[] [“பார்வை”] “பார்வை” மின்நூல் பொன் குலெந்திரன் (Pon Kulendiren) மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. [Creative Commons License] “பார்வை” by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted. This book was produced using Pressbooks.com. Contents - பார்வை (21 சிறுகதைகள்) - இம் மின்னூல் பற்றி… - ஆசிரியரின் பேனாவிலிருந்து - நூலாசிரியர் அறிமுகம். - 1. அத்தியாயம் 1 ( பார்வை ) - 2. அத்தியாயம் 2 (எதிர்பாராதது) - 3. அத்தியாயம் 3 (அதிகாரம்) - 4. அத்தியாயம் 4 ( சகுனம்) - 5. அத்தியாயம் 5 (சீட்டு) - 6. அத்தியாயம் 6 (செய்யும் தொழிலே தெய்வம்) - 7. அத்தியாயம் 7     (  சின்ன வீடு ) - 8. அத்தியாயம் 8 (பணச்சடங்கு) - 9. அத்தியாயம் 9 ( பென்சன்) - 10. அத்தியாயம் 10    (தலைமுறை இடைவெளி) - 11. அத்தியாயம் 11 (வடு) - 12. அத்தியாயம் 12 (செவ்வாய் தோஷம்) - 13. அத்தியாயம் 13 (விசித்திர உறவு) - 14. அத்தியாயம் 14 (சுமை) - 15. அத்தியாயம் 15 ( குடை) - 16. அத்தியாயம் 16 ( வாரிசு ) - 17. அத்தியாயம் 17 ( தெருச் சிறுவன்) - 18. அத்தியாயம் 18  ( நூறு ரூபாய் நோட்டு) - 19. அத்தியாயம்19 ( லொட்டரி டிக்கட்) - 20. அத்தியாயம் 20 ( விதவை ) - 21. அத்தியாயம் 21 ( ஆணாதிக்கம் ) - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பார்வை (21 சிறுகதைகள்) [Cover Image] உருவாக்கம்: ஆசிரியர் & மின்னூலாக்கம் – பொன் குலேந்திரன் மின்னஞ்சல்:  kulendiren2509@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 இம் மின்னூல் பற்றி… “பார்வை என்ற இம் மின்னூல் பற்றி… “பார்வை” என்ற தலைப்பில் வெளியாகும் 21 சிறுகதைகளை மின்னூலாக உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். முதலாம் கதையான பார்வை ஒரு புகைப்படயாளரின் பல கோணப் பார்வைகள் பற்றியது. இத்தொகுப்பில் கதைகள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களைக் கருவாக வைத்து கற்பனையும் கலந்து பின்னப்பட்டவை. ஒரே விடயத்தைத் திருப்பித் திருப்பி வாசிக்கும் போது வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்பது என் கருத்து. அதனால் கதைகளில் சகுனம், சீட்டு. விதவைத் திருமணம், செய்யும் தொழிலே தெய்வம், செவ்வாய் தோஷம், ஆண் ஆதிக்கம், சின்வீடு, அதிகாரம், தலைமுறை இடைவெளி, வாரிசு போன்ற பல வித்தியாசமான கருத்துக்களைக் கொண்ட கதைகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளேன். கனடா. இலங்கை சூழல்களில் எழுதப்பட்ட கதைகள் இவை. எதிர்பாராத முடிவுகளைக் கொண்டவை. வாசியுங்கள், இரசியுங்கள், உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். பொன் குலேந்திரன் மிசிசாகா ஒன்றாரியோ- கனடா. Kulendiren2509@gmail.com 3 ஆசிரியரின் பேனாவிலிருந்து [Writer4]                                                              நூவாசிரியர் பேனாவிலிருந்து… கதைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒரு விதம். பாட்டி சொன்ன கதைகள் , உண்மைக் கதைகள் , காதல் கதைகள், உருவகக் கதைகள் , நாட்டுப்புறக் கதைகள் . மரபுவழிவந்த கதைகள் , பேய்க்கதைகள் , துப்பறியும் மர்மக் கதைகள் , விஞ்ஞானக் கதைகள் . தத்துவக் கதைகள் , இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காலத்தோடு கதைகள் சொல்லும் விதம் மாறுகிறது. சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனையைக் கருவாக வைத்து பல கதைகள் எழுதினாலும் யாதார்த்தமாக, உண்மையாக வாழ்க்கையில் நடப்பதை எழுதுவது குறைவு. அப்படி ஒரு யதார்த்தமான கதையை எழுதினால் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழும்புகிறது. திருமணத்திற்கு முன்னர் ஒரு தமிழ் பெண் ஆடவனுடன் உடலுறவு வைத்து கொள்ளலாமா என்ற கேள்விக்கு ஒரு சினிமா நடிகை பதில் அளித்தது தமிழ் நாட்டில் ஒரு புரட்சியையே உருவாக்கிவிட்டது என்பது பலருக்கு தெரியும். அக்கருத்தைப் பின்னனியாக வைத்து ஒரு சிறகதை கூட எழுதலாம். மகாபாரதத்தின் முக்கிய கதாப் பாத்திரங்களில் பாண்டவரின் தாய்  குந்தியும் ஒருவள். குந்தி திருமணமாகமுன் கர்ணனை ஈன்றெடுத்தவள். பாண்டவர்களின், மனைவி திரொளபதி ஐவருக்கு மனைவியானாலும் அவளைத் தெய்வமாக மதிக்கிரார்கள். எக்காரணத்தால் ஒரு சினிமா நடிகை சொன்ன தனிப்பட்ட கருத்திற்கு கண்டனங்கள் தெரிவித்தார்கள் என்பது புரியாத புதிர். குந்தியும் பாஞ்சாலியும் புராணக்கதை பாத்திரங்கள் என்பதாலா? அகலிகை என்ற சிறுகதையை எழுதி புதுமைப் பித்தன் புதுமை படைத்தான். என் கதைகள் பெரும்பாலும் நான் அறிநத சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஒவ்வொரு கதைக்கும் உயிருண்டு. தனிச் சுவையுண்டு. அதற்கு உயிரூட்டுவது கதையை எடுத்துச் சொல்லும் விதம். ஆரம்பத்தில், இரண்டொரு அத்தியாயங்களை வாசித்தவுடன் கதையை தொடர்ந்து வாசிக்கலாமா விடவா என்ற தீர்மானத்தை வாசகர் எடுத்துவிடுகிறார். கதையைத் தொடர்ந்து வாசிக்கும் போது முடிவு என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை எழுத்தாளன், வாசகனிடம் தோற்றுவிக்க வேண்டும். “பார்வை ” என்ற தலைப்பில் வெளியாகும் இந்த சிறு கதைத் தொகுப்பை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்.. முதலாம் கதையான பார்வை ஒரு பகைப்படயாளரின் பல கோணப் பார்வைகள் பற்றியது. இக்கதையை நான் எழுதும் போது என்மனதில் நின்றவர் பிரபல இயக்குனரும் புகைப்பிடிப்பாளருமான காலம்சென்ற பாலு மகேந்திரா. இத்தொகுப்பில் உள்ள 21 கதைகள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களைக் கருவாக வைத்து கற்பனை கலந்து பின்னப்பட்டவை. ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு கதையின் கரு, மின்னல் போலத் தோன்றும். ஒரே விடயத்தை திருப்பித் திருப்பி வாசிக்கும் போது வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்பது என் கருத்து. ஒவ்வொரு கதைக்குப் பின்னால் ஒரு அனுபவமும், தத்துவமும் அடங்கியள்ளது, சில கதைகளில் யதார்த்தமும் மறைந்திருக்கிறது. நான் எழுதும் போது அந்தக் காட்சி திரைப்படம் போல் என் கண் முன் வந்து காட்சியளிக்கும். ஒரே முழு மூச்சாக நான் எழுதி முடிக்கும் மட்டும் அந்த கதாப்பாத்திரஙக்ள் என்னோடு உறவாடும். எழுதி முடிந்தபின்னரே என் மனதை விட்டு பிரியமனமில்லாமல் பிரியும். “செய்யும் தொழிலே தெய்வம்” எமது பழைய மரபு வழி வந்த தொழில் ரீதியான கொள்கைக்கு எதிரானது. சாதி வழிவந்த தொழிலையே நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில்லை. இக் கருவினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை தான் செய்யும் தொழிலே தெய்வம். “வடு” என்ற கதை யதாhத்தமான கதை. எமக்குள் இருக்கும் பாலுணர்ச்சி என்ற உணர்வு எப்போது மிருகமாக மாறுகிறது என்பது எவருக்கும் தெரியாது. அதனை கருவாக வைத்து அக்கதை எழுதப்பட்டது. உறவுகள் பல விதம். ஆண் பெண் உறவு சட்டப் பூர்வமானது. பெண்ணுக்கும். பெண்ணுக்கும் இடையிலான உறவும (Lesbianism), ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவும்  (Gay) வாயில் விரல் வைத்து சிந்திக்க வைக்கிறது. பல நாடுகளில் இந்த உறவு சட்டப்படி தடைச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உறவினை எந்த நோக்கத்தோடு பார்க்கிறேம் என்பது ஒரு தனிமனிதனைப் பொறுத்தது “சுமை” என்று கதை என் மனதில் தோன்றியதே ஒரு தனிக்கதை. யாழ்ப்பாணத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தில், போக்குவரத்துக்கு சைக்கிள் எவ்வளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மீன் விற்பனை செய்பவன் முதல், டியூசனுக்குப் போகும் மாணவ மாணவிகள், தொழிலாளிகள், குடும்பங்கள் எல்லோரையும் சுமந்து செல்கிறது. அப்படத்தைப் பார்த்து விட்டு என் நண்பர் அதற்கு சுமை என்ற சுருக்கமான தலையங்கத்தை கொடுத்து கதை எழுதச் சொன்னார். படத்தை உற்று நோக்கினேன் உடனே பிறந்தது கதை. சிறீலங்காவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட குடைக்கு இருக்கும் மதிப்பை பலர் அறிந்ததே. கொழும்பு கால் பேஸ் மைதானத்திலும் , விகாரமாதேவி பூங்காவிலும் குடைக்கு பின்னால் காதலர்கள் பேசும் கதைகள் பல, ஆனால் இந்த குடை என்ற தலைப்பினைக் கொண்ட சிறுகதை மனிதாபிமானத்தோடு தொடர்புள்ளது. விதவைத் திருமணத்தை கருவாகக் கொண்ட கதை “விதவை”. இவை போன்று ஒவ்வொரு கதையினது பார்வை வேறுபட்டது. சரி என் கதைகளைப் பற்றி நான் கதை அளக்காமல் உங்களை வாசிக்க விடுவது தான் முறை. கதைகளை வாசித்து, இரசித்து, அலசி ஆராய்ந்து உங்கள் விமர்சனங்களை நல்லதோ கெட்டதோ எனக்குத் தந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இவற்றில் சில கதைகள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அனுபவங்கள் , அறிந்த கதைகளுடன் கூடப் பொருந்தலாம். நன்றி பொன் குலேந்திரன் மிசிசாகா – ஒன்றாரியோ கனடா 4 நூலாசிரியர் அறிமுகம்.                [Kulendiren latest 2 - Copy]                                             நூலாசிரியர் அறிமுகம். பொன் குலேந்திரன் ஆகிய நான், ஒரு காலத்தில் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College, Jaffna, Sri Lanka ) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி, அதன் பின்னர் துபாய் , அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி, ஓய்வு பெற்றவன.; தற்போது நான் ஒரு கனடா பிரஜை. பத்து வயது முதற் கொண்டே எழுதத் தொடங்கியவன். “குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவன்.  கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்;. பீல் மிசிசாகா முது தமிழர் சங்கத்தில் நான்கு வருடங்கள் தலைவராக இருந்தேன். “பார்வை” எனது முதல் மின்நூல் சிறுதைத் தொகுப்பு. நான்ஆங்கலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறேன்;. ஆங்கிலத்தில்- Short Stories from Sri Lanka   Hinduism a Scientific Religion & Some Temples in Sri Lanka. Sufferings of Innocent Souls ( Short stories on HR Violations) The Dawn ( A novel of an Immigrant family to Canada from Jaffna – Sri Lanka) Strange Relationship (21 Short Stories) .அகிய நூல்களையும் தமிழில்: விசித்திர உறவு (சிறுகதைத் தொகுப்பு) அழகு (சிறுகதைத் தொகுப்பு) அருவி (கவிதைகள்) வளரும் வணிகம்( கட்டுரைகள்) அறிவுக்கோர் ஆவணம் (கட்டுரைகள்) கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; “முகங்கள்” எனது  மூன்றாவது 21 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளேன்.                                                                               ♣♣♣♣♣ This is where you can add appendices or other back matter. [pressbooks.com] 1 அத்தியாயம் 1 ( பார்வை )                                                       [Nicon Canera1]                                                                                                                                              பார்வை   அறைச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலெண்டரில் உள்ள படத்தைக் கண்வெட்டாமல் உற்றுநோக்கியபடி நித்தியானந்தன் கதிரையில் அமர்ந்திருந்தான். பிரபல்யமான கலெண்டர் பதிப்பகத்துக்காக அவன் எடுத்த படம் அது. வழமையில் கலெண்டருக்கு அரை நிர்வாணத் தோற்றத்தோடு, பால் உணர்வைத் தூண்டக் கூடிய  வெளிநாட்டுப் பெண் மொடல்கள் தான் தோற்றமளிப்பார்கள். ஆனால் அவன் உற்று நோக்கியது சற்று வித்தியாசமான, சேலை அணிந்த, ஒரு தமிழ் பெண்னின் படம்.   முத்துச் சிரிப்பழகி என்று பார்த்தவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு அவள் தன் பல்வரிசை முழுவதையும் தன் சிரிப்பில் காட்டியபடி தோற்றமளித்தாள். அந்த படத்தை எடுத்த  போட்டோகிராபர்; நித்தியானந்தன் பெயரை ஊரில் அறியாதவர்கள் இல்லை. அவன் எடுக்கும் படங்களைச் சற்று உற்று நோக்கினால் அதில் ஒரு தத்தவமே அடங்கியிருக்கும். “நித்தி” என்று அவனை சுருக்கமாக அவன் நண்பர்கள் அழைப்பார்கள். அவனது “நித்தி ஸ்டுடியோவில்” அவன் எடுத்த படங்களைப் பார்த்து இரசிப்பதற்காக தினமும் ஒரு கூட்டம் இருக்கும். ஆண்களினதும், பெண்களினதும் பல் வேறு தோற்றங்களையும், முகபாவனைகளையும் தவிர பறவைகள், மிருகங்கள் , இயற்கைக் காட்சிகள் கூட அவன் எடுத்த படங்களில் காணலாம்; நித்தியானந்தன் இயற்கையில் மயில் தோகை விரித்தாடும்போது எடுத்த படமும், நாக பாம்பு படம் எடுததுத ஆடும் போது தனது கெமராவில் கிளிக் செய்து எடுத்த படங்களைக் கண்ட நஷனல் ஜியோகிரபிக் (National Geographic) மாதாந்த சஞ்சிகையின் வரும் படங்களுக்குப் பொறுப்பான மைக் தொம்சன் என்பவர் அவ்விரு படங்களால் கவரப்பட்டு நித்தியானந்தத்தோடு தொடர்பு கொண்டார். அந்த தொடர்பினால் உலகில் பரபல்யமான சஞ்சிகைக்குhப் படம் எடுப்பதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான் நித்தி. கலெண்டருக்காக அவன் எடுத்த முத்துப் பல் வரிசைக்காரி ஒருத்தியின் படம், தற்செயலாக முருகன் கோவில் வாசலில் ஒரு வருடத்துக்கு முன்பு அவன் எடுத்த படம். அப்பெண்ணின் பெயர் முத்தழகி என்று அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. அவனுக்கு வெளிநாட்டுக் கலெண்டர் பதிப்பகத்தில் இருந்து அந்தப் படத்துக்காக கிடைத்த பெரும் தொனையின் ஒரு பகுதியை ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்தழகிக்குக் கொடுத்ததை அவன் மறக்கவில்லை. திரும்பவும், வேறு கோணத்தில் வைத்துப் படம் எடுக்க கோவில் வீதிக்கு அவளைத் தேடி போனான் நித்தி. ஆனால்  அவளைக் காணமுடியவில்லை. வீதியில் பூமாலை கடை வைத்திருக்கும் கடைக்காரர் ஒருவரிடம்; அவளைப் பற்றி நித்தி விசாரித்தான். “ஐயா என் பெயர் நித்தியானந்ந்தன். பல மாதங்களுக்கு முன் இக்கோவில் வீதியில் பூ விற்றுக் கொண்டு இருந்தாளே ஒரு பெண், அவள் இப்போ எங்கே என்று உங்களுக்குத் தெரியமா”? நித்தி கடைக்காரரைக் கேட்டான். “யார் முத்தழகியையா கேட்கிறீர்கள்?. “ “ஆமாம் அவளே தான் ஐயா” கடைக்காரர் சிரித்தார். “ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்?”, நித்தி அவரைக் கேட்டான். “தம்பி நீர் அந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு பெரும் உதவி செய்திருக்கிறீர் அவளது படத்தை கலண்டரில் பார்த்த ஒரு சினிமாக்காரர். தேடி வந்து அவளை சினிமாவில் நடிக்கக் கூட்டிப் போய் விட்டார். அவள் இப்போ வசதி உள்ள சினிமா நடிகை” என்றார் கடைக்காரன். நித்தியால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.                                                               ♣♣♣♣♣ நித்தியானந்தனுக்கு பத்து வயதாக இருக்கும் போது, அவனுடைய தாய்மாமன், அவனது பிறந்த நாளுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்த பிரவுனி 127 கொடெக் பெட்டிக் கெமராவே அவனது புகைப்படம் எடுக்கும் கலைக்கு வித்திட்டது. பெட்டிக் கெமராவை 1888ஆம் ஆண்டு உலகுக்கு அறிமுகம் செய்தது கொடெக் கொம்பெனி.  அக் கெமாராப் பாவிக்கும் விதத்தை நித்தியானந்தனுக்கு மாமன் விளக்கினார்; கொடெக் பெட்டி கெமராவில் நித்தி  எடுத்த முதற்படம் இன்றோ நாளையோ தன் வாழ்வு முடியப்போகிறது என்று சிந்தித்தபடி மரம் ஒன்றின் கீழ் ஒரு  பொக்கவாய் குழந்தையோடு அமர்ந்திருந்த ஒரு பொக்கவாய் கிழவியின் படம். அந்தப்படத்துக்கு அவன் கொடுத்த தலைப்பு “இளமையும் முதுமையும்”. ஐந்து வருடங்களுக்கு முன் மரணித்த நித்தியின் பங்கஜம் பாட்டியின் தோற்றத்தோடு அந்தக் கிழவியின் தோற்றம் இருந்ததே அக் கிழவியின் உருவத்தை தன் கெமராவுக்குள் நித்தி அடக்கக் காரணமாகயிருந்தது. பங்கஜம் பாட்டி நிண்ட ஆயுளோடு வாழ்ந்து, தொன்னூற்றி; எட்டு வயதில் மரணித்தவள். நித்திமேல, அவள் தாயை விட அளவுகடந்த அன்பு வைத்திருந்தவள். கைநிறைய வலையல்கள். மூக்கில் பெரிய முக்குத்தி. இரு காதுகளிலும் தோடுகள், ஊஞ்சலாடும் தோற்றம். கன்னத்தில ஒரு கருமையான வடு. தோடுகளின் பார்த்தால்,  காதுகள் நிண்டு, தோடுகளுக்கு ஊஞ்சலாக இயங்கின.  அது தான் பங்கஜப் பாட்டியின் தோற்றம். அவன் எடுத்து அந்த முதற் போட்டோ எதிர்பாராதவாறு புகைப்படக் கண்கட்சியொன்றில் முதல் பரிசை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தது, அதுவே கெமராவின் வில்லையினூடாக அவனது பார்வை வளர்வதற்கு அத்திவாரமிட்டது. பின் ஏராளமான படங்களை நித்தியானந்தன் எடுத்து பிரபல்யமானான். திருமணங்களிலும, பி;றந்தநாள் கொண்டாட்டங்களிலும், நித்தியானந்தன் தான் முக்கிய போட்டோகிராபர். காலப்போக்கில் தனக்கெனப் புகைப்படம் எடுக்கும் கடையொன்றை தன் தம்பி சத்தியநாதனின் உதவியோடு ஆரம்பித்தான். பணம் அவனைத் தேடி வந்தது. புகைப்படத்துக்கு உகந்த தோற்றமுள்ள உருவங்களை அவன் கண்கள் தேடி அலைந்தான். நேரில் பார்த்தால் அழகி எள்று சொல்ல முடியாத தோற்றமுள்ள உள்ள பெண்ள் கூட அவன் பார்வைக்கு வித்தியாசமாகத் தென்பட்டார்கள்.  ஆங்கிலத்தில் போட்டோஜீனிக் (Photogenic)என்பார்களே, அத்தகைய தோற்றமுள்ளவர்களை அவன் கண்கள் தேடி அழைந்தன. அவன் எடுத்த பல பெண்களின் படங்கள் அவனுக்கு அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை. வாழக்கையில் நித்தி எடுத்த படங்களில் மூன்று பெண்களின் படங்களை அவனால் மறக்க முடியாது. அதில் அவன் இரசித்து எடுத்த முதல் பெண். கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த முத்தழகியை என்ற பூக்காரியினுடயது அவன் எதிhபாராத வாறு கோயிலுக்கு போன போது காண நேரிட்டது. தனக்கு பூ வி;ற்ற முத்தழகியின் சிரிப்பால் கவரப்பட்டான் நித்தி. அந்த முத்துப்பற் சிரிபபோடு அவளை தன் கமராவுக்குள்; அடக்கிக் கொண்டான். காலப்போக்கில அப்பெண் ஒரு சினிமா நடிகையானாள். இரண்டாவது அவன் ரசித்து எடுத்த பெண் பதினாறு வயதுடைய  ஒரு கல்லூரி மாணவி மீராவுடையது. அவளின் கள்ளம் கபடமற்ற வட்டமான முகம், நீண்ட உருண்ட கருவிழிகளின் பார்வை, அவளின் முகத்தைத் தன் கெமராக்குள் அடக்க வேண்டும் என்ற ஆசையை அவனுக்குத் தோற்றுவித்தது, எத்னையோ பெண்களின் பார்வைகளைக் கண்டு பல கோணங்களில் படம் எடுத்த அவனுக்கு மீராவின் பார்வை ஒரு வித்தியாசமான, பார்த்தவர்களைக் கவரக் கூடிய பார்வையாக அவன் கண்களுக்குத் தெரிந்தது. மீரா கவிதை புனைவதில் கெட்டிக்காரி. அவள் படித்த கல்லூரியின் வருடாந்த சஞ்சிகையில் அவள் எழுதிய “பார்வை” என்ற கவிதையை எல்லோரும் இரசித்தார்கள். அது மட்டுமா அவளின் படமும் கவிதையோடு பிரசுரமாகி இருந்தது. கவிதையின் தலைப்புக்கு பொருத்தமான படம். அந்தப் படத்தை மிராவின், பார்வை என்ற கவிதைக்காக  அவள் கேட்டு நித்தியானந்தன் எடுத்த படம்.. நித்தி பதின்இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கு சித்திரா ஆசிரியையாக வந்த முதல்நாளே  அவன் பார்வைக்கு அவள் வித்தியாசமாக தென்பட்டாள். அவளைப் பேரழகி என்று சொல்லமுடியாது ஆனால் அவளது கண்களும, பார்வையும், சிரிக்கும் போது குழிவிழும் கன்னங்களும், வில போன்ற புருவமும்ஈ நித்;தியின் கெமராவுக்குள அடங்கக்கூடிய தோற்றம் உள்ளவள். ஒரு ஆசிரியையை மாணவன் எவ்வாறு படம் பிடிக்க முடியும்? அவன் படிக்கும் கல்லூரியில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. சித்திராவுக்கு நித்தி ஒரு போட்டோகிராபர் என்று மற்றைய ஆசிரியர்கள் சொல்லி தெரியவந்தது.. “உங்கள் தோற்றம் படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது டீச்சர். உங்களைப் படம் எடுக்க விருப்பப் படுகிறேன். சில நிமிடம் படத்துக்கு போஸ் செய்ய முடியுமா” என்று சித்திராவை நேரடியாகக் கேட்பதற்கு நித்திக்குப் பயம். சித்திரா கோபக்காரி. கண்டிப்பானவள். ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவள். தலமை ஆசிரியரிடம் போய் அவள் தன்னைப்பறறி முறையிட்டால்?, ஸ்கூலில் இருந்து வெளியேறவேண்டியது தான். ஏதாவது ஒரு நாளாவது தன் விருப்பம் நிறைவேறாமலா போகும். சித்திராவுக்கும் நித்திக்கும் இடையே குறைந்தது ஐந்து வயது வித்தியாசம். சித்திராவின் தோற்றத்தைத் தினம் தினம் தனக்குள் நித்தி இரசித்துக் கொள்வான். சித்திராவுக்கு ஒரு காதலன் இருப்பது நித்திக்குத் தெரியவந்தது. அடிக்கடி இருவரும் சந்திப்பதை கண்டிருக்கிறான். காதலனை அணுகிச் சித்திராவை படமெடுக்க உதவக் கேட்டால் என்ன? அவன் உதவ மறுத்தால் வேறு வழியைப்பார்க்க வேண்டியதுதான். நித்தி எதிர்ப்பார்த்தது ஒரு நாள் நடந்துவிட்டது. “நித்தி நீ மறக்காமல் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். செய்வியா”?, என்று கூடவே படித்த அவன் நண்பன் சேகர் கேட்டான். சேகர் படித்து முடித்து அரசாங்கத்தில் பெரும் பதவியில் இருப்பவன். நித்திக்கு தேவைப்பட்ட நேரம் புகைப்படக் கருவிகள் வாங்கப் பணஉதவியும் செய்திருக்கிறான். இரு மாதங்களுக்கு முன்னர் 12,000 டொலர்கள் பெறுமதியான, விலை உயர்ந்த கெமராவான நிக்கோன் கெமெரா வாங்க பண உதவி செய்தவன். அவன் உதவி கேட்டால் எப்படி நித்தியால் மறுக்க முடியும்? “என்ன உதவி சேகர் தேவை?” நித்தி நண்பனைக் கெட்டான். “எனது மனேஜருக்கு ஒரு கிழமையில் திருமணம் நடக்கவிருக்கிறது. நீ அவருடைய திருமணத்தில் ஒபிசல் போட்டோகிராபராக படம் எடுக்க முடியமா?. “நிட்சயமாக நான் உனது மனேஜரின் திருமணத்துக்கு வந்து படம் எடுக்கிறேன். நீ உதவி செய்து நான் வாங்கிய நிக்கோன் கெமெராவைத்தான் நான் பாவிக்கப்போகிறேன். இந்தக் கெமெராவில் எடுக்கும் படங்கள் வெகு தெளிவாக இருக்கும்” என்றான். நித்தி. “நான்ஒன்றை சொல்ல மறந்திட்டன். மணமகனையும், மனமகளயும் தனித்தனயே வைத்து பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும். அத்ற்கான செலவை என் மனேஜர் தருவார்” “அதில் பிரச்சனையில்லை. எனக்கு அவர் பணம் தரத்தேவையில்லை. நீ எனக்குச் செய்த உதவிக்கு இது பிரதி உபகாரமாய் இருக்கட்டும” என்றான் நித்தி. நித்தியை தன் மனேஜரின் திருமணத்துக்கு தன் காரில் சேகா அழைத்துச் சென்றான். திருமணத்துக்கு ஏகப்பட்ட கூட்டம். மணமகனை சேகர் நித்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அவரை எங்கையோ பார்த்த ஞாபகம் நித்திக்கு வந்தது. முதலில் மணமகனான சேகரின் மனேஜரை ரவிச்சந்திரனைப் படம் எடுத்த பின்னா,; ணமகள் இருந்த அறைக்குள் நித்தியை அழைத்துச் சென்றான் சேகர். “டீச்சர் மீட் மை பிரண்ட் நித்தி. உங்களுக்கு ஏற்கனவே இவரைத் தெரியும் என நினைக்கிறேன். என் கூடவே ஒன்றாகப் படித்தவர்”, என்று நித்தியை மணமகளுக்கு  அறிமுகப்படுத்தினான் சேகர். மணமகளை அலங்காரத்தோடு கண்டதும் நித்தியானநதன்  வாயடைத்துப் போனான். அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. “என்ன நித்தியானந்தன் திகத்துப்போய் நிற்கிறீர்? என்னை நினைவிருக்கிறதா? நான்தான் நீர் படித்த கல்லாரியில் படிப்பித்த சித்ரா டீச்சர். எனக்கு கணவானாக வரப்போகிறவரை எனது கல்லாரியில் என்னை அவர் சந்திக்க வரும் போது பார்திருப்பிரே” என்றாள் சிரித்தபடியே  சித்திரா. சித்திரா சொன்னதைக் கேட்டு, நித்தியானந்தன் அதிர்ச்சியடைந்தான். அதிலிருந்து அவன் மீள சில வினாடிகள் எடுத்தன. “என்ன  நித்தி பேசாமல் என்னைப் பார்தத்படியே நிற்கிறீர். என்னை உமக்கு நினைவிருக்கிறதா “? “இப்போ நல்லாய் உங்களை நினைவிருக்கிறது டீச்சர். நீங்கள் படிப்பித்தபோது உங்களை படம் எடுக்கு வேண்டும் என்று பார்வைக்குப் பட்டது. ஆனால் பயத்தில் நான்உ ங்களைக் கேட்கவில்லை. நீங்கள் ஒரு கண்டிப்பான டீச்சர் என்று மற்றைய டீச்சர்கள் சொல்லிக் கேள்விப்பட்டனான். நான் அ ப்படி உங்களைப் படம்எடுக்க விருப்பமாக இருக்கிறது என்று கேட்டு, அதை நீங்கள் தவறாகப் புரிந்து,பிரின்சிபலுக்குமுறையிட்டால், பிறகுஎன்னை ஸ்கூலில் இருந்து வெளியே போகச் சொல்லிவிடுவார்கள் என்ற பயம் எனக்கு. அது தான்…” என்று தன பேச்சை இழுத்தான் நித்தியானந்தன்;. “பார்த்தீரா எப்படி உமது எண்ணம் இப்போ நிறைவேறப் போகிறது என்று. நீர் விரும்பியபடி என்னை எத்தனை கோணத்திலும் வைத்துப்; படம் எடுகலாம்.  ரவி உமக்கு ஒன்றும் சொல்லமாட்டார்”, என்றாள் சித்திரா. சேகருக்கு அவர்களுடைய உரையாடலைக் கேட்க ஒரு சினிமாக் கதை போல் இருந்தது. நித்தியனந்தன் தன் கலைத்திறனைக் காட்ட  தன புது நிக்கோன் கமராவோடு தயார் ஆனான். இது அவன் விரும்பிப் படம் எடுக்கப் போகும் மூன்றாவது பெண்.                                                                     ♣♣♣♣♣ 2 அத்தியாயம் 2 (எதிர்பாராதது) [Condo3] எதிர்பாராதது ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பது இருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது வேறொன்று. பல்லினங்கள் வாழும் கனடாவில் பெண்களையோ அல்லது  ஆண்களையோ இல்லறவாழ்வுக்குத் தேர்ந்தெடுப்பதில் எமது இளம் சந்ததி எவ்வளவு கவனமாக செயல்படுகிறார்கள் தெரியுமா? தீர்மானங்கள் எடுப்பதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். வயது ஏறுகிறதே என்ற கவலை தாயகத்தில் வாழும் பெண்களைப் போல் இங்குள்ள பெண்களுக்கு இல்லை. ஊரில கலியாணம் பேசிப் போகும் போது பெண்ணின் வயது என்ன என்பது முக்கிய கேள்வி. நீண்ட காலம் திருமணமாகாமல் இருந்தால் காரணம் சொல்லியாக வேண்டும். அதற்கு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் பொருத்தமான சாதகம் வந்து சேரவில்லை என்பதைச் சாட்டாகத் தரகர் சொல்லி தப்பித்துவிடுவார். தங்கள் வாழ்க்கையில் சிறு தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக. எமது கலாச்சாரத்தை மதிக்கும் தன்மை, பிற இனங்களின் குடும்ப வாழக்கை முறைகள், பெற்றோர்களின் விருப்பு வெறுப்புக்கு மதிப்பு போன்றவையில் தேர்வு தங்கியுள்ளது. பல்கலைக்கழகங்களில் படித்து வெளியேறும் போதே நான்காண்டுகள் தம்மோடு கூடிப் பழகி படித்த ஆணையோ அல்லது பெண்ணையோ தனது இல்லற வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது இன்று வழக்கமாய் இருந்து வருகிறது. இதற்குப் பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. காரணம் அவர்கள் கருத்து பிள்ளைகலால் மதிக்கப்படுவதில்லை. “அவர்கள்தானே வாழப் போகிறவர்கள். நாம் பொருத்தம், சாதி, குடும்பம் பார்த்துச் செய்து வைத்து பிழையேதும் நடந்துவிட்டால் பிறகு பழி எம்மீது தான் விழும” என்ற பயம் பெற்றோருக்கு வேறு. வேலை செய்யும் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்றாகப் பல காலம் பழகி, மனங்கள் இரண்டும்; ஒத்துப்போய்., காதலித்து திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். நம் மனதுக்குப் பிடித்த          பொதுவாக ஒரு நல்ல குடும்பத்தில் ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ தேர்ந்தெடுத்து, பல காலம் பழகி அதன் பின்னர் திருமணம் செய்வது என்பது சிலருக்கு கிட்டும் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அப்படி கிட்டிய அதிர்ஷ்டத்திற்கும் சில சமயங்களில், சில ஆண்டுகளில், சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் சில ஆண்கள், பெண்களைத் தெரிந்தெடுப்பதில் மிகக் கவனமாக செயல்படுகிறார்கள். அதே போன்றே தான் பெண்களும்”. “கனடாவில் வளர்ந்த பெண்கள் வேண்டவே வேண்டாம்;. அவையள் வரப்போகும் கணவனோடு கூடிப் பழகி பல மாதங்களுக்கு பின்னர்தானாம் பழகி கெமிஸ்டிரி பொருந்தினால் தான் பழகியவனை கணவனாக ஏற்பதா இல்லையா என்று தீர்மானிப்பார்களாம். வரப் போகும் கணவனின் குணத்தைப் பற்றி நல்லாக அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமாம். தம் விருப்பங்களுக்கு ஒத்துப்போகக் கூடிய ஒருவனோடுபேசிப் பழகி அவன் மனதில் உள்ளதை அறிந்த பின்னர் தான் திருமணமாம். இது ஒரு மாத காலம் எடுக்கலாம். ஏன் சில சமயம் பல மாதங்கள் கூட எடுக்கலாம்.; ஜாதகம் , சாதி, அந்தஸத்து பார்ப்பதெல்லாம் சுத்த ஹம்பக். தன் உழைப்பையும் படிப்பையும் மட்டும் நம்பி அவன் வாழக்கூடாதாம்.  தமக்கு கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாதாம்.” இந்த கோட்பாடுகளை பல பெண்கள்; சொல்ல அறிந்த எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அதனால் தான் கனடாவில் பெண் எடுப்பதில்லை எனத் தீர்மானித்தேன். தாயகத்தில் தான் எனக்குப் பெண் வேண்டும் என்ற போக்கை கொண்டவனாக மாறினேன் நான். தமிழ் கலாச்சாரம் , பண்பு, ஒழுக்கம், அடக்கம், குனிந்த தலை நிமிராத போக்கு. இப்படி எனக்குள் பல எதிர்பார்ப்புப்கள்.  என் நண்பர்கள் எனது போக்கைப் பார்த்து என்னைக் கேலி செய்தார்கள்.. “என்னடா உனக்கு பயித்தியமா? கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் ஏன் அலைவான்?,  நீ இலங்கையில் வேலை செய்வதாய் இருந்தால் உனது கொள்கை சரியானது தான். ஆனால் நீ கனடாவுக்கு அகதியாய் வந்து இப்போது சிட்டிசனாகி நல்ல வேலையில் வேறு இருக்கிறாய். இந்த எட்டு வருட கனடா வாழக்கை உன்னை புது மனிதனாக மாற்றவில்லையா? கனடாவிலை படித்த தமிழ் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் எல்லோரும் நீ நினைத்தது போல்; ஒரு வழிப் போக்குள்ளவர்கள் அல்ல. பல ஆண்களுடன் சரளமாக பழகும் சுபாவம் கொண்டவர்கள் அல்ல. அவர்களில் ஒருத்தியை பார்த்துக் கலியாணம் செய்யாமல் ஊருக்குப் போய் பெண் பார்த்து முடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாயே. காலத்தோடு ஒத்துப் போகிறாயில்லையே. ஊரில் என்றால் பெண்ணைப்பற்றி , குடும்பத்தைப் பற்றி நாலுபேரிடம் விசாரிக்கலாம். ஒளித்திருந்து கூட பெண்ணைப் பார்க்கலாம். அதோடு தமிழ் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவளாக இருப்பாள். ஊரிலை இப்ப இருக்கிற நிலமையிலை என்ன செய்யப்போகிறாயோ தெரியாது. கிராமத்தில் கிணற்றுத் தவளையைப் போல வாழ்ந்த பெண் உனக்கு ஒத்துவராது. தினமும் கோயில் குளம். பிடிக்காத விரதங்கள் இல்லை. பெற்றோர் கீறிய கோட்டைத் தாண்டாதவர்கள். உனக்கோ மீன் இறைச்சி இல்லாமல் சாப்பாடு இறங்காது.  வீட்டைவிட்டு வெளியே வந்து அவர்கள் பலரோடு பேசி பழகுவது கிடையாது. அவர்களில் ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும் என்று கனடா வாழக்கையில் வாழ்ந்த நீ நினைப்பது மடைத்தனம். நீ கலியாணம் முடித்தபிறகு உடனடியாக உன் மனைவியை உன்னோடு கனடாவுக்கு கூட்டி வரமுடியாது அது தெரியுமே உனக்கு? அப்படி வந்தாலும் ஒரு நல்ல வேலைக்கு அவளை அனுப்ப பல மாதங்கள் எடுக்கும். அதுவரை அவள் வீட்டுக்குள் சிறைப்பட்டு இருக்க வேண்டிவரும். ஒரு வருஷத்துக்கு மேல் எடுக்கும் அவளுக்கு விசா கிடைக்க”, என்று நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள். ”இருக்கட்டுமே. இங்கை பெண் எடுத்து ஒரு சில வருடங்களில் விவாகரத்தில் போய் முடிந்த பலரைப் பார்த்திருக்கிறன். கனடாவிலை மேற்கத்திய ஸ்டைலிலை நம்மமுடைய ஆக்கள். வாழ நினைக்கினம். உடுப்பை மாற்றுவது போல் கணவனை மாத்துகினம். எனக்கு அது சரிப்பட்டு வராது மச்சான்” என்று எனது கருத்தைத் அவனுக்குத் தெரிவித்தேன். என்னோடு வேலை செய்த சாந்தா என்ற தமிழ்ப் பெண் எங்கள் கொம்பெனியில் வேலை செய்த வரதனைக் காதலித்து திருமணம் செய்தவள். அவர்கள் திருமணம் நான்கு வருடங்கள் தான் நிலைத்தது. இப்போது கையில் ஒரு குழந்தையோடு தனியாக தாயுடன் வாழ்கிறாள். அவளுக்கும் விவாகரத்து செய்து தனியாக வாழும் ஒரு கயனாகாரன் ஒருவனுக்கும் தொடர்பாம். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. அது அவளுக்கு வசதியாயிற்று. விரைவில் அவள் திரும்பவும்; திருமணம் செய்யப் போகிறாளாம். பிள்ளையோடு அவளை அவன் ஏற்றுக்கொள்ள ரெடியாம். அவனோடு வாழ்ந்து அவனைப் பிடிக்காவிட்டால் திரும்பவும் விவாகரத்தா? வரதன் சாந்தாவை எதோ ஒரு காரணத்தை காட்டி விவாகரத்து செய்து அவனும் மறு திருமணம் செய்து கொண்டான். இங்கை மணவாழ்க்கை ஏதோ கார் மாற்றுவது போலாகிவிட்டது. இது போன்ற நிலையை நான் வரவேற்கத் தயாராயில்லை. எனது மனதுக்கு விரும்பிய பெண்ணை ஊரில் எடுத்தால், அங்கு வளரும் பெண்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் நல்ல சுற்றாடலில் வளர்பவர்கள். இங்கு போன்று மற்றைய இனத்தவர்களின் தாம்பத்திய வாழ்க்கை முறைகளை கண்டு, கேட்டு அறியாதவர்கள். ஆகவே எனக்குப் பிரச்சனை ஏற்படாது. கனடா மாப்பிள்ளை என்ற பட்டத்திற்காக எனக்கு எத்தனையோ பெண்களை ஊரில் பேசி வந்தனர் என் பெற்றோர். பல படங்களைப் பார்த்து விட்டு தள்ளி வைத்துவிட்டேன். ஆனால் சுபத்திராவின் படத்தை கண்டவுடன நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் ஊரில் நான் படித்த கல்லூரியில் அவள் எனக்கு மூன்று வகுப்புகள் குறைவாக படித்தது உடனே என் ஞாபகத்துக்கு வந்தது. ”சுபி”, அப்படித்தான் அவளை அவளது சினேகிதிகள் அழைத்தார்கள். சுபி அப்படிப் பெரிய அழகியில்லாவிட்டாலும் படிக்கும் போது ஒழுக்கமான மாணவி என்று பெயர் பெற்றவள். சுமாரான பொது நிறம். ஆனால் என்னை விட நிறம் கூட. படிக்கும் போது  அவளோடு எனக்குப் பேசக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. அவளது பார்வையில அப்போது ஒரு தனிக் கவர்ச்சி இருந்தது.. அதை மட்டும் கண்டேன். நீண்ட தலை மயிர். அவள் நடக்கும் போது நீண்ட பின்னலின் அசைவைக்கண்டு இரசிப்பேன். அவள் இலகுவில்  எவரையும் தலை நிமிர்ந்து பார்க்கமாட்டாள். சிரிக்கமாட்டாள். பார்த்தால் தன் கற்பு பறிபோய்விடும் என்ற எண்ணமோ என்னவோ. படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. கொஞ்சம் பாடக் கூடிய திறமையிருந்தது. அவளது தாயும் அந்த கல்லூரியில் படிப்பித்ததினால் தன்னை மற்றைய ஆசிரியர்கள் அவதானிக்கிறார்கள் என்ற பயத்தினால் மாணவர்களுடன் பேசுவதை தவிர்த்தாள். வீட்டிலும் கட்டுப்பாடு போலும். படிக்கும் போது அவளுக்கு ஒரு காதல் இருந்ததாக வதந்தி இருந்தாலும் நான் நேரடியாக காணவில்லை. அப்படி இருந்திருந்தால்தான் என்ன?. பள்ளிக கூட காதல் மலராத மொட்டு போன்றது.  சுபியின் ஓரே சகோதரி திருமணமாகி லண்டன் சென்று விட்டாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவளுக்கும் இவளுக்கும் ஆறுவயது வித்தியாசம்.  சுபியோடு நான் பேசியது குறைவு. ஒரே ஒரு தடவை டீச்சரை சந்திக்க வீட்டுக்குப் போனபோது கதவைத்திறந்து ”அம்மா கைவேலையாக இருக்கிறா உள்ளேவந்து இருங்கோ” என்று விறுக்கென்று சொல்லிவிட்டு அறைக்குள் சுபத்திரா ஓடிப் போனது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. தனது அறைக்குள் இருந்து ஜன்னல் ஊடாக என்னைக் கவனிக்கிறாளா என்று பார்த்தேன் ஆனால் அவளது கவர்ச்சியான கண்களைத்;தேடினேன். காணவில்லை. கல்லூரியில் அவளைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், நேரே என்னைப் பார்க்கமாட்டாள். அப்படி ஒரு நல்ல ஒழுக்கமான, கூச்சமுள்ள பெண் அவள். நல்ல குணமான பெண் கிடைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்திருந்த போது தான் எனக்கு சுபத்திராவின் படம்; போஸ்ட்டில் ஊரிலிருந்து பெற்றோரிடமிருந்து வந்தது. பார்த்தவுடன் சுபத்திரா தான் நான் தேடிய பெண் என்று உடனே தீர்மானித்து விட்டேன். இப்படி ஒரு நல்ல குணமுள்ள, அடக்கம் ஓடுக்கமான பெண்ணைப் பார்த்து திருமணமான என் நண்பர்கள் பொறாமைப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அவர்களுடைய மனைவிமாருக்கும் அவளது நடத்தை ஒரு வழிகாட்டியாக இருக்கட்டுமே என நினைத்தேன். மறு கணம் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புதல் கொடுத்தேன். சுபியின் தாயுக்கு நான் அவளின் பழைய மாணவன் என்றபடியால் உடனே என்னைப் பிடித்துவிட்டதாம். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஊரில் போய் திருமணம் செய்து அவளோடு இருகிழமை வாழ்ந்துவிட்டு வந்தேன். வாழ்ந்துவிட்டு வந்தேன் என்பதை விட அவள் வீட்டில் இருந்துவிட்டு வந்தேன் என்றால் தான் பொருந்தும். புதுமணப்பெண் என்றபடியால் பயத்தாலோ அல்லது பெண்ணுக்குரிய கூச்சத்தாலோ, அல்லது மணமான பெண் எவ்வாறு கணவனின் ஆசைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்ற அறியாமையாலோ என்னவோ அவள் என் ஆசைகளை பூர்த்தி செய்யவில்லை. அதோடு தனக்கு மாதவிலக்கு என்று சாட்டு சொல்லி என்னை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டாள். என் தாகத்தை அவளால் தீhக்க முடியவில்லை. ஆரம்பத்தில் என்னிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அதனால் அவள் மேல் நான் கோபப்படவில்லை அவளது வெகுளித்தனத்தையிட்டு பரிதாபப்பட்டேன். அப்படி ஒரு பெண்ணை நானே விரும்பி தேர்ந்தெடுத்ததால் இதையெல்லாம் நான் பொறுத்துக்கொள்ள வேண்டும் தானே.  முன்பின் தெரியாதவனை எப்படி அவளால் திடீரென்று ஏற்க முடியும் என்ற பயமோ தெரியாது. என்னுடன் நெருங்கிப் பழக சற்று தயங்கினாள். ”ஏன் சுபி உனக்கு என்னை கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து தெரியும் தானே. இப்ப நான் உனக்கு தாலி கட்டிய கணவன். உன்னைப் போல் நல்ல குணம் உள்ள பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பதற்காகத்தான்  நான் கனடாவில் பெண் எடுக்காமல் இவ்வளவு தூரம் வந்து ஊரிலை  உன்னைக் கலியாணம் செய்தனான். இங்கை உள்ள பெண்களுக்கு கனடா மாப்பிள்ளை, அதுவும் நல்ல உத்தியோகத்தோடு கிடைப்பது அதிர்ஷ்டம். நான் கனடாவுக்குப் போனவுடன் வெகு சீக்கிரம் உனக்கு விசாவுக்கு ஆயத்தம் செய்கிறன். உன்னைப் பிரிந்து வெகுகாலம் என்னால் இருக்கமுடியாது சுபி”. சுபத்திரா ஒன்றும் பேசாது தலைகுனிந்தபடி இருந்தாள். அவள் முகம் வெயர்த்து இருந்தது. அவள் கைளை நான் பற்றிய போது அதில் நடுக்கத்தைக கண்டேன். “ஏன் சுபி உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? சொல்லு. அல்லது கனடாவுக்கு வர பயமா? சொல்லு சுபி”. “அதொன்றுமில்லை. இது எனக்கு ஒரு புது அனுபவம்.” என்றாள் உதட்டுக்குள. “பயப்படாதே நான் உன்னைப் பூப்போல பார்ப்பேன். நான்  உனக்கு விருப்பமில்லாமல் உன்னை திருமணம் செய்யமாட்டேன்”, என்று அவளுக்கு மனத்தைரியத்தை கொடுத்தேன். ஒரு கிழமையில் நான் அவளைப் பிரிந்து கனடா புறப்பட்டபோது அவளது முகத்தில் ஏக்கம் தொனித்ததை என்னால் உணரமுடிந்தது. பிரிய மனம் இல்லாமல் திருமணமாகியும் கணவனின் கடமையைப் பூர்த்தி செய்யமுடியாது, தாகத்துடன் தாம்பத்திய உறவு வைக்காமல் அவளைப் பிரிந்தேன். அவளது மனதில் என்ன இருந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் கண்களில் கண்ணிர் வழிந்ததைக் கண்டேன். கலியாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலை. என் நிலையை நண்பர்களுக்குச் சொன்னால் அவர்கள் சிரிப்பார்கள். இதுக்குத்தான் ஊரிலை போய் பெண் எடுத்தாயா என்று என்னைப் பகிடி பண்ணுவார்கள்.                                                         ♣♣♣♣♣ என் திருமணம் நடந்து ஒரு ஏழு மாதங்கள் உருண்டோடியது ஒரு கனவு போலிருந்தது. மனைவிக்கு விசாவர தாமதமாயிற்று. அடிக்கடி கோல் எடுத்து அவளோடு பேசுவேன். அவளது அழுகை மட்டும் தான் மறுபக்கத்தில் கேட்கும். ஏதோ அவள் சொல்ல நினைப்பாள் ஆனால் வார்த்தைகள் வெளிவராதது போல் எனக்கிருந்தது. நான் தொடர்ந்து நிறையப் பேசுவேன். அதற்கு அவள் ஒரு சில பதில்கள் மாத்திரமே சொல்லுவாள். அவளுக்கு ஏதும் வீட்டில் பிரச்சனையோ.  திரும்பவும் ஒருமாதம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் வருவோமா என்று கூட யோசித்தேன். நான் பாவி. அந்த நேரம் பார்த்து எனக்கு மனேஜராக புரமோஷன் தந்து ஒரு செக்சனுக்கு பொறுப்பாக விட்டுவிட்டார்கள். லீவ் ஒரு வருடத்துக்கு தர மறுத்துவிட்டார்கள். என்ன செய்ய? உத்தியோகமா மனைவியா என்ற நிலை. கனேடிய இமிகிரேசனைத் திட்டித் தீர்த்தேன். கணவன் மனைவியை இவ்வளவு காலம் பிரித்து வைத்த பாவம் உங்களை சும்மா விடாது என்று வாயுக்குள் வந்தபடி திட்டினேன். “உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லு எனக்குத் தெரிந்த ஏஜன்சிகாரன் ஒருவன் இருக்கிறான் அவன் மூலம் அவளை இரண்டு கிழமைகளில் கனடாவுக்கு கூப்பிடலாம். ஆக செலவு 12 லட்சம ரூபாய் “, என்றான் என் நண்பன். அவன் சொன்னது தனது கொமிஷனையும் சேர்த்தோ என்னேவோ தெரியாது. எனக்கு அவன் சொன்ன குறுக்கு வழியில் போக விருப்பமில்லை. அவள் சட்டப்படி வர வேண்டும் என்பது தான் எனக்குச் சரியெனப்பட்டது. கடிதமும் டெலிபோன் கோல்களும் தான் எனக்கு உதவின. ஆனால் எனக்கு அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருநத்து. நான் எம்.பியின் ஒபீஸ் படிகளில் ஏறி இறங்காத நாட்கள் இல்லை. அதோடை இந்த பாழாய்ப் போன சுனாமி வந்து எனது மனைவியின் விசாவை மேலும் தாமதிக்க வைத்து விட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசா கொடுப்பதை முதலில் கவனித்தார்கள் கனேடிய ஹைகொமிசன். அவர்களுக்கு எனது பரதவிப்பு தெரியவாப் போகிறது. என் நண்பர்கள் எனக்கு தாம் முன்பு எச்சரிக்கை செய்ததை நினைவூட்டி என் ஆத்திரத்தைக்  தூண்டினார்கள். எனது திட்டுகள் கனடா அரசின் காதில் கேட்டதோ என்னவோ கடைசியாக எனது மேல் கருணைகொண்ட கொழும்பு கனேடிய ஹைகொமிசன் அவளை மருத்துவ பரிசோதனைக்கு போய் வரும்படி அறிவித்திருக்கிறார்கள் என அறிந்ததும் , இனி குறைந்தது இரண்டொரு மாதங்களில் சுபத்திரா கனடா வந்துவிடுவாள் என்ற சந்தோஷம். அவள் வரமுன் நல்ல இரண்டு ரூம் கொண்டோவாக பார்த்து செல்ல வேண்டும். தேவையான கிங் சைஸ் கட்டில், வீட்டுக்கு தேவயான  சாமான்கள் வாங்கவேண்டும்.  நான் வேலைக்குப் போனால் அவள் பொழுது போகாமல் வீட்டில் தனியாக இருப்பாளே என்பதற்காக 27 அங்குள டிவியும், விசிஆரும்  வாங்கினேன். ஊர் புதினங்களை அசல் யாழ்ப்பாணத்து தமிழில் கேட்கட்டும் என்பதற்காக தமிழ் வானொலிகளை ஒலிபரப்பும் ரேடியோ ஒன்றையும் வாங்கினேன். அதில் போகும் கலந்துரையாடல்களை கேட்டாவது ஊர் நினைவுகளால் அவள் கவலைப்படாமல் இ.ருக்கட்டுமே என்பதற்காக. நான் புது கொண்டோவுக்குப் போன போது ஒன்றைமட்டும் முக்கியமாக கவனித்தேன். ஒரு ஈழத் தமிழ் குடும்பமாவது நான் வசிக்கும் மாடியில் வசிக்கக் கூடாது என்பது எனது விருப்பம். பிறகு என்னையும் மனைவிiயும் கண்டு விட்டு, ”நீங்கள் எந்த ஊர் ? ஊரில் அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா? என்று சொந்தம் தேடியபிறகு  எனக்கு என்ன வேலை என்ன சம்பளம் என்று எனது பயோ டேட்டாவை கேட்கும் அளவுக்கு போய்விடுவார்கள். வசதியிருந்தால் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு மனைவியோடு வாருங்களேன் என்பார்கள். மேலும் எங்கள் குடும்பத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ளவோ என்னவோ தெரியாது.. இது எனது நண்பன ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதற்கு முன்னர் நான் இருந்த  அப்பார்ட்மெண்ட கட்டிடத்தில வசித்தவர்களில அறுபது விகிதம் தமிழ் குடும்பங்கள். கட்டிடத்துக்குள் நுழைந்ததும் மீன் பொரியலும் , இறைச்சி, மீன் கறி மணமும், தாளித்த வெந்தயக் குளம்பு வாசனையும தான் மூக்கைத் துளைக்கும். அதோடு மட்டுமல்ல ஒரு அப்பாhட்மெண்டில் கோயில் நடத்தி ஒரு பெண் சம்பாதிப்பதாக சிலர் சொல்லி கேள்விபட்டிருக்கிறன். உருவந்து நடக்கப் போவதை சொல்வாளாம். அதுவும் பூஜைக்கு பின். வெகு விரைவில் அவள் தனி வீடு வாங்கி ரிச்மெண்ட் ஹில்லுக்கு போகப் போவதாக சொன்னார்கள். கனடாவில் கடவுள் பெயர் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைக்கத் தெரிந்தவர்கள் அவளைப் போல் பலபேர். அந்தப் பிரச்சனைகள் உள்ள கட்டிடத்தில் எனக்கு அப்பார்ட்மெண்ட வேண்டவே வேண்டாம்.  எல்லாவீடுகளிலும் இருந்து வரும் வாசனைகள் ஒரு புதுவித கலவையாகி வயிற்றைக் குமட்டும் விதத்தில் கட்டிடத்தை தழுவும். அதனால் தான் அந்த மணமில்லாத பத்து மாடிக் கொண்டோவாக தேடிப் பிடித்து ஏழாவது மாடியில உள்ள அப்பார்ட்மெண்ட இலக்கம் 700 க்கு என் மனைவியோடு வாழ தீர்மானித்தேன. கொண்டோ கட்டிடம் எனக்கு பிடித்துவிட்டது. அண்டர்கிரவுண்ட் கார் பார்க். வாடகை மாதம் 1400 நூறு டொலர்கள். நான் பிறந்த திகதியும் ஏழு, ஆகவே அப்பார்ட்மெண்ட எண்ணும் என் மனதுக்கு பொருந்திவிட்டது. அப்பார்ட்மெண்டில் இரண்டு அறைகள் அதில் ஒன்று பெரிய படுக்கை அறை. மற்றது அளவில் அதைவிட சற்று சிறியது. அதை எனது கணனி அறையாக வைத்திருக்க தீர்மானித்தேன். சுபி வந்ததும் அவளுக்கு நானே கணினி பயிற்சி கொடுக்க டெல் (Dellட)  கணினி ஒன்றை வாங்கினேன். ஊர் செய்திகளை சுடச்சுட அறியட்டுமே என்பதற்காக இண்டர்நெட் வசதியும் ஒழுங்கு செய்திருந்தேன். அவள் ஊரில் ஒருவனுக்கு வாழக்கைப்பட்டிருந்தால், இந்த வசதிகள் அவளுக்கு கிடைக்காமல போயிருக்கும் என்று எனக்குத் தெரியும். அவளை படிப்படியாக கனேடிய வாழ்க்கை முறையோடு ஒத்துப் போகக் கூடிய ஆயித்தங்கள் செய்திருந்தேன். ஊரில்  ஆர்மிக்கு பயந்து வாழவேண்டிய நிலை. அப்பாhட்மெண்டில் ஒரு பெரிய ஹால். வசதியான பல்கனி. அதில் நின்று பார்த்தால் சீஎன் டவர் தெளிவாகத் தெரியும். இரவு நேரத்தில் டவுன் டவுன் ( Down Town) கார்த்திகை விளக்கீடு போல் காட்சி அளிக்கும்;. ஹாலுக்குப் பக்கத்தில் சமைப்பதற்கு எல்லா வசதிகளோடு சமையல் அறை. ஊரைப் போல் விறகு வைத்து கண் எரிய அடுப்பு மூட்டத் தேவையில்லை. அரை மணித்தியாலத்தில் சமையலை செய்;துவிடலாம். நாலு அடுப்புகளைக் கொண்ட சமையல் அடுப்பு. படுக்கை அறையோடு சேர்ந்து வசதியாக ஒரு குளியல் அறை;. படுக்கை அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊரில இருந்து திருமணமாகி விசா கிடைத்து, கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் வர இருக்கும் என்மனைவிக்காக நான் வாங்கிய, இருவர் வசதியாக உருண்டு படுக்கக் கூடிய கிங் சைஸ் கட்டில். அதற்கு பொருத்தமான தலையணைகள்.  கட்டிலுக்கு அருகே ஒரு பெரிய ஜன்னல். அதனால் அறைக்குள் நல்ல வெளிச்சம். அங்கிருந்து பார்த்தால் பக்கத்தில் உள்ள கொண்டோவில் நடப்பதை அவதானிக்கலாம். பக்கத்து வீட்டு ஜன்னலைப் பார்க்கும் சந்தாப்பம் கிடைக்கும் போது பல சிந்தனைகள் என் மனதில் மோதிச் செல்கிறது. காதல் , பரிதாபம், மனித அபிமானம், நட்பு, இப்பபடி பல தோன்ற அந்த ஜன்னல் துணைபோகிறது. ”அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா””என்ற எதிர் நீச்சல் படத்தில் வரும் நகைச்;சுவை பாடல் என் மனக்கண்முன் அப்படியே ஜன்னலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்து அவளுக்கும் கணவனுக்கும் இடையே ஏற்படும் ஊடல்களை எப்படி இரசிக்க முடிகிறதோ அதே போன்று ஜன்னலூடாக பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பதில் தான் என்ன சிலுசிலிர்ப்பு? சுபியும் சௌகார் ஜானகியைப் போல் பாடத் தொடங்கிவிடுவாளோ. பெரும்பாலும் குடும்பங்களுக்கு பக்கத்து வீட்டில் நடப்பதைப் பற்ற்p அறிவது என்றால் அதில் தனிச் சுகம். காரணம் தமது வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து திருப்திபடுவதற்காகவோ அல்லது அவர்களது குடும்பவாழ்க்கையை தங்களது தாம்பத்திய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கவோ, அல்லது அவர்கள் நல்ல வசதியுள்ளவாகளாக அவர்கள் இருந்தால் உறவாடி பண உதவி பெறுவதற்காகவோ இருக்கலாம். பக்கத்துவீட்டில் காப்பி, சர்க்கரை, அரிசி, மிளகாய் வாங்குவதில் கூட பலருக்கு தனிச்சுகம் காண்பார்கள். இரவல் வாங்கியது திரும்பவும் கொடுக்கப்படுமா என்பது சந்தேகம். தாயகத்தில் வீட்டு ஜன்னலை விட வேலியில் அடுத்த வீட்டில் நடப்பதை விடுப்பு பார்பதற்கென உருவாக்கப்படும் ஓட்டை ஒரு வித ஜன்னலாகப் பயன்படுகிறது. வதந்திகளை உருவாக்க அவை துணைபோகிறது. பக்கத்து வீட்டுக்கு யார் வந்து போகிறார்கள், குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கிறார்களா இல்லையா?. அதுவும் பக்கத்து வீ;ட்டில் ஒரு பருவப் பெண் இருந்தால் அங்கு வரும் ஆடவர்களைக் கணக்கெடுக்க அந்த வேலியில் போட்ட ஜன்னல் பெரிதும் துணை போகிறது. கனடாவில் பக்கத்து அப்பார்ட்மெண்டுகளில் நடப்பதை பைனகுலொர்ஸ் பாவித்து ரசிக்கும் ஜீவின்களுமுண்டு. இந்த ஜன்னலூடாக என் வீட்டில் நடப்பதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக தடித்த கரு நீல நிறத்தில்  கேர்ட்டனஸ் போட்டிருந்தேன். வெளியில் இருந்து பார்பபவர்களுக்கு அறைக்குள் நடப்பது தெரியாது. ஹாலில்  உள்ள ஜன்னலுக்கும் அதே மாதிரி கேர்டன்ஸ போட்டிருந்தேன். எல்லாம் என மனைவி வரமுன் நான் செய்த ஏற்பாடுகள். அவள் வந்ததும் என் நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும். சுபியை அறிமுகப்படுத்த வேண்டும். அவள் எனது நல்ல நண்பர்களின் குடும்பத்துடன் மட்டுமே. பழக வேண்டும். இங்கு இருக்கும் அவளது தூரத்துச் சொந்தக்காரர்களுக்கு அவள் வருவது தெரியக் கூடாது. தெரிந்துவிட்டால் ஊரில் இருந்து வரும் போது  அந்தச் சாமான் கொண்டுவா, இந்தச் சாமான் கொண்டு வா என்று பட்டியல் போட்டு; சுபியை பாரம் தூக்க வைத்து விடுவார்கள். என் பெற்றோருக்கு அறிவித்து விட்டேன அவள் இங்கு வரும் விஷயம், பிரயாணம் செய்யும் திகதி பற்றி ஊரில் ஒருத்தருக்கும் மூச்சு விடக் கூடாது என்று.                                                          ♣♣♣♣♣ ஓரு பாடாக கனடாவுக்கு தேர் அசைவது போல் சுபத்திரா வந்து சேர்ந்தாள். எயர் போர்ட்டில் அவளை நானும் என்னோடு வேலை செய்யும் என் நண்பன் மகேசும்; அவனின் மனைவியும் வரவேற்பதற்காகப் போயிருந்தோம். சுபி ஜீன்சில் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு சேலை உடுத்து வந்ததிகால் அவளை என்னால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சற்று தோற்றத்தில் மாறியிருந்தாள். வெயிட் போட்டிருந்தாள் போல் எனக்குத் தெரிந்தது.. ”என்ன சுபி கொஞ்சம் வெயிட் போட்டிட்டீர் போலத் தெரிகிறது? வரமுன்பு மாமியின் சமையலை ஒரு பிடிபிடித்திருக்கிறீர் போல தெரிகிறது” என்றேன் நான் அவள் வந்ததும் வராததுமாய்.  எனது மனைவி மெலிந்தருப்பதை விரும்புகிறவன் நான். ”அப்படி  ஒன்றுமில்லை. நீங்கள் தான் கலியாணத்தின் போது இருந்ததிலும் பார்க்க மெலிந்திருக்கிறீர்கள் ” என்றாள்  சுபி. ”ஒவ்வொரு நாளும் அவருக்கு உங்கள் நினைவு தான் சுபி;.பாவம் பல இரவுகள் உங்கடை அவருக்கு நித்திரை இல்லை. நல்லாக சாப்பிடுவது கூடக் கிடையாது. நீர் இனி சுவையாக ஊர் சாப்பாடு சமைத்துப் போடும்” என்று பதில் அளித்தாள்  மகேசின் மனைவி. சுபி வந்து இரண்டு நாட்களாகிவிட்டது. நாட்கள் போனது தெரியாது. அந்த இரண்டு நாட்களும் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். பாவம் நீண்ட பயணத்தால் சுபி களைத்திருப்பாள் என்று அவளை நான் தொந்தரவு செய்யவில்லை. நான் என்ன மிருகமா? இவ்வளவு காலம் பொறுத்தது இன்னும் சிலநாட்கள் பொறுக்க முடியாதா என்னால்.?  அந்த கிழமை முழுவதும் நான் லீவு போட்டிருந்தேன் சுபிக்கு சியர்சில் ( Sears)  நல்ல உடுப்புகள் வாங்க அழைத்து சென்றேன். ஒன்றாகப் போய் எனக்கு தெரிந்த ஒரு தமிழ் குரொசரி கடையில் மீன், மரக்கறி, பழங்கள், சரக்குத் தூள் வாங்கிவந்தோம். கடைக்காரார் என் மனைவியைக் கண்டதும் துருவித் துருவி கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். எனக்கு அவர் கேள்விகள் பிடிக்கவில்லை. அவசரம் அவசரமாக சொப்பிங்கை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். வருகிற சனிக்கிழமை இரவு நான்கு குடும்பங்களுக்கு என் விட்டில் விருந்து. உம்மை அவர்களுக்கு அறிமுகப்படுத்தத்தான் இந்த ஏற்பாடு. நீர் சமைக்க தேவையிலலை. இங்கை ஓடர் கொடுத்தால நல்ல சாப்பாடு தயாராக இருக்கும். எங்களோடை சேர்த்து பதினாலு பேருக்குப்  பன்னிரெண்டு சாப்பாடு நல்லாய் போதும். நீரே சாப்பாட்டை தேர்ந்தெடும். நீர் ஒன்றும் சமைக்கத் தேவையில்லை. களைத்துப் போய் வந்திருக்கிறீh என்று அவளின தேகநலத்தின் மேல் அக்கறை கொண்டவன் போல் சொன்னேன். சாப்பாட்டைப் பற்றி நான் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று தன் வாயை இரு கையாலும் பொத்திக் கொண்டு வோஷ் ரூமுக்குள் ஓடிப்போனாள். அடுத்த நிமிடம் அவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. நான் பயந்து போனேன். ”என்ன சுபி என்ன செய்கிறது. மத்தியானம் வெளியில் சாப்பிட்ட கடைச் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லையா. அல்லது எயர் கனடா சாப்பாடு புட் பொயிச் (Blood Poisson) ஆக்கிவிட்டதா”? விசனத்தோடு அவளைக் கேட்டேன். ”அப்படியில்லை. எனக்கு ஒன்று மில்லை. கொஞ்ச நேரம் என்னை நிம்மதியாகப் படுக்க விடுங்கள்” என்றாள் பதட்டத்துடன். அவளை அணைத்தபடி படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தேன். திரும்பவும் அரைமைணி நேரத்தில ஓடிப்;போய் வாந்தி எடுத்தாள். அவள் அடுத்து அடுத்து வாந்தி எடுத்ததினால்  எனக்கு பயம் வந்துவிட்டது. ”வா சுபி இனி இதை டொக்டரிடம் காட்டாமல் விடமுடியாது. ஹெல்த் கார்ட்” கிடைக்காட்டாலும் பரவாயில்லை. நீர் லாண்டட் இமிகிரணட். எனது தமிழ் டொக்டரிடம் சொன்னால் அவர் உடனடியாக கவனிப்பாh” என்றேன்.. தன்னால் டாக்டரிடம்  வரமுடியாது என்று அடம் பிடித்த அவளை வற்புறுத்தி எனது குடும்ப டாக்டரிம் அழைத்துச் சென்றேன். டாக்டர் பரிசோதித்து விட்டு ஒரு வேளை வயிற்றுக் குழப்பமோ என்று தீர்மானிக்க இரத்தம், யூரின் பரிசோதனைகளை உடனடியாக செய்யச் சொன்னார். பக்கத்தில இருந்து பரிசோதனை நிலையத்தில் உடனடியாக அதைச் செய்தோம். சுபி அன்று முழவதும் பேயறைந்தவள் போல் இருந்தாள். அடுத்தநாள்டாக்டரின கிளினிக்கில் எங்கள் இருவரையும் வரும்படி; டாக்டரிடம் இருந்து கோலவந்தது. என்ன பிரச்சனையோஎன்று பயந்தபடி இருவரும்; சென்றோம். டாக்டரின அறைக்குள்போனதும் டாக்டர் உடனே ”கொன்கிராஜிலேஜன்ஸ்”  என்று தன் கையை நீட்டினார், டாக்டர் என்னை பாராட்ட. ”என்ன டாக்டர் எதற்காக என்னை பாராட்டுகிறீர்;கள்”? ”நீர் தந்தை ஆகப் போகிறீர். அதற்குத்தான் ” என்றார் டாக்டர் எனக்குப் பாறாங்கல் ஒன்று என் தலையில் தூக்கிப் போடுவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன் சுபியை. அவள் மௌனமாக ஏதும் தெரியாதவள் போல் கீழே பார்த்தபடி இருந்தாள். ”என்ன டாக்டர் சொல்லுகிறீhகள்”? ”உமது மனைவி கரு தரித்திருக்கிறாள். இப்போ அவள் வயிற்றில மூன்றுமாதச் சிசு வளர்கிறது”. வன்னால் டாக்டர் சொன்னதை நம்பமுடியவிலிலை, அந்த அறையில உள்ள பொருட்கள் எல்லாம் சுழலுவது போன்ற ஒரு உணர்வு  எனக்கு. ”உண்மையாகவா டாக்டர்? எதைக் கொண்டு சொல்லுகிறீர்கள்? ”நேற்று அவளைப் பரிசோதித்து நான் கண்ட அறிகுறிகளை வைத்து எனக்கு ஒரு சந்தேகம். அவளிடம் சில கேள்விகள் கேட்டேன் உமது மனைவி தந்த பதில்கள் எனக்கு சந்தேகத்தை தோற்றுவித்தது. பிளட், யூரின் பரிசோதனைகள் அவள் கற்பிணி எபதை உர்;ஜிதம் செய்துவிட்டது. இனி உமது மனைவியை கவனமாகப் பார்த்துக் கொள்வது உமது பொறுப்பு. உம்மை நம்பி ஊரிலை இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறா. முதலில் அவவுக்கு ஹெல்த் இன்சுரள்ஸ் கார்ட்டை விரைவாக எடும்”, டாக்டர் சொன்னார். நான் நடுக்கத்தோடு பக்கத்தில் இருந்த சுபியை திரும்பவும் நோக்கினேன். அவள் ஒன்றும் தெரியாதவள் போல் தரையைப் பார்த்தபடி இருந்தாள். என்னால் நம்பமுடியவில்லை. ”கள்ளி. சாதுவாக இருந்து என்னை நீ ஏமாற்றி விட்டாயா? இதற்காகவா அவ்வளவு தூரம் வந்து உன்னைத் திருமணம் செய்தேன்? இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையா”?  மனதுக்குள் நான் பொருமினேன். நான் தாலிகட்டினாலும் அவள் இன்னும் உடல் ரீதியாக எனக்கு சொந்தமாகவில்iயே! (பி.கு.இது ஒரு உண்மைக்கதையை அடிப்படபடையாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டது.  பெயர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. இக்கதையின் முடிவை வாசகர்கள் கையில்; விட்டுவிட்டேன். கதாநாயகன் சுபியை ஏற்றுக் கொண்டானா?. சுபி.அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டாளா? விசா>கிடைத்து கனடா வரமுன் ஊரில் சுபிக்குநடந்ததுஎன்ன?.கணவனுக்கு நடந்ததைச் சொவ்லுவாளா ?)                                                                        ♣♣♣♣♣ 3 அத்தியாயம் 3 (அதிகாரம்)                           [Benz2]                                                                     அதிகாரம் ஆறு மாடிக் கட்டிடத்தில், நாலாவது மாடியில். முப்பது அடி நீளமும், இருபத்தைந்து அடி அகலப்; பரிமாணங்களைக் கொண்ட அறை அது. அறைக்கு வெளியே அமைச்சர் பாலசூரியரின் பெயர் பதித்து, அமைச்சின் பெயர் பித்தளை தகட்டில் பிரகாசித்தது. வெளிநாட்டிலிருந்து பிரத்தியோகமாக இறக்குமதி செய்யப்பட்ட, பர்மா தேக்கினால் செய்யப்பட்ட மேசையும், கதிரைகளும். அமைச்சரைச் சந்திக்க வருபவர்கள் அமர்வதற்கு ஒரு விலையுயர்ந்த சோபா செட்டும் அறையை அலங்கரித்தன.  அமைச்சரின் அரசியல் கட்சியின் நிறமான நீல நிறத்தில் அறைச்சுவர்கள்  தொற்றமளித்தன. அவர் அமைச்சராக முன்னர் ஆட்சி செய்த கட்சியின் நிறம் பச்சை. ஆட்சி மாறி பாலசூரியர் அமைச்சாரனதும் அவர் செய்த முதற் சாதனை, தனது ஒபீஸ் அறைச் சுவர்களின் நிறத்தைப் பச்சை நிறத்திலிருந்து நீல நிறத்துக்கு மாற்றியது.  அதுமட்டுமல்ல அமைச்சரினது அரசியல் கட்சியின் நிறமான நீல நிறத்தில் அறை ஜன்னலின் திரைச்சீலைகள்  கூட நீல நிறத்துக்கு மாற்றப்பட்டது. அறையின் ஓரத்தில் இருந்த சிறு மேசையில் சில பழைய டைம், நியூஸ் வீக், ரீடேர்ஸ் டைஜஸ்ட், ஆங்கில சஞ்சிகைகளும், சில சிங்களப் பத்திரிகைகளும் இருந்தன.  அமைச்சர் பாலசூரியர் ஒரு தமிழரானாலும், மேசையில ஒரு தமிழ் பத்திரிகை கூட இருக்கவில்லை. அறையை அலங்கரிக்க  குரோட்டன், பாம் செடிகள் இருந்தன. அரசியல் மேடைகளில் தேசீயம் பேசி தான் பொதுமக்களின் நண்பன் என்று சொன்னாலும், அமைச்சருக்கு வெளிநாட்டுப் பொருட்களிலேயே விருப்பம் அதிகம். அது மட்டுமல்ல எவரும் அவரைப் பார்ப்தற்கு பலத்த கட்டுப்பாடு. அவரது மேசைக்குப் பின்னால் உள்ள சுவரில் ஜனாதிபதியின் படம காட்சியளித்தது. மேசையின், ஓரத்தில் அமைச்சரின் குடும்பத்தின் படம் இருந்தது.  எயர்கொண்டிசனர் அறைக்குக் குளிரூட்டிக் கொண்டிருந்தது. அமைச்சர் லிப்டில் தன் பாதுகாவலரோடு நாலாவது மாடிக்குப் போய் வரும்போது, பாதுகாப்பு கருதி, வேறு எவரும் லிப்டில் ஏறுவதற்கு அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . அரசியல் மேடைகளில் சோசலிசம் கதைத்தாலும் அவர் போக்கில்  முதாளிதத்துவமே பிரதிபலித்தது. அவர் பேச்சில் தான் ஒரு அமைச்சர், நினைத்ததைச் செய்யலாம் என்ற அகங்காரமும், அதிகாரத்தன்மையும் தெரிந்தது பாலசூரியர் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. செல்வம் படைத்தவர் என்பதால் அரசியல் கட்சிக்கு நிதி உதவி செய்த காரணத்தால் நியமன எம்பியாகி அமைச்சுப் பதவி பாலசூரியருக்கு கிடைத்தது. அரசாங்கத்தின மந்திரிசபையில் அவர் ஒருவரே தமிழர். ஆனால் அவரது பெயர் சிங்களப் பெயர் போல் இருந்ததினால் அவர் ஒரு சிங்களவர் என்றே பலர் நினைத்தனர்.  மந்திரி சபையில் ஒரு தமிழரும் இருக்கிறார் என்று காட்டவதற்காக அவரை அரசாங்கம் கைப்பொம்மையாக வைத்திருந்தது. அமைச்சரின் அகலமான மேசையில் கொம்பியூட்டரும், சிவப்பு. நீலம், வெள்ளை ஆகிய நிறங்களில் மூன்று டெலிபோன்களும் அலங்கரித்தன. விலை உயர்ந்த சுழலும் கறுப்பு நிறக் கதிரை அமைச்சரின் ஆசனமாக இருந்தது. அமைச்சரின் நிரந்தரச் செயலாளர் வீரசிங்கா, பரிபாலன சேவையில் பல வருடங்கள் வேலை செய்தவர். அதிகம் பேசமாட்டார். அமைதியானவர். பரிபாலன. நிதி ஒழுங்குவிதிகளை மீறி நடக்காதவர். நேர்மையைக் கடைப்பிடிப்பவர். பரிபாலன சேவையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று  அமைச்சின் நிரந்தரச் செயலாளராக நியமனம் பெற்று வந்து மூன்று வருடங்களாகின. அவர் வேலை செய்யும் அமைச்சர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வீரசிங்கா, தன் சாதுர்யத்தை பாவித்து  கடைமையாற்பவர். அமைச்சரின் மனம் நோகாமல் செயலாற்றக் கூடிய திறமை உள்ளவர். அன்று காலை பத்துமணிக்கு அமைச்சின் செயலாளர் வீரசிங்கா, கையில் இரு பைல்களோடு அமைச்சரின் அறைக்குள் பரவேசிக்க அறை வாசலில் காத்து நிறார். ஒருமுக்கிய விஷயம் பேசவேண்டும் என்று தொலைபேசியல் அமைச்சர் தன்னை அழைத்தனினால் அவரைக் காண வநதிருப்பதாக அமைச்சரின பிரத்தியேக செயலாhளர் மூலம் அமைச்சருக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். பதினைந்து நிமடஙகளாகியும் உள்ளை வரலாம் என்று வீரசிஙகாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பாலசூரியருக்குத் தமக்குக் கீழ் வேலை செய்பவர்களை அலட்சியமாக நடத்துவதில் ஒரு தற்பெருமை. கொம்பியூட்டரை வாங்க முன்பாக அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த தன் மகனோடு கலந்து பேசிய பிறகே அவனது பரிந்துரையின் படி விலை உயர்ந்த கொம்பியூட்டர் இரண்டை அமைச்சின் பட்ஜட்டில் வாங்குவாவற்கு அமைச்சின் நிரந்தர செயலாளர் வீரசிங்காவை அழைத்து கட்டளையிட்டார். எக்காரணத்தால் அமைச்சருக்கு இரு கொம்பியூட்டர்கள தேவைப் படுகிறது என்பது செயலாளருக்கு புரியவில்லை. அமைச்சர் தனது வீட்டு பாவனைக்கு ஒரு லப்டொப்பும் மற்றது தன் ஒபீஸ்பாவனைக்கு மேசையில் வைக்கும் கொம்பியூட்டர் ஒன்று, அதோடு தேவைபட்ட தரமான பிரின்டர் , ஸ்கானர், மென்பொருள்கள் ஆகியவை  வாங்குவதற்கு ஓடர் கொடுக்கும் படி சொன்னார். லப்டொப் தனது வீட்டில் பாவனைக்கு என்று அவர் காட்டிய காரணத்தை செயலாளர் நம்பிவிட்டார். உண்மையில் லப்டொப் அமைச்சரி;ன் மகள் பாவிப்பதுக்கு என்பது செயலாளருக்குத் தெரியாது. இரு கிழமைக்குள் அழகான டெல் கொம்பியூட்டர் அவர் மேசையை அலங்கரித்து. அதை எப்படி பாவிப்பது என்பது அமைச்சருக்குத் தெரியாது. தன்னிடம் காண வந்தவர்கள், தன்னைக் கவனிக்கும் விதத்தில் கீ போர்ட்டைத் தட்டுவார். அவரைச் சந்திக்க வந்திருப்பவர்கள் அமைச்சருக்கு கொம்பியூட்டர் பாவிக்கத் தெரியுமென அறியட்டும் என்பதைக காட்ட அவரது நடிப்பு அது. அரசியலில் அவர் முதலில் கற்றது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நடிப்பு. அன்று அமைச்சர் பாலசூரியர் படு கோபத்தில் இருநதார். காரணம் பல அமைச்சாகள் விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களை அரசு செலவில்; வாங்கி பாவிக்கிறார்கள், தனக்கு அந்தச் சந்தர்ப்பம் கிட்டவில்லையே என மனம் புழுஙகிளார். “என் அமைச்சுக்கு என் பாவனைக்கு  ஓரு 2015 ஆம் ஆண்டு மொடல்; மேர்சிடீஸ் பென்ஸ் E250  காரை நான் ஏன் வாங்கக் கூடாது”? வீரசிங்காவைப் பார்தது  அமைச்சர் பாலசூரியர் கேட்டார். “வாங்கலாம் சேர், அது வாங்க குறைந்தது பதினைந்து மில்லியன் ரூபாய்கள் மட்டில் தேவைப்படும். இவ்வளவு  பணம் கார் வாங்க பட்ஜட்டில் ஒதுக்கப்படவில்லையே. தபால் சேவைக்காக  ஆறு வான்கள் வாங்க மட்டுமே பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது இருக்கிறது” என்று பதில் சொன்னார் வீரசிங்கா. அவர் நிதி ஒழுங்கு விதிகளை மதிப்பவர். அதை மீறினால் திறைச்சேரி பல கேள்விகளைக் கேட்கும். அதனால் வரும் விளைவுகள் என்ன என்பது அவருக்கு அனுபவாயிலாகத் தெரியும். “எனக்கு முன்பு இருந்த அமைச்சர் பாவித்த கார் பழமையான டொயோட்டா மொடல். அது அடிக்கடி பிரச்சனை கொடுப்பதாக டிரைவர் என்னிடம் முறைப்பாடிட்டான். அமைச்சரின் பாவிப்புக்கு நல்ல தரம் உயர்ந்த, பென்ஸ் கார் ஒன்று அவசியம் வாங்கவேண்டும். என்ன சொல்லுகிறீ? ஆப்போது தான் அநத காரில நான் போய் இறஙகு போது எனக்கு ஒரு மதிப்பு இருக்கும்”? அமைச்சர் சொன்னார். “படஜட்டில் பென்ஸ்கார்  வாங்குவதற்குபோதிய பணம் இல்லையே சேர். அந்த மொடல்  கார் வாங்கப்; பெரும் தொகையன பணம் தேவை”, செயலாளர் விளக்கம் கொடுத்தார். “அதற்கென்ன? தபால் சேவைக்காக வாங்க இருக்கும் ஆறு வான்களின் எண்ணிக்கையை  மூன்றாகக் குறைத்து அதில் மிஞ்சும் பணத்தை பென்ஸ் கார்  வாங்கப் பாவிக்கலாமே. என்ன சொல்லுகிறீர்?” அமைச்சர் செயலாளரைக் கெட்டார். “அப்படி செய்வதற்கு நீங்கள் அனுமதி எழுத்தில் எனக்குத் தந்தால் நீங்கள் விரும்பும் காரை வாங்கலாம்”, செயலாளர் கார் வாங்குவதற்கு தேவையான நிதியை அவர் சொன்னபடி செய்யும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். “அப்படியானால் நான் சொன்னபடி செய்வதற்கான அறிக்கையை தயார் செய்து என்னிடம் அனுமதி கேட்டு சமர்ப்பியும்.  அதை அனுமதித்து கையொப்பம் இடுகிறேன்” என்றார் அமைச்சர். தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறோமே என்பதைப் பற்றி அவருக்கு  சிறிதும் கவலையிருக்கவில்லை. இருநாட்களில்அறிக்கையை தயார்செய்து அமைச்சரிடம்வீரசிங்கா போனார் “நீங்கள் சொன்னபடி கார் வாங்குவதற்கு  உங்களுடைய அனுமதி வேண்டி, அறிக்கை ஒன்றை தயார் செய்கிறேன்  சேர் “ என்றார் செயலாளர். “இன்னும் இரு மாதத்தில் சர்வதேச தபால் சேவைக்கான மீட்டிங் இங்கு நடக்க விருக்கிறது. அந்த மீட்ங்கிற்கு பல வெளிநாட்டவர்கள் கலந்துகொளள் வருவார்கள். அநத மீட்டிங்கிற்கு நான் புது பென்ஸ் காரில் போய் இறங்கினால் தானே எங்கள் அமைச்சின் மதிப்பு உயரும். என்ன சொல்லுகிறீர்?” பாலசூரியர் செயலாளரைக் கெட்டார். “நிங்கள் சொன்னபடி செய்யலாம் என்றார் செயலாளர். அவருக்குத் தெரியும் அமைச்சருக்கு முடியாது என்ற வார்த்தை பிடியாது என்று. “மிஸ்டர் வீரசிங்கா. ஓன்று சொல்லமறந்து விட்டேன். வாங்கும் கார் நீல நிறத்தில் இருக்கவேண்டும். பென்ஸ் கார் கொம்பெனி ஜெனரல் மனேஜர் பந்துசேனாவை எனக்குத் தெரியும். அவரோடு அதைப் பற்றி பேசுகிறேன்” என்றார் அமைச்சர் பாலசூரியர். சிரித்தபடி “ நல்லது சேர்” என்றார் வீரசிங்கா.                                     ******* ஒரு மாதம் சென்றது. அமைச்சர் பாலசூரியர் அவரது பிரத்தியேக செயலாளராக வேலை செய்பவர் அமைச்சரின் அண்ணன் இராமசூரியரின் மகன் தேவராஜா. அவர்;சொன்ன செய்தியைக் கேட்டு அன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் அமைச்சர் இருந்தார். காரணம் அமைச்சருக்காக இறக்குமதி செய்யப்பட்ட நீல நிற பென்ஸ் கார் வந்துவிட்டதாக கார் கொம்பெனி சேல்ஸ் மனேஜர் தனக்க அறிவித்தாக தேவராஜா சொன்ன செய்தியே. சேர் நீங்கள் விரும்பியபடி  வந்த மூன்று கார்களில் உங்களுடைய கட்சியின் நீல நிறத்தில் ஒரு கார் இருந்தது. அதை மனேஜர் உங்களுக்காக டெஸ்ட் ரன் செய்ய ஒழுங்கு செய்திருக்கிறார். இன்னும் இரு நாட்களில் கார் அமைச்சுக்கு வந்துவிடும்” என்றார் அமைச்சரின. பிரத்தியேக செயலாளா தேவராஜா. அச்செய்தியைக் கேட்டவுடன் அமைச்சர் உடனே தன் மனைவிக்கு போன் செய்து புதுக் கார் வந்துவிட்டதாகவும் . அதில் தான்  மந்திரி சபைக் கூட்டத்துக்கு போகமுன்பு காலமும் நேரமும் நல்லதா என்று கோவில் ஐயரிடம் கேட்டுத் தனக்குச் சொல்லும்படி அமைச்சர் சொன்னார். அமைச்சரின் கார் டிரைவர் பியதாசாவை  அமைசர் அழைத்து புதுக் கார் வந்துவிட்டது. அக்காரை கவனமாகப் பராமரிப்பது உன் கடமை. உன்னைத் தவிர வேறு ஒருவரும், க்காரை ஓட்டக் கூடாது. அக்காரை நிறுத்துவதற்கு கராஜ் ஒன்றை அமைச்சுக்கு அருகில் வீரசிங்கா ஒழுங்கு செய்வார்”, என்றார் அமைச்சர். பிரேமதாசா அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டிரைவர். சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் வீட்டில்அவன்  வேலை செய்தவன். அன்று காலை பத்தரைமணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருந்தது . அமைச்சர் தனது புது நீல நிறப் பென்ஸ் காரில் மந்திரிசபை கூட்டத்துக்கு காலை ஒன்பதரை மணிக்கே புறப்பட்டார். அன்றைய  கூட்டத்துக்கு வரும் அமைச்சர்களுக்கு தன் புதுக்காரை விளம்பரப் படுத்துவது தான் அவரது முக்கிய நோக்கம். செயலாளர் வீரசிங்கா கட்டிட வாசல் வரை வந்து அமைச்சரை வழியனுப்பி வைத்தார்.                                                                        ♣♣♣♣♣ நேரம் சரியாக பத்துமணி இருக்கும். செயலாளர் வீரசிங்காவுக்கு, கல்வி அமைச்சின் செயலாளராக இருக்கும் அவரது நண்பர் சேனரத்தினாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “மிஸ்டர் வீரசிங்கா. ஒரு முக்கிய செய்தி டிவியிலும் ரேடியோவிலும் போகுது உமக்குத் தெரியமா”? சேனரத்தினா கேட்டார். “நீர்; செய்தியைச் சொன்னால் தானே எனக்குத் தெரியும்”, வீரசிங்கா பதில் அளித்தார். “ஒரு துயரமான செய்தி. உம்முடைய அமைசர் பாலசூரியர் குண்டு வெடிப்பில் இறந்திட்டார். குண்டு வெடித்து அவர் பயணம் செய்த புது பென்ஸ் கார் முற்றாக நாசமாம். அவரும், அவரது டிரைவரும் அந்த இடத்திலேயே அடையாளம் காணமுடியாமல் இறந்திட்டார்களாம்”, என்றார் சேனரத்தினா தொலைபேசியில். வீரசிங்கா அதிர்ச்சியில் பேசாமல் இருந்தார். ரேடியொவில் செய்தியைக் கேட்டு அமைச்சில்  வேலை செய்பவர்கள், செயலாளரின் அறைக்குள் கூடிவிட்டனர் அனுதாபம் தெரிவிக்க.                                                               ♣♣♣♣♣ 4 அத்தியாயம் 4 ( சகுனம்) [Black cat]   சகுனம் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்தாள் தங்கம்மா. எதையோ அதிசயமாக கண்டுபிடித்தவள் போல் “இண்டைக்கு அட்டமி. நீங்கள் திலகாவின் கலியாண விஷயமாய் பேசத் தரகரை வரச் சொல்லியிருக்கிறியள். வருகிற வெள்ளிக்கிழமை நல்ல நாள். அது வரை தள்ளிப் போடுங்கோ அட்டமியில் ஆரம்பிக்கிற காரியம் உருப்படாது.” மனைவி தங்கம்மாவின் கட்டளையைக் கணவன் வடிவேலுவால் தாண்டிப் போக முடியவிலலை. “உனக்கு எதுக்கெடுத்தாலும் சாத்திரமும் சகுனமும் தான்.  நேற்று முற்றத்திலை ஒரு காகம் விடாமல் கரைந்த போது வீட்டுக்கு விருந்தாளிகள் வரப்போகினம் என்று உலையிலை இரண்டு சுண்டு அரிசி கூடப் போட்டாய், கடைசியிலை ஒருத்தரும் வராமல் சோறு மிச்சம் இருந்து. இண்டைக்கு அதைப் பழம் சோறாக்கி எனக்குத் தள்ளிப்போட்டாய். எப்பத்தான் நீ உந்த சகுனம் பாக்கிறதை விடப் போறாயோ தெரியாது,”  அலுத்துக் கொண்டார் வடிவேலு. தங்கம்மாவை திருமணம் செய்து நூற்பத்தைநது வருடங்களிலே அவளது சகுனம் பார்க்கும் பழக்கத்தில் எதுவித  மாற்றத்தையும் அவர் காணவில்லை. ஊர் சனங்கள் கனவு கண்டால் அடுத்த நாள் தஙகம்மாவைத் தேடிவந்து நல்லது நடக்குமோ அல்லது கெட்டது நடக்குமோ என்று விளக்கம் கேட்பார்கள். மூன்று பேராய் ஒரு காரியத்துக்கு போகப்படாது. வெளியே புறப்படும் போது யாரும் தும்மினால் அது போதும் தங்கம்மாவுக்கு. குறுக்கே  வெள்ளைச் சீலையுடன் விதவை ஒருத்தி முன்னுக்கு வந்தால் வந்தால் அது போதும் அவளுக்கு விளக்கம் கொடுப்பதற்கு. எதையோ காணக் கூடாததொன்றை கண்டு விட்டமாதிரி பதட்டப்படுவாள். “இப்ப போகாதையுங்கோ. சகுனம் சரியில்லை. போகிற காரியம் சரிப்பட்டு வராது “ என்று தடுத்துவிடுவாள். தங்கம்மாவின தாய் நாகம்மாவும் எதையும் நாள் நட்சத்திரம் நேரம் பார்த்துத் தான் செய்வாள். வியாழக்கிழமைகளில் முதல் முறையாக யாரும் வீட்டுக்கு வருவதை அவள் விரும்புவதில்லை.“ கள்ள வியாழன் கழுத்தறுப்பான், செவ்வாய் வெறுவாய், ஞாயிறு நோயறு என்று ஒவ்வொரு தினங்களுக்கும் ஒரு அடை மொழி சொல்வதில் கெட்டிக்காரி நாகம்மா. தனக்கு தெரிந்த சகுனங்களைத் தன் மகளுக்கும் போதித்தாள். நாகம்மாவின் கணவன் பஸ் விபத்தொன்றில் இறப்பதற்கு ஒரு கிழமைக்கு முன், முற்றத்தில் இருந்த மாமரத்தில் ஆந்தை ஒன்று ஊக் ஊக் என்று அலறியதைக் கேட்ட நாகம்மா அது எத்தனை தடவை அலறுகிறது எனக் கணக்கு வைத்து ஏதோ வீட்டிலை நடக்கக் கூடாதொன்று நடக்கப் போகிறது என்று கணவனுக்குச் சொல்லிப் பயந்தாள். “அதொன்றுமில்லை அது தனது துணையைத் தேடி அலறுதாக்கும் நீ போய் தேவையில்லாமல் எத்தனை தடவை அது கத்துகிறது என்று  எண்ணி, ஒரு விளக்கம் கொடுக்கிறாய் என்று பேசிவிட்டுப்போய்விட்டார். ஆனால் திடீரென்று ஒரு நாள்; பஸ் விபத்தில் இறந்த பத்துப் பேரில் நாகம்மாவின் கணவனும் ஒருவர்.  ஒரு கிழமைக்கு முன் ஆந்தை அலறியதை ஞாபகத்தில் வைத்திருந்து இழவு வீட்டுக்கு வந்த பலருக்கு சொல்லி தான் நினைத்த மாதிரி நடந்துவிட்டது என ஒப்பாரி வைத்தாள் நாகம்மா. ஆனால் பஸ் விபத்தில் இறந்த மற்ற ஒன்பது பேரின் வீட்டிலும் ஆந்தை அலறியதா என்று ஒருவரும் துணிந்து அவளைக் கேட்கவில்லை. தங்கம்மாவி;ன் மூத்த மகள் குடும்பம் புதுவருஷத்துக்குப் பிறகு தங்கள் வீட்டை ஒரு நல்ல நாள் பார்த்து வராததால் தான் மருமகனோடை சீதனம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு குடும்பங்களும் பிரியவேண்டிய நிலை வந்தது என்று அடிக்கடி கணவனுக்கச் சொல்லி குறைப்படுவாள். வடிவேலுக்கு மனைவியைப் போல் சாஸ்திரம் சம்பிரதாயத்தில் அவ்வளவுக்கு நம்பிக்கையில்லை. காரணம் அவரின் நண்பர் வைத்திலிங்கம் மாஸ்டர் ஒரு பொதுவுடமைவாதி. அவரி;ன் போதனைகள் சில வடிவேலுவையும் பாதித்துவிட்டது. ஆனால் மனைவி சொல்லும் விளக்கத்துக்கு எதிர்த்து நின்று பதில் சொல்லும் தைரியம் அவருக்கில்லை. குடும்பத்துக்குள் ஏன் வீண்சச்சரவு என்பது அவர் எண்ணம.;மகள் திலகாவும் தாயின் பக்கம் இருந்தாலும் மகன் ரவி மட்டும் தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லாமல் போவான். வடிவேலுதான் என்ன செய்வார்? ரவி படித்து பட்டம் பெற்றபின்  வேலைகளுக்கு மனுக்கள் பல போட்டும் பதில் ஒன்றும் கிடையாது மன விரக்தியோடு இருந்தான். “உனக்கு இப்ப காலம் சரியில்லை. எட்டிலை வியாழன். அதனாலை வியாழ சுகமுமில்லை. வருகிற மாதம் வியாழன் எட்டிலை இருந்து ஒன்பதுக்கு மாறியபிறகுதான் எதாவது உத்தியோகம் கை கூடும்” என்று மகனுக்கு உத்தியோகம் கைகூடாத காரணத்தை மகன் ரவிக்கு விளக்கினாள் தங்கம். அவளது விளக்கம் அவனுக்கு எரிச்சலைத் தான் தூண்டியது. ஏன் தாயுடன் வீணாக வாக்குவாதப் படுவான் என மனதுக்குள் நினைத்து, அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான். “அம்மா எனக்கு இப்ப காலம் எப்படி?. அட்வான்ஸ்  லெவல் சோதனை பாஸ் பண்ணி யூனிவேசிட்டிக்கு போகமுடியுமா? என்று தாயிடம் கேட்டாள் திலகா. துன் மகள் திலகாவும் தன்னைப் போல் சாஸ்திரம் சகுனம் பார்ப்பது போன்றவற்றில் அதிக நம்பிக்கை உள்ளவள் என்பதை தெரிந்த தங்கத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. மகளின் சாதகம் தங்கத்தின் மனதில் அப்படியே பதிந்திருந்தது. “திலகா உனக்கு ஒரு குறையுமில்லை நல்ல வியாழ சுகம் வேறை. புதன் திசை இப்பதான் துவங்கியிருக்கு. புதன் நல்ல இடத்திலை வேறு கிரகங்களின் பார்வை படாமல் இருக்குது. இனி படிப்புக்கு உனக்கு என்ன குறை”? என்றாள் தங்கம். தாயின் நாக்கு கருநாக்கு. அவள் எது சொன்னாலும் நடந்துவிடும் என்பது திலாகவின் மனதில் பதிந்த முழு நம்பிக்கை.                                                                  ♣♣♣♣♣ வாசலில் தபால்காரன் மணி அடிப்பது கேட்டது. ஓடிப்போய் அவன் கொணடு வந்த கடிதத்தை வாங்கினாள் திலகா. ரவியின் பெயருக்கு ஒரு கொம்பெனியில் இருந்து கடிதம் வந்திருந்தது. “அண்ணா உனக்குத் தான் கடிதம்” என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள் அவள். அறையில் வேலையாக இருந்த ரவி வெளியே வந்து திலகாவிடம் இருந்து கடிதத்தை வாங்கி பிரித்து வாசித்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது . ஏதோ நல்ல செய்தியாக்;கும் என்று திலகா நினைத்து “ என்ன அண்ணா எதாவது இண்டர்வீயுவூக்கு கூப்பிட்டு கடிதம் வந்திருக்கா”? என்று கேட்டாள். “ ஓம” என்று சுருக்கமாக பதிலுக்கு தலையாட்டினான் ரவி “அம்மா இங்கை வாயேன் அண்ணாவுக்கு இண்டர்வியூவுக்கு கடிதம் வந்திருக்கு”, என்று தாயைக் கூப்பிட்டாள் திலகா. அடுப்படியிலிருந்து அகப்பையும் கையுமாக வந்த தங்கம் “என்னடா ரவி. எந்தக் கொம்பெனியடா இண்டர்வியூவுக்கு வரும்படி உன்னை கூப்பிட்டிருக் கிறாஙகள்” என்று  ரவியைக் கேட்டாள். “ஓரு பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பனி அம்மா.  வருகிற புதன் கிழமை  காலை பத்து மணிக்கு இண்டர்வியூ” என்றான் ரவி “வருகிற புதன் கிழமையா?. அய்யய்யோ. அண்டைக்கு முழு நாளும் கரிநாளாச்சே. எடுத்த காரியம் கை கூடாதேயடா. வேறு நாள் தரச் சொல்லிக் கேட்டுப் பாரேன” என்றாள். “அம்மா இது தான் எனக்கு வந்த முதல் இண்டர்வியூ கடிதம். என்ன விஷயம் தெரியாமல் கதைக்கிறியள். அவங்களிடம் போய் நாள் சரியில்லை என்று காரணம் சொல்ல முடியுமா?. பிறகு கிடைத்த இண்டர்வியூவையும் கான்சல் செய்து போடுவாங்கள். இந்தகாலத்திலை உத்தியோகம் கிடைப்பதே கஷ்டம்” என்றான் சற்று கோபத்துடன் ரவி;. “ சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டன். உன் விருப்பப்படி செய். நான் சொல்வதை நீ எப்ப கேட்டு நடக்கிறனீ. இண்டர்வீயூக்கு போக முந்தியாவது பிள்ளையார் கோயிலுக்குப் போய் அருச்சனை செய்து போட்டு, தேங்காய் உடைத்துப்போட்டு போ.  பிறகு  நல்லது நடக்காவிட்டால் நீ கவலைப் படுவாய்.” தங்கம் ரவியை எச்சரித்தாள். ரவிக்கு தாயுடன் வாதாட விருப்பமில்லை. “ ஏன் இந்த மனுசி எதுக்கும் தடங்கல் சொல்லுது. இதுண்டை வாயிலை நல்லது வராதா“? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு வெளியே போனான். திலகா என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் பேசாமல் நின்றாள். “நான் அவன் நன்மை கருதித் தான் சொன்னனான். அவனுக்கு உது விளங்குதில்லை. நீ என்ன சொல்லுகிறாய திலகா?, மகளைக் கேட்டாள் தங்கம். “நான் என்னத்தை அம்மா சொல்ல. அண்ணாவின் போக்குத்தான் உனக்குத் தெரியும் தானே. உன் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லிப்போட்டாய். வரப்போகிற முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றாள் திலகா.                                                           ******* கையில் நற்சான்று பத்திரங்கள் அடங்கிய பையுடன் நேர்முகப் பரீடசைக்கு ரவி புறப்பட்டான். அன்று தான், முதல்தடவையாக லண்டனில் இருந்த அவனது மாமா கொண்டு வந்து கொடுத்த மார்க்ஸ் அன்; ஸ்பென்சர் சேர்ட்டையும், டையையும் அவன் அணிந்திருந்தான். பார்ப்பதற்கு மாப்பிள்ளையைப் போல் இருந்தான். காலை ஐந்து மணிக்கே எழும்பி இண்டர்வியூவுக்கு படித்தான். ”நீ இண்டர்வியூவுக்கு போவது பிரபல்யமான கம்பனி. உன் தோற்றம் முக்கியம். கேட்ட கேள்விகளுக்கு மாத்திரம் மறுமொழி சொல். பதட்டப்படாதே. தன் நம்பிக்கையுடன் பேசு. குறைந்தது பதினைந்து நிமிடமாவது முந்தி போய் விடு”, இப்படி பல ஆலோசனைகளை அவன் நண்பன் ராஜா அவனுக்குச் சொல்லியிருந்தான். தங்கம் மகனை வழியனுப்ப அவன் பின்னே வந்தாள். அவளின் வற்புறுத்தலின் பேரில் நெற்றியில் சுவாமி படத்திற்கு முன்னால் போய் நின்று, வணங்கி, திரு நீற்றை பூசிக்கொண்டான். அவன் வாசலுக்கு வரும் போது சுவர் கடிகாரத்தில் எட்டுமணி அடித்தது. “மணி அடிக்கிறது நல்ல சகுனம். ரோட்டிலை இறங்கமுன்; இரண்டு பக்கமும் பார்த்துப்போ” என்று மகனுக்கு எச்சரிக்கை செய்தாள். அவன் பதிலுக்குத் தலையாட்டிவிட்டு வீதியில் காலடி எடுத்து வைத்த போது கனகாம்பாள் அம்மா வெள்ளைச் சேலையுடன் கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். கனகாம்பாள் ஒரு விதவை. பிள்ளையார் கோயில் ஜெகதீஸ்வர ஐயரின் மனைவி. அவளைத் தங்கத்துக்கு எள்ளளவுக்கும் பிடிக்காது. காரணம் அவளில் முழித்தால் போகிற காரியம் சரிவராது என்ற எண்ணம் தஙகத்துக்கு. அதோடு மட்டுமல்ல அவளின் நடத்தையில் சந்தேகப்பட்டுதான் ஐயர் சிறுவயதில் இறக்க வேண்டிவந்தது என்ற ஊர்வம்புக்கு அவள் தூபமிட்டாள். கனகாம்பாள் அழகி என்பது உண்மை. அவளின் நீண்ட தலைமயிரையும், மாநிறத்தையும், அழகிய கண்களை பற்றி விமர்சித்தவர்கள் பலர். கனகாம்பாளுக்கு ஆண்களைக் கண்டால் போதும். அவர்களளோடு கதைப்பதில் அவளுக்கு ஆனந்தம். அவளுக்கும் சிவன் கோயில் ஐயரின் மகனுக்கும் ஏதோ தொடர்பாம். ஜெகதீஸ்வர ஐயர் அவமானம் தாங்காமல் கிணற்றிலை விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி கனகாம்பாளைப் பற்றிப் பல ஊர் வதந்திகள். கனகாம்பாள் அம்மாவின் சகோதரன் எதோ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார் என்ற கர்வம் வேறு அவளுக்கு என்று அடிக்கடி தங்கம் எரிச்சல்படுவாள். “எடியே திலகம் அங்கை பார். அந்த கனகாம்பாள் ஐயர் மனுசி குறுக்காலைப் போவதை. நேரம் கிடைக்காமல் இந்த நேரம் பார்த்தே அவள்  போக வேணும். அவள் தான் அவனுக்கு முழிவியளம். ரவியை பிறத்தாலை கூப்பிட்டுக் கொஞ்ச நேரம் வந்திருந்திட்டு போகச் சொல்ல எனக்கு யோசனை.” என்றாள் தங்கம் திலகாவை அழைத்து. “ஓம் அம்மா அண்ணாவும் அவவோடை நிண்டு என்னவோ கதைச்சு கொண்டு நிக்கிறார். உந்த ஐயர் அம்மாவுக்கு ஆம்பிளையளோடை கதைக்கிறது எண்டால் நல்ல விருப்பம். அதுவும் இளம் பெடியன்கள் என்றால் போதும். அண்ணாவுக்கும் அவ மேலே நல்ல மரியாதை. ஊரிலை அவவை பற்றி பல விதமாக பேசுகிறது தெரிந்திருந்தும் ஏன் அண்ணா அவவோடை கதைக்கிறாரோ தெரியாது” என்றாள் திலகா. “இனி அவள் எல்லா விபரமும் துருவித துருவி; கேட்கப் போறாள். உவனும் எல்லாத்தையும் கக்கப் போறான். உவளோடை உவனுக்கு என்ன கதை வேண்டியிருக்கு?. என்ன நடக்குமோ தெரியாது?” என்று சத்தம் போட்டாள் தங்கம். அவன் போய் மறையும் மட்டும் ஏதும் பூனை, நாய் குறுக்காலை ஓடுகிறதா என்று கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள். “அண்ணா அவவிடம் எதோ துண்டிலை எழுதி கொடுத்துப் போட்டு போறான். வந்ததும் என்ன அவவோடை கதைச்சவன் எண்டு வீட்டை வந்த பிறகு கேள்.” திலகா தாயுக்குச் சொன்னாள் “ஒரு விதவை முகத்திலை முழித்தால் போகிற காரியம் எங்கை கைகூடப் போகுது. இது நான் அனுபவத்தில் கண்ட விஷயம்”. “அம்மா அதிகம் யோசிக்காதே. அண்ணனுக்கு உந்த உத்தியோகம் கிடைக்க வேண்டும் எண்டு தலையிலை எழுதியிருந்தால் அவருக்கு கிடைக்கும” என்றாள் திலகா. தாயும் மகளும் பேசுவதைக் கேட்ட வடிவேலு ,வாசலுக்கு வந்தார். “என்ன தாயும் மகளும் ரோட்டை பார்த்தபடி கதைக்கிறியள்”? என்றுகேட்டார்.. “அதொண்டுமில்லை. உவன் ரவி இண்டர்வியூவுக்கு போகிற சமயம் பார்த்தே அந்த தாலி அறுந்த பிராமணப் பெண் முன்னுக்;கு வரவேண்டும். அது மட்டுமே, அவளோடை அவனுக்கு என்ன கதை வேண்டியிருக்கு? அவளைப் பற்றி ஊர் என்ன கதைக்கிறது எண்டு உங்களுக்குத் தெரியும் தானே? “பாவம் அந்த ஐயர் அம்மா சின்ன வயதிலை புருஷனை பறிகொடுத்தது மட்டுமன்றி ஊர் வம்புக்கு கூட இலக்காகி இருக்கிறாள். நாளைக்கு எனக்கு ஒன்று நடந்து உனக்கும் அந்த அந்த அம்மாவிண்டை கதி ஏறபட்டால் பலர் உன்னைப் பற்றி முழிவியளத்துக்கு உதவாதவள் என்று தானே கதைப்பினம் அதை யோசித்தியா? வடிவவேலு மனைவியைக் கேட்டார். “எண்டை சாதகத்தின் படி நான் உங்களுக்கு முந்தி சுமங்கலியாய் தான் போவன் எண்டு இருக்கு. யோசிக்காயுங்கோ, உங்களுக்கு முந்தி நான் போயிடுவன்” என்றாள் தங்கம் அங்கே நின்று ஏன் வீணாக மனைவியோடு விவாதத்தை வளர்ப்பான் என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் வடிவேலு.                                                                                      ***** இண்டர்வியூ முடிந்து இரண்டு கிழமை ஆகியும் ரவிக்கு பதில் வரவில்லை. அவன் தொடர்ந்து வேறு வேலைகளுக்கு மனுப்போட்டுக் கொண்டிருந்தான். மேசையில் இருந்து மூன்று கடித உறைகளைப் பார்த்த தங்கம் “ஏன்; ரவி நீ போன இண்டர்வியூவிலை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொன்னேன் என்றாயே. பார்த்தியா இன்னும் அவையளிடமிருந்து பதில் வரவில்லை. நீ போகும் போது அந்த ஐயர் அம்மா வெள்ளை சேலையோடை வந்த போதே நினைத்தேன் சகுனம் சரியில்லை என்று” என்றாள். “ஏன் அம்மா வீணாக அந்த நல்ல மனுசி மேலே பழியைப் போடுகிறாய்?. யார் கண்டது அவவை நான் இண்டர்வியூவுக்கு போகைக்கை சந்தித்தது ஒருவேளை நல்லதைச் செய்யலாம்” என்றான் ரவி. வாசலில் போஸ்ட்மென்னின் சைக்கில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. ரவி ஓடிப்போய் அவனிடமிருந்து கடிதத்தை வாங்கினான். கடிதத்தின் கவரில் ரவி இண்டர்வியூவுக்கு போன கொம்பெனி பெயர் இருந்ததைப் பார்த்தான். இது இ;ளடர்வியூ முடிவைப்பற்றிய கடிதமட தான் இது. என்ன கடிதத்தில் எழுதியிருக்கோ என்ற பதட்டத்துடன் பிரித்து வாசித்த அவனுக்கு தனக்கு  வேலை கிடைத்துவிட்டதை நம்பமுடியவில்லை. மனதுக்குள் கனகாம்பாள் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான். “அம்மா எனக்கு வேலை கிடைத்து விட்டது. அதுவும் கனகாம்பாள் அம்மாவுடைய உதவியுடன்”என்று மகிழ்ச்சி பீரிடச்  சத்தம் போட்டுச் சொன்னான். “நீ என்னடா ரவி சொல்லுகிறாய்?. உனக்கு வேலை கிடைத்ததிற்கும் அவள் கனகாம்பாளுக்கும்; என்ன சம்பந்தம்?  தங்கம்மா ரவியைக் கேட்டாள். “நான் இண்டர்வியூவுக்கு போன அன்று அவவை ரோட்டிலை சந்தித்தனான். அவவுடன் கதைத்தபோது நான் எந்த கொம்பனிக்கு இண்டர்வியூவுக்கு போகிறன் என்று சொன்னேன். அந்த கொம்பெனியில் தான் தனது அண்ணன் மார்கட்டிங் டைரக்டராக இருக்கிறார் என்றும, நான் விரும்பினால் தான் அவரோடை போனில் பேசி பார்க்கிறன் என்று சொல்லி என்னிடம் இண்டர்வியூ விபரங்களை வாங்கிக் கொண்டாள். நிட்சயமாக ஐயர் அம்மா அவவிண்டை தமையனோடை என்னைப் பற்றி கதைத்திருக்கவேண்டும். என்னை இண்டர்வியூ செய்த மூன்று பேரில் அவரும் ஒருவர். மார்கட்டிங் டிரெக்டர் என்ற பதவியில் அவர்தான் குழுவுக்கு  தலமை தாங்கினார்” தங்கம் பதில் பேசாது அதிர்ச்சியடைந்துபோய் நின்றாள். தான் சொன்ன சகுனம் பிழைத்து விட்டதே என நினைத்து மனதுக்குள் கோபப்பட்டாள். அதே சமயம் மகனுக்குஉத்தியோகம்கிடைத்ததையிட்டு மனதுக்குள் மகிழ்ச்சி. விட்டுக்கொடுக்காமல் “ இங்கைபார் ரவி, யார் குத்தி அரிசி ஆனாலும் சரி ற“ விட்டுக்கொடுக்காமல் தன் கருத்தை தெரிவித்து விட்டு அவ்விடத்தை விட்டுத் தங்கம் நகர்ந்தாள்.                                                                                  ♣♣♣♣♣ 5 அத்தியாயம் 5 (சீட்டு) [Chitfund3] சீட்டு     சில்லாலைக் கிராமத்திலும். மட்டுமல்ல சுற்றுப்புறக் கிராமங்களிலிலும் சீட்டுக்காரி சின்னம்மாளைத் தெரியாதவர்கள் இல்லை. சொன்னசொல்தவறாது, நாணயங்களுடன் தொடர்புள்ள நாணயக்காரி அவள். சொன்ன திகதிக்கு சீட்டுப்பணத்தைக் கொடுக்கத்தவறாதவள். சின்னம்மாளுக்கு சீட்டுபிடிப்பது ஒருபுதிய தொழில் அல்ல. பரம்பரைத் தொழில் என்று குறிப்பிடுவதில் தவறில்லை. அவளுடைய தாய் பொன்னம்மாள்கூட ஒருகாலத்தில் சீட்டுபிடித்து பல குடும்பங்களுக்குத் தங்கள் பெண்பிள்ளைகளைக் கரைசேர்க் கஉதவிபுரிந்தவள். அக்காலத்தில் வங்கிகளைநம்பி அக்கிராமமக்கள் வாழவில்லை. சீட்டுத்தான்  அவர்களுக்குத் தேவைப்பட்டநேரத்தில்கை கொடுத்து உதவியது. சின்னம்மாளின் ஏலச்சீட்டினால்பயன் அடைந்த புகையிலைதரகர்களும்; வெங்காயம், மிளகாய்வியாபாரிகளும்பலர். பொன்னம்மாளும் சின்னம்மாளைப் போல்வாக் குநாணயம் தவறாதவள். சூரியன் கிழக்கில் உதிக்கத்தவறினாலும் பொன்னம்மாள்சொன்ன திகதிக்குசீட்டுப் பணத்தை உரியஆளுக்குக் கொடுக்கத்தவறமாட்டாள். அப்படி காசுசேராவிட்டாலும் கையில் உள்ள தன்பணத்தைப் போட்டுகொடுத்துவிடுவாள். சீட்டுபிடிப்பவர்கள் யாராவதுசீட்டுக்காசைகுறித்தநேரத்துக்கு கொடுக்கத்தவறினால் பொன்னம்மாள் பொல்லாதவளாகிவிடுவாள். அவள்வாயில் இருந்துவரும் வார்த்தைகளுக்கு அஞ்சி சீட்டுப்பிடிப்பவர்கள்  காசைக் கொடுக்கத்தவறமாட்டார்கள். எழுபதுவயதாகியும் பத்து சீட்டுகளைப் பரிபாலனம் செய்துவந்தாள். அவளின் ஞாபகம் அபாரமானது.  பழையகொப்பிஒன்றில்தேய்ந்தபென்சில்ஒன்றினால்அவள்எழுதிவைத்தகணக்குகளில்ஒருபடித்தகணக்காளர்   கூடபிழை கண்டு பிடிக்கமுடியாதவாறு இருந்தது. இவ்வளவுக்கும் அவள்படித்தது உள்ளுர்த மிழ்பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்புவரையே. தீடீரென்று ஒரு நாள் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட பொன்னம்மாள் முழுப் பொறுப்பையும் தன் மகள் சின்னம்மாளிடம் பாரம் கொடுத்தாள். சீட்டு பிடிக்கும் தொழிலை சின்னம்மாள் தாயிடம் முற்றாகக் கற்றறிந்தவள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் சின்னம்மாளின் பெயரும் ஊர்ச் சனங்களின் மதிப்பில் வெகு விரைவில் பிரபல்யமாகத் தொடங்கியது.  தாய்க்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்த சின்னம்மாள் அவள் இறந்தபின் பரம்பரைத் தொழிலைச் செய்யத் தொடங்கினாள். “சில்லாலை சீட்டுக்காரச் சின்னம்மாள்” என்ற நீண்ட அடுக்கு மொழிப் பட்டப் பெயர் பொன்னாலை வரை தெரி;ந்திருந்தது. வணிகத்தில் ஒரு ஒழுங்குமுறையை அவள் கடைப்பிடித்தாள். சீட்டு பிடிப்பவர் எவராவது பணம் கொடுக்கத் தவறினால் அவர்கள் நாணயத்தின் மேல் ஒரு கரும் புள்ளியைக் குத்தி அவர் வேறு எவரோடாவது சீட்டுபிடிக்க முடியாதவாறு செய்துவிடுவாhள். அவள் சொல்லுக்கு அவ்வளவு மரியாதை. அதற்குப் பயந்து குறிபிட்ட திகதிக்குள் பணத்தைக் கொடுக்கச்; சீட்டுகாரர்கள் தவறமாட்டார்கள். ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு இரண்டிலும் அவள் கைதேர்ந்தவள். புகையிலைத் தோட்டம் செய்யும் பலர் அவளிடம் ஏலச் சீட்டுபிடிக்க வரிசையில் நின்றனர். ஆனால் அவளது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே அதில் சேரமுடியும். சீட்டுக்காசும் கையுமாக சிறாப்பர் சித்தம்பலத்தின் மனைவி கமலா வருவதைக் கண்ட சின்னம்மாள் “என்ன கமலா சிறாப்பருக்கு சம்பளம் கிடைத்த இருபத்தைந்தாம் திகதியன்றே நீர் காசைக் கொண்டுவந்து கட்டுகிறீர். இப்படி எல்லோரும் முதலாம் திகதிக்கு முன்னரே கொண்டு வந்து தந்தால் எனக்குப் பிரச்சனையில்லை. வாரும். எனக்குப் பக்கத்திலை வந்திரும். என்ன குடிக்கப் போறீர்?”; என்று அனுசரணையுடன் கமலாவை வரவேற்றாள். கமலா அவளின் சினேகிதிகளில் ஒருத்தி. பல வருடங்களாக அவளிடம் சீட்டு பிடிப்பவள். சி;ன்னம்மாளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவள். கமலா யாரையாவது சீட்டில் சேர அறிமுகப்படுத்தினால் மறு வார்த்தை பேசாமல் சி;ன்னம்மாள் சேர்த்துவிடுவாள். “ இப்பத்தான் சாப்பிட்டுப் போட்டு வந்தனான் அக்கா. குடிக்க ஒண்டும் வேண்டாம் இந்தாருங்கோ அவருடைய சீட்டு காசு. வைதேகிக்கு நாளைக்கு சம்பளம். அவளுடைய சீட்டுக்காசை நாளைக்கே கொண்டு வந்து தாறன்” கமலா பணத்தை சி;ன்னம்மாளிடம் நீட்டினாள். எல்லாம் புதிய மணம் வீசிய புது நோட்டுகள். புத்தகவடிவில் இருந்தது. சிறாப்பருக்கு கிடைக்காத புது நோட்டுச் சலுகையா? சின்னம்மாள் காசை எண்ணி எடுத்தாள். சில நோட்டுகள் ஒட்டிக்கொண்டன. “வைதேகி எப்படி இருக்கிறாள்? அவளைக் கண்டு கன காலம்.” கமலாவின் ஒரே மகள் வைதேகியைப் பற்றி; சி;ன்னம்மாள் விசாரித்தாள். “நான் வரைக்கை அவள் இன்னும் வேலை முடிந்து ஸ்கூலாலை திரும்பவில்லை. முத்தையா அம்மானின் மாட்டு வண்டிலிலை தான் இன்னும் இரண்டு டீச்சர்மாரோடை வேலைக்குப் போய் வாறவள். அதாலை பயமில்லை. பாவம் கஷ்டப் பட்டு இராப்பகலாய் உழைச்சு தன்றை கலியாணத்துக்கு  சீதனம் சேர்க்கிறாள்” கமலா சொன்னாள். “வைதேகி படிப்பிக்கிற ஸ்கூலிலை தான் என்டை அக்காவிண்டை மகளும் படிக்கிறவள். வைதேகியைப் பற்றி உயர்வாக சொல்லுவாள். பிள்ளையளுக்கும் அவளை நல்லாய் பிடிக்குமாம். திறமையான இங்கிலீஷ் டீச்சராம்” வைதேகியைப் புகழ்ந்து சின்னம்மாள் சொன்னாள். “ஓம் அக்கா, அதாலை வீட்டிலையும் இங்கிலீஸ் டியூசன் கொடுக்கிறவள். அவள் உழைக்கிற காசிலை முக்கால் வாசி அவளுடைய சீட்டுக்குப் போகுது. இதெல்லாம் எல்லாம் அவள் கலியாணத்துக்குத் தான் சேர்க்கிறம். வேறு பிள்ளையளா எங்களுக்கு இருக்குது குடுக்க?. இருக்கிற வீட்டையும் சீவிய உருத்து வைத்து அவளுக்கு குடுக்க நானும்; அவரும் யோசித்திருக்கிறம். அதோடை இரண்டு சீட்டு காசுகளையும் எடுத்து, கையிலை இருக்கிறதோடை சேர்த்து ஐம்பது குடுக்க யோசித்திருக்கிறம். நுல்ல இடத்தில் இரண்டு சம்பந்தங்கள் கைவசம் இருக்கு. ஒரு மாப்பிள்ளை பட்டதரி மாப்பிள்ளை. டீச்சராக இருக்கிரார். மற்ற மாப்பிளளை வவுனிய கசசேரியிலை  கிலாஸ் ரூ கிளார்க்காக வேலையாம். சாதகம் நல்லாய் பொருந்தியதாகப் பார்த்து செய்து வைக்க வேண்டும். எல்லாம் கடவுள் விட்ட செயல்”, கமலா தன் மனதில் உள்ளதைச் சொன்னாள். “கமலா நீர் ஒன்றுக்கும் யோசிக்காதையும். உமக்கும், உம்முடைய அவருக்கும் நல்ல மனசு. உம்முடைய மனுசன்டை சீட்டு காசு பதினையாயிரமும்., உம்முடைய மகளிண்டை சீட்டு காசு இருபதாயிரமும்; இன்னும் மூன்று மாசத்திலை எடுக்கலாம். நீங்கள் கலியாணத்துக்கு வேண்டிய ஒழுங்குகளை  இப்பவே செய்யத்தொடங்குங்கள்”, என்று கமலாவுக்கு தைரியத்தைக் கொடுத்தாள் சின்னம்மாள். “சரி அக்கா. நேரமாச்சு.  அப்ப நான் கிளம்பிறன். வைதேகி ஸ்கூலாலை வருகிற நேரமாச்சு. நான் வரக்கை அவர் வீட்டிலை இல்லை. கலியாண விஷயமாய் அவர், ஓவர்சியர் கந்தையரைப் பார்க்க போயிட்டார்” என்று சொல்லிக் கொண்டு கமலா புறப்பட்டாள். “இவ்வளவு தூரம் வந்த நீர் வெறும் கையோடைப் போகக் கூடாது. வீட்டை செய்த எள்ளுருண்டையும் பனங்காய்ப் பணியாரமும் இருக்கு, தாறன். கொண்டு போய் சிறாப்பருக்கும், வைதேகிக்கும் குடும“ என்று சொல்லியபடி சின்னம்மாள் எழும்பிப் போய் அடுப்படியில் இருந்து ஒரு சிறு பார்சலை கொண்டு வந்து கமலாவிடம் கொடுத்தாள். அவளை வாசல் வரை வழியனுப்பிப் போட்டு அலுமாரிக்குள் கமலா கொடுத்த  பணத்தைக் கொண்டு போய் வைத்து பூட்டினாள.. சின்னம்மாள் பழமையில் ஊறியவள். பணத்தை வங்கியில் போடும் அவளுக்கு பழக்கமில்லை. கையில் காசு இருந்தால் தான் அவசரமாக காசு தேவைப்படுபவர்களுக்கு நகைகளை அடைமானமாக எடுத்து இருபது விகித வட்டிக்கு மூன்று மாதத்துஙகளுக்குள் திருப்பித் தரும்படி கடன் கொடுத்து சம்பாதிக்கக் கூடியதாயிருந்தது. பலர் கொடுத்த சீட்டு பணத்தில் உழைத்தாள் அவள். ஆனால் சொன்ன திகதியன்று சீட்டுப் பணத்தைப் சீடடுக்காரர்களுக்குக்  கொடுக்க அவள தவறமாட்டாள்.                                                                                                            ♣♣♣♣♣ சிறாப்பர் சிற்றம்;பலம் பலகாலம் அரசசேவையில் சிறாப்பராக இருப்பவர். தான் பென்சன் எடுக்க முன்னரே தனது ஒரே மகள் வைதேகியின் கலியாணத்தைச் செய்துமுடிக்க வேண்டும் என்பது தான் அவருடைய முழு விருப்பம். கலியாணத்துக்கு குறைந்தது ஐம்பதாயிரம் தேவை. ஒரு வருஷத்துக்கு முதல் சீட்டு போட்டு சேர்த்து வைத்த காசில் ஒரு பகுதியை தாயின் இழவு வீட்டுக்குச் செலவு செய்து போட்டார். செல்லாச்சி கிழவி விட்டுச் சென்ற மூக்குத்தியும் தோடும் ஐயாயிரத்திற்கு கூட பெறுமதியில்லை என அவருக்கும் தெரியும். அதற்கு மேலாக  செத்த வீடு, காடாத்து, அந்தியேட்டி என்று செலவு செய்து போட்டார். தாயுக்கு ஒரே பிள்ளை சிற்றம்பலம். கணவன் இறந்தவுடன் கஷ்டப்பட்டு கிடைத்த கொஞ்சப் பென்சன் காசுடன் பலகாரம் செய்து சம்பாதித்து மகனை வளர்த்து படிப்பித்து ஆளாக்கினவள் செல்லாச்சி. மாமியாரோடை ஒட்டென்றால் ஒட்டு கமலா. அதே போல செல்லாச்சியும் பிரச்சனை என்று வந்தால் மருமகள் பக்கம் தான் சாய்வாள். “எணேய். நீ எனக்கு தாயில்லை அவளுக்கு தான் தாய் என்று” அடிக்கடி வேடிக்கையாக சிறாப்பர் தாயைச் சீண்டுவார்.  சுpற்றம்பலம் கொஞ்சம் பின் வாங்கினாலும் கமலா செலவு செய்ய பின்வாங்கியிருக்கமாட்டாள். மாமியார் சாக முன் தன் கையில் ஐயாயிரம் காசை செத்தவீட்டு செலவுக்கு எனப் பென்சன் காசில் சீட்டுபிடித்து கொடுத்து வைத்ததை கமலா சொன்னபோது தன் தாய்க்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கத்தை சிறாப்பரால் உணர முடிந்தது. செத்த வீட்டுச் செலவு போக மிஞ்சினது இருபத்தையாயிரம். இன்னும் இருபத்தையாயிரம் இருந்தால் எப்படியும் வைதேகியின் கலியாணத்தை முற்றாக்கி இரண்டு வருடத்தில் முடித்திடலாம் அதுக்கு சின்னம்மாளின் சீட்டு தான் வழிகாட்டும் என்று சிறாப்பரும் கமலாவும் தீhமானித்து இரண்டு வருஷத்துக்கு முதலே சீட்டில் சேர்ந்தார்கள். வைதேகி பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியையாக வேலை  செய்து மாதம் மாதம் உழைத்த காசில் இருபதாயிரத்துக்கு ஒரு குலுக்கல் சீட்டு. மற்றது சிறாப்பரின் சம்பளத்தில் பதினையாயிரத்துக்கு ஒரு ஏலச் சீட்டு. இன்னும் நான்கு மாதத்தில் இருண்டும் சோத்து முழுத்தொகை முப்பத்தையிரத்தையும் எடுக்கலாம். சிறாப்பராக வேலைசெய்தாலும் பணத்தை வங்கியில் போட்டு சேர்க்க அவர் விரும்பவில்லை. வரவு செலவு, சேமிப்புகள் எல்லாவற்றையும் கவனிப்பது கமலா. சிறாப்பரும் வைதேகிiயும் முழு சம்பளத்தையும் அப்படியே கொண்டு வந்து கமலாவிடம் கொடுப்பார்கள். அவர்களின் கைச்செலவுக்கு வேண்டிய நேரம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். கமலாவிடம் கணக்கு கேட்கும் பழக்கம் இருவருக்கும் கிடையாது. சின்னம்மாளிடம் சீட்டுப் பணத்தைக் கொடுத்துப் போட்டு கமலா வீடு திரும்பிய சில நேரத்தில் வைதேகியும் சிறாப்பரும வீடு வந்துசேர்ந்தார்கள். “என்ன அப்பா. போன காரியம் காயோ பழமோ?” கணவனிடம் ஆவலாகக் கேட்டாள் கமலா. “ஓரளவுக்கு பழம் தான். மாப்பிள்ளை பருத்தித்துறை ஹார்ட்லி கொலேஜ்ஜிலை  சயன்ஸ் டீச்சராம். மூன்று வருஷத்துககு; முந்தித்தானாம் கொழும்பு யூனிவர்சிட்டியிலை பட்டம் பெற்றவர். கிலாஸ் எடுத்தவராம். தகப்பனும் ஓவர்சியராம். அதாலை எங்கடை ஓவர்சியர் கந்தையருக்கு அவையளைத் தெரியும். தங்கமான பெடியனாம். தாய் சின்ன வயதிலேயே போயிட்டாவாம். தகப்பன்தானாம் பெடியனுக்கு எல்லாம்.” “பருத்தித்துறை ஹார்டிலி கொலேஜ் என்கிறியள். பருத்தித்துறை ஆக்களே அவையள்?. ஊருக்கு வெளியே கல்யாணம் செய்ய கொஞ்சம் யோசிப்பினமே” கமலா மாப்பிள்ளையின் ஊரைக் கேட்டாள். “அப்படியில்லை. தகப்பன் கோப்பாய் . தாய் இருபாலை. பெடியன் தாய் செத்ததும் கரவெட்டியிலை இருந்த சிறிய தாய் வீட்டிலை இருந்து ஹார்ட்லி கொலேஜ்ஜிலை படித்தவன்.” தானும் தகப்பனும் பேசுவதை சுவர் ஓரமாக நின்று கேட்டுகொண்டிருந்த வைதேகியை கண்டாள் கமலா. “இந்தா பிள்ளை பணியாரம். சின்னம்மா மாமி உனக்கும் அப்பாவுக்கும் குடுக்கச் சொல்லித் தந்தவ. வீட்டிலை செய்தவவாம்.” என்று கையில் இருந்த பார்சலை கொடுத்தாள் கமலா. “இந்தாருங்கோஅம்மாஇந்தமாசத்துசம்பளம். நாளைக்கு சனிக்கிழமை அதுதான் இண்டைக்கு தந்தவங்கள்”என்றுதன் சம்பள உறையைத் தாயிடம் கொடுத்தாள் வைதேகி. “நல்லதாய் போச்சு. நாளைக்கே போய் உண்டை சீட்டுக்காசைக் கொடுத்திடுறன். நீ ஏதோ ஒரு சீலையும் அதுக்குப் பொருத்தமாக டூ பை டூ ஜக்கட் துணியும் வாங்க வெண்டும் எண்டு போன மாசம் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு. வா நாளைக்கு நீயும் நானும் பெரியகடைக்குப் போய் ராஜகோபால் கடையிலை அதை பார்த்து வாங்குவம். வைதேகி தலையை ஆட்டி ஒப்புதல் கொடுத்து ப்போட்டு பணியாரப் பார்சலுடன் தன் அறைக்குள் போனாள். “ கமலா நீர் ஒருக்கா முடிந்தால் முடமாவடிச் சாத்திரியாரிடம் போய் இந்த இரண்டு சாதகத்தையம் காட்டி பொருத்தம் எப்படி என்று கேளும். எனக்குத் தெரிந்தமட்டில் நல்ல பொருத்தம் போலத் தெரியுது”. இந்தக் கலியாணம் தரகருக் உள்ளாலை வராமல் கந்தையர் கொண்டு வந்தது நல்லதாய் போச்சு. இல்லாட்டால் தரகருக்கு வேறை கொமிஷன் கொடுக்கவேண்டும்.” என்றார் சிறாப்பர் சித்தம்பலம். “ எப்படியும் தை பிறந்ததும் செய்து முடிக்கலாம். அப்ப இரண்டு சீட்டுக் காசும் வந்திடும். எனக்கு இரவு சமையல் வேலை இருக்கு நான் வாறன். உங்களுக்கு கோப்பி கொண்டு வந்து தாறன். அந்த பணியாரத்தைச் சாப்பிட்டுப்போட்டு குடியுங்கோ ” என்று கமலா மகள் கொடுத்த சம்பள உறையை அலுமாரிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சமையல் அறைக்குள் போனாள்.                                                                                       ♣♣♣♣♣ மூன்று மாதங்கள் போனது தெரியவில்லை. மாரி மழை என்றும் இல்லாதவாறு கொட்டித் தீhத்தது. ஊர் குளங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. தை பிறக்க இரண்டு கிழமைகள் தான் இருந்தது. தைபிறந்தவுடன் நல்ல நாள் பார்த்து எழுத்தையும் கலியாணத்தையும் ஒன்றாக வைக்கலாம் என இரண்டு பகுதியும் தீர்மானித்தார்கள். செலவும் மிச்சம். இதற்கு முன்னின்று பேச்சு வார்த்தை நடத்தி; முடிவுக்கு கொண்டு வந்தவர் ஓவர்சியர் கந்தையர். நல்ல மனுசன். பொது சனத்துக்கு கேட்காமலே உதவக் கூடியவர். பணம் இருக்கிறது என்ற செருக்கு இல்லாதவர்.                                                                                        ♣♣♣♣♣ அன்று சனிக்கழமை காலை வேப்பங் குச்சியால் பல் துலக்கிய படி காணியைச் சிறாப்பா சிற்றம்பலம் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சிந்தனை முழுவதும் வைதேகி கலியாணம் ஒரு பிரச்சனையில்லாமல் நடக்க வேண்டும் என்பதே. படலையைத் திறந்த சின்னம்மாளின் பக்கத்துவீட்டுக்காரி பதைக்கப் பதைக்க ஓடிவருவதைக் கண்டார் சிறாப்பர் “என்ன தங்கம்மா. என்ன விஷயம் இப்படி இளைக்க இளைக்க ஓடிவாறாய்”  பல்துலக்கிய குச்சியை வாயில் வைத்தபடியே சிறாப்பர்சிற்றம்பலம் கேட்டார். “ஐயோ சிறாப்பர் ஐயா. அதையேன்கேட்கிறிள்? நடக்கக் கூடாதொன்றல்லோ நடந்து போச்சு. சொன்னால் நம்பமாட்டியள்” ஒப்பாரி வைத்துபடி சொல்லி அழுதாள் தங்கம். “என்ன விஷயம் எண்டு சொல்லிப் போட்டு அழன்” “சின்னம்மாளின்டை வீட்டை அல்லோ நேற்று இரவு அவவிண்டை வாயுக்குள்ளை துணியை அடைத்து ஆளை மயக்கிப் போட்டு,  கொள்ளையடித்துக் கொண்டு போயிட்டாங்கள் ஆரோ ஒரு கள்ளா கூட்டம்.. சீட்டுக்காரருக்கு கொடுக்க சேர்த்து வைச்ச சீட்டுக்காசுகள் , அடைவு நகைகள் எல்லாம் ஒண்டு விடாமல் துடைச்சு எடுத்துக் கொண்டு போட்டாங்கள். பேயறைந்த மாதிரி சின்னம்மாள் இருக்கிறாள். வீட்டிலை ஒரே சீட்டுக்காரர் கூட்டம். பொலீசும் வந்திட்டாங்கள். அவையளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவள் இருக்கிறதை பார்க்க எனக்குப் பரிதாபமாயிருக்கு. அது தான் உங்களுக்கு விஷயத்தை சொல்ல ஓடிவந்தனான” என்றாள பதைக்கப் பதைக்க பக்கத்துவீட்டுத் தஙகம்.. சிறாப்பருக்கு கேட்டவுடன் தலைசுற்றிற்று. ஏதோ தலையில் இடி விழுந்த மாதிரி ஒரு உணர்வு. சத்தம்போட்டு வீட்டுக்குள் இருந்த கமலாவையும் வைதேகியையும் கூப்பிட்டார். சிறாப்பருக்கு ஏதோ நடக்கக் கூடாது நடந்து விட்டது என்று நினைத்து ஓடி வந்த இருவருக்கும் தங்கம் நடந்ததைச் சொன்னாள். கமலா பேயறைந்தவள் போல் அசையாது நின்றாள். “அம்மா யோசிக்காதையங்கோ வாருங்கோ இரண்டு பேரும்  என்ன நடந்தது எண்டு போய் பார்ப்போம்” என்று ஆறுதல் சொல்லி தாயையும் கூட்டிக் கொண்டு சின்னம்மாள் வீட்டுக்கு புறப்பட்டாள் வைதேகி. சின்னம்மாள் வீட்டுக்கு முன்னால் ஒரே கூட்டம் அதில் கமலாவுக்கு அறிமுகமான முகங்கள் பல. கவலை தோய்ந்த முகத்தோடை நிற்பதைக் கண்டதும் அவர்கள் எல்லோரும் சீட்டு பணத்திற்காகத்; தான் வந்திருக்;கிறார்கள் என்று அவளுக்கு தெரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. சிலர் “எல்லாம் போச்சுது” என்பதைக் காட்ட இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார்கள். வீட்டுக்குள் நுளைந்த கமலாவும் வைதேகியும் பொலிசார் விசாரணை முடித்துக்கொண்டு வெளியேறுவதைக் கண்டார்கள். மூலையில் முடங்கிக்கிடந்த சின்னம்மா கமலாவைக் கண்டதும் ஓ வென்று ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினாள். “ஐயோ கமலா கடவுள் என்னை சரியாக சோதிச்சுப் போட்டார். நான் என்ன பாவம் செய்தனோ தெரியாது!. வீட்டை முழுவதும் அப்படியே படுபாவியள் வழித்தெடுத்துக்கொண்டு போயிட்டாங்கள்.. எனக்கு எப்;படி சீட்டுக்காரார் முகத்திலை முழிக்கிறது எண்டு தெரியவில்லை. உங்கள் இரண்டு பேரிண்டை சீட்டுக்காசு முப்பத்தையாயிரத்தையும் சேர்த்து வைச்சிருந்தனான். அதையும் அள்ளிக்கொண்டு போட்டாங்கள். இனி காசு தரமுடியுமோ தெரியாது. இன்னும் பலருக்கும் காசு கொடுக்கவேண்டும். நான் என்ன செய்யிறது எண்டு தெரியாமல் முழிக்கிறன்”, சின்னம்மா அழுத்படி சொன்னாள். “என்ன மாமி இப்படி எணடை தலையிலை குண்டை தூக்கிப் போட்ட மாதிரி பேசிறியள். அவரும் வைதேகியும் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு. இன்னும் ஒரு மாதத்திலை வைதேகிக்கு எழுத்து. சீதனத்துக்கு உந்த சீட்டை தான் நம்பியிருந்தனாங்கள். பாவம் வைதேகி கேட்டதும் அழுதிட்டாள்” கமலர் கோபத்துதோடு பேசினாள். வைதேகி தாயைப் பேசவிட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள். “இப்ப இவளை என்ன செய்யச் சொல்லுறாய். காசு இருந்தால் தராமல் பொய் சொல்லுறாளே? நடந்த விஷயம் தெரியுந்; தானே? உனக்கு மட்டுமே பிரச்சனை?. அங்கை பார் எத்தனை பேர் நிக்கினம் எண்டு” சின்னம்மாளுக்கு வக்காலத்து வாங்கினாள் ஏற்கனவே சீட்டு பணத்தை எடுத்து முடித்த பக்கத்து வீட்டுக்காரி  இராசம்மா. கமலாவுக்கு அவள் மேல் சரியான கோபம் வந்தது. “நான் உம்மோடை கதைக்கயில்லை. எனக்கும் சின்னம்மாவுக்கும் உள்ள பிரச்சனை. மற்றைவையள் தலையிடத் தேவையில்லை” சற்று காரமான குரலில் பதில் அளித்தாள் கமலா. வைதேகி தாயைச் சமாதானப் படுத்தினாள். “ இங்கை பார் சின்னம்மா இன்னும் ஒரு கிழமை நேரம் தாறன். நீ எப்படிக் காசைப் பிரட்டுவியோ எனக்குத் தெரியாது. உணடை வீட்டையும் காணியையும் ஈடு வைத்தாவது எங்கடை சீட்டுக்காசு முப்பத்தைதாயிரமும் ஒரு கிழமைக்குள்ளை நான் வரக்கை எனக்குத தர வேண்டும். இல்லாட்டால் நடக்கிற சங்கதி வேறு. உனக்கு மானம் ரோஷம் இருந்தால் இவ்வளவு காலம் நாணயமாக நடந்த மாதிரி நடப்பாய் எண்டு எதிர்பார்க்கிறன்.” என்று சின்னம்மாளுக்கு எச்சரிக்கை செய்து போட்டு விடுக்கென்று பதிலை எதிர்பாராது மகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் கமலா.                                                                                               ♣♣♣♣♣ அன்று பின்னேரம் சின்னம்மாளுக்கு நடந்ததை அறிந்து ஓவர்சியர் கந்தையர் சிறாப்பர் வீட்டுக்கு வந்தார். “என்ன கமலா சின்னம்மாள் என்னவாம். பாவம் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு தவித்து நிற்கிறாள். பாவம் அவள். நாணயக்காரியான சின்னம்மாளுக்கு இப்படி நடக்கும் என்று ஆர் எதிர்பார்த்தது?. இந்த களவை, அவளிடம் சீட்டுக் காசு நகை இருக்குது எண்டு தெரிந்த ஒரு ஆள் தான் செய்திருக்கவேண்டும” என்றார் கந்தையர். “பாருங்கோ ஓவர்சியர். அதுவும் இந்த நேரத்தில் இப்படி நடந்திருக்கு. நாங்கள் வைதேகி கலியாணத்துக்கு என்ன செய்ய எண்ட நிலை. சின்னம்மாளுக்கு ஆத்திரத்திலை பேசி போட்டு வந்திட்டன். ஒரு கிழமை தவணை கொடுத்திருக்கிறன் காசை தரச்சொல்லி “அழுதபடி கமலா கந்தையரிடம் முறையிட்டாள். “உது தெரிந்துதான் நான் உங்களைப் பார்த்துப் பேச வந்தனான். சிறாப்பரோடை நான் எல்லாம் விளக்கமாய் கதைச்சுப் போட்டன். வைதேகி என்றை மகள் மாதிரி. எனக்கோ பிள்ளையள் இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும். வைதேகியின் கலியாணத்துக்கு வேண்டிய முப்பத்தைந்தாயிரத்தை நான் தாறன். உங்களுக்கு வசதி பட்ட நேரம் திருப்பித் தாருங்கள். வட்டியும் வேண்டாம். திருப்பித் தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல காரியத்துக்கு உதவியதாக இருக்கட்டும” கந்தையர் தான் வந்த காரணத்தைச் சொன்னார். சிறாப்பரும் கமலாவும் அதை கந்தையரிடம் இருந்து எதிர்பார்த் திருக்கவில்லை. சிறாப்பர் சிற்றம்பலம் கந்தையரின் கையை பிடித்து உணர்ச்சி பொங்க அழத் தொடஙகினார். கமலாவினதும்  வைதேகியினதும்  கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல வென்று கொட்டியது. “ இனி நடக்கப்போற காரியங்களைக் கவனியுங்கள். சீட்டுக்காசைப் பற்றி யோசியாதையுஙகள். அவள் சின்னம்மாள் தன் வீடு  நிலத்தை விற்றாவது கடனைத்தீர்ப்பாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. காசு கிடைக்கிற நேரம் சந்தோஷப்படுங்கள். கமலா நாளைக்கு நீர் சி;ன்னம்மாளிடம் போய் கோபத்தில் பேசினதை மறந்து விடும்படி சொல்லும். நான் காசு தருகிறதை பற்றி மூச்சு விட வேண்டாம். என்ன”? கந்தையர் கமலாவுக்கு ஆறுதல் சொன்னார். “ஓம் ஓவசியர். உங்கடை பெரும் தன்மைக்கு மிகவும் நன்றி. நான் அவளோடை கன காலம் சினேகிதம். உந்த சீட்டுக்காசு போன கவலைதான் என்னை இப்படி கீழ்தரமாக  கோபத்திலை பேச வைச்சது “ என்றாள் தன்தவறை உணர்ந்து கமலா. மறு நாள் கமலா சி;ன்னம்மாளைப் போய் கமலா காணமுன்  காலையில் வந்த செய்தி அவளை அதிர்ச்சியடைய செய்தது. “ஏன் ஊர் சனங்கள் இந்த நேரம் இப்படி ஓடுதுகள் என்று ஒருத்தரை நிறுத்திக் கேட்ட போது “சின்னம்மாள் அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு நேற்றிரவு செத்துப்போட்டாளாம். அதைக் கேட்டு ஓடுதுகள் ” என்ற பதில் அவரிடம் இருந்து வந்தது.                                                                                       ♣♣♣♣♣ 6 அத்தியாயம் 6 (செய்யும் தொழிலே தெய்வம்)                                                     [Hair saloon] செய்யும் தொழிலே தெய்வம் என் தலை மயிர் வளர்ந்து ஹிப்பியைப் போல் நான் தோற்றமளித்தேன். வருகிற சனிக்கிழமை சொந்தக்காரர் ஒருவரின் மகளுக்குத் திருமணம். “இந்த தோற்றத்தில் திருமணத்துக்குப் போனால் பலர் பார்த்து பலவிதமாக கதைப்பினம். போய் தலைமயிர் வெட்டாமல் வீட்டை வரவேண்டாம்” என்ற என் மனைவியின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் ஒரு நல்ல சிகையலங்கரம் செய்யும் கடையாகத் தேடிக்கொண்டு சென்றேன். பல முறை போன கடைக்குப் போய் தெரிந்த பெண்களின்  விரல்களின் தடவலை அனுபவித்த என் தலை. இந்த முறை ஒரு புது இடத்தை நாடியதில் தவறில்லை. துபாயில் வேலை செய்து கனடாவுக்கு வந்த ஒருவர் ஒரு சிகை அலங்காரக் கடை போட்டிருக்கிறாராம் என்று என் நண்பன் சதீஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. செல் போனில் அவனிடம் விபரம் கேட்டு அவன் சொன்ன மோலுக்குப் போனேன்.  “ஹரிஜுலி ஹெயர் ஸ்டைல்ஸ் “ ( HariJulie Hair Styles) பெயர் பலகை என்னைக் கவர்ந்தது. உடனே உள்ளே நழைந்தேன். புன்முறுவலுடன் கடையின் உரிமையாளர் என்னை வரவேற்றார். அவரைக் கண்டதும் என் பழைய துபாய் நண்பன் ஹரிகர பாஸ்கரன் என்று அடையாளம் கண்டு கொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. துபாயை விட்டு நான் கனடாவுக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டன. இந்த பத்து வருடங்களில் பாஸ்கரனின் தோற்றத்தில் மாற்றம் இருந்தது. கடையினுள்ளே கண்ணோட்டம் விட்டேன். மூன்று அழகிய யுவதிகளும்; இரண்டு இளைஞர்களும் சிகை அலங்காரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். “என்னைத் தெரிகிறதா பாஸ்கர்?” என்றேன். சற்று என்னை உற்று நோக்கிய அவன் “ஓ! இப்போ நினைவுக்கு வருகிறது. நீர் துபாய் டெலிகொம்மில் வேலை செய்த ரமேஷ் அல்லவா”? என்றபடி என் கரங்களை கைப்பற்றி குலுக்கினான் பாஸ்கர். “ ஆமாம் நான் உன் பழைய நண்பன் ரமேஷ்தான். அது சரி நீ ஏன் இந்தத் தொழில் செய்கிறாய். நீ இந்த தொழில் செய்வது உன் அப்பாவுக்கு தெரியுமா?” என்றேன் ஹரிகர பாஸ்கரனை எனக்கு ஊரில் இருந்தே தெரியும். அவனின் அப்பா, தான் ஒரு சாதிமான் என்றும், தனது பரம்பரை வேளாள பரம்பரை என்றும் அடிக்கடி பேசிக்கொள்பவர். உயர் குலம் என்று தம்பட்டம் அடித்த குடும்பத்தை சேர்ந்த பாஸ்கரன் எப்படி தந்தைக்குத் தெரியாமல் சவரம் செய்யும் தொழிலைச் செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்பது எனக்குப் புதிராக இருந்தது. துபாயில் கூட பாஸ்கரன் சாதி சனம் பார்த்துத்தான்  மற்றவர்களுடன் பழகியவன். ஒரு கொம்பனியில் மார்க்கட்டிங் மனேஜராக இருந்தவன். அப்படி தான் செய்யும் தொழில் தனது சாதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று பார்த்து வாழ்ந்தவன். அவன், தனது நண்பர்களை, சாதியும் அவர்கள் செய்யும் தொழிலையும் பார்த்தே தேர்ந்தெடுத்து பழகினான்.  இப்போது கத்திரிக்கோலும் கையுமாக அவனை ஒரு சிகை அலங்காரக் கடைக்கு முதலாளியாகப் பார்த்த போது என் மனதில் அக்கேள்வி என்னையறியாமலே பீரிட்டு வந்தது. “அப்பாவுக்கு தெரியாது. அவர் ஊரிலை. நான் இங்கு கனடாவிலை இந்தத் தொழில் ஆரம்பித்திருக்கிறேன். அதோ வேலை செய்கிறாள் என்மனைவி “ஜுலி”. அவள் தான் இந்த பிஸ்னசுக்கு முக்கியகாரணம்” என்றான் சிரித்தபடி. அவன் காட்டிய வேலை செய்து கொண்டிருக்கும் பெண்ணை நோக்கினேன். பார்ப்பதற்கு உயரமாக அழகாக இருந்தாள். அவளது நீண்ட விரல்கள், எங்கள் இருவரையும் கவனியாது வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது. “பிழையில்லை. வடிவான பெண்தான். என்ன பிலிப்பினோவா?” என்றேன் மெல்லிய குரலில் . “ஆமாம்” என்று தலையாட்டினான் அவன். இங்கு கனடாவில் தான் ஒரு சிகை அலங்கார கடையில் முடி வெட்டும் போது அவளைச் சந்தித்தனான். அவளும் துபாயில் ஒரு ஐந்து நட்சத்திர  ஹோட்டலில் உள்ள சலூன் ஒன்றில் வேலை செய்தவள். கனடா வந்து வேலை தேடி நான் களைத்துப் போயிருந்தேன். என்ன தொழில் செய்யலாம் என்று பல தொழில்களை பற்றி யோசித்தேன். உனக்கு தெரியும் எங்கள் பழைய நண்பன் சதீஷை. அவன் தன்னோடு சேர்ந்து இன்ஷியூரன்ஸ் வேலை செய்யத் தூண்டினான். அது எனக்கு அவ்வளவுக்கு உகந்ததாய் தெரியவில்லை. ஜுலியின் சந்திப்பு காதலாக மாறி பின்னர் திருமணத்தில் முடிந்தது. அவள் ஒரு கத்தோலிக்கப் பெண். நான் சரியான சைவம் என்று உனக்குத் தெரியும் தானே.? ” “ இப்போ நீ கத்தோலிக்கனாக மாறிவிட்டாயா?” “இல்லை. அவளை மாற்றிவிட்டேன். அவளும் சைவம். சரியான திறமை சாலி. அவளிடம் சிகை அலங்காரம் செய்வதறகாகவே பெரிய இடத்துப் பெண்கள் பலர் வருவார்கள். அவள் தான் நான் இந்தத் தொழிலுக்கு வரக் காரணமாகயிருந்தவள். அவளது ஆலோசனைப்படி சிகை அலங்கார இன்ஸ்டிடியூட்டுக்குச் சென்று இக்கலையைக் கற்றேன். எனக்குப் பிடித்துக் கொண்டது. சிரமமில்லாமல் எனக்கு இக்கலை வந்தது. பின் துபாயில் நான் உழைத்து சேமித்த பணத்தோடு நாம் இருவரும் ஒரு சிறு ஹெயர் சலூனை மூன்று வருடங்களுக்கு முன் ஸ்காபரோவில் ஆரம்பித்தோம். அது வளர்ந்து இப்போ நான்கு யுவதிகளும் இரண்டு இளைஞர்களும் எங்கள் ஸ்தாபனத்தில் வேலை செய்யும் அளவுக்கு பெரிதாகிவிட்டது. விரைவில் மிசிசாகாவிலும் ஒரு கடையை தொடங்க இருக்கிறோம்.” என்றான் பெருமையாக. “ நல்லது இப்போ எனக்கு நீ முடி வெட்டப்போகிறாயா அல்லது உன்மனைவி வெட்டப்போகிறாளா?” என்றேன். “நானே வெட்டிவிடுகிறேன். ஏன் என்றால் அவள் வெட்டினால் நீ தேவையில்லாம் என் அப்பாவைப்பற்றி கதைத்து அவளது மனதை கலக்கிவிடுவாய். அவளுக்கு என் ஊர்க் கதை தெரியாது” “சரி வா வா. எங்கே உன் கை வண்ணத்தை என் முடியில் காட்டு. அது மட்டுமல்ல எனக்குச் சவரமும் செய்து விட வேண்டும்.” என்று கதிரையில் போய் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் அவனின் கையில் உள்ள கத்திரிக்கோல் என் முடியை கத்திரிக்கத் தொடங்கியது. செய்யும் தொழிலே தெய்வம். இதில் சாதி என்ன வேண்டியிருக்கு?. என்றது என் மனம். “என்ன ரமேஷ் பேசாமல் இருக்கிறாய். பார் எப்படி காலம் மாறிப் போய்விட்டது என்று. ஒரு மார்க்கட்டிங் மனேஜர் கத்திரிக்கோல் பிடித்து தலை முடி வெட்டுவதை. பிஸ்னஸ் என்று வந்தவுடன் எதில் மக்கள் தேவை அதிகமோ அதில் கவனம் செலுத்த வேண்டும். மாதம் ஒரு முறையாவது தலைமுடி வெட்டியாக வேண்டும். அதாலை இந்த பிஸ்னசுக்கு நல்ல டிமான்ட் உண்டு.” “ நீ வெட்டும் போது ஊரிலை உனக்கும் எனக்கும் தலை முடி வெட்டிய பாபர் வினாசியின் நினைவுதான் எனக்கு  ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் ஒரு வித்தியாசம். அவன் வெட்டும் போது வாயில் வெற்றிலையை வைத்து குதப்புவான். என்மேல் இருந்த வெள்ளைத் துணி மேல் ஒரே சிவப்பு நிறத்தில் வெற்றிலைச் சாறு தெறித்து கோலம் போடும். ஆனால் நீ வெட்டும் போது சுவிங்கத்தை வாயில் வைத்து சுவைக்கிறாய்”. “ அது போகட்டும் நீ இப்போ எங்கை வேலை”? “நான் வேலை இழந்து பலமாதங்களாகிவிட்டது. எவ்வளவு தேடியும் வேலை கிடைக்வில்லை. ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என்ற யோசனை எனக்கு” என்றேன்.. “கவலைப்படாதே ரமேஷ். நீ எனது மிசிசாகா கடையில் வேலைக்குச் சேரலாம். ஒரு நம்பிக்கையான ஆள் அங்கு எனக்குத் தேவை. அதோடு நீயும் சிகை அலங்கார இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் இக்கலையைப் படி. மேற்கத்திய நாடுகளில் சாப்பிடச் செலவு செய்யாவிட்டாலும் சிகை அலங்காரம் செய்ய எவ்வளவு பணம் வேண்டுமானாலும் விரயம் செய்ய ஆக்கள் தயார். அதோ பார் அந்த 75 வயதுக் கிழவியை. யாரும் அவளின வயதை சரியாக கணிக்க முடியுமா சொல்?. மாதம் இரண்டு முறை இங்கு வந்து ஹெயர் ஸ்டைலும் முக அலங்காரமும் செய்யத் தவறமாட்டாள். அவளைப் போல் எத்தனையோ வயது வந்த பெண்கள் இங்கே வருகிறார்கள். இந்த பிஸ்னஸ் ஒரு நல்ல வருவாய் உள்ள பிஸ்னஸ். நீ ஊரிலை இருந்த உன் அந்தஸ்த்தைப் பற்றி யோசிக்காதே. ” என்றான் பாஸ்கர். “ சரி பாஸ்கர் நான் போகும் போது உனது பிஸ்னஸ் கார்டை தா. நான் யோசித்து உன்னுடன் தொடர்பு கொள்கிறேன’ “ என்றேன். “இங்கை பார் ரமேஷ் நீ செய்யும் தொழிலைப் பார்த்து உனது ஊர் அந்தஸ்துடன் ஒப்பிட்டு ஆக்கள் ஒவ்வொன்று சொல்லுவினம். அதைப்பற்றி யோசியாதே. கனடாவுக்குப் புலம் பெயாந்து வந்த பலர் ஊரில் உயர் பதவியில இருந்தவர்கள். இங்கை கனடாவிலை எனக்குத் தெரிந்த என்ஜினியர் ஒருவர் பியூனரல் ஹோமிலை (Funeral Home) வேலை செய்கிறார். ஊரிலை. ஆரசாங்கத்திலை உயர் பதவி வகித்த என்ஜினியர் அவர். ஆனால் இங்கு வந்து வருமானத்துக்காக பல தொழில்கள் செய்கிறார்கள். படும்குளிரில் வீடுவீடாகப் போய் பேப்பர் கூடப் போடுகிறார்கள். நீ பிஸ்னஸ் செய்து முன்னேற வேண்டும் மென்றால் இதையெல்லாவற்றையும் பார்க்க முடியாது.” நான் அவனின் பிஸினஸ் கார்ட்டை வாங்கிக் கொண்டு. முடிவெட்டிய செலவான பதினைந்து டொலரை நீட்டினேன். அவன் வாங்க மறுத்தான். பேசாமல் மேசையில் பணத்தை வைத்து விட்டு கடையைவிட்டு வெளியேறினேன்.                                                                            ♣♣♣♣♣ 7 அத்தியாயம் 7     (  சின்ன வீடு ) [Bypass surgery1]          சின்ன வீடு ஆதவன் அழகன். உயரமானவன். சூரியனைப்போல் பிரகாசமான கண்கள். தோற்றத்தில் ஒரு கம்பீரம். நடையில் தனி மிடுக்கு. பேச்சில் ஒரு துடுக்கு. சிரிப்பில் ஓரு கவர்ச்சி. ஆதவன் அழகாக ஆடை அணிந்து வந்தால் அவைனை பார்த்தவர்கள் ஒரு சினிமா நடிகன் என்றே நினைப்பார்கள். யாராவது இயக்குனர்கள் அவனைப் பார்த்து விட்டால் தாங்கள் எடுக்கும் படத்துக்கு; கதாநாயகனாக தேரிவு செய்ய சற்றும் தயங்கமாட்டார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் போல் “அழகரசன் ஆதவன்” என்று பட்டப்யெர் வைக்க இரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.  அவனது தோற்றத்துக்கு ஏற்ற ஒரு அழகியை பெண்ணை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பது சற்று கடினம். வாழ்க்கையில் பொறுப்பற்றவனாக வாழ்பவன் ஆதவன். சிறுவயதில தாயை இழந்தவன். பாட்டியாரின் பராமரிப்பில் வளர்ந்தவன். தந்தை மகேசன் ஒரு பரிபல்யமான கிரிமினல லோயர். பல குற்றவாளிகளுக்கு தண்டணை கிடைக்காமல் வாதாடி வென்றவர்.  அவருககு மகனைப் பற்றி கவலை இல்லை. தன் தொழில தான் அவருக்கு முக்கியம். மகனின் போக்கைப் பற்றி அவருக்கு பல புகார்கள் வந்ததால் ஆதவனோடு பேசுவதைத் தவிர்த்தார். “பிளேய் போய்” (Play Boy) என்று பலரால் அழைக்கப்பட்ட ஆதவனுக்கு கல்லூரியில்   படிக்கும் போது “கேர்ல் பிரண்ட்ஸ்” அனேகர். அவனுடைய நட்புக்காக பெண்கள் ஏங்கித்தவித்தவர்கள் பலர். அவனை காதலித்து பின்னர் கைவிடப்பட்ட பெண்களில் ஒருத்தி; தற்கொலைசெய்தது பலருக்கு தெரிந்த கதை.  ஆதவன் பிலேய் போய் என்று பெயர் வாங்கினாலும் படிப்பில் மட்டும் கவனம். படித்து இருபத்தைந்து வயதில் என்ஜனியாரனவன். ஆதவனின் அதிர்ஷ்டம் படித்துப் பட்டம் பெற்ற சில மாதங்களுக்குள் ஒரு அமெரிக்கன் கொம்பெனியில் பெரிய சம்பளத்தில் பல சலுகைகளோடு அவனுக்கு வேலை கிடைத்தது. “நெலும்” என்ற பெயரில்  இருபது வயது சிங்களப்பெண் ஒருத்தி ஆதவனுக்கு ஸ்டெனோ கிராபராகவும் செக்கரட்டரியாகவும் நியமிக்கப்பட்டாள். சிங்களத்தில் “நெலும்” என்றால்  அழகிய தாமரை என்பது அர்த்தம். பெயருக்கு ஏற்ற அழகி அவள். கண்டியில் பிறந்து வளர்ந்தவள். தனது பரம்பரை, கண்டியை ஒரு காலத்தில் ஆண்ட நாயக்கர் வம்சத்தினர் என்று பெருமையாக நெலும் அடிக்கடி ஆதவனுக்கு சொல்லிக்கொள்வாள். “ அப்போ உன்னில் தமிழ் ரத்தம் ஓடுது என்று சொல்” என்பான் வேடிக்கையாக ஆதவன். வேலை கிடைத்த சில மாதங்களில் பணக்கார இடத்தில். உர்மிளாவை நல்ல சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டான் ஆதவன். தனி பங்களா, வெளிநாட்டுக் கார் , பாங் சேமிப்பில் ஐம்பதாயிரம். ஆதவன் உர்மிளாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இரண்டு வருடங்கள் கழிந்தன. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பது போல் ஆதவனுக்கு உர்மிளாவோடு வாழ்ந்து அலுப்பு தட்டிவிட்டது. எத்தனை நாளைக்குத்தான் ஒரே உணவைத்தான் உண்பது? பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்த ஆதவனுக்கு நெலும் மேல் ஒரு தனிப்பட்ட ப்ரியம் ஏற்பட்டது. அவர்களிடையே உறவு நட்பாக ஆரம்பித்து காதலில் முற்றுப்பெற்றது. வேலை முடிந்தபின்னர் நெலுமோடு சினிமாவுக்கும், ரெஸ்டொரண்டுகளுக்கு போய் வரத் தொடங்கினான் ஆதவன். அவன் வேலை சம்பந்தமாக பல இடங்களுக்குப் போகும் போது நெலுமையும் அழைத்து செல்வான். ஹோட்டலில் ஒரே அறையிலேயே இருவரும் தங்குவார்கள். ஆதவன் திருமணமானவன் என்பது நெலுமுக்கு தெரிந்திருந்தும் அவன மேல் அவளுக்கு இருந்த காதல் எல்லை மீறி தன்னை திருமணம் செயது கொள்ளம்படி ஆதவனை கேட்கும் அளவுக்குப் போய்விட்டது. “நெலும், நான் ஏற்கனவே திருமணமானவான். எனது இரு வருட தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இடையே எப்பவும் வாக்குவாதங்கள். அவள் சிக்கனக்காரி. அவளது தகப்பனும், சகோதரனும் எதைச் சொன்னாலும் மீறமாட்டாள். எனக்கு ஏன் அவளைத் திருமணம் செய்தோம் என்றாகிவிட்டது. அப்படி இருந்தும், உன்னைத் திருமணம் செய்வது என்றால் என்மனைவி உர்மிளாவை விவாகரத்து செய்யவேண்டும். அவள் கொண்டு வநத சொத்து எவ்லாவற்றையும் நான் இழக்க வேண்டி வரும். அது அவ்வளவுக்கு உசிதமான காரியமாக எனக்குத் தெரியவில்லை. நாமிருவரும் தொடர்ந்தும் திருமணமாகாவிட்டாலும் கணவன் மனைவி போல் வாழ்வோம். என்ன சொல்லுகிறாய்”? ஆதவன் நெலுமைக் கேட்டான். “ நான் உமக்கு சின்ன வீடாக இருப்பதா? சமுதாயம்   எங்களைப் பற்றி என்ன பேசும்”?, நெலும் ஆதவனைக் கேட்டாள். “ஏன் கண்டியின் கடைசி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விக்கிரமராஜசிங்காவுக்கு நான்கு மனைவிகள் இருந்ததில்லையா? கேள்விபட்டிருப்பியே” “ நல்லாக இருக்கிறது உமது நியாயம். அவன் ஒரு அரசன். அவன் தான் நினைத்ததை செய்யலாம். நீர் சாதாரண குடிமகன். சட்டம் என்று ஒன்று இருக்கிறதே, ஆதவன் உமக்கு நான் சின்ன வீடாக இருப்பதற்கு உமது மனைவிக்கும்; அவளது பெற்றோருக்கும் சம்மதமே?” “அவர்கள் சம்மதம்  எனக்குத் தேவையில்லை. என்போக்கை அவர்களால் மாற்றமுடியாது. நீர் தொடர்ந்து எனக்கு சின்னவீடாகவே இரும். உமக்கு வேண்டியதை கனவன்போல் கவனித்துக் கொள்வேன்.” நெலும் சிந்தித்தாள். அவளுக்கு ஆதவனோடு உறவைத் துண்டிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவன் மனைவி போல் இருவருடங்கள் வாழந்துவிட்டாள். “இதற்கு ஒரே வழிதான உண்டு.  எங்கள் உறவினால் குழந்தையொன்று எஙகளுக்கு கிடைக்காமல் நடந்துகொள்வது  தான் சரியான வழி என எனக்குப் படுகிறது” என்ன சொல்லுகிறீர் ஆதவன்”. நெலும் கேட்டாள். “ எது உன் விருப்பமோ நெலும் அதன் படி நடக்கிறன். உன்னை என்னால் மறக்கமுடியாது.” ஆதவன் நெலுமின் யோசனைக்கு கட்டுப்பட்டான். தொடர்ந்து நெலும் ஆதவனின் சின்ன வீடாகவே இருந்தாள்.                                                                                        ♣♣♣♣♣ எவர் வாயை அடைத்தாலும் ஊர் வாயை அடைக்க முடியாது என்பார்களே அதே போல் ஆதவன்- நெலும் உறவு உர்மிளாவுக்கும் அவளின் பெற்றோருக்கும் விரைவில் தெரியவந்தது, ஆதவன் தன் உறவை மறுக்கவில்லை. தன்னால் நெலுமை மறக்க முடியாது என்று திட்டவட்டமாக மனைவிக்கும் அவளின் பெற்றோருக்கும் சொல்லிவிட்டான். ஆதவன் வெலை நிமித்தம்; அடிக்கடி வெளியிடங்களுக்குப் போய் வருவதாக அவனோடு வேலைசெய்பவர்கள் உர்மிளாவுக்கு, ஆதவன் நெலும் உறவைப்பற்றி பல விதமான வதந்திகளைப் பரப்பினார்கள். உர்மிளா படிப்படியாக ஆதவனை வெறுக்கத் தொடங்கினாள். அவர்களுக்கிடையேலான தாம்பத்திய உறவு பாதிக்கபட்டது. அவர்களுக்கு குழந்தையிலாததும் அவர்களின் உறவுக்கான பாலமாக அமையவில்லை. காலப்போக்கில். ஆதவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதலில் இருதய நோய் என்று ஆதவன் நினைத்தான். பல பரிசோதனைகளுக்கு பின் அவனது இரு நீரகங்களும்  வெகுவாக பாதிப்படைந்திருப்பதாக டொக்டர்கள் கண்டுபடித்தனர். டயாலிசிஸ் (Dialysis) செய்வது அவ்வளவுக்கு உசிதமல்ல. இதற்கு மாற்று வழி ஒரு நீரகமாவது ஆரோக்கியமான மாற்று நீரக ஒப்பிரேஷன் செய்தாக வேண்டும் என்று டொக்டர்களின் ஆலோசனை ஆதவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உர்மிளாவுக்க தன கணவனுடைய இரு நீரகங்களும் பாதிபடைந்திருப்பதைப் பற்றி கேள்விபட்டதும் அவளது போக்கில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஆதவனோடு பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். எங்கே தனது இரு நீரகங்களில் ஒன்றை தனக்குத் தானம் செய்ய ஆதவன் கேட்டுவிவானோ என்ற பயம் வேறு அவளுககுத்க தோன்றியது. தனது பிரச்சனையை நெலுமுக்கு ஆதவன் எடுத்தச்சொன்னாhன். ஆதவனின் தேகநலம் இப்படி இளம் வயதில் பாதிபடையும் என்று நெலும் எதிர்பார்க்கவில்லை. ஆதவனின் பிரச்சனைக்குத் தீர்வு காண சில தினங்களாக தனக்குள் நெலும் போராடினாள். முடிவில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். மனைவியும், உறவினர்களும் ஆதவனுக்கு உதவ முன் வராததைச் சிந்தித்து கவலைப்பட்டாள். முடிவில் ஒரு நாள் ஆதவனிடம். “டார்லிங் உங்களோடு ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும்; என்று பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தாள் நெலும். “ என்ன விஷயம் சொல்லேன் நெலும்”. “ உங்களது கிட்னி டிரான்ஸ்பிளான்டைப் பற்றியது. பொருத்தமான நீரகம் ஒன்றை விலை கொடுத்து வாங்க உங்களிடம் போதிய பணம் இல்லை. உங்கள் மனைவியும் மாமனாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்று சொன்னீர்கள். அதோடு உங்கள் சுயமரியாதை அவர்களிடம் நிதி உதவி கேட்க விடாது. உங்கடை பிரச்சனைக்கு ஒரே வழி மட்டும் தான் உண்டு ஆதவன். நான் நன்றாக யோசித்தப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன்” என்றாள் கரிசனையோடு நெலும்” “ என்ன முடிவு எடுத்திருக்கிறாய் நெலும்?” “ அமைதியாக நான் சொல்வதைக் கேளுங்கள். எனது இரு சீறுநீரகங்களில் ஒன்றை உங்களுக்கு நான் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறன். என் நீரகம் உங்களுக்குப் பொருந்தினால் நான் உங்களது சின்ன வீடு என்ற உரிமையில் உங்கள் சம்மதத்தை கேட்கிறேன்” என்றாள் அமைதியாக நெலும். ஆதவனுக்கு அவள் சொன்னது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த வயதில் இப்படியொரு தியாக மனப்பான்மை உள்ள ஒரு பெண்ணா நெலும் என்றது அவன் மனம். அவளைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் ஆதவன்   ♣♣♣♣♣ ♣♣♣♣♣♣     8 அத்தியாயம் 8 (பணச்சடங்கு) [New House 2]                                                             பணச்சடங்கு வாசலில் கட்டப்பட்டிருந்து கதலி வாழை மரங்களின் இலைகள் காற்றில் ஆசைந்தாடின. அதோடு தொங்கிய தென்னங் குருத்து, மாவிலைத் தோரணங்கள் வேறு.  அம்மங்கள அலங்காரம் அந்த புதுவீட்டில் ஏதோ விசேஷம் நடக்கிறது என்பதை விளம்பரப்படுத்தியது. அப்போதிக்கரியாக 30 வருடங்கள் பல ஊர்களில் வேலை செய்து சம்பளமும் , கிம்பளமும் வாங்கி, இருபது பரப்புக் காணியில் அய்யாத்துரையர் கட்டிய வீடு. அதுவும் பிரதான வீதி வீடடுக்கு அருகே என்பதால் வீட்டின் மதிப்பு அதிகம். வாசலைத்தாண்டி உள்ளே போனால், முன் வளவில், வேப்பமரத்தின் நிழலில் வரிசையில் வாடகைக் கதிரைகளில் சிலர் அமர்ந்தவாறு போவோர் வருவோரைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் பாக்கு சீவல் , வெற்றிலை, சுண்ணாம்பு, சுருட்டு சிகரட் பெக்கட்டுகள் ஒரு தட்டத்தில் அவர்களுக்காகவே வைக்கப்பட்டிருந்தன. ஒரு பத்து வயது சிறுமியும், சிறுவனும் பால் கலந்த கோப்பியை வெள்ளிப் பாத்திரங்களில் பரிமாரிக்கொண்டிருந்தனர். “இரு கதலிக் குலைகளும் குறைந்தது அறுநூறு ரூபாய்  பெறுமதியிருக்கும் போல இருக்கு. குலை நிறைய பழங்கள். உது நிட்சயம் நீர்வேலி வாழைதான்  அம்பட்டன் அவினாசியும் , வண்ணான் அண்ணாமலையும் கொடுத்து வைத்தவர்கள் என்று மனதுக்குள் புழுங்கிய தம் கருத்தை வாயுக்குள் வெற்றிலையைக் குதைப்பியபடி ஒருவர் தெரிவித்தார். வெற்றிலைச் சாறு அவர் கடவாய் வழியே வழிந்தோடியது. கருத்து தெரிவித்தவர் புது வீடு கட்டியவரின் கிட்டத்து உறவினர். “இண்டைக்கு பின்னேரம் உந்த குலைகளிலை எத்தனை வாழைப்பழஙகள் மிஞ்சுமோ தெரியாது” இது இன்னொருவரின் அவதானம். “ வினாசியும் அண்ணாமலையும் மாறி மாறி வந்து குலைகள் பத்திரமாக இருக்கா என்று பார்த்திட்டு போறதை கவனிக்கவில்லையே?” முதல் கருத்து தெரிவித்தவர் பதில் சொன்னார். புது வீட்டுக்கு குடிபுகும் சடங்கு வீட்டுக்குப் போவோர் வருவோரை விமர்சித்தபடி முற்றத்தில் இருந்த வாடகைக் கதிரைகளுக்கு பாரமாக இருந்த அவர்கள்; பொழுது போக்கிற்காக சாப்பாடு நேரம் வரும்வரை விமர்சகர்களாக மாறிவிட்டார்கள். அதில் ஒருவர் ஒரு சிகரட் பக்கெட் ஒன்றை எடுத்து சிகரட்டை பற்றவைத்து பின்னர் மூன்று சிகரட்டுகளை எவரும் கவனியாத வாறு தனது சேர்ட் பையுக்குள் பதுக்கி விட்டார். சில நிமிடங்களில் தாம்பாளத்தில் இருந்த சுருட்டுகளும் சிகரட்டுகளும் மாயமாய் மறைந்துவிட்டன. அப்போத்திகரி அய்யாத்துரையின் நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள்.; “என்ன அண்ணை அய்யாத்துரையருக்குக்கு இந்த நாலு சார வீட்டைக் கட்டி முடிக்க எவ்வளவு முடிந்திருக்கும் என நினைக்கிறியள்?” ஒருவர் தன் மனதில் குறண்டிக் கொண்டிருந்த சந்தேகத்தை அடக்கமுடியாமல் கக்கினார். தான் கட்டிய வீட்டிலும் பார்க்க கூட செலவு செய்திருப்பாரோ என்ற ஆதங்கம் அவருக்கு. “ நான் நினைக்கிறன் அவருடைய ஓவர்சியர் மாமனார் உதவி இருந்த படியால் கல்லும் மண்ணும் சும்மா கிடைத்திருக்கும். மாமனாரும் ரோடு போடுகிற சாட்டில் கொஞ்சத்தை இங்கை வீடு கட்டத் தள்ளியிருப்பார்”, ஏதோ நடந்ததை நேரில் கண்டவர் போல் ஒருவர் தன் கருத்தைத் தெரிவத்தார். “ சீ அப்படி  சொல்லாததையும் அந்த மனுசன் ஒரு சிவில் என்ஜனியரை பிடித்து பிளான் போட்டு கட்டினவராக்கும். கட்டி அரைவாசியிருக்கக்கை ஒரு; எழுபதாயிரம் முடிஞ்சிது எண்டவர் . இப்ப கட்டி முடிந்த பிறகு இரண்டு லட்சத்துக்கு மேலே  திண்டிருக்கும். கதவுகள் கூட வேப்பமரத்தால் செய்ததாம். கல் அரிஞ்சு கட்டினவர். கொழும்பிலை இருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த லைட் பூட்டினவராம். அப்ப அவ்வளவு காசு போயிருக்கும் தானே”, விளக்கம் கொடுத்தார் இன்னொருவர். “அவருக்கென்ன காசுக்கு பஞ்சமே. பல நிறங்களில் மருத்து கலந்து கொடுத்து நல்லாய் காசு உழைத்துப்போட்டார். அதுவும் பல காலம் சிங்களப் பகுதிகளிலை அப்போதிக்கரியாக வேலை செய்து வாங்கிய சம்பளத்தை விட கிம்பளம் அதிகம் வாங்கினவர். அந்த மனுசன்டை கைராசி தொட்டவுடனை நோய் பறந்துபோகுது. அதாலை அவரிடம் வைத்தியம் பார்க்க வரும் சனங்கள் அதிகம்.   பொய் மேடிக்கல் சேர்ட்டிபிக்கட் எழுதி கொடுத்து சம்பாதித்தது சும்மாவே;. அப்ப இரண்டு இலட்சத்துக்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவது அவருக்கு கஷ்டமே” என்றார் பக்கத்தில் இருந்தவருக்கு  மட்டும் கேட்கும் விதத்தில் தான் எதையோ கண்டு பிடித்தவர் மாதிரி வேறொருவர். வாழை மரத்தில் கட்டியிருந்த “சுந்தரம் சவுண்ட் சேர்விசின்” இரு பெரிய ஊமத்தம் பூ போன்ற பெரிய குழாய்களில் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் கதை வசனம் போய்கொண்டிருந்தது. “ஏன் உந்த தொண்டை கிழிய கத்திற வசனத்தைப் போடுறாங்களோ தெரியாது நிற்பாட்டிப் போட்டு ஒரு சுந்தராம்பாள் அல்லது ரமணியம்மாளின் பக்திபாடலைப் போடலாமே” என ஒருவர் கருத்து தெரிவித்தார். அவர் சொன்னதைக் கேட்டோ என்னவோ வசனம் ஓலிபரப்பு தீடிரென நிறுத்தப்பட்டது. ஒருவர் கணைத்தபடி, மொய் எழுதியவாளின்  பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்: விதானையார் விசுவலிங்கம் ஐந்நூற்றி ஒரு ரூபாய். தர்மலிங்கம் மாஸ்டர் நானூறு  ரூபாய் , பிரம்படி பேரம்பலம் முன்னூற்றி ஐம்பது, மணியகாரரர் மாணிக்கம் நூற்றி ஒன்று” மடத்தடி சிவராசா நூறு ரூபாய் “ பணச்சடங்கில் பணம் கொடுத்தவர்களினது பெயரும் தொகையும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாஸ்டர் ஒருவர் “இதென்ன எதோ வகுப்பிலை பிள்ளையள் எடுத்த மார்க்சை சத்தம் போட்டு சொல்லுறது போலக் கிடக்கு. இதுவும் ஒரு விளம்பரமே”? “அதில்லை ஒவ்வொருத்தரிண்டை அந்தஸ்தை விளம்பரப்படுத்தும் முறையாகும். ரிசிட் கொடுக்க தேவையில்லை. கொப்பியிலை எழுதிவைச்சால் போதும். விதானையார் விசுவலிங்கத்திற்கு ஐந்து பெட்டையள். அவையளிண்டை கலியாணத்துக்கு போய் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தவர் அய்யாத்துரையர். அதுதான் கொடுத்த காசை திருப்பி ஒரு ரூபாயோடு சேர்த்து கொடுத்துவிட்டார்”, வந்திருநத ஒருவரின் விமர்சனம். “நீர் உதெல்லாம் கணக்கு வைத்திருக்கிறீர் போல. ஆரோ சொல்லிச்சினம் அய்யாத்துரையின்டை மனுசியிண்டை தம்பி கனாடவிலை ரெஸ்டொரண்ட் வைத்து நல்லச் சம்பாதிக்கிறானாம். அவன் பெடியன்; ஐம்பதானியரம் அனுப்பியிருக்கிறாரானாம். அதையேன் அவன் பெயரை மைக்கிலை முதலிலை சொல்லவில்லை”? தன் சந்தேகத்தைக் கேட்டார் குத்தகைக்காரர் பொன்னையர். “நல்லாய் இருக்கு உம்முடைய கேள்வி. உதை இயக்கப் பெடியன்கள் கேட்டுவிட்டு தங்களுக்கு அதிலை வரி தரச் சொல்லிக் கேட்டால் பிரச்சனை கண்டீரோ. அது தான் விஷயத்தை அப்படியே வெளியிலை சொல்லாமல் அமுக்கிப்போட்டார்”. ”அது சரி யூனிவர்சிட்டியிலை என்ஜனியரிங் படிக்கிற அய்யாத்தரையிண்டை மூத்த மகனுக்கு அந்தக் கனடா மச்சான்டை மகளுக்கு கொடுக்கத் திட்டமாமே? அது தான் முதற் பணமாக அனுப்பியிருக்கிறாரோ என்னவோ? “நான் கேள்விபட்டது அந்த பெடியனும் எங்கடை ஸ்டேசன் மாஸ்டர் மகளுக்கும் இங்கை பள்ளிக் கூடத்திலை படிக்கிற நாளிலை இருந்து தொடர்பாம். இப்ப இரண்டு பேரும் யூனிவர்சிட்டியிலை எண்ட படியால் மேலே பேசத் தேவயில்லை” “உமக்கேன் அந்த சிறுசுகளிண்டை கதை. உம்முடை மகளும் யூனிவர்சிட்டியிலை காதலித்து தானே கலியாணம் செய்தவள். அதுவும் உம்முடைய மருமகனுக்குத் திருகோணமலை சொந்த ஊர்” அய்யாத்துரையின் மகனின் காதலைப் பற்றி விமர்சித்தவர் பேசாமல் எழுந்து மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். ஒலிபரப்பில் தொடர்ந்து பெயர்கள் வாசிக்கப்பட்டன. சிலர் கடித உறைகளில் பணத்தை வைத்து அய்யாத்துரையின் மனைவி செல்லம்மாவிடம் கொடுத்தனர். அய்யாதுரையர் வந்தவர்களை கவனித்த படியிருந்தார். அய்யாத்துரையரின்டை வீட்டு கணக்கு வழக்குகளைக் பார்ப்பது செல்லாம்மாள் தான் என்பது ஊரில் எல்லோருக்கும் தெரியும். அவளுக்கு தான் அய்யாத்துரையரின் வரும்படி எவ்வளவு என்று தெரியும். ஒரு மெடிக்கல் சேர்டடிப்பிக்கட கொடுக்க அவர் ஆட்களின் வரும்படிக்குத்  தக்கவாறு வாங்குவதை செல்லம்மாள் தான் தீர்மானிப்பாள். அய்யாத்துரையர் ரிட்டையராக இன்னும் ஆற மாதங்கள் இருந்தன. உத்தியோகத்தில் இருக்கும் போது வீடு கட்டி குடி புக வேண்டும் என்பது அவர் திட்டம். அதுவும் ஊரொடை வேலை மாறி வந்ததால் பலரை அவருக்குத் தெரியவந்தது. அதற்குப்பிறகு வீடடில் டிஸ்பென்சரி வைத்து வைத்தியம் பார்க்க வசதியாக ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தார் தனது புது வீட்டில். அய்யாத்துரையரின் பிள்ளைகளில் மூத்தவன் மகன். இரண்டாவது மகள். அவளுடைய கலியாணத்தையும் முற்றாக்கி அவளை கரை சேர்த்துவிட்டால் தானும் மனைவியும் அந்த சீவிய உருத்து வைத்து மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கும் வீட்டிலை வாழலாம் என்பது தான் அவர் திட்டம். அந்த புது வீட கட்டியதில் அவருக்கு இலாபம் என்ற தான் சொல்லலாம். பணச்சடங்கில் செல்லம்மாவின் கணக்குப் படி முதல் நாளே முப்புதாயிரம் சேர்ந்து விட்டது. இன்னும் இரண்டு நாள் கொணட்டாட்டம். கொழும்பில் இருந்து சொந்தக்காரர்களும்  நண்பர்களும் வரவேண்டும். அதோடு அவர் அப்போத்திகரியாக வேலை செய்த சிங்களப் பகுதிகளில் இருந்து சிங்கள முதலாளிமார் வரவேண்டும். அவர்கள் அய்யாதுரையரோடு ஒட்டென்றால் ஒட்டு. “ லொகு அய்யா “ என்ற தான் அவரை செல்லமாக அழைப்பர்கள். காரணம் அவர் ஆறடி உயரம். அதோடு அவர் வேலை செய்த இடங்களில் அவர் முக்கிய புள்ளியாக கணிக்கப்பட்டார். காய்ச்சல் என்றால் மறு நிமிடமே சிங்கள முதலாளிமார் வீட்டை போய் நின்று மருந்து கொடுத்தவர் அய்யாத்துரை. அதை அவர்கள் மறக்க முடியுமா? அவர்களுக்கென கிடாய் வெட்டி , போத்தல்களோடை முன்றாம் நாள் பெரும் கொண்டாட்டம் வைக்க திட்டம் போட்டிருந்தார் அய்யாத்துரையர். மூன்றாம் நாள் குறைந்தது ஒரு இலட்சம் கிட்டும் என்பது அவர் கணிப்பு. வீடு கட்டிய செலவு போக குறைந்தது ஒரு இலட்சம்  பணச்சடங்கு மூலம் மிஞ்சும். ஒலிபரப்பி தொடர்ந்து பெயர்களைக் கதறிக் கொண்டிருந்தது. முருகேசு எழுபது ரூபாய் , செல்வராசா ஐம்பது ரூபாய்.. என்றவுடன் யாரொ பின்னனியில் முணு முணுத்தது தெளிவாகக் கேட்டது. அது செல்லம்மாளின் குரல். “உவன் செல்வத்தின் மகளுடைய சாமத்திய சடங்கிற்கு நூற ரூபாய் நோட் ஒன்றை சுலையாக நான் கொடுத்தது நான் இங்கை கொப்பியிலை எழுதி வைத்திருக்கிறன். அவன் அதை மறந்து ஐம்பது கொடுத்து போறான்”  என்றாள் கோபத்தோடு செல்லம்மாள்..  அவள் காசு கொத்துவிட்டு போனவர்களின் தொகையை தான் கொடுத்த தொகையுடன் கொப்பி ஒன்றில் இருநதது கணக்கோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்;. “அதைக் கேட்ட முன்வளவில் சிகரட் குடித்துக் கொண்டு இருந்த ஒருவர் “ செல்லம்மாளோடை சேட்டை விட முடியாது. எல்லாத்துக்கும் கணக்கு வைத்திருக்கிறாள்” என்றார். “ஏன் உந்த மனுசிக்கு உவ்வளவு பண ஆசையோ தெரியாது.” இது அங்கிருநத இன்னொருவரின் விமர்சனம். அந்த சமயம் இருவர் டையுடன் வாசலைத் தாண்டி வளவுக்குள் வந்தார்கள். வந்தவர்கள் ஊருக்கு அறிமுகமானவர்களாக இல்லாத படியால் அவர்கள் இருவரையும் எலலோருடைய கண்களும் நோக்கின. “ ஆர் உந்த இரண்டு பேர். அதுவும் குடிபுகுற வீட்டுக்கு டையோடை வருகினம்? வந்தவர்களில் ஒருவர் ஆஙகிலத்தில் “ Is this Appothecary Ayyathurai’s house?” என்று கேட்டார். ஆங்கிலத்தில் பதில் சொல்லி ஏன் சிக்கல்படுவான் என்று ஒருத்தரும் பதில் சொல்லாமல் இருந்தனர். அதே கேள்வியை வந்தவரில் மற்றவர் சற்று அதிகாரத் தொனியுடன் திரும்பவும்கேட்டார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த தம்பையா மாஸ்டரை எல்லோரும் பார்த்தர்கள்,பதிலை எதிர்பார்த்து. “ Yes Yes. This is his house. May I know who both of you are?” “We both are from Bribery Commissioner’s office. There is a complaint against Mr Ayyathurai. We would like to speak to him” பதிலைக்கேட்டு மாஸ்டர் அதிர்ச்சி அடைந்தார். “OK OK. He is very busy inside. Come I will take you both to him” என்று ஆங்கிலத்தில் பதில் சொல்லியபடி இருவரையும் வீட்டுக்குள் மாஸ்டர்;கூட்டிச்சென்றார். அரை குறையாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் “நாங்கள் கதைச்ச மாதிரி நடக்கப் போகுது போல இருக்குது..ஆரே அய்யாத்துரையருக்கு எதிராகப் பெட்டிசன் போட்டிட்டான்” என்றார் மனதுக்குள் சந்தோஷத்தோடு ஒருவர். எல்லோரும் மொளனமாக நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அரை குறையாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் “நாங்கள் கதைச்ச மாதரி நடக்கப் போகுது போலத் தெரியுது. ஆரோ ஒருவன் அய்யாத்துரையருக்கு எதிராக எரிச்சலிலை பெட்டிசன் போட்டிட்டான் போல இருக்கு. வந்த ஆக்கள் ஊழல்; ஒழிப்பு இலாக்காவை சோச்நத ஆக்கள்” என்றார் ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த ஒருவர்.. வீட்டுக்குள் ஒரே வாக்குவாதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடந்தது. படிப்படியாக அய்யாத்துரையரின் குரல் ஓய்ந்தது. எல்லோரும் மொளனமாக நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சில நேரத்துக்கு முன்னர் வீட்டுக்கு வந்த “டை” கட்டிய இருவரும் அய்யாததுரையரோடு வெளியே வந்தனர். அய்யாத்துரையர் தொங்கிய முகத்தோடு நடந்தார். ஒருத்தரோடும் அவர் முகம்கொடுத்துப் பேசவில்லை. இந்த குடிபுகுற நாளண்டு அய்யாத்துரையருக்கு என்ன நடந்தது என்று விபரம் தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். “அய்யாத்துரையர் வீடு குடி புகுவதுக்கு வைத்த முகர்த்தம் சரியல்லை போல கிடக்கு “என்றார் சாஸ்திரியார் சாம்பசிவம். “உங்களை அய்யாத்துரையர் கேட்டிருந்தால் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வராத ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுத்திருப்பியல் என்ன சாத்திரியார்? என்றது ஒரு குரல் நக்கலாக.                                                                        ♣♣♣♣♣ 9 அத்தியாயம் 9 ( பென்சன்) [Pensions]                                                           பென்சன் 35 வருட அரசாங்க சேவை அன்றோடு கிளாக்கர் கிட்டினருக்கு முடிவடைகிறது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அரசாங்கச் சேவைக்காக அர்பணித்தவர் “கிட்னர்”; எனச் செல்லமாக அழைக்கப்படும் சிதம்பரப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை. நேர்மைக்கும் , கடுமையான உழைப்புக்கும், சொன்ன வார்த்தை தவறாமைக்கும் பெயர் பெற்றவர்.. இருபது வயதில் அரசசேவையில் லிகிதராக வேலைக்குச் செர்ந்தவர். தனக்குப் பின், வரிசையில் நிற்கும் இரு சகோதரிகளுக்காக தொடர்ந்து படிக்கவசதியில்லாது வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. உள்ளூர் தபாற் கந்தோரில் தபால்காரனாக வேலைசெய்த அவரின் தந்தையான சிதம்பரப்பிள்ளையின்  வருமானமும்; ஆசிரியையாக வேலை செய்த தாயின் உழைப்பும் தனது இரு சகோதரிகளுக்கும சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைக்கப் போதுமானதாக இல்லை என்று அவருக்கு தெரியும். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் படித்து, சர்வகலாசாலைக்கு நுலைந்து பட்டம் பெற வேண்டும் என்று அவர் கண்ட கனவு நனைவாகவில்லை.  கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று தாயின் வற்புறுத்தல காரணமாக  கிளரிக்கல் சேர்விஸ்சுக்கு விண்ணப்பித்த போது மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. நீண்ட கால அரச சேவையில் ஒரு நாளாவது அவர் நேரம் தாமதித்து வேலைக்குச் சென்றது கிடையாது. அதே போன்று மாலையிலும் அவர் தான் கடைசி ஊழியராக வேலை முடிந்து வீடு செல்வது வழக்கம்.  கிளரிக்கல் சேர்வீசில் சாதாரண லிகிதராக சேர்ந்து ஓய்வு பேறும் போது எவ்வளவோ போட்டிகளுக்குப் பின்னர், பரிபாலன சேவையில் பதவி உயர்வு பெற்று உதவி அரசாங்க அதிபரானார் (Assistant Governmnet Agent)  ;. பாவம் அவ்வளவு நேர்மையாக வேலை செய்தும் அந்தப் பதவி; கிடைக்க அரசியல்வாதிகளின் தயவை நாட வேண்டிய  நிலை அவருக்கு. அது கிடைப்பதற்கு எத்தனைத் தடவை பாராளுமன்ற ஊறுப்பினர் வீட்டு வாசலைத் அவர் தொட்டு வணங்கி வர வேண்டியிருந்தது. அவரது நல்ல காலம் அந்தப் பதவிக்கு பா.ம.உ யின் இனத்தவர்கள் ஒருவரும் போட்டிக்கு நிற்கவில்லை. தனது பாராளுமன்ற தொகுதிக்கு உதவி அரசாங்க அதிபராக கிட்னரை நியமித்ததி;ன காரணம் தனக்கு ஏற்றவாறு திட்டங்களை டெண்டரில் விட்டு தனக்கு சாதகமாக கிடைக்கத்தான என்பது கிட்னருக்குத் தெரியும்.  சங்கக் கடையில் மனேஜராகா இருந்து அரிசியில் மண் கலந்து விற்று திடீர் பணக்காரனாகி, அதன் பின் அரசியலில் புகுந்து பெரிய புள்ளியான அந்தப் பா.ம. உக்கு ஊழல் ஒரு புதிய விஷயமில்லை. உத்தியோகத்திற்கு கடிதம் கொடுப்பது முதல் பதவி உயர்வு வரை வேலைக்கு ஏற்றவாறு ரேட் வைத்திருந்தார். ஒரு போதும் அவர் பணத்தை நேரடியாக வாங்கியது கிடையாது. அவருக்கு உதவியாக இருந்த செல்வம் என்ற அவரது மைத்துனன்; தான் அதனைக் கவனித்துவந்தார். அவர் மூலமே பாராளுமன்ற உறுப்பினரின் தொடர்பு அவருக்கு கிடைத்தது. அரசசேவையில் கிட்னர் சேரும் போது பல ஊர்களில் வேலை செய்ய வேண்டிவரும் என எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஊரொடு இருக்கலாம், பெற்றோருக்கு உதவியாக இருந்து குடும்பப் பிரச்னைகளுக்கு வழி காணலாம்,  என நினைத்த கிட்னருக்கு முதல் முறையாக வேலை கொழும்புக் கச்சேரியில்  என்றவுடன் வேலைக்குப் போவோமா விடுவோமா என்ற நிலை. ஆனால் தாயார் குடும்ப நிலையைக்காட்டி வற்புறுத்தியபடியால் அவருக்கு வேலையை ஏற்க வேண்டிவந்தது. கொழும்பில உள்ள வெள்ளவத்தை பகுதியில் தாயரின் தூரத்து சொந்தக்காரார் ஒருவர் நடத்திய சம்மரியில் தங்க இடம் கிடைத்தது கொழும்புக்கு புதிதான அவரின் அதிர்ஷ்டம். ஒரு அறையில் மூன்று பேர் முடங்கி கிடக்க வேண்டிய நிலை. காலையில் குளிப்பதற்கும், மலசலம் கழிப்பதற்கும் கியூ வேறு. காரணம் மூன்று அறையுள்ள அந்த சம்மரியில்  பத்து பேர் வாழ்ந்தனர். ஹாலின் ஒரு பகுதி கூட ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. காலை போசனம் காலி வீதியல் உள்ள காந்தி லொட்ஜில்;. நண்பன் ஒருவனின அறிமுகத்தால் கொப்பி ஒன்றில் திகதி போட்டு எழுதும் மாதக் கணக்கொன்றை அங்கு தொடங்கினார். சரியாக சம்பள நாளன்று கணக்கு பார்த்து பணத்தைக் கொடுத்துப் போடுவார். வெள்ளை நிற லோங்சும, வெள்ளை நீண்ட கை சட்டையும் அவரது வேலைக்குப் போகும் யூனிபோர்ம். கொழும்பில் ஆரம்பித்த அவரது அரசாங்க சேவை, கண்டி இரத்தினபுரி , காலி , குருநாகல் போன்ற சிங்களப் பகுதிகளிலும் மட்டக்களப்பு, புத்தளம் போன்ற தமிழ்ப் பகுதிகளிலும் தொடர்ந்தது. அரச சேவையில் கடைசி ஐந்து வருடஙகளும் தான் யாழ் குடா நாட்டில் சேவை செய்யும் சந்தர்ப்பம அவருக்கு கிட்டியது. அதிக காலம் சிங்களப் பகுதிகளில் வேலை செய்ததினால் சிங்களத்திலும் எழுதி, வாசித்து உரையாடக் கூடிய திறமையை விரைவில் அவர் பெற்றார். மும்மொழிகளிலும் வேலை செய்யக் கூடிய கிட்னருக்கு அரசசேவையில் தனி மதிப்பை மற்றைய ஊழியர்களிடம் கொடுத்தது மட்டுமன்றி நல்ல உறவையும் ஏற்படுத்தியது. மொழிபெயர்ப்பு என்று வந்தவுடன் கிட்னரைத் தான் முதலில் சக ஊழியர்கள் தேடுவார்கள். அதனால் அவர் வேலை செய்த கச்சேரிகளில் எல்லாம் அவரது பெயர் பலருக்கு தெரியவந்தது. “மும்மொழிக் கிட்னர்”; என்று கூட பகிடியாகச் அழைப்பார்கள்.. தனது கெட்டித்தனத்தால் தன்னோடு கிளரிக்கல் சேர்வீசில் வேலை செய்த இரு நண்பர்களை தன் இரு சகோதரிமாருக்கு மாப்பிள்iளாக தேர்ந்தெடுத்து குறைந்த சீதனத்தில் கலியாணம் செய்து வைத்தவர் கிட்னர். சகோதரிகளுக்காக அவர் அவ்வளவு வயது வந்தும் திருமணமாகமலே இருந்தார். இரத்தினபுரி கச்சேரியில் வேலை செய்யும் போது அவருக்கு வயது நாற்பது. கெட்டித்தனத்தால் முதலாம் தர லிகிதராக பதவி உயர்வடைந்திருந்தார்.  அக்கச்சேரிக்கு காலியில் இருந்து மாற்றம் பெற்று வந்தடைந்த சில மாதஙகளில், அங்கு தனக்கு முன் கடமையாற்றிய பிரதம லிகிதர் அரசுக்கு சேர வேண்டிய சுமார் மூன்று இலட்சம் பணம் சேராமல் போனதிற்கு காரணம் என்பதையும் அவர் பல ஊழல்களை செய்ததையும் கண்டுபிடித்து அரசாங்க அதிபருக்கு அறிக்கை ஒன்று சமர்பித்தார். அந்த கண்டுபிடிப்பு மேலாதிகாரிகளிடம் பெரும் பாராட்டைமட்டும் பெறாமல் அடுத்த வருடமே பதவி உயர்வையும் அவருக்கு பெற்று கொடுத்து ஸ்பெசல் கிலாஸ் லிகிதராக கொழும்பில் உள்ள  திறைச்சேறிக்கு மாற்றலாகி பென்சன் பகுதிக்கு செல்ல உதவியது.. இரத்தினபுரியில் வேலை பார்த்தபோது அவருக்கு கீழு வேலை செய்த டைபிஸட் பிரேமலதாவின் தொடர்பு ஏற்பட்டது. பதினெட்டு பக்க அறிக்கையை ஒருவரும் அறியாத விதத்தில் தட்டச்சு செய்து அவருக்கு கொடுத்ததினால் அவரின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானாள் சிஙகள இனத்தைச் சேர்ந்த பிரேமா.  பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த பிரேமாவை வளர்த்தது பிள்ளைகள் இல்லாத அவளது தாய் மாமன் குடும்பம். இரத்தின வியாபாரியான அவர் குணத்திலும் இரத்தினம் தான். பிரேமா கிட்னர் மேல் வைத்திருந்த நம்பிக்கை நாளடைவில் காதலாக மலர்ந்தது அவளின் தாய் மாமனின் ஆசீர்வாதத்துடன் திருமணத்தில் முடிந்தது. நல்லகாலம் அவரின் கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க கிட்னரின் தாயும் தகப்பனும் உயிருடன் இருக்கவில்லை. கிட்னரின் சகோதரிமார் இருவரும் தமது தமையன் தமக்காக செய்த தியாகத்தைக் கூட பெரிதாகக் கருதி நன்றிக்காக கூட  திருமணத்துக்குப் போகவில்லை. அதனால் கிட்டனர் அவர்கள் மேல் கோபப்படவில்லை. வேலையில் கிட்னர் சற்று கண்டிப்பானவர். அரசாங்க விதிகளில் இருந்து சற்றும் விலகிச் செல்லமாட்டார். அரச சேவை பரிபாலன, நிதி சட்டப் புத்தகங்களை கரைத்து குடித்திருந்தார். அவர் கடைப்பிடித்த கடுமையான முறைகளினால் பலருக்கு பென்சன் கிடைப்பது தாமதாகியது. அரசசேவையில் பல திணைக்களஙகளில் வேiலை செய்தவர்களின் வேலை சம்பந்த அறிக்கைகள் முழுமையாக கிடைத்து, அவர்கள் அரசுக்கு ஏதாவது பணம் கொடுக்க வேண்டுமா என்று கணித்து , அவர்கள் ஊதியம் இல்லாது லீவில் இருந்த நாட்களையும் கழித்த பின்னரே அதை முற்றாக்கி மேலதிகாரியின் அனுமதிபெறுவார். பண்டகச்சாலை மேற்பார்வையாளராக பல இடங்களில் வேலை செயத ஒருவர் தனது கவனயீனம் காரணமாக பல அரிசிமூட்டைகளை களவு கொடுத்து அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்றுபோது அவரி;ன் பென்சன் முற்றாக்க சுமார் இரண்டு வருடங்களாயிற்று. அறிக்கைகள்யாவும் சரியாக வந்து சேராததே அந்த தாமதத்திற்கு காரணமாகும். அரசுக்கு அவரது; கவலையீனம் காரணமாக ஏற்பட்ட இழப்பு சுமார் நாற்பதாயிரம் ரூபாய் . அதை அவரின் பென்சனில் இருந்து கழித்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த பணம் மிகச் சிறிது என கிட்டனருக்குத் தெரியும். நோயினால் அவதிப்படும் படும் அவ்வூழியரின் மனைவியின் மருந்துச்செலவுக்கு அந்தப் பணம். போதாது என்பதும் அவருக்குத் தெரியும். அரச சட்டப் புத்தகத்தில் உள்ள சில ஓட்டைகளைப்பாவித்து பத்தாயிரம் ரூபாய் மட்டுமே கழித்துவிட்டு மிகுதி பென்சன் பணம் கிடைக்கும்படி செய்த மனிதபிமானம் மிக்கவர் கிட்டனர். கண்டிப்போடு கலந்த இரக்க சுபாவம் படைத்தவர். பென்சன் திணைக்களத்தில்,  இறந்தவர்களுக்கும் மரண அத்தாட்சிப பத்திரமின்றி கள்ளக் கையெழுத்துடன் பென்சன் கொடுக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார் கிட்னர். அவரது திறமையை நம்பியே மேலதிகாரிகள் தங்கள் தீர்மானங்களை எடுத்தனர். பென்சன் பகுதியில் இருந்து மாற்றலாகி அவர் செய்த சேவைக்கு பதவி உதவி திடீரென்று வரவில்லை. ஒரு நாள் அவரது அதிகாரி தன் அறைக்கு வரும்படி அழைத்திருந்தார். கதவை தட்டிவிட்டு ஒதுங்கி நின்ற கிட்னரை “ Come inn” என்ற ஒரு அதிகாரக் குரல் அறைக்குள் இருந்து வரவேற்றது. அவரது அதிகாரி சோமரத்னாவுக்கு கிட்டனர் மேல் நல்ல மதிப்பு. அவரின் கீழ் வேலை செய்த சிங்கள ஊழியர்களை விட அவர் மேல் கூடிய நம்பிக்கை வைத்திருந்தார். சோமரத்தினா அமரும்படி அவரைக் கட்டளையிடும் வரை அவர் முன்னே பதுமையாக மரியாதையுடன் நின்றர் கிட்னர் . “ Sit down Kitnar” “ Thank you sir” “உமக்கு ஒரு நல்ல செய்தி சொல்லவே அறைக்கு அழைத்தனான். உமது கடும் உழைப்பையும் திறமையும்  மதித்து உம்மை  பரிபாலான சேவைக்கு மேலிடத்துக்கு சிபார்சு செய்துள்ளேன். ஆனால் உயர் பதிவிகளுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு அவசியம் வேண்டும. எனது சிபார்சை நம்பி மட்டும் இராதையும்” என்றார் ஆங்கிலத்தில் அதிகாரி சோமரத்தினா சொன்ன அறிவுரையைக் கேட்டு கிட்னருக்க என்ன பதில் சொல்வதென்ற தெரியவிலலை. பேசாமல் அவர் முகததைப் பார்த்தபடி இருந்தார். “ என்ன மௌனமாக இருக்கிறீர். உமக்கு மூன்ற பாஷைகளும் தெரியும், வேலையில் நல்ல திறமைசாலி. அது மட்டும் இருந்தால்; போதாது. சற்று அரசியல்வாதிகளோட ஒத்துப்போகவும்; தெரியவேண்டும். உமக்கு யாழ்ப்பாணத்தில் யாராவது எம் பியை தெரியுமே?. “ எனக்கு யாரை சேர் தெரியும். நானும் வேலையும் என்று இருப்பவன். யாழப்பாணத்தில நான் வேலை செய்யவில்லை” “எனக்கு உம்மைபற்றி தெரியும். உமக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அறைக்குள் அழைத்தனாhன். எனக்கு தமிழ் எம் பி ஒருவரின் பீஏயைத் தெரியும். அவரது அண்ணருக்கு நான் பென்சன் கெதியிலை கிடைக்க உதவினனான். அதுக்குப் பிறகு நாலைந்து பேருக்கு பென்சனும், கொமியூட்டட்டும் கெதியிலை கிடைக்க உதவினாhன். அவர் காசடிக்கிறவர்; என்று பிறகு தான் தெரியவந்தது. ஆனால் நான் கேட்டால் எந்த உதவியையும் செய்ய மாட்டன் என்று சொல்லமாட்டார். அவரோடை நான் கதைக்கிறன். நீர் போய் அவரைச் சந்தித்து நான் அனுப்பினதாகச்சொல்லும். அவர் பெயர் செல்வம். புரொமோஷன் ஓடர் வந்ததும் அவருக்கு 5000 ரூபாய் கொடுத்தால் போதும்.” “ஊழலுக்கு எதிரான போக்குள்ள தன்னை விசயம் முடிந்ததும் காசு கொடுக்கச் சொல்லுகிறரே தனது அதிகாரி. எப்படி முடியாது என்று சொல்ல முடியும். எனக்க இன்னும் ரிட்டயராக ஐந்து வருஷம் இருக்கிறது. இந்தப் புரொமோஷன் கிடைத்தால் எனக்கு கிடைக்கிற பென்சன குறைந்தது இருபது விகிதம் கூடும். அதோடை இந்த பதவியில் இருந்து ரிட்டயரானால் அதைக்காட்டி கொம்பெனிகளில் வேலை எடுக்க முடியும். மகள் மல்லிகாவின் வாழ்க்கைக்கு ஒரு வழி பார்க்கவேண்டும். ஒருத்தரும் எனக்கு உதவப் போவதில்லை. பிரேமாவும் ரிட்டையரானால் எங்கள் இரண்டு பேருடைய பென்சனிலை தான் வாழக்கை நடத்த வேண்டும்;. அதிகாரிக்கு செல்வத்தின் கொமிஷனில் ஏதாவது பங்குண்டோ “?. கிட்னருக்கு சந்தேகம் வந்தது. “என்ன கிட்னர் யோசிக்கிறீர்? இந்த சந்தர்ப்பததை தவற விடாதையும:” “சரி சார் நீங்கள் சொன்னபடி செய்கிறன். எனக்கு அவருடைய தொலைபேசி, விலாசம் ஆகியவற்றைத் தாருங்கள்.”. “இன்று வெள்ளிக்கிழமை. வருகிற செவ்வாய் கிழமைக்குள் முழு விபரததையும் தாரன். இந்த மாத முடிவுக்குள் புரொமஷன் லிஸ்ட்டை முடீவு செய்வினம். அதுக்கிடையிலை அவரோடை பேசி எம்பியையும் சந்தியும் என்ன? கிட்னர் பதிலுக்குசம்மதம் தெரிவித்து  தலையாட்டினார். மூன்று மாதங்களில் கிட்னர் கையில் பதவி உயர்வுக்கான கடிதம் வந்தவுடன் அந்த கடிதத்தின பெறுமதி 5000 ரூபாய் என நினைத்து அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். `                                                                              ♣♣♣♣♣ கடைசி நாளான அன்று வேலைக்கு போவது அவருக்கு என்னவோ மாதிரி இருந்தது. அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் நாளது. நாளை முதல் நான் ஒரு சாதாரண மனிதன். ஆயிரக்கணக்காக ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் பெயர் பட்டியலில் அவர் ;பெயரும் ஒன்று. இனி ரிட்டையர்ட் என்ற வார்த்தையையும் சீ ஏ எஸ ( CAS) ஒபிசர் என்ற தன் பெயருக்கு அடுத்துள்ள பட்டத்துடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆபிசில் அவருக்கு பலத்த வரவேற்பு காத்திருந்தது. நேரே தன் அறைக்கு போன அவர் வெளியில் இருந்த தனது பெயர் பலகையைப் பார்த்தார்.  கிருஷ்ணப்பிள்ளை, உதவி அரசாங்க அதிபர், சாவகச்சேரி. நாளை வேறு ஒருவரின் பெயருடன் இந்தப் பலகை இங்கு தொங்கப் போகிறது. “சேர் டீ கொண்டு வரட்டுமா. கலைத்துப் போய் வந்திருக்கிறியள்.” என்று பியூன் சின்னையா வந்து கேட்டான. கொண்டு வரச்சொல்லிப்; பதிலுக்கு தலையாட்டிவிட்டு தன் அறைக்குள் சென்றார். என்னைப் பார்த்தால் கலைத்தவன் மாதிரியாகவா இருக்கிறது? அரச சட்டத்தின்படி 55 வயதில் ஓய்வு பெற வேண்டும் ஆனால் அரசியல் வாதிகள் விரும்பினால் ஏதோ பிச்சை போடுகிற மாதிரி ஒவ்வொரு வருடமும் சேவையை நீடிப்பினம். அதுக்கு அவர்களிடம போய் பல் கெஞ்ச வேண்டும். இதுவும் ஒரு வாழ்க்கையா?. இன்னும் என்னால் பத்து வருஷம் வேலை செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. ஆனால் என் பதவி;, மந்திரி ஒருவரின் மைத்துனருக்கு ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டதாம். கடிதமும் போயாகிவிட்டதாம். ஏற்கனவே அவர் என்னிடம் ஒரு கிழமைக்கு முன் வந்து வேலையைப்பற்றி விசாரித்துப் போயிருக்கிறார். இனி எனது ரிட்டயர்n;மண்ட் ஓடரில் மாற்றம் வராது. அது எனக்கு தேவையில்லை. இவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு மாடாக உழைத்துக்கொடுத்தனாhன். மேலும் ஒரு வருஷம் என சேவையை நீடிக்க அவர்களால் முடியாதாம். இது தான் எனது சேவைக்கு வெகுமதி. சிந்தித்தவாறு தனது பிரத்தியோகப் பைலை புரட்டினார். சின்னையன் அறைக்குள் டீ யோடு வந்தாhன். சின்னையன் கொண்டு வந்த டீ யை வாங்கிக் குடித்தார் கிட்னர். “சேர் இன்று மத்தியானம் உங்களுக்கு ஒபீஸ் ஆட்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன பிரியாவிடைப் பார்ட்டி ஒழுங்கு செய்திருக்கினம். ஹெட் ஓபிசில் இருந்தும் ஆட்கள் வருகினமாhம” சின்னையன் செய்தி சொன்னான. “அப்படியா?. நல்லது என்றார் அமைதியாக கிட்னர். அவரது சிநதனை;கள் எல்லாம் வேறு எங்கையோ இருந்தது. “ரிட்டையாரன பிறகு என்ன சேர் செய்யப் போகிறியள்? சுpனனையன் கேட்டான். “முதலிலிலை என்டை பென்சன் தாமதிக்காமல் கிடைக்க கொழும்புக்குப் போய் தெரிநதவாகளைக் கண்டு கெதிப்படுத்தவேண்டும. பென்சன கிடைச்சவுடன் இந்தியாவில் உள்ள கோயில் குளத்துக்கு ஒரு மாதம் போய் வர யோசித்திருக்கிறன” “சேர் ரிட்டயரான பிறகு எங்களையெல்லாம் மறந்திடாதையுங்கோ. நேரம் கிடைத்த நேரம் எங்களையும் வந்து பார்த்துப்போட்டுப் போங்கோ. உங்களிலை எல்லோருக்கும் நீஙகள் நல்லவர் என்ற மதிப்பிருக்குது” கிட்டனர்  முகத்தில் புன்னகை தெரிந்தது. அன்று நடந்த பிரியாவிடையில் அவரது சக ஊழியர்கள் தங்கள் நினைவாக கொடுத்த சீக்கோ கைகடிகாரமும் ஆயிரம் ரூபாய் உள்ளடக்கிய கடித உரையும் அவரைச்  சிலிர்க்க வைத்தது. எலலோருக்கும் தன் நன்றியை தெரிவித்து விட்டு கலங்கிய கண்களுடன் வேலைத்தளத்தைவிட்டு வெளியேறினார்.                                                                                            ♣♣♣♣♣ கிட்னர் ரிட்டயராகி ஒன்பது மாதங்களாகிவிட்டது. பிரேமா தொடர்நது வேலைக்குப் போய்வந்தாள். தனது பென்சன் விஷயமாக குறைந்தது ஐந்து தடவையாவது கொழும்புக்கு போய் வந்திருப்பார். உமது சேவைகால அறிக்கைகள் இன்னும் வந்து சேரவிலலை என்ற பதிலே பென்சன் ஒபிசுpலை இருந்து வந்தது. அவர் வேலை செய்த போது இருந்த அதிகாரியும் ஊழியர்களும் இப்போது அங்கில்லை. அவர் வேலை செய்த இடத்தில் இருந்தவர் ஒரு சிங்களவர். அவரைப் பார்த்தால ஒரு சிடு மூஞ்சி என்பது முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. பென்சன பிரானஜ்சில அவர் வேலை செய்த போது இருந்த பியோன் நாணயக்கார இன்னும் அங்குதான் வேலையில் இருந்தான். நாணயக்கார ஒரு நாணயமான சிங்களவன். அவனைக் கண்டதும் அவருக்கு மனதுக்குள் ஒரு சந்தோஷம். அரசசேவையில பியூனைப்பிடித்தால் எந்த காரியமு;ம் இலகுவாக நடக்கும் எனபத அவருக்குத் தெரியும். “மாத்தயா. இப்போ பென்சன் பிரான்ஞ்சில் ஒரு வேலை செய்து முடிப்பது சரியான கஷ்டம். ஒவ்வொருத்தருக்கும் பைலை நகாத்த காசு கொடுக்கவேண்டும். உங்கடை பைல் இன்னும்  அசையாமல் கிடக்கிது. நான் கூட எனக்குத் தெரிந்த ஒருவரோடு கதைத்தனான். நீங்கள் முந்தி இங்கை வேலை செய்தனீங்கள் எண்டும் சொன்னானன்.. ஏதொ தன்னால் முடிந்ததை செய்கிறன் எண்டார். நீங்கள் முடிந்தால் சீப் கிளாக் ஜெயரத்தினாவோடை கதையுங்கள். வெளித் தோற்றத்துக்கு சிடு மூஞசியானாலும் சிங்களத்திலை நீங்கள் கதைச்சால் சில சமையம் உங்களுடைய பென்சன உங்களுக்கு கெதியிலை கிடைக்க உதவி செய்வார். அவரும் இரத்தினபுரிதான்.” என்றான சிஙகளத்தில் நாணயக்கார. நாணயக்கார ஆலோசனை சொன்ன மாதரி ஜெயரத்தினாவுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு ரிட்டடையராகி ஒன்பதுமாதங்களாகியும் பென்சன் இன்னும் கிடைக்கவில்லை என்பதை எடுத்துச்சொன்னார். தான் இரத்தினபுரி கச்சேரியில் வேலை செய்ததாகவும் தனது மனைவியின் சொந்த ஊர் இரத்தினபுரி என்றம் சொன்னார். அவர் சிஙகளத்தில் உரையாடியது ஜெயரத்தினாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்பது அவர் முகத்தில் இருந்து தெரிந்தது. தன்னால் இயன்றளவு அவருக்குப் பென்சன் விரைவாக கிடைக்க வழிசெய்கிறேன் என்றார் ஜெயரத்தினா. அந்த சந்திப்புக்கு பின் வீடு திரும்பி மூன்று மாதமாகியும் அவருக்குப் பென்சன் வரவில்லை. திரும்பவும் ஜெயரத்தினாவைப் போய் அவர் சந்திக்க திட்டம் போதுதான் “Pension approved ” என்று சில படிவஙகளுடன் கடிதம் ஒன்று வந்தது. அந்த படிவங்களை நிறப்பி அதில் குறிப்பிட்டுள்ள அத்தாட்சிகளுடன் அனுப்பினால் அடுத்தமாதத்தில் இருந்து பென்சன் அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என்றிருந்தது கடிதத்தில் தாமதிக்காமல் பூர்த்தி செய்த படிவங்களையம் அத்தாட்சி பத்திரங்களையும் ஒரு கடித உறைக்குள் வைத்து ரெஜிஸ்டேர்ட் போஸ்டில் அனுப்பிப் போட்டு வீடு திரும்பினார் கிட்னர். நெஞ்சுக்குள் இறுக்கிறது என்று அன்று இரவு படுத்தவர் தான் பிறகு அவர் எழும்பவேயிலலை. பாவம் கிட்னர். கடும் உழைப்பின் பயனை அவரால் அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அவர் உடல் அதற்கு முதல் பென்சன் எடுத்துவிட்டது.                                                                                                 ♣♣♣♣♣ 10 அத்தியாயம் 10    (தலைமுறை இடைவெளி)                                                              [Postoffice 2]                                      தலைமுறை இடைவெளி ஓய்வுபெற்ற போஸ்ட்மாஸ்டர் சிவராசா அன்று பின்னேரம் சேர்ச் ஹோலில் நடக்க விருக்கும் அவர் அங்கத்தினராக உள்ள சங்கத்தின் இரவு போசன விருந்துக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர் ஒவ்வொரு வருடமும் தவறவிடுவதில்லை. “வெளியிலை நல்லாய் மத்தியானத்திலை இருந்து ஸ்னோ கொட்டிக்கொண்டிருக்கிறது. இன்று பின்னேரம் உங்கடை டிப்பார்ட்மெண்டிலை வேலை செய்தவர்களின் அசோசியேசன் டின்னருக்கு போக வேண்டும் என்று சின்ன பிள்ளையளைப் போல அடம்பிடிக்கிறயளே வெளியிலை நிலைமை தெரியவில்லையா உங்களுக்கு?”; சிவராசாவி;ன் மனைவி கணவனைப் பார்த்து கரிசனையுடன் கேட்;டாள். அவள் அப்படி கவலைப்படுவதற்கு காரணம் இருக்கத்தான் செய்தது. இருதய நோய் உள்ளவர்கள் குளிரில் போவதையும் டிரைவ்வேயில் ஸ்னோ தள்ளுவதையும் தவிர்க்கவேண்டும் என்று அடிக்கடி தொலைக்காட்சியில் சொல்வதை அவள் பார்த்திருக்கிறாள். சிவராசாவுக்கு “அன்ஜையினா” ( Angina) என்ற இருதய வியாதி. அதுவும் குளிர் காலத்தில் கூடுதலாக இருதய வலி வந்துவிடும். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தின் புகையை நாக்குக்கு கீழ் இரண்டு தரம் அடித்து அவர் சற்று நேரம் ஓய்வு எடுத்த பின்னர் வலிபோய்விடும். இந்த முறையையே சிவராசா கடந்த சில மாதகாலமாக கடைப்பிடித்து வந்தார். பல பரிசோதனைகளுக்கு பின்னர், அவசியம் இருதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று டாக்டர் சொல்லுவார் என நினைத்தார் சிவராசா. ஆனால் டாக்டர் சொன்ன கருத்து வேறு. “ உமது இருதயக் குழாய்களின் இரண்டு தான் எழுபது விகிதம் அடைபட்டுள்ளது. ஆகையால் உடனடியாக உமக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தேவைப் பட்டால் அன்ஜியோ பிளாஸ்டி செய்ய வேண்டி வரும். இந்த மருந்தை தொடர்ந்து பாவியும். இன்னும் ஆறுமாதத்திற்கு பிறகு பரிசோதித்து முடிவு எடுப்போம்” டாக்டர் சொன்னது அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது. ; சிவராசா, போஸ்ட் மாஸ்டராக தமிழ் சிங்களப் பகுதிகளில் சுமார் முப்பத்தைந்து வருடங்கள் சேலை செய்து சீப் போஸ்மாஸடராக ரிட்டையரானவர். அவரது சிகரட் குடிக்கும் பழக்கம் நைட் டியூட்டி செய்யும் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. வேலை செய்து முடிந்தபின் நண்பர்களுடன் சேர்ந்து, மூன்று கிலாஸ் சாராயமும் இரண்டு சிகரட்டும் ஊதி உள்ளே தள்ளத் தொடங்கி, பின் ஒரு நாளைக்கு ஒரு பக்கட் சிகரட்டை புகைத்து வளையம் விட்டு இரசிக்கும் அளவுக்கு பழக்கம் வளர்ந்துவிட்டது. இந்த சிகரட் குடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் அவர் கலியாணம் முடிக்குமட்டும் தான். சீதனத்தோடு வந்த அவர் மனைவி பாhர்வதியின் சக்தியானது அவரின் பழக்கத்தை முற்றாக மாற்றிவிட்டது. அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையின் சின்னமாக ஜெயராசா பிறந்தான். அவன் பிறந்த பிறகு இரண்டு தடவை பார்வதி கருவுற்றும் குழந்தை கருவில் தங்கவில்லை. ஊர் சாஸ்திரியார் ஒருவரைக் கலந்தாலோசித்தபோது ஜெயராசாவுக்கு சகோதர பொருத்தம் இல்லை என்று கையை விரித்துவிட்டார். “ஏதோ கொள்ளி வைக்க ஒரு ஆண் குழந்தையாவது எங்களுக்கு இருக்குதே. அது கடவுள் விட்ட புண்ணியம்” என்று மனத்திருப்தியோடு சிவராசா தம்பதிகள் வாழ்ந்தார்கள். ஜெயராசாவுக்கு ஒன்றென்றால் சிவராசாவும் மனைவியும் பதை பதைச்சுப் போவார்கள். தனியாக அவனை ஒரு இடத்திற்கும் போய்வர விடுவதில்லை. செல்லப்பிள்ளையாக வளர்ந்தான் ஜெயராசா. அவன் கேட்பதெல்லாம் பெற்றோரிடமிருந்து கிடைத்தது. விதம் விதமான உடைகள் அணிந்து பள்ளிக்கு வருவதை பார்த்து அவன் நண்பர்கள் “ கொடுத்துவைத்தவன் “ என்று சொல்லிப் பொறாமைப் படுவார்கள். சிவராசா போஸ்மாஸ்டராக வேலை செய்தாலும் போதிய செல்வம் படைத்தவர் என்பது பலருக்குத் தெரியும். தனது உத்தியோகத்திலிருந்து வரும் சம்பளத்தை மட்டும் நம்பி அவர் வாழவில்லை. குருநாகலில் இருபது ஏக்கரில் தோட்டம் , பூனகரியில் பத்து ஏக்கர் நெல்வயல் இப்படி பல சொததுக்களுக்கு அதிபதியாக இருந்தார் அவர். அவரின் தகப்பன் விட்டுச் சென்ற முதுசத்துடன் மனைவி கொண்டு வந்த சீதனமும் சேர்ந்து அவரை அவ்வூர் பணக்காரர்களில் ஒருவராக சமுதாயத்தைக் கணிக்க வைத்தது. ஊரில் கார் வைத்து ஓடுகிற அளவுக்கு அந்தஸ்து படைத்தவர் அவர். “மொரிஸ் மைனர் சிவராசா” என்று அவரின் நண்பர்களால் அழைக்கப்பட்டார். அதற்கு காரணம் சிவராசா என்ற பெயரில் இவரைத் தவிர இரண்டு போஸ்ட்மாஸ்டர்கள் இருந்தார்கள். ஒருவர் உயரம் குறைந்தவர் அதனால் “கட்டை சிவராசா” என்ற அடைப்பெயரைப் பெற்றாhர். மற்றவர் நிறத்தில் கறுப்பாக இருந்தபடியால் “கறுவல் சிவராசா” என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படிப் பட்ட பெயர் வைத்து அழைப்பது அக்காலத்தில் ஒரு வழக்கம். பார்வதியின் கணவன் சிவராசாவுக்கு மனைவி மூலம் கிடைத்த செல்வம் அவரின் அந்தஸ்த்தை சமூகத்தில் உயர்த்தியது. மாமன் தன் சொந்தச் செலவில் கட்டிய பிள்ளையார் கோயிலுக்கு சிவராசா தர்மாகர்த்தாவானார். பார்வதியின் தகப்பன் இறந்தவுடன் அவர் பாவித்த மொரிஸ்மைனர் காருக்கும் சொந்தக்காரரானார் சிவராசா. அதுவே அவருக்கு அந்த பட்டம் அவர் பெயருடன் இணையக் காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் வாகனம் ஒட்ட பழகுமட்டும் பார்வதியின் தகப்பனுக்கு டிரைவராக இருந்த தேவராசாவை தொடர்ந்து சாரதியாக வைத்துக்கொண்டார். தேவராசாவுக்கு பார்வதியை சிறுவயதிலேயே இருந்து தெரியுமாகையால் அவனும் சிவராசா குடும்பத்தின் நம்பிக்கைக்கு பாhத்திரமானான். ஜெயராசாவை பள்ளிக்கூடத்துக்கு காரில் கூட்டி போய் வருவது தேவராசாவின் முக்கிய கடமைகளில் ஒன்று. வெய்யிலில் ஜெயராசா நடந்து சென்றால் எங்கே அவன் நிறம் குறைந்து விடுவானோ என்று சிவராசாவும் பார்வதியம் பயந்தார்கள். சில சமயம் லீவில் சிவராசா வந்து நிற்கும் நேரங்களில் தானே மகனை பள்ளிக்கூடத்துக்கு காரில் கூட்டிப்போய்வருவார். அவ்வளவுக்கு மகனைப் பாதுகாப்புடன் வளர்த்தவர் சிவராசா. ஒரு நாள் காய்ச்சல் என்று படுத்த ஜெயராசா அன்று இரவு காய்ச்சல் கூடி பிதட்டத் தொடங்கினாhன். சிவராசாவும் மனைவியும் பயந்து, பத்து மைல் தூரத்தில் இருந்த யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு கொட்டும் மழையில் காரில் கொண்டு சென்றதை பற்றி பார்வதி அவருக்கு அடிக்கடி நினைவூட்டுவாள். இந்த பழைய சம்பவங்களை நினைக்கும் போது அவருக்கு சில சமயம் சிரிப்புத்தான் வரும். காலத்தோடு பிள்ளைகளின் குணம் எப்படி மாறுகிறது என்று நினைக்கும் போது அவருக்கு மனதுக்குள் வருத்தமாயிருந்தது. கனடாவுக்குத் திருமணமாகி ஜெயராசா சென்றபோது தன்மேல் அவனுக்கு இருந்த மரியாதையும் அக்கரையும்; இப்போது முற்றாகமாறிவிட்டதை அவரும் மனைவியும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. அவன் தன்னோடு ஓருகாலத்தில் மகனாய் மட்டும் பழகாமல் நண்பனாகவும் சில விஷயங்களில் பழகியதை அவர் நினைத்துப் பார்த்தார். சில சமயம் இருவரும் ஒன்றாக ரீகல் தியேட்டருக்கு ஆங்கிலப்படம் பார்ப்பதற்கு பார்வதிக்கு தெரியாமல் போனதுண்டு. ஊரில் வீடு, நிலம், வயல்களை விற்று மகன் ஜெயராசாவின் ஸ்பொன்சரில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர் சிவராசா தம்பதிகள். அவர்களுக்கு ஆரம்பத்தில் மகனின குடும்பத்துடன் வாழ்வது பெருமிதமாக இருந்தது. ரிச்மணட் ஹில்லில் நான்கு அறைகள் கொண்ட ஒரு தனி வீடு வாங்கி அதில் தன் அந்தஸ்தை தன் நண்பர்களிடையே வெளிப்படுத்துவதில் ஜெயராசாவுக்கு பெருமை. வீடு வாங்குவதற்குத் தேவையான பணத்தின் ஒரு பகுதியை சிவராசா தம்பதிகள் ஊரில் உள்ள சொத்துக்களை விற்று வந்த பணத்தில் கொடுத்துதவினர். வீட்டில் மகனுக்கும் . மருமகளுக்கும் பேரனுக்கும் பாவிப்பிற்காக தனித்தனியாக கார் வேறு. இதோடு எல்லாவித சொளகரியங்களும் இருந்தும் தங்களுக்கு எக்காரணத்தால் பேஸ்மெண்டை வாழ்வதற்கு மகனால் ஒதுக்கித் தரப்பட்டது என்று அவர்களுக்கு விளங்குவது கடினமாக இருந்தது. ஒவ்வொரு அறையின் பாவிப்பை பற்றி மருமகள் காரணம் காட்டி விளக்கி, தனது மாமன் மாமியினது பிரத்தியோக வாழ்க்கையில் தலையிடாது இருக்கவே ஒரு பெரிய பேஸ்மெண்டை ஒதுக்கியுள்ளோம்; என்று மருமகள் சொன்னபோது சிவராசா தம்பதிகள் வாயடைத்துப் போனார்கள். காற்றோட்டம் குறைந்த பேஸ்மெண்டில் சிறைக் கைதிகள் போல் வாழ்ககை நடத்தினார்கள். ஊரில் தாம் பெரிய வீட்டில் வாழ்ந்த வாழ்ககையோடு ஒப்பிட்டு பார்த்தபொழுது தமது விதியை நொந்துக்கொண்டார்கள். மூன்று கார்கள் வீட்டில் இருந்தும் தெரிந்தவர்களை சந்தி;க்க வெகுதூரம் செல்வதற்கு பொதுசன போக்குவரத்தையே நம்பி வாழ்ந்தனர் அத்தம்பதிகள். பல தடவை வாய்விட்டு மகனிடமும் மருமகளிடமும் . பேரனிடம் தங்களை காரில் கொண்டு போய் விடும் படி கேட்டும் தக்க பதில் சாதகமாக கிடைக்காதலால் மனமுடைந்தார்கள் தம்பதிகள். ஒரு காலத்தில் மகனை தனியாக நடந்து போக விடமால் பாதுகாத்தவர் சிவராசா. ஆனால் இன்றோ கனடாவில் அவர்கள் நிலமை வேறு. எந்த கடும் வெய்யிலிலும் பஸ் ஏறி லைப்ரரிக்கும் நண்பர்களை சந்திக்கவும் போய்வந்தார். வீட்டில் சமையல் வேலையெல்லாம் பார்வதி கவனித்தாள். அவளை கனடா வந்தபின் மகனின் குடும்பத்துக்கு சமையல்காரியாகவே ஜெயராசா குடும்பம் நடத்தியது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போய் களைத்துப்போய் வந்தபின் சமையல் செய்வது இலகுவான காரியமா?. தன்னை; தகப்பனும் தாயும் எவ்வளவுக்கு கஷ்டப்படாமல் வளர்த்தனர் என்பதை ஜெயராசா மறந்துவிட்டானா? அல்லது தலைமுறைகள் பெற்றோர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் அன்பும் மாறுகிறதா என்பது சிவராசாவுக்கு புரியாத புதிராயிருந்தது. அக்காலத்தில் தினமும் அப்பா அப்பா என்று அவரை சுற்றி வந்தவன் இப்போ அவன் தன்னோடு சில வார்த்தைகள் பேசுவது கூட அருமையாக இருந்தது. வேலை வேலை என்று இராப் பகலாய் ஓடி ஓடி உளைக்கவே நேரம் அவனுக்கு சரியாயிருந்தது. தோளில் போட்டு தாலாட்டி, படுக்கைக்குப் போகும் போது கதை சொல்லி தூங்க வைத்து வளர்த்த சிவராசாவின் அருமைப் பேரன் கூட மாறிவிட்டான். My Great Grand Pa என்று அடிக்கடி அவன் சொன்ன வார்ததைகள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. இப்போது Grand Pa போய் ஓல்ட் மான் ( Old Man ) என்று தன்னைப்பற்றி நண்பர்களோடு பேரன் விமர்சிப்பது அவர் காதில் விழாமல் இல்லை. அதற்காக வீணாக அவனோடு வாக்குவாதப்பட அவர் விரும்பவில்லை. ஒரு நாள் ஹோம் வேர்க் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையை எழுதி வந்து சிவராசவிடம் பேரன் காட்டியபோது அதில் பல இலக்கணப் பிழைகள் இருப்பதை கண்டு, சிவராசா சுட்டிக் காட்டியது அவனுக்கு பிடிக்கவில்லை. “ உங்கடை இங்கிலீஸ் ஓல்ட் இங்கிலீஸ். நான் எழுதுவது மொடர்ண் கனேடியன் இங்கிலீஸ். “ என்று தன் பிழைகளை ஏற்க மறுத்துவிட்டான். ஏன் வீண்; பிரச்சனை என்று சிவராசா ஒதுங்கி நின்றார். அன்று கொட்டும் ஸ்னோவில் சங்கத்தின் டின்னருக்கும் போக வேண்டும் என்று கணவன் அடம்பிடித்தது பார்வதிக்கு எரிச்சலைக் கொடுத்தது. “அப்பா, ஜெயத்திடம் அல்லது உங்கடை பேரனிடம் கேட்டுப் பாருங்கோவனஇ; காரிலை கொண்டு போய் உங்களை விடச்சொல்லி. இங்கை இருந்து வெகு தூரமில்லையே. உவையள் மூன்று பேரில் ஒராள் கொண்டு போய்விட்டால் பிறகு வரக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னொருத்தர் உங்களை அங்கை வந்து கூட்டிக்கொண்டு வரலாம் தானே. இந்த உதவியை கூட அவர்களாலை செய்ய முடியாதே?. நுPங்கள் அவையளுக்கு முந்தி எவ்வளவு செய்திருக்கிறியள் என்று உணர்ந்து பார்க்கினமே?” பார்வதி சற்று கோபத்துடன் கேட்டாள். “ இஞ்சாரும். உமக்கு நல்லாய் தெரியும் உமது மருமகளின்டை குணம். அவன் ஜெயம் கூட அவளின் கட்டளையின் படி தான் நடக்கிறவன். அவன் பேரன் ரவியை விடும். அவன் மத்தியானமே இண்டைக்குத் தன்றை பிரணட்ஸ்சோடை சினிமாவுக்கும், அதுக்குப் பிறகு டின்னருக்கும் போகிறான் எண்டு சொல்லிப்போட்டான். போகிற வழியிலை இரண்டு பேரை காரிலை ஏற்றிக் கொண்டு போகவேண்டும் என்று மத்தியானமே நான் இண்டைக்கு அசோசியேசன் டின்னருக்கு போகிற விசயத்தை சொன்ன போது எங்கே தன்னி;டம் லிப்ட் கேட்;கப்போறனோ என்ற பயத்திலை முன்கூட்டியே தனது புரோகிராமைச் சொல்லிப்போட்டான். அவன் ஜெயம் கூட மனைவியோடை பின்னேரம் பேர்த்டே பாhட்டி ஒன்றுக்கு அவசியம் மிசிசாகா போகவேண்டுமாம். மிசிசாகாவில் உள்ள அவர்கள் வீடு கன தூரம், அதாலை நேரத்தோடை வெளிக்கிட வேண்டும் எண்டு சொல்லிப்போட்டான். திரும்பி வர நேரமாகுமாம் இனி நான் எப்படி அவையளை வற்பறுத்தி கட்டாயம் என்னை டின்னருக்கு கொண்டு போய் விடுங்கோ என்று கேட்க முடியும்?” “அப்ப டின்னருக்குப் போகாமல் நில்லுங்கோவன்” “ அதெப்படி முடியும்?. பதினைந்து டொலர் குடுத்து டின்னருக்கு டிக்கட் வாங்கிட்டன். அதோடை இந்த சந்தர்பத்திலை தான் என்னோடை வேலை செய்த பழைய பிரண்ட்;ஸ் மாரையும் சந்தித்து கதைக்கலாம். “ “ சரியப்பா. நான் சொல்லுறதை சொல்லிப்போட்டன். இனி உங்கள் இஸ்டம். போகக்கை குளிர் தாங்கிற மாதரி உடுத்துக்கொண்டு போங்கோ. இங்கை இருந்து பஸ் ஸ்டொப் வேற கிட்டயில்லை. ஸ்னோவிலை நடந்து போகிறது கவனம். வழுக்கப் பார்க்கும். போகக்கை உங்கடை ஸ்பிறே மருந்தையும் கொண்டு போங்கோ. தேவைப்பட்டால் பாவியுங்கோ” பாhர்வதி கணவனுக்கு பாதுகாப்புக்கான சில கட்டளைகளையிட்டாள். “ அப்ப நீரும் வாருமேன டின்னருக்கு. உமக்கு என்றை பிரண்ட்ஸ் கன பேரைத் தெரியும்” “ உங்களுக்கு விசரே. நான் உந்த குளிரிலை போய்வந்தால் பிறகு படுத்தபடுக்கையாய் படுக்க வேண்டும். பிறகு யார் உங்களைக் கவனிக்கிறது? போய் சேர்ந்ததும் ஆரிடமாவது செல் போன் இருக்கும்,; போன் செய்து சொல்ல மறந்திடாதையுங்கோ” சிவராசா தலையாட்டிவிட்டு டின்னருக்குப் புறப்பட ஆயித்தமானார்.                                                                                          ♣♣♣♣♣ கனடா வாழ் இளப்பாறிய போஸ்ட் மாஸ்டர் சங்கத்தி;ன் டின்னர் நடக்கும் சேர்ச் மண்டபத்தில்; அந்த குளிரிலும் கூட்டத்துக்கு குறைவில்லை. வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பின் அங்கத்தினர்கள் ஒன்று கூடி குலாவும் விழா அது. இரவுபோசனத்தோடு சேர்த்து நடனம், பாடல், நாடகம், பிங்கோ, ஏலம் போன்ற நிகழ்ச்சி நிரல்கள். அங்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருத்தரும் தமது கடந்த கால வாழக்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் சங்கம் இருந்த நிலையை விட இப்போது அதன் தரம் உயர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாம் அடிக்கடி சந்தித்து பேசி குலாவக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது என்று பலர் சொன்ன கருத்தை சிவராசா ஆமோதித்தார். “சிலர் கூட்டத்தில் வந்து பேச வேண்டும் என்பதற்காக நடந்த விஷயங்களிலை குற்றம் குறை சொல்லி பேசுவார்கள் ஆனால் அவர்களைச் செயல்பட விட்டால் அவர்களின் செயல்பாடு பூஜ்யம்தான். தாங்களும் செய்யமாட்டினம் மற்றவர்களையும் செய்ய விடாது ரூல்ஸ் கதைப்பதில் கெட்டிக்காரரர்” என்றார் சிவராசா. சிலருக்கு, சிவராசா யாரைத் தாக்கிப் பேசுகிறார் என்று விளங்கவில்லை. சிவராசாவுக்கு தெரிந்தவர்கள் பலர் அங்கிருந்தனர். அவருக்கு உதவியாளராக இருந்த எமானுவல் அவரைக் கண்டதும்; ஓடி வந்து. “ மாஸ்டர் எப்படி இருக்கிறியள்?. இந்தக் குளிருக்கு சூடாக ஒரு பிளக் லேபல் விஸ்கி எடுக்கிறியளா?. எண்டை கார் பூட்சுக்குள் இரண்டு போத்தில் இருக்கு.” என்றான். இமானுவல் தன் குடிப்பழக்கத்தை விட்ட பாடாகயில்லை. ஒரு முறை அவரோடு தபால் பங்கிடும் பகுதியில் குடி போதையில் இருந்த இமானுவல், சக ஊழியர் ஒருவரை பேசத்தகாத வார்த்தையால் பேசியதால் தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டபோது சிவராசா கொடுத்த வாக்குமூலமே அவனை காப்பாற்றியது என்பது இமானுவேலுக்குத் தெரியும். அதனால் அவர் மேல் அவனுக்கு ஒரு தனி மரியாதை. ஆனால் அவன் குடிப்பழக்கம் மட்டும் மாறியதாயில்லை. “ கேட்டதுக்கு நன்றி இமானுவல். நான் இப்ப குடிப்பதில்லை. நீர் இன்னும் குடியை விடவில்லையா” என்றார் சிவராசா. “ அதையெப்படி விட முடியும் மாஸ்டர்.” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து இமானுவேல் நகர்ந்தான். தன் தோளில் ஒரு கை பட்டதும் திரும்பிபப் பார்த்தார் சிவராசா. சிரித்தபடி நின்றது வேறு ஒருவருமில்லை. அவரோடு நுவரேலியாவில் ஒன்றாக தபாற்கந்தோரில் மூன்று வருடம் வேலை செய்த சண்முகம்தான். “மாஸ்டர் எப்படி சுகம் உமக்கு அன்ஜயினா என்று கேள்விப்பட்டேன். உண்மையா. சுகர் லெவல் எப்படி?. கொலஸ்டிரோல் உமக்கு இருக்கே?. சிவராசாவின் உடல் நலத்தைப் பற்றி; விசாரித்தார் சண்முகம். தனக்கு உள்ள நோயைபற்றிய விபரம் எவ்வளவுக்கு நண்பர்களிடையே பரவியிருக்கிறது என்று நினைக்கும் போது சிவராசாவுக்கு சிரிப்புத் தான் வந்தது. சந்திக்கும் போது நோய்பற்றி விசாரிக்கும் பழக்கம் ஊரில் இருந்து கனடாவுக்கும் வந்துவிட்டது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார். நல்லகாலம் நான் இந்த பெயருள்ள மருந்தை டாக்டர் சொல்லி சுகருக்கு பாவிக்கிறன். நீரும் உமக்கு சுகர் இருந்தால் அதை பாவியும் சுகம் வரும் என ஊரில் சொல்வது போல், சண்முகம் மருத்துவராக மாறவில்லை. போஸ்ட் மாஸ்டர் வேலை செய்;தவர்கள் தம்மோடு திணைக்களத்தில் ஒன்றாக போஸ்ட்மாஸ்டராக வேலை செய்தவர்களோடு உரையாடும் போது “ மாஸ்டர்” என்று அன்பாக அழைப்பது வழக்கம். அதே தொனியில் சண்முகம் அக்கரையாக சிவராசாவை கண்டபோது கேட்டார். “ உண்மைதான் . ஆனால் இப்ப பைபாஸ் தேவையில்லை என்று டாக்டர் பரிசோதித்து சொல்லிப்போட்டாh. நல்லகாலம் எனக்கு சுகர் கொலஸ்டிரோல் எல்லாம் நோமல்” “ அன்ஜையினா இருக்கும் போது. இந்த குளிரிலை அப்ப எப்படி வந்தனீர். பஸ்சிலா?” “ இல்லை என்மகன் காரிலை கொண்டு வந்துவிட்டவர். பத்துமணிக்கு பேரன் வந்து காரிலை கூட்டிப்போவான்” என்று முழு பூசணிக்காயை சோற்றுக்கள் மறைத்த மாதிரி பொய் சொன்னார் சிவராசா. தன் மகனையும் பேரனையும் விட்டுக்கொடுக்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அதுவும் தன் மகனின் அந்தஸ்தை விட்டுக்கொடுக்கமுடியுமா? “ அது தானே பார்த்தேன். அந்தக் காலத்தில் மொரிஸ்மைனர் கார் நீர் வைத்திருந்தவராச்சே. அது மட்டுமா உமது மகன் நல்ல உத்தியோகத்திலை இருக்கிறாராம். ரிச்மண்ட் ஹில்லில் டபிள் கராஜ் உள்ள ஒரு பெரிய தனி வீடாம். உண்மையா? “ ஓம்.” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். எங்கே மனுசன் மகனின் உத்தியோகம் . சம்பளம் போன்ற விபரங்களை கேட்கத்தொடங்கிவிடுவாரோ என்ற பயம் அவருக்கு. பாவம் சிவராசா மகனின் மரியாதையை காக்க தான் சொன்னது பொய் என்பதை நினைத்து அவர் மனம் குறுகுறுத்தது. என்ன செய்வது?. அவர் நிலமை அப்படி.; அவருக்குத் தெரியாமல் சிவராசா பயணம் செய்த அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர் அவர் அருகே நின்றதை சிவராசா கவனிக்கவில்லை. நிகழ்ச்சிகளும் டின்னரும் முடிய இரவு பத்தாகிவிட்டது. சிவராசா யாரும் தான் பஸ்சில் திரும்பிப் போவதை பார்க்காதிருக்க சாப்பாட்டை அவசரம் அவசரமாக முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.                                                                                                ♣♣♣♣♣ வீடு திரும்பும் தனக்கு இப்படி நடக்கும் என்று சிவராசா எதிர்பார்க்கவில்லை. பக்கத்து வீட்டு சீன நண்பர் வைசாங், அவரை ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சைக்காக கூட்டி செல்ல வேண்டிய நிலை அவர் சங்கத்தின் டின்னர் முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்டது. நல்லகாலம் வீட்டு டிரைவ் வேயில் வழுக்கி விழுந்ததால் ஓரளவுக்கு வைசாங்கின்;. உதவியோடு; ஆஸ்பத்திரிக்கு அவருக்குப் போகக்கிடைத்தது. வீட்டில் மகனோ பேரனோ அவரை அழைத்துப் போக இருக்கவில்லை. இவரது கால் முறி;ந்துவிட்டதாக எக்ஸ்ரே எடுத்து பார்த்துச் சொன்னார்கள். காலில் பெரிய கட்டுடன் வீடு பக்கத்துவிட்டுக்காரன் காரில் வீடு திரும்பும் வழியில் “ஏன் இந்த வயதில் ஸ்னோவில் வெளியே போனீர்கள் என்று வைசாங்; ஆங்கிலத்தில் கேட்டார்.” தான் டின்னருக்குப் போக வேண்டிய காரணத்தைச் சொன்னார் சிவராசா. “ஏன் உமது மகன் அல்லது மருமகள் அல்லது பேரன் காரில் கூட்டிப்போயிருக்கலாமே “ என்றார் வைசாங். “அவர்களுக்கு வேறு அவசர வேலை இருந்தது. இல்லாவிட்டால் அவசியம் கூட்டிப்போயிருப்பார்கள்” மகனினின் குடும்பத்தின் மேல்; மேல் பக்கத்து வீட்டு சீனக்காரன் வைத்திருந்த மதிப்பு குறைந்து விடுமோ என்ற எண்ணம் சிவராசாவுக்கு. “ அப்போ நீர் என்னைக் கேட்டிருந்தால் நான் கூட்டிப்போயிருப்பேனே” என்றாhர் வைசாங சிவராசாவால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தச் சீன மனுசனுக்கு உள்ள நல்ல இதயம் என் மகன் குடும்பத்துக்கு இல்லையே என நினைத்தபோது அவர் கண்கள் கலங்கின. என்ன செய்வது இளம் தலைமுறைகளின் போக்குகள் காலத்தோடு மாறுகின்றன. அவர்களுக்கும் என்னைப் போன்ற நிலை ஒரு காலம் வராமலா போகப்போகுது என்று தனக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டார்.                                                                             ♣♣♣♣♣ 11 அத்தியாயம் 11 (வடு)                                [Vadu.pg]                           வடு பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைச் சுவரில் இருந்த கடிகாரம் மாலை ஐந்துமணியைக் காட்டியது. வத்சலாவிற்கு பிரசவ வலி துவங்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து கிட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் ஆகிவிட்டது. வழக்கத்தில் குறைந்தது ஆறுமணித்தியாலங்களுக்குள் குழந்தை பிறப்பது வழக்கம். இது அவளின் முதற் பிரசவம்  தன் கைகள் இரண்டையும் தலையில் வைத்தபடி யோசனையுடன் என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன் அமர்ந்திருந்தான் மகேஷ். எட்டுமாடி ஆஸ்பத்திரியின் ,ஆறாம் மாடியில் உள்ள, ஆறாம் வோர்ட்டின் பிரசவப் பகுதி அது. அந்த அறைக்குள் இன்னொரு வெள்ளைக்கார இளைஞனும் அரைத்தூக்கத்தோடு அமர்ந்திருந்தான். அவ்விளைஞனின் மனைவிக்கு அது இரண்டாவது பிரசவம், ஆஸ்பத்தரியில் அவன் மனைவியை அனுமதித்து இரண்டு மணித்தியாலம் தான் ஆகிறது என்று மகேஷ் அவனிடம் விசாரித்தபோது தெரியவந்தது. தன் மனைவியின் நிலையை அவனுக்கு சொன்ன போது தனது மனைவியின் முதல் பிரசவத்தில் குழந்தை இரண்டு நாட்களுக்கு பிறகு தான் பிறந்தது என அவ்விளைஞன் ஆறுதல் சொன்னான் . இரண்டாம் பிரசவம் என்பதாலையோ என்னவோ அந்த இளைஞன் கவலைப்படாமல் சற்று தூங்கக் கூடியதாகயிருந்தது. பிரசவத்தின் போது பெண்ணானவள் மரணத்தின் எல்லையைத் தொட்டுத் திரும்புவாள் என்று அவனது பாட்டி சொன்னது மகேசின் நினைவுக்கு வந்தது. அந்த நிலை பல வருடங்களுக்கு முன்னர் மருத்துவ வசதிகள் இல்லாத போது இருந்திருக்கலாம். ஆனால் இப்போது ஒரு பெண் கருத்தரித்த சில மாதங்களில் இருந்து சிசுவின் வளர்ச்சிகளை வைத்தியர்கள் அவதானித்து ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் ஆவன செய்யக்கூடியதாக இருக்கிறது. அந்த அறைச் சுவரை மூன்று அழகிய குழந்தைகளின் படங்கள்  அலங்கரித்தன. ஒரு குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு  அவனை கவர்ந்தது. அப்படங்களைப் பார்த்து மனதுக்குள் பெருமூச்சு விட்ட மகேஷ் தனக்கும் அதுபோல் அழகான, ஆரொக்கியமான குழந்தை கிடைக்குமா என்று ஏங்கினான். ஆணோ, பெண்ணோ பரவாயில்லை. வத்சலாவுக்கு சுகப்பிரசவமானால் போதும் என்றது அவன் மனம். நேரம் போகப் போக வத்சலாவுக்கு என்ன நடக்குமோ என்ற பயம் மகேசுக்கு வேறு. முதற் பிரசவம் கொஞ்சம் நேரம் எடுக்கும். தேகநிலையைப் பொறுத்தது. வத்சலா வைத்தியரின் ஆலொசனைப்படி அவ்வளவுக்கு ஓடி ஆட வேலை செய்தது குறைவு. பின்னேரங்களில் வெளியல் போய் சற்று உலாவி வருவோம் வா என்றால், எதாவது சாக்குப் போக்கு சொல்லி கடத்தி விடுவாள். அதோடு கடைசி நேரத்தில் இரத்த அழுத்தம் வேறு. அழுத்தம் கூடினால் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஆகாது என்பார்கள். மகேஷின் தாய் மாமன் மகள் வத்சலா. மகேஷின் தந்தைக்கு மகன் சொந்தத்துக்குள் திருமணம் செய்வது அவ்வளவுக்கு விருப்பமாகியிருக்கவில்லை. சொந்தத்துக்குள், அதுவும் சொந்த மச்சாளை திருமணம் செய்து பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்தால் அறிவு குன்றியவர்களாக இருப்பார்கள் எனப் புள்ளி விபரம் சொல்கிறது என்று மனைவியுடன் வாதாடிப் பார்த்தார். ஆனால் அவளோ தனது ஒரே தம்பியின் மகளான வத்சலாவுக்கு தான் மகேஷ் என்று சிறுவயதிலேயே இரு குடும்பமும் தீர்மானித்துவிட்டது. அதில் இருந்து மாறமுடியாது என மறுத்துவிட்டாள். மனைவியின சொல்லுக்கு கட்டுப்பட்டவர் மகேஷின் தந்தை. நடப்பது நடக்கட்டும். விதியை யாரால் மாற்றமுடியும் என்று பேசாமல் இருந்துவிட்டார். சாதகப்பொருத்தம் கூட பார்க்கவில்லை. தாய் மாமன் மகளை திருமணம் செய்தால் அதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. அது தான் வழக்கம் என்று மகேசின் தாயின் கட்டளைக்கு குடும்பத்தில் மறுப்பு கிடையாது. கல்யாணமாகி மூன்று வருடங்களாகியும் மகேஷ் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. வைத்தியர்களை கலந்தாலோசித்த போது பல பரிசோதனைகளுக்கு பின்னர் இருவரிலும் ஒரு வித குறையுமில்லை என்றார்கள். அதன் பின் வத்சலா கரு தரித்தும் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டு குடும்பத்தில் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. மகேஷ் தம்பதிகள் ஏறியிறங்காத கோயில்கள் இல்லை. ஊர்   சாஸ்திரிமார்கள் சிலரிடம் போய் தங்கள் சாதகங்களைக்காட்டி தங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும் வாய்ப்புண்டா எனக் கேட்டார்கள். அதில் ஒருவர் மட்டும் நிட்சயம் உங்களுக்கு குழந்தைபாக்கியமுண்டு. செவ்வாய்க்கு கிரகசாந்தி செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கிறபடியால் சாந்தி செய்தால், பிறக்கும் குழந்தையைப் பாதிக்காது என்று தன் கருத்தைச் சொன்னார். கருச்சிதைவுக்குப் பின்னர்  மறுபடியும்; குழந்தை கரு தரிப்பதற்கும் மிடையே இரு வருடங்கள் சென்று விட்டன. அந்த இடைவெளியில் தான் அந்த மறக்கமுடியாத சம்பவம் மகேஷின் வாழக்கையில் நடந்தது.                                                                                               ♣♣♣♣♣* மகேஷின் தூரத்து உறவினனான சந்திரன் மகேஷிற்கு பத்து வருடங்களுக்கு மூத்தவன், மகேஷிற்கு பல வருடங்களுக்கு முன்னரே சந்திரனுக்கு திருமணம் நடந்தவிட்டது. அதுவும் காதல் திருமணம். அவனோடு வேலை செய்த அழகியான வசந்தியை தனது பெற்றோரின் எதிர்ப்புக்கு இடையே சந்திரன் திருமணம் செய்து கொண்டான். சந்திரன் நண்பன் மட்டுமல்லாது உறவினன் என்ற காரணத்தால் மகேசுக்கு பல உதவிகளை சந்திரன் செய்திருக்கிறான். பாங்கொன்றில் உயர் பதவியில் இருந்த சந்திரன், தனது செல்வாக்கைப் பாவித்து பாங்கில் தனக்கு வேலை வாங்கிக் கொடுத்த உதவியை மகேசால் மறக்க முடியாது. திருமணமானபோது மகேஷ் உதவி முகைமயாளராக உயர்ந்து விட்டான். வத்சாலாவை திருமணம் செய்ய முன்னர் சந்திரன் குடும்பத்துடன் மகேஷ் மட்டுமே நெருங்கிய தொடர்பு வைத்திருந்தான். சந்திரனின் மனைவி வசந்தி கருவுற்றிருந்தபோது சந்திரனுக்கும் வசந்திக்கும், அவன் துணையாகயிருந்தான். திருமணமாகி அடுத்த வருடமே சந்திரன் தம்பதிகளுக்குப் பிறந்தது அழகான பெண்குழந்தையானாலும் இரு கால்களும் சூம்பிய, உணர்ச்சியற்ற நிலையில் பிறந்தது. தங்களுக்கு ஊனமான ஒரு குழந்தை பிறக்குமென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சந்திரன் தம்பதிகளுக்கு அக்குழந்தையின் வருகை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அக்குழந்தைக்கு அவ்வளவு அழகைக் கொடுத்த இறைவன், ஏன் அந்த குறையையும் சேர்த்து கொடுத்தான் என்று எல்லோரும் மனம் நொந்தனர். குழந்தை மதிவதனிக்கு பிறப்பினால் ஏற்பட்ட ஊனத்தை போக்குவது கடினம் என நினைத்தபோது சந்திரனும் வசந்தியும் வெகுவாக மனப்பாதிப்புக்கு உள்ளானர்கள். குழந்தையின் வளர்ச்சியையும் வருங்காலததையும் நினைத்து கவலைப்பட்டனர். குழந்தையை வளர்ப்பது ஒரு பிரச்சனையாக இருந்தது.  அந்த சமயத்தில் தான் மகேசின் உதவி அவர்களுக்கு கிட்டிற்று.  தனக்கு நன்கு தெரிந்த தாதிப் பெண் ஒருவளை குழந்தை மதிவதனியை பராமரித்து வளர்க்க சந்திரன் தம்பதிகளுக்கு அறிமுகப்படுத்தினான் மகேஷ். அந்த தாதியும் வதனியை தாயைப் போல் கவனித்தாள். வதனிக்கு தமிழ் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தாள். வதனியும் சொல்லிக் கொடுத்ததை கிரகிக்கக் கூடியவளாகவும் விரைவில் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள். அவளுக்குள் எதோ ஒரு திறமை இருப்பதை மகேஷ் கண்டான். அதை சந்திரனுக்கும் வசந்திக்கும் எடுத்துச் சொல்லியும் ஊனமான தமது மகள் மேல் அவர்களுக்கு இருந்த வெறுப்பும், தங்களுக்குப் பாரமாக இவள் வந்து பிறந்திருக்கிறாள் என்பதால் ஏற்பட்ட அக்கரையின்மையும அவர்களுக்கு சந்திரன் எடுத்துச் சொன்னதை ஏற்றுக் கொள்ள தடையாகயிருந்தது. பெற்றோரின் அன்புக்காக ஏங்கித் தவித்த வதனிக்குச் சந்திரனி;ன் அன்பு கிடைத்தது. வேலையில் இருந்து வீடு திரும்பும் போது அவன் கையில் சொக்கிலேட்டுனும் கதைப்புத்தகங்களுடனும் அடிக்கடி வதனியைப்  போய் பார்க்காமல் மகேஷ் போவது கிடையாது.  காலப்போக்கில் வதனியின் வளர்ச்சியுடன் கூடிய அழகு சந்திரனை  பிரமிக்க வைத்தது பத்து வயதாக இருக்கும் போதே வயதுக்கு கூடிய வளர்ச்சி அவளது கால்களுக்கு மேல்பாகத்தில் இருந்ததைக் கண்ட மகேஷ், இவளுக்கு மட்டும் நடக்க முடியுமானால்  இவளது அழகிற்காகவே சீதனம் இல்லாமல் பலர் மணக்க முன்வந்திருப்பார்கள். ஆனால் பாவம் இந்த சிலையில் இவளை மணமுடிக்க துணிந்து எவரும் முன்வருவார்களா என்பது சந்தேகம். சந்திரன் தம்பதிகளின் வாழ்க்கைக்குப் பின் .வதனியை யார் கவனிக்கப் போகிறார்களோ தெரியாது. திடீரென்று ஒருநாள் பத்து வயதான வதனி ருதுவானது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. வதனி ருதுவான போது செய்யவேண்டிய சடங்கை ஒருத்தருக்கும் விளம்பரப்படுத்தாமல் இரகசியமாக சந்திரன் செய்து முடித்தான். அதுவும் மகேஷ் வற்புறுத்தியபடியால்.                                                                                        ♣♣♣♣♣ “ மாமா நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் வாசித்துப்பாருஙகள்” என்ற வதனி தான் எழுதிய கவிதையை நீட்டிய போது அதை வாங்கி வாசித்த மகேஷால் நம்பமுடியவில்லை. இந்த சிறுமிக்கு இவ்வளவு திறமையிருக்கிறதா? உடலின் ஒரு பாகத்தில் இழந்த சக்தி முழவதும் மூளையில் திரண்டு செயலாற்றுகிறாதா? திருமணமாகாது காதலுக்காக ஏங்கும் ஒரு கருமை நிறமுடைய கன்னிப் பெண் ஒருத்தி பற்றிய கவிதையது. அதில் அப்பெண் தனது மனதில் உள்ள ஆசைகளை ஒளிவு மறைவின்றி எடுத்துச்சொல்கிறாள். கரும்முகிலில் இருந்து மழை கொட்டுவது போல் அவள் கண்களில் இருந்து பொழியும் கண்ணிரைத் துடைக்க ஒரு முடமானவன் முன்வருகிறான்.” அது தான் கவிதையின் கரு. அக்கவிதை மூலம் வதனி தனது ஏக்கத்தை மறைமுகமாக எடுத்துக் காட்டியிருப்பதை மகேஷால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அவனால் தான் என்ன செய்;ய முடியும்? கவிதையில் வரும் முடவனைப் போல் மாற அவனால் முடியாதே!                                                                                     ******** இரு நாட்கள் லீவு கேட்டு தாதிப் பெண் ஊருக்குச் சென்று விட்டாள். அந்த இரு நாட்களும் வதனியைக் பகல் நேரங்களில் கவனிப்பதற்கு சந்திரனாலும் மனைவியாலும்; வேலை காரணமாக முடியவில்லை. ஏதாவது ஊனப்பிள்ளைகள் வளரும் விடுதி ஒன்றில் தாதி வரும் வரை சேர்த்து விடுவோம் என்று சந்திரனும் வசந்தியும் சொன்னபோது சந்திரனுக்கு வதனியை அனாதையைப் போல் விடுதியில் விட விருப்பமில்லை. அவ் விடுதிகள் வியாபாரத்திற்காக நடத்தப்படுபவை. குழந்தைகளுக்கு நேரகாலத்திற்கு சத்துள்ள உணவு கொடுக்க மாட்டார்கள். கவனிப்பும் குறைவு என்று வாதாடி, தாதி வருமட்டும் தான் லீவு எடுத்து பகல் நேரங்களில், அவளின் தேவைகளை கவனித்து ஆவன செய்ய மகேஷ் முன்வந்தான். அந்த உடன்பாடே அவனுக்கு அவன் வாழக்கையில் என்றும் அழிக்கமுடியாத மாபெரும் வடுவை உருவாக்கிவிட்டது. அன்று நடந்தது அவனுக்கு மட்டுமே தெரியும். தன் செயலை நினைத்து வெட்கப்பட்டான் மகேஷ்தன் செயலை நினைத்து வெட்கப்பட்டான் மகேஷ். வத்சலாவைக்கு கூட அவன் அதைச் சொல்லவில்லை. எங்கே தங்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் போய்வடுமோ என்ற பயமே காரணம். வதனியைப் பராமரிக்க ஒப்புக் கொண்ட இரண்டாம் நாள் மத்தியானமே அந்தத தவறு நடந்தது. அன்று என்றுமில்லாதவாறு வெளியில் மழை இடிமின்னலுடன் கொட்டிக் கொண்டிருந்தது. சக்கர வண்டியில் அறைக்குள் இருந்த வதனிக்கு இடியும் மின்னலும் ஏதோ ஒரு விதமான பயத்தை உருவாக்கியது. ஜன்னலூடாக வீசிய குளிர் காற்றில் அவள் உடல் சூட்டைத் தேடியது. உடல் குளிரினால் நடுங்கத் தொடங்கியது. இடியின் சத்தத்தில் பயமும் அவளைக் கவ்விக்கொண்டது. “மாமா இங்கை கொஞ்சம் வாங்கோ என்று” வதனி மகேசைக் கூப்பிட்டாள். ஹாலில் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த மகேஷ் ஏதோ அவசரமாக்கும் அது தான் வதனி கூப்பிடுகிறாள் என நினைத்தான். “ என்ன வதனி. என்ன வேண்டும்? என்று வதனி இருந்த அறைக்குள் போனான். அவளது பார்வை என்றுமில்லாத வாறு அவனுக்கு புதுமையாக, தன் மனதை சுண்டியிழுப்பது போல் இருந்தது. “எனக்கு குளிருது மாமா. என்னைகொஞ்சம் போர்த்து விடுங்கோ. ஜன்னலையும் சாத்தி விடுங்கோ” என்றாள் வதனி. அவளது போர்வையால் மூடப்படாத கால்கள் சூம்பியிருந்தாலும் அதில் ஒரு கவர்ச்சியிருந்தது. மதிக்கு  பன்னிரணட்டு வயது என எவரும் சொல்லமாட்டார்கள்.  அவளது கால்களுக்கு மேல் அவளது உடலில் பதினாறு வயது உடைய பெண்ணுக்குள்ள கவர்ச்சியான பருவமாற்றம் இருந்தது. திரண்ட மார்பகம், நீண்ட கண்களும் விரல்களும் ,கருங்கூந்தல். அழகு தேவதையைப் போல் காட்சி தந்தாள். நிறத்தில் கூட தாயைப்போன்ற பொன்னிறம். இறiவா ஏன் இநத அழகிய படைப்பில் ஒரு குறையை வைத்து படைத்து வஞ்சித்து விட்டாய், என சிந்திததவாறு பீரோவுக்;குள் இருந்த போர்வையை எடுத்து வந்து அவள் கைகளில் மகேஷ் கொடுத்தான். கொடுக்கும் போது என்றும் இல்லாத வாறு அவன் மேல் பட்ட அவளின் விரல்களின் ஸ்பரிசம் அவனுக்கு ஏதோ நரம்புகளில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வைக் கொடுத்தது. அவளது பார்வை அவனை காந்தததைப் போல் கவர்ந்து இழுப்பது போல் இருந்தது. “ என்ன மாமா புதுமையாக கையிலை தாறியல். என்னை போர்த்து விடுங்கோவன் ”, கெஞ்சிக் கேட்டாள் வதனி பதில் பேசாமல் போர்வையை அவளிடமிருந்து வாங்கி அவள் உடம்பை மகேஷ் போர்த்தினான். அப்போது அவனுடைய கைகள் முதல் தடவையாக அவளது திரண்ட மார்பகங்களில் பட்டது. அந்த ஸ்பரிசம் தூங்கிக் கொண்டிருந்த அவனது உணர்ச்சிகளை உசுப்பிவிட்டது. அவன் மனதில் ஏதோ எதிர்பாராத எண்ணங்கள் தீடிரெனகுடிபுகுந்தது. அவள் மீது அவன் வைத்திருந்த அன்பு விபரீ ஆசையாக மாறியது. அவ்வளவு தான் எதோ வெறிபிடித்தவன் போல் வதனியைக் கட்டிப்பிடித்து அவளது சிவந்த உதடுகளில் முத்தமிட்டான். வெளியில் கேட்ட இடி ஓசையில் அவனது முத்தத்தின் சத்தம் கரைந்தது. வதனிக்கு அது புது அனுபவம். பிறந்ததிற்கு பெற்றோர் கூட அவள் கன்னத்தில் முத்தம் இடவில்லை. மகேஷ் மாமா கூட அப்படி கன்னத்தில ஒர நாளாவது முத்தமிட்டது கிடையாது. இதென்ன புதுமையாக நடக்கிறார் என்றது அவள் மனம். முத்தமிடும் போது சந்;திரனின் கைகள் அவளது மார்பகத்தை இறுகப் பற்றிக்கொண்டது. எங்கிருந்தோ ஒரு மிருகத்தனம் அவனை ஆட்கொணடது. அவன் தன்னிலை மறந்தான். வதனியின் உடல் நிலைமறந்தான். அவன் மூச்சின் உஷ்ணம், அவளின் கன்னங்களுக்கு சூட்டைக் கொடுத்தது. அவள் அவன் பிடியில் இருந்து திமிறினாள். அவளால் முடியவில்லை. பாவம் சக்கர வண்டியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுந்து ஓடக்கூடிய நிலையில் அவள் இருக்கவில்லை. “வேண்டாம் மாமா. எனக்கு நோகுது என்னை விட்டிடுங்கோ. என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ. நான் ஒரு முடமானவள்“, என அவள் கெஞ்சினாள். அவன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாத காமவெறியனானான். அவள் மேலிருந்த பாசம் காமமாயிற்று. கட்டுக்கடங்காமல் போயிற்று. சில நிமிடங்கள் வெளியில் நடந்த இயற்கையின் நடனத்துக்கு போட்டியாக அறைக்குள் நடந்த வெறியாட்டத்தை வதனியால் எதிர்க்க முடியவில்லை. அவளுக்கு மட்டும் நடக்கும் சக்தியிருந்திருந்தால் அவனிடம் இருந்து விடுபட்டு தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்டு அறையை விட்டு ஓடியிருப்பாள். சில நிமிடங்களில் தனது காரியம் முடிந்ததும் திரும்பிப் பாராலே அறையைவிட்டு ஒரு குற்றவாளி போல் வெளியேறினான மகேஷ்.. ஒரு கொலையைச் செய்தவன் போன்ற குற்ற உணர்வு அவனுக்கு. அதுவும் ஒரு ஊனமான பெண்ணை, தன் பாதுகாப்பில் தன்னை சகோதரனாக நம்பி விட்டுச்சென்ற சந்திரனின் மகளை சீரழித்து விட்டேனே. நான் ஏன் அப்படி சொற்ப நேரத்துக்குள் மிருகமா மாறிவிட்டேன்? அதுவும் எனக்கெனறு ஒரு மனைவியிருக்கும் போது. அவனால் தன் கீழ்தரமான நடத்தையை நினத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அறைக்குள் வதனி  விம்மி விம்மி அழும் சத்தம் கேட்டது. அவ்வழுகை அவனைச் சித்திரவதை செய்வது போலிருந்தது. சந்திரனும் வசந்தியும் வேலை முடிந்து வீடு திரும்பமுன் நடந்த சம்பவத்திற்கான அறிகுறிகள் இல்லாது செய்துவிட்டான் மகேஷ். பாவம் வதனி மௌனமாக அதிர்ச்ச்pயாலும் போராடிய களைப்பாலும் சக்கரவண்டியில் இருந்த நிலையிலேயே தூங்கிவிட்டாள்;. அவளைப் பார்க்க அவனுக்கு பரிதாபமாக இருந்தது. களங்கம் மற்ற ஒரு சிறுமியை சில நிமிடங்களில் கசக்கிவிட்டேனே. ஏன் இப்படி ஒரு தவறை இந்த ஊனமுற்ற சிறுமிக்கு செய்தோம் என்பது போல் இருந்தது. சம்பவம் நடந்த அடுத்த இரண்டு நாட்கள் அவனது குற்றமுள்ள மனம் அவனை சந்திரன் வீட்டுப் பக்கம் போகவிடவில்லை. தனக்கு சுகமில்லை என சந்திரனுக்கும் சாட்டு சொல்லிவிட்டு வீட்டில் தங்கிவிட்டான். வத்சலாவுக்கு அவன் போக்கு ஆச்சரியததைக் கொடுத்தது. அடிக்கடி வதனியைப்பற்றி வீட்டில் பேசுகிறவன் அந்த இருநாட்களும் பேச்சே எடுக்கவில்லை. அவன் செய்த மாபெரும் குற்றச் செயலின் விளைவு மூன்றாம் நாள் வதனி தற்கொலை செய்த செய்தி அவனது காதுகளுக்கு எட்டியபோது தெரிந்தது. அவன் துடிதுடித்துப்போனான். “என்ன அத்தான் உங்கள் நண்பன் சந்திரனின்  மகள் வதனிக்கு என்ன நடந்தது.?. எதற்காக திடீரென தற்கொலைசெய்துகொண்டாள்? “ என்று வத்சலா கேட்டபோது மகேசுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. “பாவம் வதனி. தன் வருங்காலத்தைப்பற்றி சிந்தித்திருப்பாள். கொஞ்ச நாட்களாக அவள் போக்கு ஒரு மாதிரி இருந்தது. பேசுவதும் குறைவு. ஒருத்தருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பாள் என நினைக்கிறேன். பெற்றோரிடம இருந்து அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை” என்று ஒரு பொய் சொல்லித் தப்பிததுக்;கொண்டான் மகேஷ்.                                                                        ♣♣♣♣♣ அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு தன் சிந்தனையில் இருந்து விடுபட்டான் மகேஷ். “மிஸ்டர் மகேஷ் என்பவர் யார்? “அறைக்குள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடனும் , கையில் ஒரு படிவத்துடனும் , அறைக்குள் வந்த வெள்ளை யுனிபோர்ம் அணிந்த பெண் டாக்டர் ஒருத்தி கேட்டாள். “ நான் தான் மகெஷ் எதாவது பிரச்சனையா டாக்டர்.? “ “உங்கள் மனைவியின் பிரசவம் சற்று சிக்கலானது. காரணம் இரட்டைக் குழந்தைகளை உஙகள் மனைவி கருத்தரித்திருக்கிறாள். அது உங்களக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.” “தெரியும். என்மனைவி கருத்தரித்து ஐந்து மாதமாக இருக்கும் போதே கைனோகொலஜிஸ்ட் ஸ்கான் செய்த ரிப்போர்ட்டைப் பார்த்து எங்களுக்கு இரட்டைக் குழந்தை கிடைக்கப் போகிறது என்று சொன்னவர். ஆனால் குழந்தைகளுக்கு சிறு பிரச்சனை ஏற்படலாம். ஏன் என்றால் என்மனைவியின் கருப்பை இரு குழந்தைகளும் வளர்வதற்கு விரிந்து கொடுக்கக் கூடிய வலுவை இழந்துவிட்டதாம் என்றவர்” “ அப்போ உங்களுக்கு ஏற்கனவே உங்கள் மனைவியின் நிலமை தெரியும் என்கிறீர்கள்” “ ஆமாம் டாக்டர்” “அது தான் குழந்தைகள் பிறப்பதற்கும் தாமதமாகிறது. குழந்தைகள் தாமாகவே வெளியேவர முடியாது கருப்பையுக்குள் பின்னிக்கிடக்கின்றன. சில வேலை சத்திர சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டி வரும். நேரம் தாமதமாக உங்கள் மனைவியின் உயிருக்கும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். ஒப்பிரேசன் செய்ய இந்த போமில் உங்களின் கையெழுத்து தேவை” எனப் படிவத்தையும் பேனாவையும் அவனிடம் டாக்டர் நீட்டினாள். மறு பேச்சில்லாமல் அதில் தனது சம்மதத்தை கையெழுத்திட்டு கொடுத்தான் “டாக்டர் , ஒப்பிரேசனுக்கு முதல் என்மனைவியை நான் உள்ளே வந்து நான் பார்க்கலாமா “? “தாராளமாக பார்க்கலாம். ஒப்பிரேசன் நடக்க குறைந்தது இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். சேர்ஜன் இன்னொரு சிசிரியன் செய்து கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் அடுத்த  ஒப்பிரேசன  உங்களுடைய மனைவியுடையது தான்”. டாக்டரைப் பின் தொடர்ந்து மகேஷ் சென்றான்.                                                                                                ♣♣♣♣♣ சேர்ஜன் சத்திரசிகிச்சையை முடித்தபின்னர் வெளியே வந்தார். மகேஷ் அவர் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் காத்திருந்தான். “மிஸ்டர்மகேஷ். உமக்கு ஒருகவலை தரக்கூடிய செய்தி என்று சொல்லவேண்டியிருக்கு., என்றார் சற்று அமைதியாகச் சோகத்தோடு.. “என்ன டாக்டர் என்ன நடந்தது?. குழந்தை பிறந்துவிட்டதா?. என் ;மனைவி எப்படி இருக்கிறாள்.”?  என்றான் மகேஷ் பதட்டத்துடன். “உமது மனைவியின் உயிருக்கு ஆபத்தில்லை. நான் எதிர்பார்த்ததை விட  இந்த ஒப்பிரேஷன் கூடிய நேரம் எடுத்துவிட்டது. மன்னிக்கவும். என்னால் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தான் காப்பாற்ற முடிந்தது. பிறக்கும் போது இறந்தே ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை உடல் முழுமையாக வளராதது தான் காரணம் என நினைக்கிறேன். உங்கள் மனைவியின் கருப்பைபையில் பிரச்சனை உண்டு. அதை வெகுவிரைவில் கவனிப்பது நல்லது. இனியும் கருத்தரிக்காமல் இருப்பது அவவுக்கு நல்லது” “அப்ப மற்றை குழந்தை”? “பிறந்த மற்ற குழநதை பெண் குழந்தை. உள்ளே போய் குழந்தையைப் பாருங்கள். இவ்வளவு தான் என்னால் செய்ய முடிந்தது“,. டாக்டர் சொன்னார். வத்சலா இருந்த அறைக்குள் மகேஷ் சென்ற பொது  அவள் அரை மயக்கத்தில் இருந்தாள். அவனைக் கண்டதும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். “அவவோடு இப்போ அதிகம் பேசாதீர்கள்.  மனக் குழப்பத்தில் இருக்கிறா.”  என்றாள் பக்கத்தில் நின்ற நேர்ஸ். அதே சமயம் ஒப்பிரேசன் செய்த சர்ஜனும் உள்ளே வந்தார். “மகேஷ். உமக்கு இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்திட்டன். உயிரோடு பிறந்த மற்ற குழந்தைக்கு கால்கள் முழு வடிவம் எடுக்காதலால் குழந்தை ஊனமாக பிறந்திருக்கிறது.. இது இப்படி ஏற்படவேண்டி வந்ததிற்கு உமது மனைவியின கருப்பையில் இரண்டு குழந்தைகள் வளர இடமில்லாததே. அதோ தொட்டிலுக்குள் உமது பெண் குழநதை படுத்திருக்கிறாள் போய்ப் பாரும்” என்றார். மகேசுக்கு சொன்ன செய்தி அதிர்ச்சியாக இருந்தது. “என்ன டாக்டர் சொல்லுகிறீர்கள் பிறந்த உயிரோடு இருக்கும் எனது குழந்தையின் கால்கள் ஊனமா “? “ஆமாம். என்னால் என்ன செய்யமுடியும்”? அதிர்ச்சியால் வாயடைத்து, நிலை தடுமாறிப் போய் மெதுவாக தொட்டிலை எட்டிப்பார்த்தான் மகேஷ். குழந்தை நிம்மதியாக விரலைச் சூப்பியவாறு தூங்கிக் கொண்டிருந்தது. என்ன வதனியின் மறுபிறவியா இந்தக் குழந்தை. நான் செய்த குற்றத்துக்கு இறைவன் என்னை பழிவாங்கிவிட்டானா? அவன் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது. கைக்குட்டையால் வாயைப் மூடிக்  கொண்டு, சத்தம் வத்லாவுக்கு கேட்காதவாறு தனக்குள் அழுதான் மகேஷ்.                                                                                             ♣♣♣♣♣ 12 அத்தியாயம் 12 (செவ்வாய் தோஷம்) [Horoscope2]                                                       செவ்வாய் தோஷம் ஊரெலு சதாசிவம் சாஸ்திரியார் மைதிலியின் ஜாதகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். வலது கை விரல்கள் எதையோ கணக்கிட்டுககொண்டிருந்தன. அடிக்கடி பேப்பரில் குறித்து கொள்வதும் ஜாதகத்தையே முறைத்துப் பார்பபதுமாக இருந்தார். டாக்டர் ஒருவர் வைத்திய பரிசோதனை ரிபபோர்டைப் பார்த்து என்ன வியாதி என்று சொல்ல சிந்திப்பது போல் தேற்றமளித்தார் சாஸ்திரியார். அவருக்கு முன்னே கந்தையரும் பாக்கியமும் சாஸ்திரியார் உதடுகளில் இருந்து என்ன வார்த்தைகள் வெளிவரப் போகிறது என்பதை எதிர்பார்த்தபடி இருந்தனர். அடிக்கடி அவரது முகச் சுழிப்பு மைதிலியின் தந்தை கந்தையருக்கும் தாய் பாக்கியத்துக்கும் பதட்டத்தைக் கொடுத்தது. ஏதோ வைத்தியர் ஒருவர் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பற்றி சொல்லப் போவது போன்ற மனப்பயம் அவர்களுக்கு. அதுவும் ஒரே மகள் முப்பத்திரண்டு வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறாள் என்றால் ஜாதகத்தில் எதோ குறை இருக்கவேண்டும். சதாசிவம் சொன்னால் தான் அவர்கள் நம்புவார்கள். அவர்களது குடும்ப வைத்தியர். வழக்கறிஞர் போல் குடும்ப சாஸ்திரி அவர். உதட்டை பிதுக்கிய சதாசிவத்தாரைப் பார்த்து: “என்ன சொல்லுது மைதிலியின் ஜாதகம். கலியாணம் எப்ப நடக்கும். உந்த பெடியன்றை சாதகத்துக்கு பொருந்துமே “? பொறுமையை இழந்த கந்தையர் கேட்டார். பாவம் கந்தையா தம்பதிகள் குறைந்தது ஐம்பது பொருத்தங்களாவது மகளுக்கு பாhத்திருப்பாhகள். வயது கூடக் கூட எங்கே அவளுக்கு கலியாணம் நடக்காமல் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. அக்கா மகனைக் கேட்டு வந்த போது கந்தையர், ஜாதகப் பொருத்தம் பார்த்ததாலே கலியாணம் நடக்காமல் போய்விட்டது. அதை பாக்கியம் அடிக்கடி அவருக்குச் சுட்டிக்காட்டுவாள். “மெய்யே பாருங்கோ. உங்களுடைய அக்கா மகனுக்கு கலியாணம் நடந்து நாலு வருஷமாயிட்டுது. இப்ப இரண்டு பிள்ளைகளுக்கு அவன் அப்பா. அவனுக்கு மைதிலியை பொருத்தம் பார்க்காமல் செய்து வைத்திருந்தால் இப்ப பேரப்பிள்ளைகளையும் கண்டிருப்போம். சொந்த மச்சானுக்கு சாதகம் பார்க்க தேவையில்லை என்பினம். நீங்கள் கேட்டால் தானே”. பாக்கியம் குறைப்பட்டாள். “சரியான செவ்வாய் தோஷம் இருக்கு உங்கடை மகளுக்கு. லக்கனத்தில் செவ்வாய். பொருத்தமான செவ்வாய் தோஷமுள்ள மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் கெதியிலை விதவையாப்போகிற வாயப்புண்டு. அல்லது கணவனை நோயாளியாக்கிப் போடும. நான் இவ்வளவு காலமும் எத்தனையோ சாதகங்களை பார்த்திருக்கிறன் இது ஒரு சரியான பாவம் கூடிய சாதகம். பெடியன்டை சாதகம் பாவம் குறைந்தது. செய்து வைத்தால் பிறகு கெதியிலை உங்கடை மகள் விதவையாவாள்” திருவாய் மலர்ந்தருளினார் சதாசிவம். “உந்த ஜாதகக்காரன் கொழும்பிலை நல்ல வேலையிலை இருக்கிறான். எஙகளுக்குத் தெரிந்தவர் ஒருவர் தான் இந்த ஜாதகத்தை அனுப்பினவர். சீதனமும் அவ்வளவு தேவை இல்லை” “எதுக்கும் செவ்வாய் தோஷம் உஙகடை மகளுடைய கலியாணத்துக்கு குறுக்காலை நிக்குது”, என்றார் சதாசிவம். “ சாத்திரியாh, நீங்கள் சொல்லுகிற தோஷம் எங்களுக்கு விளங்குதில்லை. இப்பதான் செவ்வாயிலை தண்ணீh இருக்கலாம் என்று ரொபர்ட் அனுப்பி ஆராச்சி நடக்கிறது. மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதாகவும் சொல்லுகினம். நீங்கள் என்னடாவெண்டால் அங்கை போகிறது தோஷம் என்கிறீர்கள். கொஞ்சம் விளக்கமாகய் தான் சொல்லுங்கோவன்” விஞ்ஞான ஆசிரியையாக இருந்த பாக்கியம் தனக்கு விஞ்ஞானம் தெரியும் என்பதை மறைமுகமாக எடுத்துக்காட்டினாள். சாஸ்திரியார் விளக்கினார்: “ஒவ்வொருவருக்கும் அவர் அவர்கள் முற்பிறவியில் செய்த கர்மாக்களின்படி பிறக்கும் போது தோஷங்களோடு பிறக்கினம். அனைத்து கிரகங்களுக்கும் தோஷமுண்டு. ஆனால் பிரபல்யமானது செவ்வாய் தோஷம் தான். கிரகம் சிகப்பு நிற நிலத்தை கொண்ட படியால் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. செவ்வாய் இரத்த ஓட்டத்துடனும் யுத்தத்துடனும் தொடர்புள்ள கிரகம். ஆகவே குருதி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் ஜாதகத்தில செவ்வாய் கிரகத்திற்கும் தொடர்புண்டு. கிரேக்கர் கூட செவ்வாயை போர்க் கடவுளாகவே கருதினர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் ஆய்வுசெய்தால் தோஷம் இல்லை என்று கூற முடியாது. தோஷம் வேறு, பாதிப்பு வேறு. பிறக்கும் போது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு இராசியாகிறது. லக்கனத்துக்கு செவ்வாய் 2,7,8,12 ல் இருந்தால் தோஷமாகும். இராசிக்கும் சுக்கிரனுக்கும் 2, 7, 8, 12ல்  செவ்வாய் இருப்பின் தோஷம் கடுமை மற்றைய இடங்களில் நிற்கும் செவ்வாய் தோஷமில்லாது சந்தோசத்தை தருவார். ஆணுக்கு 2இலும் , பெண்ணுக்கு 4-12 இலும் , ஆண் பெண் இருவருக்கும் 8ல் செவ்வாய் இருந்தால் தோஷபாதிப்பு அதிகமாகிறது. 2ல் செவ்வாய் உள்ள ஜாதகத்திற்கு 12ல் செவ்வாய் உள்ளவர் கன பொருத்தமாகும். அதே போன்று 4ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துக்கு 4ல் செவ்வாய் உள்ள தோஷமே சேர்க்க வேண்டும். 7, 8 ல் செவ்வாய் நிற்க இதே அமைப்பு சேர்க்க பாதிப்பில்லை. செவ்வாய் 2ல் நின்று அவ்விடம் மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷமில்லை. 4ல் நின்று மேஷம் விருச்சிகமாகில் தோஷமில்லை. 7ல் நின்று மகரம், கடகமாகில் தோஷமில்லை. 8ல் நின்று தனுசு, மீனமாகில் தோஷமில்லை. 12ல் நின்று கும்பம், சிம்மம் ஆகில் தோஷமில்லை”, சதாசிவத்தார் விளக்கினார். “அடேயப்பா தலைசுத்துது இதைக் கேட்டக. செவ்வாய் இருக்கிற வீட்டைப் பொறுத்துத்தானா  பலன் கிடைக்கும்”? “ஆமாம். 2 இல் செவ்வாய் என்றால்- நெருப்பு, திருடர் பயம் ஏற்படும். 4 இல் செவ்வாய் – தாயால் திருமணம் தடைப்படும். 7 இல் செவ்வாய் காதலில் தோல்வி ஏற்படும். 8ல் செவ்வாய் மர்மஸ்தான நோய் ஏறபடும். 12 இல் செவ்வாய் பொருந்தாத முதலீடு செய்து இழப்பு”. “அப்ப செவ்வாய் நல்லது செய்யாதா”?, கந்தையர் கேட்டார். “ஏன் செய்யாது?. செவ்வாயின் கேந்திர, கோணத்தில் குரு சுக்கிரன் நின்று வலுக்க பேரிகை யோகம” உண்டாகும். செவ்வாய் 3, 6, 10,11ல் நின்று குரு பார்க்க அதன் தசகாலம் அனைத்தும் நலமும் கூடும். மகரச்செவ்வாய் யோகம். அதோடு சந்திரன் சேர்ந்திருப்பின் சசிமங்கள யோகம். பிறக்கும் பிள்ளைகள் கீர்த்தியுடன் வாழ்வார்கள். செவ்வாயுடன் குரு கூட குருமங்கள யோகம் கிடைக்கும். செவ்வாய் சுக்கிரனோடு கூடியிருப்பின் சுக்கிர மங்கள யோகம். பெண்ணுக்கு கூடாது ஆனால் ஆணுக்கு தொழில் செய்யும் மனைவி கிடைக்கும். மீனத்தில் செவ்வாய் சுக்கிரன் கூட எதிர்பாராது தன வரவு கிடைக்கும்” “அப்ப வெள்ளையர்கள் திருமணத்துக்கு முன் செய்கிற இரத்தப் பரிசோதனை (Blood Test)  என்று சொல்லுங்கோவன். அது அவையள் பிள்ளைகள் குறையில்லாமல் பிறக்கவும், கருச்சிதைவு நடைபெறாமல் இருக்கவும் பரிசோதிக்கினம” பாக்கியம் மேலும் விளக்கம் கேட்டாள். “இருக்கலாம். எனது அனுபவப் படி சரியாக செவ்வாய் தோஷப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யாவிடில் பெண்ணுக்கு தோஷப்பாவம் கூடுமாகில் ஆணை வருத்தக்காரனாக்கிவிடும். அதே போன்று ஆணுக்கு தோஷ பாவம் கூடுதலாகின் பெண்ணைப்பாதிக்கும். கருச்சிதைவும் ஏற்படலாம்”, சதாசிவம் விளக்கினார். “சாஸ்திரியார் நீங்கள் செவ்வாய் தோஷத்தைப் பற்றி சொன்னது இவ்வளவும் தானா? கந்தையர் கேட்டார். “இல்லை இன்னும் பல விஷயஙகள் இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லி உங்களை குழப்ப விருப்பமில்லை. என்னிடம் உங்கடை மகளுடைய சாதகத்துக்கு பொருத்தமான ஒரு சாதகம் இருக்கு. உங்களுக்கு விருப்பம்மெண்டால் பார்க்கட்டே. முற்றானால் எனக்கு தரகர் கொமிஷன் தந்தால் போதும” சதாசிவம் மன் ஜாதகக் கட்டுக்குள் இருந்த ஒரு சாதகத்தை தேடி எடுத்தார். செவ்வாய் தோஷத்தை அடிப்படையாக வைத்து உழைக்கலாம் என்ற நப்பாசை அவருக்கு. “அதுக்கென்ன பார்ப்போமே. மாப்பிள்ளை எப்படி? வடிவானவனே? படித்தவனே?. சாதி சனம் எப்படி? என்ன வேலை? எந்த ஊர்? பாக்கியம பேள்விகளட மேல கேள்விகள்; கேட்டாள். “முதலிலை ஜாதகத்தையும் படத்தையும் பாருங்கோ. பெடியன் பெயர் இரமணன். கொழும்பிலை இன்ஜினியராக வேலை செய்கிறான். தகப்பனும் இன்ஜினியராக இருந்து இரண்டு வருஷத்துக்கு முந்தி தான் இறந்தவர். பொறுப்பில்லாத பையன். ஆனால் வயது வித்தியாசம் தான் குறைவு. படத்தைப் பாருங்கோவன் என்று படத்தை நீட்டினார் சாஸ்திரியார். படத்தை வாங்கிப பார்த்தார் கந்தையர். “எங்கேயோ பெடியனைப் பார்த்தமாதிரி இருக்கு” என்றார். “ எங்க தாருங்கோ பார்ப்பம்”, என்று  கந்தையரிடம் இருந்து படத்தை வாங்கினாள் பாக்கியம். “என்ன உங்களுக்கு ஆளைத் தெரியவில்லையே.? உங்களோடை வேலை செய்த சங்கரப்பிள்ளையர் கொழும்பிலை இருந்து அனுப்பின மாப்பிள்ளை தான் உது:”, எதையோ கண்டுபடித்தவள் மாதிரி பாக்கியம சொன்னாள். “அட அதே பெடியன். அது பொருத்தமில்ல என்று முடிமாவடி சாஸ்திரி சொல்லிப் போட்டார். பிறகு என்னத்துக்கு திரும்பவும் இதை எடுப்பான்” கநதையர் சொன்னார். சதாசிவம் சாஸ்திரியாhருக்கு முடமாவடி சாஸ்திரியார் பொறுத்தமில்லை என்று சொன்னது அவர் பிழைப்பை கெடுபடபது போல் இருந்தது. நல்லகாலம் முடமாவடி சாஸ்திரியார் இறந்து ஆறுமாதமாகிவிட்டது. அவர் பாhத்த பொருத்தம் சரியில்லை என்று சொன்னால் திரும்பவும் அவரைப் போய் கேட்கவே போகினம் ? சதாசிவம் சிந்தித்தார். “அவர் சாதகத்தை சரியாக பார்க்கவில்லை போல இருக்கு. இரண்டு பெருக்கும் ஒரே இராசி, ஒரே இலக்கனம். அதோடை செவ்வாய் தோஷப் பாவமும் சமனாக இருக்குது. தாலிப் பொருத்தம் கூட உண்டு”. “எதுக்கும் வேண்டாம் என்று தள்ளி வைத்த கலியாணப் பேச்சை திரும்பவும் எடுக்கிறது  எனக்கு நல்லதாகத் தெரியவில்லை” என்றார் கந்தையர். “நீங்கள் உதையெல்லாம நுணுக்கமாய் பார்க்கப் போனால் மைதிலுக்கு கலியாணம் நடந்தமாதிரிதான். நான் வாறன் எனக்கு வேலை இருக்கு” சதாசிவம் புறப்பட்டார். கந்தையரும் பாக்கியமும் ஒருவர் முகத்தைப் ஒருவர் பார்த்தபடியே திகைத்து நின்றனர்.                                                                                       ♣♣♣♣♣ மாதங்கள்  பல சென்றன.. ஒரு நாள் சதாசிவம் சாஸ்திரியார் கந்தையரை சந்திக்க  நேர்ந்தது. “ என்ன கந்தையர் மகளுக்கு ஏதும் கலியாணம் ஒழுஙகாகி விட்டதே”? “இல்லை” என்றார் சுருக்கமாக கந்தையர். “ அப்ப என்னிடம் ஒரு நல்ல சாதகம் இருக்குது மகளுக்குப்பொருத்தம் பார்ப்போமா,”? “ தேலையில்லை” பதில சொன்னார் கந்தையர். “ ஏன’ தேவையில்லை:?.சாஸ்திரியார் கேட்டார். “ அவள் தனக்கு கலியாணம் வேண்டாம் என்று சொல்லி மதம் மாறி கன்யியாஸ்திரியாகி விட்டாள்” என்றார் கவலையொடு கநதையர். சாஸ்தரியார் ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு நழுவினார்.                                                                                    ♣♣♣♣♣ 13 அத்தியாயம் 13 (விசித்திர உறவு) [1344925417_bc01f78950_z]                                                             விசித்திர உறவு கொழும்பிலிருந்து வடக்கே நாற்பத்தைந்து மைல் தூரத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த நிறைந்த கிராமம் பொல்ககாவலை. அக்கிராமத்தை வடக்கே போகும் ரயில் பிரயாணிகள் தெரியாதவாகள் இல்லை என்று துணிந்து சொல்லலாம். . பெயருக்கேற்ப தென்னந்தோட்டங்கள் நிறைந்த கிராமம் அது. பிரபல்யமான புகையிரதச் சந்தி அக்கிராமப் பெயரை  பலர் மனதில் பதிய வைத்து விட்டது. புகையிரத நிலையத்தில் நின்று கிழக்கே பார்த்தால் பனிபடர்ந்த மலைத்தொடர்களையும், தெயிலைத் தோட்டங்களையும், மேற்கே பார்த்தால் தென்னம் தோட்டங்களையும் வயல்வெளிகளையும்; காணலாம். கொழும்பு, கேகாலை, குருணாகலை ஆகிய நகரங்களில் இருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும் இடமது. கண்டிக்கும் பதுளைக்கும் யாழ்பாணத்துக்கும்; போகும் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய புகையிரத நிலையமது. ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மாடாக உழைத்த மலைநாட்டுத் தமிழர்கள், குடியுரிமையிழந்து, புலம்பெயர்ந்து தம் சொந்த மண்ணாம் தமிழ் நாட்டுக்குப் போவதற்காக  மூட்டை முடிச்சுக்களுடன் கடும் குளிரில் தலைமன்னார் போகும் இரவு மெயில் ரயிலின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடம் பொல்ககாவலைப் புகையிரத நிலையம். பல இனக்கலவரங்களின்  போது யாழ்ப்பாணம் ரயிலில் செல்லும் தமிழ் பிரயாணிகளை வழிமறித்து அடித்து, அவர்களுடைய பொருட்களை சிங்களவர்கள் கொள்ளையடித்ததும் இந்த புகையிரத ஸ்தானத்தில் தான். பழமையில் ஊறின் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் கிராமம். அத்தகைய கிராம மண்ணில் இரு ஜீவன்களுக்கிடையே விசித்தரமான உறவு மலர்ந்து கிராமவாசிகளின் ஏளனமான பார்வைக்கு விருந்தாகுமென  எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அக்கிராமத்தில்தான் எங்கள் கதையின்; கதாநாயகி குணவதி நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தாள். கதாநாயகி என்பதை விட கதாநாகன் என்று சொல்வதே மிகப் பொருத்தமாகும். வயதுக்கு அதிகமான வளர்ச்சி. அவளுடைய தோற்றமும் நடையும் குரல்வளமும் ஆண்களைப்  போன்றது எனக் கிராமத்தவர்கள் பலர் வர்ணித்தது உண்டு.  அவள் பேசும் போது அவளின் குரல் ஆண் குரலா அல்லது பெண் குரலா என்று வித்தியாசம் கண்டுபிடிப்பது மிகக் கடினம். இந்த மாற்றத்தை அவளுக்கு எட்டு வயதாயிருக்கும் போதே பெற்றோர்கள் அவதானித்தனர். பெண்மைக்கு வித்தியாசமான குணாதிசயங்களையுடைய அவளை ஏளனமாக அவளுடன் படித்த சக மாணவிகள் விமர்சித்ததுண்டு. பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நாடகங்கள் மேடை ஏறும் போது ஆண் வேஷத்துக்கு முதலில் தெரிந்தெடுக்கப் படுபவள் குணாவதிதான். அவளைக் “குணா” என்ற ஆண் பெயர் கொண்டு தான் அவளது தோழிகள் அழைப்பார்கள். அதைக் குணாவதி பெரிதாக எடுத்துக்கொல்வதிலலை. தன் ஆண்மைக் குணம் தனக்கு பாதுகாப்பிற்காக கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்பது அவள் கருத்து. மற்றைய பெண்களை விட தன்னிடம் பழக ஒரு வித பயமும் மரியாதையும் மாணவர்கள் வைத்திருந்ததை அவளால் அவதானிக்க முடிந்தது. மாணவர்களுடன் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் மாணவிகள் முதலில் குணாவைத் தான் முன்னின்று வாதாடி பிரச்சனையைத் தீர்த்து வைக்க அனுப்புவார்கள். அவளின் ஆண்மைத் தோற்றத்தினால், சில மாணவிகள் அவள் மேல் விளக்கமுடியாதளவுக்கு அன்பு வைத்திருத்தார்கள். “ எடியே குணா நீ மட்டும் உண்மையில் நீ ஒரு ஆணாக இருந்திருந்தால் நீதாண்டி என் வருங்காலக் கணவன் என்று” சில மாணவிகள் நகைச் சுவையாக சொல்லுவார்கள். அந்தவயதில்; ஒரு பெண்ணுக்கேற்ற மார்பக அமைப்பு, மெதுமை, மென்மையான குரல் அவளுக்கில்லாதது சகமாணவிகளுக்கு ஆச்சரியமாயிருந்தது.                                                                                            ♣♣♣♣♣ புகையிரத நிலையத்துக்கருகே உள்ள தபாற் கந்தோரில் தபாற்காரனாக பல வருடங்களாக வேலை செய்யும் குணபாலாவின் இரு பெண்குழந்தைகளில் மூத்தவள் குணவதி.   குணாவின் தாய்  குணாவுக்கு எட்டுவயதாக இருந்த போது விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, இரு குழந்தைகளையும் குணபாலாவின் கையில் பாரம் கொடுத்து விட்டு இவ்வுலகையிலிருந்து  விடைபெற்றுவிட்டாள். அதன் பின் குணபாலாவின் விதவைத் தாய் சீலாவதியின் மேல் தான் இருகுழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு விழுந்தது. குணாவின் தங்கை ஞானாவதி ருதுவாகும் போது வயது பன்னிரெண்டு. அப்போது பதினைந்து வயதான குணா ருதுவாகாமல் இருந்தது சீலாவதிக்கும் குணபாலாவிற்கும் பெரும் கவலை. கிராமத்து சாஸ்திரியாரிடம் அவளது சாதகத்தை கொண்டு போய்க்காட்டிக் கேட்ட போது அவர் சொன்ன வார்த்தைகள் அவர்களை திடுக்கிட வைத்தது. “ஆணாகப் பிறக்க வேண்டிய இச்சாதகக்காரி ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாவின் நிமித்தம் இப்போது பெண் பிறவி எடுத்திருக்கிறாள். இதனால் இப்பிறவியில் இவளுக்குச் சில எதிர்பாராத சம்பவங்கள் இவள் வாழ்க்கையில் நடந்து, உங்கள் குடும்பத்துக்கு அவப்பெயர் கூட வரலாம். நீங்கள் தினமும் பன்சலாவுக்குப் போய் புத்தபகவானைத் தியானித்து உங்கள் மகளைக் காப்பாற்றும் படி வேண்டுங்கள். இவளுக்குத் திருமணம் நடக்கும் ஆனால் ….” என்று முழுவதையும் விளக்கமாய் கூற விரும்பாமல் அரை குறையாகச் சொல்லிவிட்டு சாதகத்தை திருப்பி சீலாவதியின் கையில் கொடுத்து விட்டார்; சாஸ்திரியார்.  காலதாமதமாகி  பதினேலு வயதில் குணவதி ருதுவானாள்.                                                                                       ♣♣♣♣♣ பொல்ககாவலை அரசினர் மஹாவித்தியாலத்தில். உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது  அவளுக்கு எதிர்பாராத விதமாக ஒரு கிராமப் பள்ளிக் கூடத்திலிருந்து மேற்படிப்பிற்காக புலமைப்பரிசு பெற்று அந்தப் பாடசாலைக்கு மாற்றாலாகி வந்த  “மல்லிகா” என்ற மாணவியின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. படிப்பில் மல்லிகா வெகு கெட்டிக்காரி. அதுவுமல்லாமல் கலையார்வம் உள்ளவள். மல்லிகாவும் குணாவும் முதற் தடவையாக சந்தித்தபோது ஏதோ பல வருடங்களாக பழகியது போன்ற ஒரு உணர்வினால் அவர்கள் இருவரும் ஈர்க்கப்பட்டனர். புதிதாக பள்ளிக்கூடத்தில் சேர்ந்த மல்லிகாவை மாணவிகள் ஒன்று சேர்ந்து பயமுறுத்தும் சமயங்களில் அவளை அவர்களின் தொல்லைகளிலிருந்து மீட்டு, பாதுகாப்பு கொடுத்தவள் குணா. பள்ளிக்கூடத்தில் அரங்கேறிய “ரோமியோ ஜுலியட்” நாடகத்தில் முக்கிய பங்கேற்று ஜுலியட்டாக நடித்தாள் மல்லிகா. அவளுடன் முதல்முறையாக ரோமியோவாக நடிக்கும் சந்தர்ப்பம் குணாவுக்குக் கிடைத்தது. அந்த நாடக ரோமியோ ஜுலியட். காதல் ஜோடிகளைப் பற்றி பாராட்டிப் பேசாதவர்கள் இல்லை. நாடகத்தின் பி;ன் அவர்கள் உறவு மேலும் வளர்ந்தது.  கணித பாடத்தில் தனது சந்தேகங்களை மல்லிகாவிடம் கேட்டு அடிக்கடி தெரிந்து கொள்வாள் குணா. அதைக் காரணம் காட்டி இருவரும் பாடசாலை முடிந்த பின்னரும் தனியாக வகுப்பில் சந்தித்து நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தச் சந்திப்பால் அவர்கள் உறவு வளரத் தொடங்கியது. அந்த உறவு காலப்போக்கில் ஒரு இறுக்கமான பிணைப்பை அவர்களிடையே தோற்றுவித்தது. அந்த உறவு காதலா அல்லது இரு பெண்களுக்கிடையேலான நட்பா என அவர்களின் சினேகிதிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.  குணாவை சில மாணவிகள் கேலிசெய்யும் போது அவளுக்காக அவர்களுடன் வாதாடுவாள் மல்லிகா. இருவரினதும் நட்பைப்பற்றி மாணவிகள் பலர் கேலியாகப் பேசிக்கொண்டனர். இவர்கள் உறவு தலமை ஆசிரியரின் காதில் எட்டியவுடன் அவர் இருவரையும் அழைத்து எச்சரிக்கை செய்தார். மல்லிகாவுடைய தொடர்பை அதிக காலம் நீடிக்க குணாவுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆரம்பத்தில் குணபாலாவை தலைமையாசிரியர் அழைத்து குணா மல்லிகா சினேகிதத்தை பற்றி எச்சரிக்கை செய்த போது  அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவிலலை. ஏதோ இரு மாணவிகளுக்கிடையே உள்ள நட்பு என்றே கருதினான்.  ஆனால் அதைப்பற்றி அவன்; தாய் சீலாவதி சொன்னபோது அவள் சில வருடங்களுக்கு முன் உள்ளூர்ர் சாஸ்திரி சொன்னதை நினைவு படுத்தினாள். அதன் பிறகு  குணபாலாவின் போக்கு மாறியது. “நீ படித்தது போதும் உன் ஆச்சுpக்கு வீட்டில் உதவியாக இரு” என  பாடசாலைக்கு போகாமல் குணாவை நிறுத்திவிட்டான். குணாவுக்கு அந்தத் தடை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தந்தைக்கும் ஆச்சிக்கும் தெரியாமல் மல்லிகாவை வயல் வெளிகளில் சந்திக்க அவள் தவறவில்லை. விசித்திரமான அவர்கள் உறவு வேறு பரிணாமம் எடுத்தது. கணவன் மனைவி போல் மறைவாக பழகத் தொடங்கினர். குணாவின் மென்மை கலந்த வேறுபட்ட ஆண்மையினால் மல்லிகா கவரப்பட்டாள். சமூகத்தின் எதிர்ப்பு மேலும் அவ்விரு ஆத்மாக்களின் உறவை வலுப்படுத்தியதே தவிர பாதிக்கச்செய்யவில்லை.  ரோமியோ ஜுலியட் காதலை போல் எதிர்ப்பில் மேலும் கிளை விட்டு வளர்ந்தது. சாஸ்திரியார் சொன்னது போல் தன் குடும்ப மானத்துக்கு மகள் பங்கம் ஏற்படுத்தி விடுவாளோ என்ற பயம் குணபாலாவை பீடித்துக் கொண்டது. குணவதியின் நடத்தையால் தனது இரண்டாவது மகளின் மண வாழ்க்கை பாதிக்கப்படுமோ எனப் பயந்தான் அவன்;. தாயின் ஆலொசனைப்படி கண்டியிலிருந்த  தனது சகோதரியின் மகன் சோமசிரிக்கு குணாவைத் திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தான். சோமசிரி இராணுவத்தில் ஒரு படைவீரன், கைநிறையச் சம்பளம். சலுகைகள் வேறு. தந்தையினதும் ஆச்சிசீலாவதியினதும் திட்டம் குணாவுக்கு மறைக்கப்பட்டது. திடீரென ஒரு நாள் குணபாலா குடும்பம் கண்டிக்குப் பயணமாக வெளிக்கிட்ட போது குணா ஆச்சியிடம் அங்கு போவதன் காரணத்தைக் கேட்டாள். “ உன் கண்டி மாமியும் மச்சானும் எங்களைப் பார்த்து பலமாதங்கள் என்று கடிதம் போட்டிருக்கிறார்கள் அதுதான் போய் ஒரு கிழமை இருந்திட்டு வருவோம்”  என மழுப்பினாள் ஆச்சி சீலாவதி. குணபாலா மௌனமாயிருந்தான். கண்டியில் தனக்கும் சோமசிரிக்கும்  திடீர்த் திருமணம் நடக்கும் எனக் குணாவதி எதிர்பார்க்க வில்லை. சோமசிரியை அவள் கண்டு பல வருடங்கள். பொல்ககாவலைக்கு இரு தடவைதான் அவன் தாயுடன் வந்திருந்தான். இப்போது அவன் தோற்றத்தில் தான் எவ்வளவு மாற்றம். அவன் நடையில் கூட பெண்களைப் போல் ஒரு வகை நளினம். திருமணத்துக்கு பின் இரண்டாவது மகளுடனும் தாயுடனும்; ஊருக்குத்  திரும்பினான் குணபாலா. குணாவை சோமசிரிக்கு திருமணம் செய்து கொடுத்து கண்டியில் வாழவைத்து, அதன் மூலம் குணா – மல்லிகா உறவைக் கத்தரித்து விட்ட சாதனையால் அவன் மனம் நிம்மதியடைந்து. குடும்ப கொளரவம் சீரழியாமல்  காப்பாற்றி விட்டேனே என்ற ஒரு திருப்தி அவனுக்கு.                                                                                           ♣♣♣♣♣ குணபாலா நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு. மகளின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கவில்லை. திருமணமாகி ஒரு மாதத்துக்குள் தன்னால் கணவனுடன் வாழ முடியாது, தன்னை திரும்பவும் ஊருக்கு அழைக்கும் படி மன்றாடி தகப்பனுக்கு கடிதம் போட்டிருந்தாள் குணாவதி. கடிதத்தில், தன் கணவனும் மாமியும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும். அவர்களுக்கு மல்லிகாவுடன் தான் வைத்திருந்த உறவு எப்படியோ தெரியவந்து விட்டதாகவும் அதன் பிறகு அவர்கள் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறை கூறி தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதுவுமல்லாமல் தனக்கும் கணவனுக்கும் இடையே தாம்பத்திய உறவு தான் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியானதல்ல எனவும். உறவின் போது அவரின் சுயநலப் போக்கு தனக்கு அவர் மேல் வெறுப்பை வளர்த்திருக்கிறதே தவிர கணவன் மனைவி என்ற உறவை வளர்க்க வில்லை எனர் பச்சையாக நீண்ட கடிதம் எழுதியிருந்தாள். சோமசிரி பலாலிக்கு மாற்றலாகி போனது குணாவுக்கு ஒரளவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்கு ஒரு பிரச்சனை தீர்ந்த மாதிரி இருந்தது. இனி தான் ஊருக்குப் போகலாம், மல்லிகாவைத் திரும்பவும் சந்திக்கலாம் என மனதுக்குள் சந்தோஷப்பட்டாள்.                                                                                         ♣♣♣♣♣ “பேராதனை  பல்கலைகழகத்தில் இடம் கிடைத்து விஞ்ஞான பட்டப்படிப்புக்கு பேராதனைக்கு வருகிறேன்” என்ற மல்லிகாவின் கடிதம் கிடைத்தவுடன் குணாவுக்கு மகிழ்ச்;சி தாங்கமுடியவில்லை. எவ்வளவு காலம் தான் அவளை விட்டு பிரிந்து இருப்பது?. அவள் தன் மிருதுவான கரங்களால் என் கரங்களை அழுத்தும் போது ஏற்படும் மனச் சந்தோஷத்திற்கு ஈடுதான் எது? குணவதியின் மனம் மல்லிகாவின் ஸ்பரிசத்தை தேடி ஏங்கியது. நாங்கள் இருவரும் பெண்கள் என்பதற்காக கணவன் மனைவியாக வாழ சமூகம் இடம் கொடுக்காதா? எங்கள் உரிமை மறுக்கப்படுமா?. சில வெளி நாடுகளில் இந்த உறவைச் சட்டம் ஏற்கும் போது இங்கு மட்டும் ஏன் இந்த உறவுக்குத் தடை? சோமசிரியுடன் என் மனத்துக்குப் பிடிக்காத சுகமற்ற தாம்பத்திய வாழக்கையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத் தானா சமூகம் எதிர்பார்க்கிறது? என் வாழ் நாள் முழுவதும் நான் என் கணவனிடம் சித்திரவதை அனுபவிக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்தாள் குணா, “என்னை ஒருவரும் தேடவேண்டாம் எனக்கு சோமசிரியுடன் வாழப் பிடிக்கவில்லை” என சுருக்கமாக  கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாமியாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டாள் குணாவதி. கடிதத்தை கண்ட குணாவதியின் மாமியார்; பதறிப்போய் தன் தம்பிக்கு தந்தி அடித்து வரவழைத்தாள். குணாவதி எங்கே போனாள் என்பது எல்லோருக்கும் புதிராயிருந்தது. அவள் பொல்ககாவலைக்கு வந்திருக்கமாட்டாள் என்பது குணபாலாவுக்குத் தெரியும். வரமுன் மல்லிகா எங்கே என்பதை மல்லிகா படித்த பாடசாலையில் விசாரித்து அறிந்த பின்னரே கண்டிக்கு சென்றான் குணபாலா. திருமணத்துக்கு முன் குணவதிக்கும் மல்லிகாவுக்கும் இடையே இருந்த விசித்திரமான உறவைப் பற்றி தனக்கு ஏன் மூடி மறைத்தாய் என குணபாலாவிடம் கோபப்பட்டாள் அவன் தங்கை. “திருமணத்துக்குப் பின் அவள் திருந்திவிடுவாள் என நாhன் நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” எனச் சொல்லி கவலைப்பட்டான் குணபாலா.  “இப்போது மல்லிகா பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள் என விசாரித்ததில் தெரியவந்தது. எதற்கும் நாங்கள் பேராதனைக்குப் போய் மல்லிகாவை சந்தித்து குணா அங்கு வந்தாளா எனக் கேட்போம். நீ அதுவரை பதட்டப்படாமல் என்னோடை புறப்பட்டு வா” எனத் தங்கையை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு பேராதனைக்கு புறப்பட்டான் குணபாலா                                                                                            ♣♣♣♣♣ பேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தினூடாக அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது மஹாவலி நதி. இரு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நதியின் ஓட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அந்த நதியில் தான் எத்தனையோ காதலில் தோழ்வியுற்ற பல்கலைக் கழக மாணவ மாணவிகள் தம்முயிர்களை மாய்த்துக்கொண்டார். மகாவலி நதிக்; கரை ஓரத்தில் ஒரே மாணவர் கூட்டம். ஏதாவது படகுப் போட்டி நடக்கிறதா என மாணவர்களிடம் விசாரித்தான் குணபாலா. “அப்படிஒன்றுமில்லை. இருகாதலர்கள் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களின் பிரேதங்கள் கரையில் ஒதுங்கியிருக்கிறது. பொலீசும் விசாரணை நடத்துகிறது. இறந்தவர்களில் ஒருத்தி பல்கலைக்கழக முதல்வருடமாணவி அதுதான் அங்கு கூட்டம்” என்றுஒருமாணவனிடம்இரு;நதுபதில்வந்தது. அதைக் கேட்டவுடன் குணபாலாவுக்கு தலைசுற்றியது. அதுகுணவதியும்மல்லிகாவுமாகஇருக்குமோ? என்று அவன் மனம்படபடத்தது. அவன்நிலை தடுமாறுவதைக் கண்ட அவன் தங்கை “ஏன் அண்ணே பதறுகிறாய். வா போய் யார் என்று பார்ப்போம் என் தமையனையும் அழைத்துக் கொண்டு அங்கு நின்ற மாணவர்களின் உதவியுடன் நதிக்கரைக்குச் சென்றாள். ஒருவரை ஒருவர் அணைத்தபடி கணவன் மனைவி போல் நதிக் கரையில் ஒதுங்கியிருந்த இரண்டு பிரேதங்களும் குணவதியுடையதும்   மல்லிகாவினதும என்பதை அடையாளம் கண்டு பிடிக்க இருவருக்கும் அதிக நேரம் எடுக்கவில்லை. பிரேதங்களின் உடல்கள் ஊதியிருந்தன. இருவர் கழுத்துகளையும் காட்டுப் பூக்களினாலான மாலைகள் அலங்கரித்தன, ஏதோ இறப்பதற்கு முன் கணவன் மனைவியாகி மாலை மாற்றிக்கொண்டார்களோ எனப் பார்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்.. இறந்த ஒரு பெண்ணின் தகப்பனும் மாமியும் வந்திருப்பதை அறிந்த பொலீஸ் சப் இன்ஸ்பெக்டா, உடனே அவர்களை ஒரு ஓரத்துக்கு அழைத்துச் சென்று “இந்தக் கடிதம் இறந்து கிடக்கும் இரு பெண்களின் ஒருத்தியான மல்லிகா எனபவளின் அறையில் இருந்து அவளுடைய சினேகிதி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்ட கடிதம். இதை வாசியுங்கள். அதன் பிறகு விசாரணையைத் தொடருவோம்” என்று  குணபாலாவின் கையில் கடிதத்தைக் சப் இன்ஸ்பெக்டர் கொடுத்தார். அவர் கொடுத்த கடிதத்தை நடுங்கும் கைகளால் வாங்கித் தங்கைக்கு சீலாவதிக்கும் கேட்கும் விதத்தில் மெதுவாக, அழுகை நிறைந்த குரலில் வாசிக்கத் தொடங்கினான் குணபாலா. எங்கள் பெற்றோர் , இனத்தவர் , நண்பர்கள் , சுமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு .. எங்கள் இருவருக்கும் இடையேலான உறவு விசித்திரமான உறவானாலும் ஒரு புனித உறவு . நாங்கள் ஒருவரை ஒருவர் மனமாறக் காதலித்தோம் . எங்கள் உறவின் நோக்கம் உடலுறவல்ல . சமூகமும் நீங்களும் அதை தப்பாகக் கணக்கு போட்டீர்கள் . பௌத்தர்களாகிய நீங்கள் போன பிறவியில் நம்பிக்கை வைத்திருப்பீர்களானால் எங்கள் உறவு போன பிறவியின் தொடர்கதை இப்பிறவி . முதல் முறை நாங்கள் பாடசாலையில் சந்தித்த போது ஏதோ எங்களுக்கிடையே புரியாத ஒரு ஈர்ப்பை நாம் உணர முடிந்தது . அதுவே காதலாக மலர்ந்தது . எங்களின் உறவை துண்டிப்பதற்காக எங்களில் ஒருத்தியான குணாவுக்கு கட்டாயத் திருமணத்தை நடத்தி வைத்தீர்கள் . அவளது சொற்ப கால மணவாழ்க்கை சோகம் நிறைந்தது . நாம் இருவரும் பெண்கள் என்ற காரணத்தால் கணவன் மனைவியாகச் சட்டப்படி திருமணம்   செய்து கொண்டு வாழமுடியாது என எஙகளுக்குத் தெரியும் என எமக்குத் தெரியும் . உங்களை விட்டு எங்கு சென்று நாம் வாழ்ந்தாலும் சமூகம் ஏளனமாகப் பேசி எம்மை ஒதுக்கி வைக்கும் . அந்த துன்பம் நிறைந்த நிம்மதி அற்ற வாழ்வை இப்பிறவியில் அனுபவிப்பதை விட அடுத்த பிறவியிலாவது நாம் கணவன் மனைவியாகப் பிறந்து காதலராக ஒன்று சேர இறைவன் அருள் புரியட்டும் . எங்கள் தற்கொலைக்கு நாங்களே பொறுப்பு . கடைசியாக ஒரு வேண்டுகோள் . எங்கள் இருவரையும் தயவு செய்து நதிக்கரை ஓரத்தில் அருகருகே புதைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . இந்தப் புனித நதியின் அரவைணைப்பில் சமுதாயத்தின் தொந்தரவின்றி , நாஙகள் இருவரமு ;; நீண்ட நித்திரை செய்ய விரும்புகிறோம் . இந்த ஆசையையாவது சமுதாயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறோம் . தயவுசெய்து , பொளத்தர்களான எங்கள் உடல்களை தகனம் செய்யவேண்டாம் இப்படிக்கு என்றும் சமுதாயத்தால் பிரிக்கமுடியாத குணா – மல்லிகா                                                                                                  ♣♣♣♣♣ (குறிப்பு- 2002ம் ஆண்டு, சிறிலங்காவின் தென்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தை கருவாகக் கொண்டு கற்பனையும் கலந்து யதார்தமான இச்சிறுகதை எழுதப்பட்டது. பாத்திரங்களின் பெயர்களும், ஊர் பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே ) 14 அத்தியாயம் 14 (சுமை) [Sumaithangi] சுமை பல விழுதுகளுடன் சடைத்து  வளர்ந்த ஆல மரம் பாதையோரத்தில் கம்பீரமாக காட்சியளித்தது. அதன் நிழலில் ஒரு சுமைதாங்கி. யாரோ ஒரு புண்ணயவான் சிந்தனையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் கற்களால் உருவாக்கப்பட்ட உபயமது. சுமைதாங்கியின் கற்களில் தமிழ் எழுதிப் பழகியிருக்கிறார்கள். பாவம் சுமைதாங்கி, ஏடாக மாறிவிட்டது போலும். எத்தனையோ வழிப்போக்கர்கள் தலையில் சுமந்து வந்த சுமைகளை அது கூலிபெறாமல் தாங்கிச் சேவை புரிந்தது. அச் சுமைதாங்கி 18ம் நூற்றாண்டில் மன்னர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது என அதன் வரலாறு பற்றிப் பேசினர் சிலர். சுமையை இறக்கிவைத்துவிட்டு வழிப்போக்கர்கள் ஆலமர நிழலில் இளப்பாறிச் செல்வதுண்டு . மரமும் சுமைதாங்கியும் இணைந்து செய்த சேவையை அவ்வூர் மக்கள் கவனித்ததாக இல்லை. பாதைக்கருகே இருந்த அந்த சுமைதாங்கியை பெயர்த்து எடுத்து பாதையை விரிவாக்க வழி விட வேண்டும். அப்பொழுதுதான்  கிராமத்துக்கு பஸ் போக்கு வரத்து வருவதற்கும் கிராமம் முன்னேறவும் வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள் ஊருக்கு ஏதோ நல்லது செய்யப் போவதாக நினைத்த சில பணம் படைத்த அரசியல் பிரமுகர்கள். முதலில் சுமைதாங்கி, அதன் பின்னர் ஆல மரமா அவர்களது இலக்கு என்ற கேள்வியை எழுப்பினான் முற்போக்குவாதியான ஒரு கிராமத்து இளைஞன். அத் திட்டத்தை முன் வைத்தவர்களுக்கு வாழ்க்கையில பணம் கைநிறைய இருந்ததால் குடும்பச் சுமை, உழைப்பாளிகளின் பாரம் , சமூக சேவை போன்றவை முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாதை ஓரமாக, ஆல மரத்துக்கு அண்மையில் ஓலைக் கூரையுடன் சிறு தேனீர் கடை வைத்திருந்த முருகேசு சுமைதாங்கியும் ஆல மரமும் செய்த சேவை பற்றி கதையாக சொல்லக்; கூடியவன். அது தேனீர் கடை மட்டுமல்ல சைக்கில் கடையும் கூட. ஒரு சமயம் கடும் வெய்யிலில் தலையில் தனது உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பதற்காக வியர்க்க வியர்க்க சுமந்து வந்த விவசாயி ஒருவன் மூர்ச்சித்து கீழே விழாத நிலையில் அவனுக்கு கைகொடுத்தது அந்தச் சுமைதாங்கி. கொண்டு வந்ததை அதில் வைத்துவிட்டு மயக்கம் கண்களைச் சுழட்ட கீழ் முச்சு பெரு முச்சு வாங்கியபடி  சுமையை தாங்கி வந்தவன், தூணில் சாய்ந்தபடி மயங்கிவிட்டான். அரை உயிரோடு இருந்த அம்மனிதனைக் கண்ட முருகேசு ஓடிப்போய்; முகத்தில் தண்ணீர்; தெளித்து வரண்ட தொண்டை இதமாக இருக்க பானையில இருந்த குளிர்ந்த தண்ணீரைக் கொடுத்து சுயநிலைக்கு அவனைத் திருப்பிக் கொண்டுவந்தான். பிறகு தான் தெரிய வந்தது தன்னைப் போல் பெரும் குடும்பச்சுமையையும் கடன் சுமையையும் அவ்விவசாயி சுமக்கிறான் என்று. அது போல் எத்தனையோ வழிப்போக்கர்களை முருகேசு சந்தித்து உறவாடியிருக்கிறான். அக்கிராமத்துக்கு வந்து போகும் வழிபோக்கர்கள் பலர் முருகேசுவின் ஆட்டுப்பால் கலந்த ஆடை மிதக்கும் தேனீரையும் கண்ணாடிப் போத்தல்களுக்குள் இருந்த சுடச் சுட வடையையும்; சுவைத்துச் செல்லாதவர்கள் இல்லை. அதுவும் தன் கைப்பட தயாரித்த தேனீரும் இறால் புதைத்த கடலை வடைக்கும் ஒரு தனி இலட்சனை இருப்பது முருகேசுவுக்குத் தெரியும். அந்த வடையின் சுவையை அனுபவிக்கவே வெகுதூரத்தில் இருந்து நேரே கள்ளுத்தவறணைக்குப் போக முன் பலர் வந்து வாங்கிப் போவதுண்டு. மாலை நான்கு மணிக்குள் தயாரித்த வடைகள்முடிந்து விடும் அளவுக்கு வியாபாரம் ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தது.  தேனீர் கடை மட்டுமல்ல சைக்கில்கள் வாடகைவிடுவது, பஞ்சரான டியூப்புகளை சில நிமிடங்கள் தேனீர் குடித்து முடிப்பதற்குள் ஒட்டிக் கொடுப்பது, சைக்கில் சில்களை நெளிவெடுப்பது, புது டயர்கள் மாற்றுவது விற்பனைக்கு வந்த பாவித்த சைக்கில்களை நல்ல விலைக்கு விற்று கொமிஷன் பெறுவது முருகேசுவுக்கு கைதேர்ந்த கலை. ரலி , ரட்ஜ், ஹம்பர், பஜாஜி சைக்கில்களின் . தரம் , சூட்சுமங்களை முற்றாக அவன் அறிந்து வைத்திருந்தான். மரமும் சுமைதாங்கியும் செய்த சமூக சேவையில் தனக்கும் பங்குண்டு என்பதை அவன் அறியாமல் இல்லை. ஆனால் தான் செய்த சேவை வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது  என்பதும் அவனுக்கு தெரியும். இன்னும் சில வருடங்களில் மோட்டர் சைக்கில்களை திருத்துவதும், வாடகைக்கு விடுவதும் போன்ற தொழில் ஸ்தானத்துக்கு தான் உயர வேண்டும் என்பது அவன் தினமும் கண்டுகொண்டிருக்கும் கனவு. அவ்வியாபாரம் அவனது தந்தை விட்டுச் சென்ற முதுசம். அக்கடையில் தான் தன் தந்தையிடமிருந்து வேலை கற்றவன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலையில்லாமல் திரிவதைக் கண்ட அவன் தன் குடும்பப் பாரத்தைச் சுமக்க தனக்குக் கைகொடுப்பது அக்கடைதான் என்பதை அவன் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை. கடை அமைந்திருந்த காணி அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும் கடையின் உரிமை அவனுடையது. பாதை விரிவுத் திட்டத்தில் சுமைதாங்கியும் ஆலமரமும் மறைந்து விட்டால் தன் காணியும் கடையும் பறி போய் விடும் என்ற பயம் அவனுக்கு இருந்து வந்தது. தனது மனைவி, அவளது வயிற்றில் வளரும் குழந்தை அதோடு வளர்ந்தபிள்ளைகள் மூவர் இவர்களின் வருங்கால வாழ்க்கைச் சுமையைத் பல வருடங்கள் தானும் தன் சைக்கில் கடையும் தான் சுமக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு உதவியாக சில சமையங்களில் அவனது மூத்த மகன் செல்வராசு உதவியாக இருப்பான். தன் தொழிலை, நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் தனக்குப் பின் தன்னைப் போல் கடையின் பொறுப்பை அவன் எடுக்கலாம் அல்லவா? கடையிருந்த இடம் அவனுக்கு அதிர்ஷடத்தைக் கொடுத்தது. “சுமைதாங்கி சைக்கிள் கடை” என்றால் அவ்வூரில் தெரியாதவர்கள் இல்லை. கடைக்கு வந்திருந்து முன்னே போடப்பட்டிருந்த சுண்ணாம்பு கறைகள் படர்ந்த இரு பழைய வாங்குகள். கடையில் தொங்கிக் கொண்டிருந்த சுவையான கதலி வாழைக் குலை. போத்தல்களில் அலங்கரிக்கும் உணவுப் பண்டங்கள், தேனீர் தயாரித்து வழங்க உதவியாக இருக்கும் பித்தளைப் பாத்திரம். இவை முருகேசு கடையின் அடையாளச் சின்னங்கள். வாங்குகளில் அமர்ந்து பொழுது போக்க அரசியல் பேசுவது முருகேசுக்கு பிடிக்காத விடயம். அதற்காகவே கடையில் “வம்பும் வதந்தியும் வேண்டவே வேண்டாம்” என்ற இரத்தினச் சுருக்கமான வசனத்தை பலகையில் எழுதியிருந்தான். “ கடன் நட்புக்கு பகை” என்ற வாசகம் கடன் கேட்பவர்களை கிட்ட நெருங்கவிடாது தடுத்தது.  அரசியல் பேசுவதால் சண்டை உருவாகி சினிமாப் படங்களில் வரும் காட்சியைப் போல் தனது கடை பாதிப்படையக் கூடிய நிலையை அவன் தவிர்த்தான். இரு சினிமா நடிகைகளின் விளம்பரப் படங்கள் மட்டும் அவனது கடை மேல் வழிபோக்கரின் கவனத்தை ஈர்த்தது. அதை இரசித்து விமர்சனங்கள் செய்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். படங்களை தன் கடையில் ஒட்டுவதற்கு முருகேசு பணம் கேட்காமல் இல்லை. “வாழ்க்கையே ஒரு வியாபாரம்” என்பது அவனது கொள்கை. வம்பு பேசி பிரச்சனை உருவாகாமல் தவிர்ப்பதற்காக தனக்குத் தெரிந்த ஒருவர் அன்பளிப்பாக கொடுத்துச் சென்ற பழைய வானொலி பெட்டி ஒன்றை அடிக்கடி தட்டிக் கொடுத்து பாட வைத்து வாடிக்கையாளர்களின் வீண் பேச்சைத் திசை திருப்பி விடுவான். சில சமயங்களில் முருகேசு தன் கடையை தன் பதினான்கு வயது மகனின் பொறுப்பில் விட்டு விட்டு தன் குடும்பச்சுமையை சைக்கிளில் சுமந்து செல்வான் பாடசாலைகளுக்கும் உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கும். அந்தப் பயணத்தை பார்த்து பலர் அதிசயித்ததுண்டு. எவ்வாறு முருகேசு தன் குடும்பத்தோடு சரிந்து விழாமல் சாதுர்யமாக சமநிலைபடுத்தி சைக்கிளில் சர்க்கஸ் வித்தை செய்பவன் போல் குடும்பத்தோடு பயணம் செய்கிறான் என்பது அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. மூன்று மைல் தூரத்தில் உள்ள அவனது குடிசை வீட்டுக்கும் நகரத்தில் உள்ள கடைகளுக்கும் போக அவனது நாற்பது வயசுள்ள சைக்கில் தான் வாகனம். அவன் தந்தை பாவித்த ரெலி சைக்கிள் என்ற படியால் அதைத் தன் மனைவிபோல் கவனித்து வந்தான். யாரும் அதை களவெடுத்து செல்லாத வாறு இரண்டு செயின் போட்டு பெரிய ஆமை பூட்டு போட்டு செல்வது அவன் வழக்கம். தன் மகன் செல்வராசு கூட அதைப் பாவிப்பதை அவன் விரும்பியதில்லை. அவன் குடும்பத்தோடு சைக்கிலில் போகும் காட்சியைப் பார்த்து. அதோ பார் முருகேசுவின் குடும்பச் சுமையை சைக்கில் சுமப்பதை. பாவம் டவுனில் மட்டும் இக்காட்சியை பொலீஸ் கண்டால் நான்கு பேர் ஒரு சைக்கிளில் போன குற்றத்திற்காக வழக்கு தொடர்ந்து தண்டப்பணம் கட்டவைத்து விடுவார்கள். பாவம் முருகேசுவின் ரலி சைக்கில். அதற்கு மட்டும் முறைப்பாடு செய்ய வாயிருந்தால் தன்னை சுமைதாங்கி போல்; முருகேசு குடும்பம் பாவிக்கிறது என்று மனித உரிமை மீறல் குழுவுக்கு முறையிட்டு முருகேசு மேல் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் அப்படி செய்யாது தன் மேல் விசுவாசம் வைத்திருந்த காலம் சென்ற முருகேசுவின் தந்தை மீதும், தன்னைத் தினமும் பராமரித்து, துடைத்து அழகு படுத்தும் முருகேசுக்கும் அவமானத்தை கொண்டு வர அது விரும்பவில்லை. ஆலமரத்து சுமைதாங்கி போல் நான் இந்த பிறப்பில் இருக்குமட்டும்; சுமையை தாங்கி நல்ல கர்மாவை சேர்த்துவிட்டு அடுத்த பிறவியில மோட்டார் சைக்கிளாகவோ அல்லது வாகனமாகவோ சரி பிறக்க மாட்டேனா என்ற நப்பாசை அதற்கு. தனது நீண்ட கால சேவயின் போது ஒரு தரமாவது நடுவழியில் முருகேசு குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிடவில்லை அவ் ரெலி சைக்கிள்.                                                                                                    ♣♣♣♣♣ தனது குடும்பத்தை வீட்டில் இறக்கிவிட்டு  கடைக்கு திரும்பிய முருகேசுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பிற நாட்டவர் அவனை சந்திப்பதற்காக காத்திருந்தார். “அப்பா இவர் பெயர் ஜோன். உங்களுக்காக கண நேரம் காத்திருக்கிறார்” என்றான் ஆங்கிலம் அறைகுறையாகத் தெரிந்த அவர் மூத்த பிள்ளை செல்வராசு. மகன் செல்வம் ஆங்கிலம் பேசுவதை முருகேசு பெருமையாக பேசிக் கொள்வான். “ வந்தவருக்கு தேனீரும் வடையும் கொடுத்தனீயா?” முருகேசு மகனை பார்த்து கேட்டார். “ இல்லையப்பா நீங்கள் வந்தபின் பார்ப்போம் என்று விட்டார்” வந்தவரின் தோளில் ஒரு கமெரா தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தமிழ் பேசியது முருகேசுக்கு வியப்பாக இருந்தது. “ Are you Mr Murugesu?” என்று முதலில் ஆங்கிலத்தில் கேட்டார். “ தன் பெயரை கேட்டவுடன் உடனே “ ஓம் சேர்” என்றான் பணிவுடன் முருகேசு அவரது வெள்ளை றிறத் தோலுக்கு மதிப்பு கொடுத்து.  அது பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்படட் அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பு. “ யோசிக்காதையும் நான் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசுவன். நீர் உமது ரெலி சைக்கிள் நாலு பேரை சுமந்து செல்வதை என் நண்பர் எடுத்த ஒரு புகைப்படத்தில் பார்த்தேன். பிரமாதமான படம். எப்படி அப்படி பலன்ஸ் செய்து கொண்டு குடும்பத்தோடு டிரவல் செய்கிறீர். ஏதும் அக்சிடென்ட் நடக்கும் என்ற பயமில்லையா உமக்கு?” “எல்லாம் அனுபவம் தான் சேர். இது உறதியான சைக்கிள் பல வருடங்களாக பாவிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு என் தந்தைiயார் இதை புதுசாக வாங்கி பாவித்தவர். அவர் இறந்த போது இது என் கையுக்;கு வந்துவிட்டது அவர் நினைவாக.” “ இப்போ இதன் வயது நாற்பது வருடம் இருக்குமா ” “ கூட இருக்கலாம். என் அப்பா எப்போ வாங்கினார் என்று எனக்குத் தெரியாது” “சைக்கிலைப் பார்த்தால் அப்படி நாற்பது வருடத்துக்கு முன்பு வாங்கினதாக தெரியவில்லை. ஏதோ புதிய சைக்கிள் போல் அதை கவனித்து வருகிறீர் போல் தெரிகிறது” “ ஓம் சார். இதை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தின போக்கு வரத்துக்கு இது தான் சேர் உதவுகிறது” “புரிகிறது அந்தப்படத்தைப் பார்த்தபொது. ரலி சைக்கிள் கொம்பெனிக் காரர்களுக்கும், சஞ்சிகை ஒன்றுக்கும், உமது ரெலி சைக்கிலை சுமையோடு படம் எடுத்து கட்டுரையொன்று எழுதித் தங்களுக்கு அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அது தான் உம்மை சந்தித்துப் பேசலாம் என வந்தேன்”” அவர் சொன்னதைக் கேட்டது முருகேசுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “என்ன சேர் சொல்லுகிறீhகள். இந்த பழைய சைக்கிளுக்கு அவ்வளவு மதிப்பா”? “மதிப்பு அதன் தரத்திலும், உத்திரவாதத்திலும,; வயதிலும் தங்கியுள்ளது. பழைய பொருட்களுக்கு வெளி நாடுகளில நல்லமதிப்பு அதை Antique Products என்பாகள் ஆங்கிலத்தில்;. உமது சைக்கிள் கடை நான்; எழுதப் போகும் கட்டுரைக்கு துணை போகப் போகிறது. பின்னடைந்த நாடுகளில் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிலைப் போல் சைக்கில் தான் முக்கிய வாகனம். எல்லோராலும் காரும் . மோட்டார் சைக்கிலும் வாங்கும் வசதிகள் இல்லை. அதோடு பெற்றோல் விலை அதிகம”. “உண்மைதான் சேர். இப்போ என்னிடம் ரிப்பெயருக்கு வரும் சைக்கில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சைக்கிலை தான் பலர் விலை குறைவு என்ற காரணத்தால் வாங்குகிறார்கள். ஆனால் அவை ரெலி சைக்கிலின் தரத்துக்கு ஈடாகாது என்பது பலருக்கத் தெரியும்.. ரலி சைக்கிள்கள் இன்னும் பழைய ஒஸ்டீன் ஏ போர்டி கார்களைப் போல் ஓடுகிறது பிரித்தானிய ஆட்சி நினைவாக.  பள்ளிக்கூட மாணவர்கள் , விவாசாயிகள் , மீன் வியாபாரம் செய்பவர்கள் , பல தொழிலாளிகள் எல்லோரினதும் சுமையைத் தாங்குவது இது போன்ற சைக்கிள்கள் தான். அதோ தெரிகிறதே சுமைதாங்கி, அது போல என்று சொல்லுங்ககோவன். “நல்லது உம்மையும் உமது மகனையும் வைத்து கடைப் பின்ணணியில் சில படங்கள் “எடுக்கப் போகிறேன். அதற்கு உமது சம்மதம் வேண்டும்” “படமா?. எதாவது உள்ளூர் பத்திரிகைக்கு அனுப்பப் போகிறீர்களா”? “இல்லை. இது ஒரு பிரபல்யமான வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகையில் கட்டுரையுடன் வரப்போகிறது. பல நாடுகளில் இந்தக் கட்டுரையை வாசிப்பார்கள். அதோடு உமக்கு சஞ்சிகையில் இருந்தும், ரெலி சைக்கிள் உற்பத்தி செய்யும் ஸ்தாபனத்தில இருந்தும் தகுந்த வெகுமதியும்  டொலரில் கிடைக்கும்”. டொலரில் வெகுமதி என்றவுடன் முருகேசுவுக்கு தான் பட்ட கடன் தான் நினைவுக்கு வந்தது. அதை தீர்த்தால் தனது கடன் சுமையை குறைக்கலாம் என்று யோசித்தான். “ என்ன யோசிக்கிறீர்.  இப்படி ஒரு சந்தர்ப்பம் உமக்கு கிடைக்காது”. “ சரிசேர் உங்கள் இஸ்டம் போலச் செய்யுங்கள். இதனால் எனக்குப் பிரச்சனை வராமல் இருந்தால் சரி. இந்த பணம் எனக்குத் தரும் விஷயத்தை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லவேண்டாம” என்று முருகேசு வேண்டிக்கெர்டான். “சரி சரி. பயப்படாதையும். உமக்கு அதனால் பிரச்சனை ஒன்றும் வராது. உமது மகன் அந்த அழுக்கான உடுப்போடையே காட்சிதரட்டும். நீரும் அப்படித்தான். படம் இயல்பாக இருக்கட்டும். அந்த சுமைதாங்கியையும்; ஆலமரத்தையும் சேர்த்து அதற்கு கீழ் உம்மையும் சைக்கிளையும் வைத்து ஒரு படம் எடுப்பேன். “அது நல்லது அவைகளின் சேவையை ஒருவரும் கவனித்துக் கௌரவிப்பது கிடையாது. உங்கள் கட்டுரையும் படமும் இந்த சுமைதாஙகிகளை கௌரவிப்பதாக இருக்கட்டும. படம் எடுப்பதற்கு முன் எங்கள் கடையின தேனீரையும் வடையையும் சுவைத்துப் பாருங்கள். அவற்றின் தரம் அப்போது புரியும் என்று வந்தவருக்கு சொல்லிவிட்டு கடைக்குள் போனான் முருகேசு. கடைக்கு முன்னே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்தபடி தனது கமெராவை எடுத்து தயார் செய்தார் வந்தவர். அதை ஆவலுடன் வேடிக்கை பார்த்தபடியே நின்றான் செல்வம். ;                                                                             ♣♣♣♣♣ 15 அத்தியாயம் 15 ( குடை)                         [Umbrella3]    குடை மழை இடி முழக்கத்தோடு வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. “நேற்று எரித்த வெய்யிலுக்குப் பதிலாக இன்று வானம் கண்ணீர் விடுகிறது” என்றாள் கனகம்.  செல்லத்துரையருக்கு தன் பெனசன் விஷயமாக கொழும்பு கச்சேரிக்கு பஸ் எடுத்துப் போக வேண்டிய அவசியம் இருந்தது. அவருக்கு தடிமன் காச்சல் வந்து சுகமாகி இரண்டு நாட்களாகி விட்டது.; மழைக்குள் போய் நனைந்து வந்து வருத்தத்தை திரும்பவும் தேடிக் கொள்ள வேண்டாம் என அவர் மனைவி கனகம் சத்தம் போட்டாள். கணவனுக்கு காய்ச்சல் என்று வந்தால் தான் படும் கஷ்டம் அவளுக்குத் தான் தெரியும். மருந்து குடிக்க சிறு பிள்ளை போல் அடம்பிடிப்பாhர். வாய் கட்டப்பாடு கிடையாது. கொத்தமல்லி தண்ணியென்றால் அவருக்கு விஷம்மாதிரி. மகன் லண்டனில் இருந்து அனுப்பிய குடை சுவரில கம்பீரத்த தொங்கிக்கொண்டிருந்தது. பல காலம் செல்லர் கந்தோருக்குப் போய் வர பாவித்த குடை வயதாகி பளுப்பு நிறத்துடன புதுக்குடையின் வருகைக்கு பி;ன் கவனிப்பரற்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தது. மார்க்ஸ் அன் ஸ்பென்சரில் வாங்கிய விலையுர்ந்த குடை. அடிக்கடி செல்லருடன் கம்பீரமாக வெளியே பொய் உலாவி வரும். பழைய குடையை எடுத்துச் செல்வதை nஅர் தவிர்த்தார். நீ எனக்காக உழைதடது என்னை வெய்யிலிலும் மழைழியலும் இருந்து பாதுகாப்பு தந்தது போதும். இன- உனக்கு ரிட்டயர் வாழ்க்கை என்பது போல் பழைய குடையை செல்லர் உதாசீனப்படுத்தினார். உள்நாட்டு குடைகைளை மற்றவர்கள் கொண்டு செல்வதைக் கண்டால் புதுக் குடைக்கு ஒரு அலட்சியம். வெளிநாட்டிலிருந்து பீளெனில் வந்த குடை நான் என்ற பெருமை. தனது நண்பர்களிடம் தனது மகன் லண்டனில் இருந்து அனுப்பிய அரிய விலை உயர்ந்த குடையைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். சிறீலங்கா காசிலை பவுணில் இருந்து ரூபாவுக்கு மாற்றினால் குறைந்தது 2000 பெறுமானம் இருக்கும். அரை மாத சாப்பாட்டு செலவுக்குப் போதுமான பணமது. “ என்ன கனகம் மழை கொஞ்சம் விட்டுது போல கிடக்குத. மணியும் ஒன்பதாகிப் போச்சு. பஸ் எடுத்து கச்சேரிக்கு போய் சேர குறைந்தது ஒரு மணித்தியாலம் வேண்டும். மத்தியானச் சாப்பாட்டு நேரத்துக்கு முதல் போயாகவேண்டும் இல்லாட்டால் இரண்டு மணிமட்டும் கச்சேரியிலை தூங்க வேண்டும். என்னுடைய பென்சனிலை மாதம் பிழையாக  ஐந்நூறு ரூபாய் கூட ஒரு வருஷமாக கழிக்கிறான்.  அதைப் பற்றி போட்ட கடிதங்களுக்கு தக்க பதில் இலலை. கச்சேரியிலை வேலை செய்து மூன்று மாதத்துக்கு தந்தி ரிட்டயரான சோமசுந்தரம் என்றவருக்கு இரு நூறு ரூபாய் கொடுத்தனான் என்டை கழிவை சரி செய்து அரியசை எடுத்து தரச்சொல்லி. ஒரு மாதமாச்ச ஆளிணடை பெச்சு முசசைக் காணோம். நேர போய் சந்தித்து சப்ஜெக்ட் கிளாக்கிண்டை கையிலை வைத்தால்தான் எதும் நடக்கும” செல்லர் புறுபுறுத்தபடி குடையை எடுக்க போனார். “இந்தாருஙகோ இந்த கொத்தமல்லித் தண்ணியை குடித்துப்பொட்டு போங்கோ. கெதியிலை மத்தியானச் சாப்பாட்டுக்கு வாஙகோ. போகிற இடத்திலை கண்டதை கடையதை சாப்பிடாதையுங்கோ. பஸ்சிலை போகிற கவனம் பர்சை பிட்பொக்கட் அடித்துப போடுவான். புதுக் குடை கவனம். அவன் தம்பி உங்களுக்காக பிரண்ட் மூலம் வாஙகி அனுப்பினவன். ஏதோ பதினைந்து பவுணாம். திறமையான குடையாம். இங்கத்து கணக்கிலை ரூபாய் 2000க்கு மேலை பெறுமதி. கவனயீனமாய் விட்டிட்டு வந்திடாதையுங்கோ. குவனம”,; எச்சரித்தபடி கொத்தமல்லி தண்ணியை செல்லரிடம் கொடுத்தாள். அவரும் அவசரம் அவசரமாக மடக் மடக்கென்ற குடித்துப்போட்டு சப்பாத்தை மாட்டிக் கொண்டு குடையும் கையுமாக வெளியே இறங்கினார். குடை அவரை வெய்யில மழையில இருந்து மட்டும் பாதுகாக்காது கைதடியாகவும் கூடசில சமயங்களில் உதவியது.  அதை வீசி வீசி அவர் பாதையில் நடக்கும் போது ஒரு தனி அதிகராத் தோற்றத்தை அவருக்கு கொடுத்தது. காலி வீதிக்கு வந்தபோது போக்கு வரத்து நெருக்கடியைப் பாhத்த போது செல்லருக்கு பயம் வந்திட்டது. நல்லகாலம் வீதியைக் கடந்து மறுபக்கம் போய் பஸ எடுக்கவேண்டிய நழல அவரகு;கு இருக்கவிலலை.  பஸ் எடுத்து போய் சேர அதிக நேரமாகலாம். அவர் போகிற பஸ் ரூட் நம்பர் போட்ட இரண்டு பஸ்கள் வந்தது. ஆனால் சனம் நிறைம்பி வழிந்து தொங்கிக் கொண்டு போனதால்; அவரால் ஏற முடியவில்லை. மழை விட்டு  வெய்யில் தனது அதிகாரத்தை காட்டிக் கொண்டிருந்தது. “அனே மாத்தயா இந்த ஒரு மாதக் குழந்தைக்கு பசிக்கு எதாவதும் கொடுங்கோ.” என்று சிங்களத்தில் பஸ்;ஸடாண்டுக்கு அருகே உள்ள பிச்சைக்காரி ஒருத்தியின பரிதாபக் குரல் போவோர் வரவோரின் கவனத்தை கவரவில்லை. அவளுக்கு குறைந்தது இருபத்ததைந்து வயதிருக்கும். கிழிந்த சேலை அவளது அங்கத்தின் சில பகுதிகளை விளம்பரம் செய்தது. அதை கடைக்கண்ணால் பாhத்து இரசித்தபடி சென்றவர்கள், அந்த இலவசக் காட்சிக்காவது அவளுக்கு சில்லரையைப் போடவில்லை.   அவர்களுக்கு அதில் நின்று அவளின சோகக் கதையை கேட்க நேரமில்லை. கொளுத்தும் வெய்யிலில் குழந்தை வெப்பம் தாங்காமால் அழுது கொட்டியது. யாரோ ஒரு தர்மவான் போட்டு சென்ற பழை பாண் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு குழந்தையின வாயுக்கள் திணித்தாள் அவள். குழந்தை அதைச்சாப்பிட மறுத்து தாய் பாலைத் தேடி அழுதது. குழந்தை பிறந்து குறைந்தது மூன்று மாதம் இருக்கலாம். அவளைப் போல் எத்தனையோ வாழ்ககையில் வழுக்கி விழுந்த பெண்கள் கைக்;குழந்தைகளோடு பாதை ஓரங்களில் முடங்கிக் கிடப்பதைக் காணலாம.; இரவு நேரங்களில கடை ஓரஙகளில உள்ள சிமேந்துப் பகுதிகள் தான அவர்களின் படுககை அறை. மழை வெய்யில் என்று பாராமல் அவர்கள் பிழைப்பு காலி வீதியை நம்பி இருந்தது. யாராவது புதுமுகம் அவர்கள் படுக்கும் இடத்ததை ஆக்கிரமித்து விட்டால் தூஷணவார்த்தை ஏவுகணைகளாக பறக்கும். சில சமயம் தலை மயிரைப் பிடித்து சண்டையிலும் இறங்கி விடுவார்கள். சண்டையை தீர்க்க தெருவுச் சண்டியன் வேறு. அவன் அதில் எத்தனை பெண்களுக்கு புருஷனோ அவாடகளை கேட்டுத் தர்ன தெரிந்து கொள் வேண்டும. அப் பெண்களி;ன் சண்டையைப் பாhத்து இரசிக்க ஒரு இரசிகாகள் கூட்டம இருக்கத்தான் செய்தது. பஸ்சில் அசையமுடியாத கூட்டம். எதோ ஒரு வழியாக வெள்ளவத்தை விகார லேனுக்கு  முன்னால் இருந்து புறக்கோட்டைக்குப் போகிற பஸ் அவருக்கு கிடைத்தது அவர் அதிர்ஷ்டம். ஒரு கையில குடையை இறுகப் பிடித்தபடி மறு கையால் பஸ்சுக்குள் தொங்கிய வலையத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றார் செல்லர். அந்தக் கலையில் அவர் பழக்கப்பட்டவர்.. பஸ் சாரதி போடுகிற தீடீர் பிரேக்கில் தனக்கு முன்னால் நிற்கும் பெண்ணோடு மோதாமல் கவனமாக இருந்தார். மோதினால் அதன் விளைவு அவருக்குத் தெரியும்.  அவருக்கு சற்று முன்னே சேலை கட்டிய பெண்ணொருத்தியை பி;ன்னால் இருந்து தன் உடம்பால் உராசியவாறு இன்பம் கண்டுகொண்டிருந்தான் சாரம் கட்டிய பேர்வழி ஒருவன். ; கைகள் அடிக்கடி அப்பெண்ணை பின பகுதியை வருடியதை அவர் கண்டுவிட்டார். அவள் என்ன செய்வது என்று தெரியமால் நெளிந்தாள். அவள் நெற்றியிலோ ஒரு குங்குமம் பொட்டு.. நிட்சயம் திருமணமான தமிழ் பெண்தான். குழந்தைகள் கூட அவளுக்கு இருக்கலாம். பாவம் குடும்பத்திற்காக பஸ் ஏறி இப்படி அவஸ்தைபட்டு வேலைக்கு போக வேண்டிய நிலை அவளுக்கு. பஸ் பிராயாணத்தில் தான் எத்தனை காமுகர்களை அவள் சந்திக்க வேண்டி இருக்கிறது.  செல்லருக்கு இதெல்லாம் புதுமையான காட்சியல்ல. அவர் கோட்டையில் வேலை செய்த போது தினமும் பஸ்சில் தான் போய் வந்தார். அதனால் பல காட்சிகளைக் கண்டு அனுபவப் பட்டவர். ஒரு தடவை அவர் பஸசில் பயணம் செய்தபோது ஒரு பெண் தனக்கு பின்னால் நின்று தன் உடம்பை அழுத்தி சேட்டை விட்டவனுக்கு பஸசை விட்டு இறங்க முன் குத்தக்கூடாத இடத்தில குத்திவிட்டு, கூட்டததோடு கூட்டமாய் தீடீரென இறங்கி மாயமாக மறைந்த சம்பவத்தை அவர் இன்னும் மறக்க வில்லை.  அதே போல் இன்னொரு சேட்டை போவழியைத் தன் கையில இருந்த குடையால் தாக்கிப் பலரின் கைதட்டளைப் பெற்ற கவுன் அணிந்த பறஙகிப பெண் ஒருத்தியை நினைத்த போது செல்லருக்கு இந்தப் பெண்ணும் அப்படி ஒரு தமிழ் வீராங்கனையாக மாட்டாளா என்ற எண்ணம் வந்தது. செல்லரைக் கொண்டக்டர் டிக்கட் கேட்ட போது எதோ ஒருவழியாக பஸ் குலுக்களில்; சேர்ட் பொக்கட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். பஸ் ஒரு குலுக்குளடன் பம்பலப்பிட்டியில் நின்றது. அவருக்குப் பகத்தில் இருந்த சீட்டில் இருந்த இருவரும் இறங்கினார்கள். செல்லர் தனக்கு லொட்டரி போல் கிடைத்த கோர்னர் சீட்டில் போய் அமர்ந்தார். குடையை தனக்கு அருகே பத்திரமாக வைத்துக் கொண்டார். தனது பர்சை அடிக்கடி தடவி பார்த்துக்கொண்டார். பிளேட் பாவித்து பிட்பொக்கட் அடிக்கும் போவழிகள் சம்பள நாட்களில் பஸ்சில் அதிகம். செல்லர் ரிட்டயராகமுன்னர் தபாற் தந்தி திணைக்களத்தில பரிபாலன அதிகாரியாக வேலை செயதவர் டியூக் பாதையில் உள்ள தலமையகத்தில் எழாதவது மாடியில் அவருக்கென சிறு அறையிருந்தது தினமும் ஒரு கையில் திணைக்களத்தில் கறுப்பு நிற தோல் பையும், குடையுமாகத் தான் செல்லர் வேலைக்குப்போவது வழக்கம். மத்தியானப் போசனத்தை வேலை செய்வோருக்கு சைக்கிலில எடுத்துச்செல்லும் சாப்பாட்டுக்கார சோமுவிடம் கொடுத்தனுப்புவாள் கனகம். பிளேட்டில் மத்தியானச் சாப்பாட்டை அழகாகக பரிமாறி செல்லருக்கு பிடித்த மீன் பொரியலையும் மோர் மிளகாய் பொரியலையும், ஊறுகாயையும் ஓரமாக வைத்து இன்னொரு பிளேட்டால் முடி , வெள்ளைத் துணியால் கட்டி, செல்லரின் பெயர் , வேலை செய்யும் விலாசம் , வகிக்கும் பதவியின் பெயர் ஆகியவற்றை உள்ளடக்கிய லேபலையும் கட்டி அனுப்புவாள் கனகம்;. எக்காரணததைக் கொண்டும் கடைகளில்; சாப்பிடக் கூடாது என்பது அவருக்கு கனகத்தின் கட்டளை. ஆனால் சாப்பாட்டுக் கரியர் செல்லரைப் போய் அடையும் போது வெள்ளைத் துணியில் குளம்பு ஊறி மஞ்சளாக மாறியிருக்கும். காரணம் பல கைகள் மாறி, சேர வேண்டிய இடத்தை சாப்பாட்டுக் கரியர் போயடையும் போது ஏற்பட்ட குலுக்களின் விளைவே துணியின் அந்த நிறமாற்றம். சில சமயங்களில்  வேறு ஒருவரின் சாப்பாடு அவரைப் போய் அடைவதுமுண்டு. பஸ்சி;ன் ஜன்னலூடாக அவர் சிந்தனைகள் தனது வேலைசெய்யும் போது ஏற்பட்ட கடந்த கால அனுபவங்களை நோக்கிந் சென்றது. தன்னொடு வேலை செய்த சிங்கள நண்பர்களோடு உணவைப் பகிர்ந்துண்டதை நினைக்கும் போது அவருக்கு சிரிப்பாக வந்தது. அந்த சுகமான உறவு 1983ம் ஆண்டு கலவரத்துக்குப் பின் ஓடி மறைந்துவிட்டது. காலி முக மைதானத்துக்கு முன்னால் பஸ் நின்றது. என்ஜின் தகராறு செய்வதினால் புறப்புட சில நிடங்களாகும் என்றான் டிரைவர். நல்லகாலம் ஜன்னல் சீட் கிடைத்தபடியால் பாசி மணம் கலந்த கடற்கரை காற்று முகத்தில் பட செல்லருக்கு இதமாக இருந்தது. கடற்கரை யோரமாக போடப்பட்டிருந்த சீமேந்து இருக்கைகளில், ஒரு குடையின மறைவில் ஒரு சோடி ஜீவன்கள தங்களை மறந்து சல்லாபத்தில ஈடுபட்டிருந்தது அவர் பாhவைக்கு பட்டது. வீதி ஓரத்தில் சல்லாபம் , பஸ் பணத்தின் போது சல்லாபம் , கடற்கரை ஓரத்தில சல்லாபம். ஏன் இவர்களுக்கு வீடு வாசல் இலலையா?. மிருகங்களைப் பொலல்லவா நடக்கிறார்கள். நாட்டில் ஒழுக்கம் சீரழிந்து விட்டதா. இவர்களி;ன் நடத்தைக்கு ஒத்தாiசாயக குடை உதவியது. ஆதுவும் ஊள்ளூர் குடை. ஆடவனின் ஒரு கை குடையை பிடித்திருக்க மறு கை சிருங்கார விளையாட்டுகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அவர்களி;ன் காதல் விளையாட்டை தினப்பத்திhகை ஒன்றை எதோ வாசிப்பதுபோல் பாவனை செய்தவாறு ஒரு முதியவர் அடல்ட்ஸ ஓன்லி படம் பார்த்து இரசிப்பது போல் இரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு துணையாக இருந்த குடை அவர் அக்காட்சியை பார்பதற்கு  இடைஞ்சலாக இருந்தது. வீசியை காற்றில குடை பறந்து போய்வடாதா என்ற நப்பாசை அக் கிழவனுக்கு. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்வில்லை போலும் எனச் செல்லர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். விகாரமகா துவி பூஙகாவிற்கு வரும் இளம் தம்பதிகளி;ன் சிருஙகார விளையாட்டுகளைப் பார்த்து இரசிப்பதற்காக, துவாரம் செய்த பத்திரிகையும் கையுமாக பூங்காவை வாசிகசாலையாக்க வரும் கூட்டம் ஒரு புறம். மனிதனின நெறி தவறிய செயல்பாடுகளுக்குத் தான் எல்லை கிடையாதே! ஓரு பாடாக பஸ் திரும்பவும் புறப்பட்டது. செல்லர் கைக்கடிகாரத்தை பார்த்தார். பஸ் ஏறி ஒரு மணித்தியாலமாகிவிட்டது. கடந்த தூரமோ ஏழு மைல்கள். மத்தியான போசன நேரத்துக்கு முன் கச்சேரிக்கு போயாக வேண்டும். இல்லாவிட்;டால் சப்செஜக்ட் கிளாhக்;கை பிடிக்க முடியாது. கச்சேரியை வந்தடையும் போது நேரம் பதினொன்றாகி விட்டது. வாசலில் நின்ற பீயூனைப் பார்த்து தனக்குத் தொந்த அரை குறை சிங்களத்தில சப்செஜக்ட் கிளார்க்கின் பெயரைச் சொல்லி பென்சன் விஷயமாக பார்க்க வந்திருப்பதாக சொன்னார். அவன் சொன்ன பதில அவருக்கு ஏமாறடறததை அளித்துத “மாத்தையாவிண்டை அம்மா நேத்து இறந்து போனா. அவர் ஒரு கிழமை லீவு”. என்றான் பியோன் தனக்குத் தெரி;ந்த தமிழில்;. சான் வெளிக்கிட்ட முழிவியளம் சரியலலை போலும். இ;நத பெனசன் விஷயத்துகாக செயத பிரயாணச செலவும் நேரமும் கூட்டிப் பார்தால் இவ்வளவுக்கு எனக்கு செர வேண்டிய பணத்தைப் பெற இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா? ஏனத் தனக்குள்  அங்கலாயித்துக் கொண்டார். வெய்யிலின அகோரம் குறையவிலலை. கச்சேரி வாசலில் செவ்விளநீர் விறவனிடம் ஒரு இளனீரை வெட்டிவித்து குடித்தப்பிறகுதான் அவருக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது. செல்லர்  நடந்தார்; பஸ்சை பிடித்து வீடு போய் சேருவதற்கு. பஸ் ஸடாண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த செல்லருக்கு குழநதை அழும் சத்தம் கேட்டது. உடனே அவருக்கு சில மாதஙகளுக்கு முன்னர் தன் மகளுக்கு பிற்நத பேத்தி துர்காவின் நினைவு தான் வந்தது. அவளின் அழுகைக் குரல் போல் அவருக்கு இருந்தது. குரல் வந்த திசையை நோக்கினார். வீதி ஓரமாய், கொளுத்தும் வெய்யிலில் திரும்பவும் வெள்வத்தையில் பஸ் ஏற முன்; தான் பார்த்த பிசசைக்காரி போல ஒரு பெண் கைக் குழந்தையோடு இருந்தாள். ஆனால் இந்தத் தடவை; கையில் குறைந்தது ஒரு கிழமைக்கு முன் பிறந்த பெண் குழந்தையோன்றுடன், பாதை ஓரத்தில் துணி விரித்து பிசசை எடுத்துக்கொண்டிருந்தாள். வாழ்க்கையில் ஒரு சில நிமிட சிற்றின்பத்திற்காக ஆடவன் ஒருவனால் வஞசிக்கப்பட்டவள் அவள். வறுமைக்காக தன் கற்பை விலை பேசி விற்றுப் பெற்ற வெகுமதி அவள் கையில். அவள் தோற்றத்தில் மலைநாட்டு இந்நிய வம்சவழி வந்த பெண்போல இருந்தது. சிங்களத்திலும் மலை நாட்டுத் தமிழிலும் அவள் பிச்சை கேட்டதில் இருந்து அதை செல்லர் ஊகித்துக் கொண்டார். “இது உன் குழநதையர் “? தமிழில் அவளைக் கேட்டார் செல்லர் “ஆமாம் சாமி. பிறந்து இரண்டு கிழமை தான் சாமி”. “அது சரி நீ பேசுவதை பார்க்க மலைநாட்டை சேர்ந்தவள் போல் இருக்கிறதே” செல்லர் அவளைக் கேட்டார். “ ஆமாம் சாமி. என் சொந்த ஊர் டிக்ஓயாவுக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமம். அஙகு உள்ள ஒரு தெயிலைத் தோட்டத்தில கொளுந்து பிடிங்கிக் கொண்டிருந்தனான். ஒரு சிங்களவன் ஒருவானால் கூடிய சம்பளத்தில் வேலை எடுத்துத் தருவதாகசச்; சொல்லி கொழும்புக்கு என்னை கூட்டி வந்து ஏமாற்றிப்போட்டான். நான். இந்தக் குழந்தை தான் அவன் தநத பரிசு” என்றாள கலையோடு அவள். “அது சரி அவன் இப்ப எங்கே”? “அவன் என்னை விட்டு போய் மூன்று மாதமாகிறது. ஆளைத் தேடினேன் கிடைக்கவிலலை. என்னைப் போல எத்தனைப் பெண்களை ஏமாற்றினானோ தெரியாது.” “நீ திரும்பவும்  குழுந்தையோடை டிக்ஓயாவுக்குப் போயிருக்கலாமே” “நாள்குழந்தையோடு ஊருக்குப் போயிருந்தால் கஙகாணயாக இருக்கும் என் தந்தை என்னை கொன்றிருப்பார்.” “அப்போ இனி உன் வாழ் நாள் முழுவதும் பாதையோரத்தில் இருந்து பிச்சை எடுத்து நீயும் குழநதையும் வாழப் போகிறீர்களா”? செல்வர் கேட்டார். “என்ன செய்வது சாமி. என் உடல இருக்கிறது எனக்கும் குழநதைக்கும் வயிற்றிப் பசியைத தீர்க்க. ஆண்களின் பசியயைத் தீர்த்து எங்கள் பசியைத் தீர்த்துகு;கொள் வேண்டிய நிலை எனக்கு” “ நீ எங்கேயாவது போய் வீட்டு வேலை செய்து பிழைக்கலாமே” “கைக் குழநதையோடு இருக்கும் எனக்கு யார் வேலை தரப்போகிறார்கள் சாமி” தீடிரென்று மழை திரும்பவும் தூறத் தொடங்கியது. தன் முந்தாiனாயல் குழந்தையின் தலையை அவள் மூடினாள். தூரத்தில் வெள்ளவத்தைக்குப் போக வேண்டிய பஸ்வநது கொண்டிருந்தது. அந்தப் பிசசக்காரி iயில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டடை திணத்தார் செல்லா. “ வேண்டாம்சாமி. இந்ததொகைகூடிப்போச்சு” என்றுபணத்தைவாங்கஅந்தப்பெண்மறுத்தாள் “பரவாயில்லை வைத்துக்கொள். மூன்று நாளைக்கு சாப்பிட உதவும் பி;ள்ளையின் பசியும் தீரும். இந்தா இதையும் வைத்துக்கொள். மழை கொட்டப ;போகுது. குழந்தை நனையாமல் பார்த்துக்கொள” என்று தன் கையில் இருந்த புதுக் குடையை அவள் முன் போட்டார் செல்லர். அவளால் அதை நம்பமுடியவில்லை. குடை வேண்டாம் என்று அவள் அவரைத் தடுக்க முன் அவர் பஸ்சில போய் ஏறினார் . செல்லருக்கு தான் செய்த செயல் வெருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏதோ அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உதவ வேண்டும் என்ற உந்தல் அவரை அத்தானத்தை செய்ய வைத்தது, அப்பெண்ணை தன வசதி படைத்த மகளின் நipலயுடன் அவர் ஒப்பிட்டுப் பார்த்ததும் ஒரு காரணமாகயிருக்கலாம்..                                                                                        ♣♣♣♣♣ “என்னப்பா இவ்வளவு நேரம் செய்தனீங்கள். எங்க குடையை கையிலை காணம்?. என்ன குடைக்கு நடந்தது” செல்வரின் மனைவி கனகம் கேட்டாள்.. “கொஞ்சம் பொறும் நடந்ததைச் சொல்லுகிறன். எனக்கு எதாவது கடிதங்கள் வந்ததே? வந்த களைப்பில கதிரையில் போய் அமர்ந்தார். “இரண்டு கடிதற்கள் வந்தது.. ஹோல் மேசையிலை வைச்சிருக்கிறன். போய் பாருங்கோ. அது போகட்டும். நீஙகள் கொண்டு போன புதுக் குடை எங்கை?. அதை முதலிலை சொல்லுங்கோ”? கனகம் கேட்டாள். “பதட்டப்படாதையும். போகக்கை பஸ்சிலை சரியான நெருக்கடி. சீட்டில் இருக்கும் போது குடையை சீட்டகு;கு முன்னுக்கு மாட்டியிருந்தனான். இறஙகும் அவசரத்திலை குடையை எடுக்க மறந்திட்டன். என் யோசனை முழுவதும் என் பென்சன் பற்றி இருந்ததே காரணம்”, முழுப’ பூசணிக்காயை சோற்றில் மறைத்து பதில் சொன்னார் செல்லர். “உங்களுக்கு இப்ப ஞாபக மறதி வர வர கூடிக்கொண்டு போகுது. உதுக்குத் தான் போகக்கை தம்பி அனுப்பிய புதுக்குடையை விட்டிட்டு பழைய குடையயைக் கொண்டு போங்கோ எண்டு சொன்னான். நீங்கள் நான் சொன்னதைக் கேட்;காமல் நடப்பாய் மகன் அனுப்பிய புதுக் குடையைக்  கொண்டு போனியள். இப்ப நடந்ததை பாருங்கோ” கனகம் தன் நச்சரிப்பைத் தொடர்ந்தாள். “சாரி சரி கோவியாதையும். நடந்தது ஏதோ நல்லதுக்கு நடந்துவிட்டது. தம்பிக்கு கடிதம் போட்டால் இன்னொரு குடையை வாங்கி அனுப்பிவைப்பான். இனி கவனமாக இருக்கிறன் “ எனக் கூறியவாறு தனக்கு வந்திருந்த கடிதத்தின் வெளி பக்கத்தைப் பார்த்தார். அரசாங்க கடிதமாக இருந்தது. அவசரம் அவசரமாக உறைக்குள்  இருந்தது கிழித்து போது அதற்குள் 18,738 ரூபாயுக்கு ஒரு செக்கும் சிங்களத்தில் ஒரு கடிதமும் இருநதது. பின் பக்கத்தில் அதன் மொழி பெயர்ப்பு இருந்தது. வாசித்த போது செல்லருக்கு தலைகால் புரியாத சந்தோஷம். எதற்காக அவர் பஸ்சில் பல தடவை பென்சன் கொடுக்கும் பகுதிக்குப் போய் வந்தாரோ அந்த பென்சனில் அவர்களால் அதிகம் கழிக்கப்பட்ட மொத்தப் பணம் செக்காக வந்திருந்தது. இனி அவரது பென்சன் மாதம் ரூபாய் 538.45 அதிகரிக்கும். தான் செய்த தர்மம் தனக்கு வேறு விதத்தில் உதவி உள்ளதை நினைத்த போது அவர் மனம் இறைவனுக்கு நன்றி செலுத்தியது.                                                                                       ♣♣♣♣♣ 16 அத்தியாயம் 16 ( வாரிசு ) [Vaarisu 3download]                                வாரிசு சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், 1955ல் , யாழ்ப்பாணக் கச்சேரியில் அரசாங்க அதிபர் முதல் கொண்டு பியூன் வரை கிளாக்கர் கணபதிப்பிள்ளையை  தெரியாதவர்கள் இல்லை. கிளரிக்கல் சேர்விசில் இருபத்திரண்டு வயதில சேர்ந்த அவர் சீனியர் கிலாஸ் டூ கிளார்க் மட்டுமல்ல  ஒரு அதிசயமான பிறவி கூட. அவரது  அபாரமான ஞாபகசக்திக்கு அவர் எங்கையோ உயர் பதவியில் இருக்க வேண்டியவர். எதையும் மனதில் கணக்கு போட்டு சொல்வதிலும் அப்படித் தான். இலங்கை சரித்திரத்தில் விஜயன் கள்ளத் தோணியில் இலங்கைக்கு தனது கூட்டாளிமாரோடு வந்து இறங்கிய காலம் தொட்டு முக்கிய திகதிகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். மகாவம்சத்தையும் சூலவம்சத்தையும் எழுதியதில் அவருக்கு ஓரு பங்குண்டோ என்று பலர் வியந்ததுண்டு. அரசியல்வாதிகளின் பிறந்த திகதிகளைக் கேட்டால் அவர் சொன்ன திகதிக்கும் அவர்கள் பிறந்த அத்தாட்சி பத்திரத்தில் உள்ள திகதிக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்காது. அதோடு மட்டுமல்ல கச்சேரியில் வேலை செய்தவர்களினது மாதாந்த சம்பளம் எவ்வளவு என்பதும் தெரியும். காஷியராக சில காலம் வேலை செய்த அனுபவமது. இருபது வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறுசம்பவத்தையும் துல்லியமாக நனைவில் வைத்திருப்பது என்பது பலரால் முடியாத காரியம். ஆனால் எமது கதாநாயகன் கணபதிப்பிள்ளை அப்படி வாழவில்லை ஒருகாலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில கிளாக்கர் கணபதியை தெரியாதவர்கள் இல்லை. அவரது அமைதியான குணம், எதையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல், ஏன் தொலை பேசி எண்களைக் கூட அவர் எழுதி வைத்தருப்பதில்லை. அவர் ஒரு நடமாடும் டெலிபோன் டிரக்டரி. எந்தக் பைலில் என்ன குறிப்பு இருக்கிறது. எந்த வருடம்,; எந்ந அரசாங்க அதிபரால் எழுதப்பட்டது என்பது போன்ற விபரங்களை கேட்டறியவேண்டும் என்றால் கிளாக்கர் கணபதியைத்தான் நாடுவார்கள். மேலிடத்தில் இருந்து வரும் சுற்றறிக்கையில் உள்ள விஷயங்கள் எல்லாம் மனப்பாடம். அவர் தான் செய்யும் உதவிக்கு உபகாரமாய் வாங்குவது கோடா போட்ட வைத்திலிங்கம் சுருட்டு ஒன்று தான். அவருடன் பேசவேண்டும் என்றால் இரண்டடி தள்ளி நின்று பேசவேண்டும் அவ்வளவுக்கு சுருட்டின் வாடை.  அதோடு வாயுக்குள் சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை போட்டு குதப்பும் வெற்றிலை வேறு. பற்கள் காவி படர்ந்து போயிருக்கும். அவர் சிரித்தால் சிவப்பு பல்லழகா என்று பலர் விமர்சனம் செய்வதுண்டு. அதை அவர் சீரியசாக எடுப்பது கிடையாது. நானோ திருமணமானவன். இனி ஆர் எனக்கு பெண்தரப்போகிறார்கள் என்பார். என்ன பாவம் செய்தாரோ அவர் மனைவி அவரிடம் இருந்து வரும் சுருட்டு வாடையை பொறுத்துக்கொள்ள. அவர் மேசையில் வெள்ளியால் செய்த மூக்குப்பொடி டப்பா. இந்தியா போய்வந்த அவர் நண்பர் ஒருவர் தனது பென்சன் வேலையை சரிசெய்து கொடுத்ததற்காக பரிசாகக் கொணடு வந்து கொடுத்தது.  மனுஷன் கை நீட்டி லஞ்சமாக காசு வாங்காத சத்தியவான். பொய் சொல்லாத அரிச்சந்திரன். சில சமயம் பதில் தெரிந்தாலும் மழுப்பி விடுவார் அதனால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தால்.  சில கேள்விகளுக்கு சிந்தித்து பதில் அளிப்பதற்கு முன்னர் மூக்குத் தூளைக் கிள்ளி, மூக்கின் இரு துவாரங்களுக்குள் அமுக்கி, உரிஞ்சு இழுத்து தும்மி விட்டு விட்டுத்தான் பதிலைச் சொல்லுவார். அதில் அவருக்கு ஒரு தனி இன்பம். அது அவருடைய மூளைக்கு ஒரு உந்தலை வேறு கொடுக்கிறது போலும். கோப்பில் உள்ள மூக்குப் பொடி கறையில் இருந்து கணபதி கையூடாக அது சென்றிருக்கிறது என்பதை ஊகிக்கலாம். சரி கிளாக்கர் கணபதியைப் பற்றி அறிமுகம் போதும் கதைக்கு வருவோம். அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தாமல் கணபதியைப்பற்றி சொன்னால் மட்டும் கதையில் சுவையிருக்காது. கணபதிதனதுமாமிமகளைச்சொத்துக்காகதிருமணம்செய்தபோதுஅவருக்குவயது இருபத்தி எட்டு. அவருக்கும் மனைவிக்கும் பதின்ரெண்டு வயது வித்தியாசம்.. என்ன கணக்கு பார்க்கிறீர்களா? ஆமாம். அவரது மனைவி தேவிகாவுக்கு திருமணமான போது வயது பதினாறு. பதினாறு வயதான இளம் மொட்டு. தேவிகா ருதுவாகி நான்கு வருடங்கள்தான். தாம்பத்திய வாழ்வுபற்றிய அனுபவம் அறிவு இல்லாதவள். ஆக கஷ்டப்பட்டு எட்டாம் வகுப்பை அவள் எட்டியதும் “இனி படித்தது போதும் உனக்காக மச்சான் காத்துகொண்டு இருக்கிறான். அதுவும் கவர்மேந்திலை பெரிய உத்தியோகம். அவன் உழைத்து போடுவான், நீ வீட்டிலை அடுப்படியை கவனித்தால் போதும்” என்று கட்டளையிட்டாள் தாய் தங்கம்மா. அவளை குணத்தில் தங்கம் என்று சொல்லமுடியாது. அவள் சொன்னது தான் வீட்டில் சட்டம். அவள் இட்ட கட்டளையை கணவனே தாண்டியது கிடையாது. காரணம், அவரிடம் வரும் போது அவள் கொண்டு வந்த சொத்;துதான் அவளுக்கு அந்த திமிரைக் கொடுத்தது. ஆனால் தங்கம்மாவுக்கு தமையன் மேல் மட்டும் தனி அன்பு. அண்ணன் மகன் கணபதிதான் தன் மகளுக்கு புருஷன் என்று தேவிகா பிறந்த நாள் முதல் கொண்டே சொல்லிக்கொண்டே வந்தாள். கணபதியின் தாயால் கூட படித்த தனது சகோதரன் மகளை மருமகளாக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் அதை நிறைவேற்றமுடியவில்லை . தங்கத்திற்கு ;இருப்பதோ ஒரே மகள். பாட்டன் விட்டுப் போன வீடு வாசல்கள் காணி பூமி ஏராளம். எல்லாம் தங்களது செலவுக்கு அல்லது பிஸ்னசுக்க பணம் தேவைபட்டபோது ஊர் சனங்கள் ஈட்டுக்கு வைத்து மீட்க முடியாது போன  சொத்துக்கள் . அதோடு அடைவு மீட்க முடியாது போன நகை நட்டுகள், வீட்டுப் பாத்திரங்கள். அறாவட்டியில் சேர்த்தபணம். அச்சொத்துக்கள் தங்களுக்குள் இருக்கவேண்டும் வெளியே போக கூடாது என்ற எண்ணம். அதோடு சொந்தத்துக்குள்ளை முடித்தால் சாதி சனம் பார்க்கத் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் மருமகனை வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் தன் தமையனின் சொத்தும் வந்து சேரும்;. அவளது திட்டத்துக்கு வீட்டில் எதிர்ப்பு இருக்கவில்லை. தேவிகா ஒரு வாயில்லா பூச்சி. கணபதிக்கு தன் மாமன் மகள் மீது ஒரு கண். அவளுடைய முகம் தோற்றத்தில் சரியாக சினிமா நடிகை தேவிகா போல என்று தன் நண்பர்கள விமர்சிக்க, அதுவே அவனுக்கு அவள் மேல் பிரியத்தை வளர்த்துவிட்டது. தேவிகா அப்படி ஒரு பேரழகியல்ல. இடுப்பில் சற்று கூடுதலாக சதைபோட்டிருந்தது. அவள் உயரத்தில் கணபதியை விடக் குறைவு. ஆனால் அவளிடம் ஒரு தனி கவர்ச்சியைக் கணபதி கண்டான். பதினாறு வயது இளம் சிட்டின் கழுத்தில் தாலியைக் கட்டி இரு வருடத்துக்குள் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி விட்டான் கணபதி. மாமியாரின் வற்புறுத்தலின் பெயரில் அவளது காலம் சென்ற தாய் நினைவாக சிவகாமி என்று பெபர் சூட்டினான். குட்டுப்பாடில்லாமல் அடுத்தடுத்து ஐந்து பெண்குழந்தைகளை சில வருட இடைவெளிக்குள் உருவாக்கியது கணபதி புரிந்த சாதனை. மனைவி தேவிகாவை ஒரு பிள்ளை உற்பத்தி செய்யும் மெசினாகவே கணபதி பாவிக்கிறான் என்று பலர் கச்சேரியில் கதைத்தாலும் அவன் அதை காதில்ல போட்டுக்கொள்ளவில்லை. பிள்ளைகளை வளர்க்க மாமி இருக்கும் போது அவனுக்கு என்ன கவலை. கடவுளாகவே பார்த்து தந்தது என்பான். தன் சந்ததி தளைக்க தனக்கு ஒரு ஆண்குழந்தை சரி கிடைக்காதா என்ற ஏக்கத்தின் முயற்சியின் விளைவே அந்த ஐந்து பெண்குழந்தைகளும். எனக்கு வயது நாற்பதாகிவிட்டது. ஒரு வேளை தனக்கு கொள்ளி வைக்க ஆண்குழந்தை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கணபதி ஏறி இறங்காத சாத்திரிமார் கிடையாது. ஒரு சமையம் ஒரு ஆண் குழந்தையை எடுத்து வளர்ப்போமே என்ற அவன் யோசனைக்கு தஙகம் இடம் கொடுக்கவிலலை. முடமாவடி சாத்திரி மட்டும் அவருக்குச சொன்னது மன ஆறுதலை கொடுத்தது. “ உமக்கொரு மகன் பிறப்பான் அவன் உம்மைபோலவே இருப்பான்” என்றார் சாத்திரியார். அது போதும் கணபதிக்கு. எண்டை மனுசிக்கு இப்ப வயசு இருபத்தெட்டு தானே. இன்னும் அவள் எனக்கு ஒரு ஆண்குழந்தையை பெற்று தரவாய்ப்புண்டு என்று தனது முயற்சியை கைவிடாததால் ஆறாவதும் ஏழாவதுமாக மேலும் இரண்டு பெண்குழந்தைகளை தேவிகா பெற்றெடுத்தாள். ஊரில் இருந்தால் தானே பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறாய் உனக்கு டிரான்சவரும் புரமோசனும் கொடுத்து கொழும்புக்கு அனுப்பி வைக்கிறேன்.  அப்படியாவது உன் மனைவிக்கு ஓய்வு கொடு என்று கடவுள் சிந்தித்தாரோ என்னவோ கொழும்பு கச்சேரிக்கு தலமை கிளாக்கராக மாறுதல் கிடைத்து போனான் கணபதி.. தகப்பனும் மாமியும் அரசியல்வாதிகளைச் சந்தித்து எவ்வளவு முயற்சி செய்தும் கணபதியை ஊரோடை இருக்கச் செய்யமுடியவில்லை. “ சரி மூன்று நாலு வருஷமாவது கொழும்பிலை இருந்து தனது கெட்டித்தனத்தை காட்டி அடுத்து புரமோஷன் எடுத்து யாழ்ப்பாணக் கச்சேரிக்கு ஓஏ ( OA) ஆக வரட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் தங்கம். “ஏன் மாமி எதற்கு யோசிக்கிறியள். கொழும்புக்கு நான் மாறிப் போனால் என்ன. யாழ்ப்பாணம் மெயில் டிரெயின் இருக்கவே இருக்கு. வெள்ளி இரவு மெயில் எடுத்தால் சனி விடிய வீட்டிலை நிப்பன். அதோடை ஒரு நாள் சிக் லீவு போட்டால் சனி, ஞாயிறு திங்கள் வீட்டிலை. திங்கள் இரவு மெயில் டிரெயின் எடுத்தால் செவ்வாய் விடிய கொழும்பிலை நிற்பன்” என்று மாமிக்கு ஆறுதல் சொன்னான் கணபதி. அவன் சொன்னது தான தங்கத்தின் மகளையும் பிள்ளையும் விட்டு பிரியமனமில்லை என்பதை மறைமுகமாக தெரியப்படுத்தவோ என்னவோ தெரியாது. அவன் சொன்னவாக்கைத் தவறவிடாமல் கொழும்புக்குப் போய் சில மாதங்கள் வார இறுதி நாட்களுக்கு மனைவி பிள்ளைகளுடன் கழித்துச் செல்வது கணபதிக்கு வழக்கமாகிவிட்டது. கணபதிக்கு தேவிகாவை காணாமல் ஒரு நாளும் இருப்பது கவலையாக இருந்தது. அவனுக்கு என்ன தேவை என்பது தேவிகாவுக்கு மட்டுமல்ல தங்கத்துக்கும தெரியும்.. வாரநாட்களில் பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கிடையே எவ்வளவோ பேச இருக்கும். பிள்ளைகள் இருந்தால் ஓடி ஆடி தொந்தரவு செய்வார்கள் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன. அதுவும் ஏழு பெண்பிள்ளைகள் என்றால் வீட்டில் அமைதி என்பதில்லை. அப்பா கொழும்பில் இருந்துவந்துவிட்டால் அவரைத் தாயோடு சில நிமிடங்கள கூட தனியாகப் பேசி மகிழ விடமாட்டார்கள். ஊரில் கணபதி கொழும்பால் வந்திருக்கும் நாட்களில் இரவு நேரங்களில சாட்டு சொல்லி பிள்ளைகளைத் தன் சம்பந்தி வீட்டுக்கு அனுப்பிவிடுவாள் தங்கம். மருமகனின் தேவையறிந்த மாமி. எங்கே இன்னும் இரண்டு பெண்களை உற்பத்தி செய்து விடுவானோ மகன் என்ற பயம் கணபதியின் தாயுக்கு. ஏன் என்றால் பிள்ளைபேறு பார்த்து பிளளையை வளர்ப்பது அவளது பொறுப்பு. கொழும்பு வாழ்க்கை கணபதிக்கு சூடு பிடிக்கத்தொடங்கிவிட்டது. அதுவும் அவனோடு சேர்ந்து ஐந்து தமிழ் நண்பர்கள் அவனைப் போல் குடும்பத்தை யாழ்ப்பாணத்தில் விட்டு விட்டு கொழும்பில் பம்பலபிட்டியில் சமரி வாழ்க்கை நடத்துபவர்கள். சனி ஞாயிறு என்றால் சமரியில் குடியும் கும்மாளமும் தான். சமைக்க மாதவன் நாயர் என்ற கேரளக்காரன். நாயர் இரண்டு மூன்று சமhளுக்கு சமைப்பவன். ஓவ்வொரு சனிக்கிழமைகளிலும் உயிரோடு ஒரு இளசான ஊர்க் கோழியை வாங்கிவந்து சுவையாக மூன்று கறிகளோடு சமைத்து வைப்பான் நாயர். நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக பின்னேரம் சினிமாவுக்கு போவார்கள். இந்த வித்தியாசமான வாழ்க்கை கணபதிக்கு ஆரம்பத்தில் ருசிபடவில்லை. அவனுக்குத் தேவை தேவகியின் அணைப்பு. ஆனால் காலப்போக்கில் தேர்தல் வேலை காரணமாக ஒரு சனி ஞாயிறு கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது தான் ஊர் வாழ்க்கைக்கும், கேளிக்கைகள் நிறைந்த கொழும்பு வாழ்க்கைக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரிந்தது. அப்போதுதான் அவனது நண்பர்களின வற்புறுத்தலின் பெயரில் வெள்ளை சாராயத்தின சுவையை அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் இரண்டு கிலாஸ் உள்ளே போனதும் தனது மனதில் புதைந்திருந்த ஆசைகளை, அனுபவங்களை கணபதி வெளிக்கொண்டு வந்தான். பாவம் எவ்வளவு காலம் ஒருத்தியின் அணைப்பில் சுகத்தை அனுபவிப்பது?  தன் நண்பர்களைப் போல் புதிய உறவை அவன் மனம் தேடியது. அவனோடு சமரியில் வாழ்ந்த மகாலிங்கத்திற்கும் தியாகனுக்கும் அவர்களோடு ஓபிசில வேலைபார்த்த டைபிஸட்டுகளுடன் உறவு இருப்பது கணபதிக்கு தெரியும்.  அவர்களிடையே உறவு என்றால் அடிக்கடி கோல் பேசுக்கும் சினிமாவுக்கும் ஹோட்டலுக்கும் போய் வருமளவுக்கு வளர்ந்திருந்தது. அதில் ஒருத்தி நீர்கொழும்பைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண. பெயர் ரீட்டா பெர்னாந்தோபுள்ளை. பெற்றோரின் பூர்வீகம் தமிழர்கள். பரவர் சாதி என்று மகாலிங்கம் சொல்லித்தான் அந்த சாதியைபற்றி முதல் தடவை கணபதி கேள்விப்பட்டான். மற்றவள் தெகிவளையைச் சேர்ந்தவள். எல்லோருடனும் கூச்சமின்றி பழகுவாள். தனக்கு வேண்டியது கிடைத்தால்; மற்றவர்களைப் பற்றி அவளுக்கு கவலை இல்லை. கண்டியில் வேலை செய்து விட்டு மாறுதலாகி கொழும்புக்கு வந்தவள். மல்லிகா அவள் பெயர். தாய் கம்பளையை பிறப்பிடமாகக்க கொண்ட சிங்களத்தி, தந்தை ஒரு மலைநாட்டுத் தமிழர் என்று தியாகன் தனக்கும் அவளுக்கு உள்ள தொடர்பை விளக்கினான். “நீங்கள் செய்வது பிழை என்று உங்களுக்குப் படவில்லையா?. ஊரிலைல் மனைவியும் பிள்ளைகளும் உங்களை நம்பி இருக்கிறபோது. இந்தச் சினேகிதம் அவசியமா? அவர்களுக்கு நீங்கள் இந்த உறவால் துரோகம் செய்யவில்லையா”?  கணபதி அவர்களுக்கு உபதேசம் செய்தான்.. “இது ஒரு பொழுது போக்கு மச்சான். மனைவிமாரை எப்பவும் பார்த்து வாழும் நாங்களும் உணர்ச்சிகளுக்கு அடிமைகள் தான். ஒரு மாற்றத்தை விரும்புவதில் என்ன பிழை? மாதம் மாதம் சம்பளம் எடுத்தவுடன் அவையளுக்கு பணம் மணியோடரிலை அனுப்புகிறோம் தானே. இனி என்ன வேண்டும்? எப்போதும் ஒரே சோறையும் கறியையும்; சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அலுப்புத் தட்டிவிடும். நாமாகவே அவர்களைத் தேடிப் போகவில்லை. அவர்களாகவே எங்கள் உறவை விரும்பி தேடி வரும்;போது நாம் என்ன செய்யமுடியும். உனக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நீ விட்டுவிடுவாயா”?, நண்பன் ஒருவன் கணபதியைக் கேட்டான். கணபதியால் பதில் சொல்லமுடியவில்லை. காரணம் வேறு டிப்பார்ட்மெண்டிலிருந்து மாறுதலாகி அவனது பகுதிக்கு வந்த ராஜேஸ்வரி தான். ராஜேஸ்வரியின் வருகை கணபதியின் போக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. வெற்றிலை போடுவதை கணபதி நிறுத்திவிட்டான். அது மட்டுமன்றி அவனது மூக்குத் தூள் டப்பா மாயமாய் மறைந்து விட்டது. பற்கள் பளிச் என்று மின்னின. தினமும் இரு தடவை பல்லை மினுக்கி வெற்றிலைக் காவியை போக்கிவிட்டான். சுருட்டு வாடை எங்கு போய் ஒளிந்ததோ தெரியாது அதற்கு பதிலாக அவரிடம் 777 ஓடிக்கொலோன்வாசைனை தான் வீசியது. ராஜேஸ்வரியின் வருகை அவனைப் புது படிப்படியாக மனிதானாக்கிவிட்டது. தேவிகாவுக்கு தான் துரோகம் செய்வதாக அவன் நினைக்கவில்லை. “என்ன கணபதி இப்படி மாறிவிட்டீர்”? என்று நண்பர்கள் கேட்டதற்கு. “எல்லாம் எனது மனநிலை கருதிதான். காலத்தோடை நாமும் மாறத்தானே வேண்டும்”என்று; சுருக்கமான பதில் அவனிடமிருந்து வந்தது. “ராஜேஸ் இதை ஒருக்கா டைப் செய்து தாரும” என்று கணபதி ராஜேஸ்வரியின் பெயரை உச்சரிப்பதில் அவர்களிடையே ஒரு தனி உறவு தொனித்தது. ஆனால் பலருக்கு அதன் இரகசியம் புரியாத புதிராக இருந்தது. அது காதலா அல்லது நட்பா?  கொழும்பு வாழ்க்கை சூடுபிடித்தபோது அவனது ஊர்வருகையில் அடிக்கடி தடங்கல்கள் ஏற்பட்டது. வேலையை சாட்டாக வைத்துக் கொண்டான். மருமகனில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு தங்கமே ஆச்சரியப்பட்டாள். தேவகி பெருமை பட்டாள். சுருட்டு, புகையிலை, வெற்றிலை பழக்கங்கள் அவனிடம் இல்லாமல் போனதால் தன் கணவன் திருந்திவிட்டான் என்று நினைத்தாள். பாவம் அவளுக்கு தெரியாது கொழும்பில் நடப்பவை. ஓவ்வொரு கிழமையும் தவறாது இருந்து வந்த அவனது வருகை மாதம் ஒரு முறையாகி. அதன் பின்னர் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாகக் குறைந்தது.  சரி நான்கு வருஷம் கொழும்பில் வாழ்ந்தது போதும் மருமகனை திரும்பவும் ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்த தங்கம் தனது அரசியல் செல்வாக்கைப் பாவித்து கணபதிக்கு திரும்பவும் யாழ்ப்பாணக் கச்சேரிக்கு மாறுதல் எடுத்துக் கொடுத்தாள். அவனுக்கோ கொழும்பை விட்டு பிரிய விருப்பமில்லை. பிரிய மனமில்லாமல் தனது நண்பர்களையும், கொழும்பு உறவுகளையும் விட்டு பிரிந்தான் கணபதி. யாழ்ப்பாணம் வந்தும் அடிக்கடி கொழும்பு கச்சேரியில் சில வேலைகள் செய்து முடிக்கவில்லை என்ற சாட்டில் கணபதி; அடிக்கடி போய் வந்த உண்மையான காரணம் ஊரில் எவருக்கும் தெரியாது. அவனால் கொழும்பில் தான் வாழ்ந்த நான்கு வருடம் எட்டு மாத வாழ்க்கையை மறக்க முடியவில்லை.                                                                                               ********* திடீரென்று கணபதிக்கு ஐம்பத்திரண்டு வயதில் ஹார்ட் அட்டாக வரும் என்று எவரும் ஊரில் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு இப்படிநடக்க தான் காரணமோ என்று தேவகி கவலைப்பட்டாள். வேலை பழு அதிகம். அது உடலை பாதித்துவிட்டது என்றார்கள் கச்சேரி நண்பர்கள். எந்தப் பழுவை அவர்கள் குறிப்பிட்டார்களோ அவளுக்குத் தெரியவில்லை  இல்லை இல்லை கொழும்பு வாழக்கையில அவன் சாப்பிட்ட கடைச் சாப்பாடு; தான் காரணம. நேர காலத்துக்கு சனிக்கிழமையிலை எண்ணைய் தேய்த்து முழுகியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்றார்கள் உறவினர்கள். “இனி உவன் வேலை செய்தது போதும் ரிட்டையர் செய்து விட்டு வீட்டோடை இருக்கட்டும். இருக்கிற சொத்தைக் கவனிக்க ஆள் இல்லை” என்றாள் கணபதியின் தாய். தங்கத்திற்கு தன் மருமகன் இன்னும் வேலை செய்து பெரிய புரோமஷன் எடுக்க வேண்டும் என்று ஆசை. மாமியாரின் ஆசைக்காக பூரண சுகமடைய முன் ஒரு மாதத்தில் திரும்பவும் வேலைக்கு போனான் கணபதி. திரும்பவும் வேலையைச் சாட்டாக வைத்து கொழும்புக்கு, அடிக்கடி போய வரலாம்; என்று அவனுக்குத் தெரியும். கொழும்பு வாழ்க்கையை, அங்கு ஏறபட்ட இனிமையான அனுபவங்களை அவனால் மறக்க முடியவில்லை. ஒரு கிழமை கொழும்புக்கு தேர்தல்  வேலை என்று போய் வந்த கணபதி நெஞ்சுக்குள் வலிக்கிறது என்று படுத்தவன்தான் பாரிசவாதத்தால் பேசமுடியாது படுத்த படுக்கையாகிவிட்டான். வைத்தியர்களும்; சில நாட்கள் தான் அவன் வாழ்வான் என்று நாளும் குறித்துவிட்டார்கள். கணபதியியின் நிலை  எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. தேவகி ஓவென்று வாய்விட்டு அழுதாள். அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து நினைத்து ஓப்பாரி வைத்தாள். கணபதியின் ஏழு பெண்களும் கணபதி படுத்திருந்த கட்டிலைச் சுற்றி கதறியபடி இருந்தார்கள். தங்கத்திறகுக என்ன செய்வது என்று தெரியவில்லை. மருமகனை திரும்பவும் தான் வேலைக்கு அனுப்பி இருந்திருக்கக்; கூடாது என்று தன்னைத் திட்டிக் கொண்டாள். அன்று காலை கணபதியின் தேகநிலை மோசமடைந்துவிட்டது. பாhவையில ஒரு ஏக்கம். கணவனின் பார்வையில இருந்து அவன் எதையோ சொல்ல வருகிறான் என்று தேவகியால் உணர முடிந்தது. தேவிகாவைச் கண்களால் அருகே அழைத்தான். அவளும் எதற்காக கணவன் அழைக்கிறான் என்று தெரியாமல் அருகே போனாள் “என்ன அத்தான், என்ன செய்கிறது என்றாள். தண்ணி தரட்டா குடிக்க”? கணபதி மூச்சு வாங்க கஷ்டப்பட்டான். நேற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. தேவிகாவை விறைத்தபடி பார்த்தான். அவன் கணகள் களங்கின. கஷ்டப்பட்டு தலையணைக்கு கீழ் இருந்து ஒரு கவரை எடுத்து தரும் படி சைகை காட்டினான். அவளும் அ”த தேடி எடுத்தாள். “அதை படி, அதை செய்”.  என்று கஷ்டப்பட்டு வார்த்தைகள் அவனிடமிருசது சிதைந்து வெளிவந்தன. அதுவே அவனது கடைசி வார்த்தைகள். அவன் கண்கள் மூடின.                                                                              ********* ஏதோ உயில் ஒன்றை எழுதிவைத்துவிட்டு கணபதி போய் விட்டானா என்று பலர் பேசிக் கொண்டார்கள். அவன் இறந்த கலவரத்தில் தலையணிக்கு கீழ் இருந்து எடுத்த கடித உரையை தனது இடுப்புக்குள் சொருகிக் கொண்டு பிரேதத்தை கட்டிப்பிடித்தபடி அழத் தொடங்கினாள் தேவிகா. முழு குடும்பத்தினதும் உறவினர்களினதும் ஓலச் சத்தம் சந்தி வரை கேட்டது. வீட்டு நாய் கூட அதைக் கேட்டு ஊளையிட்டது. “இனி அழுதென்ன பிரயோசனம்?. அவன் உன் புருஷன் நல்ல வாழ்வு உன்னோடை வாழ்ந்து விட்டுத்தானே போயிருக்கிறான்.. இருக்குமட்டும் உன்னிலையும் பிள்ளைகளோடையும் பாசமாக இருந்தான் என்கிறது ஊருக்குத் தெரியும். பாவம் கொள்ளி வைக்க ஓரு மகனை தராமல் போயிட்டான். ஆசைப்பட்ட  அவனுக்குஅது அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை”, இது ஊர் கிழவி ஒருத்தியின் வியாக்கியானம். “அது சரி அவர் கண்மூடமுன் கவர் ஒன்றை உனக்கு தந்ததை கண்டனான்.. எங்கை வைச்சாய் அதை”? கணபதியின் தாய் கேட்டாள் மருமகளை. அப்போது தான் கணபதி கடைசியில் கொடுத்த கவரை தன் மடிக்குள செருகியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அறைக்குள் அழுதுகொண்டே போய் கவரை பிரித்து பார்த்தாள் தேவிகா. என் தேவிகாவுக்கு உனக்கு நல்லாய் தெரியும் எனது கடைசி ஆசை எனக்கு என் மகன் கொள்ளிவைக்கவேண்டும் என்பது. உன்னால் எனக்கு ஒரு மகனை பெற்றுத் தர முடியவில்லை. ஊரெழு சாத்திரி ஒரு நாள் சொன்னது சரியாக நடந்து விட்டது. கொழும்பில் நான் வாழ்ந்தபோது என்னோடை வேலை செய்த ராஜேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட உறவினால் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். தனிமையில் இருந்த எனக்கு ராஜேஸ்வரியின் தொடர்பு என் தனிமையின் விரக்தியைப் போக்கியது.  அவள் கற்பிணியாக இருக்கும் போது அவளை நான் ஏமாற்றாமல் இருப்பதற்காக உங்களுக்குத் தெரியாமல் ரெஜிஸ்டர் மரேஜ் செய்தேன். அது உனக்கு நான் செய்த பெரிய துரோகம் என்று எனக்குத் தெரியும். என் மகனுக்கு என் தாத்தாவின் பெயரான ஆறுமுகம் என்று பெயர் வைச்சன். என் மகன் ஆறுமுகம் தான் எனக்கு கொள்ளி வைக்கவேண்டும். தயவு செய்து ராஜேசுக்கு நான் இறந்தவுடன் அறிவிக்கவும். அவளுக்கு என் ஆசை தெரியும். அவள் நிட்சயம் என் ஈமச்சடங்கில் பங்குகொள்ள என் மகனையும் கூட்டிக்கொண்டு வருவாள். அவள் விலாசமும் தொலை பேசி எண்ணும் எனது டயரியில் எழுதி மேசை டிராயரில் வைத்திருக்கிறன்.  உங்கள் ஒருவருக்கும் தெரியாமல் அவளோடு உறவு கொண்டு ஒரு வாரிசைப் பெற்றதிற்காக அவளையும் என் மகனையும் ஒதுக்கி வைத்துவிடாதீர்கள். ஆறுமுகத்தின் உடம்பில் ஓடுவது என் இரத்தம். ஐந்து வயதான அவனை நீ பார்த்தால் என்னை பார்த்தமாதிரி. நான் முழு விசயத்தையும் கடைசி வரை மறைத்ததிற்கு என்னை மன்னிக்கவும். அதனால் குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவே அப்படி செய்தேன். நான் ராஜேசுடன் வாழ்ந்த கொஞ்ச கால வாழ்க்கையை என்னால் மறக்கமுடியாது. இந்தக் கடிதம் எனக்கு முதல் ஹார்ட அட்டாக வந்து நான் உயிரோடு போராடிய எனக்கு மரணம் எந்த நேரமும் வரலாம் என்ற பயத்தில்  எழுதியது. உன் பெற்றோரை சமாதானப்படுத்துவது உன் பொறுப்பு. எனது பெற்றோரும் உனக்க எதிராக போகமாட்டார்கள என நினைக்கிறன். உனது அத்தான் கணபதி கடிதத்தில எழுதியிருந்ததை தேவிகா வாசித்து முடித்ததும் அதிர்ச்சியில் பேசாது மௌனமாக நின்றாள். அவள் கையில் இருந்து கடிதம்; கீழே நழுவி விழுந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. அதே சமயம் அறைக்குள் வந்த தங்கம் கீழே கிடந்த கடிதத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். “பாவிப் பயலே இங்கை விதைத்தது போதாதென்று கொழும்பிலையும் போய் விதை;துவிட்டு வந்திருக்கிறியா. வாரிசாம் வாரிசு” என்றாள் கோபமாக. “அம்மா போதும் நிறுத்துங்கோ. ஆவர் மேல் கொபப்பட்டு பிரயோசனமில்லை. அவரது கடைசி ஆசையை நான் பூர்த்தி செய்தாக வேண்டும். எனக்கும் என் ஏழு பிள்ளைகளுக்கும் அவர் ஒரு குறையும் வைக்கவில்ல. நான் தான் அவர் ஆசைப்பட்டதிற்கு ஒரு வாரிசைப் பெற்றுக்கொடுக்காமல் குறைவைத்துவிட்டு விட்டேன். இனி அவர் எழுதிய படி நடக்கவேணடியதை கவனியுங்கள்” என்றாள் அழுதபடி தேவிகா. எங்கிருந்து அவளுக்கு அந்த தைரியம் வந்ததோ தெரியாது.  v                                                                      ♣♣♣♣♣   17 அத்தியாயம் 17 ( தெருச் சிறுவன்) [Shoe Polisher]                 தெருச் சிறுவன் எனக்கென்று கார் இருந்தும் ஆபிசுக்கு பஸ்சில் நான் போய் வருவது தான் வழக்கம். ஒன்று காரில் போனால் போய் வர  பெற்றோலுக்கான பணச் செலவு இருக்கும். இரண்டாவது டிரபிக்கில் கார் ஓட்டுவதென்றால் பொறுமையும,; கவனமும் வேண்டும். அதுமட்டுமல்ல ஆபிசுக்கு அருகே கார்பார்க் செய்வதற்கு பணம் கொடுத்தாக வேண்டும். என் வீட்டுக்கும் நான் வேலை செய்யும் இடத்துக்கும் பத்துமைல் தூரம். அவ்விடத்துக்கு டிரெயினிலும் போகலாம். ஆனால் ஸ்டேசனிலிருந்து இன்னும் பதினைந்து நிமிட நடை என் ஆபிசுக்கு. பஸ்சில் போனால் என ஆபீசுக்க அருகே நிற்பாட்டும் பஸ் தரிக்கும்;; வசதியுண்டு. இதையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னரே பஸ்ஸில் போக தீர்மானித்தேன். விட்டில் இருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் பஸ் தரிக்கும் இடமுண்டு.; தினமும் அறிமுகமான பல முகங்களை சந்திக்கும்போது அவர்களுக்கு “குட் மோர்னிங்”;  சொல்லிப் போவது என் பழக்கத்தில் வந்துவிட்டது. பல காட்சிகளைப் பார்த்தபடி பஸ் ஸ்டாண்டுக்கு நடப்பேன். பாதையோரத்தில் வீட்டில் தயாரித்த உணவுவகைகளையும் . பழங்களையும் வி;ற்கும் “வட்டியம்மமா” என்று அழைக்கப்படும் வயோதிப பெண்கள் வாடிக்கையாளர்களை கூவி அழப்பார்கள். போகும் பாதை ஓரத்தில் பிள்ளையார் விலாஸ் என்ற பெயரோடு ஒரு ரெஸ்ரொரண்ட் உண்டு அந்த விலாசில் தாயரிக்கப்படும் மசாலா தோசைக்கும் மோதகத்துககும் ஏக கிராக்கி. காலையில் சாப்பிடாமல் அந்த விலாசை காலைப் போசனத்துக்காக தஞ்சமடையும் பிரமச்சாரிகள் பலர். அந்த ரெஸ்ரொரண்ட முதலாளி கணபதிப்பிள்ளை இலகிய மனம் படைத்தவர். அவரது கடைக்கு முன்னால் சப்பாத்து பொலிஷ் செயயும்; சிறுவன் கை நீட்டி பிச்சை வாங்காமல், சொநதமாக தொழில் செய்தான். அவனுக்கு மிகுதி இருக்கும் காலை, மாலை சாப்பாட்டை அச்சிறுவனுக்கு இலவசமாக கொடுப்பார். அதற்கு பிரதி உபகாரமாக சமையல் அறையையும் ரெஸ்ரொரண்டையும் சுத்தம் செயவதும், பாத்திரங்களைச் சுத்தம் செயவதும் அச்சிறுவனின் பொறுப்பு. அச்சிறுவனின் பெயர் தர்மசேனா என்று பிள்ளையார் ரெஸ்;ரொரண்ட முதலாளி கணபதிபிள்ளை சொல்லித் தான்; எனக்கு தெரியவந்தது. அவனை அன்போடு தர்மா என்றுதான் கணபதிப பிளளை அழைப்பார் தர்மாவைத் தவிர்த்து, தெரு ஓரத்தில் லொட்டரி டிக்கட் விற்பவன் . தினப் பத்திரினை விற்பவன் , இளனி விற்பவன் , சப்பாத்துகளை பழுதுபார்க்கும் ஒரு வயோதிபன்;. இவர்களோடு ஒரு பிச்சைக்காரர் கூட்டம். அந்த கூட்டத்தில் இருவர் முடமானவர்கள். கைக் குழந்தையோடு ஒரு கண்தெரியாத பெண். இவர்கள் எல்லாம் நான் தினமும் காணும் கதாப்பாத்திரங்கள்.   இவர்கள் தினமும் என் பார்வையில் இருந்து தப்பமாட்டார்கள். ஒரு நாளாவது வட்டியம்மாக்கள்  கூவி விற்கும் பொருட்களையோ, லொட்டரி டிக்கட விற்பவனிடம் லொட்டரி டிக்கட்டையே  நான் வாங்கியது கிடையாது. ஆனால் சில சமயததில்; தாகமாக இருந்தால் செவ்விளனியை  வாங்கிக் குடிப்பேன். பஸ்சில் பயணம் செய்யும் போது வாசிப்பதற்கு அன்றை தினப் பத்திரிகை ஒன்றை வாங்கிக்கொள்வேன். நான் தினமும் காணும் கதாப்பாத்திரங்களில் எனது அனுதாபத்தைக் கவர்ந்தவன் சப்பாத்து பொலிஷ் செய்யும் தெருச் சிறுவன் தர்மா. அவனுக்கு சுமார் பத்து வயதிருக்கும். டீப்டொப்பாக ஆடை அனிந்து டை கட்டிக்கொண்டு வேலைக்குப் போகிறவர்கள் தங்கள் சாப்பாத்துகள் பிரகாசமாக இருக்க வேண்டும்; என்று விரும்புவார்கள். தர்மாவின்  வாடிக்கையாளரர்களில்; பொலீஸ்காரன் சிரிசேனாவும் ஒருவன்.  சிரிசேனாவுக்கு பெயருக்கேற்ற சிரித்த முகம். மூன்று வருடங்களாக வெள்ளைவத்தை பொலீஸ்டேசனில் வேலை செய்பவன். இவர்கiளின் சப்பாத்துகனை பொலிஷ் செயது உழைப்பதே அச்சிறுவனின் தொழில். வாடிக்கையாளர்கள் அணிந்திருக்கும் சப்பாத்தை பார்த்தவுடனேயே  அது பழையதா, எவ்வளவு காலமாக செவை செய்திருக்கிறது என்று கண்டு பிடித்துவடுவான். சப்பாதது பாவனையால பழுதுபாhக்க வேண்டியிருந்தால் அருகே இருக்கும சப்பாத்துகளை பழுதுபார்க்கும் வயோதிபருக்கு அறிமுகப்படுத்தி வைப்பான.;;;  வருமானம் குறைந்தவர்கள்; உள்நாட்டு விலை குறைந்த பாட்டா அல்லது டிஐ சப்பாத்துகளை அணிவார்கள். அவை நீண்ட காலம் சேவை செய்யாது. வசதி படைத்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் தங்கள் பிள்ளைள் மூலம்  கேசூ, அல்லது கிளார்க் சூ போன்றi விலையுயாந்த சப்பாத்துகளை அணிந்திருப்பார்கள். அவர்கள வசதி அறிந்து தன் சேவைக்கான ஊதியததை தர்மா வாங்குவான். அவர்கள் அணிநதிருக்கும் சப்பாத்தைப் பொலிஷ் செய்வதற்கு வசதியாக காலை வைக்கக கூடிய வித்தில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சிறுமேடை அவனது கருவிகளில் ஒன்று.  அவன் வைத்திருநத பெட்டிக்குள் கீவீ பொலிஷ் டின் இரண்டு;, பிரஷ் இரண்டு, மஞ்சல் நிறத்தில் கம்பளித் துணி ஒன்று ஆகியவையே அவன் தொழிலுக்காகப் பாவிக்கும் பொருட்கள். தினம் குறைநதத ஐம்பது ரூபாய் மட்டில சம்பாதித்துவிடுவான். சிலர் அவன் மேல இரக்கப்பட்டு கொசுறாக பணம் கொடுப்பார்கள். அவனின் வாடிக்கையாளர்களில் ஒருவனான சிரிசேனா தான் டியூட்டிக்குப் போகமுன் தர்மாவிடம் தன் இரு சப்பாத்துகளைப் பொலிஷ செய்த பின்னரே செல்வது வழமை. சிரிசேனாவின் சப்பாத்துகளைப் பொலிஷ் செய்யும் நேரத்தில் தர்மாவும் சரிசேனாவும்; தாழ்ந்த குரலில் மற்றவர்களுக்கு கேட்காத வாறு பேசிக்;கொள்வார்கள். அவர்கள் எதைப்பற்றி  பேசுகிறார்கள் எனபது பக்கத்தில் இருப்பவருக்குக் கேளாது. பிரதான வீதியின் ஒரு பக்கத்தில் ஒரு அனாகரிக பௌத்த மகா வித்தியாலயம் என்ற பெயரில் கல்லூரி இருநதது. அக்கல்லூரி மாணவாகள் சிலர் போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றும் வகுப்பு ஒழுஙகாக வருவதிலலை என்றும் கல்லூரி அதிபர் அறிநதாh. கல்லூரி முடிந்ததமு; சிலமாணவர்கள் போதை மருந்து விறபவர்களோடு போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுவதாக வெள்ளவத்தை பொலீஸ் ஸ்டேசனுக்கு பொறுப்பாக உள்ள பொலிஸ் இன்ஸபெடருக்கு புகாhகள் பல போய் சேர்ந்தன. இதைத் தொடாநது கல்லூரி அதிபரும் முறைப்பாடிட்டார். பொலிஸ் இன்ஸபெடா தன் நம்பிககை;கு பாத்திரமான சிரிசேனாவை அழைத்து போதை மருந்து வியாபாரம் செயபவர்களை விரைவில் கண்டுபிடிக்கும் படி உத்தரவு பிரப்பித்தார்.                                                               ♣♣♣♣♣ அன்று வழமை போல் ஆபிசுக்குப் போக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். போகும் வழியில ஒரு தினப்பத்திரிகையை வாங்கிக் கொண்டு பஸ் நிற்கும் இடததை நோக்கி நடந்தேன். அன்று அமைச்சரும், உயர் அதிகாரிகளும் ஒபீசில் நடக்க இருக்கும் முக்கிய கூட்டமொன்றுக்கு வர இருப்பதால் வசீகரமாக ஆடை அணிந்து, டை கட்டிக்கொண்டு புறப்பட்டேன்.    போகும் வழியில் தர்மாவிடம் எனது  சப்பாத்தை பொலிஷ் செயய வேண்டியிருந்ததால் அவன் வழமை போல் வேலை செய்யும் இடததை நோக்கிச் சென்ற போது அங்கு ஒரே கூட்டம். பொலீஸகாரன் சிரிசேனா உற்பட மூன்று   பொலீஸ்காரர்கள்.  பலரை விசாரண செய்து கொண்டு நின்றார்கள்.; எனக்கு காரணம் தெரியவில்லை. பிளாட்பாரத்தில் தர்மவாவின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு கிடந்தது. அவன வேலைக்கு பாவிக்கும் பொருட்கள சிதறிக கிடநதுன. துர்மாவுக்கு ஏதோ நடகக்கக் கூடாதது ஒன்று நடந்து விட்டது எனபதை நான் ஊகிக்க அதிக நேரம் எடுக்கவிலலை. நேரே தர்மாவுக்க தினமும் சாப்பாடு கொடுத்துவந்த  பள்iளார் ரெஸடொரண்ட் முதலாளி கணபதிபிள்ளையரிடம் போனேன். “என்ன கணபதி ஏன இநதக் கூட்டம. தர்மாவுக்கு என்ன நடந்தத” என்ற விசனத்தோடு அவரைக் கேட்டேன. “அதே  ஏன கேக்கிறியள் சேர். பாவம்  ஒன்றும் தெரியாத அந்த ஏழைச் சிறுவனை யாரோ பாவிகள் கொலை செய்து விட்டார்கள். தர்மா சமூகத்துக்கு நல்ல காரியம் செய்யப் போயிருக்கிறான். அதுவே அவனுக்கு யமனாக வநதுவிட்டது” என்றாhட கண்களில கண்ணீர் மல்க கணபதி. “அப்படி கொலை செய்ய அப்படி என்ன தர்மா பாரதூரமாக செய்து விட்டான்?” நான் கணபதியைக் கேட்டேன். “இந்த பகுதியிலை மாணவர்களுக்கு போதை மருநதுது வியாபாரம் செய்த கூட்டத்தைப் பொலீஸ் கைது செய்து விட்டது.” “அப்படியா?. அதுக்கும் தர்மாவுக்கும் என்ன தொடர்பு?” நான் புரியாமல் கணபதியைக் கேட்டேன். “வேலை செய்யும் போது தர்மா பிரதான வீதியில் என்ன நடக்கிறது என்பதை அவதானித்தபடியே வேலை செய்தான். தான கண்ட  விபரததை பொலீஸ்காரர் சிரிசேனாவுக்கு சொல்லியிருக்கிறான். அது போதும் பொலீசுக்கு போதை மருந்து விபவாகள் யார் என்று கண்டு படித்து கைது செய்ய” “அப்போ தர்மசேனா ஒரு பெலீஸ் இன்போமர் என்கிறீரா கணபதி?” நான் அவரைக் கேட்டேன். “ஆமாம் அது தான் உண்மை. தர்மசேனா சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்ட இந்த சிறுவயதிலேயே முயற்சித்திருக்கிறான். ஆனால் அதர்மக்காரர்களான போதை மருந்து கடத்தற்காரர்கள் தங்களைக் காட்டிக் கொடுத்தவன் வாழக் கூடாது என்ற கோபத்தில் தர்மாவைக் கொலை செய்து விட்டார்கள். “ என்றார் சோகத்தோடு கணபதி.                                                           ♣♣♣♣♣ 18 அத்தியாயம் 18  ( நூறு ரூபாய் நோட்டு)  [Gram Seller]                         நூறு ரூபாய் நோட்டு எனது அடுத்த சிறுகதைக்கு எதைக் கருவாக வைத்து எழுதுவது என்று சிந்தித்தவாறு, இதமானகடல் காற்றைச் சுவாசித்தபடி கடற்கரை மணலில் போய் அமர்ந்தேன் கரையை வந்து அடிக்கடி முத்தமிட்டு சென்ற கடல் அலைகளைப் பார்த்து இரசித்தேன் . அவ்வலைகில்; விளையாடிய சிறுகுழந்தைகள் என் கவணத்தை ஈர்த்தது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி தோன்றிய சுனாமி என்ற பெரும் அலைகளினால் எத்தனை ஆயிரம் உயிர்கள் பழியாகி இருக்கும் என்று என் மனதில் கேள்வி எழும்பியது. கடற்கரை மண்ணில் பிள்ளைகள் விளையாடுவது போல் நண்டுகள் ஓடி திரிநது கோலங்கள் போட்டன. அதையும் இரசித்தேன். சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி அரவணைத்தவாறு இருந்தனர். அன்று கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. “ஐயா,  வீட்டில் தயாரித்த நல்லதிறமான சுண்டல், வடை இருக்கிறது வாங்கல்லையோ”, ஒரு சிறுவன் குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன். ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் சுண்டல், வடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அவனைப பார்த்து நான் “ஏய் பையா, இந்த வயதில் பாடசாலைக்குப் போகாமல் சுண்டல் விற்கிறாயே, ஏன் பாடசாலைக்குப் போய் படிக்க உனக்கு வசதியில்லையா”? என்று நான் அந்தச் சிறுவனைக் கேட்டேன் “இல்லை சாமி. என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மா இட்டலி, தோசை விற்று என்னையும் என் தங்கைமார் இருவரையும்  கவனிக்கிறாள். அவள் சம்பாதிப்பது குடும்பத்துக்குப் போதாது. அதாலை படிப்பை  பாதியில் நிறுத்தி விட்டு சுண்டல் விற்கத் தொடங்கினேன்” என்றான். அவனது நிலையைக் கேட்டு அச்சிறுவனுக்கு உதவ வேண்டும் போல் எனக்கு இருந்தது. அவனைப் பார்த்து “சரி எனக்கு மூன்று வடைகளும்,, சுண்டலும் தா” என்றேன். தான் வைத்திருந்த பழைய சஞ்சிகை ஒன்றிலிருந்து இரு பக்கங்களைக் கிழித்து, சுண்டலையும் மூன்று வடைகளையும் அதில் வைத்து,  சுற்றி எனக்குத் தந்து என்னிடம் “பத்து ரூபாய் தாருங்கள் சாமி” என்றான். என்னிடம் மாற்றினக் காசு இல்லாத படியால் ஒரு நூறு ரூபாய் நோட்டை பேர்சில் இருந்து எடுத்து அவனிடம் நீட்டினேன். அச்சிறுவன் நூறு ரூபாய் நோட்டை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தான் ஏதோ  புதுமையைக் கண்டவன் போல். அந்த நூறு நோட்டை அவன் பார்த்த விதம் அதுவே முதல் தடவையாக அச்சிறுவன் அதைப் பார்த்திருப்பான் போல் எனக்குத் தோன்றியது. “என்ன பையா நோட்டைத் திருப்பித் திரும்பி பார்க்கிறாய்?; அது கள்ள நூறு ரூபாய் நோட்டில்லை. நான் உனக்குத் தந்தது உண்மையான நூறு ரூபாய் நோட்டு. என்னிடம் மாற்றின காசு இல்லாத படியால் தந்தேன்” என்றேன் சிரித்தபடி. “சாமி ,நான் தந்த சுண்டலுக்கும், வடை இரண்டுக்கும் எனக்கு பத்து ரூபாய் தந்தால் போதும்”. “உன்னிடம் மாற்றின காசு இல்லாட்டால், அதோ உணவு வி;ற்கும் தள்ளு வண்டிக்காரனிடம் போய் காசை மாற்றிக் கொண்டு வா. அவனிடம் மாற்ற காசு இருக்கும்” என்றேன். “சாமி இந்த பெட்டியையும் சுண்டலையும் பார்த்துக்கொள்ளுங்கள் நான் நூறு ரூபாய் நோட்டை மாத்திக் கொண்டு வரும்வரை“ என்று என்னிடம் வேண்டினான்;. அவன் கொண்டு வந்த சுண்டலும் வடையும் இருந்த கண்ணாடிப் பெட்டியை என்னருகே வைத்துவிட்டு தள்ளுவண்டிக்காரனிடம் இச்சிறுவன் நூறு ரூபாய் நோட்டை மாற்றி வரப்; போனான். நான் அவன் தந்த சுண்டல் பொட்டலத்தை பிரித்தேன். சுண்டலும் வடையையும் அவன் சுற்தித் தந்த பேப்பரைப் பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. அது ஒரு பழைய தமிழ் சஞ்சிகையில் இருந்து கிழிக்கப்பட்ட பக்கங்கள்; என்று ஊகிக்க எனக்கு அதிகநேரம் எடுக்கவில்லை. நான் நூல்களை தெய்வமாக மதிக்கும் எழுத்தாளன்.  அந்தப் பக்கத்தில் இருந்ததை வாசித்தேன். உடனே எனக்கு எனது இளமைக் காலத்தில் நான் இரசித்து வாசித்த  கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் தான் என் நினைவுக்கு வந்தது. உடனே அவன பெட்டி மேல் வைத்துச் சென்ற பழைய சஞ்சிகையை எடுத்துப் பார்த்தேன் அது ஒரு பழைய பல வருடங்களுக்கு முன் வெளிவந்த கல்கி சஞ்சிகை. யாரோ ஒருவர் பழைய பேப்பர்கள், போத்தல்கள் வாங்குபவனுக்கு இந்த கல்கி சஞ்சிகையை பேப்பர்களோடு விலைக்குப் போட்டிருக்கலாம். இந்த பழைய கல்கி சஞ்சிகை கை மாறி பழைய பேப்பர் போத்தல் வாங்குபவனிடமிருந்து சிறுவன கையுக்கு வந்திருக்கலாம். தமிழ் இலக்கியம், சுண்டல் விற்கவும் உதவுகிறதே என்று நான் கவலைப்பட்டேன். “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்பது போல் வாசிக்கும் அளவுக்கு கல்வி அறிவு இல்லாத சுண்டல்கார சிறுவனுக்கு கல்கியின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவலைப் பற்றி என்ன தெரியும்? நான் என்னைத் தேற்றிக் கொண்டேன் வண்டில்காரனிடம் இருந்து நூறு ருபாய் நோட்டை மாற்pக் கொண்டு வநத அச்சிறுவன் “இந்தாருங்கோ சாமி உங்கள் மிகுதிக் காசு” என்று மிகுதிப் பணமாகிய தொன்னூறு ரூபாய்களை என்னிடம் நீட்டினான். “பையா எனக்கு மிகுதி பணம் வேண்டாம். நீயே முழுப் பணத்தையும் வைத்துக்கொள். இதோ நீ தந்த சுண்டலும் வடையும்”, நான் சொன்னேன். ”என்ன சாமி சொல்லுகிறாய்” சிறுவன் திகைத்துப் போய் என்னைக் கேட்டான். “நான் தந்த காசுக்கு நீ கிழித்து சுண்டல் சுற்றித்தந்த பழைய கல்கி சஞ்சிகையை மட்டும் எனக்குத் தந்தால் போதும். இனி சுண்டல் சுற்றி விற்பதானால் சஞ்சிகைகளிலோ அல்லது பழைய நூல்களிலோ இருந்து பக்கங்களை கிழித்து, சுண்டலை  சுற்றி விற்காதே. அது நீ தமிழ் இலக்கியத்துக்கு செய்த பெரும் தொண்டாகும்” என்று சொல்லி சுண்டலுக்குப் பதிலாக பழைய கல்கி சஞ்சிகையை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு, எனக்கு எனது அடுத்த சிறுகதைக்கு கரு கிடைத்து விட்டது என்ற திருப்தியில் கடற்கரையில் இருந்து எழும்பிச் சென்றேன். அச்சிறுவன் என் செயலைப்பார்த்து வாயடைத்துப் போய் நின்றான். அவன் அன்று முழுவதும் சுண்டல் வி;யாபாரம் செய்தாலும் அவனுக்கு நூறு ரூபாய்க்கள் கிடைத்திருக்குமா என்பது எனக்குச் சந்தேகம்.                                                                              ♣♣♣♣♣ 19 அத்தியாயம்19 ( லொட்டரி டிக்கட்) [649 Lotto] லொட்டரி டிக்கட் டீவியில் மகாபாரதத்தில் சூதாட்டப்படலம் போய் கோண்டிருந்தது. சகுனி எப்படி தன் எண்ணத்தின்படி சொக்கட்டான் காய்களை நகர்த்தி, சூதாட்டத்தில் தர்மரை வெல்லும் காட்சி. ஜோதிலிங்கம் காட்சியை இரசித்தபடி இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி பார்வதி சமையலறைக்குள் இடியப்பம் அவித்துக்கொண்டிருந்தாள். டிவியில் போய்க்கொண்டிருக்கும் காட்சியை இரசித்தவாரே, கிலாசில் உள்ள விஸ்கியை சுவைத்தார் ஜோதிலிங்கம்;. இளைஞனாக இருக்குமு;போதே ஜோதிலிங்கத்திற்கு சூதாட்டத்தில் ஆர்வமிருந்தது. படிக்கும் காலத்தில் “என்ன பந்தயம்?” என்ற வார்த்தைகளை நண்பர்களோடு போட்டி என்று வந்தால் அடிக்கடி அவன் பாவிப்பது வழக்கம். கொழும்பில் வேலை செய்யும் போது, தினமும் “பூக்கீஸ்”; என்று சூதாடுபவர்களால் அழைக்கப்படும் குதிரைப் பந்தயப் பணயக்காரார்களிடம்  போய் குதிரைகள் மேல் பணம் கட்டிவருவார்;. பல தடவை வென்றுமிருக்கிறார். இங்கிலாந்தில், லெஸ்டர் பிக்கட், விலி கார்சன் போன்ற ஜொக்கீஸ் என அழைக்கப்படும் குதிரை ஓட்டுநர்களின் பெயர்களும,; வேகமாக ஓடும் குதிரைகளின் பெயர்கள்; எல்லாம் ஜெயத்துக்கு அத்துப்பாடம். குதிரை ஓட்டத்தில் அவருக்கு ஆசையை உண்டுபண்ணியது அவரோடு கொழும்புக் கச்சேரியில் ஒன்றாக வேலை செய்த நாணயக்கார என்ற சிங்கள அரசாங்க ஊழியர். அவரை அன்பாக “நாணயம்” என்றே ஜோதிலிங்கம் அழைப்பார். பதிலுக்கு ஜோதிலிங்கத்தை “ஜோதி“என்று நாணயக்கார அழைப்பார். நாணயமும்; ஜோதியும் பகற் போசன நேரத்தின் போது தவறாது பூக்கீ;ஸ் கடைக்குப் போய் குதிரைகள் மேல் பணம் கட்டிப்போட்டு வருவார்கள். மூட்டைகள் தூக்கும் கூலிகள் , ர்pக்ஷோ இழுக்கும் தொழிலாளிகள், அரசாங்க ஊழியர்கள், கொம்பெனிகளில் வேலை செய்பவர்கள்  ஆகியோர் கூட பூக்கீசை தரிசிக்கப் போவது வழக்கம். அவ்வளவு படிப்பறிவு இல்லாத பல தொழிலாளுக்கு  ஆங்கிலம் வாசிக்கத் தெரியாவிட்டாலும் குதிரைகளினதும், ஜொக்கிமார்களுடைய ஆங்கிலப் பெயர்ளை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். ஜோதிக்கு சூதாட்டத்திலும் , குடியிலும் தான் ஆர்வம். பெண்கள் விஷயத்தில் சற்று ஒதுக்கி நிற்பார். அவருடைய தந்தை சண்முகலிங்கமும் ஒரு சூதாட்டப் பிரியர். சண்முகலிங்கம் தன் சொத்தில் ;அரைவாசியை சூதாடியே அழித்தார். ஒரு காலத்தில் எப்போது குதிரைகள் ஓடிய விபரத்தை உள்ளடக்கிய புத்தகமும் கையுமாகவே இருப்பார். அதவே அவரது பைபிலாக இருந்தது. ஜோதி கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்த பின்னர், குதிரைகள் மேல் பந்தயம் கட்டும் சந்தப்பம் அவருக்கு கிட்டவில்லை. காரணம் குதிரைகள் பந்தயத்துக்காக ஓடும் இடங்கள் மிகக் குறைவாக இருந்ததே. ஆனால் அதற்கு பதிலாக கிழமைக்கு இரு முறை 649 என்ற லொட்டரி சீட்டுகள் இழுக்கப்பட்டன. இந்த லொட்டரி டிக்கட்டில்; 1 முதல் 49 எண்களில் 6 எண்கள் தெரிந்தெடுக்கப்படவேண்டும். அதனால் அந்த லொட்டரிககு 649 என்ற பெயர் வந்தது. சரியாக ஆறு எண்களையும் தேர்ந்தெடுத்தால் வென்றவருக்குப் பல மில்லியன் டொலர்கள் முதற் பரிசாகக் கிடைக்கக கூடிய வாய்ப்பு உண்டு;. அப்படி ஒருவரும் லொட்டரி இழுவையின் போது வெல்லாவிட்டால் அப் பரிசுப் பணம் அடுத்த இழுவையில் சேர்த்துக் கொள்ளபடும். இதை “ஜக்பொட்” என்று பெயர் சூட்டி அழைத்தனர். பல தடவை ஒருவரும் சரியாக ஆறு எண்களைத் தெரிந்தெடுக்காவிடில், பரிசுத் தொகை பல மில்லியன்களைத் தாண்டிவிடும். அனேகமாக வயது வந்த கிழவன் கிழவி மார்களே சூதூட்டத்தில் ஈடுபட்டனர். கசினோவுக்குப்  போய் வருவது பெரும் பாலும் முதியொர்களே . ஜோதி ஒரு தடவை தனது முதியோர் சங்கத்தின் அங்கத்தினர்களோடு ஒரெல்லா என்ற இடத்தில் உள்ள கசினோவுக்கு போய்வந்தாh.; அவருக்கு அந்த சூதாட்டம் சுவர்சியமாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு தடவையும் 649 லொட்டரி டிக்குட்டுகள் ஐந்தாவது வாங்குவார். அவரது வசதிகேற்ப அவர் வாழ்ந்த அப்பர்hட்மெண்ட்  கட்டிடத்துக்கு அருகாமையில் இருந்த பிலாசாவில் உள்ள கடையொன்றில்; 649 டிக்கட் லொட்டரி டிக்கட் வி;ற்கப்பட்டது. 649 லொட்டரியோடு அதிக விலையில் சூப்பர்; செவன் என்ற 1 முதல் 49 எண்களில் 7 எண்களைத் தெரிந்தெடுக்கும் லொட்டரியும் கிழமைக்கு ஒரு தடவை இழுக்கப்பட்டது. அதன் பரிசுத் தொகை 649 லொட்டரி பரிசுத் தொகையை விட அதிகம். கனடாவுக்கு வந்து சில மாதங்களில் இந்த லொட்டரிகளைப் பற்றி ஜோதி அறிந்து தன சூதாட்ட விளையாட்டைத் துவங்கினாh.; அவருக்கு அரசு கொடுத்த வெல்பயர் பணத்தில் குறைந்தது சிறு தொகையை லொட்டரிக்கு செலவு செய்தார். ஒரு தடவையாவது தனக்கு பல மில்லியன் டொலர்களாவது விழாதா என்ற நப்பாசை அவருக்கு இருந்தது. பல தடவை லொட்டரி எடுத்த ஜோதிக்கு இரு தடவைகள் 300 டொலர்களும், 250 டொலர்களும் மட்டுமே ஆறுதல் பரிசாகக் கிடைத்தது. அதுவே அவரைத் தொடர்ந்து 649 லொட்டரி டிக்கட்டுகள் வாங்கத் தூண்டியது. பரிசாகக் கிடைத்த பணத்தை விட ஜோதி லொட்டரி டிக்கட்டுகள் வாங்கச் செலவு செய்த பணம் பல மடங்கு அதிகம். அவர் மனைவியும் இரு பிள்ளைகளும் ஜோதியை லொட்டரி டிக்கட் வாங்குவதை நிறுத்தும்படி எவ்வளவோ சொல்லியும் அவர் செவியசாய்க்கவில்லை. அந்க் கிழமையும் வழமை போல் ஜோதி பத்து 649 லொட்டரி டிக்கட்டுகளை  Nஐhதி வாங்கினார். லொட்டரி இழுக்கப்பட்ட அடுத்த நாள், ஜோதி கையில் விஸகி கிலாசும், வாயில் சிகரட்டோடும் ஹாலில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தார். அன்று அவருக்கு வயிற்றுக்குளப்ம வேறு. அதோடு இடது கையில் வலி. மூச்சுவிட அவருக்குச் சிரமமாக இருந்தது, இரு தினங்களுக்கு முன்னர் குடும்ப வைத்தியரிடம் போய் செக் அப் செய்த போது அவரது இரத்த அழுத்தம் அதிகமென்றும், இரத்தப் பரிசோதனையின் படி அவருக்கு சுகர் லெவலும் கொலஸ்டிரோலும் அதிகம் என்றும், சிகரட், விஸ்கி;  குடிப்பதையும்;, நிறுத்தும்படி ஜோதிக்கு டாக்டர் அறிவுரை சொன்னார். இந்த வயதில் ஹார்ட் அட்டாக் வரக் கூடியச் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றார் டாக்டர். இனிப்பான, கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கச் சொன்னார்;. பல தடவை டாக்டர் இந்தப் புத்திமதிகளை ஜோதிக்கு சொல்லியும் அவர் அதைக் கேட்டப்பாடாக இல்லை. நெஞ்சுவலி ஜோதிக்கு அடிக்கடி வந்து போனதும். அதைபற்றி அவர் கவலைபட்டதாக தெரியவில்லை. ஒரு கையில் வலி வேறு. இதையல்லாம் பற்றி கவலைப்படாமல்; தனக்குப் பரிசு வீழுந்திருக்கிறதா என்று தான் வாங்கிய பத்து லொட்டரி டிக்கட்டுகள்; ஒவ்வொன்றாக பத்திரிகையில் வெளிவந்த முதலாம் பரிசு பெற்ற எண்களோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டிருந்தார். முதலாம் பரிசு ஜக்பொட்டாக பத்து மில்லியன் டொலர்கள். இரண்;டாம் பரிசு இரண்டு மில்iலியன். பரிசு விபரம் பத்திரிகையில வந்திருந்து. முதல் ஐந்து டிக்கட்டுகளில தான தெரி;ந்தெடுத்த எண்களைப் பரிசு கிடைத்த எண்கiளோடு ஒப்பிடடுப்; பார்த்தாh ஜோதி.; ஒரு டிக்கட்டில் மாத்திரம் இரு எண்கள் சரியாக இருந்தது. மற்றைய நான்கு டிக்கட்டிகளிலும் பரிசு விழுந்து  ஒரு எண் சரி இருக்கவில்லை. தன் அதிர்ஸ்டத்தை நொந்த வாரே ஆறாவது டிக்கட்டைப்பார்த்தார்;. அதிலும் ஒரு எண்ணும்; விழவில்லை. ஆத்திரத்தில் ஒரு மிடக்கு விஸ்கியைக் குடித்தார்;. நெஞ்சுவலி அதிகரித்ததை அவர் கவனத்தில் எடுக்கவில்லை. அவரது சிந்தனை முழுவதும் லொட்டரி டிக்கட்டுகளிலேயே இருந்தது.  எட்டாவது, ஒன்பதாவது டிக்கட்டுகளைப் பாhத்தார். அந்த டிக்கட்டுகளிலும்; அவருக அதிhஷடம் கிட்டவில்லை. “ அட சனியனே எண்டை கஸ்ட காலம் என்று தனக்குள் தன்னைத் தானே திட்டிக்கொண்டார். கடைசியாக பத்தாவது டிக்கட்டில் உள்ள எணகளை பத்திரிகையில் வந்த பரிசு பெற்ற எண்களோடு ஒப்பிட்ட பார்க்கத் தொடங்கினார்;. அவரது கண்கலால் தான் பார்ப்பதை நம்ப முடியவில்லை. நெஞ்சு வலி அதிகரித்து முச்சு விட அவருக்கு கஷ்டமாக இருந்ததை அவர் கவனத்தில எடுக்கவில்லை. நெஞ்சுக்குள்; குத்துவது போன்ற ஒரு வேதனை. முகம் எல்லாம் வியர்த்தது. கை வலி அதிகரித்தது. அவர் தெரிந்தெடுததத ஐந்து எண்கள் அவர் வாங்கிய பத்தாவது டிகட்டில் பரிசு பெற்;ற எண்களோடு பொருந்தின. ஆறாவது எண்ணைப அவர் பார்த்து  தனக்கு முதற் பரிசு விழுந்திருக்கிறதா என்று அறியமுன்னர் ஜோதி “ஐயோ அம்மா நெஞ்சு வலிக்குதே” என்ற பெரிய சத்தத்தோடு சோபாவில் சாய்ந்தார். அவரது குரல்  கேட்டு மனைவியும் இரு பிள்ளைகளும் ஹாலுக்குள் ஓடி வந்தனர். ஜோதிலிங்கத்தின் மகனுக்கு தன் தகபனுக்க என்ன நடந்து இருக்குகெமனப் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக் வில்லை. சகோதரியை உடனே அம்புலன்சுக்கு போன் செயயச் சொன்னான். பத்து நிமிடங்களில அம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில் வநத பராமெடிக்கிஸ் ஜோதியை உடனடியாக ஆஸ்பத்திரி எமர்ஜென்சிக்கு கொண்டு; சென்றார்கள். போகும் போது ஜோதிக்கு ஓரளவுக்கு சுயநினைவு இருந்தது. “என் டிக்கட். என் டிக்கட்”, என்று பிதட்டியபடியே அம்புலன்சில் சென்றார். தனக்கு வந்திருந்த ஆபத்தை அவர் உணரவில்லை.                                                                                     ♣♣♣♣♣ “நல்ல நேரம் உங்கடை தந்தைக்கு ஹாhட் அட்டாக் வந்து அவர் உயிர் தப்பியதே அபூர்வம். பல பரிசோதனைகள் உடனடியாக செய்ய வேண்டு;ம். அவசியப்பட்டால் ஹாhட் சேர்ஜரி செய்யவேண்டியும் வரும். உம்முடைய சகோதரி சொன்னார் இவர் சிகரடடும்;, விஸ்கியும் தினமும் குடிப்பதாக. அது உண்மையா“? டாக்டர் ஜோதியின் மகனைக் கேட்டார். ஜோதியின் மகன் டாக்டருக்கு தந்தையைப்பற்ற்p முழு உண்மையையும்; சொன்னான் . பரிசோதனைகள் செய்து மூன்று நாட்களுக்கு பி;ன்னர், வைத்தியர்கள் ஜோதிக்கு இருதயத்தில் மூன்று இரத்தக குழுhய்கள் தொன்னூற்றி ஐந்து விகிதம் இரத்தம் ஓட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது   ஓப்பன் ஹார்ட் சேர்ஜரி அவசியம் விரைவில் செய்தாகவேண்டும்; என முடிவெடுத்தனர்.. அதைப்பற்றி ஜோதி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர் சிந்தனைக்ள முழுவதும் தான் வாங்கிய பத்தாவது டிக்கட்டில் தான் தெரிந்தெடுத்த நம்பர்களில் ஐந்து சரியாக இருந்தது. ஆறாவது நம்பர் நிட்சயம் சரியாக இருந்திருக்கும். அதை நிட்சயப்படுத்த முன்பே  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டது”.. மகனிடம் சொல்லிக் கவலைப்பட்டார் ஜோதி. “ அப்பா டிக்கட்டைப் பற்றி கவலைப் படாதீங்கள். உங்கள் உயிர் தப்பியதே உங்கள் அதிர்ஷடம். அதுவே போதும்;. வேறு அதிர்ஷ்டம் வேண்டாம் உங்களுக்கு” என்றான மகன். மகனின் பதில் ஜோதிக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. “ எண்டா தம்பி, மெசையில் நான் வைத்த டிக்கட்டுகளுக்கு என்ன நடந்தது? முதலாம் பரிசு கிடைக்க இருந்த நம்பர்களை கொண்ட டிக்கட்டும் மேசையில் வைத்திருந்தேன் அதைப் போய் எடுத்துவா” “அப்பா உங்களுக்கு என்ன பயித்தியமே? மேசையில் இருந்த அந்த டிக்கட்டுகள் எல்லாவற்றையும் அம்மா இரண்டு நாற்களுக்கு முந்தியே, கூட்டி குப்பைக்குள்ளை போட்டிட்டா. குப்பையோடு குப்பையாய் குப்பை அள்ளுபவன் லொரியிலை  எப்பவோ கொண்டு போயிருப்பான். அந்த டிக்கட்டும் குப்பையோடு போய் இருக்கும் என்றான் மகன். “கைக்கு எட்டியது வாயுக்க எட்டவில்லையே. அந்த டிக்கட் மாத்திரம் இருந்தால் எனக்குப் பத்து மில்லியன் டொலர்கள் கிடைத்திருக்குமே. நான மில்லியனியராகி இருப்பேனே” என்று வாயுக்குள் முணுமுணுத்தார் ஜோதிலிங்கம்.                                                                             ♣♣♣♣♣ 20 அத்தியாயம் 20 ( விதவை )                                  [Widow2] விதவை நான் கோயிலுக்குப் போவதைத் தவிர்ப்பவன், ஆனால் நாத்திகன் இல்லை. இறைவன் எமக்குள் இருக்கும் போது அங்கு ஏன் அவரைத் தேடிப்போவான் என்பது என் கருத்து. சற்று முற்போக்குத் தன்மை. சிலருக்கு அந்தக்கருத்து பிடிக்காது. என் கருத்துக்கு என் மனைவி  எதிர்மாறனவள். சற்று பழமையில் ஊறியவள். வெள்ளிக்கழமையில் வீட்டில், மரக்கறி உணவு.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்கு போயாக வேண்டும் என்பது அவளது நியதி. அன்று கோயிலுக்கு நான் போன போது ஒரு உருக்கமான காட்சி. ஒரு பெண். அதுவும் வெள்ளை நிறச் சேலை அணிந்த அழகிய இளம் விதவை கைக்குழந்தையோடு தெய்வத்தின் சன்னிதியில் கண்களில் நீர் வழிய உருக்கமாக தேவரம் பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வயது சுமார் இருபததைந்துக்கும் முப்பதுக்கும்; இடையில் இருக்கலாம் என மதித்தேன். இந்த இளம் வயதில். அவள் வெள்ளை சேலை அணிய வேண்டுமா? நான் அவள் மேல் பரிதாபப் பட்டேன்.  அவள் குரலும் கண்ணீரும், என்னை சற்று உலுக்கியது. அவள் நெற்றியில் குங்குமத்தைக் காணோம். கழுத்தில் தாலியில்லை. நகைகள் இல்லை. வெள்ளை நிறச் சேலை அவள் அழகை மெருகுபடுத்தியது. ஒரு கேரளப் பெண்போல  தோற்மளித்தாள். நீண்ட தலைமயிர் ஆனால் அவள் கூந்தலில் மலர்கள்; இல்லை. கைகளில் வலையல்கள் கூடக் கிடையாது. சுற்றியிருப்பவர்களைக் கூட அவள் கவனிக்கவில்லை. தன் சோகக்கதையை இறைவனிடம் பாடல் மூலம் முறைப் பட்டதாக எனக்கு தெரிந்தது. அவள் கண்களில் கண்ணிர் வழிந்தது. அக்காட்சி சினிமாவில் வரும் காட்சியைப் போல்எனக்கு இருந்தது . ஏன் அழுகிறாள் என்று சிந்தித்தேன்? அந்த வயதில் அவளது கோலத்தைப் பார்த்ததும் இந்த வயதில் கணவனின் பிரிவை அவளால் தாங்க முடியவில்லையோ எனச் சிந்தித்தேன. அவள் நீண்ட தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவள் போல் என் மனதுக்குப் படவில்லை. அதுவும் அந்த குறைந்த வயதில் விதவைத் தோற்றம் என்றால் தன் விதியை நொந்ததினால் தோன்றிய அழுகையா? அருச்சனை செய்து ஐயர் கொண்டு வந்த தட்டில், இருபது டொலர் நோட்டைப் போட்டுவிட்டு  கையில் இருந்த ஒரு வயதுக் குழந்தையை கீழே இறக்கினாள். குழந்தை தாயின் சேலையை பிடித்துக்கொண்டு விரலை சுப்பியபடி நின்றது. இனத்தவர்கள் அவளோடு உதவிக்கு வந்திருத்தாக எனக்குத் தெரியவில்லை. அவளுடைய சோகத்தில் பங்குகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை போலும். ஐயருக்கோ அவள் தட்டில் காணிக்கையாக போட்ட பணம் அவர் மனதில் திருப்தியைக் கொடுத்தது. கடவுள் மேல் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்த ஐயருக்கு கொடுத்து காணிக்கை அது. அவள் வாய்விட்டுபக் கதறி, “தாயே அவர் ஏன் இந்த குழந்தையை என்னோடு தனிய தவிக்க விட்டு போய் விட்டார்? நான் எப்படி இவனை வளர்க்கப் போகிறேன். நான் தனித்துப்போனேன். சொந்தக்காரர்களும் ஒதுங்கிவாழ்கிறார்கள்.  நீ தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்”இ  ஒப்பாரி வைத்து அழுதாள். அங்கு நின்ற பலருக்கு அவளது அழுகையைக் அவர்கள் கணகளிலிலும் கண்ணீர்; வரும்போல இருந்தது . எல்லோரது பார்வைகளும் அவளை நோக்கிச் சென்றன. “ ஐயோ பாவம் இந்த வயதில் விதவையாகவேண்டுமா. தாலி பாக்கியம் இல்லை போலும் என்று எனக்கு பகத்தில் நின்றவர்  முணுமுணத்தது என்காதில் விழுந்தது ஐயர் அருச்சனைத் தட்டோடு திரும்பி வந்தார். “பிள்ளை நீ அழுவதால் போன உம் கணவர் திரும்பவும் வரப்போவதில்லை. மனதை தேற்றிக் கொள்ளும். வாழக்கையில் விரக்தியடையாதே. உம்மைப்போல் எத்தனையோ பெண்கள் சிறுவயதில் கணவனை இழந்து திரும்பவும் புது வாழ்வு ஆரம்பித்திருக் கிறார்கள். இதோ திரு நீறு, இதை பூசும். உமது கவலைகள்  எல்லாம் சரி வரும். மனதை தேற்றிக்கொள்ளும்” .ஐயருக்கு அவளை ஏறகனவே நன்கு தெரியும். “இதற்கு முன்னர் உவள் சுமங்கலியாக பல தடவை கணவனோடு கோயிலுக்கு வந்திருக்கிறாள். நான் கோயிலுக்கு வருகிற சமையம் இவளைக் கண்டிருக்கிறன்”, குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன். என் நண்பன் மோகனின் குரல் அது. அவன் அடிக்கடி கோயிலுககு வருபவன். ஒரு வேலை கோயிலில் பலரை சந்திக்கவும், தரிசனத்துக்கு வரும் இளம் பெண்களை பார்க்கவும், காரணமாக இருக்கலாம். அவனும் அந்தப் பெண்ணை அவதானித்திருக்கிறான். மோகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. “அப்படியா? உனக்கு அவளை முன்பே தெரியுமா  மோகன்”?, நான் அவனைக் கேட்டேன.; “இப்படி விதவைக் கோலத்தில் கோயிலுக்கு வந்து அழுது கண்ணீர் வடிப்பதை இப்போது தான் நானும் முதல் தடவையாகப் பார்க்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒட்டாவுக்கு போகும் வழியில் இவளது கணவன் கார்விபத்தொன்றில் இறந்தவன். நல்ல உத்தியோகத்தில் இருந்தவன். அழகன். நல்ல காலம் குடும்பமாக அவன் காரில் போகவில்லை” என்றான் மோகன்”.  விதவையாகையால் அவள் கையில் குங்குமத்தையும் பூவையும் கொடுப்பதை ஐயர் தவிர்த்தார். திருமணமாகி மூன்று வருடங்களில் விபத்தில் இறந்து போன கணவன் அவளுக்கு நல்லதைச் செய்து விட்டே போனான். நான்கு வருடங்களுக்கு முன்னர் 5 இலட்சம் டொலர்களுக்கு விபத்துக்கான காப்புறுதி ஒன்றையும் எடுத்து வைத்திருந்தான். காரணம் தனது ஜாதகத்தில் அவனுக்கு தீடீர் மரணம் எற்படும் என்று இருந்ததாம். காப்புறுதி கொடுத்த கொம்பெனிக்கு அவனுடைய சாதகம்  தெரியாது போல். மனைவிக்கும் அதை அவன் சொல்லவில்லை. தனது மணவாழ்க்கை நீண்ட வாழ்க்கை இல்லை என்பதை அவன் ஏற்கனெவே அறிந்து வைத்திருந்திருக்கிறான். அதனால் தான் அடிக்கடி கோயிலுக்கு வந்தானோ என்னவோ”. இது மோகனின் விமர்சனம். “ இது உனக்கு எப்படி தெரியும்;”? நான் அவனைக் கேட்டேன். “ இது இறந்தவனுடைய நண்பன் எனக்குச் சொன்னது” என்றான் மகன். தெரிந்தவர் ஒருவர் கார் விபத்தில் இறந்தால் இறந்தவன் இன்சியூரன்ஸ் எடுத்தவனா என்ற கேள்வி பலர் மனதில் தோன்றுவது சகஜம். “உயிருக்கான பாதுகாப்புக்காக நானூராயிரம் டொலர்கள் மதிப்புள்ள வீட்டின் மீதும் காப்புறுதி எடுத்திருந்தான். அந்த வீடும் இப்போ அவளுக்குத்தான சொந்தம்”,. இதை எனக்கு சொன்னது எனக்கருகே நின்ற அந்தப்பெண்ணின் இறந்த கணவனது நண்பர் ஒருவர்”, என்றான் மோகன். விதவைக்கு கிடைத்த சொத்து பற்றி தான் எத்தனையோ விமர்சனங்கள். பொறாமைகள். சிலரின் மறைவு சிலசமையம் சிலருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்னும் சிலர் குடும்பத்தை விட்டு போகும் போது கடன்களை வைத்துவிட்டு போவார்கள். கணவனின் மரணத்துக்கு பின்னர் அவள் ஒரு திடீர் பணக்காரி. பணம் மட்டும் இருந்;தால் என்ன. இழந்த கணவனையும், அவன் மேல் அவள் வைத்திருந்த அன்பையும், திரும்பவும் அவள் பெற முடியுமா?. அதுவும் அவள் அவனை 3 வருடங்கள் ஓடி ஓடி காதலித்து திருமணம் செய்தவளாம். ஆசைக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு அவன் போய்விட்டான்.                                                                                               ♣♣♣♣♣ கோயிலுக்கு வெளியே நான் வந்த போது, ஈழப் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணம் சேர்க்க உண்டியல் குழுக்கிக் கொண்டிருந்தார்கள் நல்ல மனம் கொண்ட சிலர். அவர்களின் வேண்டு கோளைக் கேட்டும் கேளாதவாறு அந்தப் பெண் ஒரு சிறு தொகையையாவது உண்டியலில போடாமல் போய்விட்டாள். ஒரு வேலை அவளது சிந்தனை வேறு எங்கையோ பொய்விட்டதோ. போரில் இறந்தவர்களைவிட அவளது கணவன் மறைவு தான் அவளைப் பாதித்திருந்தது. தனது கணவனின் மறைவை நினைத்து ஐயருக்கு இருபது டொலர் அருச்சனைக்காக கொடுத்த அவள், போரில் உயிர் நீத்த எத்தனையோ குழந்தைகள் , பெண்;கள், ஆண்கள் ஆகியோரை நினைத்து ஒரு டொலாரவது போட்டிருந்தால் அது அவளது மதிப்பை கூட்டியிருக்கும். அவளது சுயநலம்தான் அங்கு ஓங்கி நின்றதை என்னால் காணமுடிந்தது. கடவுளிடம் அவள் வேண்டியது தன் கணவனின் மறைவிற்கு பின்னர் பாதுகாப்பு. அதுக்கு தேவையான பணமும வீடும்; கிடைத்துவிட்டது.  அதே சமயம் மரணம் என்பது எவருக்கும் எந்த நேரத்திலும் குடும்பத்தில் வரலாம். அதை சவாலாக ஏற்று வாழத் தெரியவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. யார் கண்டது. கணவன் மேல் உள்ள பக்;தியும் அன்பையும் விட, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையும் பக்தியும் அவளுக்கு முக்கியமாக இருந்திருக்கலாம்.                                                                                               ♣♣♣♣♣ சுமார் ஒரு வருடத்துக்குப் பின் நான் அந்தப் பெண்ணை ஒரு நாள் திரும்பவும் அதே கோவிலில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த முறை நான் கண்ட காட்சி முற்றிலும் வேறுபட்டது.  அவள் நெற்றியில் குங்குமம், விலையுயர்ந்த பச்சை நிறக் காஞ்சிபுரச் சேலை அணிந்திருந்தாள். தலையில் பூவும் . கழுத்தில் நகைகளோடு அவள் காட்சி அளித்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “என்ன திரும்பவும் திருமணம் செய்துவிட்டாளா?. அப்படியானால் அது நல்ல முடிவு” என்று நான் சிந்தித்த போது அவள் அருகே, ஒரு வெள்ளயினத்தவன் நிற்பதைக் கண்;டேன். அவளது குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு அவன நின்றான். அவன் தான் அவளது கணவன் போலும். காலம் மாறிவிட்டது. விதவைக் கல்யாணத்தை ஆதாரிப்பவன் நான்.                                                                                             ♣♣♣♣♣ 21 அத்தியாயம் 21 ( ஆணாதிக்கம் )  [jaffna_kachari_new] ஆணாதிக்கம்       ஓரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தியிருப்பாள் என்பது உண்மை. மனைவி அமைவெதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். பெண்களின் புனிதத்தையும் திறமையைம் மதிக்காத  ஆண்கள் அனேகர். இந்தக் கதை அத்தகைய ஆண் ஒருவனைப்பற்றியது. உதவி அரசாங்க அதிபர்  ( Assistant Government Agent) ராஜ் என்று அழைக்கப்படும் இராஜரத்தினம் தற்புகழ்ச்சியை விரும்புபவன். சுயநலவாதி. தனது அதிகாரிகளின் சொல்லுக்கு கீழபடிந்து நடந்து நற்பெயர் பெற்றவன். தனக்குக் கீழ்வேலை செய்பவர்களை துட்டாக மதிப்பவன். பெண்களை மதிக்காதவன். ஆவாகள் செய்யும் ஒவ்வொரு கரியத்திலும் பிழை கண்டுபிடிப்பதில் அவனுக்கு ஒரு திருப்தி. ராஜ் எதையும் திட்டமிட்டே செய்வான். அன்று யாழ்ப்பாணக் கச்சேரியில்  கொழும்பிலிருந்து வந்திருந்த உள்நாட்டு விவகார அமைச்சருக்கான கூட்டம்;.  மதிய போசனம் உற்பட கூட்டத்தை ஒழுங்கு செய்யும்  பொறுப்பை  இராஜரத்தினத்திடம் அரசாங்க அதிபர் கொடுத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் உதவி அரசாங்க அதிபர்களின பிரச்சனைகளையும் மக்களின் தேவைகனையும் கேட்டு தீர்த்து வைக்கவே  அமைச்சர் வந்திருந்தார். கூட்டத்தில் அமைச்சருக்கு அருகே தான் அமர்வதற்கு ஏற்றவாறு இருப்பிடங்களை ராஜ் ஒழுங்கு செய்திருந்தான். அமைச்சரோடு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் உரையாடி, தனக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாட முடியும் என்பதை அமைச்சருக்கு காட்டினார். அமைச்சர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சிங்களத்தில் ராஜ் பதில சொன்னார். அவரது முக்கிய நோக்கம், சிஏஎஸ் எனப்படும் இலஙகை அரசின் பரிபாலன சேவையில் கிலாஸ் 1 க்கு பதவி உயர்வு பெற்று, இன்னும் சில மாதங்களில் அரசாஙக அதிபர் இளப்பாறிய பின்னர், தான் அந்த சீட்டைப் பிடிக்க வேண்டும் என்பதே. “புளூரிப்பன்” ஹொட்டலில் அமைச்சருக்கு மதிய போசனத்தை ராஐ; ஒழுங்கு செய்திருந்தான். பல விதமான யாழ்ப்பாணத்து கறிகள், பழவகைகள் பரிமாறப்பட்டது. திருப்தி அடைந்த அமைச்சர் தனது உரையில் கூட்டத்தையும்,  போசனத்தையும் ஒழுங்கு செய்த ராஜை பாராட்டிப் பேசினார். எதை ராஜ் எதிர்பார்த்தானோ அது நடந்தது. அரசாங்க கிலரிக்கல் சேர்விசில் இருபத்தி மூன்று வயதில் சாதாரண கிளார்க்காக வேலை செய்ய ஆரம்பித்து படிப்படியாக தன் உயர் அதிகரிகளுக்கு பந்தம் பிடித்து, விரைவாக பதவி உயர்வு பெற்றவன் ராஜ். சிங்களம் பேசவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டான். கொழும்பு, கண்டி, மாத்தறை ஆகிய இடங்களில் சில காலம் வேலை செய்தது, அவருக்கு சிங்களம் கற்க உதவியாக இருந்தது. எவருக்கு கீழ் வேலை செய்கிறாரோ அவர் சொல்வதறகெல்லாம் மறுக்காமல் ஆமோதிப்பதினால், “பந்தங்காரையா” (தீப்பந்தம் பிடிப்பவன்) என்று சக ஊழியர்கள் அவனைக் குறைவாகப் பேசினாலும், ராஜ் கவலைப்பட வில்லை. அவனுக்கு தன் காரியம் ஆனால் சரி. யூனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெறும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை.  ஆனால் தான் அரச சேவையில் எப்படியும் உயர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்தது. இருபத்தி மூன்று வயதில் கிலரிக்கல் சேர்விசில் சேர்நத ராஜ்,  முப்பது வயதில் சிஏ.எஸ் பரீட்சை எழுதி முதல் தடவையிலேயே சித்தியடைந்தான். ஆரம்பத்தில் கண்டி, மாத்தறை கச்சேரிகளிலிலும், திருகோணமலை கச்சேரியிலும்; உதவி அரசாங்க அதிபாராகவும் கடமையாற்றி, அமைச்சர் ஒருவரின் உதவியோடு யாழ்ப்பாணக் கச்சேரிக்கு  மாற்றலானான். யாழ்ப்பாண மாவடட்த்தில், நல்லூர், சாவகச்சேரி போன்ற இடங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி, இறுதியில் யாழ்ப்பாணக் கச்சேரியில் மேலதிக அரசாங்க அதிபரானான். ராஜின் தந்தை செல்வரத்தினம், யாழ்மத்திய கல்லூhரியில்  ஆசிரியராக வேலை செய்து இளப்பாறியவர். கோண்டாவிலைச் சேர்நத செல்வரத்தினம் தன் மனைவியோடு பிரச்சனைப்பட்ட வாழ்க்கையையே நடத்தியவர். அவரும் பெண்களை மதிக்காதவர். அவரது ஒரே மகன் இராஜரத்தினம். தந்தையைப் போல ஒரு சுயநலவாதி. அவனுக்கு தன் காரியம் நடந்தால் போதும். ராஜ் அரச பரிபாலன சேவையான சிஏஎஸ் பாஸ் செய்து அரசில் உயர் பதவி வகித்த போது அவனக்கு பல இடங்களில் இருந்து கலியாணம் பேசி வந்தது. கரம்பனைச் சேர்ந்த பெரிய பிஸ்னஸ்மன் தர்மலிங்கத்தின் ஒரே மகளான கொளரியை, கொழுத்த சீதனத்தோடு ராஜ் திருமணம் செய்தான். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இரு வீடுகள், பளையில் பத்து ஏக்கரில் தென்னந்தோட்டம். அதை விட நகை நட்டு, பணம் வேண்டியளவு, தர்மலிங்கம் தன் ஒரே மகளுக்கு  சீதனமாகக் கொடுத்தார். சீதனப் பணம் ஐந்துலட்சத்தில் இரண்டு இலட்சம் செல்வரத்தினத்துக்கு  டொனேசனாக கொடுத்த பி;ன்னரே செல்வா தன் மகனின்  திருமணத்துக்கு சம்மதித்தார். “ஏன் ஐயா மகனின் கலியானத்துக்கு டொனேஷன கேட்கிறீர். ஊமக்கு இருப்புது ஒரே மகன். பெண் பிள்ளைகள் கூட இல்லை அவர்களுக்கு சீதனம் கொடுக்க” என்று கல்யாணத் தரகர் தம்பிப்பிள்ளை கேட்டதுக்கு. “இது என்ன கேள்வி. ஆவன் ராஜை வளர்த்து, படிப்பித்து ஆளாக்கிய நான் செய்த செலவைப் பற்றி யோசித்தனீரே? அதை திரும்பிப் பெற இதைவிடச் சநதர்பம் எனக்கு வராது”, என்றார் செல்வரத்தினம். அவர் பண ஆசை பிடித்தவர் என்பது தரகருக்குத் தெரியும்.                                                                          ♣♣♣♣♣ கொளரி, கொழும்பு லேடீஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வி படித்தவள். அடக்கமானவள். படிப்பில் கெட்டிக்காரி. கொழும்பு யூனிவர்சிட்டிக்குப் போய் அறிவியலில் முதன்மையாக பட்டம் பெற்றவள். படிப்பைத் தொடாந்து பொளதிகத்தில் பி.எச் டி பட்டம் பெறவேண்டும் என்பதே அவள் ஆசை. தர்மலிங்கம் அடிக்கடி சுகயீனப்படுவதால், தனக்கு ஏதும் நடக்க முன்பே மகளுக்குத் திருமணம் செய்து வைத்hhர். “ நீ கலியாணம் செய்த பிறகு உன்றை கணவனின் அனுமதியோடு படிப்பைத் தொடரலாம. ஏனக்கு ஆட்சேபனையில்லை” , என்றார் தர்மலிங்கம். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கௌரி பௌதிக ஆசிரியையாக வேலை செய்யத் தொடங்கினாள். அவள் படிப்பித்த ஏலெவல் மாணவிகள் ஒருவராவது பொளதிகத்தில சித்தியடையாமல் போனதில்லை. யாழப்பாணத்தில,; கொளரி பிரபல்ய பௌதிக ஆசிரியை என்று பெயர் பெற்றது ராஜுக்கு அவ்வளவுக்கு திருப்தியில்லை. அதோடு ராஜரத்தினத்துக்கு தன் மனைவி வேலைக்குப் போவது மனதுக்கு அவ்வளவு வெறுபபைகட கொடுத்தது. “அவள் வேலை செய்வதால் குடும்பத்துக்கு வருமானம் அதிகரிக்கும். அதோடு கொளரி படித்த படிப்பு வீணாகப் போகக் கூடாது” என தன் தாய் ருக்குமணியின்; கட்டாயத்தினால் கொளரி வேலை செய்வதற்கு ராஐ; சம்மதித்தான். வீட்டில் சமைக்கும் உணவு தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பது ராஜின் கட்டளை. கௌரி தன் இஷ்டத்துக்கு சமைக்க முடியாது. தினமும் கறிகள் கூட தன்னைக் கேட்டுத் தான் கொளரி செய்யவேண்டும். வீட்டில் உள்ள ஜன்னல திரைச்சேலை முதற்கொண்டு கதிரை, மேசை சோபா, கட்டில் வரை அவன் தோந்தெடுத்தாக இருந்தது. கொளரியின்  கருத்துக்கு ஒருநாளும் ராஜ் மதிப்பு கொடுத்ததில்லை. வங்கிக் கணக்கு இருவர் பேயரில் இருந்தாலும் செக் புத்தகத்தைத் தான் வைத்துக்கொண்டான். கொளரியிடம் பிசிக்ஸ் டியூசனுக்காக மூன்று மாணவிகள் வீட்டுக்கு வருவதை ராஜ் அவ்வளவாக விரும்பவில்லை. கௌரி தேர்ந்தெடுத்த கேள்விகள,; இறுதி ஏலெவல் பரீட்சைக்கு அனேகமாக வருவதினால் மாணவிகளிடையே அவளுக்கு ஒரு தனி மதிப்பிருந்தது. மற்றைய கல்லூரிகளில படிக்கும் மாணவ மாணவிகள் கூட அவளிடம் டியூசன் கேடடுட வந்தாலும் அவள் அவர்களை ஏற்றுக்கொள்வில்லை. மாணவ மாணவிகள் வீட்டுக்கு வருவதும் , அவர்களின் பெற்றோர்கள கொளரி படிப்பிக்கும் முறையைப் பராட்டுவதும் ராஜுவின்; மனதில் பொறாமையைக் கொடுத்தது. ஒரு சமயம் அரசாங்க அதிபர் கூட கொளரியிடம் பிசிக்ஸ் படிக்கும் தன மகள்  கொளரி படிப்பிக்கும் முறை இலகுவாகவும், விளங்;கக்கூடியதாகவும் இருப்பதாகத் தனக்குச் சொல்லி கௌரியை பராட்டியது ராஜுக்கு எரிச்சலைக் கொடுத்தது. வேலை செய்யும் இடத்தில் பலருக்கு ராஜின் போக்கு பிடிக்கவில்லை. அவனுக்கு கீழ மூன்று பெண்கள் வேலை செய்தார்கள். அவர்களை ராஜ் வேறுபாடு காட்டி நடத்தினான். அவர்களை நடத்தும் விதம் சக ஊழியர்களுக்கு ராஜமேல் வெறுப்பைக் கொடுத்தது. வேலை செய்த மூன்று பெண்களில் ஒருத்தியான டைபிஸ்ட வனிதா, பத்து வருடங்கள் டைபிஸ்ட்டாக வேலை செய்தவள். வனிதா சுருக்கெழுத்தும் தெரிந்தவள். ஆனால் ராஜுவுக்கு அவள் வேலையில திருப்தியில்லை. ஒருநாள வனிதா ஆங்கிலத்தில் டைப் செய்த  முக்கிய கடிதத்தில் பல எழுத்துப் பிழைகள் இருப்பதை கண்ட ராஜ், அவளைப் பற்றி அரசாஙக அதிபருக்கு முறையிட்டு, யாழப்பாணக் கச்சேரியில் இருந்து வவுனியா கச்சேரிக்கு  வனிதாவை மாற்றம் செய்தான். நல்லூரில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த வனிதாவுக்கு, அந்த மாற்றம் அசௌகரியததைக் கொடுத்தது. வனிதாவின் கணவனும் யாழ்ப்பாண மாநகரசபையில் வேலை செய்பவன். ராஜிடம் தன் மாற்றத்தை ரத்து செய்யும்படி எவ்வனவு கெஞ்சிக் கேட்டும் ராஜ் சம்மதிக்கவில்லை. அரசாங்க அதிபரிடம் வனிதா முறையிட்டும், ஒன்றும் நடக்கவில்லை. ராஜ் – கௌரி தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வருடத்தில் மாலதி பிறந்தாள். தன் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ராஜுவுக்கு மாலதி பிறந்தது பெரும்  ஏமாற்றத்தைக் கொடுத்தது. தன்னையறியாமலே ஆரம்பத்திலிருந்தே மகள் மாலதியை வெறுக்கத் தொடங்கினான். தன் தாயை ஒரு வேலைக்காரி போல் தந்தை நடத்துவதைக்கண்ட மாலதி, தந்தெயோடு பல தடவை வாக்குவாதப்பட்டிருக்கிறாள். தாயைப் போல் மாலதி படிப்பில கெட்டிக்காரி, ஆனால் பிடிவாதக்காரி. “மாமி. இவர் என்னோடு எப்போதும் சணடைபோடுவதை மாலதி அவதானித்து வாராள். ஆதனாலை ஏன் அம்மா அப்பா உங்களோடை எப்பவும் குறைபிடித்து சண்டை போடுகிறார். நீங்கள் அவரை விட கூட படித்தவள் என்ற பொறாமையா? என்னிலையும்; அவருக்கு விருப்பமில்லை? அவருக்கு பெண்களைப் பிடிக்காதா? என்று கேட்டிருக்கிறாள்.” என்றாள் மாமியாரிடம் கௌரி. “இங்கை பார் கௌரி. குடும்பத்திலை கணவன் மனைவிக்கிடையே சண்டைச் சச்சரவு வருவது சகஜம். உங்கள் விசயத்தில மாலதியை தலையிடவேண்டாம் என்று சொல்லிவை, என்று கௌரியின் மாமியாh ருக்மணி; அவளுக்கு அறிவுரை சொன்னாள். ருக்மணிக்கு தன் பேத்தி மாலதியின் குணம் தெரியும். சில நாட்களாக மாலதி ஸ்கூல்; முடிந்து வீட்டுக்கு தாமதித்து வரத் தொடங்கினாள். ராஜ் அதைபற்றி மகளிடம் விசாரிக்கவில்லை. கொளரிக்கும,; ராஜின் தாயுக்கும்  மாலதி தாமதமாக வருவதைப் பற்றி; கவலை. மகளை தாமதித்து வருவதைக் கண்டிக்கும்படி கொளரி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராஜ் கேட்கவில்லை. “உவள் அப்படி என்ன படித்து கிழித்து விடப்போகிறாள். நேரத்தோடை கலியாணத்தை செய்து வைப்போம்;. அப்போ எங்களுக்கும் பிரச்சனை தீர்ந்த மாதிரி” என்றான் ராஜ். கொளிக்கு கணவனின் பதில் வெறுபபைக் கொடுத்தது. தன் மகளின் கெட்டித்தனம் அவளுக்கு தெரியும். “ஏன் மாலதி இப்ப சில நாட்களாக ஸ்கூல் முடிந்து தாமதித்து வருகிறாய்” என்று ஒரு நாள் கொளரி மாலதியைக் கேட்டதுக்கு, தன் வகுப்பு மாணவிகளுக்கு கணித பாடத்தில் உதவிசெய்வதாக விளக்கம் கொடுத்தாள். தீடீரென ஒரு நாள் மாலதி ஸ்கூலில இருந்து வரவேயில்லை. கொளரிக்கும் மாமியாருக்கும் என்ன செய்வதென்று தெரியவிலலை. மகளை காணவில்லை என்று ராஜ் கவலைப்படவில்லை. “ என்ன தம்பி, மாலதி விடுதலைப் புலிகளின் இயக்கத்தில சேர்ந்துவிட்டதாக பக்கத்து வீட்டு இந்திரன் சொல்லிக் கேள்விப்பட்டேன். இந்திரனுக்கு இயக்கத்திலை பல பெடியன்களைத் தெரியும். அவள் இயக்கத்தில் சோந்தது உனக்குத் தெரியுமா?, விதானையாரின் மனைவி ராஜைக் கேட்டாள். அவளுக்கு ஊரில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் தெரியும். “மாமி. அவள் விருப்பப்படி இயக்கத்தில சேர்ந்து விட்டாள். அதுக்கு நான் என்ன செய்யமுடியும்? ஒரு சனியன் தொலந்தது என்று இருக்கட்டும். என் சொல்லை அவள் ஒரு நாளும் கேட்பதில்லை. எப்போதும் தாய் சொன்னபடிதான் நடப்பாள்.” என்றான் ராஜ் கோபத்தோடு, தான் அதைப்hற்றிக் கவலைப்பட்டதாகக் காட்டிக் கொள்ளாமல். விதானையார் மனைவி, மாலதியைப் பற்றிய நியூஸ் சொல்லி அடுத்த நாள், “அத்தான் இந்த கடிதத்ததை பார்த்தீர்களா. ஒரு பெடியன் உங்களிடம் கொடுக்கச் சொல்லி தந்துவிட்டுப் போனவன்.” “கடிதமா? எங்கை வாசி.”கௌரி கடிதத்தை வாசிக்கத் தொடங்கினாள் அன்பின் அப்பா, அம்மா, அப்பம்மாவுக்கு.. எனக்கு தெரியும் நான் உங்களைவிட்டுப் பிரிய எடுக்கும் முடிவை கேள்விபட்டு நீஙகள் பெரும் கவலைப்படுவீர்கள் என்று. இந்த முடிவை நான் எடுப்பதுக்கு முக்கிய காரணம், அப்பா அம்மாவை வேலைக்காரி போல நடத்தும் விதம். அப்பா ஒரு பழமைவதி. ஆண் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். மனைவிக்கு தகுந்த இடம் அடுப்படி என்பதே அவர் எண்ணம். நான் அவர் குணத்தை மாற்றச் சொல்லி எவ்வளவோ கேட்டும் அவர் மாறவில்லை. அது அவரின் பிறவிக் குணம். அப்பப்பாவும் அவரைப் போலவே அப்பம்மாவை நடத்தியவர் என்று அப்பம்மா சொல்லிக் கேள்விப்பட்டேன். நான் இயக்கத்தில் சேர வேண்டிய முக்கிய நோக்கம் பெண்களும் ஆண்கனைப் போன்று எதையும் சாதிக்க கூடியவர்கள் என்பதை அப்பாவுக்கு நிரூபித்துக் காட்ட. இயக்கத்தில் ஆண் பெண் என்ற வேறபாடு கிடையாது. இயக்கத்தில் எனது சினேகிதி சங்கரி சேர்ந்ததைப் போல் சேர்ந்து, தமிழ் இனத்தின் விடுதலைக்கு, பெண்களின் பங்கில் நானும் ஒருத்தியாக இருக்க முடிவெடுத்தேன். சமூகத்தில நிலவும் பழமையையும் ,மூடநம்பிக்கைகளையும் களைத்தெறிந்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக உழைப்பேன். மாலதி என்ற பெயருள்ள ஒரு மகள் இருந்தாள் என்பதை மறந்துவிடுங்கள். நான் எல்லாப் பெண்களைப் போல் பிள்ளைகள் பெறும் இயந்திரமாக இருக்க விருப்பப்படவில்லை. சமூகத்துக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள். நன்றி மாலதி கடிதத்தில் தன் ஒரே பேத்தி எழுதியருந்ததை ராஜின் தாய் கெட்டதும். தலைசுற்றி கிழே விழுந்தாள். ராஜ், கௌரி இருவரும் சோந்து அவளை தூக்கிப்போய் கட்டிலில் கிடத்தினார்கள. சில நிமிடங்களுக்கு பின்னர் ராஜின் தாய் ருக்மணி கண்வழித்தபோது மகனும், மருமகளும் அருகே நிற்பதைக் கண்டாள். ராஜை தன் அருகே அழைத்து”  இப்போ நடந்ததைப் பார். இதுக்கெல்லாம் நீதான் காரணம். நீ கௌரியை நடத்தும் விதம் மாலதியின் மனதைப் புண்படுத்திவிட்டது. அது தான் அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள். இனியாவது உன் போக்கை மாற்று” என்றாள் கவலையோடு ராஜின் தாய். கேளரி மௌனமாக நின்றாள். “ உங்கள இரண்டு பேருக்கும் மாலதியின் போக்கு தெரியும். அவளுக்கு இயக்கத்தோடு தொடர்பு இருந்ததாக எனக்கு சொல்லியிருந்தால், நான் அவளை கொழும்பில் உள்ள ஸ்கூலில ஒன்றில் சேர்த்து, போர்டிங்கில் போட்டிருப்பேன். இந்த சூழ்நிலையில இருந்து விடுபட்டிருப்பாள்”, ராஜ் தன் தாயின் மீதும் மனைவி மீதும் குற்றம் சுமத்தினான். சில வாரங்கள் உருண்டோடின. மாலதியிடம் இருந்து ஒரு தகவல்களும் வரவிலலை. மாலதியைப பிரிந்த கவலை கௌரியையும் அவள் மாமியரையும் வாட்டியது. ஒரு நாள் காலை, ராஜ் தனக்கு கீழ் வேலை செய்பவர்களோடு ஒரு மிட்டிங்கில் இருந்த சமயம், அரசாங்க அதிபர் பிரத்தியேக செயலாளாளர் ஒரு செய்தியோடு வந்தார். “சேர்  ஜி.ஏ உங்களை உடனடியாகப் பார்க்க வேண்டுமாம். தன் அறைக்கு வரட்டாம்”. செய்தியை ராஜுக்கு அறிவித்துப்போட்டு பதிலுக்கு காத்திராமல போய்விட்டார். ஜி.ஏ ஏன் தனை கூப்பிடுகிறார் என்பது ராஜுக்கு விளங்கவில்லை. மீட்டிங்கை ஒத்திவைத்துப்போட்டு அவசரம் அவசரமாக ஜி.ஏ யின் அறைக்கு ராஜ் போனான். அறைக்குள் ஜி.ஏயைத் தவிர இன்னும் இருவர் இருநதனர். ஒருவர் யாழ்ப்பாண மாவடத்தின் டி.ஐ.ஜி. மற்றவர் பிரிக்கேடியர். அவர்கள் இருவரையும் ராஜ் முன்பே சந்தித்திருக்கிறான். “ராஜ் உமக்கு ஹோம் மினிஸ்டிரி செயலாளரிடம்; இருந்து கடிதம் ஒன்று வந்;திருக்கிறது. பாதுகாப்பு கருதி உம்மை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தி வைக்கும்படியும், வேலையில் இல்லாத காலத்தில அரைமாதம் சம்பளம் கொடுக்கும் படியும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. செயலாளர் தன் கையொபமிட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.” என்று கடிதத்தை ஜி.ஏ ராஜிடம் கொடுத்தார். “என்ன சேர் சொல்லுறியள்? ஏதறகாக என்னை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தவேண்டும்?. நான அப்படி என்ன தவறு செய்தேன்? ராஜ் பதட்டத்தோடு அரசாங்க அதிபரைக் கேட்டான். “உம்மை வேலையில் இருந்து தறகாலிகமாக வேலையில் இருநது நிறுத்தும் கடிதம் என்கையில் கிடைத்தவுடன், நான், செயலாளரோடு கதைச்சனான். உமது மகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும. அது உமக்கு தெரிந்திருந்தும் நீh ஒபீசுக்கு அறிவிக்கவில்லை என்றும் நீர் தொடர்நது வேலை செய்வது ஆபத்து என்று ஒரு பெட்டிசன் வந்ததாகவும். அதைத் தீர விசாரித்த பின்னரே அமைச்சரின் அனுமதியோடு இந்த நடவடிக்கையைத் தான் எடுத்தாகச் சொன்னார். அது சரி ஏன் நீர் உமது மகள் இயக்கத்திலை சேர்ந்ததை பற்றி எனக்கு முன்பே அறிவிக்க வில்லை”? ஜிஏ கேட்டார். “சேர் என மகள் இயக்கத்தில் சேர்ந்து பல வாரங்களாகிவிட்டது. அவளைக் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்துப்போட்டேன். எனக்கும் அவளுக்கும ஒரு தொடர்பும் இல்லை.” என்றான ராஜ். “தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ பாதுகாப்பு கருதி எனக்கு உடனடியாக நீh  எனக்கு அறிவிக்கத் தவறிவிட்டீர். அதுவே உம்மை வேலையில இருந்து தற்காலிகமாக நிறுத்த வேண்டி வந்து. இன்னுமொன்று சொல்ல வேண்டும். நீர் இருக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு பொலீசின் அனுமதியின்றி போகக் கூடாது. தினமும் யாழ்ப்பாண பொலீஸ் ஸ்டேசனுக்கு போய் உம்மை அடையாளம் காட்டி கையொப்பமிட வேண்டும். இது முக்கியம. பொலீஸ் டிஐஜி அதற்கான ஓழுங்குகளைச் செய்துள்ளார்”, என்றார் அரசாஙக் அதிபர் கடுமை நிறைந்த தொனியில்;.  அறைக்குள் இருந்த டிஐஜியும், பிரிக்கேடியரும் ஜிஏ சொல்வதை ஆமோதித்து சரியென தலையாட்டினார். மாலதி இயக்கத்தில சேர்ந்;தது தன்னைப் பாதிக்கும் என்று ராஜ் எதிர்பார்க்கவில்லை. தனது பல கால அரசசேவையில தனக்கு ஏற்பட்டமு அழிக்க முடியாத களங்கம் என்றது அவர் மனம். பெட்டிசன் போட்டது வேற எவருமாயிருக்காது. இது நான் டிரான்ஸ்பர் செய்த டைபிஸ்ட் வனிதாவின் வேலைதான். எனக்கு எதிராகப் பேட்டிசன் போட்டு பழிக்குப் பழி வாங்கிவிட்டாள். பாவி. ராஜ் மனதுக்குள் கறுவிக் கொண்டான். “ ராஜ் உமது பைல்களையும் ஒபீஸ் சாவிகளையும் உமக்கு அடுத்த சீனியரான உதவி அரச அதிபர் ஆனாந்தனிடம் கொடும். நான் ஏற்கனவே அவருக்கு சொல்லிவிட்டேன்.” என்றார் ஜிஏ. ராஜாவால் பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. கடிதத்தோடு குனிந்த தலையோடு ஜிஏயின் அறையைவிட்டு வெளியேறினான். ******** ராஜா கவலை தோயந்த முகத்தோடு, நேரத்தோடு வீடு திரும்பியது, கௌரிக்கு கணவனுக்கு ஏதோ ஒபீசில் ஏதோ நடக்கக் கூடாதத: நடந்து விட்டது எனபதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. கவலையோடு கதிரையில் தலையில கைவைத்தபடி அமர்நத கணவனைப் பார்த்து “அத்தான் கலைத்தப்போயிருக்கிறியள் கோப்பி கொண்டுவாரன் என்று சமையலறைக்குப்;  போனாள். ராஜின் தாயுக்கு மகன் பேசாமல் இருப்பது விசனத்தைக் கொடுத்;தது. வழமையாக வீட்டுக்குள் வந்ததும் கௌரியோடு சண்டை ஆரம்பிப்பவன் அன்று வித்தியாசமாக, அமைதியாக இருக்கும் காரணம் அவளுக்கு புரியவிலலை. கௌரி கோப்பியைக் கொண்டு வநது ராஜிடம் நீட்டினாள். நடுங்கும் கரத்தோடை கோப்பியை வாங்கினான் ராஜ். அவன் கண்களில இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. கௌரியும், ராஜின் தாயும் அதை எதிர்பாhக்க விலலை. ஒருபோதும ராஜ் அழுதது கிடையாது. என்னைத் தான பல தடவை அழவைத்திருக்கிறார். இன்று ஏன இவர் கண்களில கண்ணீர். மாலதிக்கு எதும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதா?, கௌரிக்குப் பல யோசனைகள். “கொளரி. என்னை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்திவிட்டாங்கள். அமைச்சு செயலாளரிடம் இருந்து எனக்கு கடிதம் வந்திருக்கு. வேலை இருந்து நிற்கும் காலத்தில் இனி அரைமாதச் சம்பளம் தான் எனககு. அது மட்டுமல்ல நான் பெலசிலை போய் தினமம் ரிப்போhட் பண்ணவேண்டுமாம”, என்று  சொல்லியபடி கடிதத்தை மனைவியிடம் கொடுத்தான் ராஜ். கொளரி அமைதியாக கடிதத்தை வாங்கி வாசித்தாள். ” வேலையில் இருநது உஙகளை நிறுத்துவதற்கு அப்படி நீங்கள்  என்ன தவறு செயதீர்கள்”, கௌரி கவலை யோடுகேட்டாள். தன்னை வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்திய காரணம் முழுவதையும் கௌரிக்கு ராஜ் எடுத்துச் சொன்னான். “அத்தான். அப்பவே நான் யோசித்தனான். மாலதி இயக்கத்தில் சேர்ந்ததையும், அதற்கு நீங்கள் பொறுப்பில்லை என்பதையும் ஜிஏயுக்கு அறிவிக்க வேண்டாமா என்று உங்களுக்கு சொல்ல. ஆனால் நீஙகள் நான் சொல்வது எதைக் கேட்டு நடந்தியள்”? “கொளரி நீh சொல்வது உண்மை. நான் உம்மையும் மாலதியையும் நடத்தின விதம் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறதுக்கு காரணம். அதுக்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கிறன். இனி வீடு நடத்துவது உமது பொறுப்பு நான் எதிலும் தலையிடமாட்டேன். வீட்ட வரவு செலவைக் கவனிப்பதும் உமது பொறுப்பு. இதோ செக் புத்தகம். நீர் இனி செக்கில் கையெழுத்தடும். மாலதி எப்படியும் எங்களிடம் இயக்கத்தை விட்டுத் திரும்பி வீட்டுக்கு வர என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்.” அமைதியாக மனைவியடம் ராஜ் மன்னிப்பு கேட்டான். ராஜின் தாயால் தன மகனிடம் ஏறபட்ட திடீர் மாற்றத்தை நம்பமுடியவில்லை. தனக்குள் சிரித்துக்கொண்டாள். “அத்தான் வருமானத்தைப் பற்றி யோசியாதையுங்கோ. இன்னும் சில மாணவிகள் என்னிடம் டியூசன் தரச் சொல்லிக் கேட்டவர்கள். அவர்களுக்கும் டியூசன் கொடுக்கிறன், நீங்கள் சம்மதித்தால்.” “இனி உமது விருப்பத்துக்கு எதிராக நான் ஒன்றும் சொல்லமாட்டேன். எத்தனை பிள்ளைகள் எண்டாலும் நீh டியூசன் கொடும். அனால் உமது உடம்பைக் கவனித்துக் கொள்ளும்” என்றான் மனைவியிடம் என்றுமில்லாதவாறு அன்பாகவும், அக்கரையோடும், ராஜரத்தினம். கணவனில் தோன்றிய மாற்றத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.  கொளரி தன் மனதுக்குள் மாலதிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டாள்.                   ♣♣♣♣♣ 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !