[] 1. Cover 2. Table of contents பயணக்குறிப்புகள் பயணக்குறிப்புகள்   நா.வே.அருள்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Creative Commons Attribution Share Alike 4.0 India கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/travel_notes மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc ஓடுதளத்தில் ஒரு பொம்மை விமானம் -நா.வே.அருள் -ஜூலை 21, 2019 ஹாங்காங் விமான நிலையம் (வலையில் பிடித்தது) சென்னை விமான நிலையத்திற்குள் நுழைகிறபோதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இனம் தெரியாத உணர்வு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வழியனுப்ப வந்தவர்களும் பயணம் செய்ய இருப்பவர்களும் உணர்ச்சியில் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்தார்கள். காமிரா முன் நின்று போஸ் கொடுப்பவர்களும் கட்டித் தழுவிக்கொள்பவர்களுமாக விமான நிலையம் உணர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். மகன் அருள்பாரதியின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள நானும் என் மனைவி ஹேமாவதியும் கனடாவை நோக்கிப் பறக்க இருந்த விமானத்திற்காகக் காத்திருந்தோம். மகன் அருள்பாரதி கனடாவில் கணினி அறிவியலில் எம் எஸ் முடித்து அங்கேயே மருமகள் விஜய்தாவுடன் பணியாற்றி வருகிறார். கனடாவுக்கு நாங்கள் ஏறவிருந்த விமானத்தில்தான் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமியும் பயணம் செய்யவிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே "சாயாவனம்’’ நெஞ்சில் நிழலாடியது. சாயாவனத்தைத் தாண்டி உலகம் நெடுந்தூரம் வந்துவிட்டிருந்தது. ஆனால் இப்போதும் எரியும் வனத்தின் தீய்ச்சல் நாசியில் துளைத்து இதயத்தில் ஒரு எரிந்து முடிந்த கரிக்கட்டையாக மிதந்து கொண்டிருந்தது. விமானம் ஏறுகிற சிறிது நேரத்திற்குமுன் அவரைச் சந்திக்க முடிந்தது. கனடாவில் சந்திப்போம் என்று அவரவரும் இருக்கைகளைத் தேடி அமர்ந்து கொண்டோம். ஆறு மணி நேரத்தில் காலை ஒன்பது மணியளவில் ஹாங்காங் விமான நிலையத்தில் பயண இடைவேளை நேரம். கனடாவுக்கான எங்கள் அடுத்த விமானத்திற்கு இன்னும் ஆறு மணி நேரம் இருந்தது. அவசர அவசரமாக அடுத்த விமானத்திற்காகச் செல்லும் வாசலைத் தேடியபடியே சா.கந்தசாமி தனது துணைவியாருடன் வந்து கொண்டிருந்தார். அவர்களுக்கான ஐம்பதாம் வாசலைக் காட்டி வழியனுப்பிவைத்தோம். ஹாங்காங் விமான நிலையத்தில் வாழ்க்கையை விமானங்கள் எங்கெங்கேயோ சுமந்து செல்கின்றன. ஹாங்காங் விமான நிலையம் அசத்தலாக இருந்தது. மொத்தம் ஐநூற்று முப்பது வாயில்கள். நமது கோயம்பேட்டில் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தது போல எண்ணற்ற விமானங்கள். பெரிய பெரிய எந்திரத் தும்பிகளைப்போல விமானங்கள் நகர்ந்து கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. குறைந்தபட்சம் ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானமாவது பறந்துகொண்டிருந்தது. அசையாத சிறகுகளின் அலுமனியப் பறவைகளைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. “மின்துகள் பரப்பு” கவிதைத் தொகுப்பில் இந்திரனின் கார்களைப் பற்றிய கவிதைகள் நினைவுக்கு வந்தன. நவீன எந்திரங்கள் மனிதனின் பாடுபொருள்கள் ஆகவில்லை என்று குறிப்பிட்டிருப்பார். ஆகாய விமானம் இன்னும் சாதாரண மனிதர்களுக்கு எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருப்பதால் அவர்களின் பாடு பொருளாக எப்படி மாற முடியும்? எனக்கும் ஆகாய விமானத்திற்குமான தொடர்பு சின்ன வயதிலிருந்தே தொடங்கிவிட்டது. சின்ன வயதில் எங்கள் ஊரில் சத்தம் வருகிறபோது அண்ணாந்து பார்ப்போம். வானத்தில் வண்டு ஒன்று பறந்து போவதுபோல உயரத்தில் ஏரோப்ளேன் பறந்து போகும். டேய் பிளேன் போவுதுடா என்று குட்டீஸ் எல்லாம் சேர்ந்து கூச்சல் போடுவோம். அத்துடன் சரி ஆகாய விமானம். உடனே தரையிறங்கிவிடுவோம். அடுத்து வேறு ஒரு விளையாட்டு ஆரம்பமாகிவிடும். எனது பேத்திகள் இருவருக்கும் ஹாங்காங் விமான நிலையத்தை அலைபேசியில் நேரலை மூலம் சுற்றிச் சுற்றிக் காட்டினேன். வருகிற போது எத்தனை விமானங்கள் வாங்கிவரவேண்டுமென்று இருவரிடமும் குறித்துக் கொண்டேன். ஆளுக்கு மூன்று மூன்று என்று ரொம்பக் குறைச்சலாகத்தான் கேட்டிருந்தார்கள். பொம்மை விமானங்களுக்குக் கூட டாலர்கள் போதா என்கிற விஷயம் நமக்குத்தான் தெரியும். குழந்தைகளின் குதூகல உலகத்தில் ஆகாய விமானம் என்ன ஆண்டவனைக்கூட சர்வ சாதாரணமாகப் படைத்து விடுவார்கள். படைப்பது குழந்தைகள் பாடு. விற்பது பெரியவர்கள் வேலை. படைத்ததை விற்பதற்குத்தான் இந்த உலகம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. பறவைகளின் உலகமே தனி. கண்டம் விட்டுக் கண்டம் வருவதற்கு எந்தப் பறவை விமானச் சீட்டு, கடவுச் சீட்டு எடுத்துக்கொண்டிருக்கிறது? பாவம் மனிதர்கள். முதல் முதலாய் வெளிநாடு போகிறவர்கள் வாழையிலையில் கையும் நெய்யும் வழிய வழியச் சாப்பிடும் தி.ஜானகிராமனின் தஞ்சாவூர் கதாபாத்திரங்களாக இருந்தால் கஷ்டப்பட வேண்டியதிருக்கும். விமானத்தில் பெண்கள் ஆங்கிலத்தை அழகாக உச்சரிப்பார்கள். அதைக் கேட்டுக் கொண்டே உணவை உள்ளே தள்ளிவிட வேண்டும். வெஜிடேரியன் இந்தியன் இந்து உணவு என்று எழுதப்பட்டிருக்கும் அந்த உணவுக் காகிதப் பெட்டிக்குள் தோசை இருக்காது. தோசை மாதிரி இருக்கும். பொங்கல் இருக்காது. பொங்கல் மாதிரி இருக்கும். சிக்கன், மட்டன் பழக்கப் பட்டிருந்தால் ஒரு வெட்டு வெட்டிக்கொள்ளலாம். மாலை நான்கு மணியளவில் மறுபடியும் காத்தே பசிபிக்கில் அமர்ந்து கனடா நோக்கிப் பறக்கத் தொடங்கினோம். மறுநாள் மதியம் இரண்டு மணியளவில் கனடா விமான நிலையம். வரிசை வரிசையாய் கணினிகள். இமிகிரேஷன் படிவத்தைப் பூர்த்தி செய்தபின் லக்கேஜ்களைக் கன்வேயர் பெல்ட் மூலம் சேகரித்தபின் வெளியில் வந்தோம். வெளியே மகன் அருள்பாரதி, மருமகள் விஜய்தா, நண்பரின் மகன் விநோத்குமார். கனடா மண்ணின் கால் டாக்சியில் அரைமணி நேரப் பயணத்தில் வீடு வந்து சேர்ந்தோம். வருகிற வழியில் வலது பக்கப் பயண விதி. நம்மூருக்கு நேரெதிரான விதி. பல விஷயங்களிலும் நம் ஊரும் கனடாவும் நேரெதிர்தான் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை. போகப் போகப் புரிய ஆரம்பித்தது. பயணிப்போம்… மனம் ஒரு கோவேறு கழுதை -ஆகஸ்ட் 4, 2019 உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாடு ஒன்றில் நேரடியாகக் கால்வைக்க முடியும் என்று கனவுகூட கண்டதில்லை. நம் வாழ்வின் சக்கரங்கள் ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஆகாயத்துப் பறவைகளை அண்ணாந்து பார்க்க முடிவதில்லை. அதுவும் ஓர் அலுமினியப் பறவை மூலம் பறந்து அண்டை நாட்டுக்குப் போவதென்பது அத்துணை எளிதானதல்ல. ஏதோ என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது. கனடாவின் வான்கூவர் நகரை அடைகிற போது ஒருமுறை மீண்டும் மனம் சென்னையிலிருந்து விமானத்தில் வந்த தருணங்களை அசைபோட ஆரம்பித்தது. விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கு எதிரேயும் ஒரு மின்திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது. காதில் கேட்கும் கருவிகளைப் பொருத்திக் கொண்டு விமானத்தின் பறத்தலைக் கவனிக்கலாம். பருவ மாற்றங்களைப் பார்த்துக் கொண்டு வரலாம். இசையை ரசிக்கலாம்.சினிமாக்களைத் திரையிட்டுக் கொள்ளலாம். நான் கிளின்ட் ஈஸ்ட்வுட் இன் மியூல் (கோவேறு கழுதை) பார்த்து முடித்திருந்தேன். அது ஒரு டிரக் ஓட்டுநரின் கதை. அவன் எப்படி போதைப் பொருள்களுடன் டிரக் ஓட்ட நேர்கிறது என்று சொல்லப் பட்டிருக்கும். அவன் குடும்பத்தினரின் கனவையோ, விருப்பு வெறுப்புகள் பற்றிய சிந்தனை இல்லாமல் அவனே அவனுக்கான வாழ்க்கையை வாழ்வான். கடைசியில் அவன் வழக்கைச் சந்திக்க வேண்டிவரும். அவன் குற்றவாளிக் கூண்டில் வைத்து விசாரிக்கப் படுவான். வாழ்க்கையில் அவரவரும் ஏதோ ஒரு சுமையைக் கோவேறு கழுதையைப் போலவே சுமக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆகாயத்துக் கோவேறு கழுதைதான் ஆகாய விமானம். விமான நிலையத்திற்குள் காலடி வைப்பது ஒரு கனவினை மெல்லத் தீண்டுவது போல இருந்தது. மனிதர்கள் எல்லோரும் வெள்ளை வெள்ளையாக இருந்தார்கள். பெண்கள் அரை டரவுசர் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் சுதந்திரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். நிலையத்திற்குள் இருந்த கடைகள் எல்லாம் மிகவும் நவீனமாக இருந்தன. பொதுவாக கூட்டம் அதிகமிருந்தால் நம்மூர்க் கடைகளில் மொய்த்துக் கொண்டு முண்டியடித்து நிற்பதுதான் வழக்கம். அங்கே வரிசையாக நின்றுகொண்டி ருந்தார்கள். சென்னை நகரத்து நெரி சலைப் பார்த்துப் பார்த்து –நூறு கி.மீ வேகத்தில் பயணித்த என் மனதுக்கு அவர்களின் நிதானம் ஆச்சரியத்தைத் தந்தது. விமான நிலையத்தைவிட்டு வெளியே வருவதற்கு முன்பு ஒருமுறை கழிவறைக்குப் போய்வரலாம் என்று நினைத்தேன். நுழைந்தால் வெளியே வருவதற்கு மனம் வராது. அப்படியொரு சுத்தம். வெள்ளை வெளேரென்று உள்தரைகள் முதல் கழிவறைப் பீங்கான்கள் வரை பளபளத்துக் கொண்டிருந்தது. அதைச் சுத்தம் செய்கிற சிப்பந்திகள் கட்டு செட்டாக உடையணிந்திருந்தார்கள். தொழில் ரீதியான மட்டப்படுத்தல்கள் தென்படவில்லை. சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையில்லை. வயிற்றைக் காலி செய்ய நேர்ந்தால்தான் கால் கழுவ ஏற்பாடு இருக்காது. எல்லாம் சுருள் தாள்கள்தான். துடைத்து எறிந்துவிட வேண்டியதுதான். ஏதோ நாம் அசுத்தமாகக் கால் கழுவாமல் வருவதுமாதிரியிருக்கும். எல்லா இடங்களிலும் இப்படித்தான் என்பதை அறியநேர்ந்தது. முதலில் கஷ்டமாக இருக்கும். அப்புறம் போகப்போக பழகிவிடும் என்கிற கதைதான். கழிவறைக்கு வெளியே ஓய்வு அறை என்று மின்னெழுத்துகள் பளபளத்துக் கொண்டிருந்தன. எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொள்ளலாம். அது ஒரு ஓய்வறையைப்போலத்தான் சுத்தமாக இருந்தது. டிம் ஹார்ட்டின், ஸ்டார் பக்ஸ், ஸப் வே என்று வரிசையாக இருந்தன. அங்கு டாலர்கள் காபிகளாகவும், பேகன்களாகவும், பேகல்களாகவும், பீட்சாக்களாகவும் உருமாற்றம் அடைந்து கொண்டிருந்தன. விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்கு முன் குடியேற்ற முறைகளைப் பின்பற்றவென்று நிலையத்துத் தாழ்வாரத்தில் நூற்றுக்கணக்கான கணினிகள். ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய அங்கங்கே சிப்பந்திகள். இதை ஒரு தன்னார்வத் தொண்டாக மேற்கொள்ளும் முதியவர்கள் பலரை அங்கு பார்க்க முடிந்தது. எங்களுக்கு உதவி செய்ய ஒரு சேர நன்னாட்டிளம் பெண்மணி இருந்தாள். அவளது தமிழ் கலந்த மலையாளம் ஒரு தலைக் கிறுக்கைக் கொடுக்கத்தான் செய்தது. எடுத்து வருகிற பொருள் விவரங்களைக் கொடுக்க வேண்டும். பயறு வகைகளில் எல்லாவற்றையும் குறிப்பிட்டுவிட்டால் ஆபத்துகளும் உண்டு. விதைகளாகும் வாய்ப்புள்ள எந்தப் பொருளும் அந்நாட்டிற்குள் எடுத்துச் செல்லமுடியாது. வெளி நாட்டிலிருந்து ஒரு புதிய மரம் வேரூன்றி விடக் கூடாது என்கிற கவனமாக இருக்கலாம். அப்போது நம்மூரில் வீட்டின் அறைகளுக்குள்ளேயே எட்டிப் பார்க்கும் வேலிக் காத்தான்கள்தான் என் ஞாபகத்துக்கு வந்தன. அந்த வேலிக் கருவைகள் அடுப்புக்கு விறகா கின்றன என்று சிலர் சொன்னாலும்கூட அவை எத்தனை விளைநிலங்களைப் பாழ்படுத்தியிருக்கின்றன என்பதை நினைத்தால் மனம் கனத்துப் போய்விடு கிறது. அவை தரைமேல் வளரும் ஹைட்ரோ கார்பன் ஆபத்துகள் அல்லாமல் வேறென்ன? ஒரு காலத்தில் அமெரிக்கக்காரன் வேலிக்கருவை விதைகளை ஹெலிகாப்டரில் விதைத்துப்போனதாக ஊர்ப் பெரிய வர்கள் சிலர் சொல்லக் கேட்டதுண்டு. இங்கிலாந்துக்காரன் மனிதர்களை மரங்களாக்கிச் சென்றான். அமெ ரிக்கக்காரன் மரங்களை முட்செடி களாக்கி வேடிக்கை பார்க்கிறான். வெளி நாட்டுக் காரர்கள் அவர்கள் நாட்டின் இயற்கையைப் பாதுகாக்க எந்தள வுக்கு விழிப்புணர்வுடன் இருக்கி றார்கள் என்று நினைத்துக்கொண்டே நிலையத்தின் வாயிலைக் கடந்தோம். வாயிலைக் கடக்கிறபோதே ஒரு சித்திரம் மனதுக்குள் ஓடிக் கொண்டி ருந்தது. டாக்சியைப் பிடிப்பதற்குள் ஒரு சின்ன உள்நாட்டு யுத்தம் நடத்தி யாக வேண்டுமே என்று எண்ணிக் கொண்டேன். அங்கு மொய்க்க இருக்கிற எந்த ஓட்டுநர் பேரத்துக்குப் படிகிற ஓட்டுநராக இருப்பார் என்று நமது அனைத்து உளவியல் தந்திரத்தை உபயோகிக்க வேண்டுமே என்று அயர்வாக இருந்தது. ஆனால் அங்கு நான் கண்ட காட்சி ஆச்சரியத்தைத் தந்தது. அவரவரும் ஒரு வரிசை முறையில் வந்து கொண்டிருந்தார்கள். பேரத்திற்குப் பேச்சில்லை. அங்கி ருந்த ஓட்டுநர்களில் ஆகப் பெரும்பா லானவர்கள் இந்தியர்களாக இருந்தார்கள். அதிகபட்சமாகப் பஞ்சாபிகள். அடுத்ததாகத் தமிழர்கள். இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் வேறுமாதிரி ஆகிவிடுகிறார்களோ? வாழ்நிலையும் சூழ்நிலையும் மனி தர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடு கின்றன? வாடகை வாகனத்தில் பறக்க ஆரம்பித்தோம். ஓடுதளத்தில் ஓடும் விமானத்தைப்போலத்தான் இருந்தது அந்த மகிழுந்து. ஆனால் வாகனங்கள் எல்லாம் சாலைகளில் வலதுபுறத்தில் சென்றுகொண்டிருந்தன. இந்தியாவில் இடதுபுறம். கனடாவில் ஏன் வலது புறம்? இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். -பயணிப்போம் சாலை விதிகளும் சமூக விதிகளும் -நா.வே.அருள் -ஆகஸ்ட் 11, 2019 ஒருகாலத்தில் குதிரைவீரர்களால் தன்னிச்சையாக உருவானதுதான் இடதுபுறச் சாலைப் பயணம். இப்போதும் இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த சௌகரியங்கள் அப்படியே பொருந்தும். கனடாச் சாலைகளில் வலப்புறத் திசைப் பயணங்களாக இருக்கின்றன. நம் நாட்டில் எப்படிச் சாலைகளில் இடப்புறம் போவோமோ அப்படி அங்கு வாகனங்கள் எல்லாமே வலப்புற விதிகளைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்தன. “சாலையில் மட்டுமல்ல, சமூகத்திலும் இடதுபுறம் பாதுகாப்பானது” என்றெல்லாம் இளமையில் கவிதை என்ற நினைப்பில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இடதுபுறச் சாலை விதிகள்தான் நமக்குப் பரிச்சயம். நமக்கு மட்டுமல்ல. நம்மைப் போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் இப்படித்தான் உள்ளது. அதன் காலனி நாடான கனடாவிலும் இடதுபுறச் சாலை விதிகள்தான் உள்ளன. உலகில் ஏறக்குறைய எழுபத்தைந்து நாடுகளில் இடதுபுற சாலை விதிகள் இருக்கின்றன. உலகின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் தொகை இடதுபுற விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா, ஹங்காங், புரூனே, வங்காளதேசம், பூட்டான், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும், கென்யா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, மாலவி, ஜாம்பியா, நமீபியா, உகாண்டா, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வலதுபுறச் சாலைவிதிகள் பின்பற்றப்படுகின்றன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் தொடர்புடைய நாடுகள் இடதுபுறச் சாலை விதிகளிலிருந்து வலதுபுறச் சாலைவிதிகளுக்கு மாறிய வரலாறுகளும் உண்டு. சாலைவிதிகள் எப்படி தோன்றின? சாலை விதிகள் எப்படித் தோன்ற ஆரம்பித்தன என்பது ரொம்பவும் சுவாரசியமான விஷயம். மனிதன் இயல்பிலேயே வலதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்திருக்கிறான். அவன் குதிரைகளில் பயணிக்கிறபோது வலதுகாலைத் தூக்கிப்போட்டுக் குதிரைகளில் ஏறுவான். இயல்பிலேயே நீண்ட வாள்களும் குறுவாள்களும் இடதுபுறத்தில் வைத்திருப்பது வசதியாக இருந்திருக்கிறது. எதிரிகள் வருகிறபோது சடாரென வாளினை வலதுகையால் உருவுவதற்கும் இடதுபுறம் வாள்கள் இருப்பதுதான் சௌகரியம். சவாரியிலிருந்து இறங்குகிறபோது வலதுகாலைத் தூக்கிப் பின்வாக்கில் தரையில் கால் ஊன்றுவான். அதாவது இடதுபுறத்தில் இறங்குவான். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அவன் இடதுபுறச் சாலையில் பயணிப்பதுதான் பாதுகாப்பானதாக இருந்தது. ஒருவேளை சாலையின் வலதுபுறம் பயணித்தால் அவன் அவசரமாக இறங்குகிறபோது சாலையின் நடுவில் இறங்கவேண்டியதாக இருக்கும். இப்படி ஒருகாலத்தில் குதிரைவீரர்களால் தன்னிச்சையாக உருவானதுதான் இடதுபுறச் சாலைப் பயணம். இப்போதும் இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த சௌகரியங்கள் அப்படியே பொருந்தும். வலதுபுற பழக்கமாக எப்படி மாறியது இடதுபுறச் சாலை விதியானது பின் எப்படி வலதுபுறப் பழக்கமாக மாறியது என்பதும் இன்னொரு சுவாரசியமான தகவல்தான். கி.பி.1700 களில் பிரான்சு, அமெரிக்கா நாடுகளில் நிறைய குதிரைகள் பூட்டிய வண்டிகளில் பண்ணைப் பொருள்களை ஏற்றிச் செல்வார்கள். குதிரைகளைச் செலுத்துபவர்க்கென இருக்கை இருக்காது. முன்னால் வரிசையாகப் பூட்டியிருக்கும் ஏழு குதிரைகளில் இடது குதிரையில் அமர்ந்தபடி ஓட்டிச் செல்வார். வலது கையால் சாட்டையைச் சுழற்றி வலது பக்கம் இருக்கிற குதிரைகளைச் செலுத்துவார். இதுவும் சௌகரியம் சார்ந்த விஷயம்தான். எதிரே வருகிற வேறு டிரக்குகளின் வலதுபுறம் இவன் செலுத்துகிற வாகனத்தை இடித்துவிடக் கூடாது. இடதுபுறக் குதிரையில் அமர்ந்திருப்பவனுக்குப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கவேண்டுமெனில் இவன் செலுத்துகிற வாகனம் வலதுபுறமாகச் சென்றால்தான் வசதி. அதனால்தான் வலதுபுறமாக வாகனத்தைச் செலுத்துகிற வழக்கம் வர ஆரம்பித்தது. . இப்படித்தான் வலதுபுறச் சாலை விதிகள் வரலாயின. கி.பி.1789 ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சியில் பிரபுக்கள் எல்லாம் சாலையின் இடதுபுறமாக அணிவகுத்துச் சென்றனர். உழுகுடிகள் அனைவரும் வலதுபுறமாகச் சென்றனர். நெப்போலியனின் ஆட்சியை ஒட்டித்தான் பிரெஞ்சு நாட்டிலும் அவன் கைப்பற்றிய நாடுகளிலும் பெருமளவில் வலதுபுறச் சாலை விதிகள் வந்தன. கி.பி. 1794 இல் சட்டத்தின் மூலமாக பாரிசில் வலப்புறச் சாலைவிதிகள் அமலுக்கு வந்தன. அந்தந்த நாட்டின் சௌகரியத்திற்கு ஏற்றவாறும் அதன் முந்தைய வழக்கத்தின்படியும் அந்த நாடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாட்டின் சாலை விதிகளைப் பொறுத்தும் தமக்கு ஏற்ற சாலைவிதிகளைப் பின்பற்றுகின்றன. செஞ்சி சந்தை முந்திரிபழமும் கனடா சந்தை ஆக்டோபஸ் கறியும் - நா.வே.அருள் -செப்டம்பர் 15, 2019 பயணக்குறிப்பு இரவு முழுவதும் அடுத்தநாள் ஆச்சரியத்துக்குக் காத்துக்கொண்டிருந்தேன். இந்தக் கனவுடன் கூடிய காத்திருப்புத்தான் வழக்கமான விமானப் பயணிகளுக்கு ஏற்படும் ஜெட் லாகிங் என்கிற விஷயம். அதாவது இந்தியாவிலிருந்து கனடா போன பிறகு நமது உடல் பகல் இரவுக் குழப்பத்திற்கு ஆளாகி அங்கு பகலிலும் தூக்கம் வந்துவிடும். இரவில் விழித்திருக்க வேண்டியிருக்கும். இந்த ஜெட் லாகிங் எனக்கு ஏற்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. மகன் அருள்பாரதியின் நண்பர்கள் விநோத்குமார், விக்னேஷ் இருவரும் உடன் வர அருள்பாரதி, மருமகள் விஜய்தா, இணையர் ஹேமா சகிதம் ரிச்மாண்டு இரவுச் சந்தைக்குப் போவதாக முடிவானது. ஆசிய அளவில் மே மாதம் முதல் குறிப்பிட்ட மாதங்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் நடக்கிற இரவுச் சந்தை. சந்தை என்றதும் எனக்குக் கூட்டேரிப்பட்டுச் சந்தைதான் ஞாபகத்திற்கு வந்தது. எனது சின்ன வயதில் சந்தை என்றதுமே கருவாட்டு வாசம் அடிக்க ஆரம்பித்துவிடும். மைலம் சந்தையில் ஆடு விற்பதும் வாங்குவதுமாக துண்டுகள் மூடி பேரங்கள் நடந்துகொண்டிருக்கும். தரகர்களின் பாடு படுகுஷாலாக இருக்கும். செஞ்சி சந்தை மாடுகள் விற்பனைக்குப் பேர் போனது. செஞ்சி சந்தையிலிருந்து எனது அம்மாவைப் பெத்த ஆயா முந்திரிப் பழம் பலாப் பழம் வாங்கி முந்தானையில் முடிந்து வருவார்கள். இது அப்படிப்பட்ட சந்தை அல்ல. தீவுத்திடல் மாதிரியான ஒரு இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் ரிச்மாண்டு னைட் மார்க்கெட். நுழைவாயிலில் இளம்வயது பெண்கள் “ஸ்கிப் த லைன்” (வரிசையைத் தவிருங்கள்) என்று கூவிக் கூவி இருபத்து எட்டு டாலர் மதிப்பிலான கூப்பன்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நிற்காமல் உள்ளே போவதற்கு ஆறு பேருக்கான அல்லது ஒருவருக்கு ஆறு வாரத்திற்கான டிக்கட்டுகள்தாம் அவை. அதை வாங்கினாலும் வரிசையில் செல்ல வேண்டியிருந்தது. ஏராளமானோர் கார்களில் வருகிறார்கள். விதவிதமான கடைகள். வேடிக்கைக் காட்சிகள். மங்காத்தா வகையறா கட்டத்தில் காசு வைத்துப் பொருள்களை எடுத்துக் கொள்ளுதல். கூடைப் பந்துகள் எறிந்து கோல் போட்டால் இத்தனை டாலர்கள். காய்கள் எறிந்து பலூன்கள் உடைத்தல். துப்பாக்கிச் சுடுதல். வளையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் கழுத்தில் மாட்டி எடுத்தல். குழந்தைகளுக்கான நீர் விளையாட்டுத் திடல்கள். இத்யாதி. இத்யாதி. இதையெல்லாவற்றையும் விட வேறொரு விஷயம்தான் அங்கே மிக முக்கியமாக நடந்துகொண்டிருந்தது. அதுதான் உணவுச் சந்தை. ஆசியாவில் இருக்கும் அத்தனை உணவு வகைகளும் விற்பனைக்கு வந்திருந்தன. ஃபோர்க் முதல் பீஃப் வரை ஆக்டோபஸ் முதல் அத்தனை வகையான மாமிச வகை உணவுகளும் அங்கேயே சுடச் சுடச் செய்து தரப்பட்டன. மரக்கறி வகையெனில் மக்காச் சோளமும், தர்பூசணி, பைனாப்பிள் பழரசங்களும் ஐஸ் கிரீம்களும்தாம். சீன, ஜப்பான் நாட்டு உணவு வகைகள்தாம் ஏராளம். அனைவரும் கூட்டம் கூட்டமாகவோ, கும்பல் கும்பலாகவோ அல்லது குடும்பம் குடும்பமாகவோ மிகவும் மகிழ்ச்சிகரமாக உணவு அருந்திக்கொண்டே பேசிக் களித்துக் கொண்டிருந்தனர். எங்கெங்கும் வண்ணமயமான விளக்குகள். டிரம்ஸ் இசை நடத்திக் கொண்டிருந்த கனடா நாட்டு மாஸ்டர் டிரம்ஸ் சிவமணி போல ஒரு சிறுவன் டிரம்ஸ் வாசித்து அசத்திக் கொண்டிருந்தான். ஜோடி ஜோடியாகக் காதலர்கள். அது வண்ணமயமான விழாக் கோலம். அந்த இரவுச் சந்தை ஒரு பகலைப் போலக் காட்சியளித்துக்கொண்டிருந்தது. இன்னும் என்னென்னவோ விளையாட்டுகள். ஒருபுறம் குழந்தைகளுக்கான நீச்சல் குளம். இன்னொரு புறம் பெரிய குகை போல் வாயைத் திறக்கும் டைனோசர். அங்கும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் போல விதவிதமாக நடந்து கொண்டிருந்தன. மனம் சொர்க்கத்துக்குள் புகுந்தது போலத் திணறியது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது புரிய ஆரம்பித்தது. அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். வாழ்வில் மகிழ்ச்சியின் எல்லையை விஸ்தரிக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சின்ன வயதிலேயே அவர்களின் மகிழ்ச்சியை அடையாளம் காட்டுகிறார்கள். நத்தை, நண்டு, மீன் வகைகள், அத்தனை வகையான அசைவ உணவுகளையும் ருசிக்கத் தருகிறார்கள். ஆக்டோபஸ் உணவுதான் அங்கே மிகவும் சிலாகிக்கப்பட்ட உணவாக நிறைய பேர்கள் அந்த உணவகத்தையே அதிகம் சுற்றிச் சுற்றி வந்தார்கள். என் மகனும் நண்பர்களும் என் மருமகளுக்குத் தெரியாமல் அங்கே சென்று அடிக்கடி எட்டிப் பார்த்து வந்தார்கள். மருமகள், டேய், ஆக்டோபசுக்குத்தானே அலையுறீங்க என்று கிண்டலடிக்க, சீ .இல்ல என்று என் மகன் சொன்னதும் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தது. நினைத்துக் கொண்டேன். நல்லவேளை ஆக்டோபஸ் எந்த நாட்டின் புனிதச் சின்னமாக அறிவிக்கப் படவில்லை. மாட்டுக்கறி வைத்திருந்தார் என்கிற ஊர்ஜிதம் செய்யப்படாத செய்தியே ஓர் உயிர் சர்வ சாதாரணமாகப் பறிக்கப் படுகிறது. ஆனால், ரிச்மாண்டு இரவுச் சந்தையில் மனிதனைத் தவிர அத்தனைக் கறிகளும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் துணிச்சலாக உண்ண முடிந்தது. முழுவதுமாக இரவு கவ்விக்கொண்டது. வண்ண விளக்குகளின் சாம்ராஜ்ஜியம் கண்களைக் கவர்ந்தது. எல்லோருமே அங்கே சக்கரவர்த்திகளைப்போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். அந்த இரவுச் சந்தையில் விலை கொடுக்காமல் வாங்கிய எத்தனையோ விஷயங்களை எழுத்தில் வடித்துவிட முடியாது. வயிறு புடைத்து விட்டது. வெளியேறத் தயாராகிவிட்டோம். நுழைவாயிலில் வருகிறபோது “ஸ்கிப் த லைன்” (வரிசையைத் தவிருங்கள்) என்று கூவிக் கூவி இருபத்து எட்டு டாலர் மதிப்பிலான கூப்பன்களை விற்றுக் கொண்டிருந்த இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிகவும் சோர்ந்து போய்க் காணப்பட்டார்கள். சென்னையிலிருந்து திண்டிவனம் போகிறபோது வழியில் சுங்கச் சாவடிகளில் வேர்க்கடலை, நாவல் பழம், வெள்ளரிப் பிஞ்சுகள் ஏந்தியபடி வருகிற ஆண் பெண்களின் முகச் சாயல்களும் மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் முறுக்குப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி பேருந்தைத் தொடர்ந்து ஓடிவருகிற சிவப்பு உடை மனிதர்தகளின் சாயல்களும் அந்த இளம் ஆண் பெண்களின் முகங்களில் பார்க்க முடிந்தது. மனிதர்கள் வண்ணங்களில் வேறுபட்டிருக்கலாம். வறுமையின் சாயல்கள் ஒன்று போல் இருந்தன. வாழ்க்கை அவர்களை இப்படியொரு பணச் சேமிப்புக்கான வழியைத் திறந்து வைத்திருந்தது. இரவுச் சந்தையிலிருந்து திரும்பிவிட்டோம். அவர்களைத் திரும்பி பார்க்கும் திராணி எனக்கில்லை. -பயணிப்போம் ஜலதரங்கம் வாசிக்கும் ஜாஃப்ரி ஏரி - நா.வே.அருள் -செப்டம்பர் 22, 2019 கனடாவின் வான்கூவர் நகரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் சாலைகளிலும் நடக்கிறபோது ஒன்றைக் கவனிக்க முடிந்தது. அதிகம் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடிவதில்லை. ஒருமுறை மையப் பேருந்து நிலையத்தில் ஒரு ஓரமாக ஒரு பெண்மணியைப் பார்க்க முடிந்தது. அவரும் ஒரு அட்டையில் எழுதி கவுரவமாகப் பிச்சை கேட்டு அமர்ந்திருந்தார். அப்படிப் பிச்சை எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் போல தோற்றமளித்தனர். ஒருவேளை நான் பார்த்த ஓரிரண்டு நபர்கள் அத்தகையவர்களோ என்னவோ. ஓரிருவரைத் தவிர அதிக நபர்களைப் பார்க்க முடியவில்லை. ஒருமுறை ஒருவர் மிக போஷாக்கான நாய் ஒன்றினைக் கொஞ்சிக்கொண்டு ஒரு மெட்ரோ ரயில் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தார். எதிரே குளிரினைத் தாங்கும் வகையிலான படுக்கை. அந்தப் பிச்சைக்காரரின் நாய் பராமரிப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இன்னொரு இடத்தில் முகத்தைத் தாடிப் புதர்கள் அடர்ந்திருக்க, படுக்கையில் மிகக் கனமான புத்தகம் ஒன்றினைப் படித்துக்கொண்டிருந்தார் ஒருவர். புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரரை அங்குதான் பார்க்க முடிந்தது. வாழ்க்கை ஓர் வாசிப்பாளனைக் கைவிட்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டைப்போல பேருந்து நிலையம், மெட்ரோ நிலையங்கள் பிச்சைக்காரர்களின் வாசஸ்தலங்களாக இருக்கவில்லை. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரிய நகரமாக விளங்குவது வான்கூவர். இயற்கை எழில் நிறைந்த பிரதேசம். எங்கெங்கும் பச்சைப் பசேலென மரகதப் பாய் விரிக்கப்பட்ட புல்வெளிப் பிரதேசம். கறுப்பு நிறத்தில் அணில்களும் முயல்களும் ஒவ்வொரு பூங்காவிலும் பார்க்கலாம். பூங்காவை எப்படிப் பராமரிப்பது என்பது இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய கலை. அழகழகான செடிகொடிகள், புன்னகைக்கும் பூக்கள், வெட்டி நேர்செய்யப்பட்டப் புதர்கள், தாவர மலைகள்போன்ற மரங்கள். உள்ளே போனால் வெளிவரவே தோன்றாது. வான்கூவரிலிருந்து மூன்று மணிநேரத்தில் பெம்பர்ட்டன் பகுதியிலுள்ள ஜாஃப்ரி ஏரிக்குப் போகலாம். போகிற வழியில் மூன்று மணிநேரமும் நமக்குப் பார்க்கக் கிடைப்பது பச்சை சொர்க்கம். மரங்கள் என்றால் வகை வகையான மரங்கள். பெரும்பாலும் மேப்பிள் மரங்கள். அதனால்தான் மேப்பிள் இலை கனடாவின் தேசிய சின்னமாகவே இருக்கிறது. எங்கெங்கெல்லாம் சாலைகளில் பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறதோ, அல்லது சுற்று வேலிகள், எல்லாமே மரங்களால் ஆனவை. பிரதான நகரங்களின் சாலை ஓரங்களில் மண் தரையைப் பார்க்க முடியாது. மரத்தூள்களைக் கொட்டி வைத்திருப்பார்கள். அதனால்தான் தூசு இல்லாத நகரமாக இருக்கிறது. அழகின் குவியல்களாக அங்கங்கும் மலைகள். மலைகளை வெள்ளையடிக்க நினைத்துத் தோற்றுப்போனதுபோல் தெரியும் அதன்மேல் திட்டுத் திட்டாக இருக்கும் பனிப்பாளங்கள். வானம் உட்காருவதற்காகத் திட்டுத் திட்டாகப் போடப்பட்ட பனிப்பாளப் பாய்களாக கிளேசியர்கள். மலையுச்சிகள் இயற்கையின் ஊஞ்சல்கள்போலக் காட்சியளிக்கின்றன. இயற்கை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகத் தோற்றம் தரும். கனடாவிலோ அது நிர்வாணமாகக் காட்சி தரும். பருவ நிலை இயற்கையைக் கட்டிலுக்குத் தயார்படுத்துவதுபோலத் தயார்படுத்திவிடுகிறது. ஜாஃப்ரி ஏரியை வந்தடைகிறோம். கீழ், நடு மற்றும் மேல் ஏரிகள் மலையின் மடியில் அமுத ஏரியாக அலைபாய்கிறது. பெம்பர்டன் பகுதியின் வடக்குப் பக்கமுள்ள துஃபே ஏரிச் சாலையிலிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே கீழ் ஏரியைக் கண்டு களிக்கலாம். மலையின் அடிவாரத்தில் ஒரு மிகப் பிரம்மாண்டமான பச்சை சேலைதான் கீழ் ஏரி. அங்கிருந்து திரும்பி ஏரிக்கு இடதுபுற காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தால் மூன்றரை கி.மீ தூரத்தில் நடு ஏரி. ஒரு சிறு மரப்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களில் காட்டுப் பாதை மலை மீது ஏறத் தொடங்கும். குறுகிய பாதை ஒடுங்கலாக இருந்தாலும் ஏற முடிகிற அளவில் லகுவாகத்தான் இருக்கும். கால்களுக்கு சாகசம், கண்களுக்குத் தீவனம். ஏறுகிறபோது ஜாஃப்ரி அருவி இடதுபுறமாக ஓடும். அங்கிருந்து கீழ் ஏரி ஒரு பெரிய குளத்தைப்போலக் காட்சியளிக்கும். இன்னும் சிறிது தூரம். சமதளத்தில் நடந்து செல்லும் வகையில் பாதை. இப்படியே நடந்தால் இருபது நிமிடங்களில் இரண்டாவது சொர்க்கத்தை அடையலாம். முதலில் மரங்களுக்கு நடுவில் கூச்சத்துடன் ஏரி குளித்துக்கொண்டிருக்கிற மாதிரி தோன்றும். எதிரே போய் நின்றால் நிர்மலமான காட்சி. கீழ் ஏரியை விட இன்னும் சுத்தமாக, வெளிர் பச்சை வண்ணம். அங்கிருந்தபடியே கொஞ்சம் நிமிர்ந்தால் பளபளக்கும் பனிப்பாளங்கள். தகத்தகாயத் தகடுகள். அங்கிருந்து நகர மனம் வராது. கால் விடாது. நடு ஏரிக்கு முன்புறம் கொஞ்ச தூரத்தில் ஒரு மரப்பாலம். தொடரும் காட்டுப் பாதை. வழியில் நீரில் மிதக்கும் பெரிய மரம். அதன் மீது நடக்க வேண்டும். மேல் ஏரியையும் நடு ஏரியையும் இணைக்கும் ஆற்றுக்கருகில் மீண்டும் ஓர் அருவி. மீண்டும் காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தால் பதினைந்து நிமிடங்களில் ஒரு மரப்பாலத்தைக் கடந்தபின் மரங்களுக்கு மத்தியில் அழகான ஏரியை காணமுடியும். மேல் ஏரியைச் சுற்றி கொஞ்சம் நடந்தபின் மீண்டும் பாறைகளாலும் வேர்களாலும் பிணைந்த குறுகிய காட்டுப் பாதையை அடையலாம். அங்கிருந்து மேல் ஏரியையும் எதிரே தக தகவென தகக்கும் பனிப்பாளங்களையும் கவர்ச்சி மிகுந்த கருநிற மலை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும். பனித்தகடுகளுக்குக் கீழே ஏரியின் முடிவில் கேம்ப் அடித்துத் தங்குமிடங்கள் உள்ளன. அங்கு உணவு அருந்தியபடியே அருவியையும் ஏரியையும் பார்த்து ரசிக்கத் தொடங்கினால் லோகத்திலேயே சொர்க்கம் இருக்கிறது என்பதை எல்லோரும் நம்பலாம். என்ன அங்கு போவதற்குக் கொஞ்சம் பணம் வேண்டும். பணம் வைத்திருந்தாலும் அங்கு போகவேண்டும் என்ற மனம் வேண்டும். -பயணிப்போம் எல்லா கனடியன்களும் அமைதியானவையல்ல - நா.வே.அருள் -செப்டம்பர் 29, 2019 […] கனடாவின் வான்கூவர் நகரத்தின் மையத்தில் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது ப்ளோடெல் கன்சர்வேட்டரி (BLOEDEL CONSERVATORY) என்ற பறவைகள் மற்றும் தாவரங்களின் சரணாலயம். எலிசபெத் ராணி பூங்காவின் நடுவில் மிகப் பெரிய கண்ணாடிக் கூண்டுக்குள் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் அக்ரிலிக் கண்ணாடிகளால் இணைத்து பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வறட்சிப் பகுதிக்கு ஏற்றவாறு அலுமினியங்களைப் பொருத்தியுள்ளனர். கண்ணாடி கூண்டுக்குள் செயற்கையாக வெப்பத்தை உருவாக்கிப் பராமரிக்கிறார்கள். அந்தப் பூங்காவுக்குள்ளேயே போன்சாய் அருவி ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். வழக்கம் போல கருப்பு அணில்கள். கறுப்பு முயல்கள். சரணாலயக் கண்ணாடிக் கூண்டுக்கு எதிரில் மூன்றரை அடி உயர மதில்சுவர் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் வான்கூவர் முழுவதையும் பார்க்க முடியும். கூண்டுக்கு வலது புறத்தில் நீர் வழியும் பெரிய குளத்தில் நடனமிடும் தண்ணீர்க் குழாய்கள். உள்ளே நுழைந்ததும் பறவைகளின் படம் அச்சிடப்பட்ட வண்ணத்தாளினையும் பார்த்த பறவைகளின் கீழ் டிக் செய்ய ஒரு பென்சிலையும் கொடுக்கிறார்கள். இடதுபுறத்திலிருந்து நமது இயற்கை தரிசனம் தொடங்குகிறது. விதவிதமான தாவரங்களையும் அங்கங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பறவைகளையும் பார்வையிட ஆரம்பிக்கலாம். முதலில் ஒரு சிட்டுக் குருவி வரவேற்றது. நம் ஊரில் ஒழித்துக் கட்டிய சிட்டுக்குருவியை வான்கூவர் வந்து பார்க்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் நகர்ந்ததும் பச்சை சிறகுகள் கொண்ட பஞ்சவர்ணக்கிளிகள் (?) மாகா என்றழைக்கப்படும் இரட்டைக் கிளிகள். விரைவில் வளர்ந்துவிடக்.கூடிய சீன மூங்கில் மரங்கள். பூச்சிகள் உண்ணும் தாவரங்கள், எங்கும் வாழக்கூடிய எலிகள், விதவிதமான பறவைகள், தாவரங்கள் என நூறு வகையான பறவைகளும், ஐநூறு விதமான தாவரங்களும் மனிதர்களின் தொல்லை இல்லாமல் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றன. பிளான்கா என்கிற பச்சைக்கிளியும் ரூடி என்கிற சாம்பல்நிற ஆப்பிரிக்கப் பச்சைக்கிளியும் சொன்னதைச் சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன. பேசிவிட்டோம் என்று போக எத்தனித்துத் திரும்பும்போது நாமே எதிர்பார்க்காத விதமாக ‘பை பை’ சொன்னது பிளான்கா. பனியில் உறைந்து பழகியிருந்த நாங்கள் முதல் முதலாக அந்த வெப்ப சீதோஷ்ண நிலைக் கூண்டுக்குள் கொஞ்சம் உஷ்ணத்தில் உறைந்து போனோம். பார்த்து முடித்துத் திரும்பவும் வான்கூவர் நகரம் வந்த உடனே அருள்பாரதியும் விஜயதாவும் அழைத்துச் சென்ற இடம் டவுன் டவுன் (Down Town). ஒவ்வொரு நகரத்திலும் ஒரு டவுன் டவுன் இருக்கும். அதுதான் அந்த நகரத்தின் இதயப் பகுதி போல. நகரத்தின் மையம். உயர உயரமான கட்டடங்கள். வழுக்கிக் கொண்டுபோகும் சாலைகள். வண்ணமயமான வணிக நிறுவனங்கள். கண்களில் ஜாலம் காட்டும் கலை வளாகங்கள். வான்கூவரில் நாங்கள் தங்கியிருந்த ரிச்மண்ட் பகுதியிலிருந்து பிரிட்ஜ்போர்ட் நிலையம் சென்று அங்கிருந்து டவுன் டவுனுக்குப் போக வேண்டும். கனடா பிளேஸ் (Canada Place) என்கிற சிறிய துறைமுகம் இருக்கிறது. அங்கு மாஸ்டாம் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அங்கிருந்து கலிபோர்னியா செல்வதற்குத் தயாராக இருந்தது. பயணிகள் வந்து கொண்டிருந்தனர். அந்தக் கப்பல் டைட்டானிக் கப்பலின் மினியேச்சர் போலத் தோன்றியது. அருகில் இருந்த துறைமுகப் பகுதியில் தரையில் கனடாவின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோதே அங்கு ஒரு பெரிய மயில் கழுத்து வாத்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருந்தது. ஒரு சீமாட்டி நாயைச் சங்கிலியில் பிடித்தபடி வந்துகொண்டிருந்தாள். அந்த மயில் கழுத்து வாத்து முதலில் நாயை விரட்டியது. சிறிது நேரத்தில் ஒரு பெண்ணைத் துரத்தியது. அங்கிருந்த ஒரு தகவல் பலகை கண்ணில் பட்டது. அதில் “எல்லா கனடியன்களும் அமைதியானவையல்ல” என்று குறிப்பிட்டிருந்தது. கனடியன்கள் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தது அந்த மயில் கழுத்து வாத்துகளைத்தான். அந்த கப்பல் நின்றிருந்த இடம் அமைதியாக அலையடித்துக் கொண்டிருந்தது. அத்தனை அமைதி நிலவிய அந்த இடம்தான் ஆழம் நிறைந்த பசிபிக் மகா சமுத்திரம். அந்த அமைதியான பசிபிக் கடலின் நுனி முகத்தைப் பார்த்தபடி நகர்ந்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு இசைக் கலைஞன் ஒற்றை மைக்கின் முன்பு பாடியபடியே கிதார் இசைத்துக்கொண்டிருந்தான். கீழே கிதாரின் உறை விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் டாலர் நாணயங்கள் ஒன்றிரண்டு விழுந்து கிடந்தன. ஏதோ என் மனம் கனத்துப் போயிருந்தது. வருகிற சுரங்கப் பாதையிலும் இன்னொரு இசைக் கலைஞன் இதேபோல கிதார் இசைத்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அநாதையாக இசை ஒவ்வொரு நடைபாதை வாசிகளிடமும் கையேந்துவது போலத் தோன்றியது. எதிரே கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது உலக வர்த்தக மையம். அதன் தாழ்வாரத்தில் நடந்துசென்றோம். நாங்கள் மட்டுமா? உலகமே அதன் தாழ்வாரத்தில்தான் ஒண்டிக்கொண்டிருந்ததுபோல பட்டது. -பயணிப்போம் கனடா குப்பை கிளறி எப்படி இருப்பார்? -அக்டோபர் 6, 2019 […] ஒவ்வொரு நகரத்திலும் ஒரு டவுன் டவுன் (Diown Town) இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்திருந்தோம். அதுதான் நகரின் வர்த்தக மையமாக இருக்கும். தொழில் வளர்ச்சியின் ஜீவநாடியாய் இருக்கும். அந்தப் பகுதியில்தான் உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் உலக வர்த்தக மையத்தின் கட்டடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. அதன் அடிவாரத்தின் எதிரில்தான் ஒரு கிதார் இசைக் கலைஞன் தனது தொப்பியை டாலர்களால் நிரப்பப்போகும் வழிப்போக்கர்களுக்காக வாசித்துக்கொண்டிருந்தான். கலை பொருளாதார வீதியில் மண்டியிட்டுக் கிடந்ததுபோலத் தோன்றியது. நகரம் நவீன நாகரிகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. உலகமெல்லாம் கடை திறந்து வைத்திருக்கும் கார்ப்பரேட்டு முதலாளிகளின் பன்னாட்டு வங்கிகள், நட்சத்திர விடுதிகள், கேசினோக்கள், விதவிதமான பொம்மைக் கடைகள், அலங்காரப் பொருள்கள் விற்கிற நிறுவனங்கள், உயர்தர ஆடை நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் வானளாவ நின்றுகொண்டிருந்தன. நிலவின் மறுபுறம் இருளாகத்தானே இருக்கும்? எங்களுடன் வந்திருந்த ஒருவர் சொன்னார்… போதைப் பொருள்களின் நடமாட்டமும், பெண்களை வைத்து நடத்தும் வாணிபமும் இதே இடத்தில்தான் மறைவாக நடந்துகொண்டிருக்கின்றன, இதே பகுதியில்தான் ஒரு பிச்சைக்காரர் தடித்த கம்பளி ரஜாய் உள்ளிட்ட ஏற்பாட்டோடு படுத்தபடியே ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் டாலர்கள் போடுபவர்களுக்கான அவரது தொப்பி. நம்முடைய நாட்டில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் வீடு இல்லாமல் காலத்தை ஓட்டும் பலரைப் பார்க்க முடியும். ஆனால், உடலை ஊசிகளால் துளைத்தெடுக்கும் குளிர்ப் பிரதேசத்தில் இவர்களைப் போன்றவர்கள் எப்படி வீடு இல்லாமல் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் வீடற்றவர்களுக்காக வாடகைக்கு வீடு எடுத்துக்கொள்ள வசதிகள் செய்து தந்ததாம் கனடா அரசு. எப்போதோ குறித்திருந்த அந்தப் பணத்தின் அளவு இப்போது போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலர் தெருவிலேயே ஸ்கேட்டிங் செய்துகொண்டிருந்தார்கள். மிக வேகமாக வந்து திடீரென படிகளில் வழுக்கியபடியே ஏறுகிறார்கள். இளைய வயசுச் சாகசம் மயிர்க் கூச்செறிந்தது. விழுந்தால் என்னாவது என்று யோசிக்கவே கூடாது. யோசித்தால் ரசிக்க முடியாது. அப்படி வருபவர்கள் கால் சக்கரங்களில் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். வேறு எதையுமே அவர்கள் கவனித்தாகத் தெரியவில்லை. விளையாட்டு வீரர்கள் போல் தோற்றமளித்த இளைஞர்களும், யுவதிகளும் தலையில் ஹெல்மட் அணிந்தபடி சர்வ சாதாரணமாகச் சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர். அங்கங்கும் இரண்டு மூன்று சக்கரங்கள் அடுத்தடுத்துப் பொருத்தியிருந்தார்கள். அதில் சிலர் தங்கள் சைக்கிளை வைத்துப் பூட்டிச் செல்கின்றனர். சைக்கிள்களைப் பொது இடங்களில் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடு. அங்கு ஒரு பெரிய கலையரங்கம் இருந்தது. அன்றைக்கு வெள்ளிக் கிழமை என்பதாக நினைவு. அன்று ஒருநாள் பார்வையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. நன்கொடையாக ஐம்பது டாலர்கள் கொடுத்து நான்குபேரும் உள்ளே நுழைந்தோம். ஒரு மாடியில் முழுக்க முழுக்கப் பெண்களின் நிர்வாண பிம்பங்களைத் தீட்டி வைத்திருந்தார்கள். அங்கு கூச்சம் ஒரு பிரச்சனையே இல்லை. வெகு இயல்பாக ரசித்துச் செல்கிறார்கள். மற்ற இரண்டு மாடிகளில் ஒன்றில் பொறியியலை இணைத்த ஓவியக் கூடம். முழுக்க முழுக்க இரும்புப் பொருள்களை இணைத்து இணைத்து வட்டமும் கூம்பும் சேர்ந்தது மாதிரி ஒரு பெரிய வடிவத்தை வடித்திருந்தார்கள். அதனை ஊடுருவி உள்ளே செல்வது மாதிரி ஏராளமான விளக்குகள். வெளியே இருந்து பிரம்மாண்டம் காட்டிய அந்த வடிவத்துக்குள் சென்று பார்த்தால் மிகச் சின்னதாகத் தோற்றம் காட்டுகிறது. ஏழெட்டு முறை “உள்ளே வெளியே” போய்ப் பார்த்த பிறகும் அப்படியே தான் தெரிந்தது. பௌதிகத்தை இணைத்து ஓவியத் திறனை வேறு விதமாகப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு இடத்தில் வேதியலையும் ஓவியத்தையும் இணைத்துக் கலை வெளிப்பாட்டினைக் காட்டியிருந்தார்கள். பிறிதொரு இடத்தில் சப்த ஜால வேறுபாடுகள். இப்படி அந்த அரங்கம் முழுவதும் விஞ்ஞானத்தின் துணையுடன் கலையை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் ஒரு ஓவியக் கூடம். விற்பனைக்காகப் பல்வேறு ஓவியங்கள், சிலைகள், பொம்மைகள், பொருள்கள். ஒரு மூன்று மணிநேரத் திரைப்படத்தைப் பார்த்துவந்த களைப்பு கண்களைத் தின்ன ஆரம்பித்தது. வெளியே வந்தோம். அரங்கத்தையொட்டிய ஒரு தாழ்வான பகுதியில் இளைஞர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். எல்லொருமே மைக்கேல் ஜாக்சன்களாகவும், பிரபு தேவாக்களாகவும் இருந்தார்கள். பெண்களும் உடன் மிகச் சிறப்பாக நடனம் ஆடினார்கள். பக்கத்தில் ஒரு இசைப் பெட்டி ஒலித்துக் கொண்டிருக்க தன் நிலை மறந்த வெறிக் கூத்து என்பார்களே அப்படியொரு வேகத்தில் சுழல் நடனம். அங்கு ஒரு உணவு வளாகத்தில் உணவை முடித்துக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ரயில் நிலையத்தில் ஒருவரைப் பார்த்தேன். அவர் மிக நேர்த்தியாக உடையணிந்திருந்தார். இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய பைகளில் காலி குளிர்பானக் குப்பிகளையும் இதர நெகிழிக் குப்பைகளையும் சேகரித்துக் கொண்டிருந்தார். அவரும் காம்பஸ் கார்டு எனப்படும் பயணி அட்டையை உபயோகித்துத்தான் ரயிலேறுகிறார். எங்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். எல்லா கனடா மக்களும் எதிரில் நேருக்கு நேர் பார்க்கிறபோது ஹாய் சொல்லி புன்னகைக்கிறார்கள். ஆனால் யாரும் பேசுவதில்லை. ஹாய் சொன்னாலே பேசிவிட்ட திருப்தியில் நகர்ந்துவிடுவார்கள் போலும். இந்த நபர்தான் எங்களுடன் உரையாடினார். இவர் மட்டும்தான் தானாகப் பேச முன்வருகிறார். நம்மூரில் ஒரு கோணியைப் பின்னால் போட்டுக் கொண்டு நாலைந்து நாய்கள் குரைத்துக் கொண்டேவர ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகக் கிளறி வாழ்க்கை நடத்துகிற அந்த நபர்கள் என் கண்முன் கணநேரம் தோன்றி மறைந்தனர். வீட்டிற்கு வந்தும் உறங்க வெகுநேரமாயிற்று. டவுன் டவுனின் அத்தனைக் காட்சிளும் மனதில் பொம்மைகள் போல ஊர்ந்து சென்றன. -பயணிப்போம் சால்மன் மீன்களால் புகழ்பெற்ற கிராமம்- நா.வே.அருள் -அக்டோபர் 27, 2019 […] பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் நகருக்கு அருகிலேயே 1880 இல் ஒரு சிறு நகரத்தை வில்லியம் ஹெர்பர்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இப்போது ஸ்டீவஸ்டன் என்கிற மீனவர் பகுதி. ஃபிரேசர் ஆற்றின் தென் கரையோரம் இருக்கும் இந்த கிராமம்தான் சால்மன் மீன் பிடிப்பு மையமாக இருக்கிறது. இந்த இடம் ரிச்மாண்டு லூலூ தீவுக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ஒருமுறை கனடா தின (ஜூலை 1 ஆம் நாள்) விழா இங்கே ஸ்டீவஸ்டன் சால்மன் விழாவாக நடந்திருக்கிறது. பசிபிக் சமுத்திரத்தில் இருந்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு ஆற்றின் வழியாக முட்டையிடச் செல்லும் சால்மன் மீன்களைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் மீனவர்கள். மீன்கள் என்று சொன்னதும் அருள்பாரதி சொன்ன கனடாவின் ஐமேக் திரையரங்க அனுபவம் நினைவுக்கு வந்தது. பசிபிக் சமுத்திரத்தின் கரையில் கனடா பேலஸூக்கு முன்னால் ஐமேக் திரையரங்கம் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரையரங்கத்திற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சிறப்புப் படங்களையும் முப்பரிமாணப் படங்களையும்தான் பார்க்க முடியுமாம். திரையரங்குக்குள் செல்கிறபோதே முப்பரிமாணக் கண்ணாடி கொடுப்பார்களாம். ஒருமுறை அவன் கடல்வாழ் மீன்கள் பற்றிய சிறப்புப் படம் பார்த்ததாகச் சொன்னான். மீன்கள் கையில் பிடிபட்டு நழுவிச் செல்வதுபோலவும், சுறா மீன்கள் வாயைத் திறந்துகொண்டு கொல்ல வருவது போலவும் இருக்குமாம். ஃபிரேசர் ஆற்றங்கரையோரத்தின் ஸ்டீவஸ்டன் மீனவ கிராமத்தில் சால்மன் மீன்கள் குழந்தைகளைப் போன்று நீந்திச் சென்றன.கிராமத்தையொட்டி ஒரு கட்டடம் இருந்தது. அங்கு ஆயுதங்கள் போலவும் பல்வேறு பொம்மைகளின் வடிவிலும் வெளியே வடிவமைத்து வைத்திருந்தனர். எதிர்ப்புறத்தில் மிகவும் பிரபலமான பீட்சா கடை ஒன்றிருந்தது. தேவையைச் சொன்னதும் சுடச்சுட பீட்சா ஒன்று செய்து தந்தார்கள். உண்மையிலேயே அந்தச் சுவை பிரத்யேகமாகத்தான் இருந்தது. அதில் நிரப்பப்பட்டிருந்த சால்மன் மீன்கள் தன் ருசியை அதிகரித்துத் தந்திருக்குமோ என்னவோ? 1877-1878 ஆம் ஆண்டுகள் வாக்கில் நியு பிரன்ஸ்விக் என்கிற பகுதியிலிருந்து தனது குடும்பத்துடன் வந்த மேநோ ஸ்டீவ்ஸ் என்கிறவர் நினைவாக இந்த கிராமத்திற்கு ஸ்டீவஸ்டன் கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளது.1889 இல் ஸ்டீவின் மகன் வில்லியம் ஹெர்பர்ட் ஆல் உருவாக்கப்பட்டதுதான் இந்த கிராமம். சால்மன் மீன் பிடிப்புத் தொழில் 1871 இல் தொடங்கியது. 1890 ஆம் ஆண்டு வாக்கில் 45 மீன்பிடி மையங்கள் இருந்தன. சால்மன் மீன்களால்தான் இந்தப் பகுதி இவ்வளவு வளம் பெற்ற பகுதியானது. அதனால்தான் சால்மனோபாலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோடையிலும் ஜப்பான், சீனா, கனடா நாட்டு முதல் (ஆதி) குடிமகன்கள், ஐரோப்பிய மீனவர்கள், பதப்படுத்தும் தொழிலாளிகள் என இந்த கிராமத்தை வந்து சூழ்ந்து விடுகிறார்கள். ஆண்டு முழுவதும் இங்கேயே தங்கித் தொழில் செய்கிறார்கள். இது மீன்பிடியோடு நின்றுவிடுவதில்லை. இதன் தொடர்பாகக் கப்பல் கட்டுதலும் படகு கட்டுதலும் நடைபெறுகின்றன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதப்படுத்திய சால்மன் மீன்களுக்காக இங்கு நல்ல கிராக்கி இருக்கிறது. முதல் உலகப் போருக்கு முன் இந்த கிராமம் சால்மனோபாலிஸ் என்றுதான் அழைக்கப்பட்டதாம். இது வான்கூவர் நகருக்கே போட்டியாகக் கருதப்படும் நிலையிருந்தது. ஆனால் மீன் பதப்படுத்தும் தொழில் நலிவடையத் தொடங்கி 1990 ஆண்டு வாக்கில் தனது தொழில் செல்வாக்கை இழந்துவிட்டது. அதனால்தான் முதன் முதல் இந்த கிராமத்தைப் பார்க்கிறபோது என்னையறியாமலே ஒரு சிதைந்த கனவு ஒன்றினைக் காண்பது போலத் தோன்றியது. இன்று ஜியார்ஜியா வளைகுடாவில்தான் பதப்படுத்தல் தொழில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தப் புதிய இடம்தான் 1994 இல் கனடாவின் தேசிய வரலாற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. கனடாவின் சிறந்த தேசிய வரலாற்றுப் பகுதிக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய கனடாவினர் ஸ்டீவஸ்டன் கிராமத்தின் பெரும்பான்மையான மக்களில் கணிசமானவர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப் போர்தான் பெருமளவில் இந்த மக்கள்தொகை குறைவதற்குக் காரணமானது. ஏனெனில், பெரும்பான்மையானவர்கள் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப் படவோ, கண்காணிப்புக்கு உள்ளாக்கவோ படவேண்டிய சூழல். எனினும் இன்னும் குறிப்பிட்ட அளவில் ஜப்பானியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜப்பானிய ஜூடோ மற்றும் பிற வீரவிளையாட்டுக்கலை மையங்கள் இன்றும் ஸ்டீவஸ்டன் கிராமத்தின் அடையாளமாக இருக்கின்றன. இன்று மீன்பிடி துறைகள் அங்கிருந்தாலும் பெரும்பாலும் அந்தப் பகுதி வணிக மையமாகவும், சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. அதுமட்டுமல்ல, இங்கு திரைப் படங்களுக்காகவும், தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் படப்பிடிப்புகள் நடத்துகிறார்கள். சரி, மீன்பிடி கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்று அருள்பாரதியிடம் கேட்டேன். இவ்வளவு நேரம் நாம் பார்த்ததுதான் மீன்பிடி கிராமம் என்றான். ஆச்சரியமாக இருந்தது. அகல அகலமாக வீதிகளை ஒட்டிய பெரிய பெரிய வீடுகள்தான் மீனவர்களின் வீடுகள் என்றறிய முடிந்தது. மீனவர் கிராமம் என்றதும் வெறும் குடிசைகள்தான் என்கிற கற்பனைக்கு நான் மட்டுமா பொறுப்பு? -பயணிப்போம் மெரினா கடற்கரையும் கேரி முனைப் பூங்காவும் -நவம்பர் 3, 2019 […] சென்னை மெரினா கடற்கரையை ஞாபகப்படுத்திய இடம் கனடாவில் உள்ள கேரி முனைப் பூங்கா. தலைநகர் வான்கூவர் ரிச்மான்ட் தென்பகுதியில் திடீரென மனதைக் கிளறும் கிராமத்து வாசம். மெரினாவில் நீச்சல் குளத்தின் பின்பகுதியையும் அதன் தென்பகுதியையும் ஓர் எழுபத்தைந்து ஏக்கர் நிலமாக விஸ்தரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் பகுதி. ஏதோ ஓர் இனம்புரியாத மண்வாசம். உடனே அங்கங்கும் உலர்ந்த காற்றில் பரவும் சிறுநீர் கமறல்களும் நினைவுக்கு வரக்கூடாது. ஆள் இல்லாத புதர்கள் ஏராளம். ஆனால் அதற்கு முன் நின்று ஒற்றை மழையடிக்கும் ஒருவரைக்கூட அங்கு பார்க்கமுடியாது. அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அனைத்துப் பொது இடங்களிலும், உணவு விடுதிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேண்டிய அளவுக்கு மிகவும் சுகாதாரமான கழிவறைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் இருக்கும் சுத்தத்துடன் ஒவ்வொரு கழிவறையையும் காணமுடியும். நம்மூரில் அவசரத்துக்கு ஒதுங்க வேண்டுமென்றால் ஒரு கழிப்பறைக் கட்டடம் கூடக் கண்ணில் தென்படாது. அப்படியே அபூர்வமாக இருந்தாலும் உள்ளே போய் வருவதற்குள் ஓமளித்துக் கொண்டு வரும். முற்றும் முழுதுமான தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்டீவஸ்டன் கிராமத்து மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம்தான் கேரி முனைப் பூங்கா (ழுயசசல ஞடிiவே ஞயசம). இந்த நிலப் பகுதி 1827 இல் ஹட்சன் பே கம்பெனியின் முன்னாள் துணை ஆளுநராக இருந்த நிக்கோலஸ் கேரி என்பவரை கவுரவிக்கும் விதமாக கேரி முனைப் பூங்கா என்று பெயரிடப்பட்டது. கனடாவில் ஒரு தவிர்க்க முடியாத நிறுவனமாக இருந்த இந்த ஹட்சன் பே நிறுவனம்தான் ஃபிரேசர் ஆற்றின் முகத்துவாரத்தைத் தனது கப்பல் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டது. மனிதர்களை விடுங்கள். நாய்கள் கூட கண்ட இடத்தில் மலம் கழித்துவிட முடியாது. தெருநாய்கள் அங்கு கிடையாது. நிறைய நபர்கள் கழுத்தில் பட்டை கட்டிய வளர்ப்பு நாய்களைக் கயிற்றில் பிடித்தபடி அங்கங்கும் காட்சியளிப்பார்கள். வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்கள் பூங்காவின் முகப்பில் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நாயின் கழிவுகளை நாய் வளர்ப்பவர்கள் அந்தப் பைகளில் சேகரம் செய்து கழிவிடத்தில் இட்டுவிட வேண்டும். இதை மீறுபவர்கள் விலங்குகள் கட்டுப்பாட்டு விதிமுறை எண் 7932-ன்படி தண்டனைக்கு உள்ளாவார்கள். இந்தப் பகுதியில் ஒரு நீண்ட கால்வாய் மாதிரி இருந்தது. ஏராளமான மீன்பிடிக் கப்பல்கள் அங்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்றும் 600 மீன்பிடிக் கப்பல்கள் இயங்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். கேரி முனைப் பூங்காவின் பல இடங்களில் மிகவும் தடிமனான மரத்துண்டுகளால் இருக்கைகள். உணவு வகைகளைக் கடித்தபடியே (ஹாட் டாக் கள், பேகன்கள் வகையறா) அந்த இடத்தை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ரசிப்பதற்கென்று ஒரு மனத்தை ஒவ்வொருவரிடமும் காணமுடியும். கனடாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மணிக்கணக்காக ஒவ்வொரு இடத்தையும் பொறுமையாகச் சுற்றிப் பார்க்கிறார்கள். இரவு ஒன்பது மணிக்குத்தான் இருட்ட ஆரம்பிக்கிறது. இந்த கேரி முனைப் பூங்காவில் சூரிய அஸ்தமனம் மிகவும் பிரபலம். பகலவன் படுப்பதெற்கென்றே பசிபிக் கடல் மெத்தைபோல குவிந்து மேல்நோக்கி வளைந்து கொடுப்பதுபோல ஒரு தோற்றம். அசந்து போனேன். நாள் முழுதும் சூரிய அஸ்தமனம் நடந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று மனம் ஏங்கியது. ஓரிடத்தில் ஒரு உலோகத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்ணில் பட்டது. முதல் முதலாக ஜப்பான் நாட்டிலிருந்து கனடாவுக்கு வந்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கியி குணோ (ழுஐழநுஐ முருசூடீ) இந்த இடத்தில்தான் கரையேறியிருக்கிறார். அந்த நிகழ்வின் நூற்றாண்டு நினைவாக 1988 ஆம் ஆண்டில் நிறுவியிருக்கிறார்கள். வந்த குடியேறியைக் கொண்டாடும் வரலாறும் புதியதாகத்தான் இருக்கிறது. இவரது பெயரில் ஒரு தோட்டம் அமைத்துப் பராமரிக்கப் படுகிறது. வந்தவர்கள் அனைவரின் நாடாக மாறிப்போனதால் கனடாவின் முதல் குடிமகன்கள் இன்றைக்கு வெறும் ஐந்து சதமானம்தான். இந்தப் பூங்கா அமைந்திருப்பதே ஸ்டீவஸ்டன் மீனவர் ஊரின் கடைசியில்தான். மீனவர்கள் என்றால் நம்நாட்டு மீனவர்களையும் அவர்கள் வாழ்வதற்கான கிழிந்துபோனக் கீற்றுக் குடிசைகளையும் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. இங்கு மீனவர் என்றால் அவர் எந்திரப் படகை வைத்துக்கொண்டு வசதியாக வாழ்பவராக இருக்கிறார். மீன்பிடித்துறை இருக்கும் இடத்தில் மாலை 8 மணி முதல் 9 மணி வரைப் பார்த்ததில் மீன்நாற்றமே வரவில்லை. மீன்வாசம் வராத மீன்பிடித் துறையா? ஆச்சரியமாகத்தான் இருந்தது. கவிச்சை இல்லாததற்குக் காரணம் அறிவியல் முன்னேற்றத்தைத் தொழில்துறையில் கடைப்பிடித்து வருவதல்லாமல் வேறென்ன? முழுக்க முழுக்க மீன்பிடித் தொழிலில் தொழில் நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறார்கள். கடற்கரையை ஒட்டினாற்போலவே ஒரு மீன் வலை பின்னும் ஊசியின் உலோகச் சிலையுடன் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தும் திசைகாட்டியையும் நினைவுச் சின்னமாக நிறுவியிருக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் தேதியிட்ட நினைவுக்குறிப்புத் தகவல் பலகை அங்கிருக்கிறது. தொழிலில் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் சமூக வளர்ச்சியில் பங்களித்து இறந்துபோன மீனவர்களின் நினைவாக இந்தச் சின்னம் நிறுவப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நினைவுச் சின்னத்தின் அடிப்பகுதியில் ஒவ்வொரு மீனவரின் பெயரும் குறிப்பிடப் பட்டிருந்தது. மெரினா கடற்கரையையும் மீனவர்களின் நிலையையும் பார்த்த ஒருவனுக்கு இதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்ததில் வியப்பில்லை. வெகுநேரம் அங்கேயே உறைந்து போய் நின்றிருந்தேன். கண்முன்னே ஆவியாகிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வியர்வைத் துளிகளின் வாசமடித்தது. நம்நாட்டு மீனவர்களின் துயரங்களை மனம் பட்டியலிட்டுப் பார்த்தது. நம் நாட்டுக்கும் கனடாவுக்கும் உண்மையிலேயே வெகுதூரம்தான். அந்த தூரம் வெறும் ஆகாய விமானப் பயணத்தின் மூலம் கண்டடைய வாய்ப்பே இல்லாத மானுட தூரம் -பயணிப்போம் கேல்கரி – கனடாவின் கலாச்சாரத் தலைநகரம் -நவம்பர் 10, 2019 […] கனடாவின் அல்பெர்டா மாநிலத்திற்குப் பயணமானோம். பயணம் என்றாலே நம் ஊரைப்போல கோடை வறுவல் இல்லாததால் மனசுக்கு இதமாகவே இருந்தது. வழியெல்லாம் மரங்கள் வரவேற்பளித்தன. பூங்காக்கள் மடி தந்தன. பளிச்சென்று முகம் கழுவிய புல்தரைகள். பார்க்கப் பசுமையாக இருந்ததால் பயணமும் இனியதாகவே இருந்தது. மாநிலம் விட்டு மாநிலம் போனாலே பெரும்பாலும் விமானப் பயணம்தான். அல்பெர்டா கால்கரி நகரத்திற்குப் போனோம். கனடாவின் ராக்கி மலைத்தொடரில் பவ் ஆறும் எல்பவ் ஆறும் சந்தித்துக் கொள்ளும் தென்பகுதியில் இருந்த நகரம். அல்பெர்டாவின் மிகப் பெரிய நகரமே கால்கரிதான். டொரோன்டோவுக்கும் மான்ட்ரீலுக்கும் அடுத்தபடியாக மூன்றாம் பெரிய நகராட்சி இது. எரிசக்தி, நிதி சேவைகள், திரைப்படம், தொலைக்காட்சி, போக்குவரத்து, தொழில் நுட்பம், உற்பத்தி ஆலைகள், மருத்துவம், சுற்றுலா போன்றவை இந்நகரத்தின் பிரதான செயல்பாடுகள். ஒரு காலத்தில் கேல்கரி நகரத்தில் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்ததால் 1896 முதல் 1914 வரையிலும் வேளாண்மைக்கும், பண்ணைகள் வைப்பதற்கும் இலவசமாக நிலங்கள் வழங்கினார்கள். எங்கிருந்தெல்லாமோ மக்கள் குவியத் தொடங்கினார்கள். 1912 ஆம் ஆண்டு நான்கு சிறிய பண்ணையார்கள் சேர்ந்து ஒரு வேளாண்மை கண்காட்சி நடத்தினார்கள். அது இன்றளவும் ஒவ்வொரு ஜூலை மாதமும் கேல்கரி நெரிசல் என்று கொண்டாடப்படுகிறது. உலகிலேயே இதுதான் மிகப் பெரிய வேளாண் கண்காட்சியாம். கேல்கரியின் இன்றைய முக்கியத்துவம் எண்ணெய்க் கிணறுகளால் வந்தது. இங்கு கனடாவின் 95ரூ எண்ணெய் உற்பத்தி நடந்ததால் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வளர்ந்தது. வேலை வாய்ப்புகள் பெருகியது. வானை முட்டும் கட்டடங்களும் அலுவலகங்களும் கட்டப்பட்டன. கேல்கரி நகரம் ஜொலிக்க ஆரம்பித்தது. மக்கள் தொகையில் ஏறக்குறைய 60 சதவிகிதம் ஐரோப்பியர்களாக இருக்கிறார்கள். முப்பத்தாறு சதவிகிதமளவு வெள்ளைக்காரர்கள் அல்லாதவர்களும், பழங்குடியல்லாதவர்களும் நான்கு சதவிகிதம் பழங்குடி இனத்தவர்களும் இருக்கிறார்கள். ஆசியாவிலிருந்து சென்றவர்களில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் அதிகம். 2012 இல் கேல்கரி கனடாவின் பண்பாட்டுத் தலைநகரமாகவே இருந்திருக்கிறது. இங்கிருக்கும் பொது நூலகம் புத்தகங்கள் வழங்குவதைக் கணக்கிட்டால் கனடாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்கிறார்கள். தென் அமெரிக்காவின் ஆறாவது பெரிய நூலகம். நூலகம் என்றால் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆடியோ, வீடியோ கேசட்டுகள், மின் புத்தகங்கள், புளு ரே போன்றவையும் கிடைக்கும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் படியான அழகழகான வடிவமைப்பில் புத்தகங்களைப் பார்க்கலாம். மிகப் பிரம்மாண்டமான நுண்கலைக்கான ஜேக் சிங்கர் கன்சர்ட் ஹால் ஒன்று உள்ளது. தெற்கு அல்பெர்டா வெள்ளிவிழா அரங்கத்தில் அல்பெர்டா பேலட் கம்பெனி, கேல்கரி ஓப்பரா, கிவானிஸ் இசை விழா ஆகியவை நடைபெறுவதாக சொல்கிறார்கள். இவையெல்லாம் இரவில் உறங்குவதில்லை, கனடா வாசிகளை உறங்க விடுவதுமில்லை. கலை மையங்கள், திரைப்படக் கம்பெனிகள், நடன மையங்கள் என ஏராளமான கலை நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அவர்கள் வாழ்க்கையின் ரசிகர்கள். வார விடுமுறைகளில் எல்லோருமே சுற்றுலாத் தலங்களில் காலம் கழிக்கிறார்கள். எந்தக் கல்லூரிக்கும் கேப்பிடேசன் கட்டணம் கொடுக்க வேண்டியதில்லை. மருத்துவ செலவுகளுக்காக வீடுகளை விற்கத் தேவையில்லை. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறார்கள். தற்போது எண்ணெய் உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக அறிந்தோம். அதனால் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நகரத்தைப் பார்ப்பதற்கு வாழ்ந்து கெட்ட நகரம் போல என்னவோ போலிருந்தது. மனிதர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவே பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் டவுன் டவுன் என்று சொல்லக் கூடிய பிரதான பகுதிதான் அது. ஒரு கறுப்பின மனிதர் தன் இஷ்டத்துக்கும் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே போனார். அவர் மனநலம் இழந்திருக்க வேண்டும். அந்த நகரமே ஒரு மனநலம் இழந்த நகரம் மாதிரி எனக்குத் தோற்றம் தந்தது. இந்த வெறுமையிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்று தோன்றியது. அங்கிருந்துதான் பேன்ஃப் நகரம் போயாக வேண்டும். பேன்ஃப் நகரம் போவதற்கான பேருந்துக்குக் காத்திருந்தோம். பேருந்தில் ஏற்றிவிடுகிற வேலைக்கு உதவி செய்வதற்காக இரண்டு பேர் இருந்தனர். அதில் ஒருவர் இந்தியர். அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். ஆனால் அவர் தமிழகம் இராமேசுவரத்திற்கு வந்து போயிருப்பதாகச் சொன்னார். ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். அந்தப் பகுதிகள் அனைத்தும் மலைகளும் பச்சைப் பசேல் சமவெளிகளுமாக இருந்தன. மலைகள் மீது பனிப் பாளங்கள் தொட்டில் கட்டி ஆடின. எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் கண்களுக்குச் சலிக்காத விருந்தாகத்தான் இருந்தது. மூடிவைத்த எண்ணெய்க் கிணறுகளைப் பார்க்க முடிந்தது. எதிரே அலைபாயும் சிறு ஏரி. நகரம் வளர்கிறபோது வனங்கள் அழிகின்றன. மக்கள் தொகை பெருகுகிறபோது பெரும்பாலான பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறுகின்றன. கனடாவில் குறைந்த மக்கள் தொகை இருப்பதால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடுகள் அந்தளவிற்குப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப் படுகின்றன. ஆறுகளிலும், ஏரிகளிலும் சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதில்லை. இந்தியாவில் நிலைமை தலைகீழ். திருப்பூரை நினைத்துப் பார்த்தால் பகீர் என்கிறது. பிளாஸ்டிக் பைகள் தின்று மாடுகள் மட்டுமல்ல. இந்தியாவே திணறிக் கொண்டிருக்கிறது. பேன்ஃப் நகரத்தை நெருங்கிவிட்டோம். அதோ ஒரு அழகிய மலை. வெண்மையான முடிக்கற்றைகள் போல பனி அருவிகள் வழிந்துகொண்டிருந்தன. . இந்த ரம்மியத்தைத்தான் நாளை முழுவதும் வலம் வரப் போகிறோம். மனசுக்குள் குளிரெடுத்தது. உண்மைதான். பேன்ஃப் நகரம் என்பது கண்கள் காண விரும்பும் கவர்ச்சி மிகுந்த கனவு அல்லவா ? -பயணிப்போம் இயற்கை அழகை ரசிக்க வலம் வருவோம்! - சி.ஸ்ரீராமுலு -நவம்பர் 17, 2019 தமிழ்நாட்டில் சுதந்திரத்துக்கு முன்பும் காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சி களின் ஆட்சிக் காலங்களில் சின்னதும் பெரியதுமாக 140-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் மேட்டூர் அணை, பாபநாசம் அணை போன்றவை ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை யாகும். அமராவதி, ஆழியாறு, பரம்பிக்குளம், குந்தா, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட தாகும். பல அணைகள் 60 ஆண்டுகளை கடந்தும் மிகப்பிரமாண்டமாக காட்சியளித்து வரு கின்றன. இந்த அணைகள் இன்று வரைக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவ சாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வரு கின்றன. உள்ளூர் மட்டுமன்றி வெளிமாநில பயணிகளுக்கும் சுற்றுலா தலங்களாக சிறந்து விளங்குகின்றன. வறண்ட பூமியில்… சென்னகேசவ மலைகளின் வழியாக வழிந்தோடும் பெண்ணையாறு, தென் பெண்ணையாறு நதிக்கு குறுக்காக திரு வண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள சாத்த னூர் அணை வட மாவட்டங்களில் முதன்மை யானதாகும். வறண்ட மாவட்டமான திருவண்ணாமலையில் இயற்கைச் சூழல் நிறைந்த மரங்கள் மலைகளோடு ஒரு அணை இருப்பதால் சாத்தனூர் போய் வரணும்னு ரொம்ப நாளாய் ஆசை. சமீபத்தில் திருவண்ணா மலை சென்ற போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. முப்பது கிலோ மீட்டர் பயணித்த தும் சாத்தனூர் அணையின் பிரதான நுழைவு வாயில் நம்மை வரவேற்கிறது. பார்க்கப்.. பார்க்க…! அணைக்கு செல்லும் பாதையின் இருபுற மும் அழகிய பூங்காக்களும் பூத்துக்குலுங்கும் செடிகளும் கொடிகளும் மனதை வருடு கின்றன. பச்சை பசேல் என வளர்ந்திருக்கும் மரங்கள், ஜில்லுன்னு வீசும் காற்றும் மன துக்கு இதமாக இருந்தது. ராஜா தேசிங்கு, அழகு மங்கை, குரங்கு, கரடி, ஆதாம் ஏவாள் என விதவிதமான சிமெண்ட் சிலைகள், மயில்க ளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொம்மை கள், கூண்டுகள், ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய முதலைப் பண்ணையும், மீன் வளர்ப்பு மையங்களும் சிறுவர்கள் முதல் வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க, புகைப்படம் எடுக்க, சாப்பிட, ஓய்வெடுக்க, நத்தை, பூக்கள், பல்வேறு வடிவி லான சிமெண்ட் இருக்கைகள், நடை பாதை யும் அமைக்கப்பட்டுள்ளன. ரம்மியமாய்… அணையின் மேல் மட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள பாதையில் நடந்து செல்லும் பொழுது நீரின் குளிர்ச்சி காற்றோடு காற்றாய் வரவேற்கி றது. கல்வராயன் மலைக்கும், தென்மலைக் கும் இடையில் செங்கம் கணவாயை ஒட்டி அமைந்திருக் கும் இந்த அணையை சுற்றிய பகுதிகள் அனைத் தும் பசுமைப் பிரதேசமாக இருப்பதால் இயற்கை அழகு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. மீன் விற்பனை… இந்த அணையில் கட்லா, ரோகு, விரால், கெண்டை, கெளுத்தி என உள்ளூர் மீன்கள் கிடைக்கின்றன. உள்ளூர் மக்களின் விற்பனைக் கும், சுற்றுலா பயணிகளுக்கும் சூடாகச் சுடச்சுட பொரித்த மீன், மற்றும் மீன் குழம்பும் கிடைக்கி றது. மீன்பிடி தொழிலையும் மீன் விற்பனை யையும் நம்பி இங்கு ஏராளமான குடும்பங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதோடு மட்டுமின்றி சிறுவர்களுக்கு தேவைப்படும் தின்பண்டங்கள் விற்கும் சிறுசிறு கடைகளும் அதிகம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் இடமாக சினிமா பிடிப்பிற்கு ஏற்ற தலமாகவும் விளங்குகிறது. எம்ஜிஆர்-ஜெயலலிதா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்க ளின் திரைப்பட பாடல் காட்சிகளின் படப்பிடிப்புகள் இங்கே நடந்துள்ளன. வரலாறு… சாத்தனூர் அணை திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் நீர்ப் பாசன தேவைகளை பூர்த்தி செய்து வரு கிறது. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் இந்த அணை கட்ட ஆரம்பித்து 1958இல் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய அணை களில் ஒன்றாகும். மொத்த நீர் கொள்ளளவு 119 அடியாகும். 2,583 அடி நீளமும், 143 அடி உயரமும் கொண்டது. 700 கோடி கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் 33 கிலோ மீட்டருக்கு ஒரு கால்வாய் பிரிந்து சென்று செங்கம், திருவண்ணாமலை பகுதி களுக்கு சேர்கிறது. இதனால் 16 ஆயிரத்து 700 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. மேலும், மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. 1903 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஆராய்ந்து அணை கட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், அதனை அவர்க ளால் நிறைவேற்ற முடியவில்லை. 1954 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அணையை கட்டத் தொடங்கி னர். அன்றைய தினம் பொதுப்பணித்துறைக்கு கக்கன் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். 1959 ஆம் ஆண்டில் முதலமைச்சாரக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது என்றும் அணையின் வரலாற்றை விரிவாக விளக்கி னார் அதிகாரி. திக். திக்..திக்… நமது அடுத்த பயணம் குடியாத்தம் நகரி லிருந்து துவங்குகிறது. ஆந்திர எல்லையான பலமனேரி செல்லும் சாலை அது. இரண்டு புறமும் மரம், செடிகள், பச்சை பசேலேன்று ஓங்கி வளர்ந்த தென்னை, மா மரத் தோப்பு களோடு காடும், மலையும் வழிநெடுகிலும் கண்களுக்கு மட்டுமல்லாது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. 25 கிலோ மீட்டர் சென்ற தும் தனியாகப் பிரியும் சாலையில் நமது இரு சக்கர வாகனம் நுழைந்தது. மிக அடர்ந்த வனத்திற்கும் மலைகளுக்கும் நடுவே பத்து கிலோ மீட்டர் ‘திகில்’ பயணம். ஆனாலும் அடர்ந்த காட்டிற்குள் கரும் பச்சை நிறத்துடன் ஓங்கிய மரங்களும், செடி, கொடிகளும் ரீங்கார மிடும் ஓசைகளும், கலர் கலராக பறக்கும் வண்ணத்து பூச்சிகளையும் பார்ப்பது கண் ணுக்கு இதமும், மனதிற்கு புத்துணர்ச்சியும் தரு கிறது. மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம் என இரண்டு கிராமங்கள் மட்டுமே இடையில் உள்ளன. மூன்றாவது உள்ளது மோர்தானா கிராமம். காக்கைக்கு தன் குஞ்சு… வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் கலக்கும் கவுண்டன்யா மகாநதி யில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை தேக்கி வைக்க, ஆந்திர மாநில எல்லையோரம் தமிழகப் பகுதியான குடியாத்தம் அருகே உள்ள இந்த மோர்தானா கிராமத்தில் கவுண்டன்யா மகாநதியின் குறுக்கே இரு மலைகளுக்கி டையே 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி யில் கட்டப்பட்டது மோர்தான அணை. இது சிறிய தாக இருந்தாலும் வேலூருக்கு இது தான் பெரிய அணையாகும். அணையின் முழு உயரமே 23.89 மீட்டர்தான். இதில் 11.5 மீட்டருக்கு மட்டுமே நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மொத்த கொள்ளளவு 262 மில்லியன் கன அடியாகும். எழில்மிகு…. ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமான புங்க னூர், பலமநேர், நாயக்கனேரி, மதனாப்பள்ளி உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் மழை பெய்தால் அதிலிருந்து கவுண்டன்யா மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் தமிழக எல்லை யில் உள்ள மோர்தானா அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதில் தேங்கும் தண்ணீரை பார்ப்பதற்கும் மலை, காடுகளால் சூழப்பட்ட எழில் கொஞ்சும் அந்த அழகை ரசிப்பதற்கு உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களும் வந்து செல்கிறார்கள். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்குச் செல்லும் சாலை ‘பல்லை இளிக்கிறது’. அதையும் தாண்டி சென்ற தும் ‘சோளக்காட்டு பொம்மை’ போன்று காட்சியளிக்கும் அணையின் அருகில் சென்றதும் ’மூக்கை’ப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. காரணம் சுகாதாரம் என்றால் என்ன என்று கேள்வியை எழுப்புகிறது ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள். ஏமாற்றம்… அணையில் இருந்து வழியும் தண்ணீர் சீரியல் நதியாய் ஓடுவது மற்ற அணைகளில் காணமுடியாத அபூர்வ நிகழ்வாகும். ஆனாலும் தண்ணீர் இல்லாத தால் அதை பார்க்க முடியவில்லை. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆறு கண் கொண்ட 12 மதகுகள் உள்ளன. போதிய நீர் இல்லாததால் மதகுகள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஆடுமாடுகள் அதிகம் தென்பட்டன. மோர்தானா அணை முழுமையாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும் பொழுது ஏராளமா னோர் வந்து பார்வையிடுகின்றனர். தற்போது நீரின்றி காட்சியளிக்கிறது. தேவை மாற்றம்! மோர்தானா அணை அருகிலிருந்த கிராமவாசி களிடம் மெல்ல பேசத் துவங்கியதும், “இந்தப் பகு தியை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு அணையான இங்கு சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை சுற்றுலா வந்து செல்ல பூங்காக்கள் அமைத்து சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொடர்ந்து பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர்.​​​​​​​ பித்தம் தலைக்கேறும் பேன்ஃப் நகரம் - நா.வே.அருள் -நவம்பர் 24, 2019 […] கனடாவில் அட்பெர்டா மாநிலத்திலிருக்கும் பேன்ஃப் தேசியப் பூங்கா பகுதியில் இருக்கும் அழகிய நகரம்தான் பேன்ஃப். ட்ரான்ஸ் கனடா தேசிய நெடுஞ்சாலையைத் தொடர்ந்து இருக்கும் அல்பெர்டா மலைத் தொடர்களில் பேன்ஃப் தேவதை குடியிருக்கிறாள். உண்மையிலேயே சொல்லப் போனால் பித்தம் தலைக்கேறும் பேன்ஃப் நகரம். கால்கரியிலிருந்து 126 கி.மீ தொலைவிலும் லேக் லூயிஸ் ஏரியின் கிழக்கே 58 கி.மீ தூரத்திலும் உள்ளது இந்த நகரம். ரன்டில் மலை, நார்க்கே மலை, காஸ்கேட் மலை, சல்ஃபர் மலை ஆகிய மலைகளின் மடியில் குடியிருக்கும் வனதேவதையைப் பார்ப்பதற்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெவ்வேறு இன மக்கள் வந்து குவிந்து கொண்டேயிருக்கிறார்கள். நாங்கள் போனது ஒரு இந்திய உணவகம். அவர் தமிழர். சென்னையில் படித்தவராம். ஆந்திராப் பெண்ணைக் காதலித்து மணம் செய்து கொண்டவர். கோயமுத்தூர்க் காரராம். சென்னையில் படிப்பு. இப்போது வசிப்பது கனடாவின் பேன்ஃப். வாழ்க்கை யார் யாரை எங்கெங்கோ அமர்த்தி வேடிக்கை பார்க்கிறது. வாழ்க்கை ஒரு சாமர்த்தியமான சதுரங்கம்தான். சிப்பாயா? குதிரையா? யானையா? ராணியா? ராஜாவா? அவரவரின் தேர்ந்தெடுப்பில்தான் அத்தனையும் இருக்கிறது என்றால் பிடிக்காத வேடத்தைப் பலர் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறதே அதற்கு என்ன சொல்ல? உணவு விடுதிகளிலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. இவ்வளவு குளிர்ச்சியான பேன்ஃப் இல்தான் சூடான ஆர்ட்டீஷியன் ஊற்றுகளும் இருந்தன. இதுதான் வாழ்க்கையின் விநோத முரண். மலையேறலாம். பனிச் சறுக்கலாம். வாகனத்தில் சுற்றித் திரியலாம். நம் நாட்டில் எப்படி ரயில் இருப்புப் பாதைகள் அமைந்த பிறகு வளர்ச்சி சாத்தியமானதோ அப்படித்தான் அங்கும். போவ் ஆறு பாயும் பேன்ஃப் பகுதியின் சமவெளியில் போடப்பட்ட கண்டங்கள் இணைக்கும் ரயில்வே இருப்புப் பாதையைத் தொடர்ந்துதான் 1880 ஆம் ஆண்டில் பேன்ஃப் நகரம் குடியிருப்புப் பகுதியானது. ஸ்காட்லாண்டின் பேன்ஃப் இல் பிறந்தவர் ஜியார்ஜ் ஸ்டீபன். கனடியன் பசிபிக் ரயில்வேயின் தலைவராய் இருந்தவர். 1884 ஆம் ஆண்டில் அவர்தான் தனது ஊரின் ஞாபகார்த்தமாய் பேன்ஃப் என்று பெயர் சூட்டினார். 1985 இல் ஐ நா சபையினால் கனடியன் ராக்கி மலைத் தொடர்ப் பூங்காக்களில் ஒன்றாக பேன்ஃப் தேசியப் பூங்கா அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இது உலகத்தின் பழங்காலச் சின்னமாக விளங்கி வருகிறது. பேன்ஃப் குளிர்கால விழாவும் பேன்ஃப் இந்திய நாட்கள் கொண்டாட்டமும் நடத்துவதற்கு நார்மன் லக்ஸ்டன் ஏற்பாடு செய்திருக்கிறார். இவர் திருவாளர் பேன்ஃப் என்று அறியப் படுகிறார். சல்ஃபர் மலையின் உச்சியில் இருக்கும் சுடுநீர் ஊற்று பேன்ஃபின் பிரபலமான சுற்றுலா இடம். மனிதர்கள் மீன்களைப்போல நீந்திக் களிக்கிறார்கள். காமிராக்களுடன் சுற்றித் திரிகிறார்கள். சல்ஃபர் மலை உச்சியிலிருந்து கோண்டுலா (கண்ணாடி கூண்டு) மூலம் சான்சன் சிகரத்தை அடையலாம். இதனை பேன்ஃப் ஸ்கை வாக் (வான் வழி) என்று சொல்கிறார்கள். நார்க்கே மலையில் பைக் ஓட்டுகிறார்கள். டனல் மலை (சுரங்க மலை) என்று அழைக்கப்படுகிற மலைக்கு இன்னொரு பெயர் தூங்கும் எருமை மலை. போவ் ஆற்றையொட்டியே இரயில்வே இருப்புப் பாதைக்குப் பதிலாக இந்த மலையைக் குடைந்து ரயில் பாதை போடுவதான திட்டம் வகுக்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டது. கேல்கரியிலிருந்து மூன்று மணி நேரத்தில் பேன்ஃப் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து புராதனமான பேஃர்மான்ட் ஓட்டலுக்கு வந்தோம். அந்த ஓட்டல் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக தரைத் தளத்தையும் முதல் மாடியையும் ஒதுக்கி வைத்திருந்தார்கள். நுழைவதற்கு முன் அற்புதமான குதிரை சிலையொன்று இருந்தது. உள்ளே விதவிதமான விற்பனைப் பொருள்கள். சுற்றுலாவாசிகள் விருப்பப்பட்ட உணவைத் தட்டில் வைத்து அங்கங்கே சுவைத்துக் கொண்டிருந்தார்கள். முதல் மாடி முற்றத்தில் ஒரு டெலஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது. தொலைவாக இருந்த மலை கண்ணுக்கு அருகில் தெளிவாகத் தெரிந்தது. முதல் மாடி பூங்காப் புல்வெளியில் ஒரு இந்திய மணமகனுக்கும் சீன மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு சீக்கிரம் ஒரு திருமணம் நடந்தேறிவிடுகிறது. ஆணவக் கொலை பயமின்றி இரண்டு காதல் பறவைகள் சர்வ சாதாரணமாக ஜோடி சேர்ந்து விடுகின்றன. காதல் கைகூடுவதற்குக் கூட நாடு பார்த்துப் பிறக்க வேண்டுமோ? பேஃர்மான்ட் ஓட்டலில் இருந்த சுடுநீர் ஊற்றில் ஆண்களும் பெண்களும் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தார்கள். சில டாலர்கள் செலவில் சுடுநீர் நீச்சலடிக்கலாம். ஓட்டலின் வெளியே வந்து லூயிஸ் ஏரிக்குப் போகலாம் என்பது திட்டம். வழியில் ஒரு ஒற்றையடிப் பாதை மாதிரி நீண்டு சென்றது. அருகில் போனால் மரச் சட்டங்களால் ஆன பாலம். போவ் ஆறு நுரைத்துக் கொண்டு ஓடியது. அல்பெர்டாவின் ராக்கி மலைத்தொடரில் உருவாகி பசும்புல் வெளிகளான சமவெளிகளில் ஓடி ஓல்டுமேன் ஆற்றில் கலந்து தெற்கு சஸ்கச்சிவான் ஆறு என்று அழைக்கப்படுகிறது. காட்டெருமை வேட்டைகளுக்காகப் பழங்குடியினர் பயன்படுத்திய ஆறு போவ் ஆறு. இன்று உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தெல்லாம் வருகிற சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகிறது. இந்த ஆற்றின் கரைகளில் வளருகிற ரீட்ஸ் என்கிற தாவரங்களிலிருந்துதான் பழங்குடியினர் வில்களைத் தயாரித்தனர். அதனால்தான் இந்த ஆறு போவ் ஆறு என்று அழைக்கப்படுகிறது. போவ் பனிப்பாறைகளில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு நீர்ப்பாசனத்திற்காகவும், மின்சாரத் தயாரிப்பிற்காகவும் பயன்படுகிறது. இது தெற்குப் பக்கமாக ஓடி லேக் லூயிஸ் என்னும் ஊரை அடைகிறது. லூயிஸ் ஏரியை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே ஜாஃப்ரி ஏரியின் மூன்று நிலைகளைப் பார்த்திருக்கிறோமே, இதிலென்ன புதிது என்று நினைத்துவிட முடியாது. ஒரு முகம், இரண்டு கை கால்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, இப்படியான சேர்மானம்தான் மனிதன் என்று இருந்துவிட முடியுமா? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அழகல்லவா? ஒரு மனிதனைப் போலத்தான் இன்னொருவனா? ஏரிகளும் அப்படித்தான். ஜாஃப்ரி ஒருவிதம். லூயிஸ் ஒருவிதம். எல்லாமே தண்ணீர்தான். அது இசைக்கும் ஜலதரங்கம்தான் வேறு வேறு. -பயணிப்போம் கனவுகள் சிதைந்த காட்டு ராஜாக்கள் - நா.வே.அருள் -டிசம்பர் 8, 2019 […] லேக் லூயிஸ் இல் மறக்க முடியாத ஓர் அனுபவம் அங்கு முதல் நாட்டவர் ஒருவரைப் பார்த்ததுதான். முதல் குடிமகன்கள் குசைளவ சூயவiடிளே என்று அழைக்கப்படுகிற அவர்கள் தங்கள் இருப்புக்காகப் போராடிக்கொண்டிருப்பதாக அவர் எங்களிடம் சொன்னது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் கனடா இன்னும் அவர்கள் மீது மென்மைப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகப் பலர் சொல்கிறார்கள். பேன்ஃப் தேசியப் பூங்கா பயணிகளின் கவனத்தைக் கவரும் ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கால்கரியிலிருந்து பேன்ஃப் வருவதற்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆனது. வழி நெடுக மலைகளும் குன்றுகளும். மல்லாந்து கிடக்கும் மார்பகங்களாக குன்றுகள். மார்பகங்களிலிருந்து வழிந்து கிடக்கும் தாய்ப்பால் மாதிரி வெள்ளை வெளேரென்று மலையின் மேல் முகடுகளில் வெண்ணிற பனிப் பாளங்கள். பைன் மரங்களின் எல்லையில்லாத வரிசைகள். அங்கங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் தண்ணீர் அம்புகளாக ஆறுகள். பச்சைக் கம்பளங்கள். பள்ளத்தாக்குகள். சொர்க்கத்தின் நிறம் பச்சையாகத்தான் இருக்கவேண்டும். பேன்ஃப் நகரத்தின் டவுன் டவுனிலிருந்து லேக் லூயிஸ் வந்து சேர்ந்திருந்தோம். முன்னர் சொன்னது போல கனடா பிரிட்டிஷாரின் காலனி. அதன் தாக்கம் இன்றளவும் நீடித்து வருகிறது. 1878 முதல் 1883 வரை கனடாவின் கவர்னராக இருந்தவர் மார்க்கஸ். லேக் லூயிஸ் என்கிற பெயர் அங்கிருக்கும் ஏரி ஒன்றுக்கு வைக்கப்பட்டுள்ளது. இளவரசி லூயிஸ் கரோலின் அல்பெர்ட்டா மகாராணி விக்டோரியாவின் நான்காம் மகள். கனடா விடுதலையடையும் முன்பே லூயிஸ் இளவரசியின் கணவர் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். இந்த கிராமத்திற்கு லகன் என்கிற இன்னொரு பெயரும் உண்டு. அந்த கிராமத்தின் மேற்குப் புறத்தில் 5 கி.மீ தொலைவில் உள்ளது ஏரி. இது பனிப்பாளங்களால் ஆன ஏரி. ஓர் ஆளைத் தூக்கிப் போட்டால் கொஞ்ச நேரத்திலேயே உறைந்துவிடுகிற அளவுக்கு அப்படியொரு குளிர்ச்சி. இந்த ஏரியைச் சின்ன மீன்களின் ஏரி என்று பழங்குடியினர் அழைப்பார்கள். பனிப் பாளத்திலிருந்து உறைந்த நீர் வருவதால் நீலப்பச்சை ரத்தினக்கல் நிறத்தில் நீர் இருக்கும். முக்கால் கி.மீ பரப்பளவு கொண்டது இந்த ஏரி. இந்த ஏரியிலிருந்துதான் லூயிஸ் அருவி மூன்று கி.மீ தூரத்திற்குச் சென்று போவ் ஆற்றில் கலக்கிறது. லூயிஸ் ஏரியின் பின்புறத்தில் மூன்று மலைகள். டெம்பிள் மவுண்ட், மவுண்ட் ஒயிட், மவுண்ட் நிப்லாக். இந்த ஏரியின் பின்புறத்தில் மிகப் பெரிய திரைச்சீலையாக இயற்கை வரைந்து வைத்திருக்கும். அந்த மலைகளின் மீது நமது கனவுகள் பனிப்பாளங்கள் போல உறைந்துபோயிருக்கும். n ஜஸ்பர் பூங்கா, பினப் பூங்காவிற்கு இடையில் லூயிஸ் ஏரி அமைந்திருக்கிறது. ஏரியில் நீர் உறைந்தில்லாதபோது படகு சவாரி அனுமதிக்கிறார்கள். குளிர் காலத்தில் பனிச்சறுக்கு விளையாடுவார்களாம். ஏனெனில் குளிர் காலத்தில் மைனஸ் நாற்பது டிகிரி செல்சியஸ் வரைக்கும் குளிரடிக்குமாம். ஜேம்ஸ் காடி, ஹட்சன் பே கம்பெனியின் டேவிட் தாம்ஸன் என்பவர்கள்தான் முதல் முதலாக போவ் ஆற்றைப் பார்த்த ஐரோப்பியர்கள். கி.பி 1787 – 88 வாக்கில் பழங்குடிமக்கள்தான் வாழ்ந்தவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடி மக்கள் அங்கு குடியேறியிருந்தார்கள். நகோடா, சூ டினா, பிளாக் புட் கான்படரேசி என்றறியப்பட்ட கெய்னை, பில்கானெய், சிக்சிகா பழங்குடிமக்கள் போவ் ஆற்றங்கரைகளில் வசித்து வந்தார்கள். பழங்குடி இன மக்கள் காட்டெருமைகளை மலை உச்சிகளுக்கு அல்லது சமவெளிகளில் துரத்தி வில் அம்புகள் கொண்டு வேட்டையாடுவார்கள். நகோடா இன மக்கள் மீன் பிடிப்புத் தொழிலும் செய்தனர். பெண்கள் வேர்கள், விதைகள், பழங்கள் முதலானவற்றைச் சேகரிப்பார்கள். தாம்ஸனின் பயணத்தை முன்வைத்து ஏராளமான ஐரோப்பியர்கள் தோல் வாணிபத்திற்காக போவ் ஆற்றை நோக்கிப் பயணமானார்கள். காட்டெருமைகளின் எண்ணிக்கையும் குறைந்து போனது. ஐரோப்பியர்கள் இவர்களிடம் விஸ்கியை அறிமுகப்படுத்தியதில் நோய்களுக்கு ஆளானார்கள். இப்படித்தான் பழங்குடிகளின் நசிவு ஆரம்பமானது. ஐரோப்பியர்களின் எண்ணிக்கை அதிகரித்து. 1870 களில் விஸ்கி வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.1877 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் ஒப்பந்தம் 7 கையெழுத்தானது. இதன்படி போவ் ஆற்றையொட்டி சில பகுதிகளை மட்டும் பழங்குடியினர் வைத்துக்கொண்டு ஏராளமான நிலப் பகுதிகளை ஐரோப்பியர்களுக்கு விட்டுக் கொடுத்தனர். நமக்கு மலரும் நினைவுகளைப்போலத் தோன்றுகிறது. நம் நாட்டில் கிழக்கிந்தியக் கம்பெனி என்றால், கனடாவில் ஹட்சன் பே கம்பெனி. வாணிபம் வழியாக வந்து அரசியலைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இருநூறு ஆண்டுகளை இழந்துதான் மீண்டும் நம் நாட்டைப் பெற முடிந்தது. ஆனால் கனடா நாட்டு முதல் குடிமகன்கள் – பழங்குடி மக்கள்.அவர்கள் தற்போது – எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் லூயிஸ் ஏரியில் பார்த்த அந்த முதல் குடிமகனுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். அவரது பிம்பம் கரையும் கனவினைப் போன்று தோற்றமளித்தது. இந்தக் காட்டின் ராஜா இன்று வாழ்க்கைக்காக இப்படி வெளிநாட்டு மனிதர்களிடம் டாலர்களுக்காகக் கையேந்திக் கொண்டிருக்கிறார். நானும் அருள்பாரதியும் கைக்குலுக்கிக் கொண்டோம். ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். இது மாபெரும் மானுடப் பாடம். வரலாற்றைப் புரிந்துகொள்ளாவிட்டால், நிச்சயம் வரலாறு நம்மைத் தண்டித்துவிடும். கனடா ஓரளவுக்கு தாராளவாத நாடாக இருந்தாலும் இன்னும் அங்கே முதல் நாட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரம் முதல் முதலாக கனடா நாட்டின் வரலாற்றைச் சுருக்கமாகவேனும் அறிய வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. -பயணிப்போம் வான்கூவரிலிருந்து விக்டோரியா வரை - நா.வே.அருள் -ஜனவரி 12, 2020 […] கனடாவின் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் சிலவற்றைப் பார்த்ததுமே பரவசம் தொற்றிக் கொள்கிறது. இரைச்சலும் சந்தையுமாக இருந்த மனநிலைக்குச் சிறிது மாற்றாக இயற்கையின் மௌனப் பாடல்களைக் கேட்டது மாதிரி இருந்தது. இப்போது விக்டோரியா நகரத்துக்கு போகிறோம். பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் தலைநகரம் விக்டோரியா. இங்கு செல்வதற்கு ஃபெர்ரி என்று சொல்லக் கூடிய படகில் பயணிக்க வேண்டும். படகு என்றால் அது படகு அல்ல. கப்பல். தண்ணீரில் நீந்திச் செல்கிறபோது ஒரு மிதக்கும் உணர்வு தொற்றிக் கொள்ளும். மீன்களின் மேல் பயணிப்பது போன்று இருக்கும்.சில நேர அசைவுகளில் பறவையின் மேல் பறப்பது போன்றதொரு பரவசம். இரண்டு மாடிக் கப்பல். மனிதர்களை மட்டுமல்ல. ஏராளமான வாகனங்கள் பயணம் செய்கிற அளவில் அதன் பரப்பளவு இருந்தது. ஏறக்குறைய 400 முதல் 500 வரைக்குமான கார்கள். ஒரு பெரிய கடைத்தெருவே இருப்பது போல விதவிதமான கடைகள். உணவு விடுதிகள் என ஒரு பெரிய ஊரே கப்பலுக்குள் இருந்தது. வான்கூவர் சாசன் நிலையத்திலிருந்து விக்டோரியா சுவார்ட்ஸ் வளைகுடா வரவேண்டும். எங்கள் பயணம் இரண்டரை மணி நேரம் பிடித்தது. குறைந்தது நான்கைந்து முறையாவது மேல்தளத்திற்கு வந்து வேடிக்கை பார்த்துத் திரும்பியிருப்போம். இந்தக் கப்பல் வருகிற கடல் வழி மார்க்கம் அமெரிக்காவின் ஒரு முனையைத் தொட்டுக் கொண்டு செல்கிறது என்பது ஒரு சிறப்பு. கனடா 49ஆம் அட்சக் கோட்டில் இருப்பதால் பூமி பிளவுபடும் பகுதி இது எனலாம். இந்தக் கப்பல் போக்குவரத்து தரைப் போக்குவரத்துடன் மிகச் சரியாக இணைக்கப்பட்டிருக்கிறது. காத்திருப்பும் நேர விரையமும் நடப்பதில்லை. மிகத் துல்லியமான நிர்வாகத்தைப் பார்க்க முடிகிறது. நாங்கள் முதலில் நுழைந்த இடம் ஜென்னி புச்சார்ட் நிர்மாணித்த மிகப் பெரிய தோட்டம். தோட்டம் என்றால் தோட்டம் அல்ல. வனம். அதாவது 1904 ஆம் ஆண்டு சுண்ணாம்புக் கல் சுரங்கமாக இருந்த இடம்தான் இன்று உலகமெல்லாம் வந்து பார்வையிடக் கூடிய மிகப் பிரம்மாண்டமான தோட்டமாக உருவெடுத்திருக்கிறது. சுண்ணாம்புக் கல் சுரங்கத்தையொட்டிய பகுதியில் ஒரு சிமெண்ட் ஆலையை நிர்மாணித்து இருக்கிறார் ராபர்ட். சுரங்கத்தின் சுண்ணாம்புப் பாறைகள் முழுதும் தீர்ந்தபின் அவரது மனைவி ஜென்னி புச்சார்ட் குதிரை வண்டிகளை வைத்து இதனை ஒரு தோட்டமாக உருவாக்கியிருக்கிறார். 1906 முதல் 1929 வரையிலும் தோட்டத்தின் பல விரிவாக்கங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஜப்பானியத் தோட்டம், இத்தாலியன் தோட்டம் மற்றும் ரோஜாத் தோட்டங்களென ஏராளமான ஏக்கர்களில் உருவாகியிருக்கின்றன. அடுத்து, விக்டோரியா நாடாளுமன்றத்திற்கு வந்தோம். இந்தக் கட்டடம் கட்டிய விதமே சுவாரசியமானது. டென்டர் விடுவது போல ஒரு போட்டியை நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்த விக்டோரியா அசெம்பிளி இருக்கின்ற கட்டடம். 25 வயதுள்ள பிரான்சிஸ் ரத்தன்பரி என்கிற பொறியியலாளரின் கைவண்ணத்தில் உருவானதுதான் இந்த எழில்மிகுந்த ரோமானிய மறுமலர்ச்சி வகையைச் சேர்ந்த கட்டடம். 9,23.000 டாலர்கள் செலவில் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 500 அடி உயரம். நடுவில் வெள்ளைச் சலவைக்கல்லால் ஆன டோம். 1897 ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்ளே சென்று பார்வையிடலாம். வெளியே வர மனமே இல்லாத நிலையில் வெளியில் வந்தோம். உலகின் மிகப் பெரிய உயிரியல் கண்காட்சியில் ஒன்றுதான் கேல்கரி நகரத்திலிருக்கும் கண்காட்சிக் கூடம். மிகப் பெரிய காட்டில் அதே சூழலில் கண்காட்சியை நிறுவியிருக்கிறார்கள். முதலில் எங்களை வரவேற்றது தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கும் பென்குவின்கள். அவை விநோத பாஷையில் பேசிக் கொண்டே இருந்தன. வித விதமான நீச்சலடித்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் போவது அற்புதமான காட்சியாக இருந்தது. ஆப்பிரிக்கப் பகுதியில் நீர்யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், புலிகள், சிங்கங்களைப் பார்க்க முடிந்தது. முன் வரலாற்று கால கண்காட்சிக் கூடம் டைனோசர்களின் எச்சங்களால் வடிவமைக்கப் பட்டிருந்தன. அங்கங்கும் முடியுதிர்ந்த காட்டெருமைகள் அசைபோட்டபடி இருந்தன. லெமூர் குரங்குகள் அழகழகாகத் தாவித் திரிந்தன. விக்டோரியா நகரம் என்பது முன்னொரு காலத்தில் கவாகுட்டில் என்கிற செவ்விந்தியர்களின் நகரம். அவர்கள்தாம் பூர்வ குடிகள். வான்கூவர் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தவர்கள். வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழ்ந்த அவர்களின் தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல். 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பானிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு விலங்குகளின் மென்முடிகள் தேவைப்பட்டன. பதிலுக்கு பழங்குடி மக்களுக்கு கோதுமை மாவு, ரெடிமேட் சட்டை, பேண்ட், போர்வை கண்ணாடி, கத்தி, அரிவாள், ஈட்டி, புகையிலை சர்க்கரை கொடுத்தார்கள். மிருது தங்கம் என்றழைக்கப்பட்ட அந்த மென்முடித் தேவைதான் ஐரோப்பியர்களை பழங்குடிகளைக் காலி செய்ய வைத்துவிட்டது. பற்றாக் குறைக்குத் தங்க வேட்டைக்காகவும் ஐரோப்பியர்கள் வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள்.இதனால் பழங்குடி மக்களின் வாழ்க்கை அடியோடு சிதைந்து விட்டது. கூடாரத்திற்குள் கால் வைத்த ஒட்டகம் கூடாரத்தையே காலி செய்த கதைதான். ஆதிப் பழங்குடி மக்களை ஐரோப்பியர்கள் அடித்துக் கொன்றார்கள். அவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டார்கள். அவர்களின் பெண்களை அபகரித்துக் கொண்டார்கள். சிதைந்து போன செவ்விந்தியர்கள் கூலிகளாகவும் எடுபிடிகளாகவும் மாறிப் போனார்கள். கடைசியில் காடுகளுக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள். எனக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி நாவல்தான் ஞாபகத்திற்கு வந்தது. செவ்விந்தியர்களின் கம்பீரமான வாழ்க்கைப் பதிவை அந்த நாவலில் காணமுடியும். அப்படியொரு மேன்மையான குணத்திற்கு ஐரோப்பியர்கள் தந்த பரிசை நினைக்கிறபோது மனம் கனத்துப் போனது. இதுவரையிலும் இயற்கை எழிலில் உற்சாகமாகப் புரண்டுகொண்டிருந்த மனம் கனடாவின் வரலாற்றை மிகச் சுருக்கமாகவேனும் படிக்க ஆசைப்பட்டது. -அடுத்த கட்டுரையுடன் பயணம் முடிகிறது பயணங்கள் முடிவதில்லை - நா.வே.அருள் -ஜனவரி 19, 2020 […] சைமன் ஃபிரேசர் பல்க லைக் கழகம் 2019 ஜூன் 12 ஆம்நாள் நடத்திய பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் நாட்டவர் ராபர்ட் ஜோசஃப். அவரிட மிருந்துதான் அருள்பாரதி தனது எம்.எஸ் மேல் படிப்புக்காகப் பட்டம் பெற்றுக் கொண்டான். இதையொட்டி அவன் அழைத்ததன் பேரில்தான் நாங்கள் கனடா சென்றோம். அந்தத் தருணம் என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்துவிட்டது. முதல் நாட்டவர் (அதாவது பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்) தனது ஏற்புரை யின் போது கனடாவின் மீது இனப் படு கொலைப் பழி இருப்பதாகவும் ஜனநாய கத்துக்காவும் எல்லோரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதற்காகவும் பல அறிவார்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டது என் சிந்தனை களைக் கிளர ஆரம்பித்தது. கனடாவின் வரலாற்றை மிக மிகச் சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டுமென்னும் ஆவலை உண்டாக்கியது. கனடாவின் வரலாற்றுச் சுருக்கம் மிகவும் சுவையானது. கனடா நாட்டின் மேற்குப் பகுதியில் இயற்கையின் பேரெழிலாக இருக்கிற மலையக வனதேவதைதான் பிரிட்டிஷ் கொலம்பியா. பசிபிக் கடலின் மடியில் இருக்கும் இந்த அழகிய ராட்சசியுடன் வான்கூவர் தீவு இணைந்தது 1966 ஆம் ஆண்டில்தான். அதன் பிறகுதான் 1871 இல் கனடாவின் ஆறாம் நிலப்பகுதி யானது பிரிட்டிஷ் கொலம்பியா. 2018 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை சுமார் ஐம்பது லட்சம். இதன் தலை நகரம் விக்டோரியாவாக இருந்தபோதும் மிகப் பெரும் நகரமாக இருப்பது வான்கூவர். உலகில் ஒருபுறம் பிரிட்டிஷ் காலனி யாக்கமாக அமெரிக்கா. கி.பி 1607 இல் வெர்ஜினியாவின் ஜேம்ஸ் டவுனில் தொடங்கி அமெரிக்கா முழுவதும் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். பலன் பசிபிக் கடற்கரையில் இரண்டாம் இங்கிலாந்தாக பிரிட்டிஷ் கொலம்பியா. மறுபுறம் பிரெஞ்சுக் காலனியாக்க மாக அமெரிக்காவின் மேற்குப் பகுதி முழுவதும் தொடர்ந்தது. பெரும்பா லான கிழக்கு வடஅமெரிக்கப் பகுதியில் பல கரீபியத் தீவுகளில் பிரெஞ்சு ஆதிக்கம். பலன் வட அமெரிக்காவில் நியூ பிரான்சு. மிகப் பிரபலமான பிரான்சின் ‘ஏழு ஆண்டுப் போர்’ முடிவில் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி கி.பி.1743 இல் பிரான்சின் அனைத்து வட அமெரிக்கப் பகுதி களும் பிரிட்டிஷாருக்குச் சொந்தமா னது. கனடாவும் நம் நாட்டைப்போலவே வெள்ளையருக்கு அடிமையாக இருந்த நாடுதான். கனடா நாட்டில் (அப்போது கனடா வட அமெரிக்கா வின் பகுதியாக இருந்தது) ஆங்கிலேய னின் முதல் குடியேற்றம் விக்டோரியா துறைமுகத்தில் 1843 ஆம் ஆண்டு நடந்தது. அதுதான் பின்னர் விக்டோ ரியா நகரமாக உருவானது. வான்கூவர் தீவின் முதல் தலைநகரம் விக்டோரியா தான். 1858 முதல் 1866 வரையிலு மான காலகட்டத்தில் ஃபிரேசர் கன்யான் கோல்ட் ரஷ் அவர்களின் வேண்டு கோளக்கிணங்க ரிச்சர்ட் கிளமண்ட் மூடியும் ராயல் பொறியாளர்களும் இணைந்து பிரிட்டிஷ் கொலம்பியாவை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மேற்குத் திசையின் தொலைதூர பாதுகாப்பு அரணாகவும், பசிபிக் கடற்கரையில் இரண்டாம் இங்கிலாந்தாகத் திகழவும் பிரிட்டிஷ் கொலம்பியாவை உருவாக்க லண்டனில் இருந்த கர்னல் அலுவலகம் மூடியை அனுப்பிவைத்தது. அவர்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் லெப்டினென்ட் கவர்னராகவும் தலைமைக் கமிஷனராகவும் இருந்தார். இந்தியாவுக்கு ராபர்ட் கிளைவ் என்றால் பி.கொலம்பியாவுக்கு மூடி என்று வைத்துக்கொள்ளலாம். கி.பி 1866 இல் வான்கூவர் தீவு பி.கொ வின் ஒரு பகுதியாக ஆனது. கி.பி 1867 இல் நியூ பிரன்ஸ்விக் பகுதியும் நோவா ஸ்கோஷியா பகுதியும் இணைந்து கனடா ஆனது. கி.பி 1848 முதலே கனடாவில் அரசு இருந்தாலும், பிரிட்டிஷ்தான் அதன் வெளியுறவுக் கொள்கைகளையும் பாதுகாப்புக் கொள்கைகளையும் வடிவமைத்து வந்தது. முதல் உலகப்போர் வரையிலும் இந்த நிலைதான். கி.பி 1931 டிசம்பர் 11 ஆம் நாள் வெஸ்ட்மினிஸ்டர் ஒப்பந்தம் மூலம்தான் கனடாவுக்கு விடுதலை கிடைத்தது. இப்போது கனடாவின் அரசியலமைப்பு ’அரசமைப்பு முடியாட்சி எனப்படும். இரண்டாம் எலிசபெத் அரசியார் நாட்டின் தலைவர் ஆவார். அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவது பிரதமர். பிரதமரின் பெயர் ஜேம்ஸ் துரூடு. கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட். கவர்னர் ஜெனரல்தான் முடியரசியின் பிரதிநிதி.. இவர் கனடாவின் பிரதமரால் நியமிக்கப் படுபவர். நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களும்இருப்பார்கள். பூர்வகுடிகள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் புதிதாகக் குடியேறியவர்கள் என அனைவரின் பழக்க வழக்கங்களும் சேர்ந்ததுதான் கனடாவின் தற்போதைய கலாச்சாரம். மொழி ரீதியாக, புவியியல் ரீதியாக, பொருளாதாரக் கொள்கைகள் ரீதியாக அதன் அண்டை நாடான அமெரிக்காவின் பாதிப்பு உண்டு. எனினும் கனடா அதன் தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று கனடா பத்துத் துணைத் தேசிய அரசுகள் கொண்ட பிராந்தியங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கிறது. ஒரு நாட்டின் பின்னால் இருக்கும் வலிகள் கொஞ்ச நஞ்சமல்ல. பல கழுகுகளிடமிருந்து தனது குஞ்சுகளைக் காக்கத் தாய்க்கோழி படாத பாடு படவேண்டியிருக்கிறது. புழு பூச்சிகளைப்போல உயிர்களைப் பலிகொடுக்க வேண்டியிருக்கிறது. கனடா என்பது இன்றைக்குக் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளுக்குப் பின்னால் தீராத துயரங்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. நகரங்களின் நவீனமயமாக்கலும் உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் பார்வையாளர்களுக்கு ஒரு கலைடாஸ்கோப்பைப் போல வண்ணமயமான காட்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஊடுருவிப் பார்ப்பவர்கள் இதன் காட்சிப்பிழைகளைக் கண்முன் நிறுத்த முனைகிறார்கள். தோற்றப் பிழைகளின் தொல் வரலாறுகளைத் தோலுரிக்க நினைக்கிறார்கள். கனடாவில் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அந்த பூமிக்கு சொந்தக்காரர்களான பூர்வகுடிகளின் அழுகையொலிகள் தேய்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 2014 இல் கனடா நாட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப் பசிக்குச் சோளப்பொறி போல வாய்த்திருக்கிறது. உண்மையில் அவர்களின் நிலத்தில் ஒரு பகுதிக்கான உரிமையை உறுதி செய்ததற்காக கனடாவின் நீதித்துறை பெருமிதம் கொள்ளலாம். ஆனால் மிச்ச மீதியுள்ளவர்களின் ஒட்டு போடப்பட்ட கனவுகளால் ஒரு வண்ணமயமான வானவில்லை வடிவமைத்துவிட முடியாது. ஆனாலும் பழங்குடியினரின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் அந்தத் தீர்ப்பு அவர்கள் நம்பிக்கையில் ஒளியேற்றட்டும். கனடா பயணம் நிறைவடைந்தாலும் பயணங்களுக்கு முடிவில்லை. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.