலவே போராக்களும் குஜராத்திலிருந்து வந்தவர்களே. போஹ்ரா என்ற குஜராத்தி சொல்லுக்கு வணிகர்கள் என்பது பொருளாகும். இன்று ஷியா - சன்னிகள் என வாழும் இவர்கள் விவசாயிகளின் வழித்தோன்றல்கள். ஷியாக்களில் பெரும்பாலோர் இஸ்மாயிலி பிரிவினர்; மேலும் ஐந்தாறு பிரிவுகள் உள்ளன. இந்தியாவில் குஜராத், மும்பை, உஜ்ஜைன், பர்ஹான்பூர், மதராஸ்ஆகிய இடங்களிலும் பாகிஸ்தானில் கராச்சியிலும் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் மொரீசியசிலும் போராக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மதராஸில் மண்ணடிப் பகுதியிலேயே பெரும்பான்மையாக வாழும் போராக்களுக்கு மூர்தெருவிலும் அங்கப்ப நாயக்கன் தெருவிலும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவர்களுக்கு ஒரு தலைவர் உண்டு. அவருக்கு வித்தியாசமாக தலை சாய்த்து மரியாதை செய்கிறார்கள். சுலைமானி போராக்கள் பேசும்மொழி உருது. இவர்களின் தலைமை பீடம்பரோடா. தாவூதி போராக்கள் பேசும்மொழி குஜராத்தி. இவர்களின் தலைமை பீடம்சூரத். மேமன்கள் இங்குள்ள முஸ்லிம்களோடு ஓரளவு நெருங்கி வந்தாலும் போராக்கள் விலகியே நிற்கின்றனர். ஆகாகான், அஸ்கர்அலீ எஞ்சினியர் போன்றோர் போரா முஸ்லிம்களே! […] மலபார் முஸ்லிம்களின் மதராஸ்! கி.பி. 1605-ல் டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினத்தில் தம்வணிகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் வணிகத்தை விரிவாக்கிய அவர்கள் பெத்த பள்ளியில் ஒரு கிட்டங்கியைக் கட்டினர். அதன் தொடர்ச்சியாய் அவர்கள் பழவேற்காட்டில் ஒரு கோட்டையை நிர்மாணித்தனர். மதராஸைத்தாண்டி தெற்கில் சதுரங்கபட்டினத்தில் ஒரு கோட்டையைக்கட்டினர். டச்சுக்காரர்களுக்கு பின்னரே ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்தனர். 1615-இல் மொகல் மன்னர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்ற ஆங்கிலேயர் சூரத்தில் தம் வணிகத்தைத்தொடங்கினர். அரபுக் கடலோரம் மட்டும் உறவாடிய ஆங்கிலேயருக்கு வங்காள விரிகுடா வர ஆசை வந்தது. காரணம் டச்சுக்காரர்களின் வணிக வளர்ச்சி. கிழக்குக் கடற்கரையில் ஆங்கிலேயர் ஆர்மகான் எனும் இடத்தில் தங்கி கொள்முதலைத் தொடங்கினர். ஆர்மகானே இன்று துர்க்கராய பட்டினம் என அழைக்கப்படுகிறது. ஆர்மகானில் கொள்முதல் கூடவில்லை; எனவே ஆங்கிலேயர் துப்பறிந்து 1639-ல் மதராஸ்பட்டினத்தின் தெற்கிலிருந்து சென்ன குப்பத்தை விலைக்கு வாங்கினர். அதற்கு முன்பே போர்ச்சுக்கீசியர் சாந்தோமில் சகல சம்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தனர். கி.பி. 15-ம்நூற்றாண்டு வரை கிரேக்கர்களும் அரபுக்களும் பாரசீகர்களும் பயணித்த கடல்வழியில் ஐரோப்பியரின் பயணம் தொடங்கியது. முதன் முதலில்(1490) போர்ச்சுக்கீசியர்கள் இந்தியா வந்து மேற்குக்கரையில் இறங்கி வணிகத்தில் வளர்ந்தனர். அடுத்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள்என இந்தியா விற்கு வந்து ஏற்றுமதி - இறக்குமதியில்லாபம்சம்பாதித்தனர். அக்கால கட்டத்தில் மதரஸாபட்டினப் பகுதிகளில் தமிழர்களும் தெலுங்கர்களுமே அதிகமிருந்தனர். ஓர் ஆவணம் கிறிஸ்துவர் அல்லாதவர்களும் மலையாளிகளும் அதிகம் இருந்ததாகக் கூறுகிறது. தாமஸ்பெர்ரி எழுதியுள்ள ‘வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள்’ எனும் நூலில் 1670-ல் ஆங்கிலேயர் வாழ்ந்த வெள்ளை நகரத்தில் கிறிஸ்துவர் அல்லாதவர்களும் மலையாளிகளும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவர் அல்லாதவர்கள் என்றால் தமிழரும் தெலுங்கரும், உடன்மலையாளிகளும்! அப்போது மதரஸாபட்டினத்தில் வாழ்ந்த நெசவாளர்களும், மீனவர்களும், விவசாயிகளும், பொதுவான வேலைகள் செய்தோரும் தமிழகத்தின் பூர்வீகக் குடிகள். கொத்தவால்சாவடி, வீரப்பன்பேட்டை (சவுக்கார்பேட்டை), பெத்துநாயக்கன்பேட்டை போன்ற இடங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்தவர்கள் தெலுங்கு பேசும்மக்கள். இவர்களின் தேசம் மதரஸாபட்டினத்திற்கு மிக அருகில் இருந்ததால் இங்கு வந்து பல தலைமுறைக்கு முன்பே குடியேறியிருந்தனர். இவர்கள் இங்கு வரக்காரணம்தெலுங்கு தேச விலை பொருட்களைச் சந்தைப்படுத்துவதே! இவ்வாறு இரண்டு தலைமுறைக்கு முன்வந்தவர்களே விஜயா - வாஹினி ஸ்டூடியோக்களின் உரிமையாளர்களான ரெட்டிக்காருகள். பெருமகன் நாகிரெட்டிக்காருவின் குடும்பத்தினர் கொத்தவால்சாவடிப் பகுதி மண்ணடிக்காரர்களாய்த் திகழ்ந்தே வடபழனியை வளைத்துப்பிடித்திருக்கின்றனர். தமிழர் இருப்பு சரி, தெலுங்கர்வரவு சரி, கேரளீயர் எப்படி மதரஸாபட்டினம் வந்தார்கள். அரபுக் குதிரைகளோடு அரபுக்காரர்களும் பாரசீகர்களும் வந்தது போல் கேரள வாசனைப் பொருட்களோடு கேரளீயர் வந்திருக்கின்றனர். ஆடைகளை நெய்து கொடுத்த தமிழர்கள், வணிகப் பொருட்களை வாங்கி விற்றுக் கொடுத்த தெலுங்கு துபாஷ்கள் போல கேரளீயர்ஏலம், மிளகு, பட்டைகளோடு வணிகத்திற்காக வந்திருக்கின்றனர். வணிகத்திற்காக வந்த பொருட்களை நூற்றுக்கணக்கான மாட்டுவண்டிகள் சுமந்து வந்ததாகத் தெரிகிறது. பாதுகாப்புப் படையினர் குதிரைகளில்! மாட்டு வண்டிகள் உள்நாட்டுக்குச் சரக்குப் போக்குவரத்தை ஓரளவு நிறைவு செய்தன. கட்டுமரம், படகு, தோணி, பாய்மரக்கப்பல்களைக் கண்டுபிடித்த மனிதன்மிக நீண்டகாலத்திற்குப் பிறகே சக்கரத்தைக் கண்டுபிடித்து வண்டிகளை உருவாக்கினான். அக்காலகட்டத்தில் தமிழக - கேரள எல்லைகளைக் கடக்க கணவாய்களே உதவின. வடக்கில் பாலக்காட்டிலிருந்து தெற்கே களியக்காவிளை வரையுள்ள வழித்தடங்கள் இரு மொழி பேசுவோரையும் இணைத்தன. ஒரு தலைமுறைக்கு முன்பு வரை தூத்துக்குடி கரிப்பு மணிகள் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டே மலையாள மக்களின் நாவுக்கு ருசி சேர்த்தன. செங்கோட்டை போன்ற ஊர்களிலிருந்து புறப்பட்ட வண்டிகள் கேரள ஊர்களில் உள்ள மக்களின் உணவுக்கு சுவை கூட்டின. பண்டைய இலக்கியங்கள் உப்பு வணிகரை உமணர் எனக் குறிப்பிடுகின்றன. தொடக்க காலத்தில் ஒரு படி உப்புக்கு பலபடி நெல் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். கேரளாவுக்கு உப்பைக் கொண்டு சென்றது போல்- அவர்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களைக் கொண்டு சென்றது போல் தமிழர்களுக்குத் தேவையான பொருட்களை - ஆங்கிலேயரின் ஏற்றுமதிக்கான வாசனைப் பொருட்களை கேரளீயர் தமிழகத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். தெலுங்கு துபாஷ்கள் ஆங்கிலேயருக்கு வணிகத்தில் உதவியது போல் கேரளீயர்கள் வணிகர்களாய் வந்து உதவியிருக்கிறார்கள். யூகத்தில்தான் கேரளீயர்களின் வருகை இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ அவர்கள் மதரஸாபட்டினத்தில் வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வணிகர்களாய் வந்த அவர்களில் முஸ்லிம்களும் இருந்துள்ளனர். பிற்காலத்தில் தங்கசாலை, கிருஷ்ணாம்பேட்டை போன்ற பகுதிகளில் அமைந்த மரக்கடைகளில் பெரும்பாலான முஸ்லிம் வணிகர்கள் இருந்துள்ளனர். அதேபோல் ஆங்காங்கு நடைபெற்ற அசைவ ஹோட்டல்களின் முதலாளிகளாகவும் அவர்கள் திகழ்ந்துள்ளனர். மரக்கடைகள், ஹோட்டல்கள் மட்டுமின்றி அவர்கள் பல்வேறு தொழில்களையும் செய்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்(1904) மதரஸா பட்டினத்தின் பெரிய ஆளுமையாய்த் திகழ்ந்த டாக்டர்டி.எம். நாயர் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமின்றி முஸ்லிம்களும் மதிக்கத்தக்கவராய்த் திகழ்ந்தார். நீதிக்கட்சியின் பிதாமகனாகிய தாரவாத் மாதவன் நாயர் பாலக்காட்டுக்காரராயிருந்தாலும் தந்தை பெரியார் அவர்களுக்கே முன்னோடி. 1914-ல் திருவல்லிக்கேணியில் நடந்த பிராமணரல்லாத பட்டதாரிகளுக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்டி.எம். நாயர் பேசி முடித்த பின் “Awake, Arise or be for Ever Fallen” - "விழிமின், எழுமின்! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்தே கிடப்பீர்’’ எனக் கூறியது இன்றும் நமக்கு ஒரு பாடமாகும். இதை இங்கே குறிப்பிடக்காரணம் கேரளீயருக்கும் மதராசுக்குமுள்ள தொடர்பைக் கூறுவதற்கே! அதே சமயம் டாக்டர் நாயர், சர்முகம்மது உஸ்மான் போன்றோரோடு கொண்டிருந்த நெருக்கத்தை நினைவு கூர்வதற்கும்தான். சமுதாயத்தில் சிலர் முன்னோடிகளாக இருப்பார்கள். அத்தகைய சமுதாய முன்னோடிகளைப் பெற்றவர்கள் மலபார் முஸ்லிம்கள். அவர்கள் மதரஸாபட்டினதில் சில இடங்களில் அமைத்த மலபார் முஸ்லிம் அசோசியேசனின் பணிகள் முஸ்லிம்களை இணைப்பவை; வேலை தேடிவரும் கேரளீயருக்கு பல வகைகளில் உதவுபவை. 1960-களில் நான் பார்த்த வண்ணாரப்பேட்டை எம்எம்ஏ (MALABAR MUSLIM ASSOCIATION-MMA) இல்லம் கவனத்தில் உள்ளது. அதேபோல் 1970-களில் எனக்கு அறிமுகமான எழும்பூர் கென்னட்லேன் எம்எம்ஏ-வும் பல செய்திகளைத் தந்தது. பள்ளிவாசலும் தங்கும் அறைகளும் பயணிகளுக்கும் புதிதாய் வாழ வந்தோருக்கும் பயன் தருபவை. எம்எம்ஏ-ஐ பார்த்துத்தான் தென்தமிழகத்தின் பல்வேறு ஊர் முஸ்லிம்கள் மதராஸில் சங்கங்கள் அமைத்துள்ளனர். […] சுவையான நிகழ்வுகள் அமீர் மகால் அமர்க்களம்! கி.பி.1779அப்போதைய ஆற்காட்டு நவாப்அமீர்உல்உமாரா மீது ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. வாங்கிய கடனை கொடுக்காததால் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் நவாபை விசாரணைக்கு அழைத்தது. நவாப் நீதிமன்றம் செல்வதைத் தவிர்த்ததால் ஒரு பக்கமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அமீர் மகால் பொது ஏலத்தில் விடப்பட்டது. அந்த வீட்டு வளாகத்தை கேப்டன் நந்தேனியல் பேக்கன் என்பவர் ஏலத்தில் எடுத்தார். அவரால் அமீர்மகாலின் கதவைக்கூட தொட முடியவில்லை. ஏலத்தில் கட்டிய பணமும் மாளிகை ஆசையும் எட்டி உதைக்க கேப்டன் பேக்கன் நீதிமன்றத்திடம் முறையிட்டார். நீதிமன்றம் ஷெரீஃபுக்கு கட்டளையிட்டது. அக்கால கட்டத்தில் ஷெரீஃப்பதவி வெறும் கெளரவப்பதவியல்ல; நீதிமன்ற ஆணைகளையும் நிறைவேற்ற வேண்டிய அதிகாரமுள்ள பதவி. அப்போதைய ஷெரீஃப்வில்லியம்ஜேக்ஸன். 1779, செப்டம்பர் 13ஆம் நாள் ஷெரீஃப், துணை ஷெரீஃப்ஜான்ஃப்பேர்னி, அமினாக்கள் தாமஸ் கிளிஃபோர்ட், தாமஸ் ஈவ்ஸ், வீட்டை ஏலம் எடுத்திருந்த நந்தேனியல்பேக்கன் ஆகியோரோடு அமீர் மகாலுக்குச் சென்றார். இவர்களுடன் ஷெரீஃபின் மொழி பெயர்ப்பாளரும் பேக்கனின் மொழி பெயர்ப்பாளரும் சென்றிருந்தனர். உதவிக்கு நாற்பது சிப்பாய்கள்! ஷெரீஃப்தன் பரிவாரங்கள் புடைசூழ அமீர் மகால்வாயிலில் பல்லக்கிலிருந்து இறங்கினார். அழகான வெள்ளாடை, கையில் ஷெரீஃப்புக்குரிய கோல், இடையில் உடைவாளுடன் இறங்கிய ஷெரீஃபை திருவட்டீஸ்வரன் பேட்டையே வேடிக்கை பார்த்தது. பல்லக்கிலிருந்து இறங்கி பரிவாரங்களுடன் அமீர்மகால்வாசலுக்கு வந்த ஷெரீஃபை வாசலில்நின்ற நவாபின் சிப்பாய்கள் தடுத்தனர். அவர்களிலிருந்த சுபேதார்“நீங்கள்யார்?’’ எனக்கேட்க ஷெரீஃப்வந்த காரணத்தைச் சொன்னார்.”உள்ளே செல்ல நவாபின் அனுமதி வேண்டும். அந்த அனுமதியைப் பெறாத உங்களை…" என சுபேதார் கூறி முடிக்கும் முன்பே ஷெரீஃப்பல முறை "இது நீதிமன்ற ஆணை, நீதியை மதிக்க வேண்டும்’’ எனக்கூறி குரலை உயர்த்தினார். "உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டோம். எங்கள் உயிர்கள் பறிக்கப்பட்டால் ஒருவேளை உங்கள் எண்ணம் நிறவேறுமோ?’’ என்ற சுபேதார் ஷெரீஃபின்மார்பில்கை வைத்துத் தள்ளினார். ஷெரீஃப் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். மொழி பெயர்ப்பாளர்களும் ஷெரீஃப்சொன்னதையே உருதுவிலும் தமிழிலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நவாபின் அலுவலர்கள் அலுங்குப்பிடியாக நின்றனர், உடும்புப் பிடியாகவில்லை. ஷெரீஃப்தம் பரிவாரங்களுடன் அமீர் மகாலுக்குள் நுழைய ஆயத்தமானார்; ஆணைகளிட்டார். அப்போது அமீர் மகாலுக்கு உள்ளிருந்து வந்த சுபேதார்களின் மேலதிகாரியான ஹவில்தார் தம் ஆட்களிடம் ஏதோ சொன்னார். ஹவில்தார் சொன்னதைக் கேட்ட நவாபின் ஆட்கள் வாள், துப்பாக்கிகளுடன் ஷெரீஃபின் முற்றுகையைச் சின்னா பின்னமாக்கினர். ஷெரீஃப் ஓட்டம் பிடித்தார். ஓடும் போது அவருடைய வெள்ளைக் கோல் தொலைந்த இடம் தெரியவில்லை. துணை ஷெரீஃப், வீட்டை ஏலம் எடுத்த பேக்கன், மொழி பெயர்ப்பாளர்கள், பல்லக்குத்தூக்கிகள், நாற்பது சிப்பாய்கள் எவரையும் காணோம். நவாபின் படை அதிகரித்திருந்ததே ஷெரீஃபின் படை பின்வாங்க காரணம்! ஒரு கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்த ஷெரீஃபை நவாபின் அலுவலர்கள் வெளியே பிடித்திழுத்துக் கொண்டு நையப்புடைத்தனர். அவருடைய உடை வாளையும் தொப்பியையும் பறித்துக்கொண்டனர். குதிரை போல் வந்து கழுதை போல் ஆக்கப்பட்ட ஷெரீஃபை நவாபின் ஆட்கள் பிடித்து அமீர் மகாலின் கவுனியைக் கடக்கவைத்தனர். பெருங்கதவைத் தாண்டிய ஷெரீஃபை நவாபின் ஹவில்தார் வெளியே அனுப்பிவிட்டு வரும்படிச் சொன்னார். பறிக்கப்பட்ட உடை வாளும் தொப்பியும் ஷெரீஃபிடம்சேர அவர் பல்லக்கு நோக்கிச் செலுத்தப்பட்டார். அப்போது எங்கிருந்தோ வந்த பல்லக்குத்தூக்கிகள் ஷொஃபை பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் சென்றனர். கஞ்சி போட்ட ஆடையோடு வந்த ஷெரீஃப்கசங்கிய ஆடையோடு சென்றார். பரபரப்பாக பேசப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேய ஆட்சிக்கு தலைகுனிவுதான். அதே சமயம் இந்நிகழ்வு நவாபுக்கு தலைநிமிர்வா என்றால் அதுவும் இல்லை. மேலே சொல்லப்பட்ட அமீர் மகால் வாசல் படிச்சண்டையைச் சொல்லும் வரலாறு நவாப்கடனிலிருந்து மீண்ட வரலாற்றைச் சொல்லவில்லை. நீதிமன்ற விசாரணையிலிருந்து தனக்கு விலக்களிக்க வேண்டுமாறு நவாப் கவர்னரிடம் முறையீடு செய்தார் என்று மட்டுமே சங்கதி முடிக்கப்பட்டுள்ளது. நவாப்குடும்பத்தோடு பின்னிப்பிணைந்த "பின்னிக்குடும்பம்! கி.பி.1803-இல் தொடங்கப்பட்ட பின்னி அன்கோவின் பெயர் இன்று வரை மறையவில்லை. மதரஸாபட்டினத்திற்கும் பின்னி கம்பெனிக்குமுள்ள தொடர்புகள் இருநூறு ஆண்டுகள் என்றால் அவர்களின் குடும்பத்தாருக்குள்ள தொடர்புகள் இருநூற்றைம்பது ஆண்டுகள். 1769-இல் சார்லஸ் பின்னி என்பார் நம் பட்டினத்திற்கு வந்தார். அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் லண்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் பத்தாண்டுகள் கழித்து 1778-இல் அவர் கவர்னர் பதவியேற்க தாமஸ் ரம்போல்ட் என்பவர் மதராஸ் வந்தபோது செயலராக உடன்வந்துவிட்டார். மதராஸ் வந்த சார்லஸ் பின்னிக்கு ஆற்காட்டு நவாபின் செயலாளராகப்பணி செய்யும் வாய்ப்பேற்பட்டது. கவர்னர் ரம்போல்ட் கோட்டையில்; சார்லஸ் பின்னி ஆற்காட்டாரின் அரண்மனையில். 1779 முதல் 1782 வரை சார்லஸ் பின்னி ஆற்காட்டு நவாபின் செயலாளராகப் பணியாற்றினார்.மதராஸ்வர்த்தக சபையின் நூற்றாண்டு விழாக் கையேட்டில் பின்னி குடும்பத்தைச் சேர்ந்த இரு திருமணங்களைப் பற்றிய குறிப்புள்ளது. முதல் திருமணம் தாமஸ் பின்னிக்கும் எலிசபத்ரொஸாரியோவுக்கும் நடந்துள்ளது. இரண்டாம் திருமணம் கேத்தரின் பின்னிக்கும் ஜான்மார்ட்டினுக்கும் நடந்தேறியுள்ளது. இவர்களுக்கும் சார்லஸ்பி ன்னிக்குமுள்ள தொடர்பு விளங்கவில்லை. என்றாலும் தனித்துவம் வாய்ந்தது பின்னிக் குடும்பம் என்பது தெளிவாகிறது. 1779-ல் ஜார்ஜ் பின்னி என்பா ர்ஒரிசாவின் கஞ்சம்பகுதியில் அறுவைச் சிகிச்சை நிபுணராக விளங்கியுள்ளார். அக்காலத்தில் பின்னி குடும்பத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் பின்னி நவாபின் கப்பல் போக்குவரத்தில் காசாளராக இருந்துள்ளார். 1797-ல் கேப்டன் ஜான்பின்னி நவாபின் மருத்துவராக அரண்மனையில் வாழ்ந்துள்ளார். 1801-இல் நவாப் அமீர்உல்உமாராவின் மரணத்திற்குப்பின் டாக்டர் பின்னி கிழக்கிந்தியக் கம்பெனியின் மணியமாகப் பதவியேற்றார். அவர் 1820 வரை வாழ்ந்த தெரு இன்றும் அவர் பெயராலேயே பின்னி தெரு என அழைக்கப்படுகிறது. கப்பல்படை கேப்டனாகவும் டாக்டராகவும் வாழ்ந்த ஜான் பின்னிக்கு தாமஸ் பின்னி என ஒரு இளவல் இருந்தார். கல்கத்தாவில் வாழ்ந்த தாமசும் ஒரு கப்பல்டை கேப்டனே. பின்னி குடும்பத்தார் 1803-ல் ஒரு பொது வணிக நிறுவனத்தைத் தொடங்கியிருந்தனர். அதன் பெயர் பின்னி அன்டென்னிஸன்க ம்பெனி. தாமஸ்பின்னி அதே பெயரில் கல்கத்தாவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். 1814-ல் அவற்றின் பெயர் பின்னி அன்கோவாக மாறியது. 1803-இல் கோட்டைக்குள்ளிலிருந்த பின்னி அன்கோ 1812-இல் அரண்மனைக்காரத் தெருவுக்கு வந்து செயல்படத்தொடங்கியது. பொதுவான வணிகங்களைச்செய்த கம்பெனி மதராசுக்கும் கல்கத்தாவுக்கும் கப்பல்களை விட்டது. அவர்கள் முகவர்களாய் இருந்த இரு கப்பல்களின் உரிமையாளர் நவாப் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தொடக்கத்திலிருந்தே பின்னி குடும்பத்தார் நவாப்களோடு நல்லுறவிலேயே இருந்தனர். அவர்களின் கப்பல்களின் பெயர்கள்: சக்சஸ்கேலி, சர்ப்ரைஸ்கேலி. பின்னி கம்பெனி பொது வணிகத்தோடு கப்பல்போக்கு வரத்தையும் நடத்தியது. பல வணிக நிறுவனங்களுக்கு முகவராகவும் செயல்பட்ட அது 1877-ல்பக்கிங்ஹாம்மில்லையும் 1882-ல் கர்னாடிக்மில்லையும் தொடங்கியது. பி அன்ட்சி மில்கள்பின்னர்பின்னி அன்கோ கீழ் இணைக்கப்பட்டது. உலகையே பிரமிக்க வைத்த பின்னியின்சாய ஏற்றுதல் நிலையம்(Dye House) அனைத்து வசதிகளும் நிறைந்தது. கர்நாடகத்தில் காப்பி எஸ்டேட்களுடன் பெங்களூர் காட்டன் அன்ட்சில்க்மில்லையும் நடத்திய நிறுவனம் இன்று காணாமல்போய் விட்டாலும் அதன் பெயர் என்றும் மறைய வாய்ப்பே இல்லை. நீலன்சிலை உடைப்புப்போர்! 1857-ல்நடந்த ஆங்கிலேய எதிர்ப்புப்போரை முதல் விடுதலைப் போர் என்பர் நம்மவர். சிப்பாய்க் கலகம் என்பர் அயலவர். அப்போர் வடக்கே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது அதை அடக்க மதராஸ் ராஜதானியிலிருந்து அனுப்பப்பட்ட ராணுவத்தளபதி நீல் எனப்படும் நீலன். கான்பூர் சென்ற நீலன் அங்கு நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டியை விட கொடுமையாக நடந்து கொண்டான். கான்பூரிலிருந்து லக்னோ வரை நின்ற சாலையோர மரங்களையெல்லாம் தூக்கு மரங்களாக்கினான். மரணித்தவர்களை யெல்லாம் குப்பை மேடாக்கி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினான். இந்திய வரலாற்றில் ரத்தக்கவிச்சியடிக்க வைத்தான். வன்முறையாளனை வன்முறையே வதைக்கும் என்பதைத் தெரியாது கொக்கரித்து நின்றான். ஆயிரம் உயிர்களை கழுவேற்றிய அவனை ஓருயிர் உயிரற்ற பிணமாக்கியது. மதராஸில் குடித்த தண்ணீர் லக்னோவில் செந்நீராய் வடிந்தது. இலண்டனிலிருந்து வந்து மதராஸில் கோலோச்சி லக்னோவில் உயிரைவிட்ட ’தியாகி’க்கு ஆங்கிலேய அரசு பட்டினத்தின் நடுவில் சிலையெடுத்தது. இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிலையாக நிற்கும் இடத்தில் அன்று கொடுங்கோலன் நீலனுக்கு செப்புச்சிலையெடுத்தது. சிலை வைத்த நாளிலிருந்து முணுமுணுப்பு. சிலையை அகற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. முணுமுணுப்பும் எதிர்பார்ப்பும் நாடக மேடைகளில் பாடல்களாக ஒலித்தன. நானா சாகிப், தாந்தியேதோபே, லட்சுமிபாய் பற்றிப் பாடியவர்கள் ஜெனரல் நீலனைப் பற்றி வசைமாறி பொழிந்தனர். அவனின் சிலையை அகற்ற தேச பக்தர்களைத்தூண்டினர். 1927- ஆகஸ்டு, 11-ல் நீலன்சிலை தகர்ப்புப் போராட்டம் நா. சோமயாஜுலு தலைமையில் நடந்தது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து தொண்டர்கள் வந்தனர். ஏணியொன்றை சிலையின் பீடத்தில் சாத்தியபின் இராமநாத புரத்தை சேர்ந்த முகம்மது சாலியா எனும் இளைஞர் உளி, சுத்தியலுடன் ஏறி சிலையைத் தகர்க்க ஆரம்பித்தார். சுப்பராயலு என்பார் சம்மட்டியுடன் ஏறி சாலியாவுக்கு உதவினார். கனமான செப்புச் சிலையாதலால் சிதைந்ததே தவிர சாயவில்லை. சிலையைச் சாய்க்கும் முன்வந்த ஆங்கிலேயப் படையால் சாலியா, சுப்பராயலோடு மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். மதராஸ்பட்டின அப்துல்அஜீஸ், அப்துல்லத்தீப், இராமச்சந்திரபுரம் காதர்மஸ் தான், பண்ருட்டி முகம்மது, இராமநாதபுரம் சாலியா, உசேன் என முஸ்லிம்கள் பங்கேற்ற சிலை தகர்ப்பு வழக்கில் ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு பற்றிய விவரங்களை காந்திஜி தம்முடைய “யங் இந்தியா” பத்திரிகையில் ஒரு கட்டுரையாக எழுதினார். முகம்மது சாலியாவையும் சுப்பராயலுவையும் தேசபிதா அக்கட்டுரையில் பாராட்டி எழுதியிருந்தார். 1927-ல் தகர்க்கப்பட்டும் 1937 வரை மதராஸ்பட்டின மக்களைப் பார்த்துப் பயந்து கொண்டு நின்ற சிலை ராஜாஜி மாகாணப் பிரதமரான பின் அகற்றப்பட்டது. அது அருங்காட்சியகத்தில் முக்காடு போட்டு படுத்துக்கிடக்கிறது. [சித்திக் ஷராய் சென்னை சென்ரல் எதிரில் சையதுகான் பேட்டை] சில இடங்கள்! பல செய்திகள்! கி.பி.1730-ல் ஆற்காடு நவாபாய் இருந்த சாதத்துல்லாகான் தன் பிரதிநிதியாய் மதராஸில் இருந்த சையதுகான் என்பாருக்கு சாந்தோமுக்கு தென்மேற்கில் அடையாறு ஆற்றங்கரையில் மிகப்பெரும் நிலப்பரப்பை அன்பளிப்பாக அளித்தார். இன்றைய சைதாப்பேட்டையிலிருந்து கோட்டூர்புரம் வரை அந்த நிலப்பரப்பு மேற்கு கிழக்காக நீண்டிருந்தது. சையதுகான் தமக்களித்த நிலத்தை நான்கு பாகமாகப் பிரித்தார். ஒரு பாகத்தை தமக்காக வைத்துக் கொண்டு மற்ற மூன்று பாகங்களை முறையே நெசவாளர்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். நிலத்தைப் பெற்றவர்கள் தம்நிலங்களை வளமாக்கினர். காலப்போக்கில் சையதுகானின் பேட்டை சைதாப்பேட்டையானது. பேட்டையின் மேற்கில் ஒரு பள்ளிவாசல்( சாதத்துல்லாகான் மசூதி) கட்டப்பட்டது. பள்ளிவாசலைச் சுற்றியும் முஸ்லிம்களின் குடியேற்றமிருந்தது. இன்றைய நந்தனமும் அண்ணா சாலையின் கிழக்குப் பகுதியும் நவாப் கார்டன் என அழைக்கப்பட்டது. நவாப் கார்டனுக்குக்கு கிழக்கில் கோட்டூர்புரத்தில் நவாபின் ஓய்வு இல்லம் இருந்தது. அரண்மனை போலிருந்த ஓய்வில்லத்தில் தான்ஆற்காடு நவாப் மதராஸ் வந்த போது தங்கியிருக்கிறார். அந்த இடத்தில் தான் இன்று செட்டிநாட்டரசருக்கு சொந்தமான ‘அடையாறு ஹவுஸ்’ இருக்கிறது. இன்றும் அப்பகுதி ‘நவாப் கார்டன்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மகபூப்ஷாகான் சாவடி எனும் மாஸ்கான்சாவடி மண்ணடி மேற்கு முனையைக் கடந்து பிராட்வேயைத் தொட்டுத் தொடங்கும் பகுதி மாஸ்கான்சாவடி, இப்பகுதியை இப்போது பிரித்துச் செல்லும் தெரு பி.வி.அய்யர் தெரு எனும் பாரிஸ் வெங்கடாசலம் அய்யர் தெரு. பாரிஸ் வெங்கடாசலம் என்பார் பாரிஸ் சென்று வந்தவராய் இருக்கலாம். அவர் தாயகம் திரும்பிய பின் ஆங்கிலேயரின் துபாஷாக இருந்திருக்கலாம். பிராட்வே பகுதியிலுள்ள சில தெருக்களே ஆங்கிலேயரின் பெயருடையவை. பல தெருக்கள் ஆங்கிலேயரோடு உள்ளூர் வணிகம் செய்தவர்களாகவோ தரகு செய்தவர்களாகவோ இருந்த இந்தியர்களின் பெயர்கள். தரகர்பி.வி. அய்யரின் பெயரைக் கொண்ட தெருவை மையமாகக் கொண்ட பகுதிக்கு மாஸ்கான்சாவடி எனப் பெயர் வரக்காரணம் என்ன? ஒளரங்கசீபின் புதல்வர் முகம்மத்ஷா காலத்தில் உதவி அமைச்சராக இருந்த அன்வர்தீன் பின்னர் உதவி நிஜாமாகி ஹைதராபாத் வந்தார். அப்போது ஆற்காடு நவாபாய் இருந்த காகா அப்துல்லா மரணிக்க அன்வர்தீன் ஆற்காட்டுக்கு நவாபாக நியமிக்கப்பட்டார். அன்வர்தீன்கானை எதிர்த்து சந்தா சாகிப் 1749 ஜூலை 21-இல் ஆம்பூரில் போர்க்களம் கண்டு இறந்தார். அதன்பின் மூத்த புதல்வர் வாலாஜா முகம்மது அலீ நவாப்ஆனார். நவாப் வாலாஜாவின் மஹ்பூப்ஷாகான் சாந்தோமில் நடந்த மோதலில் மரணிக்க அவர் நினைவாக மஹ்பூப்ஷாகான் சாவடியும் மெளலா பள்ளிவாசலும் அமைக்கப்பட்டதாம். ஆயிரம்விளக்கு அப்பாஸி ஆஸர்கானா ஆயிரம் விளக்குப் பள்ளிவாசல் மதரஸாபட்டினத்தில் உள்ள ஒரே ஷியா பள்ளிவாசல். முஸ்லிம்கள் கர்பலா யுத்தத்திற்குப்பின் ஆட்சியதிகார போட்டியில் சன்னி - ஷியா என பிளவுபட்டனர். அவர்களில் சன்னிகள் மொகலாய மன்னர்கள். ஷியாக்கள் பாமினி சுல்தான்கள். பாமினி சுல்தான்கள் அகமத்நகர், பிதார், பிரார், பீஜப்பூர், கோல்கொண்டா என ஆண்டபோது விஜயநகரை வென்றனர். விஜயநகரின் வீழ்ச்சிக்குப் பின் கோல்கொண்டாவை முதலில் ஆண்டவர் சுல்தான் குலிகுப்துஷா. அவருக்குப்பின் ஜாம்ஸித், இபுறாகீம், முகம்மது குலி, சுல்தான் முகம்மது என நால்வர்ஆண்டனர். ஆறாவதாக சுல்தான் அப்துல்லா குதுப்ஷா ஆட்சிக் கட்டில் ஏறினார். இவர் காலத்தில அடவு கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டது. இவருடைய ஆட்சிக்காலம் 1626 முதல் 1672. இக்கால கட்டத்தில் தான் 1647-ல் மதரஸாபட்டினத்திற்கு கோல்கொண்டா குதிரை வீரர்கள் வந்தார்கள். உருது பேசுபவர்கள் வந்தார்கள். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சாந்தோம் எனக்கு விந்தவர்கள் ஆயிரம் விளக்கு வரை ஆயிரக்கணக்கில் குடியேறி கோலோச்சினார்கள். அக்காலகட்டத்தில் கட்டப்பட்டது தான் அப்பாஸி ஆஸர்கானா பள்ளிவாசல். அப்போது அங்கிருந்தவர்கள் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி முஹர்ரம் பண்டிகையைக் கொண்டாட அப்பகுதி ஆயிரம் விளக்கு எனப் பெயர்பெற்றது. ஆயிரம் விளக்குப் பள்ளிவாசல் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க ஆங்கிலேயர் அதை ஆற்காட்டு நவாப் முகம்மதலீயின் இளைய மகன் உம்தத்துல் உமாரா 18ஆம் நூற்றாண்டில் கட்டியதாக சொல்கிறார்கள். சுல்தான் அப்துல்லா குதுப்ஷா காலத்தில்(1647) மதரஸாபட்டினம் வந்த கோல்கொண்டாகாரர்கள் கடைசி சுல்தான் அப்துல் ஹஸன்தானாஷா காலம் (1672-1687) வரை இங்கு ஆட்சியதிகாரத்தில் இருந்துள்ளார்கள். 1687-ல் மொகலாயர் வசம் கோல்கொண்டா சென்றது. அதன்பின் ஆற்காட்டு நவாபாக ஜால்பிகார், தாவூத்கான் என ஆட்சிபுரிந்து வர மதரஸாபட்டினம் ஷியாக்களிடம் இருந்து சன்னிகள் வசம் சேர்ந்தது. குணங்குடி மஸ்தான் அடக்கத்தலம் மதரஸாபட்டினத்து ராயபுரம் ராபிட்சன் பூங்கா மிகப்பிரபலமானது. அதன் எதிரில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனைக்குப்பின் மணிக்கார் சவுட்ரி (எம்சி) ரோடுக்குக் கிழக்கே உள்ளது மஸ்தான் தோட்டம். பெயருக்குத் தான் தோட்டம், ஆனால் அங்கு நூற்றுக்கணக்கான விளிம்பு நிலை மாந்தர்களின் சிறுசிறு இல்லங்கள் உள்ளன. அவற்றின் நடுவேதான் குணங்குடி மஸ்தானின் அடக்கத்தலம் உள்ளது. மஸ்தானின் அடக்கத்தலம் அங்கு இருப்பதாலேயே அப்பகுதிக்குப் பெயர் மஸ்தான் தோட்டம். கி.பி.1790 அளவில் இராமநாதபுரம் மாவட்டம் குணங்குடி எனும் சிற்றூரில் பிறந்த குணங்குடி மஸ்தானின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதிர் என்பதாகும். இளமையில் கீழக்கரை மதரஸாவில் பயின்றவர் துறவறம் பூண்டு காடு மலைகளில் தவமிருந்து இறுதியில் மதரஸாபட்டினம் வந்து வாழ்ந்தார். ஏழை எளிய மக்களோடு சேர்ந்தார். 1837 அளவில் ராயபுரத்தில் மறைந்தார். அவருடைய ஞானப்பாடல்கள் மிகப்புகழ் பெற்றவை. ‘வாழ்க்கை நிலையானது அல்ல’ எனப்பாடிய குணங்குடியாரின் பாடல்கள் மக்கள் வாய்மொழிப் பாடலானது. பாமர மக்களின் மரணங்களின் போது பாடும் பாடலானது. அண்மையில்‘கானா பாடல்கள்" பற்றி ஆய்வு செய்தவர்கள் ’குணங்குடியாரின்பாடல்கள் தான் கானா பாடலின் பிறப்புக்கு மூலமாகும்’ என நிறுவியுள்ளனர். குணங்குடியாரின் சமாதிக்குப் பக்கத்தில் புலவர் நாயகம் சமாதி உள்ளது. இளமையில் குணங்குடியாரோடு மதரஸாவில் பயின்ற புலவர் நாயகம் கல்வி கற்றபின் வணிகம் செய்து பின்னர் ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு குணங்குடியாரோடு சேர்ந்து வாழ்ந்து மறைந்தவர். மயிலாப்பூர்கச்சேரி சாலை மதரஸபாபட்டினத்தில் ஒரே பெயரைக் கொண்ட பல சாலைகள் இருக்கலாம். பட்டினத்தில் ஒரே பெயரைக் கொண்ட சாலை கச்சேரி சாலை. கச்சேரி செய்பவர்களின் ஊராகிப் போன மயிலாப்பூரில் கோல்கொண்டா சுல்தானின் ஆட்சியின் போது கோர்ட்கச்சேரிக்கான பகுதியே இன்றைய கச்சேரித் தெரு. லஸ்ஸிலிருந்து கிழக்குக் கடற்கரையைத் தொடும் நீண்ட சாலையான கச்சேரி சாலையில் அன்று காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை போன்றவற்றோடு ஆட்சியதிகார அலுவலகங்களும் இருந்த பகுதியே கச்சேரி சாலை. கச்சேரி சாலையில் ஒரு பள்ளிவாசல், வடபுறம் இரு பள்ளி வாசல்கள், தெற்கில் இரு பள்ளிவாசல்கள். ஐந்து பள்ளி வாசல்களைச் சுற்றிலும் முஸ்லிம் குடியிருப்புகள் இருந்த விரிந்த பகுதி முஸ்லிம்களின் பட்டினமாகவே விளங்கியுள்ளது. கோல்கொண்டா காலத்திற்குப்பின் அமைந்த ஆற்காட்டு நவாப் ஆட்சியில் கபாலீஸ்வரர் கோவிலுக்காக மயிலாப்பூர் தெப்பக்குளத்தைக் கட்டிக்கொடுத்ததும் அதில் முஹர்ரம் பண்டிகையை முடிக்க வாய்ப்புப் பெறப்பட்டிருப்பதும் இரு சமூக ஒற்றுமையை உலகுக்குச் சொல்லும் உன்னத ஏற்பாடாகும். சலவையாளர் காலனியும் கோதாமேடும் சைதாப்பேட்டையில் அடையாறு தெற்காகவும் மறை மலையடிகள் பாலம் கிழக்காகவும் ரயில் பாதைகள் மேற்காகவும் அப்துல்ரசாக் தெரு வடக்காகவும் உள்ள ஒரு தீபகற்பப்பகுதி மேலே சொல்லப்பட்ட காலனியும் மேடும். சலவையாளர்களின் குடியிருப்புப் பகுதி தனியாக உள்ளது. அடையாறு குளிக்கும் ஆறாக இருந்தபோது நூற்றுக்கணக்கான சலவையாளர் குடும்பங்கள் குடியேறி, இன்று ஆறு சாக்கடையான பின்பும் தொழிலை மாற்றி வாழ்கின்றனர், சிலர் மட்டும் பழைய தொழிலைச் செய்து வருகின்றனர். சலவையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு வகை விளிம்பு நிலை மனிதர்களும் வாழும்பகுதி கோதாமேடு என அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான குடிசைமாற்று வாரிய வீடுகளும்நூற்றுக்கணக்கான தனித்தனி வீடுகளும் இங்கு உள்ளன. ஒரு காலத்தில் இங்கு முஸ்லிம் மந்திரவாதிகளும் பாம்பாட்டிகளும் மாயாஜால வித்தைகள் செய்வோரும் வாழ்ந்து இன்று தொழிலை மாற்றிக் கொண்டு வாழ்கின்றனர். பல்வேறு தொழில் செய்வோர் இங்கு வாழ்ந்தாலும் முக்கியமாக மீன் வியாபாரிகள் இங்கு வாழ்கின்றனர். கட்டிடத் தொழிலாளர்களும் கணிசமாக வாழும் இங்கு இரு பள்ளிவாசல்கள் உள்ளன. அவை: மஸ்ஜிதே நூர், மஸ்ஜிதே ஹுதா. கோதாமேடு என ஒரு பகுதி பெயர் பெறக் காரணம். இங்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் குஸ்திகள் நடைபெறும் மேட்டுப்பகுதி இருந்ததாகும். மதராஸின் மல்யுத்தம் செய்வோர் இரு குழுவினராக இருந்தனர். ஒரு குழுவினர் ‘சார்பட்டா’ பரம்பரை எனவும் மற்றொரு குழுவினர் ‘இடியப்ப நாயக்கர்’ பரம்பரை எனவும் குறிப்பிடப்பட்டனர். ஒரு வகையறா இன்னொரு வகையறாவோடு சண்டையிடுவர்; ஒரே பெயர் கொண்ட வகையறா தம்வகையறா வோடு சண்டையிட மாட்டார்கள். சண்டைக்கலை தர்மம்! ‘பாக்ஸர்’ என அழைக்கப்பட்டவர்களின் பழைய பரம்பரை இன்று காணாமல் போய் விட்டது. ‘கராத்தே’ அந்த இடத்தைப்பிடித்துக்கொண்டது. சித்தீக்ஷராய் தங்குமிடம் வட ஆற்காடு மாவட்டம் கீழ்விஷாரத்தில் பிறந்து மதரஸா பட்டினத்தில் பெரும் தோல் வணிகராக விளங்கிய நவாப்சி. அப்துல்ஹக்கீம் கட்டிய தங்கும் விடுதி சித்தீக்ஷராய். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நவாபின் தந்தை சித்தீக்ஹுஸைன் பம்பாயிலிருந்து திரும்பிய போது சென்ட்ரல் ஸ்டேசன் எதிரிலுள்ள ராமசாமி முதலியார் விடுதியில் எழுதிப் போட்டிருந்த வாசகத்தைக் கண்டு துடிதுடித்தார். அவ்வாசகம் இதுதான்: நாய்களுக்கும் பாய்களுக்கும் இங்கு இடமில்லை. நவாபின் தந்தை நாயை விட இழிவாக முஸ்லிம்கள் நடத்தப்படுவதை நீக்க விடுதியொன்று வருங்காலத்தில் கட்டும்படி மகனை வேண்டிக்கொண்டார். அப்போது மகனுக்கு வயது 18. தோல் தொழிலில் உச்சநிலையை அடைந்த நவாப் தம்58-வது வயதில் 1921-ல்ராமசாமி விடுதிக்கு மேற்கிலிருந்த இடத்தை விலைக்கு வாங்கி சித்தீக்ஷராயைக் கட்டி ‘வக்பு’ செய்தார். இங்கு முஸ்லிம் பயணிகள் மூன்று நாள்கள் கட்டணமின்றித் தங்கிக்கொள்ளலாம். அதற்கு மேல் இரண்டு வாரங்கள் குறைந்த கட்டணத்தில் தங்கலாம். இங்குள்ள மாடியில் தொழுகைப் பள்ளியும் இருப்பது சிறப்புக்குரியது. நவாபின் கொடைத்திறத்துக்கு இணையாக எவரையும் கூற இயலாது. கோடம்பாக்கம் மசூதித் தெரு மதரஸாபட்டினத்தின் சினிமா ஸ்டூடியோக்கள் வடபழனி, விருகம்பாக்கம், சாலி கிராமம் என இருந்தாலும் அவை அனைத்தும் கோடம்பாக்கம் எனும் பெயருக்குள் அடக்கம்ஆகும். இன்று அவ்வுலகம் கோலிவுட் என அழைக்கப்படுகிறது. கோலிவுட்டின் பெரிய நடிகர்கள் நகரின் பல்வேறு இடங்களில் பங்களாக்களில் வசித்தாலும் முன்காலங்களில் துணை நடிகர்கள் வசித்த பகுதி கோடம்பாக்கம் மசூதித் தெரு. ஆற்காட்டு சாலையிலிருந்து ஒரு கிளையாய்ப் பிரியும் மசூதித் தெருவின் முனையில் பள்ளிவாசல் இருக்கிறது. இன்று பல்வேறு வித வீடுகளும் பல்வேறு வித மனிதர்களும் வாழ்ந்தாலும் அன்று பெரும்பாலான சிறிய வீடுகளிலும் குடிசைகளிலும் துணை நடிகர்- நடிகைகள் வாழ்ந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக மசூதித் தெரு இருந்தது. துணை நடிகர்களின் ஏஜெண்டுகளில் பலர் முஸ்லிம்களாக இருந்ததாலும் அவர்களின் மூலம் ஒண்டிக் கொள்ள இடம் கிடைத்ததாலும் மசூதித் தெரு அன்று மக்கள் திரளால் பிதுங்கிக் கிடந்தது. கதிரவன் போரூர் போய்ச் சேர்ந்து விட்டால் போதும் தெருவே கலககலப்பாகி விடும். ஏஜெண்டுகளைக் கண்டு அன்றாடச் சம்பளத்தை வாங்க துணை நடிகர் பட்டாளம் தெருவைத் தேன் கூடாக்கிவிடும். இன்று நடிகர்களுக்கு சங்கம் வந்து விட்டது. இன்றுள்ளவர்களுக்கு மசூதித் தெரு வரலாறு தெரியாது. இத்தெருவில் வளர்ந்து பெரும் நடிகர் ஆனவர்களும் உண்டு. கோடம்பாக்கம் ஆற்காட்டு நவாப்களின் போர்க் குதிரைகளின் லாயமாக இருந்துள்ளது. அக்பராபாத் என்பது ரயில்வே ஸ்டேசன் முன்னுள்ள பகுதி. சூளைமேடு - ஜக்கரியா காலனி சூளை என்ற சொல்லுக்கும் மதரஸாபட்டினத்திற்கும் பல தொடர்புகள் உள்ளன. செங்கற்சூளைகள் இருந்த பகுதிகள் அவை. இன்று அங்கெல்லாம் சூளைகள் இல்லாவிட்டாலும் பெயர் மட்டும் எஞ்சி நிற்கிறது. மதராஸின் குறுக்கும் நெடுக்குமாக பல நீர்ப்பாதைகள் உள்ளன. நகரைப் பற்றி அறியாத பலர் எல்லா நீர்ப்பாதைகளையும் கூவம் எனவே குறிப்பிடுகின்றனர். அமைந்தகரையிலிருந்து வந்து பச்சையப்பன் கல்லூரி வழியாகச் செல்லும் நீர்ப்பாதை நேப்பியர் பாலத்தைக் கடந்து கடலில் குளிக்கிறது. இதுவே கூவம் ஆறு ஆகும். இயற்கை ஆறு இது! செயற்கை ஆறு எது? அது காக்கிநாடாவிலிருந்து மதராஸ் வழியாக மரக்காணம் போய்ச் சேரும்பக்கிங்காம் கால்வாய், ஆங்கிலேயர்களால் தோண்டச் செய்யப்பட்ட செயற்கை நீர்ப்பாதை. இது மூலக்கொத்தளம் தாண்டி கூவத்தோடு கைகுலுக்கி திருவல்லிக்கேணியைக் கடந்து தெற்கே தவழ்ந்து செல்கிறது. தெற்கில் அடையாறை மணந்து பாலவாக்கம், நீலாங்கரை, பனையூர், கானத்தூர், முட்டுக்காடு வழியாக மாமல்லபுரத்தையும் கடந்து மரக்காணம் அடைகிறது. ஒரு காலத்தில் இக்கால்வாயில் படகுகள் மிதந்தன. இப்போது பழங்கதையாய்… பக்கிங்காம் கால்வாய், கூவம்ஆறு, அடையாறு தவிர மேலும்சில கால்வாய்கள் நகரில் தவழ்ந்த வரலாற்றை மறந்து கிடையாய்க் கிடக்கின்றன. இன்றைய சூளை அன்று செங்கற்சூளைகள் நிறைந்திருந்த காரணத்தால் பெயர் மாறாமல் இன்றும் சூளை என்ற பெயரோடு விளங்குகிறது. சூளைக்கு மேற்கில் பட்டாளம், பட்டாளத்திற்கு மேற்கில் உள்ளது ஓட்டேரி, இங்கு ஏரி இருந்திருக்கலாம். இன்று ஏரியில்லை, ஓட்டேரியின் மேற்கில்ஓட்டேரி நல்லா கால்வாய் ஓடாமல் ஓடுகிறது. இது ஓடிய காலத்தில் இங்கும் செங்கல் சூளைகள் நிறைந்திருந்த காரணத்தால் கால்வாயின் கிழக்குச்சாலை இன்றும் செங்கற்சூளை சாலையென அழைக்கப்படுகிறது. புரசைவாக்க வடக்கு முனையிலிருந்து வடக்கே செல்லும்’பிரிக்ளீன்ரோடு’தான்அது. சூளை, சூளைச்சாலையை அடுத்து சூளைமேடு நம்கவனத்திற்கு வரும். பச்சையப்பர் காலத்தில் கூவத்தில் நன்னீர் ஓடிக் கொண்டிருந்தபோது இன்றைய சூளைமேட்டில் செங்கற்சூளைகள் நிறைந்திருந்தன. எனவே தான் இன்று சூளைகள் இருந்த மேடு சூளைமேடு என அழைக்கப்படுகிறது. சூளைமேடு இருக்கும் மதராஸில் இன்று சூளைப்பள்ளம் என்று ஒரு பகுதி இருப்பது அண்மைக்கால வரலாறு. கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர் நகர்என உருவான போது கட்டிடத் தேவைக்காக சூளைகள் நெசப்பாக்கத்தின் தெற்கில் உருவாகின. அவை இருந்த பகுதி இன்று மேடாக ஆனபின்பும் சூளைப்பள்ளம் எனவே அழைக்கப்படுகிறது. சூளைமேட்டைப் பற்றி எழுத வந்தவன் சூளைகளைச் சுற்றிவிட்டு இப்போது தான் நுங்கம்பாக்கம் ரயிலடிக்கு வந்துள்ளேன். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனுக்கு மேற்கில் உள்ள பகுதியே சூளைமேடு. இங்குள்ள தெருக்களில் அப்துல்லா தெரு, வகாப்தெரு, பாஷா தெரு என முஸ்லிம்களின் பெயர்களில் சில தெருக்கள் உள்ளன. நீண்ட காலமாக இங்கு பள்ளிவாசல் இல்லை. அண்மையில்தான் இங்கு பள்ளிவாசல்கள் உருவாகியுள்ளன. சூளைமேடு நெடுஞ்சாலையின் தென்முனையில் உள்ள மார்க்கெட் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. அடுத்து தெற்கில் சுபேதார் தோட்டம், ஜக்கரியா காலனி என முஸ்லிம்களைத் தொடர்புபடுத்திய பெயர்களி ல்குடியிருப்புகள். ஜக்கரியா காலனியின் தெற்கில் புலியூர் பள்ளிவாசல்! தேனாம்பேட்டை எத்தீம்கானா ‘அஞ்சுமனே ஹிதாயத்தே இஸ்லாமி’ என அழைக்கப்படும் இஸ்லாமிய நிறுவனம் பள்ளிவாசலையும் மதரஸாவையும் அனாதை இல்லங்களையும் கொண்ட பரந்த வளாகம். 1890-ல் ஆற்காடு இளவரசர் முனாவர்கானால் தொடங்கப்பட்ட அஞ்சுமனே பல்வேறு அறப்பணிகளை ஆற்றி வருகிறது. அமீர்மகால் ஆற்காட்டு நவாப்கள் வாழ்ந்த இல்லம், இன்றும் ஆற்காட்டு இளவரசர் குடும்பத்தினர் வாழும் இல்லம். திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியில் செந்நிறத்தில் அரண்மனையைப் போல் காட்சி தரும் அமீர் மகால் மதரஸாபட்டின அடையாளங்களில் ஒன்று. முஹம்மதன் நூலகம் நவாப் குலாம் கவுஸ்கானால் தொடங்கப்பட்ட இந்நூலகம் வாலாஜா ரோடும் காயிதே மில்லத்சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அரபி, பார்ஸி, உருது, ஆங்கிலம் என ஆயிரக்கணக்கான நூல்கள் நிறைந்துள்ள இந்நூலகத்திற்கு எகிப்து, லண்டன், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள்நூல்களை வழங்கியுள்ளன. இஷாஅத்துல் இஸ்லாம்சபை திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்ட இஷா அத்துல் இஸ்லாம் சபையின் முக்கிய கிளை மதரஸாபட்டின மண்ணடியில் உள்ளது. பெண்களுக்கான அரபுப்பாட சாலையை நடத்தும் சபை புதிதாக இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது. அமீர்பாக் நவாப்வாலாஜா முஹம்மதலிக்கு 18-ம் நூற்றாண்டின் இறுதியில் சொந்தமாக இருந்த 37 அரண்மனைகளில் அமீர்பாக்கும் ஒன்றாகும். அதை ஆண்டு அனுபவித்த பின் நவாப் உச்சநீதிமன்றத்துக்கு (சத்ர்அதாலத்) ஒதுக்கிக் கொடுத்தார். 1798-ல் கட்டப்பட்ட அமீர்பாக் 1802-ல் ஃபிரான்சிஸ்லடூர் கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதன்பின் அங்கு ஆக்ரா வங்கி செயல்பட்டது. 1909-இல் ஸ்பென்சர்ஸ் குடும்பம் அதை வாங்கியது. அதைத் தொடர்ந்து விக்டோரியா குடும்ப விடுதியாகவும் 1910-இல் அது ஸ்பென்ஸ்சர்ஸ் ஹோட்டலாகவும் மாறியது. அமீர் பாக் கட்டப்பட்ட போது நுழைவாயில் பனிரெண்டு தூண்களை உடையதாகவும் யானைகள் நுழைய வசதியாக 40 அடி அகலத்திலும் கட்டப்பட்டது. அதனுள் ஒரு நேர்த்தியான கலையரங்கமும் விதானமுள்ள கூரையும் மரத்தாலான முன் மண்டபமும் இருந்தன. உம்தாபாக் ஸ்பென்ஸர்ஸின் கன்னிமரா ஹோட்டலுக்கு எதிரில் இப்போது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி இருக்கும் இடத்தில் 1798-இல் உம்தாபாக் கட்டப்பட்டது. 1849-இல் அங்கு மதரஸா-இ-ஆஸம் நிறுவப்பட்டது. இதுதான் அன்று தென்னகத்தின் முக்கிய இஸ்லாமியப் பள்ளியாக விளங்கியது. 1894-ல் ஒரு துணி கம்பெனி உம்தாபாக்கை வாடகைக்கு எடுக்க மதரஸா-இ-ஆஸம் சேப்பாக்க அரண்மனை வளாகத்துக்குச் சென்றது 1934-ல் அது தன் சொந்த இடத்துக்கு வந்தது. மதரஸா வளாகத்திலேயே அரசினர் முஹம்மதியக் கல்லூரி இயங்கி 1948-ல் அது ஆடவர் கலைக்கல்லூரி ஆனது. நவாப் உம்தத்துல் உம்ரா இறந்தபின் 1801-ல் உம்தாபாக்கோலா சிங்கண்ணச்செட்டி என்பவருக்கு விற்கப்பட்டது. அதன்பின் அது சாமுவேல் மூராட்டுக்கு 1822-ல் கைமாறி, மீண்டும் நவாப் குடும்பத்துக்கே வந்து சேர்ந்தது. கர்நாடகத்தின் கடைசி நவாபான குலாம் முஹம்மது கெளஸ் (1825-1855) உம்தாபாக்கை விலைக்கு வாங்கி குடியேறினார். இவர் அங்கு குடியேறியபின் அந்தத்தோட்ட இல்லங்களில் புத்துணர்வு புழங்கியது. மக்கள் நடமாட்டத்தோடு மகிழ்ச்சி குதிபோட்டது. காரணம், நவாபின் துணைவியார் பேகம்சாஹிபா ஆஸம்உன்னிஸா, விருந்தோம்பலுக்கும் வள்ளல் தன்மைக்கும் பெயர் பெற்ற பேகம்சாஹிபா நவாப்களின் வரலாற்றில் பேசப்படும் மாமனுஷியாவார். உம்தாபாக் மதரஸாவுக்கு குலாம்முஹம்மது கெளஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது கூடுதல் செய்தி. தியாகராய நகர் முஸ்லிம் சாலைகள் இந்தியா விடுதலையடைவதற்கு முன் இடைக்கால அரசுகள் ராஜதானி நகர்களில் அமைக்கப்பட்டன. மதராஸ் ராஜதானியில் 1920 முதல் 1947 வரை அமைந்த பனிரெண்டு அரசுகளில் சுயேச்சைகளின் அரசு இருமுறையும் கவர்னர்களின் ஆட்சி ஒருமுறையும், காங்கிரஸ் ஆட்சி மூன்று முறையும் அமைந்தன. மீதி ஆறு அரசுகளும் நீதிக்கட்சியின் பிரதமரைப் பெற்றிருந்தன. நீதிக்கட்சி ஆட்சியில் தான் தியாகராய நகர் பூங்கா நகராகப் பொலிவு பெற்றது. நீதிக்கட்சித் தலைவர் பிட்டி தியாகராயரின் பெயரில் அமைக்கப்பட்ட அழகிய நகரின் பெரும்பாலான தெருக்கள் அக்கட்சியின் தளகர்த்தர்களின் பெயர்களில் அமைந்தன. காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட அசோக் நகரிலும்தி.மு.க. காலத்தில் அமைக்கப்பட்ட அண்ணாநகரிலும் தெருக்கள் நிழற்சாலைகளாகவும் எண்களைக் கொண்ட சாலைகளாகவும் இருக்கின்றன. ஆனால் கலைஞர் கருணாநிதி நகரின் தெருக்கள் திராவிட இயக்கத்தலைவர்களின் பெயர்களால் அமைந்தவை. அதைப் போல் நீதிக்கட்சியினரால் அமைக்கப்பட்ட தியாகராய நகர் தெருக்களின் பெயர்களும் அமைந்தன. அவற்றில் உஸ்மான் சாலை, ஹபிபுல்லா சாலை, பசுலுல்லா சாலை, மூஸா சாலை என சில சாலைகள் முஸ்லிம்களின் பெயரைக் கொண்டவை. இந்த முஸ்லிம் சகோதரர்கள் நீதிக்கட்சியில் முன்னணி வகித்தவர்கள், அமைச்சர்களாய் இருந்தவர்கள். மூர்மார்க்கெட் மூர் எனும் சொல்லுக்கு ‘முஸ்லிம்கள்’ என்பதே பொருளாகும். முஸ்லிம்களின் கடைகளே அதிகமிருந்த மார்க்கெட் மூர் மார்க்கெட் என அழைக்கப்பட்டது. மளிகை, காய்கறிகள், பழங்கள் தவிர அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்ட மதரஸாபட்டினத்தின் அன்றைய ஸ்பென்சர் மூர் மார்க்கெட் ஆகும். துணி மணிகளுக்கு ‘லண்டன்ஸ்டோர்’ போன்ற கடைகள், தையலுக்கு ‘ஜுனுஸ்சேட்’ நிறுவனம், அழகு சாதனக்கடைகள், விளையாட்டுப் பொருள்கடைகள், மருந்துக் கடைகள், புத்தகக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைந்திருந்த மூர் மார்க்கெட் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் மதராஸின் வரலாற்றில் அழிக்க முடியாத வரலாற்றைக் கொண்டதாகும். மூர் மார்க்கட்டைச் சுற்றியிருந்த நடைபாதைக்காரர்கள் செய்த ஏமாற்று வணிகத்தால் மொத்தச் சிவப்புக் கட்டிடத்தின் மீதும் பொதுமக்கள் தாரைப் பூசினர். தேவையான பழம் பொருட்களும் பழைய புத்தகங்களும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்தன. இன்றுள்ள அல்லிக்குள மார்க்கெட் வெறும் பழம் பொருள் அங்காடியாகத் திகழ்கிறது. அன்றைய மூர் மார்க்கெட்டின் பெயரை அல்லிக்குளம் மீட்டெடுக்கவில்லை. மூர் மார்க்கெட்டிலிருந்த நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் பெயரில்லாமல் போய்விட்டாலும் ‘லண்டன்ஸ்டோர்’ மட்டும் இன்று புரசைவாக்கம் வைகிகி காம்ப்ளெக்ஸில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய வர்த்தக சபை 1909-ல் தென்னிந்திய வர்த்தக சபை துறைமுகத்தின் எதிரில் இருந்த ‘இராம கோடி பில்டிங்ஸ்’ கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இன்றைய ராஜாஜி சாலையிலுள்ள இந்தியன் வங்கி கட்டிட வளாகம் தான் அன்றைய இராமகோடி பில்டிங்ஸ். அதன் முதல் தலைவராக இருந்த சர்.பிட்டி தியாகராய செட்டியார் தான் வர்த்தக சபை அமைய காரணமானவர். அவருடன் திவான் பகதூர் கோவிந்ததாஸ் சதுர்பூஜதாஸ், கான்பகதூர் எம்.ஏ. குத்தூஸ்பாட்சா சாகிப், டி.வி. அனுமந்தராவ் மற்றும் பண்டிட் வித்யாசாகர் பாண்டியா ஆகியோர் முன்னணி வகித்தனர். நூறு உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட வர்த்தக சபை படிப்படியாய் வளர்ந்து பல்வேறு நகரங்களைச் சேர்ந்த வணிக சபைகளையும் தன்னுடன் இணைத்து கொண்டது. வணிகர்களின் நலனை மட்டும் சபை முன்னெடுத்துச் செல்லவில்லை. பல்வேறு பொது நல சேவைகளையும் செய்தது. நீதிக்கட்சித் தலைவரும் முதல் வர்த்தக சபைத் தலைவருமான பிட்டி தியாகராயரை அடுத்து பல முக்கிய பிரமுகர்கள் சபைத்தலைவர் ஆனார்கள். அவர்களில் முக்கியமாவனர்கள்: சர்எம்.சி டி. முத்தையாச் செட்டியார், எம்.ஜமால் முகம்மது சாகிப், நவாப் சி. அப்துல்ஹக்கீம், திவான் பகதூர் கோவிந்ததாஸ் சதுர்பூஜதாஸ், திவான் பகதூர்எம். பாலசுந்தர நாயுடு போன்றோர். முத்தியால்பேட்டை முஸ்லிம்அஞ்சுமன் 1913-இல் மதராஸின் கேந்திரப் பகுதியான மண்ணடி முத்தியால் பேட்டையில் முஸ்லிம் அஞ்சுமன் அமைக்கப்பட்டது. 1917-ல் முஸ்லிம் லீக் தொடங்கப்படுவதற்கு முன் முஸ்லிம்களின் கல்வியை மட்டும் நோக்கமாகக் கொண்டு அஞ்சுமன் செயல்பட்டது. கல்விப்பணிக்காக அஞ்சுமன் அமைக்கப்பட்டாலும் அது பல்வேறு பொதுப் பணிகளையும் முன்னெடுத்துச் செய்தது; பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. அஞ்சுமன் சார்பில் 1917 மார்ச், 14-ல் மதராஸ் விக்டோரியா ஹாலில் நடந்த கூட்டம் மிகமிக முக்கியமானது. அதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர்’ நமக்கு உடனடியாகத் தேவைப்படும் அரசியல் கண்ணோட்டம்’ எனும் தலைப்பில் நீண்டதோர் சொற்பொழிவாற்றினார். இக்கூட்டத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து வந்திருந்த தோழர் அகமது தம்பி மரைக்காயர் தலைமை யேற்றிருந்தார். அப்போது அஞ்சுமனின் தலைவராக சர்முகம்மது உஸ்மான்சாகிப் இருந்தார். இவரின் நினைவாகவே தியாகராய நகரில் உஸ்மான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம் முன்னணியினர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தோடு தோளோடு தோள் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கசாலை மொகலாயர்கள் தக்காணத்தை வென்றபின் ஒளரங்கசீபின் கடைசி மகன்கான் பக்ஷ்பீஜப்பூர் சுல்தான் ஆனார். மதரஸாபட்டினம் பீஜப்பூர்ஆட்சி எல்லைக்குள் வந்தது. எனவே ஆங்கிலேயர் கான்பக்ஷிடம் அனுமதி பெற்று நாணயங்களைத் தயாரிக்கத்தொடங்கினர். அந்நாணயச்சாலை தற்போது அரசு அச்சகம் இயங்கும் பகுதியில்அமைந்திருந்தது. "மின்ட்’ என அழைக்கப்பட்ட தங்க நாணயச்சாலை இருந்த தெருவே இன்று தங்கசாலை என அழைக்கப்படுகிறது. இச்சாலை தான் துறைமுகப் பகுதியில் வடக்கு - தெற்காக செல்லும் சாலைகளில் மிக நீண்டது. தங்கசாலை மணிக்கூண்டிலிருந்து சென்ட்ரல் ரயில் அலுவலகத்தின் பின்புறம் வரை நீண்டுள்ளது தங்கசாலை. […] ஆடை முதல் அத்தா வரை… முஸ்லிம்களில் பெரும்பாலோர் வணிகர்களாக இருப்பது குறைஷி வணிகச் சமுதாயத்திலிருந்து இஸ்லாம் வந்ததாலா? அண்ணலாரே பெரும் வணிகராக இருந்ததாலா? வணிகந்தான் நிறுத்தி வைத்து விட்டு ஐந்து வேளைத் தொழுகைகளை நிறை வேற்றக்கூடிய கச்சவடம் என்பதாலா? பிறருக்கு அடிமையாகாமல் இறைவனுக்கே அடிமைப்பட வேண்டும் என்ற மனோ நிலையைத் தருவதாலா? எந்தக் காரணமாய் இருந்தாலும் கொள்முதலும் விற்றலும் காலங்காலமாய் முஸ்லிம்களின்கை வண்ணத்தில் மிளிர்ந்தன. உள்ளூர் வணிகத்திலும் உலக வணிகத்திலும் முஸ்லிம்கள் தடம்பதிக்க இறையச்சமும் நாணயமும் அவர்களின் கால்களாயின. வியாபாரத்தில் பொய் சொல்லக்கூடாது, எடையில் ஏமாற்றக்கூடாது என்பது முஸ்லிம்களின் இதயக் கொள் முதலாகும். இவை விற்பனைக்கல்ல. உறவு பாராட்ட வேண்டும், உரிய விலையைச் சொல்ல வேண்டும்; இவை உதடுகள் விற்பனை செய்யும் உன்னதப் பொருள்கள். விலை மதிப்பற்ற இவை வாங்குவோரை வசப்படுத்தும் கருத்து முதல்வாதம். பொருள் முதல் வார்த்தை வணிகத்தோடு மட்டும் வைத்திருக்கும் முஸ்லிம்கள் கடினமான வணிகத்தையும் செய்தார்கள்; எளிதான வணிகத்தையும் செய்தார்கள். பாரசீகத்திலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து பூம்புகார் பட்டினத்தில் இறக்கியவர்கள் வைரத்தையும் முத்தையும் திமிஷ்க் என அழைக்கப்பட்ட டமாஸ்கஸ் வரை கொண்டு சொன்றார்கள். திமிஷ்கிலிருந்து புறப்பட்ட வாசனைத் திரவிய சாலை யெமன் வரை சென்றது. வடக்கையும் தெற்கையும் இணைத்த சாலை அரபிக்கடலில் முடிந்தாலும் பாய்மரக்கப்பல்கள் அந்த வணிகப்பாதையை மலபார்- தமிழகம் வரை கொண்டு சென்றன. அரபு வணிகர்கள் ஆறாம் நூற்றாண்டில் அரபு முஸ்லிம் வணிகர்களாய் மாறினார்கள். அவர்களின் தொடர்பால் குஜராத்கட்சிலிருந்து மலபார், திருவாங்கூர், குமரி, காயல், கீழைக்கரை, நாகை, கடலூர், இடைக்கழிநாடு, மண்ணடி, பழவேற்காடு என வணிகம் செய்தோர் முஸ்லிம்களாய் மாறினார்கள். வணிக உறவோடு இதய உறவும் கொண்டார்கள். பழமையான வணிகம் பாண்டிய நாட்டு முத்துக்களும் கோல்கொண்டா வைரங்களும் விற்றவர்கள் தனித்தனியாய் இருந்தார்கள். துணிமணிகள், நீலச்ச யம், நவதானியங்கள் விற்றோர் தனித்தனியாய் இருந்தார்கள். ஏலம்- கிராம்பு விற்றோர், நறுமணப்பொருட்கள் விற்றோர், தேயிலை ஏற்றுமதி செய்தோர் தனித்தனியாக இருந்தார்கள். பீங்கான் பொருட்கள், வெள்ளீயம் விற்றோர், தங்கத்தை விற்றோர், பட்டாடைகளை இறக்குமதி செய்தோர் தனித்தனியாக இயங்கினார்கள். இவர்களெல்லாம் மண்ணடி முழுவதும் பரவிக்கிடந்தார்கள். பாரசீகக் குதிரைகளையும் அரபியக் குதிரைகளையும் இறக்கி விற்றவர்கள் லாயங்களை அமைத்துக் கொண்டு மண்ணடி முகத்துவாரத்தின் அருகிலேயே வாழ்ந்தார்கள். வணிகம் செய்தோர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அவர்கள் அரபு மொழி பேசுபவர்களாகவும் தமிழ்மொழி பேசுபவர்களாகவும் இருந்தனர். இச்சங்கதிகள் எல்லாம் முற்கால வரலாற்று ஏடுகளிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்டவை. கண்களை மூடிக்கொண்டு பழங்கால நிகழ்வுகளைக் கண்டு பயணித்து வருங்காலத்தை வடிக்க வாருங்கள். அப்படி நீங்கள் வந்துவிட்டால் நாம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பயணிக்லாம். ஆடை வணிகங்கள் தொன்று தொட்டு துணி மணிகள் விற்பனையில் முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியுள்ளதை பல்வேறு இடங்களில் வரலாறு பேசுகிறது. முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இன்னும் கூட ‘நெய்யக்காரர்கள்’ எனவே குறிப்பிடப்படுகின்றனர். நெசவுத்தொழில் செய்தவர்களின் ‘பாவோடிகள்’ இன்றும் பல ஊர்களில் அதே பெயரில் உள்ளன. ஆங்கிலேயர்களின் வணிகப்பொருட்களில் சிண்ட்ஸ் துணிகள், கலம்காரித் துணிகளே முக்கியமானவை. அவ்வகை துணிகளை தமிழர்களான செங்குந்தர்களும் தெலுங்கு - கன்னடம் பேசும் செட்டியார்களும் மராட்டி பேசும் செளராஷ்டிரர்களும் நெய்தார்கள். முஸ்லிம்களோ துணி உற்பத்தியின் ஒரு பகுதியான கைலிகளை நெசவு செய்வதிலும் விற்பதிலும் முதலிடத்தை வகித்தார்கள். அவர்களின் அன்றைய கைலி உற்பத்தியின் முக்கிய கேந்திரம் பழவேற்காடு, ஆங்கிலத்தில் “பளயகாட்” என அழைக்கப்பட்ட பழவேற்காட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைலிகள் ‘பளயகாட் கைலி’ என பெயர்பெற்றது. இலங்கைக்கும் கிழக்காசிய நாடு களுக்கும்சென்றது. மதரஸாபட்டினத்தின் மீர்சாகிப்பேட்டையும் சைதாப்பேட்டையும் பளயகாட்கைலி நெசவின் முக்கிய கேந்திரங்கள்; கைலியின் தேவை அதிகமான போது அவை தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து தொடர்ந்து வர கைலிகளுக்காகவே பல கடைகள் உண்டாயின. அக்கடைகளில் மெளலானா கம்பெனி ஒன்று. இதன் உரிமையாளர்கள் கர்நாடகக் கடலோர பட்கலைச் சேர்ந்தவர்கள். தரமான கைலிகளுக்கப்பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு இணையாக ஏற்பட்ட நிறுவனம் “சங்கு” முகம்மது அப்துல்காதர் கம்பெனி. ‘சங்கு’ மார்க் கம்பெனியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்ரீஸ் லுங்கிக் கம்பெனியினர். இவர்களைத் தவிர எத்தனையோ கைலி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கைலி என்றால் மண்ணடிதான் எனச்சொல்லும் அளவில் மூர் தெருவிலிருந்து ஜோன்ஸ் தெரு வரை கைலிக் கம்பெனிகள் செயல்படுகின்றன. தொடக்க காலத்தில் கைத்தறி உற்பத்தியில் கவனம் செலுத்திய ஆங்கிலேயர்கள் அடுத்த கட்டமாக நூற்பாலைகளை உருவாக்கினார்கள். மதரஸாபட்டினத்து பின்னி ஆலைகளும் சூளை மில்லும் பெயர் பெற்றவை. சூளை மில்வேலை நிறுத்தத்தால் முடங்க பின்னி ஆலைகள் பெரிய அளவில் துணிகளை உற்பத்தி செய்தன. பின்னியின் காக்கித் துணிகள் உலக அளவில் பெயர் பெற்றவை என்றால் அதன் கறுப்புப் போர்வைகள் சாமான்யர்களின் குடிசைகளில் நுழைந்தவை. பின்னி கம்பெனிக்கு பட்டாளத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து பக்கிங்ஹாம், கர்னாடிக் என இரு ஆலைகள் இருந்தன. முதல் ஆலை 1877-ல்தொடங்க, இரண்டாம் ஆலை 1882-ல் நிறுவப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட மதரஸாபட்டின ஆலைகளைப் போல் நாட்டின் பல பகுதிகளிலும் துணி உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டன. முக்கியமாக பம்பாய், அகமதாபாத் ஆலைகள் துணி உற்பத்தியில் புரட்சி செய்ய இரு நகரங்களையும் சேர்ந்தோர் பலர் துணி வணிகர்களாய் மாறினர். அவர்களில் முக்கியமானவர்கள் குஜராத்திகள். அந்த குஜராத் வணிகர்கள் நாட்டின்பல பகுதிகளுக்கும் சென்று துணி விற்பனை நிலையங்கள் அமைத்தனர். அத்தகைய துணி விற்பனை நிலையங்கள் மதரஸாபட்டினத்திலும் அமைந்தன. அந்தத்துணி விற்பனை நிலையங்களில் சிலவற்றுக்கு மேமன் முஸ்லிம்கள் முதலாளிகளாக இருந்தார்கள். சைனா பஜாரிலிருந்து கிளை பிரியும் கிடங்குத் தெரு பெயருக்கு ஏற்றாற் போல் ஜவுளிக்கிடங்காகத் திகழ்ந்தது. மேமன் முஸ்லிம்கள் தவிர சில தமிழ் முஸ்லிம்களும் துணிக்கடைகள் அமைத்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் மதார்ஷா டெக்ஸ்டைல்ஸ், இவர்களின் நிறுவனம் 1938-இல் தொடங்கப்பட்டது. 