[]           தைத்திரீய உபநிஷத் கோ . ரா . பாலசுப்ரமணியன்       மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியிடு : FreeTamilEbooks.com    உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                                    பொருளடக்கம் முன்னுரை 4  சீக்ஷாவல்லி 5  ஆனந்தவல்லி 18  ப்ருகுவல்லி 29      முன்னுரை   கடவுள் என்னும் தத்துவத்தின் உண்மையை ஆராய்வதில் வேதகால ரிஷிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து பிற்கால சந்ததிகளாகிய நமக்கு உபநிஷத்துகள் என்ற அறிவுப்பெட்டகங்களை அருளியுள்ளனர். இவற்றுள் மூன்று பாகங்களைக்கொண்ட தைத்திரீயோபநிஷத் ஒரு முக்கியமான உபநிஷத்.   ரிஷிகளின் கருத்துகளை உபநிஷத்துகள் சுருக்கமாகவும் சில இடங்களில் சங்கேதமொழியிலும் கூறுகின்றன. பண்டைய நாட்களில் சீடர்கள் குருவோடு வாழ்ந்து கற்கும்போது இவற்றை குரு விளக்கியும், சீடர்களின் சந்தேகங்களுக்கு தகுந்த விடைகள் அளித்தும் ரிஷிகளின் உட்கருத்தை சீடர்கள் அறியுமாறு செய்வார்.  வேதகாலங்களில் இப்படிப்பட்ட விளக்கங்களையும் விடைகளையும் புத்தகமாக எழுதி வைக்கும் முறை பின்பற்றப்படவில்லை. பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து புத்தமதம் சமண மாதம் இந்தியாவில் தலைதூக்கியிருந்த காலத்தில் சங்கரர் ராமானுஜர் மத்வர் போன்ற ஞானிகள் அவதரித்து சனாதன தர்மத்தை நிலைநாட்டினர். இவர்கள் காலவழக்கப்படி உபநிஷத்துகளுக்கு இவர்கள்  பாஷ்யங்கள் [விளக்கங்களை] நூல்ரூபமாக வடமொழியில் அருளியுள்ளனர். இந்நாட்களில் இவை தமிழ்மொழிபெயர்ப்பில் புத்தகங்களாக அறிஞர்களால் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழிபெயர்ப்பும் பெரும்பாலும் பல வடமொழிச்சொற்களை கொண்டு விளக்குவதால் ஓரளவேனும் வடமொழி தெரிந்திருக்க வேண்டியுள்ளது.   வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் உபநிஷதங்களை வடமொழியிலேயே படிக்க நேரம் இருந்ததால் மூலநூலை ஆழ்ந்து படிக்க வாய்ப்பு அமைந்தது..சிந்தித்தவைகளை எழுதிப்பார்த்தால் பல ஐயங்கள் தீர்ந்து தெளிவாயின. இந்தநூல் அவ்வாறு அமைந்தது. ஒவ்வொருவரும் தானே மூலநூலை மற்ற நூல்களின் உதவியோடு படித்தலே சிறந்தது. ஏனெனில் ஒருவர் அறிவுக்கு எட்டாத சில பொருள்கள் இன்னொருவருக்கு புலப்படலாம்.இவ்வாறு ஒருவர்கொருவர் உதவியால்தான்  இக்காலத்தில் நாம் பொருளை அறிந்துகொள்ளமுடியும்.   என்னுடைய இந்த முயற்சி தைத்திரீய உபநிஷத்தைப் பற்றி அறிய  ஆர்வமுடையோருக்கு ஒரு தொடக்க உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.     ஆசிரியர் கோ. ரா. பாலசுப்ரமணியன் பற்றி சிறுகுறிப்பு:   ஆசிரியர் மின்பொறி இயலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பன்னாட்டு மின்பொறியியல் நிறுவனத்தின் இந்திய கிளையின் மேனேஜிங் டைரெக்டராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். எண்பது வயது ஆகும் இவர் நூல்கள் படிப்பதிலும் ஆன்மீக விஷயங்களிலும் காலத்தை செலவிடுகிறார். தொடர்பு கொள்ளும் முகவரி   ceerbee @ gmail.com     ஓம் தைத்திரீயோபநிஷத்   தைத்திரீய ஆரண்யகத்தில் 7, 8, 9 ஆவது அத்தியாயங்கள் முறையே ஸீக்ஷாவல்லி , ஆனந்தவல்லி , ப்ருகுவல்லி என்ற பெயர்களுடன் தைத்திரீய உபநிஷத்தின் பகுதிகளாக அமைந்துள்ளன. ஸீக்ஷாவல்லி பிரபஞ்சத்தின்  இருப்பு (பொருள் ,உடல் ) என்ற தன்மையை  ஆராய்ந்தும் ப்ருகுவல்லி பிரபஞ்சத்தின்  செயல்முறைகளை ஆராய்ந்தும் , ஆனந்தவல்லி பிரபஞ்சத்தின் மனம்  (அ) அனுபவம் என்ற தன்மையை  ஆராய்ந்தும் ,  அவற்றின் மூலம் ஆராய்பவருக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன .               சீக்ஷாவல்லி   முதல் அனுவாகம்   ஹரி: ஓம் // ஹரி: ஓம் // ஸன்னோ மித்ரஸ்ஸம்வருண: / ஸன்னோ பவத்யர்யமா// ஸன்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி: /சன்னோ விஷ்ணுருருக்ரம: / நமோ பிரஹ்மணே /நமஸ்தே வாயோ/ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி /த்வமேவ ப்ரத்யக்ஷம் பிரஹ்ம வதிஷ்யாமி /ருதம் வதிஷ்யாமி / சத்யம் வதிஷ்யாமி/ தன்மாமவது/ த்த்வக்தாரமவது/ அவதுமாம்/ அவது வக்தாரம் /ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: //  ஸம் –(மங்களமாக ), நோ (நமக்கு), மித்ர: (மித்ரன்) ஸம் (மங்களமாக), வருண(.வருணன்), ஸம் –(மங்களமாக ), நோ (நமக்கு), பவது (ஆகட்டும்), , ப்ருஹஸ்பதி (ப்ருஹஸ்பதி), ஸம் –(மங்களமாக ), நோ (நமக்கு), விஷ்ணு: (எங்கும் உறைபவர் )), உருக்ரம: (எங்கும் செல்பவர்) நமோ (சரணம்) ப்ரஹ்மணே  (பெரும் மூலமே), நம: (சரணம்), தே (உனக்கு), வாயோ (காற்றே), த்வம் (நீ ), ஏவ (தானே) ப்ரத்யக்ஷம் (புலனால் அறியப்படும்), ப்ரஹ்ம (பெரும் மூலம்), அஸி (உள்ளாய் ), த்வம் (நீ ), ஏவ (தானே) ) ப்ரத்யக்ஷம் (புலனால் அறியப்படும்), ப்ரஹ்ம (பெரும் மூலம்), வதிஷ்யாமி (சொல்வேன்) ருதம் ( படைப்பின் ஒழுங்குமுறை) வதிஷ்யாமி (சொல்வேன்), சத்யம் (இருப்பின் தன்மை) வதிஷ்யாமி (சொல்வேன்), தத் (அது) மாம் (என்னை) அவது(தூண்டட்டும்), தத் (அது) வக்தாரம் (சொல்பவரை ) அவது(தூண்டட்டும்), அவது (காக்கட்டும்) மாம் (என்னை), அவது (காக்கட்டும்) வக்தாரம் (சொல்பவரை ) ஓம் (பெரும் மூலம் ) ஸாந்தி: (அமைதி), ஸாந்தி: (அமைதி), ஸாந்தி: (அமைதி),.    பொழிப்புரை : உலகங்களைத் தாங்கும் மித்ரனே அறிவைத்தாங்கும் வருணனே அறிவை நல்கும் அர்யமனே ,வாழ்வை அருளும் இந்திரனே ,ஞான வாக்கை அருளும் ப்ருஹஸ்பதியே , எங்கும் நிறைந்தவரும் எங்கும் செல்பவருமான சவித்ரு தேவனே எங்களுக்கு மங்களத்தை அருள்வீர்களாக . ப்ரஹ்மம் என்ற ஆதிமூலமே சரணம் ,வாழ்வின் சக்தியாகிய  காற்றே சரணம் நீதான் புலனால் அறியப்படும் ஆதிமூலமாக உள்ளாய் .நீதான் புலனால் அறியப்படும் ஆதிமூலமென்று சொல்வேன்., படைப்பின் ஒழுங்குமுறை என்று சொல்வேன், இருப்பின் தன்மை என்று சொல்வேன் .அந்த ஆதிமூலம் என்னைத்தூண்டட்டும் .அந்த ஆதிமூலம் ஆசிரியரை தூண்டட்டும்.என்னைக்காக்கட்டும் .ஆசிரியரைக்காக்கட்டும் .ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி. மனஉலகில் அமைதி.    இரண்டாவது அனுவாகம்     ஸீக்ஷாம் வ்யாக்யாஸ்யாம: / வர்ண ஸ்வர: / மாத்ரா பலம்/ ஸாம ஸந்தான: / இத்யுக்தஸ் ஸீக்ஷாத்யாய: //  ஸீக்ஷாம் (கற்பதைப் பற்றி) வ்யாக்யாஸ்யாம: (விவரிக்கிறோம் )வர்ண: (எழுத்து), ஸ்வர: (உச்சரிப்பு), மாத்ரா (கால அளவு ) பலம் (அழுத்தம்)சாம (வேதமந்த்ரம்) சந்தான:(தொகுப்பு ) இதி (இவ்விதமாக)உக்த: (சொல்லப்பட்டது) ஸீக்ஷா (கற்பதுபற்றி) அத்யாய: ( பகுதி)    பொழிப்புரை: கற்பதைப்பற்றி விவரிக்கிறோம், எழுத்து ,உச்சரிப்பு, கால அளவு அழுத்தம் வேதமந்த்ரம் இவ்விதமாக சொல்லப்பட்டது  கற்பதுபற்றி பகுதி.   கருத்துரை : ஒரு செய்யுளை நாம் படிக்கும் போது அதன் கருத்து நமக்கு வெளிப்படுகிறது .எழுத்துக்கள் உரிய உச்சரிப்பு,காலஅளவு, அழுத்தம் முதலியவற்றுடன் ஒன்று சேர்ந்து வார்த்தைகளாகவும் வாக்கியங்களாகவும் ஆகி செய்யுளாக வெளிப்படுகின்றன .. செய்யுளின் கருத்து ஒரு வாக்கியத்திலோ ,வார்த்தையிலோ எழுத்திலோ வெளிப்படுகிறதா என்றால் இல்லை . ஆனால் இவற்றில் எது ஒன்று  செய்யுளிலிருந்து நீக்கப்பட்டாலும் கருத்து மாறுபடும் .ஆகவே இவைஅனைத்திலும் கருத்து உள்ளுறைகிறதென்று கொள்ளலாம்.இது பின் வரும் பகுதிக்கு உவமையாக பயன்படுகிறது .   மூன்றாவது அனுவாகம்   ஸஹ நௌ யச: / . ஸஹ நௌ பிரஹ்மவர்ச்சஸம் /    ஸஹ (சேர்ந்து ) நௌ (எங்களுக்கு)  யஸ: (கீர்த்தி) ஸஹ (சேர்ந்து ) நௌ (எங்களுக்கு) பிரஹ்மவர்ச்சஸம் (பிரஹ்மஞான ஒளி)    பொழிப்புரை : சீடன் ஆசிரியர் எங்கள் இருவருக்கு கீர்த்தியும் பிரஹ்மஞான ஒளியும் உண்டாகட்டும் . அதாதஸ் ஸகும்ஹிதாயா உபநிஷதம் வ்யாக்யாஸ்யாம: / பஞ்சஸ்வதிகரணேஷு/ அதிலோகமதி ஜ்யௌஷித மதி வித்யமதி  ப்ரஜமத்யாத்மம் / தா மகாஸகும்ஹிதா இத்யாசக்ஷதே//  அத(பிறகு),அத: (மேற்கொண்டு)ஸம்ஹிதாயா: (சேர்க்கைகளுடைய) உபநிஷதம் (உடனுறைபவதை ) வ்யாக்யாஸ்யாம: (விளக்குகிறோம்), பஞ்சஸு (ஐந்துகளில்), அதிகரணேஷு (செயல்பாடுகளில்), அதிலோகம் (உலகத்துடன் உடனுறைவது) அதிஜ்யௌஷிதம் (பிரகாசங்களுடன் உடனுறைவது), அதிவித்யம் (ஞானத்துடன்  உடனுறைவது), அதிப்ரஜம் ( பிரஜோத்பத்தியுடன்  உடனுறைவது), அத்யாத்மம் (ஆத்மாவுடன் உடனுறைவது). தா : (அவைகள்)மகாஸகும்ஹிதா: (பெரும் சேர்க்கைகள்) இதி (என்று) ஆசக்ஷதே (காணப்படுகிறது).    பொழிப்புரை : பின் மேற்கொண்டு சேர்க்கைகளுடைய ஐந்து செயல்பாடுகளில்  உடனுறையும் தத்துவத்தை விளக்குகிறோம் .அதுவே உலகத்துடன், ப்ர்காசங்களுடன், ஞானத்துடன், ,ப்ரஜோத்பத்தியுடன், ஆத்மாவுடன் உடனுறைவது. அவைகள் ஐந்து பெரும் சேர்க்கைகள் என காணப்படுகின்றன.   அதாதிலோகம் / ப்ருதிவீ பூர்வரூபம் / த்யௌருத்தர ரூபம் / ஆகாஸஸ்ஸந்தி: / வாயுஸ் ஸந்தானம் / இத்யதிலோகம் //    அத (பின்னர்) அதிலோகம் (உலகத்துடன் உடனுறைவது ) ப்ருதிவீ (பூமி ) பூர்வரூபம் ( முன்தோற்றம்) த்யௌ: (மேல் உலகம்) உத்தரரூபம் (பின்தோற்றம்) ஆகாஸ: (ஆகாசம்) ஸந்தி: (இணைப்பு) வாயு: (உயிர் ஆற்றல்) சந்தானம் (செயல் ஆற்றல்) இதி (என்று) அதிலோகம் (உலகத்துடன் உடனுறைவது)    பொழிப்புரை : உலகத்தின் உடனுறைவதின் முதல் தோற்றம் பூமி  .  பின்னர் தோன்றுவது மேல் உலகம் . இவற்றை இணைப்பது ஆகாசம் (அ-து ) உள்ளொளியாகிய ப்ரஹ்மம்  , செயலை ஆற்றுவது வாயு  .   கருத்துரை : உலகம் எனப்படுவது உயிர்கள் பல்வேறு அனுபவங்களைப் பெறும் ஒரு அமைப்பாகும் .உலகம் பிரஹ்மத்திலிருந்து தோன்றி பிரஹ்மத்திலேயே நிலைபெற்றுள்ளது உதாரணமாக பூமியிலிருந்து தோன்றிய உயிர்கள்(உடல்கள்) பூமியிலேயே நிலைபெற்றுள்ளது போல.   பிரஹ்மமே ஆகாசமாகி அதுவே முன்னர் பூமியாகவும் பின்னர் மேலுலகமாகவும் தோன்றுகிறது. அதுவே வாயுவாகி செயல் ஆற்றலாக அமைந்து.உயிர்களுக்கு அனுபவங்களை நல்குகிறது.  அதாதிஜ்யௌஷிதம் / அக்நி: பூர்வரூபம் / ஆதித்ய உத்தரரூபம்/ ஆபஸ்ஸந்தி : /வைத்யுதஸ் சந்தானம்/ இத்யதிஜ்யௌஷிதம் //    அதாதிஜ்யௌஷிதம்(பின்னர் ப்ர்காசங்களுடன் உடனுறைவது) அக்நி: பூர்வரூபம் (சிற்றறிவு முதல் தோற்றம்) ஆதித்ய உத்தரரூபம் (பேரறிவு பின்னர் தோற்றம்) ஆபஸ்ஸந்தி: (ஆபஸ் என்ற ப்ரஹ்மம் இணைப்பு) வைத்யுதஸ் சந்தானம் (ஞானமின்னொளி செயல் ஆற்றல் ) இத்யதிஜ்யௌஷிதம் (இவ்வாறு ப்ர்காசங்களுடன் உடனுறைவது)    பொழிப்புரை : பிரகாசங்களுடன் உடனுறைவது ப்ரஹ்மம் ஆபஸ் என்ற எல்லைஇல்லா அறிவு , இணைப்பாகி ,அதில்  அக்னி என்ற சிற்றறிவும் பின்னர் ஆதித்யன் என்ற பேரறிவும் ஞானமின்னொளி என்ற செயல் ஆற்றலால் அமைகிறது ..   அதாதிவித்யம் / ஆசார்ய : பூர்வரூபம் /அன்தேவாஸ்யுத்தரரூபம் / வித்யா ஸந்தி: /ப்ரவசனகும் சந்தானம் / இத்யதிவித்யம் //    அதாதிவித்யம் (பின்னர் ஞானத்துடன் உடனுறைவது ) ஆசார்ய : பூர்வரூபம் (ஆசார்யன் முன்னர் தோற்றம் ) அன்தேவாஸ்யுத்தரரூபம் ( உடன்வசிக்கும் சீடன் பின்னர் தோற்றம்) வித்யா ஸந்தி: ( ஞானம் இணைப்பு ) ப்ரவசனகும் சந்தானம் (விளக்கம் செயல் ஆற்றல்) இத்யதிவித்யம் (இவ்வாறு ஞானத்துடன் உடனுறைவது)    பொழிப்புரை : ஞானத்துடன் உடனுறைவது ப்ரஹ்மம். ஞானம் என்ற இணைப்பில் முன்னர் ஆசாரியன் உருவிலும் பின்னர் சீடர்கள் உருவிலும் விளக்கம் என்ற செயல் ஆற்றலால் அமைகிறது.   .அதாதிப்ரஜம்/ மாதா பூர்வரூபம்/ பிதோத்தரரூபம்/ பிரஜா ஸந்தி: /ப்ரஜனநகும் சந்தானம் / இத்யதிப்ரஜம்//    .அதாதிப்ரஜம்(பின்னர் ப்ரஜோத்பத்தியுடன் உடனுறைவது) மாதா பூர்வரூபம் (அன்னை முன்னர் தோற்றம் ) பிதோத்தரரூபம்(தந்தை பின்னர் தோற்றம்) பிரஜா ஸந்தி: (பிரஜைகள் இணைப்பு) ப்ரஜனனகும் சந்தானம் (பிரஜைகளை தோற்றுவிப்பது செயல் ஆற்றல்) இத்யதிப்ரஜம் (இவ்வாறு ப்ரஜோத்பத்தியுடன் உடனுறைவது)    பொழிப்புரை : ப்ரஜோத்பத்தியுடன் உடனுறைவது ப்ரஹ்மம் பிரஜைகள் என்ற இணைப்பில் முன்னர் அன்னை உருவாகவும் பின்னர் தந்தை உருவாகவும் பிரஜைகளை தோற்றுவிக்கும் செயல் ஆற்றலால் அமைகிறது.   அதாத்யாத்மம் /அதராஹநு: பூர்வரூபம் /உத்தராஹனுருத்தரரூபம் /வாக்ஸந்தி: / ஜிஹ்வா சந்தானம் / இத்யத்யாத்மம் //    அதாத்யாத்மம்(பின்னர் ஆத்மாவுடன் உடனுறைவது) அதராஹநு: பூர்வரூபம் (மேல் முகவாய்க்கட்டை முன்னர் தோற்றம் )உத்தராஹனுருத்தரரூபம்(கீழ்முகவாய்க்கட்டை பின்னர் தோற்றம்) வாக்ஸந்தி: (பேச்சு இணைப்பு) ஜிஹ்வா சந்தானம் (நாக்கு செயல் ஆற்றல்) இத்யத்யாத்மம் (இவ்வாறு ஆத்மாவுடன் உடனுறைவது).    பொழிப்புரை : ஆத்மாவுடன் உடனுறைவது ப்ரஹ்மம் பேச்சு என்ற இணைப்பில் மேல்,கீழ் முகவாய்க்கட்டைகள் முன்,பின் தோற்றங்களாக நாக்கின் செயல் ஆற்றலால் அமைகிறது. இதீமா மகாஸகும்ஹிதா: //    இமா: (இந்த) மகாஸகும்ஹிதா: (பெரும் சேர்க்கைகள் )இதி (இவ்வாறு)  பொழிப்புரை : இவ்வாறு இந்த பெரும் சேர்க்கைகள் அமைகின்றன.   கருத்துரை : முன் அனுவாகத்தில் செய்யுளின் பொருள் எவ்வாறு எழுத்து ,உச்சரிப்பு கால அளவு அழுத்தம்  சொல் அனைத்திலும் தொக்கி நிற்கிறது என்று கண்டோம் . அதேமாதிரி ப்ரஹ்மம் ஐந்து பெரும் சேர்க்கைகளிலும் ஊடுருவி நிற்கிறது .   ய ஏவமேதா மகாஸகும்ஹிதா வேத/ சந்தீயதே பிரஜயா பஸுபி: / பிரமவர்ச்சஸேநாஅன்னாத்யேன ஸுவர்க்யேண லோகேன //  ய: (எவன்) ஏவம் (இவ்வாறு)ஏதா: (இந்த) மகாஸகும்ஹிதா: (பெரும் சேர்க்கைகளை ) வேத (அறிவானோ) சந்தீயதே(சேர்கிறான்) பிரஜயா(ப்ரஜையுடன்)  பஸுபி:(பசுக்களுடன்)  பிரமவர்ச்சஸேன(பிரமஞான ஒளியுடன்) அன்னாத்யேன (அன்னம் முதலியவற்றுடன்) ஸுவர்க்யேண லோகேன(சுவர்க்கம் போன்ற உலகுடன்)     பொழிப்புரை :எவன் ஒருவன் இந்தபெரும் சேர்க்கைகள் அனைத்தூடும் ப்ரஹ்மம் உள்ளது என்பதை அறிந்து வாழ்வானோ அவன் பிரஜைகள்,செல்வங்கள் ,அன்னம் முதலியன அடைந்து உலகில் சுவர்க்கம் போன்ற அனுபவத்துடன் வாழ்வான்.   யஸ்ச்சந்தஸாம்ருஷபோ விஸ்வரூப:/ சந்தோப்யோஅத்யம்ருதாத் சம்பபூவ / ஸ மேந்த்ரோ மேதயா ஸ்ப்ருணோது /அம்ருதஸ்ய தேவ தாரணோ பூயாஸம் //  ய:(எவர் )சந்தஸாம்(வேதங்களுள்), ருஷபோ(காளை) விஸ்வரூப: (அனைத்து உருவும் ஆனவர்)/ சந்தோப்யோ(வேதங்களிலிருந்து) அம்ருதாத்(அழிவில்லாததிலிருந்து)அதி சம்பபூவ(தலைவரானார்) / ஸ: (அவர்)மே (என்னை )இந்த்ரோ(இந்திரியங்களுக்கு தலைவன்) மேதயா(அறிவினால்) ஸ்ப்ருணோது(காக்கட்டும்) /அம்ருதஸ்ய(அழிவில்லா வேதத்தை ) தேவ(தேவனே) தாரணோ(அடைந்தவனாக) பூயாசம்(ஆவேனாக) //     பொழிப்புரை : எவர் அழிவில்லா வேதங்களின் மூலம் தலைவர் என அறியப்பட்டார் . அந்த புலன்களுக்குத் தலைவன் என்னை அறிவுக்கூர்மை உடையவனாக ஆக்கட்டும்.,தேவனே அழிவில்லா வேதத்தை அறிபவனாக ஆவேனாக.   ஸரீரம் மே விசர்ஷணம்/ ஜிஹ்வா மே மதுமத்தமா / கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் / பிரஹ்மண: கோஸோஅசி மேதயா பிஹித: / ஸ்ருதம் மே கோபாய //    ஸரீரம்(உடல்) மே(என்னுடைய )  விசர்ஷணம்(செயலுக்குத் தக்கதாக)/ ஜிஹ்வா(நாக்கு) மே(என்னுடைய)  மதுமத்தமா(இனியதைக் கூறுவதாக) / கர்ணாப்யாம்(செவிகளால்)  பூரி(விரிவாக) விஸ்ருவம்(கேட்பதாக) / பிரஹ்மண: (பிரமஞானத்தின்) கோஸோ(உறையாக)அசி(உள்ளாய்)  மேதயா(அறிவினால்) பிஹித: (நிறைந்தவன்)/ ஸ்ருதம்(கேட்கப்பட்ட வேதம்) மே(எனக்கு) கோபாய(நிலைத்து இருப்பதற்கு) //  பொழிப்புரை: என் உடல் செயலுக்குத் தக்கதாகவும் ,நாக்கு இனியதைக் கூறுவதாகவும்,செவிகளால் விரிவாகக் கேட்கவும் அருள் புரிவாயாக. பிரஹ்மஞானத்தின் உறை போன்ற நீ அறிவினால் நிறைந்தவன். கேட்கப்பட்ட வேதம் என்னுள் நிலைத்து செயல்பட அருள் புரிவாயாக.   ஆவஹந்தீ விதன்வானா / குர்வாணா சீரமாத்மன: / வாஸாகும்ஸி மம காவஸ்ச்ச//அன்னபானே ச ஸர்வதா / ததோ மே ஸ்ரியமாவஹ/ லோமஸாம் பஸுபிஸ்ஸஹ ஸ்வாஹா//    ஆவஹந்தீ(கொண்டுவருபவளாக) விதன்வானா(பரந்து விரிபவளாக) / குர்வாணா(செய்பவளாக) சீரம்(நீண்ட ஆயுளை)ஆத்மன: (என்னுடைய)/ வாஸாகும்ஸி(உடைகள்) மம(எனக்கு) காவஸ்ச்ச(கால்நடைகளும்)//அன்னபானே ச(அன்னபானங்களும்) சர்வதா(எப்பொழுதும்) / ததோ(பின்னர்) மே(எனக்கு) ஸ்ரியம் (செல்வச்செழிப்பை) ஆவஹ(கொண்டு வா )/ லோமஸாம்(ஆட்டு மந்தைகளை) பஸுபிஸ்ஸஹ(கால்நடைகளோடு) ஸ்வாஹா(உனக்கு அர்ப்பணம் ஆகட்டும்)//    பொழிப்புரை : வேத மாதா பரந்து விரிபவளாக எனக்கு நீண்ட ஆயுளை அளிப்பவளாக, உடைகள் கால்நடைகள் ,,அன்னபானங்கள் எப்பொழுதும் , கொண்டுவருபவளாக இருக்கட்டும் .எனக்கு ஆட்டுமந்தைகள் கால்நடைகள் முதலிய செல்வச் செழிப்பை கொண்டுவருவாயாக . உனக்கு அர்ப்பணம் ஆகட்டும்.   ஆ மா யந்து பிரஹ்மசாரிணஸ் ஸ்வாஹா /  வி மா யந்து பிரஹ்மசாரிணஸ் ஸ்வாஹா/ பிரமா யந்து பிரஹ்மசாரிணஸ் ஸ்வாஹா / தமா யந்து பிரஹ்மசாரிணஸ் ஸ்வாஹா / ஸ மா யந்து பிரஹ்மசாரிணஸ் ஸ்வாஹா //     மா(என்னிடம்) ஆயந்து(வருவார்களாக) பிரஹ்மசாரிண: (வேத மாணவர்கள்) ஸ்வாஹா(அர்ப்பணம் ) /   மா(என்னிடம்) வியந்து (பிரிந்து செல்வார்களாக) பிரஹ்மசாரிண: (வேத மாணவர்கள்) ஸ்வாஹா(அர்ப்பணம் )  பிரமாயந்து( முன்னேறுவார்களாக) பிரஹ்மசாரிண: (வேத மாணவர்கள்) ஸ்வாஹா(அர்ப்பணம் ) / தமாயந்து(புலனடக்கம் பயில்வார்களாக) பிரஹ்மசாரிண:(வேத மாணவர்கள்) ஸ்வாஹா(அர்ப்பணம் ) /  ஸமாயந்து(மன அடக்கம் பயில்வார்களாக) பிரஹ்மசாரிண: (வேத மாணவர்கள்) ஸ்வாஹா(அர்ப்பணம் )  //    யஸோ ஜனேஅஸானி ஸ்வாஹா/ ஸ்ரேயான் வஸ்யஸோஅஸானி ஸ்வாஹா//   யஸோ(புகழ்) ஜனே(சமூகத்தில்)அசானி(அடைவேனாக) ஸ்வாஹா(அர்ப்பணம்ஸ்ரேயான்(மேன்மைகள் பெற்றவனாக ) வஸ்யஸோ(செல்வவந்தர்களுள்)அசானி(ஆவேனாக) ஸ்வாஹா(அர்ப்பணம்) /     பொழிப்புரை: சமூகத்தில் புகழை அடைவேனாக. செல்வவந்தர்களுள் மேன்மைகள் பெற்றவனாக ஆவேனாக. உனக்கு அர்ப்பணம் ஆகட்டும். தந்த்வா பக பிரவிஸானி ஸ்வாஹா/ சமா பக ப்ரவிஸ ஸ்வாஹா/ தஸ்மின் சஹஸ்ரஸாகே/ நிபகாஹம் த்வயி ம்ருஜே ஸ்வாஹா//     தந்த்வா(அந்த உன்னை) பக(பகவானே) பிரவிசானி(உள்நுழைவேனாக) ஸ்வாஹா/(அர்ப்பணம்) மா(என்னை)ஸ பக(அந்த பகவானே  ) ப்ரவிஸ(உள்நுழைவாயாக) ஸ்வாஹா(அர்ப்பணம்) / தஸ்மின்(அந்த) ஸஹஸ்ரஸாகே(ஆயிரக்கணக்கான கிளைகள் உடையதில்)/ பக(பகவானே ) அஹம்(நான்) த்வயி(உன்னிடத்தில்) நிம்ருஜே(புனிதம் அடைகிறேன் ) ஸ்வாஹா(அர்ப்பணம்) //   பொழிப்புரை : பகவானே என்நினைவில் நீயும் உன்னினைவில் நானும் இருப்போமாக .உன்னிடம் விளங்கும் ஆயிரக்கணக்கான கிளைகள் உடைய வேதத்தில் ஆழ்ந்து புனிதம் அடைகிறேன். அர்ப்பணம் . யதாஆப: ப்ரவதாயந்தி /யதா மாஸா அஹர்ஜரம் / ஏவம் மாம் பிரஹ்மசாரிண: / தாதராயந்து சர்வத: ஸ்வாஹா //    யதா(எவ்வாறு )ஆப:( நீர்கள்) ப்ரவதா(பள்ளமாயுள்ள வழியால் ) யந்தி(செல்கின்றனவோ ) (/யதா(எவ்வாறு ) மாஸா(மாதங்கள்) அஹர்ஜரம்(நாட்கள் கழிவதாலோ) / ஏவம்(இவ்வாறு) மாம்(என்னை) பிரஹ்மசாரிண:(வேத மாணவர்கள்) / தாத: (அனைத்தையும் தாங்குபவரே ) ஆயந்து(வருவார்களாக) சர்வத:(எல்லா திக்குகளிலிருந்தும் ) ஸ்வாஹா(அர்ப்பணம்) //    பொழிப்புரை : நீர்கள் பள்ளமாயுள்ள இடத்தை அடைவதுபோல, நாட்கள் மாதங்களில் ஒன்றுவதுபோல ,பகவானே,என்னிடம் எல்லாதிக்குகளிலிருநதும் வேதம்பயில மாணவர்கள் வருவார்களாக .  அர்ப்பணம்.   பிரதிவேஸோ  அஸி  பிர மா பாஹி பிர மா பத்யஸ்வ /  பிரதிவேஸோ(உடன்வசிப்பவர்) அஸி (உள்ளீர்கள் ) மா(என்னை) பிர பாஹி(ஒளி ஊட்டுங்கள்)  மா(என்னை)  பிரபத்யஸ்வ(காப்பீராக) /    பொழிப்புரை : உடன்வசிப்பவராக உள்ளீர்கள் .எனக்கு அறிவு ஒளி ஊட்டி என்னைக் காப்பீராக .   கருத்துரை : இந்த உபாசனையில் ரிஷி ப்ரஹ்மத்தை  பகவானாக சாதகர் உள்வாழ்பவராக அறிவிக்கிறார். சாதகர் பகவானின் அருளை வேதங்களின் மூலம் நல்வாழ்வுக்காகவும்  ஞானத்துக்காகவும் வேண்டுகிறார் .   இடை உரை   இந்த உபாசனையில்  உலகங்களின் ஏற்பாட்டையும் அவற்றில் உள்ள தோற்றங்களையும் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது..பெரும்பான்மையான மக்களுக்கு இந்த ஏற்பாடு அறிவுக்கு இசைந்ததாக தோன்றும். கடவுளை தங்கள் நாட்டு ஞானியர்கள் அறிவித்தவாறு உபாசித்து பயனடைவர். எடுத்துக்காட்டாக ஸ்ரீமத்வாசார்யர் உபதேசித்த மத்வ மதம், மற்றும் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை கூறலாம். மற்றும் சிலருக்கு பல கேள்விகள் மனத்தில் எழும். அவையாவன, 1. உலகங்களின் அமைப்பு இந்த ஒரு மாதிரிதானா? வேறு அமைப்புகள் படைப்பில் உள்ளனவா? 2. கடவுளும் அவர் படைப்பும் தனித்தன்மை கொண்டவர்களா? தனித்தன்மை உடையவர்கள் என்றால் இணையான வலிமை இல்லை என்றாலும் கடவுளை எதிர்த்து ஒருவன் தன் தனித்தன்மையை நிலைநாட்டமுடியுமா?அப்படிப்பட்ட எதிர்ப்பே கடவுள் வலிமை அளவற்றதாயினும் கட்டுப்பட்டதே என்று ஆகாதா? 3.   மேற்கூறியபடி நிலை என்றால் ஏதேனும் ஒரு உலக அமைப்பில் புராணங்களில் கூறியவாறு அசுரர்கள் கடவுளை அடக்கி ஆளமுடியுமா?   மாஹாசமஸ்யர் என்னும் ரிஷி இந்த கேள்விகளுக்கு விடை தேடினார். அவர் பெயரில் ஒரு உள்ளடங்கிய பொருள் உள்ளது.அதாவது பிரஹ்மாண்டம் அனைத்தையும் அளந்தவர் (ஆராய்ந்தவர்) என்பதே.பின்வரும் மூன்று அனுவாகங்கள் அவர் கண்ட உண்மையை விவரிக்கின்றன     ஐந்தாவது அனுவாகம்     பூர்புவஸ்ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ருதய: /  பூர் (பூ : ) புவ (புவ: )ஸுவ (சுவ:) இதி வா (என்றுதான்)ஏதா: ( இந்த) திஸ்ரோ (மூன்று ) வ்யாஹ்ருதய: (மந்திர சொற்கள் )    பொழிப்புரை : பூ:, புவ:, சுவ: என்ற மூன்று மந்திர சொற்கள்     கருத்துரை : ரிஷி உலகங்களும்  அவற்றின் நடப்புகளும்  மூன்று கூறுகளாக அமைவதையும் அவை பூ;, புவ:, சுவ: என்ற மந்த்ரங்களாகவும் தேவதா ஸ்வரூபங்களாகவும் தன் ஞானத்ருஷ்டியில் காண்கிறார்.  பூ: என்ற தேவதா ஸ்வரூபம் வரையறுக்கப்பட்ட பொருள்  அமைப்புகளை படைப்பு அனைத்திலும் குறிக்கிறது.    புவ: என்ற தேவதா ஸ்வரூபம் செயல் அமைப்புகளை படைப்பு அனைத்திலும் குறிக்கிறது.  சுவ: என்ற தேவதா ஸ்வரூபம் எண்ண அமைப்புகளை  படைப்பு அனைத்திலும் குறிக்கிறது.  தாசாமுஹஸ்மை தாஞ்சதுர்த்தீம் / மாஹாசமஸ்ய: பிரவேதயதே/ மஹ இதி   தாசாம் (அவற்றின்)உ ஹ (முதன்மையாகவே) தாஞ்(அந்த )சதுர்த்தீம்(நான்காவதை) / மாஹாசமஸ்ய: (மாஹா சமஸ்யர்) பிரவேதயதே ஸ்ம (அறிவித்தார்  )/ மஹ: (மஹ:) இதி (என்று)    பொழிப்புரை: மாஹா சமச்யர் அவற்றின் முதன்மையான அந்த நான்காவதான  மஹ: என்பதை அறிவித்தார்   தத்பிரஹ்ம /ஸ ஆத்மா / அங்கான்யன்யா தேவதா: /.   தத் (அது)பிரஹ்ம (ப்ரஹ்மம்) /ஸ (அவர் ) ஆத்மா (ஆத்மா) / அங்கானி(உறுப்புகள் ) அன்யா (மற்ற ) தேவதா: (தேவதைகள் )    பொழிப்புரை : அந்த மஹ: என்பது ப்ரஹ்மம் அல்லது ஆத்மா என கூறப்படுகிறது . மற்ற பூ:, புவ:, சுவ: என்ற தேவதைகள் அல்லது சக்திகள் இதனுடைய உறுப்புகள் ஆகும்.  பூரிதி வா அயம் லோக: / புவ இத்யந்தரிக்ஷம் / ஸுவரித்யஸௌ  லோக: / மஹ இத்யாதித்ய: /ஆதித்யேன வா வ ஸர்வே லோகா மஹீயந்தே /  பூரிதி வா அயம் லோக: (பூ: என்றுதானே  இந்த உலகம்) / புவ இத்யந்தரிக்ஷம் (புவ; என்று வானவெளி) / சுவரித்யஸௌலோக: (சுவ: என்று இந்த மேல் உலகம்) / மஹ இத்யாதித்ய: (மஹ: என்று ஆதித்யன்) /ஆதித்யேன வா வ ஸர்வே லோகா மஹீயந்தே (ஆதித்யனால்தானே அனைத்து உலகங்களும் பெருமை அடைகின்றன )   /    பொழிப்புரை: உலகங்களைப் பொறுத்தவரை மஹ: என்னும் ப்ரஹ்மம் அனைத்துஉலகங்களை படைக்கும் ஆதித்யனாகவும் பூ:, புவ: சுவ: முறையே பூவுலகம் வானவெளி ,மேல் உலகம் என  ஆதித்யனால் அதன்  உறுப்புகளாக பெருமை அடைகின்றன .    பூரிதி வா அக்னி: /புவ இதி வாயு: / ஸுவரித்யாதித்ய: /மஹ இதி சந்திரமா: /சந்த்ரமஸா வாவ ஜ்யோதீகும்ஷி மஹீயந்தே  பூரிதி வா அக்னி: (பூ:என்றுதானே அக்னி ) / புவ இதி வாயு: (புவ:என்று வாயு) / சுவரித்யாதித்ய: (சுவ: என்று ஆதித்யன்) /மஹ இதி சந்திரமா: (மஹ: என்று சந்திரன்)/சந்த்ரமஸா வாவ ஜ்யோதீகும்ஷி மஹீயந்தே (சந்திரனால் அல்லவா அனைத்து ஆற்றல் ஒளிகளும் பெருமை அடைகின்றன.)    பொழிப்புரை : அனைத்து ஆற்றல் ஒளிகளைப் (சக்திகளைப்) பொருத்தவரை மஹ: என்னும் ப்ரஹ்மம் அனைத்துசக்திகளைப் படைக்கும் மனம் எனும்   சந்திரனாகவும் பூ:, புவ: சுவ: முறையே உருவங்களைப் படைக்கும் அக்னி ,செயலைப் படைக்கும் வாயு ,எண்ணங்களைப்படைக்கும் ஆதித்யன் என சந்திரனால் அதன் உறுப்புகளாக பெருமை அடைகின்றன.    பூரிதி வா ரிச: /புவ இதி சாமானி / சுவரிதி யஜுகும்ஷி /மஹ இதி ப்ரஹ்ம  / பிரஹ்மணா  வாவ ஸர்வே வேதா  மஹீயந்தே//  பூரிதி வா ரிச: (பூ:என்றுதானே ரிக்வேதம்) /புவ இதி சாமானி (புவ: என்று சாமவேதம்) / சுவரிதி யஜுகும்ஷி (சுவ; என்று யஜுர்வேதம்) /மஹ இதி ப்ரஹ்ம(மஹ: என்று ப்ரஹ்ம) / பிரஹ்மணா  வாவ ஸர்வே வேதா  மஹீயந்தே(பிரமத்தால் அல்லவா அனைத்து வேதங்களும் பெருமை அடைகின்றன ) //    பொழிப்புரை : அனைத்து  ஞானங்களைப்  பொருத்தவரை மஹ: என்னும் ப்ரஹ்மம் அனைத்து ஞானங்களைப்  படைக்கும் ஓம்  எனும் பிரஹ்மமாகவும்   பூ:, புவ: சுவ: முறையே பல்வேறு பிரபஞ்ச இருப்புகளை அறிவிக்கும் ரிக் வேதமாகவும் செயல்களை அறிவிக்கும் சாமவேதமாகவும் எண்ணங்களை அறிவிக்கும் யஜுர்வேதமாகவும் ஓம் எனும் பிரஹ்மத்தால்    அதன் உறுப்புகளாக பெருமை அடைகின்றன.    பூரிதி வை பிராண: /புவ இத்யபான: / ஸுவரிதி வியான: /மஹா இத்யன்னம் / அன்னேன வாவ ஸர்வே ப்ராணா மஹீயந்தே //   பூரிதி வை பிராண: (பூ: என்று அல்லவா பிராணன் )  /புவ இத்யபான: (புவ என்று அபானன்)  / ஸுவரிதி வியான: (ஸுவ: என்று வியானன்) /மஹ: இத்யன்னம் (மஹ: என்று அன்னம்) / அன்னேன வாவ ஸர்வே ப்ராணா மஹீயந்தே ( அன்னத்தால் அல்லவா அனைத்து பிராணன்களும் பெருமை அடைகின்றன)    பொழிப்புரை: அனைத்து வாழ்வுகளைப் பொருத்தவரை, மஹ: என்னும் ப்ரஹ்மம் அனைத்து வாழ்வுகளை அளிக்கும் அன்னமாகவும், பூ:, புவ: சுவ: முறையே உடல் வாழ்வாகவும் , செயல் வாழ்வாகவும் , எண்ண வாழ்வாகவும் அன்னத்தால் அதன் உறுப்புகளாக பெருமை அடைகின்றன .    தா வா ஏதாஸ் சதஸ்ரஸ்ச்சதுர்தா / சதஸ்ரஸ்ச்சதஸ்ரோ வ்யாஹ்ருதய : /  தா வா ஏதாஸ் சதஸ்ரஸ்ச்சதுர்தா (அந்த நான்குதான் இந்த நான்குநான்காக பிரிக்கப்பட்டவை ) / சதஸ்ரஸ்ச்சதஸ்ரோ வ்யாஹ்ருதய : (பதினாறு வ்யாஹ்ருதி தேவதைகளாக ஆகின்றன ) /    பொழிப்புரை: பூ:, புவ:, சுவ:, மஹ: என்ற நான்கு வ்யஹ்ருதிகள் ஒவ்வொன்றும் படைப்பில்  நான்காகப்பிரிந்து ௧௬ வ்யாஹ்ருதி தேவதைகள் ஆகின்றன.    தா யோ வேத / ஸ வேத பிரஹ்ம /ஸர்வே அஸ்மை தேவா பலிமாவஹந்தி //  தா யோ வேத (அவற்றை யார் அறிகிறானோ )   / ஸ வேத பிரஹ்ம (அவன் ப்ரஹ்மத்தை அறிகிறான்)   /சர்வே அஸ்மை தேவா பலிமாவஹந்தி (அவனுக்கு இந்த அனைத்து தேவர்களும் அன்னத்தை கொண்டு வருகின்றனர்) //    பொழிப்புரை: இந்த வ்யாஹ்ருதி தேவதைகளின் தத்துவத்தை அறிபவன் ப்ரஹ்மத்தை அறிகிறான் . அப்படிப்பட்டவனுக்கு இந்த அனைத்து தேவர்களும் தாங்கள் படைக்கும் அன்னங்களை சமர்ப்பிக்கின்றனர் .    கருத்துரை : படைப்பில் பொருள் செயல் எண்ணம்   என்பவற்றுக்கு முறையே இயக்கும் சக்திகளைக் குறிக்க பூ:, புவ:, சுவ: என்ற மூன்று குறியீடுகள் உள. மாஹாசமச்யர் என்னும் ரிஷி பிரபஞ்சத்தில் அனைத்தையும் இயக்கும் சக்தியாக பிரமத்தையும் அதன் குறியீடாக மஹ :என்ற மந்த்ரத்தை கண்டு அதை உலகுக்கு வெளியிட்டார் .     பொருள் அல்லது இருப்பு படைப்பில்(1 ) பூவுலகாகவும் .(2 )உருவங்களைப் படைக்கும் சக்தியாகவும் ,(3 ) இருப்புகளை குறித்த ஞானத்தை நல்கும் .ரிக்வேதமாகவும் ,(4 )வாழ்வை அருளும்  பிராணனாகவும் நான்குவிதமாக வெளிப்படுகிறது  .  செயல் படைப்பில் (1 ) வானவெளியாகவும்,(2 ) செயல் ஆற்றும் சக்தியாகவும் ,(3 ) செயல்களைக்குறித்த ஞானத்தை நல்கும் சாமவேதமாகவும் ,(4 )செயல் வாழ்வை அருளும் அபானனாகவும் நான்கு விதமாக வெளிப்படுகிறது .     எண்ணம்  படைப்பில் (1 ) மேல் உலகமாகவும் , (2 ) அறியும் சக்தியாகவும் (3 )எண்ணத்தின்  ஞானத்தை நல்கும் யஜுர்வேதமாகவும், (4 ) எண்ண  வாழ்வை அருளும் வ்யானனாகவும் நான்குவிதமாக வெளிப்படுகிறது.    ப்ரஹ்மம் படைப்பில் (1 ) உலகங்களைப் படைக்கும் ஆதித்யனாகவும் (2 ) பொருள், செயல்,எண்ணம் மூன்றையும் அறியும் மனமாகவும் (3 ) அனைத்து ஞானங்களையும் தோற்றுவிக்கும் உணர்வாகிய ஓம் என்றும் (4) அனைத்து வாழ்வுகளையும் நல்கும் அன்னமாகவும் வெளிப்படுகிறது .  ப்ரஹ்மத்தின் வெளிப்பாடுகளாகிய இந்த பதினாறு சக்திகளையும் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான். அந்த அறிவாளிக்கு பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் தொண்டு புரிகின்றன                             +-------------+-------------+-------------+-------------+-------------+ |   | பூ: | புவ: | சுவ: | மஹ:  | | |    |         +  |          +  | | | |          +  | | | ப்ரஹ்மம் | | | |  செயல் | அனுபவ | அனைத்து | | | உ | அமைப்புகள்  | அமைப்புகள் | அமைப் | | | ருவ/இருப்பு | |   | புகளுக்கும் | | | அமைப்புகள் | | | மூலம்  | | |   | | | | | | | | |    | +-------------+-------------+-------------+-------------+-------------+ | +உலகங்கள்   | ,பூவுலகம் | வானவெளி | மேல் உலகம் | ஆதித்யன் | | |  .    ,    |   ,  |  ,  | அனைத்துஉலகங | | | | | | ்கள்படைப்பு | | | | | |   | | | | | | | | | | | |     | +-------------+-------------+-------------+-------------+-------------+ | +சக்திகள்   | அக்னி | வாயு  | ஆதித்யன்   | சந்திரமா | | | உருவங்க | | | (மனம்)  | | | ளைப்  | செயல் | அனுபவ ஞானம் | | | | | ஆற்றுவது   |   | அனைத்தையும் | | | படைப்பது   | | | அறியும் | | | | | | சக்தி  | | | | | | | | | | | |    | +-------------+-------------+-------------+-------------+-------------+ | +ஞானங்க ள் | ரிக்வேதம்  | சாமவேதம்  | யஜுர்வேதம்  | ஓம் | |   | | | | ஞானங்களை | | | இர | செயல்களை | எண்ணங்க | தோற | | | ுப்புகளைக்  | ககுறித்த | ளைக்குறித்த | ்றுவிக்கும் | | | | ஞானம்   | ஞானம்   | மூலம்   | | | குறித்த | | | | | | ஞானம்   | | |    | +-------------+-------------+-------------+-------------+-------------+ | +வாழ்வுகள் | பிராணன் | அபானன் | வியானன்எண்ண | அன | |   | உயிர் | செயல் | வாழ்வு   | ்னம்அனைத்து | | | வாழ்வு   | வாழ்வு   | | வாழ் | | | | | | வுகளுக்கும் | | | | | | மூலம  | | | | | | | | | | | |   | +-------------+-------------+-------------+-------------+-------------+ +      இடை உரை    முன் அனுவாகத்தில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் (அ-து) ரூபம், சக்தி. ஞானம் முதலியன ப்ரஹ்மத்தின் உறுப்புகள் என ரிஷி அறிவிக்கிறார்.. இவை அனைத்தும் கூடிய மனிதனும் ப்ரஹ்மத்தின் ஒரு சிறுபகுதியே என்பது இதிலிருந்து தெளிவாகிறது.   அடுத்த அனுவாகத்தில் மனிதனில் ஆரம்பித்து  அவன் ப்ரஹ்மத்தில் எவ்வாறு உறைகிறான் என்று ரிஷி விளக்குகிறார்..அதற்கு அடுத்த அனுவாகத்தில் ப்ரஹ்மத்தில் ஆரம்பித்து அதனுள் மனிதன் எவ்வாறு உறைகிறான் என்பது விளக்கப்படுகிறது . இவ்வாறு மனிதன் ப்ரஹ்மத்தின் அங்கமே என்பது நிலை நாட்டப்படுகிறது.       ஆறாவது அனுவாகம்   ஸ ய ஏஷோஅந்தர்ஹ்ருதய ஆகாஸ: / தஸ்மின்னயம் புருஷோ மனோமய: /அம்ருதோ ஹிரண்மய: / ஸ ய ஏஷோஅந்தர்ஹ்ருதய ஆகாஸ:(எவரோ அவர் இந்த ஹ்ருதய ஆகாசம்  / தஸ்மின்னயம் புருஷோ மனோமய: (அதனுள் இந்த மனோமயமான புருஷன்) /அம்ருதோ ஹிரண்மய: (இறப்பில்லாதவர் , உள்ளவர்  ) /   பொழிப்புரை: எவரோ அவர் இந்த ஹ்ருதய ஆகாசத்தை சரீரமாக கொண்டிருக்கிறார். அதனுள் இறப்பில்லாது (அ-து) செயல் ஆற்றும் திறமையோடு  அனைத்தையும் அறியும் மன உருவாக என்றும் உள்ளவர்.   அந்தரேண தாலுகே /ய ஏஷ ஸ்தன இவாவலம்பதே / ஸேந்திரயோனி: /யத்ராஸௌ  கேஸாந்தே விவர்ததே/ வ்யபோஹ்ய சீர்ஷகபாலே / அந்தரேண தாலுகே(தாடையின் உள்நடுவில்) /ய ஏஷ ஸ்தன இவாவலம்பதே (எந்த இது முலைக்காம்பு போல் தொங்குகிறதோ )/ ஸேந்திரயோனி: ( இதுவே இந்திரியங்களின் வழி ) /யத்ராஸௌ  கேஸாந்தே விவர்ததே (எங்கு இது கபாலத்தின் ரோமங்கள் முடியும் பாகத்தில் சுழித்துக் கிளம்புகிறதோ / வ்யபோஹ்ய சீர்ஷகபாலே (தலைக்கபாலத்தினுள் பிரிந்து ) /   பொழிப்புரை : தாடையின் உள்நடுவில்  முலைக்காம்பு போல் தொங்கும் இதுவே இந்திரியங்களை அடையும் வழி.  இந்த வழி தலை மண்டை ஓட்டினுள் ரோமங்கள் முடியும் அடிபாகத்தில் சுழித்துப் பிரிந்து கிளம்புகிறது.   பூரித்யக்நௌ பிரதிதிஷ்டதி / புவ இதி வாயௌ / ஸுவரித்யாதித்யே / மஹ இதி பிரஹ்மணி /ஆப்நோதி ஸ்வாராஜ்யம் / ஆப்நோதி மனஸஸ்பதிம் /வாக்பதிஸ் சக்ஷுஸ்பதி: /ஸ்ரோத்ரபதிர் விக்ஞானபதி: / ஏதத் ததோ பவதி / ஆகாஸஸரீரம் பிரஹ்ம /ஸத்யாத்ம ப்ராணாராமம் மன ஆனந்தம் / ஸாந்தி ஸம்ருத்தமம்ருதம் /இதி பிராசீன யோக்யோபாஸ்வ //   பூரித்யக்நௌ பிரதிதிஷ்டதி (பூ: என்று அக்னியில் நிலை கொள்கிறார்) / புவ இதி வாயௌ(புவ என்று வாயுவில் ) / ஸுவரித்யாதித்யே (சுவ என்று ஆதித்யனில்) / மஹ இதி பிரஹ்மணி (மஹ என்று பிரஹ்மனில் ) /ஆப்நோதி ஸ்வாராஜ்யம்( நான் என்ற தனித்தன்மையை அடைகிறான்) / ஆப்நோதி மனஸஸ்பதிம்(மன ஆற்றலை அடைகிறான்) /வாக்பதிஸ் சக்ஷுஸ்பதி: (வாக் ஆற்றல்,பார்வை ஆற்றல்)/ஸ்ரோத்ரபதிர் விக்ஞானபதி(கேள்வி ஆற்றல் ,பகுத்தறிவு ஆற்றல்) / ஏதத் ததோ பவதி (பின்னர் இதுவாக ஆகிறான்) / ஆகாஸஸரீரம் பிரஹ்ம (ஆகாசமே ப்ரஹ்மத்தின் உடலாகவும்) /சத்யாத்ம ப்ராணாராமம் மன ஆனந்தம்( உள்ளதே  ஆத்மாவாகவும், பிராணனே பிரபஞ்ச லீலையாகவும்  மனதே ஆனந்தமாகவும்) / ஸாந்தி ஸம்ருத்தமம்ருதம்(அமைதி,நிறைவு ,இறவாமை ) /இதி பிராசீன யோக்யோபாஸ்வ (என்று ப்ராசீனயோக்யனே உபாசிப்பாயாக ) //   பொழிப்புரை: (ஹ்ருதய ஆகாசத்தில் உள்ள ஆத்மா இந்த இந்திரிய வழியில் சென்று ) பூ: என்று தியானித்து அக்னியில் நிலை பெற்று உருவத்தை அடைகிறார். புவ: என்று தியானித்து வாயுவில் நிலைபெற்று செயல் ஆற்றலை அடைகிறார். சுவ: என்று தியானித்து ஆதித்யனில் நிலைபெற்று எண்ண அறிவு ஆற்றலை அடைகிறார் .மஹ : என்று தியானித்து பிரமனில் நிலைபெற்று பிரமஞானத்தை அடைகிறார். உடலும் செயல் ஆற்றலும் அடைந்து நான் என்னும் தனித்தன்மையை அடைகிறார்.    மனதின் ஆற்றலை அடைந்து வாக்,பார்வை, கேட்டல், எண்ணம், பகுத்தறிவு ஆகியவற்றை அடைகிறார் பின்னர் பகுத்தறிவின் உயரிய நிலையில் பிரமஞானத்தை அடைகிறார் .அதன் விளைவாக நான் என்னும் தனித்தன்மையை அகற்றி ஆகாசமே உடலாகவும் உளதே ஆத்மாவாகவும் பிராணனே பிரபஞ்ச லீலையாகவும் மனதே ஆனந்தமாகவும் அறிந்து அமைதி,நிறைவு,இறவாமை என்ற பிரஹ்மமாக தன்னை உணர்கிறார். ப்ராசீனயோக்யனே இவ்வாறு உபாசிப்பாயாக.   கருத்துரை : ஆத்மா ஒன்றே ஆயினும் அது பல ஜீவர்களில் அக்னி, வாயு, ஆதித்யன் முதலியவர்களின் சக்தி நிலைகொள்ளும்போது தனித்தன்மை வாய்ந்த பல ஜீவாத்மாக்கள் ஆக உலகங்களில் செயல்படுகின்றனர். உடல்,செயல்,மனத்தால் பல நிலைகளில் இருக்கும் அவர்களில் சிலர் உயர் எண்ணங்கள் ,கூரிய பகுத்தறிவு மூலம் மெய்ஞானம் அடைவதில் முன்னேறுகின்றனர். பலபிறவிகளில் பக்குவமடைந்து பிரஹ்ம உணர்வை அடைகின்றனர்.   உலகங்களில் ஜீவர்கள் ப்ரஹ்மத்தின் அங்கங்கள் என்ற கூற்று இந்த  ஞானிகளால் ஜீவர்களுக்கு உபதேசிக்கப்படுகிறது. கடவுள் ஜீவர்களில் இருந்துவேறுபட்டவர் என்ற முந்தையகூற்றினால் சில ஜீவர்களுக்கு எழுந்த ஐயங்கள் இந்த முடி.வினால் அகலுகின்றன.   ஏழாவது அனுவாகம்     ப்ருதிவ்யந்தரிக்ஷம் த்யௌர்திஸோவாந்தரதிஸா: / அக்னிர்வாயு ராதித்யஸ் சந்திரமா நக்ஷத்ராணி / ஆப ஓஷதயோ வனஸ்பதய ஆகாஸ ஆத்மா / இத்யதிபூதம் / அதாத்யாத்மம் / ப்ராணோ வ்யானோ அபான உதானஸ்ஸ மான: /சக்ஷுஸ் ஸ்ரோத்ரம் மனோ வாக் த்வக் /சர்ம மாமும்ஸகும்ஸ்நாவாஸ்தி மஜ்ஜா /ஏதததி விதாய ரிஷிரவோசத் / பாங்க்தம் வா இதகும்சர்வம் பாங்க்தேனைவ பாங்தக்கு ஸ்ப்ருணோதீதி //  ப்ருதிவ்யந்தரிக்ஷம் த்யௌர்திஸோவாந்தரதிஸா: (ப்ருதிவீ , வான்வெளி , மேல் உலகம் ,திசைகள் ,இடைதிசைகள் ) / அக்னிர்வாயு ராதித்யஸ் சந்திரமா நக்ஷத்ராணி (அக்னி ,வாயு ,ஆதித்யன்,சந்திரன் ,நக்ஷத்திரங்கள் )  / ஆப ஓஷதயோ வனஸ்பதய ஆகாஸ  ஆத்மா (நீர்கள், ஓஷதிகள், மரங்கள் , ஆகாசம் , ஆத்மா ) / இத்யதிபூதம் (என்று படைப்பில் உடனுறைபவை) / அதாத்யாத்மம் (பின்னர் ஆத்மாவுடன் உடனுறைபவை ) / ப்ராணோ வ்யானோ அபான உதானஸ்சமான: (பிராணன் ,வியானன் அபானன் ,உதானன் சமானன் ) ,  /சக்ஷுஸ் ஸ்ரோத்ரம் மனோ வாக் த்வக் (பார்வை,கேட்டல்  மனது, வாக்கு , ஸ்பரிசம் ), /சர்ம மாமும்ஸகும்ஸ்நாவாஸ்தி மஜ்ஜா ( தோல் ,மாம்சம் ,தசைநார்கள் ,எலும்பு , எலும்புச்சோறு ) /ஏதததி விதாய ரிஷிரவோசத் (இவற்றை ஒன்றோடொன்று உடனுறையும் குழுக்களாக அறிந்து ரிஷி கூறினார்) / பாங்க்தம் வா இதகும்சர்வம் பாங்க்தேனைவ பாங்தக்கு ஸ்ப்ருணோதீதி (ஐந்துகளானவை இவை அனைத்தும் ஐந்துகளாக ஐந்தை அடைகின்றன என்று ).    பொழிப்புரை : ப்ருதிவீ , வான்வெளி , மேல் உலகம் ,திசைகள் ,இடைதிசைகள் ஆகிய ஐந்தும்  பிராணன் ,வியானன் அபானன் ,உதானன் சமானன் ஆகிய ஐந்தும் ஒன்றை ஒன்று அடைகின்றன. அக்னி ,வாயு ,ஆதித்யன்,சந்திரன் ,நக்ஷத்திரங்கள் ஆகிய ஐந்தும் பார்வை,கேட்டல்  மனது, வாக்கு , ஸ்பரிசம் ஆகிய ஐந்தும் ஒன்றை ஒன்று அடைகின்றன. நீர்கள், ஓஷதிகள், மரங்கள் , ஆகாசம் , ஆத்மா ஆகிய  ஐந்தும்  தோல் ,மாம்சம் ,தசைநார்கள் ,எலும்பு , எலும்புச்சோறு ஆகிய  ஐந்தும் ஒன்றை ஒன்று அடைகின்றன.    கருத்துரை : உலகங்களும் அவற்றில் ஏற்படும் வாழ்வு அனுபவங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. சக்திகளும் செயல்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஆத்மாவைச் சார்ந்தவைகளும் ஜீவர்களைச் சார்ந்தவைகளும் ஒன்றையொன்று அடைந்திருக்கின்றன.   இருவிதமாகவும் ஆராய்ந்து ரிஷி படைப்பனைத்தும் ஆத்மாவின் அங்கங்களே என அறிவித்துள்ளார். முன் உபாசனை முடிவில் எழுந்த ஐயங்களுக்கு விடை கிடைத்துவிட்டது.  1. அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டத்தின் அமைப்பும் ஆத்மாவின் அங்கங்களாக அனைத்துப்படைப்பும் விளங்குவதும் தெளி.வாகியது   2. ஜீவாத்மா கடவுளின் ஒரு அங்கமே .   ஆயினும் முன் உபாசனைப்படி  கடவுளை தன்னிலும் வேறாக வழிபட்டாலும் ஞானத்தையும் மற்ற பயன்களை அடைவதிலும் ஒரு தடையும் இல்லை என்பதும் தெளிவாகிறது.    இடை  உரை     பெரும்பாலானோருக்கு மேற்கூறிய விளக்கங்கள் இசைவானாதாகத்  தோன்றும். இந்த விளக்கங்களை பின் பற்றி ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் அமைந்துள்ளது .மேலும் சைவ வைஷ்ணவ சாக்த வழிபாடுகளும் இதை ஒட்டியே அமைந்துள்ளன.   ஆயினும் ஒருசிலருக்கு மேலும் ஐயங்கள் எழுகின்றன. ப்ரஹ்மத்தின் அங்கங்களே படைப்பு அனைத்தும் என்றால் பல அளவுக்குட்பட்டவை சேர்ந்த ஒன்று மிகப்பெரியதாயினும் அதுபோன்று பல இருக்கும் வாய்ப்பை மறுக்கமுடியாது. உவமைக்கு புராணங்களில் கோடிக்கணக்கான பிரம்மாண்டங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே ஆதாரமாக மேலும் ஏதேனும் அமைப்பு உள்ளதா? அது நம் அறிவுக்கு புலப்படுமா?     திரிசங்கு என்னும் ரிஷி இந்த வினாவுக்கு விடைகாண விரும்பினார். மேலும் ஆராய ஒரே வழிதான் தென்பட்டது. அனைத்து ஞானங்களின் மூலம் ஓம் என்ற அக்ஷரம் என்பது மாஹசமச்யரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர் அந்த ஓம் என்ற அக்ஷரத்தை குறித்து தவம்  செய்தார். அவர் கண்டு வெளியிட்ட உண்மைகள் அடுத்த மூன்று  அனுவாகங்களில் கூறப்படுகின்றன.     எட்டாவது அனுவாகம்   ஓமிதி பிரஹ்ம /ஒமிதீதகும் ஸர்வம் / ஓமித்யேததனுக்ருதி ஹஸ்மாவா அப்யோஸ்ராவேத்யாஸ்ராவயந்தி /ஓமிதி ஸாமானி காயந்தி / ஓகும்ஸோமிதி ஸஸ்த்ராணி ஸகும்ஸந்தி / ஓமித்யத்வர்யு: பிரதிகரம் பிரதிக்ருணாதி / ஓமிதி பிரஹ்மா ப்ரஸௌதி / ஓமித்யக்நிஹோத்ரமனுஜானாதி / ஓமிதி ப்ராஹ்மண: ப்ரவக்ஷ்யன்னாஹ ப்ரஹ்மோபாப்னவாநீதி / ப்ரஹ்மைவோபாப்நோதி //   ஓமிதி பிரஹ்ம (ஓம் என்று பிரஹ்மம் ) /ஒமிதீதகும் ஸர்வம்(  ஓம் என்று இந்த அனைத்தும்)  / ஓமித்யேததனுக்ருதி ஹஸ்மாவா அப்யோஸ்ராவேத்யாஸ்ராவயந்தி (ஓம் என்று சொல்லி இதைத் தொடர்ந்து அல்லவா ஆரம்பி என்ற அனுமதியும் பின்னர் வேதத்தைக் கேட்கின்றனர் ) / ஓமிதி ஸாமானி காயந்தி (ஓம் என்று சாமவேதம் இசைக்கின்றனர் ) / ஓகும்ஸோமிதி ஸஸ்த்ராணி ஸகும்ஸந்தி (ஓம் சோம் என்று ரிக்வேதம் உரைக்கின்றனர்) / ஓமித்யத்வர்யு: பிரதிகரம் பிரதிக்ருணாதி(ஓம் என்று யஜுர்வேதி அத்வர்யு ஆமோதிக்கிறார் )  / ஓமிதி பிரம்மா ப்ரஸௌதி (ஓம் என்று பிரம்மா அனைவரையும் காரியத்தில் ஈடுபடுத்துகிறார்) / ஓமித்யக்நிஹோத்ரமனுஜானாதி(ஓம் என்று அக்னிஹோத்ரம் செய்ய அனுமதிக்கிறார் ) / ஓமிதி ப்ராஹ்மண: ப்ரவக்ஷ்யன்னாஹ ப்ரஹ்மோபாப்னவாநீதி ( ஓம் என்று பிராமணன் சொல்லி ப்ரஹ்மத்தை அடைவேன் என்று கூறினார் ) / ப்ரஹ்மைவோபாப்நோதி(பிரஹ்மத்தையே அடைகின்றார்) //   பொழிப்புரை : .ஓம் என்று பிரஹ்மம் .ஓம் என்று இந்த அனைத்தும். .ஓம் என்று இதைத் தொடர்ந்து அல்லவா ஆரம்பி என்ற சொல்லும் பின்னர் வேதத்தைக் கேட்கின்றனர் .ஓம் என்று சாமவேதம் இசைக்கின்றனர் . ஓம் சோம் என்று ரிக்வேதம் உரைக்கின்றார் . ஓம் என்று யஜுர்வேதி அத்வர்யு ஆமோதிக்கிறார் .ஓம் என்று பிரம்மா அனைவரையும் காரியத்தில் ஈடுபடுத்துகிறார்.ஓம் என்று அக்னிஹோத்ரம் செய்ய அனுமதிக்கிறார் . ஓம் என்று பிராமணன் சொல்லி ப்ரஹ்மத்தை அடைவேன் என்று கூறுகிறார் .பிரஹ்மத்தையே அடைகின்றார்.   கருத்துரை : முதல் உபாசனையில் “ஓம்” பகன் ,இந்த்ரன் ,தாதா என்று போற்றப்பட்டார். இரண்டாவது உபாசனையில் “ஓம்” மஹ: என்னும் பிரமத்தைக் குறிக்கும் குறியீடாகப் போற்றப்பட்டார். இந்த மூன்றாவது உபாசனையில் “ஓம்” என்பதே ப்ரஹ்மம் என்கிறார். ஓம் என்பது தேவனோ அல்லது படைப்பு அனைத்தையும் உள்ளடக்கிய குறியீடோ அல்ல. ஆகவே ரிஷி ஓம் என்ற மந்த்ரத்தை சிந்தையில் இருத்தியே உண்மையை அறிய தவம் புரிகிறார். அனைத்தும் ஓம் என்றால் இது எவ்வாறு எழுந்தது எழுகிறது என்று ஆழ்ந்து ஆராய்ந்தார் . ஆச்சரியப்படும் முடிவுக்கு வந்தார். ஓம் வேதம் ஒதுபவரிடமிருந்தும் ஆராயும் என்னிடமிருந்தும் தொடங்குவதால் நாம் அனைவருமே ஓம் என்பதற்கு மூலகாரணங்களாக இருக்கவேண்டும் . ஓம் என்பதே அனைத்தும் என்பதால் “நான்” என்றும் உணரும் நாமனைவருமே ஓம் என்ற ப்ரஹ்மம் ஒன்றே தவிர வேறில்லை. இதை ஆழ்ந்த தவத்தின்  மூலம் ரிஷி உறுதி செய்கிறார். தவத்தை எவ்வாறு இயற்றுவது என்பது அடுத்த அனுவாகத்தில் விவரிக்கப்படுகிறது.   ஒன்பதாவது அனுவாகம்   ருதஞ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / சத்யஞ்ச  ஸ்வாத்யாய ப்ரவசனே ச / தபஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / தமஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / ஸமஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / அக்னயஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / அக்னிஹோத்ரம் ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / அதிதயஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / மானுஷம் ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / பிரஜா ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / பிரஜாதிஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச / சத்யமிதி சத்யவசா ராதீதர: /தப இதி தபோநித்ய: பௌருசிஷ்டி: / ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி நாகோ மௌத்கல்ய: /தத்தி  தபஸ்தத்திதப: //   ருதஞ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (வாழ்வு ஒழுங்குமுறையும் வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்) / சத்யஞ்ச  ஸ்வாத்யாய ப்ரவசனே ச ( உண்மையைப் போற்றுதலும் வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / தபஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (தவத்தையும் வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)   / தமஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச( இந்திரியங்களை அடக்குதலும்  வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / ஸமஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (அந்தக்கரணங்களை அடக்குதலும் வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / அக்னயஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (அக்னிகளைப் போற்றுதலும்  வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / அக்னிஹோத்ரம் ச  ஸ்வாத்யாய ப்ரவசனே ச (அக்னிஹோத்ரத்தைப் போற்றுதலும்  வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / அதிதயஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (அதிதிகளைப் போற்றுதலும்  வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / மானுஷம் ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச ( மானுடநியதிகளைப் போற்றுதலும்  வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  / பிரஜா ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (சந்ததிகளை பராமரிப்பதும் வேதத்தை  ஓதுதலும் விளக்குதலும்)  / பிரஜனஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச (ருது காலங்களில் சந்ததிகளுக்காக மனைவியைச் சேருவதும்  வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)  /பிரஜாதிஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச ( தன்மக்கள் மூலம் சந்ததி விளங்கச் செய்வதும் வேதத்தை ஓதுதலும் விளக்குதலும்)   சத்யமிதி சத்யவசா ராதீதர: ( (சத்யம் என்று சத்யவாக்கினால் ராதீதரர் ) /தப இதி தபோநித்ய: பௌருசிஷ்டி: ( தவம் என்று  நித்யதபசி பௌருசிஷ்டி) / ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி நாகோ மௌத்கல்ய: (வேதம் ஓதுதலும் விளக்குதலும் இவ்வாறு என்று மௌத்கல்ய குலத்தில் பிறந்த நாகர் ) /தத்தி  தபஸ்தத்திதப: (அதுவே தவம் அதுவே தவம் ) //   பொழிப்புரை : வாழ்வு ஒழுங்குமுறை , உண்மை பேணுதல் , தவம், புலனடக்கம் , மன அடக்கம் , அக்னிகளைப் போற்றுதல்,அக்னிஹோத்ரத்தைப் போற்றுதல் , அதிதிகளைப் போற்றுதல் , மானிட நியதிகளைப் போற்றுதல் , சந்ததிகளைப் பராமரித்தல் , ருதுகாலங்களில் மனைவியைப் புணர்ந்து சந்ததிகளை உண்டாக்கல், தன்மக்கள் மூலம் சந்ததி விளங்கச்செய்தல் , இவை அனைத்துடனும் வேதம் ஓதுதலும் விளக்குதலும் செய்யவேண்டும்.ராதீதரர் சத்யவாக்கினால் சத்தியத்தை போற்றவேண்டுமென்றும் , நித்யதபசி பௌருசிஷ்டி தவம் புரியவேண்டுமென்றும் கூறுகின்றனர். செய்வது அனைத்தையும் வேதம் ஓதுதல் விளக்குதல் கூடவே செய்யவேண்டுமென்று மௌத்கல்ய குலத்தில் பிறந்த நாகர் கூறுகிறார். அப்படிசெய்வதே தவம் என்று அறுதியிட்டு உபதேசிக்கின்றார்.   கருத்துரை : சத்யம். தபஸ் முதலியவற்றை வேதத்தோடல்லாமல் தனியே உபாசித்தால் அவை மேல் உலகங்கள், சித்திகள் முதலியவற்றை அருளலாம். ஆனால் பிரஹ்மஞானம் அடைவது நிச்சயமல்ல. அதேமாதிரி வேதத்தை மட்டும் ஓதுவது விளக்குவது என்பவற்றில் ஈடுபட்டு சத்யம், தபஸ் முதலிய தர்மங்களை அனுசரிக்காவிடில் புனிதத்தன்மை அடையாது அதனால் உண்மையை அறியும் கூர்ந்த புத்தி அமையாது வேதங்களின் உட்பொருளை அறிந்து பிரஹ்மஞானத்தை அடையமுடியாது.   பத்தாவது அனுவாகம்   அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா /கீர்த்தி: பிருஷ்டம் கிரேரிவ / ஊர்த்வபவித்ரோ வாஜிநீவ ஸ்வம்ருதமஸ்மி / திரவிணகும் ஸவர்ச்ஸம் / ஸுமேதா அம்ருதோக்ஷித: / இதி த்ரிஸங்கோர் வேதானுவசனம் // அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா (நான் படைப்பு என்னும் மரத்தை   தூண்டுபவன் ) /கீர்த்தி: பிருஷ்டம் கிரேரிவ (மலையின் உச்சி போன்ற புகழோடும் ) / ஊர்த்வபவித்ரோ வாஜிநீவ ஸ்வம்ருதமஸ்மி (ஓங்கிஎழும் புனிதமான  சூர்யன் போல மங்களமான இறவாமையாக உள்ளேன் ) / திரவிணகும் ஸவர்ச்சஸம் ( வீர்யம் படைத்த  ரசமாகவும் ) / ஸுமேதா (சிறந்த அறிவுத்திறனாகவும்)அம்ருதோக்ஷித: ( வேதாம்ருதத்தால் நனைக்கப்பட்டவனாகவும் ) / இதி த்ரிஸங்கோர் வேதானுவசனம் (என்று த்ரிஸங்குவின் ஞானம் அடைந்தபின் கூறிய மந்திரம் ) //   பொழிப்புரை : நான் படைப்பை தூண்டுபவன். மலை உச்சி போன்று அனைத்திலும் உயர்ந்த புகழோடு ஓங்கிஎழும் சூர்யன் போல மங்களமான இறவாமையாகவும், வீர்யம் படைத்த ரசமாகவும் , சிறந்த அறிவுத்திறனாகவும், வேதாம்ருதத்தால் நனைக்கப்பட்டவனாகவும் உள்ளேன் .   கருத்துரை : சரீரம் செயல் மனம் அனைத்துக்கும் மூலமான நான் என்ற உணர்வே ப்ரஹ்மம். உணர்வின் அளவற்ற சக்தியால் ஞானம் ,பகுத்தறிவு எண்ணம் செயல் ,பொருள் உலகங்கள் பல்விதபடைப்பு அனைத்தும் அதனிடமிருந்தே உண்டாகின்றன. பிரமஞானம் அடையும் ஒரு மனிதன் இதைக்காணும் போது அவனிடமிருந்து எழும் சொற்களே இந்த மந்திரம் . அத்வைத சித்தாந்தத்தை பரப்பிய ஸ்ரீ சங்கராச்சார்யர் பிரஹ்மமே அனைத்தும் என்ற மேற்கூறிய கருத்தைப்போற்றினார். மற்ற சித்தாந்தங்களும் இதன் ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியே என்பதை விளக்கும்வண்ணம் ஸ்ரீ சங்கரர் எல்லா தெய்வங்களைப்போற்றியும் , சரணாகதி தத்வத்தைப்போற்றியும் துதிகள் இயற்றியுள்ளார்.. மேலும் அவர் ஸ்தாபித்த மடங்களில் விக்ரஹாராதனைகளையும் தொடங்கிவைத்தார் .   பதினொன்றாவது அனுவாகம்     வேதமநூச்யாசார்யோ அந்தேவாசினமனு ஸாஸ்தி /சத்யம் வத /தர்மம் சர / ஸ்வாத்யாயான்மா ப்ரமத: / ஆசார்யாய ப்ரியம் தனமாஹ்ருத்ய பிரஜாதந்தும் மா வ்யவச்சேத்சஸீ: / ஸத்யான்ன பிரமதிதவ்யம்/ தர்மான்ன பிரமதிதவ்யம் /குஸலான்ன பிரமதிதவ்யம் / பூத்யை ந பிரமதிதவ்யம் /ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ந பிரமதிதவ்யம் // (1 ) வேதமநூச்யாசார்யோ அந்தேவாசினமனு ஸாஸ்தி (வேதத்தை சொல்லிக் கொடுத்தபின் குரு  மாணவனுக்கு நல்வழி கற்பிக்கிறார் ) /சத்யம் வத (உண்மையே பேசு) / தர்மம் சர ( நல்லொழுக்கத்தைக் கடைப்பிடி ) / ஸ்வத்யாயான்மா ப்ரமத:(  வேதம் ஓதுதலில் கவனக்குறைவு வேண்டாம்) /ஆசார்யாய ப்ரியம் தனமாஹ்ருத்ய பிரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ: (ஆசார்யனுக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து பின்னர் மக்கள் ரூபமான குலத்தொடரை வெட்டிவிடாதே) / ஸத்யான்ன பிரமதிதவ்யம் (உண்மை போற்றுவதில் கவனக்குறைவு  வேண்டாம்)/ தர்மான்ன பிரமதிதவ்யம் (நல்லொழுக்கத்தை பின்பற்றுவதில் கவனக்குறைவு வேண்டாம் ) / குஸலான்ன பிரமதிதவ்யம்(நலம் பேணுவதில் கவனக்குறைவு வேண்டாம்) / பூத்யை ந பிரமதிதவ்யம் (செல்வம் ஈட்டுவதில் கவனக்குறைவு வேண்டாம்) /ஸ்வாத்யாயப்ரவசனாப்யாம் ந பிரமதிதவ்யம் (வேதத்தை ஓதுவதிலும் விளக்குவதிலும் கவனக்குறைவு வேண்டாம்) // (1 )   பொழிப்புரை : வேதத்தை சொல்லிக் கொடுத்தபின் குரு  மாணவனுக்கு நல்வழி கற்பிக்கிறார் .உண்மையே பேசு. நல்லொழுக்கத்தைக்கடைப்பிடி . வேதம் ஓதுதலில் கவனக்குறைவு வேண்டாம்.    ஆசார்யனுக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து பின்னர் மக்கள் ரூபமான குலத்தொடரை வெட்டிவிடாதே .உண்மை போற்றுவதில் கவனக்குறைவு  வேண்டாம். நல்லொழுக்கத்தை பின்பற்றுவதில் கவனக்குறைவு வேண்டாம் .நலம் பேணுவதில் கவனக்குறைவு வேண்டாம் .செல்வம் ஈட்டுவதில் கவனக்குறைவு வேண்டாம் .வேதத்தை ஓதுவதிலும் விளக்குவதிலும் கவனக்குறைவு வேண்டாம்) . (1 )   தேவபித்ருகார்யாப்யாம் ந பிரமதிதவ்யம் / மாத்ருதேவோ பவ / பித்ருதேவோ பவ/ ஆசார்யதேவோ பவ / அதிதி தேவோ பவ / யான்யனவத்யானி கர்மாணி / தானிசேவிதவ்யானி / நோ இதராணி / யான்யஸ்மாககும் ஸுசரிதானி / தானி த்வயோபாஸ்யானி / (2 ) தேவபித்ருகார்யாப்யாம் ந பிரமதிதவ்யம் (தேவர்கள் ,பித்ருக்கள் குறித்து செய்யவேண்டிய கார்யங்களில் கவனக்குறைவு வேண்டாம் ) / மாத்ருதேவோ பவ (தாயை தெய்வமாகக் கொள்பவனாக இரு ) / பித்ருதேவோ பவ (தந்தையை தெய்வமாகக் கொள்பவனாக இரு)/ ஆசார்யதேவோ பவ (ஆசார்யனை தெய்வமாகக் கொள்பவனாக இரு ) / அதிதி தேவோ பவ (அதிதியை தெய்வமாகக் கொள்பவனாக இரு  / யான்யனவத்யானி கர்மாணி (ஆனால் இவர்களுடைய குற்றமற்ற செயல்கள் எவையோ ) / தானிசேவிதவ்யானி (அவைமட்டும் பின்பற்றவேண்டியவை ) / நோ இதராணி (மற்றவை அல்ல ) / யான்யஸ்மாககும் சுசரிதானி (எங்கள் அனைவருடைய நல்லொழுக்கங்கள் எவையோ ) / தானி த்வயோபாஸ்யானி (அவைமட்டும் உன்னால் பின்பற்றக்கூடியவை ) / (2 ) தேவர்கள் ,பித்ருக்கள் குறித்து செய்யவேண்டிய கார்யங்களில் கவனக்குறைவு வேண்டாம்  .தாயை தெய்வமாகக் கொள்பவனாக இரு  .தந்தையை தெய்வமாகக் கொள்பவனாக இரு . ஆசார்யனை தெய்வமாகக் கொள்பவனாக இரு  .அதிதியை தெய்வமாகக் கொள்பவனாக இரு . ஆனால் இவர்களுடைய குற்றமற்ற செயல்கள் எவையோ  .அவைமட்டும் பின்பற்றவேண்டியவை . மற்றவை அல்ல  . எங்கள் அனைவருடைய நல்லொழுக்கங்கள் எவையோ அவைமட்டும் உன்னால் பின்பற்றக்கூடியவை . (2 )   நோ இதராணி / ஏகே சாஸ்மத்ச்ரேயாகும்ஸோ பிராஹ்மணா : /தேஷாம் த்வயாஸனேன ப்ரஸ்வஸிதவ்யம் /ஸ்ரத்தயா தேயம் / அஸ்ரத்தயாதேயம் / ஸ்ரியா தேயம் /ஹ்ரியா தேயம் / பியா தேயம் / ஸம்விதா தேயம் / அத யதி தே கர்மவிசிகித்ஸா வா வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் /  (3 ) நோ இதராணி (மற்றவை அல்ல ) / ஏகே சாஸ்மத்ச்ரேயாகும்ஸோ  பிராஹ்மணா : ( நம்மவரில் எவரெல்லாம் சிறந்த பிராஹ்மணர்களோ /தேஷாம் த்வயாஸனேன ப்ரஸ்வசிதவ்யம் ( உன்னால் அவர்களுக்கு இருக்கை கொடுத்து உபசரிக்கப்படவேண்டும்) /ஸ்ரத்தயா தேயம் ( நம்பிக்கையுடன் கொடுக்கப்படவேண்டும்) / அஸ்ரத்தயாதேயம் ( நம்பிக்கையில்லாது கொடுக்கப்பட வேண்டாம் ) / ஸ்ரியா தேயம் (தன்னிடமுள்ள செல்வத்திலிருந்து கொடுக்கப்படவேண்டும் ) /ஹ்ரியா தேயம் (குறைவோ என்ற வெட்கத்துடன் கொடுக்கப்படவேண்டும் ) பியா தேயம் (குறைவோ என்ற அச்சத்துடன் கொடுக்கப்படவேண்டும் ) / சம்விதா தேயம் (முறைப்படி கொடுக்கப்படவேண்டும் ) / அத யதி தே கர்மவிசிகித்ஸா வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் / (மேலும் உனக்கு வேத கர்மங்களை அனுசரிப்பதிலோ உலகநியதிகளை அனுசரிப்பதிலோ ஐயங்கள் ஏற்படுமாயின் )  (3 ) மற்றவை அல்ல. நம்மவரில் எவரெல்லாம் சிறந்த பிராஹ்மணர்களோ  உன்னால் அவர்களுக்கு இருக்கை கொடுத்து உபசரிக்கப்படவேண்டும்.  நம்பிக்கையுடன் கொடுக்கப்படவேண்டும்.  நம்பிக்கையில்லாது கொடுக்கப்பட வேண்டாம் .தன்னிடமுள்ள செல்வத்திலிருந்து கொடுக்கப்படவேண்டும். குறைவோ என்ற வெட்கத்துடன் கொடுக்கப்படவேண்டும். குறைவோ என்ற அச்சத்துடன் கொடுக்கப்படவேண்டும். முறைப்படி கொடுக்கப்படவேண்டும். மேலும் உனக்கு வேத கர்மங்களை அனுசரிப்பதிலோ உலகநியதிகளை அனுசரிப்பதிலோ ஐயங்கள் ஏற்படுமாயின் ; யே தத்ர பிராஹ்மணா: சம்மர்ஸின: /யுக்தா ஆயுக்தா: / அலூக்ஷா  தர்மகாமாஸ்யு: / யதா தே தத்ர வர்தேரன் / ததா தத்ர வர்தேதா: / அதா அப்யாக்யாதேஷு / யே தத்ர பிராஹ்மணா: ஸம்மர்ஸின: / யுக்தா ஆயுக்தா: / அலூக்ஷா தர்மகாமாஸ்யு: / யதா தே தேஷு வர்தேரன் / ததா தேஷு வர்தேதா: / ஏஷ ஆதேஸ: /ஏஷ உபதேஸ: / ஏஷா வேதோபநிஷத் / ஏததனுஸாஸனம் / ஏவமுபாஸிதவ்யம் / ஏவமுசைததுபாஸ்யம் // (4)   யே தத்ர பிராஹ்மணா: ஸம்மர்ஸின: ( அங்கு  சாஸ்த்ரார்த்த ஆராய்ச்சி செய்யும் திறமை உடையவர்கள் எவர்கள்   /யுக்தா ஆயுக்தா: ( ஈடுபட்டவர்கள் , ஒருமித்த கருத்து உடையவர்கள்  / அலூக்ஷா  தர்மகாமாஸ்யு: ( கடுமை தவிர்த்த மனமுடையவர்கள் ,நல்லொழுக்கத்தில் விருப்புடையவர்கள் இருக்கின்றனரோ ) / யதா தே தத்ர வர்தேரன் (எவ்வாறு அவர்கள் அந்த விஷயத்தில் செயல்படுவார்களோ ) / ததா தத்ர வர்தேதா: (அவ்வாறு அந்தவிஷயத்தில் செயல்படுவாயாக ) / அதா அப்யாக்யாதேஷு ( பழிச்சொல்களுக்கு ஆளாகும்போது ) / யே தத்ர பிராஹ்மணா: ஸம்மர்ஸின: (அங்கு  சாஸ்த்ரார்த்த ஆராய்ச்சி செய்யும் திறமை உடையவர்கள் எவர்கள்) / யுக்தா ஆயுக்தா: (ஈடுபட்டவர்கள் , ஒருமித்த கருத்து உடையவர்கள்  )/ அலூக்ஷா  தர்மகாமாஸ்யு: (கடுமை தவிர்த்த மனமுடையவர்கள் ,நல்லொழுக்கத்தில் விருப்புடையவர்கள் இருக்கின்றனரோ) / யதா தே தேஷு வர்தேரன் (எவ்வாறு அவர்கள் அவற்றில் செயல்படுவார்களோ ) / ததா தேஷு வர்தேதா: (அவ்வாறு அவற்றில் செயல்படுவாயாக ) / ஏஷ ஆதேஸ: (இதுவே கட்டளை ) /ஏஷ உபதேஸ: (இதுவே போதனை ) / ஏஷா வேதோபநிஷத் (இதுவே வேத உபநிஷதம்) / ஏததனுஸாஸனம் ( இதுவே உத்தரவு ) / ஏவமுபாஸிதவ்யம்/ (இவ்வாறே கடைபிடிக்கவேண்டுவது) ஏவமுசைததுபாஸ்யம் (இவ்வாறுதான் இது போற்றப்படவேண்டும் ) // (4)    அங்கு  சாஸ்த்ரார்த்த ஆராய்ச்சி செய்யும் திறமை உடையவர்கள் எவர்கள்    ஈடுபட்டவர்கள் , ஒருமித்த கருத்து உடையவர்கள் ,கடுமை தவிர்த்த மனமுடையவர்கள் ,நல்லொழுக்கத்தில் விருப்புடையவர்கள் இருக்கின்றனரோ அவர்கள் எவ்வாறு அந்த விஷயத்தில் செயல்படுவார்களோ அவ்வாறு அந்தவிஷயத்தில் செயல்படுவாயாக. பழிச்சொல்களுக்கு ஆளாகும்போது அங்கு  சாஸ்த்ரார்த்த ஆராய்ச்சி செய்யும் திறமை உடையவர்கள் எவர்கள் ஈடுபட்டவர்கள் , ஒருமித்த கருத்து உடையவர்கள்  கடுமை தவிர்த்த மனமுடையவர்கள் ,நல்லொழுக்கத்தில் விருப்புடையவர்கள் இருக்கின்றனரோ ,எவ்வாறு அவர்கள் அவற்றில் செயல்படுவார்களோ அவ்வாறு அவற்றில் செயல்படுவாயாக ,இதுவே கட்டளை .இதுவே போதனை .இதுவே வேத உபநிஷதம் . இதுவே உத்தரவு. இவ்வாறே கடைபிடிக்கவேண்டுவது. இவ்வாறுதான் இது போற்றப்படவேண்டும் . (4)   பன்னிரண்டாவது அனுவாகம்   ஹரி: ஓம் // ஸன்னோ மித்ரஸ்ஸம்வருண: / ஸன்னோ பவத்யர்யமா// ஸன்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி: /ஸன்னோ விஷ்ணுருருக்ரம: / நமோ பிரஹ்மணே /நமஸ்தே வாயோ/ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி / த்வாமேவ ப்ரத்யக்ஷம் பிரஹ்மாவாதிஷம்  /ருதமவாதிஷம்  / சத்யமவாதிஷம் / தன்மாமாவீத்/ த்த்வக்தாரமாவீத் / ஆவீன்மாம்/ ஆவீத்  வக்தாரம் /ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: //  ஸம் –(மங்களமாக ), நோ (நமக்கு), மித்ர: (மித்ரன்) ஸம் (மங்களமாக), வருண(.வருணன்), ஸம் –(மங்களமாக ), நோ (நமக்கு), பவது (ஆகட்டும்), , ப்ருஹஸ்பதி (ப்ருஹஸ்பதி), ஸம் –(மங்களமாக ), நோ (நமக்கு), விஷ்ணு:(எங்கும் உறைபவர் )), உருக்ரம: (எங்கும் செல்பவர்) நமோ (சரணம்) ப்ரஹ்மணே (பெரும் மூலமே), நம: (சரணம்), தே (உனக்கு), வாயோ (காற்றே), த்வம் (நீ ), ஏவ (தானே) ப்ரத்யக்ஷம் (புலனால் அறியப்படும்), ப்ரஹ்ம (பெரும் மூலம்), அஸி (உள்ளாய் ), த்வாம் (உன்னை  ), ஏவ (தானே) ) ப்ரத்யக்ஷம் (புலனால் அறியப்படும்), ப்ரஹ்ம (பெரும் மூலம்), அவாதிஷம்  (கூறினேன் ) ருதம் ( படைப்பின் ஒழுங்குமுறை) அவாதிஷம்  (கூறினேன் ), சத்யம் (இருப்பின் தன்மை) அவாதிஷம்  (கூறினேன் ), தத் (அது) மாம் (என்னை) ஆவீத் (தூண்டியது ), தத் (அது) வக்தாரம் (சொல்பவரை ) ஆவீத் (தூண்டியது ), ஆவீத்  (காத்தது ) மாம் (என்னை), ஆவீத் (காத்தது ) வக்தாரம் (சொல்பவரை ) ஓம் (பெரும் மூலம் ) ஸாந்தி (அமைதி), ஸாந்தி (அமைதி), ஸாந்தி (அமைதி),.    பொழிப்புரை : உலகங்களைத் தாங்கும் மித்ரனே அறிவைத்தாங்கும் வருணனே அறிவை நல்கும் அர்யமனே ,வாழ்வை அருளும் இந்திரனே ,ஞான வாக்கை அருளும் ப்ருஹஸ்பதியே , எங்கும் நிறைந்தவரும் எங்கும் செல்பவருமான சவித்ரு தேவனே எங்களுக்கு மங்களத்தை அருள்வீர்களாக . ப்ரஹ்மம் என்ற ஆதிமூலமே சரணம் ,வாழ்வின் சக்தியாகிய  காற்றே சரணம் நீதான் புலனால் அறியப்படும் ஆதிமூலமாக உள்ளாய் .நீதான் புலனால் அறியப்படும் ஆதிமூலமென்று கூறினேன் ., படைப்பின் ஒழுங்குமுறை என்று கூறினேன் , இருப்பின் தன்மை என்று கூறினேன் .அந்த ஆதிமூலம் என்னைத்தூண்டியது  .அந்த ஆதிமூலம் ஆசிரியரை தூண்டியது .என்னைக்காத்தது  .ஆசிரியரைக்காத்தது  .ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி. மனஉலகில் அமைதி.   ஆனந்தவல்லி   ஸஹானாவவது / ஸஹநௌ புனக்து / ஸஹவீர்யம் கரவாவஹை / தேஜஸ்வி நாவதீதமஸ்து / மாவித்விஷாவஹை / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: //   ஸஹானாவவது (எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக ) / ஸஹநௌ புனக்து (எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக ) / சஹவீர்யம் கரவாவஹை (ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக ) / தேஜஸ்வி நாவதீதமஸ்து  (கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும்) / மாவித்விஷாவஹை (வெறுக்காமல் வாழ்வோமாக) / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: (ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி) //   பொழிப்புரை : எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக. எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக  .ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக . கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும் .வெறுக்காமல் வாழ்வோமாக .ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி.   பிரஹ்மவிதாப்நோதி பரம் / ததேஷாப்யுக்தா / ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம  / யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் / ஸோ அஸ்நுதே ஸர்வான் காமாந்த்ஸஹ / பிரஹ்மணா  விபஸ்சிதேதி / பிரஹ்மவிதாப்நோதி பரம் (வேதத்தின் உட்பொருளை அறிந்தவன் பரம்பொருளை அடைகிறான் ) / ததேஷாப்யுக்தா (அதைக்குறித்து இந்த உறுதிமொழி ) / சத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம (சத்யமானதும், ஞானமும் முடிவில்லாததும் வேதம் )   / யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன்(பரவெளியில் ஹ்ருதய குஹையினுள் வைக்கப்பட்டுள்ள பரம் பொருளாகிய அதை எவன் அறிவானோ ) / ஸோ அஸ்நுதே ஸர்வான் காமாந்த்ஸஹ (அவன் விரும்பிய அனைத்தையும் துய்த்து மகிழ்கிறான் ) / பிரஹ்மணா  விபஸ்சிதேதி ( வேதத்தினால் அடைந்த ஞானத்தால் என்று ) /   பொழிப்புரை : வேதத்தின் உட்பொருளை அறிந்தவன் பரம்பொருளை அடைகிறான் .அதைக்குறித்து இந்த உறுதிமொழி வேதத்தில் உள்ளது. “வேதம் சத்தியமானது, ஞானத்தை அளிப்பது, முடிவில்லாதது . பரவெளியில் ஹ்ருதய குஹையினுள் வைக்கப்பட்டுள்ள பரம் பொருளாகிய அதை எவன் அறிவானோ அவன் வேதஞானத்தினால்  விரும்பிய அனைத்தையும் ஒன்றுசேர துய்த்து மகிழ்கிறான் .”   கருத்துரை : இந்த அனுவாகத்தில் செயல் மூலம் ப்ரஹ்மத்தை ப்பற்றி ஆராயப்படுகிறது . செயல்கள் அனைத்திலும் அறிவைப்பெருக்கும் செயலே சிறந்தது. .அறிவு மேம்பட மேம்பட விரும்பியதை அடையும் ஆற்றல் மேம்படுகிறது..உதாரணமாக தாவரங்களை விட மிருகங்கள் அறிவில் மேம்பட்டிருப்பதால் அவற்றின் விரும்பியதை அடையும் ஆற்றல் அதிகம்.அவற்றை விட சாதாரண மனிதனுக்கும் ,அவனைவிட அறிவாளிக்கும் இந்த ஆற்றல் அதிகமாக உள்ளது. தேவர்களுக்கும் மேலே ஆற்றல்  பெறவேண்டுமாயின் வேதஞானம் ஒன்றே வழி . வேதத்தின் உட்பொருளை அறிந்தவன் பிரஹ்மாவின் நிலை வரை வேண்டியன வேண்டியவாறே அடைந்து இன்புறுகிறான் . சாந்தோக்ய உபநிஷத் மந்த்ரம் 8 – 2 - 10  அவனைப்பற்றி இவ்வாறு கூறுகிறது   “ எந்த விஷயத்தில் அவன் கவனம் செல்கிறதோ , மேலும் எந்த பொருளை விரும்புகிறானோ அவனுடைய சங்கல்பத்தினால் அவை தோன்றுகின்றன.அவற்றை அடைந்து அவன் மேன்மையும் மகிழ்ச்சியும் பெறுகிறான்.”   தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாஸஸ் ஸம்பூத: / ஆகாஸாத் வாயு: / வாயோரக்னி: /அக்னேராப : / அத்ப்ய: ப்ருதிவீ / ப்ருதிவ்யா ஓஷதய: / ஒஷதீப்யோ அன்னம் / அன்னாத்புருஷ: / தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாஸஸ்ஸம்பூத: (அதில்  அல்லது இதில்  ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டானது ) / ஆகாஸாத் வாயு: (ஆகாசத்திலிருந்து காற்று) / வாயோரக்னி: (காற்றிலிருந்து அக்னி ) /அக்னேராப : (அக்னியிலிருந்து நீர்கள்  ) / அத்ப்ய: ப்ருதிவீ (நீர்களிளிருந்து பூமி ) / ப்ருதிவ்யா ஓஷதய: (பூமியிலிருந்து பயிர்கள் ) / ஒஷதீப்யோ அன்னம் (பயிர்களிலிருந்து சோறு ) / அன்னாத்புருஷ: (சோற்றிலிருந்து புருஷன்) /   பொழிப்புரை : பரவெளியில் அல்லது இதயவெளியில்  ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டானது .ஆகாசத்திலிருந்து காற்று. காற்றிலிருந்து அக்னி . அக்னியிலிருந்து நீர்கள்  .நீர்களிலிருந்து பூமி .பூமியிலிருந்து பயிர்கள் .பயிர்களிலிருந்து சோறு. சோற்றிலிருந்து புருஷன்.   கருத்துரை : ஆத்மாவிலிருந்து புருஷன் தோன்றும் முறையினால் புருஷன் பூமி நீர்கள் அக்னி காற்று ஆகாசம் ஆத்மாவின் பரிணாமங்களே என்பது தெளிவாகிறது. பூமியை ஒருவன் ஆராய்வானாகில் அவன் முறையே நீர்கள் அக்னி காற்று ஆகாசம் இவற்றைக்கண்டு முடிவில் சத் அல்லது இருப்பு என்ற ஆத்மாவைக் காண்பான் . அதேமாதிரி புருஷனை ரிஷி ஆராய்ந்து அவனுள் அதே ஆத்மாவைக் காண்கிறார். இந்த ஆராய்ச்சியே உபநிஷத்தின் பின்வரும் அனுவாகங்களில் விவரிக்கப்படுகிறது. முதல் அனுவாகம் மையக்கருத்தை சுருக்கமாக அறிவிக்கிறது. இதுபற்றியே பரவெளியிலும் மனிதனுள்ளும் உள்ள அந்த ஒரே ஆத்மாவிலிருந்து இந்த படைப்பு உண்டாகிறது என்பதை” தஸ்மாத் வா ஏதஸ்மாத்வா ‘ என்ற சொற்களின் மூலம் அறிகிறோம் .   ஸ வா ஏஷ புருஷோஅன்னரஸமய: / தஸ்யேதமேவ ஸிர: / அயம் தக்ஷிண: பக்ஷ: / அயமுத்தர: பக்ஷ: / அயமாத்மா / இதம் புச்சம் பிரதிஷ்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி // ஸ வா ஏஷ புருஷோஅன்னரஸமய: ( இந்த புருஷனோ முழுதும் அன்னரசத்தால் உண்டானவன் ) / தஸ்யேதமேவ ஸிர: ( அன்னமே அவனுக்கு தலை) / அயம் தக்ஷிண: பக்ஷ: ( அன்னம் வலது  பாகம் / அயமுத்தர: பக்ஷ: (அன்னம் இடது பாகம்) / அயமாத்மா (அன்னம் ஆத்மா) / இதம் புச்சம் பிரதிஷ்டா (அன்னம் கீழ்பக்க ஆதாரம் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது) //   பொழிப்புரை  இந்த புருஷனோ முழுதும் அன்னரசத்தால் உண்டானவன். அன்னமே அவனுக்கு தலை. அன்னம் வலது  பாகம் .அன்னம் இடது பாகம் .அன்னம் ஆத்மா. அன்னம் கீழ்பக்க ஆதாரம் .இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது.   கருத்துரை : அன்னகோசம் முழுதும் அன்னத்தாலேயே இயங்குகிறது. உடலியக்கம் தானாக அன்னத்தால் இயங்குவது நாம் அனைவரும் அறிந்ததே..பூமியின் பரிணாமம் மனிதனில் அன்னமாகத்தோன்றுகின்றது.ஒரு புருஷன் தலையினால் புலன்கள் மூலம் உலகை அறிகிறான் .உடலின்வலது இடது பாகங்கள் செயல்புரிய உதவுகின்றன. ஆத்மா புருஷனின் அனைத்து அனுபவங்களையும் உணர்கிறது. ஆதாரம் புருஷனைத் தாங்குகிறது.. அன்னகோசத்தில் அனைத்துமே அன்னமாக உள்ளது. இந்த அன்னமய புருஷன் நாம் காணும் இந்த வெளி உலகைக் காண்பதில்லை . அன்னமயகோசத்தில் மட்டும் வாழும் ஜீவன்களுக்கு உதாரணமாக விதைகளைக் கூறலாம் .இவற்றில் உயிர் உள்ளது .ஆனால் பூமியில் விதைத்து நீர்விடும்வரை இது அன்னகோசம் ஒன்றில் மட்டும் வாழ்கிறது. . இரண்டாவது அனுவாகம்   அன்னாத்வை பிரஜா: பிரஜாயந்தே / யா: காஸ்ச ப்ருதிவீகும்ஸ்ரிதா: / அதோ அன்னேனைவ ஜீவந்தி / அதைனதபியன்த்யத : / அன்னகும்ஹி பூதானாம் ஜ்யேஷ்டம் / தஸ்மாத் ஸர்வௌஷதமுச்யதே / ஸர்வம் வை தே அன்னமாப்னுவந்தி / யே அன்னம் ப்ரஹ்மோபாஸதே /  அன்னகும்ஹி பூதானாம் ஜ்யேஷ்டம் / தஸ்மாத் ஸர்வௌஷதமுச்யதே / அன்னாத் பூதானி ஜாயந்தே / ஜாதான்யன்னேன வர்தந்தே / அத்யதே அத்திச பூதானி / தஸ்மாதன்னம் ததுச்யத இதி   அன்னாத்வை பிரஜா: பிரஜாயந்தே (அன்னத்திலிருந்துதான் பிராணிகள்  உண்டாகின்றனர்)  / யா: காஸ்ச ப்ருதிவீகும்ஸ்ரிதா: ( யார் எவரெல்லாம் பூமியை அடைந்துள்ளார்களோ) / அதோ அன்னேனைவ ஜீவந்தி (பின்னர் அன்னத்தினாலேயே வாழ்கின்றனர் ) / அதைனதபியன்த்யத : (பின்னர் முடிவில் இதனிடமே செல்கின்றனர்) / அன்னகும்ஹி பூதானாம் ஜ்யேஷ்டம் ( அன்னமே பிராணிகளுக்கு மூத்தது )/ தஸ்மாத் ஸர்வௌஷதமுச்யதே (அதனால் அனைவருக்கும் மருந்து என கூறப்படுகிறது ) / ஸர்வம் வை தே அன்னமாப்னுவந்தி (அனைத்து அன்னங்களையுமே அவர்கள் அடைகின்றனர்  / யே அன்னம் ப்ரஹ்மோபாஸதே (எவர் அன்னத்தை ப்ரஹ்மமாக உபாசிக்கின்றார்களோ ) /  அன்னகும்ஹி பூதானாம் ஜ்யேஷ்டம் (அன்னமே பிராணிகளுக்கு மூத்தது )/ தஸ்மாத் சர்வௌஷதமுச்யதே (அதனால் அனைவருக்கும் மருந்து என கூறப்படுகிறது )  / அன்னாத் பூதானி ஜாயந்தே (அன்னத்திலிருந்து பிராணிகள் பிறக்கின்றனர் )/ ஜாதான்யன்னேன வர்தந்தே (பிறந்தவை அன்னத்தினால் வளர்கின்றன ) / அத்யதே அத்திச பூதானி(உண்ணப்படுகிறது,உண்கிறது பிராணிகளால்/களை  / தஸ்மாதன்னம் ததுச்யத இதி (அதனால் அன்னம் [உண்பது ] என கூறப்படுகிறது )   பொழிப்புரை : அன்னத்திலிருந்துதான் பிராணிகள்  உண்டாகின்றனர். யார் எவரெல்லாம் பூமியை அடைந்துள்ளார்களோ. பின்னர் அன்னத்தினாலேயே வாழ்கின்றனர் .பின்னர் முடிவில் இதனிடமே செல்கின்றனர். அன்னமே பிராணிகளுக்கு மூத்தது .அதனால் அனைவருக்கும் மருந்து என கூறப்படுகிறது. எவர் அன்னத்தை ப்ரஹ்மமாக உபாசிக்கின்றார்களோ அனைத்து அன்னங்களையுமே அவர்கள் அடைகின்றனர்  .அன்னமே பிராணிகளுக்கு மூத்தது .அதனால் அனைவருக்கும் மருந்து என கூறப்படுகிறது .அன்னத்திலிருந்து பிராணிகள் பிறக்கின்றனர் .பிறந்தவை அன்னத்தினால் வளர்கின்றன. பிராணிகளால் உண்ணப்படுகிறது பிராணிகளை உண்கிறது அதனால் அன்னம் [உண்பது ] என கூறப்படுகிறது .   கருத்துரை : அன்னத்தை ஒருவன் ப்ரஹ்மம் என்று உபாசிப்பது என்பதின் பொருள் அவன் அன்னத்தைப்பற்றி முழுதும் ஆராய்ந்து அறியவேண்டும்..பல்வகை அன்னங்களை எப்படி உற்பத்தி செய்யவேண்டும்.அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதே.. அப்படி உபாசிப்பவனான பிரமவித்  பிரமமாகிற அன்னத்தை வேண்டியபடி அடைவான்.   முன்னர் ஹ்ருதயவெளி அல்லது பரவெளி என கூறப்பட்டவாறு இங்கும் முன்னர் அன்னத்தைப்பற்றி பிராணிகள் நோக்கிலும் பின்னர் அன்னத்தின் நோக்கிலும் கூறப்படுகிறது .முன்னர் நோக்கு பிராணியின் தனிப்பட்ட நோக்கு .அதாவது வ்யஷ்டி நோக்கு .பின்னர் நோக்கு அன்னத்தின் முழுமையான நோக்கு அதாவது சமஷ்டி நோக்கு. இவ்வாறே பின்வரும் கோசங்களிலும் வ்யஷ்டி சமஷ்டி நோக்குகள் விளக்கப்படுகின்றன..   தஸ்மாத்வா ஏதஸ்மாதன்னரஸமயாத் / அன்யோஅந்தர ஆத்மா பிராணமய; / தேனைஷபூர்ண: / ஸ வா ஏஷபுருஷ வித ஏவ / தஸ்ய புருஷ விததாம் / அன்வயம் புருஷவித: /தஸ்ய பிராண ஏவ ஸிர: / வ்யானோ தக்ஷிண: பக்ஷ: / அபான உத்தர: பக்ஷ: / ஆகாஸ ஆத்மா / ப்ருதிவீ புச்சம் பிரதிஷ்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி //   தஸ்மாத்வா ஏதஸ்மாதன்னரஸமயாத்(அதிலிருந்தோ இதிலிருந்தோ அன்னரசமயத்திலிருந்து) / அன்யோஅந்தர ஆத்மா பிராணமய; (வேறாக உள்ளே பிராணமய ஆத்மா )/ தேனைஷபூர்ண (அதனால் இது நிறைந்தது)  / ஸ வா ஏஷபுருஷ வித ஏவ (அதுவும் இந்த புருஷன் மாதிரியே ) / தஸ்ய புருஷ விததாம்(அந்தபுருஷவிதத்தை ) / அன்வயம் புருஷவித: (ஒட்டியே இந்தபுருஷவிதம்) /தஸ்ய பிராண ஏவ ஸிர: (அதற்கு பிராணனே தலை ) / வ்யானோ தக்ஷிண: பக்ஷ: (வியானன் வலதுபாகம்) / அபான உத்தர: பக்ஷ: (அபானன் இடதுபாகம் ) / ஆகாஸ ஆத்மா (ஆகாசம் ஆத்மா ) / ப்ருதிவீ புச்சம் பிரதிஷ்டா (பூமி கீழ்பக்க ஆதாரம் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது)  //   பொழிப்புரை : பிராணிகளிலிருந்தோ அன்னத்திலிருந்தோ உள்ள அன்னரசமயத்திலிருந்து. வேறாக உள்ளே பிராணமய ஆத்மா உள்ளது. அதனால் இந்த அன்னமயகோசம்  நிறைந்தது. அந்த பிராணமய கோசமும்  இந்த அன்னமயகோசம்  மாதிரியே .அந்தபுருஷவிதத்தை ஒட்டியே இந்த பிராணமய புருஷவிதம். அதற்கு பிராணனே தலை. வியானன் வலதுபாகம். அபானன் இடதுபாகம். ஆகாசம் ஆத்மா . பூமி கீழ்பக்க ஆதாரம் . இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது.   கருத்துரை : இந்த பிராணமயபுருஷன் நீர்களின் பரிணாமம். உலகத்தை பிராணனால் அறிகிறான். வ்யானனாலும், அபானனாலும் செயல்புரிகிறான்..சரீரத்தில் உள்ள ஆத்மா ஆகாசத்தால் உணர்கிறான்.பூமி இவனுக்கு ஆதாரம் .இவனும் நாம் காணும் வெளிஉலகைக் காண்பதில்லை .அன்னமய,பிராணமய கோசங்களில் மட்டும்வாழும் ஜீவன்களுக்கு தாவரங்களை உதாரணமாகக் கொள்ளலாம் .   பிராணம் தேவா அனுப்ராணந்தி /மனுஷ்யா: பஸவஸ்ச்ச யே /ப்ராணோ ஹி பூதானாமாயு: / தஸ்மாத் ஸர்வாயுஷமுச்யதே / ஸர்வமேவ த ஆயுர்யந்தி / யே பிராணம் ப்ரஹ்மோபாஸதே / ப்ராணோ ஹி பூதானாமாயு: / தஸ்மாத் சர்வாயுஷமுச்யத இதி / தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா / ய; பூர்வஸ்ய / பிராணம் தேவா அனுப்ராணந்தி (தேவர்கள் பிராணனை ஒட்டியே வாழ்கின்றனர்)  /மனுஷ்யா: பசவஸ்ச்ச யே (மனிதர்கள், மிருகங்களும் எவையோ ) /ப்ராணோ ஹி பூதானாமாயு: (பிராணன்தான் பிராணிகளின் வாழ்வு ) / தஸ்மாத் சர்வாயுஷமுச்யதே( ஆதலால் அனைத்துக்கும் வாழ்வு எனக் கூறப்படுகிறது )  / சர்வமேவ த ஆயுர்யந்தி ( அவர்கள் அனைவருமே வாழ்வை அடைகின்றனர்)/ யே பிராணம் ப்ரஹ்மோபாசதே ( எவர்கள் பிராணனை ப்ரஹ்மம் என்று உபாசிக்கின்றனரோ / ப்ராணோ ஹி பூதானாமாயு (பிராணன்தான் பிராணிகளின் வாழ்வு )/ தஸ்மாத் சர்வாயுஷமுச்யத இதி (ஆதலால் அனைத்துக்கும் வாழ்வு எனக் கூறப்படுகிறது ) / தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா / ய; பூர்வஸ்ய / (அவனுக்கு முன்னவன் ஆத்மா எதுவோ அது சரீரம் )   பொழிப்புரை : தேவர்கள் பிராணனை ஒட்டியே வாழ்கின்றனர். மனிதர்கள், மிருகங்களும் எவையோ அவையும் . பிராணிகளின் வாழ்வு பிராணனால்தான். ஆதலால் அனைத்துக்கும் வாழ்வு எனக் கூறப்படுகிறது . எவர்கள் பிராணனை ப்ரஹ்மம் என்று உபாசிக்கின்றனரோ அவர்கள் அனைவருமே வாழ்வை அடைகின்றனர். பிராணன்தான் பிராணிகளின் வாழ்வு .ஆதலால் அனைத்துக்கும் வாழ்வு எனக் கூறப்படுகிறது .அவனுக்கு முன்னவன் ஆத்மா எதுவோ அது சரீரம் கருத்துரை : ப்ராணமயபுருஷனுக்கு சரீரம் அன்னமய புருஷனின் ஆத்மாவாக அமைகிறது. அன்னமய புருஷனுக்கு ஆத்மா அன்னமே ஆதலால் பிராணமய புருஷனின் சரீரம் அன்னத்தாலாகியது.. எவர்கள் பிராணனை ப்ரஹ்மம் என்று உபாசிக்கின்றனரோ அவர்கள் நீண்ட ஆயுளை அடைகின்றனர் .   தஸ்மாத் வா ஏதஸ்மாத் பிராணமயாத் / அன்யோ அந்தர ஆத்மா மனோமய:/ தேனைஷபூர்ண: / ஸ வா ஏஷ புருஷ வித ஏவ / தஸ்ய புருஷ விததாம் / அன்வயம் புருஷ வித: / தஸ்ய யஜுரேவ ஸிர: / ரிக் தக்ஷிண: பக்ஷ: / ஸாமோத்தர : பக்ஷ: / ஆதேஸ ஆத்மா / அதர்வாங்கிரஸ: புச்சம் பிரதிஷ்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி //   தஸ்மாத்வா ஏதஸ்மாத்பிராணமயாத்(அதிலிருந்தோ இதிலிருந்தோ பிராண மயத்திலிருந்து) / அன்யோஅந்தர ஆத்மா மனோமய; (வேறாக உள்ளே மனோ மய ஆத்மா )/ தேனைஷபூர்ண (அதனால் இது நிறைந்தது)  / ஸ வா ஏஷபுருஷ வித ஏவ (அதுவும் இந்த புருஷன் மாதிரியே ) / தஸ்ய புருஷ விததாம்(அந்தபுருஷவிதத்தை ) / அன்வயம் புருஷவித: (ஒட்டியே இந்தபுருஷவிதம்) /தஸ்ய யஜுரேவ ஸிர: (அதற்கு யஜுர்வேதமே தலை ) / ரிக்  தக்ஷிண: பக்ஷ: ( ரிக்வேதம்  வலதுபாகம்) /  ஸாமோத்தர: பக்ஷ: ( சாமவேதம்  இடதுபாகம் ) / ஆதேஸ  ஆத்மா (கட்டளை  ஆத்மா ) / அதர்வாங்கிரஸ: புச்சம் பிரதிஷ்டா (ஆஸ்ரம தர்மங்கள்  கீழ்பக்க ஆதாரம் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது)     பொழிப்புரை : ப்ராணனிலிருந்தோ பிராணமய ஜீவன்களிலிருந்தோ பிராணமயத்திலிருந்து வேறாக உள்ளே உள்ள மனோமயாத்மாவினால் இது நிறைந்தது . அந்த மனோமயகோசமும் பிராணமயகோசம் போலவே உள்ளது. அந்த புருஷ விதத்தை ஒட்டியே இந்த மனோமய புருஷ விதமும். அதற்கு யஜுர்வேதமே தலை .ரிக்வேதம் வலதுபாகம். சாமவேதம் இடதுபாகம். வேதத்தின் கட்டளைகளே ஆத்மா. ஆஸ்ரம தர்மங்களை அடைவிக்கும் அதர்வண வேதமே ஆதாரம். இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது.   கருத்துரை : இந்த மனோமயபுருஷன் அக்னியின் பரிணாமம். நாம் காணும் வெளி உலகு இவனால் காணப்படுவதே . வாழ்வில் வேதங்கள் அறிவிக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்களை புரிய வேண்டும் என ரிஷி அறிவிக்கிறார். இந்த கோசத்தில் வாழும்  ஜீவன்களுக்கு ஒரு சிறிய அளவுக்கு மிருகங்களையும் , முழு அளவுக்கு மனிதர்களையும்  உதாரணமாகக் கொள்ளலாம்.   .யதோவாசோ நிவர்த்தந்தே / அப்ராப்ய மனஸா ஸஹ / ஆனந்தம் பிரஹ்மணோ வித்வான் / ந பிபேதி கதாசநேதி / தச்யைஷ ஏவ ஸாரீர ஆத்மா / ய: பூர்வஸ்ய / .யதோவாசோ நிவர்த்தந்தே(எங்கிருந்து வேதங்கள் திரும்பிவிடுகின்றனவோ ) / அப்ராப்ய மனஸா ஸஹ (மனதுடன் கூட அடையாமல் ) / ஆனந்தம் பிரஹ்மணோ வித்வான்( வேதத்தின் உட்பொருளை அறிந்து ஆனந்திக்கும்  அறிஞன் ) / ந பிபேதி கதாசநேதி( எப்போதும் அச்சத்தை அடைவதில்லை  என்று) / தஸ்யைஷ ஏவ ஸாரீர ஆத்மா  / ய: பூர்வஸ்ய (அதற்கு முன்னவன் ஆத்மா எதுவோ அது சரீரம் ) பொழிப்புரை : வேதமந்த்ரங்களைக் கூறி கட்டளையிடப்பட்ட கர்மங்களைச் செய்பவன் , வேதமந்த்ரங்களின் உட்பொருளை அறிந்து எப்போதும் அச்சத்தை அடையாமல் ஆனந்தத்திலேயே திளைத்திருக்கும் அறிஞனின் நிலையை அடைவதில்லை.பிராணமயனின் ஆத்மாவாகிய ஆகாசமே மனோமயனின் சரீரம் .   கருத்துரை : மனோமயகோசத்தில் புரியக்கூடிய சிறந்தசெயல் வேதங்களின் கட்டளைப்படி கர்மாக்களை செய்து தன் மனதில் எழும் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதே. இதனால் ருதத்துக்கு இசைந்த முறையில் இவ்வுலகிலும் ,மேல் உலகங்களிலும் இன்பம் அடையலாம். ஆனால் இதன்மூலம் வேதத்தின் உட்பொருளை அறிந்தவன் நிலையை அடையமுடியாது. அந்த நிலையில்தான் எப்போது இந்த இன்பம் முடிந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் ஆனந்தமாக இருக்க இயலும்.   தஸ்மாத் வா ஏதஸ்மான்மனோமயாத் / அன்யோ அந்தர ஆத்மா விஞ்ஞான மய:/ தேனைஷபூர்ண: / ஸ வா ஏஷ புருஷ வித ஏவ / தஸ்ய புருஷ விததாம் / அன்வயம் புருஷ வித: / தஸ்ய ஸ்ரத்தைவ சிர: / ருதம்  தக்ஷிண: பக்ஷ: / ஸத்யமுத்தர : பக்ஷ: / யோக  ஆத்மா / மஹ: புச்சம் பிரதிஷ்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி //   தஸ்மாத்வா ஏதஸ்மாத் மனோமயாத்(அதிலிருந்தோ இதிலிருந்தோ மனோ மயத்திலிருந்து) / அன்யோஅந்தர ஆத்மா விஞ்ஞானமய; (வேறாக உள்ளே விஞ்ஞானமய அதாவது நுண்ணறிவு மய  ஆத்மா )/ தேனைஷபூர்ண (அதனால் இது நிறைந்தது)  / ஸ வா ஏஷபுருஷ வித ஏவ (அதுவும் இந்த புருஷன் மாதிரியே ) / தஸ்ய புருஷ விததாம்(அந்தபுருஷவிதத்தை ) / அன்வயம் புருஷவித: (ஒட்டியே இந்தபுருஷவிதம்) /தஸ்ய ஸ்ரத்தைவ ஸிர: (அதற்கு நம்பிக்கையே  தலை ) / ருதம்  தக்ஷிண: பக்ஷ: ( ஒழுங்குமுறை   வலதுபாகம் ) சத்தியமுத்தர: பக்ஷ: (உண்மை வலதுபாகம்)/ யோக  ஆத்மா(ஒன்றுதல் ஆத்மா  ) / மஹ: புச்சம் பிரதிஷ்டா (பிரபஞ்சமே கீழ்பக்க ஆதாரம் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது)   பொழிப்புரை : மனோமயத்திலிருந்தோ மனோமயஜீவன்களிலிருந்தோ வேறாக உள்ளே உள்ள விஞ்ஞானமய(நுண்ணறிவு) ஆத்மாவால் நிறைந்தது . அந்த விஞ்ஞானமயகோசமும் மனோமயகோசம் போலவே உள்ளது. அந்த புருஷ விதத்தை ஒட்டியே இந்த விஞ்ஞானமய புருஷ விதமும். அதற்கு செய்யும் காரியத்தில் நம்பிக்கையே தலை. மஹ: என்னும் பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறையே அதன் வலதுபாகம் . உண்மையே இடதுபாகம் . பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைஞானத்தில் ஒன்றுதலே அதன் ஆத்மா , இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது.   கருத்துரை : இந்த விஞ்ஞானமய புருஷன் வாயுவின் பரிணாமம் . உலகில் நாம் புலன்களால் காண்பதற்கு பின் உள்ள உண்மையை இவனால்தான் நாம் அறியமுடிகிறது . காணும் உலகின் பின் உண்மை என்ன என்று ஆராய்வதற்கு, அப்படிப்பட்ட உண்மை உள்ளது. அது ஒழுங்குமுறைக்கு உட்பட்டது. அதை நாம் அறியமுடியும் என்ற இந்த மூன்று செயல்களிலும் நம்பிக்கை இருந்தால்தான் செயல்புரியமுடியும். உதாரணமாக நம்மைப்போல் புலன்களால் அறியும் மிருகங்களுக்கு இந்த கோசத்தில் செயல்புரியும் வாய்ப்பே இல்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டுதான் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி பிரபஞ்சத்தில் தோன்றும் அனைத்து பொருள்களும் ஒரே சக்தியின் பல்வேறு பரிணாமங்களே என அறிவித்த உண்மையை  புலன்களுக்கு அப்பாற்பட்டு அறிகிறோம் .அதேமாதிரி சீக்ஷாவல்லியில்  திரிசங்கு என்ற மெய்ஞானி ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப்பின் அறிவித்த  பிரபஞ்சம் அனைத்துமே ஒரு உணர்விலிருந்து விரிந்து பிரிந்தது  என்ற உண்மையை  புலன்களுக்கு அப்பாற்பட்டு அறிகிறோம். இந்த கோசத்தில்  ஓரளவு இவ்வுலகில் வாழும் மனிதர்களும் பெருமளவு  அறிஞர்களும் மெய்ஞானிகளும் முற்றிலும்  மேல் உலகங்களில் வாழும் தேவர்களும் அடங்குவர். விஞ்ஞானம் யக்ஞம் தனுதே / கர்மாணி தனுதே அபி ச /விஞ்ஞானம் தேவா: ஸர்வே / பிரஹ்ம ஜ்யேஷ்டமுபாஸதே / விஞ்ஞானம் பிரஹ்ம சேத் வேத / தஸ்மாச்சேன்ன ப்ரமாத்யதி / ஸரீரே பாப்மனோ ஹித்வா / ஸர்வான் காமான் ஸமஸ்னுத இதி / தஸ்யைஷ ஏவ ஸாரீர ஆத்மா / ய: பூர்வஸ்ய / விஞ்ஞானம் யக்ஞம் தனுதே ( நுண்ணறிவே வேள்வியைப் படைக்கிறது ) / கர்மாணி தனுதே அபி ச (பலவித வினைகளையும் படைக்கிறது) /விஞ்ஞானம் தேவா: ஸர்வே (நுண்ணறிவே தேவர்கள் அனைவரும்) / பிரஹ்ம ஜ்யேஷ்டமுபாஸதே (மூத்ததான வேதத்தை உபாசிக்கின்றனர் ) / விஞ்ஞானம் பிரஹ்ம சேத் வேத (நுண்ணறிவே வேதம் என அறிவானாகில்) / தஸ்மாச்சேன்ன ப்ரமாத்யதி (அந்த அறிவில் தடுமாற்றம் இல்லாவிடில் ) / ஸரீரே பாப்மனோ ஹித்வா (சரீரத்தில் உள்ள பாபத்தை அகற்றி ) / ஸர்வான் காமான் ஸமஸ்னுத இதி( அனைத்து விருப்பங்களையும் அடைகிறான் என்று) / தஸ்யைஷ ஏவ ஸாரீர ஆத்மா / ய: பூர்வஸ்ய /(அதற்கு முன்னவன் ஆத்மா எதுவோ அது சரீரம் ).   பொழிப்புரை : நுண்ணறிவே வேள்வியைப் படைக்கிறது. பலவித வினைகளையும் படைக்கிறது. நுண்ணறிவே தேவர்கள் அனைவரும்.அவர்கள்  மூத்ததான வேதத்தை உபாசிக்கின்றனர். நுண்ணறிவே வேதம் என அறிவானாகில், அந்த அறிவில் தடுமாற்றம் இல்லாவிடில் ,சரீரத்தில் உள்ள பாபத்தை அகற்றி  அனைத்து விருப்பங்களையும் அடைகிறான் என்று(கூறுகிறது.) அதற்கு முன்னவன் ஆத்மா எதுவோ அது சரீரம்   கருத்துரை : ஐன்ஸ்டீன் சக்தி ஒன்றே அனைத்துப் பொருள்களாகவும் பரிணமிக்கிறது என்பதைக்காண நுண்ணறிவால் செயல்முறைகளை அமைக்கிறார்..ஒரு உணர்வே அனைத்துப் பிரபஞ்சம் என்பதை அறிய  ரிஷி வேள்வி முறைகளை அமைக்கிறார். ஆகவே வேண்டும்பயனுக்கேற்ப நுண்ணறிவு செயல்முறைகளையும் வேள்விமுறைகளையும் அமைக்கிறது .. ஒருவன் வேதமே நுண்ணறிவு என தடுமாற்றமில்லாமல் அறிவானாகில் தன்னிடம் உள்ள பாபங்களை அதன்மூலம் அகற்றி வேண்டும்பயன்களை அடைவான்.   தஸ்மாத் வா ஏதஸ்மாத்விக்ஞானமயாத் / அன்யோ அந்தர ஆத்மாஆனந்த மய:/ தேனைஷபூர்ண: / ஸ வா ஏஷ புருஷ வித ஏவ / தஸ்ய புருஷ விததாம் / அன்வயம் புருஷ வித: / தஸ்ய ப்ரியமேவ ஸிர: / மோதோ  தக்ஷிண: பக்ஷ: / பிரமோத உத்தர : பக்ஷ: / ஆனந்த  ஆத்மா / பிரஹ்ம புச்சம் பிரதிஷ்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி //   தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞானமயாத்(அதிலிருந்தோ இதிலிருந்தோ விஞ்ஞான  மயத்திலிருந்து) / அன்யோஅந்தர ஆத்மாஆனந்தமய; (வேறாக உள்ளே ஆனந்தமய  ஆத்மா )/ தேனைஷபூர்ண (அதனால் இது நிறைந்தது)  / ஸ வா ஏஷபுருஷ வித ஏவ (அதுவும் இந்த புருஷன் மாதிரியே ) / தஸ்ய புருஷ விததாம்(அந்தபுருஷவிதத்தை ) / அன்வயம் புருஷவித: (ஒட்டியே இந்தபுருஷவிதம்) /தஸ்ய ப்ரியமேவ ஸிர: (அதற்கு விருப்பமே   தலை ) / மோதோ  தக்ஷிண: பக்ஷ: ( மகிழ்ச்சியே   வலதுபாகம் ) பிரமோத உத்தர: பக்ஷ: (பெருமகிழ்ச்சி இடதுபாகம்)/ ஆனந்த  ஆத்மா (ஆனந்தம் ஆத்மா  ) / பிரஹ்ம  புச்சம் பிரதிஷ்டா ( ப்ரஹ்மமே   கீழ்பக்க ஆதாரம் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது)   தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞானமயாத்(அதிலிருந்தோ இதிலிருந்தோ விஞ்ஞான  மயத்திலிருந்து) / அன்யோஅந்தர ஆத்மாஆனந்தமய; (வேறாக உள்ளே ஆனந்தமய  ஆத்மா )/ தேனைஷபூர்ண (அதனால் இது நிறைந்தது)  / ஸ வா ஏஷபுருஷ வித ஏவ (அதுவும் இந்த புருஷன் மாதிரியே ) / தஸ்ய புருஷ விததாம்(அந்தபுருஷவிதத்தை ) / அன்வயம் புருஷவித: (ஒட்டியே இந்தபுருஷவிதம்) /தஸ்ய ப்ரியமேவ ஸிர: (அதற்கு விருப்பமே   தலை ) / மோதோ  தக்ஷிண: பக்ஷ: ( மகிழ்ச்சியே   வலதுபாகம் ) பிரமோத உத்தர: பக்ஷ: (பெருமகிழ்ச்சி இடதுபாகம்)/ ஆனந்த  ஆத்மா (ஆனந்தம் ஆத்மா  ) / பிரஹ்ம  புச்சம் பிரதிஷ்டா ( ப்ரஹ்மமே   கீழ்பக்க ஆதாரம் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது)   பொழிப்புரை : விஞ்ஞானத்திலிருந்தோ விஞ்ஞானமய ஜீவன்களிலிருந்தோ விஞ்ஞான  மயத்திலிருந்து, வேறாக உள்ளே ஆனந்தமய  ஆத்மா. அதனால் இது நிறைந்தது. அதுவும் இந்த புருஷன் மாதிரியே. அந்தபுருஷவிதத்தை ஒட்டியே இந்தபுருஷவிதம். அதற்கு விருப்பமே தலை. மகிழ்ச்சியே   வலதுபாகம். பெருமகிழ்ச்சி இடதுபாகம். ஆனந்தம் ஆத்மா  . ப்ரஹ்மமே   கீழ்பக்க ஆதாரம். இதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது.   கருத்துரை : இந்த ஆனந்தமய கோசம்  ஆகாசத்தின் பரிணாமம். ஆனந்தம் அடையும் அடிப்படையிலேயே எல்லா கோசங்களிலும் செயல்கள் புரியப்படுகின்றன .இந்தகோசத்தில் ஓரளவு மனிதர்களும் பெருமளவு தேவர்களும் முற்றிலும் மெய்ஞானிகளும் மூன்றாம் பதத்தில் வாழும் ப்ருஹஸ்பதி பிரஜாபதி பிரம்மா முதலிய தேவர்களும் அடங்குவர்   அஸன்னேவ ஸ பவதி / அஸத்ப்ரஹ்மேதி.வேத சேத் / அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத / ஸந்தமேனம் ததோ விதுரிதி / தஸ்யைஷ சாரீர ஆத்மா / ய: பூர்வஸ்ய /  அஸன்னேவ ஸ பவதி(இல்லாததுபோல அவன் ஆகிறான்) / அசத்ப்ரஹ்மேதி.வேத சேத் ( இல்லாதது ப்ரஹ்மம் என்று அறிபவன் ) / அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத (இருக்கிறது ப்ரஹ்மம் என்று அறிபவன் )  / ஸந்தமேனம் ததோ விதுரிதி (இருப்பவனாக இவனை அதனால் அறிகின்றனர் ) / தஸ்யைஷ ஸாரீர ஆத்மா / ய: பூர்வஸ்ய / (அதற்கு முன்னவன் ஆத்மா எதுவோ அது சரீரம் ).   பொழிப்புரை : இல்லாதது ப்ரஹ்மம் என்று அறிபவன் இல்லாததுபோல ஆகிறான். இருக்கிறது.ப்ரஹ்மம் என்று அறிபவனை அதனால் இருப்பவனாக அறிகின்றனர். அப்படி இருப்பவனுக்கு ஆனந்தமயகோசத்தின் ஆத்மாவாகிய ஆனந்தம் சரீரமாகிறது   கருத்துரை : ரிஷி கோசங்களின் ஆராய்ச்சியில் ஆனந்தமே ஜீவாத்மாக்கள் என்று அறிகிறார் . அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஆதாரம் ப்ரஹ்மம் .ஆகவே தொடர்ந்து பிரஹ்மத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். பிரஹ்மசூத்ரத்தில் வியாசபகவான் கூறியவாறு வேதமே பிரஹ்மத்தைப்பற்றி அறியும் வழி என்பதால் வேதத்தின் துணையை நாடுகிறார்.   வேதம் ப்ரஹ்மத்தை” சத் “ அல்லது “ இருப்பு “ என்று அறிவிக்கிறது. இருப்பில் உணர்வும் உணர்வில் ஆனந்தமும் ஒடுங்கி செயலற்ற நிலையே “ நிர்குணப்ரஹ்மம் “ எனப்படுகிறது . .அந்தநிலையில் இருப்பு இருந்தாலும் அதை உணர உணர்வு செயலற்ற நிலையில் உள்ளதால் அது இல்லாமை போலும் கொள்ளலாம்   “ நிர்குண ப்ரஹ்மம் “ என்பது தன்மைகள் இல்லா அழிவில்லா பெருநிலை . அது  “இருப்பும்” அல்ல , “இல்லாததும்” அல்ல. அது  “உணர்வும்” அல்ல . “உணர்வில்லாததும்”  அல்ல. அது  “ஆனந்தமும் (செயல்) “ அல்ல , “ஆனந்தமில்லாததும்” அல்ல . அது முற்றும் சமநிலையில் , நம் இந்திரியங்கள் , வாக், மனம். புத்தி அனைத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில் உள்ளது. அதை நாம் எவ்வாறும் அறிய  இயலாது. ஆனால் ஒன்ற இயலும். பிரஹ்மத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் ஜீவாத்மா நிர்குணப்ரஹ்மத்தைப்பற்றி அறியவிரும்பி அதில் ஈடுபட்டால் முடிவில் நிர்குணப்ரஹ்மத்தோடு ஒன்றிவிடுவான். அப்போது அவன் இல்லாததுபோல ஆகிவிடுவான்.   நம் அறிவிற்க்கப்பாற்பட்ட  முறையில் நிர்குணப்ரஹ்மத்தில் அதன் சக்தியினாலேயே  மாறுபாடு அமைகிறது. நிர்குணப்ரஹ்மத்தில் “இல்லாமை” என்ற பரவெளியும் அந்த பரவெளியில் சத் (இருப்பு), சித் (உணர்வு), ஆனந்தம் (செயல்) என்ற தன்மைகளோடு சகுண . ப்ரஹ்மம் தோன்றுகிறது. இதுவும் அழிவில்லாப் பெருநிலையாக, நம் அறிவிற்க்கப்பாற்பட்ட நிலையில் உள்ளது .இதை அறிய விரும்பும் ஜீவாத்மா சகுண பிரஹ்மத்தோடு ஒன்றுவான். இப்படிப்பட்ட ஜீவாத்மாதான் பிரம்மாண்டத்தில் முதலாகத் தோன்றும் பிரஹ்மா . இவரை பிரம்மாண்டத்தில் எல்லோரும் உள்ளவராக அறிகின்றனர். நம் அறிவிற்க்கப்பாற்பட்ட  முறையில், சகுண ப்ரஹ்மம் உணர்வுப் பரவெளியில் (சிற்றம்பலம்) கணக்கற்ற ப்ரஹ்மாண்டங்களை தோற்றுவிக்கிறது . “இருப்பு” ப்ரஹ்மாண்டமாகவும் “உணர்வு” நான் பிரம்மா என்ற ஆணவமாகவும் , ஆனந்தம் என்பது பிரம்மாவின் செயலாகவும் (சரீரமாகவும்) தானாகத் தோன்றுகின்றன.   அதாதோ அனுப்ரஸ்னா: / உதோஅவித்வானமும் லோகம் ப்ரேத்ய / கஸ்சன கச்சதீ / ஆஹோ வித்வானமும் ப்ரேத்ய கஸ்சித் ஸமஸ்னுதா உ / அதாதோ அனுப்ரஸ்னா: (இதன்பின் எழும் கேள்விகள் ) / உதோஅவித்வானமும் லோகம் ப்ரேத்ய / கஸ்சன கச்சதீ (ஞானம் அடையாதவன் ஆயினும் எவனேனும்  இறந்தபின் இந்த பிரமலோகத்திற்கு செல்கிறானா?) / ஆஹோ வித்வானமும் ப்ரேத்ய கஸ்சித் ஸமஸ்னுதா உ(ஞானம் அடைந்தவன் எவனும்  மரித்தபின் இந்த பிரமலோகத்தை அடைகிறானா?) /   பொழிப்புரை : இதன்பின் எழும் கேள்விகள். ஞானம் அடையாதவன் ஆயினும் எவனேனும்  இறந்தபின் இந்த பிரமலோகத்திற்கு செல்கிறானா? ஞானம் அடைந்தவன் எவனும்  மரித்தபின் இந்த பிரமலோகத்தை அடைகிறானா?   கருத்துரை : இந்த கேள்விகளின் நோக்கம் , படைப்பு எவ்வாறு நிகழ்கிறது.? இறந்தபின் பிரஹ்மலோகம் ஞானம் இல்லாவிடினும் அடையலாம் என்றால் அப்போது இறக்கும்வரை இவ்வுலகில் வேண்டியன பெறுவதற்கு உரிய செயல்களை மட்டும் செய்வது அறிவுடைமை .ஏனெனில் இவ்வுலகில் வேண்டியன பெற்று இன்பமாக வாழ்ந்து பின்னர் பிரஹ்மலோகத்திலும் இன்பமாக இருக்கலாம். இறந்தபின் ஞானம் அடையாமல்  பிரஹ்மலோகம் போகமுடியாது  என்றால் ஞானம் அடைந்தவன் நிச்சயமாக பிரஹ்மலோகத்தை அடைவான் என்று உறுதியாகக்கூறமுடியுமா? அப்படி என்றால் ஞானம் அடையச் செய்யும் முயற்சி பொருளுள்ளது.   பின்னர் வரும் விளக்கங்கள் இந்த கேள்விகளுக்கு பதிலாக அமைகின்றன. சுருக்கமாக ஞானம் அடையாதவன் அவன் வினைகளுக்கேற்ப கோசங்களில் உள்ள உலகங்களில் வாழ்வான். ஞானம் அடைந்தவன் ஐந்து கோசங்களையும் கடந்து பிரஹ்மத்துடன் ஒன்றி விரும்பியவாறு அனுபவங்களை அடைவான்.   ஸோ அகாமயத / பஹுஸ்யாம் பிரஜாயேயேதி / ஸதபோ அதப்யத / ஸதபஸ்தப்த்வா / இதகும் ஸர்வமஸ்ருஜத / யதிதம் கிஞ்ச / தத்ஸ்ருஷ்ட்வா / ததேவானுப்ராவிஸத் / ததனுப்ரவிஸ்ய / சச்சத்யச்சா அபவத் / நிருக்தம் சாநிருக்தம் ச / நிலயனம் சாநிலயனம் ச / விஞ்ஞானம் சாவிஞ்ஞானம் ச / ஸத்யம் சான்ருதம் ச ஸத்யமபவத் / யதிதம் கிஞ்ச / தத்ஸத்யமித்யாசக்ஷதே / ததப்யேஷ ஸ்லோகோ பவதி // ஸோ அகாமயத (அவர் [பிரம்மா ] விரும்பினார்) / பஹுஸ்யாம் பிரஜாயேயேதி (பலவாக ஆகக்கடவேன் , பிறப்பேனாக என்று  / ஸதபோ அதப்யத ( அவர் தியானம் செய்தார் ) / ஸதபஸ்தப்த்வா (அவர் தியானம் செய்து  / இதகும் ஸர்வமஸ்ருஜத (இந்த அனைத்தையும் வெளிப்படுத்தினார் ) / யதிதம் கிஞ்ச (எந்த இவை அனைத்தையும் ) / தத்ஸ்ருஷ்ட்வா (அதைப்படைத்து ) / ததேவானுப்ராவிஸத் ( அந்தபடைப்பினுள்ளேயே உட்புகுந்தார் )  / ததனுப்ரவிசஸ்ய (அதனுட்புகுந்து ) / சச்சத்யச்சா அபவத் (காண்பதும் காணப்படாததாகவும் ஆனார்) / நிருக்தம் சாநிருக்தம் ச( அறிவை வளர்க்கும் சொற்களாகவும்  அறியாமையை அளிக்கும் சொற்களாகவும்  ) / நிலயனம் சாநிலயனம் ச (ஆதாரமாக உள்ளதாகவும்  ஆதாரமாக இல்லாததாகவும்  ) / விஞ்ஞானம் சாவிஞ்ஞானம் ச  ( நுண்ணறிவாகவும்  அறியாமையாகவும்  ) / சத்யம் சான்ருதம் ச ( மெய்யும் பொய்யுமாக ) சத்யமபவத் ( பிரம்மா ஆனார்) / யதிதம் கிஞ்ச(எது இது எதுவாயினும்) / தத்சத்யமித்யாசக்ஷதே (அது பிரம்மா என்று சொல்கின்றனர் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (அதைக்குறித்தும் இந்த வேத மந்த்ரம் உள்ளது ) //   பொழிப்புரை :அவர் [பிரம்மா ] விரும்பினார்). பலவாக ஆகக்கடவேன் , பிறப்பேனாக என்று   அவர் தியானம் செய்தார் . அவர் தியானம் செய்து இந்த அனைத்தையும் வெளிப்படுத்தினார் . எந்த இவை அனைத்தையும் ,அதைப்படைத்து, அந்தபடைப்பினுள்ளேயே உட்புகுந்தார். அதனுட்புகுந்து காண்பதும் காணப்படாததாகவும் ஆனார் . அறிவை வளர்க்கும் சொற்களாகவும் அறியாமையை அளிக்கும் சொற்களாகவும் ,ஆதாரமாக உள்ளதாகவும்  ஆதாரமாக இல்லாததாகவும் , நுண்ணறிவாகவும்  அறியாமையாகவும் , மெய்யும் பொய்யுமாக  பிரம்மா ஆனார். எது இது எதுவாயினும் அது பிரம்மா என்று சொல்கின்றனர். அதைக்குறித்தும் இந்த வேத மந்த்ரம் உள்ளது . கருத்துரை :  சகுண பிரமத்திலிருந்து தானாகத் தோன்றிய பிரம்மா பிரம்மாண்டத்தில் உலகங்களையும் ஜீவராசிகளையும் படைக்கிறார். தன் க்ரியாசக்தியின் (உண்டாக்கும் ஆற்றல்) மூலம் அனைத்தையும் படைக்கிறார் . ஜீவ சரீரங்களில் உயிர் கொடுக்க அனைத்திலும் உட்புகுந்து உயிராகிறார். தன் ஞானசக்தியின் ( அறிவு ஆற்றல் ) மூலம் ஜீவர்களில் பலவிதமான அறிவுத்திறன்களை படைக்கிறார். இவை மட்டும் இருந்தால் அனைத்து சரீரங்களில் உள்ள உயிர்களும் தாம் பிரம்மாவின் கூறே என்பதை அறிய வல்லதாகி மெய்ஞானம் அடையுமாதலால் படைப்பு நிலைக்காது , தானே மேலும் பெருகாது. ஆகவே தன் இச்சாசக்தியின் (விரும்பும் ஆற்றல்) மூலம் அறியாமையையும் அதன்விளைவாக ருதத்துக்கு எதிரான பொய்மையையும் படைக்கிறார். இதனால் பிறப்புக்கு தக்கவாறு அறிவுபெற்று ஜீவராசிகள் தாம் பிரம்மாவின் கூறு என்பதை மறந்து நான் என்ற ஆணவம் அடைந்து தங்கள் விருப்பபடி செயல்களை உலகில் ஆற்றுகின்றன. இந்த வினைப்பயன்களுக்குத் தக்கவாறு  ஜீவராசிகள் மேல்,கீழ் உலகங்களை அடைந்து படைப்பு  நிலைக்கிறது ,பெருகுகிறது .   அஸத்வா இதமக்ர ஆஸீத் / ததோ வை ஸதஜாயத / ததாத்மாநகும் ஸ்வயமகுருத / தச்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி / ரஸோவை ஸ: / ரஸக்குஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீபவதி / கோஹ்யேவான்யாத்க: ப்ராண்யாத் /யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் / ஏஷ ஹ்யேவானந்தயாதி /யதாஹ்யேவைஷ ஏதஸ்மின்னத்ருஸ்யேஅநாத்ம்யே அநிருக்தேஅநிலயனேஅபயம் பிரதிஷ்டாம் விந்ததே / அதஸோஅபயம் கதோ பவதி / யதாஹ்யேவைஷ ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே / அத தஸ்ய பயம் பவதி / தத்வேவ பயம் விதுஷோ மன்வானஸ்ய /ததப்யேஷ ஸ்லோகோ பவதி // அஸத்வா இதமக்ர ஆஸீத் (நிர்குண ப்ரஹ்மம் தான் இதன்முன் இருந்தது) / ததோ வை ஸதஜாயத (அதிலிருந்துதான் சகுணப்ரஹ்மம் உண்டாகியது ) / ததாத்மாநகும் ஸ்வயமகுருத (அது தன்னை பிரம்மாவாக செய்தது ) / தச்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி (அதனால் அதை நன்குசெய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது ) / ரஸோவை ஸ: ( அவர் [ப்ரஹ்மானந்த ] ரசமே ) / ரஸக்குஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீபவதி (ரசத்தை அடைந்துதான் இவன் ஆனந்திப்பவனாக ஆகிறான் .) / கோஹ்யேவான்யாத்க: ப்ராண்யாத்(யார்தான் ஸ்வாசிப்பான் யார் வாழ்வான்?) /யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத்(இந்த ஆகாசத்தில் ஆனந்தம் இல்லாவிடில் ) / ஏஷ ஹ்யேவானந்தயாதி(இவரேதான் ஆனந்திக்கச்செய்கிறார் ) /யதாஹ்யேவைஷ ஏதஸ்மின்னத்ருஸ்யேஅநாத்ம்யே அநிருக்தேஅநிலயனேஅபயம் பிரதிஷ்டாம் விந்ததே (ஆம் எப்போதுதான் இவன் இந்த படைப்பில்  காணப்படாததில்,  தான் என்ற தனித்தன்மை உள்ள ஆத்மாவாக  இல்லாததில், அறியாமையை அளிக்கும் சொற்களில் ,ஆதாரமில்லாததில் பற்றி பயமின்மையை உறுதியாக அடைகிறானோ ) / அதஸோஅபயம் கதோ பவதி(அப்போது அவன் பயமின்மையை அடைந்தவன் ஆகிறான் ) / யதாஹ்யேவைஷ ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே ( ஆம் எப்போதுதான் இந்தபடைப்பில் சிறிதேனும் வேற்றுமையை செய்கிறானோ )  / அத தஸ்ய பயம் பவதி(அப்போது அவனுக்கு பயம் உண்டாகிறது ) / தத்வேவ பயம் விதுஷோ மன்வானஸ்ய (அப்படி நினைக்கும் அறிஞனின் பயமும் இப்படியே) /ததப்யேஷ ஸ்லோகோ பவதி (அதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது ) //   பொழிப்புரை : நிர்குண ப்ரஹ்மம் தான் இதன்முன் இருந்தது.அதிலிருந்துதான் சகுணப்ரஹ்மம் உண்டாகியது. அது தன்னை பிரம்மாவாக செய்தது. அதனால் அதை நன்குசெய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது ) , அவர் [ப்ரஹ்மானந்த ] ரசமே. ரசத்தை அடைந்துதான் இவன் ஆனந்திப்பவனாக ஆகிறான் . இந்த ஆகாசத்தில் ஆனந்தம் இல்லாவிடில் யார்தான் ஸ்வாசிப்பான் யார் வாழ்வான்? இவரேதான் ஆனந்திக்கச்செய்கிறார் .ஆம் எப்போதுதான் இவன் இந்த படைப்பில்  காணப்படாததில், தான் என்ற தனித்தன்மை உள்ள ஆத்மாவாக  இல்லாததில் ,அறியாமையை அளிக்கும் சொற்களில் ,ஆதாரமில்லாததில் பற்றி பயமின்மையை உறுதியாக அடைகிறானோ ,அப்போது அவன் பயமின்மையை அடைந்தவன் ஆகிறான் . ஆம் எப்போதெல்லாம்  இந்தபடைப்பில் சிறிதேனும் வேற்றுமையை செய்கிறானோ ,அப்போது அவனுக்கு பயம் உண்டாகிறது .அப்படி நினைக்கும் அறிஞனின் பயமும் இப்படியே. அதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது .   கருத்துரை : பொருளில் ,செயலில் ,எண்ணத்தில் அறிவில் இது நல்லது கெட்டது , காண்பது காணாதது ,செய்யவேண்டுவது செய்யக்கூடாதது என்ற வேற்றுமை எண்ணம் இருக்கும்வரையும்,தான் என்ற தனித்தன்மையை இழக்க விரும்பாவிடினும் ,  அனைத்தும் பிரஹ்மமே என்ற உயரிய ஞானத்தை அடையவில்லை என்பதையே குறிக்கிறது பிரம்மாவின் ஆனந்தமும் அளவிடப்படுவதால் அவரும் ஏதோ ஒருசிறிய வேற்றுமை  செய்வதாலோ அல்லது செய்யாததாலோ இன்பம் அழிந்து துன்பம் வந்துவிடுமோ என்பதே பயத்துக்குக் காரணம். மனிதர்களோ வேற்றுமையே உண்மை என்ற நிலையில் இருப்பதால் அவர்கள் குறைந்த ஞானமும் ஆனந்தமும் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர் . பீஷாஸ்மாத்வாத: பவதே / பீஷோதேதி ஸூர்ய: / பீஷாஸ்மாதக்நிஸ்சேந்த்ரஸ்ச / ம்ருத்யுர்தாவதி பஞ்சம இதி / ஸைஷானந்தஸ்ய மீமாகும்ஸா பவதி / யுவாஸ்யாத் ஸாது யுவாத்யாயக: / ஆசிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட: / தஸ்யேயம் ப்ருதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் / ஸ ஏகோ மானுஷ ஆனந்த: /தே யே ஸதம் மானுஷா ஆனந்தா: / பீஷாஸ்மாத்வாத: பவதே (வேற்றுமைகாண்பதிலிருந்து உண்டாகும் பயத்தினால் காற்று வீசுகிறது./ பீஷோதேதி ஸூர்ய: (பயத்தினால் சூர்யன் உதிக்கிறான் ) / பீஷாஸ்மாதக்நிஸ்சேந்த்ரஸ்ச (வேற்றுமைகாண்பதிலிருந்து உண்டாகும் பயத்தினால் அக்னியும் இந்த்ரனும் )/ ம்ருத்யுர்தாவதி பஞ்சம இதி (ம்ருத்யு ஐந்தாவதாக ஓடுகிறான்)/ ஸைஷானந்தஸ்ய மீமாகும்ஸா பவதி (இது ஆனந்தத்தின் ஆராய்வாக உள்ளது. / யுவாஸ்யாத் ஸாது யுவாத்யாயக: ( இளைஞன் சாதுவாகவும் வேதத்தை கற்பவனாகவும் இருக்கட்டும் ) / ஆசிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட: (மக்களை ஆள்பவனாகவும் ,உறுதியுள்ளவனும், வலிமையுடையவனாகவும் ) / தஸ்யேயம் ப்ருதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் ( அவனுக்கு இந்த பூமி அனைத்து செல்வங்களையும் முழுமையாக அளிக்கட்டும்) / ஸ ஏகோ மானுஷ ஆனந்த: (அது ஒரு மானிட ஆனந்தத்தின் முழு அளவு)/தே யே சதம் மானுஷா ஆனந்தா: (எவை நூறு மானிட ஆனந்தங்களோ அவை ) /   பொழிப்புரை : வேற்றுமைகாண்பதிலிருந்து உண்டாகும் பயத்தினால் காற்று வீசுகிறது. பயத்தினால் சூர்யன் உதிக்கிறான் .வேற்றுமைகாண்பதிலிருந்து உண்டாகும் பயத்தினால் அக்னியும் இந்த்ரனும் தங்கள் கடமையை செய்கின்றனர் . ம்ருத்யு ஐந்தாவதாக ஓடுகிறான். இது ஆனந்தத்தின் ஆராய்வாக உள்ளது. இளைஞன் சாதுவாகவும் வேதத்தை கற்பவனாகவும் இருக்கட்டும். மக்களை ஆள்பவனாகவும் ,உறுதியுள்ளவனும், வலிமையுடையவனாகவும் இருக்கட்டும் . அவனுக்கு இந்த பூமி அனைத்து செல்வங்களையும் முழுமையாக அளிக்கட்டும் அது ஒரு மானிட ஆனந்தத்தின் முழு அளவு எவை நூறு மானிட ஆனந்தங்களோ அவை.   ஸ ஏகோ மனுஷ்ய கந்தர்வாணாமானந்த: ( அது ஒரு மனுஷ்ய கந்தர்வர்களின் ஆனந்தம் ) / ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  )  / தே யே ஸதம் மனுஷ்ய கந்தர்வாணாமானந்தா: ( எவை நூறு மனுஷ்யகந்தர்வர்களின் ஆனந்தங்களோ ) /ஸ ஏகோ தேவகந்தர்வாணாமானந்த: ( அது ஒரு தேவகந்தர்வர்களின் ஆனந்தம்)/    ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  ) / தே யே ஸதம் தேவகந்தர்வாணாமானந்தா: ( எவை நூறு தேவகந்தர்வர்களின் ஆனந்தங்களோ  )/ ஸ ஏக: பித்ருணாம் சிரலோகலோகானாமானந்த: ( அது ஒரு நீண்டகாலம் இருக்கும் லோகத்தில்வாழும் பித்ருக்களுடைய  ஆனந்தம்)/   ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  ) / தே யே சதம் பித்ருணாம் சிரலோகலோகானாமானந்தா : ( எவை நூறு நீண்டகாலம் இருக்கும் லோகத்தில்வாழும் பித்ருக்களுடைய ஆனந்தங்களோ  )/ ஸ ஏகோ ஆஜானஜானாம் தேவானாமானந்த: ( அது ஒரு படைப்பிலேயே தேவப்பிறவிஎடுத்த தேவர்களின்  ஆனந்தம்)/   ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  )/ தே யே சதம் ஆஜானஜானாம் தேவானாமானந்தா : ( எவை நூறு படைப்பிலேயே தேவப்பிறவிஎடுத்த தேவர்களின் ஆனந்தங்களோ  )/ ஸ ஏக: கர்மதேவானாம் தேவானாமானந்த:( அது ஒரு கர்மாவினால் தேவபதவி அடைந்த  தேவர்களின்  ஆனந்தம்)/ யே கர்மணா தேவானபி யந்தி ( எவர் கர்மங்களால் தேவர்களையும் அடைகின்றனர் )   ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  ) / தே யே ஸதம் கர்மதேவானாம்  தேவானாமானந்தா : ( எவை நூறு கர்மாவினால் தேவபதவி அடைந்த தேவர்களின் ஆனந்தங்களோ  )/ ஸ ஏகோ தேவானாமானந்த:( அது ஒரு  தேவர்களின்  ஆனந்தம்)/   ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய(விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  ) / தே யே ஸதம்  தேவானாமானந்தா : ( எவை நூறு  தேவர்களின் ஆனந்தங்களோ  )/ ஸ ஏக இந்த்ரஸ்யானந்த :( அது ஒரு இந்த்ரனுடைய ஆனந்தம்)/   ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய(விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  ) / தே யே ஸதம் இந்த்ரஸ்யானந்தா:( எவை நூறு   இந்த்ரனுடைய ஆனந்தங்களோ  )/ ஸ ஏகோ ப்ருஹஸ்பதேரானந்த :( அது ஒரு ப்ருஹஸ்பதியினுடைய ஆனந்தம்)/ ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய(விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  ) / தே யே ஸதம் ப்ருஹஸ்பதேரானந்தா: :( எவை நூறு ப்ருஹஸ்பதியுடைய ஆனந்தங்களோ  )/ ஸ ஏக: ப்ரஜாபதேரானந்த :( அது ஒரு ப்ரஜாபதியினுடைய ஆனந்தம்)/ ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  )) / தே யே ஸதம் ப்ரஜாபதேரானந்தா: :( எவை நூறு பிரஜாபதியுடைய ஆனந்தங்களோ  )/ ஸ ஏகோ பிரஹ்மண ஆனந்த :( அது ஒரு ப்ரஹ்மாவினுடைய ஆனந்தம்)/ ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய (விருப்பங்களால் கட்டுப்படாதவனும்  வேதம் அறிந்தவனும் ஆக இருப்பவனுடையதும்  )   பொழிப்புரை : அது ஒரு மனுஷ்யகந்தர்வர்களின் ஆனந்தம். அதன் நூறுமடங்கு ஒரு தேவகந்தர்வர்களின் ஆனந்தம் .அதன் நூறுமடங்கு ஒரு பலகாலம் இருக்கும் உலகில் வாழும் பித்ருக்களுடைய ஆனந்தம் . அதன் நூறுமடங்கு ஒரு  படைப்பிலேயே தேவப்பிறவி எடுத்த தேவர்களின் ஆனந்தம் . அதன் நூறுமடங்கு ஒரு கர்மாவினால் தேவபதவி அடைந்த தேவர்களுடைய ஆனந்தம் . கர்மாவினால் தேவபதவிகளையும் அடைகின்றனர் . கர்மதேவர்களின் ஆனந்தத்தின் நூறுமடங்கு ஒரு தேவர்களின் ஆனந்தம். அதன் நூறுமடங்கு ஒரு இந்த்ரனின் ஆனந்தம். அதன் நூறுமடங்கு ஒரு ப்ருஹஸ்பதியின் ஆனந்தம். அதன் நூறுமடங்கு ஒரு பிரஜாபதியின் ஆனந்தம். அதன் நூறுமடங்கு ஒரு ப்ரஹ்மாவின் ஆனந்தம் . இந்த அனைத்து நிலைகளில் உள்ள ஆனந்தத்தையும் , எவன் ஒருவன் விருப்பங்களுக்கு அடிமையாய் இல்லாமலும் வேதங்களை அறிந்தவனாகவும் உள்ளானோ அவனும் அனுபவிக்கிறான்.   கருத்துரை : பிரம்மாண்டத்தில் அனைவருக்கும் முதன்மையானவர் ப்ரஹ்மா. அவருடன் இந்த ஆராய்ச்சி முற்றுப்பெறுகிறது. இதன் மேலே சகுணப்ரஹ்ம நிலை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது .அதில் சகுணப்ரஹ்மமே சத், சித், ஆனந்தம் எனக்கூறப்படுவதால் ஆனந்தம் அளவிற்கப்பாற்பட்டது என்று ஊஹிக்கலாம் .   இந்த அனைத்து ஆனந்த நிலைகளையும் விரும்பியவாறு அனுபவிக்க ஒருவர் வேதங்களை அறிந்தவராகவும் ,விருப்பங்களுக்கு அடிமையாகாதவராகவும் இருக்கவேண்டுமென கூறப்படுவது ஏனென்றால் வேதம் அறிந்த ஒருவரே அனைத்து நிலைகளை அறிந்தவராக இருக்கமுடியும்.அப்படியிருப்பினும் ஏதேனும் ஒரு நிலையிலுள்ள இன்பங்களுக்கு அவர் அடிமையாகிவிட்டால் அந்த நிலையிலிருந்து அவர் விடுபடமுடியாது. எந்தநிலை ஆனந்தமாயினும் விரும்பியவாறு அனுபவிக்கமுடியாது .   ஸ யஸ்சாயம் புருஷே / யஸ்சாஸாவாதித்யே / ஸ ஏக: / ஸ ய ஏவம்வித் / அஸ்மாத் லோகாத் ப்ரேத்ய / ஏதமன்னமயமாத்மானமுபஸம்க்ராமதி / ஏதம் பிராணமயமாத்மானமுபஸம்க்ராமதி / ஏதம் மனோமயமாத்மானமுப ஸம்க்ராமதி / ஏதம் விஞ்ஞானமயமாத்மானமுபஸம்க்ராமதி / ஏதமானந்தமய மாத்மானமுபஸம்க்ராமதி / ததப்யேஷ ஸ்லோகோ பவதி //   ஸ யஸ்சாயம் புருஷே (அவன் இந்த புருஷனிலும் யாரோ ) / யஸ்சாஸாவாதித்யே (அவன் இந்த ஆதித்யனிலும் யாரோ) / ஸ ஏக: (அவன் ஒருவனே) / ஸ ய ஏவம்வித் (யார் அவன் இவ்வாறு அறிவானோ) / அஸ்மாத் லோகாத் ப்ரேத்ய (இந்த உலகத்திலிருந்து மரித்தபின் ) / ஏதமன்னமயமாத்மானமுபஸம்க்ராமதி (இந்த அன்னமய ஆத்மாவைக்கடந்து செல்கிறான் ) / ஏதம் பிராணமயமாத்மானமுபஸம்க்ராமதி ( இந்த பிராணமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான்) / ஏதம் மனோமயமாத்மானமுபஸம்க்ராமதி (இந்த மனோமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான் ) / ஏதம் விஞ்ஞானமய மாத்மானமுப சம்க்ராமதி (இந்த விஞ்ஞானமயஆத்மாவைக் கடந்துசெல்கிறான் ) / ஏதமானந்தமய மாத்மானமுபஸம்க்ராமதி (இந்த ஆனந்தமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான் ) / ததப்யேஷ ஸ்லோகோ பவதி (அதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது )//   பொழிப்புரை : யார் இந்த புருஷனிலோ யார்  இந்த ஆதித்யனிலோ , இருவரிலும் அவன் ஒருவனே, யார் இவ்வாறு அறிவானோ அவன் இந்த உலகத்திலிருந்து மரித்தபின் இந்த அன்னமய ஆத்மாவைக்கடந்து செல்கிறான். இந்த பிராணமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான். இந்த மனோமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான். இந்த விஞ்ஞானமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான். இந்த ஆனந்தமய ஆத்மாவைக் கடந்துசெல்கிறான். அதைக்குறித்தும் இந்த வேதமந்த்ரம் உள்ளது .   ஒன்பதாவது அனுவாகம்   யதோவாசோ நிவர்த்தந்தே / அப்ராப்ய மனஸா ஸஹ /ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் / ந பிபேதி குதஸ்சநேதி / ஏதகும்ஹவாவ ந தபதி / கிமஹகும் ஸாது நாகரவம் / கிமஹம் பாபமகரவமிதி / ஸ ய ஏவம் வித்வாநேதே ஆத்மாநகும் ஸ்ப்ருணுதே / உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாநகும் ஸ்ப்ருணுதே /ய ஏவம் வேத / இத்யுபநிஷத் // .யதோவாசோ நிவர்த்தந்தே(எங்கிருந்து வேதங்கள் திரும்பிவிடுகின்றனவோ ) / அப்ராப்ய மனஸா ஸஹ (மனதுடன் கூட அடையாமல் ) / ஆனந்தம் பிரஹ்மணோ வித்வான்( வேதத்தின் உட்பொருளை அறிந்து ஆனந்திக்கும்  அறிஞன் ) / ந பிபேதி கதாசநேதி( எதிலிருந்தும்  அச்சத்தை அடைவதில்லை  என்று) / ஏதகும்ஹவாவ ந தபதி(இதைக்குறித்து கவலையே கொள்வதில்லை) / கிமஹகும் சாது நாகரவம் (நான் ஏன் நற்செயல்களை புரியவில்லை?) / கிமஹம் பாபமகரவமிதி (நான் ஏன் பாவத்தை செய்தேன் என்று) / ஸ ய ஏவம் வித்வாநேதே ஆத்மாநகும் ஸ்ப்ருணுதே ( ப்ரஹ்மமேஅனைத்தும் என்று அறிந்தவன் எவனோ அவன் இவை இரண்டிலும் ஆத்மாவையே அடைகிறான் ) / உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாநகும் ஸ்ப்ருணுதே ((இரண்டாகிய இவைகளிலேயே  இவன் ஆத்மாவையே அடைகிறான்)/ய ஏவம் வேத (எவன் இவ்வாறு அறிந்தவனோ ) / இத்யுபநிஷத் (இவ்வாறு உபநிஷத் ) //   பொழிப்புரை : எங்கிருந்து வேதங்கள் மனதுடன் கூட அடையாமல் திரும்பிவிடுகின்றனவோ அந்த நிலையை வேதத்தின் உட்பொருளை அறிந்து ஆனந்திக்கும்  அறிஞன் நான் ஏன் நற்செயல்களை புரியவில்லை? நான் ஏன் பாவத்தை செய்தேன்? என்று எதிலிருந்தும்  அச்சத்தை அடைவதில்லை.   ப்ரஹ்மமேஅனைத்தும் என்று அறிந்தவன் எவனோ அவன் இவை இரண்டிலும் ஆத்மாவையே அடைகிறான் .இவ்வாறு உபநிஷத் .   ஸஹானாவவது / ஸஹநௌ புனக்து / ஸஹவீர்யம் கரவாவஹை / தேஜஸ்வி நாவதீதமஸ்து / மாவித்விஷாவஹை / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: //   ஸஹானாவவது (எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக ) / ஸஹநௌ புனக்து (எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக ) / ஸஹவீர்யம் கரவாவஹை (ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக ) / தேஜஸ்வி நாவதீதமஸ்து  (கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும்) / மாவித்விஷாவஹை (வெறுக்காமல் வாழ்வோமாக) / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் சாந்தி: (ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி) // பொழிப்புரை : எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக. எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக  .ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக . கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும் .வெறுக்காமல் வாழ்வோமாக .ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி.                     ப்ருகுவல்லி   ஸஹானாவவது / ஸஹநௌ புனக்து / ஸஹவீர்யம் கரவாவஹை / தேஜஸ்வி நாவதீதமஸ்து / மாவித்விஷாவஹை / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: //   ஸஹானாவவது (எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக ) / ஸஹநௌ புனக்து (எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக ) / ஸஹவீர்யம் கரவாவஹை (ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக ) / தேஜஸ்வி நாவதீதமஸ்து  (கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும்) / மாவித்விஷாவஹை (வெறுக்காமல் வாழ்வோமாக) / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: (ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி) //   பொழிப்புரை : எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக. எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக  .ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக . கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும் .வெறுக்காமல் வாழ்வோமாக .ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி.   முதலாவது  அனுவாகம்   ப்ருகுர் வை வாருணி: /வருணம் பிதரமுபஸஸார /அதீஹி பகவோ ப்ரஹ்மேதி /தஸ்மா ஏதத் ப்ரோவாச / அன்னம் பிராணம் சக்ஷு: ஸ்ரோத்ரம் மனோ வாசமிதி / தகும் ஹோவாச /யதோ வா இமானி பூதானி ஜாயந்தே / யேன ஜாதானி ஜீவந்தி  / யத்ப்ரயந்த்யபிஸம்விஸந்தி / தத் விஜிக்ஞாஸஸ்வ / தத் ப்ரஹ்மேதி / ஸ தபோஅதப்யத / ஸ தபஸ் தப்த்வா //    ப்ருகுர் வை வாருணி: (ப்ருகு என்ற வருணனின் புத்திரர்) /வருணம் பிதரமுபஸஸார (தந்தை வருணனை அடைந்தார் ) /அதீஹி பகவோ ப்ரஹ்மேதி (பகவானே பிரமத்தைக் குறித்து உபதேசிப்பீராக என்று) /தஸ்மா ஏதத் ப்ரோவாச ( அவருக்கு இதைக் கூறினார்) / அன்னம் பிராணம் சக்ஷு: ஸ்ரோத்ரம் மனோ வாசமிதி (அன்னம்,பிராணம் ,கண், காது ,மனம், வாக்கு என்று )  / தகும் ஹோவாச (அவரிடம் மேலும் சொன்னார் ) /யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ( எங்கிருந்து இந்த ஜீவராசிகள்  பிறக்கின்றன ) ( / யேன ஜாதானி ஜீவந்தி (எதனால் பிறந்த ஜீவராசிகள் வாழ்கின்றன) / யத்ப்ரயந்த்யபிஸம்விஸந்தி (எதனிடம் திரும்பி கலக்கின்றனர் ) ( / தத் விஜிக்ஞாஸஸ்வ (அதை அறிந்துகொள் ) / தத் ப்ரஹ்மேதி (அது ப்ரஹ்மம் என்று) / ஸ தபோஅதப்யத (அவர் தத்வ விசாரம் செய்தார்) / ஸ தபஸ் தப்த்வா (அ வர் தத்வவிசாரம் செய்து) //   பொழிப்புரை :  ப்ருகு என்ற வருணனின் புத்திரர், பகவானே பிரமத்தைக் குறித்து உபதேசிப்பீராக என்று தந்தை வருணனை அடைந்தார். அவருக்கு வருணன் இதைக் கூறினார்  அன்னம்,பிராணம் ,கண், காது ,மனம், வாக்கு என்றவை பற்றி ஆராய்ந்து எங்கிருந்து இந்த ஜீவராசிகள்  பிறக்கின்றன, எதனால் பிறந்த ஜீவராசிகள் வாழ்கின்றன, எதனிடம் திரும்பி கலக்கின்றனர் என்று அறிந்துகொள்.,அதுவே ப்ரஹ்மம். அவர் தத்வ விசாரம் செய்தார். அவர் தத்வவிசாரம் செய்து ;   கருத்துரை : வருணன் இதுதான் ப்ரஹ்மம் என்று உபதேசிக்கவில்லை. அப்படி உபதேசித்திருப்பாரேயாயின் ப்ரஹ்மம் என்பது புலன்களாலோ, மனதாலோ. அறிவாலோ அறியக்கூடிய பொருளாக அமையும். இவை அனைத்துக்கும் அப்பாற்பட்ட தத்துவமாகையால் அது விசாரம் செய்தே எட்டக்கூடியதாகிறது . ஆகவே விசாரணையைத் தொடங்கும் முறையை வருணன் உபதேசிக்கிறார்.   அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் / அன்னாத்யைவ கல்விமானி பூதானி ஜாயந்தே / அன்னேன ஜாதானி ஜீவந்தி / அன்னம் பிரயந்த்த்யபிஸம்விஸந்தீதி / தத்விக்ஞாய /புனரேவ வருணம் பிதரமுபஸஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி /தகும்ஹோவாச / தபஸா ப்ரஹ்ம விஜிக்ஞாஸஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸதபோஅதப்யத / ஸதபஸ்தப்த்வா  //   அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் (அன்னம் ப்ரஹ்மம் என்று தீர்மானித்தார் ) / அன்னாத்யைவ கல்விமானி பூதானி ஜாயந்தே ( அன்னத்திலிருந்துதானே இந்த ஜீவராசிகள் உண்டாகின்றன ) / அன்னேன ஜாதானி ஜீவந்தி (அன்னத்தால் ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன )/ அன்னம் பிரயந்த்த்யபி ஸம்விஸந்தீதி அன்னத்திடம் திரும்பிக் கலக்கின்றன) / தத்விக்ஞாய (அதை அறிந்துகொண்டு) /புனரேவ வருணம் பிதரமுபஸஸார (மீண்டும் தந்தை வருணனை அடைந்தார்) / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி (பகவானே பிரமத்தைக் குறித்து உபதேசிப்பீராக என்று) /தகும்ஹோவாச(அவரிடம் கூறினார் ) / தபஸா ப்ரஹ்ம விஜிக்ஞாஸஸ்வ (விசாரத்தினால் ப்ரஹ்மத்தை அறிந்துகொள் ) / தபோ ப்ரஹ்மேதி (விசாரமே ப்ரஹ்மம் என்று ) ( / ஸதபோஅதப்யத (அவர் தத்வ விசாரம் செய்தார்) / ஸதபஸ்தப்த்வா (அவர் தத்வவிசாரம் செய்து) //   பொழிப்புரை : அன்னம் ப்ரஹ்மம் என்று தீர்மானித்தார் அன்னத்திலிருந்துதானே இந்த ஜீவராசிகள் உண்டாகின்றன . அன்னத்தால் ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன அன்னத்திடம் திரும்பிக் கலக்கின்றன. அதை அறிந்துகொண்டு மீண்டும் தந்தை வருணனை அடைந்தார். பகவானே பிரமத்தைக் குறித்து உபதேசிப்பீராக என்ற அவரிடம் வருணன்  கூறினார் விசாரமே ப்ரஹ்மம் என்பதால்  விசாரத்தினால் ப்ரஹ்மத்தை அறிந்துகொள் . அவர் தத்வ விசாரம் செய்தார். அவர் தத்வவிசாரம் செய்து ;   கருத்துரை : விசாரத்தின் முடிவில் வருணன் பிரஹ்மத்திற்கு கூறிய குறிகள் அன்னத்திற்கு பொருந்தியிருப்பதைக்கண்டு அன்னமே ப்ரஹ்மம் என்று தீர்மானித்து , அதையே குருவின் மூலமாக உபதேசமாகப் பெற்றுக்கொள்ள எண்ணி அவரை உபதேசிக்க வேண்டுகிறார் . ஆனால் வருணனோ அவரை ப்ரஹ்மத்தை அறிய மீண்டும் தபஸ் செய் என்கிறார். இதனால் அன்னத்திற்கும் மேல் ஒரு மூலம் உள்ளது என்பதை ப்ருகு  அறிகிறார். மேலும் வருணன் தபஸ் ப்ரஹ்மம் என்று ப்ருகுவிடம் கூறுகிறார் .ஒருவன் நாற்சந்தியை அடைந்து தருமபுரியை அடையும் வழி எது என்று கேட்பானாயின் அங்குள்ளவன் ஒருவழியைக் காண்பித்து இது தருமபுரி என்று கூறுகிறான். கேட்டவன் அதை தருமபுரி செல்லும் வழி என்று புரிந்துகொள்வதுபோல் இங்கு “தபஸ் ப்ரஹ்மம்” என்றால் தபஸ் செய்வதே ப்ரஹ்மத்தை அறியும் வழி என்பது பொருள்.   மேலும் விசாரம் செய்யும்போது பிராணன் இல்லாவிடில்  அன்னத்தால் மட்டும்  பிறப்பு, வாழ்வு, லயங்களின்  காரணமாய் இருக்கமுடியாது என்பதைக்  காண்கிறார் . பிராணன் இல்லாவிடில் ஜீவராசிகளுக்கு வாழ்வு என்று என்பதே இல்லை.   மூன்றாவது அனுவாகம்   ப்ராணோ  ப்ரஹ்மேதி வ்யஜாநாத் / ப்ராணாத்யைவ கல்விமானி பூதானி ஜாயந்தே / ப்ராணேன ஜாதானி ஜீவந்தி / பிராணம்  பிரயந்த்த்யபி ஸம்விசந்தீதி / தத்விக்ஞாய /புனரேவ வருணம் பிதரமுபஸஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி /தகும்ஹோவாச / தபஸா ப்ரஹ்ம விஜிக்ஞாஸஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸதபோஅதப்யத / ஸதபஸ்தப்த்வா  //     பொழிப்புரை ; பிராணனே ப்ரஹ்மம் என்று தீர்மானித்து முன்போல் வருணனிடம் செல்ல அவர் ப்ருகுவை மீண்டும் தபஸ் செய்ய ஏவுகிறார். தபஸ் செய்த ப்ருகு மனம்  இல்லாவிடில்  பிராணனால்  மட்டும்  பிறப்பு, வாழ்வு, லயங்களின்  காரணமாய் இருக்கமுடியாது என்பதைக்  காண்கிறார் . மனம்  இல்லாவிடில் ஜீவராசிகளுக்கு வாழ்வு என்று என்பதே இல்லை.   நான்காவது அனுவாகம்   மனோ  ப்ரஹ்மேதி வ்யஜாநாத் / மனஸோஹ்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே / மனஸா ஜாதானி ஜீவந்தி / மன: பிரயந்த்த்யபி ஸம்விஸந்தீதி / தத்விக்ஞாய /புனரேவ வருணம் பிதரமுபஸஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி /தகும்ஹோவாச / தபஸா ப்ரஹ்ம விஜிக்ஞாஸஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸதபோஅதப்யத / ஸதபஸ்தப்த்வா  //   பொழிப்புரை ; மனமே  ப்ரஹ்மம் என்று தீர்மானித்து முன்போல் வருணனிடம் செல்ல அவர் ப்ருகுவை மீண்டும் தபஸ் செய்ய ஏவுகிறார். தபஸ் செய்த ப்ருகு விக்ஞானம்   இல்லாவிடில்  மனத்தால்   மட்டும்  பிறப்பு, வாழ்வு, லயங்களின்  காரணமாய் இருக்கமுடியாது என்பதைக்  காண்கிறார் . விக்ஞானம் இல்லாவிடில் ஜீவராசிகளுக்கு வாழ்வு என்று என்பதே இல்லை.   ஐந்தாவது அனுவாகம்     விக்ஞானம்  ப்ரஹ்மேதி வ்யஜாநாத் / விக்ஞாநாத்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே / விக்ஞாநேன ஜாதானி ஜீவந்தி / விக்ஞானம் பிரயந்த்த்யபி ஸம்விஸந்தீதி / தத்விக்ஞாய /புனரேவ வருணம் பிதரமுபஸஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி /தகும்ஹோவாச / தபஸா ப்ரஹ்ம விஜிக்ஞாஸஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸதபோஅதப்யத / ஸதபஸ்தப்த்வா  //   பொழிப்புரை ; விக்ஞானம்   ப்ரஹ்மம் என்று தீர்மானித்து முன்போல் வருணனிடம் செல்ல அவர் ப்ருகுவை மீண்டும் தபஸ் செய்ய ஏவுகிறார். தபஸ் செய்த ப்ருகு ஆனந்தம்   இல்லாவிடில் விஞ்ஞானத்தால் மட்டும்  பிறப்பு, வாழ்வு, லயங்களின்  காரணமாய் இருக்கமுடியாது என்பதைக்  காண்கிறார் . ஆனந்தம்  இல்லாவிடில் ஜீவராசிகளுக்கு வாழ்வு என்று என்பதே இல்லை.   ஆறாவது அனுவாகம்   ஆனந்தோ  ப்ரஹ்மேதி வ்யஜாநாத் (ஆனந்தம் ப்ரஹ்மம் என்று தீர்மானித்தார் ) / ஆனந்தாத்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே (ஆனந்தத்திலிருந்தேஇந்த ஜீவராசிகள் உண்டாகின்றன )  / ஆனந்தேன ஜாதானி ஜீவந்தி (ஆனந்தத்தினால் ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன )/ ஆனந்தம்  பிரயந்த்த்யபி ஸம்விஸந்தீதி (ஆனந்தத்தில் திரும்பி கலக்கின்றன ) / ஸைஷா பார்கவீ வாருணீ வித்யா (இந்த இது ப்ருகுவினுடையதும் வருணனுடையதுமான ஞானம் ) / பரமே  வ்யோமன் ப்ரதிஷ்டிதா (பரவெளியில் நிலைகொண்டுள்ளது ) / ய ஏவம் வேத பிரதிதிஷ்டதி (இவ்வாறு அறிந்தவன் நிலை கொள்கிறான் )/ அன்னவானன்னாதோ பவதி (அன்னத்தை உடையவனாகவும் அன்னத்தை உண்பவனாகவும் ஆகிறான் ) / மஹான்பவதி பிரஜயா  பஸுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன (பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும் )/ மஹான் கீர்த்யா (பெரியோன் புகழால் ) //   பொழிப்புரை : ஆனந்தம் ப்ரஹ்மம் என்று தீர்மானித்தார் ஆனந்தத்திலிருந்தேஇந்த ஜீவராசிகள் உண்டாகின்றன. ஆனந்தத்தினால் ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன ஆனந்தத்தில் திரும்பி கலக்கின்றன இந்த இது ப்ருகுவினுடையதும் வருணனுடையதுமான ஞானம். பரவெளியில் நிலைகொண்டுள்ளது . இவ்வாறு அறிந்தவன் நிலை கொள்கிறான் .அன்னத்தை உடையவனாகவும் அன்னத்தை உண்பவனாகவும் ஆகிறான் . பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும். புகழாலும் பெரியோன் ஆகிறான்.   கருத்துரை : ஆனந்தம் ப்ரஹ்மம் என்பதுதான் ப்ருகு அடைந்த ஞானமா என்றால்  அவ்வாறில்லை . ஏனெனில் அவர் அடைந்த ஞானம் ஆனந்தத்தில் நிலை கொள்ளவில்லை. பரவெளியில் நிலைகொண்டுள்ளது. இது விரிவாக பின்னர் வரும் அனுவாகங்களில் விவரிக்கப்படுகிறது .ஆனந்தம் ப்ரஹ்மம் என தீர்மானிக்கும் முன் எதனால் வருணன் இதைக்கூறாமல் மற்ற அனைத்தையும் கூறினார் என்பது பற்றி ப்ருகு தானே ஆராய்கிறார். அப்போது அவர் அன்னம் இல்லாவிடில் பிராணனோ ,அன்னம், பிராணன் இல்லாவிடில் மனமோ , அன்னம் பிராணம் மனம் இல்லாவிடில் விக்ஞானமோ, அன்னம் பிராணம் மனம் விக்ஞானம் இல்லாவிடில் ஆனந்தம் ஒன்றுமட்டுமே  ஜீவராசிகளின் வாழ்வுக்கு காரணமாக இருக்கமுடியாது . இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே ஜீவராசிகள் பிறக்கின்றனர்,வாழ்கின்றனர் , லயமடைகின்றனர் என்று காண்கிறார். ஆகவே இவை அனைத்துக்கும் ஒரே மூலகாரணம் உண்டா என்று மேலும் தன்  ஆராய்ச்சியை தொடர்கிறார் . வருணன் கூறிய வாக் அதாவது வேதத்தின் .உதவியை நாடுகிறார். அதன் மூலம் சகல வல்லமையும் பொருந்திய நான் என்ற உணர்வே அனைத்துக்கும் மூலகாரணம் என்று கண்டு அறிகிறார். அதிலிருந்தே அனைத்தும் பிறக்கின்றன, வாழ்கின்றன, லயமடைகின்றன ,அதுவே அன்னம்,பிராணம்,மனம்,விக்ஞானம் ,ஆனந்தம் என அறிகிறார்..   இவ்வாறு அறிபவன் எவனும் தான் விரும்பியவைகளை அடைபவனாகவும்,,அடைந்தவற்றை அனுபவிப்பவனாகவும் உள்ள ஆற்றலை அடைகிறான்.. செல்வத்தாலும்,ப்ரஜைகளினாலும் பிரமஞான ஒளியாலும் புகழாலும் பெரியோனாக விளங்குகிறான். இங்கு அன்னம் என்ற சொல் சோறு என்ற குறுகிய நோக்கில் கூறப்படவில்லை .ஜீவனின் அனுபவத்தையே அன்னம் என்று குறிப்பிடப்படுகிறது . ஆகவே அன்னம், பிராணம், மனம், விக்ஜ்நானம் , ஆனந்தம் அனைத்திலும் ஜீவன் அடையும் அனுபவங்கள் அன்னம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. பின்வரும் அனுவாகங்களில் அன்னம் என்ற சொல் இவ்வாறே கையாளப்படுவதைக் காணலாம் .   ஏழாவது அனுவாகம்   அன்னம் ந நிந்த்யாத் / தத்வ்ரதம் / ப்ராணோ வா அன்னம் / ஸரீரமன்னாதம் / ப்ராணே ஸரீரம் ப்ரதிஷ்டிதம் / ஸரீரே பிராண: ப்ரதிஷ்டித: / ததேததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் / ஸ ய ஏததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி / அன்னவானன்னாதோ பவதி / மஹான் பவதி பிரஜயா பஸுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன / மஹான் கீர்த்யா //   அன்னம் ந நிந்த்யாத் ( அனுபவத்தை இகழக்கூடாது ) / தத்வ்ரதம் (அது நோன்பு ) / ப்ராணோ வா அன்னம் (பிராணன் அனுபவம்) / ஸரீரமன்னாதம் (உடல் அனுபவத்தை அடைபவன்) / ப்ராணே ஸரீரம் ப்ரதிஷ்டிதம் ( பிராணனில் உடல் நிலைபெற்றுள்ளது ) / ஸரீரே பிராண: ப்ரதிஷ்டித: (உடலில் பிராணன் நிலைபெற்றுள்ளது ) / ததேததன்னமன்னே ப்ரதிஷ்டிதம்( அந்த உடலின் அனுபவம் இந்த பிராணனின் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளது)/ ஸ ய ஏததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி ( அந்த எவன் இந்த அனுபவம் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளதை அறிவானோ அவன் நிலைகொள்கிறான்) / அன்னவானன்னாதோ பவதி (அநுபவத்தை  உடையவனாகவும் அநுபவத்தை அனுபவிப்பவனாகவும் ஆகிறான் ) / மஹான்பவதி பிரஜயா  பஸுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன (பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும் )/ மஹான் கீர்த்யா (பெரியோன் புகழால் ) //   பொழிப்புரை : அனுபவத்தை இகழக்கூடாது. அது நோன்பு. பிராணன் அனுபவம். உடல் அனுபவத்தை அடைபவன். பிராணனில் உடல் நிலைபெற்றுள்ளது. உடலில் பிராணன் நிலைபெற்றுள்ளது. அந்த உடலின் அனுபவம் இந்த பிராணனின் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளது. அந்த எவன் இந்த அனுபவம் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளதை அறிவானோ அவன் நிலைகொள்கிறான். அநுபவத்தை  உடையவனாகவும் அநுபவத்தை அனுபவிப்பவனாகவும் ஆகிறான். பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும். புகழால் பெரியோன் ஆகிறான்.   கருத்துரை : உடலில்லாமல் வாழ்வு (பிராணன்) இல்லை. வாழ்வு இல்லாமல் உடல் இல்லை. உடலின் அனுபவமும் வாழ்வின் அனுபவமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து உள்ளது . பிரஹ்மஞானம் சிறந்த அனுபவம் என்பதால் உடல், பிராண அனுபவங்களை இகழக்கூடாது என்று ரிஷி அறிவுறுத்துகிறார் . சுவரைவைத்துத்தான் சித்திரம் எழுதமுடியுமாதலால் இவற்றைவைத்துத்தான் மற்ற அனுபவங்களுக்கு முன்னேறமுடியும் . உடலையும் வாழ்க்கையையும் சீரியமுறையில் போற்றுபவன் செல்வங்களை அடைந்து சீராக வாழ்வான்.   எட்டாவது அனுவாகம்     அன்னம் ந பரிசக்ஷீத / தத்வ்ரதம் / ஆபோ வா அன்னம் / ஜ்யோதிரன்னாதம் / அப்ஸு ஜ்யோதி: ப்ரதிஷ்டிதம் / ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டிதா: /ததேதமன்னமன்னேப்ரதிஷ்டிதம் / ஸ ய ஏததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி / அன்னவானன்னாதோ பவதி / மஹான் பவதி பிரஜயா பஸுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன / மஹான் கீர்த்யா //   அன்னம் ந பரிசக்ஷீத (அனுபவத்தை வீணாக்கக்கூடாது ) / தத்வ்ரதம் (அது நோன்பு) / ஆபோ வா அன்னம் ( சிதாகாசம் அல்லது உணர்வுப்பரவெளியே அனுபவம் )/ ஜ்யோதிரன்னாதம் (மனம் என்ற ஒளியே அனுபவத்தை அடைகிறது) / அப்ஸு ஜ்யோதி: ப்ரதிஷ்டிதம்( சிதாகாசத்திலேயே மனம் நிலைபெற்றுள்ளது ) / ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டிதா: (மனத்திலேயே சிதாகாசம் நிலைபெற்றுள்ளது )/ / ததேததன்னமன்னே ப்ரதிஷ்டிதம்( அந்த மனதின்  அனுபவம் இந்த சிதாகாசத்தின்  அனுபவத்தில் நிலைபெற்றுள்ளது)/ ஸ ய ஏததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி ( அந்த எவன் இந்த அனுபவம் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளதை அறிவானோ அவன் நிலைகொள்கிறான்) / அன்னவானன்னாதோ பவதி (அநுபவத்தை  உடையவனாகவும் அநுபவத்தை அனுபவிப்பவனாகவும் ஆகிறான் ) / மஹான்பவதி பிரஜயா  பஸுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன (பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும் )/ மஹான் கீர்த்யா (பெரியோன் புகழால் ) //   பொழிப்புரை : அனுபவத்தை வீணாக்கக்கூடாது. அது நோன்பு .சிதாகாசம் அல்லது உணர்வுப்பரவெளியே அனுபவம் .மனம் என்ற ஒளியே அனுபவத்தை அடைகிறது. சிதாகாசத்திலேயே மனம் நிலைபெற்றுள்ளது. மனத்திலேயே சிதாகாசம் நிலைபெற்றுள்ளது. அந்த மனதின்  அனுபவம் இந்த சிதாகாசத்தின்  அனுபவத்தில் நிலைபெற்றுள்ளது. அந்த எவன் இந்த அனுபவம் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளதை அறிவானோ அவன் நிலைகொள்கிறான். அநுபவத்தை  உடையவனாகவும் அநுபவத்தை அனுபவிப்பவனாகவும் ஆகிறான். பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும். புகழால் பெரியோன் ஆகிறான் .   கருத்துரை : சிதாகாசம் (அ ) சிற்றம்பலம் (அ) உணர்வுப்பரவெளியிலிருந்தே மனம் எண்ணம் அறிவு என்ற ஒளிகளைப்பெறுகிறது. மனத்தின் மூலம்தான் சிதாகாசத்தைப்பற்றி நாம் எண்ணமுடிகிறது. ஆகவே சிதாகாசமும் மனமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து உள்ளது. இவற்றால்  ஏற்படும் அனுபவங்களை மனிதன் சிறந்தமுறையில் அனுபவிக்காமல் வீணாக்கக்கூடாது.     ஒன்பதாவது அனுவாகம்   அன்னம் பஹு குர்வீத / தத் வ்ரதம் / ப்ருதிவீ வா அன்னம் / ஆகாஸோ அன்னாத: / ப்ருதிவ்யாம் ஆகாஸ : ப்ரதிஷ்டித: / ஆகாஸே ப்ருதிவீ ப்ரதிஷ்டிதா / /ததேதமன்னமன்னேப்ரதிஷ்டிதம் / ஸ ய ஏததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி / அன்னவானன்னாதோ பவதி / மஹான் பவதி பிரஜயா பஸுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன / மஹான் கீர்த்யா //   பொழிப்புரை : அன்னம் பஹு குர்வீத ( பலவித அனுபவங்களை அடைவாயாக ) / தத் வ்ரதம்(அது நோன்பு) / ப்ருதிவீ வா அன்னம்(படைப்பில் அனைத்தும் அனுபவம் ) / ஆகாஸோ அன்னாத: (ப்ரஹ்மமே அனுபவிப்பவர் ) / ப்ருதிவ்யாம் ஆகாச: ப்ரதிஷ்டித: (படைப்பில் ப்ரஹ்மம்  நிலை கொண்டுள்ளது) / ஆகாசே ப்ருதிவீ ப்ரதிஷ்டிதா (ப்ரஹ்மத்தில்  படைப்பு நிலைகொண்டுள்ளது ) / ஸ ய ஏததன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி ( அந்த எவன் இந்த அனுபவம் அனுபவத்தில் நிலைபெற்றுள்ளதை அறிவானோ அவன் நிலைகொள்கிறான்) / அன்னவானன்னாதோ பவதி (அநுபவத்தை  உடையவனாகவும் அநுபவத்தை அனுபவிப்பவனாகவும் ஆகிறான் ) / மஹான்பவதி பிரஜயா  பசுபிர்ப்ரஹ்மவர்ச்சஸேன (பெரியோன் ஆகிறான் ஆநிரைச்செல்வத்தாலும் பிரமஞான ஒளியாலும் )/ மஹான் கீர்த்யா (பெரியோன் புகழால் ) //   கருத்துரை : படைப்பும் ப்ரஹ்மமும்  ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன. படைப்பில் ஜீவனாகத் தோன்றியவன் வாழ்நாளை வீணே கழிக்கக்கூடாது. பலவித முயற்சிகளால் தன உடல்,பிராணன்,எண்ணம், அறிவு முதலியவற்றை நல்வழி செலுத்தி பலவித அனுபவங்களை அடைந்து அதை மற்றவர்க்காக அர்ப்பணிக்க வேண்டும். ஞானிகளாகிய வ்யாசமரிஷி, வால்மீகி மகரிஷி, பாணினி, காளிதாசன், சாணக்யன், ஆதிசங்கரர் ,அப்பர்,திருஞானசம்பந்தர்,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ,அருணகிரிநாதர், குமரகுருபரர் ராமகிருஷ்ண பரமஹம்சர் ,அரவிந்தர், மகாத்மா காந்தி , ரமண மகரிஷி கணக்கற்ற மற்றும் பலர் அளித்துச்சென்ற அனுபவங்கள் மனித இனத்தையே வளமாக்கிக்கொண்டிருக்கின்றன .   பத்தாவது அனுவாகம்   ந கஞ்சன வஸதௌ பிரத்யாசக்ஷீத / தத் வ்ரதம் / தஸ்மாத் யயா கயா ச விதயா பஹ்வன்னம் ப்ராப்னுயாத்./ அராத்யஸ்மா அன்னமித்யாசக்ஷதே / ஏதத்வை முகதோ அன்னகும் ராத்தம் / முகதோ அஸ்மா அன்னகும் ராத்யதே / ஏதத்வை மத்யதோன்னகும் ராத்தம் / மத்யதோ அஸ்மா அன்னகும் ராத்யதே / ஏதத்வா அந்ததோஅன்னகும் ராத்தம் / அந்ததோ  அஸ்மா அன்னகும் ராத்யதே //   ந கஞ்சன வஸதௌ பிரத்யாசக்ஷீத (இந்த ஜீவசரீரத்தில் வாழும் சக்திகளை வெறுத்து ஒதுக்காதே ) / தத் வ்ரதம்(அது நோன்பு) / தஸ்மாத் யயா கயா ச விதயா பஹ்வன்னம் ப்ராப்னுயாத் (ஆதலால் எந்த எந்த விதத்திலாவது மிகுந்த அனுபவங்களை அடையவேண்டும் )./ அராத்யஸ்மா அன்னமித்யாசக்ஷதே(இந்த அனுபவம் நமக்கு தயாராக உள்ளது என்று சொல்லப்படுகிறது) / ஏதத்வை முகதோ அன்னகும் ராத்தம் (இதுவே முதலாக தயாராக உள்ள அனுபவம்) / முகதோ அஸ்மா அன்னகும் ராத்யதே ( இவனுக்கு முதலாவதினுடைய அனுபவம் தயார் செய்யப்படுகிறது) / ஏதத்வை மத்யதோன்னகும் ராத்தம் (இதுவே மத்தியில் தயாராக உள்ள அனுபவம் ) / மத்யதோ அஸ்மா அன்னகும் ராத்யதே ( இவனுக்கு மத்தியினுடைய அனுபவம் தயார் செய்யப்படுகிறது )/ ஏதத்வா அந்ததோஅன்னகும் ராத்தம் ( இதுதான் கடைசியாக தயாராக உள்ள அனுபவம்) / அந்ததோ  அஸ்மா அன்னகும் ராத்யதே (இவனுக்கு கடைசியினுடைய அனுபவம் தயார் செய்யப்படுகிறது)//   பொழிப்புரை : இந்த ஜீவசரீரத்தில் வாழும் சக்திகளை வெறுத்து ஒதுக்காதே அது நோன்பு. ஆதலால் எந்த எந்த விதத்திலாவது மிகுந்த அனுபவங்களை அடையவேண்டும். இந்த அனுபவம் நமக்கு தயாராக உள்ளது என்று சொல்லப்படுகிறது. இதுவே முதலாக தயாராக உள்ள அனுபவம். இவனுக்கு முதலாவதினுடைய அனுபவம் தயார் செய்யப்படுகிறது. இதுவே மத்தியில் தயாராக உள்ள அனுபவம். இவனுக்கு மத்தியினுடைய அனுபவம் தயார் செய்யப்படுகிறது. இதுதான் கடைசியாக தயாராக உள்ள அனுபவம். இவனுக்கு கடைசியினுடைய அனுபவம் தயார் செய்யப்படுகிறது.   கருத்துரை : முதலாவது வித அனுபவம் ஏழாவது அனுவாகத்தில் கூறப்பட்ட அன்னம் பிராணம் தொகுதிகளால் ஏற்படுவது. ஜீவனின் பிறப்பின் முதல் இறப்பு வரை இந்த அனுபவம் தொடர்கிறது .ஒருவன்  உடல் உழைப்பை பெரிதும் சார்ந்த  உழவனாயிருந்தாலும் அல்லது  ,அறிஞனாயிருந்தாலும் ஞாநியாயிருந்தாலும்  இந்த அனுபவங்களை அடைந்தே வாழ வேண்டியுள்ளது. இரண்டாவதாக நடுவில்  கூறப்படும் அனுபவம் எட்டாவது அனுவாகத்தில் கூறப்பட்ட ஆபஸ் (சிற்றம்பலம்) ஜ்யோதி தொகுதிகளால் ஏற்படுவது. பெரும்பாலும் ஜீவனின் இளம்வயது முதல் இறப்புவரை எண்ணம் அறிவு இவற்றால் அனுபவம் தொடர்கிறது. அறிஞனாயிருந்தாலும் ஞாநியாயிருந்தாலும் இந்த அனுபவங்களை அடைந்தே வாழ்கிறான் . கடைசியாக கூறப்படும் அனுபவம் ஒன்பதாவது அனுவாகத்தில் கூறப்பட்ட படைப்பு ப்ரஹ்மம் தொகுதிகளால் ஏற்படுவது .பெரும்பாலும் அறிவுமுதிர்ச்சி அடைந்தபின் இந்த அனுபவம் வாய்க்கிறது. ஆனால் சங்கரர், திருஞானசம்பந்தர் போன்ற ஞானிகள் பிறவியிலிருந்தே இந்த அனுபவங்களுடன் விளங்கினர் .   சமுதாயத்தில் வாழும் பெரும்பாலோரைக் கருத்தில் கொண்டே பண்டைய காலத்தில் ரிஷிகள் பிரஹ்மச்சர்யம், க்ருஹஸ்தம் வானப்ரஸ்தம் சன்யாசம் என்ற ஆஸ்ரமமுறைகளை வகுத்தனர்.முதல், நடு அனுபவங்களின் தொகுப்பு பிரஹ்மச்சர்ய ஆச்ரமத்திலும் , க்ருஹஸ்தாஸ்ரமத்திலும், முதல்,நடு , கடைசி தொகுப்புகள் வானப்ரஸ்த சந்நியாச ஆஸ்ரமங்களிலும் ஏற்படுகின்றன. ய ஏவம் வேத / க்ஷேம இதி வாசி / யோகக்ஷேம இதி பிராணாபாநயோ: / கர்மேதி ஹஸ்தயோ: / கதிரிதி பாதயோ: / விமுக்திரிதி பாயௌ / இதி மானுஷீ: ஸமாக்ஞா: / [தத் பிரதிஷ்டேத்யுபாஸீத / பிரதிஷ்டாவான் பவதி ] ய ஏவம் வேத (எவன் இவ்வாறு அறிவானோ ) / க்ஷேம இதி வாசி (வளம் என்று வேதவழியில்  ) / யோகக்ஷேம இதி பிராணாபாநயோ: (வாழ்க்கை நலம் என  வாழ்வில்  ) / கர்மேதி ஹஸ்தயோ: (செயல் என  கரங்களில் ) / கதிரிதி பாதயோ: (நடை என  கால்களில் ) / விமுக்திரிதி பாயௌ (கழிதல் என மலவாயிலில்    / இதி மானுஷீ: ஸமாக்ஞா: (என்று மனிதர்களில் காணப்படுபவை ) / [தத் பிரதிஷ்டேத்யுபாஸீத (ப்ரஹ்மம் நிலை கொண்டுள்ளது என்று வழிபடவேண்டும்) / பிரதிஷ்டாவான் பவதி(நிலைபெற்றவனாக ஆகிறான் . ]   பொழிப்புரை : இவ்வாறு அறிபவன் வளம் என்று வேதவழியிலும், வாழ்க்கைநலம் என வாழ்விலும் , செயல் என கரங்களிலும், நடை என கால்களிலும், கழிதல் என்று மலவாயிலிலும் மனிதர்களில் காணப்படுபவைகளில் ப்ரஹ்மம் நிலை கொண்டுள்ளது என வழிபடவேண்டும்.அவ்வாறு வழிபடுபவன் நிலைபெற்றவனாக ஆகிறான்.   கருத்துரை : மேற்கூறிய அனுபவங்கள் முதல் தொகுதியாகிய சரீரம்  பிராணம் தொகுதியைச் சேர்ந்தவை  என்பதை நோக்கவும் .   அத தைவீ : / த்ருப்திரிதி வ்ருஷ்டௌ / பலமிதி வித்யுதி / யஸ இதி பஸுஷு / ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு/ ப்ரஜாதிரம்ருதமானந்த இத்யுபஸ்தே /. [தத் பிரதிஷ்டேத்யுபாஸீத / பிரதிஷ்டாவான் பவதி ] அத தைவீ : (மேற்கொண்டு தேவசக்திகளைப் பற்றியது ) / த்ருப்திரிதி வ்ருஷ்டௌ(அடைந்த நலன்களில் மனநிறைவு என்று  ) / பலமிதி வித்யுதி (உள்ளுணர்வால் எழும் அறிவுமின்னல்களில் ஆற்றல் என்று)  / யஸ இதி பசுஷு (செல்வங்களில் கீர்த்தி என்று) / ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு(விரிந்துபரந்த நக்ஷத்ரங்களில் விஞ்ஞானம் என்று)/ ப்ர்ஜாதிரம்ருதமானந்த இத்யுபஸ்தே( ஆண் பெண் குறிகளில் சந்ததி , சுக்லம்,ஸ்ரோநிதம்என்ற அம்ருதங்கள், இன்பம் என்று ). [தத் பிரதிஷ்டேத்யுபாஸீத (ப்ரஹ்மம் நிலை கொண்டுள்ளது என்று வழிபடவேண்டும்) / பிரதிஷ்டாவான் பவதி(நிலைபெற்றவனாக ஆகிறான் . ]   பொழிப்புரை : மேற்கொண்டு தேவசக்திகளைப் பற்றியது. அடைந்த நலன்களில் மனநிறைவு என்றும்  உள்ளுணர்வால் எழும் அறிவு ஒளிப்பிழம்புகளில் ஆற்றல் என்றும் செல்வங்களில் கீர்த்தி என்றும் விரிந்துபரந்த நக்ஷத்ரங்களில் விஞ்ஞானம் என்றும் ஆண் பெண் குறிகளில் சந்ததி , சுக்லம்,ஸ்ரோநிதம்என்ற அம்ருதங்கள், இன்பம் என்றும் ப்ரஹ்மம் நிலை கொண்டுள்ளது என்று வழிபடவேண்டும் .அவ்வாறு வழிபடுபவன்  நிலைபெற்றவனாக ஆகிறான்   கருத்துரை : மேற்கூறிய அனுபவங்கள் நடு  தொகுதியாகிய ஆபஸ் ஜ்யோதி   தொகுதியைச் சேர்ந்தவை  என்பதை நோக்கவும் .   ஸர்வமித்யாகாஸே / தத்ப்ரதிஷ்டேத்யுபாஸீத / பிரதிஷ்டாவான் பவதி / தன்மஹ இத்யுபாஸீத / மஹான்பவதி / தன்மன இத்யுபாஸீத / மானவான் பவதி / தன்னம இத்யுபாஸீத / நம்யந்தே அஸ்மைகாமா: / தத்ப்ரஹ்மேத்யுபாஸீத / ப்ரஹ்மவான் பவதி / தத்ப்ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத / பர்யேணம் ம்ரியந்தே த்விஷந்த: ஸபத்னா: / பரியேஅப்ரியா ப்ராத்ருவ்யா : / ஸயஸ்சாயம் புருஷே / யஸ்சாஸாவாதித்யே / ஸ ஏக: / ஸர்வமித்யாகாஸே (அனைத்தும் ப்ரஹ்மத்தில் என்று ) / தத் பிரதிஷ்டேத்யுபாஸீத (ப்ரஹ்மம் நிலை கொண்டுள்ளது என்று வழிபடவேண்டும்) / பிரதிஷ்டாவான் பவதி(நிலைபெற்றவனாக ஆகிறான் / தன்மஹ இத்யுபாஸீத ( அதை பிரபஞ்சம் என்று உபாசிப்பானாக ) / மஹான்பவதி (பிரபஞ்சத்தை அறியும் பெரியோன் ஆகிறான்)/ தன்மன இத்யுபாஸீத (அதை மனம் என்று வழிபடுவானாக)/ மானவான் பவதி ( சீரிய எண்ணங்களும் அறிவும் படைத்தவனாக ஆகிறான்)/ தன்னம இத்யுபாஸீத (அதை அடைக்கலம் என்று வழிபடுவானாக ) / நம்யந்தே அஸ்மைகாமா (விருப்பங்கள் இவனிடம் அடைக்கலம் புகுகின்றன) / தத்ப்ரஹ்மேத்யுபாஸீத (அதை வேதம் என்று வழிபடுவானாக ) / ப்ரஹ்மவான் பவதி ((வேதத்தை அறிபவனாகிறான்)/ தத்ப்ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத (அதை ப்ரஹ்மத்தின் சுற்றியுள்ள எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்று வழிபடுவானாக) / பர்யேணம் ம்ரியந்தே த்விஷந்த: ஸபத்னா: (இவனைச் சுற்றியுள்ள வெறுக்கும் எதிரிகள் அழிகின்றனர்) / பரியே அப்ரியா ப்ராத்ருவ்யா : (சுற்றியுள்ள எந்த வெறுக்கப்படும் எதிரிகள் )/ ஸயஸ்சாயம் புருஷே (அந்த எவன் இந்த புருஷனில்)/ யஸ்சாஸாவாதித்யே (எவன் இந்த ஆதித்யனில்) / ஸ ஏக: (அவன் ஒருவன்) /   பொழிப்புரை ; அனைத்தும் ப்ரஹ்மத்தில் நிலை கொண்டுள்ளது என்று வழிபடவேண்டும். நிலைபெற்றவனாக ஆகிறான். அதை பிரபஞ்சம் என்று உபாசிப்பானாக. பிரபஞ்சத்தை அறியும் பெரியோன் ஆகிறான். அதை மனம் என்று வழிபடுவானாக. சீரிய எண்ணங்களும் அறிவும் படைத்தவனாக ஆகிறான்.   அதை அடைக்கலம் என்று வழிபடுவானாக. விருப்பங்கள் இவனிடம் அடைக்கலம் புகுகின்றன. அதை வேதம் என்று வழிபடுவானாக. வேதத்தை அறிபவனாகிறான். அதை ப்ரஹ்மத்தின் “சுற்றியுள்ள எதிரிகளை அழிக்கும் ஆற்றல்” என்று வழிபடுவானாக இவனைச் சுற்றியுள்ள வெறுக்கும் எதிரிகள் மேலும் சுற்றியுள்ள எந்த வெறுக்கப்படும் எதிரிகளும்  அழிகின்றனர். யார் இந்த புருஷனிலோ யார்  இந்த ஆதித்யனிலோ , இருவரிலும் அவன் ஒருவனே..   கருத்துரை : மேற்கூறிய அனுபவங்கள் கடைசி   தொகுதியாகிய  ப்ருதிவீ ஆகாசம்  தொகுதியைச் சேர்ந்தவை  என்பதை நோக்கவும்    பிரஹ்மத்திலிருந்து ,பிரஹ்மத்தால் ப்ரஹ்மமே பிரபஞ்சத்தைப் படைத்திருப்பதால் ப்ரஹ்மத்தின் கூறாகிய ஜீவன் பிரஹ்மத்திடம் எதுவேண்டினும் அதற்குத்தக்க முயற்சி அல்லது வழிபாடு செய்யின் அனைத்தையும் அடையமுடியும்.. ப்ரஹ்மமே பிரபஞ்சம் என்று வழிபடின், பிரபஞ்சத்தைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் அறியமுடியும். இக்கால விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஆராய்ந்து பல உண்மைகளை அறிந்து வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். மனம் என்று வழிபட்டு காளிதாசன் போன்ற கவிஞர்கள் , ராமாயணம் மகாபாரதம் போன்ற காவ்யங்கள் , கார்ல்மார்க்ஸ் போன்றோரின் சிந்தனைகள் தோன்றுகின்றன .   மேலும் அதை எந்த ஒரு தெய்வமாகவும் எண்ணி அடைக்கலம் புகுந்தால் , நினைத்தனவெல்லாம் அடையலாம் . இதற்கு துருவன், பிரஹ்லாதன் ,ராவணன், சூரபத்மன் அப்பர், திருஞானசம்பந்தர் போன்றோர் சான்று .வேதம் என்று வழிபட்டால் வேதத்தின் உட்பொருளை அறியலாம். ப்ரஹ்மத்தை எதிரிகளை அழிக்கும் சக்தி என்று வழிபட்டால் தன்னை வெறுக்கும் எதிரிகளும் தான் வெறுக்கும் எதிரிகளும் அழிவர்.தேவர்களின் வழிபாட்டால் விஷ்ணு ராவணனையும், முருகன் சூரபத்மனையும் , சிவபெருமான் திரிபுரங்களையும் துர்கா தேவி மகிஷாசுரனையும் வதம் செய்தனர்.   ஸ ய ஏவம்வித் / அஸ்மால்லோகாத் ப்ரேத்ய / ஏதமன்னமயமாத்மான முபஸம்க்ரம்ய / ஏதம் பிராணமயமாத்மான முபஸம்க்ரம்ய / ஏதம் மனோமயமாத்மான முபஸம்க்ரம்ய / ஏதம் விக்ஞானமய மாத்மான முபஸம்க்ரம்ய / ஏதமானந்தமயமாத்மானமுபஸம்க்ரம்ய / இமான்லோகான் காமான்னீ காமரூப்யனுஸஞ்சரன் / ஏதத் ஸாமகாயன்னாஸ்தே / ஹா வுஹா வுஹா உ //   அஹமன்ன மஹமன்ன மஹமன்னம் / அஹமன்னாதோ அஹமன்னாதோ அஹமன்னாத: / அஹக்குஸ்லோகக்ருத் அஹக்குஸ்லோகக்ருத் அஹக்குஸ்லோகக்ருத் / அஹமஸ்மி ப்ரதமஜா ருதா ஸ்ய / பூர்வம் தேவேப்யோஅம்ருதஸ்ய நா பாயி / யோ மா ததாதி ஸ இதேவ மா வா: /அஹமன்னமதந்தமா த்மி /அஹம் விஸ்வம் புவனமப்யபவாம் / சுவர்நஜ்யோதீ: / ய ஏவம் வேத / இத்யுபநிஷத் //                             ஸ ய ஏவம்வித் (அந்த எவன் இவ்வாறு அறிந்தவன்) / அஸ்மால்லோகாத் ப்ரேத்ய (இந்த உலகிலிருந்து மரித்தபின் ) / ஏதமன்னமயமாத்மான முபஸம்க்ரம்ய (இந்த அன்னமயமான ஆத்மாவைக் கடந்து) / ஏதம் பிராணமயமாத்மான முபஸம்க்ரம்ய (இந்த பிராணமயமான ஆத்மாவைக்கடந்து) / ஏதம் மனோமயமாத்மான முபஸம்க்ரம்ய (இந்த மனோமயமாத்மாவைக் கடந்து ) / ஏதம் விஞ்ஞானமய மாத்மான முபஸம்க்ரம்ய ( இந்த விஞ்ஞானமய ஆத்மாவைக் கடந்து ) / ஏதமானந்தமயமாத்மானமுபஸம்க்ரம்ய ( இந்த ஆனந்தமய ஆத்மாவைக் கடந்து )/ இமான்லோகான் காமான்னீ காமரூப்யனுஸஞ்சரன் (இந்த லோகங்களில் விரும்பியவாறு விரும்பிய உருவத்தோடு சஞ்சரிப்பவராய்  ) / ஏதத் ஸாமகாயன்னாஸ்தே ( இந்த சாமகானத்தை ஒதுபவராக உள்ளார் ) / ஹா வுஹா வுஹா உ (அடாடா அடாடா அடாடா ) //   அஹமன்ன மஹமன்ன மஹமன்னம் (நானே அனுபவம் நானே அனுபவம் நானே அனுபவம்) / அஹமன்னாதோ அஹமன்னாதோ அஹமன்னாத: (நானே அனுபவத்தை அடைபவன் நானே அனுபவத்தை அடைபவன் நானே அனுபவத்தை அடைபவன் ) / அஹக்குஸ்லோகக்ருத் அஹக்குஸ்லோகக்ருத் அஹக்குஸ்லோகக்ருத் (நானே வேதமந்த்ரத்தை உண்டாக்குபவன் நானே வேதமந்த்ரத்தை உண்டாக்குபவன் நானே வேதமந்த்ரத்தை உண்டாக்குபவன் ) / அஹமஸ்மி ப்ரதமஜா ருதா ஸ்ய (நானே ருதத்தினுடைய முதலில் தோன்றியவன் )/ பூர்வம் தேவேப்யோஅம்ருதஸ்ய நா பாயி (தேவர்களுக்குமுன் அம்ருதத்தின் இருப்பிடம் ) / யோ மா ததாதி ஸ இதேவ மா வா: (எவன் என்னைக்கொடுக்கிறானோ அவன் என்னையே தாங்குபவன் போல் ) /அஹமன்னமதந்தமா த்மி (நான் அனுபவம், அனுபவிப்பவனை அனுபவிக்கிறேன் ) /அஹம் விஸ்வம் புவனமப்யபவாம்(நான் அனைத்து உலகத்தையும் வென்றுள்ளேன் ) / சுவர்நஜ்யோதீ: (சூர்யன் போன்ற ஒளியோன் ) / ய ஏவம் வேத (எவன் இவ்வாறு அறிவானோ [அந்த நான்] / இத்யுபநிஷத் (என்று உபநிஷத் ) //     பொழிப்புரை : அந்த எவன் இவ்வாறு அறிந்தவன் ,இந்த உலகிலிருந்து மரித்தபின், இந்த அன்னமயமான ஆத்மாவைக் கடந்து இந்த பிராணமயமான ஆத்மாவைக்கடந்து இந்த மனோமயமாத்மாவைக் கடந்து இந்த விஞ்ஞானமய ஆத்மாவைக் கடந்து இந்த ஆனந்தமய ஆத்மாவைக் கடந்து இந்த லோகங்களில் விரும்பிய உருவத்தோடு  விரும்பியவாறு செல்பவராய் இந்த சாமகானத்தை ஒதுபவராக உள்ளார். அடாடா அடாடா அடாடா .   நானே சரீரம் பிராணம் தொகுதியின் அனுபவம்; நானே  ஆபஸ் ஜ்யோதீ தொகுதியின் அனுபவம்; நானே ப்ருதிவீ ஆகாசம் தொகுதியின் அனுபவம். நானே சரீரம் பிராணம் ஆகிய தொகுதியின் அனுபவத்தை அடைபவன் நானே ஆபஸ் ஜ்யோதீ ஆகிய தொகுதியின் அனுபவத்தை அடைபவன் நானே ப்ருதிவீ ஆகாசம் ஆகிய தொகுதியின் அனுபவத்தை அடைபவன். நானே ரிக் வேதமந்த்ரத்தை உண்டாக்குபவன்; நானே யஜுர்வேதமந்த்ரத்தை உண்டாக்குபவன் நானே ஸாமவேதமந்த்ரத்தை உண்டாக்குபவன் நானே ருதத்தினுடைய முதலில் தோன்றியவன் .தேவர்களுக்குமுன் அம்ருதத்தின் இருப்பிடம் .எவன் என்னைக்கொடுக்கிறானோ அவன் என்னையே தாங்குபவன் போல உள்ளான். நான் அனுபவத்தை  அனுபவிப்பவனை அனுபவிக்கிறேன். நான் அனைத்து உலகத்தையும் வென்றுள்ளேன். சூர்யன் போன்ற ஒளியோன். எவன் இவ்வாறு அறிவானோ [அந்த நான்] என்று உபநிஷத் . ஸஹானாவவது / ஸஹநௌ புனக்து / ஸஹவீர்யம் கரவாவஹை / தேஜஸ்வி நாவதீதமஸ்து / மாவித்விஷாவஹை / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: //   ஸஹானாவவது (எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக ) / ஸஹநௌ புனக்து (எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக ) / ஸஹவீர்யம் கரவாவஹை (ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக ) / தேஜஸ்வி நாவதீதமஸ்து  (கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும்) / மாவித்விஷாவஹை (வெறுக்காமல் வாழ்வோமாக) / ஓம் ஸாந்திஸ் ஸாந்திஸ் ஸாந்தி: (ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி) //   பொழிப்புரை : எங்கள் இருவரையும் ஒன்றாகத் தூண்டுவாராக. எங்கள் இருவரையும் ஒன்றாகக்  காப்பாராக  .ஒன்றாக பிரஹ்மதேஜசை வளர்ப்போமாக . கற்ற வேதம் எங்களுக்கு ஞான ஒளியூட்டுவதாக இருக்கட்டும் .வெறுக்காமல் வாழ்வோமாக .ஓம் பரு உலகில் அமைதி , செயல் உலகில் அமைதி , மன உலகில் அமைதி.   ஓம் தத் சத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ஓம் இருப்பாகிய அந்த பிரஹ்மத்திற்கு இது அர்ப்பணமாகட்டும் .