[] பயனுள்ள கட்டற்ற மென்பொருட்கள் கணியம் குழு மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும். This book was produced using PressBooks.com. Contents - பயனுள்ள கட்டற்ற மென்பொருட்கள் - 1. படக்கதைகளை உருவாக்கலாம் - 2. OCTAVE திறமூலமொழி - 3. கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown - 4. ஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள் - 5. Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு - 6. Digits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!! - 7. K3b – உபுண்டு லினக்ஸில் CD/DVD யில் எழுதும் மென்பொருள் - 8. aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள் - 9. லைஃபோகிராஃப் (Lifeograph) தனிப்பட்ட மின்னணு நாட்குறிப்பேடு - 10. Wallpaper சுழற்சிகள் - 11. பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம் - 12. விக்கிபீடியா கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண உதவும்Kiwix மற்றும் Okawix - 13. IRC – ஒரு அறிமுகம் - 14. அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் - 15. BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள் - 16. நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! - 17. டக்ஸ்மேதுடன்(TuxMath) கணிதம் படியுங்கள் - 18. எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம் - 19. லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி? - 20. லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல் - 21. மொசில்லா – பாப்கார்ன் - 22. படங்களை ஒப்பிடுதல் – Geeqie - 23. GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ] - 24. அப்டானா ஸ்டூடியோஸ் - 25. Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி - 26. zimbra-desktop மின்னஞ்சல்களை படிக்க மென்பொருள் - 27. பிடிஃஎப் கோப்புகளிருந்து படங்களை பிரித்து எடுக்க - 28. Hybrid PDF என்றால் என்ன? - 29. சுகோபனோ(SOKOBANO):ஒரு அருமையான முப்பரிமான புதிர் விளையாட்டு - 30. பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler) - 31. உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய - 32. குறித்த நேரத்தில் கணினியை விழிக்க வைக்க!! - 33. Flowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான் - 34. கேடென்லைவுடன்(Kdenlive) காணொளி தொகுத்தல்(video editing) - 35. ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம் - 36. Free Software – என்ன பயன்? - 37. Youtube/ Vimeo காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம் மாற்ற – Clipgrab - 38. உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல் - 39. awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி? - 40. வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள் - 41. உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’ - 42. pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு - 43. ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2 - 44. உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள் - 45. மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக - 46. Calibre – மின் புத்தக நிர்வாகம் - 47. டைம் ட்ரைவ் – கால எந்திரம் - 48. shutter ஒரு வரப்பிரசாதம் - 49. கிட் – Distributed Revision Control System - 50. குரோமியம் & க்ரோம் - 51. Arduino – ஓர் அறிமுகம் - 52. CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள் - 53. Stellarium – வானவியல் கற்போம் - 54. தட்டச்சுக்கான கட்டற்ற மென்பொருள் - 55. நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 5 கட்டற்ற மென்பொருட்கள் - 56. பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் : - 57. MP4TOOLS – மல்டி மீடியா மாற்றி - 58. கார் ஓட்டலாம் வாங்க Torcs - 59. Gedit – உரை பதிப்பான் - 60. Scribus – ஒரு DTP மென்பொருள் - 61. உபுண்டு மென்பொருள் மையம் - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - அறிமுகம் 1 பயனுள்ள கட்டற்ற மென்பொருட்கள் [PKMP] பயனுள்ள கட்டற்ற மென்பொருட்கள்   கணியம் குழு http://kaniyam.com உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். உரிமை :  Creative Commons Attribution 4.0 International License.​ வெளியீடு : FreeTamilEbooks.com மின்னூலாக்கம் – Guruganesh – guru96299@gmail.com அட்டைப் படம்  – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com       [pressbooks.com] 1 படக்கதைகளை உருவாக்கலாம் இருபரிமானஅசைவூட்டு படக்கதைகளை நாமே உருவாக்கிட உதவும் ஸ்கிராச் எனும் திறமூல பயன்பாடு   [] ஸ்கிராச் என்பது இருபரிமான அசைவூட்டு படங்களையும் விளையாட்டுகளையும் படக்கதைகளையும் தொடக்கநிலையார்களும் உருவாக்கிட உதவிடும் நிரல்தொடர் எழுதவதற்கானசூழலை கொண்ட தொரு திறமூல மொழியாகும்.இதனை http://scratch.mit.edu/ என்ற தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்க இதனை நிறுவி பயன்படுத்திட 800 X 480 துல்லியம் கொண்ட 16 பிட்டிற்கு மேற்பட்ட திரை, விண்டோ 2000இற்கு பிந்தைய பதிப்புடைய இயக்கமுறைமை, 120 மெகாபைட் காலி நினைவகம், ஒலி,ஒளிஒலி அமைப்பு ஆகியவை தேவையானவையாகும் இந்த ஸ்கிராச்சின் ஒரு செயல்திட்டத்தை sprites என அழைப்பார்கள். இதில் பயன்படுத்திடும் கட்டளைகள் scripts என அழைப்பார்கள். Sprites என்பது வரைபட பதிப்பானால்(paint editor) உருவாக்கபட்ட அல்லது நினைவகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யபட்ட ஒருகுழுவான உருவபடங்களின் தொகுப்பாகும் இந்த தொகுதியின் ஒவ்வொருஉருவப் படமும் ஒருcostume என அழைக்கபடும். இந்த ஸ்கிராச்சினுடைய முதன்மை பக்கத்திரையானது block palette ,scripts area, stage ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை கொண்டதாகும் . ஸ்கிராச்சினுடைய முதன்மை பக்கத்திரையின் block palette ஆனது Movement, Looks, Sound, Pen, Control, Sensing, Operators, Variables ஆகிய எட்டு துனைப்பகுதிகளை கொண்டது. அதற்கடுத்தாகவுள்ள scripts area ஆனது ஸ்கிராச்சின் கட்டளை தொகுதிகளை அவ்வப்போது இயந்திர மொழிக்கு மொழிமாற்றும் பணியை செய்கின்றது. block palette இலிருந்து scripts area இக்கு கட்டளைகளானது கொண்டுவரபட்டு விட்டவுடன் வரிசைகிரமமாக தருக்கமுறையில் செயல்படசெய்கின்றது இந்தspritesஐ தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மேலிருந்து கீழாக செயல்படுத்துகின்றது மூன்றாவதாகவுள்ள stageஎன்பது இறுதிய நிலையாகும் அசைவூட்டு படங்களை உருவாக்கிய பின் அதனை இயந்திர மொழியாக மாற்றி செயல்படுத்திட கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உருவாக்கிய அசைவூட்டு படங்கள் இயந்திரமொழிக்கு குறிமுறைகளாக மொழிமாற்றிடும் செயல் ஆரம்பித்து வெளியீடு stageஎன்ற பகுதிக்கு வந்து சேர்ந்து திரையில் பிரதிபலிக்க செய்கின்றது. (இதழ் 23 நவம்பர் 2013 ) ச.குப்பன் kuppansarkarai641@gmail.com 2 OCTAVE திறமூலமொழி சிக்கலான கோட்டு சமன்பாடுகள் தீர்வுசெய்ய பயன்படும் Octave எனும் திறமூலமொழி அறிவியல் ஆய்வுகளிலும் கணிதஆய்வுகளிலும் சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்யவேண்டிய நிலைஉள்ளது அவ்வாறான சிக்கலான கணக்குகளை மிகஎளிதாக தீர்வுசெய்திட Octave எனும் திறமூலமொழி உதவுகின்றது இந்த Octave எனும் மேம்பட்ட மொழியானது திறமூல குழுவின்மூலம் கட்டளைவரிகளின் வாயிலாக சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன Matlab ஐ பற்றி அறிந்தவர்கள் மிகசுலபமாக அதன் தொடர்ச்சியான [] இந்த Octave எனும் திறமூலமொழியை தெரிந்துகொள்ளமுடியும் மிகஅனுபவம் வாய்ந்த கணிதஅறிஞர்கள்கூட தீர்வுகாண அவதிபடும் சிக்கலான கோட்டு சமன்பாடுகளை மிகஎளிதாக தீர்வுசெய்வதற்கான பலஅரிய கருவிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது அடுக்குக்கோவைகள் ,ஒருங்கமைவு சமன்பாடுகள் வேறுபாட்டு சமன்பாடுகள்,வெவ்வேறு இயற்கணித சமன்பாடுகள் போன்ற மிக சிக்கலான சமன்பாடுகளை இதிலுள்ள செயலிகளின் வாயிலாக மிகச்சுலபமாக தீர்வுகாணமுடியும் மேலும் இது சி ,சி++, போர்ட்ரான் போன்ற மொழிகளில் எழுதபட்ட தகவமைவுகளோடு ஒருங்கிணைந்து செயல்படும் திறன்வாய்ந்ததாகவுள்ளது. இது மிகமேம்பட்ட கணித தீர்வுகாணும் மொழிஎன்பதால் Matlab or Fortran போன்றவற்றை நன்கு அறிந்தவர்கள் இந்த Octave எனும் திறமூலமொழியை பயன்படுத்திடுமாறு கேட்டுகொள்ளபடுகின்றது ஏனெனில் மிகச்சிக்கலான கணித சமன்பாடுகளை இதன்மூலம் தீர்வுசெய்வதற்காக மணிகணக்கில் முயன்றாலும் புதியவர்களுக்கு சோர்வும் வெறுப்பும் ஏற்பட்டுவிடும் என்ற அறிவரையை மனதில் கொள்க இதனுடைய வரைகலையை பயன்படுத்தி தரவுகளை வரைபடமாகவும் அதனைதொடர்ந்து இடைமதிப்புகள் குறிப்பிட்ட மதிப்பு எவ்வாறுஇருக்கும் என யூகித்து கண்டுபிடிக்கவும் முடியும் இது பொது அனுமதிபயன்பாடாக (GNU General Public License)கையடக்கநிலையில் கிடைக்கின்றது. [] (இதழ் 23 நவம்பர் 2013 ) ச.குப்பன் kuppansarkarai641@gmail.com 3 கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது. தானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இந்த மென்பொருளானது மிகவும் உதவியாக இருக்கும், மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க உதவும். “Qshutdown” ஆனது EasyShutdown என்ற மென்பொருளோடு ஒத்த செயல்பாடு கொண்டதாக உள்ளது. இருப்பினும் இந்த மென்பொருளானது தனிப்பயன் தேதி தேர்வு(Custom Date Selection), போன்ற மேம்பட்ட விருப்பங்களையும் வழங்குகிறது. இந்த மென்பொருளானது உபுண்டு சார்ந்த இயங்குதளங்களான Kubuntuமற்றும் Xubuntuபோன்ற இயங்குதளங்களில் இயங்குகின்றது. இந்த மென்பொருளை உருவாக்கியவரின் கணக்குப்படி இது UNIX மற்றும் FreeBSD போன்ற இயங்குதளங்களிலும் வேலை செய்யலாம், ஆனால் இதுவரை சோதனை செய்யப்படவில்லை. நீங்கள் பின்வரும் PPA பயன்படுத்தி qshutdownநிறுவ முடியும்: sudo add-apt-repository ppa:hakaishi/qshutdown sudo apt-get update sudo apt-get install qshutdown   இந்த மென்பொருளை நிறுவிய உடன் qshutdown’ஐ துவக்கவ[]ும். துவக்கிய பின்பு எந்த செயலை செய்ய வேண்டும் என்று தேர்வுசெய்யவும் (பணிநிறுத்தம், இடைநிறுத்தம் அல்லது உறக்கம்). செயலை தேர்ந்தெடுத்தபின்பு காலநேரத்தை தேர்வுசெய்ய வேண்டும். (எடுத்துக்காட்டாக: 3 நிமிடம்). Coundownதொடங்க OKபொத்தானை சொடுக்கவும். அல்லது செயலை உடனடியாக இயக்கNow பொத்தானை சொடுக்கவும்.     ஒருவேளை நீங்கள் நேரத்தை மாற்றியமைக்க விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் app-indicator பட்டியில் இருந்து மென்பொருளை தொடங்கி மென்பொருளில் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய செயல்பாட்டை பின்னர் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நினைத்தால் இந்தமென்பொருளை நீங்கள் சிறிதாக்கி app-indicator பட்டியிலும் வைத்துக் கொள்ளலாம்.   []   விருப்பம் (preferences) மெனுவிலிருந்து நீங்கள் எழுத்துருஅளவு, அதிகபட்சகோப்பு அளவு, தன்னியக்கதொடக்கம் (Autostart), எச்சரிக்கைகளை செயல்படுத்துதல் போன்ற செயல்களை மாற்றியமைக்க முடியும். []   நீங்கள் உங்கள் உபுண்டுபதிப்பிற்கானqshutdownமென்பொருளை Launchpad ல்இருந்தும்பதிவிறக்கமுடியும். Download qs hutdown https://launchpad.net/~hakaishi/+archive/qshutdown மூலம் http://www.addictivetips.com/ubuntu-linux-tips/schedule-system-shutdown-reboot-hibernate-in-ubuntu-with-qshutdown/   பிரவீன்   praveen s < praveen9482@gmail.com >   இதழ் 23 நவம்பர் 2013   4 ஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள் ஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள்   நம்மில் பெரும்பாலானோர் நினைவுபடங்களையும் ஒலிஒளிபடங்களையும் திருத்தம் செய்திடவும் மேம்படுத்திடவும் அதன்பின் அதனை பல்லூடகத்தின் மூலம் பார்வையிடவும் விரும்பும் நிலையில் அதனை செயற்படுத்திடும் நிறுவனத்திடம் அல்லது கடைகளிலும் அல்லது அதற்கான வல்லுனரிடமும் கொடுத்து சரிசெய்து பெற்று திரையிட்டு பார்த்து மகிழ்ந்திடுவோம். துரதிஷ்டவசமாக அதே செயல்களை செய்கின்ற ffDiaporama எனும் திறமூல மென்பொருள் இருப்பது நம்மில் பெரும்பாலோனுருக்கும் தெரியாத செய்தியாகும். இதனை இயக்கி செயல்படுத்திடுவதற்காக ஒலிஒளிபடங்களை கையாளும் திறன்கொண்ட வல்லுனர் போன்ற நிபுனத்துவ அறிவோ திறமையோ தேவையில்லை .அதற்கு பதிலாக பாமரனும் மிகசுலபமாக இதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது உள்ளது இது Windows, Linux, Mac OS X Solaris போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன் வாய்ந்ததாகும். இது நிழற்படங்களையும் உருவபடங்களையும் ஒலிஒளிபடங்களையும் ஒலிஒளிபடங்களாக உருமாற்றிடும் திறன்மிக்கது.மேலும் எந்த வகையான படப்பிடிப்பு சாதனங்களின் மூலம் எடுக்கபடும் படங்களையும் home cinema systems, smart phones , tablets ஆகியவற்றில் காணும் வகையில் இது உருமாற்றிடும் திறன்வாய்ந்தது. [] அதுமட்டுமின்றி இது ஏறத்தாழ Windows Live Movie Maker என்பது போன்றே செயல்படுகின்றது . இதிலுள்ள Project என்ற தாவியின் திரையிலுள்ள add files. projects, titles , edit ஆகிய வாய்ப்புகளின் வாயிலாக ஒரு ஒலிஒளிபடத்தை காட்சியை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்து பதிப்பித்தல் செய்யலாம். அதன்பின் Render Video என்ற தாவியின் திரையிலுள்ள smart phones (Smart Phone, Apple, Nokia ,போன்ற கையடக்க சாதனங்கள்), Web (HTML , SWFஆகியவடிவமைப்பில் ,அல்லது DailyMotion , YouTube ஆகிய இணையதளங்களில் ), Multimedia Systems, gaming consoles, ADSL Box , media players ஆகிய வாய்ப்புகளின் மூலம் நாம் விரும்பும் வடிவமைப்பில் இதன் வெளியீடு அமையுமாறு செய்யமுடியும். இந்த திறமூல மென்பொருள் பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் http://ffdiaporama.tuxfamily.org/?page_id=178 என்ற இணைய பக்கத்திற்கு செல்க.. ச.குப்பன் kuppansarkarai641@gmail.com www.skopenoffic.blogspot.in, www.vikupficwa.wordpress.com ஆகிய வலைபூக்களுக்கு சென்று தங்களின் மேலான கருத்துகளை வழங்கிடுக. இதழ் 23 நவம்பர் 2013 5 Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு []Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட உதவிடும் விரிவாக்க செயலை அனுமதிக்கின்றது. மேலும் புதிய மொழிகளையும் ,புதியவசதிவாய்ப்புகளையும் சேர்த்து கொள்ள இது அனுமதிக்கின்றது .தற்போது Bluefish2.2.4 எனும் இதனுடைய புதிய பதிப்பு விண்டோவில் செயல்படுமாறு வெளியிடபட்டுள்ளது இது விண்டோ,மேக்,லினக்ஸ் போன்ற எந்தவொரு இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறும், ஒரே உரைபதிப்பானானது குறியீட்டு மொழி (Markup Language)போன்ற பல்வேறு மொழிகளிலும் செயல்படும் வண்ணம் மிகத்திறன்வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது. மிகப்பெரிய கோப்புகளையும், ஒரே சமயத்தில் ஏராளமான அளவிலான கோப்புகளை திறந்து கையாளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டிருந்தாலும் இதனுடைய கோப்பின் அளவு 4.2 எம்பி ஆகும். இது மிகப்பிரபலமான கட்டளைவரித்தொடர் மொழிகளான(Programming language) சி ,சி++ ஜாவா, போன்றவைகளையும், குறியீட்டு மொழிகளான (Marku[]p Language) ஹெச்டிஎம்எல்5, கோல்டு பியூஷன் மார்க்அப் லாங்குவேஜ் ஆகியவைகளையும், உரைநிரல் மொழிகளான(Scripting language)பியெர்ல், பைதான் ,ரூபி ,விபி ஸ்கிரிப்பட், ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளையும் ஆதரிக்கின்றது. அதுமட்டுமல்லாது தமிழ், சீன, ஜப்பானிய மொழி போன்ற பதினேழு மொழிகளுக்குள் மொழிமாற்றம் செய்திடும் திறன்மிகுந்தது ஆகும் இது இணைய பக்கங்களை உருவாக்குவதிலும் ஒதுக்கீடு செய்வதிலும் சேவையாளர் பணியிலும் மிகசிறப்பாக செயல்படுகின்றது இதில் வழக்கமான உரைபதிபபான்களில் உள்ளவறு கட்டளைபட்டை, கருவிகளின் பட்டை, குறிப்பிட்ட செயலுக்கு உடன் தாவிசெல்வதற்கான தாவிபட்டை, கோப்பினை தேடிபிடிப்பதாற்கான தேடுபொறி , உரைகளை திருத்திட உதவிடும் பதிப்புதிரை என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டுள்ளது .திரையின் கீழ்பகுதியிலும் வழக்கமான நிலைபட்டை, கட்டளைவரிகளின் வெளியீட்டு பகுதி ஆகியவை உள்ளன. இதன் திரைவடிவமைப்பானது வாடிக்கையாளர் விரும்பியவாறு குறிப்பிட்ட பகுதி அல்லது பலகம் திரையில் தோன்றவேண்டுமெனில் தோன்றசெய்யவும் குறிப்பிட்ட பகுதி மறையசெய்யவேண்டுமெனில் அவ்வாறே மறையசெய்யவும் அனுமதிக்கின்றது நம்மால் அடிக்கடி பயன்படுத்தபடும் கட்டளைகளை விரைவாக அணுகுவதற்கேற்ப அவைகளை முதன்மையான இடத்தில் வைத்து கொள்ளுமாறு அனுமதிக்கின்றது. இதனுடைய திரையின் இடதுபுற பலகத்தில் கோப்பினை தேடிபிடிப்பதாற்கான (file browser)என்றவசதி, சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) சேர்ப்பதற்கான வசதி,பக்க அடையாளக் குறியிடும் (bookmark)வசதி ,எழுத்து அமைவு பட(Character map)வசதி ஆகியவை இதில் கிடைக்கின்றன திரையின் இடதுபுற பலகத்தில் உள்ள கோப்பினை தேடிபிடிப்பதற்கான (file browser)வசதியின்மூலம் கோப்பினை புதியதாக உருவாக்குதல், ஏற்கனவே உள்ள கோப்பினை பெயர்மாற்றம் செய்தல், நிரந்தரமாக நீக்கம் செய்திடுதல் என்பனபோன்ற பல்வேறு பணிகளை வழக்கமான உரைபதிப்பானில் செய்வதைபோன்று செயல்படுத்தலாம் ஒருகுறிப்பிட்ட செயல்திட்ட பணிக்காக பல்வேறு குறிமுறைகளைஅல்லது குறிப்பிட்ட குறிமுறையை அடிப்படையாக கொண்ட தனித்தனி கோப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அல்லது தொகுதியாக உருவாக்கிட இது அனுமதிக்கின்றது வடிகட்டுதல்,காலியான வரிகளை நீக்கம் செய்தல் ,டாஸ் கட்டளை வரிகளை யுனிக்ஸ் கட்டளை வரியாக உருமாற்றம் செய்தல், திரும்ப திரும்பவரும் வரிகளை நீக்கம் செய்தல், குறிமுறைகளை வாடிக்கையாளர் விரும்பவண்ணம் வடிவமைப்பை அழகுபடுத்தி செம்மைபடுத்துதல், கோப்பினை பதிப்பித்தலுக்கான கட்டளை வரிகளை சேர்த்தல் என்பன போன்ற வழக்கமான பல்வேறு உரைபதிப்பு செயல்களை இதில் செய்திடமுடியும். பல்வேறு கோப்புகளை ஒரேசமயத்தில் திறந்து பணிபுரியும் போது ஒரு குழுவான குறிமுறைகள் மற்ற கோப்புகளிலும் உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதி இதில் உள்ளது இந்த உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதியின்மூலம் குறிப்பிட்ட உரைத்தொகுப்பின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த உரைபதிப்பான் ஆனது அடையாளக் குறியீடு (bookmark) செய்து கொள்ள அனுமதிக்கின்றது இணைய பக்கங்களை உருவாக்கிடும் போது எழுதப்படும் ஏராளமான கட்டளை வரிகளில் உள்ள செயல் தட்டங்களில எழுத்துபிழைகளை சரிசெய்யஉதவும்Spell check எனும் வசதி இதில் உள்ளது . ஜாவா, ஹெச்டிஎம்எல்5 ,விபி ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளின் கட்டளை வரிகளை சிறுசிறு குறிமுறைகளாக (snippets of code) தனித்தனி தொகுதியாக பிரித்து வைத்துகொள்ளும் வசதி இதில் உள்ளதால் குறிப்பிட்ட குறிமுறைகளின் வரியானது எந்த மொழியில் எழுதபட்டுள்ளது என குழம்பி தவிக்காமல் தெளிவுபடுத்த இது உதவுகின்றது மிகப்பெரிய செயற்திட்டங்களில் பல்வேறுகோப்புகளை உருவாக்கவேண்டிய நேரங்களில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும் தேடிபிடித்து திறப்பதற்கு மிகச்சிரமமாக உள்ள நிலையில் இடதுபுறபலகத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியில் Open Advanced என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன் கோப்புகள் அமைப்பின் வகைவாரியாக (.css, .java, .html)திரையில் தோன்றும் அவற்றுள் தேவையான வகையில் உள்ள கோப்புகளில் நாம்விரும்பும்கோப்பினை திறந்து கொள்ளமுடியும் இதே வழிமுறையில் துனைகோப்பகத்தில் உள்ள கோப்புகளையும் தேடிபிடித்து திறந்து கொள்ளமுடியும் குறிப்பிட்ட தவறான சொல்லை அல்லது சொற்றொடரை திருத்தம் செய்து சரியான சொல்லை அல்லது சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான find and replaceஎனும் வசதி இதில் உள்ளது இலக்கண பிழைகளையும், எழுத்துபிழைகளயும் சுட்டிகாட்டிடும் வசதி சொல்லை அல்லது சொற்றொடரை தட்டச்சு செய்திடும்போது மிகுதி எழுத்துகளை தானாகவே நிரப்பி கொள்ளும் வசதி ,உரையாடல் பெட்டி வழிகாட்டி உரையாடல் பெட்டி போன்றவைகளை தோன்றசெய்தல் என்பனபோன்ற வழக்கமான உரைபதிப்பானின் அனைத்து செயல்களையும் செய்யும் திறன் கொண்டதாகும் இதனைபற்றி மேலும் அறிந்து கொள்ள http://bluefish.openoffice.nl/index.html என்ற இணைய தளத்திற்கு செல்க  - ச.குப்பன் 6 Digits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!! ப . அருண் < aalunga@gmail.com > [] மிகவும் துல்லியமாக ஊகிப்பதில் வல்லவரா? அப்ப இது (4digits) உங்களுக்கான விளையாட்டு தான். இதை விளையாடுவது மிகவும் எளிது. 4 வெவ்வேறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை உங்கள் கணிணி தனது மனதிற்குள் (அதாவது, நினைவகத்தில்) நினைத்துக் கொள்ளும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான்!! ” இதில் என்ன இருக்கு? நாங்கல்லாம் வரிசையா எண்ணை அடித்து கண்டுபிடிப்போம்ல!!” அங்க தான் இருக்கு விளையாட்டே!! ஒரு எண்ணைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 8 வாய்ப்புகள் தான். எவ்வளவு விரைவாக முடிக்கிறீர்கள் என்பது உங்கள் திறமையைப் பொறுத்தது. [] விளையாட்டில் ஊகத்தை நீங்கள் உள்ளிட்டவுடன் , $A #B என்ற பதில் கிடைக்கும். அதாவது, உங்கள் எண்ணில் உள்ள $ இலக்கங்கள் சரியாக அதே இடத்தில் உள்ளன. # இலக்கங்கள் இடம் மாறி உள்ளன.(உ.தா: விடை 1729 : உங்கள் ஊகம் 1234 → 1A 1B; 5086 → 0A0B; 1279 → 2A 2B) சரியான எண்ணை நீங்கள் கண்டுபிடித்தால் 4A 0B என்று வரும்.. இந்த விளையாட்டினை யொங்கி பான் (Yongzhi Pan) python கொண்டு எழுதியுள்ளார். இது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனை நிறுவ python-gtk2 மற்றும் python-glade2 ஆகியவையும் தேவை. இது இயங்குதளம் பாகுபாடின்றி கிடைக்கிறது (Windows / Linux / Mac) . இந்த விளையாட்டை விளையாட : http://sourceforge.net/projects/fourdigits/ 7 K3b – உபுண்டு லினக்ஸில் CD/DVD யில் எழுதும் மென்பொருள் ‘KDE Burn Baby Burn’ என்பதன் சுருக்கமே K3b என்பதாகும். விண்டோஸ் இயங்குதளங்களில் CD/DVD யில் தகவல்களை எழுதுவதற்கு அல்லது பதிவதற்கு Nero மென்பொருள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல லினக்ஸ் இயங்குதளங்களில் K3b மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் Nero ஒரு வணிக மென்பொருள் ஆகும். ஆனால் K3b ஒரு ஓப்பன் சோர்ஸ்(அகம் திறந்த) மென்பொருள் ஆகும். K3b யானது வரைகலை இடைமுகப்புடன் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாம் CD/DVD யில் எந்தெந்த பயன்பாட்டுக்களை மேற்கொள்ளவோமோ அத்தனை வகையான பயன்பாடுகளும் K3b யில் கிடைக்கிறது. மேலும் Disc Cloning என்று சொல்லக்கூடிய Disc to Disc Copying வேலையையும் K3b யில் நாம் மேற்கொள்ள முடியும். []  சாதரணமாக விண்டோஸ் பயனாளர்கள் Nero வில் மேற்கொள்ளக்கூடிய -  Data CD/DVD உருவாக்குதல் -  Audio CD/DVD உரு வாக்குதல் -  Video CD/DVD உருவாக்குதல் -  ISO Image களை எழுதுதல் -  CD/DVD Copying (பிரதியெடுத்தல்)  போன்ற அனைத்து வகையான அடிப்படை பயன்பாட்டையும் நாம் K3b யில் மேற்கொள்ளலாம். K3b யின் முக் கிய அம்சங்கள் : 1. Audio CD burning 2. Data Cd/DVD burning 3. CD Text support 4. Blu-ray [9]/DVD-R/DVD+R/DVD-RW/DVD+RW support 5. CD-R/CD-RW support 6. Mixed Mode CD (Audio and Data on one disk) 7. Multisession CD 8. Video CD/Video DVD authoring 9. eMovix CD/eMovix DVD 10. Disk-to-disk CD and DVD copying 11. Erasing CD-RW/DVD-RW/DVD+RW 12. ISO image support உபுண்டு 12.04/12.10/13/04 பதிப்புகளில் K3b மென்பொருளை நிறுவுதல்: படி 1: முனையத்தை(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொடுக்கவும் sudo apt-get update sudo apt-get install k3b (இந்த கட்டளைகளை இயக்கும் போது கடவுச்சொல் கேட்கும் அப்போது தங்களுடைய கடவுச்சொல்லை கொடுக்கவும்) படி 2: K3b யை வெற்றிகரமாக நிறுவிய பின் Dash Home க்குச் சென்று K3b என தட்டச்சு செய்தால் உங்களுக்கு K3b கிடைக்கும்.(படத்தைப் பார்க்கவும்) []   - இரா.கதிர்வேல் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர் பகிர்ந்து கொள்க 8 aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள் - டிமித்ரி பொபோவ் பெரும்பாலான புகைப்படம் எடுப்பவர்கள், ‘நிழற்படம் எடுத்தபின் செய்யும் வேலைபாடுகள், படைப்புத்திறனில் முக்கியமானவை’ எனக் கருதுவர். சில நேரங்களில் பெரிய செய்முறைகள் ஏதும் இல்லாமல் புகைப்படத்தின் தரத்தை மட்டும் மேம்படுத்த வேண்டி உள்ளது. இங்குத் தான், aaphoto உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த எளிய பயனுள்ள செயலி, ஒரு கட்டளையை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நிழற்படத்தின் தரத்தை மேம்படுத்தி விடுகிறது. பல பிரபலமான லினக்ஸ் பகிர்வுகளின் களஞ்சியங்களில் (repositories) aaphoto இடம் பெற்றுள்ளது. இதனால் உங்களது distro’s package manager-ஐ பயன்படுத்தி இதனை நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். டெபியன் மற்றும் உபுண்டுவில் “apt-get install aaphoto” என்னும் கட்டளையை root பயனராக இயக்கலாம். இதற்கு மாறாக ஒரு மொழி மாற்றப்பட்ட இருமத்தை (compiled binary) செயல்திட்ட வலைதளத்திலிருந்து (project’s website) நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, aaphoto-வை source-லிருந்து இருமமாக்கலாம் (compile). aaphoto, histogram-களை ஆராய்ந்தும், contrast, color balance, saturation மற்றும் gammalevelகள் போன்ற முக்கிய அமைப்புகளைப் படத்திற்கேற்றாற்போல சரிசெய்தும் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்த முயல்கிறது. சில சமயங்களில் மேம்படுத்துதலில் பிழை ஏற்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் aaphoto சிறப்பாகவே செயல்படுகிறது. aaphoto-வை பயன்படுத்துதல், இப்போது இருப்பதை விட எளிமையானதாக ஆக்க இயலாத ஒன்று: “aaphoto foo.jpg” என்ற கட்டளையை (foo.jpg என்பதை நீக்கிவிட்டு தங்கள் புகைப்பட கோப்பின் பெயரை) பயன்படுத்தவும். இதனால் aaphoto தானாக மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தின் பதிப்பைத் (version) தருகிறது. aaphoto-வால் JPEG, JPEG 2000 மற்றும் PNG போன்ற பல்வகை படங்களைக் கையாள முடியும். aaphoto-வைப் பயன்படுத்த aaphoto கட்டளையும், புகைப்படத்தின் பெயரும் போது என்றாலும், அது பல தெரிவுகளையும் (options) கூட வழங்குகிறது. –jpg, –png ஆகியன படத்தின் வகையைத் தெரிவிக்கின்றன –resize என்பது படத்தைக் குறிப்பிட்ட அளவுக்கு மாற்றுகிறது --quality ஆனது இறுதியாய் வெளிவரும் படத்தின் தரத்தை மாற்ற பயன்படுகிறது அளிக்கப்பட்டுள்ள அனைத்து தெரிவுகளையும் (options) காண “aaphoto –help” என்ற கட்டளையைப் பயன்படுத்துங்கள். aaphoto ஆனது மற்ற புகைப்படம் மாற்றம் செய்யும் செயலிகளுக்கு (photo editing applications) மாற்று அல்ல என்றாலும், சிறு சிறு மாற்றங்கள் அதிக கடினம் இல்லாமல், எளிதில் செய்ய இது ஒரு நல்ல கருவி. aaphoto * என்ற கட்டளை ஒரு folderல் உள்ள அனைத்து படங்களையும் மேலான முறையில் மேம்படுத்துகிறது. jopine  ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி 9 லைஃபோகிராஃப் (Lifeograph) தனிப்பட்ட மின்னணு நாட்குறிப்பேடு லைஃபோகிராஃப் என்பது சுய குறிப்பெடுக்க உதவும் செயலி ஆகும். குறிப்பேடு செயலியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நமக்கு இது திருப்திகரமாக வழங்குவதோடு, சில சிறப்பம்சங்களையும், குறைந்த அளவே உள்ள நிறுவும் தொகுப்பாக (installable package) தருகிறது. சிறப்பம்சங்கள்: - மறையாக்கம்(encryption) செய்த மற்றும் செய்யாத நாட்குறிப்பேடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது - சிறிது நேரத்திற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் தானாகவே வெளியேற்றி (logs out automatically) விடும் (ஒரு வேளை நீங்கள் வெளியேற மறந்துவிட்டால், உங்கள் நாட்குறிப்பேட்டை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு) (எனினும் இது கட்டாய தேர்வு இல்லை). - தலைப்புகள் மற்றும் உட் தலைப்புகளை தானாகவே வடிவமைக்கும் (இந்த யோசனையை வழங்கியதற்காக டாம்பாய்க்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்) - பொதுவான தேடல் / வடிகட்டி - வார்ப்புருகள் (editor themes) - விரும்பிய இடுக்கைகள் (favorite entries) - குறியிடுதல் (entry tagging) - பிழை சரிபார்த்தல் (spell checking) - விக்கி போன்ற மேம்பட்ட எழுத்து வடிவமைத்தல் (bold, italic, strikeout, மேலும் பல) - இடுக்கைகளுக்குள் இணைப்பு – URI போன்ற இணைப்புகள் (http://, file://, mailto://, மேலும் பல) - தானியங்கி நகலாக்கம் (automatic backup) - தனி இடுக்கைகள் அல்லது குறிப்பேடு முழுவதும் உள்ள இடுக்கைகளை மாற்றலாம் - ஒரு தனிப்பட்ட குறிப்பேடு அல்லது அனைத்து குறிப்பேடுகளையும் அச்சிடலாம் - பொதுவான புள்ளியியல் அட்டவணை (basic statistical chart) பின்வரும் வெளியீடுகளில் நாம் எதிர்பார்ப்பவை: - இடுக்கைகளில் புகைப்பட இணைப்பு - உட்பொருத்திகள் (plug-ins) லைஃபோகிராஃப்-ஐ உபுண்டு 12.04 ல் நிறுவ, முனையத்தில் பின்வரும் கட்டளைகளை தட்டச்சு செய்யவும்: sudo add-apt-repository ppa:dmxe/ppa sudo apt-get update sudo apt-get install lifeograph [] [] நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/ 10 Wallpaper சுழற்சிகள் விண்டோஸ் பயன்படுத்தி விட்டு, லினக்ஸ் பக்கம் வந்த பின், எனக்கு இருந்த மிகப் பெரும் குறை, wallpaper-ஐ த் தான்தோன்றித்தனமாக(random), ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மாற்றும் வசதி இல்லை. இதற்குத் தகுந்த இலவச லினக்ஸ் மென்பொருள் தான் இந்த WALLCH. [http://wall-changer.sourceforge.net/] இதனைப் பதிவிறக்க : http://sourceforge.net/projects/wall-changer/files/latest/download?source=files பதிவிறக்கியக் கோப்பை நீங்கள் அழுத்தும் பட்சத்தில், நாம் Ubunut Software Center-க்கு அழைத்துச் செல்லப்படுவோம். அங்கு Install என்னும் பட்டனை அமுக்கினால் போதும். இதனை நாம் நிறுவிய பின், நமக்குத் தேவையான  wallpaper-களை இதனுள் சேர்த்து விட்டு, சுழற்சிக்கான நேரத்தையும் மாற்றி விட வேண்டும். பின் இதனை இயக்கினால், தானாக நாம் சேர்த்த wallpaper-களெல்லாம் மாறி மாறி வரும். [] சிறப்பம்சங்கள் : - wallpaper-களை நாம்  ஆல்பமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதனை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். - படக் கோப்புகள் உள்ள folder-ஐ நேராக சேர்க்கலாம். - wallpaper-ஐ வரிசையாக அல்லது மாற்றி மாற்றி சுழல வைக்கலாம் - சுழற்சி நேரத்தையும் நாம் தேர்வு செய்யலாம், அல்லது அதுவே மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ளும். - இந்த மென்பொருள்  மூலம் web cam அல்லது snapshot எடுத்து, wallpaper சுழற்சியில் சேர்க்கலாம் - வரலாறு ரொம்ப முக்கியம். இந்த மென்பொருள் நாம்  wallpaper-களை மாற்றி அமைக்கும்  (சேர்க்கும், நீக்கும்) பொழுது, தேதியையும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்கிறது. இதுவரை எவ்வளவு நேரம் இந்த மென்பொருள் இயங்கிக் கொண்டுள்ளது, எத்தனை முறை wallpaper-ஐ மாற்றி உள்ளது என்பதையும் கச்சிதமாக கணக்கிட்டுச் சொல்கிறது. - எந்நேரமும்  இணைய வசதி உள்ளவர்களுக்கு, உலகத்தின் செயற்கைக்கோள் படத்தை அல்லது விக்கி பீடியா ‘photo of the day’ படத்தை,  அதுவாகவே எடுத்து wallpaper-ஆக வைக்கும். நம் கணினி இயங்க ஆரம்பித்த உடன், இதுவும் அதன் வேலையை ஆரம்பித்து விடும். இதனை நாம் கட்டுப்படுத்தலாம். நாம் விரும்பினால், ஒவ்வொரு wallpaper மாறும் போதும் ஒலியைச் சேர்த்துக் கொள்ளலாம். இதைத் தவிர , இந்த WallCh நிறுவனம் நமக்கென 1000 wallpaper-களை இலவசமாகத் தருகிறது. (சொடுக்கவும்)  http://wall-changer.sourceforge.net/downloads/desktop-wallpapers.html நீங்களும் என்னைப் போல ஒரு wallpaper விரும்பியா? நீங்கள் நிச்சயம் பார்த்து பயன்படுத்த வேண்டிய தளம் -> wallbase.cc . இந்தத் தளம் Creatvie Commons-ல் உள்ளது! வண்ண வண்ண வால்பேப்பர்கள், மாற்றி மகிழுங்கள் ! —- பெயர்: ஓஜஸ் aoojass@gmail.com ட்விட்டர் : @oojass வலைப்பூ : நாற்சந்தி – naarchanthi.wordpress.com நான் அ.ஓஜஸ். உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன். உலகத்தையும், இணையத்தையும், படித்து வருகிறேன். 11 பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம் பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம் பி.டி.எஃப் கியூப் அற்புதமான சிறப்பியல்புகள் கொண்ட, ஒரு வேகமான மற்றும் குறைந்த கோப்பு அளவு உள்ள பி.டி.எஃப் காண்பிப்பான் ஆகும். முப்பரிமாண சுழலும் கன சதுர தோற்றத்தை உருவாக்க இது பாப்ளர் (Poppler) மற்றும் ஓபன் ஜி.எல். (OpenGL) ஐ பயன்படுத்துகிறது. இது பார்ப்பதர்க்கு அழகான தோற்றங்களுடன் பி.டி.எஃப் களை காண உதவுகிறது (சிறப்பாக லேடெக்ஸ், பீமர் மற்றும் பிரோஸ்பெர் காட்சியளிப்பு(presentation)). முப்பரிமாண சுழலும் கன சதுர உருவகம் பெரிய திரையில் மிக அழகாய் தோற்றம் அளிக்கும். அடிக்கடி கன சதுர உருவகம் பயன் படுத்தினால் அது பார்ப்பதற்கு எருமையும் கழுதையும் ஜோடி சேர்ந்தார் போல் இருக்கும். ஆனால், காட்சி ஓட்டத்தின் அடுத்த பகுதிக்கு செல்லும் போது மட்டும் இதை பயன்படுத்தினால், பார்வையாளர்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம் என்பது எளிதாய் புரியும். பிடிஎஃப் கியூபின் முக்கிய கவனம், அதன் அசைவூட்டம் (animation), வேகம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் தான் உள்ளது.(DRI வன்பொருள் கொடுக்கப்பட்டிருக்குமேயானால்). உபுண்டுவில் நிறுவுதல்: உபுண்டு முனையத்தில், sudo apt-get install pdfcube என்ற கட்டளையை இயக்கவும். திரைப்பிடிப்பு: [] ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி 12 விக்கிபீடியா கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண உதவும்Kiwix மற்றும் Okawix விக்கிபீடியா – இலவச கலை களஞ்சியம் (Wikipedia – The Free Encyclopedia) – இது இன்று இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவராலும் நன்கு அறிந்ததே! விக்கிபீடியா கட்டுரைகள் Creative Commons கீழ் உள்ளதால் இவற்றை சுதந்திரமாக பயன்படுத்தவும் நகலெடுக்கவும் இயலும். மேலும், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுத முடியும். இதன் காரணமாக தற்போழுது விக்கிபீடியாவில் 30 இலட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. முதல் பத்து இணைதளங்களில் விக்கிபீடியாவும்ஒன்று. (http://www.onlinemba.com/blog/wikipedia-facts/) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவராலும் விக்கிபீடியா பயன்படுத்தப்பட்டு வருகிறது.[]  தமிழகத்தின் இலவச மடிக்கணினி திட்டத்தாலும், குறைந்த விலையில் இணைய இணைப்பு கிடைப்பதாலும் அனைவராலும் இணையத்தை எளிதாகப் பயன்படுத்த இயலுகிறது. விக்கிபீடியாவை ஆப்ஃலைனில் கொண்டு வருவதன் மூலம் இன்னும் சிறப்பாக, எளிதாக தகவல்களை பெற இயலும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் இணைய இணைப்பின்றியே விக்கிபீடியா கட்டுரைகளை எளிதாகப் பெற முடியும். பள்ளிகளில் உள்ள கணினிகளில் விக்கிபீடியாவை ஆப்ஃலைனில் நிறுவ அறிவுறுத்தலாம். இதனை Kiwix மற்றும் Okawix நமக்குச் செய்து தருகின்றன. மேலும் இந்த மென்பொருள்கள் Creative Commons License மூலம் வழங்கப்படுகின்றன.   www.kiwix.org இணையதளத்தில் இருந்து kiwix ஐ நிறுவிக்கொள்ளலாம். Kiwix *.zim என்ற கோப்பினைப் படிக்கும். kiwix.orgஆல் உருவாக்கப்பட்ட சில விக்கிபீடியா கோப்புகள் www.kiwix.org இணைய தளத்தில் உள்ளன. அதில் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் 3.7 GB மற்றும் 10 GB அளவில் உள்ளன. இதில் 3.7 GB கோப்பில் 45,000 கட்டுரைகளும் (படங்களுடன்), 10 GB கோப்பில், சனவரி 2012 க்கு முடிய உள்ள அனைத்து கட்டுரைகளும் (படங்கள் இன்றி) உள்ளன. [] மேற்கண்ட கோப்பினைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அதனை Kiwix- இல் திறந்தவுடன் 20 – 30 நிமிடங்கள் indexing முடிந்த பின்னர், விக்கிபீடியாவில் உள்ள அதிகப்படியான கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண இயலும். உங்களிடம் விக்கிபீடியாவில் கணக்கு இருந்தால் உங்களுக்குத் தேவைப்படும் கட்டுரைகளை ஒன்று சேர்த்து(Go to Print/Export in left panel > Create a book > enable book creator and then place the cursor on wikipedia links > add linked wiki page to your book – see below image) அதனை ஒரே கோப்பாக *.zim பதிவிறக்கம் செய்து அதனை Kiwix ல் படிக்கவும் தேவைப்படும் போது நகல் எடுக்கவும் அல்லது pdf கோப்பாக மாற்றவும் முடியும். Okawix மென்பொருளும் இதே போல் தான். ஆனால் Okawix *.okawix கோப்பினைப் படிக்கும். இதனை www.okawix.com இணைய தளத்தில் பெறலாம். இதனை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக இயக்கலாம். இதற்கான விக்கிபீடியா கோப்புகள் அதன் இணைய தளத்திலேயே கிடைக்கின்றன. [] [] [] இது காரைக்குடியில் இருந்து லெனின். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறேன். கடந்த 4 வருடங்களாக உபுண்டு லினக்ஸை பயன்படுத்தி வருகிறேன். வாய்பளித்த கணியம் இதழிற்கு நன்றி. e-mail : guruleninn@gmail.com பகிர்ந்து கொள்க 13 IRC – ஒரு அறிமுகம் இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்.   IRC என்றால் என்ன ? 1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த IRC . அன்று முதல் இன்று வரை இது பல பயனர்களை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உதவுகிறது. இந்த தொடர்பு முறை பொதுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இருக்கலாம். இன்று, IRC யில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உள்நுழைவு, மறையாக்கம்  என புதுப்புது அம்சங்கள் நிறைந்த சேவையாக இந்த IRC உருமாறியுள்ளது.   யார் IRC யை பயன்படுத்துகிறார்கள் ? IRC கண்டுபிடிக்கபட்டு பல வருடங்கள் ஆனாலும், இன்று வரை அது புழக்கத்தில் தான் உள்ளது. தங்களை போன்ற விருப்பு வெறுப்புகளை கொண்ட மற்ற நபர்களை சந்தித்து பேச IRC ஒரு அருமையான தளத்தை அமைத்து தருகிறது. IRC கிளையன் வழங்கன் (Client – Server ) முறையை பயன்படுத்தி நம்மை அரட்டை அடிக்க வைக்கிறது.   கிளையன் (Client ) என்றால் யார் ? ஒரு IRC சர்வர் உடன் எப்போது உங்களை நீங்கள் இணைத்து கொள்கிறீர்களோ அப்போதே நீங்கள் ஒரு client ஆகிறீர்கள். அவ்வாறு ஆன பின் அந்த சர்வர் இல் இருக்கும் மற்ற client களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.   வழங்கன் (server ) என்றால் யார் ? அனைத்து client களையும் இணைத்து ஒரு அரட்டை அரங்கத்தை (chat session ) ஐ நடத்தும் கருவி தான் இந்த சர்வர். IRC யில் சர்வர் இல்லாமல் நீங்கள் client களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது.   Pidgin பதிவிறக்கம் செய்யலாம் [] Pidgin என்பது ஒரு எளிய IRC client . அதனை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். பதிவிறக்கம் செய்ய இந்த லிங்க்http://www.pidgin.im/download ஐ சொடுக்குங்கள். அதனை நிறுவ, பதிவிறக்கம் செய்யப்பட்ட file ஐ சொடுக்குங்கள். பின், அதனை நிறுவுங்கள்.   Pidgin நிறுவிய பின் அதனை configure செய்ய வேண்டும். [] Pidgin ஐ துவங்குங்கள். Accounts tab இற்கு சென்று “Manage Accounts ” கிளிக் செய்து Add கிளிக் செய்யுங்கள். உங்களிடம் ஏற்கனவே பயனர்பெயரும் கடவுச்சொல்லும் இருந்தால் அதனை கொடுங்கள் இல்லை என்றால் கடவுச்சொல் தராமல் வெறும் username மட்டும் கொடுத்து “add ” பட்டன் ஐ சொடுக்குங்கள். நீங்கள் கொடுத்த பயனர்பெயர் ஏற்கனவே உபயோகத்தில் இருந்தால் /nick “விருப்பப்பட்ட பெயர்” என்ற command ஐ கொடுத்து பயனர்பெயரை மாற்றுங்கள். பயனர்பெயரை தேர்ந்து எடுத்தை பின் அதனை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அதனை செய்ய பின்வரும் இந்த command ஐ அளிக்க வேண்டும். /msg NickServ REGISTER your_password email@address.com     [] your _password என்ற இடத்தில் உங்களது கடவுச்சொல்லையும் email@address.com என்ற இடத்தில் உங்களது email முகவரியையும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்த பின் நீங்கள் உங்களது email inbox ஐ பார்க்க வேண்டும். Nickserv விடம் இருந்து வந்திருக்கும் email ஐ திறந்து அதில் உள்ள command line ஐ copy செய்து கொள்ளுங்கள். பின் அந்த line ஐ Nickserv இல் paste செய்யுங்கள். அவ்வாறு செய்த பின் நீங்கள் பதிவுபெற்ற user ஆகிவிடுவீர்கள்.   [] [] [] [] நீங்கள் முதலில் கடவுச்சொல் தராமல் உள்ளே வந்து இருந்தால், மறுபடியும் Accounts > Manage Accounts > add இற்கு சென்று உங்களது புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை அளிக்க வேண்டும். []   இதன் பின் நீங்கள் முதலில் கொடுத்து இருந்த account ஐ அளித்து விடலாம்.   [] இவ்வாறு அளிக்கா விட்டால், ஒவ்வொரு முறையும் “/msg NickServ IDENTIFY your_password” என்ற command ஐ அளித்து தான் நீங்கள் IRC யை தொடக்க முடியும். ஒரு IRC நெட்வொர்க்கில் இணைவது எப்படி ? ஒரு IRC நெட்வொர்க்கில் ஒன்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் (channels ) இருக்கும். ஒரு நெட்வொர்க் ஐ நிறுவ IRC சர்வர் தேவைபடுகிறது. ஒரு தனிப்பட்ட ஆர்வத்தை கொண்ட மக்களை ஒன்றாக இணைத்து பேச வைக்கும் குழுக்கள் தான் இந்த channels . இதை போன்று பல்லாயிர சேனல்கள் ஒரு IRC நெட்வொர்க்கில் இருக்கலாம். ஒரு IRC நெட்வொர்க்கில் இணைய அதன் address ஐயும் Port Number ஐயும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அப்பிடிப்பட்ட நெட்வொர்க் ஐ கண்டுபிடித்தபின் உங்கள் client ஐ கொண்டு நீங்கள் இணைந்துகொள்ளலாம்.   ஒரு எடுத்துகாட்டை பாப்போம். 1 . முதலில், இங்கே இருக்கும் சிறந்த IRC நெட்வொர்க் களை பற்றி பாருங்கள். 2 . நான் அதில் “freenode ” என்ற நெட்வொர்க் ஐ தேர்ந்து எடுத்துக்கொண்டேன். 3 . அதன் address ஐயும் Port Number ஐயும் பார்த்து விட்டு எனது IRC client இல் அவற்றை சேர்த்து கொண்டேன். 4 . இதே காரியத்தை நீங்கள் /SERVER irc.freenode.net என்ற command ஐ உபயோகித்தும் செய்யலாம். (irc.freenode.net என்ற இடத்தில உங்களது server address ஐ அளிக்க வேண்டும்) 5 . இவ்வாறு செய்து ஒரு நெட்வொர்க்கில் இணைந்த பின் நீங்கள் command களை கொடுக்க தொடங்கலாம்.   []   ஒரு IRC சேனலில் சேருவது எப்படி ? ஒரு Yahoo messenger இல் வரும் chat room களை போன்றது தான் இந்த சேனல்கள். அது அப்பிடியே chat room களை போன்றது என்றும் சொல்லிவிட முடியாது. எனவே நாம் அதனை மக்கள் தொடர்பு கொள்ளும் இடமாக கருதலாம். ஒரு நெட்வொர்க்கில் இணைந்த பின் நீங்கள் அதில் உள்ள சேனல்களில் சேரலாம். அவ்வாறு செய்ய பின்வரும் command ஐ கொடுங்கள். /list   [] அவ்வாறு செய்த பின் அந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து சேனல்களையும் நீங்கள் பார்க்கலாம். எந்த சேனலில் சேர உங்களுக்கு விருப்பமோ அதனை select செய்து “join ” பட்டன் ஐ சொடுக்கவும். சில உபயோகமான தகவல்கள் ஒரு வழியாக ஒரு IRC சேனலில் சேர்ந்து விட்டீர்கள். இதன் பின் என்ன செய்வது? பின் வரும் தகவல்களை படித்து சற்று தெளிவு பெறுங்கள். 1 . ஒரு நெட்வொர்க்கில் சேர்ந்த பின் அதன் வழிமுறைகளை பற்றியும் விதிகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் மீறினால் அந்த சேனலில் இருந்து நீங்கள் தடை செய்யப்படலாம். 2 . IRC இல் நீங்கள் யார் என்று தெரியாத காரணத்தினால் அதை தவறாக பயன் படுத்தாதீர்கள். விதிகளுக்கு உடன்பட்டு நடந்து கொள்ளுங்கள். 3 . எந்த காரணத்திற்காகவும் விதிகளை மீறி தவறான முறையில் நடந்து கொள்ளாதீர்கள். 4 . தேவை இல்லாமல் தவறான தகவல்களை பரப்பாதீர்கள். 5 . மற்றவர்களின் தனிமையை மதியுங்கள். யார் என்றே தெரியாமல் அவர்களுக்கு அழைப்பு விடாதீர்கள். 6 . தேவை இல்லாமல் உங்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.   சில முக்கியமான command கள்   IRC யில் எந்த ஒரு command ஐ அளித்தாலும் அதற்கு முன் ஒரு ” / ” குறியை அளிக்கவேண்டும். /nick username பயன்படுத்தி உங்களது பயனர்பெயரை மாற்றி கொள்ளலாம். /msg recipient பயன்படுத்தி எந்த ஒரு நபருக்கும் உங்களது செய்தியை அனுப்பலாம். எடுத்துகாட்டு, /msg NickServ IDENTIFY your_password   /list பயன்படுத்தினால் உங்களது நெட்வொர்க்கில் உள்ள அணைத்து சேனல்களையும் பார்க்கலாம். பயன்படுத்தி ஒரு சேனலில் சேரலாம். /help பயன்படுத்தி எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்து கொள்ளலாம் . /away I am away என்ற command ஐ உபயோகித்தால் நீங்கள் வெளியே இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் . “I am away” என்ற செய்திக்கு பதிலாக நீங்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும் தரலாம் . /quit அளித்தால் நீங்கள் அந்த நெட்வொர்க் ஐ விட்டு வெளியே வரலாம் . இதன் பிறகு என்ன ? IRC ஐ பற்றி தேவையான முக்கியமான தகவல்களை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவே ? அதை உபயோகித்து பார்கலாமே !   []   ஸ்ரீராம் இளங்கோ காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன். எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr மின்னஞ்சல் : sriram.04144@gmail.com 14 அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் ~ ஸ்ரீராம் இளங்கோ நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு மூன்றாவது நபரை போன்றே காட்சியளிக்கும். அந்த சங்கடத்தை போக்க நீங்கள் பின்வரும் 10 பயன்பாட்டு மென்பொருட்களை நிறுவி பயன்படுத்தலாம். பிதொஸ் (Pithos) நீங்கள் நிறைய பாடல்களை இணையத்தின் மூலமாக கேட்பவர் என்றால் நீங்கள் விண்டோசில் Pandoraவை அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். உண்மையை சொல்ல போனால் Pandora போன்ற ஒரு சிறப்பான மென்பொருள் லினக்சில் இல்லை. இருந்தாலும், Pandora போன்ற மென்பொருட்களில் உள்ள அணைத்து சிறப்பம்சங்களும் இதில் உண்டு. கேட் (Kate) HTML போன்ற கணினி மொழிகளை தொகுக்கும் பொது பொதுவான Word மென்பொருட்கள் சிறப்பாக செயல்படாது. அனால் இந்த Kate எடிட்டர் HTML போன்ற மொழிகளையும் எளிதாக தொகுக்க வழி செய்யும். இதில் பல்வேறு அம்சங்களும் உண்டு. சிம்பிள் ஸ்கேன் (Simple Scan) ஒரு Scanner ஐ உங்களது கம்ப்யூட்டர் இல் இணைத்த பின், இந்த மென்பொருளை நிறுவினால் ஒரு படத்தை ஸ்கேன் செய்வது இவ்வளவு சுலபமா என்று நீங்களே யோசிப்பீர்கள்விண்டோஸைப் போன்று சலசல என்ற optionகள் இதில் இல்லை. பாஸ்கெட் நோட்ஸ் (Basket Notes) நமக்கு தோன்றும் ஒவ்வொரு யோசனைகளையும், நம் வேலைக்கு தேவைப்படும் விசயங்களும் பகுதிவாரியாக தனித்தனியே பிரித்து வைத்து அடுக்கி கொண்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்? இவை அனைத்தையும் செய்ய உங்களுக்கு உதவும் மென்பொருள் தான் பாஸ்கெட் நோட்ஸ். ப்ரசெரோ (Brasero) லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்தும் ஒவ்வொருவரது வாழ்கையிலும் ISO கோப்புகளை CD களாக மாற்றுவது ஒரு அன்றாட நிகழ்வு. இந்த காரியத்தை செய்ய ப்ரசெரோ வை விட சிறந்த மென்பொருள் வேறு எதுவும் கிடையாது. க்விப்பர்(Gwibber) [] நாம் அனைவரும் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துகிறோம். ஒரு நொடியில் ட்விட்டரில் ஆயிரகணக்கான ட்விட்டுகள் தட்டச்சு செய்யபடுகின்றன.இவை அனைத்தையும் ட்விட்டர் தளத்தில் பார்ப்பது ஒரு கடினமான காரியம். ட்வீட்டுகளை முறைபடுத்தி, ஒருங்கிணைத்து இதில் பார்த்து கொள்ளலாம். லக்கி பேக்கப் (Lucky Backup) இன்றைய சூழ்நிலையில் நமது கோப்புகளை CD , DVD களில் பராமரித்து பேக்கப் செய்வது என்பது ஒரு முடியாத காரியம். எனவே, நமது கோப்புகளை நமதுவன்தட்டிலேயோ(Hard Disk) அல்லது இணையதிலோ பேக்கப் செய்யும் வழிமுறைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான, முக்கியமான கோப்புகளை எளிதாக, வேகமாக பராமரிக்க பயன்படும் பல மென்பொருட்களில் இது தலை சிறந்தது.   கிளிப் கிராப் (Clip Grab) இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே கணியத்தில் ஒரு செய்தி குறிப்பு வந்துள்ளது. இருந்தாலும் இதை மறுமுறை சொல்வதில் எந்த தவறும் இல்லை. YouTube போன்ற பல இணையதளங்களில் இருந்து வீடியோ கோப்புகளை எங்களால் பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை என்பது பல லினக்ஸ் பயன்பாட்டளர்களின் கேள்வி. அதற்க்கு விடை அளிக்க உருவாக்க பட்டது தான் இந்த கிளிப் கிராப். ஷட்டெர் (Shutter ) நாம் அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் நம் கணினியின் screenshot தேவைப்படும். விண்டோஸ் இல் இதை செய்ய printscreen பொத்தானை அழுத்தி பெயிண்டிற்க்குச் சென்று paste செய்ய வேண்டும். ஆனால் லினக்ஸ் இல் இந்த ஷட்டெரை இன்ஸ்டால் செய்தால் ஒரே ஒரு பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான screenshot ஐ பெறலாம். புதுப்புது டெர்மினல்கள் என்னதான் இன்று GUI பயன்பாட்டு முறை கோலோச்சினாலும், நம் வேலைகளை டெர்மினல் மூலமாக செய்வதில் உள்ள வேகம் அதில் வராது. லினக்ஸ் இயக்கு தளங்களில் இருக்கும் டெர்மினல் சிறப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள பயன்பாடுகள் குறுகியவை. அனால் நீங்கள் இணையத்தில் புதுப்புது டெர்மினல் களை பார்க்கலாம். அவற்றுள் சில Gnome-Terminal,Konsole& Eterm. இவை தவிர்த்து மேலும் பல்வேறு சிறு சிறு லினக்ஸ் பயன்பாடு மென்பொருட்களும் இணையத்தில் உள்ளன. அவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே! [] ஸ்ரீராம் இளங்கோ காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன். எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr மின்னஞ்சல் : sriram.04144@gmail.com 15 BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள் வேதியியல், இயற்பியல், பொருளறிவியல் (Material Science), மீநுண்ணறிவியல் (Nanoscience), வேதி தகவல் நுட்பம் (Cheminformatics), உயிரி தகவல் நுட்பம் (Bioinformatics) இதுபோன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும், மாணவர்களும் பெரும்பாலும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், திட்ட விளக்கங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படும் வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை Perkin Elmer (பல ஆராய்ச்சிக் கருவிகளை தயாரித்து வழங்கும் பெரிய நிறுவனம்) -ன் தயாரிப்பான ChemDraw என்ற வர்த்தக மென்பொருளைக் (Cracked version) கொண்டே உருவாக்கி வருகின்றனர். லினக்ஸ் இயங்குதளத்திலும் வேதியியல் தொடர்பான பணிகளுக்கு பல கட்டற்ற மென்பொருள்கள் (Chemistry Packages) கிடைக்கின்றன. BKchem, gchempaint, easychem, bist, chemtool, xdrawchem என பல வகையான மென்பொருள்கள் இருந்தாலும், python மூலம் எழுதப்பட்ட BKchem மட்டுமே மூலக்கூறு வரைபடங்களை சிறப்பாக உருவாக்க உதவும் ஒரு முழுமையான மற்றும் சுலபமான தீர்வாகும். BKchem மென்பொருளானது Beda Kosata என்பவரால் எழுதப்பட்டு, 10 வருடத்திற்கும் மேலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை apt-get install bkchem அல்லது apt-get install debichem-view-edit-2d என்ற கட்டளையை முனையத்தில் அடிப்பதன் மூலம் நிறுவலாம். BKchem -ன் சிறப்புகள் : - அளவற்ற undo மற்றும் redo - SVG, EPS, PDF, PNG கோப்பு ஆதரவு - CML (Chemical Markup Language – பல வேதியியல் மென்பொருள்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கோப்பு அமைப்பு) கோப்பினை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வசதி. - வரைபடத்தை 3D -க்கு சுழற்றுதல் - பொதுவாக பயன்படுத்தப்படும் வரைபடங்களுக்கு வார்ப்புருக்கள் (templates) (பென்சின் வளையம், மேலும் பல) - libreoffice – Draw விற்கு ஏற்றுமதி செய்யும் வசதி வர்த்தக மென்பொருளான ChemDraw -விற்கு நிகரான மேலும் பல வசதிகள் BKchem -ல் உள்ளன. ChemDraw –வை பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கும் BKchem கட்டற்ற மென்பொருளை பரிந்துரை செய்யலாம். இணையதளம் : http://bkchem.zirael.org [] லெனின் குருசாமி 16 நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (Burning a Data CD/DVD with Nautilus)அண்மைக் காலங்களில், விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை. லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா? எப்படி செய்வது ? 1. நாட்டிலஸ் மேலாளரில் மெனுப்பட்டியலில் உள்ள Go→Location என்பதற்குச் செல்லுங்கள். [] 1. தோன்றும் முகவரிப்பட்டையில் (Address bar), burn:/// என்று உள்ளிட்டு Enter விசையை அழுத்துங்கள். [] 3. உடனே, வட்டு உருவாக்கி (CD/DVD Creator) திறக்கும். அதில், தேவையான கோப்புகளை இடுங்கள்.[] 4. கோப்புகளை இட்ட பின், “Write To Disc” என்பதைச் சொடுக்குங்கள். [] 1. திறக்கும் உரையாடல் பெட்டியில் (Dialog box), தகுந்த வட்டைத் தேர்வு செய்யுங்கள். - வெற்று வட்டு எனில், Blank Disc என்பதைத் தேர்ந்தெடுங்கள். - பிம்பமாக (Image) எழுத, Image File என்பதைத் தேர்வு செய்யுங்கள். - ஏற்கனவே தரவு எழுதப்பட்ட வட்டு எனில், அதன் பெயரைத் தேர்வு செய்யுங்கள். [] 6. கொஞ்சம் பொறுங்க.. ‘Burn’ ஐ அழுத்திடாதீங்க!! அடுத்து, பண்புகளை மாற்ற ‘Properties’ பக்கம் செல்லுங்கள். 7. வரும் பக்கத்தில், பண்புகளைத் தகுந்தவாறு மாற்றுங்கள். - எழுதும் வேகத்தை மாற்றலாம் - மீண்டும் வட்டில் எழுதுவதற்கு வழிவகை செய்ய (Multi-seesion) , ‘Leave the Disc Open’ என்பதைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். [] [] 8. பண்புகளை மாற்றிய பின்னர், ‘Burn’ பொத்தானைச் சொடுக்குங்கள். 9.ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வட்டு எனில், பழைய கோப்புகளை என்ன செய்வது என கேட்கும். அவற்றை வைத்திருக்க, ‘Only Append’ என்பதைத் தேர்ந்தெடுங்கள். 10. சில நிமிடங்களில், உங்கள் வட்டு தயாராகி விடும்!! பின் குறிப்பு : இந்த முறை மூலம், தரவு வட்டுகளை (Data Disc) மட்டுமே உருவாக்க இயலும். ஒலி, ஒளி வட்டுகளை ( Audio/ Video Disc) உருவாக்க முடியாது. நன்றி : Burning a Data CD/DVD with Nautilus , கேரி ரிக்மண்ட் (Gary Richmond), Free Software Magazine CD/DVD creation with Nautilus, The Gnome Journal [] மொழியாக்கம்: ‘ஆளுங்க’ அருண் தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும்இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன். கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!! செந்தமிழ் மொழியினன் – பாரத நாட்டினன். ஆளுங்க என்கிற அருண் http://www.aalunga.in 17 டக்ஸ்மேதுடன்(TuxMath) கணிதம் படியுங்கள் கணித சூத்திரங்களை கற்பது சில காலங்களாக்வே கடினமானதாக இருந்து வருகிறது. அவை எளிதில் கொள்ளும் படியாக இல்லா விட்டால் சிறிது சிரமம் தான். TuxMath பயன்படுத்துபவர்கள் விரைவாக கணித சிக்கல்களை அவிழ்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை TuxMath விளையாடினால் நியாபகத் திறன் அதிகரிக்கும். இந்த விளையாட்டு மிகுந்த கேளிக்கைகள் நிறந்தது. Terry Hancock தன் மகனுக்கு கணிதம், வேப்பங்காயாய் கசப்பதாக கூறுகிறார்.அவன் எளிதில் கவனத்தை சிதற விடுவதாகவும், இதன் காரணமாக Terry Hancock சில மணிநேரங்கள் அவனுடன் செலவிடுவதாகவும் தெரிவித்தார். Terry-ன் மகன், படித்ததை நினைவில் கொண்டு வருவதில் தான் சிரமப் படுகிறான். 8 X 9 திற்கோ அல்லது 3 X 4 கிற்கும் கூட விடை காண அவனுக்கு 30 வினாடிகள் தேவைப் படுகின்றன. இது வருந்தத்தக்க நிகழ்வு. [] எனினும், அவன் கணிதத் தேர்வுகளில் தோல்வி அடைவது இல்லை.   கணித அடிப்படைகளில் தான் அவனுக்கு பிரச்சனை இருப்பது தெளிவாய் தெரிகிறது. மெதுவாக கணக்குகள் செய்வது அவனது நேரத்தை விரையமாக்குகிரது. கணினியில் பல program-கள் செய்து, நேர வரையறை ஏற்படுத்தி, மெதுவாக வேகத்தை அதிகப்படுத்தி, புதுமையாக சிந்தித்து கணிதம் எளிமையாக கற்கலாம். இதன் மொத்த உருவம் தான் TuxMath ஆகும். Math கட்டளையின் தன்மை : []   இந்த விளையாட்டு, எரிகற்கள் நம் பனிக்கோட்டையை தாக்குவதை போன்ற தன்மை கொண்டது. ஒவ்வொரு எரிகல் அருகிலும், ஒரு கணித புதிர் இருக்கும். நாம் அதை தெளிவித்து விடை எழுதி enter அழுத்த வேண்டும். இப்படி செய்தால் நம் பனிக்கோட்டைகள் காப்பாற்றப் படும். [] இது மிகவும் எளிமையானது, இதன் வரைகலை(graphics) மற்றும் ஒலி அமைப்பு அருமையாக அமைக்கப் பட்டுள்ளது. இந்த விளையாட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல செல்ல பெரியவர்களுக்கு கூட இது கடுமையானதாக இருக்கும். Factoroid கள் : இந்த விளையாட்டில் எரிகல்லை, சில எண்கள் தட்டச்சு செய்வதன் மூலம் அழிக்கலாம். எடுத்துக் காட்டாக ஒரு கல்லில் 51 என குறிப்பிட்டிருந்தால், 3 அல்லது 17 அழுத்தினால் அதை 3 அல்லது 17 துண்டுகளாக பிரித்து விடும். அந்த கற்கள் முற்றிலுமாக குறைக்கப் பட்ட பின் அவற்றை 0 மூலம் அழித்து விடலாம். [] அது போலவே அந்த கற்களில் பின்னங்கள்(fractions) இருந்தால், எ.டு. 21/51, அதை 17 அல்லது 3 மூலம் தனியாக பிரித்து பின்பு 0 கொண்டு முற்றிலுமாக அழித்து விடலாம். இங்கு ஒரு சிறு சூழ்ச்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கற்களை எண்கள் கொண்டு பிரிக்கும் அதே நேரத்தில், ஒளி செலுத்தி அதனை அழித்திடவும் வேண்டும். அது போலவே, எரிகற்கள் நாம் விண்கலனை தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.   கடினமில்லா கணிதம் : கணிதம் கற்க பல செயலிகள் எனக்கு பரிந்துரைக்கப் பட்டன. ஆனால், வேறு எவையும் TuxMath அளவிற்கு கேளிக்கை நிறந்ததாக இல்லை. நான் முழு மனதோடு இதை பரிந்துரைக்கிறேன். இது ஒரு கட்டற்ற மென் பொருளும் ஆகும். டெபியனில்(debian) இதை வெறுமனே ‘tuxmath’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது முக்கிய பிரிவின் (main distribution) கீழ் வருவதாகும். Debian-ன் KDE நிரலில் இது ‘Games → Games for Kids’-ன் கீழ் இடம் பெற்றிருக்கும். இதை நீங்களும் அனுபவித்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்! http://www.freesoftwaremagazine.com/articles/learning_tuxmath   [] நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/   18 எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம் எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம்அலுவலகங்களில் உள்ள உங்களது கணினியை உங்கள் வீட்டிலிருந்து இயக்க வழியும், வசதியும் கிடைத்தால் எவ்வளவு வசதியாய் போய்விடும் என்று எண்ணி, இயங்கு தளம் மாறுபடுகிறது என்ற காரணத்தால் விட்டுவிட்டீர்களா? வீட்டில் குனு/லினக்ஸ்-ம் அலுவலகத்தில் விண்டோஸ் இயங்குதங்களும் பயன்படுத்துகிறீரா? குழப்பம் தேவையில்லை. உங்களுக்கான வழி இதோ! விண்டோஸ் இயங்கு தளங்களில் உள்ள மிக முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்றான இந்த ரிமோட் டெஸ்க்டாப் லாகின் எனப்படும் தொலைதூரத்திலிருந்து இணைய வசதியுடன் உங்கள் கணினியை இயக்கும் வசதியை எந்த ஒரு லினக்ஸ் விநியோகஸ்தர்களும் வழங்கவில்லை. ஆனால் இவ்வசதியை வெளியிலிருந்து கிடைக்கும் பலவகை மென்பொருட்களின் துணை கொண்டு பெற முடியும். அந்த வகையில் Remmina Remote Desktop எனப்படும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்த எளிமையாகவும், இலவசமாகவும் நமக்கு கிடைக்கிறது. இந்த மென்பொருளை எவ்வாறு தரவிறக்கி நிறுவுதல் மற்றும் பயன்படுத்தல் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.  படி 1: உங்கள் விண்டோஸ் கணினியை ரிமோட் ஆக இயக்க அல்லது மற்ற கணினிகளை இணைக்க, அது உங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அந்த அனுமதியைப் பெற நீங்கள் கணினியிலுள்ள இதற்கான செயல்பாடுகளை enable செய்ய வேண்டும்.   படி 2: பதித்தல்   உபுண்டு இயங்கு தளமானது, விண்டோஸ் இயங்கு தளங்கள் பயன்படுத்தும் RDP எனப்படும் Remote Desktop Protocol – யை இயக்கும் மென்பொருட்களைக் கொண்டு வருவதில்லை. நாம் தான் நம் தேவைக்காக உபுண்டு மென்பொருள் தளத்திலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும். இதை செய்ய, Applications – Ubuntu Software Center வழியாக செல்லலாம். அங்கே Get Software என்பதை தெரிவு செய்து, அதில் Remote Desktop என தேடவும். தேடலுக்கு விடையாக, பல மென்பொருட்களின் பெயர்கள் வரிசைபடுத்தப்பட்டிருக்கும். நாம் இங்கு, பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் புகழப்பட்டு வரும் Remmina Remote Desktop – யை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த வரிசையிலிருந்து Remmina Remote Desktop – யை தேர்ந்தெடுத்து Install செய்துகொள்ளவும்.   படி 3: கட்டமைத்தல்: Applications – Internet என்ற வழியில் ரெம்ம்மினாவை திறந்து கொள்ளலாம். அதில் New Connection என்ற பட்டன் யை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் Remote Desktop Preference window யைத் தரும். இங்கு தான் நாம் நம்முடைய இணைப்புகளை கட்டமைத்துக் கொள்ளப்போகிறோம். [] []   அதில் உள்ள profile பகுதியில், உங்களுக்கு விருப்பமான பெயரை நீங்கள் ஏற்படுத்தப் போகும் இணைப்பின் பெயராக கொடுக்கவும். அதன் பின் அதில் உள்ள Basic Tab – ல் உள்ள server field – ல் உங்கள் விண்டோஸ் கணினியின் IP Address யையும், பயனர் கணக்கு விபரங்களையும் உள்ளிடவும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு தேவையான கலர் தீர்மானத்தையும் செய்துகொள்ளலாம்.   உங்கள் உபுண்டு தளத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட அடைவை விண்டோஸ் உடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதே திரையிலுள்ள Share folder என்பதனை கிளிக் செய்யவும். அதன் பின் நீங்கள் பகிர விரும்பும் அடைவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.   [][][]   இது தவிர, அதிகப்படியான கட்டமைப்புகளுக்கு, Advanced Tab யை அழுத்தவும்.இவ்வாறாக அனைத்து விதமான கட்டுமான அமைப்புகளையும் செய்து முடித்த பின், connect பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் விண்டோஸ் கணினி on செய்யப்பட்டிருந்தால், உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நம் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தபின், இணைப்பை மூடும் போது, Remmina தாமாகவே அந்த இணைப்பு விவரங்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் சமயத்தில் திரும்ப நாம் இணைத்துக் கொள்ளலாம். Source: http://www.7tutorials.com/connecting-windows-remote-desktop-ubuntu ஆக்கம்:ஆனந்தராஜ் anandsnan@gmail.com 19 லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி? கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் இருக்கும் ஐயமே அவற்றில் தமிழில் எழுதும் வழி தான். விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழில் எழுத அழகி, முரசு, அஞ்சல் போன்ற மென்பொருட்கள் உள்ளன.லினக்ஸில் தமிழில் எழுத பல வழிகள் இருந்தாலும், ibus முறையே மிக எளிதானது. அமைப்புகளில் (Settings) சில சிறு மாற்றங்கள் செய்தால், எளிதாய் மொழி மாற்றி எழுதலாம்.  முதல் படி - நிறுவுதல் (Installation):   பெரும்பாலான அன்பர்களுக்கு ibus ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். (சின்னம் ‘i’ வடிவில் இருக்கும்). அப்படி இருப்பின், நேராக இரண்டாம் படிக்குச் செல்லுங்கள். இல்லாத பட்சத்தில், கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி நிறுவுங்கள்: - எளிதாய் நிறுவுவதற்கு, உங்கள் இயங்குதளத்தில் உள்ள Package Manager மூலம் ibus என்று தேடி நிறுவிக்கொள்ளவும். (உ.தா: உபுண்டுவில் Ubuntu Software Centre \ Synaptic Package Manager ) - முனையத்தின் (Terminal) மூலம் நிறுவும் வழிமுறைகளுக்கு: iBus- Read Me   []   இரண்டாம் படி – தேர்வு செய்தல் (Customization): 1. ibus (அல்லது) ibus → Preferences ஐத் தேர்வு செய்யவும். 2. அங்கு உள்ள Input Method என்கிற Tab -க்குப் போகவும். 3. அதில் உள்ள ‘Customize active input methods’ என்பதைத் தேர்வில் வைக்கவும்(Tick). 4. ‘Select Input Method’ என்கிற கீழ்விடு பட்டியலில் (Dropdown list) ‘தமிழ்’ என்பதைத் தேர்வு செய்யவும். 5. அதிலும், தேவையான Method (Phonetic, தமிழ்99, typewriter, itrans, inscript,) ஐத் தேர்வு செய்து சேர்க்கவும். 6. தேர்வு செய்த முறையைச் சேர்க்கவும். (Add செய்ய வேண்டும்) - Phonetic என்பது ஒலிபெயர்ப்பு (Transliteration) முறை ஆகும். {Google Transliteration IME, அழகி போன்றது} - தமிழ் 99 என்பது மிக எளிதாக இருக்கும் மற்றொரு முறை. (விக்கிபீடியாவில் உள்ள தமிழ் கட்டுரைகள் இந்த முறையின் மூலமே எழுதப்படுகிறன) - Typewriter என்பது தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களுக்கான முறை. - Itrans இந்திய மொழிகளுக்கான ASCII Transliteration முறை - Inscript இந்திய விசைப் பலகை அமைப்பிற்கானது.7. அடுத்து, ‘Advanced’ Tab -க்குப் போகவும். 8. அங்குள்ள ‘Share the same input method along all applications’ என்பதைத் தேர்வு நிலையில் (Tick) வைக்கவும்.   []      []   மூன்றாம் படி - இயக்குதல்:   1. System Settings → Language என்பதற்குச் செல்லவும். 2. அதில் Keyboard input Method என்பதில் ibus என்பதைத் தேர்வு செய்யவும்   நான்காம் படி - துவக்க பயன்பாடுகளில் சேர்த்தல்:   1. System Tools → Startup applications என்பதற்குச் செல்லவும். அதில் Add பொத்தானைச் சொடுக்கவும். 2. திறக்கும் உரையாடல் பெட்டியில், கீழ்காணும் படத்திம் உள்ளதை உள்ளிடவும்: [] உள்ளிட்ட பின் ‘Add” ஐச் சொடுக்கி சேமிக்கவும். அவ்வளவு தான்…   இனி , நீங்களும் எளிதாக தமிழில் எழுதலாம். உள்ளீடு முறை செயல்பாட்டில் இருக்கும் போது, தகவல் பலகத்தில் (Notification) அதன் சின்னம் தெரியும். [] நாம் செய்த வழிமுறைகளால், கணிணி துவங்கிய உடனேயே தமிழில் எழுத இயலும்.   முன்னிருப்பு விசைகள் (Default Keys): - தமிழ் உள்ளீட்டைத் துவக்க \ நிறுத்த \ மொழிகளுக்கு இடையே மாறுவதற்கு (English, Tamil) Control+ Space அழுத்தவும். உள்ளீடு முறைகளுக்கு இடையே மாறுவதற்கு, Control+Alt+space அழுத்தவும்   தேவையெனில், ibus → Preferences சென்று இவற்றை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பு: இதன் மூலம் தமிழ் மட்டுமன்றி பல மொழிகளை எழுதலாம். ~’ஆளுங்க‘ அருண் 20 லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல் ~ ஆனந்தராஜ் இயக்குதல் : [] நீங்கள் உபுண்டு 11 .10 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களை இயக்குபவரானால், நீங்கள் இந்த ‘Deja Dup’-ஐ தனியாக நிறுவ தேவையில்லை. நீங்கள் ‘Deja Dup’-ஐ முதன் முதலாக பயன்படுத்தத் தொடங்கும் போது, படத்தில் காட்டியுள்ள படி, இரு பொத்தான்களைக் கொண்ட திரை தோன்றும். இதன் பொதுவான அமைப்புகளின் படி, இந்த மென்பொருளானது Trash மற்றும் Download அடைவுகளைக் காப்பெடுக்க எடுத்துக் கொள்ளாது. அது தவிர கடைசியில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதெல்லாம் எந்த ஊடகம் வழியே காப்பெடுத்தல் நடக்க வேண்டும் என்பதைத் தான்.   ‘Deja Dup’-ஆனது FTP, SSH, WebdAV, Windows Share மற்றும் Ubuntu One போன்றவைகளுக்கு ஆதரவளிக்கின்றது. இவ்வாறு அனைத்து அமைப்புகளும் சரியென கண்டபின், ‘Backup now’ எனும் பொத்தானை அழுத்தினால், வேலை தொடங்கி விடும்.   []   Periodic Backups: குறிப்பிட்ட இடைவெளியில் மறுபடியும், மறுபடியும் தானாகவே காப்பெடுக்கும் வசதியினை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். திரையில் தோன்றும் Schedule பட்டனை அழுத்துவதன் மூலம் எப்பொழுது தங்களுக்கு அடுத்த காப்பெடுத்தல் நடக்க வேண்டும் என்பதனை நிர்ணயித்துக் கொள்ளலாம். மீட்டெடுத்தல் (Restore) அனைத்து “Backup and Restore” மென்பொருட்களைப் போலவே Deja Dup-ம் தரவுகளை மீட்டெடுக்கும் வசதியினைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் கடந்த கால காப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் வசதி, இந்த மென்பொருளைப் பயன்படுத்த வேறு எந்த காரணமும் தேவையில்லை எனும் அளவிற்கு சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இதைச் செய்வதற்கு, தேவையான கோப்பின் மேல் ரைட் கிளிக் செய்து ‘Restore from previous version’ என்பதனை தேர்ந்தெடுத்தால் போதும். [] பாதுகாப்பானதா? ‘Deja Dup’ உங்கள் தரவுகளை மறை குறியீடாக (Encrypt) மாற்றித்தான் அனுப்புகிறது. அதனால் நீங்கள் உங்களது கடவுச் சொல்லை (Password) நினைவில் வைத்திருக்கும் வரை உங்கள் தரவுகள் பாதுகாப்பானதே! ஆங்கில மூலம்: http://www.freesoftwaremagazine.com/articles/backup_your_data_linux_dejadup பகிர்ந்து கொள்க 21 மொசில்லா – பாப்கார்ன் மொசில்லா ஆம்!! மொசில்லா என்றாலே , அது இணையத்தை திறந்த தன்மையுடையதாக மாற்றுவதைப் பற்றியும் , இணையத்தின் உண்மையான சக்தியை உலகிற்கு உணர்த்துவதைப் பற்றியதுமே ஆகும். இதுவே மொசில்லாவை ஒரு புரட்சிகரமான பையர்பாக்ஸ் உலவியின் முலம் வலை தொழில்நுட்பங்களை நம் கணினிக்கு கொண்டு வர தூண்டிய விஷயமாகும். மொசில்லா இன்னும் பல புதுமைகளை செய்ய உள்ளது , அதில் நீங்கள் இழக்க கூடாத ஒன்று “மொசில்லா பாப்கார்ன்” பாப்கார்ன் எதற்காக? அது எதனைக் கொண்டு வர நினைக்கிறது? இணையம் உருவான காலம் முதலே , மக்கள் தங்களின் அறிவை பயன்படுத்தி இணையத்தில் மிகச்சிறந்த பறிமாற்றம் நடக்க முயற்சித்து வருகின்றனர். அவ்வகையில் , முதலில் தோன்றியவை குறிசொற்கள் மற்றும் மிகையிணைப்புகளாகும். அதனை தொடர்ந்து , சில காலத்திற்கு பின் புகைப்படங்கள் மற்றும் இசை தோன்றியது . இதனை தொடர்ந்து , பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியாக வீடியோ இணையத்தில் தோன்றியது.மக்கள் இந்த மேம்பாடுகளை வியப்பாக சில காலத்திற்கு மட்டுமே பார்த்தனர் ,அதன் பிறகு இவை தன் ஆற்றலை இழந்தது. ஏன்? இவற்றில், ஏதோ ஒன்று உறுதியாக இல்லை.ஓர் எடுத்துக்காட்டாக , உணவில் காரம் இல்லாததைப் போல!!! சிறிது யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்: இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களுக்கும் , பயனருக்கும் மத்தியில் நிகழ் நேர தொடர்பு என்பது எங்கே? நம்மிடம் , மிகப்பெரிய தகவல் வளங்கள் இணையத்தில் உள்ளன என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.ஆனால் , பிரச்சனை என்னவென்றால் அவை அனைத்தும் நிலையானவை என்பதேயாகும். மக்கள் உருவாக்குவதை,நம்மால் பார்க்கமுடியும். அவற்றில், நம்மால் ஏதும் செய்யவோ, மாற்றவோ முடியாது.சுருக்கமாக , தகவல்கள் நிலையானவை என்றால் ” பயனரின் பங்கு அதனை பார்ப்பதை தவிர வேறு எதுவும் இல்லை”. எனவே , இது செய்தித்தாள்களை படிப்பதை போன்றது அல்லது தொலைகாட்சி பார்ப்பது போன்றதேயாகும். ஃபிளாஷ் இணையத்தில் ,உயிர்ச்சித்தரமாக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் மின்னுகின்ற கிராபிக்ஸ் முலம் சிறிய பயனருடனான தொடர்பை கொண்டுவர முயற்சித்தது. இருப்பினும் , இவையும் நிலையானவையே! ஏனெனில் ,தகவல்களுக்கும் , பயனருக்கும் நிகழ் நேர தொடர்பு என்று ஒன்று இல்லை. ஆனால் , நிகழ் நேர தொடர்பை ஏற்படுத்த உறுதியாக ஓர் வழி இருக்க வேண்டும். ஓர் வலை உள்ளடக்கத்தினால் ,அனைத்து சிறந்த ஊடாடக்கூடிய அனுபவங்களையும் இணைத்து தகவல்களை தர முடியும் என்றால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட வலை உள்ளடக்கத்தை உருவாக்குவதைனையே குறிக்கோளாக கொண்டதே “மொசில்லா பாப்கார்ன்” திட்டமாகும். எவ்வாறு? தொழில்நுட்ப ரீதியாக, பாப்கார்ன் திட்டமானது முழுக்கமுழுக்க ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு உருவாக்கப்பட்டது. பாப்கார்னுக்கு முதுகெலும்பாக popcorn.js உள்ளது – popcorn.js என்பது ஓர் ஜாவாஸ்கிரிப்ட் நூலகமாகும். இது HTML5 ஊடக கூறுகள், வழிமுறைகள் மற்றும் நிகழ்வுகளை பயன்படுத்தி ஒரு API-யை வழங்குகின்றது. இந்த API கொண்டு , வீடியோ / ஆடியோ- களில் நிகழ் நேர தகவல்கள் மற்றும் தொடர்பை கொண்டு வர முடியும். உங்களுக்கு சிறு குழப்பமாக இருக்கும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாம் சிறிது விரிவாக பார்த்தால் இக்குழப்பம் நீங்கிவிடும். நீங்கள் ஓர் நிகழ்ச்சி அமைப்பாளர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ரஜினிகாந்தின் நேரடி துபாய் நிகழ்ச்சியைப் பற்றி ஒரு விளம்பர வீடியோவை வெளியிட நீனைக்கின்றீர்கள். பொதுவாக , இவ்வகை வீடியோகளில் பின்னணி இசை , நிகழ்ச்சி நடைபெறும் இடம் , கட்டணத் தகவல்கள் போன்றவையே இருக்கும். இதுவே popcorn.js முலம் உருவாக்கப்பட்டால் ,பின்வரும் அம்சங்களை உங்கள் வீடியோவில் காணமுடியும்: வீடியோவில் ரஜினிகாந்தை டேக் பண்ணலாம் , அவரின் ப்ளிக்க்ர் புகைப்படங்களை ஸ்ட்ரியம் செய்ய முடியும், அவரின் ட்விட்டர் மற்றும் விக்கி பக்கங்களின் இணைப்புகளை பார்வையாளர்கள் ஆணுகுவதற்கு திரையிடலாம் , யுடுப் வீடியோகளை உட்பொதிக்கலாம் , கூகிள் மாப்ஸ் இணைப்புகள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைப் பற்றிய தகவல்களை தரலாம். இவை அனைத்திற்கும் மேலாக , உங்களால் வானிலைப் பற்றிய தகவல்களையும் தர முடியும் . துபாயின் வெப்பத்தை உங்களால் மஞ்சள் நிற ஒளியை இணைப்பதன் மூலம் காட்ட முடியும். பாப்கார்ன் திட்டத்தின் புதிய சேர்ப்பான பாப்கார்ன் மேக்கர் ( popcorn maker ) , பிற வீடியோ எடிட்டிங் மென்பொருள் போலவே மிக எளிதாக பாப்கார்ன் சார்ந்த வீடியோகளை உருவாக்க உதவுகிறது. புதுமையாக உள்ளது அல்லவா? இப்போதே பங்களிக்க தொடங்குங்கள் – http://mozillapopcorn.org/ Interviewer : Dwaraka Nath Translated By : Gautham Raj Elango This article was made possible my Mozilla’s Project NeMo – News Mozilla. NeMo is all about taking knowledge and know how about Open Source and Web concepts to people like you and me by whatever means possible, print media being on top of it. Please visit https://wiki.mozilla.org/NeMo to know more and participate !   22 படங்களை ஒப்பிடுதல் – Geeqie இரண்டு படங்களை சாதரணமான Image viewers-ஐக் கொண்டு ஒப்பிடுவது சுலபம் அல்ல. முதலில் ஒரு Image viewer(Eye of Gnome, Ristretto) கருவியை இரு சாளரமாகத் திறந்து அதில் இரண்டு படங்களை ஏற்றி, அவ்விரு சாளரங்களையும் தேவையான அளவிற்கு வைத்த பின்னரே ஒப்பிட இயலும். இவ்வாறு ஒப்பிட்டால் படத்தில் உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு அளவு சிறிதாக்கு(zoom out) போன்ற செயல்களை இரு சாளரங்களிலும் தனித்தனியாக செய்ய வேண்டும். மேலும் இந்த அமைப்பை சேமிக்காவிட்டால் மீண்டும் ஒப்பிடும் போது மேல் சொன்ன அனைத்தையும் மறுபடியும் செய்ய வேண்டும். குனு/லினக்ஸ் இயக்குதளங்களை உபயோகிப்போர் ‘Geeqie image viewer’ என்னும் கருவியைக் கொண்டு படங்களை சுலபமாக ஒப்பிடலாம். உபயோகப்படுத்தும் முறை : 1. ஒருசாளரத்தில்‘Geeqie’கருவியைத் திறந்து கொள்ளவும். 2. திறக்கப்பட்டசாளரம் மூன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.அதில் படம் இருக்கும் கோப்பகத்தின் வடிவ அமைப்பு இடது பக்கத்தின் மேற்புறமும், அக்கோப்பகத்தில் இருக்கும் கோப்புகளை இடது பக்கத்தின் கீழ் புறமும், திறக்கப்பட் படம் வலது பக்கமாகவும் அமைந்திருக்கும். 3. கோப்பக பிரிவின் மூலம் படங்கள் இருக்கும் கோப்பகத்திற்கு செல்லவும், அக்கோப்பகத்தில் அமைந்துள்ள கோப்புகள் வரிசையாக காண்பிக்கப்படும். அவ்வரிசையில் இருந்து ஒப்பிட வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.(ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பின் மற்றொன்றை தேர்வு செய்ய “ctrl” விசையை அழுத்தி தேர்ந்தெடுக்கவும்) 4. இரண்டு படங்களும் திறக்கப்பட்ட பின் “view” பட்டியிலிருந்து “split” என்னும் உருப்படியை தேர்ந்தெடுக்கவும், இதில் நிறைய விருப்பங்கள் காண்பிக்கப்படும். அதில் மேலும்-கீழும் , வலது-இடது பக்கம்(top-and-bottom or side-by-side) ஆகிய விருப்பங்கள் படங்களை மேலும் கீழுமாகவும் அல்ல வடது இடது புறமாகவும் காட்ட உதவும் . தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப இரு படங்களும் காண்பிக்கப்படும். ‘e’ என்னும் விசையை அழுத்தினால் குறுக்கு வழியில் இரு படங்களையும் மேலும் கீழுமாக திறக்கலாம். [] “view” பட்டியிலிருந்து “split” என்னும் உருப்படியில் உள்ள “quad” என்னும் விருப்பத்தின் மூலம் நான்கு படங்களை ஒப்பிடலாம். இடது பக்கத்தில் உள்ள பிரிவினை மறைக்க அல்ல காண்பிக்க(to toggle) “ctrl+h” விசைகளை சேர்த்து அழுத்தவும். இதன் மூலம் படத்தை முழு சாரளம் அளவிற்கு பார்க்கலாம். கோடிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி செயற்படு படம்(active image). கோடிட்டு காட்டப்பட்டுள்ள படத்தின் உரு அளவை பெரிதாக்க “=” விசையையும் , உரு அளவை சிறிதாக்க “-“ விசையையும் உபயோகப்படுத்தலாம். இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் உரு அளவைப் பெரிதாக்க(zoom in) “+” விசையையும், உரு அளவை சிறிதாக்க(zoom out)“-“விசையையும் உபயோகப்படுத்தலாம். படங்களை தனித்தனியாக நகர்த்த அம்புகுறி விசைகளை(arrow keys) உபயோகப்படுத்தலாம். இரண்டு படங்களையும் சேர்த்தது போல் நகர்த்த “shift” மற்றும் அம்புகுறி விசையை ஒரே நேரத்தில் அழுத்தவும். இக்கருவியில் பல சிறப்பியல்புகள் உள்ளன. உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு அளவு சிறிதாக்கு(zoom out) ஆகிய செயல்களை சுட்டி மூலமாகவும் செய்யலாம். மேலும் உபயோகப்படுத்த சுலபமாகவும், இயக்குதளத்தில் கனமற்றதாகவும் இக்கருவி செயல்படும். ஆங்கிலமூலம் ; http://www.freesoftwaremagazine.com/articles/compare_two_images_easily_geeqie ~ அன்னபூரணி பகிர்ந்து கொள்க 23 GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ] []G’MIC ஆனது GIMP உடன் வரும் நீட்சி(Plugin) ஆகும். தற்போதுள்ள G’MIC 1.5.0.8 ஆனது இமேஜ் ஃபில்டர், 284-ம் மேற்பட்ட உருமாற்றங்களைக் கொண்டது. மேலும் 1/2/3 பரிமாண படங்களை வேறு வகையாய் மாற்ற, திறமையாக கையாள, வடிகட்ட, பல்நிறமாலையாய் காண (Multi Spectral Visualizing) 15 வகைகளை கொண்டது. எப்படி நிறுவுவது: http://sourceforge.net/projects/gmic/files/ என்ற இணைப்பில் G’MIC 1.5.0.8.deb தொகுப்பை பதிவிறக்கலாம்.   wget -O gmic-1.5.0.8.deb http://sourceforge.net/projects/gmic/files/gmic_1.5.0.8_i386.deb/download sudo dpkg -i gmic-1.5.0.8.deb   இதனை PPA அல்லது Personal Package Archive (மென்பொருள் நிறுவ பயன்படும் மென்பொருள் பெட்டகம்) மூலமாகவும் நிறுவலாம் அதற்கு,   ppa:ferramroberto/gimp     என்பதை உபுண்டுவில் சேர்க்கவும்.   sudo add-apt-repository ppa:ferramroberto/gimp sudo apt-get update sudo apt-get install gmic gimp-gmic   பயன்படுத்தும் முறை: நிறுவிய பின் ஏதேனும் ஒரு படத்தை GIMP-ல் நிறுவவும். பின்பு Filter >> G’MIC-ஐ தேர்ந்தெடுத்தால் dialog box ஒன்று திறக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான effects தேர்ந்தெடுத்து பயனாக்கம் செய்யலாம். ஒவ்வொரு உருமாற்றமும் மாறுதல் செய்யப்படக் கூடியது, அந்த மாற்றங்களை G’MIC சாளரத்தில் நேரடியாக காணலாம்.     [] நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/ மின்னஞ்சல் : jophinep@gmail.com     24 அப்டானா ஸ்டூடியோஸ் []   அடோபி டீரீம்வீவர் என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜியா உங்களுக்கு, அதன் விலையைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விடுபவரா நீங்கள்? மைக்ரோசாப்ட் நிறுவனம் என்றாலே காத தூரம் ஓடுவீர்களா? உங்களுக்காகவே காத்திருக்கிறது அப்டானா ஸ்டூடியோஸ் 3. இணைய தளங்கள், தயாரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள் இது. இதை க் கொண்டு எச்.டி.எம்.எல்,(HTML) சி.எஸ்,எச்,(CSS), ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript), ரூபிரெய்ல்ஸ்(Ruby on Rails) , பி,எச்.பி,(PHP) , பைதான்(Python) இவற்றைப் பயன் படுத்தி நமக்குத் தேவையானதை உருவாக்கலாம்.இணைய தள செயலிகளை உருவாக்குவதற்கும்,அதை சீராக சோதனை செய்வதற்க்கும், இந்த இலவச மென்பொருள் மிகவும் உதவியாக உள்ளது. []   எச்.டி.எம்.எல் 5,(HTML 5), சி.எஸ்.எஸ், (CSS) ஜாவாஸ்ரிப்ட் இவற்றின் குறியீடுகளை எழுதும் போது அடோபி ட்ரீம்வீவரைப் போல நமக்குத் தேவையானக் கட்டளைகளைக் காட்டி உதவி புரிகிறது. முக்கியமாக எச்.டி.எம்.எல் 5 பற்றிய விதிமுறைகளையும் நமக்குக் காட்டுகிறது. எந்தெந்த விதிமுறைகள் வழக்கத்தில் அதிகமாக உள்ளன. எவை இன்னும் பிரயோகத்திற்கு வரவில்லை என்று மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. எஃப்.டி.பி,(FTP) ,எஸ்.எஃப்.டி.பி (SFTP), போன்ற கோப்புப் பரிமாற்று வரைமுறைகளை(protocols)நன்றாக செயலாற்ற முடிகிறது. ரூபி ரெய்ல்ஸ்சில் உருவாக்கப்படும் இணைய ஒருங்குகளை(applications)எளிதாக வலையேற்றம் செய்ய முடிகிறது. இணைய தளங்களை உருவாக்குவதற்கும், இணைய ஒருங்குகளை ஒருங்குகளை உருவாக்குவதற்கும் பயன் படுவதோடு சோதனை செய்யவும் பிழைகளை கண்டுபிடித்து நீக்கவும் அப்டானா உதவி செய்கிறது. திட்டப் பணிகளை கிட் ஹஃபில்(GitHub) நேரடியாக ஏற்றி அணியினருடன் சேர்ந்து பணியாற்ற உதவி செய்கிறது. கணினி முறையியக்கிகளின் முனையத்தை(Built-in Terminal) பயன் படுத்திக் கணினி மொழிகளில்கணினிக் குறியீடுகளை எழுத முடிகிறது. திறவூற்று மென்பொருட்களின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக அப்டனா வளர்ந்து வருகிறது.மேலும் விவரங்களுக்கு https://wiki.appcelerator.org/display/tis/Home என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும். http://aptana.com/products/studio3 என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.   சுகந்தி வெங்கடேஷ் மின்னஞ்சல் : vknsvn@gmail.com வலை : http://tamilunltd.com 25 Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி உங்கள் வினியோகத்தை பில்ட் செய்யும் ஒரு எளிய கருவி தான் உபுண்டு பில்டர். இது பதிவிறக்கவும், கோப்புகளை பிரித்தெடுக்கவும், பல வழிகளில் விருப்பமைவு செய்யவும்(customize) உபுண்டு இமேஜ்களை ரீபில்ட் செய்யவும் அனுமதிக்கிறது. i386 மற்றும் amd64 இமேஜ்களை நம்மால் விருப்பமைவு செய்ய முடியும்.உபுண்டு பில்ரை நிறுவ. .deb தொகுப்புகளை இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்(http://code.google.com/p/ubuntu-builder/downloads/list) பிறகு இதனை டபிள் கிளிக் செய்யவும். திரைப்பிடிப்பு (screenshot) []   சதிஷ் குமார் 26 zimbra-desktop மின்னஞ்சல்களை படிக்க மென்பொருள் []இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்க பொதுவாக offline mail client தேவை. லினக்ஸ் உடன் பல மென்பொருள் இருந்தாலும், சில மென்பொருள் சிறப்பு. இங்கு Zimbra Desktop பற்றி பார்போம். மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்கலாம். இப்பொது எப்படி என்பதை பார்போம், பதிவிறக்கம் மற்றும் நிறுவ wget -N http://files2.zimbra.com/downloads/zdesktop/7.1.2/b10978/zdesktop_7_1_2_ga_b10978_linux_i686.tgz tar -xvf zdesktop_7_1_2_ga_b10978_linux_i686.tgz cd zdesktop_7_1_2_ga_b10978_linux_i686.tgz sudo ./install.pl [][] முக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம். மேலும் தெரிந்துகொள்ள: http://www.youtube.com/watch?v=Fs8NzcBAId0 [] லட்சுமிசந்திரகாந்த், கடந்த 6 ஆண்டுகளாக linux admin -ஆக பணியாற்றி வருகிறேன். இப்போது Autodesk, Singapore -ல் பணியாற்றி கொண்டும் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் SystimaNX IT Solutions Pvt, Ltd. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளேன். 2003 -ம் ஆண்டு முதல் லினக்ஸ், FOSS மீது கொண்ட அன்பால் ஒரு கணினி நிறுவனம் அமைத்து, விரும்பும்படி வேலை செய்யவேண்டும் என்ற கனவை கடந்த 4 ஆண்டுகளாக நிஜமாக்கி உழைத்துக்கொண்டு உள்ளேன். ஓய்வுநேரங்களில் தகவல் தொழில்நுட்பம், தமிழ் புத்தகம், புகைப்படம் எடுத்தல், சுவையாக சமைப்பது, கால்பந்து பார்ப்பது , வலை பதிவுகள் என்று பொழுது போக்கிகொண்டு உள்ளேன். வலை பதிவு : http://opennetguru.com மின்அஞ்சல் : malan.in@gmail.com 27 பிடிஃஎப் கோப்புகளிருந்து படங்களை பிரித்து எடுக்க Linux இயக்குத்தளங்களில் இதை செயற்படுத்த, Ubuntu விற்கு   sudo apt-get isntall poppler-utils   Fedoraவிற்கு   sudo yum install poppler-utils   மற்ற இயங்குதளங்கள் பயன்படுத்துவோர் package manager மூலமாக தேடி நிறுவிக்கொள்ளலாம்.   pdfimages -j pdffile.pdf ~/pdfimages/   இக்கட்டளையைக் கொண்டு பிடிஃப் கோப்புகளிருந்து படங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இதில் pdffile.pdf என்பது பிடிஃப் கோப்பின் பெயர். பிரிக்கப்பட்ட படங்கள் /home/username/pdfimages என்னும் கோப்பகத்தில் சேமிக்கப்படும். JPEG வடிவ கோப்புகளுக்கு –j. அவசியம் இல்லாவிட்டால் PPM வடிவ கோப்பாக பிரிக்கப்படும். PDF images என்னும் கருவி மூலம் பிடிஃப் கோப்புகளிருந்து படங்களை சுலபமான வழியில் அழகாகவும் துல்லியமாகவும் பிரிக்கலாம்.   pdftotext pdffile.pdf இக்கட்டளை மூலம் பிடிஃப் கோப்பில் இருக்கும் எழுத்து உள்ளடக்கத்தை தனியாக பிரித்து எழுத்து வடிவ கோப்பாக (.txt file) அதே பெயரில் சேமிக்கலாம். இக்கட்டளை மூலம் எழுத்துக்களை மட்டும் தான் பிரிக்க இயலும் படங்களில் உள்ள எழுத்துக்களை பிரிக்க இயலாது. அவ்வாறு பிரிக்க இந்த இணையத்தளத்தை பார்க்கவும்.   ~ அன்னபூரணி 28 Hybrid PDF என்றால் என்ன? Hybrid PDF என்பது சாதாரண PDF போலத்தான். ஆனால் இதில் மூல ஆவணம் (source document) இணைந்திருக்கும். இந்த இணைப்பால் ஏதேனும் ஒரு புதுமையான office மென்பொருள் கொண்டு இதில் தேவைக்கேற்றவாறு திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.Hybrid PDF உருவாக்குவது எப்படி? 1. முதல் கட்டமாக Libre Office-ல் ஆவணத்தை உருவாக்குங்கள். அல்லது Libre Office துணை செய்யும் எந்த ஒரு ஆவணத்தையும் Libre Office-ல் திறந்து கொள்ளுங்கள். 2. பின்பு File மெனுவில், “Export as PDF” –ஐ தேர்ந்தெடுக்கவும். 3. நீங்கள் உருவாக்கும் PDF-ல் “திருத்தத்தக்க ODF கோப்பை(file) நுழைக்க வேண்டுமா?” என்று பொருள்படும் தேர்வுப் பெட்டியை (checkbox) தேர்வு செய்யவும். விண்டோஸ் மற்றும் மேக்கின் உரையாடல் பெட்டிகள் (dialog boxes) மேலே, வட்டமிடப்பட்ட தேர்வுகளுடன் உள்ளன. 4. வேறு தேர்வுகளையும் நீங்கள் மாற்றம் செய்யலாம். எடுத்துக் காட்டாக, படிமைப் பகுதிறன் (image resolution) குறைக்காமல் இருக்கச் செய்யும் தேர்வை பயன்படுத்தலாம். ஆனால், படங்கள் பெரியதாய் இருந்தால் கோப்பின் அளவும் பெரியதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 5. ‘Export’ விசையை(button) கிளிக் செய்து, அதனால் உருவாகும் செய்முறையை சேமிக்கவும். 6. வாழ்த்துகள்! Hybrid Pdf தயார்! 7. இந்த PDF சாதாரண PDF போலவே PDF ரீடர்களில் திறந்து கொள்ளும். ஆனால், Libre Office-ல் (அல்லது OpenOffice.org, NeoOffice மற்றும் பலவற்றில்) திருத்தத்தக்கதாக (editable) திறந்து கொள்ளும். Libre Office-ல் அந்த PDF-ஐ இழுத்து விட்டும் திறக்கலாம். 8. இனி நீங்கள் அந்தத் தேர்வுப் பெட்டியில் (checkbox) செய்த தேர்வை நீக்கும் வரை Libre Office-ல் உருவாக்கப்படும் அனைத்து PDF-களும் Hybrid PDF-களாகவே இருக்கும்.   [] []   Hybrid PDF-க்கான ஆங்கில ஒலி ஒளி பயிற்சியை http://www.youtube.com/watch?v=EuVZcygoZsI –ல் காணலாம்.   []   நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/ 29 சுகோபனோ(SOKOBANO):ஒரு அருமையான முப்பரிமான புதிர் விளையாட்டு சுகோபனோ : சுகோபனோ என்ற புதிர் விளையாட்டு (Classic sokobian) யின் என்ற விளையாட்டின் உள்ளுந்துதலில் உருவானது.ஆனால் இது முப்பரிமான வரைகலையுடன் வருகிறது.இவ்விளையாட்டு எளிய முதல் கடினம் வரையிலான 300 நிலைகளை கொண்டது. மேலும் வெவ்வேறு சட்டங்களில் மீண்டும் அற்ற தொடங்கும்/இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்டிகளை குறித்த இடத்திற்கு தள்ளுவதே இவ்விளையாட்டின் இலக்கு. அதன் முலமாக ஒரு முழுமையான இணைப்பு உருவாகும்.எந்த ஒரு தவறான நகர்த்தலும் உங்களை ஆட்டத்தின் போக்கில் இருந்து முடக்கலாம். எனினும் பின் வாங்கும் அம்சம் இருப்பதால் தவறாக நகர்த்திய பெட்டிகளை மீண்டும் நகர்த்தி கொள்ளலாம். [] இந்த விளையாட்டை உங்கள் உபுண்டு 12.04/11.10 வில் நிருவ உங்கள் முனையத்தில் இருந்து பின் வரும் கட்டளைகளை பயன்படுத்தி கொள்க.   sudo add-apt-repository ppa:upubuntu-com/games sudo apt-get update sudo apt-get install sokobano   விளையாட்டை உங்கள் (Unity Dash) யில் இருந்து தொடங்கவும். [] விளையாடி மகிழ்க….!   சதிஷ் குமார் 30 பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler) இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட வேர்ட் ஆவணங்களை பிரிப்பதோ அல்லது சேர்ப்பதோ எளிது. அது போல் பிடிஎஃப் கோப்புகளை எப்படி இணைப்பது/ பிரிப்பது? லினக்ஸ் இயக்கு தளத்தில் பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவியைக் கொண்டு சுலபமாக செய்யலாம்.பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவி பைபிடிஎஃப்(pyPdf) எனும் கருவிப்பொதியின் முன் முகப்பு (GUI Interface) . பைபிடிஎஃப் என்பது பைத்தான் நிரலகம்(library) கொண்டு உருவாக்கப்பட்ட பிடிஎஃப் கருவி. இக்கருவியைக் கொண்டு பிடிஎஃப் கோப்புகளின் தகவல்களை அறியலாம், பிடிஎஃப் கோப்புகளை இணைக்கலாம், பிரிக்கலாம், தேவையான பக்கங்களை வெட்டி நீக்கலாம், கோப்புகளை மறையாக்கம் (encryption) அல்லது மறைவிலக்கம் (decryption) செய்யலாம். இவற்றிலிருந்து இணைப்பதும் பிரிப்பதுமான செயல்களை செய்வதற்கு மட்டும் பிடிஎஃப் – ஷஃப்லெர் உருவாக்கப்ப்டடது. டெபியன் டிச்ட்ரொவை(debian distro) சார்ந்த லினக்ஸ் இயக்கு தளத்தில் கருவியை நிறுவ sudo apt-get install pdfshuffler எனும் கட்டளையைக் கொண்டு நிறுவலாம். உபுண்டு(ubuntu) பயன்படுத்துபவர்கள் சாப்ட்வேர் சென்டர் மூலமாகவும் அல்லது http://sourceforge.net/projects/pdfshuffler/ இந்த இணையதளத்திலிருந்து எடுத்து பொறுத்திக்கொள்ளாம். உபயோகப்படுத்தும் முறை : 1. பிடிஎஃப் – ஷஃப்லெரை திறக்கவும். 2. “ இம்போர்ட் பிடிஎஃப்” எனும் பொத்தான்னை சொடுக்கவும். அதன் பின் உரையாடல் சாளரம் திறக்கப்படும், அதிலிருந்து தேவையான பிடிஎஃப் கோப்புகளை தேர்ந்தெடுத்துக்கொள்க. 3. தேவையான கோப்புகள் திறக்கப்பட்டபின், தங்களின் தேவைக்கேற்ப பக்கங்களை இழுத்து வரிசைப் படுத்திக்கொள்ளலாம். 4. “டெலிட் பேஜஸ்” எனும் பொத்தான்னைக்கொண்டு தேவையற்ற பக்கங்களை நீக்கலாம். 5. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இக்கருவியைக் கொண்டு திறந்து ஒரே கோப்பாக சேர்க்கலாம்.   []   [] தேவையான மாற்றங்கள் செய்த பின் “எக்ஸ்போர்ட் பிடிஎஃப்” எனும் பொத்தானை சொடுக்கவும், மாற்றம் செய்த பிடிஎஃப் கோப்பு சேமிக்கப்படும். வேர்ட் ஆவணங்களை போல பிடிஃப் ஆவணங்களையும் இப்போது சுலபமாக இணைக்கலாம்/ பிரிக்கலாம்.   மூலம் ; http://maketecheasier.com/split-merge-pdf-files-with-pdf-shuffler/2011/01/18 - அன்னபூரணி 31 உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள். உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்: - webm கோப்பு வடிவத்திற்கு சேமித்துக்கொள்ளலாம் - திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தேர்வு செய்து அந்தப் பகுதியினை மட்டும் பதிவு செய்தல் - அழுத்தப்பட்ட பொத்தானைக் காண்பித்தல், மற்றும் பதிவு செய்தல் - ஒலியோடு பதிவு செய்தல் அதாவது திரையோடு சேர்த்து ஒலியினையும் பதிவு செய்யும் வசதி. - உபுண்டு 11.10/12.04 -ல் Eidete னை நிறுவுவது எப்படி:கீழ்காணும் கட்டளைகளை முனையத்தில் கொடுக்கவும் (கணினி இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியம்) sudo add-apt-repository ppa:shnatsel/eidete-daily sudo apt-get update sudo apt-get install eidete மூலம் : http://bit.ly/kaniscrncast ~ இரா . கதிர்வேல்   32 குறித்த நேரத்தில் கணினியை விழிக்க வைக்க!! எப்படி Terminalலிருந்து தானாகவே நமது கணினியை ஒரு குறிபிட்ட நேரத்தில் ஆன் செய்வது ? rtcwake என்னும் utilityயை பயன்படுத்தி turn off/suspend செய்யலாம். மேலும் குறித்த நேரத்தில் turn on னும் செய்யலாம். rtcwake கட்டளையின் மாதிரி:   sudo rtcwake -m [type 0f suspend] -s [number of seconds]   உதாரணமாக 60நொடிகளுக்கு பிறகு கணினி onஆக வேண்டுமெனில்.   sudo rtcwake -m disk -s 60   என்று சொடுக்குங்கள். இதில் [type of suspend] - standby – சிறிதளவு மின் சிக்கனம். ஆனால் உடனே திரும்ப வந்துவிடுவேன். - mem – RAMற்கு suspend செய்யும் - disk – diskகிற்கு suspend செய்யும்.ஆகவே கணினி off செய்யப்படும். - no – கணினி மீண்டும் விழிக்க வேண்டிய நேரத்தை குறிப்பிடவும் ( இதில் மட்டும் பயனாளி தான் கணினியை sleep நிலைக்கு செலுத்த வேண்டும். மற்றவைகளில் தானாகவே sleep நிலைக்கு வந்து விடும்) .   நேரத்தை எவ்வாறு கொடுக்கலாம் ! [number of seconds] -t தட்டச்சி செய்த நொடிகளுக்கு பின் கணினி எழும். -l கணினி எழ வேண்டிய நேரத்தை local time இல் குறிக்கலாம். -u கணினி எழ வேண்டிய நேரத்தை UTC time இல் குறிக்கலாம். மூலம்: http://bit.ly/autohiber ~ ஜி . பி . ஆர் . குமார் 33 Flowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான் Flowblade என்பது லினக்ஸ் இயங்குதளங்களுக்கான அதிவிரைவு, நேரிலா, பல்தட ஒளிதோற்றப் பதிப்பான் ஆகும். இதனைக் கொண்டு நாம் ஒலி, ஒளிக் கூறுகளை எளிதில் திருத்தி அமைக்கலாம். இந்தப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புக் காட்சிகளைப் படமாக்கவும், படங்களைத் தொகுக்கவும், ஒலி நாடாக்களைத் தெளிவுப்படுத்தவும் பயன்படுகிறது.   Flowblade படக் கருத்தியல் (film based paradigm ) முறையைப் பின்பற்றுவதால் ( ஓர் ஒளித் தொகுப்புக்கு பின் மற்றொன்றை வைப்பதைப் போன்ற அமைப்பு), இது முன்னர் நீங்கள் பயன்படுத்திய OpenShot மற்றும் Kdenlive ஆகியவற்றை விட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும்.   என் கருத்தின் படி, இது ஒரு சிறந்த மென்பொருள் என்றே சொல்லுவேன். இது அதிவிரைவாகச் செயல்படுவது மட்டுல்லாமல், அதிக வினைத்திறனும் கொண்டு வியக்கவைக்கும் படி இருக்கிறது (அல்லது) இதன் அதிவிரைவான செயல்பாடும், வினைத்திறனும் வியக்கவைக்கும் படி இருக்கிறன. இது விரைவில் உபுண்டு மற்றும் டெபியன் களஞ்சியங்களில் சேர்க்கப்படலாம்.   சில சிறப்பம்சங்கள்   - இடையில் சேர்த்தல் மற்றும் கத்திரித்தல் : இரண்டு வகையான மாற்றுதல், இரண்டு வகையான கத்திரித்தல் மற்றும் நான்கு வகையான சேர்த்தல் ஆகியவற்றை நீங்கள் Flowblade இல் செய்யலாம். - இது மட்டுமன்றி, timeline-இல் ஒளி, ஒலி நாடாக்களை இழுத்து வந்து அமர்த்தலாம் (drag n drop ). - ஒளிக் கூறுகளை நீங்கள் பெரிதாக்கலாம், சிறிதாக்கலாம், மாற்றியமைக்கலாம், கலவை செய்யலாம். வேண்டுமானால், அசைவூட்டம் கூட கொடுக்கலாம். - ஒரு படத்தை எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். அதன் நிறத்தை மாற்றலாம், திரிபு செய்யலாம், கலங்கலாக மாற்றலாம். - ஒலி நாடாக்களை எதிரொலிக்கச் செய்யலாம், நிறுத்தி வைக்கலாம். அதனைத் தனித் தனியாகப் பிரித்து ஒலி மாற்றம் கூட செய்யலாம். Flowblade பொதுவாகப் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலி, ஒளி மற்றும் படக் கோப்பு வடிவங்களையும் ஏற்று கொள்ளும். JPG, PNG மற்றும் SVG முதலிய படங்களும்,. mp4 , h264 , Theora , mpeg2 போன்ற ஒளி வடிவங்களும், mp3 , ac3 போன்ற ஒலி வடிவங்களும் ஏற்றுக்கொள்ள படும். Flowblade பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் – http://code.google.com/p/flowblade/downloads/list [] ஸ்ரீராம் இளங்கோ காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன். எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr மின்னஞ்சல்: sriram.04144@gmail.com பகிர்ந்து கொள்க 34 கேடென்லைவுடன்(Kdenlive) காணொளி தொகுத்தல்(video editing) இதுவரை எனது விருப்பத்திற்குரிய காணொளி தொகுக்கும் செயலியாக இருந்து வருவது கேடென்லைவ்(Kdenlive) தான். இது மற்றவையை காட்டிலும் மிக மேலோட்டமான கற்றல் வளைவையும், மிக பிரபலமான பல்தட இடைமுகப்பையும் (multi track interface) கொண்டது. எனினும் சில அடிப்படை இயக்கங்களை இது கடுமையானதாக ஆக்கவில்லை.[]   இதன் கிடைப்புத் திறன்(availability) சிறிது சிக்கலானது, உபுண்டு ஸ்டுடியோ 11.10 “ஆனெரிக் ஆசெலோட்”ல் (Ubuntu Studio 11.10 “Oneric Ocelot”) உள்ள கேடென்லைவ்(Kdenlive) நிறுவி செயலற்று இருந்தது வருத்தம் அளிக்கிறது. இதன் நிரல்(program) துவங்கியவுடனே செயலிழந்து MLT மற்றும் SDL தொகுப்புகள் சம்பந்தமான பிழையை தோற்றுவிக்கும். எனினும், டெபியன்(debian) மூலம் நிறுவுதல் நன்றாகவே அமைந்தது. இதன் இடைமுகப்பின் உருவகம் ஏறதாழ ஓப்பன் ஷாட்(Open Shot) போலவே அமைந்துள்ளது. இவ்விரண்டும் பிளெண்டர்ஸ் வி.எஸ்.இ.(Blender’s VSE) போல தோற்றம் அளிக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு பல்தட வரி அமைப்பை(multi track strip interface) வழங்குகின்றன. இவற்றில் ஒலி மற்றும் ஒளி தடங்களை இணைக்கலாம்.   மேலும் இது open shot-ல் உள்ளதை போல, பல் ஒலி மற்றும் ஒளி தடங்களை ஏற்றி,   தேவையான இடங்களில் இழுத்து விட்டு காட்சியை தொகுத்துக் கொள்ளலாம். இதற்கு மேலாக ஒலி மற்றும் ஒளி தடங்களில் நேரத்தை குறைத்து அவற்றிற்கு பல விளைவுகளை செலுத்தலாம் (உச்ச கட்டமாக விளைவுகளை அடுக்கவும் செய்யலாம், இதனால் அவை தங்களுக்குள்ளேயே மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும்). எனக்கு அதன் விபரம் சரியாக தெரியவில்லை, ஆனால் உட்பொருத்தி(plugin) மூலம் விளைவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என நினக்கிறேன். இப்படிப்பட்ட வசதி மிகுந்த வரவேற்புக்குரியது.   நான் காட்சிகளை உருவாக விழைகிறேன் என்றால், Blender’s VSE அளவிற்கு வசதிகள் Kdenlive எனக்கு வழங்குவதில்லை. ஆனால் தன்னால் இயன்றவற்றை Kdenlive எளிமையாய் செய்கிறது. எனவே இரு பரிமாணம்(2D) அளவிலான இயக்கத் தந்திரங்களுக்கு Kdenlive ஒரு சிறந்த தேர்வு. காணொளி வடிவமைப்பு குறித்த விபரங்கள் எளிமையாகவும், நேரக்குறி முறைகள்(time code) எந்த வகையில் படிக்கும்படியாகவும் சரிசெய்து கொள்ளலாம்.Kdenlive சாளரம், Blender’s VSE-ன் அடிப்படை தோற்றம் போலவே காட்சி அளிக்கும். ஆனால், நமக்கு தேவையானவற்றை போராடி பெற வேண்டிய அவசியம் இல்லை.   இறுதியாக தொகுப்பு பட்டியலில்(editing menu) வரிகள்(strips) எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியும், ஒலி தடங்களின் தோற்றம்(display of audio track) குறித்தும் பல விபரங்கள் தொகுத்தல் நிகழ்வை மென்மையாக்குகின்றன. Kdenlive மூலம் நல்ல காட்சி ஓட்ட அனுபவம் கிடைப்பது உறுதி. நான் அனைத்தையும் இன்னும் முயன்று பார்க்கவில்லை, ஆனால் நான் தேடிக் கொண்டிருந்த செயலி Kdenlive ஆக இருக்கலாம். http://www.freesoftwaremagazine.com/articles/video_editing_kdenlive_might_be_sweet_spot   [] நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/ 35 ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்   ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.   கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற version control systemகளைக் கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளை உள்ளடக்கியது. அதனைக் கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையாதென நான் கூறியதன் காரணம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன் இதற்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் உருவாக்கப்பட்டு, GPL உரிமத்துடன் (இதுவும் அவர் வடிவமைத்ததே) வெளியடப்பட்ட முதல் மென்பொருள் ஈமேக்ஸ். இத்தகைய சிறப்பான ஒரு மென்பொருளைக் கற்றுக்கொள்ள இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்? வாருங்கள் ஈமேக்ஸ் உலகத்திற்குள் புகுவோம்.   நிறுவுதல் பல குனு/லினக்ஸ் இயங்குதளங்களில் தொகுபதிவகத்திலேயே (repository) ஈமேக்ஸ் கிடைக்கும். அந்தந்த இயங்குதளத்தின் பொதி மேலாண்மை மென்பொருள் வாயிலாகவே நிறுவிக்கொள்ள முடியும். உபுண்டு இயங்குதளத்தில் நிறுவ, முனையத்தில் கீழ்க்காணும் கட்டளையை இடவும்: sudo apt-get install emacs23 ஈமேக்ஸ் கட்டளைகள் ஈமேக்ஸ் கட்டளைகளைப் பார்க்கும் முன்பு, இரு குறியீடுகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும். குறியீடு பொருள் ---------- --------------------------------------------------- C-x Ctrl விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும் M-x Meta (Alt) விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும் கோப்பைத் திறத்தல் C-x அழுத்தியதும் நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்குதியில் வந்து நிற்கும். அங்கே திறக்கவேண்டிய கோப்பிற்கான பெயரை இடவும். []    கோப்பை சேமித்தல் கோப்பில் மாற்றங்கள் செய்தபின் அதனை சேமிக்க, C-x C-s (C-x அழுத்தியபின் C-s அழுத்தவும்). கோப்பை மூடுதல் சேமித்த கோப்பை மூட C-x C-k Enter ஈமேக்ஸை விட்டு வெளியேற C-x C-c உரை திருத்துதல் உரையின் ஒரு பகுதியை select செய்ய, எப்போதும் போல Shift-ஐ அழுத்திக்கொண்டு அம்புக்குறிகளைப் (arrow keys) பயன்படுத்தலாம். அல்லது, அப்பகுதியின் தொடக்கத்தில் நிலைகாட்டியை வைத்து C- அழுத்திவிட்டு, பின்னர் அம்புக்குறிகளைக் கொண்டு தேர்வு செய்யலாம். தேர்வு செய்த பகுதியை நகலெடுக்க M-w, தேர்வு செய்த பகுதியை அழிக்க C-w. மற்ற உரைதிருத்திகளில் இருப்பது போல் அல்லாமல், cut செய்வதும் delete செய்வதும் ஈமேக்ஸைப் பொறுத்தவரையில் ஒன்றே. அதாவது delete செய்யப்படும் எந்த ஓர் உரையும் clipboard-ல் இருக்கும். ஏற்கனவே வெட்டப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட உரையை paste செய்ய C-y (y = yank) உலாவுதல் (navigation) பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்புக்குறிகள், Home, End ஆகிய விசைகள் அல்லாமல்  ஈமேக்ஸிற்கென்றே உரித்தான சில விசைகள் உள்ளன. அவற்றுள் சில: ஓரெழுத்துப் பின்னால் செல்ல C-b ஓரெழுத்து முன்னால் செல்ல C-f முந்தைய வரிக்குச் செல்ல C-p அடுத்த வரிக்குச் செல்ல C-n வரியின் தொடக்கத்திற்குச் செல்ல C-a வரியின் இறுதிக்குச் செல்ல C-e இவை முதலில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், பழகிக்கொண்டால் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியும் (விசைப்பலகையில் அம்புக்குறிகள் இருக்கும் ஓரமாகக் கையை நகர்த்த வேண்டியதில்லை).               விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள். மின்னஞ்சல்: viky.nandha AT gmail DOT com வலைத்தளம்: http://vigneshnandhakumar.in       36 Free Software – என்ன பயன்? நான் ஒரு computer user, எனக்கு coding , programming-லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது, நான் Open Source இல்ல Free Software use பண்றதுனால என்ன பயன் ? “ என்ன பொருத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான கேள்வி. சரி இதுக்கு பதில் பல விதங்களில் சொல்லாம். அதில் ஒன்றை மட்டும் நான் இங்கு சொல்கிறேன். ஏனென்றால் அதுதான் அடிப்படையான ஒன்று. Public Collaboration – அதாவது, இன்றைக்கு இருக்கும் Open Source இல்ல Free Software-கள் பலவும், ஒருவரால் உருவாக்கப்படவில்லை. அதோட code-ஐ அனைவரும் பார்க்கலாம், மாற்றலாம், share பண்ணலாம். நாம எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்கிறது ஒரு Community ஆக அதாவது, சமூகமாக. Bus-ல் போய்க் கொண்டிருக்கிறோம், நம் சீட்டில் பக்கத்தில் உட்கார்ந்து வருபவருக்கு திடீரென்று வலிப்பு, உடனே சாவிக்கொத்து, ஆம்புலன்ஸ்-னு உதவி செய்யத் தானே செய்றோம். நான் மட்டும் வளர்ந்து, என் தினசரி வாழ்க்கை தரம் மட்டும் உயர்ந்தால் பத்தாது, நான் வளர்ந்த, நான் வாழ இடம் கொடுத்த இந்த சமுதாயமும் என்னோடு சேர்ந்து வளர வேண்டும் என்ற அடிப்படையோடு உருவான மாற்றம் தான் இந்த Open Source & Free Software. அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது. நமக்கு coding, Programming தெரியவில்லை என்றாலும் open Source software-களை நாம் பலரும் பயன்படுத்தும் போது அந்த Software-ல் ஏதேனும் குறை இருக்கலாம் (நிச்சயம் இருக்கும்), எடுத்துக்காட்டாக, Mozilla Firefox use பண்ணும்போது, திடீரென்று அதில் ஏதோ பிரச்சனை. இந்த பிரச்ச்னை தொடர்ந்து கொண்டே இருந்தால் நாம் google-ல் இதற்கு தீர்வு தேடுவோம். தீர்வும் கிடைக்கும், சரி, இந்த தீர்வை சொல்லியது யார் என்று பார்த்தால் அவருக்கும் இந்த பிரச்சனை வந்து அவரே சரி செய்து இருக்க வேண்டும் இல்லை வேறு யாரிடமும் கேட்டிருக்க வேண்டும். மீண்டும் இந்த பிரச்சனை வராமல் இருக்க Firefox-இன் அடுத்த பதிப்பு வெளியிடும் போது இந்த தீர்வு அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நாம், அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Free and Open Source Software-இன் தரத்தை அதில் இருக்கும் சில குறைகளை சுட்டிக்காட்டி அந்த software-ஆனது இன்னும் மேன்மை பெற வழி வகுக்கிறோம். So Everyone gets a Quality Software. இவை யாவும் ஏதோ ஒரு Company-க்கு மட்டும் சொந்தம் அல்ல, இதை மேன்மை படுத்துபவர்கள் பலரும் நம்மில் ஒருவர் தான். இன்று உலகெங்கும் அனைவரும் பயன்படுத்தும் Mozilla Firefox, VLC Media Player, போன்ற Free and Open Source Software களுக்கு நீங்கள் என்றாவது பணம் கொடுத்திருக்கீறர்களா? இல்லை ஏனென்றால் அவர்கள் ஒரு இலாப நோக்கம் இல்லாது புதிய உருவாக்கம், Quality Software அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர். நீங்களும் இவற்றில் ஏதேனும் குறை இருக்கிறது, அல்லது இதை மேன்மை படுத்தலாம் என்று வைத்திருந்தால் அதில் பங்கெடுத்துக்கொள்ளலாமே !!! FirefoxForum:-https://support.mozilla.org/enUS/questions/new Firefox Bugreport:- https://bugzilla.mozilla.org/ VLC Support Center:- http://www.videolan.org/support/ VLC Bug report:- http://wiki.videolan.org/Report_bugs 37 Youtube/ Vimeo காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம் மாற்ற – Clipgrab Youtube அல்லது Vimeo காணொளிகளைப் பல வழிகளில் பதிவிறக்கம் செய்யலாம். Clipgrab என்னும் இலவசக் கருவி Youtube, Vimeo போன்ற இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யவும், அவற்றின் கோப்பு வடிவத்தை மாற்றவும் உதவுகிறது. இக்கருவியைக் கொண்டு கீழ்காணும் இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்: - Youtube - Vimeo - Clipfish - Collegehumor - DailyMotion - MyVideo - MySpass - SevenLoad - Tudou   []   பதிவிறக்கம் செய்த காணொளிகளைக் கீழ்காணும் கோப்பு வடிவங்களாக மாற்றலாம் - WMV - MPEG4 - OGG Theora - MP3(ஒலித்தோற்றம் மட்டும்) - OGG Vorbis(ஒலித்தோற்றம் மட்டும்) இக்கருவியைக் கொண்டு HD காணொளிகளையும் பதிவிறக்கம் செய்யலாம்.   Ubuntu இயக்குதளத்தில் நிறுவ:   இக்கருவியை ppa(ppa:clipgrab-team/ppa) மூலமாகவும் நிறுவலாம்.   http://ubuntuguide.net/how-to-add-ppas-and-install-softwares-in-ubuntu-12-04 இணையத்தளித்திலிருந்து வரைபட முறை மூலமாக நிறுவும் முறையை அறியலாம். கட்டளையைக் கொண்டு நிறுவ:   sudo add-apt-re pository ppa:clipgrab-team/ppa sudo apt-get update sudo apt-get install clipgrab   – அன்னபூரணி ஆங்கில மூலம்: http://ubuntuguide.net/download-convert-youtube-vimeo-ubuntu-12-04 38 உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல் apt-get என்பது உபுண்டுவில் மென்பொருள் பொதிகளை(packages) தரவிறக்கி நமது கணினியில் நிறுவுவதற்கும், உபுண்டுவை இற்றைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் கட்டளையாகும். apt-fast என்பது apt-get-ஐப் போலவே செயல்படும் ஒரு shell script. இணையாகவும்(parallel), ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி தரவிறக்குவதாலும் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்கலாம். இந்த முறையினை axel போன்ற தரவிறக்கிகள் உபயோகப்படுத்துகின்றன. இந்த நிரல் axel அல்லது aria2c போன்ற தரவிறக்கிகளை பயன்படுத்தி அதிகப்படியான வேகத்தை சாதகமாக்குகிறது.   இதனை ஒருமுறை நமது கணினியில் நிறுவி விட்டால் இதனை apt-get-ஐ உபயோகிப்பது போலவே பயன்படுத்தலாம். முதலில் ஒரு மென்பொருளினை (software package) நிறுவும் முன், உபுண்டுவின் மென்பொருள் தரவு தளத்தினை இற்றைப்படுத்த வேண்டும் (apt-fast update). இப்போது ஒரு மென்பொருளினை நிறுவுவதற்கு “apt-fast install packagename” என்று தர வேண்டும். இதில் package name என்பது நமக்கு தேவையான மென்பொருள் பொதி. இப்போது நம்முடைய மென்பொருளானது வழக்கத்தை விட அதி வேகமாக தரவிறங்குவதைப் பார்க்கலாம். உபுண்டுவினை மேம்படுத்தவும் இதே வழிமுறையினை பின்பற்றவும். அதற்கு apt-fast dist-upgrade அல்லது apt-fast upgrade என்று தரவும்.   apt-fast-ஐ உபுண்டுவில் நிறுவுவதற்கு:   apt-fast-ன் அதிகாரப்பூர்வமான PPA பொதியினை Ubuntu 12.04, 11.10, 11,04 மற்றும் 10.04ல் நிறுவலாம். உங்களுடைய முனையத்தைத் திறந்து(Ctrl+Alt+T), அதில் கீழ் உள்ள கட்டளைகளைத் தரவும்.   sudo add-apt-repository ppa:apt-fast/stable sudo apt-get update sudo apt-get install apt-fast axel அதனை நிறுவிய பின்பு, axel அல்லது aria2cயினை நம்முடைய விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக axel-ஐத் தேர்ந்தெடுக்க configuration file-ஐத் திறந்து கொள்ளவும்.   sudo gedit /etc/apt-fast.conf   அதில் “_DOWNLOADER“ வரியின் முன்னால் உள்ள “#”-ஐ நீக்கிவிட்டு சேமிக்கவும்.   # axel: _DOWNLOADER=’cat /tmp/apt-fast.list | xargs -l1 axel -n ${_MAXNUM} -a’ # axel   கீழ் உள்ள கட்டளையின் மூலம் இற்றைப்படுத்திய பின், நாம் apt-fast-ஐ apt-get போலவே உபயோகிக்கலாம். sudo apt-fast update   மணிமாறன் : manimaran990@gmail.com   ஆங்கில மூலம்: http://ubuntuguide.net/install-apt-fast-download-accelerator-in-ubuntu-12-0411-1010-04 39 awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி? awk, sed மற்றும் grep ஆகிய மூன்றும் லினக்ஸ் அல்லது யுனிக்ஸ் கட்டளை-வரியில்(command-line) எனக்கு விருப்பமான கருவிகளாகும். இவை மூன்றும் திறன்மிகு கருவிகளாகும். எப்படி awk-ஐ உபயோகிப்பது என்று இப்போது பார்ப்போம். அதன் பிறகு சில உபயோகமான awk ஒற்றை வரி கட்டளைக் காணலாம். AWK உரை நடையில் உள்ள தரவுகள் அல்லது தரவுத் தொடர் பரப்புகைகளை(data streams) நிரற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும். இது 1970-களில் பெல் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. பழமையான மொழி என்பதால், அதன் வயதை மட்டும் கருத்தில் கொண்டு இதை ஒதுக்கிட கூடாது. இது மிகவும் திறன்மிகுந்ததும், செயல்களை ஆற்றலுடன் செய்து முடிப்பதும் ஆகும். சரி, வாருங்கள் awk-ஐ ஒரு கை பார்க்கலாம். awk-ன் சிக்கலான செயல்பாடு மற்றும் பயன்பாட்டை தெரிந்து கொள்வதற்கு முன், அதன் அடிப்படையிலிருந்து ஆரம்பிப்போம். தற்போதைய பயிற்சிக்காக ஒரு கோப்பை உருவாக்கிக் கொள்வோம். நீங்கள் எந்தவொரு கோப்பையும் இந்த பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்; அது அமைப்பிலிருக்கும் பதிவுக் கோப்பாகக் கூட இருக்கலாம். நாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘df’ கட்டளையின் மாதிரிப் பெறுகையை(sample output) நமது பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்வோம்.   Filesystem      1K-blocks         Used            Available            Use%       Mounted on /dev/sda3 56776092 25257692 28587744 47% / /dev/sda1 101086 30293 65574 32% /boot /dev/sda4 158128684 46476484 110045700 30% /home /dev/shm 1785172 0 1785172 0% /dev/shm   இந்த மாதிரியான பெறுகைகள் awk கையாள மிகச் சிறந்தனவாகும். Tab அல்லது Space-ஆல் பிரிக்கப்பட்ட தரவுகளைப் பிரித்தெடுப்பது awk-க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அது ஏன் என்று விரைவில் உங்களுக்குப் புரியும். ‘df > test.txt’ என்ற கட்டளையை உங்கள் முனையத்தில் தட்டச்சு செய்யுங்கள் அல்லது மேலே கொடுக்கப்பட்டள்ள பெறுகையை ஒரு கோப்பில் நகலெடுத்துக் கொண்டு, அந்த கோப்பிற்கு ‘test.txt’ என்று பெயரிடுங்கள். பொதுவாக எல்லா வழங்கல்களிலும் awk இருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் உங்கள் வழங்கலில் awk இல்லையென்றால் அதை முதலில் நிறுவுங்கள். முனையத்தில் பின்வரும் கட்டளையை எந்த அடைவுக்குள் ‘test.txt’ கோப்பை உருவாக்கினீர்களோ, அந்த அடைவுக்குள்ளிருந்து தட்டச்சு செய்யுங்கள்: # awk '{print}' test.txt பெறுகை ‘test.txt’ கோப்பிலுள்ள எல்லா வரிகளையும் அடக்கியிருக்கும். கோப்பிலுள்ள முதல் செங்குத்து வரிசையை மட்டும் தனியாக எடுக்க, கீழே உள்ள கட்டளையைத் தட்டச்சு செய்யுங்கள்: # awk '{print $1}' test.txt தானாகவே awk கோப்பு Tab-ஆல் பிரிக்கப்பட்டிருக்கிறது என கண்டறிந்து, அதிலுள்ள முதல் செங்குத்து வரிசையை மட்டும் எடுத்துக் காட்டுகிறது. உங்களது பெறுகை, கீழே கொடுக்கப்பட்டுள்ள பெறுகையை ஒத்திருக்கும்.   Filesystem /dev/sda3 /dev/sda1 /dev/sda4 /dev/shm   இதே மாதிரி கோப்பிலுள்ள எந்த ஒரு செங்குத்து வரிசையையும் தனியாக பிரித்தெடுக்க முடியும். மூன்றாவது செங்குத்து வரிசையை பிரித்தெடுப்பதற்கு, மேலே நாம் முதல் செங்குத்து வரிசையை எடுக்கப் பயன்படுத்திய கட்டளையை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி மாற்றினால் போதும். # awk '{print $3}' test.txt ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளைக் கூட awk-ஐ பயன்படுத்தி நாம் எடுக்கலாம். அதற்கு வேண்டுமென்ற வரிசைகளை கட்டளையில் சேர்த்து, வரிசைகளை காற்புள்ளியால் பிரித்து விடுங்கள். # awk '{print $1, $3, $6}' test.txt இந்த கட்டளை முதலாம், மூன்றாம் மற்றும் ஆறாம் வரிசைகளை எடுத்துக் காண்பிக்கும். Filesystem Used Mounted /dev/sda3 25257692 / /dev/sda1 30293 /boot /dev/sda4 46476484 /home /dev/shm 0 /dev/shm Space அல்லது Tab அல்லாமல், பிறவற்றால் கோப்பு பிரிக்கப்பட்டிருந்தால் (உதாரணத்திற்கு ‘/etc/passwd’ கோப்பு முக்காற் புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும்) awk-ஆல் அவற்றைத் தானாக பிரித்தறிய முடியாது. அந்த மாதிரியான தருணங்களில், சரியான பிரிப்பானை(separator) உபயோகப்படுத்தும்படி awk-ஐ நாம் அறிவுறுத்த வேண்டும். கீழ்வரும் கட்டளை ‘/etc/passwd’ கோப்பிலுள்ள முதல் செங்குத்து வரிசையை பிரித்தெடுத்து காண்பிக்க பயன்படுகிறது. # awk -F':' '{print $1}' /etc/passwd இந்த கட்டளை உங்கள் அமைப்பிலுள்ள பயனர்களின் பெயர்களை பெறுகையில் கொடுக்கிறது. root bin daemon adm lp subramani இதே மாதிரி எந்தொரு பிரிப்பானையும் பயன்படுத்தி தரவுகளைப் பிரித்தெடுக்கலாம். awk-ஐப் பயன்படுத்தி உங்களது பதிவுக் கோப்புகளிலிருந்து உங்களுக்குத் தேவையான விவரங்களை சேகரிக்கலாம். உதாரணத்திற்கு, உங்களது இணைய வழங்கியில்(Web Server) எந்த இணைய URL, எந்தெந்த இணைய விதிமுறை முகவரிகளிலிருந்து(IP Address) பார்க்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், awk-ஐ பயன்படுத்தி இந்த விவரங்களை வழங்கியின் access பதிவுக் கோப்பிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை உபயோகப்படுத்துங்கள்:- # awk '$9 == 200 {print $1, $7}' access.log 10.110.1.95 /ui/ 10.120.20.226 /index.html 10.35.110.1 /ui/ 10.35.110.1 /ui/ 10.35.110.1 /ui/ இது மாதிரி விவரங்களை சேகரிப்பதன் மூலம், உங்களது இணையத்திலிருந்து யாராவது செய்திகளைத் திருடுகிறார்களா என்று உங்களது இணையத்தை அதிகமாக யார் பார்வையிடுகிறார்கள் என்பதிலிருந்து அறியலாம். உங்களது இணையத்தளம் எந்த இணைய விதிமுறை முகவரியிலிருந்து அதிகம் பார்க்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய, # awk '$9 == 200 {print $1}' access.log | sort | uniq -c | sort -nr 1557 10.35.110.1 386 10.110.1.95 209 10.120.253.171 87 10.120.20.196 34 10.120.253.151 8 10.120.20.226 ஆங்கில மூலம் :- http://www.simplehelp.net/2012/02/05/how-to-get-started-using-awk/     இரா . சுப்ரமணி . மின்னஞ்சல் : subramani95@gmail.com வலைப்பதிவு : http://rsubramani.wordpress.com 40 வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள் []“கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” ~ பாரதியின் பாடல் வரிகள் “விற்கத் தெரியாதவன், வாழத் தெரியாதவன்” ~ “அங்காடி தெரு” படத்தில் வரும் வசனம் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை. இந்த வர்த்தகத்தில் நடைபெறும் பரிமாற்று / பணமாற்று / பண்டமாற்று முறைகளின் தற்போதைய தேவை , வேகம். நல்ல தரம், விரைந்த சேவை இவை இரண்டுமே, இன்றைய தொழில் வளர்ச்சிக்குத் தாரக மந்திரங்கள். பொருளின் தரம் அது உங்க கையில் தான் இருக்கு. ஆனா வேகம்?!!. பணிகளை விரைவாக முடிக்க அனைவரும் நாடுவது மென்பொருள் எனப்படும் “software”. இது எவ்வாறு உங்கள் தொழிலின் வேகத்துக்கு /வளர்ச்சிக்கு உதவும்? பெரிய தொழிற்சாலைகளால் எவ்வாறு விரைவாக சேவை செய்ய முடிகிறது? ஆட்கள் பலம் / பண பலம் மட்டும் இல்லாமல்,  இங்கே  அறிவின்  பலம் மிக அதிகமாக  வேலை செய்கிறது. அது தான்  இந்த மென்பொருள்  எனப்படும் “software”. இன்றைய கணினி உலகில் பரிமாற்ற / வர்த்தக உலகிற்கு மென்பொருள்களின் (software) தேவை மிக மிக அவசியம். எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கக்கூடிய “Open Source Software” பல இருந்தும், அவை பற்றிய போதிய அறிவு இல்லாததே, இந்திய தொழில் முனைவோரின் முக்கிய குறைபாடு. இது தான் குறைபாடு ? என்ன செய்யலாம் ?! இந்த கேள்விகளுக்கு விடை தேடுவதே, இந்தத் தொடரின் முக்கிய நோக்கம். அப்போ நாம என்னென்ன மென்பொருட்கள் இருக்குனு மட்டும் தான் பாக்க போறோமா ?. “ஐஸ் கிரீம” கைல கொடுத்துட்டு எப்படி திங்கறதுன்னு சொல்லாம  போனா ?!!!.. அப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு போக மாட்டீங்க. இந்த தொடரில் என்னென்ன “Open Source Softwares” இருக்கு , அதுல எது சிறந்தது ?, எதுக்கெல்லாம் (How to use) பயன்படுத்தலாம்?அதைப் பயன்படுத்தும் (Best Business Practices) சிறப்பான முறைகள் என்னென்ன? நிறுவுதல் (Installation) மற்றும் பராமரிப்பை (Maintenance) விரிவான முறையில் இந்த பகுதியில் நீங்கள் காணலாம். வலை / கணினி மூலம் வேகமான இந்த உலகில் வாடிக்கையாளரின் கேள்வி /குறைபாடுகளுக்கு விரைவாக பதில் தர வேண்டியது நமது கடமை. இந்த வசதிகளை தரக்கூடிய  வாடிக்கையாளர் உதவி மென்பொருள்  “Open Source Help Desk” பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம் “A customer is the most important visitor on our premises. He is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so.”  - Mahatma Gandhi காந்தியின் இந்த கூற்றை மெய்ப்பிக்க, வாடிக்கையாளர் ~ விற்பனையாளர் உறவு மேம்பட , வாடிக்கையாளரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்க பட வேண்டும், அதற்கு உதவுவது , வாடிக்கையாளர் உதவி மென்பொருள்  எனப்படும் “HelpDesk” மென்பொருள். இணையத்தில் இலவசமாக கிடைக்கும் வாடிக்கையாளர் உதவி மென்பொருட்கள் அதிகமாக இருந்தாலும், எல்லோராலும் விரும்பப்படுகிற வாடிக்கையாளர் உதவி மென்பொருட்கள் கீழே வருவன..   1. OSTICKET வலை : http://www.osticket.com/ 2. Request Tracker வலை : http://bestpractical.com/rt/ 3. Help Desk Software வலை : http://freehelpdesk.org/ 4. OTRS (Open source Ticket Request System) வலை : http://otrs.org 5. SiT – SiT Support Ticket System வலை :  http://sitracker.org   “தரமான ஒன்று இருந்தாலே போதுமே, அப்புறம் எதுக்கு இத்தனை” என்று கேக்குறீங்களா ?. உங்க கேள்வி நியாயமானது தான். ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபடுகிறது. எவ்வாறு ? இதற்கான பதில், அடுத்த இதழில். தொடரும் …   [] சரன் சிங் (Saran Singh), ஒரு விவசாயின் மகன். கிராமத்து மண்வாசனையில் வளர்ந்து, நகரத்தில் பொட்டி தட்டுற வேலை. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் பெருமையை உலகிற்கு சொல்லும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் “Software Developer”. மின்னஞ்சல் : saran.saaos@gmail.com வலை : http://www.saaos.com 41 உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’ NetHogs ஒரு சிறிய ‘net top’ கருவியாகும். பொதுவாக போக்குவரத்தை நெறிமுறை(protocol) அல்லது உள்பிணையத்தின்(subnet) படி பிரிக்கும் மற்ற கருவிகளைப் போல் அல்லாமல், இது அலைத்தொகுப்பை(bandwidth) செயல் வாரியாகத் தொகுக்கின்றது; இதற்காக எந்தவொரு சிறப்பு கருனிக் கூறும் ஏற்றப்பட வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வலையமைப்புப் போக்குவரத்து அதிகமானால், NetHogs மூலம் எந்த PID அதற்கு காரணம் என்று கண்டுபிடித்து, அது தேவையில்லாத்தாக இருப்பின் அந்த செயலை நிறுத்தி விடலாம். [] உபுண்டு repository-ல் வழக்கமாக இருக்கும் NetHogs-ஐ ‘Software Center’ மூலம் நிறுவிக் கொள்ளலாம் அல்லது பின்வரும் கட்டளையை முனையத்தில் அடிக்கவும். sudo apt-get install nethogs NetHogs-ஐ உபயோகப்படுத்த root சிறப்புரிமை தேவை; eth0 வழக்கநிலையாகும். sudo nethogs eth0 pppo இணைப்பில் :- sudo nethogs ppp0   —- ஆங்கில மூலம் :- http://ubuntuguide.net/nethogs-monitor-network-bandwidth-per-process-in-ubuntu இரா . சுப்ரமணி . மின்னஞ்சல் : subramani95@gmail.com வலைப்பதிவு : http://rsubramani.wordpress.com 42 pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு pySioGame என்பது சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகள் மற்றும் விளையாட்டுகளை உள்ளடக்கிய சேர்க்கை ஆகும். இவை அனைத்தையும் ஒரே சாளரத்திலேயே பயன்படுத்தலாம். pySioGame கணிதம், வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல் மற்றும் ஞாபகத்திறன் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகும். இதன் உருவாக்குநர்(developer) இந்த செயல்திட்டத்தை(project) முற்றிலுமாக நிறைவு செய்துவிடவில்லை. எனினும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இது நன்றாக இயங்குவது புலப்பட்டது. மேலும் மூன்றிலிருந்து பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இது மிகவும் பயனளிப்பதாய் இருக்கும்.இக்கட்டுரையில், pySioGame-ஐ உபுண்டு 12.04/11.10-வில் நிறுவும் முறையை குறிப்பிட்டுள்ளேன். (பிற லினக்ஸ் பதிப்புகளில் நிறுவ, இந்த கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்)   []   pySioGame நிறுவுதல்: pySioGame(0.3.0 beta)- ஐ, உபுண்டு 11.10/12.04-ல் நிறுவ, பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்துங்கள். Sudo add-apt-repository ppa:upubuntu-com/edu sudo apt-get update sudo apt-get install pysiogame   இனி கட்டுப்பாட்டகத்திலிருந்து (from dashboard) ஆட்டத்தைத் துவக்கலாம்.   [] [] []   பிற லினக்ஸ் பதிப்புகளில் pySioGame-ஐ நிறுவ, இந்த இணைப்பை பயன்படுத்தவும். http://sourceforge.net/projects/pysiogame/ குறிப்பு: pySioGame நிறுவப்படும் முன், python நிறுவப்பட்டிருக்க வேண்டும்.   [] நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/   43 ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2 ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ []ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான நிரலாக மாற்றிக் காட்டும் ஈமேக்ஸ். 1. Indentation அறவே இல்லாத ஒரு நிரலை ஈமேக்ஸில் திறக்கவும். 2. C-x அழுத்தியபின் h அழுத்தவும். 3. C-M-\ அழுத்தவும். உங்கள் நிரல் எவ்வளவு நேர்த்தியாக சீரமைக்கபட்டுவிட்டது! ஆம் இதெல்லாம் ஈமேக்ஸ்கு ஜுஜூபி [] சரி வாருங்கள் மேலும் சில கட்டளைகள் பயில்வோம். பல கோப்புகளைக் கையாளுதல் பல கோப்புகளை ஒரே நேரத்தில் கையாளுவது பல சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பிலிருந்து உரையை நகலெடுத்து இன்னொரு கோப்பில் இடலாம். வலை உலாவிகளில் பல tab-களைப் பயன்படுத்துவது போலத்தான். vi பயன்படுத்திப் பழகியோருக்கு இது புதுமையாக இருக்கலாம். [] முதல் கோப்பைத் (sample1 என்று வைத்துக் கொள்வோம்) திறந்தபின் இன்னொரு கோப்பையும் (sample2 என்று வைத்துக் கொள்வோம்) அதேபோலத் (C-xC-f) திறக்கவும். இப்போது sample1 sample2-ன் வலப்பக்கத்தில் இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள். அதாவது திறக்கப்படும் ஒவ்வொரு புதிய கோப்பும் தற்போதைய கோப்பின் இடப்பக்கத்தில் திறப்பதுபோல் வைத்துக்கொள்ளலாம். இப்போது sample1-ற்குச் செல்ல C-x அழுத்தி வலது அம்புக்குறியை அழுத்தவும். அதேபோல் மீண்டும் sample2-ற்குச் செல்ல C-x <இடது அம்புக்குறி>. இப்படிப் புதிய கோப்புகளைத் திறந்துகொண்டே போனால் ஒரு கட்டத்தில் தேவையான கோப்பிற்குச் செல்வது தலைவலியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். நூறு கோப்புகளைத் திறந்தாலும் தேவையான கோப்பிற்குச் செல்ல எளிமையான வழி உள்ளது. C-x அழுத்தி b அழுத்தவும். இப்போது நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும் (இதை mini-buffer எள்று சொல்வதுண்டு). அங்கே தேவையன கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்தவும். திறக்கப்படிருக்கும் அனைத்துக் கோப்புகளின் பெயர்களையும் பட்டியலிட C-xC-b. மீளமைத்தல் (undo) உரைதிருத்தும் போது மீளமைத்தல் என்பது பலருக்கு முக்கியமான தேவை. இதற்கு C-x u பயன்படுத்தலாம். C-_ என்பதும் இதே வேலையைச் செய்யும். தேடுதலும் மாற்றுதலும் (Search and replace)   குறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்றொடரைத் தேட C-s அல்லதி C-r பயன்படுத்தலாம். C-s நிலைகாட்டி இருக்கும் இடத்தில் தொடங்கி முன் நோக்கித் தேடும், C-x பின் நோக்கித் தேடும்.Regular expressions கொண்டும் தேடலாம். முன்நோக்கித் தேட C-M-s, பின்நோக்கித் தேட C-M-r. அதேபோல் ஒரு சொற்றொடரைத் தேடி அதற்குப் பதிலாய் வேறொரு சொற்றொடரை இட, C-% அழுத்தவும். Minibuffer-ல் தேடவேண்டியசொற்றொடரை இட்டு அழுத்தவும். பின்னர் புதிய சொற்றொடரை இடவும். இதேபோல் regular expression கொண்டு replace செய்ய C-M-% பயன்படுத்தலாம். இப்போது எங்கெல்லாம் replace செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். குறியீடு பொருள் ---------- ---------------------------------------------------------------- ! அனைத்து இடங்களிலும் மாற்ற , தற்போது காட்டப்படும் இடத்தில் மட்டும் மாற்ற y தற்போது காட்டப்படும் இடத்தில் மாற்றி அடுத்த இடத்திற்குச் செல்ல n அடுத்த இடத்திற்குச் செல்ல q எதையும் மாற்றாமல் விட   ஈமேக்ஸில் பட்டையைக் கிளப்ப வாழ்த்துகள் [:)] [] விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள். மின்னஞ்சல்: viky.nandha AT gmail DOT com வலைத்தளம்: http://vigneshnandhakumar.in 44 உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள் உபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating system) வேறுபாடின்றி அனைத்திலும் மெய்நிகராக(virtually) இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நாவில் எச்சில் ஊறும் வண்ணம் விளையாட்டு அனுபவங்கள் வழங்குவதில் உபுண்டு எந்த வகையிலும் விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸிற்கு குறைந்தது அல்ல. சில முற்றிலும் சுவாரசியமான விளையாட்டுகளும் உபுண்டுவில் இயங்கக்கூடியவையாக உள்ளன. அவற்றில் சில புகழ்வாய்ந்த விளையாட்டுகளைப் பார்ப்போம். எந்த வகை விளையாட்டாக இருந்தாலும் அது உற்சாகமூட்டுவதாகவும் உத்வேகமூட்டுவதாகவும்(அட்ரினலின் சுரப்பி தன்னை மறந்து அளவுக்கதிகமாக சுரக்கும் அளவிற்கு) எப்போதும் இருந்து வருகின்றன. கணினி விளையாட்டுகள் உருவான காலகட்டத்திலிருந்தே உலகளவில் பல லட்சம் மக்களின் உள்ளங்களை அவை கொள்ளை கொண்டுள்ளன. மாரியோ(Mario) மற்றும் டேவ்(Dave) போன்ற விளையாட்டுகளை மக்கள் விரும்பத்துவங்கியது தான், முற்றிலும் சொகுசான வரைகலை(Graphics) நிறைந்த இன்றய விளையாட்டுகள் உருவாவதற்கு வழி வகுத்தன. கணினி விளையாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன: - சண்டை போட்டிகள் - வேகப் பந்தயங்கள் - கேளிக்கை விளையாட்டுகள் - மர்ம விளையாட்டுகள் - சிறு புதிர்கள் - விடுகதைகள் மேல் குறிப்பிட்ட பட்டியல் அத்துடன் நிறைவுபெறவில்லை, நீண்டுகொண்டே போகும். மலையளவு வரைகலை (graphics) நிறைந்த விளையாட்டுகள் கூட உள்ளன. நீங்களும் இவ்வகை விளையாட்டுகளின் விரும்பி என்றால், இந்த சொற்ப காரணத்திற்காக உபுண்டுவிலிருந்து விண்டோஸுக்கு நீங்கள் தாவிச் செல்ல வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இன்று பல வரைகலை(graphics) மழையில் மூழ்கிய விளையாட்டுகள் உபுண்டுவில் இயங்குவதாகவும் உள்ளன. அவற்றில் பொறுக்கி எடுக்கப்பட்ட சிறந்தவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.   அம்னீசியா : தெ டார்க் டெசெண்ட் ( Amnesia: The Dark Descent) [] இது மர்மத்தின் சாயல் கொண்டது. இதில் விளையாடுபவர் டேனியல் என்ற சிறுவனாக பாவிக்கப்படுவார். இந்த விளையாட்டின்படி அந்த சிறுவனுக்கு தன் பெயரை தவிர வேறு எதுவும் தெரியாது. அவன் தன் வாழ்வின் உண்மைகளை எவ்வாறு தெரிந்து கொள்கிறான் என்பதே இந்த விளையாட்டின் போக்காக அமைந்துள்ளது. அந்த உண்மைகளை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறு தடயங்கள் மூலமாக கண்டுபிடிக்க வேண்டும். அதுபோலவே சிறப்பாக உள்ளது அதன் விளையாட்டு முறையும். இதை இலவசமாக பயன்படுத்த முடியாது என்றாலும், சோதனைப் பதிப்பை(demo version) பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய: http://www.amnesiagame.com/#demo ட்ரெமுலஸ் (Tremulous) []   இது திட்டமிடும் விளையாட்டு. எதிரிகள் தாக்குதலில் உயிர் பிழைப்பதும், தம் தாக்கு களத்தை பாதுகாப்பதுமே இதன் நோக்கம் ஆகும். தன் ஆற்றல்களை வீரர் இழந்து நிற்கும் நிலையில் அதனை உயிர்ப்பிக்கும் விதைகள் இதில் முக்கிய பங்கு வகிப்பவை. வரைகலை(graphics) அருமையாக இருந்தாலும் இதன் ஒலியமைப்பு சிறந்ததாக இல்லை. பதிவிறக்கம் செய்ய : http://tremulous.net/files/ ஸ்லாம் ஸாக்கர்(Slam Soccer) [] இது கால்பந்து அரங்கில் விளையாடும் கேளிக்கை விளையாட்டு. இதில் எதிரணியினரை உடலால் தாக்க முடியும். வரைகலை(graphics) குறைந்த அளவே இடம் பெற்றாலும் இது சுவாரசியம் நிறைந்தது. பதிவிறக்கம் செய்ய: http://www.bolzplatz2006.de/en/downloads.php அர்பன் டெரர்(Urban Terror) [] உத்திகொண்டு ஆடும் ஆட்டம் இது. இதில் வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை தொடுத்து மரணம் உண்டாக்கும் தீவிரவாதிகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்றார் போல் இதன் வரைகலையும்(graphics) ஒலியமைப்பும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இது எதிரிகளை சுட்டு வீழ்த்தும் விளையாட்டு.  பதிவிறக்கம் செய்ய: http://www.urbanterror.info/support/110-/ சாவேஜ் 2(Savage 2) [] இது பல பாத்திரங்களை உள்ளடக்கிய விளையாட்டு. விளையாடுபவர் பல்வேறு பாத்திரங்களில் அதற்கேற்ற செயல்கள் செய்து இறுதியாய் வெற்றியை சுவைக்க வேண்டும். பதிவிறக்கம் செய்ய: http://www.savage2.com/en/download.php எக்ஸ் மோடோ(X Moto) [] இது இருசக்கர வாகனப் பந்தயம். வரைகலை(graphics) திறம்பட இல்லாவிட்டாலும், இது பசுமரத்தாணி போல உங்கள் உள்ளத்தில் பதியக் கூடியது. பதிவிறக்கம் செய்ய: http://xmoto.tuxfamily.org/   ப்லைட் கியர்(Flight Gear) [] இது திறமைக்கு சோதனை. விளையாடுபவர் தம் திறமைகளை பயன்படுத்தி விமானம் தரை இறங்கவும், பறந்து செல்லவும் வழிகாட்ட வேண்டும். இதன் அதினவீன வரைகலை(graphics) மற்றும் முப்பரிமாண(3D) அமைப்பு நோக்கத்தக்கது. பதிவிறக்கம் செய்ய: http://www.flightgear.org/download/main-program/#linux வார்சோன் 2100(Warzone 2100) [] இது உத்தி மற்றும் திட்டமிடுதலின் கலவை நிறைந்தது. விளையாட ஆர்வத்தைத் தூண்டும். வரைகலை(graphics) சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தாலும் இது மிகக் கடினமான விளையாட்டாகும். பதிவிறக்கம் செய்ய: http://wz2100.net/download மெகாக்லெஸ்ட்(Megaglest) [] இது இயல்பு வாழ்க்கை வியூகம் வகுக்கும் விளையாட்டு. விளையாடுவோர் பல பாத்திரங்களில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். பதிவிறக்கம் செய்ய: http://sourceforge.net/projects/megaglest/ நெக்ஸுய்ஸ் (Nexuiz) [] இது உறையவைக்கும் காட்சி அமைப்புகள்(visuals) கொண்ட முப்பரிமாண(3D) திறன் பெற்ற துப்பாக்கி சுடும் விளையாட்டு. இது தொடற்சியான உயிர் காக்கும் போராட்டத்தை உள்ளடக்கியது. எதிரில் வரும் பகைவர்களின் ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி அழிக்க வேண்டும் பதிவிறக்கம் செய்ய: http://www.alientrap.org/games/nexuiz [] ஜொபின் பிராஞ்சல் ஆன்றனி மின்னஞ்சல்: jophinep@gmail.com வலைத்தளம்: jophinepranjal.blogspot.in 45 மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக ஹேக்கட்டி ஹேக்(Hackety Hack) ஒரு கட்டற்ற மென்பொருள் மற்றும் திறவூற்றாகும்(open source). இதை பயன்படுத்தி ரூபி நிரலாக்க மொழி(Ruby Programming language) மூலம் GUI application(Graphical User Interface application நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால், “வரைபட பயனர் இடைமுகப்பு”) உருவாக்கும் முறையை பயிலலாம். மேலும் இது ஒரு IDE-ஐ(Integrated Development Environment அதாவது ஒருங்கிணை விருத்திச் சூழல்) விரிவான பாடத் தொகுப்புடன் சேர்ப்பதால் கற்றலை மிக மிக எளியதாகவும், விளையாட்டாகவும் ஆக்குகிறது.  [] ஹேக்கட்டி ஹேக்கை லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸ் எக்ஸ் போன்ற இயங்குக் தளங்களில் (operating systems) பயன்படுத்தலாம். நிரலாக்கர்கள்(programmers) தங்கள் அனுபவங்களை பகிர, கேள்விகள் கேட்க, விமர்சனங்களை தெரிவிக்க வகை செய்யும் வண்ணம் இது வலைத்தளத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.   ஹேக்கட்டி ஹேக்கை கொண்டு ரூபி மொழியின் அடிப்படைகளை கற்று எளிய செயலிகளை(apps) விரைவாக உருவாக்க முடியும். இது எளிய செயலிகள் உருவாக்க மட்டுமல்ல, ஹேக்கட்டி ஹேக் மூலம் நீங்கள் அடிப்படையை கற்றுவிட்டால், ஹேக்கட்டி ஹேக்கை போலவே மிகப் பெரிய மற்றும் சிக்கலான செயலிகளை உருவாக்கத் துவங்கலாம்.   நீங்கள் நிரலாக்கத்தில் ஈடுபடவும், பல் தளங்களில் இயங்கும் செயலிகள்(cross platform apps) உருவாக்கவும் விழைபவரானால், ஹேக்கட்டி ஹேக் ஒரு நல்ல துவக்கத்தை தரும்.   ஹேக்கட்டி ஹேக்கை உபுண்டு / லினக்ஸ் மின்ட்ல் தரவிறக்கி நிறுவ :   இதனை அதிகாரபூர்வ வலைப்பக்கத்திலிருந்து(official website) தரவிறக்கலாம்.   “http://hackety.com/downloads/latest/linux” இது ஒரு இருமை கோப்பை(binary file) தரவிறக்கும். நிறுவும் முன் அதற்கு இயக்க அனுமதி(executable permission) வழங்க வேண்டும். இதற்கு, முனையத்தில்(terminal), sudo chmod +x hacketyhack-1.0.1.run என்றும், நிறுவ ./hacketyhack-1.0.1.run என்றும் கட்டளைகளை பயன்படுத்தவேண்டும். ஹேக்கற்றி ஹேக்கால் உருவாக்கப்பட்ட ஒரு எளிய செயலியின்(app) திரைப்பிடிப்பு(screen shot) இதோ: [] அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு: http://hakety.com/faq நிரலாக்கம்() தொடர்பான பொதுக் கேள்விகளுக்கு:http://hakety.com/questions [] நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/ மின்னஞ்சல் : jophinep@gmail.com 46 Calibre – மின் புத்தக நிர்வாகம் Calibre – மின் புத்தக நிர்வாகம் [] Calibre E-book Management , உங்கள் மின் புத்தங்கங்களை(e-book) நிர்வாகம் செய்ய சிறந்த “நூலக -மென்பொருள்’ இது. என் பார்வையில், சிறந்த மற்றும் எளிதாக மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள். இது கிட்டத்தட்ட எந்த வடிவம் கொண்ட புத்தகங்களையும் வாசிக்கும் திறன் படைத்தது.  ஓர் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த சாப்ட்வேர் உடன் ஒரு வெப்சர்வர்(webserver) உள்ளது, இதுமூலம் நீங்கள் உங்கள் நூலகத்தை மற்றவருக்கு நெட்வொர்க்கில்(network) உங்கள் சேகரிப்பை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.   Calibre – இணைய புத்தக நிர்வாகம் மென்பொருளை நிறுவ(to Install), பின்வரும் கட்டளையை பின்பற்றவும். sudo python -c “import urllib2;exec urllib2.urlopen(‘http://status.calibre-ebook.com/linux_installer’).read(); main()”   உபுண்டு/டெபியான் – இல் sudo apt-get install calibre   ஃபெடோரா – இல், yum install calibre   OS பயன்பாடுகள் மெனுவிலிருந்து(start menu) அல்லது ரன்-கட்டளை(run) உரையாடல் பெட்டியிலிருந்து  calibre  என்று type செய்து மென்பொருளை துவங்கலாம். [] Calibre முக்கிய சாளரத்தில் உள்ள அமைப்புகள், 1) முதன்மை கருவிப்பட்டை பகுதி – Main Menu [] 2) இடது பக்கம் உள்ள பிரிவு பகுப்பு பகுதி – left catagory panel [] 3) மையத்தில் புத்தகத்தின் வாசிப்பு பகுதி – book list panel [] 4) வலது பக்கம் உள்ள புத்தகத்தின் அட்டை முன்னோட்ட பகுதி – preview panel [] அனைத்து முதன்மை செயல்பாடுகள் என்பது  இ-புக் சேர்ப்பதற்கு(addiing),  இ-புக் தகவல்களை திருத்த(meta edit), மற்றும் இ-புக் மாற்றம் செய்ய(convert) உதவும். நீங்கள் புத்தகத்தில் டேக்(tag) மற்றும் உங்கள் தலைப்பு(titile), பிற விவரங்களை சேர்க்கலாம். மேலும் நீங்கள் தேட(search) மற்றும் வரிசைப்படுத்துவதன்(short) மூலம் இதனை எளிமையாக கையாளலாம். உள்ளடக்க சர்வர் : நாம் எந்த கணினி அல்லது ஐபோன், Android  மொபைல் போன்ற சாதனங்களிலும் புத்தகங்களை படிக்க முடியும், எனவே நீங்கள் உங்கள் நெட்வொர்க்கில் உங்கள் நூலகத்தை பகிர்ந்து(network sharing) கொள்ள வேண்டும். அதற்கு 1) முக்கிய கருவிப்பட்டியில், “பகிர்ந்து / இணை” (connet / share) என்ற பொத்தானை அழுத்தவும். 2. “உள்ளடக்கம் சேவையகத்தை துவக்க” (start content server) தேர்ந்தெடுக்கவும். [] [] [] ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கவும், மற்றும் பட்டனின் மேல் மூன்று நீல நிற பல்பு பச்சை நிறமாக மாறிவிடும், இந்த வழியாக உங்கள் சர்வர் இயங்கும் [] நாம் இப்போது URL http://:8080/ வழியாக நூலகத்தை அணுக முடியும்.நான் கூட இப்பொது என் ஐபோன் மூலம் என் நூலகத்தை அணுகவும் முடியும்.   [] இப்போது நீங்கள் நெட்வொர்க்கில் உங்கள் முழு நூலகம் அணுக முடியும்! இது சூப்பர் இல்லை?   மேலும், இது, பிற மின்னூல் வடிவங்களான, mobi, ebub க்கு மாற்ற உதவுகிறது. [] லட்சுமிசந்திரகாந்த், கடந்த 6 ஆண்டுகளாக  linux admin -ஆக பணியாற்றி வருகிறேன். இப்போது Autodesk, Singapore  -ல் பணியாற்றி கொண்டும் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் SystimaNX IT Solutions Pvt, Ltd. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும்  உள்ளேன். 2003 -ம் ஆண்டு முதல் லினக்ஸ், FOSS மீது கொண்ட அன்பால் ஒரு கணினி நிறுவனம் அமைத்து, விரும்பும்படி வேலை செய்யவேண்டும் என்ற கனவை கடந்த 4 ஆண்டுகளாக நிஜமாக்கி உழைத்துக்கொண்டு உள்ளேன். ஓய்வுநேரங்களில்  தகவல் தொழில்நுட்பம், தமிழ் புத்தகம், புகைப்படம் எடுத்தல், சுவையாக சமைப்பது,  கால்பந்து  பார்ப்பது , வலை பதிவுகள் என்று பொழுது போக்கிகொண்டு உள்ளேன் வலை பதிவு  : http://opennetguru.com மின்அஞ்சல்  : malan.in@gmail.com 47 டைம் ட்ரைவ் – கால எந்திரம் டைம் ட்ரைவ் - கால எந்திரம் []   டைம் ட்ரைவ் (Time Drive) நமது எந்தவொரு கோப்பையும் (file) [அது இசை, காணொளி (video), படங்கள், ஆவணம் (document) அல்லது வேறெதுவாகவும் இருக்கலாம்] எளிய முறையில் காப்புநகல் (back up) எடுக்க, பயன்படுத்த எளிமையான பயனமைப்பு (utility). இதனைப் பயன்படுத்தி நம்மால் எத்தனை கோப்புகளையும் எத்தனை கோப்புறைகளையும் (folder) காப்புநகலெடுத்து, மீண்டும் ஒற்றைச் சொடுக்கில் (single click) மீள்விக்க (restore) முடியும். இது அதிகரிப்புக் காப்புநகல் (incremental backup) (தரவுகளைப் பல நகல்கள் எடுக்காமல் அவற்றின் வேறுபாடுகளை மட்டும் சேமிக்கும் ஒரு முறை) முறையைப் பின்பற்றுவது தனிச்சிறப்பு.   நீங்கள் உங்களுக்குப் பயன்படும் கோப்புகளை நீக்காமல் (delete) இருந்தால், டைம் ட்ரைவ் மூலம் அவற்றை விரைவாக உலாவவோ (browse) தேடவோ முடியும். பல கோப்புகளை மீள்விக்க (restore) வேண்டுமானால், அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் சேர்த்துவிட்டு பிறகு ஒரு சொடுக்கில் மீள்விக்கலாம்.   டைம் ட்ரைவ் ஆனது Python மற்றும் PyQt கொண்டு உருவாக்கி, மேம்படுத்தப்பட்டுள்ளது. இது லினக்ஸ் (உபுண்டு, ஓப்பன்சூயெஸ்), மேக் ஓஎஸ் எக்ஸ் மற்றும் விண்டோஸ் (XP/ Vista / 7) போன்ற இயக்க அமைப்புகளில் (operating system) இயங்கக் கூடியது. அது மட்டுமல்ல, எந்த தளங்களிலெல்லாம் (platform) போலித்தன்மையை (duplicity) (தகவல்களை மறையாக்கம் (encrypt) செய்து காப்புநகல் எடுக்கும் மென்பொருள்) நிறுவ (install) முடிமோ அவற்றிலெல்லாம் இதனை இயக்க முடியும்.     டைம் ட்ரைவினை Ubuntu (11.10/12.04) மற்றும் Linux Mint - ல் நிறுவும் முறை : உபுண்டுவில் (11.10/12.04) டைம் ட்ரைவை நிறுவ, [] முதலில் அதன் சார்புகளை (dependencies) நிறுவ வேண்டும். இதற்கு உபுண்டு முனையத்தில் (terminal) sudo apt-get install python-boto ncftp python-qt4 sshfs என்ற கட்டளையைப் (command) பயன்படுத்த வேண்டும். டைம் ட்ரைவைப் பதிவிறக்கம் செய்து நிறுவ, wget -O time-drive_0.4-1_all.deb http://goo.gl/auWnk sudo dpkg -i time-drive_0.4-1_all.deb   நீங்கள் இன்னும் உபுண்டு (Jaunty, Karmic மற்றும் Lucid) பயன்படுத்துபவராக இருந்தால் PPA டைம் ட்ரைவை உங்கள் கணினியில் சேர்த்துக்கொள்ளலாம்.     sudo apt-add-repository ppa:time-drive-devel/stable sudo apt-get update sudo apt-get install time-drive டைம் ட்ரைவினை Unity Dash (Unity) அல்லது Overlay (gnome shell) -இல் தொடக்கவும். (start)   குறிப்பு : மேலும் பல தகவல்களுக்கு (ஆங்கிலத்தில்) http://www.oak-tree.us/blog/index.php/science-and-technology/time-drive என்ற இணைப்பைப் பார்க்கவும்.   நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வலை பதிவு : http://jophinepranjal.blogspot.in/ மின்னஞ்சல் : jophinep@gmail.com [] 48 shutter ஒரு வரப்பிரசாதம் [] shutter ஒரு வரப்பிரசாதம்   “ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆயிரம் வார்த்தைகளை கொண்டு ஒரு விஷயத்தை ஒருவருக்கு புரியவைப்பதை விட ஒரு புகைப்படம் கொண்டு வெகு சுலபமாக புரிய வைக்கலாம். எழுத்து பேச முடியாட பல இடங்களில் படம் மிக சுலபமாக பேசி விடும். உதாரணமாக நாம் blog செய்யும் போதே எவ்வளவு தான் பக்கம் பக்கமாக எழுதினாலும், அதில் ஒரு சிறிய புகைப்படம் சேர்த்து எழுதும் போது தான் மற்றவர்களுக்கு சுலபமாக புரிய வைக்க முடியும். நாம் நமது ubuntu -ல் பொதுவாக ‘screenshot’ எடுக்க வேண்டும் எனில் அதில் default -ஆக வரும் ‘take screenshot’ எனும் application வைத்தே எடுப்போம். நாம் இதை முதன்முதல் பார்த்து/கேள்வி பட்டபோதே ஆச்சர்யம், மகிழ்ச்சி அடைந்து இருப்போம். ஆனால் ஒரே ஒரு application மூலம், - நாம் முழு window - குறிப்பிட்ட பகுதி - முழு திரை - முழு web page போன்றவற்றை புகைப்படம் எடுக்க - எடுத்த புகைப்படங்களை edit செய்ய - email செய்ய - FTP வழியாக upload செய்ய - நமக்கு தேவையான படி profile preferences செய்து கொள்ளும் வசதி - புகைப்படத்தை compression செய்ய - format மாற்றி அமைக்க - குறிப்பிட்ட நேரம் கழித்து புகைப்படம் எடுக்க - எடுத்த புகைப்படத்தில் water mark போட என பலவித வசதிகளும் செய்ய முடியுமா?????? அட இது அனைத்தும் ஒரே application மூலமாகவா?! ஆம் முடியும். அதுதான் நமது “shutter” application. இது ஒரு “feature rich screenshot program” என shutter இணையதளம் குறிப்பிடுகிறது. நீங்கள் blogging -ஐ வழக்கமாக கொண்டிருப்பவரா? (அ) how-to பற்றி எழுதுபவரா? நமக்கெல்லாம் இந்த “shutter” ஒரு வரப்பிரசாதம் ஆகும். நீங்கள் அனைத்தும் terminal -லேயே செய்ய பிரியம் உடையவரா? அதற்கும் shutter வழிவகை செய்கிறது. “Shutter –selection”, “shutter –section”, “shutter –full” and “shutter –window” போன்ற கட்டளைகளைக் கொண்டும், terminal வழியாக நாம் நமக்கு தேவையான படி screenshot எடுத்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. நாம் ஒரு இணைய தள பக்கத்தை screenshot எடுக்க சிலர் browser -ல் சில add-Ons -களை Install செய்து எடுப்பர். ஆனால் browser -ன் version update செய்யும் போதோ (அ) add-ons update செய்யும் போதோ பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் shutter மூலம் சில சொற்ப நொடிகளில் நாம் எந்த இணையதள பக்கத்தையும் சுலபமாக screenshot எடுக்க முடியும். மேலும் நாம் எடுக்கும் screenshot-ஐ நமது விருப்பபடி தேவையான folder -ல் save செய்து கொள்ள முடியும். சில் special wild-cards மூலம் சேமிக்கும் file-களின் பெயர்களை set செய்து கொள்ள முடியும். எடுக்கும் screenshot -ன் thumnails -ஐ generate செய்வது, எடுத்த screenshot களை edit செய்வது என்பதெல்லாம் shutter -ன் கூடுதல் சிறப்பு ஆகும். Edit -> preference -க்கு சென்று நமக்கு தேவையானபடி shutter preference ஐ set செய்து கொள்ளலாம். இங்கு நாம் reduce colors, thumnail size, keyboard -ன் default print, button, FTP server connection, plugins tab போன்ற முக்கிய settings ஐ காணலாம். Shutter -ல் default ஆக பல plugins install செய்யப்பட்டே வருகிறது. 3D reflection, 3D rotate, Nesate, Sepia, Graphscale, Jigsaw piece போன்ற plugins மிகச்சிறந்த உதாரணம் ஆகும். மேலும் அதில் உள்ள watermark plugin மூலம் நாம் எடுக்கும் புகைப்படத்தில் watermark போட முடியும். இது போன்ற பல வசதிக்ள அனைத்தையும் shutter ஒன்றே தருகிறது. Ubuntu ல் Install செய்ய : $sudo apt-get install shutter இணையதள முகவரி : http://shutter-project.org த . சுரேஷ் 49 கிட் – Distributed Revision Control System கிட் – Distributed Revision Control System   கிட் என்பது ஒரு திருத்தக் கட்டுப்பாடு அல்லது பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் [ Version Control System ] . இது பரவிலான திருத்தக் கட்டுபாடு ஒருங்கியத்தைக் கொண்டது, அதாவது Distributed Revision Control System. இதை பல கட்டற்ற மென்பொருள்களின் மூலங்களை பராமரிக்க பயன்படுகிறது. கிட்டில் உள்ள முக்கியமான அடிப்படை கமெண்டுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. கிட் நிறுவதல் கிட்டை உபண்டு கணினியில் நிறுவ, கமென்ட் லைன் திறந்து sudo apt-get install git-core  என டைப் செய்யவும். விண்டோசில் பயன்படுத்த அதற்க்கான கோப்பை http://code.google.com/p/msysgit/downloads/list எனும் வலைபக்கத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவவும். புது கிட் ப்ராஜக்ட்டை துவங்குதல் துவங்கப்படும் புது ப்ராஜக்ட்டை ஒரு கிட் ப்ரொஜெக்ட்டாக துவங்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு ப்ராஜக்ட்டை கிட் ப்ராஜெக்ட் ஆக்கலாம். அதற்க்கு உங்கள் ப்ராஜெக்டின் மூலம், source, முழுவதும் ஒரே டைரக்டரியில் இருக்க வேண்டும். குறிப்பு: கொடுக்கபட்டுள்ள கமேண்டுகள் அனைத்தும் “Terminal”இல் அடிக்க வேண்டியவை. விண்டோஸ் பயனாளர்கள் கிட்டுடன் வரும் கிட் பேஸ் (git bash) புது ப்ராஜெக்ட் எனில் அதற்கான டைரக்டரியை முதலில் உருவாக்கவும். எற்கனவே இருக்கும் ப்ராஜக்ட் எனில் இது தேவையில்லை. mkdir project உங்கள் ப்ராஜக்ட் டைரக்டரிக்குள் நுழையுங்கள் cd project அந்த ப்ராஜெக்ட்டை ஒரு கிட் ரெப்போவாக மாற்ற git init என டைப் செய்யுங்கள். அதற்கு Initialized empty Git repository in /home/user/project/.git/ என பதில் வரும். இப்பொழுது உங்கள் ப்ராஜெக்ட் ஒரு கிட் ரெப்போவாக(repo or repository) நிறுவப்பட்டுவிட்டது. “.git” எனும் டைரக்டரி உங்கள் project டைரக்டரியில் உருவாக்கப்பட்டு அதனுள் எல்லா கிட் சார்பான விசயங்களும் சேமிக்கப்படும். எப்பொழுதாவது கிட் தேவையில்லை எனில் “.git” டைரக்டரியை மட்டும் உங்கள் project டைரக்டரியிலிருந்து நீக்கினால் மட்டும் போதும். git init மூலமாக எந்த ஒரு டைரக்ட்டரியையும் ஒரு கிட் ரெப்போவாக மாற்றி அதனுள் உள்ள கோப்புகளை பதிப்புக்கட்டுப்பாட்டுக்குள் (version control) கொண்டு வரலாம். ஒரு நண்பர் தான் எழுதும் கவிதைத்தொகுப்புகளை கிட் பயன்படுத்தி பராமரித்து வருகிறார். இதுவே வேறு ஒருவர் ஒரு கிட் ரெப்போ வைதிருக்கிறார், அது உங்களுக்கு வேண்டும் என்றால், அதற்கு git clone என்ற கமேண்ட் உதவும். git clone /path/to/repo இதில் /path/to/repo என்பது கணினியில் உள்ள ஒரு கிட் டைரக்டரியாகவோ அல்லது இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்ய கிட் சுட்டியாக இருக்கலாம். இது மற்றவர்களின் ப்ராஜெக்ட்டுகளில் இணைந்து செயல்பட உதவும் ஒரு கமேண்ட் ஆகும். அடிப்படை பதிப்புசார் கமேண்டுகள் இப்பொழுது நமது project எனும் புது ப்ராஜெக்ட்டில் main.cpp மற்றும் functions.cpp என இரண்டு கோப்புகள் மட்டும் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். main.cpp `#include ` எனும் வரியையும்  functions.cpp `#include` என்ற வரியையும் மட்டும் கொண்டுள்ள கோப்புகள். இவைகளை கிட்டின் பார்வைக்குக்கீழ் கொண்டு சென்றால்தான் பதிப்புக்கட்டுபாடு செய்யமுடியும். நமது ரெப்போவின் நிலைமையரிய git status கமேண்டு பயன்படுத்தலாம். git status -s என இப்பொழுது கமேண்டு கொடுத்தால் ?? functions.cpp ?? main.cpp என பதில் வரும், இதற்கு ரெப்போவில் உள்ள கோப்புகள் functions இரண்டும் இன்னும் கிட்டின் பார்வைக்குக்கீழ் அல்லது கண்காணிப்பில் இல்லை என அர்த்தம். நமது ப்ராஜக்ட் டைரக்டரியில் உள்ள கோப்பை கிட்டின் பார்வைக்குக்கீழ் வைக்க git add எனும் கமேண்டை பயண்படுத்தலாம். git add . என்று கொடுத்தால் அதற்க்கு இந்த டைரக்டரியில் உள்ளா எல்ல கோப்புகளையும் கிட்டின் பார்வைக்குகீழ் வைப்பதாக பொருள். அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பை மட்டும் கிட்டின் பார்வையில் வைக்க, git add filename உபயோகிக்கலாம். இங்கு filename எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான கோப்புகளின் பெயர்களை கொடுக்கவும். git add . பின்பு நமது ரெப்போவின் நிலைமையை பார்ப்போம். மறுமுறை git status -s எனும் கமேண்ட் கொடுத்தால் A  functions.cpp A  main.cpp என பதில் வருகிறது. அப்படியெனில் functions.cpp மற்றும் main.cpp ஆகிய இரண்டு கோப்புகளும்  கிட்டின் பார்வையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என அர்த்தம். இதை ஒரு பதிப்பாக சேமிக்க git commit கமேண்ட் பயன்படுத்தலாம். git commit -a -m “first commit” எனும் கமேண்டிற்கு [master (root-commit) f872195] first commit 2 files changed, 4 insertions(+), 0 deletions(-) create mode 100644 functions.cpp create mode 100644 main.cpp என்று பதில் வரும். இப்பொழுது நமது கோப்புகள் main.cpp மற்றும் functions.cpp ஆகிய இரண்டும் பதிப்பு சேமிக்கப்பட்டுள்ளன. இந்த கமேண்டில் “git commit” எனும் பாகம் ஒரு கிட் கமேண்ட். “-a” எனும் parameter, புதிதாக இந்த commitடில் கோப்புகள் சேர்க்கப்படுகின்றன என சொல்கிறது.”-m” எனும் parameter அடுத்து வருவது இந்த commitடிற்கான மெசேஜ் என சொல்கிறது. “first commit” எனும் பாகம்தான் -m குறிபிட்ட அந்த commit message. இரண்டு parameterகளையும் இனைத்து -am எனவும் குறிப்பிடலாம். “first commit” என்பதற்கு பதில் என்ன மெசேஜ் வேன்டுமானாலும் கொடுக்கலாம். அது உங்களை பொருத்தது. இப்பொழுது git status -s கொடுத்தால் எந்த பதிலும் வராது. அப்படியெனில் நமது ரெப்போ சுத்தமாக உள்ளது, அதாவது எல்லா  கோப்புகளும் அதில் உள்ளவைகளும் பதிப்பு பெற்று சேமிக்கப்பட்டுள்ளனு என அர்த்தம். இப்பொழுது நமது main.cpp எனும் கோப்பில் சிறிது மாற்றம் செய்துவிட்டோம் என வைத்துக்கொள்வோம். அதில் உள்ள `#include ` என்பதை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக `#include ` என கொடுத்துவிட்டோம். அதாவது நமது ப்ரொஜெக்ட்டில் மாற்றங்கள் செய்துவிட்டோம். இப்பொழுது git status -s எனக்கொடுத்தால் M main.cpp எனக்காட்டும், இதற்கு main.cpp எனும் கோப்பு மாற்றம் அடைந்துள்ளது ஆனால் அந்த மாற்றம் இன்னும் பதிக்கப்படவில்லை அல்லது பதிப்பாக சேமிக்கப்படவில்லை என அர்த்தம். நாம் என்ன மாற்றம் செய்துள்ளோம்  என அறிய git diff கமேண்ட்டை பயன்படுத்தலாம். git diff எனக்கொடுத்தால் diff –git a/main.cpp b/main.cpp index 10b222c..0472ffd 100644 — a/main.cpp +++ b/main.cpp @@ -1,2 +1,2 @@ -#include +#include என சொல்கிறது. அதாவது a,b என இரண்டு கோப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை காண்பிக்கிறது. அதில் aவாக நாம் ஏற்க்கனவே பதித்து வைத்திருக்கும் main.cppயையும் bயாக இப்பொழுது நாம் மாற்றம் செய்து வைத்திருக்கும் main.cppயையும் கிட் எடுத்துக்கொண்டு அவைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை காண்பிக்கிறது. a கோப்பில் #include நீக்கபட்டதை கழித்தல் குறியுடனும், b கோப்பில் #include சேர்க்கப்பட்டதை கூட்டல் குறியுடனும் சொல்கிறது. இந்த மாற்றங்களை commit செய்துவிட்டு காத்திருங்கள், அடுத்த மாதம் எப்படி கிட் கொண்டு ப்ரொஜெக்டுகளை இணையத்தில் போட்டு வைப்பது, மற்றவருகளுடன் பகிர்ந்து கொள்வது, மற்றும் மற்றவருகளுடன் இனைந்து செயல்படுவது எனப்பார்போம். மேலும் அறிய http://gitref.org என்ற இணையதளம் செல்லலாம். கணியம் ஆசிரியருக்கான பின்குறிப்பு: முடியலடா சாமி.. என்ன சார் கோவம் எங்க மேல? 4 1/2 மணி நேரமா மூச்சு தெனற தெணற அடிச்சேன்.. உசுரு போய் உசுரு வந்திரிச்சு … உஸ் யப்பா…. [] அருண்மொழி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொலைஉணர்வு (Remote Sensing ) முதுகலை பயிலும் மாணவர். கட்டற்ற மென்பொருள் சமாச்சாரங்களில் ஆர்வம் கொண்டவர். மின்னஞ்சல் : aruntheguy@gmail.com வலை : http://www.arunmozhi.in/ 50 குரோமியம் & க்ரோம் குரோமியம் & க்ரோம் [] குரோமியம் browser என்பது Open source ஆகும். ஆனால் க்ரோம் என்பது குரோமியம் project எனும் opensource project -ஐ அடிப்படையாக கொண்டு google – ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு closed source, commercial product ஆகும். இரண்டும் 99.99% ஒரே மாதிரிதான் இருக்கும்.க்ரோம் நமது ubuntu repositeries -ல் கிடைக்காது. ஏனெனில் இது open souce கிடையாது. எனினும் இதை third party repositoriy -யில் கிடைக்க google வழி செய்கிறது.   குரோமியம் browser ubuntu developer -களால் maintain செய்யப்பட்டு stable release update – process களையும் செய்யப்படுகிறது. ஆனால் இது stable chrome browser -ஐ மாதிரியா வைத்து கொண்டு chrominum -ஐ மேம்படுத்தி release செய்கின்றனர். []     குரேமியத்தின் souce code -ஐ எடுத்துக் கொண்டு மேலும் சில் feature களை சேர்த்து google -ஆல் re-branding செய்யப்பட்டதே ‘க்ரோம்’ ஆகும். []   google செய்த மாற்றங்கள்: - flash player -ஐ integrated செய்தது. - Sand boxed pdf viewer built-in செய்தது. - Google name or logo - auto – update முறையை சேர்த்தது. - Usage statistics or trash reporting -ஐ google தெரிவிக்கும் வண்ணம் புதிய option -ஐ சேர்த்தது.   க்ரோமில் உள்ளது போல் features ubuntu குரோமியமில் வேண்டும் எனில் கீழ்கண்ட codecs ஐ install செய்ய வேண்டும். - chromium_codecs_ffmpeg - chromium_codecs_ffmpeg_extra - flashplugin_installer   இது உங்களது தேவைகளை பொறுத்தது. உங்களது கணிணியை google, break செய்யாது என்று நீங்கள் நம்பினால் க்ரோம் -ஐ use செய்யுங்கள் அல்லது ubuntu developer -களில் test செய்து வெளியிடப்படும் opensource chromium வேண்டும் எனில் chromium -ஐ உபயோகப்படுத்துங்கள். மேலும் இதில் third party source தேவை இருக்காது.   க்ரோமில் default-aga adobe flash player install செய்யப்பட்டு வரும். குரோமியத்தில் அப்படி install செய்து வெளியிட முடியாது. ஏனெனில் flash player open source கிடையாது. ஆனால் நாம் குரோமியத்தை install செய்துவிட்டு பின்னர் adobe flash player -ஐ சுலபமாக install செய்து கொள்ள முடியும். க்ரோமில் auto – update செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் ubuntu -ல் உள்ள auto – update வசதி மூலம் குரோமியமை update செய்து கொள்ள முடியும். கடைசியாக, க்ரோம் என்பது google -லின் ஒரு brand. குரோமியம் அப்படி இல்லை. Usage-traking மற்றும் சில Licence களுக்கு நீங்கள் அடிபணிந்தால் நீங்கள் க்ரோமை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். [:)] க்ரோமில் புதிதான ஏதேனும் சேர்க்க விரும்பினால் google அதை குரோமியத்தில சேர்த்து test செய்துவிட்டு பின் க்ரோம் stable release -ல் அதை சேர்த்து வெளியிடும். குரோமியம் என்பது 100% open source ஆகும். இதை யார் வேண்டுமானாலும் download செய்து கொள்ளலாம். (code, test, ideas, bugs போன்றவைக்கு யார் வேண்டுமானாலும் contribute செய்யலாம்)   த.சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். SlashProg எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார். மின்னஞ்சல் : jemenisuresh@gmail.com வலை : http://root2linux.com [] 51 Arduino – ஓர் அறிமுகம் Arduino – ஓர் அறிமுகம் [] வணக்கம். இந்த உலகம் நமக்கு மென்பொருள்களை திறவு மூலத்தில் (open source) வழங்குவது போல, வன்பொருள்களையும் திறமூலமாக வழங்குகிறது. அட ! அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா ! ஆம், முடியும் என்பதே உண்மை. நுண்கட்டுப்படுத்தி (Micro Controller) முதல் கணினி வரை, தானியங்கிக் காசாளம் (ATM) முதல் துணிதுவைக்கும் இயந்திரம் (Washing Machine) வரை வன்பொருள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சுற்றுப் பலகை (circuit board) தான் மற்ற எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. நமது கணினியில் உள்ள வன்பொருள்களுக்கெல்லாம் தாயாக இருப்பது தாய்ப்பலகை (Mother Board) தான். இந்த தாய்ப்பலகையில் எல்லா விதமான உள்ளீடு/வெளியீடு கருவிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமிக்ஞைகளை (சைகை; signal) ஓரிடத்தலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தவும் அவற்றை இருமமாக மாற்றவும் தாய்ப்பலகையில் இணைக்கப்பட்டுள்ள சின்ன சின்ன சில்லுகளும் (chips) கட்டுப்படுத்திகளுமே (controller) முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நுண்கட்டுப்படுத்திப் பலகைகள் (micro controller board) நமக்குத் திறமூலமாகக் கிடைத்தால் நாம் என்னவெல்லாம் செய்யலாம். சாதாரண மின்தூக்கி முதல் பறக்கும் ரோபோ வரை உருவாக்க முடியும் அல்லவா! அப்படிப்பட்ட திறமூல வன்பொருள்தான் அர்டுயினோபலகை (Arduino Board) ஆகும். சரி! நமக்கு திறமூல வன்பொருள் கிடைத்துவிட்டது. நாம் எப்படி மற்ற கட்டுப்படுத்திகள் (controller), உணரிகள் (sensors), இயக்கிகளுடன் (motors) இணைத்து ஓர் இயந்திரத்தை உருவாக்குவது எப்படி? அதற்கு கட்டளைகள் (Instructions) தேவையல்லவா! நாம் அர்டுயினோவுக்கு எப்படி கட்டளை கொடுப்பது ? இதற்கு அர்டுயினோவே பதிலைத் தருகிறது. அர்டுயினோவுக்கு குழு நமக்கு arduino IDEஎன்ற மென்பொருளைத் தருகிறது. இந்த மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து நமது கணிணியில் நிறுவி, அதில் நிரல்கள் எழுதலாம். அப்படி எழுதிய கட்டளைகளை arduino பலகைக்குள் செலுத்தி அதை தனித்தே இயங்கும் ரோபோவாக மாற்ற இயலும். [] சரி, அறிமுகம் போதும் ! கொஞ்சம் உட்சென்று arduino-வை எப்படிப் பயன்படுத்துவது என்று விரிவாகப் பார்போமா?!! “Hello World” நிரல் Arduino நாம் எந்த ஒரு நிரல் மொழி கற்றுக்கொள்வதானாலும் முதலில் நாம் கற்பது ‘Hello World’ ஐக் கணினி திரையில் எப்படி print செய்வது என்பது தான். அது போல arduino board (hardware) ல் எப்படி hello world என்று அச்சிடுவது? இது அப்படி இல்லை. இதைப் பொறுத்தவரை ஒளி உமிழ் இருமுனையத்தை (LED) ஒளிர வைப்பதே arduino வின் hello world ஆகும். என்ன, arduino வின் hello world கற்றுக் கொள்ள நீங்கள் தயாரா ? தேவையான வன்பொருள்கள் 1. Arduino Board 2. LED தேவையான மென்பொருள்கள் - Arduino Software [] நீங்கள் எந்த விதமான இயங்கு தளம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எல்லா வகையான (Linux, Mac, Windows) OS க்கும், தனித்தனியான arduino மென்பொருள்களை http://arduino.cc/ என்ற தளத்திலிருந்துப் பதிவிறக்கம் செய்து, நிறுவிக் கொள்ளலாம். இதோ கீழே உள்ள படி தான் arduino software இருக்கும். உபுண்டுவில் நிறுவ, $ sudo apt-get install arduino செய்முறை : Arduino board ல் 13 வது pin connector ல் 220 ஓம் (ohm) மின்தடையை (resister) இணைக்கவும். பிறகு LED யின் positive leg (கொஞ்சம் நீண்டு இருக்கும் கம்பி) ஐ resister உடன் இணைக்கவும். LED யின் negative leg (சிறிய கம்பி) ஐ arduino board யின் ground (GND) connector உடன் இணைக்கவும். இப்போது இந்த arduino board kit ஐ கணிணியுடன் இணைக்கவும். எப்படி ? Serial port மூலமாகவோ (அ) USB port மூலமாகவோ இணைக்கலாம். [குறிப்பு : arduino board வாங்கும் போது, USB port இருக்குமாறு பார்த்து வாங்கினால், பெருமளவு உதவியாய் இருக்கும்.] இப்போது கணிணியில் arduino software ஐ இயக்கி, அதில் பின்வரும் program ஐ type செய்யவும். // LED Blink Program Begins [] [] /* Blink Turns on an LED on for one second, then off for one second, repeatedly. */ void setup() { // initialize the digital pin as an output. // Pin 13 has an LED connected on most Arduino boards: pinMode(13, OUTPUT); } void loop() { digitalWrite(13, HIGH);   // set the LED on delay(1000);               // wait for a second digitalWrite(13, LOW);   // set the LED off delay(1000);               // wait for a second } // LED Blink Program Ends இந்த நிரலை பார்க்கும் போதே தெரிகிறது, இது C program மொழியில் எழுதப்பட்டது. Code விளக்கம் : pinMode(13, OUTPUT); என்ற கட்டளையில் 13 வது pin ஐ output pin ஆகinitiate செய்கிறோம். digitalWrite(13, HIGH); என்ற கட்டளையில் 5 volt ஐ 13 வது pin க்கு அனுப்புகிறது. இதனால் LED யின் முனைகளுக்கு இடையே voltage difference உண்டாவதால் LED ஆனது ஒளிர்கிறது. digitalWrite(13, LOW); என்ற கட்டளையில் 0 volt ஐ 13 வது pin க்கு அனுப்பவதால், LED ஒளிர்வது நிறத்தப்படுகிறது. நம்முடைய கண்களால் இதன் அதிவேகத்தை (LED On/Off) உணரமுடியாது. அதனால், delay() கட்டளையை பயன்படுத்து கிறோம். இங்கு 1000 millisecond (ஒரு வினாடி) இடைவெளியை கொடுத்துள்ளோம். void setup() function ல் initialization கட்டளைகளையும், void loop() function ல் தொடர்ந்து நடக்க வேண்டிய செயலுக்கான கட்டளைகளையும் தர வேண்டும். இப்போது இந்த code ஐ arduino software ல் உள்ள verify button ஐ இயக்கி compile செய்யலாம். ஏதாவது error இருந்தால், அங்குள்ளwindow வில் காட்டப்படும். Error எதும் இல்லாவிட்டால், upload button ஐ இயக்கி byte களாக மாற்றப்பட்ட கட்டளைகள் arduino வில் உள்ளEEPROM memory chip ல் சேமிக்கப்படுகிறது. Arduino Kit ல் power supply இணைக்கப்பட்டிருத்தல் அவசியம். (USB Port உபயோகித்தால், power supply அவசியமில்லாதது.) கட்டளைகளை upload செய்த பிறகு, arduino board ல் உள்ள RESET button ஐ அழுத்தினால், LED விட்டு விட்டு ஒளிர்வதை பார்க்களாம். இப்போது நீங்கள் கணிணியுடன் தொடர்புள்ள serial port / usb port இணைப்பை துண்டித்து விடலாம். Arduino kit தனித்தே இயங்குவதை காணலாம் (power supply அவசியம்). எவ்வளவு சுலபமாக இருக்கிறது, arduino ஐ உபயோகிப்பது ! ! ! Multi Programming Language Support : Arduino வில் C, C++, Java, Python, Ruby ஆகிய உயர்மட்ட program மொழிகளின் மூலமும் உங்களது கட்டளைகளை எழுதலாம். இதில் Ruby Arduino Development (RAD) ஐ உபயோகிப்பது மிகவும் சுலபம். Project Ideas : சரி, நாம் என்னவெல்லாம் Projects Arduino Kit மூலம் செய்யலாம் ? - Stepper motors ஐ Wifi/Bluetooth/IR controller board உடன் இணைத்து, Remote Control Car/Helicopter/Boat Robot ஐ உருவாக்க முடியும். - Heat Sensors உடன் இணைத்து, analog வெப்பத்தை digital வெப்ப குறியீட்டாக (Celsius) மாற்ற முடியும். - IR sensors, Speakers உடன் இணைத்து வீட்டின் கதவிற்கு மேலும் பாதுகாப்பு தரலாம். - GPS Receiver Device உடன் இணைத்து நாம் இருக்கும் இடத்தின் latitude, longitude ஐ digital ஆக பெற முடியும். - Ethernet cable உடன் இணைத்து data ஐ எங்கோ இருக்கும் server க்கு அனுப்பலாம். உருப்படியாக/ படிப்படியாக Arduino வில் projects செய்ய வேண்டுமானால் இந்த லிங்க்கிற்கு http://arduino.cc/playground/Projects/Ideas செல்லவும். எங்கே வாங்குவது ? நமது இந்தியாவில் http://www.bhashatech.com/ website ல் order கொடுத்து பெற்றக் கொள்ளலாம். அல்லது நீங்களே arduino board ஐ உருவாக்கலாம். அதற்கான Circuit Diagram ஐ http://arduino.cc/ கண்டறியலாம். மடல் குழு : Arduino developer mailing list, Arduino users mailing list என்று தனித்தனியாக உள்ளது. நீங்கள் அதில் இணைந்து உங்கள் சந்தேகங்களை கேட்களாம். http://arduino.cc/mailman/listinfo/developers_arduino.cc த . அருளாளன் [] நான் ஐ.ஐ.டி. டெல்லியில் Python Programmer ஆக பணியாற்றி வருகிறேன். வலை பதிவு : http://tuxcoder.wordpress.com மின்னஞ்சல் : arulalant@gmail.com 52 CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள் CAD  அல்லது Computer Aided Drawing இப்போது வடிவமைப்பு மாடலிங்   அல்லது வரைகலை கட்டடக்கலை[] சித்தரிப்புகள் மாதிரிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவித தொழில்துறையிலும் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது. இங்கே Ubuntu Linux -ல் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு சில  CAD பயன்பாடுகள் பட்டியல் உள்ளது. வாகன உற்பத்தி, உள்நாட்டு கட்டுமான மாடலிங் மற்றும் மின்னணு சுற்று உற்பத்தி தொழில்கள் வரையிலும் இதன் பயன்பாடு பரவியுள்ளது. பட்டியலில் கிட்டத்தட்ட முடிவில்லாமல் உள்ளது.இன்று கேட் மென்பொருள் தொகுப்புகளை கிட்டத்தட்ட எந்த இயக்கத்தளத்திற்கும் மற்றும் லினக்ஸ் distros -க்கும் கிடைக்கின்றதுஇதில் எந்த விதிவிலக்கும் இல்லை. லினக்ஸ் இயங்குதளத்திற்குப் பயன்படக்கூடிய பல இலவச மற்றும் பிரீமியம் கேட் பயன்பாடுகள் உள்ளன. எனவே நாம் உபுண்டு போன்ற லினக்ஸ் அடிப்படையிலான இயக்க கருவிகளில் பயன்படுத்தக்கூடிய சிறந்த மற்றும் மிகவும் திறமையான கேட் பயன்பாடுகளைப் பார்க்க கொஞ்சம் நேரம் கொடுக்கலாம். கணினி ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானம் போன்ற பல்வேறு கோளங்கள் வடிவமைப்பு மற்றும் மாடலிங் துறையில் நுழைந்த தினத்திலிருந்து, உண்மையான பொருளை ஒரு முன்னுரையில் வைக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் உருவாக்கும் கருத்துக்கள் மற்றும் மாதிரிகள் வழியில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பேனா மற்றும் காகிதம் பயன்படுத்தி செய்ய முடியாத துல்லியம் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு ஒழுங்கமைவுக்கு உதவும் வரைகலையானது கட்டடக்கலை மற்றும் மற்ற வடிவங்களை உருவாக்க உதவின. இது மனிதனுக்கு துரோகம் செய்யும் முயற்சி என சொல்லக்கூடாது. இதனால் நேரம் மற்றும் ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். கேட் பயன்பாடுகள் வடிவமைப்பு செயல்முறை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன மேலும் கிட்டத்தட்ட அனைத்து நவீன கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு நடைமுறைகள் கேட் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றன. லினக்ஸ் உடன் கேட் ஆதரவு உள்ள ஏராளமான பயன்பாடுகள் கிடைக்கின்றன. அங்கு சில distros  போன்ற[] இலவச மென்பொருள்கள் உள்ளன .  அதேசமயம் நீங்கள் பிரீமியம் பொதிகளையும் பெறலாம்.  Linux -ன் மேல், கேட் பயன்பாடுகளின் மேல் இந்த பரந்த உலகின் மூலைகள் முழுவதும் லினக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. ப்ரிஸ்கேட் (Bricscad:)   Bricscad ஒரு வணிக வரைகலை தொகுப்பு.  இது ஆட்டோகேடின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய செயல்பாடுகளை வழங்குகிறது மற்றும் லினக்ஸ் தளங்களில் விரிவான ஆதரவும் கொண்டுள்ளது.  இது Bricsys முலம் வளர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது மற்றும் அதன் வேர்கள் IntelliCAD இயந்திரத்திலிருந்து கட்டப்பட்டது.     க்யூகேட் (Qcad:) இது ஒரு 2D வடிவமைப்பு, மாடலிங் மற்றும் வரைவு மென்பொருள் தொகுப்பு கொண்ட  கட்டற்ற மற்றும்[] திறந்த மூலம் உள்ள மென்பொருள். எனினும் இலவச பதிப்பில் சில வரம்புகள் உள்ளன.  ஆனால் முழு Qcad நிபுணத்துவ பதிப்பு ஒரு வரையறுக்கப்பட்ட இலவச சோதனை காலத்துடன்  ஒரு மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த மென்பொருள் லினக்ஸ் கருவிகளை ஆதரிக்கிறது மற்றும் 2D வரைதல் மற்றும் வரைகலை பயன்பாடுகளில் இருக்கிறது.               ப்ரீகேட் (FreeCAD) FreeCAD, இது ஒரு சிறந்த திறந்த மூல 3D வரைகலை எடிட்டர். இது பைத்தான் மொழியை முதன்மையாக கொண்டு[] எழுதப்பட்டது மேலும் OpenCascade மற்றும் (QT)க்யூடி அடிப்படையாக கொண்டது. இந்த மென்பொருள் சக்திவாய்ந்தது மேலும் மேக்ரோ பதிவு, workbenches, சர்வர் முறைமை மற்றும் dynamic -காக uploadசெய்யக்கூடிய application extention போன்ற அம்சங்கள் நிறைய கொண்டுள்ளன. இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளங்களில் ஒத்திசைவு பதிப்புகள் கொண்டிருக்கிறது.           வேரிகேட்(VariCAD) இது ஒரு சக்திவாய்ந்த 2D மற்றும் 3D CAD மென்பொருள் அடிப்படையில் இது இயந்திர பொறியியல்[] வடிவமைப்பு மற்றும் மாடலிங்க்கு ஆதரவு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது முக்கியமான அளவுருக்களுடன் வடிவியல் தடைகளுக்கு தனிப்பட்ட ஆதரவை வழங்குகிறது. மேலும் குண்டுகள், குழாய்கள், உலோக வளையாத தாள், சோதனைகளில் ஏற்படும் விபத்துகள மற்றும் சபை ஆதரவு mechanical கருவிகளுக்கு வழங்குகிறது. மேலும் ஒரு rich symbol library -ஐ கொண்டுள்ளது. இது பில்கள் கணக்கீடு, பொருள் செலவுகள் போன்றவற்றைக் கணக்கிடுதல் ஆகிய செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்கிறது. இது ஒரு பிரீமியம் பதிப்பு. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் தளங்களிலும் கிடைக்கிறன.       திறந்த கேஸ்கேட் தொழில்நுட்பம் (Open CASCADE Technology) இது ஒரு 3D மேற்பரப்பு மற்றும் திட மாடலிங் மென்பொருள் தொகுப்பு.  இது விரிவான data exchange மற்றும்[] விரைவான பயன்பாட்டு வளர்ச்சி திறன்களை க் கொண்டுள்ளது.  இது முற்றிலும் இலவச மற்றும் லினக்ஸ் தளங்களில் ஆதரவு கொண்ட ஒரு திறந்த மூல மென்பொருள் ஆகும்.                 பிரியா, காஞ்சிபுரம், பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிக்கிறார்.[] மின்னஞ்சல் : priyacst@gmail.com வலை :  http://sweettux.wordpress.com 53 Stellarium – வானவியல் கற்போம் நம் பைந்தமிழ் அறிஞர்கள், கண்களை மூடி தியானத்தில் மூழ்கி வானில் நடக்கும் விசித்திரங்களை அறிந்து, தெரிந்து, தெளிந்து நமக்கு பாடல் வழியே கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அறிவியல் வளர்ந்த காலங்களில் பெரிய பெரிய டெலிஸ்கோப்பின் உதவி கொண்டு வானியல் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினர். சிறுவயதில் இதையெல்லாம் நாம் புத்தகம்/தொலைகாட்சி மூலம் பார்க்கும் போது நாம் பெரியவராய் ஆனவுடன் நமது வீட்டு மொட்டை மாடியில் பெரிய டெலஸ்கோப் வாங்கி வைத்து தினமும் வானில் நடக்கும் அதிசயங்களை காண வேண்டும் என்ற அவா நம் எல்லோருக்கும் இருந்திருக்கும். ஆனால் வளர வளர குடும்பம், வேலை, குழந்தைகள் போன்ற சுகமான சுமைகளில் சிக்கி,  நமது சிறு வயது ஆசைகளை பெருவயதில அடிக்கடி அசைபோடுவதோடு நின்றுவிடுகிறோம். நாம் வானத்தை எப்போது பார்க்கிறோம்?  அவ்வப்போது ஏற்படும் சூரிய/சந்திர கிரகணங்களின் போதுதான் நமக்கு வானம் என்று ஒன்று உள்ளதே நினைவுக்கு வருகிறது. அல்லது facebook -ல் நமது photographer நண்பர்கள் சூரியன் மறைந்த வானம், நிலா ஒளி வெளிச்சத்தில் வானம், நட்சத்திர கூட்டம் போன்றவற்றை photo எடுத்து போடும் போது அதற்கு like கொடுக்கும் போதுதான் நினைவுக்கு வருகிறது. இந்த அவசர இயந்திர உலகில், இயற்கை அன்னையின் படைப்புகளை நாம் மறக்கப்பட்டுவிட்டோம். [] [] சிறு வயதில் நட்சத்திரம், பெளர்ணமி நிலா போன்றவற்றைப் பார்த்து விட்டு ஏற்படும் மகிழ்ச்சி வளர வளர அட! இது நாம் தினமும் பார்பது தானே என்று அலட்சியம் ஏற்படுகிறது. கண்சிமிட்டும் விண்மீன்களை நாம் பார்க்க மறந்தாலும் அவை நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்! எத்தனை பேர் நம்மில் தினமும், இல்லை அடிக்கடியாவது வானத்தை நிமிர்ந்து பார்க்கிறோம்!நாம் கவிஞராகவோ அல்லது வானியல் துறை அறிஞராகவோ இருந்தால் தான் தினமும் வானத்தைப் பார்ப்போம். கவிஞராக இருந்தால் கவிதை வரவில்லை எனில் வானத்தைப் பார்த்து கவிதை எழுதிவார். [] ஏனெனில் வானம், நிலா மற்றும் பெண் இல்லையென்றால் கவிதை இல்லை. இந்த வானம் இல்லையென்றால் எவ்வாறு வானியல் துறை அறிஞர் ஆவது?  நாம் தான் கணிப்பொறி துறையில் கால்தடம் பதித்து விட்டோமே!  நம்மை போன்ற கணிப்பொறி வல்லுனர்கள், இரவில் நமது office-ன் மேற்கூரையைக் கூட பார்க்க நேரம் இல்லாமல் கணிப்பொறியில்/தொலைபேசியில் தலையை விட்டுக்கொண்டு வேலை செய்யும் ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டது என்று என்னைப்போல புலம்புபவரா நீங்கள்? [] இந்த நிலை தற்போது இருக்கும் இளம் சந்ததியினருக்கு மீண்டும் நிகழாமல் இருக்க பல வழிகள் வந்து விட்டது. இதில் ஒன்று தான் கணிப்பொறியியல் புரட்சி. எனவே தற்போது வெறும் computer மட்டும் இருந்தால் போதும், வானில் என்ன நடக்கிறது, எப்படி உள்ளது என்பதை நாமும் பாமரனும் தெரிந்து கொள்ளலாம். நமக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘stellarium‘ எனும் மென்பொருள். இது ஒரு free & open source software ஆகும்.   [] இதன் மூலம் நாம் கிட்டதட்ட 600,000 நட்சத்திரங்களின் கட்டமைப்பு/ கூட்டமைப்புகளைப் பார்க்க முடியும்.  நாம் stellarium -த்தில் மூழ்கி விட்டோம் எனில் நாம் இதில உள்ள சிறப்பான zoom வசதி மூலம் நமது உலகை மறந்து விட்டு, பால்வழி அண்டத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த பிரபஞ்சமே நமது வீடு என்ற கொள்கையில் நாமும் ஒத்து போய்விடுவோம்.   வலை தளம் : http://www.stellarium.org ubuntu ல் Install செய்ய: sudo apt-get install stellarium இதை நமது GNU/LINUX OS -ல் install செய்து, பிரபஞ்சத்தில் மூழ்கி எழுந்திடுவோம்!  மீண்டும் அடுத்த மாதம் வேறு ஒரு சிறப்பான application உடன் உங்களை சந்திக்கிறேன். [] த.சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். SlashProg எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார்.   மின்னஞ்சல் : jemenisuresh@gmail.com வலை : http://root2linux.com 54 தட்டச்சுக்கான கட்டற்ற மென்பொருள் நாம் முன்னாட்களில் தட்டச்சுக் கலையை கற்க, தட்டச்சு பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் சேர்ந்து பயில வேண்டும். ஆனால் தற்போழுதோ ஒரு கணினியும் தட்டசுக்கான மென்பொருளும் இருந்தாலே போதும். தட்டச்சு கற்க பல மென்பொருட்கள் இருகின்றன. அவற்றுள் ஒன்றான கட்டற்ற மென்பொருளான Klavaro  பற்றி இக்கட்டுரையில் காண்போம்.   முதலில் Klavaro   நிறுவுதல் உபுண்டு சாப்ட்வேர் சென்டரை (Ubuntu Software Center)  திறந்து கொள்ளுங்கள் . [] Klavaro-வின் தோற்றம் . பிறகு மேல இருக்கும் தேடுபொறியில் klavaro  என்று தட்டச்சு  செய்து சொடுக்குங்கள். . வந்திருக்கும் result இருந்து Klavaro-இ தேர்வு செயுங்கள். பிறகு வரும் window-வில்  Install now பொத்தனை சொடுக்குங்கள். root கடவுச்சொலை உள்ளிட்டு தொடருங்கள் .   இணைய அமைப்பின் வேகத்திற்கு ஏற்றவாறு சில நேரங்களில் install  ஆகிவிடும்.     Klavaro  பயன்பாடு   0-Introduction நிலையில் எந்தந்த key-களுக்கு எந்த விரலை பயன்படுத்த வேண்டும் என்பனவற்றை கற்கலாம். 1- Basic Course யில் குறிப்பிட்ட கீகளையும் அதன் அருகில் உள்ள கீகளையும் கற்கலாம். 2-Adaptibility நிலையில் அனைத்து கீகளின் இடங்களையும் (பார்க்காமல்) அறிந்துகொள்ளலாம். 3-Speed – இதில் வேகமாக தட்டச்சு செய்வதற்கான பயிற்சி கொடுக்கப்படும். 4-Fluidity இது தட்டச்சில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கான நிலையாகும்.   பிற வசதிகள்: நாம் பயிற்சி செய்யும் பொழுது நம்முடைய progress-ஐ தெரிந்துகொள்ளலாம். இதன் நினைவக அளவு ( ~ 2.5 MB ) மிகவும் குறைவானதே.   பிற கட்டற்ற தட்டச்சு மென்பொருட்கள் : . K Touch . Tipptrainer Typing Tutor . Tux Typing   — [] ராஜேஷ் குமார் , கணிப்பொறி பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர். University College Of Engineering, விழுப்புரம் .   மின்னஞ்சல்  :  gprkumar@gmail.com 55 நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 5 கட்டற்ற மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நம் மக்கள் மென்பொருட்களை உடைத்து (crack) செய்து பயன்படுத்துவதால் வரும் கேடுகளைப் பற்றித் தெளிவு பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். ஆகையால் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கட்டற்ற மென்பொருட்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.   [] இந்த பட்டியலில் நாம் ஏற்கனவே அறிந்த விஎல்சி, ஃபயர்ஃபாக்ஸ் போன்ற மென்பொருட்கள் சேர்க்கப்படவில்லை.   1 . பப்பி லினக்ஸ் ( Puppy Linux) இது மிகவும் பழைய கணினிகளில் உள்ள தகவல்களை காப்புப்படி (backup) செய்ய உதவும் நிகழ் இயங்குதளம் (live OS). இதனை இயக்க வெறும் 128 MB நேரடி அணுகல் நினைவகக் (RAM) கொள்ளளவு இருந்தாலே போதும். அவசரமாக இணையத்தை அணுக வேண்டும் என்றால் பப்பி லினக்சைப் பயன்படுத்தி வெறும் ஐந்தே நிமிடங்களில் அணுகலாம். அதே போன்று விண்டோஸ்  இயங்குதளச் (Windows OS) செயல்பாட்டை இழந்து விட்டால் பப்பி லினக்சை நிறுவித் தகவல்களை எளிதாகத் திரும்பப் பெற்று விடலாம். விண்டோஸ் இயங்குதளத்திற்குக் கடவுச்சொல் கொடுத்திருந்தாலும்  அதில் உள்ள தகவல்களை இது எளிதாக  அணுகி மாற்றம் செய்து விடும். பதிவிறக்க இங்கே செல்லவும் – http://puppylinux.org/main/Download%20Latest%20Release.htm                                                             2 . டாரிக் ‘ ஸ் பூட் அண்ட் நியூக் ( Darik’s Boot and Nuke)                                                   இந்த மென்பொருள் ஒரு கணினி வன்வட்டை (Hard disc) முழுவதுமாக அழித்து விடும். இந்த மென்பொருளை நாம் தொடக்குவட்டாகப் (BOOT CD ) பயன்படுத்த வேண்டும். [] வன்வட்டை உடனடியாக அழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த DBAN பெரும் உதவியாக இருக்கும். தகவல்களை அழித்தோம் என்றால் அதனை சில மீட்டமை மென்பொருட்களை (recovery software) பயன்படுத்தித் திரும்பப் பெற்று விடலாம். ஆனால், DBAN தேவையற்ற தொடர்பில்லாத புது தகவல்களை வன்வட்டில் பதிந்து விடும். இதன் மூலம் பழைய தகவல்கள் முற்றிலுமாக அழிந்து விடுகின்றன.   கீழே இருக்கும்  இணைப்பில் உள்ள கோப்பினைப் பதிவிறக்கம் செய்து, ஒரு குறுந்தகடில் பதிந்து கொண்டு, தொடக்கு வட்டாக (BOOT CD ) இயக்கவும். பதிவிறக்க இங்கே செல்லவும் - http://sourceforge.net/projects/dban/files/dban/dban-2.2.6/dban-2.2.6_i586.iso/download   3 . ட்ரூக்ரிப்ட் ( TrueCrypt)   ஒரு கோப்பினை மறைக்குறியீடாக்கம் (encrypt) செய்ய உதவும் மென்பொருள். ஒரு தனி கோப்பாக இருந்தாலும் முழு உறையாக (folder) இருந்தாலும் இம்மென்பொருள் சிறப்பாக செயல்படும். ஒரு கோப்பினை மறைக்குறியீடாக்கம் செய்தபின் அதனை மறுபடியும் பார்க்க இதே மென்பொருளை பயன்படுத்தலாம். அதே கோப்பை மறைவிலக்கம் (decrypt) செய்ய ஒரு கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும்.   இந்த மென்பொருளை பேனா இயக்கியிலோ புற வன்வட்டிலோ (pen-drive or external hard disc) உள்ள கோப்புகளை மறைக்குறியீடாக்கம் செய்யவும் பயன்படுத்தலாம்.   பதிவிறக்க இங்கே செல்லவும்  – http://www.truecrypt.org/downloads   []     4 . குனோம் – டு ( Gnome – Do)   உபுண்டு  பயனர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய ஒரு மென்பொருள். பலர் விண்டோசைப் போன்று உபுண்டு அழகானது இல்லை என்று வதந்தியைப் பரப்பிக் கொண்டு இருகின்றனர். ஆனால், மெய்யாகவே மேக்கிற்கு (Mac) அடுத்து அழகான இயங்குதளம் உபுண்டு தான். [] Gnome -Do வைப் போன்ற சரியான மென்பொருட்களை பயன்படுத்தினால் உபுண்டுவின் அழகு மட்டுமன்றிப் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்து விடும். Gnome -Do வில் ஏகப்பட்ட  தேர்வுகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த யூடியூப் காணொளியைப் பார்க்கவும் – http://www.youtube.com/watch?v=fI4d35MbpA0   பதிவிறக்க இங்கே செல்லவும் – http://do.davebsd.com/   5 . பிளீச்பிட் ( Bleachbit)   []            விண்டோசில் எவ்வாறு தற்காலிகக் கோப்புகள் (temporary files) சேர்ந்து கொண்டு  கணினியின் வேகத்தைக் குறைகின்றனவோ அதே போன்ற நிகழ்வு உபுண்டு இன்ன பிற லினக்ஸ் வழங்கல்களிலும் நடக்கும். விண்டோசில் இந்த தொல்லையை தீர்க்க CCleaner போன்ற மென்பொருட்கள் உள்ளன. அதற்கான கட்டற்ற வகை பதிலீடு தான் இந்த Bleachbit . உலவிகள், மென்பொருட்கள், நிறுவிகள் (installers) போன்றவை சேமிக்கும் அனைத்துத் தற்காலிகக் கோப்புகளையும் இம்மென்பொருள் உருத்தெரியாமல் அழித்துவிடும். பதிவிறக்க இங்கே செல்லவும் – http://bleachbit.sourceforge.net/       [] ஸ்ரீராம் இளங்கோ   காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன். எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr மின்னஞ்சல்  : sriram.04144@gmail.com 56 பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் : வரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும். தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த மென்பொருள் சுமார் 3GB அளவு கொண்டது. மேலும் அதனை பயன்படுத்த நீங்கள் Rs . 4000 வரை செலவு செய்ய நேரிடலாம். ஆனால் அதே காரியங்களை செய்யகூடிய பல FOSS மென்பொருட்கள் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது. இதோ, பொறியியல் மாணவர்களுக்கு உதவும் சில FOSS மென்பொருட்களை பற்றிய சிறு குறிப்புகள்.   1  . GNU Octave : நீங்கள் MATLAB இல் தொடங்கிய ஆவணங்களையும் இந்த GNU Octave இல் காண முடியும். MATLAB இல் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. MATLAB போலவே வரைபடங்களை இந்த மென்பொருளில் முப்பரிமாணத்தில் காணலாம். இந்த மென்பொருள் MATLAB ஐ காட்டிலும் சுமார் மூன்று மடங்கு கம்மியான இடத்தை தான் அடைக்கும் (500 MB மட்டுமே).   இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் -[]   http://www.gnu.org/software/octave/download.html       GNU octave இன் முப்பரிமான output   2  . OpenSCAD : இன்றைய தினத்தில் CAD பயன்படுத்தாத பொறியியல் மாணவர்களை பார்ப்பது அரிது. இயந்திர பொறியாளர்கள் மட்டுமின்றி மின்னியல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர்களுக்கும் CAD ஒரு இன்றியமையாத மென்பொருளாக மாறி விட்டது. OpenSCAD என்பது CAD வடிவமைப்பை துல்லியமாக, முப்பரிமாணத்தில் செய்ய கூடிய ஒரு மென்பொருள். நீங்கள் அளிக்கும் திட்ட செயலாக்கத்தை (script codes )  ஐ வைத்து OpenSCAD உங்களுக்கு முப்பரிமான வடிவமைப்பை தரும். இது Windows , Linux மற்றும் Mac ஆகிய அணைத்து இயக்கு தளங்களிலும் செயல்படும். []   இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் – http://www.openscad.org/     OpenSCAD இன் இயந்திர வடிவமைப்பு 3 . Genius Maths Tool – கடினமான, நெடிய கணக்குகளை தீர்க்க நம்முடிய scientific calculator களே தடுமாறும். அந்த நேரத்தில் நமக்கு உதவியாக இருப்பது தான் இந்த Genius Maths Tool . இது “உபுண்டு (ubuntu )” இயக்கு தளத்தின் “software center ” இல் கிடைக்கும்.   கடினமான integration , differentiation மட்டுமின்றி முப்பரிமான படங்கள் மற்றும் statistics ஆகியவற்றை இயக்கம் திறமை கூட இந்த மென்பொருளுக்கு உண்டு. []  இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லவும் – http://www.jirka.org/genius.html           Genis Math Tool இன் ஒரு function   ஸ்ரீராம் இளங்கோ   காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன். எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr                                          [] மின்னஞ்சல்  : sriram.04144@gmail.com           57 MP4TOOLS – மல்டி மீடியா மாற்றி இது  AAC audio மற்றும் AVI/MPG video-வை PSP, iPod மற்றும் Symbian-இவைகளில் பயன்படுத்தப்படும் format-க்கு மாற்றும் திறமை கொண்டுள்ளது.   இதனை நிறுவ உங்கள் Ubuntu Menu-வில் Applications -> Ubuntu Software Centre-ஐ தேர்வு செய்யவும்.   இதில் Edit -> Software Sources -> Other softwares-க்கு செல்லவும்.   கீழ்க்கண்ட இரண்டு Repository-களை சேர்க்கவும்.   “deb http://ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main” “deb-src http://ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main”   இப்பொழுது கீழ்க்கண்ட கட்டளை(command)யைப் பயன்படுத்தி apt-get list-ஐ reload செய்யவும். $ sudo apt-get update இப்பொழுது நீங்கள் MP4TOOL-ஐ நிறுவ தயாராகிவிட்டீர்கள்.   பின்வரும் command-ஐ பயன்படுத்தி MP4TOOL-ஐ install செய்யவும். $ sudo apt-get install mp4tools நமக்கு தேவையான கட்டளைகளின் பட்டியலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   mk3gp   :   இந்த கட்டளை சாதாரண 3gp file-ஆக மாற்ற பயன்படுகிறது.   mks60   :   இந்த கட்டளை High Quality 3gp file-ஆக மாற்ற பயன்படுகிறது. ஆனால் இது சில phone-களில் play ஆகாது.   mkamr   :   இந்த கட்டளை சாதாரண AMR file-ஆக மாற்ற பயன்படுகிறது.   mkmp4   :   இந்த கட்டளை சாதாரண H.264 MP4 file-ஆக மாற்ற பயன்படுகிறது.   mkipod  :   இந்த கட்டளை Apple iPod-க்கு தேவையானப்படி ஒரு படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.   mkpsp   :   இந்த கட்டளை Sony PSP-க்கு தேவையானப்படி ஒரு படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.   dvd23gp :   இந்த கட்டளை DVD-ஐ சாதாரண 3gp file-க்கு மாற்றுகிறது.   dvd2s60 :   இந்த கட்டளை DVD-ஐ High Quality 3gp file-க்கு மாற்றுகிறது.   dvd2psp :   இந்த கட்டளை DVD-ஐ Sony PSP-க்கு தேவையானப்படி படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.   dvd2ipod    :   இந்த கட்டளை DVD-ஐ iPod-க்கு தேவையானப்படி படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.   எந்த ஒரு video-வையும் உங்களுக்கு தேவையான format-ல் மாற்றுவதற்க்கு file path-னை மேலே பட்டியலிடப்பட்ட கட்டளைகளுடன் சேர்த்து  பயன்படுத்திக்கொள்ளவும். உதாரணத்திற்கு பின்வரும் command-ஐ கவனிக்கவும்.   “mk3gp path/to/videofile.avi”   இது Videofile.avi என்ற file-ஐ 3GP file-ஆக மாற்றியிருக்கும். இப்பொழுது இந்த 3GP file-ஆனது பல்வேறு Mobile-களில் பார்ப்பதற்கு தயாராக உள்ளது. [] பிரவீன் குமார் . காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்.   மின்னஞ்சல்  : praveen9482@gmail.com வலை          : http://praveenlearner.wordpress.com 58 கார் ஓட்டலாம் வாங்க Torcs ஒரு பரபரப்பான பந்தைய விளையாட்டை தேடுகிறீர்களா? இதோ TORCS (The Open Racing Car Simulator). இது 1997ஆம் ஆண்டின் 2டி பந்தைய விளையாட்டான soapbox derby simulator என்பதிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த 3D பந்தைய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இதில் பல championship போட்டிகள், நூற்றுக்கணக்கான ஓடுகளங்கள் (Tracks), மற்றும் ஆயிரக்கணக்கில் தரவிறக்ககூடிய பிற Tracks, மற்றும் கார்கள் போன்ற பல  வசதிகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் பிறரோடு விளையாடக்கூடிய இரு championship போட்டிகளும் உள்ளன. அதில் ஒன்று TORCS Driving Championship, மற்றொன்று The TORCS Racing Board.   இதனை Ubuntu-வில் நிறுவுவதற்கு உங்களுக்கு விருப்பமான பேக்கேஜ் மேனேஜரில் (Ubunut Software Center, apt, aptitude, synaptic, adept, etc) ‘torcs’ என்பதை தேடி நிறுவவும் அல்லது கீழே உள்ளதை நகல் செய்து Terminal-ல் போடவும்.   $ sudo apt-get install torcs   இதனை பற்றி மேலும் அறிய http://torcs.sourceforge.net/ இணையதளத்திற்குச் செல்லவும்.     [] [] [] மணிமாறன். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர். மின்னஞ்சல்          :  manimaran990@gmail.com வலை          :   http://mani-g.blogspot.com 59 Gedit – உரை பதிப்பான் Gedit என்பது ஒரு உரை பதிப்பான் (text editor). பொதுவாக உரை பதிப்பான் மூலம்,உரையை மட்டுமே type செய்ய முடியும்.உதராணமாக ஓர் எழுத்து ஒன்றை  type செய்யலாம்.   ஆனால் Gedit உரை பதிப்பான் மற்ற பதிப்பான்களை விட அதிக சிறப்பு அம்சங்களை  பெற்றுள்ளன.   Gedit னுள்  நுழைந்ததும் edit  ->  Preferences  ->  plugins  என்ற  option-க்கு  செல்லவும்   Change Case  : இது ஒரு textcase-ஐ மாற்ற உதவும் plugin ஆகும்.   (i) உங்கள் text editor ல் plugins option ல் change case என்ற check box ஐ தேர்ந்தெடுக்கவும், பின்னர் edit menu-ல் change case என்ற option-ஐ காண்பீர்கள். இப்பொழுது உங்கள் உரை பதிப்பானில் ஏதேனும்  ஒரு உரையை type செய்யவும். பின்னர் அதனை ctrl + A என்ற கீயின் மூலம் தேர்வு செய்யவும். இப்பொழுது  edit menu சென்று  change case என்பதை  தேர்வு செய்யவும் . இவை நான்கு option-களை  காண்பிக்கும்.   * All Upper case –> இவை நீங்கள் தேர்வு செய்த உரையை பெரிய எழுத்தாக மாற்றும். * All Lower case –> இவை  நீங்கள்  தேர்வு செய்த  உரையை சிறிய எழுத்தாக மாற்றும். * Invert case      –> இவை நீங்கள் தேர்வு செய்த உரையை சிறிய எழுத்தில் இருந்து அதை பெரிதாகவும், பெரிய எழுத்தில் இருந்தால் அதை  சிறியதாகவும் மாற்றும். *Tile case          –>  உங்களுடைய உரையானது அனைத்தும் சிறிய எழுத்தில் இருந்தால், அதன் முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக மாற்றும் (அல்லது) உங்களுடைய உரையானது அனைத்தும் பெரிய எழுத்தில் இருந்தால், அதன் முதல் எழுத்து மட்டும் சிறிய எழுத்தாக மாற்றும்.   Document Statistics :             இந்த document statistics tool, உங்களுடைய text file ஆனது save செய்யப்பட்டதா (அல்லது) இல்லையா, எந்த பெயரில் text file save செய்யப்பட்டது, எத்தனை வரிகள்(Lines) உள்ளன, எத்தனை வார்த்தைகள்(words) உள்ளன எத்தனை எழுத்துக்கள்(characters) உள்ளன, எத்தனை  bytes எடுத்துக்கொண்டன என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு  Text file-ல் I LOVE LINUX என்ற text உள்ளது என வைத்துக்கொள்வோம். இந்த document statistics -ஆனது வரிகள்(Lines)–1, வார்த்தைகள்(words)–3, எழுத்துக்கள்(characters with spaces)–12, எழுத்துக்கள்(characters no spaces)–10,  bytes–12.     External Tools : இந்த check box-ஐ தேர்வு செய்து, “Configure Plugin” என்ற option-ஐ தேர்வு  செய்யவும், இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான shell script எழுதி அதனை  உபயோகிக்கலாம்.   File Browser Pane : “plugin” option க்கு சென்று “File Browser Pane” என்ற check box-ஐ தேர்வு செய்து  “Configure Plugin” என்பதை தேர்வு செய்யவும், இதனால் geditor-ன் இடதுபுறம் open செய்யப்பட்ட text file-கள் காட்டப்படும். இதனால் சுலபமாக உங்கள் file-களை தேர்வு  செய்யலாம் .   Insert Date/Time : இந்த option-ஐ தேர்வு செய்வதன் மூலம் உங்களுடைய text editor-ல்  தேதி/நேரம் (date/time) print ஆகிவிடும். பல்வேறு “date/time” மாதிரிகளை உபயோகிக்க “Use the Selected Format” என்ற option-ஐ தேர்வு செய்வதன் மூலம்  பெறலாம். இதனை தேர்வு செய்ய Edit -> Insert Date/Time என்ற option-க்கு  செல்லவும்.   Spell Checker : இதனை தேர்வு செய்வதன் மூலம், நீங்கள் type செய்த சொற்களில் ஏதேனும் தவறு உள்ளதா என கண்டுபிடிக்க உதவுகிறது. ஏதேனும் தவறு இருந்தால், அதனை அடிக்கோடிட்டு காட்டும்.இதனை Tools -> Check Spelling (அல்லது) shift+F7 என்ற key-யின் மூலம் பெறலாம்.     [] நாகராஜன், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் B.E Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார்.   மின்னஞ்சல்       :   knagarajanbtech@gmail.com வலை                   :   http://knagarajanbtech.blogspot.com/ 60 Scribus – ஒரு DTP மென்பொருள் Scribus கற்றலின் இந்த தொடரின் இறுதியில், ஒரு முழு அலங்கரிக்கப்பட்ட பதிப்பினை உங்களால் உருவாக்க முடியும். நிறங்களுடன் கூடிய புத்தகமோ (அ) கருப்பு வெள்ளை நிற செய்திக்கடிதமோ, இதில் உள்ள அடிப்படைகள் அனைத்தும் ஒன்றே. ஆதலால் நாம் முதலில் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வோம். இதற்காக நாம் scribus-ng என்ற மென்பொருளை இங்கே பயன்படுத்தியுள்ளோம்.   இங்கே நாம் புதிய document (அ) ஏற்கனவே உள்ள ஒன்றை திறக்கும் போது தோன்றும் உரையாடல்பெட்டியில் உள்ள அமைப்புகளை அப்படியே விட்டுவிட்டு Ok-ஐ அழுத்தவும். []   இது நம்முடைய பதிப்புகளை செய்யக்கூடிய காலியான பக்கமாகும். சிவப்பு நிற வெளிப்புறக்கோடானது பக்கத்தின் விளிம்புப்பகுதி ஆகும். நீலநிறக்கோடானது நம்முடைய தரவுகளை வைப்பதற்கான இடத்தினைக் குறிக்கின்றது. இந்த நீலநிறக்கோட்டிற்கு வெளியே எழதப்படும் தரவுகளை அச்சிடப்பட முடியாது. இது A4 காகிதத்தின் அளவினை குறிக்கின்றது.   []     இப்போது நாம் பயன்படுத்தத் தொடங்குவோம். []            முதலில் ஒரு தலைப்பு உரையைச் சேர்க்க, கருவிப்பட்டை(Toolbar)யில் உள்ள Insert Text Frame பணிக்குறியை தேர்ந்தெடுக்கவும். இப்போது mouse-ன் பொத்தானை அழுத்தி வேண்டிய இடத்தில் வரையவும்.   இதில் உரையை சேர்ப்பதற்கு/பதிப்பதற்கு, mouse-ன் இடது பொத்தானை இரு க்ளிக் செய்யவும். உரைப்பதிப்பை நிறுத்த உரைப்பெட்டியின் வெளிப்புறத்தில் க்ளிக் செய்யவும்.   உரையை தேவையான இடத்தில் நகர்த்த, அதன் மீது அழுத்தி நகர்த்தலாம். இப்போது உரைப்பெட்டியின் property-களை Window -> Properties – னை தேர்வு செய்யவும். பின் உரைப்பெட்டியை தேர்ந்தெடுத்து அதன் Properties-களை மாற்றி அமைக்கலாம். []     []     Text tab-ஐ கிளிக் செய்து, பெட்டியிலுள்ள உரையின் எழுத்துருக்களின் அளவு, நிறம் போன்ற பல்வேறு Properties-களை அமைக்கலாம். இதில் உரையை மையப்படுத்த, Align Text Center பொத்தானை கிளிக் செய்யவும்.   இன்னும் பார்க்க கொஞ்சம் சாதாரணமாக இருப்பதால், நாம் அங்கு ஒரு நிறத்தை தீட்டி பார்ப்போம். Color & Effects tab-ஐ க்ளிக் செய்து அருகில் உள்ள வண்ணப்பூச்சு பொத்தானை கிளிக் செய்து, தேவையான நிறத்தை தேர்ந்தெடுக்கவும். இப்போது நமக்கு ஒரு தலைப்பு கிடைத்துவிட்டது.   நமக்கு இப்போது உண்மையான பொருளடக்கம் கொண்ட உரை வேண்டும். ‘எனவே மற்றொரு உரைப்பெட்டியை சேர்க்கவும்,  ஆனால் இந்த முறை பக்கத்தில் பாதி அகலம் மற்றும் அதிக உயரமாக வைக்கவும். உரை பெட்டியை நிரப்புவதில் நேரம் கழிப்பதைக் காட்டிலும், நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைப்பெட்டியில்  நமக்காக Scribus உரையை பூர்த்தி செய்யும். இதற்கு Insert  -> Sample Text-ஐ கிளிக் செய்யவும். [] []   இங்கே நாம் நமது நிரப்பி உரைக்கு தேவையான பத்திகள்  மற்றும் பல மொழியை தேர்ந்தெடுக்க முடி[]யும். நான் இங்கு நிலையான ஆங்கிலம் மற்றும் பத்து பத்திகள் தேர்ந்தெடுத்து உள்ளேன்   காத்திருக்க! ஆனால் அந்த பத்து பத்திகள் உரைப்பெட்டியில் இல்லை. ஏன் கட்டளை புறக்கணிக்கப்பட்டது? உரைப்பெட்டியின் அடிப்பகுதிக்கு வெளியே ஓடும். நீங்கள் வலது அடிப்பகுதிக்கு மிக அருகில் பார்த்தால், நீங்கள் அதில் ஒரு ‘X’-வுடன் கூடிய ஒரு சிறிய பெட்டியை பார்ப்பீர்கள். இந்த குறியீடு பெட்டியில் அனைத்து உரையையும்  சேர்க்க போதுமான இடம் இல்லை என்று சொல்கிறது.   நாம் அதை பெரிதாக்கவோ அல்லது மற்றொரு  பெட்டியில் தொடங்கவோ வேண்டும. இல்லையென்றால், அதை பார்க்க []முடியாது.                     பக்கத்தின் வலது பாதியில் மீண்டும் ஒரு புதிய உரைப்பெட்டியை இழுத்து, அதை உயரமாக வைக்கவும். இங்குதான் மாயங்கள் நிகழ்கின்றன . உரையின் ஓட்டம்  தொடங்கியிருக்கிற இடது நெடுவரிசைப் பெட்டியில் ஒருமுறை க்ளிக் செய்த பிறகு, கருவிப்பெட்டியில் உள்ள Link Text Frames பொத்தானை தேர்ந்தெடுத்து, வலது நெடுவரிசைப் பெட்டியில் க்ளிக் செய்யவும். இப்போது தானாகவே உரைகள் அதில் தோன்றும். கவனிக்கவும்! மீண்டும் Link Text Frames பொத்தானை க்ளிக் செய்ய மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால், நீங்கள்     உரைப்பெட்டிகளை தொடர்ந்து இணைக்கப் போகிறீர்கள் என்று Scribus நினைத்துக்கொள்ளும்.   []   உரைப்பெட்டிகளின் அளவை மாற்றுவதன் மூலமாக, உரைகள் தானாக இடம் மாறுவதை காணலாம். சரி, இப்போது செய்த வேலைகளை ஓரிடத்தில் சேமிப்போம். File-> Save As கொடுத்து file-ன் பெயரை கொடுக்கவும். பிறகு, PDF(Portable Document Format)-ஆக மாற்ற File -> Export -> Save as PDF கொடுத்தால், Preflight Verifier Window தோன்றும்.   PDF-ஆக மாற்றுவதற்கு முன்பு, ஆவணத்தில் ஏதாவது பிழை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்று Scribus சோதிக்கும். இந்த ஆவணத்தில், நாம் []கொடுத்த உரையானது முதல் பக்கத்தில் உள்ள இரு பெட்டியினுள் அடங்காததால், Text overflow என்ற பிழையை Scribus கூறுகிறது. இதன் மூலமாக, புத்தகத்தை அச்சிடப்படும் போது ஏற்படும் பிழைகளை இங்கேயே தவிர்க்கலாம். இங்கே நாம் Ignore Errors பொத்தானை அழுத்தி தொடர்வோம். Save as PDF window-ஆனது, PDF file எப்படி காட்சியளிக்க வேண்டும், அதில் என்னென்ன அடங்கியிருக்க வேண்டும் போன்ற பல விருப்பத்தேர்வுகளைக் கொண்டிருக்கும். இப்போது file-ன் பெயரைக் கொடுத்து சேமிக்கவும்.     இனிவரும் தொடர்களில் இன்னும் பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம். இந்த கட்டுரை உங்களுக்கு தகவல் நிறைந்ததாக இருந்திருக்கும் என் நம்புகிறோம்.             []  செல்வமணி சம்பத், இணைய தள வல்லுநர், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.   மின்னஞ்சல்      :    selva.infobees@gmail.com வலை                  :  http://infobees.wordpress.com 61 உபுண்டு மென்பொருள் மையம் இந்த, கட்டுரையில், உபுண்டு மென்பொருள் மையம்(Ubuntu Software Center) செய்ய முடியும் விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம். உபுண்டு பயன்படுத்தி  இருந்தால், உபுண்டு மென்பொருள் மையம் பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் பயன்பாடுகளை(Applications) சேர்க்க அல்லது நீக்க இது பயன்படுகிறது. உங்கள் உபுண்டு ல் நிறுவப்பட்ட மென்பொருள்களைப் பார்த்தல் மற்றும் மாற்றுதல், மேம்படுத்துதல், நீக்குதல் மற்றும் அனைத்தையும் பற்றி வரலாற்றில் பெற முடியும்.   உபுண்டு மென்பொருள் மையம் திறக்க: Go to Applications>Ubuntu Software Center இது திறக்க சிறிது நேரம் பிடிக்கும். உபு  ண்டு மென்பொருள் மையம் இவ்வாறு காட்சியளிக்கும். [Image031]     மென்பொருள்களை   நிறுவ:   உங்கள் முகப்புத்திரையில் உபுண்டு window திறந்தவுடன் Get Software பிரிவில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கும். மேலும் புதிய மென்பொருட்களையும், அதன் சிறப்புகளையும் மற்றும் மேலும் சில  ஸ்லைடுகளை காட்டுவதையும் பார்க்க முடியும். குறிப்பிட்ட பிரிவுகள் மீது க்ளிக் செய்தவுடன் அப்பிரிவிலுள்ள மென்பொருள்களை ஆராய்ந்து பட்டியலிடும்.   மேலும், நீங்கள் வலது புறம் தேடல் பெட்டியில் மென்பொருளின் பெயரை பயன்படுத்தி தேடலாம். நீங்கள் கிளிக் செய்த பிறகு, உங்கள் விருப்பத்திற்கேற்ப மென்பொருட்களைப் பற்றி நிறைய தகவல்களை பார்க்க மற்றும் நிறுவ முடியும். மேலும் தகவல் திரைக்காட்சிகளுடன் உட்பட மென்பொருள் பற்றிய விவரங்களை அளிக்கிறது. பிறகு, நீங்கள் மென்பொருள் நிறுவ தயாரானவுடன், install என்பதை கிளிக் செய்யவும், நீங்கள் உங்கள் கடவுச்சொல்லினை அளித்து அங்கீகரிக்க வேண்டும் பிறகு மென்பொருள் உங்கள் உபுண்டு கணிணியில் நிறுவப்படும்.   மென்பொருள் பார்வையிட மற்றும் அதை நீக்க :   நீங்கள் நிறுவிய மென்பொருட்களை பார்ப்பதற்கு Installed Softwares என்பதை கிளிக் செய்யவும். பிறகு நீங்கள் Linux கணிணியில் நிறுவப்பட்ட மென்பொருள் பார்க்க முடியும். மேலும் நீங்கள் மென்பொருள் பற்றிய தகவல்களை பார்க்க முடியும், மேலும் அதனை நீக்குவதற்கான பொத்தான் இருக்கும். அதனை கிளிக் செய்து மென்பொருளை நீக்க முடியும்.     நீங்கள் வரலாறு அல்லது மென்பொருள் மாற்றங்களை சரிபார்க்க இயலும். நீங்கள் மென்பொருள் நிறுவிய, நீக்கிய, மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேதியினையும் காண இயலும். Edit மெனுவின் கீழ் மென்போருள் மூலங்களை(Software Sources) விருப்பத்தேர்வினைக் காண முடியும்.     சரவணன், காஞ்சிபுரம் பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரியில் B.Sc Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார். மின்னஞ்சல்  :   seesaravana7@gmail.com     கோப்புகளின் வடிவமைப்பு   உபுண்டு பயன்படுத்த ஆரம்பிக்கும் ஒவ்வொரு புதிய பயனருக்கும் ஆரம்பத்தில் உபுண்டுவின் ஆவணங்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கும். Linux-ன் ஆவண வடிவமைப்பு முதலில், குறிப்பாக விண்டோஸ் பயனருக்கு, கடினமாக இருக்கும். முக்கிய கோப்புகளின் பட்டியலுடன், அவைகள் என்னென்ன என்பதையும் சுருக்கமாக இங்கே கூறப்பட்டுள்ளன.     /   -   (Forward Slash) இது உபுண்டு இயங்குதளத்தின் முதல் மற்றும் அடிப்படையில் வரும் மற்ற ஆவண கோப்புகள் அனைத்தும் இதனுள் வைக்கப்பட்டிருக்கினறன. /root   -   இங்கு root என்பது உபுண்டு இயங்குதளத்தை நிர்வகிப்பதற்கு உபுண்டுவால் உருவாக்கப்பட்ட ஒரு பயனர்(Administrative User) ஆகும். root user என்பது உங்கள் கணிணியின் கடவுள் ஆகும். ஏனெனில் root-ஆனது உங்களின் முழு filesystem-ஐ நீக்குதல் போன்று எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆதலால் root user-ஆக செயல்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.     /bin    -   Linux-ன் அனைத்து program-களும் இங்கு இருக்கும். இவையனைத்தும் binary வடிவிலான file-ஆக இருக்கும். அதாவது கணிணியால் மட்டுமே read செய்யக்கூடிய file-ஆக இருக்கும். இதிலுள்ள file-களைப் பற்றி அறிய வேண்டுமெனில் Applications -> Accessories -> Terminal சென்று $ man என்பதை கொடுத்தால் அதை பயன்படுத்தும் வழிமுறைகளைக் காணலாம்.     /etc    -   இங்கு linux-ன் நிர்வாக பயன்பாடுகள் மற்றும் configuration file-கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்குஇ நீங்கள் apache2 மென்பொருளை நிறுவியிருந்தால், அதன் configuration file-களை /etc/apache2 என்ற இடத்தில்     /dev    -   இங்கு கணிணியின் கருவிகளை கட்டுப்படுத்தகூடிய file-கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குதான் உபுண்டுவானது மற்ற கருவிகளின் இணைப்பிணை பற்றி கொடுக்கப்பட்டிருக்கின்றன.     /home   -   இங்கு root user-ஐ தவிர, மற்ற பயனரின் தரவுகள் அனைத்தும் தேக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பயனரின் பெயரில் தனித்தனி கோப்புகள் உருவாக்கப்பட்டு, அதனுள் அந்தந்த பயனருக்கான Config file-கள் மற்றும் Desktop கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும்.     /tmp    -   இது தற்காலிக தரவுகளின் கோப்பு ஆகும். அதாவது ஒன்று (அ) இருமுறை பயன்படுத்திய பிறகு, program-களுக்கு தேவைப்படாத file-கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு linux system-களானது குறிப்பிட்ட இடைவெளியில் /tmp கோப்பில் உள்ளவற்றை தானாகவே அழித்து விடுகிறது.       /opt    -   இங்கு உங்கள் விருப்பத்திற்கேற்ற program-கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் ஏதாவது புதிய மென்பொருளை நிறுவி, அதனை மறுபடியும் நீக்கினால் system-ல் உள்ள மற்ற எந்த மென்பொருளையும் பாதிக்காது.அதாவது, ஒரு program/application-ன் அனைத்து தரவுகள் மற்றும் library-கள் இந்த ஒரே இடத்திலேயே வைக்கப்படுகின்றன.       /media  -   சில வழங்கல்கள் USB வட்டுகள், cd/dvd-கள் மற்றும் வேறுவகையான filesystem-களை இந்த கோப்பில் mount செய்யப்படுகின்றன.    [Image033]   /usr    -   /bin (அ) /etc கோப்பில் வைக்க முடியாத games, printer மென்பொருள் போன்ற கூடுதல் பயன்பாடுகளை நீங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. /usr-ஐ அதன் தேவையைப் பொறுத்து சில பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. அதாவது, program-களுக்காக /usr/bin என்றும், sound file-கள் (அ) பணிக்குறிகள் போன்ற பங்கிடப்பட்ட தரவுகளுக்காக /usr/share என்றும், நேரடியாக இயக்கமுடியாத library-கள், ஆனால் மற்ற program-களை இயக்க அவசியமான library-களை /usr/lib என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. package manager (Ubuntu Software Center)ஆனது /usr-ல் உள்ள தரவுகளை கவனித்துக்கொள்ளும்.     மேலும் மற்ற சில ஆவண கோப்புகள் இருக்கின்றன. அவற்றில் சில     /usr/local/      -   நீங்கள் உங்கள் Ubuntu Software Center-ஐ பயன்படுத்தாமல், தனியாக நிறுவிய மென்பொருள்கள் அனைத்தும் இங்கே சென்று உட்காருகின்றன. இது /usr போன்று அதே வடிவமைப்பை பெற்றிருக்கின்றன. பொதுவாக /usr/local-ல் இருப்பவைகள் முக்கியமாக கருதப்படாததால் உங்களின் தனித்த file-கள் மற்றும் script-களை இங்கே வைக்க முடியும்.   இப்போது நீங்கள் அனுபவம் பெற்ற linux பயனரைப் போன்று உங்களைக் கருதிக்கொள்ளலாம். இந்த கோப்பு வடிவமைப்பு முதலில் குழப்பமாக இருந்தாலும், சிறிய பயன்பாட்டிற்கு பிறகு இயல்பானதாக மாறிவிடும்.     செல்வமணி சம்பத், இணைய தள வல்லுநர், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர். [Image030]   மின்னஞ்சல்      :    selva.infobees@gmail.com வலை                  :  http://infobees.wordpress.com 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 அறிமுகம் இலக்குகள் - கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. - உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. - இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. - எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது. - அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும் விவரங்களை வெளியிடுவது. பங்களிக்க - விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம். - கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த விஷயமாக இருத்தல் வேண்டும். - பங்களிக்கத் தொடங்கும் முன்னர் கணியத்திற்கு உங்களுடைய பதிப்புரிமத்தை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறீர்கள். - editor@kaniyam.comமுகவரிக்கு கீழ்க்கண்ட விவரங்களடங்கிய மடலொன்றை உறுதிமொழியாய் அளித்துவிட்டு யாரும் பங்களிக்கத் தொடங்கலாம். - மடலின் பொருள்: பதிப்புரிமம் அளிப்பு - மடல் உள்ளடக்கம் - என்னால் கணியத்திற்காக அனுப்பப்படும் படைப்புகள் அனைத்தும் கணியத்திற்காக முதன்முதலாய் படைக்கப்பட்டதாக உறுதியளிக்கிறேன். - இதன்பொருட்டு எனக்கிருக்கக்கூடிய பதிப்புரிமத்தினை கணியத்திற்கு வழங்குகிறேன். - உங்களுடயை முழுப்பெயர், தேதி. - தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும். - கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விஷயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம். - படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம். - தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம். - தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம். - தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக editor@kaniyam.com முகவரிக்குஅனுப்பிவைக்கவும். - தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் பங்களிக்கலாம். - ஐயங்களிருப்பின் editor@kaniyam.com மடலியற்றவும். விண்ணப்பங்கள் - கணித் தொழில்நுட்பத்தை அறிய விழையும் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் இது. - இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. - தங்களுக்கு தெரிந்த விஷயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருந்தால் போதும். - இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது. - குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும். வெளியீட்டு விவரம் பதிப்புரிமம் © 2012 கணியம். கணியத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் http://creativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன. இதன்படி, கணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்: த. ஶ்ரீநிவாஸன் – editor@kaniyam.com வெளியீட்டாளர்: ம. ஶ்ரீ ராமதாஸ், 1 அக்ரஹாரம், துகிலி – 609804 தொ. பே: +91 94455 54009 – amachu@kaniyam.com கட்டுரைகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே உரியன. கணியம்பெயருடைமை: ம. ஶ்ரீ ராமதாஸ் – ஆசிரியர் குழு