[] 1. Cover 2. Table of contents தேநீர்ப் பேச்சு தேநீர்ப் பேச்சு   ராகவ சந்தோஷ்   ragavasanthosh5394@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - ராகவ சந்தோஷ் - ragavasanthosh5394@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thaeneer_pechu மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: ராகவ சந்தோஷ் - ragavasanthosh5394@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Ragava Santhose - ragavasanthosh5394@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation அன்பிருப்பதே இருதயம் மீதம் எல்லாம் உதிரத்தை உந்தித் தள்ளும் சதைக் குவியல் எனப் புரிய வைத்த Nafia வுக்காக […] கொதிக்கக் கொதிக்க அருகே வந்து குளிரக் குளிர வைத்துப் போனாய் […] கொதிக்கக் கொதிக்க உன்னைத்தான் குடித்துக் குடித்து ஆறுகிறேன் கொஞ்சம் நான் தோல்விகளை […] மறக்க உன்னைத்தான் தேடினேன் நேரமறிந்து கோப்பையுடன்‌ வந்தாய் நீ […] என்னைத் தூயனாக்க தன்னைக் கறைப்படுத்திக் கொண்டது என் விருப்பமான தேநீர்க்கோப்பை காத்திருந்த […] பத்து நிமிடமும் தவம்தான் நீ தருவது கவலை மறக்கும் வரம் என்பதால் ஒரு சிறு […] மாற்றம் வேண்டும் இன்று என் தேவைக்காய் ஒரு ஏலக்காய் […] உன்னைக் கைகளில் ஏந்தும்‌ முன்னே கண்களால் பருகி விட்டேன் […] இனிக் குடிக்கக் கூடாது எனும்‌ முடிவையும் உன்னைக் குடித்துத்தான் எடுக்க வேண்டியதாயிருக்கிறது […] உன்னைத் தேடத் துவங்க காரணம் தேவையில்லை நீ வேண்டும் எனும் காரணமே போதுமானது முதல் மிடறுக்கும் […] இரண்டாம்‌ மிடறுக்குமான இடைவெளியில் காதருகே ஆறுதல் சொல்கிறார் எப்போதோ தேடிய கடவுள் […] தீண்டத் தீண்ட தீர்வதில்லை சில கோப்பைத் தேநீர்கள் நினைவுகளையும் கலந்து விடுவதால் மழைக்கால காலைகளில் […] இளஞ்சூடாய் அணைத்துக் கொள்கிறாய்.. உன் கதகதப்பில் எழுதுகிறேன் இன்னுமொரு கவிதை […] சில நாட்களில் தேவை பல பொழுதுகளில் போதை […] மழைக்கால மாலைகளில் என் இதழை நீ தீண்டியதை எல்லாம் வரமென நினைத்திருக்கிறேன் நேற்று […] தீண்டாத ஊடலை இன்று நாவைச் சுட்டுத் தனித்துக் கொண்டது என் அதிகாலைத் தேநீர் […] உடைந்து போனாலும் உறைந்து போனாலும் நீ மட்டும் என்னுள் நிறைந்து போகும் நொடிகள் எல்லாம் மோன நிலை உன் […] தெருவோரத் தீண்டல்தான் என்னை பத்து நிமிட புத்தனாக்கியது […] ஆறாமல் வாயேன்.. என் கவலைகளை ஆற்ற.., உன்னிடம் முத்தம் வாங்கிவிட […] லஞ்சமாய் தளும்பத் தளும்ப தேநீர் தருகிறது அந்த நீலநிறக் கோப்பை […] இருக்கும் போதே அனுபவி ஆறிவிடும் தேநீர் […] சில நேரம் உணவுக்குப் பின் சில நேரம் உணவாகவே தேநீர் வேலை இல்லை […] என்றாலும் வேளாவேளைக்குப் பசியாற்றியது அன்று அம்மாவின் கை இன்று தேநீர் அரைக்குவளை […] குடிக்கக் குடிக்கக் குறைகிறது கோப்பையும் கவலைகளும் உன்னைக் […] குடித்துப் பார்க்க ஆசைப்பட்ட மழைத்துளி உன்னுள்ளே கரைந்தது என்னைப்போலவே ஒவ்வொரு முறை […] குடிக்கும் போதும் எந்த மர‌நிழலும் போதியாகிறது மாஸ்டர் அண்ணனாகிறார் சில அயலார் நண்பராகிறார் நீ அமுதமாகிறாய் […] குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன் உன்னைக் குடிக்கும் பழக்கத்தை விடாமல் இருக்கிறேன் […] ஒவ்வொரு தேநீரிலும் அடிச்சொட்டு மட்டும் தேனாகிறது […] ஏதோ நினைவில் உன்னுடன் இருக்கையில் சுட்டுச்சுட்டு சுட்டிக்காட்டுகிறாய் உன் இருப்பை […] ஆறாமல் வந்துதான் ஆற்றுப்படுத்துகிறாய் தினமும் […] இருக்கும் வரை இனித்துவிட்டு போன பின்பு கசக்கிறது அடிநாக்கில் […] […] ஐந்து நிமிட அணைத்தலுக்கு அக்னியில் கொதித்து வருகிறாய் ஒரு‌முறை தான் எனக் குடிக்கிறேன் ஒவ்வொரு முறையும் […] எனக்காக தயாரிக்கப்படும் தேநீரில் மட்டும் அமுதத்தைக் கலந்து விடுகிறார் தேநீர்க்காரர் அடிமனதில் […] […] அதற்கும் கவலைகள் இருக்கக் கூடும் இறுதித் துளிக் கசப்பு […] குடித்தவுடன் எடையற்று விழும் கோப்பையைப்‌போல மனமும் லேசாகிப் போனது கொதிக்கக் கொதிக்கக் குடிக்கிறேன் வெந்து தீரட்டும் கவலை […] அன்றாட உழைப்புக்கு ஊக்க மருந்து ஒரு கோப்பை தேநீராகிறது அமர்ந்து […] குடித்து எட்டிப் பார்த்தேன் கடைக்காரன் தேவதூதனாகி இருந்தான் கண்ணாடியில் […] வரும்போது கடைக்குள்ளே செல்கிறது காகிதத்தில் வருவதுதான் குப்பைக்குப் போகிறது. எத்தனை […] […] இனிப்புகள் சேர்த்தாலும் நீங்குவதே இல்லை சில அடி ஆழக் கசப்புகள் நம் கலவிக்குப் பின்தான் புத்துணர்ச்சி கிடைக்கிறது […] தேநீருடன் நினைவுகளும் நிறைந்திருக்கிறது. சில கோப்பைகளில் மட்டும் […] சிலருக்கு வேளைக்கு சிலருக்கு வேளாவேளைக்கு ஆனால் எல்லோருக்கும் காலிக்கோப்பைக்கும் […] எச்சில் கோப்பைக்கும் வித்தியாசம் எச்சில் கோப்பை குப்பைக்குப் போகிறது காலிக்கோப்பை குப்பையாகப் போகிறது தேநீரின் சுவை […] சில நேரம் தயாரிப்பவரையும் பல நேரம் கொடுப்பவரையும் சார்ந்தது. […] கசந்திருந்த தேநீரில் எல்லாம் ஒளிந்திருக்கலாம் அதைப் பறித்தவனின்‌ கண்ணீரோ பதப்படுத்தியவன் வலியோ தயாரித்தவனின் சோகமோ […] புளியந் தோப்பை வறுமையில் விற்றுவிட்டு புளியங்கொட்டையைக் கலக்கிறார் பரம்பரை‌ புளிவிவசாயம் செய்த தேநீர்க்காரர் கொதிக்கின்ற […] தேநீரைக் கொட்டிவிடாமல் சொட்டுச்சொட்டாய் பருகி முடிக்கும் நிதானம் வாழ்வின் தத்துவம் […] இனிப்பும் கசப்பும் இணைந்ததே தேநீர் அலைபேசியும் […] செய்தித்தாளும் நடுவில் தோன்றியபோது தேவைக்குக் கொஞ்சமும் எனக் குடித்த போது துடித்துத்தான் போயிருக்கும் தேநீர்க்கோப்பை […] அடுத்த நொடி இழுத்துக் கொண்டிருந்த அந்த நாளில் எனக்காக ஆறாமல் காத்திருந்த போது தேநீரும் தேவதையாய்த் தெரிந்தது […] காதலனாகவே உன்னைத் தீண்ட வந்தேன் அடுத்த ஐந்து நிமிடத்தில் உன்னைத் தீண்டியபின்பு புத்தனாகியிருந்தேன் சிலுவையில் இருந்து […] இறங்கி வந்து மீண்டும்‌ அறைவதாய் இருக்கிறது அன்றாட வாழ்க்கை அதில் ஐந்து நிமிட விடுதலை தேநீரினால் கிட்டியது தேநீர் விற்றவர்கள் […] பெரும் உயரம் தொட்டிருக்கலாம் ஆனால் தேயிலை பறிப்பவர் கைகள் இன்னும் தழும்பேறிக் கொண்டது மிக நீண்ட‌ […] மழை இரவுகளில் தனிமை நிறைந்த பொழுதுகளில் எல்லாம் என் படுக்கையறைக்கு நீ வந்த பிறகுதான் விடிந்தது என நம்பத் தொடங்கினேன் […] தனிமையும் இனிமைதான் உன்னுடன் இருக்கும்போது இரத்தத்தில் […] கலந்துவிட்டது இப்போது நேற்றைய சோதனையில் இரத்த வகை டீ பாஸிட்டிவ் […] பாலுக்கும் உனக்கும் சிறந்த பொருத்தம் எனக்கும் உனக்கும் ஆகச்சிறந்த பொருத்தம் […] என்ன பந்தயத்தில் வென்றுவிட்டேன் என்று இக்கோப்பையை முத்தமிடுகிறேன்? சில வேளைகளில் […] இது இதழ் முத்தம் பெற்ற பின்பு தேவதையின் உமிழ்நீர் என்பதின்‌ சுருக்கமோ எனத் தோன்றுகிறது. […] உன்னைக் குடித்தபின்பு நானும் நுனிநாக்கிலே இனிப்பும் அடிநாக்கிலே கசப்பும் […] என் இதழைச் சேரவா ஆவி பறக்க அலைந்தாய்? […] உன்னை ஆறவிடாமல் குடித்ததற்கா என்னை ஆற்றுப்படுத்திச் செல்கிறாய் ? இனிப்பா […] கசப்பா எனத் தெரியவில்லை... ஆனால் இனிக் கசப்பில்லை. […] என்னுடன் சேர்ந்த பாவத்திற்கு உன்னையும் கழுவி ஊற்றுகிறார்கள் நம் அருமை தெரியாதவர்கள் இதழோடு […] உன்னைச் சேர்த்த பின்தான் உணர்ந்தேன் நீ இரண்டு நிமிட சொர்க்கம் என்பதை நரக வாழ்வில் […] இருந்து மீட்டு இரண்டு நிமிடம் இன்பம் தந்தாய் இறக்கை கட்டி பறக்கத் தயாராகிவிட்டேன் நான் […] எதையோ தேடி எதற்கோ ஓடுபவர்களுக்கு எப்படித் தெரியும்? தேநீர் என்பது கணப்பொழுது சரணாலயம் என்பது […] தேநீரிலேயே திருப்தியடைந்த மனம் உலகத்தையே வென்றதாக சந்தோஷிக்கிறது சில நேரம் […] நினைவுகளின் ஊற்று சில நேரம் மறதியெனும் மாமருந்து எதுவாயினும் நல்ல துணை குவளைத் தேநீர் […] சோகங்கள் என்னைக் குடிக்கின்றன. நானோ உன்னைக் குடித்து என்னை மீட்டுக்கொள்கிறேன். […] மதுவும் போதைதான் நீயும் போதைதான். அது மயங்க வைக்கிறது நீயோ தீர்வுடன் வருகிறாய். […] சாதிச்சண்டை கலவரத்தில் அடித்துக் கொண்டவர் சேர்ந்து அமர்ந்தனர் உனக்காக […] ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர் வந்தாலும் தேறுதல் கிடைத்தது என்னவோ உன்னிடம்தான் வாழ்க்கையும் தேநீரைப் போலத்தான். சிலருக்கு […] இனிப்பாகவும் சிலருக்கு கசப்பாகவும் ஆனால் அனுபவிப்பதற்கு மட்டும் எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ரயில் பேச்சு […]   […] ஆயிரம்‌பேர் கடந்து விட்டாலும் எதற்கும் தடம் மாறியதில்லை சில சிறப்பு ரயில்கள் […] தாமதமாய் வரும்போதெல்லாம் சில கவிதைகளை கொண்டுவருகிறது நாம் போக வேண்டிய ரயில் […] முன்பதிவான இருக்கை ஆனாலும் பின்பதிவான நினைவுகள் இனிமை […] பதினோரு மணிக்கு தூங்கப் போனபின் யாருடன் பேசியிருக்கும் ஜன்னலோர மின்விசிறி […] வீட்டில் உறங்கும்போது இரைச்சலான உன் சத்தம் உன்னில் உறங்கையில் தாலாட்டாகி விடுகிறது […] தனிமையை உணரவில்லை இடம் வந்தது இறங்கிப்போ எனச் சொல்லும் வரை […] புது மழையின் வெள்ளம் என பாய்ந்தது தண்டவாள வரப்புகளுக்குள் […] அந்த ரயிலை இன்னும் தாமதமாகவே வரச் சொல்லுங்கள். காத்திருப்பின் இனிமை பிடித்திருக்கிறது. […] தாமத ரயில்கள் எல்லாம் எங்கோ நின்று எனக்கு இன்னும் இரு கவிதைகளை […] எழுதிக் கொண்டிருக்கக் கூடும் ஓடி வந்த களைப்பில் உறங்கட்டும் விடுங்கள் அது வளர்ந்த குழந்தை கதைப் பேச்சு […] புறாக்கள் வளர்க்கும் எங்கள் வீட்டை பூனைகள் வளர்க்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஏனோ முறைக்கிறார் இப்போது படபடக்கவில்லை புறாக்கள் […] நிலவு இரவெல்லாம் நதியில் முங்கிக் குளிக்கிறது தன் கறைகள் நீக்க விடிய‌ விடிய […] அடுத்த கவிதைக்கு புள்ளிகள் வைக்க சிறுத்தைகளிடம் கடன்‌ வாங்கிக் கொள்ளலாம் கோடுகள் போட்டுக்கொண்டு புலிகளாகலாம்‌ அவை […] என்றோ செத்த எலியை இன்னும் குத்திக் கிழிக்கின்றது பசியாறாத காகம் […] உப்புத் தண்ணீரைக் குடித்துவிட்டதால் உமிழ்ந்துவிட்டுச் செல்கிறது மேகங்கள் நீங்கள் மழையெனக் கொண்டாடிக் கொள்ளுங்கள் […] கண்ணாடித் தொட்டி மீனுக்கு கடலெனப்படுவது மூடநம்பிக்கை […] கடித்துவிட்டு விட்டுவிட்டுப் போனது எறும்பு அதற்கும்‌ நான் கசந்திருக்கக்கூடும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை […] தனியார் இடத்தில் இடமில்லை. ஊர்தியிலேயே உதிர்ந்தவனை பொட்டலம் கட்டி ஓரமாய் வைத்தனர் நான்கு நாள்‌ கழித்து எரிக்க FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.