[] [ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல்] ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் கார்த்திக் சோமலிங்கா மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.. This book was produced using PressBooks.com. Contents - ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் - 1. ரோனின் - ஒரு சாமுராயின் சபதம்! - 2. வவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்! - 3. ஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்! - 4. காவலாளிகளின் காவியம் - 1 - வாட்ச்மென், ஒரு அறிமுகம்! - 5. காவலாளிகளின் காவியம் - 2 - வாட்ச்மென், ஒரு அலசல்! - 6. மறக்கப்பட்ட மனிதர்கள் - 1 - வியட்நாம் வரலாறு! - 7. மறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...! - 8. மறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்...! - 9. மறக்கப்பட்ட மனிதர்கள் - 4 - தொடரும், முற்றும்! - 10. மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 1 - வாசிப்பு! - 11. மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்?! - 12. கிராஃபிக் காமிக்ஸ் - ஒரு புதிய ப்ளேடு, ஆங்கிலத்தில் - 13. வெகுஜனப் பத்திரிக்கைகளின் ரெடிமிக்ஸ் காமிக்ஸ் கட்டுரைகள்! - 14. ஈரோடு புத்தகப் புயலிலே ஒரு ப்ளேடு! - 15. ஹெராயினும், சென்சாரில் சிக்கிய ஹீரோயின்களும், பின்னே ஞானும்! - 16. லயன் காமிக்ஸ் 29வது ஆண்டு மலர் - ஆல் நியூ ஸ்பெஷல் - ஒரு அலசல்! - 17. 2013½ - தமிழ் காமிக்ஸ் அரையாண்டு ரிப்போர்ட்! - 18. காமெடி கௌபாய், கில்லாடி கௌபாய்! - 19. முத்து காமிக்ஸ் - 40வது ஆண்டு மலர் - Never Before ஸ்பெஷல்! - 20. மரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்! - 21. ப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்! - 22. தங்கக் கல்லறை - மின்னும் மரணம்! - 23. முரட்டுக் கௌபாய் - லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி - Man with Strange Name! - 24. ஒரு காமிக்ஸ் குழாயடிச் சண்டை! - 25. 007 ஜேம்ஸ் பாண்ட் - தமிழில்! - 26. BoPET = மைலார் / SHSS = ஓ மை லார்ட்! - 27. வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - முத்து காமிக்ஸ் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்! - 28. லயன் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் மற்றும் சந்தா விபரங்கள்! - 29. காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 - நிறைவுப் பதிவு - ஒரு இனிய அனுபவம்! - 30. சிங்கத்தின் சிறு குகையில் - ப்ளேட்பீடியா @ காமிக் கான் பெங்களூர்! - பகுதி 1 - 31. காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 கண்காட்சி, பெங்களூர் - ஒரு அறிமுகம்! - 32. முகமூடி - தமிழ் காமிக்ஸ் மறுமலர்ச்சிக்கு மிஷ்கின் செய்த பேருதவி! - 33. லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - ஒரு காவியப் பார்வை! - 34. பாலிவுட் படங்களும், கிராபிஃக் நாவல்களும்! - 35. லக்கி லூக் - லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்) - 36. தமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்! (50-ஆவது பதிவு) - 37. என் பெயர் பில்லா - ஒரு முன்பின்நவீனத்துவ விமர்சனம்! - 38. ஜெரோம் ப்ளோச் - மொபெட்டில் வந்த டிடெக்டிவ்! - 39. தூர்தர்ஷன் நினைவுகள்! - ஸ்பைடர்மேன் & ஹி-மேன் - 40. என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி! - 41. உலகப் பதிவுகளில் கடைசி முறையாக! - 42. புத்தக பாதுகாப்பு - ஒரு நுண்ணிய கலை! - 43. பிரின்ஸ், பார்னே, ஜின் மற்றும் கழுகு! - 44. இரத்தப் பாதை..! - 45. காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் ஒன்று! - 46. காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் இரண்டு! - 47. காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் மூன்று! - 48. காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் நான்கு! - 49. பிருந்தாவனமும் ப்ளேட்பீடியாவும்! - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் [Cover Image]   உருவாக்கம்: கார்த்திக் சோமலிங்கா மின்னஞ்சல்: வலைத்தளம் : http://www.bladepedia.com/ மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன் மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். [pressbooks.com] 1 ரோனின் - ஒரு சாமுராயின் சபதம்! ஜப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி []கேள்விப் பட்டிருப்பீர்கள் – மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள்! ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள்! தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் – “ரோனின்”! வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும்?! அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த “ரோனின்“: [] 13ம் நூற்றாண்டைய ஜப்பான்… தனது தலைவன் ‘ஒஸாகி’-யை, சூழ்ச்சி செய்து கொன்ற ‘அகாட்’ என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான் ரோனின் ஒருவன்; ஆனால், முதல் முயற்சியில் வெற்றி கிட்டாமல் போய் விடுகிறது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது… கற்பனைக்கு எட்டாத அறிவியல் வளர்ச்சிகள் பெற்று, அழிவின் விளிம்பில் நிற்கும் நியூயார்க் நகரில், தான் இழந்த கௌரவத்தை மீட்டானா அந்த ரோனின்?! இந்தக் கதை வெளியான சமயம் (1983), “இது எல்லாம் சாத்தியமா?!” என்ற கேள்விகள் இருந்திருக்கக் கூடும்! ஆனால், கதை வெளியாகி 31 ஆண்டுகள் ஆன பின்னர், “இதுவும் சாத்தியமே!” என்ற எண்ண வைக்கும் அளவுக்கு, கற்பனைக் குதிரைகளை கால இயந்திரத்துடன் பிணைத்து, முன்னோக்கி செலுத்தி இருக்கிறார் மில்லர்! [] ஃபிரான்க் மில்லரின் கற்பனைகள் காலம் கடந்து நின்றாலும், “ரோனின்” எனது எதிர்பார்ப்புகளின் எல்லைகளைத் தொடத் தவறி விட்டது என்றே சொல்ல வேண்டும்!100 அல்லது 150 பக்கங்களில் முடிக்கப் பட்டிருக்க வேண்டிய இக்கதை, “குருவை இழந்த ரோனின்” போல, 300+ பக்கங்களுக்கு இலக்கின்றி நீள்கிறது! சிக்கலான கதையும், நாம் பழக்கப் பட்டிராத ஓவிய பாணியும் – கதையோடு ஒன்றுவதற்கு பெரும் தடையாக அமைந்திருக்கின்றன! இவை காமிக்ஸ் சித்திரங்களா இல்லை சிறுபிள்ளையின் கிறுக்கல்களா அல்லது கைதேர்ந்த கலைஞனின் நவீன ஓவியங்களா என்ற குழப்பம் பல இடங்களில் தலை தூக்குகிறது! ஓவியங்களில் புதைந்திருக்கும் சம்பவங்களைப் புரிந்து கொள்வதற்குள், தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! இக்கதையில், சிறப்பான தருணங்களும், வியக்க வைக்கும் ஓவிய ஜாலங்களும் ஆங்காங்கே தென்பட்டாலும்; கதை மீதான ஆர்வத்தை இறுதி வரை தக்க வைத்துக் கொள்வது என்னைப் பொருத்த வரை மிகுந்த சிரமமாகவே இருந்தது! கதையின் உயிர்நாடியே, “ரோனின் யார்?” என்பதைச் சொல்லும் அந்த முக்கியமான பகுதி தான்! அது இப்போது தெரிந்து விட்டதால், மறுவாசிப்பு செய்யும் போது இந்தக் கதை பிடித்துப் போகலாம்; புரியாமல் இருந்த சில இடங்கள் மறுவாசிப்பில் பிடிபடலாம்! ஆனால், அதற்கான பொறுமை தற்போது என்னிடம் இல்லை! [:)] [] ஒருவேளை, நீங்கள் இப்புத்தகத்தை படிக்க விரும்பினால், அதன் முக்கியமான திருப்பத்தை முதலிலேயே அறிந்து கொள்வது நலம்; முதல் வாசிப்பிலேயே கதையை ரசிப்பதற்கு இது உதவும் என நினைக்கிறேன். கடைசி பக்கத்தை, முதலில் படிக்கும் வழக்கம் கொண்ட வாசகர்கள் மட்டும், இப்பதிவை மேற்கொண்டு படிக்கலாம்! [:)] கதையின் முக்கியப் பகுதிகள்: [] அக்வாரியஸ் என்ற நிறுவனம் – வேண்டிய வடிவங்களுக்கு மாறக் கூடிய, பழுது பட்டால் தானாக சரி செய்து கொள்ளக் கூடிய பயோ-சர்கியூட்களைக் கண்டு பிடித்து, அவற்றை உலக மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் ஆராய்சிகளில் இறங்குகிறது; கை கால்கள் இன்றிப் பிறந்த பில்லி என்ற இளைஞனுக்கு, பயோ-சர்கியூட்களால் ஆன செயற்கை அங்கங்களைப் பொருத்தி, அவற்றை அவன் எண்ணங்கள் மூலமாக இயக்க வைக்கும் முயற்சிகளில் கணிசமான வெற்றியையும் ஈட்டுகிறது! அந்நிறுவன ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டுக் கணினியின் பெயர் விர்கோ; மனிதர்களுக்கு நிகரான சிந்தனை சக்தியை அது கொண்டிருக்கிறது! தான் நினைத்தபடி மற்றவர்களை ஆட்டிப் படைக்கக் கூடிய தொலை இயக்கு (telekinetic) சக்தி பில்லிக்கு இருப்பதை அறியும் விர்கோ, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பயோ-சர்கியூட்களை உலகின் புதிய உயிரினங்களாக நிறுவ முயற்சிக்கிறது! ஆனால், பில்லியின் சிறுவயதில் நடந்த சில சம்பவங்கள் தந்த மன அதிர்ச்சி, அந்த சக்தியை அவன் வேண்டும் போது பிரயோகிப்பதற்குத் தடையாக அமைந்திருக்கின்றன! அந்த சக்தியை பில்லியிடம் இருந்து வெளிக்கொணர்வதற்காக, அவனுள் பிரம்மைகளைத் தூண்டி, அவனை ஒரு மாய உலகினில் தள்ளுகிறது விர்கோ! அந்த உலகில், பில்லி ஒரு ரோனின் ஆக மாறுகிறான். அகாட் பூதத்தைப் போல (பார்க்க மூன்றாம் பத்தி!) ஒரு ரோபோவை வடிவமைத்து, ரோனினின் (பில்லி) பழிவாங்கும் உணர்வுகளுக்குத் தீனி போடுகிறது விர்கோ! விர்கோவின் வில்லங்கமான திட்டங்கள் பலிக்கிறதா என்பதே மீதக் கதை! “சாமுராயாவது, பூதமாவது?” என சலிப்பின் விளிம்பில் வாசகன் நிற்கும் சமயத்தில், விஞ்ஞானத்தைக் கையில் எடுத்து, Artificial Intelligence, Bio-Circuitry, Organic Computing, Self Healing & Self Constructing Computers, Psionics (Telekinesis), Virtual Reality என்று நம்பத் தகுந்த (அல்லது நம்பித் தொலைக்க வேண்டிய) அறிவியல் விளக்கங்களை வரிசையாக அடுக்குகிறார் மில்லர்! இந்தக் கோணத்திலிருந்து, கதையை படிக்கத் துவங்குங்கள் – ஒருவேளை உங்களுக்குப் பிடித்துப் போகலாம்! [:)] பின்குறிப்பு:  ரோனின், விரைவில் ஒரு டிவி சீரியலாக வரப் போகிறதாம் – அதையாவது புரியும் படி எடுத்தால் மகிழ்ச்சியே! [;)] இக்கதையின் தலைப்பைப் பார்த்ததும், ‘ராபர்ட் டி நீரோ’ நடித்த ‘ரோனின்‘ என்ற அருமையான ஆக்ஷன் திரைப்படம் நினைவுக்கு வந்தது! சாமுராய்கள் பற்றி முதன் முதலாக, ‘ஜானி இன் ஜப்பான்’ என்ற முத்து காமிக்ஸில் படித்ததாக ஞாபகம் (சின்னஞ் சிறு வயதில்!); அதன் மறுபதிப்பு என் சேமிப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன் – தூசி தட்டி வைக்க வேண்டும்! [:)] 2 வவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்! [] இப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் – Batman: Year One! இது, நான் ‘ஆங்கிலத்தில்’ (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல்! இந்த ‘வவ்வால்’, ‘சவால்’ எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது [;-)] முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம்! சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது! காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் – சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, ‘சூப்பர் ஜீரோ’-வாக்கி விடும்! எனவே, நம் வயது மற்றும் ரசனைக்கேற்ற சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து படிப்பது மிக அவசியம். எண்பதுகளின் பிற்பாதியில், DC காமிக்ஸ் நிறுவனம், சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது! அதன் ஒரு அங்கமாக, பேட்மேனின் முன்கதையை காலத்திற்கேற்ப மாற்றிச் சொல்லும் கடினமான பணியை, Bronze Age காமிக்ஸ் பிதாமகர்களில் ஒருவரான ஃபிரான்க் மில்லர்-இன் வசம் ஒப்படைத்தது! அந்த முடிவு, பேட்மேனுக்கு இன்றளவுக்கும் பொருந்தக் கூடிய மிகச் சரியானதொரு துவக்கத்தைத் தந்திருக்கிறது! [] பேட்மேனுக்கு மட்டுமல்ல, பேட்மேன் தொடரை வாசிக்க எண்ணுபவர்களுக்கும், இந்த ‘Batman: Year One’ புத்தகம் சரியான ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது! இந்த ‘முன்கதையின் முன்கதை’-யை இத்துடன் நிறுத்திக் கொண்டு, கதைக்குள் நுழையலாமா?! சட்ட ஒழுங்கு சீர்கெட்ட கோத்தம் சிட்டி! அன்றைய தினம், முக்கியமான இருவர் வருகை புரிகின்றனர். லெஃப்டினன்ட் ‘ஜேம்ஸ் கோர்டன்’; சிகாகோவில் இருந்து பணி மாற்றமாகி, கோத்தம் நகருக்குள் அடியெடுத்து வைக்கிறார். மற்றவர், 25 வயது இளம் கோடீஸ்வரர் ‘ப்ரூஸ் வேய்ன்’; 12 வருட வனவாசத்திற்குப் பிறகு தனது மாளிகைக்குத் திரும்புகிறார். இடைப்பட்ட இந்த 12 வருடங்களில், பல்வேறு தற்காப்பு மற்றும் தாக்குதல் கலைகளைத் கற்றுத் தேர்ந்த ப்ரூஸ் வேய்ன், இரவில் மாறு வேடமிட்டு சமூக விரோதிகளை எதிர் கொள்கிறார். முதல் முயற்சி, படுதோல்வியில் முடிகிறது. லெஃப்டினன்ட் கோர்டனின் முதல் நாள் அனுபவங்களும் உற்சாகமூட்டுவதாக இருக்கவில்லை. அவரின் உயரதிகாரியான போலிஸ் கமிஷனர் ‘ஜில்லியன் லோப்’, காவல் துறையை சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுத்துவது அவருக்குத் தெரிய வருகிறது. [] இவ்விருவரின் வழிமுறைகள் வேறாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்று தான் – சமூக விரோதிகளை களைந்து, கோத்தம் சிட்டியை சுத்தம் செய்வது! சட்டத்தை தன் கையில் எடுக்கும் ப்ரூஸ் வேய்ன், வவ்வால் வேடமிட்டு சமூக விரோதிகளின் மனதில் பயத்தை விதைக்கிறார். சட்டத்திற்குக் கட்டுபட்ட கோர்டனோ, தனது நேர்மையான நடவடிக்கைகளின் மூலம் மக்களிடையே புகழ் பெறுகிறார். இடையே, ‘ஹார்வி டென்ட்’, ‘கேட்வுமன்’ போன்ற முக்கியமான பாத்திரங்களின் அறிமுகங்களும் நடைபெறுகின்றன! கோர்டன் மற்றும் பேட்மேனை முடக்க, கமிஷனர் தலைமையிலான கும்பல் பல முயற்சிகளை மேற்கொள்கிறது! ‘அந்தக் கும்பலின் கொட்டத்தை அடக்க, நேரெதிர் குணம் கொண்ட நம் நாயகர்கள் இருவரும் கை கோர்த்தார்களா?’ – என்ற கேள்விக்கு, விறுவிறுப்பான இறுதிப் பக்கங்கள் விடை அளிக்கின்றன! முத்தாய்ப்பாக, கதையின் இறுதிப் பக்கத்தில், பேட்மேன் தொடரின் பிரபல வில்லனான ‘ஜோக்கர்’-இன் பெயரும் அடிபடுகிறது! இவை அனைத்தும் நூற்றுக்கும் குறைவான பக்கங்களில் நடந்து முடிந்து விடுவதால், பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லை! [] கோர்டன் மற்றும் பேட்மேனின் பார்வையில், மாறி மாறி நகர்கிறது கதை – சிறிதும் அலுப்பு ஏற்படுத்தாமல்! பிரான்ஃக் மில்லரின், கனகச்சிதமான கதை சொல்லலுக்கு, டேவிட் மாஸுக்கெல்லி-யின் ஓவியம் கூடுதல் கனம் சேர்க்கிறது! ப்ரூஸ் தன்னை பேட்மேனாக நிறுவிக் கொள்ள செய்யும் முயற்சிகளில் சந்திக்கும் முதல் கட்டத் தோல்விகள், கோர்டன் மற்றும் அவர் மனைவிக்கு இடையே நேரும் விரிசல், நாயகர்கள் இருவரும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடுவது – ஆகிய உளப் போராட்டங்கள் நிறைந்த பகுதிகள், அவர்களோடு நம்மை ஒன்றச் செய்கின்றன! [] பேட்மேன், வவ்வால்கள் புடை சூழ போலீசிடம் இருந்து தப்பும் இடமும்; கோர்டன் மன நோயாளியிடம் இருந்து சிறுமிகளைக் காப்பாற்றும் இடமும், ரசிகர்களை இருக்கை நுனிக்குத் தள்ளக் கூடியவை! இவை போதாதென்று, கூர்மையான வசனங்களும் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன! ஒரு கட்டத்தில், “From this moment on…. none of you are safe.” என்று, பேட்மேன் தன்னுடைய எதிரிகளை நோக்கிக் கூறுவார்! அந்த வசனத்தை சற்று மாற்றி, இப்புத்தகத்தைப் பற்றிய ஒருவரித் தீர்ப்பை பின்வருமாறு எழுதலாம்: From the moment you pick this book, none of you will get bored! [] பின்குறிப்பு 1: இக்கதை சில வருடங்களுக்கு முன்னர் அனிமேட்டட் படமாக வெளியாகி, பேட்மேன் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது! அதில் இருந்து ஒரு அதிரடிக் காட்சி: [] பின்குறிப்பு 2: நம்மில் பலருக்கு, திரைப்படங்கள் வாயிலாக பேட்மேனின் அறிமுகம் இருக்கும். ஆனால் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு முன்னரே, திகில் காமிக்ஸ் மூலமாக பேட்மேன் அறிமுகமாகி இருந்தது பற்றி, வலைப்பூ துவக்கிய புதிதில் (Bladepedia: Year One) எழுதி இருந்தேன்: தமிழ் பேசிய பேட்மேன்! பின்குறிப்பு 3: ஆங்கில காமிக்ஸ் படிக்கும் / சேர்க்கும் ஆர்வம் இருந்தாலும் (புத்தக வடிவில்), அவற்றின் விலை ஒரு தடையாக இருந்து வந்தது. Flipkart மற்றும் Amazon புண்ணியத்தில், (பலத்த) தள்ளுபடி விலையில், பல ஆங்கில காமிக்ஸ்களை கடந்த ஒரு வருடமாக வாங்கி வருகிறேன். சமீப மாதங்களில் தான் இவற்றை வாசிக்கத் துவங்கியுள்ளேன் (Thorgal, Watchmen, Jonah Hex, Batman etc.). ஆகவே, இனி ப்ளேட்பீடியாவில் ஆங்கில வாடை சற்று தூக்கலாக இருக்கும்! [:)] 3 ஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்! “சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன்  []சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம்! நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு – பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் – ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்!” இது, “Face full of Violence” காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்! எனக்கு, ‘The Good, the Bad and the Ugly‘ போன்ற, ‘Spaghetti Western‘ படங்கள் மிகவும் பிடிக்கும்! இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் – ‘பழி வாங்கல்’, ‘புதையல் தேடல்’, ‘இரயில் கொள்ளை’ போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை! ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை! காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே! ‘சிஸ்கோ கிட்’-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித்ததாக நினைவில்லை. இத்தாலியப் படைப்பான டெக்ஸ் வில்லர் மற்றும் அதன் அருகாமை நாடுகளில் படைக்கப்பட்ட வெஸ்டர்ன்கள் (ப்ளூபெர்ரி, லக்கி லூக், சிக் பில் etc.) – இவற்றை மட்டுமே அதிக அளவில் படித்துள்ளேன். [] ஜோனா ஹெக்ஸ் – DC காமிக்ஸ் வெளியீடு, அமெரிக்கத் தயாரிப்பு; நமக்குப் பழக்கமான, ஐரோப்பிய வெஸ்டர்ன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பு – Weird Western ரகம்! டெக்ஸின் கண்ணியத்தையோ, ப்ளூபெர்ரியின் மதியூகத்தையோ ஜோனாவிடம் எதிர்பார்க்கக் கூடாது; முகத்தின் வலது பக்கம் சிதைந்து, விகாரமாக தோற்றமளிக்கும் ஜோனா ஹெக்ஸ், ஒரு மிரட்டலான கதாபாத்திரம் (உருவத்தில் மட்டுமல்ல)! அபாச்சேக்களால் வளர்க்கப் பட்டு, தெற்கத்தியப் படையில் பணியாற்றி, பின்னர் வெகுமதி வேட்டையனாக (Bounty Hunter) மாறியவன்! அன்றைய மேற்கில், அது இழிதொழிலாக கருதப்பட்டது. இருப்பினும், தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையானவன், நல்லவர்களுக்கு மட்டும் நல்லவன்! [] 1972-ல் அறிமுகமான இத்தொடரில், பல கதாசிரியர்களும் ஓவியர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். 2006-ல் இருந்து முற்றிலும் புதிய கதைகளின் தொகுப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது! அவைகளில் ஒன்று தான், Face full of violence – ஆறு சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு! இவை, ஜோனாவைப் பற்றிய அறிமுகக் கதைகள் அல்ல; ஜோனாவின் முகம் சேதமடைந்தது எவ்விதம் போன்ற தகவல்களும் இத்தொகுப்பில் இல்லை! ஆனால், ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற தனிக் கதைகள் என்பதால், பின்புலம் தெரியாமலேயே இவற்றை ரசிக்க முடிகிறது! அதிகபட்சம் 24 பக்கங்களுக்குள் முடியும் கதைகள், அளவான வசனங்கள், ஆயில் பெயின்டிங்கிற்கு நிகரான அழகிய சித்திரங்கள், கிளின்ட் ஈஸ்ட்வுட்டை நினைவுறுத்தும் ஜோனாவின் தோற்றம் (முகத்தின் சிதைவடையாத பகுதி!), மெலிதான நகைச்சுவை என, ரசிக்கக் கூடிய அம்சங்கள் இதில் ஏராளம்! ஆனால், அனைவரும் ரசிக்கக் கூடியதா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி! காரணம், புத்தகத்தின் பெயரைப் போலவே, ஒவ்வொரு பக்கத்திலும், வன்முறை தனது கோர முகம் காட்டுகிறது! [] ஜோனா ஹெக்ஸ் கதைத்தொடர், சிறுவர்களுக்கும், இளகிய மனம் படைத்தவர்களுக்கும் நிச்சயம் ஏற்றதல்ல! ‘Face full of violence’ தொகுப்பிலிருக்கும், முதல் கதையின் சுருக்கத்தை கீழே தந்துள்ளேன். கிட்டத்தட்ட, ‘நான் கடவுள்’ பாணியிலான இந்தக் கதையைப் படித்து விட்டு, உங்களுக்குப் பிடிக்குமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! சிலுவைகள் இல்லாத கல்லறை: செல்வந்தர் ஒருவர், காணாமல் போன தனது பத்து வயது மகனை தேடித் தரும் பணியை ஜோனா ஹெக்ஸிடம் ஒப்படைக்கிறார். வெறி பிடித்த நாய்களோடு, சிறுவர்களை சண்டையிட வைத்து, பணம் சம்பாதிக்கும் கொடூரமான ஒரு கும்பலைச் சந்திக்கிறான் ஜோனா. செல்வந்தர் கூறிய அங்க அடையாளங்கள் கொண்ட சிறுவன் அங்கே தென்படாததால் அங்கிருந்து விலகிச் செல்கிறான்! [] அன்றிரவு, ஜோனாவை கொல்ல இருவர் வருகின்றனர். அவர்களில் ஒருவனின் காதை, துப்பாக்கி குண்டு மூலமாக சிதறடித்து, இதன் பின்னணியில் இருப்பது நாய்ச்சண்டை கும்பலின் தலைவன் தான் என்பதை அறிகிறான்! சிறுவனின் முடிக்கு சாயம் பூசி அடையாளத்தை மறைத்து வைத்திருப்பது தெரிய வருகிறது! தலைவனை வீழ்த்தி விட்டு சிறுவனை கவனிக்கிறான் ஜோனா – ரேபிஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு பரிதாபமாக முடங்கிக் கிடக்கிறான் அவன். [] சிறுவன் துன்பப் பட்டு இறப்பான் என்பதை அறியும் ஜோனா, ‘நீ ஒரு வீரனாக மடிந்தாய் என்று உன் தந்தையிடம் சொல்வேன்!’ எனக் கூறி கருணைக் கொலை செய்கிறான். கும்பலின் தலைவன் மீது வெறி நாய்களை ஏவி, பழி தீர்க்கிறான். பிறகு, சிறுவனின் சடலத்தை அவன் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, கனத்த இதயத்துடன் அங்கிருந்து அகல்வதாக கதை முடிகிறது! இறுதியாக… இது ஒரு சிறிய சாம்பிள் மட்டுமே! ஜீரணிக்க கடினமாக இருந்தால், ஜோனாவுக்கு சொல்லுங்கள் நோ நோ! ஹெக்ஸ் இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறார் நமது டெக்ஸ்! [:)] [] 4 காவலாளிகளின் காவியம் - 1 - வாட்ச்மென், ஒரு அறிமுகம்! இந்தியர்களுக்கு இராமாயண, மகாபாரதக் காவியங்கள் எப்படியோ; அப்படித் தான், []அமெரிக்கர்களுக்கு சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களும்! வித்தியாசமான ஆடை, ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டு; தீமையை ஒடுக்கி, நீதியை நிலைநாட்ட ‘சூப்பர் ஹீரோ’ அவதாரம் எடுக்கும் எண்ணற்ற ‘மகா நாயகர்’-களின் கதைகளைப் படித்துத் தான், ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தைகளும் வளர்கின்றன! ஆனால், ‘வாட்ச்மென்‘ வழக்கமான சூப்பர் ஹீரோ கதையல்ல; ஒவ்வொரு பக்கத்திலும் அதிரடியை எதிர்பார்த்தால், படு மோசமாக ஏமாந்து போவீர்கள்! 20ம் நூற்றாண்டு அமெரிக்காவின், முக்கியம் வாய்ந்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் ஊடே, கற்பனையாக சூப்பர் ஹீரோக்களைப் புகுத்துவதால் நேரும் விளைவுகளைச் சொல்கிறது வாட்ச்மென்! 384 பக்கங்கள் கொண்ட வாட்ச்மென் கிராஃபிக் நாவலின் முழு வீச்சையும் உணர, அதன் வசனங்களையும், சித்திரங்களையும் உள்வாங்கி, நிறுத்தி நிதானமாகப் படிக்க வேண்டியிருக்கும். இந்த இரு பாகப் பதிவின் மூலம், இதன் முழுக்கதையையும் விரிவாக எழுதுவது என் நோக்கம் கிடையாது! மாறாக, non-linear ஆக பயணிக்கும் இந்தப் புத்தகத்தை படிக்க எண்ணி இருப்பவர்களுக்கு, இப்பதிவு ஒரு துவக்கப் புள்ளியாக உதவ வேண்டும் என்ற நோக்கில், எளியதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறேன்! முடிந்த வரை Spoiler-களைத் தவிர்த்துள்ளேன்; விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்! 1987-ல் வெளியான இந்த கிராஃபிக் நாவல், மொத்தம் 12 பாகங்கள் (12×32 பக்கங்கள்) கொண்டது;  கதை, 1985-ல் துவங்கி, முன்னும் பின்னுமாக நகர்கிறது! 1938 – ஆக்ஷன் காமிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவை அறிமுகப் படுத்துகிறது – சூப்பர் மேன்! நிஜ வாழ்விலோ, முகமூடி அணிந்த பல நீதிக் காவலர்கள் ஆங்காங்கே முளைத்து, சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்! பத்திரிக்கைகள் அவர்களின் புகழைப் பரப்புகின்றன… மக்கள் ஆராதிக்கின்றனர்… சமூக விரோதிகள் அஞ்சிப் பதுங்குகின்றனர்! அமெரிக்க அரசு, அவர்களில் சிலரை – WW2, வியட்நாம் ஆகிய பல போர்க்களங்களுக்கு அனுப்பி வைக்கிறது! கதையின் மையக் கதாபாத்திரங்கள் மொத்தம் ஆறு பேர் தான்; அவர்களில் ஒரே ஒருவனைத் தவிர ஏனையோருக்கு, அற்புத சக்திகள் ஏதும் கிடையாது; அந்த ஐவரை, சூப்பர் ஹீரோக்கள் என்று அழைப்பதை விட, “முகமூடிக் காவலாளிகள்” என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்! --------------------------------------------------------------------------------------------------------- [] இடமிருந்து வலமாக: சில்க் ஸ்பெக்டர், டாக்டர் மன்ஹாட்டன், நைட் அவ்ல் 2, காமெடியன், ஓசிமண்டியஸ் & ரோர்ஷாக் --------------------------------------------------------------------------------------------------------- 1. ரோர்ஷாக்: உலகில் உள்ள அழுக்கை எல்லாம் ஒருசேர விழுங்கி விட்டது போல, அவன் உடலில் எப்போதும் வீசும் ஒரு நாற்றம்; உள்ளுக்குள் உறைந்திருக்கும் பால்ய கால அவமானத்தை, சுற்றியிருக்கும் சமுதாயத்தின் சீரழிவை அவன் முக உணர்வுகள் வெறுப்புடன் பிரதிபலிக்க, அதை அழகான சமச்சீர் கருப்பு வெள்ளை சித்திரங்களாக உருமாற்றிக் காட்டும் அவனது அந்த முகமூடித் தோற்றம்! அற்பப் பொருட்களையும், ஆயுதங்களாக மாற்ற வல்ல ரோர்ஷாக், நிழலுகத்தின் எமன்! 2. காமெடியன்: போர்க்களங்களில் புகழ் ஈட்டிய, மனிதத்தன்மை அற்ற, முரட்டு முகமூடி நாயகன் – அமெரிக்க அரசின் கையாள்! சக மனிதர்களின் பாசாங்குத்தனத்தை அடியோடு வெறுக்கும் அவன், உலகம் விரைவில் அழியப் போகிறது என்ற நிதர்சனம் புரிந்தவன்; அதுவே அவன் செயல்களிலும் பிரதிபலிக்கிறது – பேரழிவு! 3. டாக்டர் மன்ஹாட்டன்: 1959-ல் நடக்கும் ஒரு விபத்தில், அவனது உடல் அணு அணுவாகப் பிளவுண்டு போகிறது! மீண்டும் ஒன்றிணைந்து, நீல நிறத்தில் மறு உருப்பெறும் அவனுக்கு, அணுக்களை ஆட்டிப் படைத்து, பேரழிவைத் தூண்டும் சக்தி கிடைக்கிறது! உருவத்திலும், குணத்திலும் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்கும் அவன், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறிவிக்கப் படுகிறான்! சர்வபலம் கொண்ட அவனது வருகை, மற்ற முகமூடி நாயகர்களை பின்னுக்குத் தள்ளுகிறது! சுருக்கமாகச் சொன்னால், மன்ஹாட்டன் ஒரு நடமாடும் ஹைட்ரஜன் குண்டு! 4. நைட் அவ்ல் 2: சட்டத்தைப் பேணும் பணியை, முந்தைய தலைமுறை நைட் அவ்லிடம் இருந்து இரவல் பெற்று, அதை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் தொடரும் – இரண்டாம் தலைமுறை நாயகன்! ஆந்தையைப் போன்ற ஆடை, இருளிலும் பார்க்கும் கண்ணாடி, நவீன ஆயுதங்கள் பொருத்திய பறக்கும் வாகனம் – இவற்றின் துணையுடன் நீதி காப்பவன் இந்த இரவு ஆந்தை! 5. சில்க் ஸ்பெக்டர் 2: தனது தாய் விட்டுச் சென்ற, குற்ற அழிப்புப் பணியை அரை மனதோடு தொடரும் நாயகி! ஒரு காலத்தில் அவளது தாய், காமெடியனால் கற்பழிக்கப் பட்டது அவள் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விடுகிறது! இவள், டாக்டர் மன்ஹாட்டனின் காதலி! 6. ஓசிமண்டியஸ்: “உலகின் அதி புத்திசாலி மனிதன்” என்று பெயர் எடுத்த முகமூடி நாயகன், மிக அழகானவனும் கூட! ஒரு கட்டத்தில், முகமூடியைக் களைந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் அவன், பெரும் தொழிலதிபராக வளர்ச்சி அடைகிறான்! புத்திக் கூர்மையும், சண்டையிடும் திறமையும் ஒருசேர இணைந்தவன் – ஆபத்தானவன்! வருடங்கள் உருள்கின்றன… 1977 – ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ ஆனது போல; முகமூடி அணிந்தவரெல்லாம், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்தனர்! இந்தப் போக்கை எதிர்த்து, காவல்துறை வேலை நிறுத்தம் செய்கிறது! சமூகத்தைக் காக்க வேண்டிய முகமூடிக் காவலாளிகளில், பல காவாலிகளும் கலந்திருப்பது கண்டு கொதிப்படையும் மக்கள், “கண்காணிப்பவர்களை, கண்காணிக்கப் போவது யார்?!” என போர்க்கொடி தூக்குகின்றனர்! [] வேறுவழியின்றி, டாக்டர் மன்ஹாட்டன் மற்றும் காமெடியன் ஆகிய அரசாங்கத்துக்கு சாதகமான இரு நாயகர்களைத் தவிர, மற்ற அனைவரின் கைகளையும் கட்டிப் போடுகிறது அரசு! அனைவரும் முகமூடி துறந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர், ஒரே ஒருவனைத் தவிர – சட்டத்தை சட்டை செய்யாமல், தன் பாணியில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டும் மாநாயகன் ரோர்ஷாக்! 5 காவலாளிகளின் காவியம் - 2 - வாட்ச்மென், ஒரு அலசல்! சூப்பர் ஹீரோக்கள் பற்றிய முன்கதையை முந்தைய பாகத்தில் பார்த்தோம். அரசாங்கத்தால், []பெரும்பாலான முகமூடி நாயகர்கள் தடை செய்யப் பட்டு எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், பல புதிரான சம்பவங்கள் நிகழத் துவங்குகின்றன. 1985 – காமெடியன், கொடூரமாகக் கொல்லப் படுகிறான்! அது ரோர்ஷாக்கிற்கு சந்தேகத்தை அளிக்க; ஓய்வில் இருக்கும் மற்ற சூப்பர் ஹீரோக்களைச் சந்தித்து, எஞ்சியவர்களுக்கும் இதே கதி நேரக் கூடும் என எச்சரிக்கிறான்! அடுத்த ஓரிரு வாரங்களில் பல தொடர் சம்பவங்கள் நடந்தேறுகின்றன! Dr.மன்ஹாட்டன், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பகிங்கரமாக அவமானப் படுத்தப்படுவதால், மனமுடைந்து மார்ஸ் கிரகம் சென்று விடுகிறான்! ஓசிமண்டியஸ் மீது கொலை முயற்சி நடக்கிறது! ரோர்ஷாக் சிறை பிடிக்கப் படுகிறான்! இதனிடையே, சோவியத் யூனியன் – ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை ஆகிய நாடுகளை ஊருடுவுகிறது! சூப்பர் ஹீரோக்களை முடக்கும் இத்தொடர் நிகழ்வுகளின் பின்னணியில் இருப்பது, சோவியத் யூனியனா என்ற கேள்வி எழுகிறது! ஏனெனில், Dr.மன்ஹாட்டனின் வருகை, அணுசக்தி படைத்த சோவியத் வல்லரசின் வலிமையைக் கேள்விக் குறியாக்கி இருந்தது! Dr. மன்ஹாட்டன் பூமியில் இல்லாததால், “சோவியத், அடுத்தாக அமெரிக்கா மீதும் கை வைக்குமா? அது மூன்றாம் உலகப் போராக மாறி, அணுகுண்டுகளால் உலகம் அழியுமா?” என்றெல்லாம் மக்கள் அஞ்சி நடுங்கத் துவங்குகின்றனர்! தாக்குதல் வருகிறது; ஆனால், எதிர்பாரா திசையில் இருந்து! அதிலிருந்து அமெரிக்காவைக் காக்க, மாறுபட்ட குணநலன்கள் கொண்ட முகமூடி நாயகர்கள் ஒன்று பட்டார்களா? அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்ன?! சுயநலமிகள் சிலர், பொதுநலன் என்ற பெயரில், குரூரமான ஒரு முடிவை அரங்கேற்றும் கனமான இறுதிக் காட்சியுடன், இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது வாட்ச்மென்! [] ஆலன் மூர் – இந்நாவலின் கதாசிரியர் (எழுத்தாளர் பாலகுமாரனை நினைவுறுத்தும் தோற்றம்!); காமிக்ஸ் வட்டாரத்தில் மிகவும் பரிச்சயமான பெயர்! இவர் கதை சொல்லி இருக்கும் விதமும், பாத்திரப் படைப்பில் செலுத்தி இருக்கும் கவனமும் வியப்பைத் தருகின்றன! குறிப்பாக, ரோர்ஷாக்கின் பாத்திரம்! ரோர்ஷாக் எனப்படுவது, ஒரு உளவியல் சோதனை! இருமருங்கிலும் சீரான வடிவங்கள் கொண்ட சித்திரங்களை, சோதனைக்கு உட்படுத்தப் படுபவரிடம் காட்டி, அவற்றைப் பற்றிய அவரின் எண்ணங்களை உளவியல் ரீதியாக அலசும் முறை! இக்கதையின் நாயகர்களில் ஒருவன், முகத்தின் அசைவுகளை, ‘ரோர்ஷாக் சித்திரங்களாக’ மாற்றிக் காட்டும் முகமூடி அணிந்து, அதையே தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டவன்! சிறையில் அவனை மனவியல் நிபுணர் ஒருவர் விசாரிக்கும் காட்சிகள் மிகவும் வலிமையானவை! சிறியதாக ஒரு எடுத்துக்காட்டு இதோ: [] கதையின் இடையிடையே, வாடிக்கையாளர்களுடன் அரசியல் பேசும் ஒரு நடைபாதை பத்திரிக்கை வியாபாரியும், கடை அருகே அமர்ந்து ‘காமிக்ஸ் தொடர்’ படிக்கும் சிறுவனும் வருவார்கள்! சிறுவன் படிக்கும் காமிக்ஸில் உள்ள படங்களும், வசனங்களும் – இந்தக் கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப உள்ளே புகுத்தப் பட்டிருக்கும். வெட்டி அரசியல் பேசியும், கற்பனை உலகில் சஞ்சரித்தும் திரியும் சராசரி மனிதர்களை, இந்தப் பாத்திரங்கள் வாயிலாக ஆலன் மூர் உணர்த்தி இருப்பார்; இது போன்ற வேறு பல யுக்திகளையும் இக்கதையில் கையாண்டு இருக்கிறார்! Dr.மன்ஹாட்டன், காலத்தின் முன்னும் பின்னும் பயணித்து, தனக்குத் தானே பேசிக்கொள்ளும் காட்சிகள் இன்னொரு உதாரணம்! [] டேவ் கிப்பன்ஸ் – இக்கதையின் ஓவியர்! ஒவ்வொரு தலைமுறை மக்களுக்கு ஒரு பொதுவான தோற்றமும், அந்தந்த கால கட்டத்திற்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியும் இருக்கும்! அவற்றை மிக அழகாக சித்திரங்களில் சிறைப் படுத்தி இருக்கிறார் கிப்பன்ஸ்! நாயகர்களின் உணர்வுகளையும், கலவர சூழ்நிலையையும் மிகவும் துல்லியமாக பிரதிபலித்து இருக்கிறார்! [] இந்த 27 வருட பழைய கதையை, நிகழ்காலத்திற்கும் பொருத்திப் பார்க்க முடிவது வியப்பு! அன்று, அமேரிக்கா வியட்நாமில் அடி வாங்கியது – இன்று ஆஃப்கானிஸ்தானில்! அன்று, சோவியத் ஆஃப்கானிஸ்தானை ஊருடுவியது – இன்று உக்ரைனை! இந்த மாற்றங்களையும்; இரண்டாம் தலைமுறை முகமூடி நாயகர்களுக்கு பதிலாக, மூன்றாம் தலைமுறையையும் உள்ளே நுழைத்தால், உறுத்தல்கள் ஏதும் இன்றி கதையை புதுப்பித்து விடலாம்! ஆனால், 2009-ல் திரைப்படமாக வந்து தோல்வி அடைந்திருக்கிறது இக்கதை! திரைக்குத் தேவையான மாற்றங்களை செய்யத் தவறியது, தோல்விக்கான காரணமாக கருதப் படுகிறது. முழுப்படம் எப்படியோ, ஆனால், Youtube-ல் தனித் தனிக் காட்சிகளைக் கண்டபோது, சிறப்பாகவே தோன்றின. எனது அபிமான நாயகர்களில் ஒருவனாகி விட்ட ரோர்ஷாக், சிறையில் மற்ற கைதிகளைப் பார்த்து ‘பன்ச் டயலாக்’ பேசும் காட்சி இதோ: “None of you seem to understand. I’m not locked in here with you… you’re locked in here with me!” (உங்க யாருக்கும் ஒரு விஷயம் புரிஞ்ச மாதிரி தெரியல! நான் உங்களோட சேர்ந்து, இந்த சிறையில இல்ல! நீங்க தான், என்னோட கைதிகளா இருக்கீங்க!) இதன் Motion Comics வடிவம் வித்தியாசமாக உள்ளது! வாட்ச்மென், - சூப்பர் ஹீரோ கதைகளின் பூச்சுற்றல்களுக்கு இடையே, யதார்த்தைத் தேடுபவர்களுக்கு பிடிக்கும்! - “சூப்பர் ஹீரோ என்பதே மிகை கற்பனை; அதில் நடைமுறை தேடுவது, நகைப்புக்குரியது!” என யதார்த்தம் பேசுபவர்களுக்கு பிடிக்காது! … என்றெல்லாம் மேலோட்டமாக வகை பிரித்து, படிக்கக் கூடிய அல்லது தவிர்க்கக் கூடிய கிராஃபிக் நாவல் அல்ல! காரணம், சித்திரங்களில் பொதிந்திருக்கும் சின்னஞ்சிறு விவரங்களும், தத்துவ நெடி தூக்கலான வசனங்களும் பலமுறை மறுவாசிப்பைக் கோருகின்றன; ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், மூன்று முதல் ஐந்து பக்கங்கள் வரை நீளும், சூப்பர் ஹீரோக்களின் டைரிக் குறிப்புக்கள் பொறுமையைச் சோதிக்கின்றன! கதாசிரியர் மேலோட்டமாக தொட்டுச் செல்லும் அரசியல் மற்றும் வரலாற்றுக் குறிப்புக்கள், விக்கிபீடியாவை தேட வைக்கின்றன! இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்காவைப் பற்றி நுணுக்கமாகப் புரிந்து கொள்ளாமல் படிப்பவர்களுக்கு, வாட்ச்மென் எந்த பாதிப்பையும் தராது என்பது தான் உண்மை! “சூப்பர் ஹீரோக்களும், பலகீனமானவர்களே!” என்பதை பலமாகச் சொல்லும் இக்கதை, காமிக்ஸ் வாசகர்கள் அனைவரையும் கவராது! ஆனால், ‘சித்திரக் கதைகளில் கனமான கதைக்களம் இருப்பதில்லை!‘ எனக் கூறும் தீவிர இலக்கிய வாசகர்கள், மேலே சொன்ன விவரங்களை மனதில் கொண்டு, இந்த சித்திரப் புதினத்தை பொறுமையாக வாசிப்பார்களேயானால், படம் வழியே கதை சொல்லும் ஊடகத்தின் மீதான தங்களின் இளக்காரப் பார்வையை மாற்றிக் கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்! 6 மறக்கப்பட்ட மனிதர்கள் - 1 - வியட்நாம் வரலாறு! ஒரு முன் குறிப்பு: வியட்நாம் பற்றிய, பல சுவையான வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு இது! தமிழில், “ஒரு [] சிப்பாயின் சுவடுகளில்…!” என்ற பெயரில் இம்மாதம் வெளியாகியிருக்கும், பிரெஞ்சு மொழிமாற்ற காமிக்ஸ் புத்தகமொன்றின், விமர்சன (தொடர்) பதிவாகவும் இதைப் பார்க்கலாம்! இந்த முன்குறிப்பு, காமிக்ஸ் என்றாலே சிறுபிள்ளைகள் சமாச்சாரம் என்று எண்ணி ஒதுங்கும் வாசகர்களுக்காக மட்டுமே! ‘ஒ.சி.சு.!’ கிராபிக் நாவலை, தீராத ஆவலுடன் (ஆர்வக் கோளாறுடன்), கூறு போட்டு விமர்சிக்கும் (வெட்டி) ஆராய்ச்சிப் பதிவு இது; அந்த புத்தகத்தை இன்னும் படிக்காதவர்கள், கீழே உள்ள வரலாற்றுக் குறிப்புகளை படித்து விட்டு, கதைக்குள் நுழைவது, கதையைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்! முன் குறிப்பு மட்டுமே, மூன்று பக்கங்களுக்கு நீண்டு விட்டதால், இனியும் தாமதியாமல் உடனே பதிவுக்குள் செல்வோம்! [;-)] [] இந்த கிராஃபிக் நாவலின், பிரெஞ்சு மூலத்தின் பெயர் “Les oubliés d’Annam” என்பதாகும்! “அன் நாம் பிராந்தியத்தின் மறக்கப் பட்ட மனிதர்கள்” என அதை மொழிபெயர்க்கலாம்! அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றே புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது; பயம் வேண்டாம், மிக மிக மேலோட்டமாகவே புரட்டுவோம்! [;)] ஃபிரெஞ்சு இந்தோசீனா: பதினெட்டாம் நூற்றாண்டில், வணிகம் செய்யவும், கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் மதத்தைப் பரப்பவும் வியட்நாமில் கால் பதித்த ஃபிரான்ஸ், மெல்ல மெல்ல வியட்நாமையும் அதைச் சுற்றி இருந்த நாடுகளையும் தன் அதிகாரத்திற்குற்பட்ட காலனிகளாக மாற்றிக் கொண்டது! வியட்நாம், கம்போடியா & லாவோஸ் ஆகிய மூன்று தேசங்களும், “ஃபிரெஞ்சு இந்தோசீனா” என்ற குடையின் கீழ், கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் (1887 – 1954) ஃபிரான்ஸிடம் அடிமைப் பட்டுக் கிடந்தன! அன் நாம்: [] வியட்நாமை மூன்று பிராந்தியங்களாகப் பிரிக்கலாம்! வடக்கே “டொன்கின்“, தெற்கே “கௌச்சின்சீனா” – இவற்றிக்கு இடையே மத்தியப் பகுதியில் அமைந்தது தான் “அன் நாம்“. இது பரப்பளவில் மற்ற இரு பிராந்தியங்களை விட மிகப் பெரியதாகும்! இந்தக் கதை நிகழும் களமும் இதுவே! ஜப்பான் ஆதிக்கமும், கம்யூனிஸ இயக்கமும்: 1940-ம் ஆண்டு,  இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில், ஜப்பான் பேரரசு வியட்நாமின் வடக்கு பிராந்தியத்தைக் (டொன்கின்) கைப்பற்றியது! அதன் மூலம் சீனாவின் முக்கிய சப்ளை லைனை துண்டித்து, நெருக்கடி ஏற்படுத்துவதே அதன் நோக்கம்! அந்தத் தருணத்தில், சோவியத் மற்றும் சீனாவின் ஆதரவுடன், வியட்நாமை – ஜப்பான் மற்றும் ஃபிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்து மீட்க, “வியட் மின்” என்ற பெயரில், தேசிய கம்யூனிச இயக்கம் ஒன்று உருவானது! அதை வழிநடத்திய முக்கியத் தலைவர்களில் ஒருவர், நாம் அனைவரும் அறிந்த “ஹோ சி மின்“! ஜப்பானின் வீழ்ச்சியும், கம்யூனிஸத்தின் எழுச்சியும்: [] அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து, 1945ம் ஆண்டு – செப்டம்பர் 2ம் தேதியன்று, நேசநாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தது! வடக்கு வியட்நாமைப் பொறுத்த வரை, அங்கே போதிய ஆட்சிக் கட்டமைப்பு இல்லாததால், சட்ட ஒழுங்கை பேணுவதற்காக ஜப்பான் ராணுவம் அங்கேயே நீடிக்க வேண்டியிருந்தது! ஆட்சி அதிகாரம் முழுவதும் ‘வியட் மின்’ இயக்கத்தின் கைகளில் இருக்க, ஜப்பான் ராணுவம் வியட்நாமிய கொரில்லாப் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சி அளித்தது! ஹோ சி மின் (வடக்கு) வியட்நாமின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்! முதல் இந்தோசீனப் போர்: [] வடக்கில் ஜப்பான் வீழ்த்தப்பட்டாலும், வியட்நாமின் மற்ற பிராந்தியங்களில் பிரெஞ்சு ஆதிக்கம் நீடித்துக் கொண்டு தான் இருந்தது! வடக்கே வியட் மின்னின் கை மேலோங்கியிருக்க, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஃபிரான்ஸ் ஆதரவுடன் தனியே ஒரு வியட்நாம் அரசு இயங்கியது! இந்த ஃபிரான்ஸின் கைப்பாவை அரசுக்கும், வியட் மின் தலைமையிலான தேசியவாத இயக்கங்களுக்கும் இடையே, 1946 முதல் 1954 வரை நடைபெற்ற இந்த போராட்டமே “முதல் இந்தோசீனப் போர்” என அழைக்கப் படுகிறது! இறுதியில், ஃபிரான்ஸ் வியட்நாமை விட்டு வெளியேறியது! இரண்டாம் இந்தோசீனப் போர் (வியட்நாம் யுத்தம்): [] 1954-ல் பிரான்ஸ் வெளியேறினாலும், இந்தோசீனப் போராட்டம், மெல்ல மெல்ல, கம்யூனிச வடக்கு மற்றும் கேபிடலிச தெற்கிற்கு இடையேயான வியட்நாம் உள்நாட்டுப் போராக மாறியது! தென்வியட்நாம் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகள் துணையிருக்க, வடக்கு வியட்நாமின் ‘வியட் மின்’ அரசுக்கு சீனா, ரஷ்யா போன்ற தீவிர கம்யூனிஸ நாடுகள் துணை நின்றன! இதற்கிடையில், அமெரிக்காவில் போருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுத்தன! தன் மக்களின் எதிர்ப்பையும், வியட்நாமிய கொரில்லாப் போராளிகளின் தாக்குதலையும் சமாளிக்க முடியாததால், 1975-ம் ஆண்டு வியட்நாமை விட்டு அமெரிக்கா வெளியேறியது! அதைத் தொடர்ந்து, 1976-ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சுதந்திர “வியட்நாம் சோஷியலிசக் குடியரசு” மலர்ந்தது! நடுவில் ஒரு குறிப்பு: “காமிக்ஸ் பற்றி பேசலாம் என்று சொல்லி விட்டு, கம்யூனிஸம் பேசுகிறானே!” என்ற குழப்பம், இந்தப் பதிவைப் படிக்கையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்! ஆனால், மேற்கண்ட வரலாற்றுக் குறிப்புக்கள், இந்தக் கதையைப் புரிந்து கொள்வதிற்கு மிகவும் அவசியமாகிறது! அடுத்த சில பத்திகளில், இந்தக் கதையின் அடிநாதத்தை தொட்டு விடலாம், கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்! [:)] சற்றே ரிவர்ஸ் கியரில் சென்று, பிறகு முன்னே நகரலாம்… அணி மாறிய மனிதர்கள்: முதல் இந்தோசீனப் போர் நடந்து கொண்டிருந்த சமயம், ஃபிரெஞ்சு ராணுவம் இந்தோசீனாவில் நிகழ்த்திக் கொண்டிருந்த அராஜகங்களுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் பலர் போர்க்கொடி உயர்த்தினர்! ஃபிரான்ஸில் இந்தப் போருக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள், மெல்ல மெல்ல தீவிரமடையத் துவங்கின! வியட்நாம் போர்க்களத்தில் இருந்த, கம்யூனிஸ சிந்தனை கொண்ட ஃபிரெஞ்சு இராணுவ வீரர்களில் பலர், வியட்நாமியர்கள் படும் அவதிகளைக் கண்டு மனமிறங்கி, ஹோ சி மின்னின் வலுவான கம்யூனிஸ சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டு, மெதுவாய் அணி மாறத் துவங்கினர். மனம் மாறிய மனிதர்கள்: இந்த அணி மாறிய இராணுவ வீரர்கள், ஃபிரெஞ்சு அரசாங்கத்தால் துரோகிகள் என்று முத்திரை குத்தப் பட்டாலும்; வியட்நாம் தேசியவாத இயக்கத்தவர்களும், கொரில்லா போராளிகளும் – இவர்களை இரு கரம் நீட்டி தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். 1960-களில், ‘அணி மாறிய துரோகிகளுக்கு’, ஃபிரான்ஸ் அரசாங்கம் பொது மன்னிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தாய்நாடு திரும்பினர்! மறக்கப்பட்ட மனிதர்கள்: [] ஆனால், அவர்களில் கணிசமான பகுதியினர், வியட்நாமிலேயே தங்கியிருக்க முடிவு செய்து, அந்நாடு முழுவதும் கம்யூனிஸ ஆட்சி மலர, தொடர்ந்து பாடுபட்டனர்; இருப்பினும், ஃபிரான்ஸில் உள்ள தங்கள் உறவினர்களுடன், கடித மற்றும் தொலைபேசித் தொடர்பில் அவர்கள் இருந்து வந்தனர்! ஆனால், அவர்களில் சிலர், முழுவதுமாக தொடர்பறுந்து போனார்கள்! அவர்களைப் பற்றிய எந்த தகவல்களும், அரசாங்கப் பதிவுகளில் காணப்படவில்லை! சுருக்கமாச் சொன்னால், வெவ்வேறு கால கட்டங்களில் அவர்கள் “காணாமல்” போயிருந்தார்கள்! நெருங்கிய உறவினர்களின் நெஞ்சினில் நீங்காத நினைவுகளாய்த் தங்கியிருந்தாலும்; காலம் செல்லச் செல்ல ஃபிரெஞ்சு அரசாங்கத்தின் தேடல் முயற்சிகள் கைவிடப்பட்டு – அரசாங்கத்தாலும், மக்களாலும் மறக்கப்பட்ட அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்கள் தான், இந்தக் கதையின் ஆதார நாயகர்கள்! 7 மறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...! எச்சரிக்கை: முத்து காமிக்ஸில் நவம்பர் மாதம் வெளியான, “ஒரு சிப்பாயின் சுவடுகளில்…!” []என்ற கிராபிக் நாவலின் கதை, இந்தப் பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது! அந்த GN-ஐ படிக்க எண்ணியிருப்பவர்கள் – இந்தப் பதிவை தவிர்த்து விடலாம்; ஏற்கனவே படித்தவர்கள், இப்பதிவின் முதல் பாகத்தை வாசித்து விட்டு மேலே தொடரலாம்! ஒரு சிப்பாயின் சுவடுகளில்…!: 1954-ல், வியட்நாமை விட்டு ஃபிரான்ஸ் வெளியேறினாலும், ஃபிரெஞ்சு வீரர்கள் பலர் அங்கு போர்க் கைதிகளாக சிறைபட்டுக் கிடந்தனர்! அணி மாறிய ஃபிரெஞ்சு வீரர்களும், வியட்நாமிலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்! முதல் இந்தோசீனப் போர் முடிந்து, கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்த நிலையில், புதிய வியட்நாம் அரசுக்கும், ஃப்ரான்ஸிற்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது! அதன் படி, வியட்நாம் தன்னகத்தே இருந்த ஃபிரெஞ்சு வீரர்களின் சடலங்களையும், உடைமைகளையும் – சவப்பெட்டிகளில் அடைத்து ஃப்ரான்ஸிற்கு அனுப்பி வைத்தது!  அக்டோபர் 1986 – ராய்ஸி இன்டர்நேஷனல் ஏர்போர்ட், பாரிஸ்! சடலங்களாக வந்திறங்கும் வீரர்களின் பெயர்ப் பட்டியல், முன்னதாகவே பகிரப் பட்டிருந்ததால், அவ்வீரர்களின் உறவினர்கள், விமானத்தில் வந்திறங்கும் சவப்பெட்டிகளின் உரிமை கோர, அங்கே குழுமியிருக்கின்றனர்! அந்த சோகமயமான நிகழ்வு, ஃபிரான்ஸ் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகிறது! [] பட்டியலில், தனது மகன் ஹென்றி ஜோபெர்ட்டின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், காணாமல் போன அவனைப் பற்றிய விவரங்கள் ஏதேனும் கிடைத்திடும் என்ற எதிர்பார்ப்பில், மூதாட்டி ஒருவரும் அங்கு வந்திருக்கிறார்! ஆனால், ஹென்றியைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் விரக்தியுடன் நிற்கும் அவரை, டிவி நிருபர் ஒருவர் பேட்டி காண்கிறார்! பாரிஸில் இருக்கும் ஒரு மன நலக் காப்பகம்: அந்தப் பேட்டியைப் பார்க்கும், நியூரித் என்ற மனநோயாளி, வெகுண்டு போய், டிவி பெட்டியை அடித்து நொறுக்குகிறார்! [] மதுபான விடுதியொன்றில் அதே பேட்டியை, பிரபல டிவி ரிபோர்ட்டர் வலோன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்! தனது குடிப் பழக்கத்தால், குடும்பம் மற்றும் அலுவலகத்தில் வெறுப்பைச் சம்பாதித்தது மட்டுமின்றி; அலுவலகத்தில் தன் திறமையையும், மனைவியிடம் தன் குடும்பப் பொறுப்பையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்! தான் வேலை செய்யும் டிவி நிறுவனத்தில், முக்கிய பொறுப்பு வகிக்கும் தனது நண்பர் லூகாஸை அன்றிரவு வலோன் சந்திக்கிறார்! காணாமல் போன சிப்பாய் பற்றிய உண்மைகளை கண்டறியப் போவதாகவும், வியட்நாமில் நடத்தப் போகும் அந்த தேடுதல் வேட்டையை, ஒரு டிவி சீரியலாக பதிவு செய்யப் போவதாகவும், தனது திறமையை நிரூபிக்க இந்த வாய்ப்பை அளிக்கும் படியும் வற்புறுத்துகிறார்! அந்த யோசனைக்கு, லூகாஸ் அரைமனதுடன் சம்மதிக்கிறார்! அதே இரவில், மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பி வெளியேறும் நியூரித், ஹென்றியின் தாய் வசிக்கும் வாலென்ட்ரே என்ற கிராமத்தை நோக்கிச் செல்கிறார். இடைப்பட்ட வேளையில், காப்பகத்தின் பொறுப்பதிகாரி, நியூரித் தப்பியோடிய சேதியை, “கார்பின்” என்ற நபரிடம் சொல்லி அவரை உஷார் படுத்துகிறார்! ------------------------------------------------------------------------------ [] வாலென்ட்ரே செல்லும் வழியில், நீலக் கார் கொலையாளியால் கொல்லப் படும் நியூரித்! ------------------------------------------------------------------------------ நியூரித் இலக்கை அடையும் தருவாயில், ஒரு கார் விபத்தில் கொல்லப் படுகிறார். அது திட்டமிட்ட கொலை என்பதை சித்திரங்கள் மூலம் ஓவியர் உணர்த்துவார்; கொலையாளி தனது நீல நிறக் காரின் நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டிருக்க, காரின் உள்ளே, நியூரித்தின் புகைப்படம் காணப்படும்! பிறகு அந்தக் கொலையாளி, ஹென்றியின் தாயார் வீட்டை, பைனாகுலர் மூலம் கண்காணிக்கத் துவங்குகிறான்! மறுநாள் காலை ஹென்றியின் தாயாரைச் சந்திக்க, வாலென்ட்ரேவுக்கு செல்கிறார் வலோன்! வழியில் அந்த சாலை ‘விபத்தை’ கவனித்து, காரை நிறுத்தி விசாரிக்கிறார்! அப்போது, “கேப்ரியல் லாரு” என்ற உள்ளூர் பத்திரிகை நிருபருடன்  ஒரு சிறு அறிமுகம் ஏற்படுகிறது! வலோன் ஹென்றியின் தாயாரை சந்திக்க வந்திருப்பதை, லாரு அறிந்து கொள்கிறார்! ஹென்றியின் தாயார் மூலமாக, அவனுடைய தோழன் கர்ராஸ் மற்றும் முன்னாள் காதலி ஸெஸிலி இவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் வலோன் – ஹென்றியின் புகைப்படம் ஒன்றையும் கேட்டுப் பெறுகிறார்! பிறகு, அதே கிராமத்தில் வசிக்கும் அவ்விருவரையும் சந்தித்து, ஹென்றியைப் பற்றி விசாரிக்கிறார்! கர்ராஸ் கொடுக்கும் தகவலின் படி, ஹென்றியுடன் பணியாற்றிய மார்ஷல் கயோன் என்பவரை சந்திக்க முடிவு செய்கிறார் – கொலையாளி ஒருவனால் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறோம் என்ற உண்மையை அறியாமலேயே! [] இதற்கிடையே வலோனின் மனைவி, அவரிடம் குடும்பச் செலவுக்காக பணம் வாங்குவதற்காக, அவர்களின் மகள் சாண்ட்ராவை அனுப்புகிறார்! மகளிடம் தனது இயலாமையைத் தெரிவிக்கும் வலோன், தான் தயாரிக்கவிருக்கும் புதிய டிவி சீரியல் பற்றி விரக்தியுடன் பேசுகிறார்! அவருக்கு ஆறுதல் சொல்கிறார் சாண்ட்ரா! பேச்சின் இடையே, ஃபிரெஞ்சு பல்கலைக் கழகங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்வதால், தனது காலேஜ் மூடி இருப்பதாக வலோனிடம் சாண்ட்ரா தெரிவிக்கிறாள்! ------------------------------------------- [] அடுத்த பாகத்திற்கு, முக்கியமானதொரு வசனம்! ------------------------------------------- மறுநாள் காலையில், வலோனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது! எதிர்முனையில்,  தன்னை ஹென்றி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்நபர், மாற்றுப் பெயரில் விலகி வசிக்கும் அவரைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டாம் என்று வலோனை  மிரட்டுகிறார்! அதை நம்பாத வலோன், தனது தேடலைத் தொடர்கிறார்! ------------------------------------- [] வலோனிடம் பேசும் நபரைக் கவனியுங்கள்! ------------------------------------- ஹென்றி அணி மாறியிருப்பானோ என்ற சந்தேகத்தை உறுதி படுத்திக் கொள்ள, மார்ஷல் கயோன் அளித்த தகவலின் பேரில், ‘எர்வின் போச்சர்ஸ்’ என்ற முன்னாள் வியட்நாம் போராளியைச் சந்திக்க ஜெர்மனி செல்ல முடிவெடுக்கிறார் வலோன். தூரத்தில் இருந்து இந்த சந்திப்பை நோட்டமிடும் கொலையாளி, தனது பாஸிடம், வலோனின் அடுத்த இலக்கு எதுவென்று சரியாகத் தெரியவில்லை என்று கூறுகிறான். அதை அறிந்திட, வலோனின் தொலைபேசியை ஒட்டு கேட்கும் ஏற்பாட்டை அந்த மர்ம நபர் செய்கிறார்! ஹென்றி என்ற பெயரில் வலோனிடம் பேசியவரும், கொலையாளியை அமர்தியவரும் ஒரே நபர் தான் என்பது சித்திரங்கள் மூலம் வாசகர்களுக்கு உணர்த்தப் படுகிறது! ------------------------------------------------------ [] வலோனிடம் பேசிய அதே நபர், கொலையாளியிடமும் பேசுகிறார்! ------------------------------------------------------ வலோனின் பெர்லின் பயணத்தை தடுப்பதற்காக, அந்த மர்ம நபர் தன் அடியாட்கள் மூலமாக அவரைத் தாக்குகிறார்! ஆனால், தேடல் முயற்சியிக்கு நேரும் ஒவ்வொரு தடையும், அதில் வெற்றி காண வேண்டும் என்ற வலோனின் பிடிவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே அமைகிறது! எனவே, மகள் சாண்ட்ராவின் அறிவுரையையும் மீறி பெர்லின் பயணிக்கிறார் வலோன்! இராணுவத்தில் இருந்து வெளியேறிய ஹென்றி, 1947ம் ஆண்டு தங்களது போராட்டக் குழுவில் இணைந்ததாகவும்; ஆனால், 1950-க்குப் பிறகு அவனுடனான தொடர்பு அறுபட்டுப் போனதாகவும் போச்சர்ஸ் வலோனிடம் தெரிவிக்கிறார்! ஹென்றி பணியாற்றிய (கம்யூனிஸ) கமாண்டோ குழு ஒன்றின் மேலதிகாரி குய்ச்சார்ட் என்பவரிடம் மேலதிகத் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்! வலோனின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டு, கொலையாளிக்கு தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப் படுகின்றன. அதன் மூலம் வலோனின் அடுத்த இலக்கை அறிந்து கொள்ளும் அவன்; குய்ச்சார்ட்டையும் கொலை செய்து, அதை ஒரு தற்செயலான விபத்து போலத் தெரியுமாறு ஜோடனை செய்கிறான்! [] அங்கே தாமதமாக சென்றடையும் வலோன், குய்ச்சார்ட்டின் வீட்டை ஆராய்கையில்; ஹென்றிக்கு ‘கிம்-சி’ என்ற பெயரில் ஒரு மகள் இருப்பதையும், வியட்நாமில் உள்ள சைகோன் நகரில் அவள் வசிப்பதையும் – குய்ச்சார்ட்க்கு அவள் அனுப்பியிருந்த ஒரு கடிதம் மூலம் கண்டறிகிறார். தான் இதுவரை சேகரித்த தகவல்களை லூகாஸிடம் பகிரும் வலோன், வியட்நாம் சென்று கிம்-சியை நேரில் சந்தித்துப் பேச அனுமதி கேட்கிறார்! அது ஒரு வீண் முயற்சி என்று எரிச்சலாகும் லூகாஸ், தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறி, தேடும் படலத்தை கை விடச் சொல்கிறார்! தன் முயற்சியில் சிறிதும் தளராத வலோன், சொந்தச் செலவில் வியட்நாம் செல்ல முடிவெடுக்கிறார்! பயணச் செலவுக்காக, தன்னிடம் உள்ள ஒரே ஒரு உயர் ஜாதிக் குதிரையை விற்று பணம் திரட்டுகிறார். தனது தாய் பணம் கேட்ட போது கூட உதவாத தனது தந்தை; பல வருடங்களுக்கு முன் காணாமல் போன யாரோ ஒரு சிப்பாயைத் தேடும் ஒரு டிவி சீரியலுக்காக, தனக்குப் பிரியமான அந்தக் குதிரையை விற்று பணம் திரட்டுவதைக் கண்டு, மிகவும் வெறுப்படைகிறாள் சாண்ட்ரா! [] தனக்குத் துணையாக வியட்நாம் வருமாறு அழைக்கும் தந்தையையின் கோரிக்கையை, ஒரு வெறுப்பு கலந்த பார்வையுடன் நிராகரித்து விட்டு, விலகி நடக்கிறாள் சாண்ட்ரா! இவை அனைத்தையும், தனது நீல நிறக் காரில் அமர்ந்தவாறு அந்தக் கொலையாளி கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்! இத்துடன், இக்கதையின் முதல் பாகம் முடிகிறது! [] 8 மறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்...! ஹென்றியின் மகள் கிம்-சியை சந்திக்க, வியட்நாமில் இருக்கும் சைகோன் நகருக்குச் []செல்கிறார் ரிப்போர்டர் வலோன் (பார்க்க: பாகம் 01 & 02)! அவரைப் பின்தொடரும் கொலையாளி, கிம்-சி உடனான வலோனின் சந்திப்பை தாமதப் படுத்துவதற்காக சிறு விபத்து ஒன்றினை அரங்கேற்றுகிறான்! உடைகளை மாற்றிக் கொள்ள வலோன் ஹோட்டலுக்குத் திரும்பும் அவகாசத்தில் கிம்-சியைச் சந்திக்கும் கொலையாளி, தன்னை அவளின் தந்தை ஹென்றி என அறிமுகம் செய்து கொண்டு; தன்னைத் தேடி ஒருவர் வருவார் என்றும், தன்னைப் பற்றிய தகவல்களை அந்த மனிதரிடம் வெளியிட வேண்டாம் என்றும் எச்சரித்து விட்டுச் செல்கிறான்! [] ஒரு வயதிலேயே தந்தையைப் பிரிந்து, சிறு வயதிலேயே தாயை இழந்த அவளுக்கு, இது  பெரும் குழப்பத்தைத் தருகிறது! அதன் காரணமாய், வலோன் அவளைச் சந்திக்கும் போது, முதலில் அவரிடம் பேச மறுக்கிறாள்! வலோன், தான் வந்த காரணத்தை எடுத்துரைத்து, மகனின் வரவுக்காக 30 ஆண்டுகளாக ஏங்கிக் காத்திருக்கும் அவளது பாட்டியின் புகைப்படத்தைக் காட்டியதும், மனம் இளகி பேசத் துவங்குகிறாள்! வியட்நாம் காம்ரேட்களுடன் தனது தந்தை ஹென்றி இணைந்தது; மோக் டென் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, வியட்நாம் போராளிகளிடையே ஹீரோ அந்தஸ்து பெற்றது; தனது தாயை காதலித்து மணந்தது; என பல தகவல்களை பகிர்கிறாள் கிம்-சி! [] ஹென்றி, கடைசியாக ‘துவாங் பை’ என்ற இடத்தில் காணாமல் போனதாக அறியும் வலோன், கிம்-சியுடன் அங்கு சென்று விசாரிக்கிறார்! ஹென்றியும் அவரது போராட்டக் குழுவினரும், ‘டின் பின்’ என்ற ராணுவ முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள முதியவர்கள் நினைவு கூர்கின்றனர்! ஆனால், டின் பின்னில் அவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே – சம்பவம் நடந்து பல வருடங்கள் உருண்டோடி விட்டதால், இராணுவ முகாம் இருந்ததிற்கான தடயங்கள் முற்றிலும் அழிந்து போய், மனித வாசமற்ற பகுதியாக அது காணப் படுகிறது! [] அந்த ஏமாற்றத்தில், “ஹென்றியை தேடுவது ஒரு வீண் செயல்” என்று நம்பிக்கையிழந்து புலம்பும் வலோனைக் கண்டு கிம்-சி உடைந்து போகிறாள்! அனாதரவாக நிற்கும் அவள் மேல் பரிவு கொள்ளும் வலோன், அவளை ஃபிரான்ஸிற்கு தன்னுடன் அழைத்துச் சென்று, ஹென்றியின் தாயாருடன் அவளை ஒன்றிணைக்கிறார். மகனைத் தொலைத்த தாயும், தந்தையைப் பிரிந்த மகளும் – அவன் விட்டுப் போன அந்தச் சொந்தத்தை, மீட்டெடுக்கும் ஒரு உணர்சிகரமான சம்பவமாக அது அமைகிறது! [] யுத்தத்தின் போது, ‘துவாங் பை’ பகுதியின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் “கார்பின்” என்பதைக் கண்டறியும் வலோன்; தற்போது DGES என்ற இராணுவ பாதுகாப்புத் துறையில் உயர் பதவி வகிக்கும் அவரை, நேரில் சந்திக்கிறார்! ஹென்றியைப் பற்றி தனக்கு ஒரு சில தகவல்களே நினைவில் உள்ளதாகக் கூறும் கார்பின், அவனுடைய தேசவிரோத செயல்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக, சிறப்பு முகாம் ஒன்றிக்கு அவனை அனுப்பி வைத்ததாகவும், அதன் பிறகு அவனைப் பற்றி எந்தத் தகவலையும் கேள்விப் படவில்லை என்றும் கூறுகிறார்! [] வலோனின் தேடுதல் முயற்சியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை, வியந்து பாராட்டும் அவர் நண்பர் லூகாஸ்; “லாரு” என்ற நபர் அவரைப் பற்றி விசாரித்ததாகக் கூறுகிறார்! லாருவிடம் தொலைபேசியில் பேசும் வலோனுக்கு, அவர் வாலென்ட்ரேவில் சந்தித்த பத்திரிக்கை நிருபர் என்பது நினைவுக்கு வருகிறது! வாலென்ட்ரே சாலை விபத்தில் இறந்த முதியவர், வியட்நாம் யுத்தத்தில் பங்கேற்ற முன்னாள் சிப்பாய் நியூரித் என்றும், அவர் தப்பி ஓடி வந்த ஒரு மன நோயாளி என்றும் வலோனிடம் லாரு தெரிவிக்கிறார்! மேலும், ‘டின் பின்’ இராணுவ முகாமில் நியூரித்துடன் பணியாற்றிய புஜால் என்ற முன்னாள் சிப்பாயை, சவ அடக்கத்தின் போது சந்தித்தகாகவும்; வலோனைச் சந்தித்துப் பேச அவர் ஆர்வம் காட்டியதாகவும் லாரு கூறுகிறார்! [] அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு அறியும் கொலையாளி, புஜாலைக் கொல்ல முயல்கிறான்! அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்கும் புஜாலை, மருத்துவமனையில் சந்திக்கிறார் வலோன்! ஹென்றி பற்றிய உண்மைகள் வெளியானால், தற்போது இராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் கார்பினின் தலை உருளும் என்று அவர் சொல்வது, வலோனுக்கு ஆச்சரியம் அளிக்கிறது! [] அந்நாளில், யுத்தத்தில் பிடிபட்ட ஹென்றி உள்ளிட்ட வியட்நாமிய போராளிகளை – கார்பினின் உத்தரவின் பேரில் தானும், நியூரித்தும் சேர்ந்து, முகாமுக்குச் செல்லும் வழியில் படுகொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் புஜால்! கார்பின் தலைமை வகித்த மோக் டென் இராணுவ முகாம் மீது, ஹென்றி நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, ‘அணி மாறிய பிரெஞ்சு சிப்பாய்களை திருத்த முயற்சிக்க வேண்டும்‘ என்ற மேலிடத்து உத்தரவையும் மீறி, இந்த வெறிச் செயலை கார்பின் நிகழ்த்தினார் என்று புஜால் விளக்குகிறார். கார்பினின் யோசனையின் பேரில், ‘வியட்நாமியர்களால் ஹென்றி குழுவினர் மீட்டுச் செல்லப் பட்டதாக‘ – பொய் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்ததோடு நில்லாமல், இச்சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட நியூரித்தை,  ஃபிரான்ஸ் திரும்பியதும், ஒரு மனநோய் காப்பகத்தில் சேர்த்ததாகவும் கூறுகிறார்! சமீபத்தில் ஹென்றியின் தாயார் அளித்த பேட்டியைக் கண்ட நியூரித், தான் இழைத்த தவறுகளுக்கு பரிகாரம் தேடும் வகையில், அவளிடம் உண்மைகளை சொல்லுவதற்காக காப்பகத்தில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் புஜால் விளக்குகிறார்! [] நியூரித்தின் எண்ணவோட்டத்தை எளிதில் கணித்த, அக்காப்பகத்தின் சீஃப் டாக்டரும், கார்பினின் மைத்துனருமான ‘பெட்ரோசியன்’ – அதை கார்பினுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து; அந்த ‘சாலை விபத்தினை’ ஒரு கொலையாளி மூலமாக கார்பின் அரங்கேற்றி இருப்பார் என புஜால் முடிக்கிறார்! அதைக் கேட்டதும், ‘ஹென்றி தேடல் படலத்தில்‘ ஏற்பட்ட ஒவ்வொரு தடங்கலுக்கும் பின்னணியில் இருந்த “மர்ம நபர்”, கார்பின் தான் என்பது வலோனுக்கு தெளிவாக விளங்குகிறது! வீடு திரும்பும் வழியில், ஃபிரெஞ்சு பல்கலைக் கழகங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து – மாணவர்கள் நடத்தும் ஒரு கண்டன ஊர்வலத்தை, அவர் கடக்க நேர்கிறது (இது ஒரு உண்மைச் சம்பவம்!)! கூட்டத்தில் தனது மகள் சாண்ட்ரா இருப்பதைக் கண்டு அவளை அழைக்கிறார் வலோன்! ஆனால், அவளோ, அவரைக் கண்டும் காணாதது போல் விலகிச் செல்கிறாள்! [] மறுநாள் தனது நண்பர் லூகாஸை சந்திகையில், “தேசிய தகவல் தொடர்பு ஆணையம்” அவருடைய ஆவணப் படத்தை ஒளிபரப்ப தடை விதித்திருப்பதை அறிந்து இடிந்து போகிறார் வலோன்! [] அவரைத் தேற்றும் வகையில், ரிப்போர்ட்டைப் பற்றி அறிந்தவுடனேயே, இராணுவ அமைச்சகம் – கார்பினுக்கு கட்டாய பணி ஒய்வு அளித்து விட்டதாக கூறுகிறார் லூகாஸ்! தவிர, உண்மைகளை வெளியிட இது சரியான நேரமில்லை என்று கூறும் அவர், முந்தைய நாள் நடந்த கண்டன போராட்டம் ஒன்றில், மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதால், ஊடங்கள் அனைத்தும் அந்த செய்திக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறுகிறார் (இதுவும் ஒரு உண்மைச் சம்பவம்!). ‘உண்மைகளை வெளியிடுவது நம்மிருவருக்கும் ஆபத்தானது‘ என்று எச்சரிக்கும் லூகாஸிடம், ‘உண்மைகள் வெளியான பின், நம் மீது கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது‘ என்றும், ‘ஒளிபரப்பிற்காக சில வாரங்கள் காத்திருக்கத் தயார்‘ என்றும் வலோன் வாதிடுகிறார்! ஆனால், லூகாஸின் மழுப்பலான பேச்சால் ஆத்திரம் அடையும் அவர் , ‘என்னை முடக்கிப் போட யாராலும் முடியாது‘ என்றவாறு வெளியேறுகிறார்! மறுநாள், வலோன் தனது இல்லத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கையில், அழைப்பு மணி ஒலிக்கிறது; வீட்டருகில் நீல நிறக் கார் ஒன்று நிற்பது ஜன்னல் வழியே தெரிகிறது! கதவைத் திறக்கும் வலோன், அங்கே நிற்கும் நபரைப் பார்த்து, குழப்பத்துடன் “மிஸ்டர்?!” என்று அவன் பெயரை அறிந்து கொள்ளும் நோக்கில் வினவுகிறார்! [] வந்திருப்பது கொலையாளி தான் – என்பது கதையைப் படிக்கும் வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியுமென்பதால், கதையின் முடிவு அவர்களின் கையிலேயே விடப்படுகிறது!                                                                                        (முற்றும் ) தொடரும் ஒரு தேடல்…!: ஒரு காமிக்ஸ் கதை பற்றி எழுத, மிக அதிக நேரம் செலவழித்தது இதுவே முதல் முறை! [:-)] இந்தத் கதை இத்துடன் முடிவுற்றாலும், விரைவில் இப்பதிவு சார்ந்த பதிவுகள் தொடரும் வாய்ப்புக்கள் (ஓரளவுக்கு பலமாக) இருக்கின்றன! [;-)] 9 மறக்கப்பட்ட மனிதர்கள் - 4 - தொடரும், முற்றும்! [] “மறக்கப்பட்ட மனிதர்கள்” தொடர் பதிவின், நிறைவுப் பகுதி இது! தொடரின் முதல் பாகத்தில், கதை சார்ந்த வரலாற்றுத் தகவல்களையும்; இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில், முழுக் கதையையும் பார்த்தோம்; இந்தப் பதிவில், கதை பற்றிய எனது விமர்சனத்துடன், இந்தத் தொடருக்கு மங்களம் பாடி விடுவோம்! பதிவில் நிறைய ஸ்பாய்லர்கள் இருப்பதால்… read at your own risk![:-)] கதையின் துவக்கப் பக்கங்கள், இந்த இதழின் முன்னட்டை போலவே தூங்கி வழிந்தாலும்; தொடரும் பக்கங்களில் மெதுவாக வேகமெடுக்கும் இக்கதை, கடைசி வரை அதே மிதமான வேகத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்து, இறுதியில் யதார்த்தமான ஒரு முடிவுடன் சட்டென்று முடிகிறது! ஒரு தாயின் தவிப்பையும், யுத்தத்தின் வலிகளையும் பதிவு செய்யும் கதை என்ற பதிப்பாசிரியரின் அறிமுகத்தைத் தாண்டி -  மனித உணர்வுகள் / உறவுகள், கண்ணுக்குப் புலனாகாத அரசியல் / யுத்த வன்முறைகள், போராட்டக் குணம், கடமையுணர்வு, கொள்கைப் பிடிப்பு, தலைமுறை இடைவெளி – என பலவிதமான உணர்வுகளும், சூழல்களும் ஒன்று சேர்கையில் நேரும் உளப் போராட்டங்களின் சித்தரிப்பாக இக்கதை அமைந்துள்ளது! “எதிரி நாட்டு வீர்களின் சடலங்களையும், உடைமைகளையும் முப்பது வருடங்களுக்கு வியட்நாம் அரசு பேணிப் பாதுகாக்குமா?!“; “வலோனை ஏன் ஓட விட்டு வேட்டையாட வேண்டும்?!” – என்று சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன! ஆனால், கதாசிரியரின் நோக்கம் தன் தாய்நாட்டின் (ஃபிரான்ஸ்) போர்க் குற்றங்களை. ஒரு காமிக்ஸ் வடிவத்தில் வெளிக்கொணர்வது என்பதாக இருப்பதால் இந்த லாஜிக் மீறல்கள் பெரிதாகத் தெரிவதில்லை! [] வாழ்வில் சாதித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கும் ரிப்போர்ட்டர் வலோன், அவரின் வயதுக்கு மீறிய பணிகளை மேற்கொள்ளுவதாக காட்டப் பட்டாலும், அவர் ஒரு வழக்கமான நாயகராக சித்தரிக்கப் படவில்லை! தடைகளைக் கண்டு தளர்ந்து போகும் சராசரி மனிதராகவே காட்டப் படுகிறார்! துவண்டு நிற்கும் தருணங்களில், பிறர் கூறும் ஆறுதல் வார்த்தைகளே அவர் நம்பிக்கையை துளிர வைக்க போதுமானதாக இருக்கின்றன! அதே போல, ஒன்றைச் செய்யாதே எனும் போது தான், அதை செய்தே தீர வேண்டும் என அவருக்குத் தோன்றும் உத்வேகம் – மனித இயல்பான, எதிர்ப்புக் குணத்தை பிரதிபலிக்கிறது! அடிமை நாட்டின் மக்களை, மனிதாபிமானம் இன்றி நடத்துவது; ஆதிக்க நாட்டின் மக்களில் சிலரே, அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது; ஒரு சாராரால் நாயகனாகப் பார்க்கப் படும் ஒருவன், மறுமுனையில் துரோகியாகப் பார்க்கப் படுவது; என விதவிதமான முரண்பாடுகளை, வரலாற்றுத் தகவல்களுடன் கோர்த்துத் தருகிறார் கதாசிரியர் ஜிரௌட்! அழுத்தமான இந்தக் கதையின் தன்மைக்கேற்ப, உயிரோட்டமான ஓவியங்களை தீட்டியுள்ளார் ஓவியர் லாக்ஸ்! காணாமல் போன சிப்பாய் ஹென்றியைச் சுற்றியே இந்தக் கதை பின்னப் பட்டிருந்தாலும், தன்னுடைய கோட்பாட்டிற்காக உயிர் இழந்த அவன் மேல் பெரிதாக ஒரு பிணைப்பு நமக்கு ஏற்படுவதில்லை! மாறாக, கடமைக்காக தனது மனைவியையும், மகளையும், நட்பையும் – இறுதியாக தனது உயிரையே பறிகொடுக்கும் ரிப்போர்டர் வலோன் தான் நம் மனதில் தங்குகிறார்! நேதாஜியின் சுவடுகளைப் பின்பற்றி, ‘அவர் மாயமாக மறைந்தது எப்படி?‘ என்பதை புலனாய்வு (புனைவாய்வு) செய்யும் ஒரு கிராபிக் நாவல் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை! தேடிப் பார்த்ததில், அப்படி ஒரு ஆய்வு நூல் உண்மையாகவே வெளிவந்திருக்கிறது என்பதும் தெரிய வந்தது – India’s Biggest Cover Up! இந்திய அரசாங்கத்தால் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ன என்பதை, ஆதாரங்களுடன் அந்த நூலாசிரியர்  விளக்கியுள்ளாராம்! ஒ.சி.சு. இதழை பொறுமையாக மறுவாசிப்பு செய்த போது, பல ஓவிய நுணுக்கங்கள் தென்பட்டன! அவற்றில் சிலவற்றை கடந்த இரு பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். இன்னொரு உதாரணம்: முதல் பக்கத்தில் – ‘வியட்நாமில் நடந்தது என்ன?’ என்ற கேள்வியுடன் ட்ரக் செல்லும் காட்சி ஒன்று காட்டப் பட்டிருக்கும் அல்லவா? அதே காட்சி கதையின் பிற்பகுதியில் விவரிக்கப்படும் (பக்கம் 105 – முதல் பேனல்)! [] ஒரு க்ளைமேக்சின் சுவடுகளில்…!: இனி பலத்த சர்ச்சைக்குள்ளான, கதையின் க்ளைமேக்ஸ் பகுதிக்குச் செல்லலாம்! எனக்குத் தெரிந்து – ஒரு காமிக்ஸ் கதைக்கு, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தவாறு ஒரு முடிவை வைத்துப் படித்தது இதுவே முதல்முறை! [:-D] இந்தக் கதையை மொழிபெயர்த்த ஆசிரியர் விஜயன் – கதையின் இறுதியில் வலோனின் கண்டுபிடிப்பை ரேடியோவில் ஒலிபரப்பச் செய்ததாலும்; கொலையாளியைப் பார்க்கும் வலோனை, “மிஸ்டர்?” என்று வினவ வைப்பதற்குப் பதிலாக, “சார்” என்று அழைக்க வைத்ததாலும் – கதையின் முடிவில் நமக்கு குழப்பம் நேர்ந்தது போதாதென்று; கதையைப் படித்த ஒவ்வொரு வாசகரும், தங்களுக்குப் பிடித்தவாறு விதவிதமான முடிவுகளை வைத்து அழகு பார்த்தனர் (நான் உட்பட!) [;-)] கதவைத் தட்டியவர் யார் என்ற அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு: - வலோன் தேடிய சிப்பா…யே அவர் தான் சார்! - வலோனின் மகளை, தன் மகனுக்காக பெண் பார்க்க வந்த பக்கத்துக்கு வீட்டு பெரியவர்! என்ற ரீதியில் வந்த பலதரப்பட்ட பதில்களை கேட்டுக் கேட்டு இறுதியாக, “என்ன, கதவைத் தட்டினியா?” என்று தொடர்ந்து புலம்பும், பரிதாப நிலைக்கு ஆளானேன்! [:-D] அதற்கு பழி வாங்கும் விதமாகத் தான், இந்த நாலு பார்ட் பதிவைப் போட வேண்டியதாகி விட்டது! [;-)] கட்டுரை எழுதுவது, கதை சொல்லுவது போன்ற எழுத்து சார் திறமைகளை, வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் சுயநலமும், இதன் பின்னணியில் இருந்தது! [:-D] “ஒரு காமிக்ஸை ஸ்க்ரிப்டாக எழுதுவது, போர் அடிக்கும் வேலை!” என்பது எனக்கும்; “அதைப் பொறுமையாக படிப்பது, அதை விட போர் அடிக்கும் வேலை!” என்பது உங்களுக்கும் – இந்தத் தொடரின் மூலம் தெரிய வந்திருக்கிறது என்றால் அது மிகை இல்லை தானே?! [:P] ஒ.சி.சு. இறுதிக் காட்சியில், கொலையாளியின் நோக்கம் வலோனைக் கொலை செய்வதே என உறுதியாக நம்புகிறேன்! அதற்கான காரணங்களாக நான் கருதுவது, பின்வருமாறு: 1) பெட்ரோசியன், நியூரித் தப்பிய தகவலை உடனடியாக ‘கார்பின்’ என்பவருக்கு தெரிவிப்பது, ஆரம்பக் கட்டத்திலேயே வாசகனுக்கு காட்டப் படுகிறது! அதற்கடுத்த காட்சியிலேயே நியூரித் சாலை விபத்தில் இறக்கிறார்! 2) அது விபத்து அல்ல, கொலை என்பதை சித்திரங்கள் மூலம் ஓவியர் உணர்த்துவார்: கொலையாளி தனது காரின் நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டிருப்பான், கார் சீட்டில் நியூரித்தின் புகைப்படம் காணப்படும்! 3) ஹென்றி என்ற பெயரில் வலோனிடம் பேசும் மர்ம நபர், வேறொரு தருணத்தில் அந்தக் கொலையாளியிடமும் பேசிக் கொண்டிருப்பார்! இருவரும் ஒருவரே என்பது அந்தக் காட்சியில் தெளிவாகிறது! 4) அதே மர்ம நபர் தான், வலோன் வீட்டு தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் ஏற்பாட்டினையும் செய்கிறார்! அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் கார்பின் போன்ற ஒருவரால் மட்டுமே, குறைந்த அவகாசத்தில் (6 மணி நேரம்) அதைச் செய்து முடிப்பது சாத்தியமாகும்! 5) ஒட்டுக் கேட்பதோடு நில்லாமல் தனது அடியாட்கள் மூலமாக வலோனைத் தடுக்கும் முயற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார்; தடயங்களை அழிக்க, தொழில்முறை கொலையாளி மூலமாக கொலைகள் செய்யவும் துணிகிறார்! அவர் உண்மையாகவே ஹென்றியாக இருந்திருந்தால், தனது தாயையோ அல்லது மகள் கிம்-சியையோ முதலிலேயே சந்தித்திருக்க வேண்டும்! 6) கிம்-சியிடம், ஹென்றி என்ற பெயரில் பேசும் கொலையாளி; வலோனிடம் ஹென்றி என்ற பெயரில் பேசிய மர்ம நபரால் ஏவப்பட்டவன்; இவர்கள் செய்யும் இந்த ஆள் மாறாட்டம் – அவர்கள் இருவருமே ஹென்றி அல்ல என்பதை தெளிவாக்குகிறது! தவிர, தனது அன்புக்குப் பாத்திரமான மேலதிகாரி குய்ச்சார்ட்டைக் கொல்ல வேண்டிய அவசியங்கள் ஏதும் ஹென்றிக்கு  கிடையாது! 7) வலோன் கார்பினைச் சந்திக்கும் போது அவரின் முழு உருவமும் வாசகனுக்கு காட்டப் படுகிறது! மர்ம நபரின் உடைகளும், ஹேர் ஸ்டைலும் கார்பினோடு வெகுவாக ஒத்துப் போகின்றன! மர்ம நபரின் மேல்மண்டையில் சிறு வழுக்கை காணப் பட்டாலும், கார்பினைக் காட்டுகையில் அந்த வழுக்கை தெரியாத கோணங்களில் மட்டுமே அவரை ஓவியர் வரைந்திருப்பார்! மர்ம நபருக்கு மீசை இல்லாதது போல் பின்புறம் இருந்து தோன்றுவது, கார்பினின் ஹிட்லர் பாணி சிறிய மீசையோடு ஒத்துப் போகிறது! கதையின் இறுதிவரை சஸ்பென்சை கொண்டு செல்லும் நோக்கில், படைப்பாளிகள் இதை வேண்டுமென்றே செய்திருக்கலாம்! [] 8) “மோக் டென் ராணுவ முகாமில் ஹென்றி நிகழ்த்திய சாகசம்” பற்றி கிம்-சி வலோனிடம் கூறியிருந்தது – “அந்த முகாமின் கமாண்டிங் ஆஃபிஸராக இருந்தவர் கார்பின்” என்ற புஜாலின் வாக்குமூலத்தோடு ஒத்துப் போகிறது! மேலும், புற்றுநோயின் பாதிப்பால் – வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புஜாலுக்கு, வலோனிடம் பொய் பேசிட வேண்டிய அவசியங்கள் ஏதும் இல்லை – அதுவும், அவர் மீதே கொலை முயற்சி நடந்த பிறகும்! 9) ஆவணப் படம் வெளியாவதை அரசாங்கம் தடுத்திருந்தாலும்; பதவிக் காலம் முடியும் முன்னரே, பணி நீக்கம் செய்யப் பட்டதால் நேர்ந்த அவமானத்திற்கு பழி தீர்க்கும் விதமாகவும், இவ்வுண்மை வலோன் மூலமாக வேறு வழிகளில் வெளிப்படும் சாத்தியங்களை தவிர்க்கவும் – கொலையாளியை அவர் மீது கார்பின் ஏவி விடுகிறார் என்பது புலனாகிறது! 10) வலோனைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயம் கார்பினுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது தெளிவு! வலோனைக் கொல்வதற்காக, அதே கொலையாளி அனுப்பப் பட்டிருப்பதால் – கொலையாளியை ஏவிய மர்ம நபரும் கார்பினும் ஒருவரே என்பதும் தெளிவாகிறது! 10 மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 1 - வாசிப்பு! [] எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருப்பதும்; அந்த ரசனைகளின் பால் அவரவரின் தனித்துவமான பார்வைகளைக் கொண்டிருப்பதும் இயல்பான ஒன்று! இந்த ரசனை மாறுபாடுகளே, வாழ்க்கையை ரசிக்கத் தக்கதாக மாற்றுகின்றன! சிலருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் – பிறருக்கு கோபம், துக்கம், வெறுப்பு என பல தரப்பட்ட எண்ணங்களைத் தருவதாகவும்; ஒரு பகுதியினரால் வெறுக்கப்படும் விஷயங்கள் – ஏனையோரால் விரும்பப் படுபவையாகவும் இருப்பது, சமூக வாழ்க்கையில் தவிர்க்க முடியாததொரு அம்சம்! அதற்காக, “எல்லாமே மாயை தான், விருப்பு வெறுப்புகள் வேண்டாம்!” என்று ஆன்மீகப் பிரச்சாரம் செய்வது என் நோக்கமல்ல! [;-)] பிடித்த விஷயங்களை சிலாகித்துப் பேசும் அதே வேளையில், பிடிக்காத விஷயங்களை அவ்வப்போது விமர்சனமும், கிண்டலும் செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை; அதை இயன்ற அளவுக்கு, பிறர் மனத்தைப் புண் படுத்தாமலும், தனிமனித தாக்குதல்கள் இல்லாமலும் செய்தாலே போதுமானது! ஆனால் இன்றைய சூழலில், “யாரும் யார் மனதையும் புண்படுத்தாமல், எந்த ஒரு கருத்தையுமே சொல்லி விட முடியாது” என்பது, நான் அனுபவித்து அறிந்த உண்மை! “நீ இதைப் பற்றி பேசுவது தவறு!” என்று நீங்கள் யாரிடமாவது கருத்து கூறினால், அந்தக் கருத்து அவர்களின் மனதை புண்படுத்தக் கூடும்! எதையும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தாலுமே, அந்த மௌனம் சில சமயங்களில் எவர் மனதையாவது புண்படுத்தி விடக் கூடும்! எனவே, பிறர் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது! இப்படி ஒரு பலத்த பீடிகையுடன் இந்த புதிய தொடரை துவக்குவதிற்கு, காரணங்கள் இல்லாமல் இல்லை! [:-D] [] மறக்கப்பட்ட மனிதர்கள் தொடரை, நான்கு பாகங்களுக்கு நீட்டி முழக்கி எழுதிய போது; நண்பர்கள் பலரும் பொறுமையிழந்து – “ஒரு கிராஃபிக் நாவலுக்கு இத்தனை பில்ட்-அப் தேவை தானா?!” என்ற ரீதியில் – இங்கும், ஃபேஸ்புக்கிலும்  என்னை கேட்ட வண்ணம் இருந்தனர்! லார்கோ வின்ச்சை விரும்புபவர் வேய்ன் ஷெல்டனையும்; டெக்ஸ் வில்லரை ரசிப்பவர், ப்ளூபெர்ரியையும் விரும்பாது போகலாம்! அதற்காக அவர்கள், ஜனரஞ்சக காமிக்ஸ்கள் அனைத்தையும் வெறுத்து ஒதுக்கி விடுவதில்லையே?! அதே போலத் தான் ஒ.சி.சு. கிராஃபிக் நாவலும்! இந்தக் கதை எல்லாருக்கும் பிடித்தே தீர வேண்டும், படித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவது, அந்தத் தொடர் பதிவின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை! மாறாக, “மொக்கை என்று பரவலாக முத்திரை குத்தப் பட்ட ஒரு கிராஃபிக் நாவலின் பின்னணியில், எத்தனை எத்தனை வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உண்மைத் தகவல்களும்; படைப்பாளிகளின் தேடலும், உழைப்பும் அடங்கி இருக்கின்றன..!” என்பதை உணர்த்துவதே அதன் பிரதான நோக்கமாக இருந்தது! ஆனால், ம.ம. தொடரை இந்தக் கோணத்தில் ரசித்தவர்கள் மி.மி. குறைவே என்பது, அதற்கு வந்திருந்த கருத்துக்களைப் பார்க்கையில் நான் அறிந்து கொண்ட வருத்தமான உண்மை! [] அடுத்ததாக இன்னொரு தொடரை ஆரம்பித்ததன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று குழம்பித் தவிக்கும் நண்பர்களுக்காக, இந்த புதிய தொடரின் நோக்கத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்! “கிராஃபிக் நாவல் என்ற சொல்லைக் கேட்டாலே, வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு பல வாசகர்கள் தள்ளப்பட்டு இருப்பதன் காரணங்கள் என்னவாக இருக்கும்?!” என்பதை அலசுவதும், அதற்கான தீர்வுகளைத் தேடுவதுமே இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்! கி.நா. அலர்ஜிக்கான முதன்மையான காரணமாக நான் நினைப்பதை இந்தப் பதிவிலும், இதர காரணங்களை – அவற்றிற்குரிய விளக்கங்களுடன் வரவிருக்கும் பதிவுகளிலும் பார்க்கலாம்! இனி, பதிவின் முதல் பகுதிக்குச் செல்வோம்: வாசிப்பு: [] காமிக்ஸ் புத்தகங்களைப் பொறுத்த வரை – “எளிமையான கதை, விறுவிறுப்பான நடை & சுபமான முடிவு!” என்ற சிறிய வட்டத்தில் அடங்கக் கூடிய படைப்புகளை வாசித்தே நாம் பழக்கப் பட்டு விட்டோம்; விதி விலக்குகளாக – ப்ளூபெர்ரி, XIII, பேட்மேன் (சிரிக்கும் மரணம்) போன்ற வயதுக்கு மீறிய படைப்புகளை சிறிய வயதிலேயே வாசித்துப் பழகிய நாம், இன்றளவும் அக்கதைகளை நேசிக்கிறோம்! ஆனால், இந்த வட்டத்திற்குள் அடங்காத காமிக்ஸ் கதைகளை, ‘கிராஃபிக் நாவல்‘ என்ற புதிய பெயரில் பார்க்கும் போது, மிரண்டு போய், அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்! ‘இதெல்லாம் ஒரு காமிக்ஸா?‘ என்று, ஏமாற்றத்தில் மருகுகிறோம்! “காமிக்ஸ் என்பது வயதில் சிறியவர்களுக்கு மட்டுமல்ல” என்ற புளித்துப் போன டயலாக்கை சளைக்காமல் பேசும் அளவிற்கு; வயதில் பெரியவர்கள் வாசிப்பதற்கென பிரத்யேகமாக படைக்கப்படும் காமிக்ஸ்களைப் படிப்பதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை! அப்படியே படித்தாலும், அவற்றில் பொழுது போக்கு அம்சங்கள் தூக்கலாக உள்ள படைப்புகளை மட்டுமே விரும்புகிறோம் (உ.ம். லார்கோ வின்ச்). [] வழக்கமான பாணியில் இருந்து விலகும் படைப்புகளை, பொறுமையாக ஒருமுறை – வாசிக்கக் கூட முயற்சிக்காமல்; அவற்றின் மேல் – ‘சோகக் காவியம்’, ‘ஆவணக் கதை’, ‘சுத்தப் போர்’ – என்று பலவகையான முத்திரைகளைக் குத்தி, ஒதுக்கி வைத்து விடுகிறோம். நம்முடைய இந்த போக்கு மாறினால் மட்டுமே, “காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு மட்டும்” என்ற வெகுஜனக் கருத்தும் (மெல்ல மெல்ல) மாறும்! இந்த மன நிலைக்கு முக்கிய காரணம், காமிக்ஸை ஒரு பொழுது போக்கு சாதனமாக மட்டுமே நாம் அணுகுவது – அதில் தவறில்லை; ஆனால், மாறுபட்ட கதைகள் பொழுது போக்காக இருக்காது, சுவாரசியமாக இருக்காது என்பது போன்ற ஒரு மனத் தடையை நமக்கு நாமே போட்டுக் கொள்வது தான் தவறு! இந்த மனத் தடைக்கு, நமது நுனிப்புல் வாசிப்புப் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் – என்னைப் பொறுத்த வரை அது ஒரு பெரிய காரணமாக இப்போதும் இருந்து வருகிறது! பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “எடுத்தோம், படித்தோம், கவிழ்த்தோம்” என்ற “எக்ஸ்பிரஸ் வாசிப்பு” பாணிக்கு நாம் அடிமைப்பட்டு விட்டோம்! [] உதாரணமாக சமீபத்தில் வெளியான, “XIII – தொடரும் ஒரு தேடல்” கதையில் கொடுக்கப் பட்டிருந்த அமெரிக்க வரலாற்றுத் தகவல்களைச் சொல்லலாம்; வளவளவென்று ஆறேழு பக்கங்களுக்கு நீண்ட அந்தத் தகவல்களை – முழுமையாகப் படிக்கப் பொறுமையின்றி, மீதக் கதையைப் படித்து முடித்தேன். ‘இது ஒரு தொடர்கதை தானே, இன்னொரு சமயம் பொறுமையாகப் படித்துக் கொள்ளலாம்’ என்ற அலட்சியமும் இதன் பின்னணியில் இருந்தது! அதன் காரணமாக, கதைக்கும் அந்த வரலாற்றுத் தகவல்களுக்கும் என்ன தொடர்பு என்பது, சரிவர புரியாமலேயே போய் விட்டது! அதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொறுமை, XIII நெடுந்தொடரைப் பொறுத்தவரை எனக்கு சுத்தமாக இல்லை! இன்னொரு உதாரணம், “ஒரு சிப்பாயின் சுவடுகள்” கிராபிக் நாவல்! முதல் வாசிப்பின் போது, அந்தக் கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை; அதற்கு முதல் காரணம் என்னுடைய இந்த நுனிப்புல் மேயும் பழக்கம் தான். கதையின் இடையிடையே, எக்கச்சக்கமான வரலாற்று விவரங்கள் கொடுக்கப் பட்டிருந்ததால், அவற்றை மேலோட்டமாக மட்டுமே படித்தேன்! ஆனால், அதன் க்ளைமேக்ஸ் மற்றும் மொழிபெயர்ப்பின் சில பகுதிகள் அளித்த குழப்பத்தால், கதையை பொறுமையாக மறுவாசிப்பு செய்ததில், க்ளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என்று, தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடிந்தது! அத்தோடு, நுணுக்கமான பல அம்சங்களும் புலனாகின! அப்படி நான் கண்டறிந்த பல விஷயங்களைப் பற்றி, “மறக்கப்பட்ட மனிதர்கள்” தொடரில் விரிவாக எழுதியிருந்தேன்! [] “என் வாழ்க்கையிலேயே நான் படித்த அதி அற்புதமான காமிக்ஸ் ஒ.சி.சு.-தான்!” என்றெல்லாம் கதை விட விரும்பவில்லை; “இது போன்ற கிராஃபிக் நாவல்களைப் படிப்பது தான் உயர்ந்த காமிக்ஸ் ரசனை!” என்று சரமாரியாக அளந்து விடவும் போவதில்லை! ஆனால், வழக்கமான “டமால், டுமீல்”; “ஹா ஹா, ஹீ ஹீ” ரகக் கதைகளையே படித்துப் பழகிய எனக்கு, இது போன்ற ஒரு மாறுதலான கதையை உள்வாங்கிக் கொள்வது முதலில் சிரமமாக இருந்தாலும், மெல்ல மெல்ல இந்தப் பாணியையும் ரசித்திட முடிந்தது! லார்கோ, லக்கி, டெக்ஸ், டைகர் – இவர்களை ரசித்திடும் அதே வேளையில், பிரளயத்தின் பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது! பி.பி.க்கு ஒரு தனிப்பதிவு இட எண்ணி, கடைசி வரை அதை எழுத முடியாமலேயே போய் விட்டது! ஒ.சி.சு.-க்காவது அதை ஒழுங்காகச் செய்யலாமே என்ற நோக்கமும் ம.ம. தொடரின் பின்னணியில் இருந்தது! [:-)] [] உங்களுக்கு கிராஃபிக் நாவல்களே பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை! ஆனால், இது போன்ற மாறுபட்ட களங்களையும், யதார்த்தமான படைப்புகளையும், உணர்வுகள் சார்ந்த கதைகளையும் அல்லது மேற்சொன்ன உதாரணங்களில் அடங்காத புதிய பாணிகளையும் ரசிக்கக் கூடிய – முற்றிலும் புதியதொரு வாசகர் வட்டம் உருவாவது, தமிழ் காமிக்ஸின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஒன்று தானே?! “கிராஃபிக் நாவல்கள் வேண்டவே வேண்டாம்!” என்று தொடர்ந்து கூறுவதன் மூலம், இவற்றை வெளியிட நினைக்கும் லயன் / முத்து காமிக்ஸ் பதிப்பாசிரியர் விஜயன் அவர்களின் ஆர்வத்திற்கு அணை போட்டு, புதிய ரக வாசகர்கள் உருவாகக் கூடிய அந்த வாய்ப்பை தட்டிப் பறிப்பது நல்லதல்ல என்பதே, ஒரு காமிக்ஸ் வாசகனாக என்னுடைய எளிய கருத்து! 11 மாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்?! Wednesday, November 27, 2013 [] கிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம்! அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும்! தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன! விடியல் பதிப்பகம் வெளியிட்ட, “ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்” ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் “மர்ஜானே சத்ரபி“, தனது சுயசரிதை நூலான “Persepolis” மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் – அவர் ஒரு பெண்(மணி)! கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் – அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis! [] “பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும்” என்று ஆரம்பித்தால் – ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்! ஆனால், இதன் தமிழ் வடிவத்தை கடந்த ஆண்டே படித்திருந்தும் – அதைப் பற்றி பதிவிட அப்போது தோன்றவில்லை! உண்மையில், அது போன்ற கதைகளைப் படிப்பதில் அப்போது நான் ஈடுபாடு காட்டவில்லை என்பது தான் உண்மை! அது தவிர, மர்ஜானேவின் சுயசரிதை கி.நா. என்னைக் கவராது போனதிற்கு வேறு சில காரணங்களும் இருந்தன! முதலாவது காரணம், மர்ஜானேவின் மிக மிகச் சாதாரணமான சித்திரங்கள்! ஐரோப்பிய மற்றும் அமெரிக்க காமிக்ஸ்களின் அற்புதமான, அழகான, தெளிவான, விரிவான, நுணுக்கமான சித்திரங்களையே பார்த்துப் பழகிய என்னால் மர்ஜானேவின் சித்திரங்களை ரசித்திட முடியவில்லை! அவற்றை குழந்தையின் கிறுக்கல்கள் என்பதா; கற்றுக்குட்டி ஓவியரின் கைவண்ணம் என்பதா; அல்லது அவை, நவீன பாணியில் வரையப்பட்ட சித்திரங்களா என்ற குழப்பம் தான் எஞ்சி நின்றது! [] இரண்டாவது காரணம், ஈரானிய வரலாறு / அரசியல் பற்றி எனக்கு எள்ளளவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அப்போது எழவில்லை! எனவே, அந்தக் கதை முழுக்க விரவிக் கிடந்த ஈரானிய அரசியல் மற்றும் வரலாறு சார் தகவல்களும், குறிப்புகளும் சுவாரசியத்தைத் தூண்டுவதாக அமையவில்லை! மூன்றாவது காரணம், அதன் தமிழ் மொழிபெயர்ப்புத் தரம் – சற்றே, பழைய இந்திரஜால் காமிக்ஸ்களை நினைவுறுத்தும் ஒரு தமிழ் நடை! இந்திரஜால் அளவுக்கு மகா மோசமில்லை என்றாலும், மொழிபெயர்ப்பாளர் பாலசந்திரன் அவர்களின் தமிழ் நடையில் ஏதோ ஒரு அம்சம் உறுத்தலாகத் தோன்றியது நிச்சயம்! அந்த இரண்டு புத்தகங்களையும் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டதால், அவற்றை மீண்டும் புரட்டிப் பார்த்து உதாரணம் அளிக்கவோ, அல்லது மாதிரிப் பக்கங்களின் ஸ்கேன்களைப் பிரசுரிக்கவோ இயலவில்லை! ஆனால், காமிக்ஸ் நண்பர்கள் பலரும் இந்த மொழிமாற்ற கிராஃபிக் நாவல் பற்றி சிலாகித்துப் பேசியதை / எழுதியதை முன்பு கவனித்திருக்கிறேன்! லயன் / முத்து காமிக்ஸில் கிராஃபிக் நாவல்கள் வேண்டாம் என்று இப்போது சொல்பவர்களும்; கி.நா. எதிர்ப்பாளர்களுக்கு +1 போட்டு ஊக்குவிப்பவர்களும் – ஈரான் கிராஃபிக் நாவலைப் புகழ்ந்தவர்களில் அடக்கம் என்பது கொசுறுத் தகவல்! [;-)] பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட, “பிரளயத்தின் பிள்ளைகள் & ஒரு சிப்பாயின் சுவடுகளில்!” – இந்த இரு கிராஃபிக் நாவல்கள்; மற்றும் விடியல் பதிப்பகத்தின் “ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்” – இவற்றிற்கு இடையே உள்ள பொதுவான அம்சம் – இவை அனைத்தும் வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை என்பதே! முக்கியமான வேறுபாடு – பி.பி. & ஒ.சி.சு. கதைகளில் புனைவு சற்று தூக்கலாக இருக்கும்; ஈரான் கிராஃபிக் நாவலோ, உண்மை தூக்கலான சுயசரிதை! சரி, பதிவின் தலையங்கதிற்கு வருவோம்: அரசியல் + வரலாறு = சோகம்?!: அந்நிய நாடுகளின் வரலாறு மற்றும் அரசியல் சூழல்களைப் பற்றிய எந்த ஒரு முன்னறிமுகமும் இன்றி – அத்தகைய கதைகளை ரசித்துப் படிப்பதும், புரிந்து கொள்வதும் சாத்தியமே இல்லாத செயல்கள்! அரசியல் / வரலாற்றுக் கதைகளைப் பொறுத்தவரையில், நமக்குப் பழக்கப் பட்ட களங்கள் இரண்டே இரண்டு தான்! 1) அமெரிக்க வரலாறு: [] பொதுவாக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள், ‘கௌபாய் கதை’ பிரியர்கள்! அவை ‘வெஸ்டர்ன் மாஸ் மசாலா’ – டெக்ஸ் வில்லர் கதைகளாக இருந்தாலும் சரி; லக்கி லூக்கின், வரலாற்று உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான காமெடி கதைகளாக இருந்தாலும் சரி; பக்கம் பக்கமாக அமெரிக்க வரலாறு / உள்நாட்டு அரசியல் பேசும் ப்ளூபெர்ரி கதைகளாக இருந்தாலும் சரி; அல்லது சோக ரசம் பிழியும் ‘எமனின் திசை மேற்கு‘ கிராஃபிக் நாவலாக இருந்தாலும் சரி – நம்மவர்களுக்கு கொஞ்சமும் சலிப்பு தட்டுவதே இல்லை! Wild West ரசனைக்காக அடித்தளங்கள் முத்து காமிக்ஸின் ஆரம்ப காலத்திலேயே (சிஸ்கோ கிட்!) போடப் பட்டு விட்டன; அதை ராணி காமிக்ஸ் நீரூற்றி வளர்த்தது என்றால்; லயனும், முத்துவும் அந்த ரசனையை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருகின்றன! 2) இரண்டாவது உலக யுத்தம்: [] ஒரு சமயத்தில் இரண்டாம் உலகப் போர் சார்ந்த கதைகள் வெகு பிரபலம் – குறிப்பாக நேசநாடுகள் மற்றும் ஹிட்லரின் ஜெர்மனிக்கு இடையே நடைபெற்ற யுத்தக் கதைகள்! ராணி மற்றும் லயன் / முத்து காமிக்ஸ்களில் ஏராளமான WW-II கதைகள் வந்திருக்கின்றன! உலகப் போர் பற்றி வரலாற்றுப் பாடம் படித்துக் கற்றதை விட, காமிக்ஸ் படித்து அறிந்தது தான் அதிகம்! சிறு வயதில் இருந்தே இரண்டாம் உலகப்போர் சார்ந்த கதைகளை நாம் படித்துப் பழகியதால், அவற்றை இன்றளவும் நம்மால் ரசித்திட முடிகிறது! ‘பிரளயத்தின் பிள்ளைகள்‘, ஒரு கிராஃபிக் நாவலாக இருந்தும் கூட, வாசகர்கள் இடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதிற்கு, வேறென்ன காரணங்கள் இருந்திட முடியும்?! மேற்சொன்ன இரு களங்களைத் தவிர, ‘மர்ம மனிதன் மார்ட்டின்‘ கதைகளையும் படித்திருப்பீர்கள் – பல்வேறு வகையான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த கதைத் தொடர் அது! அதில் புனைவின் சதவிகிதம் அதிகமாகவும், மசாலா காட்சிகள் நிறைந்தும் இருப்பதாலோ என்னவோ, மார்ட்டின் கதைகளைப் ரசிப்பதில் நமக்கு எவ்வித சிரமமும் இருப்பதில்லை! [] ஆனால், வரலாறு தூக்கலாகவும், அரசியல் வாடை கலந்தும், உண்மைச் சம்பவங்களைக் கொண்டும், யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் கதைகள் இருக்கும் போது நம்மவர்களுக்கு கொட்டாவி தான் மிஞ்சுகிறது! அதுவும், அவை நமக்கு எந்த தொடர்பும் இல்லாத, படித்தும் அறிந்திராத அந்நிய நாடுகளில் நடைபெறும் கதைகள் எனும் போது! ஈரான் மற்றும் ‘ஒரு சிப்பாயின் சுவடுகளில்’ ஆகிய கிராஃபிக் நாவல்கள் பெரிதாய் எந்த வரவேற்பும் பெறாததின் பின்னணியில் மேற்சொன்ன காரணங்களும் அடங்கியுள்ளன! எமனின் திசை மேற்கு & பிரளயத்தின் பிள்ளைகள் – இவை இரண்டும், “பழக்கப் பட்ட களங்கள் + அட்டகாசமான சித்திரங்கள்” என்ற அடிப்படைகளில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சோகமான முடிவைக் கொண்டிருந்ததால், அதே அளவுக்கு எதிர்ப்பையும் பெற்றன என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்! [] இனிமேல் தமிழில், சுயசரிதை (உ.ம்.: Buddha), அரசியல் / வரலாறு பேசும் (உ.ம்.: Maus) அல்லது சோகமயமான முடிவைக் கொண்ட (உ.ம்.: V for Vendetta) கிராஃபிக் நாவல்களை வெளியிடும் தைரியம், எந்த பதிப்பகத்திற்காவது வருமா என்பது மிகப்பெரும் கேள்விக் குறியே! வாசகர்கள் இடையே வரவேற்பு இல்லாத கதைகளை வெளியிட்டு, இழப்பைச் சந்திக்க யார் தான் முன் வருவார்கள்?! // அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழிலும் கிராபிக்ஸ் நாவல்கள், மாங்கா நேரடியாக எழுதப்பட்டு மிகப்பிரபலமாக விளங்கும் என்று நான் முன் உணர்கிறேன், அது நடைபெறுவதற்காக ஆரம்ப அறிகுறிகள் இப்போது தென்படத்துவங்குகின்றன. // இவை, பிரபல எழுத்தாளர் திரு.S.ராமகிருஷ்ணன், ஈரான் கிராபிக் நாவலுக்கான தனது விமர்சனப் பதிவில் முத்தாய்ப்பாக எழுதி இருந்த வரிகள்! அதை அவர் எழுதியே, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருக்கும்! எஞ்சியிருக்கும் எட்டரை ஆண்டுகளில் – கிராஃபிக் நாவல்கள், தமிழில் நேரடியாக படைக்கப் படுவது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; ஏற்கனவே மொழிபெயர்த்த ஒரு சில நாவல்களைப் படிப்பதற்கு, இங்கே சில நூறு ஆட்களாவது தேறுவார்களா என்பது தான் இப்போதைய ஒரே கேள்வி! 12 கிராஃபிக் காமிக்ஸ் - ஒரு புதிய ப்ளேடு, ஆங்கிலத்தில் Monday, August 26, 2013 [] காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது என் இளவயது பொழுதுபோக்குகளில் முதன்மையானதாக இருந்தது! எண்பதுகளின் மத்தியில் காமிக்ஸ் படிக்கத் துவங்கிய எனக்கு, அச்சமயம் வெளியாகிக் கொண்டிருந்த பல விதமான காமிக்ஸ்களை வாங்க போதுமான பணம் ஒருபோதும் இருந்ததில்லை! கைச்செலவுக்காக கிடைக்கும் சில (கால் / அரை) ரூபாய்களைத் திரட்டி மாதந்தோறும் ஒரு சில புத்தகங்களை மட்டுமே வாங்க முடிந்தது! அது ஒரு காமிக்ஸ் கனாக்காலம், அன்று வாங்கத் தவறிய புத்தகங்களை இன்றளவும் என் கனவுகளில் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்! 1997-ல் வேலையில் இணைந்ததும் எனது மனதுக்கு நெருக்கமான காமிக்ஸ்களை பல வருடங்கள் பிரிய நேர்ந்தது! அச்சமயத்தில் காமிக்ஸ் பதிப்பாளர்களும் இரும்புக்கை மாயாவி கணக்காய் கண்களில் இருந்து காணமல் போகத் துவங்கியிருந்தனர்! லோ-வோல்டேஜ் கரண்ட் பாய்ந்ததால் முழுமையான அரூப ரூபம் கிட்டாமல், லயன் & முத்து காமிக்ஸ்கள் மட்டும் அவ்வபோது கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்தன (என்பதை பின்னர் அறிந்தேன்!). 2012 முதல் சிவகாசியில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் பலனாக இப்போது லயன் & முத்து காமிக்ஸ்கள் தமது முழு உருவத்துடன் வெளியுலகில் தலைகாட்டி வருகின்றன! [:)] இப்படியாக லயன் & முத்து புண்ணியத்தில் எனது காமிக்ஸ் வாசிப்பு மீண்டும் முழு வீச்சுடன் தொடங்கி இருக்கிறது! இப்போது வேலைக்கு போய் மாதச் சம்பளம் வாங்கி லோன் கட்டும் அளவிற்கு வளர்ந்து(!) நின்றாலும், இன்னமும் காமிக்ஸ் வாங்க போதுமான பணம் இல்லாமல்தான் இருக்கிறது, அதாவது ஆங்கில காமிக்ஸ்களை! பெரும்பாலான தமிழ் காமிக்ஸ் ரசிகர்களைப் போலவே நானும் ஆங்கிலத்தில் காமிக்ஸ் படிப்பதை “தீவிரமாக” தவிர்த்து வந்தேன்! ஆனால், அதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கத்தான் செய்தன! முதல் காரணத்தை மிக எளிதில் யூகித்து விடலாம்! ஆங்கில காமிக்ஸ்களின் அலற வைக்கும் விலைப் பட்டியல்தான் அது! ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் ரஃபிக் உள்ளிட்ட பல வலைப்பதிவர்கள், ₹195 விலையில் Cinebook / Eurobooks இதழ்கள் இந்தியாவில் கிடைப்பதாக எழுதி வந்த சமயம், நான் எட்ட நின்று பெருமூச்சு விட்டதோடு சரி! 50 பக்கங்களுக்கு, ₹200 கொடுப்பது என்னைப் பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருந்தது, இருக்கிறது!  வருடங்கள் பல கழிந்தும் ₹200 என்பது மிக அதிகம்தான் என்று இப்பொழுதும் தோன்றுவதற்கு, இதே தரத்தோடு வெளிவரும் லயன் & முத்து காமிக்ஸ்களின் குறைவான விலையும், லோன் கட்டியது போக கையில் மிஞ்சும் சொற்ப சம்பளமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம். ஆனால், இவ்வாறான நேரடி விலை ஒப்பீடுகள் சரியல்ல என்பதும் புரியாமலில்லை. ஏனெனில், பிரகாஷ் பப்ளிஷர்சின் சந்தைப் படுத்தும் முறையானது மற்ற உள்நாட்டு / வெளிநாட்டு ஆங்கிலப் பதிப்பகங்களோடு ஒப்பிடும்போது பெரிதும் மாறுபடுகிறது. சந்தா மற்றும் ஈபே மூலம் நடக்கும் நேரடி விற்பனையைத் தவிர்த்து, லயனின் வெளியுலகத் தொடர்பாக இருப்பவை விரல் விட்டு எண்ணக் கூடிய சில (தமிழ்நாட்டு) புத்தக நிலையங்களும், அவ்வபோது நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளும் மட்டுமே! ஆங்கில மொழிக்கு வாசகர்கள் அதிகம் என்பதால், ஒரு காமிக்ஸ்கான ஆங்கில உரிமங்களை பெறுவதற்கு ஆகும் செலவுகள், பிராந்திய மொழி உரிமங்களைக் பெறுவதைக் காட்டிலும் மிக அதிகம். தவிர ஆங்கிலப் பதிப்பகங்கள் தங்களது வெளியீடுகளை இந்திய அளவில் மிக விரிவாக சந்தைப் படுத்துகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருக்கும் புகழ் வாய்ந்த புத்தக விற்பனை மையங்களில் தமது புத்தகங்களை விற்பனைக்கு வைக்கின்றன. அப்படி பார்வைக்கு வைக்கப்படும் புத்தகங்கள் உடனுக்குடன் விற்றுத் தீர்வதுமில்லை. முழுவதும் விற்க பல வருடங்கள் கூட ஆகலாம். Reliance TimeOut, Landmark போன்ற இடங்களில், பல பேர் அங்கேயே உட்கார்ந்து முழுவதும் படித்துவிட்டு நடையைக் கட்டி விடுவார்கள். [:)] இப்படியாக, இடைத் தரகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கான கழிவுத் தொகை, விற்பனை மையங்களில் விற்பனையாகாமல் தேங்கும் இதழ்கள்; கூடுதலாக  வெளிநாட்டுப் பதிப்பகங்கள் என்றால் இறக்குமதி செய்ய ஆகும் செலவுகள், மற்றும் இந்திய விநியோகஸ்தர்களுக்கான கட்டணங்கள் என எல்லா செலவீனங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் ஒரு புத்தகத்தின் விலையினை தீர்மானிக்கிறார்கள். இங்கிலாந்துப் பதிப்பகமான Cinbook-கிற்கு தற்போது இந்திய விநியோகஸ்தர்கள் யாரும் இல்லை என்பதால், அவர்களின் லயனை விட சற்றே அளவில் பெரிய, ஐம்பத்தி சொச்ச பக்கங்கள் கொண்ட ஒரு காமிக்ஸின் விலை, இங்கிலாந்தில் என்ன விலைக்கு விற்கிறதோ அதே விலைதான் இந்தியாவிலும்; அதாவது 6 பவுண்டுகள் – இந்திய விலையில் சுமார் 600 ரூபாய்கள்! கதைகளின் பக்க எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்ப புத்தகத்தின் விலை 7 பவுண்டுகளில் இருந்து 10 பவுண்ட்கள் வரை மாறுபடும். சில இந்திய (இணைய) விற்பனையகங்கள் இறக்குமதி தொகையையும் நம் தலைமேல் கட்டும் பட்சத்தில் புத்தக விலை மேலும் அதிகரிக்கும். ஆனால், Eurobooks போன்ற இந்தியப் பதிப்பகங்கள் கெட்டியான ஆர்ட் பேப்பரில், லயனை விட பெரிய அளவிலான (A4) காமிக்ஸ்களை, இன்னமும் 200 ருபாய் விலைக்கே விற்றுக் கொண்டிருக்கின்றன. தோராயமாகப் பார்த்தோமானால் லயனை விட இரண்டரை அல்லது மூன்று மடங்கு மட்டுமே விலை அதிகம். எனவே, பொத்தாம் பொதுவாக 50 பக்க ஆங்கில காமிக்ஸ்கள் 1000 ரூபாய், லயனோ 50 ரூபாய் என்று சொல்வது; லண்டனில் ஒரு ப்ளேட் இட்லியின் விலை 5 பவுண்ட்கள் என்று சலித்துக் கொள்வதற்கு ஈடானது! சென்னையில் 20 மடங்கு குறைந்த விலையில் கிடைக்கும் அதே இட்லிதான், ஆனால் விற்கும் இடம் வேறு அல்லவா? அதேபோல, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பதில்லையா என்ன – அதே லாஜிக்தான்! அதற்காக லயன் & முத்துவின் மதிப்பைக் சற்றும் குறைத்துச் சொல்லவில்லை, லயனின் குறைந்த விலை பற்றி எதிர்மறையாக பேசுபவர்களோடு நான் ஒத்தும் போகவில்லை! ஏனெனில், குறைந்த பிரிண்ட் ரன் மட்டுமே கொண்ட ஒரு பதிப்பகம், விளம்பரதாரர்களின் துணையின்றி, 100 ரூபாய் விலையில், தரமான ஆர்ட் பேப்பரில், ~112 பக்கங்களுடன் ஒரு காமிக்ஸ் வெளியிடுவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. டாலரின் மதிப்பு, பழனி ‘ரோப் கார்’ போல ஏறுமுகமாக இருக்கும் இவ்வேளையில், ஆசிரியர் விஜயன் அவர்கள் இன்னமும் விலையை ஏற்றாமல் வைத்திருப்பதே மிகப் பெரிய அதிசயம்தான்! அதிக லாப நோக்கமின்றி அவர் செயல்படுவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது! ஆங்கில காமிக்ஸ்களின் விலை பற்றி எல்லாம் விசனப்பட்டுக் கொண்டிராமல், அவற்றின் CBR வடிவங்களை இணையத்தில் இருந்து இலவசமாக (அதாவது இல்லீகலாக) தரவிறக்கம் செய்து, கணினி, டாப்லெட் அல்லது மொபைல் திரையில் ஜாலியாகப் படிக்கலாம் என்பதை நான் அறியாமல் இல்லை! ஆனால், எனக்கு புத்தகத்தை தொட்டுப் படிப்பதில் கிடைக்கும் அந்த “கிக்”, காமிக்ஸை கம்பியூட்டரில் படிப்பதில் கிடைப்பதில்லை! [;)] சிறு வயதில் இருந்து தமிழ் காமிக்ஸை மட்டுமே படித்து பழக்கப் பட்டதாலோ என்னவோ, தமிழில் படிக்கும் போது மனதுக்கு நெருக்கமாகத் தோன்றும் அயல்நாட்டு நாயகர்களும், கதைக்களங்களும் , ஆங்கிலத்தில் படிக்கும்போது மிகவும் அந்நியமாகவே தோன்றுகி(ன்றனர்)து!. ஆங்கில காமிக்ஸ்களை படிக்கத் தவிர்த்ததிற்கு இதுவும் ஒரு காரணம். லயன், முத்து & ராணி புண்ணியத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க & ஐரோப்பிய காமிக்ஸ்கள் என பல வகையான படைப்புகளின் அறிமுகம் எனக்கு ஓரளவுக்கு இருக்கிறது. இருப்பினும் நான் படித்தறியாத காமிக்ஸ் களங்கள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் தமிழில் வெளியாவது நிச்சயம் சாத்தியமில்லை, அவ்வளவு ஏன் – அவை அத்தனையும் ஆங்கிலத்திலேயே கூட வெளியாகி இருக்காது!. சித்திரங்கள் நாம் பழக்கப்பட்ட பாணியில் இல்லை என்ற ஒரே காரணத்தால் ‘கார்டோ மால்டிஸ்‘க்கே இங்கு பெரிதாய் வரவேற்பு கிட்டாத போது; புதுமையான வேறு பல சித்திர பாணிகள், கதைக் களங்கள், கிராபிக் நாவல்கள் மற்றும் தற்கால அமெரிக்க காமிக்ஸ்கள், தமிழில் உடனே ஏற்கப்படுமா என்பதும் பெரும் கேள்விக் குறியே! இவற்றில் ஒரு சிறு பகுதியையாவது ஆங்கிலத்தில் படிக்க முயற்சிக்கலாமே என்ற ஆர்வம் தற்போது மேலோங்கி இருக்கிறது! இனி நான் படிக்கவிருக்கும் ஒவ்வொரு ஆங்கில காமிக்ஸ் பற்றியும் எனது ஆங்கில வலைப்பூவான www.grafikcomics.com இல் பதிவுகள் இடப்போகிறேன். நேரம் கிடைக்கும் போது அப்பதிவுகளை தமிழாக்கம் செய்து ப்ளேட்பீடியாவிலும் வெளியிடுவேன். [] இதன் துவக்கமாக சமீபத்தில் சில Cinebook மற்றும் Eurobooks காமிக்ஸ்களை வாங்கினேன். அமேசானின் இந்தியத் தளத்தில் சில சினிபுக் இதழ்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன (₹87 முதல் ₹150 வரையிலான விலைகளில்!). அவ்வாறு நான் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கிய இதழ்களில் சில, இதோ: - Alpha: 1 – Exchange - Alpha: 2 – Wolves - Alpha: 3 – The List - Lady S: 1 -  Here’s to Suzie! - Pandora’s Box: 1 – Pride - Pandora’s Box: 2 – Sloth - Pandora’s Box: 3 – Gluttony - Pandora’s Box: 4 – Greed - The Bluecoats: 1 – Robertsonville Prison - The Bluecoats: 2 – The Navy Blues - The Scorpion: 1 – Devil’s Mark - The Scorpion: 2 – Devil in the Vatican [] 2001ல் இருந்து பெங்களூரில் குப்பையைக் கொட்டிக் கொண்டு இருந்தாலும், காமிக்ஸ் புத்தகங்களைப் பொறுக்க இங்கிருக்கும் Blossoms, Bookworm போன்ற புகழ் பெற்ற புத்தகக் கடைகளுக்குப் சமீப காலம் வரை சென்றதில்லை! இதற்காகவும், Landmark போன்ற புத்தக மையங்களில் அவ்வப்போது நடைபெறும் ஆடித் தள்ளுபடி விற்பனைகளை தவற விட்ட குற்றத்திற்காகவும் இப்போது ரொம்பவே வருந்துகிறேன். சினிபுக் இதழ்களின் புதிய பதிப்புகள் அறுநூறு ரூபாய்களுக்கு குறைவாக கிடைப்பதில்லை எனும் நிலையில், அவற்றின் பழைய பதிப்புகளைத் தேடி ஆன்லைன் & ஆஃப்லைனில் கடை கடையாக அலைகிறேன். அப்படியாக Thorgal தொடரின் முதல் 9 பாகங்கள் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைத்தன! இனி அவற்றை படிக்க வேண்டியதுதான் பாக்கி! [:)] Eurobooks வெளியிட்ட Lucky Luke 4 in 1 Volume-களையும் வாங்கி இருக்கிறேன். சினிபுக்கின் பழைய 200 ரூபாய் பதிப்புகள் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால், இவற்றை வாங்க இனி நிறையவே அலைய வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். இந்த மாத காமிக்ஸ் பட்ஜெட்டில் ஏற்கனவே ஜமுக்காளம் விரித்து விட்டதால், வேட்டையை அடுத்த மாதம்தான் தொடர வேண்டும்! ப்ளேட்பீடியாவில் கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாக ப்ளேடு போட்டதில் எனது தமிழ்ப்புலமை(!) சற்றே முன்னேறி இருக்கிறது. ஆனால் வேலைக்கு சேர்ந்து 16 வருடங்கள் ஆகியிருந்தும், வேலை தொடர்பான ஈமெயில் மற்றும் கோப்புகளை ஆங்கிலத்தில் எழுதுவதைத் தாண்டி, எனது ஆங்கிலப்புலமையானது “Respected Manager, As I am suffering from fever, kindly grant me two days leave.’ என்ற அளவிலேயே இருக்கிறது! சரி, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதியாவது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நிஷ்டூர முடிவுக்கு வந்துள்ளேன்! என் ஆங்கிலத்திடம் இருந்து, ஆண்டவர் உங்களை காப்பாற்றுவாராக! [:)] [] வலைப்பூவின் பெயரை “GRAFIK COMICS” என்று வைத்ததிற்கான காரணத்தை எளிதில் யூகித்திருப்பீர்கள். கிராஃபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் என்ற இரண்டு வகைகளும் வலைப்பூ பெயரில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். ஃபேஸ்புக்கிலும் “கிராபிக் காமிக்ஸ்”காக ஒரு தனிப்பக்கத்தை துவக்கியுள்ளேன். இந்தப் பதிவின் ஆங்கில வடிவத்தை படிக்க எண்ணுவோர் இங்கே போய் ரிஸ்க் எடுக்கலாம். இப்போதைக்கு அவ்வளவுதான் நண்பர்களே, எழுத்து கூட்டி காமிக்ஸ் படிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கிறது, பை பை! [:)] பின்குறிப்பு: கிராஃபிக் காமிக்ஸ் வலைப்பூவை துவக்கி சரியாக ஒரு மாதம் ஆகி விட்டது.  அதன் முதல் பதிவை தமிழாக்கம் செய்து இங்கே வெளியிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைப்பேன். ஆனால், டிராஃப்டைப் பார்த்தாலே ஒரே  அயர்ச்சியாக இருக்கும். நான் ஆங்கிலத்தில் எழுதியதை, நானே மொழியாக்கம் செய்வதென்பது ரொம்பவே போரடிக்கும் வேலை. ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழில்  மாற்ற முயற்சித்தால் சுவாரசியம் குறைகிறது என்பதால், வார்த்தைகளை முன்பின் மாற்றி, கூடுதலாக சில தகவல்களையும் இணைத்துள்ளேன். இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் ஆங்கில காமிக்ஸ் பற்றிய எனது பதிவுகளை உடனுக்குடன் படிக்க நீங்கள் செல்ல வேண்டிய முகவர் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் கிராபிக் காமிக்ஸ் டாட் காம் – எங்களுக்கு ப்ளேட்பீடியாவைத் தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை! [:)] 13 வெகுஜனப் பத்திரிக்கைகளின் ரெடிமிக்ஸ் காமிக்ஸ் கட்டுரைகள்! [] பல நண்பர்களின் கூட்டு முயற்சியின் பலனாக கடந்த வார இந்தியா டுடேவில் தமிழ் காமிக்ஸ் வலைபதிவர்கள் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது! கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்னர் காமிக்ஸ் நண்பர் விஸ்வா அவர்கள், இந்தியா டுடே நிருபர் திரு.இரா.நரசிம்மன் அவர்களிடம் இந்தக் கட்டுரைக்காக மற்ற சில பதிவர்களின் பெயர்களோடு எனது பெயரையும், வலைப்பூ முகவரியையும் பரிந்துரைத்திருப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த 8-ம் தேதியன்று, நரசிம்மன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, காமிக்ஸ் வலைப்பூக்கள் குறித்தான எனது பார்வைகளை பகிர்ந்திருந்தேன். அதிலிருந்து ஓரிரு வரிகள் இந்தியா டுடேவில் அச்சேறி இருக்கின்றன! இந்த கட்டுரைக்காக நான்கு வாரங்களுக்கு முன்னரே பேட்டி அளித்து முடித்து விட்ட வேறு சில காமிக்ஸ் பதிவுலக நண்பர்கள், அதைப் பற்றி வெளியில் மூச்சு கூட விடவில்லை என்பது தேவையில்லாத உபரி தகவல்! [;)] கட்டுரை நான் எதிர்ப்பார்த்த கோணத்தில் இல்லை என்றாலும், காமிக்ஸ் வலைப்பதிவர்கள் பற்றிய பிரத்தியேகத் தகவல்கள், தேசியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது!  நிருபர் நரசிம்மன் அவர்களுக்கும், அவரிடம் எனது பெயரையும் பரிந்துரைத்த விஸ்வாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், சில சிந்தனைகளைத் கிளறி விடவும் தவறவில்லை! ‘இந்தியா டுடே’ கட்டுரையின் உள்ளடக்கத்தையோ, ஆங்காங்கே காணப்படும் எடிட்டிங் & அச்சுப் பிழைகளையோ பட்டியல் போட்டு விரிவாக அலசுவது என் நோக்கம் அல்ல! பதிவர்களிடம் சிரமேற்கொண்டு பேட்டி கண்ட நிருபர் மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக, தமிழ் காமிக்ஸ் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகள் மீதான ஒரு ‘பொது விமர்சனப் பார்வை’ என்றும் கொள்ளலாம்! [] காமிக்ஸ் என்றாலே அது குழந்தைகளுக்கானது என்ற ஒரு பொதுப்புத்தி மக்களிடையே இருக்கிறது! வெகுஜன பத்திரிக்கைகளில் வெளியாகும் ‘மேலோட்டமான’ காமிக்ஸ் கட்டுரைகள், அத்தகைய பொதுப்புத்திக்கு மேலும் வலுச் சேர்க்கும் விதமாகவும், படிப்பவர்களுக்கு ஆர்வம் தூண்டாத தகவல் தொகுப்புகளாகவும் அமைந்திருப்பதை காண முடிகிறது! இதுவரை பத்திரிக்கைகளில் வெளியான தமிழ் காமிக்ஸ் குறித்த பெரும்பாலான கட்டுரைகள், இந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றன! இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள், நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம்! ஆனால், இது மாற வேண்டும் என்பது என் விருப்பம்! தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கட்டுரை எழுதுவது என்பது மிகவும் சுலபமான காரியம்! கீழ் கண்ட டெம்ப்ளேட் வரிகளை அடிப்படையாக வைத்து சில பத்திகள் எழுதி, அவற்றை ஒன்றாகக் கோர்த்தால் கட்டுரை ரெடி! ஆங்காங்கே அரதப் பழைய காமிக்ஸ் இதழ்களின் முன்னட்டைகள் கொண்டு அலங்கரிப்பது மிக அவசியம்! 1. 90-களோடு காமிக்ஸ் பொற்காலம் முடிந்து விட்டது. 2. இன்றைய சிறுவர்கள் காமிக்ஸ் படிப்பதில்லை! முப்பதைத் தாண்டியவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்! 