[] பூப்பதெல்லாம்  சிறுகதைகள் விமலன்      மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.  பொருளடக்கம் 1. ப்ரவ்ஸிங்,,,,,,, 4  2. நாணல்புல்,,,,,,,,,, 7  3. விலாசம்,,, 10  4. செதுக்குமுத்து,,,,,,, 13  5. கத்திரிப்பான்,,,,,, 16  6. வாலாட்டம்,,,,,,,,,,, 18  7. வெள்ளக்கட்டி,,,,,,,,, 20  8. ரெடி ஸ்டார்ட்,,,,,,,, 23  9. எழுதிச்சென்ற பக்கம்,,,,,, 25  10. ஒற்றைவிளக்கு,,, 29  11. மிச்சச்சுவர்,,,,, 32   12. வல்லினம்,மெல்லினம்,,,,,,, 35  13. மெழுகுத்துண்டு,,,,,,, 39   14. பூப்பதெல்லாம்,,,,,,, 41  1. ப்ரவ்ஸிங்,,,,,,,   []     நான் மற்றும் நண்பர்கள் இருவருமாய் சந்தித்து பேசிக்கொண்ட இடம் ஒரு இணைய  தளமையத்தின் வாசலாய் இருக்கிறது. ஒருவர் கண்ணன். மற்றொருவர் குமார். இருவருமே25 வருடங்களாய் அறிமுகம், பழு த்தபழக்கம், பழக்கம் முற்றுகையிலும், பக்குவப் பெறுகையிலும் ஒருமுதிர்வும்கன்  னியத்தன்மையும் கொள்கிறதுதான், அதுவும் ஒருகுறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணப் படுகிற பயணத்தில் அமைந்துவிடுகிற நட்பு மிகவும், உன்னதம் கொள்கிறதாய். வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லாமல் மூவருமாய் சூலக்கரையிலிருந்தும், பாண்டியன்  நகரிலிருந்தும், ஆத்துப்பாலத்தின் அருகிலிருக்கிற ஏரியாவிலிருந்தும் புறப்பட்டுவந்து மையம்கொண்ட  இடமாய்  இந்த  இடமாய் இருக்கிறது. கண்ணன் கறுப்பு வெள் ளையில் தெரிந்தார்.   போன வாரம்தான் பஜாரிலிருக்கிற ஒரு முண்ணனி டெய்லரிடம் தைத்தது பேண்ட் எனவும், சட்டை ரெடிமேட் எனவும் அது எடுத்து கிட்டத்தட்ட ஒரு ஆறுமாதங்களாவது இருக்கும் எனச்சொன்னார். பேண்ட் சட்டை அவருக்காக தைத்ததா இல்லை அதில் அவர் பொருந்திப் போனரா என எண்ணத்தோனியது.   திரும்பவுமாய் ஒரு ரவுண்ட் வருகிறது போலும் கறுப்பு.வெள்ளை,வரட்டும்,இருப்ப தை மாற்றி மாற்றி போடுவதுதானே புது பேசனாய்/ குமார் அப்படியில்லை. இருப்ப திலேயே லூசாக இருக்கும் போல உள்ளது மாதிரி யான ஒரு டீசர்ட்டும்,ஜீன்ஸ் பேண்டுமாய் காட்சிப்பட்டார். பையனது ஜீன்ஸ் பேண்ட் எனவும் டீசர்ட் சும்மா  ரப் யூஸிற்காக வைத்திருப்பது எனவுமாய் சொன்னார்.   மேம்பாலத்தின்வழியாகத்தான்வந்தேன்.வீட்டிலிருந்துகிளம்புகையில்மணி6.30தாய் இருந்திருக்கலாம், எனதுஇருசக்கரவாகனமே இம்மாதிரியான நேரங்களுக்கு உற்ற துணையாயும்,ஆபத்பாந்தவனாயும்/ அல்லம்பட்டிமுக்கில்போலீஸ்நிற்குமோ,அவர்கள்பிடித்துலைசென்ஸ்கேட்டால்என்ன சொல்லி சமாளிப்பது என்கிற மெல்லிய மன உதறல் என்னில்  இல்லாமல் இல்லை.  இப்போது என இல்லை.வீட்டைவிட்டு வண்டியை எடுக்கிற ஒவ்வொரு நாட்களிலு  மாய் இந்நினைவு என்னை கனமாக ஆட்க்கொள்வதாய்/  புதிதாய் நடைபழகுகிற குழந்தையின் பயத்துடதான்இப்படியாய் ஒவ்வொரு முறை யும் வண்டி எடுக்கும் போது பயப்பட வேண்டியிருக்கிறது.   இப்படித்தான் ஒரு முறை வள்ளிக்குளம்தாண்டிவண்டியில் வந்து கொண்டிருக் கையில் வண்டியை கை நீட்டி மறைத்துலைசென்ஸ்கேட்டார்கள்.என்னிடம் லைசென் ஸ் இல்லை அப்போது,. லைசென்ஸ் இருந்த பை  வீட்டில் சிக்கிக்கொண்டது. ஹெல்மெட் அணி யாமல் செல்பவர்களை பிடித்த நேரமது. நான் ஹெல்மெட்தான்  அணிந்திருக்கிறேனே என்கிறதைரியத்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நெஞ்சு நிமிர்வு அர்த்தமற்றதுஎனநினைக்கவைத்து விட்டார்கள்சடுதியில். நான்ஒருஅரசுஊழியன்என்கிறபேச்சே தப்பிப்பதற்கும்,சாக்குசொல்வதற்கும் போது மானதாய் இல்லை.சரி அதனால் என்னைப்பொழுது எல்லா இடத்திலும், எல்லா நேரத் திலுமாக தப்பித்துக் கொண்டிருக்க முடியாதுதான்.நானும் எனது நண்பருமாய் வந்த இரு வாகனத்தைகைநீட்டி மறைத்தவளுக்கு எனது  மகளின் வயதைவிட இரண்டு மூன்று வயது குறைவாக இருக்கலாம்.   அவள்இந்தவேலைக்குவருவதற்குமுன்பாகஒருகடையில்கணக்குஎழுதிக் கொண் டிருந்தாள். மூன்று அக்காக்கள்,ஒரு தம்பி என அடங்கிய குடும்பம். ஒருஅக்காளு க்குதிருமணம் முடிந்துவிட்டது. ஒன்னொரு அக்காளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டி ருக்கிறார்கள்.   இன்னொரு தங்கை பள்ளி இறுதி வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள். படிக்கட் டும் என விடவில்லை அவர்களது வீட்டில். அல்லது அவளும் அப்படி இருக்கவில் லை. அவளும் தீப்பெட்டிஒட்ட லீவுநாட்களில் பருப்புமில்லுக்கு வேலைக்குப்போய் வந்தாள். தம்பிஎனக்கும், படிப்பிற்கும்தூரம் அதிகம் என பருப்பு மில்லுக்கு வேலைக்கு போனான். தங்கை போன அதே மில்.அவன்தான் தங்கையை பருப்பு மில்லில் சேர்த்து விட்டது. மில் முதலாளி கூட முதலில் ஏண்டா படிக்கிற புள்ளையப் போயி,,,,,,,,என்ற போது, தம்பி தான் முதலாளியிடம் சொல்லி சம்மதிக்கவைத்திருக்கி றான், அப்பாவும் அப்பாவும்  டீச்சரும் வாத்தியாருமாக/  இப்பொழுது அவர்கள் அனேகமாய்ரி ட்டையர் ஆகிஇருக்கக்கூடும்.மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தபெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டதா, படித்துக் கொண் டே பருப்பு மில்லில் வேலை செய்தவள்  இப்போது என்ன செய்து கொண்டிருக் கிறாள்?   இவளது தம்பி அதே பருப்புமில்லில்தானா அல்லது வேறு எங்கேனுமாவது ,,,,,,  தன்னை இருத்திக் கொண்டிருப்பானா? போலீஸ் சீருடையில் இருக்கும்இவளிடம் அதுபற்றிகேட்க முடியாது,அதுவும் இந்தச் சூழலில் என நினைத்துக் கொண்டிருக் கையிலேயே அவள் சார் நீங்க போகலாம் என்கிறாள். என்னிடம் இல்லாத லைசென்சுக்காக என்ன சொன்ன போதும் கேட்காதவள் இப்பொழுது எப்படி சமாதானம் அடைந்தாள் எனத் தெரிய வில்லை.ஒரு வேளை என் மன எண்ணம் அவளுக்கு கேட்டிருக்கலாமோ. வாய்ப்பிருக்கிறதுஎன்கிற நினைப்புடனும் பின்னா ன நாட்களில் அவளைப்பற்றி அவர்களது உறவினரான எனது நண்பனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் கிளம்புகிறேன் அவ்விடத்தை விட்டு/   வான்வெளியில் பறந்து சென்ற பறவையும் வீசிச் சிரித்த  தென்றலும் ஒன்றாய் கை கோர்த்து காட்சிப்பட காட்சியின் சந்தோஷத்துடன் நான்,,,,,,,,,,,/   நான் போன நேரம் இணைய தளமையத்தில் கூட்டம் அதிகமாய்இருந்திருக்கவில் லை. ஆனால் இருந்த ஒரு கம்ப்யூட்டரில் அதிகம் வேலை இருப்பதாய் உரிமை யாளர் சொல்கிறார்.  அவர் சொன்ன நேரம் மாலை முடிந்து இரவு கைகோர்க்க காத் திருந்த 7.00 மணி பொழுதாய் இருக்கிறது. கையில் வாட்ச்  கட்டியிருக்கவில்லை  என்பதால் செல்போனை  எடுத்துப்பார்த்து மணி யை உறுதிசெய்து கொள்கிறேன் இப்பொழுதிலிருந்துசரியாய் ஒருமணி நேரத் திற்குமுன்பாய் குமார் போன் பண்ணியிருந்தார்.“நான் அலுவலக வேலை முடிந்து கிளம்பி விட்டேன்.இணைய தளமையைத்தின் முன்பாய் காத்திருக்கிறேன், வாருங்கள் என்றார்,அவரே மேலும்,,,,,,உங்களைப்போலபத்து டூ ஐந்து எல்லாம் இல்லை எங்களது வேலை நேரம்.ஷிப்ட்தான்.ஒரு வாரம் பகல் என்றால் மறுவாரம் நைட் ஷிப்ட். இன்னும் சில நாட்கள் இரண்டும் சேர்த்துப்பார்க்க வேண்டிய கட்டாயம் வந்து விடும். அது எங்களுக்குள்ளாய் இருக்கிற உயர்ந்த பட்ச அட்ஜெஸ்ட்மெண்ட்,எனக்கு லீவு தேவைப்படுகையில்இன்னொருவர் எனது டூட்டி யை பார்த்துக் கொள்வார். அவருக்கு லீவு தேவைப்படுகையில் நான் சேர்த்துப் பார்த்துக் கொள்வேன் என்றார். இப்படியான அனுசரிப்பிகளையும், அட்ஜஸ்ட் மெண்டுகளையுமாய் தாங்கி இதுநாள் வரை வேலை பார்த்துவந்தாகிவிட்டது  என்றார்.   நாங்கள் நின்ற இடமும்,குமார் வேலை இருக்கிறதாய் சொன்ன இடமும் இணைய தளமையம் அல்ல.மாறாகஅதன்அருகில்தான் இணைய தளமையம் காட்சி பட்டுத் தெரிந்ததாய்/ குமார்சொன்னஇடம்ஜெராக்ஸ்மற்றும்பத்திரங்கள்டைப்அடிக்கிறகடையாய்.அதிலிருக்கிற ஒரு கம்ப்யூட்டரில் இணையம் இருந்ததால் குமார் அங்கு தனக்கு தேவையான வேலைகளைச் செய்பவராய். அதனாலயே அது இணைய தள மையமாகிப்போனது.   அவர் அங்கு வேலை செய்ய வருகிற பொழுது கண்ணனுக்கும், எனக்குமாய் போன் பண்ணிச் சொல்லி விடுவார், கூடுமான வரை சந்தித்துக்கொள்வோம் மூவருமாய். குமார்  கிளம்பி விட்டேன் அலுவலகம் விட்டு எனச்சொன்னபோது நான் குளித்துக் கொண்டிருந்தேன்.இன்றுசனிக்கிழமை.அரைநாள்அலுவலகம்தானே. அரைப்பள்ளிக் கூடம் எனக் கேலியாகச்சொல்கிற நாள்.அவசர அவசரமாய் அலுவலகம்முடிந்துமதியம்மூன்று மணி போல வீடு வந்து வயிறு முட்ட சாப்பிட்டு விட்டுஒருகுட்டித்தூக்கம்போட்டு எழுந்தால்எழுந்திருக்கிற பொழுது இப்படியாய், அல்லதுவேறு ஏதா வது ஒரு விதமாய் உருக்கொண்டு.   நான் மிகவும் தாமதித்து சென்றுவிட்டேன் போலும், குமார் மையத்தின் வாசலியே அமர்ந்திருந்தார். கவிதை எழுதுவதிலும்,கதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட குமார் தன் படைப் புகள் யாவையும் வாரம் ஒருதடவை தனது பிளாக்கில் அப்டேட் செய்கிறார். எழுதி பத்திரிக்கைகளில்  பிரசுரம் செய்ய காத்திருந்து,,,,,,அதில் ஆகிவிடுகிற தாமதத் தைத் தவிர்க்க இப்படி எழுகிறேன் எனச் சொன்னவாறே டீக்கடை நோக்கி நகர்கிறோம்.   டீக்கடைக்காரர் ஏற்கனவேஅறிமுகமானவர்,பைபாஸ் சாலை இறக்கத்தில் முன்பு டீக்கடை வைத்திருந்தார், அவர்டீக்கடைவைத்திருந்தநேரம்”அன்னக்கிளியேஉன்னத்தேடுதே”,,விலிருந்து இளைய ராஜாவின்பாடல்கள்டீக்கடைகளின் ஆன்மாக்களில்கோலாச்சி கொண் டிருந்த காலம், டீக்கடைக்காரர் இளையராஜாவின் அருகில் நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று  கடையினுள்ளே  பிரேம் பண்ணி அலங்காரம் செய்யப் பட்டு.பின் பாட்டுக்கு பஞ்சமா என்ன, பாட்டுக்கேட்பதற்காகவே அவரது கடையில் டீ க் குடிக் கப் போன நாட்கள் என்னில் நிறையவே/ கறுப்புநிற பெரிய டேப்ரிக்கார்டரில் பச்சையும், சிவப்புமாய் லைட்டுகள் எரிய ஒலிக் கிற பாடல்கள் மனம் கவ்வவைத்திருக்கிறதாய் எப்பொ ழுதுமே/பாடல்களின் ஒலிக்கேற்பவும், லயத்திற்கேற்ப்பவுமாய் எரிகிற லைட்டுக்களைபார்த்தவாறே அடுத் தடுத் ததாய் இரண்டு மூன்று டீக்குடித்த நாட்களும் இல்லாமலில்லை அப்போது/  இப்போது அவர் தனியாய் வந்துவைத்திருக்கும்இந்தக்கடையில்ஒரே ஒரு டீவி இருக்கிறது. அது எந்த நேரமும் பழைய பாடல்களை ஒலி பரப்பிக்கொண்டே/  இன்று காலை அரசு மருத்துவ மனைக்கு கூட்டிப்போன உடல் நலமில்லாத நண்பர் இப்பொழுது நலமாக இருப்பதாய் சொன்னார். கூடிப்போன சுகரும், பிரச ரும் அவரை கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாகச் சொன்னார்.   தெரிந்தடீக்கடைதான்,வாரம்ஒருமுறையாவதுஇங்குவந்துடீசாப்பிடவேண்டியதாகிப் போகிற நிகழ்வு தற்செயலா,திட்டமிடப்பட்டதா. தெரியவில்லை. அப்படி டீ சாப்பிடுகிற பொழுதுகளிளெல்லாம் முன்பு எப்பொழுதும் இல்லாததாய்  தற்பொழுதான நாட்களில் சிகரெட் குடிக்கலாமே என்கிற மெலிதான எண்ணம் என்னில் முளை விடுவதை தவிர்க்க இயவில்லை.   சிறிது நாட்களாய் சிகரெட் பழக்கத்தை கைவிட்டிருந்த கண்ணனிடம் இதைச் சொன்ன போது சிரித்தார். முதலில் குமாரைப்போல கவிதை எழுதப்பழகுவோம்.அப்புறமாய்சிகரெட்தேவையா என யோசிக்காலாம் என்றார், அதுவும் சரியே எனதோனிய எண்ணம் உருக்கொண்ட மனதினாய் அங்கிருந்து நாங்கள் கலைந்த நேரம் மணி இரவு பத்தை எட்டித் தொட்டுக் கொண்டிருந்தது.                                           2. நாணல்புல்,,,,,,,,,,   []     அந்த மெல்லிய கம்பு அவளது உடல் எடையை தாங்குமா இல்லையா என்பதல்ல தாங்குகிறது.   அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே கண் கூடு. மாதவன் டீக்கடை வாசல்அது.   இவன் தெற்குப்பார்த்து நிற்கிறான். மேற்குப் பார்த்து கடையின் நடை. அப்படியா னால்கடையின் டீப்பட்டரையும் அப்படித்தானே இருக்க  வேண்டும்.நீங்கள் நினை ப்பது சரிதான்.   ஒன்றல்ல,இரண்டல்லதட்டுநிறைந்த வடைகளும் பஜ்ஜிகளுமாய் அருகில் சட்னி வாளியுடன் வைக்கப்பட்டிருந்த  இடத்தினருகில் நிற்கிறான்.கடையின் நடை வாசல ருகே கடையின் உள் செல்ல வழிவிட்டு அமர்ந்திருந்த  டீப்பட்டரையில் அடுக்கித் தெரிந்த பஜ்ஜிவடைகளில் நிலையூன்றித் தெரிந்தபார்வைநகன்று, நகன்று டீ மாஸ் ட ரின் மேல் பதிந்த போது மாலை வெயில் மெல்ல இறங்கித் தெரிவதாக/ வடையில் முழித்துத் தெரிந்த பருப்பும்,பஜ்ஜியின் லேசான கருகலுமாய் எதை எடுத் துத் தின்பது முதலில் என யோசிக்க வைத்துவிடுகிறது.   காலையிலிருந்து மாலை வரை அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் ஒன்றுக்குப் போகக்கூட எந்திரிக்க யோசித்தவனாய் கம்யூட்டரையே உற்றுப்பார்த்தபடி அமர் ந்து வேலை பார்ப்பதில் இப்படி ஆகிப்போகிறது.     அதன் விளைவு இப்படி போகிற வழியில் தட்டுப்படுகிற கடையில் ஏதாவது சாப்பி ட்டு ஒரு டீக்குடித்தால் தேவலாம் போல தோனி விடுவது தவிர்க்க முடியாத தாகிப் போகிறது. முத்து இன்னமும் ஒரு படி மேலே.     தினசரி மாலை வேலைமுடிந்து வருகையில் சட்னியுடன் ரெண்டு வடையும் பஜ்ஜி யும் சாப்பிடால்தான்கடைக்காரர்அந்தவழியேபோகவிட மாட்டார்என்பது போல பேசு வார். எல்லாம் எண்ணெய்ப் பலகாரங்களின் மேல் இருக்கிற மோகம். காய்ந்து போன மூளைக்கு சற்றே ஈரம் பாய்ச்சினால் நன்றாக இருக்கும் என்கிற நினைப்பிலும் நப்பாசையிலுமாய் ஏதாவது ஒருடீக்கடையில் நிற்பதை விடுத்து மாதவன்  டீக்கடையில் நிற்கிறான்.     மிகச்சரியாக அதன் எதிர் வரிசையில் நான்கு கடை தள்ளி டாஸ்மாக்.சமயத்தில் அந்தக் கடையின் வாடையும், போதையும் இங்கு வந்துதாக்கதலைகிர்ரிட்டு விடும்.  அப்புறம் குடிக்கிற திக்கான டீ கிக்காக இருக்கும்.தினசரி காலை,மாலை இரு வேளை அங்கு டீக்காய் நிற்கிற போது கிடைக்கிற தட்டுப்படுகிற கடையின் அடை யாளத்தையும், வாசனையையும் தவிர்த்து காணமுடிகிற ஒன்றாய் அந்தப் பாட்டி  காட்சிப்பட்டுத் தெரிகிறாள்.     சுட்டுவிரல் தடிமனே இருக்கும் மெல்லிய நாணல் கம்பு .அதுவும் அவளது இடுப் பளவே இருக்கிறது.80 ற்கும் மேற்பட்ட வயதில் தெரிந்த அவளது உடலைப் போர்த்திக் கிடந்த புடவை அந்த மெல்லிய உடலுடன் ஒட்டிப்போயும், நகர்வற்று மாய்/  அவள் புடவையை உடுத்திருக்கிறாளா அல்லது அள்ளி போர்த்தியிருக்கிறாளா என்கிற சந்தேகம் அவளைப்பார்க்கும் போதெல்லாம் வராமல் இருந்ததில்லை. அவள் வருகை டீக்கடை நடையை தொட்டு விட்டாலோ அல்லது தூரவருகையில் அவளை எட்டிப் பார்த்து விட்டாலோ போதும்,மாதவன் ரெடியாக இரண்டு பஜ்ஜிகளை பிய்த்துப் போட்டு சட்னி ஊற்றி வைத்து விடுவார் ரெடியாக ஒரு பிளாஸ்டிக் தட்டில்/ அவளும் கடைக்குள் நுழைந்ததும் அதை வாங்கிக்கொண்டு கடையினுள் இருக்கிற பெஞ்சில் அமர்ந்து விடுவாள்.பெரும்பாலான நாட்களில் கையில் வாங்கிய பஜ்ஜித் தட் டுடன் அவள் கையில் வாங்கிய பஜ்ஜித்தட்டுடன் அவள் சென்று அமர்கிற இடம்கடையின்சமயலறையாய்இருந்திருக்கிறது.அங்குதான்அவளுக்குசௌகரியப் படுகிறது எனச்சொல்கிறார் கடையின் உரிமையாளர் மாதவன்.     அன்றாடநகர்வுகளில் காலையிலும், மாலையிலுமாய் நடந்தேறுகிற இந்த சௌகரி யம் அவளது  வயதில் அவளை எங்கு நிலை நிறுத்தி வைத்திருக்கிறது எனத் தெரி யவில்லை.   தினசரி காலை வேலையிலும்,மாலை வேலையிலுமாக அவளைப் பார்க்க நேர்ந்து விடுவதுண்டு.சில நாட்கள் பார்க்கமுடியாமல்தப்பிப்போவதும் உண்டு.     மெலிந்து ஒட்டிப்போய்கிடக்கிற உடலில் முளைத்துத் தெரிகிற கைகளும், கால் களும் அவள் உடல் பாரத்தை தாங்கி நடக்கஏதுவாயும்கம்புபிடித்து நடந்து செல்ல  ஏதுவாயும் ஆகிபோகிறது.   அவளது இடுப்பளவே உயரம் கொண்ட கம்பு அவள்உடுத்தியிருந்தசேலையையும் சேர்ந்து தாங்கி சுமந்து வருவதாய்/ ”எனக்குசுங்கடிப்பொடவையும்,கண்டாங்கிச்சேலையும்ரொம்பவே புடிக்கும் தம்பி. ஏங் வீட்டுக்காரரு அததான் எடுத்துக்குடுப்பாரு.அதுல நான் ரொம்பவே நல்லா இருக்குறதா சொல்லுவாரு.நானும் ஓரளவுக்கு நல்லாவே இருப்பேன் அப்பம். ஏங்கூட காடு கரைகள்ல வேல செய்யிற ஏங்சேக்காளிகளுக்கு இது ஒண்ணுதான் ஏங் மேல ரொம்ப பொறாமையா இருக்கும்ன்னா பாத்துக்கப்பா, ஏங் மேல ஆசைப்பட்டுதான் என்னையகூட்டிக்கிட்டுவந்தாரு.எங்க கல்யாணம் மொறையா ஆயி,அப்பன்பாத்து பேசி  முடிச்ச வச்ச கல்யாணம் இல்ல,நான் மதுரை யைத் தாண்டி ரொம்ப தூரத்துலஇருக்குறஊர்க்காரி,காண்ட்ராக்டாமாசக்கணக்கு ல இங்க நெல்லு நாத்து நடுற வேல செய்ய வந்த யெடத்துல என்னய அவருக்கு ரொம்பவேபுடிச்சிப்போச்சி,ஏங்கூடவேலை செய்யிற ஒருத்திகிட்ட  கேட்டுப்பாத்து ருக்காரு,ஒறவு மொற,ஊரு மொற,,,,,, எல்லாம் எப்பிடி என்ன ஏதுன்னு.   எனக்கும் அவரு மேல ஒருகிறுக்கு இருந்திச்சிதான்,அவர பாத்த நாளு மொதக் கொண்டுமனசு நெல கொள்ளல என்ன,,,ஆம்பள அவரு தைரியமா சொல்லீட் டாரு, பொம்பள நான் எப்பிடி பட்டுன்னு சொல்றது/ மனசுக்குள்ளயே போட்டு மருகி நின்ன நாளும் அதுவுமா பாத்து ஒரு நா ராத்திரி வேளையா நாங்க தங்கியிருந்த வயக்காட்டு கூடாரத்துகே வந்துட்டாரு.அப்புறமாஎன்ன செய்ய மனசும், மனசும் பேசிக்கிட்ட  அருமை யானபொழுதாபோச்சி அது, நாங்களும்மறுநா காண்ட்ராக்ட் முடிஞ்சி கெளம்பப்போறோம். என்ன செய்ய தம்பி ,அவரு எங்க கல்யாணம் பத்தி ஒரு முடிவக்கேக்குறாரு. அப்ப வே அந்த நிமிஷமே சொல்லச் சொல்றாரு.ஆம்பள அவர மாதிரி படக்குன்னு என்னால ஒரு முடிவ சொல்ல முடியல.அவரு இப்பவே இப்பிடியே கெளம்பு .ஏதாவது கோயில்ல போயி கல்யாணம்கட்டிக்கிருவோம்ங்குறாரு,கண்டிப்பா ரெண்டு பேர் வீட்லயும் சம்மதி க்க மாட்டாங்க,ஜாதி குறுக்க நிக்கும் போது எப்பிடின்னாரு,நானும் காண்ராக்ட் வேல முடிஞ்சி ஊருக்குப்போன ஒருவாரத்துல இவரத்தேடி பஸ்ஸேறி வந்துட் டேன்.     அப்பறம்என்னரெண்டு வீட்லயும் அதகளம்தான்.நாங்க வேற,நீங்க வேற இனிமே நம்ம  ரெண்டு கும்பத்துக்கும் ஒட்டும் கெடையாது ஒறவும் கெடையாதுன்னு சொல் லி ஏங் மொத மகன் பெறக்குற வரைக்கும்பேச்சுவார்த்தபோக்குவரத்து அன்னம், தண்ணின்னு எதுவும்இல்லாம இருந்தவுங்க மூத்தமகன் பொறந்த கொஞ்ச நாள்ல புள்ளைய பாக்குற சாக்குலவந்தாக .அப்புறம் பாத்தா சம்பந்தகாரங்க  ரெண்டு பேரும் எங்களக்கூட மறந்து  போறஅளவுக்குஒண்ணு, மண்ணாஐக்கியமாகிப் போனாங்க. அப்பயெல்லாம்தாய் வீட்ல யிருந்து என்னய பாக்க வரும்போது ஒரு சுங்கடி சேல உறுதி.மதுரப்பக்கம் அதுசௌ கரியம்தான,இவருஇங்க எடுத்துதர்ற கண்டாங்கிச் சேலைன்னு  வரும் கடந்தும் எனக்கு கட்ட நேரமில்லாம பெட்டிக் குள்ள ஒறங்கும் சேலக.வீட்ல சோறு தண்ணிக்கி பத்தாக் கொற வந்தப்பக்கூடயும்  உடுத்துற உடுப்புக்கு பஞ்சம் வந்தது கெடையாது. அடுத்த வருசங்கள்ல பொறந்தரெண்டுகொழந்தைகளுக்கும்என்னோடபழையசேலை   தான் பீத்துணியாஇருந்துச்சி/ அப்பிடியெல்லாம்  இருந்துட்டு இப்பம் ஒத்தச் சேலை க்கு அல்லல்ப்படவேண்டியிருக்கு. அவரு போனதுக்கு அப்புறம் அப்பிடியே அவர நினைச்சிக்கிட்டு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன் தம்பி. டீக்கடைக்கும் வீட்டுக்கும் ஊடாலையுமா ஜீவன் கெடந்து அல்லாடுது,இப்பம்சாப்புட்டுப்போறேனே,அதுதாஏங்ராச்சாப்பாடு.வீட்ல போயி இருந்தா சாப்புடுவேன்,  இல்லைன்னா அப்பிடியே மொடக்கி படுத்துருவேன்,கடைய விட்டுபோகும் போது டீக்கடை தம்பி மிச்சமிருக்குற ரெண்டு பஜ்ஜிய மடிச்சி குடுக்கும், அந்த மாதிரி நாள்கள்ல எனக்கு கூடுதல் சாப்பாடு கெடச்ச மாதிரி இருக்கும். பிராய த்துலஏங்அளவுக்குசாப்புட ஆள்கெடை யாது, ஏங்சோட்டுபொண்ணுங்க ஏங்கூட சாப்பாட்லபோட்டி போட முடியாது. சரித் தான் அப்பத நெலமைய இப்ப நெனைச்சா முடியுமா, நெலம எப்பிடி இருக்கோ அப்பிடி போயிக்கிற வேண்டியதுதா, ஏங்மகனும் என்னையகொறயாவச்சிப்பாத்து க் கல்ல,அவன் சத்து அவ்வளவுதான். உள்ளூரிலே கட்டிக்குடுத்த பொண்ணு ரெண்டு பெண்பிள்ளைகளோடநிக்குறா,    அவளுக்குபுள்ளைகளுக்குநல்லயெடத்துலமாப்புளஅமையனுமேன்னுகவல.இவனுக்கு என்னையப் பாத்துக்குறதும்,புள்ளைங்களவளக்குறதும்,படிக்கப்போடுறதுமே பெரும் பாடா  இருக்குது. எங்க தம்பிஅவன்வருமானத்துலவருசத்துக்குஒருநூல்ப்பொடவைஎடுத்துதர்றதேபெருசு/ இது போககூப்பன்கார்டுலதைப் பொங்கலுக்குகுடுக்குற சேலையையும் ஊட, மாட வாங்கிக்கிருவேன். அதுவேசரியாகிப்போகும்என்றாள்.அவள்கட்டியிருந்த புடவை  வயலெட் கலரில் இருந்தது.பார்டர் அடர் ஊதாகக்கலரில்/ முகம் நிறைந்த சுருக்கமும், ஊடல் நிறைந்த தளர்வும்,நடக்க முடியா நகர்வுமாய் நடுத் தெருவின் மத்தியிலிருந்து வருகிறாள்.     போனவருசமே மழைக்கு ஒழுகுன வீடு தம்பி.இந்தவருசமாவதுமழைக்குமுன்னாடி அதை சரி பண்னனும்ன்னு அலையா அலையுறான் ஏங் மகன் .எங்க விக்கிற வெலை வாசிக்கும்,கூலிக்கும் அவன் நெனச்சது நடக்காம போயிருமோன்னு கெடந்து மருகுறான். ரெண்டுல ஒண்ணு பொம்பளப் புள்ளையாப் போச்சு அவனுக்கு.பையனவுடஅவகொஞ்சம் சுதாரிச்ச ஆளு.உருண்டு,பெரண்டு தரையிலே கூட நீந்தீருவான் நீந்தி/ பொம்பளப் புள்ளயும் அவன விட்டவ இல்ல.ஆனாலும் இவள பையன் அளவுக்கு சுதந்திரமா விட முடியல.     இவுங்களாவது பரவாயில்ல.எங்க காலத்துல எங்காவது பக்கத்து ஊருக்கு போக ணுன்னாகூட தொணையோடதான் போகணும். இப்ப கையில காசும் ஒடம்புல தெம்பும்தான் வேணும் தம்பி. நெனைச்சநேரம் நெனைச்சயெடம்ன்னு போயி  வந்துர் ராங்க/ பஸ்ஸீல, ரயில்லண்ணு எனச் சொன்ன பாட்டியின்  பேத்தி12ஆம்வகுப்புப்படித்துக்  கொண்டிருந்தாள் உள்ளூர்ப்பள்ளியில் .     போன வருடம்தான் ப்ளஸ் டூ வரை கொண்டு வந்திருந்தார்கள்.11 ஆம் வகுப்புக்கு மதுரை போய்வந்தபிள்ளை. உள்ளூருக்கு12வரவும் திரும்பவும் உள்ளூர் வகுப்பறை யிலேயே/ அவளுக்கு 17 ஆகப்போகுது தம்பி வயசு. கல்யாணம்பண்ணிவச்சிரலாம்னுசொல்றான்  மகன்,    இந்தக்கழுதகேக்கமாட்டேங்குறா,மேலபடிக்கணும்,வேலைக்குபோகனுன்னு ஒத்தக்கால்ல நிக்குறா, அத  அவன் அப்பங்கிட்ட சொல்றதுக்கு பயந்துக்கிட்டு எங்கி ட்டு வந்து  சொல்லிச் சொல்லச் சொல்றா, நான்  என்ன செய்ய மத்தளத்துக்கு ரெண்டு பக்க  இடிங்குற மாதிரி ரெண்டு பேர்ட்டயுமா வாங்கிக்கட்டிக்கிட்டு,,,,,,,,,,,,,சரி அவுங்க யார் தம்பி ஊராவுங்களா?ஒருபக்கம்பெத்தமகன்,ஒரு பக்கம் அவன் பெத்த பேத்தி. இப்பஎன்ன கொறஞ்சா போறம்,வையவைய வைரக்கல்லு,.அது சரி இது ஒரு மாத் தந்தான தம்பி.நாங்க அப்ப அப்பிடி இருந்தோம்ங்குறதுக்காக இப்பவும் புள்ளைங்க அப்பிடி இருக்க முடியாது.தவுர இப்ப எதுனாலும் துட்டுன்னு ஆகிப்போச்சு தம்பி/ஒரு காலத்துல காடு,கரைன்னு வெளஞ்சு கெடந்தப்ப பக்கத்து மனுசன்ஒறவு வேணும்ன்னு நெனைச்சோம்/பெத்தவுங்க, பெறந்தவுங்க, அண்ணன், தம்பி,பெத்தவுங்க, பெறந்தவுங்க அண்ணன், தம்பி,ஜாதி சனம் எல்லாம் தேவை ன்னு ஆகிப்போச்சு.அதுதான் இந்த சீரழி வுக்கெல்லாம் காரணமோன்னு தோணுதுதம்பி.மனுசமொகம் பாத்து பேசுனது, பழகுனது  எல்லாம் மாறிப் போச்சு  தம்பி என்கிறாள்.     9.45 பஸ் பத்து நிமிடம் தாமதம் போலும்.இப்போதுதான் போகிறது.ஆட்களையே காணவில்லை.   அரை மணிக்கு முன்னதான் மதுரையிலிருந்து வர்ர வண்டி போச்சி. அப்பமே நெனைச் சேன்.கூட்டம் கொறைவா இருக்கேன்னு,இன்னைக்கி என்ன எதுவும், அட்டமி, இல்ல  வடக்க,தெக்க சூலமாதெரியல,ஒரு வேள அப்பிடித்தான் போலயிருக்கு.   இப்பம்யாருஅதையெல்லாம்பாக்குறா,ஏதோஒருதோதுக்காகஅப்பம்சொல்லி  வச்சிருக்காங்க, இப்பம்இருக்குறகாலத்துக்குஅதுஒத்துவருமான்னு தெரியல.  தம்பி  சரி அப்பம் அப்பிடி இருந்துச்சி,இப்பம் இப்பிடியிருக்கு/ இருக்கட்டும் தம்பி,,,,,,,,,, காலையில வெள்ளன ஏங் மகன மீன் யேவாரத்துக்கு அணுப்பணும்/ வரட்டுமா? 3. விலாசம்,,,   []     அவர்களதுவீட்டைகண்டுபிடிப்பதுஒன்றும்சிரமமாகஇருக்கவில்லை நாராயணா ஸ்டோர்ஸீக்கு எதிர் சந்தில் இருக்கிறதுஎன்றார்கள்.போய் விட்டேன். நீண்ட அகலமான தெரு. ஸ்டோரிலிருந்து பார்த்தால்குறுக்காகப் போன மெயின் ரோட்டைத்தாண்டி நீண்டு தெரிந்தது.    இரண்டு பக்கமும் முளைத்திருந்த வீடுகள் வரிசையாகவும்,வரிசை தப்பியுமாய் தெரிந்தன. வாசலில்போடப்பட்டிருந்தகோலங்கள் அழிந் தும் வெள்ளை பாவியுமாய் தெரிந்தது அலசலாக. அருகில் போய் தான் பார்க்க வேண்டும். மண் பாதையாக இருந்த தெருக்கள் எல்லாம் இப்போது சிமெண்ட் அல்லது தார் சாலையாக பூத்திருந்தது.    சரி தெருவிற்குள் போய் தேடிப்பார்க்கலாம்.தெருமுக்கில் வலது பக் கம் தச்சுப் பட்டறையும், மர அறுவை மில்லும் இருந்தது.நான் கைந்து பேர் எந்த நேரமும் தேவைகேற்ப வேலைபார்த்துக் கொண்டுதான்  இருந்தார்கள்.இரண்டு பக்கமும் சட்டமடித்து எங்கோ ஒரு ஓரமாய் மோட்டார் பொருத்தப்பட்டிருந்த அறுவை மிஷினின் ஒரு முனை யில் மரசக்கையை கொடுக்க அது நகன்று,நகன்று அறுபட்டு எதிர் முனையில் இருப்பவரின் கைகளில் செதுக்கப்பட்ட வழவழப்பான கட்டையாக உருமாறி வருகிறது.   அடைக்கப்பட்ட சதுரமான கட்டிடத்தில் முன் வாசல் மட்டும் தப்பை வைத்துக ட்டப்பட்டிருந்தது. பக்கவாட்டில்தகரம்வைத்துமூடப்பட்டிருந்த வெளியில்தான் சொர,சொரப்பு வழவழப்பாய் மாறிய நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. வீட்டுக் கொல்லை வாசலுக்கு வலைக்கதவு அடிக்க வாங்கிய மரச் சக்கையை இங்குதான் செதுக்கக் கொண்டு போயிருந்தேன். செதுக்க வும் நன்றாக இருந்தது. சொர, சொரப் பெல்லாம் போய்வழவழப்பாய்.மஞ்சள்பூசிக்குளித்தபுதுப் பெண்ணின்  பொலிவு போல/ கண்களும்,உதடும் உதிர்க்கும் வார்த்தைகள் மனதிற்குள்ளாய் நுழை ய புதுப் பெண்ணின் பொலிவு நிறைய இடங்களில் அவசியப் படுகிற மாதிரி அல்லது அது மனதை கிறக்கி விடுகிற மாதிரி கட்டை வழவழ ப்பில் நான் லயித்துவிட பேசாமல் அவர்கள் கேட்ட கூலியை நான் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன்.   ஸ்டோரிலிருந்து ரோட்டை கடந்த நேரம் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கட்டிய பெண் என்னை திரும்பித் திரும்பி பார்த்தவாறு செல்கிறாள்.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவளின் பார்டருக்குள் சிரித்த பூக்களும்,வடிவங்களும் என்னைப் பார்த்து கண் சிமிட்டின. அவளது தோளில் தொங்கியகைப்பை அவளது அலங்காரம்,தலை யில் சிரித்த மல்லிகைப்பூ,சேலையில் பொதிந்திருந்த பொடி,பொடி பூக்கள் ,மெதுவான வேகத்தில் விரைந்த அவர்களது இரு சக்கர வாகனம் எல்லாமும் என்னை சற்று நிதானித்து சாலையை கடக்கச் செய்தது.  கடந்த வேகமும்,அவர்களின் இருசக்கர வாகன அமர்வும் தரையில் பட்டு அவர்களின்நிழலை இழுத்துச் சென்றது. இழுபட்ட நிழல் பள் ளம்,மேடு,கல்,மண்,கழிவு என அனைத்தின் மீதும் பட்டுப்பட்டு பயணி க்கிறதாய்,,,,,,,,./  யாரவது சொந்தமாய் இருக்க வேண்டும் அல்லது தோழமை பூத்திரு ந்தநட்பின் மூலமாய் கிடைத்திருந்த பழக்கமாய் இருக்கவேண்டும். அதுதான் அப்படி திரும்பித்திரும்பிப் பார்த்துச் செல்கிறாளோ, என்ன வோ...........?சொந்தங்களின்முகம்மறந்துரொம்பநாட்களாகிப்போனது. அலுவலகம், யூனியன்,ஆர்வம் காரணமாக அணைத்துக் கொண்ட பழக்கங்கள் எல்லாம் செக்கு மாடாய் சுழல வைக்க சொந்தம், பந்தம், கோவில்,குளம்,சுற்றம் மறந்து ரொம்ப நாட்களாகிப் போனது.லீவு கிடைக்கிற நாட்களில் “அக்காடா”என ஓய்வெடுக்கவும் முரண் களை யோசிக்கவுமே நேரம் சரியாகிப் போகிறது.பின் எங்கிட்டு  சொந்தம், பந்தம் அவர்களது முகங்கள், அவர்களோடான உறவு...............?   வெளியில் சொல்லமுடியாத கனவாய் ஆகிப் போகிற இம்மாதிரி கொடுமைகளையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது என தெரிய வில்லை.அதிலும் என் போன்ற கீழ் மட்ட ஊழியனுக்கு இந்த சமூகம் தருகிற மரியாதை இருக்கிறதே,அடேயப்பாஅதை ..................ம் போய்த் தான் சரிபண்ணிக் கொள்ள வேண்டும்.   அந்நேரத்திற்கு கூட்டம் அதிகமில்லாத சாலையில் சென்றவர்களின், விரைந்தவர்களின் எண்ணங்களும், செயல்களும்அப்படித்தானே இருந்திருக்கும்? எண்ணங்களை ஒட்டிய செயல் பாடுகளை தடுக்க யாரால் முடியும்? என எனது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வர அதை அசை போட் டானாய் தெருவிற்குள் செல்கிறேன். காலையில் போட்டிருந்த கோலத்தின் அழிந்து போன அடையாள ங்கள் தெருவின் இருபக்க வீடுகளின் முன்பும் தெரிந்தது.   ரோடு,ரோடு தாண்டி நடை,நடை தாண்டி வீட்டின் உள்புறம்..,,..,,என விரிந்த வீடுகளின் வரைவில் ஒன்றுக் கொன்றுமாறுபட்டும் வேறுபட் டும், வித்தியாசித்துத்தெரிந்தது. இத்தனைக்கும்மத்தியில்தான் அவர்களது வீட்டை பார்க்க வேண்டும் பழைய காவல் நிலையத்தை ஒட்டிய தெருவில்தான் அவர்களது வீடு எனச்சொன்னார்கள்.இப்போது வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்டார்கள்.காவல்நிலையம் இருந்ததற்கான அறிகுறிகளே அங்கு இல்லை.கட்டிடமே உருமாறிப் போயிருந்தது. நல்லதுதான் எத்தனை,எத்தனை மனிதர்களை எப்படியெல்லாம் சந் தேகப்பட்டு,எப்படியெல்லாம் வழக்குப் போட்டு விசாரித்த இடமாக இது இருந்திருக்கிறது.எத்தனை பேரின் வாழ்கையின் திசையை திருப்பிப் போட்டதோ இந்த இடம் என தெரியாத முடிவுடன் நான் நின்று கொண்டு. அந்த இடத்தின் எஞ்சிய அடையாளமாய்தெருமுனையில்இருந்த அடி குழாய் இன்னும் அப்படியே தண்ணீரோடு. ஆண்களும், பெண்களும், பெரியவர்களும் எப்போதும் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருக்கி றார்கள். சண்டை, சச்சரவு இல்லாமல்.எந்த வேலையானாலும் சரி, எந்த மழை குளிரானாலும் சரி எப்போதும் அந்தக் குழாய் அடி பட்டுக் கொண்டேயிருக்கும் போல. பூமியிலிருந்து தண்ணீர் வருகிறதா,அல்லது கைபிடித்து தண்ணீர் அடிக்கிறவர்களின்ராசியா?தெரியவில்லை.அந்த தெருக்காரர்களுக் கும்,அந்த அடி குழாய்க்கும் அப்படி ஒரு உறவு பூத்திருந்தது. இந்த அழகர்ந கர்தோன்றிய காலத்தில்போட்டது என சொல்லியிருந்தார் அந்த வாழைப்பழக்கடைக்காரர்.   முப்பதிலிருந்து முப்பத்தியிரண்டு இருக்கலாம் வயது.நாற்பத்தியிர ண்டு வயதுக்காரனான நான் அவரை பற்றி குறிப்பிடுகையில் அவர், இவர் என்றுதான் குறிப்பிடுகிறேன். ஏன் அப்படி என கேட்டால் தெரியவில்லை என சொல்வதற்கில்லை. அப்படியேபழகிப் போனேன். என்னை விட குறைந்த வயதினர் ,குறை ந்த வருவாய் பிரிவினர் குறைந்தவேலைபார்ப்பவர்அனைவரிடமும் எந்த பேதமுமில்லாமலும்,மரியாதையுடனும்பேசவும்,பழகவும்கற்றுக் கொண்டதன் விளைவுதான் இந்த மனது. நான் வேலை பார்க்கிற வங்கிக்கு வருகிற வாடிக்கையாளர்களிட மும், சகஉழியர்களிடமும் எப்போதும்மரியாதையாகவேநடந்துகொள் கிற பழக்கம் என்னிடம் எப்பொழுதும் உண்டு.வாங்க ம்மா, வாங்க சார்,வாங்க மேடம்,வாங்க தம்பி.வாங்கஅண்ணே ,,,,,,,,என்று தான் சொல்லி பழகியிருந்தேன்.  முள்ளு, முள்ளான தாடி முகத்தில் குத்திக் கொண்டு நிற்க பார்வை சரியாக தெரியாமல் வரும் கந்தவேலிடமும், நகைக்கடன் கேட்டு வருபவரிடம், நகை எத்தனை உருப்படி எனக்கேட்டால் தான் மேய்க் கும் ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் பாண்டி வேலனிடமும் தராதரம் பார்க்காத பழக்கம்தான் என்னை அப்படியெல்லாம் சொல்ல வைத்திருக்கிறது.   ஒரே ஊரிலேயே பிறந்து,ஒரே ஊரிலேயே வளர்ந்து அதே ஊரிலே யே வாழ்ந்து முடித்து விடுகிற பாக்கியம்தான் பெரும்பாலானோ ரைப் போலவே எனக்கும் வாய்த்திருக்கிறது என்றார் அந்த வாழைப் பழகடைக்காரர். கடையின் பேர் என்னவோ வாழைப்பழகடைதான்.ஆனால் அங்கு சாந்திப் பாக்கு,பீடி,சிகரெட் வெற்றிலை,பாக்கு,பான்பராக் என எல்லா ம் இருந்தது.அவர் சொன்ன அடையாளத்துடனான வீட்டிற்கு செல்ல இன்னும் கொஞ்சம் தூரமிருக்கிறது.  நேராகப்போய் ஒரு தெரு திரும்ப வேண்டுமாம் கூறினார்கள்.நான் போய்க்கொண்டிருந்ததெருவின் முனையில்சாக்கடை கழிவை வாரி ஓரத்தில் குவித்திருந்தார்கள். சின்னதான அந்த குவியலின் உள்ளேயிருந்து அழுக்கும்,சாக்கடை கரையுமாக குச்சி ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.பார்க்க அருவரு ப்பாக தோன்றினாலும் குச்சியின் நீட்டத்தை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.ஏன் இப்படி என சாக்கடை அள்ளியவர்களை கேட் பதா அல்லது அள்ளியதை போடுவதற்கு உரிய ஏற்பாடை செய்து கொடுக்காதவர்களைப்பற்றி பேசுவதா?எது எப்படியாயினும் உடனடி யான தவறுக்குஅவர்கள்தான் ஆட்பட்டுப்போகிறார்கள்.   குவியலுக்குஎதிர்த்தவீட்டில்இருந்தவயதானமூதாட்டியைபார்க்கிறேன்.  அவர் தான் சொல்கிறார் என்ன செய்யச் சொல்றீங்கதம்பி, அப்பிடித்தான் கெடக்கு,அவுங்கள கேட்டா இவுங்கன் றாங்க,இவுங்களக் கேட்டா அவுங்கள கையக் காட்டுறாங்க.இப்பிடியேமாறி,மாறிநடக்குது தம்பி. இது எங்க போயி எப்பிடி முட்டிக்கிட்டு நிக்கும்னுதான் தெரியல.   நீங்க தேடி வந்த வீடு அதோ அதுதான் தம்பி.ரெண்டு பேரு வாசலுக்கு முன்னால நிப்பாங்க, அவுங்கதான் நீங்க தேடி வந்த ஆளுங்க, அண் ணன்,தம்பி ரெண்டு பேரும் சேந்து தொழில் பண்றாங்க, வருமானம் சில சமயம் அள்ளிக்கிட்டு வரும் சில சமயம் ஈயாடும்.சமாளிச்சு ஓட்றாங்க,என்னோட சொந்தக்காரங்கதான் தம்பி.பேச்சு வார்த்தை கெடையாது இப்ப. அவுங்கதான் என்னைய இங்க வீடுபாத்து குடி வச்சாங்க,அதுக்கு பாத்திங்கீன்னா எத்தன தடை,எத்தன எதிர்ப்பு,எத்தன வசச்சொல்லு, எவ்வளவு குரோதம்,யப்பா,,,,,,,,,,,,,,,,மனசுவிட்டுப்போச்சு தம்பி.ஏன் பேரன்மார்க தான்என்னானாலும் பரவாயில்லைன்னுசொல்லிஎதுத்தவு ங்க கூடயல்லாம் பேசி சண்டபோட்டு என்னயஉக்கார வச்சாங்க. இப்பஅவுங்ககுடியிருக்கநெலையான வீடில்லாமஅலையு றாங்க தம்பி.   வீட்டுக்காரரு காலி பண்ணச் சொல்றாராம்.திடீர்னு இப்பிடிச் சொன் னா எங்க போவாங்க அவுங்க,புள்ள,குட்டிகள வச்சிக்கிட்டு.ஒரே ஆள் க இருக்குற தெரு அதான் இப்பிடி.எங்கள மாதிரி ஆள்கள இருக்க விடமாட்டங்க.நொரண்டு இழுத்துக் கிட்டே இருப்பாங்க தம்பி.நாங்க பொழப்பப் பாக்குறதா,இல்ல இவு ங்களோடசண்டபோட்டுகிட்டுஇருக்குறதா?சொல்லுங்க,பாத்தா படிச் சவரு மாதிரி இருக்கீங்க,ஏதாவது கரைக்ட்டா சொல்லுங்க தம்பி என்றாள். வீடு தேடிய அலுப்பை விட மூதாட்டியின் பேச்சு என்னை அசைத்து விட அண்ணன்,தம்பி இருவரையும் நோக்கி கிளம்புகிறேன்.அவர்கள் என்னை பார்க்க, நான் அவர்களைப் பார்க்க மெளனமாய் கரைகிறது நிமிடங்கள். நான் பேச வாய் எடுத்த சமயத்தில் அவர்கள் துண்டுச்சீட்டு ஒன்றை நீட்டினார்கள்.அதில் அவர்கள் குடிபுகப்போகும் புது வீட்டின் முகவரி இருந்தது.                                                     4. செதுக்குமுத்து,,,,,,,   []     ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான் .காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது.ஆனாலும் குளிருக்குப் பயந்து போர்வையை இழுத்து மூடிக் கிடந்தான்.   முன்பெல்லாம் காலிலிருந்து தலைவரை முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு படுத்தாலும் ஒன்றும்தெரிவதில்லை. இப்போதெல்லாம் மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு.வயது கூடிக் கொண்டே  போகிறது தானே?ப்ரஷரிலிருந்து சுகர்வரைஎல்லாம் அப்பிக்கொண்டிருக்கிறது. வாரம் தவறாமல்ஹோமியோபதி டாக்டர் கந்தசாமியைத்தான் போய் பார்க்க வேண்டியிருக்கிறது.   அவரும் ரொம்பவும் செலவு வைக்காமல் இது,இது இப்பிடி,இப்பிடி,இந்தந்த மாத்தரையை சாப்பிட்டுவிட்டு இப்படி, இப்படி இருந்து கொள்ளுங்கள்.ரொம்பவும் மனதைப் போட்டு உழட்டிக் கொள்ளவேண்டாம் என்பார். சரித்தான்கெமிக்கலின் பாதிப்போடு சாப்பிடுவதை விடுத்து, அது இல்லா மல்மருந்துமாத்திரைசாப்பிடுவதுநிறையவே பிரயோஜனமாகவும் , மன நிறைவாகவும். இந்த தை முடிந்தால்  49 பிறக்கிறது.அவனது மூத்த மகன் கூட அடிக்கடி கேலி செய்கிறான். அப்பா ஒங்களுக்கு வயசு ஆயிருச்சு.”என. சொல்லி யவனும்,அவனது மனைவியும்அந்தப்பேச்சுக்குசிரித்துக் கொள்கிறனர். “ஆமாமா,நீ மட்டும் அப்பிடியே மார்க்கண்டேயனாவா இருக்கப் போற, இந்த பதினஞ்சு வயசுல பாரு மண்பானையில தண்ணி ஊத்தி வச்ச மா திரி  வயிரு,ஒடம்மெல்லாம் பாரு பொது,பொதுன்னு ஏதோ காத்தடிச்ச் வச்சமாதிரி,போ,கிறுக்காமொதல்லஒடம்பகொறைக்கிறவழியப்பாரு, இதுல ஒங்க அப்பாவ கேலி பண்ணவந்துட்ட,அவர மாதிரி ஒரு நா இருந்துருவயா நீ?”என கணவனுக்கு வக்காலத்து வாங்குகிறவளாக மாறிப்போவாள் படக்கென.இந்த பேச்சைக் கேட்டதும் அவனது மகனின் முகமும் காற்று பிடுங்கிய பலூனாக.  “தினசரி காலையில எந்திரிச்சு வாக்கிங் போ,இல்லைன்னா சைக்கி ளிங்க் போ,இல்லைன்னா வீட்டுல சின்னதா எக்சர்சைஸ் பண்ணிக்கப் பா, ஒடம்பு என்னாக்குறது பின்னாடி என்பான் அவன்.“ம்நானா போக மாட் டேங்கிறேன், நீங்கதான் விட மாட்டேங்குறீங்க.வீட்டுக்குள்ளயே போட்டுஅடைச்சு வைச்சுருக்குறீங்க.   கிரவுண்டுக்குப் போயி சைக்கிள் ஒட்டப் போறேன்னு சொன்னா விட மாட்டேங்க்குறீங்க.அப்பறம் சும்மா,சும்மாஎன்னையேகுத்தம் சொன்னா  எப்படி?என்கிறான் பதிலுக்கு கோபமாகவும்,சப்தமாகவும்.   ஏதாவது ஒன்றை செய்யச் சொன்னால் அதற்கான வசதி உள்ள இடங் களில் தான் செய்வேன் அல்லதுசும்மாஇருந்துவிடுவேன்.என்கிற மனோ பாவம் பிடித்தாட்டுகின்ற நிலையில் உள்ளவனாகிப் போன மகனது மனஅழுத்தம்தான்  “அப்பாவுக்கு வயசாகிப் போச்சு”என அடிக்கடி பேச வைக்கிறதோ?அவனது மனைவியை மறுக்க வைக்கிறதோ?அப்படியெ ல்லாம் மகனுக்குச் சொல்லும் ஆலோசனையை பின்பற்றி அவனும்,நடை பயிற்சி,சைக்கிள் ஓட்டுதல்,உடற்பயிற்சி அல்லது யோகா என ஏதாவது செய்யலாம் என்றால் முடிவதில்லை.உடலை அழுத்தும் சோம்பல், மனம்நிரம்பிய சிந்தனை மெல்லிதான குளிர் இன்னும் விடியாத அரை இருள் என போர்வை விலக்காமல் வாயோரம் எச்சில் ஒழுக ஊத்தை வாயுடன் படுத்துக் கிடப்பான். அப்படித்தான் இன்றும் படுத்துக் கிடக்கி றான்.    கட்டியிருந்த கைலி அவிழ்ந்திருந்தது.பூப் போட்ட கைலி.அந்தாதி கடை யில் எடுத்தது. தவணை கடைக்கடை என அதற்கு பெயர்வைத்திருந்தான். அந்தக் கடைக்குப் போகும் மாதாந்தோறும் அவனது மனம் அவிழ்ந்து போகிறதுண்டு.காரணம்அந்தக்கடையில்வேலைபார்க்கும்பெண்பிள்ளை தான்.  நன்றாக இருந்தால் இருபதுக்குள் இருக்கலாம் வயது அவளுக்கு. துணிக ளுக்கு மத்தியில் பொதித் துவைக்கப்பட்டிருக்கும் உயிர் பொம்மை யாய். அங்குமிங்குமாய்நடந்துகொண்டும்,  கடைக்கு வருகிறவர்களுக்கு துணி களை எடுத்துக் காண்பித்துக் கொண்டுமாய். நடப்பாள், ஓடுவாள்.வேகமாய் எட்டெடுத்து வைப்பாள்.இப்படி அவளின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் கடை வளர்ச்சி பற்றிய சிந்தனை உள்ளட ங்கியே இருக்குமே என எண்ணத் தோனுகிற வகையில் நடந்து கொள் வாள். மெலிதானஅடர்த்தியற்றநிறத்திலும்,அளவிலுமானதாவணி,அதற்கு மேட்சிங்கான பாவடை,சட்டை கசலையான மெலிந்து சிவந்த தோற்றம். சதை திரட்சியற்ற கைகளும்,கால்களும்,உடலுமாய் அவளது வறுமையை பறையறிவிக்கும்.   “வாங்கநல்லாயிருக்கீங்களா?,சேலைஎடுக்குறீங்களா?,பேண்ட்,சர்ட்எடுக்கிறீங்களா?வேற ஏதாவதும் எடுக்குறீங்களா?என படபடப்பாள்.ஒரு முறை பார்க்கையில் பாவடை தாவணியில் இருந்தால் ,மறுமுறை பார்க்கை யில் சுடிதார் போட்டுக் கொண்டிருப்பாள்.அதிலும் பளிச்சிடும் அவளது எளிமை அவனை ஈர்ப்பதாகவே.ஆனால் அந்த எளிமையை மீறிய அவளது தோற்றம் அவனை எங்கெங்கோ இழுத்துச் செல்வதாக அமைந்து விட, சங்கடம் மிக கிளம்பி விடுவான்.   அவள் அவளது வருமானம்,குடும்பம், பாடு என சுற்றி,சுற்றி கிளை பரப்பிரெக்கை கட்டி விடும். கடையைவிட்டு வந்த பிறகும் கூட அந்த எண்ணம் அன்றைய நாளின் பாதியை ஆக்ரமித்துக் கொள்ளும். அப்படி யான ஒரு சங்கட தருணத்தில் எடுத்து வந்த கைலிதான்  இது. முழங்கால் வரை ஏறியிருந்ததை இறக்க மனமில்லாமல் போர்வை யை  இழுத்துப் போர்த்திக்கொண்டான் கழுத்து வரை.தலையில் குரங்குக் குல்லா மாட்டியிருந்தான்.பனித்த கண்கள் திறக்கவும்,திறந்த கண்கள் பனிக்கவுமாய் இருந்த கணம் வீடு அழகாக காட்சியளித்தது.மனைவி, பிள்ளைகள் இருவர் என படுத்திருந்த வீட்டில் எரிந்த இரவு விளக்கின் வெளிச்சம் வீட்டை ரம்யப் படுத்தியது.  வேண்டாம்.........,இன்னும்சிறிதுநேரத்தில் பால்காரர் வந்து விடக்கூடும். தண்ணீர்வண்டி தெரு முனையில் வந்து ஹாரன் அடித்து நிற்கும்.இரண் டும் வருவது அடுத்தடுத்ததான நிகழ்வாய் இருக்கும்.ஒருநாள் தண்ணீர் வண்டி முந்தும்,ஒரு நாள் பால்க்காரர் முந்தி விடுவார்.சமயத்தில் இரண்டுமே சேர்ந்தாற்ப் போல வந்துவிடுகிற சோகமும் நடந்து விடுவது உண்டு.அந்நேரம்,நீ அங்கு, நான் இங்கு என வேலைகளை பிரித்துக் கொள்வார்கள்.அப்படி பிரித்துக் கொள்ள சோம்பலாகிப் போகிற தருணத்தில் தண்ணீர் வண்டி போய்விடும்.பிறகு அந்த வண்டி பயணிக் கிற திசைகளில் பின்னாலேயே நூல் பிடித்து செல்ல வேண்டும். அதற் கெனஅரைமணி ஆகிப் போகும். அந்த  அரைமணி காலை நேரப்பயணம் பள்ளிஅலுவலகப்புறப்பாடுகளின் போது மட்டும் சிரமம் காண்பிக்கும். எந்தவெயில்,மழை,குளிரானாலும்சரி.இதுதான் அன்றாட ஏற்பாடாய் அவர்கள்குடியிருக்கும்பகுதியில்மழைவெள்ளமாய்ஓடினாலும்சரி அதி காலையில்தண்ணீர்வண்டி வரவேண்டும்.வந்தால்தான் வீடுகளில் தாக சாந்திக்கும், சமையலுக்குமாய்..........,மனைவியை எழுப்பினான்.அவள் மணிஎன்னஎனகேட்டுவிட்டுதிரும்பவும்படுத்துக்கொண்டாள்.நேற்று இரவே முடிவுபண்ணிக்கொண்டுதான் படுத்தான்.   பொங்கலுக்கு மறுநாள்நல்ல நாளும்,அதுவுமாய் கறி எடுக்க வேண்டும். ஆட்டுக் கறிஎடுத்து வருடக்கணக்கில் ஆகிப்போனது.300 ரூபாய் என்கிறா ர்கள்.அதற்கு கோழிக் கறி எடுத்து விட்டுப் போகலாம்.90 ரூபாய்தான். ஆட்டுகறிய விடகோழிக்கறிநன்றாகச்சமைக்கிறாள்அவனது மனைவி. அதுவும் ஒரு காரணம்,பணமும் ஒரு காரணமாய் ஆகிப் போக கோழிக் கறிக்கே பெரும்பான்மை ஓட்டு.அவன் வீடு போலவேதான் அனைத்து வீடுகளிலும் நிலைமைஇருக்கும்................சிக்கன் கடை,............சிக்கன் கடை என பெயர் பலகைகள் மாட்டிய கடைகளின் முன்பாக கூடியுள்ள கூட்டம் இதை உறுதி செய்வதாகவே/பொருளாதாரம் நலிந்த தேசத்தில் மக்களுக்கு வாய்ப்பது இதுவாகத்தான் இருக்கும் போல.......,/ அவனது மகனும் அதைதான் சொன்னான். “நாளைக்கு காலையில வெள்ளென எந்திரிச்சு கோழிக்கறிஎடுக்கணும்”என.“வெள்ளென என்பது அவனது அகராதியில் காலை 6.30 என்கிறான்.   மனம் இல்லாமல் படுக்கையை விட்டு எழுந்து முகம் கழுவி கிளம்பிய  போது மணி ஆறு மனைவியிடம் 200ரூபாய் வாங்கிக் கொண்டான்.இன்னும் பால்காரர் வரவில்லை.வீட்டில் தேநீர் போடவில்லை.தண்ணீர் வண்டிச் சத்தம் கேட்கிறது. “நீங்கள் போங்கள்” என அவசரப் படுத்தி கதவை பூட்டி விட்டுகுடத்தை தூக்கிக் கொண்டு ஓடினாள். ஒருகிலோ போதும் என தோன்றியது.வாங்கி விட்டான். அவன்,மனை வி பிள்ளைகள்இருவர்அனைவருக்குமாய்ஒருவேளை   போதும்.கூடவே தக்காளி,இஞ்சி என வாங்கிக்கொண்டான்,இதே நூற்றி நாற்பது வரை வந்து விட்டது.இனி டீ சாப்பிட வேண்டும்.எல்லாம்முடிந்து வீடு திரும்பும்  போது மணி 7.30 ஆகியிருந்தது.    இரண்டு மாதங்களாக வீட்டிற்கு பின்னால் கூட்ட வில்லை. மனைவி தான் அவ்வப்பொழுது கூட்டிக் கொள்வாள்.இன்று மாடியையும் சேர்த்து கூட்ட வேண்டும்.கொல்லைப்புறம்,பக்கவாட்டாக கிடந்த வெளி,என கொஞ்சம்கிடந்த வெற்றிடத்தில்நின்றமரங்கள்இலைகளை உதிர்த்து இடத்தை ஆக்ரமித்திருந்தன.   ஒரு வேலையை செய்து முடிக்கையில் மற்றொன்று விட்டுப் போகிற துதான்.உதிர்ந்து கிடந்த மரத்தின் இலைகள்,ஈரம் பூத்திருந்த மண்,அதில் நெடித்து ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள்,இடது மூலை ஓரமாய் நின்ற அடி குழாய்,அதை சுற்றியிருந்த  கட்டப் பட்டிருந்த சிமெண்ட் தளம் என நின்றிருந்த இடத்தை தோட்டம் என்றார்கள்.ரகத்திற்கு ரெண்டாக மரங்கள் வைத்திருந்தார்கள்.வேப்பமரம்,பன்னீர் மரம், தென்னை மரம்,அரளிப்பூ மரம் ........, என./பார்த்தவரை மரங்கள் நன்றாகத்தான் உள்ளது.கடந்த சில நாட்களாகவே தோட்டத்தை கூட்டவில்லை. பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று கூட்டியிருக்கலாம் .உடல் சோம் பல் மிகுந்து விட்டது .சோம்பல் இப்பொழுது குப்பியாகக் கிடக்கிறது இப்போது மிகவும் தூசியாகக் கிடக்கிறது.  பொதுவாகவே அவனது தோட்ட வெளி அனைத்தும்நிரம்பியதாகத்தான் இருந்தது. பூச்சிகள், எறும்புகள், பறவைகள்,கோழிகள்,ஆடுகள்,சமயத்தில்பன்றிகள் அனைத்தும் மேயும் பெருவெளியாகத்தான் இருந்துள்ளது.வீடுகட்டியது போக மீதம் இருந்த வெற்றிடத்தைத்தான் தோட்டம் என அறிவித்துக் கொண்டார்கள். அதில் ரகத்திற்கு இரண்டாக நின்றதில் மனதை பறிகொடுத்து விடுகிற வனாகவே அவன்.ஆனாலும் அதன் வளர்த்தியிலும்,அடர்த்தியிலுமாய் காயாமல் கிடக்கும் தரை உதிர்ந்து கிடக்கும் இலைகள்,ஈர வாடை அடிக் கும் மண். குளிர் காலங்களில் யாருடைய அனுமதியும் அற்று வீட்டிற்குள் நுழை ந்து குளிர ஆரம்பித்து விடும் தருணங்களில் அவன் நினைப்பதுண்டு. ஒரு வேளை இந்த மரங்கள்இருப்பதானால்தான்இவ்வளவு குளிர்ச்சியும், கொசுவும் வருகிறதோஎன. அதெல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த மரங்களை வெட்டிவிட்டால் தேவலாம் என்கிறாள் அவனது மனைவி. பன்னீர் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருக்கிறது.வேப்பமரத்தில் காக் கையின் கூடு முட்டையுடன்இருக்கிறது. பூமரத்தில்பூக்கள் அழகழ காய் சிரிக்கின்றன. பூவே,பூவே காக்கையைப் பார்.காக்கையே,காக்கையே தேன் கூட்டை  கவனி.   தேன்கூடே,தேனீக்களே தேனைகாக்கைகளுக்கும் இன்னும் பிறவற்றிற்குமாய் பகிர்ந்து கொடுங்கள்.இங்கே ஆடு மேய்கிறது,மாடு வந்து போகிறது.பன்றிகளும்,நாய்களுமாய் வந்து ஊடாடுவது உண்டு.உடல் பெருத்த கோழி ஒன்றுதனது குஞ்சுகளுடன் அதோ தோட்டத்து மூலையில் உள்ள அடிகுழாய் அருகில்  ஈர மண்ணைகிளறியவாறு இரை தேடும்.இடது மூலையில் ஒரு கரிச்சான் குருவி தினசரி காலை 7 மணி சமீபம் தனது காதலியுடன் வந்து போவது உண்டு.இது போக அவனும், அவனது மனைவியும்,பிள்ளைகளுமாய் சுற்றித்திரிவார்கள்.அவர்களுக்கும்,அவைகளுக்கும் தேனைக் கொடுத்து விட்டு நீங்கள் இஷ்டத்திற்கு சேகரித்துக் கொள்ளுங்கள் என சொல்லத் தோனுகிறது. மரங்களை சுற்றியும்,வெற்று வெளியிலும்,மாடிமுழுக்கவுமாய் கூட்டி அள்ளிவிட்டு திரும்பப் பார்க்கிறான்.இடம் சுத்தமாய் இருந்தது. வேர்வை நிரம்பியிருந்த உடலை துடைத்துக் கொண்டு தரையில் சிறிது நேரம் அமர்ந்து எழுந்து விட்டு கூட்டியதை அள்ளிப் போடுகையில்தான் கவனிக்கிறான்.தேனீக்கள் கூடு கட்டிய பன்னீர் மரத்தின்அடியில் கூட்டா மல்  விட்டதை. குப்பையும்,மண்ணுமாய்கிடந்தது. அவற்றின்ஊடாக பறந்தும்,ஊர்ந்தும் சென்ற தேனீக்கள் மரத்தை சுற்றி பறந்தவாறும் ஊர்ந்தவாறுமாய். ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறது தான். அதுவும் நல்லதுக்குதான்.                     5. கத்திரிப்பான்,,,,,,   வெட்ட வெட்ட குறைகிறது முடி.அது கையின் விரைவா அல்லது கத்திரி யின் விரைவா எனப் புரியவில்லை, மாறாக அது சொல்லிச்சென்ற செய்தி கை,மற்றும் கத்திக்கோல் ,சீப்பு இவைகளின் கூட்டு உழைப்பே சிலும்பிக் கிடந்த முடிகளை வெட்டி அழகு படுத்திக் கொண்டிருக்கிறது என/  காலையில் எழுந்ததுமே நினைவுக்குவந்தது,இன்றுமுடிவெட்டிவிடவேண்டும்,என/  என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டா ன்.   இந்நேரம் தாத்தா டீக்கடை திறந்திருப்பார்.முகம் கழுவி தலை சீவுகை யில்  திரும்பவும் ஒருமுறை வந்த  நினைவு இன்றைக்கு எப்படியேனுமாவ து முடி வெட்டி விட வேண்டும் என்பதே/  என்றுமே சீக்கிரம் கடை திறாந்து விடுகிறா தாத்தா இன்று லேட்டாக திறந்து விட்டார் என சொன்னார். கடையில் டீ சாப்பிட உட்கார்ந்திருந்த எலெக்ட்ரீசியன்  மாடசாமி அண்ணன். என்னுடன் சேர்ந்து மூன்று பேர் அமர்ந்திருந்தோம் அந்நேரமே.வேகமாக வந்த ஒருவருக்கு எலெக்ட்ரீசியன் அண்ணன் பதில் சொல்லிக் கொண்டி ருந்தார்.ஆமா அண்ணே,காலையில் நான் வந்துதான் எழுப்பி விட்டேன் அப்புறமா மனசில்லாம கடைபோட்டாரு பாத்துக்கங்க,வயசாச்சில்ல, முன் ன மாதிரி நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி கடை போட முடியல ,என்ன மோ ஒரு வைராக்கியத்துல வண்டிய ஓட்றாருண்ணே,ஆமாம் என்றார்.   அந்த ஐந்து மணியின் அதிகாலை புலர்வுக்குரோட்டில்இன்னும் நடமாட்ட ம் ஆரம்பிக்கவில்லை. மனிதர்களைச்சுமக்காமல்தன்னைத்தானேச்சுமந்துகொண்டு வெற்றுருவாய் காட்சியளித்தது கருநிற சாலை.அந்த மோனம், ,அமைதி.மென்சலனம்எல்லாமுமாய்தவம்புரிகிற முனியின் நீண்டதாடியா ய்நீண்டுவிரிந்துகிடக்கிறதாய்.   தீப்பெட்டி ஆபீஸ் வீதி வழியாகத்தான் செல்கிறேன்.கையிலிருந்த மஞ்சள் நிற டார்ச் வெளிச்சம் பாய்ச்சி முன்னால் வழி காண்பித்ததாய்/ வெளிச்ச ங்கள் எப்பொழுமே  கைபிடித்து நடை பழக்கும் ஒரு தகப்பனின் பாங்குட னும், வாஞ்சையுடனுமாய்/ முன்னெல்லாம் அந்தப்பாதையில் நடக்க முடி யாது. நடக்க முடியாது என்ன, அந்தப்பக்கம் பாதையே இருந்ததில்லை மறைத்துகட்டப்பட்ட ஆளுயர காம்பவுண்ட் சுவரின் குறுக்கே கோடு காட்டி நின்றது.   தீப்பெட்டிஆபீஸின்பின்புறமாய்புதராய்மண்டிகிடந்தசெடிகளும் சீமைக் கருவேலையுமாய் அமர்ந்து தெரிந்தவற்றை மறைத்து நின்ற காம்பவுண்ட் சுவர்  அந்த இடம் மறைத்து நின்றது உயரமாய்/ வெறும் செங்கல் கட்டுடன் விட்டிருந்தார்கள்.எனது வீட்டு வாசலிருந்து பார்த்தால் முகத்தில் அடித்தாற்போல நீண்டு தெரிகிற சுவரை இடித்த நாள ன்று இரவு தூங்கவில்லை,மீறிப்போய் வம்பாக படுக்கையில் சாய்ந்தாலும் தூக்கம் பிடிக்கவில்லை.கொஞ்ச நேரம் படுக்க,கொஞ்ச நேரம் எழுந்து போய் கேட்டைத் திறந்து வாசலில் அமர்ந்து சுவர் இடக்கப்படுவதைப் பார்க்க என போனதாய் இரவு/ சாய்ங்காலம் ஆறு மணிக்கு அந்தச்சுவரை இடிக்க நான்கு பேர் வந்திருந் தார்கள்.வேலைக்கு அவர்கள் கொண்டு வந்திருந்த சாமான்களைப்போட்டு விட்டு சாப்பிடப்போர்கள். போனவர்கள் போனவர்கள்தான். தட்டு, மண் வெட்டி,கடப்பாரை எல்லாமுமாய் தாங்கி அவர்கள் வந்தார்கள் ஒரு இரண்டு மணி நேரம் கழித்து/ சாமான்களை கொண்டு வரும்போது கசலையாய் வந்தவர்கள் இப்போது குளித்து எண்ணெய் தேய்த்து தலை சீவி புத்துணர்ச்சி பொங்க தெரிந்தார் கள்.   அன்று  இரவு ஒன்பது மணிக்கு வேலையை ஆரம்பித்த அவர்கள் மறுநாள் காலை விடிகிறவரை வேலை செய்தார்கள். சுவர் இருந்த இடத்தில் இப்போது கற்பனையாய் ஒரு கோடு மட்டுமே விழிப் படலங்களில் படர்வதாய்/ இடிக்கப்பட்ட காம்பவுண்ட்ச்சுவரினுள் இருந்த வெற்றிடம் பிளாட்ப் போடப்பட்டு.  பிளாட்போட்ட சிறிது தினங்களில் கட்டப்பட்ட ஒரு வீடும், அதன் அருகாமையாய் இருந்த மற்றொரு வீடுமாய்இப்போது தெரிகிற இந்தப்பாதையை வலிய உண்டாக்கியது போலான ஒரு தோற்றம் தந்ததாய்/ இப்போது என்போன்றோர்கள் சைக்கிள்,இருசக்கரவாகனம் மற்றும் கால் நடையாய் ச்செல்ல அவ்வழியே பெரிதும் உதவுவதாக.இதற்கு முன்பாக ரோட்டைச்சுற்றிசென்ற சங்கடத்தை இவ்வழி தீர்த்து விட்டதாக/  டீசாப்பிட்டுவிட்டுவருகிறேன்வீட்டிற்குள்  நுழைகையில் வழி யெங்குமாய் காண்பித்து வந்த டார்ச் லைட்டை அணைக்க மறந்தவனாய் திரும்பவும் ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்து அமர்கிறேன். அந்த அமர்வு புத்தகம் படிக்கலாமா,கம்யூட்டர் பார்க்கலாமா என  அலை பாய்ந்த மனதுக்குள்ளாய் புத்தகமும் அல்லாமல் கம்யூட்டரும் அல்லாமல் வீட்டின் பக்க வாட்டு வெளியை பெருக்குவது என்கிற முடிவு ஓடோடி வந்து ஒட்டிக்கொள்ளச்செய்து விடுகிறது. காலைச் சாப்பாட்டை முடித்த பொழுது மணி பத்து இருக்கலாம்.இந்நேரம் போனால் கடையும் திறந்திருக்கும், கூட்டமும்  இல்லாமல் இருக்கும் என்கிற நினைவு தலைதூக்கிய போது ஏதோ ஒரு வேலையோ,அல்லது மிதமிஞ்சி ப் போன் சோம்போறித்தனமா தெரியவில்லை போகவில்லை. அப்படியே சாப்பிட்டு விட்டுகுளிக்கஆரம்பித்துவிட்டேன்.   காலைச்சாப்பாடு கொஞ்சம் வேலை,பஜார்ப் பக்கம்  போய்வந்தது. மதியச் சாப்பாடு,அது முடிந்து ஒரு மென் பகல் தூக்கம் என எல்லாம் முடிந்து எழு ந்தமாலையின் 4மணிக்கு,இரண்டு மணிக்கு போய்விட்டுதிரும்பவுமாய் வந் து விட்ட மின்சாரத்தின் துணையுடன் முகம் கழுவி சட்டை அணிந்து கொ ண்டு நான் சென்ற இடம்காலையில் சென்ற அதேடீக்கடையாய்   இருக் கிறது. அப்படியே முடிவெட்டிவிட்டு சென்று விடலாம்.வீட்டிற்குப்போய் திரும்புவ தென்றால் சொம்பேறித்தனம் அல்லது வேறு ஏதாவது தடுத்து விடும். வே ண்டாம். சட்டைப் பையைப் பார்கிறேன்.பணம் இருந்தது. டீக்கடையிலிருந்து சலூன் வாசல் கண் படும் தூரத்திலேயேதான் இருந் தது. நாகர் கோவிலார் காய்கறிக்கடை ,அதன் பக்கத்தில் இருந்த பலசரக்கு க்கடை மற்றும் பூக்கடை,,,,என அடுக்கியிருந்த வரிசையில் சலூன். வாசலில்ஒரு ஜோடி செருப்புக்கிடந்தது. அது சலூன் உரிமையாளர் செருப் பாகத்தான் இருக்க வேண்டும்.மோல்டெட் செருப்பு.150ரூபாய்க்குக்குறை யாமல்இருக்கலாம். பாலவனத்தத்தில்செருப்புத்தைக்கிறகாளியுடன்பேசிக்கொண்டிருந்தபோது எங்கனஅண்ணாச்சி ,லெதர் வெலையெல்லாம் கூடிப்போச்சி,முன்ன மாதிரி வேலையும் இல்ல இப்ப,அதான் போயி வேலைகள ஆர்டர் எடுத்து ட்டுவர்றேன்என்றார்.இதுபூராம்பள்ளிக்கூடபுள்ளைகளோடபைக. கிழிஞ் சது,போனது வந்தது.எல்லாம்கைபாத்துக் குடுக்குறதுக்காக வாங்கீட்டுப் போறேன் என்றார்.   கடையின் வாசலில் செருப்பைப் பார்த்ததும் காளி சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது. சென்ற முறை முடி வெட்டிக் கொண்டி ருக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ”என்ன கடைக்காரரே,நல்லாயில்ல இதுசொன்னா சொன்னபடி நடந்துக்கங்க,அப்பத்தான் நல்லாயிரூக்கும், ஆமாம்” என வண்டியிலிருந்து இறங்காமலேயே பேசியவரிடம் ”இல்லண்ணே,வீட்டுக்காரம் மாவுக்கு ஒடம்பு சரியில்ல, ரெண்டு நாளா கட தெறக்கல,இன்னைக்கு வெள்ளிக் கெழம வேற, தொழில் சுமாராத்தான்நடக்கும்,குடுத்துர்ரேன்கூடிய சீக்கிரம். தொழில் நல்லா ஓடுனா  ஒங்களுக்கு குடுக்காம எங்க போகப் போறேண் ணே”,என வண்டியிலிருந்து இறங்காமல் கெத்தாகபேசியவரிடம்பணிவாக சொன்ன சலூன் கடைக்காரர் அவர் போனதும் சொன்னார்.   “இனிமே செத்தாலும்தவணைக்குவாங்கக்கூடாதுசார்.நானும்ஒரு பெரட்டு பெரட்டீறலாம்ன்னுதான் இவர்கிட்ட கடனுக்கு காசு வாங்குனேன். வார வட்டி சார்.வாங்குன பணத்தோட வட்டியையும் சேத்து வாராவாரம் குடுத் துரணும் கரெக்டா,இல்லாட்டி இப்பிடித்தான் வந்து தெருவுல நின்னு மானத்த வாங்குவாங்க. நாய் பொழப்பா போச்சு சார்.நம்ம பொழப்பு சமய த்துல சீன்னு ஆயிரும் சார்.ஒழுங்கா தொழில் ஓடுனா ஒண்ணும் தெரியாது சார்.கடைக்கு எதுவும் லீவு போட்டுறக்கூடாது.அப்பிடி இருந்தா பொழப்பு நகந்து போறது தெரியாது சார்.இல்லைண்ணா,இப்பிடித்தான்அசிங்கப்பட வேண்டியிருக்கும் சார்.,   ”பையனுக்கு படிப்பு வரல சார். அங்கிட்டு இங்கிட்டுன்னு ஆடி ஓய்ஞ்சி போயி இப்பத்தான் நெலைக்கு வந்துருக்கான் . ஒரு வருசமா,அவனும் குடி கூத்துன்னு ரொம்ப கெட்டு தூந்துபோனான்  சார், இப்பத்தான் கையக்கால  புடிச்சி ஒங்களமாதிரி ரெண்டு பேர விட்டு பேசவுட்டுசம்மதிக்க வச்சிருக்கு சார், கேரளாவுக்கு எங்க வேலைக்கு போறேன்னு ஒதுக்கிட்டான்,சாப்பாடு தங்குறயெடமெல்லாம் அவுங்களே குடுத்துறம்ன்றாங்க.சரின்னு அனுப்பி வச்சிருக்கு,பாப்போம்,அவன்மூலமாவது குடும்பத்துக்கு  ஒரு விடிவு வருமா ன்னு/ இங்கயே இருந்து ஏங்கூட நின்னு தொழில் கத்துக்கடான்னு சொன் னாலும் கேக்குற வழியக் காணோம்.அதுவும் ஒரு வகைக்கு நல்லது தான் சார்.வெளிய போனா பயம் இருக்கும்,தொழில்ல ஒழுக்கம் கெடைக்கும், இதுன்னா தகப்பன் கடைதானேன்னு ஆகிப்போகும்.அப்புறம்பழைய படியும் ஆரம்பிச்சிட்டான்னா நிப்பாட்றதுசெரமம் சார். அங்கிட்டுப் போயி கண்ணுக்குதெரியாம  என்னத்தையோ ரெண்டு பண்ணீட்டாலும் துட்டு சம்பாதிக் கணும்ங்குறஅக்கறைவந்துரும்சார்”.எனநிறையபேசிக் கொண்ட வாறே இருந்தார் முடி வெட்டிய பின்னுமாய்/ நான் தான் நேரமாகிறது என வந்து விட்டேன். அன்றைக்கு அப்புறம் இன்றைக்குத்தான்அவரது கடைக்குச்செல்வபனாக/ வெட்ட, வெட்ட குறைகிறது முடி அது கை மற்றும் கத்திரி, சீப்பு ஆகிய மூன்றின் கூட்டு உழைப்பும் இயக்குபவரது மன நிலையையும் விரைவையும் காட்டி/               6. வாலாட்டம்,,,,,,,,,,,     கருப்பு நிற நாய்க்குட்டியது.வாலாட்டியும் எக்குப்போட்டுமாய் விளையாடிக் கொண்டி ருந்தது பரந்து விரிந்த மண் நிறைந்த பூமியின்  வெற்று மேனி மீது/  இவனும் மனைவியுமாகத்தான் அமர்ந்திருந்தார்கள். பணி முடிந்து விட்ட இரவு வேளை யின்ஓய்வுப்பொழுதது.சாப்பிட்டு முடித்துவிட்ட இரவு 9.30 மணி பொழுதிற்கு வீட்டி னுள்அடைபட்டுக்கிடந்தபுழுக்கம் தாங்காமல் வெளியில் வந்து விட்டிருந்த வேளை.   இளையவள் வீட்டினுள் டீ.வி பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை முறை சொன் னாலும் கேட்க மாட்டேன் என்கிறாள்தான்,படுத்துக்கொண்டே டீ.வி பார்ப்பதை விட மாட்டேன் என்கிறாள்.   பழையசினிமாபாடல்ஒன்றைபி.பி சீனிவாசன் அவர்களும்,சுசிலா அம்மாவுமாய் இழை த்துக்கொண்டிருந்தார்கள்தங்களதுஇனிமையானகுரலால்/இந்தக்காலதலைமுறைக்கு அக்கால பாடல் பிடித்துப்போனது மிகவும் ஆச்சரியமாகவே/   பொதுவாக வே டீவி சேனல்களில் பாடல் நிகழ்ச்சிகளில் 12,13 வயதுடைய சிறுவர், சிறுமியர் கூட பழைய பாட்லை தேர்ந்தெடுத்து நேர்த்தியாகப்பாடுவது ஆச்சரிய மாகவே/  ஊதாக்கலர் புடவை தன் மென்நிறம்காட்டிஅவள்உடல்போர்த்திஅமர்ந்திருந்தது.அதற்கு  மேட்ச்சிங்காய் சட்டை. அவளது வருத்தம் இவ்வளவு பெரிய ஏரியாவில் இன்னும் ஜாக்கெட் தைக்க சரியான ஒரு ஆளில்லை என்பதே/ ஊரில் இருந்த வரை கவலையில்லை. அய்யாக் காளை டெய்லர் இவர்களின் மன நினைவை சட்டையாக உருமாற்றிக்கொடுத்தார். இப்போது திருமணமாகி இங்கு வந்த நாளிலிருந்து ஒழுங்காக சட்டை தைக்கும் டெய்லரை தேடி அலைகிற பிழைப்பாய் போய்விட்டது.அளவெடுத்துதைக்க ஆளில்லை.பழைய சட்டையை வாங்கி அதை புதுத்துணிமேல் வைத்து அப்படியே வெட்டித்தைத்து விடுகிறார்கள் என்பதுவே அவளில் உள்ள மிகப்பெரியமனக்குறையாக/  டவுனிற்குள்ளெல்லாம் போய்வந்துவிட்டாள்சட்டைதைக்க.ஊஹும்எந்தபிரயோஜனமும் இல்லை. ஓன்று சரியாக இருந்தால் மற்றொன்று ஊடம்பில் உட்காராமல் போய்விடுகிறது. வேறு வழியில்லாமல் இங்கேயே தைக்க ஆரம்பித்து விட்டாள்.   ஒரு முழத்திற்கும் குறைவாக அவள் வைத்திருந்த மல்லிகைப்பூ இவன் நாசி துழைத் ததாய்/வாங்குகிற சம்பளத்தை எல்லாம் இப்படி பூவாக தலையில் மாற்றி வைத்து கொண்டால் எப்படி?என்கிற இவனது கேலிப்பேச்சை அவள் பூவாங்குகிறநாட்களில் சந்திப்பதுண்டு.   பூத்துத்தெரிந்த மண்ணின் பரப்பு ஒற்றையாய்தெரியாமல்தன்மேல் விழுந்து படர்ந்து பரவியிருந்த தூசிகளையும்,குப்பைகளையும்,குவிக்கப்பட்டுதெரிந்தமண்குவியல்களையும் காட்சிப்படுத்தியதாய்/ இவைகளுக்குமத்தியில் மண்ணின் மலர்வுக்கும் அதன் தலையசைவிற்குமாய் இடம் கொடுத்து முளைத் திருந்த சீமைக்கருவேலை முட்செடிகள் மற்றும் மற்றுமாய் என காட்சிப் பட்ட அவைகளின் ஊடும்பாவுமாய்ஓடித்திரிந்தும்எக்குப்போட்டும்விளையாடிக்  கொண்டிருந்த அதை  அவர்களது வீட்டின் முன் சற்றே தள்ளிபடுத்திருந்த நாய் ஒன்று கண்டு கண் சிமிட்ட அதன் அருகில் வரவும் இது அதை நோக்கிச் செல்ல வுமான ஒரு நேர்கோட்டு நிகழ்வு அந்த இரவின் தெரு விளக்கு ஒளியில் சட்டென நிகழ்ந்து விடுகிறதாய்/    அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் பூத்துதெரிந்த புது ஏரியா அது.ஆனால் தார் ரோடு போட்டிருந்தார்கள்.அதுஇவரைக்கும் பரவாயில்லை. அமைகிற வார்டு மெம்பரைப் பொறுத்து  தெருவுக்கு சிமிண்ட் ரோடோ,தார் ரோடோ வந்து விடுகிறது. சற்றெ புறமுதுகு காட்டியும் ரோட்டுக்கு வழிவிட்டுமாய் இருபக்கமும் தன் கலர் காட்டி அகலமாயும்,குறுகலாயும் வாசல் திறந்திருந்த வீடுகள்  காட்சிப்பட்ட வீதியில் கடைசியாய் தெரிந்த வீட்டின் மாடிப்படி ஓரத்தில் ஈன்ற குட்டிகளை விட்டுவிட்டு இரை தேடிப்போய்விட்ட தாயின் துனை பிரிந்து வந்த குட்டிகளில் ஒன்றுதான் இப்படி விழிப்படலங்களில் பட்டு விரிகிறதாக.   வெக்கை தாங்காத வேனல் சூட்டின் நாளொன்றின் இரவுப்பொழுதில் எந்நேரம் வந்ததென தெரியவில்லை,சூழ் கொண்ட வயிற்றை சுமந்து கொண்டு இடம் தேடி அலைந்து கடைசியாய்வந்து தஞ்சம் கொண்ட இடம் இதுவாகவே இருக்கிறது. அப்படி வந்தன்று இரவே குட்டிகளை ஈன்றெடுத்திருக்க வேண்டும் போலும்/ அது தெரியாமல் வழக்கம் போலவே அந்த வழியாகநியூஸ் பேப்பர் போட வந்த பையனை தாய் நாய் உண்டு இல்லை என ஆக்கி விட்டது,அன்றிலிருந்து ஒரு வாரம் வரை அவன் பேப்பர் போடவரவில்லை.அவனிடம் பேப்பர் வாங்குபவர்கள் வெளி உலகம் செய்திகளிலிருந்து அன்னியப்பட்டவர்களாய் ஆகிப்போனார்கள் அந்த  நாட்களில் என செய்தி அறிந்த வட்டாரங்கள் கூறிச்சென்றன.   நன்றாகஇருந்தால் 15 அல்லது 20 நாட்கள் வளர்ச்சி இருக்கலாம்.அந்த நாய்க்குட்டி க்கு/ நுனி வாயால் தரையை ஊதி,ஊதி புஸ்புஸ்ஸென்ற காற்றுடனும் பரபரப்பாயும் எதையோ தேடித்தேடித்தின்கிறதாயும் தென்படுகிறது சமயா சமயஙகளில்/  எத்தனை மணி,எத்தனை நேரம் எந்த நாள் என துல்லியமாய் சொல்லி விட முடியவி ல்லை. போன வாரம் என்கிறதாய் நினைவு. தாய் நாய் தான் ஈன்ற குட்டிகளில் இரண்டை காணாமல் இந்த வெற்று வெளி எங்குமாய் ஓடித்திரிந்தது.முள்ச்செடிகள் உடலில் உரவும் உரசிய முட்ச்செடிகள்அதன் உடலைக்கீறி ரத்தம் வழியச்செய்யவுமாய் இருந்த நேரத்திலும் கூட விடாமல் ஓடிக் கொண்டும்,குறைத்துக்கொண்டும் வெட்ட வெளியில் தன்னை ஊன்றியிருந்த வீடுகளின் முன்பாய் நின்றுவாறு. சற்று நேரம் அங்குநின்று குறைக்கிறது. அப்படியேதிரும்பிஓடிப்போய்களைத்து ஓரிடத் தில் நிற்கிறது. அப்புறம் வேறோர் இடம் தேடிப்போய் நின்று குரைக்கிறது,மெல்ல குறைப்பை நிறுத்தி களைத்துப்ப்போய் நிற்கிறது எங்காவது ஓரிடம்தேடிப்போய். மெலிந்து எலும்பு தெரிந்த உடலுடனும், ஒட்டிப்போன வயிறுடனுமாய்/ தெரு முனை திருப்பத்திலிருந்த வலது பக்க வீட்டின் மாடியிலிருந்த பாட்டிக்கு அப்போதுதான் கடைக்குப்போக நேரம் வாய்த்திருக்கிறது போலும்.பெரும்பாலுமாய் காலை வேலையென்றால் ஐந்தரை மணியின் அதிகாலையின் இருள் பிரியா வேளை யிலும் இரவு வேளை என்றால் இப்படித்தான் ஊர் உறங்கப்போகிற பொழுதிலுமாய் கடைக்குப் போய் வருகிறாள்.   மெலிந்துஒட்டியதேகம்அவளதுபுடவையைசுமந்துகொண்டுஇருப்பதேபெரியவிஷயமாக/ சென்ற மாதம்தான் அவளது மகளுக்குதிருமணம்முடிந்திருந்தது.புதுக்கருக்கு குலையாத மணப்ப்பெண்,விருந்துச்சாப்பாடு ,மறு வீடு எல்லாம் முடிந்த பின்பாக பிழைப்பை நிலையூன்ற தாய் வீட்டிற்கே வந்து விட்டாள் கைபிடித்தவனை கூட்டிக் கொண்டு/ வேன்  டிரைவராம் கணவன்.கொஞ்ச வயதுக்காரனாகத்தான் தெரிந்தான். பிள்ளையின் வளர்த்தி கூட இல்லை. கல்யாணத்திற்கு முன்புதீப் பெட்டி ஆபீஸ் சம்பளம் என இருந்தவள் கல்யாணத்திற்குப் பின்பாய் தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப்போவதை நிறுத்தி விட்டாள்.   தாயும் மகளும் ஏதேனும் முடிவு எடுத்து இருப்பர்களோ என்னவோ தெரியவில்லை. போட்டி போட்டுக்கொண்டு உடல் மெலிந்து தெரிந்தார்கள்,அம்மையும், புள்ளையும் இப்பிடியே இருந்தாப்ல ஒங்க ரெண்டு பேரயும் பாத்து கௌவர்மெண்டு அரிசி வெலைய கொறச்சுப்புடுமா என்ன?நல்லா சாப்புட்டு நல்லா இருங்க,,,, சொல்லாதா ஆளில்லை கேலியாகவும்,உரிமையுடனுமாய்.அதற்கெல்லாம் பதிலாக பாட்டியின் வாய் அகன்ற சிரிப்பொன்றே இருந்திருக்கிறது/   ரொம்பவும்எளிமையானவள்தான்பாட்டியின்மகள்.அவள் தலையில் அன்றாடம் வைக் கிற பூவைக்கூட அவள் காசு கொடுத்து வாங்குவதில்லை.பக்கத்து வீட்டு கொல் லையில் பூத்து நிற்கிற மஞ்சள் அரளிப்பூவே அவளது தலையை அலங்கரித்தி ருக்கிறது அன்றாடம். அவளது வயதுப் பிள்ளைகள்தீப்பெட்டிஆபீஸில்சம்பளம்வாங்கிய நாளன்றில் கவரிங் கடையை முற்றுகை இடும் போது அவள் பலசரக்குக்கடை பாக்கியை கொடுத்துக் கொண்டிருப்பளாக/ பாராட்டி சீராட்டி வளர்த்த தன் பிள்ளைக்கு  இப்படி வயது பிராயத்தில் கூட நல்ல தனமாய் உடுத்த,கொள்ள கொடுத்து வைக்கவில்லை என பாட்டி இவனிடம்  சொல்லி வருத்தப்படாத நாள் மிகவும் கம்மி.அப்படியெல்லாம் நிலை கொண்டிருந்த வருத்தம் பாட்டியிடம் இப்பொழுது இல்லை.   தாயும் பிள்ளையுமாய் வீடு பார்ப்பதில் மும்பரமாய் இருந்தார்கள்.MPCC நகரில் ஒரு வீடு இருப்பதாகவும் வாடகையில் 100 ஐக்குறைத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்து விட்டால் அடுத்து வருகிற நல்ல நாளாய்ப்பார்த்து பால் காய்ச்சி குடி போய் விடலாம் என்கிறாள் பாட்டி/ எதைத்தின்றதுஎனத்தெரியவில்லை.வாந்திஎடுக்கிறது.நாய்,மனைவிதான்சொன்னா ள்  நான்கு நாட்களுக்கு முன்பாய்  குட்டிகளை தூக்கிப்போக வந்திருந்த சிறுவர்கள் இரண்டு பேர் எல்லாம் பொட்டக்குட்டிகளா இருக்குடா,வேண்டாண்டாஎனச்சொன்னார்களாம். ஆனாலும் ஈன்ற நான்கில் இரண்டை பறிகொடுத்துவிட்டு இரண்டை மட்டு மே தக்கவைத்துகொண்டு/ அந்த  இரண்டில் கரு நிறம் காட்டுகிற குட்டிதான்வெளி அளந்து திரிகிறதாய்.இவன் கூட சொன்னான் மனைவியிடம்.வீட்டில் ஏதாவது சாப்பாடு இருந்தால் எடுத்து வை என/இல்லைவேண்டாம்,பிஸ்கட் தவிர எது போட்டாலும் திங்க மாட்டேன் என்கிறது. அதுனாலதான் போடல.தவிர இப்பிடியெல்லாம் போட்டுப்பழக வேணாம்.அப்புறம் இங்கேயே தங்கீரும், முடக்கமாயிரும் என்றாள்.அவன் மனைவி சொன்னது நாய்க்குட்டிக் கு கேட்டிருக்குமோ என்னவோ தெரியவில்லை.மேல் நோக்கி மடங்காத வாலுடன் தரையில் கிடந்த பழந்துணி ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு பெரிய நாயுடன் எக்குப் போட்டுகொண்டும், அதைச்சுற்றி வாலாட்டிக்கொண்டுமாய்/   7.  வெள்ளக்கட்டி,,,,,,,,,     எங்குமே காணக்கிடைக்கிறதுதான் காசியப்பன் கடைகள்.காசியப்பன்கடைஎன்றால் எங்களூரில் மிகவும் பேமஸ்.பிறக்கப்போகிற குழந்தை தவிர அனைவருமாய்  அறிந்த கடை.   காசும்,பணமுமாய்கைகோர்த்துஉறவாடிக்கொள்ளாதகாலங்கள்அது.இப்போதிலிருந்து ஒரு நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி வைத்துக்கொள்ளலாம். கட்டளையிட்டது போல காலங்களில் வானம் அவிழ்ந்து பெய்கிற மழையும்,கோடையில் அடிக்கிற வெயிலும் ஆடியில் தேடி விதைக்கிற பட்டங்களும் நிறை கண்மாய்த்தண்ணீரும் மடை வாய்க்காலில் நிறைந்த நீரும் வயல் நிறைந்து பயிர்களுமாய் செழித்திருந்த காலமது.   களையினூடே பயிரும், பயிருனூடே களைகளுமாய் கறுப்பு முடிகளுக்கு மத்தியிலி ருக்கிற வெள்ளை முடியாயும்,வெள்ளை முடிகளை தூக்கிக்கொண்டு தெரிகிற கறுப்பு முடியாகவும் காட்சிப்படும்.   உயர்ந்து நிற்கிற கண்மாய்க்கரை மேட்டில் செல்கிற கருநிறம் பூசிய தன் இரண்டு ஓரங்களில் வலப்புறம் கண்மாயையும்,இடப்புறம்  வயல் வெளியையுமாய் காட்சிப் படுத்திய ஊரது.   கண்மாயில் அலையடிக்கிற நீர் மீதும்,வயல்களில் தலையசைக்கிற பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் மீதும் தழுவிப்படர்கிற காற்றாய் உறவு பூத்த நெஞ்சங்களும், நட்பு கொண்ட உள்ளங்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நன் மதிப்பு கொண்டும், உள்ளச்சுத்தியோடுமாய் வாழ்ந்து வந்த காலங்கள் அவை,எதைப்போட்டாலும் முளைக்கிறமண்ணாய்காட்சிப்பட்டஅதுஅவர்களது உழைப்பையும், வியர்வையையும், தன் ஈரம் காயா உடல் மீது அப்பியிருந்தது/   கணக்கும்,வழக்கும் காசும்,பணமும் இருக்கட்டும் உங்களோடு. உழைப்பும், வியர்வை யும் அதன் உன்னதமும்,இருக்கட்டும் எங்களோடு என போகத்திற்கு ஒரு முறை விளைகிற விளைச்சலை கமிஷன் கடையில் விற்று விட்டு காசும் பணமுமாய் வாங்கி வந்து வைத்திருக்கிற பணத்திற்கு சரியாக கனக்குக்கூட  பார்க்கத்தெரியாமல் குத்து மதிப்பாய் செலவளித்து வாழ்ந்து தெரிந்த வெள்ளந்தி மனிதர்கள் குடிகொண்டிருந்த பூமியுமாய்.   கலர்க்கலராய் கொம்புகளில் அடித்த பெய்ண்ட் உதிர்ந்திருக்க தன் உயரம் காட்டிச் செல்லும் காளை மாடுகள்,கொஞ்சமாயும் அப்புராணியாயும் செல்லும் பசு மாடுகள். கூட்டம்,கூட்டமாய் தன் தினவுகாட்டிச் செல்கிற எருமைகள், உடலில் வளர்ந்து கிடக் கிற ரோமத்தின் அடர்த்தி காட்டிய படி நடமிடும்ஆடுகள்.வீதிகளெங்கும் நிறைந்து வீசுகிற வாசனையும்,காணக்கிடைக்கிற காட்சிகளும்   வீதிகளில் நிறைந்து கிடக்கிற சாணத்தையும்கொமியத்தையும்,ஆட்டுப் புழுக்கைகளையும்,தரையில் உதிர்ந்து கிடக்கிற கோழி இறகுகளையும் ,எச்சங்களையும் நிறைந்துகாட்சிப்படுத்தியவாறும்   பூத்தும்,சிரித்துமாய்/   அதிகாலை4.30திற்கெல்லாம் விழித்துக்கொண்டு விடுகிற டீக்கடைகள் அந்நேரமே கையில் டீக்கிளாஸீடன்  மனிதர்களை அறிமுகம் செய்யும்.அந்நேரமே ஊரின் துவக்க த்தை பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைக்கிறவர்களாக அவர்களே ஆகித் தெரிகிறார்கள்.ஊர் மந்தையில் சின்னதாய் ஒரு குடிசைதாங்கி காட்சி தருகிற அந்த இரண்டு டீக்கடைகள்தான் ஊரின் தேநீர் விரும்பிகளுக்கு தாக சாந்தி அளிப்பதாக. மத்தியான வெயிலில் டீக்குடிகிற டீஆர்வலர்களை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கிற அந்த இரு கடைகளில் ஒரு கடைமதியம் ஒருமணிக்குமாய், இன்னொரு கடைசற்றேபிந்தியுமாய்மூடப்படுகிறஅதிசயம்இங்கே அன்றாடங்களில்/ ஒரு மணி நேரம் முன்னப்பின்ன என்கிற சொல்லாடலுக்கு உட்பட்டு/   சொல்லாடல் சரிதான்.கடை மூடுவது சொல்படியா அல்லது முன்னப்பின்னவா என்கிறதெல்லாம் காசிநாதன் அகராதியில் வந்திருக்கவில்லை.   24 நான்கு நேர டீக்கடை அது.இப்போது பலசரக்குக்கடை வைத்திருக்கிற இடத்தில் முன்பு டீக்கடை தான் வைத்டிருந்தார்.டீ,வடை மொச்சை என்கிற ஜபர்தஸ்தான ஏற்பாடுடன்/ தூங்குகிற நேரம் தவிர்த்து அவரிடம் வந்து டீக்குடிக்க ஆள் இருக்கத் தான் செய்தார்கள்.காலை எழுந்து வருகிறவர்கள் முதல் மாலை வேலைக்கு சென்று திரும்பி வருகிறவர்கள்,இரவு வீட்டில் மனைவி மக்களுடன் சண்டை போட்டு விட்டு மனதில் மல்லுக்கட்டு நிரம்ப வந்து கடித்துக்குடிக்கிற டீயும்,உடைத்துச்சாப்புடுகிற வடையும்எனசாப்பிடுபவர்களுக்காய்இரவு ஒன்பது மணிவரை கடை திறந்திருக்கும். டீ வாங்கலையோ,டீ,,,,,,என குரல் கொடுக்க மறந்து போகிற காசிநாதனை ஞாபகப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள் இரவு 9 மணிவரை டீக்குடிக்க வருகிற ஆட்கள்.   அவ்வாறாய் வந்து  போகிற கடைசி டீத் துளியின்மனிதர்கள் தருகிற காசின்அல்லது சொல்லிச் செல்கிறகடனின் அடையாளங்களுடன் அணைக்கப்படுகிற அடுப்பு எந்நேரமும்பால்ச்சட்டி சுமந்தே/   அடுப்பை சுத்தம் செய்கிற அவரது கவலையெல்லாம் நெருப்புக்கு விறகு செலவாகிப் போகும், இல்லையென்றால் அடுப்பில் எந்நேரமும் சட்டியை ஏற்றி வைத்துக் கொண் டே இருக்கலாம் என்பதே/   பாலுக்கென ஒன்று,தண்ணீருக்கென பிறிதொன்று என இரண்டாய் காணப்படுகிற சின்னதேக்சா அலவிலான ஈயச்சட்டிகள் அடுப்பில் காய்ந்து கொண்டே/அப்படி காய்ந்து கொண்டிக்கிற சட்டிகள் ஒன்றில் இரு நாளின் இரவுப் பொழுதில் காலியாய் எரியாத அடிப்பில் ஏறி வைக்கப்பட்டிருந்த சட்டியில் இறந்த பூனை ஒன்று யாருக் கும் தெரியாமல் ரகசியமாக விழுந்து விட்டது என்கிறார்கள்.   உயரம் காட்டி நின்ற அடுப்பாதலால் விழுந்த பூனையை கவனிக்காமல் மறுநாள் அந்தப் பாத்திரத்தில் அப்படியே தண்ணீர்  ஏற்றி டீப்போட்டு விட்டார் என்கிறது தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்லிச் செல்கிறதாய் ஒரு பேச்சு இருந்தது ஊருக் குள்/அப்படியெல்லாம் காசிநாதன் போட்ட டீ திக்காக இருந்ததற்குப்பதிலாய் ஒரு மாதிரிகிக்காய்இருந்தது.அந்த கிக் அனைவரிடமுமாய் குடிகொண்டிருந்த நேரங்களி ல்தான்  கட்டுபடியாகவில்லைஅவசர அவசரமாய் டீக்கடையை மூடி விட்டு பலசரக் குக் கடையை ஆரம்பித்தார்.   சரி பலசக்குக்கடைக்கு எதற்கு வண்டி மாடெல்லாம் என அவர் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்போது போல் அப்போதெல்லாம் முக்குக்கு மூணு கடைகள் கிடையாது,அல்லது நினைத்த நேரம் நினைத்த மாத்திரம் பக்கத்து நகரம் சென்று இருசக்கரவாகனத்தில் சரக்கு வாங்கி வருகிறபழக்கங்கள்முளைத்துக் காணப்பட்ட தில்லை.   அப்படியிருந்த காலத்தில் காசிநாதன் கடை தேடி பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் சரக்கு வாங்க ஆட்கள் வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.   அப்படி நிலைகொண்டிருந்த கடை மிகவும் சின்னதாகவும் அல்லாமல் பெரியதாக வும் அல்லாமல் நிலை கொண்டு காட்சி அளித்ததாய்/   ஆனால் அந்தமாட்டு   வண்டி இருக்கிறதே அவரது கையில் படுகிற பாடு சொல்லி மாளாது.  தினசரி வேலை இருக்கிறதோ இல்லையோ வண்டியை பூட்டிகொண்டு கிளம்பி விடுவார் டவுன் நோக்கி/ஒற்றை மாட்டு வண்டு கூட்டு வண்டிசைஸில் சின்னதாய் காட்சிப்பட்ட சென்ற பயணம்  நேர்கொண்ட பயணமா அல்லது சீரற்றதா எனவெல்லாம் சொல்ல இயலாது.   மார்க்கெட்,காய்கறி,மாம்பழப்பேட்டை,மாம்பழங்கள்,இதர,இதரவென அள்ளி வருவார். அப்படி அள்ளிவருகிறவைகளில் அரிசிபருப்பும் அடங்கும் சமயங்களில்/இவர் என்ன கடையில் போய் வாங்குவார சரக்குகளை அல்லது சூரை போடும் போது அள்ளி எடுத்து வந்துவிடுவாரா  என பேசிக் கொள்ளாதவர்கள் இல்லை  ஊருக்குள்/   பத்துபைசாவிற்குப்புளி,நாலணாவிற்குபொரிகடலை,பத்துபைசாவிற்குதேங்காய்ச்சில் ஒரு ரூபாய்க்குநல்லெண்ணை,,,,,,,,,,,,,,,,எனதருகிறஅதிசயம்அவரதுகடையில் நடக்கிற போது இந்தப்பேச்செல்லாம் அழுங்கிப்போகும் தன்னாலே/   ஊரே நின்று ஒட்டு மொத்தமாய் சரக்கு வாங்கினாலும் கூட அவரிடமும், அவரது மனைவியிடமும் இருக்கிற நிதானம் அவரது கடைக்கு அடையாளமாய்/ தபால் பை டரவுசரும்,தோள்ப்பட்டையோரம் கிழிந்த சட்டையும், புத்தகங்கள் சுமந்த மஞ்சள் பையுமாய் பள்ளி முடிந்தவுடன் வசதியாய் இருக்கிற நாங்கள் (அப்பொழுதெ ல்லாம் கையில் ஐந்து பைசாவிற்கு மேல் வைத்திருந்தால் வசதி மிக்கவர்கள்)  நேராகச்செல்வது காசிநாதன் கடைக்கே/கடைக்குச்சென்ற பெரும்பாலானவர்களின் வாக்கு பொரிகடலைப்பக்கமாகவே இருக்கும்.கைநிறைய வைத்துச்சாப்புடுகிற அள விற்கு நிறைந்து தெரிகிற பண்டம் ஆதுதானே?ஆதலாலே பிடிக்காவிட்டாலும் கூட அது அனைவரினது பிடித்த தின்பண்டங்களின் லிஸ்ட்டில் காணப்பட்டதுண்டு.   எங்களுக்குமட்டும்எனஇல்லை.பெம்பாலனவர்களின்தின்பண்டம்அதுவாகவேஇருக்கும். வடக்குத் தெருவின் வாசலை ஒட்டி இடது புறசந்தில் இரண்டாவதாய் காணப் பட்ட கட்டிடமாய்/   கடைக்கு என ஏது அப்பொழுதெல்லாம் தனியாக கட்டிடங்கள்.அதுவும் கிராமத்தில்/ அந்த வகையில் வீடே கடையாய் காட்சிப்பட்டுத்தெரிந்தது.சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களும்,வெள்ளை மங்கி பழுப்புகாட்டி கரை படிந்த சுவர்களுமாய் அழுக்குப் பிடித்த கட்டிடமாயும் காட்சிதரும். உப்பிலிருந்து காய்கறிவரை எல்லாமுமாய் அடைபட்டு காணக்கிடைகிற கடையில் என ஒரு பெரிய வம்பென்றால் எந்தப்பொருள் எங்கிருக்கிறது எனத்தெரியாதபடி எல்லாவற்றின் மீதும் எல்லாமும் கிடக்கும்.உப்பு மீது துவரம் பருப்பும்,பருப்பு மீது அரிசியும்,அரிசி மீது காய்கறிகளும் கறிவேப்பிலையும் எண்ணெய் டின்னின் மீது வெல்லக்கட்டிகளும், வெல்லக்கட்டிகளின் பக்கத்தில் சேவு டின்னும்,அதனருகில் சீவல் வைத்திருக்கிற கொட்டானுமாய் அதிலும்,இதிலும் என மாறி,மாறி கிடக்கும்/   கடையின் வாசலிருந்த உப்பு மூட்டையின் அடியிலிருந்து தண்ணீராய் கசிந்து ஒழுகும்.வாசலோரத்தில் கடைமுன்பாகதரையில்கசிந்து ஓடுகிறஉப்புத்தண்ணீரைக் கடக்க படகெல்லாம் தேவையிருக்காது.   அழுக்கடைந்து போயிருக்கிற அந்தக்கடை இருட்டடைந்து போயுமாய்.மின்சார வசதியில்லாத வீடு,கடை வாசலிருக்கிற உப்பு மூட்டையை தாண்டி கடைக்குள் பிரவேசிக்கையில்  ஒன்றின் மீது ஒன்றாய் சிதறி காட்சிப்பட்ட சரக்குகள் தரையிலும் சிந்திக் காணப்படுவதாக/   காசிநாதனும் அவரது மனைவியுமாய் அடைபட்டுதெரிகிற கடையில் இருக்கிற பலசரக்கின் நிறங்கள் அவர்களது உடலில் ஒட்டிக்கொண்டதா அல்லது இவர்களது நிறம் பலசரக்கில் பாய்ந்து போனதா எனதெரியாத அளவிற்கு இருப்பார்கள் அவர்களிருவருமாய்/ ஊரில் கூட சிலர் கேலியாக பேசிக்கொள்வதுண்டு. ”ஊர்பஞ்சாயத்தக் கூட்டி மொதல்ல அவுங்க ரெண்டு பேரையும் சுத்தமா குளிக்கச் சொல்லிச் சொல்லணும்”என/   அம்மாதிரியாய் காட்சிப்பட்டுத்தெரிந்தவர்கள் உடையிலும், கூடவா அப்படித் தெரிய வேண்டும்?எங்கும் காணக்கிடைப்பதாகவே காசியப்பன் கடைகள்/                       8. ரெடி ஸ்டார்ட்,,,,,,,,     டீக்கடைக்காரர்தான்சொன்னார்.இவ்வளவுஅவசரப்படவேண்டாம்.சிறிதுநேரம்நிற்கட் டும்.அப்புறமாய் எடுங்கள்,எடுக்கும் என்றார்.   சரி அதற்குள்ளாக ஒரு டீ சாப்பிட்டு விடலாம் சொன்னவரின் கடையிலேயே என்கிற யுக்தியும் யோசனையும் மேலிட ஒரு டீயை சாப்புடுகிறவனாகிப்போகிறான்.   போஸ்ட்ஆபீஸ் தாண்டிய படேகர் ரோட்டின் வாசல் அது.பிஸியான சாலை என சொல்ல முடியாவிட்டாலும் அது அற்றுமாய் இருக்கிற சாலை என்கிற அடையாளக் குறிக்குள் தன்னை காட்சிப்படுத்திகொள்கிற சாலையாய்/   மல்லாங்கிணறிலிருந்துபாண்டியன் நகர்வழியாக தனதுநீளம் காட்டி விரைந்து வருகிற சாலையது. கருப்பாய் தன் நிறம் காட்டி ஒரு பெரிய மலைப்பாம்பின் நகர்வுடன் தன் இருப்பைக் காட்டிக்கொள்கிற ஒன்றாய் பாண்டியன் நகர் தாண்டி போஸ்ட் ஆபீஸ் வந்ததும் மேலும் நேரே போகும் எண்ணமற்று இடது புறமாய் வளைந்து நகர் நோக்கிச் செல்கிறதாய்/   ஒன்றல்ல,இரண்டல்ல நூற்றுக்கணக்கிலான வாகனங்களையும் மனிதர்களையும் தன் மாரிலேந்தி அன்றாடம் கடக்க வைக்கிற வித்தையை செய்து முடிக்கிற வேலையில் இருக்கிறசாலைஅப்படியேநேர் முகம் காட்ட மனமில்லாமல் ஏதோ இளங்காதலனிடம் பொய்க்கோபம் காட்டி முகம் திருப்பிக் கொள்கிற காதலியைப்போல வலது புறம் நோக்கி திரும்பி கோபம் காட்டாமல் நகர் நோக்கிச் செல்கிறதாய்/   அப்படியெல்லாம் ஓட்டம் காட்டுகிற அந்த சாலையைத் தாண்டியதுமாய் விரிகிற பட்டேல் ரோட்டின் வாயிலில்தான் இந்த சொல் விரிவும் பதிவும்நடந்தததாய் /   மஞ்சுளா டாக்டரின் வீட்டிற்கு எதிராய் முளைத்திருந்த திடீர் டீக்கடை  அது,கடந்து போனமாதம் வரை கண்ணில் படாத கடை  இப்போது எப்படி?,,,,   ஒரு வேளை  திருச்செல்வமதி மில் வேலையாட்களை வைத்து வியாபாரம் நடக்கலாம் என்கிற உத்தேசத்தில் கடையைஊணியிருக்கலாம்.இனி அதன் வியாபார அளவைப் பொறுத்து  கடையின் வேர் கீழ்வரை இறங்கிச்செல்லும்.   நகராட்சியின் ஆக்ரமிப்பு அகற்றலோ அல்லது நெடுஞ்சாலைத்துறையின் ஆக்ரமிப்பு அகற்றலோ தெரியவில்லை.அங்கு வரிசையாக இருந்த கடைகளை அகற்றிய பின் ரொம்ப நாள்கழித்து போடப்பட்டிருந்த கடையாய் இது.அதுவரை கடைகளில்லாமல் மில் வேலைக்காரர்கள் மிகவும்தான் திண்டாடிபோனார்கள்.   இப்போதென்ன ஒரு காலத்தில் திருச்செல்வன் மில்லின்  ஒரு சிஷ்ப்ட்டிற்கு வருகிற வேலையாட்களின் எண்ணிக்கை 30 பேருக்குக்குறையாமல் இருக்கும்,மூன்று சிஷ்ப்ட்.. மும்மூனா9என90பேர்வரைதன்னில்அடைகாத்துவைத்துஓடிக்கொண்டிருந்தஸ்பின்னி ங் மில்/     ஒருஊதாக்கலர்சேம்ப், ஒருடேப்ரிக்கார்டர்இப்படித்தான்அடையாளப்பட்டார்கள் அந்த  மில்லில்வேலை பார்த்தவர்கள்.இவர்கள்தான் இன்னார் என.   வரிசையாய் நின்ற கடைகள் நான்கு நன்றாகஓடிய முன் பனிக்கால இரவுகளிலும்,அது அற்ற நாட்களிலுமாய் நான்கில் ஒன்றில் மட்டுமே கணக்கு வைத்து வாரம் தவறாமல் பணம் கொடுத்து விடுகிற வேலையாட்களும்,வஞ்சகமற்று நான்கிலுமாய் கணக்கு வைத்து வாரக்கடைசி சம்பளதன்று உழப்பித்திரிகிறவர்களையும் தன்னகத்தே வைத்து சுமந்து திரிந்த கடைகளாய் காட்சிப்பட்ட அவைகள் வெறும் டீக்கடைகளாக மட்டும்  இல்லை. அரிசிமாவும், உளுந்தமாவும் அரைச்சிசுட்ட தோசையும் இட்லியும் மொச்சையும், வடைகளும் காட்சிபட்ட கடைகளாயும் மில் வேலைக்காரர்களின் பொழுது போக்கு இடமாயும்/   90பேரில்60,70பேர்வரைஒரேயூனியல்இருந்தநேரம்ஓடிய மில்லின் ஒட்டமும், வேலைக் காரர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும்,போனஸீம்,இன்னும் பிற பிறவான ஊக்கத் தொகைகளும் யூனியன்பிரிந்து இரண்டு,மூன்றாய்போன பின்பாக இல்லாமல் போனது, மில் நிர்வாகமும் ஆலை நட்டம் என ஆட்களைக் குறைத்தது.   கேட்டுப்போனபோது அப்படித்தான் செய்வோம் என்கிற பதில்நிர்வாகதரப்பிலிருந்து வர முனைப்பான யூனியன் ஸ்டரைக்கில் இறங்கிவிட அதன் எதிர் யூனியன்ஆட்கள்  நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் வேலைக்குச் சென்றார்கள்.  பின் என்ன ஸ்டரைக் அர்த்தமற்றுப்போனது.   இவைகளை காட்சிப் பொருளாயும், செய்ய ஏதுமற்றவர்களாயும் பார்த்துக் கொண்டிரு ந்த கடைக்காரர்களின்  குறைந்து போன வியாபாரம் போலவே மில்லிலும் வேலையாட் கள் குறைக்கப்பட்டு  இப்போது மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வேலையாட்களாக அந்த மில்லில் தன்னை தக்க வைத்துக் கொண்டும்,புதுப்பித்துக்கொண்டுமாய்/   ஆனால் ஆக்ரமிப்பில் அகற்றப்பட்ட  டீக்கடைகள் திரும்பவுமாய் தன்னை புதுப்பிக்க மறந்து போனதாய் அல்லது மறுத்ததாய்  என ஏதோ ஒன்று நடை பெற்றுப்போனதொரு நாட்களின் நகர்வுகளில் தான் மஞ்சுளா டாக்டர் அங்கு வீடு கட்டி குடிவருகிறார்   .மில் குவார்ட்டர்ஸின் அடுத்த சுவராய் இருந்த மஞ்சுளா டாக்டரின் வீடு சற்றே பெரிதாகவே அவர்களது மனம் போல/   குடல் இறக்க ஆபரேசன் பண்ணவேண்டும், என  வேறொறு டாக்டரிடம் போய் நின்ற போது அவர் அம்புக்குறியிட்ட இடம் மஞ்சுளா டாக்டரின் கிளினிக்காகவே இருந்தது. அவர் கொடுத்த தைரியமும், அவரது நம்பிக்கைவார்த்தைகளுமே அவனை உடனே குடலிறக்க ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைத்தது. 20ஆயிரங்களில் நின்றவர் ஆபரேஷன் முடிந்ததும் பதினைந்து போதும் என எல்லை கோடு கீச்சினார்.   சந்தோசமும் ,சங்கோஜமாய் அவன் பணம் கொடுத்த நாட்களிலிருந்து இன்றுவரை அவரிடம் இருக்கிற மரியாதை இன்னும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைய வில்லை.   மஞ்சுளா டாக்டர் குடிகொண்டிருக்கிற வீட்டைத்தாண்டி செல்கிற போதெல்லாம் அவனது நினைவு இதுவாகத்தானிருந்திருக்கிறது.   அந்த சாலை வழியே அப்படியே நூல்ப்பிடித்துச் சென்றால் ரயில்வே ஸ்டேஷனுக்கும், அப்படியே நகர் நோக்கியுமாய் சென்று விடலாம்.இடையில் வருகிற வேர் ஹவுஸ் கோடவுன்  எப்போதும் லாரிகளால் நிரப்பட்டு/   மாதத்தின் பாதிநாட்களில் அந்த சாலை லாரிகளிக்கு மட்டுமே சொந்தமாகிப் போகிறதாய். வடக்கத்தி காரர்களிலிருந்து,தெற்கத்திக்காரர்கள் வரை அங்கு ட்ரைவர் கிளீனர்களாக தென்படுவார்கள்/   அப்படி தென்பட்ட ஒரு நாளில் பட்டேல் ரோட்டின் வாசலில் சிலதப்படிகளே சென்ற அவனது இருசக்கர வாகனம் மிகச்சரியாக டீக்கடை முன்பாய் நின்று போகிறது.   அப்போது டீக்கடைக்காரர் சொன்ன வார்த்தைகளே மேற்ச்சொன்னதாய் பதிவாகிப் போக அவனும் அவர் சொன்ன ஒரு வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்தும்,அவரது கடையில் ஒரு டீயைக்குடித்து விட்டுமாய் பின் தனது இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்கிறான்.அவன் குடித்த டீக்கு வண்டியும் ஸ்டார்ட் ஆகிறது           9. எழுதிச்சென்ற பக்கம்,,,,,,   மிகச்சரியாக மூன்றுதான்,ஒன்று கூடி நான்கோ அல்லது ஒன்று குறைந்து இரண் டோ அல்ல.   உருட்டபட்டு வட்ட வடிவில் தேய்க்கப்பட்டிருந்த பூரிமாவின் வடிவுகள் அவை.வட்ட வடிவில் யாரோ ஒரு கை தேர்ந்த ஒவியன் வரைந்தெடுத்த ஓவியம் போல காணபட்ட அவைகள் அலுமினிய தேக்சா மூடியின் மீது பரப்பியும்,ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டுமாய்/   அப்படிகூட்டுறவாய்அமர்ந்திருந்தஅவைகளைதனது வலது கையால் எடுத்து இடது கையில் வைத்துக் கொள்கிறார்.வலது கையால் கொதிக்கிற எண்ணெய்யில் வெந்து கொண்டிருக்கிற பொன் நிறம் காட்டிய பூரிகளை கையகலம் கொண்ட கண் கரண்டியால் அரித்தெடுக்கிறார்.   ”என் கண்ணில் எண்ணெய் வழிந்தால்”என இறங்கிச்சொட்டுகிற எண்ணெய் ஒழுக லுடனும் தன் கையில் தாங்கிக்காட்டிய பூரிகள் மூன்றுடனுமாய்இருந்தஅவைகளை கரண்டியுடன் சட்டியின் விளிம்பில் தாங்கு கொடுத்து அப்படியே உட்கார வைத்து விட்டு இடது கையில் இருந்த வட்ட வடிவ பூரியின் வடிவை வலது கைக்கு மாற்றி  எண்ணெய் கொதிக்கும் சட்டியுனுள் வீசுகிறார்.   ஒருகிலோமீட்டர் அகலத்திற்கோ,அல்லது கால் பர்லாங்கின் சுற்றளவிற்கோ தன்னை  காட்டிக் கொள்ளவில்லை சட்டி.சின்னதாய் கைக்கு அடக்கமான சட்டிதான் அது. அதில்தான் இத்தனையும் செய்கிறார் அவர்.   ஒரேசீராக எரியும் ஸ்டவ்வின் மீது அகல விரிந்த தீ ஜ்வாலையின் மீது அமர்ந்திருந்த அந்த இரும்புச்சட்டி அதனுள் ஊற்றப்பட்டிருந்த அரைச்சட்டியின் அளவேயான எண்ணெயையும் அதில் வெந்து கொண்டிருக்கிற பூரிகளையும் சுடப்படுவதற்காய் வீசப்படுகிற பூரிமாவின் வட்ட வடிவங்களையும் உள்வாங்கிக்கொண்டுமாய் காட்சி  யளிக்கிறது. அப்படி இருந்த இரும்புச் சட்டிசற்றே கரிப்பிடித்தும்,தன்கருநிறம்காட்டியுமாய்/   தண்ணீர்ஊற்றிபிசையப்பட்டமாவை உருண்டைகளாய்உருட்டிஅதை வட்ட வடிவில் தேய்த் தெடுத்துஎண்ணெய் கொதிக்கிற சட்டியில் சுட்டெடுக்கிறவரின் வேலை அன்றாடம் அதுவாகத்தான் இருக்கிறது.   சற்றே பொன் நிறமாயும் வெள்ளையாயும் கலர் காட்டி வட்டவடிவில் சுட்டெடுக்கப் படுகிற பூரிகள் சட்னி சாம்பார் , மற்றும் உருளைக் கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கப்படுகிறது பார்சலாகவோ அல்லது கடையில்அமர்ந்துசாப்பிடுபவர்களுக்கோ/   திருப்பதிகடையில்எப்போதுமேஇந்நேரம்ரெடியாகஇருக்கும்.என்னவெனதெரியவில்லை.இன்னும் ரெடியாகவில்லை.ஆரம்பத்தில்சைக்கிள்க்கடை வைத்திருந்தவர். கடை நடத்தி கட்டுபடி ஆகவில்லையா  அல்லது முடியவில்லையா,இல்லை சமாளிப்பது கடினமாக இருந்ததா தெரியவில்லை. கேட்டதில் வம்பு போலீஸ் கேஸ் என நிறைய வருவதாய்ச்சொன்னார்.   நன்றாக கடை நடந்து கொண்டிருந்ததாய் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த ஓரு நாளின் இரவு சைக்கிள்களை கைமாற்றி விட்டு ஒரு வாரத்திலேயே கடை இருந்த இடத்தை விரிவு செய்தும்,செமன் செய்தும் ஓட்டல் ஆக்கிவிட்டார்.   நன்றாகத்தான்ஓடிக்கொண்டிருந்தது,இப்பொழுதுவரை நன்றாகத்தான் ஓடிக்கொண் டும் இருக்கிறது. என்ன செய்ய பாலாய்ப்போன போதைப்பழக்கம் ஆளையே உருமா ற்றிப் போட்டு விடுகிறதுதே/   இரவு மணி பத்தைத்தொட்டு விடக்கூடாது . ஒயின் ஷாப் பக்கம் நகன்று விடுகிறார், எத்தனைக்கூட்டம் கடையில் இருந்த போதும்.   முதலில் இரவில் கடைக்கு வருபவர்கள் யாராவது வற்புறுத்தினால் மட்டுமே குடித் தவர் இப்போதெல்லாம் பகலில்கூட,,,,/   போதையில் சிவந்திருக்கிற கண்களுடன் அவர் வணக்கம் சொல்லி மரியாதை தெரிவிக்கிறதை அவர் மேல் நல்ல மதிப்பு வைத்திருந்தவர்கள்கூடவிரும்பவில்லை. கடைக்கு வருவதைத் தவிர்க்கவும் திருப்பதியை  பார்பபதை தள்ளிப்போடவுமாய் விரும்பினார்கள். இப்படி இருந்த நேரத்தில் அவனைப் பார்த்தால்நல்லமரியாதையுடன் பேசும் திருப்பதி இப்பொழுதெல்லாம் அப்படி இருப்பதில்லை என்றாலும் கூட பழகிய பழக்கத்திற்காய்,,,,,,,,,,   கடையை நெருங்கி விட்டிருந்த நேரம் அங்கு இன்னும் பூரி ரெடியாகவில்லை எனத் தெரிந்தது. இட்லி ரெடியாகி இருக்கலாம்,அல்லது தோசை கேட்டால் ஊற்றித் தரலாம்.ஆனாலும்அவன்பூரிதான் வாங்க வேண்டும் என நினைத்துத்தான் வந்தான். அவனது பையனுக்கு பூரி என்றால் கொஞ்சம் இஷ்டம். மதியச்சாப்பாடு டிபன் பாக்ஸிலும்,நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டிலுமாய் அடைபட்டிருந்த வயர்க்கூடையில் வைக்கப்படாத காலை டிபனை வாங்க வந்திருந்தான்.   இன்றைக்கு கேம்ஸ் என காலை ஆறரை மணிக்கெல்லாம் ஹாக்கி பேட்டுடனும், பந்துடனுமாய் சென்றுவிட்ட மகனுக்கு 8.40ற்குள்ளாக சாப்பாடுகொண்டுபோய் கொடுக்க  வேண்டும்.   9 ஆம் வகுப்புப்படிக்கிற அவனுக்கு கேம்ஸ்ஸில் நிறைய ஆர்வம் உண்டு. அவனது விருப்பப்படியே ஹாக்கிடீமில் சேர்ந்துவிட்டான்.விருப்பம் மட்டுமில்லை. ஸ்போர்ட்ஸ் கோட்டா,,,,,, வேலை,,,,,,,,, என்கிற பேச்சையும்உள்ளடக்கிவைத்திருக்கிறான்.”பையன்களாய் ஸ்கூலில் பேசுவார்கள் போலிருக்கிறது, நம் காலத்தில் எல்லாம் இதெல்லாம் எங்கே தெரிந்தது நமக்கு” என அவனும் அவனது மனைவியுமாக பேசிக் கொள் வார்கள்,மகன் அப்படி சொல்கிற சயங்களில்/   இதோ ரெடியாகிவிடும் பத்து நிமிடங்களில்,நீங்களும் கூட கிளம்புங்கள்.இன்னும் எதற்கு அவன் படிக்கிறபள்ளிக்குப்போய்திரும்பவருவானேன்? மூன்றும், மூன்றுமாய் ஆறு கிலோ மீட்டர் நீள்கிற இழுவைதூர பயணத்தில் தென்படுகிற காட்சிகளும், தொற்றிக்கொள்கிற எண்ணங்களுமாய் கூடவே வேஸ்டாய் செலவாகிற பெட்ரோலும் எதற்கு வீண்செலவு?அது தான் ஏற்கனவே குளித்து ரெடியாகித்தானே இருக்கிறீர்கள்?   ,பேண்ட்சட்டையைமாட்டிகொண்டால் ஆயத்தம் என்ற குரலுடன் ரெடியாகி விடுகிற தன்மை வந்து விடும்.என்றைக்கும் இல்லாத அதிசமாய் இன்றைக்கு அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து 6.00 மணிக்குள்ளாய் குளித்து ரெடியான அதிசயம் நடக்கும் போதே நினைத்தான்,அது இப்படி ஒரு தற்செயல் ஒற்றுமையாய் ஆகிப் போனது ,அதுவும் நல்லதற்கே எனச்சொன்ன அவனின் மனைவி மகனுக்கான மதியச்சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டிலையும் வயர்க்கூடையில் வைத்துக்கொடுத்த நேரம் மணி காலை எட்டை எட்டித்தொடப்போகிறதாய்/   பூப்போட்ட சேலையில்சிறுபிள்ளைபோல இருந்தாள்.அவளிடம் கேலியாக அடிக்கடி சொல்வதுண்டு. ”உன்னை யாரும் பெண் கேட்டு வந்து விடாமல்,அப்புறம் என் பாடு சிக்கல் ஆகிவிடும்” என/   அம்மாவை கேலி பண்ணாமல் இருக்க முடியாது உங்களால்  என அதற்கு பதில் மொழி நவிழ்கிற மகள்”கல்யாண வயச நெருக்கி  நான் இருக்கையில  அம்மாவப் போயி ,,,,,,,,போங்கப்பா என பொய்க்கோபம் காட்டுவாள்.கல்லூரியில் இளங்கலையில் மூன்றாமாண்டை குத்தகைக்கு எடுத்திருக்கிறவள்.   அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அண்ணா போன் பண்ணி விட்டார். சென்னை யில இருந்து நண்பர் ஒருத்தர் வர்றாருப்பா,அவர ரயில்வே ஸ்டேஷன்ல ரீசீவ்பண்ணி எங்க சொந்தக்காரங்க வீட்ல விட்டுருப்பா என அவர் அடையாளம் இட்ட இடம் தோழரின் வீடாய் இருந்தது. நண்பர்  என அண்ணா குறிப்பிட்டவர் ஒரு பொது நலவாதியாய் இருந்தார்.   காலை 6.05ற்கு வரவேண்டிய ரயில் இன்னும்வரவில்லை.ஒருமணிதாமதமாகும் என்றார்கள். அதுவும் ஒரு வகைக்கு நல்லதாகவே போயிற்று, கையில் பெரிதாக அவன் எதுவும் பணம் கொண்டு வரவில்லை. ஆட்டோவிற்கு,அண்ணாவின் நண்பரு டன் சேர்ந்து அருந்த டீக்கு என எதற்குமே பணம் கொண்டு வரவில்லை,பத்து ரூபாயை மட்டுமே பையில் வைத்துக்கொண்டு எந்த தைரியத்தில் வந்தான் எனத் தெரியவில்லை.   இனி வீட்டிற்கு போய்விட்டு வரும் போது கையில் ஒரு இருநூறு ரூபாயாவது கொண்டு வர வேண்டும்.ரயில்வே ஸ்டேசனுக்கும், அவனது வீட்டிற்கும் இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். சர்வேயர், மைக்கல் எல்லாம் இல்லாத உத்தேசக் கணக்கு இது/   அண்ணா சொன்ன நண்பரிடம் போன் நம்பர் வாங்கிக்கொண்டு அண்ணாவிடம் விஷயத்தைச்சொல்லி ரயில்வே ஸ்டேசனின்  சூழலிலிருந்து விடை பெறுகிறான். இந்த இடைவெளியில் வீட்டிற்கு போய் பையனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தானும் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்கிற முடிவுடன் வீடு வந்து சேர்ந்த போது பிடாரனின் மகுடிக்கு சொக்கி ஆடுகிற பாம்பு போல மனம் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு தலையாட்டிக் கொண்டிருந்தான்.   இன்னும் அரை மணியில் ரெடியாக வேண்டும்.சூரியன் வெளிச்சம் காட்ட ஆரம்பித்து விட்டான். அவனது  வேலை அவனுக்கு,இவன் வேலையை இவன் செய்ய வேண்டுமே?என எண்ணம் பூத்தவனாய்  இருசக்கரவாகனத்தை வீட்டின் ஓரமாய் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.   சற்றெ நாட்களுக்கு முன்புவரை நின்ற இரண்டு வேப்பமரங்களும்,இரண்டு பண்னீர் மரங்களும் இப்போது இல்லை.போர்க்குழியின் அருகே முளைத்து நின்றதால் அனுமதியில்லாமல் அதனுள் நுழைந்து குழியை மூடிவிடும் ஆபத்து இருக்கிறது.தவிர வீட்டின் சுவரருகே இப்படி வேப்பமரங்களை வளரவிடுவது பெரும் தவறு.அஸ்திவாரக்குழிக்குள் சென்றுவிடக்கூடும்.ஆகவே வெட்டி விடுங்கள் நாலாம் பேரிடம் கருத்துக்கேட்காமல்,என யாரோ எப்போதோ சொன்னது ஞாபகத்திற்கு வர அவர்கள் சொல்லிய ஒரு வருடத்திற்குள்ளாக அவர்கள் சொன்ன சொல்லின் ஈரம் காயும் முன் அதன் வடு தெரிய இருபது நாட்கள் முன்பாக வெட்டிய மரங்கள் இப்போது இல்லாதிருந்தாலும் கூட இரு சக்கரவாகனத்தை  நிறுத்தும் போதெல்லாம் தன் உருக்காட்டி அசைந்து நிற்பதாய் ஒரு நினைவு அவனுக்குள்/   வெட்டிய இலைகளையும்,சிலும்புகளையும் குப்பையாய் ஒரம் கட்டி விட்டு வெட்டிய மரத்தை மட்டும் துண்டு போட்டு மரம் வெட்டியவர்கள் எடுத்துப்போன பின் அவர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை கூட்டி அள்ளி எரிக்க மிகவும் சிரம்பட்டுப் போனான.அவைகளை கூட்டி எரித்த மறுநாள் உடல் வலி மிகுதியாகி காய்ச்சலில் போய் சுழியிட்டது.அப்புறமாய் ரவி சுப்பரமணியம் டாக்டரிடம் போய்தான் அந்த சுழியை எடுக்க வேண்டியதாகிப்போனது.   ரவிசுப்ரமணியம் அவன் குடியிருக்கிற ஏரியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாய் இருப்பவர் இன்றளவுமாய்.இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து தனது மருத்துவ வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியிட்டவர்.   நெட் கனெக்‌ஷன் கிடைக்கவில்லை சரியாக,ஒவ்வொருமுறையும் கம்ப்யூட்டரில் பணி செய்கிற போதும்  தேவுடுகாத்தது போல காத்திருக்க வேண்டியிருக்கிறது. கம்ப்ளெயிண்ட் கூட புக் பண்ணி விட்டேன் என ரயில்வே ஸ்டேசன் போய் திரும்பு கையில் எதிர்ப்பட்ட வெங்கடேஷ் அண்ணனிடம் சொன்னேன்.அவர் அங்கு பணிபுரிபவர்.   வேல மூர்த்தி சாலையிலிருந்த அக்கா கடையில் நீயூஸ் பேப்பர் வாங்கிக் கொண்டி ருந்தார்.அந்நேரமே நீட்டாக  பேண்ட் சர்ட் அணிந்து இன் பண்ணியிருந்தார்.”தம்பி நம்பளப்பாத்தா நாலு பேருக்கு உற்சாகம்வரணும்தம்பி,டல்லாயிரக்கூடாது, அதுக்காக நம்ம ஒண்ணும் பெருசா மெனக்கெடனும்ன்னு இல்ல, என்பார்.   யாரது வெங்கடேஷ் அண்ணனா இப்படிப்பேசுவது?ஒரு காலத்தில்,,,ஒரு காலத்தில் என்ன?சற்றே பிந்தைய ஐந்து வருடங்களுக்கு முன்புவரை ஐந்தரை அடி உடம்பை சின்னோண்டான சாராய பாட்டிலுக்குள் அடைத்துக்கொண்டு திரிந்தவர்.எங்கு பார்த்தாலும்,எப்போது பார்த்தாலும் போதை நிரம்பிய விழிகளுடனும், உடலுடனும், நடையுடனுமாய் திரிந்தவர்.   அவரது அம்மா அவனிடம் சொல்லி அழுகாத நாள் இல்லை .எனக்கு மட்டும் ஏன்பா இப்பிடி?குடிச்சிட்டு  கண்ட யெடத்துல அவன் விழுந்துகெடைக்கையில மனசு கதறுதுப்பா.அட அதுதான் பரவாயில்லைன்னு  விட்டா எந்நேரம் யாரு கூட வம்புஇழுத்துட்டு வந்து நிக்குறான்னு சொல்ல முடியலப்பா,,,,,,,,என்கிற பேச்சுடனும் அழுகையுடனுமாய் வெங்கடேஷ் அண்ணனின் தாயார் வந்து சொல்கிற ஒவ்வொரு நாளும் அவனுக்கு சங்கடமாய் இருந்ததுண்டு. மிதமிஞ்சிய போதையில் எங்காவது விழுந்து கிடக்கிற வெங்கடேஷ் அண்ணனை தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்த நாட்களும் உண்டு.அதையெல்லாம் எப்போதாவது அவரைப்பார்க்க நேர்கிற சமயங்களில் நினைக்க வாய்க்கிறதுண்டு.அப்படியெல்லாம் இருந்த அவர் இப்படிச் சொல்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/   அவருடையஇந்தமாற்றத்திற்குக்காரணம்அவரின்சொந்தங்கள்தான்எனச்சொல்கிறார்கள். சிதைந்து கிடந்த வெங்கடேஷ் அண்ணனை கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி அவரின் உடலில் இருக்கிற அனாவசியங்களை எடுத்தெரிந்து விட்டு அத்தியாவசி யத்தை மட்டுமே அவரின் முழு உருவாய் ஆக்கி அவரின் ரத்தமும் ,சதையுமான உடலுக்கு புத்துயிர் ஊட்டியவர்களும்,புது அர்த்தத்தைக் கொடுத்தவர்களுமாய் ஆனவர்கள்.   வெங்கடேஷ் அண்ணனை இன்று இந்த அளவில் அடையாளப்படுத்தி வைத்திருக் கிறவர்களாய் சொல்லப்பட்டார்கள்.அப்படிஅடையாளப்படுத்தப்பட்டஅவர்இப்போதெல்லாம் பாட்டிலுக்குள் அடைபட்டுத்தெரியாமல் இவருக்குள் பாட்டிலை சிறைபடுத்தி வைத்திருக்கிறார். அவரில் அடையாளப் பட்டுத்தெரிந்தஇந்தவித்தியாசம்அவரினுள்முளைவிடஆரம்பித்த நாளிலிருந்து பளிச்னெஸூம்,பிரெஷ்னெஸூமாயும்,அதிகாலைக் குளியல், அன்றா டம் ரோமக்கட்டைதட்டாத ஷேவிங்,நல்லதாய்உடுத்துதல்என்கிறஅடையாளங்கள் அவரின் மேல்ச்சட்டை ஆகிப்போகிறது.   அப்படியானஅடையாளம்முளைவிட்டுப்போனநாளிலிருந்துபாட்டிலையும்,போதையையும் ஓரம் கட்டிவிட்ட அண்ணன் வெங்கடேஷிடம் சொல்லிவிட்டு வந்த வேலை அனேகமாய் முடிந்து விடும்.நான் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் எனவுமாய் சொல்லி இருக்கிறார்.   வீட்டில்வந்து மனைவிரெடிபண்ணிக்கொடுத்தடிபன்பாக்சையும்,தண்ணீர்பாட்டிலையும் வாங்கிக் கொண்டிருந்த நேரம் அண்ணாவின் நண்பர் போன் பண்ணி வந்து இறங்கி விட்டதாகவும், தன்னுடன் இன்னொரு நண்பர் வந்திருப்பதாகவும் நாங்களே ஆட்டோப்பிடித்து சென்று விடுகிறோம், அண்ணா சொன்ன வீடு எங்கிருக்கிரு க்கிறதெனமட்டும் சொல்லுங்கள்.நீங்கள் எங்களை அங்கு வந்துபாருங்கள் என்கிறார்.   எளிதாகிப்போகிறதுவேலை.சற்றேநிதானமாகக்கிளம்பலாம்.மிகவும் நிதானம் காட்டி னால் பையனுக்கு  சாப்பாடு கொண்டு போய்க்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுப் போகலாம் என்கிறஎண்ணத்துடன் கிளம்பிச்சென்றபோதுடிபன்வாங்கநின்றரோட்டோரக்கடைதான் இத்தனையும் அடையாளப் படுத்தியும், சுமந்து கொண்டுமாய்/   ஒன்று கூடி நான்கோ, அல்லது ஒன்று குறைந்து இரண்டோ அல்ல,மிகச்சரியாக மூன்றுதான்.சுட்டெடுத்தபூரிகளும்,சுடப்படுவதற்காய்எண்ணெய்ச் சட்டியில் வீசப் படுகிற மூன்று பூரிகளுடன் இன்னமும் ஒன்று சேர்த்து நான்காய் வாங்கி பார்சலாய் கொண்டு செல்கிறான். சுட்ட பூரிகள் விற்பனைக்காகவும்,சுடப்படப்போகிற வட்ட வடிவ மாவு வடிவங்கள் பூரியாய் உருவெடுப்பதற்காகவும்/                                           10. ஒற்றைவிளக்கு,,,     போட்ட கையெழுத்தை விட அது போடப்பட்ட தருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப்போகிறது.   சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது காலை மணி 11ஐ எட்டி த்தொட போகிற நேரம். எட்டித் தொட்டு தோளில் கைபோட்டு உரசி மகிழ்ந்து அடுத்தநேரம்11ன்னே என கறாராக அறிவிக்கப் போகிற வேளை. கணிணியின் முன்னமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டும் ஒரு மேட்டரை டை செய்தவாறுமாய் அம்ர்ந்திருக்கிறான்.ஹாலின் ஜன்ன ---லோரமாக இருந்த கணிணியின் மீது வெயிலின் வெளிச்சம்  பட்டும் அது சுமந்திருந்த மரஇலைகள்,மரத்தின் உரு,கம்யூட்டரின் நிழல் ஆகியவைளை மொத்தம் கூட்டி இவன்  மீதும் கம்ப்யூட்டர் டேபிள் மீதும் சிதறியுமாய்/   மூடி வைத்திருந்த ஜன்னலைத் திறந்தது  யார் இப்போது?என்ற கேள்வி இவனுள் முளைவிட்டதை மனைவிசுட்டதோசையின் சப்தம் அமுக்கியது.அடுப்படியின் புகையும், வெக்கையும் வெளியேறுவதற்காக  திறந்து விட்டிருக்கவேண்டும்.   அவளும் இந்த  வீட்டிற்கு குடி வந்த இந்த பத்து வருடங்களாய் கேட்டுகொண்டுதான் இருக்கிறாள்,சமைலறையில் ஒரு பேன் மாட்டவேண்டும் என/ஏனோ அது இன்று வரை கைவரப்பெறவில்லை.   ஊதாக்கலர் சேலையிலும்,கருப்புக்கலர்ச்சட்டையிலுமாய் பாந்தமாகத்தெரிகிறாள்.  காட்டன்புடவை அது. MPPRகடையில் எடுத்தது.வெறென்ன தவணையில்தான். கடைக் காரர் சொன்னார் புடவை எடுக்கும் போது.  இன்னோன்னு சேத்து எடுத்துக்குங்க சார். இதெல்லாம் சீசன்லவர்றதுதான். எனச்சொன்னஅவரதுவார்த்தைக்கு ஆட்படாமலு ம் ஆசைபட்டு விடாமலுமாய் தனித்து ஒற்றையாய் எடுத்த புடவை அது.இந்த வீடெங்கும், கொடியிலும்,பீரோவிலுமய் நிரம்பிக்கிடக்கிற அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற துணிகள் எல்லாம் இப்படி எடுத்ததுதான்.கடைக்கார்ரர்களின் விசால மனதும் இவன் மாதிரியா னவர்கள் மனைவி மக்களுக்கு பேண்ட் சர்ட்டும், சேலையும்,சுடிதாருமாய் எடுக்க உதவியிருக்கிறது.கிட்டத்தட்டலட்சம்வரை தொட்டிருக்கலாம் இவன் அந்தக்கடையில் எடுத்திருந்த ஜவுளியின் மதிப்பு.இவனும் மனைவியும் தூக்கம் வராத இரவுகளில் திண்னையில் அமர்ந்து பேசிகொண்டிந்த நாட்களில் அரைபடும் சொற்கட்டுகளாக/ அது மாதிரியான சமயங்களில் பேசப்பட்ட சொற்கட்டுகளிலும், துணைச்சொற்கட் டுகளிலுமாய் உருவெடுத்த புடவை இப்போது ஊதாக்கலர்காட்டி/   ஜன்னலின் கம்பி வழிவெளித்தெரிந்த கொல்லைப்புற மரங்களையும், அதை ஒட்டிய வெற்று வெளியையும் அது தாண்டியிருந்த வீடுகளையும் ரோட்டையும், அது தழுவிக் கொண்டிருந்த மனிதர்களையும் படம் பிடித்துச் சொல்லியதாய். வளர்ந்திருந்த பூ மரத் தில்எக்குப்போட்டவாறுஆடு ஒன்று தன் பசி தீர்க்கும் முயற்சியில்/ மரத்தின் மீது மலர்ந் -திருந்த சிவப்பு நிற பூக்கள் தன் கையை அகல விரித்து அலகு காட்டியதாய்/   சாம்பல் பூத்திருந்தது மரப்பட்டையாயும்,பச்சை நிறம் காட்டியது இலைகளாயும்,  சிவப்புநிறம் பூக்களாயும் எனதன்மேனியின்மொத்தகலர்காட்டிசிரித்தஅழகுமரங்களாயு ம்,  பச்சையும், மெரூனும், இன்னும்,இன்னுமாய் கலர் காண்பித்த வீடுகள் அதனுள் குடி கொண்டிருந்த மனிதர்களின் மன நிலையையும் தொட்டுச்சொல்லிச் சென்றதாய்/   உயரப்பறந்து சென்ற பறவை ஒன்று காற்றின் திசையில் சொல்லிச்சென்ற சேதி என்ன வென்று தெரியவில்லையாயினும் கூட சங்கரிடம் சொல்ல ஒரு சேதி இருந்தது. ”எண்ணன்னே,எங்க இருக்கீங்க?நல்லாயிக்கீங்களா?கவர்மெண்ட் ஆஸ்பத்திரிகிட்ட  நிக்கிறோம்,நம்மவேலைபாக்குற நிறுவனத்துல வேலைக்கு சேர வந்தவருக்கு இன்னை -க்கிரெக்காடுவெரிபிகேஷன்,திண்டிவனத்துல இருந்து வந்தவரு மெடிக்கல், பிட்னெஸ்  வாங்காம வந்துட்டாரு.இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம யாரையாவது கௌவர் -மெண்ட் டாக்டரப்பாத்து சர்டிபிகேட் வாங்கிக் குடுக்கணும்”என்றார்.   சங்கர் சொல்லி  முடித்த மறுகணம் சட்டென மனதில் தங்கி வந்து நின்றவர் தோழர் நம்பியாகத்தான் இருக்கிறார்.நம்பிக்கு டாக்டர்கள் வட்டாரத்தில் கொஞ்சம் பழக்கம் அதிகம்.அவர் சார்ந்து நிற்கிற இயக்கமும்,அவரின் நன் நடத்தையுமே அம்மாதிரியான பழக்கங்களில் அவரை வழிகாட்டி வைத்திருக்கிறது  எனலாம்.   இப்போது அவரிடம் பேசலாம்,ஆனால் அவரது நம்பர் இல்லை கைவசம், இன்னொரு தோழரான முத்துக்கிருஷ்ணனிடம் கேட்கலாம்.அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறவர்,அதனால் என்ன ”ஓடுகிற ஓட்டத்தின்  மத்தியில் சற்றே நின்று போன் நம்பர் மட்டும் சொல்லிவிட்டு ஊங்களது ஓட்டத்தை தொடருங்கள்” எனச்சொன்னால் முடிந்தது விஷயம்.   செல்போன் நம்பர் வாங்கியே விட்டான் தோழர் முத்துக்கிருஷ்ணனின் ஓட்டத்தை நிறுத்தி. சேலத்திலிருந்துவந்து கொண்டிருந்தநம்பி ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி”அவர்  அவசரவார்டில் இருக்கிறாரா பாருங்கள்,இருந்தால் நான் அவருடன் போனில்  பேசி விடுகிறேன் நீங்கள் வந்த  வேலை எளிதாகிவிடும்” என்கிறார்.   இவன் வீட்டை விட்டு கிளம்பும் முன்பாக சங்கரிடம் சொல்லிவிட்டு ”அங்கேயே  இருங்கள். இதோவந்து விடுகிறேன், ஐந்து நிமிட நேரத்தில்” எனக் கிளம்புகிறான்.  அவர்களை அவசர வார்ட் அருகே நிற்கச்சொல்லிவிட்டுஅங்குபோனபின்தான்தெரிந்தது. தோழர் சொன்ன டாகடர் ஒரு கேஸை அட்டெண்ட் பண்ணிக்கொண்டிருந்தார் என/   என்ன செய்யலாம் இப்பொழுது?வேறு யாராவது தெரிந்த டாக்டர் ,,,,என அரிச்சலாய் தூசிதுடைத்துப்பார்த்தபோது ஒன்னொரு டாக்டர் பாரதி சுப்ரணியம் தென்படுகிறார். டாக்டர் என்றால் அவர் வெறும் டாக்டர் மட்டும் இல்லை. அவர் கிளினிக் வைத்திருந்த ஏரியாவின் அதி முக்கிய அடையாளங்களில் ஒன்றாய்த் திகழ்ந்தவர்.இரண்டு ரூபாய் க்கு மருத்துவம் பார்த்து தன் மருத்துவ வாழ்க்கையை துவங்கியவர்.இன்று அசைக்க முடியாத நன்நம்பிக்க்கை முனையாக/   அவர் இந்நேரம் இருப்பாரா அல்லது டூட்டி முடிந்து போயிருப்பாரா? எனத் தெரிய வில்லை.முன்னால் ஓ.பி பார்க்கிற இடத்தில் கேட்டதில் அவர் ஆபரேஷன் தியேட்டர் போய்விட்டதாய்ச் சொன்னாள் நர்ஸ் ஒருத்தி.ஆபரேஷன் தியேட்டரினுள் இருக்கிற வரை எப்படிப்போய் பார்ப்பது என்கிற யோசனையும் தயக்க முமாய் இருந்தவன் சங்ரையும் உடன் வந்திருந்தவரையும் நிற்கச்சொல்லி விட்டு எதற்குமொரு ரவுண்ட் போய்விட்டு வருவோம் என டாக்டர்கள் அமர்ந்திருக்கிற அறை நோக்கியும் அது அல்லாததுமாய் யாராவது ஒரு தெரிந்த டாக்டர் அல்லது பாரதி சுப்ரமணியமே தென் --பட்டு விட மாட்டாரா என்கிற ஆவலுடன் உந்துதலுடனுமாய் நகர்கிறான்.   நீண்டுவிரிந்திருந்தது ஆஸ்பத்திரி.தடுத்துக்கட்டப்பட்டிருக்கிற அறைகளை ஒவ்வொன் றாக தாண்டி வந்த போது ஐந்தாவது அறையில் காட்சிப்பட்டவராக மருதம்மாள் டாக் டர் இருந்தார்.வயிற்றுவலி என வந்த சிறுவனுக்கு பக்குவமாய் மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.   இவனுக்கு குடல் இறக்க ஆபரேஷன் பண்ணியவர். குரல் அவர்தான் எனக்காட்டிக் கொடுத்தது.பின் பக்கமாகத்தெரிந்த அவரை முன் பக்கமாகப்போய் பார்த்து பழக்க தோசத்தில் “நல்லாயிருக்கீங்களா”எனக்கேட்டு விட்டான்.   சிமிண்ட் பூசப்பட்டிருக்கிற தரையின் நான்கு மூலைகளிலும் மடக்கி சிவப்புக்கலர் சாயம் பூசியிருந்தார்கள். வெள்ளைப்பூக்களைச்சுற்றி மலர்ந்து சதுரம் காட்டி நிற்கிற சிவப்பு நிற மலர்களைப் போல,பார்க்க நன்றாகவே இருந்தது.   பழக்க தோஷத்தில் எல்லோரையும் கேட்பது போல மருத்துவரையும் கேட்பது உசிதமல்ல,அதுவும் மருத்துவமனையில் வைத்து,,,,,,,,,அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியை இவன் கேட்டால்,,,,,,,அவரும் சிரித்துக்கொண்டே நன்றாய் இருப்பதாய்ச் சொன்னார்.”தனது பெயரின் முத்திரையை கிளினிக்கிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன் என்றும்,ஆபரேஷன் தியேட்டரில் இருக்கிற பாரதி சுப்ரமணியன் சாருக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் அவரிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள்” என  அவரிடம் சம்மதம் கேட்டு  வாங்கிக்கொண்டு அனுப்புகிறார்.   சங்கருடன் வந்தவர் கார்மேகம் என இவ்வளவு அலைச்சலுக்குப்பின்தான் அறிந்து கொள்ள முடிந்தது.அப்போதுதான் நேரமும் இருந்தது.   திண்டிவனம் அருகே இருக்கிற குக்கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த அவர் அவரது  கிராமத்திலேயே முதன் முதலாய் அரசு வேலைக்கு வந்தவராம்.கலங்கிப்போய் நின்றார்.அவரது மனம் முழுக்க மெடிக்கல்,பிட்னெஸ் சர்டிபிகேட்டே/அது இல்லாது போனால் வேலைக்கு வேண்டாம் எனச்சொல்லி விடுவார்களோ,வாழ்க்கை வீணாகிப் போய்விடுமோ என்கிற அவரது உள் மன பிம்பம் வார்த்தைகளிலும், பேச்சிலுமாய்/ கண்கள் கலங்கித்தெரிந்தது.அதற்குள்ளாக டாக்டரம்மா கூப்பிட்டனுப்பி  விட்டார். டாக்டர் பாரதிசுப்ரமணியனிடம் நான் சொல்லிவிட்டேன், நீங்கள் போய் பார்த்துவிடுங்கள் என/ சங்கரின் இருசக்கர வாகனத்தின் பின்னால்தான் கார்மேகம் அமர்ந்து வந்தார். கருப்புக் கலர், நன்றாகயிருந்தது பார்ப்பதற்கு.இவனுக்குத்தெரிந்து   பத்து வருடங்களாக அந்த வண்டியைத்தான் வைத்திருக்கிறார்.   செடிகள் வரிசை கட்டி நின்ற இடத்தின் ஓரமாகத்தான் வண்டியை நிறுத்தினார்கள். கம்பி வேலி கட்டம் கட்டி நின்றது.வெள்ளியில் உருக்கி ஊற்றியது போல நன்றாக இருந்தது பின்னலுடன் பார்க்கிற போது.   இரண்டு பேரிடம் வழி கேட்டதில் சரியாகச்சொன்னார் ஒருவர் ஆபரேஷன் தியேட்டர் எங்கே இருக்கிறது என/   ஆஸ்க்கலர் பேண்ட்,பச்சைக்கலரில் வெள்ளைக்கோடுகள் ஓடிய டீசர்ட் இவனுக்கு நன்றாகத் தெரிந்தது. கார்மேகமும், சங்கரும் அவரவர்களுக்கு பிடித்த கலர்களில் என இல்லையானாலும் கூட கிடைத்த கலர்களில் உடைகள் உடுத்தியிருந்தார்கள்.கருப்பு வெள்ளைகாம்பினேஷ்னும்,கோடு போட்ட சட்டையும்,அடர்கலரில் பேண்டுமாய் அணி கிற தன்மை இன்னும் புழக்கத்தில்/   வெள்ளைக்கலரில் ஊதாக்கலரில் ஊதாக்கோடுகள் ஓடியசட்டையும், கருஞ்சாந்துக் கலரில்  பேண்டுமாய் கார்மேகமும்,பிஸ்கட் கலரில் டீசர்ட்டும்,ஆப் வொயிட் கலரில் பேண்டுமாய் நின்றார் சங்கர்.   ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் தாண்டி உள் நுழைந்ததிலிருந்து வரிசையாகவும் அது தப்பியுமாய் வளர்ந்து நின்ற மரங்கள் இலைகளையும்,கிளைகளையும் ,பூக்களை யும் காட்டிச்சிரித்தது. அதுதாண்டி ஆபரேஷன்  தியேட்டர் வாசலில் நின்ற பொழுது தியேட்டரின் முன் வெளியில் ஐந்து பேர் வரை நின்றிருந்தார்கள். அதில் தெரிந்த இரண்டு ஆண்கள் மிகவும் கசலையாக/அதில் ஒருவரின் மனைவிக்கு ஆபரேஷன், சிசேரியன்,”என்ன குழந்தையாய் இருக்கும் என்பது அவரது யோசனையின் பிரதான இடமாக இருந்திருக்கும்.நல்லஎண்ணமும்,நல்லசிந்தனையும் கொண்டவள்தான் அவரது  மனைவி. ஆனால்  உடல் கொஞ்சம் பூஞ்சை”என்கிற வாதையும் அவரிடம் இல்லாமல் இல்லை. பதட்டமும்,மென்வாதையுமாய்தெரிந்த அவர்களின் முகங்கள் எதிர்பார்ப்பைத் தேக்கி/   அவ்வளவு வலியிலும்,ரத்தப்போக்கிலும், கழிவிலுமாய் பிறக்கப்போகிற குழந்தை என்னவாக இருக்கும் என்பதே அவரது பிரதான கேள்வியாய் இருக்கும் என்பதை  வெளிச் சொல்லி விளக்க வேண்டியதில்லை.வேகமாகநகர்ந்த நிமிடங்களும்,நொடிகளும், இவனுக்கும்,சங்கருக்கும், கார் மேகத்திற்கும் மிக மெதுவாய் நகன்றோடியதாக/கண் முன்னே காட்சிப்பட்ட அத்தனையும் அவசரம் காட்டியும்,மெதுவாயும் நகர்கிறதான பிரமை/ வாங்கி விடலாமா சர்டிபிகேட்? என்கிற யோசையுடனும் அவஸ்தையுமாயும் இருந்த பொழுதுதியேட்டரினுள்இருந்துவந்தநர்ஸ் ஒருத்திசொல்லியிருக்கிறேன் டாக்ட ரிடம் நீங்கள் வந்திருக்கிற விஷயத்தை என்று சொன்ன நேரம் வந்துவிட்டார் டாக்ட ரும்.   வெளியில் கிடந்த செருப்புகளை ஒரம் தள்ளியும்,அதன் மேல் மிதித்தவாறுமாய் டாக்ட ரின் கூப்பிட குரலுக்கு தியேட்டரினுள் செல்கிறார் கார்மேகம்.   இவனுக்கானால் ஒரே வாதிப்பு.தெரிந்த முகம்,இனிய பழக்கம்,சொன்னவுடன் தியேட் டரிலிருந்து வந்து விட்டாரே ஆபரேஷனை அட்டெண்ட் பண்ணிக் கொண்டிருந்தவர். என்கிற யோசனையும், காத்திருப்புமாய் இருந்த பொழுது கரைந்த நிமிடங்களில் தியேட்டரின் கதவைத்திறந்து கையில் குழந்தையை ஏந்தியவாறு நர்ஸ் வருகிறாள். குழந்தையின் உடம்பில் சுற்றப்பட்டிருந்த துண்டில் சிவப்பு நிறப்பூக்கள் குழந்தையின் மேனியில் படர்ந்து தெரிந்ததாய்/   குழந்தைக்கொண்டு வந்த நர்ஸின் பின்னாலேயே கார்மேகமும் வந்துவிட்டார் கையில் சர்டிபிகேட்டோடு/   நர்ஸ் கொண்டு வந்த குழந்தையின் பிஞ்சு மேனி மீது டாக்டர் பாரதி சுப்ரமணியன் ஆபரேஷன் செய்து எடுத்த தடயமும்,கார்மேகம் கொண்டு வந்த சர்டிபிகேட்டில் டாக் டர்  பாரதி சுப்ரமணியனின் கையெழுத்தும்/   11. மிச்சச்சுவர்,,,,,   []                             வந்தவேலையை எல்லாம் முடித்து விட்டு என்னிடம் பணம்வாங்க வந்தவளு க்கு 25 வயதிருக்கும். அச்சடிக்கப்படிருந்த கிராமத்து முகம்.    நீங்க,,,,,,,,,,,,ஊருதானா?என என்னை ஏறிட்டவள் என்னையும் அவளை நோக்கி பார்க்கவைத்தாள். அலுவலகத்தில் நின்றிருந்த அவ்வளவு கூட்டத்திலும் அவளதும்,என்னதுமான சந்தித்துக் கொண்ட எதிரெதிர் பார்வையும் ஒரே நூழிலையில் ஓடிய நேரெதிர் பேச்சில் குடிகொண்டிருந்த மெல்லிய உயிரோட்டம்அவளைப்பார்த்துஇன்னும்இன்னும்சிலவைகளைகேட்கவும்வைக்கிறது.        தேவைவேண்டி நகைக்கடன் வாங்குவதற்கு  எங்களது  அலுவகத்திற்கு வந்திருந்தாள். அவள்  கொண்டு வந்தது  எந்த   வகையான  பொருள்   எனத்  தெரியவில்லை.   செயினா,நெக்லஸ்ஸா,மோதிரமா,கம்மலா,,,எதுவாயினும் தங்கமே கொண்டு வந்ததங்கத்திற்கு ஏது பொருள்,கணக்கு என்கிற அடைபாட்டுடன்  நகைக்கடன் இன்னாருக்கு இவ்வளவு என பெயர் எழுதிய ரசீது என்னிடம் வந்த பொழுது  கூப்பிட்டுகொடுக்கிறேன்.  அப்போதுதான்  மேற்கண்ட  இத்தனையும்  நேரடி ஒளிபரப்பாக/   நல்லமனம்,நல்ல உடல்,நல்ல எண்ணம்,நல்லசெயல்,நல்லநண்பர்கள்,நல்ல தோழர்கள்,,,என்பது போன்றஇதரஇதரவைகளாய்வாய்த்தும்கைவரவும்பெற்றுவிடுகிறவரிசையில்நல்லமனிதர்களின் பழக்கமும்அவர்களதுஉறவும்தேவையாகவே இருக்கிறது.    இப்பூவுலகில்கைகுலுக்கிக்கொள்ளவும்,தோளோடும்மனதோடும்சேர்ந்துஉறவாடி நெசவிட்டுக் கொள்ளவுமாய்/      “எங்க வீட்டுக்  காரர்கிட்ட  கேட்டிங்களாம்ல  சொன்னாரு”-அவள்.      “ஊம்”- நான்        “பக்கத்தூருதான்,நானு,,,,,,,,,,,,,எங்க வீட்டுக்காரரு முருகன்,கொத்தனார் வேலை பாக்குறாரு” எனஅவள்சொன்னஉருவம்அரிச்சலாகபிடிபட்டாலும்இவர்தான்எனஉறுதிசெய்யமுடியவில்லை. "யாரும்மாகிட்ணய்யாவீட்டுஆளுகளாம்மா,சந்தோசம்மாசந்தோஷம், நல்லாயிருக்கீங்களா?நீங்க சொன்னஒடனேபடக்குன்னுஞாபகத்துக்குவரல,சாரிம்மா,ஒங்கவீட்டுக் காரரவுட அவுங்க அப்பா, தாத்தாதாம்மா நல்ல பழக்கம்.எல்லாரும் ஒண்ணா வேல செஞ்சிட்டு திரிஞ்ச ஆட்கள்மா என அவளிடம் சொல்லிய நேரம் என்னுள் நிழலாடிய கிட்ணய்யா முழு உருவினராயும், என் நினைவில் கால் பதித்தவராயும்/   ஊரில் வேலை ஏதும் அற்ற வெயில் பொழுது அது.கூலிக்காரர்கள்  டீக்கடையிலும் பல்சரக்குக் கடையிலுமாக கூசிக்கூசி கடன் சொல்லி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்த வெப்ப நாட்களின் பொழுதுகள்.   சுட்டெரித்தசூரியனின்சக்கரம்மனிதர்களைமட்டுமில்லாமல்அவர்களது அன்றாடப்பாடுகளை எத்தியும், எள்ளிநகையாடியுமாய்கேலி செய்தும் கொண்டிருந்தநேரம் நானும் என்னை போலவே உழைப்பின் மடியில்ஊஞ்சலாடிகைபிடித்துநடம்பதித்து பிழைத்தவர்களின்பாடுகளும் நிரம்பவே கேள்விக்குறியாகி கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டு நகர்ந்த புழுக்கமான பொழுதுகள்.   ஒன்றில் சறுக்கிய காலை மற்றொன்றில்சரிசெய்துகையூன்றிஎழுந்திரிக்கும் முன்உடன்தோள் சேர்ந்திருந்தவேலைக்காரர்களேகிடைத்த வேலைக்கும்,எங்காவது வேலை விசாரித்தும் ஒருவ ருக் கொருவர் தெரியாமல் போய் வந்து கொண்டிருந்த ரகசிய நாட்களின் முரட்டு நகர்வுப் பொழுதுகளில் பக்கத்து ஊரில் கிட்ணய்யா  ஒரு கிணறு வெட்டை காண்ராக்ட் எடுத்திருந்தார்.   விஷயம் கேள்விப்பட்டு ஒற்றையடிப்பாதையில் சென்று கொண்டிருந்த 15 பேரில் நானும் ஒருவனாக சேர்ந்து கொண்டேன்.கையில்மண்வெட்டியும் இல்லை.மதிய நேர சோறும் இல்லை.   “மாப்ளஇதுஒண்ணும்காட்ல மம்பட்டிபுடிச்சி செய்யிற வேலை கெடையாது.கெணறு வெட்டு வேல .அடிக்கிற வெயில்ல ஆள அமுத்திப்புடும் பாத்துக்க”.என என்னை நோக்கி வந்த  கிட்ணய் யாவை வார்த்தைகளை பாவமாக ஏறிட்டவனை பார்த்து “சரி,சரிவா,நீயும்தாஎன்ன செய்வ பாவம்.வந்ததுதா வந்த மம்பட்டி இல்லன்னாக்கூட பரவாயில்ல,ஒரு தூக்குச்சட்டியில கொஞ்சம் சாப்பாடாவது கொண்டு வர்ரதுக்கு என்ன என வந்த கோபத்தை மென்று தின்றவராய் சிரித்து சமாளித்து என்னை அவருடன் வேலைக்கு அலைத்து சென்ற நாட்கள் நனைந்த கோழியின் இறகு நீவி உள்ளுள்காத்துக்கொண்டபஞ்சாரத்தைஞாபகப்படுத்தியது.   அது மட்டுமில்லைகிட்ணய்யாநான்நான்கிட்ணய்யாஎனபடம்விரிக்கிற பொழுதுகளில்எங்களுள் இருந்தநட்பும்நெருக்கமும்உறவும்அந்தஊரில்  பெரும்பாலுமாய்யாரிடமும்காணப்பட்டதாக இல்லை.   காடுகரைகளிலும்வேலைத்தளங்களிலும்,மட்டும்நெருக்கம்கொண்டிருக்கவில்லைஎங்களுக்குள் பூத்திருந்த நட்பு.   அது தாண்டிகுடும்பம் ,குடுக்கல்,வாங்கல்,நட்பு ,தோழமை கைமாத்துஎன்கிற அளவிற்குமலர்ந்து சிரித்து நின்றது.   காயம்பட்ட  மனதுகளின் ஆறுதல்வார்த்தைகளாய் ஒன்றோடுஒன்றுதழுவிக்கொண்ட ஆதரவுப் பொழுதுகள் அவை.   இல்லாதவர்களுக்குஇல்லாதவர்களேஆதரவாயும்,அடைக்கலமாயும்தோள்தருகிறவர்களாயும் ஆகிப்போன பொழுதுகளில் படர்ந்து கிடந்த நட்பாக அந்தஊரில் எங்களது நெருக்கம்.இத்தனை க்கும் அவர்கள் எங்களுக்கு சொந்தமோ உடன் பிறந்தவர்களோ கிடையாது.   வேற்று  ஜாதிகளுக்குள்  உறவுசொல்லி  அழைத்துக்  கொள்கிற  பழக்கத்தை தன்னகத்தேமுடியி ட் டு பாதுகாத்து வைத்திருந்த கிராமங்களில் எங்களது ஊரும் ஒன்றாய்/    பிழைப்பு தேடி ஊர்விட்டு ஊர்வந்தவர்களிடம் மிகுந்து தெரிந்த உழைப்பின்  வாசனையும், வியர்வையின் தடமும் எங்களைஅவர்களின்பால்ஈர்த்துநேசம் கொள்ளச்செய்தது.    அப்படியான ஈர்ப்பு விடிந்தெழுந்த ஒரு நாளில் மாப்ள,மாமா,,,என நேசம் கொள்ள வைத்தது. அந்த  ரசாயண மாற்றம் எங்களில் நிகழ்ந்த அந்த  கணமே எங்களின் இறுக்கத்தையும், நட்பை யும், நேசத்தையும்,உறவையும் கொண்டாடி மகிழ்ந்ததாய்/   நான்,கிட்ணய்யா,அவரது மகன் இன்னும் சில பேர் என ஒரு பழைய வீட்டை இடித்துக் கொண்டிருந்தோம் காண்ட்ராக்டவேலையது. இடிபாடுகளுக்குள்ளாக  நின்ற  பழைய  வீட்டை இடித்துதரை மட்டமாக்கி சுத்தமாக்கி தரவேண்டும்.   வேலைஆரம்பித்தஇரண்டாவதுநாளோ,மூன்றாவதுநாளோஎன்கிறதாக நினைவு.   சுட்டெரிக்கும் மதிய வெயிலில் கிட்ணய்யா மற்றவர்கள் என  ஆளாளுக்கு  ஒரு வேலையை செய்த் கொண்டிருக்க பழைய சுவரின் மீது கால் பரப்பி சம்மட்டி அடித்துக்கொண்டிருந்த கிட்ணய் யாவின் மகன் சுவரோடு சுவராக சேர்ந்து இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் குற்றுயிராக கிடந்த நேரம். பாதி இடிந்து மீதி இடிந்து விழ தயாராக காத்திருந்த சுவர் இடிபாடுகளின் தலைக்கு மேலாக/   தொக்கி நிற்கும்  மிச்சச்சுவர்  தன்மீது   விழுந்துவிடுமோ   என்கிற  பயத்திலும்,யோசனையிலும் மற்ற அனைவரும் கொஞ்சம் விலகியும் யோசனையாயும் நின்ற நேரம் நானும், கிட்ணய்யா வும்தான் இடிபாடுகளுக்குள் கிடந்தவரை மீட்டு தூக்கி வந்தோம்.   சோடா தெளிப்பு,தண்ணீர் கொடுத்தல்,உடல் நீவி விட்டது  என்கிற  முதலுதவிகள் முடிந்து எங்களது சித்தப்பா வீட்டில் நின்ற மாட்டு வண்டியில்தான் அவரை பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம்.  பிழைத்தது பெரும் பாடு என்றார்கள்.   அவர் வீடு வந்து சேர்ந்த மறு வாரத்தில் ஒரு நாள் ஊர் எல்லை அய்யனார் கோவிலில் சென்று பொங்கல் வைத்து விட்டு வந்தோம் நானும் கிட்ணய்யாவுமாக/   அன்று பொங்கிய பொங்கலிருந்து உதிர்ந்த சோற்றுப் பருக்கையாய் பிழைப்பு  வேண்டி ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்து போன இந்த 30 ஆண்டுகள் கழித்து இன்று கிட்ணய்யாவும் அவரது மகனும்  இல்லை.   ஆனால் அவர்களது மகன் வயிற்று பேரனும்,பேரனின் சம்பந்தகாரர்களும் இப்பொழுதுமாய் நிலைத்து நின்று என்னோடு பேசியும் நட்புறவாடியும் நலம் விசாரித்தும் விட்டுமாய் போகிறார்கள்.   இந்த உறவு இதன் மூலம் துளிர்க்குமா,கிட்ணய்யாவின் வாரிசுகளோடு    எனது வாரிசுகளும் நட்பாய்படர்ந்துநிற்பார்களா?படரவேண்டும்எனஆசைதான். பார்த் துக் கொண்டிருக்கிற காலம் பதில் சொல்லட்டும். கொஞ்சம்வழிவிட்டுநிற்போம்.   வந்திருந்தவளுக்குபணம் கொடுத்து கைகூப்பி அனுப்புகிறேன்,நட்புடன்   சிரித்தவாறு/                                12. வல்லினம்,மெல்லினம்,,,,,,,   வணக்கம்பரமு.நீங்கள்இப்பொழுதுஎங்கே இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?எதுவும்அறிய வில்லை நான்.ஏன்அப்படிஇருந்தேன்என்பதற்குஎந்த விளக்கமும்  இல்லைஎன்னிடம். ஆனால் நீங்கள் சொன்னசொல்இன்னும் பசு மரத்தானி போல என்னுள்/   புது நிறமாக கசலையாய்இருந்தநீங்கள்வேப்பங்குச்சிக்கு கையும், காலும்முளைத்தது போல ஒல்லியாகவும் என்மனம் கவர்ந்தவ ராயும் அப்படிஇருந்தநீங்கள்சொன்னசொல்இன்னும்பசுமரத்தானி போல.   ஈனி என்னை பரமுஎனக்கூப்பிடாதீர்கள்,அதுபெண்ணின்பெயரை  போல அர்த்தம்தருகிறது .தவிரநீங்கள்என்னைக்கூப்பிடுகிறதருண ங்களில் அதைக் கேட்பவர்கள் பிரியமானவர்களின் பெயர்களை மனம் முழுக்க நிரப்பி சந்தோஷப் படக்கூடும்.அந்த சந்தோசத் துடன் அவர்கள் என்னை பார்க்கும் தருணங்களில்  நான் ஆண் எனத் தெரிந்ததும் ஏமாந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே,,,,,,, பரமசிவம்,நல்ல பெயர் அது. உலகைக்காக்கும் பரம்பொருளின் பெயர்என ஆன்மீகவாதிகளாலும், அழைக்கவும், உச்சரிக்கவும் இலகுவாக, வருகிறது என அது அற்றவர்களாலும் பேசப்படுகிற பெயர்அது.ஆதலால்மனம்பிடித்துப்போகிறது.   எனதுஊரிலிருந்துஇரண்டாவது கிலோமீட்டரில் இருந்த ஊரில் தான் குடியிருந்தீர்கள் நீங்கள். கிட்டத்தட்ட கீழூர், மேலூர்போலான  ஒரு தோற்றம் தருகிற ஊர் அது.நான் வசிக்கிற ஊரின் திசையிலி -ருந்துவந்தால் இரண்டாவது ஊராகவும்,நீங்கள் வசிக்கிற ஊரின் திசையிலிருந்து கடந்து வந்தால் முதலாவதாகவும் தென்படுகிற தங்களது ஊரின் மணம் மிக்க மண்ணிலிருந்து நீங்களும்,எனது ஊரிலிருந்துநானுமாய்வந்துகைகோர்க்கும்இடம்முக்கியஇடமாய் இருந்திருக்கிறது, ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன இப்பொழுது அதனால்.சொல்லிவிட்டுப்போவோம். பெரியாட்கள் சந்திக்கிற இடம் மட்டுமே பேசப்படுகிற இடமாய் சரித்திரப்பதிவு ஆகுமா என்ன,,,,/   சம்பங்கிவாத்தியார்தோட்டத்தின்அருகாமைப்பகுதிஅது.ரோட்டின்மீதான வளைவிலும் திருப்பத்திலுமாய் இடதுபக்கமாய் அமைந் துமாய்வரைந்துகுடிகொண்டுமாய்/   போட்டதெல்லாம்விளைந்தது எனச்சொன்னார்கள், தப்பித்தவறி யாராவது சேர்ந்தாற்ப் போல ஒருமணி நேரத்திற்கும் மேலாய்நின்று விட்டால் வேர்விட்டு விடும் அப்படி விளைச்சல்காட்டி செழித்துச் சிரித்தமண்ணாய்.   தோட்டத்துக்காரர்களையும்சும்மாசொல்லிவிடமுடியாது.அவர்களும்உடம்பின்ரத்ததை வேர்வையாய் ஊற்றி மண்ணுக்கு உரமிட் டார்கள், பதிலுக்கான கைமாறாய் மண்பொண்ணாய் மாறி பயிர்களைத்தந்தது. ஆச்சரிமாய் அந்தப்பகுதியில் வெங்காயம் எங்குமே விளையாத நேரம்அது, அவர்களதுதோட்டத்தில்மட்டும்விளைந்தது. தண்ணீர்வாகும் அதற்கு  ஒரு காரணம் என்றார்கள். அப்படித் தான் இருந்தது.அவர்களது தோட்டத்தின் கிணற்றுத் தண்ணீரும்/ வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த அந்ததண்ணீரை தனது இரு கைகளாலும் அள்ளிக்குடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்காகசாப்பாடுகொண்டுவந்தமகனைமம்பட்டியால்அடித்துக்கொ ன்று விட்டார் தோட்டத்துக்காரர் எனச்சொல்வார்கள்.   அவரதுபேச்சுவீட்டில்எடுபடாதபொழுதாய்இருந்தசமயம்.அவரு டைய தங்கச்சி மகள் வயதுக்குவந்து நிற்கிறாள்அதைவிடுத்துஇவன் ஊரில் குடியாவன் பெண்டாட்டியிடம் சல்லாபித்துத் திரிந்திரு க்கிறான் என்பது தோட்டக்காரரின் கோபமாயும் ஞாயமாயுமாக வே இருந்திருக்கிறது. அந்த ஞாயத்தின் அடியில் வைக்கப்பட்ட தடை கல்லாக ஒட்டு மொத்த  வீடும் அவருக்கு எதிராய்/   ”பொம்பளபல்லஇளிச்சிக்கிட்டுவந்தாஎன்னபண்ணுவான்ஆம்பள. அவனுக்கு தகிரியம் இருக்கு. பாஞ்சிட்டான்,இப்ப என்ன ஒங்க தங்கச்சி பொண்ண கட்டமாட்டேன்னா சொல்றான். அவ பழக்கத்த விட முடியாதுன்னு தான சொல்றான்,கழுதஅது வாட்டு க்கும் இருந்துட்டுப்போகுது ஒருபக்கம், கல்யாணத்தகட்டி வைங்க சரியாப்போகும் எல்லாம்” என்கிற வீட்டாரின் பேச்சு அவரது கோபத்தை மேலும்,மேலுமாய் தூபமிட்டு வளர்த்துக் கொண்டிரு ந்த நாட்களில் மகன் கொல்லப் படுகிறான் அப்பாவின் கையாலே யே. அவரைப்பொறுத்தவரைஅவரதுசெய்கைஅவருக்கு ஞாயமாகவே படுகிறதுஇன்னும். போலீஸ், கோர்ட்,வாய்தா,என்றான பின்னும்  கூட அவரது மனம் அவரது செய்கைக்கு பச்சை கொடிகாட்டிக் கொண்டிருந்ததாகவே/   “என்ன இருந்தாலும் போன புள்ள போயிட்டான், இருக்குறவர காப்பாத்தனுமில்ல. அவருதான் குடும்பத்துக்கு ஆதாரம், இருக்கு றதக்காப்பாத்த ஆளு வேணுமில்ல.தோட்டம், தொரவு,  வீடுன்னு  கெடக்கு அனாமத்தா,,,,,,, பொழப்பு கெடக்கு  நடுவீதியில, இவரு தண்டனை ஆயிப்போயிட்டாருன்னா, எப்பிடி,,,,,,? என்கிறகேள்வி யானசொல்அவரைகாப்பாற்றிக்கொண்டுவந்தபொழுதன்றிலிருந்து இன்றுவரை தரிசாய்க் கிடந்த மண்ணை பொன்விளைகிற பூமி யாய்  ஆக்கினார்.அப்படியான மண்ணின் வாசத்தை முகர்ந்தபடி தான்நமதுசந்திப்பு நடந்திருக்கிறது பெரும்பாலான தினங்களில்/   சார்லஸ்ஆயில்மில்அது.நம்மூர்ரோடுடவுனை அண்மிக்கிற இடத் தில் இருந்தமில் .பருத்தி விதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் என்பதை நான் அங்கு வேலைக்குச்சேர்ந்த பின்தான் கண்ணாரக் கண்டேன்.நீங்கள்தான்சொன்னீர்கள்,இப்படிஎண்ணெய்எடுக்கிற வேலை கிட்டதட்ட வருடக் கணக்கில் நடக்கிறதுஎன/இந்த மில்  திறந்ததேஅதற்காகத்தான்,இங்குஅது மட்டுமே பிரதான வேலை. என எனக்கு முன்பாய்அந்தமில்லில்வருடக்கணக்கில்பணியாற்றி அனுபவப்பட்ட தாங்கள் சொன்னீர்கள். கைபிடித்து நடை பழகித் தருகிற பாங்குடன் அந்த மில்லில் வேலைக்குச்சேர்ந்த நாளன்றி லிருந்து நீங்கள்தான்எனக்குஅந்தமில்லைப்பற்றிஎல்லாம்சொல்லித் தருகிறீர்கள்/எது,எது எங்கெங்கு,எவை,எவற்றில் என்னென்ன வெலை செய்ய வேண்டும்?யார் முதலாளி,யார்எந்திரக்காரர் எத்த னைபேர்வேலைசெய்கிறார்கள்,பகலுக்குஎத்தனைபேர்,இரவுக்கு எத்தனை பேர் எனவும் எனது வேலை என்ன இங்கு என்ன எனத் தெளிவுசெய்துஎன்னைமில்முதலாளியிடம்அறிமுகம்செய்துவைக் கிறீர்கள்.ஒருவெயில்நாள்இரவன்றுசாப்பாட்டிற்காய்விடப்படுகிற ஒருமணி  நேர இடைவேளையின் போது/   மெலிதானபூமலர்வுபோலானஅறிமுகம்அது.கருப்புநிறகடப்பக்க ல் பதிக்கபட்டிருந்த மில்லின் இடதுபுறம்சின்னதாய்ஒதுக்கப் பட்டி ருந்த ஒரு அறையில்  இருந்த முதலாளி முதலாளி தோற்றம்  தருவ தைவிடுத்துசாதாரணமாய்தோற்றம்தந்ததேமிகப்பெரியஆறுதலாய்/ முதலாளி, முதலாளி,,,,,,,எனச்சுற்றி வருகிறவர்களை அவர் எப் பொழுதும்பக்கத்தில் அண்ட விடுவதில்லை எனசொன்னீர்கள் நீங்கள், அவரைப்பாத்துவிட்டுவந்த பிற்பாடான ஒருநாளில்.நம்மூரு பையன் தான், விவசாயம் போச்சு, மழையில்ல,தண்ணியில்ல, அனலடிச்சிப்போயி நின்னான்,நாந்தான் இங்க கூட்டீட்டு வந்தே ன் .எனச் சொன்ன நீங்கள் மில்லுவேல, புதுப்பழக்கம், வேலையில ஏதாவது சின்ன தப்புத் தண்டா நடந்தாக்கூட பெரிய மனசு பண்ணி  நீங்கதான் பொருத்துக்கணும்.” என்பதில் ஆரம்பித்து என்னுடன் வேலைவந்த சோமுஅண்ணன், கருப்பாயம்மாள், நாகண்ணன்,,,,, எல்லோரையும் பற்றி சொன்னீர்கள்.   இதில் சோமுஅண்ணனுக்குகருப்பாயம்மாளைமேய்க்கவே நேரம் சரியாக இருந்ததை ஒருநாளின் இரவுஷிப்ட்டில்பார்த்துவிட்ட முதலாளி இரண்டு பேரையும் அப்படியே அனுப்பி விட்டார்.நடு இரவு அது எனவும் பார்க்காமல்/   அதுபோலவேநாகண்ணனுக்கும்வேலைஒத்துக்கொள்ளவில்லை. எண்ணெய்க் கக்கல்வாடைக்கு சாப்பிடக்கூடபிடிக்கவில்லை .மீறிச் சாப்பிட்டால் வாந்தி தான் வருகிறது என போய் விட்டார் வேலையை விட்டும், மில்லைவிட்டுமாய்/ உண்மைதான்அவர்சொன்னது .பிழைப்பிற்காக ஏதோஒன்றுதின்றகதைதான்.இரவுஷிப்ட்டின்போதுசாப்பிடுவதற்காகவிடப்படுகி ற இடைவேளையில் சாப்பிடமுடிவதில்லை வயிறு தீயாய் பசித்த போதும்கூட/வாயைத்திறந்துவம்பாகவயிற்றுக்குள்தள்ள வேண் டியகட்டாயத்தில்/சாப்பிட மறுக்கிற கோழியின் வாயைப் பிளந்து வம்பாகதவிட்டைத் திணிக்கிற மாதிரி வம்படியாகதொண்டைக் குழிசங்கடப் பட சாப்பிட வேண்டியிருக்கும். கையெல்லாம் அப்பி யிருக்கிற எண்னைஉடலெல்லாம்அப்பியிருக்கிறவியர்வை எல்லாம் கலந்த எண்ணையும் அழுக்குமாய்/ இதில்எங்கிட்டுச் சாப் பிட?வம்படியாய்சாப்பிட்டுவிட்டுதிரும்பவுமாய்வேலையைஆரம் பிக்கத் துவங்குகிற நேரத்தில் சாப்பிட்ட உணவு குடலுக்கும், வாய்க்குமாய் பயணிக்கும் பயணம் இருக்கிறதே,அது ஒரு தனிக் கதை.   அப்படிப்பயணித்தஒருநாளன்றின்இரவுஷிப்ட்டின்போதுமாட்டிக் கொண்டிருந்தமிஷின்இருத்தி வைக்கப்பட்ட இடத்தில் சரியாக அமராமல் தன் நிலை விலகி அப்படியே விழுந்து விட எவ்வளவு வேகமாக கையை உருவியும் கூட இடது கையின் ஆள்க்காட்டி விரலின் நுனி அடி பட்டுவிடுகிறது. நுனிஎன்றால்சின்ன நுனியே? நகத்தின் அருகே வலதுபக்கமாய்/ மிஷின் விழுந்த வேகத்தில் அந்த இடம் அப்படியே சப்பளிந்து அதிலிருந்து தெரித்து தரை யில் விழுந்த சதைத்துண்டு தரையில் விழுந்துதுடிக்கிறது. மிஷின் விழுந்தவேகம்,கையிலிருந்த சதைத்துண்டு .கைதெறித்த வலி எல்லாம் அனுபவித்தனாயும் பார்த்தவனாயும்அடிபட்டஇடத்தில் எண் ணெயில்நனைத்ததுணியைசுற்றிக்கொண்டுதரையில்விழுந்து துடித்தசதைத்துண்டைஅதேகையால்எடுத்துவெளியேஎறியப் போகையில் எதிரில் வந்த நீங்கள்விஷயம்கேள்விப்பட்டுவாமுதலா ளியிடம் பேசுவோம். பேசிவிட்டு ஓய்வெடு ஷிபட் முடிகிறவரை  என்கிறீர்கள்/ சிறிது நேரம் செட்டில் போய் அமர்ந்திருந்து விட்டு வேலையைத் தொடர்கிறேன்.அதுவரைநீங்கள்தான்எனதுமிஷினையும்கவனித்துக்கொள்கிறீர்கள்.   ஆளுக்கொருதனிமிஷின்.எனக்கு,உனக்குபொன்னம்மாக்காவுக்கு,சந்திரக்காவுக்கு,மாரிய ண்ணனுக்கு என ஐந்து மிஷின். பெரி தாய் வாய்பிளந்து நிற்கிற  ஐந்திலுமாய் கொட்டப்படுகிற பருத்தி விதைகள் அரைபட்டு ஒருபக்கம் புண்ணாக்காகவும்,மறுபக்கம் எண்ணெய்யாகவும் வெளியேறுகிற காட்சியைக்காண்பிக்கிற மிஷின்களாயும்/   காலையில்8மணிக்குவந்தால்இரவு8மணிக்குபணிமுடிகிற12மணி நேர வேலை நம்மளது,உடம்பின் முழு இயக்கமும் இயங்கியே ஆகவேண்டும்12மணிநேரமும்.   அப்படியாய் ரத்ததை வியர்வையாய் சிந்தி உழைப்பாய்க் கொடு த்த நம் இருவருக்குமாய் இரவு ஷிபட் வேலையாய் அமைந்து போனது தற்செயல் ஒற்றுமையே/   இரவுஷிப்ட்டில்ஒருசௌகரியம்.இரவு7.00அல்லது7.15ற்கு சாப்பி ட்டு விட்டு வீட்டை விட்டுக் கிளம்பினால் மில்லுக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு கொண்டு போனால் போதுமானது.இப்போது போல டிபன் பாக்செல்லாம் அப்போது இருந்ததா,இல்லையா என சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனக்கு. பெரியதாக இருக்கிற சில்வர் தூக்கு வாளியே எனது அப்போதைய டிபன் பாக்ஸ்/ஆனால் பகல் சிப்ட் என்றால் அப்படி இல்லை.மதியம் 12 மணிக்கு சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து அல்லது ஆறு மணி வாக்கில் ஒருதரம் சாப்பிட வேண்டியிருக்கும். அதனாலேயே  மதியம் சாப்பிடுகையில் மாலை சாப்பிட வேண்டுமே என கூசிக் குசி சாப்பிட வேண்டியிருக்கும்.   மில்லே உலகமான பொழுதது.அப்படியான நாளன்றின் இரவு சிப்ட் முடிந்து வீட்டிற்கு கிளம்பப் போகிறநேரம்.நன்றாகயிருந்தால் இன்னும் அரை மணி  நேரமே இருக்கலாம். எரிந்து கொண்டிரு க்கிற பாய்லரின் உள் அழகுக்காட்டிக்கொண்டிருந்த தீ சொல் பேச்சுக்கேளாமல் சட்டென பாய்லரை விட்டு வெளிதாவி வந்து என்னை போர்த்தி எடுத்துவிட்டுச்சென்றுவிடுகிறது.   பாய்லர்ஒட்டுமொத்த மில்லின் இயக்கத்திற்காய் எரி சக்தி தருகிற  கொதிகலன்.அதைதொடர்ந்து குறையவிடாமல் செய்ய கடலைப் பொட்டு,விறகுஏதாவது போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பாய்லர் தொடர்ந்து எரிவதற்கும் அது தன் கொதி நிலையை குறிப்பிட்ட சூட்டிலிருந்து கீழிறங்காமல் வைத்துக்  கொள்ளவுமாய்/   பாய்லர்எரியஎரிய,கொதி நிலைக் கூடக் கூட கடலை பொட்டும், விறகுகளும் காலியாகிக் கொண்டிருக்க,பாய்லரின்முன்நின்றநான் இயந்திரமாய்வேலைசெய்துகொண்டிருக்கிறேன்.   வெயிலின்கிரகணங்கள்நான்நின்றஆஸ்பெஸ்டாஸ்கூரைதாண்டி உள் எட்டிப்பார்க்கிறநேரம்.வீடு கிளம்ப இன்னும் அரை மணியே  உள்ளது,சீக்கிரம் போய் கைகால் கழுவிவிட்டு வந்து விட்டால் வேலை முடிந்ததும் சட்டென கிளம்பிரயில்வேகேட்அருகே இருக் கிற டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிடலாம்அப்படியே, என்பது நாம் இருவருமாய்  வரைந்து பேசி வைத்திருந்த திட்டம்/ அதை அமுலாக்க சீக்கிரம் கிளம்புவது ஒன்றே இப்போதிருக்கிற தலையாய கடமை என்கிற அவசரத்தில்  வேகவேகமாய் கடலைப் பொட்டை பாய்லர் நிரம்ப அள்ளி நிரப்பிவிட்டு பாய்லரின் கதைவை  மூடப்போகிற நேரம்/உள்ளிருந்து பறந்து வந்ததீஎன்னைத்தாக்கி விட்டு மறுபடியும் வேகவேகமாய் உள்ளே சென்று விடுகிறது.   அப்படியே உறைந்து போயும்,கைகால்களில் இருக்கிற முடிகள் கருகிப் போயுமாய் அதிர்ச்சியுற்று நின்றநேரத்தில் விஷயம் கேள்வி பட்டு ஓடிவந்து அள்ளிக்கொள்கிறீர்கள் நீங்கள். தாய்க்கோழிதன் குஞ்சைஅரவணைத்துக்கொள்கிறவாஞ்சைஅந்தஅரவணைப்பில் அந்த அரவனைப்புடன்  முதலாளியிடம் என்னைக்கூட்டிச்சென்ற நீங்கள் எனக்காக ஆஸ்பத்திரி செலவு கொடுக்க வேண்டும் என முதலாளியிடம்பேசுகிறீர்கள்,அவர்அதுஎனதுதப்புத்தான்என்றும்,  இதற்கெல்லாம் மில் பணம் கொடுத்தோ,ஆஸ்பத்திரிக்கு செலவு செய்தோ உதவாது எனச்சொன்னதை எதிர்த்து 5 வருடங்களாய் வேலை செய்த மில்லிலிருந்து வெளியேறி விடுகிறீர்கள்/ அப்பொழுதிலிருந்துஅடுத்தடுத்தசில தினங்களில் நம் நட்பு வேறு மில்லில் வேலை செய்வதில் தொடர்ந்தது.அப்புறமாய்வேலைநிமித்தமாய் நான் ஒருபக்கமும்,நீங்கள் அதே மில்லிலுமாயும் அவரவர் களதுஇருப்பைபதிவுசெய்து கொண்ட காலகட்டத்தில் உங்களது அருகாமையிலிருந்து கழண்டுவந்த நான் இன்று தேடுகிறேன் நீங்கள்எங்கு இருக்கிறீர்கள்,எப்படி இருக்கிறீர்கள்,என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், மில்லில்நம்முடன் வேலைசெய்த விதவைப் பெண் கங்காவை திருமணம் செய்து கொண்டீர்களா எனத் தெரி யவில்லை. அறிகிற ஆவலுடன் நான்/                         13. மெழுகுத்துண்டு,,,,,,,     அந்தவேனைபின்னோக்கிஇழுத்தவனுக்குஎன்னவயதுஇருக்கும்எனநினைக்கிறீர்கள்ஆறுஅல்லதுஎழாம் வகுப்புப்படிக்கிறவயது இருக்கலாம்.மாநிறமேனியில்கொஞ்சம் பூசினார்ப்போலத்தெரிந்தான்.   கைலியைமடித்துக்கட்டியிருந்தான்.அவனதுபெயர்கண்ணன்.என்னதம்பிஇதெல்லாம் உன் வயது பையன் களெல்லாம்பெரிமுடாஸீம்டீஸர்ட்டுமாய்அலைகிறபோதுநீமட்டும் நீ இப்பிடி கைலியை டப்பாக்கட்டுக்கட்டிக்கொண்டும்,முண்டாபனியன்போட்டுக் கொண்டும் தலையை படியவாரிக் கொண்டுதிரிந்தாயானால்,,,,,,,உடை நாகரீகம் பற்றிய உன் வயதொத்தவர்களின் பார்வை என்னாவது ?எனநினைத்ததைஅவனிடம்கேட்க முடியவில்லை.   காய்கறிக்கடைக் காரர் கருப்பசாமியண்ணனின் வேன் அது.கருப்பாசாமி பாறையில் முளைத்த செடியாய் வேர் விட்டவர்.அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சைக்கிளில் புளி வியாபாரம் செய்கிறவர்.சுத்துப்பட்டியில் அவர் கால் படாத ஊர் இல்லை.கும்பலாக நாலு தலை தெரிந்தால் போதும். ”புளி வாங்களையோ,புளி”என்கிற ரிதம் மாறாத குரல் அவரிடமிருந்து ஓங்கி ஒலிக்கும்.   புளிவியாபாரம்பார்த்தமூளைமெல்ல,மெல்லகடைபோட்டுசொந்தஊரில்உட்கார்ந்தால் என்ன,,,,,,,,?எனயோசித்தபோது வேறு எந்தக்கட்ஃபைக்காரரும் செய்யாத வேலையை செய்தார். ஒரு  ரூபாய்க்கு புளி,இரண்டு ரூபாய்க்கு எண்ணெய்,ஐம்பது பைசாவிற்கு பொரி கடலை, ஐம்பது பைசாவிற்கு தேங்காய்ச்சில்,,,,எனஇன்னும்பிறவுமாய்சேர்த்து எளியவ ர்களுக்கான இடமாய் தன் கடையை மாற்றிக்கொண்டார்.கேட்டால் சிரிப்பார். கேட்பவர் தோளில் கைவைத்தோ அல்லது ஆழமாக பார்த்தவாறோ/   நெருங்கிப்போய்கேட்டால்”அப்படிகைக்கும்,வாய்க்கும்பத்தாமலேயேவளந்துட்டேன்”. ஏங் வயசுல நல்ல சாப்பாட கண்ணுல பாக்க நாலு நாளாவது ஆகும்.வாரத்துல ஒரு நா அப்பிடி சாப்புட்டா அதிசியம். அதஇப்பநெனைச்சிப் பாக்குறேன்.இப்பிடி யேவாரம் பண்றதால எனக்கு ஒண்ணும் நட்டமில்ல, லாபத்துல கொஞ்சம் கொறையும். இல்லை ன்னாரொம்பகூடுதலாலாபம் கெடைக்காது. அவ்வளவுதான்.  அதுனால இந்த மாதிரி ஜனங்களுக்கு யேவாரம் செய்யாம இருக்க முடியாது.நான் செய்யலைன்னா இவுங்க ளுக்கு வேற யாரு செய்வா?எல்லாம் ஐஞ்சுக்கும்,பத்துக்குமா காடு கரைன்னும், கொத்த வேலைன்னும் பாக்குற ஜனங்க/என சொன்ன கருப்பசாமி இப்போது புதிதாய் காய்கறிக்கடை போட்டிருக்கிறார்.கோட்டூர் போகிற வழியில்/ அதன் பேரே ரெண்டு ரூபாய்க் கடை. ரெண்டு ரூபாய்க்கு ஒரு கை காய்.நாம் கொடுகிற ஒவ்வொரு இரண்டு ரூபாய்க்கும் ஒரு கைகாய் அது தான் கணக்கு/அப்படி அவர் கடை ஆரம்பித்த புதிதில் இரண்டு ரூபாய்க்கு போட்ட காய்கறி இப்போது ஆறு  ரூபாய்.சுற்றியுள்ள ஊர்களில் இருக்கிற கடைகளுக்கு எல்லாம் இவர் சரக்கு தான். காலை ஆறு மணிக்கு சூடுகட்ட ஆரம்பிக்கிற அவரது வியாபாரம் சுற்றுப்பட்டி  கடைகளுக்கு காய்கறி சப்ளை செய்வதிலிருந்து உள்ளூர்க்கார்களுக்கும், தன் கடை தேடி வந்து வியாபாரம் வாங்குகிறவர் வரைக்கும் நீண்ட பட்டியலாய்உருவெடுத்துநிற்கும் அது தவிர இப்படி சடுதிகொள்கிற வியாபாரத்தை பத்து மணிக்கு முடித்துக் கொண்டு சுற்றி இருக்கிற ஊர்களுக்கு காய்கறி வியாபரத்திற்கு போய் விடுவார். அதுமட்டுமில்லை சாத்தூரிலிருக்கிற ஒரு அரசுப்பள்ளியின் ஹாஸ்டலுக்கு காய்கறி சப்ளை இவர்தான்.   இவர்கொடுக்கிறகாய்கறிக்குஉடனேபணம் கிடைக்காது.மாதம் ஒரு முறை செக்காகக் கொடுத்து விடுவார்கள். கண்ணனின்அப்பாமருதண்ணனும்,கருப்பசாமியண்ணனும் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்துஆறாம்வகுப்புவரை.அதற்கப்புறமாய்  வசதிகாணாமல் மருதண்ணனின் படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டார்கள். வசதிஎன்பது ஒரு புறம் இருக்க தங்களது தொழிலைத் தொடர்ஆள் ஒருவர் வேண்டும் என மருதண்ணனின் கையில் ரம்பத்தையும், இழைப்புளியையும்  கொடுத்துவிட்டார் அவரது அப்பா/   மருதண்ணன் படிப்பை நிறுத்திய மறுவருடம் கருப்பசாமியண்ணனும் ஏழாம் வகுப்புடன் வியாபாரத்திற்கு தாவிவிட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை உழைப்பின் நுனி பிடித்து,கையூன்றி எழுந்து,சுவர் பிடித்து நடந்து,தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து நடந்து தவழ்ந்தேறி வந்தவர்கள்.இன்று அந்த ஊரின் பேசப்படுகிற அடையாள மனிதர்களில் ஒருவர்களாய் ஆகிப்போனார்கள். சாரதாக்காவின்கல்யாணவீடுஅது.ஒருவாரமாய்புதுக்களைபூண்டிருக்கிறவீட்டின் முன் தான் கருப்பசாமியண்ணனின்காய்கறிலோட்வேன்நின்றிருந்தது.கருப்பசாமியண்ணனுக்கு சாரதாக்கா கழுத்தை நீட்டியிருந்தால் கருப்பசாமியண்ணன்இப்போது சாரதக்கா வீட்டின் முன் போய் நின்றிருக்க மாட்டார்.   ஊதாப்பெயிண்ட் அடித்த வீடு. நாடாக்கமார் தெருதாண்டி,ரெட்டியார் தெரு நுழையும் முன்பாக இடையிலாக இருந்த ஆசாரிமார் தெருவை ஒட்டியிருந்த வீடு. உதாக்கலர் வண்ணம் மின்னிய வீட்டின் மாடியிலிருந்துமுல்லைபூக்கொடிகாய்த்துத் தொங்கும் சரம் சரமாய்/   வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் ரகத்திற்கு ஒரு செடியாகவும், கன்று களாகவும்/ பார்க்கநன்றாக இருக்கும்,அது போல வீடும் பளிச்சென சுத்தப்பட்டு துடைத்துவைக்கப்பட்டது போலவேஎந்நேரமும்/சாரதாக்காவுக்கும்கருப்பசாமியண்ணனுக்கு வாக்கப்படவேண்டும் என்கிற எண்ணம் மனம் முழுக்க மத்தாப்பூவாய் மலர்ந்திருத்திருந்தது. கருப்பசாமியண்னனுக்கும் அப்படியேஆகியிருந்தது.   ஒல்லியாய்,மாநிறத்தில் நடுவாந்திர உயரத்தில் பளிச்சென துடைத்து வைத்தது போலிருக்கிற சாரதாக்கவைபார்க்கிறபொழுதெல்லாம்மனம்களிகொள்ளாமல் இருந்த தில்லை. சாரதாக்கவைப்பார்க்கவென்றே கருப்பசாமியண்ணன் வம்பாக ஏதாவது ஒரு வேலை வைத்துக்கொண்டு போவார். கல்யாணம் முடித்து,குடும்பம் நடத்தி பிள்ளை குட்டிக ளுடன் நடமாடித்திரிவார் மனதிற்குள்ளாக/   அவர் மனம் முழுக்க இப்பிடி என்றால் சாரதாக்காவின் மனது லேசாய் இல்லை.கருப்பாசாகியண்ணன் அந்ததெருப்பக்கம்வருகிறமாதிரிதெரிகிற நாட்களில்  வீட்டு முன் கலர் கோலம் மின்னும்.ஜை ஒற்றையிலிருந்து ரெட்டையாய் மாறும். எதற்கெனத் தெரியாமலேயே அந்தத்தெருவில் நாலைந்து முறைகுறுக்குநெடுக்காக  நடப்பாள். கடைக்குப்போக வந்து விட்டு கடைக்குப் போகாமலே யேயார்வீட்டின் முன் பாகவாவது நின்று பேசிக்கொண்டிருப்பாள்.வீட்டு வாசலில் நின்று கொண்டு நன்றாக இருக்கிற தலையை உளைத்துவிட்டுவிட்டு ஜடைபின்னிக் கொள்வாள்.    டீ.வியில்சப்தமாகபாடல்வைத்துக்கேட்பாள்.கருப்பசாமியண்னனின்கடைக்குப் போய் அவர் கையால் ஏதாவது ஒரு சாமான் வாங்கி வருவாள். பெரும்பாலுமாய் அப்படி அவள் வாங்குகிற சரக்கு,,(?/)தேன் மிட்டாயாகவே இருக்கும்.   சாரதாக்காவின் அப்பாவிற்கு இது ஜாடை,மாடையாகக்கூடஅல்லாமல்நேரடியாகவே தெரிய அவர் கருப்பசாமியண்ணனிடம்போய்பேசிவிட்டுவந்துவிட்டார்.வேணாம்மாப்ளஇது வீண் ஆச,விட்டுருங்க, ஒங்க குடும்பம் ஒரு மொன,எங்க குடும்பம் ஒருமொன,, எப்பிடி ஒட்ட வச்சாலும் ஒட்டாது.,,,,,,,,,,,,,,,என நீளமாக பேசிவிட்டு வந்து விட்டார்.அன்று அந்த நினைப்பை கைவிட்டவர்தான்.  மஞ்சள்,பச்சை,பிங்க் என பலவர்ணங்களில் காணப்பட்டவீடுகளின் முன் காட்சிப் பட்ட கோலங்கள் அழிந்தும், அழியாமலும்/ வெள்ளைமாவும்,கலர்மாவுமாய்காட்சிப்பட்ட  கோலங்கள் காட்சிப்பட்ட வீதி சிமிண்ட் பூசப்பட்டிருந்த தரையாய் இருந்ததாக/   மெயின் ரோட்டின் இடது புறம் வாசல் வைத்தது போல் இருக்கிற தெருவில் நுழைந்து நூல்ப்பிடித்துச் சென்றால் அப்படியே கடந்து,நடந்து வந்து இந்தப்பக்கமாய் இருக்கிற மெயின் ரோட்டில் ஏறிக்கொள்ளலாம்.ஊரின்ஆரம்பத்தில்நுழைந்துகடைசியில் வெளி யேறுவது போல/ சைக்கிள்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மட்டுமே நுழைந்து வெளியேறுவதற்கு வசதியுள்ள வீதி அது.அதில் போய் எப்பிடி இந்த வேனை நுழைத்தார்கள் எனத்தெரியவில்லை.     தெருவின் முனையிலிருந்து பின்னோக்கி முழு உந்து விசையுடன் ஏறிய வண்டியை பின்னோக்கி தொட்டு இழுத்த சிறுவனைப்பார்த்து ஊதாக்கலர் பூசிய வீட்டிலிருந்து வெளியே வந்த  சாரதாக்கா சைகையில் சொல்கிறாள் கவனம் என/   வேனில் முன்னால் அமர்ந்து ஸ்டியரிங்பிடித்துக்கொண்டிருந்தகருப்பசாமியண்ணன் வேனை பின்னோக்கி நகர்த்திக்கொண்டிருந்தவராய்/                                    14. பூப்பதெல்லாம்,,,,,,,       பத்தில் ஐந்து உதிர்ந்துவிடும் போலிருக்கிறதே/உதிர்வென்றால் உதிர்வு அப்படியொரு உதிர்வு .பட்டுக்கம்பளம் போர்த்தியது போலல்ல,வெள்ளையாய் போர்வை போர்த்திய மாதிரி.   ஒன்று,இரண்டு,மூன்று மரங்களிருந்து உதிர்பவை இவ்வளவா?பார்க்கவும் ,கேட்கவும் ஆச்சரியமாய் இருக்கிறது.ஓரு வேளை இவையெல்லாம் உதிராமல் பூப்பவையெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?என்கிற கேள்வியையும் உட்படுத்திச் செல்கிறது .மரம் பார்க்கும் போதும், அது நிலைத்து நிற்கிற தரை பார்க்கிற போதுமாய்.   மஞ்சளும் அது ஒரு நிறமுமாய் கைகோர்த்து சிறு கற்களும்,பெருங்கற்களுமாய் காட்சிப் படுகிற மண் பரப்பின் மீது வீட்டின் பின்பக்க மற்றும் பக்கவாட்டின்கொல்லை காட்சிப் பட்டு தெரிகிறது.   வேப்பமரங்கள் மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,புங்க மரம் ஒன்று என வகைக் கொன் --றாய் நின்ற மரங்கள் உதிர்கிற இலைகளைஅன்றாடம்கூட்டி அள்ளுகையில் தோனுகிற யோசனையுடன் இப்போது வேப்பமரம் ஒன்றை வெட்டிவிடலாம்என்பதும்கைகோர்த்துக் கொண்டதாய்/   வீட்டின் கொள்ளைவெளியில்தன் ஆகுருதி காட்டி,உடல் பருத்து நிற்கிற மரமாய் அது. மிகவும்பருத்து விடவில்லை.அதற்காக அப்படியில்லைஎனவுமாய்சொல்லிவிட முடியாது. நேராகவும்,சீராகவும் ஒரு   குறிப்பிட்ட உயரம் வரை பருத்து வளர்கிற வேப்பமரம் நல்ல விலை போகும் என்பார்கள். ஏறக்குறைய  அந்த மரத்தை பார்க்கிற கணங்களிலெல்லாம் அப்படித் தோணாமல் இல்லை இவனுள்ளாக/ஆனாலும் அவசரமாக வெட்டவேண்டிய தேவை என்ன இருக்கிறது.என்பதை ஆராய்ந்த கணங்களில் மரம்பருத்துபோகும் போது  அதன் வேர்கள் வீட்டின் அஸ்திவாரத்தில் நுழைந்து விட வாய்ப்பிருக்கிறது. எனவே,,,,,,,/ என முடியாத முற்றுப்புள்ளியாய் இவனும்இவனதுமனைவியும்பேசிகொண்ட நாட்களின் இரண்டு காலையின் சூர்ய அஸ்தமனம் கழித்து மரம் வெட்டுபவர் ஒருவர் வந்தார். டீக்கடைக்காரர் சொல்லி விட்டார் என/   பேசினார்கள் இருவரும்.அவர் வந்த வேளை ஒரு பதினோரு மணி இருக்கலாம்.காலை வேளை விடை பெற்று மதியத்தைவரவேற்கதயாராய்இருந்த நேரம்.அந்தநேரமே அவரது  பேச்சில் சாராய வாடை வீசியது.”இன்னைக்கு ஞாயித்துக் கிழமை சார்.பொழுது போகமா நான் குடிக்கிறதில்லை .என்னமோ ஒடம்பு வலிக்குஆத்தமாட்டாமத்தான்இப்பிடி, வீட்ல  கோழி  வெந்துக்கிட்டு இருக்கு சார்.போய் சாப்புட்டு படுத்தாத்தான் அடுத்தவாரம் ஓட முடியும் .பொழப்பு அப்பிடி.நாயில பாதி எங்க ஓட்டம் பத்துக்கிடுங்க”என்றார்.   அவரது பேச்சில் கயத்தாறு பக்க பாஷையின் வாடைவீசியது, “டீக்கடைக்காரரு எனக்கு  மாமந்தான், எங்க தங்கச்சியதான் கட்டீருக்காரு,வந்துட்டோம்பொழப்புதேடிஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி. ஊருலஒண்ணும்நெலைகொண்டபொழப்பாத்தெரியல, மனசக் கழக்கிட்டுவந்துட்டோம், பொழக்கணுமில்ல சார்.வந்த யெடத்துல அவரு வீட்டாள்களும் நாங்களும் ரொம்ப  நெருக்க மாயிட்டோம்.  இத்தனைக்கும்சொந்தஊர்லசண்டைக் கோழி மாதிரிவெடச்சிகிட்டு திரிஞ்சோம் நாங்க ரெண்டு குடும்பமும்,ரெண்டு வீட்டு பெரியாள் களும் பாத்த பார்வ அது.கஞ்சிக்கு இல்லைன்னாலும் வைராக்க்கியம்ங்குறபேர்ல அவுங்க போட்டுக்கிட்ட சண்ட கட புடிச்ச வேத்தும இன்னும், இன்னுமானநெறஞ்சுபோன கெட்டி தட்டிப்போன பழக்க வழக்கங்க,,,,, எல்லாம் எங்கள் ரொமபவும் தூரமாக்கி வச்சிருச்சி. முணுக்குன்னுறதுக்குள்ள சண்டதான், போலீஸ்ஸ்டேசந்தான்னு  இருந்தவுங்க இங்க வந்த ஒடனே சுத்தமா மாரிப் போனோம்”   ”இத்துப்போன மனுசங்க,இத்துப்போன பொழப்புஅவுங்களது,அவுங்களஎன்ன செஞ்சா லும் கேக்க ஆளு கெடையாதுன்னு நாங்க இங்க பொழப்பு தேடி வந்த புதுசுல ஒரு சளதாரி நாயி ஏங்மச்சான் வீட்டுக்குள்ளபுகுந்துட்டான்.அன்னைக்குஅரிவாள தூக்கிட்டு  நாந்தான் அவன வெரட்டுனேன்.மறு நா விடிஞ்சு எந்திரிச்சுவீட்டவிட்டுவெளிய வரயில ஏங் மச்சான் வீட்டு வாசல்ல நாலு பேரோட நிக்கிறாரு. என்னான்னு கேட்டதுதான் தாமதம்.   படக்குன்னுகண்ணுலதண்ணிவடிச்சிட்டுஎங்கையப்புடிச்சிக்கிட்டாரு. அப்புறம்  பெரியாள்க பேசி முடிச்சாங்க.ஏங் தங்கச்சிய அவரும்,அவரு தங்கச்சிய நானுமா கட்டிக் கிட்டோம்.குண்டாம்மாத்து சம்பந்தம். நல்லாத்தான் இருக்கோம்ரெண்டு குடும்பமும்/ இப்ப ஏங்மூத்த பையன் பத்தாவது படிக்கிறான்,சின்னப்பொண்ணுஎட்டாவது படிக்கிறா, அவருக்கும் இதே வயசுல ரெண்டு பொண்ணு நிக்குறாங்க/  சின்னவபடிக்கிறா, போன வருசமே பெரிய வபடிப்ப நிறுத்திட்டாரு.நாங்க,,,,,, ஆளகதான்,ஒங்களுக்குத்தெரியும்ன்னு  நெனைக்கிறேன்” எனச் சொன்னவரை ஏறிட்டபோது கருத்துமேனிவாடிஒட்டித் தெரிந்தார். கை,கால்கள் மெலிந்தும், விரைத்தும் நரம்புகள் புடைத்து தெரிந்துமாய்/   கட்டம் போட்ட கைலியை மடித்துக்கட்டியிருந்தார், வெள்ளைச்சட்டை அழுக்கும், ஆங் காங்கே கரை படிந்துமாய்/அப்பொழுதுதான் தலைக்கு குளித்துவிட்டு வந்திருப்பார் போலும்,முடிகள் சிலும்பிக் கொண்டு நட்டுக்கொண்டு தெரிந்தது. அவர் நீட்டிய கையிலி ருந்த முடிகள் வியர்வை பூத்து தெரிந்ததாய்/கையில் நிறைந்துதெரிந்தமுடிகளின் மேலே வர்ணம் காட்டிய வியர்வைத் துளி வெயில் பட்டு மின்னியது. அவர் கைகாட்டி பேசிய திசையிலிருந்து பச்சை காட்டி சிரித்த ஒற்றை மரத்தை மட்டுமே வெட்டுவதுநல்லதல்ல, மற்ற இந்த இரண்டையும் கூட வெட்டி விட்டு புதிதாக வேறு கன்று வையுங்கள்.நீங்கள் சொல்கிற ஒற்றை மரம் தவிர்த்து இது எதுவும் தேறாது போலிக்கிறது,நாங்கள் மூன்று பேர் வருவோம் வெட்டுவதற்கு,வெட்டி விறகாகி கொடுத்து விட்டுப்போய் விடுகிறோம். அதற்கு இவ்வளவு ஆகும் கூலி என அவர் சொன்னதற்கும்,இவன் இல்லையில்லை. எனக்கு நீங்கள் விறகாக வெட்டியெல்லாம் தர வேண்டாம். வெட்டிய மரத்தை நீங்களே விலை பேசி எடுத்துக் கொள்ளுங்கள், அதற்கு விலையாய் எவ்வளவுகொடுப்பீர்கள் என்ற தாவாவில் முடிந்து போனது.நிலையற்ற பேச்சாய் அன்று முடிந்து போன மரம் வெட்டை பற்றி திரும்பத்திரும்ப நலைந்து முறை கேட்டு வந்துவிட்டார்மரம் வெட்டுபவர், இவன் தான்  இருக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டான். அவரிடம்வேறு வேறாக சாக்குசொல்லியவனாய்/   சரியாகப் பார்க்கப் போனால் அந்த மரம் மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து இலையும், கிளையுமாய் நின்ற நாட்களிலிருந்து இன்று வரை அவன் அதன் அருகாமையிலேயோ அல்லது சற்றுத் தள்ளியோ நின்றுதான் பல்விளக்கி இருக்கிறான் பெரும்பாலான நாட்களில்/ பாத்ரூமின் பின்பக்கக் கதவை திறந்தால்தென்படுகிறவேப்பமரம்சுமந்து நின்ற தரை வீட்டின் பின்பக்க கொல்லைவெளியாய்காட்சியளிக்கிறது.   முள்மரங்களின் நடுவில் ஊனப்பட்டிருந்த  வீட்டை  தனியாக வீடாக காட்சிப்படுத்திக் காட்ட இவன்எடுத்துக்கொண்டமுயற்சிகளில்முள்மரங்களைவெட்டுவதே முக்கியமாயும் முதன்மையாயும்  பட்டது.இடம் வாங்கும் போதே இடத்தை மூடி மறைத்திருந்த முள்மரங்களை  பிளந்து வந்துதான் இடம் பார்த்தார்கள். தரகர்,இவன்மற்றும்இவனது மனைவி, பிள்ளைகள் இருவருமாய் கால் பதித்த இடம்  பிடித்துப்போக விலையைக்கேளுங்கள் ஓருநாட்களில் அட்வான்ஸ் போட்டு விடலாம் என்ற முடிவைஅங்கேயேமுள் மரங்களுக்கு  நடுவாக எடுத்துவிட்டார்கள்.தவிர இம்மாதிரியான  இடத்தை வாங்கினால் விலையும் சற்று குறைத்து வாங்கலாம் என்கிற உள் மன எண்ணம்  ஒரு பக்கம்.அன்றே முடிவு பண்ணினான்.   தச்சுபண்ணுவதற்கு முன்பாக இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்,தன் இடம் மட்டுமே சுத்தப்பட்டால் போதுமானது என அன்று எடுத்த முடிவில் சிறிதே மாற்றம் பண்ணி தன் இடத்திற்கு அருகே இருக்கிற இடத்தையும் சுத்தம் செய்தால் தேவலாம் என்கிற முன் வரைவை  முன் மொழிந்து கொண்டான் இடம் தச்சுப்பண்ணிய நாளன்றில்/   அன்று கையில் எடுத்த அரிவாள்தான் வீடுகட்டி முடிக்கும்வரைகீழேவைக்க மனமின்றி வெட்டிக் கொண்டி ருந்தான்,வீடு கட்டிய இடம்,அதைஒட்டிஉள்ள சிறிய வெளி, என்பது  மாறி வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்த இடம் அதை ஒட்டியும்,எதிர்த்தாற்ப்போல் இருக் கிற வெளியும் வெட்டுவது என்கிற எண்ணத்துடன் வெட்ட ஆரம்பித்தான்.அப்படி சுத்தப்படுத்தப்பட்ட வெளியில் கட்டபட்ட வீட்டின் சரித்திரம் இன்றோடு பத்து வருடங்கள் என்பதாய்/   பச்சையும் ,மஞ்சளும் அடர் ப்ரவ்னும்,நீலமும்,மெரூனும் இன்னும்,இன்னுமாய் பிற நிறங் களை சுமந்து கொண்டிருக்கிற வீடுகளை காண நேர்கிற சமயங்களில் நம் வீட்டிற்கும் இப்படித்தான் பெயிண்ட் அடிக்க வேண்டும் என மிகவும் பிரயாசைப்பட்டிருக்கிறான். ஆனால் வீடு கட்டி முடிந்த்தும் இப்போதைக்கு  பெயிண்ட் அடிக்க வேண்டாம்,வொயிட் சிமிண்ட் மட்டும்ப் பூசி கொள்ளுங்கள் போதும்,ஒருவருடம்கழித்துப்பார்த்துக்கொள்ளலாம்  என்றார் வீட்டை கட்டியராசுகொத்தனார்.   வீட்டிற்குதச்சுபண்ணியதிலிருந்து ,அஸ்திவாரம் தோண்டியநாளதுவரைராசுக் கொத்த னார் யார் எனத் தெரியாது.அவரை மனதாலும் கூட நினைத்ததில்லை.இவனது மனதில் உதித்து முடிவு பண்ணிய தெல்லாம்  வேறொருவர்,கட்டிடக்காண்ட்ராக்டர்,சௌகரியமாக வேலையைமுடித்துத்தருகிறேன்எனச்சொல்லிநம்பிக்கைகாட்டி பேசியவர். நிலத்தை கொடுத்தால் போதும் வீட்டைக்கட்டி சாவியை கையில் கொடுத்து விடுவார்,நாம் எதுவும் பார்த்துக்கொள்ள வேண்டியதில்லைஎன நம்பிக் கொடுத்தான். கல்லும் மண்ணுமாய் நிலைகொண்டிருக்கிறகரிசல்பூமியில் செங்கலும்,  சிமெண்டுமாய் புதிதாக வீடொன்று நிலைகொண்டு எழுந்து நிற்பதை காண்கையில் பட்டகஷ்டமும்,அடைந்த வேதனையும் கண்காணாமல்போய்விடும்.பேங்கில்வைத்த மனைவியின்  நகைகலையெல்லாம் கூட மீட்டுவது இரண்டாம் பட்சமாகித்தெரியும்.   நண்பர்களும்,தோழர்களும்,உறவினர்களும் பண்ணிய உதவியும் செய்த நற்செயலும் நல்லதாகிப்படம் காண்பிக்கும்.மனது சந்தோ ஷிக்க  பால் காய்ச்சிபுது வீட்டுக்கு குடி வருகையில் எல்லாமுமாய் கைகூடிவந்த நிம்மதியும் திருப்தியுமாய் இருக்கலாம் என்கிற நினைப்பின் வேரிலும்  நம்பிக்கையிலும் ஆசுவாசத்திலும் ஊற்றிய வெந்நீராய்வீட்டுவேலைகள்மும்பரமாகநடந்து கொண்டிருந்த நாளில் காண்ட்ராக்டர் கோணக்கலப்பை சாத்தி விட முன் வந்து உருத்தரித்தவர்தான் ராசுகொத்தனார்.   பக்கத்து தெருவில் ஒரு நடந்து கொண்டிருந்த புது வீட்டு வேலையில் இருந்து தன்னை பிய்த்துக் கொண்டுவந்தவர்.நான்அங்குஇல்லையென்றாலும்நஷ்டமில்லை அவர்களுக்கு, அங்கு கிடக்கிறார்கள் வேலை செய்ய ஆட்கள் நிறைந்து போய்.ஆனால்இங்கு நிலைமை அப்படியில்லை என இப்போது நீங்கள் கட்டிக்கொண்டிருக்கிற வீட்டில் வேலைபார்க்கிற மட்டக்கொத்தனார் பையன் வந்து சொன்னான், மனது கேட்கவில்லை,வந்து விட்டேன், எனக்கும் ஒரு ஆசை.நானாக என் கீழ் ஆள் வைத்து ஒரு வீட்டைகட்டிமுடித்துப் பார்க்க வேண்டும் என,அனுமதிப்பீர்களா.என அவர் கேட்ட நாளிலிருந்து வீட்டின்சாவி இவனது  கைக்கு வரும் வரை அவர்தான் தலைமைக்கொத்தனார்.   அவர் அப்படியொன்றும் வேலையில் முற்றுமாக கற்றுத்தெளிந்தவரில்லை.ஆனாலும் கையும் வாயும் சுத்தம் .அவர்குடியிருக்கிற N G Oகாலனியிலிருந்துதுருப்பிடித்த சைக்கிள் ஒன்றில் தான் வருவார். இத்துப்போன சைக்கிள்அது.முக்கால்வாசிநாள்அந்த சைக்கிளை இவர்தான் சுமந்து செல்வார். இவர் நினைத்ததற்கு மாறாக நடந்த நிகழ்வாய் சொல்வார்கள்  அதை. அவரும் இம்மாதிரியான கேலிப் பேச்சுக்களுக்குசிரித்துக்கொள்வார்,  தலைமை கொத்தனார் என்கிற எந்த ஒரு சிறு பந்தாவும் இருந்த தில்லை.எந்த ஒரு கோபமும் பட்டதில்லை, ஒரே ஒரு முறை அந்த சொல் உடைத்து  கோபப் பட்டு  விட்டார், அதானே மனிதன் என்றால் கோபப்படவேண்டுமே?கணேஷனின் காலவாசலில் சுண்ணாம்பு வாங்க வேண்டும் என்கிற அவரது சொல்லை மீறி சுண்ணாம்புக்கார சேட்டிடம் வாங்கிய மறு நாள் மிகவும் கோபப்பட்டு விட்டார்.இரண்டு நாள்பேசக்கூடஇல்லை,உடன் வேலை பார்க்கிற பையன்கள் மூலம்தான் எல்லாம்புறாவிடுதூதாகஇருந்தது.மிகவும்சங்கடமாகக் கூடப் போய் விட்டது. இரண்டாம்நாள் மாலை வீட்டிற்கு வந்தான் மட்டக்கொத்தனார் ஒருவன், சார்அவர்மனதில்ஒன்றும் வைத்துக்கொண்டுகோபப்படவில்லை.அவர் சொன்ன இடத்திலிருந்து சரக்கு வந்திருந்தால் வேலை கொஞ்சம்நன்றாகஇருக்கும்என நினைத்து  தான் அப்படி நடந்து கொண்டார் என்றான்.மறு நாள் அவர் வேலைக்கு வருவதற்கு முன்பாக இரவோடு இரவாக அவர் சொன்ன கால வாசலிலேயே சுண்ணாம்பு வாங்கி அங்கிருந்தே ஆட்களை வேலைக்கு பேசி கூட்டி வந்து குழைத்துப் போட்டு விட்டான் சுண்ணாம்பை.சந்தோஷப்பட்டுப்போனார் மறு நாள் வேலைக்கு வந்தவர்.மனித மனம் புரிந்த ,மனிதர் என ராசுக் கொத்தனார் சொன்னதாகக் கேள்வி.   அப்போதெல்லாம்இப்போதுமாதிரிஇல்லை.கொத்தனார்,சித்தாள் வீடு,அவர்களதுவீட்டுப் பிள்ளைகள் என்றாலே தனியாய் அடையாளப்பட்டு தெரிந்த காலம் அது. அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு தன் குடும்பத்தை வைத்திருந்தவர்.தண்ணி வெண்ணி என்கிற பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர். அப்படியே இருந்தாலும் அது தப்பில்லை என்கிற கருத்துக் கொண்டவர்.உடல் அலுப்புக்காக வாரத்தில் ஒரு நாள் குடிக்கிறார்கள் தப்பில்லை அது ஆனால் அதே வேலையாக திரியும் போதுதான் தப்பாகிப் போகிறது என்பார்.அந்தபேச்சும் தெளிவுமே அவரை அத்தொழிலில் தக்க வைத்திருந்தது எனலாம்.கரண்டியைப்பிடித்து ஒரு சின்னசுழட்டுசுழட்டினாலே வீட்டின்  சிமெண்ட் பூசப்பட்டிருக்கிற சுவரில் சிரிக்கிற டிசைன் அவரது கைநேர்த்தியை அறிவித்த நாட்களின் நகர்வுகளில் தான்  அவனதுவீட்டு வேலைகளைப்பார்த்து வந்த ராசுக்கொத்தனார்தான் ஒருநாள் வேலைக்கு வருகையில் அரிவாளைகொண்டு வந்து கொடுத்தார்.இது நல்லாயிருக்கும்.வெட்டுங்க என/   “மொட்ட அரிவாள வச்சிகிட்டு நீங்க இப்பிடி லொட்டு,லொட்டுனு வெட்டிகிடுதிரியிரத பாக்கும் போது ரொம்ப பாவமா இருக்கு சார். இது ஏங் வீட்டம்மா வச்சிருந்த அருவாளு/ அவளும் ஒங்கள போலதான், வீட்ட சுத்தி எதுவும் மொளச்சி இருக்ககூடாதுன்னு பார்ப்பா.நாங்க குடியிருக்குற ஏரியாவுல எங்க வீடு கொஞ்சம் தள்ளி இருக்கும்.அவுட்டர் மாதிரின்னு வச்சிக்கங்களேன்.வாடக வீடுதான். கொறஞ்ச வாடக,அவ வேலைக்கு ப்போற சம்பளமும் ஏங் சம்பளமும் குடும்பம் நிக்காம ஓடஉதவிபண்ணுச்சி.சுண்னாம்புக் காலவாசல்லவேலசெஞ்சா.ஏதோபேர்தெரியாத  நோயி  அவள கொண்டு போயிருச்சி,. படுத்த படுக்கையா ஒரு மாசம்கௌவர்மெண்ட ஆஸ்பத்திரி பெட்ல கெடந்தா,எந்த வைத்தியமும் அவ நோய சரி பண்ணல. போயிச் சேந்துட்டா. ஒத்தப் பொம்பளப்புள்ளய கையில குடுத்துட்டு,   ”அவ இப்ப பத்தாவது படிக்கிறா?அவ எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஏங் வீட்டம்மா யெறந்து போனா, சொந்தக்காரங்கள்லயிருந்து கூட வேல பாக்குறவுங்க வரைக்கும் எல்லாரும் சொன்னாங்க, சொல்லாதவுங்க பாக்கி இல்லைன்னு சொல்லாம்.இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானன்னு. நாந்தான் விட்டுட்டேன் அப்பிடியே, இப்பத்தோணுது, பண்ணிருக்கலாமோன்னு/இல்ல பண்ணாம இருந்ததுதா சரின்னும் தெரியுது,இப்பிடி மாத்தி,மாத்தி கெடந்து அல்லாடுது மனசு .கல்யாணம்ன்னு பண்ணுறது பெருசில்ல,எங் மக  பாடு ரொம்பத்திண்டாட்டமா போயிரும்.அதை நெனைச்சும் மருகி நிக்க வேண்டியிருக்கு.சமயத்துல சீன்னு ஆகிப் போயிரும் சார் பொழப்பு.அப்பிடியே மொடங்கி  போயிருது மனசு.என்ன செய்ய பொழப்புன்னு ஒண்ணு இருக்கே,உதறி எந்திரிச்சு ஓடிக்கிட்டு இருக்கேன் சார்”என்று சொன்ன ராசு அண்ணன் வீடு கட்டிபால் காய்ச்சிய அன்று வரவில்லை. ஏதும்கோபதாபமா? அல்லது ஏதேனும் குறைபாடு வைத்து விட்டோமாஅவருக்கு என்கிற மண்டைக் குடைச்சலுடன் மறு நாள் அவரது வீட்டிற்கு போய் விட்டான், அவருக்கும், அவரது மகளுக்கும் எடுத்து வைத்திருந்த புதுத் துணிக ளுடன்/   அவரது கல்யாணநாள் நேற்று என்றும் அவரதுமனைவியின்நினைவேநேற்று முழுவதும் தன்னை சுற்றிக் கொண்டும், நிறைத்தும் இருந்ததாகவும் சொன்ன அவர் டீப்போட்டு க்கொடுத்தார்.சாப்பாடு தண்ணி எல்லாம்  நம்ம கையாலதான் சார்.என்னத்தையோ வெந்து  வேகாம, திண்ணும், திங்காம,,,,/ எங்மகளுக்குதான் ரொம்ப சங்கடம் சார்.நல்லா சாப்புடுற வயசு பாத்திக்கிங்களா?ஏன் அண்ணன் கூட சொல்றான் கொண்டாந்து ஏன் வீட்ல விட்டுருன்னு,இவதான் போக மாட்டேங்கிறா,நானும் வற்புறுத்தல விட்டுட்டேன். காலகாலத்துல இவள ஒருத்தன் கையில புடிச்சிக்குடுத்துட்டா நிம்மாதியாப் போகும். அப்பறம் ஏங் பாடுதான எப்பிடியாவது உருண்டு பெறண்டு பொழச்சிக்கிற வேண்டியது தான்.பறந்து கெடக்கு உலகம்ன்னுவாங்க,என்ன நம்மளுக்கும் வயசாச்சு,கைகாலு நல்லாயிருக்குற வரைக்கும் தான் சார் எங்க பொழப்பெல்லாம்,,,,,,,,,,,,/என மிகவும் வருத்தமாக பேசிய ராசு அண்ணன் ரோடு வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். ஏதாவது வேலைஇருந்தா கூப்புடுங்க சார் என்கிற பேச்சுடன்/அன்று அவரிடம் பேசி விட்டு  வந்ததுதான்,அதற்கப்புறமாய் ரோட்டில் ஓருசில தடவை பார்த்திருக்கிறான். என்கிற நினைவுடனும் வேலைகளின் நினைப்புகளில் அவரை மறந்துபோய் விட்டுருந்த நாட்களுக்கு இடையிலுமாய் தூங்கி எழுந்த ஒரு நாள் காலை இவனை வீட்டின் பின்புற வெளியை கூட்டி விட வேண்டும் என யோசிக்க வைக்கிறது.   மேனி பெருத்த வேப்ப மரம் . அது உதிர்த்த பூக்கள்,மஞ்சளும் வெள்லையும் கலர் காண்பித்து கிடப்பவைகளை இன்று எப்படியும் கூட்டி விட வேண்டும்நேற்று நினைத்து  முடியாமல் பொனதை இன்று செயலாக்கி விட வேண்டும். பூப்பவையெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?