[] []   பணியாரம்      சிபி                                  கவிதை தொகுப்பு நூல் : பணியாரம்  ஆசிரியர் : சிபி  மின்னஞ்சல் : sibikannan555@gmail.com  வகை : கவிதைகள்  அட்டைப்படம் : சத்யன்   மின்னூலாக்கம் :   அ.ஷேக் அலாவுதீன்    தமிழ் இ சர்வீஸ், மின்னஞ்சல் : tamileservice17@gmail.com     வெளியீடு :   FreeTamilEbooks.com     உரிமை :   CC-BY-SA   பொருளடக்கம் உங்களோடு ஒரு நிமிடம் 6  கடவுள் 7  அம்மாவுக்கு 8  ஆஹா… 11  விவசாயி 13   தானமாக்கினான் 15  அர்த்தம் 17  பணியாரம் 18  விடுதலை 20  கோபம் 21  காத்திருக்கு… 23  தவம் 25  எச்சில் 27  மின்னல் 28  போர்வை 29  நிரபராதி 30  பேராசை 31  குருட்டு 32  நியுட்டன் விதி 33  விவசாயி 34  நீயும் கடவுள் 35  பஞ்சம் 36  அம்மா 37  கல்லறை 38  தேவதை 39  நேரம் 40  கோவணம் 41  வாசனை 42  இலக்கு 43   அன்பளிப்பு 44  என்ன ? ? ? 45  ஊசி நூல் 46  விடையா !!! 47  தற்கொலை 48  எதிரி 50  உன்னைச் செதுக்கி 52  விழி 53  டிக்கெட் 54  ஓப்பீடு 55  சிகிரெட் 56  முட்டாள் தனம் 57  அலை வட்டம் 58  கருவிழி 59  திரு நங்கை 60  கிராமம் 62  வரம் 63  தேடல் 64  பொட்டோ 65   பாவம் 66  ஹைக்கூ 67  காதல் உண்டு 68  பிச்சைகாரர்கள் 70  குருட்டு உலகம் 72  காத்திரு 75  அழகி … 77  சுடிதார் 78  சிலை பேசினால் 83  வெற்றி 85    உங்களோடு ஒரு நிமிடம்                     வணக்கம் வாசக நண்பர்களே !!  முதலில்  என்  புத்தகத்தை தேர்வு செய்து படிக்கும் உங்களுக்கு  நன்றியை கூறிக்கொள்கிறேன். கல்லூரி மாணவனான நான் தேனி எனும் தென்றல் வீசும் ஊரில் பிறந்து விவசாயி  மகனாய் வளர்ந்து வைரமுத்து வரிகளில் மிரண்டு  நானும் ஒரு கவிங்கனாகும் வரம் பெற்றேன். முகபுத்தகத்தில்   பதிவிட்டு அதில் நல்ல வரவேற்பு பெற்ற கவிதைகளை    உங்களுக்கு சமர்பிக்கிறேன்.            வானத்தை  வாடகைக்கு வாங்கி ஏவுகணை முனையில் நீல கடலை மையாக தொட்டு நான்  எழுதிய கவிதை  மேகங்கள் எப்போதும் உன் நெஞ்சில் மழையாய் பெய்யும் என நம்புகிறேன்.  கடவுள்    என்  அப்பாவும்              கடவுள் தான்    ஆயிரம் விதைகளுக்கு           உயிர் கொடுப்பாதால்    நல்ல விவசாயியாக… []               அம்மாவுக்கு   அகண்ட வயிறு        வச்சவளே  என் ஆசை நெஞ்சை         தைச்சவளே..  கால விரிச்சு       நடந்துருப்ப  கதறி கதறி           அழுதுருப்ப  என்ன நீயும்          சுமக்கயில… நீ இழுத்த          முச்சேல்லாம்  நான் தானே         சுவாசிச்சேன்    வறுமையில       வயிறு வத்தி  போனாலும்      உன் பாசம்  வத்தி  போகலயே     கருப்பா சிவப்பானு         பாக்காம கண்இமையா         நீ சுமந்த பெருமான நா       பாத்தா உன்னை  சுமக்க       வரங்கேப்பேன்...  வருசமெல்லாம்      உன்னை சுமந்து  வானத்துல       பறந்துருவேன்    சுகமுன்னா        சுகந்தானே  ஆத்தா உன் மடியில்       உறங்கையில ...  []     ஆஹா… விண் மீன்கள்        எல்லாம் விரல் மோதிரமானால்          ஆஹா…  குளிர் பானங்கள்          எல்லாம் குளங்களாய் போனால்           ஆஹா…   மது பானங்கள்           எல்லாம் சாக்கடையில் போனால்               ஆஹா…   சிறகுகள்        இல்லாது பறவைகள் பறந்தால்              ஆஹா…   சிவ பெருமான்        கையில் சிலுவையை பார்த்தால்         ஆஹா…   சாதி சான்றிதழ்           இல்லா   தமிழகம் கிடைத்தால்         ஆஹா…   குரங்குகள்        இல்லா கட்சிகள் கிடைத்தால்           ஆஹா…   மோசங்கள்       செய்யாத  முதல்வர்கள் கிடைத்தால்           ஆஹா… ஆஹா…   விவசாயி   வரண்ட மண்ணை வெட்டி வரப்பாக்கினேன் மேகத்துக்காரன் மழைத் தராமல் ஏமாற்றினான்   விதையும் உரமும்  வாங்க போராடினேன் அதிக விலைக்கும் குறைந்த தரமும் தந்து ஏமாற்றினான்    பழமும் காயும் நல்லத் தரமாக்கினேன் பணமும் விலையும் குறைவாக்கினான்   கடனும் அடகும்     நிறைவாக்கினான் சோகத்தை காதில்  பறையாக்கினான்    நல்ல விதையை  ஊன மாக்கினான் பீட்சா,பிரட்டை தினமும் சாதமாக்கினான்   விவசாயின்     வாழ்க்கையை கஷ்டத்துக்கு       தானமாக்கினான்   யார் அவன் ??? கேவலம் நாகரிகப் பித்து பிடித்த  கிறுக்கன் அவன்.  ஒரு ரூபாய்   ஒரு ரூபாய்க்கு ரத்தம் தடவிய  மாங்காய் கீற்று வாங்குவதா...    கருப்பு பூமி  கோலி குண்டு வாங்குவதா...    வெல்லத்தில் மிதந்த பணியாரம் வாங்குவதா...   பத்து பைசா ரோஜாமிட்டாய்  வாங்குவதா...      குழப்பத்தில் கைவிட்டேன்  கால்டவுசரில் காசும் மனமும் டவுசர் ஓட்டையில் தொலைந்து விட்டது…      அர்த்தம் கூண்டு கிளியும்          தொட்டி மீனும் சிரிக்கின்றது         மனிதனுக்கு சந்தோசத்தின்        அர்த்தம் புரியவில்லை என்று….     பணியாரம்   தென்னங்கிற்று குடிசையில் சுருக்கத்துக்கு சொந்தகாரியின் அடுப்பில் சிக்கிய விறகின் கோபத்தால் பள்ளகுழி சட்டி சூடேரிக் கிடக்குது பாவம் மாவு மாட்டிக்கிட்டு  அரைவேக்காடா கருகுது அத கிழவி கருப்பட்டி பாலில் மிதக்கவிடும் போது ஊரும் எச்சில் நீச்சல் குளத்தை நிரப்பிடும் அம்பது பைசாவுக்கு அந்த ருசி கிடைச்சது ஆனா இன்னைக்கு??????    விடுதலை   வெயிலை கூட         சுகமாக்கி கொண்டேன்       வியர்வைக்கு விடுதலை       கிடைப்பதாலே….   கோபம் பூவின் அழகுக்காக செடி வைப்பவர்கள் அல்ல நாங்கள் பூமியின் அழகுக்காக மரம் வைப்பவர்கள்  நாங்கள்...    எப்போதும் வேர்வை தான் என்ன செய்வது எங்களை நம்பி  பல வயிறு  பட்டினி கிடக்குமே...    வருமானம் ஏதோ குறைவு தான் தன்மானம் மட்டும் விவசாயிக்கு பெரிது தான்... எனக்கும் நாகரிகமாய் வாழ ஆசை தான்  நாங்கள் அங்கே  வந்து விட்டால் பாவம் நாகரிகத்தார்  சட்டையை தான்  திங்க வேண்டும்...    முடிந்தால் வந்து  மண்ணோடு விளையாடு மரத்தோடு உறவாடு    ஏழை தான் நான் ஆனால் என் விதைகள் என்னை முதலாளியாய் மதிக்கிறது அது  போதும் ஒரு விவசாயிக்கு        காத்திருக்கு…   நம்ம ஊரை விட்டுபுட்டு  நாகரிகம் பழகளாமுனு வந்தா!!!!!! நாறுது நகரம்.    குழாய் போட  ஆசைப்பட்டு  குடும்பத்தை  விட்டுட்டு  கொத்தடிமையா கிடக்குறோமே    உன் பாட்டனும்  ஏன் பாட்டனும்  குழந்தையா  வளத்த மரத்தை மறந்துட்டு  மண்வாசனை  இல்லாத நகரத்தில வாழனுமா???    சோறுபோட மண்ணிருக்கு சொந்தமெல்லாம் காத்திருக்கு   ஓயாம உழைக்காம,  ஒய்யாரமா உழுவ செம்மண்ணு காத்திருக்கு சிக்கிரமா கிளம்புடா தோழா!!!!!!            தவம் தமிழ் பூமியில்      பிறப்பது தவம் என்பேன் நான்   அக்கினிக் குஞ்சொன்று கண்டு பிடித்தவன்  இங்கே தான்...    ராமாயணத்தை  கவிதையாக்கியன் இங்கே தான்...    இறந்த மாட்டின் தோலையும் பறையாக்கி வாழ வைத்தவன் இங்கே தான்...   இரண்டடி வரியில் உலகை அளந்தவன் இங்கே தான்...   தஞ்சை கோயிலெனும் அதிசயம் செய்தவன் இங்கே தான்...   மீனவனாய் பிறந்து விஞ்ஞான வலை விசியவனும்  இங்கே தான்...    ஒவ்வொரு தமிழனும் நமக்கு தமிழ் தாய்  வாழ்த்து தான்...  எச்சில்   அரசியலில்  பண எச்சில்கள்  எல்லாம் வீணாக  வீதியில்  பிரச்சாரத்திற்கு துப்பபடுகிறது...      மின்னல் மின்னல் நேராக தோன்றினால் அழகாக தெரியாது அது போலவே வாழ்வும்…     போர்வை   ஒசோனும் போர்வைதான் பூமி காக்க… அரசாங்கம் போர்வைதான் லஞ்சம் காக்க… நம்பிக்கை போர்வைதான் வெற்றி காக்க… காதல் ஒரு போர்வை தான் அன்பு காக்க… கஷ்டங்களும் போர்வைதான் அனுபவம் காக்க சந்தோசமும் போர்வை தான் உயிரை காக்க...   நிரபராதி இரும்பு கம்பிகளில் சிக்கி கொண்டு இருக்கிறான் நிரபராதி இரும்பு கம்பிகள்  தொழிற்சாலைக்கு முதலாளியாய் இருக்கிறான் குற்றவாளி…    பேராசை பேராசை ரப்பரை போலே  நம்மை இழுக்கும்   அது சந்தோச பருமனை ஒடுக்கி ஒல்லியாகி ஒரு கட்டத்தில் பிய்ந்து விடும்….   குருட்டு            குருடர்களுக்கு                        மட்டும் தான் தெரியும்                  காதல் அழகை சார்ந்தது                          இல்லை என்று…    []         நியுட்டன்  விதி           இன்னொரு    நியுட்டன்                                    கிடைப்பானா             உன் கண்களின்                                ஈர்ப்பு விசையை                கண்டு அறிய …        []         விவசாயி              எப்போது மனிதன்                    கனியின்றி , கணிணியை            உண்ணும்   நாள் வருமோ                            அப்போது தான்              வியர்வை சிந்திய                      விவசாயின்  ஞாபகம் வரும் []       நீயும் கடவுள்         கடவுள் எனும்  கல்லுக்கு                    உடுத்தும் ஆடையை           ஏழை எனும் குழந்தைக்கு                       உடுத்தி பார் நீயும்           கடவுளாவாய் …..             []           பஞ்சம்         தாகத்திற்கு                       சிறு நீரும்          பஞ்சமாகி விட்டது                    சில  நாடுகளில்… []                       அம்மா           என் முதல்                   பிறந்தநாள்  வாழ்த்து           பிரசவத்தில்                      என் அம்மாவின்            அன்பான  கதறல்கள்….                  []     கல்லறை        மகனே!!! உயிரோடு                இருக்கும் போதே       என்னைக் கொன்றுவிட்டாயே                       முதியோர் இல்லம்       எனும் கல்லறையில்                    புதைத்து விட்டாயே…..           []              தேவதை          படுதா  பெண்ணே!!!                      ஏன் இந்தக் கருப்பு ஆடை           உன் கண்களால்                       என்னைக் கொன்று விட்டு              இரங்கல் காட்டுகிறாயா…. []                                        நேரம்           விலை உயர்ந்த                   கடிகாரம்  அணிந்தவனுக்கு           நேரம் கிடைக்கவில்லை                       வாழ்க்கையை ரசிக்க...             []         கோவணம்           கோவணத்தோடு                       உழுவதால் நான்            மானங்கெட்டு                         இருக்கலாம்  ஆனால்             என்  ஒவ்வொரு நெல்லும்                                தானம் கெட்டதல்ல…                 []             வாசனை          இறந்த பிணமாய்க்                 கிடந்த போதும்          ரோஜா மாலை வாசனையில்                  அழுகிறாள் தாய்           தன் மகன் வெளிநாட்டில்                      இருந்து வரவில்லை என்று..            []         இலக்கு               எந்த அறிவும்                        இல்லாத குண்டுகளே                சரியாக இலக்கை                         தாக்கும் போது                நம்மால் ஏன் முடியாது…   []             அன்பளிப்பு                பூமிக்கு                         மழைத் துளிகளின்                அன்பளிப்பு                         குடைக்காளான்கள்…           []           என்ன  ? ? ?            உழவுக்காக                      போராடுபவனுக்கு             உணவுக்காக                          போராடுபவன்              உதவினால்  என்ன ? ? ?       []     ஊசி நூல்           இறைவா!!! ஊசி நூல்                     கொண்டுவா           உலகில் உருண்டையில்                    அளவற்ற பிளவுகள்            அதைத் தைத்து உலகை                        ஒர் நாடாக்குவோம்               []     விடையா !!!           மின்னலுக்கு                  மேகம் தடையா ???            கண்களுக்கு                   காதல்  விடையா???             உன் பார்வை என்ன                     கடவுள் கொடையா???             இதழ்கள் என்ன                       முத்த மடையா???              அழகு என்ன                        பிரம்மன் படையா ???                                தற்கொலை          முத்தங்களே !!! தற்கொலைக்கு                  தயாராகி விட்டது           இளம்பெண்களின்  கொடூர                   கற்பளிப்பை கண்ட பின்பு…        []         அலங்கோலம்       சாக்கடை நாற்றம்                  தோற்று போனது         உன்  சாய நாற்றத்தில்….               வெற்றிலையும்                     வெறுத்து  போனது        உன் உதட்டு சாயத்தால்…   பிரம்மனின்  கற்பனை            கலைந்து  போனது    உன்  அளவற்ற                அலங்காரத்தால்…..                                 எதிரி      காற்றே நீ              என்  எதிரி தான்     அவள் கூந்தலை              வருடும்  போது     ஆனாலும்  நீ என்                நண்பன் தான்     அவள்  கூந்தல்                  அலையை நான்      ரசிக்கும்  போது…        யார் அவள் ???   வான கதிர்களின்        வண்ண வெளிச்சம் வாழ்ந்து கிடக்குதடி         உன் பாற்கடல் சிரிப்பில்…   நீ  அணிந்தால்          கந்தலும் பந்தலாகுமடி   நம் திருமணத்திற்கு…   சிங்கப்பூர்  செண்டும்            உன் நறுமணத்தால்   வெக்க போர் கொள்ளுதடி…     மேகத்தில்  மறைந்த         விமானத்தை போல உன் பல்வரிசையை        ஓளித்து காட்டுடி…   உன் கண் இமையில்        நூல்  கோர்த்தால்  அரிய வகைப்         பட்டாடை கிடைக்குமடி…   உன்னைச் செதுக்கி       சிலையாக்கி இருந்தால் சோழன் பேருலக       புகழ் பெற்றிருப்பான்…      உன்னைப் பார்த்த         என் கண்கள்  திரும்பி பார் என           என்னை மிறட்டுதடி…   இதற்கு மேலாக          நான் எழுதும்  ஓவ்வொரு வரியும்         உன் அழகெனும் கவிதையோடு     போரிட்டு தோற்றுவிடுமடி….            விழி உன்  கருவிழி      ஒரம் திரும்ப என் இருவிழி          காத்திருந்தது அழகாக… []           டிக்கெட்      கடவுள் எனும்          கண்டக்டர்  தோல்வி எனும்   டிக்கெட்டையை  கிழித்து         தருகிறான் என்றால்  ! அது வெற்றி எனும்          அழகான பயணத்துகாக…. []       ஓப்பீடு        உன்னோட சுடிதாரும்            நீ போட்ட லிப்ஸ்டிக்கும்         உன்னோட கண்மையும்               ஸ்டிக்கர்  பொட்டும்         விலை உயர்ந்ததல்ல                உன்னோட கண்களோடு          ஓப்பிட்டு பார்க்கும் போது…      []   சிகிரெட்    அழகான  சிகிரெட்              ஒன்றைக் காதலித்தேன்    புன்னகைப் புகையை           உறுஞ்சும்  சுகம் தந்தது     பழக  பழுக             பகை எனும் நெஞ்சை    பொசித்து விட்டது…. []     முட்டாள் தனம்      தேவை இல்லா                நகத்தை  வளர்த்து      ரசிக்கிறோம்….       தேவை உள்ள                 மரத்தை  வளர்க்க     மறுக்கிறோம்… []          அலை வட்டம்   தேங்கிய குளத்தில்         மழைத் துளி   அலை  வட்டமிட்டது… ஓங்கிய காற்றில்      மூங்கில் கீச்சலிட்டது… இயற்கையை நண்பனாய்         நான் பார்த்த போது… []                    கருவிழி            கவிதைக்காரன்  நான்       களவுக்காரி  நீ ஏன் பேனாவை        திருடி விட்டாய் உன்னை நான்          வர்ணிப்பேன் என்றா ??? உன்னை வர்ணிக்க          பேனா எதற்கு   உன்  கருவிழி ஒர            கண்மை போதுமே… []   திரு நங்கை   நான் என்ன செய்வேன்      அந்த பிரம்மன் செய்த தவருக்கு வேலை தான் கொடுக்கவில்லை       கொஞ்சம் வேதனை கொடுக்காதீர்   நான்   ஆணாய்ப் பிறந்தால்          வீரனாகியிருப்பேன்… பெண்ணாய்ப் பிறந்தால்        தெய்வமாகியிருப்பேன்..   இரண்டும் கிடைக்கா         கொடிய குற்றவாளி நான்..           உடம்பில் ஒட்டிப் பிறந்த         மனிதனை மதிக்கும் நீ  குணத்தில் ஒட்டிப் பிறந்த           என்மேலேன்ன வெறுப்பு   மன்னியுங்கள் இந்த          திருநங்கையை … மதியுங்கள் இந்த         பெருநங்கையை… []                 கிராமம்   அரை டவுசரில்         ஆயிரம்   ஓட்டைகள்   எப்போதும் அடங்கா         எங்கள்   சேட்டைகள் மணலால் கட்டிய         மழைக்  கோட்டைகள் என்றென்றும் எங்கள்          கிராமத்தில் மட்டும்…    []   வரம்   கடவுளிடம் வரம்       கேக்க வாய்ப்பு வந்தால்  உன் கண் முன்            நான் மட்டும் அழகாகத் தோன்ற         வரம் கேட்பேன் மன்னித்து விடு           உன்னிடத்தில் நான் சுய நலவாதி தான்….   []              தேடல்   ஆண்களோ       பெண்களைத்தேடி பெண்களோ      பொன்னைத் தேடி   கோழையோ        வறுமையைத் தேடி வீரனோ       பெருமையைத் தேடி   பூனையோ       எலியைத் தேடி பாரமோ       வலியைத் தேடி நிஜமோ       நகலைத் தேடி பொட்டோ        நெற்றித்தேடி தோல்வியோ         வெற்றித் தேடி   தேடல்கள்         பாடல்கள் அல்ல முடிந்து விட        தொடரும் ……                  பாவம் உணவுக்காக      உழும் போது  தான் தெரிந்தது      உணவை வீணாக்குவது பாவம் என்று….. []                                                ஹைக்கூ கதறிக்கதறி    அழுதும் தாய்பால் கிடைக்கவில்லை         அனாதைக்குழந்தை…     []             காதல் உண்டு அழகாய் நானும்       பிறக்கவில்லை  எந்தப் பெண்ணும்        என்னை ரசிக்கவில்லை … பணமும் ,பந்தாவும்          அதிகமில்லை  அன்பு மட்டும்       நெஞ்சில் குறையவில்லை … காதலிக்க நானோ              ஹீரோஇல்லை  என் காதல் ஒன்றும்             ஜீரோ இல்லை  காதல் இல்லா           நெஞ்சம்  இல்லை  காத்திருப்பில்           பஞ்சம் இல்லை … காதல் இல்லா           ஆணுக்கு  உண்மையான         காதலோடு  மனைவி      காத்திருப்பாள் தனிமனிதா            வெறுக்காதே  காதல் உண்டு         மறுக்காதே …  []   பிச்சைகாரர்கள் தன் அம்மாவை முதியோர்இல்லம்      சேர்க்கச் சொல்லி கெஞ்சுபவன்  கடவுளை வணங்கி தன்னை       மட்டும் காப்பற்ற கேட்பவன்    விவசாய தொழிலை     மதிக்காது சோறு கேட்பவன்  தன் உண்மையான தோழியிடம்      காதலிக்க கேட்பவன்    கம்மங்குழை கேவளபடுத்தி          பீட்சா கேட்பவன்  மணலை அள்ளி கட்டிடம் கட்டிவிட்டு       மழை  கேட்பவன்    இன்னும்  மாமனாரிடம்       வரதட்சணை  கேட்பவன்  சாக்கடை  சுத்தம் செய்பவனை      குடிசையில் தள்ளி மாடி வீடுகேட்பவன்      இதற்கெல்லாம் மேலாமாக         ஒன்றுமே செய்யாதுஓட்டு  கேட்பவன்  இவர்கள் தான் உலகத்தின்      உண்மையான பிச்சைகாரர்கள்....       []       குருட்டு உலகம்   அவளுக்கு காந்த        கண்களாம் தெரியவில்லை  இறகு        இமைகளாம் தெரியவில்லை    வைரப்        பற்களாம் தெரியவில்லை  போர் வில்        புருவமாம்  தெரியவில்லை    அவள் வார்த்தையில்         வந்த காதல் மட்டும் தெரிந்தது  உலகம்  என் நெஞ்சில்          உருண்டது அவள் காதலால்      கடவுளே நான்           குருடனாய் பிறந்தது  யார் செய்த தவமோ????            இல்லை யென்றால்  அவள்  அழகைத்தானே             காதலித்திருப்பேன்  உருவ பொம்மையல்ல              நம் காதல்  உணர்வு பொம்மையடி           நம்  காதல்...  []             காத்திரு    காற்றில் சிக்கிய       காகிதமாய் பறக்காதே  ஆலமாரமாய் நில்        புயல் வந்தாலும்     மோதிப்பார்க்கலாம்        வெற்றியை     ஊதிப் பார்க்கலாம்...  கொஞ்ச நேரம்        வந்தாலும்  மிரட்டும் மின்னலாய்     எந்த நேரமும் இருப்போம்  தோல்வியை       தோழனாக்கி பார்  வெற்றி         அடிமையாவான்  கத்திகள் ரத்ததிற்கு       அஞ்சுவதில்லை  புத்திகள் குற்றத்திடம்       கெஞ்சுவதில்லை    தடைகள்ஆயிரம்         வந்தாலும் பல  துன்பங்கள் ஆயிரம்       நேர்ந்தாலும்  வெற்றியை ருசிப்பவன்       தான் உண்மையான  வெற்றிக்குத் தகுந்தவன்…   []   அழகி …   அழகி போட்டி நடத்துபவருக்கு தெரியவில்லை போலிருக்கிறது அன்பை விட பெரிய அழகி வேறில்லை என்று  []       சுடிதார்   ஆயிரம் பள்ளி சுடிதார்கள் மத்தியில் உன் சாயம் போன ரிப்பன் காட்டி கொடுத்தது…   ஏழ்மையிலும் என் அழகு பணகாரியே… உன் ரெட்டை ஜெடைக்கு மாலையாய் அந்த மல்லிகை பூ அந்த பூ ஐந்து சவரன் ஆபரண தங்கத்துக்கு நிகராணது ...         நீ பத்தாப்பு நான் பண்ணடாப்பு எப்போதும்  உன் ஞாபகமாய் என் மனதில் வெடிக்கும் மாத்தாப்பு...      நாளைய சந்தேகம்           பாலைவனம் இல்லா        பச்சை வண்ணம்      பார்க்கமுடியுமா           என சந்தேகம் !!!  வானத்தின் நிஜ      நிறம்  பார்போமா  என சந்தேகம்!!!  ரேசன் கடையில்     அரிசி பருக்கை  பார்க்க முடியுமா       என சந்தேகம்!!!  பொங்கல் விழாவில்          எதை வைத்து  சமைப்பார்கள்       என சந்தேகம்!!!    எந்த சாக்கடையில்        உள்ள தண்ணிர்  குடிப்பார்கள்        என சந்தேகம்!!!  அந்த சாக்கடையில்    கூட தண்ணீர்  பார்க்க முடியுமா       என சந்தேகம்!!!  இதழ்கள்      சண்டைபோடும்  முத்ததில் நிஜ         காதல்  இருக்குமா  என சந்தேகம்!!!  மாநிலத்திற்கு     ஒரு விவசாயி  ஆவது இருப்பாரா      என சந்தேகம்!!!       இதை விட       மனிதர்கள் ஊனம்  இல்லாமல்     பிறப்பார்களா  என்பதே  சந்தேகம்!!!   []         சிலை பேசினால்   சாமி கும்புட வரும் நீ  கடவுளை  தேடும் நேரத்தில் என் சிற்பத்தை ரசித்திருந்தால் நீயும் அறிஞன் ஆகியிருப்பாய் ...  வெளிநாட்டு அழகை ரசிக்கும் உங்களுக்கு எங்கே என் சிற்பியின் திறமை தெரிய போகுது??? பாவங்களை  தொலைக்க மட்டுமே கோயில் வந்தவருக்கு பாறைகளை குடைந்து செய்த சிற்பிகளின் அருமை புரிய போகிறது  பாலும் தேனும் என் மேல் சிந்தாமல் பாவம் தீர்க  பசித்தவனுக்கு  சிந்துங்கள் அவன்  சிரிப்பு உன்னை  கடவுளாக்கும்..      வெற்றி மலைகளின் மரணம்        மண்சரிவில்  வெற்றியின் மரணம்           மன சரிவில் …  வானொலி என்றால்            ஒலி  கேட்கும்  வெற்றி என்றால்            வலி  கேட்க்கும்…  []