[] போராளிகளின் சிந்தனைகள் ஆர்.பட்டாபிராமன் freetamilebooks.com Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 போராளிகளின் சிந்தனைகள் 1. போராளிகளின் சிந்தனைகள் 1. ஆசிரியர் பற்றி 2. 1. லோகியாவின் பார்வையில் மார்க்சியம் 1. லோகியா பார்வையில் மார்க்சியம் - II 3. 2. P C ஜோஷி 1. P C ஜோஷி - II 4. 3. தோழர் பி டி ரணதிவே (B T Ranadive) 5. 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் 1. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - II 2. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - III 3. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - IV 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - V 5. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - VI 6. 5. தோழர் டாங்கே - DANGE 7. 6. மது லிமாயி (MATHU LIMAYE) 8. 7. நீட்சே Nietzche 9. 8. தோழர் அஜாய்கோஷ் 10. 9. மாவீரன் பகத்சிங் வாழ்க்கை 1. பகத்சிங் - II 2. பகத்சிங் - III 11. 10. விடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின் 1. எங்களைப் பற்றி - Free Tamil Ebooks போராளிகளின் சிந்தனைகள் போராளிகளின் சிந்தனைகள்   ஆர்.பட்டாபிராமன்   மின்னூல் வெளியீடு : freetamilebooks.com   உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் & அட்டைபடம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   ஆசிரியர் பற்றி - http://www.pattabiwrites.in/ - pattabieight@gmail.com - Ph: 9443865366 1. லோகியாவின் பார்வையில் மார்க்சியம் நவீன அரசியல் சித்தாந்தத்தில் ராம் மனோகர் லோகியா முக்கிய பங்களித்தவர். விடுதலை போராட்டம், காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட், சோசலிஸ்ட் இயக்கங்கள் என பயணித்தவர். தான் சரி என கண்டறிந்தவற்றிற்காக போராடியவர். மார்சியம்- காந்தியம்- ஆசியவகைப்பட்ட ஜனநாயக சோசலிசம் என பேசிவந்தவர். இந்திய வரலாற்றை வெறும் வர்க்க போராட்டம் என சுருக்கிவிடமுடியாது. சாதிய வரலாறை பார்க்காமல் இந்திய வரலாற்றை அய்ரோப்பிய நான்கு கட்ட சமுக அமைப்பு என மார்க்சிய விளக்கத்தினுள் அப்படியே பொருத்திவிட முடியாது என பேசியும் எழுதியும் வந்தவர் . சாதி குறித்த விரிவான உரையாடலை நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் நடத்தியவர். லோகியா மார்க்சை விட காந்தியிடம் நெருக்கமாக வந்தவர். நேருவுடன் நட்பும் கடும் எதிர்ப்புகளையும் கொண்டிருந்தவர். ஜெயபிரகாஷ் நாரயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் போன்றவர்களுடன் ஒன்றாக நின்று பணியாற்றியவர். அவர்களுடன் கடுமையான வேறுபாடுகளை பகிரங்கமாகவும் வைத்தவர். சோசலிஸ்ட் இயக்கம் மிக கடுமையான உடைவுகளுக்கு உள்ளாகி தனது அரசியலை நீர்க்க செய்துகொண்டுவிட்ட இன்றைய சூழலிலும் அவரது எழுத்துக்களின் பொருத்தப்பாடு குறித்த உரையாடல்களை உதிரியாக உள்ள லோகியா சிந்தனைவாதிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவரது சில முக்கிய ஆக்கங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடத்திய மார்க்சியம்- சோசலிசம் குறித்த உரையாடல்கள், சமத்துவம் குறித்த பேச்சுகள், உலக மனம்- மானிடவர்க்கம் போன்றவை தொடர் விவாதத்திற்கு உரியனவாக இருக்கின்றன, அவரது எழுத்துக்களில் சில முக்கியமானவை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வந்துள்ளன. மார்க்ஸ்- காந்தி- சோசலிசம், மார்க்சிற்கு பிந்திய பொருளாதாரம், Meaning of Equality, caste essays- speeches, சரித்திர சக்கரம் போன்றவை பொருட்படுத்த வேண்டிய ஆக்கங்களாக உள்ளன. மார்கிசயர் பேசிவருகிற வரலாற்று பொருள்முதல்வாத சமுக கட்டங்களை அப்படியே உலக நாடுகள் முழுமைக்கும் பொருத்த முடியாது என்பது அவரது முடிபு. இந்திய மார்க்சியர் சிலர் அடிமை சமுதாயம் இருந்ததாக பேசுவது அவருக்கு திரித்துக் கூறலாகவே படுகிறது. அதே போல் உலகம் முழுமையும் ஒரே கட்டத்தில் நிலபிரபுத்துவமும் ஏற்பட்டிருக்கமுடியாது. சோசலிசம் ஏற்பட்டு விஞ்ஞானத்தை பூரணமாக பயன்படுத்திவிட்டால் பொன்னுலகம் என்று பேசுவது யாந்திரிகமானது போன்ற விமர்சனங்களை லோகியா தொடுக்கிறார். ஹெகல் மனித ஆன்மாவின் வளர்ச்சி என்றார். சிலரின் விடுதலையிலிருந்து அனைவருக்குமான விடுதலை நோக்கி என அவர் வரலாற்றை விவரித்தார். மார்க்ஸோ வரலாறு என்பதே வர்க்கப்போராட்டத்தின் வரலாறு தான் என்கிறார். வர்க்கப்போராட்டம் என்பதை லோகியா மறுக்கவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு பாட்டாளிகளுக்கான வேறுபாடு என்ற ஒன்றை மார்கஸ் கவனிக்க தவறினார் என்கிறார் லோகியா. உலக ரகசியங்களை வெளிப்படுத்திய பொருள்முதல்வாத விளக்க சாவி மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால் அதன் ஒளி எந்த இருளை அகற்றியது என தெரியவில்லை என்கிறார். ஒன்றுக்கு மேற்பட்ட விதிவிலக்குகள் கொள்ளும் எதுவும் எப்படி பொதுவிதியாக இருக்கமுடியும் என கேள்வி எழுப்பினார். இந்தியாவும், எகிப்தும் ஒருகாலத்தில் மிக உன்னத நிலையில் இருந்தன. ஆனால் அவை ஏன் விழுந்தன என்பதை வரலாற்று 4 சமுக அமைப்புகள் பார்வையில் விளக்க முடியவில்லை. வ.பொ.மு கண்ணோட்ட்த்தில் முன்னும் பின்னுமான நிலைகளில் எப்படி மாறுபாடுகள் இச்சமுகங்களில் ஏற்பட்டன என்ற விமர்சனபூர்வமான கேள்வி அவரிடம் வெளிப்பட்டது. பொருள்முதல்வாதம் கூட ஐரோப்பிய பெருமிதவாதமாகவே தனக்கு படுவதாக அவர் எழுதினார். ஒரு குறிப்பிட்ட நிலையில் வளர்ச்சி பெற்றதாக விளங்கும் சமூகம் இருவகை போராட்டங்களை சமாளிக்கிறது. உள் வர்க்கப்போராட்டங்கள், வெளி சக்திகளுடன் போராட்டங்கள். நமது நாட்டில் வர்க்கப்போராட்டங்கள் சமாளிக்கப்பட சாதிய உருவாக்கங்கள் நடந்தன. உள்ளே சாதிய தாக்குதல்கள், வெளிசக்திகளின் தாக்குதல்கள் என சமாளிக்க முடியாமல் போகும்போது அழிவை தவிர வேறு வழி என்ன என்கிறார் லோகியா. இதனால் வர்க்கங்களை ஒழிக்கவேண்டும் என்ற ஆர்வம் யாரைவிடவும் தனக்கு குறைவானதல்ல எனவும் பேசுகிறார். ஒரு நாகரிகத்தில் சமத்துவம்- வர்க்கம்- சீர்குலைவு, நீதி- வருணம்- தேக்கநிலை என சக்கர சுழற்சி நடைபெறுகிறது. புராதன இந்தியா, ரோம் ஆகியவற்றின் வர்க்கங்களும் நவீன அய்ரோப்பிய வர்க்கங்களும் வெவ்வேறானவை. உலக நிலைகளை கண்ணுற்றால் ஒரே உலகம், வர்க்கமற்ற சமுகம் உருவாகிவிடும் என்பதற்கான நம்பிக்கை பொய்த்துவருகிறது என தனது கவலையை அவர் பகிர்ந்துகொண்டார். உள்நாட்டில் அனைத்தும் திருப்தி- வெளிஉலகில் அமைதி தவழும் பொற்காலம் என்பது வெறுங்கனவாகவே தோன்றுகிறது என்றார். சமுதாயங்களின் போக்கு மனித வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதுபோல் தோற்றமுற செய்யலாம். அதற்குரிய புத்திசாலி திட்டம் என ஏதும் காணப்படவில்லை என விசனப்படுகிறார். தானும் தன் குடும்பமும் சுகமாக வாழவேண்டும் என்கிற வேட்கைதான் உயரிய தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு அடிப்படை. சோவியத் ருஷ்யாவும், அமெரிக்காவும் இந்த தூண்டலில்தான் பாடுபடுகின்றனர். சொத்துரிமை என்பது இங்கு பிரச்சனையாகவில்லை. தொழில் அபிவிருத்தி மூலம் வாழ்க்கைத்தர உயர்வு என இரு சமுகங்களும் முதலாளித்துவம்- கம்யூனிசம் என இரு சாராரும் நம்புகின்றனர். ருஷ்யாவில் உணவு பிரச்சனை தீர்க்கப்பட்டது சாதனை என பேசப்படுகிறது. நிலப்பரப்பு, குறைந்த மக்கள் சமுகம் ஒன்றை இந்தியா போன்ற அதிக மக்கள் குறைந்த நிலப்பரப்புடன் ஒப்பிட முடியாது. ருஷ்யாவில் சதுர மைல் ஒன்றில் 20 பேரும், இந்தியாவில் 300 பேரும் வாழ்கிறார்கள். சரித்திர பூகோள நிலைகளை கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் ஒப்பீடும் அதே முறையை எடுத்துக் கொள்வதும் எதிர்மறை விளைவுகளைக் கூட உருவாக்கும் என்றார். வர்க்கம், போராட்டம், ஜனநாயகம் என்பதெல்லாம் கூட திரிக்கப்படுகிறது. என்றோ ஒருநாள் வரப்போகும் பொற்காலத்தின் பெயரால் அன்றாட தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன.. உடனடியாக பெறப்படவேண்டிய பலவற்றை தியாகம் செய்ய கோரப்படுகிறது. நல்லமுடிவு வரும் என சொல்லி தீய வழிகளில் அழைத்து செல்லப்படுகிறோம் என காந்திக்கு நெருக்கமாக வந்து தனது விமர்சன உரையாடலை முன்வைக்கிறார் லோகியா. இதே விமர்சனத்தை காந்தி பேசிவந்த ராமராஜ்யம் குறித்தும் மற்றவரால் சொல்லமுடியும். கருத்துமுதல்வாதம்- பொருள்முதல்வாதம் என நவீனமனம் இரண்டாக பிளவுபடுத்திவிட்டது. இரண்டிற்குமான முரண்பாடு தனக்கு தோன்றவில்லை என்றார் லோகியா. சரித்திரத்தில் நாம் பேசும் அசோகன், புத்தனைவிட புராண ராமனும் சிவனும் மக்களை கவ்வி பிடித்துள்ளனர். அவர்களைபற்றி மக்கள் அதிகம் பேசுவது ஏன் என வினா எழுப்பினார் லோகியா. அன்பு, பக்தி, தயை போன்ற புனைவுகள் அய்க்கியம் ஒன்றை உருவாக்குவதை நாம் பார்க்காமல் இருக்கக்கூடாது என்கிறார். மனிதகுல வாழ்விற்கு வரலாறு உரைநடை என்றால், தொடர்ந்து மக்களிடம் செல்வாக்கு செலுத்திவரும் புராண புனைவுகள் கவிதைகள் போல் இருக்கின்றன என்றார். வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, புராணங்களிலிருந்தும் கூட மனிதகுல வரலாற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். மதம் குறித்த விவாதத்தில் மதம் அபின் என்ற மேற்கோள்களுடன் நிற்க முடியாது. ஒழுக்கம், தனிநபர் குணநலன் மேம்பாடு ,பண்பாட்டுபோதனையில். கருணை புலனடக்கம் என்பதில் நாம் மதம் என்பதை ஒதுக்கமுடியாது என கருதினார். பொருளாதாரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் நிரந்தர பகைத்தனமை இல்லாமல் உறவு ஏற்படவேண்டும் என்றார். புரட்சிக்கு புனிதமான நோக்கத்துடன் உறவுகொள்ள வேண்டும்.. இல்லையேல் எழாது- நிற்காது என்றார். நல்ல ஒன்றை தீய வழிகளால் அடையமுடியாது என்கிற காந்தியத்திற்கு அவர் வந்து சேர்கிறார். முதலாளித்துவம்- கம்யூனிசம் என்று பேசும் நாடுகளின் நடைமுறை எந்த வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை- தன் நாட்டு மக்கள் உயர்வு என்பதே இருவருக்கும் உந்து சக்தி என சமதூர விமர்சன நிலைக்கு போனார் லோகியா. ’இருதுருவ மோதல்’ உலகிற்கு நன்மை செய்யவில்லை என்றார். அடிமைகள் எஜமானன் பக்கம் நிற்பது போலவே பிற நாடுகள் துருவம் சார்ந்து நிற்கின்றன என்றார். போராட்டமின்றி எந்த மாற்றமும் வராது என்பதை ஏற்கும் லோகியாவால் அது ரத்தக்களறி மூலம் வந்தால்தான் சிறப்பு என்பதை ஏற்கமுடியவில்லை. உலகம் அநீதிக்கு தலைவணங்காமை- சட்ட மறுப்பு என்ற வடிவங்களை உணரத் துவங்கிவிட்டது என்றார். சோசலிச மாநாடு ஒன்றில் எதிர்கால ஜனநாயகத்திற்கு இன்று சர்வாதிகாரம் என்பதும், தேச விடுதலைக்கு துரோகம் (வெள்ளையனே வெளியேறு போராட்டம்) செய்வதும்தான் கம்யூனிச வழிகளா என உரக்க கேள்வி எழுப்பினார். ஆச்சார்யா நரேந்திர தேவ் போன்றவர்கள் நாம் மார்க்சியவாதிகள் தான். மார்க்சியத்தை மீட்டவர்கள் என சொல்லலாம் என்று இடைமறித்ததைக்கூட கேலியாகத்தான் லோகியா பார்த்தார். அரசியல் செயல்பாடு என்பதில் எந்த ஒரு தனிமனிதனுடைய சிந்தனையையும் முழுமையாக மையம் கொண்டிருக்கக்கூடாது என வாதிட்டார் லோகியா.. அதேநேரத்தில் மனிதன் என்றுதான் நாம் சிந்தனையை ஆராயவேண்டியுள்ளது . அவர்கள் சிந்தனை உதவலாம் ஆனால் அதே ஆதிக்கமாகி அழுத்தக்கூடாது என்றார். காந்தி மார்க்ஸ் விஷயத்தில் இதை கூடுதல் பொறுப்புடன் பார்க்கவேண்டியுள்ளது என்றார். இதில் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் என்ற மார்க்சிய ஆய்வை லோகியாவால் ஏற்க முடிகிறதா என்பதை அறியமுடியவில்லை.. லோகியா பார்வையில் மார்க்சியம் - II மார்க்சின்பொருளாதார அம்சங்கள் மீது பெருமளவு தனது கருத்துக்களை மார்க்சிற்கு பிந்திய பொருளாதார ஆய்வில் முன்வைக்கிறார் லோகியா. பண்டம் உழைப்பு மதிப்பு, உபரிமதிப்பு, மூலதனம், முதலாளித்துவ நெருக்கடி என விவாதிக்கிறார். முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் ஓட்டாண்டியாக இராமல் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்து இருப்பது குறித்து விவரிக்கிறார். நடுத்தர வர்க்கமாக மாறிய பாட்டாளிகள் குறித்து சொல்கிறார். தந்து நெருக்கடிகளை சமாளித்து மீளும் சக்தி முதலாளித்துவத்திற்கு இருக்கிறது என்பதை கம்யூனிஸ்ட்கள் காணத்தவறிவிட்டனர் என 70 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார். இன்று லோகியாவதிகளால் இந்த விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் மீது வைக்க முடியாமல் போகலாம். அதேபோல் மூலதன பெருக்கம் என்பது வறுமைபெருக்கம் மட்டுமே என்பதையும் நிருபிக்கமுடியவில்லை என்றார் லோகியா. தொழிலாளிவர்க்கம் என நாம் பேசுவதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்றார் லோகியா. தொழிலாளிவர்க்க ஒற்றுமை என்பதும் கூட சாத்தியப்படாமலே இருக்கிறது என்றார்.. மார்க்ஸ் வரையறுத்தபடி வளர்ந்த நாட்டில் புரட்சி என்பது நடைபெறாமல், ருஷ்யாவில் நடைபெற்றதை நாம் எப்படி விளங்கி கொள்வது என்றார். டிராட்ஸ்கி வவரித்த பலவீன கண்னி மூலமா என கேள்வி எழுப்ப்பினார். ரஷ்ய புரட்சியை மார்க்சிய விளக்கங்கங்களில் தேடிக்கொண்டிருப்பதை ஏற்கமுடியவில்லை என்றார். முதலாளித்து இரும்பு கூட்டிலிருந்து வர்க்கப் போராட்ட பறவை பறந்தோடியது பற்றிய விளக்கங்கள் போதுமானதாக இல்லை என ஏகடியம் பேசினார் லோகியா. மார்க்ஸ் கூறியது மெய் என நிரூபிக்க கம்யூனிஸ்ட்கள் தங்கள் நேரத்தை முழுதும் செலவழிக்கிறார்கள் என விமர்சித்தார்., மூலதன குவிப்பு, ஏகபோகம் உருவாதல் ஆகியவற்றில் மார்க்சியத்தை நிராகரிக்க முடியாது என்பதை ஏற்கிறார் லோகியா. ஆனால் ஏழ்மை, வர்க்கபோராட்டம், புரட்சி ஆகிய விதிகளில் அதனால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை என்கிறார். முதலாளித்துவத்தின் இறுதி கட்டமே ஏகாதிபத்தியம் என்கிற லெனினிய வரையறுப்பில் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. ஏகதிபத்தியம்,முதலாளித்துவம் இரண்டும் சேர்ந்தே வளர்வதாக அவர் கருதினார்.முதலாளித்துவம் வளர்வதற்கு இடமில்லாத நிலையில் போர்கள் ஏற்பட்டன என்பதை அவர் ஏற்கிறார். ஏகாதிபத்திய எல்லைக்குள் பல முதலாளித்துவங்கள் செயல்படுவதாக அவர் விளக்கினார். முதலாளித்துவம் குறித்த மார்க்சிய வரையறுப்புகள் மேற்கு அய்ரோப்பிய நிலவரங்களின் விளக்கங்களாகவே உள்ளன என்றார். அமெரிக்கா, ஜப்பான் வரையறைகள் கூட பின்னர் நுழைந்தவையே என்கிறார். இந்தியாவில் 1950களின் ஆரம்பங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமா அமெரிக்கா ஏகாதிபத்தியாமா என்ற விவாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளில் பெருமளவு எதிரொலித்தது. உள்நாட்டு, வெளிநாட்டு இயக்கங்களுக்கு இடையிலான பரஸ்பர பாதிப்புகள் குறித்த முழுமையான கொள்கையை மார்க்சியம் உருவாக்க தவறிவிட்டது என்கிறார். லோகியாவிற்கு ரோசா லக்சம்பர்க் ஆய்வுகள் கிட்டியதா என தெரியவில்லை. உழைப்பை லட்சியவாதம் சார்ந்த ஒன்றாக மார்க்சியவாதிகளை மார்க்சியம் பேசவைத்துவிட்டது. ஏகாதிபத்திய நாடுகளில் உழைப்பும் காலனிநாடுகளில் உழைப்பும் வேறானவை என்பதற்கு லோகியா அழுத்தம் தருகிறார்.அவற்றின் மதிப்புகளும் வேறானவை என்றார். உபரி மதிப்பு என்பதில் தொழிலாளரின் அவசியத்தேவை என தனியாக இருக்கிறதா எனவும் வினவுகிறார். வரலாற்றின் நிலவரப்படித்தான் தேவைகள் நிர்ணயிக்கப்படுவதாக சொல்லி செல்கிறார். பட்டினி நிலையில் இருந்துகொண்டு காலனி தொழிலாளி உழைக்கவேண்டிய நிர்பந்தம் குறித்த புரிதல் தேவைப்படுகிறது என்கிறார். கோடானுகோடி காலனி தொழிலாளர்களின் ஆவிகள் கண்காணாமல் நின்று ஏகாதிபத்திய நாடுகளின் தொழிற்சாலைகளை ஓட்டுகின்றன என கவித்துவமாக பேசுகிறார். ”பெரிபெரி சுரண்டல்” என்பதை அவருக்கு தெரிந்த வகையில் பேசியிருக்கலாம். இவற்றை முழுமையாக பார்க்காமல் உழைப்பின் கூலிக்கும் உற்பத்தி மதிப்பிற்கும் உள்ள முரண்பாட்டில்தான் முதலாளித்துவம் வளர்கிறது என சொலவது பழைய பாட்டி அர்த்தம் புரியாமல் பாடிக்கொண்டிருபதுதான் என விமர்சிக்கிறார். வளர்ந்த முதலாளித்துவ நாட்டின் தொழிலாளர்களில் உயர் ஊதியக்காரர்கள் காலனி நாட்டு சுரண்டலில் ஒரு பகுதியை பெறாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார் லோகியா. உபரிமதிப்பை கம்யூனிஸ்ட்கள் கூறுவது போல் கணக்கிடமுடியாது என்ற முடிவிற்கு லோகியா வருகிறார். தனது வரையறை என்ன என்பதை எடுத்துரைக்கிறார். குறிப்பிட்ட ஒருகாலகட்டத்தில் ஒரு தொழிலாளி பெறும் ஊதியம் எவ்வளவு, அக்காலத்திய உற்பத்தியில் ஒவ்வொரு தொழிலாளியின் சராசரி பங்கென்ன – அதன் வித்தியாசம்தான் உபரிமதிப்பு என்பதுதான் சரியான கணக்கீடு. இந்த கணக்கீட்டை உலகளாவியது என்று பேசுகிறார். காலனிகள் முதலாளித்துவத்தின் கிராமங்கள் என பேசும்போது ரோசாலக்சம்பர்க் அருகில் வருகிறார். நமது நகரங்கள் கிராமங்களை சுரண்டுவதைவிட காலனிநாடுகளை முதலாளித்துவ நாடுகள் சுரண்டுவது மிக அதிகமானது என்கிறார். இருவட்ட கருத்துதனை புரிந்து கொள்ளாமல் உபரிமதிப்பு கணக்கீட்டை சரியாக வரையறுக்க முடியாது என்கிறார். உள்நாட்டு விநியோகம் என்பதில் மட்டும் முதலாளித்துவ நெருக்கடி என பார்த்து நின்றுவிடக்கூடாது. ஏகாதிபத்திய இயக்க வேகத்தில் காலனிகள் நலிவிற்கும், புதிய சுரண்டல் மேய்ச்சல்நிலம் நோக்கி ஏகாதிபத்தியம் செல்வதற்கு ஏற்படும் காலதாமதத்திலும் நாம் நெருக்கடிகளை புரிந்துகொள்ளவேண்டும் என தனது ஆய்வு பார்வையை மேம்படுத்துகிறார். மூலதனம், உழைப்பு இரண்டுமே புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மாற்றம் பெறுகின்றன. புதிதாக காலனிகள் கிடைக்கவில்லை எனும்போதெல்லாம் பொதுநெருக்கடி எனும் பிரச்சனையை சந்திக்கிறோம் என்ற முடிவிற்கு வருகிறார். காலனிநாடுகளைத்தான் இவ்வகை நெருக்கடிகள் அதிகம் பாதிக்கும் என்கிறார். எனவே தான் காலனி தொழிலாலர்களின் எழுச்சி மிக முக்கியமாகிறது. இந்த முற்போக்கு பாத்திரத்தை நாம் உணரவேண்டும் என்கிறார். ருஷ்ய புரட்சியைக்கூட மார்க்சிய உலகம் இவ்வாறு ஏற்றால்தான் விளக்கமுடியும் என்கிறார். ருஷ்யா சோவியத்தில் இலாப நோக்கில்லை என்றாலும் முதலாளித்துவ தொழில்நுட்ப அடிப்படையிலேயே செயல்படுகிறது என்றவர் லோகியா. ஒருநாட்டின் தொழில் நிறுவன பிரச்ச்னை வேறு- அது தனிஉடைமையா அல்லது பொது உடைமையா என்பது வேறு என்கிறார். விஞ்ஞானத்தை உற்பத்திக்கு பயன்படுத்தவேண்டிய எந்த நாட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும். உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு ஒன்றுடன் ஒன்று இயங்குபவை. முந்திய ஆண்டுகளில் சேமித்த உழைப்பு சக்தியே சோசலிச பொருளாதாரத்தில் மூலதனமாகிறது. கனரக எந்திரங்களாக காட்சி அளிக்கிறது. அதே நேரத்தில் குவியல் முறையில் எந்திரங்களை புகுத்தி பொருளாதாரத்தை நவீனப்படுத்தும் முயற்சி வறட்டுத்தனமாக அங்கு நடைபெறுகிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்தார். வளைந்து கொடுக்காத பொருளாதாரமாகி அங்கு குழப்பம் உருவாகலாம் என எச்சரிக்கை தந்தார். சோசலிச பொருளாதாரத்திகேற்ப உற்பத்தி முறைகளை ருஷ்யா சொந்தமாக உருவாக்கவில்லை. அங்கு அதிகார விநியோகமுறை நிலவுகிறது. அது தாறுமாறாக இருக்கும் நிலையில் அரசு உதிர்வது எப்படி என வினவினார், மேற்கூறிய அவரது கருத்துக்கள் எல்லாம் 1940களிலேயே தெரிவிக்கப்பட்டவனவாக இருக்கின்றன. ருஷ்யா சோசலிசத்துடன் ஏற்படும் மோதலால் உலக முதலாளித்துவம் சிதையும் என்பதை ஏற்பதற்கில்லை என்றார் அவர். உலகப்போரை சமாளிக்க ருஷ்யாவும், முதலாளித்துவ நாடுகளும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளையே மேற்கொண்டன. தற்காப்பு முறைகளில் வேறுபாடு ஏதுமில்லை. சோசலிசத்துடன் மாறுபட்ட அரசாங்கங்களின் உதவியுடன்தான் போரின் நிலைமைகள் மாற்றப்பட்டன, இதை சோசலிசத்தின் வெற்றி என பார்க்கமுடியவில்லை என்ற தனது பதிவை அவர் முன்வைத்தார். மார்க்ஸ் மேற்கு அய்ரோப்பிய நலன்களே உலக நலன்கள் என கருதிவிட்டார். ஏகாதிபத்திய உழைப்பு- காலனி உழைப்பு என்ற பிரிவினை குறித்து மார்க்சியர் ஏன் பேசவில்லை என்கிறார். பின்தங்கிய நாடு ஒன்று விரைவில் மாபெரும் சக்தியாக வளரமுடியும் என்பதை ருஷ்யா உலகிற்கு காட்டியுள்ளதை ஏற்று பாராட்டினார் லோகியா, ஆனால் உலகிற்கான ஒரேபாதை, வழிகாட்டி என்பதை ஏற்கமுடியவில்லை என்கிறார். மார்க்க்சியத்தின் சிறந்த அம்சம் தனி சொத்துரிமை மீது பற்றில்லாதது, சுரண்டல் சொத்து சமூககேடு என்பதை அது உயர்த்தி பிடிக்கிறது என்பதில் தனது ஏற்புகளை வெளிப்படுத்துகிறார். லெனின் பெருந்தலைவர்தான் ஆனால் அவரது ஏமாற்றுகளில் உடன்பாடில்லை என்கிறார் லோகியா. புரட்சிக்காக கொலைகளையும் பொய்களையும் நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார். தங்களிடம் ஆகப்பெரிய சித்தாந்தம் இருக்கிறது என்றும் அதற்காக அனைத்து தியாகங்களுக்கும் தயார் என மார்க்சியர்களிடம் பெருமிதம் இருக்கிறது. ஒழுக்க நெறிகள் போன்றவையெலாம் சிறு விஷயங்கள்- பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருதி ஒதுக்குவதை ஏற்கமுடியவில்லை என தனது மாறுபட்டினை தெரிவிக்கிறார். ஈசோ உபநிடதம் மன அளவில் சொத்து பற்றிய எண்ணத்தை அழிக்க நினைக்கிறது. மார்க்சியம் புற வடிவில் அதை செய்யப்பார்க்கிறது என்று சொல்லி இருமையில்லை ஒருமை என்ற வாதம் நோக்கி நகர்ந்துவிடுகிறார் லோகியா. லோகியா ’மார்க்ஸ் காந்தி சோசலிசம்’ என்ற புத்தகத்தை எழுதினார். கம்யூனிச நாடுகள் என சொல்லப்படும் ருஷ்யா சீனா தங்களுக்குள்ளே கூட சமத்துவத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. சீனனும் ருஷ்யனும் சமமாகவில்லை என தனது கருத்தை கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தார். சோவியத் லாபியின் பேச்சை அப்படியே செவிமடுத்து பெருந்தொழில்கள் தேசியமயம் என சோசலிசத்திற்கான கெட்ட துவக்கத்தை இந்தியா கண்டது என்ற விமர்சனத்தையும் லோகியா முன்வைத்தார். இந்திய வரலாற்றை மார்கஸ் சொல்வது போலவோ அல்லது அதே போல் டாங்கே தனது புத்தகத்தில் எழுதியது போலவோ விளக்க முடியாது. இங்கு சாதியின் பின்புலத்தை கணக்கில் கொள்ளாமல் வரலாற்றை விளக்க முடியாது என்றார். மனித ஆளுமையை சிறுமைப்படுத்திடும் எந்த பொருளாதாரா ஏற்பாடும் அரசியல் ஏற்பாடும் ஏற்பதற்கில்லை என்றார். மனிதனை மையமாக வைத்து பேசுவதுதான் தனது சோசலிசம் என்றார். கோமிண்டர்ன் கம்யூனிசம் மனித மாண்புகளை தூக்கி நிறுத்தும் வகையில் நடைமுறையில் செயல்படவில்லை என தீர்ப்பிட்டார் லோகியா. ஆசியவகைப்பட்ட சோசலிசம் என அவர் பேசும்போது முதலாளித்துவத்தையும் கோமின்பார்ம் சோசலிசத்தையும் நிராகரிப்போம் என்றார். கோமின்பார்ம வகைப்பட்ட சோசலிசம் அதன் நடைமுறைகள் Dignity of Man என்ப்தை சிறுமைப்படுத்திவிட்டதாக உணர்ந்தார். சமுகநீதி, தேசியமயம் மற்றும் கூட்டுறவுமுறை, மக்களுக்கான ஜனநாயக உரிமைகள், எதிர்கட்சி செயல்பாடுகள், அதிகாரிவர்க்க நிர்வாகமுறையை மட்டுப்படுத்தி, ஜனநாயக அம்சங்கள் நிறந்த நிர்வாக முறை, நீதி நியாயங்களை புறந்தள்ளாத பன்னாட்டு உறவுகள் என தங்கள் ஆசிய சோசலிசம் அமையவேண்டும் என்றார். போர்க்குண போராட்டங்கள் என்பதற்கு அவர் constructive Militancy- Militant Construction என புதிய இரு முழக்கங்களை வித்தியாசமான பார்வையில் தந்தார். கும்பலாக இருந்தாலே அழிவுவேலைகளை செய்வது என்பதற்கு நேர்மாறாக போர்க்குணம் என்பதை ஆக்கவேலை என்பதுடன் அவர் இணைத்தார். Immediacy in struggle and Organisation, permanent civil disobedience போன்ற கருத்துக்களை அவர் முன்வைத்தார். இரண்டாம் உலக யுத்த காலத்தில்தான் மார்க்சிற்கு பிந்திய பொருளாதாரம் எழுதினார். வரலாறு எழுப்பும் பல கேள்விகளுக்கு மார்க்சிய பதில்கள் போதவில்லை என்ற பொதுகருத்து சோசலிஸ்ட்கள் மத்தியில் இருந்தது. மனிதவரலாற்றை Logic of Events என்பதுடன் Logic of will ம் சேர்ந்தே நடத்துகின்றன என்பார் லோகியா. வர்க்க வேறுபாடுகளும் சாதிய அடுக்குமுறை ஏற்றத்தாழ்வுகளும் உள்ள இந்திய சமூகத்தை நாம்தான் புதிய வகையில்ன் புரிந்து கொள்ள வேண்டும். Dialectical Materialism - dialectical Idealism ஒன்றுடன் ஒன்று அனுசரனை கொள்ளத் தேவையுள்ளதாக அவர் கருதினார் பின்னாட்களில் அவர் ஏழுவகை புரட்சி என பேசிவந்தார். 1952 பன்ச்மாரி மாநாட்டில்” it is silly to be a Gandhiyan or Marxist and it is equally so to be an anti Gandhiyan and anti- Marxist. There are priceless treasures to learn from Gandhi as from Marx” என பேசினார்.. சோசலிசத்தை நாம் தொடர்ந்து Borrowed Breadhல் வைத்திருக்கக் கூடாது என்றார். தன்னை மார்க்சியவாதி என்றோ எதிர்- மார்க்சியவாதி என்றோ அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் லோகியா. Ref: Marxism-Gandhism-Socilism by Lohia Economics After Marx by Lohia Ram Manohar Lohia- Vision and Ideas Edited by Verinder Grover Janata Weekly Articles 2. P C ஜோஷி ஜோஷி தனது 28ஆம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட்அரசியல் இயக்க தலைமை பொறுப்பிற்கு வந்தவர். கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பை துணிச்சலுடன் எடுத்துக் கொண்டவர். நூற்றுக்கும் குறைவாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடுதலையின் நெருக்கத்தின் போது 80 ஆயிரமாக உயர்த்தியவர். பன்முகத் தன்மை கொண்ட பல்வேறு பிரிவுகளுடன் விவாதித்து நெருக்கமாக விழைந்தவர். எழுத்தாளர், கலைஞர், கவிஞர், அறிவாளிகள், விஞ்ஞானிகள் என தோழமை கொண்டவர். நாட்டின் விடுதலை குறித்த பார்வை உட்கட்சி சச்சரவுகளால் தனது தலையாய இடத்தை பறி கொடுத்தவர். அவரது தேசிய முன்னணி என்கிற அரசியல் முன்னெடுப்பு அன்றுள்ள சூழலில் விவாதங்களை கிளப்பியது. ஜோஷி அல்மோர எனும் இமாலய அடிவாரத்தில் எப்ரல் 14, 1907ல் பிறந்தவர். முழுப்பெயர் பூரண சந்திர ஜோஷி. தந்தையார் பண்டிட் ஹர் நந்தன் ஜோஷி தலைமை ஆசிரியராக இருந்தவர். தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தார். தாயார் மாலதிதேவி. ஜோஷியின் 10வது வயதில் நோய்வாய்பட்டு இறந்தார். அன்றுள்ள சூழலில் மற்ற அனைவரையும் போல் பள்ளிகளில் காந்தி குறித்த பேச்சறிந்தார் ஜோஷி. சுயராஜ்யம் என்ற முழக்கம் பாலகன் ஜோஷியிடம் விடுதலை தாகத்தை எற்படுத்தியது. மீரட் மாவட்டம் ஹபூரில் தனது மெட்ரிக் கல்வியை 1920 ல் முடிக்கிறார். இண்டர்மீடியட்டில் சமஸ்கிருதத்தில் தங்க மெடலை பெறுகிறார். 1924ல் அலகாபாத் பலகலை கழகத்தில் பொருளாதாரம், ஆங்கிலத்தில் பட்டம் பெறுகிறார். 1928க்குள் MA LLB ஆகிறார். அலகாபாத் நகரம் மதன்மோகன் மாளவியா தாக்கத்திலும் மோதிலால் நேரு தாக்கத்திலும் இருந்த நேரமது. மோதிலால் பக்கம் நிற்பவராக ஜோஷி மாறுகிறார்.. கதர் ஆடையுடன் நவஜவான் பாரத்சபா உறுப்பினராகிறார். ஜவஹர்லால்நேரு தலைமையில் செயல்பட்ட அலகாபாத் இளைஞர் கழக உறுப்பினராகிறார். ஆனந்த்பவன் ஈர்ப்பு மையமாகிறது. 1928 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் இந்து-முஸ்லிம் பிரச்சினைகளில் நேருவின் நிலைபாட்டில் ஜோஷி அதிருப்தியுற்றார். அல்மோர மாவட்டம் சார்ந்த அப்தர் அலி என்கிற தொழிற்சங்க தலைவர் மூலம் அவருக்கு ரஜினி பாமித்ததின் “நவீன இந்தியா” எம்.என்.ராயின் இந்திய அரசியலின் எதிர்காலம் போன்ற எழுத்துக்கள் கிட்டின. எம்.என் ராய் மீது மரியாதை ஏற்பட்டது. தோழர் ரஜினி பாமிதத் எங்கள் வழிகாட்டியானார் என ஜோஷி பின்னர் குறிப்பிடுகிறார். லேபர் மன்த்லி கிடைக்கிறது. மீரத்தில் செப் 1928ல் விவசாய தொழிலாளர் கட்சியுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார் ஜோஷி. அதன் இணைச்செயலராகிறார். சர்தேசாய், பரத்வாஜ் போன்றவர்களின் தோழமையும் கிட்டுகிறது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான மரியாதை உயர்கிறது. பிலிப் ஸ்பிராட், பென்பிராட்லியுடன் விவாதங்கள் நடைபெறுகின்றன. பிலிப் கேம்பிரிட்ஜ் பட்டதாரி. பிராட்லி பொறியியல் தொழிலாளி பகுதியிலிருந்து கட்சிக்கு வந்தவர். கட்சி அமைப்பை கட்டுவது குறித்த பயிற்சியை அவர்கள் தந்தனர். காந்தி குறித்த எதிர்மறை கருத்துக்களே தரப்பட்டுவந்தது. பிரிட்டிஷார் 1929ல் தொழிற்த்கராறு சட்டம் மூலம் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்தனர். 1929 மார்ச்சில் போராடிய அனைத்து முக்கிய தலைவர்கள் டாங்கே,காட்டே, மிராஜ்கர், அதிகாரி, முசாபர், தாரணி, பிராட்லி, ஸ்பிராட் என 31 தோழர்கள் விசாரணை கைதிகளாகினர். 22 வயதான ஜோஷியும் விடுதியிலிருந்து தூக்கி வரப்பட்டார். மீரத் சதிவழக்கு என பின்னர் இது வரலாற்றில் இடம்பெற்றது. மோதிலால் தலைமையில் தோழர்கள் பாதுகாப்பு கமிட்டி ஒன்ற காங்கிரஸ் அமைத்தது. காந்தி நேரிடையாக வந்து சிறையில் தோழர்களை சந்தித்தார். சிறையை மார்க்சிய கல்விக் கூடமாக தோழர்கள் மாற்றினர். அனைவரும் தங்களை சாதியற்றவர்கள் என பதிவுசெய்து கொண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கண்டன உரைகளை வழக்கு விசாரணயின்போது வெளிப்படுத்தினர். சோசலிச புரட்சி என பேசினர். ஹிரன்முகர்ஜி ஆங்கில புலமையை அனைவரும் அறிவர். ஜோஷி மிக நேர்த்தியாக ஆங்கிலத்தில் ஆவணங்கள் உருவாக்குவதில் தேர்ச்சியை காண்பித்தார் என ஹிரன் பதிவிடுகிறார். சிறையில் மிக பணிவுடன், இணக்கமாக நடப்பவராக ஜோஷியிருந்தார். அவரின் தோட்டப்பயிற்சி பாராட்டை பெற்றது. 1933ல் வெளிவந்த பின்னர் தொடர்ந்து ஜோஷி கட்சி வேலைகளில் ஈடுபட்டார். டெக்ஸ்டைல் தொழிலாளர் போராட்டம் மீண்டும் இரு ஆண்டுகள் சிறைக்கு அவரை அனுப்பியது. இம்முறை துணிவெளுத்தல், தோட்டவேலைகள் தரப்பட்டன. தோழர்கள் ரணதிவே போன்றவர்கள் தந்த தீவிர முழக்கங்களால் கட்சியில் பிரிவினை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியே மிக ஆரம்பநிலையில்தான் இருந்தது. அதில் போல்ஸ்விக் என பேசியதில் மேலும் பலவீனம் ஏற்பட்டது. அகிலத்தின் 7வது மாநாடு 1935ல் காங்கிரஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற புரிதலுக்கு வந்தது. அய்க்கிய முன்னணி தந்திர பார்வையில் பென்பிராட்லி தீசீஸ் பிப்ர்வரி 1936 இம்ப்ரிகார் இதழில் வெளியிடப்பட்டது. காங்கிரசுடன் இணைந்தா என்ற தயக்கம் நெருடல் இங்கிருந்த இளம் கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. ரஜினிபாமிதத் பல்வேறு குழுக்களுடன் விவாதித்து அனைத்திந்திய ஒருங்கிணப்பை வலியுறுத்தினார். கட்சி மையம் ஒன்றை பலப்படுத்தி செயல்பட முடிவானது. தோழர் ஜோஷியிடம் பொதுச்செயலர் பொறுப்புகொடுக்கப்பட்டது. சர்வதேச இயக்கத்தலைமை வழிகாட்டலுடன் இவை யாவும் செய்யப்பட்டன. மிஷல் காரி என்கிற ஐ சி எஸ் மற்றும் தோழர் மிஷல் ஸ்காட் உதவியுடன் கல்கத்தாவில் மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. ஜோஷி, அஜாய், பரத்வாஜ் சந்திப்புடன் சூரத்தில் ஜூன் 1936ல் ஜோஷி பொதுச்செயலராக அறிவிக்கப்படுகிறார். மேற்கு பகுதிக்கு அஜாய், வடக்கிற்கு பரத்வாஜ், தென்பகுதிக்கு காட்டே பொறுப்பாக்கப்படுகின்றனர். 1936ல் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படுகிறது. AISF அமைக்கப்படுகிறது. 1935ல் பாரிசில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் தாக்கம் இங்கும் ஏற்பட்டது. பாசிச கலாச்சாரத்திற்கு எதிரான குரலை அங்கு கார்க்கி, மால்ரக்ஸ், ஈ எம் பாஸ்டர் எதிரொலித்தனர். 1938ல் விவசாயி- கவிஞர் கூட்டு மாநாடு என்ற புதுமை பரிதாபாத்தில் நடந்த்து.1945ல் உருது எழுத்தாளர் மாநாடு ஒன்று அய்தராபாத்தில் சரோஜினிதேவி நாயுடு தலைமையில் நடைபெற்றது. இவ்வனைத்திலும் உத்வேக பங்களிப்பை நல்கினார் ஜோஷி. ஜமின்தாரி ஒழிப்பு என்ற முழக்கத்தில் கிசான் சபாக்கள் உருவான காலமும் இதுதான். National Front பத்திரிக்கையும் துவங்கப்பட்டது. ஜோஷியுடன் டாக்டர் அதிகாரி கல்கத்தாவில் செயல்பட்டுவந்தார். ஜோஷி, அதிகாரி, பரத்வாஜ் , அஜாய் பத்திரிக்கை ஆசிரியர்குழுவில் செயல்பட்டனர். 1938ல் கட்சியின் மையம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. தேசிய காங்கிரசும் தொழிலாளிவர்க்கமும் என்ற பிரசுரத்தை கட்சி வெளியிட்டது. அரசியல் போராட்டங்களில் பங்கேற்பீர் என்ற வேண்டுகோளும் விடப்பட்டது. சுபாஷ்போஸ் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என கட்சி நிலை எடுத்தது தோழர் ஜோஷ்யின் தனிசிறப்பு மணிக்கணக்காக இளைஞர்களுடன் தனிஉரையாடல்களை மேற்கொள்வது- அதன் மூலம் தோழர்களை ஈர்ப்பது என்பதாக இருந்தது. 1942 வெள்ளைய்னே வெளியேறு இயக்கத்தின் போது கட்சி பல விமர்சனங்களை சந்தித்தது. வங்க பஞ்சத்தில் மக்கள் பணியாற்றி கட்சி தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என பெரும் களப்பணிக்கு ஜோஷி திட்டமிட்டு கட்சித்தொண்டர்களை இறக்கினார். பஞ்சத்தின்போது ஒருகோடி மக்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவெல்லாம் பிணங்கள் என்ற நிலை. பல்லாயிரக்கணக்கான பெண்கள் அன்றாட வாழ்க்கைக்கே விபச்சாரிகள் ஆக்கப்பட்ட சூழல் இருந்தது. பெண்கள் சுயபாதுகாப்பு அமைப்பை ஒன்றை நிறுவி ஏராள இளம் பெண்களை காத்திட , மீட்டெடுக்க இயக்கம் ஒன்றிற்கு ஜோஷி வழிகாட்டினார். கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியாற்றிட ஆயிரக்கணக்கில் உணவுகூடங்கள் தேவைப்பட்டன. கட்சி நூற்றுக்கணக்கன உணவுகூடங்கள் அமைத்திட ஜோஷி வழிகாட்டினார். தாமே நேரில் சென்று செயல்படும் தோழர்களை உற்சாகப்படுத்தினார். ஜப்பான் பாசிச எதிர்ப்பு முழக்கங்களுடன் விடுதலையை கோரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஜோஷி அமைக்க செய்தார். வங்கம் வீழ்ந்தால் இந்தியா வாழாது என்ற முழக்கத்துடன் வங்க நிலைமைகளை தேசிய பிரச்சனையாக்கினார். தேசிய அரசாங்கம் என்ற முழக்கத்தை எம் என் ராய் ஆதரவாளர்கள் பேசிவந்தனர். ஜோஷியும் கல்கத்தாவில் நிலைமைகளை சீராக்கிட தேசிய அரசாங்கம் என்றார். டாக்டர் ஷியாமபிரசாத் போன்றவர் உதவட்டும் என்றார். அந்த அளவிற்கு வங்க மீட்பு என்பதில் அக்கறை செலுத்தினார். 