3. பொதுவாக மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது! 4. காமிக்ஸின் இடத்தை டிவி, இன்டர்நெட், வீடியோ கேம்ஸ், இத்யாதி இத்யாதி பிடித்துக் கொண்டு விட்டன! 5. காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கானது மட்டும் அல்ல – பெரியவர்களும் படிக்கலாம். 6. ராணி, மேத்தா, இந்திரஜால் போன்ற பல காமிக்ஸ் இதழ்கள் இப்போது வருவது இல்லை, லயன் & முத்து மட்டும் வருகின்றன! 7. இடைப்பட்ட காலத்தில் பல வலைப்பதிவர்கள், காமிக்ஸ் பற்றி தொடர்ந்து எழுதி, காமிக்ஸ் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்! 8. இரும்புக்கை மாயாவி என்ற பெயர் உங்கள் நினைவுகளில் மின்சாரத்தை பாய்ச்சுகிறதா? அவர் இன்னமும் தமிழில் வந்து கொண்டுதான் இருக்கிறார், படித்துப் பயனடையுங்கள்! 9. காமிக்ஸ் வாசகர்கள் பலர் படித்த பிறகு அவற்றை சேகரிக்கவும் செய்கிறார்கள். 10. பழைய காமிக்ஸ் இதழ்களை சேகரிப்பது என்பது ஒரு காஸ்ட்லி ஹாபி! 11. சித்திரக் கதைகள் சிறு வயது நினைவுகளை மீட்டெடுக்கின்றன. 12. தமிழில், மொழியாக்கம் செய்த சித்திரக்கதைகள் மட்டுமே வெளியாகின்றன! 2012-ல் இருந்து மறுமலர்ச்சி கண்டு வரும் தமிழ் காமிக்ஸிற்கு, இவை போன்ற வரலாற்றுத் தகவல்கள் முக்கியம்தான் என்றாலும், புதிய காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி அதிகம் பேசுவதே இந்த மறுமலர்ச்சிக்கு அதிகம் பயனுள்ளதாய் அமையும் என நினைக்கிறேன்! காமிக்ஸ் எடிட்டர் விஜயன் அவர்கள் அளிக்கும் சில பேட்டிகளும் இது போன்ற டெம்ப்ளேட் தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்து இருக்கின்றன! NBS வெளியீடு தொடர்பாக அனிமேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் குரோனிக்கிள் – இவற்றிற்காக அளித்த பேட்டிகளில் சற்றே மாறுதலாக, தற்போதைய வாசகர்களின் எதிர்பார்ப்பு பற்றியும், ஐரோப்பிய காமிக்ஸ்களை மொழிபெயர்ப்பதில் இருக்கும் சிரமங்கள் பற்றியும் பேசி இருக்கிறார்! ஊடகங்களிடம் பேசும் போது, கடந்து சென்ற காமிக்ஸ் பொற்காலத்தைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிராமல், புதிய நாயகர்களின் வருகை பற்றியும், கிராபிக் நாவல்கள் பற்றியும், மாறி வரும் காமிக்ஸ் ரசனைகள் குறித்தும் அவர் அதிகம் பேசவேண்டும் என்பது என் விருப்பம்! ஆனால், குறிப்பாக சில புத்தக வெளியீடுகளைப் பற்றி மட்டும் அவர் பேசினாரென்றால், அது ஒரு விளம்பரமாக தோற்றமளித்து, பேட்டி காணும் பத்திரிக்கையால் நிராகரிக்கப்படக் கூடும் என்ற சங்கடத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழில் தற்போது காமிக்ஸ் வெளியிடும் ஒரே நிறுவனம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் என்பதால், லயன் & முத்துவின் பெயர்களை குறிப்பிடாமல் புதிய தமிழ் காமிக்ஸ்கள் பற்றி பேசுவது என்பது இயலாத காரியமாகி விட்டது. வேறொரு பதிப்பகத்தின் பெயரை பிரதானப்படுத்தி எழுதப்படும் காமிக்ஸ் கட்டுரைகளை வெளியிட எத்தனை பத்திரிக்கைகள் முன்வரும் என்பதும் சந்தேகமே! எனவே, காமிக்ஸ் பற்றி ஊடகங்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தால் லயன், முத்துவோடு நில்லாமல் சற்று பொதுப்படையாகவும் பேசுவது நல்லது! ‘காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல’ என்ற தேய்ந்து போன ரெக்கார்டை மீண்டும் மீண்டும் ஓட விடுவதை விட, அதை செயலில் காட்டுவது அதிக பயன் தரும்! உதாரணத்திற்கு: 1. சமீபத்தில் படித்த ஏதாவது ஒரு ஆங்கில கிராபிக் நாவல் / காமிக்ஸ் பற்றி சுருக்கமாக விமர்சிக்கலாம். 2. தமிழில் நீங்கள் படிக்க விரும்பும் புகழ்பெற்ற காமிக்ஸ் படைப்புகளை பட்டியலிடலாம். 3. தமிழில் இதுவரை வெளிவராத காமிக்ஸ் Genre-கள் எவை என்பதை அலசலாம். 4. பெரியவர்களுக்கு ஏற்ற காமிக்ஸ்கள் / கிராபிக் நாவல்கள் சிலவற்றின் பெயர்களை பகிரலாம் (அவை எந்த மொழியில் இருந்தாலும்!) 5. காமிக்ஸை தழுவி எடுக்கப்பட்ட ஏதாவது ஒரு திரைப்படத்தைப் பற்றி ஆராயலாம். 6. காமிக்ஸ் நண்பர்களிடையே இணைய வெளியில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் பற்றி விவரிக்கலாம். 7. லயன் / முத்துவில் உங்களை மிகவும் கவர்ந்த சமீபத்திய வெளியீடு அல்லது நாயகர்கள் பற்றி பேசலாம். 8. தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் மாறி வரும் ரசனை பற்றி அலசலாம்! 9. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் காமிக்ஸ் ஆர்வம் மலர நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி பேசலாம். 10. உங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான காமிக்ஸ்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுக்கிறீர்கள் என்பதைச் சொல்லலாம். 11. தமிழில் தரமான காமிக்ஸ் வெளியிட பிரபல பதிப்பகங்கள் முன்வர வேண்டும் என்ற உங்கள் ஆவலை வலியுறுத்தலாம். 12. ஆங்கிலத்தில் குறைந்த விலையில் காமிக்ஸ் கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம். இவற்றின் இந்தியப் பதிப்புகளை வெளியிட, உள்நாட்டுப் பதிப்பகங்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கலாம். 13. முழுவதுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு வெளியாகும் தரமான ஆங்கில கிராபிக் நாவல்களை அறிமுகப் படுத்தலாம். இது போன்ற முயற்சிகள் தமிழில் இல்லை என்று அங்கலாய்க்கலாம்! 14. வளர்ந்து வரும் டிஜிட்டல் (Licensed) காமிக்ஸ் டிரெண்ட் பற்றி பேசலாம். இப்படிப்பட்ட மாறுதலான யோசனைகள் வேறு ஏதேனும் இருந்தால் இங்கே பகிரலாமே?! காமிக்ஸ் பற்றிய ஆவலைத் தூண்டும் ஒரு பயனுள்ள ‘செய்தித் துணுக்கு’ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கீழே உள்ள தினகரன் கட்டுரை ஒரு உதாரணம். சினிமா பிரபலங்கள் தங்களின் பேட்டிகளின் இடையே ‘இரும்புக்கை மாயாவி’ பற்றி ஓரிரு வரிகள் பேசிச் செல்வதை விட, இது போன்ற நறுக்கென்ற காமிக்ஸ் செய்தி தாங்கி வரும் சினிமா கட்டுரைகள் பன்மடங்கு பயன் தரும் என்பது என்  கருத்து! - இரத்தப் படலம் – லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் – தினகரன் வெள்ளி மலர் சிறப்பு கட்டுரை இரத்தப் படலம் குறித்து வெளியான செய்திகள் / கட்டுரைகள், இதுவரை காமிக்ஸ் படிக்காத வாசகர்களையும் காமிக்ஸ் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. மற்றொரு உதாரணம்: - XIII – தினகரன் நாட்டாமை பதில்கள் XIII பற்றிய இன்னொரு செய்தி! ஆனால், இது ஏதோ குழந்தைகளுக்கான காமிக்ஸ் என்ற ரீதியில் அரசு எழுதி இருப்பார்! - XIII – குமுதம் அரசு பதில்கள் (நன்றி: கட்டுரை இணைப்புகள் நண்பர் விஸ்வாவின் TCU Comics Cuts-ல் இருந்து பெறப்பட்டுள்ளன!) ‘காமிக்ஸ் பற்றி ஊடங்களில் கட்டுரை / பேட்டி வருவதே பெரிய விஷயம், அதிலும் குறை காண்பதா?’ என்ற உங்களின் மனக்குரல் எனக்குள்ளும் எதிரொலித்திடத் தவறவில்லை! இவற்றின் பின்னணியில் இருக்கும் யதார்த்தங்கள், பத்திரிக்கை ஆசிரியரால் வெகுஜன ரசனையை கருத்தில் கொண்டு செய்யப்படும் மாற்றங்கள், நிருபர்களுக்கு என இருக்கும் சில கட்டுப்பாடுகள் இவற்றையும் உணர முடிகிறது! ஆனால், காமிக்ஸ் பற்றிய பத்திரிக்கை கட்டுரைகள் / தொலைக்காட்சி பேட்டிகள் வெளிவர காரணமாக இருக்கும் ஊடகம் சார்ந்த நண்பர்கள், மேற்கண்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு கட்டுரைகளை / பேட்டிகளை வடிவமைக்க முயற்சிகள் மேற்கொண்டால், பொது மக்களிடையே காமிக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம். [] இறுதியாக, நான் இந்தியா டுடேவுக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்துள்ளேன். காமிக்ஸ் பதிவர்கள், சித்திரக்கதை விமர்சனங்கள், ஃபேஸ்புக் குழுமங்கள், தீவிர வாசகர்கள், ஐரோப்பிய காமிக்ஸ், மாறி வரும் ரசனை, சென்சார் மற்றும் பண்பாடு பற்றிய சூடான இணைய விவாதங்கள் என்று சற்றே மாறுதலான கோணத்தில் நான் எழுதி இருந்தாலும், வழக்கமான ‘டெம்ப்ளேட் தகவல்களையும்’ அவற்றுடன் இணைத்து, நீட்டி முழக்கி ‘வள வள’ என்று எழுதி இருந்தததால், சொல்ல வந்த முக்கியமான கருத்துக்கள் வெளியாகாமல் அடிபட்டுப் போய் விட்டன என்ற ஆதங்கம் மட்டுமே மிச்சமிருக்கிறது! [:(] 14 ஈரோடு புத்தகப் புயலிலே ஒரு ப்ளேடு! [] சிறந்த புத்தகங்கள் சிறந்த நண்பர்களுக்கு ஈடானவை; அத்தகைய புத்தகங்களை நமக்கு அறிமுகப் படுத்துபவர்களும் சிறந்த நண்பர்களே – அப்படிதான் கார்த்திகைப் பாண்டியன் அவர்களும் எனது மனதில் இடம் பிடிப்பார்! நண்பர் ஒருவரின் புத்தகத்தை வெளியிடுவதற்காகவும், லயன் காமிக்ஸ் ஸ்டாலை பார்வையிடுவதற்காகவும் ஈரோடு வந்திருந்த அவர், தானொரு பிரபல பதிவர் என்ற எந்தவொரு தோரணையுமின்றி சட்டெனப் பழகினார். கா.பா., “வலசை” என்றொரு இலக்கியச் சிற்றிதழையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடப் பட வேண்டிய விஷயம்! [] நேற்யைய நண்பகலை சில மணி நேரங்கள் விழுங்கி இருந்ததொரு தருணத்தில், ‘காமிக்ஸ் தவிர வேறெதுவும் படிப்பதில்லையா கார்த்தி?’ என்றவரிடம் ‘இலக்கியம் என்றாலே எனக்கு அலெர்’ என ஆரம்பித்து பிறகு ‘ஜி’யை வெட்டி ‘பயம் ஜி’ என்று ஒட்டினேன்! ‘இதுவரைக்கும் வேறு புத்தகங்கள் அதிகம் படிச்சது இல்ல, ஏதாவது நல்ல புத்தகத்தை பரிந்துரையுங்களேன்!’ என்றேன்; ‘எஸ். இராமகிருஷ்ணனோட துணையெழுத்து படிச்சுப் பாருங்க’ என்றவர், அந்தப் புத்தகம் தன்னை எவ்விதம் பாதித்தது என்பது பற்றியும் பேசினார். வேறு சில எழுத்தாளர்களையும், அவர்களின் சில சிறந்த படைப்புகளையும் பட்டியலிட்டார். கிளம்புவதற்கு முன் விகடன் பதிப்பகத்தில் வாங்கிய துணையெழுத்து ஈரோடு முதல் பெங்களூர் வரை இரயிலில் எனக்கு துணையாக இருந்தது. பயணம் முடிந்து பெங்களூர் வந்தாகி விட்டது, பாதி புத்தகத்தையும் கடந்தாகி விட்டது, ஆனால் மாற்று வாசிப்புக்கான எனது பயணம் இன்னமும் தொடக்கப் புள்ளியில்தான் நின்று கொண்டிருக்கிறது! சில மாதங்களுக்கு முன்னர் வாங்க எண்ணி பிறகு வாங்காமலேயே விட்ட “~புயலிலே ஒரு தோணி~ புத்தகம் எப்படி?!’ என்று கா.பா.விடம் கேட்டதிற்கு, தமிழின் சிறந்த  படைப்புகளில் அதுவும் ஒன்று என அவர் கூறியதால் அதையும் வாங்கினேன்! சாருவின் ஜீரோ டிகிரியை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களைக் கூட தாண்ட முடியாமல் தூக்கிப் போட்டதை அவரிடம் சொன்னபோது, எனது வாசிப்பு எல்லையை விரிவு படுத்திவிட்டு அதை மீண்டும் படிக்க முயலுமாறு கூறினார். இரண்டாவது பத்திக்கு சில மணி நேரங்கள் முன்பாக: [] நேற்று திருப்பூரில் மனைவி குழந்தையை விட்டுவிட்டு  ஐந்து நாள் பேச்சலராக (பேச்சாளராக) பெங்களூர் திரும்பும் வழியில், ஈரோடு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். சென்னை புத்தக விழாவை  இதுவரை கண்டதில்லை, ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப் பெரிய புத்தக கண்காட்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்! புத்தகங்களாலும், ஜனத்திரளாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஸ்டால்களை கண்டும் காணாமல், நேராக 78ம் எண் தாங்கிய லயன்-முத்து காமிக்ஸ் ஸ்டாலை அடைந்த போது நேரம் நடுப்பகலைத் தொட்டிருந்தது! ஆசிரியர் விஜயன் அவர்கள், காமிக்ஸ் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். அவரிடம் வணக்கங்களை தெரிவித்து விட்டு – ஈரோடு நண்பர்கள் ஸ்டாலின், விஜய், புனித சாத்தான் & ஆடிட்டர் ராஜா இவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். வலையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்திருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது பழகுவதற்கு எளிய, இனிய நண்பர்களாகவே பரஸ்பரம் உணர்ந்தோம்! நேரில் சந்திக்கையில், மனத்தடைகளை உடைத்தெறிந்து எவ்வித தயக்கமுமின்றி இயல்பாய் சிரித்துப் பேசிடும் மனிதர்களை காண்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை!லயன் வலைப்பூவில் நான் கொடுக்கும் டார்ச்சர்களே போதும் என்பதால் நேரில் ஆசிரியரிடம் நான் அதிகம் பேசவில்லை; மாதந்தோறும் 100 ரூபாய் இதழ்களுக்கு பதிலாக இரண்டு ஐம்பது ரூபாய் இதழ்களாக வெளியிடலாமே என்ற கோரிக்கையை மட்டும் வைத்தேன். முகம் நிறைய சிரிப்புடன் வரவேற்கும் லயன் சீனியர் அலுவலர் ராதாகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனது தோளை அழுத்திக் கொண்டிருந்த ட்ராவல் பேகைப் கவனித்து, அவரருகில் சுமையை இறக்கி வைத்திடுமாறு அன்புடன் பணித்தார்! வேலு அவர்கள் வழக்கம் போல மும்முரமாக விற்பனையை கவனித்துக் கொண்டிருந்தார். புத்தக கண்காட்சியை – குறிப்பாக நமது காமிக்ஸ் ஸ்டாலையும், ஆசிரியரையும் பார்த்துப் பேசுவதற்கென்றே வெளியூர் வாசகர்கள் பலர் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்! லயன் வலைப்பூவில் அறிமுகமான கார்த்திகைப் பாண்டியன், சேலம் டெக்ஸ் விஜயராகவன், திருப்பூர் சிபி, பழனிவேல், தாரமங்கலம் பரணிதரன், ஷல்லூம் பெர்னாண்டஸ் மற்றும் பலரை (பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்) சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! கண்காட்சிக்கு வந்திராத பெங்களூர் வெங்கட் பிரசன்னா போனில் நலம் விசாரித்தார்! [] வலைக்கு அப்பாற்பட்ட பல வாசகர்களையும் காண முடிந்தது – சேலம் கார்த்திகேயன், கோவை செந்தில்குமார், அஸ்லம் பாஷா, பெங்களூர் அஜய் (மகேஷ்?), மற்றும் எனது சிறிய நினைவுப் பேழையில் சற்று நேரம் மட்டுமே தங்கி மறைந்த பல பெயர்கள், பல பேர்கள், பல ஊர்கள்!. அவர்களில் ஒரு சிலரிடம் மட்டுமே பேச இயன்றது என்றாலும், அவர்கள் அனைவரும் ஆசிரியருடன் எல்லை மீறிய உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலோனோர் இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு வேண்டுமென ஆசிரியரை துளைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் சிங்கத்தின் சிறு வலைக்கு பெரிய தூண்டிலாக போட்டுக் கொண்டிருந்தனர்.பொதுவாக வலைக்கு அப்பாற்பட்ட வாசகர்களிடம் – வலையில் நடக்கும் விவாதங்கள், சச்சரவுகள் பற்றிய ஒருவித கசப்புணர்ச்சி இருப்பதை அவர்கள் பேச்சில் இருந்து உணர முடிந்தது. அது பற்றிய சிலரின் கருத்துகளையும், அவற்றிக்கு ஆசிரியர் அளித்த சில பதில் கருத்துகளையும் கேட்க நேரிட்ட போது மிகவும் சங்கடமாக இருந்ததால் அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டினேன்! ஒவ்வொரு கேள்வியும் பதிலைத் தேடியே தத்தம் பயணங்களை மேற்கொள்கின்றன. தம்மை எப்பாடு பட்டேனும் அடையவே இத்தகைய கேள்விகள் விடாமல் துரத்துகின்றன என்று அந்த பதில்கள் சலித்துக் கொள்ளுமேயானால் கேள்விகள் நின்று விடும் அல்லது வேறு இடங்களில் கேட்கப்படும்! [:)] ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பார்வை, ஒவ்வொரு புரிதல்கள்! தங்களை குறையே இல்லாத மனிதர்களாக முன்னிறுத்திக் கொள்ள விரும்புபவர்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்! ஆனால் இவை அனைத்தையும் தாண்டி நம் அனைவரையும் இணைக்கும் கண்ணுக்குப் புலனாகாத அந்த காந்தப் பிணைப்பிற்கு மறுபெயர் காமிக்ஸ் என்பதை நான் சொல்லிடத் தேவையில்லைதான்! இந்த விழாவில் சந்தித்த மறக்க முடியாத நண்பர்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர் – முன்னவர் முதல் பத்தியில் வீற்றிருக்கிறார். மற்றவர் மதிய உணவுப் பந்தியில் கடைசியாக உண்ண அமர்ந்த ஈரோடு விஜய்! [] வலைப்பூக்களில் பரஸ்பரம் கலாய்த்தது, கட்டிப் புரண்டு சண்டையிட்டது என்று ஏற்கனவே ஈரோடு விஜயுடன் ஒரு ஆரோக்கியமான அறிமுகம் இருக்கிறது. கடைசியாக லயன் வலைப்பூவில் இட்ட பதில் பின்னூட்டதில் கூட அவரை பயங்கரமாக வாரியிருந்தேன். ஆனால், நேரில் பார்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதான எவ்வித அறிகுறிகளும் இன்றி நெடுநாள் பழகிய நண்பரை சந்திப்பது போலவே உணர்ந்தேன் (அவரும் தார் என்றே நினைக்கிறேன்). நான் முதன்முதலாக காமிக்ஸ் படித்த (பார்த்த) ஊர் ஈரோடு, அதுவும் “ஈரோடு அருள் நெறி திருப்பணி மன்றம்” பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த சமயம், அருள்நெறி மற்றும் ஆடைகள் விலகிய ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டின்  ‘அழகியைத் தேடி’-தான் நான் பார்த்த முதல் காமிக்ஸ் என்றதுமே விஜய் ஆவென வாய் பிளந்தார். அவரும் அதே பள்ளியில்தான் படித்திருக்கிறார், அதே காமிக்ஸைப் பார்த்திருக்கிறார். பிறகு சிறிது நேரம் காணாமல் போன விஜய் கையில் ஒரு “சுஜாத்+ஆ” வுடன் திரும்பினார். சுஜாதா எழுதிய அந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் “ஆ” என்ற ஒற்றைச் சொல்லுடன் முடியுமாம். நான் வியப்புடன் “ஓ!” என்றேன்! அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார்!ஸ்டாலுக்கு வருபவர்களிடம் பேச்சு கொடுப்பது, போட்டோ எடுப்பது, நண்பர்களிடையே ஜாலி கமெண்டுகள் அடிப்பது என்று சதா இயங்கிக் கொண்டே இருந்தார் விஜய்! நான் காலையில் சரியாக சாப்பிடாமல் கிளம்பியதாலும், திருப்பூர்-டு-ஈரோடு பஸ்ஸில் நின்று கொண்டே வந்த காரணத்தாலும் களைத்திருந்த என் முகத்தை கவனித்த விஜய், மற்றவர்களையும் துரிதப்படுத்தி உணவருந்த  ஏற்பாடு செய்தார். எல்லோரும் சாப்பிட அமர்ந்தும் கூட விஜய் மட்டும் நெடுநேரம் சாப்பிடாமால் போட்டோக்களை க்ளிக்கிக் கொண்டே இருந்தார். [] “லயன் வாசகர் விஸ்கி-சுஸ்கி உங்கள் பள்ளித் தோழரா? வார்த்தைக்கு வார்த்தை நண்பா என அழைத்து உரிமையுடன் பேசுகிறீர்களே?” என்றவரிடம் என்னை நண்பா என்று அழைப்பவர்களை நண்பா என்றும், நண்பரே என்று அழைப்பவர்களை நண்பரே என்றும் அழைப்பதாக தெளிவு படுத்தினேன். என்னை நண்பனாய் பாவிப்பவர்களுக்கு நான் நண்பன், மாறாக என்னை எதிரி என சிலர் முடிவு கட்டினால் நானும் அவர்களுக்கு எதிர்த் திசையில் அவர்களை விட வேகமாக நடையைக் கட்டி விடுவேன் – அவ்வளவே! அதே போல எனது அலைவரிசைக்கு ஒத்து வராத நண்பர்களிடம் அளவுடன் மட்டுமே நட்பு பாராட்டுவேன்! லயன் ஸ்டாலுக்கு வலதில் இருந்த பெரியார் புத்தகங்கள் மட்டும் அடுக்கியிருந்த அந்த ஸ்டாலை என் கண்கள் நோட்டமிடுவதை கவனித்த ஆடிட்டர் ராஜா “பெரியாரின் நூல்கள் படிச்சிருக்கீங்களா?” எனக் கேட்டார்; ‘இல்லை, இலக்கியம் படிப்பதில்லை’ என நான் சொன்னதும் சட்டென நிமிர்ந்து ‘இது இலக்கியம் இல்லை, வாழ்க்கை’ என்றார். ‘நீங்களே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுங்களேன்?’ என்றதும், ‘சின்னதா ஆரம்பிங்க’ எனச் சொல்லியவாறு “மனிதனும் மதமுமை” பரிசளித்தார். தொடர்ந்து பேசியதில், விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஜான் பெர்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” புத்தகத்தை உங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்றார். அந்த “உங்களைப் போன்ற” என்ற வார்த்தைக்குப் பின்னே புதைந்திருக்கும் அர்த்தங்களை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது! அந்த புத்தகத்தை பார்த்தும் வாங்காமல் தவிர்த்து விட்டேன்! பிரிதொரு சமயத்தில் படிக்க முயற்சிப்பேன்! [] புனித சாத்தான் சோமசுந்தரம் அவர்களும் நன்றாகப் பேசினார். அருகில் அவரது மனைவியார்  இருந்ததாலோ என்னவோ, பணிவுடன்  ‘குனிந்த தலை சாத்தனாராகவே’ காட்சி அளித்தார். ஆனாலும் தனது புதிய செவ்விந்தியப் பெயருக்கேற்ப வாய் நிறைய ‘சிரிக்கும் சாத்தானாக’ ஸ்டாலை வலம் வரவும் செய்தார். எனது கிரீன் மேனர் மொழிபெயர்ப்பை மிகவும் ரசித்ததாக கூறினார், சம்பிரதாய பாராட்டுகளைப் போலன்றி அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் தொக்கி நின்ற அந்த உண்மையை நான் ரசித்தேன்.நண்பர் ஸ்டாலின் வழக்கமாக போனில் பேசுவதைப் போலவே உற்சாகமாகப் பேசினார். போட்டோவில் பார்த்ததை விட நேரில் சற்று இளமையாகவே தோற்றமளித்தார். கிமுவில் சோமு என்ற தமிழ்ச் சித்திரக் கதையை எனக்கு பரிசளித்தார்! சோமலிங்கா என்ற பெயரைப் பார்த்துத்தான் அந்தக் கதையை தேர்ந்தெடுத்தாரா என்பது தெரியவில்லை. ஆசிரியரையும் நண்பர்களையும் பேட்டி எடுப்பதில் மும்முரமாக இருந்தார் மனிதர். பிறகு காமிக்ஸ் பற்றிய கருத்துக் கணிப்பிற்காக கேள்விகள் அடங்கிய தாள்களை அனைவருக்கும் விநியோகித்தார். “நான் லயனில் அதிகம் எதிர்ப்பார்ப்பது மாயாவி, ஸ்பைடர் & ஆர்ச்சி கதைகளையே” என்று சும்மா லுல்லுலாயிக்கு எழுதிக் கொடுத்தேன்! [:)] தமிழைக் கூட ஆங்கில கீபோர்ட் + Google Transliteration துணையுடன் டைப்பிக் கொண்டிருக்கும் எனக்கு, பேனாவைப் பிடித்து  தமிழை எழுதுவதற்குள் ஆங்ஞை வற்றி விட்டது. கோவை ஸ்டீல் க்ளாவால் கண்காட்சிக்கு வர இயலவில்லையாம், போனில் சில வார்த்தைகள் அன்பாகப் பேசினார். ப்ளாகர் நண்பர் அப்துல் பாஸித் கேட்டிருந்த காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி பையில் திணித்துக் கொண்டேன். நான் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலையும் (அவருக்காக) வாங்கியதைக் கண்டு எடிட்டர் முதற்கொண்டு பலரின் புருவங்கள் ஸ்பைடரின் புருவங்களைப் போல மேல் நோக்கி உயர்ந்தன! ‘நண்பர் ஒருவரை பழிவாங்கும் நடவடிக்கை’ என்றவாறு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்!நண்பர் பழனிவேலின் அழகுக் குட்டிப் பாப்பா வர்ஷா “மேற்கே ஒரு குட்டிப் புயலை” சப்பித் தின்று கொண்டிருந்தது! பரணிதரனின் மகன் தூக்கக் கலக்கத்தில் நின்று கொண்டிருந்தார். புனித சாத்தானின் மகள் மும்முரமாக பஜ்ஜி தின்று கொண்டிருந்தார். ஆடிட்டர் ராஜாவின் மகன் தனது தந்தை கேட்ட காமிக்ஸ் கேள்விகளுக்கு ஆர்வமின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சுற்றிலும் களேபரமாக இருந்தாலும் அதில் இருந்து விலகி நிற்கும் குழந்தைகளது இந்த தனி உலகம் மிகவும் சுவாரசியமானது! அவர்கள் வளர்ந்த பிற்பாடு வாழவிருக்கும் சம உலகில், நாமும் அவ்வாறே விலகி நின்று கடந்து சென்ற பழைய உலக நினைவுகளை அசை போட்டவாறு  உறைந்திருக்கப் போகிறோம்! மணி மூன்றைத் தொடவிருந்த வேளையில் மற்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களுக்கு ஒரு அவசர விசிட் அடித்தேன். தமிழ் எழுத்துக்கள் அடங்கியதொரு அழகிய அட்டையை என் குட்டிக்காக வாங்கினேன். புயலிலே ஒரு தோணி, துணையெழுத்து, என் அம்மா கேட்டிருந்த PKP & ராஜேஷ் குமார் நாவல்கள் இவற்றை வாங்கிக் கொண்டு லயன் ஸ்டாலுக்கு திரும்பினேன். [] மாலை நாலரை மணிக்கு ட்ரைன் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் 3:45க்கு பரபரத்துக் கொண்டிருந்த என்னை, ஸ்டாலினின் ஸ்ப்லெண்டரில் டிராப் செய்கிறேன் என்று விஜய் ஆசுவாசப் படுத்தினார். ‘ஸ்ப்லெண்டிட்’ கண்டிஷனில் இருந்த அந்த வண்டி நெடுநேரம் வரை ஸ்டார்ட்டே ஆகவில்லை. ‘நான் ஆட்டோல வேணா போய்க்கறேன் விஜய்’ என்ற என் வார்த்தைகள் அவரின் தன்மானத்தை சீண்டிப் பார்த்ததும், வலது காலை ஓங்கி ஒன்றரை டன் எடையுள்ள உதையை கிக்கருக்கு அவர் பரிசளிக்க வண்டி மெதுவாக உருளத் தொடங்கியது. பத்து அடிக்கு ஒரு முறை இளைப்பாற நின்ற அந்த வண்டியைப் பார்த்ததில் வயது ஏறி இருப்பது நண்பர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல என்ற உண்மை மட்டும் உள்ளங்கை பூசணி போல தெளிவாகத் தெரிந்தது! ஈரோட்டு புத்தக கண்காட்சி அனுபவங்களால் மனதில் மகிழ்ச்சியும் ஏறி இருந்தது!பி.கு.: நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஜோரில் விழாவை சரியாக படம் பிடிக்க இயலவில்லை. கேமரா கொண்டு செல்ல மறந்ததும் ஒரு காரணம். இந்தப் பதிவில் உள்ள ஓரிரு புகைப் படங்கள் நண்பர் ஸ்டாலினின் வலைப்பூவில் இருந்து பெறப்பட்டுள்ளன, மற்றவை யாவும் என் செல்போனின் கைவரிசை – மேலும்  படங்கள் பிறகு இணைக்கப்படும்! புத்தக விழா குறித்த தினசரி அப்டேட்களை இங்கே படிக்கலாம்! http://www.tamilcomicskadanthapaathai.blogspot.in/ 15 ஹெராயினும், சென்சாரில் சிக்கிய ஹீரோயின்களும், பின்னே ஞானும்! தலைப்பைப் பார்த்து இப்படியா ஆசையாக ஓடி வருவது?! சற்று நில்லுங்கள். சிந்தியுங்கள் – இந்தியாவில் சென்சாரின் வீச்சு, நீங்கள் சிறுபிள்ளை சமாச்சாரம் என (தவறாக) நினைத்திடும் காமிக்ஸ் வரை நீளும் என்பதை உங்களால் கனவிலும் நம்பிட இயலுமா? இந்த சிந்தனையுடன் தொடர்ந்து படியுங்கள்! முத்து காமிக்ஸ் மார்ச் வெளியீடாக, ‘துரத்தும் தலைவிதி’ மற்றும் ‘விதியோடு விளையாடுவேன்’  என்ற லார்கோ வின்ச்சின் இருபாக ஆக்ஷன் திரில்லர் வெளிவந்திருக்கிறது! சம்பவம் நடந்த இதழ் இதுதான்!!! [:)] ஹெராயின்: [] கதைச்சுருக்கம்: கட்டுக்கடங்காத பெரிய நிறுவனமான W குழுமத்தின் டைரக்டர்களில் ஒருவர், நிறுவன அதிபர் லார்கோவுக்கு தெரியாமல் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறார். ஆனால் அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை என்னவோ லார்கோ மீதுதான் விழுகிறது. விசாரிக்க வரும் அதிகாரிகளைக் சுட்டுக் கொன்று, அந்த பழியும் லார்கோ மீது விழுமாறு எதிரிகள் ஜோடிக்கிறார்கள். சைமனின் துணையுடன் லார்கோ இந்த சிக்கலில் இருந்து எப்படி விடுபடுகிறார், தனது குழுமத்தின் மீது படிந்த கறையை எப்படி நீக்குகிறார் என்பது மீதக் கதை!அழுத்தமான கதையம்சம் கொண்ட ஒரு கனத்த புதினத்தை படித்திடும் திருப்தியை தந்திட லார்கோவின் கதைகள் ஒருபோதும் தவறுவதில்லை! எக்கச்சக்கமான பாத்திரங்கள், கிளைக்கதைகள், பக்கம் பக்கமாய் வசனங்கள் & விவரிப்புகள் – போன்ற அம்சங்கள் நிறைந்திருந்தாலும், அயற்சியூட்டாமல் கதை பயணிக்கிறது! இதற்கு ஆசிரியரின் அபாரமான தமிழாக்கமும் பெருமளவு உதவியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை! [] சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே மதிப்பு கொண்ட மூலப் பொருள்களில் இருந்து, பல மில்லியன் பெறுமானமுள்ள ஹெராயின் எப்படி தயாராகிறது; பிறகு அது எப்படி சந்தைப்படுத்தப்படுகிறது  என்பது குறித்த விரிவான தகவல்கள் வியப்பை அளிக்கின்றன! நக்கல் வசனங்கள் அடிப்பதில் கிட் கார்சன் (டெக்ஸ்) வரிசையில் சைமனும் விரைவில் இணைந்து விடுவார் போல – நகைச்சுவை கலந்த வசனங்கள் ரசிக்க வைக்கின்றன! []முன்னட்டையில் லாரன்ஸ் & டேவிட்டை நினைவுறுத்தும் வகையில் ஷார்ப்பான லுக்குடன் நிற்கிறது லார்கோ & சைமன் ஜோடி! ஆனால், கட்டிடங்கள் சரிவது போன்ற ரியலிஸ்டிக் பின்னணியின் வண்ணக்கலவை இவர்களோடு பொருந்தாமல் தனித்துத் தெரிகிறது! சமீப காலமாக பச்சை நிறக் கதிர்கள் பின்னட்டையில் நிரந்தர இடம் பிடித்திருப்பதை கவனிக்க முடிகிறது.கருப்பு வெள்ளை மற்றும் வண்ண காமிக்ஸ்களை தனித்தனியே வெளியிடுவதே சிறந்தது என்ற பல வாசகர்களின் கோரிக்கையை நனவாக்கியிருக்கும் முதல் முழுவண்ண இதழ் இது! மியாவி, ஹேகர், மதியில்லா மந்திரி (KBT போட்டிக்கான கதை, ஆசிரியரின் மொழிப்பெயர்ப்புடன்!) போன்ற பக்க நிரப்பி கதைகளுக்கு பஞ்சமில்லை. KBT-யில் வென்ற வாசக நண்பர் பாண்டிச்சேரி D.செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள்! [:)] அவருடைய மொழியாக்கம் தனியே ‘பாட்டு புத்தகம்’ போல இணைப்பாக வந்துள்ளது!!! KBT பற்றிய மேலதிக விவரங்கள் சற்று கீழே! சென்சாரில் சிக்கிய ஹீரோயின்கள்: தமிழ் காமிக்ஸ் வட்டாரத்தில் சமீப காலத்தில் அதிகமாக அடிபடும் வார்த்தை சென்சார்! திறந்த மேனி மேலைநாட்டுப் பெண்டிருக்கு ஆடை போர்த்தி அழகு பார்ப்பது தமிழ் காமிக்ஸ் உலகில் புதிதல்ல என்றாலும்; சமீபத்தில் மாடஸ்டியின் திருமேனியை கோடு போட்டு மறைத்ததாலும், லார்கோவின் நாயகிகளை(!) போர்வை போர்த்தி ஒளித்ததாலும் – எழுச்சி(!) கொண்டு பொங்கி விட்டனர், தமிழ் காமிக்ஸ் மீது காதல் கொண்ட காளையர்கள்! எடி ப்ளாகில் பலத்த அடிதடியே நடந்தது. ஒரு பக்கம் கலாசாரக் காவலர்கள், மறுப்பக்கம் சென்சாரை எதிர்க்கும் கலாச்சார எதிரிகள்(!), இவர்களுக்கு நடுவில் சிக்கித் தவித்த மிதவாதிகள் – இவற்றை எல்லாம் எட்ட நின்று ரசித்த எடிட்டர் என படு குஜாலாக சில நாட்கள் நகர்ந்தன. [:)] எடிட்டர் ப்ளாகில் சென்சார் குறித்து நான் இட்ட பின்னூட்டங்களை ஒன்று தொகுத்து, இது பற்றிய எனது இறுதியான பார்வையை ஒரு தனிப் பதிவாக இடலாமா என்று யோசித்து வருகிறேன்! காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் என்று இன்னமும் குழந்தைத்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் நம்மாட்கள் அந்தப் பதிவைப் படித்தால், ‘அட காமிக்ஸில் கூட சென்சாரா?! என வாயைப் பிளப்பார்கள் அல்லவா?! அப்படியாவது அவர்களுக்கு காமிக்ஸின் பால் சற்றேனும் ஈடுபாடு ஏற்பட்டால் சரிதான்! பின்னே ஞான்: Kaun Banega Translator (சுருக்கமாக KBT!) என்ற ஹிந்தி காமிக்ஸ் மொழிபெயர்ப்பு போட்டியில் கலந்துகொண்ட நான் தவறுதலாக தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பியிருந்ததால் இரண்டாவது பரிசே கிடைத்தது! அந்த மொழியாக்கத்தை கீழே படிக்கலாம்! The Invisible Menace – மதியில்லா மாயாவி! பிரபலமான நகைச்சுவை பன்ச் வசனங்களை இடையில் நுழைக்காமல், வசன உருவாக்கத்தில் அதிகம் சுதந்திரம் எடுத்துக் கொள்ளாமல்; போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த பிரெஞ்சுக் கதையின் – ஆங்கில மொழிபெயர்ப்பை அப்படியே அடியொற்றி எடுத்தது,  நண்பர்களிடையே சற்றும் வரவேற்பை பெற்றிடவில்லை என்பதுதான் உண்மை. சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்க்கும் பாணி சீரியஸ் கதைகளுக்கு வேண்டுமானால் அவசியப்படலாம் ஆனால், நகைச்சுவைக் கதைகளில் நம்மவர்கள் உடனடி சிரிப்பை வரவழைக்கும் மொழி மாற்றத்தையே விரும்புகிறார்கள் என நினைக்கிறேன் (அது மூல வசனங்களை சற்றே மாற்றுவதாய் அமைந்தாலும்!).என்னுடைய இந்த சோதனை முயற்சி(!) படுதோல்வியை தழுவியிருப்பதால்; அடுத்ததாக KBT2-வில் பங்கு பெற்று, ஓரளவு சீரியஸ் கதையான க்ரீன் மேனரை, செம காமெடியாக மொழிபெயர்க்கலாமா என்று படு சீரியஸாக யோசித்து வருகிறேன்! [;)] தமிழில் தலைப்பு வைத்த துராத்மா!: வாசக நண்பர் ஸ்டாலின் பகிர்ந்திருக்கும் இந்த இந்திரஜால் காமிக்ஸ்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பீதியாக இருக்கிறது! லயன் / முத்து வெளியீடுகளுக்கு ‘ஸ்பெஷல்’ என்று முடியும் பெயர் வைக்கச் சொல்லி விஜயன் அவர்கள் மீண்டும் வற்புறுத்தினால்; அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இது போன்ற டெர்ரர் தலைப்புகளை முன்மொழியலாமே?! [;)] எங்கே, உங்கள் திறமையை சாம்பிளுக்கு பின்னூட்டங்களில் காட்டுங்கள் பார்ப்போம்?! [:)] தமிழ் காமிக்ஸில் தமாசு தலைப்புகள் – பாகம் 1001! முகநூலின் சண்முகங்கள்: ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்காத நண்பர்களுக்காக, ஃபேஸ்புக் குழுமங்களில் இருந்து ஒரு குட்டி அப்டேட்! முதல் முகம்: ஃபேஸ்புக் நண்பர் ரமேஷ் சண்முகசுந்தரம் “தமிழில் படிக்க ஆசை!” என்ற பெயரில் தனியே ஒரு குழுமத்தை தொடங்கி அதில், அவருக்கு பிடித்தமான பிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ்களின் மாதிரிப் பக்கங்களை தமிழில் அறிமுகப் படுத்துகிறார்! ‘இது ஸ்கேன்லேசன் தளம் அல்ல, தமிழில் இதுவரை வராத கதைகளைப் அறிமுகம் செய்யும் நோக்கில் துவக்கப்பட்ட தளம்‘ என்று  தெளிவுறுத்தும் ரமேஷ், பிராங்கோ-பெல்ஜிய வகையில் வெளியாகியுள்ள மொத்த கதைகளின் எண்ணிக்கை 139755 என்ற தலையை சுற்றவைக்கும் புள்ளிவிவரத்தை தருகிறார்! இவற்றில் இருந்து அதிகபட்சம் ஒரு 100 கதைகள் தமிழில் வெளியாகி இருக்குமா?! – சிறுதுளி!!!இரண்டாம் முகம்: ஃபேஸ்புக்கில் இன்னுமொரு சண்முகசுந்தரம் இருக்கிறார். சமீப காலமாகத்தான் பதிவிட்டு வருகிறார் (நான் கவனித்த வரையில்!)! லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு மாதிரி அட்டைகளை வடிவமைத்து அசத்துகிறார் மனிதர்! அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் சில மாதிரி அட்டைகள் இதோ. குறிப்பாக இரத்தத்தடத்தின் அட்டை வடிவமைப்பு தூள் ரகம்! பார்டர் இல்லாத இது போன்ற அட்டைகளே எடுப்பாக இருக்கின்றன என்பது என் கருத்து! [:)] வாசகர்களின் மொழிப்பெயர்ப்பு திறமையை வெளிக்கொணர KBT போட்டி வைத்தது போல, இதற்கும் ஒரு KBD (Kaun Banega Designer) வைத்தால் வாசகர்கள் ப(அ)ட்டையை கிளப்புவார்கள் என நினைக்கிறேன்! [:)] +-----------------------------------+-----------------------------------+ | [] | [] | +-----------------------------------+-----------------------------------+ | [] | [] | +-----------------------------------+-----------------------------------+ கடைசியாக… மூன்று முகம்: இது ரஜினிகாந்த் நடித்த படம், ஆனால் அதில் அவர் பெயர் சண்முகசுந்தரம் அல்ல, அலெக்ஸ் பாண்டியன்! [:)] 16 லயன் காமிக்ஸ் 29வது ஆண்டு மலர் - ஆல் நியூ ஸ்பெஷல் - ஒரு அலசல்!   [] லயன் காமிக்ஸின் 29-வது ஆண்டு மலராக ‘All New Special‘ என்ற சிறப்பிதழ், ₹200 விலையில், 214 பக்கங்களுடன், நான்கு கதைகளைத் தாங்கி வெளியாகி இருக்கிறது! இந்த இதழின் 7 பக்கங்களில் சிறிதாக எனது பங்களிப்பும் இருக்கிறது! KBT2 போட்டிக்காக, க்ரீன் மேனர் தொடரின் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்து நான் அனுப்பி வைத்த தமிழாக்கம் தேர்வாகி, இந்த இதழில் அச்சேறி இருக்கிறது! எனது எழுத்துக்களை எனக்கு பிடித்த காமிக்ஸ் இதழிலேயே வாசிப்பது என்பது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது! வாய்ப்பு அளித்த லயன் ஆசிரியர்  திரு.S.விஜயன் அவர்களுக்கு நன்றி! இதை சாக்காக வைத்தாவது எனது மனைவியை மீண்டும் காமிக்ஸ் படிக்க வைக்கலாம் என்று முயற்சித்து வருகிறேன்! [:)] முதல் முயற்சி படு தோல்வி அடைந்த சோகக் கதையை கடந்த பதிவின் கடைசி பத்திகளில் படித்து மகிழலாம்! இனி விமர்சனத்துக்குள் செல்வோமா ஜென்டில்மென்?!1. கொலை செய்வீர் கனவான்களே! (Green Manor): தன் வாழ்நாளின் பெரும்பகுதியை க்ரீன் மேனர் என்ற மேல்தட்டு க்ளப்பில் பட்லராக கழித்த தாமஸ் பிலோ, ஓய்வு பெரும் தருவாயில் சித்தம் பேதலித்து கொடூர புத்தி கொண்டவனாக மாறுகிறான். அந்த க்ளப்பில் நடந்த பல குற்றங்களுக்கு மௌன சாட்சியாக இருக்க நேர்ந்த அவலம்தான் அதற்கு காரணமா? மனநல காப்பகத்தில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் அடைக்கப்படும் தாமஸ், க்ரீன் மேனர் க்ளப்பின் இருண்ட பக்கங்களை டாக்டர் தார்ன் என்ற மனவியல் நிபுணரிடம் அசை போடுகிறான்… நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக படித்தால் இக்கதைகள் பைத்தியக்காரத்தனமாகக் தோன்றலாம்! சித்திரங்களையும் உன்னிப்பாக கவனிக்கா விட்டால் சரியாக புரியாமலேயே போய் விடலாம் (உதாரணம்: சிறு கொலையும் கைப்பழக்கம் கதையின் முடிவு)! ஆனால், மனம் ஓய்வாக இருக்கும் ஒரு தருணத்தில் நிதானித்துப் படித்தால், மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிடும் இக்கதைகளின் ஆழம் அனைவருக்கும் புரியும்! ஆறு சிறுகதைகள் கொண்ட இந்த முதல் பாகத்தில், ஒவ்வொரு சிறு கதையும் ஒரு சோகமான ஆனால் நகைப்புக்குரிய திருப்பத்துடன் முடியும்; எனவேதான் இந்தப் படைப்பு Dark Humor / Black Humor (இருண்ட நகைச்சுவை) என்ற பிரிவில் வகைப் படுத்தப் படுகிறது! 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், விக்டோரியன் இங்கிலாந்தில் நடைபெற்ற (கற்பனை) சம்பவங்களின் தொகுப்பு என்பதால், சற்று வித்தியாசமான தமிழ் நடையை விஜயன் அவர்கள் கையாண்டிருக்கிறார். இந்தத் தொடரின் ஆங்கில பதிப்பே நீட்டி முழக்கிப் பேசும் பழைய ஆங்கில நடையை கொண்டிருக்கும் போது, தமிழில் மட்டும் சுருக்கமான பின்நவீனத்துவ வசனங்களையா எதிர்பார்க்க முடியும்?! [:)] [] ஆனால், சமகால பாணியில் இல்லாத தமிழ் வசனங்கள் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு சற்று அன்னியமாக தோன்றலாம்! நான் மொழிபெயர்த்த பகுதியை மட்டும் பெரும் கெஞ்சல்களுக்குப் பின் படித்த என் மனைவியார் (“மனைவியர்” அல்ல) – ‘தமிழ்ல புரியற மாதிரி எழுதி இருக்கலாமே?!’ என்று கடுப்பேற்றினார். எனக்காக, 20 வருட இடைவெளிக்குப் பிறகு காமிக்ஸ் படித்த என் அண்ணனுக்கு கதை + தமிழ் நடை மிகவும் பிடித்திருந்ததிற்கு இந்த தலைமுறை இடைவெளி ஒரு காரணமாக இருக்கலாம்! என்னளவில் நான் தூய தமிழுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை, துயரத்தை பகடி செய்யும் விக்டோரியன் கால க்ரீன் மேனருக்கு அதுவே பொருத்தமானது என்ற ஆசிரியரின் முடிவோடு முழுதும் ஒத்துப் போகிறேன்! ஆனால், வழக்கில் இல்லாத சொற்பிரயோகங்கள் அதிகம் வேண்டாம், அவை புதிதாய் காமிக்ஸ் படிக்க முயல்பவர்களுக்கு ஒரு தடையாக அமைந்து விடக்கூடும் என்ற என் கருத்தை லயன் ப்ளாகில் தெரிவித்து இருந்தேன்! ஆசிரியரும் வரவிருக்கும் க்ரீன் மேனர் பாகங்களில் இதை கவனத்தில் கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார்! உதாரணத்திற்கு, கீழ்க்கண்டவற்றை தவிர்க்கலாம்: 1. ‘வெற்றார்ப்பரிப்பு’, ‘கற்பனைக்கப்பாற்பட்டதொரு’ – இவை போன்ற படிக்க சிரமம் தரும்  கூட்டுச் சொற்கள்! 2. நிஷ்டூரம், நல் நேர நஞ்சு, யெளவனமான யுவதி – போன்ற வழக்கில் இல்லாத பிரயோகங்கள்! லயன் ப்ளாகில், எனது இந்த கருத்துகளுக்கு ‘சில’ வாசகர்கள் எதிர்க் கருத்து தெரிவித்து இருந்தனர். க்ரீன் மேனரில் காணப்படும் இருண்ட நகைச்சுவை (இ.ந.) அனைவரையும் கவராது என்பது ஒருபுறம் இருக்க, பேஸ்புக்கில் இ.ந. என்றால் என்ன என்பது குறித்து ஒரு நீண்ட விவாதமே நடந்தது! உட்கார்ந்து யோசித்ததில், சில வாசகர்களுக்கு உதித்திருக்கும் திடீர் தமிழ் பற்றே ஒரு இருண்ட நகைச்சுவையாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது! “முற்றிலும் புதுமையான சிறப்பிதழ்” என்று தமிழ்ப்பெயர் வைக்காமல், “லயன் ALL NEW ஸ்பெஷல்” என்ற ஆங்கிலப் பெயர் தாங்கிய கொட்டை எழுத்துக்கள் அட்டையில் மின்னுவது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையாம்! ‘டாக்டர்’, ‘போலிஸ்’, ‘ஜென்டில்மென்’, ‘ஓ. மை காட்’ என கதை நெடுக ஆசிரியர் ஆங்கிலம் கலந்து எழுதி இருப்பதும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லையாம்; நிஷ்டூரம் போன்ற சம்ஸ்கிருத சொற்களும் இந்தக் கண்மணிகளுக்கு உறுத்தவில்லையாம்! ஆனால், நான் ‘வழக்கில் இல்லாத தமிழ் சொற்கள் வேண்டாமே!’ என்று கருத்து தெரிவித்ததைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உடனே தமிழ்ப்பற்று பொங்கி வழியத் துவங்கி விடுகிறதாம்!!! இதை விட ஒரு பெரிய இருண்ட நகைச்சுவை வேறு என்னவாக இருந்திட இயலும்? [:)] ஒரு நிஷ்டூர சுய பிரசங்கம்: பக்கம் 33ல் துவங்கி 40 வரை, நான் தமிழாக்கம் செய்த “இரசித்துக் கொல்ல வேண்டும்!” கதை இடம் பெற்றுள்ளது! இக்கதைக்காக, கீழ்க்கண்ட இரண்டு தலைப்புகளையும் பரிசீலனையில் வைத்திருந்தேன்: 1. கலைகார கொலைஞர்கள்! 2. ஆய கொலைகள் அறுபத்திநான்கு! ”சிரித்துக் கொல்ல வேண்டும்!’ (The killing joke) எனக்கு மிகவும் பிடித்த பேட்மேன் கதைகளில் ஒன்று! அதை நினைவு கூரும் விதமாக “இரசித்துக் கொல்ல வேண்டும்!” என தலைப்பிட்டேன்! உங்களுக்கு எந்த தலைப்பு  பொருத்தமாக தோன்றுகிறது நண்பர்களே? 2. தோட்டா தேசம் (Comanche): வழக்கமான வெஸ்டர்ன் ஷெரிப், ரேஞ்சர், bounty hunter ரக சாகசங்களில் இருந்து விலகி ஒரு நிஜமான ‘கௌபாய்’ கதையாக அமைந்துள்ளது! மாட்டுப் பண்ணையை தனித்து பாதுகாக்க முடியாமல் தவிக்கும் இளம் பெண் ஒருத்திக்கு ஒத்தாசையாக நின்று எதிரிகளை வீழ்த்தும் ஒரு நாயகர், காமெடி செய்ய ஒரு கிழம் என கதையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது! ரெட் டஸ்ட் & கென்டக்கி இவர்களின் அமுங்கிய மேல்மண்டைகளையும், கமான்ச்சேவின் டோரா கண்களையும் தவிர்த்துப் பார்த்தால் பிரம்மிப்பூட்டும் சித்திரங்கள். ப்ளுபெர்ரி கதைகளிலும் இந்த கலவையான சித்திர அமைப்பை கவனிக்கலாம் (டைகரின் மூக்கு & ஜிம்மியின் முகரை!). 15 பாகங்கள் கொண்ட இந்த தொடரை 5 ஆண்டு கால அவகாசத்தில் ஆசிரியர் வெளியிட இருக்கிறாராம்!; ஹாவ்வ்… [:)] 3. பிரளயத்தின் பிள்ளைகள் (Batchalo): இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த உருக்கமான கிராபிக் நாவல் பற்றி எழுத ஒரு தனிப்பதிவே தேவைப்படும்! இதன் தத்ரூபமான சித்திரங்கள் மனதை விட்டு அகல மறுக்கின்றன! மற்ற அனைத்து கதைகளைக் காட்டிலும் இதில் ஆசிரியரின் மொழிபெயர்ப்பு மிக அருமையாக வந்திருக்கிறது! வாசகர்களிடம் பெருகி வரும் மாற்று காமிக்ஸ்க்கான ஆதரவு மகிழ்வு தருகிறது! இது பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்! 4. ஸ்டீல் பாடி ஷெர்லாக் (Baker Street): பக்கங்களை நிரப்புவதற்காக வந்திருக்கும் இரண்டு சிறு கதைகள் – சிறுவர்களை கவரக் கூடும்! இதற்கு முன்னர் வந்த ஸ்டீல் பாடி கதைகளை காட்டிலும் இவை சற்று தேவலாம் ரகம் ஒரு ஸ்பெஷல் அலசல்: அழகான முன் அட்டை, ரசனையான கதைத்தேர்வு, அச்சுக் கோளாறுகள் இல்லாதது என திருப்திகரமாக அமைந்திருக்கும் இந்த ஆண்டு மலரில் குறிப்பிடத்தக்க குறை என்ன என்று பார்த்தால், அது ஒன்று மட்டுமே! All அல்ல, Almost-ம் அல்ல உண்மையில் இது Half New Special மட்டுமே! இதிலுள்ள நான்கு கதைகளில், கமான்ச்சே – ரெட் டஸ்டும், ஸ்டீல்பாடி (பேக்கர் ஸ்ட்ரீட்) ஷெர்லாக்கும் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல! மாறாக, வழக்கம் போல கலவையான கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழாக இது அமைந்திருக்கிறது என்பதே! தனித்தனியே பார்த்தால் இந்த நான்கு கதைகளுமே அந்தந்த Genre-ன் கீழ் சிறந்த கதைகள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை!ஆனால், இப்படி சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரும் படிக்கக் கூடிய வகைக் கதைகளையும் (ஸ்டீல் பாடி & தோட்டா தேசம்), மற்றும் ‘ஓரளவுக்குகாவது’ விவரம் புரிந்தவர்கள் படிக்கத் தகுந்த கதைகளையும் ( க்ரீன் மேனர் & பட்சாலோ ) ஒரே இதழில் வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் போது ‘ஹம்கோ ஸ்பெஷல் இஸ்யூஸ் ஸே பச்சாலோ’ என ஹிந்தியில் கூவத் தோன்றுகிறது! முதலில் இது 2 * ₹100 ஸ்பெஷல் இதழ்களாக வெளிவர இருந்தது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவலை இங்கே காணலாம்! ஆனால், அதிலும் ஸ்டீல்பாடி + பட்சாலோ என்ற ரகளையான காம்பினேஷன் இருந்ததால் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இருந்திருக்காது! குண்டு மசாலா மிக்ஸ் ஸ்பெஷல் இதழ்கள் மீதான தனது காதலை எடிட்டர் சிறிதும் குறைத்துக் கொள்வதாய் இல்லை என்பதை அவரின் சமீப கருத்துக்கள் தெளிவாக்குகின்றன (கீழே!)! //தனியாக வரும் கதைகளின் தாக்கம் அதிகமிருக்கும் என்ற கருத்துக்கு நான் உடன்பாடு சொல்ல மாட்டேன் ! பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போதும் வீரியம் கொண்ட கதைகள் நம் மனதை விட்டு அகல்வதில்லையே ! நம் கதைகளின் பெரும்பான்மை பெல்ஜியத்தில் வெளியான TINTIN ; SPIROU போன்ற காமிக்ஸ் பத்திரிகைகளில் தொடர்களாக வந்து ; வெற்றியான பின்னே தனித் தனி ஆல்பம்களாக வலம் வந்தவை. So நிறைய வேளைகளில் இவைகளின் துவக்கப் புள்ளிகள் – கதம்பமானதொரு கச்சேரியில் தானே தவிர exclusive albums வாயிலாக அல்ல ! // அவருக்கு என் பதில்கள்: 1. பத்தோடு பதினொன்றாக அணிவகுத்து நிற்கும் போது அவற்றில் உள்ள சிறந்த கதை மட்டுமே நம் மனதில் தங்கும்! அதன் தாக்கத்தால் மற்ற ஓரளவு நல்ல கதைகளும் படு சுமார் எனத் தோன்றக் கூடிய அபாயம் இருக்கிறது!2. வார / மாத இதழ்களுக்காக சிறிது சிறிதாக வரையப்பட்டு வெளியான தொடர் கதைகள் அவை! ஆனால், நமக்குத்தான் அவை இப்போது முழுமையாகக் கிடைக்கின்றதே?! அவற்றில் வெற்றி பெற்ற கதைகள் எவையென்றும் ஏற்கனவே தெரியுமே? யாரோ கஷ்டப்பட்டு கட்டிய ரோஜா மாலையை பிய்த்துப் போட்டு, வேறு மலர்களோடு சேர்த்து ஏன் கட்ட வேண்டும்? (பூக்காரம்மா கோச்சுக்கும்ல?!) கொசுறு: [] கேரளாவை சேர்ந்த “ரீகல் பப்ளிஷர்ஸ்”, மலையாள தினசரிகளில் வெளியான Phantom & Mandrake – டெய்லி ஸ்ட்ரிப்களைத் தொகுத்து கோமிக்ஸ் வெளியிடத் தொடங்கி இருக்கின்றனர்! (மலையாளத்தில்தான்!). அவர்களிடம், இவற்றை தமிழுலும் வெளியிடச் சொல்லி பல நண்பர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். Phantom வெறியரான நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள், ஒருபடி மேலே போய் நண்பர்களிடம் ரீகல் பப்ளிஷர்ஸின் முகநூல் பக்கம் சென்று “லைக்” போடுமாறு ஆதரவு திரட்டி வருகிறார்! இப்போது அந்த பேஜை மலையாளிகளை விட நம்மாட்கள்தான் அதிகம் லைக்கி இருக்கிறார்கள்! [;)] லயன் ஆசிரியர் விஜயன் அவர்களிடம், உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு ஈமெயில், சாட் போன்ற basic platform-களைத் தாண்டி, Social Network-களில் இணைய உலக அடியெடுத்து வைத்து சில வருடங்கள் கழிந்து விட்டது என்றும் லயன் & முத்துவிற்காக ஒரு தனி Facebook Group அல்லது குறைந்த பட்சம் ஒரு Official Facebook Page துவக்கச் சொல்லியும் கோரிக்கை வைத்திருந்தேன்! அவரும் விரைவில் துவக்குவதாக உறுதி கூறியிருக்கிறார்! கடந்த ஆண்டே துவக்கி இருந்தால் இந்நேரம் ஒரு 2000 லைக் காவது தாண்டி இருக்கலாம்; அதிலிருந்து குறைந்தது 200 புதிய சந்தாதாரர்களாவது கிட்டி இருப்பார்கள்! ஹூம்ம்! டுமீல்: லயன் ப்ளாக் அல்லது FB காமிக்ஸ் குழுமங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு, இந்தப் பதிவின் சில பகுதிகள் எங்கேயோ படித்த உணர்வை தந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! ‘ஃபேஸ்புக் பக்கம் தலைய வச்சுக் கூட படுக்கறது இல்ல; நான் ரொம்ப நல்ல பையனாக்கும், தடுக்கி விழுந்ததுல லைட்டா எட்டிப் பார்த்தேன்’ என்று லயன் ப்ளாகில் பில்டிங் கட்டும் பேஸ்மென்ட் வீக் பார்ட்டிகளுக்கும் இது பொருந்தும்! [;)] 17 2013½ - தமிழ் காமிக்ஸ் அரையாண்டு ரிப்போர்ட்! [] நடுவில் வலைச்சரத்தில் எழுதிய தத்தக்கா பித்தக்கா பதிவுகளை கணக்கில் சேர்க்காவிட்டால், கடைசியாக பதிவெழுதி காலாண்டு காலம் ஆகிறது! 2013 தொடங்கியே அரையாண்டு ஓடி விட்ட நிலையில் எனது இருப்பை உறுதி செய்யும் விதமாக இந்த முழு நீளப் பதிவு! இதை ஏற்கனவே இட்ட கருத்துக்களின் சுருக்கம் என்று கூட சொல்லலாம், புதிதாக எதையாவது எதிர்பார்த்து வந்திருப்பவர்கள் பதிவின் இரண்டாம் பாகத்திற்கு நேரடியாக செல்லலாம்! [:)]  ஜனவரி: தமிழ் காமிக்ஸ் பிரியர்களுக்கு இந்த ஆண்டின் துவக்கமே முத்து காமிக்ஸ் – Never Before Special மூலமாக தடபுடலாகத்தான் துவங்கியது! தமிழில் இப்படி ஒரு தயாரிப்புத் தரத்துடன் வெளியான காமிக்ஸைப் பார்க்க மகிழ்வாக இருந்தது! ஆனால், பல்வேறு விதமான கதைகளை சுமந்து வந்த இந்த இதழ்; மூன்று தொடர் கதைகளையும் உள்ளடக்கி இருந்ததால் ஒரு முற்றுபெறாத இதழாக அமைந்து ஏமாற்றம் அளித்தது! கலவையான கதைகளுடன், கனமாக வெளியிட்டால் மட்டுமே அது ஒரு ‘சூப்பர் ஸ்பெஷல்’ இதழ் என்று எண்ணாமல், ஒரே கதையை இப்போது வருவதை விட பெரிய அளவில், ஹார்ட் பௌண்ட் அட்டையுடனோ (அதாவது ஸ்பெஷல் எடிஷன்!); அல்லது ஒரு தொடர் கதையின் அனைத்து பாகங்களையும் ஒரே இதழாகவோ வெளியிடலாம்! அல்லது ஒரே ஒரு புதிய நாயகரை தடபுடலாக அறிமுகப் படுத்தலாம்! ஆனால் லயன்-முத்து காமிக்ஸ் எடிட்டர் விஜயனோ தனது காக்டெயில் பாணியை கைவிடுவதாய் இல்லை என்பதற்கு இம்மாதம் வெளிவரப் போகும் லயன் 29வது ஆண்டு மலரே சாட்சி!  அடுத்ததாக, 30வது ஆண்டு மலருக்கு 1000 ரூபாயில் எக்கச்சக்க கதைகள் வேண்டும் என்ற ரீதியில் லயன் ப்ளாகில் விழும் கருத்துக்களை பார்க்கும் போது மாறுபட்ட ஸ்பெஷல் இதழ்கள் வரும் என்ற நம்பிக்கை அடியோடு போய் விட்டது!  பிப்ரவரி: டெக்ஸ் வில்லரின் ‘சிகப்பாய் ஒரு சொப்பனம்‘ & லக்கி லூக்கின் ‘வில்லனுக்கொரு வேலி‘ என இரண்டு புத்தகங்கள் 50 ரூபாய் விலையில் பிப்ரவரியில் வெளியாகின! ஸ்பெஷல் என்று முடியும் எந்த உபபெயரும் இந்த இதழ்களுக்கு இல்லை என்பதே ஒரு ஸ்பெஷலான அம்சம்தான்! [;)] தலையணை சைஸ் காக்டெயில் காமிக்ஸ் வரிசையில், இந்த மாதாமாத ஸ்பெஷல் பெயர் சூட்டல்களும் தமிழ் காமிக்ஸின் தகர்க்க முடியாத தனித்துவ அம்சங்களில் ஒன்றாக இணைந்து விட்டது! பரபரப்பான கதையம்சத்துடன் களமிறங்கிய டெக்ஸ் தனது ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை என்றாலும் புத்தகத் தரத்தில் ஏமாற்றம் துவங்கியது இந்த இதழில்தான்! லக்கி லூக்கை முன்பு அளவுக்கு ரசிக்க முடியாமல் போனாலும் சிறுவர்களுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்த இவரைப் போன்றவர்களே சரியான தேர்வாக இருப்பார்கள்! டெக்ஸ், டைகர், லக்கி லூக், சிக் பில் என்று நீளும் கௌபாய்களின் பிடியில் இருந்து தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்! [:)]  மார்ச்: லார்கோ வின்ச் – ஆக்ஷன் ஸ்பெஷல்! இந்த வருடம் வெளியான காமிக்ஸ்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! அற்புதமான மொழிபெயர்ப்புடன் வெளிவந்த க்ரைம் த்ரில்லர்! கொசுறாக வாசக நண்பர் செந்தில் குமாரின் மொழிப்பெயர்ப்பில் மதியில்லா மந்திரி கதை இந்த இதழுடன் இணைப்பாக வந்தது! லார்கோ சாகசத்தை விட எடிட்டர் ப்ளாகில் நடந்த சென்சார் குறித்த விவாதங்கள் ஒரே அடிதடியாக இருந்தன! காமிக்ஸ் படைப்பாளிகள் இப்போது எடிட்டிங்கிலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்திருப்பதால், இனி நானே நினைத்தாலும் நினைத்த இடத்தில் கத்திரி போட முடியாது என்று சமீபத்தில் சென்சார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடிட்டர்! படைப்பாளிகள் இப்படியே கெடுபிடியாக இருந்தால் இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழும்! [:)]  ஏப்ரல்: ஹாட் & கூல் ஸ்பெஷல் & டைகர் ஸ்பெஷல் என்று இரண்டு ‘பெசல்’ இதழ்கள் வெளியாகின! [:)] ‘ஒரு ஒப்பந்தத்தின் கதை’ – NBS-இல் தொடங்கிய வேய்ன் ஷெல்டன் சாகசத்தின் இறுதிப் பாகம்! முதல் இரண்டு பாகங்களை விட இதில் பரபரப்பு அதிகம்! மசாலா தூக்கலான இந்த பழி வாங்கும் படலத்தின் மூலம் வேய்ன் முன்னணி நாயகர்கள் வரிசையில் இலகுவாக இடம் பிடித்துள்ளார்! சிக் பில் குழுவின் ‘ஒரு கழுதையின் கதை’ – பல நாட்களுக்குப் பின்னர் மிகவும் ரசித்துப் படித்த ஒரு காமெடி கதை! எடிட்டரின் சரளமான ட்ரேட்மார்க் நகைச்சுவை வசனங்கள் மிகவும் ரசிக்க வைத்தன! இதே மாதம் சன் ஷைன் லைப்ரரியில் வெளியான டைகர் ஸ்பெஷல், அமெரிக்க வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த வழக்கமான ப்ளூபெர்ரி சாகசம்! அட்டை, அச்சுத்தரம் என்று எந்த ஒரு வகையிலும் குறை சொல்ல முடியாத ஒரு இதழ்! இரும்புக்கை எத்தன் & பரலோகப் பாதை – இந்த பழைய முத்து இதழ்களின் வண்ண மறுபதிப்புதான் என்றாலும் நான் படிப்பது இதுவே முதல்முறை!   மே: ஸ்பெஷல் என்ற அடைமொழி ஏதும் இன்றி இரத்தத் தடம் வெளியானது! ஏப்ரல் மாத டைகர் ஸ்பெஷலில் ஜோராக ஆரம்பித்த கதை, செவ்விந்தியர்களுக்கு எதிரான டைகரின் நடவடிக்கைகளால் சப்பென்று முடிந்தது! இருந்தாலும், இது ஒரு அட்டகாசமான தொடர் என்பதில் சந்தேகம் இல்லை! கிளைமேக்சை விட படு சொதப்பலான அம்சமாக இந்த இதழின் அச்சுத்தரம் அமைந்திருந்தது! இதே இதழில் பக்க நிரப்பியாக வெளியான ஸ்டீல் பாடி ஷெர்லாக் கதையின் பேச்சுத்தமிழ் வசன நடை, ஒட்டாமல் ரொம்பவே தனித்துத் தெரிந்தது, கதையும் சுமார் ரகமே!  ஜூன்: பெங்களூர் காமிக் கானில் பங்கேற்பதற்காக நான்கு இதழ்கள் இம்மாதம் தயாராகின. எனவே, இவ்வருட காமிக் கான் ரொம்பவே டல்லடித்தாலும், தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு புத்தக எண்ணிக்கையில் ஏதும் குறை இருக்கவில்லை!  1. லக்கி ஸ்பெஷல்: சூப்பர் சர்க்கஸ் & பொடியன் பில்லி இவற்றின் மறுபதிப்பு, சிறு வயதில் விழுந்து விழுந்து சிரித்த பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. இப்போது அந்த அளவுக்கு சிரிக்க முடியாத அளவுக்கு இறுக்கமானவர்களாக நாம் மாறியிருந்தாலும் இந்த இரண்டு லக்கி கதைகளும் கிளாஸிக் ரகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 2. குற்றத் திருவிழா: ஸ்பைடர் சாயலில் இன்னொரு “V ஷேப் ஹேர்-ஸ்டைல் மண்டையர்” டயபாலிக்! சற்று பூச்சுற்றல் ரகம் என்றாலும், விறுவிறுப்பான கதை மற்றும் தெளிவான சித்திரங்கள் அதை ஈடுகட்டி விடுகின்றன! கதையில் வரும் கம்பியூட்டர் மானிட்டர், டெலிபோன், மைக்ரோ ஃபிலிம், கார் & வேன் இவற்றைப் பார்க்கையில், இது குறைந்தது 25 – 30 வருட பழைய காமிக்ஸ் எனத் தோன்றினாலும் புதிய பாணி (நமக்கு!) சித்திரங்களின் புண்ணியத்தில் அது ஒரு உறுத்தலாக தெரியவில்லை! இவ்விதழின் பின்னட்டையில் வாசகர் ஷண்முக சுந்தரத்தின் ஆக்கம் வெளியானது! அதன் பிறகு ஏனோ அவர் காணாமல் போய் விட்டார், புதிய கவர் டிசைன்களையும் ஃபேஸ்புக்கில் பகிர்வதில்லை!  3 & 4. இரண்டு டெக்ஸ் இதழ்கள்: நிலவொளியில் ஒரு நரபலி – டெக்ஸை முதன்முறையாக வண்ணத்தில் காணும் ஆர்வத்துடன் ஒரே மூச்சாக படித்ததில் கதை போரடிக்காமல் நகர்ந்தது! ஆனால் அடுத்ததாக “பூத வேட்டை-யின்” 224 வளவள பக்கங்களை படித்து முடிப்பதற்க்குள் நாக்கு தள்ளி விட்டது! இரண்டு இதழ்களின் முன்னட்டைகளும் சுமார் ரகமே! அடிக்கடி ‘அட்டை நல்லா இல்லை’ என்று நொட்டை சொல்லி போரடித்து விட்டதால், இனிமேல் இது பற்றி அதிகம் சட்டை செய்வதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்! [:)] இந்த வருடம் வெளியான மூன்று டெக்ஸ் கதைகளும் அமானுஷ்யம் சார்ந்ததாக அமைந்ததோடில்லாமல், அடுத்ததாக வரவிருக்கும் டெக்ஸ் கதையும் (திகில் நகரில் டெக்ஸ்) அமானுஷ்ய கதையாக இருக்கலாம் என்பதை எண்ணும் போதே மனதுக்குள் திகில் அடிக்கிறது! [:)] ----------------------------------------- [] அட்டைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்! ----------------------------------------- அரையாண்டு ரிப்போர்ட் – பாகம் 2! இந்த 6 மாதங்களில் மட்டும் மொத்தம் 11 புத்தகங்கள் வெளியாகியுள்ளன! லார்கோ, வேய்ன், டயபாலிக் என ஆக்ஷன் நாயகர்கள் ஒருபுறம்; டெக்ஸ், டைகர் என்று வெஸ்டர்ன் ஆசாமிகள் மறுபுறம்! அவ்வப்போது நகைச்சுவைக்காக லக்கி லூக், சிக் பில் என்று இந்த மூன்று பாணிகளை தாண்டி நாம் இந்த ஆண்டும் பயணிக்கவில்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிராபிக் நாவல்கள் வந்தாலும், ஹாரர், வார், சூப்பர் ஹீரோ (ஸ்பைடர் அல்ல!), சயன்ஸ் பிஃக்ஷன் என்று கொஞ்சம் மாறுதலாகவும் முயற்சித்தால் நன்றாக இருக்கும்! இந்த ஆண்டு அட்டவணை ஏற்கனவே முடிவாகி விட்ட நிலையில், அடுத்த வருடமாவது இது நடக்கிறதா என்று பார்க்கலாம்! அதே போல, சந்தா கட்டலாம் என்று நினைப்பவர்களை +5, +6, +12, சன்ஷைன், முத்து, லயன், மறுபதிப்பு,  சூப்பர் ஸ்பெஷல் அட்வான்ஸ் புக்கிங் என்று விதவிதமாக குழப்பாமல் சந்தா முறையை அடுத்த ஆண்டு எளிமைப் படுத்தினால் வசதியாக இருக்கும்! ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு விகிதத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மற்ற பொருட்களின் விலைகள் எகிறுகின்றன! இம்மாதம் முதல் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப் போவதாக சமீபத்தில் விஜயன் அவர்கள் அறிவித்திருந்தார்! இவற்றை ஈடு கட்ட விரைவில் காமிக்ஸ் விலை கூடினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! மாறாக, விலையில் ஏற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தால் அந்த எண்ணம் புத்தகத் தரத்தில் எதிரொலித்து விடக்கூடாதே என்று சற்று கவலையாகத்தான் இருக்கிறது! தொடர்ந்து நிகழும் அச்சுக் குளறுபடிகள், தாளின் தர மாற்றங்கள் கலக்கத்தைத் தருகின்றன! .என்னைப் பொறுத்தவரை, புத்தகத் தரம் குறையாமல் இருக்க விலையை ஏற்றியே ஆக வேண்டும் என்றால் அதை நிச்சயம் ஆதரிப்பேன்! அல்லது பக்கங்களைக் குறைக்க ஃபில்லர்  கதைகளை மூட்டை கட்டி விடலாம்! இன்று விற்கும் விலைவாசியில் 100 ரூபாயில் தரமான முழுவண்ண காமிக்ஸ் இதழ்கள் கிடைப்பது மிகப் பெரிய விஷயம்தான் என்றாலும், சல்லிசாக கிடைக்கும் ஒரே காரணத்தினால் இவற்றை விமர்சிக்கவே கூடாது என்பது மிகவும் தவறான, வேடிக்கையான வாதமாக தோன்றுகிறது! எடிட்டர் ப்ளாகில் விமர்சிப்பவர்களை விமர்சித்து ஒரு சிலர் வியாக்கியானங்கள் செய்வதும் தொடர்ந்து வருகிறது! இவர்களின் அன்புத் தொல்லை ஒருபுறம் என்றால் பேஸ்புக்கில் ஒரு சிலர் விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எந்நேரமும் எதையாவது குறை சொல்லி இன்னொரு பக்கம் ஆனந்தத் தொல்லை தருகிறார்கள்! மூன்றாவது அணியினரோ புத்தகம் எந்த தரத்தில் வந்தாலும் அதை ‘சூப்பர்’ என்று சொல்லியே சிரிப்புத் தொல்லை தருகிறார்கள்! [:)] ஆளாளுக்கு ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது! எனவே இந்த மும்முனை தள்ளுமுள்ளுவில் சிக்காமல் நான் சொல்ல நினைப்பதை மட்டும் ஓரிரு பின்னூட்டங்களாக எடிட்டர் ப்ளாகில் போட்டு விட்டு நடையைக் கட்டி விடுகிறேன்! எல்லோருக்கும் நல்லவனாகவோ, சிந்தனாவாதியாகவோ, காமிக்ஸ் தீவிரவாதியாகவோ, நடுநிலையாளனாகவோ என்னை போலியாக முன்னிறுத்திக் கொள்வதைக் காட்டிலும் நான் நானாகவே அதாவது ‘மொக்க ப்ளேடாகவே’ இருக்க விரும்புகிறேன். [:)] பொதுவாகவே காமிக்ஸ் பதிவர்களின் ஆர்வம் முன்னிலும் வெகுவாக குறைந்து விட்டதை கவனிக்கிறேன்! முன்பு ஒவ்வொரு மாதமும் காமிக்ஸ் வெளியான சூட்டோடு பலரின் விமர்சனப் பதிவுகள் வெளியாகும் – இப்போதோ பல இதழ்களுக்கு ஒரு பதிவு கூட வருவதில்லை! இதற்கு காரணங்கள் என்னவாய் இருப்பினும், காமிக்ஸ் பதிவர்களின் விமர்சனங்களை கடுமையாக எதிர்த்து வந்த தீவிர வாசக அன்பர்கள் இந்த தேக்கத்தை பார்த்து சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம்! [:)]  இறுதியாக… அவ்வபோது என் மனைவியை காமிக்ஸ் படிக்க வற்புறுத்துவது மூலமாக துன்புறுத்தி மகிழ்வது உண்டு! [:)] எனக்காக ஆர்வத்துடன் படிப்பது போல பாவ்லா காட்டி நான் நகர்ந்ததும் புத்தகத்தை மூடி வைத்து விடுவார்! ‘ஊஹீம், இது வேலைக்கு ஆகாது, என் எதிரில் முழுதாக படித்தே ஆக வேண்டும்’ என்று வம்படியாக ‘ஒரு கழுதையின் கதையை’ படிக்க வைத்தேன். நான் ரசித்து சிரித்த இடங்களை எல்லாம் ஒரு ஜென் துறவியைப் போன்ற சலனமில்லா முகத்துடன் கடந்து கொண்டிருந்தார். என் நகைச்சுவை உணர்ச்சி மீது எனக்கே பலமான சந்தேகம் வந்து விட்டது! ‘இங்கே சிரிக்கணும்’, ‘ஷெரிஃப்போட இந்த முகபாவத்தைப் பார்த்தியா – காமெடியா இல்ல?’ என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்ததில் லைட்டாக புன்னகைத்துக் கொண்டே வந்தார்; அவர் கண்களுக்கு நானே ஒரு காமெடி கழுதையாக தெரிந்தேனோ என்னவோ? [:)] என் மனைவிக்கு லார்கோ ரக ஆக்ஷன் கதைகளும் பிடிப்பதில்லை, இது போன்ற கார்ட்டூன் கதைகளும் பிடிப்பதில்லை. தவிர காமிக்ஸ் பாணி தமிழ் வசனங்களை புரிந்து கொள்வதே அவருக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது! ரசனை என்பது தானாக வர வேண்டிய ஒன்று, திணிக்க முடியாது இல்லையா?! அவருக்கு காமிக்ஸ் மீது ஈடுபாடு இல்லை – அவ்வளவுதான்! ஆனாலும், என் துன்புறுத்தல்கள் தொடரும்! [:)]  பி.கு: நாங்களும் நூறாவது பதிவு போடுவோம்ல!:) 18 காமெடி கௌபாய், கில்லாடி கௌபாய்! இது கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைவிமர்சனம் அல்ல, பிப்ரவரி மாதம் வெளியான இரண்டு வெவ்வேறு விதமான கௌபாய் (லயன்) காமிக்ஸ்கள் பற்றிய விமர்சனம். ஒருவர் லக்கி லூக் – சிரிப்புக் கௌபாய், மற்றவர் கேடிகளை வீழ்த்தும் கில்லாடி – டெக்ஸ் வில்லர்! 1. சிகப்பாய் ஒரு சொப்பனம் – டெக்ஸ் வில்லர் (லயன் #215): [] பிப்ரவரி மாத கோட்டாவில் வெளியாகியிருக்கும் 2 * ₹50 இதழ்களில் முதலாவது இதழான இது, நச்சென்ற அட்டைப்படத்துடன் வந்திருக்கிறது! விதவிதமான நீள அகலங்களில் காமிக்ஸ் வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸ், வழக்கமாக Trade Paperback புத்தகங்களுக்கு பயன்படுத்தப்படும் அளவில் இந்த இதழை வெளியிட்டிருக்கிறார்கள். பழகிப்போன அளவு என்பதால் கையில் பிடித்துக்கொண்டு படிப்பதற்கு சிக்கென்று இருக்கிறது. இது ஒரு கருப்பு வெள்ளை காமிக்ஸ் மற்றும் புத்தக அளவும் வழக்கத்தை விட சிறியது என்பதால் கூடுதலான பக்கங்களுடன் (242) வந்திருக்கிறது!   கதைச்சுருக்கம்: செவ்விந்தியர்களில் ஒரு பகுதியினரையாவது மகா மோசமான கொலை வெறியர்களாக காட்டியே ஆக வேண்டும் என்ற டெக்ஸ் காமிக்ஸ் சம்பிரதாயங்களை மீறாத கதையமைப்பு. ஹூவால்பை செவ்விந்திய இனத்தின் மதகுரு ஒருவன், “மற்ற செவ்விந்திய இனங்களை அடிமை கொண்டு”, அவர்கள் துணையுடன் வெள்ளையர்களை அடக்கத் திட்டம் போடுகிறான், இதை டெக்ஸ் சாமர்த்தியமாக முறியடிக்கிறார். இதில் “மற்ற செவ்விந்திய இனங்களை அடிமை கொண்டு” என்பதை கவனியுங்கள் – அதாவது செவ்விந்தியன் ஒருவன், தனது இனங்களை ஒன்று சேர்த்து வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதாக காட்டினால்; நடுநிலைப் பார்வையில் அவன் தன் தாய்நாட்டைக் காக்கப் போராடும் வீரனாக, ஆளுமை கொண்ட தலைவனாகத் தோன்றக் கூடிய அபாயம் இருப்பதால், இப்படி ஒரு உபாயம். [] இந்த ஒரு அம்சத்தை ஜீரணித்துக் கொண்டு படித்தால் இது மிகவும் துடிப்பான கதையே! உயிரோட்டமான சித்திரங்கள் வேகமாய் நகரும் கதைக்கு துணையாக இருக்கின்றன! கதை நெடுக பரபரப்பான சண்டை காட்சிகளுக்கு குறைவில்லை! வழக்கம் போல கிட் கார்சனின் பன்ச் வசனங்கள் அருமை – கார்சனின் வசனப் பகுதியை எழுதுவதற்காகவே ஆசிரியர் தனியே ரூம் போட்டு யோசிப்பார் என கேள்விப் பட்டேன்! [:)] டெக்ஸ் காமிக்ஸின் அமைப்புக்கு இந்த பேப்பரின் உயர விகிதம் சற்று அதிகம் என்பதால் உட்பக்கங்களில் மேலேயும் கீழேயும் தலா ஒரு இன்ச் இடம் வீணாகி உள்ளது (படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்!). இந்த இதழின் வடிவமைப்பு, டெக்ஸ் காமிக்ஸை ‘உருவாக்கும்’ இத்தாலிய பதிப்பகத்திற்கு மிகவும் பிடித்துப் போனதால்; இந்த இதழை மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்தில் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்கிறார்களாம்! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் (அதுவும் தமிழில்!) இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது பெருமை சேர்க்கும் சங்கதிதானே? இதுவரை மட்டமான தாள்களிலேயே தமிழ் டெக்ஸை பார்த்துப் பழகிய அவர்களுக்கு இந்த இதழ் மிகச் சிறப்பாக தோன்றி இருப்பது வியப்பில்லை என்றாலும்; கடந்த ஆண்டில் இருந்து  உயர்தர தாள்களில் தமிழில் காமிக்ஸ் படித்து பழகிப் போன நமக்கு, இந்த இதழின் மகா சன்னமான வெளிர்நீல தாளின் தரம் ஏமாற்றத்தையே தருகிறது. பக்க நிரப்பியாக, ஒரு ‘ஒரு பக்க’ பூனைக் கதைத் தொடர் இந்த இதழில் அறிமுகமாகி இருக்கிறது. யாரோ ஒரு நல்லவர், இரும்புக்கை மாயாவி மேல் இருக்கும் அளவுகடந்த பிரியத்தால் இத்தொடருக்கு ‘மியாவி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். இந்த இதழ் வெளியான சமயத்தில் பேரினவாதம் – சிற்றின்பவாதம், மன்னிக்கவும் சிற்றினவாதம் பற்றியும்; அமெரிக்காவில் செவ்விந்திய பூர்வகுடி மக்கள் ஒடுக்கப்பட்டதைப் பற்றியும் – லயன் ப்ளாகில் ‘நீயா நானா’ டைப்பில் ஒரு காரசாரமான விவாதமே நடந்தது. சுவாரசியமான அந்த விவாதத்தைப் படிக்க விரும்புபவர்கள், ஒரு கழுகின் வருகை பதிவின் பின்னூட்டப் பகுதிக்குச் சென்று முதலில்  பொறுமையாக அனைத்துப் பின்னூட்டங்களையும் “Load More” செய்த பின்னர் அந்த விவாதத்தை தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள். [:)] 2. வில்லனுக்கொரு வேலி – லக்கி லூக் (லயன் #216):  [] பிப்ரவரி மாதம் வெளியாகி இருக்கும் இரண்டாவது ₹50 இதழின், பழைய மினிலயன் பாணி அட்டைப்படம் நினைவுகளைக் கிளருகிறது. ஒரு முழுநீள லக்கி லூக் சாகசத்துடன், உபரியாக இரண்டு எட்டு பக்க Iznogoud (மதியில்லா மந்திரி) கதைகள் (ஒன்று மட்டும் B&W-ல்!). ‘குட்டீஸ் கார்னர்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காகவும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. வழக்கமான ₹100 புத்தகங்களை விட பக்கங்கள் 50% குறைச்சல் என்றாலும், ஒரு (முழுநீள) கதைக்கு ஒரு தனி புத்தகம் என்ற அமைப்பு இதன் ப்ளஸ்! இதையே மாதா மாதம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்! இந்த இதழ் முதல், ஜூனியர் எடிட்டராக விஜயன் அவர்களின் புதல்வர் விக்ரம் பதவியேற்றுள்ளார்! தனது தந்தையைப் போலவே தமிழ் காமிக்ஸ் உலகில் பெரும் மாறுதல்களை கொண்டு வர அவருக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்!   [] கதைச்சுருக்கம்: அடாவடி கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் பரப்புகளுக்கிடையே, நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய இயலாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தனது ட்ரேட்மார்க் நகைச்சுவையுடன் போர்க்கொடி உயர்த்துகிறார் லக்கி லூக்! []இதோடு இணைந்து வந்திருக்கும் மதியில்லா மந்திரியின் இரண்டு கதைகளும் பரவாயில்லை ரகம்! குறிப்பாக வண்ணத்தில் வந்திருக்கும் அந்த ஊடு சூனிய காமெடிக் கதையும், அதன் வசனங்களும் நன்றாக உள்ளன! மொத்தத்தில் சிறுவர்களுக்கு நீங்கள் புதிதாக காமிக்ஸ் அறிமுகம் செய்ய விரும்பினால், அவர்களுக்கு பரிசளிக்க இது மிகவும் பொருத்தமான இதழ்! நீங்கள் இன்னமும் படித்திராத பட்சத்தில், NBS பற்றிய ஒரு (தாமதப்) பார்வை: முத்து காமிக்ஸ் துவங்கி நாற்பது ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் - கிட்டத்தட்ட டெலிபோன் டைரக்டரி சைஸில், 400 ருபாய் விலையில், 456 பக்கங்களுடன், 90 சதவிகிதம் முழுவண்ணத்தில், பத்து கதைகள் அடங்கிய ஒரு மெகா காமிக்ஸ் சிறப்பிதழ்..." href="http://www.bladepedia.com/2013/04/Muthu-Comics-40th-Anniversary-Edition-Never-Before-Special-Title-No-319-Review-Tamil.html">முத்து காமிக்ஸ் – 40வது ஆண்டு மலர் – Never Before ஸ்பெஷல்! 19 முத்து காமிக்ஸ் - 40வது ஆண்டு மலர் - Never Before ஸ்பெஷல்! [] முத்து காமிக்ஸ் துவங்கி நாற்பது ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் – கிட்டத்தட்ட டெலிபோன் டைரக்டரி சைஸில், 400 ருபாய் விலையில், 456 பக்கங்களுடன், 90 சதவிகிதம் முழுவண்ணத்தில், பத்து கதைகள் அடங்கிய ஒரு மெகா காமிக்ஸ் சிறப்பிதழ் – கடந்த ஜனவரி மாதம் சென்னை புத்தகத் கண்காட்சியில் வெளியிடப்பட்டது! இந்த நீளமான வாக்கியத்தைப் படிப்பதற்கே மூச்சு வாங்குகிறதல்லவா? இந்த Never Before Special-ஐ (சுருக்கமாக NBS!) படித்து முடிப்பதற்கும் மூச்சு வாங்கித்தான் போனது! நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காமிக்ஸ் இதழில் திருஷ்டிப் பரிகாரமாக இருப்பது இதன் முன்னட்டை எனலாம். கௌபாய் டாப் ஹீரோக்களில் ஒருவரான ப்ளூபெர்ரி, எக்குத்தப்பான காஸ்டியூமில், ஒரு கையால் பற்றி எரியும் சாட்டையை சுழற்றிக் கொண்டே மறு கையால் இலக்கின்றி சுடும் வேடிக்கையான ஓவியம், இந்த இதழின் சிறப்பை மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பின்னட்டையில் தமிழ் காமிக்ஸ் உலகின் சமீபத்திய சூப்பர் ஸ்டாரான லார்கோ, கிட் ஆர்ட்டின் மற்றும் இந்த இதழில் அறிமுகமாகியுள்ள புது நாயகர் வேய்ன் ஷெல்டன் ஆகியோர் இடம் பிடித்துள்னர். அட்டைகளில் உள்ள சித்திரங்களை விட, அட்டை வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள நகாசு வேலைகள் வெகுவாக கவர்கின்றன. உதாரணதிற்கு, அட்டையோடு இணைந்து வந்திருக்கும் மேலுறை (Dust jacket), ஆங்காங்கே செய்யப்பட்டுள்ள வழுவழு லாமினேஷன், மின்னும் எழுத்துக்கள் – இவற்றைச் சொல்லலாம். முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்களின் சுருக்கமான ஆனால் அர்த்தமுள்ள முன்னுரை முதல் பக்கத்தை அலங்கரிக்கிறது. இன்றைய தலைமுறையினர் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ரீதியிலான ஆதங்கமான எழுத்துக்கள்! சமீபத்தில் பேஸ்புக் நண்பர் சிவக்குமார் பகிர்ந்திருந்த ஒரு கார்ட்டூன் இதோ: [] இந்த முன்னுரையைத் தொடர்ந்து முத்து காமிக்ஸின் தற்போதைய ஆசிரியரும், சௌந்திரபாண்டியன் அவர்களின் புதல்வருமான திரு.S.விஜயனின் நான்கு பக்க முகவுரை! வாசகர் வட்டம் மிகவும் குறுகியது என்ற போதிலும், தயாரிப்புத் தரத்தை மேம்படுத்தி தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் வெளியிட்டு வரும் விஜயன் பாராட்டப்பட வேண்டியவர்! அட்டைகளின் உட்புறங்களில் லயன் / முத்து பதிப்பகத்தில் தற்போது பணிபுரிபவர்கள் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது. பத்து கதைகளுக்கும் தனித்தனி பதிவு போடுவது காலத்தை விரயம் செய்யும் காரியம் ஆகி விடும் என்பதால் அவற்றைப் பற்றிய ஒரு சிறு பார்வை மட்டும்: I. லார்கோ வின்ச் – 1. கான்க்ரீட் கானகம் New York! & 2. சுறாவோடு சடுகுடு!: லார்கோ வின்ச்சின் இரு பாகக் கதைதான் இந்த இதழின் ஹைலைட்! வழக்கமான தமிழ் காமிக்ஸ் தலைப்பு வைக்கும் பாணியில் (ஒரு டேஷ் டேஷ் – கதை/உதை (அ) ​படலம்/சடலம் (அ) மர்மம்/கர்மம் etc.) இருந்து சற்றே வேறுபட்ட கதைகளின் பெயர்களே, கனத்த கதையம்சம் கொண்டதொரு படைப்பை படிப்பதற்கு ஏதுவான ஒரு மனநிலையை அமைத்துத் தந்துவிடுகின்றன! +----+----+----+----+ | [] | [] | [] | [] | +----+----+----+----+ வணிக சாம்ராஜ்யங்கள் ஒன்றையொன்று விழுங்குவதற்காக செய்யும் பங்கு வர்த்தக தகிடுதத்தங்களை மையமாக வைத்து புனையப்பட்ட பரபரப்பான கதை. ஏராளமான பிசினஸ் சட்டங்கள் & ஷேர் மார்கெட் குறித்த விளக்கமான தகவல்கள், வசனங்கள் கதையெங்கும் விரவிக் கிடப்பதால் மிகவும் கவனமான வாசிப்பை கோரும் படைப்பாக அமைந்துள்ளது! மேலோட்டமாக படித்தால் விளங்கமாலேயே போய்விடும் அபாயம் இருந்தாலும், வழக்கமான லார்கோ பாணி அதிரடிகளும்; காதல் காட்சிகளும் நிறைந்திருப்பதால் சலிப்பு தட்டா வண்ணம் கதை நகர்கிறது!  II. சிக்பில் & கோ – 3. கம்பளத்தில் கலாட்டா!: [][]ஒரு மிதமான நகைச்சுவைக் கதை. ஷெரிஃப் டாக் புல் மற்றும் கிட் ஆர்ட்டினின் அசட்டுத்தனங்கள் லேசான புன்னைகையை கொணரத் தவறுவதில்லை. சிக்பில் குழுவினரின் “அதிரடி மன்னன்” என்ற கதை ஏற்கனவே ஜுனியர் லயனில் முழு வண்ணத்தில் பாக்கெட் சைஸில் வந்திருக்கிறது என்றாலும், முழு அளவில், வழுவழு வண்ணத்தில் வருவது இதுவே முதல் தடவை!  III. லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி – 4. கான்சாஸ் கொடூரன்! & 6. இருளில் ஒரு இரும்புக் குதிரை!: முத்து காமிக்ஸின் முதன்மையான நாயகர்களில் ஒருவரான ப்ளூபெர்ரியின் கதைகள் இன்றி எந்த ஒரு (Cocktail) சிறப்பிதழும் சிறப்பானதாக அமைந்திடாது என்பதாலோ என்னவோ, ஒன்றுக்கு இரண்டாக ப்ளூபெர்ரி கதைகள் இதில்! +----+----+----+----+ | [] | [] | [] | [] | +----+----+----+----+ ஆனால், இவற்றில் முதலாவது (கா.கொ.) தொடர்கதை ஒன்றின் மத்திமப் பகுதியாகவும், மற்றொன்று (இ.ஒ.இ.கு.) இன்னுமொரு தொடர்கதையின் துவக்கமாகவும் அமைந்து அந்தரத்தில் தொங்குவது வெறுப்பையே வரவழைக்கிறது. இருப்பினும் வழக்கமான கௌபாய் சமாச்சாரங்கள் நிறைந்த கதைகள் என்பதால் (என்னைப் போன்ற) வெஸ்டர்ன் பிரியர்களை எளிதில் திருப்திப்படுத்தி விடுகின்றன! குறிப்பாக இ.ஒ.இ.கு.-யில் கையாளப்பட்டுள்ள யுத்த தந்திரங்கள் மற்றும் (The Five Man Army திரைப்படத்தை நினைவுறுத்தும்) இரயில் சார்ந்த ஆக்ஷன் காட்சிகள் தூள்! IV. டிடெக்டிவ் ஜில் ஜோர்டன் – 5. அலைகளின் ஆலிங்கனம்! [] []ஜில் ஜோர்டான் தமிழில் அறிமுகமாவது இப்போதுதான் என்றாலும், இது உண்மையில் ஐம்பதாண்டு (அரதப்) பழைய கதைத் தொடர். கிட்டத்தட்ட டின்டின் பாணியிலான கார்ட்டூன் சித்திரங்கள் கொண்ட, மெலிதான நகைச்சுவை கலந்த துப்பறியும் கதைகள் என்பதுதான் இத்தொடரின் தனித்தன்மை. சித்திரங்கள் வண்ணத்தில் பளிச்சென்று இருந்தாலும், ஏனோ முதல் வாசிப்பில் மனதோடு ஒன்ற மறுக்கின்றன. ஜில் பார்ப்பதற்கு Blondie-யில் வரும் Dagwood போலவே இருக்கிறார்! ஆர்ப்பாட்டமில்லாத கதையோட்டம், ஆங்காங்கே பளிச்சிடும் ஜில்லின் புத்திசாலித்தனம், உதவியாளார் லிபெல்லின் (மொக்கை) நகைச்சுவை, அலைகள் உயர எழும் சமயத்தில் தரைப்பாலத்தின் நடுவே ஜில் குழு பயணிக்கும் கார் மாட்டிக் கொள்ளும் பரபரப்பான கட்டம் என ஓரளவு ரசிக்கத் தக்க விதத்திலேயே கதை பயணிக்கிறது.  V. வேய்ன் ஷெல்டன் – 7. ஒரு பயணத்தின் கதை! & 8. ஒரு துரோகத்தின் கதை!: ஜேம்ஸ் பாண்ட் போன்ற நளினமான(?) முரட்டுத்தனம் கொண்ட உளவாளி வேடத்தில் நடித்திட நாற்பது வயதை கடந்து, காதோரம் நரை தட்டிய நடிகர்தான் பொருத்தமான தேர்வாக இருந்திடுவார் இல்லையா? அப்படிப்பட்ட ஒரு நாயகர்தான் வேய்ன் ஷெல்டனும்! எந்த ஒரு நாட்டின் உளவாளியாகவும் இல்லாமல், தனிப்பட்ட முறையில் பணத்திற்காக ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் முரட்டுத்தனமும், தெனாவட்டும் கலந்த ஒரு துடிப்பான நபர்! +----+----+----+----+ | [] | [] | [] | [] | +----+----+----+----+ சோவியத் ரஷ்யாவில் உள்ள ஒரு சுயாட்சி பகுதியில் நடக்கும் ஒரு எதிர்பாரா ட்ரக் விபத்தில் அந்நாட்டு இராணுவ அமைச்சர் கொல்லப் படுகிறார். விபத்துக்கு காரணமான ட்ரக் ஓட்டுனர் ஒரு பிரெஞ்சு நாட்டவர் என்பதால் ஏற்படும் அரசியல் பதட்டத்தால் இந்த இருநாடுகளுக்கிடையே பொருளாதாரத் தடை ஏற்படுகிறது. இந்தத் தடையால் பாதிக்கப்படும் ஒரு தொழிலதிபர், அந்த ட்ரக் டிரைவரை சிறையில் இருந்து ‘யாரும் அறியா வண்ணம்’ மீட்கும் மிக ஆபத்தான பணியில் ஷெல்டனை அமர்த்துகிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது ஒரு அட்டகாசமான சித்திர விருந்து! இதனுடைய மூன்றாவது மற்றும் இறுதிப் பாகம் விரைவில் வெளியாகிறது என்பது (வெறுப்பேற்றும்) கொசுறுத் தகவல். VI. மாடஸ்டி பிளைஸி – 9. எதிரிகள் ஏராளம்!: [] அறிமுகமாகி நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உருண்டிருந்தாலும் சில நாயக, நாயகிகள் தங்களது வசீகரத்தை சிறிதளவேனும் தக்கவைத்துக் கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில், மாடஸ்டி ப்ளைஸி & கார்வின் தோன்றும் இந்த B&W ஆக்ஷன் த்ரில்லர் ஓரளவுக்கு சுவாரசியமானதாகவே இருக்கிறது. ஒரு பழைய ஜேம்ஸ் பாண்ட் படத்தை TV-யில் பார்க்கும் உணர்வு நிச்சயம் ஏற்படும். சிறுவயதில் அதிரடியாக தோன்றிய ஆக்ஷன் படங்கள், இப்போது பார்த்தால் ஸ்லோமோஷனில் நகர்வது போன்ற உணர்வு எழுவது ஒன்றும் வியப்பில்லைதானே?! இந்தக் கதையை விட – மாடஸ்டியின் பிகினி உடையில், கோடு போட்டு விளையாடி அவரை கோடஸ்டியாக மாற்றிய முத்து காமிக்ஸ் ஓவியரின் சாகசம் மிகவும்(!) ரசிக்கத்தக்கதாக இருந்தது! [;)] VII. இரும்புக்கை மாயாவி – 10. விலங்குகளா..? வில்லன்களா?: [] 70-களின் துவக்கத்தில் முதலாவது முத்து காமிக்ஸ் இதழில் அறிமுகமான இரும்புக்கை மாயாவி, தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு காமிக்ஸ் சூப்பர் ஹீரோ! ஒரு கட்டத்தில் காமிக்ஸ் என்றாலே இரும்புக்கை நினைவுக்கு வரும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய கைராசி(!) நாயகர். முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு சிறப்பு மலரில் இந்த வழக்கொழிந்த நாயகர் இடம் பெற்றிருப்பது அவரது கடந்த கால வெற்றிக்கு ஒரு நினைவஞ்சலி என்ற அடிப்படையில் என நினைக்கிறேன்!!! மாயாவியின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்! இறுதியாக: மொத்தத்தில் கலவையான கதைகள் கொண்ட சிறப்பான காமிக்ஸ் தொகுப்பாக NBS அமைந்துள்ளது. எனினும் இந்த அம்சமே இதற்கு எதிராகவும் போய்விடுகிறது! இது போன்ற மைல்கல் தருணங்களுக்கு கனத்த புத்தகம் வெளியிட்டே ஆகவேண்டும் என்றால் 4 அல்லது 5 பாகங்கள் கொண்ட ஒரு முழு நீள ப்ளூபெர்ரி சாகசத்தையோ அல்லது ஒரே நாயகரின் பல கதைகளையோ இணைத்து ஸ்பெஷல் இதழாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. NBS-இல் மூன்று கதைகள் முழுமையடையாமல் அந்தரத்தில் தொங்குவதும் இந்த எண்ணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படி இருப்பினும், இது ஒரு தவறவிடக் கூடாத காமிக்ஸ் பொக்கிஷம்! முன் பதிவின் பேரில், குறைவான அளவிலேயே இப்புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ளன என்பதால் விரைவில் விற்று தீரும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது Ebay-இல் விற்பனையாகிறது! லயன் காமிக்ஸ் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டும் (04562 – 272649 & 04562 – 320993) வாங்கலாம்! பின்குறிப்பு: “ஒரு படிக்கக் கூடாத பதிவும், ஒரு வாங்கக்கூடாத புத்தகமும்!” என்ற தலைப்பில் 09 ஜூலை 2012 அன்று 12:42:00 AM மணிக்கு முதன்முதலில் வெளியாகி, கடந்த டிசம்பரில் கூடுதல் விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இப்பதிவு, தற்போது மூன்றாவது முறையாக (மற்றும் இறுதியாக?) புதுப்பிக்கப்பட்டுள்ளது! ஜனவரியிலேயே புத்தகம் கிடைத்து விட்டாலும், படித்து முடிக்கவே கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது! இதற்கான இந்த விமர்சனமும் முழுமை அடையாமல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ட்ராஃப்டே கதி என கிடந்து, ஒரு வழியாக இன்று வலையேறுகிறது!!!  தொடர்புடைய பேட்டிகள் / பதிவுகள்: முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள், ஒரு பிரபல இணையதளத்திற்கு இந்த இதழைப் பற்றி அளித்த சிறு பேட்டி: 456 Pages Tamil Comic Book ‘Never Before Special’ இது குறித்த ஆசிரியரின் இதர பதிவுகள்: - கனவுகள் மெய்ப்படும் போது…! - எட்டும் தூரத்தில் NBS ! - http://lion-muthucomics.blogspot.in/2012/11/blog-post_30.html - அடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம்! - மாற்றம் மாத்திரமே மாறாததே! 20 மரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்! சற்றே கௌரவமான இறுதி யாத்திரையுடன், நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது… [] கடந்த வருடம் வெளிவந்த தமிழ் காமிக்ஸ் இதழ்களில் – வாசகர்கள் & பதிவர்கள் பார்வையில் மிகவும் பரிதாபமான முடிவை சந்தித்தது SHSS மட்டும்தான் என்று இதுவரை நினைத்திருந்தேன்! ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும்! NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது! அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், ‘ஓரளவு’ உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி! கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை – குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது!) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம்! முழுக்கதையையும் சொன்னால் சுவாரசியம்(?!) இருக்காது, எனவே சுருக்கமாக: வரிசையாக சில அழகிகள் கொலையாகின்றனர்! அச்சமயத்தில் அலெக்ஸ் உல்லி என்ற பிரபல புலனாய்வு பத்திரிக்கையாளர் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிடுவது பற்றி அறிவிக்கிறார். அவரையும் கொலை செய்ய தொடர் முயற்சிகள் நடக்கின்றன! துப்புத் துலக்கப் போகும் ஜானி சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி என்று குற்றம் சாட்டப்படுகிறார்! புத்தகத்தை பிரபலமாக்க அலெக்ஸ் உல்லிதான் இந்த நாடகங்களை நடத்துகிறாரா? யார் நிஜமான கொலையாளி?! இதற்கான பதிலை கருப்பு வெள்ளை பக்கங்களில் காணுங்கள்!!! வழக்கம் போல ஓவியங்கள் மிகத் தெளிவு என்றாலும் ஜானியை வண்ணத்தில் ரசித்த பிறகு மறுபடியும் கருப்பு வெள்ளையில் பார்ப்பது சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது! மாடஸ்டி ப்ளைசியை, கோடஸ்டி ப்ளைசி ஆக்கி அழகு பார்த்த முத்து காமிக்ஸ் ஓவியரின் கண்களில் (கைகளில்?) இருந்து கீழ்க்கண்ட பக்கம் தப்பித்ததும், இது குறித்து தமிழ் காமிக்ஸ் கலாசாரக் காவலர்கள் எடிட்டர் ப்ளாகில் எதிர்ப்பு தெரிவிக்காததும் பெரும் ஆச்சரியமே! [:)][:)][:)] [] உறுத்தலான இன்னொரு விஷயம், கதாமாந்தர்களின் முழுப் பெயர்களை, முன் மற்றும் பின் பகுதிகளை மாற்றி மாற்றி உபயோகிப்பது! உதாரணத்திற்கு “அலெக்ஸ் உல்லி”-யை சில சமயம் அலெக்ஸ் என்றும், சில சமயம் உல்லி என்றும் அழைக்கிறார்கள். இது இந்த இதழில் மட்டுமல்ல – சமீபத்திய பல இதழ்களில் கவனித்த ஒன்று! முழுப்பெயரையும் மனதில் பதிய வைத்து கவனமாக படிக்காவிட்டால் ‘யார் இந்த புது ஆசாமி?’ என்ற குழப்பமே மிஞ்சுகிறது! +----+----+----+ | [] | [] | [] | +----+----+----+ சாணித்தாளை விட தேவலாம் என்றாலும், காகிதத் தரத்தில் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. சன்னமான தாள் என்பதால் பின்பக்கத்தில் உள்ள ஓவியங்கள் முன்பக்கமும் தெரிகின்றன! ஸ்கேன் செய்யும்போதுதான் என்றில்லை, வெற்றுக் கண்களிலேயே அப்படிதான் தெரிகிறது. இந்த பேப்பரைப் போய் ஆஹா, ஓஹோ என்று புகழ எப்படித்தான் மனம் வருகிறதோ?! பத்து ரூபாய் விலைக்கு இந்த பேப்பரே போதும் என்றாலும் 50 ரூபாய் இதழான ‘சிகப்பாய் ஒரு சொப்பனத்தில்’ இது ரொம்பவே சொதப்பலாக படுகிறது! இன்னமும் சற்று தடிமனான தாளை கொடுத்தால் நலம்! டச் அப் செய்த மற்றும் செய்யாத சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு: +----+----+ | [] | [] | +----+----+ இந்த இதழோடு இணைப்பாக வந்திருந்த NBS அழைப்பிதழை பார்த்ததும் ஒரு கணம் இரும்புக்கை மாயாவியின் 60ம் கல்யாண அழைப்பிதழோ என்று தவறுதலாக எண்ணி விட்டேன்! அப்படி ஒரு மங்களகரமான பத்திரிக்கை!!! [:)] [] ஆளாளுக்கு சிகப்பாய் ஒரு சொப்பனம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் இன்னமும் NBS-ஐயே முடித்த பாடில்லை! இந்த லட்சணத்தில் மரணத்தின் நிசப்தம் பற்றிய விமர்சனப் பதிவை வேறு போட்டே ஆக வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம்! இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது எனக்கே விடை கிடைக்காத ஒரு கேள்வி! காமிக்ஸ் மீதான சலிப்பா அல்லது பதிவிடுவதில் வந்த அலுப்பா என சரியாகத் தெரியவில்லை! [:)] இந்த சங்கடமான கேள்வி என்னை உறுத்திடும் வேளையில், இன்று என்னை சந்தோஷப்படுத்திய ஒரு சேதி இதோ: [] ப்ளேட் அப்டேட்  (ஜனவரி 28, 2013): 11 மாத வலைப்பூ பயணத்தில் ஒரு சிறிய மைல்கல்! 100000 ஹிட்ஸ், வாசகர்கள் எனக்கு கொடுத்த தர்ம அடிகள் அல்ல – என் வலைபூவிற்கு விழுந்த ஹிட்ஸ்களின் எண்ணிக்கை!!! [:)] அன்பான உங்கள் வரவேற்பிற்கு நன்றிகள் பல கோடி! [:)] 21 ப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்! இணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்… [] முன்னரே சொல்லி விடுகிறேன் – இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! [:)] கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை!) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது! பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது – நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் – மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்(!) சொல்லிக் கொண்டிருந்தேன்! அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் “ஙே” என்ற பதிலை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன்! [:)] “ஙே” என்ற எழுத்தை Google Transliterate-இல் எப்படி டைப்புவது என்பது தெரியாமல் “ஙே” என முழித்தது கூடுதல் தகவல்! [;)] [] எனக்கு வழி தெரியாது என்பதால், சிபி அவர்கள் ஷார்ப்பாக காலை 11 மணிக்கு என் மாமனார் வீட்டருகே என்னை சந்தித்து உடன் அழைத்துச் செல்வதாகக் உறுதியளித்தார்! சொன்ன நேரத்தில் 11:30 மணிக்கே மனிதர் டாண் என்று வந்து நின்றார்:) [:)][:)] அவருடைய இரும்புக்குதிரை போன்ற பைக்கின் – பெட்ரோல் டேங்க் மேலே கட்டியிருந்த அந்த உயர்ரக சேணம் சற்றே புடைப்பாக இருந்ததை என்னுடைய கண்கள் கவனிக்கத் தவறவில்லை! RC புக், இன்சூரன்ஸ் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் அடங்கிய முக்கிய கோப்பாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்! அவர் முன்னே செல்ல, என் மனைவியின் சகோதரியிடம் கடன் வாங்கி வந்த பிங்க் நிற ஸ்கூட்டியில் அவரை பின்தொடர்ந்தேன்! ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் திருப்பூர் மாநகரில் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும் ஒரே நபர், நமது நண்பர் சிபிதான்!!! [:)] ஆச்சரியத்தில் ‘ஆ’ என்று அகல விரிந்த வாயை மூட முடியாமல் அவருடைய ஹெல்மெட்டை குறி வைத்து பிங்கியை முடுக்கினேன்! [:)] போக்குவரத்து நெரிசலில் அவர் அவ்வப்போது காணாமல் போவதும், ஹெல்மெட் புண்ணியத்தில் அவரை நான் சட்டென இனங்காணுவதும் என மிக சுவாரசியமான பயணங்களில் ஒன்றாக அது அமைந்திருந்தது! [:)] அதே வேளையில் சிபியின் அலுவலகம் அருகே உள்ளதொரு டீக்கடையில், ஒரு மர்ம உருவம் லெமன் டீயை ஒரு சிப் உறிஞ்சுவதும், சிபி வராத கடுப்பில் ஒவ்வொரு சிப்புக்கும் ஒரு தடவை மணி பார்ப்பதும் என பொறுமையிழந்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தது! அவர் வேறு யாருமல்ல நண்பர் நாகராஜன்தான்! 11 மணிக்கே அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று சொன்னதை நம்பி மனிதர் 10:45க்கே வந்து விட்டாராம்! எங்கள் இருவரைக் கண்டதும், கடுப்பை மறைத்துக்கொண்டு கை குலுக்கி சிரித்தவாறே டீ சாப்பிடலாமா என்றார்! நாங்கள் குடித்தது டீக்கடை லெமன் டீதான், டாஸ்மாக் பீர் அல்ல என்பதை கீழே உள்ள போட்டோக்களைப் பார்த்து உறுதி படுத்திக் கொள்ளலாம்! +-------------------------+------------------------+ | --------------------- | -------------------- | | [] | [] | | சிபியும் நானும் – 1 | சிபியும் நானும் -2 | | --------------------- | -------------------- | +-------------------------+------------------------+ முக்கியக் குறிப்பு: நான் அணிந்திருக்கும் சிவப்பு நிற டீஷர்ட்டில் செவ்விந்திய வீரர் ஒருவரின் தலைப்பாகை பொறிக்கப்பட்டிருப்பது முழுக்க முழுக்க தற்செயலானதொரு சம்பவமே ஆகும்! இதற்கும் லயன் வலைப்பூவில் சமீபத்தில் அரங்கேறிய நீண்ட விவாதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை [;)] [] பிறகு சிபியின் கார்மெண்ட் ஃபேக்டரி வளாகத்தில் நுழைந்தபோது பல வலது கைகள் விறைப்பாக சல்யூட் அடித்தன! நம்முடன் இருப்பது ஒரு முக்கிய அதிகாரி என்ற எண்ணம் எனக்கும், நாகராஜனுக்கும் லேசாக உறைக்க ஆரம்பித்த சமயத்தில், முதல் மாடியில் உள்ள குளிரூட்டப்பட்ட அந்த தனியறையின் சுழல் நாற்காலியில் அவர் அசத்தலாய் சென்று அமரவும் அவ்வெண்ணம் சரியே என உறுதிப்பட்டது! ஞாயிறு அன்றும் பணியாளர்களை அவர் விடாமல் வேலை வாங்கும் அழகை கண்டு மகிழலாம்! [:)] [] பரஸ்பர அறிமுகங்கள் நடந்தேறின! நாகராஜன் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தபோது எடுத்த போட்டோவை ஃபேஸ்புக்கில் பல நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். நண்பர் ரஃபிக், நான் நாகராஜன் மாதிரியே இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்! நாகராஜனுக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் தோன்றவில்லை! ஆறு ஒற்றுமைகள் ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்! [:)] சிபியின் போட்டோவையும் முன்னர் ஒரு தரம் ஸ்டாலின் அவர்களின் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன்! நண்பர் ஸ்டீல் க்ளாவின் இரும்புக்கரம் மின்சாரத்தைப் பாய்ச்ச, சிபியின் ஒட்டுமொத்த முடிகளும் குத்திட்டு நிற்கும் அற்புதமான படம் அது! [:)] [] காமிக்ஸ், NBS வெளியீடு, சென்னை புத்தக கண்காட்சி, திருப்பூரில் பழைய புத்தகக்கடை வைத்திருக்கும் பெரியவர், சினிமா, LKG அட்மிஷன் – இப்படி பல விஷயங்களை பேசியதில் நேரம் சென்றதே தெரியவில்லை! [] சரி முக்கியமான விசயத்திற்கு வருவோம்! அத்தனை நேரம் சேணத்தில் பாதுகாத்து வைத்திருந்த அந்த கோப்புகளை மேஜையில் பரப்பினார் சிபி! அவை கோப்புகள் அல்ல, ஆ….. என்ற அதிர்ச்சியில் கண்களை கசக்கிக் கொண்டேன் :)  நான் ட்ரீம்களில் மட்டுமே கண்டிருந்த ஸ்பெஷல் இதழ்கள்தான் அவை! [:)] எனக்கே எனக்கா என்று மனம் துள்ளிக்குதிக்கத் தொடங்கியது! இருந்தாலும் நமது நண்பர்கள் எக்ஸ்சேன்ஜ் முறையில் புத்தகங்களை பரிமாறிப் படிக்கும் பழக்கம் வைத்திருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் – ‘காமிக்ஸ் கையால் காக்காய் கூட ஓட்டிப் பழக்கமிராத’ என் மனதில் குபீர் என திகில் அடித்தது! :) :) [:)] [] ஆனால், நான் வெட்கும்படி நண்பர் சிபி ஒரு காரியம் செய்தார்! “மில்லினியம் ஸ்பெஷல் நீங்களே வச்சுக்கங்க! MDS & ‘மரண முள்’ படிச்சுட்டு மெதுவா ரிட்டர்ன் கொடுங்க” – என்றார்! நான் அசடு வழிந்ததை துடைத்துக்கொண்டு “ரொம்ப நன்றி ஜி! ஆனா, எப்படி இப்படி? புக்கை எல்லாம் டக்குன்னு தூக்கித் தர்றீங்க?! நான் ஒரு தடவை படிச்ச புக்கை நானே மறுபடி எடுத்துப் பாக்குறதில்லே, மத்தவங்களுக்கும் கொடுக்கறதில்லே” என்று வெட்கமில்லாமல் சேஃப்டி சைடில் சொல்லி வைத்தேன்! [:)] என்ன செய்வது எனக்கு காமிக்ஸ் மீது அப்படி ஒரு possessiveness! :) நாகராஜன் அவர்களுக்கும் சிபி சில புத்தகங்களை பரிசளித்தார்! [] மூன்று பேருக்குமே அன்று நேரமின்மை காரணமாக உடனே கிளம்ப வேண்டியிருந்ததால் – அடுத்த முறை நிச்சயமாக லஞ்சுக்கோ, டின்னருக்கோ சந்தித்து நிதானமாக உரையாடலாம் என்ற முடிவில் கை குலுக்கிக் கிளம்பும் முன்னர், நண்பர் சிபி மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்! எனக்கும் நாகராஜனுக்கும் – பொருத்தமான அளவில், ஆளுக்கு இரண்டு “Van Heusen” டீஷர்ட்களை பரிசாக அளித்து அன்பு மழையில் நனைய வைத்தார்!!! அடுத்த நாள் பொங்கல் தினம் என்பதால், அந்த டீஷர்ட்கள் மறக்க முடியாத பொங்கல் பரிசாக அமைந்துவிட்டன! அடுத்ததாக தீபாவளிக்கு முந்தைய நாளும் சிபியை நிச்சயம் சந்தித்திட வேண்டும் என்ற முடிவுடன் இருவரும் நன்றி சொன்னோம்! [:)][:)][:)] லயன் மற்றும் இதர காமிக்ஸ் வலைப்பூக்கள் மூலமாக மட்டுமே அறிமுகமாகியிருந்த இரண்டு நண்பர்களை நேரில் சந்தித்தது மிகவும் இனிய அனுபவமாயிருந்தது! வலைப்பூக்களில் / ஃபேஸ்புக்கில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம்; முகம் தெரியா நண்பர்களைப் பற்றி நாமாக ஒரு பிம்பத்தை மனதில் வைத்துக் கொள்கிறோம்! ஆனால், நேரில் சந்தித்துப் பேசிடும் போது அத்தகைய பிம்பங்கள் சட்டென உடைகின்றன – உருவிலும், உறவிலும் முற்றிலும் மாறுபட்ட நபர்களாக அவர்கள் தோற்றமளித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்! இதுதான் இணைய நட்பிற்கும், நேரில் கைகள் இணையும் நட்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம், இல்லையா நண்பர்களே?! [:)] சரி, இணைய நண்பர்கள் இணைந்த கதையைப் படித்தீர்கள்! ஆனால், இணைய நண்பர்கள் பற்றிய அறிமுகங்கள் இத்தோடு முடிந்திடவில்லை! கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பெங்களூரைச் சேர்ந்த மற்றுமொரு இணைய நண்பர் கிரிதரன், என்னுடைய தங்கக் கல்லறை விமர்சனத்தைப் படித்துவிட்டு, ராணி காமிக்ஸில் ஒருமுறை டைகர் (ப்ளூபெர்ரி) போன்ற தோற்றம் கொண்டதொரு கௌபாய் வீரர் தோன்றியதாக அந்த புத்தகத்தின் சில பக்கங்களை தனது மொபைல் கேமரா மூலம் படமெடுத்து அனுப்பி இருந்தார்! எனக்கும் டைகர் போலத்தான் தோன்றுகிறது – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?! +----+----+----+----+ | [] | [] | [] | [] | +----+----+----+----+ அப்புறம் கிரிக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் உரித்தாகுக; எனக்காகவும் மற்றுமொரு பெங்களூர் நண்பர் பெரியாருக்காகவும் (பூர்னிஷ்) “ஸ்டார் காமிக்ஸ் – பனி மண்டலக் கோட்டை” இதழ்களை வாங்கி, நண்பர் ரஃபிக் மூலம் அனுப்பியிருந்தார் . சும்மா சொல்லக்கூடாது, ரஃபிக்கின் பேக்கிங் கனஜோர்!!! [:)] நன்றி நண்பர்களே!!! [] பெரியார் பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும்! நாம் ஃபேஸ்புக்கில் ஏதாவது போஸ்டோ, கமென்ட்டோ போட்டால், அது எவ்வளவு மரண மொக்கையாக இருந்தாலும் அடுத்த நொடியே லைக் போடுவார்! [:)] தன் நிழலை விட வேகமாக செயல்படும் லக்கி லூக்கைப் போல, நம் போஸ்ட்டை விட வேகமாக இவர் லைக் போடுவதால் ஃபேஸ்புக் வட்டாரத்தில் இவரை “லைக்கி லூக்” என்று அன்புடன் அழைக்கிறார்கள்! [:)] கடைசியாக நமது நண்பர்கள் பலர், காமிக்ஸ் குறித்த பிரத்தியேக வலைப்பூக்களை சமீபத்தில் துவக்கியுள்ளனர்! அது குறித்த சிறிய அறிமுகப் படலம்! காமிக்கேயன்: என்று தனக்குத் தானே பெயர் சூட்டி மகிழும் இவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்! கிங்கேயன், கரண்டிமேன் என்று பல புனைப்பெயர்களில் சுற்றும் இவரின் இயற்பெயர் “P. கார்த்திகேயன்”! [:)] comicsgalaata.blogspot.com ஷி நா பா: டைகர் மேல் உள்ள பிரியத்தால் தன் மூக்கையே சிதைக்கத் துணிந்த இவரின் ஒரிஜினல் பெயர் சௌந்தர் என்பதாகும்! [:)] இவர் நடத்தும் எண்ணற்ற வலைப்பூக்களில் – இது ஒரு புதிய வருகை! http://blueberry-soundarss.blogspot.com   பொடியன்: முதல் பதிவிலேயே விஜயன் அவர்களின் பின்னூட்டத்தைப் பெற்றவர் நம் பொடியர்! http://tamilcomicsworld.blogspot.com   ஸ்ரீராம்: சார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்! [:)] http://nameistexwiller.blogspot.com ஈரோடு விஜய்: இவரும் காமிக்ஸ் பற்றிய ஒரு வலைப்பூ துவக்கியுள்ளாராம்! ஆனால் பிரச்சினை என்னவென்றால், வலைப்பூவின் முகவரியைக் கேட்டால் அதற்கு புகை சமிக்ஞையிலேயே பதில் அனுப்பித் தொலைக்கிறார்! [;)] இவர் விரைவில் எல்லோருக்கும் புரியும் முகவரியில் வலைப்பூவை நடாத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! [;)] புகை சமிக்ஞை   இவர்களைத் தவிர, இந்த இரண்டு நண்பர்கள் தங்கள் ஓவியத் திறமையை தங்கள் வலைப்பூக்களில் காட்டி வருகின்றனர்: விஸ்கி சுஸ்கி: சமீபத்தில் இவர் ஃப்ரொபைல் பகுதிக்கு சென்ற போதுதான் இவர் வலைப்பூ நடத்தும் விசயமே தெரியவந்தது!!! http://valaippathivugal.blogspot.com cap tiger: யாருக்கும் தெரியாமல், சீக்ரெட்டாக வலைப்பூ நடத்துபவர்களில் இவரும் ஒருவர்! [;)] இவர் வலைப்பூ நடத்தி வரும் விஷயம் எனக்கு இன்றுதான் தெரியும்!!! http://sivsmilyart.blogspot.in இறுதியாக, பாலா: காமிக்ஸ் ரசிகரான ஓவியர் பாலா (விகடன், தினமலர்…) அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதால், எனக்குப் பிடித்த வலைப்பூ என்பதாக மட்டுமே இதைப் பார்க்கவும். இவருடைய படைப்புக்கள் லயன் / முத்து காமிக்ஸில் வெளி வர வேண்டும் என்பது என் ஆசை! http://cartoonbala-conceptartist.blogspot.com   இந்த நீண்ட பதிவைப் படித்த கடுப்பில் ‘ரெண்டு ஷாட் டக்கீலா’ அடிக்கக் டாஸ்மாக் கிளம்பிட வேண்டாம்! மொக்கைகள் இத்துடன் முடிவுற்றன – அடுத்த பதிவில் சந்திப்போம்! [:)][:)][:)] 22 தங்கக் கல்லறை - மின்னும் மரணம்! November 28, 2012 [] இந்த இதழின் அழகிய அட்டையைத் தாண்டி உட்பக்கங்களுக்கு செல்லவே நிச்சயமாக சில நிமிடங்கள் பிடிக்கும்! படங்களை மேலோட்டமாகப் பார்த்து, வேகமாக வசனங்களை படித்து, பக்கங்களை நகர்த்தினால் சுவாரசியம் இராது! ஒவ்வொரு கட்டத்திலும், அட்டகாசமான இதன் சித்திரங்களை நிதானித்து உள்வாங்கி அனுபவித்துப் படித்தால் ஒரு Spaghetti வெஸ்டர்ன் படம் பார்த்த உணர்வு கிடைப்பது நிச்சயம்! சிவப்பு விளக்குகளுக்கு இடையில் இதன் கதை, ஸ்பாய்லர்கள் இன்றி மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது! லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் முதலில் இந்தப் பதிவை படிப்பது நலம்! கதை திடுதிப்பென்று முடிவது போல ஒரு உணர்வு எழுந்தாலும், இவ்வருடத்திய டாப் காமிக்ஸ் இதழ்களில் தங்கக் கல்லறையும் ஒன்று என்பதில் சற்றும் ஐயம் இல்லை!!! ⚫⚫⚫ தங்கத்தைத் தேடுவதையே முழுநேரத் தொழிலாக கொண்ட முரட்டுத் தங்க வேட்டையர்கள் நிறைந்த 19ம் நூற்றாண்டின் அமெரிக்கா! அரிஸோனா மாநிலத்தில் பலோமிடா என்ற சிறு நகரில் சட்டஒழுங்கை பேணுவதற்கு தற்காலிக மார்ஷலாக பணியிலிருக்கிறார் ப்ளூபெர்ரி, அவரது டெபுடி ஜிம்மியுடன்! லக்னர் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் அந்த கிழட்டு நபர், தனக்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கம் இருக்குமிடம் தெரியும் என அந்நகரில் உள்ளதொரு மதுபானக் கடையில் உளறி வைத்து வம்பில் மாட்டுகிறான். இதே கதையைச் சொல்லி, முன்பு மோசடி செய்திருந்ததால் கோபமாகும் அந்நகர தங்க வேட்டையர்கள் லக்னரை கொல்ல முயல்கின்றனர். அவனைக் காப்பாற்றி, பாதுகாப்புக்காக சிறையிலடைக்கிறார் ப்ளூபெர்ரி! அச்சமயம் வெகுமதி வேட்டையர்கள் இருவர், லக்னரை கைது செய்ய வாரண்ட்டுடன் ப்ளூபெர்ரியை அணுகுகின்றனர். இடைப்பட்ட வேளையில் ஜிம்மிக்கு தங்கச் சுரங்கத்தில் பாதியை தருவதாக ஆசை காட்டி அவன் உதவியுடன் சிறையில் இருந்து தப்புகிறான் லக்னர். [] ஜிம்மி புதையல் ஆசையில் ப்ளூபெர்ரிக்கு துரோகம் இழைத்திருந்தாலும் அடிப்படையில் ஒரு நல்ல மனிதன். லக்னரோ முதுகில் குத்த நேரம் பார்க்கும் நயவஞ்சகன். இவர்களைத் தேடிக் கிளம்பும் மூவரணியில் ப்ளூபெர்ரி ஒரு நேர்மையான அதிகாரி. ஆனால் அவ்விரண்டு வெகுமதி வேட்டையர்களோ பணத்திற்காக எதையும் செய்ய கூடியவர்கள். முரண்பாடான மனிதர்கள் கூடுமிடத்தில் மனிதத்தின் முகட்டையும், மடுவையும் தொட்டுச் செல்லும் சம்பவங்களுக்கு பஞ்சமிராதுதான்! தங்கச் சுரங்கத்திற்கு செல்லும் பாதையோ – சுட்டெரிக்கும் பாலைவனமும், வறண்ட குட்டைகளும், குறுகிய கணவாய்களும், முரட்டுச் செவ்விந்தியர்களும், இன்ன பிற தடைகளும் நிறைந்த ஆபத்தான ஒன்று!. களைத்த குதிரைகளின் மேல் செய்யும் பயணம் மரணத்திற்கு மட்டுமே இட்டுச் செல்லும். அக்குதிரைகளும் இல்லாவிடில் வெப்பம் தாளாது களைத்து விழும் இடமே கல்லறையாய் மாறிடும்! வறண்ட பாலைவனமோ, ‘தங்கத்தை விட தண்ணீர் பெரிது’ என்ற கசப்பான உண்மையை இறக்கும் நிலையிலுள்ள வேட்டையர்க்கு இரக்கமின்றி நினைவூட்டிடும்! இந்தத் தடைகளை ஐவரும் தாண்டினார்களா?! தடத்தில் உள்ள தடைகளை கடந்தால் மட்டும் போதுமா?! முடிவில் ஒரு திருப்பமாய், சுரங்கத்தின் அருகே காத்திருந்தது அந்த பேராபத்து – தங்கக் கல்லறை! ⚫⚫⚫ [] ☻ ஒரு மாறுதலுக்காக ஆசிரியர் விஜயனின் வலைப்பூவில் நான் இட்ட கீழ் காணும் பின்னூட்டத்தை இங்கே ‘காப்பி + எடிட் + பேஸ்ட்’ செய்கிறேன்! [;)] // இவ்வருடம் வெளியான வண்ண இதழ்களில் மொழிப்பெயர்ப்பு / மொழிநடை, எந்த தரத்தில் இருந்ததோ – அதே பாணியில்தான் தங்கக் கல்லறையிலும் இருக்கிறது! இந்த புதிய பாணி மொழிப்பெயர்ப்பு என்னைப் போன்ற ஒரு பகுதி வாசகர்களுக்கு ‘சற்றே சுமார் ரகம்’ (ஆங்காங்கே) என படுவதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான காரணங்களையும், அவர் அலுவலர்கள் சந்திக்கும் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் இன்ன பிற நெருக்கடிகளைப் பற்றியும் ஏற்கனவே ஆசிரியர் பல முறை பொறுமையாக விளக்கி விட்டார். எழுத்துப் பிழைகளை களைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். எனவே, இவற்றை மீண்டும் மீண்டும் பெரிது படுத்துவதில் யாருக்கும் எந்த பலனுமில்லை. // பி.கு.1: அதே சமயம் இனி வரும் இதழ்களில், நான் மற்றும் மற்ற வாசக நண்பர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டிய குறைகளைத் தவிர்த்து, புதிதாக ஏதேனும் தென்படும் பட்சத்தில் அவற்றை ஆசிரியரின் வலைப்பூவிற்குச் சென்று, தயங்காமல் ‘ஜல்தியாக’ பின்னூட்டம் இடுவேன் என்று இங்கு உறுதி கூறுகிறேன்! ;) இதில் எந்த ஒரு கெட்ட நோக்கமும் கிடையாது! [:)] பி.கு.2: ‘ஜல்தி’ – சமீபத்தில் நமது இதழ்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல். மேலே உள்ள பத்தியில் இருப்பது போலவே இந்தச் சொல் வரும் இடமெல்லாம் கண்ணை உறுத்துகிறது!!! பி.கு.3: இந்தப் புத்தகத்தை இன்னமும் வாங்காதவர்கள், Ebay மூலம் ஜல்தியாக வாங்குங்கள்! [:D] பி.கு.4: இணைப்பாக வரும் கருப்பு வெள்ளைக் கதைகள் ஒரு பகுதி வாசகர்களை வெகுவாக திருப்தி படுத்தும் [;)] பி.கு.5: ‘டை_ர்’ என்ற பெயர், இந்தப் பதிவில் வேண்டுமென்றே (வேண்டாம் என்றே!) தவிர்க்கப்பட்டுள்ளது! [;)] பி.கு.6: இந்தப் பதிவு போன பி.கு.விலேயே முடிந்து விட்டது! [:)][:)][:)] 23 முரட்டுக் கௌபாய் - லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி - Man with Strange Name! []தோற்றத்திலும் சரி, ஆளுமையிலும் சரி – ப்ளூபெர்ரியைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகத்திற்கு வரும் நபர் ‘கிளின்ட் ஈஸ்ட்வுட்’தான்! அவர் நடித்த டாலர் ட்ரையாலஜி படங்களுக்கு சற்றும் சளைக்காதது ப்ளூபெர்ரியின் வெஸ்டர்ன் காமிக்ஸ் வரிசை! கேப்டன் பிரின்ஸ்  காமிக்ஸில் வரும் பார்னேயைப் போல ஒரு  குடிகார கிழவர்தான் ப்ளூபெர்ரியின் டெபுடி, பெயர் – ஜிம்மி! இவரோடு இணைந்து வன்மேற்கில் ப்ளூபெர்ரி நிகழ்த்தும் அதிரடி சாகசங்கள், வெஸ்டர்ன் ரசிகர்களை குதூகலிக்க வைக்கும்! வழக்கமான டமால் டுமீல் ரக கௌபாய் கதைகள் போலன்றி ப்ளூபெர்ரி காமிக்ஸ்கள் அழுத்தமான கதையம்சதையும், பல வரலாற்று விவரங்களையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு! வெஸ்டர்ன் படங்கள் மற்றும் காமிக்ஸ் மீதான ஈர்ப்பு சிறு வயதிலேயே  தோன்றியதற்கு ராணி காமிக்ஸ்தான் முக்கிய காரணம். அண்ணன் உபயத்தில் முதலில் படித்த (படம் பார்த்த?) கௌபாய் கதை “பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்” என்பதாய் ஞாபகம். அப்போது ராணி காமிக்ஸில் அடிக்கடி கௌபாய் கதைகள் வெளிவரும் – அவற்றில் மூன்று குதிரை வீரர்கள் (லியோ, ஃப்லிப் & சைமன்) மற்றும் கிட் கார்சன் தோன்றிய கதைகள் வெகு பிரபலம். கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்பட்ட செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கு []ஈர்ப்பு அதிகம்! பெயரில் இந்தியர்கள் என இருந்ததால் அவர்களும் நம்மூர் ஆட்கள்தான் என்ற தப்பான புரிதலில் இருந்த பால்ய காலம் அது. காமிக்ஸ்களிலும், எங்கள் அப்பா அரிதாக அழைத்துச் சென்ற வெஸ்டர்ன் சினிமாக்களிலும், செவ்விந்தியர்கள் வீரமிக்கவர்கள் ஆனால் மூளையற்ற வெறியர்கள், கொலைகாரர்கள் என்ற ரீதியிலேயே சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். சற்று விவரம் தெரிந்த பிறகு உண்மையான வில்லன்கள் அமெரிக்காவை ஆக்ரமித்த வெள்ளையர்கள்தான் என்பதும், செவ்விந்தியர்கள் குழுக்களாக பிரிந்து தங்கள் பகுதி நிலத்தை பாதுகாக்க போராடிய அப்பாவி பூர்வ குடிகள் என்பதும் தெளிவாக புரிந்தது! []அதனாலோ என்னவோ, எண்பதுகளின் பிற்பாதியில் லயன் காமிக்ஸ் மூலமாக  ‘டெக்ஸ் வில்லர்’ அறிமுகமானபோது மனதில் பச்சக் என ஒட்டிக்கொண்டார். செவ்விந்திய நவஜோ இன தூதராக, அவர்கள் உரிமைக்கு பாடுபடும் நாயகராக சித்தரிக்கப்பட்டிருப்பார் (இருப்பினும் வெள்ளையர்களே உயர்வாக காட்டப்படுவார்கள் என்பது வேறு விஷயம்!). டெக்ஸைப் பற்றி வேறு ஒரு  பதிவில் பார்ப்போம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து, தொண்ணூறுகளின் பிற்பாதியில், என் காமிக்ஸ் ஆர்வம் மங்கத் தொடங்கிய கால கட்டத்தில் – டெக்ஸ்ஸைப் போன்ற ஆளுமை மிக்க மற்றொரு கௌபாய் நாயகன் லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி, முத்து காமிக்ஸ் ‘தங்கக் கல்லறை’ மூலமாக  கேப்டன் டைகர் என்ற பெயரில் அறிமுகமானார். ஆச்சரியகரமாக தங்கக் கல்லறையின் முதல் பகுதி என் சேகரிப்பில் இருந்தாலும் ப்ளூபெர்ரி என்ற டைகர் ஐந்து வருடங்கள் முன் வரை என் ஞாபகத்தில் இருந்திருக்கவில்லை. படிப்பை முடித்ததும் காமிக்ஸ் சகவாசம் இன்றி கழிந்த பத்து ஆண்டுகளின் முடிவில், 2007-ஆம் ஆண்டு லயன் அலுவலகம் சென்று, அவர்கள் கைவசம் இருந்த அனைத்து பிரதிகளையும் அள்ளிக்கொண்டு வந்து, அவற்றில் இருந்த ப்ளூபெர்ரி கதைகளை படித்தபோதுதான் டெக்ஸைப் போலவே ப்ளூபெர்ரியும் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார்! [:)] ப்ளூபெர்ரி கிராபிக் நாவல் பற்றிய ஒரு சிறு ட்ரைலரை கீழே பார்க்கலாம்! https://www.youtube.com/watch?v=m7V_oDkJILE சவரம் செய்த முகத்துடன் பளிச்சென்று வலம் வரும் வழக்கமான கௌபாய் நாயகர்கள் போலன்றி, முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கும் ஒரு வார தாடியுடன், காடு மேடுகள் சுற்றித் திரியும் கரடு முரடான மனிதர்! வசதியான குடும்பத்தில் பிறந்து, துவக்கத்தில் அடிமை முறையை ஆதரித்தவர். செய்யாத கொலைக்கு பழி சுமத்தப்பட்டவர். பிறகு மனம் மாறி, தெற்கை சேர்ந்தவராக இருப்பினும் நான்கு ஆண்டுகள் நடந்த அமெரிக்க சிவில் போரில் தென்மாநில கான்ஃபெடரேட்  படைகளுக்கு எதிராக செயல்பட்டு, போர் முடிந்ததும் அமெரிக்க குதிரைப்படையில் லெஃப்டினன்டாக பணியமர்ந்தவர். டெக்ஸைப் போலவே செவ்விந்தியர்களின் உரிமைக்கு போராடியவர். தனது சமயோசித புத்தியாலும், செயல்திறனாலும் பல வெற்றிகளை தேடித் தந்தவர். இருப்பினும் தெற்கை சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும், கொஞ்சம் அடாவடிப் பேர்வழி என்பதாலும் மேலதிகாரிகளின் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் வஞ்சிக்கப்படும் பரிதாப நாயகர். அநீதி யாருக்கு எதிராக இழைக்கப்பட்டாலும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் நல்லவர் – இப்படி ப்ளூபெர்ரிக்கு பல அடையாளங்கள்! []ப்ளூபெர்ரியின் பிரதான படைப்பாளிகள் – Jean-Michel Charlier (கதாசிரியர்), Jean Giraud (கதாசிரியர் + பிரதான ஓவியர்) – இருவருமே தற்போது உயிருடன் இல்லை! Moebius என்ற புனைப்பெயரில் அறியப்படும் இதன் ஓவியர், ப்ளூபெர்ரியை வரைந்தது ‘Jean-Paul Belmondo’ என்ற ஃபிரெஞ்சு  நடிகரின் (இடது) தோற்றத்தை மாதிரியாக வைத்து! Moebius ப்ளூபெர்ரியை வரையும் அட்டகாசமான இந்த வீடியோக்களைப் பாருங்களேன் – ஜீனியஸ்!: ---------------------------------------------------------- ----------------------------- Jean Giraud drawing Blueberry with pencil, pen and brush MOEBIUS DRAWING BLUEBERRY   ---------------------------------------------------------- ----------------------------- ப்ளூபெர்ரியை வைத்து ஒரு ஃபிரெஞ்சு படமும் வந்திருக்கிறது! இருப்பினும் கேள்விப்பட்டவரையில் அப்படம் ப்ளூபெர்ரியின் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை! ------------------------------------------------  [] ப்ளூபெர்ரி Vs கிளின்ட் ஈஸ்ட்வுட் உருவ ஒற்றுமை! ------------------------------------------------ ப்ளூபெர்ரி காமிக்ஸ் சித்திரங்களை முழுப் பக்கமாக பார்த்தால் ஒழுங்கின்றி கொசகொசவென்று இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் ஒவ்வொரு Panel-ஐயும் உற்று நோக்கினால் அவற்றில் உள்ள நுண்ணிய விவரங்கள் ஆளை அசரவைக்கும். ஒரே ஒரு குறை, ப்ளூபெர்ரி மற்றும் ஜிம்மியின் முகங்கள் ஒரே கதையின் ஒவ்வொரு பேனலிலும் ஒவ்வொரு விதமாக மாறி ‘சில சமயம்’ அவர்களை இனம் காணுவதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடும். []ப்ளூபெர்ரியின் சிறந்த கதைகளில் ஒன்றான தங்கக் கல்லறையின், முதற்பதிப்பின், முதல் பாகத்தை அது வெளிவந்த சமயத்தில் ‘படித்து மறந்ததோடு’ சரி! அதன் இரண்டாம் பாகம் என்னிடம் இல்லாததால் அதனை முழுதாய் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது! சமீபத்தில் வெளியான இதன் ‘முழு வண்ண மறுபதிப்பு’ அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறது! சுருக்கமாக சொன்னால் வெஸ்டர்ன் ரசிகர்கள் தவறவிடக் கூடாத அட்டகாசமான இதழ் இது! இதன் விமர்சனத்தை விரைவில் எதிர்பாருங்கள்! இந்த இதழ் தற்போது ebay-யில் கிடைக்கிறது! 24 ஒரு காமிக்ஸ் குழாயடிச் சண்டை! [] “தமிழ் காமிக்ஸ் அரசியல்(!)” பற்றி அறியாத நண்பர்களுக்கு முதலிலேயே சொல்லி விடுகிறேன், இது ஒரு நீண்ட, போரடிக்கும் பதிவு! [:)] எப்போது SHSS இதழ் பற்றிய காட்டமான கருத்துகளை என் வலைபூவிலும் அதையே எடிட்+பேஸ்ட் செய்து லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் அவர்களின் வலைப்பூவிலும் இட்டேனோ அங்கு தொடங்கியது இந்தப் பிரச்சினை! வாதங்கள் விதண்டாவாதங்களாக மாறியதாலும், பதில்கள் கண்ணியம் இழந்து தாக்குதல்களாக மாறியதாலும் “குழாயடிச் சண்டை” என்பதே பொருத்தமாக இருக்கும். சண்டை நடந்த இடம் விஜயன் அவர்களின் வலைப்பூ என்பதால் அங்கே மேலும் எண்ணையை ஊற்றி விஜயன் மற்றும் இதர வாசகர்களின் எரிச்சலை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை! மேலும் காமிக்ஸ் பற்றிய விமர்சனம், கருத்துக்கள், யோசனைகள், அவ்வப்போது கொஞ்சம் மொக்கை போன்ற சங்கதிகளைத் தாண்டி மற்ற விஷயங்களை அங்கே பேச விரும்பவில்லை! சண்டையை அங்கே மேலும் வளர விடாமல் நிறுத்திக்கொண்டு விலகியது நானாக இருப்பதில் எனக்கு பெருமையே தவிர எந்த ஒரு சங்கடமும் இல்லை! இருந்தாலும் அங்கே ஒரு சிலர் தவறு என் மேல்தான் என்ற ரீதியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாலேயே தீபாவளி முடிந்தும் வெடிக்க வேண்டியிருக்கிறது! நல்ல சில கருத்துக்கள் எதிர் தரப்பில் இருந்து வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் ஏதாவது தவறாக பேசி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பது என் வழக்கம். அது பற்றி நான் ஈகோ பார்ப்பதில்லை. சில வாதங்களுக்கு (விதண்டாவாதங்களுக்கு) தக்க பதிலடி கொடுத்த பின்னர், எதுவும் பேச முடியாமல் பம்மிக்கொண்டு பதுங்கும்  பழக்கம் என்னிடம் இல்லை! சரி என்றால் விடாமல் வாதிடுவேன், தப்பு என்றால் உடனே மன்னிப்பு கேட்பேன்! ஆனால் இறுதியில் ஸ்டீல் க்ளா மற்றும் பரணியிடம் ஒரு சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டதிற்கு நான் மன்னிப்பு கேட்டதை திசை திருப்பி என் மேல்தான் தவறு என்பது போல் சித்தரித்துக் கொண்டிருகின்றனர் ஒரு சிலர்! விஜயனின் வலைப்பூவில் உலாவும் சில தீவிர வாசகர்களுக்கு லயன் / முத்து காமிக்ஸ் பற்றி விமர்சித்தால் கொஞ்சமும் ஆகாது போல! சினிமா நாயகர்களின் தீவிர ரசிகர்கள், அவரவர் அபிமான நடிகரின் ஒரு சில படங்கள் மொக்கையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் ‘படம் சூப்பர்’ என்று சொல்லித் திரிவதில்லையா – அதுபோலத்தான் இதுவும்! தவறில்லை! ஆனால் குறிப்பிட்ட அந்தப் படம் ‘படு மொக்கை’ என்ற உண்மையைக் கூறுபவர்களை கும்பலாக சேர்ந்து ‘மொத்த’ நினைப்பதுதான் தவறு! :) அதிலும் அந்த உண்மையைக் கூறுபவர் வலைப்பதிவராக இருந்து விட்டால், மொத்து மொத்து என்ற மொத்திவிடுவார்கள்! பதிவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரம், இல்லையா?!. என்னைப் போன்ற காமிக்ஸ் பதிவர்கள் சொல்லும் “குறைகளை” மட்டும் பூதாகரமாக்கி பிரச்சினையை கிளப்பும் இவர்கள், நாங்கள் பாராட்டி பேசும் போதும், நிறைகளை பட்டியலிடும் போதும் கண்களை இறுக்க மூடிக்கொள்கிறார்கள்! SHSS மற்றும் தங்கக் கல்லறை பற்றிய என் கருத்துக்கள் மற்ற பதிவர்களிடம் இருந்து வெகுவாக வேறுபடுகின்றன! பதிவர்களை விடுங்கள், விஜயனின் வலைப்பூவில் பின்னூட்டமிடும் ‘பதிவர் அல்லாத’ வாசகர்களும் பல்வேறு விதமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலரும் SHSS மற்றும் தங்கக் கல்லறையை தீவிரமாக விமர்சித்திருக்கிறார்கள். அப்படி இருக்க பதிவர்களை மட்டும் பொதுவாக குறை சொல்வது என்ன நியாயம்?! அதே போலதான் நான் ‘இந்த ஆண்டு’ உறுப்பினராக இணைந்த ஃபேஸ்புக் குழுமத்தைப் பற்றிய இவர்களின் கருத்தும்! இங்கே நடக்கும் ஜாலியான கும்மிகளை, கேலிகளை, கிண்டல்களை மட்டும் ஆசிரியர் வலைப்பூவில் வந்து போட்டுக்கொடுக்கும் முகமில்லாத சிலர், அதே ஃபேஸ்புக் பக்கத்தில் நடக்கும் உருப்படியான விவாதங்களைப் பற்றி ஆசிரியர் வலைப்பூவில் எதுவும் சொல்வதில்லை! பின்னே உருப்படியான விசயங்களை பேசுவதால் அவர்களுக்கு என்ன லாபம் கிட்டி விடப்போகிறது?! யாராவது காமிக்ஸ் பதிவர்கள் அல்லது ஃபேஸ்புக் உறுப்பினர்கள் சில சமயம் எல்லை மீறி எதையாவது சொல்லி வைத்தால் அதற்கு பொத்தாம் பொதுவாக அனைத்து பதிவர்களையும், ஃபேஸ்புக் உறுப்பினர்களையும் குறை கூறுவது எந்த வகையில் நியாயம்?! தாக்குதல்கள் ரொம்பவே தனிப்பட்ட விதத்தில் போனதால், பொறுமையாக பதில் சொல்ல வேண்டியிருந்தது. சிலர் அனானி போர்வையில் வந்து இஷ்டத்திற்கு உளறினாலும், அவர்களுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்! இப்படி பொறுமையாக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்ததுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று இப்போதுதான் உறைக்கிறது! நான் எனக்கு பிடித்த, பிடிக்காத காமிக்ஸ்களை விமர்சனமோ, நக்கலோ, கேலியோ, கிண்டலோ செய்து கொண்டேதான் இருப்பேன்! அந்த விமர்சனங்களை இங்கேயும் இடுவேன், தேவைப்பட்டால் எடிட்+பேஸ்ட் செய்து எடிட்டர் வலைப்பூவிலும் இடுவேன்! இங்கே போடும் விமர்சனங்களை, எடிட்டர் வலைப்பூவில் நான் அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதில்லை! என் வலைப்பூவுக்கு சுட்டியோ, சுய விவரங்களோ அல்லது இன்ன பிற தேவையற்ற தகவல்களோ இருந்தால் அவற்றை நீக்கி விட்டுதான் போடுகிறேன்! என் வலைப்பூவிற்கு விளம்பரம் அளிக்கும் தவறை வலைப்பூ தொடங்கிய ஆரம்ப காலத்தில், ஆர்வக் கோளாறில் விஜயனின் வலைப்பூவில் செய்து, அவர் சுட்டிக்காட்டியதும் அது தவறு என உணர்ந்து வழக்கம் போல மன்னிப்பு கேட்டு அதற்கப்புறம் ஒரு தடவை கூட அப்படி செய்ததில்லை! எனவே என் வலைப்பூவிற்கு விளம்பரம் தேடுகிறேன் என்று யாரும் வீணாக குதிக்க வேண்டாம்! அதே போல காமிக்ஸ் பதிவுகள் அத்தனையையும் விஜயனின் வலைப்பூவில் நான் போடுவதில்லை! லயன், முத்து பற்றிய பதிவுகளை அவசியம் இருந்தால் மட்டும் போடுகிறேன்! Wild West ஸ்பெஷலுக்கு நான் எழுதிய விமர்சனத்தில் முழுக்கதையும் சொல்லி இருந்ததால் அந்த விமர்சனத்தை அங்கே போடவே இல்லை! அதே போல சில வாரங்களுக்கு முன் நான் எழுதிய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் பதிவையும், அதில் ‘முத்து காமிக்ஸ்’ பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன் என்ற ஒரே காரணத்தினாலேயே நான் ஒன்றும் ஓடோடிப் போய் அதை எடிட்டர் ப்ளாகில் காப்பி பேஸ்ட் செய்யவில்லை. நான் அங்கே போடும் பதிவுகள் மிகவும் அவசியமான விமர்சனப் பதிவுகள் மட்டுமே! போகிறபோக்கில் குறை சொல்லிப் போகாமல் எனக்கு தெரிந்த தீர்வுகளையும் அங்கே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்! எனவே எதிக்ஸ் குறித்து யாரும் எனக்கு லெக்சர் கொடுக்கத் தேவையில்லை! முதலில் உங்களிடம் அது இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்யுங்கள்! இதில் வேடிக்கை என்னவென்றால் விஜயன் அவர்கள் விமர்சனங்களை வரவேற்கிறார், தேவைப்பட்டால் பதிலும் சொல்கிறார், ஓவராகப் போனால் கோபப்படுகிறார், அவருக்கு சரியென படுபவற்றை ஏற்றும் கொள்கிறார்!   அவருக்கு எந்த பிரச்சினையும் இதில் இருப்பதாய் தெரியவில்லை. அதை நானே அவரிடம் வலைப்பூவில் நேரடியாக கேட்டும் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்டேன்.  இதுவும் அந்த ‘பஞ்சாயத்து தலைவர்களுக்கு’ பொறுக்கவில்லை போலும், என்னை வெறுப்பேற்றும் நோக்கில் எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி செய்வதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன?! விஜயன் அவர்களின் வலைப்பூவில் நிறைகளை மட்டும்தான் சொல்ல வேண்டும், குறைகள் சொல்ல விஜயன் அவர்களே அனுமதித்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் – கேவலப்படுத்தி அனுப்புவோம் என்கிறார்களா?! முக்கிய குறிப்பு: @ Comic Lover, Parani & கோ. ஸ்டீல் க்ளா: கீழே நான் எழுதியிருப்பவை உங்களைக் குறித்தது அல்ல – உங்களோடு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை! ஹஜன் என்னை மறைமுகமாக நக்கலடித்த போது, எனக்கு ஆதரவாக பேசிய கோ.ஸ்டீல் க்ளா, ஈரோடு விஜய், Comic Lover இவர்களுக்கு என் நன்றிகள் (வேறு யாராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்!). இங்கு முதலில் மன்னிப்பு கேட்பவன் மடையன் ஆகிறான், செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் நழுவுபவர்கள் நாணயஸ்தர்கள் ஆகிறார்கள்! அந்த நாணயஸ்தர்கள் வாய்க்கு வந்தபடி எதுவும் பேசுவார்களாம், அதை நான் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளக் கூடாதாம்! ஆனால், நான் ஏதாவது பேசினால் மட்டும் (அது கண்ணியமான தொனியில் இருந்தால் கூட) இவர்கள் கும்பலாக வம்புக்கு வருவார்களாம், நல்ல நேர்மை, நல்ல நியாயம்!!! வம்பிழுத்தது யார், வார்த்தை நெருப்பை கொட்டியது யார், மட்டரகமாக பேசிவிட்டு குறைந்த பட்சம் மன்னிப்பு கூட கேட்காமல் நழுவியது யார், பஞ்சாயத்து செய்வது யார், அணைந்த நெருப்பை கிளறுவது யார், மறைமுகமாக தாக்குவது யார், எதிக்ஸ் இல்லாமல் எழுதுவது யார், நேர்மையின்றி இருப்பவர் யார், ஸ்கூல் பையனாக இருப்பவர் யார், கேலி பேச்சுக்கும் சீரியஸ் தொனிக்கும் வித்தியாசம் தெரியாதவர் யார் என்ற பல கேள்விகளுக்கான விடைகள், கீழே தேதி + நேர வரிசைப்படி உள்ள ஸ்க்ரீன் ஷாட்ஸ்களை கண்டால் உங்களுக்கு தெரிய வரும்! புத்தக சேகரிப்பாளர்கள் எல்லாம் பதுக்கல்காரர்கள், அதிக விலைக்கு விற்பவர்கள் என்ற ரேஞ்சில் நியாயம் பேசிக்கொண்டிருக்கும் ஹஜன் சுந்தர், சில மாதங்கள் முன் புத்தகப் ப்ரியனை தாக்கிப் பேசியதையும், அவரிடம் இருந்தே புத்தகங்களை ‘நல்ல விலைக்கு’ வாங்க நினைத்த அதிசயத்தையும் இங்கே காணலாம். நீங்கள் எந்த விலைக்கோ விற்றுக்கொள்ளுங்கள் அல்லது வாங்கிக் கொள்ளுங்கள் – அது உங்கள் தனிப்பட்ட விஷயம்! ஆனால், அனைத்து சேகரிப்பாளர்களையும் ஒரே தட்டில் வைத்து எடை போட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?! விஜயன் அவர்கள் நூறு ரூபாய்க்கு புதிய புத்தகம் வெளியிட்டால், பத்து ரூபாய் புத்தகம்தான் வேண்டும் என்று ஹஜன் அடம் பிடிப்பார் என்பது தனிக்கதை!. மொத்தத்தில் பழைய காமிக்ஸ் சேகரிக்கும் தீவிர தேடுதலில் இருக்கும் இவர்களைப் போன்றவர்கள், CC-க்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்ற ஒரே காரணத்தால் கிடைத்த கேப்பில் எல்லாம் பொங்குகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது! முதலில் சர்ச்சையை கிளப்பிய என் SHSS பதிவில் இருந்து துவங்குகிறேன்: BoPET = மைலார் / SHSS = ஓ மை லார்ட்! 25 007 ஜேம்ஸ் பாண்ட் - தமிழில்! []ஆக்ஷன் படங்கள் என்பது ஆண்களுக்கு மட்டுமானது என்ற தவறான பிம்பம் ஆரம்பத்திலிருந்தே நம் மனதில் அழுந்தப் பதிந்து விட்டது! அதற்குரிய அடித்தளங்கள் சிறுவயதில் நமக்கு கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் முதற்கொண்டு பலமாக அமைக்கப்பட்டுவிடுகின்றன! ஆக்ஷன் ஹீரோவான 007 ஜேம்ஸ் பாண்ட்டின் படங்கள் எனக்கு சிறு வயதிலேயே மிகவும் பிடித்துப் போனதில் வியப்பில்லைதான்…! எனக்கு 007 ஜேம்ஸ் அறிமுகமானது 006 வயதில்! பக்கத்து []தெருவில்தான் குடியிருந்தார் – என்று சொன்னால் மட்டும் நீங்கள் நம்பி விடவா போகிறீர்கள் ஆனால், நிஜமாகவே ஆறு வயதிலேயே எனக்கு ஜேம்ஸ் பாண்டின் அறிமுகம் ராணி காமிக்ஸின் மூலமாக கிடைத்தது! காமிக்ஸ் என்றதும் சிதறு தேங்காயைப் போல தெறித்து ஓடுபவர்கள் கீழே இருக்கும் அழகிய காமிக்ஸ் பக்கத்தை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் [;)] நான் என் வாழ்க்கையில் திருட்டுத்தனமாய் படித்த (பார்த்த?) முதல் புத்தகம் ஜேம்ஸுடையது என்பது எளிதில் விளங்கிவிடும்! பாட புத்தகத்துக்கு நடுவில் புதைத்து பாண்டைப் படித்தவர்களில் நானும் ஒருவன்! []உள்ளாடைகளில் (சில சமயம் அதுவும் இன்றி) சுற்றும் அழகிய பெண்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் ஜேம்ஸ் காமிக்ஸ்களில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது! உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணிக்கும் அசத்தலான கதையமைப்பு, ஜேம்ஸின் ஸ்டைல், உலகை மிரட்டும் வில்லன்கள், ஜேம்ஸ் விரட்டும் கார்கள், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பனிப்போர்,  நவீன ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள், ஆழ்கடலில் நடக்கும் சண்டைகள்… இத்யாதி, இத்யாதி! ஆங்கிலப் படங்கள் நாங்கள் பார்க்க அனுமதியும், வாய்ப்பும் இல்லாத அந்நாட்களில் ஜேம்ஸின் காமிக்ஸ் புத்தகங்கள் அக்குறையைத் தீர்த்தன! ஜேம்ஸ் பாண்டாக ஷான் கானரியில் தொடங்கி டேனியல் கிரெயிக் வரை பல நடிகர்கள் நடித்ததைப் போல, காமிஸ்களிலும் பல ஓவியர்கள் ஜேம்ஸை தங்கள் பாணியில் வரைந்திருக்கிறார்கள்! அவர்களில் முக்கியமான இருவர் John McLusky & Yaroslav Horak. மெக்லஸ்கியின் ஓவிய பாணி பாலீஷ்டாக, தெளிவாக இருக்கும் – பெண்களை மிக அழகாக வரைந்திருப்பார்! ஹோராக்கோ அதிரடியாக வரைவார், ஆக்ஷன் காட்சிகளில் ஒரு வீரியம் இருக்கும் – கண்களை மிகவும் கூர்மையாக வரைவார்! கீழே உள்ள பாண்ட்களில் மெக்லஸ்கியால் வரையப்பட்டவர் யார், ஹோராக்கால் வரையப்பட்டவர் யார் என்பதை நீங்களே சொல்லி விடுவீர்கள்! அதே போல ஜேம்ஸை படைத்த இயான் ப்ளெமிங்கைத் தவிர மற்ற பல கதாசிரியர்களும் ஜேம்ஸ் பாண்ட்  காமிக்ஸுகளுக்கு கதை எழுதி இருக்கிறார்கள்! உதாரணத்திற்கு மாடெஸ்டி ப்ளைசியைப் படைத்த Peter O’Donnell ஜேம்ஸுக்கும் கதை எழுதியிருக்கிறார். ---- ----- []  [] ---- ----- ராணி காமிக்ஸ் பெற்ற பெருத்த வரவேற்பிற்கு ஜேம்ஸ்தான் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. மாதம் இருமுறை இதழான ராணி காமிக்ஸில் ஒரு இதழில் ஜேம்ஸ், மறு இதழில் வேறு ஒரு நாயகர் என தொடர்ச்சியாக ஜேம்ஸ் கதைகள் வெளிவந்த காலமது! ராணியைத் தவிர்த்து முத்து காமிக்ஸிலும் தலை காட்டியிருக்கிறார் ஜேம்ஸ்! ஆனால் ராணியில் வந்தபோது இருந்த தாக்கம் முத்துவில் இல்லாததிற்கு காரணம், ஜேம்ஸின் நல்ல கதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணியில் வந்து விட்டிருந்தன என்பதால் இருக்கலாம்! இவற்றைத் தவிர இன்னும் சில பதிப்பகங்கள் ஜேம்ஸின் காமிக்ஸ்களை (தமிழில்) வெளியிட்டிருக்கின்றன! ஜேம்ஸின் பெரும்பாலான காமிக்ஸ்கள், 1958 முதல் தொடங்கி 1984 வரை பல்வேறு ஆங்கிலப் பத்திரிக்கைகளில் டெய்லி ஸ்ட்ரிப்களாக வெளிவந்தவையே! இவற்றைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்! ஸ்ட்ரிப்களைத் தவிர மேலும் சில காமிக்ஸ் புத்தகங்களும் வந்துள்ளன – விவரங்களுக்கு இங்கே செல்லவும்! தற்சமயம் ஏனோ புதிய ஜேம்ஸ் காமிக்ஸ்கள் வெளிவருவதில்லை! சில வருடங்களுக்கு முன் Young Bond என்ற பெயரில் ஐந்து நாவல்கள் வெளியாகின, அதை சார்ந்து ஒரு கிராபிக் நாவலும் வெளியிடப்பட்டது, இது ஜேம்ஸின் மாணவப் பருவத்தில் நடப்பதாய் அமைந்திருக்கிறது (நான் படித்ததில்லை). பழைய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ்களின் தொகுப்பு (ஆங்கிலம்) இப்போது ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கிறது! ---------------------  [] Casino Royale Strip --------------------- காமிக்ஸ் தவிர்த்து ஜேம்ஸின் திரைப்படங்களும் என்னை சிறு வயதில் வெகுவாய் கவர்ந்தன! அவற்றில் வரும் பாண்ட் தீம் மியூசிக்கும், சில படங்களின் டைட்டில் சாங்குகளும் அட்டகாசமாக இருக்கும்! பழைய ஜேம்ஸ் படங்களை இப்போது பார்த்தால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை! எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் டிவியில் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களை போடும் போதெல்லாம் கண் கொட்டாமல் பார்க்கும் நடுத்தர வயது ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். []கல்யாணமான புதிதில் என் மனைவியிடம் ஓவர் பில்ட் அப் கொடுத்து “Quantum of  Solace”-க்கு அழைத்துச் செல்ல, இண்டர்வல் வரை அரை  குறை உறக்கத்தில் இருந்த அவர், பின்னர் பாப்கார்ன் நொறுக்கிய களைப்பில் ஆழ்ந்து உறங்கியதும், சற்று நேரம் கழித்து எனக்கும் கொட்டாவி வர ஆரம்பித்ததால் அவரை எழுப்பி வீடு திரும்பியதும் இன்றும் புன்னகையை வரவழைக்கும்! கேசினோ ராயலைத் தவிர்த்து சமீபத்தில் வெளியான பெரும்பாலான பாண்ட் படங்கள் சுமார் ரகம் என்பது பரிதாபகரமான ஒன்று! Skyfall பாக்ஸ் ஆஃபிஸிலும், ரசிகர்கள் மத்தியிலும் விழாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! விமர்சனம்: Skyfall – 2012 – ஐம்பதிலும் ஆக்ஷன் வரும்! பி.கு.: 1. கற்போம் பிரபு தனது பலே பிரபு வலைப்பூவில், தன்னுடைய காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். காமிக்ஸ் பற்றி பதிவு செய்யும் சிறுபான்மை பதிவர்கள் வட்டத்தில் புதிதாய் இணைந்திருக்கும் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்! [:)] - பெயர் பிரபு, வயது பனிரெண்டு – மீண்டும் காமிக்ஸ் அனுபவம் 2. ஜேம்ஸ் தோன்றிய ராணி / முத்து காமிக்ஸ் கவர் ஸ்கேன்கள் விரைவில் இணைக்கப்படும்! 3. இங்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள ராணி காமிக்ஸ் ஸ்கேன்கள் ரஃபிக்கின் வலைப்பூவில் இருந்து அனுமதி இன்று சுடப்பட்டுள்ளன [;)] 26 BoPET = மைலார் / SHSS = ஓ மை லார்ட்!   []லயன் காமிக்ஸ் “சூப்பர் ஹீரோ சூப்பர் சொதப்பல்” (SHSS) இதழ் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய, வழக்கொழிந்த காமிக்ஸ் நாயகர்களைத் தாங்கி, சில பல ‘பழைய’ வாசகர்களின் கட்டாயத்தின் பேரில், கடனே என்று வெளிவந்துள்ளது! ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி கதைகளை மேலோட்டமாக படித்தேன். மாயாவி கதையைப் படிக்க பொறுமை இல்லை, படித்தாலும் விமர்சிக்கப் போவதில்லை. நான் இந்த நாயகர்களை குறை கூறவில்லை அந்த காலகட்டத்தில் இவர்கள் சூப்பர் ஸ்டார்கள்தான் – அதில் சந்தேகமில்லை, நானும் இவர்களை ரசித்தவன்தான் – மறுக்கவில்லை! ஆனால் இவர்களையே பிடித்துக்கொண்டு கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பது சரிதானா?! இனிமேல் மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற []நிகழ்காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நாயகர்களை காமிக்ஸ் கிளாசிக்ஸில் மட்டும் வருமாறு ஒதுக்கி வைப்பது நலம் (அவற்றில் வருவதே வீண் வேலைதான்!). அப்படித்தான் ஆசிரியர் விஜயனும் முடிவெடுத்திருக்கிறார் என்றாலும், ஆளாளுக்கு ஆஹா… ஓஹோ… என்று SHSS-ஐ புகழ்ந்து தள்ளி அவர் மனதை மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. ஆசிரியரின் வலைப்பூவில் வரும் சில பின்னூட்டங்களை படித்தால் குழந்தைப் பருவதிலேயே நமது வாசகர்கள் பலர் விருப்ப ஓய்வு எடுத்துவிட்டதாக தெரிகிறது. வயதில் உள்ள முதிர்ச்சி, நண்பர்களின் கருத்துகளில் காணாமல் போனது வியப்பே! []ஒருவேளை இக்கதைகளின் கதாசிரியர்களும், ஓவியர்களும் இன்னமும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கண்களில் SHSS மற்றும் ஏனைய கிளாசிக்ஸ் இதழ்கள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! உலக காமிக்ஸுகளில் கடைசி முறையாக அவர்களின் புராதனப் படைப்புகள் இன்னமும் இங்கே வெளியாகிக் கொண்டிருப்பதை அறிந்தால், அந்த ஆனந்த அதிர்ச்சியிலேயே அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது! [;)] இன்றைய தலைமுறையினருக்கும் இக்கதைகள் பிடிக்கும் என இன்னும் சில ‘பழைய’ வாசகர்கள் திடமாக நம்புவது நகைப்புக்குரியது! காலம் மாறி சில காலமாகி விட்டது நண்பர்களே…! காமிக்ஸ் கிளாசிக்ஸ் முதற்கொண்டு பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் அனைத்து இதழ்களையும் வாங்குவதற்கு முக்கிய காரணம், நான் ஒரு தமிழ் காமிக்ஸ் சேகரிப்பாளன் என்பதே! ஏதாவது ஒரு அரிய  தருணத்தில் பழைய நினைவுகளை அசை போட உதவும் என்பது நான் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வாங்குவதற்கான உப காரணம். அனுபவித்து செய்ய வேண்டிய ஒன்றை வெறும் சடங்காய் செய்தால் சலித்து விடும் என்று என் வலைப்பூ அனுபவம் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன் (என் காமிக்ஸ் சேகரிப்பும் கொஞ்சம் அந்த ரகம்தான்!). இது காமிக்ஸ் கிளாசிக்ஸ்க்கும் பொருந்தும். தேர்ந்தெடுத்த தரமான கதைகளை வெளியிடாமல் வெறுமனே மாயாவி, நீராவி என்று வண்டியை ஓட்டினால் ரொம்ப நாள் தாங்காது! புதிய வாசகர்கள் சேரும் இவ்வேளையில் இப்படியான விஷப் பரிட்சைகள் தேவைதானா? நம்முடைய பழைய காமிக்ஸ் மோகத்துக்கு எஞ்சியிருக்கும் ஒரே தமிழ் காமிக்ஸ் பதிப்பகத்தின், மின்வெட்டு போக மிஞ்சியிருக்கும் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிப்பது முறைதானா?! நான் யாருடைய ரசனையையும் குறை கூறவில்லை, ஆனால் புதிய கதைகள் வர தடைக்கற்களாக அல்லது வேகத்தடையாக இருக்கும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் நமக்கு தேவைதானா?! இந்த விசயத்தில் வாசகர்கள் நிர்பந்தத்திற்கு ஆளாகாமல் ஆசிரியர் சுயமாக முடிவெடுத்தல் நலம்! கதைத்தேர்வு ஒத்து வரவில்லை என்றால் CC-ஐ மூட்டை கட்டுவதே மேல்! வருடத்திற்கு 7 டைஜெஸ்டுகள் வீதம் இது போன்ற அரதப் பழைய கதைகளை வெளியிடுவதில் பொன்னான நேரத்தை வீணடிக்காமல்,  கொட்டிக்கிடக்கும் புதிய காமிக்ஸ் படைப்புகளை  அறிமுகப்படுத்துவதிலும், மொழிப்பெயர்ப்பு தரத்தை மேம்படுத்துவதிலும் விஜயன் அவர்கள் தமது சக்தியை செலவழிக்கவேண்டும் என்பதே அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் ரசிகனின் விருப்பமாய் இருக்கக் கூடும். காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ள புதிய சூப்பர் ஹீரோ கதைகளை (உதாரணம் பேட்மேன்) வெளியிடுவதற்கு அதீத ராயல்டி ஒரு தடையாக இருக்குமானால், பக்கங்களைக் குறைக்கலாம்! ஐம்பது வண்ணப் பக்கங்களில் புதிய, தரமான ஒரு கதையை தமிழில் படிக்க 75 ரூபாய் கூட கொடுக்கலாம்! மேலே சொன்ன கருத்துக்கள் காட்டமாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும். இந்த காரணத்தினாலேயே ரொம்ப நாட்களாக இந்தப் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன் – முடிந்தவரை கண்ணியமாகவே கருத்துக்களை கூறியுள்ளேன்! [;)] அப்புறம் இம்மாத ஆரம்பத்தில் குட்டியாய் ஒரு அமெரிக்க (அலுவல் ரீதியான) ட்ரிப் அடித்தபோது மறவாமல் மைலார்  உறைகளையும், அமிலத்தன்மையற்ற அட்டைகளையும் அமேசான் புண்ணியத்தில் வாங்கி வந்தேன்! மைலார் உறையில் காமிக்ஸ் இதழையும், ஸ்டெடியாக நிற்க வைப்பதற்கான அமிலதன்மையற்ற அட்டையையும் நுழைத்து நிற்பாட்டிய நிலையில் அடுக்கி வைத்தால், நம் சாணித்தாள் காமிக்ஸ்கள் கூட பல்லாண்டு வாழும் என்பது மேலை நாட்டு ஐதீகம். இதைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இந்தப் பதிவை பார்க்கவும்!  [] 200 அட்டைகள் + மைலார்  உறைகள் அடங்கிய காம்போ பேக்கின் விலை சுமார் முப்பது டாலர்கள். இந்திய மதிப்புப்படி ஒரு அட்டை மற்றும் உறைக்கு சுமார் எட்டு ரூபாய் ஆகிறது! இந்தியாவில் இது கிடைப்பதில்லை, மொத்தமாக இறக்குமதி செய்து, இரண்டு மடங்கு விலையில் விற்றால் நன்றாக கல்லா கட்டலாம்! [;)] காமிக்ஸ் சுய / குடிசைத் தொழில் ஆர்வலர்கள், இதற்காக என்னென்ன வஸ்துகளை இறக்குமதி செய்யலாம் என்ற பல்பை எரிய விட இந்த லிங்கை அமுக்கவும்! அட்டைதானே என்று லேசாக எண்ணி இரண்டு காம்போ செட்கள் வாங்கினேன். ஆனால், சரியான வெயிட் – லக்கேஜில் கணிசமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது! நான் வாங்கிய Current  Size கவர்களில் பழைய ராணி, லயன் / முத்து பழைய பெரிய(!) சைஸ், பார்வதி சித்திரக்கதை போன்ற புத்தகங்களை தாரளாமாக வைக்கலாம். ஆனால், இப்போது புதிதாய் வெளிவரும் லயன் / முத்து இதழ்களை வைக்க முடியாது. அதற்கு Magazine ரக கவர்களை வாங்க வேண்டும். அடுத்த தடவை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்! அட்டை என்றதும் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது – இந்த வருடத்தில் வெளிவந்த மகா கேவலமான முன்னட்டை SHSS உடையதாகத்தான் இருக்க வேண்டும்! மட்டமான கலர் காம்பினேஷன், லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக் கிழவியை ஞாபகப்படுத்தியது! ஆனால், பின்னட்டை சூப்பர்! நல்ல வேளையாக டிராப்ட் கவரில் இருந்த “புத்தம் புதிய சாகஸங்கள்” என்ற காமெடியான tagline-ஐ ஆசிரியர் எடுத்து விட்டார்! ---- ---- [] [] ---- ---- கடைசியாக ஒரு அப்டேட், கடந்த மாத ஓட்டெடுப்பில் யாரோ ஒரு அழகிய தமிழ் மகன் கள்ள ஓட்டை குத்து குத்து என்று குத்தியதில் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் முதலிடம் பெற்றிருக்கிறது! இந்த மாதம் மறு ஓட்டெடுப்பு நடத்தினால் SHSS முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! [:)] [] இன்று மட்டும் மூன்று பதிவுகள் தொடர்ச்சியாக இட்டுவிட்டதால், ஒரு க்விக் ரீகேப் இதோ! [;)] - பீட்சாவை 7.5 surround சவுண்ட்டில் பார்த்த அனுபவம்! - டெங்கு எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் இரண்டில் தற்போது நின்று கொண்டிருக்கிறது! - BoPET = மைலார் / SHSS = ஓ மை லார்ட்! 27 வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - முத்து காமிக்ஸ் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்! []எச்சரிக்கை: இந்தப் பதிவில் முழுக்கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. கதைநாயகன் நாதன் சிஸ்லிமின் 14 வயது இளம்பிராயப் பார்வையில் விரிவதாய் அமையும் இந்தக் கதை Spaghetti வெஸ்டர்ன் படங்களின் ஆரம்பக் காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை! வறண்ட, பரந்த பாலைப் பரப்பில் ஊர்ந்து வந்து வ்யோமிங்கில் உள்ளதொரு சிறு நகரில் நிலை கொள்ளும் அந்தப் புகை வண்டி நம்மை ஒரு கனத்த கதைக்குள் இட்டுச் செல்கிறது! அம்ப்ரோசியஸ் வான் டீர் என்ற செல்வந்தர் தன் மறைந்த சகோதரரின் தொலைந்த புதல்வன் எட்வின் வான் டீரை தேடுகிறார், கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் பரிசு என்ற அறிவிப்புடன். பாசத்தினால் அல்ல, அவனை அழித்து முழு சொத்தையும் தனதாக்கிக் கொள்ள! இதை அறியாத நாதனின் அண்ணன் ஜெஸ் சிஸ்லிம், தனது தம்பியை எட்வினாக நடிக்கச் சொல்லி அம்ப்ரோசியஸிடம் பரிசுத் தொகையை கறக்க எண்ணுகிறான். எட்வினை அழிக்கும் எண்ணத்துடன் அந்தப் புகை வண்டியில் தன் சின்னஞ்சிறு மகள் கேத்தியுடன் வந்திறங்கும் அம்ப்ரோசியஸை ஜெஸ் சந்தித்து எட்வினாக நடிக்கும் தன் தம்பி நாதனின் மறைவிடத்திற்கு இட்டுச் செல்கிறான். அங்கு நடக்கும் குழப்பத்தில், ஜெஸ் அம்ப்ரோசியஸின் அடியாளால் கொல்லப்படுகிறான். அடுத்து நாதனின் நெஞ்சைக் குறிவைத்துப் பாயும் தோட்டா அவன் விலகிக்கொள்வதால் குறி தவறி அவனுடைய இடது கையைப் பதம் பார்க்கிறது.  சுதாரித்துக்கொள்ளும் நாதன் அம்ப்ரோசியஸையும் அவரின் அடியாளையும் சுட்டுக் கொன்று துப்பாக்கி மற்றும் பணமுடிச்சு சகிதம் கிளம்பும் சமயம் – முழு விவரமும் புரியாமல் குழப்பத்தில் திகைத்து நிற்கும் சிறுமி கேத்தியின் பெருவிழிகளை ஒரு சில கணங்கள் எதிர்கொண்டு பின்னர் தப்பியோடுகிறான் – இவ்வாறாகத்தான் அவர்கள் முதல் சந்திப்பு நடக்கிறது! [] சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப எண்ணும் நாதன், வ்யோமிங்கை விடுத்து குதிரையில் இரவு பகல் பாராமல் ஒரு நீண்ட நெடிய, கொடிய பயணத்தை மேற்கொள்கிறான். பயணத்தின் முடிவில் சிகிச்சையின்றி புரையோடிப் போன இடது கையை இழக்க நேர்கிறது! நேட் கோல்டன் என பெயரை மாற்றிக்கொண்டு அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒதுங்கி வாழ்ந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் ஒற்றைக்கையால் துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்று, தனது 25வது வயதில் ஒரு தீர்மானத்துடன் கான்சாசில் உள்ள விச்சிடா நகருக்கு செல்கிறான் – வான் டீர் குடும்பம் வசிக்கும் இடம் அதுதான். அந்நகரின் ஷெரீஃப் ஸாம், நேட்டுக்கு வேலை வழங்க எண்ணி அவன் துப்பாக்கி சுடும் திறமையை பரிசோதிக்கிறார். அந்தத் தேர்வில் ஏனோ நேட் சொதப்பிவிடுகிறான். இருந்தாலும், ஒற்றைக்கை நேட்டை அந்நகரின் வங்கிக்கு பாதுகாவலனாக ஷெரீஃப் நியமிக்கிறார், சில நாட்கள் சுகமாக கழிகின்றன! ஒரு நாள் ஷெரீஃப் தனது டெபுடியை அழைத்துக்கொண்டு ஒரு கண்காணிப்பு வேலைக்காக விச்சிட்டாவை விட்டு செல்கிறார் – அது ஒரு திட்டமிட்ட ஜோடிப்பு! ஷெரீஃப் இல்லாத ஊரில், ஒற்றைக்கை பாதுகாவலனால் கொள்ளைக் கும்பலை எதிர்த்து என்ன செய்து விடமுடியும்?! நேட் தேர்வில் தோற்றாலும் வேலைக்கமர்தப்பட்டது இந்த திட்டத்தின் ஒரு அங்கம்தானே – வங்கிக் கொள்ளையர்களின் கூட்டாளி அல்லவா விச்சிட்டாவின் ஷெரீஃப்?! வங்கியில் நுழையும் கொள்ளையர் துப்பாக்கி சூடு நடத்தும் சமயம் குறுக்கே நுழையும் ஒரு அழகிய இளம்பெண்  நேட்டால் காப்பாற்றப் படுகிறாள். நேட்டாக மாறி நிற்கும் நாதன், அழகிய இளம் பெண்ணாக வளர்ந்து நிற்கும் கேத்தி வான் டீரின் மயக்கும் விழிகளை தன் வாழ்வில் இரண்டாவது முறையாக எதிர் கொள்வதும் துப்பாக்கி முழக்கத்தினூடேதான் நிகழ்கிறது! நேட்டின் உண்மையான திறமையை உணராமல், கையாலாகதவன் என எண்ணி வரும் கும்பல் கைலாசம் போய் சேர்க்கிறது! நேட் ஒரே நாளில் நகரின் நாயகன் ஆகிறான், அனைவரின் அன்பையும் பெறுகிறான் – அதாவது ஒரு நபர் நீங்கலாக – ஷெரீஃப்தான் அந்நபர்! நேட்டைப் பற்றிய உண்மை அறியாத கேத்தி அவனை தன் பரந்த பண்ணையின் பாதுகாவலனாய் சேருமாறு அழைப்பு விடுக்கிறாள்! முதலில் அவ்வாய்ப்பை மறுக்கும் நேட், ஷெரீஃப்பால் மிரட்டப்பட்டு நகரை விட்டே விரட்டப்பட்டதும், கேத்தியின் பண்ணையில் வேலைக்கமர்கிறான். தனது 25வது வயதில் விச்சிட்டாவை நோக்கி ஒரு தீர்மானத்துடன் கிளம்பியது வான் டீர் குடும்பத்தின் வாரிசாக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொள்ளத்தான் – அதற்கான தான் ஜோடித்த ஆதாரங்களை வான் டீர் குடும்பத்திடம் காட்டி எட்வின் வான் டீராக பரிணாமம் அடைகிறான் நாதன் என்ற நேட்! அம்ப்ரோசியஸ் இன்னமும் உயிருடன் இருக்கும் அதிர்ச்சியான உண்மை அச்சமயத்தில் வெளியானாலும் அவர் பாரிச வாயு நோயால் முடக்கப்பட்டு, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நடைபிணமாக இருப்பது ‘எட்வினுக்கு’ ஆறுதலை தருகிறது! ஆனால் நேட் எடுத்த தீர்மானத்தின் ஒரு பகுதிதான் இந்த வாரிசுப் படலம் என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லாமல் விட்டது இந்த கதையை தமிழில் மொழிபெயர்த்தவரின் தவறா அல்லது கதாசிரியர் வேண்டி விரும்பிச் செய்ததா என்பது இதன் ஃபிரெஞ்சு மூலத்தை படித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆம், முதல் சந்திப்பிலேயே சிறுவன் நாதன் கேத்தியின் கண்களில் தன் மனதை பறிகொடுத்து விட்டிருக்கிறான் என்பது கதையின் இறுதி கட்டத்தில்தான் புலனாகிறது. தன் காதலை எட்வினாக கேத்தியிடம் சொல்லும்போதுதான்  அவர்கள் சகோதர சகோதரியாக மாறிவிட்டிருக்கும் கொடுமையான உண்மை அவனுக்கு உறைக்கிறது! தொடரும் தொல்லையாக, ஷெரீஃப் ஸாம் – வ்யோமிங் நகர ஷெரீஃப்பை அழைத்து வந்து எட்வின் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நேட் என்ற நாதன்தான் அம்ப்ரோசியசை நடைபிணமாக்கி, அவர் அடியாளை சுட்டுக் கொன்ற நபர் என்ற உண்மையை போட்டுடைக்கிறார்! எட்வின் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டு தப்பியோடும் நேட், காவலர்களால் சுடப்பட்டு வீழ்கிறான். அவனால் காதலிக்கப்பட்ட கேத்தி கண்ணீருடன் அவனை வெறிக்கும் காட்சி அவன் வாழ்வின் கடைசி தருணமாகிப் போகிறது! அவள் கண்களில் தெரிந்தது பச்சாதாபமா இல்லை காதலா என்ற கேள்விக்கு விடையின்றி பரிதாபமாக இறந்து போகிறான் நேட்! நாற்பது வருடங்கள் உருண்டோடுகின்றன. சோகத்தின் உச்சமாய் ஒரு உச்சகட்ட காட்சியில், மரணப் படுக்கையில் படுத்திருக்கும் வஞ்சக ஷெரீஃப் ஸாம் – நேட்டின் நினைவில் திருமணம் புரியாமல் வாழும் ‘மூதாட்டி’ கேத்திக்கு அழைப்பு விடுத்து ஒரு ‘உண்மையான’ உண்மையை போட்டுடைக்கிறார். தகுந்த ஆதாரங்களுடன் கேத்திக்கு ஷெரீஃப் விளக்கும் அதிர்ச்சித் தகவல் இதுதான் – ‘கேத்தி… நீ மனதோரம் நேட் மேல் காதல் கொண்டிருந்ததை நானறிவேன். நேட் பொய் சொல்வதாக நினைத்துக் கொண்டு தன்னை வான் டீர் குடும்ப வாரிசு எட்வின் எனச் சொல்லி ஏமாற்றி இருந்தாலும், அவனே அறியாத உண்மை அவன்தான் உண்மையான எட்வின் என்பது‘. மரணத்தின் விளிம்பிலும், மரணித்த நேட்டின் முதுகில் குத்தி, கேத்தியை கொடும் துன்பத்தில் ஆழ்த்திய இன்பத்தில் கிழட்டு ஷெரீஃப் பெரும் குரூர சிரிப்பை உதிர்ப்பதாய் முடிவடைகிறது கதை! புதையல் வேட்டைகளும், துப்பாக்கி சண்டைகளுமே  பிரதானமாய் காட்டப்படும் வன்மேற்கின் மற்றொரு யதார்த்த முகத்தை காட்டும் இந்தக் கதை – பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் கதாசிரியர் ஜான் வான் ஹாமால் எழுதப்பட்டு, ஓவியர் ரோசின்ஸ்கியின் அழகிய சித்திரங்களால் செதுக்கப்பட்டு, காமிக்ஸ் வடிவில் – Western என்ற பெயரில் 2008-ஆம் ஆண்டு ஃபிரான்சில் வெளியானது! அதன் தமிழ் மொழியாக்கம், இம்மாதம் முத்து காமிக்ஸில் Wild West ஸ்பெஷலாக மலர்ந்துள்ளது. இந்தப் படைப்பின் சித்திரங்களின் சிறப்பை உணர காமிக்ஸ் பதிவுலகில் புதிதாய் கால் பதித்திருக்கும் வாசக நண்பர் ராஜ்குமாரின் பதிவைப் படியுங்கள்! சோகத்தில் உழலும் நாயகர்களும், தோற்றுப் போகும் காதல்களும், பச்சைத் துரோகங்களும் தமிழ் சினிமா பார்த்துப் பழகியவர்களுக்கு புதிதல்ல என்றாலும் இந்தக் காமிக்ஸைப் படித்து யாராவது ஒரு இயக்குனர் இன்ஸ்பைர்(!) ஆகி, சமகால மதுரை சூழலில் இந்தக் காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது! கிராபிக் நாவல் என்றால் என்ன?!: சமீப காலத்தில் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே ஒரு பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் கேள்வி இது! உண்மையில் அதை வரையறுப்பது சற்று கடினம்தான். மேலே சொன்னது போல கனத்த கதையம்சம் கொண்ட காமிக்ஸ்கள் சில சமயம் கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரே ஒரு பிரபல நாயகனை மட்டும் சுற்றி அமையும் தனித் தனி காமிக்ஸ் கதைகள் அல்லது தொடர்கள் போலன்றி ‘எவனோ ஒருவனின்’ கதை சொல்லும் தனிப்படைப்புகளும் கிராபிக் நாவல்கள் என்றே அழைக்கப்படுகின்றன! ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராபிக் நாவல்தான் – அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ நேர்த்தியான ஓவியங்களுடன் தீட்டப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுரைகளுக்குள்ளும் அடைக்க முடியாத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராபிக் நாவலே! [:)] []முத்து காமிக்ஸ் Wild West ஸ்பெஷலில் மேற்சொன்ன கதையை தவிர்த்து, தமிழில் வெளியான கௌபாய் ஹீரோக்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழும் இருவரில் ஒருவரான கேப்டன் டைகர் என்ற ப்ளூபெர்ர்யின் அதிரடி சாகசமான “மரண நகரம் மிசெளரி” இடம்பெற்றிருக்கிறது. பதிவு ஏற்கனவே மரண நீளத்திற்கு போய் விட்டதால் அதனை விமர்சிக்கப் போவதில்லை. இதைப் படிக்கும் போது ஒரு டமால் டுமீல் (நன்றி ஜான் சைமன்) வெஸ்டர்ன் படம் பார்த்த திருப்தி கிடைப்பது நிச்சயம்!!! டைகரின் ரசிகர் மன்ற சிவகாசி கிளையின் சீனியர் மேனேஜர் சௌந்தரின் திருவுருவம் இந்த இதழில் வெளியாகியிருப்பது தற்செயலான ஒரு திட்டமிட்ட செயல் என்ற உண்மை சமீபத்தில் கசிந்திருக்கிறது! புத்தகத்தின் சில மாதிரிப் பக்கங்களை ஸ்கேன் செய்ய நேரமில்லாததால், சௌந்தரின் பதிவிலிருந்து சுடச் சுட ஒரு சில ஸ்கேன்கள் சுடப்பட்டுள்ளன! [;)] இன்னொரு கௌபாய் சூப்பர் ஸ்டாரான டெக்ஸ் வில்லரின் 240 பக்க முழுநீள சாகசம் அடுத்த ஆண்டு வெளியாகிறது என்பது கொசுறு தகவல். ---- ---- ----- [] []  [] ---- ---- ----- இது போன்ற புதிய முயற்சிகளை தமிழுக்கு கொண்டு வருவதில் திரு.S.விஜயனை அடித்துக்கொள்ள இப்போதைக்கு ஆள் இல்லை. மொழிப்பெயர்ப்பு சற்று ஏமாற்றத்தையே தருகிறது. கதாபாத்திரங்கள் செந்தமிழிலும், கொச்சைத் தமிழிலும் மாறி மாறிப் பேசிக் கொள்கின்றனர், சில இடங்களில் கதையின் போக்கு எளிதில் விளங்கவில்லை. ஆசிரியர் என்னதான் ஹாட்லைனில் இதற்கு விரிவான விளக்கங்கள் சொன்னாலும் ஒரு டிஜிடல் இமேஜ் ஃபைலை, போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் எடிட் செய்து டயலாக் பலூனை லேசாக ஊதிப் பெரிதாக்குவது அப்படி ஒன்றும் பெரிய காரியம் அல்ல – இது எளிதில் தவிர்க்கக் கூடியதொரு சிறு குறையே! மற்றபடிக்கு இது தவிர்க்கக் கூடாத ஒரு அற்புதமான காமிக்ஸ் விருந்து, இதை Ebay-இல் வாங்க இங்கே செல்லவும்! 28 லயன் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் மற்றும் சந்தா விபரங்கள்! முத்து & லயன் காமிக்ஸ் – அறிமுகம்: [] அனைத்து வயதினரும் படிக்க ஏற்ற, பல வகையான அயல்நாட்டு காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்களை, சிவகாசியைச் சேர்ந்த ‘பிரகாஷ் பப்ளிஷர்ஸ்’ என்ற பதிப்பகம், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. கடந்த 40 வருடங்களாக முத்து / லயன் மற்றும் வேறு சில பெயர்களின் கீழ் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம், 2012 முதல் புத்தகங்களின் தயாரிப்புத் தரத்தையும் வெகுவாக மேம்படுத்தி உள்ளது. இந்த இதழ்களைப் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம். எச்சரிக்கை: கீழ்க்கண்ட தகவல்கள் புதிதாய் காமிக்ஸ் வாங்க விரும்புவர்களின் வசதிக்காக, ஒரு காமிக்ஸ் விசிறி என்ற முறையில் நான் தொகுத்தவையே! இவை எவ்விதத்திலும் முழுமையானவையோ, அதிகாரபூர்வமானவையோ அல்ல! சரியான தகவல்கள் பெற, பிரகாஷ் பப்ளிஷர்ஸை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். +----------------------------------+----------------------------------+ | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் | மேலதிகத் தகவல்கள் | +----------------------------------+----------------------------------+ | 2014 ஆண்டுச் சந்தா | - உங்கள் நகரத்தில் சிறப்பான | | | சேவை தரும் கூரியர் நிறுவனம் | | தமிழ்நாடு: | எது என்று அறிந்து அதைத் | | | தேர்ந்தெடுங்கள். | | - ST கூரியர்: र2300 | | | - Professional கூரியர்: र2400 | - ‘சன்ஷைன் கிராபிக் நாவல்ஸ்’ | | - பதிவுத் தபால்: र2400 | இதழில், சற்றே மாறுபட்ட | | | கதையம்சம் கொண்ட படைப்புக்கள் | | இதர மாநிலங்கள்: | வெளியாகின்றன (உதாரணம்: ஒரு | | | சிப்பாயின் சுவடுகளில்…!). | | - ST கூரியர்: र2500 | இவற்றை வாங்க விருப்பம் | | - Professional கூரியர்: र2600 | இல்லையெனில், சந்தா தொகையில் | | | र400-ஐ கழித்துக் | | | கொள்ளுங்கள்! | | | | | | - ‘சன்ஷைன் லைப்ரரி’ இதழில், | | | பழைய கதைகள் மறுபதிப்பு | | | செய்யப்படுகின்றன! 2014-ல் | | | மொத்தம், 6 மறுபதிப்புகள் | | | வெளியாக இருக்கின்றன! | | | | | | - ஆண்டு மலர், தீபாவளி மலர் | | | போன்ற ஸ்பெஷல் இதழ்கள் சந்தா | | | தொகையில் அடங்காது. | +----------------------------------+----------------------------------+ | 2014-ல் வெளியாகும் கதைகள் | - இவை தவிர, Super Six ஸ்பெஷல் | | | இதழ்களின் வாயிலாக, மேலும் பல | | - 2014 ஆண்டுக்கான Preview-வை, | புதிய கதைகள் | | PDFFormat-ல், இங்கே | வெளியாகவிருக்கின்றன! | | தரவிறக்கம் செய்யலாம்! | | | சுருக்கமாகச் சொல்வதானால்: | | | - 34+ கதைகள்! (22 புதிய | | | வெளியீடுகள், 6 | | | மறுபதிப்புகள் & 6 | | | கிராபிக் நாவல்கள்) | | | - 20+ நாயகர்கள் | | | - 1750+ பக்கங்கள்! | | +----------------------------------+----------------------------------+ | தற்போது வெளியாகும் காமிக்ஸ் | - மாதந்தோறும் குறைந்த பட்சம் | | இதழ்கள் | ஒரு புதிய காமிக்ஸ் | | | வெளியாகிறது. | | - முத்து காமிக்ஸ் | | | - லயன் காமிக்ஸ் | - சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை | | - சன்ஷைன் லைப்ரரி | அளிக்கப்பட்டு, கூரியர் மூலம் | | - சன்ஷைன் கிராபிக் நாவல்ஸ் | புத்தகங்கள் உடனுக்குடன் | | | அனுப்பி வைக்கப்படுகின்றன | | | | | | - கீழ்கண்ட காமிக்ஸ் இதழ்கள் | | | தற்போது வெளியாவதில்லை: | | | - காமிக்ஸ் க்ளாசிக்ஸ் | | | - திகில் காமிக்ஸ் | | | - ஜூனியர் / மினி லயன் | | | - திகில் லைப்ரரி | | | - முத்து காமிக்ஸ் வாரமலர் | | | - முத்து மினி காமிக்ஸ் | +----------------------------------+----------------------------------+ | பதிப்பாசிரியர் / எடிட்டர்: | - புது இதழ்கள் பற்றிய | | | விவரங்களை உடனுக்குடன் அறிய, | | - திரு. S. விஜயன்  | ஆசிரியரின் வலைப்பூவைத் | | - இவரே பெரும்பாலான கதைகளை | தொடருங்கள்:http | | மொழிபெயர்ப்பும் | ://lion-muthucomics.blogspot.com | | செய்கிறார்! | | | - லயன் அலுவலக மின்னஞ்சல் | - பதிப்பாசிரியருடன் | | முகவரியில் | கருத்துக்களை நேரடியாக பரிமாற | | பதிப்பாசிரியரை தொடர்பு | எண்ணினால், வலைப்பூவில் | | கொள்ளலாம்: | பின்னூட்டம் இடுவதே சிறந்த | | lioncomics@yahoo.com | வழிமுறை! | +----------------------------------+----------------------------------+ | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் – பதிப்பக | - இணையத்தளம்: | | விவரங்கள் | - www.lion-muthucomics.com | | | | | முகவரி: | - மின்னஞ்சல்: | | PRAKASH PUBLISHERS | - lioncomics@yahoo.com | | 8D-5, Chairman PKSAA Road, | | | Ammankoilpatti, Sivakasi, PIN | - முகநூல் பக்கம்: | | 626 189, Tamilnadu. | - www.face | | | book.com/LionMuthuComicsSivakasi | | தொலைபேசி: | | | | - பதிப்பாசிரியரின் வலைப்பூ: | | - (Tel) 04562 – 272649 | - http | | - (Tel) 04562 – 320993 | ://lion-muthucomics.blogspot.com | | - (Fax) 04562 – 275159 | | +----------------------------------+----------------------------------+ | சந்தா கட்டும் முறை (இந்தியா) | - ஆன்லைனில் பணம் செலுத்தினால் | | 1. ஆன்லைன் ட்ரான்ஸ்பஃர்: | உங்கள் பெயர், முகவரி மற்றும் | | Name of Account : PRAKASH | இதர விவரங்களை மின்னஞ்சல் | | PUBLISHERS | மூலம் தெரிவியுங்கள்! | | Bank : Tamilnad Mercantile Bank | | | Ltd., Sivakasi Branch. | - Cheque / DD மூலம் பணம் | | Account Number : 003150050421782 | அனுப்பினால் உங்கள் விவரங்களை | | Account Type: Current | அதனுடன் எழுதி அனுப்புங்கள். | | IFSC Code : TMBL0000003 | | | | - 2014-க்கான சந்தா தொகையை | | (அல்லது) | அட்வான்ஸ் ஆக இப்போதே அனுப்பி | | | வைக்கலாம்! ஜனவரி (2014) மாத | | 2. Cheque / DD: | இதழ்கள் குறித்த நேரத்தில் | | Draw Cheque / DD in favor of: | கிடைக்க வேண்டும் என்றால், | | PRAKASH PUBLISHERS | டிசம்பர் (2013) மூன்றாம் | | | வாரத்திற்குள் சந்தா பணத்தை | | | அனுப்பி வைப்பது நலம். | +----------------------------------+----------------------------------+ | அயல் நாட்டு சந்தா | - இலங்கைக்கான சந்தா, பல | | | விதிகளுக்கு உட்பட்டது; | | - தோராயமாக  र4500 | மேலதிக விவரங்கள் அறிய, | | | பதிப்பகத்தை நேரடியாக | | - பிற நாடுகளில் வசிக்கும் | அணுகவும். | | வாசகர்கள், சரியான சந்தா / | | | ஷிப்பிங் விவரங்களை அறிய லயன் | - இலங்கை வாசகர்களால் | | / முத்து அலுவலகத்தை தொடர்பு | நடத்தப்படும் முகநூல் | | கொள்ளுங்கள்! | பக்கத்தில் (அதிகாரபூர்வமற்ற) | | | விவரங்களைப் பெறலாம் | | | (Unofficial Fan Page): | | | https://www.fac | | | ebook.com/groups/412480238797291 | +----------------------------------+----------------------------------+ | சந்தா தொடர்பான கேள்விகளுக்கு | - லயன் வலைப்பூவில் | | | பின்னூட்டம்  இடுவதன் மூலமும் | | - லயன் அலுவலகத்தை  தொலைபேசி | தெளிவு பெறலாம். | | அல்லது மின்னஞ்சல் மூலமாக | | | அணுகவும்! | | +----------------------------------+----------------------------------+ | Dispatch தொடர்பான கேள்விகளுக்கு | - புத்தகம் வருவது தாமதமானால் | | | இவர்களை அணுகலாம்! | | - திரு. ராதாகிருஷ்ணன் (அ) | | | திருமதி. ஸ்டெல்லா மேரி | | +----------------------------------+----------------------------------+ | ஸ்பெஷல் இதழ்கள் | - 2014-ல் வெளியாகவிருக்கும் | | | ஸ்பெஷல் இதழ்கள் (சூப்பர் | | - அவ்வப்போது, அதிக விலையில் | சிக்ஸ்):  | | ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகும். | - லயன் காமிக்ஸ் 30-வது | | இவை சந்தாவில் அடங்காது! | ஆண்டு மலர் – மேக்னம் | | | ஸ்பெஷல்! | | | - இது தவிர மற்றும் ஐந்து | | | ஸ்பெஷல் இதழ்கள்! | +----------------------------------+----------------------------------+ | நேரடி விற்பனை | - இவ்விதழ்கள் புத்தக கடைகளில் | | | கிடைப்பது மிகவும் அரிதே! | | - காமிக்ஸ்  குறித்த | சந்தா கட்டிப் பெறுவதே சிறந்த | | விழிப்புணர்வோ, ஆர்வமோ பரவலாக | வழி! | | இல்லாததால், பிரகாஷ் | | | பதிப்பகத்தார் நேரடி | - சென்னையில் லாண்ட்மார்க், | | விற்பனையில் அதிகம் கவனம் | டிஸ்கவரி புக் பேலஸ் போன்ற | | செலுத்தாமல், சந்தா முறையை | சில புத்தக நிலையங்களில் | | ஊக்குவிக்கின்றர்! | கிடைக்கின்றன. | | | | | | - மற்ற நகரங்களில் ஒரு சில | | | முக்கிய புத்தகக் கடைகளில் | | | கிடைக்கலாம்! உங்கள் | | | நகரத்திற்கான முகவர் யார் | | | என்று அறிய லயன் அலுவலகத்தை | | | தொடர்பு கொள்ளுங்கள். | | | | | | - ஈரோடு மற்றும் சென்னை | | | புத்தகக் கண்காட்சிகளில், | | | முத்து / லயன் காமிக்ஸ் | | | ஸ்டால் பெரும்பாலும் | | | இடம்பெறும். | +----------------------------------+----------------------------------+ | ஆன்லைன் விற்பனை | - பிற இணைய புத்தகத் தளங்கள் | | | (ஒரு சில இதழ்கள் | | - Amazon | கிடைக்கலாம்!): | | - Worldmart | - www.udumalai.com | | | - ht | | | tp://www.discoverybookpalace.com | | | - Ebay | +----------------------------------+----------------------------------+ | பழைய இதழ்கள் | - பழைய புத்தக கடைகளில் | | | முயற்சிக்கலாம்; ஆனால், | | - சமீப ஆண்டுகளில் வெளியான | கிடைப்பது மிகவும் அரிது! | | இதழ்களில் சில, இன்னமும் | | | பதிப்பகத்தாரிடம் | - மற்ற காமிக்ஸ் வாசகர்களிடம் | | கிடைக்கின்றன. அவற்றை வாங்க | அல்லது சேகரிப்பாளர்களிடம் | | விரும்பினால், அவர்களை | விலைக்கோ அல்லது புத்தக | | நேரடியாக அணுகவும். | மாற்றுக்கோ வாங்கலாம். | | | | | | - பொதுவாக பழைய காமிக்ஸ்கள், | | | மிக அதிக விலைக்கு விற்கப் | | | படுகின்றன. | | | | | | -  பழைய சந்தா விவரங்களை இங்கே | | | காணலாம்! வரலாறு முக்கியம்  | | | அல்லவா?! [:)] | | | - 2012 / 2013 | +----------------------------------+----------------------------------+ | தற்போதைய புத்தக வடிவமைப்பு | - விளம்பரங்கள் ஏதும் இல்லை | | | என்பதை கணக்கில் கொண்டால், | | - 1) 7.25″ x 9.5″ ஆர்ட் | இவை மிகவும் குறைந்த விலை | | பேப்பர், 52 பக்க, முழு வண்ண | தான்! | | காமிக்ஸ் – விலை र60 | | | | - குறிப்பு: இதே அளவிலான ஆங்கில | | - 2) 7.25″ x 9.5″ ஆர்ட் | காமிக்ஸ்கள் பல மடங்கு அதிக | | பேப்பர், 104 பக்க, முழு வண்ண | விலையில் விற்கப் படுகின்றன. | | காமிக்ஸ் – விலை र120 | ஆனால், அவற்றுடன் நேரடி விலை | | | ஒப்பீடுகள் செய்வது சரியாக | | - 3) 5.5″ x 8.5″ சுமாரான | இராது. ஏனெனில்: | | வெள்ளைத் தாள், 224 பக்க, | - அவை வெளிநாடுகளில் | | கருப்பு வெள்ளை காமிக்ஸ் – | இருந்து இறக்குமதி | | விலை र60 | செய்யப்படுகின்றன. | | | - ஆங்கிலத்திற்கான ராயல்டி | | - 4) ஸ்பெஷல் இதழ்கள்: र250, | கட்டணங்கள் அதிகம். | | र500 என வெவ்வேறு விலைகளில், | - அவற்றின் தயாரிப்பு | | அதிக பக்கங்களுடன் | மற்றும் சந்தைப் | | வெளியாகும். | படுத்தும் செலவுகள் மிக | | | மிக அதிகம். | | | - இது பற்றி மேலும் அறிந்து | | | கொள்ள இந்தப் பதிவைப் | | | படியுங்கள். | +----------------------------------+----------------------------------+ | நிறைகள்: | குறைகள்: | | | | | - தமிழில் காமிக்ஸ் வெளியிடும் | - வண்ண இதழ்களில் அடிக்கடி | | ஒரே நிறுவனம் | நேரும் அச்சுக் குளறுபடிகள் | | - குறைவான விலை | (Dull prints, Color spots | | - அனைத்து வயதினரும் படிக்கக் | and mixing issues). | | கூடிய வகையில் வெளியாகும் பல | - B&W இதழ்களில் | | வகையான கதைகள் | உபயோகிக்கப்படும் சுமாரான | | - வண்ண இதழ்களில் | தாளின் தரம். | | உபயோகிக்கப்படும் உயர்ரக | - பிரெஞ்சில் இருந்து நேரடியாக | | ஆர்ட் பேப்பர் | தமிழாக்கம் செய்யப்படும் | | | கதைகளில் காணப்படும் | | | மொழிமாற்றப் பிழைகள். | | | - சமீபத்திய 20% | | | விலையேற்றத்தோடு, 10% | | | பக்கங்களும் | | | குறைக்கப்பட்டுள்ளன [:(] | +----------------------------------+----------------------------------+ அன்றும் இன்றும்: 1970-களின் ஆரம்பத்தில் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள், முத்து காமிக்ஸை துவக்கினார். ரிப் கிர்பி, பஸ் சாயர், ஜானி நீரோ, பான்டம் என பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைத் தொடர்களே முத்துவில் வெளியாகின. குறிப்பாக “ஸ்டீல் க்ளா (இரும்புக்கை மாயாவி)” என்ற பிரிட்டிஷ் காமிக்ஸ் நாயகர் தமிழ்நாட்டில் அழியா புகழ் பெற்றதற்கு முத்து காமிக்ஸே காரணம்! எண்பதுகளின் மத்தியில் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களின் புதல்வர் திரு.S.விஜயன் அவர்கள் – லயன், ஜூனியர், மினி லயன் & திகில் என்ற பெயர்களில் மேலும் பல புதிய காமிக்ஸ் இதழ்களைத் துவக்கினார். காலப்போக்கில் முத்து உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் எடிட்டராக பொறுப்பேற்ற அவர், புகழ்பெற்ற பல ஃபிரான்கோ-பெல்ஜிய மற்றும் இத்தாலிய காமிக்ஸ் கதைகளை தமிழில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்! உதாரணத்திற்கு XIII, டெக்ஸ் வில்லர், பேட்மேன், ப்ளூபெர்ரி, லக்கி லூக், லார்கோ வின்ச் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற நாயகர்கள் பலரை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார்! தொண்ணூறுகளின் பிற்பாதியில் மக்களிடையே குறைந்த வாசிக்கும் ஆர்வம், காமிக்ஸ் துறையையும் விட்டுவைக்கவில்லை. நடுவில் சில வருடங்கள் தமிழில் எந்தவொரு காமிக்ஸ் இதழ்களும் வெளிவராத நிலையும் இருந்தது! தொலைந்து போன அந்த ஆர்வத்தை மீட்டெடுக்கும் வகையில், ஜனவரி 2012 முதல், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களை மாதம் தவறாமல், திரு.S.விஜயன் வெளியிட்டு வருகிறார். காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி பெரிதும் இல்லாததால், பெரிய அளவிலான நேரடி விற்பனை முயற்சிகளை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தற்போது மேற்கொள்ளவில்லை. எனினும் பெருநகரங்களில், லாண்ட்மார்க் உள்ளிட்ட சில புத்தகக் கடைகளில், இவர்களின் வெளியீடுகள் கிடைக்கின்றன. நேரடியாக கடைகளில் வாங்க வாய்ப்பு இல்லாதவர்கள், ஆண்டுச் சந்தா கட்டுவதே சிறந்த வழி. தற்போது காமிக்ஸ் இதழ்களுக்கு பெருகி வரும் வரவேற்பு,  இந்நிலையை விரைவில் மாற்றி விடும் என்று நம்பலாம்! மட்டமான தாள்களில் முன்பு வெளியாகிக் கொண்டிருந்த இந்த இதழ்கள், தற்போது உயர்ரக ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில், மேம்பட்ட தரத்தில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது! என்றாலும், வண்ண இதழ்களில் அடிக்கடி நேரும் அச்சுக் குளறுபடிகளும், கருப்பு வெள்ளைக் கதைகளில் சுமாரான தாள்கள் உபயோகிக்கப் படுவதும், விரைவில் சரி செய்யப் பட வேண்டும் என்பதே நெடுநாளைய வாசகர்களின் விருப்பமாக உள்ளது! 2014-ல் வெளியாகும் கதைகள்: கீழ்க்கண்ட Preview-வை PDF Format-ல், இங்கே டவுன்லோட் செய்யலாம்! +:---+:---+ | [] | | +----+----+ | [] | [] | +----+----+ | [] | [] | +----+----+ | [] | [] | +----+----+ | [] | [] | +----+----+ | [] | [] | +----+----+ | [] | [] | +----+----+ | [] | [] | +----+----+ | [] | | | | | | [] | | +----+----+ . 29 காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 - நிறைவுப் பதிவு - ஒரு இனிய அனுபவம்! []காமிக் கானில் என்னை பிரம்மிக்க வைத்த விஷயம் என்னவென்றால், விழாவிற்கு வந்திருந்த கூட்டம் வெறும் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமாக இல்லாமல் கைகளில் ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அள்ளிச் சென்றதுதான்! வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் காமிக்ஸ் ஆர்வலர்களே என நினைக்கிறேன். அனைத்து வயதினரும், தங்கள் வயதுக்கு ஏற்ற ஏதோ ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கியதாகவே தெரிந்தது! “காமிக்ஸ் என்பது சிறு பிள்ளைகளுக்கு மட்டும்” என்று இன்னமும் தவறாக எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இந்த கண்காட்சியை ஒருதரம் பார்த்திருந்தால் உண்மையை உணர்ந்திருப்பார்கள்! பல பதிப்பகங்கள் மற்றும் பிரபல புத்தகக் கடைகள் தமது ஸ்டால்களை அமைத்திருந்தன! ஆனால், அப்படி ஒன்றும் பிரமாதமான தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கவில்லை! சிறிய / புதிய பதிப்பகங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் MRP விலைக்கோ அல்லது ஆன்லைனில் விற்பதை விட சற்று அதிக விலைக்கோ விற்றுக் கொண்டிருந்தனர்! “War Picture Library Collection” என்றொரு பருமனான புத்தகம் இருந்தது – விலையைக் கேட்டால் பத்து பவுண்டுகள் என்றார்கள், நாம் இருப்பது லண்டனிலா, பெங்களூரிலா என்ற குழப்பத்துடன் இடத்தை காலி செய்தேன்! Batman-இன் சன்னமான காமிக்ஸ் புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் ரூபாய் ஆயிரத்துக்கு மேல் – லயனில் வரும்போது படித்துக்கொள்ளலாம் என நடையைக் கட்டினேன்! [;)] பொதுவாய் ஆங்கில காமிக்ஸ்களை படிக்கும் வழக்கம் இல்லை என்பதால் அவற்றை வாங்குவதில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் சில இந்தியப் பதிப்பகங்களின் உள்ளூர் தயாரிப்புக்கள் கண்களையும், கவனத்தையும் ஈர்த்தன! அந்த பதிப்பகங்களின் பெயர்கள்: Campfire, Level 10, Pop Culture, Rovolt & Vimanika! இவர்களின் காமிக்ஸ் புத்தகங்களை புரட்டிப்பார்த்து வியப்பிலாழ்ந்தேன் – சித்திரங்கள் உலகத் தரத்தில் இருந்தன! கதையமைப்பும் உலகத்தரமா என்பது படித்துப் பார்த்தால்தான் தெரியும்! இவற்றில் சிறப்பானவற்றை தேர்வு செய்து, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்தியப் படைப்புகளுக்கும் நாம் ஆதரவு அளிக்க வேண்டும் எனபது என் ஆசை – ஒருவேளை விஜயன் அவர்கள் மனது வைத்தால் இது நடக்கலாம்! ஒரேயடியாக எல்லா புத்தகங்களையும் வாங்க மனம் (பணம்) இல்லாததால், Pop Culture பப்ளிஷர்சின் Payback மற்றும் Rovolt பப்ளிஷர்சின் Aveon இரு பாகங்கள் – இந்த மூன்று காமிக்ஸ்கள் மட்டும் வாங்கினேன்! என் மகனுக்காக ஒரு சோட்டா பீம் குட்டீஸ் படக்கதை மற்றும் ஒரு மாற்றத்துக்காக சூஃபி குட்டி(பட)க்கதைகள் இவற்றையும் வாங்கினேன்! Payback தீவிரவாதத்தை கதைக்களனாக கொண்டிருக்கிறது! இதன் ஓவியரை ஸ்டாலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது – வெகு சமீபத்தில்தான் தனது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்! இவ்வளவு இளவயதில் அவருடைய சித்திரத் திறமை வியக்க வைக்கிறது – விற்பனையான ஒவ்வொரு Payback புத்தகத்திலும் தன்னுடைய இனிஷியலை அழகாகப் பொறித்துத் தந்தார்! Aveon ஒரு அறிபுனைத் தொடர்கதை – இது வரை இரு பாகங்கள் வெளியாகியுள்ளன! இந்திய ஓவியர்களின் கைவண்ணத்தில் சித்திரங்கள் அட்டகாசமாக இருக்கிறது – சுருக்கமாக சொன்னால் இந்தியாவில் இருந்து ஒரு உலக காமிக்ஸ்! இந்த இரண்டு கதைகளையும் இன்னமும் படிக்கவில்லை, படித்த பின்னர் முடிந்தால் ஒரு விமர்சனப் பதிவிடுகிறேன்! [] ப்ளேட்பீடியாவைத் துவக்கிய சமயம் புத்தகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி ஒரு பதிவிட்டது நினைவிருக்கலாம். காமிக் கானில் நான் மிகவும் எதிர்பார்த்து சென்ற விஷயம் – காமிக்ஸ் இதழ்களை பாதுகாக்க ஏதுவான மைலார் உறைகளையும், அமிலத் தன்மையற்ற அட்டைகளையும் வாங்கலாம் என்பதுதான்! துரதிர்ஷ்டவசமாக எந்த ஒரு ஸ்டாலிலும் இவற்றைக் காண இயலவில்லை! நம்நாட்டில் இன்னமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படாதது வருத்தத்துக்குரியது! []காமிக்ஸ் தவிர்த்து குட்டீஸ்களை கவர்வதற்காக எக்கச்சக்கமான ஸ்டால்கள்! சின்னச் சின்ன பொம்மைகளுக்கெல்லாம் யானை விலை குதிரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்! இரண்டு நாட்களில் ஸ்டால் வாடகையை மீட்டாக வேண்டுமே – அவர்கள்தான் என்ன செய்வார்கள்?! அழுது அடம் பிடிக்கும் என் மகனை சமாதானப்படுத்த இருநூறு ரூபாய் பெறாத ஒரு காரையும் மேலும் ஒரு பொம்மையையும் வாங்கியதில் ஆயிரம் செலவாயிற்று – அழுகையின் விலை ஆயிரம்!!!  Dora மற்றும் Ninja-வின் ஆளுயர பொம்மைகள் விழாவில் உலா வந்து கொண்டிருந்தன. அவற்றின் உள்ளே இருந்தவர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருந்தது! நமது காரிகேச்சர்களை வரைந்து கொடுக்கவும் ஓவியர்கள் இருந்தனர் – முகத்தை வரைய Rs.150/-. என் மகனை மடியில் உட்கார வைத்து அவன் முகத்தை வரையச் சொன்னேன்! இதை வேடிக்கை பார்க்கவும், போட்டோ எடுக்கவும் ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது! யார், யார் ஃபேஸ்புக் ‘வால்களில்’ எங்கள் போட்டோக்கள் அடிபடுகிறதோ தெரியவில்லை! [:D] இரண்டரை வயது குழந்தையை வரைவது லேசுபட்ட காரியமா என்ன – அதன் முடிவில் என் மகனைப் போல ஐம்பது சதவிகிதம் தோற்றமளிக்கும் ஒரு உருவம் ஓவியர் கைவண்ணத்தில் உதித்திருந்தது – தாடையைதான் அநியாய நீளத்திற்கு இழுத்து விட்டிருந்தார்! மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பினோம் – என் மகனுக்கு ஒரே பெருமிதம் மற்றும் சந்தோஷம்!  [] இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டது ஒரு இனிய அனுபவம், அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் அந்த இனிமை இரட்டிப்பாகியது! இந்த கண்காட்சி வேண்டுமானால் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், தமிழ் காமிக்ஸைப் பொறுத்தவரை இது ஒரு இனிய துவக்கமாக அமைந்திருக்கிறது எனலாம். இந்திய அளவில் நடந்த ஒரு நிகழ்வில் நமது தமிழ் காமிக்ஸ் இதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்தது பெருமைக்குரிய விஷயம்! இது குறித்த சிறப்புப் பதிவை ஆசிரியர் S.விஜயனில் வலைப்பூவில் காணலாம்! தமிழ் காமிக்ஸ் என்று மட்டுமல்ல, பொதுவாகவே காமிக்ஸ் பற்றிய அறிதலை மக்களிடம் இவ்விழா சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது! காமிக் கான் பற்றிய எனது பதிவுகளை (இது ஆறாவது!) தொடர்ந்து படித்த உங்களுக்கு என் நன்றிகள் பல. இத்துடன் இந்த தொடர் மொக்கைகள் நிறைவடைகிறது என்பதை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! அதை விட அதிக மகிழ்ச்சியுடன் நீங்கள் தப்பித்துச் செல்லும் முன்னர், கீழே உள்ள படங்களை பார்த்துச் செல்ல தவறாதீர்கள்! [:)] காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்!: Comic Con Express 2012 @ Bangalore +-----------------------------------+-----------------------------------+ |  [] |  [] | +-----------------------------------+-----------------------------------+ | | ---------------- | | -------------------------------- | லயனில் வருமா?! | | சூஃபி காமிக்ஸின் அழகான ஸ்டால்! | ---------------- | | | | | -------------------------------- | | +-----------------------------------+-----------------------------------+ |  [] |  [] | +-----------------------------------+-----------------------------------+ | -------------------- | ----------------------------- | | ஓவியர்களின் தினம்! | விலை 10 பவுண்டுகள் மட்டுமே! | | -------------------- | ----------------------------- | +-----------------------------------+-----------------------------------+ | | | +-----------------------------------+-----------------------------------+ | -------------------------- | ------------------------- | |  [] |  [] | | குடும்பத்தோடு படிப்போம்! | இந்தக் கூட்டம் போதுமா?! | | -------------------------- | ------------------------- | +-----------------------------------+-----------------------------------+ | | | +-----------------------------------+-----------------------------------+ | -------------------------- | ------------------------------- | |  [] |  [] | | இன்னும் கொஞ்சம் வேணுமா?! | சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்! | | -------------------------- | ------------------------------- | +-----------------------------------+-----------------------------------+ | காமிக் கான் முழு பதிவுத் தொகுப்பு |  Comic Con Express 2012 @ | | : | Bangalore | +-----------------------------------+-----------------------------------+ 30 சிங்கத்தின் சிறு குகையில் - ப்ளேட்பீடியா @ காமிக் கான் பெங்களூர்! - பகுதி 1 வெள்ளிக்கிழமை இரவுகளில் டிவியில் படம் பார்த்து லேட்டாக படுத்தே பழகி விட்டது, சனிக்கிழமை காலையில் எட்டு, ஒன்பது மணிக்கு கீழ் எழுந்ததில்லை! அதிலும் நேற்றிரவு ரொம்ப நேரம் நண்பர் ஒருவரிடம் சாட் செய்து பிறகு இணையத்தை மேய்ந்து விட்டு தூங்கச் சென்றபோது கிட்டத்தட்ட அதிகாலை மூன்று மணி! தூக்கம் வராமல் கடைசியாக நேரம் பார்த்த போது நாலு கோழிகள் ஒரு சேர கூவின! [:)] அடுத்த ஓரிரு மணி நேரங்களில் எழுந்து(!) தயாராகி, சோம்பலான சனிக்கிழமை காலையில் மெதுவாக வண்டி ஓட்டிச் சென்றது ரொம்பவே வித்தியாசமான அனுபவம் – சனிக்கிழமை ஷிஃப்டில் வேலை செய்யும் சில பரிதாப ஜீவன்களை தவிர RT நகர் ஏறக்குறைய வெறிச்சோடித்தான் கிடக்கிறது! கோரமங்களா கிட்டத்தட்ட 15KM தூரம் என்றாலும் காமிக்ஸ் கண்காட்சிக்குப் போகிறோம் என்ற நினைப்பே என் வண்டியை வேகமாய் உந்தித் தள்ளத் தொடங்கியது! அசரீரீ: “அடங்குடா, மேட்டருக்கு வா…” காலை மணி 10:30 கோரமங்களா உள்ளாடை அரங்கம், மன்னிக்கவும் – உள்ளரங்கம். அதன் வெளியில் நின்று கொண்டு நான் எடுத்த போட்டோ இதோ [:)] [] உள்ளே நுழையும் போதே முதலில் சிங்கத்தின் சிறு குகைக்குள்  செல்ல கால்கள் பரபரத்தன! வழியில் எடுத்த சில போட்டோக்கள் இதோ: [] நுழைந்தவுடன் வரவேற்ற சூப்பர் ஹீரோக்கள்… இடப்பக்கம் ஹாலிவுட் முகமூடி! [:)] [] பதினோரு மணி ஆகும் முன்னரே ஓரளவுக்கு நல்ல கூட்டம், காமிக்ஸ் கண்காட்சிக்கு இத்தனை பேர்  ஆர்வத்துடன் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது! [] சும்மா சொல்லக் கூடாது, அட்டகாசமான ஏற்பாடுகள்தான்! எங்கு பார்த்தாலும் காமிக்ஸ் ஸ்டால்கள்! [] நமது பிரகாஷ் பப்ளிஷர்சின் சிறிய ஸ்டால் இதுதான், அதாவது சிங்கத்தின் சிறு குகை! [:)] [] விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள Wild West மற்றும் இதர ஸ்பெஷல் இதழ்கள்: [] பழமையும், புதுமையும் கைகோர்க்கும் இடம் – நடுவில் ஸ்பைடரும், ஆர்ச்சியும்! [] குகையில் ஒரு சிங்கம் [:)] அருகே திரு.விஜயனின் புதல்வர்! [] ஸ்டால் அருகே எடிட்டருடன் உரையாடும் தமிழ் காமிக்ஸ் வாசக நண்பர்கள்! [] இப்போதைக்கு இவ்வளவுதான் நண்பர்களே! இன்னும் சில மணி நேரங்களில் அடுத்தப் படப் பதிவை ப்ளேட்பீடியாவில் எதிர்பாருங்கள்! [:)] Update: காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்! Comic Con Express 2012 @ Bangalore 31 காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 கண்காட்சி, பெங்களூர் - ஒரு அறிமுகம்! []Comic Con India Express 2012 மாநாடு – பெங்களூரில் நாளை (8, Sep 2012) காலை பதினோரு மணி அளவில் கோரமங்களா உள்ளரங்கத்தில் தொடங்குகிறது! Comic Con India (The Indian Comics Convention) என்பது ஒரு தனியார் அமைப்பாகும்! இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், காமிக்ஸ், கிராபிக் நாவல், அனிமேஷன் படங்கள் போன்ற சித்திர வடிவிலான ஊடங்கங்களை பிரபலப்படுத்துவதாகும்! இத்துறை சார்ந்த படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இவ்வமைப்பு செயல்படுகிறது! அதற்காக, இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என தவறாக எண்ணிவிட வேண்டாம்! இந்திய அளவில், சித்திரத்துறை விற்பன்னர்களை ஒரு குடையின் கீழ் ஆண்டுக்கு ஓரிரு தடவையாவது ஒருங்கிணைக்கும் பாராட்டுக்குரிய, வணிகரீதியிலான முயற்சியே இது! இதனை செயல்படுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் ஒரு கண்காட்சி [](மாநாடு என்று சொல்வதை விட  இது பொருத்தமாக இருக்கிறது!) இவ்வமைப்பினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது! அது பற்றிய ரஃபிக்கின் ஆங்கிலப் பதிவை இங்கே காணலாம்! அமர் சித்திர கதா, விமானிகா, டைமண்ட் காமிக்ஸ், லெவல் 10 போன்ற ‘இந்தி’ய அளவில் பெயரெடுத்த படா படா பதிப்பகங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றன! அதன் வெற்றியைத் தொடர்ந்து இவ்வருடமும் பிப்ரவரி மாதம் 2வது Comic Con கண்காட்சி டெல்லியில் அட்டகாசமாக நடைபெற்றது! அடுத்த வருடமும் அதே பிப்ரவரியில், அதே டெல்லியில் நடைபெறும்! “ஏதோ நேர்ல போய் பார்த்தா மாதிரியே கதை உடறியே, அந்த விக்கி பேஜை மூடிட்டு பதிவெழுத உனக்கு தில்லு இருக்கா?!” என்றெல்லாம் யாரும் என்னை கேள்வி கேட்டு விடக் கூடாது என்று எண்ணிய Comic Con அமைப்பினர், டில்லியில் நடைபெற்ற கண்காட்சிகளின் வெற்றியின் எதிரொலியாக “Comic Con Express” என்ற மினி கண்காட்சியை பெங்களூரில் நாளை தொடங்குகின்றனர்! அவர்களுக்கு என் நெஞ்சு கசிந்த நன்றிகள்! [:D] Express கண்காட்சிகள் இனி வருடா வருடம் டெல்லி தவிர்த்த முக்கிய இந்திய நகரங்கள் ஏதாவது ஒன்றில் நடைபெறும் – அடுத்தது சென்னையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! []இதில் தமிழனாக நாம் பெருமைப்படக் கூடிய சங்கதி என்னவென்றால், முதன் முறையாக தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் ஒன்று (இருப்பதே ஒன்றுதானே?!) இவ்விழாவில் கலந்து கொள்கிறது! ப்ளேட்பீடியாவை தொடர்ந்து வாசிப்பவராய் இருந்தால் சரியாக கணித்திருப்பீர்கள் – அது எடிட்டர் திரு.விஜயன் அவர்களின் பிரகாஷ் பப்ளிஷர்ஸேதான்! [:)] அது மட்டுமல்ல, தமிழில் நான் அறிந்த வரையில் முதன் முறையாக ஒரு (வண்ண) கிராபிக் நாவலை திரு. விஜயன் அவர்கள் நாளை வெளியிடுகிறார்! Wild West Special என பிரபல அரசியல் பதிவர் ஒருவரால் நாமகரணம் சூட்டப்பட்ட இந்த இதழ் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும் – விலை நூறு ரூபாய் மட்டுமே!. பெங்களூரில் இருப்பவர்கள் ஸ்டால் எண் B-17 இல் வாங்கலாம்! பெங்களூர் வர இயலாதவர்கள், Ebay மூலம் வாங்கிக் கொள்ளலாம்! +-----------------------------------+-----------------------------------+ | ------------------------ | ----------------------- | |  [] |  [] | | Stall B17 Location Map | Hands Up, Books Down! | | ------------------------ | ----------------------- | +-----------------------------------+-----------------------------------+ இவ்விதழில் மேற்சொன்ன கௌபாய் கிராபிக் நாவலை தவிர்த்து, லெஃப்டினன்ட் []ஸ்ட்ராபெர்ரியின் கதையும் இணைந்து வருகிறது! தமிழ் கூறும் நல்லுலகில் ‘கேப்டன் டைகர்’ என்று அன்பொழுக அழைக்கப்படும் இவரின் காமிக்ஸைப் படிக்க ‘தேதிமுகா’ வெறியர்கள் (தேறாத, திருந்தாத, முழுநேர காமிக்ஸ் வெறியர்கள்) கொலைவெறியோடு கோரமங்களா உள்ளரங்கில் இன்றிலிருந்தே உலவுவதாக பட்சிகள் சொல்கின்றன! இதைத் தவிர பல பிரபல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு காமிக்ஸ் படைப்புகள் இங்கே விற்பனைக்கு கிடைக்கும்! அதிக அளவில் ஆங்கில காமிக்ஸ் மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறேன்! [:)] நீங்கள் பெங்களூரில் அல்லது அதற்கு அருகாமையில் வசிப்பவராய் []இருக்கும் பட்சத்தில் இக்கண்காட்சியை தவறவிடாதீர்கள்! குட்டீஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும், பெரியவர்களும் குட்டீஸ்களை ரசிக்கலாம் (உங்கள் கற்பனை தறி கெட்டு ஓடினால் நான் பொறுப்பல்ல!). உண்மையில், இக்கண்காட்சியில் அடல்ட்ஸ்க்கான காமிக்ஸூகளும் கிடைக்கும். எனவே வழக்கம் போல, காமிக்ஸ் என்றாலே குட்டீஸ் சமாசாரம் என்று தவறாக முடிவெடுத்து வராமலிருக்க வேண்டாம்! தவிர, வீடியோ கேம்ஸ் மற்றும் திரைத்துறை சார்ந்த ஸ்டால்களும் இருக்கும் எனத் தெரிகிறது! அப்புறம் அட்டகாசமான சில மெர்ச்சன்டைஸ்களும் இங்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்! உதாரணத்திற்கு இடது பக்கத்தில் உள்ள ‘அண்ணா’ டி-ஷர்ட்! இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியில் நாளை நிச்சயம் கலந்து கொள்வேன்! ஞாயிறு அன்று செல்ல முடியுமா எனத் தெரியவில்லை! இரண்டரை வயது வாண்டையும், மனைவியையும் வீட்டில் தனியே விட்டு வார இறுதி முழுதும் ஊர் சுற்றினால் புரட்சிதான் வெடிக்கும்! [:)] முடிந்த வரை Comic Con கண்காட்சி குறித்த விவரங்களை, படங்களோடு பதிவிடுவேன்! என்னை விட மூத்த மற்றும் முதிய பதிவர்களும் நாளை விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், நாளை பதிவுகள் களை கட்டும் என நினைக்கிறேன்! விஜயன் அவர்களும் ஒரு பதிவர்தான் என்பதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும்! [;)] ஒரு எக்ஸ்க்ளூசிவ் வதந்தி – தற்போது விருப்ப ஓய்வில் இருக்கும் ஒரு பழம் பெரும் பதிவர், []தனது வலைத்தளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக பேஸ்புக் வட்டாரங்கள் அலறுகின்றன! அன்னார் (அண்ணா அல்ல!) தமிழில் எழுதினால் தமிழ்நாட்டில் பலரையும் சென்றடையலாம் என்பது என் கருத்து! அப்புறம் முகம் தெரியாத பல காமிக்ஸ் வாசகர்களையும், பதிவர்களையும் நாளை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன் – என்னிடம் பழைய காமிக்ஸூகள் ஏதும் விற்பனைக்கோ, மாற்றுக்கோ இல்லை என்பதை அவர்களுக்கு அட்வான்சாக தெரிவித்துக் கொள்கிறேன்! [;)] இருந்தாலும் யாராவது பழைய காமிக்ஸ் விற்க நினைக்கும் பட்சத்தில் இரு கரம் நீட்டி குறைந்த விலையில் வாங்க சித்தமாகவே இருக்கிறேன்! [:D] []திரு. விஜயன் அவர்களையும் சந்திக்க விருப்பம் இருக்கிறது – நான் அவர் வலைப்பூவில் இப்போது செய்யும் விமர்சன அலப்பரையிலும், முன்னொரு காலத்தில் என் தளத்திற்கு கண்ணிவெடி லின்க்குகள் வைத்து வெறுப்பேற்றியதிலும் – என் மேல் லைட்டாக(!) கடுப்புடன் இருப்பார் என்பதை நினைத்தால்தான் அடிவயிறு கலங்குகிறது! [;)] இந்த அழகில் சில குசும்பு பிடித்த வாசகர்கள் அவரை வீடியோ பேட்டி வேறு எடுக்க சொல்கிறார்கள்!!! [:)][:)][:)] சரி ஓவராய் மொக்கை போட்டாகி விட்டது, இன்று போய் நாளை வாருங்கள்! காமிக் கான் பற்றிய முழு பதிவுத் தொகுப்பை இங்கு காணலாம்: Comic Con Express 2012 @ Bangalore 32 முகமூடி - தமிழ் காமிக்ஸ் மறுமலர்ச்சிக்கு மிஷ்கின் செய்த பேருதவி! [] முகமூடி நான் பார்க்க விரும்பிய படம்! மேலோட்டமாக விமர்சனங்களை மேய்ந்ததில் எனக்கு தெரிய வந்தது – இது ஒரு பார்க்கக் கூடாத படம்! அது தெரிந்தவுடன் அனைத்து விமர்சனங்களையும் வரி விடாமல் படித்தேன்! படித்ததும் இது பார்த்தே தீர வேண்டிய படம் என்ற முடிவுக்கு வந்தேன்! ஏன்? விஜய டி ராஜேந்தரின் வீராசாமி, விக்ரமின் கந்தசாமி போன்ற மரண மொக்கை படங்களை டிவியில் போடும்போதெல்லாம் ஒரு காமெடி எஃபெக்ட்டுக்காக கொஞ்ச நேரமாவது பார்ப்பதில்லையா? அதே காரணம்தான்! இவ்வாண்டில் வெளியான சூப்பர் unintentional காமெடிப் படம் இதுவாகத்தான் இருக்க முடியும். இது போதாது என்று உச்சகட்ட காமெடியாக, ‘இது தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம்’ என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்! [:)] படத்தில் சில சண்டை காட்சிகளும், அவற்றிக்கான பின்னணி இசையும் அவ்வபோது ட்ராஜிக் ரிலீஃப் ஆக வருகின்றன, நிஜமாகவே பாராட்டுகள்! மிக்க நன்றி மிஷ்கின் சார்! நீங்கள் பத்திரிக்கை பேட்டிகளில் சொல்லியிருந்ததைப் போல, தமிழ் காமிக்ஸ் இதழ்களின் பெயர்களையோ அல்லது அதில் தோன்றிய நாயகர்களின் பெயர்களையோ முகமூடி படத்தில் எந்த ஒரு கதாபாத்திரம் மூலமாகவும் சொல்ல வைக்கவில்லை! ஜீவா, நரேனிடம் ‘இரும்புக்கை மாயாவி தெரியுமா?‘ என்று விறைப்பாக நின்று கொண்டு குரல் உயர்த்திக் கேட்கவில்லை! புத்தர் சிலைக்கு அடியில் முத்து காமிக்ஸ் இதழ்கள் சில சிதறிக் கிடப்பது போன்ற கவிதையான காட்சியை வயலினின் அழுகையினூடே செதுக்கவில்லை! முக்கியமாக, முகமூடி ஜீவா – டாஸ்மாக்கில் லயன் காமிக்ஸ் படிப்பது போன்றதொரு காட்சியையும் வைத்துத் தொலைக்கவில்லை! இதன் மூலம் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் (தமிழ்) காமிக்ஸ் மறுமலர்ச்சிக்கு உங்களால் ஆன மிகப் பெரியதொரு உதவியை செய்திருக்கிறீர்கள்! இனி நீங்கள் கொடுக்கப்போகும் பேட்டிகளில் தமிழ் காமிக்ஸ்களில் வெளியான சூப்பர் ஹீரோ கதைகளுக்கும், முகமூடி படத்தில் ‘இல்லாத’ கதைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்களானால் இன்னும் சிறப்பாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சிக்கு பொருத்தமான மாற்று வசனம் இதோ: நரேன்: பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அயன்மேன்…  ஏய் முகமூடி, ஒன் பேரு இன்னா மேன்?! ஜீவா: ஐ’ம் மொக்கைமேன்! மிஷ்கினின் பேட்டிகளில் இருந்து! - குமுதம் – 25.4.2012 எதன் தாக்கத்தில் இந்தப் படத்தை எடுக்குறீங்க? சொன்னால் சிரிப்பீங்க. என்னோட இளமைக் காலம் முழுதும் என்னை வழி நடத்தியது, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் புத்தகங்கள்தான். சினிமாவிற்கு வந்த பிறகு இதை எப்படியாவது படமாக்கணும்னு காத்திருந்தேன். இப்பதான் டைம் வந்திருக்கு. - ஆனந்த விகடன் – 25.4.2012 ‘முகமூடி’ – என் சின்ன வயசுக் கனவு. ‘அம்புலிமாமா’, ‘பாலமித்ரா’, ‘முத்து காமிக்ஸ்’ படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக்கை மாயாவி இப்பவும் என் கனவில் வர்றான்! ‘முகமூடி’ ஸ்க்ரிப்ட் முடிஞ்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன். இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம். கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர் கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்… ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி மாதிரி எதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை. 33 லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - ஒரு காவியப் பார்வை! []கிட்டத்தட்ட 5 மாதங்களில், 50000 ஹிட்ஸ்களை அள்ளித் தந்த வாசகர்களுக்கு நன்றி! [:)] லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் – பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தமது புது அவதார பாணியில் இவ்வருடம் வெளியிட்டிருக்கும் நான்காவது இதழ்! வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் – கேப்டன் பிரின்ஸ் குழுவின் “பரலோகப் பாதை பச்சை!” மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் “பனியில் ஒரு பரலோகம்!”. கொசுறாய் கருப்பு வெள்ளையில் ஒரு ஆதி கால காமிக்ஸ் கதை – “கொலைகார பொம்மை”. அப்புறம் பக்கம் பக்கமாய் ஆசிரியரின் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மற்றும் வெளிவரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்கள் என ஒரு சுவாரசியமான இதழாக அமைந்திருக்கிறது! 1. பரலோகப் பாதை பச்சை! – கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம்!: பிரின்ஸ் குழு பற்றிய [] ஒரு சிறிய அறிமுகத்திற்கு இந்தப் பதிவை படிக்கவும் – இது பதிவெழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இட்ட பதிவு – கொஞ்சம் மொட்டையாக, மொக்கையாக இருக்கும் – மன்னிக்கவும்! (இப்படி ஒவ்வொரு கதாநாயகருக்கும் ஒரு அறிமுகப் பதிவு இட ஆசை!). முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் – அவ்வளாவாக கவரவில்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது! பிரேசிலில், ஆற்றோரம் அமைந்ததொரு அழகிய சுற்றுலாப் பகுதியில் நாட்டாமை செய்து வரும் ஒரு கும்பலிடம் பிரின்ஸ் குழு சிக்கிக் கொள்கிறது! பிரின்சின் அட்டகாசமான படகின் மேல் அவர்களுக்கு ஒரு கண் – அதைப் பயன்படுத்தி ஒரு விலை உயர்ந்த ‘சரக்கை’ சட்ட விரோதமாக கடத்த நினைக்கிறார்கள். பிரின்ஸ் குழு அதில் இருந்து எப்படி தப்பிக்கிறது, எப்படி படகை மீட்கிறது என்பதுதான் கதை! உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் – கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும்! அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ணத்தில் கண்களை கவர்கிறது! படங்களை நின்று, நிதானித்து, இரசித்து கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிப் படித்தால் ஒரு ராம்போ படத்தைப் பார்த்த எஃபெக்ட் கிடைப்பது நிச்சயம்! சில சாம்பிள் சித்திரங்கள் இதோ!: ---- ---- ----- [] []  [] ---- ---- ----- 2. பனியில் ஒரு பரலோகம்! – ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம்! ஜானியை []அறியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம் (விரைவில் ஒரு தனி அறிமுகப் பதிவை எதிர்பாருங்கள்) – ஜானி ஒரு துப்பறியும் ரிப்போர்ட்டர், இவரிடம் சிக்கும் கேஸ்கள் எல்லாம் குழப்படி ரகம்தான் – இரண்டு மூன்று தடவை படித்தால் மட்டுமே புரியும்! ஆனால் இவர் கதைகளில் ஓவியங்கள் மிகவும் பிரமாதமாக இருக்கும்! டபுள் த்ரில்லில் வெளியாகியுள்ள ‘பனியில் ஒரு பரலோகம்’ – மேற்சொன்ன ரீதியிலான ஒரு அக்மார்க் ஜானி சாகசம்! வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு – பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் – சொக்க வைக்கிறது! அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ்! சமீபத்தில் இவ்வளவு வசீகரமான அட்டையை பார்த்தது இல்லை! நம்மூர் பாணியில், ஒரு மோசடி சாமியாரின் கதை! போலீசிடம் இருந்து தப்பிக்க முயலும் []போது சாமியார் ஆக்சிடெண்டில் இறந்து போகிறார் – அல்லது அப்படித்தான் எல்லாரும் நம்புகிறார்கள்! அவருடைய மகனோ, ‘என் அப்பா ரஸ்புடீனின் மறுபிறவி – ஒன்பது மாதத்தில் உயிர்தெழுந்து வருவார்‘ என பீலா விட்டுத் திரிகிறார்! நடுவில் சாமியாரை போலவே முகத்தோற்றம் உடைய அவரின் சகோதரர் வேறு உள்ளே நுழைந்து குழப்புகிறார். இப்படி பலப் பல குழப்பங்களின் முடிச்சுகள் கதையின் இறுதியில் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது – எடிட்டர் பாணியில் சொல்வதென்றால் இடியாப்ப சிக்கல் க்ரைம் த்ரில்லர்! 3. கொலைகார பொம்மை – ஒரு சாவகாசமான சாகசம்! புதிய லயனை தொட்டுத் தொடரும் பழைய காமிக்ஸ் (கூடா) சகவாசம்! இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை! ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் – அதுவும் வண்ணத்தில்! ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம்! கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை! எடிட்டர் வலைப்பூவில், பல நண்பர்கள் இந்த கதையை பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளி, இது போன்ற அரதப் பழசான கதைகளுக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டிருப்பதை நினைத்தாலே பகீர் என்கிறது! எது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று! ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ்! டபுள் த்ரில் ஸ்பெஷல் – ஏ த்ரில் மாங்கே மோர்! [:D] வாசகர்களின் எண்ணங்களை கேட்டு அதை ஓரளவுக்காவது நடைமுறைப்படுத்தும் அரிதான பத்திரிக்கை ஆசிரியர்களில் விஜயனும் ஒருவர்! வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி  வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமான வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம்! அப்புறம் ஓரளவு குறைந்த விலையில் கருப்பு வெள்ளை காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்! இந்த இதழில் அவர் வாசகர் விருப்பத்திற்கேற்ப செய்துள்ள மாற்றங்கள் சில! - வெளியீட்டாளர் விபரம் – எளிய Ebay முகவரியுடன் [;)] - மொழிப்பெயர்ப்பு நிஜமாகவே சூப்பர்! சமீபத்தில் வந்த இதழ்களில் இதுதான் பெஸ்ட்! குறிப்பாக பார்னேவின் புலம்பல்கள் உதட்டோரம் புன்னைகையை வரவழைத்தன! - கதைகளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்த நினைவில்லை! - முன்னட்டையில் சிறிய புள்ளிப் பிழையை சரி செய்ய மெனக்கெட்டு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது – என்னே ஒரு கடமை உணர்ச்சி! சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை! (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா?!) - அப்புறம் சக வாசகர் உதயகுமாருக்கு வாழ்த்துக்கள் – ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம்! மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்! +-----------------------------------+-----------------------------------+ | [] | [] | | | | | |   | +-----------------------------------+-----------------------------------+ குறை சொல்லவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது என்பதால், ஒரு சில குறைகளை பட்டியலிடுகிறேன்! [;)] விஜயன் அவர்கள் இவற்றைப் படித்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரிதான்! - பரலோகப் பாதை பச்சை – அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி! [;)] - மாதம் ஒரு வாசகர் பகுதியை வண்ணத்தில் வெளியிடுங்களேன் ப்ளீஸ்?! - எழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் இருப்பதை தவிர்க்க, அதிக அளவு மார்ஜின்கள் விடாமல் அச்சிடுவது சாத்தியமா? “Proportionate”ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே?! இப்படிச் செய்தால், பைண்டிங்கில் பிரச்சினை வருமோ? - கருப்பு வெள்ளையில் உள்ள வேர்களை அடியோடு துண்டிக்கக் கூடாதுதான் – ஓக்கே! ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே?! அறுபதுகளின் கதைகள் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன! - தமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி – இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் – டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை ‘புத்தம் புதிய சாகசம்‘ என்று அழைப்பது! புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும்! தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள்! எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு! - அப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது – ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா?! [:D]  [] குறை சொன்ன திருப்தியில் தூக்கம் கண்களை சுழற்றுவதால், இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன் [;)] அடுத்ததாக வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷலில் சந்திப்போம் நண்பர்களே! [:)] குட் நைட், வைல்ட் ட்ரீம்ஸ்! [;)] பி.கு.: ப்ளேட்பீடியாவில் 50000-வது ஹிட்டை அடித்த ஸ்பெஷல் வாசகர் நீங்களாகவும் இருக்கலாம்! [:)] உங்கள் ஆதரவுக்கு நன்றி! [:)] 34 பாலிவுட் படங்களும், கிராபிஃக் நாவல்களும்! [] காமிக்ஸ் கதைகள், ஹாலிவுட் படங்களாக மாறுவது சர்வசாதாரணம்! அதே போல, ஹாலிவுட்டில் ஒரு சில மெகா பட்ஜெட் படங்களை வெளியிடும்முன், படத்தை பற்றிய காமிக்ஸ் அல்லது கிராபிஃக் நாவல் வெளியிடுவது ஒருவகை விளம்பர உத்தி! இப்படி வெளியாகும் படக்கதைகளை கிராபிஃக் நாவல் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்றாலும், எளிமையை கருதி காமிக்ஸ் என்ற சொல்லையே இப்பதிவில் உபயோகப்படுத்துகிறேன்! அவ்வாறாக வெளியாகும் விளம்பர காமிக்ஸ் புத்தகத்தில் உள்ள கதைக்கும், படத்தில் வரும் கதைக்கும் எந்த தொடர்பும் இருக்காது! மாறாக அவை கதாபாத்திர அறிமுகங்களாகவும் அல்லது முக்கிய கதாபாத்திரத்தின் ஒரு சிறிய சாகசமாகவும் மட்டுமே பெரும்பாலும் இருக்கும்! இப்படி ‘படக்’கதை மூலம் பணம் அள்ளும் உத்தியை இப்போது பாலிவுட்காரர்களும் ‘படக்’கென்று பிடித்துக்கொண்டு விட்டார்கள்! [] எனக்கு தெரிந்த வரையில் முதலில் காமிக்ஸ் போட்டது ஷாரூக் கானின் ‘Ra-One’ படத்திற்காக என்று நினைக்கிறேன். படம் வெளியாவதிற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வாரா வாரம் அப்படத்தின் இணையதளத்தில் ஆன்லைன் காமிக்ஸ் வெளியிட்டார்கள் – அந்த மொக்கை காமிக்ஸை இங்கே படிக்கலாம்! அப்புறம் குழந்தைகளுக்கான கலரிங் புக்கில் தொடங்கி, டாய்லெட் பேப்பர் வரை ஷாரூக்கின் அழகிய(!) முகத்தை அச்சடித்து, அதிக விலைக்கு விற்று கல்லா கட்டினார்கள்! நம்மாட்கள் எந்திரன் ரஜினிக்கு ஒரு காமிக்ஸ் வெளியிட்டிருந்தால் (இன்னும்) பணத்தை அள்ளியிருக்கலாம், மிஸ் செய்துவிட்டார்கள்! [;)] இந்த காமிக்ஸ் ஐடியா ஷாரூகிற்கு ரொம்ப பிடித்துப்போனதோ என்னவோ, அடுத்த சில மாதங்களில் வெளியான அவரின் ‘டான் 2′ படத்திற்கும் ஒரு காமிக்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது (Don?) – அதை ஒட்டியதொரு வீடியோ கேமும் உருவாக்கப்பட்டது! வழக்கம் போல நம்மாட்கள் அஜீத்தின் ‘பில்லா 2′ படத்திற்கு காமிக்ஸ் ஏதும் வெளியிடாமல் மிஸ் செய்து விட்டார்கள்! [] அதற்கப்புறம் சைஃப் அலி கான், தனது கனவுப் படமான ‘ஏஜன்ட் வினோத்’ வெளியாகும் முன் ‘The Jungfrau Encounter’ என்ற பெயரில் ஒரு காமிக்ஸ் வெளியிட்டார்! இதை நான் இன்னமும் படிக்கவில்லை – ஆனால் கேள்விப்பட்ட வரையில் இது கொஞ்சம் உருப்படியான கதையம்சத்துடன், தரமான சித்திரங்களுடன் அழகிய வண்ணத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது! ஹிந்தி படங்களையே அரிதாகத்தான் பார்க்கிறேன் – இந்த லட்சணத்தில் அந்த நடிகர்களின் திருவுருவம் தாங்கிய காமிக்ஸ்களை வேறு படிக்க வேண்டுமா என்ற எண்ணமே அதை இன்னமும் படிக்காததிற்கு காரணம்! அகமதாபாத்தில் இருந்த சமயம், மொக்கை ஹிந்திப்படங்களை கூட விடாமல் பார்த்திருக்கிறேன் என்பது நீங்கள் கேட்காத தகவல்! [] நேற்று  Infibeam ஷாப்பிங் தளத்தின் மேஜிக் பாக்ஸில், சல்மான் கானின் ‘Ek Tha Tiger’ பட கிராபிஃக் நாவலை 50% தள்ளுபடியில், ஐம்பது ரூபாய்க்கு கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்ததால் – சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கினேன் – டிஜிடல் காமிக்ஸ் வடிவத்தில்! மேற்சொன்ன இதர திரைப்பட காமிக்ஸ்களின் உருவாக்கத்தில் பணியாற்றிய கலைஞர்களில் ஒரு சிலர் இந்த இதழின் வடிவமைப்பிலும் பங்கேற்றுள்ளனர்! ‘Yomics’ என்ற நிறுவனம், BPI பப்ளிஷர்ஸ் மூலம் இந்த காமிக்ஸை வெளியிட்டுள்ளது – யோமிக்ஸின் ஆசிரியர், ஹிந்தி நடிகர் ‘உதய் சோப்ரா’ என்பது ஆச்சரியத் தகவல்! இன்றுதான் அந்தப் படம் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்! இந்த காமிக்ஸின் பெயர் ‘Saving The High Seas’, 50 முழு வண்ணப் பக்கங்கள், டிஜிடல் எடிஷனைத் தவிர வழக்கமான புத்தக வடிவிலும் கிடைக்கிறது! எதிர்பார்த்தபடியே, கதை என்று ஒன்றும் பெரிதாக இந்த காமிக்ஸில் இல்லை! ஜேம்ஸ்பாண்ட் படங்களின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களில் ஒரு அறிமுக சாகசம் இருக்கும் அல்லவா – அப்படி ஒரு அத்தியாயம்தான் கதை! [] சல்மான்தான் ‘டைகர்’ – இவர் ஒரு RAW ஏஜென்ட்! கதைநாயகன் மதச்சார்பின்றி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினாலோ என்னவோ அப்படி ஒரு மொக்கை பெயரை வைத்துள்ளார்கள்! இதே மொக்கைப் பெயரில், ஒரு சூப்பர் கௌபாய் காமிக்ஸ் ஹீரோ – தமிழ் காமிக்ஸ் இரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயமானவர் என்பது இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயம்! [;)] வழக்கம் போல இஸ்லாமிய தீவிரவாதிகள் (ஹாவ்வ்வ்… கொட்டாவி) நம் நாட்டில் நுழைந்து ஒரு கப்பலை கைப்பற்றுகிறார்கள்! அதில் உள்ள பயணிகளை, பணயக் கைதிகளாக மாற்றுகிறார்கள்! கடற்படை தளபதிகள் இக்கப்பலை மீட்க RAW-வின் உதவியை கோருகிறார்கள் – பின்னிரவில் இந்தத் தகவல் டைகரை தட்டி எழுப்புகிறது. காபி கூட குடிக்க முடியாத கடுப்பில் மனிதர் நிமிடத்திற்கொருதரம் காபி காபி என்று புலம்பித்தள்ளுகிறார்! ஓசையின்றி முடிக்க வேண்டிய இரகசிய ஆபரேஷன் என்பதால் ராக்கெட் லாஞ்சரை டைகருக்கு தர மறுக்கிறார்கள்! கடுப்பாகும் டைகர், ‘அப்புறம் எப்படி எதிரிகளை தாக்குவது? ராக்கெட்டை கைகளால் வீசியா?!‘ என்று ஹிந்தியில் ஜோக்கடிக்கிறார்! அப்புறம் துப்பாக்கி மற்றும் ஒரு சில சகாக்கள் சகிதம் மிதவை மூலம் கப்பலை அடைகிறார்! துப்பாக்கி சண்டை நடக்கிறது, தனது சகாக்களை தலைமையகத்திற்கே திரும்பிப் போகச் சொல்லி தான் மட்டும் மாட்டிக்கொள்கிறார்! கடற்படை தளபதிகள் கப்பலை அழிக்க திட்டமிடுகின்றனர் – டைகர் தப்பித்தாரா? இதர பயணிகளை காப்பாற்றினாரா? அந்த கப்பலை தீவரவாதிகள் ஏன் கைப்பற்றினர்? – போன்ற விவரங்களை எந்த ஒரு பரபரப்பும், சுறுசுறுப்பும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்! படித்து முடித்த பிறகு எனக்கே காப்பி குடிக்க வேண்டும் போல் தோன்றியது! இருந்தாலும் ஆறுதலானதொரு விஷயம், சித்திரத் தரம் மற்றும் வண்ணக் கோர்ப்பு! முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களின் கைவண்ணத்தில்! சித்திரங்களில் அதிக டீடெயில்ஸ் இல்லாவிட்டாலும் நன்றாகவே உள்ளது – இப்படிப்பட்ட சித்திரங்கள் அருமையானதொரு கதையுடன் மட்டும் கைகோர்த்துவிட்டால் அற்புதமான காமிக்ஸ்கள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது! திரைப்பட விளம்பரம் என்ற ஒரு அம்சத்தை தாண்டி அவை வியாபார ரீதியாகவும் வெற்றியடையும் வாய்ப்பும் உள்ளது! இந்த எண்ணம் தந்திடும் மகிழ்ச்சியில் ஏஜென்ட் வினோத் கிராபிஃக் நாவலையும் தள்ளுபடியில் [;)] ஆர்டர் செய்து விட்டேன்! இந்திய காமிக்ஸ் கலைஞர்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறு ஆதரவு! [:)] [] இனி வரும் காலங்களிலாவது, இப்பேர்ப்பட்ட ஒரு அருமையான விளம்பர + வியாபார ஊடகத்தை, எந்திரன் மற்றும் பில்லா படங்களில் கோட்டை விட்டதைப் போல தவற விடாமல் நமது தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! குறைந்தபட்சம் இரும்புக்கை பிரியர் மிஷ்கினாவது, தன் முகமூடி படத்திற்கு ஒரு படக்கதை வெளியிட்டு புரட்சி செய்ய வேண்டும் என்பதே தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் அவா! [] அப்படி ஒரு காமிக்ஸ் வெளியானால் அதிலும் ஒரு மஞ்சள் சேலை அழகி இருப்பார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்![] 35 லக்கி லூக் - லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்) []லயன் காமிக்ஸின் 28 ஆவது ஆண்டு மலர் (லயன் நியூ லுக் ஸ்பெஷல்) இம்மாதம் வெளியாகியிருக்கிறது! இதன் ஆசிரியர் திரு. S. விஜயன் அவர்கள், 1984-இல் லயன் காமிக்ஸை துவக்கிய நாள் முதல் இன்று வரை பல ஏற்ற இறக்கங்களை கடந்து வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்! இடையில் ஏற்பட்ட பெரும் தொய்வுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்! அதே போல இந்த ஆண்டு தோன்றிய  மறுமலர்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் – எனக்கு முக்கிய காரணமாய் தோன்றுவது நீண்ட நாள் வாசகர்கள் காட்டி வரும் பேராதரவே! வாசக எண்ணிக்கையில் சிலராய் இருந்தாலும் தமிழில் காமிக்ஸ் படிப்பது என்பது ஒரு கல்ட் இயக்கமாய் உருப்பெற்றிறுப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை! அப்படிப்பட்ட தமிழ் காமிக்ஸ் hardcore வாசகர்களில் ஒருவனாக – லயன் காமிக்ஸுக்கும், திரு.விஜயனுக்கும், பிரகாஷ் பப்ளிஷர்ஸின் அலுவலர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! லயன் நியூ லுக் ஸ்பெஷல், அவர்களுடைய சமீபத்திய மறு அவதார பாணியிலேயே உயர் தர தாளில் அச்சாகி, இரண்டு முழு நீள, முழு வண்ண லக்கி லூக்கின் சாகசங்களுடன் ஒரு தரமான படைப்பாக வெளிவந்துள்ளது! கொசுறாக சில கருப்பு வெள்ளை பக்கங்கள், எழுபதுகளில் வெளிவந்த வேறு இரண்டு காமிக்ஸ் கதைகளுடன் அச்சிடப்பட்டிருக்கிறது! இவ்விதழின் முக்கிய கதைகளான இரண்டு லக்கி லூக் ஆல்பங்கள் வெளியானது அறுபதுகளில் என்றாலும், அவை காலத்தை வென்ற கௌபாய் கதைகள் என்பதால் சட்டென ஒன்ற முடிகிறது! இதுவும் ஒரு ஃபிராங்கோ-பெல்ஜியன் வகை காமிக்ஸ்தான்! உங்களில் எத்தனை பேருக்கு லக்கி லூக் (Lucky Luke) பற்றி தெரியும் என தெரியவில்லை! அவர் ஒரு ஒடிசலான கௌபாய்! துணைக்கு ஒரு வெள்ளை குதிரையுடன் சோலோவாக சுத்தும் தனிக்கட்டை! பார்க்க சோப்ளாங்கியாக இருந்தாலும், அவரிடம் ஒரு தனித்திறமை – தன் நிழலை விட வேகமாக சுடுவது! அவருடைய குதிரையின் பெயர் ஜாலி ஜம்பர்! பன்ச் டயலாக்கள் அடிப்பது இதன் வாடிக்கை! லக்கி காமிக்ஸ்களில் அடிக்கடி இடம்பெறும் இன்னொரு ‘கதாநாய்’ ரான்டன்ப்ளான்! ஆம், நாய்தான் – இது ஒரு நிஜமான சோம்பேறி + சோப்ளாங்கி + அடிமுட்டாள்! அப்புறம் ஒரு வெட்டியான் – அசோகன் பாணியில் சவப்பெட்டி, பிண ஊர்த்தி சகிதம் யார் தலை விழும் என அலையும் ஒரு வழுக்கைத்தலை  நபர்! சுவாரசியத்தைக் கூட்ட தங்க வேட்டையர்கள், ஷெரிஃப்கள் , மதுபானக் கடைகள், குடிகாரத் தடியர்கள் மற்றும் நடன நங்கைகள்! கௌபாய் கதைகளில் செவ்விந்தியர்கள் இல்லாமலா?! மேற்கத்திய வழக்கப்படி, தவறாகவே காட்டப்படும் செவ்விந்தியர்கள்!  இவர்களோடு சில காமெடி வில்லன்கள் – டால்டன் சகோதரர்கள், பில்லி, ஜேன், ஜெஸ்ஸி ஜேம்ஸ் இப்படி! இவர்கள் அனைவரும் கும்பலாக வைல்ட் வைல்ட் வெஸ்ட் காலத்தில் அடிக்கும் லூட்டிகளின் அணிவகுப்பே லக்கி லூக் காமிக்ஸ் சீரிஸ்! உண்மையில், இந்த கதாபாத்திரங்களில் பல பேர் உல்டாவாக்கப்பட்ட நிஜ நபர்களே! ‘ஓஹோ?! குழந்தைகள் காமிக்ஸ் போல!‘ என்று உங்கள் மண்டையில் பல்ப் எரிந்தால், உடனே சுவிட்சை ஆஃப் செய்யுங்கள்! அனைவர் இரசனைக்கும் ஏற்ற தரமான நகைச்சுவை படைப்புகள் இவை! உண்மையில் சித்திரங்களில் பொதிந்துள்ள நகைச்சுவையை உணர, இரசிக்க சற்று மன முதிர்ச்சி தேவை! ஒருவேளை நீங்கள் லக்கி லூக்கை ’சுட்டி டிவி’யில் வரும் அனிமேஷன் தொடர் மூலம் அறிந்திருந்தால், அது பற்றிய உங்கள் கருத்துக்களை ரப்பர் போட்டு அழித்து விட்டு – “ஒரு படைப்பின் மிக முக்கிய அம்சமான கதாநாயகன் பெயரை மாற்றி படைப்பாளியை அவமதித்துவிட்டு, மொக்கை மொழிப்பெயர்ப்பில் படைப்பை சிதைப்பவர்கள் லிஸ்டில் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு” என்பதாக மட்டும் எழுதிக்கொள்ளுங்கள்! ஆம், சுட்டி டிவியில் லக்கி லூக்கின் பெயர் ’டெலக்ஸ் பாண்டியன்‘, இது எனக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது (நன்றி RSK & சௌந்தர்!). இது போன்ற பெயர் மற்றும் கதை மாற்றும் செயலை பிரகாஷ் பப்ளிஷார்ஸும் ஒரு சில சமயம் செய்திருக்கிறார்கள் என்றாலும், தமிழ் காமிக்ஸில் அவர்கள் பங்களிப்பு மிக மிகப் பெரியது என்ற ஒரு காரணத்தால் அவற்றை மறக்க வேண்டியிருக்கிறது! அது மட்டுமன்றி எடிட்டர் விஜயன் அவர்கள் சமீப காலமாக தரத்தில் கொண்டு வந்த நல்ல மாற்றங்கள் இனி இது போன்ற சிதைவுகள் இராது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது! சரி, லயன் நியூ லுக் ஸ்பெஷலில் வெளியாகியுள்ள கதைகளின் சுருக்கத்தை பார்ப்போம்! லக்கி லூக் காமிக்ஸ்களில் கதை என்று பெரிதாய் ஒன்றும் இருக்காது, ஓவியங்களிலும், வசனங்களிலும் உள்ள நகைச்சுவை அதை ஈடு கட்டி விடும்! 1. பனியில் ஒரு கண்ணாமூச்சி!: []லக்கியின் அபிமான எதிரிகளான டால்டன் சகோதரர்கள், நாலு பேரும் நாலு விதமான உயரம் கொண்டவர்கள் – அவர்களின் உயரத்தை பொறுத்து, அறிவின் அளவு அதன் எதிர் திசையில் இருக்கும் என்பதுதான் வேடிக்கை! சிறை சுவற்றில் ஒரே ஒரு ஓட்டை போட்டாலே தப்பி விடலாம் என்றெல்லாம் லாஜிக்காக யோசிக்காமல் ஆளுக்கொரு ஓட்டை அவரவர் சைசில் போட்டுக் கொண்டு கனடாவுக்கு தப்பியோடுகிறார்கள்! அவர்களை பிடிக்க லக்கி படும் படாத பாடுதான் கதை! (குறிப்பு: உட்பக்கங்களின் ஸ்கேன்கள் சுமாராக இருப்பதற்கு மன்னிக்கவும்! புத்தகத்தை மடக்க மனம் வரவில்லை! [:)] 2. ஒரு வானவில்லைத் தேடி!: பொன்னையும், பொருளையும் தேடி கலிபோர்னியா செல்லும் ஒரு []பெரிய கும்பலை பத்திரமாக வழி நடத்தும் பொறுப்பு லக்கிக்கு! இடையில் பல இடைஞ்சல்கள்! முரட்டு செவ்விந்தியர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள், அந்த கும்பலில் இருக்கும் சில சொதப்பல் காமெடி கேஸ்கள் – இவர்களால் இடையில் ஏற்படும் பல இடைஞ்சல்களை லக்கி எப்படி சமாளிக்கிறார் என்பது கதை! மேலே உள்ள முழு வண்ண லக்கி லூக்கின் சாகசங்களை தவிர்த்து மேலும் இரண்டு கருப்பு வெள்ளை காமிக்ஸ்கள் இணைந்து வந்துள்ளன! 3. மனித வேட்டை (காரிகனின் 18 பக்க க்ளாசிக் சாகசம்!): []கரிபியன் தீவிலிருந்து சிண்டிகேட்டுக்கு (அரசுக்கு எதிரான சில வணிக அமைப்புக்கள் என அர்த்தம் கொள்ளலாம்!) எதிரான ஒரு முக்கிய சாட்சியை, வழக்கு விசாரணைக்காக அமெரிக்க அழைத்து வர வேண்டிய கடினமான பொறுப்பு காரிகனுக்கு! இவர்கள் இருவரையும் சிண்டிகேட்டின் கரீபிய ஏஜன்ட் கார்ஸ்ட்ராம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வேறொரு கரீபியன் தீவுக்கு கடத்தி, விலங்குகளைப் போல் வேட்டையாடி கொல்ல முயற்சிக்கிறார்! உண்மையில், இது கிட்டத்தட்ட 40 ஆண்டு பழைய காமிக்ஸ் என்றாலும் க்ளாசிக் ரகத்தில் சேர்க்கலாம் – விறுவிறுப்பாக இருந்தது! 4. மரண முரசு (ஜான் ஸ்டீலின்  16 பக்க மொக்கை!): 28-ஆவது ஆண்டு மலருக்கு திருஷ்டிப்பொட்டு வேண்டுமல்லவா?! அதற்காகவே வெளியாகியிருக்கும் சிறப்புக் கதைதான் இது! இவற்றைத்தவிர ஆசிரியரின் வழக்கமான ஹாட்லைன், வரவிருக்கும் காமிக்ஸ்களின் விளம்பரங்கள், ஒரு சில குட்டி காமிக்ஸ் கதைகள் என்று அட்டகாசமாக உள்ளது இந்த இதழ்! இது நீங்கள் அவசியம் வாங்க வேண்டிய இதழ், Ebay மூலமும் வாங்கலாம்! லயன் / முத்து காமிக்ஸ் பற்றிய சந்தா மற்றும் இதர விபரங்களுக்கு இந்தப் பதிவை பார்க்கவும்! நிற்க!: நீங்கள் தமிழ் காமிக்ஸ் வாசிப்பிற்கு புதியவராய் இருக்கும் பட்சத்தில் இந்த பதிவை இது வரை படித்தால் போதுமானது! கீழே உள்ள தீவிர விமர்சனக்கள்  உங்களுக்கு எந்த பயனையும் தராது என்றே நினைக்கிறேன்! லயன் நியூ லுக் ஸ்பெஷல் – ஒரு அலசல்!: இந்த இதழ்களை பற்றிய நெகடிவ் கருத்துக்களை கூறவே தயக்கமாகத்தான் இருக்கிறது – குறைசொல்லி என்ற முத்திரை விழுந்துவிடுமோ என்று! பெரும்பாலான வாசகர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே பாராட்டிவிட்டு, உறுத்தும் விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதிற்கு லயன் / முத்து மீதான அபரிதமான அபிமானம் காரணமாக இருக்கலாம்! சரி முதலில் நல்ல விஷயங்களையே பார்ப்போம்! - ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆங்கில காமிக்ஸ்களை எட்டி விடும் தூரத்தில் இருக்கிறது! - உயர் தர தாளில், உயிரோட்டமுள்ள வண்ண அச்சு! - லக்கி லூக் கதைகளில் பேனல்களுக்கும், பக்கங்களுக்கும் கத்திரி போடாதது! - ஃபிரெஞ்சு மூலத்திற்கு கிரெடிட் கொடுத்தது! - மனித வேட்டை – காரிகன் சாகசத்தின் மொழிப்பெயர்ப்பு ஓல்ட்ஸ்கூல் என்றாலும், அருமை! - வாசகர் அறிமுகம் மற்றும் கடிதங்கள்! - புதிய இதழ்களுக்கான, வண்ண விளம்பரங்கள் அருமை! அதே போல, க்ரே ஷேடிங்களுடன் கூடிய கருப்பு வெள்ளை விளம்பரங்களும் நன்றாக உள்ளன! - வெகு நாளைய வாசகர் கோரிக்கைக்கு செவி சாய்த்து தரமான பேக்கிங்கில் அனுப்பியது! களைய வேண்டிய குறைகள்: - அட்டைகளில் கதைகளுக்கான ஒரிஜினல் ஓவியங்களை உபயோகப்படுத்தாதது! - பின்னட்டை ரொம்பவே சுமார் ரகம்! - லக்கி லூக் கதைகளில் மொழிப்பெயர்ப்பு அவ்வளவு சுவாரசியமாக இல்லை! சினிமா காமெடி வசனங்களை நம்பியே மொழிப்பெயர்ப்பில் நகைச்சுவை கூட்டுவது ஓரளவுக்கு ஓகேதான் என்றாலும் விரைவில் அலுத்துவிடுகிறது! - நான் இத்தனை காலம் திரு. விஜயன் மட்டும்தான் அனைத்து கதைகளையும் மொழி பெயர்க்கிறார் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தேன்! விஜயனின் இந்த பேட்டியைப் படித்த பிறகு, தற்போது திரு.கருணையானந்தம் என்பவர்தான் அப்பணியை பெரும்பாலும் செய்கிறார் என்று அறிந்தேன்! வேற்று மொழி படைப்புகளின் வெற்றி அல்லது தோல்வியின் பெரும்பங்கு அவற்றை மொழி பெயர்ப்பவரின் தோள்களில்தான் உள்ளது! அப்பேர்ப்பட்ட பணியை செய்பவருக்கு கிரெடிட் கொடுக்கும் விதமாய், சின்னதாய் அவர் பெயரையும் கதைகளின் – ஆரம்பத்திலோ, இறுதியிலோ தெரிவித்தால், வாசகர்கள் பாராட்டவோ, குறை சொல்லவோ வசதியாக இருக்கும்! - எழுத்துருக்கள் (Fonts) சிறிதும் பெரிதுமாய் இருக்கிறது! இந்த குறையைக் களைய புத்தக நீள அகலத்தை சற்று அதிகரித்தால் மட்டுமே முடியும் – வேற்று மொழி ஒரிஜினல் அளவுகள் அப்படிதான் சற்று பெரியதாக இருக்கின்றன! நடைமுறையில் அது சாத்தியமில்லை என விஜயன் கோடிட்டு காட்டிவிட்டார் (லயன் ப்ளாக் பின்னூட்டமொன்றில்!). எனவே கண்ணாடி அணியாத வாசகர்களும் சீக்கிரமே கண் டாக்டரிடம் போக வேண்டி வரலாம்!  [] - பல இடங்களில் எழுதுப் பிழைகள் உறுத்துகின்றன! எடிட்டர் கவனிக்கவேண்டும்! - லக்கி லூக் கதைகளுக்கு கார்ட்டூன் ரக எழுத்துருக்களை பயன்படுத்தியிருக்கலாம்! - இவ்விதழின் இரண்டு லக்கி லூக் கதைகள், முறையே 1963 மற்றும் 1964 ஆம் ஆண்டுகள் வெளியானவை! அப்படியிருக்க பொத்தாம் பொதுவாக 1971 என கிரெடிட்டில் போட்டது ஏனோ? (நன்றி: விக்கியில் ஒரு வெட்டி ஆராய்ச்சி! ) - ரான்டன்ப்ளானின் பெயர் சினிபுக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் போல ரின்டின்கேன் என வெளியாகியுள்ளது! இது போன்ற பெயர் மாற்றங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும்! இனி வரும் வெளியீடுகளில், ஏற்கனவே பெயர் மாற்றத்துக்குள்ளான கதாபாத்திரங்களையும் அவரவர் அசல் பெயரில் உலவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்! முக்கியமாக கேப்டன் டைகர் பெயரை, ப்ளூபெர்ரி என்று சரி செய்வது! - கதைத் தேர்வுகளில் கவனம் தேவை – ஜான் ஸ்டீலின் – மரண முரசு ரொம்பவே சுமார் ரகம்! - கருப்பு வெள்ளை கதைகள் அச்சிடப்பட்டுள்ள தாள்கள் முன்பை விட பரவாயில்லை ரகம் என்றாலும் மறுபக்கத்தின் கருமை முன்பக்கத்தில் தெரிகிறது! சற்றே GSM அதிகமான தாளை பயன்படுத்தலாம்! - அப்புறம் ஓவியங்களில் வரும் பெயர்ப் பலகைகளில் – தமிழ் எழுத்துக்களை பொதிக்கும் போது, பலகையின் சாய்மானம் மற்றும் ஒளி அமைப்புக்கேற்ப எழுத்துக்களை வைத்தால் நன்றாக இருக்கும்! கீழே சில உதாரணங்கள்! ----- ---- ----- -----  [] []  []  [] ----- ---- ----- ----- செய்யக் கூடிய மாற்றங்கள்: - லக்கி, லார்கோ போன்ற நாயகர்களின் – 44 பக்க ஆல்பங்கள் இரண்டை ஒரே இதழில் வெளியிடும்போது , முன்னட்டையில் முதல் சாகசத்தின் ஒரிஜினல் அட்டையையும், பின்னட்டையில் இரண்டவாது ஆல்பத்தின் ஒரிஜினல் அட்டையையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்! - அட்டை வடிவமைப்பு: ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கலரில், ஒவ்வொரு அளவில், ஒவ்வொரு டிசைனில் கேப்ஷன்கள் போடுவதை தவிர்த்து ஒரே வண்ணத்திலான, ஒண்ணரை இன்ச் பட்டிக்குள் லயனின் லோகோ மற்றும் கதையின் பெயரை வெளியிடலாம்! பின்னட்டையில் ISBN Code-ஐ (எண்களுடன்) வெளியிடலாம்! - லயன் காமிக்ஸ் வெளியீடு எண்ணுடன், வெளியான மாதம் மற்றும் வருடத்தை இணைத்தால் நன்றாக இருக்கும்! - உங்களின் Ebay காமிக்ஸ் ஸ்டோரின் எளிய முகவரி இதுதான்: http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html – உங்கள் ப்ளாக் முகவரியின் கீழ் இதையும் பிரசுரிக்கலாம்! - வாசகர் அறிமுகத்திற்கு ஒரு கால் பக்கமாவது ஒதுக்கலாம் – இம்மாதப் பகுதியில் இடம்பெற்ற வாசக நண்பர் சோமசுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்! வாசகர்களுக்காக ஒரு யோசனை!: - வாசகர் அறிமுகப் பகுதிக்காக உங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பும் போது – பெயர், வயது, ஊர் – போன்றதொரு போரடிக்கும் டெம்ப்ளேட்டில் சிக்காமல் உங்களைப் பற்றிய சுவையான சுய அறிமுகத்தை, உங்கள் வயது மற்றும் அனுபவத்திற்கேற்ற முதிர்ச்சியோடு பகிர்ந்தால் இரசிக்கும்படி இருக்கும்! ஒரு ஆச்சரியக்குறி!: லக்கி லூக்கின் இந்த கதைகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஒரிஜினல் சித்திரங்களை இவ்வளவு அழகாக ஃபிரெஞ்சு பதிப்பகத்தாரால் (Dupuis/Dargaud) பளபளப்பு குறையாமல் எப்படி பேணிக் காக்க முடிகிறது?! 25 வருட ரீப்ரிண்டுக்கே முழி பிதுங்கும் பரிதாப நிலை நம் பதிப்பகத்தாரிடம்! காமிக்ஸ் என்று இல்லை நம் பதிப்பகத்துறையே அப்படித்தானோ?! இப்போதைக்கு தோன்றியவை இவ்வளவுதான் நண்பர்களே! இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்! 36 தமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்! (50-ஆவது பதிவு) டார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் []ஆகிவிட்டது, இல்லையா? உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார்? நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்!). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் – ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக! உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள்! எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும்? இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் – விஜயன் அவர்கள்தான்! 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன்! ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை  என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான்! அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் வார்த்தையில் அடங்காது! அனேக காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு திகில் என்றாலே XIII மற்றும் பிரின்ஸ் மட்டுமே ஞாபகம் []வருவது ஆச்சரியகரமானது! பேட்மேன் – நான் அறிந்த வரையில் இந்த சூப்பர் ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை விஜயனுக்கே சேரும்! (1988-இல் என நினைக்கிறேன், தொல் காமிக்ஸ் ஆய்வாளர்கள் தெரிந்தால் சொல்லலாம்! ). பத்தே வயதான எனக்கு அக்கதைகளை படித்ததும் பித்துப்பிடித்தது போல் ஆகிவிட்டது! பேட்மேன் ஒரு வழக்கமான ஹீரோ அல்ல, அவரின் வில்லன்களும் அப்படித்தான்! கைகலப்போடு நில்லாமல் மனோரீதியாகவும் மோதிக்கொள்வார்கள்! மன உளைச்சல் தரும் வில்லன்கள், மனநோயாளி எதிராளிகள், ஹிப்னாடிச வில்லன்கள், போதை மருந்துக் கும்பல்கள் என ஒவ்வொரு கதையும் மிக மிக வித்தியாசமான அனுபவத்தை அளித்தது! வசனங்களும் வழக்கமான ரகம் அல்ல, கிட்டத்தட்ட ஒரு மனவியல் நிபுணரின் எழுத்துக்களை படிப்பது  போல் இருக்கும்! இக்கதைகளை பற்றிய விஜயனின் அறிமுகத்தை (~25 வருடங்களுக்கு முன்!) இடப்பக்கம் பார்க்கலாம்! இது வரை எத்தனை பேட்மேன் இதழ்கள் திகிலில் வெளியாகின என சரியாகத் தெரியவில்லை (தொ. கா. ஆ. தெ. சொ!). மேலோட்டமாக எனது காமிக்ஸ் சேகரிப்பில் தேடியதில் நான்கு பேட்மேன் அட்டைகள் தாங்கிய இதழ்கள் சிக்கின. இவற்றைத் தவிர, வேறு கதைகளோடு இணைந்தும் பேட்மேனின் சாகசங்கள் வெளியாகி உள்ளன (முன் அட்டையில் பேட்மேன் படம் இல்லாமல்). நேரம் கிடைத்தால் இவற்றை ஒவ்வொன்றாய் விமர்சனம் செய்வேன்! எனக்குத் தெரிந்து ஜோக்கரின் கதைகளே அதிகம் வெளியாகி இருக்கின்றன! உதாரணத்திற்கு “சிரிக்கும் மரணம்” இதழில் இருந்து ஜோக்கரும், பேட்மேனும் மோதிக்கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சி இதோ: -------------------------  [] சிரி அல்லது செத்து மடி! ------------------------- இன்னொரு வில்லனான ப்ரொஃபசர் மைலோவும் “பேட்மேன் கிறுக்கனா” இதழில் தோன்றி இருக்கிறார்! அதில் ஒரு காட்சியையும், ஏனைய பேட்மேன் வில்லன்களின் அணிவகுப்பையும் கீழே காணலாம் (அனைவரும் திகிலில் அறிமுகமாகவில்லை)! ---- ---- [] [] ---- ---- []பேட்மேன் அறிமுகமான நாள் தொட்டு, ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் பேட்மேன் காமிக்ஸ் இதழ்கள் வெளி வந்திருக்கும் என நினைக்கிறேன், ஆனால் அவை அனைத்தும் சிறந்தவை அல்ல என சில காமிக்ஸ் நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்! எடிட்டர் விஜயனின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது, அதைப்பற்றி இப்பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்!:- //அந்த கணத்தில் 1990 களில் BATMAN கதைகளை நாம் வெளியிட்ட சமயம் கூட…ஒரு இதழுக்கான கதையைத் தேர்வு செய்திட நான் எத்தனை DC Comics இதழ்களைப் புரட்டி இருப்பேன் என்பது என் மண்டைக்குள் flashback ஆக ஓடியது !  சாம்பிள்கள் எத்தனை கேட்டாலும் முகம் சுளிக்காமல் அனுப்பிட்ட DC காமிக்ஸ்-ன் archives இன்-சார்ஜ் Mrs .Phillis Hume -க்கும் மானசீகமாய் ஒரு நன்றியும் சொல்லத் தோன்றியது ! கிட்டத்தட்ட 50  கதைகளைப் படித்து..அதிலிருந்து ஒன்றைத் தேற்றி..அதிலும் லேசு பாசாக எடிட்டிங் செய்து தான் வெளியிடுவோம். (“சிரித்துக் கொல்ல வேண்டும்” – ஒரு அற்புதமான விதிவிலக்கு!!)// நடுவில் வெகு நீண்ட காலம் காமிக்ஸ் படிக்கும் பழக்கமே விட்டுப்போனதால் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சைனீஸ் போன்ற எந்த ஒரு மொழியிலும் காமிக்ஸ் படிக்கவில்லை – இனிமேல் பேட்மேனின் முக்கியமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை இரவல் வாங்கியாவது படித்திட தீர்மானித்துள்ளேன், விலைக்கு வாங்கவேண்டுமென்றால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது! Dark Knight Rises படத்தின் முக்கிய வில்லன் Bane – துரதிர்ஷ்டவசமாக இக்கதாபாத்திரம் DC []காமிக்ஸில் வெளியானபோது திகில் காமிக்ஸ் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டது! XIII, பிரின்ஸ் போன்ற திகில் காமிக்ஸின் ஆஸ்தான நாயகர்கள் லயன் காமிக்ஸுக்கு கட்சி மாறினாலும், பேட்மேன் மட்டும் பின்னர் ரைஸ் ஆகவே இல்லை! ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை, குழப்பமான கதையம்சம் கொண்ட பேட்மேன் காமிக்ஸ்களை தமிழ் வாசகர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லையோ என விஜயன் நினைத்திருக்கலாம் அல்லது DC காமிக்ஸின் Archives இன்சார்ஜ் Mrs.Phillis Hume ஓய்வு பெற்றிருக்கலாம்! எது எப்படியோ, இது தமிழ் காமிக்ஸுக்கு பெரியதொரு இழப்பு என்பதில் சற்றும் ஐயமில்லை! []90-களில் சில பேட்மேன் திரைப்படங்களை காண நேர்ந்தபோது அது இழப்பு மட்டும் அல்ல பேரிழப்பு என உணர்ந்தேன்! ஏனோ டிம் பர்ட்டனின் பேட்மேன் (Batman & Batman Returns) என்னை சற்றும் கவரவில்லை, ஒருவேளை இப்போது மீண்டும் பார்த்தால் பிடிக்குமோ என்னவோ! ஜோயல் ஷூமேக்கர் இயக்கத்தில் “Batman Forever” திரைப்படம், அப்போது “The Mask” படத்தின் மூலம் புகழின் உச்சத்தில் இருந்த ஜிம் கேரிக்காக பிடித்தது! அதே இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த மொக்கைக் காவியம் “Batman & Robin”-ஐ எப்போது பார்த்தாலும் பிடிக்காது என்பது மட்டும் சர்வ நிச்சயம்! நல்ல வேளையாக திரையுலகில் அதலபாதாளத்தில் விழுந்திருந்த பேட்மேன் இமேஜை கிறிஸ்டோபர் நோலன் இப்போது தூக்கி நிறுத்திவிட்டார்! பின்குறிப்பு: தற்போது விளம்பரம் என்ற சொல்லைக் கேட்டாலே, “Selective Hearing Loss” []வியாதிக்கு ஆளாகும் விஜயன் அவர்கள், அந்த காலத்தில் விளம்பர தூதராக ஆனானப்பட்ட பேட்மேனையே நியமித்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! [;-)] இந்த விளம்பரத்தில் உள்ள ஓவியங்களை வரைந்தது நம்மூர் ஆர்டிஸ்ட் ஒருவர்தான் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? விஜயன், இந்தப் பதிவில் இதைப் பற்றி கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்! //“இந்த இதழின் ஆரம்பப் பக்கமே freehand drawing-ல் மிகத் திறமைசாலியான நமது ஓவியர் ஒருவர் வரைந்திட்ட காமிக்ஸ் விளம்பரம் !! Batman-ஐ கொண்டு நமது லயன் ; திகில் & மினிலயன் காமிக்ஸ்களுக்கு சந்தா விளம்பரம் தயாரித்து இருந்தோம் ! அன்றைக்கு மூன்று இதழ்களின் மொத்த சந்தாத் தொகையே ரூபாய் 75 தான் !! பாருங்களேன் அந்த விளம்பரத்தை”!//. – விளம்பரத்தைக் கண்டவுடன், அப்படிவத்தை பூர்த்தி செய்து லயன் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தேன் – அதன் நகலை வலப் பக்கம் காணலாம்! [;-)] காமிக்ஸ் கிசு கிசு: விஜயனின் டாப் 20 காமிக்ஸ் லிஸ்டில்[]ஜோக்கரின் முதல் சாகசமான “சிரித்துக் கொல்ல வேண்டும்” இடம் பெற்றது பல வாசகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது! தமிழில் மீண்டும் பேட்மேன் வெளிவர வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ‘வாசக துன்பர்’ ஒருவருக்கு பதிலளிக்கும் வகையில் விஜயன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்: //நிறைய நாயகர்களை ; தொடர்களை ஒட்டு மொத்தமாய் இழுத்துப் போட்டு விட்டு அவஸ்தைப்பட்ட அனுபவம் நிறையவே உள்ளது ! So நிதானமாய் ஆனால் உறுதியாய் இந்த second innings ல் ஆடிட வேண்டுமென்பதில் கொஞ்சம் உஷாராகவே இருக்கிறேன் என்று சொல்லிடலாம் ! பொறுத்திருந்து பாருங்கள்…2013-ன் வாணவேடிக்கைகள் நிறையவே காத்துள்ளன ! BATMAN நமது ராடாரில் தான் இருக்கிறார் ! Stay assured !// 37 என் பெயர் பில்லா - ஒரு முன்பின்நவீனத்துவ விமர்சனம்! []முன்பின்நவீனத்துவம் – இதற்கும் இலக்கிய உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! இதற்கு நான் கொடுக்கு அர்த்தம் என்னவென்றால், இப்பதிவு நேர்க்கோட்டில் அமையாமல் – முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டு, பில்லா பட விமர்சனமாக மட்டுமன்றி, இடையிடையே இந்த பதிவிற்கு தொடர்புடைய ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் விமர்சனமாகவும் நவீன(!) முறையில் எழுதப்பட்டுள்ளது!   அதற்காக ஜம்ப் செய்து, ஜம்ப் செய்து பில்லா பட விமர்சனம் மட்டும் படிக்கக்கூடாது! இரண்டையும் ஆழ்ந்து(!) படியுங்கள், இவற்றிற்கான தொடர்பு என்ன என்பதை பதிவின் நடுவில் சொல்கிறேன்! அப்புறம் பில்லா ட்ரைலர் நிச்சயம் பார்த்திருப்பீர்கள், “டொன் டொய்ங், டொடடோ டோ  டொன் டொய்ங்” என்ற ரீதியில் ஒரு தீம் மியூசிக் வருமல்லவா?! இந்த பதிவில் நீங்கள் “♫” என்ற சங்கீத குறியை காணுமிடமெல்லாம் அந்த மியூசிக்கை மனதில் ஓட விட்டு, அஜித் நடப்பது போல கற்பனை செய்ய வேண்டியது மிக அவசியம்! அதே சமயத்தில் அஜீத் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்! எனது வழக்கமான சினிமா விமர்சன பாணிக்கு மாறாக இங்கு முழுக் கதையையும் சொல்லி இருப்பதால் படம் பார்க்க விரும்பும் அன்பர்கள் வெள்ளை கட்டங்களை படிக்காமல், நீளமான இப்பதிவின் நீலக் கட்டங்களை மட்டும் படித்தால் நலம்! +-----------------------------------------------------------------------+ | படத்தின் ப்ளஸ்கள் முதலில் சொல்ல வேண்டுமானால் அஜீத் ஆர்பாட்டமில்லாமல் | | நடித்திருக்கிறார்! டயலாக் டெலிவரியில் ரொம்ப முன்னேற்றம்! இவரைத் தவிர | | சிறப்பாக நடித்தவர்கள் என்றால் இளவரசை சொல்லலாம்! வில்லன்களும் | | ஸ்மார்டாக இருக்கிறார்கள்! படம் எடுத்த இடங்கள், காட்சியமைப்பு, பின்னணி | | இசை, ஒளிப்பதிவு, உடைகள், செலவு இப்படி ஒவ்வொன்றுமே உலகத்தரம்! | | உள்ளே நுழையும்போது படம் போட்டிருந்தார்கள், போலிஸ் ஆஃபிசர்(!) ஒருவர் | | டீக்கடையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஆளிடம் லாக்கப்பில் இரண்டு நாள் | | தங்கிச் செல்லுமாறு அன்புடன் அழைக்கும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது! | | பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன், ‘படம் போட்டு எவ்ளோ நேரம் ஆச்சு?!‘ | | அவர் ரெண்டு நிமிடம் கழித்து ‘இப்பதான் பத்து நிமிட்டு ஆச்சு!‘ என்று | | மலையாளத்தில் கூறினார்! அந்த பதிலை நான் கேள்வி கேட்டபோதே அவர் மூளை | | தயாரித்திருக்கும் பட்சத்தில் நான் படம் ஆரம்பித்து முழுதாய் பனிரெண்டு | | நிமிட்டுகள் கழித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டும்! ஒருவேளை | | (நல்லவேளை?), ஏதாவது ஒரு பாட்டு மிஸ் ஆகியிருக்குமோ? பில்லா படங்களில் | | அந்த லோகோ காட்டப்படும் டைட்டில் எனக்கு ரொம்ப பிடிக்கும் – நிச்சயமாக | | அதை மிஸ் செய்துவிட்டேன் போல! நாங்க அகதிகள் தான் அடிமைகள் கிடையாது | | என்றவாறு தல காட்டும் ♫ அஜீத்குமார் ♫ போலீஸை பின்னியெடுக்கிறார்! | +-----------------------------------------------------------------------+ | []லார்கோ வின்ச் – ஒரு அறிமுகம்!: லார்கோ – ஐரோப்பாவில் பிரசித்தி | | பெற்றதொரு கதாபாத்திரம்! ஜேம்ஸ் பாண்ட்  போல் இவர் ரகசிய உளவாளி | | கிடையாது! ஆனால் இவர் செய்யும் சாகசங்கள், சில்மிஷங்கள் எல்லாம் ஜேம்ஸ் | | ரகம்தான்! Batman, Ironman போல ‘சூப்பர் ஹீரோ’ சக்திகளும் இவரிடம் | | இல்லை. ஆனால், அவர்களுக்கொப்ப பெரிய நிறுவனமும், பணபலமும், செயல்வேகமும் | | நிச்சயம் உண்டு! அவர்கள் உலகை காப்பாற்ற புறப்படுவார்கள், நம்மவரோ | | தன்னையும் தன் நிறுவனத்தை காப்பற்றிக்கொள்ள எந்நேரமும் போராடுவார் – | | அவ்வளவுதான் வித்தியாசம்! இதுவரை 17 ஆல்பங்கள் வெளியாகியுள்ள லார்கோ | | காமிக்ஸ் தொடரின் முதல் இரண்டு கதைகளை முத்து காமிக்ஸ் நிறுவனம் | | தமிழில், முழு வண்ணத்தில், நூறு ரூபாய் விலையில் உயர்தர ஆர்ட் | | பேப்ப்பரில் வெளியிட்டுள்ளது! | +-----------------------------------------------------------------------+ |  உள்ளூர் கடத்தல்காரர் ஒருவர் அடிவாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருடன் | | இணைந்து அஜித்தை சிக்க []வைக்க எண்ணுகிறார்! மீன் வாயில்(!) வைரக்கற்கள் | | பதுக்கிய(!) லோட் லாரியை சென்னையில் இன்னொரு கடத்தல்காரரிடம் (இளவரசு) | | சேர்பிக்குமாறு சொல்லிவிட்டு, வழியில் அதை மடக்கி அஜித்தை கொன்று, | | வைரத்தோடு அஜீத் தப்பியோடிவிட்டதாக இளவரசிடம் புளுகுவதே இவர் திட்டம்! | | எதிர்பார்த்தது போல இதிலிருந்து தப்பும் அஜீத் இளவரசின் வலது தலையாக | | மாறுகிறார். ஒரு கிளப் பாட்டு -  ♫ இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளுகிறார்! | | ♫ அப்புறம் ஓமனக்குட்டியை (பார்வதி ஓமனக்குட்டன் , சுருக்கமாக | | ஓமனக்குட்டி ) பாட்டில்லாமல் மீட் பண்ணுகிறார்! | +-----------------------------------------------------------------------+ | கதைச்சுருக்கம்: லார்கோ – பெற்றோரை இழந்த ஒரு இளைஞர். இவர், பல | | பில்லியன் டாலர்கள் மதிப்பு []கொண்ட மிகப்பெரிய சர்வதேச நிறுவனமான “The | | W Group” என்ற நிறுவனத்தின் தலைவர் “Nerio Winch”-ஆல் தத்து | | எடுக்கப்படுகிறார்! நெரியோ, தனக்கு பிறகு தனது நிறுவனத்தை வழி நடத்த | | லார்கோவை பத்து வயதிலிருந்தே எல்லா விதத்திலும் தயார் படுத்தி | | வருகிறார்! நெரியோ ஒன்றும், லேசுப்பட்ட ஆள் கிடையாது. வியாபாரத்தில் | | எல்லா தகிடுதத்த வேலைகளையும் செய்து முன்னேறியவர், அதனால் பணத்தை | | மட்டுமின்றி பல எதிரிகளையும் சம்பாதித்தவர்! அவரை மனதளவில் தந்தையாக | | லார்கோ ஏற்றுக் கொண்டது கிடையாது அதற்கு நெரியோவின் வழிமுறைகளும் ஒரு | | காரணம். இந்த சூழ்நிலையில் நெரியோ தனது நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி | | ஒருவரால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கொடுஞ்செயல் சாமர்த்தியமாக | | தற்கொலை என ஜோடிக்கப்படுகிறது – நெரியோவுக்கு பிரைன் கேன்சர் இருந்தது | | காரணமாக காட்டப்படுகிறது! | +-----------------------------------------------------------------------+ | அப்புறம் கோட்சூட் போட்ட உள்ளூர் தாதாவிடம் (மனோஜ் கே. ஜெயன்) பாண்ட்ஸ் | | பவுடர் வாங்கும் அஜீத் []அதை விற்றுக் கொடுக்கிறார்! இந்த பவுடர் சேல்ஸ் | | டீலிங்கில், லுங்கி கட்டிய ♫ இன்னொரு ரவுடியை ஷூட்(!) பண்ணுகிறார்! ♫ | | இதனால், இம்ப்ரெஸ் ஆகும் மனோஜ், இவரை இன்னொரு கோட்டுசூட்டு போட்ட கோவா | | தாதா அப்பாஸியிடம் அறிமுகப்படுத்துகிறார்! ♫ இன்னொரு கிளப் பாட்டு – | | தாதாவின் ஆளையே (ப்ரூனா அப்துல்லா – நடிப்பை துணியாக நினைத்து ‘பிய்த்து | | உதறி’ இருக்கிறார் மனுஷி!) லுக் விடுகிறார் அஜீத்! ♫ அப்பாஸிக்கு, | | டிமிட்ரி என்ற இரஷ்ய (ஸ்பானிஷ்?) மொழி பேசும் சர்வதேச கோட்டுசூட்டிடம் | | இருந்து, ரைடில் சிக்கிய சரக்கை மீட்டுத் தருமாறு உதவி கேட்டு அழைப்பு | | வருகிறது! அப்பாஸி தயங்குகிறார், ♫ அஜீத் நான் செய்கிறேன் என்கிறார்! ♫ | | பலத்த ஆயுதம் தாங்கிய 100 போலிஸ் வீரர்கள்(!), 200 Coast Guard வீரர்கள் | | இவர்களை ஏட்டு ஏகாம்பரத்தின் ரைஃபிளுடன் திறமையாக எதிர் கொண்டு ♫ | | ட்ரக்கில் தப்புகிறார் அஜீத்! ♫ அப்பாஸியுடன் டீல் பேச வரும் ஒரு | | அரசியல்வாதியையும் அவரின் மகனையும் பகைத்துக்கொள்கிறார்! | +-----------------------------------------------------------------------+ |  []திடீரென்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு | | இருபத்தாறே வயதான நமது ஹீரோவின் தலையில் இடியாக விழுகிறது! கூடவே இதை | | கொஞ்சமும் விரும்பாத, கூட இருந்தே குழி பறிக்கும் W குழுமத்தின் | | உயரதிகாரிகளை சமாளிக்கும் தொல்லை பிடித்த வேலையும்தான்! லார்கோவின் | | தந்தை நெரியோ கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இஸ்தான்புல்லில் | | இருக்கும் லார்கோவை ஒரு கொலை கேசில் மாட்டி விட்டு விடுகின்றனர்! இதில் | | இருந்து லார்கோ எப்படி தப்பிக்கிறார் என்பதை முதல் பாகத்திலும் (என் | | பெயர் லார்கோ!), தனது வளர்ப்பு தந்தையின் பங்குகளை கைப்பற்றி நிறுவனத்தை | | எப்படி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்பதை இரண்டாம் | | பாகத்திலும் (யாதும் ஊரே… யாவரும் எதிரிகள்…!) ஜெட் வேகத்தில் | | சொல்லியிருக்கிறார்கள்! | +-----------------------------------------------------------------------+ | மேற்கண்ட ஏட்டு ஏகாம்பர ரைஃபிள் மேட்டரில் இம்ப்ரெஸ் ஆகும் டிமிட்ரி, | | வியாபார விரிவாக்கம் (ஆயுத []ஹோல்சேல் விற்பனை ) தொடர்பாக அப்பாஸிக்கு  | | அழைப்பு விடுக்கிறார்! அதற்கு அல்லக்கை மனோஜ் உடன் ♫அஜீத்தை | | அனுப்புகிறார்! ♫ இன்னும் ஒரு கிளப் பாட்டு! அஜீத் செல்வாக்கில் | | கடுப்பாகும் மனோஜ், அப்பாஸி – அஜீத் இருவரையும் பிரிக்கிறார்! ♫ அஜீத் | | தனியாக தொழில் செய்ய முடிவெடுக்கிறார்! ♫ | +-----------------------------------------------------------------------+ | லார்கோவின் பாத்திர வடிவமைப்பு அபாரம்! சிறு வயதில் இருந்து அவர் எப்படி | | கொஞ்சம் கொஞ்சமாக  உயர் []பொறுப்புக்கு செதுக்கப்படுகிறார் என்பதை | | தெளிவாக சொல்கிறார்கள். துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் | | பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது “Casino Royale” ஜேம்ஸை | | நினைவுபடுத்துகிறது! அவருடைய ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி | | மறைக்கப்பட்டுள்ளன – இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! அமெரிக்க | | மோகம், ஐரோப்பிய நாடுகளுக்கும் இருக்கிறது என்பதை லார்கோவின் – W | | நிறுவனத் தலைமையகம் மற்றும் கதைக்களன் நியூயார்க் என்றிருப்பதில் | | புலனாகிறது! அதே போல வசதி படைத்ததொரு அமெரிக்கர் / ஐரோப்பியர் எந்த | | நாட்டிலும் என்ன அக்கிரமும் செய்து விட்டு ஜஸ்ட் லைக் தட் தப்பித்து | | போய் விடலாம் என்பது மாதிரியான கதையமைப்பு எரிச்சலூட்டுகிறது! | +-----------------------------------------------------------------------+ | தெருவில் கொலையே நடந்தாலும், கண்டுகொள்ளாமல் ஊர்வலம் போகும் கோவா | | கார்னிவலில், இசகு []பிசகாக இரஷ்ய டீலர்களிடம் மாட்டும் அஜீத் அடி | | வாங்கி, அடித்து, தப்பித்து, அப்பாஸியின் இடத்திற்கு வந்து ♫ அவரையும் | | சுட்டுத் தள்ளுகிறார்! ♫ இங்கே படத்தின் continuity-யை  மனதில் கொண்டு, | | அஜீத்தின் இரத்தக்கறைகளை கழுவாமல், கோட்டுசூட்டையும் மாற்றாமல் நடிக்க | | வைத்த இயக்குனர் பாராட்டுக்குரியவர்! அப்புறம் தேவையில்லாமல், கோவா | | முதலமைச்சரையும் போட்டுத் தள்ளுகிறார் அஜீத்! ஆனாலும், நீங்கள் அஜீத்தை | | தவறாக நினைத்து விடக்கூடாது – ♫ அவர் ஹீரோ – ரொம்ப நல்லவர்! ♫ | +-----------------------------------------------------------------------+ | []முதல் பக்கத்தில் உள்ள பாத்திரங்களின் அறிமுகப் பக்கம், தலை சுற்ற | | வைக்கிறது. வாய் சுளுக்க வைக்கும் அத்தனை வெளிநாட்டுப் பெயர்களை மற்றும் | | அவர்கள் வகிக்கும் பதவிகளை நினைவில் நிறுத்த என்னால் ஆகாது என்பதால் அதை | | படிக்காமலேயே விட்டு விட்டேன் – இருந்தாலும் கதை புரிவதில் குழப்பம் | | வரவில்லை. தமிழில் வெளிவந்த கதைகளில் குறிப்பாக காமிக்ஸ்களில் இவ்வளவு | | விரிவாக நிர்வாக மேலாண்மையை எதுவும் பிரித்து மேய்ந்தது இல்லை என | | நினைக்கிறேன்! ஏதோ கம்பெனி போர்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணுவது போன்ற | | ஒரு உணர்வு படிக்கும் போது ஏற்படுகிறது! | +-----------------------------------------------------------------------+ | அப்பாஸிக்கு பிறகு டிமிட்ரி அஜீத்துடன் வியாபாரம் செய்ய நினைக்கிறார்! | | அஜீத் கேட்கும் கமிஷன் []கட்டுப்படியாகாமல் டென்ஷன் ஆகும் டிமிட்ரி, | | மனோஜ் மற்றும் அரசியல்வாதியுடன் சேர்ந்து அஜீத்தை ஒழித்துக்கட்ட | | நினைக்கிறார்! அதில் இருந்து தப்பிக்கும் அஜீத் அரசியல்வாதியை நீ | | தகுதியான எதிரியல்ல என ♫ ஷூட் பண்ணாமல் விடுகிறார்! ♫ உள்ளூர் லுங்கி | | ரவுடி, மற்றும் படம் முழுக்க பொடிப் பொடி அடியாட்கள் இவர்களை எல்லாம்  | | தகுதி பார்க்காமல் அஜீத் போட்டு தள்ளியதை நாம் தேவையில்லாமல் ஞாபகம் | | வைத்துக்கொள்ளக் கூடாது! இந்த களேபரத்தில் ஓமனக்குட்டி கழுத்தறுபட்டு | | சாகிறார் – இந்த சொத்தை சீனுக்குதான் அந்த பவர்புஃல் பன்ச் டயலாக்! | +-----------------------------------------------------------------------+ | []கதை நெடுக நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் பின்னிப்பிணைத்த விதம் | | அட்டகாசம், திரைப்படங்கள் தோற்றது போங்கள்! நிகழ காலத்தில் லார்கோ | | எறியும் கத்தி…, அடுத்த காட்சியில் கடந்த காலத்திய ஒரு நிகழ்வில் | | குத்திட்டு நிற்பது ஒரு உதாரணம், கதை முழுதும் இப்படிதான் – ஆனால் | | கொஞ்சமும் குழப்பமேற்படுத்தாமல்! இக்கதையில் வரும் ஆக்ஷன் | | காட்சிகளுக்கான சித்திரங்கள், நேரில் பார்ப்பது போன்ற உணர்வை | | ஏற்படுத்துகின்றன! சான்ஸே இல்லை! நீங்களே பாருங்கள்! லார்கோ ஒரு | | ஃபிரெஞ்சு படைப்பு என்பதால் FTV ஜில்பான்ஸ் சமாச்சாரங்களும் நிறையவே! | | ஆனால், அவை பெரும்பாலும் தமிழில் எடிட் செய்யப்பட்டுள்ளன! | +-----------------------------------------------------------------------+ | க்ளைமேக்ஸில் டிமிட்ரி ஏதோ ஒரு நாட்டிலிருந்து, ஏதோ ஒரு நாட்டுக்கு | | அனுப்பும் ஆயுதங்களை, ♫ []அஜீத் தடுத்து நிறுத்துகிறார்! ♫ ஆயுத | | தளவாடங்கள் தாங்கிய ட்ரைனை திசை திருப்புகிறார்! ஒற்றை கேமரா மூலமாக | | எல்லா ஆங்கிள்களிலும் இதை வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்து பார்க்கும் | | டிமிட்ரி தண்டவாளத்தில் ஹெலிகாப்டரை  பார்க் செய்து இரயிலை(!) | | நிற்பாட்டுகிறார்! அப்புறம் ஹெலிகாப்டரை கிளப்பினால் உள்ளே அஜீத்! | | இவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் குலுங்க சண்டை போடும்போது எவன் செத்தா | | எனக்கென்ன என்பது போல் வண்டி(!) ஓட்டும் அந்த பைலட்டின் கடமை உணர்ச்சி | | அளப்பரியது! இதற்குமேல் சுருக்கமாக என்னால் கதை சொல்ல முடியாது, | | மிச்சத்தை வெள்ளித்திரையில் காணுங்கள்! | +-----------------------------------------------------------------------+ | []ஒரு படைப்பை மொழிபெயர்ப்பு செய்வதென்பது மிகவும் சிரமம் வாய்ந்த | | காரியம்! வெறும் சொற்களை அப்படியே மொழிபெயர்க்க ஓரளவு படைப்பின் மூலமொழி | | அறிவும், இணையமும், பக்கத்தில் ஒரு dictionary-யும் இருந்தால் | | போதுமானது! ஆனால் அப்படி செய்தால் அதில் கொஞ்சமும் சுவை இருக்காது! | | வடிவேலு அல்லது சந்தானத்தின் டைமிங் ஜோக்குகளை பிற மொழியில் அப்படியே | | மாற்றினால் எப்படி சிரிப்பு வராதோ அப்படித்தான் இதுவும்! எனவே | | மொழிபெயர்ப்பு என வந்திடும் போது கொஞ்சம் சொந்த சரக்கையும் கலந்து | | அடிப்பதை தவிர்க்க இயலாது! அதுவும் காமிக்ஸ் இதழ்களில் வேறு மொழி | | சொற்களுக்கான / வார்த்தைகளுக்கான முன்னமே வடிவமைக்கப்பட்ட டயலாக் | | பலூன்களில் தமிழை திணிப்பது அல்லது விரிப்பது எல்லாம் ரத்தக் கண்ணீர் | | வரவழைத்திடும்  செயல்! அந்த வகையில் இவ்விதழின் மொழிபெயர்ப்பாளர்கள் | | விஜயன் மற்றும் கருணையானந்தம் – இருவரும் பாராட்டுக்குரியவர்கள்! | +-----------------------------------------------------------------------+ இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்! லார்கோவின் இரண்டு கதைகள் கொண்ட ஒவ்வொரு தொகுப்பும் ஆங்கிலத்தில் ருபாய் 350 முதல் 1000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது! ஆனால் தமிழில் அதே தரத்தில் வெறும் நூறு ருபாய் மட்டும்தான்! தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! ஆனால் மற்றவர்க்கு, நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இது ஒரு தவறவிடக்கூடாத காமிக்ஸ் இதழ்! இதை Ebay மூலமாகவோ அல்லது லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ வாங்கலாம்! இதைப் பற்றிய முழு நீள விமர்சனத்தை இங்கே காணலாம்: என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி!  [] எல்லாம் சரி, பில்லாவுக்கும், லார்கோவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இரண்டு பேரும்  கோட்டுசூட்டு போட்டு இருப்பார்கள்! அவ்வளவுதான்! ஒரே ஒரு வித்தியாசம் – பில்லா ஸ்மார்டாக, ஸ்டைலாக இருப்பார்! லார்கோவோ ஸ்டைலாக, ஸ்மார்டாக இருப்பார்! அப்புறம், காமிக்ஸ் பற்றி அறிந்திராத வாசகர்களையும் காமிக்ஸ் விமர்சனம் படிக்க வைத்த ♫ அஜீத் அவர்களுக்கு நன்றி! ♫ ♫ இந்த நீளமான பதிவை பொறுமையாய் படித்த உங்களுக்கும் நன்றி! ♫ சொல்ல மறந்து விட்டேன் – அஜீத்தை பிடிக்கும் என்றாலும், பில்லா II எனக்கு பிடிக்கவில்லை! [:(] பின்குறிப்பு: எனக்கு பிடித்த படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுதுவது என்ற கொள்கையை அஜீத்துக்காக கொஞ்சம் தளர்த்தியது, தமிழ் காமிக்ஸ் பற்றிய awareness பலருக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே! [:)] என் பெயர் யோஹன்!: சமீபத்தில் இணையத்தில் ஒரு புரளி கிளம்பியுள்ளது! கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகவிருந்த “யோகன் அத்தியாயம் ஒன்று” என்ற திரைப்படத்தின் டீசர் போஸ்டர் ஆங்கிலத்தில் வந்த லார்கோ வின்ச் திரைப்பட போஸ்டரை உரித்து(!) வைத்திருந்ததால், யோகனின் கதையும் லார்கோவின் ‘inspiration’-னுடன் இருக்குமோ ♫ என்ற சந்தேகம்தான் அது! ♫ சரி விஜய் பத்தின நியூஸுக்கு எதுக்கு அஜீத் மியூசிக் அப்படின்னு கேக்கறீங்களா? அதனால என்ன பாஸ்? நல்லாதானே இருக்கு!  [] 38 ஜெரோம் ப்ளோச் - மொபெட்டில் வந்த டிடெக்டிவ்! [] மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்சனின் “ஜானி இங்கிலீஷ் ரீபார்ன்” பார்த்திருக்கிறீர்களா? அவரின் அசட்டுத்தனமான துப்பறியும் விதம் உங்களுக்கு பிடித்ததா? அதே போல அவரின் பழைய டிவி தொடர்களில் (மற்றும் சமீப கார்டூன் அவதாரத்தில்) இழையோடும் மெல்லிய, கவனித்தால் மட்டுமே விளங்கக்கூடிய நகைச்சுவைகள் உங்களுக்கு பிடிக்குமா? அப்படி என்றால் ஜெரோமை உங்களுக்கு பிடிக்கும்! ஒரே ஒரு வித்தியாசம்தான் – பீன் குருட்டாம்போக்கில் எல்லாவற்றையும் செய்வார், ஜெரோமுக்கு கொஞ்சம் மூளையும் வேலை செய்யும் – பீன் அளவுக்கு காமெடி பண்ண மாட்டார்! இளகிய மனம் படைத்த ஜெரோம் கிட்டத்தட்ட ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் போல இருப்பார்! துணைக்கு ஒரு புத்திசாலியான காதலி வேறு! இவரின் மென்மையான துப்பறியும் சாகசங்கள் அடங்கிய இந்த ஃபிரெஞ்ச் காமிக்ஸ் சீரிஸை தமிழில் அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் ஆசிரியர் விஜயனை நிச்சயம் பாராட்டலாம்! [] இதை பிரெஞ்சில் வெளியிட்ட Dupuis (டுபுக்ஸ் என்றெல்லாம் தவறாக படிக்கக்கூடாது!) நிறுவனத்தின் இணையதளத்தில், இது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் படிக்கத் தகுந்தது என போட்டிருக்கிறது – எனவே இதை குழந்தைகள் காமிக்ஸ் என சொல்ல முடியாது – கொஞ்சம் சுழற்றியடிக்கும் கதைக்களன்கள் கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம்! கதைக்கான ஓவியங்கள் சுமார் என்றும் சொல்லிட முடியாது – வேண்டி விரும்பி இவ்வாறாக வரையப்பட்டுள்ளது தெரிகிறது – ஒரு அமெச்சூர் டிடெக்டிவ்வை தெள்ளத் தெளிவான சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினால் எடுபடாது, இதுதான் சரி! உண்மையில் கதை மாந்தர்களின் சித்திரங்கள்தான் மொக்கையாக குண்டு அல்லது சப்பை மூக்குகளுடன் வரையப்பட்டுள்ளன – ஆனால் தெருக்கள், சாலைகள், சுற்றுப்புற கட்டிடங்கள், பொருட்கள் இவை யாவும் மிக நுணுக்கமாக சித்தரிகப்பட்டுள்ளன! [] ஜெரோமிடம் கார், பைக் எல்லாம் கிடையாது – மொபெட் மட்டும்தான். எடிட்டர் விஜயன் தவறாக சைக்கிள் என குறிப்பிடுகிறார், உண்மையில் அது பழைய லூனா போன்ற ஒரு வகை மொபெட் – Solex நிறுவன தயாரிப்பு – ரொம்ப முக்கியம்[;)] – தம் மொபெட்டில் அட்ரஸ் எல்லாம் ஒட்டிக்கொண்டு ரெயின் கோட்டு, தொப்பி சகிதம் துப்பறிய கிளம்பிவிடுவார் மனிதர்! உடனே நான் ஜெரோம் சீரிஸை சிறு வயதிலேயே கரைத்துக் குடித்தவன் என விபரீத கற்பனையை வளர்க்காதீர்கள் – எல்லா புகழும் பிரெஞ்சு விக்கிபீடியாவிற்கே! இது போன்ற துப்பறியும் கட்டுரைகளை(!) இன்டர்நெட் இல்லாமல் எழுத முடியாது! [:D] குறிப்பாக நாளைக்கு! இதுவரை 22 ஜெரோம் ஆல்பங்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்ணை மூடிக்கொண்டு நடுவில் இரண்டு புத்தகங்களை உருவிய கதையாய் ஆல்பம் என் 15 & 16-இல் வெளியான ஒரு முழு நீள ஜெரோம் சாகசத்தை வெளியிட்டதை கூட பொறுத்துக் கொள்ளலாம்! ஆனால் இப்படியா மொட்டையாகவா கதையை ஆரம்பிப்பது?! ஜெரோம் யார், அவர் எங்கு வசிக்கிறார், ஒரே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கும்  ஜெரோமுக்கும் என்ன தொடர்பு? இதை பற்றி ஒரு prologue இன்னமும் விரிவாக போட்டிருக்கலாம்! நட்ட நடுக்காட்டில் விட்டது போன்ற ஒரு ஃபீலிங்! இன்னும் படிக்காதவர்களுக்காக மேற்சொன்ன விடுபட்ட குறிப்புடன் கதைச் சுருக்கத்தை பார்க்கலாம்! [] பாரிஸ் மாநகரின் ஒரே டிஸ்ட்ரிக்ட்டில் (நம்மூர் பாஷையில் ஏரியா!) வசிக்கும் ஒரு சில கதாபாத்திரங்களை சுற்றியே பெரும்பாலான ஜெரோம் கதைகள் பின்னப்பட்டுள்ளன (என்று ஆராய்ந்த வரையில் தெரிகிறது!). ஜெரோம் வசிக்கும் அபார்மென்ட்டின் கேர்-டேக்கர் மிசஸ் ரோஸ் என்ற நேர்மையான மூதாட்டி! ரோஸின் தோழர் ஒரு வயதான வாட்ச்மேன்! []நகரின் ஒரு பகுதியில் இருக்கும் காயலான் கடையில் (அரும்பொருள் விற்பனைக் கடை என்பதே சரியான பதமாக இருக்க முடியும்!), ₣450 விலை கொண்ட ஒரு அழகிய போட்டோ ஃபிரேமை கறாரான பேரத்திற்கு பிறகு அதிக விலை கொடுத்து வாங்குகிறார் ஜெரோம்! 449 ஃபிராங்கா என வாயை பிளக்காமல், அரிய  கலைப்பொருள்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தில் நடக்கும் கதை என்பதை நீங்கள் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்! இப்போ எல்லாம் Euro-தானே என ஈ என்று இளிக்காமல் (விளம்பரம்!) இது 11 வருடங்களுக்கு முன் வெளியான கதை என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்! அதனுள் ஒரு அழகிய பெண்ணின் நிர்வாண ஓவியமும் இருக்கிறது! ரோஸின் மீது மிகுந்த நன்மதிப்பு கொண்ட ஜெரோம் அவருக்கு அந்த ஓவியத்தை மட்டும் தனியாக பரிசளிக்கிறார் (கலாச்சார அதிர்ச்சி – நம்மூர் பாட்டிகளுக்கு இப்படி பரிசளித்தால் என்ன ஆகும்?!). ஓவியத்தோடு கூடவே பிரச்சினையையும் வாங்கியது அவருக்கு அப்போது தெரிந்திருக்க நியாமில்லைதான்! [] மூதாட்டியின் போஸ்ட்மேன் நண்பர் பரிசளிக்கப்பட்ட அந்த ஓவியம் ஒரு பிரபல ஓவியரால் வரையப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என இனம் காணுகிறார் – அதை விற்கவும் யோசனை சொல்லுகிறார், ஆனால் மிசஸ் ரோஸுக்கு  அதில் உடன்பாடு இல்லை. அது நிச்சயம் களவாடப்பட்ட பொருளாய் இருக்க வேண்டும் என நினைத்து ஜெரோமிடமே திருப்பித் தந்து விடுகிறார்! ரோஸின் நேர்மையை கண்டு நெகிழும் ஜெரோம், அவ்வோவியத்தை அதன் உண்மையான உரிமையாளரிடம் சேர்ப்பிக்க எண்ணி, அவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்! ஒரு வழியாக அதன் உரிமையாளர் ஒரு கறார் கணக்கு டீச்சரான ‘மேடம் டி ஷெகுர்’ என்பதை கண்டறிந்து அந்த குண்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தும் விடுகிறார்! விலை உயர்ந்த ஓவியம் என்ற ஒன்றை தாண்டி அந்த ஓவியத்தின் பின்னே ஒரு சோகக் கதை – அதுதான் “சிகப்பு கன்னி மர்மம்” – இக்கதையின் முதல் பாகம்! [] ‘மேடம் டி ஷெகுர்’-இன் வீட்டில் ஜெரோம் விருந்துண்ணும் போது இரண்டு மூன்று நபர்கள் ஒரு சில காரணங்களுக்காக வந்து செல்கிறார்கள்! மூதாட்டி ஓவராய் ஊற்றி கொடுத்ததில் ஃபிளாட் ஆகும் ஜெரோம் கண் விழித்துப் பார்க்கும் போது பெருத்த ஆபத்தில் சிக்கி இருப்பது தெரிகிறது – மூதாட்டி சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருக்கிறார், துப்பாக்கி ஜெரோமின் கையில், கதவை பலமாய்த் தட்டும் போலிஸ்! மூதாட்டியை சுட்டது யார்? ஜெரோமா? அல்லது நடுவில் வந்த சில நபர்களா? ஆனால் ஜெரோம்தான் என போலிஸ் கமிஷனர் முடிவெடுத்து கேஸை க்ளோஸ் செய்ய முயல்கிறார்! [] அப்போதுதான் ஆஜராகிறார் ஜெரோமின் காதலி பாபெட்! கமிஷனரை ஏதோ தனது அசிஸ்டன்ட் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு, அவரை தன் போக்கில் வரவழைத்து – இவர் துப்பறியும் விதம் கவிதை! சிறையில் இருந்தவாறே இவர் துப்புத் துலக்க ஜெரோம் உதவுகிறார்! கதையில் ஒரு சஸ்பென்ஸ் ஃபேக்டர் மிஸ்ஸிங்தான் என்றாலும், குற்றவாளி யாராய் இருக்கக் கூடும் என எளிதில் யூகிக்க முடிந்தாலும் – கதை முழுக்க ஒரு இனம் புரியாத கவர்ச்சி – ஓவியங்களிலும், வசனங்களிலும்! – இப்படியாக ‘தற்செயலாய் ஒரு தற்கொலை!’ – இக்கதையின் இரண்டாம் பாகம்! [] நிர்வாண ஓவியம் மட்டுமன்றி இன்னும் சில விஷயங்கள் கலாசார அதிர்ச்சி அளிக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டு எடிட்டர் விஜயன் அவர்கள் பல இடங்களில் கத்திரி போட்டிருக்கிறார், கதையின் ஜீவன் அந்த கத்திரியால் சற்று துண்டிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை! மனிதர் தமிழ் மெகா தொடர்களை பார்த்ததில்லை போலும் – அந்த கலாசார புரட்சிகளை பார்த்திருந்தால் இதை ஒரு கலாசார அதிர்ச்சியாக எண்ணியிருக்க மாட்டார்! [] எடிட்டர் விஜயனிடம் ஒரு கேள்வி: நான்கு வருடம் முன்பு டிசைன் (பிரிண்ட்?) செய்த அட்டை வீணாகக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்த கதையை, சிறிய அளவில், சுமாரான தாளில், கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்தது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா? லார்கோ இதழைப் போன்று A4 சைஸில் முழு வண்ணத்தில் வந்திருந்தால் இந்த இதழ் இன்னும் பெரிய தாக்கத்தை வாசகரிடையே ஏற்படுத்தியிருக்கும்! ஆனால், வரும் இதழ்களில் இந்த குறையை நிச்சயம் தவிர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் பலமாக இருக்கிறது! ஜெரோமுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் – வழக்கமான அதிரடி நாயகர்களுக்கிடையே தென்றலாய் வந்த இளம் ஹீரோ இவர் – நிச்சயம் ரிப் கிரிபியின் இழப்பை ஈடு கட்டுவார்! [] உண்டு மயங்கும் ஒரு மந்தகாச மதியத்தில் இதை படிக்கக்கூடாது!.., ‘ஈ’ அடிக்கும் ஒரு ஈவ்னிங் டைமில் இதை படிக்கக்கூடாது!.., கொசு கடிக்கும் ஒரு கொடுங்குளிர் இரவிலும் இதை படிக்கக்கூடாது! – நிச்சயம் பிடிக்காது! மனம் லேசாய் இருக்கும் ஒரு இளவேனிர்க் காலையில், இதமான சூட்டில் தேநீர் குடித்தவாறு, இரசித்துப் பார்த்துப் பார்த்து படிக்க வேண்டிய காமிக்ஸ் இது! ஒரு வேளை உங்களுக்கு அப்படியும் பிடிக்கவில்லை என்றால் உங்களிடம் ஏதோ இரசனை வேறுபாடு (குறைபாடு?) உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது! [;)] 39 தூர்தர்ஷன் நினைவுகள்! - ஸ்பைடர்மேன் & ஹி-மேன் [] எண்பதுகளில் என்னைப் போன்ற பொடிப்பையன்களை கட்டிப்போட்ட விஷயங்கள் காமிக்ஸை தவிரவும் ஒரு சில இருந்தன! அவற்றில் DD-இல் (அப்போது எல்லாம் தூர்தர்ஷன்  மட்டும்தானே!) ஒளிபரப்பான அனிமேட்டட் கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரசித்தமானவை! இரண்டு மேன்கள் ஸ்பைடர்மேன் & ஹி-மேன் – அப்படி ஒரு வெறித்தனமான (பொடி) இரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு! அந்த காலகட்டத்தில் பெரிசுகள் இராமாயணம் – சில வருடங்கள் கழித்து மகாபாரதம் என்று பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கோ ஸ்பைடர்மேனும், ஹி-மேனும்தான்! மேற்சொன்ன இதிகாசங்களையும் அவ்வப்போது பார்த்ததுண்டு – குறிப்பாக சொன்னால் – வாலி, அனுமார், இராவணன், கர்ணன் வரும் எபிசோட்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தங்கள்! [] 1985-ஓ அல்லது 86-ஓ சரியாக நினைவில்லை – நாங்கள் வேலூரில் இருந்த சமயம், அப்போதுதான் ஸ்பைடர்மேன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது! எங்கள் வீட்டில் அப்போது டிவி இல்லாத காரணத்தினால் இவற்றை பார்க்க, நானும், என் அண்ணனும்  மாமா வீட்டிற்கு சென்று விடுவோம்! மாமா அப்போது ப்ளாக் அண்ட் வைட் சாலிடர்  டிவிதான் வைத்திருந்தார்! நல்ல Wide ஸ்க்ரீன் டிவி! உடனே கற்பனையை LCD ரேஞ்சுக்கு ஒட்டாதீர்கள்! டிவி ஸ்க்ரீன் என்னமோ 4:3 தான். ஆனால், டிவி பெட்டிதான் wide-ஆக இருக்கும், அதற்கு அழகாக இரண்டு ஷட்டர்கள் வேறு! ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும்! சானல்களை மாற்ற Knob-ஐ தான் திருக வேண்டும் – ரிமோட் எல்லாம் கிடையாது! ஆசையாக வந்து ஆன் செய்தால், அடிக்கும் காற்றில் ஆன்ட்டெனா திரும்பி ஒரே புள்ளி ராஜாக்களாய் தெரியும்! அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்று வைத்திருந்தான்! ‘நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்’ என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான்! தொலைதொடர்புக்கு செல் போன் டவரைப் போல சமையலறையின் புகை போக்கி டவர் ஒன்று இருந்தது! அதன் வழியாக குரல் கொடுப்பான் – ‘இப்போ தெரியுதா?’ நான் ‘இல்லேடா இன்னும் கொஞ்சம் லெஃப்ட்டுல திருப்பு’ என்று சம்பந்தமில்லாமல் உளருவேன்! ஒருவழியாக அண்ணன் அப்படி இப்படி ஆன்டென்னாவைத் திருப்பி சிக்னல் கிடைக்குமாறு செய்வான் – ‘என்னடா பண்ணே’ என்று கேட்டால் “பூஸ்டர் அட்ஜஸ்ட் பண்ணேன்” என்று ஏதோதோ சொல்வான் – எனக்கு அப்போது ஒன்றும் விளங்கியதில்லை! ஸ்பைடர்மேன் தீம் மியூசிக் அவ்வளவு அற்புதமாக இருக்கும் – நானும் அர்த்தம் புரியாமலேயே குத்து மதிப்பாக மனப்பாடம் பண்ணி வைத்திருந்தேன்! இப்போது இன்டர்நெட்டில் தேடியதில் இது 1967-இல் வெளியான டிவி சீரீஸ் என தெரிகிறது! அந்த ஓபனிங் சாங்கை பாருங்களேன்! (நீங்கள் 1990-க்கு அப்புறம் பிறந்தவராக இருப்பின், இதை பார்த்து செம காமெடி என்று நிச்சயம் சிரிப்பீர்கள்!) [:)][:)][:)] Spider-man Original Cartoon Theme Song  இதன் பாடல் வரிகள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்! [] ஸ்பைடர்மேன் தொடரில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வில்லன் என செம கலக்கலாக இருக்கும்! வில்லன்களை விட என்னை கவர்ந்த  நபர், ஸ்பைடர்மேன் – பீட்டர் பார்கராக இருக்கும் வேளைகளில் பணியாற்றும் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜேம்சன்தான்! மனிதர், ரஜினி ஸ்டைலில் சுருட்டை ஊதித் தள்ளிக்கொண்டே நறநறவென பேசுவார்! BP எகிறினால் முஷ்டியை ஓங்கி மேஜையின் மேல் ஒரு குத்து விடுவார் [:)] ஒரு சில நண்பர்கள் வீட்டில் அப்போது கலர் TV வந்திருந்தது – ஸ்பைடர்மேன் தொடர் கிட்டத்தட்ட ஈஸ்ட்மேன் கலரில்தான் இருந்தது என்றாலும் – கருப்பு வெள்ளையில் பார்த்து விட்டு திடீரென கலரில் ஸ்பைடியை கண்டதும் எங்களுக்கு ஏக்கமாக போய் விட்டது! அதற்கும் என் அண்ணன் ஒரு வழி செய்தான்! மாமா வீட்டு சாலிடர் டிவியின் ஸ்க்ரீன் மேல் உப்பலாக இருந்த நீல வண்ண கண்ணாடியை மெதுவாக நெம்பி எடுத்தான், பிறகு டிவியை போட்டால் கிட்டத்தட்ட பிரவுன் கலரில் படம் தெரிந்தது! அப்புறம் என்ன, மீதித் தொடரை முழு பிரவுனில் பார்த்தது தமிழ்நாட்டில் நாங்கள் இருவராய் மட்டுமே இருக்க முடியும்! [:)] [] பிறகு சேலத்து மாற்றலாகி போன பிறகு, ஹி-மேன் தொடங்கியிருந்தது! கர்ண கடூரமாக ‘ஹி-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க, ஹி-மேன் ஏதேதோ பேசிக்கொண்டே வாளைத்  தூக்கிக் காட்டுவார் – எங்களுக்கு அப்படியே புல்லரிக்கும்! [;)] வழக்கம் போல எனக்கு ஹி-மேனை விட அதில் வரும் வில்லனான ஸ்கெலிட்டரை ரொம்பப் பிடித்துப் போனது! அதே போல ஹி-மேனின்  தொடை நடுங்கிப் புலியும், காமெடி மேஜிசியன் Orco-வும் (செம கியூட்!) ரொம்ப பாப்புலர்! அப்போது, ஹி-மேன் படம் கூட வெளிவந்ததாய் ஞாபகம் – ஓடவில்லை! He-Man: Opening Theme ஹி-மேன், ஸ்பைடர்மேன் – இவ்விரண்டு தொடர்களும் எந்தெந்த நாட்களில், எந்தெந்த நேரத்தில் ஒளிபரப்பாகின என்பது, மண்டையை எவ்வளவு குடைந்து பார்த்தும் பளிச்சென்று ஞாபகம் வரவில்லை! ஸ்பைடி சனி மாலையிலும், ஹி-மேன் ஞாயிறு காலையிலும் – அரை மணிநேரம் ஒளிபரப்பாகின என்பதாக கலங்கலான ஞாபகம்! [] பள்ளிக்கு அருகே, ஃபிளாட்பாரக் கடைகளில் ஹி-மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் இவர்களின் விதவிதமான ஸ்டிக்கர்கள் கிடைக்கும். பெட்ரோல், கெரசின், தின்னர், நெயில் பாலிஷ் – இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்தது போன்ற ஒரு கிறக்கமான வாசத்தை அந்த ஸ்டிக்கர்கள் கொண்டிருக்கும்! அவற்றை நோட்டுகளில் ஒட்டி ஆசிரியர்களிடம் திட்டு வாங்கியதுண்டு! அப்புறம், இஸ்திரி செய்தால் துணியின் மேல் ஒட்டும்படியான ஸ்டிக்கர்களும்  கிடைத்தன! நல்ல வேளை, அவற்றை ஸ்கூல் யூனிஃபார்மில் ஒட்டவில்லை – இல்லையென்றால் TC குடுத்து அனுப்பியிருப்பார்கள்! அப்போது லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மோகமும் பீக்கில் இருந்தது – அந்த ஸ்பைடரின் ஸ்டிக்கர்கள் கிடைக்குமா என்று தேடியலைந்த கதையும் உண்டு! அப்புறம் மெதுவாக தொண்ணூறுகளில் இவர்களை மறந்தே போனேன்! கார்ட்டூன் நெட்வொர்க்கில் புதிய ஸ்பைடர்மேன் தொடர்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன்! சுட்டி டிவி-யில் ஹி-மேன் மறு ஒளிபரப்புகளையும் பார்த்திருக்கிறேன்! புதிதோ, பழையதோ எதுவாக இருந்தாலும் இப்போது பார்க்கும் போது கொஞ்சமும் பிடிப்பது இல்லை! ஆனாலும் அவை, இளம் வயது இனிய நினைவுகளை கிளறிச் செல்ல ஒருபோதும் தவறுவது இல்லை! [:)] பி.கு.: புதிய ஸ்பைடர்மேன் படத்தின் விமர்சனம்: தி அமேஸிங் ஸ்பைடர்மேன் – 2012 – எங்கேயோ பார்த்த ஞாபகம்! 40 என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி! [] ஒரு வழியாக முத்து காமிக்ஸ் – “என் பெயர் லார்கோ” இதழ் நேற்று என்னிடம் வந்து சேர்ந்தது! தமிழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களிலும், ஃபிரெஞ்சில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 21 நீண்ட வருடங்களுக்குப்(!) பிறகும் கடைசியாக லார்கோ வின்ச் காமிக்ஸின் முதல் தொகுப்பை படித்து முடித்து விட்டேன்! இருந்தாலும், ‘தம்பி, நீ கொஞ்சம் லேட்!’ என்று துளியும் நினைக்க வைத்திடாத ஒரு கதையமைப்பு இவ்விதழில் இருப்பது வியப்பு! செல்போன்கள் இல்லை என்ற சின்னதொரு குறையை தவிர, நாம் 21 வருட பழையதொரு காமிக்ஸை படிக்கிறோம் என்ற நினைப்பை சற்றும் தோற்றுவிக்கவில்லை!!! ஆதி கால அம்பாசடர்களையும், மாற்றமில்லாத மாருதிகளையும், ஒரே மாடல் காரை பல மாடல்களாக மாற்றி ஒப்பேற்றும் டாட்டாவையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த கதையில் வரும் 25 வருட பழைய ரக கார்கள் கூட லேட்டஸ்ட் மாடலாக தெரிவது என் தவறா? [;)] [] காமிக்ஸ் துறையில் ஒரு பெரும் பங்களிப்பு பெல்ஜியத்துக்கு இருக்கிறது! அந்நாட்டின் கலைஞர்கள் தனியாகவும், பிரான்ஸ் போன்ற சக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் கூட்டு முயற்சியுடனும்  எண்ணற்ற அற்புத படைப்புகளை காமிக்ஸ் உலகிற்கு அளித்துள்ளார்கள்! டின் டின், தோர்கல், XIII போன்றவை உதாரணத்திற்கு (வெகு)சில! அவ்வரிசையில் ஒரு முக்கிய கற்பனை கதாபாத்திரம்தான் லார்கோ! இத்தொடர் முதலில் வெளியானது ஃபிரெஞ்சு மொழியில். லார்கோ கதாபாத்திரத்தை உருவாக்கியவர் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு XIII காமிக்ஸ் நெடுந்தொடர் மூலம் நன்கு அறிமுகமான Jean Van Hamme என்ற பிரபல பெல்ஜிய கதாசிரியர்! (ஓவியர் அல்ல). 1970 -களில் நாவல் வடிவத்தில் அறிமுகமாகி பெரிய வரவேற்பில்லாத காரணத்தினால் கிடப்பில் பல வருடங்கள் கிடந்தவர்தான் லார்கோ! 80-களின் இறுதியில் “Philippe Francq” என்ற பெல்ஜிய ஓவியர், ஒரு புதிய காமிக்ஸ் அறிமுகபடுத்த வேண்டும் என்ற யோசனையோடு வான் ஹாமை சந்தித்தபோது லார்கோ தூசி தட்டிக்கொண்டு வெளியில் வந்தார்! இன்றளவும் லட்சக்கணக்கில் விற்றுக்கொண்டும் இருக்கிறார்! லார்கோ தொடரில் ஒவ்வொரு தொகுப்பும் இரண்டு கதைகளை உள்ளடக்கி  வருகிறது! முதலாவதில் இசகு பிசகாக நம் ஹீரோ மாட்டிக்கொள்வார், இரண்டாவதில் லாவகமாக அதிலிருந்து மீண்டு தனது நிறுவனத்தை காப்பாற்றுவார்! இதுவரை 17 தொகுப்புக்கள் வெளி வந்துள்ளன! முதல் தொகுப்பு 1990-இலும் கடை தொகுப்பு 2010-இலும் வெளியாகின.சரி, முத்துவில் வெளியாகியிருக்கும் முதல் இரு பாகங்களின் கதைச் சுருக்கத்தை பார்ப்போம்! கதையை தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் சிகப்பு எழுத்துக்களை  தாண்டிச் செல்லலாம்! [] லார்கோ – பெற்றோரை இழந்த ஒரு இளைஞர். இவர், பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட மிகப்பெரிய சர்வதேச நிறுவனமான “The W Group” என்ற நிறுவனத்தின் தலைவர் “Nerio Winch”-ஆல் தத்து எடுக்கப்படுகிறார்! நெரியோ, தனக்கு பிறகு தனது நிறுவனத்தை வழி நடத்த லார்கோவை பத்து வயதிலிருந்தே எல்லா விதத்திலும் தயார் படுத்தி வருகிறார்! நெரியோ ஒன்றும், லேசுப்பட்ட ஆள் கிடையாது. வியாபாரத்தில் எல்லா தகிடுதத்த வேலைகளையும் செய்து முன்னேறியவர், அதனால் பணத்தை மட்டுமின்றி பல எதிரிகளையும் சம்பாதித்தவர்! அவரை மனதளவில் தந்தையாக லார்கோ ஏற்றுக் கொண்டது கிடையாது அதற்கு நெரியோவின் வழிமுறைகளும் ஒரு காரணம். இந்த சூழ்நிலையில் நெரியோ தனது நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவரால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கொடுஞ்செயல் சாமர்த்தியமாக தற்கொலை என ஜோடிக்கப்படுகிறது – நெரியோவுக்கு பிரைன் கேன்சர் இருந்தது காரணமாக காட்டப்படுகிறது! திடீரென்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இருபத்தாறே வயதான நமது ஹீரோவின் தலையில் இடியாக விழுகிறது! கூடவே இதை கொஞ்சமும் விரும்பாத, கூட இருந்தே குழி பறிக்கும் W குழுமத்தின் உயரதிகாரிகளை சமாளிக்கும் தொல்லை பிடித்த வேலையும்தான்! லார்கோவின் தந்தை நெரியோ கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இஸ்தான்புல்லில் இருக்கும் லார்கோவை ஒரு கொலை கேசில் மாட்டி விட்டு விடுகின்றனர்!  [] அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை முதல் பாகத்திலும் (என் பெயர் லார்கோ!), தனது வளர்ப்பு தந்தையின் பங்குகளை கைப்பற்றி நிறுவனத்தை எப்படி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்பதை இரண்டாம் பாகத்திலும் (யாதும் ஊரே… யாவரும் எதிரிகள்…!) ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார்கள்! இரண்டாம் பாகத்தில் லார்கோவின் நண்பனே எதிரியாக மாறுவது போல ஒரு பகுதி இருக்கும் – எனவேதான் “எதிரே ஒரு எதிரி” என்று பதிவின் தலைப்பில் இருக்கிறது! குழம்ப வேண்டாம் – பதிவின் தலைப்பை சுருக்கவே இந்த மாற்றம்! [:)] [] லார்கோ ஒரு வசீகரமான  போக்கிரி – பிரிட்டிஷ் காமிக்ஸ் ஹீரோக்களை போலும் இல்லாமல், அமெரிக்க காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை போலும் இல்லாமல் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்த தனி ரகம்! ஆளை பார்த்தாலே ஒரு நிறுவனத்தின் தலைவர் என்றெல்லாம் சொல்ல முடியாதபடிக்கு ஒரு ப்ளேபாய் லுக், கலைந்த கேசம், அலட்டலான பார்வை, மப்பான பேச்சு, பதட்டமில்லாத சாகசம் என ஒரு மார்கமாகத்தான் இருக்கிறார்! ஜேம்ஸ்பாண்ட் போல் இவர் ரகசிய உளவாளி கிடையாது என்றாலும் இவர் செய்யும் மற்ற சாகசங்கள், சில்மிஷங்கள் எல்லாம் ஜேம்ஸ் ரகம்தான்! [] லார்கோவின் பாத்திர வடிவமைப்பு அபாரம்! சிறு வயதில் இருந்து அவர் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக  உயர் பொறுப்புக்கு செதுக்கப்படுகிறார் என்பதை தெளிவாக சொல்கிறார்கள். துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது “Casino Royale” ஜேம்ஸை நினைவுபடுத்துகிறது! அவருடைய ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன – இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! அமெரிக்க மோகம், ஐரோப்பிய நாடுகளுக்கும் இருக்கிறது என்பதை லார்கோவின் – W நிறுவனத் தலைமையகம் மற்றும் கதைக்களன் நியூயார்க் என்றிருப்பதில் புலனாகிறது! அதே போல வசதி படைத்ததொரு அமெரிக்கர் / ஐரோப்பியர் எந்த நாட்டிலும் என்ன அக்கிரமும் செய்து விட்டு ஜஸ்ட் லைக் தட் தப்பித்து போய் விடலாம் என்பது மாதிரியான கதையமைப்பு எரிச்சலூட்டுகிறது! [] முதல் பக்கத்தில் உள்ள பாத்திரங்களின் அறிமுகப் பக்கம், தலை சுற்ற வைக்கிறது. வாய் சுளுக்க வைக்கும் அத்தனை வெளிநாட்டுப் பெயர்களை மற்றும் அவர்கள் வகிக்கும் பதவிகளை நினைவில் நிறுத்த என்னால் ஆகாது என்பதால் அதை படிக்காமலேயே விட்டு விட்டேன் – இருந்தாலும் கதை புரிவதில் குழப்பம் வரவில்லை. தமிழில் வெளிவந்த கதைகளில் குறிப்பாக காமிக்ஸ்களில் இவ்வளவு விரிவாக நிர்வாக மேலாண்மையை எதுவும் பிரித்து மேய்ந்தது இல்லை என நினைக்கிறேன்! ஏதோ கம்பெனி போர்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணுவது போன்ற ஒரு உணர்வு படிக்கும் போது ஏற்படுகிறது! துப்பாக்கி சண்டைகள், கார் சேசிங் போன்ற வழக்கமான சமாச்சாரங்களை தாண்டி, வியாபார நுணுக்கங்கள் மற்றும் போர்டு ரூம் விவாதங்களை பற்றி விரிவாக அலசுவதால் லார்கோ தொடர் ஒரு தனித்தன்மையுடன் திகழ்கிறது! [] கதை நெடுக நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் பின்னிப்பிணைத்த விதம் அட்டகாசம், திரைப்படங்கள் தோற்றது போங்கள்! நிகழ காலத்தில் லார்கோ எறியும் கத்தி…, அடுத்த காட்சியில் கடந்த காலத்திய ஒரு நிகழ்வில் குத்திட்டு நிற்பது ஒரு உதாரணம், கதை முழுதும் இப்படிதான் – ஆனால் கொஞ்சமும் குழப்பமேற்படுத்தாமல்! இக்கதையில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்கான சித்திரங்கள், நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன! சான்ஸே இல்லை! நீங்களே பாருங்கள்! []ஒரு படைப்பை மொழிபெயர்ப்பு செய்வதென்பது மிகவும் சிரமம் வாய்ந்த காரியம்! வெறும் சொற்களை அப்படியே மொழிபெயர்க்க ஓரளவு படைப்பின் மூலமொழி அறிவும், இணையமும், பக்கத்தில் ஒரு dictionary-யும் இருந்தால் போதுமானது! ஆனால் அப்படி செய்தால் அதில் கொஞ்சமும் சுவை இருக்காது! வடிவேலு அல்லது சந்தானத்தின் டைமிங் ஜோக்குகளை பிற மொழியில் அப்படியே மாற்றினால் எப்படி சிரிப்பு வராதோ அப்படித்தான் இதுவும்! எனவே மொழிபெயர்ப்பு என வந்திடும் போது கொஞ்சம் சொந்த சரக்கையும் கலந்து அடிப்பதை தவிர்க்க இயலாது! அதுவும் காமிக்ஸ் இதழ்களில் வேறு மொழி சொற்களுக்கான / வார்த்தைகளுக்கான முன்னமே வடிவமைக்கப்பட்ட டயலாக் பலூன்களில் தமிழை திணிப்பது அல்லது விரிப்பது எல்லாம் ரத்தக் கண்ணீர் வரவழைத்திடும்  செயல்! ----- ----  [] [] ----- ---- [] எனவே எழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் மாறி மாறி வருவது தவிர்க்கவியலா ஒன்று. அந்த வகையில் இவ்விதழின் மொழிபெயர்ப்பாளர்கள் விஜயன் மற்றும் கருணையானந்தம் – இருவரும் பாராட்டுக்குரியவர்கள்! லார்கோ ஒரு ஃபிரெஞ்சு படைப்பு என்பதால் FTV ஜில்பான்ஸ் சமாச்சாரங்களும் நிறையவே! ஆனால், அவை பெரும்பாலும் தமிழில் எடிட் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன், இந்த கதை ஆங்கிலத்தில் வெளியான போது கூட இந்த கத்திரி சமாசாரம் நடந்தேறியிருக்கிறது! இதன் ஆங்கிலப் பதிப்பை பற்றி ஃரபிக் ராஜாவின் இந்த பதிவில் காணலாம். சற்றே முதிர்ந்த ரசனைக்கான காமிக்ஸ் இது, இதன் அடிப்படையில் ஒரு சில திரைப்படங்களும் வந்துள்ளன! சமீபத்தில் இணையத்தில் ஒரு புரளி கிளம்பியுள்ளது! கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகவிருந்த “யோகன் அத்தியாயம் ஒன்று” என்ற திரைப்படத்தின் டீசர் போஸ்டர் ஆங்கிலத்தில் வந்த லார்கோ வின்ச் திரைப்பட போஸ்டரை உரித்து(!) வைத்திருந்ததால், யோகனின் கதையும் லார்கோவின் ‘inspiration’-னுடன் இருக்குமோ என்ற சந்தேகம்தான் அது! -------------------- [] விஜய் Vs . வின்ச்! -------------------- இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்! லார்கோவின் இரண்டு கதைகள் கொண்ட ஒவ்வொரு தொகுப்பும் ஆங்கிலத்தில் ருபாய் 350 முதல் 1000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது! ஆனால் தமிழில் அதே தரத்தில், நூறு ருபாய் விலையில் வெளியிட்ட எடிட்டர் விஜயன் பாராட்டுக்குரியவர் – ISBN Bar Code-உடன் வெளியாகும் முதல் தமிழ் காமிக்ஸ் இதழ் இதுவாகத்தானிருக்கும்! தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! ஆனால் மற்றவர்க்கு, நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இது ஒரு தவறவிடக்கூடாத காமிக்ஸ் இதழ்! இதை Ebay மூலமாகவோ அல்லது லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ வாங்கலாம்! [] பின்குறிப்பு: 1986-இல் வெளிவந்த திகில் காமிக்ஸின் முதல் இதழும் மறுபதிப்பாக லார்கோ இதழுடன் இணைந்து வந்துள்ளது – தயவு செய்து அதை மட்டும் படித்துவிடாதீர்கள்! இந்த விமர்சனத்திற்கு அப்புறம் உங்களுக்கு கொஞ்ச நஞ்சம் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருந்தால் அதுவும் தொலைந்து விடும்! [] 41 உலகப் பதிவுகளில் கடைசி முறையாக! [] ஒரு வழியாக ‘தலை வாங்கி குரங்கு’ & ‘சாத்தானின் தூதன் டாக்டர் 7′ இதழ்கள் இந்த வாரத்தில் என்னிடம் வந்து சேர்ந்தன! இப்படி எல்லாரும் படிச்சதுக்கப்புறம் புக்கை அனுப்பினா எங்களை மாதிரி காமிக்ஸ் விமர்சனம் எழுதி கஷ்ட ஜீவனம் நடத்துற சிறுபான்மை காமிக்ஸ் பதிவர்களோட கதி என்னவாகும்னு எடிட்டர் கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும்! எல்லாருமே ஏற்கனவே விமரிசையா விமர்சனம் எழுதி முடிச்சுட்டதால நான் புதுசா என்னத்த ‘உலகப் பதிவுகளில் கடைசி முறையாக’ இதை பற்றி எழுதிட முடியும்னு தெரியல (ஐய்யா, பதிவோட தலைப்பு வந்துருச்சு)! சரி ட்ரை பண்ணறேன்! தலை வாங்கிக் குரங்கைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை, படிக்கும் போதே கதையை யூகிக்க முடிவது ஒரு பெரிய வெறுப்பம்சம்! இருந்தாலும் டெக்ஸ் என்னும் மந்திர சொல் எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது! கால் நூற்றாண்டுக்கு முன் இந்த கதை தமிழில் வெளியான போது அது எவ்விதமான அதிர்வை உண்டாக்கி இருக்கும் என்பதை உணர முடிகிறது! பொதுவாகவே நம்மாட்களுக்கு கௌபாய் கதைகள் ரொம்ப பிடிக்கும்! டெக்ஸ் தனியாக சாகசம் புரியும் இந்த கதையில், அட்டையில் தேவையில்லாமல் ஏன் அவரது பேமிலி போட்டோ என்பது புரியவில்லை – குரங்கு நீங்கலாக [;)] பொதுவாக நான் முத்து / லயன் அட்டைகளில் கவனித்த ஒரு விஷயம், அதீத வண்ணங்கள், கண்ணைப் பறிக்கும் வகையில் உபயோகிக்கப்படுவது! இதை பற்றி நான் இந்தப் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்! த.வா.கு.வும் இதற்கு விதி விலக்கல்ல. இதை சற்றே குறைத்தால் ஒரு ரிச்லுக்(!) கிடைக்க வாய்ப்பிருக்கிறது! காமிக்ஸ் புத்தகத்தை முகர்ந்து பார்த்து போதை அடைவது என் சின்ன வயது பொழுது போக்கு! (ஆமாமா, உதயநிதிக்கு முன்னாடியே நாங்க ஆரம்பிச்சிட்டோம்!)… த.வா.கு.வின் தாள்களில் ஆங்கில வாடை அடித்தது! கனத்த மேலட்டை காமிக்ஸ் சேகரிப்பாளர்களை மகிழ்விக்கும்! ஆனால் அச்சுத்தரமோ ஒவ்வொரு பக்கத்தின் மேலும் ட்ரேஸ் பேப்பர் வைத்து படிப்பது போல கலங்கலாக, ஒரு நீர்த்துப்போன அனுபவமாக இருந்தது. [] டெக்ஸின் ட்ரேட்மார்க் நக்கல் வசனங்கள் (விஜயனின் அருமையான மொழி பெயர்ப்பில்!) இதில் குறைவு! தமிழில் வெளிவந்த முதல் டெக்ஸ் கதை (முதல் பதிப்பு வந்த காலத்தில்) என்பதால் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு ஒரு வசனம்: “வேறு யாராவது துப்பாக்கியை எடுக்க நினைத்தால் என் அடுத்த இலக்கு அவர்களுடைய கையாக இருக்க வேண்டுமென்பதில்லை” (த.வா.கு. ப 35 / க 2) நச்! [:)] விளம்பர இடைவேளை… [;)] படித்து விட்டீர்களா: - சலாம் சேலம்! - புத்தக பாதுகாப்பு – ஒரு நுண்ணிய கலை! - காமிக்ஸ் வேட்டை நெடுந்தொடர்! எத்தனை பேர் இதை கவனித்தார்களோ தெரியவில்லை, ஆனால் ‘டாக்டர் 7′ இதழை விஜயன், முத்து / லயன் தளத்தில் அறிமுகப்படுத்தியபோது ‘எமனின் தூதன் டாக்டர் 7″ என்றுதான் தலைப்பு வைத்திருந்தார், திடீரென எப்படி எமன், சாத்தானாக மாறினார் என புரியவில்லை! எது எப்படியோ, எல்லாரும் சிலாகித்து கொண்டிருக்கும் இதன் அட்டையை பற்றிய எனது கருத்தும் மேற்சொன்னவாறுதான் – ஆளை அடிக்கும் பிரகாச வண்ணக் கலவை! ஒரிஜினல் ஓவியமும், லயன் ஓவியரின் கத்தரிக்கும் திறனும் உங்கள் பார்வைக்கு! +-----------------------------------+-----------------------------------+ | ------------- | ------------------------ | |  [] |  [] | | மூல ஓவியம்! | லயனின் வண்ணக் காவியம்! | | ------------- | ------------------------ | +-----------------------------------+-----------------------------------+ என்னைக் கேட்டால், லயன் அட்டையில் இருக்கும் அந்த குட்டி டாக்டர் செவன் உருவத்தையும் கத்திரி போட்டிருக்கலாம்! இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் சிறப்பாக வடிவமைத்ததிற்கு, வெளியே தலை காட்ட விரும்பாத நமது லயன் ஓவியருக்கு பாராட்டுக்கள்…! அப்புறம், ஒரு மாபெரும் ஓவியனை இந்த உலகம் இழந்த கதையை, இந்தப் பதிவில் பொறுமையிருந்தால் படித்துக்கொள்ளுங்கள் [;)] [] ‘சா.தூ.டா-7′, ஒரு அரதப் பழசான ஜேம்ஸ்பாண்ட் டைப் கதைதான்! எடிட்டரின் கத்திரி புகுந்து விளையாடி இருப்பது, கதை சட்சட்டென்று நகர்வதிலும், பட்டென்று முடிவதிலும் தெரிகிறது! இந்து மத குறியீடுகள் ஓவியங்களில் கண்கூடாக தெரியும் போது, கதை நடக்கும் நாட்டின் பெயர் காலிபூர் என்றும், இளவரசர் பெயர் ஜமால் என்றும் இருப்பது நெருடுகிறது! ஆனால் இது எடிட்டர் விஜயனின் வேலை அல்ல ஒரிஜினலே அப்படிதான் என்பது இந்த புத்தக விமர்சனத்தை பார்க்கும் போது தெரிகிறது! மேலைநாட்டவர்கள் இந்தியாவை தங்கள் படங்களிலும், கதைகளிலும் காட்டும் விதம் எனக்கு ஒருபோதும் பிடித்ததில்லை! உதாரணம்: Octopussy! [] []காரிகன் தொடருக்கான சித்திரங்கள், வில்லியம்சனின் கை வண்ணத்தில் அற்புதமாக இருக்கும்! கருப்பு, வெள்ளையின் செறிவை ஏற்றி, இறக்கி பிரம்மிக்க வைப்பார்! [] காரிகன் மற்றும் சில ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸுகளில் ஒரு வித ஷேடிங் உத்தி கையாளப்பட்டிருக்கும்! சின்னச் சின்ன கருப்பு புள்ளிகள் அல்லது சதுரங்கள் (பழைய டிவியை கூர்ந்து கவனித்தால் தெரியும் புள்ளிகளை போல!) அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டிருக்கும்! முக்கியமாக கதாபாத்திரங்களின்  உடல் பாகங்களிலும், அணியும் உடைகளிலும் இதை கவனிக்கலாம்! பேனலின் அளவுக்கேற்ப சித்திரத்தை விரிவாக்குகிறேன் பேர்வழி என்று, லயனின் ஆஸ்தான ஓவியர் இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களை கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது! லயன் ஓவியரின் விரல் வித்தையை இடது பக்கத்தில்  கண்டு களிக்கலாம்! [:)] ---------------------- [] அழகிய அமெரிக்க மகன்! ---------------------- “கன்னித் தீவில் ஒரு காரிகை” போன்ற ஒரு சொதப்பலான கதையை அது வெளியான கால கட்டத்திலும் யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் என்பதை என்னால் சத்தியம் செய்து கூறிட முடியும்! தனியே தீவில் வசிக்கும் ஒரு கிழவரை சமாளித்து, புதையலை அடைவது ஏதோ ஒரு மிகப் பெரிய காரியம் என்பது போல் ஒரு மொக்கை காரணம் சொல்லி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்!  முதுகைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், அவரை தீவை விட்டு வெளிக்கொணர ஒரு மகாமட்டமான ப்ளான் வேறு! சரி விடுங்கள்… [:)] மற்றபடிக்கு சித்திரங்கள் அபாரம், ரிப் கொஞ்சம் இளமையாக தெரிகிறார்! காரிகனுக்கும், ரிப்புக்கும் ஓய்வு கொடுத்தது உருப்படியான விசயம்தான்! இவர்களின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து எப்போதாவது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழில் வெளியிடலாம்! இம்மாதிரியான புராதன கதைகள் புதிய வாசகர்களை சேர்க்க எவ்வகையிலும் உதவாது! வருட சந்தா 250 என்று உள்ளட்டையிலும், 620 என்று உள்ளே இன்னொரு பக்கத்திலும் குழப்பி அடித்திருக்கிறார்கள்! சந்தா படிவத்தை கத்தரித்து புத்தகத்தை சேதப்படுத்தும் அளவுக்கு நாம் இரக்கம் அற்றவர்கள் என எடிட்டர் நினைத்து விட்டாரா? [:)] படிவத்தை, தனியே புத்தகத்தின் உள்ளே சொருகி வைப்பது நலம்! அப்படியே செய்தாலும், அதைக்கூட காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட யூகம்! [;)] இந்தப் பதிவின் ஒரு பின்னூட்டத்தில் விஜயன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: >>>சாணி பேப்பர் வாசத்தை மறந்திட இன்னும் இரண்டு இதழ்களுக்குக் காத்திருக்க அவசியமே இல்லை…! இப்போது தயாராகி இருக்கும் லயன் டாக்டர் 7 இதழே நல்ல பேப்பரில் தான் அச்சாகி உள்ளது ! (Art paper அல்ல )<<< ஆனால் எனக்கு வந்த பிரதி அப்படியேதும் நல்ல பேப்பராய் தெரிந்திடவில்லை! ஆனால் அவர் சொன்னவாறே, மங்காத்தா மேல சத்தியமாக “ஆர்ட் பேப்பரும்” அல்ல – மாறாக, உஜாலா சொட்டு நீலம் தோய்த்த  அதே சாணித்தாள்தான்… அதே கெரசின் வாசனைதான்! முகர்ந்து பார்த்ததில் போதை கன்னாபின்னாவென தலைக்கேறியது [;)] அட, இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க…??? படம் முடிஞ்சுருச்சு கெளம்புங்க பாஸ்! Bye, bye! [:)] 42 புத்தக பாதுகாப்பு - ஒரு நுண்ணிய கலை! [] நாம் சிறுவயதில் மிகவும் பிரயத்தனப்பட்டு சேகரித்த காமிக்ஸ் மற்றும் இதர புத்தகங்கள் விலை மதிப்பற்றது என்பதை நாம் அறிவோம்! நாம் அன்று ஒரு சில ரூபாய்கள் கொடுத்து வாங்கிய புத்தகங்களை, இன்று யாரேனும் பல ஆயிரங்கள் கொடுத்துக் கேட்டாலும் விற்க மாட்டோம் என்பது புத்தகங்கள் மீது காதல் கொண்ட ஒவ்வொரு சேகரிப்பாளருக்கும் தெரியும்! ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத சங்கதி ஒன்று இருக்கிறது! அது, பாடுபட்டு சேர்த்த புத்தகங்களை முறையாக பாதுகாப்பது எப்படி என்பது பற்றிதான்! நான் சிறு வயதில் ஒரு காமிக்ஸ் புத்தக சேகரிப்பாளனாய்  இருந்தேன் – வேலை கிடைத்ததும் புத்தகங்களைத் தூக்கி பரணில் போட்டு விட்டு பத்து வருடங்கள் காமிக்ஸ் பக்கமே திரும்பாமல் இருந்தேன்! 2007-இல் மீண்டும் அந்த புத்தகங்களை பிரித்துப் பார்த்தபோது ஏற்ப்பட்ட அதிர்ச்சி அளவில் அடங்காது! [] எனது அனுபவம் கற்று தந்த பாடம் மற்றும் இணையம் மூலம் புத்தக பராமரிப்பு பற்றி நான் அறிந்த பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை, உங்களுடன் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள போகிறேன்! கீழ் காணும் தகவல்களில் பெரும்பாலானவை, நான் பற்பல இணைய தளங்களில் இருந்து சேகரித்த தகவல்களாகும்! இப்பதிவில் ஏற்கனவே இல்லாத, புத்தக பராமரிப்பு பற்றிய உங்களுக்கு தெரிந்த  தகவல்களை பின்னூட்டங்கள் மூலம் தெரியப்படுத்தி இப்பதிவை மேம்படுத்த உதவுங்கள்! அத்தகவல்களை நீங்கள் பிறிதொரு இடத்தில் இருந்து அறிந்திருக்கும் பட்சத்தில், அதற்கான மூலத்தையும் அத்தகவலுடன் கொடுத்திட விழைகிறேன்! கவனிக்க: இக்குறிப்புகள் முறையாக இன்னும் வரிசைப்படுத்தவில்லை. உங்கள் கருத்தை அறிந்து, சில கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்க படங்களை இணைத்து விரைவில் இவற்றை ஒழுங்குபடுதுவேன்! புத்தக பாதுகாப்பு முறைகள்: 1. புத்தகங்களை அதிக வெப்பம், ஈரப்பதம், தூசி இல்லாத அறையில் அல்லது அலமாரியில் பாதுகாக்கவும் 2. ஈரப்பதம் மற்றும் செல்லரித்ததால் பாதிக்கப்பட்ட புத்தகங்களை பிற புத்தகங்களுக்கு அருகில் வைத்திட வேண்டாம், முடிந்தால் தனியே பாதுகாக்கவும் 3. புத்தகங்களை பரணில் அல்லது வீட்டின் கிடங்கில் (Store room) ஒருபோதும் வைத்திட வேண்டாம். அதிகபட்ச ஈரப்பதமும், பூச்சிகளும் உங்கள் புத்தகங்களை பதம் பார்த்திடும்! 4. புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்ககூடாது, மாறாக அவைகளை நிற்பாட்டிய நிலையில் வைக்கவும் 5. புத்தகங்களை அடுக்கும் முறை: - ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் அளவை விட சற்றே பெரிதானதொரு “Mylar” பிளாஸ்டிக் உறையில் வைத்திட வேண்டும். புத்தகத்தை நுழைப்பதற்கு முதல் அதற்கு சாய்மானமாக, Mailaar  உறை அளவிலான ஒரு அட்டையை வைத்திடவும் (கடின அட்டை கிடைக்கவில்லையெனில், இரண்டடுக்கு கார்ட்போர்ட் அட்டையை உபயோகித்திடலாம்). சாதாரண PVC பிளாஸ்டிக் உறையை பயன்படுத்துவது நல்லதல்ல! - இவ்வாறு பலப்படுத்தப்பட்ட புத்தகத்தை ஒன்றன் மீது ஒன்றாக சாய்வாக நிற்பாட்டி வைக்கலாம்! - முடிந்த வரை ஒரே அளவிலான புத்தகங்களாக பிரித்து அடுக்கவும் - பத்து அல்லது பதினைந்துக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாறு அடுக்கிட வேண்டாம் - மூடியுடன் கூடிய அட்டைப்பெட்டிகளில் மேற்கண்டவாறு சிறிது சிறிதாய் புத்தகங்களை பிரித்து வைக்கலாம். இவ்வாறு அட்டை பெட்டிகளில் மூடி வைப்பது பூச்சிகளையும், ஈரப்பததையும் கட்டுப்படுத்தும் - சில மாதங்களுக்கு ஒரு முறை பெட்டிகளை திறந்து புத்தகங்களை கண்காணியுங்கள்! 6. செய்தித்தாள் அல்லது மட்ட ரக தாள்கள் மூலம் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டாம், இது புத்தக அட்டையை பழுப்பேற செய்யும்! 7. கிழித்த புத்தகங்களை பின் அடிப்பது, கிளிப் செய்வது, ரப்பர்பேண்ட்  மூலம் கட்டுவது போன்ற முறைகளை தவிர்க்கவும் – இவைகள் துருப்பிடித்தோ அல்லது ரப்பர் ஒட்டியோ புத்தக அட்டை மற்றும் உள்பக்கங்களை பாழ் செய்திடும் 8. கிழிந்த பக்கங்களை சாதாரண பிளாஸ்டிக் பசைநாடா (Cellotape!) மூலம் ஒட்டக்கூடாது! முடிந்தால் உயர்தர நிறம், வழுவழுப்பில்லாத, மின்னாத நாடாக்களை பயன்படுத்தவும்! (உ.ம். Scotch Magic Tape) 9. மடங்கிய பக்கங்களை சீராக்குவதாய் நினைத்து புத்தகத்தின் மேல் அதிக எடை உடைய பொருட்களை பல மணி நேரம் வைப்பது தவறு 10. சுருண்ட பக்கங்களை நேராக்க இஸ்திரி பெட்டியை கட்டாயமாக  உபயோகிக்க கூடாது! இது தாளை பழுப்பேற்றி விரைவில் பொடித்துப்போக செய்யும்! 11. அளவுக்கதிகமாக அந்துருண்டைகளை உபயோகிக்க வேண்டாம், புத்தகத்தில் உள்ள மீன் போன்ற புழுக்களை இது ஏதும் செய்வதில்லை (நான் அறிந்த வரையில்)! மாறாக நாப்தலின் உருண்டைகளின் அதீத வேதித்தன்மை தீங்கையே விளைவிக்கும்! 12. கரப்பான் பூச்சிகளும் மிக ஆபத்தானவை, அவற்றை கட்டுக்குள் வைத்திடுங்கள்! அதற்காக கொல்லி மருந்து தெளிப்பான்களை பயன்படுத்தி புத்தகங்களை குளிப்பாட்டிட வேண்டாம்! 13. உணவுப்பொருட்களை புத்தகங்களுக்கு அருகில் வைக்கவேண்டாம் 14. புத்தகங்களை கணக்கெடுப்பதாக நினைத்துக்கொண்டு அதன் மேல் வெளியீடு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத வேண்டாம்! - மாறாக ஒரு சிறிய  காகிததில் தேவையான விவரங்களை எழுதி புத்தக மேற்பரப்பில் தெரியுமாறு வைத்துக்கொள்ளுங்கள்! 15. சில புத்தகங்களில் முன் மற்றும் பின்னட்டை மேல் ஒட்டி இருக்கும் பிளாஸ்டிக் மேலுறையை தனியே பிரிக்க வேண்டாம் (உ.ம். ஆரம்ப கால ராணி காமிக்ஸ்). அவ்வாறு பிரிக்கும் போது அந்த அட்டை பளபளவென்று புதிது போல மின்னி உங்களை மகிழ செய்யலாம், ஆனால் விரைவிலேயே தூசு மற்றும் அழுக்கு ஒட்டி அதிகமாக சேதமடைந்து விடும்! 16. படிக்கும் / கையாளும் முறை: - பழைய புத்தகங்களை படிக்க நினைத்தால் அதை இன்னொரு புத்தகத்தின் உள்ளே வைத்து, சமதளத்தில் கிடத்தி அதிகம் கை படாமல் படிக்கவும் 17. பக்கங்களை எச்சில் அல்லது பசை தொட்டு திருப்பக்கூடாது! 18. புத்தகங்களை (பக்கங்களை) மடிக்கவோ, வளைக்கவோ கூடாது! 19. புத்தகங்களின் அருமை அறியாதவர்களிடம், குறைந்த பட்சம் பார்க்க கூட கொடுக்க வேண்டாம்! அவர்களுக்கு நிச்சயமாக புத்தகத்தை எப்படி கையாளுவது என்று தெரிந்திருக்காது! 20. முடிந்த வரை உள்பக்கங்களை ஸ்கேன் செய்வதை தவிருங்கள்! 21. - தொடரும் – உதவி தேவை:  அமில தன்மையற்ற மைலார் பிளாஸ்டிக் உறை மற்றும் கடின அட்டைகள் எங்கே கிடைக்கும் என யாருக்காவது தெரியுமா? தற்போதைக்கு நான் உயர் தர “File Folder” உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்துகிறேன் (Document quality sleeves)! அட்டைக்கு சாதாரண கார்ட்போர்ட் அட்டையை உபயோகிக்கிறேன். நன்றி: நண்பர் ஈரோடு ஸ்டாலின் தம்முடைய நண்பர் பொள்ளாச்சி நசன் அவர்களிடம் இருந்து பெற்றுத் தந்த குறிப்புகள் சிலவற்றை கீழே காணலாம் – அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்!: - வெப்பம் குறைவான இடம் பூஞ்சைகள் வளர வழி வகுக்கும் ஆகவே புத்தகங்களை சற்று உலர்வான இடத்தில் வைப்பது நலம். - தஞ்சை பல்கலை கழகத்தில் ஒரு பாதுகாப்பு பொடி விற்பனை செய்ய படுகிறது – அதனை வாங்கி அலமாரிகளில் வைக்கலாம். அல்லது புத்தகங்கள் மேல் படாமல் மஞ்சள் தூள் பரப்பி வைக்கலாம்! - புத்தகத்தை ஒட்டும் பொழுது பசை இருந்தால் அதனை நாடி பூச்சிகள் வரும் அதனை தவிர்க்க வஜ்ரம் சேர்க்கலாம். - புத்தகத்தின் pin-களை நீக்கி விட்டு (துருப்பிடிப்பதை தவிர்க்க), அதற்கு பதிலாக – மேல் ஒரு அட்டை கீழ் ஒரு அட்டை வைத்து நூல் கொண்டு கட்டவும்! - கிழிந்த பகுதியை ஒட்ட செல்லோ டேப் உபயோகிக்கக் கூடாது – நகல் எடுக்கும் போது அவ்விடம் கருமையாய் தெரியும்! - குறிப்பாக புத்தகத்தை அதிகம் புரட்டாமல் இருப்பது நலம் - புத்தகங்களின்  வாழ்நாள்!: - சாணித்தாள் 35  ஆண்டுகள் - நோட்டிஸ் பேப்பர் 50  ஆண்டுகள் - தரமான வெள்ளைக் காகிதம் 60  முதல் 70  ஆண்டுகள் - கெட்டியான வழுவழுக் காகிதம் 100  முதல் 160  ஆண்டுகள் References: - http://www.loc.gov/preservation/care/books.html - http://dlis.dos.state.fl.us/archives/preservation/books/index.cfm - http://www.ehow.com/how_14516_preserve-comic-books.html - http://www.ehow.com/how_5597739_protect-books-papers-silverfish.html - http://www.boldsky.com/home-n-garden/improvement/2011/preserve-maintain-book-091211.html  - http://blog.archive.org/2011/06/06/why-preserve-books-the-new-physical-archive-of-the-internet-archive/ - http://www.preservation.gc.ca/howto/articles/books_e.asp 43 பிரின்ஸ், பார்னே, ஜின் மற்றும் கழுகு! கண்ணா, கறை நல்லது! – அது உன் மனதில் இல்லாத வரை…!அழுக்கான, பரட்டை தலை ஆசாமிகள் நமது அன்புக்குரிய நாயகர்களாகி போவது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்ற எண்ணம் யாராவது கொண்டிருந்தால் அதை தூக்கி உடைப்பில் போடுங்கள்! பெல்ஜிய கதாசிரியர் கிரெக்கும், ஓவியர் ஹெர்மன்னும் இணைந்து தயாரித்த  மேற்கண்ட நான்கு கதாபாத்திரங்கள் நம் மனதை அதே போல எளிதாய் கொள்ளை அடித்துவிடுவார்கள்! அப்படி ஒரு அட்டகாசமான பாத்திர படைப்பு! இக்கதைகளில் தோன்றும் இன்னுமொரு அற்புத கதாபாத்திரம், இயற்கை! பார்ப்பவர் மனதை மயக்கி, அப்படியே இன்னொரு உலகத்திற்கு இட்டு செல்லும் வகையில், இயற்கையை அற்புதமாய் தம் சித்திரங்களில் வெளிப்படுத்தும் ஹெர்மன் அவர்களுக்கு, அமேசான் காட்டையே எழுதி வைத்தாலும் போதாது! தமிழில், எண்பதுகளின் பிற்பாதியில் திகில் காமிக்ஸ் மூலம் நமக்கு அறிமுகமான இவர்களின் சாகசம் இன்று லயன் கம் பேக் ஸ்பெஷல் வரை தொடர்கிறது!. பிரின்ஸ் குழுவை பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ!   +-----------------------------------+-----------------------------------+ | பெயர் | சிறு  அறிமுகம் | +-----------------------------------+-----------------------------------+ | பிரின்ஸ் (Bernard Prince) |  இவர் ஒரு முன்னாள் இன்டர்போல் | | | போலீஸ் இன்ஸ்பெக்டர்! தனது உறவினர் | | | மூலம் கிடைத்த சொகுசு படகில், | | | உலகம் சுற்றும் சாகச வீரர்! பரட்டை | | | தலை, அழுக்கு உடை – இவரது வெளி | | | அடையாளங்கள்! ஆனால் உள்ளுக்குள் | | | மனிதர், ஹால்மார்க் சொக்க தங்கம்! | | | நட்புக்காக உயிரை கொடுக்க கூட | | | தயாராகிவிடுவார்! இடப்பக்கம் உள்ள | | | 1970  பாணியிலான பிரின்ஸ் எனக்கு | | | பிடிக்கும்! (வலது, 2010-ல்!) | +-----------------------------------+-----------------------------------+ | பார்னே (Barney Jordan) |  ஒரு மதுக்கடையில் அறிமுகமாகி அதன் | | | பிறகு ப்ரின்சுடன் உலகம் சுற்றும் | | | வாலிப கிழவர். இவரையும் | | | தண்ணியையும் பிரிக்க முடியாது, | | | கடலில் மிதந்தாலும் அல்லது தரையில் | | | நடந்தாலும்! கழுகை செலுத்தும் | | | புலம்பல் மாலுமி! | +-----------------------------------+-----------------------------------+ | ஜின் (Djinn) |  வார்த்தைகளால் வசீகரிக்கும் இந்த | | | சிறுவன் ஒரு அனாதை! சட்டபூர்வமாக | | | தத்து எடுக்கா விட்டாலும் பிரின்சை | | | பொறுத்த வரையில் இவன் ஒரு மகனைப் | | | போலதான்! பார்னேயை விரட்டுவது | | | இவனது பொழுதுபோக்கு! | +-----------------------------------+-----------------------------------+ | கழுகு (Cormoran) |  சிறிய ரக உல்லாச படகான இது, | | | பிரின்சின் அதிகாரபூர்வ வீடு! | | | இதற்கு சிறு கீறல் ஏற்பட்டாலும் | | | ப்ரின்சுக்கு கோபம் தலைக்கேறி | | | விடும்! | +-----------------------------------+-----------------------------------+ நண்பர்களே, இது ஒரு 2-in-1  பதிவு! தமிழ் காமிக்ஸில் நட்பை பறைசாற்றும் வகையிலான ஜோடிகளை பற்றிய ஒரு தொடர் பதிவை எழுத போவதாக இந்த பதிவில் நான் உதார் விட்டிருந்தது உங்களுக்கு அநேகமாக மறந்திருக்கலாம்! பிரின்ஸ் பற்றிய அறிமுக பதிவாக (புதிய வாசகர்களுக்கு) அமையும் அதே நேரம், பிரின்ஸ் குழுவின் நட்பை / நெருக்கத்தை பறை சாற்றும் கதைகள் ஒரு சிலவற்றை இப்பதிவில் மேலோட்டமாய் காண்போம்! 1. நதியில் ஒரு நாடகம்! (திகில் 36): 1989-இல் சேலத்திலிருந்து மதுரை சென்ற ஒரு சமயம், சேலம் பேருந்து நிலையத்தில் வாங்கிய இதழ் இது! பேருந்து மதுரையை அடைந்த போது நான் பல தடவை இதை பார்த்து, ரசித்து, படித்து முடித்திருந்தேன்! இந்த கதை பற்றி இப்பதிவில் விரிவாய் எழுதலாம் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் நான் அறிந்த வரையில் ஏற்கனவே இரண்டு பேர் அந்த நல்ல காரியத்தை செய்து உங்களை என்னிடமிருந்து காப்பாற்றி விட்டார்கள்! - விஸ்வாவின் விரிவான விமர்சனம்!, Entry 2-இன் கீழே பார்க்கவும்… - முதலை பட்டாளத்தின் நறுக் விமர்சனம்! “பார்னே! உன் மரண ஓலம் என்னை வெறி கொள்ள செய்கிறது” என்றவாறு பிரின்ஸ் துப்பாக்கியுடன் பாயும் அந்த காட்சியை முதலில் படித்த போது ஏற்பட்ட மன அதிர்வு இன்று படித்தாலும் ஏற்படுவது ஆச்சரியமான ஒன்று! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?! என் மனதுக்கு நெருக்கமான கதைகளில் இதற்கு ஒரு தனி இடம் எப்போதும் உண்டு! நான் பொக்கிஷமாய் வைத்துள்ள இதன் பிரதியிலிருந்து சில படங்கள்: +-----------------------------------+-----------------------------------+ | ------------------------- | ------------- | |  [] |  [] | | முன் மற்றும் பின்னட்டை! | நண்பேண்டா…! | | ------------------------- | ------------- | +-----------------------------------+-----------------------------------+ +-----------------------------------------------------------------------+ | ------------------------------------- | | நதியில் ஒரு நாடகம் அட்டையின் மூலம்! | | ------------------------------------- | +-----------------------------------------------------------------------+ 2. நரகத்தின் எல்லையில்! (திகில் 41): பார்னே, பிரின்சை காப்பாற்றும் இடம்! (நேரம் கிடைக்கும் போது சற்றே விவரித்திடுவேன்!) -----  [] ----- 3 . கொலைகார கானகம்! (திகில் 43): பிரின்ஸ் தனது செல்ல கரடியை காப்பாற்றும் காட்சி! (நேரம் கிடைக்கும் போது சற்றே விவரித்திடுவேன்!) -----  [] ----- நன்றி: இப்பதிவுக்கான சில வண்ணப்படங்கள் கீழ் கண்ட தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன! - Comic Wiki - Comics Info - Comic Vine 44 இரத்தப் பாதை..! எனது மனம் கவர்ந்த சித்திர நாயகர்களில் ஒருவர் ஜான் சில்வர்! நமது எடிட்டரிடம் பெயர் மாற்றத்துக்கு ஆளான பாக்கியசாலிகளில் ஒருவரான இவரது இயற்பெயர் – ஜான் ஹவோக்! (John Havoc). இவர் தமிழில் மேத்தா காமிக்ஸில்தான் ஜான் என்ற பெயரில் முதலில் அறிமுகமானார்! சுய பச்சாதாபத்துடன் சுற்றும் அவரின் சோகம் கலந்த சாகசங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை! கதைகளின் இறுதியில் அவர் பணி ரீதியாக வெற்றி கண்டாலும், சொந்த பிரச்சினையில் தோல்வி கண்டு சோகத்துடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு நடையை கட்டுவார்! அவரை பற்றிய அற்புதமான பதிவுகள் இதோ: ராஜாவின் பார்வையில் மற்றும் கவினின் சிறிய பதிவில் மற்றும், புரியாத மொழியிலே புரிந்த படங்களுடன் சில தகவல்கள்! சரி இந்த பதிவுக்கு வருவோம்! வீரியமிக்க வெடி மருந்தோடு சுற்றி அலையும் ஒரு முன்னாள் “Q” ஏஜண்டான பிரிஸ்கோவிடம் இருந்து உதவி கேட்டு வந்த அழைப்பை தொடர்ந்து ஜான் சில்வர் தலைமையகத்திற்கு அழைக்கப்படுகிறார். வழக்கம் போல இதுதான் கடைசி பணி என்ற அல்வாவுடன் பிரிஸ்கோவை மீட்க கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க படுகிறார் ஜான்! அவர்களிருவரும் எதிரிகளின் கண்களில் மண்ணை தூவி தப்பிக்க முயலும் ஒரு சாலை பயண சாகசம்தான் இந்த கதை! திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதை இது! முடிவில் உங்களையும் அறியாமல் பிரிஸ்கோவிற்காக வருத்தப்படுவீர்கள், அது இந்த கதையின் பாத்திர வார்புக்கான வெற்றி! இவ்விதழின் அட்டகாசமான அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு! இரத்தப் பாதை..! (முத்து வெளியீடு எண்: 177 ) முன்னட்டை: [] பின்னட்டை: [] 45 காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் ஒன்று! சேலத்தில் செருப்பு தேய்ந்த கதை! [] “காமிக்ஸ் சேகரிப்பில் பழைய புத்தக கடைகள் ஆற்றும் பங்கு – பகுதி ஒன்று” என்ற தலைப்பில்தான் எழுதலாம் என்று நினைத்தேன், ஆனா ஒரு பய படிக்க மாட்டான் என்ற உண்மை உரைத்ததால் காமிக்ஸ் ஸ்டைலில் தலைப்பை மாற்றி விட்டேன் [:)] பழைய புத்தக கடைகளுடனான முதல் தொடர்பு ஏற்படுத்தியது எனது அப்பாதான்! 1986-இல்  நாங்கள் ஒரு சமயம் திருச்சி சென்ற போது பெரிய சர்ச்சுக்கு (பெயர் ஞாபகமில்லை) எதிரே உள்ள சாலை பிளாட்பார கடைகளில் ஓரிரு புத்தகங்கள் வாங்கியது மங்கலாய் நிழலாடுகிறது! அங்கே புத்தகங்கள் வாங்கிய ஞாபகத்தை விட அந்த கடைவீதி பின்னணியில் சர்ச்சின் பிரமாண்ட தோற்றம் கோட்டோவியமாய் இன்னும் என் மனதில்! ஆனால் உண்மையான வேட்டையை ஆரம்பித்தது சேலத்தில்தான்! எங்கள் அப்பா PWD-இல் பணி புரிந்த காரணத்தால் மூன்று வருடங்களுக்கொருமுறை ஊர் மாற்றலாகி விடும்! அவ்வாறு, 1988-இல் வேலூரில் இருந்து சேலம் வந்திறங்கியபோதே பேருந்து நிலையம் அருகில் வரிசையாக பழைய புத்தக கடைகளை பார்த்ததில் பசித்தவன் பன்னை பார்த்தது போல அப்படி ஒரு மகிழ்ச்சி! மனதில் அவ்விடத்தை வட்டம் போட்டு கட்டம் கட்டி வைத்தேன். அன்றிலிருந்து எந்த ஊருக்கு மாற்றலானாலும் என் கண்கள் துளாவும் முதல் இடம் பேருந்து நிலைய அருகேயான சாலைகளும் தெருக்களுமாக  ஆனது! பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே உள்ள டீ மற்றும் புத்தக கடைகளில் பளபளப்பாய் தொங்கும் காமிக்ஸுகளை  பார்ப்பது ஒரு வகை சுகம் என்றால், பிளாட்பார கடைகளில் அடுக்கி வாய்த்த காமிக்ஸுகளை பார்ப்பது இன்னொரு பெருஞ்சுகம்! அந்த புத்தகங்களை புரட்டும் போது வரும் வாடையே அலாதி – ஹ்ம்ம் அதெல்லாம் சொல்லிப் புரிவதில்லை! அது என்ன “சேலத்தில் செருப்பு தேய்ந்த கதை” என்ற உப தலைப்பு என்று மண்டையை உருட்டிக் கொண்டு இருப்பவர்கள் மேலே தொடரவும். “அந்த பிஞ்ச செருப்ப என் கைல குட்றா” என்று பீதி கிளப்புபவர்கள் அப்படியே அரை வட்டம் அடித்து கிளம்புங்கள்! ஆத்துக்காடு ஹௌசிங் போர்டில் நாங்கள் குடியிருந்தோம். எங்களை மரவனேரி பாரதி வித்யாலயாவில் சேர்த்தார்கள். நான் ஆறாவது, அண்ணன்  ஒன்பதாவது! வீட்டிலிருந்து  கிட்டத்தட்ட 4km தொலைவில் எங்கள் பள்ளி! நானும் என் அண்ணனும் வாரத்தில் மூன்று, நான்கு நாள் பஸ்ஸில் செல்லாமல் நடந்தே சென்று வருவோம். அவ்வாறாக சேமித்த பணம் காமிக்ஸ் புத்தகங்களாய் மாறும்! என் அண்ணன் ஆரம்பத்தில் சில வருடங்கள் என்னைப் போலவே காமிக்ஸ் பைத்தியமாக இருந்தான், ஆனால் சீக்கிரமே அவனது நாட்டம் வேறு தளங்களில் மாறியது, அது இங்கே தேவையில்லை! ஒவ்வொரு வார இறுதியிலும் இவ்வாறாக சேர்த்த பணம் ஆளுக்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய் இருக்கும். அதை வைத்து எங்களால் முடிந்த அளவு பழைய புத்தகங்கள் வாங்குவோம். முன்னுரிமை ராணி காமிக்ஸ் இதழ்களுக்கே, ஏனென்றால் மூன்று ரூபாய்க்கே நான்கு பழைய புத்தகங்கள் கிடைக்கும்!  நாங்கள் காமிக்ஸாகவே  மதிக்காத பட்டியலில் முதல் இடத்தில் இந்திரஜால் காமிக்ஸ் அப்போது இருந்தது என்பதால் அதை மட்டும் தொடவே மாட்டோம். நிறைய பேர் அப்படி நினைத்ததன் மௌன சான்றாய் அடுக்கடுக்காக அப்புத்தகங்கள் வாங்குவார் இன்றி கிடக்கும். வாங்காமல் விட்ட புத்தகங்களின் ஆவி (இந்திரஜாலையும் சேர்த்துதான்)  அவ்வப்போது என் கனவில் இன்னமும் வந்து வெறுப்பேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன! புத்தகத்தை கூட சுலபமாக வாங்கி விடலாம் ஆனால் அதை வீட்டுக்கு தெரியாமல் பதுக்குவதும், படிப்பதும் இன்னொரு கலை. எதை பதுக்குவது, எதை காட்டுவது போன்றவற்றிக்கு சில வரையறைகள் இருந்தன. பின்னே, தினமும் நடந்து போய்தான் காசு சேர்த்தேன் என்று அம்மாவிடம் சொல்ல முடியுமா என்ன! வாங்கும் புத்தகங்களில் ஒன்றிரண்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்றவற்றை முதுகில் பதுக்கி கடத்துவோம்! அப்படி கையில் வைத்துக் காட்டும் புத்தகங்களில் எப்போதும் ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இருந்ததில்லை! காரணம் உங்களுக்கே தெரியும், அந்த காலத்தில் எங்களை போன்ற பள்ளி மாணவர்களுக்கு அதிகபட்சமாய் கிடைத்த கிளு கிளு புத்தகங்களே தலைவரின் காவியங்கள்தான்! சரி பதுக்கிய புத்தகங்களை படிப்பதெப்படி? அடுத்த பதிவில்… 46 காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் இரண்டு! புயல் தாக்கிய புத்தக புதையல்! தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடனேயே பொறுப்பாக பாட புத்தகங்களை வைத்து உட்கார்ந்து விடுவேன். நடுவில் பின் அடித்த பாட புத்தகமாய் தேர்ந்தெடுத்து அதற்குள் முதல் பாகத்தில் பதுக்கிய காமிக்ஸையோ அல்லது ஏற்கனவே படித்த, மிகவும் பிடித்த காமிக்ஸையோ வைத்துக்கொண்டு ரொம்ப பொறுப்பாக படிக்க ஆரம்பித்து விடுவேன். யாராவது அருகில் வந்தால் பாட புத்தகத்தின் அடுத்த பக்கத்தை புரட்டி எனது கல்வி சேவையை தொடருவேன். இது ஒரு நாள் அப்பாவிடம் கையும் களவுமாய் பிடிபட்டு காது முறுக்கு பிழியப்படும் வரை நடந்தது! நல்ல வேளை, அப்போது உள்ளே தலைவர் ஜேம்ஸின் காமிக்ஸ் இல்லை! சரி, பழைய புத்தக கடை மேட்டருக்கு வருவோம். வார சேமிப்பு அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறாக மட்டுமே இருந்த காரணத்தினால் புதிய காமிக்ஸ் வாங்க அவ்வளவாக நாட்டம் காட்டியதில்லை! மாதம் கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு வகை காமிக்ஸுகள் வந்திட்ட பொற்காலம் அது! அதை தவிர பூந்தளிர், ரத்னபாலா, அமர் சித்ரகதா போன்ற புத்தகங்களும் வாங்க சொல்லி ஆசையை கிளப்பும்! கிரைம் நாவல்களும் கோலோச்சின! எல்லாவற்றையும் அட்டை முனை மடியாமல், பக்கங்கள் கசங்காமல் புத்தம் புதியதாய் வாங்குவதென்பது என்னை போன்ற பள்ளி மாணவர்களுக்கு ஒரு கனவாக மட்டுமே இருந்தது! எங்களது தீராத புத்தக தாகத்திற்கு 50% தள்ளுபடி தந்துதவி, ஒரு உயரிய சேவையை இந்த பழைய புத்தக கடைகள் செய்தன. அப்போதெல்லாம் சேலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வோர் பஸ் ஸ்டாப்புக்கும் ஒரு பழைய புத்தக கடை இருந்தது! ஆனால் எல்லாவற்றிலும் காமிக்ஸ் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான கடைகளில் ராஜேஷ் குமார், பிகேபி, சுபாவின் நாவல்களே அதிகமாய் கிடைக்கும். (அவ்வப்போது அவற்றை வாங்கினாலும் பெரும்பாலும் சேகரித்து வைத்ததில்லை, சர்குலேசன் முறையிலேயே பலவற்றை படித்து விடுவோம்) அதை தவிர பாட்டு புத்தகங்களும் சில மஞ்சள் பத்திரிகைகளும் அக்கடைகளில் வைத்திருப்பார்கள். காமிக்ஸ் கிடைத்த கடைகள்  வின்சென்டிலும், அதை தாண்டினால் வள்ளுவர் சிலை மற்றும் கலெக்டர் ஆபீஸ் அருகிலும் இருந்தன. இரயில் மற்றும் பஸ் நிலைய அருகிலிருந்த கடைகளை தவிர்த்து இன்னும் சில இடங்களில் காமிக்ஸ் புத்தகங்கள் கொட்டி கிடந்தன. முக்கியமாக கீதாலயா  திரையரங்கை (அங்கு உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் ப்ரூஸ்-லீயின் பிக் பாஸ் படங்களை புத்தம் புதிய பிரிண்டில் 70mm திரையில் கண்டது கொசுறு தகவல்) சுற்றிய பகுதிகளில் ஏராளமாக பழைய புத்தக தள்ளு வண்டி கடைகள் நிற்கும். அங்குதான் நான் லயனில் வெளி வந்த சிறந்த டெக்ஸ் கதைகளில் ஒன்றான டிராகன் நகரத்தை வாங்கினேன்! என்ன, இலவச தாய விளையாட்டுதான் கிடைக்கவில்லை! அட்டை கிழிந்திருக்கும் காரணத்தினாலேயே நான் பல காமிக்ஸுகளை வாங்காமல் விட்டதுண்டு! அவ்வாறிருக்க, பின்னடித்த நிலையில், வார்னிஷ் மெருகுடன் புத்தம் புதிய, நான் கேள்விப்பட்டிராத பல முத்து காமிக்ஸ் புத்தகங்கள் அங்கே காணக்கிடைத்தால் அதுவும் பாதி விலையில் கிடைத்தால் குஷிக்கு கேட்கவும் வேண்டுமா? அவ்வாறு கீதாலயா அருகில் சில முத்து காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கினேன். அவை போலியாக இருக்கக்கூடும் என்ற ஐயம் இப்போதும் எனக்கு உண்டு! ஏனென்றால்,   அப்போதெல்லாம் முத்து காமிக்ஸ் மறுபதிப்பு செய்யப்பட்டால், அட்டை படத்தை மாற்றி, விலையை ஏற்றி, ஒரு புதிய வெளியீடு எண்ணையையும் குடுத்து விடுவார்கள்! ஆனால் நான் குறிப்பிடும் புத்தகங்களில் அந்த மூன்றாவது விஷயம் மட்டும் மிஸ்ஸிங்! புதிய அட்டை, புதிய விலை ஆனால் வெளியீடு எண் மட்டும் எழுபதுகளில் வந்த அதே எண்! இவை போலியா அல்லது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்டவைதானா? இந்த கேள்விக்கு விஜயன் சாரால் மட்டுமே பதில் கூற இயலும் என்று நினைக்கிறேன் (அவர் இந்த பதிவை படிக்கும் அபாக்கிய நிலை நேர்ந்தால்!). போலியோ இல்லையோ, ஜானி நீரோ ஜாலியாக ஸ்டெல்லாவுடன் போஸ் கொடுக்கும் அந்த அட்டைப்படமும், அப்புத்தகத்தின் கடைசி பக்கமும் நீங்களும் கண்டு களிக்க, இதோ! : காணமல் போன கைதி! – முத்து (மறு!) வெளியீடு எண் – 35    [] எனது காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு முக்கிய பகுதி சேலத்தில் பழைய புத்தக கடைகளில் வாங்கியவையே!எல்லாம் என் கைப்பட பார்த்துப் பார்த்து வாங்கியது என்பதால், யார் கையும் அதன்மேல் படாமல் பொக்கிஷமாய் பொத்திப் பாதுகாத்து வருகிறேன்! உள்பக்கங்களை ஸ்கேன் செய்தால் அவை மடங்கிவிடுமோ என்ற அச்சத்திலேயே அதை தவிர்க்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! நடுவில் கிரிக்கெட் பைத்தியம் முற்றிப் போனதால் கொஞ்ச காலம் காமிக்ஸ் வாங்காமல் தெரு கிரிக்கெட் விளையாடி கழிந்தது! கை டென்னிசும் ரொம்ப பிரசித்தம்! இன்னும் சில காலம் தபால்தலை மற்றும் நாணய சேகரிப்பில் கழிந்தது! ராணி காமிக்ஸின் தரம் தாழ்ந்த அந்த காலகட்டத்தில் எனது காமிக்ஸ் ஆர்வமும் கொஞ்சம் தடுமாற்றமாய்தான் இருந்தது! எனது உயிர் தோழர்களாக அப்போது இருந்த கணேஷ் மற்றும் ஓம்ப்ரகாஷுக்கு காமிக்ஸ் ஆர்வம் இல்லாததும் ஒரு காரணமாய் இருந்திருக்க கூடும்! எட்டாவது அரையிறுதி தேர்வு நடந்த சமயம், கிரிக்கெட் ஆர்வகோளாறு காரணமாக கணக்கு பரீட்சை அன்றைக்கு இருப்பதையே மறந்து, நாள் முழுக்க விளையாடி விட்டு அடுத்த நாள் பள்ளி சென்று நின்றால், சாரி நீ ஒரு நாள் லேட் என்றார்கள்! அதோடு கிரிக்கெட்டுக்கு தடா விழவும், மறுபடி படிப்பில் நாட்டம் செலுத்தலானேன் (பாட புத்தக நடுவில் புதைத்த காமிக்ஸ் புத்தக படிப்பில்தான்!) நடுநடுவில் எனது சொந்த ஊரான மதுரை செல்ல வாய்க்கும் போது அங்கும் விடாமல் கடைகள் தேடி அலைவேன்!  இப்படி இனிமையாக கடந்த அந்த நேரத்தில் புயலாய் ஒரு தகவல் என்னை தாக்கியது! 1991 – எனது அப்பாவுக்கு மீண்டும் இடமாற்றமாகி விட்டிருந்தது! நண்பர்களை பிரியப்போகிற துயரத்துக்கு இணையாக, நான் அறிந்த பழைய புத்தக கடைகளையும் அவற்றின் உரிமையாளர்களையும் இனிமேல் என்னால் பார்க்க முடியாதே என்ற துயரம் என்னை அழுத்தியது! என்னை பொறுத்தவரையில் சேலத்தை தவிர வேறு எங்கும் இவ்வளவு புத்தகங்கள் கிடைக்காது என்றே நம்பிக்கொண்டிருந்தேன். எனது புத்தக வேட்டை இனி கனவு கோட்டைதானா?  அடுத்த வேட்டைக்களம் எது? விரைவில்…. 47 காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் மூன்று! அதியமான் கோட்டையில் இரட்டை வேட்டையர்! முன்கதை சுருக்கம்: ஆமா…! இவன் நைனாக்கு மூணு வருஷம் ஒரு தபா ட்ரான்ஸ்பர் ஆச்சாம், இவனும் பொட்டி படுக்கைய கட்டிகினு, பழைய பொஸ்தக மூட்டயோட ஊரெல்லாம் சுத்துனானாம்! அய, பிச்சகாரன் தோத்தான்பா! பார்ட்டு – பார்ட்டா கொல்லுரானே… இனி… மாற்றலான இடம் – தர்மபுரி! சேலத்தில் இருந்து கூப்பிடு தூரம்தான் என்பது மட்டும் ஒரு ஆறுதலாய் இருந்தது. சேலத்தில் மீதமிருந்த நாட்களில், நான் பரபரப்பாய் இயங்கினேன். முடிந்த வரை காமிக்ஸ் இதழ்களை வாங்கித் தள்ளினேன்! பக்கத்து மளிகை கடையில் இரண்டு தடித்த பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியின் காலி அட்டை பெட்டிகளை வாங்கி (சிறிய சைஸ் பெட்டிதான் பொறாமை வேண்டாம்!),  எனது காமிக்ஸ் சேகரிப்பை அவற்றில் சீராக அடுக்கினேன். பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் செய்தித்தாள்களை கசக்கி நிரப்பினேன் – புத்தகங்கள் அசையாதிருக்க வேண்டுமென்று. பின்னர் அப்பெட்டிகளை சணல் கயிறால் கட்டி, அக்கட்டுக்களின் மேல் பிரவுன் ஷீட் ஒட்டி கிட்டத்தட்ட ஒரு மினி பேங்க் லாக்கர் போல அலங்கரித்தேன்! நல்ல வேளை, இந்த தடவை பார்சல் சர்வீசில் வீட்டு சாமான்களை அனுப்பாமல் ஒரு மினி வேனை அப்பா ஏற்பாடு செய்திருந்தார்! அதனால் அலுங்காமல் குலுங்காமல் புத்தகங்கள் தர்மபுரி புது (வாடகை) வீட்டில் வந்திறங்கின! இலக்கியம்பட்டி – செந்தில் நகரில் எங்கள் வீடு… வீட்டுக்கு பின்னாலேயே இருந்த அரசு மேனிலை பள்ளியில் சேர்த்தார்கள். ஒன்பதாவது வகுப்புக்குள் நுழைந்த முதல் நாளன்றே நான் இன்றும் மனதளவில் உயிர் தோழனாய் கருதும், ஆனால் எனது தவறால் தொடர்பறுந்த ஜெகன் அறிமுகமானான்! வார்த்தைக்கு வார்த்தை நண்பா போட்டு பேசும் அவனது கபடமில்லாத நட்பு இன்னும் என்னை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது! உறுத்தல் குறையும் ஒரு உன்னத நாளில் உன்னை தேடி வருவேன் நண்பா! [:(] என் புதிய சகா ஜெகன், எனது சக வேட்டையனானான்! அவனுக்கு தர்மபுரி பரிச்சயமான ஊர் என்பது மிகவும் வசதியாக போனது! ஒவ்வோர் மூலையிலும் பழைய புத்தக கடைகளை அறிமுகபடுத்தி வைத்தவனும் அவனே! என்னிடம் அப்போது சைக்கிள் இல்லாத காரணத்தினால், அவனே என்னை டபிள்ஸ் உக்கார வைத்து சுற்றுவான், நன்றாக ஓட்டக் கற்றுக் கொடுத்தவனும் அவனே (நன்றி நண்பா!). ஒன்பதாவது சேர்ந்து பல மாதங்கள் கழித்துதான் நாங்கள் ஒரு சைக்கிள் வாங்கினோம்! சனி, ஞாயிறு விடாமல் சைக்கிளில் கிளம்பி விடுவோம் காமிக்ஸ் வாங்க! தர்மபுரி பேருந்து நிலையம் அருகேதான் பழைய புத்தக கடைகள் விரவிக்  கிடந்தன! NH7 வழியாக செல்லாமல், பின்புறம் இருப்புப் பாதையை ஒட்டிய ஒற்றையடி பாதையில் செல்வோம் (இப்போது மாறியிருக்குமோ?). பலமுறை தண்டவாளங்களில் நடந்தே கடந்திருக்கிறோம். வீட்டிலிருந்து சுமார் 2.5km  தூரம் அப்போது அவ்வளவு தொலைவாக உணர்ந்ததில்லை! பல பிளாட்பார கடைகள் இருந்தாலும் அவற்றில் எனக்கு பிடித்தமான கடை ஒன்று இருந்தது! சிமெண்ட் மூட்டை கவர்களை ஒன்றாக இணைத்து தைத்த விரிப்பில் உட்கார்ந்து, அதன் மேலே புத்தகங்களை பரப்பி, அழுக்கான ஆனால் அன்பான கிழவர் ஒருவர் அவற்றை விற்று வந்தார்! வாரா வாரம் சென்று பரிச்சயமான காரணத்தினால் எங்களுக்காக பிரத்தியேகமாக பல காமிக்ஸுகளை விரிப்பின் அடியில் மறைத்து வைத்திருப்பார். அந்த தாத்தாவிடம்தான், என் சேகரிப்பிலியே மிகவும் அரதப்பழசான புத்தகமும் கிடைத்தது! அது முத்து வெளியீடு எண் 3. அப்புத்தகத்தை எப்போதாவது எடுத்து பார்த்திடும் போது அவரின் நினைவலைகள் தாக்கிடும்! இன்னும் தர்மபுரியில் அதே இடத்தில் இருப்பார், ஆனால் புதியதாய் கடை வைத்து முன்னேறி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்வேன்! அட்டையில்லா அப்புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் ஸ்கேனை இப்பதிவில் அந்த அன்பு கிழவருக்கு சமர்ப்பிக்க எண்ணினேன்! இரண்டு நாள் தேடியும் அந்த புத்தகம் என் கையில் சிக்காததால் பிறிதொரு நாளில் அதை இப்பதிவில் இணைத்திடுவேன்!:( ஜெகனோடு சகவேட்டையாடுவது எனக்கு பிடித்தமான காரியமாய் இருந்தாலும், அதில் சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்தன. சேலத்தில் இருந்த போதாவது பள்ளி செல்லும் பேருந்து கட்டணத்தை மிச்சம் பிடித்து காமிக்ஸ் வாங்கினேன். தர்மபுரி வந்ததில் அந்த வாய்ப்பும் பறிபோனது (வீட்டின் பின்புறம் செல்ல பஸ் சர்வீஸ் இருக்க வாய்ப்பில்லைதான்!). அதனால் நான் வாங்கும் காமிக்ஸை அவனும், அவன் வாங்கியதை நானும் மாற்றி படித்துக்கொள்வோம். நல்ல வேளையாக, அவ்வப்போது அம்மா கொடுத்த பாக்கெட் மணியை இதற்காகவே ஒதுக்கி வைப்பேன். இருவரும் சேர்ந்து சென்று வாங்கினால் கிடைக்கும் வேட்டையை பங்கு போட வேண்டி இருந்ததால் நாங்கள் அவ்வப்போது தனியாகவும் வேட்டையாட ஆரம்பித்தோம்! சென்ற பதிவில், ராணி காமிக்ஸின் தரம் தாழ்ந்ததால் பல வருடங்கள் அதை வாங்காமல் புறக்கணித்ததை பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? (அதை பற்றி விரிவாக ரபிக்கின் இந்த வலைபதிவில் படித்திடலாம்!) ஜெகன் மட்டும் அறிமுகமாகாமல் போயிருந்தால் முகமூடி மாயாவியின் அற்புதமான சில கதைளை தமிழில் படிக்காமலேயே போயிருப்பேன்! மாயாவி கதை வெளியிடும்போது மட்டும் ராணி பதிப்பகத்தாரின் மொழிபெயர்ப்பில் சற்றே தரம் கூடுவதை கண்டு வியந்திருக்கிறேன். வகுப்பறையில், PT பீரியடில் மற்ற நண்பர்களோடு சேர்ந்து ராணி காமிக்ஸின் மாயாவி இதழ்கள் படித்து உடற்பயிற்சி செய்வோம்… (பிரகாஷ் குழுமத்தின் இதழ்களை மட்டும் மற்ற நண்பர்களுடன் பகிர்வதை கவனமாய் தவிர்த்துவிடுவேன், திரும்ப கிடைக்காது என்பதுதான் காரணம்!). பல கதைகள் மொக்கையாக இருந்திட்டாலும், ராணி காமிக்ஸின் மொழிபெயர்ப்பு கண்ணீரை வரவைத்திட்டாலும், லீ பாகின் வசீகரிக்கும் ஓவியங்களுக்காவே வெறித்தனமாய் ஊரிலுள்ள பழைய புத்தக கடை ஒன்று விடாமல் சல்லடை போட்டிருக்கிறேன்! 1984-இல் பற்றிய ராணி தீ மீண்டும் ஒருமுறை பிரகாசமாய் சில வருடங்கள் எரிந்தது! ஜெகனது நினைவாக, அவனுக்கும் எனக்கும் (அந்த காலகட்டத்தில்!) மிகவும் பிடித்த ஒரு மாயாவி கதையின் கவர் ஸ்கேன் இதோ! நெருப்பு கக்கும் கழுகு – ராணி காமிக்ஸ் வெளியீடு எண்: 168   [] பி.கு. 1 : ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி உபயோகித்த “சிகரெட் லைட்டர் பிஸ்டல்”, மாயாவியிடம் இருந்து சுடப்பட்டதே ஆகும்! அதை மாயாவி கையில் வைத்துக்கொண்டு காமெடி பண்ணும் அழகை மேலே காணலாம்[:)] பி.கு. 2 : “அவள் தொடுத்த அம்பு!” – அட்டகாசமான வண்ணக்கலர் படத்தை காண வேண்டுமென்றால் அடுத்த பதிவை தவறாமல் படியுங்கள் [;)] இந்த பதிவில் ஓவராய் உணர்ச்சிகளை பிழிந்து, உங்களை சித்திரவதை செய்ததிற்கு மன்னிக்கவும்! அதை சரி கட்டிடும் வகையில் நான் செய்த சில காமெடி டெர்ரர்கள் அடுத்த பதிவில்! 48 காமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் நான்கு!   ------------  [] வாண்டுமாமா ------------ வாண்டுகளுக்கோர் மாமா! – காமிக்ஸ் வேட்டை நெடுந்தொடரில், இந்த அத்தியாயம்  திரு.வாண்டுமாமா அவர்களுக்கு சமர்ப்பணம்! தமிழில், தற்போது சிறுவர் இலக்கியம் என்பது பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் காணக்கிடைக்காத ஒன்று! மிஞ்சி போனால் இரயில் பயணங்களின் போது, மகாமட்டமான தாளில் அச்சிடப்பட்ட பீர்பால், தெனாலிராமன் அல்லது மொக்கை நீதிக்கதைகள் பத்து ரூபாய்க்கு கிடைத்திடலாம்! அவற்றையும் பெரிசுகள்தான் வாங்கிப் படிப்பார்கள்! அந்த காலத்திலும் நிலைமை அவ்வளவு பிரமாதமாக இருந்திடவில்லைதான்! இருப்பினும் வாண்டுமாமா, முல்லை தங்கராசன் உள்ளிட்ட வெகு சில பெயர் சொல்லும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்தார்கள்! முதலில் படியுங்கள், காமிக்ஸ் வேட்டை பாகம்: ஒன்று, இரண்டு & மூன்று! தர்மபுரியில் இருந்த கால கட்டத்தில் (1991-93) புதிது புதியதாய் சில காமிக்ஸ் இதழ்கள் முளைத்து கொண்டு  இருந்தன! அவற்றில் முக்கியமானது பார்வதி சித்திர கதைகள்! அயல் நாட்டு படக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டால் காமிக்ஸ் என்றும் உள்நாட்டு தயாரிப்புகள் சித்திர கதைகள் என்றும் அழைக்கப்படுவது விசித்திரமான ஒன்று! பார்வதியில் வெளியான சித்திர கதைகளில் பெரும்பாலானவை வாண்டுமாமா அவர்கள் சிறுவர்களுக்காக 1970-களில் படைத்த உலகத்தரம் வாய்ந்த கதை தொடர்களே / தொகுப்புகளே! +-----------------+-----------------+-----------------+-----------------+ | --- | - | ---- | ---- | | --------------- | --------------- | --------------- | --------------- | |  [] |  [] |  [] |  [] | | ப | | அற | அற | | ார்வதி – இதழ் 1 | ஓவியம் – ரமணி! | ிமுக பக்கம் – 1 | ிமுக பக்கம் – 2 | | --- | - | ---- | ---- | | --------------- | --------------- | --------------- | --------------- | +-----------------+-----------------+-----------------+-----------------+ வாண்டுமாமாவின் கதையமைப்பில் – ராமு,  செல்லம், ரமணி, கோபன் போன்ற திறமை வாய்ந்த ஓவியர்களின் கைவண்ணத்தில் மாதா மாதம் அற்புதமான கதைகள் வெளிவர ஆரம்பித்தன! வழக்கம் போல, லயன்-முத்துவே கதியென கிடந்த எனக்கு இப்புத்தகங்கள் வெளியானது முதலில் சில மாதங்கள் வரை தெரியவில்லை! ராணி காமிக்ஸ் -  மாயாவியை எனக்கு அறிமுகப்படுத்தியது போல, இதை அறிமுகப் படுத்தியதற்கும் எனது உயிர் நண்பன் ஜெகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! இருந்தாலும் வாண்டுமாமா எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தார், பூந்தளிர் புண்ணியத்தில்! அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற இதழ்களில் வெளிவந்த பல சரித்திர, மாயாஜால கதைகள் எனக்கு அவ்வளவாக பிடித்ததில்லை – அவைகளுக்கான விளக்க சித்திரங்களிலும் ஒரு தமிழ்த்தன்மை இருக்காது! (பெரும்பாலானவை ஆந்திர தேசத்து படைப்புகள் என நினைக்கிறேன்). அவ்வகையில் பூந்தளிர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று – அதற்கு முக்கியதொரு காரணம், திரு. வாண்டுமாமா / செல்லம் கூட்டணியில், நமது ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகள் வெளியானதுதான்! எனவே, பார்வதி சித்திர கதைகள் சட்டென்று பிடித்து போனதில் வியப்பேதும் இல்லைதான்! ---------------  [] அரஸ் – அட்டை! --------------- ------------------  [] ம. செ. – ஓவியம்! ------------------ வாண்டுமாமா அவர்கள், கௌசிகன் அவதாரத்தில் சற்றே முதிர்ந்த ரசனைக்கு எழுதிய “அறிவின் விலை ஒரு கோடி” என்ற “சித்திர புதினம்” வகை இதழும் பார்வதியில் வெளியானது! இதன் சிறப்பம்சம், இதற்கு ஓவியம் வரைந்தவர் எனக்கு(ம்) மிக மிக பிடித்தமான திரு. மணியம் செல்வன் அவர்கள்! (அட்டை பட ஓவியம் மட்டும் அரஸ் வரைந்தது!). ஜெ (ஜெயராஜ்) அவர்கள் பெண்களை வரைந்தால் அது கிளர்ச்சியூட்டும் வகையில் இருக்கும்! மாருதி அவர்களின் தெய்வீக பெண்களும், பெண்மை மிளிரும் ஆண்களும் எனது ரசனைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர்! எனது பார்வையில் பெண்களை பெண்களாக வரைந்த மிகச்சில ஓவியர்களில் ம.செ.வும் ஒருவர்! --------  [] கபீஷ்! -------- ----------------  [] வேட்டைக்காரன்! ---------------- இவற்றை தவிர, பூந்தளிரில் வெளியான கபீஷ் மற்றும் வேட்டைக்கார வேம்புவின் சித்திர சிறு கதைகள், பார்வதியில் தொகுப்புகளாய் வெளிவந்தன! இவைகள் வட இந்திய படைப்புகள்தான் என்றாலும் நம்மால் ரசிக்க முடிந்ததற்கு காரணம் அழகிய ஓவியங்களும், எளிமையான கதையம்சமும்தான்! தமிழ் காமிக்ஸ் இதழ்களுக்கே உரித்தான, “காலப்போக்கில் தரமிழக்கும் நோய்” பார்வதியையும் தாக்கியது! வாண்டுமாமா மற்றும் பூந்தளிர் சரக்கு தீர்ந்து போக ஆரம்பித்ததால், திடீரென்று ஒரு ‘பாண்டுமாமா’(?!) உருவானார்! மனதில் தங்காத சில வட இந்திய / அயல்நாட்டு கதைகள் சுமாரான மொழிபெயர்ப்பில் வெளியாகின! (இரும்புக்கை) மாயாவி என்ற பெயர் அட்டையில் இருந்தாலே மலிவான சரக்கும் விற்று விடும் என்ற ஒரு கால கட்டம் முன்பிருந்தது! அதே பாணியில் வாண்டுமாமாவின் பெயரை உல்டா செய்து கதைகள் வெளியிட்டதிலேயே அவர் எந்த அளவு பிரபலமாக இருந்தார் என்பதை எளிதில் உணரலாம்! -------------  [] பாண்டுமாமா! ------------- -------------  [] சுமார் கதை! ------------- சமீபத்தில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாண்டுமாமாவின் “மர்ம மாளிகையில் பலே பாலு”  வாங்கியபோது, பார்வதி சித்திர கதைகளின் ஞாபகம் ஒரு கணம் அதி பிரகாசமாய் ஒளிர்ந்து மறைந்தது! மாணவ பருவத்தில், இந்த கதைகள் கற்பனை கிணற்றினை வற்றாது கிளறிய அந்த இனிய காலகட்டம் திரும்பிட இனி ஒருபோதும் வாய்ப்பில்லைதான் – உயரிய தாளில், கனத்த புத்தகமாய் பாலுவை மீண்டும் படிக்க கிடைத்தாலும்! பத்து ருபாய் பெறாத ஒரு ப்ளாக் ஆரம்பித்தாலே விளம்பரம் தேடும் இந்த காலத்தில், அவ்வளவு புகழ் இருந்தும் அதை சுய ஆதாயத்துக்கு பயன்படுத்தாத ஒரு நேர்மையான, எளிமையான மனிதராக வாண்டுமாமா அவர்கள் இருந்திருக்கிறார் என்பதை எண்ணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது! அதற்கு ஒரு சிறு சான்று, பார்வதி – பதிப்பாசிரியர் திரு.ஹரிராமனின் கீழ்க்கண்ட கடிதம்! ஏப்ரல் 21 அன்று பிறந்தநாள் காணும் வாண்டுமாமா அவர்களை வாஞ்சையுடன் ஒருமுறை நினைவு கூர்வோம்! ----------------------  [] பிறந்த நாள் – ஏப் 21 ---------------------- -------------  [] வாண்டுமாமா! ------------- பொறுமையாய் படித்ததிற்கு நன்றி நண்பர்களே! விரைவில் ரகளையான பல அனுபவங்களுடன், காமிக்ஸ் வேட்டை அத்தியாயம் ஐந்தில் உங்களை சந்திப்பேன்! -தொடரும்- வாண்டுமாமா பற்றிய சில சுவையான பதிவுகள் / தகவல்கள்: 49 பிருந்தாவனமும் ப்ளேட்பீடியாவும்! அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களே! நான் உங்களுக்கு இம்மியளவும் இதற்கு முன் அறிமுகமில்லாதவன் என்ற போதும், உங்கள் வலைத்தளத்தில் எனது வேண்டுகோளுக்கிணங்க, எனது காமிக்ஸ் (சித்திர கதை / சித்திர நாவல்) தளத்திற்கு அறிமுகம்  கொடுத்தமைக்கு மிக்க நன்றி! இன்றைய தேதியில் எஞ்சியிருக்கும் காமிக்ஸ் படிக்கும் வாசகர்கள் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்பது மிகவும் ஓர் ஆச்சரியமான விஷயம்! பெரும்பாலோருக்கு குறிப்பாக தமிழில் காமிக்ஸ் வெளியாகின்றன என்ற சேதியே ஆச்சரியத்தை தரக்கூடியது என்பது எனக்கு ஆதங்கத்தைத்தான் தருகிறது :(. அந்த ஆதங்கத்தின் முதல் வெளிப்பாடே உங்களுக்கு நான் எழுதிய கடிதம். எஞ்சியிருக்கும் சொற்ப வாசகர்களிலும், பலர் காமிக்ஸ் இதழ்களை ஏதோ மஞ்சள் பத்திரிக்கை வாசிப்பது போல மற்றவர்களிடம் இருந்து மறைத்து படிப்பது இன்னொரு வேதனை தரும் சங்கதி! (நானும் அதை செய்திருக்கிறேன்). காமிக்ஸ் என்ற ஒரு சிறந்த காணும் ஊடகம் இதன் காரணமாய் வேகமாக மறைந்து வருகின்றது என்பதை ஜீரணிப்பதே கடினமாக உள்ளது. 1970 – 1990 காலகட்டத்தில் காமிக்ஸ் இதழ்கள் தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்திட்டன. பல பதிப்பகங்கள் அயல் நாட்டு மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளை அச்சேற்றின! இன்று எஞ்சி இருப்பன முத்து மற்றும் லயன் காமிக்ஸ் மட்டுமே (அவைகள் இரண்டும் ஒரே பதிப்பகத்தை சார்ந்தது என்பது வேறு விஷயம்). இவற்றை பதிப்பிக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் உரிமையாளர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காமிக்ஸ் பதிப்பில் பழம் தின்று விதை விதித்த அவர்களது நிறுவனத்திற்கும் தமிழில் காமிக்ஸ் வெளியிடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக இன்றளவும் இல்லை. லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் பல தடவை மரித்து உயிர்தெழுந்தது  ஒரு சோக சரித்திரம். இத்துறையில் ஒரு போட்டியாளரும் அவர்களுக்கு இல்லை என்பதே காமிக்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் துயரமான விஷயம்தான். அயல்நாடுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவரவர் வயதிற்கேற்ற காமிக்ஸ்கள் வாங்கி படித்து மகிழ்வது, புத்தக வாசிப்பே வெகுவாய் மரித்திட்ட தமிழ்நாட்டில் கைகூடுமா?!! அது வெறும் கனவாகவே இருந்திட கூடாது என்ற உத்வேகத்தில் என்னால் இயன்றதை செய்து வருகிறேன். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகிறேன்! உங்களது பதிலில் காமிக்ஸ் புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் அனுப்பி வைத்திட சொல்லி இருந்தீர்கள். நான் லயன் மற்றும் முத்து இதழ்களுக்கான ஒரு வருட சந்தா உங்கள் பெயரில் நாளை முதல் வேலையாய் கட்டவுள்ளேன். உடனே உங்கள் முகவரியை எனது மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்துங்கள்! நீண்டதாய் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த  கடிதத்தை பொறுமையாக படித்த உங்களுக்கும், உங்களது வலைத்தள பின்தொடர்வாள வாசக நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல! அன்புடன், -கார்த்திக் பெங்களூரு *** நீங்கள் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே வருகை எண்ணிக்கை எகிறியதை இதன் மூலம் காணலாம்! [] *** @ கேபிள்சங்கர்  & யுவகிருஷ்ணா: விரைவில் உங்களுக்கு தொல்லை அளித்திடுவேன்… [:)] உங்களுக்கும் எனது மனதார்ந்த நன்றிகள்! *** சில பயனுள்ள சுட்டிகள் (சின்ன சுட்டிகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான்!): முத்து & லயன் அதிகாரபூர்வமான தளங்கள்: http://www.lion-muthucomics.blogspot.com http://www.lion-muthucomics.com சக (மூத்த!) பதிவர்களின் தளங்கள் (எவ்வகையிலும் இவை வரிசைப்படுத்தப்படவில்லை!): http://www.comicology.in http://www.tamilcomicsulagam.blogspot.com http://muthufanblog.blogspot.com http://mokkaicomics.blogspot.in http://browsecomics.blogspot.in http://akotheeka.blogspot.in http://poongaavanamkaathav.blogspot.in http://kakokaku.blogspot.in http://kanuvukalinkathalan.blogspot.in/search/label/காமிக்ஸ் மேற்கண்டவை ஒரு சில மட்டுமே! விரைவில் கூடுதல் இணைப்புக்களை அளித்திடுவேன்! [:)] இப்பொழுது மணி கிட்டத்தட்ட 3am! *** ஜாக்கி சேகரின் வாசகர்கள் அல்லாதவர்கள் நலனிற்காக அந்த கடிதமும் அவரின் பதில் இடுகையும், கீழே! கார்த்திக்: Apr 3, 2012 திரு. ஜாக்கிசேகர் அவர்களே, நான் உங்கள் பதிவுகளை ஓரிரு வருடங்களாக படித்து வருகிறேன். இயல்பிலேயே பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி செல்லும் எனக்கு, மனதில் பட்டதை எழுதும் உங்கள் பாணி மிகவும் பிடிக்கும்! நான் காமிக்ஸ் புத்தகங்களின் பெரும் ரசிகன். இந்த காலத்து பள்ளி மாணவர்களும், கல்லூரி இளைஞர்களும் காமிக்ஸ் பற்றிய எந்த அறிதலும் இல்லாது அவற்றை குழந்தைகளுக்கான புத்தகங்கள் என நினைத்து புறக்கணிப்பது வேதனையை தருகிறது! உதாரணத்திற்கு லயன் காமிக்ஸ் ஆசிரியரின் இந்த பதிவை பாருங்கள்! இது குழந்தைகள் விஷயமல்ல! காமிக்ஸை விடுங்கள், பொதுவாகவே தமிழில் வாசிக்கும் வாடிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் உங்களை போன்ற நட்சத்திர வலை பதிவர்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து மிகவும் வியந்து போகிறேன்! கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா  மற்றும் உங்களுடைய சமீப பதிவுகளில் ஓரிரு பின்னோட்டம் எழுதி எனது காமிக்ஸ் பற்றிய வலைதளத்திற்கு சுட்டி கொடுத்தவுடனேயே  எனது வலைதளத்திற்கு வருவோர் எண்ணிக்கை கூடியது எனக்கு  மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! காமிக்ஸ் பற்றிய அறிதல் இல்லாத இத்தலை முறையினர் எனது பதிவுகளையும், எனது சக காமிக்ஸ் பதிவர்களின் (தோழர்களின்) வலைத்தளங்களையும் எனது  வலைத்தளத்தில் உள்ள சுட்டிகள் மூலம் பார்த்து காமிக்ஸ் பற்றி சற்றேனும் அறிந்து கொண்டால் அதுவே எனக்கு போதுமானது! நேரம் கிடைத்திடும் போது எனது தளத்தை ஒருமுறை வாசிக்க வேண்டுகிறேன்! அனுபவமிக்க உங்களுடைய கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும்! http://bladepedia.blogspot.com/ நான் உங்களுக்கு இக்கடிதம் எழுதிட முக்கிய காரணம், நான் உங்கள் தளத்தில் எனது தளத்திற்கு விளம்பரம் கொடுக்க விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க! நான் வெறுமனே பின்னூட்டமிட்டு எனது தளத்திற்கு இலவச விளம்பரம் அளித்தது உங்களை எரிச்சல் படுத்தி இருக்காது என்றே நம்புகிறேன். அவ்வாறிருந்தால், மன்னிக்கவும்! உங்கள் தள முகப்பின் மேற்பகுதியில் ஒரு மாதம் விளம்பரம் கொடுத்திட நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள். மிக்க நன்றி! அன்புடன், கார்த்திக் ஜாக்கி சேகர்: அன்பின் கார்த்திக், படிக்கும் விஷயம் பலரிடம் சென்று சேரவேண்டும் என்பது நல்ல விஷயம்.. இதுக்கு காசு எல்லாம் வேண்டாம்… உங்கள் கடிதத்தை நான் அப்படியே பிரசுரிக்கின்றேன்..   அதில் இருக்கும் தொடுப்பு மூலம் என் தளத்துக்கு வருபவர்கள் மற்றும் காமிக்ஸ் மேல் விருப்பம் இருப்பவர்கள்.. நிச்சயம் உங்கள் தளம் வந்து வாசிப்பார்கள்.. உங்களிடம் காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் கொடுக்கவும் படித்து வெகுநாள் ஆகின்றது… நன்றி பிரியங்களுடன் ஜாக்கிசேகர். 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  - தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !