[] 1. Cover 2. Table of contents மகான் குரு நானக் மகான் குரு நானக்   என்.வி.கலைமணி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/mahan_guru_nanak மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/mahan_guru_nanak This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Balu1967 - Balajijagadesh - Ssriram mt - Gladys jaba - Fathima Shaila - சத்திரத்தான் - பிரபாகரன் ம வி - Info-farmer - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. யோகி குருநானக்! தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி, தொண்டாற்றி மறைந்துள்ளர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுவதைப் போல “திருமூலர் பெருமானைப் போன்ற பல சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். கைலாய மலையின் அடித்தளத்திலே மட்டும் அவர்கள் பூத உடலோடு வாழவில்லை. அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிருந்து கொண்டு உண்மை விளக்கங்களை அவ்வப்பொழுது மக்களுக்குத் தந்து வரும் பிறப்பும் இறப்புமற்ற வாழ்வுடையவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்” என்ற விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார். ஏறக்குறைய நாற்பது சித்தர்கள் கலை, ஞானம், பக்தி போன்ற துறைகளிலே தோன்றியவர்களையும் சேர்த்து, கணக்கிட்டிருந்தாலும், அவர்களுள் முக்கியமானவர்கள் என்று மக்களால் போற்றப்படும் பெரும் ஞானிகள் பதினெண் சித்தர்களே ஆவர். அவர்கள் அனைவரும் யோகக் கலைகளிலே பண்பட்ட மேதைகளாவர். காட்டிலும் மேட்டிலும் மலைகளிலும், குன்றுகளிலும் சுற்றி அலைந்து காயோ கனியோ கிடைத்தவற்றை உண்டு உறங்கி, பொறிகளின் புலன்களை அடக்கி வென்று, அற்புதங்களை மக்களுக்குச் செய்து காட்டினார்கள். அவர்கள் எழுதி வைத்த திருமந்திரங்கள், திருமறைகள், பாடல்கள் அனைத்தையும் இன்று நாம் படிக்கும் போது சிந்தைகள் சிலிர்க்கின்றன. அந்த யோக ஞானிகள், புதுப்பது மூலிகைகளைக் கண்டறிந்து மருத்துவ உலகுக்கு வழங்கி, மருத்துவ மன்னர்களாக இன்றும் விளங்குகிறார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட யோகக் கலைகள் மக்களது நோய் தீர்க்கும் கலைகளாகவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்குரிய மருத்துவக் கலைகளாகவும், மனோதத்துவக் கலைகளாகவும், அவை போற்றப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களது கலைகள் யாவும் சித்துக் கலைகளாகவே மதிக்கப்படுகின்றன. எனவே, சித்தர்கள் என்று மக்களால் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். சித்தர் யார்? தகுதிகள் என்ன? அறிவு, அறியாமை என்ற அன்றாட நிலைகளைக் கடந்தவர்கள் சித்தர்கள்: இறை அருளால் பெற்ற பேரறிவால் உயர்ந்து நிற்பவர்கள் சித்தர்கள் வரம்பைத் தாண்டிய உண்மையை உணர்ந்தவர்கள் சித்தர்கள்! உண்மை ஒன்றே; எல்லாம் ஒருவனே, இவைதான் சித்தர்கள் கண்ட உண்மை! சித்தர்கள் கல்வியால் மட்டுமே அறிவை வளர்ப்பவர்கள் அல்லர் வெறும் தத்துவக் கடல்களிலே மட்டும் ஆழம் காண்பவர் அல்லர் ஆன்மீகத்தை நூல்களிலே ஆய்ந்தாய்ந்து, அதையே பேசிப் பேசி மக்களை மயக்குபவரும் அல்லர் சித்தர் அறிவில் அவர்கள் ஆலமரம் போன்றவர்கள். இவ்வுலகில் வாழும் வரை இறையுணர்வோடு ஒன்றிணைந்து வாழ்பவர்கள்! அவர்கள் உள்ளத்திலே ஓடிடும் உயிர் நாடியே உண்மை என்ற மெய்ப்பொருளாகிய இறை தத்துவம் தான் அவர்கள் தான் சித்தர்கள்! சித்தர்கள் நெஞ்சமெனும் அருவியிலே அன்பும் கருணையும் இரு கரைகளாகக் காட்சி தரும். மக்களது அறியாமை எனும் மண்ணை அரித்துக் கொண்டு அறிவெனும் சலசலப்பு ஓசைகளை எழுப்பி அது நீராகப் பெருக்கெடுத்து வரும். பாமர மக்கள் இடையே அது பண்புடன் கலந்து, அவர்கள் இடையே இரண்டற ஒன்றி வாழ்ந்து, இன்ப துன்பங்களில் பங்கேற்று, தக்க நீதி நெறிகளைக் கற்பித்து, நல்வழிகளில் அவர்களை நடத்திடத் தமது உழைப்புகளைத் தியாகம் செய்பவர்கள் தான் சித்தர்கள். தவயோகத்துள் புகுவர் தன்ணொளி பெறுவர்; உலகியல் எண்ணங்களைப் படிப்படியாகக் குறைப்பர் பரம் பொருளை தமது மன வெளியிலே கண்டு, கலந்து களி கொள்பவரே சித்தர் பெருமக்கள். அவர்களுக்கு மெய்ஞானமே நிறை அறிவு: அறிவால் எதையும் பாரார்; அருளால் அனைத்தையும் நோக்குவர். அலைகடல் போல அங்கிங்கெனாதபடி அலைவர் சித்தர் போக்கு சிவம் போக்கல்லவா? ஆசையை அறுப்பதே அவர்களது துறவு. அதனால், ஆண்டவனே ஆனாலும் ஆசையை அறுமின்கள் என்பர் ஆசை மனதின் செயல்; ஞானிகட்கு தோன்றாது ஆசை சித்தர்கள் சிந்தனைகளே சித்தாந்தம்; வேதத்தின் முடிவுகளே வேதாந்தம்; அதனால்தான் நாம் பேசும் மொழிகளல் ஆன்மீக உண்மைகளை உலகுக்கு விளக்க இயலாது என்றார்கள். ஏனென்றால், சித்தர்கள் அதிகம் பேசமாட்டார்கள் வானத்தைப் பார்ப்பார்கள் மோனத்தைத் தேடுவார்கள்; ஞானத்தை உணர்வார்கள். அவர்களே சித்தர்கள். ஒவ்வொரு சமயத்துக்கும் தத்துவங்கள் உண்டு. அதனால், தத்துவ வாதம் செய்து, ஒரு தத்துவத்தை மற்றொரு தத்துவத்தோடு மோதவிட்டு, எனது தத்துவம்தான் சிறந்தது என்ற தத்துவப் போராட்டம் செய்வதன்று சித்தர்கள் போராட்டம். ஒரு வேளை அவர்கள் அவ்வாறு ஈடுபட நேர்ந்தாலும் அதை ஓர் அறிவாய்வுச் சிந்து விளையாட்டாகவே அதனை மதிப்பர் சித்தர்கள்! அப்படியானால், சித்தர்களது நோக்கம் என்ன? உடல், உயிர், உலகம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ள இறைஞானத்தைப் போதித்து, பரம்பொருள் ஒன்றே, அதன் பேறு எனப் பெற்று, மக்களின் பிறப்பறுப்பதே அவர்களது நோக்கம். உலக மக்களுக்கு அதை அறிவுறுத்துவதே அவர்களது சித்தாந்தமாகும். அத்தகைய ஞான மகான்களது தொண்டுகள், ஆன்மீகத்தின் அரும் புதையல்களாக மக்களால் போற்றப்படுவதற்கு என்ன காரணம்? அந்த சித்தர்கள் இறுதியாக எங்கெங்கே உயிர் துறந்தார்களோ, அந்தப் புனித இடங்கள் எல்லாம் மக்கள் நாள்தோறும் சென்று வணங்கி வழிபாடியற்றும் திருக்கோயில் களாக தெய்வத் தலங்களாக இன்றும் காட்சி தருகின்றதைப் பார்க்கின்றோம். நாமும் சென்று நமது நன்றி வழிபாட்டை ஆங்காங்கே நடத்துகின்றோம். எடுத்துக்காட்டாக திருமூலர் தில்லையிலும், அழகர் மலையில் இராமதேவரும், அனந்த சயனத்தில் கும்ப முனியும், திருப்பதியில் கொங்கணவரும், பாரூரில் கமல முனிவரும், சோதியரங்கத்தில் சட்ட முனியும், கருவையில் கருவூராரும், கூடலில் சுந்தரானந் தரும், எட்டுக் குடியில் வான்மீகரும், காசியில் நந்தி தேவரும், சங்கரன் கோயிலில் பாம்பாட்டிச் சித்தரும், பழநியில் போகரும், திருப்பரங்குன்றத்தில் மச்ச முனியும், இராமேசுரத்தில் பதஞ் சலியும், செந்திலில் கோரக்கரும், வைத்தீஸ்வரன் கோயிலில் தன்வந்தரியும், குதம்பைச் சித்தர் மாயவரத்திலும் உயிர் துறந்த புனித இடங்கள் எல்லாம் திருக்கோயில்களாக நின்று இன்றும் மக்களுக்கு அருளாசியை வழங்குகின்றன. மேலே கூறப்பட்ட சித்தர் மகான்கள் எல்லாம்; ஞான யோகிகளாக ஆன்மீக அருளாளர்களாக வாழ்ந்த பெரு மக்களாவார். அவர்களுக்கு சாதிகள் கிடையாது. மதங்களை மதியார் மனிதநேயம்தான் அவர்களது மதம் என்று எண்ணியவர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற இறை ஞான சிந்தாந்தம் கொண்டவர்கள். ‘யாதும் ஊரே, யாவரும் உறவினரே’ என்ற விரிந்த உலகம் கான சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார்கள் தமிழ் மகான்கள். அதனால்தான் பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், ரஷ்ய நாட்டுக்கு சென்றிருந்தபோது, எங்கள் நாட்டின் மனித நேயச் சித்தாந்தம் இதுதான் என்று எடுத்துக்காட்டிப்பேசினார்கள். அதனால்தான், அந்த சிந்தாந்திகளை நாம் இன்றும் போற்றுகின்றோம். வட இந்தியாவிலே மேற்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள தாள்வாண்டி என்ற கிராமத்திலே பிறந்த குருநானக் என்பவரும், தமிழ்நாட்டுச் சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி, அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களைப் போதித்திருக்கிறார். குருநானக் இளம் வயதிலேயே இறையனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற ஞான யோகியாக வாழ்ந்து காட்டியுள்ளார். இறைவனை புறத்திலும், அகத்திலும் வழிபட்டு, தனது யோக தவத்தின் வலிமையாலும், நிஷ்டையின் ஒழுக்க சாதனைகளாலும் பரம் பொருளைத் தம்முள் கண்ட மகானாகவும், இறைஞானம் நிறைந்த மகாத்மாவாகவும் அவர் திகழ்ந்துள்ளார். தனக்கு வந்த துன்பம், நோய், அச்சம், வறுமை எல்லாவற்றையும் துச்சமாகத் துக்கி எறிந்து விட்டு, நாள்தோறும் மக்களுக்கு ஞானோபதேசம் செய்து, ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து திரிந்து வாழ்க்கையின் ஞான விதைகளை மக்களது நெஞ்சங்களில் தூவி, புதியதொரு வாழ்வியல் மார்க்கத்தை மக்களுக்காக உருவாக்கி; அதன் வழியிலே அவர்களை நடக்க வைத்தவர் ஞானி குருநானக் சொந்தபந்தங்களைத் துறந்து கடுந்தவம் புரிந்தார். தனது மாணவர் மர்தானாவுடன் சைதாபாத் என்ற நகர் வந்தார். அவர் அன்று தங்கிய அந்த ஊரை மக்கள் இன்று அமெனாபாத் என்று அழைக்கின்றார்கள். அந்த ஊரில் பாய்லாலு என்ற ஓர் ஏழை தச்சன் வீட்டிலே வந்து அவர் தங்கினார். அந்த ஏழைத் தச்சன் ஒரு மனிதாபிமானி; குருநானக் அபிமானி, அன்பு மட்டுமல்ல தச்சனிடம் இருந்த ஒழுக்கமும் கூட நானக் என்னென்ன உபதேசங்களை மக்களுக்கு கூறினாரோ அதற்கேற்ப வாழ்ந்து வந்த குருநானக் விசுவாசியாகவும் அந்த ஊரில் விளங்கி வந்தவர். அமெனாபாத் மாநிலத்தின் ஆளுநர் பெயர் மாலிக்பாகோ. குருநானக் ஏழைத் தச்சன் வீட்டில் தங்கி இருந்த அன்று, கவர்னர் ஒரு விருந்து நடத்தினார். அந்த விழாவில் அந்த நகரின் முக்கியமான செல்வர்கள், அதிகாரிகள், மதகுருக்கள், முல்லாக்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டார்கள். அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வருகை தந்துள்ளவர்களும், ஏழை மக்களும் கூட விருந்தில் கலந்துண்ணலாம் என்று ஆளுநர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். குருநானக் தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்ட உடனே அவரிடம் சென்று எல்லோரும் அருளாசி பெற்றார்கள். அப்போது குருநானக்கிடம் ஆளுநர் அனுப்பிய ஒர் அதிகாரி வந்தான். கவர்னர் தங்களை விருந்துக்கு அழைத்து வருமாறு என்னை அனுப்பினார் என்றான். அதற்கு குருநானக், ‘எனது ஏழை நண்பர் தச்சர் பாய்லாலு வீட்டில்தான் விருந்துண்ணப் போகிறேன். அது மட்டுமன்று, ஆளுநர் நடத்தும் விருந்துக்கு நான் வர மாட்டேன்’ என்று கூறி அந்த அதிகாரியை அனுப்பிவிட்டார். குருநானக் கூறிய பதிலைக் கேள்விப்பட்ட ஆளுநர் நானக் ஓர் இந்து நான் ஒரு முஸ்லீம், அந்த மத பேதத்தால் நானக் எனது விருந்துக்கு வர மறுத்துவிட்டாரோ என்று யோசித்தார். உடனே நானக் விருந்துண்பதற்கான தனி ஏற்பாடுகளை ஆளுநர் செய்தார். மறுபடியும் ஆளுநர் அதே அதிகாரியை நானக்கிடம் அனுப்பி விருந்துக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டார். ஆளுநர் அனுப்பிய அதிகாரி மீண்டும் குருநானக்கிடம் வந்து, தனி விருந்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் ஆளுநர் செய்த விவரத்தையும் அவரிடம் விவரித்தார். ‘எனக்கு ஜாதி வேற்றுமை என்ற எண்ணமே கிடையாது. எங்கும் உண்பேன்; எங்கும் உறங்குவேன்; எனக்காகத் தூய்மை செய்யப்பட்ட இடமோ, தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவோ எதுவும் தேவையில்லை. கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் எல்லா இடங்களும் எனக்குத் தூய்மையானவைதான். ஜாதி பேதமோ, மத பேதமோ, உணவு பேதமோ, இட பேதமோ, இன பேதமோ எதுவுமே என்னைப் பொறுத்தவரை கிடையாது. ஆனால், கவர்னர் மாலிக் வீட்டில் நான் உணவு உண்ண மாட்டேன்’ என்று கூறி வந்த அதிகாரியைத் திருப்பி அனுப்பி விட்டார் குருநானக் கொந்தளித்தார் கவர்னர் குருநானக் தங்கியிருந்த ஏழை தச்சன் வீட்டுக்கு விர்ரென்று பரிவாரங்களோடு வந்திறங்கினார். வீட்டிற்குள் நுழைந்து, எனது வீட்டில் உணவுண்ண மறுத்த காரணம் என்ன? என்று நெருப்புப் பொறிகள் தெறித்தார்போல கோபமாகக் கேட்டார் ஆளுநர். உடனே குருநானக், ஆளுநரை நோக்கி, உண்மையை உணர விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்களுடைய வீட்டில் இருந்து உணவை எடுத்துவரச் சொல்லுங்கள் என்றார். கவர்னர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, ஆட்களை அனுப்பி குருநானக்குக்காக தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்டு ஆணையிட்டார். வந்தது உணவு அதிலே இருந்து ஒரு ரொட்டித் துண்டை எடுத்து நானக் தனது ஒரு கையிலே வைத்துக் கொண்டார். ஏழை தச்சன் வீட்டின் ஒரு ரொட்டித் துண்டை மறுகையிலே எடுத்துக் கொண்டார். இரண்டு கைகளிலும் இருந்த ரொட்டித் துண்டுகளை வந்தவர்கள் கண்ணெதிரே தனித்தனியாகப் பிழிந்து காட்டினார். கவர்னர் வீட்டு ரொட்டித் துண்டிலிருந்து ரத்தம் வடிந்தது. தச்சன் வீட்டு ரொட்டித் துண்டிலிருந்து பால் வடிந்தது. அதைப் பார்த்த அனைவரும் வியந்து போனார்கள். அப்போது ஆளுநரைப் பார்த்த குருநானக், இப்போது புரிந்ததா உமக்கு? நான் ஏன் உமது வீட்டு உணவை உண்ண மறுத்தேன் என்பதற்குரிய காரணம். உங்களுடைய உணவில் ஏழை மக்களது ரத்தம் கலந்திருக்கிறது. ஏன் தெரியுமா? ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து, வாட்டி வதக்கி அவர்களது உழைப்பில் நீங்கள் உல்லாசியாக, கவுரவம் தேடுகிறீர்கள். இந்த ஏழை தச்சர் தானே உழைத்து உழைத்து வேர்வை சிந்தி வருமானம் தேடி வாழ்கிறார். அந்த வேர்வைதான் நீங்கள் இப்போது பார்த்த பாலாக ஒடிய காட்சி என்றார். அளுநர் மன வருத்தத்தோடு வந்த வழியே நடந்தார். இந்தச் செய்தி சிறிது நேரத்துக்குள் நகர் முழுவதும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தார்கள். எங்கு பார்த்தாலும் குருநானக் வந்தார்கள். அற்புதம் பற்றிய பேச்சே எதிரொலித்தது. சிறு வயதிலேயே ஞானம் இந்திய மாநிலங்களிலே ஒன்று பஞ்சாப் மாநிலம், ஐந்து நதிகளான ஜீலம், ஜீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்ற நதிகள் பாய்ந்து அந்த மாநிலத்தை வளமுள்ள பகுதியாக மாற்றியதால் அதற்கு பஞ்சாப் என்ற பெயர் வந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு பஞ்சாப் ஒரே மாநிலமாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் அந்த மாநிலத்தை நம்மிடம் விட்டுச் செல்வதற்கு முன்பு அதை மேற்குப் பஞ்சாப்பென்றும், கிழக்கு பஞ்சாப்பென்றும் இரண்டாகப் பிரித்து நிர்வாகம் செய்து வந்தார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, மேற்குப் பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான்் நாட்டுடன் சேர்க்கப்பட்டு விட்டது. கிழக்குப் பஞ்சாப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில் தாள்வாண்டி என்றொரு சிற்றுர் உள்ளது. தாள்வாண்டி என்ற அந்தக் கிராமத்தில், மேதாகலூராய் என்பவரும், மட்டாதிரிபாத் என்ற அவரது மனைவியாரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒரு நடுத்தர குடும்பமாகவும், அக்கிராமத்தில் செல்வாக்குடனும் இருந்தார்கள். அந்த தம்பதியர் களுக்கு, 1469 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கார்த்திகை முழு நிலாவான பெளர்ணமி நாளன்று குருநானக் பிறந்தார். அக்குழந்தைக்குப் பெற்றோர் நானக் என்று பெயரிட்டார்கள். நானக்கின் தமக்கை பெயர் பீபி நானக் என்பதாகும். ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும், ஆஸ்திக்கோர் ஆண் குழந்தையும் போதுமென்ற முதுமொழிக்கேற்றவாறு பெற்றோர்கள் தங்களது இரண்டு குழந்தைகளையும் இரு கண்களாகக் கருதி வளர்த்து வந்தார்கள். குறிப்பாக, ஆண் குழந்தையான நானக்கை அளவிலா அன்புடன் பேணி காத்து வந்தார்கள். ஒரே ஒரு ஆண் குழந்தை அல்லவா? அதனால், அக்குழந்தை நன்றாக நடந்து, ஆடிப்பாடி, பேசும் பருவமான ஒன்பது வயது வரை வீட்டிலேயே செல்லமாக வளர்ந்து, பிறகு அதே சிற்றுரிலுள்ள பள்ளியில் பெற்றோர் கல்விக்காகச் சேர்த்தார்கள். பள்ளி ஆசிரியர் ஒர பிராமணர் ஆவார். நானக் பள்ளியில் சேர்க்கப்பட்ட நாளன்று, ஆசிரியர் அரிச் சுவடியின் முதல் எழுத்தை நானக்குக்குச் சொல்லிக் கொடுத்து, அதை எழுதுமாறு கூறினார். பையன் அந்த எழுத்தை எழுத வில்லை. கரும்பலகையை உற்றுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்த சிறுவன் நானக்கைப் பார்த்து, “எழுதச் சொன்னால் எழுதாமல் உட்கார்ந்தபடியே இருக்கிறாயே ஏனப்பா” என்று அமைதியாகக் கேட்டார். பையன் வாயைத் திறக்கவில்லை. கோபம் வந்தது ஆசியருக்கு பையனை அதட்டி “எழுதப்பா ஏன் உட்கார்ந்து கொண்டே இருக்கிறாய்? எழுது தம்பீ” என்று அதட்டியும் செல்லமாகவும் பையனை கேட்டுப் பார்த்தார் ஆசிரியர். உடனே பையன் நானக் ‘ஐயா நீங்கள் சொல்லிக் கொடுத்த எழுத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இறைவன் படைத்த மூல ஒலியைப் பற்றியே சிந்திக்கிறேன்’ என்றார். நானக் கூறிய பதிலைக் கேட்டு பள்ளி ஆசிரியர் வியப் படைந்தார். மீண்டும் அவர் நானக்கிடம், ‘சிறுவனே, நீ விவரம் விளங்காத பையன். கடவுள் படைப்பைப் பற்றியும், ஏன் அதைப் படைத்தார் என்பது குறித்தும் உனக்கு விளங்கக் கூடிய வயதல்ல; நீ குழந்தையப்பா’ என்றார். அதற்கு பதில் கூறிய நானக், ஐயா கடவுளால் படைக்கப்பட்ட அந்த ஒலியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் ஆரம்பமே இல்லை என்றார். நானக் வயது என்ன? ஒன்பதுதானே இந்த வயதில் இப்படி ஒரு தத்துவம் பேசுகிறானே சிறுவன். அறிவு அவனிடம் வயதுக்கு மீறி அல்லவா காணப்படுகிறதென்பதை எண்ணிய ஆசிரியர் நானக்கைக் கண்டு வியப்படைந்தார். நானக்கின் தந்தையை அழைத்தார் ஆசிரியர். அவரிடம் உனது பையன் ஆன்மீகத் தத்துவம் பேசுகிறானப்யா இந்த வயதுக் குழந்தை எதுவும் இவ்வாறு பேசிடும் அறிவு பெற முடியாது மேதாகலூராய்! எனவே, இந்த சிறுவன் கடவுளின் கொடையாக உனக்கு வந்து பிறந்து விட்டானோ என்று மிக ஆச்சர்யத்தோடு கூறினார். தந்தை மேதாகலுராய், தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு சென்று, ஆசிரியர் கூறிய விவரங்களை அவனைப் பெற்ற தாயிடம் கூறினார். பெற்றோர்கள் தமது மகனுடைய எதிர்கால நிலை என்னவோ என்று வருத்தமடைந்தார்கள். ஆனாலும், நானக்கின் தந்தை தனது மகனுக்கு படிப்பு வராதோ இல்லையென்றால் ஆசிரியர் எதற்காக நானக்குக்கு கல்வி போதிக்கும் தகுதி தனக்கு இல்லை என்றார் என்பதை எண்ணி யெண்ணி வருத்தப்பட்டு, அவனுக்குக் கல்வி கற்பிக்க என்ன செய்யலாம் என்று கலங்கிய மனதுடன் இருந்தார். நானக்குக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் தகுதி தனக்கு இல்லை என்று ஆசிரியர் கூறிய பிறகு எப்படி தந்தை தனது மகனைப் பள்ளிக்கு அனுப்புவார்? அதனால் முதல் நாளன்று நானக் பள்ளிக் கூடத்துக்குப் போனதோடு, அவருடைய கல்வி வாழ்க்கை முடிந்து விட்டது. நானக் தந்தையார் தனது சத்திரிய பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு மகனுக்கு பூணூல் விழா நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பூணூல் விழாவன்று பூணூல் அணிவிக்கும் பார்ப்பனர் வந்தார். ஓமம் வளர்க்கப்பட்டது. சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருந்தன. மந்திரங்கள் ஒதப்பட்டன. பிறகு புரோகிதர் அரிதயாள் பூணூலைக் கையிலெடுத்தார். நானக் அதைத் தடுத்து நிறுத்தினார். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ‘அபச்சாரம் அபச்சாரம்’ என்று முணுமுணுப்பு ஒலிகளை எழுப்பினார்கள். அப்போது நானக் புரோகிதரை நோக்கி, ‘ஐயா புரோகிதரே. எதற்காக நான் பூணூல் போட்டுக் கொள்ள வேண்டும்? காரணம் என்ன?’ என்று கேட்டார். இந்தக் கேள்வி புரோகிதரை கேட்ட கேள்வி மட்டுமா? விழாவிற்கு வந்திருந்த பெரியோர்களையும், பரம்பரையாகப் பூணூல் அணிந்து வருபவர்களையும் கேட்ட கேள்வி அல்லவா இது? எனவே, விழாவுக்கு வருகை தந்திருந்த எல்லாரிடமும் நானக் கேட்ட கேள்வி, ஒரு வித திடுக்கிடும் தோற்றத்தை உருவாக்கிவிட்டது. புரோகிதர், பூணூல் போட்டுக் கொள்வதற்கான விவரங்களை எல்லாம் சுருக்கமாக நானக்கிடம் கூறினார். சிறு பையனுக்குப் புரோகிதர் பதில் கூறிக் கொண்டிருப்பதை பழமை விரும்பிகள் ஓர் அருவருப்பாகவே கருதினார்கள். அன்று வரை பூணூலணிவதற்குரிய காரணங்களைக் கேட்டறியாதவர்கள் எல்லாம் சிறுவன் கேட்ட கேள்வியால் சரியான பதிலைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால், நானக்குக்கு மட்டும் புரோகிதர் கூறிய விளக்கம் மன நிறைவை அளிக்கவில்லை. ஆனால், நானக்கிடம் இருந்த இறையுணர்வு ஒரு பாடலாக அங்கே எழுந்தது. அவர் பாடினார். அந்தப் பாடலின் கருத்து என்ன தெரியுமா? “பூணூல் அணிபவர்களே! சாதாரண பருத்தி நூலை அணியாதீர்கள். அதனால் எந்தவிதமான பயனுமில்லை. இரக்கம் என்ற கருத்தியைக் கொண்டு மன நிறைவு என்ற நூலை தயாரியுங்கள். அதில் உண்மையென்ற முடிச்சுக்களைப் போட்டு அணிந்து கொள்ளுங்கள். உண்மையோடு வாழுங்கள், நல்வாழ்வு பெறுங்கள்” என்ற கருத்துக்கள் அந்தப் பாடலிலே இனிமையோடு மிதந்து வந்தன. அவர் பாடிய குரலோசை விழாவிற்கு வருகை தந்தோரை எல்லாம் இனிமையாக மகிழ்வித்தன. நானக்கின் பெற்றோர்கள் தன் மகனை உதவாக்கரை என எண்ணினார்கள். ஒரே ஒரு நாள் தான் பள்ளிப் படிப்புக்கு போனார். அதோடு கல்வி முடிந்தது. பூணூல் விழாவாவது நடத்தலாம் என்று பெற்றேர் ஆசையோடு விழா செய்தார்கள். அதுவும் புரோகிதர் அறிவைச் சோதிக்கும் விழாவாக மாறியது. அதற்குப் பிறகு எந்த வேலையினையும் நானக் வீட்டில் செய்வதில்லை. எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் மூழ்கியவரைப் போல, கண்களை மூடிக் கொண்டே அவர் அமர்ந்திருக்கும் காட்சி, பெற்றோர்களை வேதனை நெருப்பிலே தள்ளியது. தனது மகன் நானக் நன்றாகக் கல்வி கற்று, ஏதாவது ஒரு சமஸ்தான்த்தில் உயர்ந்த பதவியில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். அவனை சுற்றி கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் கூட்டம் சூழ்ந்திருக்க வேண்டும். தமது குடும்பம் பெருமையுடனும் புகழுடனும் வாழ வேண்டும். மகன் சிறந்த செல்வச் சீமானாகத் திகழ வேண்டும் என்று நினைந்த அவரது தந்தையாரின் ஆசையிலே தவறென்ன இருக்க முடியும். குருநானக்கின் பெற்றோர்கள் தன் மகனுக்கு தகுதியும், தரமும் இல்லாததைக் கண்டு அவனின் நண்பர்களின் சகவாசம் சரியில்லையென எண்ணினார்கள். மகன் இப்படி இருக்கிறானே என்பதற்காக ஒரு தகப்பனால் சும்மா இருக்க முடியுமா? அதனால் எப்படியாவது மகனை நல்ல வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று மேதாகலுராய் முடிவு செய்தார். அதற்குரிய வழிகளைத் தனது நண்பர்களிடம் பேசும் போதும் கேட்டார். அதற்கு ஒரு நண்பர் மேதாகலுராவுக்கு யோசனை கூறும் போது, இழிவான வேலை ஏதாவது ஒன்றை நானக்கிடம் கூறி, அதைச் செய்யச் சொல்லுங்கள். உடனே அவனுக்கு மான ரோஷம் வரும். நான் செய்ய மாட்டேன். அது கேவலமானது என்று மறுப்பான் பிறகு நீங்கள் கூறுகின்ற யோசனை என்னவோ அதற்கேற்ப நடப்பான் என்றார். இந்த யோசனை ஒரளவுக்கு நானக் தந்தைக்கு உடன்பாடானதாகவே தெரிந்தது. அதனால், ஒருநாள் மேதாகலுராய் தனது மகனை அழைத்தார். ’நீ தினமும் நமது வீட்டிலுள்ள மாடுகளை ஒட்டிக் கொண்டு,வயற் பக்கங்களிலே மேய்த்துக் கொண்டு வா" என்றார். மகனிடம் என்ன பதில் அவர் எதிர்பார்த்துக் கூறினாரோ அதன்படி நடக்கவில்லை. தந்தை மாடுகளை மேய்த்துக் கொண்டு வா என்று கூறினால், மகன் மானரோஷத்தோடு தன்னை எதிர்ப்பான். பிறகு அவர் கூறும் எந்த வேலையையும் ஏற்றுச் செய்ய முன்வருவானென்று அவர் எதிர்பார்த்த முடிவு, தந்தைக்கு ஏமாற்றத்தையே தந்தது. ஆனால் நானக், தந்தை கூறிய மாடு மேய்க்கும் தொழிலைச் செய்வதற்கு மனநிறைவோடு, மகிழ்ச்சியாக ‘சரி தந்தையே’ என்று ஒப்புக் கொண்டார். மகன் நானக், தனது யோசனையை ஏற்று ஒப்புக் கொண்டதை அறிந்த தந்தை மனம் மிக நொந்தார். இதற்கா மகனை இவ்வளவு செல்லமாக வளர்த்தோம். கடவுளே இதுவும் உன் சோதனை தானா? என்று மேதாகலுராய் வருத்தப்பட்டார். ஒவ்வொரு காலை தோறும் நானக், மாடுகளைத் தொழுவத்தில் இருந்து ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டு இருப்பார். எங்காவது ஒரு மரத்தடியில் அமர்ந்து கடவுள் சிந்தனையிலே மூழ்கிவிடுவார். மேய்ப்பன் மேற்பார்வை இல்லாமலேயே மாடுகள் மேயும், பிறகு மாலைதோறும் அவ்ற்றைத் தொழுவத்திலே ஒட்டி வந்து கட்டி விடுவார். நாட்கள் இவ்வாறு உருண்டோடின. தந்தை மேதாகலூராய்க்கு இந்தக் காட்சி ஆனால் மகனுக்கு இந்த வேலை ஏதோ ஓர் இழிவான வேலை என்று தெரியவில்லை. தெய்வத் தொண்டாக தோன்றியது செய்யும் தொழில். கிறித்துவ மத நிறவனரான இயேசு நாதருக்கு மேய்ப்பர் என்று ஒரு பெயரும் உண்டல்லவா? ஏன் வந்தது அந்தப் பெயர் அவருக்கு? அவரும் ஆட்டுக்குட்டிகளை மேய்த்தவர் அல்லவா? அவரைப் போல நாமும் மாடுகளைத் தானே மேய்க்கின்றோம். அதனால் தவறில்லையே. ஆயர்பாடியிலே, பாரத காலத்துக் கண்ண பெருமான் மாடுகளை மேய்த்தாரே அதனால் அவருடைய தெய்வாம்சப் புகழும் பெயரும் கெட்டா போய்விட்டது? யார் எந்தெந்தத் தொழில்களைச் செய்தாலும், அவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் தானேயென்று எண்ணிய நானக், மாடு மேய்க்கும் தொழிலை ஒரு பேரானந்தப் பிழைப்பாகவே எண்ணிச் செயல்பட்டார். ஒரு நாள் வழக்கம் போல மாடுகளை மேய்த்திட ஒட்டிச் சென்ற நானக், அவற்றை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு, இறைஞானச் சிந்தனையிலே ஆழ்ந்து விட்டார். நேரம் பகலானது கடும் வெயில் உலகைச் சுட்டெரித்தது. பசி மறந்தார். சாப்பாட்டை மறந்தார். பட்ட மரத்தின் வெயில் வெப்பம் தன்னைத் தாக்குவதையும் மறந்த நிலையில் அவர் கடவுள் சிந்தனையிலே மிதந்தார். வயல்புற வரப்புகள் ஒரமாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், திடீரென வயலில் இறங்கி, பயிர்களை மிதித்து, துவைத்து, வயிறு முட்ட மேய்ந்து, பயிர்களைப் பாழ்படுத்திவிட்டன. வயலுக்குச் சொந்தக்காரன் இதைப் பார்த்துவிட்டு லபோதிபோ என்று வாயிலடித்துக் கொண்டு ஓடி வந்தான். மாடுகள் வயலில் இறங்கி, பயிர்களைப் படுநாசப்படுத்தி, மண்ணோடு மண்ணாகப் பயிர்கள் மிதிபட்டிருப்பதைக் கண்டான் அந்த ஏழை உழவன்! மாடுகள் யாருடையது? யார் மேய்ப்பனென்று அவன் சுற்றும் முற்றும் பார்த்தபோது, மாடுகளை மேயவிட்டு விட்டு மரத்தடியிலே தூங்குவது போல கிடக்கும் நானக்கைக் கண்டான் அந்த விவசாயி. வயிறு எரிந்தான் அக்குடியானவன்! நேராக படுத்துக் கிடக்கும் நானக் எதிரிலே வந்து நின்று ‘நியாயமா உனக்கு? என் பயிர்களை இப்படிப் பாழ்படுத்தலாமா? மாடுகளை மேய விட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு தூங்குவது அக்கிரமம்’ என்றெல்லாம் அக்குடியானவன் பயிர் அழிந்த ஆத்திரத்தால் கண்டபடி பேசினான். தியானத்திலே இருந்து எழுந்த நானக், சிறிதும் அந்த ஏழை மகன் மீது கோபப்படாமல், ‘அன்பரே கோபமோ ஆத்திரமோ படாதீர் இந்த மாடுகள் உனது வயலில் மேய்ந்தால் உனக்கு நட்டம் வராது. மேலும் மேலும் உனது வயல் வளமாக விளையப் போகிறது பார் இதுவரை விளையாத அளவுக்கு உனது வயல் விளைய போவதைப் பார்’ என்றார் நானக் மாடுகள் பயிர்களை மிதித்து மேய்ந்து நாசப்படுத்திவிட்டதை நான் நானக்கிடம் கேட்டால், அவன் என்னைக் கேலி செய்கிறான். அடுத்த முறை நல்ல விளைச்சல் விளையும் என்று கிண்டலும், குத்தலுமாகப் பேசுகிறான் என்று அந்த ஏழைக் குடியனவன் ஓடிப்போய் ஊர்த் தலைவரிடம் அழுது புகார் கூறினான். ஊர்த் தலைவரல்லவா? உடனே தனது வேலைக்காரர்களை ஏவி, உழவன் புகார் உண்மைதானா? என்று பார்த்து வருமாறு கூறினார் அந்தப் பணியாட்கள், ஏழை ஊழவனுடன் சென்று அவர்கள் வயல்களைப் பார்த்தார்கள். என்ன புகார்களை அநத ஏழை விவசாயி ஊர்த் தலைவரிடம் கூறி அழுதானோ, அதற்கு நேர் மாறாக மாடுகள் பயிர்களை மிதித்துத் துவைத்ததற்கான அடையாளங்களோ பயிர்களை மாடுகள் மேய்ந்ததற்கான அரைகுறை கதிர் தாள்களோ, மொத்தத்தில் மாடுகள் வயல்களில் இறங்கியதற்கான சுவடுகளோ ஏதும் அவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை. ஏழை விவசாயி அழுதான் என்ன சொல்வது என்று திணறினான்! தலைவரிடம் தந்த புகார் பொய்யாய் போய் விட்டதே. எப்படி என்று திகைத்தான். உண்மையா பொய்யா வென்று நடந்ததைப் பார்க்க வந்த தலைவரது வேலையாட்கள், அந்தக் குடியானவனைக் கண்டபடி ஏசினார்கள் தலைவரிடம் சென்று, நானக் மீதும், மாடுகள் மீதும், அந்த வேளாளன் கூறியதெல்லாம் பொய்ப் புகார்கள் என்று கூறிவிட்டார்கள். ஆனால், உழவன் ஐயா எனது கண்களிரண்டாலும் பார்த்தது உண்மை, சத்தியம். மறுபடியும் பயிர்கள் எப்படியோ வளர்ந்துவிட்டன ஐயா என்று அழுது கொண்டே கூறினான் அவன். ஆனால் ஒன்று ஐயா, எனது வார்த்தைகளை இப்போது நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏனென்றால் ஏழை ஆனால் நானக் ஏதோ ஒர் அற்புதம் செய்து நாசமாக்கப்பட்ட எனது பயிர்களை மீண்டும் வளரச் செய்து விட்டார் போகப் போக எனது உண்மையை நீங்கள் உணர்வீர்கள் என்றான் விவசாயி ஏழைதான். ஆனால், எக்காரணம் கொண்டும் பொய் பேசமாட்டான். நானக்கிடம் ஏதோ ஓர் கடவுள் சக்தி இருக்கிறது என்பது ஊர்த் தலைவரது நம்பிக்கை. அதற்குச் சான்றாக இருக்கிறது இந்த ஏழை விவசாயினுடைய புகார். எனவே எப்படியும் நானக்கின் கடவுள் சக்தி என்ன என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார் தலைவர். நாட்கள் நகர்ந்தன மதியம் நேரம் கடும் வெயில்! மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருந்தன. நானக் தன்னை மறந்தார். தரையில் படுத்தவர் படுத்தபடியே மெய் மறந்து கிடந்தார். என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியாத ஒரு தியான மயக்க நிலை அவருக்கு. சூரிய வெப்பம் நானக் முகத்தைத் தீய்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு கடுமையான வெயில் வெப்பம் அவரது முகத்தில் விழுந்து கொண்டிருந்ததும் அவருக்கு ஏதோ ஒரு மெய் மறந்த நிலை. அந்த நேரத்தில் அவர் படுத்துக் கிடந்த தரையருகே இருந்த அடர்ந்த புதர் ஒன்றிலே இருந்து ஒரு நல்ல பாம்பு சீறியபடியே வெளிவந்தது. நானக் என்ன விழித்துக் கொண்டா இருக்கிறார் பயந்து எழுந்து பாம்பு பாம்பு என்று ஓடிட அந்த பாம்பு நானக் முகத்தை நோக்கிச் சென்றது. தன்னுடைய படத்தை விரித்தது. நானக் முகத்திற்கு மேலே படத்தை அகலமாக விரித்துக் கொண்டும், ஒரடி உயரத்துக்கு மேலே தன்னுடைய உடலைத் தூக்கிக் கொண்டும் அருள்ஞான பிஞ்சுவுக்குக் குடைபோல பிடித்துக் கொண்டே நின்றது அப்போது அந்த வழியே ஊர்த் தலைவர் எங்கோ போய் விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்து அப்படியே நின்று விட்டார். ராய்புலார் என்ற பெயருடைய அந்த ஊர்த் தலைவர் சிறந்த பக்திமான் அப்போதுதான்் அவரது நீண்டநாள் சந்தேகம் உண்மை என்று நிரூபணமாகிவிட்டதை அவர் அறிந்தார். உடனே, ஊர்த் தலைவர் ஊருக்குள் சென்று தான் கண்ட உண்மையை ஊராருக்குத் தெரிவித்தார். நேராக மேதாகலூராய் வீட்டிற்கு ஓடிப்போய்தான் கண்டதைக் கூறி நானக் மனிதரல்லர்! அவர் ஓர் அருளாளர் என்று கூறி அவரும் நம்பினார் ஊராகும் நம்பினார்கள்! தெய்வம் ஒன்றே தமிழ் சித்தர்கள் தவங்களை இயற்றி, யோகிகளாக மாறி, தமிழ்ப் பண்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆன்மீகத் தத்துவங்களை வளர்த்து, மக்களுக்கு இறைஞானத்தைப் போதித்தார்களோ, அதே போன்ற கொள்கைகளை, சித்தாந்தங்களை வட நாட்டு மக்களுக்கும் கூறிட கடுந்தவமியற்றிய கர்ம யோகி குருநானக்கென்ற ஞானி பஞ்சாப் மாநில மக்கள் அவரை அவதார புருஷர் என்றார்கள். நானக்கின் தந்தைக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. அவர் வாழ்ந்த ஊர்த் தலைவரான ராய் புலார், தான் கண்ட அற்புதத்தை அவரது தந்தையிடம் நேருக்கு நேர் கூறிய போதும்கூட, நானக் தந்தைக்கு நம்பிக்கை உருவாகவில்லை. மாறாக, மகன் மீது மட்டற்ற கோப உணர்ச்சியே கொண்டிருந்தார். அதற்கு அவர் காரணம் கூறும் போது, மாடுகளை மேய்க்கச் சென்றவனுக்குத் தொழிற்கடமை, பொறுப்பு இருந்தால் மாடுகள் வயலிலே புகுந்து மேய்ந்து துவம்சம் செய்யுமளவுக்கு விட்டிருப்பானா என்பது போன்ற உளுத்துப் போன காரணங்களை அவர் பேசிக் கொண்டே இருந்தார். பலர் பல உண்மைகளைக் கூறியும் அந்த பழமை விரும்பி மாறாமலே இருந்தார். குருநானக்கின் தந்தை அவனை மாடு மேய்க்க விட்டது பெரும் தவறு என்று எண்ணி மாடு மேய்க்கும் தொழிலுக்குப் போக வேண்டாமென்று எண்ணினர். நானக்கும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றபடி தனது தலையை ஆட்டி இனி போக மாட்டேன் என்ற அடையாளத்தைத் தந்தைக்கு உணர்த்தி விட்டார். இப்போது அவருக்கு நேரம் கிடைத்தது. தியானத்திற்கு நிறைய நேரம் செலவழித்தார். தந்தை அதைக் கண்டு வருத்தமுற்றார். நானக் வயது பதினாறு - பதினேழானது அதற்காக தனது குடும்பம் மீது பற்றோ, பொறுப்போ ஏதுமே எழவில்லை அவருக்கு ஒருநாள் தந்தை நானக்கைக் கூப்பிட்டு, ’மகனே! பொருளில்லார்க்கு இந்த உலகம் இல்லையப்பா! அடுத்த உலகமான அருள் உலகத்தையே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்! தவறு மகனே அது பொருள் இல்லா ஏழையை எவனும் மதிக்கமாட்டான். அருள் உலகத்து நடவடிக்கைகளின் வழிபாடு களைச் செய்யக் கூட பொருள் தேவையப்பா வெறும் யோகமும், தியானமும் செய்வதால் பொருள் வராது; சேராது. எனவே, விவசாயமாவது செய்! வளமாக வாழ்வாய்! இப்படியே ஆன்மீகவாதியாக இருந்தால், நான் செத்ததற்குப் பிறகு நீ மிகவும் துன்பப்படுவாய் நானக். நன்றாக யோசனை செய் மகனே என்று கெஞ்சாத குறையாய் மகனிடம் கூறினார். தந்தையே! நான் இப்போது விவசாயம் செய்து கொண்டு தான்னே இருக்கின்றேன். விடாமுயற்சியோடும், பக்தியோடும் நான் வேளாண்மை செய்து கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையப்பா இது நம்புங்கள் என்னை என்றார் நானக். திருதிருவென விழித்தார் மேதாகலூராய். “என்னப்பா சொல்கிறாய்? விவசாயமா செய்து கொண்டு இருக்கிறாய்? அதனால் பெற்ற லாபம் என்ன?” என்று நானக்கின் தந்தை தன் மகனைக் கேட்டுவிட்டு, இவனுக்கு ஏதாவது சித்தப் பிரமை ஏற்பட்டிருக்குமோயென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது நானக் “அப்பா, எனது உடலே வயல், உள்ளெளியே உழவன் அடக்கம் என்ற நீரைப் பாய்ச்சுகின்றேன்; தெய்வீகம் என்ற விதையை விதைத்துக் கொண்டிருக்கிறேன். அன்பு எனும் பயிர் முளை கிளம்புகிறது. உண்மை எனும் இடத்திலே இருந்து அதைக் காத்து வருகிறேன். மகிழ்ச்சியின் பெருங்களிப்பே எனக்கு கிடைக்கும் ஊதியம். அந்தக் களிப்பே என் ஆன்மாவின் வளத்துக்குரிய ஆதாரமாக அமைந்துள்ளது” என்றார் நானக். என்ன கூறுகிறான் மகனென்று தந்தைக்குப் புரியவில்லை. விவசாயத் தொழில் அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ, ஏதேதோ வாதம் பேசி நம்மைத் தட்டிக் கழிக்கிறான் மகன் என்று எண்ணிக் கொண்டார் தந்தை. ஒருவேளை மகன் வியாபாரத் தொழிலிலாவது விருப்பம் காட்டுவானாவென்று எண்ணிய தந்தை ‘நானக் கடை வைத்துக் கொடுக்கட்டுமா? வியாபாரமாவது செய்கிறாயா?’ என்று கேட்டார். ‘அப்பா, எனது உடல் ஒரு கடிை அதில் தெய்வீகம் எனும் சாமான்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். அந்தக் கடையிலே இருந்து உண்மை’ எனும் செல்வத்தை வருமானமாகப் பெறுகிறேன் என்றார் நானக் தந்தையிடம். நாம், கேட்டதற்கு நானக் ஏதேதோ பதில் கூறுகிறானே என்று நினைத்தாரே தவிர, என்ன சொல்கிறான் தனது மகன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவரால் ‘குதிரை வாணிகம் செய்கிறாயா மகனே?’ என்று கேட்டார் தந்தை! குதிரை வியாபாரமா? நான் என்ன அரேபியனா? என்று கேட்கவில்லை நானக், தன் தந்தையை "உண்மை என்பதுதான் குதிரை அந்தக் குதிரையை விற்பவன்தான் உண்மையான வாணிகன் அந்த உண்மை என்ன ஊதியம் தரும் தெரியுமா அப்பா? நற்குணம் என்ற வருவாய் தான் அது. இறைவனை அடைவதற்கு வழி அதுதான்’ என்று நானக் தந்தையிடம் கூறினார். ‘சரி எதுவும் வேண்டாம் உனக்கு அரசு பணி ஏதாவது செய்கிறாயா நானக்?’ என்று கேட்டார் தந்தை! “அப்பா, இறைவன் ஒருவனே என் தலைவன். அவனைப் பணிந்து இறை ஊழியம் செய்வதே எனது தொழில். கடவுளின் பார்வை பெறுவதுதான் எனக்குப் பேரின்பம். நான் பெறுகின்ற ஊதியமும் அதுதான்” என்றார் நானக். இவ்வாறு கூறிய அவர், உடனே இறை தியானத்தில் அமர்ந்து விட்டதைக் கண்டு தந்தை நின்று கொண்டே இருந்தார். நானக் தனது தியானத்திலிருந்து எழ அதிக நேரமானது. அதுவரை அவரது தந்தை மேதாகலூராய் மகன் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார். அதையும் கவனியாமல் நானக், தனது அறை யிலே சென்று அமர்ந்தார். அப்போது அவரது அம்மா மகனை உண்பதற்காக அழைக்க வந்தார். ‘மகனே, நேரம் காலம் ஏதுமில்லாமல் கடவுளையே பூஜை செய்து தியானித்துக் கொண்டிருக்கிறாயே, இது சரியன்று பெரிய ஆன்மிக ஞானிகளாலும், வேதாந்தி - சித்தாந்திகளாலும் கண்டறிய முடியாத ஒரு பரம்பொருளை, நீ தேடிக் கொண்டு வாழ்நாளை வீழ்நாளாக்குவது நியாயமன்று உன்னால் எல்லாம் கடவுளைக் காணமுடியுமென்று நினைக்கிறாயா மகனே’ என்று வருத்தம் தவழ்ந்த முகத்தோடும் குரலோடும் கேட்டார் தாயார். அதற்கு நான்க், ’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்பது தாங்கள் அறியாததா அம்மா? பிறப்பால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பது கிடையாதம்மா! கடவுளைக் காண்பதற்குத் தனித் தகுதி பெற்றவர்கள் யார்? ஒருவரும் இல்லை தாயே! கடவுளை எந்த நேரமும் மனதில் நிறுத்தி யார் தியானம் செய்கிறார்களோ, அவர்களால்தான் காண முடியும் கடவுளை. அவர்கள்தான் உயர்ந்தவர்கள் பிறப்பால் அன்று யார் கடவுளை மறந்து விடுகிறார்களோ, அவர்கள் தாழ்ந்தவர்கள் இதுவும் பிறப்பால் வருவதல்ல தாயே! செயலால் தான் என்று நானக் தனது தாய்க்கு தமிழ்நாட்டுச் சித்தர்களது எண்ணத்தையே எதிரொலித் தார். இவ்வாறு தனது அன்னையிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் தியானத்தில் அவரையம் அறியாமலேயே அவர் மூழ்கிவிட்டார். இப்போது என்ன வயது தெரியுமா நானக்குக்கு? பதினேழு முடிந்தது. இந்த இளம் வயதிலேயே நானக், உளம் உருக, உடல்உருக, கடவுள் தியான வழிபாடுகளிலேயே காலம் கழித்து வந்தார். தகப்பனாருக்கு இந்தச் செயல் மேலும் வருத்தத்தையே தந்தது. மகனிடம் இப்படிப்பட்ட ஒரு தெய்வீக வழிபாடு இருப்பதை மேதாகலுராய் ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. இவ்வாறு நினைத்த நேரத்தில் தியான மயக்கத்தில் மகன் ஆழ்ந்து கிடப்பதை அவர் ஒரு வியாதியாகவே நினைத்துக் கொண்டார். அந்த நோயை இன்னதென அறிந்து கொண்டு மருத்துவம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு தெம்பு அவர் உள்ளத்திலே தெரிந்தது. அதனால், அடுத்த ஊரிலே இருந்த மருத்துவரை அழைத்து வந்து மகனது உடலைச் சோதனை செய்யும்படி கூறினார் தந்தை! நானக்கின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு வரும் போதே தனது மகன் உடல் நலக் குறைவை எப்படியாவது சுகப்படுத்த வேண்டும் என்று மருத்துவரைக் கேட்டுக் கொண்டதற் கேற்ப, மருத்துவர் நானக் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நானக் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, பின்பு மருத்துவரைப் பார்த்து ‘மருத்துவரே! உங்களுடைய உள்ளம் என்ற நாடியை முதலில் சோதித்துப் பாருங்கள்’ என்றார். நானக் கூறியதைக் கேட்டதும் மருத்துவர் ஒரு கணம் திகைத்து நின்றார். மறுபடியும் அவர் மருத்துவரைப் பார்த்து, மருத்துவரே! எனக்கு என்ன நோயென்று உமக்குத் தெரியுமா? வேறு ஒன்றுமில்லை. கடவுளிடம் இருந்து பிரிந்து விட்டதால் உருவான பிரிவுநோய். அதன் ஆற்றாமையால் நான் வருந்திக் கொண்டிருக் கிறேன். அந்த வருத்தமே எனது நன்மைக்கும், நல்வாழ்விற்கும் ஒர் அடையாளமாக உள்ளது. அதனால் வருத்தமே ஒரு நோயாகவும், அதைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இருக்கிறது. இரண்டுமே ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கின்றன என்றார். நானக் பேசிய தத்துவார்த்தங்களைக் கேட்ட மருத்துவர். பதினேழு வயதுடையவன் பேச்சா இது? ஏதோ எல்லாம் உணர்ந்த ஒரு ஞானியைப் போல பேசுகிறானே என்று திகைத்து நின்றார். அவருடைய தத்துவ விளக்கம் வைத்தியரைத் திணறடித்தது. “இந்த வாலிபன் சாதாரணமான ஒரு சிறுவனல்ல. மக்களை ஞான வழியில் திருப்ப வந்த ஒரு தீர்க்கதரிசி, அதனால், அவர் உடல்நலத்தைப் பற்றி அக்கறை கொள்ள அவசியமில்லை” என்று மருத்துவர் நானக்கின் தந்தையிடம் கூறிவிட்டுச் சென்றார். சரக்குகளை விலைக்கு வாங்கி மற்ற கடைக்கு விநியோகம் செய்ய நானக்கிடம் 20 ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பி வைத்தார் தந்தை. மகன் நானக், தனது நண்பனுடன், தந்தை கூறிய அறிவுரைக்கேற்றவாறு அடுத்த ஊரிலே கூடும் சந்தைக்குச் சென்றார். அப்போது அவர் சென்ற வழியிலே சாமியார்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு ஒரே பசி! கையிலே பணமில்லை! அதனால் களைத்து ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து விட்டார்கள். என்ன காரணம்? ஏன் இப்படிச் சோர்ந்து படுத்துவிட்டீர்கள் என்று நானக் அவர்களை விசாரித்தபோது, சாமியார்கள் பசியால் களைத்து நடக்க முடியாமல் படுத்துக் கிடக்கும் விவரத்தை அறிந்து கொண்டார். தனது நண்பர் பாலாவிடம் தந்தை கொடுத்த இருபது ரூபாயையும் கொடுத்து, சாமியார்கள் பசியைப் போக்கிட ஏதாவது உணவுகளை வாங்கி வருமாறு பக்கத்து ஊருக்கு அவரை அனுப்பி வைத்தார். சாமியார்களின் பசியை நானக் தீர்த்தார். இருபது ரூபாயை வியாபாரத்திற்காகப் பெற்றுச் சென்ற மகன் திரும்பி வருகிறானே, எவ்வளவு லாபம் சம்பாதித்து வந்திருக்கிறானோ என்ற ஆசையோடு ஓடி வந்து, மகனே சென்றாயா சந்தைக்கு? சரக்குகளை வாங்கி மற்ற கடைகளுக்கு விற்று எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? என்று தந்தை கேட்ட போது, சாமியார்களுக்கு பசிதானம் செய்துவிட்ட மன நிறைவோடு வந்த நானக், வெறுங்கையோடு வந்ததைக் கண்டு தந்தைக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. அப்போது நானக் நண்பன் பாலா நடந்த விவரத்தை மேதாகலூராயிடம் கூறினார். நானக்கின் தந்தை அவன் சொல்வதைக் கேட்டவாறே நானக்கைப் பார்த்தார். அவர் பத்மாசனத்தில் ஆழ்ந்து இருந்தார். மேதாகலுராய் தனது மகள் பீபி நானகியை, சுல்தான்பூர் ஆளுநராக இருந்த தெளலத்கான் லோடியிடம் அமைச்சராக இருந்த திவான் ஜெய்ராம் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். பீபி நானகி செல்வச் சீமாட்டி நல்ல செல்வாக்கு படைத்த குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். அந்த அம்மையாருக்குத் தன் தம்பியின் மீது அளவற்ற பாசம் உடன்பிறப்பல்லவா? தனது தம்பி நானக், பெற்றோரை நல்லபடியாக வைத்திருக்க வில்லையே என்ற கவலை. அதனால், தம்பியை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, கணவரிடம் கூறி, கவர்னரிடம் ஏதாவதொரு நல்ல வேலையை வாங்கிக் கொடுத்து, தாய்வீட்டை நன்னிலைக்குக் கொண்டு வரலாமே என்று அவர் திட்டமிட்டார். தாள்வாண்டிக்கு வந்தார் தமக்கை தந்தையிடம் தனது எண்ணத்தை எடுத்துரைத்தார். அப்பா சம்மதம் தந்தார். அதனால் தம்பியை அழைத்துக் கொண்டு சுல்தான்பூர் வரத் திட்டமிட்டார் பீபி நானகி. தாள்வாண்டி ஊர்த் தலைவர் ராய்புலார், நானக்கின் நெருங்கிய நண்பர் மட்டுமல்லவே - அவர் ஒர் அவதார மனிதர் என்ற நம்பிக்கையைக் கண்ணால் கண்டு ஊராருக்கு உரைத்தவர் அல்லவா? அப்படிப்பட்ட தனது நண்பர், தம்மை விட்டுப் பிரிந்து தனது தமக்கை வீடு செல்வதை எண்ணி வருத்தப்பட்டு, தமது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று, ’எனக்கு தங்களது வாழ்த்தும் அறிவுரையும் வழங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்று கண்ணீர் தளும்ப, தழதழத்தக் குரலில் கேட்டுக் கொண்டார். “அன்பரே மக்களுக்கு உண்மையோடு தொண்டு செய்யுங்கள். யாருக்கு உங்களது உதவி தேவையோ அவர்களுக்குத் தவறாமல் உதவுங்கள். துன்பப்படும் மக்களின் துயர் துடைக்கக் கவனம் செலுத்துங்கள். தாங்கள் மக்களுக்கு வழங்கும் நீதியைக் கருணை யோடு வழங்குங்கள். இறைவனுடைய எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு பெறுவீர்கள்.” என்ற அறிவுரையை ஊர்த் தலைவர் ராய்புலாருக்குக் கூறினார். பிறகு அவரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு தனது தமக்கையுடன் சுல்தான்பூர் சென்றார். சுல்தான் பூரில் அக்காள் கணவர் ஓர் அமைச்சராதலால், அவர் தனது மைத்துனர் நானக்குக்கு தானியக் களஞ்சியம் காப்பாளர் என்ற வேலையைக் கவர்னரிடம் பெற்றுத் தந்தார். அந்த வேலையைப் பெற்றுக் கொண்ட நானக் தனது மைத்துனர் பெயருக்கு இழுக்கேதும் நேரிடாதவாறு பொறுப்புடன் பணியாற்றி வநதாா. தனது தம்பி, கணவர் பெற்றுக் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்து வருவதைக் கண்ட தமக்கையார், தம்பியைப் பற்றி இனி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. தம்பி திருந்தி விட்டான் என்று மகிழ்ச்சியடைந்தார். தம்பிக்கு நல்ல இடத்திலே பெண் பார்த்து திருமணம் செய்து விடலாம் என்ற முடிவுக்கு தமக்கை வந்தார். கணவரிடம் இது பற்றி கலந்துரையாடினார். தம்பியின் சம்மதத்தைப் பெற்றிட நானக்கிடமும் கூறினர். அக்காள் வார்த்தையை தம்பி மறுக்காமல் ஒப்புக் கொண்டார். இந்தச் செய்தியை தனது தந்தை மேதாகலூராய்க்கும் மகள் தெரிவித்தார். அமைச்சர் மைத்துனர் தானியக் களஞ்சியக் காப்பாளர் பதவியும் நிரந்தரமானது. அதனால் பீபி நானகி, தனது தம்பிக்கு பணக்காரர் வீட்டுப் பெண்ணாகப் பார்த்து பேச்சு வார்த்தையும் நடத்தி, பெண்வீட்டாரது சம்மதத்தையும் பெற்றார். பெண்ணின் பெயர் மட்டாசுலாகனி என்பதாகும். நல்ல குடும்பத்திலே பிறந்த அந்தப் பெண்ணுக்கும் நானக்குக்கும் திருமணம் நடந்தது. தாய் தந்தை, உறவினர் அனைவரும் ஆசி கூறி மணத்தை முடித்து வைத்தார்கள். தமக்கைக்கோ பேரின்பம்! உதவாக்கரை என்று தனது தந்தையால் வெறுக்கப்பட்டு வந்த தம்பியை அழைத்துக் கொண்டு வந்து, தனது கணவரின் ஆசியோடு நல்ல வேலையைப் பெற்றுத் தந்து, நல்ல குடும்பப் பெண்ணை, நற்குணவதியை, பணக்காரர் வீட்டுப் பெண்ணாக்ப் பார்த்து தனது தம்பிக்கு மனம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக்கி விட்டோமே என்ற மகிழ்ச்சியிலே தமக்கை பேரின்பம் கண்டார். நானக்கின் இல்லற வாழ்க்கை இனிமையாக நடந்து வந்ததின் அடையாளமாக, அவருக்கு பூரீசந்த் என்ற ஆண் குழந்தையும், லட்சுமி சந்த் என்ற பெண் குழந்தையும் பிறந்தார்கள். திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாயின. இப்போது அவருக்கு வயது இருபது! சுல்தான்பூர் வட்டாரத்தில் மழை இல்லை. வயல்கள் வறண்டன. மக்கள் உணவுப் பஞ்சத்தால் கடும் வேதனையடைந்து சொல்ல முடியாத கஷ்டங்களைப் பட்டு ஊர் ஊராக அலையும் நிலை ஏற்பட்டு விட்டது. சுல்தான் பூர் மிகவும் நற்குணவான் என்று மக்களால் போற்றப் பட்டவர் மனித நேயம் கொண்ட மக்கள் தொண்டர். அவர் மக்கள் படும் உணவுப் பஞ்சத்து வேதனைகளை நேரில் சென்று பார்த்து. ஆறாத் துயரம் அடைந்தார். அப்படிப்பட்ட அவர் என்ன செய்தார் தெரியுமா? நானக்கை அழைத்தார் உணவுப் பஞ்சத்தினால் மக்கள் துன்பப் படக்கூடாது என்று அவருக்குக் கூறி, மக்களில் யார் வந்து விலைக்குக் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் தான்ியங்களைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நானக்கும் அதுதான் சரியான யோசனை என்று கூறி, அவரது உத்தரவுப்படியே நடப்பதாகச் சொல்லி விட்டு வந்தார். மறுநாள், அரசாங்கத் தானியக் களஞ்சியத்தில் யார் வேண்டுமானாலும் சென்று உணவு தானிய வகைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று தண்டோரா போடப்பட்டது. மக்கள் தாங்க முடியாத மகிழ்ச்சியால் அலைமோதிச் சென்று கூட்டம் கூட்டமாக தானிய வகைகளை விலைக்கு வாங்கலானார்கள். நானக் அல்லவா தானியக் களஞ்சியக் காப்பாளர் அவரே மக்களுக்குரிய தானியங்களை அளந்து கொடுத்து வந்தார். தானியங்களை அளவுக் கருவிகளால் ஒன்றிரண்டு மூன்று என்று அளந்து போடுவார். பதின்மூன்று என்ற எண் வந்துவிட்டால் உடனே தன்னை மறந்து தானிய வகைகளை அளந்தது அளந்தபடியே தியானத்தில் மூழ்கிவிடுவார். அதற்குப் பிறகு அவரைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. தானியம் வாங்க வந்த மக்கள் சிலர் ஒழுங்காகப் பணத்தைப் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் நானக்குக்கு ஒன்றும் தெரியாது. பதின்மூன்று என்ற எண்வரும்போது ஏன் தானியம் அளப்பதை அப்படியே நிறுத்தி விடுகிறார்? என்று மக்கள் யோசித்தார்கள். அந்த எண் வரும் நேரத்தில் மட்டும் ஏன் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்? பஞ்சாபி மொழியில் பதின்மூன்று என்ற எண்ணுக்கு தேரா என்று பெயர். அந்தத் தேரா என்ற சொல்லுக்கு ‘உன்னுடைய’ அல்லது ‘உங்களுடைய’ என்று பொருள். அதனால், தேரா என்று எண்ணும்போது, ‘உன்னுடைய’ என்னும் பொருளையே நானக் எண்ணிக் கொண்டார். அதாவது, கடவுளே! உன்னுடைய சேவைக்கே நான் இருக்கிறேன்’ என்று நானக் நினைப்பார். அந்த நினைவு வந்ததும் தம்மை மறந்து அவர் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்! என்ற காரணம் பிறகுதான் எல்லாருக்கும் தெரிய வந்தது. நாட்கள் இவ்வாறு சென்றன. தானியங்களை விற்றதற்கோ, அதற்கு வசூலான பணத்திற்கோ கணக்கு வழக்கில்லை. கடவுளின் சேவைதான் தானியத்தை அளந்து மக்களுக்குக் கொடுப்பது என்றெண்ணிய நானக்குக்கு கணக்கு எழுத நேரம் ஏது? அல்லது கணக்கு எடுக்க வைக்க காலம் ஏது? கவர்னருக்கு இந்தச் செய்திகள் எல்லாம் தெரிந்தது. தானியக் களஞ்சியத்துக் கணக்குகளை எடுக்குமாறு கவர்னர் உத்தரவிட்டார். அரசு அதிகாரிகள் களஞ்சியத்திற்கு வந்து கணக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட நானக், களஞ்சியத்தை விட்டே வெளியேறிவிட்டார். களஞ்சியத்தில் கணக்கு எடுக்கச் சென்ற அதிகாரிகள். தானிய வகைகள் மலைமலையாகக் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள். பணப்பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். பெட்டி நிரம்பிப் பணம் வழிந்து கிடந்தது. தானியங்கள் விற்பனை ஆனதற்கான அடையாளங்கள் ஏதும் தென்படவில்லை. அதே நேரத்தில் பணம் நிறைய நிரம்பிக் கிடந்தது. ஒன்றுமே புரியாத அரசு அதிகாரிகள், வியப்பால் களஞ்சியக் கிடங்கை விட்டு வெளியேறினார்கள். நானக் தானியக் களஞ்சியத்தை மட்டும் விட்டு வெளியேற வில்லை. இல்லற வாழ்க்கையை விட்டு விட்டே சென்றுவிட்டார். ஆம், அவர் துறவியானார் தனது எண்ணத்தை நானக், தனது தமக்கையின் கணவரிடம் கூறினார்; வெளியேறினார். அவர் தமக்கையிடமும், மைத்துனரிடமும் கூறிவிட்டு வெளியேறும்போது “நான் இல்லற வாழ்க்கையிலிருந்தே வெளியேறுகிறேன். ஏனென்றால், எனது பிறவியின் முதல் வேலை முடிந்துவிட்டது. இல்லறத்தில் இருந்து துறவறத்திற்குப் போகிறேன். மனிதப் பிறவியில் எப்படி உண்மையாக வாழ வேண்டும் என்பதைக் குடும்பத்தில் வாழ்கின்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே செல்லுகின்றேன். இல்லறத்தில் வாழும்போதே இறைவனை அறிவது எப்படி என்பதை உலகத்துக்கு உணர்த்தவே போகின்றேன்” என்று நானக் கூறினார். தமக்கையும், மைத்துனரும் போக வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள்! கண்ணிர் விட்டார்கள். இருந்தும், நானக் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். உலக மக்களுக்குரிய ஞானவழிகளை உபதேசங்களாக ஊர்தோறும் உரைக்கவே நானக் சுல்தான்பூர் நகரைவிட்டுப் புறப்பட்டார். நானக் துறவறத்தைக் கவர்னர் கேள்விப்பட்டு வருந்தினார். உண்மையான ஒரு மக்கள் ஊழியரை தெய்வாம்சம் பெற்ற ஒரு தானியக் களஞ்சியக் காப்பாளரை இழந்து விட்டோமே என்று திவான் ஜெய்ராமிடம் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் பீபி நானகி கண்ணிர் சிந்தியபடியே இருந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவன் சுல்தான்பூர் கவர்னரின் தானியக் களஞ்சியப் பாதுகாப்பாளர் பணியை உதறித் தள்ளிவிட்டு, கண்ணிர் சிந்தும் பீபி நானகியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, நானக் தனது இல்லறத்தைத் துறந்து வந்து விட்டார். ஒர் ஒடையருகே வந்து அமர்ந்தார். அங்கே தவத்திலே ஒரு யோகியாக இறைவன் பற்றோடு இருந்தார். கடவுள் ஒருவரைத் தவிர அவர் மனம் எதன் மீதும் பற்றேதும் இல்லாமல், கடுமையான யோகத்திலே அமர்ந்து விட்டார். கடும் வெயில், கடும் குளிர், அச்சம், காற்றின் வேகம், எல்லாம் அவரைத் துன்புறுத்தியும்கூட அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. தன்னுணர்வற்ற தனிமனிதனாக உட்கார்ந் திருந்தார். அழகே உருவான மனைவி உருவம் அவரை மருட்டியது: தான் பெற்ற செல்வங்களது காட்சிகள் பந்த பாசநேசத்தோடு மின்னி நினைவுறுத்தின. அவர் வகித்த பதவி, தமக்கையின் பாசம், மைத்துனரின் இரக்கம், தாய் தந்தையரின் எண்ணங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்து சூழ்ந்து, தோன்றித் தோன்றி அவரது தவத்தைக் குலைக்க முயன்றன. எல்லாவற்றையும் அவர் துச்சமாக மதித்து, அமர்ந்த இடத்திலேயே ஒரு சிறு கல் குன்றுபோல ஆடாமல் அசையாமல் இருந்தார். எந்த பந்த பாச சக்தியாலும், சிற்றின்பச் சிந்தனைகளாலும் அவருடைய தவத்தைக் குறைக்க முடியவில்லை. இவ்வாறு அவர் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தார். அந்த மூன்று நாட்களுக்குப் பிறகுதான் நானக் தியானம் கலைந்து எழுந்தார். சுற்று முற்றிலும் தனது சூழலை நோக்கினார். அப்போது இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடலை அவர் பாடினார். அந்தப் பாடலின் பொருள் இது : “இறைவா! நீ ஒருவன். உண்மை என்பதே உனது பெயர். ஆதியும் நீயே, அந்தமும் நீயே, உனக்கு நிகர் நீயே, அழிவற்ற கடவுளும் நீயே, பிறப்பு இல்லாதவன் - இறப்பும் இல்லாதவன்; சகல சக்தியும் நீயே இறைவா!” என்பதே அந்தப் பாடலின் மூலக் கருத்தாகும். இன்றைக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இந்தப் பாடலின் கருத்தே திருமந்திரச் சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பாடலை நானக் பாடி முடித்த பின்பு, ஓடைக்கரை ஓரத்தை விட்டு எழுந்து நடந்தார். அவரது கால்கள் இரண்டும் கல்லறை ஒன்றை நோக்கி நடந்து கொண்டிருந்தன. இவ்வாறு மைத்துனர் மாறிவிட்டதைக் கண்ட திவான் ஜெய்ராம், ஒரு முஸ்லிம் மதகுருவை அழைத்து வரும்படி தனது பணியாட்களுக்கு உத்தரவிட்டார். வந்த அந்த முஸ்லிம் மத குருவிடம் தனது மைத்துனர் மனநிலையை திவான் விளக்கினார். அதைப் புரிந்து கொண்ட அந்த மதகுரு, நானக்குக்கு ஒன்று போய் பிடித்திருக்க வேண்டும் அல்லது சித்தப் பிரமையாக இருக்க வேண்டும்" என்றார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முல்லா கூறியதைக் கேட்ட நானக் மறுபடியும் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். எந்த சித்தப் பிரமையைத் தெளிய வைத்திட வந்தாரோ முல்லா, அதே பிரமை மனிதரான நானக் பாடத் தொடங்கினார். இதோ அந்தப் பாடலில் அவர் கூறிய கருத்து : “மனிதர்கள் விந்தையானவர்கள். ஆனால், அவர்களுடைய எண்ணங்களோ, முட்டாள்தனமானவை. எவருடைய ஞானத்தில் இறை அன்பு தவழ்கின்றதோ அவரைப் பார்த்து, இந்த முட்டாள்தனமான மனிதர்கள் பேய் பிடித்தவன் என்று கூறிவிடுகிறார்கள். கடவுளுக்கு யார் பக்தனாக இருக்கிறானோ, அவனைச் சித்தப் பிரமை பிடித்த மூளைக் கோளாறுடையவன் என்கிறார்கள்” என்ற பாடலைத்தான்் நானக் அப்போது பாடினார். நானக் இவ்வாறு பாடிய பாடலைக் கேட்ட அந்த முல்லா திகைத்துவிட்டான். நாம் திவானிடம் கூறிய கருத்து இந்த மனிதனுக்கு எப்படித் தெரியும்? குரு நானக்கைப் பார்த்து, “ஐயா நீர் பேசுவது ஒரு கற்றறிந்த ஞானியைப் போல இருக்கிறது. ஆனால், முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீரே ஏன்?” என்றார் முல்லா. அந்த முல்லாவின் கேள்விக்கு “இறைவன் தியானத்தில் மூழ்கியவன், தன்னை இழிவாகப் பேசுவதைக் கயமையாகவே மதிக்கிறான். அத்தகைய குணமுடையவனை அறிவில்லாதவன் என்று அழைக்க, அறியாதவனைத் தவிர வேறு யாருக்குத் துணிவு தோன்றும்” என்று நானக் பதில் கூறினார். உடனே முல்லா, “அப்படியானால் நீர் ஏன் மனைவி மக்கள் உள்ள இல்லற வாழ்க்கையை விட்டுவிட்டு, இந்த மயானத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்?” என்று கேட்டார். “அதுவா மனித இனத்திற்குத் தொண்டு செய்யத்தான்” என்றார் நானக் முஸ்லீம் இனமென்றோ, இந்து இனமென்றோ ஒன்றும் இல்லை. மனித குலத்தில் எல்லோரும் ஒன்றே! எல்லாம் இறைவனுடையவையே! மக்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு, கடைசியில் எல்லோரும் இந்த மயானத்திற்குத்தான்் வந்து சேர வேண்டும். இந்த கல்லறை மக்களது ஒருமைப்பாட்டை விளக்கும் நிரந்தரமான இடமாகும். ஆனால், மற்ற மனிதர் களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் இறந்துவிட்ட பிறகு மற்றவர்களுடைய தோளிலே ஏறிக் கொண்டு இந்த இடத்திற்கு வருவார்கள். நான், எனது சொந்தக் கால்களாலே இங்கு நடந்து வந்து விட்டேன்." என்றார் நானக். பேய் ஒட்ட வந்த முல்லா தோல்வியோடு திரும்பிப் போனார். அவர் திவான் ஜெய்ராமைச் சந்தித்து, ‘நானக் நல்லறிவுடன்தான் இருக்கின்றார். ஆனால் மக்கள் இனத்திற்குத் தொண்டு செய்ய தனது வழிதான் சிறந்தது என்ற திடமனதோடு இருக்கிறார்’ என்று அவரிடம் கூறி விட்டுச் சென்றுவிட்டார் முல்லா. பிே நானகி, தனது தம்பியை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் பலவும் தோல்வி கண்டுவிட்டதை அறிந்து மனமுடைந்து போனார். ஒரே தம்பி அவர் வாழ்வு இப்படியாவதா என்ற சோகமும், மனவருத்தமும் அவரை மிகவும் துன்புறுத்தி வாட்டியதால், தானே தம்பியைப் பார்த்து, தக்க முறைகளைக் கூறி அழைத்து வரலாம் என்று எண்ணி, அவர் தனது தம்பி தங்கியுள்ள கல்லறையை நோக்கி வந்தார். தம்பியைச் சந்தித்தார் கண்ணீர் சிந்தினார் தம்பி, உன்னை உயிருக்கு உயிராக நானும், உனது மனைவி மக்களும், மைத்துனரும், தாய் தந்தையரும் மதிக்கும் குடும்பத்தை விட்டு விட்டு, நீ இப்படி கல்லறையிலே வந்து அநாதையாக இருக்கலாமா? என்ன குறையென்று கண்டு நீ ஏன் வந்தாய் தம்பி?" என்று பீபி நானகி அழுத குரலோடு தழுதழுத்தபடியே தனது தம்பியைக் கேட்டார். ‘எனது அன்பு சகோதரி நான் அநாதை அல்ல; இந்த மக்கள் குலம் எல்லாமே எனது குடும்பம்தான். எனக்கென்று ஒரு குடும்பம் இல்லை. அந்த மக்கள் இனத்திற்குத் தொண்டு செய்யவே நான் புறப்பட்டு விட்டேன். எனது சேவை மக்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பெரிய குடும்பத்திற்கு நான் சேவை செய்ய வந்து விட்ட போது, எனது குடும்பத்திற்கும் தொண்டு செய்வதாகத்தான் பொருள்’ என்று குருநானக் கூறிய போது பீபி நானகி, தன் தம்பியின் முடிவைக் கண்டு தேம்பித் தேம்பி அழுதபடி போனார். சகோதரி பீபி நானகி மனம் ஒடிந்து தனது வீடு திரும்பினார். எப்படியாவது தம்பியை அழைத்துக் கொண்டு வந்து அவருடைய மனைவி மக்களுடன் சேர்த்து வாழ வைத்து விடலாம் என்று திட்டமிட்ட சகோதரியின் முயற்சி தோல்வி கண்டுவிட்டது. நானக் தனக்காக மட்டுமே இல்லாமல், இறைவன் படைப்பிலுள்ள எல்லா உயிர்களுக்கும் தொண்டு செய்யும் ஒரு கடவுள் தொண்டனாக மாறிவிட்டார். கல்லறையை விட்டு நானக் கால்நடையாகவே புறப்பட்டார். ஒவ்வொரு ஊர்தோறும் சென்று, மக்களுக்குரிய நல்வழி ஞானத்தைப் போதித்திட அவர் புனிதப் பயணம் சென்றார். குரு நானக்குடன், பாய்மர்தனா என்ற ஒரு பாணர்குல மாணவனும் சென்றான். அந்த பாணன் தனது குலத் தொழிற்கருவியான மண்டோலினி எனும் இசைக் கருவியை வாசித்துக் கொண்டே நானக்குடன் பயணம் செய்வான் அதனால் இருவருக்கும் நடைப்பயணக் களைப்பு அவ்வளவாகத் தெரியாது. நானக்கும், பாய்மர்தனாவும் நடந்து கொண்டே இருந்தபோது, மாணவனைப் பார்த்து, மர்தனா மண்டோலினியை எடுத்து வாசி கேட்டுக் கொண்டே போவோம் என்றார் நானக். உடனே மர்தனா குருவே நான் மண்டோலினியைக் கொண்டு வரவில்லையே என்றான். அப்படியா! அது உனது குல இசைக் கருவியாயிற்றே; ஏன் கொண்டு வர மறந்தாய்? போகட்டும் அதைப் பற்றி வருந்தாதே! இதோ, இந்த வட திசையை நோக்கிச் சிறிது தூரம் செல். உனக்கு ‘ரூபாய்’ என்ற இசைக் பருவி ஒன்று கிடைக்கும் என்றார் நானக் ‘எனக்கு வடதிசையில் எவரையும் தெரியாதே குருவே’ என்றான் மர்தானா! ‘நான் சொல்கிறபடி செய்! இசைக் கருவி கிடைக்கும்’ என்றார் நானக். வட திசை நோக்கி மர்தானா சென்றான். கொஞ்சம் தூரம்தான் போயிருப்பான் அப்போது அந்தக் கானகப் பாதை வழியாக ஒரு முதியவன் நடந்து வந்து கொண்டிருந்ததை மர்தானா பார்த்தான். அந்த முதுமையாளன் வயதுக்கேற்றவாறு சற்றுக் கூன் வடிவமாக அவனது முதுகு காணப்பட்டதைக் கண்டான் கிழவன் நரைத்த வெண்தாடியோடு வருவதைப் பார்த்தான் மர்தானா! அப்போது அந்த முதியவன் மர்தானாவைப் பார்த்து, ‘ஐயா எங்கே வந்தீர்கள்?’ என்று கேட்டான். ஒருவர் எனக்காகக் காத்திருப்பார் அவரைப் பார்க்கச் சென்று கோண்டிருக்கிறேன் என்றான் மர்தானா! ‘ஏன் அவரைத் தேடிப் போகிறாய்?’ என்று கேட்டார் அந்த நரைதாடிக் கூன் கிழவன். வேறு ஒன்றுமில்லை, அவரிடமிருந்து ‘ரூபாய்’ என்ற ஓர் இசைக் கருவியைப் பெற்று வரச் செல்கிறேன் என்றான் மர்தானா ஓ, ஓ, அவர் நீர்தானா? நானக் உம்மை அவரிடம் அனுப்பி வைத்தாரா? என்று அந்தக் கிழவன் கேட்டான். ‘நானக் அனுப்பினாரா?’ என்று கிழவர் கேட்டதைக் கேட்டு, மர்தானா திகைத்து வியப்படைந்து, ஆம் அவர்தான் அனுப்பினார் என்றான். உடனே அந்தக் கிழவன், மர்தானா, நானக் குரு மகானுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தைக் கூறு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே என்னை நம்பி அவர் கொடுத்து விட்டுச் சென்ற இந்த ரூபாய் இசைக் கருவியை, இப்போது நான் உன்னிடம் கொடுத்திருப்பதையம் கூறு என்று சொல்லியவாறே ஓர் அழகிய ரூபாய் இசைக் கருவியை அந்த வயோதிகத் தாடிக்காரர் மர்தானாவிடம் கொடுத்தார். அடுத்த கணமே, அவர் மறைந்து போனார். இதையெல்லாம் கேட்டபடியே வியப்படைந்த அவன் இசைக் கருவியைப் பெற்றுக் கொண்டு வந்தான் - நானக்கிடம்! ரூபாய் இசைக் கருவியை கிழவனிடம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த மர்தனாவிடம் அதை மீட்டு, வாசி என்றார் நானக், குருவே, எனக்கு அந்தக் கருவியை வாசிக்கத் தெரியாது என்றான் மர்தானா! அது ஒன்றும் கடினமான செயலன்று. ரூபாய் இசைக் கருவியில் உள்ள கம்பிகளில் உனது விரல்களை வைத்து அவற்றை அசையும்படி செய். அதுபோதும் என்றார் குருநானக். மர்தானா, குரு கூறியபடியே செய்தான்! இசை நாதம் வெள்ளம் போல் பெருகிற்று. ரூபாய் கருவியை தனக்கு வாசிக்கத் தெரியாது என்று மர்தானா கூறினானே. இப்போது எப்படி அவனால் அதை வாசிக்க முடிந்தது குருநானக்கின் அற்புதக் கருணையால்தான் மர்தானாவினால் அக்கருவியை வாசிக்க முடிந்தது. குருநானக்கும், மர்தானாவும் அன்றிரவு அமெனாபாத் என்று இன்றைக்கும் அழைக்கப்பட்டு வரும் அன்றைய சைதாபாத் என்ற பெயருடைய நகரை வந்தடைந்து, பாய்லாலு என்ற பெயருடைய ஒரு தச்சன் வீட்டிலே தங்கினார்கள். யார் இந்த பாய்லாலு? சைதாபாத் என்ற அந்த நகரில் மர வேலைகளைச் செய்து வரும் தச்சன் அவன். பெயர் பாய்லாலு. ஏழைகளிலேயே அவன் பரம ஏழை எவ்வளவுதான் அவன் வியர்வையை சிந்தி வேலை செய்தாலும், வயிராற உணவு உண்ணும் வருமானம் அவனுக்கு வருவது அரிது. ஆனால், பாய்லாலுவுக்கு நானக் என்றால் யார்? எப்படிப்பட்ட நேர்மையாளர் என்பதைப் பற்றிச் சுல்தான் பூரிலே உள்ள அவனது உறவினன் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டதால், அவரிடம் மிகுந்த மரியாதை உடையவர் பாய்லாலு. அப்படிப்பட்ட ஏழையிலும் ஏழ்மையான அந்தத் தச்சன் வீட்டிலே தான் நானக்கும், மர்தானாவும் வந்து தங்கியிருந்தார்கள். அமெனாபாத் மாநிலத்திற்கு ஒரு கவர்னர். அவர் பெயர் மாலிக் பாகோ. நல்ல மனிதர்தான் என்று அந்த மாநில மக்களால் மரியாதையாகப் பாராட்டப்பட்டவர் அவர். குரு நானக் தச்சர் வீட்டில் தங்கி இருந்த அன்று, அந்த ஆளுநர் ஒரு விருந்து நடத்தினார். அந்த விருந்தில் மதபேதமின்றி எல்லாச் சமியார்களும் மத குருமார்களும் விருந்துண்ணும் வாய்ப்புப் பெற்றார்கள். அன்று. நானக் அந்த ஊருக்கு வந்திருக்கும் செய்தியும், அவர் தச்சரது வீட்டில் தங்கியுள்ளதும் அந்த ஆளுநருக்குத் தெரிந்தது. அதனால், அந்தக் கவர்னர், ஓர் அதிகாரியை அனுப்பி குரு நானக்கையும் விருந்துண்ண வருமாறு அழைத்தார். ஏழைத் தச்சர் வீட்டிலேயே தங்கியிருந்த நானக், வந்த அதிகாரியிடம் தான் தச்சர் வீட்டிலேயே உணவு உண்டு கொள்வதாகக் கூறிவிட்டார். அத்துடன் இல்லாமல் கவர்னர் நடத்தும் விருந்துக்குத் தன்னால் வர இயலாது என்றும் கூறிவிட்டார். குரு கூறியனுப்பிய விவரத்தைக் கேட்ட கவர்னர், குருநானக் ஓர் இந்து கவர்னரான நாம் ஒரு முஸ்லீம், மத அடிப்படையில் நானக் நமது விருந்தில் உண்ண மறுத்து விட்டார் போல் இருக்கிறது என்று எண்ணி குருநானக்குக்காக தனி விருந்து நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் செய்து உணவுகளைத் தயாரித்தார். கவர்னர் மறுபடியும் ஓர் அதிகாரியை அனுப்பி, குருநானக்கை விருந்துக்கு மீண்டும் அழைத்து வருமாறு பணித்தார். ‘எனக்கு ஜாதி வேற்றுமையோ, மத பேதமோ ஏதும் கிடையாது. எனக்காக தூய்மை செய்யப்பட்ட இடமோ, தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவோ தேவையில்லை. என்னைப் பொறுத்த வரை இறைவனால் படைக்கப்பட்ட பூமியும், அதனுள்ளே உள்ள இடங்களும் தூய்மையானவையே. மனித குல மக்கள் எல்லாரும் எனக்கு சகோதரர்களே அல்லாமல், அவர்களிடம் பேதம் பார்ப்பவன் நான் அல்லன். ஆனால், கவர்னர் வீட்டு விருந்தில் மட்டும் நான் சாப்பிட மாட்டேன்’ என்று கூறி அந்த அதிகாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார் நானக். எது உண்மை? எது பொய்? அமெனாபாத் நகரத்திலே தங்கியிருந்த குரு நானக்கும், மந்தானாவும் ஏழை தச்சர் வீட்டிலே இருந்து மீண்டும் ஊர் ஊராக ஞானோபதேசப் பயணம் செய்திடப் புறப்பட்டார்கள். இருவரும் ஒரு காட்டுப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். இடையில் மாண்வன் மர்தானாவுக்கு ஒரே பசி! அவனுடைய கண்கள் இருண்டன. நடை மிக தளர்ந்தது. நகரங்களின் வழியாகச் சென்றால், கடைகள் இருக்கும். உணவுகளை வாங்கி உண்ணலாம். ஆனால், நகரங்களிற்குள் குரு போவதில்லை. பெரும்பாலும் சிற்றூர்கள், பேரூர்களுக்கே செல்கிறார். அதனால், அவனது பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மாணவனுக்கு! இருந்தாலும், அவனால் பசியை அடக்க முடியவில்லை. மனம் விட்டே கேட்டுவிட்டான் மர்தானா தனது குருவை! "நகரத்துக்குள்ளே நீங்கள் ஏன் போக மறுக்கிறீர்கள். இப்போது எனக்குப் பசி! எங்கே செல்வேன் பசியாறிட! எதையாது உண்டால்தான் என்னால் நடக்க முடியும் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான் மர்தானா! நானக் மாணவனைப் பார்த்து, ஒரு சிறு சிரிப்பை சிரித்துக் கொண்டு, மர்தானா, நகரங்கள் பாபத்தின் இருப்பிடங்கள். அதனால்தான், நான் நகரத்தினுள் அதிகம் செல்வதில்லை. உனக்கு பசி தானே எடுக்கிறது? இதோ இந்தக் காகிதத்தைக் கொண்டு போய் நகரத்தில் உள்ள மக்களிடம் காட்டு. இதில் எழுதி இருக்கும் வாசகத்தின் உட்பொருளை உணர்பவர் எவரோ, அவர் உனக்கு உணவு வழங்குவார் என்று சொல்லி ஒரு காகிதத்தை மர்தானாவிடம் கொடுத்தார். அந்த காகிதத்தில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? எது உண்மை, ‘எது பொய்?’ என்பதே அந்தக் காகிதத்தில் எழுதப் பட்டிருந்த சொற்றொடர்கள். எனவே, அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு மர்தானா நகருக்குள் நுழைந்தான். யார் யார் தன்முன் எதிர்பட்டார்களோ அவர்களிடம் எல்லாம் அந்தக் காகிதத்தைக் காட்டினான். அதன் உட்பொருள் எவருக்கும் புலப்படாதது மட்டுமன்று, படித்தவர்களில் பலர் அவனைப் பற்றி மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். சிலர் அலட்சியமாகச் சென்றனர். வேறு சிலர் கேலியாகவும், கிண்டலாகவும் பேசிக் கொண்டார்கள். ஒருவரும் உணவு தர முன் வரவில்லை. பசி அவனை நறநறவென்று மென்று கொண்டே இருந்தது. இறுதியாக, ஒரு ரொட்டிக் கடைகாரனை மர்தானா அணுகி காகிதத்தைக் காட்டினான். அவன் அந்த சொற்களைப் படித்தான். எடுத்தான் எழுதுகோலை. உடனே எழுதினான் பதிலை. வாழ்க்கை என்பது பொய் மரணம் தான் மெய் என்று. காகிதத்தை மர்தானாவிடம் திருப்பிக் கொடுத்தான். அவனுக்கு வேண்டிய உணவுகளை வயிராறக் கொடுத்தான். அவனும் உண்டு மகிழ்ந்தான். ரொட்டிக் கடைக்காரன் மர்தானா பசியாறிய பின்பு தன்னருகே அழைத்து, இந்தக் கேள்விகளை எழுதியது யார் என்று கேட்டான். அதை எழுதியவர் எனது மதிப்பிற்குரிய குருநானக்தான் என்றான் மர்தான ரொட்டிக் கடைக்காரன் நானக்தான் எழுதினார் என்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். உடனே, சத்குரு நானக்கை நேரில் பார்ப்பதற்கு கடைக்காரன் புறப்பட்டான். இருவரும் ஒரு காட்டிற்குள் சென்றார்கள். நானக்கைக் கண்ட ரொட்டிக் கடைக்காரன் மகிழ்ச்சியின் சிகரத்திற்கே சென்றான். அந்த மகிழ்ச்சிக்கு இடையில் கடைக்காரன் அக்கேள்விகளை நானக்கைப் பார்த்து சத்குருவே எனக்கும் ஓர் உண்மை வழியைக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டான். ரொட்டிக் கடைக்காரன் சத்குரு நானக்குடன் சில நாட்கள் தங்கியிருந்தான். எது உண்மையான வாழ்க்கை என்பதை நானக் அவனுக்கு எடுத்துரைத்து உணர்த்தினார். பிறகு, அதற்குரிய திருமந்திரத்தைப் போதித்து ரொட்டிக் கடைக்காரனுக்கு விடை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார். அவன் நானக்கை விட்டு பிரிய மனமிலாதவனாய் நகர்ந்தான். அந்த நகரைவிட்டு நானக் மீண்டும் தனது ஞானோபதேசப் பயணத்தைத் துவக்கினார். இடையிடையே அவரைத் தேடி வந்து பார்க்கும் மக்களுக்குத் தரிசனம் தந்து இறைவனை அடைவதற்கான மார்க்கத்தைக் கூறியபடியே பயணம் செய்து வந்தார். நாட்கள் நகர்ந்து, வாரங்களாக, மாதங்களாக மாறி, ஆண்டு களாகின. மர்தானாவும் - நானக்கும் எல்லா இடங்களுக்கும் சென்றபடியே இருந்தார்கள். சத்குரு நானக் எந்தெந்த பக்கம் நோக்கிப் பயணம் போக வேண்டும் என்பதைக் காட்ட, ஒளி வட்டம் ஒன்று அவருக்கு முன்பு சென்றபடியே இருந்தது. அதைப் பின் தொடர்ந்து குரு நானக் நடந்தார். அவரைப் பின்பற்றி மர்தானா நடந்தான்! மர்தானாவுடன் நானக்கின் மற்றொரு மாணவரான பாலா என்பவரும் பின் சென்றார். இந்த இரு சீடர்கள்தான் குருநானக் வாழ்க்கை முழுவதுமாக அவருடன் இருந்தவர்கள் ஆவர். குருநானக், மர்தானா, பாலா மூவரும் ஒரு நாள் மாலை, காட்டின் நடுப் பகுதியிலே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது காவி உடை பூண்டு, நெற்றியிலே பொட்டு வைத்துக் கொண்டு, இறைவன் அடியார் போல் வந்த ஒருவன். அவர்கள் மூவரையும் மனமுவந்து எதிர்கொண்டு அழைத்தான். அந்த அடியார், நானக்கையும் அவருடைய சீடர்கள் இருவரையும் கண்டு, “அன்புடையவர்களே நீங்கள் மூவரும் எனது குடிலுக்கு வந்து வாழ்த்துதல் வேண்டும்” என்று அவர்களது பாதங்களிலே வீழ்ந்து, பணிந்து வேண்டிக் கொண்டான். இறைவன் அடியார் போல வந்தவன், உண்மையில் அடியார் அல்லன். அவன் ஒரு கொள்ளைக்காரன். காட்டிலே வருபவர்களிடம் இரக்கம் உள்ளவனைப் போல கருணையோடு பேசி, தனது குடிசைக்கு அழைத்துச் சென்று, உணவு கொடுப்பான். உரையாடி மகிழ்வான்; பிறகு உறங்கவும் இடம் தருவான். வந்தவர்கள் அயர்ந்து உறங்கும்போது, அவர்களைக் கொன்று, அவர்களிடமுள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கொள்வான். காட்டில் வருபவர்களைக் கொலை செய்வதும், கொள்ளை படிப்பதும் அவன் தொழில். அதே எண்ணத்தில் தான் குரு நானக்கையும், அவரோடு சென்ற இரண்டு சீடர்களையும் கொலை செய்யவே குடிசைக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று அவன் வேண்டிக் கொண்டான். ஞான மகான் குருநானக் அந்தக் கொள்ளைக்காரனை ஒரு முறைதான் கண்டார். அவனிடமிருக்கும் எண்ணற்ற விவரங்களை, விபரீதங்களை உடனே அறிந்து கொண்டார். பிறகு அந்த போலி இறையடியானைப் பார்த்து, ’உண்மையான இறையடியவனே! நாங்கள் யார் வீட்டிலும் தங்குவது இல்லை; ஆயினும் உனது அன்பான வேண்டுகோளை ஏற்று, உம் வீட்டு விருந்தினராக இருக்கிறோம். வானம்தான் எங்களுக்குக் கூரை! பூமிதான் வீடு! அதில்தான் நாங்கள் உறங்குவது வழக்கம் அன்பனே! என்றார். அந்த போலி இறையடியான் போல வேடமிட்ட கபட வேடதாரி பெயர் என்ன தெரியுமா? சஜ்ஜன் என்பதே. அந்தக் கொள்ளைக்காரனுக்கு அன்று மிகப் பேரானந்தம்! காரணம் மூன்று பேர்கள் அவன் விரித்த வலையிலே மாட்டிக் கொண்டார்களே அதனால்! ஆனால் குருநானக், கண்ணாடியில் உருவத்தைப் பார்ப்பது போல, அந்த அடியானின் முகத்திலேயேள அவன் எண்ணங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டார். அதனால், அவர் தனக்குள்ளேயே சிரித்தார். பிறகு, கொள்ளைக்காரனும் மற்ற மூவரும் ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். சத்குரு நானக், மர்தானாவை அழைத்தார். ரூபாய் இசைக் கருவியை எடுத்து வாசி என்று குரு கேட்டு கொண்டார் மர்தானாவை, அவனும் அவ்வாறே வாசித்தான் அந்தக் கருவியிலே இருந்து கிளம்பிய இசை வெள்ளம், அந்தக் காடு முழுவதையுமே இசை இன்பத்தில் மூழ்கடித்தது. சஜ்ஜன் என்ற அந்தக் கபட வேடதாரி இசையை ரசிப்பது போல பாசங்குச் செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் குரு நானக் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். அந்தப் பாட்டைக் கேட்டு, மரம், செடி, கொடி, புல்பூண்டுகள் எல்லாமே மயங்கி நின்றன. அவ்வளவு அற்புதமாக அந்த இசை அமைந்திருந்தது. நானக்கின் பாடல் சஜ்ஜன் அன்று வரை செய்திருந்த கொலைகளையும் கொள்ளைகளையும் பற்றிக் குறிப்புக் காட்டுவன போல விவரித்தது. அவன் செய்த பாவச் செயல்களுக்கு எல்லாம் ஒரே வழி நரகம்தான் என்பதையே அந்தப் பாடல் எதிரொலித்தது. சஜ்ஜன் அந்தப் பாடலைக் கேட்டான் ஓ…! வென்று கதறி அழுதான் சத்குரு அவர்களே! நான் கொலைகாரன்தான்! கொள்ளைகாரன்தான் எண்ணிலாத கொலை, கொள்ளைகளைச் செய்தவன்தான்! நான் அந்த பாவத்திலே இருந்து தப்புவதற்கு என்ன வழி? வழி என்ன குருவே! என்று குருநானக் கால்களிலே விழுந்து அழுதான்! சஜ்ஜன் கொலை, கொள்ளைகளைச் செய்தவன்தான். ஆனாலும் தனக்கு மனசாட்சி உண்டு என்பதற்கு அவன் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குமளவுக்கு அவன் நானக்கின் ஞானப் பாடலால் திருந்திய மனிதனானான். சத்குரு பாடிய பாடல் அவனது பாவங்களைக் குத்திக்குடைந்து அவற்றைக் கொலை செய்து, அவனது மனத்தைத் தூய்மைப்படுத்தியது. அப்போது சத்குரு நானக் அந்தக் கொலை பாதகனுக்கு ஓர் உய்யும் வழி கூறினார்! ஏ, சஜ்ஜனா உன்னுடைய பாவச் செயல்களிலே இருந்து நீ மீள வேண்டும் என்று நம்புவது உண்மையானால், நான் சொல்வது போலச் செய்தால் நீ மன்னிப்புப் பெறலாம்; மன்னிக்கப்படுவாய் என்றார். என்ன குருதேவா அது என்று கேட்டான். அதற்கு சத்குரு "யார் யாரை நீ கொலை செய்தாயோ. எவரெவரை நீ கொள்ளையடித்தாயோ, அவர்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய குடும்பத்தினர்களைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவர் கால்களிலும் விழுந்து, நான் செய்தது தவறுதான். இப்போது மனம் திருந்திவிட்டேன். என்னை மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை கூறுங்கள் என்று கதறி அழுதுகேள்! என்ற அறிவுரையை சத்குரு நானக் கூறியதுடன், இல்லாமல் அதற்கான மந்திரத்தையும் போதித்து வழியனுப்பினார். இதுதானே சமுதாயத்தை திருத்த வந்த ஓர் சற்குருவின் ஞானோபதேசம்! தவறு செய்தவன் தனது தவறைத் தெரிந்து அதை மீளவும் செய்யாத திருந்திய மனம் பெற்று விட்டாலே, பிறகு அவன் திருந்திய ஆத்மாதானே! சத்குரு வார்த்தை சத்திய வார்த்தை என்று நம்பிய சஜ்ஜன் அடுத்த கனமே புறப்பட்டுவிட்டான் அவன் யார் யாரைக் கொடுமை படுத்தினானோ, கொலை செய்தானோ, கொள்ளை படித்தானோ அவன் நினைவுக்குத் தெரிந்த வரையில் ஒவ்வொரு துடும்பங்களிடமும் சென்று மன்னிப்புக் கேட்டான். அக்குடும்பத்தாரின் கால்களிலே விழுந்து கதறி கண்ணீர் சிந்தினான்! அப்போது பழிக்குப் பழியாகப் பலர் அவனுக்கு எண்ணற்றத் துன்பங்களைக் கொடுத்தார்கள். அடி உதைகளை அவன் பெற்ற போதும் கூட, அவர்களிடம் காலில் விழுந்து சத்குரு நானக் உபதேசம்படி மன்னிப்புக் கேட்டான். பாவங்களிலே இருந்து விடுதலையானான் இறைவா நீயே கதி என்று யோகமும் தியானமும் செய்து இறைவனையே எண்ணியெண்ணி மனமுருகினான் சஜ்ஜன். குருத்துவாரம் துள்ளத் துடிக்கக் கொலைகளைச் செய்து பாவங்களைச் சேர்த்துக் கொண்ட சஜ்ஜன், ஊர் ஊராகச் சென்று பணக்காரர்களது செல்வங்களைக் கொள்ளையடித்துப் பாவங்களை உருவாக்கிக் கொண்ட சஜ்ஜன், அந்த குடும்பங்களை எல்லாம் தேடிச் சென்று அவர்களது கால்களைத் தனது கண்ணீரால் கழுவிய சஜ்ஜன், திருந்திய மனிதனானான். பாவங்களிலே இருந்து விடுதலை பெற்றான். தன்னை மனிதனாக்கிய சத்குருவுக்கு மரியாதை செலுத்தினான். எந்த சத்குருவின் ஞானபோதனையாலும், மூல மந்திரச் சக்தியின் நம்பிக்கையாலும் திருந்திய ஆன்மவாதியாக மாறினானோ அவன் தனது சத்குருவுக்கு நினைவகமாகக் கோவில் ஒன்றையும், ஏழைகளது பசிக்குப் புசிக்க தர்மசாலை ஒன்றையும் உருவாக்கினான். சீக்கிய மதத்தை தழுவிய மக்கள் கட்டிய கோவில்களில், சஜ்ஜன் கட்டிய சீக்கியத் திருக்கோவில்தான் முதல் கோவிலாகும். அன்னதான் தர்ம சாலைகளிலும் அவன் நிறுவிய அன்னதான மடமே இன்றும் முதலாவதாகத் திகழ்கின்றது. சத்குரு நானக், சஜ்ஜன் என்ற கொலைகாரனை மனிதனாக்கிய பிறகு மீண்டும் தனது அறிவு கொளுத்தும் ஆன்மிக ஞானப் பயணத்தைத் துவங்கினார். அவருடன் மர்தானாவும், பாலாவும் தொடர்ந்தனர், மூவரும் வடநாட்டுப் பகுதிகளிலே உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், மேடு பள்ளங்கள், சமவெளிகள் ஆகிய எல்லாப் பகுதிகளையும் கடந்து ஆண்டுக்கணக்காக ஆன்ம உபதேசம் செய்து கொண்டே வந்தார்கள். இவ்வாறு தொடர் பயணம் செய்து வந்து கொண்டே இருந்த குருநானக், திடீரென்று தனது சீடர்களிடம், நான் பிறந்த ஊருக்கு உடனே செல்ல வேண்டும். எனது நண்பர் என்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக் கிடக்கின்றார் என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட மர்தானாவும், பாலாவும், யார் அந்த நண்பர் என்று சிந்தித்தவாறே சத்குருவுடன் தாள்வாண்டிக்குப் புறப்பட்டு நடந்தார்கள். தாள்வாண்டி ஊர்த் தலைவர் ராய்புலார் சத்குருவின் நேருங்கிய முதல் நண்பரல்லவா? அவர் மரணப் படுக்கையிலே கிடந்தார். தான்் சாவதற்குள் ஒருமுறை தனது நண்பர் சத்குரு நானக்கை காண வேண்டும் என்று ஆசையோடு ஊசலாடிக் கோண்டிருந்தது ஊர்த் தலைவரான ராய்புலார் உயிர். இதை உணர்ந்து கொண்ட சத்குரு உடனடியாக தாள்வாண்டி வந்து சேர்ந்தார். சத்குரு நானக்கை ராய்புலார் பார்த்து மரண மகிழ்ச்சி அடைந்தார். இது எத்தகைய நட்புப்பேறு என்று ஊரார் வியந்து பேசிக் கொண்டார்கள். இராய்புலார், சத்குருவை நோக்கி, தூய நெஞ்சமுடைய ஞானியே, நான் உம்மை வணங்க வேண்டும் என்று என் இதயம் துடிக்கின்றது. உடல் தான் இடம் தரவில்லை. எனது நெஞ்சும் அன்பும் உங்களுடைய திருப்பாதங்களிலே வீழ்ந்து பணிந்து கிடக்கின்றது என்று ராய்புலார் சத்குருவின் தோள்மேலே சாய்ந்தார். உடனே சத்குரு, எனது நெஞ்சைக் கவர்ந்த இளம் வயது அருமை நண்பரே, உங்களுடைய இதயம் எனக்கு அனுப்பிய செய்தியை அறிந்த பின்புதான் நான் ஓடோடி வந்தேன் என்று கனிவான சொற்களைக் அவர் காதுகளில்ே விழுமாறு கூறிய படியே, தனது கையைச் சத்குரு ராய்புலார் தலையிலே வைத்துத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ராய்புலார் மனம் அமைதியோடு அவரது தோள் மீது சாய்ந்தபடியே இருந்த போது அவர் இறந்து போனார்! அருமை நண்பரது ஆருயிர் பிரிந்த பின்பு, சத்குரு தனது தாய் தந்தையரைப் போய் பார்த்தார். அன்றிரவே மீண்டும் தனது ஞான பயணத்தைத் துவங்கி விட்டார். சில ஆண்டுகள் சென்றன. அதற்குள் அந்த மார்க்க ஞானி வடநாடு முழுவதையும் சுற்றி வந்து விட்டார். பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் வளமான ரவி நதிப் பகுதிக்கு சத்குரு நானக் சென்றார். அங்கே ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே குடியேறினார். அந்த இடம் இறைஞான வழிபாடு செய்வதற்கேற்ற இடமாக அமைந்திருந்தது. அங்கே குடியேறிக் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு அவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார். ஞான குரு நானக் குடியமர்ந்திருந்த இடத்திற்குச் சொந்தக்காரன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவன் பெயர் கரோரியா. தனக்கு உரிமையான இடத்தில் ஒரு சாமியார் குடியேறிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட அவன், மிகுந்த கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தனது வேலைக்காரனோடு குதிரை மேலேறி அந்த இடத்திற்குப் புறப்பட்டான். வட்டிக் கடைக்காரன் குதிரை வேகத்துள்ளலால் தடுமாறிக் கீழே விழுந்தது. மறுபடியும் அவன் அந்தக் குதிரையைத் தட்டிக் கொடுத்து ஏறி உட்கார்ந்தான்். குதிரை கடும் வேகமாகப் பறந்து வந்த போது, அவன் கண்பார்வை மங்கியது. அவன் நோக்கிய இடமெலாம் கருப்பாகவே தெரிந்தது. அவனது பார்வைக்கு சர்வமும் கறுப்பு மயமாகவே தென்பட்டது. உடனே வட்டிக் கடைக்காரன் தனது குதிரையை நிறுத்திக் கொண்டு வேலைக்காரனை அழைத்து, என்னால் எல்லா வற்றையும் பார்க்க முடிகிறது. ஆனால் எல்லாமே ஒரே இருட்டாகவே இருக்கிறதே, ஏன்? என்று தனது வேலைக்காரனைக் கேட்டான். வேலைக்காரன், சத்குரு நானக்கின் அருமை பெருமைகளை இதற்கு முன்பே கேள்விப்பட்டிருந்தான். இருந்தாலும், தனது முதலாளியிடம் இதைப் பற்றி ஏதும் அவன் கூறவில்லை. ஒரு வேளை அவன் நானக்கின் பெருமையைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், அந்த முதலாளி அவனது கருத்தை அப்போது அலட்சியப் படுத்திப் பேசியிருப்பான். அதனால் அவன் அவரைப் பற்றிய எந்த விஷயத்தையும் தனது முதலாளியிடம் கூறாமல் இருந்து விட்டான். வட்டிக் கடைக்காரன் குதிரை கீழே விழுந்ததும், அவனுக்குக் கண் பார்வை தெரிந்தும்கூட எல்லாமே இருட்டாகவே இருந்ததாலும், அவன் யோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த நேரத்தில்தான் வேலைக்காரன், சத்குரு யார்? அவர் எப்படிப்பட்ட மகான் என்பதை எல்லாம் முதலாளிக்கு விவரமாக விளக்கினான். வேலைக்காரன் கூறிய விவரங்களை அறிந்த வட்டிக் கடைக்காரன். அப்படிப்பட்ட ஞானியா அவர்? என்று திணறிப் போய், குதிரையை விட்டு இறங்கி, அதைக் கையிலே பிடித்துக் கொண்டு, தனது பணியாளனோடு நானக் ஞானியிடம் சென்றான். சத்குரு பாதத்திலே விழுந்து, கதறி, பதறி அழுதான். தன்னை மன்னிக்க வேண்டும் குருதேவா என்று கேட்டுக் கொண்டது மட்டுமன்று. அவனுக்கு ரவி நதிக்கரையில் இருந்த நிலம் முழுவதையும் அவரது மார்க்கத் தொண்டுக்கே உரிமையாக்கி விட்டான். அதைக் கேட்ட சத்குரு நானக், "எனது அன்பனே! இந்த இடம் உனக்கும் எனக்கும் உரிமையானதன்று! இறைவனுக்கே சொந்தமானது. இறைவன் தொண்டுக்காக நீ வழங்கிய இந்த இடமெல்லாம் அவரது திருப்பணிக்கே பயன்படப் போகிறது. எனவே, இந்த இடத்திற்கு இறைவன் இருப்பிடம் என்ற பெயர் திகழ்வதாக, கடவுள் இருப்பிடமான இந்த இடத்திற்கு கர்தர்பூர் என்று பெயரிடுகிறேன் என்று சத்குரு கூறினார். வட்டிக்கடைக்காரன் கரோரியா, மீண்டும் பழைய கண் பார்வையைப் பெற்று தனது இருப்பிடம் சென்றான். கரோரியா கொடுத்த அந்த நிலப்பகுதிகளை குருநானக் விரும்பியதைப் போல கடவுள் பணிக்கே மக்கள் பயன்படுத்தினார்கள். சத்குரு எண்ணத்தின்படி அந்த கர்தர்பூர் எனும் கரோரியா இடத்தில்தான், குருத்து வாரம் என்ற சீக்கிய மதத் திருக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் சாதிமத இன பேதங்களின்றி மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, முதன் முதலாக கூட்டு வழிபாடுகள் நடப்பதற்கான வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. கோவில் இருந்தால் மட்டும் போதுமா? அந்தக் குருத்துவாரம் கோவிலைச் சுற்றி மக்கள் குடும்பம் குடும்பமாகக் குடியேறி னார்கள். அவர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டன. குரு தேவர் நானக்கைப் பார்க்க வருபவர்கள் தங்குவதற்கான விருந்தினர் இல்லங்கள் கட்டப்பட்டன. பக்தர்கள் பெருமளவு அந்த இடத்திற்கு வந்து போகும் புனித ஸ்தலமாக கர்தர்பூர் மாறிவிட்டது. சத்குரு நானக் மறுபடியும் இல்லற வாழ்க்கையைத் துவக்கினார். தனது அருமை மனைவியான சுலாகனி அம்மையையும், செல்வங் களான பூரீசந்த், லட்சுமி சந்த் ஆகியோரையும் அழைத்து வந்து கர்தர்பூர் குருத்துவாரம் அருகே குடியமர்த்தினார். துறவற வாழ்வை நீங்கி மீண்டும் இல்லறவாசியானார் சத்குரு. வீடு பேறு பெறவோ, இறை வழிபாடு செய்யவோ துறவறம் தான் சரியான மார்க்கம் என்பதை அகற்றி, இல்லறவாசியாக இருந்து கொண்டே இறைவழிபாடு செய்யலாம். வீடு பேறும் பெறலாம் என்ற திருவள்ளுவர் பெருமானது எண்ணப்படி, வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும் தெய்வத்தின் இடத்தைப் பெறலாம் என்ற வாழ்க்கையைச் சத்குரு வாழ்ந்து காடடினாா. நானக் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்யலானார்! குருத்துவாரம் கோவிலுக்கு வருகின்ற இறைபக்தர்கள் கூட்டம் நாள்தோறும் பெருகலாயிற்று. கோவில் வழிபாட்டுக்கு வருகை புரிவோர் எல்லாம் சத்குரு நானக்கைக் கண்டு தரிசித்துச் சென்றவாறே இருந்தார்கள். சத்குரு, தன்னைத் தேடிவரும் இறையன்பர்களுக்குரிய வாழ்வியல் ஞானபோதனைகளை யாற்றி, அறவாழ்க்கை வழிகளைக் கூறி, கடவுளையே எண்ணி யெண்ணி வீடுபேறு பெறுமாறு போதாந்த உரையாற்றி வந்தார். சத்குரு நானக், வயலில் இறங்கி உழுவார்; விதைப்பார் நாற்று நடுவார்; களை களைவார்; அறுவடை செய்வார் இறைவழி பாடுகளை மக்களுக்குக் கூறும் போல துறவியாக, போலி ஞானியாக, போலி ஆன்மீக போதகர்களைப் போல அல்லாமல், அந்த மகானே விவசாயியாக மாறி எல்லாப் பணிகளையும் மற்றவர் உதவிகளின்றி அவரே உழைத்து உழைத்து உழைப்பின் அருமையை, பெருமையை உலகுக்கு உணர்த்தினார். விவசாயத் தொழிலில் அவர் உழைப்புக்கான ஊதியத்தைத் தனது குடும்பத்துக்கு எடுத்துக் கொண்டு, மீதியிருக்கும் தானிய வகைகளை குருத்துவாரம் கோவிலுக்கு வரும் பக்தர் பெரு மக்களுக்கும் உதவும் வகையில் உணவு படைப்பதற்காக வழங்கி விடுவார். அல்லும் பகலும் அந்த மகானைக் காணவரும் இறை தோண்டர்கள், வாழ்வுக்கு வழி தெரிந்து கொண்ட அறிவோடு - வயிற்றுக்கும் உணவு பெற்றுச் சென்றனர். இப்படிப்பட்ட இறைஞானத் தொண்டர், தனது குடும்பத்துக்கோ, தனது உறவுகளுக்கோ எதையும் சேர்த்து வைக்கும் வழிகாட்டியாக வாழாமல், பொது மக்கள் தொண்டராகவே வாழ்ந்து காட்டினார். சத்குரு நானக்கின் இறை வழிபாடு ஞானம் வட இந்தியா முழுவதும் பரவியது மட்டுமல்ல, இமயமலையையும் தாண்டி அவரது கடவுள் தொண்டுகள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், நீண்ட நெடுந்தொலை துரத்தில் இருந்து வந்த மக்கட் கூட்டம் ஒன்று குரு நானக்கை நேரில் பார்த்து மகிழ வேண்டும் எனும் ஆசையிலே குருத்துவாரம் வந்தது. அப்போது நானக் வயலிலே ஏர் உழுது கொண்டு உடம்பெல்லாம் ஒரே சேறுமயமாக இருந்தார். அந்த நேரத்தில்தான், சத்குருவைக் காண வேண்டுமென்ற மக்கள் கூட்டம் அவரைத் தேடிவந்து, அவரிடம் “நாங்கள் சத்குரு நானக்கைப் பார்க்க வேண்டும். எங்கே அவர் இருக்கிறார் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்கள். ஏர் உழுது உடலெல்லாம் சேறு மயமாக நின்று கொண்டிருந்த நானக், இவர்கள் நானக்கின் அடையாளம் தெரியாதவர்கள் போலிருக்கு என்று தெரிந்து கொண்டு ‘வாருங்கள், அவரைக் காட்டுகிறேன்’ என்று தனது வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று, அமரும்படி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார். திரும்பி வந்த அந்த ஞான மகானைப் பார்த்த அந்த மக்கள், அப்போதுதான் நம்முடன் வந்தவர்தான் சத்குரு என்பதைப் புரிந்து கொண்டார்கள்! அவரை உற்று உற்று நோக்கி ஆச்சரியப்பட்டார்கள். இவ்வாறு அவர் ஏன் இருந்தார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். “உழைப்பிலும் அடக்கத்திலுமே உயர்வு இருக்கிறது” என்பதை அந்த ஞானி அப்போது அவர்களுக்கு உணர்த்தினார். தன்னைத் தேடி வந்த அந்த பக்தர் பெருமக்களுக்கு கடவுளை அடையும் ஞான வழிகளைக் கூறி அவர்களுடன் அளவளாவி, உணவுண்டு, மகிழ்ச்சி பொங்க அவர்களை வழியனுப்பி வைத்தார். இரவி ஆற்றின் ஒரு கரையிலே நானக் ஊர் ஒன்றை உருவாக்கினார்! அந்த இடத்திலே இருந்து அடிக்கடி அவர் மறுகரைக்கும் காலாற சென்று வருவார். அந்த மறுகரையிலும் ஒரு திருக்கோவிலை எழுப்பிட அவருக்கு எண்ணம் வந்தது. அங்கே ஒரு கோவிலை கட்டச் செய்தார் நானக், அந்த இடத்திற்கு அவர் தேராபாப நானக் என்று பெயரிட்டார். ஒரே ஆற்றின் இரு கரைகளிலும் அவர் ஏன் இரண்டு கோவில்களைக் கட்டினார்? இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் சத்குரு உருவாக்கிய இரண்டு கோவில்களின் உட்பொருள் விளங்கியது. வெள்ளையர்கள் இந்தியாவை இரண்டாகப் பிரித்துத்தான்் நமக்கு சுதந்திரம் தந்தார்கள். ஒன்று இந்துஸ்தான்; மற்றொன்று பாகிஸ்தான் அல்லவா? அவ்வாறு பிரிட்டிஷார் பிரித்தபோது கர்தர்பூர் பாகிஸ்தான் அதிகாரத்துக்குள் போய்விட்டது. தேராபாபா நானக் என்ற கோவில் பகுதி இந்தியாவுக்குள் வந்துவிட்டது. ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே, சத்குரு நானக், இந்தியா இப்படி இரண்டு துண்டாக்கப் படும் என்பதை உணர்ந்தாரோ என்னவோ அவரது ஆன்மீக தீர்க்க தரிசனத்தால் ஒரு கோவில் பாகிஸ்தானுக்கும், மறுகோவில் இந்துஸ்தானத்துக்கும் வரும் நிலை ஏற்பட்டு விட்டது என்று சீக்கிய மக்கள் கூறுகின்றனர். இந்துவானாலும் சரி, முஸ்லீம் ஆனாலும் சரி, சத்குருவுக்கு அந்த மதபேதமே கிடையாது. அவர் மனித நேயம் கொண்ட மகானாக மட்டுமே இருந்தாரே ஒழிய, எந்த மத மக்களையும் இழிவாக எண்ணியவர் அல்லர் அதே போல சாதி பேதங்களையும் கடந்த ஞானி அவர். அதனால் நானக் என்ற மகான், முஸ்லிம்களையும், இந்துக்களையும் ஒரே மாதிரியாகவே மதித்துப் பழகி வந்தார். இரண்டு மதங்களைச் சேர்ந்த மக்கள், பிரிவினைக்கு முன்பு சகோதரப் பாசத்தோடும், சமத்துவ மனப்பான்மையோடும் வாழ்ந்து கொண்டிருந்தபோது, சத்குரு நானக் மகான் அந்த இரு நாட்டு மக்களுக்குமே சீக்கிய சமய நெறிகளை போதித்திருக்கிறார். அதன் அடையாளமாக இன்றும் கர்தர்பூர் நகரம் பாகிஸ்தான் நாட்டில் செல்வாக்கோடு உள்ளதைப் பார்க்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சத்குரு நானக், முஸ்லிம் பெருமக்களிடம் காட்டின மரியாதையும், மதிப்பும், நேசமும் பாசமும் தான்! குருநானக், பல ஆண்டுகளாக இல்லற ஞானியாக வாழ்ந்தார். தம்மை நாடி வந்த மக்களுக்கு சீக்கிய சமய நெறியை உபதேசம் செய்து வந்தார். அதற்குப் பிறகு அந்த ஞானி தனது இரண்டாவது சமய நெறி பரப்பும் பயணத்தைத் துவக்கினார். இலாகூர், பாக்பத்தான், சியால்கோட் போன்ற பெரும் நகரங்களுக்குச் சென்றார். தனது தலையாய தெய்வீக நெறியான ஒன்றே தேவன், ஒன்றே கடவுள், ஒன்றே இறைவன் என்ற உண்மைக்குரிய ஆதாரங்களோடு ஆங்காங்கு வாழ்ந்த மக்களுக்கு ஞான போதனை செய்தார். அவரது அறிவுரை களையும், அறநெறிகளையும் மக்கள் கேட்டு அவரைப் பின்பற்றினார்கள். இதற்குப் பிறகு மீண்டும் சத்குரு கர்தர்பூர் வந்தார். குருத்துவார வளர்ச்சிகள் எவ்வாறுள்ளன என்பதைக் கண்டார். தனது குடும்பத்துடன் தங்கி குருத்துவாரம் வளர்ச்சிக்குரிய வழிகளை மேற்கொண்டும். கண்காணித்தும், விவசாயம் புரிந்தும் வந்தார் அவர். எங்கும் இறைவன் சத்குரு நானக், சில ஆண்டுகள் கழித்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது ஞானோபதேசங்களைப் போதிக்கப் புறப்பட்டு விட்டார். அவருடன் மாணவர்கள் மர்தானாவும், பாலாவும் சென்றார்கள். நீண்ட நெடுந்தூரப் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இது. சிறு சிறு மலைக் குன்றுகள், பாலைவன மணல் வெளிகள் போன்ற இடங்களை எல்லாம் கடந்து செல்ல வேண்டிய பயணமாகையால், நடந்து போவதின் களைப்பைக் கண்டு சலிக்காமல் இருக்க மர்தானா தனது ரூபாய் இசைக் கருவியால் இன்னிசை பொழிவான். அவனா பொழிகிறான் அந்த நாதத்தை உடன் செல்லும் சத்குரு அருளாசியால், அந்த இசைக் கருவியின் கம்பிகளில் மர்தானா விரல்களை வைத்து அசைப்பான்! அவ்வளவுதான். ரூபாய் இன்னிசைக் கருவி தேவகான மழைகளைப் பொழிந்து, கால்நடைப் பயணத்தின் களைப்பைப் போக்கும்! சலிப்பு ஏற்படாமல் நடந்து கொண்டே செல்வர் மூவரும்! மர்தானாவிடம் இருந்த ஓர் அதிசய சக்தியைப் போல பாலாவிடமும் ஒரு அபூர்வ சக்தி அமைந்திருந்தது. என்ன சக்தி அது? ஒரு செய்தியை அல்லது விஷயத்தை தனது செவிகளால் கேட்டு விட்டானேயானால் அதை அப்படியே நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஓர் அதிசய சக்தி படைத்தவனாக இருந்தான் பாலா. எங்கெங்கே, எவ்வெப்போது, என்னென்ன சம்பவங்களைப் பார்க்கின்றானோ அல்லது கேட்கின்றானோ,அவற்றையெல்லாம் பாலா தனது மனதுள்ளே பசுமரத்தானி போல பதித்துக் கொள்வான். அதற்குப் பிறகு, எத்தனை ஆண்டுகள் கழித்து அவனிடம் கேட்டாலும், தான் கண்டவற்றை அல்லது கேட்டவற்றை அப்படியே திருப்பிக் கூறிடும் தனித் தகுதி பெற்ற திறமையாளனாக இருந்தான் அந்த பாலா. இந்த தனி ஆற்றல், தெய்வீகத் திறன் அவனுக்கு வந்தது எப்படி? மர்தானாவுக்கு தனது குரு அருளாசியால் எவ்வாறு ரூபாய் இசைக் கருவியை மீட்டிடும் சக்தி வந்ததோ, அதே போன்ற சக்திதான் இந்த பாலாவுக்கும் சத்குரு அருளால் வந்ததெனலாம். சரி, இந்த சக்தியால் சத்குரு நானக்குக்கு என்ன பயன்? சத்குரு நானக் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றாரோ, எந்தெந்த சம்பவங்களில் கலந்து கொண்டாரோ, என்னென்ன நிகழ்ச்சிகளை செய்து காட்டினாரோ, எங்கெங்கே என்னென்ன பாடல்களைப் பாடினாரோ, எத்தகைய போதனைகளை ஆற்றினாரோ அவற்றை எல்லாம் ஒரு வரிகூட விடாமல், குன்றாமல், மிகாமல் உண்மையை உள்ளவாரே, அப்படியே எப்போதும், யார் கேட்டாலும், நடந்த சம்பவக் காட்சிகளை நடந்தது நடந்தபடியே ஒப்புவிக்கும் மன ஆற்றலைப் பெற்றிருந்தான் பாலா. அவற்றைப் பிற்கால வரலாற்றாசிரியர்கள் அல்லது எழுத்தாளர்கள் அப்படியே எழுதிக் கொண்டார்கள். சத்குரு நானக்கின்போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது எல்லாமே. பாலாவின் மனப்பாடத் திறனால் கிடைத்தவையே தவிர, சத்குரு நானக் அவர்களால் எழுதி வைக்கப்பட்டவை என்று ஒன்று கூட இல்லை. சத்குரு நானக் என்ற ஞானியாவது பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பன்னூறாண்டு களுக்கு முன்பே வாழ்ந்தவர்களது ஞானப் புதையல்கள் எல்லாம், அவர்களுக்குப் பின்னே வந்த பேரறிவாளர்களின் பேராற்றல்களால் தொகுக்கப்பட்டனவே தவிர, அந்த ஞானப் பெருமகன்களால் எழுதி வைக்கப்பட்ட அறிவுக் கருவூலங்களல்ல! உண்மையை நிலை நாட்டிட நச்சுக் கோப்பையை ஏந்திக் குடித்த அறிவு மன்னன் சாக்ரடீஸ் பேசிய அறிவாய்வுரைகளை எல்லாம் பிளேட்டோ என்ற பேரறிவுச் சக்கரவர்த்திதான் எழுதி வைத்தான்! சீன நாட்டு ஞான மாமன்னன் கன்பூசியஸ். பேசிய வித்தக விவேக தத்துவ ஞானங்களை அவனுக்குப் பிறகு வந்த சீனப் பேரறிவாளர்கள் எழுதி வைத்தவைதான் இன்று கன்பூசியஸ் மதமாக, தத்துவங்களாக உலகம் நம்பி ஏற்று உணர்கின்றது. கெளதம புத்தர் தனது உபதேசங்களை எழுதி வைத்து விட்டுச் செத்தவரல்லர் அவர் உயிரோடு வடபுலத்தை உலாவந்த போது, எனது போதனைகள் எல்லாமே பெளத்த மதச் சிந்தனைகள்தான் என்று கூறவில்லை. அவர் மக்கள் வாழ்க்கை உய்திடுவதற்கான அறிவுரைகளை, கூறினார். அவ்வளவுதான்! அந்த சித்தார்த்த மகானுக்குப் பிறகு வந்த அவரது வாரிசுகள் அவருடைய அறிவுரைகளைத் தொகுத்து புத்தமதம் என்ற பெயரைச் சூட்டி விட்டார்களே தவிர, சித்தார்த்தன் வைத்த திருப் பெயரல்ல பெளத்தம் என்ற மதச்சொல்! அதே போன்று சமணமும், மகா வீரரின் பெயரால் தொகுக்கப் பட்ட அறவுரைகளே தவிர, மகாவீரரால் சமணமதம் என்று பெயர் கொடுக்கப்பட்டு அந்த மகானால் எழுதி வைக்கப்பட்ட சான்றுகள் அல்ல! இவ்வளவு ஏன்? கிறித்துவ மதம் இயேசுநாதரால் நிறுவப்பட்ட மதம் என்பதற்கு ஏதாவது சான்று உள்ளதா? அவருக்குப் பிறகு வந்தோர் மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரவர்கள் கேட்டதை விசாரித்ததை எழுதி வைத்தார்களே தவிர இயேசுவைக் கண்ணால் பார்த்தவர்கள், அவர் அருளிய அறிவுரைகளைச் செவிகளால் கேட்டவர்களா எழுதி வைத்தார்கள்? இல்லை இயேசு பெருமான்தான் எழுதி வைத்தாரா? சத்குரு நானக், படியாதவராக இருந்தாலும், ஒரு நாள் பள்ளி மாணவராக இருந்தாலும், அவருடைய சீடர்களிலே பாலா சத்குரு அருளாசி பெற்ற ஒரு நல்ல ஞான உரை தொகுப்பாளனாக விளங்கினான். பாலா நானக்குடன் இறுதிக்காலம் வரை சென்றிராமல் இருந்திருந்தால் சீக்கிய மதபோதகரின் அறிவுப் புதையல்கள் நமக்குக் கிடைத்திருக்குமா? ஆனால் ஒன்று இங்கே கூற வேண்டி உள்ளது. திருவள்ளுவர் பெருமானின் பொதுமறை, எவராலும் தொகுக்கப்பட்ட நூலன்று: இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அவரால் கைச்சான்றோடு எழுதப்பட்ட தமிழ் மறையாகும் அதனால்தான், இன்று மட்டுமன்று உலகம் உள்ளவரை திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறள் அறறிெ இருக்கும் என்பது உண்மையிலும் உண்மையாகும்! சத்குரு நானக், தம் சீடர்களான மர்தானா, பாலா இருவருடனும் முகமது நபிகள் நாயகம் நகரான மெக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மெக்காவுக்குச் சில முஸ்லிம் பக்ரிகளும் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானுக்கும் அவர்தம் சீடர்களும் சேர்ந்து துணையாகச் சென்று கொண்டிருந்தனர். சத்குருவை நோக்கி ஒரு முஸ்லிம் பக்கிரி, நீங்கள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேட்டார். ‘ஒன்றே தேவன் என்பதை எந்த மதம் ஒப்புகின்றதோ, அந்த மதத்தைச் சேர்ந்தவன் நான்’ என்றார் சத்குரு. முஸ்லிம் பக்கிரிகளுக்கு குருநானக் பதில் வெறுப்பையே அளித்தது. அதனை குரு நானக்கும் நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் வழியிலே சேர்ந்த பயண நட்பு. மேலும் மக்கா செல்லும் வரை வழித் துணையும் வேண்டும் அல்லவா? அதனால் அந்தப் பக்கிரிகளுடன் சத்குரு சென்று கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் நேரம். இருந்தாலும் வெயிலைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் மெக்கா நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். சத்குரு நானக்கும், அவரது சீடர்களும், முஸ்லிம் பக்கிரிகளும் சென்று கொண்டிருக்கும்போது, ஓர் அற்புதம் நடந்தது. முஸ்லிம் பக்கிரிகளும், சத்குரு நானக் அணியினரும் கடும் வெயிலில் மெக்காவை நோக்கி நடந்து கொண்டிருந்த போது, அவர்களது தலைகளுக்கு மேலே கருமேகங்கள் படர்ந்து வந்து குடைபிடிப்பது போல தவழ்ந்தன் அவர்கள் அனைவரும் நடக்க, நடக்க அந்த கருமேகமும் உடன் வந்து கொண்டே இருந்தது. அதனால், அவர்களுக்குக் கடுமையான வெயிலின் கொடுமை ஒன்றும் செய்யவில்லை. என்றாலும் அப்போது யாருக்கும் இந்த கருமேகம் குடைபிடிப்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதைப் பெரிதாகயும் அவர்கள் எண்ணவில்லை. சத்குரு அணியினரும், முஸ்லிம் பக்கிரி அணியினரும் அன்றிரவு ஓரிடத்தில் தங்கினார்கள். வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த பக்கிரிகளுடன் அன்றிரவைக் கழிக்க குருநானக் மகான் விரும்பாததினால், அவர் தமது இரண்டு சீடர்களையும் அழைத்துக் கொண்டு அன்றிரவே, அவர்களுக்குத் தெரியாமல் மெக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பொழுது புலர்ந்தது. அப்போதுதான் சத்குருவும் அவரது சீடர்களும் சென்று விட்டதை பக்கிரிகள் புரிந்தார்கள். அதனால் இவர்கள் கவலைப்படவில்லை. மதரீதியாக பக்கிரிகள் சத்குருவை விரோதிகளாகத்தான்ே மதித்தார்கள். அதனால் இந்துக்கள் பிரிந்து போனதைப் பற்றி முஸ்லிம்களுக்கு எந்தவித வருத்தமும் ஏற்படவில்லை. பிறகு தங்கள் மெக்கா பயணத்தை அவர்கள் தொடர்ந்தார்கள். வெயில் கடும் வெயில் நேரம் ஆக வெப்பம் கொதித்தது. கடுமையான சூடு அவர்களது தலையை தாக்கிற்று. கால்களால் நடக்க முடியவில்லை. பக்கிரிக் குழுவினர் திடீரென வானத்தை அண்ணாந்து நோக்கினார்கள். முதல் நாள் சத்குருவுடன் பக்கிரிகளும் சேர்ந்து வந்த போது, நடக்க நடக்கக் குடைபிடித்தது போன்று நகர்ந்து நகர்ந்து வந்த கருமேகத் திரள் இன்று எங்கே போயிற்று? அப்போதுதான் பக்கிரிகள் சத்குரு நானக் ஒரு பெரிய மகான்தான்் என்பதை உணர்ந்தார்கள். மேகம் குடைபிடித்து வந்த அதிசயத்தை அவர்கள் மறுநாள்தான் தெளிவாக அறிந்தார்கள். அடடா நானக்கை முகம் சுளித்து, வெறுப்புமிழ்ந்து வெறுத்ததை நினைத்து அவர்கள் வருந்தி நடந்தார்கள். சத்குரு நானக்கும். அவரது இரு மாணவர்களும் பல நாட்களுக்கு முன்பேயே மெக்கா நகரை வந்தடைந்து விட்டார்கள். எப்போதுமே சத்குரு திறந்த வெளியில்தான் படுத்து உறங்குவார். எங்கு போனாலும் அதே பழக்கத்தைத் தான் தவறாமல் கடைபிடிப்பார். அரேபியாவில் குருநானக் படுத்துத் துங்கிக் கொண்டிருந்தார். அவர் கால் நீட்டிக் கொண்டிருந்த திசையில் மசூதி ஒன்று இருந்தது. அந்த ஊர் மெளலானாக்களின் சிலர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். யாரோ ஓர் இந்து மசூதி இருக்கும் திசையின் பக்கம் தனது காலை நீட்டிக் கொண்டிருக்கிறானே என்று திடுக்கிட்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த மெளலானா, மசூதிக்குரிய மெளலானாவிடம் ஒடித் தகவலைத் தெரிவிக்கவே, அவர் மசூதியிலே இருந்து விரைந்து வந்து சத்குரு படுத்திருக்கும் காட்சியைக் கண்டார். கடுங்கோபம் வந்தது மசூதி மெளலானாவுக்கு காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் சத்குருவை வாயில் வந்தபடி ஏசினார். அத்தனை பேச்சுக்களையும் அமைதியாகப் பெற்றுக் கொண்ட குருநானக், மெளலானாவைப் பார்த்து, ‘ஐயா, பெரியவரே, கடவுள் இருக்கும் திசையில் நான் காலை நீட்டிக் கொண்டிருப் பதாகக் கூறுகின்றீர். அப்படியானால், கடவுள் இல்லாத திசையில் எனது கால்களைத் திருப்பி வையுங்களய்யா’ என்று கூறினார். குருநானக் ஓர் இந்து என்பது அப்போதுதான் புரிந்தது அந்த மெளலானாவுக்கு. அவர் மேலும் ஆத்திரமும் எரிச்சலும் அடைந்து, குரு நானக் கால்களை வேறு திசையில் கடுப்பாகத் திருப்பி வைத்தார். அந்த திசையில் மற்றொரு மசூதி காட்சி தந்தது. இதைக் கண்ட மற்ற முஸ்லிம்களும், பக்கிரிகளும் திகைத்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் மெளலானா விடவில்லை. மறுபடியும் சத்குரு நானக்கின் இரண்டு கால்களையும் மிக எரிச்சலோடு பல திசைகளிலும் மாறி மாறித் திருப்பி வைத்தார். எந்தெந்தத் திசைகளிலே சத்குரு கால்களை மாற்றி மாற்றி திருப்பித் திருப்பி வைத்தாரோ அந்த மெளலானா, அந்த திசைகளின் பக்கங்களிலே எல்லாம் மசூதிகள் மாறி மாறி வந்து நின்று காட்சி தந்து கொண்டே இருந்தன. இதைக் கண்ட அரேபிய மக்களும், மௌலானாக்களும் திகைத்துப் பிரமிப்பு அடைந்தார்கள். குரு நானக் மெளலானாவைப் பார்த்து, அன்புடையவரே! ஆண்டவன் இல்லாத இடமே இல்லை! அவர் எங்கும் அங்கும் இங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உமது செயல் நிரூபிக்கின்றதைப் புரிந்து கொண்டீரா? இதுதான் உண்மை என்று சுட்டிக் காட்டினார். மெளலானாக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் பெருமக்கள், பக்கிரிகள், மற்ற பொதுமக்களும் சத்குரு மீதிருந்த கோபம் தணிந்து, உண்மையை ஒப்புக் கொண்டார்கள். அரேபிய மக்கள் இடையே இந்த ஆன்மிக சம்பவம் புதியதோர் மறுமலர்ச்சியை உருவாக்கிற்று எனலாம். மெக்கா நகரை விட்டு, சத்குரு மதீனா நகர் சென்று மக்களுக்குரிய மார்க்க போதனையைச் செய்தார். பின்பு பாக்தாத் நகர் வந்தார். அந்த நகரிலே அப்போது ஒரு முஸ்லிம் துறவி வாழ்ந்திருந்தார். அவர் பெயர் ஹசரத் குவாஜா பிலால் என்ப தாகும். குரு நானக் அந்த முஸ்லிம் துறவியை நேரிலே சென்று சந்தித்தார். துறவியும் நானக்கைப் பற்றிக் கேள்விப்பட்டதைக் கூறி, இரு இறையன்பர்களும் அளவளாவி மகிழ்ந்தார்கள். குருநானக் அந்த துறவியாருடன் 15 நாட்கள் தங்கி பழகினார்கள். பாக்தாத் நகரை விட்டு குரு நானக், தனது மாணவர்களுடன் ஈரான் நாட்டிற்குச் சென்றர். அங்கே புகழ் பெற்றிருந்த சில இஸ்லாம் மத குருமார்களுடன் பேசி மகிழ்ந்தார். மறுபடியும் அங்கே இருந்து தனது இருப்பிடமான கர்தர்பூர் வந்து சேர்ந்தார். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தாம் கண்ட அனுபவங்களை குருத்துவாரம் பக்தர்களுக்கு விளக்கிக் கூறி மகிழ்ந்திருந்தார். குருநானக் கைது பாபக்தாத் நகர் சென்று வந்த சத்குருவும், அவரது சீடர்களும் சில மாதங்கள் ஒய்வெடுத்துக் கொண்ட பின்பு, மீண்டும் தங்களது புனித பயணத்தைத் துவங்கினார்கள். அவர்கள் மூவரும் அமெனாபாத் நகரில் சத்குருவின் ஏழை நண்பரான தச்சர் வீட்டிலே தங்கியிருந்தார்கள். அப்போது லாயச் சக்ரவர்த்தியான பாபர் படைகள் டெல்லி மாநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. மறுநாள் சத்குருவும், அவரது சீடர்களும் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தபோது, பாபர் படைகள் தச்சர் வீட்டைச் சூழ்ந்து முற்றுகையிட்டிருந்ததைக் கண்டார்கள். அமெனாபாத் நகரில் சிறைபிடிக்கப்பட்ட மற்ற மக்களோடு, குருநானக்கும், அவரது சீடர்களும் கைது செய்து சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள். அந்த நாளில் யார் யார் சிறைபிடிக்கப்படுகிறார்களோ, அவர்கள் தலையில் பாரத்தை ஏற்றிச் சுமக்க வைத்து சிறைக்கோ, விசாரணை மன்றத்துக்கோ அழைத்துச் செல்வது வழக்கம். அதைப் போலவேதான், பாபர் பேரரசன் ஆட்சியிலும் நடந்தது. குருநானக், மர்தானா, பாலா ஆகியோர் தலைகளில் பாபர் படையினர் பாரத்தை ஏற்றிச் சுமக்க வைத்து அழைத்துப் போனார்கள் மர்தான்ா பயந்தான்் எங்கே பாரம் தனது தலையை உடைத்து விடுமோ என்ற அச்சத்தால் ஆனால், நடந்தது என்ன தெரியுமா? குருநானக், மர்தானா, பாலா ஆகியர் மூவர் தலை மீதும் சுமைகள் வைக்கப்பட்டன. தனது தலை உடைந்து நொறுங்கப் போகிறது என்று மர்தானா பயந்தான்! ஆனால், அவர்கள் தலைமேல் ஏற்றப்பட்ட சுமைகள் அவர்களது தலைகளின் மேல் அழுத்தி நெருக்காமல், ஒர் அரை அடி உயரத்தில் மிதந்து கொண்டே வந்தன. ஆனாலும், அவர்கள் நடந்து கொண்டேதான் இருந்தார்கள். ஏற்றப்பட்ட சுமைகளும் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. படைவீரர்கள் இந்த அற்புதத்தைப் பார்த்துத் திகைத்தார்கள். அப்படியே அசந்து நின்று விட்டார்கள். இந்தச் செய்தி பாபர் பேரரசனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவன் வந்து இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்குள் அவர்கள் மூவரும் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து, சுமைகளை இறக்கி வைத்து விட்டார்கள். அதனால், அந்த அற்புதக் காட்சியைப் பாபரால் பார்க்க முடியவில்லை. படைவீரர்கள் பாபருக்கு அனுப்பிய செய்தி பொய்யென்று அவன் நினைத்து விட்டான். இருந்தாலும், இந்த அதிசயம் உண்மைதானா என்று அவர் சோதிக்க நினைத்தார். சத்குரு சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்த தானியங்களைக் குத்திக் கொடுக்க வேண்டிய வேலைகளை சத்குருவுக்குப் பணிக்கப் பட்டது. குருநானக் எதைக் குறித்தும் கவலைப்படாமல் தியானம் செய்வதிலே மூழ்கி விட்டார். தானியத்தைக் குத்தும் இயந்திரம் தானாகவே வேலை செய்து கொண்டிருந்தது. குத்திய தானியம் வெவ்வேறாகப் பிரிந்து கொண்டிருந்தது. ஆட்கள் எவரும் வேலை செய்யவில்லை. தான்ாகவே எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. குருநானக் வேலை செய்யும் இடத்திற்குப் பேரரசர் பாபர் வந்து பார்த்தார். நானக் எந்த வேலையையும் செய்யவில்லை. அவர் கடவுள் தியானத்திலே திளைத்திருந்தார். ஆனால், எல்லா பணிகளும் தானாகவே நடந்து கொண்டிருப்பதை பாபர் கண்டார். சத்குரு தியானத்திலே இருந்து எழுந்திருக்கும் வரை பாபர் காத்துக் கொண்டே இருந்தார். அவர் எழுந்ததும், குரு நானக்கிடம் பாபர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பாபருக்கு சத்குரு அறிவுரைகளைக் கூறி ஆசி வழங்கினார். பாபர் தனது தவறுகளை உணர்ந்து, குருநானக் ஒரு மகான்தான் என்று நம்பி மனம் மாறிச் சென்றார். வழக்கம் போல சத்குரு தனது சொந்த ஊரான கர்தர்பூருக்குத் திரும்பினார். அவர் அங்கே சில நாட்கள் தங்கிய பிறகு, மீண்டும் தனது ஞானோபதேசப் பணிகளைச் செய்திட மேற்குத் திசைக்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். பஞ்சாப் மாநிலத்தின் மேற்குத் திசையிலே உள்ள ஹசன் அப்தல் என்ற ஊரருகே உள்ள ஒரு குன்றருகே சென்று குருநானக் அமர்ந்தார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்று தங்கினார்கள். அந்த இடத்தில் பாறை ஒன்று இருந்தது. கதிரவ துடைய கடும் வெயில் அப்போது தகித்துக் கொண்டிருந்தது. மர்தான்ாவுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். சத்குருவிடம், குருவே, நான் தாகத்தால் தவிக்கிறேன் என்றான். சத்குரு, கவலைப்படாதே மர்தானா அதோ அந்தக் குன்றின் மேலே ஒரு நீரூற்று இருக்கிறது. அதிலே இருக்கும் தண்ணீரைக் குடித்துத் தாகத்தை தனித்துக் கொண்டு வா என்று அவனை அனுப்பி வைத்தார். மர்தானா சென்றான். வேகமாக அந்தக் குன்றின் மேல் ஏறினான். நீரூற்று இருப்பதை மகிழ்ச்சியோடு கண்டான். தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த அவன், நீரைக் குடிக்கச் சென்ற போது, ஒரு பக்கிரி ஓடிவந்து, நீ யார் எப்படி இந்த நீரூற்றுக்கு வந்து தண்ணீரைக் குடிக்கலாம் என்றான். தடுத்தான். ‘சத்குரு தான் என்னை அனுப்பி வைத்தார். எனக்குத் தண்ணீர் தாகம் என்றான். உடனே பக்கிரி வேண்டுமானால், தனியாக ஒரு நீரூற்றைத் தோண்டித் தருமாறு உனது குருவிடம் போய் கூறு’ என்று மர்தானாவைத் திருப்பி அனுப்பி விட்டான். மர்தான் திரும்பி வந்து, பக்கிரி கூறியதைக் குருவிடம் கூறினான். உடனே சத்குரு, ‘மர்தானா, மறுபடியும் அதே பக்கிரியிடம் போ! பணிவாக அவரை வேண்டிக் கொள். அவர் உன்னைத் தண்ணீரைக் குடிக்க அனுமதிப்பார்’ என்றார். தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த அவன், மீண்டும் பக்கிரியிடம் சென்று பணிவாகத் தண்ணீர் குடிக்க அனுமதிக்கும். படி வேண்டினான். ஆனாலும், பக்கிரி அவனுக்குத் தண்ணீர் குடிக்க அனுமதி தரவில்லை. தள்ளாடியபடியே மீண்டும் குருவிடம் வந்தான் மர்தானா. தண்ணீர் குடிக்க அனுமதி மறுத்ததைக் குருவிடம் சொன்னான். களைத்துப் போய் கீழே உட்கார்ந்து விட்டான் மர்தானா. உடனே குரு, மர்தானா கவலைப்படாதே. நீ உட்கார்ந்துக் கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு நீரூற்றைத் தோண்டு என்றார். சத்குரு கூறியபடியே மர்தானா தோண்டினான். தண்ணீர் பீறிட்டு வந்தது. அதைக் குடித்து அவன் தாகம் தீர்த்துக் கொண்டான். தண்ணீர் தர அனுமதிக்காத பக்கிரி, இருந்த இடத்திலிருந்தே நீரூற்று தோண்டியதையும், நிலத்து நீர் பீறிட்டு வந்ததையும், அவன் தண்ணீர் குடித்து தாகம் தணிந்து கொண்ட காட்சியையும் பார்த்தான். அப்போது மர்தான்ா தோண்டிய நீரூற்றிலே இருந்து வேகவேகமாக தண்ணீர் பீறிட்டு வந்ததையும், அதே நேரத்தில் அவனுடைய ஊற்றில் தண்ணீர் குறைந்து கொண்டே பூமியுள்ளே சென்று கொண்டிருந்ததையும் பக்கிரி கண்டு கோபம் கொண்டான். உடனே, தனது நீரூற்றருகே இருந்த ஒரு பாறையை அவன் மர்தானா நீரூற்றை நோக்கி உருட்டி விட்டு விட்டான். இதைக் கண்ட மர்தானா அலறிக் கொண்டு குரு நானக்கிடம் ஓடி வந்தான்். அவர் இதையெல்லாம் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பாறை வெகு வேகமாக உருண்டோடி வரவே, உடனே சத்குரு தனது கையை மேலே உயர்த்தினார். அவ்வளவு தான்் வேகமாக உருண்டோடி வந்த அந்தப் பாறை அப்படியே நின்று விட்டது. நகரவில்லை. அந்தப் பாறை மீது குருநானக் கை அடையாளமும் அப்படியே பதிந்திருந்தது. பக்கிரி இந்தக் காட்சியைப் பார்த்தான். அப்படியே வியந்து நின்றுவிட்டான். எவ்வளவு பெரிய பாறையை நாம் உருட்டி விட்டோம். அது எவ்வளவு வேகமாக உருண்டோடி வந்தது. அந்தப் பாறையைத் தனது கையை உயர்த்தி அப்படியே தடுத்து நிறுத்தி விட்டாரே அவர் யார்? என்று திகைத்து நின்றான். எனவே, அந்த மனிதர் சாதாரணமானவர் அல்லர். ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்தப் பக்கிரி, குன்றின் உயரத்திலே இருந்து கீழே இறங்கி ஓடி வந்தான். சத்குருவிடம் வந்து பணிந்து நின்றான். ’என்னை மன்னித்து விடுங்கள் மகானே என்று அவர் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினான். சத்குரு நானக் அவனது அழுகுரலைக் கேட்டு மன்னித்தார். உடனே பக்கிரி, இறைஞானியே, தெய்வீகச் சக்தியைப் பெறுவது எப்படி? என்றான். அதற்கு சத்குரு ’அன்பனே, நாம் ஒவ்வொருவரும் தன்னலத்தை மறக்க வேண்டும். உண்மை நெறியில் வாழ வேண்டும். நமக்கெலாம் ஒரு கடவுள் உண்டு. அந்த இறைவனை நாள்தோறும் வணங்கித் தியானம் செய்ய வேண்டும். அதுவே தேய்வீகச் சக்தியைப் பெறும் வழி" என்று அந்தப் பக்கிரிக்கு ஞானத்தைப் போதித்தார். சத்குரு நானக்கும், சீடர்களும், நேராக பெஷாவர் நகர் அருகிலிருக்கும் கோரக்ஹதி என்னும் இடத்திற்குச் சென்று, அங்கே இருந்த யோகிகளுடன் கலந்துரையாடிய பின்பு மீண்டும் தங்களது ஞானப் பயணத்தைத் துவங்கி நடந்தார்கள். குருநானக் செய்த அற்புதங்கள் இமயமலைச் சாரல்களின் ஒரு பகுதி காஷ்மீரம். அது இயற்கை அன்னையின் அழகுக் காட்சிகள் நிறைந்த ஓர் இடம்; எங்கு பார்த்தாலும் எழில் சிரிக்கும் வண்ண வண்ண வனப்புகள் மிகுந்த மலர்கள் காட்சி தரும் பகுதி. அழகு மிகு மலர்ச் செடிகள் அணிவகுத்து சிரிக்கும் இடம். வளைந்தாடும் கொடிகள் மக்களை வரவேற்று மகிழ்ச்சியூட்டும் நிலம். கனி குலுங்கும் மரங்கள். வெள்ளை வெளேர் என்ற காட்சி தந்து கொண்டே இருக்கும் பனிக் குவியல்கள். அந்தக் காஷ்மீரம் நாட்டின் தலைநகர் ஸ்ரீநகர். சத்குரு நானக்கும், அவரது மாணவர்களும் அந்த நகருக்குள் சென்றார்கள். குரு நானக் வருகை தருகிறார் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து, அவரது ஆசியையும், வாழ்த்தையும், அறிவுரைகளையும், அறவுரைகளையும் பெற்று ஞானத் திருவிழாவைப் போல வீதி வீதியாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஸ்ரீநகரில் பிரம்மதாஸ் என்ற ஒரு பண்டிதர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஓர் அற்புதச் சக்தி கொண்ட பறக்கும் கம்பளம் ஒன்றிருந்தது. அவர் அந்தக் கம்பளத்தின் மேல் அமர்ந்து கொண்டு இமயமலைச் சாரல் மக்கள் இடையே சில அற்புதங்களைச் செய்து புகழ் பெற்றிருந்தார். நினைத்த இடங்களுக்கெல்லாம் பறந்து போவார், பறந்து வருவார். அதனாலே அவர் அப்பகுதியில் தான் ஒரு தெய்வீகச் சக்தியுடையவன் என்ற மனக் கர்வத்தில் இருந்தார். அந்த மாயக் கம்பளக்காரர், குரு நானக் காஷ்மீரம் வந்திருப்பதை அறிந்து, தன்னுடைய கம்பளத்தின் மீது பறந்து வந்து, சத்குருவை விட தான் சக்தி பெற்றவன் என்ற எண்ணத்தை அவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, மக்களுக்கு தனது சக்தி குருநானக்கை விட ஆற்றல் பெற்றது என்பதையும் மெய்ப்பிக்க எண்ணினார். குருநானக் ஸ்ரீநகரில் கூடி தன்னை வரவேற்ற மக்களுக்குக் காட்சி தந்து, ஞான வழிபாடு செய்வதை கூட்டம் கூட்டமாய் கூடி நின்று மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பிரம்மதாஸ் என்ற அந்தப் பண்டிதன் தன்னுடைய பறக்கும் கம்பளத்தில் ஏறி குருநானக் உபதேசம் செய்திடும் இடத்திற்கு வந்தார். கூட்டம் கூட்டமாய் அங்கே திரண்டிருந்த மக்களைப் பார்த்து, “எங்கே உங்களுடைய குரு? அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று மனக்கர்வத்தோடும், ஆணவக் குரலோடும் அவர் கேட்டார். உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் சத்குரு நானக் இதோ உட்கார்ந்திருக்கிறார் என்று அவரைச் சுட்டிக் காட்டினார். எங்கே, எங்கே?’ என்று மீண்டும் மீண்டும் அந்தப் பண்டிதர் கேட்டார். - கோபம் கொண்ட ஏனய்யா பண்டிதரே. உமக்குக் கண் தெரிகிறதா? இல்லையா? இதோ அந்த மகான் உட்கார்ந்திருப்பதைப் பாரும் என்று குருவைக் காட்டினார்கள். உண்மையிலேயே பண்டிதரால் சத்குருவைப் பார்க்க இயலவில்லை. சரி சரி, சத்குருவைப் பார்க்க வந்ததே எனது தகுதிக்குக் குறைவுதான் என்று கூறியவாறே மீண்டும் வீடு சென்றிட தனது பறக்கும் கம்பளத்தருகே வந்து, அதைப் பறந்து போகுமாறு உத்தரவிட்டார். கம்பளம் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. பண்டிதர் தனது மாய மந்திர சக்தி அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். கம்பளம் பறக்கவில்லை. கூடியிருந்த மக்கள் என்னய்யா பண்டிதரே, கம்பளம் பறக்க மறுக்கிறது என்று கூச்சல் போட்டார்கள். பண்டிதர் கூடியிருந்த மக்கள் முன்பு அவமானப்பட்டார். எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இந்த அவமானத்தை எண்ணி அவர் மனம் கொதித்தார். எனவே, அந்த இடத்தை விட்டுக் கால்நடையாகவே பண்டிதர் தனது வீடு போய்ச் சேர்ந்தார். ஸ்ரீநகர் மக்களுள் முக்கியமான பண்டிதரது நண்பர்கள். அன்று மாலையே அவரது வீட்டிற்குச் சென்று அவருக்கு உண்டான கேவலத்தை குறித்து கேட்டார்கள், வருந்தினார்கள் அவர்கள். அப்போதுதான் பண்டிதர், தன்னைத் தேடி வந்த முக்கியமான நண்பர்களைப் பார்த்து, குருநானக் எப்படிப்பட்டவர் என்ற விவரத்தை விசாரித்தார். நானக் தெய்வீகச் சத்தியை வந்தவர்கள் பண்டிதரிடம் கூறினார்கள். குருநானக்கைப் பற்றிய ஞானப் பெருமைகளை, அற்புதச் சக்திகளைக் கேட்டுக் கொண்ட பண்டிதர். உடனே சத்குரு தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். பண்டிதரைக் கண்ட குருபிான் அவரைப் பார்த்து, ‘அன்பரே’ என்று புன்முறுவலோடு கூப்பிட்டார். சத்குருவினுடைய கனிவானக் குரலைக் கேட்ட பண்டிதர், அவர் காலடியிலே கதறி விழுந்து என்னை மன்னித்து அருள் புரிக’ என்றார். ‘அருளாளரே, நேற்று என்னால் ஏன் தங்களைப் பார்க்க முடியவில்லை?’ என்ற விவரத்தைக் கேட்டார். அதற்கு சத்குரு, ‘நேற்று உன் கண்களைக் கர்வம் என்ற இருள் மூடிக் கொண்டது. அதனால் என்னைப் பார்க்க முடியாது போயிற்று. உனது கம்பளத்தில் பறக்கும் சக்தி இருந்ததால், நீ தெய்வச் சக்தி உடையவன் என்ற அகம்பாவம் கொண்டாய். மாயாஜாலத்தில் பறப்பதனால் நீ உயர்ந்தவனா? தெய்வத் தன்மை உடையவனாக முடியுமா? ஈக்களும், கொசுக்களும் கூடத்தான்் பறக்கின்றன. அதனால், அவை உயர்ந்தவை ஆகிவிடுமா?’ என்று குருநானக், பண்டிதரைப் பீடித்திருந்த அகம்பாவ உணர்வை, ஆணவத் திமிரை, மனக்கர்வ மமதையை கனிவோடு அகற்றி ஞானத்தை அவர் மனதிலே உருவாக்கினார். உடனே பண்டிதர் சத்குருவிடம், தனக்கு நல்ல வழிகளைக் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளவே. நானக் ஒரு பாடலை இசையுடன் பாடி, அதன் கருத்தை விளக்கினார். அதனால் மன அமைதி பெற்று பண்டிதர் வீடு திரும்பினார். அன்று முதல் மாயாஜால சக்தியையும், மந்திரங்களின் சக்தியையும் மறந்து, பண்டிதர் மனநிறைவு என்ற சாந்தியைப் பெற்று வாழ்ந்தார். காஷ்மீர் மக்களிடம் தனது ஞான உரைகளை ஆற்றிய பின்பு, அவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெறும் நெறிகளைப் போதித்து, இமயமலையின் அடிவாரத்திலே உள்ள மற்றொரு நாடான திபெத் பகுதிக்குத் தனது சீடர்களுடன் பயணமானார். திபெத் லாமாக்கள் இடையே சத்குரு திபெத் நாட்டுக்கு குருநானக் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பெளத்த மதக் குருக்களின் தலைவரான லாமா, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வரவேற்றார்! சத்குரு நானக் ஓர் அவதார புருஷர் என்பதை தலைமை லாமா புரிந்து கொண்டார். அதனால், தனது மற்ற லாமாக்களுடன் சென்று, குரு நானக்கை அவர் எதிர்கொண்டு வரவேற்று, தங்களது மடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். விருந்து வைபவங்களை நடத்தினார்கள். மதங்களிலே உள்ள உண்மைகளை அவர்கள் கூடி உரையாடி, அதனால் பல அரிய கருத்துக்களை ஒருவருக்கு ஒருவர் உணர்ந்து மகிழ்ந்தார்கள். இறைவனைப் பற்றியும், அவருடைய படைப்பின் அற்புதங்கள் குறித்தும் சத்குரு பல பாடல்கள் மூலமாக அவர்களுக்கு விளக்கினார். அதைக் கேட்ட பெளத்த லாமாக்கள் வியந்தார்கள். சில சந்தேகங்களையும் கேட்டு அவர்கள் புரிந்து கொண்டார்கள். குரு நானக் தனது சீடன் மர்தானாவிடம் ரூபாய் இசைக் கருவியை வாசிக்கச் செய்து, அந்த இசையினால் இறைவழிபாடு செய்யும் இன்பத்தை லாமாக்களுக்கு விளக்கிக் காட்டினார். சில நாட்கள் லாமாக்கள் மடங்களிலே தங்கியிருந்த பின்பு, குருநானக் தாம் உருவாக்கி வரும் சீக்கிய மதத்தின் புனித, புதிய கருத்துக்கள் ஒவ்வொன்றையும் திபெத்திய மக்களுக்கு உபதேசம் செய்து விட்டு, அங்கிருந்து கைலாச மலையின் வழியாக மானசரோவர் வந்தடைந்தார். மானசரோவரில் குருநானக்! மானசரோவரிலும், கைலாச மலையிலும் தவம் செய்து கொண்டிருந்த ஞான யோகிகள், மாமுனிவர்கள் பலர். சத்குரு நானக் வருவதை அறிந்து, அவரை அன்பு தவழ வரவேற்று, வருக வருக என்ற மகிழ்ச்சி ஒலிகளை எழுப்பினார்கள். மானசரோவர் மாமுனிவர்கள் நானக் செய்த புதிய மத உபதேசங்களைக் கேட்டு உற்சாகமடைந்தார்கள். பிரயாகையில் சத்குரு: பிறகு அங்கிருந்து குருநானக் சீடர்களுடன் அலகாபாத் நகர் வந்தார் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று பேராறுகள் கூடும் இடத்தைக் கண்டுகளித்தார். சத்குரு அலகாபாத் நகர் வந்த தினம் சூரிய கிரகண நாளாகும். அன்று லட்சக்கணக்கான மக்கள் நதிகளில் நீராடுவார்கள். நதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் குளிக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆற்றுக் குளியலாடிய மக்கள், அங்கேயே இறை வழிபாடுகளைச் செய்து மகிழ்வர். இவ்வாறு மக்கள் நீராடி, அவரவர் பழக்க வழக்கப்படி இறைவழிபாடுகளைச் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு போலிச் சாமியார் தன்முன் ஒரு மேசையைப் போட்டுக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார். அதைக் கண்ட அலகாபாத் யாத்ரிகர்கள் அந்த மேசை மேலே காசுகளைப் போட்டுச் செல்வார்கள். ஒவ்வொரு முறையும் காசு மேசை மீது விழும் ஓசையைக் கேட்டதும் போலிச் சாமியார் தனது கண்களைத் திறந்து பார்ப்பார். பிறகு, அந்தக் காசுகளை எடுத்துத் தனது பையில் போட்டுக் கொள்வார். மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவார். போலிச்சாமியார் செய்யும் இந்த வேடிக்கைக் காட்சியை, சத்குரு நானக்கும் அவரது சீடர்களும் நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சத்குரு சிரித்துக் கொண்டார். அதனால் அவர் ஒரு வேடிக்கை செய்தார். போலிச் சாமியார் மேசை அருகில் சென்று ‘பெரியவரே என்ன செய்கிறீர்கள்?’ என்று வேடிக்கை யாகக் கேட்டார். ‘அப்பனே! விளையாட்டாக எதையும் கேட்கக் கூடாது. பிள்ளாய், தியானத்தில் மூழ்கி, மூன்று உலகங்களையும் பார்க்கிறேன். உனக்கு இது தெரியவில்லையா அப்பனே!’ என்றார் சாமியார். அந்த விநாடியே சாமியார் தனது கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் மூழ்கிவிட்டார். அந்த நேரத்தில் சத்குரு, மர்தானாவைப் பார்த்து ஜாடை காட்டினார். உடனே சாமியார் முன்பு இருந்த மேசையைத் துக்கிக் கொண்டு போய் வேறு ஓர் இடத்தில் வைத்து விட்டார் மர்தானா நீண்ட நேரமாக காசு விழும் ஒசை கேட்கவில்லை சாமியாருக்கு. உடனே அவர் கண்களைத் திறந்து பார்த்தார். மேசையைக் காணவில்லை. எங்கே என் மேசை என்று சாமியார் அலறினார். அப்போது சத்குரு, ‘சாமியாரே உமது மேசை மூன்று உலகங்களுக்கும் போயிருக்கிறது’ என்று வேடிக்கையாகவே பதில் கூறினார். போலிச் சாமியார் வெட்கத்தால் தலையைக் குனிந்து கொண்டே தரையைப் பார்த்தபோது, சத்குரு சாமியாரைப் பார்த்து, உண்மையாக வாழ்வது எப்படி? என்ற வழிகளைக் கூறினார். அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அந்தச் சாமியார் அலகாபாத் நகரை விட்டே ஓடிப் போய்விட்டார். அலகாபாத் நகரை விட்டு சத்குருவும், மாணவர்களும் புறப்பட்டார்கள். காசி, கயை, பூரி போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தனது சீக்கிய மத நெறிகளை வெளிப்படுத்தினார். எது உண்மையான மார்க்கம் என்பதைத் தக்கச் சான்றுகளுடன் மக்களுக்கு விளக்கியபடியே சத்குரு பூரியில் சில நாட்கள் தங்கியிருந்தார். காமரூபத்தில் குருநானக்! அசாம் மாநிலத்திலே உள்ள காம ரூபம் என்ற இடத்திற்கு குரு நானக்கும், சீடர்களும் சென்றார்கள். அங்கே புகழ்பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று, ஓரிடத்தில் நானக் தங்கினார். காமாட்சி தேவி திருக்கோவிலின் ஒரிடத்தில் குருநானக் தங்கியிருந்தபோது, அவரது மாணவன் மர்தான்வுக்கு பசிப்பிணி உயிரை வாட்டியது. பசி எடுக்கிறது குருதேவா என்றான் மர்தானா. ‘மர்தானா நகருக்குள் செல். உணவு கிடைக்கும். உண்டு வா!’ என்றார். ஆனால் நீ எச்சரிக்கையோடு சென்று வர வேண்டும். நகரில் சூனியக்காரிகள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை’ என்று கூறி அனுப்பினார். நகருக்குள் நுழைந்தான் மர்தானா. அவன் போவதை சூனியக்காரிகள் மூவர் பார்த்துவிட்டார்கள். ஒருத்தி ஏதோ ஒரு மந்திரத்தைக் கூறி ஒரு நூல் கயிற்றை மர்தானாவின் கழுத்தில் வீசினாள். மனிதனாகச் சென்ற மர்தானா நாயாக மாறிவிட்டான். சத்குரு அந்த நிகழ்ச்சியை தனது ஞானக்கண்ணால் அறிந்தார். உடனே நாயாக மாற்றப்பட்ட மர்தானா இருந்த இடத்திற்கு பாலாவுடன் விரைந்தார். சத்குருவைக் கண்டதும் இரண்டாவது சூனியக்காரி ஓடி வந்தாள். ‘இதோ இந்த மனிதரையும் நாயாக மாற்றுகிறேன்’ என்று நானக்கைச் சுட்டிக் காட்டினாள். மந்திரம் ஜபித்த நூலொன்றைச் சத்குருவின் மீது வீசினாள். சத்குரு உடனே அவளைப் பார்த்து நீயே நாயாவாய் என்றார். அடுத்தக் கணமே அவள் நாயானாள் குரைத்தாள்! நானக் பாலாவைப் பார்த்து, ‘நாயாக மாறியுள்ள மர்தானாவின் கழுத்திலிருக்கும் அந்த நூலை எடு’ என்றார். பாலா குரு கூறியபடியே செய்ய மர்தானா மீண்டும் மனிதனானான். மற்றொரு சூனியக்காரி அப்போது குருநானக்கின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்து ஓடி வந்தாள். அவளும் வேறோர் மந்திரம் ஜெபித்த நூலொன்றைக் குருநானக் மீது வீசிட கையைத் துக்கினாள். துக்கியகை உயர்ந்தபடியே நின்றுவிட்டது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேறொரு சூனியக்காரி, தலைமை சூனியக்காரியிடம் ஓடி நடந்த விரவத்தை விளக்கினாள். சீறிய கோபத்தோடு தலைமை சூனியக்காரி விரைந்து வந்தாள். தனக்குள்ள முழு மந்திர ஆற்றலையும் ஜெபித்தாள். எதுவும் நடைபெறாததால் படுதோல்வி கண்ட அவள், சத்குருவின் காலில் விழுந்தாள். குருநானக் அவளையும், மற்ற சில சூனியக்காரிகளையும் மன்னித்தார். சூனிய வித்தைகளைப் பயன்படுத்தி மக்களைத் துன்பப்படுத்துவது பாபம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, குருநானக் தனது சீடர்களுடன் வழக்கம்போல தனது ஞான யாத்திரையைத் தொடர்ந்தார். அசாம் பகுதியிலே உள்ள அடர்ந்த காடுகளில் புகுந்து அவர்கள் மூவரும் நடந்து செல்லும் போது, சீடர்களைப் பார்த்து ஜாக்கிரதையாக என்னைப் பின்பற்றி வாருங்கள். பின் தங்கிட வேண்டாம். ஏன் தெரியுமா? மனிதர்களைக் கொன்று திண்பவர்கள் இந்தக் காட்டிலே இருக்கிறார்கள் என்று எச்சரித்தபடியே சென்றார். குரு கூறியதைக் கேட்டு பாலாவும், மர்தானாவும் பயந்து கொண்டே அவரைப் பின்பற்றினார்கள். அப்போது அவர்களைப் பசி நெருப்பாய் எரித்தது. குருதேவா எனக்கு அதிகமாகப் பசி துன்புறுத்துகின்றது என்று மர்தான்ா வழக்கம் போலச் சொன்னான். உடனே குரு தேவர் ‘உனது பசி எனக்கும் தெரிகிறது. இதோ இந்த வழியாகச் செல். அந்த திசையில் உணவு உனக்குக் கிடைக்கும்’ என்றார் அவர். சத்குரு காட்டிய திசையிலே சிறிது தூரம் சென்றான். இரண்டு மலைவாசிகள் திடகாத்ரமான உடல் பலத்தோடு ஓடி வந்து மர்தானா மீது பாய்ந்து, குண்டுகட்டாகக் கட்டித் துக்கிக் கொண்டு அவர்களது தலைவன் முன்னே கொண்டு போய் போட்டார்கள். மர்தானாவை ஒரு மரத்தில் பலாத்காரமாகக் கட்டினார்கள். அந்த மரம் எதிரே, ஒரு கொப்பரையில் எண்ணெய் கடும் சூட்டோடும், நெருப்போடும் கொதித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மர்தானா உடல் துடித்தான் எதற்காக எண்ணெய் கொதிக்கிறது? காட்டிலே செல்வோரை மலைவாசிகள் துக்கிக் கொண்டு வந்து உயிரோடு கொதிக்கும் கொப்பரை எண்ணெயில் போட்டுப் பொரித்துத் தின்பார்கள். அதுபோல மர்தானாவையும் வறுத்துத் தின்றிடத்தான் அந்த எண்ணெய் கொப்பரையிலே கொதித்துக் கொண்டிருந்தது. அதனால்தான் எண்ணெய் கொதிப்பதைக் கண்டு மர்தானா நடுங்கி விட்டான். என்ன ஆனான் மர்தானா என்பதை சத்குரு தனது ஞானக் கண்ணால் அறிந்தார். உடனே தனது சீடன் இருக்கும் இடம் நோக்கி அவர் விரைந்தார். குருநானக் வந்ததும் அந்த மலை வாசிகள். அவரையும் பிடித்துக் கட்டிப் போட ஓடிவந்தார்கள். என்ன நடந்தது தெரியுமா அப்போது? எந்த இடத்தில் ஒவ்வொரு மலைவாசியும் நின்று கொண்டிருந்தார்களோ, அவர்கள் அந்தந்த இடங்களை விட்டு ஆடவுமில்லை, அசையவு மில்லை. அப்படியே மரம்போல நின்று விட்டார்கள். சத்குருவின் தெய்வீக ஆற்றல் அவர்களை ஒரடிகூட நகராமல் செய்துவிட்டது எனலாம். உடனே, பாலா மர்தானா உள்ள இடத்துக்கு ஓடி அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடுதலை செய்தான் மலைவாசிகள் அனைவரும் குருநானக்கின் ஆற்றலையும், அருட்தன்மையினையும் பார்த்து,அவர்கள் அப்படியே மனம் மாறிவிட்டார்கள். பிறகு அவர்கள் நின்ற இடங்களில் இருந்தவாறே ‘மகானே எங்களை மன்னித்து அருளாசி வழங்குங்கள்’ என்று கதறியழுது கண்ணீர் சிந்தினார்கள். நானக்தான் இரக்க சுபாவமும், கருணையுள்ளமும் கொண்டவராயிற்றே! சத்குருவின் கருணை அன்பால் அவர்கள் எல்லாரும் நடக்கவும், நகரவும் சக்தி பெற்றார்கள். அவர்கள் சத்குரு நின்றிருந்த இடத்திற்கு ஓடிவந்து அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நானக் அவர்களை மன்னித்தார். சீக்கிய நெறிகளை அவர்களுக்குப் போதித்தார். மனம் மாறிய அந்த மலைவாசிகள் சீக்கிய மதவழியிலே நின்று வாழ்ந்தார்கள். ⁠சத்கருவின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. சத்குருவும்,மற்ற இரு மாணவர்களும் ஒருநாள் நடுக்காட்டில் நடந்து கொண் டிருந்தார்கள். மறுபடியும் மர்தானாவுக்குப் பசி வாட்டியது. அதை குரு உணர்ந்தார். அவர் மர்தானாவைப் பார்த்து, “மர்தானா உனக்குக் கடுமையான பசியோ என்றார். சரி, அதோ அந்தச் சிகைக்காய் மரத்திலே உள்ள பழங்களைப் பறித்துத் தின்னு. பசி தணியும். ஆனால் ஒரு நிபந்தனை. எவ்வளவு பழங்களை உன்னால் தின்ன முடியுமோ, அவ்வளவையும் அங்கேயே தின்னலாம். ஆனால், ஒரு பழத்தைக் கூட நீ எடுத்து வரக் கூடாது.” என்றார் குரு. ⁠’குருதேவா சிகைக்காய் கசக்குமே எப்படி நான் அதை தின்ன முடியும் என்றான் மர்தானா. ⁠’மர்தானா பசி எடுக்கிறது என்கிறாயே! அதனால் சோன்னதைச் செய்" என்றார் சத்குரு. ⁠மர்தானா ஆசையோடு சிகைக்காய் மரத்தின் மேலேறிப் பழத்தை வயிறு புடைக்கத் தின்றான். அவனுக்கு அம்மரத்தின் பழங்கள் கசக்கவில்லை. தேன் போல.இனித்தபடியே இருந்தது. பசியும் தணிந்தது. ஆனால், குரு கூறிய வார்த்தையை மர்தானா மறந்து விட்டான். மறுநாளுக்கும் வேண்டி பழங்களை பறித்துக் கொண்டு வந்தான் அவன். ⁠மறுநாள் பசி வருமுன்பே நேரத்திலேயே! தான் பறித்து வைத்திருந்த பழங்களைத் தின்றான். பாவம் ஒரே கசப்பு! எட்டிக் காயைப் போல வாயெல்லாம் கசந்து கொண்டே இருந்தது. உமிழ் நீரைத் துப்பியபடியே இருந்தான். அவன் வாயும் கசந்தது வயிறும் குமட்டிற்று. நாக்கு எச்சிலைத் தரையிலே சிந்தியபடியே இருந்தது! துப்பித் துப்பி வாயும் ஒய்ந்து விட்டது. ⁠மர்தாமனாவின் செயல்களை எல்லாம் ஒன்றும் தெரியாதவாறு சத்குரு கவனித்தபடியே இருந்தார். பிறகு அவராலேயே அடக்க முடியவில்லை சிரிப்பை! மர்தானாவோ குருவுக்குத் தெரியாது என்று எண்ணிக் கொண்டு, கசப்பைத் தாங்க முடியாமல் இங்கும் அங்குமாக எச்சிலை உமிழ்ந்தபடியே கர் கர்ரென்று காறிக் காறித் துப்பிக் கொண்டே இருந்தான். மர்தானா நேற்று உனக்கு பசி எடுத்தது. தேவையேற்பட்ட போது உண்டாய். அதனால் அது இனித்தது. இப்போது ஆசையேற்பட்டதால் தின்றாய். அதனால் கசந்தது இல்லையா? என்றார் குரு. ⁠குருதேவா என்னால் கசப்பைத் தாங்க முடியவில்லை. பேச முடியவில்லை என்றான் மர்தானா. ⁠கவலைப் படாதே. ‘சத்நாம்’ என்று சொல். கசப்பு மறைந்து விடும் என்றார் குரு. ⁠அவ்வாறே கூறினான் மர்தானா. ’சத்நாம் என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தான் அவன், மறைந்தது கசப்பு. அவன் முகம் ஒளி பெற்றது. மகிழ்ச்சியடைந்தான் மர்தானா. தமிழ்நாட்டில் சத்குரு ⁠சத்குரு நானக் தாம் கண்ட புதிய வாழ்வியல் நெறிகளை சீக்கிய மதம் என்ற பெயரால் மக்களுக்கு வழங்கிட, கால் நடையாகவே மத்திய கிழக்கு நாடுகளான மெக்கா, மதினா, அரேபியா, பாக்தாத் போன்ற நகரங்களுக்கு எல்லாம் சென்று வந்தார். ⁠இமயமலைச் சாரல் பகுதிகளிலே உள்ள நாடுகளான காஷ்மீரம், திபெத் போன்ற நாடுகளுக்கும் சென்றார். அங்கும் தனது புதிய நெறிகளது தத்துவ விளக்கங்களை மக்களிடையே பரப்பினார். ⁠வட இந்தியப் பகுதிகளான பஞ்சாப், டெல்லி, அசாம் காமரூபம், கங்கை, யமுனை, சிந்து நதிகள் பாயும் வளமான சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்கள் இடையேயெல்லாம் சென்று தமது நெறிகளைப் போதித்தார். ⁠குருநானக் மத்திய கிழக்கு நாடுகளிலே வாழ்ந்த முஸ்லீம் பெருமக்களிடையேயும், திபெத் பகுதிகளிலே வாழும் பெளத்த மதத் தலைவர்களான லாமாக்களையும், அங்கு வாழ்ந்து வரும் புத்தமத மக்களையும், மானசரோவர், காஷ்மீரம், கைலாசம் மலைப் பகுதிகளிலே கடும் யோகங்களை இயற்றி வரும் இந்து மத மா முனிவர்களையும், யோகிகளையும் கண்டு தனது புதிய நெறித் தத்துவங்களை, நுட்பங்களைக் கலந்துரையாடியும், சென்ற இடங்களிலே எல்லாம் மதம், இனம், சாதி பேதங்களைப் பாராமல் மக்கள் மனத்திலே சமத்துவ நெறியையும் உருவாக்கி வட இந்தியா முழுவதும், அதற்கப்பாலுமாக வலம் வந்த ஒரு ஞானியாகத் திகழ்ந்தார். குருநானக் மேற்கண்டவாறு வட இந்தியப் பயணங்கள் சென்றபின்பு, இந்தியாவின் தென்பகுதிக்கும் சென்று வர வேண்டும் என்ற அவா உந்தலால் அவர் தமிழ்நாட்டிலே உள்ள முக்கடல் சங்கமமான கன்னியாகுமரி முனைக்கும், இராமேஸ்வரம் திருக்கோவில் உள்ள யாத்திரிகத் தலத்திற்கும் வருகை தந்தார். தமிழ் மக்களுக்கு உபதேச உரைகளை ஆங்காங்கே போதித்தார் அந்த ஞான மகான்! ⁠தமிழ்நாட்டின் புகழ் பெற்ற புனிதத் தலங்களுள் ஒன்றான இராமேஸ்வரம் கடற்கரையில், சத்குரு நானக் ஒருநாள் நின்று கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். ⁠அப்போது திடீரென்று தனது சீடர் மர்தானாவைப் பார்த்து, “என் நண்பர் எனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவரை உடனே சென்று பார்க்க வேண்டும்” என்று சத்குரு கூறிப் புறப்பட்டார். மாணவர்கள் பின் தொடர்ந்தார்கள். ⁠தமிழ்நாட்டில் அவருக்கு அவ்வளவு முக்கியமான நண்பர் யாராக இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? இதோ அவரது நண்பர் விவரம் : ⁠தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகில் சங்கல் தீபம் என்ற ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவின் மன்னன் ராஜா சிவநாத். அவர் ஓர் இறையன்ப பக்தர். அந்த சிற்றரசருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர். அவர் பெயர் பகீரத், சிறந்த புகழ் பெற்ற கடல் வாணிகர் அவர். தனது வணிகம் சம்பந்தமாக அந்த வியாபாரி பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்று வரும் கப்பல் வாணிகர். அந்தந்த நாடுகளிலே அவரைப் போன்ற புகழ் பெற்ற, செல்வச் சீமான்களான வியாபாரிகள் பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுடன் பகீரத் அடிக்கடி தொடர்பு கொள்வார். ⁠எந்தெந்த நாட்களில், எவ்வப்போது, என்னென்ன முக்கியமான, சிறப்பான, அதிசயமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற விவரத்தை பகீரத் தெரிந்து கொள்வார். அத்தகைய சிறப்புச் சம்பவங்கள் இருந்தால் கப்பல் வணிகர், சங்கல் தீவை ஆட்சி செய்து வரும் தனது அருமை நண்பருக்குத் தெரிவிப்பார். சில நேரங்களில் ராஜாவும், வாணிகருமே அந்தந்த சிறப்புச் சம்பவங்களில் கலந்து கொண்டு திரும்புவதுமுண்டு. ராஜா அத்தகைய ஓர் ஆன்மீகவாதி மட்டுமன்று, சிறந்த இறைஞான சீலரும் கூட. ⁠அத்தகைய ஆன்மீக பக்தருக்கு, பகீரத் வாணிகர், தாம் கேட்டறிந்த குருநானக்கின் அற்புதங்களையும், அவருடைய ஒருவனே இறைவன் என்ற தெய்வீகத் தத்துவங்களையும் ஒரு சமயம் தெரிவித்திருந்தார். அது முதல் சத்குரு நானக்கையும், அவரது இறைவழிபாடு ஞான நெறிகளையும் நேரில் கண்டறிந்து, அருளாசி பெற்றிட வேண்டும் என்ற தணியாத பக்தி தாகம் கொண்டிருந்தார் அந்தத் தீவுமன்னன். ⁠அதற்கு ஏற்றவாறு சத்குரு நானக் இராமேஸ்வரம் வருகை தந்துள்ள செய்தியை ராஜா அறிந்து மகிழ்ந்தார். அவர் வருகைக்காக ராஜாவும் எதிர்பார்த்திருந்தார். இந்த எண்ணச் சூழல் சத்குருவின் ஞானக் கண்ணுக்குப் புலப்பட்டதால் தான், ராமேஸ்வரம் கடற்கரையிலே நின்று கொண்டிருந்த குருநானக்குக்கு திடீரெனத் தனது நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கூறும் சிந்தனை உதயமானது. ⁠சத்குரு நானக் சங்கல் தீபம் என்ற தீவுக்குத் தனது மாணவர்களுடன் போய்ச் சேர்ந்தார். குருநானக் வந்துள்ள செய்தியை முன்கூட்டியே அறிந்து கொண்ட ராஜா, அவரைச் சகல மரியாதைகளுடனும், தனது பரிவாரங்களுடனும் எதிர்கொண்டு சென்று வரவேற்றுக் கோலாகலமாக இறைவனது திருவிழாவைப் போலக் கொண்டாடி, ஞானமகானைத் தனது அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார். ⁠சத்குரு அங்கே தங்கியிருந்த நாட்களில் தினந்தோறும் அந்த அரண்மனைத் திடலில் மக்களைத் திரட்டி தனது சீக்கிய மத நெறிகளை விளக்கினார். குருநானக் மீது ராஜா சிவநாத்துக்கு மிகுந்த மரியாதை, மதிப்பு, ஆன்மீக நேச பாசம் எல்லாம் உண்டு. என்றாலும் வந்திருப்பவர் உண்மையான குரு நானக்தானா? அல்லது அவர் பெயரால் யாராவது ஒரு போலிச் சாமியாரா? என்பதை ராஜா கண்டறிய விரும்பினார். ⁠அந்தச் சோதனைகளிலே சத்குரு வெற்றி பெற்றார். ஆனாலும் ராஜாவுக்கு ஒரு மன நெருடல் குரு தேவரைப் போய் அவநம்பிக்கைப் பட்டோமே என்பதுதான் அது. ⁠குருநானக்கை வழியனுப்பும் விழாவில் பாராட்டிப் பேசிய ராஜா சிவநாத், மகான், யோகி குருநானக் ஓர் அவதார புருஷர் ஆவார் என்று பேசி, தான் அவர்மீது அவநம்பிக்கை வைத்தது தவறு. ஏனென்றால் போலிச் சாமியார்கள் அதிகமாகப் பெருகி ராமேஸ்வரம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி ஏமாற்றுவதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான் சத்குரு போலிச் சாமியாரோ என்ற ஓர் ஐயம் எனக்கு ஏற்பட்டு விட்டது. ⁠சத்குரு அவர்கள் இந்த பாபியை மன்னிக்க வேண்டும் என்று அந்த விழாவின் மக்கள் மத்தியிலே ராஜா கேட்டுக் கொண்டார். அதற்கு சத்குரு, ‘அன்பின் வடிவான மெய்யன்பரே, உமது நினைப்பில் தவற்றில்லை. உண்மைதான். நீங்கள் இறைஞான வழிபாடுகளிலே ஒரு புதுமையைப் புகுத்தி மறுமலர்ச்சி கண்டு நீண்ட நாள் வாழ வேண்டும்’ என்று குருநானக் ராஜாவை வாழ்த்தி அருளாசி வழங்கினார். ⁠சங்கல் தீபம் என்ற அந்தத் தீவிலே இருந்து சத்குரு கன்னியாகுமரி சென்றார். முக்கடல் சங்கமத்தின் இயற்கை அமைப்பின் எழிலை நீண்ட நேரமாக ரசித்தபடியே குமரிக் கடலோரக் கரையிலே மெய்மறந்து நின்றார். ⁠முக்கடல் குமரியின் சங்கமத்திலே இருந்து சத்குரு நேராக திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்றார். அப்போது ராணி அதை ஆட்சி செய்து கொண்டிருந்தார். குருநானக் ராணியைச் சந்தித்து உபதேச உரை நிகழ்த்திய பின்பு, ஆன்மீக நெறிகளில் அரசியாருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் சிலவற்றை நீக்கினார். ⁠சத்குரு அங்கே இருந்து கண்ணன் பிறந்த இடமான பிருந்தாவனம் சென்றார். பிறகு, தமது சீடர்களுடன் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார். யமுனை நதிக்கரையிலே அப்போது புதுதாகக் கட்டப்பட்டிருந்த குருத்துவாரம் திருக்கோவிலைப் பார்த்து பரவசப்பட்டார். சில நாட்கள் அவர் தில்லி மாநகரிலே தங்கிவிட்டுப் பிறகு, தனது இருப்பிடமான கர்தர்பூர் சென்றார். சீக்கிய மதத்தை நிறுவிய சத்குரு இந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டின் முக்கடலோரச் சங்கமக் காட்சியைக் கண்டு வியந்துபோன சத்குரு நானக், பிறகு திருவாங்கூர் அரசியாருடைய ஆன்மீகச் சந்தேகங்களைத் தீர்த்த பின்பு, பிருந்தாவனம், தில்லி போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, தன்னுடைய சீக்கிய மதநெறிகளை மக்களுக்கு விளக்கி யுரைத்து இறுதியாக தான் நிறுவிய புனிதத் தலமான கர்தர்பூர் நகர் வந்து சேர்ந்தார். நீண்ட நெடும் நாட்களுக்குப் பிறகு, குருத்துவாரம் திருக்கோவிலில் மறுபடியும் கூட்டு வழிபாடு ஆரம்பமானது. மதம், சாதி பேதங்கள் பாராமல் வழிபாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். சகோதரத்தத்துவத்துடனும், எல்லாரும் ஒரே உறவினரே என்ற பண்பாட்டுக்கேற்பவும், அவர்களது சந்தேகங் களுக்குரிய கேள்விகளுக்கு தக்க பதில்களைக் கூறி, எல்லா இனமக்களையும் ஒன்றுபடுத்தி, இணைத்து உபதேச உரைகளை ஆற்றினார். வழிபாடு முடிந்தது. மக்கள் அவரவர் வினாக்களுக்குரிய விடைகளைப் பெற்று சத்குருவுடன் மகிழ்ச்சியைப் பங்கீடு செய்து கொண்டு உற்சாகமடைந்தார்கள். அப்போது கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் கூட்டத்திலே இருந்து எழுந்து, சத்குருவை நோக்கி, குருதேவா, என் நண்பன் ஒருவன் நோயாளி. அவனை வீட்டில் விட்டு விட்டு நான் வந்திருக்கிறேன். நான் சென்றுதான் அவனுக்குரிய எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். அவர் கூறியதைக் கேட்டதும், எந்த நேரத்திலும், எதற்கும், கோபப்படாத சத்குருவுக்கு அப்போது கோபம் கொந்தளித்து வந்தது. அந்த பக்தரைப் பார்த்து சத்குரு “என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, நோயினால் துன்பப்படும் ஒருவரை மேலும் துன்பப்படுத்திவிட்டு வரலாமா? அவரை விடவா என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உமக்குப் பெரிதாகப் போய்விட்டது. கடவுள் உமக்கு கொடுத்த கடமையிலே இருந்து நீர் தவறி விட்டீரே நியாயமா? அது மட்டுமன்று நான் கூறும் ஆபத்துக்குதவும் பண்பையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டிரே! போம்! உடனே சென்று அந்த நோயாளியைக் காப்பாற்றும் அன்பரே” என்று கூறி சத்குரு அவரை அனுப்பி வைத்தார். ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ திறமைகளைப் பெற்றிருக்கலாம். மற்றவர்களை விட அபூர்வ அறிவுகளையும் அடைந்திருக்கலாம். அவற்றால் எந்தவித அமைதியும் அவனுக்கு ஏற்பட்டு விடாது. கடவுளை எண்ணி உருகியுருகி வழிபட்டால் தான் அந்த மனிதனுக்கு அமைதி கிடைக்கும் என்று சத்குரு தனது உபதேசம் ஒவ்வொன்றிலும் வலியுறுத்தி வந்தார். சத்குரு நானக் உபதேசங்கள் மக்கள் இடையே புதியதோர் எழுச்சியை உருவாக்கிக் கொண்டு வந்தமையால், பல்லாயிரக் கணக்கான மக்கள் அவருடைய சீக்கிய மதம் என்ற புதுமையான மதத்திலே சேர்ந்து இறைஞான வழிபாடுகளிலும் கலந்து கொண்டு வந்தார்கள். தன்னுடைய உபதேச உரையாடல்களைக் கேட்க வந்திருந்த மக்களிடையே சீக்கியர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு மனித குலத்தில் ஒழுக வேண்டும் என்பதற்கான இலக்கணங்களை அவர் அப்போது அறிவுரையாக, அறவுரையாக விளக்கம் தந்தார். - உண்மையும், மனநிறைவும், உள்ளத்தில் இரக்கமும் உடையவரே - சீக்கியர்! - எவர் மீதும், எதன் மீதும் விருப்பு வெறுப்புக் காட்டாமல் அவை பற்றாமல் இருப்பவரே - சீக்கியர்! - எந்த உயிருக்கும், எந்த வித துன்பமும் கொடுக்காமல் வாழ்பவரே - சீக்கியர்! - யார் ஒருவர் மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற பொறிகளின் ஆசைகளுக்கும், ஆதிக்கத்துக்கும் அடிமை ஆகாமல் இருக்கின்றாரோ - அவர்தான் உண்மையான சீக்கியர்! - ஆண்டவன்ன எப்போதும் நெஞ்சிலே நிறுத்தி, அதற்கேற்ற வாறு பணிந்து, அடங்கி, அமைதியோடு வாழ்பவரே சிக்கியர்! - இன்னா செய்தார்க்கும் இனியவை செய்பவரே, அவர்களை மன்னித்து நேசிப்பவரே - சீக்கியர்! - தன்னலத்தை வெறுத்து பொது நலத்தைப் பேணி பாதுகாத்து, மக்களுக்காகத் தொண்டு செய்பவரே - சீக்கியர்! தனது பாடல்களைக் கேட்டும், ஞானப் பொழிவுகளது கருத்துக்களை ஏற்றும், ஆங்காங்கே உள்ள மக்கள் சீக்கிய மத நெறிகளைப் பின்பற்றி வாழ்வதை அவர் நேரில் கண்டார். அளவிலா மகிழ்ச்சியும் பெற்றார். அதனால் அவரது மதம் வட இந்தியாவிலே புனித மதமாக வளர்ந்தது. அருள்மிகு ஞானியான சத்குரு நானக், 1469 ஆம் ஆண்டு பிறந்து, 1538 ஆம் ஆண்டு வரை தூய்மையான மனித நெறிகளை ஒரு மதமாக்கி, அதற்கு சீக்கிய மதம் என்று புனிதப் பெயர்சூட்டி, மக்களிடம் ஒரு மறுமலர்ச்சி வாழ்வியலைத் துவக்கிடும் மகானாக ஏறக்குறைய 69 ஆண்டுகள் இந்திய மண்ணிலே நடமாடினார். மக்களைச் சூழ்ந்து கொண்டிருந்த அறியாமை, அகம்பாவம், ஆசை, மாய மந்திரம், ஏவல் சூனியம், பொறாமை, கொலை, கொள்ளை, மூடநம்பிக்கை வழிபாடுகள், அதிகார ஆணவங்கள், தன்னல பந்த பாசங்கள் போன்ற இருள்களை மக்கள் மனங்களிலே இருந்து அகற்றிடும் சத்குரு என்ற ஞான நிலவாக நடமாடி மக்களுக்கு அருள் ஒளி வழங்கினார் குருநானக் என்ற மனித குல பெருமான். இந்து - முஸ்லிம் என்ற மத வேறுபாடுகளைக் களையவும், இனங்கள் என்ற களைகளை வேரோடு பிடுங்கி எறியவும், மனித சமத்துவம் என்ற பயிர்களை உருவாக்கும் அருளாளன் என்ற விவசாயியாக பாடுபட்டார். சீக்கியர் என்ற அறுவடையை மக்களுக்கு வழங்கினார். ⁠இறைஞான தொண்டுகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அந்தப் புனிதன் குருநானக் என்ற மனித குல மேம்பாட்டின் அருளாளன், 1538 ஆம் ஆண்டில் எந்த விதமான நோய்களுக்கும் ஆளாகாமல் காலத்தோடு காலமானார். ⁠இந்து முஸ்லீம் என்ற வடநாட்டின் இருமத சகோதரத்துவ பாசத்துக்கு இணைப்புப்பாலமாக வாழ்ந்து காட்டிய மனித மாமேதை குருநானக் மறைந்து விட்டதைக் கண்ட அந்த இரு மதத்தினர்களும், அவரவர் மதங்களுக்குரிய மரியாதைகளோடு, அந்த ஞானச் சித்தனுக்கு சமாதியையும், கல்லறையையும் எழுப்பி வழிபாடு செய்து வருகின்றார்கள் என்பது இந்திய ஆன்மீக வரலாறு சந்தித்திராத ஓர் அற்புதமாகும். ⁠இன்றைக்கும் ரவி நதிக்கரை ஓரத்திலே காட்சி தரும் தேரா பாபா நானக் என்ற இடத்துக்குச் சென்று வரும் வாய்ப்புடைய லட்சக்கணக்கான மக்கள் அங்கே உள்ள குருநானக் சமாதியிலே வழிபாடுகள் செய்வதைக் கண்டுகளிக்கலாம் வளர்க குருநானக் நெறிகள் ★ ★ ★ FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.