1943ல் இந்திய மக்கள் நாடக மன்றம் என்கிற இப்டா உருவாக்கப்பட்டது. கட்சி சொல்லத்தகுந்த அளவில் உறுப்பினர்களை பெற்றது. முழுநேர புரட்சியாளர்கள் என்ற பதிவில் முழுநேர பணியாளர்கள் 2000 இருந்தனர். தொழிற்சங்கம், கிசான் சபா, மாணவர் இயக்கம், மாதர் அமைப்புகளில் கட்சி செல்வாக்கு பெற்றது. கட்சியின் பத்திரிக்கைகள், பிரசுரங்கள் 11 மொழிகளில் வெளிவந்தன. அடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கன கட்சி வெளியீடுகள் தேங்கி நிற்காமல் விற்கப்பட்டன. அனைத்திந்திய அரசியலில் விவாத இடம் ஒன்று கட்சிக்கு கிடைக்கப்பெற்றது. அனைத்திந்திய அமைப்பு வடிவமும் கிடைத்தது. தோழர்களை கட்சிக்கு ஈர்ப்பதில் ஜோஷியின் திறமை பாராட்டுக்குரியதாக இருந்தது. அறிவுஜீவிகள், கவிஞர், கலைஞர் என பலரும் தயக்கமின்றி அவருடன் விவாத உறவுகளை மரியாதையை வைத்திருந்தனர். 1941 கையூர் தியாகிகளின் பேரன்பில் நெகிழ்ந்தார் ஜோஷி. கையூர் போராட்ட்த்தில் 60 தோழர்கள் மீது வழக்கு- நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சாவைக்கண்டு சோராமல் அப்பு, அபுபக்கர், சிறுகண்டன், குணாம்பு ஆகிய தோழர்கள் ஜோஷியை பார்க்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும் , தோழர் ஜோஷி பார்க்க வந்தார். அவர்களை பர்றி மிகப்பெருமையுடன் உரையாடினார். தோழர் கிருஷ்ணன் பிள்ளை மொழிபெயர்த்தார். மகத்தான கடமைக்கான உயிர்த்தியாகம் வீணாகாது என ஜோஷி தெரிவித்தவுடன் கட்சி பொதுச்செயலர் மூலம் தங்களுக்கு மாபெரும் அங்கீகரிப்பை தந்துவிட்டதாக அத்தோழர்கள் மனதிலிருந்து நன்றி தெரிவித்தனர். காவிய நிகழ்வு போல் இக்காட்சி அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஜோஷியும் வாழ்க என சொல்லி அத்தோழர்கள் தூக்கில் ஏறினர். ஜோஷிக்கு மற்றொரு சிறந்த பொறுமைக்குணமும் இருந்தது. நாம் கூட்டத்தில் பேசும்போது யாராவது கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தால், நம்க்கு கோபம் வரலாம்- சோர்வு ஏற்படும்- கவனம் சிதறலாம். ஆனால் ஜோஷி அதை நாம் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார். நாம் பேசுவது அவர்களை தொடவில்லை என புரிந்து கொள்வோம் என்பார். அவரது கூட்டங்கள் பலநேரங்களில் தடை பெற்றிருக்கிறது. பாட்னா, பெகுசராய் சுற்றுப்பயணத்தில் அவருக்கு இவ்வனுபவம் ஏற்பட்ட்து. கட்சி ஒழிக. ஜோஷி ஒழிக முழக்கங்களை அவர் கேட்டார். ஜோஷி மிக சிறந்த பேச்சாளர் என கருதப்படவில்லை. விளக்கபாணியில் உரையாடல் செய்பவராக இருந்தார். அவர் தனது பயணத்தை மூன்றாம் பெட்டிகளில்தான் செய்து வந்தார். கட்சித்தலைவர்கள் சிறையிலிருந்தனர். தியோலி சிறையில் தோழர்கள் டாங்கே, ரணதிவே, அஜாய் ஆகியோருக்கு மக்கள் யுத்தம் என்கிற ஆவணம் கிடைக்கப்பெற்றது. காங்கிரசின் யுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டை தாக்கியும், சோவியத்தை காப்பது என்ற பொருளிலும் அறிக்கை ஒன்று தயாரிக்கபட்டது. முன்பு பிரிட்டிஷ் தலைவர்கள் தேச உணர்விற்கு மிக எதிராக போகவேண்டியதில்லை என்ற அறிவுரையை ஜோஷி, அதிகாரியிடம் தந்திருந்தனர். ஆனால் சோவியத் யுத்த களத்திற்கு வந்தவுடன் மக்கள் யுத்த முழக்கம் வந்தது. தோழர் ரஜினி பாமிதத்திற்கு அடுத்து கட்சி கொள்கை நிலைகளில் டாக்டர் அதிகாரியை ஜோஷி பொதுவாக மதித்து வந்தார். அதிகாரி சொல்லும் போது தட்ட முடியாது என்ற நிலையை ஜோஷி எடுத்தார். ஹன்ஸ்ராஜ் என்ற பெயரில் அவ்வறிக்கை ஜோஷியால் Forward to Freedom வெளியிடப்பட்டது. தேச ஒற்றுமை, பாதுகாப்பு, தேச அரசாங்கம் என்ற முழக்கம் தரப்பட்டது. விடுதலைப்போரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் செயல்பாடுகளும் என்ற பிரசுரத்தை ஜோஷி எழுதினார். அதற்கு பிரிட்டிஷ் கட்சியின் செயலர் ஹாரிபொலிட் முன்னுரை எழுதி அப்பிரசுரம் லண்டனில் வெளியிடப்பட்டது. ஜப்பனின் பேராபத்து அதில் சுட்டிக்காட்டப்பட்ட்து. யுத்த்த்தில் நடுநிலை இல்லை என்பது தெளிவாக்கப்பட்ட்து. கட்சி எடுத்த நிலைப்பட்டிற்கு காங்கிரசின் வலது பட்டேல் பிரிவும், காங்கிரஸ் சோசலிஸ்ட் இட்து ஜெயபிரகாஷ் பிரிவும் கடும் கண்டனங்களை எழுப்பின. காந்தியை ஜோஷி நேரிடையாக சந்தித்து தங்கள் நிலைபாட்டை விளக்கினார். பின்னர் நடந்த கடித போக்குவரத்துகள் காந்தி- ஜோசி கடிதங்கள் என வெளியாயின. காந்தியை தேசத்தந்தை என ஜோஷி விளித்தார். காந்தியும் உங்களைப் போன்றவர்களை நான் இழக்க விரும்பவில்லை என பேசினார். காங்கிரஸ் ராம்கர் மாநாடின்போது கூட பரத்வாஜ் போன்ற தோழர்கள் கைதாவதிலிருந்து தப்பிட காந்தியுடன் ஒரே காரில் பயணிக்க முடிந்தது. வெள்ளைய்னே வெளியேறு தீர்மானம் வந்தபோது டக்டர் கே எம் அஷ்ரப் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எதிர்த்து கலகம் ஏதும் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமை தங்கள் அமைப்பில் செயலாற்றிய கம்யூனிஸ்ட்கள் மீது சார்ஜ்சீட் கொடுத்தது-. நீக்கவேண்டும் என்று பேசியது. ஆனால் அரசியல் பெருந்தன்மையுடன் ஜோஷி தலைமை காங்கிரசை ஒடுக்கி தலைவர்களை சிறையில் வாட வைப்பது பிரிட்டிஷ் நலன்களுக்குகூட உகந்த்தல்ல என்ற நேரிய அறிக்கையை தந்தது. கம்யூனிஸ்ட்கள் மீதான காங்கிரஸ் குற்றசாட்டுகளுக்கு பதில் என்கிற ஆவணத்தை கடும் உழைப்பை நல்கி ஜோஷி தயாரித்தார். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தருவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஆவணமது. 1945ல் PPH வெளியீடாக வந்தது. காங்கிரசும் லீகும் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை ஜோஷி தொடர்ந்து சொல்லி வந்தார். They Must Meet, They Must Meet Again என்கிற அழுத்தம் தரக்கூடிய பிரசுரங்கங்களை கொணர்ந்தார். காந்தி- ஜின்னவைத்தான் அவர்கள் என ஜோஷி குறிப்பிட்டார். அதேபோல் அக்டோபர் 1945ல் கங்கிரஸ் லீக் கம்யூனிஸ்ட் தேசிய முன்னணி என பேசினார். தெபகா, தெலங்கானா எழுச்சிகளில் கட்சி முக்கிய பாத்திரமாற்றியது. தெலங்கனா பகுதி போராட்டத்திற்கு ஆயுதங்கள் பெற்று அனுப்புவதில் அவர் பெரும் பங்காற்றினார். 1946 தொழிலாளர் இயக்கங்கங்கள் பெருகின. லீக் பாகிஸ்தான் கோரிக்கையை உறுதியாக வற்புறுத்தி வந்தது. 1946 ஜூனில் பிரிட்டிஷ் திட்டம் எதிர்ப்போம் என்றது கட்சி. வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் சட்ட அசெம்பிளி என்றது. டாக்டர் அதிகாரி லெனினிய வெளிச்சத்தில் பாகிஸ்தான் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு ஆவணம் என்றார். ஜோஷி தயக்கம் எடுபடவில்லை. ரஜினிபாமிதத்தின் அறிவுரைக்கு பின்னர் பாகிஸ்தான் கோரிக்கையை சுயநிர்ணய பின்னணியில் பார்த்த்தும் அதற்கு லெனினை துணைக்கு அழைத்துக்கொண்ட்தும் தவறு என புரிந்துகொள்ளப்பட்ட்து. இதை ஜோஷி பின்னாட்களில் தெளிவுபடுத்தினார். P C ஜோஷி - II மவுண்ட்பாட்டன் தனது திட்டத்துடன் மார்ச் 1947ல் வருகிறார். காங்கிரசுடன் உறவுகளை சரி செய்திட அறிவுறுத்தல் வருகிறது. கட்சி இந்து முஸ்லீம் ஒற்றுமை முழக்கத்தை பலப்படுத்த துவங்கியது. விடுதலை காலத்தில் நாட்டின் பிரிவினை, வகுப்புவாத கலவரங்களால் நாட்டின் ஆன்மா பாதிக்கப்படுகிறது. நாடு அலைக்கழிக்கப்படுகிறது. காந்தி, நேருவுடன் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் அய்க்கிய முன்னணி என்கிறார் ஜோஷி. கட்சிக்குள் இந்தப்பாதை மீது விமர்சனம் எழுகிறது. நேரு சீனாவின் சியாங்காய் ஷேக்குடன் ஒப்பிடப்படுகிறார். தெலங்கானா ஏனான் என்ற ஒப்பீடு வருகிறது. இந்திய சுதந்திரம் போலி என கருத்துக்கள் முன்வருகின்றன. ரணதிவே, அதிகாரி இவ்விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அய்ரோப்பாவிலிருந்த டாங்கே பெல்கிரேடில் அகிலத்தின் பிரதிநிதி எட்வர்ட் கர்டெல்ஞ் என்பாரை சந்திக்கிறார். காங்கிரஸ் எதிர்ப்பும் போராட்டமும் அறிவுறுத்தப்படுகின்றன.. நாடு திரும்பிய டாங்கே இந்த வழிகாட்டலை பொலிட்ப்யூரோவில் வைக்கிறார். ஜோஷி பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகிறார். கட்சியின் பெரும்பான்மை ஜோஷியை நிராகரிக்கிறது. பொதுச்செயலரிலிருந்து ஜோஷி வெளியேறுகிறார். தோழர் ரணதிவே பொறுப்பேற்று பிப்ரவரி 1948 கல்கத்தா கங்கிரசில் பொதுச்செயலராகிறார். ஜோஷி தனிமைப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. சுயவிமர்சனம் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அப்போது கட்டாயமாக இருந்தது . தலைவர்கள் அதை அனுசரிக்கவும் செய்தனர். ஆரம்பத்தில் சுந்தரையா போன்றவர் ஜோஷி பக்கம் நின்றாலும் பெரும்பான்மைக்கு முன் யாரும் நிற்கமுடியாது என்பது பொதுவான சூழல். கட்சி ஆயுதம் தாங்கிய எழுச்சி என பேசியது. நகரங்களில் வேலைநிறுத்தம் கிராமங்களில் போராட்டங்கள் என்று வழிகாட்டப்பட்டது. புரட்சி மிக அருகாமையில் போன்ற சித்தரிப்புகள் வந்தன. விடுதலை நேரத்தில் ஏறத்தாழ வெகுஜன கட்சி 80 ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலையிலிருந்த கட்சி சரியத்துவங்கியது. இந்திய பூர்ஷ்வாக்கள் முழுமையாக ஏகாதிபத்திய பக்கம் என்பதை ஏற்கமுடியாது என்றார் ஜோஷி. சீர்திருத்த அபாயம் என 1949ல் ஜோஷியை கட்சியிலிருந்து தலைமை நீக்கியது. 1980களில் புபேஷ் குப்தா அன்று ஜோஷி நீக்கம் கட்சிக்கு மிகப்பெரிய அடி என தெரிவித்தார். ஜோஷி பேராசிரியர் ஜே டி பெர்னால் மூலம் கட்சியின் தவறான பாதை குறித்தும் தனது நிலைப்பாட்டை குறித்தும் பிரிட்டிஷ் கட்சிக்கு எடுத்துரைக்க செய்தார். ரணதிவே மீது விமர்சனம் எழுந்தது ஆந்திர தோழர்கள் சீனப்பாதை என ராஜேஷ்வர்ராவ் தலைமையில் பேசினர். பின்னர் மூன்று பி ஆவணம் என டாங்கே, அதிகாரி, ஜோஷி முன்வைத்தனர். ஜோஷிக்கு அனைத்திலும் கருத்து வேறுபாடு இருந்த்து. ராஜேஸ்வர்ராவிற்கு பின்னர் அஜாய் பொதுச்செயலர் பொறுப்பேற்றார். ஜோஷி மீண்டும் 1951 ஜூனில் கட்சிக்குள் சேர்க்கப்பட்டர். கட்சி ரணதிவேவை சுயவிமர்சன நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியபோது தனது அனுபவம் அவருக்கு வேண்டாம் என பேசினார் ஜோஷி. கட்சி தோழர்களை தனிமைப்படுத்துவதுபோல் நடப்பது சரியல்ல என்றும் கருதினார். ஜோஷி அலகாபாத் திரும்பி India Today என்கிற மாதப்பத்திரிக்கையை துவங்கினார். ரஜினிபாமிதத் எழுதிய புகழ்வாய்ந்த புத்தக தலைப்பு அது. இந்தியா சீனா சோவியத் கூட்டு அவசியம் என அதில் எழுதினார். முதல் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசின் வெற்றியை குறைத்து மதிப்பிடவேண்டாம் என எச்சரித்தார். கட்சிக்கு வெளியே சிறந்தவர்கள் இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து தோழமை கொள்வது அவசியம் என்றார். 1952 டிசம்பரில் வியன்னாவிற்கு சமாதான கவுன்சில் மாநாட்டிற்கு சென்றார். பாமிதத் அவரை பொறுமையுடன் இருக்க வேண்டிக்கொண்டார். அஜாய் சரி செய்வார் என்றார். மாற்றங்களை கொணர்வார் என்றார். நேருவின் 5 ஆண்டுதிட்டம், சீன-ருஷ்ய உறவுகள், நேரு குறித்து நேர்மறையான அணுகுமுறை அஜாய்- டாங்கேவிடம் ஏற்படவில்லை என ஜோஷி கருதினார். 1956 பாலக்காடு காங்கிரசில் விடுதலை குறித்த பார்வை அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஜோஷியையும் ரணதிவேயையும் சமப்படுத்தி கயிற்றின் மேல் நடக்கும் வேலையை அஜாய் செய்யவேண்டியிருந்தது என்பதை ஜோஷியே ஏற்றுக்கொண்டார். எந்தவித வறட்டுத்தனமும் வெகுஜன கட்சிக்கு உதவாது என்பதில் ஜோஷி அழுத்தம் தந்தார். 1968 பேட்டி ஒன்றில் நமது செக்டேரியன் அணுகுமுறையால் நாம் கேரளா ஆட்சியை இழந்தோம் என கருத்து தெரிவித்தார். 1958 அமிர்தசரஸ் காங்கிரசில் அவர் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி வந்தார். 1962வரை நியுஏஜ் ஆசிரியராக செயல்பட்டார். அவரால் டெல்லி தனிமையை பழக்கமாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. சீன யுத்தத்தின்போது கட்சிக்குள் வேறுபாடுகள் அதிகமாயின. டாங்கே பிரிட்டிஷ் ஏஜெண்ட் என தாக்கப்பட்டார். டாங்கே பதவி விலகி ஒற்றுமைக்கு உதவலாம் என்ற கருத்து ஜோஷியிடம் இருந்தது. கட்சி உடைவு என்பது பலருக்கு அளித்த வருத்தம் போல் ஜோஷிக்கும் வேதனையை தந்தது. 40 ஆண்டுகள் தவப்பணி வீண் போனது என கருதினார். கட்சியைவிட்டு வெளியேறியவர்களில் சிலர் அதிதீவிர இடது பேசுபவர்கள் அல்லர், அவர்களுக்கு டாங்கே எதிர்ப்பு இருந்தது அவ்வளவுதான் என ஜோஷி பேசிவந்தார். உடைவிற்கு பின்னரும் கட்சி டிசம்பர் 1964ல் டாங்கேவை சேர்மனாக தேர்ந்தெடுத்தது. டாங்கே சேர்மன் ஆவது சரியல்ல என ஜோஷி கருதினார். அவர் தனக்கு மத்திய பொறுப்பு ஏதும் வேண்டாம் என மறுத்துவிட்டார். உ.பி மாநிலமையத்திற்கு தனது உறுப்பினரை மாற்றிக்கொண்டு அவர் சென்றார். அவரது கட்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. தனது வாழ்நாட்களை இனி ஆய்வுகளில் கழிக்கலாம் என ஜவஹர்லால் பலகலைகழக வளாகத்தை தேர்ந்தெடுத்து பெரும்பான்மை நேரத்தை செலவழித்தார். கேரளாவின் புகழ்வாய்ந்த சிந்தனையாளர்களில் ஒருவராக கருதப்பட்ட தோழர் தாமோதரனுடன் இணைந்து ஜே என் யு வில் இடதுசாரி ஆவண காப்பகம் நிறுவிட பாடுபட்டார். இதற்காக பெர்லின், மாஸ்கோ என தேடிச் சென்றார். இந்தியாவில் பல்வேறு நண்பர்களுடன் தொடர்பு கொண்டு ஆவணகாப்பிற்கான தொண்டினை செய்தார். 1857 முதல்விடுதலைப்போர் குறித்த கட்டுரைகளை கொணர்ந்தார். தோழர் ஜோஷியின் துணைவியார் தன்னளவில் புகழ் வாய்ந்த கல்பனா தத்தா என்பார். விடுதலை புரட்சியாளர். . கல்பனாதத் இன்றுள்ள பங்களாதேஷ் பகுதியில் உள்ள ஸ்ரீபூர், சிட்டகாங்கில் ஜூலை 27, 1913ல் பிறந்தவர். 1929ல் மெட்ரிக் முடித்தவுடன் மாணவர் இயக்கத்தில் இணைந்து சூர்யாசென் புரட்சிகர செயல்பாடுகளுக்கு துணையாக நின்றவர். அவர்கள் மே 19, 1933ல் சிட்டகாங் ஆயுத கிடங்கு கொள்ளை வழக்கில் கைதாகின்றனர். சென், தாரகேஷ்வர்தஸ்திதார், கல்பனாவிற்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது, அப்போது கல்பனாவிற்கு வயது 20. தாகூர் போன்றவர்கள் தலையிடுகின்றனர். கல்பனாவிற்கு தண்டனை மாற்றப்பட்டு, பின்னர் 1939ல் அவர் விடுதலையாகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். கட்சி வகுப்பு ஒன்றிற்கு அவர் 1942ல் வந்தார். ஜோஷியிடம் நட்பு ஏற்பட்டு இருவரும் 1943 ஆகஸ்டில் மணம்புரிகின்றனர். கட்சி அலுவலகத்தில் ரணதிவேவும், முசாபரும் மணமக்கள் சார்பில் இருந்து பிஸ்கட்- தேநீர் செலவில் திருமணம் நடந்தேறியது. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காலத்தில் கணவர் ஜோஷிக்கு ஆறுதலைதரும் துணையாக நின்றார். Indian Statistical துறையில் சில காலம் பணிபுரிந்தார். தனது இறுதி காலத்தில் பத்திரிக்கைகளில் பணிபுரிந்த தம் மகன் சந்த்ஜோஷி, மருமகள் மானி சட்டர்ஜியுடன் இருந்தார். பிப்ரவரி 8, 1995ல் அவர் இயற்கை எய்தினார். 15 ஆண்டுகளுக்கு முன்னதாக தோழர் பி சி ஜோஷி நவம்பர் 9, 1980ல் மறைந்திருந்தார். ஜோஷியின் மனிதநேய தோழமை குறித்து அவருடன் நெருக்கமாக பழகிய தோழர்கள் பதிவு செய்துள்ளனர். பம்பாய் கம்யூன் வாழ்வில் லீலா சுந்தரையா பொறுப்பில் தோழர்களுக்கான உணவுக்கூடம் துவங்கியது, இளம் மொகித் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள போராடியதுவரை ஜோஷி நகைச்சுவை உணர்வுடன் தோழமை பாராட்டியவற்றின் பதிவுகள் உள்ளன. 1934ல் 50 உறுப்பினர்கள் அதுவும் உதிரியாக என்று பிபன் சந்திரா தனது கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறார். 1943ல் இது 17000 ஆக முதல் மாநாட்டின்போது உயர்ந்தது. விடுதலை காலத்தில் 80000 தாண்டியது. புகழ்வாய்ந்த இந்தியர்களான பி சி மகலனாபிஸ், டி டி கோசாம்பி. ராகுல்ஜி, பால்ராஜ் சஹானி, பி என் கங்குலி, கியான் சந்த், சம்பு மகராஜ் போன்றவர்கள் ஜோஷியிடம் அன்பு பாராட்டிய பெரியோர்களில் சிலர். People’s Democarcy ல் ஜோஷி நூற்றாண்டின் போது ஜோஷியின் பங்களிப்பை சுட்டிக்காட்டி தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை ஒன்றை எழுதினார். ஜோஷியை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டிய முன்னோடிகளுள் ஜோஷி முக்கியமானவர். அவர் பங்களிப்பை மறப்பது வரலாற்றுக்கு புறம்பானது- மார்க்சியத்திற்கும் புறம்பானது என்று அதில் அவர் குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் போன்ற சர்வதேச கோட்பாடுகளைகொண்ட இயக்கங்கள் நேஷனலிசம் என்பதை பூர்ஷ்வா கருத்துருவம் என குறுக்கிவிடக்கூடாது என்பதிலே ஜோஷிக்கு அளப்பரிய பங்களிப்பு இருந்தது. காந்தி பற்றிய புரிதலில் அவரது பார்வையை கட்சியின் பார்வையை வரலாற்றாய்வாளர் பிபின் சந்திரபால் குறையாக விமர்சிக்கிறார். பாமிதத் வழியாக காந்தியை அவர்கள் கண்டனர். பாமிதத்தின் ஆய்வுகள் அரைகுறையாக இருந்தன என்பது பிபின் வைத்த விமர்சனமாக இருந்தது. நேருவின் மறைவு முதலாண்டு நினைவில் Nehru Legacy- A self Critical Communist Evolution என்ற கட்டுரையை ஜோஷி எழுதினார் பாலக்காடு காங்கிரசின்போது ராஜேஸ்வர்ராவ்,பவானிசென், சோமநாத் லாகிரி, ரவிநாரயண் ரெட்டி போன்றவர்கள் ஜோஷி நிலைப்பட்டிற்கு நெருக்கமாக இருந்தனர். கட்சியின் கொள்கை நிலையில் திருப்புமுனையாக அமைந்த 1958 அமிர்தசரஸ் காங்கிரசில் ஜோஷி முக்கிய பங்காற்றினார். 1977-78 படிண்டாவிற்கு அவர் வந்தபோது பலரும் அவரிடம் நேயத்தை காட்டினர். கம்யூனிஸ்ட் கட்சியை அதன் குழந்தை நிலையிலிருந்து தேசிய பருவத்திற்கு உயர்த்தியவர் ஜோஷி என்ற பெருமிதத்தை அவரது நூற்றாண்டின்போது பலரும் தெரிவித்தனர்,. Ref: 1. P.C. Joshi : A Political Journey , by Bipan Chandra 2. P.C. Joshi: A Biography Gargi Chakravartty 3. Joshi Centenary Articles in PD, Mainstream 3. தோழர் பி டி ரணதிவே (B T Ranadive) இந்தியாவில் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு சோசலிசம் மலரவேண்டும் என்று மார்க்சியத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ்நாள் முழுதும் போராடியவர்களில் தலையானவர் தோழர் பி டி ரணதிவே.. மும்பாய் தாதர் பகுதியில் டிசம்பர் 19, 1904ல் பிறந்தவர் . அவரின் முழுப்பெயர் பாலசந்திர திரிம்பக ரணதிவே. தந்தை திரிம்பக் மொரேஷ்வர் ரணதிவே வருமானத்துறையில் பணிபுரிந்தார். தாயார் யசோதா. புகழ்பெற்ற அகல்யா ரங்கனேகர் உட்பட ரணதிவேவிற்கு 4 சகோதரிகள், மூன்று சகோதரர்கள். தந்தையார் கோகலே ஈர்ப்புடையவர். சமய நல்லிணக்க சபாவில் இருந்தவர். ரணதிவேவிற்கு பள்ளி நாட்களில் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திலகர், காந்தி குறித்த பேச்சுகள் மாணவர் மத்தியில் இருந்தன. 1921ல் புகழ்வாய்ந்த புனேவின் பெர்குசான் கல்லூரியில் சேருகிறார். அடுத்த ஆண்டு டாங்கே போன்றவர்கள் படித்த வில்சன் கல்லூரி பம்பாயில் சேர்கிறார். வரலாறு, பொருளாதாரத்தில் பட்டம் பெற்று முதுகலையும் சேர்கிறார். காந்தி மீது ஈர்ப்பு இருந்தாலும் செளரி செளரா நிகழ்வில் காந்தி திடிரென போராட்டத்தை விலக்கிக்கொண்டது குறித்த விமர்சனம் ரணதிவேயிடம் அப்போதே இருந்தது. தனது MAவில் Gold Medalistஆக அவர் வெளிவந்தார். டாக்டர் ஆய்விற்கு “இந்தியாவில் ஜனத்தொகை” என்பதை எடுத்துக்கொண்டார். புகழ்வாய்ந்த மார்க்சிய அறிஞர் டாக்டர் அதிகாரி பி டி ஆரின் உறவினர். ஜெர்மனியில் வேதியல் டாக்டர் பட்டம் பெற ஆய்வு மாணவராக அங்கு சென்றவர். ஜெர்மனியில் அவருக்கு மார்க்சியம்- கம்யூனிஸ்ட் கட்சி நூல்கள் கிடைக்கப் பெற்றன. சிலவற்றை அவர் இந்தியாவிற்கும் இரகசியமாக அனுப்பிக் கொண்டிருந்தார். BTRக்கு ரஜினிபாமிதத்தின் லேபர் மன்த்லி கிடைக்கத் துவங்கியது. லெனின் நூல்களை வாங்கமுடிந்தது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு 1928ல் அவர் அதில் உறுப்பினராகிறார். கிராந்தி என்கிற மராத்தி வாரப்பத்திரிக்கைக்கும் ஆசிரியராகிறார். 1929 கிரினிகாம்கார் சங்க வேலைநிறுத்தம், ரயில்வே வேலைநிறுத்தங்களில் முன் நிற்கிறார். ரயில்வே சங்கத் தலைவராகிறார். வேலைநிறுத்தங்கள் காரணமாக வழக்கிற்கு உள்ளாகி ஒராண்டு சிறையில் வாடுகிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ராயல் கமிஷன் என்கிற விட்லி கமிஷனை நேரு பகிஷ்கரிக்கவேண்டும் என்ற நிலை எடுத்தார். பிடிஆர் போன்றவர்கள் நேரு நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள் ஆனால் என் எம் ஜோஷி, திவான் சமன்லால் போன்றவர்களை (AITUCஆரம்பகால தலைவர்கள்) அதன் உறுப்பினர்கள் என அரசாங்கம் அறிவிக்கிறது. இதனால் கருத்து வேறுபாடுகள் உருவாகி அவர்கள் AITUCலிருந்து வெளியேறுகின்றனர். 1931ல் ஒர்க்கர்ஸ் வீக்லி என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு ரணதிவே ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அந்த ஆண்டில் ஏ ஐ டி யு சி யில் சுபாஷ்சந்திர போசுடன் கருத்து வேறுபாடு எழுந்து கம்யூனிஸ்ட்கள் வெளியேறுகின்றனர். 1934வரை தனியாக ரெட் யூனியன் நடத்துகின்றனர். பம்பாயில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்தி பேசிய மேடையிலேயே ஏறி பகத்சிங்கை காப்பாற்றுவது எனும் பிரச்சனையில் காந்தி துரோகம் செய்துவிட்டார் என விமர்சித்து பி டி ஆர் பேசுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியைவிட போல்ஷ்விக் கட்சிதான் பொருத்தமானது, அதனை அமைக்கவேண்டும் என கருதி பிடிஆர் போல்ஸ்விக் கட்சி அமைக்கிறார். சீனா, பிரிட்டன், ஜெர்மனி கட்சித்தலைவர்கள் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுகோள் விடுத்தனர் . 1934ல் கம்யூனிஸ்ட் கட்சி தனது அகில இந்திய மையம் ஒன்றை துவங்கி செயல்பட ஆரம்பித்தது. ரணதிவே அதில் மத்திய கமிட்டி உறுப்பினராகிறார். கிரினிகாம்கார் சங்க நடவடிக்கைகளால் டாகடர் அதிகாரியும் ரணதிவேவும் கைதாகி 2 ஆண்டுகள் சிறை வைக்கப்படுகின்றனர். மார்க்சியத்தை ஆழமாக கற்பதற்கு அவரது சிறைவாசம் உதவியது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் போராட்டங்களில் முன்நின்றார். 1938ல் டெக்ஸ்டைல் தொழிலாளர் வேலைநிறுத்தம் அம்பேத்கார் ஆதரவுடன் நடந்தது. அதில் ரணதிவே முக்கிய பங்காற்றினர். தொழிலாளர் மத்தியில் பணியாற்றிவந்த விமல் சர்தேசாயை ரணதிவே மகிழ்வுடன் திருமணம் செய்துகொள்கிறார். 1939 செப்டம்பர் இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் கட்சி பத்திரிக்கைகள் தடை செய்யப்படுகின்றன, பி டி ஆர் உட்பட தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ராஜஸ்தான் தியோலி சிறையில் அவர்கள் அடைக்கப்படுகின்றனர். 1942 வெள்ளையனே வெளியேறு போரட்டத்தை காந்தி அறிவிக்கின்றார். யுத்தத்தில் சோவியத் பங்கேற்ற சூழலில் மக்கள் யுத்தம், ஹிட்லர் தலைமையிலான பாசிசம் வீழ்த்தப்படவேண்டும் என்ற பார்வையில் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் செயல்பட்டனர். காந்தி அறைகூவலில் கட்சி பங்கேற்கவில்லை. இதனை சோசலிஸ்ட்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு போராட்ட நாயகர்களாக தங்களை உயர்த்திக் கொண்டனர். ரணதிவே உட்பட கம்யூனிஸ்ட் இளம் தலைவர்கள் தங்கள் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு பதிலை தந்து கொண்டிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943 மே மாதம் பம்பாயில் நடந்தது. 1935 முதலே பி சி ஜோசி பொதுச்செயலர் பொறுப்பில் பணியாற்றிவந்தார். Working Class and National Defence- Report on Production என்கிற ஆவணத்தை தோழர் ரணதிவே எழுதி இக்காங்கிரசில் முன்வைத்தார், பின்னர் PPH வெளியீடாக அது வந்தது. வங்க பஞ்சம், தெபகா, வார்லி, புன்னப்புரா, ரின் போராட்டங்களில் பி டி ஆர் தனது பங்களிப்பை நல்கி கொண்டிருந்தார். ஆகஸ்ட் 1947 இந்திய விடுதலை அறிவிப்பிற்கு பின்னர் கட்சி சீர்திருத்த பாதையில் போவதாக ரணதிவே கருதினார். எதிர்த்து போராட துவங்கினார். ஜோஷி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கல்கத்தாவில் 1948 இரண்டாவது கட்சி காங்கிரசில் ரணதிவே பொதுச்செயலராகிறார். யதார்த்தத்திற்கு புறம்பாக இடது அதிதீவிர தவறுகளை அவர் செய்ததாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இக்காலத்தில் ரணதிவே மாவோவைக்கூட பிற்போக்குவாதி என விமர்சித்த காலமது. ரணதிவேயின் ருஷ்ய பாதை, ராஜேஸ்வர்ராவின் சீனப்பாதை என்ற விவாதங்கள் கட்சிக்குள் எழுகிறது. ரணதிவே பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். தவறை ஏற்றுக்கொண்டு,என் முகத்திரையை நானே அகற்றிக் கொள்கிறேன் என அவர் சுய விமர்சன அறிக்கை வைத்துக்கொண்டார். பின்னாட்களில் CPIML கட்சியின் லிபெரேஷன் பத்திரிக்கை இதனை வெளியிட்டது. BTR சாதரண நிலை உறுப்பினராக கட்சியில் பொறுமையுடன் தொடர்ந்தார். சீனப்பாதை என்கிற ஆவணத்தை சீனாவிற்கு மொகித்சென் எடுத்து செல்கிறார். சீனத்தலைமை அதை அங்கீகரித்து உதவும் என ராஜேஸ்வரராவ் உள்ளிட்ட ஆந்திர தீசீஸ் தோழர்கள் அக்காலத்தில் நம்பியிருக்கலாம். டாங்கே காட்டே அஜாய் ஆகிய மூவரும் இணைந்து 3 பி ( Three P ) ஆவணம் தருகிறார்கள்.பிரச்சனைகளை தீர்ப்பதற்காக டாங்கே, அஜாய், ராஜேஸ்வர், பசவபுன்னையா ஆகிய நால்வர் டீம் மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்து வழிகாட்டுதல் பெறுகின்றனர். இச்சந்திப்பு பிப்ரவரி 1951ல் நடந்ததாக ருஷ்ய ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. மெயின்ஸ்டீரிம் நிகில் சக்கரவர்த்தி இத்தோழர்கள் கப்பலில் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ததாக மொகித்சென் தனது பதிவில் தெரிவிக்கிறார். பின்னர் அஜாய் பொதுச்செயலராகிறார். பொருளாதார நெருக்கடி குறித்தும், 5 ஆண்டு திட்டங்கள் குறித்தும் ரணதிவே எழுதிய கட்டுரைகள் பாராட்டை பெற்றன. அவர் மகராஷ்ட்ரா கமிட்டிக்கு செயலராக பொறுப்பேற்கிறார். நான்காவது கட்சி காங்கிரசில் அவர் மத்திய கமிட்டிக்கு தேர்வு பெற்று தேசிய பொறுப்புகளுக்கு மீண்டும் உயர்த்தப்படுகிறார். நியுஏஜ் ஆசிரிய பொறுப்பேற்று டெல்லியில் பணிபுரியத் துவங்குகிறார். 1958 அமிர்தசரஸ் காங்கிரஸ், 1961 விஜயவாடா காங்கிரசில் கட்சியில் நடந்த பெரும் விவாதங்களில் தோழர் ரணதிவே முக்கிய பங்காற்றுபவராக விளங்கினார். விஜயவாடாவில் மாற்று ஆவணத்தை முன்வைத்தார். டாங்கே தலைமையிலான திருத்தல்வாதிகளை முறியடிப்போம்- ஆனால் கட்சிக்குள் இருந்து போராடலாம் என்ற கருத்தை டம்டம் சிறையிலிருந்து ஜோதிபாசு அக்டோபர் 1963ல் கடிதம் மூலம் தெரிவிக்கிறார். பின்னர் வெளியிடப்பட்ட கட்சி ஆவணங்களில் பாசுவின் கடிதத்தை பார்க்க முடிந்த்தாக பிரண்ட்லைன் கட்டுரையில் ஏ ஜி நூரணி தெரிவித்தார். இந்திய சீன யுத்தத்தின்போது கருத்து வேறுபாடுகள் தீவிரமாயின. தேசியகவுன்சில் கூட்டத்திலிருந்து பி டி ஆர் உள்ளிட்ட 32 தலைவர்கள் வெளியேறி தெனாலியில் கூடி CPIM கட்சியை உருவாக்கினர். தோழர்கள் நம்பூதிரி, ராமமூர்த்தி ,கோபாலன், ரணதிவே, சுர்ஜித், சுந்தரையா, பசவபுன்னையா, பிரோமோத் தாஸ், ஜோதிபாசு ஆகிய 9 மூத்த தலைவர்கள் CPM மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்ப்யுரோவிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். AITUCல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளால் 32 ஜெனரல் கவுன்சில் உறுப்பினர்கள் வெளியேறி 1970ல் கோவாவில்கூடி CITU தொழிற்சங்கம் அமைத்தனர். கல்கத்தாவில் கூடிய மாநாட்டில் தோழர் ரணதிவே தலைவராகவும், தோழர் ராமமூர்த்தி செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். CPIM, CITU இரண்டு அமைப்புகளிலும் மிக முக்கிய பங்களிப்பாளராக தலைமை பாத்திர தகுதியுடன் தோழர் பி டி ஆர் செயல்பட துவங்கினார். இந்திரா அம்மையார் ஆட்சி, எமர்ஜென்சி, ஜே பி போராட்டங்கள், ஜனதா அனுபவங்களுக்கு பின்னர் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் தங்கள் கட்சி காங்கிரசில் கூடி 1978ன் துவக்கத்தில் இடதுசாரி ஜனநாயக மாற்று என்ற ஒத்த அரசியல் நிலைப்பாட்டிற்கு வந்தனர். இக்காலங்களில் CPI- CPM மத்தியில் தங்கள் பத்திரிக்கைகளில் பெரும் விவாதங்களை நடத்திக்கொண்டனர். தயவற்ற விமர்சனங்கள் ஒருவர் கொள்கை நிலைப்பாடுகளை மற்றவர் தாக்கி கடுமையாக நடைபெற்ற ஆண்டுகள் அவை. ருஷ்யா- சீன அனுபவங்கள், நக்சலைட்டுகள் பிரிந்து போதல் போன்ற அனுபவங்களும் கிடைக்கப்பெற்றன. கேரளா, மேற்குவங்க ஆட்சி அனுபவங்கள், மத்திய ஆட்சியில் பங்கு பெறுவது குறித்த விவாதங்கள்,CPI பங்கேற்ற அனுபவங்கள் என பல நடந்தேறின. தோழர் பி டி ஆர் பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சோசியல் சயின்டிஸ்ட், மார்க்சிஸ்ட் பத்திரிக்கைகளில் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் கற்பிக்கும் வண்ணம் ஆழமான கட்டுரைகளை எழுதிவந்தார். CITU மாத இதழில் அவர் எழுதிய பல புகழ்வாய்ந்த கட்டுரைகள் மூன்று வால்யூம்களாக தொகுக்கப்பட்டு கொணரப்பட்டன. வேலையின்மை, விலைஉயர்வு, பொதுத்துறைகள், இந்திய பொருளாதாரம், அரசின் அவ்வப்போதைய கொள்கைகள், தொழிற்சங்க ஒற்றுமை, மத்திய சங்கங்கள் இணைந்து கான்பெடெரேஷன் அமைப்பது, தொழிலாளரும் அரசியலும். மத நல்லிணக்கம் என பல்வேறு அமசங்களில் அவர் எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத் தலைவர்கள் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய சிறந்த தொகுப்பு அவை. P&T தோழர்களுக்கு சில கேள்விகள் எனக்கூட ஓரிரு கட்டுரைகள் இருந்தன. உழைக்கும் பெண்களுக்கு தனி மாநாடுகள் என்பதில் அவர் வழிகாட்டியாக இருந்தார். மத்திய மாநில பொதுத்துறை போராட்டங்களுக்கு வழிகாட்டினார். தொழிற்சங்க இயக்கத்தில் தொழிலாளர்கள் Guest போல் நடந்து கொள்ளக்கூடாது- நடத்தப்படவும் கூடாது என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தியவர். Euro communism, இந்தியாவில் நிலம் சாதி பிரச்சனைகள், சோவியத் புரட்சி, மார்க்ஸும் தொழிற்சங்கமும், விடுதலை போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் போன்ற அவரது ஆக்கங்கள் இடதுசாரிகள் மத்தியில் அதிகமாக வாசிக்கப்பட்டன. மார்க்ஸ் - மார்க்சியம் குறித்த எளிய ஆழமான அவரது கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்தது. அவர் 1958ல் டாங்கே குறித்தும், சர்வோதயாவும் கம்யூனிசமும் பற்றி புத்தகங்கள் எழுதியதாக அறிகிறோம். வறட்டுத்தனமாக இடது நிலையிலிருந்து பேசியவர் என்ற விமர்சனம் ரணதிவே மீது இப்போதும் இருந்து வருகிறது. நவீன வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா போன்றவர்கள் பொருத்தமான கட்டத்திற்கு பொருத்தமான ஆய்வுகளை அற்புதமாக தந்தவர் ரணதிவே என கட்சிக்காரர்கள் எழுதுவதை கடுமையாக விமர்சித்தார். பி டி ஆர் யாந்திரிகமாகவே விஷயங்களை எழுதியதாகவும் காரில்லோ குறித்துக்கூட அவர் எழுதியதை ஏற்கமுடியாது எனவும் எழுதினார். இதற்கு தோழர் பிரகாஷ் காரத் தகுந்த பதிலையும் தந்திருந்தார். நோய்வாய்பட்ட நிலையில் தோழர் ரணதிவே பம்பாயில் ஏப்ரல் 6 1990ல் மறைந்தார். தனது வாழ்நாளில் இந்தியாவில் சோசலிச புரட்சி சாத்தியமில்லாமல் போனதே என்ற வருத்தத்தை அவர் பதிவு செய்பவராகவே இருந்தார். இந்தியாவில் மார்க்சிய இயக்க முன்னோடி என்கிற தன்மையில் ரணதிவே வரலாறாக நிற்கிறார். 4. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் வங்கத்தின் அர்பலியா கிராமத்தில் 24 பர்கானா மாவட்டத்தில் மார்ச் 21 1887ல் பிறந்தவர் எம் என் ராய். தந்தை தீனபந்து பட்டாசார்யா- தாய் வசந்திகுமாரிதேவி. மாணவர் பருவத்தில் விவேகானந்தா எழுத்துக்களால் ராய் ஈர்க்கப்படுகிறார். பின்னர் இரகசிய புரட்சிகர நடவடிக்கைகளில் இருந்த பிரம்பந்த உபாத்யாய், வங்கப்பிரிவினை இயக்கம், அனுசீலன் சமிதி பர்ன் கோஷ் போன்றவர்களின் தொடர்பு அவரை புரட்சிகர இயக்கம் நோக்கி அழைத்து சென்றது.. அனுசீலன் சமிதியில் அரவிந்த கோஷ் உடன் நட்பு ஏற்பட்டது. 1906ல் ஜதின்முகர்ஜியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை தனது அரசியல் குருவாக ராய் ஏற்கிறார். புரட்சியாளர்களுக்கு ஆயுதம் பெறுவதற்கும் குண்டு தயாரிப்பதற்கும் நிதி பெரும் பிரச்ச்னையாக இருந்ததால் அவர்கள் கஜானா கொள்ளை என்பதில் ஈடுபட்டனர். நனேரந்திரநாத்தாக இருந்த ராய் 1907 டிசம்பரில் முதல் அரசியல் நிதி கொள்ளையில் சங்கிரிபோடா எனும் இடத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தேசிய கல்லுரி மாணவர். கைது செய்யப்பட்டாலும் விடுவிக்கப்பட்டார்.1908-09ல் ஜதினால் உருவாக்கப்பட்ட ஜுகாந்தர் குழுவில் அவர் முக்கிய இடத்தைப் பெற்றார். 1910-15 ஆண்டுகளில் தொடர்ந்த அரசியல் கொள்ளைகளில் ஈடுபட்டார். 1915ல் பெலியகட்டா கொள்ளையில் கைதாகி பிணையில் இருந்தபோது தலைமறைவானார். பெர்லின் புரட்சிகர குழு மூலமாக இந்திய புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க ஜெர்மனி ஏற்பாடு செய்யும் என்ற செய்தி பரவுகிறது. நரேன் ஏப்ரல் 1915ல் ஜாவா செல்கிறார். அங்கு தன்னை சி ஏ மார்டின் என பெயரிட்டு கொள்கிறார். அங்கிருந்து இரண்டே மாதங்களில் பயன் ஏதுமில்லாததால் இந்தியா திரும்பிவிடுகிறார். பிறகு ஜப்பான் சென்று ராஷ்பிஹாரி போஸை சந்திக்கிறார். அந்த சந்திப்பும் தனக்கு பயனளிக்கவில்லை என்ற நிலையில் டோக்கியோவில் சன்யாட்சனை சந்திக்க முயற்சிக்கிறார். ஜெர்மன் தூதுவர் மூலம் பீகிங்கில் நிதியை ஒப்படைக்க முடிந்தால் ஆயுதங்கள் தரமுடியும் என சன்யாட்சென் தெரிவித்தார். 1915 செப்டம்பரில் பலாசோர் பகுதியில் போலீசார் மோதலில் ஜதின் கொல்லப்படுகிறார் என்பதை ராய் அறிகிறார். அவரது ஆயுத பரிமாற்றப் பயணமும் வெற்றி பெறாத நிலையில் அவர் மார்டின் என்ற மத ஆய்வாளர் வேடத்தில் 1916ல் சான்பிராசிஸ்கோ செல்கிறார். அங்கிருந்து கலிபோர்னியா செல்கிறார். அங்கு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் தனது ஜூகாந்தர் குழு தோழரின் சகோதரர் தனகோபால் முகர்ஜியை சந்திக்கிறார்.. அங்குதான் தனகோபால் அவருக்கு மனபேந்திரநாத் ராய்(எம் என் ராய்) என நாமகரணம் சூட்டுகிறார். அப்பெயர் வரலாற்றில் நிலைத்தது. பின்னாட்களில் தனது துணவியாக வரப்போகிற அப்போது மாணவியாக படித்துவந்த எவ்லின் ட்ரெண்ட் அறிமுகமாகிறார். இருவரும் நியுயார்க் செல்கின்றனர். மணம் புரிகின்றனர், 1926வரை சேர்ந்து செயல்படுகின்றனர். நியுயார்க்கில் சோசலிஸ்ட்கள் கூட்டம் ஒன்றில் லாலாலஜ்பத்ராய் பேசுகிறார் என்பதை தெரிந்து எம் என் ராய் அக்கூட்டத்தில் பங்கேற்கிறார். லாலாலஜ்பத் உரை ராய்க்கு நிறைவைத் தரவில்லை. ஆனாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டார். நியுயார்க் பொது நூலகத்தில் மார்க்ஸ் புத்த்கங்களை படிக்க துவங்கினார். அமெரிக்க அதிபர் வில்சனுக்கு ராய் எழுதிய பகிரங்க கடிதம் அவருக்கு பாராட்டை தந்தது. போரின் பொருளாதார விளைவுகள் குறித்து ராய் பேசியிருந்தார். கொலம்பியா பல்கலைகழக வளாகத்தில் ராய் கைதாகும் நிலை ஏற்படுகிறது. அவர் தப்பி மெக்சிகோ செல்கிறார். மெக்சிகோ அரசியல் சூழல்களை பார்த்து பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினார். மார்க்சிய செல்வாக்கு முழுமையாக அவரிடம் பற்றாத சூழலில் ஸ்பானிஷ் மொழியில் இந்தியா குறித்த பிரசுரங்கங்களை 1918-19களில் கொணர்ந்தார். பின்னர் அங்கிருந்த இடதுசாரிகளுடன் இணைந்து எல் சோசலிஸ்டா என்கிற பத்திரிக்கை துவங்கப்படுகிறது. மெக்சிகோ அரசாங்கத்திடம் ஏற்பட்ட நல்லுறவு அவரை அப்போது மெக்சிகோ அதிபராக இருந்த கரான்சா நட்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்றது. எல் ஹெரால்டொ எனும் பத்திரிக்கையின் ஆங்கில பதிப்பில் அவரது கட்டுரைகள் வெளியாயின. அவர் மெக்சிகோ சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகிறார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக 1919ல் மெக்சிகோ வந்த மிஷேல் பரோடின் ராயின் நண்பராகிரார். ஹெகலிய தத்துவங்களை பரோடின் ராயிற்கு அறிமுகப்படுத்துகிறார். கம்யூனிஸ்ட் அகிலம் (மூன்றாவது அகிலம்) துவக்க மாநாட்டின் முடிவுப்படி சோசலிஸ்ட்கள் கட்சிப்பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என மாற்றி செயல்படுவது என்பதை ஏற்று மெக்சிகன் கட்சியும் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியாகிறது. ராய் அதை அகிலத்துடன் இணைக்கிறார் போல்ஷ்விக் புரட்சிக்குப் பின்னர் அமையப்பெற்ற முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக மெக்சிகோ கட்சி வரலாற்றில் இடம் பெற்றது. மெக்சிகோவில் சோசலிஸ்ட் குழுக்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடுகள் நிலவின. ராய் 1919 நவம்பரில் எவ்லினுடன் ஸ்பெயின் சென்றார். மாஸ்கோவில் கோமிண்டர்ண் எனப்படுகின்ற அகிலத்தின் 2வது காங்கிரசில் மெக்சிகன் பிரதிந்தியாக ராய் பங்கேற்றார். பெர்லினில் ராய் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் அகஸ்ட் தால்ஹைமரை சந்திக்கிறார். விடுதலைக்கு போராடும் மக்களுக்கு அகிலம் உதவுவதற்கு ராய் முன்முயற்சி எடுக்க வேண்டும் என தோழர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்ற்னர். ஜெர்மனியில் தங்கியிருந்த மாதங்களில் அவர் எட்வ்ர்ட் பெர்ன்ஸ்டெயின், கார்ல் காட்ஸ்கி, ஹில்பெர்டிங் போன்ற புகழ் வாய்ந்த மார்க்சியர்களை சந்திக்கிறார். எர்னஸ்ட் மேயர், தால்ஹைமர், கிளரா ஜெட்கின், பால் லெவி போன்றவர்களுடன் தோழமை கொள்கிறார். ரோசா லக்ஸம்பர்க் ஆதரவாளர்கள் ஜெர்மன் டச்சு கம்யூனிஸ்ட்கள் சிலரின் பழக்கம் அவரை மார்க்சியத்தில் உறுதிப்படுத்தியது. தேசியவாதம் சுயநிர்ணய உரிமை போன்றவற்றில் நம்பிக்கையின்மையை அவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். ரோசா-லெனின் வேறுபாடுகளையும் அவர்கள் தெரிவித்து வந்தனர். ராய்- லெனின் விவாதம் வந்தபோது ராய்தான் கம்யூனிஸ்ட்- லெனின் தேசியவாதி என்றெல்லாம் அவர்கள் ராயை ஆதரித்து ஏற்றிப் பேசினர். முதன்முதலாக இந்திய நிலைமைகள் குறித்து ராய் தான் புரிந்துகொண்ட மார்க்சிய அடிப்படையில் அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தார். காங்கிரஸின் அணுகுமுறை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கானது ஆனால் புரட்சிகரவாதிகள் உழைக்கும் மக்களின் பொருளாதார விடுதலைக்காக போராடுகிறோம் என ராய் எழுதினார். அவருக்கு இந்தியாவுடன் நேரிடையான களத்தொடர்பு ஏதுமில்லை. கோமிண்டர்ண் இரண்டாவது மாநாடு 1920 ஜூலை-ஆகஸ்டில் நடந்தது. அதில் தேசிய காலனிய பிரச்சனை குறித்த லெனின் ஆய்வறிக்கையுடன் ராயின் அறிக்கையும் விவாதத்திற்கு வைக்கப்பட்டது. ஆசிய மையப்படுத்த அறிக்கையை லெனின் ஏற்கவில்லை. அய்ரோப்பிய புரட்சிகளின் வெற்றிக்கே கூட ஆசிய புரட்சிகளின் அவசியம் குறித்து ராய் பேசினார். காலனிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் பலவீன நிலைதனையும் முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமை பாத்திரத்தையும் லெனின் குறிப்பிட்டார். ராய் மிக அதிக தூரம் சென்றுவிட்டார் என லெனின் மதிப்பிட்டார். காலனி நாடுகளின் பூர்ஷ்வா தலைமையுடன் முழுமையாக அய்க்கியமாகிவிடாமல் அவர்களுடன் இணைந்த போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார் லெனின். ராய் தொழிலாளர் விவசாயி வர்க்க அணியை கட்டுவதற்கு இந்நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை உடன் அமைக்க வேண்டும்- அதற்கு கோமிண்டர்ன் உதவவேண்டும் என வாதிட்டார். முதலாளித்துவ என்ற கட்டத்தை எட்டாமலேயே சோவியத் முறைக்கு பின்னடைந்த நாடுகள் வளர்ந்த நாடுகளின் பாட்டாளிவர்க்க துணையுடன் போகமுடியும் என லெனின் ராய் அறிக்கைகளை அகிலம் சமரசப்படுத்திக்கொண்டது. லெனின் ஆய்வறிக்கைக்கு துணை செய்பவையாக சீன, இந்திய பிரதிநிதிகளின் அறிக்கைகள் இருந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார். காலனி நாடுகளில் தொழிலாளர் விவாசாயிகளை திரட்டும் நமது முயற்சிகளுக்கு அங்குள்ள பூர்ஷ்வா வர்க்கம் தடை ஏற்படுத்தாத சூழலில் அவர்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்றார் லெனின். அவ்வாறு இல்லாத சூழல் எனில் எதிர்த்து போராடவேண்டும் எனவும் லெனின் தனது நிலையை தெளிவுபடுத்தி வந்தார். . ராய் இந்திய நிலைகளில் தொழிலாளர்- விவசாயி வர்க்க உணர்வை மிகையாக மதிப்பிட்டிருந்தாலும், அவர்களை வர்க்க உணர்வுடன் திரட்டும் கருவி சொந்த நாட்டில் தேவை என்று மதிப்பிட்டது வரவேற்க தகுந்த ஆய்வாக அகிலத்தில் இருந்தது. மக்களை திரட்டி போராடும் காந்தியை லெனின் புரட்சிகரவாதி என மதிப்பிட்டதை ராய் ஏற்கவில்லை. காந்தி அரசியல்ரீதியாக புரட்சிகரமானவராகவும்- சமுக அம்சங்களில் பிற்போக்களாராகவும் இருக்கிறார் என ராய் மதிப்பிட்டார். இதில் ராய் பிளக்கானோவின் கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டார். லெனின் பூர்ஷ்வாக்கள் உள்ளிட்ட தொழிலாளர், விவசாயி, குட்டிமுதலாளித்துவ வர்க்க சேர்க்கை குறித்து பேசினார். ராய் முதலாளித்துவாதிகள் நீங்கலான வர்க்க சேர்க்கை என பேசினார். தாஷ்கண்டில் நூற்றுக்கணக்கான முஹாஜிர்களுக்கு இராணுவ மார்க்சிய பயிற்சிப்பள்ளி ஒன்றில் ராய் சில மாதங்கள் கவனம் செலுத்தினார். இச்சமயத்தில் தாஷ்கண்டில் அக்டோபர் 17, 1920ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவித்தனர். கட்சியை ராய், எவ்லின், அபானி, ரோசாபிடின், மொகமது அலி, சாபிக் சித்திக், ஆச்சார்யா துவங்கினர். பின்னாட்களில் வெளிநாட்டில் இப்படி கட்சி ஆரம்பித்ததால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எதிர்ப்பால் இப்பள்ளியை மூடவேண்டியதானது. பின்னர் ஆசிய புரட்சியாளர்களுக்கு பயிற்சி தரும் வகையில் கீழைதேய கம்யூனிஸ்ட் பல்கலைகழகம் ஒன்று மாஸ்கோவில் நிறுவப்பட்டது. 1921 மத்தியில் ராய் இதற்கான முயற்சி எடுத்தார். பெர்லின் புரட்சிகர கமிட்டிக்கும் ராய் குழுவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. பெர்லின் குழுவில் சட்டோபாத்யாயுடன், அவரது துணைவியார் அக்னெஸ் ஸ்மெட்லி, பி என் தத்தா, நளினிகுப்தா, லுகானி கான்கோஜ் இருந்தனர். லெனின் உட்பட சோவியத் தலைவர்களுடன் ராய்க்கு இருந்த நெருக்கம் பெர்லின் புரட்சியாளர்களுக்கு கோபத்தை மூட்டியது. அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் இந்தியா குறித்து பேசுவதற்கான அதிகார பிரதிநிதிகள் தாங்கள்தான் என கோரினர். ராய்-அபர்னி முகர்ஜியை ஒற்றர்கள் என பெர்லின் விரேந்திரநாத் சட்டோபத்யாய் குழுவினரும், ஜெர்மன் ஏஜண்ட்கள் என ராய் குழுவினரும் விமர்சித்துக் கொண்டனர். சட்டோபத்யாய குழுவினர் தாஷ்கண்டில் உருவாக்கப்பட்டதாக சொல்லும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்படவேண்டும் என்றனர். புது கமிட்டி ஒன்றில் பணியாற்ற தயார் எனவும், கட்சியை கலைப்பதாக தான் ஏற்றுக்கொண்டாலும் தன்னோடு உருவாக்கியவர்கள் ஏற்பார்களா எனத் தெரியாது என ராய் வாதாடினார். இந்தியாவிலுள்ள, வெளிநாடுகளிலுள்ள புரட்சியாளர்களுக்கு உதவி செய்து ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதுதான் முதல் கடமையாக இருக்க வேண்டும்- பின்னர்தான் கம்யூனிசம் உருவாக்குதல் என சாட்டோ வாதடினார். கோமிண்டார்ன் கம்யூனிஸ்ட் கட்சிகளை நிறுவுதல் வளர்வதற்கு உதவி செய்தல் தங்கள் கடமை என முடிவெடுத்ததால் பெர்லின் குழுவினர் வெளியேறினர். விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - II 1919 இந்திய அரசாங்க சட்டத்திற்கு ஒத்துழைப்பு என்ற வகையில் காந்தி, மதன்மோகன் மாளவியாவும் எதிர்ப்பு என்ற வகையில் சி ஆர் தாஸ் போன்றவர்களும் செயல்பட்டனர். பின்னர் நிலைமை மாறியது . காந்தி ஒத்துழையாமையை அறிவிக்கிறார். சி ஆர் தாஸ் ஒத்துழையாமைக்கு ஒத்துழைப்பதில்லை என செயல்படுகிறார். சுயராஜ்யம் என்பதை விளக்குவதில் கருத்து வேறுபாடு காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இருந்தது. கிலாபத்தையும் ஒத்துழையாமையையும் காந்தி இணைத்தார். 1921 வேல்ஸ் இளவரசர் வருகையின் போது போராட்டங்கள் தீவிரமாயின. தாஸ், நேருக்கள், லஜ்பத், மெளலான போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். முதல் உலகப்போர் பாதிப்பால் சம்பள வீழ்ச்சி எதிர்த்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தும் மில் தொழிலாளர்கள், ரயில்வே அஞ்சல் போராட்டங்கள் எழுந்தன. 1920ல் மட்டும் 200 வேலை நிறுத்தங்கள் நடந்ததாக ராயல் கமிஷன் பதிவு செய்தது. 1920ல் AITUC உருவானது. முதல் அமர்விற்கு லஜ்பத்ராய் தலைமை தாங்கினார். காந்தியின் சம்பரான் இயக்கம் தொடர்ந்து கிராமப்புறங்களில் விவசாய இயக்கங்கள் எழலாயின. அரசாங்கத்திற்கு வரிகொடா இயக்கம் என்ற காந்தியார் ஜமின்தார்- விவசாயிகள் உறவுகள் சீர்குலையாமல் இருக்க விரும்பினார். ஆனால் விவசாயிகளுக்கு கண்ணெதிரே நடக்கும் மண்ணின் கொடுமைகளே அரசு கொடுமைகளைவிட அதிகம் தெரிபவனவாக இருந்தன. வெளிநாட்டில் இருந்த ராய் போன்றவர்கள் நிலங்கள் தேச உடைமை- விவசாயிகளுக்கு பிரித்து வழங்குதல் என பேசிக்கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் எவ்வளவு தடுக்க நினைத்தாலும் மீறி சோவியத் புரட்சியின் தாக்கம் இளைஞர்களிடம் கவ்வி பிடிக்கத் துவங்கியது. சோவியத் குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிடலாயின அரசியல் பொருளாதார கட்டுமானம் குறித்த் செயல் திட்டம் கொள்கைஅறிக்கை ஏதும் இல்லாமல் தேசிய இயக்கம் செயல்படுவதாக ராய் கருதினார். 1921 அகமதாபத்தில் காங்கிரஸ் என அறிந்து ராயும் அபானியும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை லெனின் ஸ்டாலின் ஏற்புடன் அனுப்பப்படுகிறது. சி ஆர் தாஸ் தலைவர் என்பதால் செல்வாக்கு செலுத்தமுடியும் என ராய் கருதியிருக்கலாம். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி போராட வைப்பதின் மூலம் மட்டுமே சுயராஜ்யம் என அறிக்கை பேசியது. ஆனால் அறிக்கைதனை தலைவர் தாஸ் அவர்களிடம் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கப்பட முடியவில்லை. வேறு சார்பாளர்கள் கையெழுத்துடன் விநியோகிக்கப்பட்டன. ஹஸ்ரத் மொகானி முழு சுதந்திரம் தீர்மானத்தை கொணர்ந்தார். காந்தி ஏற்க மறுத்து ஆபத்தில் முடியும் என நிராகரித்தார். ஒத்துழயாமை இயக்கம் கைவிடப்பட்டது கிலாபத் இயக்கத்தையும் பாதித்ததாக அலிகார் மாணவர்கள் கருதினர். காந்தியின் கைதும் காங்கிரசை பலவீனப்படுத்தியது. அகிலத்தின் மூன்றாம் மாநாட்டில் டிராட்ஸ்கி வைத்த உலக நிலைமைகள் குறித்த அறிக்கையின் மீது ராய் கருத்து தெரிவித்தார். முதல் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு உலகம் அமெரிக்கா தலைமையிலும் கிழக்குலகு இங்கிலாந்து தலைமையிலும் உள்ளன. போருக்குப்பின்னர் தனது எந்திர பாகங்களுக்கு சந்தை தேவை என்பதால் காலனி நாடுகளை தொழில்மயமாக்க துவங்கியது என்றார் ராய். காலனி நாடுகள்தான் இங்கிலாந்தின் நீடித்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவுகின்றன என்றார். எனவே இங்கிலாந்திற்கு தொடர்ந்து இந்த வாய்ப்பை நல்காமல் சோசலிசத்தின் ஆதாரத்தளங்களாக காலனிநாடுகள் புரட்சிகர இயக்கங்கள் மூலம் மாற்றப்படவேண்டும் என்றார் ராய். புரட்சிகர மக்கள் பக்கம் காந்தி நிற்கப்போகிறாரா இல்லையேல் காலனியத்தன்மையை காக்கும் பூர்ஷ்வா சீர்திருத்தவாதிகளுடன் நிற்கப்போகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் ராய். கீழை நாடுகளின் அரசியல் சமுக பொருளாதரா இயக்கங்கள் மேற்கு இயக்கங்கள் போல் ஒத்த தனமை கொண்டவையல்ல எனவும் ராய் கருத்து வெளியிட்டார். 1922ன் மத்தியில். பெர்லினுக்கு கட்சியின் தலைமையகத்தை மாற்றி வேன்கார்டு பத்திரிக்கையை ராய் கொணரத் துவங்கினார். India in Transition, India’s problem and solution, What we want போன்ற பிரசுரங்கள் சுற்றுக்கு வந்தன. டாங்கேவால் கொணரப்பட்ட socialist பத்ரிக்கைக்கு மதிப்புரையை அக்டோபர் 1922ல் ராய் எழுதினார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்டான சார்லஸ் அஸ்லேவை டாங்கே, முசாபர் ஆகியோரை சந்திக்க ராய் அனுப்பினார். கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைய இச்சந்திப்பும் ராயுடனான தொடர்பும் உதவின. இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பை டாங்கே கொணரமுடியும் என்ற நம்பிக்கை சார்லஸிற்கு வந்தது. பெஷாவர், மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா, அகமதாபாத் பகுதிகளில் கட்சி அமைப்புகள் உருவாகிவிட்டதாக கோமிண்டர்னுக்கு ராய் தெரிவித்தார். சி ஆர் தாஸ் ருஷ்யாவிற்கும், மார்க்சியத்திற்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டார். கயா காங்கிரஸிற்கு ராய் அனுப்பிய இந்திய தேசிய காங்கிரசிற்கான திட்டம் என்பதை ராய்ட்டர் போல்ஷ்விக் சதி என வர்ணித்தது. தேசிய இயக்கத்தை தீவிரப்படுத்துதல் என்கிற தனது நடவடிக்கைகள் வெற்றிபெறாமை குறித்து ராய் சோர்வடைந்தார். கயா காங்கிரஸிற்கு பிறகு மோதிலால், தாஸ் போன்றவர்கள் சுயராஜ்ய கட்சியை உருவாக்கி மத்திய சட்டமன்றத்திற்கு சென்றனர். 1924ல் லேபர்கட்சி பிரிட்டனில் ஆட்சிக்கு வருகிறது. காந்தி விடுதலை செய்யப்படுகிறார். சிங்காரவேலர், டாங்கே போன்றவர்கள் அய்ரோப்பா வரவேண்டும் என ராய் விரும்பினார். அகிலத்தின் 4வது மாநாட்டில் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகள் வரவில்லை என்ற வருத்தம் ராய்க்கு இருந்தது. 1923 ஏப்ரலில் சிங்காரவேலர் சென்னையில் கூட்டிய லேபர் கிசான் மாநாட்டில் டாங்கே பங்கேற்கவில்லை. அவ்வமைப்பு சார்பில் முதல் மேதினத்தையும் சிங்காரவேலர் கொண்டாடினார். சிங்காரவேலரின் வேண்டுகோளை ஏற்று ராய் அவரது அமைப்பை மையமாக கொண்டு முசாபர், டாங்கே குழுக்கள் அதற்கு கிளையாகவும் செயல்படவேண்டும் என நினைத்தார். ஆனால் போல்ஷ்விசம் குறித்து சிங்காரவேலர் மாறுபட்ட கருத்து வைத்திருந்தால் கோமிண்டர்ன் ஆதரவு இருக்காது என்பதையும் ராய் தெளிவுபடுத்தினார். கான்பூர் சதி வழக்கில் கம்யூனிஸ்ட் இளந்தலைவர்கள் கைதாகின்றனர். 1924ன் மத்தியில் ராய் தனது செயல்பாடுகளை பாரிசிலிருந்து நடத்தி வந்தார். ஆனால் பிரஞ்சு அரசாங்கம் வேன்கார்டு கொணர்வதில் தடை ஏற்படுத்தியது. பாரிசிலிருந்து அவர் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் கான்பூர் சதி வழக்கால் தொடர்புகள் கடினமாயின. கான்பூரில் உஸ்மானி கைதிற்கு பின்னால் சத்யபக்தா முன்முயற்சி எடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 50 நபர்களுடன் 1924 நவம்பரில் தான் துவங்கிவிட்டதாக பேசிவந்தார். இந்த செய்தி ராயை எட்டவில்லை. ஆனால் சத்யபக்தாவுடன் தொடர்புடைய ஜானகி பிரசாத் பாகர்கட்டா ராயுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார். டிசம்பர் 1924ல் பெல்காமில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் விநியோகிக்க தேசியவாதிகளுக்கு வேண்டுகோள் என்ற அறிக்கையை பாகர்கட்டா மூலம் ராய் அனுப்ப முயற்சித்தார். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துவேறுபாடுகளை சரி செய்துகொண்டு ஒன்றுபட்ட செயல்பாடு என பெல்காமில் முடிவெடுத்தனர். ராயின் தீவிர புரட்சிகர தேசியம் ஆதரவு பெறாமல் போனது. எழும்பிய முழுவிடுதலை தீர்மான முயற்சியும் காந்தியடிகளால் அவசியமற்றது என ஒதுக்கப்பட்டது. 1926ல் மாளவியா லஜ்பத்ராய் ஆதரவுடன் சுயராஜ்ய கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை காங்கிரஸ் கட்சி மேலும் வலதுசாரி சரிவுடன் கூடிய அமைப்பை ஒன்றை துவங்கினார். முப்பதாண்டுகளுக்கு மேலாக அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு- ஒராண்டு ஒத்துழையாமை கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்கிற விமர்சனங்கள் எழத்துவங்கின. Masses என்கிற பத்திரிக்கை துவங்கி காங்கிரசை கடுமையாக விமர்சித்து ராய் எழுதிவந்தார். இந்து-முஸ்லீம் வேற்றுமைகளும் அதிகரித்து வருவதாக ராய் தெரிவித்தார். அனைத்து வகுப்புவாத அமைப்புகளையும் உடன் கலைக்கவேண்டும் என ராய் வேண்டுகோள் விடுத்தார். சி ஆர் தாஸ் மீதான நம்பிக்கையும் பொய்த்துவிட்டதாக ராய் கருதினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் வலிமை குறித்து அதிதமாகவே மாஸ்கோவிற்கு தெரிவித்து வந்தார் என்றும் அதனால்தான் நிதி உதவியை அவரால் பெறமுடிந்தது என்கிற விமர்சனம் ராய் மீது எழத்துவங்கியது. 1925ல் பஞ்சாலைத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களில் இறங்கினர். வடமேற்கு ரயில்வே தொழிலாளர்கள் முதன்முதலாக தங்கள் பகுதியில் செங்கொடி ஏற்றினர். 1924ல் அகிலத்தின் 5வது மாநாடு கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கங்களில் தீவிரமாக பணியாற்றவேண்டும்- மோதிலால், லஜ்பத்ராய் செல்வாக்கிலிருந்து விடுபடவேண்டும் என்ற வழிகாட்டுதலை தந்திருந்தது. ’சிவப்பு விவசாயிகள் அகிலம்’ இந்திய விவசாயிகள் அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விழைந்தது. இந்திய தேசியவாதிகள் குறித்த ராயின் தொடர்ந்த எதிர்மறை பார்வையை அகிலத்தில் ஜினோவீவ் போன்றவர்கள் ஏற்க மறுத்தனர். இந்தியாவில் வளர்ந்துவரும் முதலாளித்துவத்தால் அங்குள்ள மக்கள் பிரச்சனைகள் போராட்டங்கள் பொருளாதார காரணிகள் கொண்டவை தவிர தேசியத்தனத்தால் அல்ல என் ராய் பிடிவாதமாக வாதிட்டு வந்தர். பிரிட்டிஷ் லேபர் அரசாங்கத்தை எதிர்த்து பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி ஏதும் செய்யவில்லை என்ற குற்றசாட்டையும் ராய் எழுப்பினார். ஆனாலும் அகிலத்தின் மார்ச் 1925 செயற்குழு கம்யூனிஸ்ட்கள் காங்கிரசிலும் சுயராஜ்ய கட்சியிலும் செயல்படவேண்டும் என்ற வழிகாட்டுதலை தந்தது. 1925ன் துவக்கத்தில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அனுப்பப்பட்ட கிலேடிங் இந்தியாவில் தங்கி கம்யூனிஸ்ட் இளந்தலைவர்களை சந்தித்த பின்னர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி என ஏதுமில்லை என்ற செய்தியை அனுப்பினார். அப்போது நாடளுமன்றத்தில் இருந்த தோழர் சக்லத்வாலா மூலம் தொழிற்சங்கத்லைவர்கள் சமன்லால், கோசாமி, என் எம் ஜோஷி போன்றவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு ஆம்ஸ்டர்டாமில் கீழைத்தேய மாநாடு ஒன்றிற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ராய் அதற்கு அழைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் குழுக்கள் இருப்பதை கிலேடிங் கண்டறியவில்லை என ராய் விமர்சித்தார். கிளேடிங்கை தொடர்ந்து 1926-28 ஆண்டுகளில் ஜார்ஜ் அல்லிசன், பிலிப் ஸ்பிராட், பெஞ்சமின் பிராட்லி போன்றவர்கள் அனுப்பப்பட்டனர். ராயின் செல்வாக்கு கோமிண்டர்ன், இந்திய கம்யூனிஸ்ட்கள் மத்தியில் சரியத்துவங்கியது. ஸ்டாலின் சக்திமிக்கவராக மாறத்துவங்கியிருந்தார். விடுதலைப் போராட்ட நாடுகளில் சுயேச்சையான கம்யூனிஸ்ட் கட்சி, பூர்ஷ்வாக்களில் முற்போக்கு புரட்சிகரசக்திகளுடன் ஒத்துழைப்பு என பேசத்துவங்கினார். 1926 நவம்பரில் அகிலத்தின் தலைமை ஜினோவீவிடமிருந்து புகாரினுக்கு மாற்றப்பட்டது. கீழை கமிஷனுக்கு ராய் பொறுப்பாக்கப்பட்டார். சீன நிலைமைகள் என்பது தீவிர விவாத நிரலில் இடம் பெற்றது. கோமிண்டர்னின் இம்ரிகார் பத்ரிக்கையின் ஆசிரியர்குழுவில் ராய்க்கு இடம் கிடைத்தது. 1927ல் ராய் சீன கட்சிக்கு உதவிட அனுப்பப்பட்டார். இந்தியாவில் வெளிப்படையான புரட்சிகர தொழிலாளர் விவசாய கட்சியைத்தான் பலப்படுத்தவேண்டும் என ராய் வலியுறுத்தி வந்தார். ஆனால் 1925ல் துவங்கப்பட்ட கம்யூனிஸ்ட்கட்சியை தொடர்வது என இளம் கம்யூனிஸ்ட்கள் முடிவெடுத்தனர். சத்யபக்தா கோமிண்டர்ன் இணைப்பு இல்லை என பேசிவந்தார். மொகானி, பாகர்கட்டா ராய் ஆலோசனைப்படி ரிபப்ளிகன் கட்சி என பேசினர். கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாடு என சிறையிலிருந்த டாங்கே ஆலோசனை தந்தார். கான்பூர் காங்கிரஸ் சூழலில் டிசம்பர் 26-28, 1925ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அப்போதும் சத்யபக்தா தேசிய கம்யூனிஸ்ட் கட்சி என்றே பேசிவந்தார். பிரிட்டிஷ் உளவாளி ராய் என்ற கண்டனக் குரலை சத்யபக்தா எழுப்பினார். பின்னர் தான் முன்முயற்சி எடுத்த கட்சியிலிருந்து வெளியேறினார். பாகர்கட்டா, முசாபர், ஜோலேகர் போன்றவர்கள் கட்சிப்பணியை தொடர்ந்தனர். 1927ல் கோமிண்டர்ன் முன்முயற்சியில் பிரஸ்ஸல்சில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதியாக ஜவஹர் பங்கேற்றார். அதன் செயற்குழுவிலும் இடம் பெற்றார். சோவியத் தாக்கத்தில் அவர் பல்வேறு தீர்மானங்களை சென்னை காங்கிரஸ் அமர்வில் நிறைவேற செய்தார். இந்த பின்னணியில் ’சைமன் கமிஷன் திரும்பி போ’ பெரும் இயக்கமாக மாறியது. லாகூர் ஊர்வலத்தில் லஜ்பத்ராய் தாக்கப்பட்டு பின்னர் மரணித்த சூழல் புரட்சிகர தேசிய இயக்கம் வளரவும் உதவியது. இளைஞர்களின் புரட்சிகர அமைப்புகள் உருவாக்கப்பட்டு சோசலிச புரட்சி பேசத்துவங்கின. தொடர் நிகழ்வுகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உயிர்த்தியாகம்வரை சென்றன. சென்னை அமர்வில் பிலிப்ஸ்ப்ராட், பிராட்லி பங்கேற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியை, தொழிற்சங்க இயக்கங்களை வலுப்படுத்துதல் என்பதில் அவர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர். ராய் சைமன்கமிஷன் விவகாரத்தில் பகிஷ்கரிப்பு என்கிற எதிர்மறை நிலைப்பாட்டைவிட அரசியல் அமைப்பு அசெம்பளி என்கிற நேர்மறையான கோரிக்கை தேவை எனக்கருதினார். தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் போலவே விவசாயிகள் பர்தோலி வரிகொடா இயக்கம் வல்லபாய் தலைமையில் தீவிரமானது. அரசின் அடக்குமுறைகள் இருந்தாலும் பின்னர் அரசாங்கம் பணிய நேர்ந்தது. 1928 AITUC ஜாரியாவில் பழிவாங்கப்பட்ட ரயில்வே தலைவர் குல்கர்னியை நேருவிற்கு எதிராக தலைமைக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரித்தனர். நேரு வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட்கள் ரெட் இண்டெர்னேஷனல் என்றும், சமன்லால், என் எம் ஜோஷி , கிரி போன்ற்வர் பிரிட்டிஷ் லேபர் TUC இணைப்பு என்றும் பிரிந்து நின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகுடன் இணைப்பு என்பதில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற முடிந்தது. இந்த சூழலில் மோதிலால் தலைமையில் நடந்த கல்கத்தா காங்கிரசில் உழைப்போர்கள் 50000க்கும் மேற்பட்டோர் பெரும் ஊர்வலமாக பந்தலுக்கு வந்து உடன்விடுதலை என்கிற தீர்மானத்திற்கான முழக்கமிட்டனர். ராய் இவ்வெழுச்சி குறித்து பெருமிதமாக பிரஞ்சு புரட்சியுடன் ஒப்பிட்டு எழுதினார். அகிலத்தின் ஆறாவது மாநாட்டில் 6 இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். செளமேந்திரநாத் தாகூர் பிரிட்டன் முன்புபோல் இல்லாமல் தேசிய முதலாளிகளின் தொழிலை ஊக்கப்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார். செளகத் உஸ்மானி கடந்த 10 ஆண்டுகளாக இங்கே தங்கியிருந்தவர்கள் இருட்டிலேயே உழன்றுள்ளனர் என ராய்க்கு எதிராக பேசினார். அகிலம் காங்கிரசின் சீர்திருத்த முகத்தை அம்பலப்படுத்துவது, தொழிலாளிவர்க்க கட்சியை வலுப்படுத்துவது என்ற வழிகாட்டுதலை தந்தது. சீனாவிலிருந்து திரும்பிய ராய் காலனிமய நீக்கம் என்ற விவாதத்தில் பங்கேற்றார். புகாரின் பயன்படுத்திய சொல்லாட்சி என்றாலும் இந்தியாவில் வளர்ந்துவரும் தொழிற்மயத்தை ராய் சுட்டிக்காட்டினார். பண்டைய கம்பெனி முறையில் பிரிட்டிஷ் நடந்து கொள்ளமுடியாது- உள்நாட்டு முதலாளிகளை ஊக்கப்படுத்தாமல் இருக்கமுடியாது என்றார். இதன் பொருள் ஏகாதிபத்திய்மே காலனிமய நீக்கத்தை தானாக செய்துவிடும் என்பதல்ல என ராய் தனது நிலையை தெளிவுபடுத்தினார். 1928பிப்ரவரியில் ராய் பெர்லின் சென்றார். அங்கு தால்ஹைமென், ஹெய்ன்ரிச் பிராட்லெர் போன்றவர்களின் குழுவுடன் நட்பு பாராட்டிவந்தார். சில மாதங்கள் அகிலத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார். ஜெர்மனில் கம்யூனிச விரோத பத்திரிக்கை ஒன்றில் அகிலத்தின் நெருக்கடிகள் குறித்து கட்டுரை எழுதினார். குசினென் போன்றவர்க்கு ராயை ஒழித்துக்கட்டுவதற்கு நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. 1929 ஜூலை பிளினத்தில் ராய் குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்தன. கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான பொதுபாதுகாப்பு மசோதாவிற்கு(பகத்சிங் குண்டெறிந்தது) ஆதரவு தந்த சுயராஜ்ய கட்சியினரை ராய் பாராட்டிவருகிறார் என்கிற விமர்சனத்தை குசினென் முன்வைத்தார். ராயிடம் மென்ஷ்விக்குகள் மணம் வீசுகிறது என்ற தாக்குதலும் வந்தது. 1929 செப்டம்பரில் ராய் அகிலத்திலிருந்து நீக்கப்பட்டார். 1929 டிசம்பரில் இது உறுதி செய்யப்பட்டது. முதலில் பெர்லின் குழுவினர் எனப்பட்ட சட்டோ, புபன் தத்தா குழுவினர் லெனினிடம் ராய் குறித்த எதிர்ப்புகளை செய்து வந்தனர். ஆரம்பத்தில் ராயுடன் நின்ற அபானிமுகர்ஜி சட்டா குழுவினருடனும், மகேந்திர பிரதாப் குழுவினருடனும் சேர்ந்து ராயை எதிர்க்க துவங்கினார். இந்தியாவிலும் கூட சிங்காரவேலர், மணிலால் போன்றவர்களுடன் அபானிக்கு தொடர்பு இருந்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர் பி தத், சக்லத்வாலா பொறுப்பில் ராயின் நேரடி இந்திய தலையீடு மட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் நளினி குப்தா, செளமியா தாகூர் போன்றவர்களும் ராயின் செல்வாக்கு வீழ காரணமாயினர். நிதிபகிர்வு குற்றாசாட்டுக்களும் தோழர்கள் மத்தியில் எழுந்தன. புகாரினுடன் ராய் நின்றதும் ஸ்டாலினிடமிருந்து ராயை தள்ளிப்போகவைத்தது. இந்தியாவில் வெளித்தெரியும் மக்கள் கட்சி, இரகசிய கம்யூனிஸ்ட் கட்சி என்கிற ராயின் வழிகாட்டுதல் ஏற்கப்படவில்லை. . இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு கம்யூனிஸ்ட்களை வெளியேற்றத்தான் பொதுபாதுகாப்பு சட்டத்தை பிரிட்டிஷ் கொணர்கிறது என தெரிவித்த ராயின் கடிதம் அசெம்பிளி கடிதம் என பெயர் பெற்றது. இதில் மோதிலால், லாலாலஜ்பத், தாகூர்தாஸ் போன்றவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். பென்பிராட்லி, பிலிப் ஸ்பிராட் இருப்பதால்தான் வேலைநிறுத்தங்கள் அதிகரித்தன என்பது அபத்தமானது என்றார் மோதிலால். அவர்களால்தான் ஆபத்து எனில் பிரிட்டிஷ் ஏன் அவர்களை இந்தியாவிற்கு வரவிட்டது என்ற கேள்வியை ஸ்ரீநிவாச அய்யங்கார் எழுப்பினார். இத்தாலி போன்ற பாசிச சர்க்காரில்தான் இத்தகைய சட்டங்கள் நிலவமுடியும் என்று கேலி செய்தார் லஜ்பத். உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் கொள்கைகளை பரவவிடாது தடுக்கத்தான் இச்சட்டம் என என எம் ஜோஷி தெரிவித்தார். ஏப்ரல் 8 1929ல் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி சார்பில் பகத்சிங்கும் பதுகேஸ்வர் தத்தும் குண்டு வீசினர். கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு சட்டத்தை சுயராஜ்ய கட்சியினர் எதிர்த்து போராடினர் என்ற ராயின் கருத்து அகிலத்தில் விமர்சிக்கப்பட்டது. முன்னதாக மார்ச்சில் 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மோதிலால் இதன்மீது விவாதம் எழுப்ப மத்திய சட்டமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை. மீரத் வழக்கு ஜனவரி 1930ல் துவங்கி மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - III லாகூரில் கவுன்சில் அரசியலுக்கு மாறுபட்டு ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தலைமை காங்கிரசிற்கு தேவை எனக் கருதி ஜவஹர்லாலை தலைமைக்கு காந்தி கொணர்ந்தார். டொமினியன் அந்தஸ்து விவாதத்தில் இருந்த நேரத்தில் ஜவஹர் தனது தலைமை உரையில் முழு விடுதலை என பேசினார். 1921லிருந்து தடுக்கப்பட்ட அதற்கான தீர்மானமும் நிறைவேறியது. 1931ல் ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகிலிருந்து ஜவஹர் ஒதுங்கினார். லீகும் அவரை கமிட்டியிலிருந்து வெளியேற்றியது. ராய் முழுவிடுதலைக்கு அரசியல் அமைப்பு அசெம்பிளி என்ற கோரிக்கையுடன் தனது அறிக்கையை வெளியிட்டார். ராய் நேரு- சுபாஷ் ஆகிய அனைவரையும் கம்யூனிஸ்ட்கள் விமர்சிக்க துவங்கினர். சோவியத்தான் சரியான முழக்கம் என்றனர். அகிலத்தின் தவறான வழிகாட்டுதலைக் கொண்டு சரியான கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் நிறுவ முடியாது என பேசத்துவங்கினார் ராய். லெனினையும் துணைக்கு அழைத்து பிரஞ்சு புரட்சி தாக்க ஜாகோபியனிசம் என்றார். பல்வர்க்க தலைமை (Multi class leadership) என்றார். தொழிலாளர் தலைமையில் விவசாயிகளுடன் குட்டி முதலாளித்துவாதிகளை இணைத்து தேசிய ஜனநாயக புரட்சி என முன்வைத்தார். பம்பாயில் 1930ல் பத்து நண்பர்கள் துணையால் ராய் குரூப் துவங்கப்பட்டது. டாக்டர் மக்மூது என்ற பெயரில் பல்வேறு அரசியல் விவாதங்களை ராய் நடத்த துவங்கினார். பம்பாயில் ராயிஸ்ட்கள் மராத்தியில் காம்கிரஞ்ச லால் பவதா மற்றும் மக்கள் என்ற ஆங்கில பத்திரிக்கைகளை துவங்கினர். மும்பையில் தங்கியிருந்தபோது வல்லபாய் படேல், என் எம் ஜோஷி, அம்பேத்கார் போன்ற தலைவர்களை ராய் சந்தித்தார். ராயின் நடமாட்டம் அறிந்த போலீசார் தேடத்துவங்கினர். பின்னர் உ பி பகுதிகளுக்கு பானர்ஜி என்ற பெயரில் சென்றார் ராய். அங்கு நேருவை சந்திக்கிறார். தனது தோழர் கபாடியை அனுப்பி மீரத் வழக்கில் சிறையிலிருந்த டாங்கேவை சந்திக்க வைக்கிறார். கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷை சந்திக்கிறார். மாநாட்டில் ராய் தங்கியிருந்த பகுதிக்கு நேரு வந்து காந்தியின் திட்டத்தை ஏற்பதற்கில்லை மேலும் கூடுதலாக தீவிர திட்டம் ஒன்றிற்கு ஆலோசனை பெறப்பட்டதாக ராய் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ராயின் கருத்துக்களில் சில நேருவின் தீர்மானத்தில் இடம் பெற்றதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் புனே சென்று தென்னிந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராய் விரும்பினார். ஆனால் ஜூலை 1931ல் அவர் கைது செய்யப்படுகிறார். பரேலி சிறையில் கக்கோரி வழக்கு புரட்சியாளர்களை சந்திக்கிறார். இக்காலத்தில் சோமனாத் லாகிரி, டாக்டர் அனாதி பாதுரி, ரஜானி முகர்ஜி போன்றவர்கள் ராய்க்கு நெருக்கமாயினர். கல்கத்தாவில் சிறிய குழு ஒன்று ராய்க்கு ஆதரவாக இருந்து வேன்கார்ட், யங் சோசலிஸ்ட் பத்திரிக்கைகளை கொணர்ந்தது. 