1960-களில் மதரஸாபட்டினத்தில் பள்ளப்பட்டிக்காரர்கள் வண்ணாரப் பேட்டையிலிருந்து தாம்பரம் வரை முக்கிய சந்தைப் பகுதிகளில் ஜவுளிக் கடையைத் தொடங்கி அதை ஜவுளிக் கடலாக்கினார்கள். தமிழ்நாடு, பூம்புகார், சீமாட்டி, டீலக்ஸ், சுமங்கலி, பரணி, மகாராஜா என அவற்றுக்கு பெயர் சூட்டியிருந்தார்கள். இவற்றில் பெரும் பகுதிக் கடைகளைக் காணவில்லை. வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் பரவிக்கிடக்கும் முஸ்லிம்களின் கடைகளில் அவர்களும் உண்டு. எம்.சி.ரோடு கடைகளில் கலந்தர் மதீனா துணிக்கடை முக்கியமானது. துணிக்கடைகளோடு ஒரே ஒரு குடைக் கடையையும் பற்றி எழுதியே ஆக வேண்டும். அது முகம்மது இபுறாகீம் கம்பெனி எனச் சொல்லத் தேவையில்லை. நூறாண்டுக்கும் மேலாக, மான்மார்க் குடைகள் சைனா பஜாரிலிருந்து புறப்பட்டு நடக்காமல் நடந்து மழையையும் வெயிலையும் ஒன்றாகக் கருதி வலம் வருகின்றன. தோல் வணிகர்கள் தொடக்கத்தில் தோலால் செய்த பொருட்களை ஏற்றுமதி செய்த ஆங்கிலேயர் பின்னர் தாயக வணிகர்களையும் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட அனுமதித்தனர். தோல் கொள் முதலிலிருந்து தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் உற்பத்தி - ஏற்றுமதி செய்தல் என முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேயக் கம்பெனிகளை அசைத்துப் பார்த்தார்கள். ஜமால் மொய்தீன்சாகிப் அன்ட் சன்ஸ், ரோஷன் எம்.எம்.ஏ. கரீம்உமர் அன்ட் கோ, காக்கா ஹாஜி முகம்மது உமர்சாகிப் நிறுவனம், ஜலால் ஹாஜி அப்துல் கரீம்சாகிப் கம்பெனி என பெரும் பெரும் நிறுவனங்கள். திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, ஆற்காட்டும் பேரூர்கள் தோல் தொழிலில் மதரஸாபட்டினத்தில் வந்து சங்கமித்தன. மொத்தத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தோல் தொழிலைக் கப்பலேற்றி கொடிகட்டிப் பறக்கச் செய்தது. 1932-ல் தொடங்கப்பட்ட மலாங் டிரேடிங் கம்பெனி மிகப்பெரிய தோல் பதனிடும் தொழிற்சாலையை மதரஸாபட்டினத்தில் மிக வெற்றிகரமாக நடத்தியது. 1871-ல் அமைக்கப்பட்ட மதராஸின் முதல் ரயில் பாதை ராயபுரத்திற்கும் ஆம்பூருக்கும் இடையிலானது. இது அமைக்கப்படுவதற்கான முக்கிய காரணம் ஆற்காட்டுப் பகுதிகளில் தயாராகும் தோல் பொருட்களை மதராஸ் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதே. புறநகர்களிலேயே தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கின. 1942-ல் மதராஸின் புறநகர் கோடம்பாக்கம். அது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது. வாணியம்பாடி - ஆம்பூர்க்காரர்கள் கோடம்பாக்கம்- புலியூர்பகுதிகளில் தோல் மண்டிகள் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் ஜக்கரியா. அவருடைய பெயராலேயே புலியூர் பள்ளிவாசலுக்குப் பின்னால் ஜக்கரியா காலனி அமைந்துள்ளது. இங்கே யுனைடெட் இந்தியா எனும் தோல் நிறுவனமும் இருந்தது. முத்துமீரான் என்பவரும் பெரும் தோல் வணிகராகத் திகழ்ந்தார். இவர் தான் மீனாட்சி கல்லூரிக்கு இடம் கொடுத்தவர். இவருடைய குடும்பத்தார் கல்லூரிக்குப் பின்னுள்ள இடத்தை முஸாஃபர்கபர்ஸ்தானுக்கு ‘வக்ஃப்’ செய்திருந்தனர். அந்தக்க பர்ஸ்தான் இப்போது யாரோ சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்திற்குப் பின் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகள் தோல் நகராக உருவெடுத்தது. அந்தத் தோல் நகரில் உள்ள பல நிறுவனங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. தங்கும் விடுதிகள் 1921-ல் கீழ் விஷாரம் வள்ளல் நவாப்சி.அப்துல் ஹக்கீம் கட்டிய விடுதியே முஸ்லிம்கள் தங்க கட்டப்பட்ட முதல் விடுதியாகும். மலபார் முஸ்லிம்கள் எழும்பூரிலும் வண்ணாரப்பேட்டையிலும் தம்மக்கள் தங்குவதற்காக முஸ்லிம் மலபார் அசோசியேஷன் சார்பில் விடுதிகள் கட்டப்பட்டன. மேமன் முஸ்லிம்கள் கொத்தவால்சாவடி சின்னத்தம்பி தெருவில் கட்டிய முஸாபர்கானாவும் குறிப்பிடத்தக்க விடுதியாகும். அங்கப்பன்தெரு தர்மக்கிடங்கு காயல் பட்டினக்காரர்களின் கைங்கர்யம், பெரிய மேட்டில் உண்டு உறங்கும் இல்லங்கள் சிலவும் தேவையைப் பூர்த்தி செய்தன. மண்ணடியில் கப்பல் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய புரூகா லாட்ஜ், மஜ்பா லாட்ஜ், மெர்டேகா, ரஜுலா, எக்ஸலண்ட், தாஜ்மஹால் என விடுதிகள் பெருகின. அண்மையில் திருவல்லிக்கேணி பகுதியில் இளையான்குடிக்காரர்களால் மேன்சன்களின் தொகை அதிகரித்துள்ளன. உணவு விடுதிகள் 1950-களில் தான் முஸ்லிம்களின் உணவு விடுதிகள் மதரஸா பட்டினத்தில் பல்கிப் பெருகின. 1951-இல் எழும்பூர் ரயிலடிக்கு முன்புஹாரி ஹோட்டல் தொடங்கப்பட்டு அதன் கிளைகள் மவுண்ட் ரோடு, சென்ட்ரல், சைனா பஜார் ஆகிய இடங்களில் பரவின. மண்ணடியில் காயல்பட்டினக்காரர்களின் காஹிரா, யூசுப் போன்ற ஹோட்டல்களும் ரஜுலா, எக்ஸ்லண்ட் போன்ற மலபார் முஸ்லிம்களின் ஹோட்டல்களும் புகழ்பெறத் தொடங்கின. கறி, மீன் மணக்கும் உணவு விடுதிகளை மதராஸில் அதிகமாகத் தொடங்கியவர்கள் மலபார் முஸ்லிம்களே! திருவல்லிக்கேணியில் வீட், ஐஸ் அவுஸில் பிர்தவுஸ், ராயப்பேட்டையில் அமீன், ஆழ்வார் பேட்டையில் சாம்கோ, சேப்பாக்கத்தில் டெக்கான்பிளாஸா, சைனா பஜாரில்டீலக்ஸ், பெரம்பூரில் சாலிமார், பெரம்பூர் பேரக்ஸில்கோகினூர், பாரூக், அயனாவரத்தில் நூர், தியாகராய நகரில் டீலக்ஸ் ஹோட்டல், கோடம்பாக்கத்தில் ஹாலிவுட், லிபர்டி என மலபார்காரர்களின் உணவு விடுதிகள் மதராஸை மணக்கச் செய்தன. மலபார் உணவை விட அதிகருசியான உணவு ஆற்காட்டுக்காரர்களின் உணவு விடுதிகளில் கிடைத்தன. ஆண்டர்ஸன் தெரு அஹமதியா, சென்ட்ரலில் உள்ள நேசனல்தர் பார், மவுண்ட் ரோடு யாத்கார், பிராட்வேயிலிருந்த தர்பார் ஹோட்டல்கள் பிரபலமானவை. வன்பொருள் கடைகள் பூங்கா நகர் கந்தசாமி கோவில் அருகில் பல வன்பொருள் கடைகள் உள்ளன. இவற்றில் சில முக்கியமான கடைகள் முஸ்லிம் களுடையவை. இவற்றில் வீட்டுத் தேவைகளுக்கான பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வகை கடைகளிலிருந்து மாறுபட்ட வன்பொருள் கடைகள் பிராட்வே பகுதிகளில் நிறையவே உள்ளன. இவை தொழிற்சாலைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் கடைகள். இவற்றின் உரிமையாளர்களில் பெரும்பாலோர் போரா முஸ்லிம்கள். வன்பொருளான கம்பிகளும் தகடுகளும் விற்கும்பல கடைகள் மண்ணடியில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளின் உரிமையாளர்கள் முஸ்லிம்களே! இக்கடைகள் இப்போது சாத்தங்காட்டுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. வைர நகைக் கடைகள் - கோல்கொண்டா சுரங்க வைரத்தை வாங்கி விற்கவே ஆர்மீனியர்களும் யூதர்களும் மதராஸ்வந்தார்கள். விற்றவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். வைரம் ஏற்றுதியான போது தங்கம் இறக்குமதியானது. தங்க நகைகளை விட அன்று தங்கக்காசுகளே வீடுகளில் இருந்தன. காலப்போக்கில் தங்க நகைகள் பிரபலமாக கடைகள் உருவாகின. இன்றுள்ள பல கடைகளில் முஸ்லிம்களின் கடைகளும் பிரபலம். அவற்றில் எல்கேஎஸ், செய்யது பாக்கர், ஃபாத்திமா, மலபார் கோல்ட், வாவு, முஸ்தபா, சுல்தான் ஜெம்ஸ் ஆகியவை முக்கியமானவை. மரக்கடைகள் தங்கசாலை மணிக்கூண்டின் மேற்குப்பகுதி, சூளை, தேனாம்பேட்டை, ஐஸ்அவுஸ் எனக்கு விந்திருக்கும் மரக்கடைகள் பலவற்றுக்கும் மலையாள முஸ்லிம்களே சொந்தக்காரர்கள். மரம் விளையும் பூமியிலிருந்து வந்த அவர்கள் தொடர்ந்து மர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து இப்போது போரூர், குன்றத்தூர் பகுதிகளில் விரிவான வணிகத்தை மேற்கொண்டுள்ளார்கள். பழைய மோட்டார் சாமான் கடைகள் எழும்பூரை அடுத்துள்ள புதுப்பேட்டையில் நூற்றுக்கணக்கான பழைய மோட்டார் சாமான்கடைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்களாக இருப்பவர்களில் பலர் நெல்லை, இராமநாதபுரம் மாவட்டக்காரர்கள். ‘பாடி’ மட்டுமுள்ள வாகனத்துக்கு இங்கு சாமான்களை வாங்கிப்பொருத்தி புதிய வாகனமாக மாற்றிவிடலாம். பழுதுபட்ட எஞ்சினை சீர்செய்து புதியது போல ஆக்கிவிடலாம். புதுப்பேட்டையை அடுத்துள்ள அண்ணாசாலை ஜெனரல்பேட்டர்ஸ் சாலையில் புதிய வாகனப்பாகங்கள் கிடைக்கின்றன. அதைத் தாண்டி தாயார் சாகிப் தெருவுக்குள் நுழைந்து விட்டால் பழைய கார் சம்பந்தமான பொருட்கள் கிடைப்பதோடு பல பட்டறைகளும் பயன்பாடும் கிடைக்கும். பழைய சாமான்கள் கிடைக்கும் கடை இன்றும் கூட காயலான் கடை என்றே அழைக்கப்படுகிறது. காயலான் எனும் பெயரின் மூலமான காயல்பட்டினத்தின் மைந்தர்கள் பழைய சாமான் கடை வைப்பதில்லை. காயலைச் சூழ்ந்துள்ள நெல்லை மாவட்டக்காரர்களே பழைய சாமான்கடைகளை வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில்லறைப் பொருள் வணிகம் சில்லறைப் பொருள் வணிகம் என்றால் மளிகை சார்ந்த வணிகங்களே. ஐரோப்பியரே செய்துவந்த வணிகம்படிப்படியாக மதராஸிகளை வந்தடைந்தது. பண்டகசாலை தெருவெனக் குறிப்பிடப்படும் கொத்தவால் சாவடிப் பகுதி ஏற்றுமதியாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் உரிய களமாக மாறியது. வர்த்தக உலகில் ஜப்பான் அப்போது மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்திருந்தது. வணிகர்கள் அந்த நாட்டுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ள மண்ணடியில் கப்பல்கள் பொருட்களைக் கொண்டு வந்து குவிந்தன. குவிக்கப்பட்ட பொருட்களில் அதிகமானவை அகமது அப்துல்கரீம் பிரதர்ஸ் லிமிடெட்டுக்குச் சொந்தமானவை. சர்க்கரை வணிகத்தை ஹாஜி ஹபீப்பீர்முகம்மது என்பார் முழுமையாக தன் கைவசம் வைத்திருந்தார். நாடு முழுவதும் கிளை பரப்பியிருந்த இவரின் தலைமையகம் கத்தியவாரில் இருந்தது. இதே போல் சர்க்கரை சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் ஹாஜி ஜமால்நூர் முகம்மது சேட். இவரின் தலைமையகம் பம்பாயில் இருந்தது. இவர்கள் இருவரும் மேமன் முஸ்லிம்கள். காகிதத்தில் கப்பல் செய்தவர்கள் 1930 வரை ‘பெங்கால்- டைட்டாகூர் பேப்பர்மில்ஸ்’ எனும் புகழ்பெற்ற கம்பெனியின் விநியோகஸ்தர்களாக வெளிநாட்டினரே இருந்து வந்தனர். அதே சமயம் இதர வகை பேப்பர் மில்களின் விநியோகஸ்தர்களாக மதராஸிகளே இருந்தனர். அவர்களில் அக்பர் அன்டு பிரதர்ஸ், ஹஸன்அலி அன்டு சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னணி வகித்தன. இன்றும் காகித வணிகத்தில் முஸ்லிம்கள் முன்னணி வகிக்கின்றனர். பெருந்தொழில்கள் மதராஸ் போர்ட்லாண்ட் சிமெண்ட் ஒர்க்ஸ், பெங்களூர் பிரிக்ஸ் அன்டைல்ஸ் ஒர்க்ஸ், ரிலையன்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சிட்டல்சுவாசல்ஜூட்மில்ஸ் போன்ற தொழிற்சாலைகளை நிறுவியவர்கள் ஆர்பத்ரைட் அன்கோவினர். இக்கம்பெனியின் பங்குகளை ஹாஜி இஸ்மாயில்சேட், பக்கீர்முகம்மது சேட் என்ற இருவரும் வாங்கி உரிமையாளர் ஆகினர். அதன்பின் ஆர்பத்ரைட் அன்கோ சவுத் இந்திய இன்டஸ்ட்ரியல் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இதழியல் தொழிலில் 1869 முதல் 2006 வரை 140 ஆண்டுகளில் தமிழ் பேசும் உலகில் வெளியான இஸ்லாமிய மாத, கிழமை இதழ்கள் சற்றேறக் குறைய 420 ஆகும். அவற்றி மதரஸாபட்டினத்தில் மட்டும்வெளியான இதழ்கள் ஏறக்குறைய நூறாகும். 1869-ல் வெளியான முதல் தமிழ் இஸ்லாமிய இதழான ‘அலாமத்லங்காபுரி’ ஈழத்து கொழும்பில் வெளியானது. அதன் பின் சில இதழ்கள் சிங்கப்பூர், மலேசியா என வெளியான போதும் மதரஸா பட்டினத்தில் வெளியான இஸ்லாமியத் தமிழ் இதழ்(1888-ல்) "சம்சுல்ஈமான்’ எனும் திங்கள் இதழ். 1923-ல் வெளியான ‘தாருல் இஸ்லாம்’ ஒரு முக்கிய இதழாகும். இதன் ஆசிரியர் பா.தாவூத்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் போல் 1948-ல் வெளியான ‘முஸ்லிம் முரசு’ இன்று வரை மலர்ந்து மணம் வீசி வருகின்றது. இதன் நிறுவனர் அப்துர்ரஹீம்; இவர் பா. தாவூத்ஷாவின் மருமகன் என்பது கவனிக்கத்தக்கது. 1954-ல் ஆ.கா.அ.அப்துல்சமதுவின் ‘மணிவிளக்கு’, 1956-ல் மெளலானா அப்துல் வஹாப்சாகிபின் ‘பிறை’, 1957-ல் வெளியான கவிஞர் தா.காசிமின் ‘பிறைக்கொடி’, 1961-ல் வெளியான ௮அ.க.ரிபாயின் ‘உரிமைக்குரல்’ 1972-ல் கவிஞர் காசிமால் தொடங்கப்பட்ட ‘சரவிளக்கு’, 1975-ல் வெளியான கனி சிஷ்தியின் ‘முஸ்லிம் குரல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க இதழ்களாகும். இஸ்லாமிய இதழாக இல்லாவிட்டாலும் அருப்புக்கோட்டை அப்பாஸ் இபுறாகீமை பதிப்பாளராகவும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனை ஆசிரியராகவும் கொண்ட “ஞானரதம்” ஒரு முக்கிய இலக்கிய இதழாகும். முஸ்லிம்முரசு, சமரசம், உணர்வு, விடியல்வெள்ளி, இனிய திசைகள், சமநிலைச் சமுதாயம், சொர்க்கத்தோழி, மக்கள்உரிமை, மணிச்சுடர், சமுதாயத் தொண்டன், பச்சை ரோஜா, திங்கள்தூது, சமூக நீதி முரசு ஆகிய இதழ்கள் தற்போதும்வெளிவந்து ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. பதிப்புத் துறையில்- நூல்விற்பனையில்… இன்றைய மதரஸாபட்டினப் பதிப்பகங்களில் மூத்தது சாகுல்ஹமீதியா அன்டு சன்ஸ். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அதே பழைய கட்டிடத்தில் அதே பழைய பாணியில் பதிப்பக விற்பனைத் தொழிலைச் செய்யும் அவர்களைப் பாராட்டவே வேண்டும். அவர்கள் காலத்திற்குப் பின் தொடங்கப்பட்ட யுனிவர்ஸர்ல் பப்ளிஷர்சின் சாதனை மெச்சத்தக்கது. சுயமுன்னேற்ற நூல்களும் இஸ்லாமியத் தமிழ்க்கலைக் களஞ்சியமும் யுனிவர்சலை எங்கும் எவரிடமும் அடையாளப்படுத்துபவை. மார்க்க நூல்களோடு தமிழ் இலக்கிய நூல்களும் வெளியிடும் அவர்களை முதலிடத்தில் கட்டாயம் வைக்க வேண்டும். யுனிவர்சலின் சகோதர நிறுவனமான நேஷனல் பதிப்பகமும் இலக்கிய, இஸ்லாமியப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறது. சாஜிதா, பஷாரத், ரஹ்மத், சலாமத், தாருல்ஹுதா எனும் பதிப்பகங்கள் நூல் பதிப்போடு வணிகமும் செய்து வருகின்றன. இவ்வைந்தில்சாஜிதா மட்டும் தான் அதிகமாக நூல்களை வெளியிட்டிருப்பதோடு நெடும் பயணத்தையும் மேற்கொண்டுள்ளது. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டும் மூன்பதிப்பகமும் தம் இயக்கங்களின் பதிப்பகமாக விளங்குவதோடு நூல் விற்பனையைப் பரவலாக்கி வருகிறது. ஐஎஃப்டி “புத்தக வனம்” எனும் வாகனம் மூலமும் நூல் விற்பனை செய்கிறது. இவை தவிர இலக்கியச் சோலை, ஃபுர்கான், இஸ்லாமிய மலிவு நூல் பதிப்பகம் என பல்வேறு நிறுவனங்கள் இயங்குகின்றன. நூல் விற்பனைக்கான மதரஸாபட்டினத்துக் கேந்திரங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று மண்ணடி, மற்றொன்று திருவல்லிக்கேணி. திருவல்லிக்கேணியில் தமிழ் நூல்களோடு உருது, ஆங்கில மொழி நூல்களும் விற்கப்படுகின்றன. அண்மையில் டெல்லியைச் சேர்ந்த ‘குட்வோர்டு’ நிறுவனம் தன் கிளையைத் திருவல்லிக்கேணியில் தொடங்கியுள்ளது. திரைப்படத்துறையில்… ‘ஜூபிடர்’ மைதீன், ‘புதையல்- தெய்வப்பிறவி’ தயாரிப்பாளர்கள் கமால் பிரதர்ஸ், ‘பாரகன்பிக்சர்ஸ்’ கோவை இஸ்மாயில், ‘கலைமாமணி’ காரை உமர், ‘மின்னல்’ உதுமான் முகைதீன், இபுறாகீம்ராவுத்தர் போன்ற படத்தயாரிப்பாளர்கள்- ‘எம்.ஜி.ஆர்பிக்சர்ஸ்’ கதை இலாகா ரவீந்தர் (காஜா மைதீன்), தூயவன் (அக்பர்), ‘தலைவன்’ அப்துல்முத்தலீப், இருகூரான் போன்ற கதாசிரியர்கள் ‘ஜெனோவா’, ‘மங்கையர்க்கரசி’ டைரக்டர்எஃப். நாகூர், கடையநல்லூர்காஜா, பாபு மகாராஜா, லியாக்கத் அலீகான், சிராஜ், ஜீவா, அமீர்போன்ற இயக்குநர்கள் கவி கா.மு.ஷெரீஃப், மேத்தா போன்ற பாடலாசிரியர்கள், நாகூர் இ.எம்.ஹனீஃபா, காயல் சேகு முகம்மது, ‘ஜென்டில்மேன்’ சாகுல்ஹமீது, முகேஷ் போன்ற பாடகர்கள்- எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், ரைஹானா, தாஜ்நூர், ஜிப்ரான் போன்ற இசையமைப்பாளர்கள் மஸ்தான், அகமது, அப்துல்ரகுமான், ஜீவா, ராஜா முகம்மது, கிச்சா போன்ற ஒளி ஓவியர்கள்- ‘டூபான்குயின்’ எஸ்.பாஷா, கம்பம்பீர்முகம்மது, ‘சந்தனத்தேவன்’ ஜி.எம்.பசீர், “அல்லி அர்ஜுனா” அப்துல்காதர், “சின்ன மருது” எம்.கே. முஸ்தபா, ‘விஜயபுரி வீரன்’ ஆனந்தன், பிரேம்நசீர், பிரேம்நவாஸ், வகாப்காஷ்மீரி, நாசர், மன்சூர்அலிகான், ராஜ்கிரண், ரகுமான், பப்லு, ஆர்யா, ஷாம், அப்பாஸ்போன்ற நடிகர்கள். அத்தர்க் கடைகள் மதராஸ்பட்டினத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தனி அத்தர்க் கடைகளைக் காணலாம். மண்ணடி, புரசை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அடையாறு பகுதிகளில் அத்தர்பாட்டில்களின் பெருந்திரளைக் காணலாம். நைனியப்பன் நாயக்கன் தெருவில் அத்தர்- சென்ட் மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. O.T காதர் பாஷா, சலீம்பெர்ஃப்யூமர்ஸ் போன்ற மொத்த விற்பனை நிலையங்கள் முக்கியமானவை. பீடிக் கம்பெனிகள்! […] தாஜ் மகால் பீடி, பவுட்டா பீடி, கரீம் பீடி, ஹுசைன் மியான் பீடி, கவர்னர் பீடி, சேட் பீடி என மதராஸில் பத்துக்கும் மேற்பட்ட பீடிக் கம்பெனிகள் இருந்தன. அவர்களுக்கு பீடி தயாரித்துக் கொடுக்க நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருந்தனர். நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளுக்குக் கீழே ஆயிரக்கணக்கான பீடித் தொழிலாளர் குடும்பங்கள் செயல்பட்டன. பீடிக் கம்பெனிகள் அனைத்திற்கும் முஸ்லிம்களே முதலாளிகள். ஏஜெண்டுகளில் எங்காவது ஒருவர் முஸ்லிம் அல்லாதவராக இருக்கலாம்! அதைப்போல ஆயிரக்கணக்கான பீடித் தொழிலாளர் குடும்பங்களில் நூற்றுக்குக் குறைவாகவே மாற்றுமத சகோதரர்களின் குடும்பங்கள் இருந்தன. மொத்தத்தில் மதராஸில் பீடி முறத்திலிருந்து பீடி பண்டல்கள் குவிக்கப்பட்ட கிட்டங்கி வரை முஸ்லிம்களே இயங்கினர். முதலாளிகள் பிரமாண்டமான பங்களாக்களில் வாழ தொழிலாளிகள் குடிசைகளிலும் தகரக் கொட்டகைகளிலும் வாழ்ந்தனர். வண்ணாரப்பேட்டை, லாலா குண்டா, புளியந்தோப்பு, பெரம்பூர், திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை எனக் குவிந்திருந்த ஏழை பாலைகள் பீடி முறங்களிலேயே தம் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். மனைவி பீடி சுற்ற, பிள்ளைகள் பீடி வாய்மூட, கணவன் டீ வாங்கிக் கொடுத்தபடி பசியை அடக்க, பூனை அடுப்பில் தூங்கிட புரியாத புதிர்அந்த ஏழைத் தொழிலாளர்களுடையது! முதலாளியும் தொழிலாளியும் முஸ்லிம்கள்தானே! தொழிலாளிக்குப் படிப்பறிவு கிடையாது. மார்க்கம் தெரியாது! முதலாளிக்கு இரண்டுமே தெரிந்தும், ஏன் அவர்கள் தம் சகோதரர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை? பீடி ஏஜெண்டுகள் ஓரளவு நன்றாக வாழ்ந்தாலும் பீடித் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு காலமெல்லாம்வாழக்காரணம்என்ன? பீடிக் கம்பெனியிலிருந்து இலையையும் பீடித்தூளையும் மொத்தமாக எடை போட்டு வாங்கி அதைப் போலவே எடைபோட்டு பீடித் தொழிலாளிகளிடம் கொடுத்த ஏஜெண்டுகள் கணிசமான வருவாய் பெற்றார்கள். பீடித் தொழிலாளிகள் மிகக்குறைவாக கூலி பெற்றார்கள். பீடிக் கம்பெனிக்காரர்கள் ஏஜெண்டுகளைக் கவசமாக்கிக் கொண்டு பிரச்சினையின்றி வாழ்ந்த போதும் பீடித்தொழிலாளர்கள் அணிதிரண்டு கூலி உயர்வு கேட்க கம்யூனிஸ்டுகள் காரணமானார்கள். 