[] [பாரதியும் ஏவிஎம்மும் -- சில உண்மைகள்] பாரதியும் ஏவிஎம்மும் -- சில உண்மைகள் ஹரி கிருஷ்ணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com பாரதியும் ஏவிஎம்மும் -- சில உண்மைகள் பதிப்புரிமை © 2015 இவரால் / இதனால் ஹரி கிருஷ்ணன். This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - பாரதியும் ஏவிஎம்மும் -- சில உண்மைகள் - நன்றி - 1. பகுதி 1 - 2. பகுதி 2 - 3. பகுதி 3 - 4. பகுதி 4 - 5. பகுதி 5 - 6. பகுதி 6 - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பாரதியும் ஏவிஎம்மும் -- சில உண்மைகள் [Cover Image]   ஆசிரியர்  – ஹரி கிருஷ்ணன் hari.harikrishnan@gmail.com   உரிமை – Creative Commons Attribution Non Commercial ShareAlike உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com   மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   2000ம் வருட இறுதியில் அகத்தியர் குழுவில் எழுதி, பின்னர் சிஃபி.காமால் தொடராக வெளியிடப்பட்டது.   2 நன்றி இந்தத் தொடரை எழுதக் காரணமாக இருந்து, ஆதரவளித்த அமரர் டாக்டர் ஜெயபாரதிக்கும், சிஃபி.காமில் வெளியிட்ட அன்றைய பொறுப்பாளர் (தற்போது கல்கி பொறுப்பாசிரியர்) ஆர் வெங்கடேஷ் அவர்களுக்கும் நன்றி. [pressbooks.com] 1 பகுதி 1 பகீரதனின் பிரயத்தனத்தால் கங்கை பொங்கி வந்தது.  சிவனுடைய சடாமுடியில் ஒடுங்கியது.  அதன் பின்னர் ஜன்ஹு முனிவரால் குடிக்கப்பட்டு அவருடைய காதின் வழியாக மறுபடியும் ஓடலாயிற்று.  பொங்கி வந்த கங்கை ஆங்காங்கே பல தேக்கங்களைச் சந்தித்த பிறகே இன்று ஓடிக்கொண்டிருக்கிறாள்.  இந்தக் கதையில் உண்மையிருக்கிறதா இல்லையா என்று ஆராய்வதல்ல நமது நோக்கம்.  இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டுக்கடங்காத ஒரு பிரவாகம் கங்கையைப் போன்றே ஓடியது.  அது புறப்பட்ட காலத்திலேயே பரவலாக மதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் எதிர்ப்பையே சந்தித்து வந்தது. அந்தப் பிரவாகத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய – சீவலப்பேரி சின்னசாமியின் மகனான – சுப்பிரமணிய பாரதி இறந்த பிறகும் இந்தக் கம்பீரக் கவிதா நதியின் ஓட்டம் அவ்வப்போது தடைகளைச் சந்தித்தே வந்தது.  தமிழின் பாக்கியம்.  தடைகள் உடைந்தன.  இன்று தடையற்று அந்த வெள்ளம் அனைவரிடத்திலும் பாய்கிறது. பாரதி என்று திரைப்படம் எடுக்கும் போதும் அது வெளி வந்த போதும் ‘இது ஓடுமா’ என்ற ஒரு பதைப்பு அனைத்துத் தரப்புகளிலும் இல்லாமலில்லை.  படம் வெகு சிறப்பாக ஓடியதுடன் விருதுகளும் பெற்றது.  சில காலங்களுக்கு முன்பு ஒரு பிரபல நடிகர் பாரதியாக நடிப்பதாக இருந்தது.  ஆனால், பிரபல நடிகர்கள் யாரும் நடிக்காமலேயே இந்தப் படம் இப்படி ஓடியது, தமிழ் மக்களின் இதயத்தில் பாரதி எத்தகைய அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறான் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. நல்ல வேளையாகப் பிரபல நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை.  இல்லாவிட்டால் ‘பாரதி படம் ஓடியதே இன்னாரால்தான்.  இல்லாவிட்டால் பாரதி படத்தைப் போய்ப் பார்க்கும் அளவுக்கு எந்தத் தமிழனுக்கு ஆர்வமும் அறிவும் இருக்கிறது.  பாரதியின் பெருமையை உயர்த்தியவரே இன்னார்தான்’ என்று அந்த நடிகரைக் கொண்டாட ஆரம்பித்திருப்பார்கள். நம் கதைக்கு வருவோம்.  மேற்படி திரைப்படத்தைச் சொன்னது எதற்கென்றால், அதே திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர் பாரதியின் பாடல்கள் என்னும் கங்கா நதியைத் தன் வீட்டுக் கிணற்றில் பதுக்கிக்கொண்டார்.  அந்த நதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் எனக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று அறிவித்து வசூலும் செய்து வந்தார்.  அந்தக் கொடுமையிலிருந்து தமிழகம் தப்பியதே ஒரு பெரிய கதை.  இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால், அந்த நதியின் அருமையைத் தெரிந்தே பாதுகாத்து வைத்திருந்து (அடடா!) அணை கட்டி (ஆஹாஹா) தமிழ் மக்களுக்குத் தக்க தருணத்தில் அணையை உடைத்து விட்டு (அடட டடடா!) இன்றைக்கு அந்தப் பாடல்களை அனைவரையும் அனுபவிக்கச் செய்திருக்கும் செம்மல் விம்மல் தும்மல் என்று பாடாத பாட்டெல்லாம் பாட வருகிறார்கள்.  ஊடகங்கள் அவர்கள் கையில்.  பணம் அவர்கள் கையில்.  என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யாரையும் புண்படுத்த  வேண்டும் என்பதோ, களங்கப்படுத்த வேண்டும் என்பதோ நமது நோக்கம் அன்று.  நடந்த நிகழ்ச்சிகளை அவரவர்களின் மனப் போக்குக்கு ஏற்ப, திரித்துச் சொல்வது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.  உள்ளது உள்ளபடி வரும் காலத்திற்குத் தெரிய வேண்டும்.  மறைப்புகளாலும் திரிப்புகளாலும் பாரதி பாடல்களில் களிம்பு ஏற ஆரம்பித்திருக்க காலகட்டம் இது. சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னால், என் இணைய நண்பர்களில் ஒருவரான ஈழத்துக் கவிஞர் இரமணீதரன் ‘பாரதி பாடல்களே கூட ஏவிஎம் தன்னுடைய பாடல் பதிவுக் கூடத்திற்காக வாங்கிப் பாதுகாத்திரா விட்டால், இன்றளவும் நின்றிருக்குமா?’ என்றொரு கேள்வியை எழுப்பினார்.  மலேசியாவைச் சேர்ந்த, ‘இணையப் பெரிசு’ என்று எல்லாத் தரப்பினராலும் பாராட்டப்பட்டும், வணங்கப்பட்டும் வரும் டாக்டர் ஜெயபாரதி ஏறத்தாழ இதே போன்ற ஒரு கேள்வியை என்னிடத்தில் எழுப்பினார்.  நிலைமை வேறொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது.  யாரோ எதற்காகவோ வாங்கிய காரணத்தால்தான் பாரதி பாடல்கள் இத்தனைக் காலச் செலவைக் கடந்து நம் கைகளை அடைந்திருக்கின்றன என்றொரு புது வகையான பொய் யாராலோ உருவாக்கப்பட்டு உலா வந்துகொண்டிருக்கிறது.  அதை நல்ல அறிஞர்களும், பெயர்பெற்ற கவிஞர்களும் நம்பவும் ஆரம்பித்துவிட்டனர்.  பொய்கள் யாரைப் பாதித்தாலும் சரி.  பாரதி பாடல்களை பாதிக்க அனுமதிப்பதில்லை என்று டாக்டர் ஜெயபாரதியின் தலைமையில் இயங்கும் அகத்தியர் மின்னஞ்சல் குழுவுக்காக (agathiyar@yahoogroups.com) நான் தொகுத்த செய்திகளின் அடிப்படையில் எழுதிய கட்டுரையின் மறுவடிவம் இது.  உண்மைகளை உலகுக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும். 1921 செப்டம்பர் 12 பிறந்த நடுநிசி நேரத்தில் பாரதி மறைந்தான்.  பாரதியின் தகனத்தில் பதின்மூன்றே பேர் மட்டும் பங்கேற்றனர்.  இதற்குப் பல காரணங்கள்.  அவற்றை ஆய்வதற்கு இது இடமன்று.  அவனுடைய மறைவிற்குப் பிறகு எஸ். சத்தியமூர்த்தி ஒரு அறிக்கை விடுத்தார்.  பாரதியின் எழுத்துக்களைப் பிரசுரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அவனுடைய குடும்பத்தாருக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதே செப்டம்பர் மாதத்தில் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.  இதற்குத் திலகர் ஸ்வராஜ்ய நிதியிலிருந்து ஆயிரம் ரூபாய் (நினைவிருக்கட்டும் 1921ல் ஆயிரம் ரூபாய்), தமிழ் மக்கள் உதவிய ரூ.12 (பன்னிரண்டு மட்டும்), மற்றும் ரங்கூனிலிருந்து வந்த நிதி என்று நிதியாதாரம் கிடைத்தது.  பாரதியின் மனைவி செல்லம்மாவும், அவரது சகோதரர் க. ரா. அப்பாதுரையும் (பாரதியின் மைத்துனர்; கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் வாஞ்சியின் கூட்டாளி என்று ஓராண்டு சிறை சென்றவர்) பாரதி ஆசிரமம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.  (பாரதி? ஆ! சிரமம்!) ஆமாம்.  பாரதி ஆசிரமம் நடத்துவது அத்தனை சிரமமானதாகிவிட்டது, வெகுவிரைவில்.  பாரதி பாடல்கள் விற்பனையாகவில்லை.  கானாடுகாத்தானில் வை. சு. சண்முகம் செட்டியார் என்றொருவர் இருந்தார்.  செட்டிமக்கள் குலவிளக்கு என்று பாரதி ஒரு பாடல் எழுதியிருக்கிறாரல்லவா? (“பல்லாண்டு வாழ்ந்தொளிர்க கானாடுகாத்த நகர்ப் பரிதிபோன்றோய்” என்று ஆரம்பிக்கும்)  அந்தப் பாடல் இவர் மீது இயற்றப்பட்டதுதான்.  1923ல் பாரதி பாடல்களைத் தாம் பிரசுரிப்பதாகவும், விற்பனைப் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் கூறி ரூ.10,000/- கொடுக்க முன்வந்தார்.  செல்லம்மா பாரதி ஒப்புக்கொண்டாலும் அப்பாதுரையின் ஆர்வமின்மையால் இது நடக்கவில்லை.  அந்த ஆண்டிலேயே பாரதி ஆசிரமத்தின் பதிப்பு வேலைகளும் நின்று போயின. இந்தக் காலகட்டத்தில் பாரதிக்குத் தமிழ்ப் பண்டிதர்களின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.  பாரதியின் பாடல்களின் எளிமையைக் கருதி அவரை முண்டாசு கட்டிக்கொண்ட பண்டாரக் கவிஞர் என்று கேலி பேசியவர்கள் உண்டு.  இலக்கணமறியாத வெள்ளைப் புலவன் என்று விவரமறியாமல் பேசிய அதிமேதாவிகள் உண்டு. பாரதியார் அண்ணாவி புலவர் என்பார் கல்வியினில் பழக்கம் இல்லார் சீரறியார் தளையறியார் பல்லக் கேறுவார் புலமை செலுத்திக் கொள்வார் ஆரணியும் தண்டலை நீள்நெ றியாரே இலக்கணநூல் அறியா ரேனும் காரிகையா கிலும்கற்றுக் கவிதை சொல்லார் பேரிகொட்டக் கடவர் தாமே என்று பாரதி மேல் பாட்டுப் பாடிய பெரும் (வெறும்?) புலவர்கள் உண்டு,  எளிய பதங்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதுபோல் எழுதினால் பண்டிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?  கண் என்பதைச் சக்கு என்றல்லவா சொல்ல வேண்டும்? 1924ல் பாரதியின் இளைய மகள் சகுந்தலாவுக்குத் திருமணம் நடந்தது.  திருமணச் செவவுக்காக பாரதியின் பாடல்களை (அடகு) வைத்து ரூ.2000 கடன் பெறப்பட்டது என்று சொல்கிறார் பாரதி ஆய்வாளர் ரா. அ. பத்மநாபன்.  பாரதியின் கவிதைகள் அதிகம் விற்காத நிலையில் அவருடைய குடும்பத்தார் நிலையான வருவாயின்றித் தவித்தனர்.  கடன் சுமையும் தீர்க்க ஒண்ணாததாக இருந்தது. ஆனாலும் அவன் பாடல்களின் அருமையை உணர்ந்தாரும் பலர் இருந்தனர்.  ஹரிஹர சர்மா (பாரதியின்  நெருங்கிய நண்பர்; தூரத்து உறவினர்) பாரதியின் தம்பி சி. விசுவநாதன் ஆகியோர் கதர்க் கடைகளில் பாரதி கவிதைகளை வைத்து விற்க ஏற்பாடு செய்தனர்.  பாரதியைப் பரப்ப முயற்சிகள் நடந்தன.  பாரதியின் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காந்தியடிகளின் யங் இந்தியாவில் வெளியிடச் செய்து பாரதியின் பெருமையை இந்தியா முழுவதற்கும் அறிவித்தார்.  (“பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசிர்வாதம்” என்று கோணல் மாணலான கையெழுத்தில் காந்தியடிகள் தமிழில் எழுதியிருக்கிறார் – பாரதி மணிமண்டபம் கட்டப்பட்ட போது..) பர்மா அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.  பர்மிய அரசு பாரதியின் எழுத்துக்கள் ராஜ துவேஷமானவை என்று அறிவித்தது.  தென்னை மரத்தில் தேள் கொட்டிவிட்டது.  பனைமரத்துக்கு நெறிகட்ட வேண்டாமா? 1928 செப்டம்பர் 11 அன்று (வேடிக்கை.  பாரதி மறைந்த நாள்!) சென்னை அரசாங்க கெஜட் அந்தத் தடையுத்தரவைத் தானும் மேற்கொள்வதாகத் தெரிவித்தது.  பாரதியின் நூல்கள் எல்லாம் கையகப்படுத்தப்பட்டன.  பாரதி ஆசிரமம் மற்றும் நூல்களை அச்சடித்த ஹிந்தி பிரசார் அச்சகம் ஆகியவை சோதிக்கப்பட்டு 2000 பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பாரதி பாடல்களைப் பாடுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையுத்தரவு, மக்கள் மத்தியில் ஆவேசத்தைத் தூண்டிவிட்டது.  இந்த ஆவேசம் பலவிதமாக வெளிப்பட்டது.  உதாரணத்துக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், 1933ல் பாரதி பஜனை சமாஜம் என்று மதுரையில் சீனிவாச வரதன் என்பவர் ஆரம்பித்தார்.  தினந்தோறும் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டு காலையிலும் மாலையிலும் வீதிவலம் வந்தார்கள். தடையுத்தரவை மீறி, தம் நாடகங்களில் பாரதியின் பாடல்களைப் பாடினார் நடிகர் எஸ். ஜி. கிட்டப்பா.  பெரிய போராட்டங்களாலும் சத்தியமூர்த்தி போன்றோரின் பெருமுயற்சியாலும் (அந்தக் கால கட்டத்தில் நடந்த சட்டசபை விவாதங்களைத் தனி நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.  பாரதி அன்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.)  பாரதியின் பாடல்களுக்கான தடை நீங்கியது. அது சரி, ஏவிஎம்முக்கும் நீ சொல்வதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்கள்.  புரிகிறது.  இந்தப் பின்னணியை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.  ஏவிஎம்முக்கு வருகிறேன். 2 பகுதி 2 இடப்பொருத்தம் கருதி, பாரதி பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்காக நடைபெற்ற போராட்டங்களை விரிவாக எழுதவில்லை.  நான் குறித்திருப்பது ஒரு சிறு துளியே.  தஞ்சை குடவாசல் புதுக்குடியில் சாமி உடையார் என்றொருவர் இருந்தாராம்.   தடை விதிக்கப்பட்டிருந்த பாரதி பாடல்கள் அவருடைய நண்பர்களுக்கு மத்தியிலாவது பரவ வேண்டும் என்பதற்காக ஒரு காரியம் செய்தார்.  தினமும் ஒரு பாரதி பாடலையாவது ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்வார்.  அப்படித் தயாரான காகிதங்களின் மற்றொரு புறத்தில் நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதுவாராம்.  தடை விதிக்கப்பட்ட பாரதி பாடல்கள் பரவுவதற்கு இப்படியும் ஒரு வழி! “சுப்பிரமணிய பாரதி திருவடிகள் வெல்க” என்றுதான் கடிதங்களை முடிப்பாராம்.  அப்படி ஒரு தேவதா விசுவாசம். இன்றைக்கு நூற்றுக் கணக்கான பதிப்பகத்தார்கள் பாரதி கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறார்கள்.  எந்தப் புத்தகக் கண்காட்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கடையிலும் இரண்டு நூல்களைத் தவறாமல் பார்க்கலாம்.  ஒன்று திருக்குறள்.  மற்றது பாரதி பாடல்கள்.  ஆனால், அந்த நாட்களில் பாரதி பாடல்களை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் சிரமப் பட்டிருக்கிறார்கள். 1924ஆம் வருடம் பாரதி நூல் பிரதிகளை விற்றுத் தரும் பணியை ஹரிஹர சர்மாவிடம் ஒப்படைத்தனர்.  சர்மா பல ஆண்டுகள் இந்தியா பத்திரிகையில் உழைத்தவர்.  பாரதிக்கு ஒருவிதத்தில் சொந்தக்காரர் என்று ரா. அ. பத்மநாபன் சொல்கிறார். பாரதி குடும்பத்தார் அவருடைய நூல்களின் உரிமையை நான்காயிரம் ரூபாய்க்குப் பாரதி பிரசுராலயத்திற்கு விற்று சகுந்தலா பாரதியின் திருமணக் கடனை அடைத்தனர் என்று ரா. அ. பத்மநாபன் சொல்கிறார்.  பாரதி பிரசுராலயம் ஹரிஹர சர்மா மற்றும் பாரதியாரின் சகோதரர் சி. விசுவநாதன் ஆகியோரால் நடத்தப்பட்டது.  இவர்களின் புத்தகப் பதிப்புப் பணிகளைப் பற்றி அதிருப்தி தெரிவிக்கிறார் பரலி சு. நெல்லையப்பர்.  பக்கத்திற்குப் பக்கம் பிழை மலிந்த பதிப்புகளாய் வந்தன என்கிறார்.  1941ல் ஹரிஹர சர்மா விலகிக்கொண்டார். 1931ல் பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை ஏவிஎம் ரூ.400 கொடுத்து வாங்கிக்கொண்டார் என்கிறார் ரா. அ. பத்மநாபன்.  அதாவது, பாடல்களை ஏவிஎம் நடத்தி வந்த ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியிட்டு வந்த ‘பிராட்காஸ்ட்’ ரிகார்டுகளுக்காக ஒலிப்பதிவு செய்து விற்கும் உரிமை.  இது வாங்கப்பட்டது இந்தக் கதையை மட்டும்தான் இப்போது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ரா. அ. பத்மநாபன் இப்படிச் சொல்கிறார்.  எதிரொலி விசுவநாதன் வேறு மாதிரி சொல்கிறார்.  இங்கே எதிரொலி விசுவநாதனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  இவர் தமிழக அரசால் பாரதி விருது நிறுவப்பட்ட முதல் ஆண்டு அந்த விருதைப் பெற்ற கவிமாமணி மதிவண்ணனின் மூத்த சகோதரர்.  அதைவிடவும் முக்கியமானது என்னவென்றால் பாரதியால் ‘தம்பி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரின் சீடர்.  நெல்லையப்பர் பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பாடல்களை வெளியிட்டவர்.  சென்னை குரோம்பேட்டையில் நெல்லையய்பரும், விசுவநாதனும் ஒன்றாய் வசித்தவர்கள்.  பரலியிடமிருந்து நேரடியாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் எதிரொலி விசுவநாதன் சொல்வது இது. பாரதி பிரசுராலயம் ஹரிஹர சர்மா, சகுந்தலா பாரதியின் கணவர் நடராஜன், பாரதியின் தம்பியான சி. விசுவநாத ஐயர் ஆகிய மூவரால் ஆரம்பிக்கப் பட்டது.  ‘1941ல் ஹரிஹர சர்மா விலகிக் கொண்டார்.  அதன் பிறகு பாரதி பிரசுராலயம் விசுவநாத ஐயரின் நேரடி மேற்பார்வையில் நடத்தப் பட்டது. காலம் குறிக்காமல் இந்தத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.  எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் 1941ல் ஹரிஹர சர்மா விலகிய பிறகு நடந்த நிகழ்ச்சி போல இது தோன்றுகிறது.  1944ல் பாரதி பாடல்கள் தனியார் கையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் முதல் முறையாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது.  ஆகவே, எதிரொலி விசுவநாதன் சொல்வதன்படி 1941க்கும் 1944க்கும் இடைப்பட்ட காலத்தில் விசுவநாத ஐயர் ஒரு காரியத்தைச் செய்தார்.  ஏனிவ்வாறு செய்தார் என்பதற்கு எங்கும் விளக்கம் கிடைக்கவில்லை.  நெல்லையப்பரின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கும் போது விசுவநாதர் வியாபார நோக்குள்ளவராகத் தெரிகிறார்.  மற்ற பல பாரதி எழுத்தாளர்களின் பார்வையில் வேறு மாதிரி தெரிகிறார்.  அதை ஆராய்வது இப்போதைய நோக்கமன்று. விசுவாநாத ஐயர் ஒரு மார்வாடி கம்பெனிக்கு, பாரதி பாடல்களை திரைப்படங்களிலும் நாடகங்களிலும் பாடுவதற்கான உரிமையை ஒரு மார்வாடிக் கம்பெனிக்கு விற்றுவிட்டார்.  அவரிடமிருந்து ஏவிஎம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார்.  ஒருவிதத்தில் பார்க்கும் போது இது பரவாயில்லை என்று கூடத் தோன்றுகிறது.  தமிழனை மார்வாடி கொள்ளையடிக்க விடவில்லை என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.  கொள்ளையடிப்பது என்றான பிறகு தமிழனென்ன மார்வாடி என்ன? 1922ல் வெளிவந்த சுதேச கீதங்கள் முதற்பாகத்திற்கு செல்லம்மா ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.  அதில் அவர் குறித்திருப்பது “பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும்வரை நான் வகித்து, பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.”  இப்படி எழுதியவரை, தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாதபடித் திருமணக் கடன் வந்து நின்றது.  அவர் பாரதி பிரசுராலயத்தை நம்பி ஒப்படைத்தார்.  ஆனால், விசுவநாத ஐயர் செய்தது மடத்தனத்தின் உச்சம். ஏவிஎம் அவர்கள் பாரதி பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் விதித்தார்.  ஒரு பாடல் 20 அடிகளுக்குக் குறைந்து இருக்குமாயின் ரூ.5/- கட்டணம்.  அதற்கு மேற்பட்டால் ஒரு அடிக்கு நான்கணா.  இது பத்திரிகைகளுக்கு.  நாடகம் மற்றும் திரைப்படங்களுக்கு உபயோகிக்க அதிகக் கட்டணம். எதிரொலி விசுவநாதன் இந்த இடத்தில் சொல்லியிருப்பதை அப்படியே தருகிறேன். “பாரதி பிரசுராலயத்தின் அந்தச் செய்கைகள், பாரதி பாடல் பற்றி அப்போது இருந்த நிலைமைகள் தமிழ்நாட்டில் முக்கியமான சில பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்தன.  அவர்கள் அந்நிலைமையை மீறிச் செயல்படாமல் பாரதி பாடல்களைத் தங்கள் பத்திரிகைகளில் அவசியம் ஏற்படும் போது அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தியே வெளியிட்டு வந்தார்கள்.  அந்நிலையை மாற்றிப் பாரதி பாடல்கள் நாட்டின் பொதுவுடைமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் ஒரு சிலரால் எழுதப்பட்டும் யாதொரு பயனுமின்றிப் போயின.” யாருடைய பாடலுக்கு யார் வரி வசூலிப்பது?  அதனால் யார் நன்மை பெற்றார்கள்?  இந்தக் கேள்விகள் தமிழறிஞர்கள் மத்தியில் எழாமலில்லை.  1944ஆம் ஆண்டு, முதல் தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது.  அவெரா கிருஷ்ணசாமி ரெட்டியார் தனியார் கையிலிருந்து பாரதி பாடல்கள் மீட்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.  அவ்வை டி.கே. சண்முகம், எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் (ஜீவா) கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் ஆகியோர் இந்தக் கருத்தை வலியுறுத்தினர். 1947ல் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின் போது சிலம்புச் செல்வர் மபொசி அவர்கள் பேசுகையில் பாரதி பாடல்கள் பொதுவுடமையாக்கப் பட்டாலன்றி அவற்றை மக்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று பேசினார். எதிரொலி விசுவநாதன் சொல்லும் ஒரு விஷயம் மிகவும் உறுத்துகிறது. “மணிமண்டபத் திறப்பு விழாவிற்காகப் பாரதி சிறப்பு மலர் போட்ட பத்திரிகைகள் பாரதி பாடல்களை உரிமை பெற்றவரின் அனுமதியோடு வெளியிட்ட கையாலாகத்தனம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.”   உரிமை பெற்றவரின் அனுமதி என்றால் என்ன என்பதை விவரிக்க வேண்டியது இல்லை.  பாரதி பாடல்களைப் பிரசுரிக்க வேண்டுமானால் ஏவிஎம் அனுமதி இல்லாமல் பிரசுரிக்க முடியாது என்ற நிலை இருந்திருக்கிறது.  பாரதி மணி மண்டபத் திறப்பு விழாவிற்காக வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் பாரதி பாடல்களை வெளியிட வேண்டுமானாலும் அவருடைய அனுமதி தேவைப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  இதற்கும் வரி வசூல் இருந்தது என்ற அபிப்பிராயமும் இருக்கிறது. மனத்தை உறுத்தும் விஷயம் என்னவென்றால் இதைப் பற்றி யாருமே எழுதாமலிருப்பதுதான்.  பாரதிக்குப் பிறகு பாரதி கவிதைகள் என்று ஆய்ந்த ரா.அ.பத்மநாபன் கூட இதைப்பற்றி ஒரு வரி கூட, ஏன் ஓர் எழுத்து கூட மூச்சு விடாமல் இருக்கிறார். இந்தக் கூத்து நடந்து முடிந்தபின் இலக்கிய உலகம் கொஞ்சம் பரபரப்பானது.  எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்கள் பாரதி விடுதலைக் கழகம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார்.  இந்தக் கழகத்தின் முதற் கூட்டம் 11.3.1948 அன்று ச. து. சு. யோகியார் தலைமையில் நடந்தது.  சந்தா தேவையில்லை.  உறுப்பினராகுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்கள்.  கழகத்தின் தலைவராக வ.ரா. தேர்ந்தெடுக்கப்பட்டார்.  துணைத் தலைவர்களாக நாரண. துரைக்கண்ணன், அ. சீனிவாச ராகவன் (அசீரா – நாணல்) ஆகியோரும், செயலாளர்களாக திருலோக சீதாராம் அவர்களும் வல்லிக்கண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாரதி வரலாற்றுப் பதிவில் மட்டுமல்ல; பாரதி பாடல்களின் வரலாற்றுப் பதிவிலும் பலவிதமான பிழைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளும் இருக்கின்றன.  ஏவிஎம் அவர்கள் இதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்.  அவருடைய கட்சியை அவர் எடுத்து வைத்திருக்கிறார்.  அதை அடுத்த வாரம் பார்க்கலாம். 3 பகுதி 3 மெய்யப்பருக்கு அவருடைய திரைப்படத்தில் சேர்ப்பதற்காகப் பாரதி பாடல் தேவைப்பட்டது.  ஆனால் அவற்றின் உரிமை யாரிடம் இருந்தது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  கொஞ்சம் முனைப்பாகத்தான் தேடியிருக்கிறார்.  சென்னை ரத்தன் பஜாரில் சுராஜ்மல் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் ஜோஷிங்லால் மேத்தா என்பவர் ஓர் ஒலிப்பதிவு கம்பெனி வைத்திருந்தார்.  அவரிடம்தான் பாரதி பிரசுராலயம் பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையை விற்றிருந்தது.  அவர்கள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தார்கள் என்று சொல்கிறார் மெய்யப்பர். பாரதி பாடல்களின் உரிமை எந்த வரையறையுடன் விற்கப்பட்டன?  எத்தனை ரூபாய்க்கு?  யாராவது தெளிவாகச் சொல்கிறார்களா பார்ப்போம்.  இந்தச் சின்ன விவரத்திலும் குளறுபடி.  சித்திர பாரதியில் ரா. அ. ப. சொல்கிறார்.  “இந்தச் சமயத்தில், பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமை ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியிட்டு வந்த ‘பிராட்காஸ்ட்’ ரிகார்டுகளுக்காக ஏ. வி. மெய்யப்ப செட்டியாரால் 400 ரூபாய்க்கு வாங்கப் பட்டது.”  (சித்திர பாரதி, பக்கம் 140) மேலே மெய்யப்பர் சொன்னபடி பார்த்தால்  அவருக்கு விற்ற சுராஜ்மல் அண்ட் சன்ஸ்காரர்களே இதை விட இருநூறு ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் மெய்யப்பர் சொல்வது மட்டும்தான் உண்மையாக இருக்க முடியும்.  ஏனெனில் அவர் இதில் நேரடித் தொடர்பு உள்ளவர். எதிரொலி விசுவநாதன் கூறுகிறார்.  “வள்ளல் மெய்யப்பர் பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமைகளை அரசாங்கத்திற்குத் தானமாக வழங்கிவிடுவதாகப் பாரதி விடுதலைக் கழுகத்தின் மூலமாக அறிவித்தார்.  அவற்றை அவர் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.” (பாரதிக்கு விடுதலை, பக்கம் 85) மெய்யப்பர் சொல்கிறார்.  “மடியில் பத்தாயிரம் ரூபாயைக் கட்டிக்கொண்டு நான் சென்றேன்.  அவர் பாரதியின் பாடல்களை அறுநூறு ரூபாய்க்குத்தானே வாங்கியிருக்கிறார்.  இரண்டாயிரம், மூவாயிரத்துக்குள் முடித்துவிடலாம் என்கிற நினைப்பில் வியாபாரத் தந்திரங்களை எல்லாம் நான் உபயோகித்துப் பார்த்தேன்.  அவர் என் தந்திரங்களுக்கெல்லாம் மேற்பட்டவராக இருந்தார்.  உபயோகம் இருந்தாலும் சரி.  இல்லாவிட்டாலும் சரி.  நான் வாங்கிய ரூபாயைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை.  பத்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் காப்பிரைட் உரிமையை மாற்றித் தருகிறேன் என்றார்.” அவருக்கு மனம் மாறுவதற்குள் அங்கேயே அக்ரிமென்ட் எழுதி உடனேயே பணத்தைக் கொடுத்து உரிமையைத் தன் மேல் மாற்றிக் கொண்டதாகச் சொல்கிறார் மெய்யப்பர்.  அது இருக்கட்டும்.  இந்த உரிமை எந்த அளவுக்கு விரிவானது அல்லது எந்த அளவு வரை மட்டும் பயன்படுவதாக இருந்தது?  ‘ஒலிப்பதிவு உரிமையை’ பாரதி பிரசுலாயத்தார் சுராஜ்மல் அண்ட் ஸன்ஸுக்கு விற்றதாகச் சொல்லப்படுகிறது.  மெய்யப்பர் தமிழக அரசுக்கு எழுதித் தந்திருக்கும் பத்திரமும் அதையேதான் சொல்கிறது. 4 ஆகஸ்ட் 1934ல் பாரதி பிரசுராலயம் மேற்படி நிறுவனத்தாருக்கு விற்றார்கள் என்று பத்திரத்தில் மெய்யப்பர் குறிப்பிட்டிருக்கிறார்.  எதற்காக?  பாரதியின் பாடல்கள், எழுத்துகள், செய்யுட்கள் ஆகியவற்றை கிராமபோன், ஒலிபரப்பு மற்றும் இதர ஒலிபரப்புச் சாதனங்கள் வாயிலாகப் பயன்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது.  “the rights of reproduction by gramaphone, broadcasting and other sound producing devices of the songs, works and compositions of the late C. Subramanya Bharathi” என்பது அரசுக்கு மெய்யப்பர் எழுதிக் கொடுத்த பத்திரத்தில் காணப்படும் வாசகம்.  அதே உரிமையத்தான் மெய்யப்பர் மேற்படி சுராஜ்மல் அண்ட் சன்ஸ் நிறுவனத்திலிருந்து பெற முடியும் என்பது வெளிப்படை. ஆனால், ஒலிப்பதிவுக்காக என்று சுராஜ்மல் அண்ட் சன்ஸ் வாங்கிய போதும் சரி, பிற்பாடு ஏவிஎம் வாங்கியபோதும் சரி.  ஒரு விஷயம் உதைக்கிறது.  மெய்யப்பருடைய பத்திரத்தில் காணப்படும் ஷெட்யூல் 1 மற்றும் ஷெட்யூல் 2ல்  (அரசுக்கு அளிக்கப்பட்ட) உள்ள பட்டியல் சற்று வினோதமாகப் படுகிறது.  தேசிய கீதங்கள், ஸ்தோத்திரப் பாடல்கள், வினாயக நான்மணி மாலை போன்ற பாடல்களுடன் ஞானரதம், பதஞ்சலி யோக சூத்திரம், வேத ரிஷிகளின் கவிதை, பகவத் கீதை மொழிபெயர்ப்பு, நவதந்திரக் கதைகள் போன்ற உரைநடை நூல்களும் காணப்படுகின்றன. பாடல்களை ஒலிப்பதிவு செய்யலாம்.  அல்லது மற்ற ‘ஒலி உற்பத்திச் சாதனங்கள்’ வாயிலாகப் பயன்படுத்தலாம்.  இந்த உரைநடைப் பகுதிகளை என்ன செய்யலாம்?  எந்த விதத்தில் ஒலிப்பதிவுக்கு உபயோகிக்கலாம்?  உபயோகிக்க முடியாதல்லவா?  அப்படியானால், இவை ஏன் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன?  பாரதியின் பெரும்பாலான எழுத்துகள் இந்தப் பட்டியல்களில் அடங்குகின்றன.  (முழுப் பட்டியலுக்குப் படத்தைக் காணவும்.) ஒலிப்பதிவு உரிமை என்று சொல்லப்பட்டாலும், மற்ற எழுத்துகளுக்கு அது (ஒலிப்பதிவு உரிமை) பொருந்தாது என்பதால் அவை யாராலும் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தன என்பது வெளிப்படை.  அல்லது அப்படிப் பயன்படுத்த, சம்பந்தப் பட்டவர்களின் அனுமதி தேவைப்பட்டது.  அப்படி அனுமதி தருவதற்குப் பணம் தேவைப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.   [Bharati AVM Document 1]   [Bharati AVM Document 2-1] [Bharati AVM Document 2-2]   [Bharati AVM Document 3] மூலம் – ஏவிஎம் சுயசரிதம்     இங்கே நான் ஏவிஎம் அவர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டவில்லை.  என்ன நோக்கத்திற்காக விற்கிறோம் என்றே தெரியாமல் பாரதி பிரசுராலயத்தார் விற்றிருக்கிறார்கள்.  ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல், ‘நல்லா போணியாறான் ஹை’ என்று ஜோஷிங்லால் மேத்தாவும் வாங்கி மூலையில் போட்டிருக்கிறார்.  வெறும் அறுநூறு ரூபாய்க்கு! ஆள் அகப்பட்டதும் பத்தாயிரத்திற்கு இவர் தலையில் கட்டி விட்டனர். ஜோஷிங்லால் மேத்தா பாரதி பிரசுரலாயத்திடமிருந்து மேற்படி இரண்டும் கெட்டான் உரிமையை வாங்கியது 4.8.1934 அன்று.  இந்த உரிமை ஏவிஎம்முக்குக் கை மாறியது 10.9.1946 அன்று.  மேத்தா சுமார் 12 ஆண்டுகள் பிடித்து வைத்திருந்தார்.  மெய்யப்பர் மூன்றாண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார். சித்திர பாரதியில் இன்னுமொரு விவரம் கிடைக்கிறது.  “1949-ம் ஆண்டில் பாரதி பிரசுராலயத்திடமிருந்த பதிப்புரிமையை சி. விசுவநாதனிடமிருந்து அரசாங்கம் விலைக்கு வாங்கியது.  பாரதி பாடல்களின் ஒலிப்பதிவு உரிமையை ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் இலவசமாக வழங்கினார்.”  அதாவது பத்மநாபன் அவர்களின் கூற்றுப்படி, மெய்யப்பர் ரூ.400க்கு வாங்கிய ‘ஒலிப்பதிவு உரிமையை.’  இந்த இடத்தில், உரிமையை, பதிப்புரிமை, ஒலிப்பதிவு உரிமை என்று இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறார் ரா. அ. ப.   எதிரொலி விசுவநாதன் இதைப்பற்றி சொல்லும்போது “பாரதி பாடல்களின் உரிமையை வைத்திருந்த சி. விசுவநாதன் அவற்றை மெய்யப்பரைப் போல தானமாக வழங்கிடவில்லை.  