1934ல் இக்குழு காந்தி பகிஷ்கரிப்பு கமிட்டி என்ற ஒன்றையும் தொடங்கினர். ராயின் ஆதரவாளர்களை இணைக்கும் வகையில் இந்திய தொழிலாளிவர்க்க புரட்சிகர அமைப்பு என்ற ஒன்றும் துவங்கப்படுகிறது. விவசாயிகள் பிரச்சனையில் காந்தியால் போதுமான வெற்றியை கொணரமுடியவில்லை என இடதுசாரி பிரிவினர் கருதினர். வரிகொடா இயக்கம் வேகமாக பரவியது. குத்தகையாளருக்கும் நிலச்சுவான்தாரர்களுக்குமான மோதல் எழக்கூடாது என காந்தி கருதினார். ராய் விவசாயிகள் இயக்கம் மேலும் தீவிரமாக எழவேண்டும் என விரும்பினார். அலகாபாத் மாவட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. நேரு இப்போராட்டம் இறுதி போராட்டம் ஆகட்டும் என பேசிக்கொண்டிருந்தார். AITUC தொழிற்சங்கங்களிலும் ராய் ஆதரவாளர்கள் செல்வாக்கு செலுத்திட பெரும் முயற்சி எடுத்தனர். ராய்கர், முகுந்தலால் சர்க்கார், நிம்ப்கர், ஹரிஹர சாஸ்த்ரி போன்றவர்கள் இதற்கு துணை நின்றனர். AIRF லும் 1933ல் நாக்பூரில் நடந்த ரயில்வே மாநாட்டில் தோழர் ரணதிவே ஆதரவாளர்களின் செல்வாக்கை குறைப்பதில் ராயிஸ்ட்கள் பணியாற்றினர். ராய் முன்வைத்த Platform for Unity என்பதை கம்யூனிஸ்ட்கள் ஓடுகாலி திட்டம் என்ற பார்வையில் நிராகரித்தனர். தொழிலாளி வர்க்கத்தை அதன் புரட்சிகர பாதையில் பாதியிலேயே நிறுத்த ராய் சதி என கடுமையான விமர்சனங்களை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர். AITUCலிருந்து வெளியேறி ரெட் தொழிற்சங்கம் துவங்கினர். இதில் ரணதிவே, சோம்நாத்லாகிரி, ஜமாலதீன் புகாரி , பங்கிம் முகர்ஜி போன்றவர் முன்நின்றனர். 1933ல் காட்டே, மிராஜ்கர், நிம்ப்கர் போன்ற மீரத் வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். வேலைநிறுத்தங்கள் ராயினரையும் கம்யூனிஸ்ட்களையும் சற்று நெருங்க வைத்தது. நாட்டில் பார்த்த யதார்த்த நிலைகள் ராயை நிதானப்படுத்தின. அவர் முன்பு எழுதியவைகளின் பொருத்தப்பாடுகள் குறித்தும் அவரை சிந்திக்க வைத்தன. பிரிட்டிஷ் அரசு ஆகஸ்ட் 1934ல் சி பி அய் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்தது. AITUC கல்கத்தா அமர்விற்கு மிராஜ்கர் வந்தார். ரெட் தொழிற்சங்கத்தை கலைக்க வேண்டும் என்பதை ராய் ஆதரவாளர்கள் கோரினர். இதை கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டு 1935ல் AITUCக்கு திரும்பினர். ஏகாதிபத்திய எதிர்ப்பு லீகில் செயல்பட்ட விரேந்திர சட்டோ புரட்சிகர இயக்கத்திற்கும் காங்கிரசிற்கும் இடையில்தான் போராட்டம் என பேசத்துவங்கினார். நாஜிகளின் செல்வாக்கு ஜெர்மனியில் உயர்ந்த சூழலில் கோமிண்டர்னின் 7வது மாநாட்டில் டிமிட்ராவ் ஐக்கிய முண்ணனி தந்திரம் என்பதை முன்வைத்தார். காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி என்ற முழக்கம் வைக்கப்பட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு தத்-பிராட்லி (Dutt - -Bradley Thesis) அறிக்கை மூலம் அகிலத்தின் பார்வை தெளிவுபடுத்தப்பட்டது, காங்கிரசையே/ காங்கிரஸ் சோசலிஸ்ட் மேடையையே ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடையாக மாற்ற முடிவானது. வளர்ந்துவரும் பாசிச அபாயம் கம்யூனிஸ்ட்களையும் சமுக ஜனநாயகவாதிகளையும் நெருங்க செய்யும் என ராய் கருதினார். கோமிண்டர்ன் தலைமைக்கு காங்கிரசை மேடையாக மாற்றுங்கள் என்ற கடிதமும் எழுதினார். தான் மீண்டும் அகிலத்திற்கு அழைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு புரட்சிகரவாதிகள் இருக்க வேண்டும் என்ற லெனின் அறிவுரையை ராய் வற்புறுத்தினார். ஆறாவது அகிலத்திற்கு பின்னர் ஓடுகாலி என முத்திரை குத்தப்பட்ட ராய் 7வது அகில முடிவில் உடன்பட்டிருந்தாலும் அவருடன் எந்த தொடர்பையும் அகிலம் வைக்கவில்லை.. ராயிஸ்ட்கள் மக்களின் உடனடி தீர்விற்குரிய கோரிக்கைகள் என வலியுறுத்தியபோது வர்க்கப்பார்வையில் கோரிக்கைகள் என்று கம்யூனிஸ்ட்கள் வேறுபட்டனர். Constituent Assembly என ராயிஸ்ட்கள் எழுப்பியதும் வேறுபாட்டை உருவாக்கியது. அரசியல் சட்ட அமைப்பையும் நாடாளுமன்றத்தையும் கம்யூனிஸ்ட்கள் குழப்பிக் கொள்வதாக ராயிஸ்ட்கள் விமர்சித்தனர். நேரு இரண்டாவது முறையும் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினராக செயல்பட்ட நரேந்திரதேவ், ஜெயபிரகாஷ், பட்வர்த்தன் ஆகியோரை செயற்குழுவில் இணைத்தார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள், ராயிஸ்ட்கள் என்ற பிரிவுகள் இயங்கின. தனிநபர் துதி - கொள்கை பலவீனங்களுடன் இந்த இடதுகள் செயல்படுவதாக ராய் விமர்சிக்க துவங்கினார். சோசலிச முழக்கம் மூலம் காங்கிரஸ் தலைமையை கைப்பற்றுவது கடினம், வலதுசாரிகள் பலம் பெறுகிறார்கள் என உணர்ந்த ராய் தேசிய ஜனநாயக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம், புரட்சி என்ற முழக்கங்களை வற்புறுத்தினார். சுபாஷ் அவர்களும் தனது ஹரிபுரா காங்கிரஸ் தலைமையுரையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற இடதுநிலைதான், சோசலிசமல்ல என்ற கருத்திற்கு வந்திருந்தார். இந்திய நிலைமைகள் போல்ஷ்விசத்திற்கு கனியவில்லை என்ற தெளிவான பார்வைக்கு ராய் வந்திருந்தார். CSPல் பிளவுவேலை செய்கிறார் ராய் என்ற குற்றசாட்டை எம் ஆர் மசானி போன்றவர்கள் சொல்லத் துவங்கினர். 1936 CSP ஃபைஸ்பூர் மாநாட்டில் ராய் கலந்துகொண்டார். தீர்மானங்களும் ஒருமனதாகவே நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளால் 1937ல் ராய் குழுவினர் வெளியேறினர். 1940 ராம்கார் காங்கிரஸ்வரை கம்யூனிஸ்ட்கள் CSPல் தொடர்ந்தனர். காங்கிரஸ்சோசலிஸ்ட் இயக்கத்தில் சோசலிஸ்ட்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் மோதல்கள் தொடர்ந்தன. ராம்கர் மாநாடு கம்யூனிஸ்ட்களை வெளியேற்றியது, விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - IV டேராடூன் சிறையிலிருந்து 1936 நவம்பரில் வெளிவந்தது முதல் ராய் உடனடி அவசியம் நாட்டின் விடுதலைதான் சோசலிசமல்ல என பேசத்துவங்கினார். காங்கிரசில் கவனம் செலுத்தி அவ்வியக்கத்தை கூடுதல் ஜனநாயகப்படுத்துவதும் திட்டங்களை தீவிரப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்திட ராய் முடிவெடுத்தார். 1936 ஃபைசபூர் மாநாட்டில்தான் காந்தியை அவர் சந்திக்கிறார். ராஜேந்திரபிரசாத், வல்லபாய் படேல் போன்றவர்களுடன் விவாதிக்கிறார். ராஜேந்திரபிரசாத்தும் ராயை சதகத் ஆசிரமத்திற்கு அழைக்கிறார். நேருவின் இடத்திற்கு நீங்கள்தான் என ராயை சந்தித்து சில காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாகவும் செய்திகள் வந்தன. காங்கிரசில் வலதுசாரி தலைவர்கள் ராய் பக்கம் பேசுவது போன்ற காட்சிகள் தெரிந்தன. காந்தியிடம் ராய் தனது சோசலிசம் குறித்த பார்வையை விளக்கும்போது விடுதலைதான் முதல் குறிக்கோள், காங்கிரசை பலப்படுத்துவது குறித்து தாங்கள் குறிப்பு தந்தால் அதை செயற்குழு ஏற்க செய்து தீர்மானம் ஆக்கிட தான் உதவ முடியும் என்றார் காந்தி. தனது பிரார்த்தனை (Prayer) கூட்டத்திற்கு ராய் வரவேண்டும் என்றார் காந்தி. ராயின் தயக்கம் அறிந்த காந்தி தனக்கு அது எவ்வளவு தேவையாக முக்கியமாக இருக்கிறது என்பதை விளக்கினார். தனது வாரப்பத்திரிக்கை நடத்திட நிதி உதவி தேவை என ராய் கோரியபோது, காந்தி முதலில் நாடு முழுக்க சுற்றி வாருங்கள் என்றார். ஃபைஸ்பூர் மாநாட்டில் ராஜேந்திர பிரசாத்தால் அரசியல் அமைப்புசட்ட அசெம்பிளி தீர்மானம் கொணரப்பட்டது. டாங்கே சோவியத், பிரான்ஸ் நடைமுறைகளை சுட்டிக்காட்டி நமது விடுதலை போராட்டம் வெற்றிக்கு பின்னர் சி ஏ (CA) என்றார். ஜெயபிரகாஷ் நாரயணன் டாங்கேவிற்கு ஆதரவு தெரிவித்தார். ராய் அவர்கள் சி ஏ அவசியம் குறித்து உரையாற்றினார். ஃபைஸ்பூர் காங்கிரஸ் இதற்காக தேசிய கன்வென்ஷன் ஒன்றை கூட்ட முடிவெடுத்தது. ராய் காட்ஸ்கி ஆகிவிட்டார் என்ற விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் வைத்தனர். நரேந்திரதேவ் புரட்சிகர கருத்து என ராயை பாராட்டினார். லோகியாவும் நம் கையில் கிடைக்கும் சிறந்த ஆயுதம் என்றார். இப்படி இடதுசாரிகளாக செயல்பட்டவர்கள் யார் எப்பக்கம் என்பது ஒவ்வொருமுறையும் கணிக்க முடியாமல் இருந்தது. இந்திய அரசாங்க சட்டம் 1935 அடிப்படையில் 1937 தேர்தல்கள் முடிந்தவுடன் கவர்னர்கள் மந்திரிசபையின் அன்றாட செயல்பாட்டில் தலையிடக்கூடாது என்பது வற்புறுத்தப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு என்ற அளவிலாவது காங்கிரஸ் தனது தொளதொளப்பை விட்டு பலவீனங்களை களைந்து புரட்சிகர அமைப்பாக எழவேண்டும் என ராய் வற்புறுத்தினார். மக்கள் தொடர்பு கமிட்டி ஒன்றை ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ், தெளலத்ராம் கொண்டு காங்கிரஸ் அமைத்தது. காங்கிரஸ் அமைப்பு சட்ட திருத்தமும் நிகழ்ச்சிநிரல் ஆக்கப்பட்டது. வலது பிரிவினர் தனிநபர்களை உறுப்பினர்களாக வைக்கலாம் ஆனால் அமைப்புகளை கார்ப்பரேட் உறுப்பினர்களாக கூடாது என்றனர். இதில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கருத்து ஏற்கப்படவில்லை. முதலில் ராய் Collective Affiliation என்கிற கருத்திற்கு ஏற்புடையவராக இருந்தாலும் பின்னர் தனது நிலையை அவர் மாற்றிக்கொண்டார். வர்க்க அமைப்புகளை முழுமையாக காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வது சரியல்ல என பேசினார். ஒவ்வொரு வர்க்க ஸ்தாபன உறுப்பினரையும் தனி உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் உறுப்பினராக ஏற்கலாம் என்றார் ராய். 1935 சட்டப்படி அமைச்சரவை பங்கேற்பு குறித்தும் விவாதம் இருந்தது. நேரு போன்றவர்களுக்கு கூட தயக்கம் இருந்தது. ராய் பங்கேற்பை ஆதரித்தார். அரசுக்குள் அரசாக (State within state) செயல்படுவதற்கான வலுவை காங்கிரஸிற்கு பங்கேற்பு தரும் என ராய் கருதினார் விவசாய அமைப்புகள் அவ்வப்போது ஏற்படுத்தும் கிளர்ச்சிகள் புரட்சியாகாது- அவர்களால் தனித்து புரட்சி உருவாக்கவும் இயலாது என ராய் கருதினார். அதே நேரத்தில் நில சொத்துரிமை என்பதில் தீவிர மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும் என விரும்பினார். தேசிய இயக்கங்களின் முழு வெற்றி என்பது விவசாய பிரச்சனை தீர்வில் இருக்கிறது என்றார். . பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டாலும் இடதுசாரி சிந்தனை தேசிய இயக்கங்களில் வளரத்துவங்கியது. இடது தேசியம் என்பதின் குரலாக சுபாஷ் போசை காங்கிரஸ் தலைவராக்கிட முயற்சிகள் நடந்தன. இடது பார்வையை கொள்கை பூர்வமாக முன்வைக்காமல் மேலெழுந்தவாரியாக போஸ் பேசுகிறார் என்ற குற்ற சாட்டை நேரு வைத்தார். காந்தியின் மனநிலைக்கு எதிராக நேரு செயல்பட தயாராக இல்லாதது இடதுசாரிகளை பலவீனமாக்கியது. திரிபுரா காங்கிரசில் 1939ல் காங்கிரசில் காந்தியின் உயர்நிலையை அங்கீகரிக்காது போட்டி என போஸ் நிற்பேன் என்ற நிலைப்பாட்டை பட்டேல் தலைமையில் வலது பிரிவு எதிர்க்க முடிவு செய்தது. பட்டாபிசீதாராமையாவை நிற்கவைத்தது. பட்டாபிசீதராமையா தோல்வியை தன் தோல்வியாக கருதி வெளிப்படையாக காந்தி பேசினார். காந்தி என்ற ஒற்றை தலைமை போல் இடதுசாரிகளுக்கு என ஒற்றை தலைமை இல்லாதது குறைதான் என சுபாஷ் கருத்து தெரிவித்தார். ஜெயபிரகாஷ்நாரயண் காந்திக்கும் சுபாஷிற்கும் இடையில் இணக்கம் உருவாக்க முயற்சித்தும் அது சாத்தியமாகவில்லை. பரத்வாஜ் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் காந்தியின் விருப்பம் ஏற்கப்படவேண்டும் என்றாலும் போஸின் தலைமை என்பதையும் வலியுறுத்தினர். காங்கிரசை தீவிரப்படுத்தவேண்டும் என்பதற்கு ராய் காட்டிய அவசரத்தை நேரு ஏற்க மறுத்தார். கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட்கள் ஆகிய இருபக்கத்தினரும் ராயை தனிமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தததாக ராயிஸ்ட்கள் குற்றம் சாட்டினர். போஸ் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கமிட்டியில் விலகுவதாக அறிவித்தார். தனது 4 ஆதரளவாளர்களாவது கமிட்டியில் என்பதற்கு காந்தி இரண்டுதான் என்றதும் தான் அனுப்பிய பெயர்களில் ஒருவரை மட்டும் காந்தி ஏற்றதும் போஸிற்கு ஏற்கனவே இருந்த அதிருப்தியை அதிகப்படுத்தியது. போஸ் விலகல் சீர்குலைவு வேலைகளை அதிகரித்துவிடும் என ஜெயபிரகாஷ் எச்சரித்தார். ராயிஸ்ட்கள் காங்கிரஸ் தலைவரை பொம்மையாக வைத்துக்கொண்டு காரியமாற்றுவது சரியல்ல எனவே போஸ் ராஜினாமா சரியானதே என விவாதித்தனர். ராய் போஸ் அணியுடன் நெருக்கம்போன்ற காட்சி வரத்துவங்கியது. ஆனால் போஸ் ஒத்துழைப்பை கோரவில்லை என்ற வருத்தமும் ராயினருக்கு இருந்தது. பிப் 1939ல் ராய் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட்கள், போஸ் அணியினர், சோசலிஸ்ட்கள் என அனைத்து இடது தரப்பினரும் பங்கேற்ற மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இந்த ஒற்றுமை மாநாட்டை தொடர்ந்து நீட்டிக்கமுடியவில்லை. மே மாதம் பார்வார்ட் பிளாக் உருவாக்கத்தை போஸ் அறிவித்தார். ஜெயபிரகாஷ், ஜோஷி போன்றவர்கள் அனைத்திந்திய இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக்குழுவை பலப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினர். போஸ் அழைப்பை ஏற்று பார்வார்ட் பிளாக்கில் சேர்வது என்பதை கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட்கள் ஏற்கவில்லை. Left Consolidation Committte (LCC) Left Radical Congressmen (LRC) போன்றவைகளுக்கு ராய் முக்கியத்துவம் தந்தார். அக்கூட்டங்களிலும் நான்கு வகையினராக செயல்பட்ட இடதுசாரிகளின் வேறுபாடுகளை குறைக்க முடியவில்லை. போஸ் கொள்கைபூர்வமான போராட்டங்களைவிட தனது முக்கியத்துவத்திற்காக போராடுகிறார் என்ற எண்ணம் ராயிடம் வரத்துவங்கியது. சோசலிஸ்ட்களின் செயற்குழுவிலிருந்து ஜூலயில் லோகியா, மசானி, பட்வர்தன் போன்றவர்கள் விலகுவதாக முடிவெடுத்தனர். LCC என்ற பெயரில் காங்கிரஸை பலவீனப்படுத்துவதை ஏற்பதற்கில்லை என்பது அவர்களின் குற்றசாட்டாக இருந்தது. கொள்கையற்று சீர்குலைவு வேலைகளை செய்வதாக ராயினரை கம்யூனிஸ்ட்கள் தாக்கினர். போஸ் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை பதிலுக்கு விமர்சித்தார். டிசம்பர் 1939 பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்களுடன் உறவுமுறிவு என அறிவித்தார். LRCயை மக்கள் திரள் இயக்கமாக மாற்ற ராய் விழைந்தார். மாவட்டந்தோறும் குறைந்தது 5 தீவிர களப்பணியாளர்களாவது வேண்டும் என கருதினார். ராம்கர் மாநாட்டில் காங்கிரஸ் தலைமைக்கு ராய் பெயர் எழுப்பப்பட்டபோது ஒருமித்த கருத்து இல்லையெனில் தனது பெயரால் பிளவு தேவையில்லை என தெரிவித்தார். போஸ், கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள் மத்தியில் ஆதரவு எழவில்லை என்பதையும் ராய் அறிந்திருந்தார். ராயுடன் வேறுபாடுகள் இருந்தபோதினும் அவர் மதிக்க தகுந்த வேட்பாளர் என ஜெயபிரகாஷ் தெரிவித்தார். ராய் புரட்சிகரவாதியல்ல, சீர்குலைவுவாதி அவருக்கு ஆசாத் வேட்பாளர் என்பது எவ்வளவோ மேலானது என கம்யூனிஸ்ட்கள் தெரிவித்தனர். ராய் காங்கிரஸ் தலைவருக்கு நின்று படுதோல்வி அடைந்தார். மெளலானாஆசாத் 1854 வாக்குகளையும், ராய் 183 வாக்குகளையும் பெற்றனர். ராம்காரில் தேர்தலிலும் தீர்மானங்கள் நிறைவேற்றத்திலும் இடதுசாரிகள் பல்வேறு நிலைபாடுகளை எடுத்தனர். விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - V உலகப்போர் மூலக்கூடாது என்பதை காங்கிரஸ் 1927முதலே பேசத்துவங்கியது. பிரிட்டிஷ் எதிர்ப்பில் காங்கிரசின் ஊசாலாட்ட அணுகுமுறை குறித்து இடதுசாரிகளின் 4 பிரிவுகளுக்கும் விமர்சனம் இருந்து வந்தது. காங்கிரசின் வலது பிரிவு ஒத்துழையாமை என பேசிவந்தது. 1939ல் காங்கிரசின் மத்திய செயற்குழு முடிவை அமைச்சர்கள் ஏற்க நேர்ந்தது. அனைவரும் அமைச்சரவையிலிருந்து விலகி கொண்டனர். ராய் பாசிச ஜெர்மனி எதிர்த்த பிரிட்டிஷ் யுத்தம் என ஆதரவு தெரிவித்தார். யுத்தத்தின் போக்கை பார்த்து நடுநிலைமை நியூட்ரல் நிலை என பேசத்துவங்கினார். காங்கிரஸ் அமைச்சரவை விலகல் என்பதையும் அவர் ஏற்கவில்லை. மக்களை காக்கும் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் அரசாங்கம் விலகக்கூடாது. அதே நேரத்தில் விடுதலைக்கான இறுதி போராட்டத்திற்கான வாய்ப்பாக யுத்த சூழலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். பலவீனப்படுத்தப்பட்ட அமைச்சரவையால் மக்களின் சிவிலுரிமைகளை காக்கமுடியாது என ராயிடம் காந்தி தெரிவித்துவிட்டார். காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் யுத்தத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினர். யுத்த எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றனர். அமைச்சரவை ராஜினாமா சரியானதே என்றனர். காந்தியடிகள் அறைகூவலுக்கு காத்திருப்பது, அவசியமெனில் சத்தியாக்கிரக போராட்ட அறைகூவலை சோசலிஸ்ட்கள் சார்பில் அறிவிப்பது என்ற முடிவையும் அவர்கள் எடுத்தனர். ஏகாதிபத்தியம் எதிர்த்த தேசிய போராட்டம் என்றார் ஜெயபிரகாஷ். யுத்த காலத்தில் நடுநிலை என்பது சரியல்ல, நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு சூழலை புரட்சிகரமாக மாற்றவேண்டும். வேலைநிறுத்தங்கள், வரிகொடா இயக்கம், மக்கள் போராட்டங்களை காங்கிரஸ் கட்ட முன்வரவேண்டும். பார்வார்டுபிளாக், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் தனியாக கொடுக்கும் அறைகூவல் மக்கள் ஈர்ப்பு போராட்டமாக அமையாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜோஷி அறிக்கை வெளியிட்டார். 1940-42 கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் சுபாஷ்போஸ் லெனின், முசோலினி இருவருமே கொண்டாடப்படக் கூடியவர்கள் என்ற கருத்திலிருந்தார். சோசலிசம்- பாசிசம் ஒத்திசைவு உருவாக்கம் குறித்து பேசி. வந்தார். செப்டம்பர் 8 1939 வார்தா கூட்டதிற்கு போஸ் அழைப்பாளராக வந்தார். காங்கிரஸ் அமைச்சரவை தானாக விலகியிருக்கக்கூடாது, கலைக்கப்பட வைத்திருக்கவேண்டும். அதுதான் சரியான போராட்ட தந்திரமாக இருந்திருக்கும் என்றார். யுத்த நெருக்கடி அற்புதமான விடுதலை போராட்ட வாய்ப்பை நல்கியிருக்கிறது. காங்கிரஸ் முடிவெடுக்காவிட்டால் பார்வர்ட்பிளாக் தனது பாதையை தேர்ந்தெடுக்கும் என்றார். கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள் போலவே ஆட்சிஅதிகாரம் வந்தபின்னர் அரசியல் அமைப்பு அசெம்பிளி என்றார். கம்யூனிஸ்ட்கள் போஸ் அணியினரை விமர்சித்தனர். இடது போல முழங்கினாலும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சீர்குலைவு வேலைகளை செய்கிறார்கள் என்றனர். போருக்கு பின்னர் ஏகாதிபத்தியம் நீர்த்து வலுவிழக்கும் என்ற ராயின் கருத்தை போஸ் விமர்சித்தார். நேரு இடதுசாரிகளுடன் சேர்ந்து உடனடி சிவில் ஒத்துழையாமை என பேசினார். படேல், பிரசாத், ராஜாஜி ஒத்துழையாமைக்கு நாடு தயாராகவில்லை என்ற காந்தியின் கருத்தை பிரதிபலித்தனர். இந்த காலத்தில் முஸ்லீம் லீக் தனது பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை நிறைவேற்றி தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது. வைஸ்ராய் லின்லித்கெள காந்தியுடனும் ஜின்னாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் என்பதில் எந்தவித சமரமும் இல்லை என ஜின்னா அறிவித்தார். இடைக்கால அரசாங்கம் என்பது ஏற்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு என்பதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. வைஸ்ராய் கவுன்சில் என்பதை ஜின்னா ஏற்கலாம் என்றார். இந்துமகாசபாவும் ஏற்கலாம் என்றது. காந்தி நிராகரித்தார். இந்திய பிரதிநிதிகள், மன்னர்கள் பிரதிநிதிகள் கொண்ட யுத்த ஆலோசனை குழு என்பதையும் வைஸ்ராய் முன்மொழிந்தார். யுத்தம் தொடர்பாக சமாதானம்- அமைதி உள்ளிட்ட கருத்துக்களை பேசிட சுதந்திரம் இல்லையேல் சத்தியாக்கிரக போராட்டம் என காந்தி பேசினார். உடனடி கோரிக்கை விடுதலையல்ல பேச்சுரிமை என்றார் காந்தி. ஜூன் 1941 கணக்கின்படி 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரசார்கள் கைதாகினர். போருக்கு எதிராக என்ற புரிதலில் போராட்டத்திற்கு ஆதரவு குறைவது போல் காந்தி உணர்ந்ததால் அக்டோபரில் போராட்டத்தை விலக்கி கொண்டார். சத்தியாகிரகம் மக்கள்திரள் ஒத்துழையாமையாக மாறாததில் ராய் ஏமாற்றமடைந்தார். கம்யூனிஸ்ட்களும், போசிஸ்ட்களும் சிறைநிரப்ப ஆர்வப்படுவதுபோல் தங்களால் முடியாது என்றார். காங்கிரசை லட்சக்கணக்கான பெயரளவு உறுப்பினர்கள் கட்சி என்பதிலிருந்து கேடர்கள் கட்சியாக மாறிடவேண்டும் என பேசத்துவங்கினார். பாசிச எதிர்ப்பு போரிலே வெற்றிபெற சர்ச்சில் தலைமையில் அமைந்த புதிய பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்றார். தான் ஆர்வமாக செயல்பட்ட LRCயை RDP என்கிற தீவிர ஜனநாயக கட்சியாக 1940 டிசம்பரில் பெயர் மாற்றம் செய்தார். NDU National Democratic Union என்கிற பரந்த மேடை அமைத்து அதில் இந்துமகாசபா, சுயராஜ்யகட்சியினர், செட்யூல்டு பட்டியல் சம்மேளனம் போன்றவை வந்து சேரவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார். ராயின் முயற்சிகள் பலனளிக்காதது மட்டுமின்றி அவர் நடைமுறை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்ற கருத்தும் பரவியது. AITUC அமைப்பிலும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் பாசிச எதிர்ப்பு தொழிற்சங்க கவுன்சில் என்ற ஒன்றை ராய்குழுவினர் அமைத்தனர். 1941நவம்பரில் இந்தியன் பெடரேஷன் ஆப் லேபர் உருவாக்கினர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் மத்தியில் உறவுகளை பலப்படுத்த பாகிஸ்தான் கோரிக்கையை கொள்கை அளவில் பரிசீலிக்கலாம், ராய் கூறுவது போல ராஜ்ய அரசாங்கங்களை புதுப்பிக்கலாம் என்ற கருத்தை ராஜாஜி தெரிவித்தார். 1942 ஏப்ரலில் காங்கிரஸ் ராஜாஜியின் கருத்தை நிராகரித்தது. அவர் கட்சியிலிருந்து விலகினார். ஜெர்மனியின் சோவியத் தாக்குதலுக்கு பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்தியாவில் கைதாகி சிறையிலிருந்த தலைவர்களுக்கும் வெளியிலிருந்த தலைவர்களுக்கும் புரிதலில் கருத்துவேறுபாடு இருந்தது. சோவியத்திற்கு ஆதரவு என்பதையும் பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலை போராட்டம் என்பதையும் ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்து இருந்தது. 1942 துவக்கத்தில் Foreword to Freedom கட்டுரையில் P C ஜோஷி தேசிய அரசாங்கம் என்பதை தெரிவித்தார். நிலைமை மக்கள் யுத்தமாக மாறிவிட்டது என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராயை பிரிட்டிஷ் ஏஜெண்ட் எனவும் வர்ணித்தது. காந்தியைவிட நேரு- ஆசாத்தை பிரிட்டிஷ் ஜனநாயகவாதிகள் நம்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் குறித்தும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கமிட்டியில் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சி என்றனர். பாசிச ஆபத்தை முறியடிக்க தேசத்தில் அனைவரின் ஒற்றுமை என்ற முழக்கத்தை வைத்தனர், சோவியத் மீதான தாக்குதல் என்பதாலேயே யுத்தத்தின் தன்மை மாறிவிடாது என்று காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்களை விமர்சித்தனர். ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் ஆன பிரச்சனைதான் யுத்தம் என ராய் கூறியதையும் முட்டாள்தனமானது என சோசலிஸ்ட்கள் விமர்சித்தனர். ருஷ்யா வந்ததாலேயே ஏகாதிபத்திய யுத்தம் மக்கள் யுத்தமாக மாறிவிடாது என்றனர்.. பிரிட்டிஷார் வெளியேறட்டும் இந்தியாவின் தலைவிதியை நாம் முடிவுசெய்துகொள்ளலாம் என நரேந்திரதேவ் முழங்கினார். பாசிச எதிர்ப்பில் சோவியத்தின் பங்குபாத்திரம் மிக முக்கியமானது என்பதை தொடர்ந்து சொல்லி வந்தார் ராய். பிரிட்டன் சோவியத்துடன் அணிசேர்ந்துள்ள நிலையில் பிரிட்டனுடன் ஒத்துழைக்கமுடியாது என்ற நிலை எடுப்பது சரியல்ல என்றார் ராய். அகிலம் தன்னை அங்கீகரிக்கவில்லை என தெரிந்தபோதும் தனது சோவியத் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்து செய்தி அனுப்பினார். தான் மீண்டும் சோவியத்தால் அங்கீகரிக்கப்படலாம் என்ற அவர் நம்பிக்கைக்கு பலன்கிட்டவில்லை. சோவியத் வழிகாட்டுதல் கம்யூனிஸ்ட்களை மக்கள் யுத்த முழக்கத்திற்கு கொணர்ந்தது. பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு நேரு தலைமை தாங்கவேண்டும் என ராய் வேண்டுகோள் விடுத்தார், வெள்ளையனே வெளியேறு சூடுபிடித்தது. ராய் குழுவினரும், கம்யூனிஸ்ட்களும் பங்கேற்கவில்லை. சோசலிஸ்ட்கள் அவ்வியக்கத்தில் தங்களை நாயகர்களாக மாற்றிக்கொண்டனர். போஸ் 1941 துவக்கத்திலேயே இந்தியாவை விட்டு வெளியேறினார். கிரிப்ஸ் தூதை நிராகரிக்க வற்புறுத்தினார். போஸ் அமைத்த ஆசாத் ஹிந்த் அரசாங்கம் ராயின் ஜப்பான் அய்யப்பாடுகளை அதிகரித்தது. நேரு கிரிப்ஸ் முன்மொழிவுகளை விவாதித்து முடிவிற்கு வரவேண்டும் என ராய் அணியினர் வற்புறுத்தினர். நேரு, ஜின்னா, ராஜாஜி, அம்பேத்கார், ராய் ஆகியோரை கொண்ட யுத்தகால தற்காலிக அரசாங்கம் அமைக்கலாம் என்ற ஆலோசனையை ராய் அணித்தலைவர் தார்குண்டே தெரிவித்தார். அவரது ஆலோசனை ஏற்கப்படவில்லை. 1942ன் இறுதியில் நடந்த தங்கள் ஆர்டிபி(RDP) கட்சி மாநாட்டில் அரசியல் அமைப்பு சட்டப்படி சுதந்திர இந்தியா, நுகர்வோர் கூட்டுறவு இயக்கம், சிறந்த வகையிலான தொழிற்சங்கங்க நடவடிக்கை போன்ற திட்டங்களுடன் மக்கள் சந்திப்பு இயக்கம் என ராய் அணியினர் முடிவெடுத்தனர். தேசிய ஜனநாயக புரட்சி பொருத்தமில்லாதது என ராய் பேசிவந்தார். தொழிலாளர்- விவசாயிகளுக்கான சமூக திட்டம்தான் இனி மையமாக இருக்கவேண்டும் என்றார் ராய். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை ராய் கைவிட்டாலும் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது குறித்தும் அவருக்கு விமர்சன பார்வை இருந்தது. அனைவருக்கும் வாக்குரிமை, தல அரசாங்கம், கூட்டுறவு இயக்கம், ஊரக வளர்ச்சிதிட்டம், கிராமங்களில் கலாச்சார கல்வி மேம்பாடு போன்றவற்றை மக்களிடம் எடுத்துசெல்ல ஆதரவு திரட்ட பொருத்தமான மக்கள் கமிட்டி அமைப்புகளை வலுப்படுத்துதல் என ராய் முன்மொழிந்தார். ஆரம்ப ஆண்டுகளில் கொடியில் காணப்பட்ட அரிவாள் சுத்தியல் என்பதையும் அவர் எடுத்துவிட்டார். Flaming Torch என்பதை பொறிக்க துவங்கினார். விடுதலைக்கு முன்னர் எம் என் ராய் - VI யுத்தத்திற்கு பிந்தியுள்ள நிலைமைகளை சீர்படுத்திட 1944 ஜாரியா கட்சி மாநாட்டில் மக்கள் திட்டம் என ராய் முன்மொழிந்தார். ஏழை விவசாயிகள், கைத்தொழிலாளர், நுகர்வோர் பங்கேற்கும் மக்கள் கூட்டுறவுகள் என அத்திட்டம் பேசியது. நாட்டின் 70 சத கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த விவசாய புரட்சி என அத்திட்டம் தெரிவித்தது. ருஷ்யாவிலிருந்து சில முழக்கங்கள் கடன் வாங்கப்பட்டன. வாலண்டரி கலெக்டிவிஷேசன்(Collectivisation) என்ற நில சீர்திருத்தம் முன்மொழியப்பட்டது. விடுதலை இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டம் என்கிற கான்ஸ்டிட்யூஷன் நகல் ஒன்றை ராய் தயாரித்தார். காங்கிரஸ் அதை ஏற்றுக்கொண்டால் மக்களை திரட்டும் பணியில் காங்கிரஸ் பின்னால் வருவோம் என ராய் அறிவித்தார். தங்கள் கட்சியில் 1940-1944 4 ஆண்டுகளில் 3500 லிருந்து லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் உயர்ந்துவிட்டதாக ராயினர் தெரிவித்தனர். இதில் ஆலைத்தொழிலாளர்கள் 15சதம், படித்த மத்தியதர வர்க்கம் 20 சதம் என்றனர். 1943ல் AITUC விட தங்கள் IFL தொழிற்சங்கத்தில் அதிக சங்கங்கங்களும் உறுப்பினர்களும் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர். ரயில்வே தொழிற்சங்க தலைமை பதவிக்கு தங்கள் ஆதரவுடன் ஜம்னதாஸ்மேத்தாவை என் எம் ஜோஷிக்கு எதிராக நிறுத்தி வெற்றிபெற வைத்தனர். 1945ல் பாரிசில் WFTU துவக்க நிகழ்விற்கு AITUC மற்றும் ராயின் IFLஆகிய இரு அமைப்புகளும் பங்கேற்றன. ஆரம்ப நாட்களில் கம்யூனிஸ்ட்களுடன் மிக நெருக்கமாக செயலாற்றி வந்த பிலிப் ஸ்பிராட் ராயுடன் இணைந்தார். போருக்குப் பின்னர் லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றும், பிரிட்டன் முழுமையாக இடது பக்கம் திரும்பும் என ராய் கருதினார். வின்ஸ்டன் சர்ச்சிலை விமர்சித்தும் வந்தார். பிரிட்டனில் செல்வாக்கு பெற லண்டனில் கட்சி அலுவலகம் ஒன்றையும் ராய் நிறுவினார். ஆனால் லேபர் கட்சியின் மீது தான் கொண்டிருந்தது மாயை என பின்னர் உணர ஆரம்பித்தார். 1945 ஜூனில் வேவல் தற்காலிக அரசாங்க திட்டம் குறித்த மாநாடு ஒன்றை சிம்லாவில் கூட்டினார்.. அதில் எந்த இடது பிரிவிற்கும் இடமில்லை. வேவல் திட்டம் மக்களுக்கு துரோகம் என ராய் விமர்சித்தார். காங்கிரஸ் முஸ்லீம் லீக் மத்தியில் இருந்த வேற்றுமையால் பலனின்றி முடிந்தது அம்மாநாடு. 1945 ஜூலையில் அட்லி லேபர் சர்க்கார் பதவிக்கு வந்தது. INA முக்கிய வீரர்கள் விடுதலை, RIN போராட்டம் ஆகியவற்றால் காங்கிரசின் மதிப்பும் செல்வாக்கும் பெருகியிருந்தது. ரின் எழுச்சியில் கம்யூனிஸ்ட்களும் அருணாஆசப்அலி போன்ற சோசலிஸ்ட்களும் தலையாய பங்கை வகித்தனர். புரட்சியாளர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் லீக் என மூன்று கொடிகளையும் உயர்த்தினர். பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. பம்பாய் மக்கள் ஆதரவும் பெருகியது. ஆனால் படேல் இதனை கலகம் என கடுமையாக கண்டித்தார். உடனடியாக வாபஸ் பெற வற்புறுத்தினார். நேரு போராட்டத்தை ஆதரவுடன் பார்த்தாலும் தவறான தந்திரம் என்றார். காங்கிரஸ் தலைவர் ஆசாத் ராணுவ வீரர்களின் நேரடி போராட்டம் என்பது தவறானது, அறிவிற்கு உகந்த செயல் அல்ல என்றார். 200க்கும் மேற்பட்டவர்கள் மடிந்தனர். ஆயிரக்கணக்கானவர் படுகாயம் அடைந்தனர். இதுபோன்ற குறுகியகால எழுச்சிக்கு ஆதரவு தரக்கூடாது என்ற நிலையை எம் என் ராய் எடுத்தார். பிரிட்டிஷார் ஆட்சி மாற்றம் செய்யப்போவதற்கான சூழலில் அரசியல் போராட்ட இயக்கங்கள்தான் தேவை- இதுபோன்ற அமைதியற்ற ராணுவ நடவடிக்கைகள் கூடாது என ராய் குழுவினர் கருதினர். அஞ்சல் ஊழியர்களின் 1946 ஜூலை வேலைநிறுத்தத்தில் கம்யூனிஸ்ட்கள் முக்கிய பங்காற்றினர். அப்போராட்டத்திற்கு ராய் தனது ஆதரவை நல்கினார். அதேபோல் ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், கராச்சி கப்பல் தள தொழிலாளர்கள் போராடினர். ஆங்காங்கே ஜமீன்தாரர்களுக்கு எதிராக நடந்த விவசாயிகளின் போராட்டத்திலும் ராய் கட்சியினர் பங்கேற்றனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அட்லி இந்தியாவிற்கு அதிகார மாற்றம் 1948 ஜூனிற்கு முன்பாக செய்யப்படும் என அறிவித்தார். ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கு லீக் தலைவர்களை ஏற்க வைக்க யாராலும் முடியவில்லை. பிரிட்டன் வெளியேற்றத்திற்கான முழு பொறுப்பும் மெளண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டது. இரு இறையாண்மை நாடுகள், ஆகஸ்ட் 15, 1947ல் என்ற அறிவிப்பை மெளண்ட்பேட்டன் ஜூன் 3 1947ல் அறிவித்தார். மதவழியில் பிரச்சனையை பிரிட்டிஷ் அதிகப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை ராய் வைத்தார். மைனாரிட்டிகளுக்கு நம்பிக்கை உண்டாக்கவேண்டியது பெரும்பான்மையினரின் கடமை. அதில் காங்கிரஸ் தவறிவிட்டது என்றார் ராய். மையப்படுத்தப்பட்ட அதிகாரமிக்க மத்திய அரசு என்பது பல்வேறு வேறுபட்ட தன்மையிலான நமது நாட்டில் சுதந்திரம், தன்னாட்சி என்பதை இல்லாமல் ஆக்கிவிடும். இந்திய சம்மேளனம் என்ற ஆட்சிமுறை தேவை என ராய் பேசினார். திராவிடஸ்தான் என்பதைக்கூட அவர் ஆதரிக்க துவங்கினார். ஜெயப்ரகாஷ்நாரயண் நாட்டின் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார். ராஜாஜி மக்களிடம் உண்மையை சொல்லத் தவறுகிறார் என அவர் விமர்சித்தார். 1947 மார்ச்சில் நடந்த தங்கள் கான்பூர் மாநாட்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் அதிகார மாற்றம் உழைப்போர் கையில்வரவேண்டும் என தீர்மானம் இயற்றியது. அதிகார மாற்ற விவாதங்களில் அதற்கு எந்த பங்கையும் காங்கிரஸ் தலைமை தரப்போவதில்லை என்ற ராயின் எச்சரிக்கையை அவர்களால் அப்போதுதான் உணரமுடிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளின் எழுச்சியில் தெபகா, தெலங்கானா போராட்டங்களில் தீவிர பங்காற்றியது. இடதுசாரிகள் ஒன்றுபட்டு நிற்கவில்லையெனில் அரசியல் சட்ட அசெம்பிளி முற்றிலுமாக சொத்துரிமைக்காரர்கள் வசமாகிவிடும் என ராய் தனது கவலையை தெரிவித்தார். ராயின் குரல் எடுபடவில்லை. மார்க்சியத்தின் மீதான நம்பிக்கை இழப்பு அவரிடம் பற்றியது. தீவிர அரசியலிருந்து ஒதுங்கிவிடலாமா என்கிற எண்ணத்தை கடிதம் மூலம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். அவரின் ஆதரவாளர்களுக்கு ராயின் விரக்தி அதிர்ச்சியை தந்தது. 1946 இறுதியில் தனது தீவிர ஜனநாயகத்திற்கான (Radical Democracy) 22 ஆய்வுகள் என்பதை முன்வைத்தார். அதிகார அரசியல் என்ற தீவிரத்திலிருந்து தத்துவ தேடல் நோக்கி அவர் திரும்பினார். Renaissance, Radical Humanism என்பதை முன்வைக்க துவங்கினார். ராயின் விடுதலைக்கு முன்னரான அரசியல் பயணம் குறித்த சில முக்கிய கட்டங்கள் மேலே பதிவிடப்பட்டுள்ளது. அவர் 1887ல் நரேந்திரநாத் பட்டாசார்யாவாக பிறந்து ஆரம்ப நாட்களில் பயங்கரவாத சதி சாகச அரசியல் கொள்ளை இயக்கங்களிலிருந்து மார்க்சியம் வர்க்க போராட்ட அரசியல் திசைக்கு திரும்பினார். லெனின், ஸ்டாலின், புகாரின் போன்றவர்கள் மட்டுமல்லாது மாவோ, பிரிட்டிஷ் கட்சித்தலைவர்கள், ஜெர்மானிய தலைவர்கள் ஆகியோருக்கு இணையான முக்கியத்துவம் பெற்று கம்யூனிஸ்ட் அகிலத்தில் பணியாற்றி, இந்திய இயக்க முன்னோடி தலைவர்கள் சிங்காரவேலர், டாங்கே, காட்டே என பலருக்கும் வழிகாட்டிய நிலைக்கு உயர்ந்திருந்தார், அகிலத்தின் தலைமையிடம் நம்பிக்கையிழப்பை பெற்ற பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் மோதல் ராய்க்கு முற்றியது. இந்திய விடுதலை இயக்க முன்னோடி தலைவர்களாக இருந்த காந்தி, நேரு, போஸ் போன்றவர்களுடன் நல்லுறவு, வேறுபாடுகள் என தான் எடுத்த முயற்சிகளில் பல தோல்விகளை கண்டார். காங்கிரஸ் தலைவராக முடியாமல் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் சோசலிச தலைவர்களுடனும் இதே நிலையைத்தான் அவரால் அனுபவமாக்கிக் கொள்ளமுடிந்தது. வாழ்நாளில் மக்களால் பெருமளவு ஏற்கப்பட்ட பெருந்தலைவராக ராயால் பரிணமிக்க முடியவில்லை. ராய், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் கட்சிகளற்ற அரசியல் என பின்னாட்களில் பேசத்துவங்கினர். தனக்கான ஆதரவாளர்களுடன் உச்சம் செல்வதும் எழுவதும் வீழ்வதுமாக அவரது அரசியல் பயணம் அமைந்தது. விடுதலைக்கு பின்னர் அவர் சில ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். 1952 ஜூனில் மலைசரிவு ஒன்றில் 50 அடி கீழே விழுந்த விபத்தால் அவர் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தனது 67ஆம் வயதில் சில மாதங்கள் நோய்வாய்பட்ட நிலயில் டேராடூன் இல்லத்தில் ஜனவரி 25, 1954 இரவில் மறைந்தார். விடுதலைக்கு பின்னர் மிக முக்கிய அவரது பெரிய அளவிலான படைப்பான Reason Romanticism and Revoultion யை கொணர்ந்தார்.. ஜனவரி 24 1954ல் அவர் மறைவிற்கு முதல் நாள் கூட தீவிர மனிதாபிமானம் பற்றிய தனது கட்டுரை ஒன்றை தனது துணைவியாருக்கு வாய்மொழியாக சொல்லி எழுத பணித்துக் கொண்டிருந்தார். வாழ்நாள் முழுதும் தனது ஆளுமையை சிந்தை திறனை மட்டுமே நம்பி பயணப்பட்டவர் ராய். தான் சரி என கருதியதற்காக தோல்விகளை கண்டு துவளாமல் ஓயாமல் தீவிரமாக உழைத்த சிந்தனையாளர் ராய். Reference: M N Roy and Indian Politics by S M Ganguly https://sreenivasaraos.com/category/m n roy Lohiatoday-MN roy 5. தோழர் டாங்கே - DANGE - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில் மாணவராக இருந்த டாங்கே 1921 மார்ச்சில் எழுதி ஏப்ரலில் வெளியிடுகிறார். வெளி உலகிற்கு இதன் மூலம் டாங்கே தெரிய வருகிறார். மார்க்ஸ்- லெனின் குறித்து ஓரளவிற்கு அறியத் துவங்கிய புரட்சிகர எண்ணம் கொண்ட இளைஞன் ஒருவன் எழுதிய முதல் ஆக்கம் என பின்னாட்களில் டாக்டர் அதிகாரி பதிவு செய்கிறார். திலகரின் மறைவிற்கு பின்னர் காங்கிரசில் காந்தியின் பாத்திரம் முன்னுக்கு வருகிறது. கொண்டாடப்படும் தலைவராக தனது செயலால் அவர் பரிணமிக்க துவங்குகிறார். திலகரிடம் நெருக்கமாக பழகி வந்த டாங்கே போன்றவர்களுக்கு திலகரா காந்தியா என புதிய சிக்கல் எழுகிறது.. டாங்கேவிற்கு சோவியத், லெனின் குறித்த செய்திகள் கிடைக்கப் பெற்றமையால் காந்தியா லெனினா கருத்தாக்கம் குறித்து சிந்தித்து அப்புத்தகத்தை அவர் வெளிக்கொணர்கிறார். டாங்கேவின் தந்தை அம்ரித் ரகுநாத்டாங்கே. .டாங்கேவின் பெயர் ஸ்ரீபாட் அம்ரித் டாங்கே. அக்டோபர் 10, 1899ல் பிறக்கிறார். 1991ல் அவர் மறைகிறார். 70 ஆண்டுகளுக்கான பொதுவாழ்வை அந்த அந்த காலங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் அடந்ததை இழக்கிறோமே என்ற கவலை ஏதுமின்றி தான் நினத்தவைகளுக்காக ஏற்கப்பட்டபோதும், ஏற்கப்படாத நிலையிலும் கருத்துப் போராட்டம் நடத்தி நிறைவாக வாழ்ந்து மறைந்தவர் டாங்கே. பஞ்சபூமியாக இருந்த அகமதுநகர் தாயின் மாவட்டம். . செவிலித்தாய், காய்கறி வியாபாரம் செய்துவந்த தாயின் சகோதரி வளர்ப்பில் நாசிக்கில் பள்ளிப்படிப்பை காண்கிறார். அங்கு ரயில்வே தொழிலாளர் சூழல் மனதில் படிகிறது. தாயின் சகோதரியுடன் பிரிட்டிஷ் ராணுவ பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு நேரும். அவர்களின் மிடுக்கு ஒழுங்கை கண்ணுறும் வாய்ப்பு கிடைக்கிறது. நாசிக் திலகர், சாவர்க்கர், துப்பாக்கி என தகவல்களால் நிறையும் நகராக இருந்தது. கேசரி பத்திரிக்கை செய்திகள் மாணவர்களையும் எட்டின. பின்னர் பம்பாய் பெயர்ந்து படிப்பை தொடர்கிறார்.1917 என்கிற வரலாற்றின் திருப்புமுனை ஆண்டில் வில்சன் கல்லூரியில் நுழைகிறார். ஆர் எஸ் நிப்ம்கர் தோழனாகிறார். The young collegiate பத்ரிக்கையை துவங்குகிறார்கள். கட்டாய பைபிள் எதிர்த்து போராடுகிறார்கள். ஆங்கில இலக்கிய கழகம் போலவே மராத்தி இலக்கிய கழகம் என்பதற்காக கல்லூரி புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது. கல்லூரி நிர்வாகம் டாங்கே உள்ளிட்டவர்களை நீக்குகிறது. இந்தியாவிற்கு சுய ஆட்சி தராத நிலையில் போருக்கு ஆட்களை எடுக்காதே என திலகர் போராடி வந்தார். ரயில்வே, அஞ்சல் ஊழியர் போராட்டங்களுக்கு ஆதரவு நல்கி எழுதி வந்தார். அக்டோபர் புரட்சியை வரவேற்றும் எழுதினார். திலகர் தனது மாண்டலே சிறைவாசத்தின்போது எழுதிய கீதாரகஸ்யம் அப்போது பிரபலமாக இருந்தது. இளைஞர்களை கவ்வி பிடித்தது. பகத்சிங் போன்றவர்கள் கூட தனது குடும்பத்தார்க்கு எழுதி எடுத்துவர சொன்ன புத்தகத்தில் கீதா ரகஸ்யமும் ஒன்று. அப்புத்தகம் தேசிய எழுச்சிக்கு அன்று துணை நிற்பதாக கருதப்பட்ட ஒன்று. சன்யாசம் என்கிற துறவை விமர்சித்து கர்மயோகம் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. டாங்கே போன்ற மாணவர்கள் திலகர் பால் ஈர்க்கப்படுவது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே. திலகரின் மறைவிற்கு பின்னர் நடந்த நாக்பூர் 1920 டிசம்பர் காங்கிரஸ் மாநாட்டில் டாங்கே சக மாணவர்களுடன் கலந்துகொள்கிறார். லாலாஜியை வரவேற்க திலகர் தலைமையில் பிப்ரவரி 1920ல் பொதுக்கூட்டம் ஒன்றை டாங்கே குழாம் ஏற்பாடு செய்கிறது. டாங்கே வரவேற்புரை ஆற்றி பலரின் கவனத்தை பெறுகிறார். திலகர் டாங்கேவிடம் பம்பாய் தொழிலாளர் மத்தியில் பணிபுரிய அறிவுறுத்தினார். 1920 அக்டோபரில் AITUC உதயமாகிறது. திலகர் மறைவால் லாலாஜி தலைமை ஏற்கிறார். டாங்கே போன்றவர்கள் இதற்கு துணை நின்கின்றனர். காந்தியின் சுயராஜ்ய கருத்துக்கள் போதாது என்ற எண்ணம் டாங்கே உள்ளிட்டவர்களுக்கு உருவாகிறது. விதல்பாய் படேல் போன்றவர்கள் காந்தியின் திட்டங்களை புகழ்ந்து பேசிய போது படேல் கருத்தை ஏற்கமுடியாது என மறுத்து பேசிய டாங்கே வெளியேற்றப்பட்டார். ஆனால் திலகர் அவரை விதல்பாய் படேலுக்கு காரியதரிசி ( செயலர்) ஆக்கினார். பம்பாய் பகுதி காங்கிரசில் தொழிலாளர் பிரிவில் டாங்கே பணியாற்ற துவங்கினார். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட டாங்கே தேசிய தலைவர்கள் துவக்கிய தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விரிவுரையாளரானார். தனிப்பட்ட முறையில் பாடம் எடுத்து ஜீவனத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டார். திலகரின் நண்பர் லோட்வாலா என்பாரின் தொடர்பால் மார்க்சிய நூல்கள், ஆவணங்கள் அவருக்கு கிடைக்கப்பெற்றன. இந்துபிரகாஷ் எனும் மராத்தி இதழில் பணியில் சேர்ந்தார். பின்னர் ஆங்கிலத்தில் மார்க்சிய எழுத்திற்காக பத்ரிக்கை தேவை எனக் கருதி சோசலிஸ்ட் வார இதழை ஆகட் 5, 1922ல் கொணர்ந்தார். அவைகள் சில தொகுக்கப்பட்டு டாங்கே நூல்வரிசையாக அவரது புதல்வியால் கொணரப்பட்டுள்ளது. செப்டம்பர் இதழில் இந்திய சோசலிச உழைப்பாளர் கட்சி என பேசினார். அகிலம், சோசலிச கருத்துக்கள் தாங்கிய இதழாக அது வந்து கொண்டிருந்தது. அவர் சிறையிலிருந்தபோதும் ஜோக்லேகர்,ஜோஷி, பர்வதே போன்றவர்கள் தொடர்ந்து சில காலம் கொணர்ந்தனர். பிப்ரவரி 20 1924 இதழில் பம்பாயில் கடும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வேலைபார்த்துவந்த 227 டெலிகாம் பெண்கள் தனியார் கம்பெனியால் நீக்கப்பட்டதை முன்வைத்து முதலாளித்துவத்தின் கோர சுரண்டல் எவ்வாறு உழைப்பவர் வாழ்வை சூறையாடுகிறது என்ற கட்டுரையை சோசலிஸ்ட் வெளியிட்டிருந்தது. கான்பூர் சதிவழக்கில் டாங்கே, முசாபர், உஸ்மானி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர். டாங்கேவிற்கு 4 ஆண்டுகள் தண்டனை என்றனர். தனது வாதமாக டாங்கே வைத்த முழுவிவரம் சோசலிஸ்ட் 1924 ஜூலை இதழில் வெளியிடப்பட்டது. அதில் எம் என் ராய் வேறுபாடு உள்ளிட்டவை பதிவாகியுள்ளன. தான் எந்த சதியிலும் ஈடுபடவில்லை- சோசலிஸ்ட் பத்திரிகை ஆசிரியன் என்ற வகையில் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருபவன் என தன் தற்காப்பை டாங்கே முன்வைத்தார். மீரத் சதி வழக்கின்போது நீதிமன்றத்தில் தனது வாதத்தை டாங்கே அக் 26 1931 அன்று வைத்தார். அதன் முழுவடிவமும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இரண்டில் 500 பக்க அளவில் அவரது மகள் தோழர் ரோசா தேஷ்பாண்டேவால் வெளியிடப்பட்டது.. தனக்கு சாதி ஏதுமில்லை 31 வயதாகிறது என நீதிபதி முன் நீண்ட மார்க்சிய சித்தாந்த உரையை தனது தற்காப்பு உரையாக பல மணி நேரம் முன்வைத்தார் டாங்கே. தனது போராட்ட வாழ்க்கையில் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர் அவர். ஹெல் பவுண்ட்(Hell Bound) என்ற சிறைக்கொடுமைகள் சூழல் குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார். 1929-35 ஆண்டுகளில் மீரத் வழக்கால் அவர் சிறையில் வாடுகிறார். விடுதலைக்கு பின்னர் ஆந்திரா சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் சிலரை கம்யூனிஸ்ட்கட்சிக்கு கொணர்கிறார். 1920 ஏஅய் டி யு சி, 1925 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கம், கிரினி காம்கார் சங்கம் போன்றவற்றில் முக்கிய பங்களிபை செய்தார். கட்சியின் மத்திய கமிட்டிக்கு 1943ல் அவர் தேர்ந்த்டுக்கப்படுகிறார். அக் 1944ல் பிரிட்டிஷ் கட்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 1946ல் அவர் பம்பாய் சட்டமன்ற உறுப்பினராகிறார். டெக்ஸ்டைல் தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு தியோலி சிறையில் வைக்கபடுகிறார். அங்கு அரசியல் கைதிகளை திரட்டி அவர்கள் நலனுக்காக போராடுகிறார். 1945 உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் துவக்க தலைவர்களுல் ஒருவராக அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றினார். AITUCல் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் முக்கிய பொறுப்புகளை வகித்து வழிகாட்டி வந்தார். அதன் பொதுச்செயலராக அவர் எழுதிய அறிக்கைகள் தொழிற்சங்க கல்வியாகவே அமைந்திருந்தன. அதன் தலைவராக இருந்தும் வழிநடத்தினார். விடுதலை தினத்தன்று அவர் மாஸ்கோவில் இருந்ததாக சில தகவல்கள் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 16, 1947ல் அவர் ஜடானோவ், சுஸ்லோவுடன் முக்கிய விவாதங்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. யுத்த காலத்தில் காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு அவ்வியக்கததை பலப்படுத்தியதாகவும், கம்யூனிஸ்ட்கள் நிலைப்பாடு தங்களை பலவீனப்படுத்தியதையும் அவர் மாஸ்கோ சந்திப்பில் சுயவிமர்சனம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. நேரு, ஜின்னா குறித்த சோவியத் தலைவர்கள் கேள்விக்கு இருவரும் பூர்ஷ்வாக்கள், முதலீடுகள் செய்யும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் என டாங்கே கூறியதாக தெரிகிறது. கட்சியில் பி சி ஜோஷி நீக்கப்பட்டு ரணதிவே பொதுச்செயலராகிறார். 1948ல் அவர் எடுத்த அதிதீவிர இடதுசாரி கொள்கைகளால் பெரும் சரிவு ஏற்படுகிறது. ராஜேஸ்வரராவ் போன்றவர்கள் சீனப்பாதை என்பது முன் வருகிறது. பின்னர் டாங்கே, அஜாய், காட்டே மூவரின் புகழ்வாய்ந்த 3பி ஆவணம் முன்வைக்கப்படுகிரது. கட்சிக்குள் நிலவும் பல்வேறு கொள்கை மோதல்களை முறைப்படுத்த மாஸ்கோவிற்கு டாங்கே அஜாய், ராஜேஸ்வர்ராவ், பசவபுன்னயா குழு ஸ்டாலின் சந்திப்பிற்கு செல்கிறது. அச்சந்திப்பு குறித்த முழு மினிட்ஸ் ரெவல்யூஷனரி டெமாக்ரசி போன்ற பத்த்ரிக்கைகளில் ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிரண்ட்லைன் பிற்காலத்தில் அச்சந்திப்பு குறித்த பசவ்புன்னையா பேட்டியை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் எவ்வாறு நடந்துகொண்டார். எவ்வளவு பேசினார். என்ன அறிவுறுத்தினார் போன்றவைகள் சொல்லப்பட்டிருந்தன. டாங்கே 1957, 1967 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நேரு, இந்திரா உட்பட அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தார்கள். சீனா யுத்தத்தின்போதும், சீன கட்சி- சோவியத் கட்சி சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் பிளவு வந்தபோதும் டாங்கே அவ்விவாதங்களில் முக்கிய பங்காற்றினார். பீகிங் அவரை ரிவிஷனிஸ்ட் என கடுமையாக தாக்கியது. இந்தியாவிலும் கட்சிக்குள் பெரும் சர்ச்சைகள் மூண்டு கட்சி உடைவிற்கு உள்ளானது. உடைவிற்கு முன் அஜாய் இறக்கும் தருணத்தில் நம்பூதிரி பொதுச்செயலர், டாங்கே சேர்மன் என்ற ஏற்பாடும் கட்சி உடைவை தடுக்க உதவவில்லை. 1964 ஏப்ரலில் CPM கட்சி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து டாங்கே நேரு- இந்திரா ஆதரவாளர், தேசியவாதியாக சுருங்கிவிட்டார், எதிர்புரட்சிவாதி என கடுமையான விமர்சங்களுக்கு உள்ளானார். கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்தது என்ற விமர்சனத்திற்கு உள்ளானது. 1977 படிண்டாவில் கூடி கட்சி கடுமையாக சுயவிமர்சனம் செய்துகொண்டது. டாங்கே முதல்முறையாக தான் மைனாரிட்டியாக உணரவேண்டிய நிலை ஏற்பட்டது. டாங்கேலைன் என ஒன்று இன்றளவிலும் அவ்வப்போது இடதுசாரி வட்டங்களில் மெயின்ஸ்டீரிம் பத்ரிக்கைகளில் பேசப்படுகிற கோட்பாடாக இருந்து வருகிறது. CPI தனது அனுபவத்தில் பதிந்தாவிலும் ,1978 ல் CPM ஜனதா அனுபவத்தின் அடிப்படையில் ஜலந்தரிலும் இடதுசாரி ஜனநாயக மாற்று என்ற ஒத்த நிலைப்பாட்டுக்கு வந்தன. இடதுசாரி ஒற்றுமை என்ற பாதையில் பயணிக்க துவங்கின. கட்சி ஒற்றுமை என்பது அவ்வப்போது சிபி அய்யால் பேசப்பட்ட்டாலும் சிபிஎம் திட்டம் வேறுபாடுகள் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி வருகிறது. மத்தியதர தொழிற்சங்க இயக்கங்களில் 1950-70களில் டாங்கே நிகரற்ற தலைவராக வழிகாட்டினார். வேலைநிறுத்தங்கள் துவங்குவது- தீர்வுடன் காலத்தே முடிப்பது, பேச்சுவார்த்தை எனும் கலையில் பயிற்சி பெறுவது என்பதில் அவரின் பங்கு போற்றத்தக்கதாக இருந்தது. Two Pillar Policy, Hold the Bull by Horn போன்றவை அவரிடமிருந்து பெறப்பட்டவைதான். தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, வங்கி இயக்கத் தலைவர்கள் பலர் அவரால் ஈர்க்கப்பட்டனர். P&T தொழிற்சங்கமான NFPTE அமைப்பின் உருவாக்கத்தின்போது அப்படிபட்ட அமைப்பை ஏற்பதா என்பதற்கு மிக நல்ல ஆலோசனை தந்த தொழிற்சஙகத் தலைவராக டாங்கே இருந்தார். ஒ பி குப்தா, ஞானையா, ஜெகன், பிரபாத்கர், பர்வானா, இன்சூரன்ஸ் தலைவர் நாச்னே, படீல் போன்றவர்களுக்கு முன்னோடி தலைவராக இருந்தவர் டாங்கே.. தோழர் குப்தாவை தபால் தந்தி இயக்கத்திற்கு அனுப்பியதில் ரணதிவே, டாங்கே பங்கு முக்கியமானது. டாங்கே இந்திய வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றிய நாயகர்கள் குறித்து குறிப்பிட தகுந்த கட்டுரைகளை வழங்கியவர். மிக சிறந்த சொற்பொழிவுகளை தந்தவர். சில கட்டுரைகள் Problems of Indian Renaissance என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியாகின. சிவாஜி, லாலாலஜ்பத், மகாத்மா காந்தி, நேருவிடத்தில் இருந்த காந்தி செல்வாக்கு, மராத்திய இலக்கியங்கள் போன்ற கட்டுரைகளை தனது அவ்வப்போதைய அரசியல் கட்டுரைகளை தவிர அவர் எழுதினார். அம்பேத்கார் மறைந்த தருணத்தில் மிக நேர்மறையாக புத்தமதம், அம்பேத்கார் பங்களிப்புகள் குறித்து சொற்பொழிவுகள் தந்தார். AITUCன் வரலாற்றை இரத்தின சுருக்கமாக தந்தவர் டாங்கே. அவரது புகழ் வாய்ந்த ஆய்வு நூல் பண்டைய இந்தியா. வரலாற்று பொருள்முதல்வாதத்தை மிக யாந்திரிகமாக டாங்கே கையாண்டுள்ளார் என்ற விமர்சனம் இந்நூல் மீது இருக்கிறது. டாங்கேவின் புதல்வி AICP 1980ல் துவங்குகிறார். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட டாங்கே அதன் பொதுச்செயலராகிறார். பின்னர் மொகித்சென் போன்றவர்கள் UCPI துவங்குகிறார்கள் . Left word, NewThinking Communist போன்ற பத்ரிக்கைகள் டாங்கே, மொகித் கருத்துக்களை தாங்கி வெளிவந்துகொண்டிருந்தன. தமிழ்நாட்டில் ஜீவாமுழக்கம் என்ற பத்ரிக்கை வந்தது. டாங்கே மே 22 1991ல் நோய்வாய்பட்ட நிலையில் மரணித்தார். மீரத் சதிவழக்கில் சிறையில் இருந்தபோது தண்டி யாத்திரைக்கு ஆதரவான கருத்துக்கள் காரணமாக டாங்கே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பலமுறை கட்சியில் தான் சென்சூர் பெற்றதாக அவர் பதிவு செய்துள்ளார். அவரின் எழுத்துக்கள் அவரது நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு அவரது புதல்வியால் வெளியிடப்பட்டன. இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றிலும் , நாட்டின் விடுதலை வளர்ச்சி நடவடிக்கைகளிலும், தொழிற்சங்க வரலாற்றிலும் தனக்கான இடத்தை டாங்கே பிடித்தேயுள்ளார். (ஆதாரம்: விசார் பாரதி பிரக்காஷன் வெளியீடுகள்- டாங்கே படைப்புகள்) 6. மது லிமாயி (MATHU LIMAYE) -ஆர்.பட்டாபிராமன் மது லிமாயி பூனாவில் மே 1, 1922ல் பிறந்தவர். தனது பெர்குசான் கல்லூரி காலத்தில் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். புகழ்வாய்ந்த தலைவர்கள் எஸ் எம் ஜோஷி ( தொழிற்சங்கத்தலைவர்), என் ஜி கோரே, பாண்டுரங்க சேன் குருஜி போன்றவர்கள் செல்வாக்கில் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. பூனாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட்களுடன் தனது 17ஆம் வயதில் இணைந்து செயல்பட்டவர் லிமாயி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் போர் எதிர்ப்பு போரட்டங்களால் கைதாகி சிறை வைக்கப்பட்டார். விடுதலைக்கு பின்னர் காங்கிரசிலிருந்து முற்றிலுமாக வெளியேறி சோசலிஸ்ட்கள் கட்சி துவங்கியபோது ஜெயபிரகாஷ், லோகியா, அச்சுத்பட்வர்தன் ஆகியோருடன் லிமாயி முன்னோடியாக இருந்தார். அக்கட்சியின் செயலர் பொறுப்பிற்கு உயர்ந்தார். கோவா விடுதலை போராட்டத்தில் முன்நின்ற அவரை போர்த்துகீசிய சர்க்கார் 12 ஆண்டு சிறை என தண்டனை விதித்தது. ஏறத்தாழ 20 மாதங்கள் போர்த்துக்கீசிய சிறைகட்டுக்குள் அவர் அவதிக்கு உள்ளானார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் தொழிற்சங்க இயக்கங்களை கட்டினார். சோசலிசத்தை வறட்டு கோட்பாடாக மாற்றுவதை அவர் ஏற்க மறுத்தார். அது வாழ்வியல் முறை என்ற புரிதல் தேவை என்றார். சம்யுக்த சோசலிஸ்ட் சார்பில் 1967ல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றார். சோவியத் புரட்சியின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் மாஸ்கோவில் தோழர் ஜோஷியுடன் லிமாயி பங்கேற்றார். பல்வேறுநாடுகளுக்கு லோகியாவுடன் பயணப்பட்டதும் ஹரால்ட் லாஸ்கி போன்ற புகழ்வாய்ந்தவர்களுடான உரையாடலும் அவரின் சோசலிச சிந்தனையை வளப்படுத்தின. மதசார்பற்ற தேசியம் என்பதை அவர் உயர்த்தி பிடித்தார். எமர்ஜென்சி காலத்தில் ஜே பி இயக்கத்தில் முன் நின்றதால் அவர் மிசா கைதியாக இருஆண்டுகள் அவதிக்கு உள்ளானார். 1977ல் ஜனதா கட்சியின் பொதுச் செயலர் ஆனார். RSS Dual Membership பிரச்சனையால் மொரார்ஜியை விமர்சித்து சரண்சிங் பக்கம் நின்றார். லிமாயி எழுத்துலகிலும் தொடர்ந்து இயங்கிவந்தவர். சுமார் 1000 கட்டுரைகள் எழுதினார் , பல கட்டுரைகள் 100 புத்தகங்களாக வடிவம் பெற்றதாக அவரை போற்றும் சோசலிச தலைவர்கள் அவரை புகழ்ந்துள்ளனர். ஸ்டாலின்- டிட்டோ, இந்தியாவில் கம்யூனிசம், சோசலிஸ்ட்கள், இந்தியாவும் உலகமும், விடுதலைக்கு பின்னால் அரசியல், ஜனதா அனுபவங்கள், மனு-காந்தி-அம்பேத்கார், சோசலிச இயக்கத்தின் கட்டங்கள் போன்றவை அவரது சில புத்தகங்கள். 1995 ஜனவரி 8ல் அவர் மறைந்தார். லிமாயி எழுதிய பல்வேறு கட்டுரைகள் The Age Of Hope- Phases of Socialist Movement என்ற புத்தகமாக 1986ல் வெளிவந்தது. அதில் இடம் பெற்ற முதல் கட்டுரை அவர் 1949ல் எழுதியது. தனித்த சோசலிஸ்ட் கட்சி என்ற முடிவிற்கு ஏற்ப தங்களுக்கான கட்சி அமைப்புவிதிகளை ஜெயபிரகாஷ் உதவியுடன் லிமாயி தொகுத்தார். அதற்கு அவர் Why A Mass Party என்ற ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அதன் சாரம் இங்கு தரப்பட்டுள்ளது. வெகுஜன கட்சி ஏன்? விழிப்படைந்த தீவிர உறுப்பினர்கள் சிலரை தேர்ந்தெடுத்து முழுநேர புரட்சியாளர்கள் என்ற கருத்தில் நாம் கட்சியை வைத்திருந்தோம். நாம் இப்போது மக்கள்திரள் கட்சியாக, தொழிற்சங்கங்ககளையும் , கிசான் சபாக்களையும், கைவினைஞர்களையும், பிற மக்கள் அமைப்புகளையும் உறுப்பினராக்கி கொள்வது என்ற முடிவை எடுத்து வெகுஜன கட்சியாக இயங்குவோம். இனி நமக்கு காங்கிரஸ் என்ற முன்னொட்டு தேவையில்லை. அன்று உடனடி கடமை தேச விடுதலை, சோசலிசமல்ல என்பதில் முன்னுரிமை இருந்தது. லாகூரில் 1938க்கு பின்னர் பிப்ரவரி 1947ல் கூடினோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் உலக சோசலிச இயக்கத்திலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ருஷ்யாவின் ‘Totalitarian Communism’ என்ற நடைமுறையை ஏற்பதற்கில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம். ஆயுத புரட்சியா வெகுஜன வழியா என்ற விவாதத்தில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் சோசலிச மாறுதல் கட்டங்களை எட்ட வாய்ப்புள்ளது என புரிந்து கொண்டுள்ளோம். நாம் 14 வருட காங்கிரஸ் தொடர்பை விடுகிறோம். தொழிலாளர், விவசாயிகள், கைவினைஞர்கள் பகுதியை உறுப்பினர்கள் ஆக்கிட முன்னுரிமை கொடுப்போம். நாம் 12 மணி நேரம் விவாதித்து 75 சத பிரதிநிதிகள் ஆதரவுடன்தான் புதிய அமைப்பு விதிகளுக்கு நுழைகிறோம். ஆயுதம் தாங்கிய புரட்சி குறித்த விவாதம் நம்மிடம் இல்லாமல் இல்லை. ஆனால் வெகுசிலர் மட்டுமே அக்கருத்தைக் கொண்டுள்ளனர். இன்றுள்ள காங்கிரஸ் அரசாங்கம் அதாரிட்டேரியன் குணங்களை கொண்டிருக்கலாமே தவிர பாசிச சர்க்கார் என வரையறுப்பது தவறு என ஜே பி தெளிவுபடுத்திவிட்டார். ஜனநாயக சோசலிசத்திற்கு ஜனநாயக சூழல் மிக அவசியமானது. நாம் சொல்லக்கூடிய ஜனநாயக நெறிமுறைகள் வெறும் அரசியல் சட்டவடிவ குறுக்கங்களே என்ற விமர்சனம் வருகிறது. நமது ஜனநாயக நடவடிக்கைகள் பாராளுமன்றத்துடன் முடிவடைவதில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராட்ட முறைகளும் சேர்ந்தவைதான். வெகுஜனங்களை பயிற்றுவித்தல், திரட்டி போராடுதல், வேலைநிறுத்தம், சிவில் ஒத்துழையாமை என அனைத்தும் நமது ஜனநாயக நெறிமுறைகளாக உத்திகளாக பார்க்கிறோம். ஆயுதம் ஏந்திய Insurrection- Coup de tat ஆட்சி கவிழ்ப்பு கலகங்களை நாம் ஏற்கவில்லை. மார்க்ஸ் கூறிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை இம்முறைகளால் நிறுவமுடியாது என கருதுகிறோம். மக்கள்திரள் கட்சி என்றாலே சீர்திருத்தவாதம் என்கிற விமர்சனத்தை நாம் ஏற்கவில்லை. பிஸ்மார்க் போராட்டத்தில் ஜெர்மன் ஜனநாயக கட்சி மக்கள்திரள் கட்சியாக நின்று ஆற்றிய பணிதனை குறைத்து மதிப்பிட முடியாது. மார்க்ஸ் கூட மக்கள்திரள் என்பதை விமர்சிக்கவில்லை. புரட்சிகர முழுநேர போராளிகள் என அமைப்பை சுருக்குவது மார்க்சியமாகாது. பாட்டாளிகளின் சுய உணர்வை வளர்தெடுத்து திரட்டுவது மூலம்தான் சமுக மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதுதான் மார்க்ஸ் பேசியது. ருஷ்யா ஜனநாயக கட்சியிலும் கூட மார்க்ஸிற்கு நெருக்கமாக லெனினைவிட மார்டோவ் தான் நின்றார். ருஷ்யாவிற்கு தேவைப்பட்ட ரகசிய நடவடிக்கைகள் எல்லாம் இன்றுள்ள இந்திய சூழலில் நமக்கு தேவைப்படவில்லை என புரிந்து கொள்ளவேண்டும். மக்களிடம் வெளிப்படையாக இருந்து விவாதித்து அவர்களை திரட்டுவது என்பதுதான் ஜனநாயக கோட்பாடாகும். தேர்தல் பங்கேற்பால் கட்சி நீர்த்துப்போகும் என்ற விமர்சனமும் வருகிறது. அனைவருக்கும் வாக்குரிமை என்ற சூழலில் நாம் தேர்தலில் நிற்க தயக்கம் எதற்கு? ஏன் தேர்தல் நடவடிக்கைகளில் நாம் ஒதுங்கவேண்டும்? தேர்தல் முறைகள் குறைகளற்ற ஒன்று என நாம் வாதாடவில்லை. நமது சத்தியாக்கிரக போராட்ட ஆயுதத்தை கைவிடாதவரை நாம் நீர்த்துபோக மாட்டோம். தேர்தல் பங்கேற்பு இயக்க வளர்ச்சிக்கு உதவும் என கருதுகிறோம். நாசிசத்தை ஜெர்மன் சோசலிச ஜனநாயகத்தால் தடுக்க முடியவில்லை என்கிற விமர்சனம் வருகிறது. மக்கள்திரள் எனும் கட்சி முறையால்தான் தடுக்கமுடியவில்லை என்கிற வாதத்தை நாம் ஏற்கவில்லை. அப்படியெனில் முழுநேர புரட்சிகர கம்யூனிஸ்ட்களால் ஏன் தடுக்க முடியவில்லை? அங்கு சோசலிச கட்சி தனது நாடாளுமன்ற பாதையுடன் சுருக்கி கொண்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டங்களை கட்டவில்லை. அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் நிலைப்பாட்டால் தொழிலாளிவர்க்க இயக்கங்கள் சீர்குலைந்தன. பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மக்கள்திரள் கட்சியாக விஸ்தரிக்கவேண்டுமென பேசத்துவங்கியுள்ளன. இத்தாலி 25 லட்சம் உறுப்பினர்கள் என தெரிவிக்கிறது. அனைவரும் முழுநேர புரட்சிகரவாதிகளாக இருக்கமுடியுமா? டோக்லியாட்டி மக்கள் வருவதற்கு கட்சியின் கதவை திறந்து வைத்துள்ளார். நமது நாட்டின் சூழல் மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்க ஏதுவாக ஜனநாயக வாய்ப்புக்களை நல்கும்போது நாம் நம்மை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும். பல தொழிற்சங்கங்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். நமது நோக்கம் நிறைவேற தொழிலாளிவர்க்கத்தின் பெரும்பான்மை ஆதரவை நாம் பெறவேண்டும். அதேநேரத்தில் வெகுஜன தொழிற்சங்க அமைப்புகள் உடைந்து போக நாம் அவசரப்படக்கூடாது. விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். மக்கள் திரள் என்பதில் நாம் வேர்விடவேண்டும். தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் அதில் முன்னணி பாத்திரம் இருக்கவேண்டும். வர்க்க உணர்வு அடிப்படையானது. சோசலிச உணர்வு என்பது அதன் மேம்பட்ட உணர்வாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. நம்மிடம் சேரவரும் தனிநபர்கள் வர்க்க அமைப்பு ஒன்றில் உறுப்பினராகி பணியாற்றிடலாம் ஆனால் திரட்டப்படாத தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், மாணவர்கள், வக்கீல்களுக்கு இது பொருந்தாது. அனைத்து மட்டங்களுக்கும் கட்சி அமைப்புகளில் நேரடி தேர்தல் சாத்தியமற்ற ஒன்று. நமது முழு சக்தியும் அதில் போய்விடும். தாலுகா, தொகுதிவாரி கமிட்டிகளுக்கு நேரடி தேர்தல் என வைக்கலாம். மாவட்ட , மாநில கவுன்சில்களை நாம் பிரதிநித்துவ அடிப்படையில்தான் அமைக்கமுடியும். ஆனால் நிர்வாக கமிட்டிகளுக்கு வரவேண்டும் எனில் குறைந்தது 14 மணிநேர பொதுப்பணி ஆற்றுபவராக இருக்க வேண்டும். ஜனநாயகமும் கட்சிமுறையும் (Democracy and Party System) 1953ஆம் ஆண்டில் மேற்குறித்த விவாதம் ஒன்றை சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக்மேத்தா, ஜெயபிரகாஷ் நாரயண் ஆகியோரை விமர்சித்து மதுலிமாயி எழுதினார். அதன் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே தரப்படுகிறது. இன்றுள்ள கட்சி முறைக்கு மாற்றாக என்ன என்பது எனக்கு தெரியவில்லை. கட்சிமுறையில் தவறு இருக்கிறது என்பதை மட்டும் உணரமுடிகிறது. நாடு தன்னை இன்றுள்ள கட்சி முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாதவரை, புதிய அரசியல் அமைப்பு சட்டம் அதற்கேற்ப உருவாக்கப்படாதவரை, கட்சிகள் தங்களை தாங்களே கலைத்துக் கொள்ளாதவரை புதிய வழி ஏதும் சாத்தியமில்லை. என ஜே பி பேசி வருகிறார். அவர் வினோபாவே சிந்தனைக்கு நெருக்கமாகி வருகிறார். ஒரு கட்சியோ, இருகட்சியோ, பலகட்சி முறையோ எதுவாயினும் கட்சி முறை ஒன்றிற்கு எதிராக பேசுவது என்பது அரசு ஒன்றிற்கு எதிராக பேசுவது என்பதே ஆகும். அசோக்மேத்தா ஆளுங்கட்சி- எதிர்கட்சி வகைப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் பரந்து விரிந்த அரசாங்கம் என்ற கருத்தை முன்வைக்கிறார். அரசாங்கம் குறித்த விவாதங்கள் இருக்கலாம் ஆனால் எதிர்த்த போராட்டங்கள் கூடாது என்கிறார். பொருளாதரத்தில் பின்னடைந்த நாடுகள் வளர்ச்சிக்கு போராட்டங்கள் உதவாது. மேலும் பின்னடைவுகளை உருவாக்கும் என்கிறார். அவர் கருத்துப்படி பார்த்தால் இரு கட்சிகள் கூட தேவையில்லை. குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் அடிப்படையில் கட்சிகள் இணைக்கப்பட்டு அரசாங்கம் அமைந்து அதனை நிறைவேற்றுவது என்பதாக இருக்கிறது. அரசாங்கத்தில் பல சச்சரவுகளை தவிர்க்கும் என்பது அவர் கருத்து. வினோபாவா பேசிவருவது நமக்கு தெரியும். தேச கட்டுமானத்திற்கு அனைத்து சக்திகளும் ஒருமுகப்பட்டு துணைபுரியவேண்டும். அதாவது நடைமுறையில் கட்சிகள் வேண்டாம்- அரசாங்கத்தை இற்றுபோக செய்தல் என்ற புரிதல் அவருக்கு. வினோபாவாவின் கருத்துக்கள் கற்பனாவாதம் சார்ந்தவையாக உள்ளன. நடைமுறைக்கு சாத்தியமானதல்ல. அரசாங்க நடவடிக்கைகளுக்காக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் நிறுவனமான கட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல் என்பது வரலாற்றின் நிகழ்வாகும். மக்களின் கருத்தை சுமக்கும் வாகனங்கள்தான் கட்சிகள். கட்சிகளில் சுயநலம் சார்ந்த நடவடிக்கைகள் இல்லை என மறுக்கவில்லை. மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்திட பிரதிநித்துவ அரசாங்கம், கட்சி அமைப்புகள்தான் ஆக உயர்ந்த ஒரே வடிவம் என ஏற்க வேண்டியதில்லை. மையப்படுத்தப்பட்ட அதிகாரம், அதிகார பரவல் இல்லாமை, ஓரிடத்தில் அதிகார குவிப்பு என்பதெல்லாம் கவலைக்குரிய அம்சங்கள்தான் எனினும் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக தேர்தல் ஜனநாயகம், கட்சிகள் என்பதை தாண்டிய ஒன்றை மனிதகுலம் கண்டறியாமல் இருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்… அய்ந்தாண்டு திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை தோல்வியடைந்து விட்டது என்றால் திட்டத்தில் கோளாறு என புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் புலம்பி பயனில்லை. நம் மத்தியில் எழும் சோர்வால் பலனடையப்போவது கம்யூனிஸ்ட்கள்தான். நம் கட்சி திட்டம் குறித்து முன்னோடி தலைவர்களே நம்பிக்கையற்று கருத்து தெரிவித்து வந்தால் நாம் எவ்வாறு முன்னேற முடியும்.மக்களின் நம்பிக்கையை பெற பொறுமையாக தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும். Erudition is a virtue to be cultivated, no doubt. But when it is not guided by steadfastness of purpose it is likely to lead one astray. பல நாடுகளின் உதாரணங்கள் இதை காட்டுகின்றன. யுகோஸ்லோவியா டிட்டோ பார்முலாவை நேரு தலைமையில் ஏன் செய்யக்கூடாது என்கிறார்கள். யுகோ நிலைமை இந்தியாவிற்கு பொருந்தாது. காங்கிரஸ் கட்சியினர் பிரிட்டிஷார் போன்றே கன்சர்வேடிவ் தன்மையினர். ஸ்டேடஸ்கோயிஸ்ட்களாக இருக்கின்றனர். நேருவை ஆக உயர்ந்த அரசியல்வாதி என நாம் ஏற்கவில்லை. புரட்சிக்கு குறுக்குவழி ஏதுமில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். 7. நீட்சே Nietzche -ஆர்.பட்டாபிராமன் நீட்சே தனது 35 ஆம் வயதில் பேராசிரியர் பணிதனை முற்றிலுமாக துறந்தார். தனது பார்வை மங்கியதாலும், உடல்நிலை கோளாறுகளாலும் தனது ராஜினாமா ஏற்கப்பட கோரியிருந்தார். அந்நிலையில் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை அதிகம் படிக்கவேண்டாம் என்றும், சிந்தித்து துன்புறுத்தி கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். நீட்சே அதனை பொருட்படுத்தவில்லை. அதிமானுடன் தாகம் அவரை துரத்தியது. அடுத்த 10 ஆண்டுகள் தீவிர எழுத்துப்பணியில், அவற்றை புத்தகமாக பதிப்பிப்பதில் ஈடுபட்டார். தனித்த வாழ்வு சூழலில் இருந்த அவரின் எழுத்துக்கள் ஆரம்பத்தில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படியே பொருட்படுத்தியவர்களிடமிருந்து மனித தொடர்பற்ற ஒருவரிடமிருந்து என்ன மதிப்பீடுகளை பெறமுடியும் என்ற விமர்சனம் எழுந்தது. அவர் அனுபூதநிலையிலிருந்து அதீத எண்ணங்களை வெளிப்படுத்துகிறார் என்ற விமர்சனம் இன்றளவிலும் உள்ளது. அவர் தொடர்பறுந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினாரா என்ற கேள்விக்கு அவரின் ஆய்வாளர்கள் இல்லை என்ற பதிலை தருகிறார்கள். ஒத்திசைவும், உறுதியான கருத்து திசையும் கொண்டவர் நீட்சே என அவரை ஆழ்ந்து படிப்பவர்கள் உணரமுடியும் என்கின்றனர். குறைந்த செலவில் எளிய வாழ்க்கையின் ஊடாக மிக குறைந்த தொடர்புகளை கொண்ட மனிதன் உன்னத சிந்தனைகளை வெளிப்படுத்தமுடியும் எனப்தற்கு நீட்சே உதாரணம் என புகழ்வாரும் உளர். ரஸ்ஸல் போன்றவர்கள் அவர் மனசிக்கல் உள்ள மனிதன் என்றார். அவர் வெளிஉலகை காணாதவர் அல்லர். பயணப்பட்டவர். ஸ்விட்சர்லாந்த், ரோம், துரின் பகுதிகளில் அவர் இருந்தபோது அவரது புத்தகங்கள் வெளிவந்தன. அவரை தலைவலி மிகவும் வதைத்தது. துரின் தெருக்களில் அவர் விழுந்துவிடுகிறார் என்ற செய்தி அவ்வப்போது நண்பர்களுக்கு எட்டியது. பிரடெரிக் வில்ஹெம் நீட்சே அக்டோபர் 15 1844ல் பிரஷ்யாவின்(ஜெர்மனியா பேரரசு) ராக்கென் பகுதியில் பிறந்தார். தனது 55 ஆம் வயதில் ஆகஸ்ட் 25 1900ல் வைமர் பகுதியில் மறைந்தார். ராக்கென் பிரஷ்யாவால் அபகரிக்கப்பட்ட பகுதி எனினும் நீட்சேயின் தந்தை அப்பகுதி ஆட்சியாளர் பெயரையே அவருக்கு வைத்தார். தந்தையார் லுத்ரன் மதபோதகர். நீட்சேயின் 5 வயதில் அவர் மறைந்தார். பாட்டியார், அம்மா, தமக்கை என பெண்கள் உலகில் நீட்சே வளர்க்கப்பட்டார். பான் பல்கலைகழகத்தில் ப்லோலோஜி Philology என்கிற ’பாஷை சாஸ்திரம்’( மொழி அறிவு) பின்னர் தத்துவம் பயின்றார். கிரேக்க மொழி ஈடுபாடு அதிகரித்தது. கிறிஸ்துவசாரம் ஏதும் அவரிடம் பற்றவில்லை. வாழ்நாள் முழுதும் இறை எதிர்ப்பாளராகவும் கடவுள் இறந்துவிட்டார் என்ற புகழ்வாய்ந்த சொற்றொடரை மனிதகுலத்திற்கு தந்தவராகவும் இருந்தார். ஓபரா இசைநாடக அறிஞர் வாக்னர், தத்துவ அறிஞர் ஆர்துர் சோபன்ஹார் ( Arthur Schopenhauer) அவரை கவ்வி பிடித்தவர்கள் சோபன்ஹார் ஹெகலுக்கு எதிராக நின்றவர். ஹெகலின் உரைகளுக்கு பெருங்கூட்டம் கூடும். சோபன்ஹாருக்கு அவ்வாறு இருக்காது. ஆனாலும் பின்னாட்களில் தான் பேசப்படுவதை அறிந்து மகிழ்ந்தார். சோபன்ஹாரின் புத்தகமான விருப்பமும் எண்ணமும் ஆன உலகம்( The World as Will and Idea) நீட்சேயிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிக அறிவு அதிக துயரம்- மிகை ஞானம் மிகை துக்கம்- அறிவு சேகரம் துன்ப சேகரம். மகிழ்ச்சி என நாம் நினைப்பது துன்பத்திலிருந்து நாம் விடுபடும் தற்காலிக தருணங்களே. நேர்மறை தாக்கங்களைவிட எதிர்மறை அம்சங்கள் உலகை ஆள்கின்றன. மனிதர்கள்தான் தங்கள் துன்பத்திற்கு காரணம். கடவுளை குறை சொல்லி பயனில்லை. நாம்தானே நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வலுவான அரசை நிறுவிகொண்டோம். அது இறைவன் தந்ததல்ல. நமது விருப்பங்களின் வடிவாகவே உலகின் நிகழ்வுகள். விருப்பமில்லையெனில் உலகில்லை. எண்ணமில்லை. வெறுமை- ஏதுமற்றதுதான். நல்லமனிதன் என்பவன் சுயவறுமை, சுயவதை, நேர்மைக்குள்ளாபவன்தான்.. என்ற சிந்தனை அவரிடம் உள்நுழைந்தது. இதனை வளப்படுத்த நீட்சே முயன்றார். மனிதன் மேம்பட மனித ஆற்றலே போதுமானது. வெளியிலிருந்து எந்தவகை இறை ஏஜென்சியும் தேவையில்லை.. எனவே கடவுள் இறந்துவிட்டார் என்பதே மனிதனை உயர்த்தும் என்ற அதிரடி சிந்தனையை அவர் வெளிப்படுத்தினார். சோபன்ஹார் கூட புத்தமதம் குறித்து நேர்மறை எண்ணம் வைத்திருந்தார். நீட்சேவிற்கு எம்மதம் மீதும் நல்ல எண்ணமில்லை. அவசியமில்லை என கருதினார். தனது சூழலில் பழக்கமாக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ மதம் மீது வெறுப்பு அவருக்கு ஏற்பட்டது. நீட்சே என பேசும்போது அவரின் உடல் உபாதைகளும் சேர்ந்தே பேசப்படுகின்றன. 1870ல் குதிரை சவாரியின் போது விழுந்தததால் மார்புவலிக்கு உள்ளானார். 1871ல் மருத்துவ விடுப்பில் சென்றார். பல்கலை சூழலில் உண்மை உணர்தல் முடியாது என்பதை நண்பர்களிடத்தில் தெரிவித்து வந்தார். 1876ல் பல்கலையிலிருந்து வெளியேறினார். தனது 28ஆம் வயதில் தன் காதலை ருஷ்ய பெண் லூ வான் சலோனிடம் தன் நண்பர் ஒருவர் மூலம் வெளிப்படுத்தினார். வேடிக்கையாதெனில் அந்நண்பரும் அப்பெண்ணிடம் தன் காதலை தெரிவித்தவர். அப்பெண் இருவரையும் நிராகரித்தர். சிக்மண்ட் பிராய்ட் ஆய்வு மாணவரானார் அப்பெண். கலோன் விபச்சார விடுதி ஒன்றில் தன் நண்பருடன் சென்ற நீட்சே பயந்து ஓடிவந்ததாக தகவல் உள்ளது. இதன் பொருள் பெண் உறவே அவருக்கு இல்லை என்பதல்ல. நிறைய இருந்திருக்கலாம். அவர் வி டி என்கிற பாலியல் நோய்க்கு உள்ளானார். Syphilis Insane நோய் தாக்கப்பட்டதாக அறிய முடிகிறது. Self-Renunciation என்கிற சுயதுறவு அறநெறியை அவர் ஏற்கவில்லை. தனது ஆக்கங்களில் அதை விமர்சிக்கிறார். வாழ்க்கைக்கு கிறிஸ்துவம் எதிரானது (நமது நாட்டில் நாம் இந்துத்துவம் என புரிந்து கொள்ளலாம்) என்றார் நீட்சே. கடவுளின் மரண அறிவிப்பின் மூலம் நாம் அளவு கடந்த விடுதலை பெறுகிறோம் என எழுதினார். அவரிடம் ’நிரந்தரமாக திரும்ப திரும்ப நிகழ்தல் eternal recurrence’ என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. அவரின் Super Man- Der Ubermensch அதிமானுடன் என்பதற்கு இக்கருத்தாக்கம் துணைபுரியும் என கருதினார். நமது வாழ்க்கை பலமுறை மிகச்சிறிய அனைத்து அம்சங்களுடன் பலமுறை வாழப்படுகிறது என்கிற கவித்துவ தெறிப்பை அவர் நல்கினார். நாம் கடந்த காலங்களில் வாழ்ந்தோம்- இனி வரப்போகும் காலங்களிலும் வாழப்போகிறோம். வாழ்க்கை நீடிக்கிறது என்பதின் அடையாளம் இடைவிடாத நடைபெறுதலில்தான் தெரிகிறது என்றார். சாவால் நாம் முற்றிலும் அழிந்துவிடுவதில்லை என்றார். திரும்ப திரும்ப நமது வாழ்க்கை நடைபெறுகிறது. நாம் திரும்ப வருகிறோம் என்பதற்கு மக்கள் அஞ்சுகிறார்கள். துன்பம் என அலறுகிறார்கள்- விடுபட விழைகிறார்கள். ஆனால் சரியாக எதிர்கொள்ளக் கூடியவர்கள் விருப்ப உறுதியுடன் விடுதலையை காண்கிறார்கள். சாதாரணமானவர்களைவிட அவர்களுக்கு வலுவான சக்தியும் கட்டுப்பாடும் உள்ளது. அவர்கள் அதிமானுடர்கள் என்ற சிந்தனையை நீட்சே வெளிப்படுத்தினார். கீழைத்தேய சிந்தனைகள் போன்றவற்றை மேற்குலகம் புரிந்துகொள்வது சற்று கடினமானது. எவ்வளவு கவித்துவ நடையில் இச்சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும் புரிய வைப்பது கடினம் என உணர்ந்த நீட்சே தனக்கான வாகனமாக பெர்சிய மாமுனி ஜராதுஸ்ட்ரா பேசியது ( Thus Spoke Zarathustra) என்ற வகையில் புகழ்வாய்ந்த படைப்பை தந்தார். 1883-85 ஆண்டுகளில் அவை வெளியாயின. எனது தத்துவம் முழுமையும் இந்நூல் மூலம் பேசப்பட்ட எளிய வார்த்தைகளில் உறைந்திருக்கிறது என்றார் நீட்சே. வாழ்வின் சக்தி மற்றவர்களைவிட உயர்ந்த ஞானம் பெற்றவர்களிடம் உள்ளது. ஜனநாயகம், சோசலிசம் என்பதெல்லாம் ஞானத்திற்கு எதிரிகளாகவே இருக்கும். பயமற்ற பார்வையும் கலப்படமற்ற மாசுமறுவற்ற தனித்த பெரும் சிந்தனையாளர்களிடம்தான் தீர்வுகள் வசப்படும். அவர்களிடம் காணும் அதீத தைரியம் அதற்கு துணையாக நிற்கும். அவர்கள் அதிமானுடர்கள் என திரும்ப திரும்ப ஞானவான்களின் மேன்மை ஒன்றே உலக மேன்மையாக நீட்சே படம் பிடித்தார். இந்த அதிமானுட சிந்தனைதான் நாசிகளை பாசிசவாதிகளை கவ்வி பிடித்து மானுட விரோத படுகொலைகளுக்கு இட்டு சென்றது- உலகை போர் மூலம் சொல்லொனா துயர்களுக்கு இட்டு சென்றது என்கிற கடும் விமர்சனத்திற்கு நீட்சே உள்ளானார். நீட்சே அதிமானுடன் என தனி நபர் பற்றி பேசினார். நாசிகள் அதிமானுட இனம் என அதை நீட்டிக்கொண்டனர் என நீட்சேவை காக்க வருவோர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். Beyond Good and Evil ல் Master Morality -Slave Morality உயர்நெறி- மந்தை நெறி குறித்து பேசுகிறார். இரண்டும் ஒவ்வொருவரிடத்திலும் கலந்தே இருக்கலாம். அன்பு, கனிவு, பரிவு போன்றவை மந்தை நெறிகளாக கொண்டாடப்படலாம். ஆனால் அதிமானுடன் சமரசமில்லாதவன். அவனுக்கு மந்தை தனமையுடன் சகவாழ்வு சாத்தியமில்லை என்றார் நீட்சே. சோசலிசம் கூட பொறாமையின் அரசியலாகவே இருக்கிறது. ஒரே ஒத்த சீரான என்ற பெயரில் மந்தைத்தனம் உருவாக்கிட கிறிஸ்துவம் , ஜனநாயகம், சோசலிசம் முயற்சிக்கின்றன. ஆனால் அதிமானுடன் தனித்த மதிப்பீடுகள் கொண்டவன் என விமர்சித்தவர் நீட்சே. கடவுள் இறந்துவிட்டார் என்பதை அவரின் மாபெரும் தத்துவக்கொடையாக பார்க்கமுடிகிறது. கடவுள் எனும் கருத்தாக்கம் மனிதனின் சாத்தியப்பாடுகளை மறுக்கிறது. அது மனித இருப்பை உதாசீனப்படுத்தி கேள்விக்குள்ளாகிறது என்றார். மதசார்பற்ற சமுகத்தில்தான் ஆக உயர்ந்த மானுட ஆளுமைகளை உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையை அவர் தந்தார். அவர் கட்சி என்கிற அமைப்பு ஒன்றிற்காக சிந்தித்ததாக தெரியவில்லை. அவரது சிந்தனைகளை நிறுவனப்படுத்திட முயற்சிக்கவில்லை. அவரது எழுத்துக்கள் allusion- suggestion பாணியில் இருப்பதாக அவரை ஆராய்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நம்பிக்கைவாதங்களை நாம் அவரிடம் காணமுடியாது. வாழ்வு என்பது முடிவாக இருந்தாலும் வாழ்தலை நோக்கமாக வைத்தல் என அவர் பேசினார். வாழ்க்கையின் குறிக்கோள் முடிவுகளை எட்டுவதல்ல- உச்ச மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருப்பது என்றார். அதிமானுடன் அதனை துணிச்சலுடன் எதிர்கொள்கிறான். நீட்சேவை கடவுளற்ற சமுகவியலாளர் என அவரது சிந்தனைகளை எடுத்து செல்வோர் புகழ்கின்றனர். நீட்சேயின் இறுதி ஆண்டுகள் பெரும் மெளனத்தில் கடந்தது. மனம் மூடுண்டது. Nihilism உச்ச அளவில் பற்றியது. பிஸ்மார்க்கின் மீசை அவரிடமும் வளர்ந்தது. அவர் தனது அதிமானுடனை அரசியல்வாதியாகவோ கொடுங்கோல் தலைவனாகவோ சித்தரிக்கவில்லை. அக்கருத்தாக்கம் மாயையால் கட்டப்பட்ட ஒன்றா? பெரும் விருப்பமா? பூமி விளைச்சலின் உயர் அர்த்தமா? தெரியவில்லை. நீட்சே பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பேசவில்லை. காணப்படும் மதிப்பீடுகளை கடந்து புதிய உச்சத்திற்கான பயணமது. நம் குழந்தைகள் பார்த்து குதூகலிக்கும் ஸ்பைடர்மேன் அல்ல அதிமானுடன். அவன் நாகரிக உச்சம் . சுதந்திர தாக வெளிப்பாடு. எளிய சிக்கன வாழ்வின் அடையாளம். நல்லது கெட்டதுக்கு அப்பால் செல்லும் பயணம். மானுடம் என்பது பாலமே அன்றி இறுதி இலக்கல்ல. கடக்கவேண்டியதை கடந்து புதிய மாதிரிகளை உருவாக்குவோம் என்கிறார். இறுதி இலக்கு என ஏதுமில்லை என்கிறார் . பிரடெரிக் வில்ஹெல்ம் நீட்சே எனும் மேற்கித்திய தத்துவாதியின் அதிமானுட பிறப்பிற்கு உலகம் காத்திருக்க போகிறதா- ஏற்கனவே அதிமானுடர்கள் தோன்றிவிட்டார்கள் அந்த மாதிரிகள் போதும் என சொல்லப்போகிறதா.. இல்லையேல் கண்டுகொள்ளாமல் செல்லப்போகிறதா? அவரின் இயல்பான மத சார்பற்ற எளிய வாழ்விற்கான தேடல்களை நாம் பொருட்படுத்தலாம். ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் தாக்கி பாசிச அரசியலுக்கு துணைபுரியும் கருத்தியல் செல்வாக்காக அவர் இருந்துவிட்டார் என்ற விமர்சனம் அவருடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அவரது இறுதிக்காலம் தோழமையற்ற தனிமையில் கழிந்தது. அவர் இற்று வீழ்ந்தார் எனக்கூட சொல்ல முடியும். நான் கடவுள் ஆக்கப்படுவதைவிட மீண்டும் பேராசிரியர்கூட ஆகிவிடலாம் என பேசினார். அகந்தை அழிவைத்தரும் . பலரை பயித்தியமாக்கும். அகந்தை அவரை தொற்றுவதற்கு முன்னரே அவர் அப்படி ஆனார். தத்துவதேடல்களால் அலைக்கழிக்கப்பட்ட அவரது மனம் பின்னர் mental suicideக்கு உள்ளானது. சகோதரியும் தாயும் குணப்படுத்த முயற்சித்தனர். ஆகஸ்ட் 25 1900ல் மரணம் அவரை பிடித்துக்கொண்டது. இரங்கல் கூட்டம் ஒன்றில் பின்வரும் தட்டிவாசகம் வைக்கப்பட்டது. கடவுள் இறந்தார்- 1884 நீட்சே நீட்சே இறந்தார்- 1900 கடவுள் 8. தோழர் அஜாய்கோஷ் அஜாய்குமார் கோஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக மிக முக்கிய தருணத்தில் 1951-1962வரை இருந்தவர். அஜாய் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் பிப்ரவரி 20 1909 வங்கத்தில் மிகிஜம் என்கிற ஊரில் பிறந்தவர். அஜாய் என்பது அங்கு ஓடிய ஆற்றின் பெயர். தந்தை சச்சிந்திரநாத் கோஷ் கான்பூரில் டாக்டராக இருந்தார். அஜாய் கான்பூரில் தனது 14 வயதில் பகத்சிங்கை சந்திக்கிறார்.. அலகாபாத் பல்கலைகழகத்தில் வேதியியலில் பட்டம் பெறுகிறார். பகத்துடன் தனது உறவுகளை கல்லூரியிலிருந்து திரும்ப வந்தவுடன் வலுப்படுத்திக் கொள்கிறார். விவாதங்கள் மூலம் புரட்சிகர இயக்கங்களை அறிந்து கொள்கிறார். பகத் செயலாற்றிய HSRA என்கிற இந்துஸ்தான் சோசலிச புரட்சிகர கட்சியும் அவரை ஈர்க்கிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அறியும் ஆர்வமும் அவருக்கு ஏற்படுகிறது. யாரால் எப்போது ஆயுதம் தாங்கிய புரட்சி என்பதில் அவருக்குள்ளே விவாதம் எழுகிறது. 1929 லாகூர் சதி வழக்கில் அஜாய் கைது செய்யப்படுகிறார். 60 நாட்களுக்கு மேல் போராடி ஜதின்தாஸ் உயிர்த்தியாகம் செய்திட்ட அந்த பட்டினிப் போரில் அஜாயும் பங்கேற்ரார். சிறை வாழ்க்கையும் புத்தகங்கள் மூலம் கம்யூனிசம் சோவியத் புரட்சி குறித்த அறிவாற்றலும் சிறைவாழ் தோழர்களின் புரட்சிகர எண்ணங்களை வலுப்படுத்தின. இந்துஸ்தான் புரட்சிகர கட்சியில் மத்தியதர வர்க்க இளைஞர்கள் சிலரின் தனிநபர் புரட்சிகரவாத முறைகளையும் அக்கட்சி சிதைந்து போனதையும் சிறையிலிருந்த வெளிவந்த அஜாய்கோஷால் பார்க்கமுடிந்தது. விடுதலைக்கான, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தனிநபர் பயங்கரவாதத்திற்கு மாற்று என்ன என்பதை அவர் யோசிக்க துவங்கினார். தோழர் எஸ் ஜி சர்தேசாய் தொடர்பும் அவருடன் தொடர்ந்து மேற்கொண்ட விவாதங்களும், கான்பூர் தொழிலாளிவர்க்க மத்தியில் பணியாற்ற துவங்கியதும் அவரை முழுநேர கம்யூனிஸ்ட் ஆக்கியது. 1933 துவங்கி 1962ல் மறையும்வரை கட்சியின் பொறுப்புகளில் மிக முக்கிய பொதுச்செயலர் பொறுப்புவரை உயர்ந்து அவர் செயலாற்றினார். புரட்சிகர ஜனநாயகவாதி என்பதிலிருந்து கம்யூனிஸ்ட் என்கிற மாற்றம் அவரிடம் முழுமையாக நடந்தேறியது. துவக்க ஆண்டுகளில் கான்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தில் மாவட்ட கமிட்டிகளில் செயலாற்றி 1936ல் மத்திய கமிட்டிக்கு அவர் சென்றார். 1935ல் பி சி ஜோஷி பொதுச்செயலர் பொறுப்பேற்றபோது காட்டே தெற்கு பகுதிக்கும், அஜாய் மேற்கு பகுதி, ஆர்.டி பரத்வாஜ் வடக்கு பகுதிக்கும் பொறுப்பாக்கப்பட்டனர்.. கம்யூனிஸ்ட் என்ற சைக்கிளோஸ்டைல் பத்திரிகையும் கொணரப்பட்டது. டிமிட்ரோவின் அய்க்கிய முன்னணிதந்திரம் உட்பட பல ஆவணங்கள் வெளியானது. கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு தலைமையகம் மாற்றப்பட்டது. தோழர்கள் தங்களிடமிருந்த சில உடைமைகளையும் விற்று அச்சகம் நிறுவினர். நேஷனல் பிரண்ட் வாரபத்திரிக்கை முதல் இதழ் பிப்ரவரி 13, 1938ல் கொணரப்பட்டது. தோழர்கள் ஜோஷி, அஜாய், ரணதிவே, டாங்கே போன்றவர்கள் ஆசிரியர் குழுவில் இருந்தனர். National Front பத்திரிக்கையில் அஜாய் பணியாற்ற துவங்கினார். கட்சியின் மிக முக்கிய வழிகாட்டியாக இருந்த டாக்டர் அதிகாரி பீஜப்பூர் சிறையிலிருந்து தப்பிட ஏற்பாடுகளை அஜாய் செய்தார் . தோழர் எம் என் ராய் எதிர்த்த கட்சி போராட்டத்தில் அஜாய் முன் நின்றார். சமஸ்தான பகுதிகளில் மக்கள் போராட்டங்களை கட்டுவதற்கு வழிகாட்டினார். 1940ல் கைதாக்கப்பட்டு தியோலி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கும் புகழ்வாய்ந்த பட்டினிபோராட்டத்தில் பங்கேற்றார். தனது உடலை அனைத்து துன்ப துயரங்களையும் தாங்குவதற்குரிய வகையில் கட்டுமஸ்தாக வலுவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அஜாய் அக்கரை காட்டினாலும் அவர் டிபி நோயால் அவதிப்பட துவங்கினார். அவர் காஷ்மீர் பகுதிகளிலும், பஞ்சாபிலும் பணிபுரியட்டும் என கட்சி வழிகாட்டியது. அங்கிருந்துதான் பம்பாய் மத்திய கமிட்டி கூட்டங்களுக்கே அவர் செல்லவேண்டிய நிலையில் இருந்தார். அவருக்கு பளுதூக்குதல், பாக்சிங் பயிற்சி இருந்தது. சோவியத் யூனியனுக்கு தூதராக அம்பாசிடராக இருந்த டி பி தார் போன்றவர்கள் காஷ்மீரில் அஜாய் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டனர். காஷ்மீரில் இயக்கம் கட்டுவதில் பெரும் முயற்சிகளை அஜாய் செய்தார். பஞ்சாபில் பின் நாட்களில் புகழ்வாய்ந்தவர்களாக மாறிய அன்றைய கல்லூரி மாணவர்களான ரொமேஷ் சந்திரா, பெரின் போன்றவர்கள் அஜாய் செயல்பாட்டால் கவரப்பட்டவர்கள். பஞ்சாபில் இருந்தபோதுதான் 1947ல் அஜாய் லித்தோராயை மணக்கிறார். அவர் இந்தோ சோவியத் கலாச்சார கழகத்தின் தலைவராக செயல்பட்டார். 1948 கல்கத்தா காங்கிரசில் அஜாய் பொலிட்பிரோவிற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அவதிப்பட நேரிடுகிறது. தோழர் ரணதிவே தலைமையிலான இடது அதிதீவிரம் குறித்த விமர்சனங்கள் பக்கம் அஜாய் நிற்கத் துவங்கினார். கட்சிக்குள் கொள்கை மோதல் வலுப்பெறுகிறது. நிலைத்து நிற்கும் அமைதி மற்றும் மக்கள் ஜனநாயகம் போன்ற தலையங்கங்கள் வரத்துவங்கின. கட்சியின் ஆவணங்களில் புகழ்பெற்ற 3P என்கிற மூவர் ஆவணம் ஒன்றை அஜாய் டாங்கே காட்டே வழங்குகின்றனர். பிற நாடுகளில் ஏறபட்ட புரட்சியை நகல்படுத்துவது அல்ல, இந்திய நிலைமைகளுக்கேற்ற புரட்சி உருவாக்கம் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில் 1951 கல்கத்தாவில் தலைமறைவு முறையில் நடந்த மாநாட்டில் அஜாய் பொதுச்செயலராகிறார். இந்தியாவில் வர்க்கங்களின் தன்மை, நிலபிரபுத்துவம், பணக்கார விவசாயிகள், நேரு அரசாங்கம் போன்றவை குறித்து கட்சிக்குள் நிலவிய வேறுபாடுகளை களைந்து கொள்வதற்காக ஸ்டாலினிடம் விவாதித்து ஆலோசனை பெற மாஸ்கோவிற்கு இருபிரிவாக நின்ற தலைமைத்தோழர்கள் அஜாய், டாங்கே, ராஜேஸ்வரராவ், பசவபுன்னையா செல்கின்றனர். பிப்ரவரி 4,6,9 1951 விவாதங்கள் குறித்து ருஷ்ய ஸ்டெனோகிராபர் குறிப்புகள் பின்னாட்களில் கிடைக்கப்பட்டன. ருஷ்ய குறிப்புகளை விஜய் சிங் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். நேரு சர்க்கார் மக்கள் செல்வாக்குள்ள அரசாங்கம் என்பதை தோழர்கள் கணக்கில் கொள்ளவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்ததாக குறிப்பு காணப்படுகிறது. சோவியத்தில் ஸ்டாலின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட திருப்பங்கள், உலகளாவிய கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஏற்பட்ட வேறுபாடுகள், பொதுத்தேர்தலில் பங்கேற்பு, தேர்தல் மூலம் கேரளாவில் தோழர் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட்களின் மாநில அரசாங்கம், மாவோயிச செல்வாக்கு பரவும் சூழல் போன்ற முக்கிய காலமாக அவரது பொதுச்செயலர் பதவிக்காலம் இருந்தது. கட்சிக்குள் ஏற்பட்ட கருத்துமோதல்கள் கட்சி உடைந்துவிடுமா என்ற அளவிற்கு செல்லும்போதெல்லாம் பல்வேறு தரப்பு தோழர்களுடன் பேசி உடைப்பை தடுப்பதில் அஜாய் பெரும் பங்காற்றினார். முதல் தேர்தலில் சோசலிஸ்ட்களைவிட அதிகமான இடங்களையும் காங்கிரசிற்கு அடுத்த பெரும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது. அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், ஆப்ரிக்கா- ஆசியா ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு ஊக்கம் தந்தவர் அஜாய். உலக கம்யூனிச இயக்கம் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்மதிப்பை அவர் பெற்றுத் தந்தார். பொருத்தமான ஆய்வுகளை தரக்கூடியவர் என்ற சிறப்பு அவருக்கு இருந்தது. 1960 மாஸ்கோ சர்வதேசிய மாநாட்டில் தேசிய விடுதலை போராட்ட தீர்மான கமிட்டியில் அவர் சேர்மனாக இருந்தார். அம்மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளை அவர் விமர்சித்து சோவியத் கட்சியின் பங்கு பாத்திரத்தை உயர்த்திப் பிடித்தார். கட்சியின் கொள்கை திசைதனை வரையறுப்பதில் 1956 பாலக்காடு 4வது காங்கிரஸ், 1958 அமிர்தசரஸ் காங்கிரஸ், 1961 விஜயவாடா கட்சி மாநாடுகளில் பெரும் பங்களிப்பை அஜாய் வழங்கினார். கேரளா அமைச்சரவை எதிர்த்த போராட்டங்கள், ஆட்சிக்கலைப்பின்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், ஜனநாயகமும் பலவீனப்படுத்தப்படுகிறது என்பதையும் நேரு மீதான விமர்சனக்களையும் தனது பிரச்சாரமாக கொண்டு சென்றார். அதே நேரத்தில் நேருவிற்கு மாற்று வளர்ந்துவரும் வலதுசாரி தலைமையல்ல என்றார். கோவா விடுதலைப் போராட்டத்திற்கு தனது வழிகாட்டுதல்களை தந்தார். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை விலக்கிக் கொள்வது, சோசலிச ஆட்சியிலும் எதிர்கட்சிகளும் இயங்க ஜனநாயக வாய்ப்பு போன்ற மிக முக்கிய கொள்கை தெளிவாக்கங்களை அவர் பொதுச்செயலராக இருந்த அமிர்தசரஸ் மாநாடுதான் வழிகாட்டியது. விஜயவாடா மாநாட்டில் புதிய நிலைமைகளும் கடமைகளும் என அவர் ஆற்றிய உரைக்கு சில திருத்தங்கள் வந்தபோதும் அவரது மிக முக்கிய கட்சி ஒற்றுமைக்கான உரையாக பொதுவாக அவரது உரை ஏற்கப்பட்டது. குறுகிய பொருளாதார தீர்மானவாதம் என்பதை எதிர்த்து அவர் போராட தவறவில்லை. தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் 1961ல் அவர் ஆற்றிய உரை நன்மதிப்பை விடுதலைக்கு பின்னால் ஆன நிகழ்வுகள்- நாட்டின் எதிர்காலம் குறித்த சரியான அணுகுமுறையை தந்தது. இந்திய- சீனா எல்லை பிரச்சனைகள் குறித்து அஜாய் நேருவுடன் தொடர்ந்து விவாதித்தார். ஏகாதிபத்திய ஏவல் நாய் நேரு என்கிற வரையறைகளை அஜாய் ஏற்கவில்லை. நேரு எதிர்த்த தனிப்பட்ட தாக்குதல்கள் கட்சியிலும் பிரச்சனையானது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்திற்கு ஏகபோக அதிகாரம் படைத்ததுபோல் உரிமை பாராட்டுவது குறித்தும், கட்சிக்குள் பிரச்சனைகளை உருவாக்குவது குறித்தும் அவர் தனது பேட்டிகளில் தெளிவுபடுத்தினார். அவர் மறைவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவருக்கு இதய நோய் ஏற்பட்டது. அவர் உடல்நிலை சீர்படுத்திட மாஸ்கோ செல்வது என்ற வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்பதை அவர் விடுப்பில் இருந்தகாலத்தில் பொதுச்செயலராக இருந்த தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது 53 வயதிலேயே ஜனவரி 13, 1962ல் மறைந்தார். அவரது நூற்றாண்டுவிழா 2009-10ல் நடந்தது. இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளிலும் மார்க்சிய-லெனினிய பயிற்சியிலும் தேர்ச்சியை அவரால் நிறுவ முடிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தேச நலன் சார்ந்த இயக்கங்களிலும் அஜாய் தனது செயல் சிந்தனைகளால் உயர்ந்து நிற்கிறார். 9. மாவீரன் பகத்சிங் வாழ்க்கை பஞ்சாப் மகத்தான தேசபக்த, புரட்சியாளர்களின் பூமியாக விடுதலை காலத்தில் திகழ்ந்தது. .உயிர் தியாக பூமியாகவும் இருந்தது. கல்சா சர்தார்ஸ் என்பவர்கள் மகராஜா ரஞ்சித் சிங் ஆட்சியில் முக்கிய பங்காற்றி வந்தவர்கள். பிரிட்டிஷ்காரர்களை தீரத்துடன் எதிர்த்து போராடியவர்கள். அர்ஜூன்சிங் லியால்பூர் பங்கா கிராம கல்சா சர்தார் வழிவந்தவர். தேசப்பற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் கொண்டவராக இருந்தவர். மனித சமுகம் அன்பினால் சகோதரத்துவத்தால் மட்டுமே தழைத்தோங்கும் என்பதில் உறுதியாக இருந்தவர். அவருக்கும் ஜெய்கவுர் பெண்மணிக்கும் மகன்களாக சர்தார் கிஷன்சிங், அஜித்சிங், ஸ்வரன்சிங் பிறந்து வளர்ந்தனர். தயானந்த சரஸ்வதியின் ஆர்யசமாஜ கொள்கைகளால் குடும்பம் கவரப்பட்டது. அர்ஜூன்சிங் தயானந்தாவை சந்த்தித்து பெற்ற மனமாற்றம் ஆர்யசாமாஜி என குடும்பத்தை மாற்றியது. புனித நூல் அணிவித்து தயானந்தாவல் அவர்கள் மாற்றப்பட்டனர். தனது குடும்பத்தில் தனது சொந்த சகோதரர்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டு சிறு சலுகைகளை அனுபவித்தபோதும் அர்ஜூன் தொடர்ந்து எதிர்ப்பாளராகவே செயல்பட்டார். பிரிட்டிஷ் எதிர்ப்பை கைவிட்டு குடும்ப வாழக்கையை ஒழுங்காக கவனிக்க உறவுக்காரர்கள் வற்புறுத்தினர். மூத்தமகன் கிஷனுக்கு ஆரம்பத்தில் அரசியலைவிட சமுக பிரச்சனைகளில் ஆர்வம் இருந்தது. விதர்பா வறட்சி அறிந்து அரசாங்கம் பாராமுகமாக இருப்பதை உணர்ந்து தனது சகாக்களுடன் அங்கு வாழ்ந்த மக்களின் பசித்துயரைப் போக்க செயலில் இறங்கினார் கிஷன். அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட அநாதை குழந்தைகளுக்கு பெரோஷ்பூரில் கருணை இல்லம் உருவாக்கினார். புரட்சியாளராக இருந்த சசிந்திரநாத் சன்யாலுடன் கிஷனுக்கு பழக்கமிருந்தது. தொடர்ந்த காலத்தில் அரசியல் வழக்குகளாக 40க்கும் மேற்பட்ட. வழக்குகள் கிஷன் மீது போடப்பட்டிருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் வாட நேர்ந்தது. கிஷன் சிங் துணவியாக வந்த வித்யாவதிக்கு புரட்சிகர முற்போக்கு வீட்டுசூழல் பழக்கமாகத் துவங்கியது. பாம்பின் விஷத்தையும் முறித்த உடல் சக்தி கொண்டவர் என உடன் இருப்பவர்களால் அவர் புகழப்பெற்றார். லாலா லஜ்பத்ராய் தலைமையில் 1907ல் மக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டங்களில் இறங்கினர். அஜித்சிங் லஜ்பத்ராயுடன் பர்மா மாண்ட்லே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சகோதரர்கள் கிஷன் மற்றும் ஸ்வரன் கூட்டங்களில் பிரிட்டிஷ் எதிர்ப்பு உரையை தந்தனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். வித்யாவதி கருவுற்றிருந்த தருணமது. சகோதரர்கள் உரையாடலின் போது தனக்கு நாடே வியந்து கொண்டாடும் மகன் தேச அர்ப்பணிப்பிற்காக பிறந்தால் மகிழ்ச்சி என்கிறார் கிஷன். செப் 27 2007ல் பேரன் பகத்சிங் பிறந்த செய்தியை அர்ஜூன்சிங்கும் பாட்டி ஜெய்கெளரும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் மகன்கள் மூவரும் சிறைக்கொட்டடியில் என்ற துயரம் குடும்பத்தில் இருந்தது. கிஷனும் ஸ்வரனும் பிணையில் வர அனுமதிக்கப்பட்டனர். அஜித் விடுதலை ஆனார். 1908 ல் திலகரின் கைது போராட்டங்களை தீவிரப்படுத்தியது. கிஷன்சிங் பாரத் மாதா சொசைட்டி நிறுவினார். அஜித்சிங் பல்வேறு பகுதி மக்களிடம் தீவிரமாக இயங்கத் துவங்கினார். கிஷன் அறிவுரையை ஏற்று வெளிநாட்டிலிருந்து தேசபக்த புரட்சிகர கடமையாற்றுவது என அய்ரோப்பா சென்றார். இரண்டாம் உலகப்போரின் போது ரேடியோ ரோமில் அவர் ஆற்றிய உரை பெரிதும் பாரட்டைப் பெற்றது. 1946ல் இடைக்கால நேரு அரசாங்கம் அமையும்வரை 35 ஆண்டுகளுக்கு மேல் குடும்பம் துறந்து செயல்பட்டவர் அஜித். தனது சிறை வாழ்க்கையிலும் பிற நாட்களிலும் அவர் ஏராளம் படித்தும் எழுதியும் வந்தார். ’முகிபன்னே வாதன்’ பெயரில் அவை வந்தன., அரசாங்கம் எழுத்துக்களை தடை செய்தது. பாரதமாதா சொசைட்டியும் தடை செய்யப்பட்டது. கிஷன்- ஸ்வரன் கைது செய்யப்பட்டனர். லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை உழைப்பு ஸ்வரணை பலகீனமாக்கியது, தனது 23ஆம் வயதில் அவர் மரணமுற்றார். இதே வயதில் தங்கள் குடும்ப வாரிசு பின்னர் வீரமரணம் அடையப்போகிறது என்பதை அப்போது அக்குடும்பம் அறிந்திருக்காது. கிஷனுக்கு பகத்சிங் மற்றும் அவருடன் 7 பேர் உடன்பிறந்தனர் .ஜகத் ,குல்வீர், ரஜேந்தர், ரண்வீர், அமர்கெளர், பீபிபிரகாஷ் கெளர், சகுந்தலா என அவர்கள் பெயரிடப்பட்டனர்… சிறுவயதில் அறியாப்பருவத்தில் வீட்டிற்கு வரும் கிஷன் நண்பர்களிடம் நான் துப்பாக்கிகளை விதைப்பேன் என பகத்சிங் கூறியதாக பதிவுள்ளது. அறிவார்ந்த போர்க்குணம் வரவழக்கத்தகுந்த குடும்ப சூழல் பகத்திற்கு வாய்த்தது. தனிமை விரும்பியாகவும் அவ்வப்போது சிந்தனை வயப்பட்டவரகவும் பள்ளிக்காலத்தில் பகத் அவரது சகோதரர்களால் உணரப்பட்டுள்ளார். தாய் இதை உணர்ந்து கவலையடைந்ததாகவும் கிஷனிடம் தெரிவித்ததாகவும் பதிவுள்ளது. புதிய சூழலுக்காக கிஷன் குடும்பம் நவகோட் பகுதிக்கு செல்கிறது. பிரிட்டிஷ் ஆதரவு சீக்கிய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காமல் லாகூரில் தயானந்தா ஆங்கில வேத பள்ளியில் பகத் சேர்க்கப்படுகிறார். அப்பள்ளியில் ஆங்கிலம், சமஸ்கிருதம், உருது கல்வியை பகத் பெறுகிறார். பிரிட்டிஷாரின் 1919 ஆள்தூக்கி கொடும் ரெளலட் சட்டம் போராட்டக்கனலை ஏற்படுத்துகிறது. அரசியல் கைதிகளுக்காவது இச்சட்டம் பாயக்கூடாது என்கிற காந்தியின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. சென்னையில் ராஜாஜியை சந்தித்த பின்னர் ஹர்த்தால் போராட்ட அறிவிப்பை காந்தி மார்ச் இறுதியில் வெளியிடுகிறார். பள்ளி கல்லூரியிலிருந்து மாணவர்கள் வெளியேறுகிறார்கள். காந்தி கைது செய்யப்படுகிறார். வன்முறைகள் எழுகின்றன என்பதறிந்த அவர் சத்தியாக்கிரகத்தை கைவிடுகிறார். பஞ்சாபில் சைபுதின் கிச்லு கைது செய்யப்பட்டு இருக்குமிடம் அறியாமல் வைக்கப்படுகிறார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஏப்ரல் 10, 1919ல் நடத்தப்பட்டு தெருவில் பிணமாகி போகின்றனர். பஞ்சாப் வைசாகி நாளான ஏப் 13 குரு கோவிந்த சிங் மக்களை திரட்டிய நாள். அமிரத்சரஸ் நகரில் 6000 மக்கள் ஜாலியன்வாலாபாக்கில் திரண்டனர். லெப்டிணண்ட் கவர்னராக இருந்த மைக்கேல் டயர் , ஜெனரல் டயரை 90 ஆயுத வீரர்களுடன் அனுப்பினான். நாய்களை சுடுங்கள் என உத்தரவு வந்ததும் குண்டுகள் பொழியப்பட்டன. எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் மிருகத்தன தாக்குதலில் மக்கள் பிணக்குவியலாயினர். மதன் மோஹன் மாளவிய 1400பேர் சுடப்பட்டு இறந்ததாக தெரிவித்தார். சிவில் சர்ஜன் ஸ்மித் கணக்கு 1800 என்றது. ரவீந்திரநாத் தாகூர் தனது பட்டத்தை துறந்தார். பின்னால் உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டு வீழ்த்தினார். பகத்சிங் ஜாலியன்வாலாபாக் அறிந்து அங்கிருந்த பிணக்குவியலை இரத்த கசிவுகளை பார்த்து மனம் நசுங்கிப் போனார். 12வயது பள்ளி மாணவன் மத்தியில் மாபெரும் பாதிப்பை இந்நிகழ்வு உருவாக்கியது. தனது சகோதரி அமரிடம் தான் ஒரு பாட்டிலில் எடுத்து வந்த இரத்தம் தோய்ந்த மண்ணைக்காட்டி இருவரும் அதன்மீது செடியை நடுகின்றனர். நமது சிறியதந்தை அஜித் இருந்தால் பிரிடிஷ்ரை விரட்டியிருப்பார் என சிறார் இருவரும் பேசிக் கொள்கின்றனர். நான் அவரை போலவே பழிவாங்குவேன் என பகத் சொல்கிறார். 1920ல் ஒத்துழையாமை-பகிஷ்கரிப்பு போராட்டத்தை காந்தி அறிவிக்கிறார். காந்தி கூட்டம் லாகூரில் என அறிந்து தனது நண்பர்களுடன் பகத் செல்கிறார். காந்தியின் உரை கேட்டு 9வது படித்துக்கொண்டிருந்த பகத் பள்ளியிலிருந்து வெளியேறி ஓத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கிறார். ஒடுக்குமுறைகளை அரசாங்கம் அதிகப்படுத்துகிறது தலைவர்கள் கைது படலம் நடந்தேறுகிறது. 25000 மக்கள் கைதாகியிருப்பர்.. ஜனவரி 4, 1922 உத்தரபிரதேசம் செளரி செளரா பகுதியில் போலீஸ்காரர்களின் ரசனை குறைவான சங்கேதங்களால் போராளிகள் கோபமூட்டப்பட்டனர். காவல் நிலயம் தீக்கிரையானது. போலீஸ்காரர்கள் மாண்டனர்.. அகிம்சை அறவழிப் போராட்டத்திற்கு நாடு தயாராகவில்லை என காந்தி போராட்டத்தை திரும்ப பெற்றார். ஆறு ஆண்டுகள் கடும் தண்டனை என அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்நிய துணிகள் தீக்கிரையாக்கும் போராட்டத்தில் பகத் நண்பர்கள் தீவிரமாக பங்கேற்றனர். பள்ளிப்படிப்பை காந்தி அறைகூவலை கேட்டு விட்டது, காந்தி போராட்டத்தை கைவிட்டது போன்றவை பகத்சிங்கின் மனப்போராட்டத்தை அதிகப்படுத்தின. நண்பர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. ஓரிரு நிகழ்வுகளை காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியது தவறு என பகத் பேசத்தொடங்கினார்.. பத்தொன்பது வயது சர்தார் கர்த்தார்சிங் தனது ஆயுத கலகத்தால் கைதாகி மரணதண்டனை பெற்று உயிர்த்தியாகம் செய்ததும் அவரது உரையும் பகத்சிங்கை கவர்ந்தன. அகிம்சை வழியில் பிரிட்டிஷாரை தூக்கி எறிய முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒத்துழையாமையில் பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் படிப்பை தொடர ஆங்காங்கே கல்லூரிகளை தேசியத்தலைவர்கள் நிறுவத்துவங்கினர். லாலா லஜ்பத்ராய் துவங்கிய தேசிய கல்லூரியில் அங்கிருந்த ஆசிரியர் பரமானந்த் மூலம் பகத்தை கல்லூரியில் சேர்த்தார் கிஷன். பரமானந்த் அவர்கள் கர்த்தார் சிங் ,லாலா ஹர்தயால் போன்றவர்களூடன் புரட்சிகர பணியாற்றியவர். சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர். புரட்சியாளர்களுடன் தொடர்பிலிருந்த பேராசிரியர் ஜெயசந்தர் பகத்சிங்கிற்கு அரசியல் வகுப்பாசிரியர். கல்லூரியில் சுகதேவ் வகுப்புத் தோழனாகிறார். தேசபக்தி, புரட்சிகர போராட்டங்கள் குறித்த கருத்தொற்றுமை உருவாகிறது. மகராணாபிரதாப், சந்திரகுப்தர் நாடகங்களை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். லாலா லஜ்பத்ராய் துவரகாதாஸ் நூலகம் ஒன்றை அமைக்கிறார். நூலக பொறுப்பாளர் ராஜாராம் சாஸ்திரிக்கும் பகத்திற்கும் ஏற்பட்ட நல்லுறவால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களை படிக்கிறார் பகத். மார்க்ஸ், பகுனின் புத்தகங்கள் அறிமுமாயின, பகுனின் அவரை கவர்கிறார். சோசலிச கோட்பாடுகள் அதற்கான புரட்சிப்போராட்டங்கள் ஆதரிக்கப்பட வேண்டியவை என்ற கருத்திற்கு பகத்சிங் வந்து சேர்கிறார். நூலகத்திற்கு வந்த புதிய புத்தகம் அனார்க்கிசம் கட்டுரைகள் அவருக்கு தரப்படுகிறது. அதில் இடம் பெற்ற வன்முறையும் உளவியலும் பிரஞ்சு அனார்க்கிசவாதி வேலன் அறிக்கையும் அவரை கவர்கின்றன. தொழிலாளி வர்க்கம், தொழிற்சங்கங்கள் குறித்த பதிவையும் பிரஞ்சு சட்டமன்றத்தில் அவரால் வீசப்பட்ட குண்டுகுறித்த பதிவையும் பகத் அறிகிறார்.. சாஸ்திரியிடம் நாமும் இவ்வாறு செயல்படவேண்டும் என்கிறார் பகத். பொது இடங்களில் இப்படிப்பட்ட கருத்துப்பகிர்வு கூடாது என சாஸ்திரி எச்சரிக்கை உணர்வை தருகிறார்.. இப்புத்தகம் 60க்கும் மேற்பட்ட முறை நூலகத்திலிருந்து பகத் பெயரால் பெறப்பட்ட செய்தியை நாம் அறிய முடிகிறது. 1923ல் தனது எப்,ஏ முடிக்கிறார். பின் BA சேர்கிறார். வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாகிறது. மறுத்து விவாதிக்கிறார். பெண் படிக்கவில்லை என சொல்லி தட்டிக்கழிக்க பார்க்கிறார். இறுதியில் தனது தேசபக்த கடமை குறித்து எடுத்து சொல்கிறார். பெற்றோரை ஏற்க செய்ய முடியாமையால் வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் கடிதம் ஒன்றை வைத்துவிட்டு வெளியேறுகிறார். அக்கடிதத்தில் எனது புனித நூல் நிகழ்வன்று காந்தி நான் நாட்டுக்கு சேவையாற்றுவேன் என சொன்னார். அதை நிறவேற்ற உறுதி எடுத்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். பெற்றோர்களின் தேடல் முயற்சி பலனளிக்கவில்லை. பண்டிட் யோசியர் ஒருவர் திரும்ப பகத் வருவார் ஆனாலும் தொடர்ந்து உங்களுடன் இருக்க மாட்டார் . வித்தியாசமான இவர் ஒன்று நாட்டை ஆள்வார்- இல்லையேல் தூக்கு ஏறுவார் என தன் கணிப்பை சொல்கிறார். தாய் வித்யார்த்தி பெரும் துயர் அடைகிறார். பகத்சிங் - II பகத்சிங் கான்பூர் சென்று பல்வந்த் சிங் என்ற பெயரில் பத்திரிக்கை பணிகளில் ஈடுபடுகிறார். புரட்சியாளர்களின் வழிகாட்டியாக இருந்த சந்திர சட்டர்ஜி மற்றும் பதுகேஷ்வர் தத், அஜாய் கோஷ், விஜயகுமார் சின்ஹா போன்றவர்களின் தொடர்பு கிடைக்கிறது. பதுகேஷ்வர் வங்க மொழி கற்றுத்தருகிறார். அங்கு பிரதாப் எனும் புகழ் வாய்ந்த பத்திரிக்கையை நடத்தி வந்த கணேஷ் சங்கர் வித்யார்த்தி பல்வந்த் சிங் (பகத்) அழைத்து கட்டுரைகள் எழுத வைக்கிறார். நிருபராக டெல்லி சென்று கலவரங்கள் குறித்து எழுத வைக்கிறார்.. போலீஸ் கண்காணிப்பு தீவிரமாகிறது .கணேஷ் சங்கர் பல்வந்தை அலிகார் பக்கமுள்ள ஷாதிபூர் கிராம தேசிய பள்ளி ஒன்றிற்கு தலைமை ஆசிரியராக அனுப்புகிறார். பகத் அங்கிருப்பதை அறிந்து ஊர் நண்பர்கள் தேடி வருகின்றனர். மாணவர்களை விட்டு பகத் சமாளித்து தான் இல்லை என அவர்களை உணரவைத்து திரும்ப செய்து விடுகிறார். பின்னர் தந்தையிடமிருந்து தொடர்ந்து வந்த உறுதி மொழிகளால் 6 மாதம் கழித்து வீடு திரும்புகிறார். ஊர் திரும்பியதும் அகலி இயக்க புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மத நடவடிக்கைகளில் நடக்கும் ஊழல் தடுப்பதற்கு போராடுகிறார். பிரிட்டிஷாரின் இந்த தாக்குதலில் 200 சீக்கியர்கள் பலியாகின்றனர். கர்த்தார் சிங், ஜ்வாலா சிங் தலைமையில் கிராமந்தோறும் இயக்கங்கள் எழுகின்றன. கிஷன் தனது பகுதியில் அவர்களை வரவேற்கமுடியாத சூழலை உறவினர் உருவாக்குகின்றனர். பகத் அனைத்து உதவிகளும் செய்ய முன் வருகிறார் அப்பகுதியினரை ஆதரவுக்கு திரட்டுகிறார். இதனால் கைது செய்யப்படலாம் என அறிந்த பகத் டெல்லி செல்கிறார். தைனிக் அர்ஜுன் பத்திரிகை பணிகளில் ஈடுபடுகிறார். அங்கும் பல்வந்த் சிங் என்றே அறியப்படுகிறார். கான்பூரில் வெள்ளம் என அறிந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட செல்கிறார். அப்போதுதான் சந்திரசேகர் ஆசாத்தை சந்திக்க உரையாட வாய்ப்பு கிட்டுகிறது. அவரிடம் வசீகரிக்கப்படுகிறார். பின்னர் லாகூர் திரும்பி ஒத்த புரட்சிகர சிந்தனையுள்ள இளைஞர்களை சேர்க்கிறார். பகவதிசரண் வோரா, அவர் துணவியார் துர்கா துணையுடன் பாரத் இளைஞர் மன்றம் 1926ல் துவக்கப்படுகிறது. லெனின் புத்தகங்களை படித்த பின்புலத்தில் அவரின் கொள்கைகளை அடியொற்றி மன்றத்தின் நோக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. விவசாயி- தொழிலாளரை திரட்டுவது என்பது பேசப்படுகிறது. சாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட தேசபக்தி முன் வைக்கப்படுகிறது. புரட்சியாளர் கர்த்தார்சிங் சிலை நிறுவப்படுகிறது. இன்குலாப் ஜிந்தாபாத் மாபெரும் முழக்கமாகிறது. லாகூர் ரகசிய புரட்சிகரகுழுவில் முக்கிய தோழர்களாக சந்திரசேகர் ஆசாத், பகத் ராம்பிரசாத் பிஸ்மில், ரஜிந்தர் லாஹிரி, அஷ்வகுல்லாகான், பதுகேஸ்வர் தத் செயல்பட்டுவந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதில் உள்ள சிரமங்களை தீர்த்திடும் வகையில் அரசாங்க நிதியை கொள்ளையிடுவது என முடிவெடுத்தனர். ஆக 9 1925 லக்னோவிற்கு மிக அருகாமை ககோரியில் தங்கள் இடுப்பு துப்பாக்கிகளுடன் அரசாங்க நிதி ரூ8600யை கொள்ளயிட முடிந்தது. ஆனால் அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியதானது. பல புரட்சியாளர்களுடன் பிஸ்மில்லும் கைதானார். ராம்பிரசாத் பிஸ்மில், ரஜேந்திரலாஹிரி, அஷ்வகுல்லா, ரோஷன்சிங் ஆகிய தோழர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.. அவர்களை தப்பவைத்து மீட்டிட பகத், ஆசாத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர் முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான்கு புரட்சியாளர்களும் தூக்கு கயிற்றில் வீரமரணம் அடைந்தனர். 1927ல் தசரா விழாவின் போது பொது இடத்தில் எவரோ குண்டு வீச மக்கள் மரணித்தனர். பகத்சிங்கிற்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அமிர்தசரஸ் சர்தோல் சிங் வீட்டில் பகத் மறைகிறார். தனது கைத்துப்பாக்கியை அங்கு விட்டு திரும்ப எடுக்க வருகையில் கைதாகி லாகூர் சிறையில் அடைக்கப்படுகிறார். காக்கோரி குறித்த விசாரணை சித்திரவதை நடந்தேறுகிறது அவரை பிணையில் விடுவிக்க ரூ 60000 என்கிறது பிரிட்டிஷ் நீதிமன்றம். மிகக்கடுமையான முயற்சிக்கு பின்னர் ரூ 60000 கட்டி ஜாமீனில் பகத் அவரது தந்தையால் பிணையில் எடுக்கப்படுகிறார். உடனடியாக புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சூழல் பகத்திற்கு ஏற்படுகிறது. குடும்பம் கறவை மாடுகளை வாங்கி பால்பண்ண ஒன்றை நிறுவுகிறது. பகத் அதன் மேலாண்மை பொறுப்பேற்கிறார். கடும் உழைப்பை நல்குகிறார். ஆனால் விரைவில் பால்பண்ணை இரவில் புரட்சியாளர்களின் சந்திப்பு கூடமாகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் திரு கோபி சந்த் பார்கவா என்பார் மூலம் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, பகத் மீதான பிணை நிதி நியாயமற்றது என நிறுவப்பட்டது. ரூ 60000 அவரது குடும்பத்தாரிடம் திரும்பத் தரப்பட்டது. பகத்சிங் தான் இனி சுதந்திர பறவை என கருதலானார். செப்8, 1928ல் ஃபெரோஷா கோட்லாவில் பகத், சுகதேவ், குந்தன்லால், சிவ வர்மா, ஜெயதேவ் குப்தா, விஜய் குமார் சின்ஹா போன்ற புரட்சியாளர்கள் கூடினர். பகத்சிங் அக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதேசங்களிலுள்ள புரட்சிகர குழுக்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை தெரிவித்தார். நாம் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அசோசியேசன் என்ற அமைப்பின் பெயரால் இயங்கலாம் என அறிவித்தார். ஆசாத் பங்கேற்க முடியாவிட்டாலும் அவர் சேர்மன் என்றும், பஞ்சாப் பிரிவு பொறுப்பில் சுகதேவ், ராஜஸ்தான் பிரிவு குந்தன், உத்தர பிரதேச பிரிவிற்கு சிவ வர்மா, பீகார் ஃபனிந்திர நாத் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டனர். அனைத்து பிரதேச ஒருங்கிணப்பு பொறுப்பிற்கு பகத், விஜயகுமார் நியமிக்கப்பட்டனர். அரசு வங்கி கொள்ளை என்பதும் முடிவானது. நவம்பர் 8, 1927ல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் எதிர்த்து பெரும் போராட்டங்கள் எழுந்தன. சைமன் சென்ற எல்லா பெரு நகரங்களிலும் ’திரும்பி போ’ என்கிற வீச்சான போராட்டங்கள் நடந்தன. சென்னை துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாயினர் லாகூருக்கு வரும்போது குண்டெறிய வேண்டும் என்கிற பகத் ஆலோசனையை அசோசியேஷன் ஏற்கவில்லை. லாலா லஜ்பத்ராயுடன் போராட்டத்தில் .பகத்சிங் பங்கேற்கிறார். லாலா லஜ்பத்ராயை பாதுகாக்கும் வகையில் புரட்சியாளர்கள் சுற்றி நின்றனர். போலீஸ் கமிஷனர் ஸ்காட் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆணையிடுகிறார். சூப்பரிடெண்ட் சாண்டர்ஸ் தலைமையில் தாக்குதல் நடக்கிறது லாலா லஜ்பத்ராய் தோள்பட்டையிலும் தலையிலும் தாக்கப்படுகிறார். போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலையடுத்து இரத்தம் சொட்டும் நிலையில் லஜ்பத்ராய் போராட்ட நிறுத்தம் என அறிவிக்கிறார். பகத் தன் மீதான தாக்குதலை பொறுத்து சகித்து. கொள்கிறார். 144 தடை போடப்படுகிறது. மீறி திரண்ட மக்களிடையில் என் மீதான அடி பிரிட்டிஷாருக்கு விழ இருக்கும் சாவு மணி என லஜ்பத்ராய் உரையாற்றுகிறார்.. உடல்நலம் பாதிக்கப்பட்டு நவம்பர் 17, 1928ல் அவர் மறைகிறார். டிசம்பர் 10, 1928ல் அசோசியேஷன் கூடி ஸ்காட் போலீஸ் அதிகாரியை கொன்று பழி தீர்ப்பது என முடிவெடுக்கிறது. ராஜகுரு போலீஸ் நிலையத்திற்குள்ளேயே அவனை கொல்ல அனுமதி வேண்டும் என்கிறார். ஆசாத் அறிவுரைக்குப் பின்னர் பொருத்தமான நேரத்திற்காக புரட்சியாளர்கள் காத்திருந்தனர். டிசம்பர் 17 அன்று காவல்நிலயத்திலிருந்து வெளிவந்த போலிஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸை ராஜகுரு தலையில் சுடுகிறார். பகத் தொடர்ந்து சுடுகிறார். ஆசாத் உள்ளிட்ட அனவரும் தயானந்தா கால்லூரி நோக்கி ஓடி தப்புகின்றனர். பகத்தை பிடிக்கவந்த சந்தன் சிங் என்கிற போலீஸ்காரர் ஆசாத்தால் சுடப்படுகிறார். அருகாமையில் இருந்த சைக்கிளில் ஏறி தப்புகின்றனர். சாண்டர்ஸை ஜேம்ஸ் ஸ்காட் என நினைத்து கொன்றாலும் தோழர்கள் கடமையை செய்ததாக கருதினர். ’மனசாட்சியற்ற அடக்குமுறை அரசே ஜாக்கிரதை’ என துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. நாங்கள் ஒரு மனிதரை கொன்றுவிட்டோமே என வருந்தினாலும் இக்கொடும் அரசாங்கத்தின் பிரதிநிதி அவர் என அறிக்கை போராளிகளின் செயலை நியாயப்படுத்தியது.. என்ன செய்வது புரட்சி இரத்தம் சிந்துதலை கோருகிறது என அவர்கள் தெரிவித்திருந்தனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க சுகதேவுடன் திட்டமிட்டார் பகத். பகவதி சரண் துணைவியார் துர்கா மற்றும் மகன் சசீந்திரன் பகத் குடும்பம் ஆகவும் ராஜகுரு வேலையாள் எனவும் வேடமிட்டு 40 மணி ரயில் பயணத்தில் கல்கத்தா தப்பினர். கைச்செலவிற்கு துர்கா குடும்ப பணத்தை தந்து உதவினார். காங்கிரஸ் மாநாட்டில் பகத் பங்கேற்றார் எனவும் அவர் பகல் பொழுதில் வெளியிலேயே செல்லவில்லை எனவும் முரண்பட்ட இருவித தகவல்கள் நிலவுகின்றன.. அனுசீலன் சமிதி தலைவர் பிரதுல் சந்திர கங்குலியுடன் பகத் சந்தித்து இரு ரிவல்வார்களை பெறுகிறார். பின்னர் வெடிகுண்டு செய்வதில் தேர்ச்சியானவர் என அறியப்பட்ட யதிந்திர நாத் அவர்களை இரகசியமாக பகத் சந்திக்கிறார். அதன் பின்னர் ஆக்ரா செல்கிறார் பகத். ஆக்ராவிலும், லாகூரிலும் வெடிகுண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் புரட்சியின் தோழர்கள் இறங்கினர். பொது பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதாக்களை கொண்டுவர பிரிட்டிஷ் தீவிரமாக இருந்தது. மசோதா மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரும் நாளில் குண்டெறிவது என்கிற பகத்சிங் ஆலோசனை ஏற்கப்பட்டது. பகத்சிங் வெளியே இருப்பது அமைப்பிற்கு தேவை என்றும் பதுகேஷ்வரும், விஜய் சின்ஹாவும் சட்டமன்றத்திற்குள் குண்டெறிவது என்றும் அமைப்பு முடிவெடுத்தது. துண்டறிக்கைகள் மூலமல்ல நமது வாழ்வை தியாகம் செய்வதே பெரும் பிரச்சாரமாகவும் விழிப்புணர்வை உருவாக்குவதாகவும் அமையும் என பகத் கருதினார். அசெம்பிளிக்கு நுழைவு அனுமதி பெறுவதற்கான ஏற்பாட்டை ஜெயதேவ் கபூர் செய்தார். ஜெயதேவ் ஆராய்ச்சி மாணவராக நடித்து இதை வெற்றிகரமாக்கினார். 1929 ஏப்ரல் 8 அன்று சட்டமன்றம் கூடியது. மோதிலால் உட்பட தலைவர்கள் இருந்தனர். மசோதாக்கள் அறிமுகம் துவங்கியவுடன் பதுகேஷ், பகத் இருவரும் குண்டுகளை யாருக்கும் காயம் ஏற்படாதவாறு எறிந்தனர். பதட்டம் பரவியது. அனைவரும் ஓடத்துவங்கினர். மசோதா தாக்கல் செய்த ஜான் ஷீஸ்டர் மேசைக்கு கீழே பதுங்கி கொண்டார். தோழர்கள் இன்குலாப் முழக்கமிட்டனர். துண்டறிக்கைகள் மசோதாக்கள் கொடும் அடக்குமுறைக்கானவை என்பதை சுட்டிக் காட்டி வெளியிடப்பட்டது. புரட்சிகர சிந்தனைகளை உலகில் யாராலும் அழிக்க முடிந்ததில்லை. சிலர் இரத்தம் சிந்தி புரட்சியை அரங்கேற்றுவதன் மூலம் மனித குலம் சுரண்டலை ஒழிக்க முடியும் என்றது அறிக்கை. இருந்த இடத்தில் அமைதியாக மோதிலால், ஜின்னா, மாளவியா, விதல்பாய் படேல் அமர்ந்திருந்தனர். சில போலிசார் முன்னேறி வந்தனர். பகத் துப்பாக்கிகளை கீழே வைத்துவிட்டு கைதாக தயார் என்பதற்கான செய்கைகளை காட்டினார். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தனது தந்தை தன்னைக் காண முயற்சி செய்கிறார் என்பதறிந்து ஏப்ரல் 26, 1929ல் பகத் டெல்லி சிறையிலிருந்து கடிதம் எழுதுகிறார். கவலைப்படவேண்டாம். மரியாதையாக நடத்துகிறார்கள். பார்க்க வரும்போது கீதா ரகஸ்யம், நெப்போலியன் புத்தகம், நாவல்கள் எடுத்து வருமாறு எழுதுகிறார். அதே நேரத்தில் தன்னை வெளிக்கொணர காட்டும் முயற்சிகள் அவசியமற்றது என தெளிவுபடுத்துகிறார். கொலை முயற்சி , குண்டு வெடிப்பு செக்ஷன்கள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தது. குண்டெறிந்தது உண்மை.. சாட்சிகள் தவறாக ஜோடிக்கப்பட்டவை என பகத் வாதாடினார். மனிதகுலத்தை தாங்கள் அளவு கடந்து நேசிப்பதாகவும், உழைக்கும் மக்களை அரசின் தாக்குதலிருந்து காப்பாற்றவேண்டியே இந்நடவடிக்கை. நாங்கள் எவரையும் கொல்ல நினக்கவில்லை என்றார் பகத்.. வாணவேடிக்கை விட்டீர்களா என அரசு தரப்பு கேலி பேசியது. ஆம் வாணவேடிக்கை எங்கள் வாழ்க்கையுடன்தான் என சீற்றத்துடன் பகத் பதில் அளித்தார் என அறியமுடிகிறது. எங்களது புரட்சிகர நம்பிக்கை அற்பமானதல்ல என அனைவரும் அறியவேண்டும் என்றார். புரட்சி என்பதை அழிவாக நாங்கள் கருதுவது இல்லை. மறுகட்டுமானம் என்றே பார்க்கிறோம் என்றார் பகத்.. நீதிமன்ற வாதங்கள் முடிந்து ஜூன் 12, 1929ல் 140 பக்க தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பில் ஆயுள்தண்டனை என்றனர். பகத், பதுகேஷ்வர் இன்குலாப் முழக்கமிட்டனர். சிறைக்கைதிகளுக்கு நேரும் அவலங்களை, கொடுமைகளை கண்டித்து லாகூர் சிறையில் ஜூன்14, 1929 முதல் பட்டினிப் போரை தோழர்கள் மேற்கொள்கின்றனர்… சுகதேவ், ராஜகுரு, யதிந்திரர், ஜெயதேவ், அஜாய்கோஷ், சிவ வர்மா அச்சிறையில் பகத்துடன் பட்டினிப்போரில் ஈடுபடுகின்றனர். மூத்த போராளி பாபா சோகன் சிங் சிறையில் 1915 முதலே இருந்து வந்தார். சாண்டர்ஸ் கொலை வழக்கும் நடக்க துவங்கியது. மருத்துவ படுக்கையிலேயே பட்டினி பலவீனத்துடன் பகத், பதுகேஷ்வர் இருவரையும் நீதிமன்றம் அழைத்து செல்கின்றனர். தேசபக்தர்களுக்கு கைவிலங்கு போடப்படுவதை எதிர்க்கிறார் பகத். பட்டினியால் யதிந்திரர் இரத்த ஓட்டம் நின்றது. கை கால் விளங்காமல் போனது. போராட்டத்தை நிறுத்தினால் யதிந்திரரை விடுதலை செய்யலாம் என்றது சிறை நிர்வாகம். பகத் போராட்டத்தை நிறுத்தி யதிந்திரரை காக்க விரும்பினார். சிறை நிர்வாகம் ஏமாற்றுவதாக உணர்ந்த பகத்சிங் தனது பட்டினிப்போரை நீட்டிக்கிறார். செப் 13 அன்று யதிந்திரரை மரணம் கவ்வியது. இந்திய விடுதலைபோரின் மகத்தான தியாக வரலாற்று நாளாக அந்நாள் மாறியது. யதிந்திரர் தியாகம் சிறை சீர்திருத்த பரிந்துரைகளை அரசாங்கும் ஏற்கும் சூழலை உருவாக்கியது. 114 நாட்களுக்கு பின்னர் அக் 5,1929ல் பகத் தனது பட்டினிப்போரை முடித்துக் கொண்டாதாக நாம் அறிய முடிகிறது. சாண்டர்ஸ் வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர்.. பகத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர், கமல்நாத் திவாரி, கிஷோர்லால், சிவ வர்மா, அஜாய்கோஷ், குந்தன்லால் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆசாத், பகவான் தாஸ், பகவதி வோரா போன்றோர் தலைமறைவாய் இருந்தனர். ஜெய்கோபால், மன்மோகன் பானர்ஜி, லலித் முகர்ஜி போன்றவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறிப்போயினர். செப் 12 1929ல் நீதிபதிகளுக்கு கட்டற்ற அதிகாரம் தரக்கூடிய மசோதா ஒன்றை- குற்றம் சாட்டப்பட்டவர்களை பார்க்காமல் கூட வழக்கு நடத்திட அதிகாரம் தரும் மோசமான மசோதா ஒன்றை கொணர்ந்தனர். மோதிலால்நேரு இதைக் கடுமையாக எதிர்த்தார். பகத்சிங் - III இர்வின் பிரபு மூவர் விசாரண கமிட்டி ஒன்றை லாகூர் சதி வழக்கிற்காக மே 1. 1930ல் அமைத்தார். இதை சட்ட விரோதமானது என பகிஷ்கரிக்க பகத்சிங் முடிவெடுத்தார். பின்னல் தோழர்கள் அறிவுரைப்படி லாலா துனிசந்த் என்பவர் வாதாட ஒப்புதல் தருகிறார். மே 12, 1930ல் இன்குலாப் முழக்கத்துடன் விசாரணக்கூடத்திற்கு புரட்சிகர தோழர்கள் வருகின்றனர்.. அவர்கள் போலீஸ்காரர்களால் அங்கு தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் மூவர் கமிட்டியில் ஒருவரான அகாஹைதர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறார். தனது மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 26, 1930ல் வழக்கு முடிவிற்கு வருகிறது. செப்டம்பர் 25ல் பகத் தாயார் பார்க்க விரும்பி சிறைச்சாலை வருகிறார். ஆனால் விதிகளின்படி சந்திப்பு மறுக்கப்படுகிறது. தீர்ப்பிற்கு பிறகு பார்க்க வாய்ப்பிருக்கலாம் கவலை வேண்டாம் என ஆறுதல் கடிதம் எழுதுகிறார் பகத்சிங். மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பதால் தந்தை கிஷன் வைஸ்ராய்க்கு சாண்டர்ஸ் கொலை நடந்த அன்று பகத் லாகூரில் இல்லை, கல்கத்தாவில் இருந்தார் என கடிதம் எழுதுகிறார். இதை அறிந்து கடுமையான வருத்தமடைந்த பகத்சிங் கோபத்துடன் தந்தைக்கு கடிதம் எழுதுகிறார். அரசியல் போராளிகள் சுயநலமற்றவர்களாக இருக்கவேண்டும். அரசியல் தன்மையில் மட்டுமே தற்காப்புகள் கூட அமைய வேண்டும் .இதை வேறு எவராவது செய்திருந்தால் அவரை நான் துரோகி என் சொல்லியிருப்பேன் .இதுபோன்ற பலவீனங்கள் கூடாது என எழுதுகிறார். இக்கடிதம் பத்திரிகைகளுக்கு அவர் வேண்டுகோள்படி தரப்படுகிறது. அக்டோபர் 7, 1930 அன்று தீர்ப்பாய பிரதிநிதி சிறைச்சாலை வந்து தீர்ப்பின் 68பக்க நகலை வாசிக்கிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரணதண்டனை என்பது படிக்கப்படுகிறது. அதிர்ச்சி நிலவுகிறது. மூவரும் புன்முறுவல் செய்கின்றனர். இன்குலாப் முழக்கம் இடுகின்றனர். மற்றவர்களுக்கு கால வரையுடன் கூடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. பின்னாளில் சி பி அய் பொதுச்செயலராக வந்த பகத்சிங் புரட்சிகர குழுவில் அன்றிருந்த அஜாய் கோஷ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் என அறிவிக்கப்படுகிறது. நாடு முழுதும் இளைஞர்களின் போராட்டங்கள் எழுகின்றன. தீர்ப்பை கண்டித்து பொது கூட்டங்கள் சென்னை உட்பட பெரு நகரங்களில் நடக்கின்றன. ஆயுள் தண்டனை பெற்ற பதுகேஷ்வர் தீர்ப்பறிந்து மனநிலை பாதிக்கப்படுகிறார். ஆயுள் தண்டனை ’குறைவான தியாகம்’ என கருத வேண்டியதில்லை. சாவிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ள புரட்சியாளர்கள் சகல துயர்களையும் சந்தித்து கொள்கைக்காக நிற்பவர்கள் என மக்களிடம் காட்ட வாய்ப்பு என புரிந்து கொள் என அவருக்கு பகத்சிங் கடிதம் எழுதுகிறார். பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல் என்பதில் பகத்திற்கு மனம் ஒப்பவில்லை. தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனை என ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக வேறுவகை வேண்டுகோள் ஒன்றை முன்வைத்து கடிதம் தந்தனர். நாங்கள் போராடுகிறோம். தொடர்ந்து போராட்டங்கள் இருக்கும். இன்றுள்ள சமுக அமைப்பு இற்று வீழும்வரை உக்கிரமான போராட்டங்கள் எழும். எங்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை. யுத்த கைதிகள் எனில் ராணுவத்தை கொணர்ந்து சுட்டு வீழ்த்துங்கள என மூவரும் எழுதினர். கவுன்சில் இதை நிராகரித்தது. மார்ச்4 1931ல் காந்தி –இர்வின் ஒப்பந்தம் வருகிறது. ஒத்துழையாமை போராட்டக்காரர்கள் விடுதலை விவாதிக்கப்படுகிறது. வன்முறையில் ஈடுபடாதவர் விடுதலை பேசப்படுகிறது. மார்ச் 5 1931 பத்திரிகை செய்தி வருகிறது. அதில் காந்தி வன்முறையில் ஈடுபட்டவர்களையும் அரசாங்கம் சிறைக்கொட்டடியில் வதைப்பது என்பதை தனிப்பட்ட முறையில் ஏற்கவில்லை என்றாலும் சட்டத்திற்கு புறம்பாக தன்னால் ஏதும் செய்வதற்கில்லை என்றார். கிஷன் குடும்பத்தார் பகத்தை இறுதியாக பார்ப்பதற்கு மார்ச் 3, 1931ல் வந்தனர். பாட்டனார் சர்தார் அர்ஜுன், பாட்டி ஜெய் கெளர் உடன் வந்தனர். தனது உடலை சுமந்து பகத் அடக்கம் செய்யவேண்டும் என்ற விழைவு தாத்தாவிற்கு இருந்தது. வாழ்வின் இன்பம் எதையும் துய்க்காமல் பேரன் மரணிக்கப்போவது மூத்தவருக்கு பெரும் துக்கமாகியது. பகத் ஆறுதல் கூறினார். எனது வாழ்வு பயனுள்ளதாக இருந்திடவேண்டும் என நீங்கள் அனைவரும் சொன்னபடிதானே நடந்துள்ளது, உண்மையின் பக்கம் நாம் நிற்போம் என்றார் பகத். வித்யாவதி உன்னை மகனாக அடைந்தது பெரும் பேறு என்றார். நீ அடையும் மரணம் மேலான ஒன்று. தூக்கு மேடையிலும் இன்குலாப் முழக்கமிட்டு நாட்டு மக்களை தட்டி எழுப்பு என்றார் தாயார். மிகுந்த மன உறுதியுடன் மரணத்தை நான் எதிர்கொள்வேன் என்றார் பகத். எனது மரணம் பல பகத்சிங்குகளை உருவாக்கும் என்றார். தந்தையிடம் நான் தங்களை காயப்படுத்திவிட்டேன் மன்னிக்கவேண்டும் என்றார். உன்னை எண்ணி பெருமிதம் அடைகிறேன் என்றார் தந்தை. நான் வாழ்வது என்பதைவிட எனது மரணம் அதிகம் பேசும். ஹிந்துஸ்தான் புரட்சிகர கட்சி என்பதுடன் நான் இறண்டற கலந்துவிடுவேன். என்னைவிட அதிர்ஷ்டசாலி யாராக இருக்கமுடியும். என் குறித்து எனக்கு பெருமிதமே என்றார் பகத். மார்ச் 24 1931ல் தணடனை நிறைவேற்றம் என இருந்தது. கடுமையான போராட்டங்கள் எழலாம் என அரசாங்கம் அறிந்து முதல் நாள் மார்ச் 23 அன்றே தூக்கை நிறைவேற்றும் வகையில் கடைசி விருப்பம் கேட்கப்பட்டது. அம்மா சமைத்த உணவு என்றார் பகத். விழித்த வார்டனிடம் கவலை வேண்டாம் இங்குள்ள போகா என்கிற கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளியைத்தான் அவர் அம்மா என குறிப்பிடுவதாக தெரிவித்தார். கண்ணீர் மல்க தயங்கிய அத்தொழிலாளியை தனக்கு உணவு சமைக்க சம்மதிக்க வைத்தார் பகத். மார்ச் 23 அன்றுதான் லெனின் புத்தகத்தை பகத் படித்துக்கொண்டிருந்தார். முடிக்க விரும்பினார். இன்குலாப் முழக்கம் கேட்க துவங்கியது. தலைமை வார்டன் சர்தார் சத்தார் சிங் முடிவு வந்துவிட்டது மகனே என்றார். எப்போது அந்த அதிர்ஷ்ட நிமிடம் என்றார் பகத். இன்று மாலை என்றனர். என்னை படைத்தவனை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது என்றார். பிரார்த்தனை செய் மகனே என்றார் வார்டன். உங்கள் உணர்வை மதிக்க்கிறேன். நீங்கள் முன்னதாக தெரிவித்திருக்க வேண்டாமா என்றார் பகத். மாலை 3 மணிக்கு தான் உறுதி செய்தனர் என்றார் வார்டன். கடைசி நேரத்தில் நான் இறைவனை பிரார்த்தித்தால் அவர் என்னை கோழை என நினைத்து விடுவார் என்றார் பகத். எங்களை சங்கிலியால் பிணைக்காமல் முகத்தை மூடாமல் தூக்கிலிடுங்கள் என்றனர் போராளிகள். சங்கிலிகள் விடுவிக்கப்பட்டன. மூவரும் கைகளை பற்றிக்கொண்டனர். சேர்ந்து பாடினர். இன்குலாப் முழக்கம் எதிரொலித்தது. சிறைச்சாலையில் மற்றவர் இத்துயர் கண்டு கண்ணீர் விட்டனர். முகமது அக்பர் என்கிற வார்டன் சங்கிலி இல்லாததால் ஆபத்து ஏதுமில்லை என துணை கமிஷனரிடம் கூறினார்.. மாஜிஸ்ட்ரேட் அவர்களே இந்திய புரட்சிகாரர்கள் எவ்வாறு இருக்கிறோம் என பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது என்றார் பகத்சிங். இன்குலாப் ஜிந்தாபாத்- ஏகாதிபத்தியம் வீழட்டும் என ஒருசேர மூவரும் முழக்கமிட்டனர். இரவு 7.33க்கு கயிறு இறுக்கப்பட்டது. முன்னதாக எனது கயிறை சரியாக பொருத்துவீர் என்றார் பகத். மோரி சிறைச்சாலைக்கு மூவர் குடும்பமும் வந்திருந்தது. மக்கள் திரளாக கூடியிருந்தனர். ஆனால் முதல் நாள் இரவே முடிந்து விட்டது என்பதை அறிந்தனர். தந்தை கிஷன் அதை கூட்டத்தாரிடம் தெரிவித்தார். அவர்களால் உடல்களை பெறமுடியவில்லை. இறுதி சடங்கு முடிந்துவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். குழப்பம் நிலவியது. சாக்குப் பைகளில் மாவீரர்கள் கிடத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டனர் என்ற செய்தி துக்கப்படுத்தியது. லாகூரிலிருந்து 70 மைல்கள் தாண்டி ஃபெரொஷ்பூர் என அறிந்து குடும்பத்தார் விரைந்தனர். அங்கு செய்தி அறிந்து மக்கள் கூடினர். சட்லஜ் நதிக்கரை ஓரம் நெருப்பு எரிவதை பார்த்து மக்கள் கூடினர். மக்கள் வருவதை அறிந்து நெருப்பை அணத்துவிட்டு போலீசார் மறைந்தனர். வந்தவர்களால்மண்ணெண்ணை நெடியை நுகர முடிந்தது. அரசாங்கம் சீக்கிய, இந்து மதப்படி சடங்குகள் நடந்து சாம்பல் கரைக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. ராம்பிரசாத் பிஸ்மில் நாங்கள் சுதந்திரம் பெறுவோம் .புரட்சியாளர்கள் சிதையுண்ட பூமிக்கு மக்கள் குவிந்து வருவார்கள் தியாகம் போற்றுவார்கள் என்றார். மார்ச் 24 1931 துக்க நாளாக போராட்டக்காரர்களால் அறிவிக்கப்பட்டது. 23 கோடி இந்தியர்கள் இன்னும் இருக்கிறோம். போராடுவோம் என பத்திரிக்கை செய்திகள் வெளியாயின.. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதில் அன்றிருந்த கம்யூனிஸ்ட்களைப் போலவே பகத்தும் நம்பிக்கை வைத்திருந்தார். சோசலிச புரட்சி என பேசிவந்தார். கம்யூனிஸ்ட் அகிலம் வாழ்க எனக் கூட முழங்கினார். ஆனாலும் அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களில் சேர்ந்து ஏன் செயலாற்றவில்லை என்பது குறித்து ஏராள விவாதங்கள் நடந்து வருகின்றன. தான் தனிநபர் பயங்கரவாதி அல்ல என தெளிவு படுத்த முயன்றார். தங்களை விடுதலைப் போரின் இராணுவப்பிரிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றார். புத்தக வாசிப்பையும் அறிவு பெருக்கத்தையும் நேசித்தவர் அவர். அவரும் தோழர்களும் படித்த நூற்றுக்கணக்கான புத்தக பட்டியல் கூட வெளியாகியுள்ளது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் உட்பட ஏராள கட்டுரைகளை எழுதியவர் பகத். பகுனின், மார்க்ஸ், லெனின், ட்ராட்ஸ்கி எழுத்துக்களுடன் தொடர்பு இருந்தது அனார்க்கிசம் குறித்து கட்டுரைகள் எழுதினார், அனார்க்கிசம் என்றால் அலர்ஜி ஆகவேண்டாம் நமது வசுதேவ குடும்பகம்தான் அது எனக்கூட எழுதியுள்ளார்.. அவரது சிறை குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் ஏங்கெல்ஸ் குடும்பம், தனிசொத்து அரசு நூலிருந்தும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உச்சகட்டம் குறிப்புகள் ட்ராட்ஸ்கி புரட்சி பற்றிய குறிப்புகள், கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்புகள் காணப்படுகின்றன. பிரிட்டிஷார் போனபின்னர் இந்தியர்களே ஆள வந்தாலும் சுரண்டல் தொடர்ந்தால் தங்கள் போர் ஓயாது என்ற கருத்தை பகத் எழுத்துபூர்வமாக வெளிப்படுத்தினார். இர்வின் பிரபுவிற்கு பதிலாக புருஷோத்தம் டாக்கூரோ, தேஜ் பகதூர் சாப்ருவோ வருவதால் சுரண்டல் பிரச்சனை தீர்ந்துவிடப்போவதில்லை என வெளிப்படையாக எழுதியவர் பகத். காந்தியின் அகிம்சை மற்றும் சமரசம் குறித்த விமர்சனங்களையும் தனது எழுத்துக்களில் அவர் வெளிப்படுத்தினார். பகத் தனது கட்டுரைகளை வித்ரோகி (கலகக்காரன்), அக்யாட் (அறியப்படாதவன்) சைனிக் (இராணுவவீரன்) என்ற பெயர்களில் எழுதி உள்ளதாக அறிய முடிகிறது. பகத்சிங்கின் ஆவணங்கள் என 100க்கும் மேற்பட்டவைகள் பட்டியிலப்படுகின்றன. அவர் 11 வயது துவங்கி எழுதியவையாக அவை உள்ளன. குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு புரட்சிகரத் தோழர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்ற வகையில் பல அமைந்துள்ளன. அரசியல் கடிதங்கள் அவரின் இறுதி 4 ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. பகத்சிங் எங்கு குண்டெறிந்தாரோ அதே இடத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் 2008 சுதந்திர தினத்தன்று பகத் சிலை நிறுவப்பட்டது.. பகத்சிங் தாயார் வித்யாவதி பஞ்சாபின் தாயார் என புகழப்பட்டார். அவர் மறைவின் போது அரசு மரியாதை செய்யப்பட்டது. மாளிகை கட்டுபவர்கள் மண்குடிசையில் வாழும் நாடு அழகான பொருட்களை செய்பவர் வாடும் நாடு. இதை மாற்றத்தான் போராடுகிறோம் என்றார் பகத்சிங். பயபக்தி நிறைந்த மக்கள் வாழும் நமது நாட்டில் மனிதாபிமானமில்லாமல் நாம் மற்றவரை நடத்துவது சரியா என கேள்வி எழுப்பியவர் பகத். தீண்டத்தகாதவர் என்பவர் நாட்டின் கட்டுமானமாக உழைத்தும் அடித்தட்டில் வாடுகிறார்கள். உறங்கும் புலிகளான அவர்கள் எழவேண்டும் என்றார்.. மதம் தனிப்பட்ட விவகாரம். அரசியல் கலப்பது ஆபத்தானது என்றார். நாம் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கடமை அழைத்தால் அனைத்தையும் துறக்க சித்தமாக வேண்டும். தியாகம் என்பது அதுதான் என வரையறுத்தார். நாட்டில் இளைஞர்கள் யுவதிகளுக்கு காதல் இருக்க வேண்டும் என்றார். அடுத்த 15 ஆண்டுகளில் பிரிட்டிஷ்காரர்கள் நாட்டைவிட்டு ஓடுவர் என கருதினார். அவ்வாறே நடந்தது. ஆனால் அவரின் பிற கனவுகள் இன்றும் பெரும் போராட்டத் தேவைகளை சுமந்த வண்ணமே இருக்கின்றன. Reference Materials: 1. The life and times of Bhagat Singh by Mahesh Sharama 2. Political Correspondence of Bhagat Singh 3. Articles of Mainstream Weekly 4. The History of Legend by Kama Maclean 10. விடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின் சோவியத் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை உலகம் காண இருக்கிறது 1917 நவம்பர் புரட்சியும் அதை தொடர்ந்த படிப்பினைகளும் பெரும் விவாதங்களையும் உரையாடல்களையும் உருவாக்கியுள்ளன. அப்புரட்சி இந்தியாவில் விடுதலைக்கு போராடிக்கொண்டிருந்த புகழ் வாய்ந்த இந்திய தலைவர்கள் மத்தியிலும், இன்று பெயர்கூட அறியாத அன்று பிரிட்டிஷ் எதிர்ப்பில் ஆங்காங்கே உத்வேகமாக எழுதி செயல்பட்டவர்கள் மத்தியிலும் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது என்பது இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அப்புரட்சி நடந்த காலத்தில் லெனின் எவ்வாறு மகத்தான வகையில் நம்நாட்டில் கொண்டாடப்பட்டுள்ளார் என்பதை நாம் உணரமுடிகிறது. இந்திய தேசிய விடுதலை இயக்க தலைவர்கள் மத்தியில் லெனினது தாக்கம் குறித்து பல்வேறு மொழிகளில் வந்துள்ளவற்றை தொகுத்து ஆய்விற்கு உட்படுத்தமுடிந்தால் மேலும் பல்வேறு செய்திகளை அறியமுடியும். பிரிட்டிஷாரின் கெடுபிடிகள் இருந்தபோதும் கூட பல்வேறு இந்திய இதழ்கள், புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆதரவு பத்திரிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோவியத் புரட்சி- லெனின் அரசாங்கம் குறித்து ஏராள செய்திகளை இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய வகையில் கொண்டு சேர்த்தன. சோவியத் புரட்சி நடந்த மறுமாதமே புனைபெயரில் டெல்லியிலிருந்து அப்துல் சத்தார் கயரி, அப்துல் ஜாபர் கயரி இருவரும் இந்திய மக்களின் வாழ்த்தை லெனினை சந்தித்து தெரிவித்தனர். அவருக்கு பரிசும் அளித்துள்ளனர். இந்தியப் புரட்சியாளர்கள் ராஜ மகேந்திர பிரதாப், பரகத்துல்லா ஆகியோரையும் 1919ல் லெனின் சந்தித்துள்ளர். பின்னர் அப்துல்ராப், எம் பி டி ஆச்சார்யா, எம் என் ராய், விரேந்திரநாத் சட்டோபாத்யாய், புபேந்திரநாத் தத்தா போன்றோர் லெனினை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. போல்ஷ்விசம் என்றால் என்ன என்பதை பத்திரிகை தணிக்கை சட்டங்கள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அறிய முடியாமல் போய்விட்டதாக மாடர்ன் ரிவ்யூ 1919ல் கூறியது. லெனின் என்ற மனிதரும் அவரது நோக்கங்களும் என்ற கட்டுரையை 1918லேயே அலகபாத் லீடர், பம்பாய் கிரானிக்கிள் வெளியிட்டன. திலகர் தனது கேசரியில் ஜனவரி 29, 1918ல் ருஷ்யத்தலைவர் லெனின் என்ற தலையங்கம் தந்திருந்தார், லெனினை சமாதானவாதி என புகழ்ந்தார் திலகர். எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகளாக பயானீர், சிவில் மிலிட்டரி கெசட், ஸ்டேட்ஸ்மேன் இருந்தன. இப்பத்திரிக்கைகளின் கபடத்தை லாலாலஜ்பத்ராய் வந்தே மாதரம் இதழில் ஜூலை18, 1920ல் கண்டித்து எழுதினார். லெனின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் இந்தியாவில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தி, பெங்காலி, உருது, மராத்தி மொழிகளிலும் வெளியானது. சோவியத்தில்கூட அப்போது அந்த அளவிற்கு வெளியாகவில்லை . இந்தியாவில் அவை சில குறைகளுடன் போதுமான விவரங்கள் இல்லாமல் வந்திருக்கலாம். வெளியிட்டதில் பலர் மார்க்சியவாதிகளும் அல்லர். சோவியத் புரட்சியை ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான புதிய சகாப்தம் என அவர்கள் புரிந்துகொண்டனர். சமத்துவ கொள்கைகளை கொண்டாடினர். இருமகாத்மாக்கள் என லெனினையும் காந்தியையும் ஒருசேர கொண்டாடியவர்கள் இந்தியாவில் இருந்தனர். அவர்களது வழிமுறைகள் வேறானாலும் நோக்கம் உன்னதமானது என அவர்கள் விளக்கம் அளித்தனர். விடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின் குறித்த உரையாடலை நாம் காந்தியிடமிருந்தே துவங்கலாம். தனியார் உடைமை ஒழிப்பு என்கிற போல்ஷ்விக்கின் லட்சியவாதத்தை அமைதியான முறையில் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் அனுசரிக்க வாய்ப்பிருந்தால் அது குறித்து என்ன கேள்வி இருக்கமுடியும் என்ற கருத்தை காந்தி தனது யங் இந்தியாவில் நவ 1928ல் பிரதிபலித்தார். இத்தகைய லட்சியத்தை உருவாக்கி வளர்த்த லெனினின் மகத்தான தியாகம் அப்போது வீனாகாது. துறப்பின் மேன்மையது என்றார் காந்தி. ஜி வி கிருஷ்ணாராவ் 1921ல் ஆங்கிலத்தில் லெனின் சரிதை எழுதினார். லெனின் வன்முறையை வழிபட்டார் என்பதை அவர் அதில் மறுத்திருந்தார். வன்முறை ஏவப்பட்டால் அதற்கு பதிலடியாக வன்முறை அமையும் என்றே லெனின் கருதியாக ராவ் எழுதினார். கிருஷ்ணாராவ் தனது முன்னுரையில் லெனின் மாபெரும் ஞானி- கடும் போராட்டங்கள் சோதனைகளுக்கு பின்னர் ஜாரின் கொடுங்கொன்மையை வீழ்த்தியவர் என புகழாரம் சூட்டுகிறார். சோவியத் புரட்சி மனிதகுல முன்னேற்றத்தில் புதிய மைல்கல் என்றார். கணேஷ் அண்ட் கோ என்ற நிறுவனம் சென்னையில் இப்புத்தகத்தை வெளியிட்டது.. இதேகாலத்தில் இந்தியில் ரமாசங்கர் அவஸ்தி கல்காத்தாவிலிருந்தும், பிடே மராத்தியில் பம்பாயிலிருந்தும், அஜீஸ் போபாலி அவர்களால் லாகூரிலிருந்து உருதுவிலும், ஹூப்ளியிலிருந்து கோரக் என்பவரால் கன்னடத்திலும் லெனின் வாழ்க்கை வரலாறு வந்திருந்தது 1918 கேசரி தலையங்கம் லெனினை சமாதானத்தின் தூதுவனாக சித்தரித்து எழுதியது. உலகம் உண்மையை அறிய வேண்டும் என்றார் திலகர். திலகரின் கேசரி ஆக21, 1920.செய்தியில் லெனினுக்கு ’மாரல் விக்டரி’ என்ற பதிவை செய்தது. லெனினை மண்டைஓடுகளுடன் காட்சியளிக்கும் இரத்தம் குடிக்கும் ராட்சஷனாக சித்தரிக்கிறார்கள். அவர் தூய மனமும், மனிதகுலத்தின் மீது அளவற்ற அன்பும் நிறைந்தவர் , கைகளில் ஆயுதம் தரிக்காத மாபெரும் தத்துவவாதி என்றது. அவரின் கம்யூனிச கொள்கை புதிய வகையிலானது. ருஷ்யாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார் என ஆதரவு குரலை தந்தது .கம்யூனிச வரலாற்றில் லெனின் பெயர் இனி நீடித்து நிலைக்கும். அனைத்து புதிய சிந்தனைகளுக்கும் உருவப்படுத்த்மனிதர்கள் தேவை என்றது. ருஷ்யா நாடு முழுதும் சுற்றி உழைக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்தவர் லெனின். தனது பேச்சு துண்டறிக்கைகள் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர். சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டு வறுமை மற்றும் போராட்டங்களை சந்தித்தவர். போல்ஷ்விக் கட்சியின் மூலம் தொடர் போராட்டங்களை நடத்தி இறுதியாக ஜாருக்கு எதிரான புரட்சியில் வெற்றியடைந்து தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்தவர் என நீண்ட கட்டுரை ஒன்றை கேசரி 29, 1924 இதழில் துந்திராஜ் த்ரிம்பக் காத்ரே என்பவர் எழுதினார். 1929ல் நேரு பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். லெனினது 30 ஆண்டுகால கடும் உழைப்பு, தியாகம், போராட்டங்கள் குறித்து அதில் பதிவு செய்கிறார். மகத்தான செயல்வீரன் என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியானது. மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் அமைதியாக ஆழ்ந்துறங்கும் அவரது உடலில் ருஷ்ய மன்ணின் மணம் வீசுகிறது. மாக்சிம் கார்க்கி கூறியது போல பூமிப்பந்தில் மனித நியாயத்தை நிலைநாட்டமுடியும் என்பதற்காக வாழ்க்கையின் அனைத்து சொகுசுகளையும் அவர் துறந்தார். லெனினை வெறியன் என்கிறார்கள் புரட்சிகர கடமை எவ்வளவு கடுமையானது- பெரும் பயிற்சிக்குரியது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவர் ஒற்றுமை என்பதற்கு நம் நாட்டில் நடப்பது போல எந்த ஒட்டுவேலையிலும் இறங்கவில்லை. செயல் வீரர்களையும் அனுதாபிகளையும் அவர் பிரித்தறிந்தார். நடப்பு யதார்த்தங்களின் அடிப்படையில் காரியமாற்றுவது என அவர் பேசினார். டூமா நாடளுமன்றத்தையும் அதே நேரத்தில் ஆயுத போராட்டத்தையும் அவர் பயன்படுத்தினார். நமது லட்சியம் நடைமுறைப்படுத்தப்பட அனைத்து வழிகளையும் கையாளுதல் என்பதை அவர் உணர்த்தினார். ரொமைன் ரோலந்த் கூறியபடி இந்த நூற்றாண்டின் தன்னலமற்ற மகத்தான செயல்வீரர் லெனின். லெனின் ருஷ்யாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வலிமைக்கான மரபாகியுள்ளார் என ஜவஹர் எழுதினார் . இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் நீ பிறந்த 1917 மகத்தான ஆண்டு. துன்பத்தில் உழலும் மக்களுக்கு விடிவிற்காக மகத்தான தலைவர் லெனின் பணியாற்றி ருஷ்யாவின் சைபீரியாவின் முகத்தையே புரட்சி மூலம் மாற்றியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். மார்க்சியத்தின் நவீன சோதனையாளர் லெனின். அதை விளக்குவதையும் வறட்டுத்தனமற்று அமுல்படுத்துவதையும் நமக்கு அளித்தவர் அவர். மார்க்க்சிய கோட்பாடுகளை உனக்கு கடிதம் மூலம் சொல்ல விரும்புகிறேன். மக்கள்திரளை கவ்வி பிடித்து அது இயக்குவதால் நமது நாட்டிற்கு கூட அது தேவைப்படலாம். புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு வெறும் ஆர்வலர்கள் மட்டும் போதாது- திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை என்பார் லெனின் என்பதை நேரு இக்கடிதங்களில் தெரிவிக்கிறார். சில நேரங்களில் நாம் மைனாரிட்டி ஆகக்கூட செயலாற்ற வேண்டியிருக்கும் என்றும் லெனின் உணர்த்துகிறார் என்றார் நேரு. போல்ஷ்விக் புரட்சி குறித்தும் அதன் முழக்கங்கள் குறித்தும் லெனினது மகத்தான பங்களிப்புகள் குறித்தும் தனது மகளுக்கு விரிவாக கடிதங்களை எழுதுகிறார். . தேசிய இன உரிமை, விடுதலைக்கு போராடும் நாடுகளின் மகத்தான தூதுவன் என்றும் புகழ்கிறார். 1918 கொலை முயற்சிக்கு உள்ளான பிறகும் ஓய்வின்றி உழைத்தார் லெனின். அவரை எந்திரமாக பார்த்துவிடாதே- மக்த்தான மனிதாபிமானி- உரக்க சிரிக்க தெரிந்தவர். நிதானமாக இருப்பவர். பெரும் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமல் எளிய நேரிடையான விவாதங்களை முன்வைப்பவர் என்றார் நேரு. எல்லைகாந்தி என அழைக்கப்படும் அப்துல் காபர்கான் நான் படித்தறிந்த புரட்சிகர வரலாற்று தலைமையிலேயே லெனின்தான் மகத்தானவராக தன்னை மேலானவன் என நிறுவிக்கொள்ளாதவராக படுகிறார் என்றார். நெப்போலியன், ரேஸா ஷா, நாடிர்ஷா போன்றவர்கள் கூட தடுமாறியிருக்கிறார்கள். லெனின் மேன்மைமிக்கவர் என பதிவு செய்கிறார். நேதாஜி சுபாஷ் அவர்கள் பிரிட்டன் ஜார் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்- பிரிட்டிஷ் மக்கள் தங்கள் தாயகத்தில் சோசலிச விடுதலையை பெறவேண்டும்- ஆளும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும் காலனி ஆட்சி முறைக்கும் தொடர்பு இருக்கிறது- காலனி சுரண்டல் மூலம் அவர்கள் வாழ்கிறார்கள் போன்ற லெனின் கருத்தாக்கங்களை மேற்கோள்காட்டி சுபாஷ் 1938 ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரையாற்றினார். காலனியாதிக்க மக்களின் விடுதலையும் பிரிட்டிஷ் மக்களின் சோசலிச போராட்டமும் இரண்டற கலந்தவை என்பதாக அவரது உரை அமைந்தது. முன்னதாக 1938 ஜனவரியில் சுபாஷ் ஆர்.பி தத் அவர்களுக்கு டெய்லிஒர்க்கர் இதழுக்கு தந்த பேட்டியிலும் கம்யூனிச கருத்துக்கள் தொடர்பாக மார்க்ஸ்-லெனின் எழுத்துக்களில் தனக்கு புரிதல் இருப்பதையும் அவ்வெழுத்துக்களில் தான் திருப்தி அடைவதாகவும் குறிப்பிட்டார். தேச விடுதலை போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் அகிலம் தரும் ஆதரவையும் உலகளாவிய பார்வைக்கு அவற்றின் அவசியத்தையும் ஏற்கவேண்டும் எனவும் பேட்டி அளித்தார். அதேபோல் 1940 மார்ச்சில் சமரசமற்றோர் மாநாட்டில் லெனினது புத்திக்கூர்மையை வியந்து பேசுகிறார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற முழக்கம் மூலம் அவர் எவ்வாறு நிலைமைகளை மாற்றினார் என்பதை விளக்கினார். இத்தாலியில் சாதகமான சூழல் 1922ல் இருந்தபோதும் இத்தாலி லெனின் என ஒருவர் இல்லாமல் போனதால் அந்நாடு திசை தப்பி முசோலினிக்கு வாய்ப்பாகி பாசிசபோக்கில் போனதை பேசுகிறார். லாலாலஜ்பத்ராய் தனது வந்தே மாதரம் (1918-20) இதழில் போல்ஷ்விசம் குறித்து காழ்ப்புணர்வில் கபடமாக வரும் எழுத்துக்களை அவற்றை பிரசுரிக்கும் பத்ரிகைகளை- பயானீர், சிவில் மிலிட்டரி கெசட் போன்றவைகளை தாக்கி எழுதினார். போல்ஷ்விக் அரசாங்கத்தின் மற்றும் லெனின் குறித்த நடவடிக்கைகளை அறிய நியூஸ்டேட்ஸ்மேன், டெய்லி ஹெரால்ட், லேபர் லேடர் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளையும் ஒருவர் படித்து உண்மையை உணர வேண்டும். இதற்கு பொருள் நாம் முற்றிலுமாக அவ்வரசாங்கத்தின் போல்ஷ்விக்கின் அனைத்து கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டோம் என்பதில்லை. அவர்களின் சில கொள்கைகள் மிக ஆரோக்கியமானவை என லஜ்பத்ராய் பதிவு செய்கிறார். நாடு பிடிக்கும் ஆசை ஏதுமின்றி அனைத்து நாடுகளின் சுதந்திரத்தையும் மனிதகுலத்தையும் மதிக்கின்ற நாடாக மலர்ந்திருக்கிறது என லாகூரிலிருந்து வந்த சுயராஜ்ய ஜூலை 8 1921ல் எழுதியது. பகத்சிங் மே 1931ல் அலகாபாத் இந்தி வாரப்பத்திரிகையில் புரட்சிகர அரசியல் போராட்டங்களில் சமரசமும் ஒரு பகுதிதான் என்பதற்கு ருஷ்யாவின் 1905 புரட்சி, தொடர்ந்து டூமா நாடுளுமன்ற பங்கேற்பு- புறக்கணிப்பு போராட்டங்களை லெனின் நடத்தியது பற்றி குறிப்பிடுகிறார். அதேபோல 1917 புரட்சிக்குப்பின்னர் உடனடியாக சமாதானம் என்பதை லெனின் உயர்த்திப் பிடித்தார்- சமரசம் எந்த நோக்கிற்காக - நோக்கம் நிறைவேறியதற்கு பின்னர் தொடர்ந்த இயக்கங்கள் என்பதை புரிந்து அரசியல் இயக்கங்கள் நடைபோடவேண்டும் - நமது சாத்வீக தலைவர்களுக்கு இப்படிப்பட்ட பார்வை இல்லாமல் இருப்பது வெறுப்பிற்குரியதாக உள்ளது என எழுதினார். மார்க்சின் மூலதன ஆக்கத்திற்கு லெனினது ஏகாதிபத்தியம் குறித்த புத்தகம் நிரப்பியாகவுள்ளது என அப்புத்தகத்தை ஆச்சார்யா நரேந்திரதேவ் ஆய்ந்து எழுதுகிறார். லெனினது ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ இந்தியில் காசிவித்யாபீடம் ராம்சாஸ்திரி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1934ல் வெளியானதற்கு ஆச்சார்யா நரேந்திரதேவ் அறிமுகவுரை எழுதியிருந்தார். லெனினது நடையில் உள்ள கடினத்தன்மையை மொழிபெயர்ப்பாளர் எளிய உருது பதங்கள் மூலம் புரிய வைத்துள்ளார் என நரேந்திரதேவ் பாராட்டுகிறார். M N ராய் தனது நினைவு குறிப்புகளில் முதலில் லெனினை சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கட்சிக்குள் அவரது ஆளுமை எப்போதுமே நீடித்தது. விவாதங்களின் கூர்மை, தோழர்களுடன் ஜனநாயக உரையாடல், ஏற்பின்மை எனத் தெரிந்தால் பிரச்ச்னையை அடிமட்டம்வரை எடுத்து சென்று தீர்வு காண முயற்சிக்கும் பாங்கு குறித்து லெனினை அதில் ராய் பாராட்டுகிறார். லெனின் இரும்பு இதயம் படைத்தவர் என சொல்லப்படுவது எவ்வளவு தவறு என்பதை நிறுவுகிறார். வெளிப்படையாகவும் நட்புடனும் உரையாடத் தெரிந்தவர் லெனின் என்கிறார். காந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பை- ஒத்துழையாமையை புரட்சிகரமானது என்று தெரிவித்த லெனின் கருத்தை ராய் ஏற்க மறுத்துவந்தார். லெனின் விரிவாக இது குறித்து அறிக்கை கேட்க பின்னால் ராயின் India In Transition புத்தகமாக அது வந்தது. ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் 1936ல் சோசலிசம் எதற்காக என்ற ஆக்கத்தில் லெனினது செய்ய வேண்டியதென்ன குறித்து விவாதித்தார். புரட்சிகர மாற்றத்திற்கு தொழிலாளர்களை- வெகுமக்களை புரட்சிகர அறிவுத்துறை நபர்கள் தயார்படுத்திட வேண்டிய கடமை குறித்து பேசுகிறார் ஜே பி. சகோதரர் லெனினது அழைப்பை கவனியுங்கள் என மெளல்வி பரகத்துல்லா வேண்டுகோள் விடுத்தார். இன்று மானுட சந்தோசத்திற்கு லெனின்தான் சூரிய வெளிச்சம் என்றார் பரகத்துல்லா. முகமதியர்களும் ஆசிய நாடுகளும் ருஷ்யா சோசலிசத்தின் உன்னதங்களை உணர்ந்து ஆர்வத்துடன் அக்கொள்கைதனை தழுவ வேண்டும் என தாஷ்கண்ட்டில் 1919ல் வெளியிட்ட பிரசுரத்தில் தெரிவித்தார் பரகத்துல்லா. தோழர் டாங்கே 1921ல் காந்தியும் லெனினும் பிரசுரத்தில் லெனின் காலனி நாடுகள் பிரச்சனை குறித்த லெனின் ஆய்வுகளை குறிப்பிட்டு எழுதுகிறார். விஞ்ஞானி மக்நாத் ஷகா பிற அரசியல் தலைவர்களை போல் அல்லாமல் லெனின் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஞானமுடையவராக இருந்தார் என குறிப்பிடுகிறார். லெனின் என்ற மனிதரும் அவர்தம் குறிக்கோளும் என தலைப்பிட்டு லீடர் அலகபாத் ஜனவரி 10, 1918 இதழில் பெரிய கட்டுரை எழுதியது. அதை பம்பாய் கிரானிக்கிள் மறுபிரசுரம் செய்தது. இந்தியன் ரிவ்யூ ஜூன் 1918ல் இளைஞர்களை கவ்வி பிடிக்கும் காந்த சக்தி லெனின் என எழுதியது. புரட்சியின் பெயரில் ரொட்டியும் நிலமும் என அவர் வாக்களித்துள்ளார் என சுட்டிக்காட்டியது. 1919 ல் தாஷ்கண்ட் சென்ற கர்பக்ஷ்சிங் போல்ஷ்விகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை அறியமுடிகிறது. ஆனால் கார்ல்மார்க்ஸ், லெனினை அவர்கள் நம்பினார்கள். அவர்களது படங்களை எல்லா இடங்களிலும் மக்கள் வைத்திருந்தனர். லெனினுடன் டெலிபோனில் பேசமுடிகிறது என்றனர். சாதரண போல்ஷ்விக் ஆடையைவிட மோசமான ஆடையையே அவர் உடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்திய ரூபாயில் ரூ 3க்கு சமமான ஊதியம் மட்டுமே அவர் பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் என்ற பதிவை செய்துள்ளார். கல்கத்தா மாடர்ன்ரிவ்யூ லெனின் சொல்லும் சுயநிர்ணய உரிமை குறித்து பிப் 1919ல் எழுதியது. அமிர்தபஜார் பத்ரிகா பெட்ரண்ட் ரஸ்ஸல் ருஷ்யா சென்று லெனின், கார்க்கி, டிராட்ஸ்கியை பேட்டிக் கண்டு நேஷன் இதழில் எழுதியதை குறிப்பிட்டு அவர்களின் மேதாவிலாசத்தை புகழ்ந்தது, லெனினை மாபெரும் அறிவுஜீவி என்றது. லெனின் சுய முக்கியத்துவம் இல்லாமல் செயல்படுகிறார். அச்சமற்றவராக, நிதானமானவராக, கொள்கையின் உருவமாக இருக்கிறார். அவர் பேராசிரியரைபோல் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் என்றும் அவரின் மின்மயமாக்கல் தொழிற்துறைகளில் அமுலாகி வருகிறது எனவும் ரஸ்ஸல் எழுதியுள்ளதாக அமிர்தபஜார் 1920 ஆகஸ்ட்17ல் பதிவு செய்தது. லெனின் மறைவை அடுத்து ஜூன் 25 1924ல் அவர் தூவிய புரட்சியின் விதைகள் உலகம் முழுதும் செல்லும்.. யாரும் அழித்துவிடமுடியாது என எழுதியது பனாரஸ்ஸிலிருந்து வெளியான இந்தி தினசரி ஆஜ் அக் 5 1920ல் இந்திய வரலாற்று தன்மையுடன் ருஷ்யபுரட்சியை விளக்கியது. மனிதகுல மீட்சி ஒரே காரணியை சார்ந்திருப்பதல்ல. பல்வேறு காரணிகளை சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. எதிர்ப்பும் சேர்ந்தே இயங்குகிறது. ஒருகாலத்தில் மதகுருமார்கள் ஆளுமையில் மனிதகுலம் இருந்தது. பின்னர் மன்னர்களின் அதிகாரத்திற்குட்பட்டே அனைத்தும் நடந்தன. தற்போது பணமுள்ள வைஸ்யர்கள் எனும் முதலாளிகளின் வசம் அதிகாரமுள்ளது. அவர்கள் முடிவெல்லைக்கு வந்துவிட்டார்கள். எதிர்ப்பு எழத்துவங்கிவிட்டது. சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்கள் தலைஎடுக்கத் துவங்கிவிட்டனர். ருஷ்யாவில் இது தெளிவாகிவிட்டது. சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்களின் தலைமை புரட்சியின் மூலம் வைஸ்யர்கள் எனும் முதலாளித்துவ தலைமையை வீழ்த்தும் என கருகிறோம்.. லெனினது கடமை முடிந்ததாக தெரியவில்லை. ஒரு லெனின் போனாலும் 10 லெனின்கள் வருவார்கள். லெனினை தனிமனிதனாக நம்மால் பார்க்க முடியவில்லை,. அவர் ஒரு காரணி என அற்புத வரலாற்று பார்வையில் அப்பத்திரிகை எழுதியிருந்தது. . டாக்டர் லக்ஷ்மன் நாராயண் ஜோஷி தனது போல்ஷ்விஸம் (1921) மராத்தி புத்தகத்தில் லெனினுக்கு வெற்றி எளிதாக கிட்டிவிடவில்லை. அவரது சுயநிர்ணய உரிமை கருத்துக்கள் அமெரிக்க தலைமை வில்சனையும் பாதித்தது என பதிவு செய்துள்ளார். அந்த மராத்தி புத்தகத்தில் ஜப்பனிய நிருபர் நகாஹிரா லெனினை பார்த்து எடுத்த பேட்டி பற்றிய குறிப்பும் இடம் பெற்றது. அவ்வுரையாடலில் லெனின் பேட்டி எடுக்க வந்தவரிடம் ஜப்பனிய உழைக்கும் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் அவற்றின் மையமான பிரச்சனைகள்- விவசாய இயக்க போராட்டங்கள்- உணவில் தன்னிறைவு உள்ள நாடாக ஜப்பான் இருக்கிறதா- ஆள்பவர்களின் தாக்குதல்கள் எவ்வாறு அமைகின்றன போன்றவற்றை கேட்டறிவதில் ஆர்வம் காட்டினார். தங்கள் நாட்டில் தம்மக்களை அறியாமையிலிருந்து வெளியேற்றிட அவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். அவரது அலுவலகம் அவரைப்போலவே மிக எளிமையாக இருந்தது என அப்பத்திரிகையாளர் செய்த பதிவையும் மராத்தி புத்தகம் எடுத்து சொல்கிறது. லெனின் உலகின் அனைத்து ஆண்- பெண் ஒற்றுமையை வலியுறுத்தியவர். உண்மையான சகோதரத்துவம் சமத்துவம் விடுதலைக்கு உழைத்தவர்- அவருக்கு நீண்ட ஆயுள் தேவை. இறை ராஜ்யமே நிறுவப்பட்டதுபோல் உள்ளது என லாகூரில் வெளியான லெனின் வாழ்க்கை வரலாறு உருது புத்தகத்தில் அசிஸ்போபாலி எழுதுகிறார். விவசாயிகளை விடுவிக்கவேண்டும் எனில் அவர்களை நகர்ப்புற சுரண்டலிருந்தும் விடுவிக்கவேண்டும் என்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தார் லெனின். நகர்ப்புறங்களிலும் தொழிலாளர்கள் நிர்வாக கட்டுப்பாடுகளுடன் சோவியத் என நிறுவ முயற்சித்தார். உலக பாட்டளிகளின் உதவி இல்லாமல் சோசலிச மரம் மானுடம் முழுமைக்குமான நிழலைத் தராது என கருதினார் லெனின். ஆப்ரிக்க, இந்தியா போன்ற நாடுகளின் விடுதலையையும் அவர் உயர்த்திப் பிடித்தார் என 1923 இந்தி ஆக்கத்தில் ப்ரான் நாத் வித்யலங்கார் எழுதியுள்ளார். யுவ வார்தா பத்திரிகை பிப்12 1923ல் லெனின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பரப்பப்படும் வதந்திகள் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து எழுதியது. அவர் ஆகஸ்ட் 1918ல் படுகொலை செய்யப்பட்டார் எனவும் , செப் 3 அன்று ஆக 31 அன்றே இறந்துவிட்டர் எனவும் செய்திகளை பத்திரிகைகள் பரப்புவதை சுட்டிக்காட்டியது வார்தா. நமது நாட்டவர்கள் இதுபோன்ற செய்திகளை விழிப்புடன் சரி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என எச்சரித்தது அப்பத்திரிக்கை. வங்கமொழி புத்தகம் ஒன்றில் அதுல் சந்திர சென் என்பார் பிப் 1924ல் கார்ல்மார்க்சின் கனவு குழந்தை லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன் என்ற பதிவை செய்கிறார். ஏகாதிபத்திய போர்களை பூமிப்பந்திலிருந்து அகற்ற வேண்டும் என லெனின் போராடினார் எனவும் குறித்துள்ளார். தேச கட்டுமானத்தலைவர் லெனின் மறைவு என பம்பாய் கிரானிக்கிள் எழுதியது. நியுயார்க ஹெரால்டில் மாக்சிம் கார்க்கி லெனின் குறித்து எழுதிய குறிப்புகளையும் அப்பத்திரிகை மேற்கோளாக காட்டியது. லெனினது வாழ்வின் அடிப்படை மனிதகுல மேம்பாடுதான். மனித இயல்பின் அனைத்து சக்திகளின் திரள் உருவமாக அவர் இருந்தார் என்ற கார்க்கியின் பதிவை ஜன் 23, 1924ல் பம்பாய் கிரானிக்கிள் வெளியிட்டது. லாகூரிலிருந்து வெளிவந்த ட்ரிப்யூன் ஜன் 29, 1924 உலக ஆளுமை மறைந்தது என்ற செய்தியை வெளியிட்டது. அய்ரோப்பாவின் கைப்பாவையாகாமல் புரட்சிகர ருஷ்யாவை உருவாக்கிய லெனின் மறைவால் உலகம் இன்று ஏழையாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது, பல நூற்றாண்டுகளில் காணமுடியாதிருந்த மாபெரும் தாக்கத்தை உலகமுழுதும் ஏற்படுத்திய அம்மனிதன் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனவும் அப்பத்திரிக்கை எழுதியது. மேலும் ட்ரிப்யூன் ஜன் 31 1924ல் லெனின் இறுதி நிகழ்ச்சி காட்சிகள் என்ற செய்தியையும் வெளியிட்ட்டது.. உறைய வைக்கும் குளிரிலும் ஏராள மக்கள் பார்வையிட வந்திருந்தனர். அந்நாட்டின் வீரர்கள் கண்ணீர்மல்க வைத்திடும் அஞ்சலி கீதம் இசைத்தனர். அவரது உடலை சோவியத் தலைவர்களும் தொழிலாளர்களும் சுமந்து வந்தனர் என அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டது டாங்கே நடத்திய சோசலிஸ்ட் பத்திரிக்கை அவருக்கு இறக்க உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி வாழும் உரிமை போலவே இறக்கும் உரிமையும் உண்டு. கோடானுகோடி உழைக்கும் மக்கள் அவர் நூறாண்டுகள் வாழவேண்டும் என்கின்றனர். ஒடுக்குபவர்கள் அவர் உடன் மரணிக்கவேண்டும் என்றனர். இரண்டையும் அவர் செவிமடுக்கவில்லை போலும். புரட்சி குறித்து எழுதி புரட்சிக்காக வாழ்ந்து புரட்சியை நடத்திய மாபெரும் உலக மனிதர் லெனின், அவர் மரணமடைவதற்கு முழு உரிமை படைத்தவர் என்று தனது ஜன 30, 1924 இதழில் பதிவு செய்தது. உருது வாரப்பத்திரிக்கை யாத் வாதன் நியுயார்க்கிலிருந்து மே 1924 இதழில் லெனினது பல்லாண்டு போராட்டம்- புரட்சி- அரசாங்க ஆட்சி குறித்த நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டு புகழ் அஞ்சலி செய்தது. உலகில் வாழ்ந்த ஒரிரு மகத்தான மனிதர்களுள் லெனின் ஒருவர் என்பதை எதிரிகள் கூட மறுக்கமுடியாது. அவரது இரங்கல் ஊர்வலம் போன்ற ஒன்றை ருஷ்யா இதுவரை பார்த்ததில்லை. நாட்டின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாஸ்கோ நோக்கி குவிந்தனர் என பதிவு செய்தது. மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 3000க்கும் அதிகமானோர் மருத்துவ சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியை தந்தது யாத் வாதன். அபுத்யா எனும் இந்தி வார இதழ் கிருஷ்ண காந்த் மாளவியாவால் நடத்தப்பட்டு வந்தது. லெனின் புரட்சியின் பேனரை உயர்த்திப்பிடித்தார் . ஏழே நாட்களில் ருஷ்யாவை மட்டுமல்ல உலகையே குலுக்கியது அப்புரட்சி. வறியவர்களாலும் உழைக்கும் மக்களாலும் நடத்தப்படும் இராஜ்யம் நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பார்க்கிறோம் என தனது ஜன் 29 1924 இதழில் எழுதியது. .அவ்விதழ் அலகாபத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. லேபர்கிசான் கெசட்டில் சிங்கார வேலர் தொழிலாளர்கள் சார்பில் துக்கம் அனுசரிப்போம் என்ற கட்டுரையை லெனின் மறைவை ஒட்டி எழுதினார். மனிதகுலத்தை மீட்க வேண்டும் என பலர் போராடியிருக்கிறார்கள் ஆனால் லெனின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் துயரங்களை போக்கிட சரியான பாதையை போடுவதற்கான வாய்ப்பை பெற்றவராக விளங்குகிறார். உலகில் ஒருசிலரின் சுயநலத்திற்கு பெரும்பான்மை பலியாவதை அறிவியல் பூர்வமாக கார்ல்மார்க்ஸ் விளக்கினார். அது நடைமுறை படுத்தப்பட்டது என புகழஞ்சலி செய்திருந்தார். லெனின் உருவாக்கிய புரட்சி சில சுயநலமிகளால் அழிக்கப்படலாம் ஆனால் அது திரும்ப திரும்ப எழும் என இதழ் ஜன 31 1924ல் எழுதினார். 1923 ஹூப்லியிலிருந்து வெளியிடப்பட்ட கன்னட புத்தகம் லெனின் எவ்வாறு மாணவர்களையும் இளைஞர்களையும் தனது பேச்சின் மூலம் பெரும் செயலுக்கு உந்தி தள்ளுகிறார் என்பதை அவரது உரைகளை மேற்கோள் காட்டி பதிவு செய்திருந்தது. கோரக் என்பவர் அதை எழுதியுள்ளார். எடுத்த காரியத்தை தொடுத்து முடியுங்கள் நடுவில் விட்டுவிடாதீர்கள். முடிக்கமுடியாத ஒன்றை துவங்காதீர்கள் என அவர்களை செயலுக்கு தள்ளியவர் லெனின் என கோரக் பாராட்டுகிறார். லெனின் முட்டாள் என்றும் ஜனநாயகத்தை அழித்துவிட்டார் என்றும் பண உலகம் கூப்பாடு போடுகிறது .சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன. நாய் நரிகளுக்கு அஞ்சாது நடைபோடும் சிம்மம் லெனின். பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இடமளிக்கும் சோவியத் சோசலிச குடியரசு அது. கம்யூனிச அரசாங்கமது என பெருமிதம் பொங்கிட கோரக் எழுதுகிறார். மனிதர்களின் எவரெஸ்ட் சிகரம் அவர், பார்த்தவர்களும் பேசியவர்களும் பரவசப்ப்ட்டுள்ளனர். ஏழைகளின் புன்சிரிப்பு அவர். எத்தனை குழப்பங்களை உருவாக்கினாலும் விடைகாணக்கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவர் பயமற்றவர்களின் அடையாளம் என கோரக் எழுதினார். தன்னுடைய செயல்களில் மகத்துவம் உருவாக்கும் பவபூதி அவர். லெனினை காந்தியுடன் ஒப்பிட்டு இருபெரும் ஆளுமைகள் என கோரக் அப்புத்தகத்தில் பதிவை தருகிறார். இருவரின் நடைமுறை உத்திதான் மாறுவதாகவும் நோக்கம் மானுட விடுதலையே என்றும் குறிப்பிடுகிறார் கோரக். மகாத்மா காந்திக்கு அடுத்த மாபெரும் மனிதர் லெனின்தான் என அஜ் பிப் 2 1924ல் எழுதியது. வங்கப்பத்திரிகைகள் இந்துஸ்தான், ஆன்ந்த்பஜார் பத்ரிகா, சசித்ரசிசிர் ,பங்கவாசி, ஜோதி, சொல்தன், பசுமதி ,பெங்காலி போன்ற பத்திரிகைகள் லெனின் மறைவு செய்தியை புகழஞ்சலியுடன் வெளியிட்டன. ஜாரின் கொடுமைகளிலிருந்து வெளிவர போராடிய மக்கள் திருப்தியடையக்கூடிய அரசாங்கம் அங்கு நடைபெறுகிறது. பிரிட்டிஷ், பிரான்ஸ் முயற்சிகள் தோல்வியுற்றன என்ற குறிப்புடன் லெனின் மறைவை சுதேசமுத்திரன் ஜன 25 1924 இதழ் வெளியிட்டது. மெட்ராஸிலிருந்து வெளியான ஆந்திர பத்ரிகா ஜன 23 1924ல் லெனின் கருத்துக்களுடன் ஒருவர் வேறுபடலாம்.. ஆனால் புத்தியுள்ள எவரும் அவர் உலகப்புகழ் வாய்ந்தவர் என்பதை மறுக்க முடியாது என்றெழுதியது. சேலத்திலிருந்து வெளியான தமிழ்நாடு எனும் இதழ் ஜன் 27 1924ல் லெனினுக்கு எதிராக பல முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி தாக்குதலை தந்தன. போல்ஷ்விசம் அழிக்கப்படவேண்டும் என கருதின. எதிரிகளின் தாக்குதலில் நிலை குலையாமல் புரட்சிகர ருஷ்யா அரசாங்கத்தை அவர் உருவாக்கினார். அவர் மறைந்தாலும் அவரது லட்சியம் நீடித்து நிலைக்கும் என்ற பதிவை செய்தது. பாண்டிச்சேரியிலிருந்து தேசசேவகன் இதுவரை இல்லாத புதியவகை ஆட்சியை உருவாக்கிய லெனின் மறைந்துவிட்டார். அவரை கேலி செய்தவர்கள் தொடர்ந்தும் கூட செய்யலாம். இணையற்ற கொள்கையை அவர் நிறுவியுள்ளார். அவை உறுதிப்பட்டு நிலைக்கும் என எழுதியது. விஜயவாடாவிலிருந்து வந்த சுயராஜ்ய பத்ரிகா லெனினை பலர் கேலிக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கினர். ஆனால் அவர் மறைவின்போது அவர்தம் இழப்பை உணராதவர் என எவருமில்லை என்றது மெளலானா ஆசாத் அவர்களை ஆசிரியராக கொண்டு அல் ஹிலால் பத்திரிகை டிசம்பர் 9 1927ல் சோவியத்தின் 10 ஆண்டு கொண்டாட்டத்திற்கு இந்திய பிரதிநிதிகள் அழைக்கப்பட்டும் அரசாங்க அனுமதி பிற சூழல்களால் யாரும் செல்லமுடியவில்லை என்ற பதிவை தந்திருந்தது. கொண்டாட்டத்திற்கு இருநாட்கள் தாமதமாக மோதிலாலும் ஜவஹரும் சென்ற செய்தி பின்னர்தான் கிடைக்கப் பெற்றது. கொண்டாட்ட ஊர்வலத்தில் மக்கள் இரவும் பகலுமாக வந்து கொண்டேயிருந்தனர் என்ற செய்தியை அவ்விதழ் பதிவு செய்துள்ளது. கம்பீரமான லெனின் சிலை கம்யூனிசத்தின் அடையாளமாக எழுப்பப்பட்டுள்ளது என்றும் எழுதியது.. செளகத் உஸ்மானி’ கிரம்ளினில்’ என்ற நினவுப்பதிவை 1927ல்செய்திட்டார். எங்களது மொழிபெயர்ப்பாளர்களுடன் லெனின் அறைக்கு சென்றோம். சரியான இருக்கைகள்கூட அங்கு இல்லை. சுவர் முழுக்க உலக நாடுகளின் வரைபடங்கள்- புத்தகங்கள் நிறைந்த அல்மிரா - கார்ல் மார்க்சின் போட்டோ இருந்தன. அறையில் ஆடம்பர வசதிகள் ஏதுமில்லை. லெனினை நாங்கள் தொந்திரவு செய்யவிரும்பவில்லை. விவசாயிகளின் அன்பிற்கு பாத்திரமானவராக அவர் விளங்கினார். தொழிற்சங்க கூட்டத்தில் அவர் ஆற்றிக்கொண்டிருந்த மிக முக்கிய உரைகளை கேட்க முடிந்தது, உணவுக்கூடத்தில் கிரெம்பிளினில் தொழிலாளர்களுடன் அவர் உணவு எடுத்துக்கொண்டார் போன்ற அவரது எளிமையை நேரில் பார்த்த உஸ்மானி எழுத்துக்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. அமிர்த்சரஸிலிருந்து வெளியான கிர்தி பஞ்சாபி மாத இதழ் பிப் 1927ல் லெனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவீர் என்ற வேண்டுகோளை விடுத்தது. விவசாயிகளுக்கு துயர்துடைக்கும் தோழன், ஏழைகளின் நண்பன், தொழிலாளர் வாழ்க்கையை உயர்த்தும் மனிதன் லெனின் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. லெனினது கொள்கைகள் உழைக்கும் மக்களை விடுவிக்கும் மகத்தான சக்தி கொண்டது. தவறாமல் உழைக்கும் மக்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தது கிர்தி. மாதுரி என்ற இந்தி மாத இதழ் ஜன 1928ல் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. குட் என்ற மான்செஸ்டர் கார்டியன் நிருபர் லெனின் அரசாங்கம் எவ்வாறு நடைமுறையில் உள்ளது என பார்வையிட 1919ல் வந்திருந்தார். இதுவரை பரப்பப்பட்ட தவறான தகவல்களை தான் உணர முடிந்ததாக அவர் எழுதியதை மாதுரி பதிவு செய்தது. லெனினை சுற்றி சீனா வீரர்கள் இருப்பார்கள் என்பது பெரும் கட்டுக்கதை - யாருமில்லை. அமைச்சர்கள் அவரவர் அலுவலகத்தில் இருந்தனர்- லெனின் எளிமையாக அவரது அலுவலத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக உழைப்பதை பார்க்க முடிந்தது.. அரசாங்க செலவில் கம்யூனிச பிரச்சாரங்களை பிற நாடுகளுக்கு நாங்கள் செய்வதில்லை என்றார் லெனின். ஆனால் பிரிட்டன், பிரான்ஸ் சோவியத் கம்யூனிச எதிர்ப்பை அரசாங்கம் மூலமே சட்டமியற்றி செய்கிறார்கள் என்பதை திருவாளர் குட் அவர்களிடம் லெனின் சுட்டிக்காட்டினார். நாங்கள் கருத்து சுதந்திரத்திற்காக நிற்போம் என்றார் லெனின் போன்ற அந்நிருபரின் பதிவை மாதுரி வெளியிட்டது. குறுகிய 10 ஆண்டுகளுக்குள் சோவியத் ஜனநாயகம் உலகின் புரட்சிகர சிந்தனையை கூர்மைபடுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலை- மக்களின் விடுதலைவரை சோவியத்யூனியன் ஓயாது என்ற வேட்கையையும் கனவையும் மாதுரி பதிவு செய்தது. லெனினின் எளிமை அய்ரோப்பிய ஆட்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. நாட்டின் ஆட்சித்தலைவர் சாதரண குடிமகனைப்போல இருக்கிறார் என்பதை அவர்களால் நினத்துப் பார்க்க முடியவில்லை. உழைக்கும் மக்கள் எடுத்து கொள்ளும் அதே உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. நண்பர்கள் கொணர்ந்து தரும் மிக உயர்ந்த பழவகைகளை பிற பொருட்களை அவர் தொடுவதில்லை. அவருக்கு வருகின்ற அப்பொருட்களை குழந்தைகள் பள்ளிக்கும், மருத்துவமனைக்கும், அநாதை இல்லங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்- அரசாங்க வேலையில் அவர் பெரும் ஊதியம் கூட ஏழைகளின் அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாக அறிகிறோம். அவரது துணைவி க்ருப்ஸ்காயா இந்த லட்சிய தவ வாழ்விற்கு துணை நிற்கிறார் போன்ற அவரின் அன்றாட வாழ்வின் உன்னத நடைமுறைகளை தேவ் விரட் என்பார் 1930ல் தனது புத்தகம் ஒன்றில் லெனினின் மேன்மை என தலைப்பிட்டு பதிவு செய்கிறார். லக்னோவிலிருந்து பார்கவா என்பாரும் 1932ல் லெனின் குறித்து பெருமையுடன் பேசுகிறார். இதேபோல கான்பூரிலிருந்து போல்ஷ்விக் ருஷ்யா என்ற இந்தி புத்தகத்தில் 1932ல் சிவ நாரயண் டாண்டன் லெனினது அரசாங்க சிறப்புக்களையும் அவரது தனிப்பட்ட அருங்குணங்களையும் பதிவு செய்கிறார். சத்ய நாராயன சாஸ்த்ரி என்பாரும் ஆசிய மக்களுக்கு லெனினின் செய்தி என்ற தலைப்பில் எழுதியுள்ளார். உலக இஸ்லாமிய சகோதரர்களின் விடுதலை குறித்து லெனின் பேசுகிறார். நமது 32 கோடி மக்களின் விடுதலைக்கு சோவியத் கொள்கைகள் துணை நிற்கிறது. புரட்சிகர எண்ணங்களை வளர்ப்போம்- சோவியத்துடன் தோழமை கொள்வோம். தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் துணை நிற்பவர்கள் சோவியத் என்பது ஆசிய மக்களுக்கு புரியத்துவங்கிவிட்டது என்ற பதிவை அவர் செய்கிறார். ஆசியாவின் புரட்சி என்ற இந்தி நூலில் இக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.. காசியிலிருந்து மகாத்மா லெனின் என்ற புத்தகத்தை சதானந்த பாரதி என்பார் 1934ல் இந்தியில் எழுதியுள்ளார். மக்களின் கல்வி அறியாமையை நீக்காமல் கம்யூனிசத்தை வளர்த்தெடுக்கமுடியாது என்ற லெனினின் உறுதிப்பாட்டை ஆசிரியர் பாராட்டுகிறார். கம்யூனிச பத்திரிகைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் விஷயங்களை எழுதவேண்டும் என லெனின் அறிவுறுத்தியதையும் அவர் பதிவு செய்கிறார். லெனின் எதையும் நேர்பட பேசிவிடுவார். லெனின் மறைந்தாலும் அவரது பாதுகாக்கப்படும் உடல் தனது நிர்வாகம் தொடர்ந்து சரியாக இயங்குகிறதா என்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கும். மக்களின் நலன் குறித்த தீர்விற்காக தவிக்கும் என எழுதினார் சதானந்த பாரதி. அற்புத அரசியல் மேதைமை என்ற தலைப்பிட்டு சையக் முஷிர் ஹுசைன் கித்வாய் எழுதுகிறார். ட்ராட்ஸ்கி போன்றவர்கள் கணிக்க தவறிய நிலையிலும் புரட்சி குறித்து மிகச் சரியான நேரக்கணிப்பை உருவாக்கி அதை நடத்த லெனினால் முடிந்தது. சரியான நேரத்தில் சமாதானம் என பேசியதையும் அவர் பலவீனமாக கருதவில்லை என அவரின் உத்திகளை பெருமையுடன் கித்வாய் தனது புத்தகமான இஸ்லாமியமும் போல்ஷ்விசமும் என்பதில் 1937ல் பதிவாக்குகிறர். இஸ்லாமியர்கள் போல்ஷ்விசத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற தனது விழைவையும் அதில் தெரிவித்தார் கித்வாய். நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறைகூடங்களில் வாடிவந்த கைதிகளையும் லெனின் கவர்ந்திழுத்துள்ளார் . லெனினது சைபீரிய கொடும் அவதிகள் மத்தியிலும் அவரின் புரட்சிகர பணிகள், புத்தகங்கள் எழுதியது போன்றவற்றை சுட்டிக் காட்டி பிஜய் குமார் சின்ஹா 1939ல் கான்பூரிலிருந்த வெளியான பதிப்பில் கூறுகிறார். மகத்தான இக்பால், வள்ளத்தோள், விஷ்ணுதே, பாரதி, ஹரிந்திரநாத் சட்டொபாத்யாய், புட்டப்பா என புகழ்வாய்ந்த் கவிபெருமகனார்கள் லெனின் குறித்தும் சோவியத் புரட்சியை வரவேற்றும் எழுதினர். மனிதகுல விடுதலைக்காகவும் நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் தங்கள் ஆயுளை அர்ப்பணித்த மகத்தான மனிதர்கள் ஆயிரம் விமர்சனங்கள் ஊடாகவும் தொடர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வும் பணியும் கலங்கரை விளக்காக ஒளிக்காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் லெனின் உலகில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஈர்ப்பு விசையாகவும் இருக்கிறார். கட்டுரையின் செய்திகளுக்கு ஆதாரம்: 1. Lenin His Image in India: edited by Debendra Kaushik, Leonid Mitrokhin, Vikas publication 1970 2. Lenin In contemporary Indian Press edited by P C Joshi,Chattopadyaay, Kaushik PPH 1970 எங்களைப் பற்றி - Free Tamil Ebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. vinavu 2. badriseshadri.in 3. maattru 4. kaniyam 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? Shrinivasan tshrinivasan@gmail.com Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org Arun arun@fsftn.org இரவி Supported by Free Software Foundation TamilNadu, http://www.fsftn.org Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி - http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி - http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை - ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். நூலின் பெயர் நூல் அறிமுக உரை நூல் ஆசிரியர் அறிமுக உரை உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் நூல் - text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? - தமிழில் காணொளி - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !