[] [பள்ளிக்கு வெளியே வானம்] பள்ளிக்கு வெளியே வானம் பள்ளிக்கு வெளியே வானம் ராகுல் ஆல்வாரிஸ் தமிழில்: அன்பரசு சண்முகம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை பள்ளிக்கு வெளியே வானம் Copyright © 2014 by Creative Commons . This book was produced using PressBooks.com. Contents - பள்ளிக்கு வெளியே வானம் - இது பெற்றோர்களுக்கானது - எழுத்தாளனிடமிருந்து வணக்கம்! - 1. மபுசாவில் ஒரு மீன் பண்ணை - 2. மண்ணின் மணமறிந்தேன் - 3. தாவரத்திருவிழா கொண்டாட்டம் - 4. காளான்களோடு இருநாட்கள் - 5. கடவுளின் தேசத்திற்கு பயணம் - 6. பாம்புகளோடு பந்தயம் - 7. விடுமுறைக்கொண்டாட்டம் - 8. உழவர்களின் தோழனோடு - 9. நான் சிலந்தி மனிதன் - 10. முதலைப்பட்டாளத்தோடு போர் - 11. கற்பித்தலின் தொடக்கம் - 12. உங்களுக்கு காட்சி எனக்குள் கனவு - 13. பெல்காமில் சிறப்பு விருந்தினர் - ராகுலின் பாதை - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பள்ளிக்கு வெளியே வானம் [Cover Image] பள்ளிக்கு வெளியே வானம் உருவாக்கம் : ராகுல் ஆல்வாரி மின்னஞ்சல்: rahulalvares@gmail.com மொழிபெயர்ப்பு : அன்பரசு சண்முகம் மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன் மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   இந்த மொழிபெயர்ப்பு நூல் ராகுல் ஆல்வாரிஸின் ஒரு ஆண்டு சுதந்திரமான வாழ்க்கையை உண்மையாக பேசுகிறது. ராகுல் ஆல்வாரிஸ் அவர்களின் தந்தை கிளாட் ஆல்வாரிஸ் அவர்களின், தி அதர் இந்தியா பிரஸ் பதிப்பகத்திடம் முறையாக அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. 2 இது பெற்றோர்களுக்கானது குழந்தைகளில் எத்தனை பேருக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமிருக்கிறது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்? பள்ளி செல்ல விருப்பமுடையவர்கள் சிலரே என்பதையும், பள்ளியை வெறுப்பவர்களே அதிகமாக உள்ளதை அவர்களின் பதில்களிலிருந்தும், கேள்விக்கு பதிலாகக் கவியும் மௌனத்திலிருந்தும் எளிதில் அறிந்துகொள்ளமுடியும். பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாத குழந்தைகளை சற்று உற்றுநோக்கி ஆழகவனிப்பதன் மூலம் கண்டறிய முடியும். வழக்கமாக அவர்கள் கூறும் உடல்நிலை சரியில்லை என்பது பள்ளிமீதான வெறுப்பின் அறிகுறிகளில் முதலிடம் பிடிக்கிறது. அடுத்தது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைத்து தங்களுக்குள் கிண்டலடித்து சிரிப்பது. இந்த பட்டப்பெயர் ஆசிரியரின் குணம் தொடர்பாகவும், உடல் தொடர்பாகவும், ஆசிரியர் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் தொடர்பாகவும் இருக்கும். ஆசிரியர்கள் இதனை அறியும்போதுதான் பட்டப்பெயர் எவ்வளவு ஆழமான கவனித்தலின் மூலம் சூட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளியும், ஆசிரியர்களும் மிக அவசியமானவர்கள். காரணம் எளியதுதான், அந்தக்காலத்தில் பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை. ஆனால் இன்றைய சம காலத்தில் மிக அதிகமான பட்டங்கள், தேர்ச்சியோடு, தனது குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை விட மேலானவர்களாக பெற்றோர்கள் உள்ளனர். எனக்கு புரியாத விஷயமெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இவ்வளவு படித்தவர்கள் ஏன் தங்கள் குழந்தைகளை தங்களைக்காட்டிலும் குறைவாக படித்தவர்களிடம் கொண்டுபோய் ஒப்படைக்க பேரார்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். பொதுவாக, நமது மனப்பான்மை பள்ளியைப்பற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடாத தன்மையாய், தொழிற்சாலையில் வேலை செய்து எந்திரங்களாகிவிட்ட மனிதர்களின் மரத்துப்போன தன்மையை நினைவுபடுத்துகின்றது. இவான் இலிச் எழுதிய புத்தகமான டீஸ்கூலிங் சொசைட்டி, முந்தைய காலத்தில் தொழிற்புரட்சி தொடங்கிய தருணத்தில் இயல்பான ஒரு மனிதனை வேலையாளாக்கி, மந்தமான சூழலில் அவர்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தொழிற்சாலை முதலாளிகளால் அந்த காலகட்டத்தில் வேலையாட்களாக நியமிக்கப்பட்டவர்கள் பிச்சைக்காரர்கள், வேலையில்லாத போக்கிரிகள், சிறை தண்டனைக் குற்றவாளிகள் என இவர்கள்தான். ஏன் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? இவர்கள்தான் ஒருங்கிணைவாக தங்களுக்குள் இல்லாமல் தங்களது உழைப்பை முழுமையாக தொழிற்சாலைக்கு அர்ப்பணிப்பார்கள் என்ற உள்நோக்கம்தான் என்று நூலில் கூறப்படுகிறது. இன்றும் கூட பலநாடுகளிலுள்ள தொழிற்சாலைகளில் மனித உணர்வுகளை மரத்துப்போகச் செய்யும் ஒரே மாதிரியான இந்த வேலைகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் பணியாட்கள் அதிகஅளவு விலகிவருவது பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. மும்பையிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள் திடீரென ஏதும் கூறாமல் பணியை விட்டு விலகி, தங்களது கிராமத்திற்கு சென்றுவிடுவது, பணியினைத் தொடர்ந்தாலும் கவனமில்லாமல் செய்வது என்ற நிலையே உள்ளது. ஒரு தொழிலாளி எட்டு மணிநேரம் வேலை என்ற நிலையில் பெரும் எந்திரங்களோடு நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என எந்திரங்களின் குறைந்துவிடக்கூடாத பாகம்போல இயங்குவதால் அவரின் மனதில் கடும் மனச்சோர்வும், அயர்ச்சியும் உண்டாகிறது. இந்த மனநிலையே ஒருநாள் ரத்ததாகம் கொண்ட கிளர்ச்சியாக, வன்முறையாக வெடித்தெழுகிறது. தொழிற்சாலை அவற்றைத் தொடங்கிய முதலாளிகளுக்கு லாபம் அள்ளித்தரும். ஆனால் அதில் மனித எந்திரமாய் மாறி பணியாற்றும் பணியாட்களுக்கு? இறைவன் அளித்த ஒப்பற்ற பரிசான கற்பனைவளமும், மனிதவாழ்வும் தொழிற்சாலை பொறிகளில் பொருட்களின் நகர்வை கவனித்துக் கொண்டு யாரோ ஒருவரின் லட்சியத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பது தானா? பள்ளிக்கூடம் எப்படி தொழிற்சாலைப் பிரிவுகளை ஒத்ததாக உள்ளது என்று நையாண்டி செய்யும் புத்தகம் ஒன்றினைப் படித்தேன்; டேஞ்சர் ஸ்கூல் – அதர் இந்தியா பிரஸ் பதிப்பகம். பள்ளி பற்றிய உரையாடலுக்கு திரும்ப வருவோம். ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் நிலையில் பள்ளியில் சேர்க்கப்படுகிறது. அதோடு அதன் கற்றுக்கொள்ளும் திறன் முடிவுக்கு வந்துவிடுகிறது. மக்களில் பலருக்கு குழந்தைகளை மிகச்சிறப்பான மதிப்பெண்கள் வாங்கிய பள்ளியில் சேர்க்க முடியாவிட்டாலும், அப்பள்ளி மிகச்சிறப்பான வேகமான கற்றல்திறனை உருவாக்குகிறது என்று நம்புகிறார்கள். மும்முரமான போட்டித்தளத்தை விட்டு விலகி, பள்ளிப்படிப்பு முடிந்தபின்தான் தெரிந்துகொள்வதற்கும், அறிதலுக்குமான வேறுபாட்டினைப் புரிந்துகொள்ளவே முடியும். குழந்தைகளைப் பெற்றெடுப்பதே பள்ளிக்கு அனுப்பத்தான் என்று நம்பும் அனைவரைப்போலவே நாமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். நம்முன் இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதானே! மிகச்சிறந்த புத்திசாலித்தனமாக பெற்றோர்களே அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகலாம். இது பல குடும்பங்களிலும் நடந்துவருகிற ஒன்று என்றாலும் குறைந்துவிட்ட ஒன்று. பள்ளியின் கற்றல் திட்டங்கள் அனைத்து குழந்தைகளின் உள்ளிருக்கும் திறமைகளையெல்லாம் வெளிக்கொணர உதவும் என்று நம்பும்போது, ஏன் பள்ளி நிறைவுற்ற மாலைவேளையிலும் கூட பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடும் பிரயத்தனம் செய்து அனுப்பி, அவர்களின் நண்பர்களை விட அதிகமாக ஏன் மிஞ்சி, முதலிடத்தையும் பெறவேண்டும் என்று பேராசைப்படுகிறோம்? மதிப்பெண்கள், முதலிடம் என்பதனை குழந்தைகள் அறிதலின் மூலம் நிகழ்த்துவதில்லை. வெறும் நினைவாற்றலை மட்டும் முன்னிறுத்துவதால் குழந்தைகளின் இயல்பான திறமைகள் என்னவென்று அவர்களுக்கும், நமக்கும் தெரியாமலேயே காலம் கடந்துவிடுகிறது. நாம் நமது குழந்தைகளின் இயல்பான திறமைகள் மலர அவர்களுக்குத் தரவேண்டியது ஒரு எளிய சந்தர்ப்பமே. நாங்கள் கோவாவைத் தாண்டி பல்வேறு இடங்களுக்குச் செல்ல முயலும்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்லுவோம். பள்ளி பாடவேளைகள் தவறுகிறது என்பதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. கற்றல் என்பது தாயின் நாக்கிலிருந்து உயிர்பெற்று, இயற்கை, வெளிப்புறச்சூழல், அனுபவம் வாய்ந்த மனிதர்கள் என்று விரிந்து நீண்டு செல்லக்கூடியவை. தற்சார்பு கொண்டு வெளியுலகை சமாளிக்கும் திறத்துடன் உருவாகவேண்டிய குழந்தைகளை நிகழ்கால கல்விமுறை அவர்களது கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் அழித்துவிட்டு, பொருளாதார முறைகளின் மலிவான வார்ப்புகளில் அச்சிடுகிறது. ராகுல் தான் படித்துக்கொண்டிருந்த எஸ்எஸ்சி வகுப்பை இறுதி செய்யும் தருணத்தில் எந்த விருப்பத்தையும் தூண்டாத பள்ளியின் கல்வி குறித்து நானும் என் மனைவியும் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்திருந்தோம். பள்ளியில் அது அவனுடைய பத்தாவது ஆண்டு. எஸ்எஸ்சி வகுப்பினை முதல்தரத்தில் இறுதி செய்தான் என்றால் பள்ளி செல்வதிலிருந்து சிறிது காலம் அவனை விடுவிக்க எண்ணினோம். நாங்கள் இதை அவனிடம் கூறியபோது அவன் இந்த விஷயத்தை நம்பவே இல்லை. ராகுல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதோடு, தேர்ச்சி பட்டியலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றிருந்தான். எனவே முன்பு கூறியபடி அவனுக்கு இடைவேளையை அளித்தோம். கொடுக்கப்பட்ட ஆண்டில் எந்த விரும்புகிற ஒரு செயல்பாட்டிலும் ஈடுபட அவனுக்கு ஊக்கம் தந்து, அதை நடைமுறைப்படுத்த பண உதவியினையும் ஏற்பாடு செய்தோம். பள்ளி செல்லாத அந்த ஆண்டினை விரும்பியது போல் வாழவிருக்கும் ராகுலுக்கு சில நிபந்தனைகளை விதித்தோம். தினமும் நிகழும் நிகழ்ச்சிகள், அவனுடைய எண்ணங்கள், கருத்துக்களை ஆண்டு முழுவதும் பதிவு செய்யும்போதுதான் கற்றல் திறனோடு ஒழுக்கமும் உருவாகும் என்று உறுதியாக நம்பினோம். ராகுலிடம் நாங்கள் கண்டு வியந்தது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை செய்யத் தொடங்கிவிட்டான் என்றால் சுய ஒழுங்கோடு அதனை செய்து முடிப்பான். இது தன்னைச் சார்ந்த விஷயங்களை விட மற்றவர்களுடைய, அவர்களுக்கான விஷயங்களில் கண்டுணர்ந்தோம். தன்னுடைய பொறுப்பிலான ஒரு செயலை மட்டும் எந்த ஒரு சலிப்பில்லாமல் செய்யமுடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினோம். தினசரி நாட்குறிப்பைத் தவறாது எழுதக்கூறியது பின்னாளில் பல நல்ல பலன்களை அளித்தது. ராகுலின் அனுபவங்கள், கருத்துக்கள், உணர்ந்த விஷயங்கள், செயல்பாட்டின் வெளிப்பாடு, மேலும் செய்த செயல்கள், செய்யவேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் எழுதக் கூறினோம். தொடக்கத்தில் ஜூனிலிருந்து டிசம்பர் வரை ராகுலின் முடிவுகள், செயல்பாடுகள் மெதுவாக மந்தமானதாக இருந்தது. பின் ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான காலத்தில் மிச்சமுள்ள காலத்தை மதிப்பீடு செய்து கொண்டு, எவ்வளவு அனுபவங்களைக் கூடுதலாகப் பெறமுடியுமோ அவ்வளவு அனுபவங்களை ராகுல் சேகரித்தான். பதினாறு வயதில் மிகச்சிறந்த குறிப்பிடத்தக்க அனுபவங்களாக அவை இருக்கக்கூடும். தனக்காக செய்த செயல்பாடுகள் (அ) பிறருக்காக செய்த செயல்பாடுகள் என அவை அமைந்திருக்கின்றன. ராகுல் தொடர்ந்து தனது நாட்குறிப்புகளை எழுதியதன் அதிர்ஷ்டமாக, அனிதா பின்ட்டோவின் வழிகாட்டுதலில் அவை இப்போது புத்தகமாக மாறியிருக்கிறது. நவீன காலத்தில் பள்ளி மாணவர்களின் மீது பேரளவிலான அழுத்தம் கனமானதாக மாறிக்கொண்டிருக்கிற நேரத்தில், தொடர்ச்சியானதாகவும் உள்ளது. தொடர்ந்த வழக்கமான தேர்வுமுறைகள் பத்து ஆண்டுகள் குழந்தைகளின் மேல் பெரும் பாரமாய் விழுந்தால் அதை அவன் எப்படி உணர்வான்? இந்த பத்தாண்டுகளில் ஏன் இன்றுவரையிலும் கூட மாணவர்கள் எந்தக் கேள்வியும் புரிதலும் இல்லாமல் பெரும் மலையளவு தகவல்களை தங்கள் மூளையில் பதிவு செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். இதில் அனைத்து விஷயங்களையும் தேர்வறையில் தாளில் வாந்தி எடுத்து கொட்டியபின் அவற்றை மறந்து போய் விடுகிறார்கள் என்பதுதான் ஆசிரியர்களின் கடும் பிரயத்தனங்களின் இறுதிமுடிவு. மனப்பாடம் செய்வது, தேர்வு எழுதுவது என்று சென்று கொண்டிருக்கும் மாணவனுக்கு மூச்சு விடக்கூட நேரம் கிடைக்காது. பத்தாவது வந்துவிட்டால் மிகவேகமாக அவன் பயணிக்கவேண்டிய பாதையை, ஆர்வம் கொண்டுள்ள செயல்பாட்டை, ஆசைகளை, கனவுகளை, கருத்துக்களை, நிறைவேற்றக்கூடிய ஒரு வழியைத் தீர்மானிக்கவேண்டும். பயணிக்கக் கூடியவனின் பாதையை அவனுக்காக அவனது பேராசை பிடித்த பெற்றோர்கள் பெரும் பணம் சம்பாதிக்கக்கூடிய இரு துறைகளான மருத்துவம் (அ) பொறியியல் என இரண்டில் ஏதேனும் ஒன்றினை நோக்கி உந்தித் தள்ளுவார்கள். இந்த பெரும் பணப்பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சில ஆண்டுகளை செலவு செய்தபின்தான் தெரியவரும்; தான் தேர்ந்தெடுத்த துறைக்கும் தன் மனம் கூறும் ஆர்வம் மற்றும் விருப்பங்களுக்கும் வெகுதொலைவு என்று. ஆனால் என்ன செய்ய? காலம் கடந்துவிட்டிருக்கும். குழந்தைகளுக்கு மூச்சுவிட சிறிது காலம் இடைவேளை கிடைத்தால்தான் அவர்களுக்கு பிடித்த செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்கள் பயணிக்கும் பாதையைச் சுயமாக அவர்களே தேர்ந்தெடுக்க முடியும். மாநில வேலைவாய்ப்புச் சந்தைகளைக் கவனித்தீர்கள் என்றால் ஒரு ஆண்டு காலம் என்பது எந்தவிதமான மோசமான நிகழ்வுகளையும் உருவாக்கிவிடப் போவதில்லை என்பதை அறிய முடியும். பள்ளி செல்லாமல் இருக்கும் ஒரு ஆண்டு முழுவதும் தங்களுடைய பையன் (அ) பெண்ணை பல்வேறு வணிகம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஈடுபட ஊக்கம் கொடுத்தீர்கள் என்றால் அது அவனுக்கு/ அவளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமையும். பல பெற்றோர்களின் நண்பர்கள் பல்வேறு துறைகளில் வணிகத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களிடம் சிறிது காலம் பணி செய்ய ஏற்பாடு செய்வது முடியாத ஒன்றல்ல. இந்த நிகழ்வை தனது கிராமம் (அ) நகரம் (அ) நாட்டிலுள்ள பல நகரங்களில் ராகுலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது போல நடைபெற ஏற்பாடு செய்யலாம். குழந்தைகளுக்கு நாம் ஏற்படுத்திக்கொடுக்கும் இடைவேளை என்பது அவர்கள் தம்மை புரிந்துகொள்ளவே என்பதை பின்னாளில் உணரக்கூடும். இடைவேளையில் குழந்தைகள் தங்களுக்கு மிகவிருப்பமான ஒன்றில், ஒருங்கிணைந்த திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு ஆண்டு காலம் என்பது அவர்களுடைய வேலைவாய்ப்பு தொடர்பானதல்ல. தங்களுக்கு விருப்பமான செயல்பாடுகள், விஷயங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள நாம் கொடுக்கும் சிறிய சந்தர்ப்பமே. இதில் ஈடுபடும் துறைகளே அவர்கள் பயணிக்கும் பாதை என்ற வற்புறுத்தும் வாய்ப்புகள் இல்லை. குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்பும் ஓவியம், பாடல், நடிப்பு, நடனம், தச்சுப்பணி, உலோக இணைப்பு வேலைகள், இணையம் என எதையும் மேற்கொள்ள சுதந்திரம் உண்டு. பள்ளியில் செலவழித்த பத்து ஆண்டுகளை விட இந்த ஓராண்டு அவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கும். பல்வேறு செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ளும்போது பணம் சம்பாதிப்பது ஒரு நோக்கமாக மாறிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கவேண்டும். ஓராண்டு காலத்திற்குப் பின், குழந்தைகள் தங்கள் அனுபவ தரிசனத்தின் வழியாக, பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு தங்களுக்கான பாதையை பல்கலைக்கழக/ கல்லூரி பாடங்களின் ஊடே கண்டடைய முடியும். ஓராண்டு காலம் அவனின்/அவளின் சுயசிந்தனையை வளர்த்திருப்பதால் அவர்கள் தங்கள் தந்தையின் தொழிலை கற்றுக்கொள்ள முனையலாம் (அ) வேறு வாய்ப்புகளை கண்டடையலாம்; இதனை எந்த வற்புறுத்தலும் இன்றி செய்வதுதான் முக்கியமான விஷயம். ஓராண்டு முழுவதும் குழந்தைகளுடன் உரையாடி, அவர்களின் தேர்ந்தெடுத்த வாய்ப்புகளின் உருவாக்கம், அதனை மேம்படுத்தல் பற்றி ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி தீர்வினை அடையும் விதம் பற்றியும் பகிர்ந்து கொள்ளுதலினால் ஆகச்சிறந்ததாக அனுபவங்கள் உருவாகக்கூடும். நாங்கள் முடிந்தவரை ராகுலிடம் பேசி சூழலுக்கேற்றாற் போல நிகழ்ச்சிகளை மாற்றி அமைத்துக் கொள்ள தன்னைப் புரிந்துகொள்ள உதவினோம். தி அதர் இந்தியா பிரஸ் பதிப்பித்துள்ள இந்த நூல் வாழ்க்கையின் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்தப்புத்தகம் பெற்றோர்களுக்கு குறிப்பிட்ட காலம் பள்ளியைவிட்டு குழந்தைகளை விடுவித்து வாழ்க்கையினை உணர, பல நல்ல வாய்ப்புகளை அடையாளம் காட்ட உதவும். நமது சமூகமும், பள்ளியின் கல்விமுறையும் சில தடைகளைக் கண்டிருக்கிறது. ராகுல் இதற்கு உதாரணம். ஓராண்டு முடிவிற்கு பின் கல்லூரி சென்று சேர்வதில் எந்த பிரச்சனையும் எழவில்லை. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்திசைவான செயலில் இறங்கும் துணிவே இதற்கு அத்தியாவசியமானவை. நீங்கள் இதற்கு துணிந்துவிட்டால் கற்றல் என்பது முன்பு நீங்கள் உணர்ந்ததைப் போல நிச்சயம் இருக்காது. கிளாட் அண்ட் நார்மா ஆல்வாரிஸ்   பர்ரா, அல்மெய்டாவட்டோ கோவா 403507 இந்தியா 3 எழுத்தாளனிடமிருந்து வணக்கம்! ஒரு ஆண்டிற்கு முன் யாராவது என்னிடம் உன்னால் ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று கேட்டிருந்தால் திகைத்தபடி, நான் புத்தகம் எழுதுவதா? உங்களுக்கென்ன பைத்தியமா? எதைப்பற்றி எழுதுவது? எனக்கு என்ன தெரியும்? என்று நிச்சயம் கேட்டிருப்பேன். புத்தகம் எழுதியதற்கு பலவிதமான விமர்சனங்கள், பதில்கள், பாராட்டுதல்கள் கிடைக்கின்றன. ஒரு ஆண்டு காலம் நான் ஈடுபட்ட செயல்கள், கிடைத்த அனுபவங்கள், கருத்துக்களை ஓரளவு பதிவு செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். அதன் வீச்சை வாசகர்கள்தான் கூற வேண்டும். பதினேழு வயதில் நான் ஒரு புத்தகம் எழுதினேன் என்றால் அதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், ஆதரவு என இவையில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. நிச்சயம் ஒரு பெரிய கேள்விக்குறி உங்கள் மனதில் இருக்கக்கூடும். சரி கடந்த ஆண்டு முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தாய் என்பதுதானே அந்தக்கேள்வி? பள்ளி செல்லாத இடைவேளைக்காலம் முழுவதும் மாற்றுக்கல்வி முறையிலான வாழ்வனுபவங்களின் வழியே பயணித்தேன். பாம்புகள், மண்புழுக்கள், தவளைகள், சிலந்திகள் மற்றும் பல்வேறான உயிரினங்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என் சிறுவயது வரலாற்று சம்பவத்திற்குச் செல்வோம். இயற்கை குறித்த அதிகமான ஆர்வம் மிக இளம் வயதிலே இருந்தது. எறும்புகள் நகர்ந்து செல்வதை பல மணிநேரங்கள் உட்கார்ந்து கவனிப்பது, கோழிகள் உணவுதேடி மண்ணைக் கிளறிச் செல்லும் பயணத்தைப் பின்தொடர்வதை சிறு வயதிலிருந்தே நீ செய்கிறாய் என்று பெற்றோர்கள் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கோழிகள், எறும்புகள் குறித்த சம்பவங்களை என்னால் இன்றும் தகவல்களை செறிவு குன்றாமல் கூற முடியும். சேவல்களை சண்டைக்கு பழக்கிக் கொண்டிருப்பது என்று சிறு வயதிலே பல்வேறு உயிரிகளை நான் செல்லப்பிராணிகளாக வளர்த்தேன். சிறிய வாத்து, வெள்ளை நிற எலியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் தோளில் ஏற்றிக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்கு செல்வது என்பதில் முயல்களையும் பின்னர் சேர்த்துக்  கொண்டேன். பெரியவனாகும்போது, எனது விலங்குகளின் மீதான ஆர்வம் காடுகளின் மீது திரும்பியது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பெற்றோருடன் புனே சென்றோம். வாழ்வின் முக்கியமான இடமாக இன்றுவரை கருதும் பாம்புப் பூங்காவினை அன்றுதான் முதன்முதலாக பார்த்தேன். பாம்புகளின் மீதும், அதனை மனிதர்கள் லாவகமாக கையாளும் திறனின் மீதும் பெரும் ஆர்வம் எப்போதுமே எனக்கு உண்டு. பாம்புப் பூங்காவின் தலைவர் திரு. நீலம் கைரேவை என் தந்தை சந்தித்து எனது எஸ்எஸ்சி தேர்வுகள் முடிந்தபின் பாம்புகள் பற்றி கற்றுத்தர முடியுமா என்று கேட்டார். அவரும் மிக மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். எஸ்எஸ்சி தேர்வை நல்ல முறையில் எழுதினால், ஒரு ஆண்டு காலத்தில் உனக்கு பிடித்த அனைத்தையும் செய்யலாம் என்று எனது அப்பா கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை. தந்தையின் எண்ணம்தான் என்னை இன்று நூல் எழுதும்வரை கூட்டி வந்திருக்கிறது. தந்தையின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு உற்சாகமாக எனது எஸ்எஸ்சி தேர்விற்குத் தயாராகத் தொடங்கினேன். தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எண்பத்தேழு விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதோடு, தோராயமாக இருபதாயிரம் மாணவர்கள் எழுதிய தேர்வில் நூற்று அறுபத்து எட்டாவதாக நல்ல மதிப்பெண்களோடு பட்டியலில் இடம்பெற்றிருந்தேன். என் அனைத்து நண்பர்களும் தளர்ந்த நடையில் கல்லூரி செல்லத் தொடங்கியிருந்தனர். என் கண்முன்னே இருந்த ஓராண்டு காலத்தில் சுதந்திரம், மகிழ்ச்சி, வனவாசி ஒத்த வாழ்வு எனப் பலவும் நிறைந்திருந்தன. என் பெற்றோர் என்னிடம் விதித்த முக்கியமான நிபந்தனை சிறியதோ, பெரியதோ எந்த விஷயங்கள் என்றாலும் அதனை நாட்குறிப்பில் எழுதி வைக்கவேண்டும். இதனோடு கூடுதலாக ஒவ்வொரு மாதமும் ஒரு அறிக்கை ஒன்றோடு சிறப்பு அறிக்கையாக எனக்கு பிடித்த மகிழ்ச்சியாக செயல்பட்ட ஒரு நிகழ்வு குறித்து எழுதவேண்டும். இதனை முதலில் எழுதும்போது பள்ளியின் வழக்கமான தேர்வுகள் நினைவிற்கு வந்தன. முதலில் எழுதப்பட்ட என்னுடைய அறிக்கைகள் சலிப்பூட்டுவதாகவும், ஒன்றுபோலவும் இருப்பதாக உணர்ந்தேன். ஒரு நாள் இரவு அம்மா நாட்குறிப்பின் முக்கியத்துவத்தை கூறினார். அதோடு நாட்குறிப்பினை எப்படி எழுதவேண்டும் என்றும், நாட்குறிப்பு என்பது ஒரு புகைப்படத்தை பார்த்தவுடனே நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருவது போல, எழுத்துக்களும் மிகச்சிறந்த விவரணைகளாக ஒரு நிகழ்வைக் கூறும் என்று அம்மா கூறிய பின்பு உணர்ந்தேன். இந்த புத்தகமும் எழுத முக்கியக் காரணமே முன்னர் நான் எழுதிய நாட்குறிப்புகள்தான். எழுத்துக்கள் என் நினைவைத் தூண்டுவதால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் மிகத்தெளிவாக என்னால் இப்போதும் கூறமுடியும். தயாரா, பயணிப்போமா? ராகுல் ஆல்வாரிஸ் [pressbooks.com] 1 மபுசாவில் ஒரு மீன் பண்ணை பள்ளித்தேர்வை எழுதிவிட்டு வெளிவந்தபின் எதுவுமே தெரியாதவனாக இருந்திருக்கிறேன் என்ற உண்மையை நேரடியாகச் சந்திக்க வேண்டியிருந்தது. நானாக எந்த இடத்திற்கும் பயணப்பட்டதில்லை. ரயிலில் செல்ல பயணச்சீட்டு கூட வாங்கியதில்லை. மற்ற குழந்தைகளைப் போல என் பெற்றோர்களோடு (அ) உறவினர்களோடு பயணிப்பேன். அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு தலையசைப்பேன். கையிலிருக்கும் பணத்தை எப்படி கையாளுவது என்று கூட அறியாதவனாக, எவ்வித அனுபவமும் இல்லாமலிருந்தேன் என்றால் நம்புவீர்களா? என் அறிவிற்கு எட்டியவரை ஐம்பது காசு (அ) ஒரு ரூபாய் என்றுதான் வீட்டில் செலவிற்கு வாங்கிக் கொண்டிருந்தேன்…கிறேன். எனவே எனது கற்றலின் தொடக்கத்தை, தற்சார்பினை அறிய புத்திசாலித்தனமாக கோவாவிலிருந்தே தொடங்கலாம் என்று பெற்றோர் கூறிய யோசனையை செயல்படுத்த முடிவு செய்தேன். எனது பயணம் தொடங்கிய காலம் மழைக்காலம் என்பதால் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணிப்பது என்பது சிரமமானதாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள். எனது கிராமத்தின் அருகிலுள்ள மபுசா நகரிலுள்ள அலங்கார வண்ண மீன்களை வளர்ப்பது, விற்பது என செயல்படும் சிறிய கடை ஒன்றில் வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். கடையின் உரிமையாளரான அசோக் டி குரூஸ் என் அப்பாவின் கல்லூரித் தோழராவார். அசோக் மாமாவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் அவர் மற்ற வணிகர்களைப் போன்றவரல்ல. மீன்களைப் பாதுகாப்பாக வளர்ப்பது குறித்து பெருகிய ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மீன்களை விற்பதை விட அவை பற்றிய கருத்துக்களை ஆர்வமாக பகிர்ந்துகொள்வார். தன் கடையிலுள்ள எந்த ஒரு மீனையும் வாங்கச் சொல்லி வற்புறுத்தும் செயலினை அவர் மேற்கொண்டதே இல்லை என்பதை என்னால் நிச்சயமாக உறுதியுடன் கூற முடியும். அசோக் மாமாவின் மூலமாக வண்ணமீன்களின் வளர்ப்பு குறித்த உலகின் முன் நிற்பதை உணர்ந்தேன். இவரது வழிகாட்டுதல் மூலமாக, சோதனைகள் செய்து பார்க்க முயற்சி செய்தபோது அவற்றை இனப்பெருக்கம் செய்ய கப்பன்ஸ், பிளேட்டிஸ், மோலிஸ் மேலும் உள்ள சிறிய எளிமையான மீன்களுக்கும் முயற்சி செய்தேன். இந்த சோதனைகள் நல்ல நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியது. இதன்மூலம் உருவான குழந்தை மீன் குஞ்சுகளை அசோக் மாமா தானே வாங்கிக் கொள்ள முன்வந்தது என்னை ஊக்கப்படுத்தவே என்று அறிந்துகொண்டேன். இந்த சோதனைகள் பெரிய நம்பிக்கையை எனக்களிக்க, சியாம்ஸ் போரிடும் மீன், நீல குராமிஸ் போன்ற மீன்களை இனப்பெருக்கம் செய்யவைக்க பல சோதனைகளைத் தொடங்கினேன். அசோக் மாமாவின் ஆலோசனைகளை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் மீன்கடைக்கு காலையில் ஒன்பது மணிக்கு கிளம்புவேன். சைக்கிளில் வேகமாகச் சென்று நேரத்திற்கு அங்கு இறங்குவேன். மதிய உணவு இடைவேளை வரை அங்கு நடக்கும் வேலைகளை கவனித்துக்கொண்டிருப்பேன். தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயங்களை கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வேன். அசோக் மாமாவினுடைய கடை இரு அறைகளைக் கொண்டு கோம்ஸ் கட்டோ காம்ளக்ஸின் தரைதளத்தில் அமைந்திருந்தது. மீன்தொட்டிகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக முன்பக்க அறையிலும், பின்பக்க அறை பொருட்களை பாதுகாப்பதற்கான அறையாகவும் செயல்பட்டுவந்தது. அசோக் மும்பையிலிருந்து வாங்கி வந்திருந்த பல்வேறு வகையான மீன்தொட்டிகள் மொத்தம் இருபது, காட்சிக்காக முன்ன்றையில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொட்டியிலும் குறிப்பிட்ட இனத்தை, வகையைச் சேர்ந்த மீன்கள் வைக்கப்பட்டிருந்தன. அசோக்கினுடைய கடை முக்கியமான சந்தைப்பகுதியை விட்டு தள்ளி இருந்ததால், நிச்சயம் நல்ல பலன்கள் கிடைத்திருக்க முடியாது என்றாலும், கடைக்கு எப்போதும் வரும் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டேதான் இருந்தார்கள். கடைக்கு தினசரி வரும் வாடிக்கையாளர்களாக இருபதிலிருந்து முப்பது பேர் வரை இருந்தார்கள். கடைக்கு வந்துகொண்டிருந்த ஆரம்ப நாட்களில் எனது வேலை மீன்தொட்டிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது, அவை அழுக்கு பிடித்திருந்தால் அதனை சுத்தப்படுத்துவது, இறந்து போன மீன்களை அப்புறப்படுத்துவது என்று சிறிய வேலைகளைச் செய்து வந்தேன். அதோடு மீன்களுக்கு உணவிடுதலையும், காயம்பட்ட மீன்களையும், நோய்க்குள்ளான மீன்களையும் பராமரித்து வந்தேன். சில சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன். அசோக் மாமா சொல்லும் பல்வேறு இடங்களுக்கும் செல்லத் தொடங்கியிருந்தேன். மொய்ராவைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் மீன்தொட்டி வைக்க விரும்பினார். மீன் தொட்டி அமைப்பது குறித்த தீர்மானகரமான சிந்தனைகளைக் கொண்டிருந்த அவர், இறுதியாக அதன் செயல்பாட்டினை செம்மையாக்க எங்களிடம் ஆலோசனைகளையும், உதவிகளையும் எதிர்பார்த்தார். அவரது வண்டியிலேயே எங்களைத் தன்வீட்டுக்கு கூட்டிச் சென்றார். பயணத்தின் போது, மீன் தொட்டி வைக்க வேண்டிய இடம், ஒளி அமைப்புகள், மீன்கள், தண்ணீர் வடிகட்டிகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் விவாதித்தோம். அவரின் விருப்பத்தை அறிந்து அதனை செயல்படுத்தும் வகையிலும், எங்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் முறையிலும் மீன்தொட்டியை அமைத்துக் கொடுத்துவிட்டு, அவரின் தேவைகளைக் குறித்துக்கொண்டு, மபுசாவிற்குத் திரும்பினோம். கடைக்கு மறுமுறை வந்தபோது அவருக்குத் தேவையான பொருட்களை அளித்தோம். இன்னொரு முறை அசோக் மாமாவும் நானும் சேர்ந்து வாடிக்கையாளர் அலுவலகம் ஒன்றுக்கு சிறிய குராமிஸ் மீன்களையும் தொட்டியின் பின்புலமாக ஒரு படத்தை ஒட்டும் வேலையைச் செய்ய முனைந்தோம். அசோக் மாமாவின் செயல்களைக் கவனமாக கற்க முயற்சித்தேன். அதன் பின்பு அசோக் என்னை வாடிக்கையாளர்களின் மீன் தொட்டிகளுக்கு ஏற்படும் சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க என்னை அனுப்பத்தொடங்கினார். நாளடைவில் வாடிக்கையாளர்களுக்கான மீன்தொட்டியில் காற்றுக் குழாய்கள், வடிகட்டிகள், பொம்மைகள் போன்றவற்றை பொருத்துவதையும், நோயுற்ற மீன்களை கவனிப்பதும், மீன்களின் இறப்பைக் கண்டறிந்து தடுப்பதும், வாடிக்கையாளர்களுக்கு புதிய மீன்களைத் தருவித்து தருவதுமான பணிகளைச் செய்யத் தொடங்கினேன். மீன் தொட்டிகள் அமைத்துக் கொடுத்ததற்கான மீதித்தொகையை வசூலிப்பது, மீன்தொட்டிகள் அமைத்து கொடுத்த வீடுகளுக்கு சென்று அவை மகிழ்ச்சியாக நீந்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இது போல நானே வீடுகளுக்கு சென்று பார்வையிடுவது மிகப் பிடித்தமானதாகயிருந்தது. ஒருநாள் அசோக் மாமா எங்கள் கடைக்கு போட்டியாக இருந்த கடையில் உள்ள மீன்கள் மற்றும் மீன்களின் உணவுகளின் விலை குறித்து உளவறிந்து வரக்கூறினார். போட்டியாளரின் கடைக்குள் சாதாரண வாடிக்கையாளர் போல நுழைந்து மீன் மற்றும் மீன் உணவுகளின் விலைகளை விசாரித்தேன். இவ்வளவும் கேட்டுவிட்டு எதையாவது வாங்காவிட்டால் எப்படி என்று விலை மலிவான ஒரு ஜோடி கருப்பு மோலிஸ் வாங்கினேன். இரண்டு கடைகளின் விலைகளை ஒப்பிட்டதில் அசோக் மாமாவின் கடைப்பொருட்களே போட்டியாளரின் கடைப்பொருட்களை விட மலிவானதாக இருந்தது. இந்தப்பருவத்தில் மீன் தொட்டிகள் அமைப்பதில் ஓரளவு மேம்பாடு அடைந்திருந்தேன். இதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது, பல மணி நேரங்கள் மீன்களைக் கவனித்து, வாடிக்கையாளர்களின் மீன்வளர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைக் கண்டறிந்து, தீர்வுகளை நோக்கி அசோக் மாமா எப்படி பயணிக்கிறார் என்பதை அறிந்துகொண்டது; இரண்டாவது, மீன்கள் தொடர்பான பல புத்தகங்களைப் படித்து கற்றுக்கொண்டதே ஆகும். எஸ்எஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதற்காக என் அப்பா அளித்த பரிசு இது. புத்தகங்கள் சற்று விலை கூடியவை என்றாலும் அவற்றின் மதிப்பு விலைக்கு நிகரானதே. புத்தகங்களின் மூலம் பெற்ற அறிவும், அனுபவங்களின் மூலம் நான் பெற்ற நடைமுறை விஷயங்களும் ஒன்றிணைந்து மீன்வளர்ப்பு குறித்த எனது அறிவைக் குறிப்பிடத்தக்க நிலைக்கு உயர்த்தின. மிக முக்கியமான நிகழ்ச்சியாக என் அனுபவத்தில் நான் உணர்வது அசோக் மாமா எனக்கு மீன்தொட்டி செய்யக் கற்றுக்கொடுத்ததுதான். வாடிக்கையாளர்களின் வரவு குறைந்த நேரத்தில் மீன்களுக்கான கண்ணாடித்தொட்டி செய்வதைப் பற்றி கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். நான் அதன் அடிப்படையைக் கற்க விரும்பியதால் ஆறு மீன்தொட்டிகள் அமைக்குமளவு மீன் தொட்டிக்கான கண்ணாடித்துண்டுகள் குறிப்பிட்ட அளவுகளில் எந்த வித கீறலும் இல்லாமல் எங்கள் கடைக்கு கொண்டு வரப்பட்டன. கண்ணாடித்துண்டுகளை விற்கும் கடைக்கு அசோக் மாமாவோடு செல்லும்போது ஒவ்வொரு துண்டும் என்னென்ன அளவுகளில் இருக்கவேண்டும் என்று அசோக் மாமா சொல்வதைக் கேட்பேன். சில சமயம் கண்ணாடித் துண்டுகளை மீண்டும் அறுக்கவேண்டி இருக்கும். காரணம் தவறான அளவுகள்தான். பல்வேறு விதமான கண்ணாடிகளை வாங்க வந்ததில், அக்கடை உரிமையாளர் நன்றாக பழக்கமாகிவிட்டார். அசோக் மாமா கண்ணாடித்துண்டுகளுக்கு எப்படி விலையை கணக்கிடுவது என்று சொல்லித்தந்தார். உற்சாகமூட்டும் மனநிலை எனக்கு ஏற்படும்படி சில சமயங்களில் அசோக் மாமா என்னிடம் பணம் தந்து விரும்பியதை வாங்கிக்கொள் என்பார். மீன்தொட்டி செய்வதற்கான கண்ணாடித்துண்டுகளை வாங்கியதோடு, அவற்றை சரியான அளவுகளுக்கு வெட்டி கடைக்கு கொண்டு போக நினைத்தபோதுதான் ஒரு பிரச்சனை முன்வந்து நின்றது. வாகனம்!. கண்ணாடித் துண்டுகளை எதில் வைத்துக் கொண்டு செல்வது? ரிக்சாவில் கொண்டு போகலாம்தான் ஆனால் அதற்கு என்ன செலவாகும் என்று முன்னமே பேசியிருந்தால் சரியாகயிருந்திருக்கும். அசோக் மாமாவினுடைய கடை அருகிலேதான் இருந்தது. வெட்டப்பட்ட கண்ணாடித்துண்டுகள் அடுக்கப்பட்ட பெட்டியின் எடையை கணக்கிட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்காரர் கைகளிலே தூக்கிக் கொண்டு போய்விட முடியும் என்று உறுதியான நம்பிக்கையைத் தெரிவித்தார். முதலில் தொடக்கத்தில் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை. ஆனால் நடக்க நடக்க கண்ணாடிப் பெட்டியின் எடை அதிகமானது போல் இருக்க, மெல்ல உடல் தளர்ந்தபடி இருக்க, சாலையில் கால் வைத்து நடக்கத் தொடங்கினேன். அனைத்து திசைகளிலும் ரிக்சாக்கள், கார்கள், மோட்டார்சைக்கிள்கள் என வாகனங்கள் அடித்த ஹாரன் ஒலியால் இதயமே அதிர்ந்து போய்விட்டது. இதயத்துடிப்பு காதில் வெம்மை பொருந்தி ஒலித்தது. கடைக்குச் சென்று சேரும் வழியிலே நான் எடுத்த இம்முடிவு சரியா என்று சந்தேகப்படத் தொடங்கிவிட்டேன். ஆனாலும் எந்த இடத்திலும் பெட்டியைக் கீழே வைக்கவில்லை. அது கண்ணாடியாயிற்றே! கைகள் கடுமையான வலியில் துவண்டு நடுங்கத் தொடங்க, கடையில் மெல்ல நுழைந்து அதை சோதித்துப் பார்த்துவிட்டு பின்னரே நிம்மதியடைந்தேன். ஆனால் அசோக் மாமா என் மீதும், நான் எடுத்த முடிவின் மீதும் கடுமையான கோபத்தை கொண்டிருந்தார் என்பதை அறிந்துகொண்டேன். ‘’கண்ணாடிப் பெட்டியோடு வரும் வழியில் உனக்கு ஏதேனும் விபத்து நடந்திருந்தால் என்ன செய்வது? உன் பெற்றோர்கள் என்னை நம்பித்தானே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்’’ என்றார். உண்மையிலே நான் அன்று முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். மீன் தொட்டியினை அமைக்கக் கற்றுக்கொள்வது மிக மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. முதலில் தொட்டிக்கான அளவினை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பின் நீளம் மற்றும் அகலத்தினை கணக்கிடவேண்டும். கண்ணாடியின் பக்கங்களை சிலிக்கான் கொண்டு இணைக்கவேண்டும். பசை போல செயல்பட்டு பக்கங்களை இணைக்கும் இது ரப்பரைப் போல கடினமானது. மேலும் இது நீரிலும் கரையாது. கண்ணாடிகளின் முனைகளில் மட்டும் சிலிக்கானைத் தடவும் அதே நேரம் வேறெந்த இடத்திலும் விரல்களால் தொடக்கூடாது. சிலிக்கான் கண்ணாடியில் ஏற்படுத்தும் அடையாளங்களைப் போலவே, கைரேகைப் பதிவுகள் கண்ணாடியில் பதிந்து என்றைக்கும் அழிக்க முடியாதபடி அழுக்காகி காட்சியளிக்கும். பிறகு தொட்டியைத் திரும்ப மூடும்போது உள்புறமாக சிலிக்கானை வலுவிற்காக தடவ வேண்டும். இந்தக் கண்ணாடி காய ஒரு நாள் முழுமையாகத் தேவைப்படும். அடுத்த நாள் தொட்டியில் நீரை நிரப்பி சோதனை செய்து சரியாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். பிறகு நான் என்னுடைய முதல் மீன் தொட்டியை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது, செய்த தவறு என்னவென்றால் மேலிருக்கக் கூடிய கண்ணாடியை மாற்றி ஒட்டிவிட்டேன். ‘’ஏதோ புதியவகை மீன் நீந்துவதற்கான தொட்டி போல’’ என்றார் அசோக் மாமா. என் கவனக்குறைவான வேலைக்கு என்னை தொட்டிக்குள்ளேயே போட நினைத்திருப்பார். நான் கற்றுக்கொண்ட விஷயங்களைச் சோதனை செய்ய கிடைத்த வாய்ப்பாக மீன்கள் தொட்டியில் இறந்துவிடுகின்றன எனும் பொதுவான புகார் ஹோட்டல் ஆஸ்பர்னின் மேலாளரிடமிருந்து வந்தது. அசோக் மாமா நேரடியாக ஹோட்டலுக்கு வந்து மீன்தொட்டியினை சரி செய்து தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடையின் மதிப்பான நெடுநாளைய வாடிக்கையாளர் என்று அசோக் மாமா தானே செல்ல நினைத்தாலும் போக முடியாதபடி பல்வேறு வேலைகள் தடுக்க, எதையும் தள்ளிப்போட முடியாத சூழலில் அவருக்குப் பதில் என்னை அனுப்பி வைக்க முடிவெடுத்தார். ஹோட்டல் மேலாளரின் முகவரி அட்டை, எப்படி ஹோட்டலை அடைவது என்கிற குறிப்புகள், மீனுக்கான சில மருந்துகள் சில குழாய்கள், குறைபாடுள்ள ஒன்றோடு என்னுடைய குழாய் ஒன்றினையும் எடுத்துக்கொண்டேன். அசோக் மாமா என் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கையின் காரணமாகவே முக்கியமான இந்த வேலையை எனக்கு கொடுத்ததாக நினைத்து பெருமையும், மகிழ்ச்சியும் தாள முடியாததாக இருந்தது. எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் அன்று மாலையில் ஹோட்டலைச் சென்றடைந்தேன். அந்த ஹோட்டல் பெரியதாகவும் அழகிய புல்வெளிப் பரப்பினையும், நீச்சல் குளத்தினையும் கொண்டிருந்தது. ஒரு அனுபவம் வாய்ந்த மீன் மருத்துவன் போல பெருமையுடன் தலை நிமிர்த்தியபடி உள்ளே நடந்தேன். ஹோட்டலின் மேலாளரைச் சந்தித்து, மீன்களைப் பற்றிய விஷயங்களைச் சேகரித்தேன். மீன்களிடம் ஏதாவது நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்று தேடியபோது எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் அதன் இறப்பிற்கான காரணத்தினை கண்டுபிடித்தேன். மீன்களுக்கு அளவுக்கதிகமான உணவிடுதல்தான் அது. மீன்களுக்கான உணவு அவற்றின் உடலளவைப் பொறுத்தே அளிக்கவேண்டும். ஆனால் மக்கள் அதிக அளவு உணவினை நீரில் கொட்டுவதால், நீர் மெல்ல நஞ்சாகிவிட மீன்கள் இறந்துபோகின்றன. மீன்தொட்டியினைச் சுத்தம் செய்து, பம்புகளை மாற்றிவிட்டு, வடிகட்டிகளைச் சரிபார்த்து பின் மீன்களுக்கு எப்படி உணவிடவேண்டும் என்று கூறினேன். மீன்களுக்கான சில மருந்துகளையும் விற்றுவிட்டு, அதனை எப்போதும் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லிவிட்டு, அசோக் மாமா தந்திருந்த கட்டணச்சீட்டினை அவர்களிடம் தந்தேன். எனது வேலையில் பெரும் திருப்தி அடைந்தவர்களாக தேநீர் தந்து உபசரித்தார்கள். நான் தேநீர் அருந்துபவனல்ல என்பதால் மட்டுமல்ல என் அனுபவத்தை அசோக் மாமாவிடம் சொல்ல இனிமேல் தாமதிக்க முடியாது என்று தேநீரை மறுத்துவிட்டு வேகமாகக் கிளம்பிவிட்டேன். அந்த நேரத்தில் பன்ஜிமிலுள்ள மீன் கடைகளைப் பார்க்க வாய்ப்பிருப்பதாகக் கூறினாலும் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்த நேரம் என்னுடைய கியர் சைக்கிள் உடைந்துபோய் கிடந்தது. எனவே அதற்கான உதிரிபாகங்கள் வாங்கவும் பன்ஜிம் செல்ல வேண்டியிருந்தது. என் அம்மாவிடம் நான் போக முடியாததற்கான காரணத்தை கூறி, அவர் பன்ஜிமிற்குச் சென்று வாங்கிவர முடியுமா என்று கேட்டேன். ஆனால் அவரோ உனக்கானதை நீயே தேடிப் பெற்றால்தான் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டார். பன்ஜிமிற்கு சென்று சைக்கிளிற்குத் தேவையான பாகங்களை வாங்கிக் கொண்டு, மீன்கடைகளைப் பார்த்துவிட்டு அசோக் மாமா கடைக்கும் சில பொருட்களை வாங்க வேண்டியிருப்பதை நினைத்துக்கொண்டு அதற்கு முழு நாளையும் செலவிட வேண்டுமா என்று யோசனை மனதில் ஓடியது. அடுத்த நாள் எனது அம்மாவோடு சேர்ந்து பன்ஜிம் சென்றேன். சில முக்கியமான பகுதிகளைச் சுற்றிக் காட்டிவிட்டு உன் வேலைகளை முடித்துக்கொண்டு வா என்று கூறிவிட்டு அம்மா கிளம்பி விட்டார். அவர் கிளம்பியது எனக்கு பதட்டத்தை உருவாக்கியது என்றபோதும் சமாளித்துக் கொண்டுவிட்டேன். மனம் சமநிலைப்பட வயிற்றில் பெரும் பசி இரைச்சலை உணர்ந்து, காமத் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டபோதுதான் வீட்டில் சாப்பிடும் உணவுவகைகள் வெளியில் என்ன விலையில் விற்கிறது என்று அறிந்து கொண்டேன். அசோக்கின் கடைக்கான சிலிக்கான் வாங்க அது விற்கும் கடைகளைத் தேடி பல கேள்விகளைக் கேட்டு இறுதியில் கடையைக் கண்டு பிடித்தேன். பின் என் சைக்கிளுக்குத் தேவையான பாகங்களை ஒரு கடையில் கிடைக்குமா என விசாரித்தபோது, அடுத்த வாரம்தான் அவை கிடைக்கும் என்று தெரிந்து கொண்டேன். இரு மீன்கடைகளையும் பொறுமையாகச் சுற்றிப்பார்க்க நேரம் கிடைத்ததே என்று எனக்கு மகிழ்ச்சி ஏற்பட, துள்ளலுடன் பிஸ்லின் எனும் கடையில் நுழைந்தேன். இதுவரை நான் பார்த்திராத பல்வேறு வகை மீன்கள் நிறைய இருந்தன. அதிக விலை மதிப்பு கொண்ட மீனை கண்டுபிடித்தேன். கடைக்காரர்களோடு பேசியபோதுதான் தெரிந்தது இது அவர்களின் குடும்பத்தொழில் என்று. பறவைகளையும் விற்பனைக்கு வைத்திருந்ததைப் பார்த்தேன். சம்திங் பிஷ்ஷி என்ற கடையும் அருகிலேயே இருந்ததால் அதில் உள்ளே நுழைந்தேன். அங்கு சிலவகை மீன்களே இருந்ததைக் கண்டு கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளானேன். கடையிலிருந்த உதவியாளர் வரும் வார இறுதியில் மிச்சமுள்ள மீன்தொட்டிகளும் விற்பனையாகிவிடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். பிரானா எனும் மனிதர்களை உண்ணும் மீனை என் வாழ்வில் முதன் முதலாக கண்டு பிரம்மித்துப் போய் நின்றுவிட்டேன். பிரானா மீன்கள் அச்சமும், கூச்சமும் அதிகம் கொண்டவை. கடுமையான பசி வெறியில்தான் மனிதர்களைத் தாக்குகின்றன. இந்தக் கடையிலும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த புதுமையான மீன்களை வைத்திருந்தார்கள். பிளாக் கோஸ்ட் எனும் மீன் இணை மூவாயிரம் ரூபாய் என்று கூறினார் உதவியாளர். அசோக் மாமாவினுடைய கடையில் மீன்களைப்பற்றி மட்டுமேயல்லாமல் பல்வேறு நடைமுறை வாழ்வுக்கான மதிப்பு மிகுந்த விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். பள்ளிக்கு சென்ற காலத்தில் ஒருமுறை கூட ஏன் அசோக் மாமா வங்கிக்குப் போய் பணம் பெற்று வருமாறு கூறியது வரையில் வங்கிக்கு நான் போனதே இல்லை. வங்கிக்குப் போய் பணம் எடுத்துக் கொண்டு வருவது எப்படி? என்றெல்லாம் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. வங்கிக்கு செல்லும் வழியை மட்டும் கேட்டுக் கொண்டேன். முடிவுகளை நானே எடுத்து அந்த வேலையைச் சரியாக செய்தேன். அதன்பிறகு பலமுறை பணத்தை செலுத்துவதற்கும், பெறுவதற்கும் வங்கிக்கு சென்று வந்தேன். பல விஷயங்களை நான் கற்றுக்கொள்ள முனைந்து ஓரளவு வெற்றி பெற்றேன் என்றாலும் நேரத்தை சரியாக கடைபிடித்து ஒரு செயல்பாட்டைச் செய்வது என்பதில் எப்போதுமே தடுமாற்றம்தான். காலையில் தாமதமாக எழுவதால் அசோக் மாமாவினுடைய கடைக்கு வெகுவேகமாய் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருவேன். என்னுடைய பல பணிகளை நிறைவேற்ற முடியாததால் எனது மதிய உணவு நேரம் தள்ளிப் போடும் படியிருக்கும். இந்த அனுபவங்கள் எனது ஒவ்வொரு நாளையும் கவனமாக தெளிவாக நேர நிர்வாகத்தினை வகுத்திடச் செய்தது. அப்போது மட்டுமே என்னால் பதட்டமில்லாது தெளிவாக எந்த வேலையினையும் செய்ய முடியும் என்று உணர்ந்து கொண்டேன். என்னிடம் இருந்த பொழுதுபோக்குகள் மற்றும் ஈடுபாடுகள் போன்றவற்றில் இருந்த உபயோகமான பல விஷயங்களைக் கண்டுணரவும் எனக்கு நேரமிருந்தது அது இந்த இடைவேளைக் காலத்தில்தான். நான் எடுக்கின்ற முடிவுகள், சோதனைகளின் விளைவுக்கு நானே பொறுப்பு என்கிற ஒரு கட்டுப்பாட்டு உணர்வையும் உணர்ந்தேன். புத்தகங்கள் வாசிப்பதில் நான் ஆர்வம் கொண்டிருந்தேன். காலை நேரங்களை பெரும்பாலும் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதில் செலவழித்தேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஹார்டி பாய்ஸ் ஆகும். இதன் ஒட்டு மொத்த பாகங்களையும் அசோக் மாமாவிடம் பணி புரிந்த காலத்திலேயே படித்து முடித்திருந்தேன். டின்டின் மற்றும் பான்டம் காமிக்ஸூம் எனக்கு மிகப் பிடித்தமானவை. அசோக் மாமாவினுடைய கடையில் வேலைகளைச் செய்து முடித்தபிறகு, ரேடியோவில் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருப்பேன். தடதடத்து தரை அதிர ஒலிக்கும் இசை எனக்கு பிடிக்கும். கனடாவிலிருந்து வந்திருந்த என்னுடைய அத்தை அடுத்தவர்களை சிரமப் படுத்தாது பாடல்களைக் கேட்க ஒரு வாக்மேனை பரிசளித்தார்கள். அந்த சமயத்தில் நான் கிடார் கற்றுக்கொள்ள நினைத்திருந்தேன். ஆனால் சில மாதங்களிலேயே கோவா விட்டு கிளம்பிவிடும் உனக்கு இப்போது கிடார் வகுப்பு வேண்டாம் என்று பெற்றோர்கள் கூறிவிட்டனர். கடிதம் எழுதுவது என்பது எனக்கு விருப்பமான ஒன்றாக என்றுமே இருந்ததில்லை. தேர்வில் நான் வெற்றி பெற்றதற்காக பல கடிதங்கள், அன்பளிப்புகள், என உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும்போது வேறுவழியில்லாமல் பதில் கடிதங்களை அனுப்பி வைத்தேன். ஒரு ஆண்டு இடைவேளை குறித்து பல்வேறு பாராட்டுதல்கள், கருத்துக்களை உள்ளடக்கி காலந்தாழ்த்தாமல் என்னை உற்சாகப்படுத்தும் விதமாக வந்த கடிதங்கள் எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஊட்டின. பல்வேறு மனிதர்களுக்கு கடிதம் எழுதினால்தான் அவற்றை திரும்ப மீண்டும் பெற முடியும் என்று உணர்ந்தேன். எனினும் கடிதம் எழுதுவது இன்றுவரை ஒவ்வாமையாகத்தான் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிலவேலைகளைச் செய்வதன் மூலம் எனக்கான சிறுதொகையை சம்பாதித்துக் கொள்வேன். காரைக் கழுவி சுத்தம் செய்வதன் மூலமாக அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் பெறுவேன். வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவருவது, மின்கட்டணத்தை கட்டிவிட்டு வருவது என வீட்டிற்கான தேவைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். அசோக் மாமாவினுடைய கடையில் வேலை செய்தது பிற்காலத்திய என் வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் நல்ல தொடக்கமாக அமைந்தது. களப்பணிக் குறிப்புகள் ஜூலி அத்தைக்கு ஒரு மீன் தொட்டி பீட்டர் டி சௌஸா மற்றும் ஜூலியட் ஆகிய இருவரும் என் பெற்றோர்களின் கல்லூரி நண்பர்களாவர். காலங்கடில் வசித்து வரும் பீட்டர் குற்றவியல் வழக்குரைஞராகவும், ஜூலியட் பள்ளி ஆசிரியராகவும் பணி செய்து வந்தனர். எங்கள் குடும்பமும், பீட்டர் மாமாவின் குடும்பமும் வெளியே சுற்றுலா என்று கிளம்பும் போது ஒன்றாகச் செல்லுவோம். ஒரு சிற்றுலா நிகழ்வு ஒன்றின் போது, அப்போது எஸ்எஸ்சி படித்துக்கொண்டிருக்கும் ஆண்டு என்று நினைக்கிறேன்; மீன் வளர்ப்பு குறித்த என் ஆர்வத்தை கவனித்த ஜூலியட் அத்தை தங்களது வீட்டில் மீன் தொட்டி அமைக்க உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். மீன்தொட்டியை அவர்கள் முன்னதாகவே தயார் செய்துவிட்டபோதும், தொட்டியின் கீழுள்ள கண்ணாடி விரிசலாகி இருந்ததால் ஜூலியட் அத்தை அதனை அசோக் மாமாவிடம் கொடுத்து சரிபார்க்கக் கூறியிருந்தாள். பின் யாருமே அதைப்பற்றிய எந்த குறிப்பையும் தராததாலும் கடைக்குப் போகாததாலும் அத்தையின் தொட்டி மட்டுமே அசோக் மாமா கடையில் எஞ்சியிருந்தது. ஜூலி அத்தை என்னை பார்க்கக் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அதை நினைவூட்டுவார்; நானும் அதனை சிறிய குறிப்பாக மாற்றி அசோக் மாமாவிடம் நான் கூறிவிடுவேன். அசோக் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்த பின் அத்தைக்குக் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற முடிவு செய்தேன். முதல் பிரச்சனையாக என் முன் நின்றது தொட்டிதான். அசோக் மாமாவின் பண்டக அறையில் கிடைக்குமா என்று தேடத் தொடங்கியிருந்தேன். பெரிய தொட்டிகள் அனைத்தையும் பார்த்து ஒரு துண்டைக் கண்டறிந்துவிட்டேன். அசோக் மாமாவும் நானும் விரிசலுற்ற கீழ்பாக கண்ணாடியை அகற்றினோம். அந்த கண்ணாடியின் அளவுகளைக் குறித்துக்கொண்டு, கண்ணாடிக் கடையிலிருந்து புதிய கண்ணாடி ஒன்றை வாங்கி வந்து பொருத்தினோம். தொட்டியை அமைத்த பின்னர், பீட்டர் மாமாவின் அலுவலகத்துக்கு சென்று, தொட்டியை வீட்டிற்கு எப்போது முடியுமோ அப்போது எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன். பீட்டர் மாமா அடுத்தநாள் மாலையில் வந்து தொட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு அவர்களின் வீட்டிற்கு தொட்டியை அமைக்க கிளம்பிச் சென்றேன். அங்கே போன பின்புதான் ஜூலி அத்தை மீன் தொட்டிக்குத் தேவையான சிறுகற்களை அதுவும் குறைவாக வைத்திருந்ததைத் தவிர வேறெந்த பொருளையும் வாங்கியிருக்காததை அறிந்து கொண்டேன். மீன் தொட்டிக்கு தேவையான பொருட்களை என்னென்ன என்று ஜூலி அத்தையிடம் கூறிவிட்டு கிளம்பினேன். பின் மறுமுறை போகும்போது, சில கிலோக்கள் கொண்ட சிறுகற்கள், குழாய்கள், பிளாஸ்டிக் தாவரங்கள், மீனுக்கான மருந்துகள், கற்களை வடிகட்டும் வடிகட்டி, சில இணைப்புக் குழாய்கள், டி வடிவ இணைப்புக் குழாய்கள், சீர்படுத்தும் கருவிகள், மீன் தொட்டிக்கான உறை என தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு போயிருந்தேன். மேலும் மீன்தொட்டிகளுக்கான நான்கு பொம்மைகளையும், இரண்டு மேலுறைகளையும் ஜூலி அத்தை தேர்ந்தெடுக்க அவர் முன் வைத்தேன். வேலையின் தொடக்கமாக சிறுகற்களைக் கழுவிவிட்டு, கற்களுக்கு அடியில் வைக்கப்போகும் வடிகட்டியை அமைத்தேன். பின் கற்களை அதன் மேல் விழச் செய்தேன். பின் அலங்காரம் செய்வதற்கான மேலுறைகள் மற்றும் பொம்மைகளை மேலே வைத்தேன். வடிகட்டிகளைக் காற்றுக் குழாயோடு இணைத்தேன். இந்த வேலைகளை நான் செய்யும்போது ஜூலி அத்தையின் இரு மகள்களான ஏஞ்சலினும், மிரியமும் பல்வேறு கருத்துக்களைக் கூறிக்கொண்டும், சிறிய உதவிகளைச் செய்து கொண்டும் அருகில் இருந்தார்கள். இரண்டு மணி நேர வேலைக்குப் பிறகு அனைத்தும் தயாராகிவிட்டது. மீன்கள் மற்றும் சில கடல் தாவரங்களைத் தொட்டியில் வைத்துவிட்டால் போதுமானதாக இருக்கும். மீன்களைத் தேர்ந்தெடுத்து தொட்டியில் கொண்டு வந்து விடும் வேலை எனக்களிக்கப்பட்டதல்ல. ஜூலி அத்தை மீன்களை கண்டோமிலுள்ள கடைகளில் வாங்கிக் கொள்வதாகக் கூறினாள். பிறகு, கண்டோமிலுள்ள கடையில் தொட்டியில் வைக்கின்ற தாவரங்கள் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது என்றவர் என்னை அது பற்றி விசாரித்து வாங்கி பீட்டர் மாமாவிடம் கொடுத்துவிடு என்று கூறிவிட்டு அதற்கான கட்டணச் சீட்டையும் என்னை தயார் செய்யத் தூண்டினார். இவற்றை அனைத்தையும் அடுத்த இரு நாட்களில் செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்குப் பின், என் அப்பா கொடுத்த குறிப்பை பீட்டர் மாமாவிடம் கொடுப்பதற்காக அவர்களின் வீட்டிற்கு சென்றேன். ஜூலி அத்தை வாங்கிவிட்டிருக்கும் மீன்கள் முதன்முதலில் நான் செய்திருக்கும் தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் என்ற நினைப்பே எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் தொட்டியில் விடுவதற்காக நான் எனது தொட்டியில் வைத்திருந்த ஐந்து ஜோடி கப்பீஸ் மீன்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் அந்தத் தொட்டியை எப்படித் தயார் செய்து வைத்தேனோ அப்படியே இருந்தால் எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா? சரி, நான் கொண்டு வந்த மீன்களே இனி வாங்கும் மீன்களுக்கு மூத்ததாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு, விளக்குகள் மற்றும் சீர்படுத்தும் கருவிகளை சரி செய்து தாவரங்களை ஒழுங்கமைத்தேன். அனைத்து வேலைகளும் முடிந்தபோது ஜூலி அத்தையினுடைய சிறிய மகள்கள் இருவரும் என் பின்னே சுற்றி குழுமிவிட்டார்கள். தொட்டியில் நீரில் காற்று வடிகட்டிகள் குமிழிகளை வெளியிட, மீன்கள் மகிழ்ச்சியாக புதிதாக வைத்த தாவரங்களிடையே சுற்றி வந்தன. ஜூலி அத்தையும் விரைவிலே எங்களோடு இணைந்து கொண்டதோடு, தொட்டி அமைத்ததற்கு நன்றி கூறி நம்ப முடியாத ஆச்சர்யமாக ஐம்பது ரூபாயை என் சட்டைப் பையில் வைத்தார். அவர் எனக்கு பணம் ஏதும் தரமாட்டார் என்று நான் நினைத்திருந்ததால், பணம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது. ஜூலி அத்தை பணத்தை நான் கண்டிப்பாக பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். அந்த ஐம்பது ரூபாய்தான் எனது முதல் சம்பளமாகும். ஜூலி அத்தையைப் போலவே எனது அப்பாவின் நெருங்கிய நண்பர்களுக்கும் மீன் தொட்டிகளை அமைத்துத் தரத் தொடங்கினேன். இந்த வேலை எனக்கு மகிழ்ச்சியையும், புதிய அனுபவங்களையும், சிறிய அளவிலான தொகை கிடைக்கவும் உத்தரவாதமளித்தது. மபுசாவிலிருந்த அவ்தூத் மற்றும் ரேகா முன்ஜ் ஆகியோரின் மகளுக்காக அழகிய பெரிய மீன் தொட்டி ஒன்றை செய்து தந்தேன். பர்ராவிலிருந்த அல்விடோ மற்றும் செலின் சாண்டியாகோ தம்பதியினருக்கு மீன்களை வாங்கித் தந்தேன். ஏனெனில் அவர்களுடைய வீட்டில் காலியான மீன்தொட்டி இருந்ததால், மீன்களை மட்டும் வாங்கித் தரக் கேட்டுக்கொண்டதால் அதனைச் செய்தேன். எனது பள்ளியிலுள்ள முதல்வர் அறையில் இருந்த ஒரு பெரிய மீன்தொட்டியினை பள்ளி நாட்களில் நான் பராமரித்து வந்தேன். எனது ஆர்வம் இப்போது என் தம்பி மிலிந்தையும் தொற்றிக்கொள்ள அவனும் மீன்களின் ரசிகனாக மாறி விட்டான். 2 மண்ணின் மணமறிந்தேன் மழைக்காலத்தில் கிராமப்புற விவசாயப் பண்ணையில் வேலை செய்து ஏதாவது புதிய அனுபவங்களைப் பெற முடியுமா என்று முயற்சி செய்தேன். வடகிழக்கு மாவட்டமான சட்டரியிலுள்ள வல்பொய்க்கு அருகிலுள்ள தானெம் எனும் கிராமத்தில் உள்ள நிலத்தைத்தான் நான் தேர்ந்து எடுத்தேன். இந்த கிராமத்து விவசாயப் பண்ணையில்தான் நான் பிறந்து மூன்று வயது வரை இருந்தேன் என்று பெற்றோர்கள் கூறியதன் காரணமாக இதன் மீதான ஈர்ப்பு அதிகரித்தபடியே இருந்தது. இந்த நிலம் குறித்த எந்த சிறு வயது நினைவுகளும் இன்று என்னிடம் இல்லை என்றாலும், இங்கு வாழ்ந்த போது எடுத்த புகைப்படங்களில் உள்ள குழந்தைப்பருவ நாட்கள், இங்கே நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் எனப் பெற்றோர் பலமுறை கூறியிருக்கிறார்கள். ஆண்டிற்கு ஒரு முறையேனும் இந்த நிலத்தை வந்து பார்த்துவிட்டு, நிலத்தில் வேலை செய்த பல கிராமத்து மனிதர்களையும் சந்தித்து பேசிவிட்டு திரும்புவோம். நிலத்திலிருந்து வெளிவந்த பதினாறு ஆண்டுகளாக எங்களது குடும்பத்திற்கு உதவிவருவது இயேசு மட்டுமே. 1985 ல் விற்கப்பட்ட எங்களது நிலத்தின் இன்றைய உடமையாளர்களாக இருக்கும் உஜ்வாலா அச்ரேக்கர் மற்றும் ஸ்யாம் ஆகிய இருவரின் அறைகளில் தங்கி விவசாயத்தைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்துக் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக தனிப்பட்ட சில நிகழ்வுகளால் அவர்கள் என்னுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டது ஒராண்டு காலத்தில் நிகழ்ந்த வருந்தத்தக்க நிகழ்ச்சியாகவே கருதுகிறேன். விவசாயத்தின் அடிப்படைகளை பர்ராவிலுள்ள எனது கிராமத்திலேயே கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். எங்கள் வீட்டுக்கருகில் உள்ளவரான கண்டோல்கர் ஒரு சிறு விவசாயி. மழைக்காலத்தின் போது தன் நிலத்தில் விவசாயம் செய்வார். மேலும் அவர்கள் உழவு வேலையை மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பார்கள். இதற்காகவே அவர்களின் முதல் மகனான குரு ஒரு ஜோடிக் காளைகளை வளர்த்துவந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு கல்சுவர்களை அமைக்க வந்தபோது, ஓராண்டில் பல அனுபவங்களைப் பெற கற்கப் போவதாகக் கூறியதும், தன்னுடன் வந்து உழவு செய்யக் கற்றுக்கொள்கிறாயா என்று இயல்பாகக் கேட்டார். நான் உடனே அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது நிச்சயம் அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கக் கூடும். அடுத்த நாள் காலையில் அதிகாலையில் உழவு செய்ய வேண்டிய வயல்களுக்குச் சென்று விட்டோம். நிலம் எங்களுடைய வீட்டிற்கு அருகேதான் இருந்தது. கலப்பையைப் பிடித்துக்கொண்டு மாடுகளிடையே நிற்பதைப் பார்ப்பவர்கள் மிக எளிதான ஒன்றாக நினைப்பார்கள். நம்புங்கள். அப்படி நின்று உழவு செய்வதற்கு சில திறன்களும், குறையாத தாங்கும் உடல்வலிவும், மனவலிமையும் தேவை என்பதை மெல்ல நான் உணர்ந்து கொண்டேன். கலப்பையை மண்ணில் மையமாக ஊன்றியிருக்குமாறு செய்து விட்டு, அதனை நகர்த்தும் அதேநேரம் கலப்பை காளைகளின் குளம்பினை காயப்படுத்தி விடாமல் மண்ணில் செலுத்த வேண்டும். சரியான அளவு அழுத்தம் கொடுக்காத போது மேலெழுந்தவாரியாகவும், அதிக அழுத்தம் கொடுத்து ஆழமாகவும் உழுதுவிடாமல் சரியான திட்டமிடலோடு ஒரே மாதிரியான அழுத்தம் நிலம் முழுவதும் கிடைக்கிற மாதிரி உழ வேண்டும். இதைக் கவனிக்கின்ற நேரத்தில் காளைகளை சரியான முறையில் குரல் கொடுத்து கட்டுப்படுத்தி, உழாத பகுதிகளில் கலப்பையைத் தூக்கி வைத்து உழ வேண்டும். முக்கியமான ஒன்று, காளைகளுக்கும், உங்களுக்கும் முழுமையான ஒத்திசைவு இருந்தால் மட்டுமே உழுதலை சிறப்பாக நிறைவேற்ற முடியும். காளைகள் குரு அண்ணனை நன்கு தெரிந்து கொண்டிருந்ததனால், நான் அவற்றிடம் அறிமுகமாக அவற்றிடம் ஹிர்ரே ஹிர்ரே என்று குரல் எழுப்பக் கூறினார். இந்த வார்த்தையைக் கூறுவதன் மூலம்தான் காளைகள் நகருவதால் என் குரல் அவைகளுக்கு பழகுவதன் அவசியத்தை உழவு செய்யும் போது நிச்சயம் உணரமுடியும் என்று நம்பினேன். குரு அண்ணாவோடு பல நாட்கள் உழவைக் கற்கப் போனபோதும், கலப்பையில் ஏறி உழவு செய்ய அனுமதிக்காததற்கு என்னால் கலப்பையை சரியாக கையாள முடியாதது என்பதும், உழவில் காளைகளுக்கு காயம் ஏதுமேற்பட்டால் அவரின் வருமானத்திற்கான வாய்ப்பையும் தவறவிட்டு, காளைகளை குணப்படுத்திக் கொண்டிருக்க நேரிடும் எனும் இரண்டு காரணங்கள்தான் மூலமாக இருந்தன. உழவு ஓட்டி முடிந்தபின் நிலம் விதையிடலுக்கு தயாராக இருந்தது. உழவு செய்த காளைகள் மெதுவாகக் கலப்பையை இழுத்தவாறு மறுபக்கத்தில் நின்றன. இதுவே என்னை உழவு செய்யத் தூண்டிய ஒரு காரணமாக அமைந்தது. கலப்பையில் நின்று கொள்ள காளைகள் மேலும் கீழுமாக நிலத்தில் அசைந்து என்னை அழைத்துச் சென்றன. இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. உழவு வேலைகள் செய்துவிட்டு வியர்வை பெருக மண்புழுதியோடும், சேறோடும் அமர்ந்திருந்த என்னை நிலத்தின் உரிமையாளர்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். அவர்களுக்கு என்னை சிறு வயதிலிருந்தே தெரியும்; அவர்களும் நானும் வாழ்வது ஒரே கிராமத்தில்தானே! என்னைப் பார்த்த ஒரு பெண்மணி ஒருவர், பள்ளி செல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் சிறுவன் என்று நினைத்துக் கொண்டு என்னைப்பற்றி என் பெற்றோர்களிடம் தெரிவிப்பதாக மிரட்டினார். அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. அவர் நான் செய்த தவறுக்கு தேவாலயப் பிரார்த்தனைக்கு வரவேண்டும் என்று விரும்பினார். களப்பணி என்பது அது குறித்த தகவல்களைப் படித்து அறிவதைக் காட்டிலும் யதார்த்தமான அறிவை அதில் ஈடுபடுவோர்க்கு எளிதில் புகட்டிவிடுகிறது என்பதை உணர எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மழைக்காலங்களில் குரு அண்ணாவுக்கு உழவுப்பணிகளில் உதவி செய்ததை இன்று நினைக்கும் போதும் பெரும் மகிழ்ச்சி என் மனதில் அலையடித்து நிறைகிறது. 3 தாவரத்திருவிழா கொண்டாட்டம் மழைக்காலமானது கோவாவிலுள்ளவர்களின் மனதிலிருந்த தாவரங்களின் மீதான காதலை வெளிக் கொண்டுவர, பெருகிய உற்சாகமும், ஆர்வமும் அதனை இயக்கும் வழியான தாவரத் திருவிழாவினை நிகழ்த்த உதவியது. சாலிகாவ் மற்றும் சியோலிம் எனும் இரு கிராமங்களில் நடந்த விழாக்களிலும் நான் பங்கேற்றேன் என்றாலும் முதல் விழாவில் வெறும் பார்வையாளனாகவும், இரண்டாவதில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பாளனாகவும், செயல் பாட்டாளனாகவும் துடிப்பான பணி அனுபவம் கிடைக்கப் பெறும் வகையில் பணியாற்றினேன். சாலிகாவில் பார்வையாளன் ஜூலை மாதத்தில் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையில் எப்போதும் வெளிச்சம் குறைவாகவும், ஈரப்பதமாயும், மேகமூட்டமாகவும் இருக்கும் மழைக்கால வானிலை அன்று மாறுபட்டு தெளிவாக வெளிச்சமாக இருந்தது. சாலிகாவிலுள்ள லூர்டெஸ் கான்வென்ட் எனும் புகழ்பெற்ற பள்ளியில் தாவரங்களின் கண்காட்சியைக் காண இருபது நிமிடங்கள் பயணித்து பத்து முப்பது மணிக்கு சென்றடைந்த போது விழா தொடங்கி மக்கள் பெரும் கூட்டமாய் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். மையக் கண்காட்சி அறை பெரியதாக இருந்தது. அதன் மையத்தில் உள்ள தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த தாவரங்களில் பெரும்பாலானவை விற்பனைக்கானவையாகும். தாவரங்களைக் கொண்டு வந்திருந்த நபர்களின் பெயர்கள் தொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன. இலைகளற்ற தாவரமான சப்பாத்திக் கள்ளிகளின் பலவகைகள் ஒரே குழுமமாக மேசையில் வைக்கப்பட்டிருந்தன. மலர் அலங்காரப் போட்டியில் வெற்றி பெற்ற பொருட்கள் மறுபுறம் இருந்தன. வண்ணம் பூசப்பட்ட ஸ்கூட்டரின் சக்கரத்தின் உட்புறம் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரத்திற்கு முதல் பரிசு அளிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே புதுமையான முயற்சிதான் அது. இரண்டு கவர்ச்சிகரமான, இதுவரை பார்த்திராத சப்பாத்திக் கள்ளிகள் வைக்கப்பட்டிருந்ததில் ஒன்றின் அடிபாகம் பச்சையாகவும், மேல்பாகம் நல்ல சிவப்பாகவும், கட்டியாகவும், மற்றொன்று பருத்தி போல புடைப்பாக இருந்தது. இதற்கடுத்து சில வகுப்பறைகளில் மேலும் பல தாவரங்கள் செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உணவுப்பயிர்களான கொத்தமல்லி, தேங்காய் நாற்றுகள், அலங்காரச் செடிகள் என பலவும் விலைக்கு இருந்தன. தோட்ட வேலைகளுக்குப் பயன்படும் நீர் தெளிக்கும் கருவிகள், கத்தரிக்கோல்கள், பூந்தொட்டிகள், விதைப்பைகள் என பல பொருட்கள் நிறைந்திருந்தன. பதினொரு மணிக்கு திரு. பிரான்சிஸ் பார்கிஸ் எனும் கல்லூரி விரிவுரையாளர் தாவரப்பண்ணைகள் குறித்து பேசவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. விரிவுரையாளராக இருந்த போதிலும், பல்வேறு தாவரங்களைப் பற்றி அறிந்து கொண்ட அவர், தாவரங்களை வளர்த்து பலமான அனுபவங்களின் அடிப்படையில் அபர்பாய் எனும் நாற்றுப்பண்ணையைத் தொடங்கியிருந்தார். கோவாவில் வெளிவரும் வாரப்பத்திரிக்கையான வீக் எண்டரில் தாவரங்கள் குறித்த சிந்தனைகளைக் கட்டுரையாக எழுதி வந்தார். என் அப்பா அவரைப்பற்றி முதலிலேயே பல விஷயங்களை கூறியிருந்தது அவரது பேச்சைக் கேட்கும் ஆர்வத்தை அதிகரித்தது. திரு. பிரான்சிஸ் பார்கஸினுடைய பேச்சு பூச்சிக்கொல்லிகள், உரங்கள், களைக்கொல்லிகள் என்று மண்ணை மலட்டுத்தன்மை செய்யும் வேதிப்பொருட்களை பயன்படுத்தியதால் இன்று பூமி எப்படி இருக்கிறது என்று பேசித் தொடர்ந்தவர், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி எளிமையாக வேளாண்மை செய்வது மட்டுமே இயற்கைக்கு நாம் செய்யும் பரிசு கைமாறு என்று கூறிவிட்டு, பின் விவசாயத்தில் மண்புழுக்களின் பங்கினைப்பற்றியும் விரிவாகப் பேசினார். பின்பு கேள்வி நேரத்தில் விரிவுரையாளரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளனைத்தும் வீட்டுத்தோட்டத்தில் பயிரிட்ட தாவரங்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முனைப்பு கொண்டு எழுந்தவையாக இருந்தன. ‘’ நடைமுறையான தீர்வுகளே நான் எடுத்தவை, அவையே பின் வெற்றிகளைத் தந்தன ‘’ என்று கூறினார் பிரான்சிஸ். பப்பாளி மரம் பூ பிடித்தபின் ஏன் காய் வராமல் இறந்துவிடுகிறது? என்ற கேள்விக்கு, பப்பாளி மரம் பூ பிடித்தபின் அதனைச் சுற்றி சிறிய அளவிலான அணைபோல மண்ணை தடுத்துக் கட்டுவதன் மூலம் , நீரின் மூலம் ஏற்படும் செல் அழுகலைக் குறைக்கமுடியும் என்றவர், அதன் வழியாக தானும் தன் நண்பர்களும் இணைந்து கண்டுபிடித்ததாக கூறி, பப்பாளி மருந்து என்று நோய் தடுக்கும் மருந்தொன்றை விளம்பரப்படுத்தினார். மாலையில் கூட்டம் முடிவடைய நான் வீடு திரும்பினேன். சியோலிமில் பணியாளன் சாலிகாவில் நான் கலந்துகொண்ட தாவரங்களின் கண்காட்சி, இத்தகைய விழாக்கள் எப்படி இருக்கும், என்ன முறையில் அமைந்திருக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள உதவியது. சியோலிமில் நடைபெறவிருந்த தாவரத்திருவிழா ‘க்ரீன் ஹெரிடேஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த அலெக்சிஸ் எனும் புகழ்வாய்ந்த கேலிச்சித்திரக்காரரிடமிருந்து அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டேன். ‘கிரீன் ஹெரிடேஜ்’ அமைப்பினை அலெக்சிஸ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து நடத்திவந்தனர். 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினொன்றாம் தேதி காலையில் நேரமாக எழுந்து, பர்ராவிலுள்ள மலைக்கு அருகிலும், அதைத் தாண்டியது போலுள்ள சியோலிமிலுள்ள அலெக்சிஸ் வீட்டுக்கு சைக்கிளில் கிளம்பினேன். நான் நினைத்ததை விட அதிவிரைவாக கிளம்பி வந்துவிட்டதைப் போலத் தோன்றியது. அலெக்சிஸூம் அவர் மனைவி டெக்லாவும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார்கள். மதிய உணவிற்குப் பின், அலெக்ஸின் கைனடிக் ஹோண்டாவின் பின்புறம் தொற்றிக் கொண்டு, திருவிழாவில் பங்கு கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களின் வீடுகளுக்கும் சென்று தாவரத் தொட்டிகளைத் தயாராக வைத்திருக்கக் கூறியும், நாளை வந்து பெற்றுக்கொள்கிறோம் என்று நினைவுபடுத்திவிட்டு கிளம்பினோம். பனிரெண்டாம் தேதி அலெக்ஸின் உரத்த கூச்சல் கேட்டு உடல் பதற எழுந்தேன். ‘’ சீக்கிரம் வா நாம் போகவேணாமா? ’’ என்று அலெக்சிஸ் கத்திக்கொண்டிருந்தார். என் அப்பாவின் கல்லூரித்தோழரான இவர் நான் சந்தித்ததிலே மிக வேடிக்கையான மனிதர் என்று உறுதியாகக் கூறுவேன். கண்காட்சியில் வைக்கப்படும் தாவரங்களைச் சேகரிப்பது எங்களது முதல் வேலையாக இருந்தது. டெம்போ 9.30 மணிக்கு வந்தவுடன் அதன் உள்ளே புதர்ச் செடிகளை போட்டு தொட்டியில் உள்ள தாவரங்களுக்கு இருக்கை போல தயார் செய்தோம். எங்கள் பட்டியலில் இருந்த வீடுகளுக்குச் சென்று, தாவரங்களை வாங்கியவுடனே அவற்றுக்கு ஓர் எண்ணை எழுதி குறித்து வைத்துக் கொண்டோம். விழா முடிந்தவுடன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இப்படி ஓர் ஏற்பாட்டை செய்தோம். சில வீடுகளில் மிக கவனமாக தாவரங்களை உச்சபட்ச பயபக்தியோடு வாங்கினோம், நீண்ட உடலுடைய டாபர்மேன் நாய்கள் எங்களை அன்புடன் கவனித்துக் கொண்டிருந்ததுதான் காரணம். நீண்ட பட்டியலைக் கொண்டிருந்ததால், வேலை அவ்வளவு எளிதில் முடிவதாக இல்லை. புதிய மனிதர்கள், புதிய வீடுகள், புதிய தோட்டங்கள் என்று காண்பது ஒரு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த பாப் இசைக்கலைஞர் பாடகர் ரெமோ அவர்களின் வீட்டிற்கும் சென்று, அவரின் தாயாரிடம் தாவரங்களைப் பெற்று வந்தோம். கிராமத்தில் மூன்று முறை சுற்றிவந்தபோது பட்டியலை நிறைவு செய்திருந்தோம். பள்ளியிலுள்ள அறைகளில் தாவரங்கள் உள்ள தொட்டிகளை ஒழுங்கு செய்யத் தொடங்கினோம். பழைய கோவாவிலிருந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நியமித்திருந்த வேளாண்மை அதிகாரி மிக்கயில் பிரகன்ஸா மற்றும் பிரான்சிஸ் பார்கஸ்(சாலிகாவில் உரையாற்றியவர்), பிற கிராமத்து சிறுவர், சிறுமிகள் அடுத்த நாள் காலையில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். அனைத்து வேலைகளையும் நிறைவு செய்துவிட்டு நிமிர்ந்தபோது மணி இரவு ஒன்று ஆகிவிட்டிருந்தது. சிறிது நேர உறக்கம்தான் அடுத்த நாளான பதிமூன்றாம் தேதி விழாவினை நடத்த உதவும் என்று சில கடைசி நிமிட வேலைகளை நினைத்துக் கொண்டே உறங்கிப்போனேன். மூன்று நாட்களுக்கு நடைபெறும் விழாவான கிரீன் ஹெரிடேஜ் விழாவினை வேளாண்மைத்துறையின் இயக்குநர் திரு. பி. கே தேசாய் காலை பதினோரு மணிக்கு திறந்து வைப்பதாக இருந்தது. விழாவில் வெட்டக்கூடிய ரிப்பனை மாற்றி படரும் கொடி ஒன்றினை ரிப்பன் போல பாவித்திருந்தார்கள். வேளாண்மை இயக்குநர் கிரீன் எய்டு 3 டோட்டல் கார்டனிங் எனும் கிரீன் ஹெரிடேஜ் அமைப்பு பதிப்பித்திருந்த நூலையும் வெளியிடுவதாக இருந்தார். நூலின் அட்டையில் தாவரத்தின் இலை வடிவமைப்பு புதுமையாகவும், மிகப் பொருத்தமாகவும் இருந்தது. விழா தொடங்கப்பட்டு, நூல் வெளியிடப்பட்ட பின், சிறப்பு விருந்தினர்கள் பேசியபின் ஒருங்கிணைப்பாளர் அலெக்சிஸ் எப்போதும் போல் வேடிக்கையான பேச்சினை பேசினார். கிரீன் ஹெரிடேஜ் அமைப்பின் முக்கியக் குறிக்கோள்கள் தாவரக்கண்காட்சிகள் நடத்துவது, இயற்கை மற்றும் சூழல் குறித்த பேச்சுகள், உரைகள், செயல்பாடுகள், இயற்கை சூழலியலை மையமாகக் கொண்ட போட்டிகள் நடத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இவைதான். கண்காட்சியின் மைய அறை மிகப்பெரியதாகவும், பல்வேறு வகையான தாவரங்களாலும் நிறைந்து காணப்பட்டது. தாவரங்களை எளிதாகவும், நெருக்கடி இல்லாமலும் பார்க்கும் வகையில் அவை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. மிளகாய், கத்தரிக்காய் செடிகள் என காய்கறிச் செடிகள், சப்பாத்திக் கள்ளிகள், படரும் கொடி வகைகள், போன்சாய் மரங்கள், பூக்கள் அற்ற நீண்ட இலைகளைக் கொண்ட தாவரங்கள், பீபஸ் மரங்கள் என இருநூறு தாவரத் தொட்டிகளுக்கு மேல் அங்கே இருந்தன. அதோடு எலுமிச்சை, ஆரஞ்சு, சப்போட்டா மரங்களும் அதில் இடம் பெற்றிருந்த தாவர வகைகளாகும். அறையின் மேடையில் போட்டிக்காக காய்கறிகளில் செதுக்கி உருவாக்கப்பட்டு பொருட்கள், மலர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் என்று பல்வேறு பள்ளிகளிலுள்ள மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி அறைக்கு வெளியே இரண்டு நடைக்கூடங்கள் நீண்டு விரிந்து சென்றன. ஒரு நடைக்கூடத்தின் ஒரு பகுதியில் அரசு நாற்றுப்பண்ணையில் வேம்பு, தேங்காய், சப்போட்டா, முந்திரி, புளி போன்ற பல தாவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு நடைக்கூடத்தில் டோட்டல் கார்டனிங் புத்தகத்தின் பிரதிகளின் முந்தைய மற்றும் தற்போது வெளியிடப்பட்ட பிரதிகளும் சிறிய மேசையில் வைக்கப்பட்டு இருந்தன. இன்னொரு மேசையில் தேங்காயினைப் பயன்படுத்தி செய்த விளக்கு, யானையின் தலை, மண்டையோடு என புதுமையான பொருட்களாக வரிசைப்படுத்தி அடுக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து தி அதர் இந்தியா பதிப்பகத்தின் புத்தக நிலையத்தில் சூழல் குறித்த பல்வேறு புத்தகங்கள் குவிந்து கிடந்தன. இதற்கு அடுத்து இருந்த கார்டன் குளோரி கடையில் தண்ணீர் தெளிக்கும் எந்திரங்கள், கத்தரிக்கோல்கள் என தோட்டத்தினை சீரமைக்கும் பல்வேறு எந்திரங்கள் விற்பனைக்கு இருந்தன. அபர்பாய் கடையில் தாவர உரங்கள், அலங்காரச் செடிகள், பனை, தென்னை, படர்கொடிகள், ஊறுகாய்கள், பழச்சாறு பானங்கள், பப்பாளி மரத்திற்கான மருந்துகள் என்று பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நடைகூடத்தின் இறுதியில் உணவகம் அமைந்திருந்தது. உண்ணவும், பருகவுமான பானங்கள் ஏராளமான உணவுப் பொருட்கள் இருந்தன. நான் சாப்பிடுவது குறித்து இங்கே கவலைப்பட வேண்டியதே இல்லை. எனக்கான கட்டணத்தை கிரீன் ஹெரிடேஜ் அமைப்பு அளித்துவிடும். உணவகத்தினை அடுத்து இருந்த சிறு மேசை, ஒரு கரும்பலகை, சாக்பீஸ்கள், பெஞ்சுகள் உரைகள் மற்றும் பேச்சு ஆகியவை நிகழ இருப்பதை அறிவித்தன. காய்கறிகளில் பொருட்கள், பழச்சாறு, வைன் தயாரிப்பு, ஜாம் தயாரிப்பது மற்றும் சப்பாத்திக்கள்ளி வளர்ப்பு குறித்து நான்கு வகை பயிலரங்கங்கள் நடக்க இருந்தன. சப்பாத்தி கள்ளியினை தன் வீட்டில் வளர்ப்பவர் அது குறித்த அனுபவங்களைக் கூறும் பேச்சினை கேட்க முடிவு செய்தேன். கள்ளிச்செடியின் வளர்ச்சி குறித்த நடைமுறை அனுபவங்களை அவர் பேச்சில் கேட்க உற்சாகமாகவும், ஆர்வமாகவும் இருந்தது. என் அம்மா தோட்டத்தில் வளர்த்துவரும் கள்ளிச்செடிக்காக குறிப்புகளைப் பேசியவரின் பேச்சிலிருந்து குறித்துக்கொண்டேன். பல விஷயங்களை நேர்த்தியாக, எளிமையாக மனதில் பதிய வைக்கும் பேச்சு அது. மூன்று நாட்களில் தொட்டியில் உள்ள தாவரங்களைக் கவனிப்பது, தண்ணீர் ஊற்றுவது, அவற்றினை ஒழுங்கு செய்வது, மேசைகள், நாற்காலிகளை சரிசெய்வது, கிரீன் ஹெரிடேஜ் புத்தகங்களை விற்பது என இன்னும் பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். அலெக்சிஸ் மாமாவோடு இணைந்து இந்த வேலைகளைச் செய்ததுதான் இதில் கொண்டாட்டமான விஷயம். கடைசி நாளில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கிரீன் ஹெரிடேஜ் விழாவில் கலந்துகொண்டு பணிகளைச் செய்ததற்காக கிடைத்த சான்றிதழ் எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. விழாவிற்கான ஒருங்கிணைப்பாளர்களின் மூலம் விழாவின் நோக்கம் இலக்கு எட்டப்பட்டதை உணர்ந்தேன். வெற்றிக்கு உதவியதில் எனக்கும் சிறு பங்கிருப்பதை அங்கீகரித்தார்கள் என்பதே விவரிக்கமுடியாத உற்சாகம் அளித்தது. இரவு தொடங்கிய திறந்தவெளி விருந்து அடுத்தநாள் பிறக்க சில மணி நேரங்கள் இருக்கும்போது, நிறைவு பெற்றது. நாங்கள் உறங்கியது மிகச்சிறிய நேரமே என்றாலும் உற்சாகத்தோடு எழுந்து தாவரங்களை அதனதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் பொறுப்பை நிறைவேற்ற கிளம்பினோம். விடியலின் வெளிச்சம் எங்கள் மீது பட சிறிது நேரமே இருக்கையில் பணியும் முடிந்தது. விழா இன்னும் சிறிது நாட்கள் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கின்ற நிகழ்வாக அமைந்திருந்தது. அலெக்சிஸ் மாமாவின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு கிரீன் ஹெரிடேஜ் அமைப்பிற்கு பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அடுத்த நாள் அலெக்சிஸ் மாமா வீட்டிலேயே தங்கியிருந்து விட்டு பதினெட்டாம் தேதி வீட்டிற்கு கிளம்பினேன்.                             களப்பணிக்குறிப்புகள் கள்ளியினை வீட்டில் வளர்ப்பது எப்படி? கள்ளி வகைத் தாவரங்கள் என்பவை பாலைவனத்திற்கு உரிய தாவரங்கள் என்பதை மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொள்ளும்போதுதான் அவற்றை தோட்டங்களில் வளர்க்க முடியும். உதாரணத்திற்கு, கள்ளிச் செடிக்கு எப்போதும் தண்ணீரை அதிகம் ஊற்றினால் அவை விரைவிலே அழுகத் தொடங்கிவிடும். அதன் தண்டு, இலைகள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆவியாதலைத் தடுக்கும் சுரப்பிகள் உள்ளன. நீரை கள்ளிக்கு அதிகமாக ஊற்றும்போது அந்த சுரப்பிகளின் செயல்பாட்டு வளையம் பாதிக்கப்பட்டு. செடி அழுகத் தொடங்கிவிடும். கள்ளிச் செடிக்கு நீர் ஊற்றுவது, பருவநிலை, சூழலின் வெப்பம் போன்றவற்றைச் சார்ந்ததே. வெயில் காலங்களில் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும், மழைக்காலங்களில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் நீர் ஊற்றினால் கள்ளிக்கு போதுமானதாக இருக்கும். கள்ளிக்கு இரண்டரை ஆண்டுகள் சூரியவெளிச்சம் சிறிது நேரம் படும்படி தேவையிருக்கும். முழுநாளும் இதனை வெயிலில் வைத்தால் சுருக்கம் விழுந்து வாடத் தொடங்கிவிடும். மற்ற தாவரங்களைப் போலில்லாமல் கள்ளியானது பகலில் கார்பன் டை ஆக்சைடையும், இரவில் ஆக்சிஜனையும் வெளிவிடக்கூடியது. இரவில் இவற்றை படுக்கையறையில் வைத்துக்கொள்வது புத்துணர்ச்சி மிகுந்த காற்றை சுவாசிக்க, பெற உதவும். கள்ளிச்செடி நன்றாக வளரவும், செழித்தோங்கவும் அது வளரும் தொட்டியை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். செடியை விட தொட்டி சிறியதாக இருந்தால் மட்டுமே செடி போராடி தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வளரும். தொட்டி பெரியதாக இருந்தால் செடிக்கு வளருவதற்கான பெரிய உந்துதல்கள் இல்லாமல் இறந்துவிடும். கள்ளியும் மனிதர்களைப் போல்தான். கஷ்டப்பட்டு உழைக்கும்போது உயர்வு கிடைக்கிறது, வாழ முடிகிறது அது போலவேதான் கள்ளியும். கள்ளிச் செடியின் வளர்ச்சிக்கான எந்த அறிகுறியும் தென்படாத கணத்தில் நீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டு, வளர்ச்சி காண்பித்தால் மட்டுமே மீண்டும் நீர் ஊற்றவேண்டும். கள்ளிச்செடியை புதிய தொட்டியில் வைக்கும் முன்னர், உடைந்த செங்கற்கள் கீழேயும், மரக்கரி மேலேயும் நிரப்பி அதன் மேற்பரப்பில் சொரசொரப்பான மணலை நிரப்ப வேண்டும். இலையுரம் கள்ளிச்செடிக்கு மிகச்சிறந்த உரமாக இருக்கும். ஒட்டுச்செடியாக கள்ளியில் துண்டினை இணைப்பது மிக எளியது. சிறிய துண்டு கள்ளியினை செல்லோடேப்பினால் தாவரத்துடன் ஒட்டினால் போதுமானது. கள்ளிச்செடியாக வளர்க்க விரும்பினால் சில நாட்கள் கள்ளிச் செடித்துண்டினை வறண்டுபோகச்செய்து அதனை தொட்டியில் மேற்சொன்ன வகையில் அமைத்தால் போதும். மெல்ல கள்ளிச்செடி கிளைவிடும். மற்ற தாவரங்கள் அமைப்பிற்கும், கள்ளிச்செடியின் அமைப்பிற்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு. அவை எளிதாக வெளியே காணக்கூடியவையே. கள்ளிச்செடியிலுள்ள முட்கள் கீழேயிருந்த மிக நேர்த்தியான ஒழுங்குடன் உருவாகியிருக்கும். இந்த முட்கள் பட்டை, இலைகளும்தான் செடியின் நீரிழப்பை தடுக்கக்கூடிய அமைப்பாக உள்ளன. கள்ளிச்செடியிலுள்ள ஒருவரின் தோலில் துளைத்து உட்சென்று விட்டால், முள்துளைத்த இடத்தை செல்லோடேபினால் சுற்றி ஒட்டிவிட்டு, டேபினை நீக்கும்போது கள்ளியின் முட்கள் வெளிவந்துவிடும். 4 காளான்களோடு இருநாட்கள் கிரீன் ஹெரிடேஜ் விழாவில் பங்கேற்றது மேலும் ஒரு பலனைத் தந்தது. கோவா மாநில அரசின் வேளாண் அதிகாரி மிக்கயில் பிரகன்சாவுடன் தொடர்பு கிடைத்தது. அவர் பணிபுரியும் விவசாய ஆராய்ச்சி நிலையம் நடத்தும் இரண்டு நாள் காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாம் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் இலா பண்ணையில் நடைபெறுவதாக இருந்தது. அனுபவங்களைத் தேடிப்பெறும் முயற்சிகளில் இது முழுக்க என்னைச் சார்ந்தது. காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறும் கோவாவில் உள்ள இலா பண்ணை மற்றும் நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் பற்றிய விவரங்கள் குறித்தோ கூட நான் அறியாது இருந்தேன். திரு. பிரகன்சா அவர்கள் பயிற்சி பெறுபவர்கள் வளாகத்தில் பயிற்சி முடியும் நாள்வரை தங்கிக்கொள்ளும் வசதியை மையம் விலையில்லாமல் அளிக்கிறது என்று கூறியிருந்தார். இரவு நேரப் போக்குவரத்து அவ்வளவு எளிதானதாக கோவாவில் இல்லாததால், பயிற்சி பெறும் அனைவரும் விலையில்லாது தங்கும் வசதியை ஏற்றுக் கொள்ளக்கூடும் என்று நான் நினைத்தேன். பயிற்சி நாளின் இரவு விவசாய ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தங்கிக் கொள்ள என் பெற்றோரிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி கிடைத்து விவசாய ஆராய்ச்சி நிலையம் சென்று பார்த்த பின்தான் தெரிந்தது; மையத்திலேயே தங்கி பயிற்சி பெறும் ஒரே நபர் நான் மட்டும்தான் என்று. ஆகஸ்ட் மாதம் இருபத்து நான்காம் தேதி என் அப்பாவிடம் விவசாய நிலையத்தின் (ஐசிஏஆர்) வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, பழைய கோவாவில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தை அடைந்தபோது, கண்ட ஒரு பலகையில் நான் இருபத்திரெண்டு கி.மீ கடந்து வந்திருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன். ஐசிஏஆர் ன் உள்ளேயே இலா பண்ணை அமைந்து உள்ளது. உள்ளே நுழைவதற்கான அனுமதியை எழுதிப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றேன். வலது பக்க வழி ஐசிஏஆரின் அலுவலகத்திற்கு சென்றது. மற்றொரு பாதை தேங்காய், கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட தாவரங்களின் தோட்டத்திற்கு சென்றது. அருகிலுள்ள பாதையில் சிறிய அலுவலகமும், நன்றாக கவனித்தால் காளான்களின் சிறு கூறுகளைக் கொண்ட ஆய்வகம் போலவே இருந்தது. இரண்டு நாள் பயிற்சிக்கு பொறுப்பாளரை சந்தித்து, அவர் வழிகாட்டிய விவசாயிகளுக்கான பயிற்சி மையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். திரு. மிக்கயில் பிரகன்சா மற்றும் திரு. ஆஸ்கர் என பயிற்சியைக் கற்றுத்தரும் இருவரும், கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களும் முன்னமே அங்கிருந்தனர். காளான் வளர்ப்பு பயிற்சிக்கு வந்தவர்கள் தங்களது பெயரை முதலில் பதிவு செய்யுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டனர். பதிவு செய்ததும், பெரும் ஆச்சர்யமாக, கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஐந்நூறு ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. தரப்படும் உதவித்தொகை பங்கேற்பவரின் போக்குவரத்து, உணவு மற்றும் பிற செலவை உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடும் என்று யூகித்தேன். பயிற்சிக்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் விவசாயிகளாகவும், என்னிலும் வயது முதிர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். பங்கேற்பாளர்களில் சிலர் ஆங்கிலமும், சிலர் கொங்கணியும் பேசுபவர்களாகவும் இருந்ததால் ஆசிரியர்கள் தமது உரைகளை ஆங்கிலத்தில் பேச, திரு. ஆஸ்கர் அவற்றை கொங்கணியில் மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. காளான் வளர்ப்புப் பயிற்சி உரைகள் மற்றும் செய்முறைப்பயிற்சி என இரு முறைகளை உள்ளடக்கியிருந்தது. முதலில் இதனை உயரமாக, ஒல்லியாக, நீளமான முடி வைத்திருந்த நந்தகுமார் காமத் தொடங்கி வைத்தார். ‘’ எதற்காக நாம் காளான்களை உற்பத்தி செய்கிறோம்? விற்பனைக்காகவா? அல்லது உணவுக்காகவா?, தோட்டத்தில் விளைவிக்கும் காளான்களை சிறிய அளவு உற்பத்தி செய்வதா (அ) அதிக அளவு உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு முயல்வதா? எதை செய்யப்போகிறோமோ அதை முடிவு செய்துவிட்டு தேவையான காளான் வகைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பிறகு எண்ணிக்கையை முடிவு செய்யலாம் ‘’ என்ற அவர் தன் பேச்சினூடே திரையில் பல்வேறு வகையான உண்ணக்கூடிய காளான்கள் மற்றும் உண்ணக்கூடாத நச்சுக் காளான்களைப் பற்றியும் விளக்கிக் கூறினார். அவருடையது நீளமான பேச்சு என்றாலும், வெகு ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது. பேச்சு முடியும் மதிய உணவு நேரம் முடிந்த நிலையில் நான் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களும் சாப்பிடுவதற்காக பயிற்சி மைய உணவகத்திற்குச் சென்றோம். வெறும் ஆறு ரூபாய்க்கு ருசியான மீன்கறி உணவு கிடைத்தது ஆச்சர்யம்தான். அடுத்த இரண்டாம் கட்ட பயிற்சி மாலையில் தொடங்கியது. இதில் இரண்டு உரைகள் இருந்தன. ஒன்று ஐசிஏஆர் விஞ்ஞானி ஒருவர் பூச்சிகள் மற்றும் காளான்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்துப் பேசினார். பூச்சிகள், பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் முறையான பராமரிப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகள் குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் கூறிய மருந்துகளை மிகக் குறைவான அளவிலான பயன்படுத்த வேண்டும். எ.கா லின்டேன், மாலத்தியான் டை குளோரோல், காப்பர் சல்பேட் (அ) சிட்ரெனெல்லா ஆயில். மெல்ல சலிப்பூறிய குரலில் முறையான பராமரிப்பே பல்வேறு நோய்களிலிருந்து காக்கும் ஒரே வழிமுறை என்று கூறி முடித்தபோது, அவரிடம் காளான் வளர்ப்பில் எந்த அனுபவமும் இல்லாத நாங்கள் என்ன கேள்வி கேட்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்து விட்டோம். அடுத்து பேசிய பெண்மணி ஒருவர் காளானில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி பேசினார். குறைந்த கொழுப்பும், சர்க்கரையும் அதிக புரதமும் கொண்ட காளான் எலும்புகளின் தேய்மான வலி, பற்சொத்தை, பற்களில் ரத்தக்கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்ட ஊட்டச்சத்து நிரம்பிய உணவு என்று அவர் கூறிய போதே என் உணவில் காளானுக்கு எப்போதும் ஒரு இடம் தர முடிவு செய்து விட்டேன். நிகழ்ச்சி முடியும் போது மாலை ஆறு மணி ஆகிவிட்டது. கலந்து கொண்டவர்களில் என்னைத்தவிர அனைவருமே வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார்கள். பயிற்சி பொறுப்பாளர்கள் அங்கேயே தங்குவதற்கு விரும்புவர்களுக்கு அறையினை ஏற்பாடு செய்வதாகக் கூற, நான் அவர்கள் அளிக்கும் அறையிலே தங்க முடிவு செய்தேன். தங்கியிருந்த இருநாட்களின் மாலை, மற்றும் காலை நேரங்களை ஐசிஏஆரை சுற்றிப்பார்த்து பல்வேறு விஷயங்களை கற்பதிலேயே செலவழித்தேன். ஐசிஏஆரில் சிறிய தாவரப் பண்ணை, பூந்தோட்டம், மீன்கள் நிரம்பிய குளம், கோழிகள், முயல்களைக் கொண்ட தொழுவம், கால்நடைப் பண்ணைகள் பெரிய நெற்பயிர்கள் பயிரிடும் நிலம் எனப் பரந்து விரிந்ததாக இருந்தது. இதோடு பழத்தோட்டத்தில் மாமரம், சப்போட்டா, தென்னை மரம் என பல பயிர்கள் இருந்தன. தோட்டங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்கும் உணவகத்திற்கும் இடையில் இருந்தன. எனக்கு கொடுத்த அறை இரண்டு படுக்கைகள், சில பூட்டக்கூடிய அலமாரிகள், மேசை, கண்ணாடி கொண்ட சிறு அறையாகும். யாருமே இரவில் தங்கியிராத அறையான அதில் தனக்குத் துணையாக ஆராய்ச்சி நிலைய பாதுகாவலர் தங்கியிருக்கக் கூறினார். உணவகத்தில் விலை குறைவாகவும், தரமானதாகவும் இருந்த உணவை அன்றிரவும் ருசித்தேன். அடுத்த நாள் காலையில் எனது உணவான ரொட்டியும் காய்கறிக்கும் மூன்று ரூபாய் மட்டுமே செலவானது. அன்றிரவு செய்வதற்கு எனக்கு எந்த வேலையும் இல்லாததால், பாதுகாவலரோடு சேர்ந்து நிலையத்தின் பின்புறமிருந்த மலையில் ஏறி கோயில் வரை சென்று வந்தோம். இரண்டாவது நாள் பயிற்சினை ஆஸ்கர் மேற்கொண்டார். ஆஸ்கரினுடைய திரையில் காட்டப்பட்ட செயல்முறைகள் அனைத்தும் நடைமுறையான அனுபவங்களை மையமாகக் கொண்டிருந்தன. காளான் வளர்ப்பு, அதன் வளர்ச்சி என்ற அவரது பேச்சினூடே பல்வேறு நடைமுறை அனுபவங்கள் நிறைந்த காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டன. நோய்த்தடுப்பு முறைகளையும், செயற்கை முறையில் காளான்களை உற்பத்தி செய்யக்கூடிய கூடத்தில் புற ஊதாக்குழாயில் தாய் உயிர்க்கூறுகள் தயாராக வைக்கப்பட்டும், வைக்கோல் வேகவைக்கப்பட்டு, காளான்களின் திரள் நிறைந்திருப்பதையும் காட்டினார். பங்கேற்பாளர்கள் இந்த செயல்பாடுகளை நாங்களாகவே செய்ய அனுமதிக்கப்பட்டோம். ஆஸ்கர் அவர்களின் வகுப்பு நீண்டதாக இருக்க வேண்டும் என அனைத்து பங்கேற்பாளர்களும் விரும்பினோம். உள்ளூர அனுபவித்து ஒன்றைக் கற்றல் என்பது நிகழ்வதாக அவர்களின் முகங்களிலிருந்து கண்டு கொண்டேன். காளான் வளர்ப்பு பற்றி பங்கேற்பாளர்களுக்கு எந்த வித அனுபவங்களும் இல்லாததால், அவற்றை விற்பனை செய்து கொண்டிருக்கும் இரண்டு பேரை ஆஸ்கர் எங்களுக்கு உரை வழங்க அழைத்திருந்தார். கடந்த ஒரு ஆண்டாக காளான்களை வளர்த்து புதிதான (அ) உலர்வான வகையில் தேவைக்கேற்ப விற்றுக்கொண்டு விடுகிறோம் என்ற அவர்களின் பேச்சு அனுபவங்களிலிருந்து எழுந்ததாக அமைந்திருந்தது. அவர்கள் தினமும் இருநூறு வைக்கோல் பைகளை நிரப்புகிறார்கள் என்றும் எலி மற்றும் நோய்களால் தொடக்கத்தில் காளான்களை விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்கள். காளான்கள் வளர்ப்பு பயிற்சி நிறைவு பெறும்போது, விவசாயிகள் பயிற்சி மைய இயக்குநர், விவசாயிகள் பயிற்சி மையத்தின் பொதுவான செயல்முறைகள் மற்றும் ஐசிஏஆரின் பணிகளைப் பற்றியும் உரையாற்றினார். சில பங்கேற்பாளர்கள் காளான்களின் உயிர்க்கூறுகள் கொண்ட பாட்டில்களை வீட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால் நான் கோவாவிட்டு வெளியே செல்வதற்கான பல பயணத்திட்டங்கள் இருந்ததால், காளான்களை வளர்க்க முடியாமல் போய்விட்டது. ஐசிஏஆரில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டதோடு, பல நண்பர்களையும் பெற்றிருந்தேன் என்பதே மகிழ்ச்சியான நினைவுகளாக உள்ளது.                         களப்பணிக்குறிப்புகள் காளான் வளர்ப்பு உண்ணுவதற்கான காளான்களில் பல்வேறு வகைகள் உள்ளன என்றாலும் ஆய்ஸ்டர் மற்றும் பட்டன் வகை காளான்களைத்தான் பெரும்பாலும் விளைவித்து விற்பனை செய்கின்றனர். குழந்தைகளுக்கும் கூட காளான் எளிதில் செரிமானம் ஆகி, சத்துக்கள் மூன்று மணிநேரத்தில் உடலால் உள்ளிழுக்கப்படும் சிறந்த உணவுப்பொருளாக உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவுநோய், ரத்த அழுத்தம் போன்றவைகளை கொண்டுள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவுப்பொருளாக உள்ளது. இதய நோய்கள், கல்லீரல் நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுகின்ற அபாயத்தின் அளவையும் காளான் குறைக்கிறது. விற்பனை செய்யுமளவு காளான்கள் வளர்க்க சிறிய அளவிலான முதலீடு தேவைப்படும். நடைமுறை அனுபவங்களை விதிகளை கவனமாக நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். நிலம் பயிரிட இல்லையென்றாலும் கூட வீட்டில் இருக்கும் சிறு அறை கூட போதுமானது. சூழ்நிலை காளான்கள் வளர இருபதிலிருந்த முப்பது டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்ப நிலையையும், முப்பத்தைந்திலிருந்து தொண்ணூறு விழுக்காடு அளவிலான ஈரப்பதமும் அவசியம். அதோடு, காற்று, பரவலான விளக்கின் வெளிச்சம், அரையிருட்டு சூழலும் தேவையாகும். அதிக அளவிலான வெளிச்சம் காளானின் நிறத்தை கருப்பாக்கி விடும். அறையின் வெப்பநிலை முப்பத்திரெண்டு டிகிரி செல்சியஸ் நிலையைத் தாண்டி உயரும்போது, வெப்பநிலையைக் குறைத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் அறையினைத் தக்கவைக்க, நுண்ணுயிரிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்ட கோணிச்சாக்குகளை நீரில் நனைத்து அறையில் தொங்கவிடலாம். வெப்பநிலை இருபது டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழ் போகும்போது, சிறிய அறையாக இருக்கும் போது இருநூறு வாட்ஸ் விளக்கினை வெப்பம் உருவாக எரியவிடலாம். தாய் உயிர்க்கூறு காளான்கள் வளருவதற்கான பொருளாக உயிர்க்கூறினை உருவாக்க பூச்சிகள் அரிக்காத, தரமான, நோயில்லாத உலர்வான கோதுமை (அ) பயறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சாரமில்லாத, பள்ளம் விழுந்த தானியங்களை அகற்றிவிட்டு மிச்சமிருக்கும் தானியங்களை அரைவேக்காடு வரும்வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதனோடே நுண்ணுயிரிகளை நீக்கம் செய்ய பார்மாலின், சேவ்லான் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு தானியத்தை நுண்ணுயிரி நீக்கம் பெற்ற மெல்லிய பருத்தித்துணியில் பரவலாக்கி, அதில் கால்சியம் கார்பனேட்டை கலக்கவும். உறிஞ்சும் தன்மை குறைந்த பருத்தித்துணியினை மேலே வைத்து இறுக்கமாக புட்டியை மூடவேண்டும். புட்டியை பிரஷர் குக்கரில் வைத்து விடவேண்டும். காளான்களின் உயிர்க்கூறு உள்ள துணி வெள்ளையாகவும், இனிமையான மணம் (அ) மணமில்லாது இருக்கலாம். உயிர்க்கூறு வெள்ளையாகவும், பருத்தியில் உருவானதாகவும் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் அது பழமையாகிவிட்டது என்று அர்த்தமாகிறது. வேறு ஏதாவது நிறம் தென்பட்டால் பூஞ்சைகளினால் பாதிக்கப்பட்டது என்று கொள்ளலாம். பதினெட்டிலிருந்து இருபது நாட்கள் பழமையானதாக உயிர்க்கூறு இருக்கலாம். காளான்கள் நோய்த்தடுப்பு மற்றும் வளர்ப்பு அறை 2.25 மீட்டர் உயரமும், 1.25 மீ அகலமும் கொண்டிருந்தது. அல்ட்ரா வயலட் குழாயும், சாதாரண டியூப்லைட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கூடவே எரிசாராய விளக்கும் பயன்பட்டது. ஒரு முறை மேற்சொன்ன முறையில் உயிர்க்கூறுகளை தயாரித்துவிட்டால் இவற்றில் விளைவிக்கப்படும் காளான்களின் விளைச்சல் குறையும் அளவு பயன்படுத்தலாம். உட்தளம் காளான்கள் வளர பயன்படும் பொருளாக நிலம் போல இங்கே வைக்கோல் பயன்படுகிறது. இதில் செல்லுலோஸ் மற்றும் லிக்னின் எனும் சத்துக்கள் காளான்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளன. இவையில்லாமல் உட்தளத்தில் பயன்படும் இலைகள், உலர்ந்த மாமர இலைகள், தென்னை மர இலைகள், கரும்பு, புற்கள், அரிசி உமி போன்றவையும் இதில் பயன்படுகின்றன. நெற்பயிர் வைக்கோலை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். எளிதில் உடையும் தன்மை கொண்டதாகவும் மஞ்சள் (அ) பொன் நிறமாகவும், வயது ஆறுமாதங்களுக்கு அதிகமானதாக இருக்கக் கூடாது. வைக்கோலை நன்றாக வெயிலில் காயவைத்து அவற்றை காற்றுப்புகாத புட்டியில் போட்டுவைத்து இரு மாதங்களுக்குள் பயன்படுத்தலாம். தயாரிக்கப்படும் உயிர்க்கூறில் நான்கு விழுக்காடு வைக்கோல் இருக்கவேண்டும். விதிமுறைகள் வைக்கோலை மூன்றிலிருந்து ஐந்து செ.மீ நீளமுள்ள சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பருத்தித் துணியில் நிரப்பி நீரில் பத்து மணி நேரம் ஊறவைக்கவேண்டும் (ஒரு கிலோ வைக்கோல் பத்து லிட்டர் தண்ணீர்). வைக்கோலானது நீரால் எடைகூடி எந்தப்பகுதியும் வெளியே தெரியாத அளவு நீரில் அமிழ்ந்திருக்க வேண்டும். அடுத்த நிலை வைக்கோலை சூடாக்கி பின் குளிர்வித்து கிருமி நீக்கும் செய்யும் செயல்முறையாகும். நீரை எண்பதிலிருந்து எண்பத்தைந்து டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வரும்வரை கொதிக்க வைக்கவேண்டும். துணியினுள் உள்ள வைக்கோலினை நீரில் மூழ்குமாறு கொதிக்கும் நீரில் குமிழ்கள் நின்றவுடன் வைக்கோல் நீரில் மூழ்கி பின் வெளியே தெரியும். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு குமிழ்கள் வெளியே தெரியும்போது, வைக்கோல் பையினை நீரிலிருந்து நீக்கிவிட்டு, அறை வெப்பநிலையில் சிறிது நேரம் இருக்குமாறு செய்து பின் குளிர்வித்து, அதனை பரவலாக்கிப் போட்டு இரண்டு மணிநேரத்திற்கு காய விட வேண்டும். வைக்கோலில் உள்ள ஈரப்பதமானது அறுபது விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது என்பதை சோதிக்க வைக்கோல் துண்டினை விரலில் இறுக்கமாக வைத்து அழுத்தும் போது, ஒரு துளி ஈரம் மட்டுமே வெளிவந்தால் அதில் ஈரப்பதம் சரியாக இருக்கிறதென்று அறியலாம். பாலித்தீன் (அ) பாலிபுரொப்பலீன் பைகளில் வைக்கோலினை நிரப்ப வேண்டும். இந்தப்பையானது 35×50 செ.மீ, 150 கி. எடையும் கொண்டிருக்க வேண்டும். சேவ்லான் (அ) பார்மாலின் (அ) டெட்டால் கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த பையினை இறுக்கி கட்டும் விதமாக நான்கு கயிறுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். முதலில் 5 செ.மீ அளவுள்ள வைக்கோலினை பையில் நுழைத்து கீழே அழுத்த வேண்டும். பின் தயாரித்து வைத்துள்ள காளான் உயிர்க்கூறுகளை உள்ளே பரவலாக பரப்பிவைக்கவேண்டும். பின் பத்து செ.மீ அளவுள்ள வைக்கோலினை பையினுள் பரப்பிவைக்கப்பட்ட பொருளை கீழே தள்ளுமாறு நுழைக்கவேண்டும். இதன் பின் இதனைச் சுற்றி இருக்குமாறு ஐந்து செ.மீ வைக்கோலினை அமைக்க வேண்டும். நான்கு கயிறுகளையும் இணைத்துக் கட்டவேண்டும். கட்டியோ (அ) அறையில் வைத்து விடலாம். கட்டிவிட்டால் கீழேயிருந்து எளிதாக காளான்களை எடுக்க முடியும். அடுத்த நாளில் முப்பது (அ) முப்பத்தைந்து துளைகளை கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியின் மூலம் ஒவ்வொரு பையிலும் இட வேண்டும். பதினைந்து நாட்களுக்கு குறைந்த அளவு காற்று, இருட்டில் வைத்துவிட வேண்டும். பின் இந்தப் பைகளை வேறொரு அறைக்கு மாற்றவேண்டும். நான்கு மணி நேரங்களுக்கு பரவலான விளக்கு வெளிச்சமும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். பிறகு அடுத்த ஒன்றரை நாட்களுக்கு ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் மேலேயிருந்து மழை போல நீரை தெளித்து வரவேண்டும். அடுத்து வரும் நாட்களில் காளான்கள் முளைக்கத் தொடங்கும். இரு நாட்களில் நன்றாக வளர்ந்து விடும். காளான்களை வெட்டியோ அல்லது மெல்ல முறுக்கி திருகியோ எடுக்கலாம். காளான்களின் உள்ளடுக்கு ஈரம் குறையாமல் இருக்க நீர் தெளிக்க வேண்டும். அடுத்த முறை காளான்கள் உருவாக ஒரு வாரம் ஆகக் கூடும். நான்கு முறை காளான்கள் விளைந்தபின் உள்ளடுக்கு நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்டுவிடும். பூச்சிகள் மற்றும் நோய்கள் முறையான பாதுகாப்பு முறைகளைக் கடைபிடித்தும், கவனமாக வளர்த்தால் மட்டுமே காளான்களை பூச்சிகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காப்பாற்ற முடியும். பட்டன் காளானானது, ஆய்ஸ்டர் காளானை விட எளிதில் நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தன்மை கொண்டது. காளான்களைத் தாக்கும் பூச்சிகள் ஏறத்தாழ வெட்டுக்கிளியின் செயல்களை ஒத்தவையாகும். காளான்களை விதைப்பதற்கு முன் சல்பரை காற்றில் பரவுமாறு பற்றவைத்து எரிக்கலாம். சிட்ரொனெல்லா எண்ணெயை நீரில் கரைத்து காளான்பைகளுக்கு தெளிக்கலாம். இவையே பூச்சிகளிலிருந்து காளான்களைக் காப்பாற்றும் சிறந்த வழி ஆகும். பாக்டீரியா மற்றும் உருளை, நூல் புழுக்கள் காளான்களை பெரிதும் பாதிப்பவை. காளான்களில் உள்ள ஈரம் அதிகரிக்கும்போது பழுப்பு நிறக் கட்டிகள் (அ) ஈரம் சேர்ந்த அழுகல் இருந்தால் அவை பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கொள்ளலாம். காளான்களின் ஈரப்பதத்தினை தொடர்ந்து கவனித்துப் பராமரிப்பதன் மூலம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் தாக்குதலை குறைக்கலாம். அடுத்து உருளைப்புழு. நூல் புழு போன்றவற்றை கட்டுப்படுத்த காளான்களின் உள்ளடுக்கை தொடர்ந்து மாற்றியமைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு அதிகமாக பழமையானதாக இருக்காமல், கவனமாகத் தேர்ந்தெடுத்து கிருமி நீக்கம் செய்யப்பட்டு பின்னரே பயன்படுத்த வேண்டும். காளான்களில் நோய் அறிகுறிகள் தென்பட்டால் நூறு கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) இருபது மில்லி பார்மாலின் மருந்துகளைத் தெளிக்கலாம். 5 கடவுளின் தேசத்திற்கு பயணம் ஆகஸ்ட் மாத இறுதியில் கன மழையும் நின்றிருந்தது. கோவாவிற்கு வெளியே உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க ஆர்வம் கொண்டிருந்ததோடு, பல இடங்களையும் என் நிகழ்ச்சி நிரலில் குறித்து வைத்திருந்தேன். எனக்குள் நானே முடிவுகளை எடுத்து செயல்பட கற்றிருந்ததில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. கோவாவில் சந்திக்கும் யாரிடமும் சரளமாக என்னால் உரையாட முடியும் என்ற தைரியம் எனக்குள் பிறந்திருந்தது. வழிகளைக் கேட்டறிவது, தேவையான உணவை வாங்குவது, பணத்தைக் கையாளுவது போன்றவற்றில் தடுமாற்றங்கள் குறைந்திருந்தன. கோவாவிற்கு வெளியே செல்ல பொறுமையின்றி காத்திருந்தேன். கோவாவிற்கு வெளியே செல்ல மற்றொரு காரணம் எனது நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் தொடர்ந்து எழுப்பிய எஸ்எஸ்சி தேர்வு எழுதிய பின்னும் ஏன் நீ இன்னும் கல்லூரி சேரவில்லை என்ற கேள்வி அம்புகளைத் தவிர்க்கவும்தான். நான் ஓராண்டு குறித்த விஷயங்களைக் கூறினாலும், இந்த முயற்சியையோ, சிந்தனையையோ அவர்கள் பயன்படுத்த, புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள். நான் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்தேன். எனவே என் ஆர்வத்தை உற்சாகத்தை தொந்தரவு செய்யும் கேள்விகளைத் தவிர்க்கவும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கிளம்பிச் செல்ல முயற்சி செய்தேன். அப்பாவும், நானும் ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதி 1995 அன்று கோவாவைவிட்டு கிளம்பினோம். பனாஜி பேருந்து நிலையத்தில் காலை ஆறுமணிக்கு கிளம்பி அன்று மாலை நான்கு மணிக்கு மங்களூர் சென்று சேர்ந்தோம். கார்வார், அங்கோலா, கும்பா, கோனவர், குண்டாபூர், உடுப்பி போன்ற இடங்களைக் கடந்து எங்களது பூர்வீகமான ஊரான மங்களூர் வந்து சேர்ந்திருந்தோம். என் அப்பா மும்பையில் பிறந்து வளர்ந்து தற்போது திருமணம் முடித்து கோவாவில் வசித்தாலும், எங்களது பூர்வீகம் மங்களூர்தான். இருந்தாலும் இல்லாவிட்டாலும் மங்களூரில்தான் எங்களது பெரும்பாலான உறவினர்கள் இருக்கிறார்கள். பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த என்னுடைய பெரிய மாமாவின் வீட்டில் தங்கினோம். இரண்டடுக்கு கட்டிடங்களாக இருந்த அந்த வீட்டில் பெரிய அத்தை மோனிகா மாக்ஸி தன் மூன்று மகன்களான ரெக்கி, பேட்ரிக், லாம்பெர்ட் மற்றும் அவர்களின் குடும்பங்களோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். என்னுடைய பெரிய மாமா கொங்கணி மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தவர் இறந்துபோய் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. என் அத்தை மற்றும் அவரது மகன்களை அன்றுதான் முதன்முதலாக சந்தித்தேன். ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டபின் அவர்கள் தந்த சிற்றுண்டியை சாப்பிட்டதும், அப்பா நகரைச் சுற்றி காட்டினார். கோட்டயத்தில் நடைபெறும் ஆராய்ச்சி மாநாடு முடிந்ததும், கோவாவிற்கு நான் தனியாக பயணிக்க வேண்டி இருக்கும் என்று அறிந்தேன். எனவே அப்பா கூறிய அடையாளங்கள், இடங்களை நன்கு மனதில் பதித்துக்கொண்டால்தான் நான் திரும்ப வீடு வந்து சேர முடியும் என்ற உணர்வே என்னை விழிப்பாக கவனிக்க வைத்தது. ரயில்நிலையம் ஹம்பன்கட்டா, மங்களூரின் மத்தியிலும், பழைய பேருந்து நிலையம் மோனிகா அத்தையின் வீட்டு வழியிலும இருந்ததைக் குறித்துக்கொண்டேன். இருட்டிய பின் வீட்டுக்கு வந்து உணவைச் சாப்பிட்டுவிட்டு உடனே படுக்கைக்கு திரும்பினோம். அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கவிருந்தது. நாங்கள் பயணிக்கவிருந்த ரயில் மங்களூருக்கு காலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தது. கண்ணூர், காலிகட், திரிசூர், எர்ணாக்குளம் என பல்வேறு ஊர்களைத் தாண்டி கோட்டயத்தில் இறங்கும்போது மணி மாலை 3.45 ஆகிவிட்டிருந்தது. நாங்கள் பதிவு செய்திருந்த ஹோட்டல் ஐஸ்வர்யாவில் குளித்துவிட்டு நகரத்தைச் சுற்றிப்பார்க்க எப்போதும் போல கிளம்பினோம். ஆனால் மழை வருவது போல் இருந்ததால் விரைந்து அறைக்குத் திரும்பிவிட்டோம். ஆராய்ச்சி மாநாடு கிரீன் பார்க் ஹோட்டலில் நடக்க இருந்ததால், அதிகாலையிலேயே அந்த இடத்திற்குப் போய் விட்டோம். மாநாட்டில் கலந்து கொள்ள முன்னமே பதிவு செய்து விட்டதால் பங்கேற்பாளர்களுக்கு துணிப்பை, பேனா, குறிப்பேடு தலா ஒன்று அளிக்கப்பட்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த கடைகளில் இயற்கைப் பொருளிலான தேநீர், ஊறுகாய், புத்தகங்கள் இன்னும் பல பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. சிறிது நேரமே கடைகளைச் சுற்றிப்பார்க்க முடிந்தது. விழா ஒருங்கிணைப்பாளர்கள் விழாவினை தொடங்கிவைக்கும் ஏற்பாட்டினைத் தொடங்கினார்கள். பின்னர், பல விஞ்ஞானிகளின் பேச்சைக் கேட்டோம். உரைகள் மாலைவரை தொடர்ந்தது. பின் உணவு இடைவேளையில் சைவ உணவு கிடைத்தது. தொடர்ந்த உரைகளில் மண்புழு பற்றி விரிவாகப் பேசிய மருத்துவர். சுல்தான் இஸ்மாயில் உரை என்னை பெரிதும் கவர்ந்தது. இவரைப்பற்றி தனி அத்தியாயமே உள்ளதால் இங்கு இதுவே போதுமானது. அடுத்தநாள் காலையில் அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் வரிசைப்படி தொடங்கின. விவசாயிகளுக்கான நேரத்தில் பல்வேறு விவசாயிகள் இயற்கை வேளாண்மை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது சுவாரசியமானதாக இருந்தது. மதிய உணவிற்குப்பின், அப்பாவும் நானும், கூடவே சித்தா சமாதி யோக நிகழ்ச்சியினை உருவாக்கியவருமான ரிஷி பிரபாகர் இயற்கை வேளாண் ஆராய்ச்சியாளருமான கார்த்திகேயன் ஆகியோர் அனைவரும் இணைந்து இயற்கை விவசாயியான திரு. கே.டி தாமஸ் அவர்களைச் சந்தித்தோம். அவர் தன்னுடைய கடல் உயிரிகள்குளம், ரப்பர்தோட்டம், பசுக்கள், மீன்குளம், பழத்தோட்டம், பெரிய மூங்கில் தோட்டம் இன்னும் பல தாவரங்கள் என பலவற்றையும் பார்வையிட அனுமதித்தார். உண்மையிலேயே அவரது பண்ணை பெரியதும், இருண்டு குளிர்ச்சியாக இரவில் வனத்தில் உலாவுவதை ஒத்திருந்தது. அடுத்த நாள் காலை காலிகட்டிற்கு ரயிலில் கிளம்பினோம். எர்ணாக்குளம், திரிசூர் கடந்து சோரனூரில் ரயிலை விட்டிறங்கி நிலையத்திலிருந்து பேருந்தைப் பிடித்து சுல்தான் பேட்டரியில் இறங்கி ரிசார்ட் எனும் ஹோட்டலில் இரவைக் கழித்தோம். எப்போதும் போல நகரைச்சுற்றி வருவதில் பல மணிநேரங்களை செலவிட்டோம். வய நாட்டில் அடுத்த நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இயற்கை வேளாண்மை சார்ந்த கருத்துக்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியே அது. வயநாடு வனவாழ்வு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் நானும் அப்பாவும் தங்கினோம். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிகமானவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் அனைவரும் தீவிர முனைப்பில் பல்வேறு விஷயங்களை விவாதித்தார்கள். இவர்களின் பெரிய அளவு ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படாததால் அங்கிருந்து நான் சென்று விட விரும்பினேன். ஆனால் வந்திருந்தவர்களில் சிலரின் அதீத புத்திக்கூர்மையும், தொடர்ந்து குறிப்பிட்ட தளத்தில் பாடுபடும் அவர்களது அர்ப்பணிப்பையும் நிராகரிக்கவே முடியாது என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். ஆரோவில்லிலிருந்து பெர்னார்ட், கோரா மாதென் மற்றும் அவரது மகளான நிதி ஆகியோர் அகமதாபாத்திலிருந்தும், ஓம்கார் என்பவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஓம்காரை மீண்டும் பின்னாளில் சந்தித்தேன். காலையிலும், மாலையிலும் காட்டிற்குள் நடைபயணம் மேற்கொண்டோம். முதல்நாளில் நீலகிரியில் காணப்படும் மஞ்சள் உடலும் கரிய முகமும் கொண்ட பெரிய குரங்குகளை, சிறிய பறவைகளை, தவளைகளை, மரங்களைக் கண்டு ரசித்தோம். மாலை வேளையில் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் இரு படங்களை திரையிட்டார்கள். ஒன்று பவானி ஆறு எப்படி மாசுபடுகிறது என்பதைப்பற்றியது. மற்றொன்று புகழ்பெற்ற அற்புதமான ‘Animals are beautiful people’ என்ற படமாகும். வயநாட்டின் அடுத்த நாள் காலையில் சென்ற நடை பயணத்தில் மான்கள் கூட்டத்தைப் பார்த்தோம். பல்வேறு விலங்குகளின் கால் சுவடுகளையும் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக மான், ஏன் யானையின் கால் சுவட்டினையும் கூட கண்டோம். இந்த அனுபவம் என்னை நடைபயணம் செல்லத் தூண்டும் பெரிய தூண்டுதலாக அமைந்தது. மூன்றாவது நாள், திரு. சிவானந்த் மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் குறித்த பல்வேறு விஷயங்களைக் கூறினார். எங்களுக்கு காட்சிகளை திரையிட்டு பூச்சிகளை உண்ணும் தாவரங்கள், மலையாடுகள், ஆறுகள் நீராவியாக மாறுவது, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பூக்கும் தாவரங்கள் என இன்னும் பல செய்திகள், தரவுகளைக் கூறினார். அவை பள்ளியில் நான் படித்த புவியியலையும், அறிவியலையும் என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது போலிருந்தது. அந்த நாளின் மாலையில் இரு படங்கள் பார்த்தோம். முதல் படம் The Whistle Hunters (காட்டு நாய்களைப் பற்றியது), இரண்டாவது படம் The Lord of the Jungle (யானைகளைப் பற்றியது); இவ்விரண்டும் சிறந்த அனுபவ தரிசனத்தை தந்த படங்களாகும். அடுத்த நாள் காலையில் பனிரெண்டு கி.மீ தூரம் நடந்தும் பறவைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. காலை வேளையின் பின்னால் இறுதி நிகழ்ச்சி நடைபெற இருந்தது. மாலை நேரத்தில் வனத்துறை காட்டுக்குள் எங்களை அழைத்துச் செல்லும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறிது தூரம் பயணித்திருப்போம்; கண்காணிப்பு கோபுரத்திலிருந்து மான், காட்டுப்பன்றி, புலி ஆகியவற்றின் கால்தடத்தை சேர்த்துக் காண நேரிட்டதால், நாங்கள் விரைவிலே இருப்பிடத்திற்கு திரும்பும்படி ஆயிற்று. அன்றைய இரவு இரு படங்கள் பார்த்தோம். ஒன்று நர்மதா நதி பற்றிய ‘A Valley Rises’, இரண்டாவது படம் ‘The Silent Valley’ என்பதாகும். சந்திப்புகள் முடிந்தவுடன் என் அப்பா தன்னுடைய திட்டப்படி சென்னையில் சில வேலைகளைச் செய்யச் சென்றாகவேண்டும். நானோ கோவாவிற்கு தனியாக என் முயற்சியில் திரும்ப வேண்டும். அப்பாவும் நானும் பேருந்தில் ஏறி காலிகட் போனோம். அங்கிருந்து நான் மங்களூர் செல்ல அப்பா பயணச்சீட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு கிளம்பும்போது மணி இரண்டு ஆகியிருந்தது. ரயில் வந்து சேரும் போது மணி நான்கு ஆகிவிட்டிருந்தது. முதல்முறையாக நான் தனியாக பயணிக்கிறேன் என்பதே எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. ரயில் வருவதற்கு இரண்டுமணி நேரம் முன்னாடியே வந்திருந்தாலும், நான் தூங்கி விடுவேனோ என்று பயமாக இருந்தது. வீடியோ கேமினை சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன். ரயில் வந்ததும் கடும் கூச்சல்களால் ரயில்நிலையமே அதிர்ந்தது. ஏதாவது இருக்கை இருக்குமா என்ற எனது கேள்விக்கு எந்தப்பதிலும் யாரும் கூறவில்லை. நல்ல இடத்தை நானே தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். ரயில் விரைவிலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டது. திருடர்கள் குறித்த பயத்தினால் எனது இரு பைகளையும் கவனமாக பார்த்தபடி வந்தேன். பைகளை வைத்த இடத்தை விட்டு எங்கும் நகராமல் இருந்தேன். நேரம் ஆக, ஆக எப்போது ரயில் நிற்கும் என்று யோசிக்கத்தொடங்கியிருந்தேன். காலிகட் ரயில்நிலையத்தில் அப்பா வாங்கித் தந்திருந்த பழங்களை எடுத்து சாப்பிடத் தொடங்கினேன். மங்களூருக்கு ரயில் வந்து சேர்ந்த போது இரவு மணி ஒன்பது ஆகியிருந்தது. ரயில் நிலையத்தில் ஒரு ரிக்சா வண்டிக்கு முப்பது ரூபாய் கொடுத்து பெரிய அத்தை வீட்டிற்கு பயணித்தேன். உண்மையிலேயே அதிகமான கட்டணம்தான் இது என்றாலும், இரவு நேரம் வேறு. மேலும் எனக்கு வழியும் உறுதியாக தெரியாது. எனவே இந்த நிலையில் எந்த வாதத்தை ரிக்சாக்காரர் மீது வைத்துக் கோபம் கொள்வது? என்னுடைய அத்தையும், அவரின் குடும்பமும் சில நாட்கள் அவர்களோடு தங்கிச்செல்லுமாறு வற்புறுத்தியபோதும், என் அம்மா கவலையோடு என் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார் என்பதை அறிந்திருந்தேன். எனவே அவரை கவலைக்குள்ளாக்க விரும்பாததால், திட்டமிட்டபடி அடுத்தநாள் கிளம்பினேன். காலையில் ரெக்கி மாமா தன் ஸ்கூட்டரில் பேருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிடும்போது, கோவா செல்லும் பேருந்து கிளம்பி நின்றது. வேகமாக ஓடித் தாவி ஏறி இருக்கையைத் தேடிப்பிடித்து அமர்ந்தேன். பேருந்து பனாஜியை அடைந்த போது மாலை ஐந்து மணியாகிவிட்டது. அங்கிருந்து மபுசாவிற்கு ஒரு உள்ளூர் பேருந்தைத் தேடி ஏறியமர்ந்தேன். மபுசாவிற்கு வந்து சேர்ந்தபின்தான் எனக்குள் இருந்த பதற்றம் சிறிது குறைந்தது. வாழும் மண் தரும் பழகிய, பாதுகாப்பான உணர்வை எப்படி வர்ணிப்பது? சுற்றித் திரியும் நாய்கள், வியாபாரிகளின் கடைகள், மக்கள் என சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தபோது, ஒலியின் வேகத்தை விட வேகமாகச் செல்லுமோ என்று அச்சுறுத்தக்கூடிய நான்கு மடங்கு இரைச்சலைக் கொண்டிருந்த மோட்டார் வண்டியில் ஏறி வீட்டிற்குக் கிளம்பினேன். வீட்டிற்கும் நான் இருந்த இடத்திற்கும் மூன்று கி.மீ தூரம் மட்டுமே இருந்தது. வீட்டில் அம்மா சிரித்தபடி என்னை எதிர்கொள்ள, தம்பிகளோ செல்லமாய் முதுகில் குத்தி வரவேற்றார்கள். என் செல்ல நாயோ சுற்றி வந்து வாலை ஆட்டியபடி மேலே தாவியது. எனக்கு வெகுதொலைவில் பார்த்த யானைகளின், புலிகளின் காலடித்தடங்கள் ஏனோ நினைவுக்கு வந்தன. 6 பாம்புகளோடு பந்தயம் புனேவிலுள்ள பாம்புகள் பூங்காவின் இயக்குநரான திரு. நீலிம் குமார் கைரேவிற்கு எனது அப்பா பல்வேறு தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் எழுதி, இறுதியில் நான் அந்தப் பூங்காவினைச் சுற்றிப்பார்க்க, பாம்புகள் பற்றிக் கற்கவும் அனுமதி கிடைத்தது. என்னோடு புனே வந்து எனக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் அப்பா சென்னை செல்வதாக திட்டமிட்டிருந்தார். கோவாவிலிருந்து பேருந்தில் கிளம்பி புனே வந்து சேரும்போது அடுத்தநாள் காலையாகியிருந்தது. புனேவில் உள்ள அஜித் மற்றும் வித்யா பட்வர்தன் ஆகியவர்களோடு என் பெற்றோர் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். அப்பா, அம்மா என் சகோதரர்கள் இரண்டு பேரோடு நானும் ஒரு ஆண்டிற்கு முன் இங்கு வந்து விடுமுறையைக் கொண்டாட பாம்புகள் பூங்கா போனபோதுதான் அங்கு கற்க வேண்டிய விஷயங்களைப் புரிந்துகொண்டேன். பின்பு, பேனி மற்றும் அவரது மகள், அவரது அக்காவான லாரா அவரது தோழி ஆகியோர் பள்ளிக்கு வெளியே பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டதும், மாற்றுக்கல்வி குறித்த சிந்தனைகளோடு தொடர்ந்து இயங்கி வருவதும் எனக்கு பெரும் தூண்டுதலாக அமைந்தது. கணேஷ்கிந்த் சாலையிலுள்ள பட்வர்தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு குளித்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் பூங்காவிற்கு கிளம்பினோம். பாம்பு பூங்காவில் அதன் இயக்குநரான திரு. கைரே அப்போது இல்லாத போதும் துணை இயக்குநரான திரு. ராஜன் ஷிர்கேவிற்கு எனது வருகை தெரிவிக்கப்பட்டிருந்தது. உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யவிருப்பதாக அவர் கூறினார். நாளின் முழு நேரத்தையும் பூங்காவிலேயே செலவழித்துவிட்டு இரவு மட்டும் சுஜித் மாமாவின் வீட்டிற்கு சென்று விடுவேன். திரு. கைரே பூங்கா திரும்ப மூன்று நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டதால் அப்பாவிற்கு கிளம்புவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததால், மும்பை கிளம்பிவிட்டார். பிறகு சில நாட்கள் என முன்னும் பின்னும் சுஜித் மாமாவின் வீட்டில் தங்கியிருந்தேன். சுஜித் மாமாவின் வீடிருந்த கணேஷ்கிந்திற்கும், பாம்புகள் பூங்கா இருந்த கட்ராஜ் இடத்திற்கும் இருபது கி.மீ தூரம் நிச்சயம் இருக்கும். என்னுடைய முதல்நாளில் எப்படி சுஜித் மாமா வீட்டிற்குப் போனேன் என்று இன்னும் நினைவிருக்கிறது. அப்பா நான் நிற்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தையும், பயணிக்க வேண்டிய பேருந்து எண்ணையும் முதலிலேயே கூறிவிட்டார். மாலைநேரத்தில் பூங்காவில் வேலை செய்பவர் பேருந்து நிறுத்தம் வரை கொண்டு வந்து விட்டார். பிறகு பேருந்திற்கு காத்திருக்கிறேன்..கா…த்திருக் …கிறேன். எந்தப் பேருந்துமே வரவில்லை. அருகிலிருந்த மற்ற பயணிகளிடம் கேட்டபோது ‘பேருந்து வரும்’, தொடர்ச்சியாக பேருந்து இல்லை, குறைவு என்ற உடனடி பதில்கள்தான் கிடைத்தன. விரைவிலேயே மழை பொழியத் தொடங்கியது. அந்த பேருந்து நிறுத்தம் நிழற்குடையற்று இருந்ததால் எனவே அப்படியே நிற்க வேண்டியதாகி விட்டது. கையிலிருந்த புத்தகங்களையாவது தலைக்கு குடையாய் பிடிக்கலாம் என்று நினைத்த போது பாதிக்கும் மேல் உடல் நனைந்துவிட்டது. சில குழந்தைகள் மழைபற்றி எந்தக் கவலையும் படாமல் , மகிழ்ச்சி பெருக என்னைக் கடந்து சென்றார்கள்; மழையே அவர்களது கவனத்தில் பதியவில்லை என்பது போல. மணி ஏழு ஆகியிருந்தது. மழையின் ஈரம் தலையிலிருந்து கால் வரை ஊடுருவி நடுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. பாம்புப் பூங்காவில் என் முதல் நாளே மழையின் தலை கலைத்த குளிர்ச்சியான இயற்கையின் ஆசிர்வாதத்துடன் தொடங்கியது. சுஜித் மாமாவின் வீட்டை எப்படி அடைவது என்று பொதுத் தொலைபேசியில் அவரை அழைக்க சாலையின் மறுபுறம் சென்றேன். சுஜித் மாமாவை அழைக்கும்போது மின்சாரம் நான் இருந்த பகுதியில் திடீரென அணைந்துபோய்விட்டது. அவர் தன் வீட்டை அடைய இன்னொரு வழியைக் கூறினார். பாதி நனைந்த புத்தகத்தில் அவர் கூறிய இடங்களான டெக்கான் ஜிம்கானா, சிம்ப்லா ஆபீஸ் என்பனவற்றை வேகமாக கிறுக்கலாக எழுதிக்கொண்டேன். பேருந்தில் ஏறி டெக்கான் ஜிம்கானாவில் (பல பேருந்துகளும் உங்களை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவை) இறங்கிப் பின் அங்கிருந்து சிம்ப்லா ஆபீஸிற்கு ரிக்சாவில் சென்றிறங்கி சுஜித்மாமாவின் வீட்டைக் கண்டுபிடித்தேன். என்னுடைய சைக்கிள் மட்டும் என்னுடன் இருந்திருந்தால் நான் பேருந்துகளையும், ரிக்சாக்களையும் நம்பியிருக்க வேண்டியிருக்காது என்று எனக்குள் குரல் எழும்பியது. பூங்காவில் முதலிரண்டு நாட்களும் பல்வேறு குறிப்புகள் எடுப்பதும், வேலை செய்பவர்களைக் கவனிப்பதுமாகவும், பேசுவதுமாக நட்போடு இருந்தேன். இதன் காரணமாக ஒரு சிறிய பாம்பினைக் கையாளும் வாய்ப்பினைப் பெற்றேன். மூன்றாவது நாளன்று திரு. கைரே பூங்காவிற்கு வந்து, நான் தங்குவதற்கான வசதிகளைச் செய்து தர முனைந்தார். பூங்காவில் அதற்கு முன் தங்குவதற்கான எவ்வித வசதிகளும் இல்லை. பல மாணவர்கள் பூங்காவிற்கு வந்து வேலை செய்துவிட்டு திரும்ப மாலையில் தங்களது வீடுகளுக்கு (அ) வசிப்பிடங்களுக்குச் சென்றுவிடும் நிலைமைதான் அங்கிருந்தது. திரு. கைரே பூங்காவின் தொழிலாளர்களிடையே அன்பாகவும் மரியாதையாகவும் ‘அண்ணா’ (பெரிய அண்ணா என்பது மராத்தி அர்த்தம்) என்று அழைக்கப்பட்டார். அவர் எப்போதும் நீளமான முழுக்கைச் சட்டையும், கையுறையும் அணிவது சில ஆண்டுகளுக்கு முன் கட்டுவிரியன் பாம்பு கடித்து இடது கையை இழந்ததிலிருந்து தொடர்கிறது. இன்றும் ஊர்வனவற்றின் குறிப்பாக பாம்புகளின் மீதான அன்பும், அக்கறையும் கடுகளவும் குறையவில்லை என்பேன். பாம்புப் பூங்காவானது பெரியதாகவும், பல்வேறு வகையான பாம்புகள் வாழுகின்றதாகவும், மேலும் ஊர்வனவாகிய விலங்குகளும் நிறைய அங்கிருந்தன. மையமாக இருந்த நிர்வாக அலுவலகக் கட்டிடத்தின் கீழ்த்தளம் சிறிய அலுவலகத்தையும், வரவேற்பு அறையாகவும், பல்வேறு பாம்புகளை வெளிக்காட்டுவதாகவும் குறிப்பாக ராஜ நாகம், மலைப்பாம்பு முதலியவை தெரியுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இதோடு பொருட்கள் வைக்கும் அறையும், கழிவறையும் இருந்தன. முதல் தளத்தில் பெரிய அறையில் இரு படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அறையில்தான் நான் தங்கியிருந்தேன். இரவில் காவலர் துணைக்கு வந்து படுத்துக் கொள்வார். அண்ணா சிறிய தொலைக்காட்சி ஒன்றினையும், தொலைபேசி இணைப்பு ஒன்றினையும் என் அறையில் எனக்காக ஏற்படுத்தி தந்திருந்தார். அதோடு நான் எப்போது வேண்டுமானாலும் அவரது இடத்திற்கு வரலாம், சாப்பிடலாம், தங்கலாம் என்றும் கூறியிருந்தார். பூங்காவில் அண்ணா, ஷிர்கே உள்பட எட்டிலிருந்து பத்து பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் மகேஷ், மிலிந்த், பூஷன், பாபா, கட்டிட பாதுகாவலர் என இவர்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்தேன். பூங்காவில் பகலில் வேலை செய்துவிட்டு இரவில் பள்ளிபடிப்பினைத் தொடரும் பலர் அங்கிருந்தனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பல மாணவர்கள் பூங்காவில் பணியாற்றுவதைப் பார்க்க முடியும். பணியாற்றுபவர்கள் அனைவரும் புனேவில் வீடு கொண்டவர்கள். எனவே இரவு நான் மட்டும் பூங்கா அறையில் தங்குவேன். சில சமயங்களில் அவர்களில் சிலர் என்னோடு தங்குவார்கள். அப்போது எனக்கு அவர்கள் பல கதைகளைக் கூறுவார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்போம். மேலும் நான் தினமும் நாட்குறிப்பினை இரவு உணவுக்குப் பிறகு எழுதுவேன். சிறியதாக கிடைக்கும் நேரத்தில் புத்தகங்களும் படிப்பேன். பூங்காவில் வேலை செய்யும் வேலையாட்களின் வேலையில் உதவி செய்வதன் மூலமாகவே பாம்புகளைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டேன். நட்சத்திர ஆமை, வான்கோழி, கோழி, எலிபாம்பு, பல்லி உள்ளிட்டவற்றின் வாழிடங்களை சுத்தம் செய்வேன். பின் இவற்றிற்கு உணவளிப்பதையும் நாளடைவில் செய்யத் தொடங்கினேன். பாம்புகளுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு முறை உணவு வைப்போம். பெரும்பாலான பாம்புகள் சிறிய எலிகளையும், ஆய்வகத்திலிருந்து வரும் வெள்ளை எலிகள், தவளைகள் இவற்றோடு வெள்ளை மலைப்பாம்பு, கோழியையும் வாரத்திற்கு வாரம் உண்டு செழித்து வளர்ந்து வந்தது. பூங்காவிலுள்ள பாம்புகளை சரியான முறையில் பிடிக்கவும், கையாளவும் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது நாளில், பாம்பு ஒன்றில் கடிபட்டேன். இப்படி கூறுவதிலிருந்தே கடித்தது ஒரு நச்சுத்தன்மையற்ற பாம்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கவனமாக அந்த பாம்பின் தாக்குதலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாம்பு பற்றிய பயம் கொடுக்கும் பாட்டியின் உணவு வேளைக் கதைகளிலிருந்து வெளிவரமுடியும் என்பதை உணர்ந்தேன். நான் பாம்புகளை அந்த நிலையிலும் நேசித்தேன். அண்ணா ‘’ பாம்பு கடித்து உடலில் பரவும் நஞ்சின் வீரியத்தை விட, அது பற்றிய ஆழ்மன பயத்திற்கு அதிக சக்தி உண்டு ‘’ என்று கூறினார். பாம்பின் கடிவாய் பெரிதாக வலிக்க வில்லை என்றாலும் அதற்களிக்கப்பட்ட சிகிச்சை மற்ற காயங்களையும் குணமாக்கும் என்று பணியாளர்கள் கூறினார்கள். பூங்காவில் நான் தங்கத் தொடங்கிய பின் பல சமயங்களில் பல நஞ்சற்ற பாம்புகளில் கடிபட்டிருக்கிறேன். குறிப்பாக, தங்க ஆரம்பித்த மூன்று வாரங்களில் பதினைந்து (அ) இருபது கடிகளை முழங்கையில் வாங்கியிருப்பேன். சில பாம்புகளின் கடிகளால் கடுமையான வலியும், கைகளில் ஏற்படும் வீக்கத்தினாலும் கடிகாரத்தைக் கூட கட்ட முடியாது போன நிலையும் ஏற்பட்டது. பாம்பினால் கடிபட்டவரை விட, கடித்த பாம்பிற்கு அதிக பிரச்சனை உண்டு என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். கடிக்கும் போது பாம்பு தன் பற்களில் சிறு பகுதியை இழந்துவிடும். எனவே இது பற்றி வருத்தப்பட பெரிதாக ஏதுமில்லை. பாதிப்புகளைக் குறைக்க நச்சுமுறிவு மருந்தைப் பயன்படுத்தலாம். பாம்பின் நஞ்சு மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை விட பாம்பு பற்றிய அச்சத்தினால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். பூங்காவில் பாம்புகளைத் தாண்டி இன்னும் பல விலங்குகள் இருந்தன. அவைகளில் சில வாழ்விடங்களில் பிடிக்கப்பட்டவை மற்றவை காயம் பட்டு பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டவையாகும். நான் தங்கியிருந்த காலத்தில் காட்டுப்பன்றி, புனுகுப்பூனை, சிறுத்தை, ஷிக்ராபறவை, குள்ளநரி, கீரிகள், ஆந்தைகள், கழுகுகள் பலவும் காயம்பட்டும், இறக்கைகள் உடைந்தும் பூங்காவில் சிகிச்சை பெற்று வந்தன. ஆந்தைகள் மற்றும் கழுகுகளின் கூண்டுகள் மேல் பக்கம் திறந்த அமைப்புடன், பறக்கும் வலிமை பெற்றவுடன், அவை பறந்து போக வழி செய்து அமைக்கப்பட்டன. மேலும் பலவகையான புதுமையான கோழிகள், சீமைப்பன்றிகள், வெள்ளை எலிகள், முயல்கள், குரங்குகள், ஜோடியான வான்கோழிகள், கடல் ஆமைகள், நட்சத்திர ஆமைகள், மெலனாக் ஆமைகள் என பெரும் வரிசையாய் இருக்கும் இவற்றிற்கு உணவு அளிப்பது, கூண்டுகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலும் நான் பங்கு பெற்றேன். புனே நகரிலுள்ளவர்கள் எங்காவது பாம்பினை பார்த்தார்கள் என்று கூறினால், பூங்காவிலுள்ள பணியாளர்கள் தகவல் கூறியவர்களோடு கிளம்பி, பாம்பினைக் கண்டறிந்து பூங்காவிற்கு மீட்டு எடுத்து வருவது இயல்பாக நடந்து வந்த நிகழ்ச்சியாகும். இதன் மூலம் பாம்புகள் மக்களால் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதே பூங்காவின் நோக்கம். இரண்டு முறை இது போன்ற அழைப்புகள் வந்த போது, சென்றுவிட்டு வெறும் கையோடு திரும்பி வந்திருக்கிறேன். பாம்பு இருக்கின்ற இடத்திற்கும், பூங்காவிற்கும் அதிக தூரமாக இருக்கும் சமயங்களில், பாம்புகள் அதே இடத்திலேயே நாம் அவ்விடத்தை அடையும் வரையா காத்திருக்கும்? பூங்காவிற்கு தினமும் வரும் பல பார்வையாளர்கள் விலங்குகளைப் பார்வையிடுவதோடு அது பற்றிய கேள்விகளையும் கேட்பார்கள். எனக்கு இந்த பாம்பின் பெயரென்ன?, இது என்ன சாப்பிடும்?, இது ஆணா? பெண்ணா? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சில பார்வையாளர்கள் ஒரு விலங்கினைக் குறித்த ஆழமான, சிக்கலான கேள்விகள் என்னை சிரமப்படுத்திய போதும், பாம்புகளோடு பழகிய அனுபவங்கள் எனக்கு கைகொடுத்தன. சில இரவுகளில் பாம்புகளுக்கு உணவாகப் போட தவளைகளைப் பிடிக்கப் போவோம். இரவு உணவு முடிந்ததும், ஸ்கூட்டரில் பத்து கி.மீ தூரத்திலிருக்கும் ஆற்றுக்குச் செல்வோம். தவளைகளைப் பிடிக்கும் முறை மிகச் சுலபமானது. ஆற்றின் ஈரப்படுகையில் கை விளக்கை அடித்துக் கொண்டே வர வேண்டும். தவளைகளின் பார்வைத்திறனை வெளிச்சம் குறைக்கின்ற சில நொடிகளில் வேகமாக தவளைகளைப் பிடிக்கவேண்டும். இதில் முக்கியமான விஷயம் பிடிக்கின்ற தவளைகள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதுதான் அது. இறந்த தவளைகளை பாம்புகள் உண்பதில்லை. தவளைகளை அதன் ஈரமான உடல் வழுக்குவதாக இருப்பதால், ஒரு முறை பிடித்தால் அதனைத் தப்பிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு (அ) மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, இருபத்தைந்து (அ) முப்பது தவளைகளைக் கோணிச்சாக்கில் போட்டுக் கொண்டு பூங்காவிற்குத் திரும்புவோம். பூங்காவிலுள்ள தொழிலாளர்களுக்கான உணவாக சமைக்கப்பட்ட உணவுகள் என் உடல்நலத்தைப் பெரிதும் குலைத்தன. ஷாம்பில் எனும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் உணவில் எண்ணெய் அலையடித்துக் கொண்டு இருந்தது. ஷாம்பில் புகழ்பெற்ற உணவாக அங்கு கருதப்பட்டது. ரொட்டியோடு பரிமாறப்படும் இது நல்ல சிவப்பாகவும், காரசாரமாகவும் இருந்தது. சில நாட்கள் இந்த ருசியான உணவை மகிழ்ச்சியாக சாப்பிட்டேன். பிறகுதான் என் வயிற்றில் மூன்றாம் உலகப்போர் வெடித்தது. ஏழுமுறை கழிவறைக்கு சென்று வந்தபோது கழிவறையும், என் குடலும் சுத்தமாக இருந்தது. அதோடு ஷாம்பிலை மறந்துவிட்டேன். பிறகு பருப்பும், சப்பாத்தியும், சிறிது பாலாடைக்கட்டியும் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தேன். பூங்காவில் குளியலறை கடுமையாக அழுக்கு படிந்து கிடந்ததால் குளிப்பதையே பல நாட்களாகத் தவிர்த்து வந்தேன். நீளமான என் தலைமுடியை நீரில் நனைத்துக் கொண்டு குளித்துவிட்டதாக பாவனை செய்து கொண்டிருந்தேன். இதைக் கண்டுபிடித்துவிட்ட பூங்கா பணியாளர்கள் என்னை எப்படியாவது குளிக்க வைத்துவிட திட்டமிட்டார்கள். ஒருநாள் அவர்கள் என்னைப் பிடித்து என் உடைகளை அகற்றி, குளியலறைக்கு நகர்த்திச் சென்றார்கள். பின் துணி துவைக்கும் சோப்பையும், கழிவறையைச் சுத்தம் செய்யும் திரவத்தையும் ஒன்று சேர்த்து, கழிவறை துடைப்பம் கொண்டு என்னை தேய்த்துக் குளிப்பாட்டினார்கள். இது போன்ற வேடிக்கையான பல நிகழ்வுகள் அனைத்தும் என் நினைவிலுள்ளன. இருட்டு மற்றும் அதற்கே உண்டான ஒலிகள் என இவற்றுக்கு பெரிதும் பயப்படுவேன். என் பயத்தை அறிந்து கொண்ட எனது நண்பர்கள் என் காதில் கேட்கவேண்டும் என்றே பேய்க்கதைகளை அமானுஷ்ய வடிவத்தில் கூறி பயமேற்படுத்துவார்கள். இறுதியிலே உண்மையிலேயே பேயைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மூன்று நண்பர்களோடு, காவலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை இரவில் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது பூஷன் தொலைபேசி அழைப்பிற்காக வெளியே சென்றான். சிறிது நேரத்திலேயே விளக்குகள் அணைந்து, பூனை கத்தும் ஒலி கேட்டது. பாபா மற்றும் காவலர் இதனை பெரியதாக கவனத்தில் கொள்ளவில்லை. போபியாவும் நானும் இதைக் கண்டு திகிலடைந்துவிட்டோம். விளக்கு அருகே இருந்த ஜன்னலும், இடைவிடாமல் தட்டப்பட்டது. பின் மராத்தி மொழியில் ‘ஜன்னலை மூடு’ என்றொரு குரல் கேட்டது. அடுத்தடுத்து பயமேற்படுத்தும் விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்தன. மண்டையோடும், எலும்பும் ஜன்னலுக்கு வெளியே ஆட, நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது, அங்கு எதுவும் இல்லை. பின் அறைக்கு திரும்பிய போது, அங்கு என்னுடைய படுக்கை, துணிகள் என அனைத்தும் கலைந்து அறை முழுக்கவே குழப்பமான நிலையில் குலைந்து கிடந்தன. கதவும், ஜன்னலும் தடதடவென ஆடுகிறதையும், ஜன்னலின் சப்தமும் திகிலெழுப்ப காவலரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். பேய், பிசாசு வரும்போது சிலுவைக்குறியினைக் காட்டினால் அது மறைந்துவிடும் என்று யாரோ சொன்னதைக் கூட செய்து பார்த்தேன். ஆனால் அந்தப் பேய்க்கு அது பற்றி பெரிய நம்பிக்கை இல்லை போலும். அப்போது திடீரென தொலைபேசி அழைப்பு பூஷனிடமிருந்து வர, அவன் வந்து கொண்டிருப்பதாகக் கூறிய பின்பு பேய் மறைந்துவிட்டதன் மர்மம் விளங்கியது. அதன்பின் அந்தப் பேய் பற்றி யாரும் கேள்விப்படவே இல்லை. அடுத்த நாள் அண்ணா மற்றும் பணியாளர்களிடம் இரவு வந்த விருந்தாளி பற்றிக்கூற அவர்கள் சிரிசிரியென சிரித்து ஓய்ந்தார்கள். பூங்காவில் எனது பணியின் கடைசி நாளில் நாகபாம்பைக் கையாள அனுமதி கிடைத்தது. நாகபாம்பை அதன் கழுத்தைப்பிடித்து, கீழே வால் பிடித்து உயரத்தூக்கி பின் பெட்டியில் வைத்து என இதனை இரண்டு மூன்று முறை செய்து பார்த்தேன். எனக்கு இங்கு கிடைத்த அனுபவங்களால் பெரும் மகிழ்ச்சி மனதில் நிறைந்து இருந்தது. என் கடைசி நாளுக்கு மிகச்சிறந்த, சரியான இறுதிக் காட்சியாக நிகழ்ச்சி அமைந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை எழுதும்போது, என் சிறுவயது அனுபவங்களையும் நினைவுகூறுகிறேன். அம்மா கூறிய நிகழ்ச்சிகளின் போது நான் பிறந்து சில மாதங்களே ஆகியிருக்கக் கூடும். வல்பொய்யில் உள்ள வீட்டில் மாலைவேளையில் தொட்டிலில் உறங்கிப் போயிருந்தேன். அம்மாவிற்கு தொலைவில் ஏதோ விழுவது போன்ற சத்தம் கேட்க, இயல்பாக மேலே கூரையை நிமிர்ந்து பார்க்க, நீளமான நீலமும், பச்சையுமான நிறம் கொண்ட பாம்பு ஒன்று நான் படுத்திருந்த கட்டிலின் அருகில் மேலிருந்து கீழாக இறங்கிக்கொண்டிருக்க, அதைக்கண்ட அம்மா கடும் திகிலில் ஆழ்ந்துவிட்டார். விவசாய நிலங்களின், நீர்நிலைகளின் அருகில் பாம்புகள் காணப்படுவது சாதாரண விஷயம்தான். பயத்தில் கூச்சல் எழுப்பினால் நான் விழித்துவிடுவேன் என்பதால் அம்மா, கவனமாக பாம்பினைப் பார்த்தபடியே நின்றிருக்கிறார். பாம்பு வேகமாக ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் பாய்ச்சலாக ஓடிவிட்டது என்பதை நன்றாக உறுதி செய்துகொண்டபின், என்னை சுற்றிலுமிருந்த கொசுவலையை நீக்கி, தொட்டுப் பார்த்தார். உண்மையில் பச்சைப்பாம்பு பலமற்ற எந்த வித துன்பமும் நமக்கிழைக்காத பாம்பு என்பதை நான் பின்னாளில் அறிந்துகொண்டேன். இன்னொரு நிகழ்ச்சி நான் மெல்ல நடந்து பழகும் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது. நான் பழைய பெட்டிகளோடு, காகித அட்டைகளை வைத்துக்கொண்டு நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பெட்டிகளிலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது. என் பெற்றோர் அதனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, நான் அதனைப்பிடிக்க தவழ்ந்து சென்றேன் என்று கூறினார்கள். பாம்புகளின் மீதான பயம் விட்டுப்போய், அதனை நட்பாக்கிக் கொள்ள சிறுவயதிலேயே முயன்றிருக்கிறேன் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நாய்களைக் கண்டு, அவற்றின் கூரான பற்களைக் கண்டு எனக்கு பெரும் பயம் வயிற்றில் இன்றும் பந்தாய் உருள்கிறது. ஆனால் பாம்புகள் அப்படியல்ல என்று சொல்லி, பயத்தை தெளிவிக்க எனது நண்பர்களைத் தேடினால் அவர்கள் தட்டுப்பட்டால்தானே?                               களப்பணிக்குறிப்புகள் பாம்புகள்   உலகெங்கும் 2500 இனத்தைச் சேர்ந்த பல்வேறு வகைப்பட்ட பாம்புகள் உள்ளன. இவற்றில் பதினைந்து விழுக்காடு பாம்புகள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை. ஆஸ்திரேலியாவில் உள்ள தொண்ணூறு விழுக்காடு பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இருநூற்று முப்பத்தெட்டு பாம்புகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இவற்றில் எழுபத்திரெண்டு மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை. ஆனால் இதிலும் சில பாம்புகள் மட்டுமே உயிருக்கு தீங்கு செய்யக்கூடியனவாக உள்ளன. நான்கு வகை பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும் கிரைட் எனும் பாம்பின் நச்சுத்தன்மை நாகபாம்பின் நச்சினைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் ஆகும். கடலிலுள்ள அனைத்து பாம்புகளுமே நச்சுத்தன்மை கொண்டவையே. இவற்றின் நச்சுத்தன்மை நாகபாம்பின் நச்சுத்தன்மையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். கடல் பாம்புகள் அவை தீவிரமாக கோபமுற்றால் மட்டுமே தாக்கும்; மற்ற சமயங்களில் யாரையும் கடித்ததாக, தாக்கியதாக கூறவே முடியாது. பாம்புகள் குளிர்ந்த ரத்தம் கொண்டவை. அவற்றின் பார்வைத்திறன் சக்தி மிகவும் குறைவு. மேலும் இமையும் இல்லாதவை. பாம்புகளுக்கு காதுகளும் கிடையாது. அதிர்வுகளை உணருவதன் மூலம் இயங்குகிறது. ருசி, வாசனை, உணர்வு என அனைத்துமே பிளவுபட்ட இரு நாக்குகளால்தான் நடைபெறுகிறது. இந்த உணர்வின் மூலமே இரை உயிர்ப்பானதா (அ) இறந்ததா என்று கண்டறிந்து சூழல்களை உணர்ந்து வாழ முயல்கிறது. இரையா, எதிரியா எனக்கண்டறியும் துல்லியமான நுட்பங்கள் கொண்ட நாக்கினைப் பெற்றுள்ளது. சில பாம்புகள் நச்சினை தம் இரையின் மீது செலுத்தி கொல்லுகின்றன. நச்சு செரிக்கக்கூடிய நொதிகளை கொண்டுள்ளதால் அவை இரையாகும் உயிரியின் உட்புறம் சென்று செயல்பட்டு அவற்றை உயிரிழக்கச் செய்யும். பாம்புகள் வேகமாக வளர்ந்து குறிப்பிட்ட வயதடைதலை நிகழ்த்திய பின், வளர்ச்சி வேகம் குறைந்து அது அதன் இறப்பு வரை அப்படியே தொடரும். தன் மேல் தோலை உதிர்த்தல் என்பது வளர்ச்சியினால் நிகழும் ஒன்றே. தன் மூக்கு பகுதியிலிருந்து பழைய தோலை பாம்பு அகற்றுகிறது. இந்நிகழ்வின் போது பாம்பு உணவை உட்கொள்ளாமல் சக்தியும், சுறுசுறுப்பும் கூடிய நிலையில் இருக்கும். பாம்பின் பற்கள் உடலில் பதிந்து, அதன் வழியே நஞ்சானது நரம்பு மண்டலத்தை (அ) ரத்த அணுக்களை முடக்கி மனிதனை உயிரிழக்கச் செய்கிறது. நச்சு முறிவு மருந்து மட்டுமே இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். உயிரிழக்கச் செய்யும் பாம்பின் நஞ்சினை பத்தில் ஒரு பங்கு அளவு குதிரையின் உடலில் செலுத்தி, பின் நஞ்சின் அளவினை மெல்ல அதிகரிக்க வேண்டும். குதிரையின் உடல் நச்சிற்கு எதிராக சுரக்கும் தற்காப்பு வேதிப்பொருளை அதன் ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து நச்சுமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டது என்றால் உடனே பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்யவேண்டும். பயத்தை தள்ளி வைத்துவிட்டு கடிபட்டவரை அவரின் உடல் வெப்பநிலை குறையாது கவனித்துக் கொள்ள வேண்டும். காயத்தடத்தினை சோதித்து அது நச்சுப்பாம்பா (அ) நச்சற்ற பாம்பா எனக் கண்டறியலாம். இரு பற்கள் ஆழமாக பதிந்திருந்தால் அது நச்சுடையது. நிறைய பற்கள் பதிந்திருந்தால் அது நச்சற்றது ஆகும். கடித்த பாம்பு நச்சுடையது என்றால் கடிபட்டவர் எங்கும் நகராதபடி செய்து. மதுபானம், தேநீர், காஃபி என மற்ற எந்த எழுச்சியூட்டக்கூடிய பானங்களையும், வலி நிவாரணிகள் உட்பட எதையும் தரக்கூடாது. காயத்தினை கழுவுவது, கடிவாயைக் கிழித்து ரத்தம் உறிஞ்சித் துப்புவது என்பன ரத்த இழப்பிற்கும், தொற்றுநோய்களுக்குமான திறப்பாகவே அமையும். கடிவாயிற்கு மேல் ஒரு விரல் நீளத்திற்குமேல் இறுக்கமான கட்டினை துணிகொண்டு கட்டவேண்டும். நச்சுமுறிவு தரும்போது கட்டினை அவிழ்த்து விட வேண்டும். ஆறு மணி நேரத்திற்குள் மாற்று மருந்து கொடுக்கப்படவில்லையென்றால் கட்டினாலும் பயனில்லை. எவ்வளவு விரைவில் மருத்துவமனையை அடைகிறோமோ, அது கடிபட்டவருக்கு நன்மையாக அமையும். பாம்புகளால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக, எலிவளைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காட்டிற்குள் நடக்கும்போதும் நல்ல காலணிகளை அணியலாம். ஜன்னல், தாழ்வாரம் என்று படரும் கொடிவகைகளை வெட்டிவிடலாம். இரவு வெளியே செல்லும்போது கை விளக்குகளை எடுத்துச் செல்வதன் மூலம் ஆபத்தினை தவிர்க்க முடியும். 7 விடுமுறைக்கொண்டாட்டம் புனேவிலுள்ள பாம்புப் பூங்காவில் மூன்று வாரங்கள் நான் தங்கியிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள், அனுபவங்கள், என நான் வாழ்ந்த நாட்கள் இன்றும் நான் நினைத்து மகிழக் கூடியனவாக உள்ளன. அந்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் உருவானது. வேண்டா வெறுப்பாக கிளம்பத் தயாரான நேரத்தில், என்னுடைய குடும்பம் தீபாவளி விடுமுறைக்காக ராஜஸ்தான் செல்வதாகவும், மும்பை வந்து பின் ராஜஸ்தானுக்காக ரயில் ஏறுவதாகவும், நான் கோவாவிலிருந்து மும்பையிலுள்ள கிர்காம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்தால் சந்திக்கலாம் என்றும் அவர்கள் கூறியது எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே கிடைத்த நாட்களை பூங்காவில் ஏதாவது அனுபவங்களைப் பெற பயன்படுத்த முடியும் அல்லவா? மும்பையில் என்ன அனுபவம் கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது. சுஜித் மாமா நான் மும்பை செல்வதற்கான பயணச்சீட்டினை வாங்கித் தந்து, பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டார். கிர்காம் வருவது எப்படி என்பதற்கான விரிவான விளக்கங்கள், விவரணைகளை அப்பா முன்னமே கூறி விட்டிருந்ததோடு, ஏற வேண்டிய பேருந்து ஒன்றினை தாதரில் தவறவிட்டபோது என்ன செய்ய வேண்டுமென்று பதட்டத்திலும் பல்வேறு யோசனைகளை அம்மா கூறினார். பின்னர் என்னுடைய மாமாவும், அத்தையும் என்னைக் குறித்த கவலைகளை வெளிப்படுத்துவதால் மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும் செயல்களைத் திட்டமிடத் தொடங்கினேன். புனேவில் பேருந்தில் காலை பத்து மணிக்கு ஏறி மும்பையில் மாலை இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தேன். பிறகு ஒரு வாடகை வண்டியைப் பிடித்து ஓட்டுநரிடம் முகவரியைக் கூறிவிட்டு, பயணத்தில் வெளியே தெரிந்த பழக்கமில்லாத தெருக்களை, இடங்களைப் பார்க்கத் தொடங்கினேன். ஓட்டுநர் என்னை இறக்கி விட்ட இடத்தை அடையாளம் தெரிந்து கொள்ள முயற்சித்தேன். அருகிலுள்ளவர்கள், கடைக்காரர்கள் என்று விசாரித்து அலைந்து திரிந்ததில் இருபது நிமிடங்களை செலவழித்தேன். நானே முகவரியை கண்டுபிடித்து கதவைப் பார்த்தேன். ஒரு வழியாக 47/c என்று எழுதியிருந்த அப்பா வழி தாத்தாவின் வீட்டைக் கண்டுபிடித்தேன். என் மாமா, அத்தை, அவர்களுடைய மகன்களான லுகானோ, ரிக்கார்டோ ஆகியோர் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, என் பெற்றோர்கள் நான் பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டேனா என்று கலவரத்தோடு விசாரிக்க தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போதே நான் என் மாமன் பையன்களோடு தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பதில் மூழ்கிவிட்டிருந்தேன். அடுத்த சில வாரங்கள் என்னுடைய ஓராண்டு காலத்தில் வராத விடுமுறைக் காலமாய் என் குடும்பத்தோடு பாம்புகள், தவளைகள், மீன்கள் என அவற்றை மறந்துவிட்டு செலவழிக்க வேண்டியிருந்தது. விடுமுறையில் அகமதாபாத்தில் உள்ள கோரா சூ மாதென் வீட்டில் சிறிது காலம் தங்குவது என்று முடிவானது. கோரா மற்றும் அவரது மகள் நிதி ஆகியோரை சிலமாதங்களுக்கு முன் வயநாட்டில் இயற்கை வேளாண்மையாளர்களின் கூட்டத்தில் சந்தித்து இருந்தேன். அகமதாபாத்தில் பாம்புகள் பூங்கா ஒன்று இருப்பதை அறிந்து, அவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற பேரார்வம் என்னை இயக்கியது. பூங்காவில் பலவகையான பாம்புகள் (மலைப்பாம்பு, நாகபாம்பு), பல்லிகள், வாத்துக்கள், ஆமைகள், குரங்குகள் மேலும் பல்வேறு சிறு விலங்குகள் பல்வேறு வித கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த மீன்கள் பண்ணை மிக மோசமான பராமரிப்பிலிருந்தது. பூங்காவின் ஒட்டுமொத்த அமைப்பும் பணத்தினால் இயங்குகிறதா (அ) அன்புடனும், அக்கறையுடனும் கூடிய ஆர்வத்தினாலுமா என்று எனக்கு புரியவில்லை. எட்டு நாட்களைச் செலவிட அகமதாபாத்திலிருந்து ரயில் ஏறி ஜெய்ப்பூர் சென்று ஸ்ரீலதா மற்றும் மகேந்திர சௌத்ரி ஆகியோரின் வீடுகளுக்குச் சென்றோம். ஜெய்ப்பூரிலுள்ள ஒரு கோட்டை ஒன்றுக்குச் சென்று இரு நாட்கள் தங்கினோம். கோட்டை ஒன்றிற்குள் நுழைவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. அதிலுள்ள அறைகள் சில பெரியனவாயும், சில சிறியதாகவும், சில பாதைகள் அகலம் குறைந்தும் தலையைக் குனிந்து செல்வதாயும் இருந்தன. கோட்டையைப் பார்க்கும் தருணத்தில் தற்செயலாக சூரிய கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரகணம் விரைவிலேயே முடிந்து விட்டதில் எனக்கு வருத்தம்தான். என் நண்பர்கள் தொலைக்காட்சியில் சூரிய கிரகணம் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். தினமும் ஜெய்ப்பூரில் கோட்டைகள், மாளிகைகள், கடைத்தெருக்கள் என்று சுற்றிவிட்டு, ருசியான குல்பி ஐஸ் சுவைப்பது, லஸ்சியை மண்குவளையில் குடிப்பது, எச்சிலூறவைக்கும் சுட்ட கோழிக்கறியைத் தின்பது என சுற்றிக் கொண்டிருந்தோம். பிறகு நாங்கள் குழுவாகச் சென்று உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஏரியில், பல்வேறு மாளிகைகள், அரண்மனைகளைப் பார்த்துவிட்டு, ஸ்ரீலதா மகேந்திராவின் இரண்டாவது வீடு இருந்த கந்தாலி வீட்டின் பின்புறம் இருந்த ஆற்றில் குளித்துவிட்டு, கிராமத்து சிறுவர்களோடு சேர்ந்து மீன் பிடித்தோம். விடுமுறை முடிந்ததும், நான் இரு சகோதரர்கள், அம்மா என அனைவரும் மூன்று மணி நேர பயணத்தில் ரட்லம் பேருந்து நிலையம் வந்தவுடன், அங்கிருந்து மும்பைக்கு கிளம்பினோம். அப்பா நேராக டெல்லி சென்றுவிட்டார். நாங்கள் வீட்டிற்கு வருவதாக அம்மாவழி தாத்தாவிற்கு தெரிவித்தோம். மாஹிம் பகுதியில் வகித்து வரும் எண்பத்தாறு வயதான மிகவும் சுறுசுறுப்பான மனிதரான அவர் எங்களை வரவேற்றார். அவருக்கு பிறந்தநாள் என்பதால் எங்களனைவரையும் சீன உணவகம் ஒன்றிற்கு அழைத்து விருந்தளிக்க விரும்பினார். நாங்கள் ஆடைகள் அணிந்து தயாராக நிற்கும்போது அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அம்மா சீன உணவகத்திற்கு எப்படிச் செல்வது என்று தாத்தாவிடம் கேட்க, அதற்கு அவர், ‘’ நீயும், பையன்களும் வண்டி பிடித்து வாருங்கள். நான் நடந்து வருகிறேன் ’’ என்று கூறி நடக்கத் தொடங்கிவிட்டார். நான் ஆச்சர்யப்பட்டு நின்றுவிட்டேன். பின்பு அனைவருமே உணவகத்திற்கு நடந்து செல்வதென்று முடிவு செய்து, நடக்கத் தொடங்கினோம். தாத்தா எங்கள் அனைவருக்கும் முன் துடிப்பாக நடந்தார். அன்று அற்புதமான உணவு வகைகளை சுவைத்தேன். அம்மா மற்றும் இரு சகோதரர் சமீர், மிலிந்த் என அனைவரும் கோவாவிற்கு கிளம்பத் தயாரானார்கள். நான் மும்பையில் தாத்தாவின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்க நினைத்தேன். அடுத்த இரண்டரை மாதங்கள் சென்னையில் சிலந்திகள், மண்புழுக்கள் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த முதலைகளோடும், பாம்புகளோடும் செலவிடத் தீர்மானித்திருந்தேன். 8 உழவர்களின் தோழனோடு நவம்பர் மாதம் ஆறாம் தேதி நான் சென்னை விரைவு வண்டியில் தாதர் ரயில்நிலையத்திலிருந்து இரவு ஏழு மணிக்கு ஏறினேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தான் பணிபுரிந்த ரயில்வே துறை அனுபவங்களின் வாயிலாக செய்தவர் ஆலன் மாமா ஆவார். தாதர் ரயில்நிலையம் மக்கள் நெருக்கடி மிகுந்ததாகவும், பரபரப்பு அதிகரித்தாகவும் இருக்கும் என்பதால் அம்மா என்னை ஆலன் மாமாவிடம் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டினார். எனக்கும் இவ்வளவு மக்கள் திரளில் எப்படி இருக்கை பிடித்து பயணிப்பது என்று நம்பிக்கையின்மை உருவாகியிருந்தது. முன்னதாக என் தாத்தா ரயில்நிலையம் வரையில் என்னைக் கொண்டு வந்து விட வண்டி ஒன்றைத் தயார் செய்து, பயணச்சீட்டு, தேவையான பணம், சாப்பிடுவதற்கான தீனிகள், தண்ணீர் என அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை சோதித்துக்கொள் என்று கூறி உதவினார். ரயில் பயணத்தில் ஒரு இரவும், அடுத்த நாள் பகல் முழுவதும் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தபோது ஏழாம்தேதி இரவு மணி எட்டு முப்பது ஆகியிருந்தது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரயிலில் பயணித்து வந்ததில், சென்னைக்கான பயணம் எனக்கு சிறிது பழகிய ஆசுவாசமான பயணமாக இருந்தது. என் பொருட்கள் குறித்து தொடர்ந்து கவனமாகவும், விழிப்பாகவும் இருந்தேன். மும்பையிலிருந்து தொடங்கிய பயணம் முழுக்க வேறுபட்ட அனுபவமாக இருந்தது. ஜன்னல் அருகே கிடைத்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, இரவில் தாழ்ந்த படுக்கையில் உறங்கினேன். என்னைச் சுற்றிலும் இருந்தவர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், இடம் பெயர்ந்து செல்பவர்களாகவும் தோன்றினார்கள். இந்தி (அ) ஆங்கிலம் பேசியபடி தனக்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு மட்டுமல்லாது பயணம் முழுவதுமே நான் யாரிடமும் எதுவும் பேசாமல் ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளைப் பார்த்தபடியே பயணித்தேன். அதுவும் சலிப்பேற்படுத்தும் போது தூங்கினேன். ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் மக்கள் கூட்டம் முண்டியடித்தபடி, குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளே இடித்தபடி ஏறினார்கள். என்னிடமிருந்த ஐந்நூறு ரூபாய் பணத்தை என் ஜீன்ஸ் பேன்டில் பல்வேறு பைகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தேன். மிச்சமுள்ளவற்றை என் உணவுப்பையினுள் வைத்திருந்தேன். தலையணைக்கு அடியில் அந்தப்பையினை வைத்துக்கொண்டு உறங்கினேன். அதோடு நான் கொண்டுவந்திருந்த தண்ணீர் புட்டி, தின்பண்டங்கள், சில பழங்கள் ஆகியவற்றை பயணத்தில் பசித்தபோது சாப்பிட்டேன். ரயிலானது மூன்று மணிநேரம் தாமதமாக இரவு மணி பதினொன்று முப்பதிற்கு வந்து சேர்ந்தது. சென்னை ரயில்நிலையத்தில் என் பெற்றோர்களின் நீண்ட நாள் நண்பரான கே.மனோகரன் மாமா என்னை வரவேற்று அழைத்து போக வந்திருந்தார். மனோ மாமா மற்றும் சாகு அத்தையின் வீட்டில்தான் சென்னையில் இருக்கும்வரை தங்க இருந்தேன். ரயில் நிலையத்தில் மனோ மாமாவை என்னால் அடையாளம் கண்டறிய முடியவில்லை. காரணம் முன்பு பார்த்ததைவிட அவர் தலைமுடி நன்றாக வெளுத்துப் போயிருந்தது. நான் வைத்திருந்த மஞ்சள் நிறப்பை கொண்டோ என்னமோ என்னை அடையாளம் அறிந்து கொண்டுவிட்டார். வீட்டிற்கு ரிக்சாவில் போய் சேர்ந்ததும், சிறிது உணவு உட்கொண்டுவிட்டு உடனே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். அடுத்த நாள் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, பல்வேறு புகைப்படத் தொகுப்புகளை எடுத்துப் பார்த்தேன். பின் பொதுவாக சில விஷயங்களை, ஓராண்டு காலம் பற்றியும் சென்னையில் எனது வேலைகளைக் குறித்தும் மனோ குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டேன். அடுத்த நாள் காலையில் மனோ மாமாவும், நானும் நியூ காலேஜ் சென்று மருத்துவர் சுல்தான் இஸ்மாயிலின் மண்புழு மையம் எங்கே அமைந்திருக்கிறது என்று கேட்டு அறிந்து கொண்டபின், அடுத்த இருவாரங்களும் மண்புழுக்கள் மற்றும் மண்புழு உரம் பற்றியும் பல புத்தகங்கள் படித்தேன். என்முன் இருவாய்ப்புகள் இருந்தன. புனேவிலுள்ள மருத்துவர். பாவால்கரின் மையத்தில் கற்கும் வாய்ப்பு (அ) மருத்துவர். இஸ்மாயிலின் மையத்தில் சென்னையில் கற்கும் வாய்ப்பு என்பதில் நான் சென்னையையே தேர்ந்தெடுத்தேன். மரு. இஸ்மாயில் இயற்கை வேளாண் விவசாயிகளின் கூட்டத்தில் பேசிய விஷயங்கள் பரவலான பாராட்டு பெற்றது. அவை என்னையும் கவர்ந்திருந்தது. மாமல்லபுரத்தில் உள்ள முதலைப்பண்ணைக்கும் சென்னையிலிருந்து செல்ல எளிதாக இருக்கும். மரு.பாவால்கரின் மையம் உள்ள புனேவில் இருந்து, முதலைப்பண்ணை வருவது என்பது சிரமம் கூடிய ஒன்று. மனோ மாமா இதய நோயாளி என்பதால், சாதாரணமாக பேருந்தில் பயணிப்பதில்லை என்னை பேருந்தில் ஏற்றிவிடுவதற்கு முன்பாகவே நியூ காலேஜ் செல்வதற்கான வழியையும், போகும் வழியில் உள்ள பல்வேறு இடங்கள், அடையாளங்களையும் கூறிவிட்டு, நகரத்தில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக கூறினார். எனக்கு தமிழ் தெரியாததால், மொழிதான் முக்கியமான சிக்கலாக இருந்தது. கல்லூரியில் மரு. இஸ்மாயில் கல்லூரி வளாகத்தினுள் மண்புழுவுக்கான குழிகள், இயற்கை வாயுத் தோட்டம், குப்பைகள் சேகரிக்கும் குழிகள், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட பின்னற் கூடைகள், தாவர உரங்கள் என பயன்படுத்த தயாராக இருந்தன. அவரை அனைவரும் ‘ஐயா’ என்றழைத்தனர். நான் அடுத்த நாளிலிருந்து வேலை தொடங்கலாம் என்று தீர்மானித்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் அடுத்த பதினைந்து நாட்களும் ஒரே விதமான பழக்கங்களை தொடர்ந்து செய்து வர முடிவெடுத்தேன். காலை ஆறுமணிக்கு எழுந்திருப்பது, இட்லி,தோசை, சாம்பார், வடை என்று சமைக்கப்படுவதை காலை உணவாக சாப்பிட்டுவிட்டு, பின் மதிய உணவை ஒரு பாத்திரத்தில் அடைத்துக் கொண்டு ஏழு மணிக்கு செல்லும் பேருந்தை அசோக் பில்லரில் பிடித்து பனகல் பார்க் சென்று அங்கிருந்து நியூ காலேஜூக்கு மணி எட்டு முப்பதிற்கு சென்றுவிடுவேன். பிறகு மாலையில் வேலைகளை முடித்துக்கொண்டு மாலை மணி மூன்று முப்பது (அ) நான்கு மணிக்கு பேருந்தில் ஏறி பயணிக்கத் தொடங்கிவிடுவேன். இல்லையென்றால் அலுவலக கூட்டத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். என் அப்பா பேராசிரியர் இஸ்மாயிலோடு ஆலோசனை செய்து, செயல்முறை அனுபவம், புத்தகங்கள் வாசிப்பது, குறிப்புகள் எடுப்பது, கவனிப்பது, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் இறுதியில் மண்புழுக்களுக்கான குழியை அமைத்துவிட முடியும் என்று கூறினார். முதலிரண்டு நாட்களும் மண்புழுக்கள் பற்றிய புத்தகங்களை மரு. இஸ்மாயில் பரிந்துரைத்தவற்றை படித்தேன். பின்பு மண்புழுக்களின் வகைகள், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கவனமாக ஆராய ஆரம்பித்தேன். அதோடு மண், அவற்றின் வகைகள், அமைப்பு, இயல்பு ஆகியவற்றை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். மரு. இஸ்மாயிலின் வழிகாட்டுதலில் பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளில் எட்டிலிருந்து பத்து மாணவர்கள் வரை ஈடுபட்டு வந்தனர். முன்பு நூலகமாக பயன்பட்டு வந்த அறையில் நாங்கள் இது தொடர்பாக வேலை செய்து வந்தோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மேசையும், நாற்காலியும் இருந்தபடியால் எனக்கும் ஒரு மேசை, நாற்காலியை ஏற்படுத்திக்கொண்டேன். வேலை செய்துகொண்டிருந்த பெரிய அறையில் உள்ள சிறிய நூலகத்தில் ஒரு முனையில் மண்புழு பற்றிய அனைத்துவித நூல்களும் இருந்ததனால் தேவையான நூல்களை எடுத்து உடனடியாக படிக்க முடிந்தது. மண்புழுக்களின் படுகை, உரக்கழிவுகள் ஆகியவை தரைதளத்தில் பெரும்பாலும் அமைந்திருந்தாலும், சில படுகைகள் குறுகியதாக வகுப்பறையின் வெளியே அமைந்திருந்தன. மதிய உணவினை அனைவரும் அங்குதான் சேர்ந்து உண்ணுவோம். அங்கிருக்கும் மாணவர்களில் யாராவது ஒருவர் வேலையைப் பற்றி சுருக்கமான குறிப்பைக் கூறுவார். அதையே நான் பின்தொடர்வேன். பின்னாளில் என் வேலைகளை ஓரளவுக்கு நான் ஒழுங்கமைத்துக்கொண்டேன். மையத்தில் தங்கிய இரு வாரத்தில் மண்புழுக்களின் சூழல் வாழும் மண்ணின் தன்மை, ஈரப்பதம், அமைப்பு ஆகியவற்றைக் கற்றேன். நுண்ணுயிரிகளை மண்ணில் பார்க்க நுண்ணோக்கியைப் பயன்படுத்தினேன். பயிற்சி முறையின் இறுதியில் மண்புழுக்களின் படுகையை அமைப்பதில் ஓரளவிற்கு தேர்ச்சி பெற்றேன். சில மண்புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை அனுபவத்திற்காக தின்று பார்த்தேன். சென்னையில் நான் தங்கியிருந்தபோது நிகழ்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அனேகமாக அது என்னுடைய இரண்டாவது நாளாக இருக்கும். பேருந்தில் ஒன்றில் ஏறி, காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டேன். கோவாவில் நடத்துநரே நம்மிடம் வந்து பயணச்சீட்டு கொடுத்துவிட்டு பணம் பெற்றுக்கொள்வார் என்பதை நினைத்துக்கொண்டு பயணச்சீட்டு கொடுக்க நடத்துநரை எதிர்பார்த்து உட்கார்ந்துவிட்டேன். அந்த நேரத்தில் இரு பயணச்சீட்டு பரிசோதகர்கள் என்னிடம் வந்து பயணச்சீட்டு கேட்க, அப்போதுதான் சென்னை நடைமுறை வேறோ என்று சந்தேகமேற்பட்டது. ஒருவர் கடுமையான தொனியில் தமிழில் பேச ஆரம்பித்தார். முதன்முதலாக சென்னையில் பயணிக்கிறேன் என்று சைகையில், ஆங்கிலத்தில் பேசியும் இருபத்தைந்து ரூபாய் அபராதம் வாங்கிவிட்டார்கள். பின் பேருந்தில் இருந்து இறங்கிய பின்தான் கவனித்தேன்; எனது பணம் வைத்திருந்த பையும் திருடப்பட்டிருந்தது. இன்னொரு சமயத்தில் பேருந்தில் கடைசிப்படியில் அந்தரப் பயணியாக எப்படி பயணிப்பது என்று கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கடுமையான நெரிசல் மிகுந்த பேருந்துகளில் கம்பிகளில் மக்கள் கூட்டம் தொற்றிச் செல்வதைப் பார்த்து நானும் ஒருநாள் அப்படிப் பயணித்தேன். பேருந்து கிளம்பும்போது கம்பியை பிடித்துக்கொண்டிருப்பது மிகக் கடுமையானதாக தோன்றியதற்குக் காரணம் மக்களின் எடை என்மேல் கவியத் தொடங்கியதுதான் காரணம். நான் எல்லோரையும் தாங்கியபடி நிற்க, என்கைகளில் ஒன்று வெளியே கதவுக்கு வெளியே இருந்தது. எப்போதும் படிக்கட்டில் நின்று பயணிக்கக் கூடாது என்று அன்றே முடிவெடுத்தேன் எனக்கு அது உதவியாக இருந்தால் தவிர. பலமுறை சென்னையில் நான் அடிக்கடி தொலைந்து போயிருக்கிறேன். பின்பு முடிந்தவரை போராடி, பல சாலைகளைக் கடந்து, பலரிடமும் விசாரித்து, எனக்கு அறிமுகமான கட்டிடங்கள், அடையாளங்களை கண்டறிந்து விடுவேன். இதற்காக அலைபேசியில் வழிகளைக் கேட்பதைத் தவிர்த்தேன். ஒருமுறை பேருந்தில் பயணிக்கும்போது, நான் இறங்க வேண்டிய இடம் முன்னதாகவோ (அ) பின்னதாகவோ இருக்கிறது என்று மனதில் பட்டவுடன் பேருந்து சிவப்பு விளக்கினால் நிற்க, நான் அதிலிருந்து வெளியே இறங்கினேன். ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் பேருந்து வந்த வழியில் நடந்து பின்னால் சென்று அந்த இடத்தை அடைந்தேன். மனோ மாமா மற்றும் சகு அத்தை என தம்பதியினருக்கு கடும் தலைவலிகளை நான் தந்து வந்த போதிலும் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத, மிகச் சாதாரணமான பாமரத்தனமாக இருந்த வாழ்க்கை முறையினை நான் விரும்பி அனுபவித்தேன். மனோ மாமா என்னை தொடர்ந்து திட்ட இரு வாய்ப்புகளை அவருக்கு வழங்கியிருந்தேன். ஒன்று குளிக்காமலே இருப்பது, இரண்டு மண் கறைகள் படிந்த அழுக்கு உடைகளை அப்படியே அணிந்துகொள்வது என்பதுதான் அது. சகு அத்தையின் சமையல் நன்றாக இருந்தது. நான் அதனை விரும்பி சாப்பிட்டேன் என்றாலும் அது அவர் கோழி (அ) மீன் செய்யும்போது மட்டும்தான் என்பதை தம்பதியினர் எப்படியோ கவனித்துவிட்டனர். எளிய காய்கறிகளிடம் உனக்கு ஏன் விருப்பமில்லை என்று பல கேள்விகள் என்னிடம் அம்பாரமாய் வீசப்பட்டன. நான் ஒழுங்கற்ற சோம்பேறியானவன் என்பதை மையத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் வரவேற்பறை இருக்கைகளில் அலங்கோலமாக விழுந்து தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்தே கண்டறிந்திருப்பார்கள். அது அவர்களை நிச்சயம் கோபப்படுத்தியிருக்கக் கூடும். உணவு அளித்தது மட்டுமில்லாது நான் மண்புழுக்கள் பற்றி கற்கவும், முதலைப் பண்ணை, சிலந்திகள் பற்றியும் கற்க உதவி செய்தவர்கள் அவர்கள்தான். இந்தப் புத்தகத்தை படிக்கும்போது அவர்கள் என் தவறுகளை, பிழைகளை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.   நாட்குறிப்பிலிருந்து…. மண்புழுக்கள் நவம்பர் பத்தாம் தேதி ஐயா எனக்கு மண்புழு பற்றி படிக்க ஒரு புத்தகத்தை தந்தார். பிறகு ஜெகன் என்னை மண்புழுக்களின் இடத்திற்கு அழைத்து போனான். அங்கு மண்புழுக்களைக் காட்டிலும் அதிகமான உயிரிகள் இருப்பதைக் கண்டேன். உயிரிகள் உள்ள மண்ணை ஆய்வகத்தில் உள்ள ஒரு புனலில் வைத்துவிட்டு மேலும் மூன்று மண் மாதிரிகளை வெவ்வேறு புனல்களில் வைத்தோம். பிறகு மதிய உணவு இடைவேளையில் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவருந்தினோம். மதிய உணவுக்குப் பின்னர், மண் மாதிரிகளை எடை பார்த்துவிட்டு அவற்றிலுள்ள உயிரிகளைப் பார்க்க புனலின் அடியில் கண்ணாடிக் குவளையில் வைத்தேன். மணி மூன்று முப்பது காட்ட வீட்டிற்குக் கிளம்பினேன். நவம்பர் பதினொன்றாம் தேதி காலையில் எனக்கு இரு வகையான மண்புழுக்கள் கொடுக்கப்பட்டு (எ.கா லாம்பிடோ மவ்ரிட்டி மற்றும் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவாடஸ்) அவற்றை கவனிக்குமாறு பணிக்கப்பட்டேன். காலை நேரம் முழுவதும் அவற்றை கவனிப்பதிலே செலவழித்தேன். மதிய உணவிற்குப் பின் நான் கவனித்த விஷயங்களைக் குறிப்புகளாக எழுதிக் கொண்டேன். பிறகு மாலையில் கல்லூரியின் விளையாட்டு மைதானம், தங்கும் விடுதி அருகேயும் சில மண்மாதிரிகளை சோதித்தோம். 25 செ.மீ x 25செ.மீ x 25செ.மீ என இரு இடங்களிலும் மண் மாதிரிகளை எடுத்தோம். அதிலுள்ள மண்புழுக்களின் எண்ணிக்கையை அதன் வகையை குறித்துக் கொண்டோம். அதோடு மண்ணின் வெப்பம், தன்மை, ஈரப்பதம் மற்றும் மண்ணின் ஈரக்கசிவுத் தன்மையினையும் அளவிட்டுக் கொண்டோம்.   நவம்பர் பனிரெண்டாம் தேதி கல்லூரிக்கு எப்போதும் போல சென்ற பின்தான் ஐயாவிற்கு கடுமையான காய்ச்சல் என்றும், இன்று வகுப்பிற்கு வர மாட்டார் என்றும் தகவல் கிடைத்தது. கடந்த ஆண்டு கல்லூரியில் படித்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இறந்துவிட்டதால் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மணி பத்து முப்பதிற்கு வீட்டிற்கு வந்துவிட்டேன். குளித்துவிட்டு, சிறிது உணவு எடுத்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துவிட்டு, நாட்குறிப்பு எழுதத் தொடங்கினேன். இரவு மனோ மாமா மற்றும் சகு அத்தை ஆகியோர் தங்களது வீட்டிற்கு சில விருந்தினர்களை அழைத்திருந்ததால், கோழிக்கறி சமைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. நவம்பர் பதினான்காம் தேதி ஐயா இன்றும் வரவில்லை. ஜெகனின் உதவியோடு அகச்சிவப்பு கதிர் ஈரக்கசிவு சமநிலையைப் பயன்படுத்தி சனிக்கிழமை எடுத்த முன்மாதிரிகளில் ஈரக்கசிவைக் கண்டறிந்தோம். மாதிரி ஒன்றை முடித்தபின் மின்விசை அளவு ஏறி இறங்கியதால் புனலை இதற்குப் பதிலாக பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. பிறகு ஜெகன் சில மண்மாதிரிகளை தங்கும் விடுதி அருகேயிருந்து எடுத்து வரச்சொல்ல அப்படியே எடுத்து வந்தேன். மண்மாதிரிகளிலுள்ளவற்றை கண்ணாடிக் குவளையில் பார்க்க, மண்புழுக்களின் சில இனங்கள் அதில் இருந்தன. நவம்பர் பதினைந்தாம் தேதி துகளாக்கப்பட்ட நூறு கிராம் மண்ணை மாதிரியை சலித்து வடிகட்டவேண்டும். இதே போல ஒவ்வொரு மண் மாதிரிக்கும் ஐந்து முறை சலிக்கவேண்டும். பிறகு மண்ணின் எடையை வடிகட்டியோடு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.   நவம்பர் பதினாறாம் தேதி மண்ணை நன்கு சலித்துக் கொண்டோம். மாலையில் கீன் கப்ஸ் மூலம் தண்ணீரை நிலைநிறுத்தும் திறனை ஆராய்ந்து அளவுகளைக் குறித்தோம். நவம்பர் பதினெட்டாம் தேதி ஐயா இன்று காலையில் மையத்தில் இருந்தார். நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்துப் படித்தேன். பின் சலித்த மண்ணை நெருப்பில் சுட்டோம். மாலையில் ‘Junior Shylock’ என்ற படத்தைப் பார்த்தேன். நவம்பர் பத்தொன்பதாம் தேதி எனது அறிக்கையைத் தயாரிப்பதற்கான வேலைகளைத் தொடங்கினேன். மாலையில் பாபுவுடன் சென்று அறிக்கைக்குத் தேவையான புகைப்படங்கள் எடுக்க படச்சுருள் ஒன்று வாங்கி வந்தேன். நவம்பர் இருபதாம் தேதி பெரியோனிக்ஸ் எக்ஸ்காவடஸ் வகை மண்புழுவை காலையில் சாப்பிட்டேன். சில மண் மாதிரிகளை எடையிட்டு நீர் வைத்திருக்கும் திறனை வெவ்வேறு மண்ணோடு ஒப்பிட்டோம். பின் சுடப்பட்ட மண்ணை எப்படிக் கணக்கிடுவது, மண்ணின் இயல்பை எப்படி அளவிடுவது என்று தொடர்ந்து என் அறிக்கையில் எழுதி வந்தேன். நவம்பர் இருபத்திரெண்டாம் தேதி இன்று அறிக்கையின் இறுதி பாகங்களை எழுதி முடித்தேன். சித்ராவிடம் அதைக்கொடுத்து சரி பார்த்துவிட்டு, ஐயாவிடம் கொடுக்க, அவர் சில திருத்தங்களைக் கூறினார். நவம்பர் இருபத்துமூன்றாம் தேதி எனது ஆய்வை எழுத புதிய நோட்டு ஒன்றை வாங்கினேன். அதில் அறிக்கை குறித்த பல்வேறு புகைப்படங்களை நானும், ஜெகனும் ஒட்டினோம். ஐயா, நானே என் முயற்சியில் மண்புழு படுகையை உருவாக்க முயற்சிக்குமாறு கூறினார். அவர் வாளி ஒன்றைத் தர, அதில் அதனை உருவாக்கினேன். ஐயா அதனைச் சோதித்துவிட்டு சரியாக இருப்பதாக கூறினார். நவம்பர் இருபத்திநான்காம் தேதி எனது நோட்டில் சில படங்கள் மட்டும் வரைய வேண்டி இருந்தது. பிறகு ஐயாவின் அனுமதி பெறவேண்டும். அங்கீகாரம் அவர் தந்துவிட்டால் பயிற்சி நிறைவு பெற்றுவிடும். ஒவ்வொரு படத்திற்கும் கீழே அவை பற்றிய சில வரிகள் எழுதக் கூறினார். ஒரு வாரம் கழித்து நோட்டைப் பெற்றுக் கொள்ளக் கூறினார். பின் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, மாலை நான்கு முப்பதிற்கு வீட்டிற்குக் கிளம்பினேன். பத்து நாட்களுக்குப் பிறகு… டிசம்பர் ஐந்தாம் தேதி இன்று விடுமுறை. நியூ காலேஜிற்கு சென்று என்னுடைய ஆய்வறிக்கை நோட்டை ஐயாவிடம் அவரது கையெழுத்திற்காக அனுப்பியிருந்தேன். பல நண்பர்களை அங்கு சந்தித்துவிட்டு, என் குறிப்பேட்டில் பலரும் குறிப்புகளை எழுதினார்கள். மண் புழுவுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஐயா என்னிடம் வழங்கினார். சித்ரா தன்னுடைய காரில் என்னைப் பனகல் பார்க் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுக் கிளம்பினார். மண்புழு உரம் மண்புழு உரம், மண்புழு நீர் என இரண்டு விதமான மண்புழுப் பொருட்கள் புகழ்பெற்று வருகின்றன. சாதாரணமாக தாவரக் குப்பைகள் அதாவது சமையலறைக் கழிவுகள் மற்றும் இறந்து போன தாவரங்கள் ஆகியவை மண்புழுக்களின் உதவியுடன் உரமாக மாற்றப்படுகின்றன. வகைகள்: மண்புழுக்களில் மூன்றுவகைள் உள்ளன. மேற்பரப்பில் காணப்படும் மண்புழுக்கள்( பெரியோனிக்ஸ் எக்ஸ்வடஸ்), மேற்பரப்பு மண்ணிலுள்ள தாவரக்கழிவுகளை உண்டு வாழ்வன இவை. மேலடுக்குகளில் கழிவுகளையும் இலைகளின் கழிவுகளையும் உண்டு வாழும் மண்புழுக்கள் (லாம்பிடோ மவ்ரிட்டி) இரண்டாவது வகையாகும். மண்ணில் ஆழத்தில் காணப்படும் மண்புழுக்கள் (ஆக்டோசடோனா திரிரேடோனிஸ்) ஆகும். மண்புழு உரம் தயாரிக்க பொருத்தமான மண்புழுக்கள் மேற்பரப்பு, மேலடுக்கு ஆகியவற்றில் காணப்படுபவையாகும். பெரியோனிக்ஸ் எக்ஸ்கவடஸ் நல்ல சிவப்பாகவும், சீரற்றும், இருமுனைகளிலும பெரும்பாலும் கருப்புநிறம் கொண்டும் இருக்கும். சிறியதாகவும், ஒல்லியாகவும் தோராயமாக பத்து செ.மீ நீளம் இருக்கும். லாம்பிடோ மவ்ரிட்டியை விட மிகத் துடிப்பானது. இதன் வளர்ச்சி, இனப்பெருக்கம் ஆகியவற்றின் வேகமும் லாம்பிடோவை விட அதிகம். லாம்பிடோ சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிறத்தையும், பளபளப்பையும் கொண்டு, உருளையாகவும், நீளமாகவும் (பதினாறு செ.மீ) காணப்படும். மண்புழுக்கள் குளுமையான வெப்பநிலை, ஈரப்பதமான மண், குறைந்த சூரிய ஒளி, கரடுமுரடான மண், நல்ல சலித்த மண் என இரண்டிற்கும் இடைப்பட்ட மண்ணில் வாழக்கூடியது. மண்புழு உரம் தயாரிக்கும்போது, மண்புழுக்களுக்கான உகந்த சூழல் எதுவென்பதை அறிந்து கொண்டிருக்க வேண்டும். மண்புழு தன் தோலின் வழியாக சுவாசிப்பதால், தோல் வறண்டுவிட்டால் அவை இறந்துவிடும். உரம் தயாரிக்க அவை பெட்டியில் உயிரோடு இருக்கவேண்டும். மண்படுகை ஈரப்பதம் மிக்கவையாக இருக்குமாறு அமைக்கவேண்டும். நீர் தேங்குவது போன்ற நிலையில் மண்புழுக்களை வைக்கக் கூடாது. நீரில் அவை சிறிது நேரம் இருந்தால் அவற்றின் உடலிலுள்ள வேதிப்பொருட்களின் விளைவால் அமோனியா உருவாகி, நீரில் கலந்து மண்புழுக்கள் அழிவிற்கு காரணமாகிவிடும். மண்புழுக்கள் உப்பு மற்றும் உப்பு நீர் ஆகியவற்றையும் ஏற்காது. மண்புழுக்களின் வாழ்நாள் ஆறு மாதத்திலிருந்து ஒரு ஆண்டு வரையாகும். முழுவளர்ச்சியடைந்த மண்புழு வெளிவர, அவை கூடு கட்டி பின் அவற்றில் முட்டையிட்டு புழுக்கள் வளர்ந்துவர பதினான்கு நாட்கள் தேவைப்படும். ஒவ்வொரு சிறு புழுவும், மற்றொரு உயிரை உருவாக்க பதினைந்திலிருந்து பதினெட்டு நாட்கள் ஆகும். மண்புழுக்களின் வாழ்நாளை கணித்து அதற்கேற்ப, அவற்றை வைத்து உரம் தயாரிக்க முடியும். மண்புழு உரம் சிறிய மரத்தினாலான (அ) பிளாஸ்டிக் (அ) வாளி என்று மண்புழு உரம் உருவாக்குதலுக்கு தேவைப்படும் பொருட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இரு கூடைகளில் ஒன்று புதிய தாவரக்குப்பைகளைப் போடவும், மற்றொன்று மட்கச் செய்வதற்கும் தேவைப்படும். கூடையில் ஒவ்வொரு முனையிலும் ஒரு துளை மற்றும் மையத்தில் நான்கு துளை என்று போட்டுக் கொள்ளவேண்டும். பானை (அ) வாளிக்கு மூன்று (அ) ஐந்து துளைகள் தேவைப்படலாம். கூடையில் ஒரு அங்குலத்திற்கு கூழாங்கற்கள் (அ) உடைந்த சிறுகற்கள் போட்டு, அரை (அ) ஒரு அங்குலத்திற்கு மணலை பரப்ப வேண்டும். பின்பு, ஐந்து (அ) ஆறு அங்குலத்திற்கு மண்ணை நன்கு பரப்பவேண்டும். பின்பு லாம்பிடோ மவ்ரிட்டி மற்றும் பெரியோனிக்ஸ் எக்ஸ்காவடஸ் ஆகிய மண்புழுக்களை உள்ளே இடவேண்டும். மண்ணை ஈரமாக்க சிறிது நீர் தெளிக்க வேண்டும். சிறிது பசுவின் சாணத்தையும் (நைட்ரஜன்), வைக்கோலையும் (கார்பன்) இவ்விரண்டையும் பரப்பிவிட வேண்டும். இவை இருபதிலிருந்து முப்பது நாட்கள் அப்படியே இருக்க வேண்டும். இதுவே மண்புழு படுகை எனப்படும். பசு சாணமும், வைக்கோலும் மண்புழுக்கள் பெருக உதவும். இப்போது தாவரக்கழிவுகளைப் பயன்படுத்தலாம். தாவரக் கழிவுகளை மண்புழு படுகை மீது நன்கு பரப்பி வைக்க வேண்டும். தாவரக் கழிவுகளை தினமும் சிறிது சிறிதாக இவற்றில் போட்டு வரவேண்டும். மண்புழுக்கள் தாவரக் கழிவுகளை உண்ணத் தொடங்கும்போது, படுகை ஈரப்பதம் குறையாது பார்த்துக்கொள்ள வேண்டும். மட்கும் செயல் தடைபடாத வகையில் கூடை முழுவதும் கழிவு நிரம்பியிருக்க சிறிது மண்ணைப் பயன்படுத்தலாம். முழுதாக இவை மட்கிப்போக நாற்பத்தைந்து நாட்கள் ஆகும். அதுவரை தொடர்ந்து நீர் தெளித்துவர வேண்டும். முழுதாக மட்கியபின் மூன்று நாட்களுக்கு நீர் தெளித்தலை குறைத்து விட வேண்டும். இதனால் மண்புழுக்கள் கூடையில் ஈரப்பதம் நிரம்பிய கீழேயுள்ள மண்ணிற்குச் சென்றுவிடும். இப்போது மேலேயுள்ள மண் உரப்பயன்பாட்டிற்குத் தயாராகிவிட்டது. கீழேயுள்ள படுகைக்கு தொந்தரவு இல்லாமல் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம். மண்புழு நீர் பீப்பாய் (அ) வாளி கொண்டு மண்புழுக்களின் கழிவினால் திரவ வடிவ உரத்தை உருவாக்க முடியும். வாளியை நிலத்தின் மீது வைத்து, கீழ்பாகத்தில் ஒரு துளையிட்டு அதன் வழியே ஒரு குழாயை மேலே வருமாறு தள்ளி வெளிப்புற முனையை அடைத்துவிட வேண்டும். வாளியின் கீழ்பாகத்தில் சரளைக்கற்களை ஆறிலிருந்து எட்டு அங்குலத்திற்கு பரப்பிவிட வேண்டும். மணலையும் மேலேயுள்ள அளவில் பரப்பியபின், மண்ணையும் அதே அளவில் பரப்பிவிடவேண்டும். பின் மண்புழுக்களை உள்ளிட வேண்டும். மண்ணை சிறிது ஈரமாக்கவேண்டும். சிறிது பசுவின் சாணமும், வைக்கோலும் கலந்து பரப்பிவைக்க வேண்டும். சில நாட்களுக்கு அப்படியே விட்டுவிடவேண்டும். நீர் உரம் தேவைப்படும்போது, நீரைத் தூறலாக மழை போல தெளிக்கவேண்டும். மண்புழுக்கள் நீர்பட்டவுடன் உள்ளே போய்விடும். வைக்கோல் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவற்றை உண்ணுகின்ற மண்புழுக்கள் மண்ணை வளப்படுத்தும் தனது கழிவுப்பொருளை உருவாக்கும். இதனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். தாவரக்கழிவுகளை வாளியில் வைத்து நாம் செய்வதை இயற்கை இயல்பாகவே தன் வழியில் நிகழ்த்துகிறது. தாவர இலைகள், பழங்கள், இறந்துபோன மரம், பூக்கள், விலங்குகளின் இறைச்சி என இவற்றில் நீர் தொடர்ந்து படும்போது நுண்ணுயிரிகள் உண்டாகி அவை மண்ணுக்கு உரமாகின்றன. இயற்கை ஒரு சுழற்சி முறையில் இயங்குகிறது. ஒரு தாவரம் இறந்து விட்டால் அது மண்புழுவினால், நுண்ணுயிரிகளில் உண்ணப்பட்டு அவற்றின் கழிவுப்பொருள் மண்ணை அடைகிறது. அந்த சத்துள்ள மண்ணில் விதைகள் காற்றினால் இடம்பெயர்ந்து விழும்போது அவை புதிய தாவரங்களாக உருவாகின்றன. மண்புழுக்கள் குப்பையை மதிப்பு மிகுந்ததாக உயிர்ப்பான ஒன்றாக மாற்றுவதிலிருந்தே அவற்றின் உருவாக்கத்திறனைப் புரிந்துகொள்ள முடியும். 9 நான் சிலந்தி மனிதன் மண்புழு பற்றி எனது வேலைகள் முடிவடைந்து விட்டதால் இருவாரங்களாக மரு. விஜயலக்ஷ்மி பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அப்பா இவரை இந்தியாவின் சிலந்திப் பெண்மணி என்று அழைத்தார். மரு. விஜயலக்ஷ்மி சிலந்திகளை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தி கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அவரது சோதனைச்சாலை முழுவதும் பல்வேறு வகையிலான சிலந்திகள், புட்டிகளில் அடைக்கப்பட்டு அவற்றின் இயக்கங்கள் மருத்துவரால் மேற்பார்வையிடப்பட்டு வந்தன. சிலந்திகள், அவற்றின் வாழ்வு குறித்த பல புகழ்பெற்ற பிரபலமான நூல்களையும் எழுதியுள்ளார். என் பெற்றோர்களிடமிருந்து முதலைப் பண்ணைக்கு செல்ல அனுமதிக்கும் அழைப்பிற்குத்தான் ஆர்வமாய் காத்திருந்தேன். முதலைப்பண்ணையில் நான் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வது இன்னும் இறுதியாகவில்லை என்றும் அதற்கு பத்து நாட்களாகும் என்று அப்பா கூறியதால், மரு. விஜயலக்ஷ்மியிடம் சிலந்திகள் பற்றி கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தேன். மரு. கே. விஜயலக்ஷ்மி மற்றும் அவரது கணவர் என இருவரும் Center for Indian Knowledge Systems (CIKS) எனும் அமைப்பில் பணிபுரிந்து வந்தார்கள். சிஐகேஎஸ் மேல்மாடி கட்டிடத்தில், மருத்துவரின் அலுவலகம் முதல் தளத்தில் அமைந்திருந்தது. தாவரங்களுக்கு பூச்சிகொல்லி பயன்படுத்துவது பயன்பாடு மிக்கதா என்பது பற்றிய ஆராய்ச்சிகளும் அவர் செய்துவந்தார். உண்மையில் அதுபற்றி எனது கருத்துகள் அவரது எண்ணத்திற்கு எதிரானவையே என்றாலும் அதைப்பற்றி இப்போது பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். வண்டிக் கொட்டகையினுள் சிலந்திகளின் ஆய்வுக்கூடம் அமைந்திருந்தது. ஐந்நூறு புட்டிகளுக்கு மேல் வைக்கப் பட்டிருந்ததில் பல்வேறு வகையான சிலந்திகள், பல்வேறு வளர்ச்சி நிலையில் இருந்தன. அவற்றின் புட்டிகளில் நேர்த்தியாக அவற்றின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. காற்றுக்காக அவற்றின் மூடியில் ஒரு சிறு துளையும், உணவிற்கு ஒரு துளையும் இடப்பட்டு உணவுத்துளை பருத்தித் துணியினால் அடைக்கப்பட்டிருந்தது. புட்டிகளில் உள்ள சிலந்திகளின் செயல்பாடுகள், வளர்ச்சி, இனப்பெருக்கம் என அனைத்தையும் மருத்துவர் கண்காணித்தபடியே இருந்தார். அவருடைய உதவியாளரான செல்வன் மருத்துவரின் உத்தரவுகளைச் செயல்படுத்தியும், அவரின் குறிப்புகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்தும் வந்தார். மரு.விஜயலக்ஷ்மி அவர்களோடு பணிபுரிந்த வாரங்களில் அவர் பரிந்துரைத்த சிலந்தி குறித்த புத்தகங்களைப் படிப்பது, சிலந்திகளை அடையாளப்படுத்தி அவற்றைக் கண்டறிவது, செல்வா அண்ணாவிற்கு உதவி செய்வது என்று பல்வேறு வகையான சிலந்திகளின் கொட்டகையைப் பராமரித்து வந்தோம். மருத்துவர் இன்னும் ஒருவகையான சிலந்திகளை வளர்த்துவந்தார். நண்டுச் சிலந்திகள் என்றழைக்கப்படும் இவை வலைகளைப் பின்னுவதில்லை. கரப்பான் பூச்சியை மட்டுமே உணவாகக் கொள்ளும் இந்த சிலந்தி தன் இரையை விட சிறியதாக இருக்கும். சிறிய குழந்தை சிலந்திகளைப் பிரித்து வைப்பது, அவற்றின் வளர்ச்சியைக் கவனிப்பது, அவற்றுக்கு உணவாக சிறு பூச்சிகளைப் பிடித்து வந்து இரையாக இடுவது என்று வேலைகளைச் செய்துவந்தேன். சிலந்திகள் குறித்த புத்தகங்களைப் படித்துவிட்டு, சில சமயங்களில் தோட்டத்திலிருந்து சிலந்திகளைப் பிடித்து வந்து அவற்றைக் கண்டறிய முயற்சி செய்தேன். சிலந்திகள் மட்டும் கொட்டகையில் வைக்கப்பட்டு இருக்கவில்லை. கரப்பான் பூச்சிகளும், ஒரு வாளியில் வைக்கப்பட்டு உடைத்த ரொட்டித் துண்டுகள் உணவாக அவற்றுக்கு அளிக்கப்பட்டிருந்தன. கரப்பான் பூச்சிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை உணவு அளித்தால் போதும் (அ) நண்டுச் சிலந்திகளுக்கு உணவாக அளிக்கும் வரையில். சிறிய சிலந்திகளுக்குத் தோட்டத்திலிருந்து சிறு பறக்கும் பூச்சிகளை தினமும் பிடித்து வந்து உணவாக அளிப்போம். பூச்சிகளை உயிரோடு சிலந்திகளுக்கு அளிக்க வேண்டும் என்பதால் அவற்றைப் பிடித்ததும் தனி புட்டியில் அடைத்து வைத்துவிட வேண்டும். சில சமயங்களில் சிலந்தி இவற்றை உடனடியாகத் தின்று விடும். மற்ற நேரங்களில் சிலந்தி அப்பூச்சிகளைத் தின்னும் வரை அவை பறந்தபடியே இருக்கும். மருத்துவர் குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த பூச்சிகளை சிறிய கண்ணி வலையில் அடைத்து குவளையில் பாலை அளித்து அவற்றை வளர்த்து வந்தார். குழந்தைப்பருவ சிலந்திகளைத் தனித்தனி புட்டிகளில் அடைத்து அவற்றிற்கு பூச்சிகளின் குஞ்சுகளை (லார்வா) அல்லது மைதா, ரவை இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்களை உண்ணக் கொடுக்கலாம். நடத்தப்படும் சோதனைகள் எல்லாம் எந்த வகை சிலந்தி கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் திறன் பெற்றிருக்கிறது என்பதைக் கண்டறியத்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். சிலந்தி பற்றிய அடிப்படையான தகவல்கள், வளர்ச்சி, இயல்பு, உணவுப்பழக்கம், இனப்பெருக்கம் ஆகியவற்றைக் கவனிப்பது சிலந்தியை கரப்பான் பூச்சிக்கு எதிரானவையாக உருவாக்க முடியுமா என்ற எண்ணத்தில்தான் என்பதை அறிவது பெரிய விஷயமல்ல. மருத்துவரின் உதவியாளரான செல்வா அண்ணாவிடம் சிலந்தி குறித்த பல செய்திகளைப் பெற முயன்றால் தமிழ்மொழி தடையாக நின்றது. அவர் நிலை ஆங்கிலத்தில் படுமோசம். எனவே புதிதாக உருவாக்கிய தமிங்கிலத்தில் உரையாடி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.                       நாட்குறிப்பிலிருந்து… சிலந்திகள் நவம்பர் இருபத்தாறாம் தேதி இன்று மனோ மாமாவும் நானும் மரு. விஜயலக்ஷ்மி அவர்களுடைய அலுவலகத்துக்கு காலை ஏழு மணிக்கு சென்றோம். மருத்துவரும் மாமாவும் பேசிக்கொண்டிருக்க, நான் சில புத்தகங்களை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். மருத்துவர் தன்னிடமுள்ள சிலந்திகளைக் காட்டினார். தன் உதவியாளர் செல்வா அண்ணாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு நாங்கள் கிளம்பும்போது மருத்துவர் சில புத்தகங்களைக் கொடுத்து படிக்கக் கூறினார். நவம்பர் இருபத்தேழாம் தேதி செல்வா அண்ணா தாய் சிலந்தியிடமிருந்து குழந்தை சிலந்திகளைப் பிரித்து தனி புட்டிகளில் அடைத்தார். மொத்தம் நூற்றுப்பத்து குழந்தைச் சிலந்திகள் மாற்றி வைக்கப்பட்டன. பிறகு இருநூறு பிற குறுஞ் சிலந்திகளுக்கு உணவளிக்கும் பணி நடைபெற்றது. சிலந்திகளின் வளர்ச்சியை எப்படி சோதிக்க வேண்டும் என்பதை செல்வா அண்ணா விளக்கமாக செயல்முறையாக காட்டினார். நவம்பர் இருபத்தொன்பதாம் தேதி இன்று குழந்தை சிலந்திகளுக்கு உணவு அளிக்கும் பணி. மருத்துவர் உடல் நலமில்லாததால், வரவில்லை. அவரது கணவர் பாலசுப்பிரமணியன் எங்களது பணிகளை மேற்பார்வையிட்டார். மாலை வேளைகளில் சில புத்தகங்களை சிலந்திகளைப் பற்றி அறிய படித்தேன். மனோ மாமாவும், சகு அத்தையும் சில நாட்கள் வெளியே செல்வதால், அவர்களது உறவினரான சந்தோஷ்குமார் என்பவரது இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் இரவு ஏழு முப்பதிற்கு கிளம்பினார்கள். பின் ஒன்பது மணிக்கு சந்தோஷ் என்னைக் கூட்டிச் சென்றார். நவம்பர் முப்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்து காலையுணவாக இட்லி, தோசை, சாம்பாரோடு சாப்பிட்டேன். இரு நாட்களாக எழுதாத நாட்குறிப்பினை எழுதிவிட்டு, தொலைக்காட்சி பார்த்தேன்த மாலையில் சந்தோஷ் மாமா பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று அடுத்த நாள் சிஐகேஎஸ் பயணிக்கவேண்டுமென்று விரிவாக விளக்கினார். டிசம்பர் ஒன்றாம் தேதி மருத்துவர் இன்று அலுவலகம் வந்திருந்தார். சிலந்திகளை எப்படிக் கண்டறிவது என்று அலுவலக வளாகத்தில் உள்ள சிலந்திகளைக் கொண்டு செயல்முறையாக விளக்கினார். சிலந்திகள் பற்றிய பல புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். சிலந்திகள் பற்றிய என்னுடைய ஆய்வுக் கட்டுரையை தயார்படுத்தக் கேட்டுக்கொண்டார். மதிய உணவிற்குப்பின், நான் பிடித்து வைத்திருந்த சில சிலந்திகளை அவரிடம் காட்டினேன். அவர் அவற்றை இனம் கண்டறிய உதவியதுடன் மேலும் பல்வேறு வகை சிலந்திகளைப் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். பின்பு மாலை நேரத்தில் சிலந்திகளுக்கான பூச்சிகளைத் தேடிப்பிடித்தோம். டிசம்பர் இரண்டாம் தேதி இன்று பல்வேறு வகை சிலந்திகளை அடையாளம் கண்டறிய முயற்சித்தேன். பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டியது இருந்ததால் நேரத்திலேயே வீட்டுக்கு சென்றுவிட்டேன். வைத்திருந்த புத்தகங்களை படித்துக் கொண்டே சென்றதில் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிச் சென்று விட்டேன். பின்பு திரும்பி அங்கே வர அரை மணிநேரம் ஆகியது. டிசம்பர் மூன்றாம் தேதி உடல் நலமில்லாததால் சிஐகேஎஸ் செல்லவில்லை. அங்கிருந்து கொண்டு வந்த புத்தகங்களைப் படித்தேன். என் ஆய்வு குறித்த அறிக்கையைத் தயார் செய்யத் தொடங்கினேன். டிசம்பர் நான்காம் தேதி சிலந்திகளுக்கு எப்போதும் போல உணவளித்தேன். இளம் சிலந்திகளுக்கு எழுபது பூச்சிகளை உணவாக கொடுத்தேன். இரு சிலந்திகளின் செயல்பாடுகளைக் கவனித்தேன். என் அறிக்கையினைத் தொடர்ந்து எழுதினேன். டிசம்பர் ஐந்தாம் தேதி மண்புழு பற்றிய அறிக்கையைப் பெற நியூ காலேஜ் போய் வந்தேன். டிசம்பர் ஆறாம் தேதி பாலக சிலந்திகளுக்கு உணவளித்த பின், பூச்சிகளைப் பிடித்தேன். பெண் சிலந்தியின் முட்டைகளிலிருந்து வெளிவந்து குஞ்சு சிலந்திகளை நானும் செல்வன் அண்ணாவும் தனித்தனி புட்டிகளில் அடைத்தோம். டிசம்பர் ஏழாம் தேதி அறிக்கையின் இறுதிப்பகுதியை எழுதினேன். பிறகு இதனை மருத்துவரிடம் கொடுத்து திருத்தங்கள் பெற்று, முழுமையான அறிக்கையை மாலைக்குள் தயார் செய்துவிட்டால் அவரிடம் அனுமதி பெற்று விடலாம். டிசம்பர் எட்டாம் தேதி சிஐகேஎஸ் க்கு வயிற்று கோளாறினால் தாமதமாகவே போய் சேர்ந்தேன். என்னுடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தேன். மருத்துவர் எனக்கு அதில் கையெழுத்திட்டு, சான்றிதழ் அளித்து விட்டார். வயிற்றுக் கோளாறினால் விரைவாக வீடு திரும்பிவிட்டேன். அடுத்த நாள் முதலைப்பண்ணைக்கு கிளம்புவதாக முடிவு செய்தேன்.                   