அரசாங்கத்தாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்ட பிறகே அவற்றை அவர் அரசாங்கத்தாரிடம் வழங்கினார்,” என்று சொல்கிறார். பாரதி பாடல்களின் பதிப்புரிமை விசுவநாதரிடம்; ஒலிப்பதிவு உரிமை மெய்யப்பரிடம் என்று பிரித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று பார்த்தால், உரைநடைப் பகுதியின் ஒலிப்பதிவு உரிமை என்பது விசித்திர, வினோத, விபரீத காரணியாக அல்லவா தோன்றுகிறது!  பாடல்களை வாங்கியவர்கள், அவற்றை ஒலிப்பதிவு உரிமைக்குப் பயன்படுத்தலாம்.  உரைநடையை என்ன செய்யலாம்?  பதிப்பிக்க வேண்டுமல்லவா?  புத்தகம் கொண்டுவர வேண்டுமல்லவா?  அதுதானே உண்மையான நோக்கமாக இருக்க முடியும், அது வியாபார நோக்கமாகவே இருந்தால் கூட?  அப்படி இல்லாத பட்சத்தில் அவற்றை விலை கொடுத்து வாங்குவானேன்?   ஒலிப்பதிவு உரிமையைத் தவிர மற்ற உரிமைகளை வாங்கவில்லை என்று மறுக்க முடியாது. அப்படி வாங்கவில்லை என்றால் எப்படி அரசுக்கு உரைநடை நூல்களையும் சேர்த்து இலவசமாகத் தத்தம் செய்ய முடியும்?  சி. விசுவநாதன் அவர்கள் அரசாங்கத்துக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தைப் பார்த்தால் ஒழிய இந்த விஷயத்தில் தெளிவாக எதையும் சொல்ல முடியாது. இப்படி உரிமையை ஒட்டு மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, நேரடியாக அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்தவர்கள் பயன்படுத்த, ‘பணம் கொடு’ என்று நிர்பந்தித்தால் யார் அவற்றைப் பதிப்பிப்பார்கள்?  யார் அவற்றை எடுத்தாள்வார்கள்?  யார் அவற்றை மேற்கோள் காட்டுவார்கள்?  யாராவது படிக்க முடிந்தால்தானே மேற்படிக் காரியங்களைச் செய்ய முடியும்?  பதினைந்து ஆண்டுகள் பாரதி பாடல்கள், எழுத்துகள் எல்லாம் வனவாசமிருந்தன. பாண்டவர்களுக்குப் பதின்மூன்றாண்டு.  ராமனுக்குப் பதினான்கு.  பாரதிக்குப் பதினைந்து. பாரதி பிரசுராலயத்திலிருந்து விலைக்கு வாங்கிய ஜோஷிங்லால் மேத்தா சும்மா போட்டு வைத்திருந்தார்.  ‘மாடு தின்னாமலும் மனிதர் தொடாமலும் வைக்கோலில் படுத்த நாய்போல்’ என்று கண்ணதாசன் பாடியது போல, யாருக்கும் பயன்படாமல் கிடந்தது பாரதி எழுத்து.  மெய்யப்பர் அவ்வாறு விட்டு விடவில்லை.  “நாம் இருவர் கதைக்கே நான் கொடுத்தது மூவாயிரம்.  அதில் வருகிற இரண்டு மூன்று பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பாரதியார் பாடல்களின் காப்பி ரைட்டுக்குப் பத்தாயிரம் கொடுத்தேன்.” கதைக்கே மூவாயிரம் கொடுத்தாராம்.  ஒன்றிரண்டு பாடல்களுக்காக, ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு முழு ஓட்டலையே வாங்கியது போல, பத்தாயிரம் கொடுத்து வாங்கினாராம்.  சரிப்பா.  ஒன்றிரண்டு பாடல்கள் தேவைப்பட்டன.  வாங்கினீர்கள்.  அத்தனைப் பாடல்களையும் வாங்கினீர்கள்.   அவற்றிலிருந்து லாபமே கிடைக்கவில்லையா?  லாபம் கிடைக்காது என்றால் தேவையில்லாமல் அத்தனைப் பாடல்களின் உரிமையையும் வாங்கியிருப்பீர்களா?  அதுவும் கதைக்கே மூவாயிரம்.  இரண்டு பாடல்களுக்குப் பத்தாயிரம் என்ற விதத்தில்? சாதுவைப் போல “பாரதியார் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டுமென்ற முயற்சி எடுத்தது அவ்வை டி. கே. சண்முகமாக இருந்திருக்கலாம்.  ஓமந்தூராரை விட்டு ‘நீங்கள் கேளுங்கள்.  கொடுத்துவிடுவார்’ என்று சொல்லியும் இருக்கலாம்” என்று ஒன்றுமே தெரியாதது போல் சொல்கிறார்.  ஒளவை சண்முகம் சகோதர்கள் பில்ஹணன் என்றொரு திரைப்படத்தை எடுத்தார்கள்.  அந்தத் திரைப்படமே பாரதி எழுத்து விடுதலை அடைந்து நம் கைகளில் தாரளமாக நடமாட வழி வகுத்தது.  அதை அடுத்ததாகப்  பார்ப்போம். 4 பகுதி 4 பணம் எப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என்பதற்கு, பாரதி விடுதலைக் கழகத்தின் முதற் கூட்டம் முடிந்த பிறகு நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டாக விளங்கும்.  வ. ரா. பாண்டிச்சேரியில் அரவிந்தரைச் சந்திக்கப் போனார்.  பாரதியின் அடிமையானார்.  இவர் எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகமே இவருடைய பாரதிப் பற்றுக்குச் சாட்சி.  பாரதி பாடல்கள் பெருமளவு பரவ இவரும் ஒரு காரணமாக இருந்தார்.  பாரதி விடுதலைக் கழகம் நிறுவப்பட்ட சமயத்தில் வ. ரா. அவர்களின் மணிவிழா நடந்தது.  அந்த விழாவுக்கு நிதியுதவி செய்வதற்குக் கல்கி முன்வந்திருந்தார்.  கல்கியோ ஏவிஎம் அவர்களின் பகைமையைச் சம்பாதித்துக்கொள்ள விரும்பாத – அல்லது முடியாத – நிலையில் இருந்தார்.  கல்கியின் திரையுலகத் தொடர்புகள் உலகறிந்த ரகசியம்.  எனவே, பாரதி விடுதலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டாம் என்று வ. ரா. அவர்களுக்குக் கல்கி சொன்னார்.  அல்லது கல்கி மூலம் வ.ராவுக்குச் சொல்லப்பட்டது.  வ.ரா. அவர்களின் நிலையைக் கழகத்தார் உணர்ந்தனர்.  எனவே தலைமைப் பொறுப்பு நாரண. துரைக்கண்ணன் அவர்களுக்குத் தரப்பட்டது. (‘பாரதிக்கு விடுதலை’ (பக்கம் 71-72) எதிரொலி விசுவநாதன்.) பாரதியை ஒரு மகாகவி என்று ஏற்றுக்கொள்ளச் சிரமப்பட்டவர் கல்கி.  காரைக்குடியில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் (1935) வ. ரா. அவர்கள் அயல் நாட்டுக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் போன்றோரின் கவிதைகளெல்லாம் பாரதியின் கவிதைக்கு ஒப்பாக மாட்டாது என்று பேசினார். கல்கி இதற்கு ஒரு பதில் எழுதினார்.  தகுந்த காரணங்களைச் சொல்லாமல் ‘பாரதியை ஒரு நல்ல கவி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  மகாகவி என்று சொல்ல முடியாது.  எனக்கும் காவிரிதான் பிடிக்கும்.  அதற்காக அதனைக் கங்கையை விடப் பெரியது என்று சொல்ல முடியுமா?’ என்று குறிப்பிட்டார்.  ஆமாம், நல்ல பாம்பு என்பதைப் போல நல்ல கவி என்று சிலர் பகடி பேசினார்கள்.  மகாகவி, நல்லகவி விவாதம் தமிழ்நாட்டில் அமர்க்களப்பட்டது.  இந்தக் கறையைக் கழுவிக்கொள்ளத்தான் கல்கி பாரதி மணிமண்டபம் கட்டினார் என்று என்  பேராசியர் திரு வேணுகோபாலன் (நாகநந்தி) சொல்லக் கேட்டிருக்கிறேன். என் ஆசிரியர் நாகநந்தி, கல்கியால் பெரிதும் கவரப்பட்டவர்,  அவருடைய கதாபாத்திரத்தின் பெயரையே தனக்குப் புனைப்பெயராகச் சூட்டிக்கொண்டார்.  பார்த்திபன் என்று தன் மகனுக்கும் குந்தவை என்று தன் தமக்கை மகளுக்கும் அநிருத்தன் என்று தன் பெயரனுக்கும் கல்கியின் பாத்திரங்களாகவே பெயர் வைத்தவர்.  கல்கி ஆராய்ச்சிக்காக சுந்தா அவர்களை ஒருவர் அணுகியபோது ‘போய் அவரிடம் கேளுங்கள்.  அவரை விடவும் யாருக்கும் கல்கியைப் பற்றித் தெரியாது’ என்று அவரை அனுப்பிவைத்தார். எனவே என் ஆசிரியர் சொன்னது உண்மையாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் கூட எப்படி பி.ஸ்ரீ., கல்கி, ரசிகமணி டிகேசி போன்றோர் நல்ல கவி கட்சியிலிருந்து மாறினார்கள் என்று எழுதியிருப்பதாக எதிரொலி விசுவநாதன் சொல்கிறார். எனவே, கல்கியின் தலையீட்டால் தலைமைப் பொறுப்பு இடம் மாறியது.  நாரண. துரைக்கண்ணன் தலைமையில் தமிழ்நாடெங்கும் ஆதரவு தேடிச் சுற்றுப் பயணம் நடந்தது.  பொதுமக்களையும், காமராசர் போன்ற அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசினர்.  திரைக்குப் பின்னே இருந்த பிரச்சினை தெருவுக்கு வந்தது. அதன் காரணமாக பாரதி பாடல்களைத் தனியார் கையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற எழுச்சி வலுக்க ஆரம்பித்தது. டி.கே.எஸ் சகோதரர்கள் இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.  பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அவர் பாடல்களைத் தங்களின் நாடகங்களில் பாடி வந்தவர்கள் அவர்கள்.  அப்படி நடத்தப்பட்ட நாடகங்களில் ஒன்று பில்ஹணன்.  இந்த நாடகத்தை 1948ஆம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்கள்.  நாடகத்தில் பயன்படுத்திய பாரதி பாடல்களைத் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருந்தார்கள்.  மெய்யப்பருக்குப் பாடல் வரிகளுக்கான வரியைச் செலுத்தவில்லை. எழுந்தார் மெய்யப்பர்.  பாரதி பாடல்களைத் தன் அனுமதியின்றி பயன்படுத்தியது குற்றம்.  எனவே, உடனடியாக படத்திலிருந்து அந்தப் பாடல்களை நீக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.  டி.கே.எஸ் சகோதரர்கள் அதற்கு, ‘பாரதியின் பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்து. அவற்றைப் பயன்படுத்த யாருக்கும் பணம் தரத் தேவையில்லை.  பாரதி பாடல்களுக்குத் தனி மனிதர் உரிமை பாராட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது’ என்று பதிலறிக்கை தந்தனர். 1948 ஏப்ரல் மாதம் டி.கே.எஸ் சகோதரர்கள் விடுத்த அறிக்கையைக் கீழே தருகிறேன். ‘அன்பர்களே, மகாகவி பாரதியாருக்கு மண்டபம் கட்டி மகிழ்ந்தீர்கள்.  ஆண்டுதோறும் பாரதி திருநாளை கொண்டாடி வருகிறீர்கள்.  உங்கள் எண்ணம் நன்று.  ஆனால் நம் தமிழ்நாட்டிலேயே அப்பாடல்களுக்குத் தடை ஏற்பட்டுள்ள நிலையைக் கவனித்தீர்களா?  ஆங்கில சர்க்கார் முன்பு தடை விதித்தார்கள்.  இன்று தனிமனிதர் தடைவிதிக்கின்றார்.  பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டிப் பராசக்தியைப் பாடிய கவிஞனின் பரந்த நோக்கத்தைக் குறுகிய வியாபார நோக்கங்கள் சிதைக்கின்றன.  தமிழ்நாட்டின் அமர கவியைச் சிலர் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக்கையை நீங்கள் அனுமதிப்பது சரியா?  பாரதி பாடல்களைப் பாடவேண்டும் என்பது எங்கள் இதயத்திலிருந்து எழும் உணர்ச்சி.  இந்த உணர்ச்சிக்குத் தடையா?’ அதிரடியாக ஒரு காரியம் செய்தனர் டி.கே.எஸ் சகோதரர்கள்.  மெய்யப்பரின் அறிக்கையை அலட்சியம் செய்து பில்ஹணன் படத்தை, பாரதியின் பாடல்களுடன் வெளியிட்டனர்.  இதனால் சினமுற்ற மெய்யப்பர், டி.கே.எஸ் சகோதரர்கள் மீதும், படத்தைத் தயாரித்த சேலம் சண்முகா பிலிம்சாரின் மீதும் சி. பி. கோ.151ஆம் பிரிவு, சட்டம் 2, பகுதி 39ன் படி, கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பில்ஹணன் படத்தைத் திரையிடவோ பட்டுவாடா செய்யவோ கூடாதென்று அவர் கோரியிருந்தார். பரலி சு. நெல்லையப்பரின் சாட்சியமும், தீர்ப்பும் அடுத்த பகுதியில். 5 பகுதி 5 மெய்யப்பரின் மனுவில் சொல்லப்பட்டிருந்தவற்றைக் கீழே தருகிறேன். பாரதி பாடல்களின் ஏகபோக காபிரைட் உரிமை மெய்யப்பரிடமே இருக்கிறது.  திருவாங்கூர், சென்னை அரசாங்கத்தார், ஏனையோர்கள் மனுதாரரிடம் அனுமதி பெற்றே பாரதி பாடல்களை பாடி./வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  அப்படி இருக்கும்போது பில்ஹணன் படத்தைப் பாரதி பாடல்களுடன் வெளியிடுவது காபிரைட் உரிமையை மீறுவதாகும். அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து காட்டினால் மனுதாரருக்கு நஷ்டம் அதிகமாகும். எப்படி இருக்கிறது கதை?  நஷ்டம் எப்படி அதிகமாகும்?  அது கிடக்கட்டும்.  சம்பாதித்த தொகையிலிருந்து, சொல்லவொண்ணாத வறுமையில் இருந்த பாரதி குடும்பத்தாருக்கு என்ன செய்தார்? ராயல்டி என்று ஒன்று உண்டல்லவா? எழுத்து மூலமாக ராயல்டி பற்றி ஒன்றும் இல்லாவிட்டாலும் தார்மீகப் பொறுப்பு என்றொன்று இருக்கிறதா இல்லையா? இன்னும் ஒன்று.  மேலே சொல்லியிருப்பது எதிரொலி விசுவநாதன் தரும் தகவல்.  இந்த மனுவில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிற விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  ‘ஏகபோக காபிரைட்’.  அதாவது மற்றவர்கள் யாருக்கும் இல்லாத உரிமை.  இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும் போது, பாரதியாரின் தம்பி சி. விசுவநாத ஐயருக்குக் கொடுக்கப்பட்ட தொகை பதிப்புரிமையை வாங்குவதற்குத்தானா என்று யோசிக்கவே வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் பரலி சு. நெல்லையப்பர் சாட்சியம் சொல்ல வந்தார்.  பாரதி உயிரோடிருந்த போதே பாரதி பாடல்களை வெளியிட்டவர் நெல்லையப்பர்.  கண்ணன் பாடல்களை 1917ல் வெளியிட்டார்.  அவரது முன்னுரையில் சொல்லியிருப்பது: “பாரதியாரது பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால் இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய்விடும்.  ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன்.  இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் – எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின் – இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்.” தீர்க்க தரிசனமான, சத்தியமான வார்த்தைகள் என்பதில் என்ன ஐயம்? நாட்டுப் பாடல்களை இரு பதிப்புகள் வெளியிட்டார்.  பாரதி அதிக உரிமையெடுத்துப் பழகியவர்களில் ஒருவர் இவர்.  லோகோபகாரி என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்.  வந்தே மாதரம் பிள்ளை என்றழைக்கப்பட்ட பரலி சு. ஷண்முக சுந்தரம் பிள்ளையின் இளைய சகோதரர்.  பாரதி நூல்களை லட்சக்கணக்கில் அச்சடித்து வெளியிடவேண்டும்.  அப்போதுதான் மலிவாக இரண்டணா விலையில் விற்க முடியும்.  அப்போதுதான் கிராமங்களிலும் பாரதியின் எழுத்து பரவும் என்று சொல்வார் என்பதாக ரா.அ.பத்மநாபன் தெரிவிக்கிறார்.  இங்கே என்ன நோக்கம் தெரிகிறது?  வியாபார நோக்கா?  பாரதி பாடல்களின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பர் எத்தனைப் பதிப்பு வெளியிட்டார்?  யாரோ எழுதிய பாட்டை யாரோ பயன்படுத்துவதை தனக்கு ஆதாயமாகப் பயன்படுத்தியதைத் தவிர என்ன செய்தார்? பாரதி, நெல்லையப்பருக்கு எழுதியிருக்கும் ஒரு கடிதத்தின் கடைசிப் பகுதி இது: “புதுமைப் பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன்.  அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக.  எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் எனக்கு அனுப்புக.  தம்பி, உனக்கேனடா இது கடமை என்று தோன்றவில்லை?  நீ வாழ்க.  உனதன்புள்ள பாரதி” எத்தனை உரிமையோடு கேட்கிறான்!  எப்படிப்பட்ட நட்பாக இருந்திருக்க முடியும்! தனது சாட்சியத்தில் பாரதி தன் கைப்பட எழுதியதை எடுத்து வைத்தார்.  கண்ணன் பாட்டை வெளியிடும்போதே பாரதி தன் பாடல்களின் உரிமையை நெல்லையப்பருக்குக் கொடுத்திருக்கிறான்.  பின்னர் பல கடிதங்களிலும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறான்.  பாரதியின் கைப்பட எழுதிய அந்த எழுத்துக்களை வைத்தவுடன், வழக்கு உடைந்து போனது.  பாரதி பாடல்கள் இந்த அப்பருக்குத்தான் சொந்தமே தவிர அந்த அப்பருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்புச் சொன்னார் நீதிபதி பி. கோமன். இந்தத் தீர்ப்பு நாட்டில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.  கப்பம் கட்டிக்கொண்டிருந்த பத்திரிகைகள் கண் விழித்தன.  தலையங்கங்கள், கட்டுரைகள் என்று பாரதி பாடல்களின் விடுதலையைப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாகப் பேசின. 1948 செப்டம்பரில் பாரதி மணிமண்டபம் திறக்கப்பட்டது.  அன்று நெல்லையப்பர் சென்னை வானொலியில் உரையாற்றினார்.  அவருடைய உரையிலிருந்து ஒரு பகுதி: “பாரதியின் பழைய நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.  பாரதி நம்மை விட்டுப் பிரிந்துபோய்க் கால்நூற்றாண்டிற்கு மேலாகிவிட்டது.  ஆனால் இவ்வளவு காலமாகியும் விடுதலைக் கவியின் பாடல்கள் பல பந்தங்களில் அடைபட்டு வருந்துகின்றன.  பாரதி பாடல்களையும் எழுத்துக்களையும் பொதுவுடைமையாகச் செய்து, அவற்றைப் பலமுறைகளில் இலட்சக் கணக்காக வெளியிட்டு நாடெங்கும் பரப்பவேண்டும்.  நானும் நீங்களும் நாட்டு மக்களும் புதுவாழ்வு பெறும் முறைகளில் இதுவே மிகச் சிறந்த முறையாகும்.” இந்த வழக்கிற்குப் பிறகு சட்டசபையில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது.  ஆர். வி. சாமிநாதன் என்பவர் பின்வரும் இரண்டு கேள்விகளை எழுப்பினார். (1) பாரதியாரின் நூல்கள் தமக்குத்தான் சொந்தமென்று  உரிமை கொண்டாடுவதும்; பிறர் பாடுவதைத் தடுப்பதும்; பாரதியின் சில பாடல்களைப் பாடியதற்காக டி.கே.எஸ் சகோதரர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதும் அரசாங்கத்தாருக்குத் தெரியுமா? (2) எல்லா பாரதி நூல்களின் பிரசுரம், பதிவு ஆகிய உரிமைகளை அரசாங்கம் வாங்கிவிடுமா? இந்தக் கேள்விகள்தாம் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆரம்பமாக அமைந்தது. பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டதும் அதன் பின் நடந்தவையும் அடுத்த பகுதியில். 6 பகுதி 6 பாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை அளித்தார்கள்.  அப்படிச் செய்வதற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெறவேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார்.  இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக்கண்ணனை அடைந்தது.  பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேராசிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள்.  கலைஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக்கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது.  செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள். எனக்கு இந்த அம்மையைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நன்றி உணர்ச்சி மேலெழும்.  பாரதியாருடைய எழுத்து மேசையின் மீது தாளையும் பேனாவையும் வைப்பார்களாம்.  வெற்றிலை பாக்கும், செம்பு நிறைய காபியும் வைப்பார்களாம்.  வீட்டில் ஒன்றும் இல்லை  ஏதாவது எழுதி, பத்திரிகைக்கு அனுப்பு என்பதற்கான குறிப்பு அது.  அப்படி இந்த அம்மை எழுது எழுது என்று தூண்டாதிருந்திருந்தால் எத்தனை அரிய எழுத்துக்கள் எழுதப்படாமலேயே போயிருந்திருக்குமோ! மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள்.  ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத்தார்கள்.  அந்தக் கடிதத்தை அப்படியே கீழே தருகிறேன். நாள் 23.4.1948,  இடம் திருநெல்வேலி கைலாசபுரம். ஓம். கனம் பிரதம மந்திரி இராமசாமி ரெட்டியார் அவர்களுக்குச் சக்தி அருள் புரிக.  மகாகவி பாரதியாருடைய பாடல்களையும் இலக்கியங்களையும் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் கிளர்ச்சி நடந்து வருவதாகத் தெரிகிறது.  இது சம்பந்தமாகப் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களும், சிந்தனை ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்களும் என்னைக் காண வந்தார்கள்.  பாரதியார் இலக்கியங்களில் யார் யாருக்கு உரிமை இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சென்னை அரசாங்கமே பெற்றுத் தமிழ் மக்களுக்குப் பொதுவுடைமையாக வழங்க உத்தேசித்திருப்பதாகவும், இந்தப் பணியில் தாங்கள் சிரத்தை காட்டுவதாகவும் என்னிடம் சொன்னார்கள்.  தங்கள் பெருந்தன்மையை மனமாரப் பாராட்டுகிறேன்.  இப்போதுள்ள உரிமைகளையும், இனி எழக்கூடிய உரிமைகளையும் நியாயமான முறையில் அரசாங்கமே பெற்றுப் பொதுமக்களுக்கு வழங்குவது எனக்குப் பூரண சம்மதம்.  தங்கள் முயற்சி சக்தி அருளால் வெற்றி பெறுக.  ஆனால் ஒன்று. இதைச் சொல்லக் கூசுகிறது.  என் கணவருடைய (பாரதியாருடைய) இலக்கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக, எனக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ விசேடமான வசதி ஏற்படவில்லை என்பது தாங்கள் அறிந்ததே.  தரும நியாயமான முறையில்(check? ல உண்டா?) இந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன். இப்படிக்கு, செல்லம்மா பாரதி. இந்த அம்மைக்குத்தான் பாரதி ‘நீ இப்படிக் கவலைப்படும் நேரத்தில் தமிழைப் படித்தால் நான் சந்தோஷமுறுவேன்’ என்று காசியிலிருந்து எழுதினான்.  எப்படி எழுதியிருக்கிறார்கள்! இவருடைய இரண்டு கட்டுரைகளை பாரதி பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறான்.  அருமையாக எழுதியிருக்கிறார்கள். இதை எழுதும் நேரத்தில் கூட என் விழி கசிகிறது. “இதைச் சொல்லக் கூசுகிறது.  என் கணவருடைய (பாரதியாருடைய) இலக்கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக, எனக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ விசேடமான வசதி ஏற்படவில்லை என்பது தாங்கள் அறிந்ததே.  தரும நியாயமான முறையில் இந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.”  எத்தனை நாசூக்கான வேண்டுகோள்! இன்னொரு விஷயம்.  நாரண. துரைக்கண்ணன் அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு, அம்மையைச் சந்திக்கப் புறப்படும் நேரத்தில் அவருடைய ஒரே மகன் – நான்கு வயது – திப்தீரியாவால் பாதிக்கப்பட்டுக் கிடந்தான்.  கவலைக்கிடமான சூழலிலும், தாமதம் செய்ய விரும்பாமல் புறப்பட்டார்.  அவர் திரும்ப வருவதற்குள் அந்த மகன் காலமாகிவிட்டான். இந்த சம்மதக் கடிதத்துடன் ஓமந்தூராரைச் சந்தித்தனர்.  ஒரு motorcycle messenger மூலம் மெய்யப்பருக்குச் செய்தி அனுப்பப்பட்டது.  மெய்யப்பர் சொல்கிறார் – “பின்னர் ஒருநாள் – அப்போது முதலமைச்சராக இருந்த ஒமந்தூர் ரெட்டியார் – இரவு ஏழு மணிக்கு ‘வெரி அர்ஜென்ட்’ என்பதாக மோட்டார் சைக்கிள் மெஸஞ்சரிடம் தம்மை அன்று இரவே எட்டு மணிக்குச் சந்திக்கும்படி செய்தி அனுப்பினார். “உடனே வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அன்று இரவு எட்டு மணிக்கே சென்று அவரைக் கூவம் ஹவுசில் சந்தித்தேன்.  அப்போது அவர் என்னிடம் சொன்னார்: ‘நீங்கள் பாரதி பாடல்களின் உரிமையை வாங்கி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  பாரதியார் போன்ற தேசிய மகாகவியின் பாடல்கள் நாட்டின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,’ என்றார்.” இத்தனைத் தமிழறிஞர்கள் சேர்ந்து ‘பாரதி விடுதலைக் கழகம்’ அமைத்துப் போராடியிருக்கிறார்கள்.  நாரண. துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், அசீரா, ப. ஜீவானந்தம் போன்ற பெரிய அறிஞர்களும் தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.  பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  சட்ட சபையில் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.  அப்போதெல்லாம் திறக்காத மனக் கதவு, அரசாங்கம் அழைத்தவுடன் படாரென்று திறந்துகொண்டது.  “ஒரு வினாடி கூட யோசிக்காமல், ‘பாரதியார் பாடல்களின் உரிமையை இந்தக் கணமே அரசாங்கத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விடுகிறேன்.  எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்.  எந்தவிதப் பிரதி பிரயோசனமும் இன்றிக் கொடுக்கத் தயார்” என்று சொல்லிவிட்டேன்” என்று மெய்யப்பர் சொல்கிறார். ஐயா, கோயம்பத்தூர் நீதிமன்றம்தான் உங்களுக்கு பாரதி எழுத்துகளின் மேல் எந்த உரிமையும் இல்லை என்று சொல்லிவிட்டதே!  நீங்கள் காசுகொடுத்து வாங்கியிருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அல்லவா அரசாங்கம் உங்களை அழைத்துக் கேட்டது!  ஒன்றுமே அறியாதது போல் சொல்கிறீர்களே,  “பாரதியார் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டுமென்ற முயற்சி எடுத்தது அவ்வை டி. கே. சண்முகமாக இருந்திருக்கலாம்.  ஓமந்தூராரை விட்டு, ‘நீங்கள் கேளுங்கள். கொடுத்து விடுவார்’ என்று சொல்லியிருக்கலாம்” இதைத்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நீங்கள் அரசாங்கத்திடம் பணம் வாங்காமல் அப்படியே அளித்தீர்கள் என்பது உண்மை.  அதற்காக உங்களை மனதாரப் பாராட்டுகிறோம்.  எந்தப் பயனும் இல்லாமல் பால் மரத்துப் போன பசுமாடாய் உங்கள் வீட்டுத் தொழுவத்தில் கிடந்த பாரதி எழுத்துகளை விடுவித்தீர்கள் என்பதற்காக உங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.  பணம் வாங்கிக் கொண்டு தந்திருந்தாலும் இந்தப் பாராட்டை உங்களுக்கு அளித்திருப்போம்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நடந்த நிகழ்ச்சிகளை மறைத்திருக்கிறீர்கள் பாருங்கள், அதற்குத்தான் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.  நீங்கள் மட்டுமல்ல.  வரிந்து கட்டிக் கொண்டு ‘வள்ளல் மெய்யப்பரால்தான் பாரதி பாடல்கள் நமக்குக் கிடைத்தன’ என்று துதி பாடும் பத்திரிகைக் கூட்டமும்தான். மெய்யப்பரின் செல்வாக்கு எல்லா உண்மைகளையும் அமுக்குகிறது.  இந்த இடத்தில் எதிரொலி விசுவநாதனே பிசிறுகிறார்.  சி. விசுவநாதன், வள்ளல் மெய்யப்பரைப் போல தானமாகத் தரவில்லை.  உரிய தொகையைப் பெற்றுக் கொண்டே தந்தார் என்று எழுதுகிறார்.  ரா. அ. பத்மநாபன் மறைமுகமாக, தனியார் கைகளிலிருந்து விடுவிக்க அறிஞர்கள் முனைந்ததைப் பற்றிச் சொல்கிறாரே தவிர அந்தத் தனியார் யார் என்று சொல்லாமல் நழுவுகிறார்.  மெய்யப்பர் கொடுத்ததைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் வள்ளல் மெய்யப்பர் தந்தார் என்று பக்திப் பரவசத்துடன் சொல்கிறார். சித்திர பாரதியின் இரண்டாம் பதிப்பில் (1982) ரா.அ.பத்மநாபன் பின்வரும் குறிப்பைச் சேர்த்திருக்கிறார்.  (பக்கம் 194) “பாரதி பாடல்களைத் தனிப்பட்டவர் உரிமையாக இன்றி மக்கள் உரிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதி விடுதலை இயக்கம் நடத்தியவர்களான டி.கே. ஷண்முகம், நாரண. துரைக்கண்ணன், திருலோக சீதாராம், வல்லிக்கண்ணன், அவெரா கிருஷ்ணசாமி ரெட்டியார் முதலியவர்களது பாராட்டத்தக்க முயற்சி விவரங்கள் எதிரொலி விசுவநாதன் நூலிலும் பிற நூல்களிலும் காணலாம்.” தனிப்பட்டவர் இன்னார் என்று சொல்லவில்லை.  அப்படியே எதிரொலி விசுவநாதன் நூலைப் படிக்க வேண்டும் என்று யாரேனும் நினைத்தால், அந்நூலின் பெயரைச் சொல்லவில்லை. சொல்லியும் ஆயிற்று. சொல்லாமலும் விட்டாயிற்று.  நேர்மை! மெய்யப்பர் விலை கொடுத்து வாங்கியதையோ அதற்குக் கப்பம் கட்டச்சொல்லி அனைவரையும் கட்டாயப்படுத்தியதையோ நான் குற்றமாகச் சொல்லமாட்டேன்.  அவரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.  ஆனால் அதற்காக வள்ளல் பட்டம் கொடுத்துக் கொண்டாடுவதைதான் ஒப்புக்கொள்ள முடியவில்லை.  அதற்கும் மேல் ஒரு படி போயாயிற்று இப்போது.  அவர் அப்படி வாங்கி, பத்திரப்படுத்தி வைத்திருந்ததால்தான் பாரதியின் எழுத்து இன்று நமக்குக் கிடைக்கிறதாம்.  இல்லாவிட்டால் என்ன புதைந்தா போயிருக்கும்?  கறையான் அரித்து, கடல் கொண்டு போய்விட்டிருக்குமா என்ன?  அப்படியே போயிருந்தாலும், பெ. தூரன், ரா. அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன், பெ. சு. மணி போன்ற பெருமக்கள் தீயின் வாயினின்று கூட மீட்டு வந்திருப்பார்கள்.  ராஅப பெயரைச் சேர்த்திருக்கிறாயே என்கிறீர்கள், அப்படித்தானே?  அவரை விட்டுவிட்டால் பாரதி என்னை மன்னிக்கவே மாட்டான்.  இப்படி எழுதியதற்காக அவருடைய பாரதி பணிகளை மறந்துவிட முடியுமா என்ன?  அவருடைய தீவிரமான தேடுதல் முயற்சியாலல்லவோ என்னைப் போன்றோர்கள் பாரதியின் காணாமல் போயிருந்த எழுத்தையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மெய்யப்பரிடமிருந்து பாரதியின் பாடல்கள் அரசாங்கத்தின் கைக்கு வந்தது.  ஆனால் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.  இப்போது அரசாங்கம் அந்தத் திருப்பணியைத் தொடர்ந்தது.  பாரதி நூல்கள் குமாராசாமி ராசா அவர்கள் முதலமைச்சரானபோது அரசுப் பதிப்பாக வந்தன.  அந்தப் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு பிற பதிப்பாளர்கள் பாரதி நூல்கள் வெளியிட அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.  திரைப்படங்களில் பாட, பாடல் ஒன்றுக்கு ரூ.200 தரவேண்டியிருந்தது.  இசைத்தட்டுகளில் பதிய, இசைத்தட்டின் விலையில் 2.5% அரசாங்கத்துக்குத் தரவேண்டியிருந்தது.  பாரதி பாடல்களை வெளியிட ஒரு வரிக்கு நான்கணா; குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் என்ற வரிவிதிப்பும் தொடர்ந்தது. மீண்டும் தமிழறிஞர்கள் போராடத் தொடங்கினர்.  அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளா விட்டால் போராட வேண்டிவரும் என்றறிவித்தார்கள்.  இதன் விளைவாக இந்த நிலை மாறியது.  20.4.1955 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையால் பாரதி பாடல்கள் பொதுவுடமையாக்கப்பட்டன.  அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்தே பாரதி உரைநடை பொதுவுடமையானது. இந்த நீண்ட வரலாற்றில் பாரதியின் எழுத்து பரவுவதற்காகத் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் கணக்கற்றவர்.  பெயர் தெரியாப் பெரியோர்கள் ஏராளம்.   தன் மகனை காலன் பறித்துக் கொண்டு சென்ற கணத்தில் கூட அவனருகில் இல்லாமல், பாரதி எழுத்தை விடுவிக்க வேண்டும் என்று உழைத்த நாரண. துரைக்கண்ணன் என்ற எழுத்தாளரின் பெயர் யாருக்காவது தெரியுமா?  குரோம்பேட்டையில் பரலி. சு. நெல்லையப்பரின் பெயரில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது.  வேண்டுமானால் அங்கே போய், ‘பரலி நெல்லையப்பர் பள்ளி’ எங்கே இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள்.  நான் கேட்டிருக்கிறேன்.  ‘இவன் யாருடா ஊருக்குப் புதுசு’ என்பது போல் பார்ப்பார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘பாரதி பாடல்களை விடுவிப்பதற்கு நானும் போராடினேன்’ என்று வல்லிக்கண்ணன் ஆனந்தவிகடனில் சொல்லியிருந்தார்.  என்ன போராட்டம் என்று யாராவது மூச்சு விட்டால்தானே! இத்தனைப் பேர்களின் உழைப்பில் கிடைத்த சொத்தை, கொஞ்ச காலம் வாங்கி வைத்திருந்து வியாபாரம் செய்துவிட்டுப் பின்னர் அதனால் இனிமேலும் பயனில்லை என்ற நிலையில் தந்தவர் வள்ளல் என்று போற்றப்படுவது என்ன நியாயம்? நான் முன்னரே கேட்ட கேள்விகளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். 1) மெய்யப்பர் பாரதி பாடல்களின் விலை கொடுத்து வாங்கினார்.  வாங்கியவர் பொருள் ஈட்டியதல்லால் என்ன செய்தார்? 2) அவ்வாறு ஈட்டிய பொருளை பாரதி குடும்பத்தாருடன் பகிர்ந்துகொண்டாரா? 3) பாரதி பாடல்களைப் பரப்ப என்ன செய்தார்?  ஏதேனும் பதிப்பு வெளியிட்டதுண்டா? 4) பாரதி பாடல்களைப் பாடிய குற்றத்திற்காக அப்படிச் செய்தவர்களைத் தடுத்ததும், வழக்குப் போட்டதும் வள்ளல்கள் செய்யும் செயலா? 5) செய்வதை எல்லாம் செய்துவிட்டு இலவசமாகக் கொடுத்தார் என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது எந்த ஊர் நியாயம்? 6) இதற்கு விவரமறிந்த பத்திரிகைகள் துணைபோவது எத்தனை அநீதி! 7) பாரதி வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறைத்தும், திரித்தும் எழுதுவது எத்தனை வெட்கக்கேடு! 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !