[] 1. Cover 2. Table of contents பழைய சொல் புதிய தேடல் பழைய சொல் புதிய தேடல்   அண்டனூர் சுரா     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution Share Alike 4.0 India கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/pazhaya_sol_puthiya_thedal மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc புதிய சொல், பழைய தேடல் ‘பொருண்மொழி’ -ஏப்ரல் 14, 2019 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் கதாநாயகன் - மாநில, தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள். CONGRESS WILL DELIVER (நாங்கள் செய்வோம்) - காங்கிரஸ். சங்கல்ப் பத்ரா (உறுதிமொழி பத்திரம்) - பாஜக MA MAATI MANUSHER (தாய், தாய்நாடு, மக்கள்) - திரிணாமுல் காங்கிரஸ். Mee Bhavishyattu Naa Badhyata (உங்கள் எதிர்காலம் எமது பொறுப்பு) - தெலுங்கு தேசம் இதுதவிர திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),…. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற வாக்குறுதிகளை வெளியிட்டன.தேர்தல் அறிக்கையும், வாக்குறுதியும் வேறு வேறு. கட்சியின் கொள்கை முடிவு என்பதே ஆயnகையளவடி. இதற்கு பகட்டு, சுவரொட்டி, அறிக்கை, இலட்சியம் எனப் பல பொருளுண்டு. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவேனென உறுதியளிப்பது ஞடிடட யீசடிஅளைந. இதனை நிச்சயம், உறுதி, வாக்குறுதி,… எனப் பொருள் கொள்ளலாம். 1967ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் அறிக்கையில் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இவ்விரு சொல்லும் உள்ளடங்கிய ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்’. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு 72 ஆயிரம் ரூபாய் manifasto நூறு நாள் வேலை வாய்ப்பு 150 நாட்களாக நீட்டிப்பு - promise Manifasto என்பது Manifestum என்கிற இத்தாலிச்சொல்லிருந்து வந்தது. Paolo Sarpi என்கிற இத்தாலியர் ‘ஆலோசனைப் போக்கின் வரலாறு’ என்றொரு நூலை எழுதினார். இதை Nathaniel Brent என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார், அந்நூலில் முதல் முறையாக இச்சொல் இடம்பெற்றது.Manifeste, என்கிற சொல்லுக்கு பிரஞ்சு தமிழ் அகராதி - பிரசித்தம், வெளிப்படை, திஷ்டாந்தம், விளக்கம், வெளி, வெளியரங்கம், தெளிவான, பராசியமான, விளம்பரம், அறிக்கை, அறிவிப்பு, பிரசித்தப்பத்திரிகை என பொருள் தருகிறது. கட்சிகள் தேர்தல் அறிக்கையாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகள் கேட்க; இன்னொரு புறம் வேட்பாளரின் சாதியைச் சொல்லி வாக்குகள் கேட்கும் அவலமும், பணத்திற்காக வாக்குகளை விற்கும் படலமும் அரங்கேறுகிறது. சமத்துவ, பொதுவுடைமை, மதநல்லிணக்கவாதிகள் ‘என் வாக்கு என் உரிமை’, ‘என் வாக்கு விற்பனைக்கு அன்று’; ‘வாக்கை விற்கிறவன் வாழ்க்கையை விற்கிறான்’; ‘நோட்டுக்கு வோட்டு நாட்டுக்கு வேட்டு’ என்பதாக மொழியாற்றுகிறார்கள். ‘நம் ஒவ்வொருவரின் அடையாளமும் அவரவர் வாக்குதான்’ - பாடலாசிரியர் எஸ்.பி.பால சுப்பிரமணியம்.‘என் முகத்தில் உள்ள கோடுகளை என் விரலில் வைக்கப்பட்டுள்ள மை தீர்மானிக்கும்’ வயது மூப்பில்லாத ஜனநாயகம் -இது இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள அறிக்கை. இத்த கைய அறிவிக்கைக்கு என்னப் பெயர்? தமிழில் பொருண்மொழிக் காஞ்சி என்றொரு இலக்கணத்துறை இருக்கிறது. கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற புறநானூற்றுப் பாடல் அவ்வகையைச் சார்ந்தது. உலகின் முதல் பொதுவுடமை சிந்தனை இதுதான். இதே போன்று ஔவையாரின் ‘எவ்வழி நல்லவ ராடவர்/அவ்வழி நல்லை, வாழிய நிலனே’.‘உடுப்பது நாழி; உடுப்பது இரண்டே’ (மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்).சரி, பொருண்மொழிக்காஞ்சி என்பது? உலக மாற்றங்கள் நிலையில்லாதவை. இந்த நிலையில்லாத உலகில் நிலைபேறுடைய புகழ் நிரல்களைக் கூறுவது காஞ்சித்திணை என்கிறது, தொல்காப்பியம். மூதுரை, முதுமொழிக் காஞ்சி, வாழ்க்கை நிலையாமை, பொருண்மொழிக் காஞ்சி, புத்தேள் உலகம் - ஆகியவை நல்வாழ்வு குறித்து பேசக்கூடியவை என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை. பொருண் என்பதற்கு பொருள் என்று பொருள். மெய்ப்பொருள் - மெய்ப்பொருண் Head of a subject - முகவுரை, பொருண்மை, பொழிப்புரை. பொருண் - நிறை (mass) என்றொரு பொருளும் உண்டு. பொருண்மயக்கம், பொருண்மன்னன், பொருண்மை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள். பொருண்முடிவு - செய்தி முடிவு, முடிந்த கருத்து, பயனிலை, பொருள் முற்றிய சொற்றொடர். பொருண்முரணணி - பொருள் முரண்படத் தொடுக்கும் ஒரு வகை அணி (Antithesis) பொருண்மை - கருத்துப்பொருள் என்கிறது தொல்காப்பியம் (சொல்லதிகாரம்). மெய்ப்பொருள் - மெய்ப்பொருண்ழநயன டிக ய ளரதெநஉவ - முகவுரை, பொருண்மை, பொழிப்புரை.பொருண் - நிறை (அயளள) என்றொரு பொருளும் உண்டு. பொருண்மயக்கம், பொருண்மன்னன், பொருண்மை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள். பொருண்முடிவு - செய்தி முடிவு, முடிந்த கருத்து, பயனிலை, பொருள் முற்றிய சொற்றொடர்.பொருண்முரணணி - பொருள் முரண்படத் தொடுக்கும் ஒரு வகை அணி (ஹவேiவாநளளை)பொருண்மை - கருத்துப்பொருள் என்கிறது தொல்காப்பியம் (சொல்லதிகாரம்). புதிய சொல், பழைய தேடல் ‘அதலகுதலைமை’ -ஏப்ரல் 21, 2019 சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம், மத்திய அரசின் அரசாணையில் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் - 5 அன்று பிரதமர் நரேந்திர மோடி, அந்நிலையத்திற்கு PURATCHI THALAIVAR DR.M.G.RAMACHANDRAN CENTRAL RAILWAY STATION எனப் பெயர்ச்சூட்டியதற்குப் பிறகு இந்தியாவின் மிக நீளமான பெயர் கொண்ட புகைரத நிலையம் என்கிற சிறப்பைப் பெற்றது. அதே நேரத்தில் ஒரே ஒரு எழுத்தின் குறைவால் உலக பிரசித்தம் வாய்ப்பை இழந்திருக்கிறது. இப்பெயரின் மொத்த எழுத்துகள் - 57. இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட வெல்ஸ் என்கிற நாட்டில் Llanfairpwllgwyngyll நகர புகைரத நிலையத்தின் பெயர், LLANFAIRPWLLGWYNGYLLGOGERYCHWYRN DROBWLLLLANTYSILIOGOGOGOCH. இப்பெயரிடல் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மூன்று மொழிகளானது. இதன் மொத்த எழுத்துகள் 58. உலகில் வாசிப்பதற்கு கடினமான, நீளமான பெயர் கொண்ட புகைரத நிலையம் இதுதான். கேரள மாநிலம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மேனாள் மத்திய அமைச்சர் சசி தரூர் ‘THE PARADOXICAL PRIME MINISTER - Narendra modi and his India’ (முரண்பாடான பிரதம அமைச்சர்) என்றொரு நூலை வெளியிட்டார். நரேந்திர மோடி, அவரது மெழுகுச் சிலையை அவரே ரசித்துக்கொள்ளும்படியான அட்டைப்படத்துடன் கூடிய இந்நூல் உலக கவனிப்பைப் பெற்றது. அந்நூலினை வெளியிடுவதற்கு முன்பு பிரபலப்படுத்தும் பொருட்டு தன் ட்வீட்டர் பக்கத்தில் THE PARADOXICAL PRIME MINISTER, 400-page exercise in floccinaucinihilipilification எனப் பதிவிட்டிருந்தார். வாசகர்கள் அந்நூலினை வாங்கி வாசிக்க, அந்நூலில் அச்சொல் இல்லாமல் இருந்தது. மறுநாள், தன் ட்வீட்டர் பக்கத்தில் Hippopotomonstrosesquipedaliophobia (ஹிப்போபொடோமான்ஸ்ட்ரொஸஸ்குப்பிட்அலியோஃபோபியா) என்கிறச் சொல்லைப் பதிவிட்டு வருத்தம் தெரிவித்தார். இச்சொல்லின் பொருள் - ‘நீளமான சொற்களைக் கண்டு பயங்கொள்ளுதல்’ (FEAR OF LONG WORDS). சரி, தமிழில் இப்படியானச் சொல்லுக்கு என்னப் பெயர்? வம்சமணி தீபிகை , கி.பி 803 ஆம் ஆண்டு முதலான எட்டயபுர மன்னர்களின் வரலாற்றைப் பேசும் நூல். இந்நூலின் மூலப்பிரதியில், தொடக்கம் முதல் பத்தி முடியும் வரை இடைவெளி, நிறுத்தக்குறியீடின்றி ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணி புரிந்த சுவாமி தீட்சிதர். ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த ‘அபிதான சிந்தாமணி ‘ யில் சோழனும் தேவியும் என்கிற தலைப்பில் நான்கு நீளமான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘காடுமீனம்படக்கண்டநங்கண்டன்வேற்’, ‘கோடுமேயுந்துறைத்தொண்டியிக்கோனகர்’,‘தேடுநீடுங்கொடிதெரியநாமுய்யவந்’, ‘தாடுமேபாடுமேயன்னமேயின்னமே’. இவை நான்கும் கூட்டுச் சொற்கள். ‘நானாதேசத்துத்திஸையாயிரத்தைந்நூற்றுவர்’ - தமிழும் வடமொழியும் கலந்த நீளச் சொல். ‘எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்’ திருச்சிற்றம்பலக்கோவை இவ்வகை இலக்கணத்தில் எழுதப்பட்டது. இலக்கணத்தில் ‘பா’க்கள் நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா. ஒவ்வொரு ‘பா’விற்கும் மூன்று இனங்கள் - துறை, தாழிசை , விருத்தம். ‘மாந்தளிர்மேனிநெடுமென்பணைத்தோள்குறுந்தொடிமகளிர்’. பரிபாடலில் இடம் பெற்ற நீள்சொல் இது. பத்து தனி அடிச்சொற்களாலான தொகைச்சொல் இது: மா, தளிர், மேனி, நெடு, மென், பணை, தோள், குறு, தொடி, மகளிர். ‘கவலுமனமிங்கெனக்குவாய்த்தலிங்கென்னே’ - (கம்பராமாயணம்) செந்தமிழ் சொல்பிறப்பியல் அகராதியில் ‘உருசகதேந்திரியோபாதனபூதங்கள்’ என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. தமிழ்ச்சொற்கள் ஏழு, எட்டு எழுத்துகளைத் தாண்டாது என்கிறது தமிழ் இலக்கணம். ஆனால் கலித்தொகையில் இடம் பெற்ற ‘ உரைக்கலத்தவர்’ என்கிற சொல்லின் மொத்த எழுத்துகள் - 9. இச்சொல்லைப் பிரித்தால் வேறொரு பொருளைத் தரவல்லது. இதன் பொருள் - ஒருவர் பேச்சாற்றமிக்கவராக இருந்தும் உறவினரிடம் சென்று தன் ஏழ்மையைச் சொல்லி உதவிக் கேட்க இயலாதவர். மனிதனின் மிக நீளமான கற்பனைத் தூரம் - சுவர்க்கத்திற்கும் நிரயத்திற்குமானத் தூரம். இதில் சுவர்க்கம் என்பது வானத்திற்கு மேலேயும், நிரயம் என்பது அதலபாதாளத்திலும் உள்ளது என்பது கற்பிதம்.அதலம் என்பதற்கு முடிவில்லாத, கீழுலகம், பள்ளம், நிரயம் , அச்சமூட்டும்படியான ஆழம்,… எனப் பல பொருளுண்டு. குதலை - குழப்பானச் சொல், மழலைச் சொல்; குதலமை - பொருள் புரியாமை, தளர்ச்சி, நடுக்கம். இவ்விரு சொற்களாலான மூன்று சொற்கள் - ‘அதலகுதலம்’ , ‘அதலகுதலை’, ‘அதலகுதலமை’.அதலகுதலம் - பெருங்குழப்பம்; அதலகுதலை - அச்சமூட்டும் குழப்பச் சொல் . இதிலிருந்து, நீளமானச் சொற்களைக் கண்டு பயங்கொள்வதை ‘அதலகுதலைமை’ என்று சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘ஓம்’ -ஏப்ரல் 28, 2019 தில்லி திகார் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்தார் ஷபீர் என்கிற நபீர். இஸ்லாமியரான இவர் குற்றவழக்கு ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறையிலிருந்து வருகிறவர். ஒருநாள் சமையல் பணியின்போது , இன்டெக்சன் அடுப்பு வேலை செய்யவில்லையென்று, சிறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுகான், கம்பியைப் பழுக்கக் காய்ச்சி, நபீரின் முதுகில் ‘ஓம் ‘ என்கிற தேவநாகிரி இந்து மத அடையாள எழுத்தை ॐ எழுதியுள்ளார். இக்கொடுமையை தன்னைப் பார்க்க வந்த பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட, நீதிபதி நபீருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானை உடனடி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஓம் என்பது எம்மொழிச்சொல், அதன் பொருள் என்ன? மின்துறையில் மின்தடையின் அலகாக ஓம் குறிக்கப்படுகிறது. இந்த விதியை வரை யறுத்தவர் ஜார்ஜ் சைமன் ஓம் என்கிற ஜெர்மன் விஞ்ஞானி. ஓம் - பிரணவ மந்திரம் என்கிறது புராணக் கதை. இந்த மந்திரத்தை படைத்தல் தொழிற்கட வுள் பிரம்மன் மறந்துவிட்டதால் பிரம்மனை தமிழ்க்கடவுளான முருகன் சிறையில் அடைத்தான் என்கிறது கந்தன்புராணம். ஓம் - ॐ; ओं; ௐ, 卍 என பல எழுத்துருக்களால் குறிக்கப்படுகிறது. இது தவிரவும் உருது, அரபி, மாண்டரின் மொழிகளில் இச்சொல் உண்டு. ஓம் என்கிற ஒலியின் முதல் எழுத்துரு 卍. சிந்து சமவெளி (கிமு3000 - 2500) காலத்திற்கு முற்பட்ட தமிழ் கிரந்த எழுத்துரு இது. இதே எழுத்து சீன மான்டரின் மொழியில் ஓன் என்பதாக இருக்கிறது. கனடா நாட்டின் அஞ்சல்துறை இலட்சினையாகவும் இந்தியாவின் தேர்தல் இலட்சனை, ஜெர்மனியில் நாசிச இலட்சனையாகவும் இருந்து வருகிறது. இன்று இது , ஸ்வாஸ்டிக் (Swastik) என அழைக்கப்படுகிறது. இவ்வெழுத்து சிந்துவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாராவிலும், எகிப்து மற்றும் சுமேரிய எழுத்து வடிவத்திலும் மேலும் சீன வரிவடிவத்திலும் காணப்படுகிறது. இந்தக்குறியீட்டின் மூலம் தென்னகம் என்கிறார் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். சிந்துவெளி மொழி விளக்கமடையாநிலையில் உள்ளது. எனினும், அதன் எழுத்துக்கள் தமிழிலுள்ள 31 எழுத்துக்களே என்றும், அதில் 12 உயிர், 18 மெய் என்றும் இதில் முதன்மையான எழுத்து 卍 என்றும் சொல்கிறார் திருத்தந்தை ஹீராஸ் பாதிரியார். இந்தியாவில் அதர்வண வேதக் காலத்தில் (கிமு 500- 400) மாண்டூக்யம் உபநிடதம் தோன்றியது. இதில்தான் முதன்முதலில் ஓம் ॐ என்கிற சொல் இடம் பெற்றது. இதன் ஆங்கில வடிவம் welcome to the lord. ‘ஓம் எனும் ஓங்காரம்’ என்கிறது திருமந்திரம். தேவநாகிரி ॐ ஓம் என்பது ஆண் - பெண் புணர்ச்சியின் ஆபாசக் குறியீடு என்கிறது - விடுதலை பத்திரிகை. 卍 ஓம் இவ்வோசை மெல்லப் பரவி இயேசு பேசிய மொழியான எபிரேயம் மொழியில் ஆமென் என்றாகியது.மேலும் இது அரபி மொழியில் ஓமென் என்றானது. 1741 ஆம் ஆண்டு துருக்கிய ஏகாதிபத்தியத்திலிருந்து பெரும்வாரியான மக்கள் தனியாக பிரிந்துப்போக சம்மதம் தெரிவித்தார்கள். அதன்படி புதிதாக ஒரு நாடு உதயமானது. அந்நாடு, ஓமன். ஓமன் என்பதற்கு சம்மதப்பகுதி என பொருள். இணையதள முகவரியில் .com என்பது உலகப் பொதுவானவை; .in (.இன்) என்றால் இந்தியா போன்று .om (.ஓம்) என்பது ஓமன் நாட்டு இணையக் குறியீடாகும். கணினி யுனிகோடில் ஓம் என்கிற சொல் (U+0BD0) என்கிற குறியீடாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் வித்துவான் பாலூர்கண்ணப்ப முதலியார் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி ஓம் என்பதற்கு பிரணவம், ஆம் என விளக்கம் தந்துள்ளது. ஜெயசிறீயின் வடமொழி தமிழ் அகராதி, ஓம் என்பதற்கு ஆமெனும் உடன்பாட்டை உணர்த்தும் ஓர் இடைச்சொல்; தன்மைப் பன்மை விகுதி; பிரணவம் என்கிறது. ஓம் - தன்மைப்பன்மைவிகுதி (நன்னூல்) ஓமோமெனவோங்கியதோர்சொல் - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ‘ஓம்படை யொன்றுஞ் செப்பாள்’ சீவகசிந்தாமணி. ஓம்படை என்பது அரசனை புலவன் வழிநடத்துவதாகும். ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்/ஆம் அவன் அறிவினுக்கு ஆறிவும் ஆயினான் (இரணிய வதைப்படலம் - கம்பராமாயணம்). இங்கு ஓம் என்பது அஉம் - பிரணவ மந்திரம். ஆம் என்கிற சொல்லின் திரிபே ஓம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணார். இச்சொல் ஈழம், தென்னாப்பிரிக்க தமிழர்களால் ஓம் என்றே இன்றும் விளிக்கப்படுகிறது . ஓம் என்பது பலர்பால் வினைமுற்று விகுதி. ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்’ போராட்டக்குரல்கள் ‘ஓம்’ எனும் விகுதிப்பெற்றே முடிகிறது. வடமொழியில் இச்சொல் ‘அம்’ என்றும் தேவநாகிரி இந்தியில் ‘ஓம்’ என்றும் விளிக்கப்பட்டாலும் அம், ஆம், ஒம், ஓம், ஒன், ஓன் என்பதன் ஆதி ஒலிப்பு ஓம் 卍 என்பது தமிழின் கொடை. பழைய சொல், புதிய தேடல் ‘ஆளி’ -மே 12, 2019 ‘த பிசினஸ் லைன் ‘ என்கிற ஆங்கில பத்திரிகை ஆண்டுதோறும் பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு ஆளுமைக்கு ‘Change-maker of The Year Award’ வழங்கி கௌரவித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான விருது , ஜிஎஸ்டி வரியை நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை சிறப்பு விருந்துநராக கலந்துகொண்டு வழங்கியவர் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் அவர்கள். இந்நிகழ்விற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் இராகுல் காந்தி சரக்கு மற்றும் சேவை வரி GOODS AND SERVICES TAX -ஐ GABBAR SINGH TAX (GST) என விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக, தன் கட்சியின் சிணுங்கல் பக்கத்தில் “@arunjaitley by Dr Manmohan Singh. Gabbar Singh Tax, Rahul Gandhi?,” எனப் பதிவிட்டது. அது என்ன கப்பர் சிங்? 2007 ஆம் ஆண்டு, சப்னா தயாரித்து நடித்த அதிரடித் திரைப்படம் GABBAR SINGH. ஒரு கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்து ஒரு பெண் போராடி வெற்றி பெறுவதுதான் கதை. இப்படத்தில் கொள்ளைத் தலைவனின் பெயர் கப்பர் சிங். இதே போன்று, 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மேந்த்ரா, அமிதாபச்சன், சஞ்சீவ்குமார், ஹேமாமாலினி என பல முன்னணி நடிகர்கள் நடித்த வெற்றித் திரைப்படம் SHOLAY. இத்திரைபடத்தில் ‘இதை எனக்குக்கொடு ‘ எனத் தட்டி வழிப்பறி செய்யும் வில்லனின் பெயர் Gabbar Singh. தெலுங்கில் பவன் கல்யாண், காவலராக கப்பர் சிங் பாத்திரத்தில் நடித்த இரண்டு தொடர் வெற்றித் திரைபடங்கள் கப்பர் சிங் -I,II.இப்படங்களின் வெற்றிக்குப் பிறகே அவர் அரசியலில் இறங்கினார். இப்படத்தின் தாக்கம்தான் தமிழில், காவல்துறை வேடத்தில் சூர்யா நடித்த சிங்கம் - 1,2,3 திரைப்படங்கள். சிங்ஹ் (இந்தி), சிம்ஹம் (மலையாளம்), சிங்க (கன்னடம்), சிங்ஹமு (தெலுங்கு) என்கிற பெயரில் சிங்கம் அழைக்கலாகிறது SINGH - மதம் மற்றும் சாதி அடையாளமாகவும் இருக்கிறது. சீக்கிய மதத்தின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங், சீக்கியர்கள் ஒவ்வொருவரும் தன் பெயருக்கும் பின் Singh சேர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படியே சீக்கியர்கள் சிங் என்றானார்கள். மேலும் ஒடிசி மற்றும் வங்க மாநிலத்தில் இந்து பிரிவில் ஒரு ஜாதி ‘சிங்க்’. இந்நிலப்பகுதியிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் சிங்களவர்கள். வடமொழியின் முதல் அகராதி எனச் சொல்லப்படுகின்ற அமரகோசம், சிங்கம் என்பதற்கு சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷா, ம்ருகேந்த்ர, பஞ்சாஸ்ய என பலப் பொருளைத் தருகின்றது. இதில் கேசரி, அரி இரண்டும் தமிழிலிருந்து சென்ற சொற்கள். அரி என்றால் - சிங்கம். அரிமான் என்பதிலிருந்து அரிமா திரிந்தது. கேசரி - கேசம் + அரி அதாவது தலை மயிர்கள் கொண்ட அரி (ஆண் சிங்கம்). சிங்கம் என்கிற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் அரி, ஆளி, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல பெயர்களால் பேசப்படுகிறது. இது தவிர வயப்போத்து, சீயம், அனுகு, கேசரி, சிம்மம், மிருகராசன், அரிமா, ஏறு,… என பல பெயர்கள் உண்டு. இதில் அரிமா, ஏறு, கேசம் என்பது ஆண் சிங்கம். சிம்மம் (இராசியும் கூட) , ஆளி - பெண் சிங்கம். சரி, கப்பர் சிங் (GABBAR SINGH) என்பது? கப்பர் என்பது அரபிச் சொல். இதன் பொருள் வலிமையான, நேர்மையான, உறுதியான எனப் பொருள். அப்படியென்றால் கப்பர் சிங்க் என்பது வலிமையான சிங்கம் எனப் பொருள் கொள்ளலாம். இதற்கு நிகராக தமிழில் சொல் உண்டா? ஆளல், ஆட்சி என்கிற சொல் ஆளி என்கிற சொல்லிலிருந்து வந்தது. பரிபாடல் 8-64, குறிஞ்சி நிலக் கடவுள் முருகனை ‘ஆளி’ என்கிறது. அதாவது ஒரு நிலத்தின் தலைவன். அதேபோன்று ஒரு காட்டை ஆளும் தலைவன் ‘ஆளி’ (சிங்கம்). யாளி என்பது கற்பனை விலங்கு, இது யானையையும் சிங்கத்தையும் வேட்டையாடும் திறன் கொண்டது என்கிறது புராணம். இதன் சிற்பம் சிங்கமும் யானையுமாகக் கொண்டது. இச்சொல் ஆளி என்கிற சொல்லிலிருந்து பிறந்ததே. ஆளி நன்மான் அணங்குடை குருளை என்கிறது பட்டினப்பாலை. இங்கு, ஆளி நன்மான் - பெண் சிங்கம்; அணங்குடை - அரவணைத்த ; குருளை - குட்டி. ‘அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்’ என்கிறது குறிஞ்சிப்பாட்டு. இங்கு உழுவை -புலி ; ஆளி - சிங்கம்; உளியம் - கரடி; ஆமான் - வனக்காளை; களிறு - யானை.கம்பராமாயணத்தில், ‘மாவொடு ஆளி ஏவினான்’ என்கிறார் கம்பர். அதாவது ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் கும்பகர்ணனை எழுப்ப, ஒன்றின் மேல் ஒன்றென ஆயிரம் குதிரை, சிங்கங்களை ஏவினான். செடிகளில் ஆளி என்றொரு வகை உண்டு. இதன் குடும்பம் மற்றும் பேரினம் Linaceae, Linum. இவை லத்தீன் சொற்கள். இதிலிருந்து வந்ததுதான் LION. ஆளி நாறு ஆடை - Linen. ‘ஆளியி னணங்கும் அரியின் குருளையும் ‘ என்கிறது சிலப்பதிகாரம். ஆளியின் அணங்கு - பெண் சிங்கக்குட்டி; அரியின் குருளை - ஆண் சிங்கக் குட்டி. LION (அரி) - lioness (ஆளி) செடிகளில் ஆளி என்றொரு வகை உண்டு. இதன் குடும்பம் மற்றும் பேரினம் Linaceae, Linum. இவை லத்தீன் சொற்கள். இதிலிருந்து வந்ததுதான் LION. ஆளி நாறு ஆடை - Linen. ‘ஆளியி னணங்கும் அரியின் குருளையும் ‘ என்கிறது சிலப்பதிகாரம். ஆளியின் அணங்கு - பெண் சிங்கக்குட்டி; அரியின் குருளை - ஆண் சிங்கக் குட்டி. LION (அரி) - lioness (ஆளி) பழைய சொல், புதிய தேடல் ‘நாரி’ -மே 19, 2019 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1.035 மில்லியன். இதில் உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் வாக்குச்சாவடிக்கென ஒரு சிறப்புண்டு. இத்தேர்தலின் முதல் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி ( PINK BOOTHS) இதுதான். கோவா மற்றும் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் போது சோதனை முயற்சியாக இவ்வகை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடி இளஞ்சிவப்பில் நிறுவப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் வாக்கு சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து இத்தேர்தலில் வட இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் அமைக்கப்பட்டன. இளஞ்சிவப்பினலான பலூன்கள், அலங்கார உடைகள், இளஞ்சிவப்பு சீருடையுடனான தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துநர், மேற்பார்வையாளர்,..என நூறு சதவீதம் பெண்களால் நிர்வகிக்கும் வாக்குச்சாவடி. முதல் முறையாக வாக்களிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், இஸ்லாமியப் பெண்கள்,…எனப் பலரையும் கவரும் படியான யுக்தி இது. தேர்தல் நடைமுறை மீதும், வாக்களித்தல் மீதும் ஆர்வமில்லாத வடகிழக்கு மாநிலம் குறிப்பாக சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் பரவலாக அமைக்கப்பட்டன. அதிகபட்சமாக, ஏழு தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லியில் பதினேழு வாக்குச்சாவடிகள் இளஞ்சிவப்பாக அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 67,700 வாக்குச்சாவடிகளில் ஒன்றுகூட முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் இளஞ்சிவப்புச் சாவடி அமைக்கப்படவில்லை என்பது ஒரு குறை. இத்தேர்தல் யுக்தியை இந்திய ஊடகங்கள் ‘ NARI SHAKTI ‘ என்றும் ‘PINK BOOTH’ என்றும் குறிப்பிட்டன. அது என்ன ‘நாரி’? நாரி - தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற ஒரு சொல். நாரை, நன்னாரை , நாரிகை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள். மர்மக் காய்ச்சலுக்கு முக்கிய மருந்தாக பயன்படும் நிலவேம்பு, அநாரியதித்தம் என அழைக்கலாகிறது. இது தவிர பீ நாரி , முள் நாரி மருத்துவ குணமுள்ள மூலிகைத் தாவரங்கள். ‘நாரிய ரில்லையிஞ் ஞாலமேழு மென்ன ‘ என்கிறது கம்பராமாயணம். நாரிகேளம் - தேங்காய் ( சிந்தாமணி நிகண்டு) நாரிகேளப்பாகம் என்றொரு வகை செய்யுள் இருக்கிறது. தேங்காயை உரித்து உடைத்து பருப்பைத் தின்றால் இனிப்புத் தருவதைப் போல பிரித்து பகுந்து படித்தால் சுவைதரும் செய்யுள். வில்லின் நாணி நாரியின் பேரொலி என்கிறது கந்தன் புராணம்.இங்கு நாரி என்பது அம்பு. குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல் - பழமொழி நானூறு. இங்கு நாராயம் என்பது வில். கள், தேன் போன்ற நறுமணப் பொருட்கள் ‘ நாரி ‘ என்கிறப் பெயரில் அழைக்கப்படுகிறது. நாரி என்பதற்கு லியோ அகராதி வில் நாண், யாழ் நரம்பு , இடுப்பு எனப் பல பொருளைத் தருகிறது. நாரிகை - பெண் நாரிக்கருத்து - இடுப்பு வலி நாரிப்பிடிப்பு - இடுப்புப் பிடிப்பு நாரி - இடை, ஒரு பண், கள், சேனை, தேன்,நன்னாரி, பன்னாடை, பார்வதி, வாசனை, பெண் (வேமன் தமிழ்ச்சொல் அகராதி ) நாரரி - நார்+அரி - பிடரி மயிருடைய சிங்கம் . சிவனுக்கு ஒரு பெயர் நாரிபாகன். நாரீ தூசணம் - பாதி விரத்தியத்தைக் கெடுப்பது ( யாழ்ப்பாணம் அகராதி ) அவன் நாரி முறிய வேலை செய்தான். நாரி பிடித்துக்கொண்டது, நாரிக்குத்து - பேச்சு வழக்குகள். இடுப்பிற்கு நாரி என்று பெயர். இடுப்பு எலும்பு நாரி எலும்பு. அதாவது மனித விலாக் கூட்டிற்கும் இடுப்பு வலயத்திற்கும் இடையில் அமைந்த 5 பெரிய முள்ளந்தண்டெலும்புகள் நாரி எலும்புகள். அதே நேரம் வடமொழியில் இச்சொல் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய சாதனைப் பெண்களுக்கு குடியரசுத் தலைவரால் ‘ நாரி சக்தி புரஸ்கர் ‘ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே நாளில் சாகித்ய அகாதமி ‘ நாரி சாதனா ‘என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறது. முழுக்க பெண்களாலான நிகழ்வு இது. மேனகா காந்தி, பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகிக்கையில் NARI - National Repository of Information for Women என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தார். பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல் ‘ அர்த்தநாரி ‘. அர்த்தம் - பாதி ; நாரி - பெண். அதாவது தன்னில் பாதியை பெண்ணாகக் கொண்டவன் என்று பொருள். சிவனின் ஒரு பெயர் அர்த்தநாரிஸ்வரன். தமிழில் நாரி என்பது பெண், தெங்கு, இடுப்பு, அம்பு , வில்,…என பலப் பொருளைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. வடமொழியில் நாரி என்றால் பெண். இதிலிருந்து நாரி சக்தி என்பதை பெண் சக்தி என்றும் ‘நாரி’ என்றால் மகளிர் என்றும் பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் ‘மழுக்கம்’ -மே 26, 2019 கேரள மாநிலத்தில் போட்டியிட்ட ராகுல்காந்தியின் அரசியல் நிலைப்பாட்டை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ‘ஞடிடவைiஉயட ஆலடியீயை ‘ என விமர்சனம் செய்தார். அது என்ன மயோபியா? ‘மயக்கம்’ என்றொரு தமிழ் இலக்கணம் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்குத் தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் ‘யானோ அரசன்?’ எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டது மயக்கமாகும். மயக்கம் பல வகை. மெய் மயக்கம் (தமிழ் என்பதை தமிள் என்றெழுவது), பொருள் மயக்கம் ( அரி என்பதை புலி என்று பொருள் கொள்வது), வேற்றுமை மயக்கம் (நரியை ஓநாய் என்பது). தன்னிலை மறப்பதும் மயக்கமே! மனிதனின் பார்வைக் குறைப்பாட்டில் கிட்டப்பார்வை ( Nearsightedness) என்கிற ஒன்றுண்டு. அருகிலுள்ள பொருளை மட்டும் காண முடிந்து தூரத்திலுள்ள பொருளைக் காண முடியா நிலை. கண்வில்லையின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பால் கண்கோளம் நீட்சியுறுகிறது. இதனால் உட்செல்லும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்பட,பிம்பம் தெளிவற்றதாகத் தெரியும். இதற்கு கிட்டப்பார்வை என்று பெயர். கிட்டப்பார்வை, மயக்கம் இரண்டிற்கும் ஆங்கிலத்தில் ‘மயோபியா’ என்றே பெயர். ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மீதான தொலைநோக்கற்றப் பார்வையை பொருளாதார வல்லுநர்கள் Economic Myopia என அழைக்கிறார்கள். இங்கு பினராயி விஜயன் குறிப்பிடுவது, Political myopia . அமெரிக்க ஊடகவியலாளர் LAUREN REIFF , அரசியல் மயோபியா என்பதற்கு ‘Good politics , Bad policy ‘ என வரையறை செய்கிறார். Political Myopia என்பதை தமிழில் மயக்க அரசியல், கிட்டப்பார்வை அரசியல், பனிமூட்ட அரசியல் எனப் பலவாறு பொருள் கொள்ளலாம். இருப்பினும் மயோபியா என்பதற்கு ‘மழுக்கம்’ எனப் பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். மழுக்கம் என்பதன் வட்டார வழக்கு மொண்ணையாக்கல். ‘ஊக்க நிலே பொருட்குறை யாவும் புலக்குறைவே / ஐயம் மருட்கறைகள் சூழின் மழுக்கே!’ என்கிறது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு. இப்பாடலின் பொருள், ஒரு செயலைச் செய்யும் கருவியின் குறை என்பது செய்பவரின் புலனக் குறையே. அக்குறையோடு ஐயம், மருட்சி சேர்ந்துவிட்டால் வினையில் மழுக்கம் உண்டாகும் என்கிறது பாடல். ‘ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே’ என்கிறது நற்றிணை. ‘அதிகக் கூர்மை மழுங்கல் ‘ என்கிறது ஒரு சொலவடை. மழுங்கல் என்கிற சொல்லின் சரியான பதம் மழுக்கம். கூர்மை × மழுக்கம் மழு - கோடரி ( சூடாமணி ); பழுக்கக் காய்ச்சிய இரும்பு. மழுக்கம் என்பதன் வேர்ச்சொல் முள் (மள்) - மழு - மழுகு - மழுங்கு - மழுக்கு - மழுக்கம். மழு - மழுங்கிய , அதிகமான எனவும் பொருள் கொள்ளலாம். மழுக்கம் என்பதற்கு செந்தமிழ் அகராதி - கூரின்மை, நிலைமைத் தாழ்வு, ஒளிமழுங்குகை, விவேகக்குறைவு எனப் பலவாறு பொருள் தருகிறது. நெல்லை ஒருமுறை குத்தியெடுத்த தவிடு நீங்காத அரிசிக்கு மழுக்கல் என்று பெயர். நெல்லை உரலிலிட்டு உலக்கையால் குத்துவதும் மழுக்கலே. மழுக்கம் என்பதற்கு தொடுவானம் என்றொரு பொருளுண்டு. தொடுவானம் அழகியலுக்கு உவமையாகச் சொன்னாலும் பேரிலக்கற்ற குறுகியப் பார்வையைக் குறிக்கும் ஒரு சொல். தொடுவான சிந்தனை - விரிவான சிந்தனை இருவேறு சிந்தனைகள். பினராயி விஜயனின் கருத்துப்படி, ‘Myopia’ எனச் சுட்டியதை ‘மழுக்கம் (கூர்மையின்மை)’ எனப் பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் ‘கூகா’ -ஜூன் 2, 2019 மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடும் பொருட்டு வேட்புமனுதாக்கல் செய்த நாளன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவில் உள்ள 35ஏ பிரிவை 2020 ஆண்டுக்குள் ரத்து செய்யப்படுமென பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். இச்சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் இந்தியா உடனான காஷ்மீரின் உறவு துண்டிக்கப்படும் எனக் கூறிய அவர் ‘ காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை கடந்த 2015ம் ஆண்டில் எனது தந்தை முப்தி முகமது சயீத் தயாரித்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடித்துள்ளது’ என்றார். இச்செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழ் ‘காப்பியடிச்சிட்டாங்க! மெகபூபா லபோதிபோ’ என செய்தியாக்கியிருந்தது. அது என்னவாம், லபோதிபோ? ஜெயமோகனின் அபிப்ராய சிந்தாமணி என்கிற கட்டுரை நூலில் ‘அகிம்சை’ என்கிற தலைப்பிலான கட்டுரையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ரமண மகரிஷி , தன் கதையில் தூங்குபவனை எழுப்பினால் லபோதிபோ எனக் கத்துவான் என்கிறார். இச்சொல் குறித்துத் தேடுகையில், கலகல, சலசல போன்று லபோதிபோ இரட்டைக் கிழவியுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகத் தெரிகிறது.தமிழ்மொழி இலக்கணத்துடன் வடமொழியை வலிந்து திணிப்பவர்கள் உபயோகிக்கும் சொல் இது. இதயம் துடிக்கும் ஓசை லப் டப்; ஆங்கிலத்தில் lub-dub, வடமொழியில் லப்திப். இதயம் பரிதவிக்கத் துடிப்பதை தமிழில் திக் திக் எனச் சொல்வதை, வடமொழியில் லபோ திபோ. ரயில் சிநேகிதம் என்கிற சிறுகதையில், ராஜேஷ் சந்திரா , ரயில் எஞ்சின் லபோதிபோ எனக் கூவிச் சென்றது என்கிறார். கிறித்தவ பெந்தேகோஸ்தே சபை, அந்நியபாஷை குழப்பம் (CONFUSION ABOUT TONGUES) பற்றிப் பேசுகிறது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறின பிறகு சீடர்கள் சபைகளை ஸ்தாபித்தனர். அவர்கள் சபைகளை ஸ்தாபித்து 1901-ம் ஆண்டுவரை அந்நியபாஷை பிரச்சனையே இல்லாமல் இருந்தது. ஆனால் அதன்பின் இடைசெருகலாக அந்நியபாஷை சபைக்குள் நுழைய, சபையின் முதன்மையான முக்கியத்துவம் குறைந்துபோய் அந்நியபாஷைக்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சும்மா லபோதிபோ என்று அந்நியபாஷை பேசி சாட்சிக்கும், கனிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து விலகுவதை நிறுத்தி சபையின் நோக்கத்தைக் காக்க வேண்டும் என்கிறது பெந்தேகோஸ்தே குறித்த ஒரு கட்டுரை. காஞ்சிரகுராம் எழுதிய ‘ முரளிதரனின் காயின் பால் ‘ என்கிற கட்டுரையில் மூன்று இரட்டைக் கிழவிகளைப் பயன்படுத்துகிறார். ‘பிகுபிகு’வெனக் கோவப்பட்டான். ‘பகபக’வெனச் சிரித்தான். இதயம் ‘லபோதிபோ’ வெனத் துடித்தது. ‘கேக்கே பிக்கே ‘எனச் சிரித்தான்; ‘கொய்யோ மொய்யோ’ என அழுதான்; இந்த வரிசையில் ‘லபோதிபோ’ . பிரபஞ்சன் எழுதிய ‘ மேன்சன்’ என்கிற கட்டுரையில் லபோதிபோ என்பதை அர்த்தமற்ற கூச்சல் என்கிறார். அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி என்கிற பாடலில் இப்படியாக ஒரு பாடல் கூகா என என் கிளை கூடி அழப் / போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா/நாகாசல வேலவ நாலு கவித் /தியாகா சுரலோக சிகாமணியே. இப்பாடலின்படி, நாகாசல -திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலவ - வேலாயுதக் கடவுளே, த்யாகா -நாலு விதக் கவிகளைப் பாடும் திறமையைத் தந்தவரே, சுரலோக சிகாணியே - தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் கிளை கூடி - என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என அழ - கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, போகா வகை - இறந்து போகாத வண்ணம், மெய்ப் பொருள் பேசியவா -உண்மையான பொருளைப் பேசுக, என்பது பாடலின் பொருள். இப்பாடலுக்கு விளக்கவுரை எழுதிய மயிலை மன்னார், கூகா என்பது ஒருவர் இறந்துபோகையில் உறவினர்கள் கூடியும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி அழுதல் என்கிறார். அதாவது, சொந்தக்காரர்கள் ‘காச்சுமூச்சு’ என்றும் ‘லபோதிபோ’ என்றும் அலறுவது. கூகா - கூகை + காக்கை. கூ - ஆந்தையின் அலறல். கூ என மனிதனைப் போல அலறுவதால் கூகை என்றானது ( அபிதான சிந்தாமணி ). கா - காக்கை , காக்கையின் கரைதல். கூ,கா இரண்டும் ஒரு சேர நிகழ்வது கூகா. அதாவது, மனிதன் பரிதவிக்க கூச்சலிடுவது. இனி, லபோதிபோ என்கிற வடசொல்லுக்குப் பதிலாக கூகா எனப் பயன்படுத்தலாமே. பழைய சொல், புதிய தேடல் ‘துவரி’ -ஜூன் 9, 2019 புதிய பாடத்திட்டத்தின் படி உருவான பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடநூலின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்திலிருந்ததால் சர்ச்சைக்கு உள்ளானது. அப்படத்தில் மாற்றமோ திருத்தமோ நிபுணர் குழுவே முடிவு செய்யும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார். காவி என்றொரு நிறம் சங்க இலக்கியத்தில் உண்டா, காவி என்பதற்கு தமிழ்ப்பெயர்தான் என்ன? காவி - Saffron. இச்சொல், Za’feran (பாரசீகம்) - Safranum ( இலத்தீன் ) - Safran (பிரெஞ்சு) வழியில் ஆங்கிலத்தில் Saffron எனத் திரிந்திருக்கிறது. மஞ்சள் என்னும் பொருள் தரும் அஸ்பார் asfar என்னும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது சேஃப்ரன் (Saffron) என்கிறது ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் எழுதிய ‘The Book of General Ignorance’ என்கிற நூல். (தமிழில் - பொதுவான அறியாமைகள்: த.க.பாலகிருட்டினன்.) Saffron கிரேக்க இதிகாசத்தில் முக்கியமான நிறமாக இருந்திருக்கிறது. ஈயாஸ் என்கிற தெய்வத்தின் நிறம் மற்றும் ரோமில் அரோரா தெய்வத்தின் நிறம் காவி. மாவீரன் அலெக்ஸாண்டர் தனது தலைமுடி காவி வண்ணத்தில் அழகாக விளங்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாற்றில் தனது தலை மயிரை கழுவியிருக்கிறார். ரோமாபுரி ஆட்சிக்காலத்தில் காவி என்பது அரசர்களுக்குரிய அதிகார நிறம். குங்குமப்பூவின் ஆங்கிலப் பெயர் - SAFFRON. இதல் அறிவியல் பெயர் - SAFFRON CROCUS. முற்காலத்தில் குங்குமப்பூவின் சந்தை - பிரிட்டன். saffron walden , அந்நாட்டின் முக்கியமான ஒரு நகரம். நிறக்கோட்பாட்டின் படி RGB (Red, Green, Blue) தனி நிறங்கள்; CMYK (Cyan, Magenta, Yellow, Key) கலவை நிறங்கள். ஈர்நிறக் கலவை - உதாரணம் பழுப்பு, ஊதா, மஞ்சள்; மூநிறக் கலவை - உதாரணம் வெண்மை, காக்கி, காவி போன்றவை - காவி (Saffron) என்கிற நிறம் RGBயின் படி - சிவப்பு:பச்சை:நீலம் - விழுக்காடு முறையே 100:60:40 என்பதால் ஆனது. CMYK கூட்டுக்கலவையின் படி - C:M:Y:K (0:40:80:0) கர்ப்பிணிப் பெண்கள் பாலில் கலந்து சாப்பிடும் குங்குமப்பூ (மகரந்தம், சூல்முடி) காவி நிறமுடையது. மராட்டிய பேரரசின் ( 1674 - 1818) அதிகாரப் பூர்வ கொடி காவி நிறத்தினலானது. இக்கொடிதான் இன்று இந்து கோவில்களில் பறக்கவிடப்படுகிறது. இந்தியில் இக்கொடி Bhagwa Dhwaj என்றும் Kesariya Pataka என்றும் அழைக்கப்படுகிறது. கேசரியா என்றால் காவிமயத்தானவர்கள் என்று பொருள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பால கங்காதர திலகர் மராட்டிய மொழியில் ஒரு நாளிதழ் நடத்தினார். அதன் பெயர் ‘கேசரி’. இதற்கு சமஸ்கிருதத்தில் ‘சிங்கம்’ என்றும் மராட்டி மற்றும் இந்தியில் ‘காவி’ என்றும் பொருள். தமிழக சமையலில் கேசரி பவுடர் என்றால் காவி நிற மாவைக் குறிக்கும். இங்கு கேசரி என்பது மராட்டிய சொல். இந்தியாவில் காவி அரசியல் என்பது அபினவ் பாரத் (இளைய பாரதம்) -1904 லிருந்து தொடங்குகிறது. துவங்கி வைத்தவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர். காவி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதி செங்கல் நிறம், துறவிகள் அணியும் ஆடை, பழுப்பு அல்லது மங்கிய சிவப்பு - Saffron அல்லது yellowish brown என விளக்கம் தந்துள்ளது. காவி என்பதன் பொதுவான குறியீடு - குங்குமப்பூ(தமிழ்). இது சஃப்ரன் (ஆங்கிலம்), கும்குமா (சமஸ்கிருதம்), குகமபூ (மலையாளம்), கும்கும்பூவ (தெலுங்கு), கேசர் (இந்தி) என்பதாக அழைக்கலாகிறது. சரி, சங்க இலக்கியத்தில் காவிக் குறித்த விளக்கம் இருக்கிறதா ? குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி பாடியுள்ளார். அதில் இலவம்பூ, ஞாழல், பலாசம் மூன்றும் காவியுடன் தொடர்புடைய மலர்கள். ஞாழல் என்பது குங்குமப்பூ என்பதாக தமிழாய்வாளர்கள் சொன்னாலும் தமிழ்நாட்டின் நெய்தல் நில பூவான இது தங்க நிற முடையது. பலாசம் என்கிற கல்யாண முருங்கை இளஞ்சிவப்பானது. இலவம்பூ ஓரளவு காவி நிறத்துடன் ஒத்தது. இந்நிறத்தை சங்க இலக்கியம் துவரி என்கிறது. ‘துவரி கனிவாய் இளமங்கை’ துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் (நாலாயிர திவ்விய பிரபந்தம்). அந்துவராடைப் பொதுவனொடு (கலித்தொகை). துவர் - சிவப்பு ; துவரி (Salmon colour) - காவி ; துவராடை - காவி ஆடை ( தமிழ் லிப்கோ அகராதி) காவி என்பது மலபார் மொழிச் சொல். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் துவரி எனச் சொல்லலாம்… பழைய சொல், புதிய தேடல் ‘தவசம்’ -ஜூன் 16, 2019 காக்கை இதழில் தமிழர் திருநாள் குறித்து இரு கட்டுரைகள். க.முகுந்தன் எழுதிய ஒரு கட்டுரை, ‘பறவைகளால் உண்ணப்படும் நெல் மணிகளைச் சேகரித்த ஆதி மனிதன் அதனை உணவாக்க பல்தேடல் முயற்ச்சிக்குப்பிறகு அரிசியை சுடுநீரிலிட்டு அரிசியைப் பதமாக்கிய அந்த தொடக்கக்கால சம்பவத்தைக் காண திரண்ட ஆதி மனிதர்களின் மகிழ்நிகழ்வே பொங்கல்’ . பொங்கலைப் போற்றுதும் கட்டுரையில் சி.அறிவுறுவோன், ‘பொங்குதல் என்பது குறிஞ்சி நிலத்தில் துவங்கி முல்லை, மருதம் நிலத்தைத் தொட்டது. புறநானூறு -168 பாடலின் படி சேரமான்கோதை என்பானுக்கு பிட்டங்கொற்றன் படை உதவி செய்திருக்கி றான். இவன் ‘காட்டுப்பசுவிடம் கறந்த பாலில் உலை வைத்து , புதிய திணை அரிசியை அதில் இட்டு சந்தன மரத்து விறகில் தீ மூட்டிப் பொங்கலிட்டு வாழை இலையில் சேரமான் கோதைக்குப் பகிர்ந்தளித்தான் ‘ என்பதாக கருவூர்க் கதம்பிள்ளை சாத்தனார் பாடி யுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ‘அருவி ஆர்க்கும் கழைபயில் நனந்தலை’ என்கிற பாட லில் காட்டுப் பன்றிகள் கிளறிய புழுதிப்பட்ட நிலத்தில் விதைத்து , முற்றிய தவசத்தை நல்லநாள் பார்த்து அறுத்து சேமித்து பொங்குவர். தவசம் என்பது என்னவாம்? நரேந்திர மோடி நவம்பர் 8, 2016 அன்று 500,1000 நோட்டுகள் செல்லாதென அறிவித்து ஓராண்டு திரும்பிய நாளை ஒரு சமூக வலைதளம் ‘தவசம் - DEMONETIZATION ANNIVERSARY’ என்கிற தலைப்பில் கேலி செய்திருந்தது. தவசம் - ஷ்ராத்தம் இறந்தவருக்கு ஓராண்டு கழித்து கங்கை நதிக்கரையில் செய்யும் காரியம் ஷ்ரார்தம். இச்சொல் சாதம் - ஷ்ராதம் - ஷ்ராத்தம் வழியில் வந்தது. அதாவது சாதம் வழிச்சடங்கு. இதையே தானியங்கள் கொண்டு செய்தால் தவசம். இதை திவசம் என்றும் சொல்வர். தவசம் என்பது தமிழ்ச்சொல். பெருமாள் முருகன் சிறுகதைகள் தொகுப்பில் ‘பதினொரு வரிசை அடுக்கு மொடாக்கள்’ என்றொரு சிறுகதையின் ஓரிடத்தில் ‘ஒவ்வொரு மொடமாகத் தவசம் காலியாகிக் கொண்டே வரும். அடி குன்றுமொடா காலியாகாது. அதற்குள் தவசம் வீட்டுக்கு வந்து சேர பழையது நிரப்பப்படும்’. கழினியூரன் தொகுத்த சொலவடை கதைகளில் ‘தவசம்’ என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. ‘விறகு பொறுக்கி வித்து தவசம் வாங்கி வந்தாள்’ பைபிள் - ஆமோஸ் 8.6 வாசகம், ‘ நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் ‘. கிராமங்களில் தானியங்களைச் சேமித்து வைக்கும் பானைக்கு ‘தவசப் பானை’ என்று பெயர். வாய் குறுகியும் அடிப்பகுதி அகன்றுமிருக்கும். நவதவசம் - நவதானியம் தவசும் தானியமும் - எண்ணுமை ( இலக்கணம் ) ‘சலவையோ பட்டோ தவச (ம்) தானியமோ’ என்கிறது குற்றால குறவஞ்சி பாடல். தவசம் அளந்தவுடனே பணம் பூராவும் வந்திடணும் - வட்டார வழக்கு. தவசம் - தவசு +அம் கி.ரா தொகுத்த வட்டார வழக்குச்சொல் அகராதியின் படி, தவசம் - தானியம். சில இடங்களில் கம்பம் புல்லைக் குறிக்கிறது. தவசு பிள்ளை - திருமணம் போன்ற விசேச வீடுகளில் சமையல் செய்பவர். இதலிருந்து தவசம் என்பது தானியம் என்கிற ஒரு முடிவிற்கு வரலாம். உணவு கூலம் ஏழு. அவை - தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று. தவசம் என்பது புல் பயிரினத்தில் விளைந்து துவசம் செய்து பிரித்தெடுக்கப்படும் விதை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ‘ தானியம் என்பது தானியா என்கிற வடமொழிச் சொல்லிருந்து வந்ததாகவும் தவசம் என்பதே தமிழ்ச்சொல் என்கிறார். தவசம் என்கிற சொல்லிருந்து வந்ததுதான் தவிடு, தவிட்டை. இதன் பிற சொற்கள் - இறடி, ஏனல், கூலம், இருவி. ஔவையாரின் கொன்றை வேந்தன் ‘ அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ‘ என்கிறது. இதையே ஆத்திசூடி, ‘அஃகம் சுருக்கேல் ‘. இதிலிருந்து தவசம், தானியம், கூலம், தினை என்பதை அஃகம் என்று சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘தலித்’ -ஜூன் 23, 2019 ஏழு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி வீரேந்திர குமார் இடைக்கால மக்களவை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர். அது என்ன ‘தலித்’ ? இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் தலித் என்கிறது 2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு. தலித் மக்களை - மத்திய அரசு ‘பட்டியல் இனத்தவர் (Scheduled caste)’ என்றும் தென் இந்திய மாநில அரசுகள் ஆதி தெலுங்கர், ஆதி கன்னடர், ஆதி திராவிடர் எனவும் பட்டியலிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 87 சாதிகள் (தமிழக அரசின் படி 76) தலித்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். தலித் என்பது மராட்டிய சொல். இச்சொல் dalita என்கிற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது. இச்சொல்லிற்கு divided, split, broken, scattered என்பதாகப் பொருள் கொள்ளப்படு கிறது. dalita என்றால் பிராமணிய சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பொருள். தலித் - இச்சொல்லை அரசியல் ரீதியாக முதலில் பயன்படுத்தியவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் மகார், மாங்கு, சாமர், தோர் எனப் பல சமூக மக்களை ஒற்றை சொல்லால் அழைக்க ஒரு சொல் தேவைப்பட்டது. அச்சொல் ‘தலித்’. இச்சொல்லை இந்தியா முழுமைக்கும் பிரபலபடுத்தியவர் அர்ச்சுனன் டாங்களே. ரிக் வேதம் ‘புருஷ சுக்தம்’ என்கிற பத்தாவது அத்யாயம் பிறப்பின் அடிப்படையிலான பேதத்தைக் கற்பிக்கிறது. ஐந்தாம் வர்ணமான இவர்கள் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் ; சண்டாளன், பஞ்சமன் என்கிறது மநு. ஜோதிராவ் பூலே, இம்மக்களை அழுத்தப்பட்டவர்கள் (SUPPRESSED) என்றும் டாக்டர் அம்பேத்கர் DEPRESSED (ஒடுக்கப்பட்டவர்) எனவும் அடையாளப்படுத்தினார்கள். அர சியலமைப்பில் Scheduled Jati என்பதை Caste என மாற்றியவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத். இங்கு Caste என்பது ஸ்பானிய சொல்லின் திரிபு. இங்கு jati என்பது பிறப்பு, Caste என்பது வகுப்பு. ஆங்கிலேயர்கள் OUT CASTES; பிராமணியம் - PANCHAMA; காந்தி - அச்சுத் (தீண் டத்தகாதவர்); அயோத்திதாசர் பண்டிதர் - சாதிகளற்ற ஆதிதிராவிடர்; பெருந்தலைவர் எம்.சி. ராஜா - ஒடுக்கப்பட்ட இந்துக்கள்; இரட்டைமலை சீனிவாசன் - சாதியற்ற இந்துக்கள் என்றார்கள். குஜராத்தி தலித் எழுத்தாளர்கள் கூடி ‘பகுஜன் சாகித்ய சங்குல்’ என்கிற அமைப்பை ஏற்படுத்தி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவுகளை உள்ளடக்கி தலித் சொல்லிற்கு நிகராக ‘பகுஜன்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தத் துவங்கினார்கள். கன்சிராம் தலித் சொல்லிற்கு மாற்றாக பகுஜன் எனப் பயன்படுத்தினார். தென் ஆப்பிரிக்காவில் தீண்டத்தகாத தமிழர்கள் ‘கூலிகள்’ என அழைக்கப்பட்டார்கள். காந்தியடிகள் சென்னை வருகையில் அச்சுத், கூலிகள், தீண்டத்தகாதவர்கள் என்கிற சொற்கள் தங்களை வலியடையச் செய்வதாகத் தெரிவித்ததால் அச்சொல்லுக்கு மாற்றாக ஹரிஜன என்கிற சொல்லைப் பயன்படுத்தினார். ஹரி - திருமால். இதனால் சிவன் வழிபாட்டினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஹரிஜனம் என்பதற்கு கடவுளின் குழந்தை என விளக்கம் தந்தார் காந்தி. ஹரிஜன என்கிற சொல்லை முதலில் துளசிதாஸர் தன் இராமாயணக் கதையில் பயன்படுத்தினார். நரஸிம் மேத்தா என்கிற கவிஞர் ஹரிஜனம் என்கிற சொல்லைத் தன் கவிதைகளால் பிரபலப்படுத்தினார். இவர் காந்திக்கு பிடித்தமான கவிஞர். 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் “ஹரிஜன்” என்ற வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டாம் என ஆணைப் பிறப்பித்தது. 2018 மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அளிக்கப்படும் அரசு ஆவணங்களில் “தலித்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டது. Dalit என்கிற சொல்லிற்கு நிகரான உலகச் சொற்கள் -APARTHEID (அமெரிக்கா), RACISM (தென் ஆப்ரிக்கா), ACHHOOT (பூடான்), NEECH JATI (நேபாளம்), Taboo (பிரிட்டன்), low ( பாகிஸ்தான்),… அமெரிக்காவில் கறுப்பின (நீக்ரோ) இலக்கியவாதிகள் வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான சமூக மாற்றத்திற்காக BLACK PANTHER (கறுஞ்சிறுத்தை) என்றொரு அமைப்பை உருவாக்கினர். இவர்களின் தாரக மந்திரம் இனவெறியை எதிர்க்கும் இனவெறி. இதன் நீட்சியாக இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு அர்ஜூன் டாங்களே, ஜே.வி.பவார், தியோ தாசல் மூவரின் முயற்சியால் ‘தலித் சிறுத்தைகள்’ எனும் அரசியல் அமைப்பு தோன்றியது. தலித் என்பதற்கு ஒடுக்கப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், ஹரிஜனம், கூலி, அழுத்தப்பட்ட வர், பட்டியல் இனத்தவர், பஞ்சமர், சண்டாளர், … என பல ஒடுக்குமுறையிலான சொற்க ளால் அடையாளப்படுத்தப்பட்டாலும் தலித் என்பது இன்று ‘சாதியற்றவர்’ என்பதாகப் பொருள்கொள்ளப்படுகிறது. பழைய சொல், புதிய தேடல் ‘மீசை’ -ஜூன் 30, 2019 மக்களவை முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய போர் விமானி அபிநந்தனைப் பெருமைப்படுத்த வேண்டும். அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார். மீசை - எம்மொழிச் சொல்? குட்டநாடு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீசை வளர்க்க ஆதிக்கச் சாதியினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி மீசை வளர்க்க முயலும் ஒருவரை மையமாக வைத்து மலையாள எழுத்தாளர் ஹரீஷ் ‘மாத்ருபூமி’ வார இதழில் ‘ மீசை’ என்றொரு தொடர் எழுதினார். இத்தொடர் இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக சங்பரிவார் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க தொடர் நிறுத்தப்பட்டது. மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யாவின் நாவல். மயிர் - வசைச் சொல் (லியோ தமிழ் அகராதி) ; மயிராண்டி - வசைச் சொல் ( கி.ரா வட்டார வழக்குச் சொல் அகராதி) . மயிருடன் நீதிமன்றத்தை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் எச்.ராஜா. ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா’ என்கிறது திருக்குறள். பருவ ஆடவருக்கு உதட்டின் மேல் மயிர் முளைக்காமலிருப்பதும், மகளிருக்கு மயிர் முளைப்பதும் ஒருவகை நோயியம் என்கிறது மருத்துவவியல். பெண்களுக்கு உதட்டிலும், கன்னத்திலும் மயிர் முளைப்பதற்கு ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ என்று பெயர். இந்நோயியத்தால் பாதிக்கப்பட்டு அதை வரமாக எடுத்துக்கொண்ட பெண் ‘ஹர்னாம் கௌர்’. இவர் மீசை தாடியுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் . மீசை, தாடி முளைத்த பெண்கள் shemale, sheman என்றும் மீசை, தாடி முளைக்காத ஆண்கள் hefemale, hewoman எனவும்; மேலும் woerdo, beardo என்கிற சொற்களால் கேலிக்கு உள்ளாகிறார்கள். விளம்பரம் வழியே ஆணாதிக்க மனோபாவத்தைத் தோலுரித்துக் காட்டிய விளம்பரம்; மீசையை வேரோடு மழிக்கும் ‘ஜில்லட்(gillette)’. ஜில்லட் என்பதற்கு king camp என்று பொருள். அதாவது சிங்கத்தின் கூடாரம். சிங்கத்திற்கு கேசரி என்றொரு பெயருண்டு. கேசம் என்றால் மயிர். உலகில் மீசை என்பது whisters, hair, feeler, bristle, barbule, barb, moustache, cockroach என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மீசையை பிரிட்டிஷார் moustache என அழைத்தார்கள். இச்சொல் mostaccio என்கிற இலத்தீன் சொல்லிலிருந்து திரிந்தது. இதையே பூனை, புலி போன்ற பக்கவாட்டிலிருக்கும் நீண்ட முடிக்கு whiskers என்று பெயர். கரப்பான்பூச்சியின் தலையின் இருபுறமும் உள்ள விரைப்பான நீண்ட முடி - antenna. சல்வடார் டாலி என்கிற ஓவியர் தன் மீசையை antenna என அழைத்துக்கொண்டார். எனக்கான கற்பனை சக்தியை வானத்திலிருந்து எனக்குள் கொண்டு வந்து சேர்ப்பது மீசை என்பதாக அவர் நம்பினார். இது ஸ்பெயினின் பயன்பாட்டுச் சொல். இறால் மீனை தமிழக மீனவர்கள் மீசைக்காரன் என்பர். மீசையை முறுக்குதல் - சண்டைக்கு நிற்றல். மீசை (missa) என்கிற சொல் போர்த்துகீசிய மொழியில் உண்டு. இச்சொல்லே தெலுங்கில் மீசமு; கன்னடம் - மீசெ; மலையாளம் - மீசா என்பதாக உள்ளது. தமிழ் இலக்கியம் தாடியை ‘அணர்’ என்கிறது. ஆனால் மீசை என்கிற சொல் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. பின்னர் மிசை என்கிற சொல்லிலிருந்து மீசை உண்டானது. (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி). ‘துடித்த தொடர்மீசைகள் சுறுக்கொள ‘ (மாரீசன் படலம் - கம்பராமாயணம்). ‘மீசைநீள் விசும்பில்’( சீவகசிந்தாமணி). சிந்து நதியின் மிசை நிலவினிலே - பாரதியார். இங்கு மிசை என்பதற்கு மேலே (upon, over) என்று பொருள். மிசை - உயர்ச்சி eminence, elevation - (சூடாமணி); மிசை - மேலிடம், elevated place (பிங்கல நிகண்டு). ‘அவலா கொன்றே மிசையா கொன்றோ’ என்கிறது புறநானூறு. இங்கு மிசை என்பது மேடு. ‘மிசைபாடும் புள்ளின்’ - கலித்தொகை. இங்கு, மிசை - வானம் (sky). ஈற்றுமிசை யகர நீடலு முரித்தே (தொல்காப்பியம். எழுத்ததிகாரம்). மிசை - முன்னிடம் (front). மீ என்பதற்கு மேலிடம் , உயரம், வானம் என பலப் பொருளுண்டு. மிசை × மிஞ்சிகம். மிசை - ஆணின் மேலுதட்டு மயிர்முடி. மிஞ்சிகம் - பெண்களின் மயிர்முடி ; lock of women’s hair (பேரகரமுதலி) மீசை - மயிரு, முடி, ரோமம், உரோமம், உதட்டிழை, கொசை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் மீசை என்பதற்கான பொருத்தமான பதம் ‘மிசை மயிர்’. பழைய சொல், புதிய தேடல் ‘அந்தியோதயா’ -ஜூலை 7, 2019 ஒரே நாடு, ஒரே ‘ரேசன்’ அட்டை’ திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 99 இலட்சத்து 53 ஆயிரத்து 681 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 18 இலசத்து 64 ஆயி ரத்து 600 அந்தியோதயா அட்டைகள். 77 இலட்சத்து 81 ஆயிரத்து 55 முன்னுரிமை அட்டை கள். மிச்சமுள்ளவை முன்னுரிமை அற்ற அட்டைகள் என்பதாக தமிழக உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தியோதயா என்பது என்ன? பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் தீனதயாள் உபாத்யாவின் சிந்தனைச்சொல் - ‘அந்தியோதயா’ பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதி ஏற்பு ‘அந்தியோதயா கொள்கை (Priciple of Antyodaya)’ யைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறது. சுரேஷ் பிரபு இரயில்வே துறை அமைச்சராக இருக்கையில் பிரபல இந்திய படைப்புகளின் பெயர்கள் இரயிலுக்குச் சூட்டப்படும் என அறிவித்தார். இதன் முன்னோட்டமாக, முக்கிய வழித்தட ரயில்களுக்கு ‘அந்தியோதயா’ பெயர் சூட்டப்பட்டது. தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஓடும் ஒரு ரயிலின் பெயர் அந்தியோதயா அதிவரைவு வண்டி. அடல் பிகாரி வாஜ்பாய், தன் ஆட்சிக் காலத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தைக் கொண்டுவந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பிறகு இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடியால் கொண்டுவரப் பட்ட ஒரு திட்டம் ‘தீன தயாள் அந்தியோதயா யோஜனா DAY - NRLM (தேசியகிராமப்புற வாழ்வாதார திட்டம்)’ செப்டம்பர் 25 , தீன தயாள் உபாத்யாய பிறந்த தினத்தை மத்திய அரசு ‘அந்தியோதயா திவாஸ்’ தினமாக அறி வித்துள்ளது.   காந்திஜி நடத்திய ஹரிஜன் பத்திரிகையில் வினோபா பாவே, ANTYODAYA என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இதன் பொருள் ‘ UPLIFT OF THIS LAST’ . தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் காந்தி இரண்டு புத்தகங்கள் எழுதினார். ஒன்று ‘இந்து சுயராஜ்ஜியம்’. இந்நூல் அன்றைய ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. மற்றொன்று ஜான் ரஸ்கின் எழுதிய அன்டு திஸ் லாஸ்ட் என்கிற நூலின் சுருக்கிய வடிவம் (குஜராத்தி). Unto this last (கடையனுக்கும் கடைத்தேற்றம்). இந்நூலுக்கு காந்தி அந்தி யோதயா என முதலில் பெயர்ச்சூட்டி பிறகு ‘சர்வோதயா’ என மாற்றினார். Sarvodaya through Antyodaya என்பது காந்திய சிந்தனை. இச்சிந்தனையின் தோற்றுவாய் ருஷ்கின். சர்வோதயா × அந்தியோதயா. (Rising of all) x (Uplift of this last). இவ்விரு சொற்களும் சமஸ்கிருத வடிவிலான பிராகிருத இந்திச் சொல். திமுக ஆட்சி, ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ - நான்கு ஆண்டுகள் சாதனை (2006 - 2010) ; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கையேடு வெளி யிட்டது. அதில் அந்தியோதயா என்கிற சொல் இடம் பெற்றுள்ளது’. தனிநபர் வரு மானத்தின் ஏறு வரிசைப்படி (அந்தியோதயா அணுகுமுறை). அந்த் - இறுதி ; சர்வ் - எல்லாம். உதயா - எழுச்சி. இதன்படி, அந்தியோதயா என்பதை கடைநிலை எழுச்சி எனப் பொருள் கொள்ளலாம். காந்திஜி, அந்தியோதயா என்பதற்கு poorest of the poor என விளக்கம் தருகிறார். அதாவது ஏழைகளிலும் ஏழை. இதற்கு நிகரான சொல் தமிழில் உண்டா? பரம ஏழை என்றொரு சொல் வழக்கில் உண்டு. இங்கு பரம என்கிற சமஸ்கிருதச் சொல்லிற்கு மிக, மிகவும் என்று பொருளாகும். ‘வைத்தாரின் நல்லர் வறியவர் ‘ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லானை இல்லாளும் வேண்டாள் ‘ - ஔவையாரின் நல்வழி. இல்லான் எழில்நலம் - திருக்குறள். வறியவர், இல்லான் இரண்டும் ஏழ்மையைக் குறிக்கும் சொல் என்றாலும் இரண்டும் வேறானவை. வறியன் × நந்தன். இங்கு வறியன் என்பவன் இயலாதவன். நந்தன் என்பவன் கிமு 5 ஆம் நூற்றாண்டில் 99 கோடி தங்க நாணயங்களை மறைத்து வைத்த மௌரிய செல்வந்தன். இவனைப் பற்றியக் குறிப்பு - அகநானூறு 251 இல் உண்டு. செல்வந்தன் அடிப்படையிலான ஏறு வரிசை இது : வறியவன் - இல்லான் - நொய்யான் - மிடியான் - பரதேசி - பாமரன் - கூலி - உழவன் - பண்ணையார் - முதலாளி - பெருமுத லாளி - அமைச்சு - அரசன் - நந்தன் (அம்பானி, அதானி). இலக்கியத்தின்படி கொடும்பசிகள் மூன்று - வாடுபசி, நீடுபசி ( பொருநராற்றுப்படை) அழிபசி (திருக்குறள்). தீர்க்கப்பட வேண்டிய பசியின் வரிசைகிரமம் முறையே அழிபசி - வாடுபசி - நீடுபசி. ரேசன் என்பது பங்கீடு. இதற்கு வரிசை என்றொரு பொருளுண்டு. வரிசை பல வகை. அகர வரிசை, உயர வரிசை, எடை வரிசை, முன்னுரிமை வரிசை,ஏறு வரிசை, இறங்கு வரிசை.. அந்த வகையில் செல்வத்தினர் அடிப்படையிலான ஏறு வரிசை (அந்தியோதயா). இதனை ‘வறிய வரிசை’ எனப் பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் -ஜூலை 14, 2019 வணிகம் செய்ய இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் கடலோர மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். அவர்களிடம் உரையாடுவதற்கு தமிழ்மொழி தேவைப்பட்டது. அதற்காக ‘கார்ட்டிலா’ என்கிற நூலை அச்சிட்டார்கள். ஆண்டு கி.பி.1554 பிப்ரவரி, 11. இந்நூல் போர்ச்சுகல் தலைநகர் ஸிஸ்பனில் வெளியானது. தமிழ் அல்லாது தமிழ் ஒலிப்பில் அச்சேறிய நூல் இது. எழுத்துரு - ரோமன் லிபி; உச்சரிப்பு - தமிழ். உலக அச்சு இயல் வரலாற்றுக்கு அரும்பெரும் சான்றாக விளங்கும் கார்ட்டிலாவின் ஒரே ஒரு பிரதி லிஸ்பன் நகர் பெலம் அருங்காட்சியகத்தில் ஒரு இரும்பு பெட்டகத்திற்குள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னவர் தனிநாயகம் அடிகளார். (ஆதாரம், ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர்). 1542ஆம் ஆண்டு, போர்ச்சுக்கீசிய பாதிரியார் புனித சவேரியார், கோவா வருகிறார். புதிதாக கிறித்தவ மறை தழுவிய மக்களுக்கு ஜெப மந்திரங்கள் சொல்லிக்கொடுப்பதற்காக DOCTRINA CHRISTAM என்கிற நூலை போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதினார். இந்நூலை 1578ஆம் ஆண்டு, ஹென்றிக்ஸ் அடிகளார் தமிழில் ‘தம்பிரான் வணக்கம்’ என மொழிபெயர்த்து அச்சு நூலாக்கினார். (அச்சில் ஒற்று இல்லாமல் தமபிரான வணககம என உள்ளது). இந்திய மொழிகளில் முதலில் அச்சேறிய மொழி தமிழ்தான். இந்நூலின் தலைப்புகள் போர்ச்சுகீசிய மொழியிலும் ஜெபங்கள் தமிழிலும் அச்சேறியுள்ளன. இந்நூலின் கடைசி வரி ‘Soli DEO honor, et gloria - Amen’ (இது கடவுளுக்கே பெருமையும் புகழும் - ஆமென்). இந்நூல் அச்சேறிய இடம் கொல்லம் இறை மீட்பர் கல்லூரி (ஆதாரம் - மோ.நேவிஸ் விக்கோரியா தொகுத்த முத்துக்குளித்துறைப் பரதவர்கள்). 1714ஆம் ஆண்டு சீகன்பால்கு, தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் புதிய ஏற்பாடு (பைபிள்) நூலினைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சில் ஏற்றினார். தமிழின் முதல் அச்சு நூல் சீகன் பால்கு அச்சேற்றிய புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்புதான் என்கிறது ஜான் முர்டோ தொகுத்த Tamil Printed Books -1865. இப்பதிவு தவறானது. Doctrina Christam என்றால் விசுவாசக் கோட்பாடுகள் என்று பொருளாகும். இதுவே மொழிபெயர்ப்பில் தம்பிரான் வணக்கம் என்றாகியது. வணக்கம் என்பது ஜெபம் (Prayer), வழிபாடு (Worship). தம்பிரான் என்பது என்ன? தம்பி ரானருள் சார்வினைச் சார்ந்துய்வான் - (இரட்சணிய யாத்திரிகம்) அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்ன தானும் தமிழிலேதாலை நாட்டி (கம்பராமாயணம்). திருவிதாங்கூர் அரசரின் பட்டப்பெயர் தம்பிரான். சைவத் துறவிகள் தம்பிரான்கள் என அழைக்கப்படுகிறார்கள். பதிணெண் சித்தர்களில் ஒருவர் தம்பிரான் சித்தர். இவரது சமாதி காங்கயத்திற்கு அருகில் ஊதியூர் மலையில் உள்ளது. பெரிய தம்பிரான், சலவைத் தொழில் செய்பவர்களின் குலதெய்வம். இலங்கை மட்டக்களப்பில் இத்தெய்வத்திற்கான ஆலயங்கள் நிறைய உள்ளன. ‘தம்பிரான் தோழர்’ என ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்கிறது ‘’திருத்தொண்டத் தொகை’. நன்னூல் இலக்கண நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர் ‘கூழங்கைத் தம்பிரான்’. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்’ - அ.தாமோதரன் எழுதிய ஒரு நூல். தம்பிரான் - தம் + பிரான், தம் என்பதற்கு கொடை, தற்காத்தல், நன் முகூர்த்தம், பங்கிடுதல், புண்ணியம், மகாவாக்கிய நான்கினொன்று, மனையாட்டி, உயிர் எனப் பல பொருளுண்டு. டாக்டர் அம்பேத்கர் எழுதிய ஒரு நூல் ‘புத்த தம்மம்’ அதாவது, ‘புத்தம் அற வழி’. இங்கு தம் என்பது அறம். இதிலிருந்து தம்பிரான், அறத்தின் தலைவன். நா.கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியின் படி, தம்பிரான் - கடவுள், கட்டளைப்படி நடத்துவோன், திருகூட்டத்தலைவன். லிப்கோ தமிழ் அகராதியின் படி, தலைவன், மடங்களின் சைவத் துறவி. தம்பிரான் வணக்கம் என்பது மதம் சார்ந்த நூல். தம்பிரான் - தாமே + பிரான் எனப் பிரித்து அனைத்தையும் படைத்தவன் தாமே எனவும் பொருள் கொள்ளலாம். இதன்படி தம்பிரான் என்பது இறை. பழைய சொல், புதிய தேடல் ‘’ஒழுகு’ - -ஜூலை 21, 2019 ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளம் முகமது யாசின், அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறவன். கடந்த ஆண்டு சாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டுபோய் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பணத்தை ஒப்படைத்திருக்கிறார். இச்செய்தி ஊடகங்களில் வெளிவர, நடிகர் ரஜினிகாந்த் முகமது யாசினை தனது வீட்டிற்கு வரவைத்து பாராட்டியதுடன் அவனது கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டார். இச்சம்பவம் இரண்டாம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடத்தில் ‘நேர்பட ஒழுகு’ கார்ட்டூன் விளக்கப் பாடமாக இடம் பெற்றுள்ளது. ஒழுகு என்பது என்ன? “வண்ணந் தானே நாலைந்தென்ப ..” என்கிறது தொல்காப்பியம். வண்ணம் என்பது பா( பாடல்) வின் நடையழகு. 4×5 =20 இருபது வண்ணங்களில் ஒரு வகை ஒழுகு வண்ணம். ஆற்றுநீர் பொருள்கோள் பாடல்கள் , நீரோடைப் போல பேசுதல் யாவும் ஒழுகு வகையைச் சேர்ந்தவை. வாய்க்கொழுப்பு சீலையில் ஒழுகுதாம் - கிராம சொலவடை . ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தனும் (ஒன்பது துளைகளுள்ள ஒழுகு உடம்பு) என்கிறது திவ்வியப் பிரபந்தம். ஒழுகு என்பது வரலாற்றைக் காலவரிசைப்படி தொகுத்தலைக் குறிக்கும். ஒழுகு - chronicle. Deacon என்பதற்கு தூதுவர் (messenger), தேவாலய மணியக்காரர் (servant), செய்தித் தொடர்பாளர் (runner)எனப் பலவாறு பொருள் கொள்ளலாம். இதன்படி Deacon Chronicle என்கிற பிரபல ஆங்கில பத்திரிகை ‘தூதொழுகு’. 600 ஏக்கர் பரப்பளவு தீவில் எழுப்பப்பட்ட திருவரங்கம் கோயிலின் வரலாற்றைக் கூறும் நூல் - ‘கோயிலொழுகு’. இதன்படி, தர்மவர்ம சோழனால் கட்டப்பட்ட திருவரங்கம் காவிரிப் பெருக்கால் அழிந்துவிட, கிளிச்சோழனால் திருத்திக் கட்டப்பட்டது. ஒழுகு என்பதற்கு கூறுதல் என்று பொருள். ஒப்புரவு ஒழுகு. இங்கு ஒழுகு என்பதற்கு அதன்படி நடத்தல் . கற்றதொழுகு. கற்றவற்றைப் பின்பற்று (பாரதியார் ஆத்திசூடி). ஒழுகு, ஒழுகை - வண்டியைக் குறிக்கும் ஒரு சொல் (யாழ்ப்பாணம் அகராதி) இயல் இரட்டித்தல் புணர்ச்சி விதியின் படி, வினைகள் அதிலுள்ள மெய் எழுத்துகள் இரட்டித்து பெயராக்கம் பெறும். அதாவது, ஒழுக்க் +அம் - ஒழுக்கம். அம் - பின்னொட்டு. ஒழுகு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டு உருவாகும் பிற சொற்களாவன: ஒழுகல், ஒழுகலாறு, ஒழுகிசை, ஒழுகிசைச்செப்பல், ஒழுகிசையகவல், ஒழுகிப்போதல், ஒழுகுகொண்டை, ஒழுகுநீட்சி, ஒழுகுமாடம், ஒழுகலான், ஒழுகப்படும், ஒழுகாய், ஒழுகுமதி, ஒழுகுவான்,… ஒழுகு - உயர்ச்சி, உயரம், ஒழுக்கம், நடை (செம்மொழி அகராதி). ‘தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்’ என்கிறது திருக்குறள். இங்கு ஒழுகுதல் என்பது மதித்து நடத்தல். ‘வையங்காவலர் வழிமொழிந் தொழுக’ -புறநானூறு. இங்கு, முறைப்படி நடத்தல். ‘கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம் ‘ - பழமொழி நானூறு. இங்கு, கடைபிடித்தல். ‘ஒழுகுகொடிமருங்குல்’ - தொல்காப்பியம். நேர்மைப்படுதல். ‘மின் ஒழுகு சாயன் மிகு பூட் பதுமை கேள்வன்’ - சீவகசிந்தாமணி. பரவுதல். ஒழுக்கெறும்பு - ஒரு பெரிய கறுப்பெறும்பு பிற எறும்புகளை வரிசையில் நடத்திச் செல்லல். இவ்வாறாக, ஒழுகு என்பதற்கு வரலாறு கூறுதல், பாய்தல், சொட்டுதல், முறையாக நடத்தல், வரிசையாக அடைந்திருத்தல், பரந்திருத்தல், வளர்தல், அதிகரித்தல், அமிழ்தல், இளகுதல், ஒழுகுதல் எனப் பலப் பொருள் இருந்தாலும் நேர்பட ஒழுகு என்பதில் ஒழுகு என்பதற்குப் ‘பின்பற்றி நடத்தல்’ எனப் பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் ‘மதலை’ -ஆகஸ்ட் 4, 2019 பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ‘மிகச் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார்’ எனப் பதிவிட்ட அப்பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொஞ்சுவதும், விளையாடுவதுமாக இருந்தார். கடுமையான முகத்துடன் இருக்கும் மோடி, இந்தப் புகைப்படங்களில் மிக மகிழ்ச்சியாகத் தெரிந்தார். இதுபோன்று கவனத்திற்குள்ளாகும் குழந்தைகளுக்கு மொழியியல் சூட்டும் பெயர்கள் என்ன? சீனப் புரட்சியின் போது ‘லீ ‘யின் தந்தையை தேசியப் படையினர் கொன்றுவிட, லீ தாயிடம் வளர்கிறார். இவ்வாறு தந்தையற்ற குழந்தை ‘கைம்பெண் குழந்தைகள் (faderleas baby)’ என அழைக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் தாயில்லா குழந்தை - ‘பிறப்பு விரும்பாக் குழந்தை’. ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தில் கிளாடியஸ், ஹேம்லட்டின் தந்தை யைக் கொன்றுவிட அவன் தந்தையில்லாமல், தாய் யாரென்றும் தெரியாமல் வழிப்போக்க னால் எடுத்து வளர்க்கப்படுகிறான் - இவன் ‘தத்துப்பிள்ளை( Toddler baby)’. திருமணமாகாமல் பிறக்கும் குழந்தை ‘ஊற்றுக்குழந்தை (Lebensborn baby)’. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லர் நாஜீ படைகளைப் பெருக்க இவ்வகை குழந்தைகளை ஆதரித்தார். தாய், தந்தை இருவருமற்றக் குழந்தை - ‘அனாதைக் குழந்தை (Orphan baby)’. தேசமற்ற அகதிக் குழந்தைகள் - ‘மிதக்கும் குழந்தை (Float baby)’. ஒரு தேசத்தின் அதிபரின் குழந்தை - ‘தலைக்குழந்தை (first baby)’. மகாராணி, இளவரசிகளுக்குப் பிறக்கும் குழந்தை - அகப்பைக் குழந்தை (Silver Spoon baby). கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் இந்தியாவிற்கு வருகை தருகையில் ட்ரூடோவின் மகனுடன் மோடி கைக்குலுக்கினார். இக்குழந்தை ‘எஜமான் குழந்தை (Boss baby)’. பிரபலமானவர்களின் புகைப்படக் குழந்தை - ‘முன்னோடிக் குழந்தை’ (Poineer baby) என அடையாளப்படுத்தப்படுகிறது. உதாரணம் ஆபிரகாம் லிங்கனின் குழந்தைப் புகைப்படம். யாரையும் வசீகரிக்கும் குழந்தை - ‘எடுப்பார் கைப்பிள்ளை’. உதாரணம் குழந்தை இயேசு, முருகன். ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே தலைவர் என்கிற கொள்கையைக் கொண்ட அடால்ப் ஹிட்லர், உஸ்சி ஸ்க்னெய்டர் என்கிற பெண் குழந்தையைக் கொஞ்சியக் காட்சியை Galerie Bilderwelt என்கிற நிறுவனம் புகைப்படம் எடுத்து வெளியிட்டது. இக்குழந்தை ஹெர்டா ஸ்க்னெய்டரின் மகளாவார். ஹிட்லரைக் கவர்ந்த இக்குழந்தையை ஆங்கில பத்திரிகை ‘the Fuhrer’s child’ என எழுதியது. Fuhrer என்பது ஜெர்மன் சொல். இதற்கு மன்னன், சர்வதிகாரி, வழிகாட்டி என்பதாகப் பொருள் கொள்ளலாம். இத்தகையவர்களின் அன்பைப் பெறும் குழந்தைகளை தமிழில் என்னப் பெயரிட்டு அழைக்கலாம்….? குழந்தை என்பதற்கு மழலை, குழவி, பிள்ளை, மதலை, மகன், மகவு, சிசு எனப் பலப் பெயருண்டு. ஆங்கிலத்தில் child, baby, infant. மதலை - குழந்தையைக் குறிக்கும் தனித்த தமிழ் இலக்கியச் சொல். கம்பராமாய ணத்தில், இந்திரசித்தன் மதலை என அழைக்கப்படுகிறான். இங்கு மதலை என்பது ‘சிறுபிள்ளை’. ‘வாதுகள் பேசிடு மாந்தர் குரலும் மதலை யழுங் குரலும்’ (பாரதியார் - தனிப்பாடல்). ‘மதலை மாடமும் வாயிலும்’ என்கிறது மணிமேகலை. இங்கு மதலை - தூண். ‘தசரதன் மதலை அரக்கனை அடுபழிஒழிப்பான்’ (இராமநாதேச்சரம் தல பதிகம்). இங்கு மதலை - மகன். மதலை என்பதற்கு கொன்றை மரம், மகன், மரக்கலம், கொடுங்கை, தூண் என்ப தாக சூடாமணி நிகண்டு பொருள் தருகிறது. மதலை - குழந்தை (பிங்கல நிகண்டு). திருக்குறளில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. பேரா.எஸ்.வையாபுரிபிள்ளை ‘மணிச்சுடர் மணிகள்’ என்கிற நூலில் மதலை என்பது ஆரிய சொல் என்கிறார். இதை செந்தமிழ்ச்செம் மல் பேரா.சி.இலக்குவனார் மறுத்து மதலை தூய தமிழ்ச்சொல் என்கிறார். ‘முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை’. இக்குறளில் மதலை என்பது துணைவன், நண்பன், தூணைப்போன்று தாங்கும் நண்பன் என்கிற பொருளைத் தருகிறது . பிரதமர் மோடி வைத்திருக்கும் குழந்தை, முன்னாள் மத்திய அமைச்சரும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினருமான சத்தியநாராயணன் ஜாதியாவின் பேரக்குழந்தை. பெரிய இடத்து குழந்தை என்பதாலும் மோடி அக்குழந்தையை ‘நண்பர்’ என அழைத்ததாலும் ‘மதலை‘ என அழைப்பது பொருத்தமாக இருக்கும். ைய சொல், புதிய தேடல் ‘ஓற்பலம்’ -ஆகஸ்ட் 11, 2019 தேவதாஸ், சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய காதல் காவியம். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த தேவதாஸ், (தந்தை நாராயண முகர்ஜி). தன் பக்கத்து வீட்டு சிறுமி பார்வதியுடன் சேர்ந்து விளையாடுகிறான். இவனது அன்பை விடவும் அவள் காட்டுவது பேரன்பாக இருக்கிறது. குழவிப் பருவத்தில் துவங்கும் இந்தப் பாசப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் காதலில் வந்து நிற்கிறது. பார்வதியின் தந்தை நீலகண்ட சக்கரவர்த்தி மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். தேவதாஸ், தன் பெற்றோருடன் பார்வதிக்காக பேசுகையில் அக்குடும்பம் தமக்கு நிகரானக் குடும்பமல்ல என மறுத்துவிட பார்வதி, புவன் சௌதுரி என்கிற செல்வந்தருக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்படுகிறாள். பார்வதியின் பிரிவு தேவதாஸைக் கவலையில் தள்ளி குடியில் ஆழ்த்துகிறது. அவனது நிலையைக் கண்டு கவலைப்படும் சந்திரமுகி என்கிறவள் அவன் மீது நேசம் கொள்கிறாள். அவளிடமிருந்து விலகும் தேவதாஸ் தந்தை மரணத்திற்குப் பிறகு சொத்துகளை விற்று, குடித்து, நோயுற்று, மரணவாயிலை நெருங்கி பார்வதி வீட்டு வாசல் முன் இறந்து கழுகுகளுக்கு இரையாகிறான். இந்நாவலின் ஓரிடத்தில் தேவதாஸ், பார்வதியின் கண்களை ‘நீலோத்பலம்’ என வர்ணிக்கிறான். (மொழிபெயர்ப்பு - புவனா நடராஜன்). இரம்மிய தேசத்து மக்கள் நிலோத்பலம் மலர் போன்ற நிறத்தை உடையவர்கள் என்கிறது புராணம். புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை - இவை அதிர்ஷ்ட மலர்கள் என்கிறது ஆன்மீகம். சங்க இலக்கியங்கள் நீலோத்பலம் மலரை நீலம் எனப்பாடியுள்ளன. பிரமிள் எழுதிய ஒரு சிறுகதை ‘நீலம்’. இக்கதையில் மேற்கத்திய ஓவியங்களை கிறுக்கல்களாக வரைந்து திரியும் ஒரு ஓவியனிடம் ஒரு சிறுவன் ஒரு பூவைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான் அப்பூ, நீலோத்பலம். நீலோத்பலம் தாமரை, அல்லி, ஆம்பல் போன்று தண்ணீரில் வளரக்கூடிய மலர். ஆம்பல் போலவே நீலமும் இருக்கும். ஆம்பல் வேறு, நீலம் வேறு. இதழ் கூர்மையாகக் கொண்டது ஆம்பல். இதழ் முனை மழுங்கி இருப்பது நீலம். பெண்களின் கண்களுக்கு நீலத்தையும் ஆண்களின் கண்களுக்கு தாமரையையும் உவமையாகச் சொல்கிறது இலக்கியம். நீலத்து அன்ன பாசிலை - நற்றிணை நீலத்து அன்ன பைம்பயிர் – மதுரைக்காஞ்சி வள்ளிதழ் நீலம் - குறுந்தொகை ஸ்ரீலங்கா 1986ஆம் ஆண்டு அமைச்சரவையைக் கூட்டி தேசிய மலரென நீல அல்லியை அறிவித்தது. பிறகு அம்மலரின் பெயரை நீலோத்பலம் எனத் திருத்தியது. நீலம்-தமிழ்ப்பெயர். நீலோத்பலம்-வடசொல். நீலோத்பலம் எனத் திருத்தியதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அரசாணையில் மலரின் படம் வேறொன்றாக இருக்க பேராதனைப் பல்கலைக்கழக தாவிரவியல் பேராசிரியர்கள் இது நீலோத்பலம் அல்ல எனச் சுட்டிக்காட்டினார்கள். அல்லியில் 50 வகைகள் உள்ளன. வெளிர் நீல அல்லியே நீலோத்பலம். ஆனால் ஸ்ரீலங்லா அரசு வெளியிட்டது கருஅல்லி. அரசாணையை மேலும் திருத்தம் செய்த அவ்வரசு தற்போது நீர்அல்லியை தேசிய மலராக ஏற்றுக்கொண்டுள்ளது. நீலோற்பலம் என்பதே நீலோத்பலம் என்றாகியிருக்கிறது. நீலம் + ஓற்பலம் நீலம் - மலர் ஓற்பலம் என்பது? நீலோற்பலம், தவளோற்பலம், மாவோற்பலம் இம்மூன்றும் இச்சொல்லுடன் தொடர்புடைய பிற சொற்கள். நீலோற்பலம் என்றால் நீல ஆம்பல் அல்லது கருங்குவளை. தவளோற்பலம் என்பது வெள்ளை அல்லி (வெண்ணல்லி) அல்லது வெண்குவளை. மாவோற்பலம் (மகோற்பலம்) என்றால் தாமரை. கீழிருந்து மேலாக தண்ணீர் குவளையைப் போல விரிந்தடுக்குத் தொகுப்பிற்கு ஓற்பலம் என்று பெயர். ஆகவே இதை தமிழில் குவளை எனச் சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘ஈறு’ -செப்டம்பர் 15, 2019 அஸ்ஸாம் மாநிலத்தில் வசிப்பவர்களில் உண்மையான குடிமகன் யார், வெளிநாட்டி னர் யார் என்கிற கணக்கெடுப்பு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடந்தேறியது. Assam NRC | No last word yet on National Register of Citizens: Himanta Biswa Sarma. (THE HINDU). மொத்தமுள்ள 3 கோடி பேரில் 19 இலட்சம் பேர் வெளிநாட்டினர் என்கிற பட்டியல் வெளியானது. இப்பட்டியலிருந்தவர்களில் பலர் தாங்கள் அஸ்ஸாமியினரே எனக் கதறவும் எங்களை உண்மையான இந்திய அஸ்ஸாமி பட்டியலில் சேர்க்க வேண்டுமென வும் கோரிக்கை வைத்தார்கள். இந்நிலையில் அம்மாநில அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா (பாஜக), ‘மோடி மற்றும் அமித்ஸா இருவரும் இந்துக்களை கைவிடமாட்டார்கள். கவலை கொள்ள வேண்டாம். இப்பட்டியல் ஒன்றும் கடைசிச் சொல் அல்ல’ என்றார். இறப்பதற்கு முன் சொல்வதும், ஒரு சம்பவம் முடிவுறும் பொருட்டு மொழிதலும் கடைசிச் சொல் என அழைக்கலாகின்றன. காந்திஜி உச்சரித்த கடைசிச் சொல் - ஹேராம். ஜூலியஸ் சீசர் - புரூட்டஸ்?; காமராசர் - விளக்கை ‘அணை’. திருக்குறளின் கடைசிச் சொல் - பெறின். லிப்கோ ஆங்கில அகராதி - Zymurgy/ஆக்ஸ்போர்டு அகராதி - Zucchini/லியோ தமிழ் அகராதி - வௌவு/வேமன் அகராதி - வௌவால்/அபிதான சிந்தாமணி - க்ஷேமியன்/மணவை முஸ்தபா தொகுத்த மருத்துவக் களஞ்சியப் பேரகராதி - zz. சரி, கடைசிச் சொல்லுக்குத் தமிழ் இலக்கணத்தின்படி என்னப் பெயர்? தொல்காப்பியம், ‘எழுத்து எனப்படுப அகர முதல் னகர இறுவாய்’ என்றும் அகத்திணை குறித்து ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப’ என்கிறது. இங்கு இறுவாய் என்பது முடிவு அல்லது முடிய. இறுவாய் என்பதற்கு இறப்பு அல்லது மரணம் என்றொரு பொருளுண்டு. பாவலர் தி.முருகுசுந்தரம் எழுதிய ஒரு வரலாற்று நூல் ‘கென்னடி வீர வரலாறு’. இந்நூல் தோற்று வாய் என்பதில் தொடங்கி இறுவாய் - இல் முடிகிறது. ‘இறுவாய்’ தலைப்பு கென்னடியின் மரணம் குறித்து பேசுகிறது. சரியாக இருபது ஆண்டுகளுக்கொருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் துப்பாக்கியால் படுகொலைக்கு உள்ளாகிறார்கள். 1.ஹாரிசன் (1840) 2. ஆப்ரகாம்லிங்கன் (1860) 3. கார்பீல்டு(1880) 4. மெக்கின்லி (1900) 5. ஹார்டிங் (1920) 6. பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் (1940). மேற்கூறியவர்களில் ரூஸ்வெல்ட் மட்டுமே உயிர் பிழைத்தார்.1960 ஆம் ஆண்டு கென்னடி அமெரிக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். கடைசி என்பதற்கு அந்தம் என்றொரு பதம் உண்டு. அந்தம் என்பதற்கு அழகு, கடை, கத்தூரி, குருடு, முடிவு, சாவு, எல்லை, அறியாமை என்பதாக வடமொழி அகராதி பொருள் தருகிறது. ஒரு பாடலில் இறுதியான சொல், பொருள், எழுத்து முதலியவற்றில் ஒன்றை வரும் பாட்டின் முதல் சொல்லாக வைத்து மாலை பின்னுவதைப் போல பாடுவது அந்தாதி. அந்தாதி என்பது வடமொழிச் சொல். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் ஈற்றெடுப்பு அல்லது ஈற்றுமுதலி. இறுவாய் - ஈறு, ஈற்று, இறுதி. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் ஒரு சொல்லின் கடைசி எழுத்தை ‘ஈறு’ என்கிறது. ஆண், பெண், பலர், அஃறிணை, உயர்திணை எனப் பிரித்துக்காட்டுவது ஈற்று எழுத்துகளே! அவ’ன்’; அவ’ள்’; அ’து’; அவ’ர்’; அவர்’கள்’. இங்கு ன், ள் - மெய்யீற்று; து (உ) - உயிர் ஈற்று. ஈறு - பேன் இனத்தின் முட்டை; பற்கள் தசையுடன் வேர் கூடுமிடம். உப்பளம் - ஈறு (திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்தம்). ஈறு என்பதற்கு எல்லை கடந்த சொல் என்றொரு பொருளுண்டு. உதாரணம், காந்தியின் பிரகடனம் ‘வெள்ளையனே வெளியேறு’. ஈறுதப்பின பேச்சு தகாத மொழி (வட்டார வழக்கு). ஒருவர் எல்லை மீறும் போது அவரின் மீது பிரயோகிக்கும் மொழி. ஈற்றயல் - இறுதிக்கும் முந்தையது (penultimate). ஈறாக - வரை (to). ஈற்றடி - கடைசி வரி. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - பாடாப் பைங்கிளி. இதில் பாடாத பைங்கிளி இதில் ‘த’ கெட்டு ‘ப்’ ஆக மாறியுள்ளது. ஈறே முடிவும் பயனுமாகும். (கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு). பிஸ்வா சர்மா, அறிவித்த கடைசிச் சொல் (இறுதி) ; இந்து மதத்தினரை மோடி, அமித்ஷா கைவிட மாட்டார்கள் (மதம் சார்ந்த தகாத மொழி) - இரண்டும் ‘ஈறு’ என்கிற ஒற்றைச் சொல்லால் குறிக்கலாம். பழைய சொல், புதிய தேடல் ‘குழாம்’ -செப்டம்பர் 22, 2019 எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம் - இந்து தமிழ் திசை இதழில் செல்வேந்திரன் எழுதிய ஒரு கட்டுரை. திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்சோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் யோஜனா, ஸ்மார்ட் சிட்டி , பொருளாதார நெருக்கடி,..என எந்தவொரு கேள்விக்கும் கல்லூரி மாணவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சினிமா பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறார்கள்,…இன்றைய கல்லூரி மாணவர்கள் குறித்து கவலைப்படும் கட்டுரையாளர் மொக்கை என்கிற சொல்லுக்கு கூர்மையற்ற, மொக்கு, மொண்ணை என்பதாகப் பொருள் தந்திருந்தார். குழாம் என்பது என்ன? இலங்கை தமிழர்களிடம் இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘20 -20 மட்டைப்பந்து போட்டிக்கு இலங்கை குழாம் அறிவிப்பு - வீரகேசரி’. இங்கு குழாம் என்பது அணி. விண்மீன் குழாம் (விண்மீன் கூட்டம்) சென்னையில் இயங்கிவரும் ஓர் இலக்கிய அமைப்பு ‘சென்னை மரபுக்கூடல்’. இந்த அமைப்பு மரபு இல்லம், ஆற்றுப்படை, செம்மை நல அரங்கு, செம்மை நூலகம், நூல் விற்பனை, பொது அங்காடி, கருத்துப்பெட்டி, கற்போர் குழாம் என பல துணை குழாம்களால் இயங்குகிறது. இங்கு குழாம் என்பது படை என்று கொள்ளலாம். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் BATCH என்பதை குழாம் என வரையறுத்துள்ளது. அதாவது மூன்றாமாண்டு மாணவர்கள் சேர்க்கை என்பதை மூன்றாம் குழாம் சேர்க்கை என்கிறது. இங்கு குழாம் என்பது தொகுதி அல்லது ஆண்டு. ‘ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து கூடும் மனமுடையீர்கள் ‘ என்கிறார் பெரியாழ்வார். இங்கு ஏடு - உடல்; குழாம் - குழு. ‘ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்’ என்கிறது ஒன்பதாம் திருமறை. அமரர் குழாம் - தேவர்க்கூட்டம். கம்பராமாயணம் அயோத்திய காண்டம் 16 ஆவது பாடல் குழாம் எனபதற்கு திருவடி என்பதாக பொருள் தருகிறது. கம்பராமாயணத்தில் கம்பர் குழாம் என்பதை திரள் என்பதாகக் கொண்டு பல வகையாகக் காட்சிப்படுத்தியுள்ளார். பதர்க் குழாம், பூரியர்(கீழ்மக்கள்) குழாம் , தேர் குழாம் , குடைஇழந்த வேந்தர் குழாம், கதிர்க் குழாம், கூடா மன்னர் குழாம், பிள்ளைக்குழாம், மகளிர் குழாம், இளைஞர் குழாம்;….இப்படியாக. இராமன் அயோத்தி நகரை விட்டுப் பிரிகிறான். மக்கள் அழுகிறார்கள் ‘ஆடினர் அழுதனர்; அமுத ஏழ் இசை பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர், ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக் கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே’ இங்கு குழாம் குழாம்கொடே என்பது கும்பல் கும்பலாக ; கூட்டம் கூட்டமாக. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம் ‘ மேயபல ஆரியர் குழாத்தினுள் பூரியர்/ விராயதென வாய தூய/வெள்ளோதி மக்குழாம்/ நிலைகுலைய மேதிகால்’ என்கிறது. அதாவது, ஆரியக் கூட்டத்தில் கீழ்மக்கள் கலந்திருப்பது அன்னம் புழங்கும் நீரில் எருமைகள் குளிப்பது போன்றது என்கிறார் திரிசுபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. ‘கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்’; ‘சான்றோர் குழாஅத்து பேதை புகல்’ இரு குறட்களில் குழாம் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். முன்னது கூட்டம், பின்னது சபை. தொல்காப்பியம் - புள்ளி மயங்கியல் ‘குயின் குழாம், செலவு, தோற்றம், மறைவு’ என்கிறது. அதாவது இங்கு குயின் குழாம் என்பது மேகத்திரள். குழு (group); திரள் (bunch), கூட்டம் (crowd), சபை (assembly) , சங்கமம் (society), herd (மந்தை), company (குழுமம்), flock (தொகுப்பு), drove (சரம்) இச்சொற்களுக்கு நிகரான சங்கச்சொல் குழாம். குழாம் என்பதே குழுமம் - குழு என்பதாக மருவி இருக்கின்றன. இன்றைக்கு இச்சொல் கோஷ்டி என்றும் கும்பல் என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. பழைய சொல், புதிய தேடல் ‘பகம்’ -செப்டம்பர் 29, 2019 ஆந்திர மாநிலம், சித்தூர் (தனித்தொகுதி) மக்களவைத் தொகுதியிலிருந்து கடந்த 2009 ஆண்டு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத், ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 -14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையெடுத்து ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவபெருமான், அம்பேத்கர், நாரதர், கலைஞர், எம்.ஜி.ஆர், அகத்தியர், ஹிட்லர், நாதஸ்வர வாசிப்பாளர்,..என தினமும் விதவிதமான கதாபாத்திர வடிவில் ஆடை அலங்காரம் செய்து விநோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். செப்-21, 2019 அன்று அவர் மறைந்ததையடுத்து பதினெட்டு கதாபாத்திரங்கள் கொண்ட கோப்புப் படத்துடன் கூடிய இரங்கல் செய்தியை இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்கிற திரைப்படத்தில், அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் நடித்துள்ளார். நவம் என்றால் ஒன்பது. கமலஹாசன் ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். தசம் என்றால் பத்து. நவம், தசம் இரண்டும் வடமொழிச் சொல். சரி, ஒரு நடிகர் பதினெட்டு வேடங்களில் திரையில் தோன்றுவதாகக் கொண்டால் அதற்கு என்ன பெயர்? ‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’ என்றொரு வரி பெரும்பாணாற்றுப் படையில் வருகிறது. இங்கு, பல் - பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து. அதாவது, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்கிறார் நச்சினார்க்கினியர். தமிழ் இலக்கியத்தில் கலம்பகம் என்றொரு வகை உண்டு. தமிழின் முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். இந்நூல் பல்லவ மன்னர்களில் ஒருவனாகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. ‘பல்வகைச் சுவைகளும் பாங்குற நிறைந்து, தெய்வங்களையோ, மக்களுட் சிறந்தாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, பல்வகை உறுப்புக்களைப் பெற்று வருவதைக் கலம்பகம்’ என்பர். A Kind of poem Composed of different kinds of stanza’s என்று தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது. கலம்பகம் - கலம்பு + அகம். இதன்படி, அகத்திலுள்ளதை கலந்து பேசுதல் என்பது பொருள். கலம் + பகம் எனப் பிரித்தும் பொருள் காணலாம். கலம் என்பதற்கு உண்கலம், பாண்டம், குப்பி, கப்பல், இரேவதி, அணிகலன், யாழ், கலப்பை, ஆயுதம், ஓலைப்பாத்திரம், ஒரு முகத்தலளவை, வில்லங்கம் என்பதாக பல பொருள் உள்ளன. பேராசிரியர் எஸ்.வஜ்ரவேலு தொகுத்த புதுவை - காரைக்கால் வழக்குச்சொல் அகராதி கலம் என்பதற்கு பன்னிரண்டு மரக்கால் என்கிறது. கலம் - பன்னிரெண்டு (டஜன்). பகம் என்பதற்கு அவாவின்மை, ஈச்சரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரிய, மென்னுயறு குணம், அழகு, காந்தி, கொக்கு, பெண்குறி, மகத்துவம், முத்தி, கொடி என பல பொருளுண்டு. மேலும் பகம் என்பதற்கு பாகம், பகுதி , பாதி எனவும் பொருள் கொள்ளலாம். பகம் என்பதே பாகம் - பாதி எனத் திரிந்தன. பகப்பிரிவினை என்பதே பாகப்பிரிவினை என்றானது. பகம் என்பதற்கு வடமொழியில் ஆறு என்றொரு பொருள் உண்டு என்கிறார் கி.வா.ஜ. கடவுளைக் குறிக்கும் பகவன் என்பது பகவான் என்கிற வடசொல்லின் திரிபே. பகம் என்பது ஐசுவரியம்,வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்களைக் குறிப்பது. இந்த ஆறு குணங்களையுடையவன் ஆதலால் பகவான் என்ற பெயர் வந்தது.(விடையன் பதில்கள்). கலம்பகம் - 12+6 =18. கலம்பகம் உறுப்புகளாவன:-புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் (இலக்கண விளக்கம் ‘ பொருளதிகாரம்). இதிலிருந்து பதிணென் வேடங்களுடன் திரையில் தோன்றும் நாயகனை கலம்பக நாயகன் எனலாம். பழைய சொல், புதிய தேடல் ‘எவன்கொலோ’ -அக்டோபர் 6, 2019 ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது விவாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டால் அது உலக நாடுகளைப் பாதிக்கும்,… என்றார். அவரது உரையை இந்திய பத்திரிகைகள் ‘ hate speech’ என எழுதின. அவரது உரைக்குப் பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் விதிஷா மைத்ரா, ‘ Words matter in diplomacy (ராஜரீக உறவுகளில் வார்த்தைகள் முக்கியமானவை); Pogrom ( இனப்படுகொலை), bloodbath( இரத்தக்களரி), racial superiority ( இனவாதம்), pick up the gun( துப்பாக்கியைத் தூக்கு), fight to the end ( கடைசி வரை சண்டையிடு) என இம்ரான்கான் பயன்படுத்திய வார்த்தைகள் இடைக்காலத்தைப் பிரதிபலிப்பவை தவிர, 21 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை அல்ல’ என்றவர் ஐ.நா பெருமன்றம் வன்சொற்களை விடவும் இன்சொற்களையே பெரிதும் விரும்புவதஆங்கிலத்தில் உரையாற்றினார். 21 ஆம் நூற்றாண்டின் வன்சொற்களென இரு சொற்களை உலக நாடுகள் அறிவித்துள்ளன. அவை Pogrom , Genocide . இவ்விரண்டும் பேரினவாதம் என்கிற பெயரில் குறிப்பிட்ட இனமக்களைத் திட்டமிட்டு கொன்றொழிப்பதைக் குறிக்கும் சொற்களாகும். வன்சொல் × இன்சொல். இவ்விரு சொற்களையும் திருவள்ளுவர் ஒரே குறளில் பயன்படுத்தியிருக்கிறார். ‘இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது’. எவன்கொலோ என்பது என்ன? இச்சொல் முதல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. ‘கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாங்கண் டது’ (கண்விதுப்பு அழிதல்). எவன்கோலோ - இச்சொல்லை அதிகமாக இடம்பெற்றுள்ள இலக்கியம் கலித்தொகை. பயன்படுத்திய ஆசிரியர் - நல்லந்துவனார். அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ? (காதலன் குறித்த காதலியின் மனக்கவலை). இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ? (காதலன் மீதான ஏக்கம் நோய்). ‘எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ?’ (காதலியின் ஏக்கம் கண்டு மரத்தின் இலைகள் உதிர்கின்றன) நாலடியாரில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. ‘எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ/உட்கான் பிறன்இல் புகல்’. ‘தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாடுதார்,வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?’ (பழமொழி நானூறு). அதாவது தன்னையே பாதுகாக்கத் தெரியாதவன் குதிரையில் செல்லும் மன்னனை எதிர்ப்பானேன்? திருக்குறள் உரையாசிரியர் மு.வரதராசனார் எவன்கொலோ என்பதற்கு ‘என்ன பயன் கருதியோ’ என்பதாக விளக்கம் தருகிறார். எவன்கொலோ - எதற்காக (கலைஞர் மு.கருணாநிதி). எவன்+கொல்+ஓ எனப் பிரித்து பொருள் தருகிறார் தேவநேயப் பாவாணர். எவன் - என்ன பயன், கொல் - அசைநிலை. ஓ - இரக்கப் பொருளது. அதாவது இரங்கிக்கூறுதல் (kindly speech). எவன்கொலோ என்கிற சொல்லை முதல் அதிகாரத்தில் திருவள்ளுவர் கட்டளைச் சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் பாவாணர். ‘கற்றதனால் ஆய பயன்கொல்’. இங்கு கொல் என்பது என்ன என்பதாகப் பொருள் தருகிறது. பாரதியாரின் தேசியகீதங்கள் பாடலில், சத்ரபதி சிவாஜி (தன் சைனியத்திற்குக் கூறியது) பகுதியில் எவன்கொலோ சொல்லை ‘யார்’ என்கிற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். ‘மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?’. ‘எவன்கொலோ வன்சொல் வழங்கு வது ‘ இவ்வரி ஆங்கிலத்தில் Why makes he use of harsh words என்பதாக மொழியாக்கம் பெறுகிறது. எவன்கொலோ என்பதற்கு யார், என்ன பயன், என்ன பயன் கருதியோ, எதற்காக, எதனால் ,… என்பதாக பொருள் கொண்டாலும் ‘ஏன்’ என்பது பொருத்தமான பதமாகும். பழைய சொல், புதிய தேடல் ‘மோடி’ -அக்டோபர் 13, 2019 பாரதியாரின் முப்பெரும் பாடல்களாவன கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு. மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். ஆனால் பாரதி, தன்னைத் தலைவனாகவும் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வ மாக என்று வரிசைப்படுத்தி பாடிய பாடல் இது. கண்ணன் - என் காதலன் பகுதியில், “ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன் மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போலே’’ என்பதாக ஒரு வரி. இப்பாடலில் மோடி என்பதன் பொருள் என்ன ? தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்துப் பிள்ளை சிவபெருமான் குறித்து பாடியுள்ள ஒரு பாடலில், பிட்டுக்கு மண் சுமந்தது, பிள்ளைக் கறி கேட்டது, சாதி இல்லாதவன், தாயும், தந்தையும் இல்லாதவன், குறவர் வீட்டுப் பெண்ணை மகனுக்கு மணம் முடித்தவன்,…என்பதாகப் பாடிச் செல்லும் ஒரு பாடலில் ‘மறை ஓதிவணங்கு நடேசரே உம்மை நான்/ ஒப்பாரும் இல்லாத தப்புலி என்றேனோ… ஏதுக்கித்தனை மோடிதான் உனக்கு / என்றன் மேல் ஐயா’ என இகழ்வதைப் போல புகழும் இப்பாடலில் மோடி என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. ‘கையாிய மண்டைக் கண் மோடி காவலர்க்குத் தான் முந்துறும்’ என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை. இங்கு மோடி என்பது பெரிய வயிறுடைய பெண் தெய்வம்(சக்தி). இந்திய எழுத்துரு மொழிகளில் மோடியெழுத்து என்றொரு வகை உண்டு. மராட்டிய எழுத்து - சேர்த்தெழுதும் வகை எழுத்து இது. மோடாமோடி என்றொரு சொல் உண்டு. இதற்கு பகட்டு அல்லது ஆடம்பரம் என்று பொருள். இச்சொல்லுக்கு அழகு, எழில் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இச்சொல் ‘மோடிமுட்டித் தனம்’ என வழக்குச் சொல்லாகியிருக்கிறது. மோடி+ மோடி - மோடிமோடி - மோடாமோடி. மோடி - செருக்கு , உயர்த்தோற்றம், வேடிக்கைக் காட்சி, பிணக்கு, ஏய்ப்பு என்பதாகவும் பொருள் கொள்ளலாம். ஊடலாய்ப் போவாரை மோடி திருத்துவார் என்கிறது - விறலிவிடு தூது. மோடி என்பதற்கு மொத்தம் என்றொரு பொருளுண்டு. ‘விதை நெல்லை சந்தையில் மோடியாய் வாங்கினேன்’. மோடி பந்தையம் - மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய உறழாட்டில் மந்திரம் செய்வோர்களுக்கிடையே நிகழும் போட்டி. மோடி வித்தை - ஒரு வகை ஏமாற்று வித்தை. மகிடி - மோடி மோடி குழல் - பாம்பாட்டியின் ஊது குழல் வகை. திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி. இதில் திப்பிலியின் வேர் - மோடி. மோடிக்காரன் - ஒப்பனை விரும்பி, பிணக்கங்காட்டுவோன், ஏய்ப்போன். மோடிப்புடவை - வெண்ணிறமுள்ள புடவை. மோடிமோதிரம் - பவுசான மோதிரம் மோடி வைத்தல்- கேடு விளைவிப்பதற்காகப் பாழ் பொருளைப் புதைத்து வைத்தல். மோடி விளையாட்டு - ஒரு கிராமத்து விளையாட்டு இது. ஒருவன் மணல் மேட்டுக்குள் ஒரு முட்டையை மறைத்து வைத்து ஏழுவாிகளை வரைவான். அந்த முட்டையைக் கண்டுபிடிப்பவனே மோடி. சூடாமணி நிகண்டு சக்தி என்பதற்கு காாி தாய், கொற்றி, மாாி, சூாி, முதணங்கு, காடுகாள், மோடி என்பதாக பொருள் தருகிறது. மோடிசை வெற்பென - மோடாமோடியாய்ச் செலவு செய்வது அதாவது கணக்கில்லாமல் செலவு செய்வது. மோடி என்பதன் வேர்ச்சொல் - முகடு. அகடு × முகடு (பள்ளம் × மேடு). முகடு - உச்சி, மேலிடம், கூரை. முகடு என்பதே மோடு என்றாகி மோடி என்பதாகத் திரிந்துள்ளது. மோடி என்பதற்கு கதிரை வேற்பிள்ளை அகராதி காடுகாள், பிணக்கு, மேட்டிமை, மெளடி, வேடிக்கை, வனத்தில் வாழும் காளி என்பதாகப் பொருள் தருகிறது. இதிலிருந்து பாரதியார் கண்ணன் பாட்டில் குறிப்பிடும் மோடி என்பது பிணக்கு என்பதாகப் பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் ‘ஐ’ -அக்டோபர் 27, 2019 ‘டிக்டாக் வீடியோக்கள் என்ன சொல்கின்றன? - இந்து தமிழ் - பெண் இன்று இதழில் பிருந்தா சீனிவாசன் எழுதிய ஒரு கட்டுரை. வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதிலிருந்து மீளத்தான் இப்படிப் பொதுவெளியில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் அவர். ஆனால் சேலம் அரசு மனநல மருத்துவர் அபிராமி, ‘ஆணோ, பெண்ணோ டிக்டாக், முகநூல் வழியே தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதை ‘ நார்சிசம்’ என்கிறார். அது என்ன நார்சிசம், இதற்கு நிகரான தமிழ்ச்சொல் தொன்மைத் தமிழில் உண்டா? கிரேக்க இதிகாச கதையில் நார்சிசஸ் என்றொரு கதாப்பாத்திரம். தன் முகத்தை ஒரு நாள் ஏரியில் பார்க்கிறான். அவன் முகம் அவனுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் அவனது முகத்தைப் பார்த்து ரசிக்கிறான். ஒரு நாள் அவனது முகத்தின் மீது அதீத மோகம் வர ஏரியில் தெரியும் அவனது முகத்தைக் கட்டித் தழுவ நீரோடையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறான். Tiktok என்கிற வீடியோ naarcissim personality disorder என்கிற நோயியத்தை ஏற்படுத்துவதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். Tiktok - ஜான் ஸ்லாடெக் எழுதிய ஒரு அறிவியல் புனைவு நாவல். இந்த நாவலின் கதாபாத்திரமான Ozma என்கிற மனித ரோபோ, வீட்டு முதலாளி எதிர்ப்பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கிறது. ரோபாவைப் பார்த்து பிரமிக்கும் முதலாளி தன்னை ரோபோவாக நினைத்துக்கொள்கிறார். தனக்குத்தானே சிலை வைத்துக்கொள்ளல், தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ளல், தன்னை சுயபடம் எடுத்து முகநூலில் பதிவிடுதல் யாவும் நார்சிசமே . Naarcisssim என்கிற சொல்லுடன் தொடர்புடைய சொல் megalomania. அதாவது தற்புகழ்ச்சி. ஐவகை இலக்கணங்களில் ஒன்று ‘அணி’. அணியில் ஒரு வகை ‘தற்புகழ்ச்சி அணி’. உதாரணம், ‘பிறர் முதுகில் சாரா என் கையில் சாரம்’. அதாவது, நான் எப்போரிலும் முதுகுப்புண் கண்டதில்லை என தன்னை புகழ்ந்து கொள்ளும் மன்னிடம் மற்றொரு மன்னன், என் அம்புகள் தோற்றோடும் புறமுதுகில் பாய்வதில்லை என புகழ்ந்துக்கொள்வது. தன்னைத் தானே புகழ்ந்துகொள்வதை வள்ளுவர் சிறுமைத்தனம் என்கிறார். ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’. ‘உடையது விளம்பேல்’ (உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே); வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்கிறது ஔவை ஆத்திசூடி. ‘கூரம் பாயினும் வீரியம் பேசேல்’ என்கிறது கொன்றை வேந்தன். தன்னைத் தானே புகழ்ந்துகொள்வது சில இடங்களில தேவை என்கிறது இலக்கண நூலான நன்னூல். ‘மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும் / தன்னுடை ஆற்றல் உணரார் இடையிலும் / மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் / தன்னை மறுதலை பழித்த காலையும் / தன்னைப் புகழ்தலுநம் தகும்புல வோற்கே (நன்னூல் 53). தன்னைத்தானே ரசிக்கும் செயலை குறிக்கும் வகையில், உளவியல் நிபுணர் சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய சொல் ‘நார்சிசம்’. கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்ப்பவர்கள்; நின்று கொண்டிருக்கும் கார் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ரசிப்பவர்கள்; அதிகமாக சுயபடம் எடுத்துக்கொள்பவர்கள்; முகநூலில் தன்னைக் குறித்த பதிவுகளை இடுபவர்கள்,… அனைவரும் நார்சிஸ்டு வகையினரே. ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த திரைப்படம் ‘ஐ’. நார்சிசஸ் கிரேக்க கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டது. ஐ என்பதற்கு தமிழ் அகராதி அரசன், அழகு, இருமல், ஒரு சாரியை, ஒரு தொழிற் பெயர் விகுதி, ஒரு பண்புப்பெயர் விகுதி, கடவுள், கடுகு, கருவிப்பொருளில் வரும் ஒரு பெயர் விகுதி, குரு, கோழை, தலைவன், சர்க்கரை, சவ்வீரம், சிவன், தண்ணீர் முட்டான் கிழங்கு, செயப்படுபொருளிலே வரும் ஒரு பெயர் விகுதி, தும்பை, துர்க்கை, நுண்மை, பருந்து, தந்தை, பெருநோய், யானைப் பாகனின் மொழி, ஆனந்த ஓசை, வினைமுதற் பெயரிலே வரும் ஒரு பெயர் விகுதி,வெண்ணெய், வியப்பு, ஐந்து, ஐயம், ஓர் இடைச்சொல், கணவன், மருந்து என்பதாகப் பொருள் தருகிறது. ஐயை (தலைவி), ஐயன் (தலைவன்) ஐ என்கிற சொல்லிலிருந்து பிறந்தவை. ஆங்கிலத்தில் I (ஐ), நான் மனநிலை என்பது நார்சிசம். தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை இலக்கண நூல் தண்டியலங்காரம், ‘தான்றற்புகழ்வது தன்மேம்பாட்டுரை’ என்கிறது. நார்சிசம் என்பது பிறர் மத்தியில் தன்னை மெச்சும்படியாக அலங்காரப் படுத்திக்கொள்வது. அதாவது சுயமோகம் கொள்வது. இதை நன்னூல் மொழியில் ‘ஓரலங்காரம்’ என்று சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘கொந்தர்’ -நவம்பர் 3, 2019 மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுடைய சுஜித் , 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். நவீன தொழில்நுட்பமும், உரிய கருவிகளும் இல்லாததால்தான் இத்துயரம் நேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ்பாபு, ‘ ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்க நவீன கருவிகளைக் கண்டுபிடிக்க ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 இலட்சம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார். ஹேக்கத்தான் ( HACKATHON ) என்பது என்ன? ஹேக்கத்தான், பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஸ்மார்ட் இண்டியா’ என்கிற திட்டத்துடன் தொடர்புடைய ஒரு சொல். கடந்த செப்டம்பர் மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 சென்னை ஐஐடியில் நடத்தியது. Hackathon, இச்சொல் Hack+ Marathon இவ்விரு சொற்களின் சேர்க்கை. மாரத்தான் , கிரேக்க நாட்டுடன் தொடர்புடைய சொல். புளூடார்ச் எழுதிய ON THE GLORY OF ATHENS என்கிற நூலில் இப்படியாக ஒரு குறிப்பு உண்டு. கிமு 490 இல் கிரேக்கர் - பாரசீகர்களுக்கு இடையிலான போரில் கிரேக்கப்படை வெற்றிபெற பெய்டிபைட்ஸ் என்கிற வீரன், மாரத்தான் நகரிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு வெற்றிச் செய்தியைக் கொண்டோடினான். இவ்விரு நகருக்கும் இடைப்பட்ட தூரம் 34.5 கிமீ. ஒரு மூச்சில் இலக்கைத் தொடுவது மாரத்தான். 1896 ஆம் ஆண்டு மாரத்தான் ஓட்டப்பந்தையம் ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பிறகு 1924 ஆம் ஆண்டு முதல் அப்போட்டியின் தூரம் 42.195 கிமீ என அதிகரிக்கப்பட்டது. இலக்கியத்தில் ஹேக் என்றொரு சொல் உண்டு. hack writer - கூலிக்காக எழுதுபவர்; hack work - நூல் வெளியீட்டிற்குச் செய்யும் இலக்கிய கூலி வேலை . Hack என்பதற்கு லிப்கோ அகராதி துண்டம் துண்டாக வெட்டுவது, வாடகைக்குதிரை, சலிப்புத்தரும் வேலையைத் தொடர்ந்து செய்பவர் அல்லது செய்ய அமர்த்தப்பட்டவர் என்பதாக பொருள் தருகிறது. Hacking கணினி, ஆண்ட்ராயடு வருகைக்குப்பின் பிரபலமடைந்த ஒரு சொல். கனடா தொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடரமணன், கணினி நிரல்களைக் கள்ளத்தனமாக திருடுதல் அல்லது கணினி நிரல்களை நச்சு நிரலிகள் (வைரஸ்) மூலமாக அழிப்பவர்களை (Hacker) ‘கொந்தர்’ என்கிற சொல்லாட்சியால் அழைத்தார். கொந்து என்கிற சொல்லிருந்து திரிந்தது கொத்து. அம்மி கொந்துதல்; பறவை தன் அலகால் கனிகளைக் கொந்துதல் (கொத்துதல்). கொந்துதல் என்பதற்கு கச்சிதமாக வெட்டுதல் அல்லது கொத்துதல் என்று பொருள். கணினியின் ஒரு நிரலை அழிக்கக் நச்சுநிரலியை கண்டுபிடிப்பவர், அந்த நச்சுநிரலியிலிருந்து கணினியைக் காக்க மாற்று நிரலியைக் கண்டுபிடிப்பவர் இருவரும் Hacker (கொந்தர்)தான். முன்னவர் Black hacker என்றும் பின்னவர் White hacker என்றும் கணினித் துறையினரால் அழைக்கப்படுகிறார்கள். கறுப்பு கொந்தரின் அடையாளச் சின்னம் முகமூடி. வெள்ளை கொந்தருக்கு வெண்தொப்பி. ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்டெடுக்க முயலும் கருவி வடிவமைப்பினர் ‘வெள்ளை கொந்தர்’ வகையைச் சார்ந்தவர். மணவை முஸ்தபா தொகுத்த கணினி களஞ்சியப் பேரகராதி hack என்பதற்கு கணினி நிரலிலுள்ள கட்டளைகளை அவசரகோலமாய் மாற்றியமைத்தல்; படைப்பாக்கக் கூர்மதியுடன் ஒரு சிக்கலை அல்லது ஒரு திட்டப்பணியை அணுகுதல் ; ஓர் இயக்க முறைமை அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் கட்டளையைத் திருத்தி அதன் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைத்தல் என்கிறது. மேலும் இந்த அகராதி Hacker - ஆர்வலர், குறும்பர் என்பதாகப் பொருள் தருகிறது. ஹேக்கத்தான் என்பது கொந்தர் மாரத்தான். அதாவது குறுகிய கால இடைவெளியில் ஒரு கருவியை கணினி வழியில் திட்டமிட்டு வடிவமைப்பவர். பழைய சொல், புதிய தேடல் ‘ஐயன்’ -நவம்பர் 10, 2019 அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் பாய்வதாக கருதப்படும் சரஸ்வதி ஆகிய ஆறுகளின் சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட தமிழர்கள் ஒன்று கூடுகின்றனர். எனவே, அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி யின் இந்தி அறிஞர்கள் விரும்பினர். இவர்கள் உ.பியில் மொழிகளை இணைக்க அமைந்த ‘பாஷா சங்கம்’ எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலை மையிடமான அலகாபாத் சங்கத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அவரது சிலையையும் அமைக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 10 இல் தென்கரை சாலைக்கு ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க்’ (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை) என இந்தி, தமிழ் பெயரில் பெயர்ச்சூட்டப்பட்டது. அதே நேரம் திட்டமிட்ட இடத்தில் சிலையை நிறுவ அம்மாநில அரசு தடை விதித்தது. சரி, ஐயன் என்பது என்ன? தொடக்கத்தில் ஐயன் அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர்கள் மூவர். அவர்கள், திருவள்ளுவர், ஐயனாரிதன் (ஐயன் ஆரிதன்), அயோத்திதாச பண்டிதர். தேவாரப்பாடல்கள் சிவன் ஐயன் என அழைக்கப்படுகிறான். அப்பன் என்பது பெருமாள். சிவன், திருமால் இருவருக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்கிறது புராணக்கதை. ஐயன் + அப்பன் - ஐயப்பன். “ஐயைனும் பெயரே குருவும் அரசனும் எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும் / ஐயன் எனும் பெயர் குருவுந் சாத்துனுந் தந்தையு முதல்வனு மந்தணன் பெயருமாம்” என்கிறது வடமலை நிகண்டு. ‘ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும் தலைவியும் புதல்வியும் இடைச்சியும் முமையும்’ (பொதிகை நிகண்டு). சூடாமணி நிகண்டு ஐயன் என்பதற்கு மூத்தோன், ஐயனார், பிதா, கடவுள் என்பதாகப் பொருள் தருகிறது. ஐ - ஐயன் - ஐயா - ஐயோ - ஐயே - ஐயர் - ஐயங்கார்,… தொடர்புடைய சொற்கள். ஐ என்றால் தலைவன், ஐயனார் - தலைவனானவன் என்று பொருள். தம் + ஆய் - தாய் ; தம் + ஐயன் - தமையன்; தம் + அக்கை - தமக்கை. ஐயன் என்பதன் பெண்பால் ஐயள் . ஐயள் என்றால் வியத்தற்குரிய அழகுடையவள் என்று பொருள். ஐயா - மரியாதை விளிப்பெயர், ஓர் இரக்கக் குறிப்புச்சொல். ஐயே என்பது ஐயன் என்பதன் விளி; ஐயை- தலைவி, காளி, தவப்பெண், குரு பத்தினி, மகள், பார்வதி, துர்க்கை, இடைச்சி. ஐயோ - வியப்பிரக்கச் சொல் அல்லது துன்பக்குறிப்பு. ஐய - அதிசயதக்க, அழகிய, அதிசயகுறிப்பு. ஐயர் - பார்ப்பான், தேவர், பெருமையில் சிறந்தவர்,முனிவர். ஐயன் என்பதற்கு அரசன், கடவுள், குரு, அருகன, துருதை, மூத்தோன், உயர்ந்தோன் எனப் பல பொருளுண்டு. ஐயோ - நுண்ணியன். ஐயன் என்பதற்கு ஆங்கிலத்தில் priest, father, master sage என்கிறது மணிமேகலை தமிழ் - ஆங்கில அகராதி. வேமன் தமிழ்ச்சொல் அகராதி , ஐயன் என்பதற்கு தலைவன், மூத்தோன், முனிவன், ஆசான், உயர்ந்தோன், தந்தை, அரசன், கடவுள், ஐயனார், பார்ப்பான் என்பதாகப் பொருள் தருகிறது. சமீபத்தில், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபரால் முகத்தில் கறுப்புச்சாயம் பூசப்பட்டது. அதே சிலைக்கு, இந்து மக்கள் கட்சி யின் மாநில தலைவர் அரஜூன் சம்பத், காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார். இவை இரண்டும் கண்டனத்திற்கு உள்ளானவை. உச்சி குடுமி, கையில் ஓலைச்சுவடி, எழுத்தாணியுடன் கூடிய திருவள்ளுவர், 1964 ஆம் ஆண்டு கே.ஆர்.வேணுகோபால் சர்மா என்பவரால் வரையப்பட்டது. இதற்கு முன்பும் திருவள்ளுவர் படங்கள் உண்டு. அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் திரு கந்தப்பன் , ஓலைச்சுவடிகளை அச்செடுத்து எல்லீஸ் பிரபுடன் பதிப்பிக்கக் கொடுத்தார். திருக்குறள் அச்சுநூலாக பதிப்பாக்கம் கொண்டதன் நினைவாக திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது. இதுதான் திருவள்ளுவரின் முதல் படம் . அதில் திருவள்ளுவர் மொட்டைத் தலை, தோளில் துண்டு, தலைக்கு மேலே குடை, கையில் ஓலைச்சுவடி யுடன் அமர்ந்திருக்கிறார். (பதிவு - ராசி.பன்னீர்செல்வன் ). திருவள்ளுவரின் காலம், இரண்டாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம் என்பதாக வரையறுக்கப்படுகிறது. ஏறக்குறைய சமண காலம். இக்காலத்தில் பிராமணன், ஐயர் போன்ற சொற்களுக்கு இடமில்லை. அரசன், பகவன், ஆசான் யாவரும் வள்ளுவரால் பாடப்பட்டவர்கள் என்பதால் அவையும் அவ ருக்குப் பொருந்தாது. இவர் உயர்வு தாழ்வு பாராட்டதவர். ஆகவே உயர்ந்தோன் என்கிற சொல்லும் பொருந்தாது. ஆக, ஐயன் என்பதற்கு மூத்தோன் என்பதாகப் பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் ‘முத்தவல்லி’ -நவம்பர் 17, 2019 பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி, மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நீதி மன்றத்தில் தொடங்கியது இந்த அயோத்தி வழக்கு. இவ்வழக்கின் தோற்றுவாய் ஹாசிம் அன்சாரி, ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ். இருவரும் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தும் தங்கள் நட்பைத் தொடர்ந்தனர். இருவரும் சிறுவயது முதல் அயோத்தி நகர தெருவில் ஓடி, ஆடி விளையாடியவர்கள். டிசம்பர் 23, 1949 இல் நள்ளிரவில் பாபர் மசூதினினுள் ராமர் சிலை வைக்கப்பட்ட பின் பைஸாபாத் நீதிமன்றத்தில் இருவரும் ஒன்றாக கிளம்பிச் சென்று வழக்குத் தொடுத்தனர். 2003 இல், பரமஹன்ஸ் மறைந்த போது, அவரது உடல் முன் மறுநாள் காரியம் நடைபெறும் வரை இரவிலும் கண்விழித்து அமர்ந்திருக்கிறார் ஹாசிம் அன்சாரி. இறுதி தீர்ப்பு வருகையில் இருவரும் உயிருடன் இல்லை. ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதியின் கடைசி முத்தவல்லி என்கிறது -தி இந்து. முத்தவல்லி என்பது என்ன? முத்தவல்லி, வக்ஃப் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சொல். இந்தியாவில் வக்ஃப் செல்லுபடியாகும் சட்டம் 1913 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. வாரிசு அற்றவர்க ளின் சொத்துகள் என்பதைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட முத்தவல்லிகள் கடமை யுடன் கூடிய வக்ஃப் சட்டத்தில் பிரிவு -36 சேர்க்கப்பட்டது. முத்தவல்லி, வக்ஃப், வஸிய்யு, வாகிஃப், ஸலாத், ஸவ்ம், மசூதி,… இவை யாவும் அரபிச் சொற்கள். ஸலாத் – தொழுகை, ஸவ்ம் – நோன்பு. வக்ஃப் ( Waqf ) என்பதற்கு நிறுத்துதல் அல்லது நிலை நிறுத்துதல் என்று பொருள். அதாவது சொத்துகளை நிலை நிறுத்துதல். வக்ஃபிற்கு சொத்துகளை வழங்குபவர் வாகிஃப். வாகிஃப் ஒருவர் வக்ஃப்பிற்கு சொத்துகளை வழங்கிவிட்டால், பிறகு அது அவ ருடைய சொத்து அல்ல. அச்சொத்துக்கு அறங்காவலராக அவரே இருக்கலாம் அல்லது வேறொருவரை நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுபவர் முத்தவல்லி. சில வக்ஃபு வாரியங்களுக்கு முத்தவல்லிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. 1956 ஆம் ஆண்டு தமிழக அரசு வக்ஃப் வாரியம் அமைத்தது. இதன் முதல் தலைவர் எஸ்.கே.அகமது மீரான். கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய மீன்காரத்தெரு நாவலில் ‘முத்தவல்லி’ பாத்திரம் வருகிறது. நாவலில், நைனா என்றொரு பாத்திரம். அவன், வள்ளி என்கிற இந்துப் பெண்ணைக் காதலித்து கருகமணி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறான். அவள் இறந்து போகையில் அவளை, நைனாவின் மனைவியாக ஏற்க முத்தவல்லி மறுத்துவிடுகிறார். மீன் காரத் தெரு மக்கள் வள்ளியை வள்ளிபீவி எனப் பெயர்ச்சூட்டி ஜியாரத் செய்கிறார்கள். ஜியாரத் - உலகில் பிறந்து வாழ்ந்து மரணித்தவர்களுக்கும் மரணிக்க இருக்கிற நமக்காகவும் பிரார்த்தனைச் (துஆ) செய்வதாகும். சஜ்தா – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதிய ஒரு சிறுகதை. இஸ்லாமிய கலைச்சொற் கள் நிரம்பப்பெற்ற கதை இது. தொழுகையின் போது விரல் ஆட்டக்கூடாது. அப்படி யாக ஆட்டும் ஒருவனின் விரலை செட்டியார் சின்னாப்பா ஒடித்துவிட, ஜூம்மா தொழுகை யில் பிரச்சனை வருகிறது. ‘தொழாதவங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம ஒழுங்கா ஐவேளையும் தொழுறவங்களப் பாத்து அப்படித் தொழு இப்படித் தொழு.. தொப்பி போட வேண்டாம்..வெரல நீட்டாத.. ஆட்டு.. தொப்பி போட்டே ஆகணும். தொப்பியில்லாம பள்ளிக்குள்ள நொழையாதே.. எங்க பள்ளில வந்து வெரல ஆட்டாதேனு.. ஒரே அக்கப் போரு.. இப்ப’. பிரச்சனைக்குரியவர்களை முத்தவல்லி அனீபா ராவுத்தர் கண்டிக்கிறார். ஸஜ்தா என்பது நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது. இக்கதையில் பின்வருமாறு சொல் விளக்கம் தந்திருக்கிறார். பித்னா – குழப்பம், சின்னாப்பா – சித்தப்பா, துஆ – பிரார்த்தனை , பரக்கத்து – சுபிட்சம், சுன்னத் – நன்மை, ஹராத் – கெட்டவழி , ஷிர்க் – இணைவைத்தல் , அத்தஹியாத் – தொழுகையில் இறுதி நிலை இருப்பு, கலிமா விரல் – ஆள்காட்டி விரல் , ஹதீஸ் – நபிவழி சொல்லும் செயலும், இமாம் – தொழுகையை வழி நடத்துபவர் , தக்வா – இறையச்சம் , குத்பா – தொழுகை உரை, ஸஜ்தா – தரையில் தலைவைத்து இறைவனை வணங்கும் நிலை, முத்தவல்லி – நாட்டாமை. முத்துவல்லி, முத்தவல்லி இரண்டும் வேறு வேறு. முன்னது ஹிந்தி. பெயர்ச்சொல். பின்னது உருது.காரணப் பெயர். Muttawalli - Muta + Wali . Muta - Obey. Wali - Governor, Lord. இதற்கு இஸ்லாமிய அகராதி - நாட்டாமை, வக்ஃப் அறங்காவலர், மசூதி பாதுகாவலர், வாரிய காவலர், சொத்துகளை நிர்வகிப்பவர் என்பதாகப் பொருள் தருகின்றது. இதிலிருந்து முத்தவல்லி என்பதற்கு மசூதியை நிர்வகிக்கும் தலைவன் என்று பொருள் கொள்ளலாம். பழைய சொல், புதிய தேடல் ‘அபரஞ்சி’ -நவம்பர் 24, 2019 கமல்ஹாசன், சினிமாவில் 60 ஆவது ஆண்டைத் தொடுவதை முன்னிட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அவருக்குப் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் வடிவேலு, ‘பரமக்குடி தந்த பத்தரைமாத்துத் தங்கம் கமல்’ எனப் பேசினார். மாற்று என்பதே மாத்து என்பதாக திரிந்துள்ளது. சரி, பத்தரை என்பது என்ன? ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி. குண்டலம் என்றால் சுருள் என்று பொருள். கேசி - முடி. இந்த காப்பிய நாயகியின் பெயர் பத்தரை. பத்தரை, பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு பெயர். இதன் பொருள், அனைத்தையும் உணர்ந்தவள் (லியோ தமிழ் அகராதி). பத்தரை - பொன்னுடன் தொடர்புடைய ஒரு சொல். கணக்கதிகாரம் பொன்னை அளக்கும் அளவுகளை வெண்பாவாக பாடியுள்ளது. இதன்படி, 1பிளவு = 2 நெல் / 1 குன்றிமணி= 2 பிளவு / 1 மஞ்சாடி= 2 குன்றிமணி / 1 பணம்= 2 மஞ்சாடி /1 கழஞ்சு= 10 பணம்/ 1 கஃசு= 2 கழஞ்சு /1 வராகன்= 12 கழஞ்சு /1 ஓஞ்சை= 9 வராகன் /1 சேர்= 9 ஓஞ்சை /1 பவுன்= 12 ஓஞ்சை. ஒரு சவரன் பொன் என்பது தோராயமாக 8 கிராம். சரியாக 7.9881 கிராம். இதில் தூய பொன் என்பது 7.3 கிராம். பொன், கேரட் என்கிற அளவால் அளக்கப்படுகிறது. இந்த அளவை, தமிழ் அளவையில் கழஞ்சு அளவைக்கு நிகரானது. தங்க ஆபரணம் 8,9,10,12,14,18,22 காரட் ( கழஞ்சு) களில் தயாரிக்கப்படுகிறது. 22 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் மற்றும் ஜின்க் என மூன்று உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் பத்து பங்கு தங்கத்தில் 1/2 பங்கு செம்பு கலந்த பொன். அதாவது அரை பங்கு அளவிற்கு மாற்றுப் பொருள் கொண்ட பொன். இந்த அரை பங்கு அளவும் கலப்பு கலக்காத தங்கத்திற்கு ‘ பத்துமாற்றுத் தங்கம் ‘ என்று பெயர். இத்தங்கம் குறித்து தாயுமானவர் பாடியுள்ளார். ‘கருமருவு குகையனைய காயத்தின் ‘ என்ற பாடலில், ‘பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட பட்சத்தை என்சொல்லுவேன்’ இதே தங்கத்தை உவமையாகக் கொண்டு பாரதியார் , கண்ணன் பாட்டு பாடியுள்ளார். ‘பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்’. பத்தரை மாற்று என்பது உலோகம் கலந்தது. பத்துமாற்று, உலோகம் கலக்காத தூய தங்கம். (தூய - சொக்கம்). இதனைச் சொக்கத்தங்கம் என்றும் சொல்லலாம். பத்தரை மாத்து தங்கம் - 99.5 டச்சு (22 கழஞ்சு). பத்து மாற்றுத்தங்கம் (24 கழஞ்சு) - 100 டச்சு. இதைவிடவும் விலைஉயர்ந்த தங்கம் உண்டு. அது, ஆயிரத்தெட்டு மாற்றால் ஆன தங்கம். இதற்கு, ‘அபரஞ்சிப் பொன் ‘ என்று பெயர். அபரஞ்சி - 1000 டச்சு கொண்டது. வைகை ஆற்றில் இறங்கும் அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் சிலை அபரஞ்சிப் பொன்னால் செய்யப்பட்டது. இதைப் போன்று, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சிலையும் இதே பொன்னால் ஆனதே. உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் இவை இரண்டும்தான். (மாலை மலர் செய்தி). அபரஞ்சிப் பூஷணம் என்பதற்கு புடமிடப்பட்ட பொன் என்பதாக நவீன தமிழ்ச்சொல் அகராதி பொருள் தருகின்றது. அபரஞ்சி குறித்து செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மூன்று விளக்கம் தந்துள்ளது. அபரஞ்சி - புடமிட்ட பொன் (Refined gold). ஆயினத்தெட்டு மாற்றி னபரஞ்சி அபரஞ்சி - தங்க ஒள்ளிழை (Gold leaf used in setting precious stones); கம்மாறு வெற்றிலை - a species of dark greened pungent thick netel leaf. அபரஞ்சித்தூள் - தங்கப்பொடி gold dust, பொன் மணல் gold ore. திருக்குற்றாலக் குறவஞ்சி, அபரஞ்சி தங்கத்தை குறவஞ்சியின் மேனிக்கு உவமையாகப் பாடியுள்ளது. ‘வஞ்சி எழில்அபரஞ்சி வரிவிழிநஞ்சி’. உரையாசிரியர் புலியூர்க் கேசியன், அபரஞ்சி என்பதை வார்த்துவிட்ட பொன் என்கிறார். உறை தங்கம் என்றும் சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘முற்றாள்’ -டிசம்பர் 8, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார். குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் நவம்பர் -25 அன்று அதிகாலை 5.17 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு காலை 8 மணிக்கு அவசரமாக தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) முதலமைச்சராகவும், அஜித் பவார் (தேசியவாத காங்கி ரஸ்) துணை முதல்வராகவும் பதவி ஏற்றார்கள். இந்நிகழ்வு ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் - சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் வீதிக்கு வந்தன. THE TELEGRAPH என்கிற பத்திரிகை WE THE IDIOTS என தலைப்புச் செய்தியுடன் இந்திய ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என விமர்சனம் செய்தது. மகாராஷ்டிரா மாநில பிரச்சனையைப் பொறுத்தவரைக்கும் WE THE IDIOTS - நாம் முட்டாள்களே. சரி, முட்டாள் என்பதன் வேர்ச்சொல் என்ன? 2018 ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் தேடு பொறியில் IDIOT எனத் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் வர அவ்வாண்டின் அதிக நபரால் தேடப்பட்ட சொல்லானது. முட்டாள் ஒரு தமிழ்ச்சொல். சிலையை அல்லது இராணியைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள்,பல்லக்கை கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் ஒரு மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது. இவர்கள் முட்டு + ஆள் - முட்டாள் என்பதாக ஒரு விளக்கம் உண்டு. குட்டை (குட்ட) என்றால் குறைந்த உயரம் என்று பொருள். பல்லக்கை மிகக் குறைந்த உயரத்திற்கு இறக்குகையில் முட்டுக் கொடுக்கும் ஆள் குனிந்தே முட்டுக் கொடுக்க வேண்டும். இதிலிருந்து பிறந்ததே , ‘குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்’ என்கிற பழமொழி. இங்கு குட்ட என்பது தலையில் கொட்டுதல் அல்ல. முட்டு - முட்டன் - மூடன் ; முட்டு - முட்டி - மட்டி ;முட்டு - மொட்டை - மட்டை - மூடன் ; முண்டு - மடமை ; முண்டம் - அறிவில்லாதவன்; மொண்ணை - கூரின்மை ; மழுக்கு - மக்கு - மதியற்றவன்,… யாவும் முட்டு என்கிற சொல்லுடன் தொடர்புடையவை. பரமார்த்த குரு கதையில் ஒரு குருவுக்கு ஐந்து சீடர்கள் இருந்தார்கள். அவர்கள் மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு. மடையன் என்பதற்கு சமையற்காரன் என்றொரு பொருளுண்டு. கோவிலில் பிரசாதம் சமைக்கும் இடம் மடைப்பள்ளி. இச்சொல்லின் திரிபு மடவன். மடவன் என்கிற சொல் மடமை எனும் வேர்ச்சொல்லிருந்து கிளைத்தது. இத்துடன் தொடர்புடைய வேறு சொற்கள்: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை . ‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை’ என குறுந்தொகையில் கோவர்த்தனார் பாடியுள்ளார். அதாவது, கொன்றை மரங்கள் மடமை உடையன. ‘மடவ, வாழி! மஞ்ஞை மாயினம்’ (மயில் கூட்டங்கள் அறியாமை வாய்ந்தவை) என்கிறது இடைக்காடனாரின் குறுந்தொகை பாடல். மடவன் , மடமை, முற்று, முற்றும், முற்றன் ஆகிய சொற்களுடன் தொடர்புடைய சொல் ‘முட்டாள்’. முற்றன் -முழுமையானவன் (பூர்ணன்). இச்சொல்லை தேவாரம்,’முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும்’ எனப் பாடியுள்ளது. முற்று - முற்றன் = முழுநிறைவானவன் முற்றும் × முற்றாமை முற்றாமை - முடிவு பெறாமை (ஏலாமை) முற்று + ஆ - முற்றா முற்றவை - அறிவால் முதிர்ந்தோர் கூடிய அவை. Assembly of wise men. ‘கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்’ எனப் பெருங்கதை உஞ்சைக்காண்டம் பாடியுள்ளது. முற்றறிவு - முழுதுணரும் அறிவு; Omniscience; முற்றறிவன் - எல்லாம் அறிந்தவன். முற்று + ஆள் = முழுவதும் ஆள். இதற்கு முழுமகன் என்றொரு பொருளுண்டு. முழுமகன் - அறிவிலி . (திவாகர நிகண்டு). ‘படிக்காத பேதையர்களுக்கு நண்பனாக இருத்தல், கோபம் கொண்ட மனைவியைக் கோலால் அடித்தல், சிறுமையான குணம் உடையவர்களை வீட்டுக்குள் அழைத்துச் செல்லுதல் ஆகிய இம்மூன்றும் முட்டாளின் காரியங்களாகும்’ என்கிறது திரிகடுகம். இதன் உரையாசிரியர் ஞா.மாணிக்கவாசகன் முட்டாள் என்கிற சொல் முற்றாள் என்கிற சொல்லிருந்து திரிந்தது என்கிறார். அதாவது முற்றாள் என்பதற்கு அறிவுக்கே இடமில்லாமல் உடல் முழுவதும் வெற்று ஆளாகவே இருப்பவன் என்று பொருள். பழைய சொல், புதிய தேடல் ‘ஓலக்கம்’ -டிசம்பர் 15, 2019 மக்களின் பாடகர் ‘மருதமலை மாமணியே முருகையா’ மதுரை சோமு (1919 - 1989) நூற்றாண்டை முன்னிட்டு இசை விமர்சகர் எஸ்.சிவகுமார் தி இந்து நாளிதழில் ‘சோமு நீ சமானம் எவரு‘ என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். அறுபது களின் பிற்பகுதி சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு கோயில் கச்சேரி. அன்றெல்லாம் சபா கச்சேரிகளை விட கோயில் கச்சேரிகளே அதிகம். செலவில்லாமல் சங்கீதப் பிரவாகத்தில் விடாய் தீர்ந்த பொற்காலம். அன்று கோயிலில் மகாவித்வான் சோமுவின் தர்பார். தெருவெல்லாம் கூட்டம் அலைமோதியது… சரி, தர்பார் என்பது என்ன? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்திருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பாரசீகம் (ஈரான்) நாட்டின் கெர்மான் மாகாணம் மன்னராட்சியின் தலைமையிட மாக இருந்தது. அந்த மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம் தர்பார் (Darbar). இங்கு பாரசீகர்களின் நீதி பரிபாலனம் நடந்தேறியிருக்கிறது. Durbar என்பது உருது சொல். இதற்கு நீதி என்று பொருள். இச்சொல்லிலிருந்து திரிந்தது Darbar. Darb + bar/ darb என்பதற்கு உருது மொழியில் இல்லம், அரண்மனை, மன்றம் என்றும் Bar என்றால் வாயில் என்றும் பொருள். முகலாயர்களின் ஆட்சியில், குறிப்பாக அக்பர் ஆட்சிக்காலத்தில் இச்சொல் இந்தியாவில் பிரபலமானது. தர்பார், மலபார், பார், தன்பார், சபா,…யாவும் முகலாய மன்னர்களுடன் தொடர்புடைய சொற்கள். இந்தியில் இச்சொல் ராஜ்தர்பார் (Rajdar bar)-அரச சபை, ஆம்தர்பார்(Aamdarbar) - நகர சபை என்பதாகத் திரிந்துள்ளது. சரி, தமிழில் இச்சொல்லுக்கு நிகரான சொல் உண்டா? ‘செல்லல் தீர்க்கும் பல்புகழ்ச் சேந்தனில் / வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் / மல்லும் சூதும் படையும் மற்றும் கல்விபயில் களமும் கழகமாகும்’ என்கிறது திவாகரம் நிகண்டு. இப்பாடலுக்கு விளக்கம் தரும் எஸ்.வையாபுரிப்பிள்ளை களம் என்பது வடசொல். கூட்டம், திரள் முதல்முதற் பிறந்ததாக இருக்க வேண்டும். திரள் என்பதே நுணுகி அலங்கரித்து ஓலக்கம் என்றானது என்கிறார். அதாவது கழகம் என்பது ஓலக்கம். ‘ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்’ என்கிறது பதிற்றுப்பத்து. மன்னன் ஓலக்க இருக்கையில் அமர்ந்து சிறப்புக் கூறுதல் என்று பொருள். ஓலக்க இருக்கை என்பது நாண்மகிழிருக்கை. ‘இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்’ என்கிறது கம்பராமாயணம் யுத்த காண்டம். ‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் / மீக்கூறும் மன்னன் நிலம்’ இக்குறளுக்கு பொருளுரை தந்திருக்கும் தேவநேயப் பாவாணர், அலுவல் நேரத்தில் ஓலக்க மண்டபத்திலும் நெருக்கடி நிலைமையில் அரண்மனையிலும் காணக்கூடியவராய் மன்னன் இருத்தல் வேண்டும் என்கிறார். செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரை, ‘யாழ்ப்பாணத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்’ . இதில், யாழ்ப்பாணம் சங்கிலித் தோப்பில் ஒரு தொன்மையான கட்டிடத்தின் ஒரு கல்வெட்டில் ‘ திரு ஓலக்கவாயில் கட்டிடம் ‘ எனப் பொறிக்கப்பட்ட செய்தியைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் இக்கட்டுரை ஓலக்கம் என்பது மன்னன் அல்லது உயர்ந்தோர் அமரும் இடம் என்றும் திருவோலக்கம் என்பது தெய்வம் அமரும் இடம். இவ்விரு சொற்களும் மொழி வழக்கில் பெரிதும் பயன்படவில்லை என்றாலும் கல்வெட்டு சொல்லகராதியில் இச்சொல் இடம் பெற்றுள்ளது என்கிறது. ஔவை.துரைச்சாமி எழுதிய ‘சேரமன்னர் வரலாறு ‘ என்கிற நூல், பாணர், கூத்தர், பொருநர், புலவர், முதலானோர் செல்வன் கடுங்கோவின் திருவோலக்கம் நோக்கி வருவாராயினர் என்கிறது. திருவோலக்கம் என்கிற சொல் திருப்பாவை, திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. ஓலக்கம் என்பதை தமிழ் அகராதிகள் சபாமண்டபம், அத்தாணி மண்டபம், அத்தாணிக்காட்சி, திருச்சமூகம், திருச்சபை என்கின்றன. சம்மணம் என்பதே சமணம், சமயம் என்றானது. சம்மணம் என்பதன் தமிழ்ச்சொல் ஓலக்கம். சம்மணமிட்டு அமருமிடம் ஓலக்க மண்டபம். இதிலிருந்து தர்பார் என்பதன் தமிழ்ச்சொல் ஓலக்கம். அதாவது, பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள் வீற்றிருக்கும் இடம். இதை திவாகர் நிகண்டு மொழியில் கழகம் என்று சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘அனலி’ -டிசம்பர் 29, 2019 2019, திசம்பர் 26 அன்று முழு வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது. சூரியன் என்பதைத் தனித்து SUN என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்துகையில்ஊ SOLAR என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் (SOLAR ECLIPSE), சூரிய குடும்பம் (SOLAR SYSTEM). சன் , சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ? சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு. தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு. ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என்கிறது. சூரியனுக்கு நிகரான சொற்களாவன: ஞாயிறு, கதிரவன், பகவன், பகலவன், என்றூழ், எல், எல்லி, எல்லோன், இரவி, வெய்யவன், வெங்கதிர், கதிர், வெய்யோன், அனலி, ஆதித்தன், ஆதவன், அழற்கதிர், இளம்பரிதி, எரிகதிர், எழுஞாயிறு, ஒளியவன், செஞ்சுடர்,…. ஞாயிறை ‘பகல் செய் மண்டிலம்’ என்கிறது பெரும்பாணாற்றுப்படை. மண்டிலம் என்றால் வட்டம் என்று பொருள். “கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்கிறது சிறுபாண்ணாற்றுப்படை. ‘ஞாயிறு போற்றுதும்’ சிலப்பதிகாரம். வெண்கதிர் என்பது சூரியன். இதற்குள் ஏழு வண்ணங்கள் உண்டு என்பதால் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரியன் செல்கிறான் எனப்பாடுகிறார் கபிலர். ‘எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப் பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு). ‘என்றூழ் உறவரு மிருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்’ என்கிறது பரிபாடல். இங்கு என்றூழ் என்பது சுழலும் ஞாயிறு. ஞாயிறு ஒளி மறைப்பு பற்றி புறநானூறு பாடியுள்ளது. ‘அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்’ அதாவது, அசுரர் தேவர் இரு தரப்பினருக்கும் போர். அசுரர்கள் ஞாயிறை மறைத்து வைக்கிறார்கள். திருமால் அதை மீட்டெடுக்கிறான். ஞாயிறு, பரிதி என்பது Sun. இது கோளவடிவமானது. இதிலிருந்து வெளியாகும் நெருப்பு, வெப்பம், அனல், ஆற்றல் என்பது solar. அழற்கதிர் - சூரியன்; அழற்கரத்தோன் - நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபெருமான்; அனலம் - நெருப்பு; அனலன் - அக்கினிதேவன்; அனலாடி - சிவன்; அனலி - நெருப்பு, சூரியன்; அனலிமுகம் - சூரியபுடம்; அனலேறு - இடி. ‘அனலிபாற் கரனுந் தீயுமாகும் ‘ என்கிறது பொதிகை நிகண்டு. ஞாயிற்றின் இன்னொரு பெயர் பாற்கரன். இதலிருந்து திரிந்தது பாஸ்கரன். சூரியன், அணுக்கரு இணைவு’ (Nuclear fusion) என்கிற தத்துவத்தின் மூலம் இயங்குகிறது.இதன் மையம் 15 மில்லியன் பாகை வெப்பநிலை உடையது. மேற்பரப்பு வெப்பநிலை 6000 பாகை. இதன் மேற்பரப்பு மண்டிலம்தான் சோலார். Sun என்பது கோளவடிவத் தீம்பிழம்பு. Solar என்பது தீம்பிழம்பின் அனலி. சூரிய கிரகணம் என்பது சூரியனை மறைத்தல் அல்ல. அதன் அனலியை மறைத்தலே. ஆகவேதான் விண்ணியல் Solar eclipse என்கிறது. இதை தமிழில் அனலி மறைப்பு என்று சொல்லலாம். பழைய சொல், புதிய தேடல் ‘தமிழி’ -ஜனவரி 12, 2020 ‘தடம் பதிக்கும் தமிழி எழுத்துக்கள் ‘ தினமணி புத்தாண்டு மலர் -2020 இல் வெளியான ஒரு கட்டுரை. தமிழி எழுத்தில் உச்சரிப்பு அனைத்தும் தமிழில் வரும் உயிர், மெய் எழுத்துக்களின் ஓசைதான். ஆனால் எழுத்துக்களின் வடிவம் மட்டும்தான் மாறுபட்டவை. கரூர் பரணிபார்க் பள்ளியின் முதன்மை முதல்வரும் , திருக்குறள் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சொ.ராமசுப்ரமணியன், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, வட்டெழுத்து, தமிழ் என்று அழைக்கிறோம் என்கிறார். தமிழி என்பது என்ன? குகைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்றும் வேறு சிலர் தமிழ் - பிராமி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. தமிழ்–பிராமி, 2. அசோகன்-பிராமி, 3. வடஇந்திய-பிராமி, 4.தென்னிந்திய-பிராமி, 5.சிங்கள–பிராமி. இங்கு, பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். உலகில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 60 விழுக்காடு தமிழ் பிராமி எழுத்துகளே ! இன்று இந்திய நாட்டில் உள்ள எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்து வந்தவை. தமிழ்-பிராமி கல்வெட்டுகள் முற்காலத் தமிழ்-பிராமி, பிற்காலத் தமிழ்-பிராமி என கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் கிடைக்கப்பெற்ற பிராமி எழுத்துகளைத் தமிழ் - பிராமி எனப் பெயர்ச்சூட்டியவர் ஐராவதம் மகாதேவன். தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் , வடஇந்திய பிராமி எழுத்துகளிலிருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். நடனகாசிநாதன், பண்டைய தமிழ் வரிவடிவத்தை, தமிழ் பிராமி என்று அழைக்கக்கூடாது, தமிழி என்றே அழைக்கவேண்டும் என்கிறார். பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டு ‘லலித விஸ்தாரம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் முதல் பேரரசர் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பிராமி எழுத்து பயன்பாட்டுக்கு வந்தது. இக்காலத்தையொட்டிய சமணர்கள், தங்கும் குகைகளில் பிராமி எழுத்துகளாக வடித்தார்கள். கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இவ்வெழுத்துகள் பிராமி எழுத்தாகவும் வட்ட எழுத்தாகவும் மாறின. பாண்டியர் வட்டெழுத்துகளாலும்; சோழர், பல்லவர்கள் கோட்டு எழுத்தாகவும் எழுதினார்கள். காலப்போக்கில் வட்ட எழுத்து, வரி எழுத்து இரண்டும் இரண்டற கலந்தன. பெரும்பான்மை வட்ட எழுத்துகள் மலையாளம் எழுத்துகளாக மாறின. தமிழ் - பிராமி, வட்ட எழுத்து இவ்விரண்டு எழுத்துகளையும் உள்ளடங்கி பொதுவாக வைக்கப்பட்ட பெயரே தமிழி. வட மொழியினர் தாமிழி என்கின்றனர். கல்வெட்டு ஆய்வாளர்களான நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல், தமிழி என்பதை ‘தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் ‘ என்கிறார்கள். பழந்தமிழ் எழுத்து என்றும் சொல்லலாம். -நிறைவு- FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.