75 விழுக்காட்டினராக முஸ்லிம்கள் இருந்த பெருந்திரள் கூட்டத்திற்காக குரல் கொடுக்க முஸ்லிம் லீக்கோ, காங்கிரசை ஆதரித்து அமைக்கப்பட்ட முஸ்லிம் இயக்கமோ முன் வரவில்லை. அவர்கள் மேல் தட்டு முஸ்லிம்களின் இயக்கங்களாக வலம் வந்தார்கள். வண்ணை லாலா குண்டா பகுதியில் அமைக்கப்பட்ட பீடித் தொழிலாளர் யூனியன் இன்று கூட அங்கே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாகக் காணப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் கூட கூலி உயர்வு கேட்டுப் போராடினார்களே தவிர பீடித் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளைப் படிக்கச் செய்ய துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. முஸ்லிம் இயக்கங்களோ தொழிலாளர்த் தோழர்களைப் பற்றி எவ்விதக் கவலையும் படவில்லை. மதராஸ், திருச்சி போன்ற நகரங்களில் இருந்த பீடித் தொழிலாளர் குடும்பங்கள் கல்வியில் மேம்படாமல் போனதற்கு பீடிக் கம்பெனிகளே காரணம்! நம்மைச் சேர்ந்தவர்கள் முறத்திலேயே முடங்கிப் போய் விடக்கூடாது என எண்ணி பீடிக் கம்பெனிகள் தொழிலாளர் குடும்பங்களை மேனிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். முக்கியமாக பீடி வாய்மூடக்கற்று முடங்கிய சின்னஞ் சிறுவர்களுக்குக் கல்விக் கண் அளிக்க முயன்றிருக்க வேண்டும். அறக்கட்டளைகள் அமைத்து கல்விச்சாலைகளை உருவாக்கியிருக்க வேண்டும். தம் வீட்டுப்பிள்ளைகளை அலிகர், லண்டன் என அனுப்பியவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளை ஆரம்பக்கல்வி கற்கவாவது வழிவகுத்திருக்க வேண்டும். முதலாளிகள் காலமெல்லாம் மேல்த்தட்டில், தொழிலாளிகள் காலமெல்லாம் கீழ்த்தட்டில்! இன்று பீடி முதலாளிகளைக் காணோம்; அவர்கள் வேறு தொழிலுக்கு அதிபதிகளாகியிருப்பார்கள். பீடித் தொழிலாளியையும் காணோம், அவர்கள் இன்றும் வேறு தொழிலாளியாகவே இருக்கிறார்கள் என்ற போதும் இன்று முஸ்லிம் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியால் ஓரளவு கற்று வெவ்வேறு பணிகளைச் செவ்வன செய்து கொண்டிருக்கிறார்கள். மதராஸில் பீடிக் கம்பெனிக்காரர்களின் எச்சமாய் பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை. ஆனால் எனக்குத் தெரிய வண்ணை மொட்டைத் தோட்டத்தில் ஒரு பள்ளிவாசல் எடுப்போடு நிற்கிறது. அது பாவுட்டா பீடிக்காரர்கள் கட்டிய மஸ்ஜித், பாவுட்டா என்றால் கொடி, அதனால் தான் என்னவோ மஸ்ஜித் புகழ்க்கொடி கட்டிப்பறக்கிறது. இப்பள்ளிவாசல் தவ்ஹீத் பள்ளிவாசலாகும். தவ்ஹீத் கச்சவடமாகும் முன்பே கட்டப்பட்டது இப்பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது!அமீருனிஷா பேகம்சாஹிபா மசூதி. சின்னச்சின்ன செய்திகள்! தாஜ் மகால் பீடி, பவுட்டா பீடி, கரீம் பீடி, ஹுசைன்மியான் பீடி, கவர்னர் பீடி, சேட் பீடி என மதராஸில் பத்துக்கும் மேற்பட்ட பீடிக் கம்பெனிகள் இருந்தன. அவர்களுக்கு பீடி தயாரித்துக் கொடுக்க நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருந்தனர். நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளுக்குக் கீழே ஆயிரக்கணக்கான பீடித் தொழிலாளர் குடும்பங்கள் செயல்பட்டன. பீடிக் கம்பெனிகள் அனைத்திற்கும் முஸ்லிம்களே முதலாளிகள். ஏஜெண்டுகளில் எங்காவது ஒருவர் முஸ்லிம் அல்லாதவராக இருக்கலாம்! அதைப் போல ஆயிரக்கணக்கான பீடித் தொழிலாளர் குடும்பங்களில் நூற்றுக்குக் குறைவாகவே மாற்றுமத சகோதரர்களின் குடும்பங்கள் இருந்தன. மொத்தத்தில் மதராஸில் பீடி முறத்திலிருந்து பீடி பண்டல்கள் குவிக்கப்பட்ட கிட்டங்கி வரை முஸ்லிம்களே இயங்கினர். முதலாளிகள் பிரமாண்டமான பங்களாக்களில் வாழ தொழிலாளிகள் குடிசைகளிலும் தகரக்கொட்டகைகளிலும் வாழ்ந்தனர். வண்ணாரப்பேட்டை, லாலா குண்டா, புளியந்தோப்பு, பெரம்பூர், திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை எனக் குவிந்திருந்த ஏழை பாலைகள் பீடி முறங்களிலேயே தம் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். மனைவி பீடி சுற்ற, பிள்ளைகள் பீடி வாய்மூட, கணவன் டீ வாங்கிக் கொடுத்தபடி பசியை அடக்க, பூனை அடுப்பில் தூங்கிட புரியாத புதிர்அந்த ஏழைத் தொழிலாளர்களுடையது! முதலாளியும் தொழிலாளியும் முஸ்லிம்கள் தானே! தொழிலாளிக்குப் படிப்பறிவு கிடையாது. மார்க்கம் தெரியாது! முதலாளிக்கு இரண்டுமே தெரிந்தும், ஏன் அவர்கள் தம் சகோதரர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை? பீடி ஏஜெண்டுகள் ஓரளவு நன்றாக வாழ்ந்தாலும் பீடித் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு காலமெல்லாம்வாழக்காரணம்என்ன? பீடிக் கம்பெனியிலிருந்து இலையையும் பீடித்தூளையும் மொத்தமாக எடை போட்டு வாங்கி அதைப் போலவே எடைபோட்டு பீடித் தொழிலாளிகளிடம் கொடுத்த ஏஜெண்டுகள் கணிசமான வருவாய் பெற்றார்கள். பீடித் தொழிலாளிகள் மிகக்குறைவாக கூலி பெற்றார்கள். பீடிக் கம்பெனிக்காரர்கள் ஏஜெண்டுகளைக் கவசமாக்கிக் கொண்டு பிரச்சினையின்றி வாழ்ந்த போதும் பீடித் தொழிலாளர்கள் அணிதிரண்டு கூலி உயர்வு கேட்க கம்யூனிஸ்டுகள் காரணமானார்கள். 75 விழுக்காட்டினராக முஸ்லிம்கள் இருந்த பெருந்திரள் கூட்டத்திற்காக குரல் கொடுக்க முஸ்லிம் லீக்கோ, காங்கிரசை ஆதரித்து அமைக்கப்பட்ட முஸ்லிம் இயக்கமோ முன் வரவில்லை. அவர்கள் மேல் தட்டு முஸ்லிம்களின் இயக்கங்களாக வலம் வந்தார்கள். வண்ணை லாலா குண்டா பகுதியில் அமைக்கப்பட்ட பீடித் தொழிலாளர் யூனியன் இன்று கூட அங்கே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாகக் காணப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் கூட கூலி உயர்வு கேட்டுப் போராடினார்களே தவிர பீடித் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளைப் படிக்கச் செய்ய துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. முஸ்லிம் இயக்கங்களோ தொழிலாளர்த் தோழர்களைப் பற்றி எவ்விதக் கவலையும் படவில்லை. மதராஸ், திருச்சி போன்ற நகரங்களில் இருந்த பீடித் தொழிலாளர் குடும்பங்கள் கல்வியில் மேம்படாமல் போனதற்கு பீடிக் கம்பெனிகளே காரணம்! நம்மைச் சேர்ந்தவர்கள் முறத்திலேயே முடங்கிப் போய் விடக்கூடாது என எண்ணி பீடிக் கம்பெனிகள் தொழிலாளர் குடும்பங்களை மேனிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். முக்கியமாக பீடி வாய்மூடக்கற்று முடங்கிய சின்னஞ் சிறுவர்களுக்குக் கல்விக் கண் அளிக்க முயன்றிருக்க வேண்டும். அறக்கட்டளைகள் அமைத்து கல்விச்சாலைகளை உருவாக்கியிருக்க வேண்டும். தம் வீட்டுப்பிள்ளைகளை அலிகர், லண்டன் என அனுப்பியவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளை ஆரம்பக்கல்வி கற்கவாவது வழிவகுத்திருக்க வேண்டும். முதலாளிகள் காலமெல்லாம் மேல்த்தட்டில், தொழிலாளிகள் காலமெல்லாம் கீழ்த்தட்டில்! இன்று பீடி முதலாளிகளைக் காணோம்; அவர்கள் வேறு தொழிலுக்கு அதிபதிகளாகியிருப்பார்கள். பீடித் தொழிலாளியையும் காணோம், அவர்கள் இன்றும் வேறு தொழிலாளியாகவே இருக்கிறார்கள் என்ற போதும் இன்று முஸ்லிம் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியால் ஓரளவு கற்று வெவ்வேறு பணிகளைச் செவ்வன செய்து கொண்டிருக்கிறார்கள். மதராஸில் பீடிக் கம்பெனிக்காரர்களின் எச்சமாய் பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை. ஆனால் எனக்குத் தெரிய வண்ணை மொட்டைத் தோட்டத்தில் ஒரு பள்ளிவாசல் எடுப்போடு நிற்கிறது. அது பாவுட்டா பீடிக்காரர்கள் கட்டிய மஸ்ஜித், பாவுட்டா என்றால் கொடி, அதனால் தான் என்னவோ மஸ்ஜித் புகழ்க்கொடி கட்டிப்பறக்கிறது. இப்பள்ளிவாசல் தவ்ஹீத் பள்ளிவாசலாகும். தவ்ஹீத் கச்சவடமாகும் முன்பே கட்டப்பட்டது இப்பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது!அமீருனிஷா பேகம்சாஹிபா மசூதி. மதராஸின் மாமனிதர்கள்! சீதக்காதி மரைக்கார் செத்தும் கொடுத்த சீதக்காதி’ என வள்ளல் தன்மைக்காக புகழப்பட்ட சைகு அப்துல்காதர் பதினேழாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினத்திலும் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர். இன்றைய ராஜாஜி சாலையிலுள்ள தலைமை அஞ்சலகக் கட்டிடம் அன்று சீதக்காதி மரைக்காரின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் பண்டகசாலையாக விளங்கியுள்ளது. வங்காளம் முதல் இலங்கை வரை வள்ளல் சீதக்காதியின் வணிக நிறுவனங்கள் இருந்துள்ளன. கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதியும் ஏற்றுமதியும் தொடர்ந்துள்ளன. ஆலம்கீர் ஒளரங்கசீபின் பிரதிநிதியாக வங்காளத்தில் சீதக்காதி .. ஒருமாத காலம் இருந்து தட்பவெப்ப நிலை பிடிக்காததால் தாயகம் திரும்பியுள்ளார். பின்னர் கிழவன் சேதுபதி (1674-1710) கேட்டுக் கொண்டதற்கிணங்க இராமநாதபுரம் சமஸ்தானத்தில் அமைச்சராக வள்ளல் சீதக்காதி இருந்துள்ளார். அக்காலகட்டத்தில் தான் அவர் ராமேஸ்வரம் கோவிலைப் புதுப்பிக்கும் மணியைச் செய்தார். கருங்கல்லால் ராமேஸ்வரத்தில் எழுப்பப்பட்ட கோவிலைப் போல் தாம்பிறந்த கீழக்கரையில் ஒரு பெரிய கல்லுப்பள்ளியை நிர்மாணித்தார். பள்ளி கோவில் சாயலில் இருந்தாலும் உருவங்கள் கிடையாது. மரகத வணிகமும் செய்த சீதக்காதி வாரி வாரி வழங்கியதால் வள்ளல் எனப் பெயர் பெற்றார். இவருடைய செல்வாக்கு கடல்கடந்தது. ஒருமுறை இலங்கையில் வரம்பு மீறி நடந்த ஆங்கிலேயர் ஐவரை கண்டி அரசர்விமல தர்ம சூர்ய கைது செய்துவிட்டார். கிழக்கிந்திய கம்பெனியினர் எவ்வளவோ முயன்றும் அவர்களை மீட்டெடுக்க முடியவில்லை. பின்னர் கண்டி அரசரின் நண்பரான சீதக்காதியை அணுகி கம்பெனியார் கைதானவர்களை விடு வித்தனர். இதற்கு நன்றிக்கடனாக வள்ளல் சீதக்காதி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த மிளகுக்கு கவர்னர் யேல்சுங்கவரியை ரத்து செய்தார். இச்செய்தி அன்றைய அரசு கெஸட்டான "சிட்டி கூரியரில்’ 1690 ஜனவரி 30-ல் வெளியாகியுள்ளது. ‘சீதக்காதி நொண்டி நாடகம்’ வள்ளல் சீதக்காதியின் புகழைக் கூறுகிறது. படிக்காசுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் கொடையைப் பற்றி பாடி மகிழ்ந்திருக்கிறார். மெளலவி அஹ்மதுல்லாஹ்ஷா மதராஸி பிரபலங்கள் பெயருக்கு முன்னோ பின்னோ தம் ஊர்ப் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் மதராஸ் வாசிகளில் மிகச்சிலரே தம் பெயருக்குப் பின்மதராஸி எனச் சேர்த்துள்ளார்கள். உருதுக் கவிஞர்களில் ஓரிருவர் மதராஸியை இணைத்துள்ளார்கள். இவர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் சூஃபி ஞானியும் விடுதலைப் போராட்ட வேங்கையாகவும் திகழ்ந்த மெளலவி அஹ்மதுல்லாஹ்ஷா மதராஸி. இவர் கடைசி கோல்கொண்டா சுல்தான் அப்துல்ஹஸன் தானாஷாவின் வழி வந்தவர். மதரஸாபட்டினத்தில் பிறந்தவர். மதரஸாபட்டினத்திலிருந்து அயோத்திக்கு புலம் பெயர்ந்தது மெளலவியின் குடும்பம். அயோத்தி நவாப் மெளலவியை பைசாபாத் அதிபராக்கிய சிறிது காலத்தில் ஆங்கிலேயர் அயோத்தியை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். மெளலவி அடிமை விலங்கொடிக்க சபதம் பூண்டார். நாடெங்கும் பயணித்து ஆங்கிலேயருக்கு எதிராக மக்களைத் திரட்டினார். 1857-ல் நடந்த விடுதலைப் போரில்ஆங்கிலேயரை அலற வைத்தார். மெளலவியின் சொல்வாக்கும் செல்வாக்கும்ஆங்கிலேயரைப் புரட்டிப்போட மெளலவியை மிரட்டிப்பணிய வைக்க ஆட்சியாளர்கள் புரட்சிக்காரரை பைசாபாத் சிறையில் அடைத்தனர். கோர்ட் கூடவில்லை; வக்கீல்கள் வரவில்லை. புரட்சியாளரை மீட்க புரட்சி செய்த பொதுமக்கள் பைசாபாத் சிறையை உடைத்து தம் தளபதியை மீட்டு வந்தனர். சிறை மீண்டார் ஷாஜஹான்பூர் சென்று முஹம்மதிபூர் எனுமிடத்தில் இஸ்லாமிய அரசை நிறுவினார். இளவரசர் பைரோஸ்ஷா, நானாராவ் ஆகியோர்அமைச்சர்களாய் நியமிக்கப்பட்டனர். அஹ்மதுல்லாஹ்ஷா பெயரில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயர் மீது அளவற்ற வெறுப்பை மூட்டிய மெளலவி ரூபியா கோட்டையில் ஆங்கிலேயருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் நடந்த சண்டையின் போது சிப்பாய்களுக்கு பேராதரவு திரட்டினார். ஷாஜஹான்பூர் அருகிலிருந்த பவைன் எனும் பகுதியை ஆண்ட ராஜா ஜகன்னாத்துக்கு மெளலவி ஆதரவு கேட்டு கடிதம் எழுதினார். இந்நிலையில் ஆங்கிலேயர் மெளலவியின் தலைக்கு 50,000 ரூபாய் தருவதாக அறிவித்தனர். பவைன் மன்னன் மெளலவியைச் சந்தித்துப்பேச வரும்படி ஆளனுப்பினான். அவன் உள்ளத்தில் கள்ளமும் கபடமும் இருப்பதைப் புரிந்து கொள்ளாத மெளலவி பவைன் கோட்டைக்குள் சென்று மாட்டிக் கொண்டார். தப்ப முயன்ற மெளலவியை பவைன் மன்னனின் தம்பி துப்பாக்கியால் துளைத்தான். அன்று 1858 ஜூன்5. அற்பக்காசுக்காக ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுபாடிய சிங்கம் அழித்தொழிக்கப்பட்டது! காஜி பத்ருத்தெளலா - காஜி உபைத்துல்லாஹ் கி.பி.1880-ல் காஜியாகி 1927-ல் காலமான உபைத்துல்லாஹ்அரபி, பார்ஸி, உருது ஆகிய மொழிகளில் 22 நூல்கள் எழுதியுள்ளார். இவரை போன்று சிறந்து விளங்கிய காஜி பத்ருத்தெளலா அரபி, பார்ஸி, உருது மொழிகளில் 14 நூல்கள் எழுதியுள்ளார். இவர்களைப் போல் பலர் மதரஸா பட்டினத்தில் வாழ்ந்து நவாபின் ஆதரவால் மும்மொழிகளிலும் சிறந்த நூல்களை எழுதியுள்ளனர். விஷாரம் நவாப்சி.அப்துல்ஹக்கீம் தோல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஷாரத்தில் 1863-இல் பிறந்தார் நவாப்சி. அப்துல்ஹக்கீம். ‘நவாப்’ என்பது ஆங்கிலேயர் அளித்த பட்டம், ‘சி’ என்பது ‘சேப்பிள்ளை’ என்ற குடும்பப் பெயரைக் குறிக்கும் விலாசம். சிறிய தந்தையிடம் வணிகத்தைக் கற்று அவருடைய பிள்ளை களோடு வணிகம் செய்து 1890-ல்மண்ணடி மூர்தெருவில் சொந்த வியாபாரத்தைத் தொடங்கியவர் நவாப்சிஏ. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தோல்களை ஏற்றுமதி செய்த நவாப் பெரும் புகழ்பெற காரணம் அவருடைய கொடை மனம். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் காங்கிரஸ்கட்சிக்கும் உதவியெனக் கேட்டவர் பலருக்கும் வாரி வழங்கிய வள்ளல் விஷாரத்துப் பெருமகனார். அங்கப்ப நாயக்கன் தெருவில் ராஜா பழனியாண்டி முதலியார் தாளாளராகயிருந்த பள்ளியை நடத்த கட்டிடமும் கொடுத்து பொருளுதவியும் செய்ததால் அப்பள்ளியின் பெயர் ‘நவாப்சி. அப்துல்ஹக்கீம் இந்து முஸ்லிம்பள்ளி’ எனப்பெயர்மாறியது. வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தலைவராயிருந்த நவாப் லட்சக்கணக்கில் நன்கொடைகள் அளித்தவர். 1933-ல் ராஜாஜி காங்கிரசுக்கு நன்கொடை கேட்ட போது ஒரு பெருந்தொகையை வழங்கியவர். காக்கி நாடாவில்(1923) நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு வரவேற்புக்குழு உறுப்பினராய் இருந்து தம் செலவில் விருந்தளித்தவர். காந்திஜியிடம் பழகிய இவர், அவர் கரங்களில் நிதி குவித்தவர். வேலூர் ஸ்கட்டர் நினைவு மருத்துவமனைக்கு இரு வார்டுகளைக் கட்டிக்கொடுத்தவர். கிலாஃபத் இயக்கத்துக்கும் வாரி வழங்கியவர். அப்துல்ஹக்கீமின் சீரிய பண்புகளைப் பாராட்டி நவாப் பட்டத்தை அளித்த ஆங்கிலேய அரசு ‘சென்னை நகர்ஷெரீஃப்’ ஆகவும் ஆக்கியது. 1937-ல் அமைந்த ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் நவாப் இருந்தார். திருவண்ணாமலை கோவில் அறங்காவலர்கள் கோவிலுக்கு யானை வாங்கிக் கேட்ட போது நவாப்யானை வாங்கிக் கொடுத்தார். விஷாரத்திற்கு ஹஜ்யாத்திரை செல்வதற்காக மதரஸா பட்டினம் வந்த நவாப் உடல்நலம் குன்றி 1938, ஜனவரி 28-இல் தம்அலுவலகத்தில் காலமானார். அவரது மறைவிற்கு தமிழகச் சட்டசபை இரங்கல் தெரிவித்து தீர்மான நிறைவேற்றியது. வழக்கறிஞர் யாகூப் ஹஸன்சேட் விடுதலைப் போராட்ட வீரரான யாகூப்ஹஸன்சேட் ஒரு வித்தியாசமான மனிதர். இலண்டனில் பார்- அட்லா படித்தவர் என்றாலும் நீதிமன்றப்படிகளை அதிகமாக மிதிக்காதவர். தோல் தொழிலைத் தொடங்கிய அவர் தொழிலைத் தொடர முடியவில்லை. காரணம் அவர் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைச்சாலை செல்பவராய் இருந்தார். எனவே அவர் நவாப் சி. அப்துல்ஹக்கீம் தோல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே போராட்டக்களத்தில் இறங்கியும் சிறைக்கூடத்தில் தங்கியும் வாழ்க்கையை வித்தியாசமாக நடத்திக் கொண்டிருந்தார். சிறைக் கூடத்தில் இருந்த நாட்களை பாரிஸ்டர் வீணாக்க வில்லை; பயனுள்ள நாட்களாய் ஆக்கிக் கொண்டார். சிறையில் அவர் இரு நூல்களை எழுதினார். அவை: 1. நேர்வழி விளக்கம்- கஷ்ஷாஃபுல்ஹுதா 2. நேர்வழி காட்டும்நூல்- கிதாபுல்ஹுதா. 1925, 1926-களில் வெளியிடப்பட்ட இந்த இரு நூல்களுக்கும் மார்க்கப் பேரறிஞ சையித் சுலைமான்நத்வி (ரஹ்) அவர்கள் அணிந்துரை எழுதியிருந்தார். அக்கால மார்க்க அறிஞர்களான மெளலானா அப்துல்பாரி மஹல்லி, மெளலானா ஹுசைன்அஹ்மது மதனீ, மெளலானா அப்துல்ஜப்பார் மற்றும் வேலூர் ஜமீயத்துல்உலமாயே ஹிந்தின் அமைப்பாளர் மெளலானா அஹ்மத்சயீத் ஆகியோர் இரு நூல்களைப் பற்றியும் சிறப்பான கருத்தைத் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு வணிக நிறுவனங்களுடன் கடிதப் போக்குவரத்து, வெளிநாடுகளுக்குச் சென்று வருதல் என பாரிஸ்டர் பாடாற்றிக் கொண்டிருந்தார். ஒரு முறை வியாபார சம்பந்தமாக லண்டன் சென்ற பாரிஸ்டரை ‘கல்யாணபூதம்’ பிடித்துக் கொண்டது. லண்டனிலிருந்து பாரிஸ்டர் நவாபுக்கு ஒரு தந்தி அனுப்பினார். “நான் ஒரு துருக்கியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். ஆகவே எனக்கு ஐநூறு பவுன் அனுப்பி உதவுங்கள்’’ என்பதே”கட்டுக்கடா கடா" தந்தி பதித்த செய்தி. பாரிஸ்டர் நவாபிடம் அலுவலராய்ப் பணி செய்தாலும் நண்பரைப் போலவே நடத்தப்பட்டார். checkஉரூபா ஐநூறுக்குப் பணி செய்தாலும் ஆயிரம் வேலைகளைச் செய்வார். தந்தியைப் பார்த்துப்பு ன்னகைத்த நவாப், தம் எண்ண ஓட்டத்தைப் பகிர்ந்து கொள்ள நண்பர் பாங்கி ஹயாத்பாஷாவின் நிறுவனத்துக்கும் போனார். அந்த நிறுவனத்தின் முதலாளி மற்றும் அலுவலர்கள் மத்தியில் ‘’பார்த்தீர்களா யாகூப்ஹஸன் சேட் செய்த வேலையை! வியாபார சம்பந்தமாக அவரை லண்டனுக்கு அனுப்பினேன். ஆனால் அவர்மீது இப்போது கல்யாணபூதம் அல்லவா சவாரி செய்கிறது’’ என இனிமை கலந்த குரலில் கிண்டலாகக் கூறினார். மணம் முடிக்காமல் வாழ்ந்த பாரிஸ்டர் மணம் முடிக்கப் போவதைப் பற்றி மகிழ்ந்த நவாப் துருக்கிப் பெண்ணை மணக்க 500 பவுன் தொகையை உடனடியாக அனுப்பி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். ’தாருல்இஸ்லாம்" பா. தாவூதஷா கி.பி.1885-ல் தஞ்சை நாச்சியார் கோவில் அருகிலுள்ள கீழ் மாந்தூர் குக்கிராமத்தில் பிறந்து கும்பகோணத்தில் கல்வி பயின்றார். தமிழறிஞர் இராமானுஜாச் சாரியாரிடம் இலக்கியம், இலக்கணங்களைக் கற்ற பா.தா. கணிதமேதை இராமானுஜத்துடன் பயின்று அவருக்கு நண்பரானார். 1908-ல் மதரஸாபட்டின மருமகன் ஆனார்; பட்டினத்துக் கல்லூரிக்கு படிக்க வந்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழும் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனிடம் தத்துவமும் பயின்றார். மதுரை தமிழ்ச்சங்க தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றவர். 1912-இல் பி.ஏ. தேறினார். அதே ஆண்டில் மனைவியை இழந்தார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி. பணி செய்து கொண்டே மாவட்டத் துணை ஆட்சியராக சட்டத் தேர்வுகளில் தேறினார். 1915-ல் மறுமணம். 1917-ல் துணை நீதிபதி. 1921-இல் விழுப்புரத்தில் நீதிபதி. ஒன்பதாண்டுகள் அரசுப் பணியிலிருந்த பா.தா.வை கிலாஃபத் இயக்கம் கட்டியணைத்துக் கொண்டது. விடுதலைப் போர் விருப்பமுடன் ஏற்றுக்கொண்டது. ‘தாருல்இஸ்லாம்’ திங்கள் இதழ் தொடங்கப்பட்டது. தேச விடுதலையைப் பற்றிப் பேசிய இதழ் முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிய மூடப்பழக்கங்களை எதிர்த்தது. புரோகித ஆட்சியை வீழ்ச்சியுறச் செய்தல், தமிழில் இஸ்லாத்தை அறிதல், பெண்கல்வி, தமிழ்க் கல்வியோடு ஆங்கிலக்கல்வி, தேசிய விவகாரங்களில் பிராமணர்களின் வலையில் விழாமல் தடுத்தல் ஆகிய செயல்பாடுகளை பா.தா. முன்னெடுத்துச் சென்றார். இதைக்கண்டு பெரியார் ஈ.வெ.ரா. ‘தாருல் இஸ்லா பத்திரிகை ஆசிரியர் நம் கூட்டத்தைச் சேர்ந்தவர்’ என எழுதினார். 1927-ல் தாருல் இஸ்லாம் வார இதழானது. ‘தமிழ்த்தொண்டன்’ எனும் பெயரில் பா.தா. எழுதினார். 38 ஆண்டுகள் தென்றலையும் புயலையும் சந்தித்த தாருல் இஸ்லாம் வரவுக்கு மேல் செலவு கண்டதால் நிறுத்தப்பட்டது. இதழ் தொடங்கிய ஆண்டில் (1921) இங்கிலாந்திலிருந்து இஸ்லாமிய அழைப்பாளர் காஜா கமாலுத்தீன் மதரஸாபட்டினம் வந்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று 1922-ல் பா.தா. அழைப்புப் பணிக்காக ஐரோப்பா சென்றார். இலண்டனில் இருந்த போது "இஸ்லாமிக்ரெவியூ’ என்ற உலகப் புகழ்பெற்ற இதழி துணை ஆசிரியராகவும் பங்குபெற்றார். ஜெர்மனியும் சென்ற பா.தா.அழைப்புப் பணி செய்வதைப் பற்றி கமாலுத்தீனிடம் கற்று தாயகம் திரும்பினார். கம்பராமாயண விரிவுரையில்வல்லமை பெற்று ‘கம்பராமாயண சாகிபு’ என பெயர்பெற்று மயிலாப்பூர், மாம்பல மாந்தரை வளைத்துப்போட்டார். பா.தா. பன்மொழி அறிஞர். அவர் பிரெஞ்சு நாவலான ‘ல கோகன்த்த மோன்தே கிறிஸ்தோ’ எனும் பெரிய நூலை மொழிபெயர்த்து தம் இதழில் தொடராக வெளியிட்டார். ‘ஆயிரத்தொரு இரவுகள்’ அரபுக் கதைகளை மொழிபெயர்த்து தமிழ் தேசமே படிக்க வைத்தார். திருக்குர்ஆனின் பொருளுரையையும் விரிவுரையையும் (26 அத்தியாயங்களுக்கு மட்டும்) தம் 80-வது வயதில் வெளியிட்டார். பா.தா. சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தபோது சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் செயலாளராகப் பதவி வகித்தார். காங்கிரஸ்காரரான பா.தா. பின்னர் முஸ்லிம்லீக்கில் இணைந்தார். மேடைகளில் முழங்கினார். பா.தா.வின் புதல்வர் எம்.பி. அப்துல்ஜப்பாரும் எழுத்தாளரே! என்.பி.ஏ. எழுதிய ‘ஷஜருத்தூர்’ நாவல் மிகச்சிறப்பான படப்பிடிப்பு கொண்டது. இவர் எழுதிய ‘நபி பெருமானார் வரலாறு’ எனும் நூலை பூம்புகார் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பா.தா.வின் மருமகனே ‘முஸ்லிம்முரசு’ நிறுவனர் அப்துல்ரஹீம். 1969, பிப்ரவரி, 24ஆம் நாள் பா.தா. மதரஸாபட்டின மண்ணில் மறைந்தார். “காயிதே மில்லத்” முஹம்மது இஸ்மாயில் கி.பி.1896 ஜூன் 5-ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த முஹம்மது இஸ்மாயில் மதரஸாபட்டின குரோம்பேட்டையில் வாழ்ந்து 1972 ஏப்ரல் 5-ல் மறைந்தார். காயிதே மில்லத் தம்முடைய முக்கால் நூற்றாண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டதே அருமையான வரலாறு. விடுதலைப் போராட்டம் விரைவாக அழைக்க காயிதே மில்லத் தம் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். 1920-ல் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். அதே ஆண்டில் ஈரோட்டில் நடந்த மஜ்லிஸுல்உலமா மாநாட்டில் கலந்து கொண்டு மெளலானா அலீ சகோதரர்கள் பிரகடனப்படுத்திய கிலாஃபத் இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். முஸ்லிம்லீகின் தலைவர் ஜமால்முகம்மது பிரபல தோல் வணிகர். இவரின் தோல் ஏற்றுமதி நிறுவனம் ஜமால் முகைதீன் அன்கோ. காயிதே மில்லத் ஜமால் முகம்மது குழுமத்தின் மருமகன் ஆனதோடு அந்நிறுவனத்தின் அலுவலரும் ஆனார். 1923 நவம்பர் 19-ல் ஜமால் ஹமீதா பீவியின் கரம்பற்றிய போது காயிதே மில்லத் கனமான கதராடையோடு காட்சியளித்தார். தோல் நிறுவனத்தில் அலுவலராய்ச் சேர்ந்த காயிதே மில்லத் விரைவில் அதன் நிர்வாகியாகி பங்குதாரராகவு உயர்ந்தார். 1936-ல் காங்கிரசை விட்டு விலகிய காயிதே மில்லத் முஸ்லிம்லீக்கில் சேர்ந்து மதராஸ் ராஜதானி லீக்கின் தலைவரானார். 1947-ல் நாடு பிளவுபட அகில இந்திய முஸ்லிம்லீக்கின் தலைமையை ஏற்றார். அதற்கு முன் இடைக்கால அரசில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். சட்டப்பேரவை, மாநிலங்களவை, மக்களவை ஆகியவற்றில் இருபதாண்டு காலம் பாடாற்றியவர் காயிதே மில்லத். 1962-ல் முஸ்லிம்லீக் திராவிட முன்னற்றக்கழகத்தோடு கூட்டணி கண்டு 1967-ல் ஆட்சியமைக்க காரணமானவர் காயிதேமில்லத். தமிழகத்தைச் சேர்ந்த காயிதேமில்லத் கேரளத்தின் மஞ்சேரி நாடாளுமன்ற உறுப்பினராக 1962, 1967, 1971- ஆண்டுகளில் வென்று டெல்லியை வியக்க வைத்தார். ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவின் ஆட்சிமொழியாக தம்முடைய தாய்மொழியான தமிழே இருக்க வேண்டுமென்றும் அதற்குரிய பல தகுதிகள் பெற்ற மொழி தமிழென்றும் பேசி வடமாநிலத்தவரை வியப்பில் ஆழ்த்தினார். குடந்தை எஸ்.ஏ. ரஹீம் ‘கும்பகோணம் என்றவுடன் ரஹீம்தான் நினைவுக்கு வருவார். ரஹீம் என்றவுடன் கும்பகோணம் தான் நினைவுக்கு வரும்’ என தீரர் சத்தியமூர்த்தியால் பாராட்டப்பட்டவர் எஸ்.ஏ.ரஹீம். 1913-ல் கும்பகோணத்தில் பிறந்த ரஹீம் 19-ம்வயதிலேயே விடுதலைப் போராட்டக்களத்திற்கு வந்தவர். 1942-ல் கும்பகோணத்தில் நடத்திய "தென்னிந்தியப் பிரிவினை எதிர்ப்பு மாநாடு’ ரஹீமைப் பற்றி பத்திரிகைகளைப் பேச வைத்தது. பாகிஸ்தானைப் பிரித்துக் கேட்டவர்களை ரஹீமின் பேச்சு சுட்டெரித்தது. அதே ஆண்டில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த ரஹீம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட பின்தடையை மீறிக் கூட்டங்களில் பேச ஐந்து மாதச் சிறைத் தண்டனை பெற்றார். 1944-ல் மீண்டும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு ஆறு மாத காலம்அலிப்பூர், பெல்லாரி சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான ரஹீம் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து “ஓட்டைப்படகு” எனும் நூலை எழுதி வெளியிட்டார். “இந்தியா என்வீடு”, ‘விடுதலை முழக்கம்’, "வழிகாட்டிய உத்தமர்’ ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டார். மயிலாப்பூரில் வாழ்ந்த எஸ்.ஏ. ரஹீம் 1945-ல் காங்கிரசை விட்டு விலகி ஜெயப்பிரகாஷ் தலைமையில் பிரஜா சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்தார். 1946-ல் ராஜம் எனும் நங்கையை மணந்து அவரை மருத்துவம் படிக்க வைத்து டாக்டர் ஆக்கினார். தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்த ‘எஸ்ஏஆர்’ வாழ்க்கை நிகழ்வுகள் சுவையானவை. வாழ்வில் பேறாய்பெற்ற மூத்த மகன் டாக்டராகி கிறிஸ்துவப் பெண்ணை மணந்து இங்கிலாந்து சென்றுவிட்டார். மகளோ ஒரு முஸ்லிம் மாப்பிள்ளைக்கு மனைவியாகி அரபகம் சென்றுவிட்டார். அரசியல், எழுத்து என வாழ்ந்த எஸ்.ஏ.ரஹிம் 1985-இல் காலமானார். மேயர்அப்துல்ஹமீத்கான் தாதாகான் என்ற செல்வந்தரின் மகனாக மதரஸா பட்டினத்தில் 1896-ல் பிறந்த அப்துல்ஹமீத்கான் இந்திய விடுதலைப் போரில் சட்டமுறையிலான கிளர்ச்சியில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிதி வசூலித்துக் கொடுத்து உதவியவர். 1921-ல் கிலாபத் இயக்கத்தை மதராஸில் அமைத்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்த அவர் அதன் நடவடிக்கை பிடிக்காததால் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். மாநகராட்சி உறுப்பினரான போது அங்கு ஜனநாயக முனிசிபல் கட்சி அமைக்கப்பட்டது. அந்தக் கட்சிக்கு அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1935-ல் மாநகர மேயர்! மீண்டும் காங்கிரசில் சேர்ந்த ஹமீத்கான் சிறிது காலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருந்தார். 1937-ல் காங்கிரசிலிருந்து விலகி முஸ்லிம்லீக்கில் இணைந்தார். 1927 முதல் 1936 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர். 1937 சட்டமன்றத் தேர்தலில் வென்று மதராஸ்பட்டின உறுப்பினர். 1946-ல் வென்று கர்நூல் தொகுதி உறுப்பினர். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு பல்வேறு வகையில் உதவிய அப்துல்ஹமீத்கான் 1966 பிப்ரவரி 14-ம் நாள்காலமானார். கவி.கா.மு.ஷெரீஃப் காதர்ஷா முகம்மது ஷெரீஃப் 1914-ல் தஞ்சை மாவட்ட அபிவிருத்தீசுவரத்தில் பிறந்தார். புதுக்கோட்டை மாவட்ட குழந்தை விநாயகர் கோட்டை எனும் ஊரில் வளர்ந்தார். கூத்தாநல்லூர் அருகில் உள்ள வேலுக்குடியில் பதின்ம வயதை அடைந்தார். 1929-ல் வேலுக்குடி சென்றபின் சுயமரியாதை இயக்கத் தொடர்பு, பெரியாரின்அன்பு, குடியரசு இதழில்கவிதை. 18 வயதில் பெரியாருடன் கருத்து மாறுபட்டு காங்கிரசில் சேர்ந்தார். தேவி நாடக சபா தொடர்பு, கதை - பாடல்கள் சபாவுக்குக் கொடுத்தல். 1934-ல் முகம்மது மீரா பீவியை மணந்து திருவாரூர் வந்தார். ‘ஒளி’ எனும் மாதமிரு முறை இதழை நடத்தியபோது முரசொலியை நடத்திய கலைஞர் கருணாநிதியோடு தொடர்பு (1948). மாடர்ன் தியேட்டர்ஸ் வாசம், படங்களுக்கு பாடல்கள் எழுதுதல். “மந்திரி குமாரி” பட வாய்ப்பை கலைஞருக்கு மாடர்ன் தியேட்டரில் பெற்றுத்தருதல். முதல் மனைவி இறந்தபின் 1940-ல்ஜமீலா பீவியை மணந்தார். 1945-ல் ராபியா கனி நாச்சியாரை மணந்தார். ஒன்பது ஆண்மக்கள், இரு பெண்மக்கள், ஒரு வளர்ப்பு மகள்! விடுதலைக்குப்பின் சிலம்புச் செல்வரின் தமிழரசுக் கழக பொதுச் செயலாளராய் இருந்தார். 1952 முதல் 1969 வரை "தமிழ்முழக்கம்‘, ’சாட்டை’ இதழ்களை நடத்தினார். அதற்கு முன் ‘சிவாஜி’, ‘செங்கோல்’ ஆகிய இதழ்களில் துணையாசிரியராய் இருந்தார். 1967-ல் தமிழரசுக் கழகத்திலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். 1982-ம் ஆண்டு முஸ்லிம்லீக்கில் இணைந்து முழு நேர எழுத்தாளராகவும் ஆன்மிகவாதியாகவும் மாறினார். கவிஞர் தாம் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து "கவி. கா.மு. ஷெரீஃப்தலையங்கங்கள்’ எனும் நூலை வெளியிட்டார். மச்சகந்தி, கண்ணகியின் கனவு, தமிழரின் சமயநெறி, சிலப்பதிகார உரை, சீறா புராண உரை, கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடுகள், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், நபியே - எங்கள்நாயகமே, இறையருள்வேண்டல், வள்ளல்சீதக்காதி வரலாறு, இறைவனுக்காக வாழ்வது எப்படி?, இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா?, மகளே கேள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கவிச்செல்வம், கவிராயர், கவித்தென்றல், கவிதை ஞானி, மகாகவி, செந்தமிழ்ச் செல்வர் என பல பட்டங்கள். 1986-ல் தமிழக அரசின் திரு.வி.க. விருது. 1990 உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பரிசும் பாராட்டும். மந்திரி குமாரி, சர்வாதிசாரி, மாதவி, துளசி மாடம், அன்னையின் ஆணை, மாங்கல்யம், முதலாளி, பெண்ணரசி, சிவகாமி, நான் பெற்ற செல்வம், பணம் பந்தியிலே என 120 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். மதரஸாபட்டினம் திருவல்லிக்கேணி பச்சையப்ப செட்டி தெருவில் வாழ்ந்த கவிஞர் 1994 ஜூலை 7-ல் காலமானார். டாக்டர் ஏ.கே. சைனுதீன் டாக்டர் ஏ.கே. சைனுதீன் மதரஸாபட்டினத்து கிருஷ்ணாம் பேட்டைக்காரர். 1960-களில் பிரபலமாய் விளங்கிய மாநகராட்சி உறுப்பினரும்கள் வேண்டுவோர் கழகத் தலைவருமாய் இருந்த மருத்துவர்ஏ. கரீமின்புதல்வர். காங்கிரசில் சேர்ந்து பணியாற்றிய டாக்டர் ஏ.கே. சைனுதீன் டெல்லித் தலைவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தவர். பின்னர் தலித் சமுதாயத் தலைவர் திரு. இளைய பெருமாள் அவர்களுடன் இணைந்து தலித்-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திண்டிவனம் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். நாஞ்சில் நாட்டுக்காரரான டாக்டர் நாகர்கோவில் ஆஸாத் ஹோட்டல்காரர்களின் மருமகன். சதாவதானி சேகு தம்பிப்பாவலரின் புதல்வர கவிஞர் செந்தாமரை (கே.பி.எஸ். ஹமீது)யின் நண்பர். கவிஞர் செந்தாமரை தெரிவு செய்துகொடுத்த ‘சக்தி’ எனும் பொருள் தரும்அரபுச் சொல்லான ‘குவ்வத்’ எனும் இஸ்லாமியத் திங்களிதழை நடத்தியவர். குவ்வத்தின் பொறுப்பாசிரியர் பிரபல எழுத்தாளர் இருகூரான். இந்தோ - அரபு உறவுக் கழகத்தின் தலைவராகவும் இருந்த ஆசிரியர் அரு.கோபாலன் அவர்கள். டாக்டர் ஏகேஎஸ்ஓா ஆங்கில இதழையும் நடத்தினார். வில்லிவாக்கத்தில் இருந்த ‘இராஜ பிரிஞ்ஜவி’ அச்சகம் டாக்டருடையது. தளபதி திருப்பூர் மொய்தீன் திருப்பூரில் ஒரு கூட்டம்! அது நாகபுரி கொடிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைப் பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். திருப்பூர் மொய்தீன் பிழம்பாகப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் நடுவில்அப்போதைய அரசியல் நாயகர் நேருஜி வர திருப்பூராரின் பேச்சுக்குத் திரையிடுகிறார்கள். திரை போட்டதைக் கண்ட நேருஜி தடைபோட வேண்டாம் பேசட்டும் எனக் கூற திருப்பூரார் கூடியிருந்தோரை பேச்சால் வசப்படுத்தினார். தமிழ்மொழி தெரியாத நேருஜியையும் தம் சொற்பெருக்கால் வாய் பிளக்கச்செய்தார். அக்காலத்தில் பேச்சாளராகி நாடெங்கும் பயணித்த இருவரில் ஒருவர் திருப்பூரார்; இன்னொருவர் ஈரோட்டார். பெரியார் சென்ற ரயில் வண்டியில் திருப்பூரார் பல நேரங்களில் பயணித்துள்ளார். விடுதலைக்கு முந்தைய காலங்களில் காங்கிரசிலிருந்த திருப்பூரார் அதன்பின் முஸ்லிம்லீக்கர் ஆனார். அதன் தொடர்ச்சியாய் அவர் துறைமுகத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்கினார். அல்லாமா ஆ.கா. அப்துல்ஹமீத்பாகவி திருக்குர் ஆனை தமிழில் மொழி பெயர்த்துத் தந்த அல்லாமா அவர்கள் சேலம் ஆத்தூரில் பிறந்து காரைக்கால், மதராஸ் என வாழ்ந்தவர். 1876-ல் பிறந்த இவர் வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் மதரஸாவின் முதல்அணி மாணவர். ‘பாகவி’ ஆனபின் மதராஸில் தொழில் தொடங்கிய அவர், பின்னர் ஒரு ஜெர்மனி தொழில் நுணுக்க மேதையுடன் சேர்ந்து தண்டையார் பேட்டையில சாயத் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். அது முதல் உலகப்போர் காலம். ஆங்கிலேய அரசு எதிரி நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவரைக் கைது செய்ய தொழிலைத் தொடர முடியவில்லை. இந்தச் சமயத்தில் விடுதலை இயக்கமும் கிலாபத் இயக்கமும் அல்லாமாவை ஆரத்தழுவிக் கொண்டன. மேடைகளில் மெல்லிய பூங்காற்றாகவும் புயலாகவும் வீசிய அல்லாமா பெரியார், ராஜாஜி போன்றவர்களுடன் நட்புக் கொண்டார். அல்லாமா எழுதிய ‘இயற்கை மதம்’ எனும் நூலுக்கு பெரியார் அணிந்துரை தந்துள்ளார். ஆங்கிலத்திலும் உருதுவிலும் வந்துள்ள ‘இயற்கை மதம்’ காயிதே ஆஸம் முஹம்மது அலீ ஜின்னாவின் பாராட்டைப் பெற்ற நூலாகும். இதற்குப்பின் அல்லாமா ஓர் சரியான லட்சியப்பணியை 1926-ல் தொடங்கினார். அப்பணி 1949-ல் நிறைவுற்றது. அச்சிறப்பான பணி அல்லாமாவை பெரும் புகழ்பெற வைத்தது. திருக்குர்ஆனை முதல் முதலில் தமிழில் மொழி பெயர்த்த அல்லாமா 1955-ல் காரைக்காலில் காலமானார். "கப்பல்காரர்’ கே.எஸ்.ஜி.ஹாஜா ஷெரீஃப் கம்பளி ஷேக் அப்துல்காதர் குலாம் மொய்தீன் ராவுத்தரின் மகனாக ஹாஜா ஷெரீப் 1920-ல் பிறந்தார். ‘ஷேக் முகம்மது ராவுத்தர் ஷிப்பிங் ஏஜென்ஸீஸ்’ நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்த ஹாஜா ஷெரீஃப் காந்திஜியோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர். மதரஸாபட்டின காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசபிதா அனுப்பும் செய்திகள் ஹாஜா ஷெரீஃப் வழியாகவே வந்தன. ஒருமுறைப் பம்பாயில் நோய்வாய்ப்பட்ட தேசபிதாவுக்கு தேவையான மருந்தை இங்கிருந்து வாங்கி அனுப்பியவர் ஹாஜா ஷெரீஃப். 1942-ல் காந்திஜி வேவல்பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹாஜா ஷெரீஃப் காந்திஜியின் தனிச்செயலாளராக இருந்தார். சிந்தியா கப்பல் கம்பெனியின் ஏஜெண்டான ஹாஜா ஷெரீஃப் பெரும் தொழிலதிபர். அக்பர், நங்கோரி கப்பல்களில் அந்தமான், சிங்கப்பூர், மலேசியா செல்ல பெருங்கூட்டமே லிங்கிச் செட்டித் தெருவில் நிற்கும். எஸ்.எஸ். ரஜுலா, சிதம்பரம் கப்பல்களையும் இவர்களே இயக்கினார்கள். ஹாஜா ஷெரீஃப் மதரஸாபட்டினத்துப் பெரும்புள்ளி. இவர் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையில் மூன்றாண்டுகள் இருந்தார். 1987-88ல் இந்தியத் தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஆனார். தமிழ்நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பாக துறைமுகத் தொகுதியில் நின்று வென்று 1957 முதல் 1967 வரை மூன்று முறை உறப்பினராக இருந்தார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு காங்கிரசில் பொருளாளர், நிர்வாகக்குழு உறுப்பினர்; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என 40 ஆண்டுகள் உயிரோட்டத்தோடு செயல்பட்டவர் ஹாஜா ஷெரீப். 1965-66ல் சென்னை மாநகர ஷெரீஃபாகவும் எல்ஐசி, ஏர்இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் ஹாஜா ஷெரீஃப். காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகவும் தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் மூத்த துணைத்தலைவராகவும் பணியாற்றியவர் ஹாஜா ஷெரீஃப். 1968-ல் அண்ணா நகரில் நடந்த இந்திய மற்றும் சர்வதேசத் தொழில் வர்த்தகக் கண்காட்சியை நடத்தி உலகப்புகழ் சேர்த்தார். அவருடைய சிறப்பான பணியைப் பார்த்து இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை அளித்தது. பெரும் வணிகர் ஜமால்முஹைதீன் இராமநாதபுரம் மாவட்டத்தின் தென்மேற்கேயுள்ள மறவர் பூமியில் ஜமால்முஹம்மது வலி என்பார் செய்த அழைப்புப்பணி மகத்தானது. எங்கிருந்தோ வந்த இறை நேசச் செல்வர் மறவர்பலரை இஸ்லாமியராக்கி நரிக்குடியில் ஓய்வுறக்கம் கொண்டுள்ளார். வேம்பங்குடி மறவர்குடியைச் சேர்ந்த ஒருவர் ஜமால் முஹம்மது வலியின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தைத் தழுவி ஜமால் முஹம்மது ஆனார். ஜமால் முஹம்மதின் இரண்டாம் மகனுக்குப் பெயர் ஜமால்முஹைதீன். இளமையில் ஆடு மேய்த்தவர் சிறிய தந்தையின் வணிகத்தில் துணையாகி வெறுப்புற்றார். அதனால் கால்நடையாக நாகப்பட்டினத்திற்கு வந்து கடற்கரையில் கூலிவேலை செய்தார். நாகப்பட்டினத்தில் அடித்த காற்று திசைமாறி அடித்தது. நாகப்பட்டினத்திலிருந்த உறவினர் முத்துமீரா ராவுத்தர் ஜமால் முஹைதீனை மதரஸாபட்டினத்துக்கு அழைத்து வந்தார். உறவினர் ஜமால் முஹைதீனை மதரஸா யூசுபிய்யாவில் ஓத வைத்ததுடன் தம் மகள் கிள்ர்பீவியையும் மணம் முடித்துக்கொடுத்தார். ஆங்கிலேய வணிகர் ஈல்ஸ் துரையிடம் துபாஸ் - பின்வணிகம் - பின்னர் ஓர் ஆங்கிலேயக் கம்பெனியிடம் துபாஷ் - அதன் பின் கடன் வாங்கி தோல் வணிகம்! தோல் வணிகம் ஜமால் முஹைதீனை பல கோடிக்கு அதிபதியாக்கியது. தாம்படித்த மதரஸாவுக்கு உதவிய ஜமால் முஹைதீன் 1898-ல் ஜமாலியா கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். பல்வேறு அறக்கொடைகள் வழங்கிய வள்ளல் 1924-ல் குற்றாலத்தில் காலமானார். “கல்வியாளர்” ஜமால் முஹம்மது தோல் வணிகர் ஜமால் முஹைதீனின் புதல்வரான ஜமால் முஹம்மது 1888-ல் பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தோல் தொழிலுக்குப் பொறுப்பான அலுவலர் தேவைப்பட வணிக உலகில் கால்பதித்தார். உருஷ்யாவைத் தவிர ஐரோப்பாக் கண்டத்தை வலம் வந்ததோடு உண்மையான உலகறிவைப் பெற்றார். பெரும் வணிகர்களைச் சந்தித்த அவர் பெரிய மனிதர்களையும் கண்டு பேசினார். முதல் உலகப்போருக்கு முன் ஜமால் முஹம்மதின் செயல் திட்டத்தின்படி குவிக்கப்பட்ட தோல்கள் போருக்குப்பின் நல்ல விலைக்கு விற்கப்பட்டு பெருநிதியைக் குவித்தன. 1926-ல் இவர்களின் வணிக நிலையம் உச்சநிலையை அடைந்தது. சட்டசபை உறுப்பினர், அகில இந்திய வணிகக் கழகத்தை நிறுவியவர்களுள் ஒருவர், அதன்தலைவர் (1951), இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர், காந்திஜியோடு நேரடித் தொடர்பு கொண்டவர், ஆகாகானின் அன்புக்குரியவர் எனப்பொது அரங்கிலும் புகழ்பெற்றவர் ஜமால் முஹம்மது. 1906-ல் மதராஸ் மாநிலத்தில் முஸ்லிம்லீகை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த ஜேஎம் 1928 முதல் 1940 வரை அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றினார். தாராள மனப்பான்மை கொண்ட ஜே.எம். மாணவர்களின் படிப்புக்கு வாரி வாரி வழங்கினார். மாணவர் சமுதாயத்திற்கு இஸ்லாத்தை உரிய முறையில் எடுத்துரைக்க பெருமகன்கள் முகம்மது மர்மடியூக்பிக்தால், அல்லாமா இக்பால், சையது சுலைமான் நத்வி, மெளலானா மெளதூதி போன்றவர்களை மதராஸ் நகருக்கு அழைத்து வந்து சொற்பொழிவுகளை ஜேஎம் நிகழ்த்தச் செய்தார். மதரஸா ஜமாலியா, ஜமாலியா உயர்நிலைப்பள்ளி என கல்வி நிலையங்களை நிறுவிய ஜேஎம் பெயரில் திருச்சியில் ஒரு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. சூஃபி போன்று வாழ்ந்த ஜேஎம் 1949 நவம்பர் 7-ல் மரண மடைந்தார். அகில இந்தியா, அயல்நாடுகள் எங்கும் பெயர் பெற்ற ஜேஎம் போன்றவர் எவரும் இன்று நம் தமிழகத்தில் இல்லை. "சதாவதானி: சேகுதம்பிப்பாவலர் நாகர்கோவில் கோட்டாறு இளங்கடையில் 1874-ல் பிறந்த பாவலர் திருக்குர்ஆனையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நிறைவாய்க்கற்றவர். பைந்தமிழ்ப் பாவலராகவும் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். 1895-ல் ஞானியார் சாகிபு பாடல்களை அச்சிட மதராஸ் வந்தார். பாவலரை அச்சக உரிமையாளர் இட்டா பார்த்தசாரதி நாயுடு தம் அச்சகத்திலேயே பணியாற்றச் செய்தார். அச்ச கத்திலிருந்தபடியே ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்திரன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகவும் இருந்தார். 1906-ல் அவதானம் செய்யத் தொடங்கிய பாவலர் ‘மகாமதி சதாவதானி’ என்ற பட்டத்தைப் பெற்றார். இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை சிலர்மருட்பா என வாதிட இல்லை அது அருட்பாதான் எனக்கூறி ‘கலைக்கடல்’ எனும் கெளரவத்தைப் பெற்றார். பன்னூல் ஆசிரியரான பாவலர் 1950 பிப்ரவரி 13 -ஆம் நாள் கோட்டாறில் காலமானார். இவரின் இரு மகன்கள் பக்கீர்மீரானும் கே.பி.எஸ். ஹமீதும். இவர்களில் ஹமீது எனும் கவிஞர் செந்தாமரை அகில இந்திய ரேடியோவில் பணியாற்றினார். பெயரர் சேகுத்தம்பி ‘முழக்கம்’ எனும் இதழை மதராஸில் நடத்தினார். மெளலவி சையத்முர்துஸா பகதூர் திருச்சியைச் சேர்ந்த மெளலவி சையத்முர்துஸா தென்சென்னை உறுப்பினராக மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (1926). அப்போது காங்கிரசில் இரு பிரிவுகள் இருந்தன. ஒரு பிரிவு தேர்தலைப் புறக்கணித்தது; மற்றொரு குழு தேர்தலில் நின்று ஆட்சியில் பங்கேற்றது. இரண்டாவது குழு சுயராஜ்ஜியக் கட்சி என அழைக்கப்பட்டது. சுயராஜ்ஜியக்கட்சியைச் சேர்ந்த மெளலவி பின்னர் முழுமையான முஸ்லிம்லீக்கர் ஆனார்; முக்கிய பொறுப்புகள் வகித்தார். இலக்கியவாதி "மஹதி: முஸ்லிம் எழுத்தாளர்களில் மிக வித்தியாசமான எழுத்தாளர் ‘மஹதி’. அந்த வித்தியாசமான எழுத்தாளர் பல வித்தியாசமான நூல்களைத் தந்துள்ளார். பன்னூலாசிரியரான மஹதியின் இயற்பெயர் சையத்அஹ்மத். மதுரையில் 1907 மே ஐந்தாம் தேதி பிறந்த மஹதி மெட்ரிக் குலேசன் வரை படித்தவர். ஆற்காட்டு நவாபின் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்ததால் உருது, பார்ஸி, அரபி மொழிகள் வாயாலும் கையாலும் வலம்வ ந்தன. உருதுக் கவிஞரின் புதல்வராய்ப் பிறந்த மஹதி 1928-ல் போடி நாயக்கனூர் உயர்நிலைப்பள்ளியின் உருதுமொழி ஆசான் ஆனார். ஓரிடத்தில் கட்டிப் போட்ட ஆசான் பணி புளித்ததால் மஹதி பல நிறுவனங்களில் மேலாளர்பணி செய்தார். 1928-ல் தீன்துனியா, ஜமீந்தார் ஆகிய பிரபல இதழ்களில் எழுதிய மஹதி 1930-ல் ’ஆனந்தபோதினி’யில் சிறுகதை எழுதினார். “முன்ஷி” எனும் புனைப்பெயரில் கலைமகளிலும் கல்கியிலும் கதையெழுதி தமிழ்வாசகர்களைக் கவர்ந்தார். 1933-ல் மதுரையிலிருந்து “வெடிகுண்டு” எனும் வாரயிதழை வெளியிட்டார். பெரியாரைப் பெரிதும் புகழ்ந்தார். தோழர் ப.ஜீவானந்தம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “சண்டே அப்சர்வர்” கே.எம். பாலசுப்ரமணியம் ஆகியோரை நண்பர்களாய்க் கொண்டார். 1934-இல் ‘ருஷ்யப்புரட்சி’ எனும் நூலை வெளியிட்டார். 1950-ல் ‘நவயுகம்’ திங்களிதழை மஹதி வெளியிட்டார். நவயுகம் நின்ற பின்பும் அவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டே இருந்தார். கலையும் எழுத்தும் மக்களுக்காகவே என செயல்பட்ட மஹதி 1957-ல் ‘இமயத்தின் சிரிப்பு’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். சமூக, சரித்திரக்கதைகளை எழுதிய மஹதி கட்டுரைகள் பலவற்றை எழுதியதோடு மொழிபெயர்ப்புகளும் செய்தார். மெளலானா மெளதூதியின் ‘ரிஸாலே தீனியாத்’ எனும் நூலை ‘இதுதான் இஸ்லாம்’ என வெளியிட இஸ்லாமிய நிறுவனம் காரணமானது. ‘மணிவிளக்கு’ திங்களிதழில் ‘தங்கநிலா’ எனும் சரித்திரப் புதினத்தைத் தொடராக எழுதிய மஹதிக்கு 1961 நான்கு வரலாற்று நூல்களை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து அவரின்பல தொடர்களை இஸ்லாமிய இதழ்கள் வெளியிட்டன. 1961-ல் தொடங்கப்பட்ட முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவரான மஹதி 1974-ல் நடைபெற்ற இரண்டாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதுபெரும் எழுத்தாளர் எனப் பாராட்டப்பட்டார். மதுரையில் பிறந்த மஹதிக்கு மதராஸ்பட்டினமே செயற்களமானது. 1974 ஆகஸ்டு இரண்டில் மறைந்த எழுத்தாசான் மஹதிக்கு மேலும் ஒரு சிறப்புண்டு. அது கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை என்ற சிறப்பு. பன்மொழி அறிஞர்எம். அப்துல் வஹ்ஹாப் தாய்மொழி தமிழோடு மலையாளம், அரபி, ஆங்கிலம், உருது எனப் பன்மொழிகள் அறிந்த எம்.அப்துல்வஹ்ஹாப் செங்கோட்டையில் 1920-ம் ஆண்டு 29-ம் தேதி பிறந்தார். திருவனந்தபுரம், மதராஸ், அலிகர் ஆகிய ஊர்களில் கற்ற ‘எம்.ஏ’ தபால்தந்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனந்த விகடனிலும் பிரசண்ட விகடனிலும் சிறுகதைகள் எழுதியவர், ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் வரைந்தார். முஸ்லிம், கதிர், மணிவிளக்கு, பிறை என இதழியல் துறையில் முத்திரை பதித்த பன்மொழி அறிஞரின் பெயர்சொல்லும் நன்னூல் ’தித்திக்கும்திருமறை’யாகும். திருக்குர்ஆனைத் தமிழில் தந்த பேரறிஞர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்திலும் முக்கிய பங்காற்றியவர், சிறந்த பேச்சளாரும் ஆய்வாளரும் ஆவார். பன்னூலாசிரியரான பேரறிஞர் பல நாடுகளுக்கும் பயணித்து பல்வேறு அரங்கங்களைச் சிறக்கச்செய்தவர். ஆலந்தூர்லப்பைத் தெருவில் வாழ்ந்து அத்தெருவை மனங்களில் நிலைக்க வைத்தவர். இலக்கியச்சுடர்“ஹசன்” கல்கி, சாண்டில்யன் போன்றோருக்கு நிகராக வரலாற்று நாவல்களைப் படைத்த ‘ஹஸன்’ எனும்மு. செய்யது முஹம்மது 1918 ஜனவரி ஒன்றில் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவரின் முன்னோர் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். 1934-ல் பள்ளிப்படிப்பை முடித்த ஹஸன் தந்தையார் ரங்கூனில் பணி செய்ததால்1935-ல்பர்மா சென்றார். அப்பயணம் அவரைப்பன் மொழி அறிஞர் ஆக்கியது. தமிழோடு ஆங்கிலமும் அறிந்திருந்த ஹஸனுக்கு பர்மாவில் அரபு, உருது, பார்ஸியோடு பர்மிய மொழியையும் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1938-ல் நாடு திரும்பி தபால்தந்தித் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றார். பணியிலிருந்த போதே எழுத்துப்பணியை மேற்கொண்ட ஹஸன் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார். 1954-ல் ‘மஹ்ஜபீன்’ சரித்திரப் புதினத்தை ஹஸன் எழுதத் தொடங்கினார். இஸ்லாமிய வரலாற்றுப் புதினத்தை தமிழில் முதன் முதலில் எழுதிய ஹஸன் புனித பூமியிலே, சிந்து நதிக்கரையினிலே, மேற்கு வானம், சொர்க்கத்துக் கன்னிகை என பல புதினங்களை எழுதினார். ஹஸன் நாவல்களில் ‘சிந்து நதிக்கரையினிலே’ நாவல்தமிழக அரசின் பரிசைப் பெற்றது. அக்காலத்தில் ‘மஹ்ஜபீன்’ நாவலைப் படித்தவர்கள் தம் பெண்பிள்ளைகளுக்கு அப்பெயரைச் சூட்டியது ஹஸனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. படைப்பாளி மட்டுமல்ல ஹஸன், அவர் ஒரு சிறந்த இதழாளர். ‘முஸ்லிம்முரசு’ திங்களிதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றிய ஹஸன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பலவும் வெளியிட காரணமானவர். 1979-ல் கொழும்பில் நடந்த நான்காவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பொற்கிழி, கீழக்கரையில் நடந்த ஐந்தாவது மாநாட்டில் பத்தாயிரத்தோடு விருது, 1997-ல் கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. நினைவுப்பரிசு என பல பரிசுகள்பெற்று புகழேந்தியானவர். பல்கலைக்கழக ஆய்வுகளுக்காக இவரின் நூல்கள் பயன்பட்டுள்ளன. மலையாள சிங்கள மொழிகளில் இவரின் படைடப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பதிப்புச் செம்மல் ‘செய்யதுனா’ வின்நட்பு வட்டம் மிகப்பெரியது. படைப்பாளிகள், பேராசிரியர்கள் என அவரைத்தேடி வந்தோர் அதிகம். முதுபெரும் அறிஞர் ஹஸன் 2005, ஏப்ரல் ஐந்தில் தம் 88-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். “நூருல்இஸ்லாம்” முஹம்மது யூசுப்பாகவி “தாருல்இஸ்லாம்” இதழில்பணியைத்தொடங்கிய யூசுப்பாகவி ‘நூருல்இஸ்லாம்’ ஆசிரியர்ஆனார். ‘தாருஸ்ஸலாம்’ ஆசிரியர் பா.தாவூத்ஷா துணையாசிரியராய் வந்த பாகவியைத் தம் சகலராக்கிக் கொண்டார். சகலரோ தாருல் இஸ்லாமின் பங்காளியாகி பின்னர் நூருல் இஸ்லாமின் உரிமையாளர் ஆனார். திருக்குர் ஆனைக்கற்று ஹாபிஸ் ஆன பாகவியார் திருக்குர்ஆனின் ஒலிப்பேழை போலவே விளங்கினார். பன்முகப் பார்வையுடன் மார்க்க, சமூக, அரசியல் கண்ணோட்டத்துடன் இதழை நடத்தினார். நெல்லிக் குப்பத்தில் பிறந்த பாகவி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை எனச்சென்று உரைமேடைகளைச் சிறப்பித்தார். இரண்டாம் உலகப் போருக்குப்பின் மலேசியா சென்ற பாகவி ‘தேச நேசன்’ தினசரியில் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றினார். பன்னூல் ஆசிரியரான பாகவி தாருல் இஸ்லாம் புக்டெப்போவையும் நடத்தினார். பெண்களரசியர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் போன்றவை பாகவியாரின் பெயரை என்றும் கூறுபவை. இவர் தொடங்கிய மற்றுமொரு மாத இதழ், அறவிளக்கு. ரானா பாவன்னா மூனா கனி (ஆர்.பி.எம்.கனி) இரவணசமுத்திரம் பால் முஹம்மது கனியென்றால் உங்களுக்குத் தெரியாது. ஆர்.பி.எம். கனி என்றால் அனைவருக்கும் தெரியும். வழக்குரைஞர் படிப்பை முடித்து விட்டு பத்திரிகையாளர் ஆனவர் ஆர்பிஎம். சிங்கப்பூர், "மலாயா நண்பன்’ தினசரியில் ஓராண்டு காலம்ஆசிரியராக இருந்தவர் ஆர்பிஎம். பத்திரிகையாசிரியர், படைப்பாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், அச்சக உரிமையாளர் எனப் பன்முகங் கொண்ட ஆர்பிஎம் ‘மெய்ஞ்ஞானப்பேரமுதத்தை’ மடை திறந்துவிட்டவர். பாரசீகப் பெருங்கவிஞர்கள், அல்லாமா இக்பால், இக்பால் கவியமுதம், இக்பாலும் பாகிஸ்தானும், மெளலானா ரூமியின்மஸ்னவீ, இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் எனப்பல நூல்களை எழுதிய ஆர்பிஎம் தென்காசியில் ‘அருள்நூல்அச்சகம்’ எனும் அச்சகம் அமைத்து தம் நூல்களை வெளியிட்டார். பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம் பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். தேன்சிட்டு, பொன்னிக்குருவி, புறா, தூக்கணாங்குருவி ஆகியவை சாதுவான பறவைகள். இந்த நான்கு பறவைகளும் கலந்த ஒரு பறவை எப்படியிருக்கும்? அது ‘ஆசிரியர்’ அப்துற்றஹீம் போலிருக்கும். சங்கதிகளைச் சேர்ப்பதில் தேன்சிட்டு, அழகும் வண்ணமும் கலந்து மகிழ்விப்பதில் பொன்னிக்குருவி, விண்ணில் பறந்து மண்ணில் நடை பயில்வதில் அமைதிப்புறா, யாரிடமும் கற்காமல் கூட்டை அமைப்பதில் வித்தகப் படைப்பினமாய் தூக்கணாங்குருவி. நான்கு பறவைகளின் கலவையாய்த் தான் வாசகருக்கு - ஆசிரியர் திகழ்கிறார். இராமநாதபுரம் தொண்டியில் பிறந்து பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியரான எம்ஆர்எம் ‘ஆசிரியர்’ எனவே குறிப்பிடப்பட்டார். அவருடைய சாதனையை வேறு எந்த முஸ்லிம் எழுத்தாளரும் செய்ததாகத் தெரியவில்லை. ‘சுதந்திர நாடு’ என்ற நாளிதழில் ஆசிரியர் பணியாற்றி தொடர்ச்சியாய் செயற்கரிய செயல்களைச் செய்த பன்னூலாசிரியரின் படைப்புகளை ஆறு வகையாய்ப் பகுக்கலாம். வாழ்க்கை வரலாறு, வாழ்வியல், சமயநெறி, மொழிபெயர்ப்பு, கலைக்களஞ்சியம், கவிதைப்படைப்பு என ஆறு வகையாய்ப் பகுக்கலாம். தமிழில் சுயமுன்னேற்ற நூல்களை எழுதிய முன்னோடியான ஆசிரியரின் “வாழ்க்கையில்வெற்றி” பல பதிப்புகளைக் கண்டுள்ளது. ‘நபிகள்நாயகம்’ நூலும் அவ்வாறே பல பதிப்புகள் கண்டுள்ளது. ‘இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்’ ஒன்றே போதும் ஆசிரியரைப் பற்றி தமிழுலகம் காலமெல்லாம் பேச! நீதிபதி பஷீர் அஹமது சயீத் திண்டிவனத்துக்கும் மரக்காணத்துக்கும் நடுவில் உள்ள ஊர் முருக்கேரி. முருக்கேரியின் வடக்கில்மிக அருகில்உள்ள ஊர்சிறுவாடி. இங்கு ஒரு சிறிய பள்ளிவாசலும் விரல்எண்ணிக்கையில் சில முஸ்லிம் குடும்பங்களும் உள்ளன. இங்கு தான் ஒரு வருங்கால நீதிபதி பிறந்தார். அந்த நீதிபதியின் பெயர் பஷீர் அஹமது சயீத். தொடக்கக்கல்வியை முருக்கேரியிலும் திண்டிவனத்திலும் படித்த ஜஸ்டிஸ் கல்லூரி, சட்டக்கல்விகளை மதரஸாபட்டினத்தில் முடித்தார். வழக்குரைஞரான அவர்பொது சேவைகளிலும் ஈடுபட்டார். அத்தொடர்பில் மதராஸ்பட்டினத்தில் செயல்பட்ட தென்னிந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவராகவும் ஆனார். இச்சங்கமே ‘மியாஸி’ எனக் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் தான் ராயப்பேட்டையில் புதுக்கல்லூரியை உருவாக்கியவர்கள். மியாஸியின் தலைவராய் இருந்த இவரை மீர்சாகிப் பேட்டை அப்துல் மஜீத் தோற்கடிக்க இவர் மியாஸியை விட்டு வெளியேறினார். வழக்குரைஞராகயிருந்த பிஏஎஸ் நீதிபதியானார். அதன் பின் ஒரு கல்விக்கழகத்தை (எஸ்.ஐ.இ.டி.) அமைத்து அதன் மூலம் தேனாம்பேட்டையில் ஒரு பெண்கள் கல்லூரியை அமைத்தார். அதன்பணி ஆலமரமாய் வளர்ந்து விழுதுகளைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது. நீதிபதி மு.மு. இஸ்மாயில் நாகூரில் எளிய குடும்பத்தில் பிறந்து மதரஸாபட்டின சட்டக்கல்லூரியில் பயின்று அங்கேயே விரிவுரையாளர் ஆனவர் முமுஇ. அதன்பின் கூடுதல் வழக்கறிஞராகி 1967-ல் புதிதாய் உருவான டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியானார். டெல்லி நீதிமன்றத்தை அலங்கரித்தவர் பின் மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாகி தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார். கம்பனில் தோய்ந்தவர் தொடர்ந்து ஐம்பதாண்டுகள் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்து கொண்டார். இஸ்லாமிய இலக்கியக்கழக மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அடைக்கலம், தாயினும், செவிநுகர்கனிகள், இலக்கிய மலர்கள், இனிக்கும் இராஜநாயகம் என நீதிபதி எழுதிய நூல்கள் இருபதைத் தாண்டும். "சிராஜுல்மில்லத்’ ஆ.கா.அ. அப்துஸ்ஸமது அரசியலில் நுழைந்து அதிக காலம் நாடாளுமன்றம், சட்டமன்றம் என பணியாற்றிய பெரும்புள்ளி சிராஜுல்மில்லத்தாகவே இருப்பார். 1964-ல் ராஜ்யசபா உறுப்பினர். 1976 வரை அப்பதவியில் இருந்த சிராஜுல்மில்லத் 1980-ல் மக்களவை உறுப்பினர். 1985-இல் சட்டமன்ற உறுப்பினர். 1990-91-ல் மீண்டும் மக்களவை உறுப்பினர். ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் செங்கோட்டையிலும் செயின்ட் ஜார்ஜ்கோட்டையிலும் தடம்பதித்திருக்கிறார். கல்லூரி காலத்து வெற்றிப்பேச்சாளர், எம்ஏ பட்டதாரி, கட்சித் தலைவர், எம்பி, எம்எல்ஏ, மணிவிளக்கு ஆசிரியர், மணிச்சுடர் நிறுவனர், சிறந்த பேச்சாளர், சீரிய எழுத்தாளர் என சிராஜுல்மில்லத் பற்றிய பன்முகங்கள் பாராட்டத்தக்கவை. அரசியல், சமுதாயம், இலக்கியம், மார்க்கம் எனப் பயணித்த மாண்பாளர் உதிர்த்த மொழி என்றும் நிலைத்து நிற்கும். செம்மொழியான அம்மொழி: இஸ்லாம் எங்கள் வழி; இன்பத்தமிழ் எங்கள் மொழி. ஐ.என்.ஏ. அமீர்ஹம்ஸா ஐ.என்.ஏ. எனும் இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றி எழுதுபவர்கள் எம்.கே.எம். அமீர்ஹம்ஸாவைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. 1943 - இரங்கூனில் ஐஎன்ஏயின் தலைமையகம் இருந்தது. அங்குள்ள சிட்டி ஹாலில் பர்மா வாழ் இந்தியர்கள் நேதாஜிக்கு வரவேற்பு விழா நடத்தி மாலைகள் அணிவித்தனர். அம்மாலைகளை நேதாஜி இயக்க நிதி சேர்ப்பதற்கு ஏலம்விட்டார். அம்மாலைகளில் ஒன்றை அமீர்ஹம்ஸா மூன்று லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். 1944- இல் நேதாவிக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அமீர்ஹம்ஸா ஒரு வைர மோதிரத்தைப் பரிசாக வழங்கினார். அமீர் ஹம்ஸாவின் தந்தை ரங்கூனில் நகைக்கடையும் துணிக்கடையும் வைத்திருந்தார். நேதாஜியின் அணுக்கத் தொண்டராக விளங்கிய அமீர்ஹம்ஸா இந்திய தேசியராணுவம் வெற்றி வாய்ப்பை இழக்க ஆங்கிலேயரால் பல துன்பங்களை அனுபவித்தார். பர்மா விடுதலை பெற்றபோது தம்சொத்து சுகங்களை இழந்த அமீர்ஹம்ஸாவின் குடும்பம் மதரஸாபட்டணம் வந்து சேர்ந்தது. பிராட்வே பகுதியில் வாழ்ந்த பெரியவர் அமீர்ஹம்ஸா மத்திய மாநில அரசுகளின் உதவி நிதி பெற்று தம் வாழ்நாளின் இறுதிப்பகுதியைக் கழித்தார். அண்மையில் அவர் காலமானார். நடிகர் எம்.கே. முஸ்தபா’ சிவகங்கைச் சீமை ‘திரைப்படத்தில் சின்ன மருதுவாக வருவார், ’மனோகரா’ படத்தில் தலையில்லாமல் வருவார், ‘திருடாதே’ படத்தில் நாயகியின் அண்ணனாக வருவார். இவ்வாறு பல படங்களில் நடித்த எம்கேஎம் புரட்சி நடிகர்எம்.ஜி.ஆர்ரின் நண்பர். சிவகங்கை மாவட்டம் பூங்குடியில்பிறந்த எம்கேஎம் 1970-களில் அண்ணலாரின் வாழ்க்கையை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக நடத்தியவர். தாயகத்தோடு நில்லாமல் நிகழ்ச்சியைக் கிழக்காசிய நாடுகளிலும் நிகழ்த்திக் காட்டியவர். இன்றைய திரைப்படத் தயாரிப்பாளர் நிக்ஆர்ட்ஸ்’ எஸ்.எஸ். சக்கரவர்த்திக்குச் சொந்தக்காரர். கம்பம்பீர் முகம்மது நடிகர் எம்கேஎம்முக்கு முன் கம்பம்பீர் முகம்மது "அல்லி அர்ஜுனா’ எனும் திரைப்படத்தை இயக்கியவர். காவல்துறையில் ஆய்வாளராய் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் விடுதலைப் போராட்ட வீரர், பாவலர், எழுத்தாளர், நாடகக்காரர் என வாழ்க்கைப் பாத்திரங்களை ஏற்றவர். "கவியோகி’ தண்ணன்மூஸா இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்து இளமைக் காலத்தில் தி.மு.கழகச் செயல்வீரராய்த் திகழ்ந்தவர். பின்னர் கவிஞராய்த் திகழ்ந்து கவி.கா.மு. ஷெரீஃப் தலைமையில் அமைந்த இஸ்லாமியத் தமிழ்க் கவிஞர் மன்ற செயலாளர் ஆனவர். இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை, சமரசம்போன்றவற்றிற்கு தூண்டுகோலாய்நின்றவர். சீதக்காதி அறக்கட்டளை பரிசு பெற்ற இவரின்"செளந்தர்ய முத்திரை’ எனும்நூலுக்கு மதிப்புரை எழுதியபோதுதான்பேராசிரியர்பெரியார்தாசன்இஸ்லாத்தின்சுகந்தத்தை முகர்ந்தார். தமிழுலகுக்கும் தமிழ் இஸ்லாமிய உலகுக்கும் உறவுப்பாலமாக விளங்கிய “மூஸா காக்கா’ பல தமிழறிஞர்களை அன்பர்களாக பெற்றிருந்தார். அவர்கள் ‘முரசொலி’ அடியார், ‘முரசொலி’ பாண்டியன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சின்னக்குத் தூசி, வரலாற்றாய் வாளர்௧. திருநாவுக்கரசு, கவிஞர்சுரதா, பிரபல இந்தி மொழிபெயர்ப்பாளர் செளரிராஜன், ‘ஒய்எம்சிஏ’ பட்டிமன்ற பக்தவத்சலம், பேராசிரியர் அ.மார்க்ஸ்,”பாரிநிலையம்’ செல்லப்பன், "முல்லை’ முத்தையா, கவிஞர் மறைமலையான், சிலம்பொலி செல்லப்பனார் எனப்பலர். காயல் எஸ்.எம். ஐக்கரியா 20.2.1995-ல் தின மணிக்கதிர் முகப்புக் கட்டுரையொன்றை வெளியிட்டது. அச்சிறப்புக் கட்டுரையின் தலைப்பு: ஒரு நட்பின்கதை. அட்டையில் பெரியாரின் படத்தோடு அவரின் நண்பரின் படமும் வரையப்பட்டிருந்தது. ஓவியத்தை வரைந்தது பிரபல ஓவியர் மணியம் செல்வன். கட்டுரையை எழுதியவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்‘சங்கொலி’ ௧. திருநாவுக்கரசு. பெரியாரின் அந்த நண்பர்யார்? அந்த நண்பரின் பெயர்எஸ்.எம். ஜக்கரியா, மண்ணடியில் வாழ்ந்த காயல்பட்டினக்காரர். திராவிட இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீண்ட காலத் தொடர்புண்டு. அத்தொடர்பில் முதல் அணியைச் சேர்ந்தவர் ஜக்கரிய்யா. திராவிட இயக்க இதழியல் வரலாற்றில் “பொன்னி” எனும் ஏட்டுக்குத் தனியிடமுண்டு. அது நின்றபின் அதைப்போல “கதிரவன்” எனும் இதழை வெளிக் கொணர்ந்தவர் எஸ்எம்இஸ்ட். பெரியாரின் நெருங்கிய தோழரும் இயக்கக் கண்மணியுமான எஸ்எம்இஸட் கறுப்புச்சட்டைக்காரர் மட்டுமல்ல, அரசியல், இலக்கிய, கலையுலக நண்பர்கள் பலரையும் பெற்றிருந்தவர். 1949, ஜனவரி 15-ல் அவர் பெரியாரின் அறிவுரைப்படி பிராட்வேயில் முதன்முதலாக திருக்குறள் மாநாட்டை நடத்தினார். திராவிட இயக்கச் செய்திச் சுரங்கமாக விளங்கிய எஸ்எம்இஸட் 2004, ஜனவரி 24-இல் மதராஸில் மரணமடைந்தார். திருப்புத்தூர்க்காரர்கள் “திருப்புத்தூரைச் சேர்ந்தவர்கள் இருவர் இப்போது எழுத்தாளர்களாக உள்ளோம்’’ எனக்கூறிய திருப்புத்தூர் வி.நூர்முஹம்மது 1942-இல்”கதிர்" எனும் இதழை நடத்தியவர். கதிர் ஆசிரியர் குறிப்பிட்ட இருவரில் இன்னொருவர் யார்? அவர்தான் ‘சமரசம்’ இதழைத் திருச்சியில் தொடங்கிய சுல்தான் பக்தாதி. 1937-ல் இந்தியை எதிர்த்து நடந்த திருச்சி - மதராஸ் கால்நடைப் பயணத்தில் கலந்து கொண்டவர். வி.நூர்முஹம்மதை சிறுகதை முன்னோடி, சிறந்த பத்திரிகையாளர் எனலாம். இவர் எழுதிய ‘சம்மதமா?’ எனும் கதை ஒரு புரட்சிகரமான படைப்பு. அதே தலைப்பில் 1952-இல் சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. மணிவிளக்கு, அறமுரசு ஆகிய இரு இதழ்களிலும் பணியாற்றிய நூர் முஹம்மது உருவகக்கதைகளும் ஒரு பக்கக்கதைகளும் எழுதினார். மணிச்சுடர், பிறை, நண்பன் இதழ்களிலும் கதை, கட்டுரைகள் எழுதிய நூர் முஹம்மது பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். சுல்தான் பக்தாதி, நூர் முஹம்மது ஆகிய இருவருடன் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு திருப்புத்தூர்க்காரர், “சமுதாயக்கவிஞர்” தா. காசிம். “தென்றல்காற்றே கொஞ்சம்நில்லு” எனும் தெவிட்டாத பாடலுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ‘சரவிளக்கு’ இதழை நடத்தினார். சிறந்த கவிஞரான தா.கா. ஒலிப்பேழைகளும் வெளியிட்டுள்ளார். மதராஸ்பட்டின துணை மேயராக விளங்கிய ஹாஜி சிலார்மியான் நடத்திய ‘பிறைக்கொடி’ எனும் ஏட்டின் பொறுப்பாசிரியராகவும் சமுதாயக் கவிஞர் இருந்தார். இயக்குநர் ‘ஜெனோவா’ நாகூர் கோடம்பாக்கம் - வடபழனியில் சினிமா ஸ்டூடியோக்கள் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது கீழ்ப்பாக்கம் தோட்டத்தில் ஒரு ஸ்டூடியோ தொடங்கப்பட்டிருந்தது. அதன் பெயர் நியூடோன் ஸ்டூடியோ. திரையுலகில் புதுக்குரலாக ஒலித்த அந்த நியூடோன்ஸ் டூடியோவின் உரிமையாளர்களில் ஒருவர் இயக்குநர் எஃப். நாகூர். நெல்லைச் சீமையிலிருந்து வந்து மதரஸா பட்டினத்தில் கால்பதித்த அவர் ஓர்அற்புதக்கலைஞர். கலை நுணுக்கத்தோடு குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களைத் தயாரித்து மெரினாவில் விற்ற அவர் திரைச் சிற்பியானது பேருழைப்பிற்குக் கிடைத்த பெரிய வெற்றி. திரைப்படத் தயாரிப்புக்கான அரங்கங்களை அமைத்த கலை இயக்குநர் திரைப்படங்களையே உருவாக்கும் மாமேதையானதை திரையுலக வரலாறு சொல்லிக் கொண்டேயிருக்கும். ஜெனோவா, அமரகவி, குடும்ப விளக்கு, ஞான செளந்தரி, மங்கையர்க்கரசி, லைலா மஜ்னு போன்றவை நாகூரின்கை வண்ணத்தில்வந்து முத்திரை பதித்தவை. எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றவர்களை நாயகர்களாக்கி படமெடுத்த நாகூர் உவமைக் கவிஞர்சுரதா, புலவர்ஏ.கே. வேலன் போன்றவர்களை கதை, வசனம், பாடல் எழுத வைத்தார். தொடக்கத்தில் ‘பால்யன்’ இதழுக்கு அட்டைப்படம் வரைந்துள்ள நாகூர்சன் லைட்சோப் கம்பெனியினருக்கு வரைந்து கொடுத்த காலண்டர் ஓவியங்கள் பலராலும் கொண்டாடப்பட்டவை. 1950க்கு முந்தைய ஆண்டுகள் இயக்குநர் நாகூர் கலையுலகை ஆண்ட ஆண்டுகள். ஓவியர் மாலி செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் ரயில்பாதையில் இருக்கும் சிற்றூர் முதலியார்ப்பட்டி, இவ்வூரில் 1930 நவம்பர் 15-ம் நாள் பிறந்த ஐ. முஹம்மதலிதான் மதரஸாபட்டினத்தில் 1950களுக்குப்பின் பிரபலமான ஓவியர்மாலி. திரைப்பட மேதை எஃப். நாகூரின் நியூடோன் ஸ்டூடியோவில் வார்க்கப்பட்ட ஓவியர் மாலி கலை இயக்குநர், நடிகர் எனப் பயணித்து ‘தினத்தந்தி’ நிறுவனத்தில் நிரந்தரப்பணியில் அமர்ந்து முத்திரைப் பதித்தவர். காதல், கல்கி, தினமணிக்கதிர், உமன்ஸ்ஏரா போன்ற மாசிகைகளுக்கு அட்டைப்படம் வரைந்தவர். சித்திரக்கதைகள் மூலம் சிந்தையைக் கவர்ந்தவர். கேலிச் சிந்திரங்கள் மூலம் அரசியல், கலை உலகின்அன்றாட நடப்புகளை அம்பலத்துக்குக் கொணர்ந்தவர். டெய்லி ஆடிலினை யாஸ்மின்அலி யாக்கி மணம்புரிந்த ஓவியருக்கு ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைச் செல்வங்கள். ரஷ்யாவில் படித்து பொறியாளரான மகன் பிரேம் நசீர்உக்ரைன் மாப்பிள்ளை ஆனார். மகள் மஜீதா பர்வீன் அண்ணாசாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரிப்பேராசிரியை ஆனார். கோட்டோவியம், வண்ண ஓவியம், பெயிண்டிங்என முத்திரை பதித்த ஓவியர்மாலி 2015 பிப்ரவரி 19-ல் காலமானார். ‘சேவைச்செம்மல்’ எம்.ஏ.ஜமீல்அஹ்மத் 1928-ல் வடாற்காடு மாவட்டம் வாணியம்பாடியில் ‘மட்டக்கார்’ குடம்பத்தில் பிறந்த ‘ஏம்ஏஜே’ சென்னை கொத்தவால்சாவடியில் 1950களில் வணிகராக விளங்கினார். 1960களில் இஸ்லாமிய இயக்கம் அறிமுகமானதைத் தொடர்ந்து பொது வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டார். தூங்கும் நேரத்தைத் தவிர அவர் கைகளில் செய்தித்தாளோ ஏதாவதொரு நூலோ காணப்படும். பேருந்தில் நிற்கும் நிலையிலும் அவர் படித்துக் கொண்டேயிருப்பார். வாசிப்பின் நேசிப்பு அவரை நூல்களை வெளியிடச் செய்தது. இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை (ஐ.எஃப்.டி.) பொதுச் செயலாளராக இருந்து அவர் நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டார். திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்யக்காரணமானார். அழைப்புப்பணியில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த ‘எம்ஏஜே’ "அழைப்புப்பணி ஏன்? எப்படி?’ எனும் முன்னோடி நூலை எழுதி வெளியிட்டார். உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட ‘வாணியம்பாடி ஞானம்பாடி’ இஸ்லாமியத் தமிழுலகிற்கு வழங்கிய நூல்களில் மெளலானா மெளதூதியின் ‘இஸ்லாத்தில் மனித உரிமைகள்’ எனும் நூல் மிகச்சிறந்தது. 1975-ல் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் வாசம் செய்தார். அப்போதும் அழைப்புப்பணி ஆற்றினார். அதன் விளைவாக முரசொலி அடியார், அப்துல்லாஹ் அடியார் ஆனது ஓர்திருப்பு முனை. சிறுபான்மையினர், விளிம்பு நிலை மாந்தர்கள், நசுக்கப்பட்டோர் உரிமைகள் பெற சகோதர சமுதாயங்களோடு சேர்ந்து பாடாற்றிய எம்ஏஜே ‘சமரசம்’ எனும் மாதமிருமுறையைத் தமிழக வாசகர்களிடையே வலம் வரச் செய்தார். 1980 முதல் “சமரசம்” சமரசக்காற்றை வீசி வருகிறது. கோடிகளைக் குவிக்க வேண்டிய வணிகரான “எம்ஏஜே” வியாபாரத்தை விட்டு பொதுப்பணி, கல்விப்பணி, சமுதாயப்பணி என தம்வாழ்வைக்கழித்து 2007-ல் மண்ணறை சேர்ந்தார். "ஓவியர்க் கோன்: எஃப். அப்துல்ரெஸாக் 1950களில் தமிழ் இதழ் உலகில் பிரபலமான ஓவியர்களான ராஜம், ஆர்யா, ராஜ், சில்பி, மணியம்போன்றோர்சிறந்து விளங்கினர். இவர்களிடையே ஓர் முஸ்லிம் ஓவியர் சிலாகிக்கப்பட்டார். அவர் பெயர் “ரெஸாக்”. 1924-ல் வலங்கை மானில் ௨.௮. பக்கீர்மஸ்தான் மகனாகப் பிறந்த ‘ரெஸாக்’ பள்ளியிறுதிப் படிப்பை முடித்துவிட்டு மதராஸ்பட்டினம் வந்து ஓவியப் பணியாற்றினார். கலைமகள், கல்கி, தினமணி கதிர், மஞ்சரி, சுதேசமித்ரன், கண்ணன், கல்கண்டு, தியாகபாரதி, முரசொலி பொங்கல்மலர் என ‘ரெஸாக்’ வரைந்த ஓவியங்கள் தனித்துவமானவை. 1970இல் ஓவியர் ரெஸாக் ‘ஸ்கிரீன்பிரிண்ட் செய்வது எப்படி?’ என்ற விளக்க நூலை எழுதி தமிழகமெங்கும் அத்தொழிலைப் பரவச்செய்தார். தமிழ்ப் பதிப்புலகில் அட்டையை லேமினேசன் செய்து மின்னச்செய்தார். தமிழகத்தில் ரெஸாக்தான் இத்தொழிலின் முன்னோடி. ’யுனைடெட் லேமினேஷன்: எனும் பெயரில் ஓவியரின் புதல்வர்கள் ஹுமாயூன் கபீர், அப்துல்நாசர், காஸிம்ரஸ்வி மூவரும் தம் தந்தையாரின் தொழிலை விரிவாகச் செய்து தடம் பதித்து வருகிறார்கள். இந்தியா என்வீடு, வழிகாட்டிய உத்தமர், மாவீரன்நேதாஜி, புத்தர் அடிச்சு வட்டில் என குடந்தை எஸ்.ஏ. ரஹீம் எழுதிய நூல்களுக்கு பக்கம்விட்டு பக்கம் ஓவியங்கள் வரைந்து 18 மொழிகளில் நூல்களை வெளியிட்டவர் ‘ஓவியர்க்கோன்’ ரெஸாக். இஸ்லாமிய நிறுவனத்தின் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கத்திற்கு வடிவமைப்புச் செய்த ஓவியர் எழுத்தாசான் எம்.ஆர்.எம். அப்துற்றகீம் அவர்களில் நூல்களுக்கும் அட்டைப்படங்கள் வரைந்தார். ஓவியம், ஸ்கிரீன்பிரிண்ட், லேமினேஷன்என வாழ்வை அமைத்திருந்த ரெஸாக் 2013-ல் மரணமடைந்தார். உசாத்துணை நூல்கள் 1. இந்திய வரலாறு - டாக்டர் ந.சுப்ரமணியன். 2. மதராஸபட்டினம்- ‘கடலோடி’ நரசய்யா . 3. சென்னை: மறுகண்டுபிடிப்பு - எஸ்.முத்தையா 4. சென்னையின்கதை (1921) - கிளின்பார்லோ 5. மதராஸ்300 - பேரா.சிவ. முருகேசன் 6. செங்கல்பட்டு மாவட்டம் - சோமலெ 7. நீதிக்கட்சி இயக்கம்- டி. வரதராஜுலு, நாயுடு 8. திராவிட இயக்க வரலாறு - முரசொலி மாறன் 9. விடுதலைப்போரில்முஸ்லிம்கள் - வி.என்.சாமி 10. இலக்கிய இதழியல்முன்னோடிகள் - ஜே.எம்.சாலி 11. முஸ்லிம்மன்னர்கள்ஆண்ட இந்தியா - தாழை மதியவன் 12. முஸ்லிம்லீக்நூற்றாண்டு வரலாறு - ஏ.எம். அனீப் 13. இதழியல்வரலாற்றில்சமரசம் - முனைவர் மு.இ.அகமது மரைக்காயர் 14. தூரிகைச்சிதறல்கள் - இருகூரான் - மாலி 15. இஸ்லாமிய கலைக்களஞ்சியம் - பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துற்றகீம் 16. Vestige of Old madras - Gornel Love 17. Golconda Fort - Awais Khan நன்றிக்குரியோர்! - சகோதரர்ஆ.ஹாரூன்சேட்,சூளைமேடு, - சகோதரர்எஃப்.ஏ. அஹமது கபீர், யுனைடெட்பிரதர்ஸ்,சென்னை - சகோதரர்ஜரூக்அலீ, செயலர், “ஆஹா முஹைதீன்மஸ்ஜித்”, சென்னை - 4 - காவேரிபட்டணம்ருக்னுத்தீன், ஐஎஃப்டி, சென்னை - சமூக ஆர்வலர்சாதிக், பழவந்தாங்கல், சென்னை - பொறியாளர் அ.தஸ்னீம்ஃபாத்திமா, சென்னை - இவர்களுடன்… கணினிக் கலைஞர்1^(st) stepஇம்ரான் - பதிப்பாளர்"இலக்கியச்சோலை கடலோடிகள், உள்நாட்டு வெளிநாட்டு வணிகர்கள் குடிமக்கள் பற்றியெல்லாம் கதைக்காமல் மதரஸாபட்டின வரலாறு முழுமையாகாது. நடுவில் சில பக்கங்களைக் கானோம் என்பது போல தொடக்கத்தில் பல பக்கங்களைக் காணோம் என வரலாறு எழுதியுள்ளார்கள். ‘மதரஸாபட்டினம்’ எனக் குறிப்பிட்டால் ஆய்வு செய்பவர்கள் ‘மதரஸா’ என்பது முஸ்லிம்களின் பாடசாலை என முடிவுக்கு வந்துவிடுவார்கள் என அஞ்சி ’மதராஸபட்டினம்’ என எழுதுகிறார்கள். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கோவில்களைப் பற்றி விரிவாக எழுதுவோர் மாற்றுமத வணக்கத்தலங்களைப் பற்றி துணுக்குச் செய்திகளையே தருகிறார்கள். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account