களப்பணிக்குறிப்புகள் மீண்டும் சிலந்தி இந்நாட்களில் ஒரு பூச்சியைப் பார்த்ததுமே பேகான் அல்லது மற்ற அழித்து ஒழிக்கும் வேதிப்பொருளிலான பூச்சிக் கொல்லிகளைத் தேடி ஓடுகிறோம். ஆனால் பூச்சிக் கொல்லிகள் செய்வது என்ன? பல்வேறு பூச்சிகளும், பூச்சிக் கொல்லிகளுக்கு எதிரான தடுப்புத்திறனை வளர்த்துக்கொண்டு தாக்குப்பிடித்து வாழும் திறனை நாளடைவில் பெற்று விடுகின்றன. மேலும் செயற்கை பூச்சிக்கொல்லிகள் சூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் மலடாக்கும் தன்மை கொண்டவை. இவற்றை விட இயற்கையிலே பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடிந்தால்? இதற்கு சிலந்திகள் என்பது ஒரே பதில். சிலந்தி என்பது ஒரு பூச்சிவகையல்ல. பூச்சிகள் தலை, மார்ப்புப் பகுதி, வயிறு என மூன்று பகுதிகள் கொண்டிருக்கும். மேலும் அவை ஒருங்கிணைந்த கண்கள் மற்றும் ஆறு கால்களைக் கொண்டு இருக்கும். அவற்றின் சிறகுகளின் வளர்ச்சி துரிதமாகும் போது அவற்றுக்கு உணர்ச்சி அவயங்கள் (அ) உணர்ச்சிக் கொம்புகள் உருவாகத் தொடங்கும். பூச்சிகள் முட்டையிட்டு உருவாகும் குஞ்சுகள் அவற்றின் பெற்றோர்களிடமிருந்து வேறுபாட்டைக்கொண்டிருக்கும். புதிய பூச்சிகள் தமக்குள் கொண்டிருக்கும் மரபணு சார்ந்தே வளர்ச்சி பெறுகின்றன. சிலந்திகள் முதுகெலும்பற்ற இணைப்புடலி வகையினைச் சேர்ந்ததாகும். சிறிய தலையுடன் இணைந்த சார்புடன் வயிற்றுப் பகுதியும் இணைந்திருக்கும். இவற்றிற்கு சிறகுகள் வாழ்நாள் முழுவதும் வளருவதில்லை. எட்டு கால்கள் கொண்டு, உணர்வு கொம்புகளுக்குப் பதில் பெடிபால்ப்ஸினைக் கொண்டிருக்கும். சிலந்தி எட்டு அல்லது ஆறு சிறிய கண்களைக் கொண்டிருக்கும் (துப்பும் சிலந்தி). சிலந்தியின் வகைகளைப் பொறுத்து அவற்றின் கண்பார்வை நன்றாக (அ) குறைவாக இருக்கலாம். குகையில் இருக்கும் சிலந்திகள் முழுக்க பார்வையற்றவையாகும். சிலந்திகளின் வகைகளைப் பொறுத்து அவற்றின் வாழ்நாள் பல மாதங்களிலிருந்து, பத்தாண்டுகள் வரை நீளும். ஏறத்தாழ அனைத்து சிலந்திகளுக்கும் வளருகின்ற முதல் பற்களே பின்பு கடுமையான நச்சை வெளியிடும் தன்மை கொண்டவையாக மாறுகின்றன. ஆனால் சிலவகை சிலந்திகளில் உள்ள நச்சுப்பற்கள் மட்டுமே மனிதனின் தோலைத் துளையிடும் வலிமை பெற்றவை. சிலந்திகளில் ஐந்துவகையைத் தவிர மற்றவை மனிதனின் உயிருக்கு தீங்கு விளைவிப்பன அல்ல. உலகமெங்கும் தோராயமாக முப்பதாயிரம் வகையினைச் சேர்ந்த சிலந்திகள் காணப்படுகின்றன. இவை இருபத்து மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ள இமயமலையிலிருந்து, கடலடிவரையிலும் காணப்படுகின்றன. அனைத்து சிலந்திகளுமே மாமிசம் உண்ணுபவைகளே. பூச்சிகள், பறவைகள், வௌவால்கள், ஊர்வன என உணவாகக் கொள்ளுகின்றன. எ.கா நச்சுகொண்ட பாம்புகள், மற்ற சிலந்திகள் போன்றவற்றை உணவாகக் கொள்ள அவற்றின் மீது நஞ்சினைச் செலுத்துகிறது. கடுமையான நச்சினால் இரைகள் இறந்துவிடும். மேலும் நச்சு அவற்றின் உடலை சிலந்தி உண்ணுவதற்கு ஏதுவானதாக செரிமானம் ஆகக் கூடியதாக மாற்றிவிடுகிறது. பெரிய சிலந்திகள் இரையை முழுமையாக விழுங்கிவிடவோ (அ) பகுதியாகவோ உண்ணுகின்றன. சிலந்திகளின் அளவு, வயது பொறுத்து அவை சாப்பிடாமல் இருப்பது சில வாரங்களிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீளுகின்றன. இரையின் உடலிலுள்ள நீரை எடுத்துக் கொள்வதால் சிலந்திக்கு தனியாக நீர் உட்கொள்ளும் அவசியம் இல்லை. பல்வேறு சிலந்திகள் தனது உமிழ்நீரினால் சுழற்சியான வலைகள் கட்டுவது இரைகளைப் பிடிக்கவே. சில வகை சிலந்திகள் தம் உமிழ்நீரினை இரை மீது துப்பி அவற்றை உண்ணுகின்றன. சிலவகை சிலந்திகள் பசிக்கும் போது வெளியே வந்து கிடைக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன. சில சிலந்திகள் இரைகள் நகர முடியாமல் பிடித்துக்கொள்ளுமாறு உமிழ்நீரை உமிழ்ந்து அதில் இரைகள் நடக்கிறதா என்று ஒரு முனையை தன்னிடம் வைத்துக்கொண்டு காத்திருக்கும். இரை மாட்டிக்கொண்டபின் மற்றொரு முனையை இழுத்து அவற்றை உண்ணும். சில வகை சிலந்திகள் பூக்களின் மீது அமர்ந்து, தேனுண்ண வரும் பூச்சிகளை உணவாக்கிக் கொள்ளும். சிறிய வலை அமைத்து அதில் அமர்ந்து இருக்கும் சிலந்திகள் வலையினை கடந்து செல்லும் பூச்சிகள் மீது உமிழ்நீரை உமிழ்ந்து வலையினுள் இழுத்துத்தள்ளி உட்கொள்ளும். மற்ற சிலந்திகளின் வலையில் சிக்கிய இரையினை கொள்ளையடித்து திருடித்தின்னும் சிலந்திகளுக்கு கொள்ளைச்சிலந்தி என்று பெயர். சிலந்திகள் தம் வலையையும், தம்மையும் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு தற்காப்பு தந்திரங்களைக் கையாளுகின்றன. சில சிலந்திகள் சூழலுக்கு ஏற்றாற் போல நிறம், வடிவம் போன்றவற்றையும் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றன. சிலந்திகளில் சில சுருள்சுருளாக வலைப்பின்னல் இழையை பறவைகள் பார்க்குமாறு தொங்க விடுகின்றன. இவற்றைக் காணும் பறவைகள் வேறு புறம் பறந்து சென்று விடுகின்றன. அவற்றில் சில சிலந்திகள் காய்ந்து நிறம் கலைந்த அழுகிய இலைகள் (அ) குச்சிகள் (அ) வறண்ட இலைகளை வலையில் வைத்து வலையைக் காத்துக் கொள்கின்றன. பறவைகள், பூச்சிகள், ஊர்வன விரும்பாத எறும்புகளை ஒத்தவற்றை வலையில் வைத்துக்கொள்ளும் சிலந்திகளும் உண்டு. ஆண் சிலந்தி, பெண் சிலந்தியைக் காட்டிலும் சிறியதாக இருக்கும்போது அவை தம் இணையான பெண் சிலந்தியால் இரையாக உண்ணப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஆண் சிலந்தி பல்வேறு தந்திரங்களைக் கடைபிடித்து தான் உண்ணப்படும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்கிறது. சில சமயங்களில் வலைகளின் இழைகளைத் தட்டி (அ) இழுத்து ஆண் சிலந்தி தான் இரையோ, எதிரியோ அல்ல, புணர்ச்சிக்கான இணை என்று உணர்த்த முற்படுவதும் உண்டு. சில சிலந்திகள் தம் பெண் இணைக்கு பூச்சிகளை உமிழ்இழையில் கட்டி பரிசாக அளிப்பதுண்டு. பின் இதனையே மற்றொரு பெண் சிலந்திக்கும் அளிக்க முற்படுகின்றன ஆண் சிலந்திகள். பூச்சிகளின் உயிரற்ற வெற்று உடல் கூட்டை காட்டி தம் பெண் இணையை ஏமாற்றி உறவு கொள்வதுமுண்டு. தம் உமிழ்இழையால் பெண் இணையைக்கட்டி, அவற்றோடு உறவு கொண்டுவிட்டு விடுவிப்பதும், பெண் இணைகள் பசியோடு பல வாரங்கள் கிடந்து இரைதேடி உண்ணும்போது அவற்றோடு ஆண்சிலந்தி உறவு கொள்ளும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணை விட ஆண் சிலந்தி சிறியதாக இருப்பதால், உறவு கொண்டபின் அவை உயிரோடு இருக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. சிலந்திகள் இயல்பாக இயற்கையிலேயே தனிமையாக இருக்கும் வாழ்வினைக் கொண்டவை. சிலந்திகள் ஒவ்வொன்றும் தனக்கான வலையினைத் தாமே அமைத்துக்கொள்கின்றன. சிறிய சிலந்தி ஒன்று, மற்றொரு சிலந்தியின் வலையில் விழுந்துவிட்டால் எது பெரிய சிலந்தியோ, அது சிறியதைக் கொன்று தின்றுவிடும். சில சிலந்திகள் ஒரே வலையில் கூட்டாக ஒன்றாகவே வசிக்கும். அவை சமூகச் சிலந்திகள் என்றழைக்கப்படும். சில சமயங்களில் நூறு (அ) ஆயிரம் சிலந்திகள் வளர்ந்தவை, குழந்தை சிலந்திகள் என ஒரே வலையில் வசிக்கும். சிறிய இரை ஒன்று கிடைத்தாலும், அனைத்து சிலந்திகளும் அவற்றைப் பகிர்ந்து உண்ணும். சிலந்திகளின் இனப்பெருக்க வேகம் அதிகம். உறவு கொண்டபின், முட்டைப் பையானது பெண் சிலந்தியின் உடலில் உருவாகி வளரத் தொடங்கிவிடும். இதனை சிலந்தி தலைக்கும் வயிற்றுக்கும் இடையிலான பகுதியில் வைத்திருக்கும். கரு முட்டை வளர்ச்சியுறுவது சிலந்தியின் வகையினைப் பொறுத்ததே. பதினைந்து அல்லது இருபது நாட்களில் எண்பது விழுக்காடு முட்டைகள் குஞ்சு பொரித்துவிடத் தயாராகும். புதிதாய் பிறந்த குழந்தை சிலந்திகள் முதலில் பெற்றோர்களை ஒத்திருப்பது போல் தோன்றும்; அது சிறியதாக இருக்கும் வரைதான். விந்தணுக்களின் உதவியால் ஒருவாரம் (அ) பத்துநாட்களில் கருப்பைக்கு புதிய முட்டைகள் வந்து வளரத் தொடங்கிவிடும். இதுபோல பெண் சிலந்தி மூன்று அல்லது நான்குமுறை உறவு கொள்ளாமல் குஞ்சு பொரிக்கும். பின் முட்டைகளை அனைத்தையும் பொரித்து முடித்ததும் உறவு கொள்ளத் தயாராகி விடும். சிலந்திகள் மிகச்சிறந்த முறையில் இயற்கையிலேயே அமைந்த பூச்சிகள் கட்டுப்படுத்தும் உயிரியாகும். சிலந்திகள் பூச்சிகள் என்று கவனம் கொள்ளாமல் வேதிப்பொருட்களை பயன்படுத்தினால், அவற்றின் பின்னே மனிதர்களும் பூமியிலிருந்து மறைந்து போக வேண்டியதிருக்கும் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்?           சிலந்திகளின் பராமரிப்பு சிலந்திகள் தன் இனத்தை சார்ந்த மற்ற சிலந்திகளையே உணவாகக் கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே அவற்றை குஞ்சு பொரித்ததும், தனித்தனியாக புட்டிகளில் அடைத்து வைத்து வளர்க்க வேண்டும். ஒன்றாக வைத்தால் தமக்குள்ளேயே சண்டையிட்டு மடிந்துவிடும். சிலந்திகள் வெளியே தெரியும்படியான புட்டிகளில் அவற்றின் வகையைப் பொறுத்து அடைத்து வைக்கலாம். புட்டிகளில் காற்றுக்காக மூடியில் சிறு துளைகளிட்டும், உணவிற்கு பூச்சிகளை உள்ளிடத் தேவையான அளவு பெரியதாக துளையிட்டும், அத்துளையினை பருத்தித் துணியினால் அடைத்துவைக்க வேண்டும். குழந்தைப்பருவ சிலந்திகள் பூச்சிகளின் லார்வாக்களை உண்ணும். பின் வளர, வளர பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை உண்ணத் தொடங்கும். இரைகளை வைத்திருக்கும் புட்டிகளை நன்கு சலவைத்தூள் மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தி வெயிலில் காய வைக்கவேண்டும். ஓரளவு வளர்ந்துவிட்ட சிலந்திகளின் இடத்தில் தண்ணீர் (அ) எண்ணெயை வைத்தால் எறும்புகளின் வருகையைத் தவிர்க்கமுடியும். வயது வந்த சிலந்திகள் உணவு உண்ணுவதற்கு முன்னே அவை உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். சிலந்திகள் அறை வெப்பநிலையைப் பொறுத்துக் கொள்ளக் கூடியது. உணவு பால்பொடி, நடுத்தர அளவிலான பருத்தித்துணி, தண்ணீரோடு கலந்து கொள்ளவேண்டும். தினமும் ஒரு சிறு கரண்டி பால்பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும். டிரோஸ்பிலியா லார்வா: கால்பகுதி கோதுமை மாவு மற்றும் நடுத்தர அளவிலான இரு வெல்லத்துண்டுகள் இவற்றை இரு குவளை நீரில் வேகவைக்க வேண்டும். மரம் அல்லது இரும்பு வலைகள் கொண்ட பெட்டியில் மேற்கூறிய உணவையும், பூச்சியினையும்(ஈ) சிறு கிண்ணத்தில் வைத்து, கூண்டில் வைக்கவேண்டும். உணவில் பூச்சிகள் முட்டையிட்டுவிடும். த்ரைபோடியம் லார்வா: ஒரு வாளியில் ரவை (அ) மைதாவை உள்ளிட்டு வாளியின் மூடியில் காற்றுக்காக துளையிட வேண்டும். பின் சிறிது நீரை மைதா (அ) ரவையில் விட்டு வர வேண்டும். தேவையான அளவு புழுக்கள் உருவான பின் அதனை எடுத்துக்கொள்ளலாம். கரப்பான் பூச்சிகள் வாளியில் கரப்பான் பூச்சிகளை உள்ளிட்டு காற்றுக்காக பெரிய துளைகளிட்டு அவை சிறு வலைப்பின்னல்களால் அடைக்கப்படவேண்டும். சில காகிதச் சுருள்களைச் செங்குத்தாக வாளியில் வைத்தால் அவை அதில் ஏறி நிற்க உதவியாக இருக்கும். 10 முதலைப்பட்டாளத்தோடு போர் டிசம்பர் மாதம் நான் வெகுநாட்களாக ஆண்டு முழுவதும் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருந்த வாய்ப்பு நிகழுமா என்று மனம் அலைவுற்றிருந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. மாமல்லபுரத்திலிருந்த முதலைப் பண்ணைக்கு செல்வதற்கான இறுதிகட்ட வேலைகளைச் செய்யத் தொடங்கியிருந்தேன். முதலைப்பண்ணையை கவனிக்கும் ரோமுலஸ் விட்டேகர் எனும் புகழ்பெற்ற பாம்பு பிடிப்பவருக்கு, நான் அங்கே வந்து தங்குவதற்கு அனுமதி கேட்டு அப்பா மூன்று மாதங்களுக்கு மேலாக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். கடிதங்களுக்கு எந்த பதிலும் வருவதாயில்லை. ரோமுலஸ் அதிக பயணங்கள் மேற்கொள்பவர் மேலும் விலங்குகள் தொடர்பான பணிகளில் மூழ்கிக் கிடக்கும் ஒருவருக்கு கடிதம் படித்து, அதற்கு பதிலெழுத நேரமிருக்குமா என்ன? முன்பிருந்த ஈடுபாடும், ஆர்வமும் மெல்ல வடிந்து ஏமாற்றமடைந்து, நிறைவேறாத பயணத்தை நினைத்துக்கொண்டிருக்கும் போது, முன்பு ஜெய்ப்பூரில் தங்க உதவிய ஸ்ரீலதா சுவாமிநாதன் அவர்கள், தனது தங்கை மாமல்லபுரத்தில் வசிப்பதாகவும் அங்கு தங்கிக்கொள்ள முடியுமா என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறார். தொலைபேசி அழைப்பில் அனைத்தும் ஒழுங்கமைவானதாகத் தோன்றியது. மனோ மாமா வீட்டிலிருந்த போது இந்த தகவலைக் கூறிய அப்பாவின் குரலைக் கேட்டதும் துள்ளிக்குதித்தபடி, அப்போதே கிளம்ப முடிவு செய்துவிட்டேன். மனோ மாமாவின் உறவினரான பாபு முதலைப்பண்ணைக்கு டிசம்பர் ஒன்பது அன்று அனுப்பி வைத்தார். அங்கு இருந்த அற்புதமான ஒரு மாதத்தை இன்றும் மறக்காமல் நினைவு கொண்டிருப்பதற்கு ஒரே காரணம், அப்போது நான் ஆதிமனிதன் போல் காட்டில் வாழ்ந்தேன் என்பதே. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீடு திரும்ப வேண்டி இருந்த போது, என்னை முதலைப்பண்ணையில் இருக்கவிடுங்கள் என்று நான் அவர்களிடம் கெஞ்சி, அவர்கள் அதற்கு அனுமதி தந்தது ஏழாவது சொர்க்கத்தில் இருப்பது போல் என்னை மிதக்கவைத்தது. மார்ச் மாதம் நான் மீண்டும் முதலைப்பண்ணைக்கு (சிறிது நாட்கள்) சென்ற போது அது முதலைகளின் இனப்பெருக்க காலமாக இருந்தது. மாமல்லபுரத்தில் உள்ள முதலைப்பண்ணை சென்னையில் இருந்து முப்பத்தேழு கி.மீ தூரம் தொலைவில் இருந்தது. மிகப்பெரிய இடமான பண்ணை கடலுக்கு சிறிது முன்னே அமைந்திருந்தது. முதலைப்பண்ணையில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்ந்து வந்தன. அவற்றிற்கான இருப்பிடக் குழிகள் பல்வேறு அளவுகளில் வெட்டப்பட்டு, சரிவான சுவர் மூலம் வெளியே வந்து தண்ணீர் பருக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சரிவான சுவற்றில் சூரியக்குளியலும் முதலைகள் செய்துகொண்டிருந்தன. சில பெரிய முதலைகள் தனித்தனியான குழிகளால் பிரிக்கப்பட்டு இருந்தன. பொதுவாக ஆண், பெண் என இருபால் முதலைகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. குட்டி முதலைகள் உள்ளிட்ட பல பிரிவு முதலைகளும் பெரிய வேலி ஒன்றினால் பிரிக்கப்பட்டிருந்தன. முதலைகளோடு பாம்புகளுக்கும் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டு வந்தது. பாம்புகளின் மீது தனிப்பிரியம் கொண்ட இயக்குநர் ரோமுலஸ் விட்டேகர், அறியப்படுவதே பாம்பு மனிதர் என்றுதானே! சென்னை பாம்புப் பூங்கா தொடங்கி பல ஆண்டுகள் ஆன போதும், அவரின் பெயர் இவ்வாறுதான் வழங்கப்படுகிறது. முதலைப்பண்ணையில் பெரிய பாம்பு வளைகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு வகையான பாம்புகள் அதில் வாழ்ந்து கொண்டிருந்தன. பாம்புகளின் நஞ்சு இருளர்களால் எடுக்கப்பட்டு அவை வளர்க்கப்படுகின்றன. பாம்புகளின் பகுதியை பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க தனிக்கட்டணம் செலுத்தவேண்டும். நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் ( ராஜ நாகம்) பானைகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டு அறைகளில் இருந்தன. முதலைப்பண்ணையில் வளைகள், வேலிகள் கொண்டு பிரிக்கப்பட்டு கடல் ஆமைகள் மற்றும் மீன் பண்ணையும் இருந்தன. வளாகத்தின் ஒரு முனையில் நூலகம் ஒன்றிருந்தது. அதில் சூழல் மற்றும் உயிரிகள் குறித்த புத்தகங்கள், மாத இதழ்கள் என நிறைந்திருந்தன. இதற்கு அடுத்தாற்போல முதலைப்பண்ணையில் ஆராய்ச்சி செய்பவர்கள், விருந்தினர்கள் தங்கிச் செல்வதற்கான குடியிருப்புகள் இருந்தன. நான் சென்றிருந்த சமயம் வெளிநாட்டினர் சிலர் அங்கே தங்கியிருந்தனர். தங்குவதற்கான குடியிருப்புகள் ஒரு படுக்கை, மேசை, நாற்காலி, குளியல் அறை, கழிவறை என்று எளிமையாகவும், தேவையானது மட்டும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. நான் அந்த அறைகளில் ஒன்றில் தங்கிக்கொண்டேன். இருளர்களின் குடியிருப்புகள் பாம்பின் வளைகளுக்கு அருகே அமைந்திருந்தன. பண்ணையில் நிரந்தர பணியாளர்களான இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் பிறரின் வீடுகள் வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தன. பண்ணையில் தங்கியிருந்த காலத்தில் பல மனிதர்களின் தோழமையும் அன்பும் கிடைத்தது. பண்ணையின் இயக்குநரான ரோம் என்று அழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர், அவரது மனைவி சைய் விட்டேகர், அவரது மகன்களான சமீர், மற்றும் நிகில், துணை இயக்குநரான கேரளாவாசியான ரோமைன், அவரது துணைவி மற்றும் அவர்களது மகனான தரக், பெங்களூர்வாசியான ஜெர்ரி மற்றும் பலரிடமும் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. முதலைப்பண்ணையில் எனக்களிக்கப்பட்ட முதல் வேலை இரண்டு அடி நீளமுள்ள தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடல் ஆமையை பராமரிப்பதுதான். அதன் காலில் மருந்தைத் தடவி கட்டுப் போட்டுவிட்டேன். பின் இதே சிகிச்சையைத் தொடர்ந்து செய்தேன். பின் அதற்கு உணவாக முட்டைகோஸூடன் நீரும் அளித்தேன். கடல் ஆமைகளைத் தொடர்ந்து உடும்புகளுக்கு உதவச் சென்றேன்( எ.கா உடும்பு உள்ளிட்ட விலங்குகள்). பச்சை நிற உடும்பை கையாள நேர்ந்தபோது, ஆச்சர்யமேற்பட்டது. அது எவ்வளவு பெரியது என்றால் அதன் வாலைக்கொண்டு, அதன் உடலை இரண்டு மூன்று முறை அளந்துவிடலாம் என்ற அளவிற்கு இருந்தது. தலையிலிருந்து வால்வரை இரண்டரை மீட்டர் நீளம் இருக்கும். நீண்டகாலமாக பண்ணையில் உள்ள விலங்கு என்பதால் எளிதாக பழகும் தன்மையுடையதாக இருந்தது. கூர்மையான ரகங்களையும், சுழலக் கூடிய தலை மற்றும் வாலினைக் கொண்டிருந்தது. சில சமயங்களில் சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தால், உடும்பைத் தூக்கிச் சென்று உப்புத்தாள் போன்ற உடலைத் தொட்டுணரச் செய்வேன். துணை இயக்குநரான ஹாரி கூறியதுதான் என்னை ஆச்சர்யப்படுத்திய செய்தி, உடும்பிற்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது என்பதுதான் அது. சில சமயங்களில் பெரிய உடும்புகளையும் கையாள நேர்வதுண்டு. அவை பலம் வாய்ந்த உடலையும், கூரிய நகங்களையும் கொண்டு கடித்துவிடக்கூடிய அபாயம் நிறைந்தவை. ஒவ்வொரு முறை தன் வளையிலிருந்து தண்ணீருக்கு வேகமாகச் செல்லும் போது பிடிக்க முயன்றால், எம்பிக்குதித்து மிகச்சிரமப்பட்டு கடியிலிருந்து தப்பிப்பேன். தண்ணீருக்கு செல்லும் முன் அவற்றைப் பிடித்துவிட வேண்டும் என்று பின்னர் கற்றுக் கொண்டேன். அவற்றின் வழியை மறித்து பிடிக்க முயற்சித்தால் தலையை அசைத்து வாலை விசிறியபடி, நம்மை எச்சரிக்கும் விதமாக மூச்சுவிடும். அதோடு அவை வேகமாக ஓடி மரத்தில் ஏறிவிட்டாலும் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. விரைவிலே அவை பயந்த இயல்புடையன என்பதையும், நீரில் அவற்றை எளிதில் பிடித்திட முடியும் என்பதையும் அறிந்துகொண்டேன். முதலைப்பண்ணையில் பல்வேறு விலங்குகள் வசிப்பதால் அவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி, அளவு, வகை என்பதைப் பொறுத்து எண்களிட்டு வளைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வளையிலும் நீர் இருப்பது அவை குளிக்கவும், குடிப்பதற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தான். முதலைகளுக்கு திறந்தவெளியாக நீர்நிலை இருக்கும். உடும்புகளுக்கோ முற்றிலும் மரங்கள் சூழ்ந்த சூழல் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏறி அமரவே இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் வளைகள் இருக்கும் பகுதிகளிலே மரங்களின் கிளைகள் முடிந்து விடுவதால் அவை வேறு மரத்தின் கிளைகளுக்கு தாவிச் செல்வது இல்லை. மிக உயரமான கிளைகளுக்கும் செல்வதில்லை. குட்டையிலுள்ள பெரிய உடும்புகளைப் பிடிக்க, இடுப்பு அளவு நிறைந்துள்ள நீரில் அதன் தலை (அ) உடல் (நீரில் அவை அதிகம் கிடைப்பதில்லை). அதன் வால் கையில் தட்டுப்பட்டதும் மெல்ல அதனை உயர்த்தி, அதன் கழுத்தைப் பிடித்து மெல்ல தூக்கவேண்டும். அதன் கழுத்து பெரியது என்பதால் அதனைத் தூக்குவது முதலில் கடினமாகவே இருந்தது. நிலத்தில் அதன் வாலை விரைவில் பிடித்து, அதன் கடியைத் தவிர்க்க, நாம் நம் நிழலை விட வேகமாக செயல்பட்டு கழுத்தைப் பிடிக்கவேண்டும். ஒரு முறை மரத்திலிருந்த உடும்புகள் சில தேவைப்பட்டபோது, பணியாளர் மரத்தில் இரண்டு மாடி உயரத்திலிருந்த அவற்றில் ஒன்றை நீண்ட குச்சி ஒன்றினால் தள்ளிவிட, அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்த உடும்பு எந்தக் காயமும் படாமல் வேகமாக ஓடத்தொடங்கின. ஒருநாள் ஜெர்ரி ஆணழகனான நிகிலிடம் பல்லியை வளையைவிட்டு, நகர்த்திக்காட்டு பார்ப்போம்! என்று சவால்விட்டார். முதலில் உடும்பின் வாலைப் பிடித்தாலும், பிறகு கடும் பிரயத்தனங்களைச் செய்துமே விலா எலும்புகள் இறுகி நெளிய நிகிலால் ஒரு அங்குலம் கூட அதனை அசைக்க முடியவில்லை. காலை வேளைகளில் முதலைகளின் வளைகளை சுத்தப்படுத்த பணியாளர்களுடன் என்னையும் இணைத்துக்கொண்டு வேலை செய்வதை அனுபவித்து செய்தேன். முதலைகளின் வளைக்குள் பெரிய குச்சிகளுடன் இறங்கி, அவற்றை நீர் நிலைக்கு கூட்டிச் செல்வோம். முதலையை கழுவி சுத்தப்படுத்திய பின்பு எலும்புகள் நிறைந்த இறைச்சியினை உணவாக அளிப்போம். ஆண் பணியாளர்கள் முதலைகளை நீருக்கும் அழைத்துச் செல்லும் பணியினைச் செய்வார்கள். பின் அங்கிருந்த மூன்றிலிருந்து, நான்கு பெண்கள் அவற்றின் உணவுக்கூடைகள், வளைகளைச் சுத்தம் செய்வார்கள். முதலைகள் அவற்றை நாங்கள் நீர்நிலைக்கு அழைத்துச் செல்வதை பெரிதும் விரும்புகின்றன் என்பதை அவை எங்களுக்காக காத்திருக்கும் முறையிலேயே தெரியும். சில சமயங்களில் முதலைகள் திருட்டுத்தனமாக ஓடி தன் சக தோழர்களைப் பார்க்கவும் சென்றுவிடும். நான் இருந்த சமயத்தில் முதலைப் பண்ணையில் ஏழாயிரம் முதலைகள் வளர்க்கப்பட்டு வந்தன. முதலைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அனைத்துமே சாகச அனுபவம்தான். ஒருநாள் ரோம் மற்றும் ஹாரி என இருவரும் பெரிய காரியல் இன் முதலை ஒன்றினை அதன் வளையிலிருந்து மாற்றி வேறொரு வளைக்கு கொண்டு போய் விட முடிவு செய்தார்கள். இனப்பெருக்க காலத்தின் போது மற்றொரு முதலையோடு சண்டையிட்டு அதன் மேல்தாடை உடைந்து போய்விட்டதுதான் காரணம். சாதாரணமாக முதலையினைப் பிடிக்க நங்கூரத்தினை ஒத்த கருவி ஒன்றினை அவற்றின் மீது வீசி அவை மாட்டிக்கொண்டதும் இழுக்கவேண்டும். நங்கூரம் மாட்டிக்கொண்டதும் பத்திலிருந்து பதினைந்து ஆட்கள் முதலைமேல் அமர்ந்து பிடித்துக்கொள்ள வேண்டும். நீரில் இருக்கும் முதலையைப் பிடிக்க இது சிறந்த வழியாகும். அதன் வாய் ரப்பர் வளையங்களால் கட்டப்பட்டு இருக்கவேண்டும். அவற்றை ஏணியில் வைத்து கட்டி, இடமாற்றம் செய்யலாம். சராசரியாக வளர்ச்சியடைந்த இளம் வயது முதலை இருநூற்றைம்பது கிலோ எடையினையும், இரண்டு (அ) மூன்று மீட்டர் நீளத்தினையும் கொண்டிருக்கும். பிடிக்க பதினைந்திலிருந்து இருபது ஆட்கள் வரை தேவைப்படுவார்கள். முதலையினை நீர் குட்டையில் கயிறுகள், ரப்பர்வளையங்கள் கொண்டு பிடித்துவிட்டபின், இவற்றை கடைசியாக விடுவிக்கும் தைரியமான மனிதனை கண்டிருக்கிறீர்களா? அதன் வாய் கட்டினை அவிழ்த்ததுதான் தெரியும். நாம் திரும்பி பார்க்கும்போதுதான் தெரியும். தன் வீட்டிற்கான குடிநீரைப் பெறுவதற்கான புரட்சி ஓட்டத்தினையும் தாண்டி ஓடிச்சென்று பாதுகாப்பான நிலத்தை அடைந்திருப்பார். காரியல் ஆண் முதலையை மக்கர் இன பெண் முதலையின் வளையில் மாற்றிவைத்தபோது, ஹாரி நக்கலாக, ‘’நீ என்ன நினைக்கிறாய், நமக்கு புதிய காமர் குட்டி கிடைக்குமா? என்றார். முதலைகள் தம் இனத்திலுள்ள பெண்முதலைகளோடு மட்டுமே இணை சேருவதால், காரியல் முதலையும், மக்கர் முதலையும் ஒன்று சேர வாய்ப்பே இல்லை. காயம்பட்ட அந்த முதலை ஓய்வெடுக்கவும், காயங்கள் குணமாகவும் அவற்றை அந்த வளைக்கு கொண்டு வந்தோம். மற்றொரு முறை ஜாஸ் 3 எனும் பெயருடைய ஆண்முதலைக்கு பெண் இணை தேடும் படலம் தொடங்கியது. பதினாறு அடி நீளமுள்ள, உலகளவில் மூன்று (அ) நான்காவது இடத்திலுள்ள மிக நீளமான உப்புநீர் முதலை ஆகும். அதனால்தான் வெள்ளையர்களைக் கொன்று தின்னும் சுறா பற்றிய படத்தின் பெயரான ஜாஸ் 2 வை ஒட்டி, ஜாஸ் 3 என்று பெயரிடப்பட்டது. ஜாஸ் 3 தனது எல்லைக்குள் வரும் முதலைகள் என எதுவாக இருந்தாலும் கொன்றுவிடும் ஆக்ரோஷ குணத்தினால் தனியாக வசித்து வந்தது. ஜாஸ் 3 ன் வளையை சுத்தம் செய்யச் சென்றால், நீரில் இருந்தாலும் எங்களைத் தாக்க ஓடி வருவான். நாங்கள் அவனுக்கு அளித்த உடற்பயிற்சிகளை விட அவன் எங்களுக்கு அளித்தது அதிகம். முதலைப்பண்ணைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவனுக்கான துணைவியைத் தேடும் நேரம் வந்தது. எதிரே உள்ள பெண் முதலைகளின் வளையை எட்டிப்பார்க்க சரிவான சுவற்றினை எட்டி எட்டி பார்த்து முயற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தபின்தான் அவன் தயாராகிவிட்டான் என்று முடிவுக்கு வந்தோம். பெண் முதலையினைப் பிடித்து அதனை ஜாஸ் 3 ன் வளையில் தூக்கி எறிய முற்படும்போது, நான் அதனைச் சோதித்து பார்க்க விரும்புவதாகக் கூறினேன் (முதலைகளின் பாலுறவு குறித்து அறிய விரும்பியதுதான் காரணம்). முதலையைத் தொட்டு சோதிக்கும்போது உருண்டை வடிவிலான ஆணுறுப்பை உணர்ந்தேன். ‘’இது ஆண் முதலை’’ என்று கத்தினேன். ‘’நிச்சயம் இருக்காது’’ என்று ஜெர்ரி தானே சோதித்துவிட்டு, ‘’ஆமாம், ரோம் இது ஆண்தான் என்று கூறியவர், என்னிடம் ‘’ராகுல் இந்த விஷயத்தில் நீ சாம்பியன்தான் ஆயிட்ட’’ கூறி சிரித்தார். முதலைகளின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து யாருமே அதை ஆணா, பெண்ணா என்று கூறிவிட முடியாது. முதலைப் பண்ணையில் குறிப்பிட்ட வளர்ச்சியினை முதலைகள் எட்டியதும் அவற்றின் பாலினத்தை பணியாளர்கள் குறித்து வைப்பார்கள். அதன் உடலிலும் அடையாளக் குறி போடப்படும் என்றாலும் சிறிய முதலைகளில் பணியாட்கள் அடையாளம் போடுவதில் தவறு செய்து விடுகிறார்கள். அதற்கு உதாரணம் மேலே நடந்த நிகழ்ச்சிதான். என்னால் அந்த நிகழ்ச்சியை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. பெண் முதலை என்று ஆண்முதலையைத் தூக்கி ஜாஸின் வளையில் விட்டிருந்தால், ஜாஸ் அவனை சில நொடிகளில் துண்டு துண்டாக வெட்டி எறிந்திருப்பான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, முதலைகளை உடல்ரீதியாக பெண்தானா என்று ஒருமுறைக்கு இருமுறை சோதித்துப் பார்க்க ஆரம்பித்தோம். பெண் முதலைகள் என்று நம்பிய பின் ஆணாகிவிட்டால், நிலைமை மோசமாகிவிடுமே! பல முதலைகள் குட்டையில் ஆழமான இடத்திற்கு போய்விடுவதால் எப்படி அவற்றைச் சோதிப்பது என்று குழப்பமாக இருந்தது. நீரிலிருந்து முதலைகள் வெளியே வந்து நிலத்தில் இருக்கும்போது பிடித்துவிடலாம் என்று ரோம் சொன்னார். ஆனால் அது அவ்வளவு எளிதாக அமையவில்லை. எனவே வேறொரு முடிவிற்கு வந்தார். சில இரும்புக் கதவுகளை இணைத்து நல்ல அடர்த்தி கொண்ட வலையினை முழுக்க மூடுமாறு அமைத்தோம். அந்த இடத்தில் நீரை இரும்பு வலைகளுக்குள்ளான இடத்தில் நிறைத்தோம். இப்படி செய்தால் நீரில் உள்ள முதலைகள் நிலத்திற்கு வரும் என்று நம்பியே இதனைச் செய்தோம். ஆனால் யோசிக்கும் போது சிறந்த திட்டமாக இருந்தது, நடைமுறையில் சீர்குலைந்துபோனது. நிலத்தில் இருந்த முதலைகள் அனைத்தும் நீர் கொட்டி நிறைத்திருந்த இடத்திற்கு வந்து தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கின. ஒரு முதலை என் சக பணியாளரின் கையையும் கடித்துவிட்டது. முதலைகள் என் காலருகே இரும்பு வலையருகே இருந்தது அதிர்ச்சியான அனுபவமாக இருந்தது. சிரமப்பட்டு முயற்சி செய்த வேலையும் படுதோல்வியைச் சந்தித்தது வருத்தமாக இருந்தாலும், நிலத்திலிருந்த முதலைகளிலிருந்து ஒரு பெண் முதலையை ஜாஸிற்கு தேர்ந்தெடுக்க முயன்றோம். ஜாஸிற்கு இவ்வளவு ஆண்டுகள் கழித்து ஒரு பெண் துணை கிடைத்திருக்கிறது. அவள் ஜாஸின் நீளம், அகலம் என் இரண்டிலுமே பாதிதான் இருந்தாள். ஜாஸ் மிகுந்த எதிர்பார்ப்பு (அ) இயல்பாகவே ஆண்களுக்கு இருக்கும் ஆக்கிரமிப்பு உணர்வு என எதுவாகவும் இருக்கலாம், நாங்கள் அறியவில்லை. அவளை தன் தாடையின் கீழே வைத்துக்கொண்டு திரிந்தான். முதலையின் இறைச்சி சுவையாக இருக்கும் இல்லையா என்று கூறிவிட்டு, எப்போது வேண்டுமென்றாலும் அவள் கொல்லப்படலாம் என்று தரக் எதிர்பார்த்து காத்திருந்தான். ஆனால் அவன் நினைப்பு பொய்யானது. ஜாஸிடமிருந்து சில காயங்களோடு தப்பித்துக் கொண்டுவிட்டாள். அதிலிருந்து அந்த பெண் முதலை நீரையும், ஜாஸையும் பிளேக் நோய் கிருமி போல ஒதுக்கி வைத்துவிட்டாள். பின்பு, முதலைப்பண்ணைக்கு இரண்டாவது முறையாக வந்தபோது, அது இனப்பெருக்க காலமாக அமைந்திருந்தது. புதிய வளைகள் தினசரி தோண்டப்பட்டுக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு வளையும் நடுத்தர அளவுள்ள கூடை ஒன்றினை ஒத்திருந்தன. சாதாரணக் கோழிமுட்டையைக் காட்டிலும் முதலையின் முட்டை மூன்று மடங்கு பெரியதாகவும், எண்ணிக்கையில் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வரையிலும் இருந்தன. பெண் முதலைகள் தம் முட்டைகளுக்கு காவலாக அந்த இடத்தை விட்டு சிறிதும் நகராது இருந்ததால் அவற்றை நீர்நிலைக்கு கொண்டுபோகச் செய்தே அவற்றின் வளையைச் சுத்தம் செய்ய வேண்டியதாகிப் போனது. முதலைப்பண்ணையில் புதிதாக ஒரு பிரச்சனை தலையெடுக்கத் தொடங்கியது. மக்கர் வகை முதலைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இருமுறை முட்டையிடும் அவை காட்டில் முட்டையிட்டால், பெரும்பாலான முட்டைகள் அவற்றின் எதிரிகளால் அழிக்கப்பட்டு சொற்பமே தப்பிப் பிழைக்கும். ஆனால் பண்ணையில் அவை செயற்கையாக இனப்பெருக்கம் செய்து முட்டைகள் பெறப்படுவதால், முட்டைகள் அழிவதற்கான வாய்ப்பே இல்லை. பண்ணையில் இனப்பெருக்க முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், அத்தனை முட்டைகளையும் நாங்கள் காலையுணவாக சாஸை மேலே ஊற்றி உட்கொள்ளத்தொடங்கிவிட்டோம். முட்டைகள் பலவும் அப்படியே உடும்புகளுக்கு உணவாக வழங்கப்பட்டது. சில பொழுதுகளில் இருளர்களோடு சேர்ந்து பாம்புகளைப் பிடிக்கச் செல்வேன். பழங்குடிகளான இருளர்கள் பாம்புகளைப் பிடிப்பதில் மிக நுட்பமான தேர்ச்சியும் வலிமையும் பெற்றிருந்தார்கள். இதற்கு முன்பு தோல் தொழிற்சாலைகளுக்காக பாம்பினைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதற்கு, அரசு தடை விதித்தபின் அவர்களின் வாழ்வு மிகவும் தடுமாறிப்போனது. இருளர்கள் விவசாயம் செய்ய நிலம் இல்லாதவர்கள். விவசாயமோ, பிற வணிகமோ அறியாதவர்கள் ஆவர். முதலைப் பண்ணை தொடங்கிய பின், திரும்பவும் அவர்கள் வாழ வழி கிடைத்தது என்றால் அது மக்களைக் காப்பாற்றவும், பாம்பின் நச்சினைப் பிரித்து எடுப்பதுமாக என்று அவர்களின் செயல்பாடுகள் பெரிதும் மாறிவிட்டிருந்தன. கடப்பாரை, சில துணிப்பைகள் என இருளர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள பாம்புகள் இருக்கும் வாய்ப்பான புதர்கள் போன்ற இடங்களிலெல்லாம் துழாவியபடி பயணித்தோம். கடப்பரை மூன்று விஷயங்களுக்குப் பயன்படுகிறது. மின்கல விளக்கை அதோடு கட்டி வளையைப் பார்க்கலாம். வளைகளைத் தோண்ட முடியும் பாம்புகளை எளிதில் கையாள முடியும். இருளர்கள் மற்றும் நான் என வெளியே செல்லும்போது பாம்புகள், கருந்தேள் இவற்றால் பாதிப்பு ஏற்படாதபடி செருப்புகளை அணிந்துகொண்டு கிளம்பினோம். இருளர்கள் பாம்பினை மட்டுமில்லாமல், எலிகளையும் பிடிப்பதிலும் கைதேர்ந்தவர்கள். வயல் வெளியில் பயிர்களை அழிக்கும் எலிகள் தம் வளையினை வரப்புகளின் ஓரத்தில் அமைத்து கொண்டிருக்கும். வளைகளில் எலிகள் சேமித்து வைத்திருக்கும் அரிசி போன்றவற்றை எடுத்து அதனுடன் எலியின் இறைச்சியையும் சேர்த்து உண்பார்கள். இந்த வேட்டை நீளமானதாகவும், வெம்மை மிகுந்ததாகவும், சோர்வு தருவதாகவும் இருந்தது என்ற போதிலும் இது போன்ற அனுபவங்களை வேறெங்கும் நான் பெற்றிருக்கவே முடியாது என்பதை பின்னர் உணர்ந்தேன். இருளர்கள் பாம்புகளை எப்படிக் கையாளுவது என்பதனையும் கற்றுக் கொடுத்தார்கள். இந்தியாவில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் நான்கினையும் கையாளக் கற்றுக்கொண்டேன் (எ.கா கண்ணாடி விரியன், நாக பாம்பு, மலைப்பாம்பு, கட்டுவிரியன்). பாம்புகள் பாதுகாப்பாக பானைகளில் அடைக்கப்பட்டு அதற்கான தனி அறையில் படுக்கையறை போல தோற்றமளிக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெளியே உள்ள பலகையில் ‘அபாயம் பாம்புகள் வெளியே உள்ளன’ என்ற வார்த்தைகளே அங்கு நுழைபவர்களை அச்சுறுத்தி தடுக்க போதுமானதாக இருந்தது. ஆனால் உண்மையில் பாம்புகள் அவிழ்த்துவிடப்பட்டால் பணியாளர்களின் மேற்பார்வையில்தான் இருக்கும். எறும்புகளிடமிருந்து பாம்புகளை பாதுகாக்க சிறு கால்வாய் ஒன்று அறை முன் வெட்டப்பட்டிருந்தது. உங்களால் நம்பவே முடியாது; ஆனால் உண்மை என்னவென்றால் பாம்புகளை எறும்புகள் அரித்துத் தின்று எலும்புக்கூடாக்கி விடும் வல்லமை பெற்றது. அதற்காகவே கால்வாய் மூலமான பாதுகாப்பு தேவைப்படுகிறது. அறைக்கு வெளியே ஒன்று (அ) இரண்டு மீட்டருக்குப் பிறகு, சிறிய சுவர், ஒரு மீட்டர் உயரம் இருக்கும். பாம்புகளை அழைத்துச் சென்று கால்வாயில் நீர் அருந்தச் செய்துவிட்டு, அவற்றின் பானைகளைச் சுத்தம் செய்வேன். இது போன்ற பயிற்சிகளே என்னை பாம்புகளை கையாளுவதில் என்னை மேம்படச் செய்ய உதவியது. பொதுவாக, அதன் வாலினைக் கையில் பிடித்துக்கொண்டு, பாம்புக் கொக்கியின் மூலம் அவற்றை கையாள முடியும்(பாம்புக் கொக்கி ஒரு முனையில் கொக்கி போன்ற அமைப்பை கொண்டிருக்கும்). எல்லோரும் முதலைப் பண்ணையில் செலவழித்த காலத்தைப் பற்றிக்கூறும்போது, கேட்கப்படும் மாறாத கேள்விகளில் ஒன்று கடிபட்டிருக்கிறாயா என்பதுதான். நிச்சயமாக, பலமுறை அனைத்துமே விபத்தாகத்தான் அவற்றைப் பெற்றேன். சில சமயங்களில் அந்தத் தாக்குதலை, கடியைக் கற்றுக் கொள்ளும் முனைப்பில் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு முறை பாம்பு ஒன்று என் மூக்கில் கடித்துவிட்டது. அதைத் தடுக்க முயன்றபோது ரோம் அதைப் பார்த்துவிட்டு, என் சட்டையில் படிந்திருந்த ரத்தத்தைக் கவனித்துவிட்டு ‘’அரைமணி நேரம்தான் விஷம் இருக்கும் கவலைப்படாதே’’ என்று கூறினார். பாம்பின் கடியினால் வலியில்லை என்றாலும் ரத்தம் நிற்காமல் மாநகராட்சி குடிநீர் குழாய் போல சொட்டிக் கொண்டே இருந்தது. என்னைக் கடித்த பாம்பு நச்சுத்தன்மையற்றது என்பதனால் தப்பித்தேன். இன்னொரு கடி பற்றிய நினைவு என்னவென்றால் குட்டி முதலையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அது சுற்றி வந்து என் கையில் கடித்துவிட்டது. யோசித்துப் பாருங்கள், மரம் அறுக்கும் ரம்பம் போன்ற பற்களால் கடிபட்டால் எப்படியிருக்கும் என்று? ஆனால் கடித்தது நான் விரும்பும் முதலையல்லவா! அதனால் நான் மகிழ்ச்சியே அடைந்தேன். ஜெர்ரி பிடித்து வந்திருந்த பாம்புகளுக்கு இரையாக சுவர் பல்லிகளை எடுத்துச் செல்லும்போது, அவை என்னைக் கடித்தபோதெல்லாம் ஊமையாகவே இருந்தேன். ஆனால் பயம் என்கைகளில் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. புனேவில் என் கையில் பாம்பு கடித்த கடியினால் கடிகாரம் கூட கட்டமுடியாமல் சிரமப்பட்ட நினைவுகள் மனதில் அலையடித்தன. முதலைப்பண்ணையின் நினைவாக நான் எடுத்துச் செல்ல முனைந்தபோது சிவப்புக்காது கொண்ட கடல் ஆமை கடித்ததில் என் சதையை என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. கடிபட்ட கரத்தை எந்தப் பணிக்கும் சிலநாட்கள் பயன்படுத்தவே முடியவில்லை. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர் பெற்ற பரிசுகளை ஒத்த கடிகளின் பெருந்தொகையினை நான் பெற்றிருக்கிறேன். உண்மையிலேயே இது முட்டாள்த்தனமான சிந்தனைதான் (சில கடிகள் கடுமையான வலியைத் தந்தன). ஒரு சிறிய நிகழ்ச்சி நினைவிலுள்ள தொடர்பானவற்றை அனைத்தையுமே வெளிக்கொண்டு வருகிறது. கடிகளின் மீது கொண்டிருந்த பயம் அதிக நாட்கள் என்னோடு இருக்கவில்லை. ஊர்வனவற்றை மிகக் கவனமாக கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கற்றிருந்தேன் என்பதோடு, நான் மிகக் கடுமையான கடிகளை பெறவில்லை. மேலும் கடி பட்டதற்கான மாற்று மருந்து, சிகிச்சை பற்றியும் அறிந்திருந்தேன். நடைமுறை அனுபவங்களை இன்னும் நெருங்கிக் கற்க பெரிய நூலகம் ஒன்று பண்ணையில் இருந்தது. முதலைகள், பாம்புகள், உடும்புகள், கடல் ஆமைகள் என பலவற்றைப் பற்றியும் படித்தேன். நான் ஒன்றைப்பற்றிய தகவல்களைத் தேடும்போது அவற்றை நான் கற்றுக்கொள்ளவோ (அ) பார்க்கவோ அன்று வாய்ப்பு கிடைத்துவிடும் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. மேலும் நான் கற்றுக்கொண்ட இவை என் தலையிலிருந்து அழிந்துபோக நான் இவற்றை தேர்வுக்காக மனப்பாடம் செய்யவில்லை என்பதையும் கூற விரும்புகிறேன். மற்ற நேரங்களையும் மகிழ்ச்சியாக வேடிக்கையாக கழிக்க வாய்ப்பிருந்தது. ஹாரியின் வீட்டிற்குப் போய் தரக்கும் நானும் பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்போம். ரோமின் வீட்டில் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். வயல் எலிகள், தவளை கால்கள், மீன்கள், கோழி, மாடு, சாக்லெட் கேக் என்று சாப்பிடுவோம். பின்புறமுள்ள கடலில் குளித்துவிட்டு, இரவில் நண்டுகளைப் பிடிப்போம். பண்ணையில் இருந்தபோது நடந்த சுவாரசிய நிகழ்வாக, நேஷ்னல் ஜியோகிராபி மாத இதழ் ராஜநாகம் பற்றிய படம் ஒன்றை தயாரிக்க வந்திருந்தார்கள். நான் அவர்களின் குழுவிற்கு உதவியாக விளக்குகளை ஒழுங்கமைப்பது, காட்சிகளின் கோணங்களுக்கு உதவுவது, காட்சிகளின் போது தப்பி ஓடும் தவளைகளைப் பிடிப்பது என்று செயல்பட்டேன். ஒரு சோம்பலான மாலைப் பணியின்போது தரக் எனக்கு முடிவெட்டிவிடுவதாகக் கூறினான். ஓராண்டாக கத்தரிக்கோல் தலையில் படாததால், முடி என் தோளில் தொட்டு ஆடிக் கொண்டிருந்தது. தரக் தனக்கு ஒன்றரை மாத அனுபவம் முடிவெட்டுதலில் இருக்கிறது என்று கூறியதை எப்படி புத்தி மழுங்கி நம்பினேன் என்று தெரியவில்லை. நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் ‘விலையில்லாத’ முடி வெட்டுதல் மற்றும் புதிய அமைப்பிலான முடி ஆகியவற்றை கற்பனை செய்துகொண்டு அமர்ந்திருந்தேன். தரக்கிற்கு எனக்கு எப்படி முடிவெட்ட வேண்டுமென்று மிக விரிவாக விளக்கம் கொடுத்தபோது, சிலவற்றிற்கு தலையசைத்து, சிலவற்றிற்கு ஆட்சேபணைகளைத் தெரிவித்து பின் ஆலோசனைகளைக் கூறினான். கத்தரிக்கோல், சீப்பு, ஷேவிங் பிளேடுமாய் வேலையைத் தொடங்கினான். முடிந்துவிட்டது என்று கூறி கண்ணாடியை என் கையில் தரக் கொடுக்கும்வரை நான் அப்படி ஒரு கோரமான ஒருவனை என் வாழ்நாளிலேயே பார்த்திருக்கவில்லை. கண்ணாடியில் பார்த்த என்னால் கூட அது நான்தானா என்று உறுதியாகக் கூற முடியாதபடி வாக்காளர் அட்டை புகைப்படத் தரத்தினையும் கீழே தள்ளி தரக்கின் கைவண்ணம் அமைந்திருந்தது. முக்கோணம் போல முடி வெட்டப்பட்டு தீவுகளாகவும், முன்தலையில் முடி வெட்டப்படாமல் நீளமாகவும், சில இடங்கள் மழிக்கப்பட்டும் எந்த ஒரு ராப் இசைப் பாடகனைவிடவும் படு கேவலமாயிருந்தேன். பிறகுதான் முடிவெட்டுதல் பற்றி தரக்கிற்கு எதுவும் தெரியாது என்ற பேருண்மையை அறிந்தபோது சற்று தாமதமாகிவிட்டது. தரக் தன்னுடைய முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறான் என்று அப்போதுதான் எனக்கு உரைத்தது. வேறு வழியே இல்லாத நிலையில் மொட்டை அடித்துவிட முடிவெடுத்து, சரியான நாவிதரின் மூலம் தலையை மழித்துவிடச் செய்தேன். முடி இல்லாதது சுதந்திர உணர்வையே தந்தது. முடி இல்லாத நிலையில்தான் பண்ணையில் இருந்த பல புகைப்படங்களை எடுத்திருப்பேன். பலதிலும் இதே வேடத்தில்தான் பதிவாகியிருப்பேன். முதலைப் பண்ணையிலிருந்து கிளம்பும் நேரம் வந்ததும், அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, திரும்ப வருவேன் என்றும் உறுதியளித்தேன். என்னோடு சிவப்பு காதுகள் கொண்ட கடல் ஆமை ஒன்றுடன் சில கடல் ஆமை முட்டைகளையும், பண்ணையின் நினைவாக எடுத்துக்கொண்டேன். பேருந்தில் இரவில் பயணித்து பெங்களூரை அடைந்தேன். என் காலடியில் ஆமையை வைத்துவிட்டு, அவள் சுவாசிக்க பெட்டியில் சிறிய துளையிட்டு வைத்திருந்தேன். திடீரென அட்டைப்பெட்டி காலியாகக் கிடந்தது. அவளோ பேருந்தின் கதவை நெருங்கிவிட்டிருந்தாள். தூங்கி கொண்டிருந்த பயணிகளுக்கு தொந்தரவு வராமல், அவளை தூக்கி வந்து பெட்டியில் வைத்தபோது, சிரித்தபடி ஒரு முதியவள் கேட்டாள் ‘’ஏம்பா வாட்டர் பாட்டில கீழே விட்டுட்டியா?’’     களப்பணிக்குறிப்புகள் முதலைகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏன் மனிதனுக்கு முன்பாகத் தோன்றிய உயிரினங்களான முதலைகள், இன்று அழிவைச் சந்தித்துக்கொண்டு இருக்கின்றன. பல்வேறு புனைவுகள் அவற்றைப் பற்றி உள்ளன. சிறிதளவே அவை பற்றி பலரும் அறிந்துள்ளனர். இயற்கையில் இவற்றின் இருப்பு எந்த பயன்பாடுகளையும் தருவதில்லை என்று எண்ணத் தலைப்படுகின்றனர். இந்த விலங்கினங்கள் எவை? முதலைகள், அலிகேட்டர் வகை முதலைகள், உடும்புகள். உலகமெங்கும் இருபத்தொரு முதலைகள் மற்றும் அலிகேட்டர் முதலைகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் மூன்று வகை முதலைகள் கண்டறியப்பட்டுள்ளன. காரியல்ஸ் -     மீன் உண்ணும் முதலைகள் மக்கர்ஸ் உப்புநீர் முதலைகள் மிகப்பெரியதும், அதிக ஆபத்தையும் ஏற்படுத்தும் முதலைகள் எவை என்றால் அவை இருபத்தைந்து அடி நீளம் வளரும் உப்புநீர் முதலைகள்தான். இந்த முதலை மட்டுமே கடலில், அதிக காலம் வாழக்கூடிய ஒரே முதலையாகும். ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி முதலைகள், உப்பு நீர் முதலைகளுக்கு அடுத்து ஆபத்தான முதலைகளாகும். அழிந்து போன மற்ற மூன்று முதலைகளின் படிமங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களுடன் இந்த குளிர்ந்த ரத்தம் கொண்ட விலங்குகள் பறவைகள், பாம்புகள், ஊர்வனவற்றைக் காட்டிலும் மிக நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளன. இவற்றின் உடலிலுள்ள குளிர்ந்த ரத்தமானது, நிழல், சூரிய வெப்பம் என பல்வேறு சூழல்களையும் சமாளிக்க உதவுகிறது. முதலைகள் அவற்றின் தாடைகளைத் திறந்து மூடுவதன் மூலம் தம் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக்கிக் கொள்கின்றன. முதலையின் கண்கள், மூக்கு, காதுகள் ஆகியவை ஒரே நேர் கோட்டிலான தலை மற்றும் நீண்ட மூக்கோடு ஒட்டி அமைந்துள்ளன. சிறந்த கண்பார்வை, கூடிய நுகர்வுத்திறன், கேட்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவற்றின் வால் நல்ல உறுதியான அமைப்பைக் கொண்டுள்ளதால் நீந்திச் செல்ல பெரிதும் உதவுகிறது. வளர்சிதை மாற்ற வேகம் குறைவு என்பதால் சில நாட்களுக்கு ஒருமுறை வேட்டையாடினால் போதுமானது. மேலும் அவற்றின் வளர்சிதை மாற்ற வேகத்தை குறைத்துக்கொண்டு, நீருக்கடியில் பல மணி நேரங்களுக்கு மேல் இருக்கக் கூடியவை. தேவையில்லாத அசைவுகளைக் குறைத்து வாழும் இவை தேவைப்படும்போது மிக வேகமாக இயங்கக் கூடியவை. சிறிய உப்புநீர் முதலைகள் அதிவேக பாய்ச்சலாக நாற்பத்தெட்டு கி.மீ வேகத்தில் மணிக்கு குறைந்த தொலைவுக்கு செல்லும் திறன் பெற்றவையாகும். சிறிய ஆறுகள், ஏரிகள், உப்புநீர், சாதாரண நீர்நிலைகள் வெப்பமண்டல நிலத்தில் என முதலைகள் காணப்படுகின்றன. குஞ்சு பொரித்ததும், குட்டி முதலை இருபத்தைந்து செ.மீ யிலிருந்து முப்பது செ.மீ வரை இருக்கும். சில ஆண்டுகளில் முழு வளர்ச்சியடைந்த ஆண் முதலைகளாக மாறும் இவற்றின் வளர்ச்சியும், அளவும் வயதைப் பொறுத்ததே. ஆண் முதலைகளின் வளர்ச்சி பெண் முதலைகளைக் காட்டிலும் வேகம் குறைவானது. காட்டின் சூழலில், பெண் முதலைகள் முழு வளர்ச்சியடைய ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளும், ஆண் முதலைகள் ஒன்பதிலிருந்து பதினொரு ஆண்டுகளும் எடுத்துக்கொள்கின்றன. காரியல் முதலைகள் முழுவளர்ச்சியடைய பனிரெண்டு ஆண்டுகளும், பெண் முதலைகள் எட்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரையும் எடுத்துக் கொள்கின்றன. சென்னை முதலைப்பண்ணையில் உள்ள பெண் முதலைகள் முழு வளர்ச்சியடைய நான்கு ஆண்டுகளும், ஆண்களுக்கு ஐந்து ஆண்டுகளும் தேவைப்படுகின்றன. சராசரியான வளர்ச்சியடைந்த மக்கர் வகை ஆண் முதலைகளின் நீளம் இரண்டு மீட்டர் ஆகும். பெண் முதலைகளுக்கு 1.6 மீட்டர் ஆகும். காரியல் மற்றும் உப்புநீர் முதலைகளில் ஆண் முதலைகள் மூன்றரை மீட்டரும், பெண் முதலைகள் மூன்று மீட்டரும் இருக்கும். இனப்பெருக்க காலம் சூழலைப் பொறுத்தே அமைந்து இருக்கிறது. இனப்பெருக்க காலத்தில் ஆண் முதலைகள் பெண் முதலைகளுடன் உறவு கொள்வதற்காக சண்டையிடும். சேர்ந்திருக்கும் காலத்தில் குமிழிகளை வெளியிட்டும், மூக்குகளை வெளியே நீட்டி, ஒன்றுடன் ஒன்று உராய்ந்தபடி சுற்றிவரும். ஒவ்வொரு வகை முதலையும், ஒவ்வொரு விதமான செயல்பாடுகளைச் செய்துவரும் (எ.கா காரியல் முதலைகள் உறவு கொள்ளும்போது அதிக அளவிலான சப்தத்தை வெளியிடும். ஆண் முதலை பெண் முதலையின் மீது அமர்ந்து நீருக்கடியில் உறவு கொள்ளும். முதலைகளின் தோராயமான கர்ப்ப காலம் முப்பத்தைந்திலிருந்து அறுபது நாட்களுக்கள் வரை ஆகும். மக்கர் முதலைகள் முப்பத்தைந்திலிருந்து நாற்பது நாட்களும் காரியல் மற்றும் உப்புநீர் முதலைகள் நாற்பதிலிருந்து அறுபத்தைந்து நாட்கள் வரையும் எடுத்துக்கொள்கின்றன. குஞ்சு பொரிப்பதில் சூழலின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை கரு உருவான நாளில் இருந்து ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக உள்ளது. முதலைகளுக்கான வளையை முப்பது செ.மீ அளவு ஆழமாகத் தோண்டி அதில் இலைகளிட்டு அவற்றின் முட்டையை வைத்தால் அடைகாக்க ஏதுவாக இருக்கும். வளையின் வெப்பநிலையை சமநிலைப்படுத்த நீரினைக் கொண்டு வந்து முதலை இறைக்கும். மக்கர் முதலைகளில் பெண் முதலைகள் இருபத்தியெட்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையும், ஆண் முதலை முப்பத்திரெண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை பராமரிக்கும். இருபால் முதலைகளும் சிறிது மாறுபட்ட வெப்பநிலையினை 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலிருந்து முப்பத்திமூன்று செல்சியஸ் வரை பராமரிக்கக் கூடியவை. முதலைகள் இயற்கையின் சமநிலை பிறழ்ந்து போகாமல் பாதுகாக்க உதவுகின்றன. இறந்து போன, அழுகிய விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலம், சுற்றுப்புறத்தை சுத்தமானதாக பேண உதவுகின்றன. நோயுற்ற, பலவீனமான, காயம்பட்ட விலங்குகளை முதலை உண்ணுவதால் இரைகளின் இனம் வலுவான தன்மை கொண்ட புதிய உயிரிகளைத் தோற்றுவிக்க இவை பங்களிக்கின்றன. வறட்சிக் காலங்களில் சிறிய குழிகள் மற்றும் சகதிகள் என முதலைகள் தோண்டி உருவாக்குவதால் ஆமைகள், மீன்கள் போன்ற உயிர்களுக்கும் நீர் கிடைக்கிறது. பல விலங்குகள் முதலையை உணவுக்காக நம்பியுள்ளன. வளைந்த அலகுடைய நீர் வாழ் பறவை, மற்றும் உடும்பு ஆகியவை நைல் நதி முதலைகளின் முட்டைகளை உண்டு வாழ்கின்றன. முதலைகள் நோய்த்தடுப்பில் சிறந்த தன்மையைக் கொண்டிருப்பதால் அவை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுகின்றன. 11 கற்பித்தலின் தொடக்கம் ஜனவரி மாதம் புதிய அனுபவங்களை வழங்கியது. அதற்கு காரணமாக அமைந்தவர் ஹார்ட்மன் டி சௌசா ஆவார். கோவாவிற்கு பெங்களூர் வழியாக செல்லும் போதுதான் ஹார்ட்மன் மற்றும் உஜ்வாலா எனும் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர்கள் பெங்களூரில் வசிப்பது நினைவுக்கு வந்தது. ஓராண்டு காலம் முடியும் வரையிலான கட்டம் வரை அவர்களின் வீட்டில் தங்கலாம் என்று நினைத்தேன். சில நாட்களை அங்கு செலவழித்துவிட்டுப் பின் வீடு திரும்பு என்பது பெற்றோர்களின் ஆலோசனையாக இருந்தது. பெங்களூரில் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து, அந்த இடம் எனக்கு பிடித்திருந்தால், மேற்கொண்டு என் பெற்றோர்களிடம் வீடு திரும்புவது குறித்துப் பேசலாம் என்று பொதுவான திட்டம் போட்டிருந்தேன். ஜனவரி மாதம் ஏழாம் தேதி பெங்களூரை நான் அடைந்த போது மணி ஒன்று நாற்பது ஆகியிருந்தது. பிங் (ஹார்ட்மனை நாங்கள் அழைக்கும் பெயர்) பேருந்து நிலையத்தில் தன் காரில் வந்து அழைத்து போனார். வீட்டுக்குப் போகும் வரையில் அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். அவரது வீட்டில் உஜ்வாலா, அவரின் குழந்தைகள் ஜூரி, அவளின் தம்பி ஜயீர் மற்றும் அப்போது இந்திய கலை அமைப்பிலிருந்த பிங்கின் சக பணியாளர் திருமதி கலையும் உடன் இருந்தார். குளித்துவிட்டு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்ததும் பிங் என் ஆர்வத்திற்கு சம்பந்தமான மனிதர்கள், இயக்கங்கள், அமைப்புகள் குறித்து பேசத் தொடங்கினார். வனம் குறித்த ஆர்வத்தை முன்னமே சந்தித்தபோது அவரிடம் வெளிப்படுத்தியிருந்தேன். நான் பிங்கின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, அவர் கூறும் மனிதர்களைச் சந்தித்து பின் அவர்கள் மூலம் வனம் தொடர்பான முக்கியமானவர்களைச் சந்திக்கலாம் என்று திட்டமிருந்தது. எனவே சில நாட்களை பலரைச் சந்தித்துப் பேசவும், பெங்களூரில் உள்ள பலரது முகவரிகளுக்கும் கடிதம் எழுதி வனம் பற்றிய தொடர்புடையவர்களைச் சந்திக்கவும் முயற்சித்தேன். பிங் ஒரு கடுமையான உழைப்பாளியும், கண்டிப்பான ஆசிரியரும் கூட. அவர் அவ்வளவு எளிதில் என்னை விட்டுவிடத் தயாராக இல்லை. சந்திக்கச் சென்ற நபர் அந்த இடத்தில் இல்லை அல்லது பெங்களூரில் இல்லை என்றால் அவர்களது முகவரிக்கு நான் எண்ணற்ற கடிதங்கள் எழுத பிங் ஊக்குவித்தார். இந்த செயல்பாடுகள் மூலம் வனவாழ்வு குறித்த பல்வேறு சிந்தனைகள், அறிவுறுத்தல்கள் என் பிற்கால வாழ்வுக்கு உதவுமா என்று ஆராய உதவின. சந்திக்கின்ற நபர்கள் ஏன் இயற்கை சார்ந்த இந்தத் துறையினைத் தேர்ந்தெடுத்தார்கள்? தேர்ந்தெடுத்த காலத்தினைப் போல இன்றும் அதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று கண்டறிய பிங் ஆலோசனை கூறினார். நான் சந்திக்கும் நபர்களிடம் என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டு தருவதற்கு பல பிரதிகள் அறிமுகக் கடிதங்களை பிங் தயாரித்துக் கொடுத்தார். எட்டு மாதங்களாக நான் செய்த செயல்பாடுகள் குறித்தும் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தது. சிறிய நேர்காணல் ஒன்றையும் சந்திப்பவர்களிடையே நிகழ்த்த இருந்தேன். நேர்காணலில் கேட்கவேண்டிய கேள்விகளைத் தயார் செய்தேன். பிங் முன்னமே நான் சந்திக்க வேண்டிய நபர்களிடம் முன்னனுமதி பெற்று தந்துவிட்டார். சில சமயங்களில் பல இடங்களுக்கு பிங்கே கூட்டிச் செல்வார். சில சமயங்களில் செல்ல வேண்டிய இடத்திற்கு நானே ரிக்சாவில் பயணிப்பேன். நான் சந்தித்த முதல் நபர் திரு. டி . பரமேஸ்வரப்பா வனத்தில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் (Principal Chief Concervator of Forests). நான் அவரின் வீட்டை அடைந்த போது மணி பதினொன்று நாற்பத்தைந்து ஆகியிருந்தது. சந்திக்க அனுமதி பெற்றிருந்தது மணி பனிரெண்டு முப்பதிற்கு ஆகும். மணி ஒன்று முப்பது வரை பரமேஸ்வரப்பா வரவேயில்லை. எனவே அவரது அலுவலகத்திலிருந்த புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அவர் வந்ததும், எனது ஓராண்டு கால செயல்பாடுகள் பற்றியும் பின்னர் எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்தும் பேசினோம். பட்டம் பெற்றபின், மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று தகுதிபெற்றால் பயிற்சியோடு பணியும் பெற்றுவிடமுடியும் என்று பரமேஸ்வரப்பா கூறினார். வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம் உள்ள தார்வாடு (அ) ஹெப்பலில் நான்காண்டு வனம் பற்றிய படிப்பை படிக்கலாம் என்றும், வனவாழ்வு ஆராய்ச்சி மையம் நடத்துகின்ற சிறு பட்டய படிப்புகளில் இணைவதன் மூலம் நிச்சயம் நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று விட முடியும் என்று கூறினார். அவரிடம் கேட்ட கேள்விகள் அதற்களித்த பதில்களையும் சுருக்கமாக கீழே தொகுத்திருக்கிறேன். கே: பனகர்கட்டா வனவாழ்வு சரணாலயத்தில் அதிகாரியாக தனியார் வழிகாட்டி சுற்றுலா சாத்தியமாகுமா? இல்லை. அங்கே சாதாரணமாக பயணிகளை சுற்றுலா கூட்டிச்செல்வதுதான் நடைபெறுகிறது. திரு. வெங்கடேஷ் துணைபாதுகாப்பு அதிகாரியைச் சந்தித்து எனது பெயரைக் கூறினால் பல தகவல்களை அவரிடமிருந்து பெறலாம். கே: சரணாலயத்திற்கான வழிமுறைகள் என்ன? அது ஒரு அரசு ஏற்படுத்துகின்ற அமைப்பு. அனைத்து பணிகளிலும் அதற்கான சரி, தவறு என்பது இருக்கும். கே: வனவாழ்வு தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு ஏதாவது பயிற்சி அளிக்கப்படுகிறதா? இந்தியாவில் அரசு இல்லாமல் தனியார் நடத்தும் சரணாலயம், மிருகக்காட்சி சாலைகள் இல்லை. வேலைவாய்ப்புகள் குறித்த எதுவும் அரசு அறிவித்தால்தான் உண்டு. பொதுவாக இத்துறையில் அது போன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகள் மிகக் குறைவு. அரிதானதே. கே: பனகர் கட்டா பூங்காவில் பணியாளர்களுக்கான பணிகள் என்னென்ன? அவர்களின் வேலை விலங்குகளைக் கவனமாக ஆரோக்கியமான நலனில் பார்த்துக் கொள்வதுதான் எ.கா உணவிடுவது, இருப்பிடத்தை சுத்தம் செய்வது என்பது போன்ற வேலைகள் இருக்கும். மற்றபடி ஆராய்ச்சி, பயிற்சிகள், விலங்குகள் குறித்து கிடையாது. கே: வனத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பதவியைப் பெற்றது எப்படி? தங்களின் பின்புலம் பற்றிக் கூறுங்கள்? உங்களைப்போலத்தான். படித்தேன். போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று வன அதிகாரியானேன். பின் அமெரிக்காவிற்கு சென்று இரு ஆண்டுகள் கழித்து வந்தபோது, தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வனத்துறையில் நியமிக்கப்பட்டேன். கே: பாம்புகளின் நச்சினைப் பிரித்து எடுப்பதற்காக பாம்புகள் பூங்காவினை அமைக்க முடியுமா? நிச்சயம் முடியும். அதற்கான உரிமம் (அ) அனுமதி, அங்கீகாரம் வாங்கிவிட்டால் போதுமானது. புனேவிலுள்ள பாம்புகள் பூங்கா விதிமுறைகளைப் பின்பற்றி உரிமம் வாங்கி செயல்படுகிறது. அவர்களுக்கு கடிதம் எழுதினால் அது பற்றிய தகவல்களைத் தருவார்கள். திரு. பரமேஸ்வரப்பா உண்மையிலேயே மிகவும் ஆதரவானவராகவும், நட்புகொண்டவராகவும் நடந்து கொண்டார். அவரைச் சந்தித்துவிட்டு திரும்பும் முன், இந்திராகாந்தி ஆராய்ச்சி நிலையம் மற்றும் டெஹ்ராடனில் உள்ள வனவாழ்வு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்கு முன்னமே அனுப்பியிருந்த கடிதத்தில் நகல் பிரதிகளை எடுத்துக் காண்பித்தேன். பெங்களூரில் SMILE (Students Mobilisation Initiative for Learning) எனும் நிகழ்ச்சியை நடத்தும் சம்வத் எனும் அமைப்பை நடத்தும் முக்கியமானவரான திரு. அருண் கோடங்கர் அவர்களை சந்திக்க அனுமதி பெற்றிருந்தேன். அவரது அலுவலகத்தை அடைந்தபோது மணி காலை பத்து முப்பது ஆகியிருந்தது. எனக்கான சந்திப்பு நேரம் பனிரெண்டு மணியாக இருந்தது. என்னைப் பற்றிய அறிமுகக் கடிதம் ஒன்றினை அவரிடம் தந்துவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். பெங்களூரில் செயல்படுத்தப்படும் SMILE நிகழ்ச்சி குறித்து என்னிடம் விளக்கிக் கூறினார். சனிக்கிழமை மாலை வேளைகளில் சாம்வதில் உள்ள திறந்தவெளி வீட்டில் படங்களைப் பார்ப்பது அது பற்றிய விவாதம், குறிப்பிட்ட சுற்றுலா, வரதட்சணை, குழந்தைகள் பாலியல் கொடுமை, மீனவ மக்களின் போராட்டங்கள் (அ) திருமணம், காதல், கல்வி (அ) பெற்றோர்கள் எனும் தலைப்புகளில் கலந்துரையாடல் செய்வது போன்றவற்றை நிகழ்த்துவது பற்றிக் கூறினார். மாணவர்கள் பல்வேறு அமைப்புகளின் வாயிலாக தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், வீடற்ற குழந்தைகள், மீனவ மக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இணைந்து பணியாற்றுகின்றதன் மூலம் சூழலின் பாதுகாப்பு குறித்து அறிய முடியும் என்றவர், அவ்வாறு பணி செய்யமுடியாத மாணவர்கள் தங்களது விடுமுறைக்காலத்தில் ஒரு செயல் திட்டத்தை வகுத்துக்கொண்டு, உள்ளூர் பிரச்சனைகளான குழந்தைத் தொழிலாளர், கட்டிடத் தொழிலாளர்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் சீரழிவு என்பதைக் குறித்த ஆய்வுகளைச் செய்யலாம் என்பதைப் பற்றிக் கூறினார். பின் சோதனே என்றால் தேடல் எனும் பொருள் படும்படியான செய்தி அறிக்கை ஒன்றை மாணவர்கள் தயாரித்து இருந்தனர். அதில் பயிற்சியில் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்த அனுபவங்கள், சமூகப்பிரச்சனைகள் குறித்த கருத்துக்கள், கட்டுரைகள், பாடல்கள் கேலிச்சித்திரங்கள், கதைகள் என கன்னடம் மற்றும் ஆங்கிலமொழி என இரண்டிலும் இருந்தன. திரு. கோடங்கர் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் கூறியதை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தேன். பிறகு, பிங் கூறியிருந்த செயிண்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள படிப்புகள் பற்றிய தகவலை அறியச் சென்றேன். சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு படிப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று பிங் கூறியிருந்தார். கல்லூரி அலுவலகத்தில் எழுத்தர் ஒருவரை சந்தித்து கல்லூரி பாடப்பிரிவுகள் குறித்த அறிக்கைகளை வாங்கிக்கொண்டேன். இரு நாட்களுக்குப்பிறகு, மரு. ஹரிஷ், காயன்கரை அவரது வீட்டில் காலை பதினொரு மணிக்கு அவரது மனைவி உடனிருக்க ( அவர் ஜெர்மன்) சந்தித்த போது இருவரும் மிகவும் நட்பு கொண்ட குரலில் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். திரு. காயன்கள் பட்டாம்பூச்சி பற்றிய ஆய்வில் நிபுணர் ஆவார். பட்டாம்பூச்சிகள் மற்ற எந்த பூச்சிகள் உயிரிகளை விட தாவரங்களோடு மிக நெருங்கிய ஒரு உயிரியாகும் என்பதை அவரிடம் இருந்து அறிந்தேன். என்ன வகையான பட்டாம்பூச்சிகள் ஒரு பகுதியில் இருக்கிறதோ, அந்த பட்டாம்பூச்சிகளைக் கொண்டே அந்தப் பகுதியின் தாவரவகைகள் இனங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பட்டாம் பூச்சிகளின் வகைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு தாவரத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. எ.கா. கோவாவில் இருநூற்றைம்பது பட்டாம்பூச்சிகள் இருக்கிறதென்றால், அங்கு தொள்ளாயிரத்திலிருந்து லிருந்து ஆயிரம் தாவர வகைகள் இருக்கலாம். இது போன்ற விவரங்கள் ஒரு உயிரியிலாளராக தருவது மிகச்சிரமம். பட்டாம் பூச்சிகள் ஒரு சிறந்த அடையாளமாக தாவரவியலாளராக பயன்பட்டு பல்வேறு தாவரவகைகள் உள்ளதைக் கண்டறிய முடிகிறது. தாய் பட்டாம்பூச்சிகள் தம் முட்டைகளை எதிரிகள் உண்டுவிடாமல் இருக்க வெவ்வேறு தாவரங்களில் வைத்துவிடும். முட்டைகள் இரண்டு (அ) மூன்று நாட்களில் குஞ்சு பொரித்துவிடும். லார்வா புழுக்கள் ஐந்துமுறை மெல்ல உருமாறி கூட்டுப்புழுவாக மாற்றம் பெறும். கூட்டுப்புழுவின் போது எந்த உணவும் உட்கொள்ளாது, சில நாட்களிலேயே பட்டாம்பூச்சியாக வளர்ச்சி பெறும். சூரிய வெளிச்சத்தில் தன் சிறகுகள் காய்ந்ததும், சிறகடித்து பறக்கத் தொடங்கி விடும். இந்த செயல்பாடுகள் நடந்து முடிய ஐந்து வாரத்திலிருந்து இரண்டு மாதங்கள் வரை ஆகும். பிறகு பட்டாம்பூச்சிகள் இருவாரங்கள் மட்டுமே உயிர்வாழும். மேலும் சில நாட்களிலேயே முட்டைகளை இடத்தொடங்கிவிடும். இரவுகளில் மட்டும் காணப்படும் விட்டில் பூச்சியும் கூட பட்டாம்பூச்சியின் இனம் சேர்ந்தது என்றாலும் விட்டில் பூச்சியின் வகைகள் பத்தாயிரத்தையும் தாண்டுகிறது. சில பட்டாம்பூச்சிகள் மற்றும் விட்டில் பூச்சிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை உ.தா கிரிம்சன் ரோஸ் எனும் கோவாவில் காணப்படும் பட்டாம்பூச்சி வகையாகும். இந்த பட்டாம்பூச்சியின் உடலானது, சிவப்பு நிறமாகவும், சிறகுகளில் சிவப்பு வட்டமும், உடலில் கறுப்பு வட்டமும் காணப்படும். சிறிய பட்டாம்பூச்சிகள் சில செ.மீ அளவுள்ளது என்பதிலிருந்து பெரிய பட்டாம்பூச்சி ‘இரு பனைமரங்களை ஒன்றாக வைத்த அளவிலும்’ காணப்படுகின்றது. சந்திப்பு முடிந்ததும், மரு. காயன்கர் பட்டாம்பூச்சிகள் பற்றிய புத்தகங்களையும், பட்டாம்பூச்சிகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளையும் காட்டினார். மதியம் ஒன்று முப்பது ஆகியிருக்க, அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டேன். மாலையில் சந்திப்பதாக அனுமதி பெற்றிருந்த மரு. லீலா அவர்களைச் சந்திக்க எம்இஎஸ் கல்லூரிக்குச் சென்றேன். அங்கு பதப்படுத்தப்பட்ட டால்பினின் (ஓங்கில்) வால், மற்றும் சுறாமீனின் தலை மாதிரியினையும் பார்த்தேன். பெங்களூரில் தங்கியிருந்த காலம் மிகச் சிறப்பான ஒன்று ஏனெனில் பிங் எனக்காக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். பெங்களூரில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு புதிய பகுதி ஒன்றை கல்விக்காகத் தொடங்க இருந்தார்கள் (Newspaper in Education). என்ஐஇ பகுதி நிகழ்ச்சிக்காக பல்வேறு பள்ளிகளில் பல தலைப்புகளில் பயிற்சிகளைத் தொடங்க இருந்தார்கள். ஜனவரி மாதம் இருபதாம் தேதி, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை அலுவலகம் சென்று, என்ஐஇ நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக இருந்தவரிடம், என்னைப் பற்றியும், ஓராண்டாக செய்துவந்த செயல்பாடுகள் குறித்தும் கூறிவிட்டு, என்ஐஇ நடத்தும் பயிற்சி வகுப்புகளில் சிலவற்றை நான் நடத்த வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன். அதுவரைக்குமே எப்படி அந்த வகுப்புகளை நடத்தப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஓராண்டில் கற்றுக்கொண்ட விஷயங்களை முன்வைத்து, எதையும் முயற்சி செய்து பார்ப்போமே என்று ஒரு தைரியமும் மனதில் இருந்தது. புதிய விஷயங்கள் முதலில் கடினம் போல் தெரிந்தாலும் உண்மையில் கடினமாக இருக்காது என்று நம்பியே வகுப்புகளை நடத்த நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டேன். என்னுடைய முதல் பயிற்சி வகுப்பு ஜனவரி இருபத்திரெண்டாம் தேதி தொடங்கியது. என்ஐஇ ஒருங்கிணைப்பாளர்கள் என்னை வகுப்பு நிகழும் இடமாகிய ஸ்ரீவாணி கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே பேசினேன். முப்பத்தைந்து நிமிடங்கள் பேசவும், பின் பத்து நிமிடங்கள் கேள்விகள் கேட்கவும், கலந்துரையாடல் செய்யவும் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தேன். முதலில் பேசத்தொடங்கியபோது சிறிது பதட்டமாக இருந்தது. பின் மாணவர்கள் கவனமாக கேட்பது கண்டு மெல்ல சுதந்திரமாக உற்சாகம் பெருக பேசத் தொடங்கினேன். அந்த வகுப்பு முடிந்ததும், ஒருங்கிணைப்பாளர்கள் என்னை பிங் அலுவலகம் (அ) வீட்டிலோ எது அருகிலிருந்ததோ அங்கே இறக்கிவிட்டார்கள். சில வகுப்புகள் பேசியபின், அதுவே நல்ல பயிற்சியாகி பேச்சுக்களை அனுபவித்து அக்கறையும், ஆர்வமும் கவனமுமாக பேசத் தொடங்கியிருந்தேன். பேசியதைவிட அங்கே அதிகம் கற்றுக்கொண்டேன் என்பதே உண்மை. ஒரு பயிற்சி வகுப்பிற்கு நூறு ரூபாயும், பயணக் கட்டணத்தையும் நாளிதழ் எனக்கு வழங்கியது. பயிற்சி வகுப்பு உரைகளில், மாணவர்களிடம் எனது ஒரு ஆண்டுத்திட்டம், சென்ற இடங்கள், கற்ற அனுபவங்கள், ஒரு ஆண்டுத்திட்டமிடல், சிந்தனை தோன்றிய விதம் குறித்தும் பகிர்ந்து கொண்டேன். பின் வகுப்பில் இரு விஷயங்களைப் பகிர முடிவெடுத்தேன். ஒன்று மண்புழு உரம், இரண்டாவது பாம்புகள் குறித்தது ஆகும். ஏனெனில் இவ்விரண்டு விஷயங்களும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்பினேன். மண்புழு உரத்தினை மிக எளிதாக வீட்டிலே தயாரிக்க முடியும். பாம்புகள் பற்றி மக்களிடம் பல்வேறு பயங்கள், கதைகள், வதந்திகள் இருந்தன. அவற்றை நீக்க பாம்புகள் பற்றிப் பேசினேன். மண்புழு உரம் பற்றி பேசும்போது குறிப்பாக பசுஞ்சாணம் மற்றும் மண் ஆகியவற்றைக் கலக்குவது பற்றி கூறியபோது, சில மாணவர்கள், மாணவிகள் முகஞ்சுளித்தபடி, அதனைக் கிண்டலடித்து சிரித்தனர். உண்மையில் நகரத்து குழந்தைகள் மரபை விட்டு வெகுதொலைவு வந்ததனால் ஏற்பட்ட பிரச்சனை இது என்று எண்ணியபடி தொடர்ந்து மண்புழு படுகை குறித்தும், அவற்றை வீடுகளில் அமைப்பது குறித்தும் பேசினேன். பாம்புகள் குறித்து பேசும்போது, நச்சுள்ளவை, நச்சில்லாதவை என இரு பிரிவுகளாக பொதுவான தகவல்களை கூறிய பின் நச்சுகொண்ட பாம்புகளை எப்படி அடையாளம் காண்பது குறித்தும் பேசினேன். பாம்பு கடித்துவிட்டால் செய்யவேண்டிய சிகிச்சை முறைகளைப் பற்றியும், பாம்புகளைப் பற்றிய புனைகதைகளையும், அதன்பின் மறைந்துள்ள உண்மைகளையும் விரிவாக பேசிய பின், சிறிது நேரம் இருந்தால், முதலைகள், கடல் ஆமைகள், சிலந்திகள் குறித்தும் பேசினேன். வகுப்பின் இறுதியில் முதலையின் பற்கள், பாம்புகள், பல்லிகள், முதலைகளோடு நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மாணவர்களுக்கு காட்டினேன். சிவப்பு காதுகளைக் கொண்ட கடல் ஆமை ஒன்றினை எப்போதும் என் பையிலேயே வைத்திருப்பேன். ஆமையைக் காட்டியபோது மாணவர்கள் பெரும் உற்சாகமாகி விட்டார்கள். ஆமையினைச் சூழ்ந்து நின்றபடியே, அதை கையில் தொட்டுப்பார்த்தபடி, அதனை தூக்கிப்பார்க்கலாமா என்றும், அதன் சாப்பிடும் பழக்கம் பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆமையின் ஓடைத்தவிர வேறெதையும் தொட மாணவர்களை அனுமதிக்காததன் காரணம், ஆமை கடித்துவிடக் கூடியது என்பதுதான். பயிற்சி வகுப்புகளை இது போலவே, நேஷ்னல் ஆங்கிலப்பள்ளி, சிந்திப் பள்ளி, செயிண்ட் மேரி பள்ளி, பொலிவியல் பெண்கள் பள்ளி, பெங்களூர் இன்டர்நேஷ்னல் பள்ளி என பல பள்ளிகளிலும் நடத்தினேன். நான் சாதாரணமாக ஏழாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடமும் உரையாடுவேன். பெங்களூர் இன்டர்நேஷ்னல் பள்ளியில் மூன்றாவது மற்றும் நான்காவது வகுப்பு மாணவர்களிடம் பயிற்சி வகுப்பை நடத்தினேன். கோவா வந்து சில மாதங்களுக்குப்பிறகு, தபால்காரரிடமிருந்து பெற்ற பதிவுத்தபாலில் என்ஐஇயிலிருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தியதற்கான தொகையாக ஆயிரத்து எழுபத்தைந்து ரூபாய்க்கு காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் என் ஒரு ஆண்டு கால கற்றல் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தேன். அதன் நகலை என்ஐஇக்கு அனுப்பினேன். அதை அவர்கள் தங்கள் செய்தியறிக்கையோடு பிரசுரித்திருந்தார்கள். மேலும் பல பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொடுக்க அழைப்பும் விடுத்திருந்தார்கள். பெங்களூரில் தங்கியிருந்தது நினைத்து மகிழத்தக்க பல நிகழ்வுகளின் தொகுதி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒருநாள் குளிப்பதற்காக நீச்சல் குளத்தில் காலியாவுடன் சென்றேன். நீச்சல் குளத்தில் குதித்தபின்தான் தெரிந்தது, அண்டார்டிகாவின் குளிரைப் போல ரத்தத்தினை உறையச்செய்யும் குளிர் உடலில் பாய்ந்தது. அதிலிருந்து பனிக்காலத்தில் எப்பாடு பட்டாலும் பிற்பாடு வெந்நீர் வைத்து குளிக்கலாமே தவிர நீச்சல் குளத்தில் குளிக்கக் கூடாது என்று குளிரில் கற்றுக்கொண்டேன். பல்வேறுவிதமான இறைச்சித் துண்டுகளை அப்போது சாப்பிடத் தொடங்கியிருந்தேன். பெங்களூரில் அதுபோல நிறைய கிடைத்தன. தென்னிந்திய உணவு வகைகள், வேகவைத்த காய்கறித்துண்டுகள், பால் இன்னும் பலவும் ருசி பார்த்தேன். ஆனால் என்ன, எப்போதும் என் பையிலிருந்த பணத்தை பார்த்தபடியே சாப்பிட வேண்டி இருந்தது. சில சமயங்களில் புத்தகக் கடைக்குப் போய், பிங் மற்றும் உஜ்வாலாவிற்கு சிறிய புத்தகங்களை வாங்குவேன். பிங்கிற்கு சமையலிலும், உஜ்வாலாவிற்கு தோட்ட வேலைகளிலும் உதவி செய்வேன். நான் அவர்களுக்கு செய்த உதவிகள் அவ்வளவே. பிங், உஜ்வாலா அவர்களது குழந்தைகள் என் அனைவரோடும் சேர்ந்து வெளியே பல்வேறு இடங்களுக்குப் போனோம். ஒருமுறை சன்கி டேன்க் எனும் ஏரிக்குச் சென்று எந்திரப்படகில் பயணித்ததும், ஜூரி, ஜயீர் ஆகிய இருவரோடும் குழந்தைகள் பூங்காவில் விளையாடியதும் பெரும் உற்சாகத்தை தந்தது. நடன நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்றிருந்தோம். ஆனால் அதனை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சில சமயங்களில் சாதாரணமாக வெளியே கிளம்பிச் செல்வோம். எனக்கு இது போன்ற பயணங்கள் மிக விருப்பமானவை. வீட்டுக்கு திரும்பி வரும்போது ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டபடி வருவோம். குறிப்பிடத்தக்க விஷயமாக எப்போது நான் காய்கறிகளை சாப்பிடத் தொடங்கினேன் என்பதைக் கூறியே ஆகவேண்டும். எனக்கு நினைவு தெரிந்தவரை காய்கறிகளை ஒதுக்கியே வந்திருக்கிறேன். என் அம்மா நான் குழந்தையாக இருக்கும்போது காய்கறிகளை உணவாகத் தந்து வந்திருக்கிறேன் என்று கூறுவார். எங்கள் வீட்டு உணவு மேசையிலும் ஏதாவது ஒரு காய்கறி, பழங்கள் என எப்போதும் இருக்கும். இப்படியெல்லாம் இருந்தாலும் எனக்கு சாப்பிட பிடித்ததெல்லாம் மீன்கறியும், அரிசிசோறும்தான். காய்கறிகளை மறுத்து ஒதுக்கிவிடுவேன். கோவாவில் என் நிலையான உணவு இப்படித்தான் இருந்தது. நான் பயணங்களைத் தொடங்கும்போது என் பெற்றோர் கூறியது இதுதான். பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கும் போது சைவ உணவை மட்டுமே சாப்பிடு என்பதைத்தான். ஓராண்டு காலத்தில் வெவ்வேறு வகை உணவுகளை சாப்பிடுவது எப்படி என்று தெரிந்து கொண்டேன். காய்கறிகள் கொண்ட உணவு என்றால் தடுமாற்றம்தான் என்றாலும் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு (அ) பருப்பு மற்றும் அரிசிச்சோறோடு ஊறுகாய் கொண்டு சமாளித்து சாப்பிட்டு வந்தேன். வெண்டைக்காய், கத்தரிக்காய் என இவற்றை சாப்பிட்டிருக்க வேயில்லை என்பதைக் கண்டுபிடித்த பிங் சாதாரணமாக பேசியபடி, உணவு பற்றிய விதிகள், தடபுடல் எல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறிவிட்டு, சாப்பிடும்போது ஒரு பாத்திரத்தில் இருந்து நிறைய காய்கறிகளை எடுத்து என் தட்டில் வைத்தார். கவனித்த போதுதான் தெரிந்தது; எனக்கு பிடிக்கவே பிடிக்காத, இதுவரை சாப்பிட்டிருக்காத வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி எல்லாம் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டிருந்தது. உணவின் பெரும் பகுதியான காய்கறிகளை பெரும் பாடுபட்டு சாப்பிட்டு முடித்தேன். இறைச்சி மற்றும் மீனில் காய்கறியின் சிக்கல் ஏதும் இருக்காது. ஆனால் காய்கறிகளை சாப்பிட்டு முடித்தவுடன், ‘’ உனக்கு காய்கறிகளை மிகவும் பிடித்திருக்கிறது போல ’’ என்று கூறிய பிங் பெரும் உதவி செய்வதாய் காய்கறிகளை அள்ளி என் தட்டில் மீண்டும் வைத்தார். இப்படியே மூன்று முறை நடைபெற்றது. முதன்முறையாக காய்கறிகளைக் கொண்ட உணவினைச் சாப்பிட்டு முடித்தேன். பெங்களூரில் மூன்று வாரங்கள் தங்கியிருந்துவிட்டு ஜனவரி முப்பதாம் தேதி கிளம்புவதாக திட்டமிட்டிருந்தேன். என் பெற்றோர்கள், சகோதரர்களைச் சந்தித்தே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. என் பல அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து பெரும் ஆவலாய், வீட்டுக்கு போனபோது டெல்லியில் நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சியினைக் காண அதர் இந்தியா பதிப்பக பணியாளர் ஒருவரோடு எனது குடும்பமே கிளம்பி போயிருந்தார்கள். திரும்பிவருவதற்கு பத்து நாட்களாகும் என்று தகவல் கூறப்பட்டது. அவர்கள் வந்த பின் என் கதைகளைக் கூற காத்திருந்தேன். என் இரு சகோதரர்களுக்கு என் பயணம் பற்றித்தெரியும். ஆனால் பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு, நண்பர்களுக்கு எதுவும் தெரியாது அல்லவா? ஐந்து மாதம் ஆகிவிட்டது, அவர்களைச் சந்தித்து என்று அப்போதுதான் நினைவு வந்தது. என் பாலிய தோழன் அசோக் என்னைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து வரவேற்றான். 12 உங்களுக்கு காட்சி எனக்குள் கனவு பிப்ரவரி மாதம் முழுமையும் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகி விட்டதற்கு, என் பெற்றோர்கள் மாதத்திற்கு பாதி நாட்கள் வெளியே இருப்பதால், வீட்டைப் பாதுகாக்க கூறிவிட்டதுதான் காரணம். எனவே ஓராண்டு காலத்திட்டத்தின் கடைசி இரு மாதங்களை மாற்றியமைக்க வேண்டியதாகிவிட்டது. மேலும் பல நபர்களுக்கு எழுதிய கடிதங்களுக்கான பதில்களை பார்க்கவும் நேரம் கிடைத்தது. ஒருமுறை ஓராண்டிற்கான திட்டமாக தேனீக்கள் பற்றி கற்றுக்கொள்ள முனைந்தபோது, அதனைக் கற்றுக்கொள்ள சூழல் இசையவில்லை. கிடைத்த அந்த நேரத்தில் கடந்த பல மாதங்களுக்காக எதை நான் செய்யவில்லை, செய்தது பற்றி கட்டுரைகளை எழுதினேன். நாட்குறிப்புகளை சரியான முறையில் எழுதி ஒழுங்குபடுத்தினேன். மண்புழு உரம் தயாரிக்க உதவும் குழியினை எங்கள் வீட்டின் பின்புறமும் அமைத்தேன். அப்பாவின் யோசனையால் அமைக்கப்பட்டது இது. நான் கற்றுக்கொண்ட மண்புழு வளர்ப்பு போன்றவற்றை பயிற்சி செய்ய நல்ல வாய்ப்பு என்று நினைத்து வேலை செய்யத் தொடங்கினேன். குப்பைகளைப் பராமரிப்பது என்பது பெரிய சிக்கலாக இன்றுமே வீடுகளில் இருக்கிறது. அப்பாவின் யோசனைப்படி, செய்த மண்புழு படுகை தவறாக போனது என்றாலும் சில மாறுதல்களைச் செய்து தேவைப்படும் நண்பர்களுக்கு கொடுத்தேன். குப்பைகளைப் பராமரிக்க இது ஒரு சிறந்த வழி என்பது பின்னர் அனைவரும் தெரிந்துகொண்டனர். அப்பாவின் யோசனை மற்றும் அறிவுறுத்தலின் படி பெரிய மண்புழு படுகை ஒன்றை அதிக அளவு குப்பைகள் இடும் குடும்பத்திற்கு உதவுவதுபோல் தயாரித்தோம். பின் சிறிய படுகையினை இடமில்லாத அடுக்ககத்தில் உள்ளவர்களுக்காக தயாரித்தோம். உருவாக்கிய அனைத்து மண்புழு படுகைகளையும் காலம் செல்ல செல்ல எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துகொண்டேன். பின்பு அதுபற்றி அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறத் தொடங்கிவிட்டேன். மண்புழு படுகையை உருவாக்கத்திட்டமிட்டபோது செங்கற்களைக் கொண்டு, அதனைக் கட்டலாம் என்று முடிவெடுத்தேன். செங்கற்களையும், சிமெண்டையும் கலந்து கட்ட எனக்கு தெரியும் என்று எங்கள் வீட்டில் வேலை செய்த வேலையாள் கூறியதைக் கேட்டு, நாங்களிருவரும் சேர்ந்து 3x2x4 என்ற அளவில் தொட்டியைக் கற்கள் வைத்துக் கட்டத் தொடங்கினோம். சிமெண்டுடன் மணலை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து அதில் நீர் சேர்த்து கலக்கி வைத்தோம். ஒன்றின் மீது ஒன்றாக கற்களை மேலடுக்கி சிமெண்டினால் ஒன்றாக்கி நிற்க வைத்தோம். எவ்வளவு எளிதான வேலை என்று என் நாட்குறிப்பில் எழுதி வைத்தேன். செங்கற்கள், மணல், சிமெண்ட் ஆகியவற்றின் அளவுகளை எவ்வளவு என்று கவனமாக குறித்து வைத்தேன். அடுத்தநாள் தொட்டி கட்டும் வேலை தொடர்ந்து நடந்தது. அதற்கடுத்த நாள் தொட்டி முழுவதும் தள்ளாடி, கலைந்து போனதுபோல் நின்றது. அந்த நிலை எப்படியிருக்கும் எனக்கு? உடனே நான் பக்கத்து வீட்டுக்காரரான குருவை எழுப்பி, விவரம் சொல்ல, அவர் தொட்டியைப் பார்த்துவிட்டு, இதை இடித்துவிட்டு முதலில் இருந்து தொடங்கவேண்டும் என்றார். சிமெண்ட் மற்றும் மணலுக்கான அளவைத் தவறாகக் கையாண்டிருக்கிறோம் (அ) கற்களை தவறாக வைத்திருக்கிறோம் என்ற போதே இன்னொன்று நினைவுக்கு வந்தது. தொட்டி கட்டுவதற்கு நாங்கள் அடித்தளம் கட்டவே இல்லையே! கற்களை வைத்து கட்டிடம் எழுப்புவது அவ்வளவு எளிதல்ல என்று அன்றுதான் உணர்ந்தேன். உடனே மிகவும் கவனமாக செங்கற்களை மறுபடியும் பயன்படுத்துவதற்காக சேதமுறாமல் கட்டிடத்திலிருந்து நீக்கினேன். கட்டிடம் கட்டுவதில் நிபுணரான குரு தொட்டியைக் கட்டமைக்க நான் அவருக்கு உதவியபடி வேலை செய்தேன். அன்று இரு தொட்டிகளை உருவாக்கினோம். ஒன்று பெரியது, மற்றொன்று நடுத்தர அளவிலானது. மண்புழு படுகைகளை தயாரித்தவுடன், எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம், அன்றிலிருந்து தாவரக்கழிவுகளை (காகிதம், பிளாஸ்டிக் தவிர்த்து) மற்றவற்றை அதில் போடக்கூறினோம். பின் இரண்டு தொட்டிகள் இருப்பதால் மாற்றிக்கொள்ள முடியும். மண்புழு உரத்தினை ஒரு மரக்கூடையில் தயாரிக்க முடிவெடுத்தோம். அதில் முன்னர் பலாப்பழ விதைகள் முளைக்க வைக்கப்பட்டு வந்தது. மற்ற இரு தொட்டிகளும் சிறப்பாக செயல்பட்டு வந்தன. அவற்றில் குப்பைகள் மண்புழுக்களால் உரமாக்கப்பட்டு வந்தன. பிப்ரவரி மாத இறுதியில் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு சுமந்து திரிந்து கொண்டிருந்தேன். தேனீ வளர்ப்பு குறித்த தொடர்புகளை என் அப்பா தேடி வைத்திருந்த போதும், அத்துறையில் எனக்கு பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. முதலைகள், பாம்புகள், வனம் என இவையே என் மனம் முழுக்க நிரம்பியிருந்தன. மீண்டும் முதலைப்பண்ணைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்றுதான் காத்துக் கொண்டிருந்தேன். எனக்கு முற்றிலும் எவ்விதத் தொடர்பும் இல்லாத, ஆர்வமும் இல்லாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதனை நிறைவு செய்ய வேண்டியிருந்தது. என் கண்பார்வைக் குறைவை நேர்த்தி செய்வதற்கான கண்பயிற்சிகள் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள கண் மருத்துவமனையில் வழங்கப்படுவதாகவும் அதற்காக நான் பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்றும் என் பெற்றோர்கள் கூறினர். முதலைப்பண்ணையிலிருந்த பரிதா எனும் ஊழியரின் மூலம் கண் மருத்துவமனை பற்றி அறிந்தேன். நான்காம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கண்ணாடிகளை அணிந்து வருகிறேன். ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போடும் எதனையும் குறிப்பு எடுக்க முடியாமல் தவித்தேன். கவனம் இல்லை (அ) உத்தரவிற்கு கீழ்ப்படியவில்லை என்று ஆசிரியர்கள் நினைத்தாலும் கரும்பலகையில் எழுதியதை என் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பின் கண் மருத்துவரைச் சந்தித்து, அவரது பரிந்துரையினால் கண்ணாடிகளை அணிந்து பார்வைக் குறைபாட்டை சமாளித்துக்கொண்டேன். கண் பயிற்சிகளைப் பற்றிக் கேட்டதும் நான் அணிந்திருந்த என் கண்ணாடிகளை கழற்றிவிடத்தான் முதலில் விரும்பினேன். என் பெற்றோரோடு பணிபுரிந்த மருத்துவ அமைப்பைச் சார்ந்த ஜெம்மா அவர்களோடு முதலில் கண்பயிற்சிகளை செய்துகொண்டிருந்தேன். முதலைப்பண்ணையில் கண்பயிற்சிகளை நான் செய்து கொண்டிருந்ததைக் கண்ட பரிதா அக்கா அரவிந்தர் ஆசிரமத்திலுள்ள கண் மருத்துவமனையில் இதற்கான முறையான பயிற்சிகள் உள்ளன என்று கூறினார். ஆர்வத்தோடு செல்லத் துடித்துக் கொண்டிருந்த முதலைப்பண்ணை அமைந்துள்ள மாமல்லபுரத்திலிருந்து பாண்டிச்சேரி அதிக தூரமில்லை என்பதால், பாண்டிச்சேரிக்கு பெங்களூரின் வழியாக அனுப்பினால் கண் தொடர்பான பயிற்சிகளை முடித்துவிட்டு முதலைப் பண்ணையில் இருவாரங்கள் தங்கியிருந்துவிட்டு பின் கோவா திரும்பிவிடுவேன் என்று என் பெற்றோரிடம் கூறியிருந்தேன். திட்டம் சரியானபடி பின்பற்றப்பட்டால் பள்ளித்தேர்வுகள் முடிந்த என் சகோதரர்களோடு ஏப்ரல், மே என இருமாதங்கள் பெல்காமிலுள்ள என் மற்ற சகோதரர்களான லுகானோ, ரிக்கார்டோ ஆகியோரும் கோடை காலம் முழுவதும் எங்களுடனே தங்கி பலாப்பழம், மாம்பழம் என சாப்பிட்டு கடற்கரையில் விளையாடலாம் என்று நினைத்திருந்தேன். என் பெற்றோர்கள் என் நிகழ்ச்சியையும் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு அனுமதித்ததால் ஏப்ரல் மாதம் இருபத்தாறாம் தேதி பாண்டிச்சேரி கிளம்பினேன். வழிகள், தடங்கள் பழகியதாக இருந்ததால், முந்தைய தடுமாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. கண்பயிற்சிகள் முடியும்வரை பெர்னார்டு அவர்களுடன் தங்கிக்கொள்ள தொலைபேசியில் பேசி அனுமதி பெற்றேன். இரவில் கோவாவிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்து ஹார்ட்மனின் இல்லத்தில் ஓய்வெடுத்துவிட்டு, மறுபடியும் இரவில் பெங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்தேன். அங்கிருந்த ரிக்சாக்காரர் என்னை ஆரோவில்லில் இறக்கிவிடுவதாக கூறி, நாற்பது ரூபாய் பெற்றுக்கொண்டு அரவிந்தர் ஆசிரமம் அருகில் இறக்கிவிட்டுப் போய்விட்டார். அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் ஆரோவில் செல்ல பேருந்து பிடித்துசென்றேன். உள்ளே செல்ல பத்து கி.மீ நடக்கவேண்டும். சிறிது தூரம் கடந்தபின் பெர்னார்ட் என்னை வரவேற்றார். பெர்னார்ட் அவர்களை ஆரோவில்லிற்கு முதல்முறை வந்த போதே சந்தித்திருந்தேன். நான் அவரின் அறையில் தங்கிக்கொண்டும், அவரின் உணவையும் பகிர்ந்துகொண்டேன். பெர்னார்ட் அவர்களின் வீட்டிலிருந்து ஆசிரமத்திற்கும், ஆசிரமத்திலிருந்து வீட்டிற்கும் என தினமும் நாற்பத்தைந்து கி.மீ பயணிக்க வேண்டியிருந்தது. கண்களின் பயிற்சிக்குப் பின், திரும்பவும் வீடு திரும்புதல் என்ற வகையில் ஒன்பது நாட்களில் முன்னூற்று அறுபது கி.மீ தூரம் சைக்கிளில் கடந்திருந்தேன். ஆசிரமம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. உள்ளே நுழைவதற்கு முன் நமது செருப்புகளைப் பாதுகாக்கும் இடத்தில் கொடுத்துவிட்டு, அதற்கான சீட்டினைப் பெற்றுக்கொண்டு செல்லவேண்டும். மக்கள் அங்கே தியானம் செய்துகொண்டிருப்பதால் அமைதியுடன் நகர்ந்து செல்கின்ற ஓசைகளைத் தாண்டி வேறெதுவும் அங்கே இல்லை. மெல்லிசை ஒன்று தொடர்ந்து பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது. முதல் பயிற்சியே எனக்கு கடுமையான ஒன்றாக இருந்தது. வெயிலில் அப்போதுதான் ஆசிரமம் வந்து இறங்கியிருக்க, என் கண்களில் தேன்துளிகள் விடப்பட்டு, வெயிலில் வியர்வை பெருக நிற்க வைக்கப்பட்டேன். என் கண்கள் கடுமையான எரிச்சலில் கருகிவிட்டதோ என்று பயந்துவிட்டேன். தேன் நாக்கிற்கு இனிப்பு கண்ணிற்கோ கடுமையான எரிச்சலைக் கொடுக்கும் என்று அன்றுதான் அனுபவித்து அறிந்தேன். அடுத்த பயிற்சி ஒரு இருட்டு அறையில் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்பதே எனக்கு கூறப்பட்டது. இதற்கடுத்த பயிற்சி இதே போலான பயிற்சியை சூரிய வெளிச்சத்தில் செய்யவேண்டும் என்பதாகும். கண்களின் நகர்வை கவனிக்கச் செய்யும் சிறிய ரப்பர்பந்து அசைத்தல், ஒரு நீளமான தாளில் எழுதியுள்ள எழுத்துக்கள், சிறிய வெவ்வேறு கோணங்களில் உள்ள எழுத்துக்களைப் படிப்பது, கண்களை வெந்நீரில் குளிப்பாட்டுவது, மூச்சை உள்ளிழுப்பது, கண்களை ஈரம் செய்த பருத்தித்துணியினால் குளிர்விப்பது என்ற பயிற்சிகள் இருந்தன. இருட்டறையில் விளக்குகளில் எதிரொளிக்கப்படும் வண்ணங்களை உற்றுக் கவனிப்பது என்று பயிற்சிகள் நீண்டன. ஒவ்வொரு பயிற்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கண்களை மூடுவது, திறப்பது, சிமிட்டுவது, குறிப்பிட்ட கோணத்தில் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நுட்பங்கள் கூடியதாக இருந்தன. பயிற்சியினை முடித்தவுடன் ஹெட்போனில் பாடலைக் கேட்டபடி ஆரோவில் வந்து சேர்ந்தேன். ஆசிரமத்தில் நடந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமுமில்லை என்றாலும் இறுதி நாளில் வீட்டில் பயிற்சி செய்வதற்கு தேவையான நான்கு புட்டிகள் கண் மருந்து, இரண்டு சிறிய புட்டிகள் தேன், ஒரு ரப்பர் பந்து, இரண்டு காகித வரைபடங்கள், மற்றும் இரு புத்தகங்கள் என இவற்றுக்கு எழுபத்தேழு ரூபாய் செலுத்தி வாங்கினேன். கண் பயிற்சியினால் ஒரு மாதத்திற்குள்ளாகவே நான் குணமடையத் தொடங்கினேன். தொடர்ந்து பயிற்சிகளைச் செய்து வர, கண்ணாடி இல்லாமல் என்னால் படிக்க முடிந்தது. நான் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக செய்வதில்லை என்றாலும், சில தருணங்களில் மட்டுமே கண்ணாடிகளை நாடுகிறேன். தொலைக்காட்சி பார்ப்பதற்கு மட்டும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறேன் என்றாலும் என் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால், அந்த வாய்ப்பும் குறைவு. பயிற்சி முடிந்ததும் முதலைப்பண்ணை செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தொலைபேசியில் பேசி செய்துவிட்டு, மார்ச் மாதம் ஏழாம்தேதி மாமல்லபுரம் செல்ல தயாராக இருந்தேன். வேடிக்கையான ஆனால் பணம் கரைந்த ஏமாந்த நிகழ்ச்சியொன்று அங்கே நிகழ்ந்தது. முதலைப்பண்ணைக்குச் செல்லும் ஆர்வத்தில் அதிகாலையிலிருந்தே காத்திருந்தேன். ஏறத்தாழ அப்போது எட்டு அல்லது ஒன்பது மணி இருக்கலாம். மாமல்லபுரம் சென்ற பேருந்து, நிலையத்திற்கு திரும்புவதற்காக காத்திருந்தேன். மாமல்லபுரம் செல்வதற்கான பேருந்து குறித்து நான் கேள்வி கேட்க அருகிலிருந்தவர்களில் ஓட்டுநர் ஒருவர், மாமல்லபுரம் பேருந்தைக் காட்ட அதன் அருகில் நான் செல்லுவதற்குள் நடத்துநரின் உடை அணிந்த ஒருவர் என்னருகில் வந்து, ‘’எங்கே போகணும்’’ என்றார். ‘’மாமல்லபுரத்திற்கு’’ என்றேன். ‘’என்னோடு வா’’ என்று கூறிய அவரைப் பின்பற்றி மாமல்லபுர பேருந்தில் ஏறினேன். அவர் என் பெட்டியை இருக்கைகளுக்கு மேலேயுள்ள இடத்தில் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்துவிட்ட என்னிடம் ‘’பயணச்சீட்டு?’’ என்றார். ‘’எவ்வளவு’’ என்றேன். இருபத்தைந்து ரூபாய் என்று பதிலளிக்க, பணத்தை அவரிடம் தந்துவிட்டேன். சிறிது நேரத்திலேயே பேருந்து கிளம்பத் தயாரான போது மேலே ஏறிய பயணிகளிடம் பயணச்சீட்டு கொடுத்தவர் வேறு ஒரு நடத்துநர் என்பதைப் பார்த்ததுமே திகைப்பாகியது. அவரிடம் முன்னதாகவே வேறு ஒரு நடத்துநரிடம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்துவிட்டேன் என்று கூற, நிரூபிக்கலாம் என்றால் பணம் பெற்ற ஆளையும் காணவில்லை. நின்று கொண்டிருந்த பேருந்திலே ஒரு பயணத்தை நிகழ்த்திவிட்டு சென்றுவிட்டார் அந்த ஏமாற்றுக்கார ஆசாமி. பதினெட்டு ரூபாய்க்கு மறுபடியும் ஒரு பயணச்சீட்டு வாங்கி முதலைப் பண்ணைக்குப் பயணித்தேன். என்னால் நம்பவே முடியாத ஆச்சர்யம் என்னவெனில் அவர் என்னை ஏமாற்றியது கூட இல்லை; எனக்கு முன்னால் வந்து இருக்கையில் அமர்ந்திருந்த யாருமே ஏன் ஒருவர் கூட அவர் நடத்துநர் இல்லை என்று என்னிடம் கூறவில்லை என்பதுதான். முதலைப் பண்ணையில் அந்த முறை ஒருவாரம் மட்டும் தங்கியிருந்து சில வேலைகளை செய்து இருந்துவிட்டு வந்தேன். ரோம், ஹாரி மற்றும் பலரும் நேஷ்னல் ஜியோகிராபிக் படம் தொடர்பான நிகழ்ச்சிக்காக கேரளா சென்றிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. பணியாளர்களே குறைவாக இருந்தது போல் தோன்றியது.                             13 வனத்திலே ஆய்வுப்பயணம் கோடைகால விடுமுறை அந்த ஆண்டு மிக மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. என் ஒன்றுவிட்ட சகோதரர்கள் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்கள். முக்கியமான தேர்வுகள் எதுவும் அந்த ஆண்டு அவர்களுக்கு இல்லாததால் விடுமுறை கொண்டாட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே தொடங்கிவிட்டது. ஆறு மற்றும் கடலில் குளிப்பது என்று சென்றது. ஆற்றில் நீந்திக் கொண்டே பாகா எனுமிடத்தில் ஆறு கடலில் சேரும்வரை செல்வது என்று கோலாகலமாக விடுமுறையைக் கழித்தோம். மே மாத காலை வேளை ஒன்றில் என் அப்பா கோவா பவுண்டேஷன் எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆய்வு ஒன்றில் பங்கெடுக்க விரும்புகிறாயா என்று கேட்டார். அவர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்தார். மேலும் ஆய்விற்காக கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைப்பதும் அவரது பணியாக இருந்தது. பணியினை நான் ஒப்புக்கொண்டேன். ஆய்வுப்பணி பெடிமிலுவிலுள்ள காடுகளில் நுழைந்து காடுகளாக உள்ள பகுதிகளை அடையாளம் காண்பது, எந்தப்பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன, காட்டில் ஏதாவது கட்டிடப்பணி நடைபெறுகிறதா உள்ளிட்ட பலவற்றையும் உள்ளடக்கியிருந்தது ஆய்வுப்பணி. மபுசாவிலுள்ள செயிண்ட் எக்ஸேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் ஸ்டீபன் மற்றும் ஜெர்ரி ஆகிய இரு மாணவர்களோடு நானும் கூடுதலாக இணைந்து கொண்டேன். மே மாதம் இருபதாம் தேதி அப்பாவும் நானும் பெடிம் காட்டிற்கு கிளம்பினோம். போகும் பாதையில் ஸ்டீபன் மற்றும் ஜெர்ரியை காரில் ஏற்றிக்கொண்டோம். அப்பா அங்குள்ள பல்வேறு இடங்களைப் பற்றிக் கூறிவிட்டு, ஆய்வு அவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். ஸ்டீபன்தான் குழுத்தலைவராகச் செயல்பட்டார். என் அப்பா ஆய்வு பற்றி முன்பே தெளிவாக கூறியிருந்ததால், ஸ்டீபன் தன் குறிப்பேட்டில் விரைவாக குறிப்புகளை எழுதத் தொடங்கினார். என் குறிப்பேட்டில் சில பறவைகளின் பெயர்களை எழுதினேன். நம்மைப்பற்றி யாராவது கேள்வி கேட்டால், பறவைகளை கவனிப்பவர்கள் என்று கூறிவிடுங்கள் என்று ஸ்டீபன் முன்னமே கூறிவிட்டிருந்தார். விதிகளுக்கு புறம்பான பல வீடுகள் காடுகளின் நடுவே கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். மேலும் ஏகப்பட்ட பெரிய மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டிருந்தன. பல மரங்கள் மின்சார ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தன. அறுக்கப்பட்ட மரங்களின் மேல் வளர்ச்சியைத் தடுக்க தார் பூசப்பட்டுருந்தது. பல மரத்துண்டுகள் அங்குமிங்குமாய் வீசப்பட்டு கிடந்தன. மே மாதத்தில் மிகக் கடுமையான வெயிலில் கால்களை நெருப்பின் மேல் வைத்திருப்பது போலிருந்தது. சிறிய பாதை ஒன்றை காட்டுக்குள் ஸ்டீபன் பார்த்தால், அனைவரும் அதன் இறுதி முனையை எட்டிய பின்தான் அடுத்து நகருவோம். களைப்பான ஒரு கணத்தில் ஜெர்ரி ‘’ஸ்டீபன் உனக்கென்ன பைத்தியமா! உள்ளே போகும் முட்கள் அண்டிய பாதையில் எதற்கு போகிறோம், நாமும் மரம் வெட்டவா போகிறோம்? என்றார். அதற்கு ஸ்டீபன் ‘’இந்த வழியே போகவில்லையென்றால் நாம் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேர்மையாக செய்யவில்லை என்று அர்த்தம். நீ என்ன விரும்புகிறாய்?’’ என்று பதில் கூறினார். களைப்பூட்டும் பல பாதைகளிலும் பயணித்தோம். அது குறுகியதோ, சிறியதோ பயன்படுத்தாமல் விட்டதாக இருந்தாலும் சரி. இரண்டாவது நாள் நான் பெடிம் காட்டிற்கு சைக்கிளில் கிளம்பினேன். அன்று இரண்டு விதிகளுக்கு புறம்பான வீடுகளையும், மலையின் மீது வெட்டப்பட்டிருந்த மரத்தினையும் பார்த்தோம். அந்த மரத்தின் மீதும் தார் பூசப்பட்டிருந்தது. ஆய்வு வேலைகள் காலையில் தொடங்கி இரண்டு மணிக்கு நிறைவு பெற்றுவிடும். சில சமயங்களில் அதன் பின்னும் வேலை செய்திருக்கிறோம். மூன்றாவது நாள் என் தந்தை மற்றும் சகோதரன் லூக் எங்களோடு இணைந்து கொண்டான். நாங்கள் அப்பாவிற்கு பார்த்த இடங்கள், விதிமுறை மீறல் வீடுகள், வெட்டப்பட்ட மரங்கள் ஆகியவற்றைக் காட்டினோம். அப்பா தான் கொண்டு வந்திருந்த கேமிராவினால் ஸ்டீபனிடம் நாங்கள் பார்த்த மேற்கூறிய இடங்களை புகைப்படம் எடுக்கச் செய்தார். காட்டினுள் சில இடங்களில் நெருப்பு பற்றவைக்கப்பட்டு புதர்கள் எரிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. நான்காவது நாளில் அந்த ஆய்வு என்னை பெருமளவு களைப்பு கொண்டவனாக உணரச்செய்திருந்தது. காட்டில் பல இடங்களில் அலைந்து திரிந்ததில் உடலெங்கும் குத்திய முட்களால் எரிச்சலும், அரிப்பும் ஏற்பட்டது. என் பாதம் முழுக்க வெப்பத்தினால் ஏற்பட்ட கொப்புளங்களினால் நிறைந்திருந்தது. உடல் வெந்நீர் பாத்திரத்தை போல் சூடேறிப் போய் இருந்தது. ஆய்வில் எனது பங்கினை விரைவாக செய்து முடித்துவிடும் முனைப்பில் இருந்தேன். மலையில் விதி மீறலாக கட்டப்பட்ட வீடுகள், பல கட்டிடங்களைப் பார்த்தோம். மேலும் வீடுகட்ட மனைகளாகப் பிரிக்கப்பட்டு முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு நிலங்களையும் கண்டுபிடித்தோம். ஆய்வில் எனது பணியினை இறுதி செய்து ஒப்படைத்த அன்று என் பணிக்கான சிறிய தொகை ஒன்று கோவா பவுண்டேஷன் மூலம் அளிக்கப்பட்டது. ஸ்டீபன் மற்றும் ஜெர்ரி தங்களுடைய ஆய்வு அறிக்கையை புகைப்படங்களோடு பின்னர் சமர்ப்பித்தனர். கோவா பவுண்டேஷன் அந்த ஆய்வறிக்கையை வனத்துறைக்கு அனுப்பியது. வனத்துறையானது விதிமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரி ஒருவரை நியமித்து காட்டிற்குள் யாரும் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று ஆணையிட்டது. 13 பெல்காமில் சிறப்பு விருந்தினர் பள்ளிக்குச் சென்று ஒரு ஆண்டு கடந்துவிட்டது. எனக்கு கிடைத்த ஓராண்டு எவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது என்று நினைத்துப் பார்க்கிறேன். இன்றோ அமைதியாக கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் நான் தீவிரமாக வேலை செய்து அனுமதி கடிதங்கள், அடையாள அட்டைகள் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நான் எதிர்பார்க்காத இடத்திலிருந்து ஆச்சர்யம் காத்திருந்து என்னை அழைக்கப்போவதை அப்போது நான் அறியவில்லை. பெல்காமில் நடைபெறும் சுற்றுச்சூழல் தினத்திற்காக ஜூன் ஐந்தாம் தேதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தேன். ஒரு ஆண்டாக நான் ஈடுபட்ட பணிகள், செயல்பாடுகள் குறித்த பதிவாக இது அமையக்கூடும் என்று நினைத்தேன். மேலும் ஒரு ஆண்டு காலம் பற்றிய பதிவுகளில் சிகரமாக அமையக்கூடும் என்று உறுதியாக நம்பினேன். சுற்றுச்சூழல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திலீப் காமத் மாமாவிடமிருந்து அழைப்பிதழ் வந்திருந்தது. முந்தைய மாதம் பெல்காமிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் திலீப் மாமா சார்ந்திருந்த அமைப்பு மூலமாக நடத்தியிருந்தார்கள். அந்நிகழ்வின் இறுதிப்பகுதியான ஜூன் ஐந்தாம் தேதி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது உரையினையும், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசும் வழங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. திலீப் மாமா அவரது மனைவி நீலிமா, மகனான பார்த்தா என அவர்கள் பல ஆண்டுகளாக எங்களது குடும்ப நண்பர்களாக இருப்பவர்கள் ஆவர். திலீப் மாமா கோவாவிற்கு வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார். சுற்றுச் சூழல் குறித்த நிகழ்ச்சி பற்றி, தனக்கு தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, குறுகிய பரப்பிலிருந்து வெளியே பார்க்கும் தனித்துவப் பார்வையினை உருவாக்கும் வண்ணம் செயல்படுவதே அதன் இலக்கு என்று குறிப்பிட்டார். இறுதிப் பகுதியில் பேசுவதற்கு இளம் சாதனையாளர், இருந்தால் அவரோடு தன்னை மாணவர்கள் பொருந்திப்பார்க்க எளிதாக இருக்கும் என்று நினைத்ததாகக் கூறினார். திலீப் மாமா நிகழ்ச்சி தயாரிப்பு குழுவிடையே என்னைப்பற்றியும், என் ஓராண்டு கால செயல்பாடுகளைப் பற்றியும் கூறி, சுற்றுச்சூழல் ஒத்த பணிகளை நோக்கிய சிந்தனைகள், செயல்பாடுகளைக் கூறியதும், அவர்களும் திலீப் மாமாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். உற்சாகமாகவும், ஆர்வத்தோடும் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு விட்டேன். யார் இந்த வாய்ப்பை வேண்டாம் என்பார்கள்? திலீப் மாமா எனக்கான செலவுகளை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். அப்பாவின் இளைய தம்பி பெஞ்சமின் மாமா பெல்காமில் வசித்தார். எனவே அவரது வீட்டில் தங்கிக்கொள்ளலாம். பெல்காமிற்கு வருவதற்கான பயணச்சீட்டிற்கான தொகையை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தந்துவிடுவதாகக் கூறினார்கள். விழாவில் பேசுவதற்கான உரையினை மெதுவாக தயார் செய்யத் தொடங்கினேன். விழா எனக்கு பெரிய வாய்ப்பை தந்திருக்கிறது என்று ஏற்றுக்கொண்டு என் பங்கை சரியாக செய்ய முயற்சித்தேன். இந்தப் பணியில் என் அம்மாவும் உதவி செய்தார். பேச வேண்டிய உரையினை முழுக்க எழுதியதும், அம்மா அதன் முக்கிய கருத்துக்களைக் குறிப்பாக எழுதி மனதில் பதிய வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மக்களிடம் பேசுவது என்பது பெரிய சிக்கலாக எனக்கு இருக்கவில்லை. மேடை பயம் என்னை எப்போதும் ஆட்கொண்டதில்லை. பள்ளியில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு பள்ளியின் சிறந்த பேச்சாளர் விருதும் எனக்குத்தான் கிடைத்தது. போட்டியில் பங்கேற்பாளராக பேசுவது வேறு. அந்த விழாவின் முக்கியமான விருந்தினராக தலைமை ஏற்றுக்கொண்டு பேசுவது முற்றிலும் வேறானது. என் அம்மா பல முக்கியமான குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பேசுவது, அடுத்தவரி நினைவுக்கு வராதபோது என்ன செய்வது உள்ளிட்ட பல யோசனைகளை எனக்கு தெரிவித்தார். என் பேச்சை வீட்டில் பலமுறை பேசிப்பார்த்த பின்னர், ஜூன் மூன்றாம் தேதி பெல்காம் செல்லத் தயாராகும் போது நம்பிக்கையுடனும், உற்சாகமாகவும் இருந்தேன். தேவையான உடைகள், சிவப்புக் காது கடல் ஆமை, கோவாவில் கிடைத்த சிறிய ஆமை, முதலையின் பற்கள், பாம்புகள் பூங்காவில், முதலைப் பண்ணையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றையும், இன்னும் சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு பெல்காம் கிளம்பினேன். ஜூன் மாதம் நான்காம் தேதி பெல்காம் வந்து சேர்ந்தேன். பேருந்து நிலையத்தில் என் சகோதரர் லுகானோ வந்து நேராக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று மாலை திலீப் மாமா எப்போது வந்து என்னை அழைத்துபோகிறார் என்ற விவரங்களைத் தந்துவிட்டு நான் கொண்டுவந்திருந்த புகைப்படங்களைக் கண்காட்சி அறையில் வைக்கப் போவதாக கூறி அவற்றைக் கேட்டார். அடுத்த நாள் லுகானோ என்னை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு மாலை மூன்று மணிக்கு அழைத்துச் சென்றார். நிகழ்ச்சி பள்ளியின் பெரிய கூடமொன்றில், நடக்கவிருந்தது. பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் பெற்றோர்களோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். கூட்டம் நடைபெறும் அறையின் ஒருபுறத்தில் எனது புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மாலை நான்கு மணியின்போது என் மாமா பெஞ்சமின், அவரது மனைவி கிரேஸ் அத்தை, மற்றும் என்னுடைய சகோதரர்கள் என சிறிது நேரம் கழித்து வரத் தொடங்கினார்கள். நான் உள்ளே நுழையும் போது அந்த அறை முழுவதும் நிரம்பி வழிந்தது. என் சகோதரன் லுகானோ அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்தேன். சூழல் நிகழ்ச்சியினை மாணவர்களே தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி பேச்சுப்பேட்டியுடன் தொடங்கியது. ஒருவர் ஆங்கிலத்திலும், மற்றவர்கள் மராத்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேசினார்கள். பின் மாணவர்கள் என்னை அறிமுகப்படுத்தி வைத்து, உரையாற்ற வருமாறு அழைத்தனர். ஆங்கிலத்தில் எனது உரையினைத் தொடங்கினேன். ஆங்கிலப் பேச்சினை, திலீப் மாமா கன்னடத்தில் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பிற்காக சிறிது நிறுத்தி பேச வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக ஆங்கில கன்னட மொழிபெயர்ப்பு போராட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே நான் பேசுகின்ற ஆங்கிலத்தை அனைவரும் நன்றாக புரிந்து கொண்டார்கள். இதனால் நான் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் பேசி கைதட்டலுடன் உரையினை நிறைவு செய்தேன். பெங்களூர் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளில் நான் செய்தது போல், சிவப்பு காதுகள் கொண்ட கடல் ஆமையை எடுத்து மாணவர்களிடம் காட்டினேன். என் சகோதரர் லுகானோ சிறிய ஆமையை எடுத்துச் சென்று மாணவர்களிடம் காட்டினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆமையினை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆர்வமுள்ளவர்களுக்கு முதலையின் பற்களைக் காட்டினேன். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியை எட்டிவிட்டதாகக் கூறினாலும், பார்வையாளர்களான மாணவர்கள் பலரும் பல கேள்விகளை என்னிடம் கேட்க விரும்பியதால், கேள்வி – பதில் கலந்துரையாடல் பகுதி, கேலிச்சித்திரம் மற்றும் பரிசுகள் வழங்கியபின் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர். இயற்கை சூழல் குறித்த கேலிச்சித்திரங்கள் பலவற்றையும் ரசித்தேன். முன்னதாகவே நடந்து முடிந்திருந்த பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி ஆகியவற்றுக்கான பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தி வழங்கினேன். அதன் பிறகு, விழா ஒருங்கிணைப்பாளர்களின் அனுமதி பெற்று நடந்த கேள்வி – பதில் தொடங்கியது. பார்வையாளர்கள் கேள்வி கேட்க, நான் அந்த இடத்திலே பதில் சொன்னேன். அந்நிகழ்ச்சி மகிழ்ச்சியான புதிய அனுபவமாக இருந்தது. பல கேள்விகள் மாணவர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து வந்தது. கேள்விகளில் அதிகம் பாம்புகள் பற்றித்தான் வந்தன. இதிலிருந்து நான் அறிந்துகொண்ட விஷயம், பாம்புகளைப்பற்றி மக்களுக்கு எவ்வளவு பயம் இருக்கிறதோ, அந்தளவுக்கு அதன்மீது வசீகரமான ஈர்ப்பும் இருக்கிறது என்பதே அது. நிகழ்ச்சி மாலை மணி ஆறு முப்பதிற்கு முடிந்தபின், விழா ஒருங்கிணைப்பாளர்கள் என் பயணத்திற்கான தொகை முந்நூறு ரூபாயை உறையில் இட்டுக் கொடுத்தார்கள். திலீப் மாமா என்னையும், லுகானோவையும் இரவு உணவிற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். லுகானோவிற்கு என் சிறிய ஆமையை மிகவும் பிடித்துவிட்டது. அதனை அவனிடத்தில் மகிழ்ச்சியோடு கொடுத்துவிட்டேன். அடுத்த நாள் ஆச்சர்யப்படுத்தும் விதமாக உள்ளூர் கன்னட நாளிதழ் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியையும் நான் பங்கு பெற்று பேசியதையும் செய்தியாக எழுதி, எனது புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது கண்டு சொல்ல முடியாத ஆனந்தத்தை உணர்ந்தேன். பின்பு நான் எழுதிய கட்டுரை என் ஓராண்டு கால அனுபவங்களைத் தழுவி எழுதப்பட்டது. அதனை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பி வைத்தேன். நாளிதழின் இளைஞர் பகுதியில் அக்கட்டுரை புகைப்படங்களோடு வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தங்களுடைய பல நண்பர்கள் அக்கட்டுரையைப் படித்துவிட்டு, படிப்புக்கு இடையேயான ஓராண்டுகாலம் பற்றி பாராட்டிப் பேசினார்கள் என்று என் பெற்றோர் தெரிவித்தனர். ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழின் கட்டுரை பல்வேறு நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. மலேசியாவில் வெளிவரும் ‘The Utusan Konsumer’ எனும் நாளிதழிலும் அக்கட்டுரை வெளியானது. பெல்காமில் நிகழ்த்திய உரை பெங்களூரில் மாணவர்களுக்கு நடத்திய பயிற்சி வகுப்புகள், எழுதிய கட்டுரை என அனைத்திலும் மாணவர்களுக்கு பரிந்துரை செய்தது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் உங்களின் பெற்றோர்களின் அனுமதி பெற்று பொதுவான படிப்பின் இடையே சிறிய இடைவெளியில் அனுபவங்களை, வாழ்க்கையை சேகரிக்கவும், இங்கேயே இப்போதே வாழவும் முயலுங்கள். அந்த இடைவெளி பின்னர் உங்கள் வாழ்வில் வருத்தப்படவேண்டியதாக அல்ல மகிழ்ச்சியான, வாழ்ந்த அல்லது அதற்கு முயன்றதான காலமாகவே இருக்கும். மீண்டும் திருப்பிக்கூற விரும்புவது ஒன்றேதான். 1995 ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, 1996 ஜூன் மாதம் வரையிலான காலகட்டம் எப்போதும் நான் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய பொக்கிஷமான காலமாகவே உணர்கிறேன். பலவற்றையும் நான் கற்றுணர்ந்தது இந்த காலத்தில்தான். பொருட்களை, பல மனிதர்களை, வேறுபட்ட சூழலை, உணவுகளை, முக்கியமாக என்னைப் புரிந்துகொள்ள சிறிய இடைவெளி உதவியது. மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, கொண்டாட்டமாக நான் விரும்பிய செயல்பாடுகளை, எண்ணங்களை பின் தொடர்ந்தேன். மற்றொரு ஓராண்டு கிடைக்குமா என்று இன்றும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன். சந்திப்போம். 1 ராகுலின் பாதை கடந்த பதினைந்து ஆண்டுகளாக ராகுல் ஆல்வாரிஸ் வட கோவாவில் மனிதர்களின் வாழ்விடங்களில் புகுந்துவிடும் பாம்புகளை அகற்றி அவற்றைக் காப்பாற்றி வருகிறார். இன்றைய தேதி வரை ஆயிரத்து ஐந்நூறு பாம்புகளுக்கும் மேற்பட்ட பாம்புகளைக் காப்பாற்றி இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறார். இவரது இரண்டாவது நூலான ‘Call of the Snake’ என்பது இவர் பாம்புகளை எவ்வாறு மீட்டெடுக்க முயன்றார் என்பது பற்றிய அனுபவக் கதைகளைக் கொண்டது. ராகுலின் பணி என்பது பல்வேறு முக்கிய முன்னணி விடுதிகள் மற்றும் தங்குமிடங்களான ராமதா, ராடிஸன், டோனா சில்வியா, தி லீலா, தாஜ் எக்ஸோடிகா ஆகியவற்றின் பணியாளர்களுக்கு பாம்புகளைக் கொல்லாமல் அவற்றை எப்படி கையாண்டு பிடிப்பது என்பது பற்றி பயிற்சி அளித்து வருகிறார். கோவாவின் சில பகுதிகளில் பறவைகள் மற்றும் பாம்புகள் கண்காட்சியினை ராகுல் தானே முன்னின்று நடத்திவருகிறார். இது போன்ற கண்காட்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நடத்துகிறார். பறவைகளைப் புகைப்படங்கள் எடுப்பது, அவற்றைத் தேடி அறிவது என்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். ஹெயின்ஸ் லெய்னர் என்பவரோடு இணைந்து ‘The Birds of Goa’ என்ற நூலினை எழுதியுள்ளார். இதில் இவர் எடுத்த பறவைகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ராகுல் தான் நடத்தும் இணைய இதழான ‘The Creepy Times’ எனும் பத்திரிக்கையிலும் தன் அனுபவங்களை, கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். அதோடு உடற்பயிற்சி ஆசிரியராகவும், அறுவை சிகிச்சை சாராத நோய் நீக்கமுறை நிபுணராகவும் உள்ளார். ராகுலின் புத்தகத்தைப் படித்துவிட்டு எண்ணற்றவர்கள் அவரை சந்திக்கவும், ஏதேனும் தனித்துவமான ஒன்றை சாதிப்பதில் நம்பிக்கை கொண்டும் உள்ளார்கள் என்றால் அவர்களை ராகுல் சந்திக்கவும், தன் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்க தயாராகவே உள்ளார். 2004 ல் ராகுல் ஆல்வாரிஸ் இளம் இயற்கை சூழலியலாளர் விருதை சரணாலயம் மற்றும் ஏபிஎன் அம்ரோ வங்கி ஆகியோரிடமிருந்து பெற்றார். 2008 ல் ‘Carlzeiss Wildlife Commitment’ விருதினையும் பெற்றுள்ளார். மின்னஞ்சல் முகவரி: rahulalvares @ gmail.com இணையதளம்: www. rahulalvares.com தொலைபேசி: 919881961071, 918322278740 2 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி - http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  - தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !