[] [cover image] தேசிய கல்விக் கொள்கை - 2019 மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் FreeTamilEbooks.com CC-BY-NC-ND தேசிய கல்விக் கொள்கை - 2019 1. தேசிய கல்விக் கொள்கை - 2019 1. நண்பர்களுக்கு வணக்கம், 2. Abbreviations 3. மொழிபெயர்ப்பில் உதவியவர்கள்: 4. மொழிபெயர்ப்பினை சரிபார்த்தவர்கள் 5. ஒருங்கிணைப்பு 6. வடிவமைப்பு 7. குறிக்கோள் 8. பகுதி I - பள்ளிக் கல்வி 2. ஆரம்ப காலக் குழந்தை பராமரிப்பும் கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம் 3. அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு 4. இடைநின்ற மாணாக்கர்களை மீள்ஒருங்கிணைத்தல் ; கல்வியை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துதல் 5. பள்ளிக் கலைத்திட்டமும் ஆசிரியமும் (கற்பித்தல் முறையும்) 6. ஆசிரியர்கள் 7. சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி 8. பள்ளித் தொகுதிகளின் மூலம் திறனை செம்மையாக பயன்படுத்துவதோடு மேலும் முறையாக நிர்வகிப்பது 9. பள்ளிக் கல்விக்கான மறு ஒழுங்கு செய்தல் 10. 8.1.6. கல்வி விஷயங்களுக்கான தலைமை அமைப்பு 1. பகுதி II - உயர் கல்வி 11. தரமான பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள்: இந்தியாவின் உயர்கல்வி அமைப்பிற்கான புதிய மற்றும் முன்னோக்கு கனவு. 12. கல்வி நிறுவனங்களை மறுகட்டமைத்தலும் ஒருங்கிணைத்தலும் 13. மிகுதாராளமயக் கல்வியை நோக்கி 14. மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலும் மற்றும் வலுவூட்டுதலும் 15. உற்சாகம், ஈடுபாடு மற்றும் திறமையுள்ள ஆசிரியர்கள் 16. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் 17. ஆசிரியர் கல்வி 18. தொழில்சார் கல்வி 19. உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான அதிகாரமுடைய ஆளுகை மற்றும் திறம்பட்ட  தலைமைப்பண்பு 20. ஒழுங்குபடுத்தும் அமைப்புகளில் மாற்றங்கள் கொணர்தல் 21. என்ன செய்ய வேண்டும்? 1. பகுதி III - முக்கிய கவனப் பகுதிகள் 22. கல்வியில் தொழில்நுட்பம் 23. தொழிற்கல்வி 24. வயது வந்தோர் கல்வி 25. இந்திய மொழிகளை ஊக்குவித்தல் 1. Part IV உருமாறும் கல்வி 26. இராஷ்ட்ரிய ஷிக்சா அயோக் RSA 1. பின்னிணைப்புகள் 2. பின்னிணைப்பு - 1 3. பின்னிணைப்பு - 2 தேசிய கல்விக் கொள்கை - 2019 தேசிய கல்விக் கொள்கை - 2019   மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-ND கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/national_educational_policy_2019} நண்பர்களுக்கு வணக்கம், தேசிய கல்விக்கொள்கை 2019ன் வரைவு ஜூன் 1ஆம் தேதி வந்ததும் முதல் எண்ணமாக அது தமிழில் தரவேண்டும் என்றே தோன்றியது. அப்போது தான் அது பெருவாரியான வாசிப்பிற்கு உள்ளாகும் என்றும் தோன்றியது. அரசிடமும் முதல் கோரிக்கையாக எல்லோரும் முன் வைத்தனர். உடனடியாக சமூக வலைதளங்களில் இதனை மொழிமாற்றம் செய்ய ஒரு கோரிக்கை வைத்ததும் இல்லாமல் ஒரு வாட்ஸப் குழு உருவாக்கி ஒவ்வொரு இயல்களாக பிரித்து மொழிபெயர்க்க ஆரம்பித்தோம். மொத்தம் 484 பக்கங்கள். இந்த குழு ஒரு கலவையான குழு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கல்வி ஆர்வலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மருத்துவர்கள், நண்பர்கள் என்று கலந்த ஒரு வித்யாசமான குழு. ஐம்பதற்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டார்கள். சிலர் நேரடியாக தட்டச்சி அனுப்பிவிட்டார்கள். சிலர் கையில் எழுதில் அந்த புகைப்படத்தினை அனுப்பிவிட்டார்கள். அனைத்தையும் ஒன்றிணைத்து சுமார் இரண்டு வாரத்தில் இந்த நிலைக்கு வந்ததே பெரும் சவால் தான். இது ஒரு வரலாற்று சம்பவமும்கூட, 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரு ஆவணத்தை மொழிபெயர்த்திருப்பது ஒரு வரலாறு தானே? இந்த பி.டி.எப் அனைவரும் தமிழில் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கொண்டுவந்தது. Preamble & Appendix பகுதிகளை இதில் சேர்க்கவில்லை. ஆங்கில பி.டி.எப்பினை மனிதவள அமைச்சக வலைதளத்தில் தரவிறக்கி வாசிக்கலாம். https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf தமிழ் சூழலில் கல்வி பற்றிய உரையாடல்களை இந்த சந்தர்ப்பத்தில் துவக்கினால் அதுவே பெரும் வெற்றி. பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வாசியுங்கள், உரையாடுங்கள். மொழிபெயர்ப்பு குழு சார்பாக, விழியன் நாகராஜன் (பாரதி புத்தகாலயம்) (இந்த முதல் வர்ஷன் PDFல் பிழைகள் இருப்பின் vizhiyan@gmail.com என்ற மின்முகவரிக்கு தகவல்களை அளிக்கவும், அடுத்த வர்ஷனில் திருத்திடலாம். தமிழ் வாசகர்கள் இதனை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டே வாரத்தில் வெளிவந்த கூட்டு முயற்சி) அடுத்த வர்ஷன் இந்த வலைதளத்தில் வெளியிடப்படும் - https://bookday.co.in/ தேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றிய உங்களது கருத்துக்களை nep.edu@nic.in என்ற மின் முகவரிக்கு மடலிடவும். ( மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ) Abbreviations AI - Accreditation Institution AC - Advisory Council AEC - Adult Education Centre AESDC - Adult Education and Skill Development Centres AICTE - All India Council for Technical Education AIDS/STD - Acquired Immune Deficiency Syndrome/ Sexually Transmitted Diseases AISHE - All India Survey of Higher Education AIU - Association of Indian Universities AU - Agriculture University AYUSH - Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy B.A. - Bachelor of Arts B.Ed - Bachelor of Education B.Sc. - Bachelor of Science B.Voc - Bachelor of Vocation BA - Binary Accreditation BCI - Bar Council of India BDS - Bachelor of Dental Surgery BEO - Block Education Officer BLA - Bachelor of Liberal Arts BLE - Bachelor of Liberal Education BoG - Board of Governors BRC - Block Resource Centre CAD/CAM - Computer-Aided Design/ Computer-Aided Manufacturing CBCS - Choice Based Credit System CDAC - Centre for Development of Advanced Computing CEP - Continuing Education Programme CESD - Central Educational Statistics Division CFTI - Centrally Funded Technical Institutions CHC - Community Health Centre CIAE - Central Institute of Adult Education CIET - Central Institute of Educational Technology CNE - Continuing Nursing Education CPD - Continuous Professional Development CRC - Cluster Resource Centre CSR - Corporate Social Responsibility CSTT - Commission for Scientific and Technical Terminology CTE - College of Teacher Education CU - Central Universities CWSN - Children With Special Needs DAE - Department of Atomic Energy DARE - Department of Agricultural Research and Education DBT - Department of Biotechnology DCI - Dental Council of India DEC - District Education Council DEO - District Education Officer DIET - District Institute of Education and Training DSE - Directorate of School Education DST - Department of Science and Technology DTE - Department of Technical Education EC - Executive Council ECCE - Early Childhood Care and Education ED - Executive Director EMT-BEmergency Medical Technicians-Basic FOSSEE - Free and Open Source Software in Education GA - Graded Accreditation GDA - General Duty Assistants GDP - Gross Domestic Product GEC - General Education Council GER - Gross Enrolment Ratio GNM - General Nursing and Midwifery GoI - Government of India HBCSE - Homi Bhabha Centre for Science Education HEGC - Higher Education Grants Council HEI - Higher Education Institutions HRDC - Human Resource Development Centre IAF - Institutional Accreditation Framework IAS - Indian Academy of Sciences IASE - Institute of Advanced Studies in Education IB - Independent Board ICAR - Indian Council of Agricultural Research ICDS - Integrated Child Development Services ICMR - Indian Council of Medical Research ICT - Information and Communication Technology IDP - Institutional Development Plan IIEC - India International Education Centre IILA - Indian Institute of Liberal Arts IIT Indian Institute of Technology INAE - Indian National Academy of Engineering INC - Indian Nursing Council INI - Institutions of National Importance INSA - Indian National Science Academy InSCED - Indian Standard Classification of Education ISCO - International Standard Classification of Occupations ISL - Indian Sign Language ITI - Industrial Training Institute IUC - Inter-University Consortium JRMB - Joint Review and Monitoring Board KGBV - Kasturba Gandhi Balika Vidyalaya LMIS - Labour Market Information System LSS - Licence to Start a School MBBS - Bachelor of Medicine and Bachelor of Surgery MCI - Medical Council of India MERU - Multidisciplinary Education and Research Universities MHFW - Ministry of Health and Family Welfare MHRD - Ministry of Human Resource Development MN - Mission Nalanda MoE - Ministry of Education MOOC - Massive Open Online Course MOU - Memorandum of Understanding MSDE - Ministry of Skill Development and Entrepreneurship MSME - Micro, Small and Medium Enterprises MT - Mission Takshashila MWCD - Ministry of Women and Child Development NAAC - National Assessment and Accreditation Council NAS - National Achievement Survey NASI - National Academy of Sciences, India NATP - National Adult Tutors Programme NCC - National Cadet Corps NCERT - National Council of Educational Research and Training NCF - National Curriculum Framework NCFAE - National Curriculum Framework for Adult Education NCTE - National Council for Teacher Education NCVET - National Council for Vocational Education and Training NCVIE - National Committee for the Integration of Vocational Education NDF - National Doctoral Fellow NEC - National Education Commission NEET - National Eligibility cum Entrance Test NETF - National Educational Technology Forum NGO - Non Governmental Organisation NHEQF - National Higher Education Qualifications Framework NHERA - National Higher Education Regulatory Authority NIEPA - National Institute of Educational Planning and Administration NIOS - National Institute of Open Schooling NIT - National Institutes of Technology NITI Aayog - National Institution for Transforming India NLM - National Literacy Mission NLP - Natural Language Processing NMC - National Medical Commission NMEICT - National Mission on Education through ICT NPDF - National Post Doctoral Fellow NPSDE - National Policy on Skills Development and Entrepreneurship NQR - National Qualifications Register NRED - National Repository of Educational Data NRF - National Research Foundation NROER - National Repository of Open Educational Resources NSDA - National Skill Development Agency NSDC - National Skill Development Corporation NSQF - National Skills Qualifications Framework NSS - National Service Scheme NTA - National Testing Agency NTP - National Tutors Programme OBC - Other Backward Classes ODL - Open and Distance Learning OER - Open Educational Resources PHC - Primary Health Centre PI - Principal Investigator PM - Prime Minister PSSB - Professional Standard Setting Body PSSCIVE - Pandit Sundarlal Sharma Central Institute of Vocational Education PSUs - Public Sector Units PTR - Pupil Teacher Ratio QPs-NOS - Qualification Packs - National Occupational Standards R&I - Research and Innovation RCI - Rehabilitation Council of India RIAP - Remedial Instructional Aides Programme RIE - Regional Institute of Education RjSA - Rajya Shiksha Aayog RMSA - Rashtriya Madhyamik Shiksha Abhiyan ROI - Return on Investment RPL - Recognition of Prior Learning RSA - Rashtriya Shiksha Aayog RSAAC - RSA Appointment Committee RTE Act - Right of Children to Free and Compulsory Education Act, 2009 RUSA - Rashtriya Uchchtar Shiksha Abhiyan SC - Scheduled Caste(s) SCC - Standing Committee on Coordination SCERT - State Council of Educational Research and Training SCMC - School Complex Management Committee SDG - Sustainable Development Goal SDP - School Development Plan SEC - State Education Commission SEZ - Special Education Zone SHEC - State Higher Education Council SIOS - State Institutes of Open Schooling SKPSkill Knowledge Provider SMC - School Management Committee SQAAF - School Quality Assessment and Accreditation Framework SQAAS - School Quality Assessment and Accreditation System SSA - SarvaShiksha Abhiyan SSC - Sector Skill Council SSDMs - State Skill Development Mission SSRA - State School Regulatory Authority SSS -Simple Standard Sanskrit ST - Scheduled Tribe(s) STEAM - Science, Technology, Engineering, Art & Design, and Mathematics STEM - Science, Technology, Engineering, and Mathematics STS Sanskrit through Sanskrit SVE School of Vocational Education SWAYAM - Study Webs of Active Learning for Young Aspiring Minds TEI - Teacher Education Institution TET Teacher Eligibility Test TLC Total Literacy Campaign U-DISE - Unified District Information System for Education UGC - University Grants Commission ULB - Urban Local Bodies UME - Union Minister for Education URG - Underrepresented Group(s) UT - Union Territory VCI - Veterinary Council of India VEI Vocational Education Institutions VESB - Vocational Education Skills Board WIPO - World Intellectual Property Organization மொழிபெயர்ப்பில் உதவியவர்கள்: நாதன், பச்சையம்மாள், சுபாஷினி, மஹேந்திரன் (புதுவை) அருப்புக்கோட்டை முத்துக்குமாரி, ராஜேந்திரன் தாமரபுரா, லட்சுமி கார்த்திகேயன், ஆசிரியர் உதயா, டாக்டர் மகேஸ்வரன் நாச்சிமுத்து, சங்கர தேவி, சின்மயி, ராமச்சந்திர வைத்தியநாத், செந்தில்நாதன் (சென்னை), வீரமணி, ப்ரியா சிவகுமார் (சென்னை), பா.பிரபாகரன், கவிதா, ஆசிரியர் தென்றல் (கோவை), சுபத்ரா (பயிற்றுநர்), ஆசிரியர் புவனா (கும்பகோணம்), ஆசிரியர் காளீஸ்வரன், சுப்புலட்சுமி நடராஜன் (லண்டன்) , கோமதி & மாறன் (புதுவை), அறிவழகன் ( தர்மபுரி), ஆசிரியர் மாதவன், ஆசிரியர் லெனின் போஸ், கீரைத்தமிழன் (திருச்சி), டாக்டர். ஸ்ரீராம் (திருச்சி), அனிதாபழனிச்சாமி (பெங்களூர்), மோகன், ராஜி நடராஜன், ராம்பிரியா (பெங்களூர்), காய்திரி சிவக்குமார் (கோவை), ஆசிரியர் ரமேஷ், அருண் தங்கவேல், ப்ரேம்குமார்(சென்னை), சிவராமன் (சென்னை). சரண்யா (சென்னை), நா.மணிகண்டன் (பெங்களூர்), கார்த்திகேயன் வரதராஜன் (பெங்களூர்), சிந்தன் (பெல்ஜியம்), ராஜி (ஈரோடு), பாரதி கமலக்கண்ணன் (கடலூர்), உமா மகேஸ்வரி (அமெரிக்கா), பூங்கொடி (சென்னை), இலக்கிய ராஜேந்திரன் (சென்னை), வீணா தேவி (பெங்களூர்), ப்ரவீன் துளசி (சென்னை), பால சிவசங்கரன் (சென்னை), பிகு, பசுபதி (கோவை), மணி ஜெயபிரகாஷ்வேல் (சென்னை), சுதந்திரா (ராஜபாளையம்) மொழிபெயர்ப்பினை சரிபார்த்தவர்கள் எழுத்தாளர் கமலாலயன் (ஒசூர்), வீ.ப.கணேசன் (சென்னை), சுப்பாராவ் (மதுரை) ஒருங்கிணைப்பு விழியன், பாரதி நாகராஜன் வடிவமைப்பு நந்தகுமார் நாகராஜன் குறிக்கோள் அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் மூலம், நமது தேசத்தை ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான அறிவுமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு நேரடியாக பங்களிக்கும் விதமாக இந்தியாவை மையமாகக் கொண்ட கல்வி முறையாக தேசிய கல்வி கொள்கை 2019 (வரைவு) கருதப்படுகிறது. பகுதி I - பள்ளிக் கல்வி ஆரம்ப காலக் குழந்தை பராமரிப்பும் கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம் குறிக்கோள்: 2025 ஆம் ஆண்டிற்குள், 3 முதல் 6 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமான, பாதுகாப்பான , உயர்தரமான, மேம்பாட்டு வளர்ச்சிக்குப் பொருத்தமான பராமரிப்பும், கல்வியும் கிடைத்திட வகை செய்தல். ஒரு குழந்தை அது பிறந்ததிலிருந்தே கற்கத் தொடங்கி விடுகிறது. குழந்தைகளின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியில், 85% க்கும் அதிகமான வளர்ச்சி 6 வயதிற்கு முன்னரே ஏற்படுகின்றது என்பதை நரம்பியல் விஞ்ஞானத்தின் சான்றுகள் பகர்கின்றன. எனவே, நிலையானதும் , ஆரோக்கியமானதுமான மூளை வளர்ச்சியினை விருத்தி செய்ய , குழந்தைகளின் ஆரம்ப காலங்களில் தகுந்த பராமரிப்பும் மூளை தூண்டலும் அவசியம் என்பதை இந்தச்சான்று நமக்கு உணர்த்துகிறது. அப்படி குழந்தைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் புறக்கணிக்கப்பட்ட அல்லது இழப்புகளை எதிர்கொண்ட குழந்தைகளின் மூளைகளை ஆய்வு செய்ததில், மூளையின் முக்கியமான பகுதிகளின் வளர்ச்சி கெடுவாய்ப்பாகக் குறைபாட்டுடன் இருப்பதையும் அதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் உணர்வுகள் எதிர்மறை விளைவுகளைக் கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகிறது. ஒரு குழந்தையின் முதல் ஆறு வருடங்கள் முறையான மூளை வளர்ச்சிக்கு முக்கியமான காலமாகக் கருதப்படுகின்றன. இந்த காலகட்டங்களில், தக்க பராமரிப்பு, ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, உளவியல் – சமூகச்சூழல், அறிவாற்றல் மற்றும் உணர்வுத் தூண்டல் உறுதி செய்யப்பட்டுவிட்டால், அந்தக் குழந்தையின் முறையான மூளை வளர்ச்சிக்கும் வாழ் நாள் முழுவதும் தான் விரும்பியதைக் கற்பதற்கும் ஏதுவாகும். அறிவாற்றல் விஞ்ஞானத்தின் இந்த சான்றுகள் , ஆரம்ப கால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியில் பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ள குழந்தைகளின் கற்றல் வெளிப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற தேசிய மற்றும் உலகளாவிய ஆய்வுகளின் மூலம் பெறப்பட்டவை. தொடக்க நிலை வகுப்புகளில் தக்க வைத்தலில் முன்பருவப் பள்ளிக் கல்வியின் தாக்கம் ‘ - என்ற தலைப்பில் 30,000 குழந்தைகளை வைத்து NCERT மேற்கொண்ட ஆய்வு, முன்பருவப் பள்ளிக் கல்விக்கும் தொடக்க நிலையில் தக்கவைப்பதற்குமுள்ள நேரடி மற்றும் வலுவான தொடர்பினையும் வருகை விகிதம், மிக முக்கியமாக, தொடக்க நிலையிலும் அதற்கு மேலும் கற்றல் வெளிப்பாடு ஆகியவற்றை விளக்குகிறது. பல்வேறு உலகளாவிய ஆய்வுகள் இதைப் பற்றிய நீண்ட காலத் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. தரமான முன்பருவ மழலையர் கல்வி என்பது அதிக வருமானம், குறைந்த விகித வேலைவாய்ப்பின்மை, குற்றம் மற்றும் கைது ஆகியவற்றோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில், இந்தியாவின் மிகச் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இந்த ECCE திட்டம் இருக்கும் என்றும் அது ஒரு ரூபாய் முதலீட்டில் 10 ரூபாய் லாபம் தரக்கூடியதாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சுருக்கமாக, ECCE இல் முதலீடு என்பது நல்ல, ஒழுக்கமான , சிந்தனைமிக்க, ஆக்கபூர்வமான மனிதராக குழந்தைகள் வளர சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தக் குழந்தைகளெல்லாம் படிப்பை ஆரம்பிக்கும் போதே பின் தங்கிய நிலையில் உள்ளனரோ அவர்கள் பள்ளிக் காலம் முழுவதும் பின் தங்கியே உள்ளனர் என்று மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தற்போது, இந்தியாவில் கடுமையானதோர் கற்றல் நெருக்கடி நிலவுகிறது. அதன் படி, தொடக்கப் பள்ளியில் சேருகின்ற குழந்தைகள் அடிப்படைத் திறன்களான எண்ணையும் எழுத்தையும் கற்றுத் தேர்வதில் தவறி விடுகின்றனர்.இந்த நெருக்கடி குழந்தைகள் 1 ஆம் வகுப்பில் நுழைவதற்கு முன்பிருந்தே காணப்படுகிறது ஆறு வயதிற்கு மேற்பட்ட பல குழந்தைகள் , குறைந்த ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியோடு ஒன்றாம் வகுப்பில் சேருகின்றனர். இன்னும் சிலர், முறையான முன்பருவ மழலையர் பள்ளி இல்லாததால் , 6 வயதிற்கு முன்பே 1 ஆம் வகுப்பில் சேர்ந்து விடுகிறார்கள். குழந்தைகள் தொடக்க நிலையிலும் அதற்கு மேலும் பின் தங்கிய நிலையில் காணப்படுவதற்கு இதுவே காரணமாகிறது. உண்மையில், 2016-17 ஆம் ஆண்டில், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் 6 வயதிற்கு முன்னரே 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக U-DISE (2016-17 ) தகவல் தெரிவிக்கின்றது. குழந்தைகளை தொடக்கப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்தயாரிப்புச் செய்வதில் உள்ள இந்த துயரகரமான குறைபாடு படித்த, வசதிபடைத்த குடும்பங்களுக்கும் இப்படி எந்தவித அனுகூலமும் அற்ற குடும்பங்களுக்கும் இடையே குறிப்பாகக் காணப்படுகிறது. ஏனெனில், வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள் , சிறந்த முன் மாதிரிகள், எழுத்தறிவு , பள்ளியில் பயன்படுத்துகின்ற மொழியிலே சரளமான அறிவு, வலுவான கற்றல் சூழல் இவற்றோடு சிறந்த ஊட்டச்சத்து, சுகாதாரம், முன்பருவ மழலையர் கல்வி ஆகியவற்றைப் பெற்று இருக்கின்றனர். ECCE – இல் செய்யப்படுகின்ற முதலீடு அனைத்துக் குழந்தைகளுக்கும், மேற்சொன்ன அனைத்து அம்சங்களையும் முழுமையாக வழங்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்துக் குழந்தைகளும் தங்கள் வாழ்நாள் நெடுக கல்வியமைப்பு முறையில் பங்கேற்கவும் வளர்ச்சியடையவும் வகை செய்யப்படுகிறது. ஒருவேளை ECCE என்பது ஒரு மாபெரும் மற்றும் மிக அதிகபட்ச ஆற்றல் வாய்ந்த சமத்துவக் கருவியாகத் திகழலாம். குழந்தைகளின் உணர்வுத் தூண்டலை உள்ளடக்கியதாகவும் அவர்களின் மூளை வளர்ச்சியிலிருந்து பள்ளிக்காக தயாரிப்புச் செய்யும் நிலை வரையும், மேம்பட்ட கற்றல் விளைவுகளுக்காகவும், சமத்துவம், நீதி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் எல்லாராலும் அடையக்கூடியதும் தரமானதுமான ECCE திட்டத்தில் இந்தியா கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும். தரமான ECCE என்ன செய்கிறது? குழந்தையின் 3 வயதிற்கு உட்பட்ட காலங்களில் , தரமான ECCE என்பது தாய் மற்றும் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் பேச்சு, விளையாட்டு, அசைவு, இசை மற்றும் ஒலியைக் கேட்பதின் மூலம் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உணர்வுத் தூண்டலை உள்ளடக்கியதாகவும் ECCE அமைகிறது. அதுமட்டுமல்லாமல், அனைத்துப் புலன்களையும் தூண்டக்கூடியதாகவும் குறிப்பாக பார்வை, தொடு உணர்வை தூண்டக்கூடியதாகவும் அமைகிறது. எண்கள் ,எழுத்துகள் மற்றும் எளிய சிக்கல் தீர்க்கும் கணக்குகள் ஆகியவற்றிற்கு இந்த காலகட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 3 – லிருந்து 6 வயது வரை , ECCE என்பது தொடர்ச்சியான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் முக்கியமாக சுய உதவித் திறன்கள்(தானே தன்னைத் தயார் செய்து கொள்ளுதல்), உடலியக்கத் திறன்கள், தூய்மை, பிரிதலினால் ஏற்படும் கவலையைக் கையாளுதல், சக வயதுக் குழந்தைகளோடு இயங்கும் திறன் (சரி, தவறு என்பதைப் புரிந்து கொள்ளுதல்), இயக்கம் மற்றும் உடற் பயிற்சி மூலமான உடல் வளர்ச்சி, பெற்றோர் மற்றும் பிறருடன், எண்ணங்கள் , உணர்வுகளை வெளிப்படுத்துதல் – தொடர்புகொள்ளுதல், வேலையின் பொருட்டோ அல்லது ஒரு செயலை முடிக்கும் பொருட்டோ ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் உள்ளிட்ட , பொதுவான ஒட்டு மொத்தமான நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்குவதாகவும் உள்ளது. இந்த வயதில், குழுவாகவோ தனித்தோ, மேற்பார்வையுடன் கூடிய விளையாட்டு முறையிலான கல்வி, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில். குழந்தைகளின் உள்ளார்ந்த மற்றும் வாழ்நாள் திறன்களான ஒத்துழைப்பு, குழுப்பணி, சமூக ஒருங்கிணைப்பு, இரக்கம், சமத்துவம், ஈடுபாடு, தொடர்பு, நன்றியுணர்வு, ஆர்வம், படைப்பாற்றல் அத்துடன் ஆசிரியர்கள், சக மாணவர்கள். ஊழியர்கள் போன்று பலருடன் வெற்றிகரமாகவும், மரியாதையாகவும் செயல்படும் திறன் ஆகியவற்றை இயற்கையாகவே வளர்த்தெடுக்க உதவுகிறது. இந்த கால கட்டங்களில், எண்கள், எழுத்துகள், மொழிகள், எண்ணுதல், நிறங்கள், வடிவங்கள், வரைதல், ஓவியம், உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு, புதிர்கள், தர்க்கரீதியான சிந்தனை, கலை, கைவினை, நாடகம், பொம்மலாட்டம், இசை மற்றும் இயக்கம் ஆகியவற்றைப் பற்றி கற்றுக் கொள்ளவும் ECCE வகை செய்கிறது. 85% க்கும் மேற்பட்ட மூளை வளர்ச்சி 6 வயதிற்கு முன்னரே ஏற்படுகிறது. தரம் வாய்ந்த ECCE ஐ இந்தியா எவ்வாறு வழங்க வேண்டும்? ECCE யின் மிக சமீபத்திய ஆய்வு, 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் , கொள்கை மற்றும் பாடத்திட்டத்திற்கான காலவரையறையின்படி பரிந்துரைக்கப்பட்ட, வயது அடிப்படையிலான கல்வியைநேர்கோட்டில் பின் பற்ற முற்படுவது இல்லை என்பதைக் காட்டுகிறது. இதன் விளைவாக, முன்பருவ மழலையர் பள்ளி, ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகள், தங்கள் தேவைக்கேற்ற பொருத்தமான கல்வியைப் பெறுவது இல்லை. 8 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே வரையறுக்கப்பட்ட கற்றலோடு பொருந்துகிறார்கள். எனவே, 3-8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நெகிழ்வான, பன்முகப்படுத்தப்பட்ட, பல்நோக்கு, விளையாட்டு—செயல்பாடு – கண்டுபிடிப்பு ஆகிய அடிப்படைகளிலான கற்றல் அணுகுமுறை அவசியமாகிறது. இதனால், இயற்கையாகவே, 3 லிருந்து 8 வயது வரையிலான குழந்தைகள் அதாவது முன்பருவ மழலையர் பள்ளியிலிருந்து 2 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்களை ஒரே கற்றல் அலகின் கீழ் நம்மால் காண முடிகிறது. இந்த கற்றல் அலகு “அடிப்படை நிலை” என்று அழைக்கப்படுகிறது. எனவே, ஒரு குழந்தை வளர்ச்சியின் முக்கியமான அடிப்படை நிலைக்கான, அத்தகைய ஓர் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை உருவாக்குவதும் அதனோடு தொடர்புடைய ஆசிரியர் தயார்படுத்துதலும் அவசியமாகிறது. நடப்பு காலங்களில், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி என்பது அங்கன்வாடிகள் , தனியார் முன்பருவமழலையர் பள்ளிகள் மற்றும் மிகச் சிறிய அளவு விகிதாச்சாரத்தில் அரசு சாரா அமைப்புகளாலும் இதர நிறுவனங்களாலும் நடத்தப்படும் முன்பருவ மழலையர் பள்ளிகள் மூலம் வழங்கப்படுகிறது. ICDS – ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை வளர்ச்சி சேவைத்திட்டத்தின் கீழ் முன்பருவ மழலையர் பள்ளிக் கல்வியின் அங்கன்வாடி முறை, இந்தியாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான சுகாதார நலனுடன் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த மையங்கள், பெற்றோர்களை ஆதரிக்கவும், சமூகங்களைக் கட்டமைக்கவும் உண்மையில் உதவியிருக்கின்றன. அவர்கள் முக்கியமான ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன், சுகாதார விழிப்புணர்வு, நோய்த்தடுப்பு, அடிப்படை உடல்நலச்சோதனை, உள்ளூர் பொது நலவாழ்வு மையங்களுக்குப் பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான வளர்ச்சி பெற்ற கோடிக்கணக்கான குழந்தைகள் உருவாவதற்கும் அதன் மூலம் மேலதிகமான உற்பத்தித் திறன் பெற்ற உயிர்கள் உருவாவதற்கும் இந்த மையங்கள் சேவையாற்றி இருக்கின்றன. எனினும் சில அத்தியாவசிய அறிவாற்றலைத் தூண்டுதல், விளையாட்டு, பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் அதேவேளையில் பெரும்பாலான அங்கன்வாடிகள் ECCE இன் கல்வி அம்சங்களோடு ஒப்பீட்டளவில் ஓரளவிற்கே ஒத்துப்போகின்றன. தற்போதைய சூழலில், அங்கன்வாடிகள் கல்விக்கான சாதனங்களைப் பெறுதலிலும் , உள்கட்டமைப்பில் பற்றாக்குறையுடனே இருப்பதால், தமது பொறுப்பில் 2-4 வயதுவரை உள்ள குழந்தைகளை அதிகமாகவும், முக்கியக் கல்வி பெறவேண்டிய 4-6 வயது வரையுள்ள குழந்தைகளைக் குறைவாகவும் அனுமதிக்கவேண்டிய சூழலுக்கு உந்தப்படுகின்றனர். இந்த அங்கன்வாடி மையங்கள் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கென பயிற்சி பெற்ற ஒரு சில ஆசிரியர்களையோ அல்லது அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய ஒரு சில ஆசிரியர்களையோ மட்டுமே பெற்றிருக்கின்றன. இதற்கிடையில், தனியார் மற்றும் இதர முன்பருவ மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளின் கீழ்நோக்கிய விரிவாக்கங்களாகவே செயல்பட்டு வருகின்றன. இவை சிறப்பான உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கிய போதிலும் அவர்களின் கற்பிக்கும் முறை வெறும் மனப்பாட நினைவாற்றலை மையமாகக் கொண்டும் , ஆசிரிய – மாணவ விகிதங்கள் முறையற்றும், வரையறைக்குட்பட்ட வளர்ச்சியடைந்த விளையாட்டு வழி மற்றும் செயல்வழிக் கற்றலையும் கொண்டுள்ளன. பொதுவாகவே இதுபோன்ற பள்ளிகள் முன்பருவக் குழந்தைப் பருவ கல்விக்கென பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டிருப்பதில்லை. சுகாதார அம்சத்திலும் அவர்கள் குறைவாகவே கவனம் செலுத்துகின்றனர். பொதுவாக, இப்பள்ளிகள் 0-4 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நலவாழ்வு அம்சங்களைக் குறைவாகவே வழங்குகின்றன. “ முன்பருவக் குழந்தைக் கல்வியின் தாக்கங்கள் “ என்ற தலைப்பில், டெல்லி , அம்பேத்கர் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வு, பொது அல்லது தனியார் பள்ளிகளில் முன் மழலையர் பள்ளிக் கல்வியை முடித்த பெரும்பான்மையான குழந்தைகள், தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்லும்போது , அதற்கான தயார் நிலைத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறுகிறது. முன்பருவ ழலையர் பள்ளிக் கல்வி கிடைப்பதில் உள்ள சிக்கல்களோடு, தரம் சார்ந்த குறைபாடுகளும், அதாவது, தகுதியற்ற பாடத்திட்டம், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமை, பொருத்தமான பயிற்றுவிக்கும் முறை இல்லாமை ஆகியவை பலருக்கும் அல்லது ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வித் திட்டங்களுக்கும் மிகப் பெரிய சவால்களாகத் திகழ்கின்றன. எனவே, இந்தக் கருத்துகளை முன்னிறுத்தி, NCERT யின் கொள்கை, ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கான மிகச் சிறந்த பாடத்திட்டத்தினையும் கற்பிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இத்ன்படி, ஆரம்ப கால குழந்தைப் பருவக் கல்வியானது, கணிசமான அளவுக்கு விரிவுபடுத்தப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இதில், அங்கன்வாடிகள், முன்பருவ மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளோடு இணந்திருக்கும் முன் மழலையர் பிரிவுகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தி ECCE யின் பாடத்திட்டத்திலும் கற்பித்தல் முறையிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் ஊழியர்களும் நியமிக்கப் படுவார்கள். கலை, கதைகள், கவிதைகள், பாடல்கள், உறவினர் கூட்டங்கள் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய , இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள எண்ணற்ற சிறப்பு மிக்க மரபுகள், ECCE யின் பாடத்திட்டத்திலும் கற்பிக்கும் கட்டமைப்பிலும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். அது, உள்ளூர்ச்சூழல் சார்ந்த அனுபவம், கலாச்சாரம், உற்சாகம், சமூக உணர்வு ஆகியவற்றை உணர்த்தும். குழந்தைகளை வளர்ப்பதிலும் , பராமரிப்பதிலும் , கல்வி புகட்டுவதிலும் குடும்பங்களின் பாரம்பரியப் பங்கினை வலுவாக ஆதரிக்கவும் ஒருங்கிணைக்கவும் வேண்டும். குடும்பத்தின் மரபார்ந்த பாத்திரவகிப்பை நிறைவேற்றுவதற்கு , குடும்பங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் தமது முன்னோடிகள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாரம்பரியப் பண்புகளைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறி விடுகிறார்கள். குடும்பங்கள் இந்தக்கடமையை நிறைவேற்ற முற்படும் வகையில் உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் . 6 வயதிற்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி வழங்குவதற்கான பொது அமைப்பின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், ECCE -ஐ RTE சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகச் சேர்க்கப்படவேண்டும் என கொள்கை கூறுகிறது. 2002 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச்சட்டத்தில் செய்யப்பட்ட 86 ஆவது திருத்தம் , நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் 6 வயது முடியும் வரை ஆரம்ப கால குழந்தைப் பருவக் கல்வியை வழங்கச் செய்வதன் மூலம் ECCE யை அனைவருக்குமானதாக்குவதற்காக ஒரு தெட்டத்தெளிவான உறுதியை வழங்கியது. RTE சட்டத்தின் இரண்டாவது பிரிவிலும் ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியை அனைவருக்கும் வழங்குவது பற்றி ஏற்கனவே விவாதித்து இருந்தது. அதாவது, 3-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவப் பள்ளிக் கல்வியை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் செய்வதன் மூலம், தொடக்க நிலைக் கல்விக்காகக் குழந்தைகளை ஆயத்தப்படுத்த முடியும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் நலனுக்காகவும் நாட்டிலுள்ள குழந்தைகளின் நலனுக்காகவும், தரமான ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியினை அனவரும் பெறுவதற்கான இந்த முக்கியமான கடமைகளை இயன்றவரை நிறைவேற்றுவத்ற்கான தருணம் இது. 2025 ஆம் ஆண்டிற்குள் தரமான ஆரம்ப கால குழந்தைப் பருவக் கல்வியை அனைவரும் அடைவதற்கான கொள்கை முயற்சிகள் பின்வருமாறு: 1.1. ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கான பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொள்கை மற்றும் வழிகாட்டுதலின் படி , ஆரம்ப கால குழந்தைப் பருவ கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உள்ளடக்கும் வகையில், NCERT யின் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். இந்தக் கட்டமைப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்: 0-3 வயது வரம்பில் உள்ள குழந்தைகளுக்குப் பொருத்தமான அறிவாற்றலைப் பெற்றோர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எப்படித் தூண்டுவது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்ளடக்கியதாக இந்தக் கட்டமைப்பின் முதல் பகுதி இருக்கும். எளிய, குறைந்த விலை கற்றல் உபகரணங்களை (ப்ளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் வண்ணமயமான சாக்லேட் குச்சிகளில் இருந்து எப்படி குழந்தைகளுக்கான கிலுகிலுப்பைகளைச் செய்வது: இனிய ஒலியைத் தரக்கூடிய தட்டல் கருவிகளைச் செய்வது: செய்தித் தாள்களை மடித்து படகு , தொப்பி செய்வது) எப்படி உருவாக்குவது என்ற வழிகாட்டுதலையும் இந்தக் கட்டமைப்பு கொண்டிருக்கும். இது குழந்தைகளுக்கான கைவினைப் பயிற்சியை உருவாக்கவும் அதனைப் பெற்றோர்கள் மத்தியில் விநியோகத்திற்குக் கொண்டு செல்லவும் இயலும். இரண்டாம் பகுதி , 3 – 8 வயது வரம்பிற்கு உட்பட்ட தொடக்க நிலை கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டமைப்பைக் கொண்டது. பெற்றோர்கள், அங்கன்வாடிமையங்கள், முன் தொடக்கப் பள்ளிகள், மற்றும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகியவற்றை நோக்கியும் இந்தக் கல்விக் கட்டமைப்பு உள்ளது. இளம் சிறார்களைப் பள்ளிக்காகத் தயார் படுத்தும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான எண்கள், எழுத்துகள், உள்ளூர் மொழியிலோ அல்லது தாய் மொழியிலோ அல்லது மற்ற எந்த மொழியிலோ எப்படி தொடர்பு கொள்வது , வண்ணங்கள், வடிவங்கள், ஒலிகள், அசைவுகள்,புதிர்கள், விளையாட்டுகள் , ஓவியங்கள், வண்ணம் தீட்டுதல், இசை மற்றும் உள்ளூர் கலைகள் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக உணர்வுத் திறங்களான ஆர்வம், பொறுமை, அணிவகுப்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நெகிழ்வுத்தன்மை, பன்முகத்தன்மை, விளையாட்டு வழி, செயல் வழி மற்றும் கண்டுபிடிப்பு வழி கற்றல் அணுகு முறையைக் கொண்டதாக இந்தக் கல்விக் கட்டமைப்பு இருக்கும். தொடக்க நிலையில் உள்ள குழந்தைகளை முழுமையாக வளர்க்க உதவும் அம்சங்களான உடற்பயிற்சிகள், புதிர்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள் , கதைகள், பாடல்கள், புள்ளிகளை இணைக்கும் ஓவியங்கள் முதலியன தொடர்பான ஆலோசனைகளும் இந்த கல்விக் கட்டமைப்பில் உள்ளடங்கும். தொடக்க நிலையில் உள்ள 3-8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மிக விரைவாக மொழிகளைக் கற்றுக் கொள்வதனாலும் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு மொழித் திறன் மிக முக்கியப் பங்காற்றுவதாலும் இந்தக் கட்டமைப்பின் முக்கிய பகுதியானது குழந்தைகளுக்கு சிறந்த பன்மொழித் திறன்களை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பாடத் திட்டக் கட்டமைப்பும் மாறுபட்ட மாநில மற்றும் உள்ளூர் கட்டமைப்பும், இந்தியாவின் மிகச் சிறந்த எண்னற்ற பாரம்பரியங்களைக் கொண்ட ECCE திட்டத்தில் விரிவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பல தேசிய மற்றும் உள்ளூர்க் கலைகள், பாடல்கள், கதைகள், புதினங்கள், புதிர்கள், விளையாட்டுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் புதுமைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக ECCE உள்ளது. 1.2. முன் மழலையர் பள்ளி (மு. ம. ப) குறிப்பிடத்தக்க அளவிற்கு விரிவாக்குதல் மற்றும் வலுவூட்டுதல்: புதிய பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் வரைவை முன் மழலையர் பள்ளிக்குக் கொண்டு சேர்க்கும் நான்முனை அணுகுமுறை. a. அங்கன்வாடி முறையை உறுதியானதாகவும் வலுவானதாகவும் மாற்றும் கல்வி முறையை உருதிப்படுத்துதல்: ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகா அங்கன்வாடி கட்டமைப்பை உறுதியாக்குதல். குழண்டதிகளின் அரிவுப் பசியைத் தூண்டும் வித்தைகளை அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்றுவித்து, அவர்கள் 3 -6 வயது குழந்தைகளுக்கான விளையாட்டு வழி மற்றும் பல் நிலை பள்ளிச் சாலைகளில் பணியமர்த்த்ப்படுவர். இந்த பயிற்சி பெற்றவர்கள் நாடுமுழுவதும் உள்ள அங்கன்வாடிகளில், அங்கன் வாடிக்கு ஒருவர் என பணீயமர்த்தப்படுவர். முன் மழலையர் பள்ளி பாடத்திட்டத்தின் கற்பித்தல் முறைக்கு ஏற்றவாறு முறையான கற்றல் கருவி ஒவ்வொரு அங்கன்வாடிகளுக்கும் வழங்கப்படும். ஒவொவொரு தாயும், சேயும் எளிதில் பயன்பெறும் வகையில் கூடுதல் அங்கன்வாடிகள் மையங்கள் அமைக்கப்படும். இதன் விளைவாக அங்கன்வசடிகள் , கல்வி, நலவழி மற்ற்ம் சத்தான உணவு பரிமாற்றம் ஒரு ஒருங்கிணைந்த கூடமாக விளங்கும். b. அங்கன்வாடியும், தொடக்கப்பள்ளிகளையும் ஒரே எல்ல்லையில் உருவாக்குதல்: அங்கன்வாடியும் தொடக்கப் பள்ளிகளையும் ஒரே சூழலில் உருவாக்கும்பொழுது பெற்றொர் மற்றும் குழந்தைகளுக்கான பயன்கள் அதிகரிக்கப்படும். இது , அங்கன்வாடிகளின் முழுமையான சேவையையும் , குழந்தைகள் அவர்களுடைய சக மாணவர்களுடனும், உறவு குழந்தைகளூடனும் தொடக்கக் கல்வியை ஒரு இணக்கமான சூழலில் பெற்றிட் உதவும் தொடக்கப் பள்ளிகளுக்கான இடம் தேர்வு செய்யும்பொழுது இந்த ஒருங்கிணைந்த வ்ளாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இது சிறப்பான மாணவர்களை கட்டமைக்க வழிவகை செய்யும். c. அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் ஒரே எல்லையில் எங்கு சாத்தியம்; ஏற்கனவே இயங்கும் தொடக்கப்பள்ளியில் அல்லது புதிதாக துவங்கவுள்ள பள்ளியிலும் இது சாத்தியம். இங்கு கல்வியுடன், சுகாதாரம், சத்துணவு மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு சேவையும் 3 – 6 வயதுக்கு உட்பட்ட மழலைகளுக்கு வழங்கப்படும் 0 – 3 வயதுக்கு உண்டான குழந்தைகளுக்கு உண்டான கல்வியையும், அக்கரையும் அங்கன்வாடி கவனித்துக்கொள்ளும். d. முன் மழலையர் பள்ளிகளை மட்டும் கட்டமைத்தல்:3 – 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இயக்கத்தில் இருக்கும் அங்கன்வாடிகள், தொடக்கநிலைப் பள்ளிகள், சுகாதாரம், சத்து உணவு மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு சேவைகள், குழந்தைகளின் வயது தேவைக்கேற்ப பராமரிக்கப்படும். இந்த நான்கு அணுகுமுறையும், புவியியல் மற்றும் கட்டமைப்பு சாத்தியக்கூறுகளை அறிந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த முயற்சியின் இலக்கு 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தகளை எளிதான , தரமான, இலவச ECCE அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டுசேர்ப்பதே ECCE - யின் சமநிலையை கருத்தில் கொண்டு , இதை சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் கொண்டுசேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். நமது நாட்டின், நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்தியா செய்யக்கூடிய மிகச்சிறந்த முதலீடு என்பது , ஒருவேளை , தரமிக்க தொடக்கநிலைக் குழந்தைமைக் கல்வியில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை அனைவருக்கும் சாத்தியமாக்குவதாகவே இருக்கும். 1.3. மனித வள மேம்பாட்டுத் துறையின் (MHRD) மேற்பார்வையில் மழலையர் கல்வி: மழலையர்கல்வியின் அனைத்து அம்சங்களும் MHRD -யின் கீழ் வருகிறது. இத்துறை அடிப்படைக் கல்வியை குழந்தைகளுக்கு நாடு முழுவதும் உறுதி செய்கிறது . அதோடு, பாடத்திட்டம் மற்றும் கல்வி முன்பருவ மழலையர் நிலை முதல் தொடக்கப் பள்ளி நிலை வரை தொடர்ச்சி அறாமல் இருப்பதை உறுதி செய்கின்றது. மேலும் கல்வியின் அடிப்படையான அம்சங்களின்மீது நாடுதழுவிய கவனம் உரிய அளவில் செலுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது . முன்பருவ மழலையர் கல்வியை, பள்ளிக் கல்வியோடு ஒன்றிணைக்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கவும் , அதை நடைமுறைப்படுத்தவும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவும் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் மகளிர் , குழந்தைகள் நல அமைச்சகம் ( MWCD) , நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் ( MHFW) , மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ( MHRD) ஆகிய துறைகள் இணைந்து ஒரு சிறப்புக் குழு அமைத்து விரிவான செயல்திட்டம் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அங்கன்வாடிகள் MWCD துறையின் கீழ் இயங்குகின்றன. எந்தத் துறையின் கீழ் இயங்கினாலும் புதிய வரைவுக் கொள்கையில் ECCE எனற பாடத்திட்டத்தை MHRD- யின் கீழ்வரும் முன்பருவ மழலையர் மற்றும் அங்கன்வாடிகளில் எப்படிக் கொண்டு சேர்ப்பது, செயல்படுத்துவது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்த முயற்சி MHRD – யின் கீழ் அங்கன்வாடிகளில் முன்பருவ மழலையர் பள்ளியில், தொடக்கப் பள்ளியில் தரமான தொடக்கக் கல்வியை விதைக்கும் என நம்பப்படுகின்றது 1.4. கற்றல் சார்ந்த நட்பார்ந்த சூழலை உருவாக்குதல்: தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மற்றும் முன்பருவ மழலையர் பள்ளிகளில் கல்வி கற்க இணக்கமான சூழல் உருவாக்கும் பொருட்டு உயர்தரமிக்க கட்டமைப்புகள் அமைக்கப்படும். குழந்தைகள் கற்றல் தன்னை ஆதாரமாக கொண்டு அதற்கு உண்டான இடங்களை , நிதி ஒதுக்கீடுகளுக்குள் உறுதி செய்ய உளவியலாளர்கள், முன்பருவ மழலையர் கல்வி நிபுணர்கள், கலைஞர்கள், வடிவமைப்பாளர்களைக் கொண்ட ஒரு குழுவை மாநிலம் தோறும் ஏற்படுத்த வேண்டும். முன்பருவ மழலையர் கல்விக்கு குழந்தைகளை வரவேற்கும் விதமான, அவர்களைத் தூண்டும் விதமான தரமான புறச்சூழல் அவசியமாகும். அனைவரும் பயன்பெறும் வகையில் கட்டமைப்பும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்து தருவது அவசியமாகும். இச்சூழலில் மாணவர்கள் சிறப்பான கல்வியோடு சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் உணர்வார்கள். இம்முறையில் மாணவர்கள் வகுப்பறையில் வெவ்வேறு இருக்கைகளில் உட்கார வழிவகுக்கும். இங்கு கற்றல் கருவிகள் பாதுகாப்பாகவும், மாணவர்களைத் தூண்டும் விதமாகவும், சரியான வளர்ச்சியை கொடுக்கும் விதமாகவும் இருக்கும். இந்த கற்றல் கருவிகள் குறைவான செலவிலும், கற்றல் சூழலைப் பாதிக்காத வகையிலும் அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இங்கு ஆசிரியர் இந்த கற்றல் கருவிகளை மாணவர்களுக்கு ஏற்றவாறு தெரிவு செய்கிறார். இதில் குழந்தைகளும் பங்கேற்கின்றனர். புகைப்பட அட்டை, புதிர்கள், புகைப்பட கதைப் புத்தகங்கள் , பாடல்கள், எளிய இசைக் கருவிகள், எண் கோபுரங்கள் , டோமினோஸ் கார்டுகள், பொம்மைகள், கைவினைப் பொருட்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், சுவரொட்டிகள், வரை கலை, எழுத்துக்களை விவரிக்கும் படங்கள்,சொற்கள், எண்கள், வடிவங்கள், நிறங்கள், இவையெல்லாம் கற்றல் கருவிகளில் சில உதாரணங்கள். இவை மாணவர்களின் கற்றல் தூண்டுதலை வேறுபடுத்தும் வகையில் வகுப்பறையின் சுவற்றில் அவர்களின் பார்வையில் அடையாளப்படுத்த வேண்டும். 1.5. முன்பருவ மழலையர் பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவித்தல்: தகுதி வாய்ந்த ஆசிரியர்களை முன் மழலையர் பள்ளிக்கு தேர்வு செய்து, மாநில அரசு அவர்களின் நிலைக்கேற்ப தொழில் பயிற்சி, மாணவர்களை வழிநடத்தும் நுட்பம் மற்றும் தொழில் கண்டறிதல் போன்றவற்றில் ஆசிரியர்கள் செறிவூட்டப்படுவார்கள். இவர்களுக்கு தொடக்க நிலையிலும், தொடர்ச்சியாகவும் தேவையான பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளும் அமைத்துத் தரப்படும். தற்சமயம், முன்பருவ மழலையர் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் அங்கன்வாடி ஊழியர்களாகவும் இருந்து ICDS –மையங்களில் முன்பள்ளிக்கல்வியைக் கையாள்பவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சியளித்து முன் மழலையர் பள்ளியின் கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துதல். 3 – 6 வயதுக் குழந்தைகளுக்கு நெகிழ்வுத்தன்மையுள்ள , பன்முகத் தன்மை, பன்நிலை, விளையாட்டு வழி மற்றும் செயல்வழிக் கல்வி பெறுவதற்கு உரிய வசதிகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளித்தல். 1.6. ECCE க்கு தேவையான, திறமையான, தரமான கண்காணிக்கும் முறையை நிறுவுதல்: தேசிய ECCE பரிந்துரை 2013ன் அடிப்படையில் திறமையான, தரமான கண்காணிக்கும் முறை நிறுவப்படும். இந்தக் கண்காணிப்புக் குழு அனைத்து முன் பருவ மழலையர் கல்வி தரும் – தனியார்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை உறுதிசெய்யும். 1.7. முன்பருவ மழலையர் கல்விக்குப் பங்குபெறுவோர் தேவையை அதிகரித்தல்: ECCE பங்குதாரர்களான கொள்கை உருவாக்குபவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் தற்போது வழங்கப்படும் கல்வியிலிருந்து ஒரு குழந்தையின் தேவை எப்படி முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்.இதுவே ECCE யின் தேவையை அதிகரிக்க உதவும். பொதுச் சேவை நிறுவனங்கள் வழியே செய்தியைப் பரப்புவது, ஊடகங்கள் வழியே பரப்புரை செய்வது, முன்பருவ மழலையர் பள்ளித் திட்டம் குறித்து பெற்றோரிடம் விவரிப்பது மற்றும் எளிய முறைகளைக் கையாண்டு பரவலாக இந்த ECCE முறையை பெற்றோர்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் பேராதரவைத் திரட்டி, குழந்தைகளுக்கு அனைத்து முக்கியத்துவமும் வழங்குதல். அவர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்தல் வேண்டும். NCERT என்.சி.இ.ஆர் . டி. ஆணையை விரிவாக்கம் செய்து அதில் முன்பருவ மழலையர் கல்விக்கான பாடத்திட்டத்தையும் கற்பித்தல் முறையையும் சேர்த்தல். 1.8. கல்வி உரிமைச் சட்டத்தில் முன்பருவ மழலையர் கல்வியை இணைத்தல்: குழந்தையின் மூளை வளர்ச்சி 3-6 வயது வரையில் முறையான வளர்ச்சி அடைகின்றது. இந்தக் காலத்தில் முறையான கற்றல் வளர்ச்சியை குழந்தைக்கு வழங்க முன்னுரிமை கொடுத்து தற்போது வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாய முன் மழலையர் கல்வியை RTE உடன் ஒருங்கிணையச் செய்தல். இங்கு கட்டாயம் என்பது அரசின் கடமையாக எண்ணி 3-6 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கத் தேவையான அனைத்து வசதிகளையும், கட்டமைப்புகளையும் உறுதி செய்து அவர்களை ECCE சேவைக்குள் கொண்டுவருதல். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு குறிக்கோள்: 2025 ம் ஆண்டிற்குள் ஐந்தாம் வகுப்பு , அதற்கு மேற்பட்ட வகுப்புகளின் மாணவர்கள் ஒவ்வொருவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடைந்திருத்தல். படித்தல், எழுதுதல் மற்றும் எண்களின் அடிப்படை செயல்பாடுகள் செய்யும் திறன் பெறுதல் எதிர்கால பள்ளிக்கல்விக்கும், வாழ்நாள் கற்றலுக்கும் அடிப்படையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும். இருப்பினும் ,தற்சமயம் வெவ்வேறு அரசு மற்றும் அரசு சாரா கணக்கெடுப்புகள் இந்த அடிப்படைத் திறன்களில் நாம் பெறும் கற்றல் நெருக்கடிக்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. தற்போது ஆரம்பக்கல்வியில் பெரும்பகுதியினரானவர்கள் - 5 கோடிக்கும் மேல் - , அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு அதாவது அடிப்படை உரைநடையைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் , இந்திய எண்களில் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகள் செய்தல் ஆகிய திறன்களை அடைந்திருக்கவில்லை. இன்றைய கல்வி முறையில் ஒருமுறை மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் பின்தங்கினால் பின்னர் அவர்கள் ஆண்டுக்கணக்கில் தட்டையான கற்றல் வளைவுகளைப் பராமரிக்கவே முற்படுகின்றனர். எனவே அவர்களால் மேம்பட முடிவதில்லை என பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதில் தகுதி வாய்ந்த மாணவர்களும் கெடுவாய்ப்பான இந்தக் கருந்துளைக்குள் எழுச்சியுற்று மலரமுடியாமல் போகின்றனர். நிறைய மாணவர்களின் பள்ளிக்கு வருகை குறைதல் மற்றும் இடைநிற்றலுக்கு இது முதன்மையான காரணமாக இருக்கிறது. அதே நேரம், பாடத்திட்டத்தை முடித்தல் கட்டாயமாக உள்ள நிலையில் அதிக அளவில் ஆண்டுக்கணக்கில் பின்தங்கிய நிலையிலிருக்கும் மாணவர்களின் மீது கவனம் செலுத்துதலும் ஒரு சேர நிகழ்வது இன்றைய பள்ளிக்கல்வியில் தாங்கள் தற்சமயம் சந்திக்கும் ஒட்டுமொத்த சிக்கலாக ஆசிரியர்கள் விளக்குகின்றனர். அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை அடைவதற்குத் தடையாக எழுந்துள்ள இந்த நெருக்கடியை உடனடியாக அணுக வேண்டியது அவசியமாகிறது. நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனில் அடுத்த சில ஆண்டுகளில் நாடு 10 கோடி மற்றும் அதற்கு மேலான மாணவர்களை கல்வித் திட்டத்தில் இருந்து எழுத்தறிவின்மைக்கு இழக்க நேரிடும் . இவ்வளவு பெரிய நாட்டில் நாடு இதை அனுமதிக்கக் கூடாது கோடிக்கணக்கான மக்களுக்கும் மற்றும் நாட்டிற்கும் இது பெரும் இழப்பாகும் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவை அடைதல் தேசத்தின் உடனடி நோக்கமாகும். மாணவர்களின் எதிர்கால கற்றலுக்கு அடிப்படையான இந்த முக்கிய இலக்கு மற்றும் நோக்கத்தினை அடைய மாணவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர் , சமூகம் உள்ளிட்ட அனைவரது ஆதரவும் மற்றும் ஊக்கமும் அவசியம். கற்றல் நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் என்ன ?துவக்க வகுப்புகளில் பெரும்பாலான மாணவர்கள் பின்தங்கி விடுகின்றனர் குறிப்பாக முதல் வகுப்பின் முதல் சில வாரங்களிலேயே அவர்கள் பின்தங்கி விடுகின்றனர். தற்போதைய கற்றல் நெருக்கடிக்கு முக்கியக்காரணம் , பள்ளிக்கு ஆயத்தமாதல் குறைதல் ; அதாவது ஆரம்ப வகுப்புகளுக்கு ஈடுகொடுக்க , முன்பருவ மழலைக் கல்வியின் பின்னணி (முன் எழுத்தறிவும முன் எண்ணறிவும் இதில்அடங்கும் ) . இந்த சிக்கலால் இதற்கு முன் முன்பருவ மழலையர் கல்வி பெறா முதல் தலைமுறைக் கற்போர் மற்றும் குழந்தைகள் தீவிரமாகப் பாதிக்கப்படுகின்றனர். அது மேலும் பெரும் எண்ணிக்கையிலான வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகளை பாதிக்கிறது. ஆரம்ப ஆண்டுகளில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் பொதுவாக வாசித்தல் , எழுதுதல் , மொழியைப் பேசுதல் , கணித சிந்தனை மற்றும் சிந்தித்தல் மிகக் குறைந்த அளவில் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையில் ஆரம்ப வகுப்புகளில் பாடத்திட்டம் அடிப்படைத் திறன்களுக்கு முக்கியத்துவம் தராமல் மனப்பாடக் கற்றல் மற்றும் இயந்திரத்தனமான பாடத் திறன்களை நோக்கி நகர்கிறது. நியமம் இப்படியாக இருக்க வேண்டும் :வாசித்தல், எழுதுதல், பேசுதல் ,எண்ணுதல், எண்கணிதம் ,தருக்க முறையில் யோசித்தல் ,சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், ஆக்கபூர்வமாக இருத்தல் போன்றவற்றில் திடமானஅடிப்படை அமைத்து எதிர்கால வாழ்நாள் கற்றலுக்கு எளிமையானதாக வேகமானதாக விரும்பக்கூடியதாக தனி கவனம் செலுத்துவதாக பாடத்திட்டமும் கற்றல் கற்பித்தல் முறைகளும் ஆரம்ப வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட வேண்டும் என்ற நியமத்தை கருத்தில் கொள்ள வேண்டும் Ecce ஆய்வின்படி( பார்க்கP1.5) ஆரம்ப வகுப்புகளில் குறிப்பாக வகுப்பு 1 மற்றும் இரண்டிற்கு விளையாட்டு வழி குழந்தை மைய கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது வெகு குறைவாக இருப்பது அடிப்படை திறன்களை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்ப ஆண்டுகளில் குழந்தைகள் இயற்கையாகவே வெவ்வேறு கற்றல் நிலையில் இருப்பார்கள் ஆனால் இன்றைய கல்வி முறை துவக்கத்திலேயே ஒரு பொதுவான நிலையை மற்றும் வேகத்தை அனைவருக்கும் முடிவு செய்கிறது இது உடனடியாக பல மாணவர்கள் பின் தங்குவதற்கு காரணமாக அமைகிறது இந்த நெருக்கடிக்கு மேலும் ஒரு காரணியாக ஆசிரியர் நிரவல் அமைந்துள்ளது ஆசிரியர் பணி நிரவல் சில நேரங்களில் விளையாட்டு வழி பன்நிலை கற்றல் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு அதிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதிகளில் ptr 30:1 என்ற அளவை மீறும் போது பெரும் தடையாக அமைகிறது. ஆசிரியர் உள்ளூர் பகுதியை சேர்ந்தவராக இல்லாதபொழுது ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான மொழித் தடை மாணவர்கள் பின் தங்குவதற்கு மற்றுமோர் அம்சமாகும் . குழந்தைகள் பாடம் நடத்தப்படும் மொழியைப் புரிந்து கொள்வதற்குப் போராடும்போது அம்மொழியில் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதற்கு சிரமப் படுவதால் அவர்களுடைய கவனம் பலவீனமடைகிறது. மாணவர்களுக்கு அவர்களுக்கு வசதியான மொழியில் கற்பிக்கப்படும் பொழுது அவர்கள் கற்றல் மேம்படுவது நிறுவப்பட்டுள்ளது இந்த கற்றல் நெருக்கடிக்கு மற்றுமொரு முக்கிய காரணியாக குழந்தைகளின் சுகாதாரம் –நலவாழ்வு ,மற்றும் சத்துணவு கவனிக்கப்படாமல் உள்ளது. அதுவும் ஆரம்ப வகுப்புகளில் சத்துணவு முக்கியப் பங்கு வகிப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நம்முடைய பெரும்பாலான குழந்தைகள் போதுமான சத்துணவு (அளவிலும் , தரத்திலும் ) கிடைக்கப்பெறாமல் இருக்கிறார்கள் . பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு பெரும்பாலான குழந்தைகளைப் போதுமான அளவு பள்ளியில் கவனம் செலுத்தாமல் தடை செய்கிறது. பல குழந்தைகளுக்குப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு அவர்களுடைய ஒரே உணவாக அமைகிறது. இந்த நெருக்கடியை சரி செய்ய உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? ECCE _ குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியமானதும் , ஆரம்ப வகுப்புகளுக்கு ஆயத்தப்படுத்தலை உறுதிப்படுத்தவும் மிக முக்கிய அணுகுமுறை ஆகும். நாடெங்கிலும் ECCE நிறுவப்படும்போது( இயல் 1 ல் விவரித்தபடி) வருங்கால மாணவர்களுக்கு பள்ளிக்கு ஆயத்தமாதல் மற்றும் ஆரம்ப வகுப்பு குழந்தைகளின் பின் தங்குதல் பெருமளவில் குறையும். எனினும் ஏற்கனவே ஆரம்ப வகுப்புகளில் இந்த கற்றல் நெருக்கடியில் இருக்கும் மாணவர்களும் இந்த தேசிய அளவிலான அர்ப்பணிப்புடன் கூடிய குறைதீர் நடவடிக்கைகள் மூலம் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் கற்றலைக் கைக்கொள்ள வைப்பதும் மிகவும் அவசியமானதாகும். தீவிரமும் ஆழமும் நிறைந்த இப்பிரச்சினையின் பரிமாணம் காரணமாக ஆசிரியர்களை மட்டும் தனியாக இப்பிரச்சினையை அணுகச் சொல்ல முடியாது சமூகத்தை உள்ளடக்கிய தேசிய அளவிலான முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவைப் படுகிறது. இதில் மாணவர்கள் தங்களையே முதன்மை வளமாகப் பார்த்துக் கொள்ளலாம் உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் சக மாணவர்கள் கற்றலானது கற்பவருக்கு மட்டுமல்லாது கற்பிப்பவருக்கும் சிறந்த அணுகுமுறையாக உள்ளது. பண்டைய குருகுல முறைப்படி மூத்த மாணவர்களிடமிருந்து சகமாணவர்கள் கற்பது வெற்றியைத் தந்திருக்கிறது. அறிவை அள்ள அள்ள குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப கற்றல் வெளிப்பாடுகளை மேம்படுத்த வெறும் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக்கு மட்டுமல்லாது அனைத்து பாடங்களுக்கும் சக மாணவர் கற்பித்தலை முறைப்படுத்தலாம். உள்ளூர் சமூகத்திடமிருந்து மேலும் உதவி வர வேண்டும் .ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி கற்பித்தலில் ஆர்வமுள்ள உள்ளூரில் உள்ள படித்தவர்கள் குறைதீர் வகுப்புகள் எடுப்பதன் மூலமும் குழந்தைகளின் நிலைக்கேற்ப குழுவாக படிப்பதன் மூலமும் பள்ளி நேரத்திலோ அல்லது பள்ளி முடிந்த பின்பு சிறப்பு வகுப்புகள் எடுப்பதன் மூலமும் இந்த கற்றல் நெருக்கடிக்கு உதவலாம் .இந்த உள்ளூர் உறுப்பினர்கள் குறிப்பாக ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான மொழித் தடையை ஈடுசெய்ய முடியும் .இந்த உள்ளூர் குறைதீர் கற்பிப்போர் உண்மையில் உள்ளூர் கதாநாயகர்கள் .பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த இவர்கள் பெண்கள் மற்றும் தாய்மார்களாக இருப்பது நல்லது. பள்ளிக் கல்வி அமைப்பின் இந்தப் பெரிய அளவிலான முனைப்பு இயக்கத்தில் ஈடுபட ஏற்ற வகையில் தன்னார்வலர்களுக்கு இது எளிமையானதாக இருக்க வேண்டும் .தகுதி வாய்ந்த உள்ளூர் உறுப்பினர்கள் இந்த குறைதீர் கற்பித்தல் மற்றும் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற பணியில் ஈடுபட ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவின் உள்ளீடுகளை கற்பிக்கும் , தன் சமூகத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்யும் நோக்கமுள்ள தன்னார்வலர்கள் வரவேற்கப்படவேண்டும். ஒவ்வொரு படித்தவரும் தன் சமூகத்தில் உள்ள ஒருமாணவனுக்கோ அல்லது ஒரு நபருக்கோ எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுப்பதன்மூலம் வெகுவிரைவில் நாட்டின் நிலவெளியையே மாற்றியமைக்கும்; அதோடு இந்த முனைப்ப்பு இயக்கம் மிக அதிக அளவு உற்சாகப்படுத்தப்படும் என்பதுடன் ஆதரவளிக்கவும் படும் . உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதன் மூலம் பின்தங்கிய பகுதிகளிலும் , ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் அதிகமுள்ள பகுதிகளிலும், எழுத்தறிவின்மை அதிகமாகக் காணப்படும் பகுதிகளிலும் ஆசிரியர் பணிக்காலியிடங்கள் விரைவாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும் விளையாட்டு வழிக் கல்வி மற்றும் பல்வகை கற்றலில் முதல் 2 வகுப்புகளுக்கு தற்போதைய மற்றும் எதிர்கால ஆசிரியர்கள் ECCE யின் பொருத்தமான அம்சங்களில் பயிற்றுவிக்கப் படுவர்.எனவே பல்வேறு கற்றல் நிலைகளில் உள்ள மாணவர்கள் , தமது கற்றலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் திறனைப் பெற முடியும் . பாடத்திட்டத்தில் அடிப்படை எண்ணறிவிலும் எழுத்தறிவிலும் அதிகரித்த கவனத்தைக் குவிப்பது மிகத்தீவிர முக்கியத்துவத்தைப் பெறும் .பொதுவாக , படித்தல் , எழுதுதல் , பேசுதல் , எண்ணுதல் , எண் கணிதம் , கணித சிந்தனை ஆகியவற்றில் ஆரம்பக் கல்விகாலம் முழுவதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் ஆண்டு முழுவதற்கும் முறையான செயல்பாடுகள் ; அன்றாடம் குறிப்பிட்ட மணி நேரங்கள் இந்தப் பாடங்களை உள்ளடக்கிய செயல்பாடுகளின் மூலமாக மாணவர்களை மேற்கண்ட பாடப்பகுதிகளில் ஆர்வமூட்ட முடியும் இறுதியாக குழந்தைகளின் மன வளர்ச்சியை உள்ளடக்கிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்த ஆரோக்கியமான உணவு வழங்குதல் ; ஆலோசகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களைப் பள்ளிக்கல்வியில் ஈடுபடுத்தி வறுமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும்.ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவுக்குப் பிறகு பாடங்களை உள்வாங்கும் திறன் அதிகம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன எனவே மதிய உணவோடு சத்தான காலை உணவும் வழங்கப்படலாம். இந்த தேசிய முனைப்பு இயக்கத்திற்காக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்அறிவை விரைவாக அடைவதற்கு அனைத்து நிலை மாணவர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சில முக்கிய மற்றும் உடனடி செயல்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். 2.1. மதிய உணவுத் திட்ட விரிவாக்கம்: ஊட்டச்சத்துமிக்க காலை உணவு (பால் மற்றும் வாழைப்பழம் போன்றவை)மற்றும் மதிய உணவு முன்பருவ மழலைகள் மற்றும் ஆரம்பக் கல்வி குழந்தைகளுக்கு வழங்கப்படும். குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இந்த காலை உணவு மற்றும் மாலை உணவு அவர்களின் கற்றலுக்கு உதவும். தரமான உணவை உறுதிப்படுத்தும் வகையில் காலை மற்றும் மதிய உணவிற்கான செலவினங்கள் , உணவுச் செலவு மற்றும் பணவீக்கத்துடன் இணைக்கப்படும். நாம் மிகத்தீவிரமான கற்றல் சிக்கலில் சிக்கியுள்ளோம் : தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் மிகப்பெரும் எண்ணிக்கையினர் அடிப்படை எழுத்தறிவு , எண்ணறிவுத் திறன்களில் தேர்ச்சியடையவில்லை . 2.2. பள்ளியில் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவில் கவனம் செலுத்துதல்: அடிப்படை எண் அறிவு மற்றும் எழுத்தறிவில் கவனம் செலுத்தவும் மாணவர்களின் வாசித்தல் மற்றும் கணிதத்தில் விருப்பத்தை உண்டாக்க பள்ளி மற்றும் வகுப்பறைப் பாடத்திட்டம் 1 மற்றும் 5 வகுப்பு வரை மறுவடிவமைப்பு செய்யப்படும்.. 1, 2, 3 –ஆம் வகுப்புகளுக்கு கணிதம் - வாசித்தல் ஆகிய திறன்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட பாடவேளைகளும் ,4 , 5 –ஆம் வகுப்புகளுக்கு கூடுதல் நேரம் எழுதுதலுக்கும் ஒதுக்கி கவனம் செலுத்தப்படும் . காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவிற்கு இடைப்பட்ட நேரம் இந்தப் பாடங்களுக்கான மிக செயற்திறன் வாய்ந்த நேரமாகும் ஆண்டு முழுவதும் மாணவர்கள் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களில் பங்கேற்க மொழி வாரம் மற்றும் கணித வாரம் மூலம் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும் குழந்தைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்த மொழி விழா மற்றும் கணித விழாக்களைத் தொடர்ச்சியாக பெற்றோர் , ஆசிரியர், சமூகம், அருகமைப் பள்ளிகள் ஆகியவற்றை ஈடுபடுத்தி நடத்துதல் எழுத்தாளர்கள் மற்றும் கணித மேதைகளின் பிறந்த நாளைக் கொண்டாடுதல் மொழி மற்றும் கணிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் செயல்பாடுகளை வடிவமைத்தல் மற்றும் வாரந்தோறும் மொழி மற்றும் கணிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளி கூட்டங்களை நடத்தலாம் வார செயல்பாடுகளாக நூலகப் பயன்பாடு சார்ந்த கதை சொல்லுதல் , நாடகம் நடித்தல் , குழுவாகக் கற்றல் , எழுதுதல் , மாணவர்களின் எழுத்துத் திறனையும் , கலைகளின் வடிவங்களைத் தாமே காட்சிப்படுத்தும் திறனையும் வெளிப்படுத்துதல் போன்றவற்றை நிகழ்த்தலாம் . வாரந்தோறும் புதிர்களுக்குத் தீர்வு காணுதல் அமர்வுகளின் மூலம் கணித சிந்தனையையும் தர்க்கத்திறனையும் இயல்பாகக்கற்பிக்கும் முயற்சிகள் . வகுப்பறை கணிதத்தை வாழ்க்கையோடு இணைக்கும் தொடர் செயல்பாடுகளை வடிவமைத்தல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் நாடு பத்து கோடிக்கும் அதிகமான மாணவர்களை கல்வித் திட்டத்தில் இருந்து எழுத்தறிவின்மை நிலைக்கு இழக்க நேரிடும் 2.3. மொழி மற்றும் கணிதத்திற்கு பயிற்சி நூல்கள்: 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாடநூலுடன் மொழி மற்றும் கணிதத்திற்கு பயிற்சி நூல் வழங்கப்பட வேண்டும் குழந்தை தன் சொந்த வேகத்தில் பயிலும் வகையில் , வயதிற்கும் வகுப்புக்கும் ஏற்ற , படைப்பூக்கம் மிக்க , ஈடுபடுத்தும் திறன்கள் மிக்க ஆக்கப்பூர்வமான வாய்ப்புகள் பயிற்சி புத்தகத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் இது பாட நூலுக்கு துணையாக பல்வேறு பயிற்சிகள் , எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், உதவி செய்யவும் தேவையான அளவு பயிற்சிகளுடன் இருக்கும் . ஒவ்வொரு குழந்தைக்கும் அதனால் என்ன செய்ய முடியும் என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளவும் அதன் மூலம் தனித்தனிக் கவனம் செலுத்தவும் உதவும் வகையில் இந்த பயிற்சி நூலில் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்குமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடைவது உடனடி தேசிய குறிக்கோளாகவும் மற்றும் பாடத்திட்டத்தின் தவிர்க்க முடியாத, பேச்சுவார்த்தைக்கு உட்படாத பகுதியாக அணிசெய்வது கட்டாயம். 2.4. மொழி மற்றும் கணித வள ஆதாரங்களின் தேசிய களஞ்சியம்: தேசிய ஆசிரியர்களின் வலைத்தளம்(DIKSHA) அடிப்படையான மொழி மற்றும் எண்ணறிவுக்கு பிரத்யேகமான உயர்தர வள ஆதாரங்களுடன் கூடிய ஒரு பிரிவைக் கொண்டிருக்கும். நாடு முழுவதிலும் இருந்து தொகுக்கப்படும் இத்தகைய வள ஆதாரங்கள், குறிப்பாக கீழே தொடுக்கப்பட்டுள்ள இரு முயற்சிகளுக்கு உதவிடும். 2.5. தேசிய போதகர்கள் திட்டம்: உதவி தேவைப்படும் சகமாணவர்களுக்கு(பொதுவாக இளையவர்கள்) உதவும் வகையில் பள்ளிநாட்களில் வாரத்திற்கு ஐந்து மணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் சிறந்த செயல் திறனாளர்களை போதகர்களாக இச்செயல்திட்டத்திற்கு அழைக்கப்பட்டு தேசிய போதகர்கள் காரியத்திட்டம் உருவாக்கப்படும். ஒரு சக போதகராக தெரிவு செய்யப்படுவது என்பது ஒரு கௌரவமான நிலையாக கருதப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் சேவை புரிந்த மணிநேரங்களைக் குறிக்கும் வகையில் மாநில அரசிடம் இருந்து ஒரு சான்றிதழ் வழங்கப்படும். 2.6. தீர்வுகள் வழிகாட்டல் பயிற்றுனர் திட்டம்: தீர்வுகளுக்கு வழிகாட்டும் பயிற்றுனர் திட்டம், ஆரம்பத்தில் ஒரு பத்து வருட தற்காலிகத் திட்டமாக பயிற்றுவிப்பாளர்களை வருவிக்க- குறிப்பாக உள்ளுர் சமுக பெண்களைக்கொண்டு – படிப்பில் பின்தங்கிய மாணவர்களை சக மாணவர்களோடு முறையாக ஒன்றுசேர்க்க உதவும் வண்ணம் உருவாக்கப்படும். இந்த வழிகாட்டல் பயிற்றுனர் பள்ளி நேரத்திலும் , பள்ளி நேரத்திற்குப் பிறகும் , கோடை நாட்களிலும் படிப்பில் மிகவும் பின்தங்கிய மற்றும் பயிற்றுனர்களின் தலையீடின்றிக் கற்க இயலாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்வர்; சாத்தியமெனில் இம்மாணவர்களின் கற்கும் நிலை மற்றும் வேகத்திற்கு ஏற்ப குழுக்களாக சேர்க்கப்படுவர். இவ் வழிகாட்டல் பயிற்றுனர்களே உண்மையான உள்ளூர் கதாநாயகர்கள்- வேறு வழியின்றி இடை நிற்ககூடிய, கலந்துகொள்ளாத, ஈடுபாடு காட்டாத மாணவர்களை மீண்டும் அழைத்துவருபவர்கள் இவர்களே. உள்ளுர் சமூகத்தில் 12-ஆம் வகுப்பபு முடித்தவர்கள் (அல்லது அவர்கள் பகுதி பள்ளியில் கிடைக்கும் அதிகபட்ச பள்ளிக்கல்வியை முடித்தவர்கள்) மற்றும் பள்ளிகளில் சிறந்து விளங்கும் செயல்திறனாளர்களிடமிருந்து வழிகாட்டி பயிற்றுனர்கள் வருவிக்கப்படுவார்கள். குறிப்பாக உள்ளுர் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகத்திலிருந்து இவ் வழிகாட்டல் பயிற்றுனரகள் வருவிக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம் பல்வேறுபட்ட உள்ளுர் முன்மாதிரி வழிகாட்டி பயிற்றுனர்கள் உறுதி செய்யப்படுவார்கள். அதிகப்படியான பெண்களை வழிகாட்டி பயிற்றுனர்களாக உறுதிசெய்வதன் மூலம் உள்ளுர் சமூகப் பெண்களின் முன்னேற்றம் மற்றும் கல்வி அமைப்பில் அதிகப்படியான பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இடங்கொடுக்க முடியும். இது பள்ளிக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பெண் குழந்தைகளைத் தக்கவைக்க பெரு உதவியாக இருக்கும். இந்நிலைகளுக்கான பயிற்சி குறிப்பாக அடிப்படை இலக்கணம் மற்றும் எண்ணியல் கற்பித்தலில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும். வழிகாட்டி பயிற்றுனர்கள் B.Ed முடித்து ஆசிரியராக முடிவெடுத்தால், வேலைவாய்ப்பில் அவர்கள் வழிகாட்டி பயிற்றுனராக செய்த சேவைக்கு தகுந்த நன்மதிப்பு வழங்கப்படும். அங்கன்வாடி மற்றும் முன்பருவ மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர்களாகப் பயிற்சிபெறுவதற்கு இந்த வழிகாட்டி பயிற்றுனர்கள் அற்புதமான மனுதாரர்கள் ஆவர். இந்த நற்றொடக்கத்தின் விளைவுகளைத் தீர்மானிக்கும் இரு முக்கிய காரணிகளே வழிகாட்டி பயிற்றுனர்களைத் தேர்வு செய்வதில் தனிச்சலுகைகள் இன்றி தகுதியை கொண்டு தேர்வு செய்வதையும் அவர்களுக்கு குழந்தைகளுடன் இணைந்து செயல்புரியத் தேவையான பணிப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்கின்றன . 2.7. பெருந்திரள் சமூகம் மற்றும் தன்னார்வலர்களின் ஈடுபாட்டை ஊக்குவித்தல்: தகுதியுடைய தன்னார்வலர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள், அருகமைப் பள்ளிகளில் இருந்து மிக சிறந்த மாணவர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து சமூக உணர்வும் ஈடுபாடும் உள்ள கல்லூரி பட்டதாரிகள் போன்றோர்) NTP மற்றும் RIAP யில் சேர்ந்து கல்வியாண்டிலும், கோடையிலும் ஊதியமின்றிப் பணியாற்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவைபுரிந்திட பெருமளவில் வருவிக்கப்படுவார்கள். இவ்வாறு NTP மற்றும் RIAP திட்டங்களில் ஒவ்வொன்றும் இரு முறைமைகளைக் கொண்டிருக்கும்: வழக்கமான முறை (சக போதகர்கள் மற்றும் உள்ளூர் சமுகத்திலிருந்து சம்பளம் பெரும் IA-களைக் கொண்டது) மற்றும் தன்னார்வலர்கள்; இந்தத் திட்டங்களின் நன்மைக்காக இவ்விரு முறைகளும் பெரிதும் ஊக்குவிக்கப்படும். தன்னார்வலர்களுக்கு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ(GOI) அவர்கள் போதகர்களாக அல்லது AI -களாகச் சேவையாற்றிய மணிநேரங்களைச் சுட்டிக்காட்டும் வகையிலும் மாநிலம் மற்றும் நாட்டிற்காக ஆற்றிய விலைமதிப்பற்ற சேவையை கௌரவிக்கும் வகையிலும் சான்றிதழ் வழங்கப்படும். 2.8. NTP மற்றும் RIAP திட்டங்களின் மேலாண்மை: வகுப்பில் உள்ள மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பிடுவது மற்றும் மாணவர்களுள் சிறந்த போதகர்களைக் கண்டறிவதுடன், NTP போதகர்கள் மற்றும் RIAP மாற்று வகுப்புகளில் இருந்து பயணடைந்த மாணவர்களைக் கண்டறிவது ஆசிரியர்களின் பொறுப்பாக இருக்கும். இவ்விரு NTP மற்றும் RIAP திட்டங்களுக்கான IA க்களை வேலைக்கு அமர்த்தவும் ஆர்வமுள்ள தன்னார்வலர்களைக் கருத்தில் கொள்ளவும் பள்ளி முதல்வருடன் ஆசிரியர்களும் இணைந்து பணிபுரிவர். ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் சராசரி வகுப்பு நிலை அடைவை முன் கூட்டியே உறுதிப்படுத்தவும் ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் IAக்களுடன் தொடர்ந்து பணிபுரிவதுடன் கையாளவும் செய்வர். 2.9. முறையான தகவமைப்பு மதிப்பீடு: ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்தை முறையாக மதிப்பீடு செய்யவும் மற்றும் ஒவ்வொரு மாணவனும் தொடர் கற்றல் படிநிலையில் எந்நிலையில் உள்ளான் என்பதை ஆசிரியர்கள் கண்டறிய உதவவும் இதன்மூலம் துல்லியமான பின்னூட்டம் மற்றும் மாணவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த கற்றல் திட்டங்களை அளிக்கவும் வலுவான தகவமைப்பு மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். தகவமைப்பு மதிப்பிடுதல் தேர்வுக்காக பொருளுணரா மனப்பாடம் செய்தலின் முக்கியத்துவத்தைக் குறைக்க உதவும் கணினி அடிப்படையிலான தகவமைப்பு மதிப்பீடு பள்ளியில் உள்ள கணினிகள் அல்லது கைக்கணினிகள் மூலமாக 2023 ஆம் ஆண்டிற்குள் முதலில் மேநிலைப் பள்ளிகளில் அமுல்படுத்தப்பட்டு பின்னர் அனைத்துப் பள்ளிகளிலும் கிடைக்கும் வகையிலும் ஒவ்வொரு பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் விரிவாக்கப்படலாம். 2.10. ஆசிரியர்களுக்கான உபகரணங்களாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்: ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கிடைக்கச்செய்வதுடன் கணினிகள், கைக்கணினிகள், ஸ்மார்ட்போன்களுக்குப் பொருத்தமான மென்பொருள் பரவலாகக் கிடைக்க வகை செய்யப்படும். இத்தகைய தொழில்நுட்பங்களைக்கொண்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கைக்கணினிகளில் பல்வேறு பிராந்திய மொழிகளில் இலக்கணம், எண்ணியல் மற்றும் பாடத்திட்டத்தை செயலிகள் (ஆப்ஸ்) மற்றும் விளையாட்டுகள் மூலம் கற்பிப்பதோடு தகவமைப்பு மதிப்பீடுகள் மற்றும் பிற தனிப்பட்ட கற்றல்களையும் முன்னெடுக்கச் செய்யும். இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களுக்கும் , மானவர்களுக்கும் கற்றலில் உதவியாக இருக்குமேயன்றி ஆசிரியர்களுக்கு மாற்றாக அமையாது. 2.11. I வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு தயார் படுத்தும் கட்டகம்: பெரும்பாலான I வகுப்பு மாணவர்களுக்கு முதல் இரு மாதங்களுக்குள்ளேயே பள்ளிக்கு வர ஆர்வம் குன்றுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே , 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அனத்து I வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று மாத கால “பள்ளிக்கு தயார் படுத்தும் கட்டகம்” வழங்கப்படுவதன் மூலம் மாணவர்கள் கற்றலுக்குத் தயாராவதை மற்றும் வழக்கமான I வகுப்பு பாடத்திட்டத்தினை துவங்க தேவைப்படும் முன்னறிவைப் பெறுவதை உறுதிப்படுத்த உதவும். பள்ளிக்கு தயார் படுத்தும் கட்டகத்திற்காக NCERT உருவாக்கும் கலைத்திட்டம் கட்டமைப்பு, பாடத்திட்டம் மற்றும் கற்பிக்கும் உத்தி ஆகியவற்றை அனைத்து I வகுப்பு ஆசிரியர்களுக்கு வினியோகிப்பதுடன் I வகுப்பு கலைத்திட்ட கட்டமைப்பு மற்றும் பணிப்புத்தகங்கள் மற்றும் பிற கற்றல் உபகரணங்களுடன் ஒன்றாக இணைக்கப்படும். இந்த கட்டக பயிற்சியின் போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஒத்துணர்வாற்றல் மற்றும் உதவும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்துக்கொள்வர். இது அனைத்து ஆரம்பக் கல்வி கற்பவர்களுக்கும் செறிவான அடித்தளம் அமைத்துத்தருவதுடன், உற்சாகம் மற்றும் தோழமையுணர்வை வளர்த்துக்கொள்வதையும் உறுதி செய்யும். இக் கட்டகம் எழுத்துகள், வார்த்தைகள், வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் எண்களை விளையாட்டு மூலம் கொடுப்பதில் கவனம் செலுத்துவதுடன் பெற்றோரை ஈடுபடுத்தி பெற்றோர்களுடன் சேர்ந்து செய்யக்கூடிய பணித்தாள் மற்றும் ஊடாடும் செயல்திட்டங்களை வீட்டுக்கு கொடுத்தனுப்புவதன் மூலம் தங்கள் குழந்தைகளின் பள்ளி வேலைகளில் பெற்றோரை ஈடுபடுத்த உதவும். மாணவர்களிடையே உயர்தர சக மாணவர்கள் மூலம் கற்பிப்பதனை செயல்படுத்துவதற்கு மதிப்புமிக்க தேசிய போதகர்கள் காரியத்திட்டம் நாடு முழுவதும் நிறுவப்படும். 2.12. பெற்றோர் பங்களிப்பின் முக்கியத்துவம்: வீட்டுச் சூழல் குழந்தைகளின் கல்வி கற்றல் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெற்றோருடன் இணைந்து செயல்புரிவது , பெற்றோரின் படிப்பறிவு, எண்ணறிவு அல்லது கல்வியறிவு ஆகியவற்றைக் கடந்து கற்றல் மேம்பாட்டில் ஒரு முக்கிய காரணியாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுடன் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது இரண்டு முறை சந்திப்பதற்கும், மேலும் அவர்கள் அடிக்கடி சந்திக்க விரும்பினால் அல்லது தேவைப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கற்றலை கண்காணிக்க, ஊக்குவிக்க , மேம்படுத்த உதவ வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து செய்யக்கூடிய பணித்தாள், செயல் திட்டம் அல்லது வீட்டுப்பாடம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் பள்ளிப்பாடம், கற்றல் மற்றும் முன்னேற்றத்தில் பெற்றோர்களை மேலும் ஈடுபடுத்த முடியும். 2.13. முன் பணி மற்றும் பணியின் பொழுதான ஆசிரியர் கல்வி மற்றும் மேம்பாடு, பள்ளிக்கு தயார் படுத்தும் கட்டகம், ECCE மற்றும் பலவகை செயல்பாடு சார்ந்த கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கும்; இந்த வலியுறுத்தல் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். அனைத்து மட்டங்களிலுமான ஆசிரியர் கல்வி மற்றும் மேம்பாடு ; கூடுதலாக உரையாடி பொருளுணர்ந்து கற்கும் வகுப்பறைகள், தகவமைப்பு மற்றும் உருவாக்க மதிப்பீடு ஆகியவற்றிற்கு உள்ளடக்கிய உத்திகளைக் கொண்டிருப்பதுடன் போதகர்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல், வழிகாட்டி பயிற்றுனர்கள் மற்றும் தொழில்நுட்பத்தை முறையே பயன்படுத்தி மாணவர்களின் தனிப்பட்ட கற்றலை உகந்ததாக ஆக்குவதற்கு ஆவன செய்யும். அனைத்து I வகுப்பு ஆசிரியர்களுக்கும் மூன்று மாத கால “பள்ளிக்கு தயார்படுத்தும் கட்டகத்தை” ஒருங்கிணைப்பதற்காக 5 நாள் திறன் மேம்பாட்டுப் பணிமனைப் பயிற்சி வழங்கப்படும். வாசித்தல் மற்றும் தொடர்புகொள்ளும் கலாச்சாரத்தைக் கட்டமைக்க பொது மற்றும் பள்ளி நூலகங்களை விரிவாக்குதல். வாசித்தல் கலாச்சாரத்தை உருவாக்க குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளூர் மற்றும் மாநில மொழிகளில் புத்தகங்கள் கொண்ட பொது மற்றும் பள்ளி நூலகங்கள் நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்படும் . மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்ல ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளூர் மொழிகளில் புத்தகங்களை பள்ளிகளும் பள்ளி வளாகங்களும் கொண்டிருக்கும். 2.14. ஒவ்வொரு பள்ளியிலும் முறையான ஆசிரியர் நிரவல் ஆசிரியர் நிலை மற்றும் மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 க்கும் கீழ் இருப்பதை உறுதி செய்தல்: வலுவான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நடவடிக்கைகளுக்கு PTR விகிதம் 30:1 க்கு குறைவானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கிளஸ்டர் மட்டுமல்லாமல் வட்டார அளவிலும் PTR உறுதி செய்ய உடனடியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதை உறுதி செய்ய வேண்டும்;.மொழிப் பாகுபாட்டை சமன் செய்ய உள்ளூர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.வகுப்பறையில் முறையான PTRஉறுதிசெய்யப்பட ஆசிரியர் வருகை அவசியம்.; அலுவலகப் பணிகள் மற்றும் இதர பணிகளில் இருந்து தவிர்த்து 100 சதவீத ஆசிரியர் வருகையை அடைவது ஆசிரியர்கள் மாணவர்களுடன் பெரும்பான்மையான வேலை நேரத்தை செலவிடுவதற்கு ஏதுவாக அமையும். மாணவர்களின் கற்றல் முயற்சிகளுக்கு உதவும்பொருட்டு , கல்வித்தகுதி வாய்ந்த சமூக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குறைதீர் கற்பித்தல் கருவிகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் . 2.15. மாணவர்களின் வாசித்தலை வளர்க்கவும் அவர்களுடைய தொடர்பு கொள்ளும் திறனை வளர்க்கவும் மாணவர்கள் புத்தகங்களை வாசித்து அவர்கள் வாசித்த கதைகள் மற்றும் புத்தகங்களின் சுருக்கங்களைத் தங்களுடைய சொந்த எண்ணங்களின் வழி வாய்மொழியாக வகுப்பின் மற்ற மாணவர்களின் முன் வழங்கலாம் . மாணவர்கள் அதிக மொழிகளைக் கற்றுக் கொள்வதால் இந்த வாசித்தல் மற்றும் முன்மொழிவுகளை பின்னர் கூடுதல் மொழிகளிலும் மேற்கொள்ளலாம். 2.16. சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்கு: குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமுதாய உறுப்பினர்கள் ஆகியவர்களுடன் இணைந்து பள்ளியில் தக்க வைத்தலை உறுதி செய்யவும் குழந்தைகளின் மன நலத்திற்காகவும் சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்களை பள்ளி வளாகங்களில்( பார்க்க p3.8) அமர்த்திக் கொள்ளலாம். 2.17. உள்ளூர் சமூக மற்றும் தன்னார்வலர்களை அணி திரட்டுதல்: கற்றல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த அவசர தேசிய நோக்கத்தைப் பற்றியும் சமூக மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதால் ஏற்படும் வாய்ப்புகள் பற்றியும் ஆசிரியர்கள் , பெற்றோர், மாணவர்கள், சமூக உறுப்பினர்கள் , பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.. ஆர்வமுள்ள குடிமக்களின் ஈடுபாட்டை அதிகப் படுத்த பெருமளவிலான பொது சேவை அறிவிப்புகள் ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் அவர்களின் சமூகத்திற்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை முதன்மைப் படுத்துதல் ; முதன்மைப் படுத்துவதன் மூலமாக நாடெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள குடி மக்களை அதிகபட்சமாக ஈடுபடுத்துதல் NTP மற்றும் RIAP திட்டங்களுக்கான சமூக உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பணியமர்த்த உதவும். இறுதியாக கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு குடிமகனும் ஒரு குழந்தைக்காவது( அல்லது வயது வந்தோர்) கற்பித்தல் ஊக்கப்படுத்தப்படும் வாய்ப்புகள் வழங்கப்படும் ; ஆதரவு அளிக்கப்படும்.( பார்க்க இயல்21) மீண்டும் சொல்லப்போனால் 2025ம் ஆண்டிற்குள் துவக்க வகுப்புகள் மற்றும் அதற்கும் மேல் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவையும் , எண்ணறிவையும் அடைவதற்கு முதன்மைஅழுத்தம் வழங்கப்பட வேண்டும். அடிப்படை கற்றல் நிலை( வாசித்தல் , எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதத்தில் அடிப்படை நிலை )அடையாமல் இந்தக் கொள்கையின் மற்ற பகுதிகள் நமது குழந்தைகளின் மிகப்பெரும் பகுதியனருக்குத் தொடர்பு அற்றதாக அமையும் இடைநின்ற மாணாக்கர்களை மீள்ஒருங்கிணைத்தல் ; கல்வியை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துதல் நோக்கம்: 2030ஆம் ஆண்டிற்குள் 3 முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய பள்ளிக் கல்வி அளித்தல். 2030ஆம் ஆண்டிற்குள் 3 முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச , கட்டாய பள்ளிக் கல்வி அளித்தல். அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும் , பள்ளிக்குத் தொடர்ந்து வருவதையும் கட்டாயம் உறுதி செய்வது பள்ளிக்கல்வி அமைப்பின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாகும். சர்வ சிக்க்ஷா அபியான் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் சமீப ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்ந்துள்ளனர். U-DISE(Unified District Information on School Education) மாவட்ட வாரியான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தரவுகளின் அடிப்படையில் 2016- 17 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை விகிதம்: - வகுப்பு 1 முதல் 5 - 95.1 % - 6 முதல் 8 - 90.7% - 9 முதல் 10 - 79.3% - 11 முதல் 12 -51.3% மேற்கண்ட தரவுகளில் ஐந்தாம் வகுப்பிற்குப் பின்பு மாணாக்கர்களின் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு தேசிய அளவில் 6.2 கோடி குழந்தைகள்(வயது 6 - 18) பள்ளியை விட்டு விலகியுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வருவதே நாட்டின் முதன்மைப் பணியாகும். மேலும் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகாமலும் தடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் மாணாக்கர்கள் பள்ளியை விட்டு விலகுவதற்கான காரணங்கள்: - இயல் ஒன்று மற்றும் இரண்டில் குறிப்பிட்டதுபோல் ஐந்தாம் வகுப்பிற்குரிய அடிப்படை மொழி மற்றும் கணித அறிவு பெறாததால் பள்ளியைவிட்டு விலகுகின்றனர். - பள்ளிக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட தொலைவு: 2016-17 ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 ஆரம்ப பள்ளிகளுக்கு, 50 நடுநிலைப்பள்ளிகள், 20 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 9 மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆக குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளி வீட்டிற்கு அருகில் அமைந்தது போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அருகில் அமையவில்லை. பள்ளிகளில் இருந்து இடைவிலகிய குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கல்வியின் எல்லைக்குள் எவ்வளவு விரைவில் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வருவது ; மற்றவர்களை இடைவிலகாமல் தடுப்பது – மிக உயர் முன்னுரிமை கொடுக்கவேண்டிய கடமை. சமூக கலாச்சார மற்றும் பொருளாதார பிரச்சினைகள்: சமூக,கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் இடைநிற்றலுக்கு முக்கிய காரணங்களாகும். உதாரணமாக குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் பள்ளியில் இடை நிற்பதற்கான முக்கிய காரணங்கள் குழந்தைத் திருமணம், பாலின மற்றும் சாதியின் பங்கு, குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவை ஆகும். மேலும் வீட்டில் மூத்த குழந்தைகள் வயதில் இளைய குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சுகாதாரமற்ற பகுதிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் குழந்தைகள் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் பள்ளிக்கு தொடர்ச்சியாக வருவதும் தடையாகிறது. உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள்: பெரும்பாலும் மாணவிகள் பள்ளியை விட்டு நிற்பதற்கு முறையான கழிவறை வசதி இல்லாமையே முக்கிய காரணமாகும். சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் துன்புறுத்துதல் மற்றும் பாதுகாப்பின்மையால் பள்ளியை விட்டு விலகிவிடுகின்றனர். இறுதியாக சில மாணாக்கர்கள் பள்ளிக்கல்வி எவ்வித ஆர்வத்தையும் தூண்டாததால் இடை நிற்கின்றனர். இடைநிற்றலைக் குறைப்பதற்கு இரு அடிப்படைச் செயல்பாடுகள் அல்லது முன்னெடுப்புகள் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. அவை 1. தரமான உள்கட்டமைப்பு கொண்ட பள்ளி வசதி ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை. பள்ளியை மேம்படுத்துதல் தேவையுள்ள இடங்களில் புதிய பள்ளிகள் திறத்தல் மற்றும் தங்குமிடம் வசதியுடன் கூடிய பள்ளிகள் ஆகியன செயல்படுத்துவதன் மூலம் இடைநிற்றலை குறைக்கலாம். 2. பள்ளி செயல்பாடுகளில் பங்கேற்றல்: i. குழந்தைகளின் கல்வி நிலையை தொடர்ச்சியாக கண்காணித்தல் மட்டுமின்றி குழந்தைகள் பள்ளியில் சேர்த்தல் மற்றும் வருகைதரல்‌. இடைநின்றாலும் மீண்டும் பள்ளிக்கு வரும் வாய்ப்புகளையும் மாற்று முறைகளையும் ஏற்படுத்துதல். ii. கல்வி உரிமைச் சட்டத்தின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி தற்போது 6 முதல் 14 வயது வரை மட்டுமே உள்ளது. இதை 18 வயது வரை(பன்னிரண்டாம் வகுப்பு) நீட்டிக்கலாம். iii. பள்ளிகளில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களை பணி அமர்த்துவதன் மூலம் மாணாக்கர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி இடைநிற்றலைக் குறைக்கலாம். நூறு சதவீத மாணவர் சேர்க்கை விகிதத்தை எட்டுவதற்கு , – குறிப்பாக ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்புவரையில் – அணுகல் வாய்ப்பை அதிகரித்தல் : தரமான உள்கட்டமைப்பும் , பங்கேற்பும் உறுதி செய்யப்பட்டவுடன், அடுத்து மாணாக்கர்களுக்குத் தரமான கல்வி அளிப்பதன் மூலமும் அவர்களை பள்ளியில் தக்கவைக்க முடியும். இடைநிற்றல் அதிகமுள்ள பகுதிகளில் மிகச்சிறந்த ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் மாணவர்களை ஈடுபட வைக்கும் உயரிய பயனுள்ள பாடத்திட்டத்தை உருவாக்குவதன் மூலமும் இடைநிற்றல் விகிதத்தை குறைக்கலாம். இதைப்பற்றி விரிவாக பின்வரும் அத்தியாயத்தில் காண்போம். தரமான, செயல்திறன் மிக்க பள்ளி உள்கட்டமைப்பை உருவாக்குதல்: 3.1. உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல்: 2030ஆம் ஆண்டிற்குள் மொத்த சேர்க்கை விகிதம்(gross enrolment ratio) 100% அடைய பள்ளிகளின் எண்ணிக்கை எல்லா நிலைகளிலும் அதிகரித்தல் வேண்டும். குறிப்பாக மேல்நிலைப்பள்ளிகள். வழிமுறைகள்: - இடைநிற்றல் அதிகமுள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரித்தல். - புதிய கல்வி வசதிகளை தேவையான இடங்களில் உருவாக்குதல் தற்போதுள்ள தனித்தனியாக இயங்கும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகை சதவீதம் குறைவாக இருப்பின், அவற்றை ஒருங்கிணைந்த பள்ளிகளாக அல்லது பள்ளி வளாகமாக மாற்றுதல். ஒருங்கிணைந்த பள்ளி/பள்ளி வளாகமானது தரஅளவுகள் கொண்ட பல சாதகமான அம்சங்களை கொண்டிருத்தல் வேண்டும். பொருள் மற்றும் மனித வளத்தினை பகிர்தல், மாணாக்கர்களுக்கான பலதரப்பட்ட வகுப்புகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல், உடன்பிறந்தவர்கள் மற்றும் வெவ்வேறு வயதுடைய வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பயிலுவதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் அமைதல் வேண்டும். ஒவ்வொரு பிராந்தியம்/மாநிலம்/மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் பள்ளிகள் உள்ளூரின் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்படும். தற்போது பள்ளியில் சேர்வதற்கான கடுமையான விதியானது (பள்ளிக்கும் வசிப்பிடத்திற்கும் இடையே உள்ள தூரத்தின் அடிப்படையில்) உள்ளூர் புவியியல் மற்றும் மக்கள்தொகை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையிலும் பள்ளியை அணுகுதல், தரம், சமபங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படாத வண்ணம் நெகிழ்வுத்தன்மையுடன் பள்ளிகள் விரிவாக்கமோ, ஒருங்கிணைப்போ செய்யப்படும். மாணவர்களின் வருகைப் பதிவைத் தொடர்ந்து கண்காணிக்கவும் , இடைநின்றுபோன மாணவர்களைத் திரும்பப் பள்ளிக்குக் கொண்டுவரவும் சமூகப்பணி ஊழியர்கள் உதவி செய்வார்கள் . என்.டி.பி.மற்றும் ஆர்.ஐ.ஏ.பி. போன்ற திட்டங்கள் இந்த முயற்சியைச் சாத்தியமாக்கும். 3.2. போக்குவரத்து வசதிகள்: வயதில் மூத்த குழந்தைகள் குறிப்பாக பெண்களுக்கு மிதிவண்டி தருவதன் மூலம் அவர்கள் குழுவாகப் பயணித்து பள்ளிக்கு வர ஏதுவாக இருக்கும். பள்ளிக்கு வரும் சாலை மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல் அவசியம்‌. போக்குவரத்து வசதிகளான பள்ளிப்பேருந்து, குழுவாக நடந்து வருதல், நடந்துவரும் குழந்தைகளுக்குத் துணையாக காவலர்கள் (சம்பளத்துடன்) அல்லது போக்குவரத்துப்படி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இளம் சிறார்கள், பெண்கள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கிராமப்புறங்களில் அவ்வாறு பள்ளிக்கு செல்லும்வழி நடந்து செல்வதற்கு பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில் 2 - 4 வயது குழந்தைகளுக்காக மிதிவண்டி ரிக்ஷா ஏற்படுத்தி (இரு சக்கர இழுப்பு வண்டி) உள்ளூர் உறுப்பினர்களுக்கு (பெற்றோர்கள்) ஊதியத்துடன் கூடிய பணி வாய்ப்பு ஏற்படுத்தி பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும். 3.3. விடுதி வசதிகள்: தொலைதூர மாணாக்கர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்புடன் கூடிய இலவச தங்குமிட விடுதிகள் நவோதயா வித்யாலயாவிற்கு இணையாக பள்ளிக்கு அருகில் அமைத்து தரப்படும். பெண் குழந்தைகளுக்குத் தனியாக தங்கும் விடுதிகள் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித் தரப்படும். குறிப்பாக சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண் குழந்தைகளுக்காக (பன்னிரண்டாம் வகுப்பு வரை) கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) போன்ற பெண்கள் தங்குமிட வசதியுடன் கூடிய பள்ளிகளை விரிவுபடுத்தி தரமாக அமைத்துத் தரப்படும். 3.4. பாதுகாப்பு வசதிகள்: அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த (குறிப்பாக பெண் குழந்தைகள் மட்டும் URG) பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் (சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்), தேவைக்கேற்ப பாதுகாவலர்கள், உள்ளூர் காவல் நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்துதல் மற்றும் மாணாக்கர்கள் தாம் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது பிற மீறல்கள் பற்றி தகவல் தெரிவிக்க நம்பகமான வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். குழந்தைகளின் உடல் மற்றும் மன ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதை சகித்துக் கொள்ளக் கூடாது. பெண்கள் மற்றும் பிற குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநிற்றலுக்கு, பள்ளி வரும் வழியிலோ அல்லது பள்ளியிலோ அச்சுறுத்தல் ஏற்படுமாயின் பள்ளி தலைமை ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க பிரிவினருடன் இணைந்து ஊறு விளைவிப்போரை அடையாளம் கண்டறிந்து தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 24 x 7 இலவச உதவி எண் பொதுமக்களிடம் தெரிவிக்கப்படும். உள்ளூர் காவலரும், சமூக செயற்பாட்டாளரும் இணைந்து பள்ளிக்குள் மற்றும் பள்ளிக்கு வெளியே இவை போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும், தகவல் தெரிவிக்கவும் பெற்றோர் மற்றும் மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும். அதிக எண்ணிக்கையில் இடைநிற்றலுக்கு, அச்சுறுத்தல்/ தொல்லை கொடுத்தல் ஆகியவை காரணமாக அமைந்தால் சிறப்பு கவனம் செலுத்தப்படும். பங்கேற்றல் மற்றும் கற்றலை உறுதி செய்தல் 3.5. மாணாக்கர்களின் வருகையைக் கண்காணித்தல்: ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு இணைந்து வெளிப்படையான மற்றும் நம்பகமான அமைப்பின் மூலம் மாணவர்களின் வருகை கண்காணிக்கப்படும். எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கு வரவில்லையெனில் பெற்றோருடன் தொடர்பு கொண்டு காரணம் அறியப்படும். வருகை சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு காலை மற்றும் மதிய உணவு அளித்தல் மற்றும் 100% வருகை பெற்ற மாணவர்களுக்கு விருதுகளுடன் அங்கீகாரம் அளிக்கப்படும். 3.6. பின்தங்கிய மாணவர்களைக் கண்காணித்தல்: ஆசிரியர்கள் மதிப்பீடுகள் மூலம் மாணாக்கர்களின் கற்றல் விளைவுகளைக் கண்காணிப்பதன் மூலம் கற்றலில் பின்தங்கிய மாணாக்கர்களை அடையாளம் காணவும், தனிப்பட்ட கற்றல் யுக்திகளை செயல்படுத்தி பெற்றோர் உதவியுடன் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும். மேலும் இவர்கள் குறைதீர் கற்பித்தல் நிகழ்வுகளான NTP (National Teacher Platform) மற்றும் RIAP (Remedial Institutional Aidee Programmes ) உடன் தொடர்புபடுத்தப்படும் 3.7. பள்ளியை விட்டு வெளியேறிய மாணாக்கர்களைக் கண்காணித்தல்: சமூக செயற்பாட்டாளர், தலைமை ஆசிரியர், சமூக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு ஆகியோர் இணைந்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து இடைநின்ற மாணாக்கர்கள் மற்றும் பள்ளிக்கு வெளியே உள்ள மாணாக்கர்களைக் கண்காணித்து, அவர்கள் பற்றிய தரவுகள் உருவாக்கப்படும். பள்ளி வளாகத்தில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை நியமித்து மேற்கூறிய தரவுகளை நிர்வகித்தும், சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இவர் தரவுகளிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு திரும்பி வர உதவி செய்வார். 3.8. சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஆலோசகரின் பங்கு: - பள்ளியில் நீண்டகால விடுப்பில் இருக்கும் மாணாக்கர்கள் - பள்ளியில் கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணாக்கர்கள் - பள்ளியில் சேராமல் அல்லது இடைநின்ற மாணாக்கர்கள் ஆகியோர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் சமூக செயற்பாட்டாளர்கள் சந்தித்து, அவர்களின் பிரச்சினைக்கான காரணத்தை ஆலோசகர் உதவியுடன் கண்டறிவார். மேலும் அவர்களின் சேர்க்கை மற்றும் வருகையை உறுதி செய்யவும் மற்றும் குறைதீர் கற்றல் திட்டங்களான NTP மற்றும் RIAP அல்லது மாற்று கற்றல் நிகழ்வுகளில் பங்கேற்க செய்வர். மேலும் CWSN (CHILDREN WITH SPECIAL NEEDS) சிறப்பு குழந்தைகளை கண்டறிந்து கல்வி அமைப்பில் ஈடுபடுத்துவர். 3.9. குழந்தைகள் ஆரோக்கியத்தில் பள்ளியின் பங்கு: சுகாதாரமற்ற நிலை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை இல்லாத பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நோய்கள் உருவாகி பள்ளியைவிட்டு விலகுகின்றனர். பள்ளி, சமூக செயல்பாட்டாளர்,ஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இணைந்து அப்பகுதியிலுள்ள பெற்றோர்கள், மாணாக்கர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ஆரோக்கியம், சுத்தம், சுகாதாரம் மற்றும் நேரத்திற்கு தகுந்த தடுப்பூசி முறைகள் அதற்குரிய சுகாதார சேவைகள் உடன் தொடர்பு படுத்தி உதவி செய்வார்கள். பரவலான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்தி, குழந்தைகள் நலன் மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து அவர்கள் வருகைக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 3.10. நீண்டகாலம் பள்ளிக்கு வெளியே உள்ள பதின் பருவத்தினருக்கு இரண்டாம் வாய்ப்பு கல்வித் திட்டம் உருவாக்குதல்: பல ஆண்டுகள் பள்ளிக்கு வராத குழந்தைகள் மற்றும் பதின்பருவ மாணாக்கர்களுக்கு உபயோகமான கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். குறைதீர் கற்பித்தல் திட்டங்கள் (NTP, RIAP)போதாத பட்சத்தில், மேற்கூறிய மாணாக்கர்களுக்கு பள்ளிக்கல்வி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சமமான மற்றும் கற்பதற்கான தயாரிப்புத் திட்டங்கள் மூலம் மாணாக்கர்களின் திறன் மேம்படுத்தப்படும். தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் (உதாரணம் சந்தை சார்ந்த உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்பு) இரண்டாம் வாய்ப்பாக ஏற்படுத்தி தரப்படும். 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளியை விட்டு இடை நின்ற மாணாக்கர்கள், கற்றலில் பின்தங்கிய மாணாக்கர்கள், கல்வியறிவற்றவர்கள் ஆகியோருக்காக வயதுவந்தோர் கல்வி அளிக்கப்படும். இதில் அடிப்படைக் கல்வி மற்றும் விருப்பமிருப்பின் தொழிற்கல்வியும் நடத்தப்படும். இத்தகைய முடிவுகள் மாணாக்கர்கள் விருப்பம் அவர்களது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து எடுக்கப்படும். 3.11. பலவழிக் கற்பித்தல்: சிறப்பு குழந்தைகள் மற்றும் இடம் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளடக்கிய அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் எளிதாக்கும் வகையில் முறைசார் மற்றும் முறைசாரா கல்வி முறையை விரிவுபடுத்த வேண்டும். புதுமையான கற்பித்தல் வழிமுறைகளான தொழில்நுட்பம் பயன்படுத்துதல், மின்னணு வளங்கள் மின்னணு கற்றல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை மேம்படுத்தி பயன்படுத்தப்படும். பள்ளிக்கு செல்லாத இளம் மாணவர்கள் தேசிய திறந்தவெளி கற்றல் நிறுவனம் அளிக்கும் சிறந்த மற்றும் தொலைதூர கல்வி மூலம் தங்கள் கற்றல் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு விரிவாக்கம் செய்யப்படும். பலதரப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு தேசிய திறந்தவெளி கற்றல் நிறுவனம் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வயது வந்தோருக்கு திறந்தவெளி அடிப்படை கல்வி கொடுப்பது தொடரப்படும். மேலும் பின்வரும் திட்டங்கள் வழங்கப்படும் : - A,B மற்றும் C நிலைக்கல்வி எனது முறைசார் கல்வி வகுப்பு 3 5 மற்றும் 8 க்கு இணையாக அளிக்கப்படும் - இரண்டாம் நிலை கல்வி திட்டம் வகுப்பு 10 மற்றும் 12 க்கு இணையாக அளிக்கப்படும். - தொழிற்கல்வி - வயது வந்தோர் கல்வி - வாழ்க்கைக்கல்வி மாநில அரசுகள் தத்தமது மாநில மொழிகளில் மாநில திறந்தவெளி பள்ளிகளை மேம்படுத்த ஊக்கப்படுத்தப்படும். 3.12. பல முன்மாதிரி பள்ளிகளை அனுமதித்தல் மற்றும் உள்கட்டுப்பாடுகள் உடைய கல்வி உரிமைச் சட்டத்தை தளர்த்தல்: மற்றும் அரசு சாரா மனிதநேய அமைப்புகள் பள்ளிகள் கட்டவும், கலாச்சார, புவியியல் மற்றும் மக்கள் தொகை போன்ற பல வேறுபாடுகள் உடைய பள்ளிகளை ஊக்கப்படுத்தவும் மற்றும் மாற்றுக் கல்வி அமைப்புகளான குருகுலம், பாடசாலை, மதரசாக்கள் மற்றும் வீட்டுப் பள்ளிகள் ஆகியவற்றை அனுமதிக்கும் வகையிலும் கல்வி உரிமைச் சட்ட விதிகள் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். கற்றல் விளைவுகள் சார்ந்து வெளிப்படும் திறனுக்கு அதிக முக்கியத்துவமும் மற்றும் உள்ளீடு சார்ந்த கல்விக்கு குறைந்த முக்கியத்துவம் தரப்படும். கல்வி உரிமைச் சட்டத்தின் அரசு சாரா கல்வி அமைப்பிற்கான உள்ளீடுகள் மீதான ஒழுங்குமுறை குழந்தை பாதுகாப்பு (உடல் மற்றும் உளவியல்ரீதியான ) அணுகல் மற்றும் சேர்த்தல், லாப நோக்கமற்ற பள்ளி மற்றும் குறைந்தபட்ச கற்றல் அடைவுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதைக் கொண்டிருக்கும். நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய தரமான பள்ளிகளை அனைத்து தரப்பினருக்கும் உருவாக்குவதன் மூலம் மாணாக்கர்களுக்கு அதிகமான கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் பள்ளிகளுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி மற்றும் தரமான பள்ளிகள் உருவாக்க வழிவகுக்கும். கொடையாளர்கள்- அரசின் கூட்டு நடவடிக்கையில் மற்ற முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும். 3.13. கல்வி உரிமைச் சட்டம் மேல்நிலைக் கல்வி வரை நீட்டிப்பு: இலவச மற்றும் கட்டாயக் கல்வி வகுப்பு 9 முதல் 12 வரை (14 முதல் 18 வயது) என கல்வி உரிமைச்சட்டத்தில் கொண்டுவரப்படும். 2030ஆம் ஆண்டிற்குள் அனைத்து மாணாக்கர்களும் பள்ளியில் சேர்ந்து தரமான கல்வியை பெற்றிருக்க வேண்டும். பள்ளிக் கலைத்திட்டமும் ஆசிரியமும் (கற்பித்தல் முறையும்) நோக்கம்: 2022 ஆம் ஆண்டுக்குள் புரியாமல் மனப்பாடம் செய்வதைக் குறைப்பதற்காகவும் முழுமையான வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காகவும் 21 ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்களான அலசி ஆராய்வது, படைப்பாற்றல், அறிவியல் மனப்பாங்கு, கருத்துப் பரிமாற்றம், பிறருடன் இணைந்து பணிபுரிவது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தொழிட்நுட்ப நுண்ணறிவு ஆகியவற்றை வளர்ப்பதற்காகவும் கலைத்திட்டமும் கற்பித்தல்முறையும் மாற்றியமைக்கப்படுகின்றன . 4.1 பள்ளிக்கல்விக்கான கலைத்திட்ட, கற்பித்தல்முறை வடிவமைப்பு 10 2 கல்வி அமைப்பு என்பது தேசியக் கல்விக்கொள்கை – 1968 ன் மிகவும் போற்றுதற்குரிய பரிந்துரையாகும். இந்த முக்கியமான, அதிக அளவில் தாக்கம் செலுத்திய பரிந்துரை நாடெங்கும் உள்ள கல்விஅமைப்பை தரப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் உதவியது. நாட்டின் பல பகுதிகளில் பள்ளிக்கல்வி என்பது 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இந்த 10 2 என்ற அமைப்பு தரம்/வகுப்புகள் 1 – 12 என அழைக்கப்பட்டது. 1- 5 வகுப்பு வரை தொடக்கப்பள்ளி, 6 – 8 வரை நடுநிலைப்பள்ளி, 9 – 10 உயர்நிலைப்பள்ளி, 11 – 12 வரை மேனிலைப் பள்ளி (நாட்டின் பல பகுதிகளில் மேனிலைப் பள்ளி நிலை, கல்லூரி முன்பருவம், இடைநிலைக் கல்லூரிப் பருவம், அல்லது இளநிலைக் கல்லூரிப் பருவம் எனவும் வழங்கப்பட்டு வருகிறது.) 10 2 என்ற பள்ளிக் கல்வி அமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவ்வமைப்பு பள்ளிக்கல்வியை முறைப்படுத்தவும் சீர்படுத்தவும் பெரிதும் துணைபுரிந்துள்ளது. இருப்பினும் தற்காலத்தில் குழந்தைகளை 21 ஆம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இயன்றளவு ஆயத்தப்படுத்த, அறிவு சார் ஆய்வுகளின் அடிப்படையில் இவ்வமைப்பு மாற வேண்டியுள்ளது என்று இந்தக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. குறிப்பாக அறிவாற்றலின் அடிப்படையிலான விளையாட்டு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் மழலையர் கல்வி (3 வயது)முதல் 12 ஆம் வகுப்புவரையுள்ளவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி வழங்கி வருவதைத் தொடரவும் இந்த அமைப்பு மாற்றம் தேவையாகிறது. (இது பற்றி முதல் மூன்று இயல்களில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.) மேலும் 3 – 18 வரையுள்ள பள்ளிக்கால அளவில் கலைத்திட்டத்திலும் கற்பித்தல் முறையிலும் பலநிலைகளில் மாற்றம் தேவையாகிறது. இம்மாற்றம் குழந்தையின் அறிவாற்றலுக்கும், குழந்தையின் இயல்புக்கும், உடல் உணர்வு வளர்ச்சிக்கு இயைந்ததாக இருக்கவும் வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒன்றாம் இயலில் கலந்துரையாடியதுபோல, 8 வயதுக்கு முன்பு வரை குழந்தைகள் விளையாட்டு முறையின் வாயிலாகவும், செயல்பாட்டு முறையின் வாயிலாகவும் கண்டடைந்து கற்பதின் வாயிலாகவும் சிறப்பாகக் கற்கின்றனர். இம்முறைகளில் நெகிழ்வுத்தன்மையும் தேவைப்படுகிறது. எட்டு வயதுக்குப் பிறகு கற்றல் கற்பித்தல் முறையை ஒரு குறிப்பிட்ட வகையில் நெறிப்படுத்த வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தி கற்பிக்கத் தொடங்குவதற்கு இப்பருவம் ஏற்றதாக இருக்கிறது. இருப்பினும் விளையாட்டு முறையையும் கண்டறிந்து கற்றலையும் வலுவாகத் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். குழந்தைகளுக்கு 11 வயதாகும்போது அவர்கள் கூர்ந்து கவனித்து, பொதுப்பண்பு கண்டு, நுண்கருத்துகளைப் புரிந்துகொள்ளத் தொடங்குகின்றனர். அதாவது ஆறாம் வகுப்பு முதல் குழந்தைகளுக்கு சிறப்புப் பாட ஆசிரியர்கள் கற்பிப்பது பயன்தரும். ஒவ்வொரு பாடத்திலும் உயர் நிலைக் கருத்துகளைப் பற்றிக் கலந்துரையாடுவது சாத்தியமானது மட்டுமல்ல, ஏற்றதும்கூட . 14 வயதுக்கு மேல், அதாவது 9 ஆம் வகுப்புக்கு மேல் வளரிளம் பருவத்தில் தங்களின் வாழ்க்கைக்கான திட்டம் வகுக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் முந்தைய வகுப்புகளில் கையாண்ட கற்பித்தல் முறைகள் உறுதிபெறுகின்றன. கூடவே கல்லூரி படிப்புக்கான, வேலைக்குச் செல்வதற்கான, வாழ்க்கைக்கான ஆயத்தமும் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் பள்ளிக்கல்வி அமைய வேண்டும். மாணவர்கள் தங்களின் பல்வேறு திறன்களின், விருப்பத்தின், இலக்கின், வாழ்க்கைக் குறிக்கோளின் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கூடவே தொழிற்கல்வியும் கலைக்கல்வியும் கற்பதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும். இந்நிலையில் பல்வேறு பாடங்களின் பல்வேறு நிலைகளை எட்ட பருவ முறை (செமஸ்டர்முறை) உகந்ததாக இருக்கிறது. குழந்தைகளின் இயல்பான அறிவாற்றலின் அடிப்படையிலும் நடைமுறை சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டும் மாற்றியமைக்கப்பட்ட கீழ்வரும் கல்வி அமைப்பு குழந்தைகளின் உச்சகட்ட முழுமையான வளர்ச்சிக்கு ஏற்றதாக, பயனுள்ளதாக இருக்கும். இது புரட்சிகரமானதும்கூட. (பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் இந்த கற்பித்தல் முறைக்கு, கலைத்திட்டத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இப்புதிய 5 3 3 4 பள்ளிக்கல்வி அமைப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் கலைத்திட்ட, கற்பித்தல் முறை வடிவமாகும். 4.1.1. புதிய 5 3 3 4 பள்ளிக்கல்வி அமைப்பில் கலைத்திட்டத்திலும், ஆசிரியத்திலும் வந்துள்ள மாற்றங்கள். 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக் குழந்தைகளின் வளர்ச்சிக்கால தேவைக்காக, அவர்களின் விருப்பு வெறுப்புக்கு இணங்க கலைத்திட்டத்திலும் கற்பித்தல் முறையிலும் தேவையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. கலைத்திட்ட, கற்பித்தல் முறை வடிவமைப்பு என்பது பள்ளிக்கல்வியில் 5 3 3 4 அமைப்புப்படி கீழ்வருமாறு மாற்றப்பட்டுள்ளது. - 5 வருட அடிப்படை நிலை – மூன்று வருட மழலை வகுப்புகளும் மற்றும் 1, 2 வகுப்புகளும் சேர்ந்தது இந்த நிலை. - 3 வருட ஆயத்த நிலை (பின் தொடக்கநிலை) - 3, 4, 5 வகுப்புகள் - 3 வருட நடுநிலை (உயர் தொடக்கநிலை) 6, 7, 8 வகுப்புகள் - 4 வருட உயர்நிலை (மேல்நிலை) – 9, 10, 11, 12 வகுப்புகள் அ.அடிப்படை நிலையில் விளையாட்டு முறை, செயல்பாட்டு முறை, கண்டறிமுறை ஆகியவற்றின் நெகிழ்வான பல்நிலை செயல்பாடுகள் உட்படுத்தப்பட வேண்டும். மழலையர் கல்வி பற்றிய தற்கால ஆய்வுமுடிகளுக்கேற்ப செயல்பாடுகள் இடம் பெற வேண்டும். காலத்தை வென்ற இந்திய பாரம்பரிய முறைகளின் அடிப்படையில் குழந்தைகளின் அறிவாற்றலும் உணர்வுகளும் தூண்டப்பட வேண்டும. ஆ.ஆயத்த நிலையில் மூன்று வருட கற்றல் கற்பித்தல் நடக்கும். அடிப்படை நிலையிலுள்ள அனைத்து கற்பித்தல் முறைகளும் உட்படும் கலைத்திட்ட கற்பித்தல்முறை பின்பற்றப்பட வேண்டும். இருப்பினும் படிப்படியாக பாடப்புத்தகங்களின் துணையோடு முறையான கற்பித்தல் ஆரம்பிக்க வேண்டும். இங்கு சிறப்புப் பாட ஆசிரியர்கள் தேவையில்லை. கலைகற்பிக்கும் ஆசிரியர்கள், சிறப்பு மொழியாசிரியர்கள் இருக்கலாம். இவர்கள் பள்ளியிலுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தலாம். வாசித்தல், எழுதுதல், பேசுதல், உடற்கல்வி, கலை, மொழி, அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைப் புரிதலை உருவாக்குவது இந்தநிலையின் தலையாய நோக்கமாகும். சிறப்புப் பாட ஆசிரியர்களின் கற்பிக்கும் பாடக்கருத்துளைப் புரிந்துகொண்டு ஆழமான கற்றலுக்கு குழந்தைகள் ஆயத்தமாக வேண்டும். இ. ஆயத்த நிலையில் அறிமுகப்படுத்திய கலைத்திட்டத்தையும் கற்பித்தல் முறையையும் இடைநிலையில் மூன்று வருடங்களுக்குத் தொடரும் என்றாலும் அறிவியல், கணிதம், கலை, சமூக அறிவியல், மற்றும் மானுடவியல் பாடங்களிலுள்ள நுண்கருத்துகளைக் கற்கவும், அவைபற்றிக் கலந்துரையாடவும் பாடவாரி ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள். அனுபவங்களின் மூலம் கற்றல் நடக்கும். பாடங்களுக்கு இடையேயுள்ள தொடர்புகளை ஆய்வுசெய்வார்கள். மேலும் பல சிறப்புப் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். பல சிறப்பு ஆசிரியர்களும் அறிமுகப்படுத்தப்படுவார்கள். ஈ.நான்கு ஆண்டுகள் கற்றல் நடக்கும் உயர்நிலையில் குழந்தைகள் பல்துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த நிலையில் இடைநிலையில் அறிமுகப்படுத்திய பாடவாரியான கலைத்திட்டத்தின், கற்பித்தல்முறையின் அடிப்படையில் கற்றல் நடைபெற வேண்டும். எனினும் மேலும் ஆழமான, விமரிசன சிந்தனை கொண்ட, வாழ்க்கை இலக்குகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து, குழந்தைகளின் விருப்பங்களுக்கு வாய்ப்பளித்து சற்றே நெகிழ்வுத்தன்மையோடு கற்பித்தல் நடைபெற வேண்டும். ஈராண்டுகள் கொண்ட இருபிரிவாக இந்நிலை பகுக்கப்படுகிறது. இந்நிலை வருடத்திற்கு இரண்டு பருவம் என எட்டு பருவங்கள் கொண்டது. ஒவ்வொரு மாணவனும் ஐந்து முதல் ஆறு பாடங்கள் வரை ஒவ்வொரு பருவத்திற்கென தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் அனைவருக்கும் பொதுவான பாடங்கள் சிலவும் இருக்கும். கூடவே அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற விருப்பப் பாடத்தைத் (கலைக்கல்வி, தொழிற்கல்வி, உடற்கல்வி போன்றவை உட்பட்ட) தேர்ந்தெடுக்கவும் செய்யலாம். அவரவர் திறனுக்கேற்ற, விருப்பத்திற்கேற்ற பாடங்களைத் தேர்வு செய்து தங்கள் திறனை விரிவுபடுத்தலாம். கட்டக வாரிய தேர்வுமுறை (மோடுலார் போர்டு எக்ஸாமினேஷன்ஸ்) அறிமுகப்படுத்தப்படும். இந்த முறையின் மூலம் ஒவ்வொரு பாடத்திலுமுள்ள அடிப்படைக் கருத்துகள், கொள்கைகள், விமரிசன சிந்தனை, உயர்நிலைத் திறன்கள் ஆகியவை மதிப்பிடப்படும். இம்முறை பொதுப்பாடங்களில் குழந்தைகளின் அடிப்படைப் புரிதலை உறுதிப்படுத்தும். இருப்பினும் விருப்பப் பாடங்களில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் மதிப்பீடுகள் நடக்கும். உயர்நிலை, மேனிலை என்னும் கருத்துக்கு இனி இடமில்லை. 11, 12 வகுப்புகள் இனிமுதல் மேல்நிலையின் ஒருபகுதியாகக் கருதப்படும். எல்லா நிலையிலும் தேசிய வட்டார பாரம்பரியங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். கூடவே நன்னெறி, சமூக உணர்வு, காரண காரியத் தொடர்பு, கண்ணிச் சிந்தனை, இலக்கவியல் அறிவு, அறிவியல் மனப்பான்மை, மொழி, கருத்துப்பரிமாற்ற திறன் ஆகியவற்றை மாணவர்களின் வளர்நிலைக்கேற்ப கலைத்திட்டத்திலும் கற்பித்தல்முறையிலும் உட்படுத்த வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் உச்ச கட்ட திறன் வளர்ச்சி சாத்தியமாக்க வேண்டும். மேலேவிவரித்த நிலைகள் அனைத்தும் முழுக்க முழுக்க கலைத்திட்டத்தையும் கற்பித்தல் முறையையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் அறிவாற்றலின் முழுவளர்ச்சியே இவ்வடிவமைப்புக்கு அடிப்படை. ஒவ்வொரு நிலையினுடையவும் தேசிய மாநில கலைத்திட்ட கற்பித்தல் முறையைப் பற்றி அறிமுகப்படுத்தப்படுவார்கள். ஆனால் அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. மகிழ்வான வகுப்பறை, அச்சமில்லா கருத்துப் பரிமாற்றம், தயக்கமின்றி வினா எழுப்புதல், படைப்பாற்றல், பங்களிப்பு, கண்டறிந்து கற்றல், தேடிக் கற்றல்… போன்ற பல சூழல்களின் மூலம் ஆழமான, அனுபவப்பூர்வமான கற்றல். 4.2 மாணவர்களின் முழுமையான வளர்ச்சி தற்காலத்தில் நிலைநிற்கும் மனப்பாடமுறையை அறவே நீக்கி கற்பது எப்படியெனக் கற்பதே உண்மையான கற்றல் என்பதை அனைத்து நிலைகளிலும் செயலாக்குவதுதான் கலைத்திட்டத்திலும் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டுவருவதற்கான முக்கிய நோக்கம். 4.2.1. பாடப்பொருள் ஒருங்கிணைப்பும் பள்ளிக்கல்வியின் வழிமுறைகளும் உயர்நிலைத் திறன்கள், விமரிசன சிந்தனை, படைப்பாற்றல், காரண காரியத்துடன் பொதுப்பண்பு காணுதல், குழுவாகச் செயல்படுதல், சமூகப் பொறுப்புணர்வு, பல்மொழித்திறன், அளவு ஒப்பீடு, இலக்க அறிவு… போன்ற திறன்களை வளர்ப்பதன் மூலம் மனப்பாடமுறையிலிருந்து கற்றலை விடுவித்து மாணாக்கர்தம் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே இந்தக் கலைத்திட்ட கற்பித்தல்முறை மாற்றத்தின் முக்கிய இலக்காகும். .அப்படியே சில பகுதிகளை மனனம் செய்யும் தேவை ஏற்பட்டாலும் அதற்கான பொருத்தமான சூழலை உருவாக்கியிருக்க வேண்டும். மனப்பாடம் செய்த பின்பு அதைப் பற்றி அலசி ஆராய வேண்டும், ஆழமான கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். அவற்றைப் பயன்படுத்துவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். இந்தக் கலைத்திட்ட, கற்பித்தல்முறை மாற்றம் மாணவர்கள் விளையாட்டு, அறிவியல், கலை, மொழி, இலக்கியம், நன்னெறிக்கல்வி ஆகிய துறைகள்உட்பட அனைத்துத் துறைகளிலும் எதிர்பார்த்த கற்றல் அடைவுகளை அடைந்திருக்க வேண்டும். மாணவர்தம் உள்ளார்ந்த திறன்களுக்கேற்ப அனைத்துத் துறைகளிலும் எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவு முன்னேற வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும். 4.3 பாடச்சுமை குறைப்பின் மூலம் அடிப்படைத் திறன் வளர்ச்சியும் விமரிசன சிந்தனையும் ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதின் அடிப்படையில் தற்போது பாடச்சுமை அதிகமாக இருப்பதை இந்தக் கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்கிறது. 1993 இல் மனிதவள மேம்பாட்டுத் துறை பேராசிரியர் யஷ்பால்குழு வெளியிட்ட “சுமையற்ற சுகமான கற்றல்” அறிக்கையும் மற்றும் தேசியக் கல்விக்கொள்கை ( 2005)- யும் மாணாக்கர்தம் பாடச்சுமையைக் குறைத்து, கற்றல்செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டை உறுதிசெய்வது, அனுபவப்பூர்வமாக கற்பது, அலசி ஆய்ந்து கற்பது போன்ற கற்றல்முறைகளைப் பின்பற்ற வேண்டியதின் தேவையை வலுவாக பரிந்துரைத்துள்ளன. சிறப்பான ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கைகள் தற்காலத்துக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கின்றன. தற்போது வகுப்பறைகளில் ஆசிரியர்கள் தங்களுக்குப் பகுத்தளிக்கப்பட்ட குறிப்பிட்ட பாடப்பகுதிகளை நடத்தி முடிப்பதில் முழுகிவிடுகின்றனர். அதன்மூலம் மனப்பாட முறை பின்பற்றப்படுகிறது. விமரிசன சிந்தனை, கண்டறிந்து கற்றல், கலந்துரையாடிக் கற்றல், பகுப்பாய்ந்து கற்றல் ஆகிய உண்மையான புரிதலுக்கு உதவும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படாமல் போகின்றன. அதனால் உண்மையான புரிதலின்றி மாணவர்கள் காணப்படுகின்றனர். 4.3.1. ஒவ்வொரு பாடத்தின் அடிப்படைக் கருத்துகளைத் தவிர்த்து மீதிச் சுமையைக் குறைத்து, முழுமையான அனுபவப்பூர்வமான கலந்துரையாடிக் கற்பதற்கான, பகுப்பாய்ந்து கற்பதற்கான வாய்ப்புருவாக்குதல் ஒவ்வொரு பாடத்திலும் அடிப்படையான, முக்கியமான, தேவையான கருத்துகளை மட்டும் கற்றால் போதும், இதனால் ஆழமாகக் கலந்துரையாடவும், நுண்மையாகப் புரிந்துகொள்ளவும் பகுப்பாய்வு செய்யவும். முக்கிய கருத்துகளைப் பொருத்தமான சூழலில் பயன்படுத்தவும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். மாணாக்கரும் ஆசிரியரும் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, வினாக்கள் கேட்க ஊக்குவித்து, மகிழ்ச்சியாக, படைப்பாற்றலோடு, குழுவினருடன் சேர்ந்து, தேடிக்கண்டடைந்து, ஆழமான அனுபவங்களோடு கற்றுக்கொள்ள வேண்டும். கலை, மானுடவியல், அறிவியல், விளையாட்டு, தொழிற்கல்வி ஆகிய துறைகளுள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க மாணாக்கருக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும். 4.4 பாடத்துறைகளைத் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பளித்து மாணாக்கருக்கு வலு சேர்த்தல் பாடச்சுமை குறைகிறது, உட்பட்டிருக்கும் குறைந்த கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்வது என்பதோடு தற்கால கலைத்திட்டத்திற்கு அப்பாலுள்ள பல பாடங்களை ஆய்வு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதில், அதுவும் குறிப்பாக மேல்நிலையில் அதிக நெகிழ்வுத்தன்மையோடு, தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே இருக்கும். நேரடி அனுபவங்களின் மூலம் பல பாடத்துறைகளை அனுபவப் பூர்வமாகத் தெரிந்துகொள்ள, அதன்மூலம் அத்துறை தனக்கு ஏற்றதா இல்லையா, தன்னால் மகிழ்ச்சியோடு அனுபவித்து அத்துறையில் கற்க முடியுமா, படிப்படியாக தன் வாழ்வுக்கான துறையாக அதுமாறுமா என்பதை மாணவரே முடிவு செய்யலாம். சிறப்புத் துறைகளைத் தேர்வு செய்வதை ஒத்திவைக்கலாம். எனவே பெற்றோரோ, சமூகமோ குறிப்பிட்ட துறையைக் கட்டாயப்படுத்தித் திணிப்பதைத் தவிர்க்க முடியும். மாணவரே தன் விருப்பம், திறன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சுயமாக சிந்தித்து தனக்கான துறையைத் தேர்வு செய்யலாம். கலை, நுண்தொழில், விளையாட்டு போன்ற மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்துத் துறைகளையும் மாணாக்கர் ஆய்வுமனப்பான்மையோடு அணுகியிருக்க வேண்டும். அப்போதுதான் மாணாக்கரின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும். சுருங்கச் சொன்னால் கலைத்திட்டத்திற்குப் புறம்பாக, தனியாக பாடப்புறச் செயல்பாடுகளோ, பாட இணைச் செயல்பாடுகளோ இருக்கா. அவையும் கலைத்திட்டச் செயல்பாடுகளாக கருதப்படும். கல்வியின் அனைத்து நிலைகளிலும் முழுமையான கற்றல், முழுமையான கல்வி என்பது கூடவே இருக்க வேண்டும். எனவே அனைத்துப் பாடங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவும் மாணாக்கர்தம் விருப்புத்திற்கேற்ப, அவர்தம் திறனுக்கேற்ப சிறப்புப் பாடங்களைத் தேர்வு செய்யவும் முடியும். 4.4.1. பாடத்தைத் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு – தன் வாழ்க்கையைத் தானே திட்டமிடும் வகையில், குறிப்பாக மேல்நிலையில் தனக்கு உகந்த பாடத்தைத் தேர்வு செய்ய அதிக வாய்ப்பளிக்கப்படும். ஆண்டுக்காண்டு தேர்ந்தெடுக்க அதிகத் துறைகள், பாடங்கள் இருப்பதால் மாணாக்கர் தம் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகிறது. 4.4.2. பாடப்புறச் செயல்பாடுகள், பாட இணைச்செயல்பாடுகள் என்று அதிக கட்டுப்பாடுகள் கொண்ட பாகுபாடு கலைத்திட்டத்தில் இல்லை. பள்ளிக்கூடத்திலுள்ள எல்லாப் பாடங்களும் கலைத்திட்டத்தின் பகுதியாகக் கருதப்படும். பாடப்புறச் செயல்பாடு, பாட இணைச்செயல்பாடு என்ற பாகுபாடு இல்லை. விளையாட்டு, யோகா, நடனம், இசை, வரைதல், ஓவியம், சிற்பம், பானை வனைதல், மரவேலை, தோட்டக்கலை மற்றும் மின்வேலை ஆகியவை அனைத்தும் கலைத்திட்டத்தின் பகுதியாகவே கருதப்படும். என்சிஇஆர்டி தேசியக் கல்விக்கொள்கைக்கு ஏற்ற பாடப்புத்தகங்கள் தயாரிக்கும். அப்புத்தகங்களில் மேற்குறிப்பிட்ட துறைகள் யாவும் கலைத்திட்டத்தின் பகுதியாக உட்பட்டிருக்கும். எஸ்சிஇஆர்டி மாநிலங்களின் தேவைக்காக இப்புத்தகங்களை மேம்படுத்தலாம். மேலும் சேர்க்கலாம். குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப ஆபத்தில்லாத உடற்கல்வி, கலைக்கல்வி, தொழிற்கல்வி, நுண்தொழில் ஆகியவற்றைக் கலைத்திட்டத்தில் உட்படுத்தலாம். 4.4.3. கலைக்கும் அறிவியலுக்கும் பாகுபாடில்லை. அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் சமூக அறிவியல் போலவே கலை மற்றும் மானுடவியல் துறைகளிலும் ஆழமாக ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இது போன்ற பாகுபாடு உயர்நிலைப் பள்ளிநிலையில் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.பார்க்க பகுதி11.2. 4.4.4. கல்விசார் பாடங்களுக்கும் தொழிற்கல்விக்கும் பாகுபாடில்லை. தொடக்கக் கல்வி கலைத்திட்டத்திலும் மேல்நிலைக் கல்விக் கலைத்திட்டத்திலும் கல்விசார் பாடங்களுக்கும் தொழிற்கல்விக்கும் குறிப்பிட்ட வேறுபாடு இருக்கக் கூடாது. இரண்டு பிரிவுகளிலும் குழந்தைகள் திறன் படைத்தவர்களாக மாறவேண்டும். மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பொதுவான அடிப்படைத் திறன்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புத் திறன்களைவிட அதிக முக்கியத்துவம் இருக்கிறது. முன் தொழில்கல்வி, பல்வேறு தொழிற்கல்வி பற்றிய அறிமுகம் ஆகியவை அனைத்து தொடக்கநிலை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். கற்றல் என்பது அனுபவப்பூர்வமாக இருக்க வேண்டும். அனைத்துத் தொழில்களின்பால் மதிப்பு உருவாக அந்த அனுபவங்கள் வழிவகுக்க வேண்டும். முறையான கலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்கல்வி உட்பட்டிருக்கும். வேளாண்மை, மின்னணுவியல், வட்டார வணிகம், நுண்தொழில்கள் ஆகியவை பற்றிய ஆழமான அறிவு இந்த நிலையில் குழந்தைகள் பெற வேண்டும். மாநில அளவில் இதற்கான திட்டமிடல் நடக்க வேண்டும். தொழிற்கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் பிற வளங்களும் வழங்கப்படும். பள்ளிக்கால அளவில் மாணாக்கருக்கு பல்வேறு வேலைகள் அறிமுகமாகியிருக்க வேண்டும். மாறிக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்புச் சூழல் பற்றியும் அதற்கிணையாக பல்வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதையும் அவர்கள் உணர வேண்டும். கலைக்கல்விக்கும் அறிவியல்கல்விக்கும் இடையே குறிப்பிடும்படியான வேறுபாடு இருக்காது. அல்லது கல்விசார் பாடங்களுக்கும் தொழிற்சார் பாடங்களுக்கும் இடையே பாகுபாடு இருக்காது என்றும் இதைச் சொல்லலாம். 4.5 வட்டாரமொழியில் கற்றல்/ தாய்மொழிக்கல்வி; பன்மொழிக்கொள்கை மற்றும் மொழியின் ஆற்றல் மொழியைப் பற்றிய நிலவிவரும் பிரச்சனைகள் கல்வியைப் பொறுத்தவரை அடிப்படையானவை. கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் கருவி என்பதைத் தவிர மொழி என்பது தனிநபரின் சுயத்தை வெளிப்படுத்த உதவுகிறது. சமூகத்தின் கலாச்சாரத்தின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. மொழி என்பது அறிவை உற்பத்தி செய்வது, அறிவைத் தன்வயப்படுத்துவது என்பவை உட்படும் அறிவாற்றல் துறையோடு நேரடித் தொடர்புகொண்டது. கருத்துகளைப் பரிமாற உதவுகிறது. சிறு குழந்தைகள் எழுத்தறிவு மிக்கவர்களாக (ஒரு குறிப்பிட்ட மொழியில்) மாறி சிறந்த முறையில் கற்கவேண்டுமானால் வட்டாரமொழியில் (வீட்டில் பேசும் மொழியில்) கற்க வேண்டும் என்று மொழிவளர்ச்சி, மொழித்திறன் வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் கூறுகின்றன. இரண்டு முதல் எட்டு வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு பலமொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான மிக நெகிழ்வான ஆற்றல் இருக்கிறது. பலமொழிகளைக் கற்பதால் கிடைக்கும் நன்மைகள் பல இருப்பினும் இந்த சமூக ஆற்றலை இயன்றளவு நேர்வழிப்படுத்தவும் வேண்டும். 2 – 8 எட்டு வயதுவரையுள்ள குழந்தைகள் மிக வேகமாகக் கற்றுக்கொள்வார்கள். பன்மொழிகளைக் கற்பது அவர்களுக்கு அறிவாற்றலை மிகவும் மேம்படுத்தும். அதனால் குழந்தைகள் அடிப்படை நிலையிலேயே மூன்று மொழிகளைக் கற்கத் தொடங்க வேண்டும். வீட்டுமொழியில்/தாய்மொழியில் கல்வி குழந்தைகள் வீட்டு மொழியில்/தாய்மொழியில் கற்கும்போது முக்கியமான கருத்துகளை விரைந்து கற்றுக்கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. வேறு மொழியில் கற்பித்தல் நடக்கும்போது, குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாத மொழியில் கற்கும் சூழல் ஏற்படும்போது அவர்கள் பின்தங்கிப் போகிறார்கள் என்பதையும் இந்தக் கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்கிறது. அதனால் தொடக்க நிலையில் கற்பித்தல் மொழி வட்டாரமொழியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் வட்டாரமொழியில் எழுதப்பட்ட பாடப்புத்தகங்கள் (குறிப்பாக அறிவியல் பாடப்புத்தகங்கள்) ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஒத்திருப்பதில்லை. வட்டாரமொழியை, பழங்குடியினர் மொழியை மதிக்க வேண்டும். அம்மொழிகளில் அருமையான பாடப்புத்தகங்கள் வெளிவர வேண்டும். முடியுமெனில் திறமையான ஆசிரியர்களை இம்மொழிப்பாடங்கள் கற்பிக்க நியமிக்க வேண்டும். 4.5.1. வட்டாரமொழி/தாய்மொழி கற்பித்தல் மொழியாகும்போது: வாய்ப்பு இருக்குமெனில், குறைந்தது ஐந்தாம் வகுப்புவரை அதிகபட்சமாக எட்டாம் வகுப்புவரை கற்பித்தல்மொழி என்பது வட்டாரமொழி/தாய்மொழியாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அம்மொழியை ஒரு மொழிப்பாடமாக கற்றுக்கொள்ளலாம். அறிவியல் பாடப்புத்தகங்கள் உட்பட உயர்தர பாடப்புத்தகங்கள் வட்டாரமொழியில் எழுதப்படவேண்டும். இந்திய மொழிமாற்ற, பொருள்விளக்கக் குழு (Indian Translation and interpretation mission (see page p4.8.4.) இதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய உயர்தர பாடப்புத்தகங்கள் மாநில வட்டாரமொழியில் கிடைக்காவிட்டால் பிறமொழிப் பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தினாலும் அதிலுள்ள அக்கருத்துகளை வட்டாரமொழியில் கற்பிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அந்த வட்டாரத்தில் வழங்கிவரும் மொழிகளுள் பெரும்பான்மையானோர் பேசும் மொழியைக் கற்பித்தல் மொழியாக்க முயற்சி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மொழிச்சிறுபான்மை மொழிகள் பேசும் மக்கள் தங்கும் பகுதிகளில் அம்மொழிகள் கற்பித்தல் மொழிகளாக இருக்கும் பள்ளிகள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 4.5.2. கற்பித்தல் மொழி தாய்மொழியாக இல்லாதவர்களுக்கான இருமொழி அணுகுமுறை: வகுப்பறைகளில் சற்றே நெகிழ்வான மொழி அணுகுமுறையை இக்கல்விக்கொள்கை பரிந்துரைக்கிறது. கற்பித்தல்மொழி தாய்மொழி அல்லாதவர்களுக்கும் கருத்துப் புரிதலை உறுதிப்படுத்தி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் இருமொழி அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இருமொழிகளில் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் கற்பித்தல் சுமுகமாக நடைபெறும். 4.5.3. மும்மொழி அல்லது அதற்கும் அதிகமான மொழிகளின் அறிமுகம்: குழந்தைகளின் மொழிகற்கும் திறமையை உயர்த்த மழலையர் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்று அல்லது அதற்கு அதிகமான மொழிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மூன்றாம் வகுப்புக்குள் அம்மொழிகளில் கருத்துகளைப் பரிமாறவும், எழுத்துகளை இனம் காணவும் அடிப்படையான வாசிப்புப் பகுதிகளை வாசிக்கவும் திறமைபெற வேண்டும் என்ற இலக்கோடு இம்மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். மூன்றாம் வகுப்புவரை கற்பித்தல் மொழியில் மட்டும் எழுதினால்போதும். அதற்குப்பின் படிப்படியாக பிறமொழிகளிலும் எழுதுவதற்கான வாய்ப்பளிக்க வேண்டும். 4.5.4. செய்கைமொழியைப் தரப்படுத்துதல்: இந்திய செய்கை மொழி (ஐ. எஸ். எல்.) தேசிய மற்றும் மாநில கலைத்திட்டத்தின் அடிப்படையில் தயாரித்த படைப்புகளை செய்கைமொழிக்கு மாற்றி கேள்விக்குறையுள்ள மாணவர்களுக்கு உகந்ததாக மொழி மாற்றம் செய்யும். வட்டார செய்கைமொழிக்கும் மதிப்புண்டு. எங்கெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் அக்குறிப்பிட்ட வட்டாரமொழியைப் பயன்படுத்தலாம். மொழியின் ஆற்றலும் பன்மொழிக்கொள்கையும் பிற வளர்ந்த நாடுகளைப் போல பன்மொழிக்கொள்கை இந்தியாவின் தேவை. ஒருநாட்டில் பலமொழிகள் நிலவுவதை ஒரு சுமையாகக் கருதாமல் கற்றலுக்கான வாய்ப்பாக, அறிவின் எல்லையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும். ஒருமொழியை மட்டும் பேசும் குழந்தைகளைவிட பலமொழி பேசும் குழந்தைகள் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைந்துள்ளார்கள். மழலைப் பருவத்திலேயே அம்மொழிச்சூழலில் ஆழ்ந்துபோகும்போது அம்மொழியை விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். உலகெங்கும் உள்ள குழந்தைகள் யாவரும் இவ்வாறு பலமொழிகளைத் தொடக்கநிலையிலேயே விரைவாகக் கற்கிறார்கள். அக்குழந்தைளின் அறிவு கூர்மையடைகிறது. கலாச்சார விழிப்புணர்வு கூடுகிறது. இத்திறன் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது. இத்தகைய குழந்தைகளால் பலவழிகளில் யோசிக்க முடிகிறது. அம்மொழிகளிலுள்ள மொழியமைப்பு, சொல்வளம், சொலவடைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதால் இது சாத்தியமாகிறது. பன்மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா சிறந்த கல்வி கற்றவர்களின் நாடாக, தேசிய ஒருமைப்பாடுள்ள நாடாக சிறந்து விளங்கும். மேலும் இந்திய மொழிகள் மிகவும் வளம் வாய்ந்த, அறிவியல்பூர்வமான, உணர்வோடு கருத்துப் பரிமாற்றம் நடத்த உதவக்கூடிய மொழிகளாகும். மட்டுமல்ல அம்மொழிகளில் பண்டைய இலக்கியங்களோடு தற்கால இலக்கியங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இம்மொழிகள் இந்தியாவின் தேசிய தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு வளமான இந்திய மொழிகள் இருந்தும், அவற்றுள் செறிவான இலக்கியம் இருந்தும் பள்ளிக்கூடங்களும் சமூகமும் கற்பித்தல் மொழியாக, கருத்துப் பரிமாற்ற மொழியாக ஆங்கிலத்தை வரித்துக்கொண்டுள்ளன. இது மிகவும் வருத்தத்திற்குரியது. காரண காரியத்தோடு ஆய்ந்து பார்த்தால் கருத்துகளையும் உணர்வுகளையும் பரிமாற ஆங்கிலத்திற்கு பிறமொழிகளைவிட எந்தச் சிறப்பும் இல்லை. மாறாக தலைமுறை தலைமுறையாக உருவாகி வந்த இந்திய மொழிகள் இந்திய சூழ்நிலைக்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப கருத்துப்பரிமாற்றத்திற்கு உகந்தவையாக இருக்கின்றன. இந்திய மொழிகள் அறிவியல்பூர்வமான அமைப்பு கொண்டவை. ஒலிப்பதுபோலவே எழுதுவதற்கு வசதியானவை. எழுத்துப் பிழைகள் வருவதற்கு வாய்ப்புக் குறைவானவை. ஆங்கிலம்போல இலக்கணத்திற்கு அநேக விதிவிலக்கு கொண்டவையல்ல. மட்டுமல்ல இந்திய மொழிகள் பண்டைக்கால, மத்தியகால, தற்கால இலக்கிய பரப்பால் செறிவானவை. இதனால் இந்தியச்சூழலில் வாழ்பவர்களுக்கு இது நம்முடையது நமக்குரியது என்ற எண்ணத்தை ஊட்டுகிறது. அதனாலேயே அம்மொழிகளில் கற்பது எளிதாகிறது. தன் சூழலுடன் தொடர்புபடுத்த முடிகிறது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பேசவும் கற்றுக்கொள்ளவும் உகந்தவையாக இருக்கிறது. இக்காரணங்களால் பள்ளிப் பாடங்களில் காணப்படும் ஆழமான கருத்துகளையும் கற்றுக்கொள்ள எளிதாகிறது. தொழிற்நுட்பத்தில் சிறந்துவிளங்கும் பிற வளர்ந்த நாடுகள் கற்றல்மொழியாக அந்தந்த நாட்டுமொழியையே பயன்படுத்தும்போது இந்தியாவில் மட்டும் பெரும்பான்மையோர் ஆங்கிலத்தைக் கற்றல்மொழியாக தேர்வுசெய்வது ஏன்? காரணம் வேறொன்றுமல்ல. செல்வச்செழிப்புள்ள இந்தியர்கள் ஆங்கிலத்தை தங்கள்மொழியாக்கிக் கொண்டதுதான். 15 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் 54 விழுக்காடு ஹிந்தி பேசும் மக்களோடு ஒப்பிடும்போது அவர்கள் சந்தர்ப்பவசமாக பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். மேலும் இப்பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வேலைகளில் நுழைய தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலப்புலமையை சோதனைக்குள்ளாக்குகின்றனர். ஒருவர் கல்வி கற்றவரா இல்லையா என்பதைக் கண்டுகொள்ள சமூகத்தில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பவர்கள் பேசும் ஆங்கில அறிவு ஓர் உரைகல்லாக மாறுகிறது. மட்டுமல்ல தொழில் கிடைக்க, அதுவும் அத்தொழில்களுக்கும் ஆங்கிலப் புலமைக்கும் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஆங்கில அறிவைத் தேர்வுக்கான அடிப்படைக்காரணியாகக் கருதுகின்றனர். இதனால் சமூகத்தின் பெரும்பகுதியினர் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். இது தெரிந்தோ தற்செயலாகவோ நடக்கிறது. இப்படி ஒதுக்கப்படுவர்களுக்கு உயர்தரத் தொழிலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. காலனி ஆதிக்கம் நிலைநாட்டிய மொழியை, தற்கால சமூகத்தில் உயர் அந்தஸ்து வகிக்கும் மக்கள் பேசும் மொழியைப் பேசாத காரணத்தால், இந்த மனப்பான்மையால் கடின உழைப்பு தேவையான, உயர்தர, அதிக நிபுணத்துவம் தேவையான தொழில்களிலிருந்தும், இப்பிரிவினரிடமிருந்தும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்த நிலைமை பெற்றோர்களிடம் அவர்கள் மொழியல்லாமலிருந்தும் தங்கள் குழந்தைகள் எப்படியாவது ஆங்கிலமொழியைக் கற்றேயாக வேண்டும் என்ற பேராவலைத் தூண்டியுள்ளது. ஒதுக்கப்பட்டவர்களை உட்படுத்தவும், சமூகத்தில் உண்மையான சமத்துவம் நிலைநிற்கவும் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் மொழியின் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும். அதற்கு பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் உயர் அந்தஸ்து பெற்றவர்கள் வட்டாரமொழிகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அவற்றை மதிக்க வேண்டும். அம்மொழிகளுக்குரிய இடத்தையும் அந்தஸ்தையும் வழங்க வேண்டும். (குறிப்பாக வேலையாட்களை நியமிக்கும்போது, சமூக நிகழ்வுகளின் போது, பள்ளி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் அத்தோடு எங்கெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் இம்மொழியைப் பயன்படுத்த வேண்டும்.) சமீபகால இந்திய மொழிகள் இழந்த முக்கியத்துவத்தையும் இடத்தையும் மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் வசிப்பவர்களையும் சமூகத்தின் பலநிலைகளில் உள்ளவர்களையும் இணைப்பதற்கு பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இம்மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகளின் பல்மொழிகற்கும் அசாத்திய திறமையைக் கருத்திற்கொண்டு, தற்போது நிலவிவரும் சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் பிறருக்கும் இடையே இருக்கும் பிளவைச் சமன் செய்ய இந்திய மொழிகளைக் கற்பிப்பதோடு அனைத்து அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் ஆங்கிலம் சிறந்த முறையில் கற்பிக்கப்படவேண்டும். ஆங்கிலமொழியைச் சரளமாகப் பயன்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்கவும் ஆய்வு செய்யவும் வட்டாரமொழி, தாய்மொழி அல்லது பிற இந்திய மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 1960 க்குப் பிறகு மீண்டும் ஆங்கிலம் உலகமொழியாகும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்பதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம். முன்பு குறிப்பிட்டதுபோல மிகவும் முன்னணி வகிக்கும் நாடுகள் அனைத்தும் அவர்களுடைய நாட்டுமொழியையே கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவும் இப்பாதையில் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இல்லாவிட்டால் அதன் வளமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் மெல்ல மெல்ல அழியும். இந்தியர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நடத்த அந்தந்த வட்டார மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறோம். அப்போதுதான் இந்தியமொழிகள் புத்துணர்ச்சியோடு மீண்டு வரும். வளம்பெறும். (இயல் 22 பார்க்கவும்). இருப்பினும் சில குறிப்பிட்ட துறைகளில் தற்காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள், எடுத்துக்காட்டாக உயர்மட்ட ஆய்விதழ்களில் வரும் கட்டுரைகள் போன்றவை பெரும்பான்மையும் ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன. இந்த அர்த்த்தில் ஆங்கிலம் உலகமொழியாக நிலைநிற்கிறது. இதனால் அறிவியல் பாடங்கள் கற்க விரும்புபவர்கள், அறிவியல் பாடங்களில் உயர்பட்டப்படிப்பு கற்க நினைப்பவர்கள் அறிவியலை இருமொழிகளில் (வட்டாரமொழியிலும் ஆங்கிலத்திலும்) கற்க வேண்டும். இது தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் அதேமுறைதான் என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். 4.5.5. பள்ளிகளிலும் தொடரும் மும்மொழிக்கொள்கை: 1968 இல் வெளிவந்த தேசிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டு, 1986 லும் 1992 மற்றும் தேசிய கல்விக்கொள்கை 2005 ம் பின்மொழிந்த மும்மொழிக் கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி தொடரும். சட்டதிட்டத்திற்கேற்ப, அந்தப் பகுதி மக்களின் விருப்பத்திற்கேற்ப இது பின்பற்றப்படும். இரண்டு வயதுமுதல் எட்டு வயதுவரை குழந்தைகள் மொழியை விரைந்து கற்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுவதாலும். பல மொழிகளைக் கற்பது அவர்தம் அறிவாற்றலுக்கு நன்மை பயக்கும் என்பதாலும் அடிப்படை நிலையில் இருந்தே மும்மொழிச் செயல்பாடுகளில் குழந்தைகள் ஆர்வத்தோடு மூழ்கிப்போக வாய்ப்புருவாக்க வேண்டும். 4.5.6. மும்மொழியை நடைமுறைப்படுத்தும் விதம்: பன்மொழி பேசும் நாட்டில் பலமொழிகளில் கருத்துப் பரிமாற்றம் நடத்தும் திறமையை வளர்த்துக்கொள்ள மும்மொழிக்கொள்கை எப்படிப் பரிந்துரைக்கப்பட்டதோ அதே முறையில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். சில மாநிலங்களில் அதுவும் குறிப்பாக இந்திமொழி பேசும் மாநிலங்களில் தேசிய ஒருமைப்பாட்டை கருத்திற்கொண்டு பிறமாநில மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தினால் அந்த மொழிகளுக்கு மதிப்பு கூடும். அந்த மொழிகளிலுள்ள இலக்கியங்கள் போற்றப்படும். அம்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மதிக்கப்படுவார்கள். மட்டுமல்ல மொழியாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு நாடுமுழுவதும் இருக்கும். பட்டதாரிகளுக்கு வேலைக்கான வாய்ப்பைக் கூட்டும். தேசிய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வட்டார மொழி ஆசிரியர்களை நாடெங்கும் நியமனம் செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக பட்டியலில் உட்படுத்தப்பட்டுள்ள 8 மொழிகள். மும்மொழிக்கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த, மாநிலங்கள் குறிப்பாக நாட்டின் பல பகுதியிலுள்ள மாநிலங்கள் ஆசிரியர்களை நியமனம் செய்ய தங்களுக்குள் உடன்படிக்கை இட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் இந்தியமொழிகளைப் பற்றிய ஆய்வுகள் நாடெங்கும் நடக்கும். 4.5.7. மொழியாசிரியர்களின் நியமனம்: ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் கிடைக்காவிட்டால் அதற்கென சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கென சிறப்பான திட்டங்கள் தீட்ட வேண்டும். அப்பகுதியில் அம்மொழி பேசும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்யலாம். இந்திய மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களின் வளர்ச்சிக்காக நாடு தழுவிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். 4.5.8. இருமொழியில் அறிவியல் கற்றல்: வட்டாரமொழியில் கற்று வந்த குழந்தைகள் எட்டாம் வகுப்பு முதல் அறிவியல் பாடத்தை இருமொழிகளில் கற்க வேண்டும். அப்போதுதான் பத்தாம் வகுப்பு வரும்போது அறிவியல் கருத்துகளை இருமொழிகளிலும் வெளியிடும் திறமை பெறுவர். இது அறிவியல் கருத்துகளைப் பற்றி பலவழிகளில் யோசிக்க மாணவர்களைத் தூண்டும். மேலும் எதிர்கால அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வைப் பற்றி, அறிவியல் உண்மைகள் பற்றி தங்கள் குடும்பத்தினருக்கும் எடுத்துரைக்கலாம். அப்பகுதிகளிலுள்ள தொலைக்காட்சிகளில் பேசலாம். வட்டார மொழியில் வெளிவரும் செய்தித்தாள்களில் அதைப்பற்றி எழுதலாம். அப்பகுதியிலும் சிறு நகரங்களிலும் வாழும் குழந்தைகளிடம் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசலாம். இருமொழிகளில் அறிவியல் கற்பது உண்மையில் ஒரு வரம். அறிவியல்துறையில் நோபல் பரிசு வென்ற பெரும்பான்மை அறிவியல் அறிஞர்களும் ஒன்றுக்கு அதிகமான மொழியில் அறிவியல் கற்றதால் அறிவியல் முறையில் சிந்திக்கவும் பேசவும் முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்கள். தற்போதைய இந்தியக் கல்விமுறையில் கற்று வந்த அறிவியல் அறிஞர்கள் பலர் தங்கள் தாய்மொழியில் அறிவியல் கருத்துகளைப் பற்றி சிந்திக்க முடிவதில்லை என்று குறைகூறியுள்ளார்கள். தங்கள் சிந்தனையில் இக்குறைபாடு எப்படி தாக்கம் செலுத்துகிறது என்றும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் போனதையும் கூறியுள்ளார்கள். 4.5.9. மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கு நெகிழ்வான வழிமுறைகள்: மும்மொழிக்கொள்கைப்படி ஆறாம்வகுப்பு வரும்போது தனக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கு சற்று தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மட்டுமே உள்ளன. இந்தி மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் ஒருமொழி இந்தி, அடுத்தது ஆங்கிலம், பிறகு இந்திய மொழிகளுள் எதைவேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தி மொழி பேசாத மக்கள் வாழும் மாநிலங்களில் வட்டார மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். நடுநிலைப் பள்ளி வந்தபிறகு மாணவர்கள் வேறு மொழியைத் தேர்வு செய்யும்போது முன்பு தேர்வு செய்த மொழிகளில் எதிர்பார்க்கும் திறன் பெற்றுள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். (ஒருமொழியில் இலக்கியத்தை ரசிக்கும் அளவுக்கு) இதை மோடுலார் வாரியத் தேர்வு (இயல்4.9.5) மூலம் மதிப்பிட வேண்டும். மோடுலார் வாரியத் தேர்வுப்படி மூன்று மொழிகளிலும் மாணவர்கள் அடிப்படைத் திறன்களைப் பெற்றுள்ளார்களா என்று பரிசோதித்தாலும் (நான்கு வருட மொழி கற்றல் மூலம் இது சாத்தியமே) ஆறாம் வகுப்பு வந்த பிறகு மொழியை மாற்ற விரும்பும் மாணவருக்கு பள்ளியும் ஆசிரியர்களும் துணைபுரிய வேண்டும். மும்மொழிக் கொள்கைக்கு உட்பட்டு மேலும் மொழிகளைத் தேர்வு செய்யவும் கற்றுக்கொள்ளவும் மிகவும் தளர்வான விதிமுறைகளே உள்ளன. 4.5.10. உயர்நிலைப் பள்ளியில் வேற்று நாட்டு மொழி: உயர்நிலையில் படிக்கும் மாணவர்கள் வேற்றுநாட்டு மொழியைக் கற்க விரும்பினால் பிரஞ்சுமொழி, ஜெர்மன்மொழி, ஸ்பானிஷ்மொழி, சீனமொழி, ஜப்பானியமொழி ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்து கற்க வாய்ப்புகள் வழங்கப்படும். இது அவர்கள் விரும்பிக் கற்பதால் விருப்பப்பாடமாகக் கருதப்படும். விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்த மொழி மும்மொழிக்குள் உட்படாது. இந்த நாட்டுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. அதனால் வேற்று நாட்டு மொழிகள் கற்க உதவும் செயல்பாடுகளுள் முக்கியமாக இந்திய மொழிகளிலிருந்து வேற்று நாட்டு மொழிக்கும் அம்மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கும் செயல்பாடு உட்படுத்தப்படும். 4.5.11. மொழி கற்றல் கற்பித்தல் அணுகுமுறை: அடிப்படை நிலையில் அதாவது (மழலையர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை) மகிழ்ச்சியாக, மொழியைப் பயன்படுத்த உதவும் செயல்பாடுகள் மூலம், கருத்துப் பரிமாற்றம் மூலம் மொழி கற்பிக்கப்படும். ஸம்ஸ்க்ருதா பாரதி மற்றும் அலையன்ஸ் ப்ரான்கேய்ஸ் என்னும் இந்திய நிறுவனங்கள் மொழிகற்பித்தலுக்கான சிறந்த மாதிரிகளை வழங்கியுள்ளன. இந்த மாதிரிகளைப் பின்பற்றி பிற மொழிகள் கற்பிக்க நினைப்பவர்கள் தாராளமாக இம்மாதிரிகளைப் பின்பற்றலாம். இங்கு முக்கியமாக எழுத்தறிமுகம், அடிப்படைச் சொற்களை வாசித்தல் போன்ற செயல்பாடுகளை உரையாடல் உத்தியைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கிறார்கள். அடிப்படை நிலையிலிருந்து ஆயத்த நிலைக்குச் செல்லும்போது வாசிப்புப் பகுதியும் செறிவானதாக மாறும், எழுத்துகளை எழுதுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும். நடுநிலைக்கு வரும்போது எழுத்துச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். மொழிகற்பித்தலின் எல்லா நிலையிலும் இயல்பாகப் பேசுவதற்கான செயல்பாடுகள் (குறிப்பாக தொடக்க நிலையில் வீட்டு மொழியில், வட்டார மொழியில்) மிக அதிகமாக உட்பட்டிருக்கும். இது எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனை குழந்தைகளிடத்தில் வலுப்படுத்தும். மேலும் வீட்டுமொழி/வட்டாரமொழி/ மற்றும் அல்லது இரண்டாம் மொழிக்கற்றலை புதிய தளத்திற்கு உயர்த்த வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள, அனைத்துத் துறையிலுள்ள எழுத்தாளர்கள் படைத்த பண்டைய, தற்கால இலக்கியங்களை வாசிப்பதின் மூலமும் ஆய்வு செய்வதின் மூலமும் இத்திறன் பெறச்செய்ய வேண்டும். (மேலும் இயல் 4.5.12, இயல்4.5.16 ஆகியவற்றைப் பார்க்கவும்) நாடங்கள், இசை, திரைப்படப் பகுதிகள், போன்றவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவதன் மூலம் இம்மொழித்திறனை மேலும் வளர்த்திட வேண்டும். குறிப்பாக மேல்நிலையில் மொழியோடு தொடர்புடைய கலைவடிவங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை அந்தந்த நிலைக்குத் தகுந்தாற்போல் பொருத்தமாக உட்படுத்த வேண்டும். மாநில மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் கற்பிக்கும்போது அப்பகுதியில் முக்கியமாக வழங்கிவரும் பிறமொழிகளுக்கும் அதன் வகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்தகைய மொழிகளை உட்படுத்தும்போது குழந்தைகளின் விருப்பு வெறுப்புகள், மகிழ்ச்சி, திறன் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அம்மொழிகளின் வளர்ச்சியும் சாத்தியமாகும். (எடுத்துக்காட்டாக செறிவான வளமையான கரிபோலி, அவதி, மைதிலி, ப்ராஜ், மற்றும் உருது மொழிகளின் இலக்கியங்களை இந்தி மொழி கற்கும்போது உட்படுத்துவது அவற்றின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.) இந்தியாவின் நவீன மற்றும் செம்மொழிகளின் அறிமுகம் ஒருவர் தம் சொந்த மொழியைச் சிறந்தமுறையில் கற்றுக்கொள்வது ஒருபோதும் அவருக்குத் தீங்கு செய்யாது. மாறாக கல்வி, சமூக, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் அடிகோலும். இதற்குச் சான்றாக உலகிலுள்ள பல வளர்ந்த நாடுகளைச் சுட்டிக்காட்டலாம். இதனால் சமீப காலமாக மதிப்பிழந்துள்ள இந்திய மொழிகள், கலைவடிவங்கள், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டெடுக்க வேண்டும் என்பதை இக்கல்விக்கொள்கை வலுவாக பரிந்துரைக்கிறது. ஒருநாட்டின் கலாச்சார வளங்களை மீட்டெடுப்பது அந்நாட்டு மக்களை வலுவானவர்களாக மாற்றும். கலாச்சார விழுமியங்கள், அவர்தம் அடையாளங்கள், வெளிப்பாடுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும். இது படைப்பாற்றலோடு, மகிழ்ச்சியோடு, திறம்பட பணிபுரிய பெரிதும் உதவும். உலக மொழிகளுள் இந்திய மொழிகள் செறிவானவை. அறிவியல்பூர்வமானவை. அழகானை. உணர்வுகளை வெளிப்படுத்த உகந்தவை. பண்டைய மற்றும் தற்கால இலக்கியங்களின் (உரைநடையும் செய்யுளும்) பெருந்திரட்டு கொண்டவை. திரைப்படங்களிலும் இசையிலும் இதன் தாக்கத்தைக் காணலாம். இதன் மூலம் நாட்டின் அடையாளமாக, சொத்தாக இம்மொழிகள் திகழ்கின்றன. நம் நாட்டின் கலாச்சார வளத்தைக் கூட்டவும் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் அனைத்து இந்திய இளைஞர்களும் நம் நாட்டு மொழிகளின் பல்வேறு வகையான, செறிவான இலக்கியச் சொத்தைப் பற்றி அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். 4.5.12. இந்திய மொழிகள் பற்றிய படிப்பு: இந்தியாவின் ஆறு முதல் எட்டு வகுப்புகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் இந்திய மொழிகள் என்ற பிரிவை எடுத்துப் படிக்க வேண்டும். இது விளையாட்டாக மகிழ்ச்சியாக கற்கும் பிரிவாக இருக்கும். இப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் இந்திய மொழிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையை அறிந்துகொள்ளலாம். அவற்றின் ஒலிப்புமுறை, எழுத்துகளின் அறிவியல்பூர்வமான அடுக்குமுறை, பொதுவான இலக்கண அமைப்பு, வடமொழியிலிருந்தும் பிற செம்மொழிகளிலிருந்தும் அம்மொழிச் சொற்கள் எவ்வாறு தோன்றின, உற்பத்தியாயின என்பவற்றை அறியலாம். மேலும் மொழிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளையும். தொடர்பையும் புரிந்துகொள்ளலாம். மேலும் நாட்டின் எப்பகுதியிலுள்ள மக்கள் எந்தமொழியைப் பேசுகிறார்கள் என்றும் மலைவாழ் மக்கள் பேசும் மொழியின் அமைப்பையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மொழியிலும் சில அடிப்படை வாக்கியங்களை (வணக்கம் சொல்வது, விளையாட்டான சில தொடர்களைச் சொல்வது) பேசக் கற்றுக்கொள்ளலாம். அம்மொழிகளிலுள்ள இலக்கிய வளத்தின் சிறு பகுதியையும் (எளிய செய்யுள்கள், பாடல்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள்) தெரிந்துகொள்ளலாம். இப்படிக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு ஒருமைப்பாட்டைப் பற்றிய, அழகான கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றிய, இந்திய நாட்டின் வேற்றுமைகளைப் பற்றிய ஒரு புரிதல் ஏற்படும். பிறமொழி பேசும் இந்தியர்களைச் சந்திக்கும்போது தயக்கமின்றி உற்சாகத்தோடு அவர்களுடன் பேச முடியும். என்சிஇஆர்டி, எஸ்சிஇஆர்டி மற்றும் மொழிவல்லுநர்கள் ஆகியோர் இணைந்து இந்த முக்கியமான பிரிவுக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். 4.5.13. கலைத்திட்டத்தில் அரும்பெரும் இந்திய இலக்கியங்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை உட்படுத்துதல்: அனைத்து இந்திய மொழிகளில் படைக்கப்பட்டுள்ள பண்டைய தற்கால இலக்கியங்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை, கற்பித்தல்மொழியில் மொழியாக்கம் செய்து கலைத்திட்டம் நெடுகிலும், அனைத்துப் பாடங்களிலும் உட்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் இலக்கிய ரசனைத் தூண்டப்படும். இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய இலக்கியத்தைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும். (எடுத்துக்காட்டாக திரு ரவீந்திரநாத தாகூரின் படைப்புகளுள் பொருத்தமான பகுதிகளை தத்துவப்பாட வகுப்புகளிலும் எழுத்துத்திறன் வளர்க்கும் வகுப்புகளிலும் உட்படுத்தலாம். அதுபோல் பொருத்தமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து நன்னெறி வகுப்புகளிலும் வரலாற்று வகுப்புகளிலும் உட்படுத்த வேண்டும்) மேலும் இயல் 4.5.14 மற்றும் 4.5.15 பார்க்க) அவற்றின் இலக்கியப் பரப்பையும் அவற்றின் முக்கியத்துவம் கருதாமல், அவற்றின் தற்காலத் தேவையைக் கருதாமல் அவற்றின் அழகைக் கருத்திற்கொள்ளாமல் நம்மால் கடந்து செல்ல முடியாது. கிரேக்க லத்தீன் மொழிகளின் இலக்கியங்கள் இரண்டையும் சேர்த்தாலும் வடமொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்களுக்கு நிகராகாது. கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக்கலை, உலோகவியல், நாடகம், செய்யுள், கதைசொல்லுதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள், மதச்சார்பற்றவர்கள், பொருளாதாரத்தில் முந்தியவர்கள், பின்னணியில் நிற்பவர்கள் என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளில் உள்ளவர்களால் அவ்விலக்கியங்கள் படைக்கப்பட்டன. வடமொழியன்றி பிற இந்தியச் சொம்மொழிகளிலும் அருமையான இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. செம்மொழிகளாம் தமிழ் மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற மொழிகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இம்மொழிகளில் வெளிவந்துள்ள இலக்கியங்கள் அவற்றின் வளமைக்காகவும் அவை மனிதகுலத்திற்குத் தரும் மகிழ்ச்சிக்காகவும் மரபுக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக மாறும்போது அடுத்த தலைமுறை இச்செம்மொழியின் பரந்த இலக்கியப் பெருவெளியில் பயணம் செய்து, அறிவுப் பெட்டகத்தைத் திறந்து, கலாச்சார வளங்களை நுகர்ந்து தங்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். 4.5.14. வடமொழியையும் அதன் பரந்த இலக்கியங்களையும் கற்றுத் தெளிதல்: வடமொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. அறிவியல், கணிதம், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அரசியல், இசை, மொழியியல், நாடகம், கதைகூறுதல், கட்டடக்கலை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் தங்கள் அறிவை வடமொழியில் வடித்துள்ளனர். அறிவுத்தேடலில், ஏன் 64 கலைகளின் வளர்ச்சியில் வடமொழி (பிராக்ருத்) ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு வடமொழியாற்றிய பங்கை கருத்திற்கொண்டு, அறிவு வளர்ச்சிக்கு உதவிய தனித்த பெருமையைக் கணக்கிலெடுத்து, கலாச்சார ஒற்றுமைக்கு உதவியதையும் கவனித்து பள்ளிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வடமொழி கற்கவும் அதன் அறிவியல் பூர்வமான அமைப்பை உணரவும் புராதன, தற்கால எழுத்தாளர்கள் (காளிதாசன் மற்றும் பாசா எழுதிய நாடகங்கள்) படைத்த படைப்புக்களின் பகுதிகளைப் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். வரலாற்றையே புரட்டிப்போடும் வகையில் வடமொழியில் எழுதப்பட்ட படைப்புகளை பள்ளிப் பாடங்களோடு எங்கெங்கு பொருத்தமுடியுமோ அங்கங்கு சேர்த்து அவற்றைக் கற்பிக்க ஆவன செய்ய வேண்டும். (எடுத்துக்காட்டாக கணிதப் புதிர்களைப் பற்றி பாஸ்கராச்சாரியர் எழுதிய பாடல்கள் கணிதக் கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும். நன்னெறி வகுப்பில் பொருத்தமான பஞ்சதந்திரக் கதைகளைக் கூறலாம்.) பட்டியலில் உட்படுத்தப்பட்டுள்ள 8 மொழிகளுக்கு இணையாக வடமொழியையும் பள்ளியின் எல்லா நிலைகளிலும் மற்றும் உயர்கல்வியிலும் விருப்பப் பாடமாக கற்பதற்கு வகைசெய்யப்படும். அடிப்படை நிலையிலும் நடுநிலையிலும் வடமொழி பாடப்புத்தகங்கள் எளிய தரமான வடமொழியில் எழுதப்பட வேண்டும். அதனால் வடமொழியை வடமொழியின் மூலம் குழந்தைகள் மகிழும்படி கற்பிக்க முடியும். 4.5.15. இந்தியச் செம்மொழிகள் அனைத்தையும் கற்பதற்கான பாடப்பிரிவுகள்: வடமொழியோடு பள்ளிக்கல்வியின் எல்லா நிலைகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெர்சியன், மற்றும் ப்ராக்ருத் போன்ற அனைத்து இந்தியச் செம்மொழிகளைக் கற்பதற்கு வகைசெய்யப்படும். குறிப்பாக இம்மொழிகள் பேசும் மக்கள் வாழும் மாநிலங்களிலும் அம்மொழிகள் போற்றப்படும் பகுதிகளிலும் இதற்கு ஆவன செய்யப்படும். அவ்வாறு செய்வதால் அம்மொழிகளும் அவற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்களும் அழியாமல் பாதுகாக்கப்படும். செம்மொழிப் படைப்புகளையும் இந்தியாவின் பிற மொழிகளில் பல்துறை வல்லுநர்கள் படைத்தவையும் ஆய்வு செய்து பொருத்தமான பகுதிகளை இலக்கிய வகுப்பிலும், படைப்பாக்க வகுப்பிலும் பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கலைத்திட்டம் நெடுகிலும் இதற்கான வாய்ப்புகளைக் கண்டடைய வேண்டும். இதனால் இம்மொழிகளின் வளமையும், செழுமையும். காலத்தை வென்று நிற்கும் கருத்தும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும். (எடுத்துக்காட்டாக தமிழிலுள்ள சங்ககாலப்பாடல்கள், பாலிமொழியிலுள்ள ஜாதகக் கதைகள், ஒடிய மொழியில் சரளா தாசாவின் படைப்புகள், கன்னட மொழியில் ராகவங்கா படைத்த ஹரிச்சந்திர காவியம், பெர்சிய மொழியில் அமீர் குஸ்ரூ படைத்தவை, இந்தி மொழியில் கபீர் படைத்தவை.. போன்றவை) 4.5.16. செம்மொழி கற்க இருவருட தனிப்பாடம்: நம் குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும் செழுமையான மொழிவளத்தைப் பாதுகாக்கவும் அனைத்துப் பள்ளிகளிலுள்ள ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை கற்கும் அனைத்து மாணவர்களும் ஒரு செம்மொழியை இருவருடம் கற்க வேண்டும். அதை உயர்நிலையிலும் கல்லூரியிலும் கற்க வேண்டுமா வேண்டாமா என்பதை மாணவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாம். இருவருட செம்மொழி கற்றலை மகிழ்ச்சியுடையதாக்க, தங்கள் அனுபவங்களோடு தொடர்புடையதாக்க, அம்மொழியிலுள்ள அருமையான படைப்புகளை எளிமையாக, இனிமையாக வாசிப்பதற்கேற்றாற்போல் மாற்ற வேண்டும். சமூகத்தின் பல்துறைகளில் சிறந்துவிளங்கிய படைப்பாளிகளின் படைப்புகளை இதற்கென தேர்ந்தெடுக்க வேண்டும். அம்மொழிகளின் ஒலிப்பியல், சொல்லாய்வு, தற்கால மொழிகளில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றை மாணவர்கள் கற்பார்கள். மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் வடமொழியை விருப்பப் பாடமாக எடுத்த மாணவர்கள் செம்மொழி கற்றல் பிரிவுக்காக தற்கால அல்லது பண்டைய மொழிகளிலுள் ஒன்றையோ அல்லது இலக்கியத்தையோ இதற்குப் பதிலாக தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக இந்தி பேசும் மாநிலங்களில் படிப்பவர்கள் மும்மொழிக் கொள்கையின்படி இந்தி, வடமொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தேர்வு செய்திருந்தால் அவர்கள் இருவருடம் இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கும் வேறொரு மொழி (எடுத்துக்காட்டு – தமிழ்) கற்கவேண்டும். 4.6 ஒருங்கிணைந்த பாடத்திட்டம் - அடிப்படைப் பாடங்களும், திறன்களும் உள்ளடக்கியது மாணவர்கள் தங்களுக்கு உரிய பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்க இலகுவாக இருக்கும் அதே வேளையில் இந்தக் கொள்கையின்படி அவர்களை சாதனையாளர்களாக்கவும் விஞ்ஞானிகளாகவும் தம்மைத் தாமே மாற்றத்திற்குத் தகவமைத்து கொள்ளவும் இந்த மாறுதல்கள் அவசியமாகின்றன. பல்வேறு திறன்கள் - விஞ்ஞான வேட்கை,மொழித்திறம் , கலைகள், தகவல் பரிமாற்றம், கேள்வி கேட்கும் திறன், இந்தியா பற்றிய அறிவு, சமூகம் சார்ந்த அறிவு இவற்றை மேம்படுத்துதல் அவசியமாகிறது. இளம் குழந்தைகள் அனைத்து விதமான கருத்துகளையும் தங்களது தாய்மொழியிலேயே சுலபமாகக் கற்கின்றனர் 4.6.1 தர்க்க மற்றும் பகுத்தறியும் வழிமுறை. 4.6.1.1. தர்க்க மற்றும் பகுத்தறிவு வழிமுறையை ஆதாரத்தின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் மூலம் வலியுறுத்துதல்: விஞ்ஞான அடிப்படையில், அறிவியல் முறையில் இதனை கற்பிக்க இப்பாட திட்டம் வழிவகை செய்கிறது, அறிவியல் மற்றும் அறிவியல் சாராபாடங்களில் இம்முறையை அமல்படுத்துவதன் மூலம் பகுத்தறியும், கேள்வி கேட்கும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. உதாரணமாக வரலாற்றில், தொல்லியல் மற்றும் இலக்கியத்துறையின் ஆதாரங்களை ஆய்வுக்குட்படுத்துதல், இயற்பியலில், இசையில் எந்த அதிர்வெண்களை பயன்படுத்துவது போன்றவைகளை கூறலாம். சுpல நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதனால் சமூகத்தில் ஏற்படும் நேர்மறை விளைவுகளை பற்றியும் ஆராயலாம். ஆதாரம் - சார்ந்த, அறிவியல் ரீதியான அணுகுமுறை மாணவர்கள் தங்களை புதுசூழ்நிலையில் பொருந்திப்போகப் பழக்குகிறது. வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்கிறது. 4.6.2 கலையும் – அழகியலும் எந்தக் கல்வியும் படைப்பாற்றலும் புதுமையும் கொண்டிருக்குமேயானால் அதில் கலைகளும் இருக்க வேண்டும். சிறுவயதில் கலைகளில் தேர்ச்சி பெற்ற குழந்தைகள் படைப்பாற்றலிலும் உற்பத்தியிலும் பின்னாளில் சிறந்து விளங்குவர். இசை குழந்தைகளின் மனநலனை மேம்படுத்தி அறிவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இசை பயிற்றுவிக்கப்பட்;ட குழந்தைகள் சிறந்த கல்வித்திறனுடனும் பன்முகத்திறனோடும் விளங்குவர். நோபல் பரிசுபெற்ற அனைவரும் இசையைப் பொழுதுபோக்காகவேனும் பயின்று கொண்டிருப்பவர்கள் ஆகின்றனர். இந்த பாடத்திட்டத்தின்படி அனைத்து குழந்தைகளும் எல்லாநிலையிலும் இசையின் மூலம் பயன்பெற வலியுறுத்தப்படுகிறது. 4.6.2.1. இளம்வயதினர் நடுவே இசையும் , கலைசார் அனுபவமும் : அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளியில் சேர்ந்த வகுப்பு முதலே இந்திய இசை வடிவங்களான கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையின் ராகங்கள், தாளங்கள் முதலியவை கற்பிக்கப்பட வேண்டும். இவை தவிர வாய்ப்பாட்டு, கிராமியக்கலைகள், கைவினைத்திறன்சார் பயிற்சியும் மேற்கொள்ளப்படவேண்டும். சிறிய அதிக விலையில்லாத கையடக்கமான சைலோபோன்கள் போன்ற இசைக் கருவிகள் பள்ளியில் இளம் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்; இதன் முலம் அவர்கள் இசையை கற்க, இசைக்க மற்றும் இசையைக் கேட்டு அனுபவிக்க முடியும்;. கலைகளில் மேடை நாடகம், கவிதை, சிற்பக்கலை, வர்ணம் பூசுதல், வரைதல், மர வேலைப்பாடுகள், தையல்கலை போன்றவை உள்ளடங்கும். கற்பித்தல் முறையானது வயதிற்கு தக்கபடியும், பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும், பழக்கப்பட்ட கலை ஆசிரியர்கள் மூலமாக இந்த கற்பித்தல் அமைய வேண்டும். இதன் குறிக்கோளானது பலமான சமூகத்தை இசை மற்றும் கலை வழியாக உருவாக்குவதே ஆகும். சமூகத்தில் உள்ள இசை பயிற்றுநர்கள் மற்றும் கலைஞர்களை பயிற்றுவித்து இதற்காக பயன்படுத்தப்படும். இதன்மூலம் அந்தந்த பகுதிக்கான பாரம்பரியக் கலைகள் பாதுகாக்கப்படும். 4.6.2.2. ஒரே ஒரு கலையை மட்டுமாவது ஊன்றிப் படித்தல்: கலைகளைப் பற்றி ஆராய்ந்து, கற்றலிலும் ஏதேனும் ஒரு கலையை ஊன்றிப் படிக்க வழிவகை செய்யப்படும் - பாடுதல், சிற்பக்கலை, வரைதல், வர்ணம் பூசுதல் போன்றவை இந்த அனுபவங்கள் மாணவர்களின் படைப்புத்திறனையும், புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆற்றலையும் பிற்காலத்தில் அதிகரிக்கச் செய்யும். 4.6.2.3. தொழில்நுட்ப உதவியுடன் கலைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லுதல்: தொழில்நுட்பம் கலைகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல உதவும். உதாரணத்திற்கு, தொழில்முறை சார்ந்த வகுப்புகள் பிரபலமான கலைபயிற்றுனர்கள் மூலம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கபடும். 4.6.2.4. அந்தந்தப் பகுதி கலைபயிற்றுநர்களுடன் கலந்துரையாடல்: அந்தந்த சமூக கலைஞர்களும், கைவினைக் கலைஞர்களும் சில வகுப்புகளை எடுக்க அழைக்கப்படுவார்கள் இதனால் மாணவர்கள் கலைகளை ரசித்து விளையாட வழிவகுக்கும். முழுமையான கலை சார்ந்த கல்வியே அவர்களின் படைப்பாற்றலை, மனிதத்தன்மையை, புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் தன்மையினை அதிகரிக்கச் செய்யும். 4.6.3. வாய்மொழி மற்றும் எழுத்து வடிவ கருத்து பறிமாற்றம் மாணவர்கள் மொழிகளைக் கற்கத் தொடங்குவதால் , பேசவும் , எழுதவும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். ஒவ்வொரு மாணவரும் இயல்பாகப் பேசவும் , கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் வாரத்தில் சில மணித்துளிகளாவது தனக்குப் பிடித்த தலைப்பில் பேச பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல் முயற்சியாக கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்படுகிறது. 4.6.3.1. “காட்டுதல் மற்றும் கூறுதல்—அடிப்படை மற்றும் தயாரிப்பு ஆண்டுகளில் கற்றல் அமர்வுகள் :” இளம் மாணவர்கள் மத்தியில் பழக்கப்படுத்துதல்: மேடைப் பேச்சாற்றலையும், கேட்கும் திறனையும் வளர்ப்பதற்குப் பார்த்துச் சொல்லுதல் முறை இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. வாரம் ஒருமுறையேனும் “காட்டுதல் மற்றும் கூறுதல்” முறை முதலாம் வகுப்பிலிருந்தே பரிந்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிடித்த பொம்மைகள், விளையாட்டு, பூக்கள், கதைகள் குறித்து சிறிது நேரம் வகுப்பு முன்னிலையில் பேச வேண்டும். ஆரம்பத்தில் குழந்தைகளின் தாய் மொழியிலும் பின்பு பிற மொழிகளிலும் இருத்தல் வேண்டும். ஓவ்வொரு பேச்சின் இறுதியிலும் அதைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் நடைபெற வேண்டும். ஆசிரியர்கள் முதன்மையாக வழிகாட்டவும் பின்பு குழந்தைகளை உற்சாக மூட்டவும் செய்ய வேண்டும். இதன் வழியாக மாணவர்கள் - ஆசிரியர்கள் பிணைப்பு உறுதி செய்யப்படுகிறது. நடுநிலை வகுப்புகளில், இந்த “காட்டுதல் மற்றும் கூறுதல்” வகுப்புகள் வாரம் ஒருமுறையாக மேற்கொள்ளப்பட்டு, பிற முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்படும்; அவர்கள் செய்திகள், கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கதைகள், கவிதைகள் குறித்து பேசுவார்கள். 4.6.3.2. தகவல் தொடர்பை நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் இணைத்தல்: நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் தகவல் தொடர்பை மேம்படுத்த குறிப்பிட்ட தலைப்புகளில் மற்ற மாணவர்கள் மத்தியில் பேச பயிற்சி வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, அறிவியல் வகுப்பில், மாணவர்கள் கரும்பலகையில் தீர்வு காண்பதற்கும் வாழ்வியல் நெறிமுறையை வாழ்க்கைப் பாடத்தின் மூலம் கண்டறியவும் வழிவகை செய்யப்படும் . குழந்தைகளின் திறமைகளையும், ஆர்வத்தினையும் கண்டறியவும் அதனை மேம்படுத்தவும் இது உதவும். நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில், மாணவர்கள் சமூகம், அறிவியல, தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவம், பொறியியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பயிற்றுவிக்கப்படுவர். இதன் மூலம் வருங்காலங்களில் மாணவர்கள் நாட்டிற்கும், உலகத்திற்கும் மிகப்பெரிய பங்காற்ற இயலும். பள்ளிக்கல்வி அறிவியல் மனப்பான்மையையும், அழகியலும், தகவல் தொடர்பினையும், நெறிமுறைப்படுத்தப்பட்ட கேள்விக்குட்படுத்தப்படுதலும், இந்தியா பற்றிய அறிவினையும், உலகை உலுக்கும் சம்பவங்களும், டிஜிட்டல் கல்வியறிவையும் மாணவர்கள் மத்தியில் வளர்க்கும். பள்ளிக்கல்வி அறிவியல் மனப்பான்மை , அழகியல் , தகவல் தொடர்பு , நெறிமுறைப் படுத்தப்பட்ட கேள்விக்குட்படுத்தப்படுதல் , இந்தியா பற்றிய அறிவு , உலகை உலுக்கும் சம்பவங்கள், டிஜிட்டல் கல்வியறிவு –ஆகிய திறன்களை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும். 4.6.4. உடற்கல்வி , உடல்நலன் , விளையாட்டுத்திறன் உடற்கல்வி உடல் மற்றும் மனநலனை அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் மற்றும் இருதய வலிமைக்கும், வளையும் தன்மைக்கும், தாக்குப்பிடிக்கும் திறன், உடல் மன ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி இன்றியமையாததாகும். குழந்தைகளைத் தங்களது குறிக்கோள் நோக்கி நகரச் செய்கிறது, குழு மனப்பான்மை, ஒற்றுமை, பிரச்சனையை எதிர்நோக்கல், ஒழுக்கம், விடாமுயற்சி, பொறுப்புணர்வு போன்றவற்றையும் மாணவர்களிடம் அதிகரிக்கச் செய்கிறது. உடற்பயிற்சி மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை விலக்கி, மனநலனை அதிகரிக்கின்றது உடற்பயிற்சி செய்யும் மாணவர்கள் நல்ல உடல்நலனைப் பெறுவதோடல்லாமல் பெரியவர்களாகி மகிழ்வாகவும், உடல் வலுவோடும் இருப்பர். கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படும். 4.6.4,1. ஆரம்பக் கல்வியில் உடற்பயிற்சி, உடல் மன நலன் மற்றும் விளையாட்டை பாடத்திட்டத்தில் சேர்த்தல்: அனைத்து மாணவர்களும் உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, தற்காப்புக்கலை, ஆடல், தோட்டக்கலை போன்றவற்றைப் பயிற்றுவிக்கப்படுவர். விளையாட்டு மைதானமும் பள்ளியில் இல்லை என்றாலும் அந்தந்தப் பகுதியில் வழங்கப்படும், தேவைப்படும் போக்குவரத்து வசதியும் செய்யப்படும், பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் ஊக்குவிக்கப்படும்;. 4.6.5 சிக்கல் தீர்க்கும் முறையும் , தர்க்கரீதியான காரணங்களை ஆராய்தலும் உடலுக்கு உடற்பயிற்சி போல அறிவிற்கு தர்க்கரீதியான விடுகதைகள், கணக்கு விளையாட்டுகள் போன்றவை இன்றியமையாதவையாகின்றன . புதிர் விடைகள், விடுகதைகள் போன்றவை குழந்தைகளின் கேள்வித்திறனை அதிகரிக்கின்றன. தர்க்க அறிவினையும் , சிக்கல் தீர்க்கும் வழிமுறைகளையும் அதிகரிக்கின்றன. . தர்க்க மற்றும் வார்த்தை விடுகதைகள் கேள்வித்திறனை அதிகரிக்கின்றன. உதாரணமாக: - இருட்டறையில் உள்ள பெட்டியில் 10 சிவப்பு காலுறைகளும், 10 நீலநிறக் காலுறைகளும் இருக்கின்றன , எவ்வளவு காலுறைகளை எடுத்தால் ஒரே நிறத்தை உடைய இரண்டு காலுறைகளை எடுக்க முடியும் ? - ஒரு விவசாயி ஒரு ஆற்றைப் படகில் கடக்க வேண்டும், அவருடன் ஒரு நரி, ஒரு ஆடு, ஒரு முட்டைக்கோஸ் ஆகியவை உள்ளன. படகில் அவர் ஏதேனும் ஒரு பொருளை மட்டுமே ஏற்றிச்செல்ல முடியும், இதில் எந்த இரண்டையும் தனியாகக் கரையில் விட்டுச் செல்ல முடியாது. நரியும் ஆடும் என்றால் நரிக்கு ஆடு உணவாகி விடும், ஆடும் முட்டைக்கோஸும் என்றால் முட்டைக்கோஸ் ஆட்டுக்கு உணவாகிவிடும். அவர் எவ்வாறு அனைத்தையும் அங்கே கொண்டு செல்வார்? - ஒரு டாமினோ இரண்டு சதுரங்களை 1ஒ2 உடையது அது செஸ் போர்டில் அருகருகே உள்ள இரண்டு சதுரங்கள் மறைக்கக்கூடியது, 32 டாமினோக்கள் கொண்டு 8ஒ8 செஸ் போர்டை மறைக்க முடியுமா (முடியும்). அப்படியென்றால 31 டாமினோக்களை பயன்படுத்தி 8ஒ8 செஸ் போர்டில் உள்ள இரண்டு குறுக்கு எதிர் கட்டங்களை அகற்றிய பிறகு மறைக்க முடியுமா: ஏன் முடியும் அல்லது ஏன் இல்லை (ஒரே வரியில் விடை இருக்கிறது ! ). விடுகதைகள் சவால் நிறைந்தவையாகவும், கணக்குகளை உள்ளடக்கியவையாகவும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு அமைய வேண்டும். மொழி விடுகதைகள் மாணவர்களுக்கு மொழியில் சிந்தனைகளைக் கற்றுக் கொடுக்கும். உதாரணமாக வட மற்றும் தென் இந்திய மொழிகள் குறித்த அறிவை வளர்க்க உதவும். ஒரே தலைப்பில் அனைத்து மாணவர்களையும் ஒரு சில வார்த்தைகள் இல்லாமல் எழுதவைப்பது மாணவர்களுக்கு பிடித்தமாக இருக்கும். கணித விடுகதைகள் எண்களைப்பற்றிய அறிவையும்,அறிவுசார் கேள்வித்திறனையும் அதிகரிக்கும் உதாரணமாக - பிடித்தமான ஒற்றை எண்ணை எடுத்து கொண்டு, ஒன்பதால் வகுக்கவும் பின்பு விடையை 12345679 ஆல் வகுக்கவும். என்ன நடக்கிறது? எதனால்? - எதைத் தேர்தெடுப்பீர்கள், ஒரு கோடி ரூபாய் இன்று, ஒரு ரூபாய் இன்று, இரண்டு ரூபாய் நாளை, 4 ரூபாய் அதற்கு அடுத்தநாள் அதாவது ஒரு நாளில் கிடைக்கும் பணத்தின் இரு மடங்கு அடுத்த தினத்தில், இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் செய்வது. இந்த விடுகதை இந்தியாவில் தோன்றியது (ஒரு ராஜா சதுரங்கத்தில் உள்ள ஒவ்வொரு சதுரத்திற்கும் இரண்டு மடங்கு அரிசி தருவதாக வாக்களிக்கிறார் அதனால் அறிவாற்றல் மிக்க குடிமகனிடம் தோற்கிறார்) – மாணவர்கள் பெரிய எண்கள் பற்றியும் அவற்றின் இரட்டிப்படைதல் பற்றியும் அறிய இயலும். இதன் மூலம் எளிதாக மாணவர்கள் ஒரு கோடிவரை எண்களைக் கற்றுக்கொள்வர்கள். ஓன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி மற்றும் அரேபிய எண் இலக்கங்களைக் கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது, இவை உயிரியல், வானவியல், பொருளாதாரம் போன்ற துறைகளிலும் உதவியாக இருக்கும் மனித மூளையின் அணுக்கூறுகள் எண்ணிக்கை, பால்வெளியில் நட்சத்திர எண்ணிக்கை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகில் உள்ள மணலின் எண்ணிக்கை பற்றி அறிய மிகப் பெரிய எண்கள் பற்றிய அறிவு இன்றியமையாததாகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தில் விடுகதைகள் பெரும் பங்கு வகுக்கின்றன பெரும்பாலும் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன உ.தா. இரண்டாம் பாஸ்காராவின் படைப்புகள். கேளிக்கை பயிற்சி,விளையாட்டுகள், விடுகதைகள் மூலம் மாணவர்களின் கற்பனைத்திறனும், அறிவாற்றலும் அதிகரிக்கின்றன . அவர்கள் பள்ளியில் தொடர்ந்து செயல்படவும் உதவுகிறது. 4.6.5.1. விளையாட்டுகள், விடுகதைகள், சிக்கல் தீர்க்கும் செயல்பாடுகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்தல்: மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள் போல கணக்கு, வார்த்தை விளையாட்டுகள் போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும், குறிப்பாக கணக்கு பாடத்திட்டத்தில், இதன் மூலம் ஆராயும் மனப்பான்மை, கற்பனைத்திறன், கேள்வி கேட்கும் திறன் போன்றவை மேம்படும். இந்தியாவில் தோன்றிய இத்தகைய விடுகதைகளும், விளையாட்டுகளும் சேர்த்து கொள்ளப்படும். குறிப்பாக சதுரங்க விளையாட்டு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக்கப்படும். 4.6.6 தொழில் முறைக் கல்வியும் , திறன்களும் தொழில்முறைக் கல்வி குழந்தைகளின் திறனை அதிகரித்து நம் நாட்டிற்கும் பலன் சேர்க்க வல்லது. சுpல மாணவர்களுக்கு பிற்கால வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் அதே வேளையில் சிலருக்கு அனைத்துத் தொழில்களின் கண்ணியத்தையும் மதிக்க உதவும். 4.6.6.1. தொழில்முறை வெளிப்பாடு: வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பல்வேறு தொழிலகள் குறித்த அடிப்படை அறிவும், முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படும். உதாரணமாக தோட்டக்கலை, மண்பாண்டம் செய்தல், மரவேலை போன்றவை 3 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படும். பிற மாணவர்கள் அவர்களின் நடுநிலை வகுப்பிற்கு முன் இதனைப் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்வர். அந்தந்த சமூகச் சூழலிற்கு ஏற்ப வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். ஆங்காங்கே இருக்கும் பயிற்றுநர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.. 4.6.6.2. 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்முறை கற்பித்தல் குறித்த கணக்கெடுப்பு: ஒவ்வொரு மாணவரும் வருடம் முழுவதும் மரவேலை, மின்துறை சார்ந்த வேலை, தோட்டக்கலை, மண்பாண்ட வேலை போன்றவைகளில் தேர்ச்சி பெறுவர். மாநில அரசும், அந்தந்தப் பகுதியின் தேவை மற்றும், பயிற்றுநரைக் கணக்கில் கொண்டு இவற்றை செயல்படுத்தும். 4.6.6.3. மேல்நிலை பள்ளிப்பாடத்திலும் தொழில்முறைக் கல்வியை உட்புகுத்துதல்: 9 முதல் 12 வகுப்பு மாணவர்களும் இத்தகைய பயிற்சியை மேற்கொள்வர்கள். படிப்பு, திறன் மேம்பாடு, விளையாட்டு, கலை மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சியில் அவர்கள் பயிற்றுவிக்கப்படுவர். 4.6.7 டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை 4.6.7.1. டிஜிட்டல் கல்வியறிவை ஒருங்கிணைத்தல்: புதிய பாடத்திட்டத்தில் அடிப்படையில் டிஜிட்டல் கல்வியறிவை அனைத்து மாணவர்களும் கற்கும் வகையில் வழிவகை செய்யபட்டிருக்கும். மேம்பட்ட நிலையில் பாடத்திட்டத்தில்: a. கணக்கீட்டுச் சிந்தனை (சிக்கல்களைக் கண்டறிந்து விடைகாணும் செயலினை கணினிகள் வெற்றிகரமாகச் செய்யும் முறை) அடிப்படை திறன் டிஜிட்டல் யுகத்தில். b. புரோகிராமிங் மற்றும் கணினிசார் நடவடிக்கைகள். இதற்கான அடிப்படை தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளில் தரப்படும். 4.6.8 நெறிமுறைகள் மற்றும் தார்மீக நியாயவாதம் வாழ்வியல் நெறிமுறைகள் பாடத்திட்டத்தின் மூலம் பள்ளியில் கற்பிக்கப்படும்போது பின்னாளில் அவர்களால் மகிழ்வான வாழ்வியலை தமதாக்கிக் கொள்ள முடியும் இதற்காகப் பின்வரும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும். 4.6.8.1. அடிப்படை நெறிமுறைகள் மற்றும் தார்மீக நியாயவாதத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தல்: புதிய பாடத்திட்டத்தில அடிப்படை நெறிமுறைகள் மற்றும் தார்மீக நியாயவாதத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தல், மிக இளம் வயதில் சரியானது எது எனக்கண்டறியவும், இதனால் யாரேனும் பாதிக்கப்படுவார்களா: இது செய்வதற்கு நல்ல விஷயமா: போன்ற கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவும் இத்திட்டம் உதவும். சிறிது வருடங்களுக்குப் பின்னர் ஏமாற்றுதல், வன்முறை, சகிப்புத்தன்மை, சமத்துவம், கருணை போன்றவை பற்றி புரிந்து கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளை மேற்கொள்ள இவை பெரிதும் உதவும். நேர்வழியிலும், மறைமுக வழியிலும் இவை கற்பிக்கப்படும். நேர்வழியில் பள்ளியில் செயல்பாடுகள், கருத்தரங்கம் மற்றும் வாசித்தல் மூலம் நெறிமுறைகள் கற்பிக்கப்படும். மறைமுக வழியில்: மொழி, இலக்கியம், வரலாறு, சமூக அறிவியல். இவற்றை துணை கொண்டு நாட்டுப்பற்று, விட்டுக்கொடுத்தல், அகிம்சை, உண்மை, நேர்மை, அமைதி, மன்னித்தல், சகிப்புத்தன்மை, இரக்கம், சமத்துவம் மற்றும் சகோரத்துவம் குறித்து சொல்லித் தரப்படும். 4.6.8.2. நெறிமுறைகள் மற்றும் தார்மீக நியாயவாதத்தைப் பாடத்திட்டத்தில் சேர்த்தல்: அடிப்படை தார்மீக நியாயவாதத்தின் மூலம் இந்தியப் பண்புகளான அகிம்சை, தன்னலமற்ற சேவை, சத்தியம், சகிப்புத்தன்மை, பெரியவர்களை மதித்தல், சுற்றுச்சூழலை மதித்தல் போன்றவை மாணவர்கள் மத்தியில் பதிய வைத்தல், குப்பைத்தொட்டி, கழிவறை உபயோகித்தல், கழிவறையை சுத்தமாக வைத்தல், வரிசையில் பொறுமையாக நிற்பது, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது, நேரம் தவறாமை, போன்ற சமூகப் பொறுப்புணர்வை மேலும் அதிகரிக்கும். 4.6.8.3. அரசியலமைப்பு மதிப்பீடுகளை மேம்படுத்துதல்: பாடத்திட்டத்தின் மூலம் கலாச்சாரம் மற்றும் பள்ளியின் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் குறித்து கற்பிக்கப்படும் மக்களாட்சி குறித்த சுதந்திரம். சமத்துவம். நீதி. பன்முகத்தன்மையை அரவணைத்தல். சகோதரத்துவம். நேர்மை. மேடைப் பேச்சின் போது விஞ்ஞான தெளிவோடு அர்ப்பணிப்பும் தேவை. அமைதி இந்தியாவின் ஒற்றுமையை பற்றி கற்பிக்கப்படும். 4.6.8.4. தனிமனித சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்: இந்தியாவில் சுதந்திரத்துடன் அனைத்து குடிமக்களின் பொறுப்புணர்வும் இன்றியமையாததாகிறது. மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்ததைத் தொடரவும். நண்பர்களின் தூண்டுதல் இன்றி சுயமாக முடிவெடுக்கவும் கற்றுத்தரப்பட வேண்டும்;. பள்ளிகள் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் , அதிகாரவலிமையளித்து தமது சொந்தப்பாதையைத் தாமே தேர்வு செய்வதற்குப் பயிற்றுவிக்க வேண்டும். 4.6.8.5. அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி: தமக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் தொண்டு செய்யும் விதத்தில் அமைத்தல். சுகாதாரம் குறித்த பயிற்சி வரும்முன் காப்பது. மனநலன், உணவுமுறை, தனிமனித மற்றும் பொது சுத்தம். போதை மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு போன்றவை கற்றுத்தரப்படும். பாலியல் கல்வியும் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்படும். அதனால் பெண்களை மதித்தல், பாதுகாப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் நோய்களைத் தடுத்துக்கொள்வது போன்றவை சாத்தியமாகும். 4.6.8.6. சமுக உணர்ச்சிகள் பற்றிய கற்றல்: சமுகம் சார்ந்த உணர்ச்சிகள் பற்றிய கற்றல் மாணவர்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிக்கும். மேலும் அவர்களது அறிவாற்றலை அதிகரிக்கவும். உணர்ச்சிரீதியான பின்னடைவைத் தடுக்கவும் உதவுகிறது. இதற்கான செயல்பாடுகளாக குழு விளையாட்டுகள்; கருணை போன்ற பண்புகள் குறித்த கதைகள்; எழுத்து, பேச்சு , கலைகள் மேற்கொள்ளப்படும் இவற்றால் மாணவர்களிடையே அறிவாற்றல் அதிகரிக்கும். கருணையை மேம்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும் இதனால் பாடத்திட்டத்தினில் சிறப்பாக செயல்பட முடியும். 4.6.8.7. இலக்கியங்கள் மற்றும் மக்களிடமிருந்து உத்வேக பாடங்களை கற்றல்: குழந்தைகள் பஞ்சதந்திரம். ஜாதகா , ஹிதோபதேசம் போன்றவற்றை இந்திய காலச்சாரம் முலம் கற்றுதரப்படும்;. இந்திய அரசியலமைப்பில் உள்ள மிக முக்கிய பத்திகளை வாசித்து. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் குறித்து கற்றுத் தரப்படும். மகாத்மா காந்தி. டாக்டர். அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தா. குருநானக் , மகாவீரர் , ஆச்சார்யா, கவுதம புத்தர், அரவிந்தர். பாபாசாகேப் அம்பேத்கர், டாக்டர் சர்.சி.வி..ராமன், டாக்டர் ஹோமி பாபா போன்றவர்கள் மாணவர்களுக்குப் பெரும் ஊக்குவிப்பாக இருப்பர்;. உலக அளவில் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன். மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டெலா போன்றவர்களைப் பற்றி கற்பிக்கப்படும். 4.6.8.8. நெறிமுறைகள் மற்றும் தார்மிக நியாயவாதத்தை பற்றிய படிப்புகள்: இந்தப் படிப்பை. ஒரு வருட படிப்பாக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. அடிப்படையாக அகிம்சை, பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மதிப்பளித்தல,. உதவும் மனப்பான்மை, சமத்துவம்,. சகோதரத்துவம் போன்றவையும் பின்பு பருவகால படிப்பில் நெறிமுறைகள் மற்றும் தார்மீக நியாயத்தைப் பற்றியும் கற்பிக்கப்படும். 4.6.9 இந்தியா பற்றிய அறிவு இந்திய இலக்கியமும். பாரம்பரியமும், பல்வேறு துறைகளில் அனுபவமும் அறிவும் கொண்டவை, உதாரணமாக கணக்கு, கலை, கவிதை, நாடகம், வேதியியல், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை. தாவரவியல்,. விலங்கியல், இசை. நடனம், யோகா மற்றும் கல்வி இவை குறித்து பழங்காலத்திலும் இன்றும் கிராமியக்கலைகள். இலக்கியங்கள் பழங்குடியினர் மரபு போன்றவை முலம் இந்தியாவிற்கு வெளியிலும் அறியப்படுகின்றன . உதாரணமாக கணக்கில். பிதாகரஸ் தேற்றம். பிபோநாசி எண்கள் மற்றும் பாஸ்கல் முக்கோணம் போன்றவற்றை பௌதாயானா. விரஹங்கா, பிங்களா ஆகியோர் முதன்முதலில் கண்டுபிடித்தனர்;. பூஜ்யம் பற்றிய அறிவும் அதன் இடமும் இந்தியாவில் 2000 ஆண்டுக்கு முன்பு ஆரியபட்டரால் கண்டறியப்பட்டது . கால்குலஸ் பற்றி பாஸ்கரா (கர்நாடகா) மற்றும் மாதாவா (கேரளா) ஆகியோர் கண்டுபிடித்தனர்;. ஆனால் இவற்றைப் பற்றி தற்போது இந்தியாவில் சொல்லித் தரப்படுவது இல்லை;. ஆங்கில ஆட்சியினால் இருக்கலாம்;. இந்தியாவின் அறிவுசார் பங்களிப்பைப் பற்றி பாடத்திட்டத்தில் சேர்ப்பது, வரலாற்றை மட்டும் தெரிந்து கொள்ளாமல் இந்திய பாரம்பரியத்தை பற்றி தெரிந்து கொள்ளவும். புவியியல் பற்றிய அறிவை விரிவாக்கவும். இந்தியர் என்ற பெருமிதம் கொள்ளவும். சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும் வழி வகை செய்யும்;. படித்த அறிவியலாளர்கள் நிறைந்த நம் நாட்டில் அவர்களின் மூலம் பாடத்திட்டத்தினை கீழ்கண்டவாறு மேம்படுத்தப்படும். 4.6.9.1. இந்திய அறிவியல் அறிவை பாடத்திட்டத்தில் சேர்த்தல்: இந்திய பங்களிப்பும், வரலாறும், முழுவதுமாக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்;. கணக்கு, வானவியல், உளவியல், யோகா, தொல்லியல், மருத்துவம், அரசியல், சமுகம், அரசாட்சி மற்றும் மேலாண்மை குறித்தும் சேர்க்கப்படும். 4.6.9.2. பழங்குடியினர் மற்றும் குடிமக்களின் அறிவுசார் கொள்கைகளையும் பாடத்திட்டத்தினில் சேர்த்தல்: அந்தந்த பகுதியின் பழக்கங்கள் மற்றும் தேவையினை கருத்தில் கொண்டு இவையும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.. 84.6.9.3. இந்தியாவில் அறிவுசார் பங்களிப்பு குறித்த படிப்பு: மாணவர்கள் இதில் ஆர்வமிருப்பின் மேல்நிலை வகுப்பில் இது குறித்து தேர்ந்தெடுத்து படிக்க வழிவகை செய்யப்படும். 4.6.10 நடப்பு நிகழ்வுகள் பள்ளிகளில்; பயிற்றுவிக்கும் அறிவு அதனுடன் முடிவதில்லை;. வருங்கால பணிகளில் அதன் பிரதிபலிப்பைக் காண முடியும். அதனால் வகுப்பறைக் கல்வியில் வெளி உலகமும் சேர்க்கப்பட வேண்டும்;. பாடத்திட்டங்கள் வளர்ச்சியை அரவணைப்பதில்லை. அதனால் ஒரு பாடமாவது மாறுதல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்;. பள்ளிக் கல்வியையும் உலக அனுபவங்களையும் அரவணைத்ததாக அது இருந்தல் வெண்டும்;. மாறுதலை உள்ளடக்கிய பாடமானது நடப்பு பொருளாதாரம் ,. அறிவியல் கண்டுபிடிப்புகள் , மருத்துவ முன்னேற்றங்கள் , கலை , இசை , புவி சார்ந்த அரசியல் கணக்கீடுகள் , பாலின விஷயங்கள் , சமூக நடப்புகள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும். எந்த ஒரு கல்வியும் கற்பனைத்திறனையும். படைப்பாற்றலையும் உள்ளடக்க வேண்டுமென அழுத்தம் தருவதாக இருக்குமானால் , அது கட்டாயம் கலையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் 4.6.10.1. சமூகம், நாடு , உலகம் சார்ந்த விஷயங்கள் குறித்த படிப்பு: 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் (வாரம் ஒரு வகுப்பு) இதில் பயிற்றுவிக்கப்படுவர் . நடப்பு நிகழ்வுகளான தூய்மை இந்தியா. பாலின சமத்துவம். சமூகநீதி. அறிவியலும் அதன் தாக்கமும். உலகளாவிய கல்வி – உதாரணமாக இந்த தேசிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள். இது போன்ற விஷயங்களில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்த்து அதற்கான விளைவுகளையும் சிந்திக்க செய்ய வேண்டும்;. தகவல் தொடர்பை அதிகரிக்கவும் குழு மேலாண்மையை வளர்க்கவும் இவை பெரிதும் உதவும் . மாணவர்கள் அவர்களது பார்வை. அனுபவங்கள் மற்றும் ஆர்வத்தினையும் இதன் மூலம் அறிந்து மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. 4.6.10.2. நாட்டு நடப்புகள் பற்றிய படிப்பு (9 முதல் 12 ஆம் வகுப்பு): அடிப்படைக் கல்வியை தொடர்ந்து, 9:12 ஆம் வகுப்பு மாணவர்களை செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகஙகள், படங்கள் போன்றவைகளில் தொடர்புபடுத்தி சிந்தித்து, செயலாற்ற வைக்கப்படும்;. ஆசிரியர் தலைப்பை தேர்ந்தெடுத்து, அதில் கருத்து பரிமாற்றம் நடைபெறும். நாட்டு நடப்புகள் குறித்து வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அவ்வப்போது கலந்தாலோசித்து முடிவு செய்வர். இதனால் அந்தந்தப் பகுதி அனுபவங்களும் உடன் சேரும்;. ஆசிரியர்கள் கருத்துகளை எளிதாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அவர்களே படித்து, ஆராய்ந்து புரிந்து கொள்வர் இடையிடையே கேள்வி கேட்டு அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும்;. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், இலக்கியம், இசை போன்ற துறை சார்ந்த செய்திகளும் இதில் சேர்க்கப்பட வேண்டும் . ஆணாதிக்கம் மற்றும் இனவெறி போன்ற சமூகப் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும். 4.7 தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 4.7.1. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் திருத்தம்: தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2005 பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது, இந்தக் கட்டமைப்பு மறு ஆய்வுக்குப்பின் மேம்படுத்தப்படும்;, அவரவர் மாநில மொழிகளில் மாற்றங்கள் செய்த பின் வெளியிடப்படும். 4.8 தேசிய பள்ளி புத்தகங்களில் உள்ளூர் செய்திகளும் அதன் சாராம்சமும் அனைத்துப் புத்தகஙகளும் முக்கிய சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும், கூடவே உள்ளூர் செய்திகளும் தேவைகளும் கொண்ட புத்தகங்களையும் கொண்டிருக்கும். ஆசிரியர்களுக்கு புத்தகங்களைத் தேர்தெடுக்கும் உரிமையும் வழங்கப்படும். இதன் முலம் அந்தந்தப் பகுதி மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்;. தரமான பாடப்புத்தகங்களைக் குறைவான விலையில் வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. மிகவும் தரமான பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி.யும் , எஸ்.சி.இ.ஆர்.டி. களும் இணைந்து இதை சாத்தியமாக்குகின்றன. இவை தவிர உயர்ரக பாடப்புத்தகங்கள் தனியார் பங்களிப்போடு வழங்கப்படுகின்றன . மாநிலங்களே அவர்களது பாடப்புத்தகங்களைத் தயார்படுத்தும். ( என்.சி.இ.ஆர்.டி. பாடநூல்களைத் தழுவியும் இருக்கலாம்) இத்தகைய பாடப்புத்தகங்கள் அவரவர் தாய்மொழியில் இருப்பது உறுதி செய்யப்பட வெண்டும். 4.8.1.x என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களை மறுவரைவு செய்து மேம்படுத்துதல் : அடிப்படையை நோக்கி ஒவ்வொரு பாடத்திட்டமும் சுருங்குவதால். புத்தகங்களின் சாராம்சமும் சுருங்குகிறது. ஆராய்தல், கண்டுபிடித்தல், ஆக்கபூர்வ கற்றல் போன்றவை வலியுறுத்தப்படும். சில பாடங்களில், அடிப்படையைத் தவிர என்.சி.இ.ஆர்.டி. சில துணைப் பாடங்கள் மூலமும் பாடத்திட்டத்தினை மேம்படுத்துகிறது 4.8.2. மாநில அளவில் புத்தகங்களைத் தயார் செய்வது : தேசிய பாடத்தில் அந்தந்த இடத்தின் வேறுபாடுகளுக்கு இணங்க எஸ்.சி.இ.ஆர்.டி .மூலம் புதிய புத்தகங்கள் தயார் செய்யப்படும். அவற்றில் கீழ்க்கண்டவை கட்டாயமாக இருக்கும். - என்.சி.இ.ஆர்.டி . அடிப்படைத் தரவுகள் - ஏதாவதொரு என்.சி.இ.ஆர்.டி .துணைப்பாடத் தரவு. அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றது - எஸ்.சி.இ.ஆர்.டி. அல்லது அந்தந்த இடத்திற்கான தரவுகள் சேர்த்துக் கொள்ளப்படும் . குறிக்கோளானது இப்போது இருக்கும் பாடச்சுமையினைக் குறைப்பதாகவே இருக்கும் ; ஆனால் ஆக்கபூர்வமாக ஆராய்ந்து மகிழ்வான நடையில் 21ஆம் நூற்றாண்டின் நடைமுறையைப் பின்பற்றி இருக்கும். பாடப்புத்தகம் சரியான தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும் ; நிரூபிக்கப்படாத தரவுகள் இருக்குமாயின் அதனை அவ்வாறே குறிப்பிட்டிருக்கும்;. ஆராய்ந்த பின் எஸ்.சி.இ.ஆர்.டி. அப்படியே என்.சி.இ.ஆர்.டி . தகவல்களை ஏற்றுக் கொள்ளும் ; அல்லது துணைப் பாடங்களாக மாநிலங்கள் பரிந்துரைத்ததை ஏற்றுக் கொள்ளும் உதாரணமாக என்.சி.இ.ஆர்.டி. அடிப்படையாக இசையில் இந்துஸ்தானி அல்லது கர்நாடக இசையை பரிந்துரைத்தாலும். மகாராஷ்டிர இசையான லாவணி , அப்ஹன்ங்ஸ் போன்ற கிராமியக் கலைகளை ஏற்றுக் கொள்ளும்;. இந்த பாடப்புத்தகஙகளை எஸ்.சி.இ.ஆர்.டி. இறுதி செய்து குறைந்த விலையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்யும். 4.8.3. பாடப்புத்தகங்கள் மற்றும் தரவுகள் - கூடுதல் பாடங்களுக்கானவை : புத்தகங்கள், புதிய பாடங்களான கணினி அறிவியல், இசை , இலக்கியத்திற்காகாகத் தயார் செய்யப்படும்;. அனைத்து புத்தகங்களும் இந்திய அளவில் அறிவுசார்ந்து இருந்தாலும் அந்தந்தப் பகுதியைச் சார்ந்த விஷயங்கள் அதில் இடம்பெற்றிருக்கும் . 4.8.4. உயர்ரக மொழிபெயர்ப்புகள் : இந்திய அளவிலான மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் (ஐஐடிஐ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு. இந்திய மொழிகளில் உள்ள சிறந்த படைப்புகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்படும்;. வெளிநாட்டு மொழிகளின் மொழிபெயர்ப்பும் இடம் பெறும்;. ஐஐடிஐ அதி நவீன அனுகுமுறையைக் கொண்டிருக்கும்;. இதனமூலம் அனைத்து இந்திய மொழிகளும் மேன்மையுறும்;. இதன் முலம். ஐஐடிஐ வழியாக , என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த பாடப்புத்தங்களும். தேசிய அளவிலான கற்பித்தல் கற்றல் தரவுகளும் (எஸ்.சி.இ.ஆர்.டி. யுடன் சேர்ந்து) அனைத்து இந்திய மொழிகளிலும் இடம்பெறச் செய்யமுடியும். 4.8.5. புதுமையான பாடப்புத்தகங்களை வடிவமைத்தல் - அதிக அளவிலான புத்தகங்கள் பள்ளிகளில் கிடைக்கப் பெறுவதற்கு: புதிய பாடப்புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் கிடைக்க உற்சாகப்படுத்தவும் ஆசிரியர்களுக்கு பாடப்புத்தகஙகள் மற்றும் குழந்தை வழிகாட்டி வழிமுறை உபயோகித்தல் தொடர்பாகவும், பொது மற்றும் தனியார் கொள்கைகள் வழிவகுக்கப்பட்டு புத்தக ஆசிரியர்களுக்கு பரிசும். பாராட்டும் அவரவர் மொழியில் சிறந்து விளங்குபவருக்கு வழங்கப்படும். இத்தகைய புத்தங்கள் தன்னாட்சிக் குழுமம் கொண்ட நிபுணர்களைக் கொண்டு இந்திய அளவிலும். மாநில அளவிலும் ஆராயப்படும். - இந்திய அளவிலான அடிப்படைத் தரவுகள் மற்றும் தேவை இருப்பின் அந்தந்த இடத்திற்கான தரவுகள் மாநிலங்களால் பரிந்துரைக்கப்படும். - புதுமையான, கற்பனைவளம் மிக்க வெளிப்பாடு மற்றும் - நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை இத்தகைய புத்தங்கள் ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்;. எந்த வகையில் பணம் செலுத்துவது, கண்டறிவது, புத்தக ஆசிரியர்களை ஒருங்கிணைப்பது போன்றவை ஒவ்வொரு தனியார் மற்றும் பொதுத் திட்டத்தைப் பொறுத்ததாகும்; ஒவ்வொரு மாணவரும் அவருக்கே உரிய இயல்பான தனித்துவமான திறன்கள் கொண்டவர்; அவற்றைக் கண்டுபிடித்து, பராமரித்து பாதுகாத்து, மேம்படுத்தி வளர்த்துவிட வேண்டும். 4.9 மாணவர்களின்மேம்பட்ட வளர்ச்சிக்கு மதிப்பீட்டு முறைகளை மாற்றி அமைத்தல் பாடத்திட்ட மாற்றத்தோடு கூடவே மதிப்பீட்டு முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்;. வெறும் மனப்பாட முறையைக் கொண்டு மாணவர்களை மதிப்பீடு செய்வதை தவிர்த்து, கற்றலையும், மேம்பாட்டினையும், யோசிக்கும் திறனையும் மேம்படுத்தும் மதிப்பீட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும், மதிப்பீடு என்பது கற்றலை அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டும். பள்ளி நாட்களில் கற்றலும். அதன் படிநிலை உருவாக்கமும், வளர்ச்சியையும் உள்ளடக்கியதாகவே இருத்தல் வேண்டும்;. அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்வதும், ஆராய்வதும் அதனை செயல்படுத்துவதும் மட்டுமே கல்வி முறையில் மதிப்பீட்டு முறையாக இருத்தல் வேண்டும். பள்ளித் தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள், வேலை வாய்ப்பிற்கான தேர்வுகள் என அனைத்தும் இதன் அடிப்படையிலேயே அமைத்தல் வேண்டும். கெடுவாய்ப்பான தற்போதைய தேர்வு முறையானது உண்மைக் கற்றல் அனுபவத்தை, தேர்வுக்கான அதிகபடியான பயிற்சியிலும், தயாரிப்புப் பணிகளிலும் மட்டுமே கொண்டு நிரப்பிக்கொண்டிருக்கிறது.இந்த நிலை , குறிப்பாக இடைநிலைப்பள்ளிக் கல்வியில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாணவர்களை கட்டாயமாக படிக்க மட்டுமே வலியுறுத்துகின்றன, இந்த முறை கற்றலை பல வழிகளில் தடுக்கிறது. - முதலில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள். மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகின்றன. மாணவர்களின் மனநலனையும். வாழ்வினையும் பின்னுக்குத் தள்ளி மனப்பாட வழிமுறையையே வலியுறுத்துகிறது, உண்மையான புரிதல், ஆராயும் மனப்பான்மை, கற்றல் இவற்றைப் பின்னுக்குத் தள்ளி மனப்பாடக் கல்விமுறையை வலியுறுத்துகிறது. - இரண்டாவதாக. தற்போதைய பொதுத் தேர்வுகளில், ஒரு சில பாடங்கள் மட்டுமே முன்னிலை பெறுகின்றன, அதனால்; மாணவர்கள் சில பாடங்களில் மட்டுமே நிபுணத்துவம் பெறுகின்றனர்;. இதனால் அவர்கள் பல்வேறு துறைகளைப் பற்றி ஆராயாமல் குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்கி விடுகின்றனர்;. மற்ற துறைகளில் அவர்களின் நிபுணத்துவம் ஆராயப் படாமலே போய் விடுகிறது. உதாரணமாக, 8 ஆம் வகுப்பிற்குப் பிறகு, அறிவியல் மாணவர்கள் தொழில்துறைப் பாடங்கள் குறித்துத் தெரிந்து கொள்வதே இல்லை எனலாம். - மூன்றாவதாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுதான் வாழ்வினை நிர்ணயிக்கும் என்றால் அது அப்போது மட்டும் படிக்கிற கூட்டு மதிப்பீடாக மட்டுமே அமையும்;. தேர்வுகள் கற்றல் அனுபவங்களை மட்டுமே தரக்கூடியதாக இருக்கவேண்டும். இதைக்கொண்டு கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல். வளர்ச்சி பெறவும் இது உதவ வேண்டும்;. தற்போதைய முறை அவ்வாறு கிடையாது இதன் நீட்சியானதை பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகளிலும் காணமுடிகிறது - பயிற்சி மையங்களின் வளர்ச்சியும், குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதையும் உதாரணமாகக் கூறலாம்;. பல்கலைக்கழகங்களும் மனப்பாட முறையை கையாண்டு, அதன் அடிப்படையிலேயே நுழைவுத்தேர்வை நடத்துகிறது. அதனால் மனப்பாடம் செய்வதும், பயிற்சி மையங்களை நாடுவதும் அதிகரிக்கிறது. மாணவர்கள் நாடு முழுவதும் பயணித்து, இந்த நுழைவுத்தேர்வை எழுதி, தனக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. துவிர, இது போன்ற தேர்வுகள் பெரும்பாலும் வருடத்தின் ஒரே நாளில் வைக்கப்படுகிறது - ஏதேனும் காரணங்களால் தேர்வு எழுத முடியவில்லை என்றால் ஒரு முழு வருடம் மாணவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தனித்தனியே தேர்வு எழுதுவதற்காக பயணச்செலவு, இடத்தேர்வு, தேர்வுக்கு தயாராதல், தேர்விற்கான நேர அட்டவணை போன்றவை மாணவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. இத்தகைய பாதக விளைவுகளைக் களைந்து, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குப் பயன்படும்படி பொது மற்றும் நுழைவுத்தேர்வுகள் அமையவேண்டும்;. இதற்கான தீர்வுகளாக. - பொதுத்தேர்வு பலதரப்பட்ட பாடங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; - மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்களை தேர்வு செய்து பொதுத் தேர்வை எழுத வழிவகை செய்ய வேண்டும். - வெறும் மனப்பாட முறையை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல் வகுப்பிற்கு தொடர்ச்சியாக செல்லும் மாணவர்களாலும் இலகுவாக தேர்ச்சி பெறும் விதம் தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். - மாணவர்கள் அந்தந்த பாடங்களை படிக்கும் பொது. அதே செமஸ்டரில் அந்த தேர்வினை எழுத வழிவகை செய்ய வேண்டும்;. இன்னும் சிறப்பாக எழுத முடியுமெனில் அதற்கும் வழிவகை செய்ய வேண்டும். - மாணவர்களுக்குத் தேர்வு சுமையை குறைக்கும்விதத்தில், சாத்தியப்படும்போது, ஆறுமாதத்திற்கு ஒருமுறையோ அல்லது ஆண்டின் இறுதியில் நடைபெறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்தின் பொதுத்தேர்வும் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு முறையிலிருந்து, ஆறுமாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் தேர்வாகவோ, ஆண்டிறுதி தேர்வாகவோ சாத்தியப்படும்போது மாற்றப்படும்.இதன்மூலம் மாணவர்களின் தேர்வுச்சுமை அதிகரிக்காது இந்த முறை, பயிற்சி மையங்கள் இல்லாத பல நாடுகளில் அமுலில் உள்ளது. தேசிய சோதனை நிறுவனம் (NTA) இத்தகைய நுழைவுத் தேர்வினை, மொழிகள், ஆராயும் திறன், தர்க்கம் முதலியவற்றில் தொடங்கி அறிவியல், கலை போன்ற பாடங்களையும் உள்ளடக்கி உருவாக்கும்;. இதனால் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் ஒரே நுழைவுத் தேர்வைக் கொண்டிருக்கும் ; இதனால் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடங்களை தேர்வு செய்து கொள்வார்கள்;. பல்கலைக்கழகங்களும் மாணவர்களின் தனி பாடத்திறனையும் அவர்களின் திறமையையும் விருப்பத்தையும் கண்டறிய இயலும்;. NTA , முதன்மை , நிபுணத்துவம் வாய்ந்த , தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு தேர்வுகளை நடத்தும் அதிகாரம் வழங்கப்படும்;. வெளிப்படைத்தன்மை, பயனுள்ள ஆராயும் தன்மை நிறைந்த தேர்வுகளை நிபுணர்கள், மனஅளவை மதிப்பீட்டாளர்கள். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்டு தரமான தேர்வுநிலைகள் தயாரிக்கப்படும்;. இறுதியாக அனைத்து தேர்வுகளும் மாணவர்களை மறு தேர்வுக்கு அனுமதிக்கும் வண்ணம் மாற்றி அமைக்கப்படும். 4.9.1. கற்றல் மற்றும் வளர்ச்சி மதிப்பிடுதலில் புதிய முன்னுதாரணம்: என்.சி.இ.ஆர்.டி. மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மதிப்பீட்டு முறைகளில் மாறுதல்கள் கொண்டு வர செய்யும்;. இந்த மாறுதல்களால் , மதிப்பீட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அடிப்படை அளவிலும், திறனிலும், விமர்சனச் சிந்தனை, ஆராய்ச்சி, கருத்தினில் தெளிவு போன்றவை பரிசீலிக்கப்படும்;. இது மனப்பாட முறைக்கு மாற்றாக அமையும்;. இந்த வழிமுறை பள்ளிகள், நுழைவுத் தேர்வுகள் (மாநில மற்றும் தேசிய). வேலைவாய்ப்பிற்கான தேர்வுகள் என அனைத்திலும் பின்பற்றப்படும்;. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தராமல் அவர்களை மறுதேர்வுக்கும் தயார்படுத்தும். 4.9.2. கற்பித்தல் கற்றல் வழிமுறையை மேம்படுத்த உருவாக்க மதிப்பீடு: பள்ளி அளவில் இத்தகைய வளர்ச்சி மதிப்பீடு தொடர்ந்து நடைபெறும்;, அதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ந்து கற்றல் நடைமுறைகளை மேம்படுத்த முடியும்;. இதன் தொடர்ச்சியாக, நிகழ்நிலை (ஆன்லைன்) கேள்வித் தாள்கள் இவர்களுக்கு வழங்கப்படும்;. மதிப்பீடு உருவாக்க முறையில் அமைவதால், திறனையும் அதன் பயன்பாடுகளையும் அடிப்படையாக கொண்டு இயங்குவதால் திறந்த புத்தகத் தேர்வுகளும் நடைபெறும்;. ஆசிரியர்கள் தாங்களாகவே வினாடி-வினா. தேர்வுகள் போன்றவற்றின் மூலம் மாணவர்களின் வளர்ச்சியை கணக்கில் கொள்வர்;. இதன்முலம் தனிப்பட்ட பாடத்திட்டத்தினையும் உருவாக்குவார்கள்;. இந்த வினாடி - வினாக்கள், பரிட்சைகள் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டறியவும். அவர்களை பற்றி மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கவும் பழக்க முடியும். மதிப்பீட்டு முறையானது வெறும் குருட்டு மனப்பாட முறையை சோதிப்பதிலிருந்து மாறி, உருவாக்கத்திலும், கற்றல் வளர்ச்சியிலும், திறன் மேம்பாட்டு சோதனைகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 4.9.3. கணினி சார்ந்த தேர்வுகளுக்கு மாணவர்களை தகவமைத்து கொள்ளுதல்: கணினியும், இணையமும் அனைத்து பள்ளிகளிலும் இருக்கும் பட்சத்தில் அனைத்து நடுநிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளிலும் கணினி உதவியுடன் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு மாணவர்களே தங்களது இலக்குகளையும், செயல் திட்டத்தினையும் வகுப்பர்;, பொதுத் தேர்வும், நுழைவுத்தேர்வும் இந்த முறையில் நடத்தப் பெறலாம் ; இதனால் மாணவர்களுக்கு தமைத்தாமே முன்னேற்றிக்கொள்ள ஒன்று அல்லது இரண்டு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும். 4.9.4. 3, 5 மற்றும் 8 வகுப்புகளில் கணக்கெடுப்பு தேர்வுகள்: பள்ளி முழுவதுக்குமான ஒவ்வொரு மாணவரின் செயல்திறனை அறியும் வண்ணம், 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுடன் நிறுத்தாமல். 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மாநில அரசுகளால் பொது தேர்வு நடத்தப்படும்;. இதன் மூலம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து பள்ளி முன்னேற்றத்திற்காகவும், கற்பித்தல்-கற்றல் முறைகளை மேம்படுத்தவும் உதவும் ; அடிப்படை அறிவை சோதிக்கும் வண்ணமும், திறன்களை வளர்க்கும் வண்ணமும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும் மூன்றாம் வகுப்பு தேர்வானது அடிப்படைக் கல்வியறிவு, எண்கள் பற்றிய அறிவு மற்றும் திறன்களைப் பரிசோதிப்பதாக அமையும். 4.9.5. பொதுத் தேர்வு முறைகளை மாற்றியமைத்தல் : அடிப்படைத் தரவுகள். திறன்கள் போன்றவைகளை சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வுகள் மாற்றி அமைக்கப்படும்;. இதன் குறிக்கோளானது பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லும் மாணவர், எந்தவித பயிற்சி மையத்தின் உதவியும் இல்லாமல், சுய முயற்சியின் மூலம் தேர்வுகளில் வெற்றி பெருமாறு மாற்றி அமைப்பதாகும்;. பொதுத்தேர்வு அடிப்படைக் கற்றல் திறன்கள், மற்றும் ஆய்வுத்திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வண்ணம் இருக்கும் . அனைத்து மாணவர்களும், பொதுத் தேர்வினை வருடத்தில் இரண்டு முறை எழுதும் வண்ணம் தேர்வுகள் மாற்றி அமைக்கப்படும்;. படிப்படியாக கணினி வழித் தேர்வினைக் கொண்டு வந்த பிறகு. மாணவர்கள் பலமுறை தேர்வுகளை எழுத வகை செய்யப்படும்;. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து. பாடங்களை இலகுவாக்க இறுதி பரீட்சை முறையை மாற்றி பருவத்தேர்வினை உள்ளடக்கிய ‘பொதுத் தேர்வு‘ முறை அமல்படுத்தப்படும் ; ஒவ்வொரு மாணவரும், தனது மேல்நிலைப்பள்ளியில் பருவத் தேர்வினை இரண்டு முறை கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களுக்கும் , ஒருமுறை இந்திய வரலாறுக்கும், ஒருமுறை உலக வரலாறுக்கும், ஒருமுறை பழங்கால இந்தியாவிற்கும், ஒருமுறை நெறிமுறைகளுக்கும், ஒருமுறை பொருளாதாரத்திற்கும், ஒருமுறை சுயதொழிலுக்கும், ஒருமுறை கணினி அறிவியலுக்கும், ஒருமுறை கலைக்கும், ஒருமுறை உடற்கல்விக்கும், இரண்டு முறை தொழில்முறை பாடங்களுக்கும் எழுதும் விதமாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்;. இதைத்தவிர மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ளவும். இலக்கிய அளவில் ஒரு மொழியை பொதுத்தேர்விற்கு எழுதும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்படும்;. இதைத்தவிர பொதுத் தேர்வுகளில் சற்று ஆழமான கருத்துகளைக் கொண்ட கணிதம், புள்ளியியல், அறிவியல், கணினி, வரலாறு, கலை, மொழி மற்றும் தொழில்முறை பாடங்களும் இருக்கும்;. பொதுத் தேர்விற்கு ஒவ்வொரு மாணவரும் 24 பாடங்களை எழுத வேண்டும்;, அல்லது 3 பாடங்களை ஒரு பருவ தேர்வுக்கு எழுதலாம். செயல்முறை தேர்வுகள் அந்தந்த பகுதிகளிலேயே நடைபெறும் . எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகளுக்கான மதிப்பீடுகள் தனித்தனியே மாணவர்களுக்கு வழங்கப்படும் . மேல்நிலைப்பள்ளியில் நாற்பதிற்கும் அதிகமாக பருவநிலை வகுப்புகள் இருக்கும். இதில் பதினைந்திற்கும் மேற்பட்டதை அந்த மாணவரே தேர்வு செய்து. பள்ளிகளே தேர்வினை நடத்தும் 4.9.6. தேசிய தேர்வாணைய மையத்தினை வலிமைப்படுத்தி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை நடத்த தயார்ப்படுத்துதல் தன்னாட்சி அமைப்பான NAT பல்வேறு கல்வியாளர்கள், மனஅளவை வல்லுநர்களைக் கொண்டிருக்கும்;. 2020 ஆண்டு முதல் தேர்வுகள் மற்றும் குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்வுகளையும், வருடத்தில் பலமுறை நடத்த ஆயத்தப்படும். NAT –வில் அடிப்படைத் தகவல்கள், துறைசார் அறிவு மற்றும் திறன்கள் அடிப்படையில் தேர்வுகளை வடிவமைத்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சேர்க்கையை எளிதாக்கும்;. பல்வேறு கல்லூரிகளும், வேலைவாய்ப்பை வழங்குவோரும்;. இந்த NAT தேர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படும்;, இதனால் மாணவர்களின் சுமை பெருமளவு குறைக்கப்படும்;. NAT நேரடியாக மதிப்பெண்களைக் கல்லூரிகளுக்கு அனுப்பி மாணவச் சேர்க்கையினை இலகுவாக்கும்;. இதேபோல் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் NAT வழிவகை செய்யும்;. NAT தேசிய அளவில் தேர்வு மையங்களை நிறுவி. அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்;. பல்வேறு மொழிகளில் தேர்வுகள் நடைபெறும்;. படிப்படியாக உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி பயிற்றுவிக்கும் மொழியிலேயே தேர்வுகளை நடத்த NAT வழி வகுக்கும்;. இதற்காக தேர்வுத்தாள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்;. கணினி சார்ந்த தேர்வாக இந்த தேர்வு அமையும்;. உதாரணமாக ICT – உதவியுடைய வயது வந்தோர் கல்வி மையங்கள், முடியாத இடங்களில் தாள்களில் தேர்வுகள் நடைபெறும். NAT பல வழிமுறைகளைக் கையாண்டு இத்தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும். இந்தத் தேர்வினை அடிப்படையாகக் கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கல்லூரிகளிலும் சேர்க்கை நடைபெற வழி வகை செய்யும்;. இதன் தரத்தை உயர்த்த பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்க்கும். பள்ளி அமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள் , தொழில்துறை தர நிர்ணயம் செய்யும் அமைப்புகள் மற்றும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து NAT செயல்படும்;. NAT வின் செயல்பாட்டினை இந்த நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர் குழு கண்காணிக்கும்;. மிகப்பெரிய அளவில் செயல்படுவதனால் NAT கருவூலமாகச் செயல்பட்டு, அதன் தரவுகளை பிற கல்வி ஆராய்ச்சி பணிக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்கும். மதிப்பீடு, தரவுகளை சேகரித்தல், ஆராய்ச்சிக்கான முன்னெடுப்பு, மதிப்பீட்டறிவு, உருவாக்க மதிப்பீடு போன்றவற்றை மேம்படுத்தி, கல்வியின் தரத்தை இந்தியாவெங்கிலும் உயர்த்த NAT முனைப்புடன் செயல்படும். 4.10 தனிப்பட்ட ஆர்வமும், திறமையும் கொண்ட மாணவர்களுக்கு ஆதரவு அளித்தல் ஒவவொரு குழந்தைக்கும் தனித்துவமான திறமை உண்டு, அதனைக் கண்டறிந்து, பாதுகாத்து, வளர்த்தல் வேண்டும்;, இந்த திறமை பல்வேறு விதங்களில் வெளிப்படும். அதனை ஊக்குவித்து பள்ளி பாடத்திட்டத்தினை தாண்டி செயல்பட வைக்க வேண்டும்;. தற்போது இருக்கும் “ஒரே கல்வி அனைவருக்கும்” என்ற கொள்கை மாறுதல்கள் இல்லாமல் ஒரே பாடத்திட்டத்தை , கற்றல் மதிப்பீடுகளைக் கொண்டது, இந்தக் கொள்கையில், தனித்திறன்களையும், தனி விருப்பத்தினையும் ஊக்குவிக்கப்படும்;. இதன் வழிநிலைகளாக கற்றலில் மாணவர்களின் தனித்தனி நலன்களையும். திறன்களையும் கண்டறிந்து மெருகேற்றி, கற்றல் அனுபவங்களை மெருகேற்றி, தலைப்பு சார்ந்த கற்றல் செயல்பாடுகள், செயல்முறைக் கற்றல் போன்றவை ஊக்குவிக்கப்படும்;. கணிதத்தில் “கணித வட்டம்” என்ற முறை பல்கேரியா. ரஷ்யா. அமெரிக்கா போன்ற நாடுகளில் கணித வல்லமை பெற்ற மாணவர்களிடையே கற்பிக்கப்படுகிறது. இதன்படி பல்கலைக்கழகம் அல்லது பள்ளியின் உட்கட்டமைப்பை வார இறுதியிலோ. சாயங்காலத்திலோ பயன்படுத்தி. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் செயல்பாடுகள் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படும்;. அந்த செயல்பாடுகள் கணக்கியலாளர்களின் பேச்சு, போட்டிகள் அல்லது விளையாட்டு முறைசெயல்பாடுகள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயல்பாட்டினை தூண்டிடும்;. இந்த ‘கணித வட்டம்’ பெரும்பாலும் வாரம் ஒருமுறையோ, இரு முறையோ கூடும்;. பல்கலைக்கழக மாணவர்களும். ஒத்த கருத்துடைய ஆசிரியர்களும் ஒருங்கே கணிதத்தை இன்னும் ஆழமாக கற்பர்;. இதற்கு கணித மேதைகள் அல்லது நன்கொடையாளர்களின் பெயர் சூட்டப்படும்;. இதே முறையில் தலைப்பு மற்றும் செயல்பாடுகள் வழியே கற்கும் குழுக்கள் அனைத்து பாடங்களுக்கும், பல்வேறு பள்ளிகள், மாவட்டங்கள் அடிப்படையில் நடத்தப்படும். “அறிவியல் குழு”, “இசை சார்ந்த குழு”, “சதுரங்க குழு”, போன்றவை அமைக்கப்படும். இதற்கு குழந்தைகளை ஆசிரியர்கள் அழைத்து செல்ல நிதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தங்கும் வசதியுடன் கூடிய தேசிய கோடை நிகழ்ச்சிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தகுதி அடிப்படையில் நடைபெறும்;. ஆசிரியர்களும் துணை படிக்கும் தரவுகளையும். வழிகாட்டுதலும், ஊக்குவிப்பும் வழங்க வேண்டும், இதற்காக: 4.10.1. தனித்திறமையும், விருப்பங்களையும் கண்டறிதல்: ஆசிரியர்கள் தனித்திறமையும். விருப்பமும் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல். ஊக்குவிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும்;. செயல்பாட்டு முறைக் கல்வி அவர்களின் திறமைகள். விருப்பங்கள் போன்றவற்றை மேலும் ஊக்குவிக்கும்;. இந்த மாணவர்கள் குழுக்களையோ, பள்ளிகளையோ கூட வழி நடத்திட வகை செய்யப்படும். 4.10.2. தலைப்பை-மையப்படுத்தியும். செயல்பாடுகளை-மையப்படுத்தியும் குழுக்களை பள்ளிகளிலும், மாவட்ட அளவிலும் ஆரம்பித்தல்: தலைப்பை மையப்படுத்தியும். செயல்பாடுகளை மையப்படுத்தியும் குழுக்களை பல்வெறு பாடங்களுக்கு, அறிவியல், கணிதம், இசை, சதுரங்கம், கவிதை இலக்கியம், கருத்தரங்கம், விளையாட்டு அமைத்திட வேண்டும்;. அந்தந்த பகுதி மாணவர்களும், ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்;. இதற்கான நிதி வருகையின் அளவினை பொறுத்தும், போக்குவரத்து மற்றும் கல்வி உபகரணங்களின் தேவை குறித்தும் கணக்கிடப்படும். 4.10.3. மத்திய நிதி உதவியுடன் தங்கும் வசதி கொண்ட கோடை நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல்வேறு பாடங்களுக்கு மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்படும்; தகுதி அடிப்படையில். புதிய மத்திய நிதி உதவி பெறும் தேசிய கோடை நிகழ்ச்சிகள் பல்வேறு பாடங்களுக்கு ஆரம்பிக்கப்படும்;, 4.10.2-இல் சொன்ன குழுக்கள் இதில் பங்கேற்கும். 4.10.4. ஒலிம்பியாட்களும் போட்டிகளும் : பல்வேறு பாடங்களில் ஒலிம்பியாட்களும் போட்டிகளும் இந்தியா முழுவதும் நடத்தப்படும்;, பள்ளி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் இவை நடைபெறும்;, சிறந்து விளங்கும் மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட்டில் பங்கேற்க நிதி உதவி செய்யப்படும்;. அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த போட்டியின் முடிவுகளைக் கணக்கில் கொண்டும். மாநில மற்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் மாணவரின் பங்களிப்பினையும் கருத்தில் கொண்டு அவர்களின் இளநிலை வகுப்பு சேர்க்கை நடைபெறும். 4.10.5. இணைய அடிப்படையிலான செயலிகள், மதிப்பீடுகள், நிகழ்நிலை சமுகங்கள் கொண்டு மாணவர்களின் தனிவிருப்பத்தையும் திறனையும் மேம்படுத்துதல் இணைய வசதி கொண்ட தொடுதிரை கைபேசி அல்லது டேப்லெட் அனைத்து மாணவர்களின் கையில் கிடைத்தவுடன் வினாடி - வினா போட்டிகள், மதிப்பீடுகள் மற்றும் நிகழ்நிலை சமுகஙகள் (ஒத்த கருத்துடைய குழுக்கள்) உருவாக்கப்படும்;. இவை 4.10;.1 - 4.10.4 இல் குறிப்பிடப்பட்டவைகளை ஆரம்பிக்க உதவும் ஆசிரியர்கள் நோக்கம் : உயர்ந்த கல்வி கற்ற, ஆசிரியர் பயிற்சி பெற்ற, திறன் வாய்ந்த, ஊக்கமும், உற்சாகமும் நிரம்பிய ஆசிரியர்களால் எல்லா நிலையிலும் உள்ள எல்லா மாணவர்களுக்கும் கல்வி அளிப்பதை உறுதி செய்தல். ஆசிரியர்களே குழந்தையின் எதிர்காலத்தை, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர். மதிப்பீடுகள் , கல்வி, கல்வி அறிவு ,கருணை உள்ளம், படைப்பாற்றல் திறன், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஆசிரியர் மூலமே பெறுகின்றனர்.ஆசிரியர்கள் கல்வியின் நோக்கத்தை வடிவமைத்து, படித்த, வளமான சமுதாயத்தை உருவாக்குகின்றனர். பண்டைய இந்தியாவில் ஆசிரியர்கள் மிகுந்த மரியாதைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர்.தகுதியுடைய மிகவும் படித்தவர்களே ஆசிரியர்களாக இருந்தனர். ஒவ்வொரு மாணவரும் அவரவர் திறனில் முழுமை அடைய தன்னுடைய கற்பித்தலில் பெற்ற அனுபவங்களையொட்டி மாணவர்களுக்கான கற்பித்தலை ஆசிரியர்கள் வடிவமைக்கின்றனர். இன்று ஆசிரியர்களின் நிலை கெடுவாய்ப்பாக , சந்தேகத்திற்கு இடமின்றி தாழ்ந்துள்ளது. ஆசிரியருக்கான சிறந்த பயிற்சிகள், ஆசிரியர் பணியிட மாறுதல், பணிநிரவல் சேவை மனப்பான்மை, ஆசிரியருக்கான அதிகாரம் போன்றவை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை இதனால் தரமான மற்றும் ஊக்கம் உள்ள ஆசிரியர்களைப் பெற முடியவில்லை. ஆசிரியர்கள் மீது உயர்ந்த மரியாதையும் ஆசிரியர் பணி மீதான மதிப்பையும் திரும்ப புத்துயிர் அளித்து உருவாக்க வேண்டும் அதுவே பிறரின் கவனத்தை ஆசிரியர் பணி ஏற்படுத்தும்.  ஆசிரியர்களை மிகுந்த ஊக்கப்படுத்தி அவர்கள் கற்பித்தலில் புதிதாக செய்ய விரும்புவதற்கு அதிகாரங்களையும் தர வேண்டும். அதுவே கல்வியில் உயரத்தையும் தரத்தையும் அடைவதற்கு குழந்தைகளுக்கும், நாட்டிற்கும் தேவைப்படுவது ஆகும். எது கற்பித்தலையும் கற்பிப்பவரையும் தன்னிகரற்றஉயர் நிலைக்கு கொண்டு செல்லும்? இந்தியா மற்றும் பிற உலக நாடுகளை நோக்கும் போது சில முக்கிய தகுதிகள் ஆசிரியர்களுக்கு  ஆசிரியர் கல்வி அளித்தல்  மற்றும் பள்ளி வளாகம் அமைத்தல் போன்றவற்றில் தேவைப்படுகிறது அந்தத் தகுதிகள் சிறந்த ஆசிரியர்களையும் கற்பித்தலையும் தரும் என கூறப்படுகிறது. ஆசிரியர்கள் நவீன சிந்தனை உடையவர்களாக ,ஊக்கம் உள்ளவர்களாக, சிறந்த கல்வி தரம், பாடம் குறித்து அறிவு நிரம்பியவர்களாக சிறந்த பயிற்சி பெற்றவர்களாக கற்பிக்கும் நிலையில் சிறந்தவர்களாகவும் இருக்க இயலும். - ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் பணியை செய்யும் சமுதாயத்துடனும், மாணவர்களுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்க வேண்டும். - ஆசிரியர்கள் கற்பித்தலை திறம்பட செய்கிறார்களா என மதிப்பிடப்பட வேண்டும் ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். - மகிழ்வான சூழல் சிறந்த கற்பித்தலையும், கற்றலையும் ஏற்படுத்தும். முக்கியமாக ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இடத்தில் ஆசிரியருக்கான பாதுகாப்பும் வசதியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். - சிறந்த கற்பித்தலை மேற்கொள்ள தேவையான கல்வி உபகரணங்கள் வகுப்பறை  மற்றும் பள்ளி வளாகம் பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும். - கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்கள் மீது சுமத்தக் கூடாது மேலும் அவர்கள் நிபுணத்துவம் அடையாத பாடம் சார்ந்த கற்பித்தலையும் ஆசிரியர்களைக் கற்பிக்கச் சொல்லக்கூடாது. - ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் சிறப்பாகப் பொருந்தக் கூடிய கற்பித்தல்  முறைகளைப் படைப்பூக்கத்துடன் உருவாக்கவும் ,   புதிய கற்பித்தல் முறைகளைப் புகுத்தவும் தன்னாட்சி அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். - பாட கருத்துகள் மற்றும் கற்பிக்கும் கலையில் புதிய யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வலுவான வாய்ப்புகளை cpd மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். - ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் ஒரு பகுதி என உணர்ந்து இருத்தல் வேண்டும். - பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி மீது அக்கறையும் ஒத்துழைப்பும் கொண்டு மாணவர்களிடையே அறிவின் பண்பட்ட நிலையை உருவாக்க வேண்டும். - அறிவையும், ஆர்வத்தையும், இரக்கம் மற்றும் சமநிலையை மாணவர்களிடையே  ஊக்குவிக்க வேண்டும். - பள்ளியில் ஏற்படுத்த வேண்டிய இந்த பண்பட்ட நிலையை உருவாக்குவதில் தலைமை ஆசிரியர்கள், பள்ளியில் பொறுப்பில் இருக்கும் தலைமை உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் போன்றவர்கள் பங்கு வகிக்க வேண்டும். இன்றைய ஆசிரியர் மற்றும் ஆசிரியக் கல்வியை பாதிக்கும் முதன்மைக் காரணிகள்: கெடுவாய்ப்பாக , தற்காலத்தில் சிறந்த கற்பித்தலை சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்கான  பத்து நோக்கங்களை பல்வேறு காரணங்களால் அடைய முடியவில்லை. - முதலாவதாக கற்பித்தலில் திறமை கொண்ட ஆசிரியர்களையும் சிறந்த செயல்திறன் கொண்ட ஆசிரிய மாணவர்களையும் பணியமர்த்துவதற்கு மிகக் குறைவான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன குறிப்பாக தற்போது ஆசிரிய நியமனங்கள்(Tet) வெறும் எழுத்துத் தேர்வின் மூலமே செய்யப்படுகின்றன. - இரண்டாவதாக ஆசிரியர் பயிற்சி மையங்களின் தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாட்டில் உள்ள 17,000 ஆசிரியர் பயிற்சி மையங்களில் 92% பயிற்சி மையங்கள் தனியார் வசம் உள்ளன. ஜேஎஸ். வர்மா அவர்களின் உச்சநீதிமன்ற அறிக்கையில் இந்த கல்வி மையங்கள் அளிக்கும் கல்வி தர விகிதம் குறைந்த அளவே உள்ளது என்றும் வணிக மையங்கள் போல செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார் .பணத்திற்கு பட்டயம் கிடைக்கும் நிலைமை உள்ளது. இது மாதிரியான கல்வி நிலையங்களை மூடினால் வழியே தரமான ஆசிரியர் பயிற்சியைத் தர இயலாது. மீதியுள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன. அவற்றின் நோக்கம் உயர்ந்ததாக இருப்பினும் முழுமையான திறன்களை வழங்குவதில் செயல் வல்லமை கொண்டிருக்கவில்லை. தற்காலத்தில் நவீன கற்பித்தல் முறைகளை வழங்கக்கூடிய பயிற்சிகளையும் வழிகாட்டலையும் தருவதில்லை. - மூன்றாவதாக ஆசிரியர்களைக் கையாள்வதில் குறைபாடுகளும் பொருத்தமற்ற முறைகளுமே நிலவுகின்றன. அரசாங்க தகவலின்படி நாட்டில் 10 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பெரும்பாலான காலிப்பணியிடங்கள் கிராமப்புறங்களிலும் அவற்றில் மாணவ ஆசிரியர் விகிதம் 60:1 ஆகவும் உள்ளன. இதில் கவலைக்குரியதாக முக்கியப் பாடங்களைக் கையாளவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. நிறைய பள்ளிகளில் உள்ள சிக்கலான விஷயம் அந்த பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் இல்லாமையால் இருக்கும் ஆசிரியர்கள் பிற பாடங்களைக் கற்பிக்கும் நிலைமை உள்ளது .பெரும்பான்மையான பள்ளிகளில் மொழிப்பாட ஆசிரியர்கள் இல்லை. கலை மற்றும் இசை ஆசிரியர்களும் இல்லை. எதிர்பாராத மற்றும் கணிக்க இயலாத ஆசிரியர் பணியிட மாறுதலால் பள்ளியும் மாணவர் நிலையும் கவலைக்குள்ளாகிறது. மனஅளவில்  மற்றும் கல்வி அளவில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமூகம் மற்றும் பள்ளியில் ஆசிரியர் மாணவர் உறவு ஆசிரியர் பணியிட மாறுதலால் முழுமையாக ஈடுபடமுடியாமல் தடுக்கிறது ஆசிரியர்கள் ஒரே இடத்தில் பணி செய்வதன் வாயிலாக கல்விச் செயல்பாடுகளில் சிறப்பாக ஈடுபட முடியும். மிகவும் பின்தங்கிய கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் அவர்களின் மொழியைப் பேசி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருத்தல் அவசியம். அந்த ஆசிரியர்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளும் வாய்ப்பு அப்பகுதி மாணவர்களுக்கு உருவாகும். ஆனால் பணிநிரவல் இந்த வாய்ப்பை தடுக்கிறது. - நான்காவதாக நிறைய பள்ளிகளில் ஆசிரியர்கள் வசதியாக உணரும் விதத்தில் கட்டட வசதியும் பிற வசதிகளும் கிடைக்கப்பெறவில்லை. பாதுகாப்பான குடிநீர் வசதியின்மை, கழிவறை வசதியின்மை, மின்சார வசதி இன்மை இவை சரிசெய்யப்பட வேண்டும். ஆசிரியருக்குத் தேவையான கற்பித்தல் உபகரணங்கள் மற்றும்  மனித வளங்களும் கூட பற்றாக்குறையாக உள்ளன. - ஐந்தாவதாக கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய பெரும்பான்மை நேரம் ஆசிரியர்கள் நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள் தேர்தல் பணிகள் ,மதிய உணவு தயாரித்தல் ,நிர்வாக வேலைகள் செய்வது ஆகியவற்றால் கற்பித்தலில் முழு கவனம் செலுத்த இயலுவதில்லை. - ஆறாவதாக, கற்பித்தல் சார்ந்த தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் போதுமான அளவு இல்லை .வழங்கப்படும் பயிற்சிகள் கற்பித்தலுக்கு தொடர்புடையதாக இல்லை. மற்றும் சில ஆசிரியர்களுக்கு பயிற்சியே கிடைப்பதில்லை. சில ஆசிரியர் அமைப்புகள் அவர்களின் பகுதிகளில் ஆசிரியர்களை இணைக்க உதவுகின்றன. ஆசிரியர்கள் கலந்துரையாடுவதிலும் கருத்துகளைப் பகிர்வதிலும் உள்ள தடைகளை இது களைகிறது. - இறுதியாக ஊதியம், பதவி உயர்வு தலைமைப் பதவி போன்றவை தகுதி மற்றும் திறமை அடிப்படையில் வழங்கப்படாமல் வயது மூப்பு அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் தங்களின் முழு கற்பித்தல் திறனை வெளிப்படுத்தும் போது அவர்களுக்கான ஊக்க ஊதியத்தை தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மீளாய்வு செய்து வழங்குதல் வேண்டும். எது ஆசிரியர் தொழிலின் தனித்துவத்தை மீட்கவும் நாடு முழுவதும் தரமான ஆசிரியர்களைக் கற்பித்தலில் ஈடுபடுத்தவும் உதவும்? ஆசிரியர் பயிற்சி படிப்பு வழங்கும் முறை, பணியமர்த்தல் , பணி நிரவல், சேவைத் தன்மை , பணியில் வளர்ச்சி, பணி மேலாண்மை போன்றவை அனைத்தும் ஆராய்ந்து வழங்கப்படுவதன் மூலம் ஆசிரியர் பணியின் தனித்துவமும் ஆசிரியரும் அவர்களின் முயற்சியும் பரந்த அடித்தளம் கொண்டதாக உறுதி செய்யப்படும். இறுதியாக இந்தத் திட்டம் மேற்சொன்ன ஏழு குறைபாடுகளும் தற்காலத்தில் கற்பித்தலைப் பாதிக்கும் காரணிகளைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தக் குறைகள் களையப்படும் போது சிறந்த கற்பித்தலை மேற்கொள்ளும் முயற்சி நோக்கங்களை அடைய உதவும். பணி நியமனம் மற்றும் பணி நிரவல்: நான்காண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படிப்பதற்குத் தகுதியும் திறனும் உடைய குறிப்பாக கிராமப்புறத்திலிருந்து அறிவும் திறனும் உள்ள மாணவர்கள் வருகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் ஆசிரியர் பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்த கிராமப்புற திறன் வாய்ந்த மாணவர்களுக்கு அவர்கள் பகுதியிலேயே வேலை உறுதி செய்யப்பட வேண்டும். இது மாதிரி அவர்கள் பகுதியிலேயே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் போது (குறிப்பாக  மாணவிகளுக்கு) அவர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக தங்களுடைய பகுதியில் விளங்குவார்கள். திறன் வாய்ந்த ஆசிரியர்களை கிராமப்புறத்தில் கற்பித்தலுக்குப் பயன்படுத்தும் போது அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் குறிப்பாக தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைச் சூழலில் மிகவும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இதில் ஆசிரியர்கள் சந்திக்கும் சிக்கல் தங்கும் இடத்திற்கான பிரச்சினை ; அதனால் ஆசிரியர்களைப் பள்ளிக்கு அருகிலேயோ அல்லது பள்ளி வளாகத்திலேயோ தங்குவதற்கான ஏற்பாடு செய்தல் வேண்டும் அதிகப்படியான ஆசிரியர்களைப் பணியிடை மாற்றம் செய்வது தவறான கொள்கை ; அது உடனே நிறுத்தப்பட வேண்டும்: ஆசிரியர்கள் அவர்களுடைய சமுதாயத்தில் நல்ல உறவு முறையை வளர்ப்பதற்கும் மாணவர்கள் ஆசிரியர்களை முன்மாதிரியாகக் கொள்வதற்கும் நல்ல கல்விச் சூழலை அடைவதற்கும் ஆசிரியர் பணியிட மாற்றம் என்பது சுய விருப்பம் அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், பதவி உயர்வு காரணமாகவும் பள்ளியின் வருகைப் பதிவேட்டில் மாணவர் வருகையில் பெரிய மாற்றம் காரணமாகவும் மற்றும் சிறந்த ஆசிரியர் ஊக்குவிப்பு காரணங்களுக்காக மட்டுமே நடைபெறும் . கற்பித்தலை சிறந்த முறையில் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக சிறந்த மற்றும் உயர்ந்த ஆசிரியர்களின் திறனுடன் தொடர்புபடுத்தப்பட்ட மேம்பட்ட சோதனைப் பொருள் மூலம் கல்வி மற்றும் ஆசிரியர் பணித் திறன்கள் பலப்படுத்தப்படும். கூடுதலாக பாட ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதற்கு அவர்களுடைய பாடத்தில் பெற்ற என்டிஏ தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பள்ளியில் அல்லது பள்ளி வளாகத்தில் ஆசிரியரைப் பணியமர்த்த இறுதிச்சுற்று ஆக அவர்களின் ஆர்வத்தையும் கற்பித்தலில் ஊக்குவித்தலும் கணக்கிட ஒரு வகுப்பறை மாதிரி கற்பித்தலும் நேர்காணலும் நடைபெறும். இந்த நேர்காணல்கள் தேர்வாளர் உள்ளூர் மொழியை எளிதாகவும் திறமையாகவும் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை அறிய உதவுவதுடன் ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒரு மொழியைப் பேசிப் பழக உதவுகிறது. இதனால் ஒவ்வொரு பள்ளி மற்றும் பள்ளி வளாகத்தில் குறைந்தபட்சம் சில ஆசிரியர்கள் உள்ளூர் மொழிகளில் உரையாடலாம்: குறிப்பாக தொலைதூர கிராமப்புற மற்றும் பழங்குடி பகுதிகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் அல்லது உள்ளூர் மொழி பேச்சு வழக்கை பேசுகிறார்கள். எனவே அவர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் சரளமாகவும் திறம்படவும் தொடர்பு கொள்ளலாம்.பாடநெறிகளுக்குப் போதுமான ஆசிரியர்களை நியமிப்பதற்கு குறிப்பாக கலை ,உடற் கல்வி, தொழிற்கல்வி பிறமொழி போன்றவற்றுக்கு உள்ளூரில் உள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் குறிப்பிட்ட பள்ளியிலேயே அல்லது தேவைப்படும் பள்ளியிலேயே பகிர்ந்து கொள்ளலாம். இனிவரும் காலத்தில் அனைத்து நிரந்தர ஆசிரியர்களுக்கும் குறைந்தபட்சம் நான்கு வருட ஒருங்கிணைந்த b.ed கல்வி இருக்கும். மேலும் மாணவர்களுக்கு உள்ளூர் அறிவையும் திறமையையும் ஊக்குவிக்க பள்ளிகளில் உள்ளூர் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு உள்ளூர்க் கலைகள், தொழிற்கல்வி, தொழில், விவசாயம் போன்றவற்றை மாணவர்கள் பயன் அடையுமாறு பயிற்றுவிப்பார்கள். வேறு ஏதேனும் பாடத்தைக் கற்பிப்பதால் உள்ளூர் அறிவைப் பாதுகாக்க மற்றும் ஊக்கப்படுத்த உதவும். அடுத்த 20 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் ஆசிரியர் மற்றும் பாட காலியிடங்களை மதிப்பிடுவதற்காக ஒரு விரிவான ஆசிரியர் தேவை திட்டமிடல் பயிற்சி இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்படும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுடனும் நிலுவையில் உள்ள ஆசிரியர்களை நிரப்புவதற்கான நோக்கம் கொண்ட காலப்பகுதியில் தேவைப்படும் பணிக்காகவும் பணியில் ஈடுபடும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பணிச்சூழல் மற்றும் கலாச்சாரம்: பள்ளிகளின் சேவைச் சூழல்களையும் , கலாச்சாரங்களையும் மேம்படுத்துவதன் முக்கிய நோக்கம் , ஆசிரியர்களின் திறமைகளைத் திறம்படச் செய்வதற்கான திறன்களை அதிகரிக்கச் செய்வதோடு அவை ஆசிரியர்களின் துடிப்பான கவனிப்பு மற்றும் உள்ளடங்கிய சமூகங்களின் பகுதியாக இருப்பதை உறுதிப்படுத்துவதாகும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பொதுவான நோக்கம் குழந்தைகளின் கற்பித்தலை உறுதி செய்வது ஆகும். இச்செயலுக்கு முதல் தேவை பள்ளிகளில் ஒழுக்கம் மற்றும் அமைதியான சேவை நிலைமையை உறுதி செய்வது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வசதியான மற்றும் ஊக்கமளிக்கும் சூழ்நிலையில் பணியாற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வி, கழிப்பறை, சுத்தமான குடிநீர் , சுத்தமான மற்றும் கவர்ச்சிகரமான இடங்கள், மின்சாரம், கணினி வசதி , இணைய வசதி– போன்றவற்றை உள்ளடக்கிய போதுமான மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்புகளைத் தங்கள் பள்ளிகளில் உருவாக்குதல் : இதற்கிடையில் பள்ளி வளாகங்களை உருவாக்குதல் துடிப்பான ஆசிரியர்களை நீண்ட தூரம் பயணிக்க வைக்க உதவும்.  எனவே குறிப்பிட்டுள்ளபடி ஆசிரியர்களைப் பகிர்ந்தளித்தல் பள்ளி மற்றும் பள்ளி வளாகத்திலேயே உறவுகளை உருவாக்கும் இது பாடம் சார்ந்த ஆசிரியர்களைப் பகிர்ந்து கொள்வதையும் துடிப்பான ஆசிரிய அறிவுத்தளத்தை உருவாக்குவதிலும் உதவும். சிறிய பள்ளிகளில் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் பெரிய பள்ளி வளாகத்தில் சமூகத்தின் ஒரு பகுதியாக பணியாற்றுவார்கள். பள்ளிக்கூட வளாகத்தை ஒரு மிகச்சிறிய , பார்வைக்கு வெளிப்பட்டுத் தெரியும் ஆளுகையின் செயற்திறன் மிக்க அலகாக உருவாக்குவது ஆசிரியர்களின் உயிர்த்துடிப்பான சமூகங்களை உருவாக்க உதவுகிறது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சமூக நலன்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் தங்களை ஒரு அதிகார வலிமை மிக்க கலாச்சாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் , அனைத்துக் குழந்தைகளும் கற்றலில் ஈடுபடுவதை உறுதி செய்யவும் உதவும்.  பள்ளி வளாகங்களில் ஆலோசகர்கள், சமூகப்பணியாளர்கள், தொழில்நுட்ப மற்றும் பழுது பார்ப்பு ஊழியர்கள், மாற்று பயிற்றுவிப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அனுமதிப்பதன் மூலம் கற்றல் திறனை சமூக சூழலை உருவாக்குவதற்கும் பங்களிப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் பிற முக்கிய உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் எஸ் எம் சி கள் மற்றும் எஸ்சிஎம்சி களின் உறுப்பினர்கள் உட்பட பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் ஆளுமையில் அதிக ஈடுபாடு கொள்வார்கள். ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத செயல்களில் தங்கள் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க நேரடியாக கற்பிப்பதில் தொடர்பில்லாத அரசுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். தங்கள் வகுப்பறைக் கற்பித்தலை பாதிக்காத சில அரிய நிகழ்வுகள் தவிர்த்து .குறிப்பாக ஆசிரியர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் இனிமேல் ஈடுபடு த்தபட மாட்டார்கள். மதிய உணவு ஏற்பாடு செய்வது மற்றும் பிற கடுமையான நிர்வாகப் பணிகளை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள் அவர்கள் கற்றல் கற்பித்தல் கடமைகளில் முழுமையாக கவனம் செலுத்துவர். கற்பித்தலுக்கான நேர்மறையான சூழலை பள்ளியில் உறுதிசெய்ய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியரிடமிருந்து சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும்வகையில் தங்கள் பள்ளியில் அக்கறையுடனும் உள்ளிணைத்துக் கொள்ளும் கலாச்சாரத்துடனும் பணியாற்றச் செய்தல் வேண்டும். அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கற்றல் மற்றும் அவர்களின் சமூகங்களில் உள்ள அனைவரின் நலன்களுக்காகவும் வெளிப்பட வேண்டும். இறுதியாக ஆசிரியர்களுக்கு பாடத் திட்டங்கள் மற்றும் சிறந்த அம்சங்களைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் சுயாட்சியை வழங்குவதோடு அவர்கள் வகுப்பறைகள் மற்றும் சமூகங்களில் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பாடப் பொருளைக் கற்கலாம் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கற்றல் விளைவுகளை மேம்படுத்த , கற்பிப்பதற்காக புதுமையான அணுகுமுறைகள் அங்கீகரிக்கப்படும். தொடர்ச்சியான தொழில்சார் நிபுணத்துவ வளர்ச்சி: ஆசிரியர்களுக்கு , தங்களின் சுய முன்னேற்றத்திற்கான நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் ; அவர்கள் தங்கள் தொழில் துறையின் சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆசிரியர்களாக தங்கள் சொந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வாய்ப்புகளை உறுதிசெய்ய Cpd க்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறை பின்பற்றப்படும். வளர்ச்சி வாய்ப்புகளாக உள்ளூர் மாநில தேசிய மற்றும் சர்வதேச கற்பித்தல் பயிற்சி மற்றும் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டு தொகுதிகள் கிடைக்கும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தங்கள் சொந்த வளர்ச்சிக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படி அனைவருக்கும் கிடைக்கும். ஆசிரியர்கள் தங்கள் யோசனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ளலாம் உருவாக்கப்படும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் தொழில் முறை வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் 50 மணி நேரம் Cpd வாய்ப்புகளில் பங்கேற்கலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளாக தலைவர்கள் தங்கள் தலைமையையும் நிர்வாக திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும் அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் மேலாண்மை பட்டறைகள் மற்றும் ஆன்லைன் அபிவிருத்தி வாய்ப்புகள் போன்ற தளங்களை கொண்டிருக்க வேண்டும் அத்தகைய தலைமைப் பொறுப்பாளர்கள் ஒரு வருடத்திற்கு 50 மணி நேரத்தை சிபிடி தொகுதிகளில் செலவிட்டு அவர்களுடைய கற்பித்தல் திறனை ஆசிரியர் பணிகளில் செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவார்கள். தொழில் மேலாண்மை: கற்பித்தல் தொழிலின் கவுரவத்தை மீட்பதற்கு முக்கியமான பகுதி ஆசிரியர்களின் தொழில் நிர்வாகமாகும். சிறந்த பணியை செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படவேண்டும்; ஊக்குவிக்கப்படவேண்டும்; சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கு சிறந்த வேலைகளை செய்ய ஊக்குவிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு ஆசிரியர் தரவரிசை கொள்ளும் பல நிலைகளோடு மேம்பட்ட மற்றும் உயர்ந்த ஆசிரியர்களை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு மூலம் ஊக்குவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும் ஒரு வலுவான தகுதி அடிப்படையிலான ஊக்குவிப்பு மற்றும் போதிய கட்டமைப்பு உருவாக்கப்படும். செயல் திறனை மதிப்பீடு செய்வதற்கு முறையான பல அளவுகள் உருவாக்கப்படும். இது பள்ளி மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் பிறரை பொருத்தவரை சக மதிப்பாய்வு, மாணவர் விமர்சனங்கள் ,மாணவர் வருகை, பொறுப்பு, cpD க்கு செலவிடும் நேரம் மற்றும் பிற சேவைகளின் அடிப்படையிலானது. இத்தகைய தகுதி அடிப்படையிலான மதிப்பீடுகள் பதவி உயர்வு முடிவுகளை நிர்ணயிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றை நிர்ணயிக்கும். தகுதி அடிப்படையில் ஆசிரியர்களின் நிலைகளை மேலுயர்த்தும் அணுகுமுறை மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது: சிறப்பான ஆசிரியர்கள் , ஜனநாயகரீதியான தலைமைக்குணங்கள் கொண்டவர்கள், மற்றும் நிர்வாகத் திறன் கொண்டவர்கள் பள்ளி, பள்ளி வளாகம்,  ,BRC,CRC,BITE,DIET போன்றவற்றில் தலைமைப் பொறுப்புகளில் இருக்க பயிற்றுவிக்கப் படுவார்கள் ஆசிரிய கல்வியை அணுகுதல்: சிறந்த ஆசிரியர் ஆவதற்கு ஆசிரியர் கல்வி உள்ளடக்கத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று அங்கீகரித்து ஆசிரியர் கல்வி படிப்படியாக பன்முக கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஏனெனில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவையாக மாறிவருகின்றன. பி. எட் . பட்டப் படிப்புக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதும் அவர்களின் நோக்கங்களுள் ஒன்றாக இருக்கும். 2030 -க்குள் ஆசிரியராவதற்கான குறைந்தபட்ச தகுதி நான்கு வருட ஒருங்கிணைந்த பிஎட் பட்டப்படிப்பு  கற்பித்தல் பணி குறித்து கற்றுக்கொள்வதோடு உள்ளூர் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பித்தல் பணிசெய்யும் நடைமுறைப்பயிற்சியும் அடங்கும். இரண்டாண்டு பிஎட் படிப்பு அதே பன்முக நிறுவனங்களில் நான்காண்டு ஒருங்கிணைந்த பிஎட் கல்வியாகவும் இளங்கலையில் சிறப்புப் பாடம் பயின்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் B.ed யாகவும் வழங்கப்படும். நான்கு வருட பன்முக இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலோ நான்கு வருட b.ed கல்விக்கு மாற்றாக ஒரு வருட b.ed கல்வி பெறலாம்.அத்தகைய அனைத்து b.ed நான்கு வருட ஒருங்கிணைந்த b.ed பட்டங்கள் அரசு ஒப்புதல் பெறப்பட்ட பன்முக உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே வழங்கப்படும். அனைத்து B.ed கல்லூரிகளும் ஆசிரியர் பணி குறித்த நவீன தொழில்நுட்பம், அடிப்படை எழுத்தறிவு– எண்ணறிவுப் பயிற்சி, பலதரப்பட்ட கற்பித்தல் மற்றும் மதிப்பீடு, cwsn கற்பித்தல், தொழில்நுட்பத்தைக் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய மற்றும் ஒருங்கிணைந்த கற்பித்தலில் பயிற்சி அளிக்கும். வகுப்பறையில் வலுவான நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் உள்ளூர் பள்ளிகளில் மாணவர் கற்பித்தலும் நடக்கும் . பின்பு இயல்பு காரணமாக கால அளவு பொருட்படுத்தாமல் அனைத்து பன்முக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் b.ed degree கற்பிக்கப்படும். கல்விச் செயல்முறையில் ஆசிரியர்களே இதயம் போன்று முக்கியமானவர்கள். அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விப் புலம் சார்ந்த ஆதரவும் தொழில் நிபுணத்துவம் சார்ந்த ஆதரவும் அவர்கள் பணியில் ஊக்குவிக்கும் சூழலும் கலாச்சாரமும் இருத்தல் அவசியம்.. குறுகியகால சிறப்பு உள்ளூர் ஆசிரியர் கல்வி திட்டங்கள் BITE ,DIETஅல்லது பள்ளி வளாகங்களில் கிடைக்கும்.உள்ளூர்ப் பள்ளிகளுக்கு அல்லது பாடசாலை வளாகங்களில் கற்பிப்பதற்காக உள்ளூர் அறிவை திறனை மேம்படுத்துவதற்காக எடுத்துக்காட்டாக உள்ளூர் கலை இசை விவசாயம் வணிகம் விளையாட்டு மற்றும் பிற தொழில் கைவினைக் கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் சிறப்புக் குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கும் கல்வி முறையில் தலைமை மற்றும் நிர்வாகத்தை அடைய விரும்பும் ஆசிரியர்களுக்கும் இரண்டாம் நிலை பிந்தைய  சான்றிதழ் படிப்புகள் பன்முக கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பரவலாகக் கிடைக்கும். இறுதியாக ஆசிரியர் கல்வியின் தரத்தை முழுமையாக மீட்டெடுக்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தரமற்ற தனிமைப்பட்டு நிற்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் விரைவில் மூடப்படும். 5.1 திறன் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்துதல் மற்றும் பயன்படுத்திக் கொள்ளல் 5.1.1. திறமையான மாணவர்களை ஆசிரியர் தொழிலுக்கு ஊக்குவிக்க தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்குதல் சிறப்பாகச் செயல்படும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கும் நான்கு வருட ஒருங்கிணைந்த பிஎட் பட்டயப் படிப்பு படிக்க ஊக்குவிப்பதற்காக மிக அதிக அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஊக்கத் தொகை வழங்க மனிதநேயஅமைப்பு உருவாக்கப்பட்டு அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பங்களிப்பை தரும். இந்த ஊக்கத்தொகை வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதே நோக்கம். ஊக்கத்தொகை அந்த மாணவர்களின் பள்ளி செயல்பாடு மற்றும் என்டிஏ தேர்வு தரவுகள் மற்றும் சமூக பொருளாதார பின்னணி ஆகியவற்றை உற்றுநோக்கி வழங்கப்படும். இதுபோன்ற சிறப்பு தகுதி அடிப்படையிலான ஊக்கத்தொகை உள்ளூராட்சி கிராமிய அல்லது பழங்குடிப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அல்லது உள்ளூர் மொழிகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.ed வெற்றிகரமாக முடித்த உடன் உள்ளூர் மாணவர்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய உதவும் உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களது சொந்த மொழிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேசுவதற்கு வசதியாக இருக்கும். பல பள்ளிகளுக்கு போதுமான அளவு ஆசிரியர்கள் உள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துவார்கள் .பெண் மாணவர்கள் அதிக அளவிலும் இன்னொரு பெண் ரோல் மாடல் களை பெறுவதற்கும் இத்தகைய ஸ்காலர்ஷிப் களின் சிறப்பு இலக்காக இருக்கும். 5.1.2. ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறை வெளிப்படைத் தன்மை உடையதாகவும் கடுமையான விதிமுறைகள் உடனும் நடைபெறுகிறது. சிறந்த ஆசிரியரை கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி தொழில் சமூகத்தில் மரியாதை உடையவர்களாகவும் மற்றும் பொறுப்பின் பிரதிநிதியாகவும் இருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான முதல் தேர்வு டெட் தேர்வு. சிறந்த ஆசிரியர்களின் அறிவு மற்றும் திறனை உறுதி செய்வதற்காக உறுதி செய்யப்பட்ட மேம்பட்ட தேர்வு முறையாக தற்போதைய டெட் தேர்வு நடைபெறுகிறது. எல்கேஜி யுகேஜி ஆசிரியர்கள் இடைநிலை நடுநிலை உயர்நிலை ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கவும் tet விரிவாக்கம் செய்யப்படும். கூடுதலாக பாட ஆசிரியர்களுக்கு பொருத்தமான பாடங்களில் உள்ள என்டிஏ டெஸ்ட் மதிப்பெண்களும் ஆட்சேர்ப்பு செயல்முறையில் எடுத்துக்கொள்ளப்படும். Tet தேர்வுl மாநில அல்லது மத்திய நிலைத் தேர்வுகள் மற்றும் nda தேர்வுகளால் தகுதி பெறுவதற்கான தேவையை கட்டாயமாக்கப்படும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். கற்பிப்பதற்கான ஆர்வத்தையும் ஊக்கத்தையும் சோதிக்க எழுத்துத் தேர்வுகள்  போதாது .சிறந்த ஆசிரியர்களுக்கு தேவைப்படும் முக்கிய குணங்கள் மற்றும் அதோடு தொடர்புடைய உள்ளூர் மொழி திறமைகளளை எழுத்துத் தேர்வில் தீர்மானிக்க இயலாது .எனவே ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர்களுக்கு இரண்டாவது சோதனை திரையிடல் நிறுவப்படும். இதில் ஒரு நேர்காணல் மற்றும் ஒரு குறுகிய ஐந்து முதல் ஏழு நிமிட மாதிரி வகுப்பறை கற்பித்தல் இருக்கும் .இந்த இரண்டாவது திரையிடல் ஒரு உள்ளூர் பிஆர்சி யில் நடக்கும் அல்லது தொலைபேசி அழைப்பு மற்றும் வீடியோ மின்னணு மூலம் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கான உயர் மரியாதை மற்றும் கற்பித்தல் தொழிலின் உயர்ந்த நிலை புதுப்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் இதுவே தொழில் துறையில் நுழைவதற்கு ஊக்கம் அளிக்கும். 5.1.3. ஆசிரிய மாணவ விகிதத்தை விரும்பியவாறு அடைதல் தற்போது ஆசிரியர் மாணவர் விகித அடிப்படையில் தனிப்பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இனிவரும் காலத்தில்  குழந்தைகளின் கல்வி தேவையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் .உள்ளூர் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக தனி பள்ளிகளில் நிலவ வேண்டிய ஆசிரியர் மாணவர் விகிதத்தையும்  அடைய இயலும். இதன்மூலம் பாடத்திற்கு போதுமான ஆசிரியர்களை பணியமர்த்துதல் மற்றும் பணிநிரவல் வாயிலாக செய்து எல்லாப் பாடங்களுக்கும் போதுமான ஆசிரியர்கள் இருப்பது உறுதிசெய்யப்படும். கலை இசை தொழில்சார் கைவினை விளையாட்டு மற்றும் யோகா போன்ற கலைகளுக்கான ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவும் மாணவர் ஆலோசகர்களாகவும் சமூக ஊழியர்களாகவும் பாடசாலை வளாகத்திலேயே உள்ள ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளப்படுவார்கள் . 5.1.4. உள்ளூர் ஆசிரியர்களையும் பன்முகத்தன்மையையும் உறுதி செய்தல்: எல்லா நிலையிலும் குறிப்பாக அடிப்படை தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை பகிர்ந்து கொள்வதற்கு முக்கியத்துவம் தரப்படும். ஏனெனில் உள்ளூர் ஆசிரியர்கள் உள்ளூர் மொழியில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூகத்துடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் பன்முகத் தன்மையை கருத்தில் கொண்டு யூ ஆர் ஜி மூலம் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவர் மற்றும் பணிநிரவல் செய்யப்படுவதால் இது கல்வியில் முன்னேற்றமடைய மேலும் உதவும். மேலும் மாணவர்களுக்கு உள்ளூரில் அவர்களின் ஆசிரியர்களில் சிறந்த முன்மாதிரியை அடைய இயலும் . பெண்ஆசிரியர்களையும் உள்ளுரில் அதிகப்படியாக நியமிக்க காரணமாக அமையும். 5.1.5. ஒரு குறிப்பிட்ட பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களை பணி நிரவல்: பல மாநிலங்களில் ஆசிரியர்கள் மாவட்டம் தோறும் பணியமர்த்தப்படுவார்கள் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் பணி நிரவல் செய்யப் படுவார்கள் .பள்ளியின் தேவைக்கேற்ப பள்ளிகளிலும் நிறுவப்படலாம். குறிப்பிட்ட பாடங்களுக்கு அதாவது இசை உடற்கல்வி மொழி மற்றும் தொழில் போன்றவைகளுக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் பகிர்ந்துகொள்ளப்படும் இதன் மூலம் எல்லா பள்ளிகளிலும் இந்த பாடங்களை கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்படும். 5.1.6. கிராமப்புறங்களில் கற்பிப்பதற்கான ஊக்க ஊதியம்:  தொலைதூர கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணி செய்ய தேவைப்படும். சிறப்பான ஆசிரியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும் ஊக்குவிப்பில் குறிப்பாக பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்ட தரமான வீடு அடங்கும் அப்போதுதான் பள்ளிக்கு அருகிலேயே தங்குமிடத்திற்கு பெறுவதில் உள்ள தொந்தரவுகளை தவிர்க்க இயலும். சிறந்த ஆசிரியர்களை கண்டறிய கடுமையான பாரபட்சமற்ற வெளிப்படைத் தன்மை யான பணிநியமனம்.உயர் அந்தஸ்து மற்றும் மரியாதை ஆசிரியர்களுக்கு அவர்கள் தொழில் முறையால் சமுதாயத்தில் தரப்படுவதை குறிக்கும். 5.1.7. ஆசிரியர்களுடனான சமூக உறவுகளில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக ஆசிரியர் பணியிட மாற்றங்களைக் குறைத்தல் , நிறுத்துதல். ஆசிரியர்கள் தங்கள் பள்ளி வளாக சமூகத்துடன் உறவினை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தைத் தாண்டி மாற்றப்படக்கூடாது .ஆசிரியர்களின் விருப்பம், பதவி நிலை, மற்றும் உள்ளூர் மொழி பேசும் திறமைக்கு ஏற்ப அவர்கள் இடத்தை ஒருமுறை சரிசெய்தல் இருக்கலாம். இனிவரும் காலங்களில் ஆசிரியர் காலிப்பணியிடம் பாடம் நிலை மற்றும் உள்ளூர் மொழி தெரிவதற்கு ஏற்ப பணியிட அமர்தல் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் மாநில அரசுகள் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களின் முதலீடுகளை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரையிலாவது ஒரே இடத்தில் நிலைத்திருத்தல். சுய தேவையின் அடிப்படையிலான இட மாற்றம், வெளிப்படையான தகவல் அமைப்பின் மூலம் முன்னெடுக்க வேண்டும் .அத்தகைய நடவடிக்கை பொருத்தமான சட்டத்தால் அளிக்கப்பட வேண்டும். 5.1.8. துணை ஆசிரியர் (பாரா டீச்சர்) பயிற்சியை நிறுத்துதல் 2022-ல் நாடெங்கிலும் உள்ள அனைத்துத் துணை ஆசிரியர்கள் ( பாரா டீச்சர் ) முறை நிறுத்தப்படும். ஆசிரியர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும் அவர்களின் சமூகங்களுடன் வலுவான நீண்டகால உறவுகளை உருவாக்குதல். 5.1.9. புதிதாகப் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்களை பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்துவது ஆசிரியர்கள் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி மற்றும் புரிதலில் பணிக்கு புதிதாக வந்த ஆசிரியப் பருவமே மிகவும் அவசியமானதாகும் .  அவர்களுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் கவனத்தில் தேவைப்படுகின்றன . அனைத்து புதிய ஆசிரியர்களும் தங்கள் முதல் இரண்டு வருட கற்பிப்பதில் பிஆர்சி  டயட் போன்ற சிபியின் ஒரு மையத்தில் பதிவு செய்யப்படுவார்கள் இது பள்ளி வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . அவர்களது சகாக்களின் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. புதிதாக வரும் ஆசிரியர்களை, சில நேருக்கு நேர் சந்திப்புகள், பள்ளி சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் நடைமுறையில் ஒரு சமூகத்தில் பங்கு பெறுதல் போன்ற இணைந்த கற்பித்தலின் மூலம் அறிமுகப்படுத்தலாம். ஆசிரியர்களை அறிமுகப்படுத்தும்போது பணியில் மூத்த ஆசிரியரைவிட ஆரம்ப ஆசிரியர்களுக்கு குறைந்த பணிச்சுமையை தரலாம். ஒருங்கிணைந்த கற்பித்தல் திட்டம் மாதிரிகள் குறித்த விவாதம் , மேல் பார்வை திட்டங்கள் மற்றும் அனுபவம் பள்ளி வளாக வளங்களைப் பயன்படுத்தும் அறிவு மதிப்பீடு முறைகள் வகுப்பறை மேலாண்மை கட்டிட இணைப்பு மற்றும் சமூகத்துடனான உறவு போன்றவை ஆரம்ப ஆசிரியர்களுக்கு வழிகாட்டலாக அமையும். ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகள் மற்றும் சமூகத்தில் தாங்களும் ஓர் அங்கம் என்பதை உணர வேண்டும் ;தங்களைத் தாங்களே முதலீடாக அர்ப்பணிக்க வேண்டும் 5.1.10. ஆசிரியர் தேவை திட்டமிடல்: ஆசிரியர்களுக்குத் தேவையான தேவைகளை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணிப்பதன் மூலம் பாட ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை ஒரு வலுவான செயல்முறை மூலம் ஆட்சேர்ப்பு செய்வது மேற்கொள்ளப்படும். ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாட ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தேவைப்படும் திட்டமிடல் பயிற்சிகள் பள்ளி கட்டிடங்களை நிர்மாணிப்பது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் மத்தியிலும் மாநில அளவிலும் மீண்டும் மீண்டும் நடைபெறும். மாநில அரசுகள் ஒவ்வொரு நிலையில் உள்ள பள்ளி வளாகத்திலும் ஆசிரியர்களின் முழு விடுதலையும் தனிப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை பகிர்ந்தளிப்பதில் மாநில அரசு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு புவியியல் பிராந்தியத்திலும் உத்திரவாதமான வேலைவாய்ப்புடன் உதவித்தொகை பெறும் b.ed மாணவர்கள் ஆசிரியர் பணியிட திட்டமிடும் பயிற்சிகளில் p. 5.1.1 சேகரித்த தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவர். 5.2 தரமான கல்விக்கு உகந்த பள்ளிச் சூழல் மற்றும் கலாச்சாரம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஆசிரிய மாணவர்கள் நல்ல கற்பித்தலை மேற்கொள்வார்கள். பள்ளி அழகாகவும் ஊக்கம் அளிக்கும் விதத்திலும் வரவேற்கத்தக்க இடத்தைக் கொண்டிருந்தால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே கற்பித்தல் சிறப்புறும். பள்ளி சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்களில் போதுமான அளவு சுதந்திரம் உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை நிர்வகிக்க வேண்டும் ஆசிரியர்கள் பள்ளி கல்வி சமூகம் ஆகியவற்றில் தன்னை ஒரு பகுதியாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள்வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு பாதுகாப்பு கௌரவம் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் திறம்பட கற்பிப்பதற்கு உதவுவன செய்ய வேண்டும். 5.2.1. போதுமான உடற்கல்வி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் வளங்கள். அனைத்துப் பள்ளிகளும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் வளங்கள் ஆகியவற்றை தனித்தனியாகவோ அல்லது பள்ளி வளாகத்திலோ பெற்றிருக்கும். மாநில அரசாங்கங்கள் பள்ளியின் அடிப்படை வசதிகள் பாதுகாப்பு மற்றும் கற்பித்தலுக்கான நல்ல சூழல் போன்றவற்றை 2022க்குள் மீளாய்வு செய்யும். சிறந்த கற்பித்தலை மேற்கொள்ள உதவும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பயனுள்ள வளங்களை மேம்படுத்தக்கூடிய செயல்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு முன்னுரிமை அளித்து உதவி தொகையை ஒதுக்கீடு செய்யும் 2022ஆம் ஆண்டுக்குள் ஏற்கனவே மின் இணைப்பு இல்லாத பள்ளிகளுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்; மேலும் அவைகளுக்கு குறைந்த கட்டணம் விதிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் கற்பித்தலுக்கு உதவ இணைய வசதியுடன் கணினி வசதி செய்து தரப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் கட்டட வசதி மற்றும் பொருட்கள் வசதி செய்து தரப்படும். பாதுகாப்பான குடிநீர் வசதி ,ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியாக இயங்கும் கழிவறை ,கை கழுவுவதற்கு குழாய் வசதிகள் 2022க்குள் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர்களுக்குக் கற்பிக்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் இயங்கும் வகுப்பறைகள் செயல்படும். பள்ளி நூலகங்கள், அறிவியல் ஆய்வுக்குத் தேவையான பொருட்கள் ,ஆய்வகங்கள் கலை மற்றும் கைவினை தொழில் பயிற்சி வகுப்புகள் ,கணினி அறைகள் போதுமான மரச்சாமான்களை கொண்ட வகுப்பறைகள் 2022க்குள் அமைக்கப்படும். கற்றலை மேம்படுத்த முன்னணி கல்வியாளர்கள் அறிவார்ந்த விஞ்ஞானிகள் கலைஞர்கள் மற்றும் கட்டிட கலைஞர்களின் ஆலோசனை பெறப்படும் . ஆலோசனை பெற்று உள்ளூர் கலாச்சாரம் கலை மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்தப்படும் இந்த வடிவமைப்பை கொண்டு புதிய பள்ளிகள் பல கட்டமைக்கப்படும். ஆசிரியர்கள் சுய முன்னேற்றத்துக்கான நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் ; அவர்களின் தொழில் துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் ஆசிரியர்களின் சுய முன்னேற்றத்துக்கான நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் ; அவர்களின் தொழில் துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும் 5.2.2. கவனிப்பு மற்றும் உள்ளடக்கும் பள்ளி கலாச்சாரம்: பள்ளிகளில் உள்ளடக்கும் பள்ளி கலாச்சாரத்தை உருவாக்கவும் நிரூபிக்கவும் அக்கறையுடனும் ஒத்துழைப்புடனும் முயற்சிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் இவ்விதமாக பங்காற்ற எதிர்பார்க்கப்படும் முன் சேவை ஆசிரியர் கல்வி மற்றும் சிபிடி இருவரும் தங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக தங்கள் இயற்கைப் பண்புகளையும் திறன்களையும் மேம்படுத்தி அதன் தொடர்ச்சி அடிப்படையில் அக்கறையுடன் உள்ளடக்கிய பாடசாலை கலாச்சாரத்தை உருவாக்கும் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரிகள் அத்தகைய ஒரு கலாச்சாரத்தை அழித்து அவர்களின் செயல்பாட்டை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பை உணர்தல் வேண்டும் இது அவர்களுடைய செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும். நல்ல நடைமுறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளடக்கிய அக்கறையுள்ள ஒருங்கிணைந்த கலாச்சாரம் பள்ளிகளில் பகிர்ந்துகொள்ளப்படும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறை ; ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதையாக நடந்துகொள்ளும் வழியில் சமுதாயம் மாற்றம் பெறும் . எல்லோரும் கல்விகற்கும் வளங்களை அணுகிப்பெறும் வகையில் காலண்டர் மற்றும் நேர அட்டவணை அமைப்பு ; பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பங்கு மற்றும் அனைத்து குழுக்களிலும் பாகுபாடு இல்லாத சமமான நடத்தை குறிப்பாக பின்தங்கிய மக்கள் குழுக்களுக்கு சமத்துவ வாய்ப்பு . 5.2.3. ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத செயல்கள் ஏதும் இல்லாமல், முழு அர்ப்பணிப்பு உணர்வுடனும், முழுத் திறமையுடனும் கற்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துதல். பள்ளி அட்டவணையில் எந்தவிதக் குறுக்கீடும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழிலை முற்றிலும் கவனத்துடன் செய்ய வேலை நேரத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பணி மற்றும் மக்கள் கணக்கெடுப்பு போன்றவை மட்டும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியின் திறமையை பாதிக்கும்  எந்தக் கற்பித்தல் அல்லாத பணியையும் பள்ளி நேரத்தில் செய்யவும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் .அவ்வாறு பணி செய்ய கேட்கப்படவும் மாட்டார்கள். எடுத்துக்காட்டாக மதிய உணவு தயாரித்தல், தடுப்பூசி மையங்களில் பங்கேற்றல், பள்ளி விநியோகப் பொருட்களை கொள்முதல் செய்தல் மற்றும் நிர்வாகப் பணிகளை செய்தல் போன்றவை. பள்ளிகளில் கற்பித்தல் அல்லாத செயல்களைச் செய்ய தேவைப்படும் பணியாளரை பள்ளி வளாகத்திற்குள் பணிநிரவல் அல்லது பங்கீடு மூலம் பெற்றுக்கொள்ளலாம் . ஆசிரியர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பள்ளிக்கு வராமல் இருந்தாலோ அல்லது விடுமுறைக் கடிதம் கொடுக்காமல் இருந்தாலோ பள்ளிக்கு வரவில்லை என்ற கணக்கில் கொள்ளப்படும். 5.2.4. எல்லா நிலைகளிலும் உள்ள மாணவர்கள் தங்கள் திறன்களை அடைந்தனரா என்பதை ஆசிரியர் அறிய குறைதீர் கற்பித்தலை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் NTP மற்றும்RIAP தீர்வு திட்டங்களை நிர்வகிப்பார்கள். ஆசிரியர்கள் எந்த மாணவர்களுக்கு கற்பிப்பவர் தேவை என்பதை அடையாளம் கண்டு அந்த மாணவர்களை குறை தீர் கற்பிப்பவர் இடமும் மற்றும் வகுப்பிலும் இணைப்பர். ஆசிரியர்கள் கற்பிப்பவரை தேர்ந்தெடுக்கலாம் ; NTP பணிகளுக்கு வழிகாட்டலாம். அப்போதுதான் RIAP ல் உள்ள IA க்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு முழுமையாக உதவ முடியும். RIAP நிகழ்ச்சி நேரத்திற்கு உட்பட்டது. பின்தங்கிய பள்ளிகளுக்கு உதவுவதற்காக எந்த வகையிலும் உதவியாளர்களும் கற்பித்தலுக்கு உதவுபவர்களும் ஆசிரியருக்குப் பதிலியாக இயலாது. நீண்ட காலம் RIAP செயல்பட இயலாது. வகுப்பறைக் கற்றலில் குறைபாடு கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களால் அடையாளம் காணப்பட்டு அந்த மாணவர்கள் கற்க உதவுவதற்காக தன்னார்வ கற்பிப்பவரை ஆசிரியர்களே தேர்ந்தெடுத்து, மேற்பார்வையும் செய்வர். இந்த நெருக்கடியான பணியைச் செய்வதற்கான நேரம் ஆசிரியர்களின் பணிச் சுமைக்கேற்ப சரி செய்யப்படும். 5.2.5. புத்துணர்ச்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் BITEs, DIETs , BRCs, CRCs போன்ற கல்வி நிறுவனங்கள் பள்ளிக்கல்வியின் தரமான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் தங்களை முதலீடு செய்து கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியருக்கு உதவுதல், வழிகாட்டுதல்மற்றும் மேற்பார்வையை வழங்குகின்றனர். மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் நன்கு இணைக்கப்பட்ட, நன்கு அறியப்பட்ட இந்த கல்வி ஆதரவு நிறுவனங்கள்,BRC மூலம் BITE மற்றும்,DIET உடன் இணைக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் உள்ளCRC போன்றவை ஒருங்கிணைந்து மாநிலங்களில் ஆசிரியர் கல்வி மற்றும் பள்ளிகளை தரமாக முன்னேற்ற, திட்டமிடுதலை நீண்ட தொலைநோக்குப் பார்வையில் ஒருங்கிணைக்கின்றன. 5.2.6. உள்ளாட்சி செயல்முறைகளில் தீர்மானிக்கும் பங்குதாரர்களாக பங்கேற்கவும் உள்ளாட்சி மனநிலையை உருவாக்கவும்,SMC மற்றும்SCMC ல் உறுப்பினராகி சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றவும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும். 5.2.7. இந்திய மொழிகளில் ஆசிரியர்களுக்கான கையேடுகள் : மாணவர்களை கவனத்தில் கொண்டு தாய்மொழியில் கற்பதை உறுதி செய்ய பழங்குடி இன மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளில் ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர்களுக்கான தரமான கையேடுகள் உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். உள்ளடங்கிய கண்டுபிடிப்புகளை ,உறுதி செய்ய நிதி உதவி ஒதுக்கப்படும், பகிர்ந்தளிக்கப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் கையேடுகளை மொழி மாற்றம் செய்தல்  மற்றும் மொழியின் தரத்தை சரிபார்க்கவும் பொறுப்பேற்கும். இந்த கையேடுகள் அச்சில் பதிப்பிக்கப்பட்டு அல்லது டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும். ஆசிரியர்களும் ஆசிரியப் பயிற்றுநர்களும் உள்ளூர் மொழியில் கையேடுகள் உருவாக்க ஊக்கப்படுத்தப்படுவார்கள். 5.3.தொடர் தொழில்முறை முன்னேற்றம். ஆசிரியர்கள் தங்கள் முன்னேற்றத்தை அவர்களின் விருப்பங்களின் படி தகவமைக்க வேண்டும். அவர்கள் விருப்பப்படி ஆசிரியர்கள் அவர்கள் பணியை அவர்களின் தொடர் கல்வி முறையாலும், அவர்கள் விருப்பப்படும் துறை சார்ந்து சில மாற்றங்களை நியாயமான முறைப்படி மாற்றியமைத்து நிபுணத்துவமான முன்னேற்றத்தை ஒரு அளவையில் நிலை நிறுத்தவேண்டும். ஒவ்வொரு நிபுணத்துவ துறையினை சார்ந்த உறுப்பினர்கள் தங்களின் தகவமைப்பின் கீழ் பலவிதமான வாய்ப்புகளை உருவகப்படுத்தி அதன்படி அவர்களின் அனுபவங்கள், செய்ல்கள் மற்றும் நுண்ணறிவுத்திறனை பகிர்ந்துக் கொள்ளவேண்டும், மற்றும் இத்துறை சார்ந்த அறிவினை மேம்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் துறை சார்ந்த பணியினை முன்னேற்ற வேண்டும். இதன் மூலம் அவர்கள் துறையின் இணை செயல்பாட்டாளராகவும் மேற்பார்வையாளராகவும் பள்ளியிலும், கல்வி நிர்வாகியாகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் தகவமைக்க வேண்டும். மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் கல்வி குழாமில் உறுப்பினராகவும் உயரவேண்டும். ஒரு பொது செயல்பாடாக ஆசிரியர்களை குழுவாகவும், கூட்டு செயல்திறன் மையத்தில் செயல்திறனாளராகவும் தம்மை வடிவமைக்க வேண்டும், இச்செயல்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இதன்மூலம் பெறப்படும் வாய்ப்புகளை தொழில் வாய்ப்பினை முன்னேற்றும் நிலையான வாய்ப்பாக ஐந்து வருடங்களுக்கு இருக்க வேண்டும். அனுபவம் மிக்க ஆசிரியர்கள் அவர்களின் தொழிலில் இவ்வகை புதிய பணிநின் மூலமாக பள்ளி கல்வியின் தரத்தினை உறுதிப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆசிரியர்களை தயார்படுத்தும் நிகழ்வின் தரத்தினையும் அதிகரிக்க முடியும். இத்தகைய தொடர் நிபுணத்துவ அபிவிருத்தியின் (CPD) மூலமாக ஆசிரியர்கள் நம்பகமான கொள்கையினை உடைய சான்று பெற்ற கொள்கையினை அணுகவேண்டும் மற்றும் கூறுநிலை நிகழ்ச்சி நிரலையும் அணுகவேண்டும். 5.3.1. தொடர் தொழில்முறை முன்னேற்றத்திற்கான ஆசிரியர்கள் வளைந்து கொடுக்கக்கூடிய கூறுதிலை அணுகுமுறை. ஆசிரியர்கள் பல அங்கீகரிக்கப்பட்ட சிறு படிப்புகளை அணுக ஏதூவாக்கி, அதன்மூலமான கூறுநிலை அணுகுமுறையால் நம்பிக்கை கூறுகளை குவித்து பல தகுதி சான்றிதழும் பட்டயப்பட்டமும் பெறவேண்டும். இதன்மூலம் சில சமயங்களில் தொழில்சார் மேல் படிப்பும் (MA - education, M,Ed) பெற வேண்டும். இத்தகைய படிப்புகள் பலவிதமான உருவகத்தில் இருக்கவேண்டும். பகுதிநேர வகுப்பு, மாலை வகுப்பு, கலந்தாய்வு செய்யும் வகுப்பு, இணையதள வகுப்பு மற்றும் கூடுதலாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்வித்துறை மற்றும் தொழில்சார் முன்னேற்ற மையங்களிலும் முழுநேர படிப்பாகவும் இருக்கலாம். ஆசிரியர்கள் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளையும், சமூகம் சார்ந்த தொழில்முறை குழுக்களையும் அணுகி தங்கள் தொழில்முறை அறிவினை முன்னேற்றிக்கொள்ளவும் பகிர்ந்துக்கொள்ளவும் வேண்டும். பணியிலுள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வாடிக்கையாளராக பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வித்துறை கண்டுகொள்ள வேண்டும். இதன்மூலமாக ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு வசதியினை முன்னேற்றி கல்வித்துறை வழங்கவேண்டும். தொழில்முறை முன்னேற்றத்திற்கான இத்தேவையும் அணுகுமுறையும் தற்போதுள்ள அணுபுமுறைக்கு மேலாக மேம்படுத்துதல் வேண்டும். தற்போதுள்ள தொழிற்கூட படிப்பு, கருத்தரங்கு, குறும்படிப்புகள், ஆசிரியர்கள் சிந்திப்புகளை மேம்படுத்த வேண்டும். வழிகாட்டுதல் மற்றும் அதன் சார்ந்த திறமைக்குரிய பயிற்சி சான்றிதழ், பட்டயப்படிப்பு சான்றிதழ் பயிற்சியினை மேம்படுத்த வேண்டும். கல்விப்புரிதல், பள்ளி சமுதாயப்பணி, நிர்வாகத்திறன் மற்றும் தலைமைத்திறனை மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த ஆசிரியர்-மாணவர் விகிதாசார அடிப்படையில் தனிப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதற்குப் பதிலாக, மாணவர்களின் கல்வித் தேவைகளின் அடிப்படையில் நியமிக்கும்படியான புதிய வழிமுறை உருவாக்கப்படும் 5.3.2. தொடர் தொழில்சார் முன்னேற்றத்தை புதுப்பித்தல் a. நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் நிபுணத்துவ அபிவிருத்தி (CPD) பாடத்திட்டம் அனைத்து நலைகளிலும், பாடங்களிலும் வழிகாட்டுதல் உள்ளடங்கிய அறிவுத்திறனிலும் முன்னேற்றப்படும். இதுமட்டுமின்றி பள்ளி கலாச்சாரம் மற்றும் வகுப்பறை பயிற்சியும் முன்னேற்றப்படும். பள்ளித்தலைவர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி வளாக தலைவர்களின் மேலாண்மை திறன், நிர்வகித்தல் திறன், வளம் பகிர்தல் திறன், நிதியினை கையாளும் திறன் மற்றும் தலைமைத் திறன் முன்னேற்றப்படும். b. ஆசிரியர்கள் என்ன படிக்க வேண்டும், எது படிக்க வேண்டும் மற்றும் அதனை செயல்படுத்தும் வடிவத்தினையும் அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் பலவிதமான வாய்ப்புகள் மூலமாக அவர்களின் படிப்பு வாய்ப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும், அவை நிபுணத்துவ முன்னெடுப்பு மற்றும் சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பு, தன் முனைப்பு மூலமாகவும் இருக்கலாம் ; இவை நேரடி தொழிற் பயிற்சி, இணைந்த தொழிற் பயிற்சி மற்றும் இணையதள தொழிற் பயிற்சி மூலமாகவும் இருக்கலாம், இவை அனைத்தும் தொடர் நிபுணத்துவ அபிவிருத்தி பாடத்திட்டத்தில் தகவமைக்கப்படும் ; இவை குறுகிய மற்றும் நெடுங்கால தொழிற்கூடமாகவும், சிறு விவாதங்களாகவும், வெளிக்கொணர்தல் மூலமாகவும், உள்துறை சான்று மூலமாகவும், விளக்குதல் மூலமாகவும், இணையதள மென்பொருள் கருவி மூலமாகவும் மற்ற ஆக்கத்திறன் மூலமாகவும் இருக்கலாம். c. ஆசிரியர்கள் அவரவர் விருப்பப்படி குறைந்தது ஐம்பது மணிநேர தொடர் நிபுணத்துவ அபிவிருத்தி பயிற்சியை வரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். 5.3.3. ஆசிரியர்களுக்கான புறத்தூண்டுதல் அற்ற தம்மால் இயக்கப்படுகிற தனிப்பட்ட முன்னேற்றம் அனைத்து மாநிலங்களும் தொழில்நுட்ப அடிப்படையிலான ஒழுங்குமுறையை தத்தெடுக்க வேண்டும், இதன்மூலம் தேர்வு அடிப்படையிலான தொடர் நிபுணத்துவ அபிவிருத்தியை செயல்படுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரின் தொழில்சார் பயணப்பாதையை தடம் பதிக்க வேண்டும். இவ்வமைப்பின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் முன்னேற்ற நோக்கினை வடிவமைக்க வேண்டும். மேற்கூறிய அமைப்பு தனிப்பட்ட முன்னேற்ற திட்டம் மற்றும் இலக்கினை சார்ந்திருக்க வேண்டும். தொழில்சார் படிப்பு சமூகங்கள் மற்றும் மையங்களை உருவகப்படுத்தி, முன்னேற்றி, நீடித்து நிறுவ வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு உயர்வான அறிவு செறிந்த மற்றும் சமூகம் சார்ந்த நிபுணத்துவம் தேவைப்படுகிறது, எனவே “கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு” வகைக்குட்பட்ட கற்றலை காட்டிலும் “சுய மற்றும் சக” கற்றலின் கலாச்சாரம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. தொடர் நிபுணத்துவ அபிவிருத்தி பள்ளி வளாகத்தினுள் ஒப்படைக்கப்பட வேண்டும். அருகிலுள்ள CRC மூலம் இது நன்கு வளர்க்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான சூழலில் மேம்படுத்தப்பட்டு, சக கற்றலுக்கான தளங்களை வழங்குகிறது. பள்ளி வளாக சந்திப்பு போன்ற வழக்கமான தொடுப்பு வழிமுறைகள் மூலமாகவும் சக ஆசிரியர்களின் ஆதரவு மூலமாகவும் தொடர் அபிவிருத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்க வேண்டும். 5.3.4. தொடர் தொழில்சார் முன்னேற்றத்திற்கான இணையதள வளங்கள்: தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) தொடர் நிபுணத்துவ அபிவிருத்திக்காக (CPD) பரவலாக பயன்படுத்தப்படும். ஆசிரியர்கள் இணையம் மற்றும் தொழில்நுட்ப தளங்களின் மூலமாக பள்ளியிலும் தத்தமது வீட்டிலும் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.. இந்த தொடர் நிபுணத்துவ அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதற்கான ஆதார மக்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுவர் மற்றும் திறம்பட பயிற்சி அளிக்கப்படுவர், இதற்கு அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்படும். இவ்வளங்களின் நிபுணர்கள் மற்றும் ஆசிரிய கல்வியாளர்கள் தொடர் நிபுணத்துவ அபிவிருத்தியின் தரத்தின் கணிசமான பாதிப்பை கொண்டிருப்பர். ஆகையால் அவர்கள் பொருத்தமான முறையில் முதலீடு செய்யப்படுவார்கள், அத்தகைய ஆதார நபர்கள் தலைசிறந்த ஆசியர்களிடையே தேர்வு செய்யப்படுவர். மேலும் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வாய்ப்பளிக்கப்படுவர். உள்கட்டமைக்கப்பட்ட சமுதாய அமைப்புகளுடன் இணைந்து இவ்வாசிரியர்கள் செயல்படுவதன் மூலம் திறமைமிக்க தொடர் நிபுணத்துவ அபிவிருத்தி திட்டத்தினை ஊக்கப்படுத்தி முன்னேற்றுவார்கள். இச்செயல் திறன் அனைத்தும் பாடமெடுத்தல் பயிற்சி, ஊக்கக்கல்வி, பண்பாடு, பள்ளி கலாச்சாரம், ஆளுமைத்திறன், மேலாண்மை திறன், வளம் பகிர்தல் திறன் மற்றும் தலைமைத்திறன் அகியவற்றில் உள்ள முன்னோக்குகள் உட்பட கற்பித்தல் நடைமுறைக்கு தொடர்புடைய சிக்கல்களை உள்ளடக்கிய சிறு ஒருங்கிணைந்த பாடத்திட்ட கட்டமைப்பை அடிப்படையாக கொண்டது. 5.3.5. பள்ளியினுள் ஆசிரியர் வளர்ச்சி செயல்முறைகள்.: ஒவ்வொரு பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியரும் பள்ளித் தலைவரும் அப்பள்ளியின் ஆசிரியர்களின் வளர்ச்சி செயல்முறைகள் மற்றும் ஆதரவு நல்கும் பள்ளி கலாச்சாரத்தை பொறுப்பேற்று வளர்த்து பள்ளி ஆசிரியர்களின் திறனை அதிகரிக்க வேண்டும். இப்பணி தலைமை ஆசிரியர்களின் பணிநோக்க வரையறையிலும் மதிப்பீட்டிலும் ஒருங்கிணைக்கப்படும். இம்முயற்சியில் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பள்ளி வளாகத்தினுள் உள்ள விரிவான சமூகத்தின் மூலமாக ஆதரவு பெறலாம். 5.3.6. சிறந்த செயல்திறன் உடைய ஆசிரியர்களை அங்கீகரித்தல்.: பள்ளியல் இருக்கும் மாணாக்கர்கள், பொற்றோர்கள், பள்ளித்தலைவர், தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தலைவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் உண்மையில் சிறந்த செயல்திறன் மிக்க ஆசிரியர்களை, வருடத்திற்கு ஒருமுறை விழா எடுத்து பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் அடையாளம் கண்டு, அவர்களின் புதுமையான, உருமாற்றிலக்கணமாக திகழும் செயலினை தேசமெங்கிலும் ஊக்கப்படுத்தல் வேண்டும். இச்செய்கை அவ்வாசிரியர்களுக்கு சிறப்பு செய்யும். 5.4. பணி மேலாண்மை 5.4.1. குறுகிய கால ஒப்பந்த ஆசிரியர்கள் திட்டம்: அனைத்து வகை ஆசிரியர்கள் பதவிக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தல் திட்டம் ஏற்படுத்துப்பட உள்ளது. இதன்படி மூன்று ஆண்டுகள் பயிற்சிக்கால அடிப்படையில் அமர்த்தப்பட்டு அவர்களின் திறமைகளுக்கேற்ப பணி நிரந்தப்படுத்தப்பட உள்ளது. பணி நிரந்தரம்/கால அளவு அவர்களின் ஈடுபாடு, சக ஆசிரியர்கள் மதிப்பீடு, வகுப்பு மதிப்பீடு போன்ற திறமைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பணி நிரந்தரம் மற்றும் கால நிரணயம் போன்றவைகள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தினால் (SCERT) நிர்ணயிக்கப்படும். குறிப்பிட்ட கால மதிப்பீடு என்றில்லாமல் நீண்டகால மதிப்பீட்டின்படி இவைகள் உறுதி படுத்தப்படும். திறமையான நேர்மையான முறையில் இந்த அமைப்பு செயல்படும் மற்றும் திறமைகளுக்கு தகுந்த மதிப்பு அளிக்கப்படும். 5.4.2. அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணியில் சமன்பாடு: முடிந்தளவு வேகமாகவும் நீண்டகால அடிப்படையில், முடிந்தளவு பணி சூழலிலும் ஊதியத்திலும் சமன்பாடு ஏற்படுத்தப்படும். சமூக பொறுப்புகள் தனித்திறன்களின் அடிப்படையில் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையிலும் ஆசிரியர்களின் தரம் மதிப்பீடு செய்யப்படும். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் முதல் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் வரையிலும் ஒரேவிதமான ஊதிய வரம்புகள் கொண்டு வரப்படும். அனைத்து ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதியம் போன்றவற்றில் மேன்மையடைய வைப்பதோடு (அவரவர் நிலையில் அவரவர் விருப்பம்போல்), இந்த முறையினால் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு குறைவாகவோ மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகமாகவோ பதவி மற்றும் ஊதிய உயர்வில் பாகுபாடு இருக்காது. மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக வர விரும்புபவர்களுக்கு தகுதியும் விருப்பமும் இருந்தால் அனுமதிக்கப்படும். அனைத்து நிலை கல்விக்கும் தரம் மிக்க ஆசிரியர்கள் தேவை என்பதை உறுதிப்படுத்தும் படியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால் அனைத்து நிலை ஆசிரியர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவார்கள் என்பது நிரூபணமாகிறது. உண்மையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் மேன்னிலைப்பள்ளி ஆசிரியரின் சேவைக்கு சமமானது. ஆகையினால் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் நான்காண்டு ஆசிரியர் பயிற்சி திட்டம் அடிப்படை தேவையாக இருக்கும், வரும் பத்தாண்டுகளில் (2030) அனைத்து ஆசிரியர்களுக்கும் பதவி உயர்விலும் ஊதியத்திலும் எல்லா நிலையிலும் சமன்பாடு நிகழும். 5.4.3. தொழில்சார் திறமைகளுக்கேற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு: தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்கப்படும். தகுதிகளுக்கேற்ப தங்களை வளர்த்திக்கொள்ளவும் பணியினில் திருப்தியும் ஆசிரியர்களுக்கு வேண்டும் என்பது தான் இந்த முடிவின் நோக்கம். குறைந்தளவில் ஐந்து நிலை பதவி உயர்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் அவர்கள் * ஆரம்பநிலை ஆசிரியர் (கால நிர்ணயம் இல்லாதது), * ஆரம்பநிலை ஆசிரியர் (கால நிர்ணயத்துடன்), * கைதேர்ந்த ஆசிரியர், * நிபுணத்துவ ஆசிரியர் மற்றும் * ஆசான். இவ்வைந்து வகை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலைகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய வரம்பு இருக்கும். தகுதி செயல்பாடு அடிப்படையில் நிலைகள் நிர்ணயிக்கப்படும். திறன் மதிப்பீடுகள் கீழ்கண்டவாறு அமையும் (காண்க P5.4.4) . அந்தந்த நிலை ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறும் ஊதியம் நிர்ணயிக்கப்படும், உதாரணமாக மாஸ்டர் (ஆசான்) ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வல்லுனராக அவர் சார்ந்த பகுதியில் அமர்த்தப்படலாம். அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை பணிகளில் சமன்பாடு அமையும் 5.4.4. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகுதிமுறை சுரநிலைகள்: ஆசிரியர் பதவி உயர்வுக்கு உறுதியான தர நிர்ணய அளவுகோல்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைமுறைகள் * ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிலைகள் (NPST), * 2022 ஆண்டுக்குள் ஆசிரியர்களுக்கான தேசிய மன்றம் (NETE), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய மன்றம் (NCERT), * ஆசிரியர் பயிற்சிக்கான ஆசிரியர் மன்றம் (NCTE), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில மன்றம் (SCERT) மற்றும் கல்வித்துறை வல்லுனர்கள் ஆகியோரால் வகுக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கான தர நிர்ணயங்களை மாநில தொழில்கல்வி அமைப்பின் மூலமாக தர நர்ணயம் செய்யப்படும். இதற்கேற்ப ஆசிரியர்களின் தொழில், நிர்வாக பதவி காலம், தொழில் முன்னேற்ற முயற்சிகள், ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் இதர அங்கீகாரங்கள் முதலியவை நிர்ணயிக்கப்படும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பதவி காலத்தின் அடிப்படையில் இல்லாமல் முழுமையாக மேற்கூறிய மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படும். இந்த தர நிர்ணயங்கள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் 2030ஆம் ஆண்டுக்குள் தீர்மானிக்கப்பட்டு பிறகு ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை என கடுமையான தரக்கட்டுப்பாடுகளுடன் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு நிலையிலும் ஆசிரியரின் பங்குக்கேற்ப/கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளுதற்கேற்ப பரிசீலிக்கப்படும், குறிப்பாக ஒரே பதவியில் இருப்பவர்களின் சம்பள உயர்வுக்கு. இவை அனைத்தும் ஆசிரியர்களின் வருகை, காலந்தவறாமை, சொத்து விபரம், மாணாக்கர்களுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்காதிருத்தல், கட்டாய பள்ளி செயல்பாடுகளில் பங்களிப்பு ஆகிய விசயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அத்தோடு மென்மையான குறிகாட்டிகளான திறமையான ஆசிரியப்பணி, வகுப்பாளும் திறமை, கற்பித்தலில் தேவையான உபகரணங்களை உபயோகித்தல், மாணவர் மன்றம் மற்றும் பெற்றோர்களுடனான இணக்கம், பள்ளி நிகழ்வுகளில் வெற்றி முதலானவை கணக்கில் எடுக்கப்படும். NPST, SPST ஆகிய அமைப்புகள் ஆசிரியர் பயிற்சிக்கான வரையறைகளை வகுப்பார்கள். ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான(PINDICS) செயல்திறன் குறிகாட்டிகள் ஏற்கனவே கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய மன்றம் (NCERT) தகவமைத்த படிமம் ஆரம்ப புள்ளியாக இருக்கும். அனைத்து ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் திறனாளராகவும் ஆசிரியர்களுக்கான பயிற்சியாளராகவும் ஆவதற்கு வழி பிறக்கும். 5.4.5. ஆசிரியர்களின் வருடாந்தர செயல்பாட்டு திறனாய்வு: மாநில தொழில்முறை தர நிலைகளின் (SPST) படியான ஆய்வு ஆசிரியர்களின் திறனாய்வுக்கு அடிப்படையாக இருக்கும். பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்களின் தரத்தை நிரணயிப்பது போல் தலைமை ஆசிரியர்களுக்கு தரம் நிரணயிக்க பள்ளி வளாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அல்லது வட்டார கல்வி ஆலுவலர் (BEO) தகுதி படைத்தவராக இருப்பார். இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், வருகை பதிவின் விபரங்களின் அடிப்படையிலும், வகுப்பு நடத்துதல், சக ஆசிரியர்களின் பின்னூட்டங்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இதற்கான விதிமுறைகள் 2022ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் SCERTயால் வகுக்கப்படும். இந்த அளவீடுகள் ஆசிரியர்களின் பொறுப்பினை கணக்கிடுவதாக அமையும். ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், சமுதாயம் மற்றும் மக்களுக்கு பள்ளியில் கல்விக்காக தாங்கள் செய்வதையும் செய்யாதிருப்பதையும் அவர்களின் பொறுப்பினை காட்டுதல் வேண்டும். இவை கல்வித்துறையில் அவர்கள் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை வெளிப்படுத்தும். சுய சார்பும், திறன் வளர்ச்சியும், நேர்மைக்கு அடித்தளமான காரணிகள் என்பதை எக்காரணம் கொண்டும் மறந்திடலாகாது. தரத்தின் குறைபாடு தான் சமூகத்தின் அவலம். நேர்மையான சுயசார்பு தன்மை ஆசிரியர்களின் ஆக்க பணிகளை தூண்டுவதாக அமையும். இந்த வழிமுறை அனைத்து ஆசிரியர்களுக்கும் சுயாட்சி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு பல காரணிகளை புலப்படுத்தும். NPST அடிப்படையில் SCERTகள் தங்கள் சுய நிர்ணயம் மற்றும் திறன் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான கட்டமைப்பையும் மாநிலத்திற்குள் ஆசிரியரின் பாத்திரத்தை அதிகாரம் அளிப்பதற்கான கட்டமைப்பையும் உண்டாக்கும். இவை அனைத்தும் SPSTயின் ஒரு பகுதியாக அமையும். 5.4.6. செங்குத்து இயக்கம் மூலம் தொழில்முறை முன்னேற்றம்.: ஆசிரியர்கள் பல கல்வி போதிக்கும் நிலையில் தங்களை நகர்த்துவதோடு மட்டுமன்றி அவர்களின் தொழில் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக கல்வி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி கற்பித்தல் போன்ற துறைக்கு செல்ல முடியும். தனிச்சிறப்பு வாய்ந்த நன்கு வரையறுக்கப்பட்ட சாதனைகளை ஆசிரியர்கள் புரிந்த பின்பு கீழுள்ள இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். A, கல்வி நிர்வாக பொறுப்பில் நுழைதல். B, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வல்லுநர்களாக முடியும் என்பது சிறப்பு கல்வித்துறையிலுள்ள அனைத்து கல்வி நிர்வாக நிலையினையும் பின்னாளில் அடையலாம் உதாரணமாக CRCs, BRCs, BITEs, DIETs, SCERTs etc அனைத்திலும் தனித்திறன் வாய்ந்த நிர்வாகத்தில் நாட்டமுடைய ஆசிரியர்களுக்காக வழி திறந்து உள்ளது. கல்வி பயில்விப்பதில் திறன் வாய்ந்தவர்கள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது தகுதியின் அடிப்படையில் கல்வி சம்பந்தமான அனைத்து வேலை உயர்வினையும் ஊதிய உயர்வினையும் அடைவதற்கு இத்திட்டம் உதவும். 5.5. ஆசிரியர் பயிற்சிக்கான அணுகுமுறை ஆசிரியர் பயிற்சிக்கு பல்துறை சார்ந்த உள்வாங்குதலும் மிகச்சிறந்த அறிவாற்றலும் கல்வியை சிறப்பாக கற்பிக்கும் திறனும் தேவைப்படும். இதற்கு ஆசிரியர் பயிற்சி கற்பித்தல் தொடர்பான நிகழ்வுகள், மற்றும் இதற்கு தகுந்த பல்துறை சார்ந்த நிறுவனங்களும் அவைகளில் அனைத்து விதமான சூழலும் அமைந்துள்ள வளாகங்களில் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் அனைத்து துறை ஆசிரியர்களின் திறனும் மேம்படும். பலதுறை உடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அனைத்து துறை சார்ந்த உயர்கல்வியோடு மாணவ ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு, கல்வி அறிவை மேம்படுத்த இம்மாதிரி பயிற்சி முறையினால் மற்ற துறை ஆசிரியர்களுடன் கலந்துரையாடவும், மாணவ ஆசிரியர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள துறைசார்ந்த வல்லுனர்கள், நூலகம், இணையம் ஆகியவை உதவும். ஆரம்ப கல்வி ஆசிரியர் பயிற்சியோடு மேல்நிலை வகுப்புகளை நடத்துவதற்கு குறிப்பிட்ட விசயங்களில் நிபுணத்துவம் பெறவும் இவை உதவும். இவை சான்றிதழ் கல்வியாகவோ , அல்லது முழுநேர/பகுதிநேர ஒருங்கிணைந்த பயிற்சியாகவோ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும். ஆசிரியக்கல்வி (B,Ed.) பயிற்சிக்கு பல்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும் உள்வாங்குதல்களும் அவைகளை கற்பிப்பவரின் திறனும் தேவைப்படும். இதில் தேர்ச்சியடைவதற்கு ஆசிரியர் பயிற்சியில் பலதுறை சார்ந்த அறிவுகளும் திறமைகளும் கற்றுத்தரப்படும். இங்கு பயிற்சி மையங்கள் இருத்தல் வேண்டும். இத்தகைய கட்டமைப்பும் வசதிகளும் இருக்கும் மயைங்களில் பயில்வதினால் மட்டுமே, ஆசிரியர்களின் திறன் வளரக்கூடிய, அறிவு வளங்கள், நூலகம்/இணையம் வசதிகள் மற்றும் குறிப்பிட்ட விடயங்களில் தனித்திறன் வளர்க்கும் ஆற்றல்கள் அனைத்தையும் தெரிந்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் முடியும். இதனால் பயிற்சி ஆசிரியர்கள் துறைகள் சார்ந்த சக மாணவர்களோடு கலந்துரையாடவும் அறிவை பகிர்ந்துக்கொள்ளவும், மனவியல், குழந்தை வளர்ப்பின் சமூக அறிவியலில் தங்களை மேம்படுத்தி கொள்ளவும், திறமைகளை மெருகேற்றிக்கொள்ளவும் முடியும். இத்தகைய மையங்களில் அனைத்து துறை வல்லுனர்களின் வழிகாட்டுதல் மாணவ ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை வளர்க்க மிக்க உதவியாக அமையும். ஆசிரியர் கல்வி (B,Ed.) திட்டம் ஆசிரியர் பயிற்சியில் கற்பித்தல் திறனை வளர்த்து கொள்ளும் பகுதிகளை சார்ந்த மறு சீரமைப்புகளை பொறுத்த வரையில், பலநிலை கலந்தாய்வு, அடிப்படை எழுத்தறிவு, கணித அறிவு, சிறப்பான கற்பித்தல், திறன் மதிப்பீடு, நேசம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு இளம் தலைமுறையின் அறிவு, கடமை, சிந்தனை, ஆற்றல், ஒழுக்கம் பழக்கம் அறிவு, நேர்மறை எண்ணங்கள், தகவல் பரிமாற்றுத்திறன், கலந்தாய்வு திறமைகள் ஆகிய முக்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த திறன்களை புதுப்பித்து கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் கவனம் செலுத்துப்பட வேண்டும். கல்லூரியில் B,Ed. படிப்பின் போது அருகிலிருக்கும் பல்வேறு நிலை பள்ளிகளுடன் இணைத்துக்கொண்டு செயல்பட்டால் வருங்கால ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதோடு கற்பித்தலின் செயல்முறை வடிவங்களையும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு நல்லாசிரியருக்கான இந்த தகுதிகள் வருங்கால ஆசிரியர்களுக்கு இன்றியமையாதது ஆகும். இதுபோன்ற ஒருங்கிணைந்த நான்கு வருட B,Ed. பயிற்சியினை பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலம் உருவாக்குவதோடு, காசுக்காக பட்டங்களை விற்பனை செய்யும் தரமற்ற ஆசிரியர்கள் பயிற்சி மையங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இத்திட்டத்தின் குறிக்கோள். முடிந்தளவு துரிதமாக ஆசிரியர்கள் பயிற்சியின் மான்பையும் தரத்தையும் மேம்படுத்த வைப்பது தான் இதன் சிறப்பு. 2030ஆம் ஆண்டோடு ஆசிரியர் பயிற்சி முழுவதுமாக பல்துறை பல்கலை கழகங்களுடன் இணைக்கப்படுவதும் முக்கியமான நோக்கமாகும். உயர்கல்வி துறையில் இந்த மாற்றங்களை கொண்டுவரும் பொருட்டு எடுக்கப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து விரிவாக அத்தியாயம் 15இல் விவரிக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் பகுதிகளில் இந்த மாற்றங்களை எப்படி செயல்படுத்துவது என்பது விவரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சியை விரும்பத்தக்கதாகவும், திறன் ஊக்கப்படுத்தவும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கவும் இப்பயிற்சிகள் உதவும். அனைத்து பள்ளிகளிலும் தகுதிமிக்க ஆசிரியர் சமூகத்தை உருவாக்க இந்த மாற்றங்கள் துணை புரியும். அனைத்து துறை மற்றும் நிலை ஆசிரியர் பயிற்சிகளும் பலபலைக்கழக உயர்கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த நான்காண்டு பட்ட படிப்பின் (B,Ed.) கீழ் கொண்டு வரப்பட்டு தரம் மிக்க சிறப்பான பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற செயல் விளக்கத்துடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க உதவும். 5.5.1. ஆசிரியர் பயிற்சி திட்டத்தை பல்கலைக்கழக திட்டத்திளுள் கொண்டு வருவது மற்றும் நான்காண்டு ஒருங்கிணைந்த நான்கு வருட ஆசிரியர் பயிற்சி ஆசிரியர் பயிற்சி துறையின் நான்கு நிலைகளாம் அடிப்படை, ஆரம்பநிலை, நடுநிலை, உயர்கல்வி அனைத்தும் உள்ளடக்கம். இவை கற்பிக்கும் திறன் மற்றும் செயல்முறை விளக்கத்துடன் நடத்தப்படும். இவை விருப்ப பாடத்துடன் இளங்கலை பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சியோடு சேர்த்து வழங்கப்படும். நல்லொழுக்க கல்வியிலும் ஆசிரியர் பயிற்சியிலும் திறன்களை வளர்க்க இது உதவும். அனைத்து ஆசிரியர் பயிற்சி திட்டங்களும் இருக்கும் பத்து அல்லது பதினைந்து பள்ளிகளோடு இணைந்து நடத்தப்படும். ஒவ்வொரு மாணவ ஆசிரியரும் இதில் ஏதாவது ஒரு பள்ளியில் பாடங்களை கற்பிக்க வழி வகுக்கப்படும். இதற்காக முதலில் வழிகாட்டி ஆசிரியருடன் இணைந்து பாடங்கள் எடுப்பது எப்படி என்பதை கவனித்தும், தாமாக வகுப்புகள் நடத்தியும், வழிகாட்டி ஆசிரியரின் பின்னூட்டங்களை பெற்றுக்கொண்டும், தேவையான திருத்தங்களை மேற்கொண்டும் பயிற்சியில் தேர்ச்சி பெறமுடியும். ஆசிரியர் பயிற்சியில் தேர்வு பெற தேவையான அணுகுமுறைகள். A, அடிப்படை மற்றும் ஆரம்பப்பள்ளி பொது ஆசிரியர்கள். B, நடுநிலை மற்றும் மேல்நிலை பாட ஆசிரியர்கள். C, சிறப்பு கல்வி ஆசிரியர்கள். D, ஓவிய ஆசிரியர்கள் (கலை மற்றும் நடனம்). E, தொழில்முறை பயிற்சி ஆசிரியர்கள். F, உடற்கல்வி ஆசிரியர்கள். இந்த நான்காண்டு பயிற்சி என்பதனை ஏனைய பட்டப்படிப்புகளுக்கு இணையானது. விருப்பப்படுபவர்கள் பட்ட மேற்படிப்பு தொடரவும் இதே பயிற்சிகள் தகுதி வாய்ந்ததாக இருக்கும். 5.5.2. கற்பித்தலில் இரண்டாண்டு பயிற்சி (பக்கவாட்டு நுழைவு): பல்வேறு விசயங்களில் (பாடப்பிரிவுகள்) ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு இரண்டாண்டு பக்கவாட்டு நுழைவு திட்டம் வழங்கப்படுகிறது. நடுநிலை மேல்நிலை பள்ளிகளில் வகுப்பாசிரியராகவும், பாடத்திட்டங்களில் செயல்முறை கல்வியில் நிபுணத்துவம் பெறவும் இது உதவுகிறது. நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சியோடு இரண்டாண்டு பயிற்சியும் வழங்குவதால் அனுபவம் மிக்க வல்லுனர்களாக ஆசிரியர்களை மாற்ற உதவாக இருக்கும். பணி காலத்தில் இரண்டு ஆண்டு இதனால் சேமிக்க முடியும் என்பதால் பல்வேறு துறையில் திறமை வாய்ந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாக அமையும். நான்காண்டு பயிற்சி திட்டங்கள் நடத்தவிருக்கும் அனைத்து விதமான வசதிகளும் கட்டமைப்பும் உடைய கல்வி சாலைகளில் இரண்டாண்டு பயிற்சி அளிக்க கோரப்பட்டுள்ளது. நான்காண்டு பயிற்சி முடித்தவர்களுக்கும் ஏதாவது பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கும் பட்ட மேற்படிப்பு உதவும் விதமாக இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்து முதுநிலை பட்டப்படிப்பு வழங்கவும் தகுந்த ஏற்பாடு செய்யப்படும். 5.5.3. சிறப்பு பாடங்களுக்கு சிறப்பு பயிற்றுனர்கள் உள்ளூர் கலை மற்றும் இலக்கியத்தில் தனித்திறன் வாய்ந்த கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய இசை, கைவினைப் பொருட்களை உருவாக்கும் வல்லுனர்களுக்கு குறுகிய கால வகுப்புகள் (10-15 நாட்கள்) நடத்த வாய்ப்பு வழங்கி உள்ளூர் மக்களின் கலை, பாரம்பரியம் மற்றும் இலக்கியம் போன்றவைகளை பாடத்திட்டங்களோடு இணைத்து வகுப்புகள் நடத்தப்படும். இதன்மூலம் கலை மற்றும் சிறப்பு திறன்களை ஊக்குவிக்க இயலும். 5.5.4. தனித்து நிற்கும் தரம் குறைந்த ஆசிரியர் கல்வி மையங்களை மூடுதல்: அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து ஆசிரியர் மையங்களும் தனிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, தரத்தினை கண்காணித்து தேர்ச்சி பெறாத மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும். மூடப்படும் இப்பயிற்சி மையங்கள் வேறு ஏதேனும் நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படும். இது பற்றிய விபரங்களுக்கு பகுதி 16.1 காண்க. தேசிய உயர்கல்வி கட்டுப்பாடு அமைப்பு (NHERA) துணையோடு Rashtriya siksha abigyan (RSA) இணைந்து இதற்கான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படும். 5.5.5. நான்காண்டு ஒருங்கிணைந்த B,Ed. பயிற்சி திட்டத்தின் சிறப்பு கற்பித்தல் அம்சங்கள்: தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திட்டத்தில் அனைத்து விதமான பரிமாணங்களை கற்றுக்கொள்வதோடு புதிய ஆசிரியர் பயிற்சி முறையில் ஒருங்கிணைந்த தத்துவ விளக்கங்களும் இதன் பயன்பாடுகளை செயல்முறை படுத்துவது குறித்தும் முழுமையாக அறிந்துக்கொள்ள முடியும். கற்பித்தல் அறிவை பெருக்குவதோடு பல நிலைகளில் தேவையான கற்பித்தல் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.. கற்றுக்கொள்வதில் சிரம்ப்படுபவர்களுக்கும், வாழ்க்கை பொருளாதாரம் ஆகியவற்றில் பின் தங்கியவர்களுக்கும், தனித்திறன் உடையவர்களுக்கும், எப்படி பாடங்கள் நடத்துவது என்பதும், இந்த பயிற்சி காலத்தில் ஆசிரியர்களால் கற்றுக்கொள்ள முடியும். இப்பயிற்சிகள் மூலமாக பயிற்சியாளர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவை மேம்படுத்துவதோடு அனுபவங்கள் வழியாகவும் நிறைய விசையங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். வெறும் எழுத்து தேர்வு என்றிருத்த இடத்தில் பாடத்திட்டங்கள், வரைவு அறிக்கை, தலையங்கம் எழுதுதல், வரைபடங்கள், மாதிரி வகுப்புகள் என்று மாற்றங்கள் கொண்டு வரப்படும். இதன்மூலம் திறன் மேம்பாடு அதிக அளவில் இருக்கும் வாய்ப்பு அமையும். 5.5.6. தனித்திறனுள்ள ஆசிரியர்கள்: பள்ளி கல்வித்துறையின் ஒருசில அமைப்புகளில் தனித்திறன் வாய்ந்த ஆசிரியர்களின் தேவை உடனடியாக நிரப்பப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக CWSN, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் வகுப்பு ஆசிரியர்கள், தனித்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள், கல்வி கற்க நேரம் எடுத்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆசிரியர்கள், குறிப்பிட்ட பாடங்களில் மேல் வகுப்பு எடுக்க சிரமப்படும் ஆசிரியர்கள். என பல பிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிரம்பவே உள்ளது. ஆழ்ந்த அறிவையும் திறமைகளையும் வளர்த்து கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே தனித்திறன் வாய்ந்த மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர முடியும். ஆகையினால் இவ விசயங்களை கருத்தில் கொண்டு அதற்கு தகுதியான ஆசிரியர்களை உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தொடக்க வகுப்புகள் எடுத்து திறமை மிக்க ஆசிரியர்களாக உருவாக்க வேண்டும். இவர்களுக்கு பிரத்யேகமான சான்றிதழ் பயிற்சிகள், முழுநேர பயிற்சியோடு அல்லது பகுதிநேர பயிற்சி வகுப்புகளோடு இதற்கான திறன் வாய்ந்த கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களால் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி குறிக்கோள்: சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி முறையை வெற்றிகரமாக ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்து குழந்தைகளும் கல்வி பெறவும் உயரவும் சமமான வாய்ப்புகளை வழங்குதல். அதன் விளைவாக அனைத்து பாலின மற்றும் சமூகப் பிரிவுகளும் 2030ஆம் ஆண்டிற்குள் கற்றலில் பங்கேற்பு மற்றும் கற்றல் விளைவுகளை சமத்துவமாக்குதல். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கு கல்வி என்பது மிகப்பெரிய கருவியாகும். உண்மையில் அதை அடைவதே மிகப்பெரிய குறிக்கோளாகும். ஒவ்வொரு குடிமகனும் கனவு காணுதல், முன்னேற்றம் மற்றும் நாட்டிற்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு மற்றும் சமமான சமுதாயத்தை அடைவதற்கு இந்த கல்வி முறை இன்றியமையாததாக இருக்கிறது .. துரதிஷ்டவசமாக பாலினம் அடிப்படையினால் மக்கள் கல்வி முறையிலிருந்து பயன்படும் வாய்ப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன் விளைவாக சமூக.. பிளவுகள் ஏற்பட்டு நாட்டின் வளர்ச்சி,புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கின்றன. இந்தக் கொள்கையானது இந்தியாவின் குழந்தைகள் அனைவருக்கும் பயன்தரும் ஒரு கல்வி முறையை வடிவமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதன் மூலம் எந்த ஒரு குழந்தைக்கும் பிறப்பு மற்றும் பின்னணியின் காரணமாக கல்வி பெறவும் , முன்னேறவும், தடையின்றி வாய்ப்புகள் பெற வழிவகை செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்திய கல்விமுறை மற்றும் தொடர்ச்சியான அரசாங்க கொள்கைகளால் பாலின மற்றும் சமூகப் பிரிவுகளில் உள்ள இடைவெளிகளை சமன் செய்வதில் உறுதியான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தரவுகளின் மூலம் அறிகிறோம். இருப்பினும் பெரிய வேறுபாடுகள் இன்னமும் இருக்கின்றன. குறிப்பாக உயர்நிலை நிலைக் கல்வியில்,அதிலும் வரலாற்று ரீதியாக, கல்வியில் பின்தங்கிய குழுக்களில் இவை தென்படுகின்றன. பள்ளிகளில் சேர்க்கை விகிதம் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சீராக சரிவதை காண முடிகிறது. இது அத்தியாயம் மூன்றில் விவாதிக்கப்பட்டது போல் நாடு முழுவதும் தீர்வுகாணவேண்டிய ஒரு சிக்கலாகும். மாணவர் சேர்க்கையில் காணப்படும் இந்த சரிவு பல URG (குறை பிரதிநிதித்துவ குழுக்களிடம் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.U-DISE 2016 17 தரவுகளின் படி ஆரம்ப நிலைக் கல்வியில் ஆதிதிராவிடர் மாணவர்கள் 19.6% உள்ளனர். ஆனால் இந்த பகுதி மேல்நிலைக் கல்வி மட்டத்தில் 17.3 சதவீதம் ஆக குறைகிறது. இவ்வகையான சேர்க்கையில் ஏற்படும் சரிவுகள் பழங்குடியின மாணவர்களிடம் இன்னும் அதிகமாக காணப்படுகின்றன 10.6%-6.8%, இஸ்லாமிய மாணவர்கள் 15%- 7.9%, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 1.1% to 0.25%, இதைத்தாண்டி மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து URG களை சேர்ந்த மாணவிகளின் சதவிகிதம் மிக அதிக சரிவுடன் காணப்படுகி… இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டும் சமநிலையின்மை ஏற்கனவே ஆரம்பப் பள்ளியில் குழந்தைகளை பாதிக்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. மாணவர்கள் சந்திக்கும் தடைகளை கண்டறிந்து துரிதமான நடவடிக்கைகளின் மூலம் அவைகளை கலைந்து,அனைத்து URG களே சேர்ந்த குழந்தைகளுக்கும் சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வியில் பாரபட்சமின்றி வாய்ப்புகள் பெற,குழந்தைகளின் ஆரம்ப கல்வி முதல் வழிவகை செய்ய வேண்டும். இது குறிப்பாக அனைத்து குழந்தைகளும் வளரும் போது ஒரு உள்ளடக்கிய மற்றும் சமமான சமுதாயத்தின் அங்கமாக இருப்பதை உறுதிப்படுத்தவும், அதன் மூலம் தேசத்தின் சமாதானத்தையும்,ஒற்றுமையையும்,உற்பத்தித் திறனையும் உயர்த்த வழிவகை செய்கிறது. கல்வியில் விலக்கு மற்றும் பாரபட்சத்தையும் ஏற்படுத்தும் காரணிகள்: URG பிரதிநிதித்துவம் குறைந்த வகுப்புகளை சார்ந்த பிள்ளைகள், அதிலும் தரமான பள்ளிகளுக்கு அணுகும் வாய்ப்பு இல்லாமையால் பாதிக்கப்படுகிறார்கள். இதுவே (URG) கல்வி அமைப்பில் இருந்து விலக்கப்படுவதற்கு முதல் அடிப்படை காரணமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக்கூடத்தை அணுகுதலில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்து விட்ட போதிலும்,குழந்தைகள் ஆரம்பக் கல்வியையும் ,உயர்நிலை கல்வியையும் அணுகுவதில்,அதிலும் கல்வியில் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட பிரிவுகள் (URG)அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் ,இன்னும் மிக முக்கியமான தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. (அத்தியாயம் 1 மற்றும் 3) இருப்பினும் பள்ளிகளை அணுகுதலில் சிக்கல் முடிவதில்லை. URGபிரதிநிதித்துவம் குறைந்த வகுப்புகளை சேர்ந்த ஒரு குழந்தை தரம் வாய்ந்த பாடசாலையை அணுகுவதிலும், நுழைவதில் வெற்றி அடைந்தாலும் கூட மற்ற பல காரணங்கள் கல்வி கற்பதற்கு முட்டுக்கட்டையாக அமைகின்றன.இதனால் குறைந்த வருகை ,மோசமான கற்றல் அடைவுகள், அதிக இடை நிற்றல் ஆகியவை நிகழ்கின்றன.உண்மையில் பல்வேறு பொருளாதார, சமூக ,அரசியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களால் பின்னப்படும் விலக்குகள் மற்றும் பாகுபாடுகளினால் கட்டமைக்கப்படும் ஒரு சிக்கலான சிலந்தி வலை போன்ற அமைப்பு பெரும்பாலும் இத்தகைய தடைகளுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. வறுமை : விலக்கு மற்றும் பாகுபாடு ஆகியவற்றில் , வறுமை ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது. ஏழை குடும்பங்கள்,பள்ளிக்கு அணுகல் இருந்தாலும் கூட தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும் ,பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆதரவு தருவதிலும்,சவால்களை சந்திக்கின்றனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பெரும்பாலானவர்கள் ஊட்ட சத்து குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.அது அவர்களின் கல்வியை நேரடியாக பாதிக்கிறது. தரமான உட்கட்டமைப்பு வசதிகள், செயல்படும் மற்றும் பாதுகாப்பான கழிவறைகள்,பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் நிலவும் தரமில்லாத தன்மை, பொருளாதார ரீதியில் பின்தங்கிய இடங்களில் நிலவும் கடுமையான பாரபட்சம் ஆகியவை சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களின் குழந்தைகள் கல்வி பெறுவதை வெகுவாக பாதிக்கிறது. நல்ல நூலகங்கள் ஆய்வகங்கள் மற்றும் கல்விக்கு உபயோகப்படும் பொருள்கள் ஆகியவை பள்ளிகளில் இல்லாதது ,தத்தம் வீடுகளில் போதிய கல்வி வளங்கள் க@கிடைக்க படாத நிலைமையில் இருக்கும் பின்தங்கிய வகுப்பு மாணவர்களை கடுமையாக பாதிக்கின்றது. சமூக பழக்க வழக்கங்களும் பாரபட்சங்களும் , தீவிர வழியில் பாகுபாட்டிற்கு பங்களிக்கின்றன.உதாரணமாக, பல சமுதாயங்கள் பெண்களுக்கு முறையான கல்வி தேவையற்றது என்று கருதுகின்றனர். சில சமூகங்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள வரலாற்று ரீதியான பாகுபாடு கல்வியின் மீது ஒரு தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . உதாரணமாக ,ஜாதி ரீதியான வகுப்பறை கட்டமைப்பு அல்லது பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகளை பள்ளியில் செய்வது போன்றவை. குழந்தைகள் பள்ளியில் காணும் இந்த பாரபட்ச கட்டமைப்பின் நீண்டகால விளைவு, இவற்றுள் பல பிரிவுகள், URG குறைந்த பிரதிநிதித்துவத்தை பாரபட்ச கண்ணோட்டத்துடனும் பார்க்கும் தீய சுழற்சி முறைக்கு எதிராக வளர்ந்து வரும் தொழில் முறை கல்வி சமூகத்தில் ஆசிரியர்களாகவும், பள்ளி தலைவர்களாகவும், அலுவலர்களாகவும் சேர்ந்து, அவர்களால் பாகுபாட்டை விலக்க முடியும். இறுதியாக பள்ளிப் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில சமூகங்களுக்கு முறையான கல்வி மற்றும் அவர்களது சொந்த வாழ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவற்றதாக இருக்கிறது. உதாரணமாக தனித்துவமான பாடத்திட்டங்கள் அவர்களுக்கு தெரிந்தவை,மதிப்பவை மற்றும் தொடர்புபடுத்திக் படுத்திக்கொள்ள கூடியவைகளை சாராமல் இருக்கின்றன. உண்மையில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டம் ,போதனை முறைகள் மற்றும் பாட புத்தகங்களின் மேல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஆய்வும்,மாணவர்களின் கண்ணோட்டத்திலேயே பாரபட்சத்துடன் வாழ்க்கை நிலை சித்தரிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்துகிறது. உதாரணத்திற்கு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் பாட புத்தகங்களில் பெரும்பாலும் ஆணாகவே சித்தரிக்கப்படுகிறார், கதைகளில் இடம்பெறும் குழந்தைகளின் பெயர்கள் எல்லா சமுதாயங்களையும் பிரதிபலிப்பவையாக இருப்பதில்லை மற்றும் மாற்றுத்திறனாளிகளை பற்றிய எந்த ஒரு குறிப்பும் இருப்பதில்லை. இதனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் குறைவான வகுப்புகளை சேர்ந்த குழந்தைகளை நமது வகுப்பறை நடவடிக்கைகள் வரவேற்பதற்கும் ,உற்சாகப்படுத்துவதற்கு வழிவகை செய்வதில்லை. உள்ளடக்கத்தை நோக்கி பள்ளிகள் செல்லவும், சமபங்கு அடையவும் என்ன செய்ய வேண்டும்? ஆரம்பகால கல்வி அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவு மற்றும் அத்தியாயங்கள்1-3 இல் கலந்துரையாடப்பட்ட அணுகல், சேர்க்கை வருகை பற்றிய முக்கியமான சிக்கல்கள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள்,பின்தங்கிய மற்றும் பிரதிநிதித்துவம் குறைந்த குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக அமைகின்றன. அத்தியாயம்1-3 இல் சொல்லப்பட்டுள்ள நடவடிக்கைகள் URG களுக்கு சரியான வகையில் இலக்கை வைத்து கொண்டு சேர்க்கப்பட வேண்டும். கூடுதலாக கடந்த பல ஆண்டுகளாய் பல திட்டங்கள் குறிப்பாக இலக்கு உதவித்தொகை மற்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் நிபந்தனையுடன் கூடிய பண உதவி மற்றும் போக்குவரத்துக்காக வழங்கப்படும் மிதிவண்டி முதலியவை, கல்வி அமைப்பில் URGகளின் பங்கேற்பை சில இடங்களில் வெற்றிகரமாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டுகளின் வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள்,புதுப்பிக்கப்பட்டு, இயல், மேலும் வலு ஏற்றப்பட்டு நாட்டிலுள்ள அனைத்து URGகளுக்கும் சென்றடையுமாறு செய்ய வேண்டும். எந்த முயற்சிகள் யூ ஆர் ஜி களுக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும் என்று ஆராய்ச்சி உறுதியாக கூறுகின்றதோ,அவைகளை பரிசீலனை செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உதாரணமாக ,மிதிவண்டிகள் வழங்குவதும் மிதிவண்டி அல்லது நடந்துவரும் குழுக்களின் மூலம் பள்ளிகளுக்கு வழிவகை செய்வதும் , சிறிது தூரம் ஆனாலும் இவை அளிக்கும் பாதுகாப்பு மற்றும் பெற்றோருக்கு வழங்கும் வசதியால் மாணவிகளின் கல்வி பங்களிப்பை அதிகரிப்பதில் சிறந்த வழிமுறைகளாக கண்டறியப் பட்டுள்ளன. ஒருவர் ஒருவருக்கு கல்வி ஆலோசனை வழங்கும் முறை மற்றும் திறந்தவெளி பள்ளி முறை,குறிப்பாக சில CWSN களுக்கு பயன் தருபவையாக அமைகின்றன. சிறந்த தரம் கொண்ட பள்ளிகள்,சமூக அல்லது பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு,சிறந்த பலனை அளிக்கின்றன. இதற்கிடையே மாணவர்கள்,பெற்றோர்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பணி செய்யும் சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசனையாளர்கள் பணியமர்த்துதல்,நகர்ப்புற ஏழை பகுதிகளில் வாழும் குழந்தைகளிடம் அதிக பயன் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில புவியியல் அமைப்பு உள்ள இடங்களில் URGகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை தரவுகள் காட்டுகின்றன. நமது நாட்டில் உள்ள URGகள் அதிகமாக வாழும் பகுதிகளை சிறப்பு கல்வி மண்டலங்களாக அறிவித்து,முன் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைந்த கூடுதல் முயற்சியால் செயல்படுத்தினால்தான் உண்மையில் இந்தப் பகுதிகளில் கல்வி நிலை மாறும் என்பதை இந்தத் திட்டம் கூறுகிறது. அனைத்து URG வகுப்புகளிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். மக்கள்தொகையில் பாதி எண்ணிக்கையில் பெண்களே உள்ளனர். துரதிஷ்டவசமாக URG களில் எதிர்கொள்ளப்படும் சமமின்மை மற்றும் உள்ளடக்கம் இன்மை ஆகியவற்றால் பெண்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தத் கொள்கை பெண்கள் சமுதாயத்தில் அளிக்கும் மிக முக்கியமான பங்கையும் அதுமட்டுமின்றி இந்தத் தலைமுறையில் மட்டும் இன்றி அடுத்த தலைமுறையில் நிகழப்போகும் சமுதாய கண்ணோட்டங்களை வடிவமைப்பதில் பெண்களுக்கு உள்ள பங்கை கண்டு கொள்கிறது. இதனால் இவர்களை சேர்ந்த பெண்களுக்கு தரமான கல்வியை அளிப்பதும்,பெண் குழந்தைகளிடம் கல்வித்தரத்தை நிகழ்காலத்திலும் இதனால் இவர்களை சேர்ந்த பெண்களுக்கு தரமான கல்வியை அளிப்பதும் , பெண் குழந்தைகளிடம்கல்வித்தரத்தை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உயர்த்தவதே சிறந்த வழி வழியாகிறது. அதனால் யூ ஆர் ஜி களை சேர்ந்த மாணவர்களை முன்னேற்ற மேற்கொள்ளப்படும் திட்டங்களும் கொள்கைகளும் முக்கியமாக யூ ஆர் ஜி கலை சேர்ந்த பெண்களிடம் முக்கியமாக கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்று இந்தத் திட்டம் கூறுகிறது.எதிர்காலத்திலும் உயர்த்துவதே சிறந்த வழி வழியாகிறது. அதனால் யூ ஆர் ஜி களை சேர்ந்த மாணவர்களை முன்னேற்ற மேற்கொள்ளப்படும் திட்டங்களும்,கொள்கைகளும் முக்கியமாக யூ ஆர் ஜி களை சேர்ந்த பெண்களிடம் முக்கியமாக கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்று இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளும் நடவடிக்கைகளும் அனைத்து URGகளுக்கும் முழுமையான இணைப்பையும், சம பங்களிப்பையும் பெறுவதற்கு மிகவும் அவசியமானதாக இருக்கின்றன. ஆனால் இவை மட்டும் போதுமானவையாக இல்லை. பள்ளி கலாச்சாரத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் நிர்வாகிகள் சமூக செயல்பாட்டாளர்கள் ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பள்ளிக்கல்வி அமைப்பிலுள்ள அனைவரும் அனைத்து மாணவர்களின் தேவைகளையும்,சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வியின் தேவையையும் அனைவரின் மாண்பு மற்றும் மரியாதையை உணர்ந்து நடக்கவும் தேவை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கல்வி முறை மாணவர்களை ஆளுமை மிக்க தனிமனிதர்களாக வடிவமைத்து, சமுதாயத்தை அதன் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள இந்த கல்வி முறை உதவி செய்கிறது. 6.1 கல்வியில் குறைவான பிரதிநிதித்துவ குழுக்களின் மேம்பாடு இந்தக் கொள்கை பள்ளிக்கல்வியில் அனைத்து குறைவான பிரதிநிதித்துவ குழுக்களுக்கும் ஒருங்கிணைந்த மற்றும் தீவிரமான கொள்கை முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறது. இந்தப் பிரிவில், அனைத்து குறைவான பிரதிநிதித்துவ குழுக்களுக்கும் முக்கியத்துவம் சேர்க்கும் மற்றும் சமமான கொள்கை முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கீழ்வரும் பிரிவுகளில் குறிப்பிட்ட குறை பிரதிநித்துவ குழுக்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. 6.1.1. இயல் 1 -3 உள்ள குறை பிரதிநிதித்துவ குழுக்களிடம் இருந்து பெறப்பட்ட மாணவர்களுக்கான நடவடிக்கைகளை வலியுறுத்துதல். நாடு முழுவதும் பின் தங்கிய பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் நிறுவப்படும். 6.1.2. நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் நிறுவப்படும். தேசிய சராசரியை விட சிறந்ததாக செயல்படும் மாநிலங்களில் கூட பிராந்தியங்களில் சமச்சீரற்ற வளர்ச்சி காணப்படுவதாக மனிதவள மேம்பாட்டு குறிகாட்டிகள் சுட்டி காட்டுகிறது. குறிப்பிட்ட புவியியல் பகுதிகளிலிருந்து,அதிகமான விகிதத்தில் மாணவர்கள் வருவதாக தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. தெளிவான சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார குறிகாட்டிகள் அடிப்படையில் எந்த ஒரு தெளிவான பகுதியையும் SEZ என அறிவிக்க மாநிலங்கள் ஊக்கப்படுத்தப்படும்.( எடுத்துக்காட்டு. மத்திய பிரதேசத்தின் பழங்குடியின மாவட்டங்கள்). இந்த மண்டலங்களில் மாநில அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், ஒரு குழந்தைக்கான செலவினம் 2:1 என்ற விகிதத்தில் இருக்கும். மேலும் கூடுதல் முதலீடுகளை மத்திய அரசு ஆதரிக்கும். இந்த கூடுதல் முதலீடுகள் பல அம்சங்களில் செலவு செய்யப்படும். இந்த மண்டலங்களில் கல்வி அடைவுகளை முன்னேற்றுவதும் இதில் அடங்கும். மேலும் அத்தியாயங்கள்1 -3 கூறப்பட்டுள்ள கொள்கைகளை செயல்படுத்துவதும் இதில் அடங்கும். குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகள், கற்றல் வளங்கள், திறன் ஆகியவை இலக்காக கொள்ளப்பட்டு இந்த மண்டலங்களில் ஆதரிக்கப்படும். பிற புதுமையான கல்வி முயற்சிகளும் இந்த மண்டலங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும்.மேலும் கற்றல் அடைவு களுக்கு ஏற்ப அவை கண்காணிக்கப்பட்டு சரி செய்யப்படும். நாட்டின் முக்கிய பகுதிகளில், கணிசமான நேர்மறையான ஏற்பாடுகளை விரைவாக செய்வதற்காக, மையம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் நெருக்கமான கூட்டு கண்காணிப்புடன் ஒருங்கிணைந்த முறையில் URG களின் மேம்பாட்டிற்கான அனைத்து கொள்கை நடவடிக்கைகளிலும் இந்த மண்டலங்கள் செயல்பட வேண்டும். அது உண்மையில் மிகவும் அவசியமான தேவை ஆகும். 6.1.3. ஆசிரியர்கள் பெறக்கூடிய மற்றும் திறன் வளர்ச்சி: ஆசிரியரை உருவாக்குவதில் உள்ளடக்கிய கல்வியின் பங்கு: அ. அங்கன்வாடி ஊழியர்கள் முன் மழலையர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி தலைவர்கள் மற்றும் இதர அலுவலர்கள் , ஆசிரியர் பயிற்சியிலும் அதேபோல் பணியிடை தொழில் வளர்ச்சியிலும், உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது. இந்தத் திட்டங்கள் எல்லா ஆசிரியர்களிடமும் வெவ்வேறு கற்கும் திறன் கொண்ட மாணவர்களிடையே தொடர்ச்சியாக உணர செய்கின்றன. அதனால் அனைத்து மாணவர்களிடமும் குறிப்பாகURG களில் ,சில குறைபாடு உள்ளவர்கள், கூடுதல் கவனம் தேவைப்படும் தாமதமாக வளர்பவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்கின்றன. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தங்கள் குறிப்பிட்ட சூழல்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி தொகுதிகளை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், சம பங்கு மற்றும் உள்ளடக்கிய கல்வி ஆகிய தலைப்புகளில் சான்றிதழ் படிப்புகள் வழங்க ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும் இந்த படிப்புகளை படிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆ. URG களிலிருந்து ஆசிரியர்களை பணியமர்த்த செய்ய வேண்டிய மாற்று வழிகள்: URG களிலிருந்து ஆசிரியர்களின் குறைவான பிரதிநிதித்துவத்தை எதிர் கொள்ள,URG களில் உயர் தரமான ஆசிரியர்களை பணியமர்த்த மாற்று வழிகள் ஏற்படுத்தப்படும். அத்தகைய முயற்சிகளில் பயிற்சிக்குப் பின் பணியமர்த்தும் முறைக்கு மாற்றாக பணியமர்த்திய பின் பயிற்சி நடைமுறைப்படுத்தப்படும். இ. மாணவ ஆசிரியர் விகிதம்: URG களில் இருந்து அதிக மாணவர் விகிதம் கொண்ட பள்ளிகளில் மாணவ ஆசிரியர் விகிதம்25:1 மிகாமல் இருக்க வேண்டும். இந்த விகிதத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் தொடர்ச்சியான தளங்களில் இடைவெளியை குறைக்கும் காலம் வரை தேவைப்படும் மாற்று தீர்வுகளையும் இணைப்பு செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். உள்ளடக்கிய கல்வியை ஆசிரியர் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க செய்தல் 6.1.4. உள்ளடக்கிய பள்ளி சூழல்களை உருவாக்குதல்: பாகுபாடு, துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளை நிறுவுதல்: அ. விலக்கு நடைமுறைகளை நீக்குதல்: சமத்துவம் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றின் மீதான தெளிவான அளவுகோல்கள் பள்ளிகளுக்கு பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் சமபங்கு மற்றும் உள்ளுணர்வை மதிப்பீடு செய்ய அளவுகோல்கள் உருவாக்கப்படும். மேலும் அங்கிகாரம் அல்லது சுய மதிப்பீடு செயல்முறைகளின் போது போதுமான அழுத்தம் தரப்படும். ஆ . கற்பவர்களுக்கு உணர்வூட்டல்: மாணவர்களின் தங்களுடைய பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை போற்றி பாராட்டும் தன்மையை உருவாக்குதல். பல்வேறு நிலைகளில் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் செயல்பாடுகள் செயல்படுத்தப்படும்,( எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் வேறுபட்ட சமூக பொருளாதார சூழ் நிலைகளைப் பற்றி கதைகளை சேர்த்தல், தங்களின் சமூகம் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில் தனி நபர்களின் எளிமையான அடையாளங்களை கேள்வி கேட்டல்). சகிப்புத்தன்மையின் அடிப்படை மனித மதிப்புகள், உள்ளுணர்வு, சம பங்கு, பச்சாதாபம், உதவுதல், சேவை முதலியன பாடத்திட்டம் முழுவதும் இணைக்கப்படும். இ. உள்ளடக்கிய பாடத்திட்டம்: பள்ளிப் பாடத்திட்டம், மாத பாடத்திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் பொருட்கள் (குறிப்பாக பாடப்புத்தகங்கள்) ஆகியவற்றில் வெளிப்படையான அல்லது மறைக்கப்பட்ட ஒரே மாதிரியான சார்புகளை அகற்றுவதற்கும் மதிப்பாய்வு செய்யப்படும். அனைத்து பாடத்திட்டத்திற்கான சீர்திருத்தங்களில் உதாரணமாக,பள்ளிக் கல்வி பாடத் திட்டம் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டு திட்டங்களிலும் அவசர நிலை தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறை பிரதிநிதித்துவ குழுக்களில, அதிகமான மாணவர் விகிதம் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 25:1 மிகாமல் இருக்க வேண்டும் 6.1.5. தரவு தளங்கள் அல்லது தகவல்களை பராமரித்தல்: ஒவ்வொரு மாணவனுக்கும் இன்றியமையாத தகவல்கள் தேசிய கல்விக்கான தேசிய தரவுத்தளத்தில்(NRED) பராமரிக்கப்படும். சிலர் கல்வி குறிகாட்டிகள் அனைத்து URG குழுக்களுக்கும் பொதுவானதாகவும் குறிப்பிட்ட குறிகாட்டிகள் குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டும் கண்காணிக்க படலாம். கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் தேசிய நிறுவனம்(NIEPA) கல்வி ரீதியாக URG களில் இருந்து மாணவர்கள் கண்காணிக்க பொருத்தமான வழிமுறைகளை உருவாக்கும்.URG களின் தரவுகள் அல்லது தகவல்களை பெற்று பகுப்பாய் செய்வதற்கான கருவிகள், பள்ளிக்கல்வியில URGகுழந்தைகளின் முன்னேற்றத்தை சிறப்பாகக் கண்காணிப்பதற்கு உதவும். NIEPA உருவாக்கப்பட்ட மத்திய கல்வி புள்ளியியல் பிரிவு (CESD) திட்டமிட்ட இலக்குகளை வடிவமைப்பதற்கும் விநியோகிப்பதற்கும், இந்த தகவல்களை பகுப்பாய்வு செய்யும். 6.1.6. Financial support to individual students: அ. இலக்கு நிதி உதவி: URG குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கவும், வளங்களை ஏற்படுத்தவும் ,மற்ற வசதிகள் செய்து தரவும் ஒரு சிறப்பு தேசிய நிதியம் உருவாக்கப்படும். ஒரு எளிய முகமை அல்லது ஒரு ஒற்றை சாளர அமைப்பு மூலம் நிதி உதவி பெற மாணவர்கள் எளிய வழி முறைகளில் விண்ணப்பிக்க முடியும். மேலும் அவர்கள் முறையற்ற ஆதரவு அல்லது சேவைகளை மறுத்துவிட்டால் புகார்களை பதிவு செய்ய முடியும். எந்த ஒரு மாணவரும் ஆதாரங்கள் மறுக்கப்படுவதை உறுதி செய்ய NRED உடன் தரவு இணைக்கப்படும். அதே சமயத்தில் மாணவர்களின் தனி உரிமை மற்றும் கண்ணியம் எப்போதும் மதிக்கப்படும்.. ஆ உதவிக்கான மாற்று வழிகள்:: ஸ்காலர்ஷிப்களை தவிர, பிற ஆதரவு வழிமுறைகளும் கிடைக்கிறது.எடுத்துக்காட்டு. URG களிலிருந்து திறமையான மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்களைNTP மற்றும் RIAP நிகழ்ச்சிகளில் கல்வி சார்ந்த மாதிரிகள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டல் உதவியாளர்களாக பணியமர்த்தலாம். காலை உணவு( மதிய உணவுடன்) குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியில் உள்ள கற்கும் மாணவர்களுக்கு, மதிய உணவின் தரத்தில் காலை உணவு வழங்குதல். URG மேம்பாடு தொடர்பான பல்வேறு துறைகளில் சிறப்பு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல். சேர்க்கை செயல்முறைகள் மற்றும் நிறுவன செயல்முறைகள் (கால அட்டவணைகள் மற்றும் கல்வி காலண்டர்கள் உள்ளிட்டவை) கற்பவர்கள் மற்றும் அவர்களின் சமூகங்களில் பல்வேறு தேவைகளை பிரதிபலிக்கும். 6.1.7. மாவட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அணுதலுக்கும் , உள்ளடக்குதலுக்கும், ஆதரவு மற்றும் இலக்கு சார்ந்த நிதி உதவி வழங்குதல் அ. மாவட்ட வாரியாக நிதி உதவி: உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது உட்பட, சூழல் சார்ந்த மற்றும் இலக்கான தலையீடுகள்/ உத்திகள் ஆகியவற்றை செயல்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் மாவட்டங்களில் உள்ளடக்கம் மற்றும் இலக்கை அணுகுவதற்கான முயற்சிகளுக்கு நிதி உதவி வழங்குதல்.மாவட்ட ரீதியாக, நிதி உதவி வழங்கப்பட்ட மாவட்டங்கள் தன்னார்வத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், அந்தந்த மாவட்ட பங்குதாரர்களால் அடையாளம் காணப்பட்ட துறைகள் மற்றும் அவர்களின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் நிதிகளை செலவழிக்க வேண்டும். ஆ. நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பிற வளங்கள் வழங்குதல் : குறை பிரதிநிதித்துவ குழுவில் உள்ள மாணவர்களின் கல்வித் தேவைகள் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காண்பிக்கும்; இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் அமைப்புகள் மூலம் போதுமான நிதி ஆதாரங்களை கொண்டிருக்கும். ( எடுத்துக்காட்டு: அந்த சமூகங்களிலிருந்து கூடுதல் ஆசிரியர்களை நியமித்தல், குறிப்பிட்ட URG களின் தேவைகளுக்கு தேவையான மொழிபெயர்க்கப்பட்ட பொருள், சம்பந்தப்பட்ட சமூகத்தை மதிப்பிடுவதற்கு சமூக தொழிலாளர்கள் பள்ளி கல்வி பற்றி உறுப்பினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்) உள்ளடக்கிய கல்வி மற்றும் சுயாதீன ஆய்வுகளுக்கு நிதி உதவி கிடைக்கப் பெறச் செய்தல்: உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்து திட்டங்கள் பற்றிய மதிப்பீட்டு ஆய்வுகளின் தாக்கமும்,ஆசிரியரின் மேம்பாடும் இதில் அடங்கும் .மேலும் குறைவான கற்றல் அடைவுகள் மற்றும் இடைநிற்றலுக்கான காரணங்கள் பற்றி அறியவும்,அதற்கான தீர்வு காணவும் இந்த நிதி உதவும். 6.1.8. ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த கொள்கையை செயல்படுத்துதல் மூலம் குறைவான பிரதிநிதித்துவ குழுக்களை ஆதரித்தல்: பள்ளிக் கல்வியில் குறைவான பிரதிநிதித்துவப் குழுக்களின் அதிகமான பங்கேற்றலை உறுதி செய்யும் முயற்சிகளில் கவனமான அணுகுமுறையும் கவனமான திட்டமிட்ட ஒருங்கிணைப்பு இருக்கும். குறைவான பிரதிநிதித்துவப் குழுக்களின் உறுப்பினர்கள் கல்வியில் பங்கு பெறுவதற்கு ஒரு இயல்பான சுற்றுச் சூழலை, சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்குமான முழு பொறுப்பு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அதற்கான மாநில/ யூனியன் பிரதேசத்திற்கான துறைகள்/ கல்வி அமைச்சகங்களுக்கும் இருக்கிறது. (எடுத்துக்காட்டு குறிப்பிட்ட துறைகள் இந்த குறிப்பிட்ட குழுக்களை முன்னேற்ற முன் மழலையர் வகுப்புகளில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, போக்குவரத்து வசதிகளை வழங்குதல். ஒரு சிறப்பு தேசிய நிதி , நிதி உதவி வழங்குவதற்கும் , வளங்களை ஏற்படுத்தவும் குறை பிரதிநிதித்துவ குழுக்களிடம் இருந்து வரும் மாணவர்களுக்கு வசதிகளை வழங்க உருவாக்கப்படும்.. 6.2 பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு மாற்று தீர்வு பெண்களுக்கு கல்வியை எளிதாகப் பெற செய்வதே வறுமையை ஒழிப்பதற்கும் வன்முறையை ஒழிப்பதற்கும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் நல்வாழ்விற்கும் தடைகளை உடைத்தெறிந்து அடுத்த தலைமுறைகளை மேம்படுத்துவதற்கும் உள்ள தெளிவான பாதை ஆகும். எனவே இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்துவதே முக்கியமான உத்தியாகும். மேலும் குறைவான பிரதிநிதித்துவ குழுக்களின் முன்னேற்றத்திற்கும் அந்தக் குழுக்களில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே முக்கியமான உத்தியாகும். மேற்கூறிய காரணங்களுக்காகவும், கல்வியில் பாலின சமத்துவத்தை அடையவும், ஒருங்கிணைந்த பாலின சமத்துவத்திற்கு முன்னுரிமை வழங்குவதே இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். 6.2.1. பெண் கல்விக்காக மாநிலங்கள்மற்றும் சமூக அமைப்புகள் கூட்டாக செயல்படுதல்: அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் தரமான மற்றும் சமத்துவமான கல்வியை வழங்கி, நாட்டை முன்னேற்றுவதற்காக, பின்வரும் ஐந்து அம்சங்களை முன்னிறுத்தி இந்திய அரசு பாலின உள்ளடக்கிய நிதியை உருவாக்கும். - பள்ளி அமைப்பில் 100 சதவீத பெண்கள் சேர்க்கையை உறுதி செய்தல் மற்றும் உயர்கல்வியில் அதிக சேர்க்கை விகிதத்தை உறுதி செய்தல். - கல்வி அறிவு கெடுக்கப்படுவதன் மூலம் பாலின இடைவெளியை நிறைவு செய்தல். - மனித மனங்களை மாற்றுவதன் மூலமும் தீங்குவிளைவிக்க பழக்கத்தை நிறுத்துவதன் மூலமும் பாலின சமத்துவத்தையும் , உள்ளடக்கிய கல்வியையும் வளர்த்தல். - பெண்களுக்கு தலைமைப் பண்பு திறனை வளர்ப்பதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால முன்னுதாரணங்களை உருவாக்க உதவுதல். - சிறந்த நடைமுறைகள் மற்றும் படிப்பினைகளை பரிமாறுவதற்காக சிவில் சமூகத்துடன் கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல். இந்த நிதி, இரண்டு நிதி மானியங்களை ஆதரிக்கும்: ஃபார்முலா மற்றும் விருப்ப மானியம்: பார்முலா மானியம் :கல்வி பெறும் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமைகளை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.( கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், மிதிவண்டிகள்வழங்குதல். விருப்ப நிதி, மாநிலங்களை ,சமூகத்தின் அடிப்படையிலான தலையீடுகளை ஆதரிக்கவும்,அளவீடு செய்யவும் உதவுகின்றன. அவை உள்ளூர் மற்றும் சூழல் குறிப்பிட்ட தடைகளை பெண்கள் அணுகுவதற்கும் தரமான கல்வியை பங்கு பெறுவதையும் உறுதி செய்யும். ஒரு முழுமையான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிர்கொண்டுள்ள குறைந்தபட்ச கல்வி சவால்களை நோக்கி இந்த விருப்ப நிதிகள் இயக்கப்படும். சமூக அடிப்படையிலான நிறுவனங்களின் மீது நிர்வாகத்தை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபடவும், தங்களது திறனை அதிகரிக்கவும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும்,விருப்பமான நிதிகளின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். நிதி மூலம் வளங்களை பெரும் நாடுகள், கல்வியில் பாலின இடைவெளியை குறைக்கும் முயற்சிகளில் ஒரு அங்கமாக உற்பத்தியில் சமூகத்தை கலந்தாலோசித்து தங்கள் திட்டத்தை உருவாக்கும். பெண்களுக்கும் தரமான மற்றும் சமமான கல்வி அளிக்க இந்த உள்ளடக்கிய நிதி கவனம் செலுத்தும். கல்வியில் பெண்கள் பங்களிப்பு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்தல். 6.2.2. கல்வியில் பெண்கள் பங்களிப்பு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்தல்: நிறுவனத் தலைவர்கள் ,ஆசிரியர்கள் ,விடுதி காப்பாளர்கள் ,சுகாதார ஊழியர்கள் ,பாதுகாவலர்கள் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் மட்டுமின்றி பள்ளிகளில் தலைமை பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்தல் வேண்டும். பெண்களை ஆசிரியர் பணியமர்த்தவும் மற்றும் தக்கவைப்பதற்கும் ,கல்வியாளர்களுக்கு திருத்தப்பட்ட மகப்பேறு உதவி சட்டத்தின்படி காப்பக வசதி செய்து தருதல். தலைமைத்துவ மேம்பாடு ஊக்க திட்டங்கள்,ஆசிரியர் பயிற்சி , பணி நிரவல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி பணியில் பெண்களை முன்னிறுத்தி செயலாற்ற முயற்சிக்கலாம். எடுத்துக்காட்டாக,கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ,பெண் ஆசிரியர்களின் விகிதாச்சாரம் குறைவாக உள்ள இடங்களில் ,சிறந்த பெண் மாணவர்களுக்கும், IA களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு ஆசிரியர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 6.2.3. பள்ளி பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குதல்: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாகுபாடு துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத நம்பகமான வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். பள்ளி பாதுகாப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் நிறுவன அங்கீகாரத்திற்கான பகுதியில் ஒரு பகுதியாக உருவாக்கப்படும். இந்த கட்டமைப்பானது பள்ளி தொடர்பான பாலின துன்புறுத்தல்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கும். மாதவிடாய்க்கு பயன்படுத்தும் சுகாதார பொருட்கள் கொண்ட பெண்களுக்கான தனி இயங்கும்கழிப்பறைகள் கட்டி அனைவருக்கும் கிடைக்க பெற செய்தல். பள்ளிக்கு வெளியே உள்ள பெண்கள பாதுகாப்பு அவர்களின் வருகைக்கும் ஒட்டுமொத்த கல்வியின் மதிப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. துர்தஷ்டவசமாக , பள்ளிக் கூடத்திற்கு வந்து செல்லும் நேரங்களில் அவர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. பெண்களுக்கு மிதிவண்டி வசதி செய்து தருதல் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து ஆகியவை அவர்களின் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும். எல்லா பள்ளிகளும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாராபட்சம், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத நம்பகமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். 6.2.4. பள்ளி வருகையை தடுக்கும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலின பேதங்களை பற்றி உரையாடுவது: நடைமுறை முயற்சியாக பள்ளியில் இடைநிற்றல் ஏற்படுத்தும் பாலின முறைகளை அறிந்து களைவதற்கான வழிமுறைகளை பற்றி பள்ளி மற்றும் சமூக பணியாளர்கள் தொடர்ந்து பெற்றோர்களிடம் உரையாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக ,குழந்தைத் திருமணம் ,பெண்களை உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பாதது ,ஆண் குழந்தைகளை சிறுவயதிலேயே பணம் ஈட்ட செய்வது ,பெண்களின் வேலை வாய்ப்பு பற்றிய தவறான புரிதல்கள் ,பள்ளி செல்லும் குழந்தைகளின் குடும்ப தொழிலில் ஈடுபட செய்வது ,வீட்டு வேலைகளில் ஈடுபட செய்வது ,பொதுவாக கல்வியை விட புற காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற பிரச்சினைகள். சமுதாயத்தில் உயர் நிலையை அடைவது ,உயர்தரமான வேலை பொருளாதார சுதந்திரம் அடைந்தது போன்ற கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அதனோடு தற்போதைய வலிமையான முன்னுதாரணங்கள் எடுத்துக்காட்டாக ,பெண் ஆசிரியர்கள், P 6.2.2 பெண்களின் திறமை மற்றும் கனவுகளை பற்றிய சமுதாய புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்தி உதவ முடியும். 6.2.5. பள்ளிகளில் பாலின உணர்திறன்: தொல்லை இல்லாத சூழல்களின் முக்கியத்துவம் ,பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பாலின பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துவதற்கு அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டாய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் போஸ்கோ சட்டம் ,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தை பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம், மகப்பேறு நலன் சட்டம் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் சட்டப்பாதுகாப்பு ஆகியவை அடங்கும். ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகளுக்கு பாலின உணர்திறன் மற்றும் உள்ளடக்கிய வகுப்பறை நிர்வாகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி அளிப்பது இதில் அடங்கும். 6.2.6. URG களில் உள்ள பெண்கள் மீது கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம்: சமூகத்தில் ஆற்றும் சிறப்பு பங்கை அங்கீகரித்தல், அடுத்த தலைமுறைக்கு சமூக ஒழுக்கம் மற்றும் கல்வி மதிப்புகளை எடுத்து செல்வதை வடிவமைத்தல்,URG உள்ளேயும் அவர்கள் எதிர்கொள்ளும் கூடுதலான குறை பிரதிநிதித்துவத்தை உயர்த்துதல், குறைவான பிரதிநிதித்துவ சமூக பொருளாதார மற்றும் சமூக கலாச்சார குழுக்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் அதில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை இலக்காக கொண்டு செயல்படுத்துதல். 6.3 ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளுக்கான கல்வி : பல்வேறு வரலாற்று மற்றும் மொழியியல் காரணிகள் காரணமாக SC மற்றும்OBC ஆகியோர் பல்வேறு மட்டங்களில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றனர். அணுகல் ,பங்கேற்பு மற்றும் பள்ளிக் கல்வியின் கற்றல் விளைவுகள் மூலம் சமூக இடைவெளிகளை இணைத்தல் ஆகியவை அனைத்தும் கல்வித் துறை வளர்ச்சி காண திட்டங்களின் முக்கிய குறிக்கோளாக தொடர்ந்து இருக்கும். பிரிவு6.1 இதில் கூறப்பட்டுள்ள அனைத்து முக்கிய கொள்கைகளோடு, சமூகப் பிரிவு இடைவெளிகளை குறைப்பதற்கான தற்போது நடைபெறும் பல வேலைத்திட்ட தலையீடுகள் ,பள்ளிக் கல்வியில் சமூக இடைவெளியை குறைப்பதற்கான கூடுதல் தலையீடுகள் பின்வருமாறு 6.3.1. SC மற்றும்OBC சமூகங்களிடம் இருந்து ஆசிரியர்களை பணி அமர்த்த செய்தல்: கணிசமான ஒடுக்கப்பட்ட மக்கள், ஆசிரியர் பட்டய பயிற்சி பெற உயர்கல்வி நிறுவனங்களில் உறுதியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்வேறு குறைபாடுகள் காரணமாக பெரும்பாலானோர் வேலை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலமாக திறன் பயிற்சி அளிக்கப்பட்டு ஆசிரியர்களாக அவர்களுடைய பகுதிகளில் உள்ள பள்ளியிலேயே பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் அவர்கள் சிறந்த முன்மாதிரியாக மாறுவர். கூடுதலாகSC மற்றும்OBC சமூக மக்களிடமிருந்து சிறந்த மாணவர்கள் மற்றும்IA களுக்கு சிறந்த ஆசிரியர் கல்வித் திட்டங்களை உருவாக்கி,ஆசிரியர்களாக மாற்றுவதற்கான உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அவர்கள் கல்வி முடித்த பிறகு இந்தப் பகுதிகளில் அவர்களை ஆசிரியர்களாக பணியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 6.3.2. மொழிபெயர்க்கப்பட்ட கற்றல் பொருள் : Sc மற்றும் obc சமூகங்களில் உள்ள தாய்மொழி ,மாநில அல்லது அதிகார மொழியிலிருந்து மாறுபட்டுள்ளது. மற்றவர்களைப் போல தாய்மொழி வழிக்கல்வியில் பயிலாமல் வேற்று மொழியில் பயில்வது அவர்களுக்கு மேலும் சிரமத்தை அளிக்கிறது. எனவே உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட எளிதாக படிக்கக்கூடிய பாடப்பொருள் பயன்படுத்தப்படும்.ஆரம்ப வகுப்புகளில் குழந்தைகளை கல்வி கற்க ஆரம்பிக்க BITE/DIET ஒருங்கிணைப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் இத்தகைய கற்றல் பொருள்கள் உள்ளூரில் தயாரிக்கப்படும். பல்வேறு உள்ளூர் மொழிகளை பேசும் ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்காக ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மாணவர்கள் கற்றல் அடைவுகளை மேம்படுத்துவதற்காக , இவர்களின் மொழி ,பரிமாற்றத்தின் ஒரு ஊடகமாக பயன்படுத்தலாம். 6.4. பழங்குடி சமூக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு வரலாற்று மற்றும் புவியியல் காரணங்களால் பழங்குடிச் சமூகக் குழந்தைகள் மற்றும் ஆதிதிராவிடக் குழந்தைகள் பல்வேறு நிலைகளில் தீவிரமான குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். பழங்குடிச் சமூகக் குழந்தைகள் பொதுவாகத் தங்களுடைய பள்ளிக்கல்வி தங்களுடைய வாழ்க்கைக்கு அந்நியமாக இருப்பதாகவும் கலாச்சார மற்றும் கல்விரீதியாக பொருந்தாததாக இருப்பதாகவும் குறை கூறுகின்றனர். பழங்குடி சமூகங்களில் இருந்து குழந்தைகளை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டத் தலையீடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் குழந்தைகள் இந்தத் தலையீடுகளின் பயன்களைப் புவியியல் தடைகள் மற்றும் சரியான மேற்பார்வை இல்லாமை, மேலாண்மை மற்றும் சமூகஅறிவு ஆகியவற்றின் காரணமாகக் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். பிரிவு 6.1 அனைத்துக் கொள்கை நடவடிக்கைகளும், மீண்டும் பழங்குடிச் சமூகங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். சூழ்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் மற்றும் பழங்குடி மரபுக் கல்வியை ஒருங்கிணைத்தல், உடனடி நடவடிக்கையாக இருக்கும். அதே நேரத்தில் நீண்ட காலப் பலனாக தகுதி உள்ள ஆசிரியர்களைப் பெற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.. 6.4.1. தொடர்புடைய கல்வி: பழங்குடிச் சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்கள் மற்றும் கல்விமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தொடர்புடைய அனுபவமாகக் கல்வியை இருக்கச் செய்தல் வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்தக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி அவர்களின் வாழ்க்கைக்குத் தொடர்புடையதாக இல்லை என்பதே முன்னணிப் பிரச்சனையாக உள்ளது. பாடத்திட்ட வடிவமைப்பு, கல்விமுறைகளும் இவர்களைப் புறக்கணிக்கும் விதமாக உள்ளன . மேலும் ஆசிரியர்கள் இவர்களுடைய கலாச்சாரம் மற்றும் மொழியைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும், தொடர்பு அற்றவர்களாகவும் உள்ளனர். கல்வியைத் தொடர்புடையதாக மாற்ற மேற்கூறிய அம்சங்கள் எல்லாம் முறையாகக் கையாளப்பட வேண்டும். பாடத்திட்டம் மற்றும் பழங்குடி மரபுக் கல்வியை ஒருங்கிணைத்தல் உடனடி மற்றும் அவசியத் தேவையாகும். அதே நேரத்தில் தகுதியுடைய மாணவர்கள், ஆசிரியர்களாக பயிற்றுவிப்பதற்காக ஊக்குவிக்கப்பட வேண்டும். பின்னர், ஆசிரியர் கல்விப் பயிற்சி பெற்று ஆசிரியராகும் பழங்குடி பகுதியைச் சேர்ந்த இந்த சிறந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும். அவர்கள் பயிற்சி முடித்த பிறகு இந்தப் பகுதிகளில் ஆசிரியர்களாகப் பணியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உள்ளூர் பழங்குடி மொழிகளில் கற்றல் பொருள்களை வழங்குவதற்கும் இந்தமொழிகளில் ( தகவல் தொடர்புப் பாலமாக( குறிப்பாகக் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி ஆண்டுகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இரு மொழிப் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு இரு மொழிகளிலும் பாடசாலைகளில் கற்பித்தல் நடைபெறச் செய்தல் வேண்டும். தாய்மொழி வழியாகக் கற்றுக் கொள்வதன் மூலம் குழந்தைகளிடம் மாற்றங்களைச் செய்ய முடியும். 6.4.2. சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள்: மாநில மற்றும் பழங்குடிச் சமூகம் அதிகமாக உள்ள மாவட்டங்கள் அளவில் குறிப்பிட்ட பழங்குடிச் சமூகத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கவேண்டும். இந்த ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித் திட்டங்களை கண்காணிப்பதுடன், பழங்குடிச் சமூக அமைச்சகத்தின் செயல்பாடுகளையும் ஆதரிப்பர். மேலும் கல்வித்துறை மற்றும் அமைச்சகம் வழங்கும் பயன்களை இந்தச் சமூகக் குழந்தைகள் பெறுவதற்கும் உறுதி செய்வர். 6.5. கல்வி ரீதியாக குறை பிரதிநிதித்துவ குழுக்களில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் குழந்தைகளுக்கான கல்வி அனைத்து சிறுபான்மை மற்றும் மத சமூகங்களுக்கும் குறிப்பாகக் கல்விரீதியாக பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களுக்கும் கல்வி வழங்குவதற்கான தலையீடுகளின் முக்கியத்துவத்தை இந்தக் கொள்கை ஒப்புக்கொள்கிறது. இஸ்லாம் சமுதாயத்தின் மத்தியில் பள்ளி மற்றும் உயர்கல்வி அமைப்பில் மிகப்பெரிய கல்விக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியக் குழந்தைகளைப் பள்ளிக் கல்வியில் சேர்ப்பதிலும் மற்றும் தக்கவைப்பதிலும் கணிசமான முன்னேற்றங்கள் இருந்த போதிலும் இஸ்லாமியர்களுக்கும் மற்ற மக்கள் குழுக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி தொடர்ந்து அதிமாக உள்ளது. இஸ்லாம் மாணவர்கள் தேசிய சராசரியைவிடக் குறைவான முதன்மைப் பதிவு விகிதங்களைக் கொண்டுள்ளனர். மேலும் இந்த இடைவெளி நடுத்தர உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்விமட்டங்களில் மட்டுமே அதிகரிக்கிறது. அனைத்து கொள்கை பிரிவு 6.1 , குறிப்பாக இஸ்லாம் சமுதாயத்தினரின் குழந்தைகளுக்குச் சிறப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். மேலும் இஸ்லாம் மக்கள் தொகை கொண்ட சிறப்புக் கல்விமண்டலங்களில் உள்ள இஸ்லாமியர்கள் கற்றல் அடைவுகளில் அதிகமான பங்கேற்பு அளவினை அடையச் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . P6.1.2 படி சிறப்புக் கல்வி மண்டலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில், சிறுபான்மைக் குழுக்களில் அல்லது மதக் குழுக்களில், உயர்கல்வியில் குறை பிரதிநிதித்துவத்தைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வியில் இஸ்லாம் மற்றும் இதர குறை பிரதிநிதித்துவ சிறுபான்மைச் சமூகங்களின் குழந்தைகளைக் கல்வியில் ஈடுபடச் செய்ய சொல்லப்படும் சில முயற்சிகள் பின்வருமாறு: 6.5.1. இஸ்லாம் களுக்கும் பிற கல்வி ரீதியான குறைபாடு உடைய சிறுபான்மையினருக்கும் பள்ளிக்கூட கல்வியை முடிக்க ஊக்குவிப்பதற்கான தலையீடு: அதிகமான இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், மிகச் சிறப்பான பள்ளிகள் அமைக்கப்படும். உருது மற்றும் மற்ற தாய் மொழிகளைப் பேசும் ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதன் மூலம் அவர்களிடையே காணப்படும் மொழித்தடையை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமூக மற்றும் பிற கல்விரீதியாகக் குறை பிரதிநித்துவ சமூகங்களின் மாணவர்களை அதிக அளவில் உயர்கல்வியில் சேர்க்க, மூன்று மொழிக் கொள்கை, தீவிர அறிவியல் மற்றும் கணிதம், ஓவியப் பின்னணியுடன், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கொடுக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மொழி மற்றும் சிறுபான்மையினர், கல்வி ரீதியாகக் குறை பிரதிநிதித்துவம் உள்ள குழுக்களை முன்னேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தேசிய திறனறிவு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இஸ்லாம் சமூகம் மற்றும் பிற குறை பிரதிநிதித்துவச் சிறுபான்மைச் சமூக சிறந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்காக நிதியுதவி வழங்கப்படும். 6.5.2. மதராஸ், மக்தாப்ஸ்,மற்றும் பிற பாரம்பரிய அல்லது மத பள்ளிகளை வலிமையாக்குதல் மற்றும் பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் வழக்கத்தில் உள்ள பாரம்பரிய அல்லது மதப் பள்ளிகள் முறையாக மதரசாக்கள், மக்தாப்கள், குருகுலம், பாடசாலா , மற்றும் ஹிந்து சீக்கிய, ஜைன, பௌத்த மதப்பள்ளிகள் மற்றும் பிற பாரம்பரியங்கள் தங்கள் பாடமுறைகளையும் பாரம்பரியங்களையும் மேம்படுத்த ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் குறை பிரதிநிதித்துவத்தை உயர்கல்வியில் போக்கத் தேசிய பாடத்திட்ட வரைவில் உள்ள பாடங்கள் மற்றும் கற்றல் அடைவுகள் ஒருங்கிணைக்கப்படும். பாரம்பரிய மற்றும் மத நிறுவனங்களின் பாடத்திட்டங்களை நவீனப்படுத்தவும், ஊக்குவிக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும். - பாரம்பரிய கலாச்சார அல்லது மதப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வகுப்பு1-12 கற்றல் அடைவுகளை அடையவும், அறிவியல், கணிதம், சமூகஅறிவியல், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தொடர்புடைய மொழிகளை அறிமுகப்படுத்தவும் நிதி உதவி அளிக்கப்படும். - மதரசாக்கள், மக்தாப்கள், மற்றும் பிற பாரம்பரிய அல்லது பௌத்த மடம் போன்ற மதப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பொதுத் தேர்வுகள் மற்றும் தேசிய திறனறிவு முகாம் நடத்தும் தேர்வுகளை எழுதி உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஊக்குவிக்கப்படுவார்கள். - அறிவியல், கணிதம், மொழி, சமூக அறிவியல், கற்பிக்க ஆசிரியர்களின் திறன் மேம்படுத்தப்படும். மேலும் புதிய கற்பிக்கும் முறைகள் கற்றுத்தரப்படும். - நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு, தேவையான கற்றல் கற்பித்தல் பொருட்கள் கிடைக்கச் செய்யப்படும். 6.6. நகரப்புற ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி: நகர்ப்புற ஏழைக் குடும்பங்களில் சுமார் ஒருகோடிக் குழந்தைகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதைக் காணமுடிகிறது. எதிர்காலத்தில் எடுக்கப்போகிற நடவடிக்கைகளால் இந்தப் போக்கு மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நகரப்புற ஏழைக் குழந்தைகள் பாதிக்கு அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகின்றனர். அதற்கு மேல் மூன்றில் ஒரு பங்கினர் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களில் இருந்து குடிபெயர்ந்து வாழ்வாதாரத் தேவைகளுக்காக வேறொரு மாநிலத்தில் உள்ள நகரங்களில் குடியேறுகின்றனர். இதுஅ வர்களைத் தன் சொந்த மாநிலத்தின் கலாச்சாரத்தையும் நகரத்து வாழ்க்கை முறையையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகச் செய்துவிடுகிறது. இதனால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை பிரிவு நகரஏ ழைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. படிப்பறிவின்மை மற்றும் இவர்களுக்கு முறையாகக் கிடைக்கப் பெறாத பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு வாய்ப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை சிறிய குற்றங்கள் அல்லது போதை மருந்துப் பழக்கம் போன்ற முறையற்ற மற்றும் ஆபத்தான செயல்களை நோக்கிச் செல்லத் தூண்டுகின்றது. சாலையில் வளரும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் போதை மருந்துப் பழக்கங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறப்படுகிறது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதே அவர்களைத் தீயவழிகளில் இருந்து மீட்டு மகிழ்ச்சியானவர்களாகவும் சமுதாயத்திற்குப் பயன் உள்ளவர்களாகவும் ஆக்க ஒரே வழி. இயல்1-3 இல் கூறப்படும் கொள்கை விவரங்கள் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு பொருத்தமாக உள்ளது. அதனால் இவை இந்தக் குழந்தைகளுக்காக அவசரமாக செயல்படுத்தப்பட வேண்டும். நகர்ப்புற ஏழைக் குழந்தைகளுக்கான கூடுதல் கொள்கை விவரங்கள் பின்வருமாறு 6.6.1. கல்வி அணுகளில் கவனம் செலுத்துதல்: நகரப்புற ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் கல்வி அணுகலை அதிகரிக்க அதிகக் கவனம் செலுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளுடன் கைகோர்த்து பள்ளிச் சேவை குறைந்த இடங்களில், பள்ளிகள் தொடங்கவும் மற்றும் ஏற்கனவே இயங்கும் பள்ளிகளில் வருகையை அதிகரிக்கவும், அதனுடன் குழந்தைகள் பள்ளிகளை அணுகப் பாதுகாப்பான வழிகள் நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் வாழும் இடங்களில் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 6.6.2. சமூக அவர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்கு: சமூக சேவையாளர்களின் வருகைகளும் அவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரச்செய்வதில் மிகவும் பயனுள்ள தலையீடாக, ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. பிரிவு 6.61 ன் படி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் வாழும் இடங்களில் உள்ள குழந்தைகள் பள்ளி அணுகுதலை அதிகரிக்க முயலும் புதிய மற்றும் தற்போது உள்ள பள்ளிகள், சிறந்த சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசகர்களைப் பணியமர்த்துவதிலும் முதலீடு செய்யும். சமூக சேவகர்கள் நகர்ப்புற ஏழைகள் வாழும் இடங்களில் குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் கண்டறியவும் அவர்களுக்குப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் உதவுகின்றனர். அவர்கள், பிள்ளைகள், பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள், தீர்வு பயிற்றுவிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியவர்களுடன் இணைக்கப் பணியாற்றுகிறார்கள். முன் குறிப்பிட்ட அவர்களுடன் சேர்ந்து பள்ளி செல்வதற்கு நடக்கும் குழுக்கள் அமைப்பது மற்றும் பிள்ளைகள் பத்திரமாக வீடு சென்றடைவது மற்றும் பிள்ளைகளின் கல்வி விளைவுகளைப் பெற்றோரிடம் சென்று சேர்த்து (பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கருத்துரையாடல்களை ஏற்பாடு செய்வது ) அதன் மூலம் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கை அதிகரிக்க உதவுவது மற்றும் பிள்ளைகளைத் தங்கள் பெற்றோரின் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்பில் இருக்க உதவுவது மற்றும் அவர்களைத் தீய பழக்கங்களில் இருந்து காப்பது மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து பொதுவாகப் பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் கல்வி பயிலும் காலம் முழுவதும் உறுதுணையாக இருக்கவும் ஆலோசனை வழங்கவும்சமூக சேவகர்கள் பணிபுரிகிறார்கள். 6.6.3. நகரப்புற ஏழைகளின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பாடத்திட்டம்: நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி செய்யப் பாடத்திட்டத்தின் சில பகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, சுத்தமான குடிநீர், தீங்கு விளைவிக்கும் விஷயங்கள், பாலின சமத்துவம், பெண்களுக்கு மரியாதை, சகிப்புத் தன்மை மற்றும் அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களுக்கு பன்முகத் தன்மையையும், தொழில்நுட்பம், நிதியியல் கல்வி அறிவு, ஸ்மார்ட்போன்கள் போன்ற தொழில் நுட்பத்தின் முறையற்ற பயன்பாட்டில் விளையும் தீங்குகள், தொழில் நுட்பத்தினால் ஏற்படும் நன்மைகள், வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியின் மீதான ஆர்வம், திறன்கள் மற்றும் தொழில் பயிற்சி ஆகியவை மேற்குறிப்பிடப்பட்டுள்ள மறுசீரமைப்பில் சேர்க்கப்படும். 6.7. மூன்றாம் பாலினம் குழந்தைகளின் கல்வி 6.7.1. பள்ளிக்கல்வியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிள்ளைகள் பங்கு பெறுவதை உறுதிப்படுத்துதல் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களின் மேல் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் மற்றும் இவர்கள் கல்வி சார்ந்தும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைக் களையத் தேவையான முயற்சிகளை எடுப்பதையும் இந்தத் திட்டம் அங்கீகரிக்கின்றது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளிடம் கல்வியைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஒரு பங்காக மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தேசியளவிலான தரவுத்தளம் அமைக்கப்படும். தங்கள் அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படாத பாதுகாப்பான மற்றும் ஆதரவான பள்ளிச் சூழ்நிலையை உருவாக்க முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிகள் பள்ளி வளாகங்கள் மற்றும் சமூகசேவகர்கள் தங்கள் பெயர்களைப் பயன்படுத்துவது, மற்றும் அவர்களின் பாலின அடையாளம் தொடர்பான பிற இடங்கள் ஆகியவற்றைப் பற்றி மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் ஆலோசனையுடன் ஒருதிட்டத்தை உருவாக்க ஊக்குவிக்கப்படுவார்கள். பாடத்திட்டமும் பாடநூல்களும் மூன்றாம் பாலினக் குழந்தைகளின் தேவைகளையும் குறைகளையும் பூர்த்தி செய்யவும் மற்றும் கல்வி அணுகுமுறை தொடர்பான பிரச்சினைகளை அணுகவும் ஏற்றவையாக மாற்றி அமைக்கப்படும். ஆசிரியர்கள் மூன்றாம் பாலினக் குழந்தைகளின் தேவைகள் மற்றும் குறைகள் மற்றும் கற்றல் தேவைகள் சார்ந்த சூழ்நிலைகளைக் கையாளத் தயார்படுத்தப்படுவார்கள். 6.7.2. சிவில் சமூகக் குழுக்களின் பங்கேற்பு மூன்றாம் பாலினக் குழந்தைகளுடன் பணிபுரியும் அனுபவம் பெற்ற சிவில் சமூகக் குழுக்கள் இந்தக் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்கள், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப் படுவதில் ஈடுபடுத்தப் படுவார்கள். சிவில் சொசைட்டி குழுக்கள் சமூக மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை பள்ளிக்கல்வியின் அனைத்து தளங்களிலும் வழிவகை செய்யவும் உறுதி செய்யவும் உதவுவார்கள். மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் பள்ளி செல்லும் வயதில் உள்ள மூன்றாம் பாலினக் குழந்தைகள் தரமான பள்ளிக் கல்வி பெறுவதை உறுதி செய்யக் கல்வி இயக்குனரகத்தில் உதவி கோரப்படும். 6.8. சிறப்பு தேவைகளை கொண்ட குழந்தைகளின் கல்வி CWSN குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போலத் தரமான கல்வி பெறுவதன் அவசியத்தை இந்தக் கொள்கை அங்கீகரிக்கின்றது. 2012 ஆகஸ்ட் முதலாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த RTE சட்டத்திருத்த சட்டமானது cwsn ஐ, ஊனமுற்றோருக்கான சட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் RTE சட்டத்தின் கீழ் CWSN குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி ஆரம்பப்பள்ளிக் கல்வி அல்லது பதினெட்டாம் வயது வரையிலான பள்ளிக் கல்வியை வழங்கவும் உறுதிப்படுத்தவும் வழிவகை செய்கிறது. அதுமட்டுமன்றி கடுமையான குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு வீட்டிலிருந்தே கல்வி பெறும் உரிமையை வழங்குகிறது. பிரிவு 6.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் இச்சூழலில் முக்கியமானவைகளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு CSWN க்கும் அர்த்தமுள்ள மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்கு குறிப்பிடப்பட்ட கூடுதல் கொள்கை முயற்சிகள் பின்வருமாறு உள்ளன. -B6.8.1. வழக்கமான பள்ளிகளில் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளை சேர்ப்பது குழந்தைகளின் கல்வித் திட்டத்தில் அவர்கள் வாழும் பகுதிகளின் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பெறவும் பள்ளி நடவடிக்கைகளில் ஆரம்பநிலை முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முக்கியமானவைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்குத் தடைகள் இல்லாத கட்டிடங்கள், சாய்வுவழிகள், கைப்பிடிகள், ஊனமுற்றோர் பயன்படுத்தக் கூடிய கழிவறைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றின் மூலம் பள்ளி அணுகுதலை ஊக்குவிக்க வழிவகை செய்யப்படும். 6.8.2. சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் கல்வி பெறுவதற்கான முயற்சிகளுக்கு தரப்படும் நிதி ஆதரவு. CWSN ஒருங்கிணைப்பதற்காக பள்ளிக்கூடங்கள் அல்லது பள்ளி வளாகங்களுக்கு நிதிஉதவி பெறுவதற்கான தெளிவான மற்றும் பயன் தரக்கூடிய வழிவகைகள் வழங்கப்படும்.. அதே போல் கிராமம்/ தொகுதி அளவில் வளமையங்கள் கடுமையான அல்லது பல குறைபாடுகள் கொண்ட மாணவர்களுக்காக அமைக்கப்படும். இத்தகைய மையங்கள் பெற்றோர்/ பாதுகாவலர்கள் பகுதிநேர அல்லது வீட்டிலேயே கல்வி கற்க உதவுவதுடன் அத்தகைய மாணவர்களுக்கு (ISL அல்லது பிற உள்ளூரில் பயன்படுத்தும் செய்கை மொழிகள் ஏதேனும் இருந்தால் அவைகளையும் கற்க மற்றும் NIOS மூலம் வழங்கப்படும் உதவிகள்) திறன்களை வளர்க்க உதவி செய்கின்றன. 6.8.3. சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி அனுப்புதலைச் சாத்தியமாக்கத் தடைகள் இல்லாத கட்டிடங்கள், சாய்வு வழிகள், கைப்பிடிகள், ஊனமுற்றோர் பயன்படுத்தக் கூடிய கழிவறைகள் மற்றும் அவர்கள் சௌகரியமாக பள்ளி செல்ல அவர்களுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 6.8.4. சிறப்பு திறனுடைய குழந்தைகளை உள்ளடக்குதல்: கல்விச் சாதனங்கள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள், அதே போல் போதுமான மற்றும் மொழி சார்ந்த கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள்( உதாரணத்திற்கு பெரிய எழுத்து மற்றும் பிரெய்லி போன்ற அணுகக் கூடிய வடிவங்களில் உள்ள பாடப்புத்தகங்கள்) CWSN களை மேலும் ஒருங்கிணைக்கவும் வகுப்பறையில் எளிதாக ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் ஈடுபாட்டுடன் நடந்துகொள்ளவும் உதவுகின்றன. இந்த நோக்கத்திற்காக உள்ளூர் சூழலில் திறம்படச் செயல்படுவதற்கான ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் சோதனைத் தீர்வுகள் ஆதரிக்கப்படுகின்றன. உபயோககரமான மற்றும் முறையான மதிப்பீடு மற்றும் முறையான கல்வி இடம்பெறுதல் மற்றும் தனித்துவமான கல்விதிட்டம் (IEP) ஆகியவை மேம்பாட்டுக்கான தலையீடுகளின் வேறு சில வழிமுறைகள் ஆகும். 6.8.5. வீட்டிலிருந்து கல்வி பெரும் ஏற்பாடுகள்: பள்ளிகளுக்குச் செல்லமுடியாத கடுமையான மற்றும் ஆழ்ந்த குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளிக் கல்வியைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் நோக்கத்துடன் NIOS களின் மூலமாகவும் வீட்டிலேயே கல்வி பெறவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெற்றோர்கள் மற்றும் கவனிப்பவர்களுக்கு புரிதல் அளிக்கப்பட்டு அவர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் தேவைகளைத் தீவிரமாக ஆதரிக்க உதவும் பொருட்களைப் பரவலாக எடுத்துச் செல்ல முன்னுரிமை வழங்கப்படும். CWSN இன் உள்ளடங்கிய கல்விக்கான திட்டங்கள் CWSNக்கான வளமையங்கள் மற்றும் பங்கேற்க விரும்பும் அரசு சார்பற்ற நிறுவனங்கள்(NGOs) மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும். உள்ளூரில் உள்ள வளமையங்கள் அரசு சாராத நிறுவனங்களுடன்(NGOs) சேர்ந்து உள்ளடங்கிய கல்வி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் சமுதாய அணிதிரள்தல் மற்றும் CWSNகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் அடையாளம் காணுதல் மற்றும் மதிப்பீடு செய்தலுக்கான திட்டங்களை உருவாக்குவார்கள். 6.8.6. காது கேளாத மாணவர்களுக்கு திறந்தவெளிப் பள்ளிக்கல்வி கிடைக்கும் வாய்ப்பு: NIOS உயர்தரத் தொகுதிகளை உருவாக்கி அதன் மூலம் ISL மற்றும் பிற அடிப்படைப் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். 6.8.7. cross disability training பயின்ற சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள்: எல்லா மாணவர்களின் கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ஆசிரியர்களுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு பள்ளி வளாகமும்cross disability பயிற்சி முடித்த சிறப்புக் கல்வியாளர்களை அந்த வளாகத்திற்குள் உள்ள அனைத்து பள்ளிகளுடனும் வேலை செய்வதற்குத் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கலாம். கல்வி வளாக மட்டத்திலுள்ள சிறப்புக் கல்வியாளர்களும் தொகுதி மட்டத்தில் உள்ள வளமையங்களும் ஒருங்கிணைப்புடன் கடுமையான அல்லது பல குறைபாடுகள் கொண்ட மாணவர்களின் மறுவாழ்வு மற்றும் கல்வித் தேவைகளை ஆதரிப்பதோடு அத்தகைய மாணவர்களுக்கான உயர்தரமான கல்வி மற்றும் திறன்களை வீட்டிலேயே பெறுவதற்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு உதவி அளிக்கிறார்கள். 6.8.8. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உதவித்தொகை: பள்ளிக்கல்வியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாகக் கல்வி உதவித்தொகை திறமையான மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக இடைநிலைக் கல்வி மட்டத்தில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களை உயர்நிலைக் கல்வியில் நுழைவதற்கு வழிவகை செய்யும் நோக்கில் தாராளமான முறையில் வழங்கப்படுகிறது. பள்ளித் தொகுதிகளின் மூலம் திறனை செம்மையாக பயன்படுத்துவதோடு மேலும் முறையாக நிர்வகிப்பது நோக்கம்: திறனை பகிர்வதோடு பள்ளிகளை உள்ளூர் அளவில் செம்மையாகவும் முறையாகவும் நிர்வகிக்கும் வகையில் பள்ளிக்கூடங்கள் பள்ளித் தொகுதிகளாக இணைக்கப்படுதல் இந்திய பள்ளி அமைப்பு முறையின் விரிவாக்கத்தில் உருவாகக்கூடிய சாதனைகளும் சவால்களும் சர்வதேச அளவில் தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் உள்ள எண்ணிக்கையை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாலினச் சமன்பாடு எட்டப்பட்டுள்ளது. பெரிதும் நலிவுற்ற குழுவினர் தொடக்கப் பள்ளிகளில் சேர முடிந்துள்ளது. இவை யாவும் பெரிதும் போற்றப்படக்கூடிய சாதனைகளாகும். இதை ஏற்கும் அதே தருணத்தில் இன்னமும் முடிவுறாத பணிகள் இருப்பதையும் அங்கீகரிக்க வேண்டும், இவை யாவுமே தொடக்கப் பள்ளி அமைப்பை விரிவுபடுத்தியதன் மூலம் நிகழ்ந்தவையாகும். குறிப்பாக சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின் வீச்சு மட்டுமின்றி மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளும் நாட்டில் மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடக்கப்பள்ளிகளை உருவாக்கியது. பள்ளி அமைப்பு முறையை விரிவாக்குவது என்ற அடிப்படை கொள்கைக்கேற்ப ஒவ்வொரு வாழ்விடத்திலும் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் ஒரு தொடக்கப் பள்ளி உருவானது அனைவரும் கல்வி பெறத்தக்கதாக இருந்தது, இது ஒருசில முக்கியத்துவம் வாய்ந்த பிர்ச்னைகளுக்கும் சவால்களுக்கும் வழி வகுத்தது. மாவட்ட வாரியாக பள்ளிக் கல்விக்கான 2016-17ம் ஆண்டுக்கான ஒன்றிணைக்கப்பட்ட தரவுகளின்படி இந்தியாவிலுள்ள 28 விழுக்காடு தொடக்கப்பள்ளிகளிலும் 14,8 விழுக்காடு மேல்நிலை தொடக்கப்பள்ளிகளிலும் மாணாக்கர் எண்ணிக்கை என்பது 30க்கும் குறைவாகவே உள்ளது. தொடக்கப் பள்ளி உயர் தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளடங்கிய தொடக்கப் பள்ளிகளில் (அதாவது முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான) ஒவ்வொரு வகுப்புகளிலும் பயிலக்கூடிய மாணாக்கர் சராசரி என்பது கிட்டத்தட்ட 14 என்ற அளவில் உள்ளது, சில கட்டங்களில் இது 6க்கும் குறைவாகவே இருக்கிறது. 2016-17 ல் 119303 ஓராசிரியர் பள்ளிகள் இருந்தன. இதில் பெரும்பாலானவை தொடக்கப்பள்ளிகளே. அவையும் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை போதிக்கக்கூடியவையே. சராம்சம்: பள்ளிகளின் விரிவாக்கத்திற்கான நமது உத்தி பயன்பாட்டை உருவாக்கி விட்டது. ஆயின் இது சின்னஞ்சிறு பள்ளிகளின் விரிவாக்கத்திற்கே வகை செய்தது. அதாவது குறைந்த எண்ணிக்கையிலான மாணாக்கர்களைக் கொண்ட பள்ளிகள். இன்றைய தினம் நமது பள்ளி அமைப்பு முறையின் கட்டமைப்பு, பிரதானமான பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளது. கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் கவனத்தில் கொள்ள வேண்டிய சவால்களும் இதில் அடங்கும். முக்கியத்துவம் வாய்ந்த மூன்று சவால்களைத் தவிர மற்றவை இத்தோடு ஒப்பிடுகையில் சிறியதுதான். முதல் சிறிய பள்ளிகள் பற்றியது. இவை பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாதவை. தவிர ஒரு சிறப்பு வாய்ந்த பள்ளியை நடத்துவதற்கான அனைத்து விதமான ஆதாரங்களையும் ஒதுக்குவதும் பயன்படுத்துவதும் செயல்முறை சிக்கல் வாய்ந்ததாகும். குறிப்பாக ஆசிரியர்களை பயன்படுத்துவதுதையும் சிக்கலான நிலைமையில் உள்ள இயற்பொருள் ஆதாரங்களை பெறுவதையும் இது பாதிக்கிறது. இந்த விவகாரத்தில் உருவாககக்கூடிய மிகவும் மோசமான வெளிப்பாடுகளும் விளைவுகளும் கீழே குறிப்பிடப்படுகிறது. - ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட வகுப்புகளில் போதனை செய்ய வேண்டியுள்ளது, பல்வேறு தருணங்களில் வெவ்வேறுபட்ட வயதுடைய மாணாக்கர் குழுக்களாக ஒன்றிணைந்து கற்பது மிகவும் பயனுள்ளது. இத்தகைய கட்டமைப்பின் நிர்ப்ந்த நிலை பல வகுப்பு போதனை என்பது இயல்பானதாகிவிடுகிறது. இது கல்வியின் தரத்திற்கு பெருங்கேடாய் அமைகிறது. - ஆசிரியர்கள் பல்வேறு பட்ட பாடங்களை போதிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அந்தந்த பாடங்களில் எந்த பின்புலமும் இல்லாத நிலையில் அவற்றை போதிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னை 6 முதல் 8 ம் வகுப்பு வரை மேலும் தீவிரமாக உள்ளது. - பாடங்களைத் தவிர பாடங்களுடன் தொடர்பானது என்று காலங்காலமாய் வரையறை செய்யப்பட்டு வந்த இசை விளையாட்டு ஓவியம் போன்றவற்றையும் அறிந்த ஆசிரியர்களை நியமனம் செய்வது என்பது அரிதாகவே உள்ளது. - பரிசோதனை பயிற்சிக்கான உபகரணங்கள் ஆய்வுக் கூட கருவிகள் நூலகத்திற்கான புத்தகங்கள் போன்ற இயற்பொருள் வளம் என்பது பள்ளிகளுக்கிடையே போதுமானதாக இல்லை. இரண்டாவதாக நிர்வாகம், மேலாண்மை ஆகியவற்றுக்கான ஒரு முழுமையான சவாலை சிறிய பள்ளிக்கூடங்கள் கொண்டுள்ளது. பல்வேறுபட்ட இடங்களில் விரிவடைந்திருப்பது, பள்ளிக்கூடங்களை எளிதில் அணுகமுடியாத சூழல், எண்ணிக்கையில் அதிகமான பள்ளிக்கூடங்கள் இவை யாவுமே அனைத்துப் பள்ளிகளையும் ஒரே தரத்தில் கொண்டு வரும் முயற்சிகளை கடினமாக்குகிறது.மேலும் இது மேம்படுத்துவதற்கான முயற்சிகளில், பள்ளிகளுக்கு தேவையான ஆதாரங்களை அளித்து உதவுவதில், ஒன்றுக்கொன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒட்டுமொத்த கல்வி முறையுடன் தனிப்பட்ட பள்ளியை இணைக்கும் முயற்சிகளில் பெரும் பாதிப்பைக் கொண்டுள்ளது . இத்தகைய சூழல் மிகவும் சிக்கலானது ஏனெனில் பள்ளிகளின் எண்ணிக்கையின் விரிவாக்கத்திற்கு பொருத்தமான வகையில் நிர்வாக கட்டமைப்பு விரிவாக்கப்படவில்லை, மூன்றாவதாக எண்ணிக்கையில் சிறிய அளவில் மாணாக்கர்களையும் குறைந்த அளவில் ஆசிரியர்களையும் கொண்டிருக்கக்கூடிய பள்ளிகள் கல்வி அடிப்படையில் போதுமானதாக இருக்க முடியாது, சிறிய பள்ளிகளை நிர்வகிக்கும் போக்கின் மோசமான விளைவுகளில் இது ஒன்றாகும். இது குறித்து போதுமான கவனம் கொள்ளப்படவில்லை. இது இரு பரிமாணங்களை கொண்டுள்ளது. ஒன்று முழுமையாக கற்பதற்கான சூழல் பற்றியது, குறைந்த பட்சம் ஒரே வயதுடைய மாணாக்கர்கள் பதினைந்து பேராவது இருக்கையில்தான் இணக்கமாக கற்கும் சூழல் உருவாகும். பெரும்பாலான நமது பள்ளிகளில் இந்த எண்ணிக்கை இருப்பதில்லை. இரண்டாவது ஆசிரியர்கள் பொருத்தமாகவும் உயர்நிலையில் போதிப்பதும் குழுவாக இருக்கையில் அமைகிறது. நமது கட்டமைப்புச் சூழல் 80 விழுக்காடு தொடக்கப்பள்ளிகளில் மூன்று அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்களை கொண்டிருப்பதற்கே வழிவகுத்துள்ளது. இத்தகைய சிறிய பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்கள் பிரதான போக்கிலிருந்து தனிமைப்படுவதை மேலும் மோசமாக்குகிறது. மேலும் அவர்களின் தொழில் ரீதியிலான திறன் மேம்பாட்டையும் தடுக்கிறது, பள்ளிகளின் ஒருங்கிணைப்பு என்பது விரும்பி தெரிந்தெடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தாலும் இது பற்றி அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது, இதன் அடிப்படையிலான முயற்சிகள் கிராமப்புறங்களில் கல்வியைப் பெறுவதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தலாகாது. ஒருங்கிணைப்பு என்பது கட்டாயத் தேவையாகும், எனவே அறிவு பூர்வமாக சிந்தித்து இதை மேற்கொள்ள வேண்டும். இது நிறைவேறுகையில் கல்வியைப் பெறுவதில் உண்மையில் தடையேதும் இராது. இதன் விளைவாக உருவாகக்கூடிய ஒருங்கிணைப்பு என்பதும் ஒரு சிறு அளவில்தான் நடைபெறக்கூடும். இது கட்டமைப்பு பிரச்னைக்கு தீர்வைத் தராது, ஆளுகை மற்றும் நிர்வாகத்திற்கு உட்பட்டு அதன் அடிப்படை அலகாக இருக்கும் பள்ளி வளாகங்களுள் பள்ளிகள் அடங்கியிருக்கும் இப்பிரச்னைகளை பள்ளித் தொகுதிகளாக உருவாக்குவதன் மூலம் எதிர்கொள்ள முடியும். பள்ளித் தொகுதி எனும் பெருங்குழுவான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது, இதில் உயர்நிலைப் பள்ளியொன்றுடன் ஐந்து முதல் பத்து மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் இணைக்கப்படும். 1964-66ல் செயல்பட்ட கல்விக் குழுதான் முதலில் இக்கருத்தை வெளியிட்டது. ஆயின் இது அமல்படுத்தப்படாமலேயே இருந்தது. தற்போது பள்ளித் தொகுதிகளின் பயன்பாட்டைக் கருதி நாங்கள் இக்கருத்தை மேலும் விரிவாக்கியுள்ளோம். இதன் நோக்கம் தனிப்பட்ட பள்ளிகளின் முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவைப்படக்கூடியவிதத்தில் துணையாய் நிற்பதும் இதன் மூலம் அவர்கள் தனிமைப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதும் ஆகும். இவையன்றி பல்வகைப்பட்ட நிர்வாக ரீதியிலான ஸ்தாபனம் சார்ந்த அரசு சம்பந்தப்பட்ட மேலாண்மை குறித்த பொறுப்புகளை பள்ளித் தொகுதிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது. எனவே இச்செயல்பாடுகளின் மூலம் கீழ்குறிப்பிட்டவற்றை பள்ளித் தொகுதிகள் எட்ட முடியும் ஆசிரியர்கள் பள்ளித் தலைவர்கள் இவர்களுக்கு துணைநிற்கும் ஊழியர்கள் ஆகியோரின் துடிப்பான குழுக்களை உருவாக்குவது உள்ளுர் அளவில் அனைத்துப் பள்ளிகளின் மட்டத்திலும்,. மழலையர் கல்வி முதல் 12ம் வகுப்பு வரை அனை மாணவர்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பை செம்மையாக்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்களாக விளங்கக்கூடிய நூலகங்கள் அறியல் ஆய்வுக்கூடங்கள் கருவிகள் கணிணி மையங்கள் விளையாட்டு வசதிகள் ஆகியவையன்றி மனித வளஞ்சார்ந்த சமூக ஊழியர்கள் ஆலோசகர்கள் ஆகியோருடன் இசை ஓவியம் மொழிப் பாடங்கள் உடற்பயிற்சிக் கல்வி போன்ற சிறப்புப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போன்றவர்களையும் பள்ளித் தொகுதியின் கீழுள்ள பள்ளிகளுக்கிடையே பகிர்ந்து கொள்தல் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்ட ஆசிரியர் மாணாக்கர் துணை ஊழியர் ஆகியோரின் தொகுதிகளை உருவாக்குவதோடு கருவிகள் கட்டமைப்பு ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றையும் மேம்படுத்த வேண்டும், இதுவே பள்ளிகள் மற்றும் பள்ளி அமைப்பு முறைக்கான மேலும் செயலூக்கம் பொருந்திய தலைமை நிர்வாகம் மேலாண்மை ஆகியவற்றை உருவாக்கிடும். பள்ளித் தொகுதிகளை உருவாக்குவதோடு ஆதார வளங்களை இத்தொகுதிகளுக்கிடையே பகிர்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுவதோடன்றி இதன் தொடர்ச்சியாய் பள்ளித் தொகுதியின் கீழ் விசேட உதவி தேவைப்படக்கூடிய குழந்தைகள் மேலும் கூடுதல் கவனம் பெறுவதும் குறிப்பிட்டதொரு பொருளை பாடத்தை மையமாக கொண்ட குழுக்கள் பாடங்கள் விளையாட்டு ஓவியம் கைத்தொழில் போன்றவை ஊக்கம் பெறுவதும் நிகழும். பிரத்யேகமான ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதால் ஓவியம் இசை மொழி உடற்பயிற்சிக் கல்வி ஆகியவையன்றி இதர பாடங்களும் மேலும் கவனத்தைப் பெற்றிடும். சமூக ஊழியர்கள் ஆலோசகர்கள் பள்ளி நிர்வாக குழுக்கள் ஆகியவற்றை பகிர்வது மாணவர்களின் ஆதரவு பங்கேற்பு வருகை செயல்பாடு போன்றவற்றுக்கு உத்வேகம் அளிக்கிறது. இது உள்ளுர் அளவில் அவரவர் சம்பந்தப்பட்ட மட்டத்தில் நிர்வாகத்தையும் தொடர் கண்காணிப்பையும் புத்தாக்கத்தையும் புது முயற்சிகளையும் மேம்படுத்துகிறது. பள்ளிகள் பள்ளித் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணாக்கர் துணை ஊழியர் பெற்றோர் உள்ளுர் மக்கள் ஆகியோர் அடங்கிய பெரிய தொகுதியை உருவாக்குவது பள்ளி அமைப்பு முறைக்கு உத்வேகம் அளிப்பதோடு திறனை செம்மையான முறையில் பயன்படுத்திடவும் வகைசெய்யும். 7.1 பள்ளித் தொகுதிகள் மூலம் சிறு பள்ளிகளின் ஒதுக்கப்பட்ட நிலையை முடிவுக்கு கொண்டு வருதல் 7.1.1. பொதுப் பள்ளித் தொகுதிகள்: பல்வேறு பொதுப் பள்ளிகள் அமைப்பு மற்றும் நிர்வாக அடிப்படையில் ஒன்றாக இணைக்கப்பட்டு பள்ளித் தொகுதி என்றழைக்கப்படும், இதன்பொருட்டு பள்ளிகளை இட மாற்றம் செய்யத் தேவையில்லை, போதுமான எண்ணிக்கையை கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட பள்ளிகளும் வழக்கமான முறையில் செயல்படும், ஆயின் இவை பள்ளித் தொகுதியின் கீழ் நிர்வாக அடிப்படையில் இணைக்கப்பட்டதொரு பள்ளியாக இருந்து வரும். பள்ளித் தொகுதி என்பது பொதுப் பள்ளி அமைப்பின் கல்விக்கான நிர்வாகத்தின் கீழ் ஒரு அடிப்படை உறுப்பாக மாற்றமடைவதோடு அதற்கேற்ப வளர்ச்சியடையும், சிறிய பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்றைய தினம் மோசமாக தனிமைப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றனர். பள்ளித் தொகுதிகள் இந்நிலையை உடைத்திட பயன்படுத்தப்படும், ஆசிரியர்களும் முதல்வர்களும் அடங்கிய சமுதாயக் குழுவினர் நேருக்கு நேர் சந்திப்பதோடு ஒன்றுபட்டு பணியாற்றுவர், மேலும் பாட போதனை அடிப்படையிலும் நிர்வாக ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பர், ஒவ்வொரு தொகுதியும் ஒரு தனி உறுப்பாக கருதப்படுவதால் போதுமான தன்னாட்சியையும் சுதந்திரத்தையும் கொண்டிருப்பதால் அனைத்து மட்டங்களிலும் உள்ள மாநில அரசின் நிர்வாகிகள் மேலும் செம்மையாக செயலாற்றுவதற்கு பள்ளித் தொகுதிகள் வழிவகுக்கும். இது நேரடி நிர்வாகத்தின் பணிச் சுமையை குறைத்திடும். ஒவ்வொரு தனிப்பட்ட பள்ளிக்கும் ஆதாரங்கள் போதுமான வகையில் அளிக்கப்படும், பள்ளித் தொகுதிகளின் அறிமுகம் என்பது அனைத்து ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ளும் திறன் கொண்டதால் இத்தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளும் தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை பெற்றிட இது வகை செய்யும் பல்வேறு பாடங்கள் மற்றும் வகுப்புகளில் போதனை செய்யும் ஆசிரியர்கள் நூலகங்களுக்கான கூடுதலான புத்தகங்கள் திறன் பெற்ற உபகரங்களைக் கொண்ட ஆய்வுக் கூடங்கள் விளையாட்டு வசதிகள் போன்றவை இப்பகிர்வில் அடங்கும். தாங்கள் பயிலும் பள்ளிக்குள்ளேயே 12ம் வகுப்பு வரை மாணாக்கர்கள் தாங்களுக்கு தேவையான அனைத்து விதமான வாய்ப்பு வசதிகளை பெற முடியும். 7.1.2. பள்ளித் தொகுதிகளின் அமைப்பு முறை: ஒவ்வொரு பள்ளித் தொகுதியும் முழுமையாக அல்லது ஓரளவு தன்னாட்சி பெற்றதாக அமையும். இவை 3முதல் 8 வயதுள்ளோருக்கான அடிப்படைக் கல்வி முதல் 18 வயதுடையோருக்கான 12ம் வகுப்பு வரையிலான கல்வியை வழங்கிடும். இத்தொகுதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை போதிக்கக்கூடிய ஒரு உயர்நிலைப் பள்ளியையும் . சுற்று வட்டாரத்தில் அடிப்படைக் கல்வி முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்கக்கூடிய அனைத்து பொதுப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். பள்ளித் தொகுதியின் கீழ் ஒரு உறுப்பாக கொண்டு வரப்பட்ட பள்ளிகள் யாவுமே ஒன்றுக்கொன்று அருகாமையில் இருப்பதையும் உள்ளுர் மட்டத்தில் இணைந்த குழுவாகவும் இருக்க முடியும் என்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தினால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை போதிக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளி யொன்று பள்ளித் தொகுதியின் கீழ் இல்லாது போனால் தொகுதிக்குள் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில் இவ்வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும். இப்பள்ளித் தொகுதிகள் இவற்றுடன் தொடர்புடைய மழலையர் பள்ளி அங்கன்வாடி விடுமுறைக்கால கல்விப் பயிற்சி முதியோர் கல்வி மையம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாய் இருக்கும். மக்கட் தொகையின் விரிவாக்கம் சாலை இணைப்பு இவையன்றி உள்ளுர் அளவில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகளை இணைத்து பள்ளித் தொகுதிகளாக்குவது என்பது அந்தந்த மாநில அரசுகளை பொறுத்தது, எனவே எண்ணிக்கை மட்டுமின்றி ஒருங்கமைவும் பள்ளித் தொகுதிகளுக்கிடையே மாறுபடும். ஆயின் மாணாக்கர்களும் அவர்களின் பெற்றோரும் எளிதில் அணுகத்தக்கவிதத்தில் இணைப்பு அமைந்திட வேண்டும். மேலும் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உகந்ததாகவும் ஆசிரியர்களுக்கும் முதல்வர்களுக்கும் துணைசெய்ய வல்ல அமைப்பொன்றை கொண்டதாகவும் இருக்க வேண்டும். 7.1.3. பள்ளித் தொகுதியின் தலைமை பள்ளித் தொகுதியின் கீழுள்ள உயர்நிலைப் பள்ளி முதல்வரே இத்தொகுதியின் தலைமை நிர்வாகியாவார். இவர் நிர்வாகம் நிதி மேலாண்மை பாடத்திட்டங்கள் குறித்த அதிகாரங்களை கொண்டிருப்பதோடு இத்தொகுதியின் கீழுள்ள அனைத்துப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கேற்ப இவற்றை பயன்படுத்திடுவதோடு கண்காணித்திடும் பொறுப்பையும் கொண்டுள்ளார். மாவட்ட அளவில் உள்ள அரசின் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளித் தொகுதியின தலைமை நிர்வாகிக்கு உரிய முறையில் நிர்வாக ரீதியாக ஆதரவளிக்க வேண்டும் மேலும் பொது நிர்வாகம் நிதி மேலாண்மை வரவு செலவுக் கணக்கு ஆகியவற்றுக்கு போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளித் தொகுதியின் கீழுள்ள மற்ற பள்ளிகளின் முதல்வர்களும் தலைமை ஆசிரியர்களும் தலைமை நிர்வாகிக்கு கட்டுப்பட்டவர்கள், இவர்கள் குழுவொன்றை உருவாக்கிக் கொள்வர். பள்ளித் தொகுதியின் கீழுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட பள்ளியின் கல்வித் தர மேம்பாட்டிற்கு இக்குழுவே பொறுப்பேற்கும். மேலும் சேர்க்கை அதிகரிப்பு வெளியேறுவோர் எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி அனைத்து மாணாக்கர்களும் 12ம் வகுப்பை முடிப்பதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். 7.2 பள்ளித் தொகுதிகளின் மூலம் மேம்பட்ட திறனைப் பெறுவது நாடெங்கிலும் உள்ள பள்ளிகளை பள்ளித் தொகுதிகளாக ஒன்றிணைப்பது ஆதாரங்களை அனைத்துப் பள்ளிகளும் பகிர்ந்து கொள்ள வகை செய்யும். இதில் சிறப்புப் பாட ஆசிரியர்கள் விளையாட்டு இசை ஓவிய ஆசிரியர்கள் ஆலோசகர்கள் சமூக ஊழியர்கள் போன்றவர்களும். இவையன்றி ஆதாரப் பொருட்களான ஆய்வுக் கூடங்கள் நூலகங்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.தகவல் தொழில் நுட்ப உபகரணங்கள் இசைக் கருவிகள் விளையாட்டுக் கருவிகள் விளையாட்டு மைதானம் போன்ற அனைத்து ஆதாரங்களின் பயன்பாடு மேம்படுவதற்கு பள்ளித் தொகுதிகள் பயன்படுத்தப்படும். இவை அனைத்தும் பள்ளிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுவதால் இன்றைய தினம் பயன்படுத்துவோரைக் காட்டிலும் பெருமளவிலான மாணாக்கருக்கு இவை கிடைத்திடும். 7.2.1. பள்ளிக் கட்டமைப்பு அடிப்படை செயல்பாட்டுக்கேற்ப ஒவ்வொரு தனிப்பட்ட பள்ளிக்கூடமும் போதுமான அளவில் ஆதார வளங்களை பெற்றிடும், தனிப்பட்ட பள்ளிகளுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்க முடியாத வசதிகளையும் கருவிகளையும் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் உயர்நிலைப் பள்ளி அனைவரும் பகிரத் தக்க அளவில் கொண்டிருக்கும். காணொளி காட்சிக் கருவியுடன் கையடக்கமான மின் ஜெனரேட்டரும் பள்ளிகள் தோறும் எடுத்துச் செல்லப்படும். இவ்வாறே உயர்நிலைப் பள்ளியானது சிறப்பான ஆய்வுக் கூடத்தையும் இசைக் கருவிகளையும் விளையாட்டு மைதானங்களையும் விளையாட்டு உபகரணங்களையும் கொண்டிருக்கும். பள்ளித்தொகுதிக்குட்பட்ட மழலையர் பள்ளி தொடக்கப் பள்ளி உயர் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பயில்வோர் இவற்றை வழக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர். உயர்நிலைப் பள்ளியானது சுற்றுக்கு புத்தகங்களை விடக்கூடிய பெரும் நூலகமொன்றை கொண்டிருக்கும். இந்நூலகம் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பி வைத்திடும். பகிரப்படும் அனைத்து ஆதார வளங்களுக்கும் உயர்நிலைப் பள்ளியின் முதல்வரே பொறுப்பானவர் ஆகும், அனைத்தின் அதிக பட்ச பயன்பாட்டை உறுதி செய்பவராக இருக்க வேண்டும். 7.2.2. ஆசிரியர்கள் தொகுதிக்குள் உள்ள பள்ளிகளுக்கிடையே ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பாடத்திட்டத்தின் அடிப்படையில் சில பகுதிகளுக்கு அல்லது பாடங்களுக்கென்று அதுவும் பயில்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு ஆசிரியர் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படுவதில்லை. எனவே ஒட்டு மொத்த தொகுதிக்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் ஆதாரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக மொழிப்பாட ஆசிரியர்கள் விளையாட்டு பயிற்சியாளர்கள் கலை மற்றும் இசை ஆசிரியர்கள் யோகா ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கான மருத்துத் தாதிகள் ஆலோசகர்கள் போன்றோரை உயர்நிலைப் பள்ளியானது நியமனம் செய்து கொண்டு பள்ளித் தொகுதிக்குள் பகிர்ந்து கொள்ள முடியும், பள்ளிகளின் அளவு சிறியதாக இருப்பதனால் விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றாக ஒருவரை நியமிப்பது என்பது கடினமானதாகவே இருந்து வருகிறது. ஓராசிரியர் பள்ளியில் இப்பிரச்னை மிகவும் மோசமாக இருக்கும். ஆசிரியல் விடுப்பில் சென்றால் அங்கே கல்வி போதிப்பது என்பதே நிகழாது. பள்ளித் தொகுதி கோட்பாட்டில் உயர்நிலைப் பள்ளியில் விடுமுறையில் செல்வோருக்கு மாற்றாக ஓரிரு இருப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள முடியும். எங்கு தேவை ஏற்படுகிறதோ அங்கே அவர்களை அனுப்பி வைக்க முடியும். பள்ளித் தொகுதிகள் அதனுள் அடங்கிய அனைத்துப் பள்ளிகளுக்காக பாடத்திட்டத்தின் அனைத்து துறைகளிலும் பிரிவுகளிலும் போதுமான அளவில் ஆசிரியர்களை கொண்டிருக்கும். 7.2.3. சமூக நல ஊழியர்கள் பள்ளித் தொகுதிக்கென்று போதுமான அளவில் சமூக நல ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். மாணவர் எண்ணிக்கை மற்றும் அப்பகுதியில் உள்ள முதியோர் கல்வி பெறக்கூடிய மக்கள் தொகை அடிப்படையில் இது அமைந்திடும். பள்ளித் தொகுதி தன் சேவையை அளிக்கக்கூடிய சமுதாய குழுக்கள் மத்தியில் சமூக நல ஊழியர்கள் தங்கள் சேவையை தீவிரமாக்கிக் கொள்ள வேண்டும். பள்ளிச் சேர்க்கை தொடர்ச்சியான வருகை குழந்தைகள் பள்ளியிலிருந்து நின்றுவிடும் போக்கை நீக்குவது போன்றவைகளுக்காக இவர்கள் பெற்றோருடனும் மாணவர்களுடனும் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். பள்ளியிலிருந்து விலகிய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு இவர்கள் அழைத்து வர வேண்டும். கிராமப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நலிவுற்ற குழுக்களைச் சார்ந்த மாணாக்கர்கள் குறித்து இவர்கள் சிறப்புக் கவனம் கொள்ள வேண்டும். சிறப்பு தேவையைக் கொண்டிருக்கும் சிறார்களை கண்டறிவதிலும் அவர்களை நிர்வகிப்பதிலும் சமூக நல ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு உதவிபுரிய வேண்டும். இதில் அவர்களின் குடும்பத்தாருடனும் சமுதாயக் குழுக்களுடனும் உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதும் அடங்கும். பள்ளித் தொகுதி எப்பகுதியில் சேவையை அளிக்கிறதோ அப்பகுதியில் உள்ள சமுதாயக் குழுக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்க வேண்டும். பள்ளி நிர்வாக குழுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் சமூக நல ஊழியர்கள் உதவி செய்திடுவர், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற் கல்வியை தேர்வு செய்வதில் அவர்கள் குடும்பத்தாருடனும் ஆலோசகர்களுடனும் இணைந்து செயலாற்றுவர். முதியோர் கல்வித் திட்டத்தில் பயன்பெறத்தக்க விதத்தில் பெரியவர்களை இனங்கண்டு அவர்களை சென்று சேர்ப்பதிலும் சமூக நல ஊழியர்களுக்கு பங்கிருக்கிறது. இத்தகைய இலக்குகளை எட்டுவதற்கு அனைத்து விதத்திலும் சமூக நல ஊழியர்களுக்கு பள்ளித் தொகுதி ஆதரவளிக்கும். மாநில அரசின் கல்வித் துறை சுகாதாரம் சட்ட அமலாக்கம் ஆகிய மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து தேவைப்படும் தருணங்களில் சமூக நல ஊழியர்களுக்கு உதவி புரிய வேண்டும். உதாரணமாக நோய் வாய்ப்பட்டு மாணவனின் வருகை பாதிப்படைதல் வாராதிருத்தல் கொடுமைக்கு உள்ளாதல் பாதுகாப்பின்மை போன்றவற்றை குறிப்பிட முடியும். 7.2.4. ஆலோசகர்கள் மாணாக்கரின் பாதுகாப்பு நன்னிலை ஆகியவற்றில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை கொண்டிருக்கின்ற அதே தருணத்தில் ஒவ்வொரு பள்ளித் தொகுதியும் ஒருவரோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆலோசகர்களை கொண்டிருக்கும். துறையை தேர்ந்தெடுத்து வழிகாட்டுதல் முதல் மன நலம் வரையிலான பலதரப்பட்ட அம்சங்களுக்கு ஆலோசனையை பெற முடியும், - ஆலோசனை தேவைப்படக்கூடிய வேறு பல பகுதிகளையும் இனங்காட்டப்படுவதோடு அதற்கேற்ற வழிமுறைகளை உருவாக்க வேண்டும், அதன் பொருட்டு மேற்கொள்ள வேண்டியவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது - தொழிற் கல்வி உள்ளிட்ட இடைநிலைக் கல்வியில் பாடத்திட்டத்தை தேர்வு செய்வதிலும் வாழ்நிலை உருவாக்கத்திற்கு வகை செய்யக்கூடிய மேல் நிலைக் கல்வியில் வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதிலும் ஆலோசனை அளிக்கப்படலாம் - வயதின் அடிப்படையில் வளர் பருவத்திலும் வளர்ச்சி பற்றிய பிரச்னைகளிலும் குறிப்பாக பதின் பருவ காலத்தில் ஆதரவும் ஆலோசனையும் வழங்கலாம். - மனத் தளர்ச்சி மனச் சிதைவு போன்ற மன நலம் சார்ந்த பிரச்னைகளில் ஆதரவும் ஆலோசனையும் அளிப்பது. பள்ளித் தொகுதியின் யதார்த்த நிலைபாட்டுக்கு ஏற்ப ஈடுகொடுக்கும் வகையில் இத்தகைய ஆலோசனைகளும் அதற்காக வழிமுறைகளும் அமைந்திட வேண்டும், இதற்கேற்ப ஒரு சில ஆசிரியர்களுக்கும் சமூக நல ஊழியர்களுக்கும் ஆலோசகர்களாக செயல்படத்தக்க வகையில் பயிற்சி அளித்திடலாம். பள்ளித் தொகுதி ஒன்றுக்காகவோ அல்லது பலவற்றுக்காகவோ முழு நேர ஆலோசகர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்கள் பள்ளிகளுக்கு அவ்வப்போது சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யலாம், ஆலோசகர்கள் மனோ நிலை சிகிச்சை தேவைப்படக்கூடியவர்களை அடையாளங் கண்ட பின் அவர்கள் தொடர் சிகிச்சை பெறுவத்ற்கு ஏற்ப தேவையான ஒத்துழைப்புகளை பள்ளித் தொகுதிகள் கொண்டிருக்க வேண்டும். மாநில அரசின் கல்வித் துறையும் சுகாதாரத் துறையும் இதை சாத்தியமாக்கும் வகையில் ஒன்றிணைப்பை கொண்டிருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் அனைத்து விதமான கற்றல் வளங்களும் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் - உள்கட்டமைப்பு, கல்விசார் பொருட்கள் (எகா: நூலகம்) மற்றும் நபர்கள் (எ.கா கலை மற்றும் இசைப்பயிற்சி ஆசிரியர்கள்) போன்றவை. 7.2.5. நிறுவனத்தின் வாய்ப்பு வசதிகளை முழுமையான அளவில் பயன்படுத்திக் கொள்தல் கல்வி நிறுவனங்களின் பொருள் சார்ந்த கட்டமைப்பு என்பது பெருமளவிலான முதலீடுகள் தேவைப்படக்கூடியதொன்றாகும். எனவே இவற்றை முழுமையான அளவில் பயன்படுத்திக் கொள்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிர்வாக ரீதியல் பொருத்தமான ஏற்பாடுகளை செய்து கொண்டு ஒவ்வொரு நாளிலும் அதிக நேரமும் ஓராண்டில் அனைத்து தினங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு பள்ளித் தொகுதிக்கும் நிர்வாக அடிப்படையிலான திட்டமொன்றை உடனடியாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தை பள்ளித் தொகுதியின் வளர்ச்சித் திட்டத்தோடு இணைக்க வேண்டும். தொழிற் கல்வியும் முதியோர் கல்வியும் பள்ளித் தொகுதியின் நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டுவரப்படுவதால் பள்ளி வேலை நேரத்திற்கு அப்பால் பொருள் சார்ந்த கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்வது என்பது சாத்தியமே. ஆசிரியர்களும் மாணாக்கரும் வழக்கமான முறையிலேயே தங்களுக்கு ஏற்ற வேலை நேரத்தையும் ஓய்வையும் கொண்டிருப்பர். இருப்பினும் நூலகங்கள் ஆய்வுக் கூடங்கள் பயிற்சிக் கூடங்கள் கைத்தொழில் கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும், இவற்றை பயன்படுத்திக் கொண்டு கற்பதில் ஆர்வமுடையோர் எவரேனுமிருப்பின் அவர் கூடுதலாக இல்லையென்றாலும் நாள்தோறும் எட்டு மணிநேரமாவது இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.தேவைப்படுமாயின் வகுப்பறைகளைக் கூட பள்ளி நேரத்திற்குப் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம், சமுதாயப் பணிகள் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு முதியோர் கல்வி கெட்டிக்கார மாணவர்களை ஊக்கப்படுத்திடும் பயிற்சிகள் விசேட உதவி தேவைப்படக்கூடிய மாணவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக இந்த கட்டமைப்பபு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் விசேட விடுமுறைக்கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யலாம். கட்டமைப்பை தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் உருவாகும் உற்சாகமான சூழலில் ஆசிரியர்கள் மாணாக்கர் உள்ளூர் சமூகத்தினர் ஆகியோர்ஆண்டு முழுமையும் முழுமையான அளவில் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திட பல்வேறு வழிமுறைகளை கண்டறிவர். 7.3 பள்ளித் தொகுதியின் மூலம் ஒருங்கிணைந்த கல்வியை பேணிப் பாதுகாத்தல் பள்ளித் தொகுதி குறித்து 1964-66ம் வருஷத்திய கல்விக்குழுவின் வரையறை என்பது பொதுப்படையானது, இன்றைய தேவையின் அடிப்படையில் அதை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். சிறிய பள்ளிகள் ஒதுக்கப்படும் நிலை முடிவுக்கு கொண்டு வந்து கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்ற துவக்க கட்ட இலட்சியத்தை தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. கல்விக்கான வசதிகளை ஒன்றிணைந்த வகையில் உருவாக்குவதே இலட்சியமாகும். இதில் மழலையர் பள்ளி அங்கன்வாடிக்கள் தொழிற்கல்வி முதியோல் கல்வி ஆகியவற்றுக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய அமைப்புகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவை உள்ளுர் அளவில் ஒன்றிணைந்து செயல்படுவதோடு ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்குள் தங்கள் பணிகளில் ஒத்துழைக்கவும் முடியும். இத்தகைய பள்ளித் தொகுதி பொதுப் பள்ளி அமைப்பின் கீழ் அடிப்படை நிர்வாகப் பிரிவாக மாற்றமடையும். 7.3.1. மழலையர் நலனையும் கல்வியையும் ஒருங்கிணைப்பது பள்ளித் தொகுதிகள் மூலம் மழலையர் நலனுக்கும் கல்விக்கும் போதுமான அளவில் கவனம் செலுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்பட்டு வருவதோடு குழந்தைகள் நலன் மற்றும் கல்வியையும் போதிப்பதில் கவனம் செலுத்தக்கூடிய பள்ளித் தொகுதிக்கு கல்வி அடிப்படையிலும் ஆதார சக்திகளின் மூலமாகவும் நிர்வாக ரீதியில் ஆதரிப்பதால் இவற்றை நிறைவேற்ற முடியும், தொடக்கப்பள்ளிக்கு முந்திய மழலையர் வகுப்புகளை ஏற்கனவே கொண்டிருக்கக்கூடிய அல்லது புதியதாக துவக்கவிருக்கும் பள்ளிகள் இந்த வகுப்புகளை பள்ளித் தொகுதி அமைப்பின் கீழ் முழுமையாக இணைக்க முடியும். சுற்று வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு பள்ளித் தொகுதி குறிப்பிடத்தக்க வகையில் தனிப்பட்ட முறையில் உதவிகரமாக இருக்கும். இயலுமாயின் பள்ளியொன்றின் வளாகத்திற்குள் அங்கன்வாடிக்களை இட மாற்றம் செய்வதும் இதில் அடங்கும். இந்த மாற்றம் அங்கன்வாடிக்களை அணுகுவதில் தாக்கத்தை விளைவிக்காத வண்ணம் அதே தருணத்தில் கட்டமைப்பை பெருமளவில் மேம்படுத்துவதாகவும் அமைந்திட வேண்டும். ஆதார வளங்கள் சமூக நலக ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரை பகிர்ந்து கொள்வதும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அங்கன்வாடி ஊழியர்களை திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவம் இதில் அடங்கும்.இவை நிறைவேறுவதற்கு வெவ்வேறுபட்ட அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியமானது என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் பெண்கள் மற்று குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையிலே ஆக்கபூர்வமான இடையுறவை ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவு இத்துடன் இணைந்து பணியாற்றுவதோடு இத்தகைய திட்டங்களுக்கான ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் நல்கிடும். 7.3.2. முதியோர் கல்வியைம் தொழிற்கல்வியையும் ஒருங்கிணைத்தல் தொழிற் பள்ளிகள் பாலிடெக்னிக்கள் தொழில் சேவைப் பிரிவு விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளுர் வர்த்தகம் சுகாதார மையங்கள் மருத்துவ மனைகள் கலைஞர்கள் கைவினைஞர்கள் உள்ளுர் மரபு சார்ந்த கைத் தொழில் விற்பன்னர்கள் ஆகிய பிரிவினருடன் பள்ளித்தொகுதிகள் ஒன்றிணைப்பை உருவாக்கி இதன் மூலம் பல்வேறு விதமான தொழிற் பிரிவுகளை அளிக்கவும் முடியும். கற்றறிவதில் தொழிற் கல்விக்கு பெரியதொரு பங்கிருப்பதால் பள்ளித் தொகுதியில் மாணாக்கர்கள் இத்தகைய கல்வி பெறுவதில் முழுப் பொறுப்பை ஏற்பதோடு பள்ளியில் கற்கும் அதே நேரத்திலேயே பயிற்சியை தொடர்ச்சியாகவும் பள்ளிக் கல்வி நிறைவுபெறும் வரை இதனை தொடர்ந்திடவும் உறுதி செய்ய வேண்டும். முதியோர் கல்விக்கான கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட பள்ளித் தொகுதியில் இணைத்திருப்பதன் மூலம் இத்தொகுதியின் கீழ்வரக்கூடிய சுற்று வட்டாரத்திலுள்ள அனைவருக்கும் முதியோர் கல்வி பெறத்தக்கதாகவே இருக்கும். 7.3.3. விசேட உதவி தேவைப்படக்கூடிய குழந்தைகள் ஒவ்வொ பள்ளித் தொகுதியிலும் விசேட உதவி தேவைப்படக்கூடிய குழந்தைகளுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் விதத்தில் தேவைக்கேற்ப பள்ளித் தொகுதிக்குள்ளேயே கட்டமைப்பை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவைப்படக்கூடிய உதவி எவ்வகையில் இருப்பினும் அப்பள்ளித் தொகுதியின் கீழ் இருக்கிற ஏதேனும் ஒரு பள்ளியில் அக்குழந்தை கல்வி பெற்றிட வேண்டும். மேலும் தேவைப்பட்டால் போக்குவரத்து வசதிகளையும் செய்து தரவ வேண்டும்.பல்வேறுபட்ட உதவிகள் தேவைப்படக்கூடிய குழந்தைகளை இனங்காணத்தக்கவகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும்.இத்தகைய குழந்தையை இனங்கண்டபின்னர் ஏற்கனவே பள்ளிச் சமூகத்துடன் அக்குழந்தையை இணைத்திடும் திறனை கொண்டிராவிடில் பள்ளிச் சமூகத்துடன் அக்குழந்தையை இணைத்திடும் வகையில் பள்ளித் தொகுதிகளுக்கு விசேட நிதி உதவி அளிக்கப்படுவதோடு அவர்களுக்கு தேவைப்படக்கூடிய உதவியையும் அளித்திடும். மறுவாழ்வுக்கான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒரு விசேட நிதித் திட்டம் உருவாக்கப்படும். 7.3.4. உயர் கல்வி அமைப்புகளின் பங்கு பள்ளிகளின் சுற்று வட்டாரத்திலுள்ள பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் பாலிடெக்னிக்கள் ஆகியவை தங்களது ஆற்றலை பயன்படுத்தி பள்ளிகளின் திறனை மேம்படுத்திட முயற்சிகளை மேற்கொள்ளும். உயர்நிலைப் பள்ளிகளுக்கு பாட அடிப்படையில் மட்டுமின்றி ஆய்வுக் கூடங்கள் புத்தகங்கள் விளையாட்டு மைதானங்கள் போனற் பருப்பொருள் ஆதாரங்களை அளிப்பதன் மூலம் அவை மேலும் பயனடையும்.தொழிற் பாடங்களை பயிற்றுவிப்பதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை பள்ளிகள் பெறுவதும் சாத்தியமாகும். இதில் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்குகளிலும் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்வதும் அடங்கும். ஒவ்வொரு கல்லூரியும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஓரிரு பள்ளிகளுடன் இணைந்திருப்பதோடு அவற்றுக்கு தேவையான உதவிகளையும் அளித்திடும். உள்ளுர் அளவில் உள்ள பள்ளிகள் மற்றும் பள்ளித் தொகுதிகளில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட திறமைக்கும் விருப்பிற்கும் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் ஆதரவளித்திடும்.உயர்கல்வி அமைப்புகள் வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக பள்ளிக் கல்வி மற்றும் முதியோர் கல்வியை உள்ளடக்கிய சமுதாயப் பணிகளை இணைக்கும் போது இத்தகைய சாத்தியப்பாடுகள் உருவாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன உயர் கல்வித் திட்டத்தை வழங்கக்கூடிய உயர் கல்வி அமைப்பொன்று இருக்கும். அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளி அமைப்பு மேம்படும் வகையில் உயர் கல்வி அமைப்பானது குறிப்பிடத்தக்க விதத்தில் பங்காற்றும். உதாரணமாக ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவித்து உள்ளுர் அளவில் தொழிற் பயிற்சி மேம்பட அது உதவிகரமாக இருக்கும். மாவட்டத்திலுள்ள உயர்கல்வி அமைப்புகள் மாவட்டக் கல்வி அலுவலர்களுடனும் வட்டார கல்வி அலுவலர்களுடனும் இணைந்து பள்ளிகளை ஊக்குவிக்கும் தங்களின் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் பணியாற்றுவர்.உள்ளுர் அளவில் பள்ளி அமைப்பிற்கு ஊக்கமளிப்பது என்பது அனைத்து உயர் கல்வி அமைப்பிற்கும் வழங்கப்பட்ட கட்டளைகளில் ஒன்றாகும். 7.4 பள்ளித் தொகுதிகள் மூலம் ஆசிரியர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பது 80 முதல் 100 வரையிலான ஆசிரியர்களைக் கொண்டதாக பள்ளித் தொகுதிகள் உருவாக்கப்படும். இதன் மூலம் வலுவான ஆசிரிய சமூகக் குழுக்கள் அமைந்திடும். இத்தகைய குழுக்கள் பல்வேறு குழுக்களுடன் இணைந்து பணியாற்றும். இக்குழுக்கள் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பதோடு பள்ளியின் திறனை மேம்படுத்துவதோடு தங்களின் செயலாற்றலையும் மேம்படுத்திக் கொள்ளும். பள்ளித் தொகுதிக்கென்று ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதால் அவர்கள் தாங்கள் பணியாற்றும் சமூகத்துடன் நீடித்த உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இக்குழுவிற்குள் இருக்கக்கூடிய பல்வேறு ஆசிரியர்களைக் கொண்டு புதிய ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நடவடிக்கைகளை பள்ளித் தொகுதிகள் மேற்கொள்வதோடு போதனை முறையையும் உருவாக்கும். 7.4.1. ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் பள்ளித் தொகுதியில் முக்கியமான பொறுப்புகளில் தொடர்ச்சியான திறன் மேம்பாடும் அடங்கும். இதன் பொருட்டு மேம்பாட்டிற்காக பன்னோக்கு அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டமொன்று உருவாக்கப்படும். பள்ளித் தொகுதியின் கீழுள்ள அனைத்து ஆசிரியர்களும் கற்பதற்கான வாய்ப்புகளில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொண்டு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு சமூகக் குழுவாக மேம்படுத்திக் கொள்வர். இவை சமூக ஆதரவு பெற்ற பங்கேற்கும் குழுக்களாக விளங்கும். கற்பதோடு பண்பாட்டியலை ஊக்குவிப்பதாயும் இயங்கும். கற்பதற்கான இத்தகைய குழுக்களின் வளர்ச்சிக்கு பள்ளித் தலைமை மற்றும் இதர சக்திகளின் தொடர்சியான பணி அவசியமாகும். பாடத் திட்டங்களையும் பாட நூல்களையும் வடிவமைப்போர் கற்பதற்கான குழுக்கள் தீவிரமாக செயல்படுவதோடு மேம்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற விசேஷதிட்டங்களை வகுக்க வேண்டும். இக்குழுக்களின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கு உதவி அளித்திடுவதோடு பங்களிப்பினை கொள்வதற்கும் சமுதாய குழுக்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.இவையன்றி இக்குழுக்கள் தங்களுக்கு ஏற்ற செயல்பாட்டு முறையில் வாராந்திரக் கூட்டங்கள் ஆசிரியர்கள் கற்பதற்கான மையங்கள் போன்றவற்றை பள்ளித் தொகுதியின் கீழ் உருவாக்கிக் கொள்ள வேண்டும் மேலும் கருத்தரங்குகள் வகுப்பறை கண்காணிப்பு கற்றறிவதற்காக வருகையை மேற்கொள்வது போன்ற மற்ற வாய்ப்புகளையும் தொடர் திறன் மேம்பாட்டு நடவடிக்கையாக கொண்டிருக்கும். ஆசிரியர்களின் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு பள்ளி வளாகத்திற்குள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக ஒரு விரிவான ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும், இதில் பல வளர்ச்சி முறைகள் அடங்கியிருக்கும். 7.4.2. ஆசிரியர்களுக்கு உதவிகரமான அமைப்பு முறைக்கு ஆதரவளிப்பது பள்ளித் தொகுதி அமைப்பிற்குள் கல்வியாளர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய அமைப்பு முறை அதன் அமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்திட மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் உள்ள பல்வேறு கல்விக் குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளித் தொகுதியின் கீழ் புவியியல் அடிப்படையில் கற்பதற்கான உரிமை அமைப்பை ஒருங்கிணைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கும், இதன் மூலம் அவ்வமைப்பின் ஈடுபாடு மிக்க ஆதார வளங்கள் பள்ளித் தொகுதிக்கு கிடைத்திடும். பள்ளித் தொகுதிக்குள் ஆசிரியர் கற்பதற்கான மையங்களை கற்பதற்கான உரிமை அமைப்பே மேம்படுத்தும். இம்மையங்கள் புத்தகங்கள் சஞ்சிகைகள் பரிசோதனைத் தொகுதிகள் இணையம் வழித் தகல்வகள் ஆகியவற்றை கொண்டிருக்கும். பள்ளித் தொகுதிக்கு ஈடு கொடுக்கும் வகையில் குறிப்பாக ஆசிரியர் திறன் மேம்படுவதில் மாவட்ட வட்டார அளவில் உள்ள அரசின் கல்வி சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். மேலும் ஆசிரியர்களின் சமூக குழுக்களின் வளர்ச்சியில் பங்கினை கொண்டிருக்க வேண்டும். பள்ளித் தொகுதியின் வளர்ச்சித் திட்டத்தின் தேவையை முழுமையாக நிறைவேற்றத்தக்க வகையில் அரசு அமைப்புகளின் செயல்பாடு அமைய வேண்டும். மேலும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டு திட்டமும் இதில் உள்ளடங்கும். இந்த அமைப்புகளின் குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியையும் இது கொண்டிருக்கும். பள்ளித் தொகுதி மாநில அரசின் மாவட்ட வட்டார கல்வித் துறை சார்ந்த் அமைப்புகள் ஆகியவை ஆசிரியர் திறன் மேம்பாட்டிற்காகவும் கல்வியாளர்களின் ஒத்துழைப்புயும் ஆலோசனையைம் பெற்றிடுவதற்கு தங்களின் சொந்த திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாநில அரசின் அமைப்புகள் நிச்சயம் துணை நிற்கும். இவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநில அரசும் திட்டமொன்றை உருவாக்கிட வேண்டும். இதற்கு அந்தந்த மாநில அரசின் கல்விக்கான ஆய்வு மற்றும் பயிற்சிக்கான அமைப்பு துணை புரியும். 7.5 பள்ளித் தொகுதிகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தனிப்பட்ட பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் பணிகளை உருவாக்கப்படும் பள்ளித் தொகுதிகள் மேற்கொள்ளும். இதற்கேற்ப தொடர்புகளையும் ஆதார ங்களையும் அளிக்கும் வகையில் இது அமையும். அரசுடன் ஒரு முகமாய் தொடர்பு கொள்ளும் வழி முறையை இது உருவாக்கும். அரசு நிர்வாக அமைப்பின் கீழுள்ள மாவட்ட வட்டார கல்வி அலுவலர்களைத்தவிர கல்விப் பணிகளுக்கு ஆதரவளித்திடும் அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு ஒவ்வொரு தனிப்பட்ட அமைப்பின் சார்பில் பள்ளித் தொகுதியுடன் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டு பொருத்தமான வகையில் உதவி நல்கிடும், 7.5.1. பள்ளிகளை பள்ளித் தொகுதியாக்குவது மக்கள் தொகை விரிவு இணைப்பு வழிகள் உள்ளுர் அளவில் ஏற்கத்தக்க அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு பள்ளிகளை ஒருங்கிணைந்து பள்ளித் தொகுதிகளை உருவாக்குகின்றன. பள்ளித் தொகுதியின் அளவும் அதில் இணைந்திருக்கக்கூடிய பள்ளிகளின் தன்மையும் வேறுபட்டிருப்பினும் இந்த ஒருங்கிணைப்பு மாணவர்களும் பெற்றோர்களும் எளிதில் அணுகத்தக்க வகையிலும் சிக்கலற்ற நிர்வாகத்தையும் கொண்டிருக்கவும் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு துணை நிற்கக்கூடிய அமைப்பொன்றின் உருவாக்கத்திற்கும் உத்தரவாதமளிக்கக்கூடியதாக இருக்கும். 20க்கும் குறைவான மாணவர் சேர்க்கையை கொண்டிருக்கக்கூடிய அதே நேரத்தில் தனித்த செயல்பாட்டிற்கு சாத்தியப்பாடில்லாத பள்ளிகளின் ஒருங்கிணைப்பையும் பரிசீலனையையும் இக்குழுவின் நடவடிக்கை கொண்டுள்ளது. இவ்வழி முறைகள் மாணாக்கர் பள்ளிக்கு வருவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாகாது. மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பத்திரமாக சென்று சேரத்தக்க விதத்தில் சைக்கிள் பஸ் போன்ற ஏனைய வழிமுறைகளுக்கு பள்ளித் தொகுதிகள் ஏற்பாடு செய்து தரவேண்டும். 2023க்குள் மாநில அரசுகள் பள்ளிகளை பள்ளித் தொகுதிகளாக மாற்றும் ஏற்பாட்டை நிறைவு செய்திடலாம்.பள்ளித் தொகுதிகள் எந்த உத்வேகத்தில் உருவாகிறதோ அதற்கேற்ற வழியில் உருப்பெற்றிட ஏற்ற திட்டமிடலையும் தயாரிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.மேம்பட்ட கல்வியை வழங்குவதற்கான வழி முறையாக இது உருப்பெறுவதை அனைத்து பயனாளிகளுக்கும் ஆசிரியர்களளும் முதல்வர்களும் தெரிவிக்க வேண்டும். 7.5.2. பள்ளித் தொகுதிகள் மூலம் பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி பராமரிப்புக்கு உத்தரவாதமளிப்பது பள்ளிகளை பள்ளித் தொகுதிகளாக மாற்றும் நடவடிக்கையை அனைத்துப் பள்ளிகள் கட்டமைப்பு நிலையை மதிப்பீடு செய்யும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.மேலும் அவற்றை மேம்படுத்திட தேவையான விதத்தில் ஒரே சமயத்தில் நிதி ஒதுக்கீ டு செய்ய முடியும்.போதுமான வகுப்பறைகள் கழிப்பறைகள் குடிநீர் மின்சாரம் இவையன்றி பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுச் சுவர் இதர முக்கியத்துவம் வாய்ந்த வசதிகள் கல்விக்கான ஆதரவு சக்திகள் ஆகியவை இனங்கண்டறியப்படுவதோடு இவற்றில் ஏதேனும் இல்லாதிருப்பின் அது குறிப்பிடப்பட்டு அவற்றை பெற்றுத் தர துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் தொடர்ச்சியாக பள்ளிக்ள் நல்ல நிலையில் தங்கள் கட்டமைப்பை பராமரித்துக் கொள்வதற்கேற்ப அன்றாட அடிப்படையில் மாவட்ட கல்வித் துறை பள்ளித் தொகுதிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 7.5.3. பள்ளித் தொகுதி நிர்வாகக் குழு ஒவ்வொரு பள்ளித் தொகுதியும் நிர்வாகக் குழுவொன்றை கொண்டிருக்கும். இதில் பள்ளித் தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர். இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இப்பள்ளித் தொகுதிக்குட்பட்ட உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரும் இதற்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் முதல்வர்களும் இருப்பதோடு ஒரு ஆசிரியரும் ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவின் சார்பில் சமூகஞ் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் செயல்படுவர். மேலும் பள்ளித் தொகுதியுடன் இணைக்கப்பட்ட அரசு துறை சார்ந்த வேறு அமைப்புகளின் உறுப்பினர்களும் கல்விப் பணிக்கு உறுதுணையாய் இருக்கக்கூடிய கல்விக்கான உரிமை அமைப்பின் உறுப்பினர்களும் செயல்படுவர். பள்ளித் தொகுதிக்குட்ட அனைத்துப் பள்ளிகளின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்துவதே இந்த நிர்வாகக் குழுவிற்கு ஒதுக்கப்பட்ட கடமையாகும். இதன் பொருட்டு இக்குழு வழிகாட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்ற நேரத்தில் குறிப்பாக பெற்றோர் சமூகக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஏற்ற நேரத்தில் மாதத்தில் ஒரு முறையாவது கூட வேண்டும்.பள்ளித் தொகுதிக்குட்பட்ட தனிப்பட்ட பள்ளிகளுக்காகவும் ஒட்டு மொத்த பள்ளிகளுக்காகவும் வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி அவற்றை விவாதிக்க வேண்டும். இவை குறித்து தங்களின் சொந்த முயற்சியின் பேரில் கண் காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பள்ளித் தொகுதியின் நிர்வாகக் குழுவில் நிர்வாக குழு உறுப்பினர்களால் எழுப்பப்ட்ட பிரச்னைகள் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் புகார்கள் ஆகியவை குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். பள்ளித் தொகுதி நிர்வாகக் குழு தொழிற் கல்வியை இணைப்பது பற்றிய தொலைநோக்கு திட்டம் ஆசிரியர்கள் மத்தியில் திறன் மேம்பாட்டுக் குழுக்களை மேம்படுத்துவது போன்ற இதர குறிப்பிடத்தக்க அம்சங்களை பரிசீலனை செய்தி சிறிய குழுக்களை அமைத்திடலாம். 7.5.4. பள்ளித்தொகுதிகளை நிர்வகிப்பது நாட்டிலுள்ள பள்ளிகளில் ஒரு சிறு விழுக்காடு மட்டு துணை நிலை ஊழியர்களை கொண்டுள்ளது, இதன் விளைவாக ஆசிரியர்களே பொதுவாக மதிய உணவுத் திட்டம் முதல் பள்ளித் தேவையை பெற்று வருவது வரையிலான அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பானவர்களாக இருக்கின்றனர். பள்ளித் தொகுதிகளின் உருவாக்கத்திற்குப் பின்னர் இது மாறிடும். பள்ளித் தொகுதிக்கு தேவையான துணை ஊழியர்களை மாவட்ட அளவில் உள்ள கல்வித் துறையினர் நியமனம் செய்திடுவர். இதன் மூலம் பள்ளித் தொகுதியின் செயல்பாடு சீரானதாக அமையும். இதில் ஊழியர் ஒரு வரவு செலவு கணக்குகளை கையாளுவது பொது நிர்வாகம் போன்றவையும் சுத்தம் செய்தல் கட்டமைப்பை பராமரித்தல் போன்றவற்றுக்கான ஏற்பாடும் அடங்கும். போதுமான அளவில் ஆசிரியர்கள் சமூக நல ஊழியர்கள் ஆலோசகர்கள் ஆகியோருடன் கூடுதலாக ஊழியர்களும் பணியாற்றுவர், ஊழியர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பள்ளித் தொகுதியின் கீழுள்ள பல பள்ளிகளில் பணியாற்ற வேண்டியிருக்கும். அத்தருணங்களில் பள்ளித் தொகுதியின் தலைமை நிர்வாகி அவர்களுக்கு போக்குவரத்து வழிமுறைகளை உருவாக்குவார். அல்லது அதற்கான ஈட்டுப்படியை வழங்கிடுவார். 7.6. பயன்கொள்ளத்தக்க வகையில் பள்ளித் தொகுதிகளின் மூலம் நிர்வகித்தல் பள்ளித் தொகுதியை அறிமுகம் செய்ததன் மூலம் பள்ளிக் கல்வி முறையை நிர்வகிப்பதில் இரண்டு முக்கிகயமான சாதகமான அம்சங்கள் வெளிப்பட்டுள்ளது. முடிவுகளை எடுப்பது கீழிருந்து துவங்குவது என்பது முதலாவதாகும். பள்ளித் தொகுதியில் இருக்கக்கூடிய முதல்வர்கள் ஆசிரியர்கள் இதர பொறுப்பாளர்கள் மேம்பட்ட கற்பித்தலை நோக்கிய முக்கியமான முடிவுகளை மேற்கொள்வதில் மற்றவர்களைக் காட்டிலும் நேரடியான பங்கினை கொண்டிருப்பதால் இப்பிரச்னையை சரியாக கையாள முடியும். இரண்டாவது மாநில அரசின் பங்கு மற்றும் பொறுப்பு பற்றியதாகும். மாவட்டஅதிகாரிகள் இந்த பள்ளித் தொகுதிகளை ஓரளவு தன்னாட்சி பெற்ற உறுப்பாக நடத்த வேண்டியுள்ளதால் சாதாரண முறையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இறுதி முடிவு எடுப்பதை அவர்களிடமே விட்டு விட வேண்டும். பள்ளியின் தரம் பற்றி கவனம் செலுத்தத்தக்க விரிந்த பணிகளையும் பள்ளித் தொகுதியிடம் அளித்திட வேண்டும். நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட அளவில் மாவட்ட கல்விக் குழுக்களை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். இது பள்ளித் தொகுதிக்கும் மாவட்ட கல்வி அமைப்பிற்கும் இடைப்பட்டதொரு அமைப்பாகும். இது உள்ளுர் மாவட்ட அளவ்ல முடிவுகளை மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகிகளுக்கு துணை நிற்கும். 7.6.1. பள்ளித் தொகுதிகளின் மூலம் மேம்பட்ட வழியில் நிர்வகித்தல் மாவட்ட கல்வி அலுவர் பள்ளித் தொகுதிக்கு அதிகாரத்தை வழங்குகிறார், மேலும் ஒவ்வொரு பள்ளித் தொகுதியும் ஓரளவு தன்னாட்சி பெற்றதாக விளங்கும். பள்ளித் தொகுதியை தனி உறுப்பாக கருதி மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் தங்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டு பணியாற்றுவர். பள்ளித் தொகுதியின் கீழ் ஒரு சில அதிகாரம் பரவலாக்கப்படும். மாவட்ட கல்வி அலுவலர்கள் அல்லது கண் காணிப்பு அலுவலர்கள் மேற்கொண்ட பணிகளை தனிப்பட்ட பள்ளிகளில் உள்ளவர்கள் கையாளும் வகையில் அதிகாரம் பிரித்து வழங்கப்படும். மாவட்டக் கல்வி அலுவலரால் பள்ளித் தொகுதிக்கு குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றிணைக்கப்பட்ட கல்வி பயிற்று முறை பள்ளிகளில் புதிய முயற்சிகள் பாடத்திட்டம் போன்றவற்றில் தன்னாட்சி வழங்கப்படும். இது தேசிய மற்றும் மாநில பாடத்திட்ட வரையறையினை பின்பற்றுவதாக இருக்க வேண்டும். இந்த அமைப்பின் கீழ் பள்ளிகள் வலுப்பெற்றிடும். கூடுதலான சுதந்திரத்தைப் பெற்றிடும். இவை பள்ளித் தொகுதி மேலும் நவீனத்துவம் கொண்டதாய் ஏற்றம் பெற்றதாய் மாறிட வகை செய்யும். ஒட்டுமொத்த கல்வி முறையை மேம்படுத்திடுவதன் மூலம் மாவட்ட அலுவலர்கள் இலக்கை எட்டுவதற்கான நோக்கிற்கு முக்கியத்துவம் அளித்திடுவர். 7.6.2. திட்டமிடுதல் பற்றிய கருத்தோட்டத்தை உருவாக்குவதல் குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கான ஒரு திட்ட அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் வழிமுறைகளை கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரிடத்தும் வளர்த்திட வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவின் பங்கெடுப்பில் பள்ளிகள் தங்களுக்குள் பள்ளிக்கான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கிக் கொள்ளும். பின்னர் இத்திட்டமே பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டத்தினை உருவாக்கிட ஆதாரமாக அமைந்திடும். பள்ளித் தொகுதியுடன் தொடர்புடைய தொழிற்பயிற்சி அமைப்பு போன்ற வேறு பல அமைப்புகளின் திட்டங்களையும் பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டம் கொண்டிருக்கும். பள்ளித் தொகுதியின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப்படும் இத்திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுவும் தன் பங்களிப்பை கொண்டிருக்கும். மனித ஆற்றல் கற்பதற்கான ஆதார வளங்கள் பருப்பொருள் ஆதாரங்கள் கட்டமைப்பு செயல்பாட்டு ஆற்றல் நிதி ஆதாரம் கல்வியின் பயன்பாடு ஆகியவற்றை இத்திட்டங்கள் கொண்டிருக்கும். பள்ளிகளில் கற்பது மேம்பட முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்டம் என்பதும் மேம்படுதலுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும். மேலும் கற்பித்தல் பற்றிய அணுகுமுறையைம் பள்ளி நெறிமுறைகளில் தேவைப்படக்கூடிய மாற்றமும் இதில் உள்ளடங்கும். மேலும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டமும் இதில் அடங்கும். உத்வேகம் பெற்று கற்கக்கூடிய சமூகத்தை மேம்படுத்திட பள்ளித் தொகுதிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் தூண்டுதலை இத்திட்டம் விவரிக்கும். மாவட்ட கல்வி அலுவர் உள்ளிட்ட பள்ளிக்கு பொறுப்பான அனைவரையும் ஒன்றிணைத்திட அடிப்படையான செயல்முறைகளை கொண்டதாக பள்ளி வளர்ச்சித் திட்டமும் பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டமும் விளங்கும். இது சீரான செயல்பாட்டை உறுதி செய்வதாகவும் இருக்கும். பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கக்கூடியதாக பள்ளி வளர்ச்சித் திட்டமும் பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டமும் இருக்கும். பள்ளி நிர்வாகக் குழுவும் பள்ளித் தொகுதிக்கான நிர்வாகக் குழுவும் பள்ளி வளர்ச்சித் திட்டத்தையும் பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டத்தையும் பள்ளிகளின் செயல்பாட்டு வழிகாட்டியாக கொள்ளும். இத்திட்டங்களின் அமலாக்குவதில் அவர்கள் உதவுவர். ஒவ்வொரு பள்ளித் தொகுதியின் பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் அல்லது வட்டார கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்திடுவார். பின்னரே பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்கை எட்டும் வகையில் இதற்கு தேவையான மனித ஆற்றல் பருப்பொருள் போன்ற ஆதாரங்கள் ஒதுக்கப்படும். விரும்பிய வகையில் கற்பித்தலின் பயன்பாட்டை எட்டுவதற்குரிய வகையில் தேவைப்படக்கூடிய அனைத்து உதவிகளும் பள்ளித் தொகுதிக்கு ஒதுக்கப்படும். மாவட்டக் கல்வி அலுவலரும் மாநில கல்வி அலுவலரும் பள்ளி வளர்ச்சித் திட்டம் மற்றும் பள்ளித் தொகுதி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் வரையறைகளின் அம்சங்களை நிறைவேற்றிடும் வகையில் தமக்குள்ளே ஒதுக்கீடு செய்து கொள்வர். இத்திட்டம் குறிப்பிட்ட கால வரையில் பரிசீலனைக்குட்படுத்தப்படும். 7.6.3. மாவட்ட கல்விக்குழுவானது பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். அந்தந்த மாவட்டத்தின் கல்வி நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும். அதற்கு முறையான ஒழுங்குமுறை விதிகள் எதுவும் இருக்காது. ஆசிரியர்களையும் பள்ளிகளையும் ஊக்கப்படுத்தி இவற்றை மேம்படுத்தும் பணியில் மாவட்ட கல்விக்குழு முக்கியப்பங்காற்றும். அதனை அடைவதற்கு ஏற்ப, பள்ளிகளுக்கும் பள்ளி வளாகங்களுக்குமான சிறப்பான நடைமுறைகளை உருவாக்கி அங்கீகாரத்தைப் பெற வைப்பதும் அதன் பணியாகும். மாவட்ட ஆட்சியரோ அல்லது மாவட்ட நீதிபதியோ மாவட்ட கல்விக்குழுவின் தலைவராகவும், மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அதன் நிர்வாக அதிகாரியாகவும் இருந்து செயல்படுவர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் அடங்கிய 15 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் அமைப்பாக மாவட்ட கல்விக்குழு இருக்கும். அதில் குறைந்தபட்சம் 5 பேராவது கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்று அம்மாவட்டத்திற்கு பங்களிப்பும் செய்திருக்கிற நபர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் எண்ணிக்கையில் குறைவில்லாமல் கூடுதலாக இவர்கள் நியமிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து ப்ளாக் கல்வி அதிகாரிகளும் மாவட்ட கல்விக்குழுவின் அழைப்பாளர்களாக இருப்பர். பள்ளி வளர்ச்சித் திட்டங்கள் (SDPs) மற்றும் பள்ளி வளாக வளர்ச்சித் திட்டங்களை (SCDPs) அடிப்படையாகக் கொண்டு, குறுகியகால மற்றும் நீண்டகால மாவட்ட கல்வி வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட கல்விக்குழு உருவாக்கும்.அதற்கான கட்டமைப்பை பள்ளிக்கல்வித்துறையே முடிவுசெய்யும். . 7.6.4. ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றத்திற்கான திட்டமிடல் மற்றும் மீளாய்வு செய்தல்: அனைத்து நிலைகளிலும் அந்தந்த நிலைகளின் நிர்வாகத் தலைமை அமைப்புகளின் மூலம் முழுமையான கட்டுக்கோப்பான திட்டமிடல் மற்றும் மீளாய்விற்கான செயல்பாட்டு முறைகள் ஏற்படுத்தப்படும். SDP, SCDP, DEDP ஆகியன இந்த மீளாய்வு முறைகளுக்கான அடித்தளத்தை உருவாக்கும். பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வியின் அனைத்து கூறுகளிலும் மேம்பாடு என்பதே இந்த திட்டமிடல் மற்றும் மீளாய்வு செயல்முறைகளின் நோக்கமாகும்.இத்தகைய மீளாய்வு முடிவுகள் , சிறந்த வழிமுறைகள் மற்றும் பள்ளிக்கல்விக்கான பங்களிப்பில் சிறந்தனவற்றை தேர்ந்தெடுக்கவும் பரிசளிக்கவும் பயன்படுத்தப்படும். சிறந்த ஆசிரியர்கள் , முதல்வர்கள், சமூக சேவகர்கள், ஆலோசகர்கள், பள்ளிகள், பள்ளிகுழுமங்கள் ஆகியனவற்றை இனங்காணுதலும் இதனுள் அடங்கும். ஒவ்வொரு நிலையிலும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான திட்டமிடுதல் செயல்முறைகளுக்கு இந்த மீளாய்வு முடிவுகள் அடித்தளமாக அமையும். 7.7. பள்ளி வளாகங்களுக்குள் உள்ள தனிப்பட்ட பள்ளிகளின் திறமையான நிர்வாகம் மற்றும் மேலாண்மை : பள்ளிகள் என்பவை சமூக நிறுவனங்கள் .அவை சமூகம் மற்றும் சமூக வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும் .நிகழ்கால மற்றும் வருங்கால மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய சமூகமானது உடனடியாக மிகப்பெரிய முதலீட்டை பள்ளிகளில் செய்ய வேண்டி உள்ளது .SMC மற்றும் SCMC மூலமாக ஆதரவும் , மேற்பார்வையும் வழங்கும் போது பள்ளி நிர்வாகமானது சிறந்த இடத்தை அடைகிறது .இந்த நடைமுறையானது ஏற்கனவே பள்ளிகளுக்கு RTE சட்டத்தின் படி செயல்படுத்தப்பட்டுள்ளது . இந்த உள்ளூர் அணுகுமுறைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பு பஞ்சாயத்துராஜ் மற்றும் உள்ளூர் சுயாட்சி நிறுவனங்கள் போன்றவை 73 மற்றும் 74 ஆம் அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் மாநில ,மாவட்ட மற்றும் கிராம / நகர அளவில் மூன்றடுக்கு முறையை வகையில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன . இந்த அதிகார பகிர்வானது மக்களுக்கு உள்ளூர் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்யவும் , பொருத்தமான நேரடியான வழியாகும் . எவ்வாறெனினும் அனைத்து SMCக்களும் பள்ளி நிர்வாகத்தில் ஈடுபடுவது என்பது இன்னும் முழுஅளவில் உண்மை அல்ல . பெற்றோர்களிடம் விழிப்புணர்வின்மை ,தினக்கூலி பெற்றோர்கள் SMC நடவடிக்கைகளில் பங்குபெற இயலாமை ,பெண்களின் குறைந்த அளவிலான பங்கேற்பு போன்ற பல்வேறு சவால்கள் முன் நிற்கின்றன . SMC கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படாததும் , போதுமான பிரதிநிதிகள் இன்றி நடத்தப்படும் அல்லது பள்ளி தொடர்பான விஷயங்களில் எந்த செல்வாக்கும் இன்றி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளன .கடந்த இருபது வருடங்களின் மிகப்பெரிய அளவிலான நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர மக்கள் அவர்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு மாற்றியுள்ளனர் .எனவே பொதுப்பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் என்பவர்கள் பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களே . அவர்களின் குரல் என்பது சமூக அரசியல் சூழலில் மிகவும் சிறிய அளவில் ஒலிக்கக் கூடியது . இந்த சமமற்ற அதிகார சமன்பாடானது SMCயின் செயல்திறனையும் ,பள்ளியுடன் வெவ்வேறு வகையிலான சமூக பங்களிப்பிலும் பாதிப்பை உண்டாக்குகிறது .மாநிலத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையானது SMCக்களின் பங்கினை பள்ளிகளின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் இரண்டாவது பாத்திரமாகவே கருதுகின்றன. SMC (பள்ளி நிர்வாக குழு)களை மேம்படுத்துதல் உள்ளூர் அரசு பள்ளிகளுக்கு பயனுள்ளது . மாநில அரசு ஏற்கனவே SMC களின் அரசியலமைப்பிற்கான வழிகாட்டுதல்களை அமைத்துள்ளன. இவை பொதுவாக பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியிருக்கின்றன. இந்த வழிமுறைகள் எஸ்.எம்.சியின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் மற்றும் பள்ளி மேம்பாட்டுக்கும் வழி வகுக்கப்படும். பள்ளியில் மிகப் பெரிய முதலீடு மற்றும் அதன் நல்வாழ்வைக் கொண்டவர்கள் (எ.கா. மாணவர்களின் தாய்மார்கள்) மற்றும் பள்ளியின் பழைய மாணவர்கள், தங்கள் குழந்தைகளின் அபிலாஷைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் கடுமையாக பாடுபடுவார்கள். இந்த குழுவானது SMC இல் போதுமான மற்றும் அதிகாரம் வாய்ந்த பங்களிப்பை கண்டறிய வேண்டும். எஸ்.எம்.சியின் உறுப்பினர்களாக, பள்ளி செயல்பாட்டின் தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த உள்ளூர் மக்களையும், முன்மாதிரியான பொது உணர்வைக் கொண்டவர்களையும் சேர்க்கலாம். இது பள்ளியுடன் எஸ்.எம்.சியின் ஈடுபாட்டை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் ,சமமற்ற திறன் கட்டமைப்பின் பிரச்சினை மற்றும் பொதுப் பள்ளி முறையால் சேவை செய்யப்படும் சமூகங்களின் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான ‘குரல்’ ஆகியவை தீர்க்கப்படும், மேலும் எஸ்.எம்.சி.களை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கு இது முக்கியமானதாக இருக்கும். பள்ளி வளாகங்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பிற நிறுவனங்கள் (எ.கா. பஞ்சாயத்துகள், வார்டு கவுன்சில்கள்) எஸ்.எம்.சிக்கு ஆதரவளிப்பதன் மூலமும், பொது தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தளம் உள்ளிட்ட பயனுள்ள மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய குறை தீர்க்கும் வழிமுறைகளை கையாளும் அமைப்பை உருவாக்குவதன் மூலமும் இது செய்யப்படும், இது சிக்கல்களை அதிகரிக்கும் உயர் அதிகாரிகளுக்கு மற்றும் இதுபோன்ற அனைத்து விஷயங்களையும் கையாள்வதில் பொது ஆய்வுகளை வழங்கவும் பயன்படும். பள்ளியின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் வர்களுக்குள்ள ஆழ்ந்த உரிமையை உணர்த்துவதற்காக ஆசிரியர்களும் பள்ளித் தலைமையும் பள்ளியின் நிர்வாக வழிமுறைகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். எஸ்.எம்.சி மற்றும் எஸ்.சி.எம்.சி ஆகியவை பள்ளித் தலைவர்களுக்கும் அவர்களது குழுக்களுக்கும் பள்ளியை நடத்த அதிகாரம் அளிக்கும். மாநிலம் முழுவதும் உள்ள பொதுப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு முழுப் பொறுப்பாக இருக்கும் டி.எஸ்.இ, இந்த ஒட்டுமொத்த ஆளுகை மற்றும் மேலாண்மை முறையை செயல்படுத்தும், இதில் மாநிலம் முழுவதும் வளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அடங்கும் 7.7.1. சமூக ஆதரவு மற்றும் கண்காணிப்பிற்கான கருவியாக பள்ளி நிர்வாக குழுக்கள் (SMC): அனைத்துப் பள்ளிகளின் (அரசு/பொது, நிதியுதவி பெறும் தனியார் , நிதி உதவி பெறாத தனியார்) செயல்பாடுகளும் SMC யால் கண்காணிக்கப்படும், RTE சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து அதன் அரசியலமைப்பு கட்டாயமாகும். பின்வரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி SMC களின் அரசியலமைப்பில் மாநிலங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.. a. SMC யில் 10-12 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும், அதில் பெரும்பாலும் மாணவர்களின் பெற்றோர் இடம்பெற்றிருக்க வேண்டும், குறிப்பாக தாய்மார்கள். தலைமை ஆசிரியருடன் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். பிற உறுப்பினர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர், மற்றும் சமூகப் பங்களிப்பில் பொது மதிப்புடைய உள்ளூர் நபர் இடம் பெற்றிருக்க வேண்டும். b. அதன் செயல்பாடுகள், கூட்டங்களை ஏற்பாடு செய்தல், நிகழ்ச்சி நிரலை தயாரித்தல், மதிப்பாய்வு செய்தல், எதிர்கால திட்டத்தை மேற்கொள்ளுதல், போன்றவற்றை உறுதிப்படுத்தும் ஒரு தலைவரை SMC தெரிந்தெடுக்க வேண்டும். c. பள்ளியின் தலைமையாசிரியர்/ முதல்வர் SMC க்கு பொறுப்பானவர் ஆகிறார். நிர்வாகத்தை மேற்பார்வை இடுவதற்கும் பள்ளியை நடத்துவதற்கும் SMC பொறுப்பாகும் மற்றும் கல்வி முடிவுகளுக்கு DSE பொறுப்பாகும். சமூகத்தில் பள்ளிக்காக உரிமை உணர்வை SMC ஏற்படுத்தும் மற்றும் சமூக ஒற்றுமை உணர்வு மற்றும் குழுவாக இயங்குதல் போன்றவற்றை வளர்க்கும்.. 7.7.2. பள்ளி நிர்வாக குழு சிறப்பாக செயல்பட செய்தல்: SMC களின் திறன்கள் மற்றும் செயல்பாடுகளை முன்னேற்றுவதற்காக சிறப்பு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை SMC கூட்டம் நடைபெறும். குழு உறுப்பினர்களுக்கு குறிப்பாக SMC உள்ள பெற்றோர்களுக்கு ஏற்ற நேரத்தில் கூட்டம் நடத்தப்படும். அனைத்து SMC கூட்டங்களிலும் நிகழ்ச்சிக் குறிப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் அது பொதுவாக அனைவருக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும். DSE மற்றும் அதன் நிறுவனங்களான CRC, BRC மற்றும் சமூக அமைப்புகள் மூலம் SMC களுக்காக திறன் வளர்ப்பு பயிற்சிகள் தொடர்ச்சியான முறையில் நடத்தப்படும். உள்ளூர் பஞ்சாயத்து அல்லது வார்டு கவுன்சில் அதன் அதிகார வரம்பில் உள்ள ஒவ்வொரு பள்ளியின் SMC திறம்பட செயல் படுகிறதா, கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா போன்றவற்றை கண்காணிக்கும். இது சக்திவாய்ந்த உள்ளூர் நலன்களில் சக்தியாக பாதுகாப்பாக மாறாது என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு SMC யின் செயல்பாட்டையும் மாவட்ட கல்வி நிர்வாகம் மதிப்பீடு செய்ய வேண்டும். 7.7.3. ஆசிரியர்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துதல்: பள்ளி மேலாண்மை கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்கனவே பகுதி P5. 4.5 ஆசிரியர்களின் பத்தியில் கூறப்பட்டது போல, ஆசிரியர்களின் பணிகளை, அளவீடுகளை இந்த கமிட்டி மதிப்பீடு செய்து அங்கிகாரம் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி மேலாண்மை கமிட்டி கீழ்க்கண்ட விஷயங்களை முக்கிய கவனத்தில் கொள்ளும். ஆசிரியர் பணி வருகைப் பதிவேடு, குழந்தைகளோடு பழகும் விதம், நன்னடத்தை செயல்பாடுகள், பள்ளியின் பல்வேறு ஆதாரங்களை முறையுடன் பயன்படுத்துதல், விதிகளுக்கு உட்பட்டு நேர்மையுடன் பணிபுரிதல் போன்றவைகள். ஆசிரியர்களின் பணிகள் வருடாந்திர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது மேல சொல்லப்பட்ட காரணிகள் எடுத்துக்கொள்ளப்படும். பதவி உயர்வு மற்றும் இழப்பீடு வழங்குதல், வருடாந்திர பணி ஆய்வில் இந்த பள்ளி மேலாண்மை குழு நிர்ணயம் செய்த காரணிகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதலுடன் வழங்கப்படும். 7.7.4. பள்ளி மேலாண்மை கமிட்டி பிரச்சினைகள் மற்றும் குறைகளை பதிவு செய்தல்: இந்த பள்ளி மேலாண்மை கமிட்டியானது பள்ளிக்கும் அரசாங்கத்திற்கும் நடுவே பாலமாக இருந்து செயல்படும். இந்த கமிட்டியில் பிரச்சினைகளை மற்றும் குறைகளை பதிவு செய்ய தகவல் தொழில் நுட்ப உதவி கொண்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவை பொது மக்கள் எளிதில் தங்களது கைபேசியில் இருந்து அணுகுமாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் பதிவு செய்யப்படுவதை வரிசைக்கிரமாக மேலதிகாரிகள் அனைவரும் தொடர்பில் இருக்கும்படியான சாத்தியக் கூறுகளை மேம்படுத்த வேண்டும். மாவட்டக் கல்விக் குழு மற்ற மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் இணைந்து இந்த பள்ளி மேலாண்மை குழுக்களை நிர்வாகம் செய்யும். உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் /வார்டு கவுன்சிலர், தங்களது ஏரியாவிற்குள் வரும் இந்த பள்ளி மேலாண்மை குழுவை நிர்வகிக்க தேவையான ஆதாரங்களை, தங்களது ஏரியா எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து பெற்றுத் தந்து உதவ வேண்டும். பள்ளி மேலாண்மை கமிட்டியில் இருந்து வரும் முறையான அறிக்கைகளின் அடிப்படையில் BEO மற்றும் DEOs செயல்பாடுகள் தனியாக மதிப்பீடு செய்யப்படும் 7.7.5. பள்ளிகளில் தலைமை: பள்ளியின் முதல்வர்/தலைமை ஆசிரியரே பள்ளியின் செயல் தலைவராக இருப்பார். பள்ளிக் கல்வித்துறை (DSE) மற்றும் பள்ளி வளர்ச்சித்திட்டத்தில் (SDP) குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் செயல்திட்டங்களின் அடிப்படையில் கற்றல் விளைவுகளைஅடைவதிலும் பள்ளியினை நிர்வகிப்பதிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் எதிர் பார்ப்புகளுக்கு பொறுப்புடையவராக அவரே திகழ்வார். பள்ளியின் இத்தலைவர்கள் பணிமூப்பின் அடிப்படையில் அல்லாது பள்ளிக் கல்வித்துறை மற்றும் அதன் அதிகாரிகளால் திறமை மற்றும் செயல்திறன் மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தன் வரைமுறைக்குள் உள்ள பள்ளி வளாகத்தின் மீது முழு உரிமையும், முடிவெடுக்கும் பொறுப்பினையும் பள்ளி தலைமைக்கு வழங்கப்படும்.பள்ளிக்கு முழு சுயசார்புத்தன்மை வழங்கப்படும்.பள்ளி தலைமையுடன் பள்ளி மேலாண்மைக்குழு பள்ளி வளாகத்தில் நிகழும் பண போக்குவரத்தை மேற்பார்வையிடும். 7.7.6. பள்ளிகளை குழுக்களாக நிர்வகித்தல்: பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய நபர்களை குழுக்களாக நிர்வகித்து, தாங்கள் சார்ந்த பள்ளிகளை தலைசிறந்த பள்ளிகளாக மாற்றுவதற்கு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களுமே ஃ முதல்வர்களுமே பொறுப்பேற்றுக் கொள்ளல் வேண்டும். இந்த குழுக்கள் , மாணவர்களின் கற்றல் குறிக்கோளோடு அவர்களின் மீதான அக்கறை, பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். முதல்வர் / தலைமை ஆசிரியர், தங்கள் பள்ளியின் ஆசிரியர் குழுக்களை அருகில் உள்ள பள்ளிகள் அல்லது ஒருங்கினைந்த பள்ளிகளின் ஏனைய ஆசிரியர் குழுக்களோடு இணைந்து பணியாற்றச் செய்வதன் மூலம் பள்ளிகளைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும். இந்த ஒருங்கினைந்த குழுக்கள், தெளிவான பாடத்திட்டம், கற்றல் மற்றும் பள்ளி நிர்வகிப்பதை குறிக்கோளாகக் கொண்டு, குறுகிய கால (ஓராண்டுக்கும் குறைவான) மற்றும் தொலைநோககு (மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்) திட்டங்களோடு பணியாற்ற வேண்டும். இத்திட்டங்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DSC) ஒருங்கினைந்த பள்ளிவளாக நிர்வாகத்தோடும் (SMC) மற்றும் உள்@ர் பள்ளி நிர்வாகத்தோடும் இசைந்து இதை வகுக்க வேண்டும். இக்குழுக்கள் மாணவர்களின் கற்றல் மற்றும் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தினை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அனைவருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் 12ஆம் வகுப்புவரை அடிப்படைக் கல்வியை உறுதி செய்தல் வேண்டும் இதுமட்டுமல்லாமல், மாணவர்களின் சேர்க்கை விகிதங்களை அதிகப்படுத்தவும், இடைநிற்றலை கணிசமாக குறைத்து மாணவர்களை பண்ணிராண்டாம் வகுப்புவரை கற்க உறுதி செய்தல் வேண்டும். மேற்கண் அனைத்தும் பள்ளியின் மேம்பாட்டுத் திட்டத்துடன், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இக்குழுக்கள், போதுமான தன்னாட்சி அதிகாரத்தோடு பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் குறிக்கோளை அடைய செயல்படுத்த வேண்டிய முடிவுகளை எடுக்கும். இதனை அடைய பள்ளி நிர்வாகம் தகுந்த மேற்பார்வையோடு தேவையான உதவிகளை, இக் குழுக்களுக்கு வழங்கும். பள்ளிக் கல்விக்கான மறு ஒழுங்கு செய்தல் நோக்கம்: பயன்தரத்தக்க ஒழுங்குமுறை மற்றும் அங்கீகரிப்பு முறைகளால் இந்திய பள்ளிக் கல்வி முறை பலப்படுத்தப்படுகிறது. அது தொடர்ச்சியாக கல்விமுறைப் பலன்களை அதிகரிக்கச் செய்வதற்காக கல்விமுறையில் நேர்மை, வெளிபடைத்தன்மை, உயர்ந்ததரம், மற்றும் புதுமை ஆகியவற்றை உறுதிசெய்கிறது. ஒழுங்குமுறைகளின் முக்கிய நோக்கத்தை நேர்செய்தல் ஒழுங்குமுறையானது இந்திய கல்வி முறையை பலப்படுத்துதல் மற்றும் கல்வியியல் பலன்களை மேம்படுத்தும் பணியையும் செய்யவேண்டும். அதிகாரம் அளிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் நம்பிக்கை உடைய ஆசிரியர்களாலும் வெளிப்படைத்தன்மை மற்றும் முழுமையாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதன்மூலம் நேர்மை உறுதி செய்யப்படும்போதும் அவர்களால் முடிந்த அளவிற்கான மிக சிறப்பாக செய்ய வைத்து இதனை சாதிக்கலாம். இம்மாதிரியான கலாச்சாரம் இல்லாமல், நாம் இத்தருணத்தில் நம் கல்வி முறையில் நேர்செய்யமுடியாத இரு கூறு நிலையில் உள்ளோம். மறுபுறம் நம் கல்விமுறை பொறுப்புமிக்க, ஆக்கப்பூர்வமான, சுயசார்புடைய, சுதந்திரமான மனிதாபிமானம் மிக்க குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். மற்றொரு வகையில் ஒழுங்குமுறை மற்றும் கலாச்சாரத்தை ஆளுதல் என்பது ஒரு கெட்டித்தன்மைக்கும் ஒழுங்கற்ற தன்மைக்கும் வழிவகுக்கும். ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் உள்ளுர் நிகழ்வுகளுக்கு ஏற்ப முடிவெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் வழிகாட்டும் முறைகள்; ஆசிரியர் கற்பிக்கும் பொருட்கள், கால அட்டவணை அமைத்தல் குறித்த பொருட்கள், தினந்தோறும் பள்ளி நடத்த தேவையான அடிப்படை நிதிசார்ந்தவை மற்றும் இதரகுறித்தவை ஆகியவையும் இதில் அடங்கும். அதிகாரிகளின் மேலிருந்து ஆய்வு செய்யும் போக்கினால், அவர்கள் தொழில்முறையாளர்களாக நம்பப்படவேண்டியதில்லை. இந்த மேலிருந்து ஆய்வு எனும் அணுகுமுறை என்பது பொதுவாக பள்ளியின் தோற்றத்தையும், நடைமுறை அம்சங்களையும் நோக்குகிறது. கல்வியியல் அடிப்படையைத் தாண்டி, ஒரு மனிதர் என்ற அளவில், அவர்கள் எந்த மனிதருக்கும் அளிக்கும் அடிப்படை மரியாதை கூட இல்லாமல் அதிகாரிகளால் இவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள். பள்ளி கலாச்சாரம் இருமாதிரியான கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு, தேவையற்ற விளைவுகளை பல்வேறு பரிணாமங்களில் ஏற்படுத்துகிறது. பள்ளிக் கல்வி முறையில் தற்போதைய அதிகார அமைப்பில் மூன்று முக்கிய பணிகளான பொதுக்கல்வி வழங்குதல், அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறையால் அல்லது அதன் அங்கம் (உம்:பள்ளிக் கல்வித்துறை மற்றும் அதன் அதிகாரிகளான மாவட்ட கல்வி அலுவலர், தொகுதி கல்வி அலுவலர்) ஆகியவற்றால் கையாளப்படுவது, அதிகமான அதிகாரத்தை குவிப்பதுடன் நோக்கங்களுக்கு முரணாகவும் அமையும். மற்ற அம்சங்களில் கவனம் செலுத்துவதால், பள்ளிக் கல்வித்துறை செய்யவேண்டிய பணிகளில், குறிப்பாக கல்வி வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவேண்டிய அதன் முயற்சிகள் நீர்த்துப் போகின்றன. தற்போதைய ஒழுங்குமுறை அமைப்பில் கூட பரவலான, வணிகமயமாக்கலையும், பெற்றோர்களை தனியார் பள்ளிகள் பொருளாதாரரீதியில் சுரண்டி, கொள்ளை லாபம் பெறுவதையும், தடுக்க இயலவில்லை. ஆனால் அதே நேரத்தில் பொது நோக்கம் கொண்ட தனியார் / மனிதநேய பள்ளிகளும் ஊக்கமளிக்கப்படுவதில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரே நோக்கம் தரமான கல்வி வழங்குவதாக இருப்பினும், இப்பள்ளிகளை ஒழுங்குமுறை படுத்துவதில், முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கண்ட பிரச்சனைகளை உடனடியாக கையாளவும், கல்வியினை வழங்கவும், முன்னேற்றமடைய செய்யும், ஒழுங்குமுறை ஓர் உண்மையான உந்து சக்தியாக் அமையவும், ஆளுகை மற்றும் ஒழுங்குமுறைகளில் நமக்கு ஒரு புரட்சிகர அணுகுமுறை தேவை. பொதுக்கல்வி முறை ஒரு துடிப்பான மக்களாட்சி சமுதாயத்தின் அடிப்படையாகும். அது நாட்டின் கல்வியியல் விளைவுகளை உச்ச நிலைக்கு கொண்டுச்செல்லக்கூடியதாகவும், பலப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். அதே நேரத்தில், மனிதநேய தனியார் பள்ளிப் பிரிவுகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் இம்மனித நேய தனியார் பள்ளிகள் முக்கிய மற்றும் பயன்மிக்க பாத்திரத்தினை ஏற்கும்படியும் செய்யவேண்டும். கல்வியில் சாதனை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் மற்றும் பலப்படுத்தும் ஒழுங்குமுறை: பள்ளிக்கூடங்கள், உள்ளுர் சமூகங்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களுக்கும் அதிகாரம் அளித்திடவும் நோக்கங்களில் முரண்பாடுகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள அதிகார குவிப்பு, ஆகியவற்றை சரிசெய்வதற்கும் இக்கொள்கையின் ஆளுமை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்பொருட்டு மாநில கல்விமுறை, அவ்வமைப்பிற்குள்ளான பொறுப்புகள் மற்றும் ஒழுங்குமுறையின் அணுகுமுறை ஆகியவை குறித்த முக்கிய கொள்கை மற்றும் பரிந்துரைகள் பின்வருமாறு :- மூன்று தனித்துவமான பங்களிப்புகளான கொள்கை வகுத்தல், கல்வியை அளித்தல் /செயல்படுத்துதுல் மற்றும் கல்வியை ஒழுங்குமுறை செய்தல் ஆகியவை, நோக்கங்களில் முரண்பாடுகளை தவிர்த்திடவும், அதிகார குவிப்பை தவிர்த்திடவும், ஒவ்வொரு பணியை சரியாக செய்வதை உறுதிப்படுத்தவும், நன்முறையில் சரிபார்க்கவும் தனித்தனியான சுதந்திரமான அமைப்புகளால் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறை தற்போது மாநில கல்வித்துறைக்கு தலைமை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு கல்வி ஆணைக்குழு (அத்தியாயம் 23-ல் காண்க) உருவாக்கப்படின், அது தலைமை அமைப்பாக மாறும். மேலும், துறையின் பங்களிப்பு அதற்கிணங்க வரையறுக்கப்படும். தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான ஒட்டுமொத்த கண்காணிப்பு மற்றும் கொள்கை வகுத்தல் ஆகியவற்றிக்கான முதன்மையான நிறுவனமாக இத்தலைமை அமைப்பு செயல்படும். இருப்பினும் பள்ளியின் செயல்பாடுகளிலோ (சேவை வழங்கல்) அல்லது அமைப்பின் ஒழுங்குமுறைகளிலோ ஈடுபடாது. அவை தனித்தனியான அமைப்புகளால் நோக்கங்களின் முரண்பாடுகளை களைந்திட மேற்கொள்ளப்படும். மாநில முழுமைக்கும் பொது பள்ளிக் கல்விக்கான செயல்பாடுகள் மற்றும் சேவை வழங்குதல் ஆகியவை பள்ளிக் கல்வி இயக்குனரகத்தால் கையாளப்படும். பள்ளிக் கல்வி செயல்பாடுகள் மற்றும் வழங்குதல் குறித்த கொள்கைகளை அது செயல்படுத்தும். ஆனால் மற்றொரு வகையில் பிரிக்கப்பட்டு, மேலே குறிப்பிடப்பட்ட தலைமை அமைப்பிடமிருந்து, சுதந்திரமாக பணியாற்றும். சுதந்திரமான, மாநிலம் முழுமைக்கும் மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் ( SSRA State School Regulating Authority) என்ற ஒழுங்குமுறை அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்தப்படும். தற்போது பள்ளிகளின் பொறுப்பாக உள்ள ஒழுங்குமுறை குறித்த சட்டப்பூர்வ சுமையினை குறைத்திட, சில அடிப்படை காரணிகளின் (கவனம், பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு, பாடவாரியாக ஆசிரியர்களின் எண்ணிக்கை, தகுதிகள், நேர்மை மற்றும் ஆளுமை செயல்பாடுகள்) அடிப்படையில் அனைத்துவிதமான ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பங்குதாரர்களாகிய ஆசிரியர்கள், மற்றும் பள்ளிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, கட்டமைப்பு காரணிகளை மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (SCERT) உருவாக்கும். இக்கட்டமைப்பு காரணிகளை செயல்படுத்திட அங்கீகாரம் மற்றும் தணிக்கை பயன்படுத்தப்படும். ஒழுங்குமுறை தகவல்களை, ஒழுங்குமுறை அமைப்புகளாலும் பள்ளிகளாலும் வெளிப்படையாக பொதுவெளியில் தெரியப்படுத்துவது, பொது மக்களின் மேற்பார்வைக்கும், பொறுப்புடைமைக்கும் பயன்படும். தர நிர்ணயம் வகுத்தல், மாநிலங்களில் கல்வி உள்ளிட்ட கல்விபுலம் சார்ந்த விஷயங்கள் மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் ( SCERT) வழிநடத்தப்படும். அதுவே இதரக் கல்வி ஆதரவு உறுப்புகளான வட்டார வள மையங்கள் (BRC Block Resource Centres) ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (BITE Block Institute of Teacher Education) ஆகியவற்றின் உதவியுடன் பலம் மிக்கதொரு நிறுவனமாக அமைக்கப்படும். பள்ளிப்பருவம் முடியும் தருவாயில் உள்ள மாணவர்களின் தகுதி சான்றிதழ்கள், பள்ளித் தேர்வு | சான்றிதழ் வாரியம் மூலம் கையாளப்படும். இந்நோக்கத்திற்காக, அதன் பொருளார்ந்த தேர்வுகளை நடத்தும். ஒவ்வொரு பாடத்திலும் முக்கிய திறன்களை வாரியங்கள் மதிப்பீடு செய்யும் (X 4 - 9 ஐ காண்க). ஆனால் பாடத்திட்ட சட்டதிட்டங்களில் பங்கு வகிக்காது.(பாடத்திட்டம் அல்லது பாடபுத்தகங்கள் உட்பட). பொது நோக்கம் கொண்ட தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதை உறுதி செய்வதற்காகவும், எவ்வழியிலும் அதனை அடக்கியாளாமல் இருப்பதற்காகவும் சட்டபூர்வமான ஆணைகளை வலியுறுத்தாமல், பொதுவாக அனைவருக்கும் தெரியப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலமாக பொது மற்றும் தனியார் பள்ளிகள் ஒரே அளவுகோள்களிலும், வரையறைகளிலும், செயல்முறைகளிலும் ஒழுங்குபடுத்தப்படும். தரமான கல்விக்கான தொண்டு முயற்சிகள் உற்சாகப்படுத்தப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு கல்வியின் நற்பயன் உறுதிபடுத்தப்படும் . தன்னிச்சையாக கல்விக்கட்டணைத்தை உயர்த்துவது உட்பட, பெற்றோர்களையும், சமூகங்களையும் அதீத வர்த்தக நடைமுறைகளிலிருந்து பாதுகாக்கப்படும் . பள்ளி ஒழுங்குமுறைக்கும் ஆளுகைக்கும் கல்வி உரிமைச் சட்டம் ,2009 (RTE,2009) சட்ட ரீதியான முதுகெலும்பாக கடந்த பத்தாண்டுகளாக விளங்குவதால், அது ஆய்வு செய்யப்பட்டு இக்கொள்கை செயல்படுத்தப்பட உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து கற்றுக் கொண்டதின் அடிப்படையிலும் , பெறப்பட்ட அனுபவத்திலிருந்தும் மேம்படுத்தப்படும் . ஒட்டுமொத்த அமைப்பின் செயல்பாட்டை தீர்மானிக்க அவ்வப்போது, மாணவர்களின் கற்றல் திறன் அளவுகள் குறித்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அடிப்படையில், NCERT(தேசீய கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம்) தொடர்ந்து நடத்தும் . மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மாநில மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடத்த ஊக்குவிக்கப்டும். அதன் முடிவுகள்ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு பகிர்ந்து அளிப்பதின் மூலம் மேம்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் . இந்த நடவடிக்கையில் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பதின்ம பருவத்தினர் ஆகியோரை மறந்துவிடக்கூடாது. ஏனெனில் இப்பள்ளிக்கல்விமுறை அவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. தெளிவான, பாதுகாப்பான மற்றும் திறமையான வழிமுறைகளின் மூலம் புகார் அளிக்கவும், குழந்தைகளின் / பதின்மப்பருவத்தினரின் உரிமைகள் அல்லது பாதுகாப்பு முறியா வண்ணம் உரிய நடவடிக்கைகள் மூலமும், அதிக கவனம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காகவும் பதின்ம பருவத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்காகவும், இவ்வமைப்பால் அதிக முக்கியத்துவம் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். பயனுள்ள சமயத்திற்கு தகுந்த, அனைத்து மாணவர்களாலும் நன்கு அறியப்பட்ட வழிமுறைகளுக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும். 8.1 அமைப்பின் கட்டமைப்பு மற்றும் பள்ளிக்கல்வி முறையின் பங்கு 8.1.1. கொள்கை உருவாக்குதல் , ஒழுங்குமுறை செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரம் ஆகிய செயல்பாடுகளை பிரித்தல்: கொள்கை உருவாக்குதல் பள்ளி செயல்பாடுகள் மற்றும் கல்வி வழங்கல், கல்வியியல் வளர்ச்சி மற்றும் மதிப்பீடு, மற்றும் கல்வியியல் துணைப்பணிகள் போன்ற கல்வியியல் செயல்பாடுகளிலிருந்து ஒழுங்குமுறை செயல்பாடுகளை மாநில அரசு பிரித்தெடுக்கும். எனவே, அவை சரியான கொள்கை உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல், செயல்பாடுகள் மற்றும் கல்வியியல் தொடர்பான விஷயங்கள் ஆகியவற்றிற்காக தனி அமைப்புக்களை உருவாக்கும். மாநில பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையம் ஒழுங்குமுறை சட்ட ஆணையைக் கொண்டிருக்கும். பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடிப்படை ஒரே மாதிரியான தர நிர்ணயம் கொண்டிருக்கும். இவ்வாணையத்தை அமைப்பதால் பள்ளிக்கல்வி இயக்கத்தில் நிர்வாக பணிகளை விடுவித்து, பொதுப்பள்ளிகளில் கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். மேலும் கொள்கைகள் வகுத்தல், ஒழுங்குமுறை மற்றும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் பங்களிப்புகளை பிரிக்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். ஒழுங்குமுறையை செயல்படுத்துவது தற்போதைய ஆய்வு முறையில் நடத்தப்படாது. அதற்கு பதிலாக, பள்ளி கட்டமைப்பு விவரங்கள், ஆசிரியர்களின் விவரங்கள், பள்ளிகளின் தேர்ச்சி, கட்டணம் மற்றும் இதர தகவல்கள் பொதுத் தளத்தில் வைப்பதின் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவுகளை தெரிந்து கொள்வதற்கும், இதன் மூலம் நடைமுறை ஒழுங்குபடுத்தப்படும். நோக்கங்களில் முரண்பாடுகளை களைய செயல்பாடுகளின் அடிப்படையில் பிரிப்பதின் மூலம் ஒழுங்குமுறை வகுக்கப்படும். 8.1.2. கொள்கை மற்றும் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிற்கான தலைமை அமைப்பு: மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை கொள்கை வகுக்கும் தலைமை அமைப்பாகும். மேலும் கொள்கை, ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்பின் கண்காணிப்பு ஆகியவற்றிற்க்கு அது பொறுப்பாகும். மாநிலத்தில் அரசு கல்வி ஆணையம்( RjSA Rajya Shiksha Aayog) (23.19ஐ காண்க) நிறுவப்பட்டால், துறை மற்றும் ஆணையம் ஆகியவற்றின் பங்களிப்புகள் தகுந்த முறையில் விளக்கப்பட்டு, சரியாக பிரிக்கப்படும். 8.1.3. பள்ளிக் கல்வித் துறையில் ஒரு ஒற்றை சுதந்திர ஒழுங்குமுறை அமைப்பு: பள்ளிக்கல்வி முறையை மேற்பார்வையிடுதல் மற்றும் அங்கீகாரத்தை செயல்படுத்துதல் ஆகியவை குறித்து அனைத்து அம்சங்களையும் கையாளக்கூடிய ஒரு சுதந்திரமான மாநில பள்ளிக் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் (SSRA - State School Regulatory Authority) நிறுவப்படும். மா.ப.க.ஒ.ஆ. (SSRA) என்பது தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம்(NHERA - National Higher Education Regulatory Authority) (P18.1.4. ஐ காண்க ) போன்று இருக்கும். புதிதாக நியமிக்கப்பட்ட மா.ப.க.ஓ.ஆ. (SSRA) மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறையின் ஒரே ஒழுங்குபடுத்தியாக இருக்கும். கல்வி மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த, அதிகபட்ச நேர்மையும், குற்றப் பின்னணி ஏதுமில்லாமலும் உள்ள 10-15 உறுப்பினர்கள் கொண்ட சுதந்திரமான குழுவால் மா.ப.க.ஓ.ஆ. (SSRA) வழிநடத்தப்படும். மா.ப.க.ஓ.ஆ. (SSRA) அரசு கல்வி ஆணையத்திற்கு (RjSA - Rajya Shiksha Aayog) அறிக்கை சமர்ப்பிக்கும். அவ்வாறில்லையெனில் மாநில முதலமைச்சருக்கு அறிக்கையளிக்கும். - அரசு கல்வி ஆணையம் (RjSA அல்லது முதலமைச்சர்) குழுத்தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களை நியமிக்கும். இவர்களது பணிக்காலம் 3 ஆண்டுகள். தொடர்ந்து இருமுறைக்கு மேல் இருக்க முடியாது. - மா.ப.க.ஓ.ஆ. (SSRA) தனது சட்டப்பூர்வ ஆணையை நிறைவேற்ற போதுமான ஊழியர்கள் மற்றும் வளங்களை கொண்டிருக்கும். பிரிவு 8.2ல் விவரித்துள்ளபடி அங்கீகாரத்தின் அடிப்படையில் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கி மேற்பார்வை செய்யும் . - மா.ப.க .ஓ .ஆ (மாநில பள்ளிக்கல்வி ஒழுங்குமுறை ஆணையம்) ( SSRA) ஒரு வலுவான, எளிதில் அணுகி குறைகளை தெரிவிப்பதற்கும் ,அதனை களைவதற்கும் உரிய செயல்பாட்டினை உருவாக்கும். அது அதிகமாக பரப்பப்பட்டு, பரவலாக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு குறைதீர்க்கும் தீர்ப்பாயங்களை கொண்டிருக்கும். - மா.ப.க .ஓ .ஆ(மாநில பள்ளிக்கல்வி ஒழுங்குமுறை ஆணையம்) ( SSRA) நீதிமன்ற அதிகாரங்களும் ஓரளவு கொண்டதாக இருக்கும். விரைந்து தீர்க்கப்பட வேண்டிய நீதித்துறை சார்ந்த விவகாரங்களைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அதனுள் அமைக்கப்படும். அவ்வமைப்பிற்கு மாநிலம் முழுவதும் அலுவலகங்கள் இருக்கலாம். மாநில அதிகாரம் அளிக்கப்படட கல்வியியல் தீர்ப்பாயம் ஒன்றினை மாநில அரசு நிறுவினால், பிறகு இப்பணியை இத்தீர்ப்பாயமே செய்யும். அங்கீகாரம் பெறுவதற்கான காரணிகள் திருப்திகரமாக இல்லாவிடில் பள்ளிகளை மூடுவது போல பள்ளிகளை இயக்குவதற்கான அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது உட்பட ஒழுங்குமுறைப்படுத்திடும் முழு அதிகாரம் மா ப க ஓ ஆ ( SSRA ) கொண்டிருக்கும். பள்ளிக்கல்வித் துறையை மேற்பார்வையிடுதல் மற்றும் அங்கீகாரத்தை செயல்படுத்துதல் ஆகியவை குறித்து அனைத்து அம்சங்களையும் கையாளக்கூடிய சுதந்திரமான பள்ளிக் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படும். 8.1.4. பொதுப்பள்ளி முறை செயல்படுத்துவதற்கும் நடத்துவதற்குமான பொறுப்பு : சில மாநிலங்களில் பொதுக்கல்வி இயக்குநரகம் பொதுக்கல்விக்கு தொடர்ந்து பொறுப்பு வகிக்கும். இது பள்ளிக் கல்வித்துறை அறிக்கையை சமர்பிக்கும். இம்மாற்றியமைக்கப்பட்ட மாநில பள்ளிக் கல்வித்துறை வடிவமைப்பில் பள்ளி கல்வி இயக்குநரகத்தால் பொதுப் பள்ளிகள் மீதான மேம்படுத்துதல் , நடத்தைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த இயலும். ஒழுங்குமு றைப் பணியை மொத்தமாக மா.ப.க.ஒ.ஆ ( SSRA) க்கு பகிர்ந்தளிப்பதால் தற்போது இருக்கும் அனைத்து இயக்கங்களின் திட்டமாகிய ( அனைவருக்கும் கல்வித் திட்டம் , தேசிய கல்வித்திட்டம் , ஆசிரியர் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய சமகால கல்வித்திட்டம் ) கல்வி வழங்குதல் மீதான சீரிய முயற்சிகளுக்காக ஒன்றாக்கப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரகத்திடம் ஒருங்கிணைக்கப்படும்.நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் இதர பள்ளிகளுகுப் பொறுப்பாகும். 8.1.5. பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல் : பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை ஒழுங்குறை மற்றும் பள்ளி செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளுபவர் என்பதை ஒட்டுமொத்மாக உண்மையான பள்ளிகளை இயக்குபவர் என்று மாற்றுதற்கு ." மேலாண்மை மாற்ற தொடர் வேலை .." போல 3-4 ஆண்டுகள் தேவைப்படும் . இந்த மாற்றத்திற்கான கட்டமைப்பைமைற்றும திட்டத்தினை பள்ளிக்கல்வி இயக்குநரகம் உருவாக்க வேண்டும். இம்மாற்றத்தினை நடைமுறைப்படுத்திட மிகவும் திறமையான அதிகாரமிக்க குழுவினை உருவாக்க வேண்டும். இம்மாற்றத்தின் முக்கிய பரிணாமங்கள் பின்வருமாறு - தொடர்ச்சியாக கல்வியின் நற்பயன்களை பெற்றிட பொதுப்பள்ளிகள் விளைவு தரத்தக்க மற்றும் திறைமையான முறையில் நடந்திட , கல்வி தலைவர்களாக மாறிடவும் அவற்றை பங்கு கொள்ளவும் முதலில் பொதுக்கல்வி முறையின் அலுவலர்கள் ( எ.கா : இயக்குநர்கள் , இணை இயக்குநர்கள் , மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் ) தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். - பள்ளிக் கல்வி இயக்குநர் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் அலுவலர்களின் பங்களிப்பு விவரங்களையும் , எதிர்பார்ப்புகளையும் ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் . அலுவலர்கள் ( எ.கா : வட்டாரக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் ) தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கல்வி விளைவுகளுக்கு பொறுப்பாக்கப்படுவார்கள் . - இரண்டாவதாக இப்பணியில் திறம்பட பங்காற்றிட அலுவலர்களுக்கு ஆதரவாகவும் , தொழில்துறை மேம்பாடு அளிக்கவும் , பணியில் முன்னேற்ற வாய்ப்புகளை சிறந்த பணிக்கான அங்கீகாரம் போன்ற சலுகைகளை அளிக்க வேண்டும். - மூன்றாவதாக ஆற்றல் மிக்க பள்ளி மேலாண்மைக்குழு ( School Management Committe) க்கள் நன்கு செயலாற்றிட , பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் அதன் அலுவலர்களின் நிர்வாக பண்பாடு மற்றும் நடைமுறைகளில் கணிசமான மாற்றம் தேவைப்படும் குறியீடாக முன்னணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கே அம்மாற்றம் தேவை. பள்ளிகளின் மாற்றத்திற்காகவும் முன்னே்ற்றத்திற்காகவும் இவ்வமைப்பு மற்றும் இதன் அலுவலர்கள் அனைத்து வழிகளிலும் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும் தலைவர்களாக பங்களிப்பர் . - நான்காவதாக , அதிகாரம் பெற்ற , பள்ளி மேலாண்மை குழுக்கள் (SMC) , பள்ளிக்கூடங்கள் (ம) மாவட்ட பள்ளி கல்வி குழு (DEC)/ஜில்லா சிக்ஷயா பரிசஷ் (ZSP) ஆகியவற்றிற்கு புதிய ஆளுமை கட்டமைப்பிலிருந்து அதிக பட்ச நன்மைகள் கிடைக்கும் பொருட்டு ,பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் (DSE) ஒட்டுமொத்த திட்டமிடல் மற்றும் மேலாண்மை அமைப்புகள் மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் மாநிலத்தின் பள்ளி வளர்ச்சி திட்டத்தினை (SDP) ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் வளங்கள் (ம) கல்வி திட்டமிடல்களை ஒட்டு மொத்தமாக சுருக்குவதாக கருதாமல் இதனை சேர்த்துக் கொள்ளப்படும் . பொதுக்கல்வி அமைப்பை நடத்துவது பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் பொறுப்பு 8.1.6. கல்வி விஷயங்களுக்கான தலைமை அமைப்பு பாடத்திட்டம் ,பாடப் புத்தகங்கள் ஆசிரியர் குறித்த நடவடிக்கைகளின் தர நிலைகள் (எ.கா) ஆள் சேர்ப்பு மேம்பாட்டு அளவிடுதல் மற்றும் கற்றல் தரத்தை அனைத்து அளவிலும் குழந்தை பருவ கல்வி உட்பட அனைத்திற்கும் தலைமை அமைப்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) திகழும் . பொதுக் கல்வியியல் அமைப்புகளை குருவள மையம் (CRC) , வட்டார வள மையம் (BRC) , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (ம) DIET போன்ற கல்வியியல் துணைக்கல்வி அமைப்புகளுக்கும் தலைமை வகிக்கும் .மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) தனது நிபுணத்துவத்தின் மூலம் அரசுக்கு கல்விப் பார்வை மற்றும் தலைமைப் பண்பு வகிப்பதற்கான திறன் வாய்ந்த சிறந்த நிறுவனமாக மாற வேண்டும் . மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) , மாநில கல்வியியல் கட்டமைப்பு (state curricular frameworks(SCF)) மற்றும் கல்வியியல் செயல்பாடுகள் (பாடத்திட்டம் ,பாடப்புத்தகங்கள் உட்பட ) ஆகியவற்றை தேசிய கல்வியியல் கட்டமைப்பு (NCF – National curricular framework) இணைந்து பொதுப்பள்ளிகள் மற்றும் ஏனையோருக்காகவும் உருவாக்கும் . அதனை உருவாக்கும் போது மாநிலத்திற்கு தேவையான பரிணாமங்களை சேர்த்துக் கொள்ளும் போதும் மாநில கல்வியியல் கட்டமைப்பு (SCF) பொதுப் பரிமாணங்களையும் தேசிய கல்வியியல் கட்டமைப்பு (NCF) பகுதிகளை முழுவதுமாகவும் எடுத்துக் கொள்ளலாம் .தேசிய கல்வியியல் கட்டமைப்பு (NCF) திருத்தத்தின் இரண்டு ஆண்டுகளுக்குள் செய்யப்பட வேண்டும் (பார்க்க – பிரிவு 4.7 (ம) 4.8 ). அனைத்துப் பாடத் திட்டங்களும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டு ,திருத்தப்படும் . ஆசிரியர்கள் ,மற்ற கல்வியாளர்கள் ,குடிமை சமுதாய அமைப்புகள் போன்றவற்றுடன் மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) பரந்த ஆலோசனையின் மூலம் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு திருத்தப்படும் . பொதுப்பள்ளி அமைப்பின் , ஆசிரியர்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) பொறுப்பாகும் . ஆண்டுக் கணக்கில் பயணிக்கும் பாதையில் பரிணாமம் அமைத்திட தொடர்ச்சியாக கல்வியாளராகத் தன்னை மேம்படுத்திக் கொள்ள தொடர்ச்சியான தொழில் மேம்பாடு (CPD) பயிற்சியினை அனைத்து ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மற்றும் பணியாளர்கள் அனைவரும் அடைந்திட பள்ளிக் கல்வி இயக்குநரகம் உறுதி செய்திட வேண்டும் . கல்வித் தலைவர்கள் (தலைமையாசிரியர் / முதல்வர்கள் ) முதல் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் உயர் அதிகாரிகள் வரையிலானவர்களுக்கான திறன் மேம்பாட்டிற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனத்துடன் SIEMAT ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்பட வேண்டும் .[உயர் கல்வித் திறன் மற்றும் குற்றமற்ற பின்னணி கொண்ட நேர்மையான கல்வியாளர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனத்தின் தலைமையகத்தை நடத்துவார்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) பள்ளிக் கல்வி துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும். 8.1.7. குருவள மையம் (CRC) , வட்டார வளமையம் (BRC) , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவற்றை வலுப்படுத்துதல் . ஆசிரியர் (ம) பள்ளிகளுக்கு அவர்களின் இடங்களிலேயே அனைத்து பள்ளிக் கல்வி மட்டங்களிலும் முன் குழந்தைப் பருவ கல்வி முதல் தொழிற்கல்வி வரையில் உதவிகளை அளிப்பதற்கு (CRC) , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவை உதவி செய்யும் . ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்கள் ஆகியோருக்கான தொடர்ச்சியான தொழில் மேம்பாடுகளுக்கு ஆதரவு , மேம்பாடு மற்றும் கற்பித்தல் , கற்றல் உபகரணங்களை சரியான வகையில் கையாளுவதற்கான ஆதரவு , பள்ளி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கான அத்துறை கல்வியில் பொருள் செயல்பாட்டிற்கான ஆதரவு மற்றும் இதரவற்றிற்குமான ஆதரவு ஆகியன இதில் உள்ளடங்கும் இந்த கல்வி உதவி நிறுவனங்கள் , தேவையான திறன்களை கொண்டுள்ள மக்களுடன் பணியாற்றும் .இந்த நிறுவனங்களின் மேம்பாடு , பள்ளிக் கல்வி முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் . இந்த நிறுவனங்களின் பணியாளர்கள் , பொதுக் கல்வி முறையில் இருக்கும் ஆசிரியர்களிடையே இருந்து வெளிப்படையான செயல் மூலம் அவர்களின் திறமை கடுமையாக சோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் . .தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஆசிரியர்கள் , பள்ளித் தலைவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்கள் ஆகியோருக்கு உதவிடும் வகையில் தேவைகேற்ப மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் கவனமாக வடிவமைக்கப் பட்ட பாடத்திட்டம் மற்றும் குறிப்பான கடும் பயிற்சி அளிக்கப்படும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) இந்த நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை போன்ற மேலாண்மை செயல்முறையை வழி நடத்தும் . இவை மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் திறன் (ம) பணிச் சூழலை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும் .அவை துடிப்பான மற்றும் சிறப்பான நிறுவனங்களாக வளரும் . ஒட்டு மொத்த பள்ளிக் கல்விக்கான கல்வியியல் சார்ந்த அம்சங்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் (SCERT) தலைமை அமைப்பாக திகழும் . 8.1.8. மதிப்பீட்டு வாரியங்கள் :- ஒவ்வொரு மாநிலமும் பள்ளிக் கல்வி சான்றிதழ் தேர்வை நடத்துவதோடு , அதே சான்றிதழையும் வழங்கும் .வாரியம் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாரியங்களை கொண்டிருக்க வேண்டும் . மாநில தேர்வாணையக் குழு அல்லது வேறு ஏதாவது தேர்வாணையக் குழு (சர்வதேச அளவில் ) மதிப்பீடு செய்யலாம் .மாநில தேர்வாணையர் குழு பள்ளிக் கல்வித் துறைக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் . மத்திய குழு ,மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு தனது அறிக்கையை அளிக்கும் .அல்லது அரசு பள்ளி ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்கு அறிக்கை அளிக்கும் .இந்த அமைப்புகள் எந்த புதிய தேர்வாணையக் குழுவையும் முன் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் வெளிப்படையான அளவுகோல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்க அனுமதிக்கும் . லாப நோக்கம் இல்லாமல் தனியார் தேர்வாணைய க் குழுவும் இருக்கலாம் . அது முற்றிலும் சுதந்திரமாகவும் பள்ளிக் கல்வி துறையின் மேற்பார்வையிலும் அல்லது ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் படி நடப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையில் உறுதி பெற்றதாகவும் இருக்கலாம் .மேற்கூறிய செயல்முறை மூலம் அங்கீகாரம் பெற்று பல்கலை கழகங்கள் தேர்வாணைய குழுக்களை தொடங்கலாம் . மாநில மற்றும் தேர்வாணையக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக தேர்வு முறையை சீர்திருத்தி மேம்படுத்தும் .தேசிய கல்வி ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவனம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களால் உருவாக்கப்படும் பாடத்திட்ட நோக்கங்களான தற்போதைய பொருளடக்கத்தை உறுதி செய்யும் தேர்வு முறையிலிருந்து மாற்றி ,திறன்களை உண்மையான மதிப்பீட்டிற்கு மாற்றும் .(பார்க்க பிரிவு 4.9) கல்வியியல் பாடத்திட்டதையோ, பாடப்புத்தகத்தையோ எந்த பள்ளிக்கும் எந்த வகையிலும் தீர்மானிக்கவோ அல்லது தீர்மானத்தில் பங்கு வகிப்பதையோ தேர்வாணையர் குழு செய்யாது .இவை அனைத்தும் மாநில பள்ளிக் கல்வி அமைப்பால் தீர்மானிக்கப்படும் . இவற்றிற்கு ஒழுங்குமுறைப்படுத்தும் பணியிலோ பள்ளிகளை மேற்பார்வையிடும் பணியிலோ எந்த பங்கும் கிடையாது . தேசம் முழுவதும் செயல்படும் மத்திய தேர்வாணையக் குழு உட்பட தற்போதுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வாணைய குழுக்கள் அனைத்து மாநிலங்களில் செயல்படும் . (எ.கா) மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (CBSE) இந்திய பள்ளிக் கல்வி வாரியம் (CSE) தேசிய திறந்த வெளிப் பள்ளி வாரியம் (NIOS) பள்ளித் தேர்வு சான்றிதழ்களில் , தாராளமயமாக்கப்பட்ட ,பல விருப்ப தேர்வு கொண்டவற்றை அளிக்கும் தேர்வாணையக் குழு பள்ளிகளை இணைப்பதில்லை . ஆனால் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் தேர்ந்தெடுப்பதற்கான வசதியைத் தருகின்றது .அவர்கள் தரும் பாடத்திட்டத்தை அடிப்படையாக பள்ளி தானே எந்த தேர்வாணையத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் . அனைத்து மத்திய மாநில தேர்வாணையக் குழுக்கள் அனைத்து பாடங்களிலும் முக்கிய ஆற்றல்கள் மற்றும் திறமைகளை தேசிய கல்வியியல் கட்டமைப்பி (NCF- National Curriculum Framework) மற்றும் மாநில கல்வியியல் கட்டமைப்பு (SCF) (பார்க்க பிரிவு 4.9) ஆகியவற்றுள் கூறப்பட்டுள்ளவாறு மதிப்பீடு செய்யும் .சர்வதேச வாரியங்களைத் தேர்வு செய்யும் பள்ளிகள் மத்திய கல்வியியல் கட்டமைப்பு (NCF) (எ.கா மும்மொழி சூத்திரம் குறித்து ,இந்திய சூழலுக்கு ஏற்றவாறு கலை ,இசை,வரலாறு ,தத்துவம் குறித்து) மாநில கல்வியியல் கட்டமைப்பு (SCF) ஆகியவற்றின் வழி இன்னும் சேர்த்து கல்வியினை அளிக்கும் . தேர்வாணையர் குழுக்கள் தேர்வு முறையினை ஒட்டு மொத்தமாக சீர்திருத்தி மேம்படுத்தும் .பாடத்திட்டத்தை அமைப்பதிலோ அல்லது பாடப்புத்தகத்தை உருவாக்குவதிலோ அவை பங்கு வகிக்காது . 8.1.9. பாடத்திட்டத்தை தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத் தன்மை :- பள்ளிகள் மற்றும் பள்ளி அமைப்புகளுக்கு அவர்களின் பாடத் திட்டத்தை தேர்வு செய்ய முழு நெகிழ்வுத் தன்மையும் இருக்கும் .இருப்பினும் ,எல்லா பள்ளிகளின் பாட நெறிகள் குறிக்கோள்கள் உட்பட கல்வி உள்ளடக்கம் மற்றும் செயல்முறைகள் , மத்திய கல்வியியல் கட்டமைப்பு (NCF) மற்றும் மாநில கல்வியியல் கட்டமைப்பு உடன் இயைந்து தான் இருக்க வேண்டும் .பொதுப் பள்ளி முறையில் அனைத்து கல்வி அதிகாரிகளும் P 8.1.6 (ம) P 8.1.7 ல் விவரிக்கப்பட்ட கல்வியியல் துணை அமைப்புகளும் பள்ளிகளுடன் கலந்தாலோசித்து பாடத்திட்ட மேம்பாட்டினையும் கல்வியியலை செயல்படுத்துவதையும் ஒருங்கிணைக்க வேண்டும் . 8.1.10. மேம்பாட்டிற்கான திட்டமிடல் மற்றும் ஆய்வு இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் பணிக்கு வழிகாட்ட ஒவ்வொரு வருடமும் கடுமையான திட்டங்களை உருவாக்க வேண்டும் . அவர்கள் இடைக்கால திட்டங்களை ( 3-5 ஆண்டுகள் ) கூட உருவாக்க வேண்டும். அமைப்புகளின் குறிக்கோள்களை அடைந்திடவும் ,கல்வியியல் அமைப்பில் பங்கினை அதிகபட்ச திறனுடன் செயலாற்றிடவும் , இத்திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட தலைமை அமைப்பில் ஆதரவு வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்காக அத்திட்டங்கள் மற்றும் அவற்றின் வெற்றிகரமான செயல்பாடுகள் ஆகியவை மதிப்பாய்வு செய்யப்படும். அரசுப்பள்ளி நிறுவனம் ( RJSA - Rajya School Authority ) அல்லது பள்ளிக் கல்வித்துறை மாநிலத்தின் இந்த திட்டமிடலையும் செயல் முறை ஆய்வையும் வழிநடத்தும். ஒவ்வொரு தனித்திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு அமைப்பு முறையில் கல்வி விளைவுகளை தொடர்ச்சியாக மேம்படுத்திட உறுதி செய்யப்படும். 8.2. பொறுப்புடன் சுயாட்சிக்கு அங்கீகாரம் : பள்ளிகள் கீழே வரையறுக்கப்பட்ட வகையில் தரநிலை மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு ( School Quality Assessment and Accreditation frame work ) தரநிலையை அடைந்துள்ளதா என்பதை உறுதி செய்யவும் பள்ளியை தொடங்குவதற்கான உரிமத்தை அளித்திடவும் அங்கீகாரமுறை பயன்படும். பள்ளிகளின் அங்கீகாரத்திற்கான அமைப்பு மற்றும் கட்டமைப்பு , பரந்த மாறுபட்ட தன்மை கொண்ட உள்ளூர்தன்மை , இளைய மாணவர்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றை கையாளும் போது நெகிழும் தன்மை , நாடு முழுவதும் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகளில் உள்ள உண்மையான நடைமுறை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பூகோள ரீதியில் அனைத்து பகுதிகளின் செயல்பாடுகள் கொண்ட தன்மை அனைத்து பள்ளிகளும் எளிதில் அணுகக்க கூடியதாகவும் நேர்மையை உறுதி செய்திட கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் முறைகளும் இவற்றிற்கு தேவை . அதிகாரமளிப்பதோடு கடமையும், பொறுப்புணர்வும் இணைந்து செல்லவேண்டும், அது மிகவும் அவசியமானதும் கூட என்பதையம் இக்கொள்கை உணர்ந்துள்ளது. 8.2.1. பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் கட்டமைப்பு (SQAAF ) உருவாக்கும். பள்ளிக்கல்வி ஒழுங்குமுற ஆணையத்தால் அங்கீகார முறையின் அடிப்படையில் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இது பயன்படும். ஆசிரியர்கள் , இதர கல்வியாளர்கள் , பள்ளியின் தலைவர்கள் , பள்ளிகள் , பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழுக்கள் குடிமை சமூக அமைப்புகள் உள்ளிட்ட கல்வி தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனை மேற்க்கொண்டு பள்ளிதர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு (SQAAF ) உருவாக்கப்படும். பள்ளிக் கல்வித்தர குறியீடு ( SEQA ) இருந்து பெறப்பட்டதும் சாலா சித்தி பள்ளி தரநிலைகள் மற்றும் மதிப்பீடு பற்றிய தேசிய திட்டம் ) செயல்பாடுகளில் இருந்தும் இது ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விதிட்டம் மற்றும் நிர்வாக நிறுவனம் ( NIEPA ) பல்கலைக்கழகம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் அங்கீகார கட்டமைப்பு ( SQAAF) அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அணுகுமுறை செயல்படுத்த தேசிய வழிகட்டுதல்களளை உருவாக்கும். மாநிலங்கள் மற்றும் பிற கல்வி தொடர்பானவர்களுடனும் ஆலோசனை செய்த பின்னர் மேற்கொள்ளப்படும் இந்த வழிகாட்டு முறைகள் இறுதியானவை அல்ல. ஆனால் துணை புரிபவை. இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு ( SQAAF)பின்வரும் கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை. அ) அனைத்து மாநிலங்களின் பள்ளித் தர மதிப்பீடு மறறும் அங்கீகார கட்டமைப்பு ( SQAAF ) ஒரு பள்ளி செயல்பட ஒழுங்குமுறையின் ஒப்புதலைப் பெற பள்ளி பூர்த்தி செய்ய வேண்டிய சில அடிப்படைக் காரணிகளுடன் சேர்த்து பள்ளிகளை தொடர்ச்சியாக மேம்படுத்தி பலவிதமான காரணிகள் அல்லது பரிணாமங்கள் கொண்டிருக்கும் . ஆனால் இந்த கூடுதல் காரணிகளும் பள்ளிகளின் ஒழுங்குமுறைக்கு தகுதியாக அமைவதில்லை. ஆ) இந்த அடிப்படை காரணிகள் கூறுபவை : பள்ளிக்கடத்தில் உள்ள அனைவருக்கும் கவனம் மற்றும் பாதுகாப்பு , பள்ளிக்கூட ம் நடத்த தேவையான அவசியமான உட்கட்டமைப்பு , தேசிய கல்வியியல் கூட்டமைப்பு / மாநில கூட்டமைப்பு (NCF / SCF ) உடன் இயைந்த பாடத்திட்டத்தின் வெளிப்படையான அறிக்கை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் எண்ணிக்கை , பாடங்கள், பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்பு , அனைத்து வித செயல்பாடுகளிலும் நேர்மை, அனைத்து விதமான ஒழுங்கு மு றத தகவல்களை ஔிவு மறைவின்றி வெளிப்படையாகத் ரெிவித்தல். ." அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு அளவு " என்ற நடைமுறை உட்கட்டமைப்பில் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. உள்ளூர் தன்மைக்கேற்ப கவனம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழ்வில் போதுமானவற்றை உறுதி செய்த ஏற்றுக் கொள்ளலாம். NCF. SCF ஆகியவற்றோடு இணைந்திருக்கும் வரை பள்ளி எந்தவொரு பாடத்திட்டத்தையும் தேர்வு செய்வதற்கு முழு சுதந்திரம் உண்டு. பள்ளி தேர்வு செய்யும் பாடத்திட்டத்தின் அடிப்படையை வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்க்கப்படும். ஆசிரியர்கள் குறித்து ஆசிரியர் கல்வியில் தேசிய அமைப்பு வகுத்துள்ள தேவையான கல்வி தகுதி கொண்ட பாட ,வகுப்பு வாரியாக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் என்ற விதத்தில் தகவல் அளித்தால் போதும். இந்த வகையில் வேறு எந்த தகவலும் தேவையில்லை. எல்லா அடிப்படைக் காரணிகளிலும். காரணிகளின் நோக்கம், அப்டிபடை பற்றிய புரிதல் பள்ளிகளிடம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்க்கப்படும். இயந்திரகதியான, பாடத்தைத் திணிக்கும், செயல்பாடு மையமான அணுகுமுறை இருக்காது. எதிர்பார்த்த அடிப்படை தரங்களின் பட்டியலில் வேறு எந்த காரணிகளும் சேர்க்கப்பட மாட்டாது. இ) கல்வி விளைவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் (SQAAF) ஏதேனும் கூடுதல் காரணிகளை / பரிணாமங்களை சேர்த்து கொள்ளலாம்.இந்த காரணிகள் இவ்வாறாக இருக்கலாம். - பாடத்திட்டத்தின் வகுப்பறை பரிவர்த்தனைக்கான செயல்முறைகள் மற்றும் அவற்றின் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் செயல்முறைகள் - மாணவர்கள் கற்றல் பற்றிய தொடர்ச்சியான வளர்ச்சி மதிப்பியிட்டிற்கான பயனுள்ள முறைகள் மற்றும் தனித்தனியான கற்றலின் திட்டங்களை நுட்பமாக சரிசெய்தல் அவற்றின் பயன்பாடு - ஒவ்வொரு மாணவருக்கும் சரியான கவனம் மற்றும் தலையீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஆசிரியர்களை ஒரு குழுவாக பணிபுரிய செயல்படுத்துவதற்கான செயல்முறைகள் - பள்ளிமேலாண்மை குழுக்களின் (SME) செயல்பாடுகள் மற்றும் அதன் துணையை பள்ளியில் பெறுவதற்கும் பள்ளிக்காக்கவும் ஆன வழிமுறைகள் - மாணவர்களை தக்கவைத்தல் மற்றும் இடைநிற்றல் விகிதத்தை குறைதல் - ஆசிரியர்களுக்கான திறமையான தொழில்முறை மேம்பட்டு திட்டங்கள் - பள்ளிவளாகத்துடன் பாடசாலையின் ஒத்திசைந்த செயல்பாடு (SQAAF) பின் அடிப்படை காரணிகள் பள்ளி தொடங்குவதற்கான உரிமத்திற்காக (LSS - License to Start School) தேவைகளை உருவாக்க மா க ப ஆ நிறுவனத்தால் பயன்படுத்தப்படும். ப.தா.மி.அ.க (SQAAF) அடிப்படை காரணிகளை தவிர வேறு எதையும் பள்ளி தொடங்குவதற்கான உரிமம் சட்டபூர்வமாக்காது. இந்த கட்டமைப்புகள் ப.தா.மி.அ.க (SQAAF) மற்றும் ப.தொ.உ (LSS) இரண்டும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு,அனைத்து பங்குதாரர்களுடனான ஒரு பரந்த ஆலோசனை மூலம் மேம்படுத்தப்பட வேண்டும் . இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் பட வேண்டும். மாநிலத்தில் பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கட்டமைப்பிற்கு தெரிவித்திட ப த (ம) அக (SQAAF) கட்டமைப்பை பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பயன் படுத்தலாம் . இந்த ஒட்டுமொத்த அமைப்பு 2023க்குள் உருவாக்கப்படலாம்.இதன் திறன் பள்ளிக்கல்வி துறை , மா.க.ஆ (SEERA) மற்றும் அரசு கல்வி ஒழுங்கு முறை(RJSA) ஆகியவற்றால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யப்படும். 8.2.2. பள்ளித்தரம் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு மற்றும் பள்ளி தொடங்க உரிமம் ஆகியவை அங்கீகாரத்தின் அடிப்படையில் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அடிப்படை எந்த ஒரு அங்கீகாரத்திற்கும் ப.த(ம) அக(SQAAF) ட்டமைப்பே அடித்தளமாக அமையும். இது அப்படியே பள்ளிக்கல்வி ஒழுங்கு முறை ஆணையத்தால் (SSRA) ஒரு வலுவான அங்கீகார முறையை உருவாக்க பயன் படும் .அவ்வப்போது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பெறப்பட்ட அனுபவங்களின் (ம) இதர முன்னேற்றங்கள் அடிப்படையில் திருத்தப்படும். ப.த(ம)அ.க(SQAAF) கட்டமைப்பின் அடிப்படை காரணிகளை தகுதிகாண் பருவத்திற்கு பிறகும் பூர்த்திசெய்யாத பள்ளிகளை செயல்பட அனுமதிக்க கூடாது.அதன் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்படுவர். 8.2.3. சுய அங்கீகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து அடிப்படை காரணிகளையும் தெரிவிப்பதின் மூலம் பள்ளி தர மதிப்பீடு மற்றும் அ.க(SQAAF)ன் அடிப்படையில் எல்லா பள்ளிகளும் சுய மதிப்பீடு செய்து உரிய ஆவணங்களை அளிக்க வேண்டும் .பள்ளி மேலாண்மை குழு மற்றும் இரண்டு சக பள்ளிகளும் அதை கவனமாகப் பரிசீலித்து ஒப்புதல் தந்தபிறகே அங்கீகாரம் செல்லுபடியாகும். சுய அங்கீகாரம் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் திரும்ப பெறப்படும். சக பள்ளிகள் ஒரே பள்ளி வளாகத்திற்குள் இருக்க கூடாது. சுய அங்கீகாரம் ,அதன் ஒப்புதல்கள், அதன் விவரங்கள் P.8.2.5 ல் விவரித்தவாறு பொதுப்பார்வைக்கு கிடைக்க பெற வேண்டும். 8.2.4. அங்கீகாரத்தின் தணிக்கை முறை. பள்ளிக்கல்வி, ஒழுங்கு முறை ஆணையம் அங்கீகாரம் தணிக்கை செய்யும் ஒரு அமைப்பை ஏற்படுத்தும். இது திறன் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட சக பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களைப் பயன்படுத்தி செய்யப்படும். அனைத்து பள்ளிகளும் (அரசு/பொது/தனியார் உதவி பெறும் மற்றும்.உதவி பெறாத தனியார் பள்ளிகள்) இந்த தணிக்கையின் கீழ் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை விவாதிக்கப்படும். தணிக்கை முடிவுகளின் விவரங்களும் P.8.2.5ல் குறிப்பிட்டுள்ளவாறு பொதுப்பார்வைக்கு கிடைக்க பெற வேண்டும். பள்ளி கல்வித்துறை மற்றும் அதன் அலுவலர்கள் பள்ளிகளின் அங்கீகாரத்திலோ அல்லது அதன் தணிக்கையிலோ பங்கு பெற மாட்டார்கள்.ஆனால் அவர்கள் அங்கீகாரம் அளிப்பதற்கான ஒட்டுமொத்த செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கான நேரத்தை அளித்தும் வளங்களை வழங்கியும் பள்ளிகளில் திட்டங்களில் அங்கீகாரம் அந்தந்த பகுதிகளில் அளிப்பதற்கு உதவுவார்கள். பள்ளிக்கல்வித்துறை அல்லது அதன் அலுவலர்கள் தடை,, இடையூறு அல்லது அங்கீகார செயல்பாடுகளை தவறாக பயன்படுத்துதல் , ஏதேனும் செய்தாலோ செய்யாமல் இருந்தாலோ அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்களாவார்கள். 8.2.5. அங்கீகாரத்திற்கும் அதன் தணிக்கைக்கும் தொடர்புடைய தகவல்களை பொது மக்கள் பெறுதல் அனைத்து தகவல்கள் மற்றும் அங்கீகார முறையின் வழிமுறைகள் பற்றிய அனைத்து மட்ட ஆவணங்கள் மற்றும அங்கீகார முறையின் செயல்பாடுகள் பொதுமக்கள் ஆய்வு செய்வது என்பது பொதுமக்களின் மேற்பார்வைக்கும் பொறுப்பிற்கும் முக்கிய வழியாக பயன்படும் இதனை செயல்படுத்த ,அங்கீகாரம் குறித்த அனைத்து தகவல்கள், (சுய அங்கீகாரம உட்பட) தணிக்கை ,அவற்றின் காரணங்கள், ஆதரமான ஆவணங்கள் ஆகியவை அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவில் இலவசமாகவும் எளிதாகவும் கிடைக்க வேண்டும்.பள்ளிக்கல்வி ஒழுங்குமுறை ஆணையம்(SSRA) ,இந்த அனைத்து தகவல்களும் கொண்ட , பள்ளிகளால் பராமரிக்கப்பட வேண்டிய இணைய தளத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இந்த இணையதளம் 2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட வேண்டும் .இந்த வெளியீட்டிற்கான வடிவமைப்பு பள்ளிக்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தால் தீர்மானிக்கப்படும். பள்ளிக்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தால் பராமரிக்கப்படும் இணையதளத்துடன் பள்ளிகளும் அதே தகவலை அதே வடிவத்தில் தங்கள் சொந்த வலை தளத்திலும் வெளியிட வேண்டும். பள்ளியில் அச்சிட்ட நகல்களையும் வைத்திருக்க வேண்டும். மேலும் கோரிக்கையின் பேரில் இந்த தகவல் இலவசமாக பகிரப்பட வேண்டும் . இந்த வெளியீடுகளில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அல்லது தவறாக தெரிவிக்கப்பட்டால் பள்ளி மற்றும் அதன் சார்பாளர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . தவறான தகவல்களை அம்பலப்படுத்த பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பு அல்லது பிற அமைப்புகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். 8.3. தனியார் பள்ளிகளின் ஒழுங்குமுறை அங்கீகாரம் மற்றும் மேற்பார்வை : தனியார் மற்றும் தனியார் தொண்டுநிறுவன பள்ளிகள் இந்தியாவில் பெருபங்காற்றி வருகின்றன. இந்த முயற்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். அவர்களை சந்தேகத்துடன் நடத்துவதன் மூலம் அவர்களின் செயப்பாட்டினை குறைத்துவிடக் கூடாது. அத்தகைய பள்ளிகளுக்கு அதிகாரம் வழங்குவதுடன் முறைப்படுத்தலால் உண்டாகும் அதிகசுமை அதனால் ஏற்படும் சிக்கல்கள், ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் தனியார் வணிக நிறுவனங்களாக பள்ளியை நடத்தி கல்வியின் அடிப்படை பொதுநலன்களை சீர்குலைக்க முயல்பவர்கள் தடுக்கப்படுவார்கள். கல்வியும் பள்ளியும் சந்தைப்படுத்தலுக்கான பொருட்கள் அல்ல. இங்கு கணிசமான ‘தகவல் சமச்சீரற்ற நிலை’ உள்ளது - மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை விட பள்ளிகளுக்கு கல்வி மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய அதிக அறிவு உள்ளது. மாணவர்கள் வசிப்பிடம், சமூக, பொருளாதார காரணங்களுக்காக பள்ளிகளிலிருந்து மாறிக்கொண்டிருக்க முடியாத அளவிற்கு, ஏற்க முடியாத அளவிலான கட்டண மாற்றம் உள்ளது. இந்த மைய அதிகாரமானது பள்ளி மற்றும் அவற்றின் பயனர்கள் கையில் உள்ளது. எனவே மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் இந்த உயர்ந்த சமமற்ற அதிகாரப் பரவலிலிருந்து குறிப்பாக சில பள்ளிகளின் மற்றும் தன்னிச்சையான, நடவடிக்கையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் கல்வி விளைவுகளும் பொதுப்பள்ளிகளை ஒத்ததாகவே இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது மிகவும் அவசியமாகும். இத்தகைய முன்னேற்றத்திற்கான பொறுப்பு தனியார் பள்ளிகளின் நிர்வாகம், உரிமையாளர் உட்பட்டவர்களை சார்ந்தே உள்ளது. இதற்காக பொதுமக்களிடமிருந்து பல்வேறு ஆதரவை பெற விரும்பும் தனியார் பள்ளிகளுக்கு தகுந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் ஆதரவு வழங்கப்படும். தனியார் பள்ளிகள் தங்கள் பெயரில் ‘பொது’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களால் நிதி உதவி வழங்கப்படும் பள்ளிகள் மட்டுமே பொதுப்பள்ளிகள் - அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள். 8.3.1. தனியார் பள்ளிகளின் ஒழுங்குமுறை : தனியார் பள்ளிகளின் ஒழுங்குமுறை பொதுப்பள்ளிகளின் கட்டமைப்புக்குட்பட்டே அமையும். மேலே குறிப்பிட்ட கொள்கைகள் அனைத்தும் தனியார் மற்றும் பொதுபள்ளிகள் அனைத்துக்கும் பொதுவானதை ஆகும். தனியார் பள்ளிகான ஒழுங்குமுறை சீருடைக்கான தேவைகளை முறைப்படுத்துத்தலுக்காக மட்டுமே. தற்போதுள்ள தனியார் பள்ளிகள் மேற்கூறப்பட்ட ஒழுங்குமுறைக்குள் வந்து அங்கீகாரம் பெறவேண்டும். ஒழுங்குமுறை மற்றும் அங்கீகாரத்துக்கான மதிப்பீடு என்பது பொதுப்பள்ளிகளுக்கு உண்டாவன்ற்றைப் போன்றே அமையவேண்டும். 8.3.2. பள்ளிகளுக்குப் பெயரிடும் முறை: தனியார் பள்ளிகள் எந்தவிதமான ஆவணப்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் அறிவிப்புகளில் “பொது” என்ற சொல்லை பள்ளியின் பெயருடன் பயன்படுத்தக் கூடாது. இந்த மாற்றம் 3 வருடங்களுக்குள் அனைத்து தனியார் பள்ளிகளாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ‘பொது’ப் பள்ளிகள் என்பவை பொதுமக்கள் நிதியால் நடத்தப்படும் பள்ளிகள் மட்டுமே. அது அரசுப்பள்ளிகள் ( மாநில அரசு பள்ளிகள் உட்பட) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள். 8.3.3. புதிய பள்ளிகள் துவங்குதல்: புதிய தனியார் பள்ளிகள் SSRA வின் வரைமுறை மற்றும் தேவைக்குட்பட்டு தன்னறிவிப்பு மூலமாக SSRAவிடமிருந்து LSS (License to start school) பெறவேண்டும். இந்த தன்னறிவிப்பானது உள்ளூர் பஞ்சாயத்து வார்டு குழு, பள்ளிமேலாண்மைக்குழு மற்றும் பட்டயக் கணக்காளரின் ஒப்புதல் பெறவேண்டும். பள்ளி தொடங்கப்பட்ட சூழலில் பள்ளி மேலாண்மைக் குழுவில் பெற்றோர் பிரதிநிதி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் மற்ற உறுப்பினர்கள் இருக்க (P7.7.1 ல் குறிப்பிட்டது போல) வேண்டும். 8.3.4. பொதுமக்களுக்கு தகவல் அளித்தல் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது ,அனைத்து வாய்ப்புகள் பற்றியும் தெரியப்படுத்த வேண்டும் .இதற்காக பள்ளிகளின் அங்கீகாரத்துக்கான நடைமுறைகள் ,கட்டண விகிதம் ,வசதிகள் ,கற்றல் விளைவுகள் ,ஆசிரியர்களின் விபரம் ,அவர்களின் கல்வித் தகுதியுடன் மற்றும் ஒரு பள்ளியை பெற்றோர் தேர்ந்தெடுக்க முடிவு செய்வது தொடர்பான அனைத்து செய்திகளும் பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும் .செய்திகளை வெளிப்படுத்தும் முறையும் எந்த செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற அம்சத்தையும் SSRA தீர்மானிக்கும் .இது அனைத்தும் SSRAவால் பொது இணைய பக்கத்திலும் , பள்ளிகளின் இணைய பக்கத்திலும் ,பள்ளி பொது ஆய்வு மற்றும் பொது மக்கள் யாரேனும் கோருவதன் அடிப்படையில் கிடைக்குமாறு அமைய வேண்டும் . தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்ய சுதந்திரம் உண்டு ,ஆனால் தன்னிச்சையாக நிர்ணயிக்க இயலாது . தகுந்த கட்டண உயர்வானது பொது ஆய்வுக்குப் பின்னர் ஏற்கப்படும். 8.3.5. தனியார் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மை குழுக்கள் :- அனைத்து தனியார் பள்ளிகளும் பொதுப் பள்ளிகளைப் போன்றே பள்ளி மேலாண்மைக் குழு அமைத்து தொடர் செயல்பாட்டின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுவால் மறுசீராய்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP) பெற்றிருக்க வேண்டும் . அப்பள்ளிகள் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு , நிதிநிலை அறிக்கை மற்றும் வருமானவரித் துறைக்கு வழங்கப்பட்ட மற்ற அறிக்கைகளை SMC மற்றும் பொதுமக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் அறிக்கையாக வழங்க வேண்டும் . அந்த அறிக்கையின் நம்பகத்தன்மைக்கு SMC ஒப்புதல் வழங்க வேண்டும் .நிதி வெளிப்படுத்தல் தரநிலைகள் பகுதி 8ல் (இலாப நோக்கற்ற ) உள்ள நிறுவனங்களுக்கானதைப் போன்றே இருக்க வேண்டும் . பள்ளி மேம்பாட்டுத் திட்டமும் , நிதிநிலை அறிக்கைகளும் எளிதாகவும் ,வெளிப்படையாகவும் கிடைக்க வேண்டும் (including online ) 8.3.6. தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் சுதந்திரம் உண்டு .ஆனால் தன்னிச்சையாக உயர்த்திக்கொள்ள முடியாது (எந்த சூழ்நிலையிலும் ) தகுந்த கட்டண உயர்வானது அதிகரிக்கும் செலவுகளுக்கானது (பணவீக்கம் சார்ந்த) பொது ஆய்வுக்குப் பின் அனுமதிக்கப்படும் . எனினும் எதிர்பார்க்கப்படாத அல்லது நியாயமற்ற பள்ளி மேம்பாடு , உட்கட்டமைப்பு நிதி போன்ற எந்த தலைப்பின் கீழும் பெறப்படும் கணிசமான கட்டண உயர்வு செய்யப்படக்கூடாது .பணவீக்கம் அடிப்படையில் அனுமதிக்கப்படும் கட்டண உயர்வானது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை SSRAவால் தீர்மானிக்கப்படும் . 8.3.7. பள்ளிகள் இலாப நோக்கமற்றவையாக இருக்க வேண்டும். பிரிவு 8ன் நிறுவனங்களுக்கான வெளிப்படையான தர நிலைகளின்படி தங்களின் தணிக்கை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையின் படி இலாபமற்றவையாக இருக்க வேண்டும். கூடுதலாக வருமான வரி சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் பள்ளிகளுக்கான கூடுதலான கணக்கீடு மற்றும் தகவல் தரநிலைகளை இலாபம் அடைதலை தடுக்கும் பொருட்டு அமைக்கலாம். 8.3.8. தனியார் பள்ளிகளில் பன்முகத்தன்மை : கடந்த 50ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் சமூக பொருளாதார விவரங்களில் முன்பு இருந்ததை விட பன்முகத்தன்மை குறைவாக உள்ளது . இது மாற்றப்பட வேண்டும். ஒழுங்குமுறை ஆணையமும் , உரிமை அதிகார ஆணையமும் அனைத்து தனியார் பள்ளிகளையும் மாணவர்களிடையே ,பன்முகத் தன்மையையும் ,ஒருங்கிணைப்பையும் தேர்ந்தெடுத்தல் குலுக்குச்சீட்டு மற்றும் கல்வி உதவித்தொகைகள் மூலமாக ஊக்குவிக்க வலியுறுத்த வேண்டும் . இதற்கான உத்வேகமானது கல்வியாளர்கள் NGO மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோரிடமிருந்து வரவேண்டும் . இறுதியில் RTE சட்டம் 12(1)(C)இல் உள்ள ஷரத்துக்களைப் பள்ளிகளை கட்டாயப்படுத்தி இதை நம்பிக்கை உரிய அளவிற்கு திறம்பட செய்ய முடியவில்லை . எனவே பள்ளிகள் இதை அவர்களே விரும்பி செய்ய விட வேண்டும் . சரியானவற்றைச் செய்யவும், புதுமைகள் புரியவும் தன்னாட்சி தந்து, பள்ளிகளில் சிறப்பாக செயல்பட விடுவதே பொதுவாக சிறந்த வழி . அதுவே இக்கொள்கைக்கான கோட்பாடுகளுடன் ஒத்திசைவானதாக்கும். 8.3.9. தனியார் பள்ளிகளில் பயன்களை மேம்படுத்துதல் . தனியார் பள்ளிகளின் கல்வி பயன்களை மேம்படுத்த முயற்சி செய்வதுடன் அதன் பயன்கள் ஏற்கனவே 4ல் குறிப்பிட்டபடி பொதுவில் வெளிப்படுத்த வேண்டும் .ஒரு தனியார் பள்ளி இது போன்ற மேம்பாடுகளுக்கு பொது அமைப்பின் ஆதரவு பெற விரும்பினால் அது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் . a. பொது அமைப்பு நிறுவனங்கள் தனியார் பள்ளிகளுக்கு கூடுதலான ,தனிப்பட்ட முயற்சிகளை எடுக்காது . ஆனால் பொது அமைப்பில் நடைபெறும் செயல்பாடுகளை தனியார் பள்ளிகளுக்கும் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும் . எ.கா. பொதுப் பள்ளி ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் திறன்வளர் பணிமனைகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பலாம் ,அல்லது ஒருங்கிணைந்த பள்ளி வளாக வளபகிர்வு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் . (எ.கா: பொது விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் அல்லது பயன்படுத்துதல் அல்லது தொழிற்கல்வி ஆசிரியர்களை பகிர்வது போன்றவை ) b. இத்தகைய பொது ஆதரவிற்கு தகுந்த அளவு கட்டணம் அல்லது விலை தனியார் பள்ளியால் ஏற்கப்பட வேண்டும் .(எ.கா:பள்ளி வளாகம் ,BRC,DIET) c. தனியார் பள்ளி மற்றும் பொதுப்பள்ளி இடையேயான எந்த ஒரு ஏற்பாடும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் .இத்துடன் இந்த ஏற்பாடு தொடர்புடைய ஆளும் குழுவால் (எ.கா: SMC,DEO,SCERT)ஏற்கப்பட வேண்டும் .மேலும் தனியார் பள்ளிகளால் ஏற்கப்படும் செலவுகளும் ,பயன்பாடும் பொதுவில் வெளியிடப்பட வேண்டும் . d. எந்த ஒரு சூழ்நிலையிலும் பொதுப்பள்ளி முறையின் வாய்ப்பு அல்லது ஆதரவை குறைக்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அளிக்கப்படாது .மேலும் பரஸ்பர நன்மை மற்றும் ஒத்துழைப்பே எப்பொழுதும் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் . 8.4. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் தாக்கங்கள்: இந்திய கல்வி வரலாற்றில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஒரு முக்கியமான திருப்புமுனை ஆகும். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல் செயல்பாடுகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அதன் நோக்கங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு இக் கல்விக் கொள்கை கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக ஆராய்கிறது. இதனைத் தொடர்ந்து கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தேவைக்கேற்றவாறு திருத்தம் மேற்கொள்ளலாம். அத்தோடு சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளதால் இக்கல்விக் கொள்கையை சட்டமாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.. அத்தோடு இந்த ஆய்வானது கடந்த பத்து ஆண்டுகளில் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள உதவும். சுருக்கமாக, கட்டாய கல்வி உரிமைச் சட்டமானது கல்விக்கான உள்ளீடுகளில் கவனம் செலுத்துவதை விட கல்வியின் பயன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக உட்கட்டமைப்பு போன்ற விஷயங்களில்) உள்ளீடுகள் மற்றும் செயல்பாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட இயந்திரத்தனமான அணுகுமுறையைக் கொண்டிராமல் விளைவுகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதாக இருக்க வேண்டும்-. ஆணைகள் பிறப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிராமல், பொதுமக்களை அதிகாரமயப்படுத்தி அவர்களது கண்காணிப்பிற்கு உட்பட்டதாக சட்டத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பொதுப்பள்ளிகள் மற்றும் பொதுநல நோக்கம் கொண்ட் தனியார் பள்ளிகள் தங்களது உள்ளூர் தேவைகள் மற்றும் பிரச்சனைகளின் அடிப்படையில் உட்கட்டமைப்பு, பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், பாடங்கள், மதிப்பீட்டு வாரியங்கள், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள் போன்றவை குறித்து முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். 8.4.1. மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை உள்ளடக்கும்படியாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை விரிவுபடுத்துதல்: வாய்ப்பு மறுக்கப்பட்டோர் மற்றும் நலிவுற்றோர் உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் ஒருவரது கல்வி வளர்ச்சிக்கும் அடைவிற்கும் அத்தியாவசியமானதாக் கருதப்படும் 3 வயது முதல் மேல்நிலைக்கல்வி வரையிலான பள்ளிக்கல்வியை தரமாகப் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு 1 முதல் 8 வகுப்புகளுக்கு உரியதாக இருந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமானது மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி(12ம் வகுப்பு) வரை விரிவுபடுத்தப்படும். அதாவது அரசில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியானது 3 முதல் 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மீதான மீளாய்வு: தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் பொருட்டும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பொருட்டும் கட்டாய கல்வி உரிமைச் சட்டமானது இக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படும். அ. உள்ளீடுகள் மற்றும் இயந்திரமயமான நிர்ணயிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை மாற்றி கள நிலவரத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்கத்தக்கதாக சட்டம் இருப்பது உறுதி செய்யப்படும். எடுத்துக்காட்டாக நகர்ப்புறங்களில் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானங்களின் அளவுகள்.. மாணவர்களது பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான ஆக்கபூர்வமான கற்றலை பாதிக்காத வகையில் பள்ளிகள் தங்களது உள்ளூர் தேவைகள் மற்றும் பிரச்சனைகளின் அடிப்படையில் இவ்விஷயங்களை முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும். அதற்கேற்றவாறு சட்டமானது நெகிழ்த்தப்படும். ஆ. கற்றல் அடைவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்கான உள்ளீடுகள் மதிப்பீட்டு முறைகளில் போதுமான அளவு சேர்க்கப்படும். இ. உட்பிரிவு 12(1)(c) ஆனது இக்கல்விக் கொள்கை மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் பெறப்பட்ட சாதக பாதக அனுபவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் அடிப்படையில், உட்பிரிவு 12(1)(c) ஆனது நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைளும் தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் வாய்ப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது, எனினும் இது மாணவர் சேர்ர்கை உட்பட்ட பள்ளிகளின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் அவர்கள் நல்நோக்கங்கள் மீதான நம்பிக்கைக்குப் புறம்பானதாகவும் உள்ளது. அத்தோடு ஊழலுக்கான பல்வேறு வாய்ப்புகள், போலிச் சான்றிதழ்கள், போலி மாணவர் எண்ணிக்கை, கட்டணத்தை உயர்த்துதல் (பிற கட்டணங்களை உயர்த்துவதன் மூலமாக மறைமுகமாக), சிறுபான்மைப் பள்ளிச் சான்றிதழ் பெற்று இச்சட்டத்தைத் தவிர்க்க முயலுதல் போன்ற பாதக விளைவுகளையும் இது ஏற்படுத்துகிறது. மேலும் இத்திட்டத்திற்காக செலவிடப்படும் பெருந்தொகையானது அரசுப்பள்ளிகளுக்கான திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவுற்ற மாணவர்களின் தொடர் முன்னேற்றத்திற்கு சிறப்பாகப் பயன்படுத்தப்படலாம் ஆய்விற்குப் பிறகு, 12(1)(c) தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டால் அது கீழ்க்கண்டவாறு செயல்படுத்தப்படலாம். அனைத்து தனியார் பள்ளிகளிலும் உட்பிரிவு 12(1)(c) ன் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கான சேர்க்கையானது முழுவீச்சில் நடைபெறும். ஏற்கனவே சில மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது போல கணிணிவாயிலான வெளிப்படையான சேர்க்கையானது அனைத்து வகையான மாணவர் சேர்க்கைக்கும் அறிவுறுத்தப்படும். பள்ளியின் கல்விச் செயல்பாடுகள் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு அனைத்துப் பள்ளிகளும் தங்களுக்கு அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையினை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். உட்பிரிவு 12(1)(c) ன் கீழ் மாணவர் சேர்க்கை செய்யும் பள்ளிகள் அதன் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களை எவ்விதப் பாகுபாடும் இன்றி நடத்துவதற்கு முழுமுயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும். அவர்கள் கற்றலில் பிந்தங்கினால் சக மாணவர்கள் மூலமாகவோ குறைதீர் கற்பித்தல் மூலமாகவோ கூடுதல் கவனம் கனிவுடன் வழங்கப்படவேண்டும். பாகுபாடு மற்றும் அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற பிரச்சனைகள் இருப்பின் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்க நம்பத்தகுந்த குறைதீர்ப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக SSRA போன்ற குறைதீர்ப்பு அமைப்புகள் மூலமாக இது செயல்படுத்தப்படலாம். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகள் தவறாகப் பயன்படுத்துவதை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலமும் சட்ட நடவடிக்கைகள் மூலமும் தடுக்கப்படும். தவறாகப் பயன்படுத்தப்படும் முக்கிய இரண்டு கூறுகள் (i) சமூக பொருளாதார அடிப்படையில் பிந்தங்கிய மாணவர்களை அதிகமாகச் சேர்த்து அவர்களிடம் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்துவது. (ii) அடிப்படையில் தனது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிக சேர்க்கை அளித்து கல்வி தருவதாக இல்லாமல் இருந்த போதும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இப்பிரிவிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விலக்கை பயன்படுத்த முயலுதல் . குருகுலம், மதராஸா, பாடசாலா, வீட்டுப்பள்ளிகள் போன்ற மாற்றுப்பள்ளிகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்கும் பொதுக்கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படும்(எ,கா BOAs). இவர்களுக்கென விதிமுறைகள் உருவாக்கப்பட்டு(கற்றல் அடைவு உட்பட) பல்வேறு வகையான பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுவது ஊக்கப்படுத்தப்படும். குறைவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை சரியான முறையில் முறைகேடுகளின்றி தீவிரமாக செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும். தொடர் மற்றும் விரிவான மதிப்பீடு மற்றும் 8ம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி போன்ற சமீபத்திய சட்டத் திருத்தங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். இதற்குப் பதிலாக குறைதீர் கற்றல் போன்ற செயல்பாடுகள் மூலம்(Remedial Instructional Aids Programme (RIAP) and National Tutoring Programme (NTP) போன்ற திட்டங்கள் வாயிலாக) மாணவர்கள் அவரவர் வயதிற்குரிய கற்றல் அடைவுகளை அடைவதை பள்ளிகள் உறுதி செய்தல் வேண்டும். அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் வெளி அமைப்புகள் மூலமான மதிப்பீட்டு முறைகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். 8.5. பள்ளிக்கல்வி அமைப்பின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல்: கல்விசார் விளைவுகளை மதிப்பீடுவது பள்ளிக்கல்வி அமைப்பின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய கருத்து சுழற்சியை உருவாக்கும். 8.5.1. தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில மதிப்பீட்டு ஆய்வு: மாணவர்கள் கற்றல் நிலையின் NAS அவ்வப்போது மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீட்டின் சுழற்சி குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும். குறிப்பிட்ட துறைக்கு தொடர்புடைய அறிவு மற்றும் திறன், மேலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் திறன்கள் உட்பட பாடதிட்டம் மற்றும் கற்றல் அடைவுகள் என முழுமையானதாக இந்த மதிப்பீடு அமையும். இந்த ஆய்வானது கல்வி அமைப்பின் ஆரோக்யத்தைப் பற்றிய பரிசோதனையை அளிக்கும், இதனால் ஒரு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒரு முழு அளவிலான கணக்கெடுத்து மதிப்பீட்டிற்கும் செல்லக்கூடாது. இந்த ஆய்வானது (NAS) தேசிய அளவில் பொதுவான தேசிய கட்டமைப்போடு நடத்தப்படுவதாகும். NAS கான கட்டமைப்பு NCERT யால் முடிவு செய்யப்படும். NCERT மூலம் அடையாளம் காணப்பட்ட செயல்முறை அடிப்படையில் நிறுவனங்களால் NAS நடத்தப்படும். NAS போலவே மாநிலங்களும், வகுப்பு மற்றும் பள்ளி அளவில் மாணவர்களின் கற்றலை கணக்கெடுப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம் - இது மாநில மதிப்பீடு ஆய்வு (SAS) எனப்படுகிறது. 3, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இவற்றை நடத்துவது குறித்து ஆலோசிக்கலாம். SAS யின் முடிவுகள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், SMC மற்றும் சமூகம் என அனைவருக்கும் கிடைக்கும்படி வெளிப்படையாக இருக்க வேண்டும். SAS யில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆராய்ச்சிக்காகவும், கற்றல் விளைவுகளை தொடர்ந்து அதிகரிக்கவும், மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு பெயரில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். மேல் கூறிய ஆர்வமுள்ள நபர்களுக்கு சுருக்கமான கருத்தை அளிப்பது, சிறு மற்றும் குறு அளவில் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் மாற்றியமைத்ததில் உதவுதல், போன்றவையே SAS இன் நோக்கம். தனிப்பட்ட அளவில் குறுகிய பயன்பாட்டுக்காக நடத்தப்படும் இத்தகைய முறைசார்ந்த மதிப்பீடுகளை இந்த திட்டம் வெளிப்படையாக அங்கீகரிக்கிறது, வளர்ச்சி சார் மற்றும் கல்விசார் பணிகளை மேற்கொள்ளும், தொடர் மற்றும் முழுமையான வளர்ச்சி மதிப்பீட்டிற்கு பதிலாக இது இருக்காது, இது தீவிரமாக நடத்தப்பட வேண்டும். SAS யின் முடிவுகள் அவ்வப்போது பரிசோதனைக்கென ஆர்வமுள்ள நபர்களுக்கு தகவலுக்காக மட்டுமே, தனிப்பட்ட மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எந்த ஒரு நிர்வாக அல்லது கல்விசார் முடிவு எடுப்பதற்கு பயன்படுத்தப்பட மாட்டாது. குறிப்பாக NAS மற்றும் SAS மதிப்பீடுகளை, தனிப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்/அல்லது பள்ளிகள் ஆகியவற்றை அளவைவிட/ தரப்படுத்த பயன்படுத்தக்கூடாது, மேலும் அவை தனிப்பட்ட மாணவர்கள் பள்ளிகள் அல்லது பள்ளி வளாகங்களை கண்காணிப்பதற்கும் அடையாளப்படுத்துவதற்குமான ஒரு கருவியாக பயன்படுத்த கூடாது. இந்த ஆய்வுகள் எந்த ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் அல்லது பள்ளிகள், அதன் சமூக மக்கள் தொகை பண்புகள் பற்றிய தகவல்களை வெளிப்படையாக வெளியிடாது. இவ்ஆய்வின் நோக்கம், உள்ளூர் ஆர்வலர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்களை வழங்குதல், மொத்த தரவு மற்றும் பெயரற்ற சோதனைகள் அடிப்படையில் மாநிலத்தில் கற்றல் மற்றும் கற்றல் விளைவுகளின் பொது நிலையை மதிப்பீடு செய்தல், கல்வி அமைப்பின் தொடர்ச்சியான முன்னேற்றதிற்கு வழி காட்ட உதவுதல் ஆகியவைத்தான். கற்றல் குறைபாடு, வளர்ச்சி சார் சவால்கள் உடைய மாணவர்களை கண்டறிதல், மற்றும் வேறு வகையான தேவைகளை பள்ளிகளுக்கு உள்ளாகவே முன்னெடுக்க வேண்டும், மேலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இதில் ஈடுபடுத்தி, மிகவும் நுட்பமாக முடிக்கவேண்டும். 8.6. குழந்தை மற்றும் வளர்பருவ கல்விக்கான உரிமைகள் பாதுகாப்பு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு என்பது குழந்தைகளின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டது. உடல்ரீதியான தண்டனை தடுப்பு, உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் இல்லாதது , பள்ளி நடவடிக்கையின் போது காயம் ஏற்படுவதை தடுப்பதற்கான தகுந்த ஏற்பாடுகள், பாதுகாப்பான உள்கட்டமைப்பு, குழந்தைகளுக்கு ஏற்ற மொழியைப் பேசுதல், குழந்தைகளிடம் பாகுபாடு காட்டாதிருத்தல் போன்றவையும் இதில் அடங்குவன. மேலும் குழந்தைகள் உரிமைக்கான சரியான சுற்றுப்புறத்தை ஏற்படுத்துதல். குழந்தைகளின் உடல் ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த, குழந்தை உரிமைகளை எந்த மீறலுக்கும் அனுமதிக்காத பூரண ஒத்துழைப்பு போன்றவை பின்பற்றப்படும். பின்வரும் முயற்சிகள் எடுக்கப்படும்: 8.6.1. பள்ளி பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டு, அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுதல், பள்ளிக்கு அங்கீகாரம் மற்றும் பதிவு செய்வதற்கான நிபந்தனைகளில் கட்டாயமாக்கப்படும். 8.6.2. ஒவ்வொரு பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் மற்றும் அதை மீறும்பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களது பயிற்சி காலத்திலையே அறிவுறுத்தப்படும். 8.6.3. குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக குழந்தை உரிமை பாதுகாப்பு தொடர்பான ஆன் – லைன் நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படும். 8.6.4. உள்ளூர் காவலர்களின் உதவியோடு குழந்தை உரிமை பாதுகாப்பு தொடர்பான புகார்கள் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்டு நம்பகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். 8.6.5. இளம்பருவ கல்வித்திட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகைக் கல்வித்திட்டம், இரண்டும் படிப்படியாக பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். 8.6.6. பணியிலிருக்கும் இரண்டாம்நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் இளம்பருவ கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு சேர்க்கப்படும். 8.6.7. சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு, அவர்தம் பெற்றோர்களுக்கு பருவ மாற்றம் தொடர்பான சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்கும் பள்ளி ஆலோசகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முறையான பயிற்சி வழங்கப்படும். பகுதி II - உயர் கல்வி தரமான பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள்: இந்தியாவின் உயர்கல்வி அமைப்பிற்கான புதிய மற்றும் முன்னோக்கு கனவு. நோக்கம்: உயர் கல்வி முறையை மறுசீரமைத்தல், நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த பன்முக உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குதல்- 2035 இல் GER ஐ குறைந்தபட்சம் 50% உயர்த்துதல். உயர்கல்வி என்பது நிலையான வாழ்வாதாரங்களுக்கும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பதாகும். அரசியலமைப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகம் நீதி சமூக நனவு, தன்னலம் கலாச்சாரம், மனிதாபிமானம் போன்றவை காணப்படுவது போல, உயர் கல்வியும் மனித நலனை உயர்த்துவதிலும் நாட்டின் வளர்ச்சியிலும் சிறந்த மற்றும் முக்கிய பங்காற்றுகிறது. உயர்கல்வி என்பது தனி நபர்களை அறிவூட்டுவதற்கும், நாட்டினை சமூக ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் கலை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஊக்குவிக்க உதவும், சிந்தனைகளையும் புதுமைகளையும் வளர்ப்பதற்கான ஒரு மையமாக செயல்படுவதாகும். இந்தியா ஒரு உண்மையான அறிவுசார் சமூகம் மற்றும் பொருளாதாரமாகவும் மாறுவதை நோக்கின் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்- வரவிருக்கும் நான்காவது தொழில்நுட்ப புரட்சியின் அடிப்படையில், இந்தியா முன் நிற்க நோக்கம் கொண்டுள்ளது,மேலும் அங்கு அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள் புதுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட திறன்சார் வேலைகளை கொண்டிருக்கும் - அதிக அளவிலான இந்தியர்கள் உயர்கல்வி பெறுவதற்கு விருப்பமாக உள்ளனர். அதன்படி மக்களின் இந்த முக்கிய மற்றும் உயர்ந்த விருப்பத்தை நிறைவு செய்வதற்காக, முடிந்தவரை விரைவாக, இந்தியாவில் உள்ள உயர்கல்வி அமைப்பு சரிசெய்யப்பட வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும், புத்துயிர் பெற வேண்டும். 21 ஆம், நூற்றாண்டில் தேவைகளை பொருத்தவரையில், ஒரு தரமான பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் நோக்கம் சிறந்த, அனைத்தும் அறிந்த மற்றும் ஆக்கப்பூர்வமான தனிநபர்களை உருவாக்குவதாகும். ஒரு தனிநபர் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட துறைகளில் ஆழமாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக வேண்டும் அதேவேளையில் பண்பு நலன்களை கட்டமைத்தல், நெறிமுறை மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள், அறிவுசார் ஆர்வம் பணி மனநிலை மற்றும் 21ம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளான அறிவியல் சமூக அறிவியல் கலை, மனித நேயம், தொழில்சார், தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கைவினை போன்றவற்றில் திறன்களை கொண்டிருக்க வேண்டும். தரமான உயர் கல்வியானது தனிப்பட்ட சாதனை மற்றும் ஞானம் ஆக்கபூர்வமான பொது ஈடுபாடு மற்றும் சமுதாயத்திற்கான ஆக்கபூர்வ பங்களிப்பு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். இது மாணவர்களை மிகவும் அர்த்தமுள்ள மற்றும் திருப்திகரமான வாழ்க்கை மற்றும் பணிநிலைக்கு தயார் படுத்துவதாக அமைய வேண்டும், மற்றும் பொருளாதார சுதந்திரத்தை செயல்படுத்துவதாகவும் அமைய வேண்டும். தரமான பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள், அனைவரும் விரும்பும் பணி மற்றும் வாய்ப்புகள் அனைத்து குடிமக்களுக்கும் கட்டாயம் கிடைக்கப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், உயர் கல்வியின் நோக்கமானது அதன் மக்களை மேம்படுத்தும் சமூக உணர்வு, அறிவாற்றல் மற்றும் திறன் மிகுந்த தேசம் போன்றவற்றின் வளர்ச்சியை செயல்படுத்த வேண்டும், மேலும் அதன் சொந்த பிரச்சினைகளுக்கு வலுவான தீர்வுகளை கட்டி எழுப்புவதாகவும் இருக்க வேண்டும். உயர்கல்வி என்பது நாட்டில் அறிவு உருவாக்கம் மற்றும் கண்டுபிடிப்பிற்கான அடிப்படையை அமைத்து, அதையொட்டி வளர்ந்து வரும் தேசிய பொருளாதாரத்திற்கு ஆழமான பங்களிப்பை அளிக்க வேண்டும். தரமான உயர் கல்வியின் நோக்கம் வெறுமனே தனிநபர் வேலைவாய்ப்பிற்கு சிறந்த வாய்ப்பினை உருவாக்குவது மட்டுமல்ல, இது மிகவும் துடிப்பான சமூக ஈடுபாடு மற்றும் கூட்டுறவு சமூகங்கள் மற்றும் மிகவும் மகிழ்ச்சியான ஒருங்கிணைந்த வளமான உற்பத்தி புதுமைகள் மற்றும் செழிப்பான நாடு போன்றவற்றின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த முக்கியமான இறுதி இலக்கினை அடைவதற்கு உயர்கல்வி சில அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பான அறிவினை வளர்த்துக் கொள்ளும் பொழுது, பரந்துபட்ட பன்முக கல்வி மற்றும் 21ம் நூற்றாண்டுக்கான திறன்கள் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளூர் சமூகங்களுடன், நடைமுறை பிரச்சினைகள் மற்றும் கூட்டு பணிகள், முழுமையான மற்றும் பிறதுறை செயல்பாடுகள் போன்றவற்றிற்கு இவை ஊக்கமளிக்க வேண்டும். முழுமையான இயந்திர மனப்பாட கற்றலுக்கு பதிலாக, சுயாதீன, தர்க்கம் அறிவியல் சிந்தனை படைப்பாற்றல் தீர்வு காணுதல் மற்றும் முடிவு எடுத்தல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு துடிப்பான கற்போரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும். இவை அந்நாளில் தேசிய பிரச்சினைகள் மற்றும் தேவைகளில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். இறுதியாக இது புதிய சிந்தனையை வளர்ப்பதற்கு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கும் மனித திறனை உருவாக்க வேண்டும். உயர் கல்வியின் கட்டமைப்பு பாடத்திட்டம் மற்றும் செயல்முறைகள் ஆகிய அனைத்தும் அதன் உயர் மட்ட இலக்குகளை வழங்குவதற்காக இந்த அனைத்து குணநலன்களையும் அடைவதற்கு இணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்திற்கு தேவைப்படும் வகையில், உயர்கல்வி நிபுணத்துவம் பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இன்னும் சில வருடங்களில் மாறக்கூடிய அல்லது காணாமல் போகக் கூடிய வேலைகளில், தற்போது மக்களை வெறுமனே அதில் தக்கவைத்துக் கொள்வது பொருத்தமற்றது மற்றும் எதிரானது. எதிர்கால பணியிடம் ஆனது திறனாய்வு சிந்தனை, தொடர்பு தீர்வு காணுதல் படைப்பாற்றல் மற்றும் பன்முக திறன் ஆகியவற்றை கோருகிறது. ஒற்றை திறன் மற்றும் ஒற்றை துறை வேலைகள் போன்றவை காலப்போக்கில் தானாக மாறும். எனவே எதிர்கால பணி நிலைகளுக்கு பலதரப்பட்ட மற்றும் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் திறன்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது- இவை உண்மையில் ரோபோட்களிடமிருந்து மனிதர்களை வேறு படுத்தக்கூடிய திறன்கள் ஆகும். குறிப்பாக, ஆர்வமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பாளராக மாற, எதிர்கால பணியாளர்களை கல்வியானது மேம்படுத்த வேண்டும். இத்தகைய பரந்த அடிப்படையில், நெகிழ்வான, தனித்துவமான, புதுமையான, மற்றும் பன்முக கற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, உயர்கல்வி, அதன் மாணவர்களை தங்கள் முதல் வேலைகளுக்கு மட்டுமல்லாமல் தங்கள் வாழ்நாளில் அவர்களின் இரண்டாவது மூன்றாவது மற்றும் அனைத்து எதிர்கால வேலைகளுக்காகவும் தயாரிக்க வேண்டும். குறிப்பாக உயர் கல்வி முறை அடுத்த தொழில்துறை புரட்சிக்கான மையத்தை அமைக்க வேண்டும். மகிழ்ச்சி தரும் விதமாக மற்றும் தற்செயலாக, மேல் கூறிய எதிர்கால வேலைவாய்ப்புக்கு தேவையான பன்முக கல்வி மற்றும் 21ம் நூற்றாண்டுக்கான திறன்களான திறனாய்வு சிந்தனை, தொடர்பு, தீர்வு காணுதல், ஆக்கத்திறன், பண்பாட்டு சிந்தனை, உலகளாவிய பார்வை, குழுப்பணி, நெறிமுறை காரணங்கள், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு - போன்றவை சிறந்த பணியாளர்களை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் சிறந்த குடிமக்களையும் சமூகத்தையும் உருவாக்குவதற்கு உதவும். உயர் கல்வியானது உள்ளார்ந்த ஆர்வம், பணி நிறைவு மற்றும் வலிமையான நெறிமுறை வழிகாட்டுதலுடன் கூடிய சிறந்த , முழுமையான மற்றும் ஆக்கத்திறன் உடைய நபர்களை உருவாக்க வேண்டும். இந்தியாவின் உயர் கல்வி முறையில் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் யாவை? உயர் கல்வியின் மேல் கூறிய முக்கிய குறிக்கோள்களை அடைவதில் தற்போது பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொள்கிறது. உயர் கல்வி முறையின் கூறுகள்: இந்தியாவில் 800-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மற்றும் சுமார் 40,000 கல்லூரிகள் உள்ளன, இவை தற்போது நாடு முழுவதும் உள்ள கடுமையான பிரிவுகள் மற்றும் சிறிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களை பிரதிபலிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், நமது நாட்டில் உள்ள 40 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகள், 21ம் நூற்றாண்டிற்கு தேவையான பன்முக முறையான உயர் கல்வியில் இருந்து வெகு தொலைவில் நின்று, இன்னும் ஒற்றை பாடத்திட்டங்களையும் நடத்தி வருகின்றன. உண்மையில் 20 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகளில் 100 க்கும் குறைவான மாணவர் சேர்க்கையை கொண்டிருக்கின்றனர், அதே நேரத்தில் 4% கல்லூரிகள் மட்டுமே மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கையை கொண்டிருக்கிறது (AISHE 2016-17). இதில் இன்னும் மோசமாக, ஆயிரக்கணக்கான சிறு கல்லூரிகளில் கற்பிக்க பேராசிரியர்களை கூட இல்லை, மேலும் சிறிதளவு கூட கல்விப்பணி அங்கு நடைபெறுவது இல்லை - இதனால் நாட்டின் உயர் கல்வி முறையின் நாணயம் கடுமையாக பாதிக்கிறது. இந்த முறையில் உள்ள பிரிவானது பல்வேறு முனைகளில் கடுமையான துணை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது: வளங்களைப் பயன்படுத்துதல், துறைகள் பாடப்பிரிவுகளில் எண்ணிக்கை மற்றும் அதன் அளவு பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அளவு மற்றும் உயர்தர பன்முக ஆய்வுகளை நடத்துவதற்கான திறன். எண்ணற்ற தடைகள்; மிகவும் முன்கூட்டியே குறுகிய நுண்துறைகளில் மாணவர்களை இட்டுச்செல்வது இந்திய உயர்கல்வி துறைகள் மற்றும் நிபுணத்துவத்திற்கான எல்லைகளை மிகவும் கடினமானதாகவும் நெகிழ்வற்றதாகவும் உருவாக்கி வைத்துள்ளது மட்டுமன்றி கல்வியின் உள்ளடக்கத்தின்/கட்டமைப்பின் மீது மிக குறுகிய ஒரு பார்வையைக் கொண்டுள்ளது. முன்பே குறிப்பிட்டதைப் போல அதன் மோசமான வெளிப்பாடுதான் இங்கு முளைத்திருக்கும் எண்ணற்ற ஒற்றைத்துறை கல்வி நிறுவனங்கள், குறிப்பாக தொழில்முறைக் கல்வி நிறுவனங்கள். உதாரணத்திற்கு இங்கு பல்லாயிரக்கணக்கான உள்ளனஒற்றைத்துறை கல்விப்பயிற்சி நிறுவனங்கள் உள்ளன, அவ்வாறே பொறியியல் மற்றும் மருத்துவக்கலிவி நிறுவனங்களும் இப்படி ஒற்றைக்கடிவாள முறையையே பின்பற்றுகின்றன. பல்துறைக் கல்வி நிறுவனமாக இருந்தாலும் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் நடுவில் ஒரு பிரிவினைச் சுவர் இத்துறைகளைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் அவரது ஒற்றைக்கடிவாள கல்விமுறைக்கு வெளியே மற்ற துறைகளைச் சார்ந்த படிப்புகள (கலை, சமூகவியல், அறிவியல்) தேர்ந்தெடுக்க அனுமதிக்க்ப்படுவதோ ஊக்கப்படுத்தப் படுவதோ இல்லை. விளைவாக நாம் உருவாக்குவது ஒற்றைப்பண்பே உடைய ஆயிரக்கணக்கான மாணவர்களையே ஒழிய பரந்துபட்ட அறிவுடைய உண்மையான தனித்துவம் மிக்க தன் சுய ஆற்றலை வெளிப்படுத்தவல்ல மாணவர்களை அல்ல. இப்படிப்பட்ட ஒற்றைக்கடிவாள கல்விமுறைகளும் நெகிழ்வற்ற பிரிவினை/எல்லைக்கோடுகளும் ஒரு நல்ல உயர்க்கல்விக்கான அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக செயல்படுவதாகும். உயர்கல்வி சென்றடையாமை, குறிப்பாக சமூக-பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு கடந்த சில தசாப்தங்களாக உயர்படிப்பிற்கான வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன, ஆனால் அது எல்லா இளம் தலைமுறையினரையும் சென்றடையும் வகையில் இல்லை. உயர்கல்வி பெறுவதில் சமத்துவமும் அதன் தரமும் இன்னும் சவாலாகவே உள்ளது. மொத்த சேர்க்கை விகிதம் (GER) குறிப்பிட்ட அளவு அதிகரித்திருப்பதும் (சுமார் 25%), சில குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை அடந்திருக்கிறது. இந்த கொள்கையானது 2035ம் ஆண்டிற்குள் மொத்த சேர்க்கை விகிதமானது 50% ஐ அடையவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதுவே நமது இளைஞர்களின் கனவுகளைப் பூர்த்தியாக்கவும் துடிப்பான ஒரு சமூகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் அடிப்படையையும் அளிக்கும் என்று நம்புகிறது. அதாவது இத்திட்டம் 2035ம் ஆண்டிற்குள் தற்சமயம் உள்ளதைக்காட்டிலும் 50% சேர்க்கைவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்கிறது. மட்டுமல்லாது உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், சமூக பொருளாதார ரரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் உயர்கல்வி சென்றடையவும் வழிவகைசெய்கிறது. கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சுதந்திரமின்மை ஆசிரியர்களுக்கு சுயமாக செயல்படக்கூடிய சுதந்திரமில்லாமை ஆசிரியர்கள் மத்தியில் ஊக்கமின்மையை எற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் புதியவைகளுக்கான வாய்ப்புகள் அரிதாகிவிடுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் புதிய முறைகளை பயிற்சியிலும், ஆராய்ச்சியிலும் சோதித்துபார்ப்பதற்கும் தனிமனித சுதந்திரம் அவசியம். குறிப்பாக, பல்கலைக்கழகங்களுடன் சார்ந்த கல்லூரிகள், மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தையும், பயிற்சிமுறைய்யையும், பாடபுத்தகங்கலையும் கடைபிடிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் - இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு நாம் விரும்பும் தனிமனித சுதந்திரம் கிடைத்திட வாய்பில்லை. அதுபோல, பெரும்பாலான கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் துணிச்சலான புதிய முன்னெடுப்புகளை தமது கல்லூரி பாடத்திட்டத்திலோ, ஆராய்ச்சியிலோ, சமூகத்திட்டங்களிலோ கொண்டுசெல்ல முடியவில்லை - ஏனென்றால் அவர்களுக்கும் கல்வியியல் சுதந்திரமோ, நிர்வாக சுதந்திரமோ அல்லது பொருளாதார சுதந்திரமோ கொடுக்கப்படுவதில்லை. இறுதியான சவாலாக சமீபவருடங்களில் தன்னிறைவு/தன்னாட்சி என்ற சொல்லே ‘பொதுநிதி குறைப்பு’ என்ற அர்த்தத்தில் தான் புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் எதார்த்த அர்த்தம் அதுவல்ல. ‘தன்னாட்சி’ என்ற சொல்லானது புதியவைகளை புகுத்தவும், ஒருங்கிணைக்கவும், ஒன்றாக செயல்படுவதற்கும், சுயமாக நிர்வகிக்கவும், சூழல் சார்ந்த முடிவுகளை எடுக்கவும், தடைகளைக் களைவதற்குமான சுதந்திரம் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும். கல்வியாளர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யாமை மேலும் முன்னுதாரணமான முன்னெடுப்புகள் நிகழாததற்கு தன்னிறைவு இல்லமை தவிர மற்றொரு முக்கிய காரணம் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முறையான தொழில்முன்னேற்ற பாதை இன்மை. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் தேர்வு முறை, கால அவகாசம், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்ற அங்கீகாரங்கள், தொழில்படி முன்னெற்றம் யாவும் தற்சமயம் தகுதி அடிப்படையில் இல்லாமல் பணிமூப்பு அடிப்படையிலோ தன்னியல்பாகவோ தான் நடக்கிறது. இதன் மோசமான விளைவுகள் ஊக்கமின்மைக்கும் புதிய சிநதனைகளை மேற்கொள்ளவும் தடைகளாக பல்வேறு தளங்களில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் போதுமான ஆராய்ச்சியின்மை மற்றும் ஆராய்சிக்கு வெளிப்படையான நிதியளிப்பின்மை சுதந்திர இந்தியாவில் உயர்கல்வியைப் பொறுத்தவரையில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது பெரும் தீங்காக விளைந்தது. ஏனென்றால் இன்று பெரும்பாண்மை பல்கலைக்கழகங்களில் மிகக் குறைவான ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. இது இரண்டுவகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஒன்று, பெரும்பாலன கல்வியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ, மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுவதோ இல்லை - இது தேசத்தின் அறிவார்ந்த ஆராய்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சாத்தியங்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். இரண்டாவதாக கல்விநிமித்தமாக, அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாதிருக்கும் ஒரு சூழலிலிருந்து உயர்தர கல்வியானது ஏற்பட வழியில்லை. அறிவாற்றல் மேம்பாடு முக்கிய விழுமியமாக இல்லாத ஒரு கட்டமைப்பில் மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள எவ்வாறு கற்பிக்கப்பட முடியும்? தற்சமயம் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆரய்ச்சிகளை தூண்டவும் வழிநடத்தவும் வழிவகைகள் இல்லை - குறிப்பாக மாநில பல்கலைகளில் (இங்குதான் உயர்கல்விக்கான 93% சேர்க்கை நடைபெறுகிறது). மேலும், புதிய ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கு மிகக்குறைவான நிதியே கிடைக்கப்பெறுகிறது, குறிப்பாக பல்துறை சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்காக (உதாரணம்: துய்மையான குடிநீர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கல்வி மற்றும் பயிற்றுவித்தல், ஆரோக்கியம் போன்றவற்றை). உயர்கல்வி நிறுவனங்களில் திறனற்ற நிர்வாகம் மற்றும் ஆளுமை HEI யின் தலைமையும் நிர்வாகமும் தற்போது வெளி சக்திகளாலும் தனிமனிதர்களாலும் செல்வாக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த அந்நிய சக்திகளுக்கு அரசியல் அல்லது பொருளாதார முகாந்திரங்கள் இருக்கின்றன. அரசு கல்விக்கூடங்கள் பெரும்பாலும் அரசு அலுவலகத்தின் ஒரு நீட்சியாகவே செயல்படுகின்றன. கல்வித் தலைமகளின் தேர்விலும் அவர்களது நிர்வாகத்திலும் குறிப்பிடத்தக்க தலையீடுகள் இருக்கின்றன. தகுதி அடிப்படையில் அல்லாமல், அநிச்சையாகவோ, குறுக்கு வழிகளிலோ தகுதியற்றவர்கள் (அல்லது குறைந்தவர்கள்) தலைமை பொறுப்புகளில் இருப்பது இந்த முறைகேட்டை தெளிவாக நமக்கு காட்டிவிடுகிறது. கல்வியைப் பொறுத்தமட்டில் பாடத்தின் மீது கூட ஆந்நிய சக்திகள் தலையிடுகின்றன. HEI களுக்கு பெரும்பாலும் தங்களுக்குட்பட்ட ஊழியர்களை நிர்வகிக்கவோ கட்டுப்படுத்தவோ அவர்கள் ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றின் மீது அதிகாரம் செலுத்தவோ கூட இயலாத சூழலே நிலவுகிறது. சுருங்கச்சொன்னால் உள்நிர்வாக கட்டமைப்பு என்ற ஒன்றே செயலிழந்துவிட்டது. போலிகளை ஆதரிக்கும் மற்றும் உண்மைநோக்குள்ள கல்லூரிகளை நெருக்கடிக்கு ஆளாககும் கட்டுப்பாட்டு இயக்கம் இங்கு நிறைய போலியான கல்லூரிகள் எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன, அதேசமயம் பல நல்ல கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் கல்வி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தசாப்தங்களாக கட்டுப்பாடுகள் அர்த்தமற்ற மிக கடுமையானவையாக இருக்கின்றன. கல்விநிறூவனங்களின் சுயாட்சிதன்மையையும் தனித்தன்மையையும் நீர்த்துப்போக வைப்பதற்கு முக்கிய காரணியாக இந்த கட்டுப்பாடுகளே இருக்கின்றன. இவைகளை சரிபடுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் ஒன்றும் பயனளிக்கவில்லை. இயந்தர ரீதியான மற்றும் அதிகாரபறிப்பு போக்கு தன்னகத்தே பல பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு மொத்த அதிகாரத்தையும் சில அமைப்புகளிடம் மட்டுமே குவிப்பது, மற்றும் அவைகளுக்குள் உள்ள பூசல்கள், மற்றும் எவரும் பொறுப்பேற்காத தன்மை. இந்த அடக்குமுறை சூழலானது ஒருவழியாக புதிய கருத்துக்கள் சிந்தனை ஆற்றல் தோன்றுவதற்கு தடைக்கல்லாக அமைகிறது. மாறாக மந்தத்தன்மையையும் ஊழல்போக்கையும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துவிடுகிறது. மட்டுமல்லாது, தனியார் HEI க்களும் அரசு நிறுவனங்களும் ஒன்றுபோலவே பாவிக்கப்படுவதில்லை. ஒரு புறம் இந்த செயலானது பொதுநோக்குடைய அரசுசார் நிறுவனங்களை விரக்தியுற செய்கின்றது , மறுபுறம் கல்வி வணிகமயமாதலைத் தடுக்க தவறுகின்றது. தரமான எல்லோருக்குமான உயர்கல்விக்காக இந்த சவால்களை வென்றெடுத்தல் இந்தக் கொள்கை வரைவானது மேலே கூறப்பட்டுள்ள எட்டு சவால்களை எதிர்கொள்ளவும் , தற்போது உள்ள முறைமைகளை முழுமையாக பழுதுபார்க்கவும் மறுசீரமைக்கவும் அதனூடே உயர்க்கல்வியை ஆர்வத்துடன் நாடுபவர்களுக்கு தரமான உயர்கல்வியை சமத்துவத்தோடும், சம வாய்ப்புகளோடும் அளிக்க வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும். இந்த கொள்கை வரைவின் நோக்கம் கீழ்கண்ட முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 9.1. பெரிய, பன்முக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை கொண்ட உயர் கல்வி முறையை நோக்கி நகர்கிறோம்: உயர் கல்விக்கான பிரதான உந்துதல் என்பது பெரிய பன்முக பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆகும், ஒவ்வொன்றிலும் 5,000 அல்லது அதற்கும் அதிகமான மாணவர்கள் இருக்க வேண்டும். உயர் கல்வி முழுவதும் பெருமளவிலான பன்முக HEI களுக்குள் சென்றால், உயர் கல்வி இன்று எதிர்கொள்கின்ற சிக்கல்களை எதிர்கொள்ளும்: - இது மாணவர்களுக்கு அறிஞர்கள் மற்றும் சக மாணவர்கள் கொண்ட துடிப்பான அறிவூட்டும் சமூகத்தை கொடுக்கும் - இது துறையினருக்கு இடையில் தீங்கு விளைவிக்கும் செயல்முறையைத் தடுக்க உதவும்; - இது மாணவர்கள் தங்கள் மூளைகளின் இருபுறமும் வளர்க்க உகந்ததாக உதவுவதோடு (கலை / படைப்பு மற்றும் பகுப்பாய்வு), அவர்களின் கற்றல் திட்டங்களில் நெகிழ்வுத்தன்மையையும் தனித்தன்மையையும் கொண்டுவர உதவும்; - இது துறைகளில் செயலில் உள்ள ஆராய்ச்சிக் குழுக்களை உருவாக்க உதவுகிறது. குறிப்பாக, 21 ஆம் நூற்றாண்டின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமான அடித்தளமாக இருக்கும் குறிப்பாக குறுக்கு ஒழுங்குமுறை ஆராய்ச்சியை உதவும். - இது வளங்கள் மற்றும் அதன் பகிர்வு, பொருள் மற்றும் மனிதவளங்கள், உயர்கல்வி ஆகியவற்றின் பயன்பாடு ஆகியவற்றை பெரிதும் மேம்படுத்தும். எனவே, உயர் கல்வியின் கட்டமைப்பைப் பொருத்தவரை, இந்த புதிய கல்வி கொள்கை பெரிய பன்முக பல்கலைக்கழகங்களுக்கு நகர்த்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. தக்ஷஷீலா மற்றும் நாலந்தாவின் பண்டைய இந்திய பல்கலைக் கழகங்களில் இந்தியாவில் மற்றும் உலகளவில் இருந்து ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அத்தகைய துடிப்பான பன்முக சூழலில் படிக்கும் வாய்ப்பு இருந்தது, இன்றைய நவீன பல்கலைக் கழகங்கள், பெருமளவிலான பன்முக ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரும் பெரும் நகர்வின் வெற்றியை நிரூபிக்கின்ற. இந்தியாவின் இந்த பெரிய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவரும் நேரம் இதுவே. இன்றைய தினம் நன்கு வளர்ந்துள்ள மற்றும் புதுமையான தனி நபர்களை உருவாக்குவதற்கு இது இன்றியமையாதது. இது மற்ற நாடுகளை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்கனவே மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த வகை புதிய உலக ரக மாதிரி நிறுவனங்களை நிறுவுதல் உட்பட புதிய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும், மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு பெரிய உயர்தர பன்முக HEI ஐ (அல்லது அதற்க்கு நெருக்கமாக) ஒன்றை நிறுவுதலுக்கும் இந்தபெரிய பன்மடங்கு உயர் தரநிலை பன்முக HEI ளுக்கு நகரும் நடவடிக்கையை முடிந்தவரை விரைவாக, திட்டமிட்ட மற்றும் ஆழ்ந்த சிந்தனை செய்து நடத்தப்படும். ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மற்றும் பல்கலைக் கழகம்-கல்லூரி ஸ்பெக்ட்ரம் போன்ற மூன்று வகையான வகையான HEI க்கள் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் செய்யப்படும். ஒற்றை-ஸ்ட்ரீம் HEI கள் வெளியேற்றப்படும், மேலும் அனைத்து ஒற்றை ஸ்ட்ரீம் HEI களும் பன்முக வகையாக மாறுவதற்கு நகரும். அனைத்து உயர் கல்வியும் இனி பலதரப்பட்ட பன்முக நிறுவனங்களில் மட்டும் நடக்கும். இது அனைத்து துறைகளின் கற்பித்தல் வேலைத்திட்டங்களையும், துறைகளுக்கு உகந்த வளங்களையும், துறைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் துடிப்பான, பெரிய கல்வி சமூகங்களையும் உறுதி செய்யும். 9.2. தாராளவாத இளங்கலை கல்வியை நோக்கிய நகர்வு: இது முதலாவது புதிய கல்விக்கு கொள்கை முன்முயற்சியுடன் கைகோர்த்து செல்கிறது. பரந்த அடிப்படையிலான பன்முகம் கொண்ட கல்விதான் உயர்கல்விக்கு அடிப்படையாக இருக்கவேண்டும் என்பதே 21ம் நூற்றாண்டில் உயாகல்வியின் தேவை. . கலை, மனிதவியல், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழில்முறை, தொழில் நுட்பம், தொழில்சார் கைவினை, சமூக ஈடுபாடு, மற்றும் கடுமையான சிறப்புத் தேர்வு ஆகிய துறைகளில் தேவையான முக்கிய திறன்களை கொண்டிருக்கும் நன்கு தேர்ந்த தனிநபர்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு உருவாக்க இது உதவும். இத்தகைய தாராளவாத கல்வி என்பதே இனி தொழில், தொழில் நுட்பம் மற்றும் தொழிற்துறை துறைகள் உள்ளிட்ட அனைத்து இளங்கலைத் திட்டங்களிலும் உள்ள அணுகுமுறையாக இருக்கும். கற்பனையான மற்றும் நெகிழ்வான பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கான படிப்பிற்கான படைப்புகளை ஒருங்கிணைப்பதற்கும், பல பயனுள்ள இடுகைகளையும் வெளியேறும் புள்ளிகளையும் வழங்குவதோடு, தற்போது தற்போதுள்ள கடுமையான எல்லைகளை தகர்த்து, வாழ்நாள் முழுவதும் கற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பல பன்முகம் கொண்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு நிலையில் (முதுநிலை மற்றும் முனைவர் பட்ட படிப்பு) , கடுமையான ஆராய்ச்சி அடிப்படையிலான நிபுணத்துவத்தை வழங்குவது மட்டும் அல்லாமல், கல்வி மற்றும் தொழில் ஆகியவற்றில் உள்ள பல பன்முகப் பணிகளுக்கு இது வாய்ப்பளிக்கும். ‘தாராளவாத கலை’ என்று அழைக்கப்படுகையில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியம் மற்றும் பன்முகம் கொண்ட பலதரப்பட்ட கற்றல் உள்ளன. துக்ஷஷீலா மற்றும் நாலந்தா போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து விரிவான இலக்கியங்கள் துறைகளில் உள்ள பாடங்களைக் கூட்டுகின்றன. பண்டைய புத்தகங்கள் 64 கலைகள் அல்லது கலைகள் பற்றிய அறிவு என விவரித்தன. இவற்றில் 64 கலைகளில் பாடல்கள், இசை வாசித்தல், மற்றும் ஓவியங்கள், பொறியியல், மருத்துவம் மற்றும் கணிதம் போன்ற ‘விஞ்ஞான துறைகள் உள்ளன’. நவீன கலைகளில் ‘தாராளவாத கலைகள்’ என்று அழைக்கப்படுவது ‘பல கலைகளின் அறிவு’ என்ற எண்ணம் இந்திய கல்விக்கு திரும்ப கொண்டு வரப்பட வேண்டும், ஏனெனில் இது 21 ஆம் நூற்றாண்டில் தேவையான கல்வி முறையாகும். 9.3. ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிலையங்களின் தன்னியக்கத்தை நோக்கிய முன்னேற்றம்: ஆசிரியர்களின் தன்னியக்க செயல்பாடு மூலம், ஆசிரியர்களால் மாணவ மதிப்பீடுகளில், சமூக சேவை முயற்சிகளில், மற்றும் ஆராய்ச்சிகளில் புதுமைகளை புகுத்தும் உந்துதலுடன் செயல்பட முடியும் மற்றும் சிறந்த நடைமுறைகள், கருத்துகளை தொடர்ந்து மேம்படுத்த மற்றவர்களுக்கிடையே, பல்கலைகழகங்களுக்கிடையே, பரந்த கூட்டங்களுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். கல்வி நிறுவனங்களில், கல்வி மற்றும் நிர்வாக தன்னியக்கதின் மூலமாக, மேம்பட்ட திட்டங்களை தொடங்கி நடத்த, புதுமையான பாடத்திட்டத்தை உருவாக்க, அந்தந்த இடத்துக்கு தகுந்த சூழ்நிலைகள் மற்றும் தேவைகள் குறித்த அறிவை நிர்வகிக்க, உகந்த மக்கள் மற்றும் தொழில் நிர்வாக திட்டங்களை அமைக்கவும் முடியும். அந்தந்த இடங்களில் உள்ள கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து சிக்கல்களும் அதில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களால் ( ஆசிரியர்கள், நிறுவன தலைவர்கள்) சிறந்த முறையில் கையாள முடியும் (புதுமைபடுத்துதல், மேம்படுத்துதல்). அதற்கு அவர்கள் தகுதியுடையவர்களாக உருவாக வேண்டும். அத்தகைய கல்வி மற்றும் நிர்வாக தன்னியக்கத்தை செயல்படுத்த பொது கல்வி நிறுவனங்களுக்கு கணிசமான, மற்றும் போதுமான பொது நிதியை நிரந்தரமாக வழங்க வேண்டும். காலப்போக்கில், நிதிச் சார்பு மற்றும் பொறுப்புகள் பல்வேறு பொது நிறுவனங்களால் நிரூபிக்கப்பட்டால், அதிகமான நிதி தன்னியக்க உரிமையும் வழங்கப்படலாம். இதன் மூலம், கற்பித்தல், சேவை, உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஆதார ஒதுக்கீடுகள், மற்றும் வளங்களை மேம்படுத்துவதற்காக அந்த இடத்தின் தேவைகளை நன்கு அறிந்தவர்கள் மூலம் முடிவு செய்யப்படலாம்; இது அனைத்து நிதி பரிபாலனங்களின் வெளிப்படைத்தன்மையை பொதுவெளியின் ஊடாக தொடர்ந்து காட்டும் விதமாக அமையும். இந்த நிதி தன்னியக்கமானது, நிதி குறைப்புக்கு வழி வகுக்காமல், கல்விச் சாதனங்களை அதிகரிக்க நிதி எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதை சுதந்திரமாக தீர்மானிக்க வழி வகுக்கும். தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த நிதிகளை ஏற்பாடு செய்து கொள்ளும்; இருப்பினும், நிதியியல் பரிபாலனம், கல்வி மற்றும் நிர்வாக பொறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த தங்கள் முழு கல்வி, நிர்வாக மற்றும் நிதி விவரங்களை வெளிப்படையாக வெளியிடும் பட்சத்தில், அவர்கள் சிறப்பினை செம்மைபடுத்த முழுமையான தன்னியக்க உரிமையை கோர முடியும். இப்படி மேன்மை அடைய முழுமுயற்சி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு படிப்படியாக தன்னியக்க உரிமை வழங்குவதின் மூலம் மற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு வழிகாட்டுதல் கிடைக்கும். 9.4. பாடத்திட்டம், கல்வி, மதிப்பீடு, மாணவர் ஆதரவு ஆகியவை சீரமைக்கப்படும்: பாடதிட்டம், ஆசிரியப்பணி, மதிப்பீடு ஆகியவை முற்றிலும் இயந்திரதனமான நடைமுறைகள் கொண்டதாக, குருட்டு பாடமாக இருக்காது. பரீட்சை முறைகள் மறுபரிசீலனை செய்யப்படும்; மதிப்பீடு என்பது பாடத்திட்டத்தின் குறிக்கோள் மற்றும் கல்வி திட்டத்தின் இலக்குகளை உயர்த்தும் விதமாக அமையும். இந்த மாற்றங்களை அடைவதற்கு ஆசிரியர் துணைபுரிவார். தரநிலை உயர் கல்வியானது எல்லா துறைகளிலும் இந்திய மொழிகளில் வழங்கப்படும். திறந்த மற்றும் தொலைவு வழி கல்வி முறையானது (ODL), வகுப்பறைக்கல்வி முறைக்கு நிகராக இருக்கும் வகையில் மறுபரிசீலனை செய்யப்படும். இந்த முறையானது உயர்கல்வி அடைய உதவி செய்து முன்னேறும் வழிகளை மேம்படுத்தும். மாணவர்களுக்கான வலுவான கல்வி, நிதி, சமூக மற்றும் உளவியல் ஆதரவு அமைப்புக்களானது, பின்தங்கிய குழுக்களில் இருப்பவர்களை கவனத்தில் கொண்டு செயல்படும். 9.5. தகுதி அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் தொழில் மேலாண்மை மூலம் ஆசிரிய பதவிகளின் மற்றும் நிறுவன தலைமைத்துவத்தின் ஒருங்கிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல்: அனைத்து ஆசிரிய பதவிகளும் தீவிரமான சேர்க்கை மதிப்பீடுகளின் மூலம் நிரப்பப்படும், ஒப்பந்த வேலைவாய்ப்பு நடைமுறை நிறுத்தப்படும். ஆசிரியர்களின் நியமனம், பதவி காலம், ஊக்குவிப்புகள் மற்றும் இழப்பீடு அதிகரிப்புகள் ஆகியவை, அவர்களின் கற்பித்தல், ஆராய்ச்சி, சேவை முதலிய தகுதியின் மதிப்பீட்டு அடிப்படையில் வழங்கப்படும். இந்த மதிப்பீடானது, உயர் கல்வி நிறுவனத்தை (HEI) ஆளும் குழு மற்றும் அதன் தலைமையின் வரைமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். அவர்கள் பரிந்துரை செய்த மாணவர்கள், நிறுவன தலைவர்கள், ஆலோசகர்கள் கொண்ட குழு ஒன்று தீவீர ஆய்வு முறைகளை மேற்கொண்டு இந்த மதிப்பீட்டை நடத்தும். நிறுவன தலைவர்கள், தகுதி அடிப்படையில், தலைமை பயிற்சி மற்றும் மேம்பாட்டு பாதைகள் மூலம் சில ஆண்டுகள் முன்னரே தயாராக இருப்பார்கள். நிறுவன தலைமை மாற்றங்களானது ஒத்திருக்கும் வகையிலும் சமமானதாகவும் இருக்க வேண்டும்.. நிறுவன தலைவர்கள் புதுமையான மற்றும் சிறப்பான அறிவின் பண்பட்ட நிலையை உருவாக்க உதவுவார்கள். இந்த நிலையானது, சிறந்த மற்றும் புதுமையான கல்வி முறை, ஆராய்ச்சி, நிறுவன சேவை, சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றை அளிக்க ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன தலைவர்களை ஊக்குவிக்கும். கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அனைத்து துறைகளிலும் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சேவை.யில் சிறப்பாக செயல்பட உதவும் விதமாக ஊக்கத்தொகைகள் உருவாக்கப்படும். 9.6. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவுதல்: அனைத்து துறைகளிலும் முதன்மையான ஆராய்ச்சி திட்டங்களுக்கு போட்டியின் அடிப்படையில் பரிந்துரை செய்து நிதியை வழங்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) ஒன்று நிறுவப்படும். மிக முக்கியமாக, , உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில், ஓய்வுபெற்ற அல்லது பணி ஓய்வு பெறும் தருவாயில் இருப்பவர்கள் மேற்பார்வையில் இருக்கும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளை தொடங்குவது, மற்றும் மேம்படுத்துவதே அறக்கட்டளையின் நோக்கமாக இருக்கும். மேலும் இந்த அறக்கட்டளையானது, ஆராய்ச்சியாளர்கள், அரசாங்க அமைச்சகம், மற்றும் தொழிற்துறைகள் இடையே தொடர்பு ஏற்படுத்தி, அதன் மூலம், சமுதாயத்துக்கு ஏற்ற பயனுள்ள ஆராய்ச்சிகள் விரைவில் மக்களை அடைவதை உறுதிப்படுத்தும். இறுதியாக, பல்வேறு பிரிவுகளில், NRF நிதியுதவியின் மூலம் அடைந்த ஆராய்ச்சியாளர்களின் சாதனைகளை கண்டுபிடித்து பரிசுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் சிறந்த ஆராய்ச்சி முயற்சிகளை NRF அங்கீகரிக்கும். இந்த முன்முயற்சிகள், தொழிற்பாட்டு முகமைத்துவ கட்டமைப்புகளுடன் சேர்ந்து, உயர் கல்வி நிறுவனங்களின் ஊக்கமளிக்கும் ஆராய்ச்சி மூலமாக, பல நிறுவனங்களில், ஆராய்ச்சி முறைகளை கொண்டு சேர்க்க உதவுகிறது. இதில் இதற்கு முன் வலுவான ஆராய்ச்சி கட்டமைக்கப்படாத பெரும்பாலான அரசு பல்கலைக்கழகங்களும் அடங்கும். 9.7. உயர் கல்வி நிறுவனங்கள் முழுமையான கல்வி மற்றும் நிர்வாக தன்னியக்கத்துடன் சுயாதீன வாரியங்களால் நிர்வகிக்கப்படும்: உயர் கல்வி நிறுவன ஆளுநர்களின் சபை (BoG) , வேந்தர், மற்றும் துணை வேந்தர் / தலைமை இயக்குநர் / தலைமை நிர்வாகி பதவிக்கான நியமனங்கள், அரசாங்கம் உட்பட எந்த வித வெளிப்புற குறுக்கீடும் இல்லாமல் தெளிவான தகுதி சார்ந்த நடைமுறைகள் கொண்டதாக இருக்கும் மற்றும் நிறுவனம் மீது வலுவான அர்ப்பணிப்புடன் செயல்படும் தனிநபர்களை அதில் ஈடுபடுத்தும் நோக்கம் இருக்கும். கல்வி சார்ந்த பலன்களின் பொறுப்புடைமை நிறுவன வாரியத்துடன் ஒன்றி இருக்கும். அரசாங்கம் (மற்றும் அதன் அமைப்புகள்) உட்பட, அனைத்து பங்குதாரர்களையும், நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்காக ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகள் அமைக்கப்படும். 9.8. “இலகுவான ஆனால் இறுக்கமான” கட்டுப்பாடு: இந்த கட்டுப்பாடு அமைப்பு, தொழில்முறை கல்வி உட்பட அனைத்து உயர்கல்விக்கும் ஒரே ஒழுங்குமுறை கொண்ட வகையில் மாறும். அடிப்படை அளவுருக்கள் (நிதி பரிபாலனம் போன்றவை) மீதான அங்கீகாரமானது, அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அடிப்படையாக அமையும்- இந்த அளவுருக்கள் குறைந்த பட்சமாக இருந்தாலும், இதனை பின்பற்ற தவறும் உயர் கல்வி நிறுவனங்களை மூடும் அளவுக்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த உயர்கல்வி நிறுவனங்கள் பொதுவில் வெளிப்படுத்தும் அனைத்து தொடர்புடைய தகவல்களும், பொதுமக்கள் கண்காணிப்பு மற்றும் தகவல் மூலம் முடிவெடுக்க பயன்படுத்தப்படும். நிதி, நிலையான அமைப்பு, அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றின் பல்வேறு மாறுபட்ட செயல்பாடுகள் பிரிக்கப்பட்டு சுயாதீன அமைப்புகளால் நடத்தப்படும், மற்றும் அதிகார செறிவுகள், முரண்பாடுகள் எல்லாம் விலக்கி வைக்கப்படும். தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் ஒழுங்குமுறை பரிபாலனங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும். கல்வியின் வணிகமயமாக்கல் நிறுத்தப்பட்டு, சேவை மனப்பான்மை கொண்ட முயற்சிகள் ஊக்கமளிக்கப்படும். மேற்படி கூறியவை யாவும் 21 ஆம் நூற்றாண்டில் உயர்நிலை உயர் கல்வியை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை பற்றிய பார்வையை சுருக்கமாக குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் அத்தியாயங்களில், மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு துவக்க முயற்சி பற்றி மேலும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன துறைச்சொல்: ஒரு நிரல் என்பது பாடநெறி தொகுப்புகள் அல்லது மற்ற கல்வி முறைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதின் மூலம், ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ பெறும் வகையில் அமைந்துள்ளது. ஒரு பாடநெறி என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை கற்க / கற்பிக்க சீராக வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். அது பொதுவாக வரவுகளை கொண்ட (எ.கா., ஒரு நிரல் அல்லது பல நிரல்கள்) ஒரு தொடர்ச்சியான விரிவுரைகள் அல்லது பாடங்களாக வழங்கப்படும். ஒரு பாடநெறி பொதுவாக ஒரு செமஸ்டர், மூன்று மாதங்கள், அல்லது 123 காலாண்டில் இயங்கும், அதே நேரத்தில் நிரல்கள் பொதுவாக 3-5 ஆண்டுகள் இயங்கும். ஒரு பாடத்திட்டம் என்பது பல்வேறு கல்வி நடவடிக்கைகளுக்கான ஒரு நிறுவன கட்டமைப்பாகும், இது ஒரு படிப்பு நிரலை உருவாக்க பாடநெறிகள் மற்றும் படிப்படியாக வடிவமைக்கப்பட்ட பிற கல்வி முறைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த கொள்கையானது, உயர் பள்ளி படிப்புக்கு (12ம் வகுப்பு) பிறகு எந்தவொரு துறையிலும் அல்லது அளவிலும் பட்டம் வழங்கும் கல்வி நிறுவனங்களை உயர்கல்வி நிறுவனம் (HEI) என்னும் பதத்தில் சேர்க்கிறது. இதில் பல்கலைக்கழகங்கள் (அனைத்து வகையான), தன்னாட்சி கல்லூரிகள், மற்றும் ஒரு பல்கலைக்கழகத்தின் நிலையை கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இணைப்பு பெற்ற கல்லூரிகள் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக அது இணைந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. பாலிடெக்னிக் போன்ற நிறுவனங்கள், டிப்ளமோ மட்டுமே வழங்குவதால் நீண்ட காலமாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படவில்லை. அத்தகைய நிறுவனங்கள் பற்றி பாடம் 20 ல் உள்ள தொழில் நுட்ப கொள்கையில் விவாதிக்கப்படுகிறது, மேலும் தேவைப்படும் இடங்களில் அது பற்றி குறிப்பிடப்படுகிறது. கல்வி நிறுவனங்களை மறுகட்டமைத்தலும் ஒருங்கிணைத்தலும் நோக்கம்: இந்திய உயர்கல்வியின் திறனை அதிகப்படுத்தும் பொருட்டு, மீத்தரம்வாய்ந்த ஆற்றல்மிகு பன்புலக்கல்வி நிறுவனங்களை உருவாக்குதலும், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை உறுதிசெய்தலும். உயர்கல்வியின் எதிர்காலக் கல்விதிட்டம் எவ்வாறு அமையவுள்ளது என்பது குறித்து இயல் ஒன்பதில் விளக்கப்பட்டுள்ளது. அந்தத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில்   கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு புதிய விளக்கத்தைத் தர வேண்டியுள்ளது. நவீனக் காலத்திற்கு ஏற்ப பல்வேறு வகையில் விரிந்து செல்லும் கல்வியின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் மிகப் பெரிய அளவில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தின்படி, ஒரு பல்கலைக்கழகம் என்பது, இளநிலை, முதுநிலை கல்விப் பட்டப் படிப்புகளில் உயர்தரமான கற்பித்தல், ஆய்வுகள் மற்றும்  சேவைகளின் மூலம் ஆகச் சிறந்த கற்றலுக்கு வழியமைக்கும் ஒரு நிறுவனம் என பொருள் கொள்ளப்படுகிறது. இக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம் முழுவதும், இத்திட்டத்திற்கு என ஒதுக்கப்படும் நிதி, பல்வேறு அரசுப் பொது நிறுவனங்களால் கல்வியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் நேர்மையான முறையில் கையாளப் பயிற்றுவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து வரும் காலங்களில், கற்பித்தல், ஆய்வுகள், கருவிகள், சேவைகள் போன்ற அந்நிறுவனங்களின் சொந்தத் தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு நிதியை கையாளும் தன்னாட்சி உரிமை அவர்களுக்கு அளிக்கப்படும். பொதுநிதியைக் கையாளும் இந்த நடைமுறையில் வழக்கம் போலவே வெளிப்படைத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். நிதியாளும் உரிமை, தொடர்ந்து அளிக்கப்படும் நிதியாதரவை நிறுத்துவதற்கன்று; மாறாக, உயர்ந்தபட்ச கல்வியியல் அடைவுகளை சாத்தியப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட நிதியினை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என்பதனை அந்த நிர்வாகமே முடிவு செய்வதற்கான உரிமைதான். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வகையில் மாநில அரசுகளோடு விரிவான ஆலோசனை நடத்தப்படும். பின்னர் ராஸ்திரிய சிக்ஸா ஆயோக் (RSA)-யின் ஒப்புதலோடு , நாளந்தா திட்டத்தை செயல்படுத்தும் ’மிசன் இயக்குநரகம்’ (கீழே பார்க்க: P 10.15) இதற்கான சட்டகம் உருவாக்கி செயல்படுத்தப்படும். கற்பித்தலுக்கும் ஆய்வுகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைக் கழகங்கள், (ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள்) அதைப்போல கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவமும் சில குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மட்டும் மேற்கொள்ளும் கற்பித்தல் பல்கலைக் கழகங்கள் என, இருவகையான பல்கலைக் கழகங்கள் பற்றி புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளன. கல்லூரிகள் என்பவை பல்கலைக் கழகங்களைப்போல, பல்வேறு துறைகளையும் கொண்டியங்கும் பெரிய நிறுவனமாக செயல்படாது. மாறாக, இளநிலை பட்டக் கல்விப் படிப்புகளை வழங்கும் ஒரு கல்வி நிறுவனமாக செயல்படும். வழக்கமான ஒரு பல்கலைக் கழகத்தைவிட அளவில் சிறியதாக இருக்கும்படி கல்லூரிகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. கல்லூரிகளுக்கு பட்டமளிக்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்படும் அல்லது அவை எந்தப் பல்கலைக் கழகத்தோடு இணைந்திருக்கிறதோ, அந்தப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாகவே செயல்படுமாறு மாற்றியமைக்கப்படும். கல்லூரிகள் தன்னாட்சி உரிமம் கொண்ட ஆராய்ச்சி பல்கலைக் கழகங்களாகவோ அல்லது போதிக்கும் பல்கலைக் கழகங்களாகவோ அவற்றின் செயல்திறன் மற்றும் விருப்பத்தின் பேரில் பரிணமிக்கலாம். குறிப்பிட்ட கால எல்லைக்குள் அதற்குரிய அங்கீகாரத்தை பெற வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்ளையும் கீழே குறிப்பிடும் மூவகை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்பது இக் கல்விக் கொள்கையின் தொலைநோக்குத் திட்டமாகும். ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் முதல் வகையையும், போதனை அல்லது கற்பிக்கும் பல்கலைக் கழகங்கள் இராண்டாம் வகையையும், கல்லூரிகள் மூன்றாம் வகையையும் குறிக்கின்றன. பல்வேறு துறைகளுடன் இயங்கும் இந்த மூவகை கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை ஆயிரக்கணக்கில் நடைபெற வேண்டும். இதை ஒரு இலக்காகக் கொண்டு அந்நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மாணவர்களின் சேர்க்கை ஆயிரக்கணக்கில் இல்லாத சூழலில், அந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிகளையும் வளங்களையும் உகந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், கற்பித்தல், ஆராய்ச்சி, கல்விச் சேவைகள் போன்றவைகளுக்கு ஏற்ற சூழலை உண்டாக்கவும், வருங்கால உயர்கல்விக்கு தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலும் பயன்படுத்திக் கொள்ளப்படும். அனைவருக்குமான கல்வி, கல்வியில் சமத்துவம் மற்றும் உள்ளடங்கிய கல்வி ஆகிய பண்புகளோடு புவியியல் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வண்ணம், அந்தப் பகுதிகளின் தன்மை மற்றும் மக்கட்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, 1-3 வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் தகுந்த எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்படும். வளரும் நாடுகளான சீனா, பிரேசில் போன்றவற்றில் நிகர மாணவர் சேர்க்கை வீதம் GER (Gross Enrolment Ratio) 44%மாக உள்ளது. அந்நாடுகளோடு ஒப்பிடும் வகையிலும் மக்களின் கல்வித் தேவைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது நமது நாட்டில், கல்வி நிறுவனங்களில் நிகர மாணவர் சேர்க்கை வீதம் 50% என நிர்ணயிக்கப்பட்டு, இந்த இலக்கு கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும் காலம் முழுவதும் தொடர வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கல்வி இலக்குகளை அடைய, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் ஒரு பகுதி என்பது, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய கல்வி நிறுவனங்களை தோற்றுவிப்பது. ஆனால் மேற்கண்ட கல்வி இலக்குகளை அடைவதற்கு வேண்டிய பெருந்திறனை, தற்போது நடைமுறையில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்தல், விரிவுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதன் ஆகிய நடவடிக்கைகளின் மூலம்தான் பெற முடியும். 1,2,3 வகைமைகளில் ஆகச் சிறந்த அரசு பொது கல்வி நிறுவனங்களை அரசு மற்றும் தனியார் என துறைகளிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் தோற்றுவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். புவியியல் ரீதியாக நலிவடைந்துள்ள, வளர்ச்சி காணாத பகுதிகளில், உயர்தர கல்வி நிறுவனங்களை நிறுவி செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இக் கல்விக் கொள்கையின் வழியாக, பின்பற்றப்படவுள்ள கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு, விரிவாக்கம், மேம்பாடு போன்ற மறுசீரமைப்புச் செயல்முறைகளின் மூலம் நாடு முழுமைக்கும் மீத்தரமான உயர்கல்வி சமத்துவ முறையில் வழங்குவதை உறுதி செய்ய முடியும். மிகப்பெரிய புதியவகை கல்வி நிறுவனக் கட்டமைப்பு, நிறைந்த வள ஆதாரங்கள், கற்பித்தலும் ஆராய்ச்சியும் பெரும் வீச்சோடு நடைபெறும் பல்துறை உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவை உயர்கல்வியில் திறனையும், மிகப்பரந்த அளவில் கல்வியினையும் மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும். 10.1. ஆற்றல்மிகு பல்துறைசார் பல்கலைக்கழக, கல்லூரிகளின் தேசியச் சூழலமைப்பு: உயர்கல்வி நிறுவனங்கள், மீத்தரமிக்க கற்பித்தல், ஆராய்ச்சி, கல்விச்சேவைகளை வழங்கும் ஆற்றல் மிகுந்த சமூக அமைப்புகளாக மேம்படுத்தப்படவுள்ளன. இவை தேசிய அளவில் கற்றலும் அறிவு உருவாக்கமும் நிறைந்த ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதோடு, சிறப்பு அளவீடுகளின் (இட ஒதுக்கீடாக இருக்கலாம்) மூலம் அனைவருக்குமான சமமானக் கல்வியை வழங்கும். இக்கல்வி மேம்பாட்டினை அடைவதற்கு, சில முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும், பல்துறைசார் கல்வியினை வழங்கும் நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும். உயர்தரமான கல்விக்கு இது மிக அவசியமாகும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒப்பீட்டுளவில் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட மாணவர் சேர்க்கை தேவைப்படுகிறது. பயனுள்ள வகையில் பல்துறைச்சார் கல்வி நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கும் அவை திறம்பட செயல்படுவதற்கும் இது அவசியமான ஒன்றாகிறது. கலை, இலக்கியம், அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் இரண்டு படிப்புகளையும் சமூக அறிவியலில் ஒரு பட்டப்படிப்புக் கல்வியையும், ஓர் உயர்கல்வி நிறுவனம் வழங்குமேயானால், அது பல்துறைசார் கல்வி நிறுவனம் என அழைக்கப்படும். நீண்டகால கல்விப் பயண அனுபவத்தில், மேற்குறிப்பிட்ட அந்த குறைந்தபட்ச உயர்கல்வியை மட்டும் வழங்குவதோடு நில்லாமல், தொழில்முறை கல்விகளையும், தொழில்சார் கல்விகளையும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வழங்க வழியமைக்கப்படும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மிகச்சிறந்த வல்லுநர்கள் உறுப்பினர்களாக கொண்ட கல்வியியல் வல்லுநர் குழுவைப் பெற்றிருக்கும். கல்விப் பணியோடு தலைமையேற்கும் பண்பு உட்பட வேறு பல பணிகளிலும் அவர்கள் பங்காற்றுவார்கள். இத்தகைய குழு உறுப்பினர்கள் உரிய அதிகாரத்தையும், மிகச்சிறந்த கல்வி மேலாண்மையையும் பெற்றிருப்பார்கள்; ஆழமான கற்றல், அறிவு உருவாக்கம், சிறந்தக் கல்விச்சேவையை வழங்குதல் போன்றவற்றுக்கு ஏற்ற வகையில் உகந்த கல்வியியல் சூழலை நிறுவனங்களில் உருவாக்கும் பொருட்டு அவர்களுக்கு இத்தகைய அதிகாரம் கொடுக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட கல்வியியல் சூழலை உருவாக்கும் பொருட்டு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி, நிர்வாகம், நிதி என அனைத்திலும் தன்னாட்சி உரிமை வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தன்னாட்சி உரிமையை காக்கும் பொருட்டு, அவற்றிற்கு பொதுநிதி ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும். பொதுச்சமூக அக்கறையோடு, உயர்தரமான கல்வி, கல்வியில் சமவாய்ப்புகளை வழங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்; அரசு கல்வி நிறுவனங்களுக்கு நிகராகவும் அவை நடத்தப்படும். கல்வியில் புதுமை காண வழங்கப்படும் தன்னாட்சி உரிமை, ஒட்டுமொத்தக் கல்விச் சூழலையும் தரப்படுத்துதல், கல்வியில் உள்ளார்ந்த புதுமைகளை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள ’இணைப்புக் கல்லூரிகள்’ என்ற அமைப்பை மெல்ல மறையச் செய்தல் உட்பட, இக்கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையில் அமைந்த இப்புதிய கட்டுநெறி முறைமை, ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். நடப்பில் இருக்கும் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவன அமைப்புகள் - தொழில்சார் மற்றும் தொழிற்முறைசார் கல்வி உட்பட – அனைத்தும் ஒற்றை உயர்கல்வி முறைமைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தக் கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மறுசீரமைப்பு அணுகுமுறைகள், குறிப்பிடத்தக்க கொள்கை அம்சங்கள் யாவும் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு செயல்படுத்தி, முடிவில் அவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர், அவை ஒன்றுக்கொன்று ஒத்திசைவு கொண்டு செயல்படுமாறு கட்டமைக்கப்படும். தொழில்முறைசார் கல்வியும் (Professional education) ஒருங்கிணைந்த உயர்கல்வியின் ஓர் அங்கமே 10.2. பொது உயர்கல்வி விருத்தி செய்யப்பட்டு பின் மேம்படுத்தப்படும். பொதுக்கல்வியின் தேசிய முக்கியத்துவம் கருதி, அந்நிறுவனங்கள் அனைத்தும் விருத்தி செய்யப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளது. 10.3. உயர்கல்விக்கான புதிய அமைப்பியல் சார் கல்விக்கட்டமைப்பு: தரமான உயர்கல்வியை பெற விரும்பு அனைவருக்கும் ஏதுவாகவும், ஆராய்ச்சியில் மீத்தரத்தை கொண்டு வருவதற்கும், புதிய அமைப்பியல்சார் கல்விக் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இப்புதிய கட்டமைப்பு மூன்று வகையான கல்வி நிறுவனங்களை தோற்றுவிக்கவுள்ளது. இந்த மூன்று வெவ்வேறு வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு நோக்கங்களுடன் செயல்படும் எனினும், தரமானக் கல்வியை வழங்குவது அவற்றின் பொதுநோக்கமாக இருக்கும். 2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்சொன்ன மூன்றில் ஒரு நிறுவனமாக வளர்ச்சி காணும். இத்தகைய மூன்று வெவ்வேறு வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு நோக்கங்களை முன் வைத்து கல்விச் செயல்களில் ஈடுப்பட்டாலும், தரமான கல்வியை வழங்குதல் என்பது அவற்றின் பொதுநோக்கமாக அமையும். மூவகை கல்வி நிறுவனங்கள்: வகை-1: ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்: இவை கற்பித்தலையும் ஆராய்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு செயல்படும். இவை தத்தம் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அறிவு உருவாக்கத்திற்கும் வழிவகுக்கக்கூடிய நவீன ஆய்வுகளில் ஈடுபடும். அதேசமயத்தில், இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டாய்வு, தொழில்முறைசார், தொழில்சார் (professional and vocational) படிப்புகளில் மிகத்தரமான கல்வியை வழங்கும். முதுநிலை, முனைவர் பட்டாய்வு கல்வியினை வழங்கும் ஆய்வு நிறுவனங்களில் பெரும்பாலானவை இளநிலைக் கல்வியை வழங்குவதில்லை. மிகச்சிறந்த நிறுவனங்களிடமிருந்து துறைசார் விரிந்த அறிவை பெற வேண்டிய நிலையில் வருங்காலச் சந்ததியினர் உள்ளனர். ஆகவே, அத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் இளநிலைக் கல்வியையும் வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படும். அடுத்த இருபது ஆண்டுகளில் 150 முதல் 300 வரை எண்ணிக்கை கொண்ட முதல்வகை கல்வி நிறுவனங்கள் செயல்படும். முதல்வகை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை 5,000 முதல் 25,000 வரை அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இலக்கு. அவற்றை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக்குவதும், பன்னாட்டு நிறுவனங்களாக்குவதும் இக்கொள்கையின் இலக்காகும். வகை - 2: கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள்: இவை இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டாய்வு, தொழில்முறைசார், தொழில்சார், சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளில் (undergraduate, master and doctoral, professional, vocational, certificate and diploma programmes) தரமான கல்வியை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும். நவீன ஆய்வுகளில் குறிப்பிடத் தகுந்த பங்கையாற்றும் வகையிலும் செயல்படும். இத்தகைய நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கையானது 5,000 முதல் 25,000 வரை அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதை இலக்காக கொண்டு செயல்படும். அடுத்துவரும் 20 ஆண்டுகளில் இத்தகைய கல்வி நிறுவனங்களில் எண்ணிக்கை, 1,000 முதல் 2,000 வரை என்ற எண்ணிக்கையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுள் மிகச்சிறந்த கல்வித் தரத்தையும், பல்வேறு துறைசார்ந்த படிப்புகளை வெற்றிகரமாகவும், மிகச்சிறந்த ஆராய்ச்சிகளை தரும் நிறுவனங்களை முதல்வகை நிறுவனமாக மாற்றுவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வகை - 3 - கல்லூரிகள்: இவை முழுக்க முழுக்க உயர்தரக் கல்வியை வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்படும். பெரும்பாலும் இவை பல்வேறு துறை, பிரிவுகளில் உள்ள இளநிலைக் கல்வியை வழங்கும். அத்துடன் தொழில்சார், தொழில்முறைசார் கல்விகள் உட்பட சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளையும் வழங்கும். இத்தகைய கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 500 முதல் 1,000 வரை இருக்குமாறு இலக்கு நிர்ணயிக்கப்படவுள்ளது. இவற்றின் எண்ணிக்கை 5,000 -10,000 வரை இருக்கும். உயர்தரமிக்க, தாராள அல்லது இலகுத்தன்மை வாய்ந்த இளநிலைக் கல்வியை (liberal undergraduate education) வழங்குவது இத்தகைய தன்னாட்சி கல்லூரிகளின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய கல்லூரிகள், தொழில்சார் படிப்புகளில் பட்டயம், சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளையும் சில தொழில்முறைசார் கல்வியையும் வழங்க வேண்டுமெனவும் எதிர்நோக்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் கல்வியில் ஆராய்ச்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதன் வழி கற்பித்தல் வலுப்படுத்தப்படும். இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்கள், ஆராய்ச்சிக்குரிய நிதியினைப் பெறுவதற்கும் அதன்மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுவார்கள். இம்முயற்சி பிற்கால ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு பொருத்தமான மாணவர்களை உருவாக்கிக் கொடுக்கும். காலவோட்டத்தில் அவை பல்வேறு துறைகளிலும், பிரிவுகளிலும் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திறன் பெற்றிருக்குமேயானால், பிற்காலத்தில் அவற்றை இரண்டாம் வகை, முதல்வகை கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கும் முயற்சிக்கப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை இந்த மூன்று வகைக்குள் அடக்குவது என்பது ஓர் உறுதியான, பிரத்தியேக வகைப்பாடு என்று கருதிவிடக் கூடாது. மாறாக, சூழலுக்கேற்ப நெகிழ்வுத் தன்மையை கொண்ட ஒரு தொடர் செயல்முறை நிகழ்வாக இது அமையும். உயர்கல்வி நிறுவனங்கள் அவற்றின் கல்வித் திட்டம், செயல்முறைகள், திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வகைமையிலிருந்து இன்னொரு வகைமைக்கு மாறுவதற்கு, தன்னாட்சி உரிமையோடு கூடிய சுதந்திரம் வழங்கப்படும். அவற்றிற்கேயுரிய குறிக்கோள்களையும் பணிகளையும் மையமாக கொண்டியங்குவதே, மூவகைப்பட்ட நிறுவனங்களின் குறிப்பிட்டத்தக்க சிறப்பு அம்சமாகும். அங்கீகார அமைப்பினால் (பார்க்க: இயல் 18.2), மூவகை நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதமான நடைமுறை விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, உரியமுறையில் செயல்படுத்தப்படும். எத்தன்மையாயினும், தரமான கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள் வழி உயர்தரமான கல்வியை வழங்குதல் என்பது மூவகை உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவானவை. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியோடு வேறு சில முக்கியப் பங்கினையும் இவை வகிக்கும். அத்தகையப் பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான வள ஆதாரங்ளும் பொருத்தமான அமைப்பும் ஏற்படுத்தப்படும். அத்தகைய பிற பொறுப்புகளில் முக்கியமானவைகளாவன: பிற உயர்கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாயிருத்தல்; கூட்டுழைப்பு மற்றும் சேவை பரிமாற்றம்; கல்வியின் வெவ்வேறு நடவடிக்கைகளிலும் தனது பங்களிப்பை உறுதி செய்தல்; உயர்கல்வி அமைப்பின் திறன் மேம்பாட்டினை வளர்த்தல்; பள்ளிக்கல்வியிலும் தனது பங்களிப்பை உறுதி செய்தல் போன்றவை. நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, இந்திய உயர்கல்வியானது, மூவகைப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குள் உள்ளடங்குவதனால், அவற்றின் எண்ணிக்கை அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் தற்போது இருக்கும் அளவைக் காட்டிலும் மிகப்பெரியதாய் இருக்கும். இதன்மூலம், ஓர் உயர்கல்வி நிறுவன வளாகத்திற்குள் உள்ள வள ஆதாரங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிப்பதோடு, பல்வேறு துறைகளின் தகுதியும் திறனும் மேம்படும். நிகர மாணவச் சேர்க்கை வீதமும் அதிகரிக்கும். இந்த மூவகை கல்வி நிறுவனங்கள், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மண்டலங்களிலும் சமச்சீரான முறையில் நிறுவப்பட வேண்டும். 10.4. தாராள அல்லது இலகுக் கல்வி – படிப்புகள் / துறைகள் / உயர்கல்வி பள்ளிகள்: தாராளக்கல்வி அணுகுமுறை என்பது, தொழில்முறைசார் கல்வி உட்பட அனைத்து துறை, புலங்களின் இளநிலை பட்டப்படிப்புகளின் கீழ்மட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய கல்வி நடைமுறையில், மாணவர்களை அவர்களது கல்வி செயல்திறனுக்கேற்பவும், முதன்மைப் பாடத்தின் அடிப்படையிலும் அல்லது வேறு ஏதோ சில காரணிகளின் அடிப்படையிலும், அறிவியல், கலை, தொழில்சார் மாணவர்கள் என தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் நிலை உள்ளது. இந்தநிலை மாற்றப்பட்டு அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களையும் படிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். வகை 1, 2 பல்கலைக்கழங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், இளநிலைக் கல்வியில் தாராளக் கல்வியை வழங்குமாறு வேண்டப்படும். தகுதிமிக்க சிறந்த பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களும் நான்கு வருட ஆசிரியர் கல்வியை வழங்க வேண்டும். இத்திட்டம் வேறுபல கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல் மற்றும் இரண்டாம் வகை உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பட்டக்கல்வி படிப்புகளை வழங்கும். அந்தந்த துறைசார்ந்த பட்டப்படிப்புகள் மட்டுமல்லாது, துறைகளுக்கு இடையே இயங்கும் கல்வியையும் வழங்கும். வளர்ந்து வரும் துறைகள், பயன்பாட்டுப் புலம் போன்றவற்றில் தேவைக்கேற்ப புதுமையான படிப்புகளைத் தோற்றுவித்து அவற்றில் மேம்பாடு காண்பதற்கு, மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். இதைச் சாத்தியப்படுத்துவதற்கு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தரம் வாய்ந்த துறைகளும் பள்ளிகளும் தோற்றுவிக்கப்படும். குறிப்பாக மொழி, சமூக அறிவியல், பண்பாடு, பௌதிக அறிவியல், கல்வி, கணிதம், கலை, இசை, விளையாட்டு போன்ற துறைகள் தரம் மிகுந்த துறைகளாகப் போற்றி வளர்க்கப்படும். பொறியியல், மருத்துவம், மருந்தியல், வேளாண்மை மற்றும் காட்டாண்மை (forestry) போன்ற நேரடிப் பயன்பாடுகள் சார்ந்த கல்வியும் தரம் மிக்கதாக ஆக்கப்படும். வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட மூவகை உயர்கல்வி நிறுவனங்கள். ஆயினும் உயர்தரமே அவற்றின் இறுதி இலக்கு. 10.5. நிறுவனத் தன்மை வாய்ந்த புதிய கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்துதல்: கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குதல், கணிசமாக தொடர்ந்து அளிக்கப்படும் பொது நிதியாதரவு, வேறுபல தனிப்பட்ட நிறுவன ஊக்குவிப்பு, ஆகியவற்றின் மூலம் நிறுவனத் தன்மை வாய்ந்த புதிய கல்விக் கட்டமைப்பின் வளர்ச்சியானது, நாடு தழுவிய அளவில் ஊக்குவிக்கப்படும். ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் அவற்றிற்கேயுரிய கல்வி நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (Institutional Development Plan -IDP) மூலம் வளர்த்தெடுக்கப்படும். எவ்வகை கல்வி நிறுவனமாக இருக்க வேண்டுமென்பதை அந்நிறுவனமே தேர்ந்தெடுப்பது, அந்நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்குரிய செயல்திட்டம், மென்மேலுமான வளர்ச்சி போன்றவை அக்கல்வி மேம்பாட்டு திட்டத்தின் உள்ளடக்கமாக அமைவன. கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் இலக்குகளை அடையும் வழிமுறையில் ஒரு பகுதியாக, தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு கலைத்திட்ட வடிவமைப்பிலும், நிர்வாகத்திலும் தன்னாட்சி உரிமை வழங்கப்படுகிறது. இன்னொரு பகுதியில் பொதுக் கல்வி, நிதி, நிர்வாகம் மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவைகளும் வலியுறுத்தப்படுகின்றன. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு கருதி அவற்றிற்கு வழிகாட்டுதல், ஒழுங்குபடுத்துதல், குழுவமைத்தல், மேற்பார்வையிடுதல், கட்டுப்படுத்துதல், தணிக்கை செய்தல் போன்ற முக்கியமான செயல்முறைகள் அனைத்தும் நிறுவன வளர்ச்சித்திட்டத்தின் (IDP) கைவசம் இருக்கும். பொது உயர்கல்வி நிறுவனங்களை பொருத்தமட்டில் அதற்கு தேவையான நிதியுதவியை தொடர்புடைய பொது அதிகார நிறுவனத்திடமிருந்துதான் பெற முடியும் என்பது வெளிப்படையானது. உயர்கல்வியை விருத்தியடையச் செய்து அதனை உயிர்ப்போடு இயங்க வைக்க தொடர் நிதியாதரவு வழங்கப்படும். 10.6. நிதிநல்கையை தீர்மானிக்கும் அமைப்பு: உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட, அவற்றிற்கு தேவையான பொதுநிதியை தீர்மானிப்பதற்கு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் ஓர் அமைப்பு அமையவுள்ளது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் சரிசமமான வாய்ப்புகளை இந்த அமைப்பு வழங்கும். அங்கீகரிக்கும் அமைப்பின் (accreditation system – பார்க்க: P18.5.1) விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள ’வெளிப்படைத் தன்மை’ என்ற கட்டளைவிதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படும். மத்திய மாநில அரசுகளின் பொதுவான கல்வி அமைப்புகளினால் - உயர்கல்விக்கான மானிய நிதிக்குழு (Higher Education Grants Council – பார்க்க: P18.4.1) உட்பட – இந்த அமைப்பு இயக்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களின் இலக்குகள் மற்றும் திட்டங்களை பிரதிபலிக்கும் கல்வி நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களுக்கு (IDPs - பார்க்க: P17.1.7), குறுகிய, மத்திம, மற்றும் நீண்டகால அடிப்படையில் அவற்றிற்கு தேவையான நிதியாதரவை வழங்கும். 10.7. மத்திய அரசு நிதியினால் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களை முதல்வகை (research universties)  நிறுவனமாக வளர்த்தெடுத்தல்: நடைமுறையில் இருக்கின்ற மத்திய பல்கலைக்கழகங்கள் (CUs), மத்திய அரசின் நிதிஆதரவுடன் செயல்படும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (CFTIs), தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் (INIs), மத்திய அரசின் கணிசமான நிதிஆதரவோடு செயல்படும் ஏனைய பிற கல்வி  நிறுவனங்கள் (இவை எண்ணிக்கையில் 50% மேற்பட்டவை), ஆகியவை  இப்புதிய கல்விக் கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள முதல்வகை நிறுவனமாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளன. இதற்கான நிதியாதரவு மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் அமையும். சில ஆராய்ச்சி நிறுவனங்களை, முதல்வகை  நிறுவனமாக மாற்றி அமைக்க முடியாதபடியான சூழல் நிலவலாம்.  சான்றாக, ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்ப  அந்த வளாகத்தின் கொள்ளளவு போதாமையாக இருக்கலாம். அம்மாதிரியான ஆராய்ச்சி நிறுவனங்கள் முதல்வகை கல்வி நிறுவனமாக மாற்றப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டாது. மாறாக, அத்தகைய கல்வி நிறுவனங்கள் முதல்வகை அல்லது இரண்டாம்வகை கல்வி நிறுவனங்களை போலவே செயல்படுவதற்கு ஏற்றவகையில் கற்பித்தல் வளப்பெருக்கத்திற்கும், ஏனைய பிறவற்றிற்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்படும். 10.8. நிறுவனத் தன்மை வாய்ந்த புதிய கல்வியியல் கட்டமைப்புகளை மாநில அளவில் உருவாக்குவதற்கான திட்டங்கள்: இந்தப் புதிய கல்வியியல் கட்டமைப்பை அடுத்து வரும் பத்தாண்டுகால அடிப்படையில் வளர்த்தெடுத்து, நடைமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களும்   தங்களை தயார்ப்படுத்திக்  கொள்ள வேண்டும். பாரபட்சமேதுமின்றி, இந்த மூவகை கல்வி நிறுவனங்களும் சமவாய்ப்பு அடிப்படையில் மாநிலம் முழுவதும்  பரவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நலிவடைந்த பகுதிகளில் இத்தகைய நிறுவனங்கள் பரவுவதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதற்காக சிறப்பு கல்வி மண்டலங்கள் (Special Education Zones) கூட இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படலாம். மக்கள்தொகை அடர்த்தி தோராயமாக  50 லட்சம், 5 லட்சம், 2 லட்சம் இருக்கும்பட்சத்தில்,  அதற்கேற்ப அப்பகுதிகளில் முதல்வகை, இரண்டாம்வகை, மூன்றாம்வகை கல்வி நிறுவனங்கள்   தோற்றுவிக்கப்படும். இந்த எண்ணிக்கை அந்தந்தப் பகுதிகளின் புவியியல் தன்மைக்கேற்ப மாறும். அப்பகுதிகளில் வாழும் மக்களைப் பற்றிய ஆய்வுகளும் (மக்கள்தொகைக் கணக்கெடுப்பு)  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிறந்த பல்கலைக் கழகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கல்வியில் சமவாய்ப்பு கொடுக்கப்பதில் எழும் இடர்கள்,  கல்விப்பரவலாக்கம், தற்கால,  எதிர்கால கல்வி வெளிப்பாட்டின் தரம் போன்ற காரணிகளின் தேவைகளுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. அவ்வாறு ஒருங்கிணைப்பதனால், நிறுவனங்களின் எண்ணிக்கை பகுதியாக குறையும். இந்தத் திட்டம் ராஸ்திரிய உச்சதார் சிக்சா அபியானின் Rashtriya Uchchtar Shiksha Abhiyan (RUSA) தொடர் செயல்முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதனால் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திற்கு இடையேயும் மிகச்சிறந்த, மிகப்பரந்த ஆற்றல்மிகு கல்விச் சமூகக் குழுக்களை உருவாக்க முடியும் என்பது திண்ணம். நடைமுறையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் வளஆதாரங்கள் இந்த ஒருங்கிணைப்பின் தாக்கத்திற்கு ஆட்படினும்,    அவை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும். மனிதவள ஆதாரங்கள் கூடுதலாக  வழங்கப்படமாட்டாது. மாறாக, அதன் தகுதியும் திறமையும் அதிகரிக்கப்படும். ஒருங்கிணைப்பிற்கு பிறகு எஞ்சி நிற்கும் கல்லூரி வளாகங்கள், தேவைக்கேற்ப பள்ளி வளாகங்களாகவும் தொழில்சார் கல்வி நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகவும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும். மாநில அரசின் பத்து ஆண்டுக்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படும். புதிய கல்விக்கொள்கையில்  வெளிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு  நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே புரிந்துணர்வு  இருக்க வேண்டியதை இது கோருகிறது. அதில்தான் அதன் வெற்றியும் அடங்கியுள்ளது. ராஸ்திரிய சிக்ஸா ஆயோக்கை (RSA - பார்க்க: P23.10) செயல்படுத்தும் குழு இதற்கு ஏதுவாக இருக்கும். உயர்கல்வி நிறுவனங்கள், தங்களது வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தாம் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதை உணர வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களிலேயே, வகை-1, வகை-2 நிறுவனமாக மாற்றப்படவுள்ள குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பெரும் ஆதரவும் வளமூட்டலும் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. இதன்பொருட்டு, மாநில அளவிலான காரணிகளையும் இவற்றில் சேர்த்து பரிசீலிக்கும்போது, தொடர்ந்து நிதியாதரவு தேவைப்படும் மேற்குறிப்பிடப்பட்ட கல்வி அமைப்பிற்கு, பொருத்தமான வடிவத்தை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம். 10.9. தேசிய ஆய்வு மையத்தின் ஆதரவு: முதல்வகை மற்றும் இரண்டாம்வகை உயர்கல்வி நிறுவனமாக தங்களை தரம் உயர்த்திக் கொள்வதற்கு தற்போது நடப்பில்உள்ள அனைத்து உயர்நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தங்கள் வளர்ச்சிக்கான நிதிஆதரவை கேட்பதற்கு அவற்றிற்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். கல்வி நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (IDP) காணப்படும் பொதுநிதி வழங்கலில் இதற்கான செயல்முறைகள் சேர்க்கப்படுகின்றன. ஆய்வுநிதி வழங்கல் மிக முக்கியமான பல்நிறுவன கூட்டுச் செயல்முறை. தேசிய ஆய்வு மைய நிறுவனம் அப்பணியைச் செய்யும். (NRF பார்க்க: Section 14.2). இந்த அமைப்பும் உயர்கல்வி நிறுவனங்களின்  நிர்வாகமும், தேசிய ஆய்வு மையத்திடமிருந்து இடரிலாத வகையில் தொடர் நிதியாதரவை பெறுவதற்கு தங்களது புலக்கல்வியமைப்பை ஊக்குவிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களை வகை-1 அல்லது வகை-2 ஆக தரம் உயர்த்துவதற்கும் அவற்றை அந்நிலையிலேயே தக்கவைப்பதற்குமான இச்செயல்முறை சற்று நெருக்கடியானதாக இருக்கக் கூடும். மாநில அரசு பல்கலைக் கழகங்கள் தங்களது ஆய்வுத் திறனையும், வகை 1 மற்றும் வகை 2  கல்வி நிறுவனமாக தம்மை தரம் உயர்த்திக் கொள்வதற்கும் ஏற்ற வகையில், தேசிய ஆய்வு மைய நிறுவனம், 2040 வரையிலான ஒரு சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பல்கலைக் கழகத்தில் இயங்கும் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளில்  ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, ஆய்வுக்குப் பின் வழங்கப்படும் தேசிய முனைவராய்வு ஊதியம், (National Post-doctoral Fellowships - NPDF)  ஆய்வு காலத்திலேயே வழங்கப்படும் தேசிய முனைவராய்வு ஊதியம் (National Doctoral Fellowships - NDF) என இரண்டு பிரிவுகளிலும்  தலா 500 ஆய்வுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். இந்த  முனைவர்பட்ட ஆதரவு ஊதியம், 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். மேலும், தேசிய ஆய்வு மையத்தினால் ஒருங்கிணைக்கப்படும் ஒரே தேர்வுக் குழுவின் மூலம் சிறந்த முனைவர் பட்ட ஆய்வு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசு வழங்கப்படும். இந்த ஆதரவு ஊதியத்தைப் பெறுபவர்கள், மாநில பல்கலைக் கழகத்தின் நியமன ஆய்வுக் குழுக்களோடு இணைந்து கொண்டு தங்களது ஆய்வுப் பணிகளைச் செய்யலாம். குறிப்பிட்ட ஆய்வுப் புலங்களில் பணியாற்றுவோருக்கான முனைவராய்வு ஊதியத்தை (NPDF) வழங்கும் மாநில பல்கலைக் கழகங்களை தேசிய ஆய்வு மையமே தேர்ந்தெடுக்கும். மாநிலப் பல்கலைக்கழகங்கள், இந்தந்த புலங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென, தேசிய ஆய்வு மையத்திடம் கேட்கலாம். முனைவராய்வு ஊதியத்தை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல், அப்பல்கலைக்கழகம் எந்தெந்த புலங்களில் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்குகிறது போன்ற தகவல்களுடன் மாணவர்களுக்கு எளிதாக பொதுவெளியில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். தேசிய ஆய்வு மையம் தோற்றவிக்கப்பட்ட ஓராண்டிற்குள் மேற்கண்ட கல்வித் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். 10.10. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சமமான முன்னுரிமையும் ஊக்குவிப்பும்: தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், முதல், இரண்டாம் வகை கல்வி நிறுவனங்களாக தரம் உயர்வதற்கு ஊக்குவிக்கப்படும். குறைந்தபட்சம் மூன்றாம் வகை கல்வி நிறுவனமாக தரமுயர்த்திக் கொள்ள வலியுறுத்தப்படும். அவ்வாறு அவை தரம் உயர்வதற்கு தேவையான நிதியாதாரங்களை அந்தந்த தனியார் உயர்கல்வி நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும், அரசுப் பொது நிறுவனங்களைப் போலவே சமமாக அவை நடத்தப்படும். அவற்றிற்குரிய முன்னுரிமையும் சம நிலையில் இருக்கும். அரசுப் பொது நிறுவனங்களைப் போலவே அவையும் தேசிய ஆய்வு மையத்திடமிருந்து ஆய்வுப் பணிகளுக்கான நிதியினை பெற முடியும். 10.11. திறந்தவெளி, தொலைதூரக் கல்வியின் தரத்தை உயர்த்துதலும், கல்வியின் சமவாய்ப்பினை விரிவாக்குதலும்: திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்குவதற்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும் அதற்கான மையங்கள் இயங்கும். கற்போரின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவு செய்தல்; அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்குதல்; நிகர மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரித்தல்; வாழ்நாள் முழுவதும் கல்வி பெறுவதற்கான பரந்த வாய்ப்புகளை வழங்குதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இது அமையும். ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் முழுநேரக் கல்வியின் வழி வழங்கப்படும் சான்றிதழ், பட்டய மற்றும் பட்டப் படிப்புகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில், அதே நிறுவனத்தால் வழங்கப்படும் தொலைதூர மற்றும் திறந்தவெளிக் கல்வியின் தரமும் அமையுமாறு பார்த்துக்கொள்ளப்படும். அத்தகைய மீத்தரமான தொலைதூர & திறந்தவெளி கல்வியினை வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும், அதற்கு தகுந்த வகையில் கல்வியாளர்களை ஊக்கப்படுத்தி கற்பித்தலுக்கு உரிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களிடமுள்ள வளங்களோடு சுருங்கிவிடாது, தொழில்நுட்பத்தின் வழி விரிந்துகிடக்கும் பல்வேறு இணைய வசதி வாய்ப்புகளையும் வளங்களையும் தொலைதூரக் கல்வியில் பயில்வோருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அடுத்த வரும் ஐந்தாண்டுகளுக்குள் நலிவடைந்த பகுதிகளின் ஒவ்வொரு மாவட்டந்தோறும், 1-3 கல்வி நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் தலா ஒன்று என்ற வீதத்தில், கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்: 10.12. எளிமைப்படுத்தப்பட்ட கல்வி நிறுவன வகைப்பாடுகளும், பல்கலைக் கழகம் என்ற சொல்லுக்கு வடிவம் கொடுத்தலும்: பல துறைகளில் இளநிலை, முதுநிலை, முனைவர் ஆய்வு பட்டக் கல்வியினை வழங்கக்கூடிய ஓர் உயர்கல்வி நிறுவனம் என்பதுதான் பல்கலைக்கழகம் என்பதற்கு, உலக அளவிலான வரையறையாக உள்ளது. அது கற்பித்தலிலும் ஆய்விலும் உயர்தரத்தை பேண முயல்கிறது. எனவே இந்த வரையறைக்கிணங்க, தற்போது நடைமுறையில் இருக்கும் ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகம்’, (‘deemed to be university’) ’இணைவுப் பல்கலைக்கழகம்’ (‘affiliating university’), ‘தனியலகுப் பல்கலைக்கழகம்’ (‘unitary university’) போன்றவை வழக்கொழியும். இனிவரும் காலங்களில், பல்கலைக்கழகம் என்பது அரசு, தனியார், அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்கள் என்றோ, ஆய்வுப் பல்கலைக்கழகம் (முதல்வகை) – கற்பிக்கும் பல்கலைக் கழகம் (இரண்டாம் வகை) என்றோதான் வகைப்படுத்தப்படும். 10.13. பட்டம் வழங்கும் அதிகாரம்: பட்டம் வழங்கும் அதிகாரம் தற்பொழுது பல்கலைக் கழகங்களோடு பிணைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தன்னாட்சி (autonomous colleges) கல்லூரிகளுக்கும் பட்டம் வழங்கும் அதிகாரம் அளிக்கப்படும். கற்பித்தல் மற்றும் ஆய்வுகளில் ஈடுபடும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் – அவை தனியார் அல்லது அரசு நிறுவனங்களாக இருக்கலாம் – அந்தந்த நிறுவனத்தின் பெயரிலேயே பட்டம் வழங்கலாம். ‘பல்கலைக்கழகம்’ என்ற அடைமொழியை அவை பெற்றிருக்க வேண்டியதுமில்லை. பல்கலைக்கழகங்கள் பலதுறை சார்ந்த படிப்புகளிலும் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புக் கல்வியினையும், முனைவர் ஆய்வுப் பட்டக் கல்வியினையும் மிகப்பெரிய அளவில் வழங்குவதனால், ஏனைய பட்டம் வழங்கும் கல்லூரிகளிலிருந்து அவை தனித்து பிரிக்கப்படுகின்றன. 2032-ஆம் ஆண்டு வாக்கில், அனைத்து உயர்கல்வி பட்டங்களும் – அனைத்து பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள் உட்பட – அங்கீகரிக்கப்பட்ட முதல், இரண்டாம், மூன்றாம் வகை கல்வி நிறுவனங்களால் மட்டுமே வழங்கப்படும் (பார்க்க:இயல்-18.2). 10.14. இணைவுப் பல்கலைக் கழகங்களை மாற்றுதல்: அனைத்து இணைவுப் பல்கலைக் கழகங்களின் நிறுவன வடிவமைப்பும் முற்றிலும் வேறொன்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது. அனைத்து இணைவுப் பல்கலைக் கழகங்களும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வளாகங்களுடன் வகை-1 அல்லது வகை-2 பல்கலைக் கழகங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன. எனவே, இனி பல்கலைக் கழகங்கள் இணைவுக் கல்லூரிகளை பெற்றிருக்கமாட்டா. தற்போது, பல்கலைக் கழகங்களோடு இணைந்துள்ள அனைத்து இணைவுக் கல்லூரிகளும் 2032-ஆம் ஆண்டிற்குள் பட்டம் வழங்கும் தன்னாட்சி உரிமை கொண்ட கல்லூரிகளாக மாற்றியமைக்கப்படும்; அல்லது பின்னாளில் வகை-1 அல்லது வகை-2 பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுவதற்கு ஏற்ற வகையில் பல்கலைக் கழகங்களோடு அவை முழுமையாக இணைக்கப்பட்டுவிடும். இவை, புதிய உயர்கல்வி நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கும் மாநிலந் தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். ((பார்க்க: இயல் - P.10.3). இம்மாற்றத்திற்கு வேண்டிய உதவிகளும் வழிகாட்டல்களும் முதல்வகை அல்லது இரண்டாம் வகை அல்லது வேறேதேனும் ஒரு வகை வழிகாட்டு நிறுவனத்தின் மூலம் செய்யப்படும். இந்த நோக்கங்களுக்காக, வழிகாட்டு நிறுவனங்களுக்கென சிறப்பு வரவு-செலவுத் திட்டங்கள் (budgets) உருவாக்கப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கால அவகாசத்தின் நீட்சி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இருக்கலாம். இறுதியில், 2032-ஆம் ஆண்டிற்கு பிறகு இணைவுப் பல்கலைக்கழகங்களோ, பல்கலைக் கழகங்களோடு இணைக்கப் பெற்ற கல்லூரிகளோ இராது. 2032-ஆம் ஆண்டிற்குள் மூன்றாம் வகை உயர்கல்வி நிறுவனமாக, அதாவது கல்லூரியாக மாற்றப்படாமல் எஞ்சி நிற்கும் கல்லூரிகள் வேறு பல சேவைகளுக்கு, உகந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும். சான்றாக, வயதுவந்தோர் கல்வி மையங்கள் (adult education centres), பொது நூலகங்கள், தொழில்சார் கல்விக்கான வளாகங்கள் எனப் பலவகையிலும் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். இதுவும் மாநில அளவிலான திட்டத்தின் ஒரு பகுதியே. மேற்கண்ட புதிய கல்வித் திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவதற்கு கட்டுக்கோப்பான ஆட்சியும், நிர்வாக மேம்பாடும் தேவைப்படுகிறது. இவை இத்திட்டங்களோடு தொடர்புடைய மைய மற்றும் மாநில அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஏதுவாக அமையும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களாகவோ, பட்டம் வழங்மும் அதிகாரம் கொண்ட தன்னாட்சி கல்லூரிகளாகவோ இருக்கும். இணைவுப் பல்கலைக் கழகங்கள், பல்கலைக் கழகங்களோடு இணைவு பெற்ற கல்லூரிகள் என்பவை இனி இருக்கமாட்டா. 10.15. புதிய கல்வி கட்டுமானங்களை ஊக்குவிக்கும் நாளந்தா கல்விப்பணித் திட்டமும், தட்சசீலம் கல்விப்பணித் திட்டமும் : இந்தியக் கல்வி முறையில் தொலைநோக்குப் பார்வையோடு மேலே விவரிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு கால அவகாசமும் சீரிய முயற்சியும் தேவைப்படுகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மூவகை உயர்கல்வி நிறுவனங்களையும் தோற்றுவிக்கும் பொருட்டும் அத்தகைய சீரிய முயற்சிகளை முடுக்கிவிடும் வகையிலும் நாளந்தா கல்விப்பணித் திட்டமும் (Nalanda -MN) ,தட்சசீலம் கல்விப்பணித் திட்டமும் (Mission Takshashila -MT) அடுத்தடுத்து செயல்படுத்தப்படவுள்ளன. இந்த இரு கல்விப்பணித் திட்டங்களும் ராஸ்திரிய சிக்ஸா அபியான் (RSA) (பார்க்க இயல் -13) என்ற திட்டத்திலிருந்து உதயமாகிறது. மேலும், இந்த இரு கல்விப்பணித் திட்டங்களையும் செயல்படுத்த ‘மிசன் இயக்குநரகம்’ (Mission Directorate) என்றொரு பொது அதிகார மையமும் தோற்றுவிக்கப்படும். நாளந்தா கல்விப்பணித் திட்டமானது 2030-ஆம் ஆண்டிற்குள், முதல்வகையில் 100, இரண்டாம் வகையில் 500 என்ற எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்களை மண்டலச் சமச்சீர் பரவலாக தோற்றுவித்து அவை திறம்பட செயல்படுவதை உறுதி செய்யும். தட்சசீலம் கல்விப்பணித் திட்டமானது, இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் ஓர் உயர்தர உயர்கல்வி நிறுவனத்தை தோற்றுவிப்பதற்கு பாடுபடும். சில மாவட்டங்களின் மக்கட்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் தங்கிப் பயிலும் வசதியோடு கூடிய உயர்கல்வி நிறுவனங்களை தோற்றுவிக்கும். இந்தப் புதிய உயர்கல்வி நிறுவனக் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான தெளிவான திட்டம், அந்தத் திட்டத்தில் உள்ள அடுத்தடுத்த படிநிலைகள், மத்திய மாநில அரசுகளிடமிருந்து பெற வேண்டிய நிதியாதாரங்கள் இவை அனைத்தையும் கண்காணித்து மேலாண்மை செய்யும் வேலையை மிசன் இயக்குநரகம் கவனிக்கும். இந்தத் திட்டம் நிறுவன கட்டமைப்பு ரீதியான நோக்கங்களை மட்டும் கொண்டதல்ல; மாறாக உள் கட்டமைப்பு, குழுக்களுக்கிடையேயான கூட்டுமுயற்சியில் மேம்பாடு போன்ற பல்வேறு சூழலியல்சார் நோக்கங்களையும் உள்ளடக்கியது. மீத்தரமான உயர்கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியுறுவதற்கு இவை அவசியமானவை. இந்த திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் என இரண்டிற்கும் பொறுப்புள்ளது. இந்த இரு கல்விபணித் திட்டங்களுக்கு நெம்புகோலாக மேலே விளக்கப்பட்ட மாநில அளவிலான திட்டங்கள் அமையும். மேலும் நாளந்தா கல்விப்பணித் திட்டத்தையும் தட்சசீலம் கல்விப்பணித் திட்டத்தையும் திட்டமிட்டு செயல்படுத்த மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் மத்தியப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய மாநிலப் பல்கலைக் கழகங்களை முதல்வகை அல்லது இரண்டாம் வகை உயர்கல்வி நிறுவனமாக மாற்றுவது நாளந்தா கல்விப்பணித் திட்டத்தின் முதல் நோக்கமாகும். இவை முழுமையான உண்டு உறைவிடப் பல்கலைக் கழகங்களாக செயல்படும். மாநில அரசு கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த தேவையான நிதியாதாரம், வரையறுக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை தாண்டுமெனில் இந்த இரு திட்டங்களுக்கும் தேவையான நிதியாதாரங்கள் இரண்டு அரசுகளிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்படும். இதுவே மத்திய அரசின் நிறுவனமெனில் அதற்கு தேவையான முழு நிதியாதாரமும் மத்திய அரசால் வழங்கப்படும். மூவகை புதிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒரு சிலவற்றை, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டியெழுப்ப்படும். சான்றாக பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் (Multidisciplinary Education and Research Universities –MERUs :பார்க்க P11.1.4) இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டி எழுப்பப்படவுள்ளது. இவை பல்துறை கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஓர் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களாகச் செயல்படும். தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் முதல் மற்றும் இரண்டாம் வகை உயர்கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படுவதற்கு தேவையான உதவிகளையும் இத்திட்டம் செயல்படுத்தும். அடுத்து வரும் பத்தாண்டுகள் முழுவதிலும், இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பயணித்து குறிப்பிட்ட இலக்குகளை அதாவது, பல்புலத்திற மேம்பாடு, அங்கீகாரம், தன்னாட்சி, தன்னாட்சியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவது போன்ற பலவற்றையும் அடைவதற்கு அந்நிறுவனங்களுக்கு நீடித்த ஆதரவும் வழிகாட்டுதல்களும் தேவைப்படுகிறது. ராஸ்திரிய சிக்ஸாய் ஆயோக் ஆனது, அத்தகைய ஆதரவையும் வழிகாட்டுதல்களையும் எப்படியெல்லாம் செய்ய முடியுமென, நிறுவனத் தன்மையோடு பல்வேறு மாதிரிகளைச் செயல்படுத்தி பார்க்கவுள்ளது. ஏனைய சில நிறுவனங்கள், தங்களை ஓர் ஆய்வு நிறுவனமாக வளர்த்தெடுத்துக் கொள்ளத் தேவையான வழிகாட்டுதல்களை வேண்டி நிற்கின்றன. அத்தகைய வழிகாட்டுதலகளை தேசிய ஆய்வு மைய நிறுவனம் (NRF - National Research Foundation) (பார்க்க இயல்: 14.3) தரவிருக்கிறது. இந்த இரண்டு கல்விப்பணித் திட்டங்களும் (நாளந்தா & தட்சசீலம்) மேற்கண்ட இலக்குகளை அடைவதற்குரிய அனைத்து நடைமுறை அறிவையும் திறனையும் பெற்று அவற்றை சாத்தியப்படுத்த வழிவகுக்கும். மிகுதாராளமயக் கல்வியை நோக்கி நோக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளிலும் பாடங்களிலும் தீவிர சிறப்புக் கவனத்துடன் மிகுந்த கற்பனைத் திறனும் பரந்த தாராளமயம் சார்ந்த கல்வியும் அனைத்து மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘தாராளமயக்கலைகள்’ என்ற கருத்துருவின் நேரடிப் பொருள், கலைகளின் தாராளமான கற்பிதம் ஆகும். முக்கிய யோசனை என்னவெனில், கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட படைப்புத் திறன் சார்ந்த மனித முயற்சிகள் அனைத்தும் உண்மையில் தனித்துவமான இந்திய மூலங்களைக் கொண்டிருக்கும் கலைகளாகவே கருதப்பட வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவில், எண்ணற்ற பண்டைய நூல்கள், 1400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட உலகின் முதல் நாவல்களுள் ஒன்றான பாணபட்டரின் காதம்பரி உட்பட, ஆய கலைகள் அறுபத்து நான்கினை விவரிக்கின்றன. இந்த 64 கலைகளில் வல்லவர் எவரோ, அவரே உண்மையாகப் படித்தவர் என்று கூறப்பட்டது. இந்த 64 கலைகள் என்பது, இசை, நடனம், ஓவியம், சிற்பம், மொழிகள் மற்றும் இலக்கியத்தை உள்ளடக்கியவை. மேலும் பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களையும் இன்று தாராளமயக் கலைகள் என்று குறிப்பிடுவதற்கு மிகவும் நெருக்கமாகக் கருதப்படுகிற தொழில்சார் பாடங்களான தச்சு வேலை போன்றவற்றையும் குறிக்கின்றன. பிற்காலத்தில் கலைகளின் எண்ணிக்கை அதிகரித்து, லலிதா விஸ்தார சூத்திரத்தில் 86 ஆகவும், 13 ஆம் நூற்றாண்டில், பல்வேறு வகையான மனித முயற்சிகளைக் குறிப்பிடும் யசோதராவின் ஜெயமங்களாவில் 512 கலைகளாகவும் கூறப்பட்டது. இந்திய இலக்கியம் இருதுறை வேலைகளின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பல்வேறு பாடங்கள், கலை மற்றும் அறிவியலில் குறிப்பாக, கி.மு.300ல், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், பெருமளவில் இசையும் நாட்டியமும் பற்றிய உரையாயினும், கணிதம் மற்றும் இயற்பியல் கொள்கைகளுக்கிடையேயான இணைப்புகளையும் ஆழமாக ஆராய்ந்து கூறுகிறது.  இந்தியப் பல்கலைக் கழகங்களான தட்சசீலமும் நாளந்தாவும் உலகின் மிகவும் பழைமையும் சிறந்த தரமும் வாய்ந்த பல்கலைக் கழகங்களாக இருந்தன. இந்தப் பழங்காலப் பல்கலைக் கழகங்கள் தாராளமாகக் கலைகளையும் தாராளமயக் கல்விப் பாரம்பரியத்தையும் உறுதியாக வலியுறுத்தின. உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் இலக்கணம், தத்துவம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம், வணிகவியல், இசை, நடனம் மற்றும் பலவற்றையும் கற்பதற்காக வந்தனர். இந்தப் பல்கலைக் கழகங்களின் சிறந்த பட்டதாரிகள் மற்றும் அறிஞர்களுக்கு மத்தியில் தத்துவவாதியும் பொருளாதார வல்லுநருமான சாணக்கியர், ஆக்கவியல் இலக்கணத்தைக் கண்டறிந்த சமஸ்கிருத இலக்கணவாதியும் கணித அறிஞருமான பாணினி, தலைவரும் இராஜதந்திரியுமான சந்திர குப்த மௌரியர், கணித மேதையும் வானவியலறிஞருமான ஆரியபட்டர் ஆகியோரும் இருந்தனர். விமரிசிக்கப்படுகின்ற தாராளமயக்கலைக் கல்வி என்னும் இந்தக் கருத்துரு, உண்மையில் 21 ஆம் நூற்றாண்டின் நாகரிக உலக வேலைவாய்ப்புத் தளத்தில் மிகவும் முக்கியமானதாகிறது. மேலும் இந்த தாராளமயக் கலைக்கல்வி இன்று விரிவாகச் சில இடங்களில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. (உ.ம். ஐக்கிய நாடுகளின் ஐவி லீக் பள்ளிகள்.) இந்தியா, தனது மூலத்திலிருந்து இந்தச் சிறப்பு வாய்ந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். மிகவும் அழகாக விளக்கப்படும் தாராளக் கலைக்கல்வி முற்காலத்தில் இந்தியாவில் பயிற்சியளிக்கப்பட்டு, மனிதனின் இரு பக்க மூளையையும், அதாவது, ஆக்கத்திறன் பகுதி மற்றும் பகுத்தாராயும் பகுதியையும் பெரிதும் வளர்ப்பதற்கு உதவியது. தாராளமயக் கலைக்கல்வியின் இன்றைய நோக்கமும் முக்கியத்துவமும் அதாவது கல்வியில் கலைகள் என்பது, அறிவியலும் மானுடவியலும், கணக்கும் கலையும், மருத்துவமும் இயற்பியலும் போன்ற பல துறைகளுக்கிடையே நிலவும் குறிப்பிடத்தக்க தொடர்புகளை ஆய்ந்தறிய மாணவர்களுக்கு உதவுகிறது. பொதுவாக, நம் முயற்சியில், அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்ற ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகளை ஆராயவும் இயலுகிறது. பரந்துபட்ட தாராளமயக் கலைக்கல்வி, அறிவு, அழகியல், சமூகவியல், உடலியல், மன உணர்ச்சிகள் மற்றும் நெறிமுறைகள் போன்ற அனைத்துத் திறன்களையும் நம்மிடம் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட வழியில் வளர்க்கிறது. இத்தகைய கல்வி, ஒருவன் மனிதனாக வாழ்வதற்குரிய அனைத்து அம்சங்களிலும் தனியாள்களின் அடிப்படைத் திறன்களை வளர்க்கிறது. உண்மையில் தாராளமயக் கல்வி, மாணவர்களை முழுமையான நல்ல மனிதர்களாக வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.  நம்பிக்கையற்ற மாணவன் ஒருவன் நடைமுறையில், “நான் திட்டமிட்டு ஏற்கும் பணிக்குச் சம்பந்தமில்லாதது போல் தோன்றுகின்ற துறைகளைப் பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று கட்டாயமாக வினா எழுப்பலாம். இப்படிப்பட்ட கேள்விக்கு நிறைய பதில்கள் சொல்லலாம். முதலாவதாக, இருவிதத்தில் மிகமுக்கியமாக தாராளமயக் கலைக்கொள்கை ஒருவரின் வாழ்க்கையைப் பெருமளவில் வளப்படுத்தவல்லது. மேலும், பல விஷயங்களையும் அவர் ரசிக்கும்பொழுது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.  இரண்டாவதாக, நீண்ட காலம் கழித்துத் தனக்கு என்ன வேலை கிடைக்கப் போகிறது என்பதை உண்மையில் ஒருவராலும் தெரிந்துகொள்ள இயலாது. அல்லது என்ன வேலை என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது. பத்திகையாளர் பரிது ஜக்காரியா, “தாராளமயக் கலைக்கல்வியின் நோக்கம், முதலில் கிடைக்கும் வேலைக்கு மட்டும் எளிமையாகத் தயார்ப்படுத்துவதல்ல. ஒருவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் அதற்கு அப்பாலும் ஏற்கக்கூடிய வேலைகளுக்கும் தயார் செய்வதே” என்கிறார். நான்காவது தொழிற்புரட்சி உருவாகும் வேளையில், விரைந்து வேலைவாய்ப்பு நிலவரம் மாறிவரும் நிலையில், தாராளமயக் கலைக்கல்வி, முன்னெப்போதும் உள்ளதைவிட மிகவும் முக்கியமானதாகவும் பயனளிப்பதாகவும் இருக்கிறது. மூன்றாவதாக, ஒருவர் எப்படியாவது தனக்குக் கிடைக்கும் வேலை பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தால், மற்ற துறைகளில் பெற்ற குறிப்பிட்ட கருத்துருக்களும் எண்ணங்களும் அவரது வேலையை மேம்படுத்தவோ அல்லது முற்றிலும் மாற்றியமைக்கவோ உறுதுணையாக அமைகின்றன. உதாரணமாக, உலகின் மிகச் சிறந்த புதுமைகள் பலவும் இப்படியான பல துறைகளில் காணப்படும் எண்ணங்களின் கருவுறுதலால் நிகழ்ந்திருக்கின்றன. மருத்துவத்தில், எக்ஸ்-ரே, சி.டி ஸ்கேன், எம் ஆர் ஐ, மற்றும் ஒளிக்கதிர்கள் போன்றவையெல்லாம் உண்மையில், இயற்பியல் மேதைகளும், விண்வெளி விஞ்ஞானிகளும் முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக இந்தக் கருத்துருக்களைப் பற்றிச் சிந்தித்தபோது தோன்றியவையாகும். அதிக நிகழ்வுகளில் அந்தத் துறை மீது கொள்ளும் மிகுந்த ஆர்வமே உடனடி நோக்கமாகிறது. தொல்லியல், மானுடவியல், வரலாறு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ரேடியோகார்பன் காலஅளவீடு, மற்றொரு உதாரணம். இந்நிகழ்வில் இயற்பியல், வேதியியல் கருத்துகள் முழுமையாக வேறுபட்ட துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. மற்றொரு பிரிவான இசைப்பாடம், நம்பமுடியாத அளவிற்குச் சுவாரசியமான தாக்கங்களை ஏற்படுத்தியும், மாறாக, உளவியல், உடலியல், சமூகவியல், பொறியியல், இயற்பியல் மற்றும் கணிதம் போன்றவற்றில் சில தாக்கங்களையும் மீளப் பெறுகிறது.  தாராளமயக் கலைக்கல்வி, ஒருவரது மூளையின் இரு பக்கங்களையும் ஒருசேர வளர்ச்சியடைய வைப்பதில் உறுதுணையாக நிற்கிறது. அழகியல், சமூகம் மற்றும் நன்னடத்தைக்குரிய திறன்கள் ஒருவரின் அறிவியல் ஆற்றலைச் சிறப்பான முறையில் அதிகரிக்கின்றன. நேர்மாறாக, இது போன்ற துறைகளில் கல்வியறிவு பெறுவது ஒருவரின் படைப்பு மற்றும் புதுமையாக்கம், தகவல் பரிமாற்றத்தில் திறன்கள் அதிகரிப்பு, நெறிமுறைகள், சேவை, நுண்சிந்தனை, ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயலாற்றுதல் போன்றவற்றைத் தீயாக வளர்க்கிறது. உலகின் சிகரத்திலிருக்கும் அநேக தொழிலதிபர்கள், தாராளமயக் கல்வியறிவினைப் பெற்ற குழு உறுப்பினர்களைக் கொண்டிருப்பது தங்களது நிறுவனங்களை அதிக வளர்ச்சியடையச் செய்வதாக அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள். உதாரணமாக, உன்னத அழகியலுடன் பொறியியலை இணைத்து, உற்பத்தியில் ஸ்டீவ் ஜாப் கூறும் கருத்துகளுக்காக மிகவும் புகழ் பெற்றவர். ஏனிந்த மெக்கிண்டாஷ் கணினி, கணினி கணக்கீடுகளில் புரட்சியேற்படுத்தியது என வினவினால், அவர், “மெக்கிண்டாஷ் மிகச் சிறப்பாக இயங்குவதற்குரிய காரணங்களுள் ஒன்று, அதன் தயாரிப்புப் பணியில் வேலைசெய்தோரில் இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், விலங்கியலாளர்கள், வரலாற்றறிஞர்கள் ஆகியோர் இணைந்து பணிபுரிந்தனர்; அவர்கள் உலகின் மிகச் சிறந்த கணினி விஞ்ஞானிகளாகவும் இருந்தனர்’’ என்று கூறுவார். உண்மையில், கிடைக்கின்ற கல்வி அணுகுமுறைகள் மீதான மதிப்பீடுகள், இளங்கலைக் கல்வியில் மானுடவியலையும், ஸ்டெம் உடனான கலைகளையும் ஒருங்கிணைக்கின்றன. அது தொடர்ந்து உடன்பாட்டளவில் கற்றல் விளைவுகளை அதிகரித்து, படைப்புத் திறன், புதுமை, நுண் மற்றும் உயர் சிந்தனைத் திறன்கள், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள், குழுப்பணி, தொடர்புத் திறன்கள், ஆழ்ந்து கற்றல், கலைத் திட்டத்தின் பல்துறை நிபுணத்துவம், சமூகவியல் மற்றும் நீதிநெறி வளர்ச்சி, மேலும் பொருத்தப்பாடும் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. உதாரணமாக, நோபல் பரிசு பெறுகின்ற விஞ்ஞானிகள் கணக்கெடுப்பின்படி அவர்கள் சராசரி விஞ்ஞானிகளைக் காட்டிலும் மும்மடங்கு கலைத்துவமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்தனர். தாராளமயக் கல்வி அணுகுமுறையால், ஆராய்ச்சியும் செம்மைப்படுத்தப்பட்டு, அதிகரிக்கப்பட்டது.  முழுமையான, தாராளமயக் கல்வியென்று இதுவரை அழகாக விவரிக்கப்பட்டது எதிர்காலத்தில் இந்நாடு 21 ஆம் நூற்றாண்டையும் நான்காவது தொழிற்புரட்சியையும் நோக்கி அடியெடுத்து வைக்க வழி நடத்தத் தேவையான கல்வியே இந்தியாவில் கடந்த காலத்தில் உண்மையாகவே இருந்தது. ஐ.ஐ.டி போன்ற பொறியியல் பள்ளிகள்கூட கலைகளையும் மானுடவியலையும் இணைக்கின்ற மிகவும் தாராளமயக் கல்வியை நோக்கி நகர்ந்தன. கலை மற்றும் மானுடவியல் மாணவர்கள் கட்டாயமாக, மேலும் அறிவியலைக் கற்கும் நோக்கம் கொண்ட போது, அனைவரும் தொழிற்சார் பாடங்களைக் கற்க முயற்சி செய்தனர். கலைகளில் அறிவியல் மற்றும் பிறவற்றிலும் இந்தியாவின் செழிப்பான மரபு தாராளமயக் கல்வி மற்றும் எளிய இயற்கை மாற்றங்களை நோக்கி நகர்வதற்குப் பேருதவியாக இருந்தது.  தாராளமயக் கலைக் கல்வியினை வழங்குவதற்கு மிகச் சிறந்த வழி யாது?  பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டு உயர்ந்த தரத்திலான தாராளமயக் கலைக்கல்வியினை மிகச் சரியான வழியில் இந்தியாவில் திரும்பவும் கொண்டு வந்து, இந்திய இளைஞர்களை 21 ஆம் நூற்றாண்டின் சவால்களைச் சமாளிக்க உகந்தவர்களாகச் செய்ய வேண்டும்.  பன்முகச் சூழல்கள் மற்றும் நிறுவனங்கள்: உயர்தர தாராளமயக் கலைக்கல்வி என்பதன் வரையறை மற்றும் இயல்பு என்பது, பன்முகத் தன்மை கொண்டதாகிறது. தாராளமயக்கல்வி விதிமுறை ஆகவும், வெற்றி காணவும் வேண்டுமெனில், பல்துறைசார்ந்த நிறுவனங்களிடம் உயர்கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும். ஒற்றைச் சாளரக் கல்வி முறையளிக்கும் நிறுவனங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பல்துறைக் கலப்பிலான உயர் கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும்.  பல்கலைக் கழகங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்தல்:  பன்முகத் திறன்கள் கொண்ட பல்கலைக் கழகங்களுக்கிடையேகூட, வேறுபட்ட துறைகளுக்கிடையில் தற்போது பரஸ்பர இடைவினைகள் காணப்படுகின்றன. மாணவர்கள், அறிவியல், பொறியியல், கலை, வாழ்க்கைத் தொழில், தொழில்முறைப் பாடங்கள் போன்ற குறுகிய பகுதிகளை நோக்கியே செல்கின்றனர். பொதுவாக எல்லாவற்றிலும் கட்டாயப்படுத்தப்பட்டு, பெரும்பாலும் மேற்கூறியவற்றையோ அல்லது அவர்களது ஓட்ட எல்லைக்குள் வரும் பாடங்களையோ தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தகு தீங்கு பயக்கும் பயிற்சி மாணவர்களின் தனியாள் விருப்பங்களையும் திறமைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை, மாற்று - பல்துறை சார் திறன்கள் வளர்த்தல், மூளையின் ஆக்கத்திறன், பகுப்புத்திறன் ஆகிய இரு பகுதிகளின் வளர்ச்சி ஆகியவற்றைத் தடுத்துவிடுகிறது. இந்த வேறுபாடுகள் கட்டாயமாகத் தகர்க்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் தாராளமயக் கல்வி மற்றும் கலப்பு - பல்துறை சார்ந்த இணை ஆராய்ச்சி மற்றும் படிப்பிற்காக ஆசிரியர்களுக்கும் ஊக்கமூட்ட வேண்டும். சுருங்கச் சொன்னால், வெகு விரைவிலேயே நாம் ஒற்றைச் சாளர முறை உயர்கல்வி நிறுவனங்களில் இருந்தும் அவற்றுக்கிடையேயான சாளர அமைப்புகள் மற்றும் அடைப்புகளில் இருந்தும் விலகி வந்துவிட வேண்டும்.  கற்பனையான கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் கலை:  உயர்கல்வி நிறுவனங்கள் கலைத்திட்டத்தில் நெகிழ்வுத்தன்மை, புதுமையும் ஈடுபாடும் உடைய பாடத்தெரிவுகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும். கலைத்திட்ட வடிவமைப்பில் ஆசிரியர்களின் அதிகப் பங்களிப்பும், நிறுவன சுயாட்சியும் இவற்றை எளிதாக்க வல்லவை. பாடங்களுக்கான கற்பித்தல் முறைகள், பொருள் உணராமல் கற்பதைக் குறைக்க முயல வேண்டும். கலந்துரையாடல், தகவல் பரிமாற்றம், பல்துறை சார்ந்த சிந்தனை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  மாற்றுத்துறை மற்றும் பல்துறை சார் கல்விக்கான துறைகளைத் தோற்றுவித்தலும் வலுப்படுத்தலும்:  மொழிகள் துறை (குறிப்பாக, இந்திய மொழிகள்), இலக்கியம் (குறிப்பாக, இந்திய இலக்கியம்), இசை (கர்நாடகம், இந்துஸ்தானி, நாட்டுப்புறம், திரைப்படம் உட்பட), தத்துவம் (குறிப்பாக, புத்தம், ஜைனம் உள்ளிட்ட இந்திய தத்துவம்), இந்திய மக்களையும் இந்திய நாட்டையும் பற்றிய ஆய்வியல், கலை, நடனம், நாடகம், கல்வி, புள்ளியியல், அறிவியல், செயல்முறை அறிவியல், சமூகவியல், பொருளியல், விளையாட்டுகள் மேலும் இவற்றைப் போன்ற மற்ற துறைகள் பல்துறைசார் கல்விக்காகவும், இந்தியக் கல்விக்குத் தூண்டுகோலாகவும் ஆன சூழல் நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் தோற்றுவிக்கப்படவும் வலுப்படுத்தப்படவும் வேண்டும்.  தீவிர சிறப்புக் கவனத்துடன் தாராளமயக் கல்வி இணைந்து வர வேண்டும்:  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் ஆழ்ந்த பாண்டித்யம் பெறுவதற்காகத் துறைகள் அல்லது தளங்களைத் தேர்ந்தெடுப்பதில் தாராள மற்றும் பரந்த அடிப்படை கொண்ட கல்வியானது, தீவிர சிறப்புக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பரந்த அடிப்படைக் கல்வி, ஒருவரது தளத்தில் சிறப்பு நிபுணத்துவம் மற்றும் ஆக்கத்திறன் அடைவு பெறுவதில் உதவி புரிகிறது. அதனால் திறன் நிலைகளில் முழுமையான வளர்ச்சியும், மாற்று மற்றும் பல்துறைகளுக்கிடையேயான வழியில் சிந்திக்கவும் முடியும். இவ்வாறு இளநிலைக் கல்வியில் முக்கிய பாடப் பகிர்வுத் தேவைகளை நிறைவு செய்ய பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்டிருந்தால் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தளம் அல்லது தளங்களில் (அது மேஜர், இரட்டை மேஜர் அல்லது மைனர்ஸ்) நிபுணத்துவம் பெற முடியும். இது முழு வளர்ச்சி பெற்ற தனி நபர்கள், கொடுக்கப்பட்ட துறை அல்லது தளங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதை உறுதி செய்யக்கூடியது.  சேவை அல்லது தொண்டு குறித்த பாடங்களை தாராளமயக் கல்வியின் ஒரு பகுதியாக ஒருங்கிணைத்தல்:  பரந்த அடிப்படை அறிவு மற்றும் தீவிர சிறப்புக் கவனம் பெற்றதை ஒருவர் எவ்வாறு தனது சொந்த வாழ்க்கையில் அல்லது தன்னைச் சுற்றியிருப்போருக்காகப் பயன்படுத்த முடியும்? பல்துறை சார்ந்த அறிவுக் களஞ்சியம், ஆராய்ச்சி, செய்நுட்ப அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, திறனுடைய ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளூர்த் தேவைகளான நன்னீர், ஆற்றல், முதியோர் கல்வி, பள்ளிக் கல்விப் பிரச்சினைகள் போன்றவை குறித்த சமூக சேவைக்கு பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் தகுந்த முன்னெடுப்புச் செய்ய வேண்டும். மாணவர்கள், “நான் கற்ற கலை, அறிவியல், பொருளியல், தொழில், கைவேலை ஆகியவை எப்படி மற்றவரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்?” போன்ற வினாக்களை எழுப்பலாம். முடிந்த பொழுது, பொருத்தமான பாடங்களில், கல்வி சார், உள்ளூர் சமூக சேவைக்கான வாய்ப்புகளைப் (பல்கலைக் கழக வளாகத்திற்கு உள்ளே அல்லது வெளியில்) பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்க முயற்சி செய்தால், ஒவ்வொருவரிடமும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் படிக்கின்ற பாடங்களை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தவும் முடியும்.  உள்ளகப் பயிற்சிகளும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும்: இறுதியாக, தாராளமயக் கல்வியின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு உள்ளூர்த் தொழிலகங்களில் உள்ளகப் பயிற்சிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆய்வு மாணாக்கர்களுக்கும் அவர்களது சொந்த அல்லது மற்ற உயர்கல்வி நிறுவனங்களிலோ ஆராய்ச்சி நிறுவனங்களிலோ ஆராய்ச்சி, உள்ளகப் பயிற்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இதனை விருப்பப் பாடமாக எடுத்திருக்கும் மாணவர்களுக்கு இது தாராளமயக் கலைகள் பட்டங்களுக்கான ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள் இதற்கான மதிப்பீட்டைத் தங்களது இளங்கலைப் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகப் பெற்று, அதனைப் பட்டப்படிப்புத் திட்டத்திற்கோ அல்லது வேறு வேலை வாய்ப்பிற்காகவோ விண்ணப்பிக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்வர். தாராளமயக் கல்வி நெகிழ்வுடைய இளங்கலைப் பட்டப்படிப்பு விருப்பங்கள்: மேலே குறிப்பிட்ட தாராளமயக் கல்வியின் ஏற்ற பண்புகள் அனைத்தையும் அடைவதற்கும் எளிமையாக்குவதற்கும். 4 வருட இளங்கலை கலைகள் (BLA), அல்லது இளங்கலை தாராளக்கல்வி (BLE) (அல்லது ஆய்வுப் படிப்புடன் BLA/BLE) போன்றவற்றை அளிக்க வேண்டும். ஒரு துறையில் அல்லது பல துறைகளில் பரந்த அடிப்படையில் தாராளமயக் கல்வியுடன் தீவிர சிறப்புக் கவனம் செலுத்தும் இந்தத் திட்டங்களை ஏற்கத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் வழக்கமான B.A., B.Sc. அல்லது B.Voc. போன்ற பட்டப்படிப்புகளும், இத்திட்டங்களைத் தொடர விரும்பும் நிறுவனங்களில் அப்படியே தொடரலாம். ஆனால் அனைத்து இளங்கலைப் பட்டப்படிப்புகளும் மிகவும் விசாலமான தாராளமயக் கல்வி அணுகுமுறையை நோக்கி நகர்தல் வேண்டும். தாராளமயக்கல்வி அணுகுமுறை பட்டப்படிப்புத் திட்டங்களையும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியினையும் மேம்படுத்துகிறது: உயர்கல்வியில் பல்துறை சார்ந்த தாராள அணுகுமுறையானது, இளங்கலைப் படிப்புத் திட்டங்கள் மட்டுமல்லாமல், பட்டப் படிப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியையும் அதிகரிக்க உதவுகின்றன. உண்மையில் பல்துறைசார் சூழல்கள், ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்தல், உள்ளூர் சமூகம் மற்றும் தொழிலகத்துடன் தொடர்பு ஆகியவை ஆசிரியர்களும் பட்டதாரி மாணவர்களும் உள்ளூரில் வசதியாக ஆராய்ச்சியினை மேற்கொள்ள மிகவும் துணைபுரிகின்றன. அனைத்துத் துறைகளும் தூய நீர், ஆற்றல், சூழலைப் பேணுதல், பால் பேதமின்மை, அருகி வரும் மொழிகளைப் பாதுகாத்தல் போன்ற உள்ளூர்ப் பிரச்சினைகளில் இணைந்து சமாளிக்க ஊக்குவிக்கிறது.  இவ்வாறாக, பல்கலைக்கழக ஆய்வு மற்றும் பட்டப்படிப்புகள் தாராளப் பண்பாட்டுடன் இணைந்து உயர்தரமான, மிகவும் பொருத்தமான, துறை சார்ந்த ஆய்வை நிர்ணயிக்கின்றன. தேசிய ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, (பிரிவு 14.2 மற்றும் 14.3) உண்மையில் ஒரு விதை உயர் தரத்துடன் வளர உதவுவதைப் போல, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பொருத்தமான, பல்துறைகளுக்கிடையேயான ஆய்வுகள், இத்தகைய சமூகத்தேவைகள், அரசுத்துறைகள் மற்றும் தொழிலகத்துடன் இணைக்கப்பட வேண்டும். 11.1. இளநிலை பட்டப் படிப்புகளை ஊக்குவிக்கும் தாராளவாத கல்வி: இளநிலை படிப்புகளில் இளநிலை கல்விப் பிரிவுகளில் ஏற்படுத்தப்படும் ஒட்டுமொத்த மாற்றம் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பாடப் பிரிவுகளுக்கும் இன்றியமையாதவையாக இருக்கும். மனித வளம், கலை, சமூகவியல், உடற்கூறு மற்றும் வாழ்வியல் அறிவியல், கணிதவியல் மற்றும் விளையாட்டு போன்றவற்றுடன் தொழில்முறை படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி போன்றவையும் மாற்றங்களுக்கு உட்படும்.  இளநிலை பிரிவுகளுக்கான சரியான பாடப்பிரிவுகளை வகைப்படுத்துதல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் நெகிழ்வுத்தன்மையுடன் அமைவதன் மூலம் மாணவர்களின் கல்வித் தேவைகளையும் தனித் திறமைகளையும் பூர்த்தி செய்யும் அதேநேரம் கல்வியின் கால அளவைத் தீர்மானிக்கும் உரிமையும் கிரெடிட் கட்டமைப்பு முறை மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைவு மற்றும் வெளியேறுதலுக்கான வாய்ப்பையும் வழங்கும். தாராளவாத கல்விக் கொள்கை அடிப்படையில் கட்டமைக்கப்படும் இளநிலைக் கல்வி பாடப் பிரிவுகளில் மேற்குறிப்பிட்ட ஒட்டுமொத்த மாற்றம் மாணவர்களின் அறிவு சார் திறமைகள், சமுதாயக் கண்ணோட்டம், பகுத்து உணரும் திறன், மற்றும் முருகியல் திறமைகளை வெளிக்கொணர துணைபுரியும்.  தாராளவாதக் கொள்கை அடிப்படை பரந்துபட்ட நோக்கோடும் கட்டமைக்கப்படும் இளநிலைக் கல்வி திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றோ அதற்கு மேற்பட்ட பாடல்களில் அல்லது பிரிவுகளில் சிறப்புத் தகுதியை வளர்க்கவும் அதில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெறவும் வழிகோலும் . 11.1.1. தாராளவாதக் கொள்கை அடிப்படையில் இளநிலைப் பட்டப் படிப்புகளை மறு வடிவமைத்தல்: இளங்கலை படிப்புகள் ஒருங்கிணைந்த பலதுறை பாடத்திட்டங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்படும். இது மாணவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் சீரிய சிறப்புப் பயிற்சியை அளித்து உபயோகமான மற்றும் முக்கிய அறிவுத் தேடல்களுக்கும் வழிவகுக்கும் வண்ணம் அமையும். கலை, உடற்கல்வி மற்றும் வாழ்வியல் அறிவியல், கணிதவியல், சமூகவியல் மற்றும் மனிதவள படிப்புகள், தொழில்சார் மற்றும் தொழில் படிப்புகளுக்குப் பொருந்தும். அனைத்து இடங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம்  அ. அனைவருக்கும் பொதுவான உலக பாடத்திட்டம் அல்லது பிரிவுகள் தேவை அடிப்படையில் அளிக்கப்படும்.  ஆ. ஒன்றோ அல்லது இரண்டு பாடங்களில் சிறப்புத்தகுதி. பொதுவான மைய பாடத்திட்டத்தின் நோக்கம் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்வது மட்டுமின்றி முக்கியமான மன நலன் சார்ந்த திறன்களான (எக) விமர்சன சிந்தனை (எ.கா. புள்ளிவிவரங்கள், தரவு பகுப்பாய்வு, அல்லது அளவு அடிப்படையில்); தொடர்புத் திறன்கள் (எ.கா. எழுத்து மற்றும் பேச்சு சார்ந்த படிப்புகள்); கலையழகு உணர்வுகள் (எ.கா. பாடல்கள், இசை, காட்சி கலை அல்லது மேடை நாடகம்); அறிவியல் கோட்பாடு மற்றும் அறிவியல் முறை; இந்தியாவின் வரலாறு, நமது சூழல் மற்றும் நமது சவால்கள் (எ.கா. இந்தியாவின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மை பற்றிய படிப்புகள் அல்லது சமகால இந்தியாவின் சமூக உண்மைகளில்); அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறை; சமூக பொறுப்புணர்வு மற்றும் தார்மிக மற்றும் நன்னெறி நியாயவாதம்; கலை, மனிதவளம் மற்றும் விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளிலும் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக போதிய வெளிப்பாடு கொண்டதாய் அமையும்.  மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி அனுபவம், பாடத்திட்டத்திற்குக் கூடுதலாக, இந்தத் திறன்களை வளர்ப்பதற்கு வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். முக்கிய பாடத்திட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எடுக்கும் படிப்புகளைத் தீர்மானிப்பதில் மாணவர்களுக்குப் போதுமான நெகிழ்வுத்திறன் வழங்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களின் சிறப்புப் பாடப்பகுதியான ‘Major’ (எ.கா. வரலாறு, வேதியியல், தத்துவம், கணிதம் அல்லது மின் பொறியியல்) மற்றும் கூடுதலாக விருப்பப்பாடமாக ‘Minor’ (எ.கா. இசை, தமிழ், இயற்பியல், புவியியல், அல்லது மருந்தகம்) அல்லது இரண்டு சிறப்புப்பாடங்களை ‘Double major’ ஆகவும் தேர்வு செய்யலாம். மாணவர்கள் கோட்பாடுகள் மற்றும் செயல்முறை அனுபவங்கள் மூலம் சிறப்புப்பாடத்தில் (Major) நன்கு ஆழ்ந்த அறிவைப் பெறுவர். விருப்பப்பாடத்தில் (Minor) கூடுதல் புரிதல் பெறுவர். நெகிழ்வுத்திறன் வழங்கப்படும். தற்போதுள்ள தொழில்முறை மற்றும் தொழில்திறன் சார்ந்த பிரிவுகளோடு (streams), மாணவர்கள் தங்களின் பாடத்தைத் தேர்வு செய்யலாம். (எ.கா.) மாணவன் major ஆக ‘இயற்பியலையும்’, விருப்பப்பாடமாக ‘வரலாறையும்’ தேர்ந்தெடுக்கலாம். மாணவர்களின் Major மற்றும் minor பாடங்களின் தேர்வைப் பூர்த்தி செய்யும் வகையில் படிப்பினைத் தீர்மானிப்பதில் சில நெகிழ்வுத்திறன் வழங்கப்படும். இந்தக் குறிக்கோள்கள் மற்றும் அமைப்புகளுடன் திட்டங்களை உருவாக்கவும், நடத்தவும் அனைத்து HEI களும் முயற்சி செய்கின்றன. கூடுதலாக, அனைத்து இளங்கலை வகுப்புகளிலும்: HEIல் மாணவர் கற்றல் திறன் மற்றும் பாடங்களைப் பயன்படுத்தி சமூக சேவையில் ஈடுபடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அனைத்து HEI க்களும் நீதி, சமத்துவம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு பங்களிப்பதன் மூலம், இளங்கலை அளவில் மாணவர்களின் சமூக ஈடுபாட்டிற்கான வழிமுறைகளை உருவாக்கும். இந்த ஈடுபாடுகள் உள்ளூர் சமூக, மாநில மற்றும் நாட்டிலுள்ள அழுத்தம் சம்பந்தமான சிக்கல்களுக்கு மாணவர்களை வெளிப்படுத்த வடிவமைக்கப்பட்டு இயங்க வேண்டும். சாத்தியமான அளவிற்கு, இவை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் சமூக ஈடுபாட்டிற்கான ஒதுக்கப்பட்ட நேரம், ஒரு பாடத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டர் அளவாவது இருக்க வேண்டும். சமூக நலத் திட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் அல்லது சிவில் சமுதாய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்களில் தன்னார்வத் தொண்டு மூலம் இதை அடைய முடியும். இது National Service Scheme, The National Cadet Core மற்றும் Youth wing of the Indian Red Cross போன்ற திட்டங்கள் மூலமும் பெறப்படலாம். செயல்முறை உலக ஈடுபாடு: அனைத்து பாடப்பிரிவுகளும் அரசியல் சார்ந்தும் செயல்முறை சார்ந்த உலக நடப்பிற்கு உகந்த முறையில் அமைக்கப்படும். (எ.கா. ஆய்வுக்கூட பணிகள், களப்பணி, கருத்தரங்கங்கள், கல்விக்கூட உட்பிரிவு பயிற்சி கற்பித்தல் குறித்தான ஆர்வம் ஏற்படுத்துதல், மாணவர் ஆராய்ச்சிகள், மாணவர் போர்ட்ஃபோலியோ மூலம்.) மொழி, இலக்கியம், கலை, விளையாட்டு மற்றும் இசையை முன்னிறுத்தல்: அனைத்து இளங்கலை படிப்புகளிலும் மொழிக் கல்விக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். கல்வி நிலையங்கள் பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் சில உலக மொழிகளில் திறனையும் ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில் ஊக்குவிக்கும். இதனால் மாணவர்கள் பன்மொழித் திறன் பெறுவதோடு இந்தியப் பண்பாட்டு அறிவு மேலோங்கவும் உலகப் பார்வை மேம்படவும் உதவி புரியும். இப்பாடத்திட்டங்கள் மொழி, இலக்கியம் இரண்டையும் ஒருங்கே கற்பிக்கும். மாணவர்கள் தங்கள் சிறப்புப் பாடங்கள் பற்றி திட்ட அறிக்கை வடிவிலும் கருத்து விளக்கம் மூலமும் குறைந்தது ஒரு இந்திய மொழியிலாவது விளக்க வேண்டும். அனைத்து இளங்கலை பட்டப் படிப்புகளும் இசை, காட்சி கலைகள், செயல் கலைகள் , விளையாட்டு போன்றவற்றிலும் சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தும். இது இந்தியாவின் ஆழமான பண்பாட்டுக் கூறுகளான கலை வடிவங்கள், இசை, விளையாட்டு போன்றவற்றிலும் மொழிவாரியான கலை அறிவையும் வளர்க்கும். யோகா இதில் ஒரு முக்கிய பகுதியாக விளங்கும். கல்வி நிறுவனங்கள் இவற்றை மேம்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்.   தாராளவாதக் கல்வி தொழில் தகுதி: அனைத்து தாராளவாதக் கொள்கை அடிப்படையிலான இளங்கலை பாடப்பிரிவுகளும் ஆழ்ந்த திறனையும் தொழில் தகுதியையும் உள்ளடக்கியதாய் இருக்கும். பாடத்திட்டத்திற்கும் கற்பிக்கும் பணிக்கும் இடையில் சீரிய இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் திறமையும் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த ஏதுவாக இருப்பதன் மூலம் பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்க இயலும். பணியிடங்களில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கவும் தயார் செய்யப்படுவர். தொழில் மற்றும் தொழில்சார் பாடத்திட்டங்கள்: தொழில் மற்றும் தொழில்சார் படிப்புகள் (பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் கல்வியியல் படிப்புகள்) தாராளவாதக் கல்வியில் ஒரு அங்கமாகவும் அதை நோக்கியும் அமையும். நீண்டகால அடிப்படையில் கல்வி முறையில் இந்தத் துறைப் பாடங்கள் அவற்றின் வரம்புக்குட்பட்டு சில குறிப்பிட்ட தேவைகளுக்காக இத்துறைகளில் தாராளவாதக் கொள்கை அடிப்படையில் அமையும், தாராளவாதக் கல்வியில் கொடுக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில் பிரிவுகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். (குறிப்பாக கல்வியியல் படிப்புகள் அவை மட்டுமின்றி எ. கா பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம்) தொழில்சார், தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகள் மாணவர்களுக்கு தாராளவாதக் கல்வியைத் தொடர்வதற்கான வழியையும் வாய்ப்பையும் உண்மையாக வழங்கும். (மேலும் பார்க்க மாதம் 15, 16 மற்றும் 20). நான்கு வருட காலம் படிக்கும் காலஅளவுள்ள இளங்கலை பட்டப்படிப்பு தாராளவாத கலை பட்டப்படிப்பு என்ற பெயரில் பி எல் ஏ அல்லது பி எல் இ பட்டப்படிப்பாக இருக்கும். பி எல் ஏ அல்லது பி எல் இ படிப்பு இறுதி ஆண்டில் சீரிய ஆராய்ச்சியைக் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் பி எல் ஏ அல்லது பி எல் இ ஆராய்ச்சிப் படிப்பாக அது அமையும். தற்போது இருக்கும் 3 ஆண்டு படிப்பு அதே துறைப் பாடங்கள் கல்விக் கொள்கைகள் அடிப்படையில் மறுவடிவம் செய்யப்படும். இது ஆராய்ச்சி நோக்கிலும் வெளிப்பாட்டிலும் சற்று தரத்தில் பின் தங்கி இருக்கலாம். தற்போது உள்ள 3 வருடப் படிப்பு அப்படியே தொடரும். அவை மூன்று வருடப் படிப்பா அல்லது நான்கு வருடப் படிப்பா என்பதை அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் தனிப்பட்ட முடிவிற்கே விடப்படும். நான்கு வருடப் படிப்பு கண்டிப்பாக பல்துறை அறிவு வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் சீரிய வாய்ப்புகளையும் ஆராய்ச்சி கூறு வாய்ப்புகளையும் மற்றும் இரட்டைப் பாடத்தில் சிறப்பு பயிற்சிக்கும் சிறந்த பங்காற்றும். 11.1.2. அரசியலமைப்பு மதிப்பீடுகளை உயர்த்தும் தாராளவாத கல்வி: HEI கள் நமது அரசியலமைப்பு மதிப்புகள் பற்றிய புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும், அவற்றின் நடைமுறைக்கு ஏற்றவாறு மற்றும் திறன்களை, அனைத்து மாணவர்களிடையேயும் ஒட்டுமொத்த கல்வி மற்றும் சுற்றுச்சூழலுடன் இணைந்து (அனைத்து) நிரல்களின் பாடத்திட்டம், இதை செயல்படுத்த உதவும். மாணவர்களின் வாழ்க்கையின் மூலம் நடவடிக்கைகளில் விதமாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு மதிப்புகள் சில அனைத்து இந்திய மக்களுக்கும் கடமைகள் மற்றும் உரிமைகள் மதிப்பீடுகள் அறிவுறுத்தப்படும். அப்படிப்பட்ட அரசியல் அமைப்பு மதிப்பீடுகள் சில: ஜனநாயக மனநிலை, விடுதலை மற்றும் சுதந்திரத்தோடு உள்ள கடமை உணர்ச்சி, சமத்துவம், நீதி, பன்முகத்தன்மை பேணும் நேர்த்தி, வேற்றுமையில் ஒற்றுமை மனிதத்தன்மை, அறிவியல் குணநலன் மற்றும் பகுத்தறிவு உரையாடலின் மீதான அர்ப்பணிப்பு, பொதுமை நியாயத்திற்கும் நேர்மை மற்றும் ஒற்றுமைக்கான மதிப்பீடாகவும் அமையும். 11.1.3. ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரமான தாராளமயமான இளங்கலை பட்டம்: நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலோ அல்லது அருகிலோ, நான்கு வருட இளங்கலை பட்டப்படிப்பு BLA திட்டத்தை வழங்கும் உயர் தரம் வாய்ந்த HEI நிறுவனம் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும். இந்தத் திட்டங்களின் வடிவமைப்புப்படி மாணவர் விரும்பினால் மூன்று வருடங்களிலேயே B.A., B.Sc., B.Voc. அல்லது அதற்கு இணையான இளங்கலை பட்டத்துடன் வெளியேறும் விருப்பத்தை வழங்க முடியும்.  இந்த முயற்சிகள் கல்வி ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களுடன் ஆரம்பிக்கப்படலாம், அதே சமயம் அனைத்து மாவட்டங்களும் 2030 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உயர்நிலைக் கல்வியாளர்கள் ‘மாதிரி பட்டப்படிப்பு கல்லூரிகள்’ என அமைக்கப்படலாம். உயர்தர உள்கட்டமைப்பு, அனைத்து பொருத்தமான கற்றல் வளங்கள், மற்றும் பல்வேறு துறைகளில் போதுமான எண்ணிக்கையிலான திறமையான ஆசிரியர்கள் HEI களில் உறுதி செய்யப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள HEI க்களுக்கு இடமாற்றுவதற்காக ஆசிரியர்கள் உட்பட, அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படலாம். (எ.கா. பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல்.) 11.1.4. புதிய பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது தாராளவாத கலைகளுக்கான இந்திய நிறுவனங்கள்: 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களிலும் முதல் IITகளை நிறுவியதைப்போல, 1960 களின் ஆரம்பத்தில் முதல் IIMS, 1970 கள் மற்றும் 1980 களில் மத்திய பல்கலைக்கழகங்கள், 1990 களில் IIIT கள், 2000த்தில் IISER மற்றும் பிற புதிய நிறுவனங்கள் போல இக்கொள்கையால் தாராளவாதக் கலைகளில் புதிய மெய்நிகராக்க நிறுவனங்களை உருவாக்குவதற்கும், பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும். அவை முழுமையான கல்விமையங்களாகவும், நாட்டில் அறிவை மேம்படுத்துவதில் முக்கியமானவையாகவும் செயல்படும்.  Ivy Leagueஆல் வழங்கப்பட்ட இத்தாராளவாதக் கலைக் கல்விகள், பல ஆண்டுகளாக அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியில் Tsingua ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, நாளந்தா பல நூற்றாண்டுகளாக மிக உயர்ந்த தரம் வாய்ந்த அறிஞர்களை உருவாக்கியது, இவர்களில் பலர் உலக சரித்திரத்தை மாற்றியுள்ளனர். உலக வரலாற்றில் சிறந்ததாய்க் கருதப்படும் நாளந்தா மற்றும் அமெரிக்காவின் Ivy League பல்கலைக்கழகங்களை மாதிரியாகக் கொண்டு குறைந்த அளவிலான (சுமார் 5) பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (multidisciplinary education and research) இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தொடங்கப்படும். மாநில அரசு , நல்ல வசதியான இடத்தில் 2000 ஏக்கர் நிலமும், பல்கலைக்கழகம் அமைக்க 50% நிதியும் வழங்கும் திறனையும் கருத்தில் கொண்டு இடம் தேர்வு செய்யப்படும். இந்த பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் (MERUs) / லிபரல் ஆர்ட்ஸ் இந்திய நிறுவனங்கள் (IILAs) இந்தியா மற்றும் உலகில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பு மாதிரி தாராளவாதக் கலை நிறுவனங்களாக மாறவும், மேலும் 30,000 அல்லது அதற்கும் அதிக மாணவர்களை ஆதரித்து வளர்க்கும் நோக்கம் கொண்டதாகும். அவை உயர்தரமான, 4 வருட தாராளமான கலைக் கல்வியில் இளங்கலை BLA பட்டம் வழங்குமாறு இருக்க வேண்டும். அவை இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை பல்வேறு துறைகளில் விரிவாகவும் முழுமையாகவும் உயர்ந்த தரத்தில் வழங்கவேண்டும். இந்தியாவில் உலகத்தரமான பல்கலைக்கழகங்களை உருவாக்கத் தேவையான பரிபூரண சுதந்திரம் அந்நிறுவனத் தலைமைக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும்.  MERUs / IILAs முழு அளவிலான உடல் அறிவியல், சமூக அறிவியல், கலை, மனிதவளம், மற்றும் பயன்பாட்டுத் துறைகள் Major மற்றும் Minor வழங்குகின்றன. தாராளவாதக் கலைக் கல்வி அணுகுமுறையில் உள்ள தொழில் மற்றும் தொழில்முறைக் கல்வி ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் பணியும் மேற்கொள்ளும். இது தற்போது தொழில்சார் மற்றும் / அல்லது தொழிற்கல்வி கல்வியில் தங்கள் மாற்றங்களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட HEI களின் மாதிரிகளாகப் பயன்படுத்தப்படலாம். 11.2. முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வலுவூட்டுதலில் தாராளமயக்கல்வி அணுகுமுறை முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை துடிப்பான பல்துறை நிறுவனங்களில் ஏற்படுத்துவதன் மூலமும் இந்நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடுகளை தாராளமய நோக்கில் அணுகி களைவதன் மூலமும் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வலுப்படுத்தப்படும். வெவ்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான தேவைகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வி அமைப்புகள், உள்ளூர் மாநில மற்றும் தேசிய அளவிலான கலாசார சமூக அமைப்புகள் மற்றும் தொழில்துறையினருடனான தொடர்புகளைப் பயன்படுத்தி (தாராளவாதக் கல்வியின் நோக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி) உயர்தரமும் பொருத்தப்பாடும் உடைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இளநிலைப் பட்டப்படிப்புகளின் அடுத்த கட்டமாக பயிலப்படுவதால் முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளும் பட்டப்படிப்பு என்றே அழைக்கப்படும். கல்வியில் தாராளவாத அணுகுமுறை, தொழிற்பயிற்சி, சமூக சேவை, ஆராய்ச்சி அலுவலர்களுடன் இணைந்து செயல்படல் போன்ற முனைப்புகள் மூலம் முதுநிலைப்பட்டப்படிப்பு பயில்பவர்கள் இளநிலை பயில்பவர்களுக்குக் கற்பிப்பதை அதிகரித்து தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். தரத்தை உயர்த்தும் இம்முயற்சியில் கல்விநிறுவனங்களின் துறைசார்ந்த அலுவலர்கள் பெரிதும் உதவுவர்.  11.2.1. தாராளவாத அணுகுமுறை மூலம் பட்டப்படிப்புத் திட்டங்களை வலுப்படுத்தல்: துடிப்பான பல்துறை நிறுவனங்கள் மற்றும் தாராளவாத அணுகுமுறையின் மூலம் இளநிலை பட்டப்படிப்புகள் மட்டுமின்றி வளாகத்திலுள்ள அனைத்துநிலை பட்டப்படிப்புத் துறைகளும் மேம்படும். அதீதக் கட்டுப்பாடுகளைக் களைதல், தாராளவாத முறையில் இளநிலை மாணவர்களுக்குக் கற்பித்தல், தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்படல், துறைகளுக்கிடையேயான ஆராய்ச்சிகளை அதிகரித்தல் போன்றவை இதற்கான அடிப்படைத் திட்டங்களாகும்.  முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் சார்ந்த அனைத்துத் திட்டங்களும் பல்துறை வளாகங்களில் உள்ள தத்தம் துறை சார்ந்த ஆழமான புரிதலையும் நிபுணத்துவத்தையும் வளர்த்துக்கொள்ளுதலில் கவனம் செலுத்தும். பட்டப்படிப்புத் திட்டங்கள் புதிய மற்றும் பொருத்தமான அறிவினை மாற்றுத்துறைகளில் (கலை மற்றும் பயன்பாட்டு) வளர்த்துக்கொள்ள ஏதுவாக இத்திட்டங்கள் தங்களை திறன்மேம்படுத்திக் கொள்ளும்.  தாராளவாத கல்வியின் இப்புதிய பல்துறை சூழலானது பட்டப்படிப்பு மாணவர்களுக்கு உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான தேவைகளின் அடிப்படையில் மாற்றுத்துறை சார்ந்த உயர்தரமும் பொருத்தப்பாடும் உடைய ஆராய்ச்சி மற்றும் கற்றலில் கவனம் செலுத்த உதவுகிறது. பட்டப்படிப்பு மாணவர்களின் ஆராய்ச்சியானது ஆசிரியர்கள், தொழிற்சாலைகள் மற்றும் இளநிலை மாணவர்களோடு இணைந்து மேற்கொள்ளப்படும்.  அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களும் தங்கள் கற்றலின் ஒரு பகுதியாக மாற்றுத்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கருத்துகள் சார்ந்த அறிமுகத்தைப் பெறுவர். எல்லா நிலைகளிலும் கற்றலை ஆராய்ச்சியோடு இணைத்து செயல்படுத்துதலே தாராளவாதக் கல்வியின் அடிப்படை நோக்கமாகும். அவ்வப்போது உயர்கல்வி நிலையங்களில் கற்பிப்பதை ஒரு துணை செயல்பாடாக மேற்கொள்வதன் மூலம் கற்றலுடனான தொடர்பை முனைவர் படிப்பு மாணவர்கள் பெறுவர். குறிப்பாக சிறந்த கற்பித்தல் வழிமுறைகள் மற்றும் தத்தம் பாடக்கருத்துகள் சார்ந்த ஒரு பருவப்பாடம் ஒன்றை முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் கற்க வேண்டும். இப்பாடத்தைக் கற்றதன் பின் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கற்றலில் உதவுவதன் மூலமும் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் உதவுவதன் மூலமும் பட்டப்படிப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவவும் முடியும். அனைத்து முனைவர் பட்ட மாணவர்களும் ஆங்கிலம் தவிர்த்த இந்திய மாநில மொழிகளுள் ஒன்றைக் கற்று தங்களது பாடத்தைக் கற்பிக்கும் அளவிற்கு அதில் தெளிவுற வேண்டும். இது பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதுதல், நேர்காணல்கள் நிகழ்த்துதல், மாணவர் உள்ளிட்டோரிடம் தங்கள் பாடத்தைக்குறித்து உரையாடுதல் போன்ற செயல்பாடுகளின் பொருட்டு இன்றியமையாததாகிறது. இந்திய மொழிகளுள் ஒன்றிலேயே முனைவர் பட்டத்திற்காகக் கற்பவர்கள் இச்செயல்பாட்டினைத் தனியே செய்யத் தேவையில்லை.  முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டமானது தொடர்புடைய திறன்களையும் அறநெறிமுறைகளையும் (எ.கா: படைப்பு குறித்த புரிதல், கல்விச்செயல்பாடுகளில் நேர்மை, கருத்துத்திருட்டுகளைத் தவிர்த்தல், மானியங்கள் கோரி விண்ணப்பங்கள் வரைய அறிந்திருத்தல்) மாணவர்களுள் வளர்ப்பதற்கு முற்படும். தேவைப்படும் தருணங்களில் பயிற்சியின் ஒரு பகுதியாக தொழிற்பயிற்சியும் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.  கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் இடையேயான இடைவெளியை நிரப்பும் பொருட்டு பல்துறை கல்விவளாகங்களில் முனைவர் பட்டத் துறைகளின் எண்ணிக்கையும் தரமும் கணிசமான எண்ணிக்கையில் உயர்த்தப்படும்.  தேசிய ஆராய்ச்சிக் கழகத்தால் (NRF) குறிப்பிடப்படும் துறைகளின் கீழ் முனைவர் பட்டப்படிப்பிற்குப் பின்னதான தரமான ஆராய்ச்சிகளைப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளும் பொருட்டு மதிப்புமிக்க உதவித்திட்டங்கள் (குறிப்பாக வெளிநாட்டவர்க்கு) செயல்படுத்தப்படும். உயர்கல்வி நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு முனைவர் பட்டம் கற்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களது கல்வித்தகுதியை அதிகரிப்பதன் மூலம் பல்துறை ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தரத்தினை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சேர்க்கை முறை மூலம் முன்னுரிமை வழங்கப்பட்டு, நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வழிநடத்தப்படும் வாய்ப்பினைப் பெற வழிசெய்யப்படும். பல்துறைக் கல்வி நிலையங்களில் தாராளவாதக் கல்வி அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முதுநிலை முனைவர் மற்றும் தொழிற்கல்வித் திட்டங்கள் வலுப்படுத்தப்படும். 11.3. தாராளவாதக் கல்வி அணுகுமுறை மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தல் 11.3.1. தொழிற்கல்வி மற்றும் ஒற்றைப்புலத் திட்டங்களை உருமாற்றுதல்: நாடு முழுவதும் இருக்கக்கூடிய தொழிற்கல்வி மற்றும் ஒற்றைப்புலக் கல்வித்திட்டங்கள் அனைத்தும் எல்லா வகையான பாடங்களையும் வழங்கக்கூடிய தாராளவாதக் கல்வியாக உருமாற்றப்பட வேண்டும். தொழிற்கல்விப் பாடங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களில் கலை மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் முக்கிய கூறுகளும் இணைக்கப்பட்டு மாணவர்கள் அறிவியல் சார்ந்தும் படைப்பு சார்ந்தும் போதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வகை செய்யப்படும். முக்கிய சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கருத்துகளும் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு கலாசார விழிப்புணர்வும் சமூக அக்கறையும் மாணவர்களிடத்தில் உருவாவது உறுதி செய்யப்படும். இவ்வாறாக தொழிற்கல்வி தாண்டி பல்வேறு நோக்கங்களை தாராளவாத நோக்கின் மூலம் அடைய முடியும். (பகுதி16.1ல் உள்ளவாறு) ஒற்றை அல்லது குறைந்த எண்ணிக்கையிலான கல்விப்புலங்களைக் கொண்டுள்ள கல்வி நிறுவனங்கள் வகை - 1 அல்லது வகை - 2 அல்லது வகை - 3 பல்துறை நிறுவனங்களாக உயர்த்தப்படும். நிறுவனம் வழங்கும் இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வகைமை செய்யப்படும். குறிப்பாக சிறந்த கட்டமைப்புடனும் ஆதார வளங்களுடனும் செயல்பட்டு வரும் மருத்துவம், பொறியியல், சட்டம், மற்றும் விவசாயம் போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு இது பொருந்தும். அதிக எண்ணிக்கையிலான ஆசிரியக்கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.   கல்லூரிகளுக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை அழைத்தல் (‘artist-in-residence’, ‘writer-in-residence’), இசை நிகழ்ச்சிகள், கலை மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் கருத்தரங்குகள் நடத்துதல். பள்ளிக்கல்வியுடன் இணைந்து செயல்படல் போன்ற சிறப்பு முன்னெடுப்புகள் மூலம் இத்தகைய நிறுவனங்களில் கலாசார மற்றும் தாராளவாதக் கல்வியைச் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நான்கு ஆண்டு தாராளவாத கலை / கல்வி இளங்கலைப்பட்டமானது முதன்மை மற்றும் இணைபாட தொகுப்பில் மாணவர்களுக்கு அவர்களது தாராளவாத கல்வி விருப்பத்தேர்வு மூலம் முழு அளவில் வழங்கப் படும். இதில் மூன்று ஆண்டு திட்டம் இளங்கலை பட்டத்திற்கு வழிவகுக்கும். பொருத்தமான சான்றிதழுடன் பல வெளியேறும் விருப்பங்களுடன் இணைந்தவாறு இப்படிப்புகள் கிடைக்கும் 11.4. தாராளவாதக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை ஒன்றன் மூலம் மற்றொன்றை வலுப்படுத்தி உயர்த்துதல் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தாராளவாத மேல்நிலைக்கல்வியை தரம்மிக்கதாக உருவாக்குவதற்கு தரம்மிக்க அறிவுத் தளங்களை உருவாக்குவதும் அத்தியாவசியமாகும். தாராளவாதக்கல்வியில் பல்துறை சூழலானது ஆராய்ச்சியை சிறப்பாக வலுப்படுத்துகிறது. நோபல் பரிசு பெற்ற பல அறிவியல் அறிஞர்களுக்கும் பொழுதுபோக்காக கலை சார்ந்த செயல்பாடுகளே இருந்துள்ளன என்னும் உண்மை கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியலிடையே ஒருங்கிணைவை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறாக உயர்கல்வி நிறுவனங்களில் தரம்மிக்க தாராளவாதக் கல்வியும் தரம்மிக்க ஆராய்ச்சிப்படிப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதன்மூலமே ஒன்றை ஒன்று வலுப்படுத்திக்கொள்ள முடியும். 11.4.1. ஆராய்ச்சிப்படிப்புகளை வலுப்படுத்துவதில் தாராளவாதக் கலாச்சாரம்:: பாடப்பிரிவுகளுக்கும் துறைகளுக்கும் இடையேயுள்ள கட்டுப்பாடுகளும் அதீத வேறுபாடுகளும் களையப்பட்டு துறைகளுக்கிடையேயான உரையாடல்கள், செயல்பாடுகள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கப்படும். தாராளமய நோக்கினால் தொழிற்சாலைகளோடும் உள்ளூர் சமூக அமைப்புகளோடும் உண்டாகும் தொடர்பானது தரமான சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும். தற்கால சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளான நீர் மேலாண்மை, ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம், அழிந்துவரும் மொழிகளைக் காத்தல், உள்ளூர் கலைகளைக் காத்தல் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆராய்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் தாராளவாத நோக்கானது தரத்தையும் பொருத்தப்பாடையும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைவையும் உறுதி செய்யும். 11.4.2. தரமான ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் தாராளமயக் கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகள்: தரமான ஆராய்ச்சிகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் துடிப்பான தரம்மிக்க தாராளவாத நோக்கை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு செயல்பாடுகள். இதைப்போன்ற பிற செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டு இணைக்கப்படும். அ. பல்கலைக்கழகங்களுக்கிடையே ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்கான மையங்களை உருவாக்குதல்: ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆராய்ச்சி மையங்கள் (Inter University Centers - IUCs) தோற்றுவிக்கப்படும். முன்பிருந்த IUCs போலல்லாது இம்மையங்கள் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும். இம்மையங்கள் துறைகளுக்கிடையேயான ஆராய்ச்சியையும் கற்பித்தலையும் ஊக்கப்படுத்துதல் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்து ஆராய்ச்சித்திறனை அதிகரித்தல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் புதுமைகளை நிகழ்த்துதல் போன்றவற்றிற்கு உதவி செய்யும். தேசிய சோதனைக்கூடங்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி மையங்களோடு தொடர்பு ஏற்படுத்தப்படும். ஆ. மொழி, மொழிக்கல்வி, இலக்கியம், கலை, தத்துவம், இந்தியா மற்றும் அதன் கலாசாரம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல்: தேசிய ஆராய்ச்சி அமைப்பின் (NRF) மூலம் மொழி, மொழிக்கல்வி, இலக்கியம், கலை, தத்துவம், இந்தியா மற்றும் அதன் கலாசாரம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிக்கான நிதி வழங்கப்படும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகை பாடப்பிரிவுகளில் கலாசாரம் சார்ந்த அறிவு புகட்டப்பட்டு தாராளவாதக் கல்வியில் புதுமையும் பொருத்தப்பாடும் உடைய ஆராய்ச்சிகள் நடைபெற வழி கிடைக்கும். மொழி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒப்பீட்டு இலக்கியம் கற்பிப்பதற்கு நிதி வழங்கப்படும். இ. இந்தியாவின் அண்டைநாடுகளின் கலாசாரம் மற்றும் வரலாறு குறித்த ஆராய்ச்சியும் கற்பித்தலும்: இந்திய அண்டை நாடுகளின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாறு குறித்த ஆராய்ச்சியும் கற்பித்தலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக சீன நாகரிகம் மற்றும் கலாசாரம். அண்டை நாடுகளின் கலாசாரம் குறித்து அறிந்தும் புரிந்தும் கொள்வதன் வாயிலாக பிராந்திய அமைதி மற்றும் சார்பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கலாம். ஈ. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஆற்றல்மிக்க உயிர்ப்பான ஆராய்ச்சிகளையும் கற்பித்தலையும் அறிமுகப்படுத்துதல்: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தற்கால மற்றும் புதிதாக உருவாகும் துறைகளில் கடுமையான மீளாய்வுகள் சீரிய கால இடைவெளியில் (5 ஆண்டுகளுக்கு ஒரு முறை) இதற்கென நிறுவப்பட்டுள்ள RSA அமைப்பினால் நடத்தப்படும். இளநிலை மற்றும் முதுநிலை கல்வி/ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் இத்தேவையைப் பூர்த்தி செய்யும்படியாக திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதுசார்ந்த தற்போதுள்ள சில துறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம் - போர்த்திறன் சார்ந்த துறைகள் (விண்வெளி, ராக்கெட் ஏவுதல், நவீன கருவிகள்), நெருக்கடிப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் (நிலவியல், ஆய்வுப்பயணம், சுரங்கம்) மற்றும் புதிதாக உருவாகும் துறைகள் (உயிர்தகவலியல், செயற்கை நுண்ணறிவு). 11.4.3. நூலகங்கள் மற்றும் மின்பத்திரிக்கைகளை எளிதில் பயன்படுத்துவதற்கான வழிகளை அதிகப்படுத்துதல்: தாராளவாதக் கல்வியையும் தரம்மிக்க ஆராய்ச்சிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு நூலகங்கள் மற்றும் மின்பத்திரிகைகளை எளிதில் பயன்படுத்துவதற்கான வழிகளை அதிகப்படுத்துவது ஓர் முக்கிய அம்சமாகும். இந்திய அரசே மின் பத்திரிகைகளை அனைத்து அரசு கல்விநிறுவனங்கள் சார்பாகவும் ஒற்றை ஆளாக வாங்கி அளிப்பதன் மூலம் செலவினத்தைக் குறைக்கவும் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடியும். நாட்டின் உயர்தர பல்கலைக்கழகங்களுக்கு மின்பத்திரிகைகள் வாங்குவதற்காக நிதி அளிக்கும் தற்போதைய நடைமுறையை மாற்றி இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பத்திரிகை பயன்பாட்டை அதிகரிக்க முடியும். 11.5. உயர்கல்வித் திட்டங்கள், பட்டங்கள் மற்றும் பிற சான்றிதழ்கள் 11.5.1. உயர்கல்வித்திட்டங்களும் சான்றிதழ்களும்: குறிப்பிட்ட தொகுப்பு மற்றும் எண்ணிக்கையிலான பாடங்களை வெற்றிகரமாக முடிப்பதன் மூலமே ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலிருந்தும் பட்டங்களும் சான்றிதழ்களும் பெறமுடியும். இதுகுறித்த விவரங்கள் கல்விநிறுவனத்தின் பாடத்திட்டம் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்படும். வெவ்வேறு வகையான சான்றிதழ்களுக்கு வெவ்வேறு வகையான பாடப்பிரிவுகளைப் படிக்க வேண்டி வரலாம். வெவ்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் துறைகளுக்கு மாறுபட்ட பாடத்தொகுப்புகளைப் படிக்கவேண்டி வரும். ஆனால் இவை அனைத்துமே தாராளவாதக் கல்வியின் அடிப்படைத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான கல்வித்தளத்தினைக் கொண்டிருக்க வேண்டும். துறை வேறுபாடின்றி, அனைத்து இளநிலைக் கல்வித்திட்டங்களுமே மூன்று அல்லது நான்கு ஆண்டு கால அளவுடைய தாராளவாதக் கல்வியை நோக்கி நகரக்கூடியதாக அமையும். உயர்கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு கால அளவை இப்பாடத்திட்டங்களுக்கு நிர்ணயம் செய்து அதனடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கலாம். எடுத்துக்காட்டாக ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (தொழிற்கல்வி உள்ளிட்ட) இரண்டு ஆண்டுகாலம் பயில்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பட்டயச் சான்றிதழும் (advanced diploma), ஓராண்டு காலம் பயில்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழும் வழங்கலாம்.  குறிப்பிட்ட பாடப்பிரிவில் நான்கு ஆண்டுகள் பயிலும் BLA அல்லது BLE பட்டமானது தாராளவாதக் கலைக் கல்வியை முழு அளவில் பயில முடியும். மூன்று ஆண்டு கால அளவில் பயிலும் பாடங்களுக்கு இளநிலைப் பட்டங்கள் அளிக்கப்படும். உயர்கல்வி நிலையங்களில் குறிப்பிடப்படும் ஆராய்ச்சிகளை சீரிய முறையில் ஆழ்ந்து செய்யும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான பட்டச் சான்றிதழ் (‘with Research’) வழங்கப்படும். இளங்கலை, இளநிலை அறிவியல், இளநிலை தொழிற்கல்வி என தேவைக்கேற்றவாறு மூன்று ஆண்டுக்கான பட்டச் சான்றிதழ்களை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும். குறிப்பிட்ட சில தொழிற்படிப்புகள் (ஆசிரியர் பயிற்சி, பொறியியல், மருத்துவம், சட்டம்) இளநிலைப் பட்டத்திற்கு நான்கு ஆண்டு கால படிப்புகளை மட்டுமே கொண்டிருக்கலாம். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேவையான கற்றல் அடைவுகளைப் பெறுவதற்குத் தேவையான கால அளவினைப் பொருத்து அப்பாடப்பிரிவில் பட்டம் அல்லது சான்றிதழ் பெறுவதற்கான கால அளவு நிர்ணயிக்கப்படும். எவ்வாறாயினும் மாணவர்கள் தத்தமது முயற்சி மற்றும் நிறுவனங்களில் வழங்கப்படும் பாடப்பிரிவினைப் பொருத்து கற்கும் காலத்தை கூடுதலாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளலாம். முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கால அளவை தேவைக்கேற்றவாறு உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டு (இரண்டாம் ஆண்டு முழுமையாக ஆராய்ச்சிக்காக மட்டும்) முதுநிலைப் படிப்பு; இளநிலை/முதுநிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் படிப்பு; நான்காண்டுகள் BLA/BLE முடிப்பவர்களுக்கு ஓராண்டு முதுநிலைப் படிப்பு  ஆராய்ச்சியுடன் கூடிய முதுநிலைப்பட்டமோ, நான்கு ஆண்டு இளநிலைப்பட்டமோ பெற்றவர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பயிலத் தகுதி பெறுவர். ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பினை நிறுத்திவிடலாம்.   அரசு உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கையும் தேசிய தேர்வு நிறுவனத்தின் (NTA) (P4.9.6 பார்க்கவும்) மதிப்பீட்டு முறையிலேயே நடைபெறும். மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலும் மற்றும் வலுவூட்டுதலும் நோக்கம்: மகிழ்வான பாடத்திட்டம், ஈடுபாட்டுடன் கூடிய திறமையான பயிற்றுவித்தல் முறை மற்றும் கற்றலுடன் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான ஆதரவை உறுதி செய்வது. திறமையான கற்றல் என்பது மாணவர்களைப் பங்கேற்க செய்யும் பொருத்தமான தேவையான கற்றல் விளைவுகளை தெளிவுற வரையறுத்த பாடத்திட்டம் மூலம் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை கண்டறிதல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் தொடங்குகிறது. உலகின் மிகச்சிறந்த பாடத்திட்டமாக இருந்தாலும் பாடப்பொருளை சிறப்பாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமையான கற்பித்தல் அணுகுமுறை தேவை. கற்பித்தல் அணுகுமுறைகளே மாணவர்களின் கற்றல் அனுபவங்களுடன் எதிர்நோக்கும் கற்றல் விளைவுகளையும் தீர்மானிக்கின்றன. மேலும் மாணவர்களின் உடல் நலம், மனநலம் ஆரோக்கியமான அறம் சார்ந்த நெறிமுறைகளுக்கான அடிப்படை பயிற்சி போன்ற மேம்பட்ட நலனுக்கான திறன்களை வளர்ப்பதும் உயர்தர கற்றலுக்கு அவசியம் ஆகும். உயர்கல்வி பயிலும் இளைஞர்கள் கடுமையான முயற்சியும், ஈடுபாடும், நோக்கமும் கொண்டவர்களாக இருப்பினும், இந்த காலகட்டம் அவர்களின் தனிப்பட்ட சமூக அறிவு சார் உலகில் மிகவும் கடுமையான காலம் ஆகும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் முதன்முறையாக மேற்கொள்ளும் தனித்துவ வேலை மற்றும் வாழ்க்கை அவற்றால் உண்டாகும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் அழுத்தங்கள் போன்றவற்றால் அவர்களின் நலனுக்கு மோசமான அச்சுறுத்தல் உண்டாகலாம். அதீத அக்கறையும், ஆதரவும் அவர்களின் நலனை பராமரிப்பதிலும், பயனுள்ள கற்றலை மேற்கொள்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. சுருங்கக்கூறின் பாடத்திட்டம், கற்பித்தல் நடைமுறைகள் மாணவர்களுக்கான ஆதரவு ஆகியவையே தரமான கற்றலுக்கு அடிப்படையானவை. உட்கட்டமைப்பு, வளங்கள், தொழில்நுட்பம் போன்றவை மேற்கண்ட அத்தியாவசியமானவைகளுக்கு துணை நிற்பவையே. இந்தியாவில் திறமையான கற்றலை உறுதி செய்வதற்கான சிறந்த நடைமுறைகளை கொண்ட உயர்தர கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றின் முன்னால் மாணவர்கள் உலகம் முழுவதும் பல துறைகளில் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து நிறுவங்களும் இத்தகைய தரமுள்ளனவாக அமைய வேண்டும். சிறந்த கற்றல் சூழ்நிலைகளுக்கான சவால்கள் கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு இருந்தாலும் நமது பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் தரமானது வகுப்பு மற்றும் ODL (திறந்தவெளி மற்றும் தொலைதூர கற்றல் முறை) முறைகளின் பலதரப்பட்ட அளவுகோலில் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கின்றன. முதலில் பாடத்திட்டமானது இறுக்கமான, குறுகிய, தொன்மை நிறைந்ததாக உள்ளது. நவீன கால பாடப்பிரிவு சார் அறிவு மற்றும் கல்வி நடைமுறைகள் சார்ந்தவைகளாக அவை இல்லை. இந்திய சூழலில் கல்வி திட்டங்கள், அதன் வரலாறு மற்றும் கலாச்சாரம் அல்லது 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த கற்றலுக்கான உலகளாவிய கல்வி அறிவு, மேலும் நம்முடைய கல்வி திட்டங்கள் கவர்ச்சிகரமாக, இந்திய மற்றும் உலக குடிமக்களை சார்ந்தும் பரந்த அறிவை வளர்ப்பதாக இல்லை. இரண்டாவதாக, பாடத்திட்ட வடிவமைப்புக்கான தன்னாட்சி ஆசிரியருக்கு பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய நடைமுறையானது கற்பித்தல் நடைமுறைகளில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாகுகிறது. உண்மையில் ஆசிரியர்கள் தங்களது புதுமையான பாணியில் கற்பிக்கும் போதும் சுயநிபுணத்துவம் மற்றும் மாணவர்களுக்கு தேவையான சுய அறிவையும் கணக்கில் கொண்டு கற்பிக்கும் போது சிறப்பாக செயலாற்றுகின்றனர். எனவே இறுக்கமான பாடத்திட்டம் வகுப்பறைகளில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் முறையான, வழக்கமான மதிப்பீடு முறைகள் இன்றி சிறிதளவு சிந்தனை திறனுடன் மனப்பாடம் செய்தலும், படைப்பு சார்ந்த திட்டங்கள் விவாதங்கள் ஆகியவற்றுடன் வலியுறுத்தப்பட்டு புறவய மதிப்பீடுகளுடன் மாணவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. இறுதியாக பெரும்பாலான நிறுவனங்களில் மாணவர்களுக்கான வலுவூட்டல் என்பது பெரும்பாலும் இல்லை. சில நிறுவனங்களில் மட்டுமே தேவையான கல்வி சார் ஆதரவு கிடைத்தாலும் இளைஞர்களுக்கு தேவையான தரம் சார்ந்த அக்கறை என்பது பொதுவாக இருப்பது இல்லை. கற்றல் சூழல்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவளிப்பதை அனைத்து மாணவர்களின் வெற்றிக்கானதாக உறுதி செய்தல்: நிறுவனமும் ஆசிரியரும் பாடத்திட்டம், கற்பித்தல் அணுகுமுறை மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் சுயமான புதிய நடைமுறைகளை மேற்கொள்ள தேவையான உயர்கல்வி தகுதிகளை கொண்டிருப்பதற்கான அறிவுரைகளை வழங்குவது ODL மற்றும் பாரம்பரிய முறைகளில் நிறுவனங்களின் மற்றும் திட்டங்களின் சமமான, நிலையான, கல்வித் தரத்தை உறுதி செய்கிறது. பாடத்திட்டமும் கற்பித்தல் முறைகளும் நிறவனங்களால் வடிவமைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் உகந்த கற்றல் சுழலை உருவாக்கவும் ஊக்கப்படுத்தவும் ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துதலுடன் இத்திட்டங்களின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் மதிப்பீடும் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய கல்வி திட்டங்களை பாடத்திட்ட சீர்திருத்தம் முதல் தரமான வகுப்பறை மாற்றம் வரையிலான செயல்பாடுகளை IDP (நிறுவன வளர்ச்சி திட்டம்) அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் மாணவர்களின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கான, பலதரப்பட்ட மாணவர்களின் சமத்தன்மை உடைய கல்வியை ஊக்குவிக்கும் அளவில் உள்ளமைப்புகளை உருவாக்கவும் சமூக மற்றும் தனிப்பட்டவர்களின் வரம்புக்குட்பட்டு அக மற்றும் புற வகையிலான வழக்கமான கல்வித் தொடர்புகளை வகுப்பறையில் உருவாக்கவும் அர்ப்பணிப்பு உடையனவாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை ஆசிரியராக மட்டுமன்றி ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் அணுகும் ஆற்றலும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். சமூக - பொருளாதார ரீதியிலான பின்தங்கிய குடும்ப பின்னணி உடைய மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டுதலும் வலுவூட்டுதலும் உயர்கல்வியின் வெற்றிக்கு உதவும். உயர்கல்வியில் நுழைவதற்கான வாய்ப்பு என்பது முதல் படி மட்டுமே. இத்துடன் தொடர் வலுவூட்டுதலும் அளிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இத்தனிப்பட்ட குழுவினருக்கான உயர்தர கல்வி வலுவூட்டலை தருவதற்கு தேவையான அளவு நிதியும் கல்வி வளங்களும் வழங்குவதன் மூலமே இதை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும். ODL உயர்தர உயர்கல்வி பெறுவதற்கான நல்ல பாதை ஆகும். இதன் முழுப் பயனையும் பெறுவதற்கு ODL ஆதர அடிப்படையில் ஒத்திசைவான விரிவாக்கம் மற்றும் வலுவூட்டுதல் மூலம் புதுப்பிக்கப்படுவதுடன் தரத்துக்கான அனைத்து வரையறைகளையும் முழுமையாக கொண்டு அமைக்கப்பட்டதை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். ODL கல்வி திட்டங்கள், முறையான கல்லூரி வகுப்பறைகளில் கிடைப்பவை போல அதற்கு ஒத்த அளவிலான உயர்தரத்துடன் வழங்குவதை நோக்கமாக கொள்ள வேண்டும். கல்வித்திட்டங்கள், படிப்புகள், பாடத்திட்டங்கள், கற்பித்தல் அணுகுமுறைகள் போன்றவைகளுடன் மாணவர்களுக்கான முறையான வகுப்பறைகள் மற்றும் ODL முறை, எதுவாக இருப்பினும் உலக அளவிலான தரத்தை அடைவதை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய குறிக்கோள் அதிக அளவிலான பன்னாட்டு மாணவர்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலவும், இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லவும், படிக்கவும் தங்கள் தரப்புள்ளிகளை மாற்றிக் கொள்ளவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அதே போல் பன்னாட்டு மாணவர்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் கல்விச் செயல்பாடுகளுக்கும் பயனளிப்பதாக இருக்கும். இந்தியாவை பற்றியும் அதன் மொழிகள், கலைகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் உலகளாவிய சூழலுக்கான உலகளாவிய கல்வி அறிவு, அறிவியல், சமூக அறிவியல் போன்றவற்றில் பன்னாட்டு அளவில் தொடர்புடைய பாடத்திட்டம் இவற்றிற்கும் அப்பால் தரமான தங்குமிட வசதிகள், வளாக வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் போன்றவைகளையும் தோற்றுவிப்பதன் மூலமாக உலகளாவிய தரநிலை அடைதல் மற்றும் வீட்டை உலகமயமாக்கல் என்ற குறிக்கோளை அடைய முடியும். 12.1 புதுமையான மற்றும் நெகிழ்வுடன் கூடிய பாடத்திட்டமும், கற்பித்தல் முறையும் 12.1.1. பாடத்திட்டம், கற்பித்தல் முறை மற்றும் மதிப்பீட்டில் தன்னாட்சி: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, மதிப்பீடு மற்றும் வளங்கள் தொடர்பான விடயங்கள் (ஆசிரியர்களின் தகுதியும் உள்ளடக்கியது) அனைத்திலும் தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும். 12.1.2. துடிப்பான மற்றும் கடுமையான பாடத் திட்டங்களின் வளர்ச்சி: ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் (HEI) அவற்றின் கல்வித் திட்டங்களுக்கான பாடத் திட்டங்களை உருவாக்குவதில் முழுமையான தன்னாட்சி பெற்றதாக இருந்தாலும் அனைத்து பாடத்திட்டங்களும் தொழிற்பயிற்சி அல்லது கற்றல் விளைவுகள் அல்லது பட்டங்களுக்கான பண்புகளுடன் தொடர்புடைய துறை / பாடப் பிரிவிற்கான தரநிர்ணய அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். நிர்வாக குழுவானது (பார்க்க பக்கம் 17.1) HEI ஆல் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி திட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி IDP யின் உள்ளார்ந்த அங்கம் ஆக்க வேண்டும். அனைத்து வகையான பாடத் திட்டங்களும் குறிப்பிட்ட கல்வி திட்டத்தின் குறிக்கோளை அடைவதில் கவனமாக இருக்கும் வகையில் பல்துறையிலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்படுவதுடன் அவர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்படவும் வேண்டும். அனைத்து பாடத்திட்டங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் (அதிகபட்சம் ஐந்து வருடம்) தொடர்பான துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் அனுபவங்கள் கற்றல் விளைவுகளின் அடைவுக்கான கண்காணிப்பு பதிவேடுகளின் அடிபடையில் மேம்பாட்டிற்கான மறுசீராய்வு மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர்கல்வி பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் வழக்கமான உண்மைகளை உணராத மனப்பாட முறை மற்றும் இயந்திரத்தனமான நடைமுறைகளில் இருந்து நகர்வு அடைகிறது. இந்த நகர்வானது இளைஞர்களை ஜனநாயகத்தின் சிறந்த குடிமக்களாகவும், எத்துறையிலும் தொழில்முறை வல்லுனர்களாகவும் மாற்ற உதவும். 12.1.3. கற்றல் நோக்கங்களுக்கான தேசிய வரைவு திட்டம்: தேசிய உயர்கல்வி தகுதிக்கான கட்டமைப்பானது (NHEQF) பட்டம் / பட்டயம் / சான்றிதழ் படிப்புகளுக்கான கற்றல் விளைவுகளை வரையறை செய்துள்ளது. இதுவே தனிப்பட்ட PSSB இல் (தொழில் தரநிலை அமைப்பு குழு p.18.1) இல்லாத அனைத்து பாடப்பிரிவு மற்றும் துறைகளுக்கான பாடத்திட்டத்திற்கான வழிகாட்டு ஆவணம் ஆகும். இது பொதுக் கல்வி சபையால் (GEC) முறைப்படுத்தப்படுகிறது. தொழிற் பாடப் பிரிவுகளில் தேசிய திறன் கட்டமைப்பு (NSQF) மற்றும் NHEQF தேசிய உயர்கல்வி தகுதிக்கான கட்டமைப்பு (NHEQF) இடையேயான தொடர்பானது எளிதில் இயங்கும் வகையிலும் ஒத்திசைவு உடையதாகவும் விரிவுபடுத்தப்படவேண்டும். 12.1.4. கற்றல் அனுபவங்களை திறமையான கற்றல்; கற்பித்தல் மற்றும் கற்பித்தல் முறைகள் மூலமாக வலுப்படுத்துதல்: கற்பித்தல் அணுகுமுறைகள் உள்ளிட்ட வகுப்பறை செயல்பாடுகள் மனப்பாடக் கற்றலில் இருந்து விலகி கருதுகோள்களை புரிந்துகொள்ளுதல், அடிப்படை திறன்களை வளர்த்தல், ஒருங்கமை செயல்பாடுகள், செய்முறை பயற்சிகள், விவாதங்கள், கற்றலுக்கான உற்சாக உணர்வு போன்றவற்றிற்கான கடுமையான பயிற்சியை ஊக்குவிக்கும். இவை நடைபெற வேண்டுமெனில் HCI ஆனது ஆசிரியருக்கு புதுமைகளை கண்டறியும், புதிய கற்பித்தல் முறைகளை உட்புகுத்தும் அளவிற்கு அதிகாரமும், ஊக்கமும் அளித்திட வேண்டும். கருத்தரங்கள், ஆய்வரங்குகள், ஆசிரியரால் வழங்கப்படும் சுயாதீன வாசிப்பு குழு மற்றும் தனிப்பட்ட திட்டங்கள் போன்றவை கற்பிக்கும் அணுகுமுறைக்கான சில எடுத்துகாட்டுகள். கூட்டு மற்றும் ஒத்த குழுவினரின் செயல்பாடுகளும் சுய கற்றலில் பெருமளவு அதிகாரம் பெறுகின்றன. வகுப்பறை கற்பித்தல் அணுகுமுறையானது ‘எப்படி’ (அதாவது கோட்பாடுகள் மற்றும் கருத்தை பயன்படுத்துவது) என்பதை அறியும் குறியீடாக அமைவது சிறந்தது. அனைத்து திட்டங்களும் (குறிப்பாக பார்வை அல்லது செயல் திறன் கலைகள், அறிவியல், கணிதம்) போதுமான அளவில் உபகரணங்கள், கருவிகள், மாணவர்கள் சோதனை செய்ய, புரிந்து கொள்ள, புதிய சிந்தனையை ஆய்வு செய்ய தேவையான வெளியை கொண்டிருக்க வேண்டும். அனைத்து கல்வித்திட்டங்களிலும் (மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் உட்பட) உள்ளூர் தொடர்பான திட்டங்கள் நடைமுறைகளை மாணவர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டும். கருதுகோள்களை வகுப்பறை கற்றலை ஈடு செய்யும் வகையிலும் களஉண்மைகளை பெறும் வகையிலும், கள அனுபவங்கள் திட்டங்கள், செய்முறை பயிற்சி மற்றும் உள்ளக பயிற்சி போன்றவைகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டும். கற்பித்தல் பயிற்சிகளில் பிரச்சனைகளை அழகான உரையாடல்களுடன் இணைத்து கற்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்க வேண்டும். பொது இடங்களில் முக்கியமான உரையாடல்களின் முக்கியத்துவம், அமைதியான பொது விவாதம், ஜனநாயகத்துடனான சவாலாக சகிப்பு தன்மையையும் நமது மாணவர்கள் பார்க்கவும் பலப்படுத்தவும் வாய்பளிக்கப்பட வேண்டும். அனைத்து கற்பித்தல் அணுகுமுறைகளிலும் உள்ளடக்கும் விதமான பன்முகத் தன்மை தொடர்பான பிரச்சனைகள் போதுமான அளவில் இடம் பெற வேண்டும். 12.1.5. உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள எல்லா மாணவர்களுக்குமான சமூக பங்கேற்பிற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகள்: அனைத்து HEI இளங்கலை அளவில் நீதி, சமத்துவம், முன்னேற்றத்திற்கான மாணவர்களின் சமூக பங்கேற்பை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்கும். இந்த வழிமுறைகள் உள்ளூர், மாநில மற்றும் நாட்டில் உள்ள சமூக சிக்கல்களுக்கான அழுத்தத்தை மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவில் வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும். இந்த வழிமுறைகள் பாடத் திட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் இதற்காக ஒதுக்கப்படும் நேரம் குறைந்தபட்சம் ஒரு அரை வருடத்திற்கு சமமாகவாவது இருக்க வேண்டும். பொது சமூக நல திட்டங்களில் ஈடுபடுவது, குடிமை சமூக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு, வளாகத்தில் கற்பித்தலில் பங்கேற்பு அல்லது ஆதரவு குழுக்கள் அமைவது, மற்ற சமூக பங்களிப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளை உள்ளூர் சமூகத்தில் தொடர்புடைய தன்னார்வத் திட்டங்களுடன் நிறைவேற்றுவது சிறப்பானதாக இருக்கும். 12.1.6. மதிப்பீடு, கற்றலின் எல்லா நிலைகளிலும் விரிவானதாகவும் கற்றல் அனுபவங்களை கற்றல் விளைவுகளுடன் பிரதிபலிக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். கல்விசார் வழிகளில் மட்டுமன்றி சுதந்திரமான கல்வியின் இலக்குகளை பரந்த அளவிலான திறன்களையும், மன நிலையும் மதிப்பீடு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதை பிரதிபலிக்கும் வகையிலான அடிப்படைத் தன்மையுடனும் மேலும் அதன் தரத்தை ஆசிரியர் அதிகரிக்கும் வகையிலான கற்றல் அனுபவங்கங்கள வழங்கும் வகையிலும் மதிப்பீடு அமைய வேண்டும். மதிப்பீட்டின் நோக்கம் முத்திரை இடுவதாகவோ, தர்ப்பமாகவே இல்லாமல் வலிமை, மேம்பாடு தேவைப்படும் பகுதிகளையும் கண்டறியும் வகையிலும் இருப்பதன் மூலம் திட்டத்தின் வரையறை செயப்பட்ட விளைவுகளை நோக்கி மாணவர்கள் நகர முடியும். இதற்காக பல்வேறு வகையான மதிப்பீட்டுக் கருவிகள் மற்றும் செயல்முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். (எ.கா) ஒத்த குழுவினர் மற்றும் சுய மதிப்பீடு, புதவோலைகள், ஒப்படைவுகள், திட்டங்கள், காட்சி அளிப்பு விளக்கங்கள், ஆய்வறிக்கைகள் போன்றவை ஆசிரியர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் தீர்மானிக்கப்பட்டு மாணவர்களிடம் பகிரப்பட வேண்டும். 12.1.7. பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் அணுகுமுறையுடன் நிறுவன மதிப்பீடு மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்திசைவு: பாடத்திட்ட தரமும் அதன் மேம்பாடும் உண்மையான வகுப்பறை பரிவர்த்தனையின் தரத்துடனும் கற்றல் விளைவுகளுடனும் ஒத்திசைவு பெற்றதாக இருப்பது அனைத்து Hel களின் IDP க்களின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இது நிறுவனம் அதன் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களை மதிப்பிட முறையாகவும், நியாயமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். மாணவர்களின் மதிப்பீடுகள், ஒத்த குழு மதிப்பாய்வுகள் மற்றும் தொடர்புடைய வழிமுறைகளும் இதில் அடங்கும். இந்த மதிப்பீடானது மேம்பாட்டிற்கான சுயமதிப்பீட்டுத் தன்மை அல்லது அங்கீகார முறைமையில் உள்ள அங்கீகார விதிமுறைகளின் தன்மையை கொண்டதாக அமைந்திட வேண்டும். (பார்க்க பிரிவு 18.2) 12.2. கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான மாணவர் ஆதரவு 12.2.1. மாணவர்களுக்கான கல்வி உதவி: அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கமான வகுப்புகளுடன் கூடுதலாக மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும். நிறுவனங்கள் தங்கள் தனிப்பட்ட சூழல்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு வழிகளில் இதை அடைந்து கொள்ள வேண்டும், எ.கா. கொடுக்கப்பட்ட மொழிகளில் திறன்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகள், கல்வி வாசிப்பு, கல்வி சார்ந்த எழுத்துக்கள், கல்வி சார்ந்த பேச்சு, நியாயவாதம் மற்றும் பகுப்பாய்வு; ஒரு குறிப்பிட்ட பாடத்தில் கவனம் செலுத்துவது; கூடுதல் (விவேகமான மற்றும் முக்கிய) துணை/ தீர்வுக்கான இணைப்புத் திட்டங்கள் / மையங்கள்; மற்றும் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி திட்டங்கள் மற்றும் மையங்கள். பல்கலைக் கழகங்கள் / கல்லூரி மாணவர்கள் உயர் கல்விக்கு முன்னர் இணைப்புத் திட்டங்களை வழங்க தேர்வு செய்யலாம் - இது சமூக அல்லது கல்வி குறைபாடுகளின் தாக்கத்தை குறைக்க முதன்மையானதாக இருக்க வேண்டும். கல்வி, நிதி மற்றும் உணர்வுநிலை ஆதரவு மாணவர்கள் சிறந்த விளைவுகளை அடைவதற்கு உதவியாக இருக்கும். 12.2.2. மாணவர்களுக்கான தொழில் ஆதரவு: அனைத்து நிறுவனங்களும் தங்கள் மாணவர்களிடையே தொழில்சார் தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும்.. பாடத்திட்டமானது உலகின் வேலைத்திறனை வளர்க்க மாணவர்களுக்கு உதவும். கூடுதலாக, நிறுவனங்கள் மற்ற வழிகளில் மாணவர்களுக்கு உதவும், எ.கா. பணியிடம் / ஆலோசனை உதவி போன்றவை வழங்குதல் மூலமாக அவர்களின் தொழில் வாய்ப்புகளில் தெளிவு பெற உதவுதல், வேலை வாய்ப்புகளை அடையாளம் காணும் செயல்முறைகளை எளிதாக்குதல், சாத்தியமான முதலாளிகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினை அமைத்தல்; வழக்கமான பாடத்திட்டத்தின் பகுதியாக இருக்கக்கூடாத குறிப்பிட்ட பணியிடத் திறன்களில் பட்டறைகள் மற்றும் குறுகிய படிப்புகள். 12.2.3. மாணவர்களுக்கு உடல் மற்றும் உணர்வு நலனுக்கான ஆதரவு: நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை உருவாக்கி, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த நேரத்தை ஒதுக்குகின்றன. மருத்துவ பராமரிப்பு, ஆலோசனை சேவைகள், சிகிச்சைகள், நோயுறல் அல்லது துன்பம் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளும் அமைக்கப்படும். நிறுவனங்கள் ஆசிரியர்களைக் கொண்டு ஒத்த குழுவினர் ஆதரவுடன் (எ.கா. நண்பர்களின் அமைப்புகள் மற்றும் மாணவர் ஆதரவுக் குழுக்கள்) வலுவான வழிகாட்டு நெறிமுறைகளை நிறுவ வேண்டும். எல்லோரும் மற்றவர் மீது அக்கறை கொள்ளும் மதிப்பீட்டை பெறவும், இந்த குழுக்களிடையே உரையாடல்களை ஊக்குவிப்பதற்காக முறையான மாணவர் மற்றும் ஆசிரிய மேம்பாட்டு முயற்சிகள் இருக்க வேண்டும். இந்த முயற்சிகளானது, பணியாளர்களும் மாணவர்களும், கல்வி நிலையங்களில் உள்ள அக்கறை என்பது உறவுகளின் தரத்திலும் மற்றும் தனிப்பட்ட தேவைகள் சவால்களை எதிர்கொள்வதிலும் உள்ளது என்பதை உணர உதவுகிறது. இது நிபுணர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை அல்ல, மாறாக அனைத்து உறவுகளையும் பேணக்கூடிய ஒரு பண்பாடு ஆகும். இவற்றில் சிலவற்றுக்கு நிபுணர்களின் கவனம் தேவைப்பட்டால், அத்தகைய தேவைகளை கண்டுபிடிக்கும் திறன் மற்றும் அதற்கான தகுந்த மறுவினைகளைத் தொடங்குவதை ஒவ்வொரு HEI இன் பண்பாட்டிலும் வளர்ப்பது முக்கியம் ஆகும். 12.2.4. மாணவர்களுக்கு நிதி ஆதரவு: நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்கும். நிதி இயலாமை காரணமாக எந்த மாணவரும் உயர் கல்விக்குத் தகுதியற்றவர் ஆகிவிடக் கூடாது. ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் இடம்பெற நிதி உதவி தேவைப்படும் மாணவர்கள் தேசிய நிதிஉதவி நிதியம் நிறுவப்பட்டு அதன் மூலமாக உதவி பெறுவர். இது கல்விக் கட்டண தள்ளுபடி மட்டுமன்றி பயிற்சி தொகை, உணவு மற்றும் தங்கும் வசதி ஆகியவற்றையும் உள்ளடக்கியது. தனியார் HEIக்கள் குறைந்தபட்சம் அவர்களின் பாதி அளவு மாணவர்களுக்கு 50% முதல் 100% வரை உதவித்தொகை வழங்கும் (P 18.6.3 ஐப் பார்க்கவும்). 12.2.5. விளையாட்டு மற்றும் கலைகளுக்கான வசதிகள்: அனைத்து நிறுவனங்களும் மாணவர்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்புடைய நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் வசதிகள், வகுப்புகள் மற்றும் சங்கங்களை வழங்குகிறது. அத்தகைய வசதிகள் மற்றும் திட்டங்கள் கலைஞர் நிர்பந்தம் திட்டம் உட்பட அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிதிகள் அனைத்து HEIகளால் ஒதுக்கப்படும். 12.2.6. நிறுவன செயல்முறைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல்: மாணவர்கள் சம்பந்தப்பட்ட செயல்முறைகளில் மற்றும் நிறுவனங்களின் குழுக்களில் ஈடுபடும் வகையில் - அமைப்புகள் மற்றும் இயங்குமுறைகள் இதற்கென அமைக்கப்படும். இது மாணவர்களின் கல்வி அனுபவங்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக அமைவதுடன் முறையீடு மற்றும் மாணவர்களின் தேவைகளுக்கு அதிக பொறுப்புடையவர் ஆகவும் HEI கள் இருக்கும். 12.2.7. தலைப்பு மையக் குழுக்கள் மற்றும் செயல்பாடுகள்: அனைத்து HEIக்களும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம், நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், கவிதை, மொழி, இலக்கியம், விவாதம், இசை, டேபிள் டென்னிஸ் போன்ற தலைப்பு மைய குழுக்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள நிதி வழங்க ஏதுவான வாய்ப்புகள், இயங்குமுறைகளை பெற்றிருக்கும். காலப்போக்கில், இத்தகைய நடவடிக்கைகள் பொருத்தமான ஆசிரிய நிபுணத்துவம் மற்றும் வளாக மாணவர் தேவை மேம்பாட்டிற்கேற்ப பாடத்திட்டத்துடன் இணைக்கப்படலாம். 12.2.8. போதுமான குறைகளை சரிசெய்தல்: காலவரையறைக்குட்பட்ட மற்றும் நம்பகத்தன்மை உடைய தரமான மாணவர்கள் சேவை வழங்குதல் மற்றும் குறைகளை சரிசெய்தல் ஆகியவை உறுதி செய்யப்படும்; தொடர்புடைய நபரின் வாக்குறுதிக்கேற்ப அபராதங்கள் அல்லது பிற அபராதங்கள் அல்லது நடவடிக்கைகள் போன்றவை விதிக்கப்படும். 12.3 திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி: வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் 12.3.1. திறந்த மற்றும் தொலைதூரக் கல்விக்கான தரத்தை உருமாற்றம் செய்தல் உயர்கல்வியில் கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் விரிவுபடுத்தப்பட்டு உயர்தரமான பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு திறன்மிக்க திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி உருவாக்கப்படும். உயர்திறன்மிக்க ஆசிரியர்கள், பாடப்பிரிவுகள், பாடங்கள் மற்றும் இதர சேவைகளை வழங்குவதன் மூலம் உயர்தரமிக்க முறைசார்ந்த வகுப்பறைக் கல்விக்கு இணையான பாடப்பிரிவுகளை திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியில் வழங்குவதே முதன்மையான நோக்கமாகும். ஒரு நிறுவனத்தின் பாடப்பிரிவுகள், பாடங்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றின் மதிப்பீடுகள், விமர்சனங்கள் ஒரு வலிமையான செயல்முறை மூலம் பரிந்துரைக்கப்பட்டு திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி பாடப்பிரிவுகளாக மாற்றப்படும். (குறிப்பாக MOOCக்கள்) 12.3.2. திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியில் தரமான கற்றல்அனுபவங்கள் பெறுவதை மேம்படுத்துதல் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வியை (Professional and vocational) மேம்படுத்த, வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்க, பல்வேறு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் பொருட்டு முறையான கல்வி மற்றும் சான்றிதழ் அளிக்க, பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை அளிக்க போன்ற காரணங்களுக்காக திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி மற்றும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். 12.3.3. முறையான கல்வி மற்றும் திறந்த மற்றும் தொலைதூரக்கல்வியை நிறுவனங்களில் வழங்குதல். சிறந்த, தகுதியுடைய ஆசிரியர்களின் உதவியுடன் அனைத்து வகை 1 மற்றும் வகை 2 நிறுவனங்களில் புதுமையான திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி பாடப்பிரிவுகள் வழங்க ஊக்குவிக்கப்படும். முறையான கல்வியில் உள்ள உயர்தரமான பாடப்பிரிவுகள் அதே கற்றல் இலக்குகளுடன் திறந்த மற்றும் தொலைதூரக்கல்வியில் பயன்படுத்தப்படும். தொலைதூரக்கல்வியில் இவ்வகை நிறுவனங்கள் பிரத்யேகமாக பாடப்பிரிவுகளை வழங்கலாம். மேற்கூறிய திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி பாடப்பிரிவுகள் மிகுந்த தரமுள்ள முறைசார்ந்த பாடப்பிரிவுகளுக்கு இணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தொலைதூரக்கல்வி பாடப்பிரிவுகளை செயல்படுத்த வகை 3 நிறுவனங்கள் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்று பாடப்பிரிவுகளை வழங்கலாம். 12.3.4. திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியில் சிறந்த தரத்தை உறுதிசெய்தல். மிகச் சிறந்த முறையில் தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்குவதை உறுதிப்படுத்த சிறந்த தகுதியுடைய ஆசிரியர்களை நிறுவனங்களில் நியமித்தல், சிறந்த தரமுடைய பாடப்பிரிவுகளை வழங்குதல், போதுமான வசதிகளில் முதலீடு செய்தல், ஆசிரியர்களுக்கு ஆதரவு அளித்தல் போன்றவை செய்தலின் மூலம் உயர்தரமிக்க உள்ளடக்கம் நிறைந்த புதுமையான பாடத்திட்டம் மற்றும் புது கற்பித்தல் முறைகள் உருவாக்க முடியும். திறன்மிகு வகையில் கற்றல் விளைவுகளை சிறந்த முறைசார் பாடப்பிரிவுகளுக்கு இணையாக வழங்குவதன் மூலம் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளின் தரத்தை அளவிட முடியும். தேசிய மற்றும் உள்ளூர் தேவைகளுக்கேற்ப திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகள், திட்டங்கள் வழங்கும் நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் (NHERA), திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகள் சார்ந்த விதிமுறைகள், தர அளவீடு, வழிகாட்டுதல், ஆகியவற்றை வழங்கும். தரமான திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியை எல்லா உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்க பொதுக்கல்வி கவுன்சில் பரிந்துரை செய்யும். உயர்கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளை மட்டுமே தொலைதூரக் கல்வி படிப்புகளாக வழங்க அனுமதிக்கப்படும். ஒட்டுமொத்த நுழைவு விகிதத்தை 50 சதவீதத்திற்கு உயர்த்துவதில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்க வேண்டும். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியில் தரத்தை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் புதிய முறைகள் மற்றும் விரிவாக்கத்திற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். 12.3.5. இணையவழி டிஜிட்டல் களஞ்சியம் வளங்களை திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், மீண்டும் மீண்டும் படி எடுத்தலை தவிர்ப்பதற்காகவும், திறந்த மற்றும் தொலைதூர கல்விக்காக உருவாக்கப்படும் அனைத்து பாடக் கருத்துக்களும் இணையவழி டிஜிட்டல் களஞ்சியமாக ஒருங்கிணைக்கப்படும் (பார்க்க P19.4.6). பாட கருத்துக்களை உருவாக்கவும் உருவாக்கப்பட்ட பாடக் கருத்துக்களை மறு ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதிப்படுத்தவும் உரிய வழிமுறைகள் செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி இணைய வழி டிஜிட்டல் களஞ்சிய உள்ளடக்கம் இலவசமாக வழங்கப்படும். 12.3.6. திறந்த மற்றும் தொலைதூர கல்வியின் தரத்தை உயர்த்த தேவைப்படும் ஆய்வுகளுக்கான நிதி ஆதாரங்கள். திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியில் குறிப்பாக கற்பித்தல் முறைகள், ஒப்படைப்புகள், மாணவர் ஆதார சேவைகள், தொலைதூரக் கல்வி மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் தரத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான ஆய்வுகளுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் வழங்கப்படும். 12.3.7. திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியில் சேரும் மாணவர்களுக்கான ஆதரவு சேவைகள்: திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி வழங்குகின்ற அனைத்து வகை நிறுவனங்களிலும் மாணவர் ஆதரவு சேவை மையங்கள் நிறுவனமயமாக்கப்பட வேண்டும். இவ்வகை ஆதரவு சேவை மையங்கள் அதே உயர்கல்வி நிறுவனங்களில் முழுநேரமாக பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று தொடர்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். கற்றல் பொருள்கள் (பொழுதுபோக்கு சார்ந்த பாடத்திட்டம், களஞ்சியம், திறந்த நிலை கல்வி வளங்கள், OERs, MOOCs) உதவி மைய சேவைகள், பயிற்சி மற்றும் ஆலோசனை, வகுப்பு நடத்துதல், இணைய வழியான வகுப்பு, விவாத கருத்துக்களம், இணையவழி ஒளிபரப்பு, நூலக வசதி, மெய்நிகர் ஆய்வு, மின் கற்றல் தொகுதி, செயல்திறன் மற்றும் பின்னூட்டம் அளித்தல், இணையவழி தேர்வு, தேர்வு முடிவு அறிவிப்பு, சான்றிதழ் வழங்குதல், குறைகளை நிவர்த்தி செய்தல் போன்றவை மாணவர் ஆதரவு சேவை மையங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 12.3.8. திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி மூலம் நிபுணத்துவம் பெறுவதற்கான திறன் மேம்பாடு வகை1 உயர்கல்வி நிறுவனங்கள் அவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை உருவாக்கவும், வழங்கவும் தேவையான திறன்மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கற்றல் வளங்களை பரவலாக்க திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி பாடங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். முறைசார்ந்த கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி ஆகியஇரண்டிலும்இவைகள்வழங்கப்படவேண்டும். தொலைதூரக்கல்வியில்நிபுணத்துவம்பெற்றஆசிரியர்குழுவினர்இவைகளைவடிவமைக்கலாம்.. 12.3.9 பாரிய திறந்த மற்றும் இணையவழி கல்வி (MOOC). MOOC (Massive Open Online Courses) தொலைதூரக் கல்வியில் மிக முக்கியமான ஒன்றாக வளர்ந்து வருகிறது. MOOC ல் மாணவர்கள் சேர்வதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் MOOC தனது திட்டங்களில் பயன்பாட்டு நிலையை எட்டவில்லை என்றபோதிலும் நாடெங்கும் உள்ள மாணவர்களுக்கு தனது பயன்மிக்க சேவையை அளித்துவர முயற்சி செய்கிறது. MOOCக்கள் வழங்கப்படும் பயிற்சிவகுப்புகள் மற்றும் கற்றல்விளைவுகள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்துவதில் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் MOOCக்களில் சேர மாணவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். தனிக்கருத்தாளர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் இந்த தேவையை பூர்த்தி செய்ய SWAYAM (Study Web of Active Learning for Young Aspiring Minds) என்ற புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய இணைய தளம் MOOCயை வழங்குகிறது. 12.3.10. வளர்ந்து வரும் MOOCக்களின் தேவையை நிறைவு செய்தல் போதுமான நிதிஆதாரங்கள் மற்றும் வழிமுறைகளை வழங்குவதன்மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இணையவழி படிப்புகளை வழங்க ஊக்கப்படுத்தப்படும். இளம் மாணவர்கள் மற்றும் வயதுவந்த கற்றவர்களின் அறிவார்ந்த தேடலை மேம்படுத்துவதற்காக MOOC இணையவழிப் படிப்புகள் தனியாக அல்லது SWAYAM போன்ற வலைத்தளங்கள் மூலம் வழங்கப்படும். நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் வழங்குகின்ற இணையவழிப் படிப்புகளை மாணவர்களுக்கு விருப்பமான முறையில் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு முழுச்சுதந்திரம் இருக்கிறது. திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் நிபுணத்துவம் பெற்ற பாடங்களில் MOOCல் பாடங்களை உருவாக்கவும் வழங்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள். மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் பின்னூட்டம் வழங்குவதற்கு தேவையான வழிமுறையை உருவாக்குதல், உண்மையான மற்றும் நம்பகத்தன்மை மிக்க முறையில் மாணவர்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை MOOC வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். 12.3.11. MOOCக்கள் ஈட்டும் வரவுகளை திரட்டுதல் மற்றும் அங்கீகரித்தல் தேசிய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பில் உள்ள பொதுக்கல்வி கவுன்சில் MOOC மூலம் ஈட்டும் வரவுகளை திரட்டுவதற்கும் மற்றும் அங்கீகரிப்பதற்கும் தேவையான வழிமுறைகள் செய்யப்படும். உலகின் எந்த மூலையிலிருந்தும் வழங்கப்படும் MOOC ஆனது கற்பித்தல் முறைகள், மாணவர்களுடன் கலந்துரையாடும் முறைகள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றை ஆய்வுசெய்து, பாடக்கருத்துக்களில் தேவையான மாற்றங்களை செய்து தேசிய உயர்கல்வி தகுதியாக்கும் கட்டமைப்பு (NHEQF) மூலம் அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்கள் MOOCல் தங்களது செயல்திறனை வெளிப்படுத்த குறிப்பிட்ட பருவத்தேர்வு முறைகளில் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுஎழுத அனுமதிக்கலாம். ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு விவரங்களை குறிப்பிடவேண்டும்.. 12.3.12. MOOCக்களின் தரத்தை உறுதிசெய்தல். வலிமையான பரிந்துரை மூலம் (அனைத்துவகை திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி) மறுஆய்வு செயல்முறைகள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர் நன்மதிப்பு ஆகியவற்றை பொதுக்கல்வி கவுன்சில் வழிகாட்டுதலுடன் எவ்வித சமரசமுமின்றி சிறந்த தரத்தில் அடையச் செய்ய மதிப்பிடப்பட்ட பயிற்சிகளை நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். மாணவர்நலனில் தனிக்கவனம், கற்றல்மாற்றம் குறித்த பயிற்சிகளை உயர்கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் கோரியிருப்பதன் அடிப்படையில் உள்வகுப்பறை பயிற்சித் திட்டங்களை MOOCக்களாக மாற்றம் செய்யலாம். இவ்வகை பயிற்சிகள் மதிப்புமிக்க பயிற்சிகளாக உருமாற்றம் செய்யப்படும். ஆசிரியர் தனது பணியை சிறப்பான முறையில் மேற்கொள்ள (மனித, பொருள் மற்றும் தொழில்நுட்பம்) வளங்களை உறுதிப்படுத்தி செயல்படுத்துவதன் வழியாக சிறந்த தரம்மிக்க MOOC கல்வி இங்கு வழங்கப்படும். 12.4 உயர்கல்வியை பன்னாட்டுமயமாக்கல் நாடு மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து கற்றல் அனுபவங்களை வழங்குவதன் மூலம் நமது மாணவர்கள் பன்னாட்டு செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு தயாராகி வரும் சூழலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களும் பன்னாட்டு மாணவர்களை ஈர்க்க வேண்டும். இந்த மாணவர்கள் பெறக்கூடிய கருத்துகளும், ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகளும் தங்களது நாடுகளில் அவர்கள் செய்யும் வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். உயர்கல்வியை பன்னாட்டு மயமாக்கலில் இந்தியா ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு. 700-ல் தக்ஷசீலத்தில் நிறுவப்பட்டது. 7-ம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகம் சீனா, இந்தோனேசியா, கொரியா, ஜப்பான், பெர்சியா, துருக்கி மற்றும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்டிருந்தது. இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கும் வேளையில், சராசரியாக, 45,000 பன்னாட்டு மாணவர்கள் (வருடத்திற்கு 11,250) இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள். பன்னாட்டு மாணவர்களை அதிகம் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 26வது இடத்தில் உள்ளது. பன்னாட்டு அளவில் கல்விக்காக பிற நாடுகளுக்கு செல்பவர்கள் மொத்த மாணவர்களில் 1% என்ற அளவில் உள்ளது. கிட்டத்தட்ட 5 மில்லியன் மாணவர்கள் கல்விக்காக பிற நாடுகளுக்குச் செல்வதாக 2014-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று குறிப்பிடுகிறது. பன்னாட்டு அளவில் சிந்தித்தல், பன்னாட்டு குடிமக்களை உருவாக்குதல், உலகின் எந்தப் பகுதியிலும் பணி செய்யத் தேவையான தகுதியையும் நம்பிக்கையும் வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கல்வி வழங்கும் நாடுகளையே பன்னாட்டு மாணவர்கள் கற்க தேர்வு செய்கின்றனர். மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நற்பெயர் காரணமாகவே மாணவர்களை கவர்ந்து வருகின்றன என்பதையும், இத்தகைய நற்பெயர் கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதே முதன்மையானது என்பதையும் நாம் உணர வேண்டும். ஆகவே பன்னாட்டு மாணவர்களை கவரக்கூடிய வகையில் இந்திய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டும். பன்னாட்டு மாணவர்கள் மற்றும் பன்னாட்டு ஆசிரியர்களின் போக்குவரத்து விதிகளை எளிமைப்படுத்துவது, உயர்கல்வியில் ஆராய்ச்சி படிப்புகளில் பன்னாட்டு கூட்டுகளை (Partnership) உருவாக்குவது, உலகின் எந்த மூலையிலிருந்தும் மாணவர்கள் சேரும் வகையில் அதன் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவது, உலகின் பல்வேறு நாடுகளிலும் நமது நிறுவனங்களின் மதிப்பை உயர்த்துவது போன்றவை உயர்கல்வியில் பன்னாட்டு மயமாக்கலை அடைவதற்கான அணுகுமுறைகள் ஆகும். 12.4.1. பன்னாட்டுத் தரத்திற்கு இணையான கல்வி இந்தக் கல்விக்கொள்கை மூலம் இந்திய மற்றும் பன்னாட்டு அளவில் போட்டித்திறனை வளர்த்துக்கொள்வதற்காக இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுயாட்சி வழங்கப்படும். இதனை இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு கலைத்திட்டம், அதன் வெளிப்பாடுகள், மதிப்பீடுகள், செயல்முறைகள், மாணவர்களின் முழுமையான கல்வி அனுபவம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் உலக குடிமகனாக விளங்குவதற்கு தேவையான அறிவையும், திறனையும் உருவாக்க வேண்டும். தொழிற்கல்வியில் தேசிய உயர்கல்விக்கான தகுதியாக்கும் வரைவு மற்றும் இதர வரைவுகள் பன்னாட்டு தரத்திற்கு மாற்றியமைக்கப்பட்டு பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளை உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும். இந்திய சூழலின் தேவைகளில் சமரசம் செய்யாமல் ”உள்ளூரில் உலகமயமாக்கல்” என்ற இலக்கை நோக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் உலகளாவிய பார்வையை வளர்ப்பதில் உதவியாக இருக்க வேண்டும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி சேவைகள் மற்றும் பிற வசதிகளை உருவாக்குவதில் தேவையான முதலீடுகளை செய்ய வேண்டும். 12.4.2. இந்திய மொழிகள், கலைகள், கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் சார்ந்த படிப்புகள் இந்திய பல்கலைக்கழகங்கள் மொழிகள், கலைகள், வரலாறு, ஆயுர்வேதம், யோகா மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்காக பன்னாட்டு மாணவர்களின் இலக்காக மாறி வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், கணினி அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளும் பன்னாட்டு மாணவர்களை கவர்ந்து வருகிறது. மேலும், தொழிற்பயிற்சிகள், தொழில் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட பாடப்பிரிவுகளுடன் அவர்களை மேலும் கவர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உணவுமுறை, ஆடைகள் போன்ற இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தக்கூடிய பாடப்பிரிவுகள் பன்னாட்டு மாணவர்களை மட்டுமல்லாமல் இந்திய மாணவர்களையும் கவர்ந்துள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் குறியீட்டு ஆய்வுகளுக்கான படிப்புகளுக்கு போட்டித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆகவே இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழிகள் தொடர்பான படிப்புகளுக்கு வெளிநாடு சென்று படிக்க வேண்டிய அவசியமில்லை. 12.4.3. கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துதல் இந்திய மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியை இந்தியாவிலும் மற்றொரு பகுதியை வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பயிலும் வாய்ப்பை உருவாக்கும். அதேபோல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியை வெளிநாட்டிலும், மற்றொரு பகுதியை இந்திய கல்வி நிறுவனங்களிலும் பயின்று படிப்பை நிறைவு செய்யலாம். இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கால அளவுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கால அளவாக உள்ளது. எனவே, இந்திய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகள் அவை இணைந்து செயல்படும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களிலும் அங்கீகரிக்கப்படும் வகையில் மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. இது மாணவர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணமாகும். குலோபல் சவுத் நாடுகளில் மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கல்விக்கான செலவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கப்படுவதும் மாணவர்களை கவர்ந்துள்ளது. 12.4.4. பன்னாட்டு மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் வருகையை எளிமைப்படுத்தல். பன்னாட்டு மாணவர்களின் வருகை எளிமைப்படுத்தப்படும். RSA பல்வேறு அமைச்சகங்களில் ஆய்வு செய்து பன்னாட்டு மாணவர்களின் வருகையை எளிமைப்படுத்த தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளும். இதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட “இந்தியாவில் கற்போம்” (Study in India) என்ற பக்கத்தில் இது தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். மேலும் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கையாளப்படும். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தரமான மாணவர்களை ஈர்ப்பதற்காக விசா, FRRO செயல்முறைகள், கால நீட்டிப்பு, தொழில் பயிற்சி கொள்கைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்படும். உலகின் பல்வேறு வளரும் நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி படிப்புகளில் சேரும் பன்னாட்டு மாணவர்களை திறன்படுத்த ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்த NRF (National Research Foundation) கட்டமைக்கப்பட வேண்டும் (அத்தியாயம் 14 பார்க்கவும்). குறுகிய காலத்தில், தங்கிப் பயில விரும்பும் மாணவர்களுக்கான, நல்ல தரமான, திறன் அடிப்படையிலான, குறுகிய கால, இந்திய ஆய்வுப்படிப்புகள் வழங்கப்படும். இந்தியாவில் பட்டம் முடித்துள்ள மாணவர்கள் நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வேலைவாய்ப்பைப் பெற அனுமதிக்கப்படுவர். அதனால் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்குமுன் சில பணி அனுபவங்களை பெற முடியும். 12.4.5. பன்னாட்டு மாணவர்கள் தங்குவதற்கும் அவர்கள் உள்ளூர் சமூகத்தோடு ஒருங்கிணைவதற்கும் வசதி செய்தல். பன்னாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பே 15% உச்ச வரம்பில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் பன்னாட்டு மாணவர்களை தக்க வைக்க உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், தங்குவதற்கான வசதிகளை உருவாக்குதல், இவற்றை சொந்தமாகவோ அல்லது பிற சேவை வழங்குநர்களின் பங்களிப்புடனோ செய்தல் வேண்டும். கல்வி நிறுவனங்கள் பன்னாட்டு மாணவர்களின் பாதுகாப்பு, நேர்மறை எண்ணங்கள், முழுமையான அனுபவம் ஆகியவற்றை கூடுதல் சமூக கட்டமைப்புகளை வழங்குவதன் மூலம் உறுதி செய்ய வேண்டும். ஆலோசகர்களை நியமித்தல், புரவலர் குடும்பங்களை உருவாக்குதல், மாணவ நண்பர்களை உருவாக்குதல், உள்ளூர் மொழி சார்ந்த பாடங்களை உருவாக்குதல் ஆகியவையும் இவற்றிற்கு தேவைப்படுகிறது. மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கத்தொகை வழங்குதலை அறிமுகப்படுத்தியும் பன்னாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும். இன்றைக்கு இந்தியாவில் பயிலும் பன்னாட்டு மாணவர்கள் பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவங்களில் பயின்று கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சிறந்த மாணவ அனுபவங்களை வழங்குகிறார்கள். மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் இதை அதிகரிக்க வேண்டும். 12.4.6. மாணவர் பரிமாற்றம் வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் குறுகிய கால பார்வையிடுதல் மூலம் உலகளாவிய திறன்களைப் பெற இந்திய மாணவர்களுக்கு வசதிகள் செய்யப்படும். இந்திய பல்கலைகழகங்களில் இருந்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், செமஸ்டர் படிப்புகள், குறுகிய கால பயிற்சிகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றிற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்வது ஊக்கப்படுத்தப்படும். மாணவர்கள் பரிமாற்றத்திற்காக பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் விரிவுபடுத்தப்பட்டு வலிமைப்படுத்தப்படும். திறன்மிக்க/தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும். மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்ப உதவித்தொகை அல்லது கல்விக்கடன் வழங்கப்படும். 12.4.7. ஆசிரியர் பரிமாற்றம் இந்திய கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் அனுபவங்களையும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்திய கல்வி நிறுவனங்களின் அனுபவங்களையும் பெற ஊக்கப்படுத்தப்படும். சிறந்த பல்கலைக்கழகங்களுடன் படிப்புகளை பகிர்ந்துகொள்வது, மாற்றுப்பணி வழங்குவது, குறுகிய கால செயல்திட்டங்களை மேற்கொள்வது, குறுகிய கால பயிற்சிகளை வழங்குவது, பணி வாய்ப்புகளை வழங்குவது ஆகியவற்றை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்வதை இது உள்ளடக்கியது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வுக்காக விடுப்புகள் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும். கூடுதலாக, இந்திய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் GIAN திட்டத்தின் கீழ் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை பார்வையிடும் வாய்ப்புகள் வழங்கப்படும். 12.4.8. ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்புகள். இந்திய மற்றும் பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்புகளை அதிகப்படுத்துவதில் கூட்டு உத்திகள் பயன்படுத்தப்படும். ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக திறமையான ஆய்வு மாணவர்களுக்கும், இளம் முனைவர்களுக்கும் NRF மூலம் நிதியுதவி வழங்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் IUCIE மூலம் விசா பதிவு செய்தல், தங்குவதற்கான கால நீட்டிப்பு செய்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் பன்னாட்டு அலுவலகங்கள் மூலம் எளிமைப்படுத்தப்பட்டு, உயர்கல்வியில் பன்னாட்டு மயமாக்குதலை உருவாக்குதல், பன்னாட்டு மாணவர்களுக்கான சலுகைகள் மற்றும் சேவைகள் வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். 12.4.9. கடல் கடந்த வளாகம். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட தகுதிகளை மேம்படுத்தி, தேர்வு செய்யப்பட்ட நாடுகளில், குறிப்பாக குலோபல் சவுத் நாடுகளில் வளாகங்கள் உருவாக்க ஊக்கப்படுத்தப்படும். மத்திய, மாநில அரசுகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் இதைச் செயல்படுத்த உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். 12.4.10. இணையவழிக் கல்வி, திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி. உள்நாட்டு மற்றும் நாடு கடந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியை பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த ஊக்கப்படுத்தப்படும். இந்திய பல்கலைக்கழகங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சேவை வழங்கும் வகையில் இணையவழிக் கல்வி மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட கற்றல் பயிற்சிப் படிப்புகளை வழங்கலாம். ஆர்வமுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும். இணையவழிக் கல்வியை இரு நாடுகளும் அங்கீகரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும். MOOCக்கள் மற்றும் வேறு வடிவிலான இணையவழி படிப்புகள் மற்றும் பட்டங்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் வகையில் இந்திய கல்வி நிறுவனங்கள் தங்கள் பன்னாட்டு கூட்டளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். 12.4.11. பன்னாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கு வரவேற்றல். (உலகில் சிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இருந்து) தேர்வு செய்யப்பட்ட பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி வழங்கப்படும். இதற்காக ஒரு சட்ட வரைவு உருவாக்கப்பட்டு அதன்மூலம் அனுமதி வழங்கப்படும். இத்தகைய பல்கலைக் கழகங்கள் இந்திய பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் அனைத்து விதிகளையும், ஒழுங்குமுறைகளையும், பாட வரைவுகளையும் பின்பற்ற வேண்டும். 12.4.12. பன்னாட்டு கல்விக்கான ஒரு பன்னாட்டு பல்கலைக்கழக மையம் (IUCIE). பல்கலைக்கழகங்களில், உயர்கல்வியில் பன்னாட்டு மையத்தை உருவாக்க தேர்வுசெய்யப்பட்ட இந்திய பல்கலைக்கழங்களில் பன்னாட்டு கல்வி மையத்தோடு இணைந்து IUCIE உருவாக்கப்படும். இந்த மையங்களை செயல்படுத்த நிதிநிலை அறிக்கையில் உரிய வழிவகைகள் செய்யப்பட வேண்டும். 12.4.13. அவுட்ரீச் மற்றும் பிராண்டிங். சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்காக, முறையான பிராண்ட் உருவாக்க பரப்புரை செய்யப்பட வேண்டும். அவுட்ரீச் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இவற்றை மேற்கொள்ள வேண்டும். IUCIE, அரசு, இந்திய உயர்கல்வி நிறுவங்கள் ஆகியவை பன்னாட்டு அலுவலகங்கள் மூலம் முறையான பிராண்ட் உருவாக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு கல்வி உதவித்தொகை மிக முக்கிய காரணியாக விளங்கும். திறம்படச் செயல்படும் பன்னாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிகமாக வழங்கப்பட வேண்டும். உற்சாகம், ஈடுபாடு மற்றும் திறமையுள்ள ஆசிரியர்கள் குறிக்கோள்: கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கான உற்சாகமுள்ள, அதிக திறமை மற்றும் ஆழமான கடமையுணர்ச்சியுடைய, அதிகாரம் கொண்ட ஆசிரியர்கள் உயர் கல்வி நிறுவனங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணி அதன் ஆசிரியர்களின் தரம் மற்றும் ஈடுபாடு ஆகும். இந்த முக்கியமான விஷயம் இந்தியாவின் தற்போதைய உயர் கல்வி முறையின் கவனத்திலிருந்து தப்பவில்லை. உயர்கல்விக்கான இலக்குகளை அடைவதில் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, ஆட்சேர்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்தை ஒழுங்குபடுத்தவும், ஆசிரியர்களை பணிக்கு எடுப்பதில் பல்வேறு குழுக்களிடமிருந்து சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. பொது நிறுவனங்களில் நிரந்தர ஆசிரியர்களின் இழப்பீட்டு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னர் ‘கல்வி ஊழியர்கள் கல்லூரிகள்’ என அறியப்பட்ட மனித வள மேம்பாட்டு மையங்களின் (HRDCs) வாயிலாக, தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊக்கமும் ஈடுபாடும் கொண்ட, மிக உயர்ந்த நிலைகளிலான தனிச் சிறப்பை அடைவதில் முழுமையாக ஈடுபட்டுள்ள ஆசிரிய உறுப்பினர்கள் ஆயிரக் கணக்கானோர், நாடு முழுவதும் உயர் கல்வித் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியிலும், சமூக சேவை மற்றும் அவர்களது தொழிலுக்கான சேவை ஆகியவற்றிலும் அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடு உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. இருப்பினும், கல்வித் தொழிற்துறையின் நிலைமையில் இந்த பல்வேறுபட்ட முன்னேற்றங்களும், உண்மையிலேயே நமக்கு உத்வேகம் அளிக்கும் மாதிரி ஆசிரிய உறுப்பினர்கள் மிகப்பலர் இருந்தபோதிலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கற்பித்தல், ஆராய்ச்சி, மற்றும் சேவை ஆகியவற்றில் ஆசிரிய தன்முனைப்பாற்றலானது, சராசரியாக, உயர்கல்வி அமைப்புக்கு அதிலிருந்து எதிர்பார்க்கப்படக்கூடிய உயர்ந்த நிலைகளை நோக்கி முன்னேறுவதும் அவற்றை அடைவதும் உண்மையில் விரும்பப்படுவதையும் தேவைப்படுவதையும் விட மிகக் குறைவாக உள்ளது. விரும்பப்படுவதைவிட குறைவான ஆசிரிய தன்முனைப்பாற்றல் நிலைகளின் பின்னால் இருக்கும் பல்வேறு காரணிகள் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ஆசிரிய உறுப்பினரும் அவரது தொழில் மற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதில் மகிழ்வோடும், உற்சாகத்தோடும், ஈடுபாட்டோடும், தன்முனைப்பாற்றலோடும் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கையாளப்பட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரிய தன்முனைப்பாற்றலுக்கான சவால்கள் தற்போதைய நேரத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரிய தன்முனைப்பாற்றலுக்கு பல சவால்கள் உள்ளன. முதலாவதாக, இயற்பொருள் உள்கட்டமைப்பு மற்றும் சேவை நிலைமைகள் பல மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சிறந்ததை விட குறைவாகவே இருக்கின்றன. பல நிறுவனங்களில் ஆசிரியர்கள் (மற்றும் மாணவர்கள்) பணியாற்ற வருவதற்கு வசதியாக உணர்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. ஆசிரியர்கள் பணியாற்ற வர விரும்புவதற்கும், குறிப்பிடத்தக்க நேரத்தை நிறுவனத்திலும் நிறுவனத்துக்காகவும் செலவிடுவதற்கும் ஏதுவாக தூய்மையான குடிநீர், தூய்மையாக இயங்கும் கழிப்பறைகள் ஆகியவற்றோடு கரும்பலகைகள், அலுவலகங்கள், கற்பித்தல் துணைக்கலப் பொருட்கள், ஆய்வகங்கள், இனிமையான வகுப்பறை இடங்கள் மற்றும் வளாகங்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். ஆசிரிய உறுப்பினர்களின் சேவை நிலைமைகளும் போதிய அளவில் இல்லை. தற்போதைய காலத்தில், குறைந்த சம்பளம் மற்றும் / அல்லது பாதுகாப்பற்ற நிலையில், தற்காலிக பணி நியமனங்களில் பல ஆசிரிய உறுப்பினர்கள் உள்ளனர். உண்மையில், நிரந்தர வேலைகளுக்கு எதிரான ஆசிரியப்பணி காலியிடங்கள் மிக அதிகமாக உள்ளன; உதாரணமாக, புதிய மத்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்கள் 50% க்கும், புதிய ஐஐடிகளில் 35% க்கும் அதிகமானதாக அறிவிக்கப்பட்டுள்ளன; மற்ற பல்கலைக்கழகங்களில் எண்கள் பொதுவாக இன்னும் மோசமாக உள்ளன. நிறுவன செயல்முறைகளை சமரசம் செய்து, அனைத்து ஆசிரிய உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் தன்முனைப்பாற்றலைக் குறைக்கின்ற வகையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த நியமனங்கள் நெறிமுறையாக மாறி வருகின்றன. இது பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். கூடுதலாக, ஒவ்வொரு வகுப்பிலும் அதிகப்படியான மாணவர்-ஆசிரியர் விகிதங்கள் (சிலவேளைகளில் 50:1 ஐ விட அதிகமாக) அதிகமான கற்பித்தல் சுமைகள் (அடிக்கடி வாரத்துக்கு அதிகபட்சம் 36 மணிநேரம்), ஆகியன வகுப்புக்கான சரியான தயாரிப்புகள் அல்லது முறையான மாணவர் தொடர்புக்கு குறைவான நேரத்தை ஒதுக்க வைக்கின்றன. இந்த நிலையில் ஆராய்ச்சி அல்லது பிற பல்கலைக்கழக நடவடிக்கைகள் மற்றும் சேவைக்காக ஒதுக்கும் நேரத்தைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. இரண்டாவதாக தொடர்புடைய பிரச்சினை என்பது பாடத்திட்ட மேம்பாடு, பாடத்திட்டம் சார்ந்த விஷயங்கள், கற்பித்தல் அணுகுமுறைகள், சேவை முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஆய்வு ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு முற்றிலும் சுயநிர்ணய உரிமை இல்லாதிருப்பதாகும். குறுகிய கால ஒப்பந்தங்களில் இல்லாத ஆசிரிய உறுப்பினர்களுக்கும் கூட, அதிகாரமளிக்கப்பட்ட உணர்வும் மற்றும் புதுமையை புகுத்துவதற்கான சுதந்திர உணர்வும் பொதுவாக போதிய அளவு இல்லை. பாடத்தொகுப்பு மற்றும் பாடத்திட்டம் ஆகியவை பெரும்பாலும் வெறுமனே ஆசிரிய உறுப்பினர்களிடம் கற்பிப்பதற்காக ஒப்படைக்கப்படுகின்றன. காட்சியளிப்பு, உள்ளடக்கம், பணிகள் அல்லது மதிப்பீடுகளில் எந்தவொரு படைப்பாற்றலுக்கோ அல்லது புதுமையை புகுத்துவதற்கோ அதில் குறைந்த அளவே இடமிருக்கிறது. இது கல்வி நிறுவனங்களின் ஆற்றலை பின்தங்கச் செய்வதோடு ஆசிரியர்களையும் ஆர்வமிழக்கச் செய்கிறது. மேலும், அதிகமான கற்பித்தல் சுமைகளும், ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள அதிகமான மாணவர்-ஆசிரியர் விகிதங்களும், படைப்பாற்றலுள்ள வகுப்பு தயாரிப்புக்கு குறைவான நேரத்தையே அனுமதிக்கின்றன. இதில் புதுமையான ஆராய்ச்சி அல்லது சேவையின் முன்னெடுப்புகளைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. தொழில்சார் மேலாண்மை பெரும்பாலும் தகுதி அடிப்படையில் அல்லாது, பணி மூப்பு, அதிர்ஷ்டம் அல்லது இதர பிற தன்னிச்சையான காரணிகளின் அடிப்படையில் இருப்பதும் ஆசிரியர்களின் தன்முனைப்பாற்றலுக்கு கூடுதல் சவாலாக அமைகிறது. பணியமர்த்தல், தக்கவைத்தல், சம்பள அதிகரிப்பு, பணி உயர்வு மற்றும் பலதரப்பட்ட பணி உயர்வுப் படிநிலைகளுக்கு இடையிலான இயக்கம் ஆகியவையெல்லாம் தகுதி அடிப்படையிலும் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சேவை ஆகியவற்றிலுள்ள தரத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக்கூடிய, தொடர்ந்து பணியில்இருப்பதற்கான உத்திரவாதம் அல்லது தொழில்முறை முன்னேற்றத்துக்கான அமைப்பு பல நிறுவனங்களில் தெளிவானதாக இல்லை. தலைசிறந்த பணியை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பானது அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாக இல்லை, இது ஆசிரியர்களின் தன்முனைப்பாற்றல் மற்றும் தர மேன்மைக்கான கடமையுணர்ச்சி ஆகியவற்றை கடுமையாக குறைக்கிறது. இறுதியாக, நிறுவன தலைமை அமைப்பு உடைபட்டு இருக்கிறது. நிறுவன தலைவர்கள் முன்கூட்டியே நல்ல விதத்தில் பயிற்சியளிக்கப்பட்டு, வளர்ச்சிக்கு துணைசெய்யப்படுவதில்லை அல்லது எப்போதும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; உண்மையில், பல சந்தர்ப்பங்களில், நிறுவனத் தலைமை முற்றிலும் ஊழல் நிறைந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. நிறுவன தலைவர்கள் மாறுவதற்கு இடையிலான காலம் பெரும்பாலும் சீரானதாக இருப்பதில்லை. தலைமைக்கான காலியிடங்கள் பல மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக இருப்பதாக அறிக்கைகள் இருக்கின்றன. வரையறையின்படி, நிறுவன தலைமையானது, ஒவ்வொரு நிறுவனத்திலும் தகுதி அடிப்படையிலான மேன்மை நிலைக்கான கலாச்சாரம் மற்றும் உயர்ந்த செயல்திறனை உருவாக்குவதில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதால், உடைபட்டு இருக்கிற தலைமை அமைப்பானது ஆசிரியர்களின் மீதும் மாணவர்களின் மீதும் கடுமையான, ஆர்வமிழக்கச் செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. 13.1. உயர் கல்வி நிறுவனங்களின் மையத்தில் ஆசிரியர்களை திரும்ப வைத்தல் உயர்கல்வியில் உயர் தரத்தை அடைவதற்காக ஆசிரியர்களை தூண்டுதல் மற்றும் ஊக்குவித்தல்: சேவை நிலைகள், ஆசிரியர்களுக்கான அதிகாரமளிப்பு, செயல்திறன் மேலாண்மை அல்லது தொழில் முன்னேற்றம், மற்றும் நிறுவனங்களின் தலைமைத்துவம் ஆகியவை முற்றிலுமாக புதுப்பிக்கப்படவேண்டும். அதனால் கற்பித்தல், ஆய்வு மற்றும் தமது சமூகங்களுக்கான சேவைகளில் தனிப்பட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த நிலைகளில் தனிச்சிறப்பை அடைவதற்கு ஆசிரிய உறுப்பினர்கள் தூண்டப்படுவார்கள்; உற்சாகமளிக்கப்படுவார்கள்; ஊக்குவிக்கப்படுவார்கள். தனிச்சிறப்பு வாய்ந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு சாதகமான சேவை நிலைமைகளை உறுதிப்படுத்துதல்: உயர்கல்வியில் நல்ல வேலைகளை செய்வதற்கு தேவையான, பின்வரும், ஆனால் அவை மட்டுமேயல்லாத அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அடையப் பெற்றிருக்க வேண்டும்: தூய்மையான குடிநீர், சுத்தமாக இயங்கும் கழிப்பறைகள், கரும்பலகைகள், அலுவலகங்கள், கற்பித்தலுக்கான துணைக்கலப் பொருட்கள், ஆய்வகங்கள் இனிமையான வகுப்பறை இடங்கள் மற்றும் வளாகங்கள் போன்றவை. கற்பித்தல் கடமைகள் அளவுக்கு அதிகமாய் இருக்கக்கூடாது, மற்றும் மாணவர்-ஆசிரியர் விகிதங்கள் மிக உயர்ந்ததாக இருக்கக்கூடாது, இதனால் கற்பித்தல் செயல்பாடு இனிமையானதாக இருக்கும். மாணவர்களுடன் தொடர்புகொள்வதற்கும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், பிற பல்கலைக்கழக செயல்பாடுகளுக்கும் போதுமான நேரம் இருக்கும். ஆசிரியர்கள் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு என நியமிக்கப்பட வேண்டும். நிறுவனங்களுக்கிடையே இடமாற்றம் செய்யப்படக்கூடாது. இதனால் அவர்கள் உண்மையிலேயே தங்களது நேரமும் உழைப்பும் பலன் தரக்கூடியதாக இருப்பதை உணர்வார்கள். தங்களின் நிறுவனத்திலும் சமூகத்திலும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆற்றல்மிகு பல்கலைக்கழக சமூகங்களை ஆசிரியர் அதிகாரமளிப்பின் மூலம் செயல்படுத்துதல்: ஆசிரிய உறுப்பினர்களை ஊக்குவிப்பதற்கு, அவர்களை நம்புவதும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதும் முக்கியமானதாகும்; பாடத்திட்டங்கள், கற்பித்தல், பணி ஒதுக்கல்கள் மற்றும் மதிப்பீடுகள், அவர்களது பாடநூல்கள் மற்றும் பிற கற்றல் பொருட்களைத் தேர்வு செய்வது ஆகியவை உட்பட, அவர்களது சொந்த பாடத்திட்டம் சார்ந்தவற்றையும், கற்பித்தல் அணுகுமுறைகளையும் படைப்பாற்றலுடன் வடிவமைப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். தங்களுக்கு சொந்தமான, புதுமையான மற்றும் தனித்துவம் நிறைந்த பாணிகளில் கற்பிக்க முடிகிறபோதும், மற்றும் அவர்களது கற்பிப்பில் தங்கள் திறமைகளையும் தங்களது மாணவர்களின் தேவைகளைப் பற்றிய அவர்களது புரிதலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்போதும், ஆசிரியர்களால் சிறப்பாக செயல்பட முடியும். சில அடிப்படை நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஆராய்ச்சி மற்றும் பிற நிறுவன நடவடிக்கைகள் மற்றும் சேவையைப் பொறுத்தவரை, அவர்களது நேரத்தை சிறப்பானதாக, பயன் தரத்தக்கதாக ஆக்குவது எப்படி என்பதைத் தீர்மானிப்பதற்கு ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்வதாயின், புதுமையான ஆய்வு, கற்பித்தல், மற்றும் சேவை ஆகியவற்றை செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்குவதென்பது உண்மையாகவே தலைசிறந்த, ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்வதற்கு ஆசிரியர்களுக்கான முக்கிய தூண்டுதலாகவும், செயலூக்கியாகவும் அமையும். தகுதி அடிப்படையிலான தொழிற்துறை மேலாண்மை மூலம் தனிச்சிறப்பை ஊக்குவித்தல்: பணியமர்த்தல், தக்கவைத்தல், சம்பள அதிகரிப்புகள், பணி உயர்வுகள், அங்கீகாரம் மற்றும் பலதரப்பட்ட பணிஉயர்வுப் படிநிலைகளுக்கு இடையிலான இயக்கம் ஆகியவை தொடர்பான நிறுவன முடிவுகள் அனைத்தும் தகுதி அடிப்படையிலும் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சேவை ஆகியவற்றிலுள்ள தரத்தின் அடிப்படையிலும் அமைய வேண்டும். இதற்கிடையில், அடிப்படை விதிமுறைகளின்படி செயல்படாத ஆசிரியர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தனிச்சிறப்பை வலியுறுத்தும் அதிகாரமுடைய தன்னாட்சி நிறுவனங்களின் குறிக்கோளை கருத்திற் கொண்டு, ஆசிரியர்களை பணிக்கு எடுப்பதில் தெளிவாக வரையறுக்கப்பட்ட, சுயாதீனமான, வெளிப்படையான செயல்முறைகளை உயர்கல்வி நிறுவனங்கள் வைத்திருக்கும். ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்பட்டபடி, அதிகத் திறன் கொண்ட தனிநபர்கள் மற்றும் ஒரு நிறுவனத்திற்குள்ளேயே ஆசிரியர்களின் மத்தியில் பலதரப்பட்ட திறன்கள் மற்றும் அனுபவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கும். பதவிக் காலம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் தனிச்சிறப்பு மிக்க, கடமையுணர்ச்சியுடன் கூடிய ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும், ஒவ்வொரு ஆசிரியத் தர வரிசைக்குள்ளும் பல நிலைகளோடு ஒரு வலுவான, தகுதி சார்ந்த பணியில் நீடிக்கும் உத்திரவாதம், பதவி உயர்வு, ஊதிய கட்டமைப்பு ஆகியவை உருவாக்கப்படும். இதே காரணத்துக்காக, செயல்திறனை சரியாக மதிப்பிடுவதற்காக பல்கூறடங்கிய சுட்டளவுகளின் ஒரு அமைப்பு உருவாக்கப்படும். அது சக மாணவர்களின் மதிப்பீடு, மாணவர்களின் மதிப்பீடு, கற்பித்தலில் புதுமையை புகுத்துதல், ஆராய்ச்சியின் தரம் மற்றும் தாக்கம், நிறுவனத்துக்கும் சமூகத்துக்குமான சேவையின் வடிவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இத்தகைய தகுதி அடிப்படையிலான மதிப்பீடுகள், ஒவ்வொரு ஆசிரிய உறுப்பினருக்கும், பதவிக்காலம் குறித்த முடிவுகளையும், பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் ஆகியவற்றோடு, மற்ற துறை சார்ந்த, நிறுவன அளவிலான அங்கீகாரங்களை நிர்ணயிப்பதற்கும் பயன்படுத்தப்படும். பதவி உயர்வுப் படிநிலைகளிலுள்ள பல்வேறு இடங்களுக்கிடையில் ஆசிரியர்கள் மாற்றப்படுவது தகுதி அடிப்படையில் இருப்பது அவசியம். நிரூபிக்கப்பட்ட தலைமை மற்றும் நிர்வாக திறன்களை கொண்ட தலைசிறந்த ஆசிரியர்கள் கல்வித் தலைமை பதவிகளை வகிப்பதற்காக தொடர்ந்து சீரான பயிற்சியளிக்கப் படுவார்கள். ஆசிரியர்களை பணிக்கு எடுப்பது, மேம்பாடு, செயல்திறன் மேலாண்மை மற்றும் தொழில்துறை முன்னேற்றம் ஆகியவை நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும். (பக்கம் 17.1.7-ஐ பார்க்கவும்). திறமை வாய்ந்த நிறுவனத் தலைமையின் மூலம் தனிச்சிறப்பு மிக்க ஒரு கலாச்சாரத்தை உருவாக்குதல்: தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையிலான கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் தனிச்சிறப்பையும், புதுமைத்தன்மையும் வளர்க்கக் கூடிய திறமை வாய்ந்ததாகவும் உற்சாகமானதாகவும் நிறுவனத் தலைமை இருக்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. ஒரு நிறுவனம் மற்றும் அதன் ஆசிரியர்களின் வெற்றிக்கு, உயர்தர நிறுவனத் தலைமை இருப்பது மிகவும் முக்கியமானது. உயர்ந்த கல்வி மற்றும் செயல்முறையில் காண்பிக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் நிர்வாக திறமைகள் போன்ற சேவைக்கான சான்றுகள் உள்ள பல்வேறு சிறந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, தலைமைத்துவ பதவிகளின் பல படிநிலைகளில் பயிற்சியளிக்கப்படுவார்கள். தலைமைத்துவ பதவிகள் காலியாக இருக்காது; மாறாக தலைமை மாற்றங்களின்போது ஒன்றுக்கொன்று மேற்பொருந்தக் கூடியதாக அமையும் காலகட்டமானது, மாற்றங்கள் சீராக நடப்பதையும், நிறுவனங்கள் சீராக இயங்குவதையும் உறுதிசெய்யும் நெறிமுறையாக இருக்கும். ஊழல் நடைமுறைகள் நீக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் நிறுவனத் தலைவர்கள் பணிக்கு எடுக்கப்படுவது நடைமுறைப்படுத்தப்படும். ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனத் தலைவர்களிடமிருந்து மிகச் சிறந்த, புதுமையான கற்பித்தல், ஆராய்ச்சி, நிறுவன சேவை மற்றும் சமூக நலத்திட்டங்களை தூண்டக்கூடிய, ஊக்குவிக்கக்கூடிய புதுமை வாய்ந்த, தனிச்சிறப்பு மிக்க ஒரு கலாச்சாரத்தை உருவாக்குதல் நிறுவனத் தலைவர்களின் நோக்கமாக இருக்கும். நிறுவனத்தின் தரத்துக்கும் இயக்கத்துக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நிறுவனத் தலைவர்கள் ஆவர். (இயல் 17-ஐ பார்க்கவும்). உயர்கல்வி ஆசிரியர்களுக்கு மதிப்பும், தனிச்சிறப்பு மிக்க தயாரிப்பு மற்றும் உகந்த பணிச்சூழல்களுக்கான ஆதரவும் கொடுக்கப்பட வேண்டும். 13.1.1. போதுமான இயற்பொருள் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்: 2023 -ஆம் ஆண்டளவில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்வருவன உள்ளிட்ட, அடிப்படை சுகாதார தேவைகளுடன் கூடிய, போதுமான இயற்பொருள் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்டிருக்கும்: பாதுகாப்பான குடிநீர் மற்றும் செயல்படும் கழிப்பறைகள்; ஆசிரியர் அலுவலக இடம்; போதுமான அறைகலன்களுடன் கூடிய இனிமையான வகுப்பறைகளின் மூலம் உகந்த கற்றல் சூழல்கள்; மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு; நன்கு வடிவமைக்கப்பட்ட வளாகங்கள்; கணினிகள் மற்றும் கணினி அறைகள், இணைய இணைப்பு மற்றும் நிறுவன மின்னஞ்சல்; அறிவியல் ஆய்வகங்கள்; தொழில் கல்வி இடங்கள்; கலைகள் / கைத்தொழில்களுக்கான உபகரணங்கள், மற்றும் பல. 13.1.2. ஆசிரியர்கள் கிடைக்கப் பெறுதலை உறுதிப்படுத்துதல்: ஒவ்வொரு நிறுவனமும் போதுமான ஆசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும், அனைத்து செயல்முறைத் திட்டங்கள், பாடங்கள் மற்றும் துறைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். விரும்பத்தக்க மாணவர்-ஆசிரிய விகிதம் (30: 1க்கு மேல் இல்லாமல்) நிலைநிறுத்தப்பட வேண்டும்; பல்வகைமை உறுதி செய்யப்பட வேண்டும். இப்போது பரவலாக இருக்கும் அணுகுமுறையான தற்காலிக, ஒப்பந்த நியமனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 13.1.3. ஒவ்வொருநிறுவனத்திற்குள்ளும்இருக்கும்அறிவுத் திறன்களின் திறமையானகலப்பு: ஆசிரிய குழுமமானது கல்வியாளர்களையும் கள செயல்பாட்டாளர்களையும் இணைத்திருப்பதாக இருக்கவேண்டும், இது செயல்படும் களத்தில் வலுவான மற்றும் ஈடுபாடுள்ள தொடர்புகளை உருவாக்குவதற்கு முக்கியமாகிறது; அதனால் சிறப்புமுறை ஆட்சேர்ப்பு ஊக்குவிக்கப்படும். ஏனெனில் பணி நியமனங்களுக்கு இதுதான் அளவுகோலே தவிர, அவர்களின் கல்வித்தகுதிகள் அல்ல. 13.1.4. பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான நிறுவனத்தின் தன்னாட்சி உரிமை: பொது நிறுவனங்கள் (மற்றும் உதவிபெறும் நிறுவனங்கள்) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், ஆசிரியர்களையும், பிற உறுப்பினர்களையும் அவர்களது விருப்பத்தின்படி சேர்ப்பதற்கான தன்னாட்சி உரிமையைப் பெற்றிருக்கும். பணிக்கு ஆட்கள் தேர்வு செய்தல் கடுமையான மற்றும் வெளிப்படையான அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகளை இது அடிப்படையாகக் கொண்டிருக்கும்; இந்த அளவுகோல்களும் நடைமுறைகளும் பொதுத் தளத்தில் கிடைக்கப் பெறுவதாக இருக்கும். ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு அளவுகோல்கள் பல்வகைமை, ஒழுக்கவியல் புரிதல், சமூகத் தொலைநோக்குகள், கற்பிக்கும் திறன் மற்றும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது; பல்வேறுபட்ட குழுக்களுடன் பணிபுரியும் திறன் மூத்தபதவிகளில் உள்ளவர்களுக்கு ஒரு முக்கியமான அளவுகோலாக இருக்க வேண்டும். (உதாரணமாக) ஜனாதிபதி / துணைவேந்தர் / இயக்குநர் ஆகியோரின் மூலம், பொருத்தமான தேடல் மற்றும் ஆட்சேர்ப்புக் குழுக்களை உருவாக்குவதன் வாயிலாக, பணிக்கு ஆட்கள் தேர்வு செய்தலின்போது சரியான செயல்முறை பின்பற்றப்படும் என்பதை நிர்வாகிகளின் சபை உறுதிப்படுத்தும். (பிரிவு17.1 –ஐ பார்க்கவும்) 13.1.5. நிறுவன கலாச்சாரத்துக்கு அதிகாரமளித்து ஊக்குவித்தல்: ஒவ்வொரு உறுப்பினரின் மதிப்பு மற்றும் கௌரவத்திற்கான மரியாதை ஆகியவற்றைக் குறிக்கின்ற, இயல்விக்கும் மற்றும் பங்கேற்கும் தன்மையுடைய கலாச்சாரம் ஒவ்வொரு நிறுவனத்திலும் நிலவும். கருத்து வேறுபாட்டை எதிர்கொள்ளும்போதும்கூட உரையாடல் மேற்கொள்ளும் உறுதியுடனான, புதிய கருத்துகள் ஊக்குவிக்கப்படுகின்ற திறந்தநிலை சூழல் இருக்கவேண்டும். நிறுவன தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோள்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதன் மூலம் ஒரு உடைமையுரிமை உணர்வு வளர்க்கப்படும். ஆசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்யவேண்டும். அதேவேளையில் நிறுவனத்தின் உயரிய இலக்குகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் பங்களிக்க வேண்டும். சவால்களை பகிர்ந்து கொள்வதற்கும் தொழில்முறை மேம்பாட்டிற்கான ஆதரவைத் தேடுவதற்கும் அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும். அதிகாரமளிக்கும் கலாச்சாரத்தின் மிக முக்கியக் கூறானது, ஆசிரியர்களுக்கு கல்விசார் சுதந்திரம் இருப்பதாகும். இது அவர்களது ஆராய்ச்சியை தொடர்வதற்கும், எழுதுவதற்கும், புதுமையான கற்பித்தல் மற்றும் பாடத்திட்ட நடைமுறைகளை பின்பற்றுவதற்குமான சுதந்திரத்தை உள்ளடக்கியதாகும். இத்தகைய கலாச்சாரத்தை வளர்ப்பது, துணைவேந்தர் / இயக்குநர் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களின் பொறுப்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். 13.1.6. ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர்களுக்கான நிரந்தர (பதவிக்கால) வேலை வாய்ப்பு வழித்தடம்: ஆசிரியர்களுக்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்ட நிரந்தர வேலைவாய்ப்பு (பதவிக்கால) வழித்தட முறைமை, ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் - தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் 2030 ஆம் ஆண்டில் இது முழுமையாகச் செயல்படும். தகுதிகாண் காலம் பொதுவாக ஐந்து வருடங்கள் ஆகும். இது மதிப்பீட்டின்படி குறைக்கப்படலாம்; அல்லது அதிகரிக்கப்படலாம். பல்வேறு ஆதாரத் தரவுகளுடன் கடுமையான மற்றும் விரிவான மதிப்பீட்டு செயல்முறையின் அடிப்படையில் உறுதிப்படுத்தல் அமையும். இது ஒரு தொடர் கால வரையறையுடனான, 360 டிகிரி கோணத்திலான (மேற்பார்வையாளர், சக மாணவர் மற்றும் மாணவர் மதிப்பீடு ஆகியன போன்ற) மீள்தரவுகளையும் ஒரு தனிநபரின் வேலைகளின் தொகுப்பின் மீதான மதிப்பீட்டையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் நிரந்தர வேலையை / பதவிக் காலத்தை உறுதிப்படுத்துவதற்கு அதன் சொந்த செயல்முறையை முடிவுசெய்யும். அத்தகைய பணி நியமனங்கள் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்; ஆசிரியர்களை நிறுவனங்களுக்கிடையே இடம் மாற்ற முடியாது. ‘நிரந்தர வேலைவாய்ப்பு’ என்பது, ஒரு பணியாளர் முன்வரையறை செய்யப்பட்ட கால எல்லையின்றி ஒருபணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது. ஒரு வரையறைக் கால அல்லது தற்காலிக அல்லது ஒப்பந்த ஊழியரிடமிருந்து (இவர்கள் அனைவரும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேலைவாய்ப்பை கொண்டிருக்கின்றனர்) ஒரு நிரந்தர ஊழியர் வேறுபடுகிறார். அத்தகைய நிரந்தர ஊழியர் ஒரு வெளிப்படையான நீண்டகால பணி நியமன ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பார். அது வழக்கமாக அந்த ஊழியர் அந்த நிறுவனத்தில் ஓய்வூதிய வயதை அடையும்போது, அல்லது பணியிலிருந்து தானாக விலகும்போது, அல்லது அந்த நிறுவனத்தின் பணியிலிருந்து முறையான செயல்முறைகளின்படி நீக்கப்படும்போது முடிவடையும். கல்வி நிபுணத்துவம் மற்றும் ஆழம், கற்பித்தல் திறன்கள் மற்றும் பொதுச்சேவைக்கான மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியப் பணி நியமனம் இருக்கும். 13.1.7. ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்: அனைத்து நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கான ஒரு ‘தொடர்ச்சியான தொழில் மேம்பாட்டு’ திட்டத்தை உருவாக்கி, அதை நடைமுறைப் படுத்துவதற்கான செயல்முறையை தீர்மானிக்கும். துறைசார்ந்த திறன் மேம்பாடு, கற்பிக்கும் திறன், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இத்திட்டம் இருக்க வேண்டும். இளம் ஆசிரிய உறுப்பினர்களுக்கான ஒரு வழிகாட்டல் திட்டம் மற்றும் சுயமதிப்பீட்டை கண்காணிக்கும் திட்டம் ஆகியவற்றை நடைமுறையில் கொண்டு வருவதை நிறுவனங்கள் கருத்தில் கொள்ளலாம். இது ஆசிரியர்களை தமது சொந்த முன்னேற்றத்தையும் கற்றலையும் மதிப்பீடு செய்ய ஊக்குவிப்பதாக இருக்கும். மனிதவள மேம்பாட்டு மையங்கள் வெளிப்புற நிறுவனங்களாக இருப்பதற்குப் பதிலாக, தற்போது அவற்றுக்கு ஆதரவு வழங்கும் பல்கலைக் கழகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கான செலவினங்களை மனிதவள மேம்பாட்டுத் துறை இரண்டு தனித்தனி பகுதிகளில் வழங்கும்: (i) பல்கலைக்கழக வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மையத்துக்கும் ஊழியர்களுக்குமான நிதி மற்றும் (ii) தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி. மனிதவள மேம்பாட்டு மையங்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் அதற்காக கட்டணம் வசூலிப்பதற்கும் அனுமதிக்கப்படும். பல்வகைப்பட்ட துறைகள் கொண்ட பல்கலைக்கழகங்களுக்குள் புதிதாக வரும் மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கு நிதி அளிப்பதன் மூலம் வள மேம்பாட்டு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உயர்கல்வியில் ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டம் தொடங்கப்படும். அதன் பாடத்திட்ட கட்டமைப்பானது, நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மனிதவள மேம்பாட்டு மையங்களால் வடிவமைக்கப்படும். இந்த கட்டமைப்பை உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த, ‘தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு’ திட்டங்களை நடத்துவதற்குப் பயன்படுத்தலாம்; உயர்கல்வி நிறுவனங்கள் தமது ஆசிரியர்கள் மற்றும் பிற உறுப்பினர்களின் ‘தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு’ பயனுள்ளதாக இருப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும். (பக்கம் 15.5.2 –ஐ பார்க்கவும்) 13.1.8. புதிய ஆசிரியர்களுக்கான ஆற்றுப்படுத்தும் பயிற்சித் திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து புதிய ஆசிரியர்களும் ஆற்றுப்படுத்தும் பயிற்சித் திட்டங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது திணைக்களங்கள்/ கல்வியியல் கல்லூரிகளாலும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படலாம். நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாண்மை, திட்டங்கள் மற்றும் பாடநெறிகள், நல்ல கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் கற்பிக்கும் அணுகுமுறைகள் மற்றும் இதர விஷயங்களை இந்தத் திட்டம் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். உயர்கல்வி நிறுவன குழுவின் திறமையான பகுதியாக மாறுவதற்கு அவர்களுக்கு இது துணைபுரியும். ஒவ்வொரு புதிய ஆசிரிய உறுப்பினருக்கும் உயர்கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பதவி வகிக்கிற, முன்மாதிரியான கண்காணிப்புப் பதிவை கொண்டிருக்கிற ஆசிரிய வழிகாட்டி ஒருவர் நியமிக்கப்படலாம். 13.1.9. மூத்த கல்வியாளர்களின் வழிகாட்டல்: பல்கலைக்கழக / கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகியகால வழிகாட்டுதல் / தொழில்சார் ஆதரவு வழங்குவதற்கு விருப்பமுள்ள தலைசிறந்த மூத்த / ஓய்வுபெற்ற, குறிப்பாக இந்தியமொழிகளில் கற்பிப்பதற்கான திறனுடைய ஆசிரியர்களின் ஒரு பெரிய குழு, நிதியளிக்கப்பட்டு, நிறுவப்பட வேண்டும். குறிப்பிட்ட பாடங்களுக்கு அல்லது நிலப் பகுதிகளுக்கான சிறந்த மக்கள் குறிப்பாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் குழு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இது நாலந்தா கொள்கை மற்றும் தட்சசீலக் கொள்கை ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட முன்னெடுப்பை அவசியமாக்கும். (P 10.15ஐ பார்க்கவும்). தங்களது பாடப் பிரிவுகளுக்கான பாடத்திட்ட தேர்வுகள் செய்யவும், கல்விசார் சுதந்திரத்துடன் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம்அளிக்கப்படும். 13.1.10. ஆசிரிய மற்றும் பிற பணியாளர்களின் தொழில்துறை மற்றும் இழப்பீட்டு மேலாண்மை: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தொழில்துறை முன்னேற்றம், பதவி உயர்வுகள், ஊதியம் தீர்மானித்தல் மற்றும் தங்களது அனைத்து ஊழியர்களின் சேவைநிலைமைகள் உட்பட்ட, தங்களது மக்களை நிர்வகிக்கும் செயல்முறைகளை முடிவு செய்யும். உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தங்களது அனைத்து ஊழியர்களின் தொழிற்துறை, பதவி உயர்வு மற்றும் ஊதியம் தீர்மானித்தல் (சேவை நிபந்தனைகளும் இதில் அடங்கும்) ஆகியவற்றுக்காக, நல்ல பயன் தரக்கூடியதும் நேர்மையானதுமான செயல்முறைகளை வகுத்தமைக்கும். இந்த செயல்முறைகள் மேம்படுத்துதல், அங்கீகரித்தல் மற்றும் செயல்திறனுக்கும் பங்களிப்புக்கும் வெகுமதி அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்; இவை ‘பணிமூப்பு நிலையை’ அடிப்படையாகக் கொண்டிருக்காது. இவை நிறுவனத்தின் நிர்வாக சபையின் வெளிப்படையான ஒப்புதலுடன் வகுத்தமைக்கப்படும், இவை திறம்படவும் நேர்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த, இந்த நிர்வாக சபையும் இவற்றை மதிப்பீடு செய்து கண்காணிக்கும். (உயர்கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து) இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இந்த முடிவெடுக்கும் செயல்முறையில் சேர்க்கப்படுவார்கள். – ஊதியம் அல்லது அதன் அதிகரிப்பு, அல்லது பதவிஉயர்வு, அல்லது தொழில்துறை முன்னேற்றத்துக்கான பிற நடவடிக்கைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு, தனிநபர் பங்களிப்பு, செயல்திறன் மற்றும் திறமை ஆகியவற்றைப் பற்றி இவர்கள் அறிந்திருக்க வேண்டும். செயல்முறைகளின் மூலமான பங்களிப்புகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மதிப்பீடானது, நிறுவனத்தின் இலக்குகளிலிருந்து பெறப்படுபவதும், நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள, சம்பந்தப்பட்ட துறையிலான சிறப்பான நடவடிக்கைகள் மூலம் தெரிவிக்கப்படுவதுமான, தனிநபர்களுக்காக வகுத்தமைக்கப்படும் பணிஇலக்குகள் மற்றும் குறிக்கோள்களின் சூழலில் அமையும். இந்த மதிப்பாய்வானது, கற்பித்தல், ஆராய்ச்சி, பயிற்சி (எ.கா. பயிற்சி செய்யும் தொழில் நெறிஞர்களோடு உள்ள ஈடுபாடு, முதியோர் கல்வி, சமூகசேவை, கள தலையீட்டு திட்டங்கள்), நிறுவன மேம்பாடு (எ.கா. கல்விசார்/ நிர்வாக குழுக்களில் பணியாற்றுவது, மாணவர் ஆதரவு) ஆகியவற்றின் மீதான 360 டிகிரி கோண அளவிலான (மேற்பார்வையாளர், சக மாணவர் மற்றும் மாணவர் மதிப்புரை ஆகிய) கருத்துகளையும், அந்த உயர்கல்வி நிறுவனம் தீர்மானிக்கும் பிற பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த அளவுருக்கள் ஒவ்வொன்றிற்குமான ஒப்பீட்டளவிலான பலம் என்பது, பல்வேறு வகையான நிறுவனங்களின் (வகை 1, 2 மற்றும் 3) கவன மையத்தைப் பொறுத்து, நிறுவனங்களுக்கிடையே மாறுபடும். ஆராய்ச்சியின் மீதான மதிப்பாய்வு வேலையின் தரம் கடுமையாக மதிப்பீடு செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இது வெளியிடப்பட்ட சுவடிகளின் எண்ணிக்கைகளால் மட்டுமே வழிநடத்தப்படுவதில்லை. (பத்திரிகைகள்போன்ற) வெளியீட்டுத் தளங்களின் மீதான நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரைப் பற்றி குறிப்பாக கவனமாக இருப்பதோடு, குறைவான தரத்துக்கு (இவற்றில் சில ’போலியானதாக’வும் இருப்பதால்) எந்த நம்பகத்தன்மையும் வழங்கப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது. கல்விசார் ஊழியர்கள் மூன்று நிலைகளில் இருப்பார்கள் - உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் பேராசிரியர் – முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிப்பட்ட ஆசிரிய உறுப்பினர்களின் மீதான மதிப்பாய்வைப் பொறுத்து இந்த நிலைகளுக்கிடையே பதவி உயர்வுகள் நிகழலாம். இந்த நிலைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு பரந்துபட்ட ஊதிய வேறுபாட்டு வரம்புகள் இருக்கும். இவை சில நிலைகளுக்கிடையே பகுதியொத்திருப்பதாக இருக்கும். பணியாளர் நியமனங்களின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் நிலைகளை உயர்கல்வி நிறுவனம் தீர்மானிக்கலாம். பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட, அவர்களின் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய அளவுகளையும் அதன் அதிகரிப்புகளையும் வகுத்தமைக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். ​​ உயர்கல்வி நிறுவனங்கள் அவர்களது பணியாளர்களின் ஊதியத்தை தற்போது வழக்கத்திலுள்ள நிலைகளிலிருந்து குறைக்கவோ அல்லது அதேபோன்ற பணிகளுக்கு புதிய பணியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கவோ கூடாது. எனினும், எதிர்கால ஊதிய அதிகரிப்பு குறித்த நிர்ணயங்கள் என்பது உயர்கல்வி நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமையாகும். எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் இந்தச் செயல்முறையை நிர்ணயிப்பதில் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கோ அல்லது (அங்கீகாரம் உள்ளிட்ட) ஒழுங்குமுறை செயல்முறைகளுக்கோ எந்தவொரு பங்கும் இருக்காது, உயர்கல்வி நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு நடைமுறைகளை இந்த செயல்முறை வரையறுத்துள்ளதன்படியே அவர்கள் மதிப்பீடு செய்வார்கள். 13.1.11. ஆசிரியர்களை பணிக்கு எடுத்தல் மற்றும் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஊதிய மேலாண்மை ஆகியவை ‘நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இருக்கவேண்டும்: பணிக்கு எடுக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையிலிருந்து, பணிக்கு ஆள் எடுக்கும் அளவுகோல்கள் மற்றும் செயல்முறைகள், தொழில்முறை முன்னேற்றம் மற்றும் ஊதிய நிர்ணயம் ஆகியவை வரையிலுமான ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் நிர்வாக சபைக்கு சொந்தமானதாகவும் இருக்கும். பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட, உயர்கல்வி நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களையும் சீரமைக்கும் பிரதான வழிமுறையாக நிறுவன மேம்பாட்டுத் திட்டம் இருப்பதால், இந்த மக்கள் செயல்முறைகள் அனைத்துக்கும் அது அப்படியே பயன்படுத்தப்படும். இது நீண்டகால அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொது நிர்வாக அமைப்பு / நிதியளிப்பு நிறுவனத்திடமிருந்து போதுமான நிதியுதவியை உறுதி செய்வதை உள்ளடக்கியதாக இருக்கும், உயர்கல்வி நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களின் ஊதியம் உட்பட்ட அவர்கள் தொடர்பான அனைத்து செலவினங்களுக்கும் இது உதவும். 2030 அளவில், பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட்ட, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தங்களுடைய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கிணங்க, தமது மக்கள் வளங்களை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் இயலும் வகையில், இந்த எல்லா விஷயங்களிலும் அதிகாரம் பெற்றிருக்கும். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் நோக்கம்: நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி புலங்களிலும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்; அதிலும் குறிப்பாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு வித்திடுதல்; சககுழு மறுமதிப்பீட்டு முறையில் நிதியுதவி அளித்து, வழிகாட்டி ஆராய்ச்சிக்கு உகந்த சுற்றுச் சூழலை உருவாக்குதல். அறிவு உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய இவை இரண்டும் நம் நாட்டின் நீடித்த, நிலைத்த, துடிப்பான பொருளாதார வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் மேலும் நாட்டை தொடர்ந்து எழுச்சியூட்டி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும் முக்கிய கருப்பொருளாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் வரலாற்றில் காணப்படும் பண்டைய வளமான நாகரிக சமுதாயங்களான இந்தியா, மெசபட்டோமியா, எகிப்து, சீனா, கிரேக்கம் தொடங்கி நவீன நாகரிக சமூகமாகப் பேசப்படும் அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் முதலாக உள்ள அனைத்து நாகரிக வளர்ச்சியும் ‘புதிய அறிவுத் தேடல்’ மற்றும் அதனை கொண்டாடுவதன் மூலமாகவே தமது அறிவுச்செல்வம் மற்றும் பொருட் செல்வங்களை பெருவாரியாக அடைந்தன. இந்த ‘புதிய அறிவுத் தேடல்’ அறிவியல் உலகில் மட்டும் இல்லாமல் கலை, மொழி மற்றும் இலக்கியம் ஆகிய அனைத்து துறைகளிலும் இருந்தது. அது அவர்களுடைய நாகரிக வளர்ச்சிக்கு உதவியதோடு மட்டும் அல்லாமல் உலகம் முழுமைக்கும் உதவியாகவும் இருந்தது. இன்றைய உலகில் நிகழ்ந்து வரும் விரைவான மாற்றங்களை, உதாரணமாக, காலநிலை மாற்றங்கள், மாறிவரும் மக்கள் தொகை மற்றும் அதன் மேலாண்மை, உயிரித் தொழில்நுட்பம், இணைய சந்தை, செயற்கை அறிவாற்றல் போன்றவற்றைப் பார்க்கும்போது ‘ஆராய்ச்சிக்கான வலுவான சூழல்’ தேவைப்படுவதன் முக்கியத்துவம் விளங்குகிறது. மேலும் இந்தியா முற்றிலும் வேறுபட்ட துறைகளில் தலைமைத்துவம் பெற்ற, திறமை வாய்ந்த தனது மனித வளத்தின் முழுப் பயனையும் ஒன்று திரட்டி, எதிர்வரும் காலங்களில் ‘அறிவார்ந்த சமுதாயமாக’ முன்னணியில் வரவேண்டுமாயின், அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிடுதல் (முக்கியமாக தேவைப்படுகிறது) முக்கியத்துவம் பெறுகிறது. நம் நாட்டில் முன்பு எப்போதும் இருந்ததை காட்டிலும் தற்போதைய காலகட்டத்தில் ஆராய்ச்சி என்பது பொருளாதாரம், அறிவுசார் சமூகம், சுற்றுச் சூழல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகிறது. வளருகின்ற, நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு பெரிய துடிப்பான சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மையமாக திகழும் ஆராய்ச்சி மற்றும் புதுமை மேலே கூறப்பட்டுள்ள அவதானிப்புகள் அனைத்தும் உலகெங்கிலும் இருந்து சமீபத்தில் கிடைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக ஐரோப்பிய தொழிற் சங்கங்கள் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட “ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் தாக்கத்திற்கான பொருளாதாரக் காரணிகள்” என பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 1995 முதல் 2007 வரை ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியின் மூன்றில் இரண்டு பங்கு ஆல்புக மூலமாக வந்தது என்றும், மேலும் 2000 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை ஐரோப்பாவின் உற்பத்தி லாபத்தில் 15% அசபுக மூலமாகவே கிடைத்தது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஓர் ஆண்டிற்கான அசபுக முதலீடை 0.2% உயர்த்தும் போது அதன் மூலமாக 1.1% மொத்த உள்நாட்டு உற்பத்தி (றூம்P) உயர்கிறது. ஐந்து மடங்காக திரும்பக் கிடைக்கிறது என்ற தகவலும் பெறப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் உள்ளிட்ட உலகின் பிற நாடுகளும் மேலே குறிப்பிட்டது போலவே தங்களது பொருளாதார வளர்ச்சியில் அசபுக-வில் செய்யப்படும் முதலீடு முக்கியத்துவம் பெறுவதாக கூறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வளர்ந்த / வளரும் நாடுகளின் ஆசபுக மீதான முதலீடுகளுக்கும் அந்நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அதன் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரியவருகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலீடு என்பது ஆண்டு தோறும் உயர்த்தப்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த பத்து ஆண்டகளாக அம்முதலீடு குறைந்தும் உள்ளது. 2008 ஆம் அண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.84% ஆக இருந்த முதலீடு 2014 ஆம் ஆண்டு 0.69% ஆக குறைந்துள்ளது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அசபுக-இன் முதலீட்டு விகிதாசாரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அமெரிக்க முக்கிய மாநிலங்கள் (2.8%), சீனா (2.17%), இஸ்ரேல் (4.3%) மற்றும் தென் கொரியா (4.2%) என்ற விகிதாசாரத்தில் உள்ளது. அதாவது இந்நாடுகள் அனைத்துமே தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் மூன்று மடங்கு ஆசபுகவில் முதலீடு செய்துள்ளன. தற்போது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து முதலீடு செய்யப்படுகின்ற குறைந்த சதவிகித அளவே நம் நாட்டில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. நம் நாட்டு மொத்த மக்கள் தொகையில் லட்சத்திற்கு 15 பேர் மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுவே சீனாவில் இலட்சத்திற்கு 11 பேரும், அமெரிக்காவில் 423 பேரும், இஸ்ரேலில் 825 பேரும் ஆராய்ச்சியாளர்களாக வெளிவருகின்றனர். (இந்திய பொருளாதாரக் கணக்கெடுப்பு 2016-17). இதன் நேரடி பாதிப்பாக காப்புரிமை மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது. உலக அறிவுசார் சொத்து (நிலிrயிd ணூஐமிeயியிeஉமிற்rயி ஸ்ரீrலிஸ்ரீerமிதீ லிrஆழிஐஷ்விழிமிஷ்லிஐ (நிணூPநு)) நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி சீனா இதுவரை 13,38,503 காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. இதில் 10% மட்டுமே வெளிநாடு வாழ் சீனர்கள் ஆவர். இதே போல் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் 6,65,571 காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து வெறும் 45,057 காப்புரிமை விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் 70% விண்ணப்பங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டுரை வெளியீடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா சிறப்பான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. அறிவியல் சார் வெளியிடுகளில் நிலையான வளர்ச்சி உள்ளது. 2009-ல் 3.1%-ல் இருந்து 2013 ஆம் ஆண்டு வெளியீடுகளின் எண்ணிக்கை 4.4% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனம், அறக்கட்டளை 2019 ஆம் அண்டு தொகுத்த ‘அறிவியல் மற்றும் பொறியியல் குறியீட்டின்‘படி சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே 2016 ஆம் ஆண்டே இந்தியாவை விட நான்கு மடங்கு அதிக கட்டுரைகளை வெளியிட்டுள்ளன என்பது தெரியவருகிறது. தேசிய அளவில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் கலாச்சார ஊடுருவலின் முக்கியத்துவம். தற்போது இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள தலையாய சவால்களான தனது ஒவ்வொரு குடிமக்களுக்கும் தூய்மையான, சுகாதாரமான குடிநீர் கிடைக்கச் செய்தல், தூய்மையான காற்று, தங்குதடையில்லா ஆற்றல், தரமான கல்வி மற்றும் மருத்துவம், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி மற்றும் சரியான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய இவை அனைத்திற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அணுகி, அவற்றுக்கு தீர்வு காணுதல் வேண்டும். மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தீர்வுகாண உயர்தர ஆய்வுகள் பல்வேறு துறைகளிலும் செய்யப்பட வேண்டும் அதுவும் அவ்வாய்வுகள் நம் மண்ணிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடுகளின் ஆராய்ச்சி முடிவுகளை வெறுமனே இறக்குமதி செய்யும் நடைமுறை இனி பயனளிக்காது. ஒரு நாடு தமக்கு வேண்டிய ஆராய்ச்சிகளை தாமே மேற்கொள்ளும் திறன் பெற்றிருக்குமாயின் அந்நாட்டு மற்றவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை தமக்கு தேவையானவாறு உட்கிரகிக்கும் வல்லமையும் பெற்றிருக்கும். ஒரு நாட்டின் தனித்துவம் வளர்ச்சி, உயர்வு படைப்பாற்றல், ஆன்மீக மற்றும் அறிவுசார் தேவைகள் என்பன அந்நாட்டின் வரலாறு, கலை, மொழி மற்றும் கலாச்சாரத்தை பெரிதும் சார்ந்து இருக்கிறது. ஆராய்ச்சிகளின் தேவை சமூக பிரச்சனைகளுக்க தீர்வு காண்பதோடு நின்றுவிடுவதில்லை. கலை மற்றும் மனித நேயத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளோடு, அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் செய்யப்படும் கண்டுபிடிப்புகள் கைகோர்த்து செல்லும்போது நமது நாடு ஞானத்தில் சிறந்து முன்னேற்றம் கண்ட நாடாக திகழும். உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு வலுவான ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கல் கலாச்சாரப் பின்புலத்தில் இருக்கும் உயர் கல்வி கற்றல் -கற்பித்தல் நிகழும் என்பது உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது தெரியவரும் உண்மையாகும். அதாவது, உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் பல்துறை பல்கலைக்கழக அமைப்பிலேயே நிகழ்கிறது. இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் ஆராய்ச்சிகளையும் அதன் மூலமாக பெறப்படும் புதிய கண்டுபிடிப்புகளையும் சரியான கண்ணோட்டத்தோடு ஊக்குவிக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருக்கும். இந்தியா ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தில் நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்ட நாடாகும். ஏறத்தாழ அனைத்து துறைகளிலும், அதாவது அறிவியல் முதல் கணிதவியல் வரை, கலை முதல் இலக்கியம் வரை, ஒலிப்பியல் முதல் மொழியியல் வரை, மருத்துவம் முதல் விவசாயம் வரை என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது. அவ்வரலாற்று பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் காலகட்டம் தற்போது வந்துள்ளது. இந்த 21ம் நூற்றாண்டில் தனது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலமாக ஒரு வலுவான அறிவார்ந்த சமுதாயத்தை பெற்ற, பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்றளவில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் உள்ள தடைகள் என்னென்ன? தற்போது இந்தியாவில் ஆராயச்சிகள் மேற்கொள்வதில் நிறைய முட்டுக்கட்டைகள் உள்ளன. அதன் விளைவாக புதுமைகள் படைக்கும் தாகத்தோடு உள்ள பல இந்தியர்கள் வாய்ப்புகளை தேடி நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இன்னும் பலர் தமது திறமைக்கு சற்றும் தொடர்பில்லாத / திறமைக்கு தீனிபோடும் வாய்ப்பில்லாத ஏதோ ஒருவேலையில் சேர்ந்துவிடுகின்றனர். ஆராய்ச்சி மற்றும் புதியன படைத்தலில் உள்ள தடைகளை தகர்ப்பது என்பது நம் நாட்டிலேயே செய்யப்படும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் நம் நாட்டின் திறமைகளை நாமே தக்கவைத்துக் கொள்ளவும் ஒரு திறவுகோலாக இருக்கும். துடிப்பான ஆராய்ச்சி சுற்றுச் சூழலை அடைவதன் மூலமாக நம் நாடு தற்சமயம் எதிர் கொண்டுள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார வளர்சசி பெற்ற, அறிவு மற்றும் பொருட் செல்வங்கள் பல்கி பெருகும் நாடாகவும் திகழும். தற்சமயம் இந்தியாவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் உள்ள முதன்மையான தடைகள் நிதி பற்றாக்குறை: ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவித்து ஆதரவு அளிக்கும் வகையில் நிதி ஆதாரம் அரசிடமிருந்தோ அல்லது தனியாரிடமிருந்தோ கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய பின்னடைவாகும். ஆராய்ச்சியற்ற கலாச்சாரம் மற்றும் மனப்பான்மை: ஆராய்ச்சி மற்றும் புதுமை படைத்தலின் பெருமையை உணராமல் இருப்பதுவும் ஊக்குவிப்பு இல்லாமையும் இளைஞர்கள் ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் இருக்க காரணங்களாகும். திறமை வாய்ந்த மாணவர்கள் அரிதிலும் அரிதாகவே தமக்கு விருப்பமான துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தமது பெற்றோர்களாலும் சமூகத்தாலும் ஊக்குவிக்கப்படுகின்றனர். (தூய) அறிவியல் துறையிலோ அதனினும் அரிதாக மனித நேயம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடவோ மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. அனைத்து மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான பாடங்களிலோ அல்லது தான் மிகவும் திறமை பெற்ற துறைகளிலோ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுமேயாயின் அது அவர்களுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கே நன்மை பயக்கும். தற்போதைய சூழ்நிலையில் கல்வியில் சிறந்து விளங்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தனிநபரின் முழு ஆற்றலையும் திறனையும் ஆர்வத்தையும் ஊக்குவிப்பதன் மூலமாக ஒரு துடிப்பான அறிவு மற்றும் ஆராய்ச்சி கலாச்சாரத்தை மறுகட்டமைப்பு செய்திட வேண்டும். ஆராய்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாத பல்கலைக் கழகங்கள்: மேலே கூறிய இரணடு தடைகளைத் தாண்டி வந்த போதும், பெரும்பாலான மாணவர்கள் (சுமார் 93%) பயிலும் மாநில பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான தகுதியற்றவையாக இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. துரதிஷ்டவசமாக தற்போது இந்தியாவில் இளங்கலை மாணவர்கள் பயிலும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கான வித்திட்டு, மேலாண்மை செய்து, நிதியுதவி செய்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான திறன் அற்றவைகளாகவே உள்ளன. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் கற்பித்தலும். ஆராய்ச்சிகளும் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டது. அதன்படி ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கென்றே அதிக நிதி ஒதுக்கீட்டில் தனி ஆராய்ச்சி நிறுவனங்களும், அதேசமயம் பல்கலைக்கழங்கள் வெறும் கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது. நாடடை பெரிதும் பாதித்தது. அதேசமயம் நம் நாட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சொற்ப அளவே இருந்த அறிஞர்களும் கூட தாம் பெற்ற அறிவை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவோ அல்லது அறிவை கடத்தவோ முடியாத நிலையிலேயே இருந்தனர். இவ்வாறு கற்பித்தலையும் ஆராய்ச்சியையும் தனித்தனியே பிரித்து வைத்துள்ள முறையை நிறுத்தி அதனால் ஏற்பட்ட விளைவுகளை திருத்துவதற்கான கருத்தொருமித்த முயற்சிகள் எடுப்பது அவசியமாகிறது. தற்போது ஆராய்ச்சிக்கான திறன் இல்லாமல் இருக்கும் நாட்டில் உயர்கல்வி தகவல் அமைப்பில் ஆராய்ச்சிக்கான வித்திட்டு, வளர்த்து, ஆதரவு தந்து உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்குவதன் மூலமாக நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இடையூறுகளை களைந்து வாய்ப்புகளை கணிசமாக விரிவுபடுத்துதல். இந்தியாவில் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் ஒரு விரிவான அணுகுமுறையை இக்கொள்கை தனது கண்ணோட்டமாக கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வி என்பது விளையாட்டு மற்றும் கண்டறியும் முறையில் மாற்றி அமைப்பது. அறிவியல் முறை, உயர் சிந்தனையை வளர்த்தல், தொழில் ஆலோசனை வழங்குதல் போன்ற அணுகுமுறைகளுக்கு முக்கியத்துவம் தந்து மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி திறன்களைக் கண்டறிதல். உயர் கல்வி முறையை மறுகட்டமைப்பு செய்தல். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், உயர்கல்வி தகவல் அமைப்பை பல்துறை மயமாக்குதல், கல்வியை தாராளமயமாக்குதல், இளநிலைக் கலைத்திட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் உள்ளகப் பயிற்சிகளை கொண்டுவருதல், ஆசிரிய தொழில் மேலாண்மை அமைப்பில் கணிசமான அளவு ஆராய்ச்சிகளை சேர்த்தல், கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமாக ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் தன்னாட்சி மற்றும் புதுமைகள் படைக்கும் திறனையும் மேம்படுத்துதல். மேலே கூறப்பட்ட அனைத்து அணுகுமுறைகளும் ஒரு நாட்டின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றை பற்றி இக்கொள்கையின் மற்ற பகுதிகளில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலே கண்ட அனைத்துக் கூறுகளையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டமைப்பதன் மூலமாக நம் நாட்டில் தரமான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தி துரிதமாக வளர வழிவகை செய்யும் கனவோடு இக்கல்விக் கொள்கை ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவப் பரிந்துரைக்கிறது. எனவே நம் நாடடின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி கலாச்சாரத்தை உருவாக்குவதே இத் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது. நாட்டில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் உள்ள தடைகளை நீக்குவதே தே.ஆ.அ (ஹியூய்)-ன் முக்கிய நோக்கமாகும். அதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த தகுதி அடிப்படையிலான சகா குழு ஆய்வின் மூலமாக நிதி உதவி எற்பாடு செய்தல், ஊக்கத்தொகைகள் மற்றும் மிக சிறப்பான ஆராய்ச்சிகக்கு அங்கீகாரம் வழங்கி நாட்டில் ஆராய்ச்சி செய்வதற்கான சூழலை உருவாக்குதல், தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் அற்ற மாநில பல்கலைக்கழகங்கள், இன்னும் பிற அரசு நிறுவனங்கள் அனைத்திலும் ஆராய்ச்சிக்கான வித்திட்டு வளர்ச்சியடைய செய்யும் மிகப்பெரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளுதல். வெற்றியடைந்த ஆராய்ச்சிகள் அங்கீகரிக்கப்பட்டு அதுமட்டுமல்லாமல் அவை ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில் அரசு மகமைகள் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் / தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்தி அந்த ஆராய்ச்சி முடிவுகள் செயல்படுத்தப்படும். தே.ஆ.அ.வின் அடிப்படைச் செயல்பாடுகள் - பல்வேறு இடங்களில் இருந்து நிதி ஆதாரங்களை திரட்டுதல். அனைத்து வகையான, அனைத்து துறைகளில் இருந்தும் சகா குழு ஆய்வின் மூலமாக நிதி திட்டங்களை வரவேற்று நிதியை பெற்றுத் தருதல். - ஆராய்ச்சி என்பது இன்றும் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கும் நம் நாட்டின் கல்விசார் நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிக்கான வித்திட்டு, வளர்த்து, ஊக்கமளிக்க வேண்டும். அதற்காக இக்கல்வி நிறுவனங்களை நாடெங்கிலும் உள்ள மிகத் தகுதிவாய்ந்த ஆராய்ச்சி அறிஞர்களை வழிகாட்டிகளாக பயன்படுத்துதல், திறமைவாய்ந்த இளம் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்ளுதல், மேலும் அந்நிறுவனங்களில் தற்போது உள்ள தரமான திட்டங்களை அங்கீகரித்து மேலும் வலுப்படுத்துதல். - தொடர்புடைய அரசின் அனைத்து கிளைகள் மற்றும் தொழிற்சாலைகளோடு ஆராய்ச்சியாளர்களை இணைத்தல். தொடர்ந்து தொடர்பில் இருக்கும்போது நாட்டின் மிக முக்கிய தற்போதைய தேவைகள் பற்றிய விழிப்புணர்வு ஆராய்ச்சி அறிஞர்களுக்கு இருக்கும். இதன் மூலமாக நாட்டின் சமீபத்திய ஆராய்ச்சியின் மிக முக்கிய கண்டுபிடிப்புகள், திருப்புமுனைகள் பற்றிய தகவல்கள் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தங்கு தடையின்றி சென்று சேரும். - இந்தத் திருப்புமுனைகள் நாட்டின் கொள்கை முடிவுகளில் பிரதிபலிப்பதோடு செயல்வடிவம் பெற்று நாட்டிற்கு பயன்படும். - தனித்தனி சிறப்பு தன்மை வாய்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் தே.ஆ.ஆ. நிதியுதவி /வழிகாட்டுதலின் மூலம் பெற்ற முன்னேற்றங்கள் அனைத்து பாடப்பிரிவுகளிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். சிறப்பு கருத்தரங்குகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஆராய்ச்சியாளர்களையும் அங்கீகரிக்க வேண்டும். தற்போது துரதிஷ்டவசமாக ஆராய்ச்சி தொடர்பாக மேலே கூறப்பட்ட கருத்துகள் குறித்து சிந்திப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகள் எவையும் இல்லை. அவ்வாறான ஒரு அமைப்பாக செயல்படுவதே புதிய மற்றும் விரிவான தே.ஆ.அ-வின் பிரதான நோக்கமாகும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நாடு முழுவதும் ஆராய்ச்சி மற்றும் புதிய படைப்புகளை ஊக்குவித்து விரிவடையச் செய்யும். 14.1. ஒரு புதிய தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல். 14.1.1. ஒரு புதிய தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்படுதல்: ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நிதி வழங்குதல், வழிகாட்டுதல், ஊக்குவித்து அனைத்து பாடப்பிரிவுகளிலும் துறைகளிலும் தகுதிகளை உயர்த்துதல். இவற்றை செய்வதற்கான இந்திய அரசின் ஒரு தன்னாட்சி அமைப்பாக புதிய தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட வேண்டும். இதற்கான சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும். தொடக்க கட்டமாக அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சிக்கான ஆயத்தங்களை செய்தல். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்தல். இவற்றின் மூலமாக இவ்வறக்கட்டளையின் குறிக்கோளை அடைதல். 14.1.2. பணியின் நோக்கம்: தே.ஆ.அ.வில் நான்கு முக்கிய பிரிவுகள் இருக்கும். அவை அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் என்பவையாகும். இப்பிரிவுகளைத் தவிர தேவைகளின் அடிப்படையில் சுகாதாரம், வேளாண்மை, சுற்றுச் சூழல் போன்ற துறைகளையும் நிர்வாகக் குழு தீர்மானித்து சேர்த்துக் கொள்ளலாம். தே.ஆ.ஆ. அனைத்து கல்வி சார்ந்த துறைகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி தரும். மருத்துவத் துறையில் துவங்கி, இயற்பியல், வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு, கல்வியில் மீ நுண் அறிவியல் (ஹிழிஐலிவிஉஷ்eஐஉe) சமூகவியல், தொல்லியல் கலை, வரலாறு மற்றும் இலக்கியம் என அனைத்தும் இதில் அடங்கும். அதேசமயம் தே.ஆ.அ. சில குறிப்பிட்ட நேரங்களில் நாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளவும் நிதி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் தே.ஆ.அ. எப்போதும் பாதுகாப்பு தொடர்பான அல்லது மிகவும் உணர்ச்சிகரமான (றீeஐஉஷ்மிஷ்ஸe) விஷயங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு நேரடியாக நிதி வழங்காது. தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதிஉதவி அளிப்பதோடு கூட தே.ஆ.அ. குறிப்பிட்ட சில துறைகளில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இயங்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் நிதியுதவி அளித்தல். அந்நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தல், ஆராய்ச்சிக்கு வழிகாட்டிகள், முனைவர்கள், முனைவர் பட்டம் பெறவிருக்கும் மாணவர்கள் என பல வல்லுநர்களை வரவழைத்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான சூழ்நிலையை செழுமைப்படுத்துதல். தற்போது இதுபோன்ற வசதி வாய்ப்புகள் கல்வி நிறுவனங்களில் மிகக் குறைந்த அளவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கிறது. தே.ஆ.அ. அதன் ஆட்சிக் குழுமத்தின் மூலமாக அரசிற்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்படும். அதன் மூலமாக நாடடில் தற்சமயம் மிக உச்சத்தில் உள்ள பிரச்சனைகளான தூய்மையான குடிநீர், சுகாதாரம், ஆற்றல் பெருக்கல் போன்றவற்றை போன்றவற்றை நன்கு புரிந்து ஆராய்ச்சியாளர்கள் செயல்படுவதை உறுதி செய்தல். அவ்வாறு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை சிறந்த முறையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசின் கொள்கைகள் வாயிலாக செயல்படுத்துதல். இறுதியாக தே.ஆ.அ. தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி முன்னேற்றங்களை (குறிப்பாக தே.ஆ.அ. நிதியுதவி செய்யாத ஆராய்ச்சிகள்) அங்கீகரித்தல் தே.ஆ.அ. விருதுகள் வழங்கியும், தேசிய கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தும் இவற்றின் மூலமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான வித்திட்டு வளரச் செய்தல். அனைத்து திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள், அதனோடு ஆண்டு வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள், ஆராய்ச்சியின் தற்போதைய முன்னேற்றம் குறித்த தகவல்கள், ஆராய்ச்சியின் முடிவுகள் இவை அனைத்தும் தே.ஆ.அ. ன் இணையதளத்தில் சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும். 14.1.3. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிதி ஆதாரம். தே.ஆ.அ.க்கு ஆண்டு ஒதுக்கீடாக சுமார் ரூபாய். 20,000 கோடிகள் வழங்கப்படும். (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% ஆகும்.) மேலும் தன்னுடைய நிதி நிர்வாகம், ஆட்சி நிர்வாக விதிமுறைகள் மற்றும் தங்களுக்கான சட்ட திட்டங்களை தாமே வகுத்துக் கொள்ளும் தன்னாட்சி நிறுவனமாகவும் இது விளங்கும். நாடு முழுவதும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு செயல்பாடுகளுக்கான ஆரம்பகட்ட நிதியான ஆராய்ச்சியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தன்மையை பொறுத்து அடுத்த பத்தாண்டுகளில் சிறிது சிறிதாக உயர்த்தி வழங்கப்படும். ஆரம்கட்ட நிதி செலவிடப்படாமல் ஏதேனும் மீதம் இருக்குமாயின் அதனை ‘நிதி மூலதனமாக’ மாற்றுதல்; அந்த மூலதனத்தை சிறப்பாகக் கையாண்டு அபாயம் இல்லாமல் லாபகரமாக பயன்படுத்துதல். 14.1.4. ஆட்சிக் குழுமம் தே.ஆ.அ-வின் ஆட்சிக் குழுமம் அந்தந்த துறைகளில் முன்னணியில் உள்ள தலைசிறந்த கல்வியாளர்களையும், ஆராய்ச்சி வல்லுநர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இக்குழுமத்தை யூறீபு (யூழிவிஜுமிrஷ்தீழிறீஜுஷ்வவிஜுதீழிபுதீலிஆஜு) கட்டமைக்கும். 14.1.5. பிரதேச சபை: தே.ஆ.அ.வின் நான்கு பிரிவுகளான அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல் மற்றும் கலை மற்றும் மனிதநேயம். ஆகிய ஒவ்வொரு பிரிவிற்குமான பிரதேச சபை அமைக்கப்படும். இச்சபைகளில் தேவையான எண்ணிக்கையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தகுதியும் திறமையும் மிக்க துறை வல்லுனர்கள் பணியமர்த்தப்படுவர். இந்த பிரதேச சபை மற்றும் ஆட்சிக் குழுமம் தே.ஆ.அ-வின் பணிகள் தொடர்வதற்கான ஒரு உயர்தர அளவுகோலாக விளங்கும். தே.ஆ.அ-வின் ஒவ்வொரு பிரிவிற்குமான பிரதேச சபை ஆட்சிக் குழுமத்தால் கட்டமைக்கப்படும். இப்பிரதேச சபை உறுப்பினர்கள் தத்தம் பிரிவில் ஒரு தொலைநோக்கு பார்வையோடு நிதிகள் பெறுதல் மற்றும் பயனுறு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான வேலைகளை முன்னெடுப்பர். ஒவ்வொறு பிரதேச சபையின் தலைவராக ஆட்சிக் குழும உறுப்பினரே இருப்பார். 14.1.6. பாட வாரியான குழுக்கள் மற்ற தலைவர்கள் ஒவ்வொரு பிரதேச சபையும் தன்வசம் உள்ள ஆய்வுத் திட்டங்களை முறையாகக் கையாள ஏதுவாக பாட வாரியான உட்பிரிவுகளாக பிரித்து அமைக்கப்பட்டிருக்கும். பிரதேச சபை ஒவ்வொரு பாடத்திற்கும் அந்தந்தத் துறைகளில் பரந்த அறிவும் அனுபவமும் பெற்ற சகாக்களைக் கொண்டு வலிமை பொருந்திய ‘பாடக் குழுக்களை’ கட்டமைக்கும். (அ) துறைகளுக்கு இடையே பயனுறு புலன்களில் கணிசமான அளவில் ஆராய்ச்சிகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட ஒன்றிணைந்த பாடக் குழுக்கள் அமைத்தல். இவற்றுள் சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை இன்னும் சிலவும் அடங்கும். (இவை தனிப்பிரிவுகளாக அறிவிக்கப்படும் வரை இணைந்தே செயல்படும்). (ஆ) ஒவ்வொரு பாடக் குழுவிலும் ஒரு புகழ்வாய்ந்த நிபுணர் குழுவின் தலைவராக இருப்பார். அத்தலைவர்கள் பிரதே சபையால் நியமிக்கப்படுவர். பாடக் குழுவின் இதர உறுப்பினர்கள். குறித்து பிரதேச சபை மற்றும் இக்குழுவின் தலைவர் இணைந்து முடிவு செய்வர். (இ) ஒவ்வொரு பாடக் குழுவிலும் தோராயமாக 10 உறுப்பிணர்கள் இருப்பர். தேவையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மாறுபடலாம். ஒவ்வொரு பாடவாரியாக பெறப்பட்ட ஆய்வுத் திட்டங்களை ஆழமாக மதிப்பீடு செய்யும் நோக்கில் இக்குழு உறுப்பிணர்கள் அப்பாடத்தை ஒட்டியே தங்கள் வேலையை செய்வர். அனைத்து ஆய்வுத் திட்டங்களையும் மதிப்பீடு செய்யும் நோக்கில் பார்க்கும்போது துறை முரண்பாடுகளின்றி மற்ற துறை வல்லுனர்களும் இப்பாடப்பிரிவில் வேலை செய்யவும் வழிவகை செய்யப்படும். (ஈ) ஒவ்வொரு பாடத்திற்கும் நிதி ஒதுக்கும் அதிகாரம் பாடக்குழுவிற்கு உள்ளது. அதேபோல் ஒவ்வொரு பாடக்குழுவிற்கும், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் முறையே பிரதேச சபைக்கும், ஆட்சிக் குழுமத்திற்கும் உள்ளது. செலவு செய்யப்படாமல் ஏதேனும் தொகை இருக்குமாயின் அது சம்மந்தப்பட்ட பிரதேச சபையிடமோ / பிரிவிடமோ / தே.ஆ.அ. நிதி மூலதனத்திலோ (ளீலிrஸ்ரீற்வி) சேர்க்கப்பட வேண்டும். (உ) ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்ட ஆய்வு திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்தல், பிரதேச சபை பரிந்துரைத்த ஆய்வு திட்டத்திற்கு ஒப்புதல் தருதல், மேலும் அரசு மற்றும் தொழிற்சாலைகளில் செயல்படுத்த தகுதிவாய்ந்த ஆய்வு திட்டத்தை தேர்ந்தெடுத்தல், மேலும் சிறந்த ஆய்வு அறிக்கைக்கான விருதிற்கு பரிந்துரைத்தல் ஆகிய மேற்கூறிய அனைத்து வேலைகளையும் பாடக்குழு செய்யும். 14.1.7. நிதி ஒதுக்கீடு: நான்கு முக்கிய பிரிவுகளுக்கான நிதி ஒவ்வொரு பிரிவிற்குமான தேவையின் அடிப்படையில் ஒதுக்கப்படும். அதிலும் பொதுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆய்வகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் பொருட்டு அதிக நிதி தேவைப்படும். இருப்பினும் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகிய துறைகள் இதுவரை பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருந்தமையால் தற்போது அத்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து கூடுதலான நிதி உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கான நிதி என்பது அனைத்து நிலையிலும் கலந்தாலோசிதது ஒப்புதல் பெற்றே வழங்கப்படும். ஆட்சிக் குழுமம் பிரதேச சபையிடமும், பிரதேச சபை பாடக்குழு தலைவரிடமும் கலந்தாலோசித்தே நிதி வழங்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி தேவைகளின் அடிப்படையில் இம்முறை திருத்தி அமைக்கப்படும். அதேபோல பிரதேச சபை தன் ஆளுகைக்கு உட்பட்ட பிரிவுகளின் கீழ்வரும் பாடங்களுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்யும். மேலே குறிப்பிட்டது போல இந்த நிதி ஒதுக்கீட்டிற்கும் பாடக்குழு தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், மதிப்பீடுகள், எதிர்வரும் ஆய்வு திட்டங்கள் மற்றும் அவற்றின் தேவைகள் அனைத்தும் கருத்தில் கொள்ள வேண்டும். 14.1.8. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சிமுறை: தே.ஆ.அ-வின் ஒட்டுமொத்த பாதுகாவலராக ஆட்சிக் குழுமம் செயல்படும். மேலும் இந்த ஆட்சிக் குழுமம், பிரதேச குழு மற்றும் பாடக்குழுவோடு இணைந்து பணிபுரியும். பணிகளை மேற்பார்வையிடுவதும், தேவையானபோது பாடப்பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்வதும் இவர்களின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இவ்வாட்சிக் குழுமம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை மற்ற குழுமங்களோடும். பாடக்குழு தலைவரோடும் மேற்சொன்னவை குறித்து ஆலோசனை கூட்டங்களை ஏற்பாடு செய்யும். பிரதேசக் குழு, பாடக்குழு தலைவரோடு இணைந்து பாடக்குழுவின் செயல்பாடுகள் சிறந்த முறையில் செயல்படுவதை மேற்பார்வையிட்டு உறுதி செய்வர். ஆட்சிக் குழுமத்தின் உறுப்பினர்களுக்கான நிலையான பதவி காலம் யூறீபு வால் முடிவுசெய்யப்படும். அதேபோல் பிரதேச சபை மற்றும் பாடக்குழு உறுப்பினர்களுக்கும் நிலையான கால அடிப்படையில் பதவிக்காலம் ஆட்சிக் குழுமத்தால் முடிவு செய்யப்படும். 14.1.9. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டனை நிதியுதவி பெறுவதற்கான தகுதிகள்: அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இவை மட்டுமல்லாமல் இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலும் இருந்து வரக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தே.ஆ.அ.வின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். 14.1.10. மற்ற நிதி ஆதார நிறுவனங்கள் தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி செய்து வரும் நிறுவனங்களான. ம்றீவீ, ம்புசி, ம்யவீ, ணூளீபுயூ, ணூளீனியூ, Uறூளீ போன்றவைகளும், இவை தவிர மேலும் உள்ள தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களும் அவரவர் முன்னுரிமை மற்றும் தேவைகளின் அடிப்படையில் தொடர்ந்து நிதி வழங்குவர். உலகளவில் ஆய்வுத் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளில் இதுபோன்ற பொது மற்றும் தனியார் நிதிஆதார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்தியாவும் இம்முறையை பின்பற்றி பயனடையும். எனினும் மத்திய தே.ஆ.அ. வெளிப்படையான முறையில் நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சிக்கான வித்திட்டு நிதியுதவி வழங்கும். மேலும் சிறப்பு பொறுப்பாணை மூலமாக அனைத்து துறைகள், துறைகளுக்கிடையேயான ஆராய்ச்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் எந்த ஒரு குறுகலான பார்வையும் இல்லாமல் ஒரு வலுவான மேற்பார்வை அமைப்பின் மூலமாக, மற்ற நிறுவனங்களின் பொறுப்பாணையிலிருந்து வேறுபட்டு தரம் வாய்ந்த முக்கியமான ஆராய்ச்சிகளை நாடெங்கிலும்உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் தகுதியை இந்த தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை வளர்த்தெடுக்கும். 14.2  ஆராய்ச்சி செய்வதற்கான விண்ணப்பங்களுக்கு சகா குழு ஆய்வின் மூலம் நிதி உதவி  தேசிய ஆராய்ச்சி அமைப்பின் பிரதான வேலை எல்லா துறையிலும் சகா குழு ஆய்வின் மூலம் ஆராய்ச்சி விண்ணப்பங்களுக்கு நிதி உதவி அளிப்பதே. 14.2.1. ஆராய்ச்சி விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு/அழைப்பு: எல்லா வருடமும்,  divisional council  எல்லா துறைசார்ந்த ஆராய்ச்சி விண்ணப்பங்களுக்கு அழைப்பை பொது வெளியில் வெளியிடும். divisional council அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் பாடப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுக்கலாம், ஆனால் எல்லா விதமான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். பல துறைகளை உட்படுத்திய விண்ணப்பங்கள், 2 அல்லது 3 பாடப்பிரிவை தொடர்புபடுத்திய விண்ணப்பங்கள் முக்கியமானதாக கருதப்பட்டு வரவேற்கப்படுகிறது; ஊக்குவிக்கப்படுகிறது. தேசிய ஆராய்ச்சி அமைப்பு அனைத்து விதமான, எல்லா துறைகளையும் சார்ந்த சகா குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கும் நிதிஉதவி அளிக்கும் 14.2.2. விண்ணப்பங்கள் வகைகள்: பல வகையான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படுகிறது. அவற்றுள் சில கீழே குறிப்பிடப்படுகிறது: - ஒரு பிரதான ஆய்வாளரை கொண்டு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி செயல்திட்டம். - நிறுவனத்திற்குள் அல்லது நிறுவனங்களை தொடர்புபடுத்திய கூட்டு  செயல்திட்டங்களுக்கான ஒப்புதல். - வழிகாட்டுபவர் மற்றும் வழிகாட்டும் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் ஆரம்பகால செயல் திறன்படுத்துதல். - பெரிய அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனத்தை முன்னேற்ற திட்டமிடப்பட்ட திறன் வளர்த்தல் விண்ணப்பங்கள். - நாட்டில் செய்யப்படும் ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்துக்கான வழிகாட்டும் நோக்கத்தோடு செய்யும் குழுமங்கள் மற்றும் மாநாடுகள். - தேசிய மற்றும் சர்வ-தேசிய முக்கியத்துவம் பெற்ற வசதிகளை பற்றிய ஆராய்ச்சிகள். - தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால செயல்திட்டங்கள்/ வசதிகள்.  - ஆராய்ச்சி பற்றிய விவரிப்பு, தேவைப்படும் வளங்கள், நிதி தேவைகளோடு சேர்த்து, விண்ணப்பத்தில் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தின் விவரிப்பையும் உள்ளடங்கும், மாணவர்கள் மற்றும் முதுநிலை பணியாளர்களின் பயிற்சியோடு  சேர்த்து,  பொதுமக்களுக்கு எட்டியவை, நதிகளை சுத்திகரித்தல், வியாதிகளை ஒழிப்பது, விவசாய நிலங்களை அதிகரிப்பது, பாலின சமத்துவத்திற்கான முயற்சி எடுத்தல், பண்டையகால எழுத்துக்களையும் பொருட்களையும் பராமரித்தல், மற்றும் பல.  - ஆராய்ச்சி விண்ணப்பங்கள் பொதுவாக, 3 ஆண்டு கால செயல்திட்டமாக இருக்கும். என்றாலும் உண்மையாக நிலைத்திருக்க கூடிய மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த 5 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகால ஆராய்ச்சி விண்ணப்பங்களும் ஏற்றுகொள்ளப்படும். 14.2.3. சகா குழு மறு ஆய்வு மூலம் தரமான ஆராய்ச்சி திட்டங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நிதியளித்தல்: ஒவ்வொரு பிரிவிலும் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் அதன் அதன் பாடபிரிவுக்கு ஏற்றாற்போல் பகிர்ந்தளிக்கப்பட்டு அதிகாரபூர்வ பாடக் குழுவை சென்றடையும். அதிகாரபூர்வ பாடக்குழுக்கள் விண்ணப்பங்களின் எல்லாவிதமான நிதியுதவி தீர்மானங்களை எடுக்கும். பாடக் குழுக்கள், ஒவ்வொரு விண்ணப்பத்தின் விவரமாக எழுதப்பட்ட மறுபார்வைகள், மதிப்பீடுகள், தேவைப்படும் ஒப்பீடுகள் மற்றும் நிதியுதவிக்கான காரணிகள் அடிப்படையில் நிதியுதவி தீர்மானத்தை எடுக்கும். இதுபோன்ற மறுபார்வைகள் பாடக் குழுவே மேற்கொள்ளும், ஒருவேளை குழுவிற்குள் போதுமான நிபுணத்துவம் அல்லது திறன் இல்லையென்றால், தேவைக்கேற்ற வகையில் வேறொரு தேசிய அல்லது சர்வதேசிய வெளிநபர் மூலம் மேற்கொள்ளப்படும். நிதியுதவி முடிவுகள், எழுதப்பட்ட விமர்சனங்களின் முழு பதிவோடு சேர்ந்து, இருக்கும் divisional council ளிடம் சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பிப்பவருக்கு மதிப்புமிக்க கருத்துகள் ஆலோசனைகள் வழங்குவதற்காக, நடுவரின் பெயர் குறிப்பிடப்படாமல் மறுபார்வைகள் அனைத்தும் விண்ணப்பத்தின் எழுத்தாளருக்கும் கிடைக்கும். சகாக்களின் மறுபார்வையின் முக்கியமான அம்சம் மாற்றுக் கருத்தில்லாமை: விண்ணப்பதாரர் குழுவின் அங்கத்தினர்களின் ஒரே நிறுவனத்தின் சகாக்களாக, கூட்டுப்பணியாளராக, குடும்ப அங்கத்தினர்களாக அல்லது அவர்களுக்கு நிதி அளித்த நிறுவனமாக இருந்தால், குழு அங்கத்தினர்கள் கலந்துரையாடல் சமயத்தில் வெளிநடப்பு செய்வார்கள். அந்த சூழ்நிலையில், மறுபார்வை எழுதுவதிலும் பங்கெடுக்க மாட்டார்கள். ‘மெகா திட்டங்கள்’, அல்லது பெரிய அளவிலான வசதிகள் (அதாவது நிதியளிக்கும் வழக்கமான அளவுகளை விட அதிகமாகக் கோரியுள்ள திட்டங்கள் அல்லது மிக நீண்ட காலத்திற்கு மேல் நடத்தப்படும் திட்டங்கள் ) அதிக நன்மையாக அல்லது ஒரு அறிவுக்களஞ்சியமாக அல்லது சமுதாயத்திற்கான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால், ஒரு சிறப்பு குழு மெகா செயல்திட்டத்தை ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய அர்ப்பணிக்கப்பட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் - மற்றும் அந்த பெரிய திட்டத்திற்கு நிதி அளிக்கப்படுமேயானால், நிதி, நிர்வாக மற்றும் பிற நடைமுறை தேவைகளை - disivisonal council அமைத்து கொடுக்கும். அத்தகைய திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படவேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட divisonal council-களும் ஆளும் குழுவின் ஒப்புதலோடு சேர்த்து, இந்த சிறப்பு நிபுணர் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் 14.2.4. நிதி வழங்குவதற்கான அணுகுமுறை: அனுமதிக்கப்பட்ட நிதி ஆண்டுதோறும் வெளியிடப்படும், மற்றும் சரியான நேரத்தில், ஆராய்ச்சியாளர்கள் நிறுவனங்கள், ரசீது உட்பட்டது முன்னேற்றம் மற்றும் செலவினங்களை விவரிக்கும் ஆண்டு விரிவான அறிக்கைகள். பொருத்தமான மேல்நிலை நிர்வாகத்திற்கான பெறுமதியான நிறுவனங்களுக்கு செலவுகள் வழங்கப்படும் மானியம். தனி நிதி தணிக்கை நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளும் இருக்கும் ஆராய்ச்சிக்கான திட்டங்களை நிறுவுதல் மற்றும் ஆராய்ச்சியில் சம்பந்தப்பட்ட உள்ளார்ந்த நிச்சயமற்ற மற்றும் அபாயங்களை நியாயமான கருத்து வழங்கபடும். 14.2.5. சபைக் குழுவின் தலைவர் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு: நிதி உள்ள ஒவ்வொன்று தலைப்பின் கீழுள்ள திட்டங்களில், நிதி தொடர்பான முழுமேற்பார்வை , ஆலோசனை, முன்னேற்றம் மற்றும் நிறைவு, சபைக் குழுவின் தலைவர் மூலம், நிதியுதவித் திட்டங்களுக்கான தொடர்பு நிலையாகவும் செயல்படும் தலைவர் மற்றும் ஒவ்வொரு நிதியுதவியுடனான நிலையை பற்றிய சபைக்கு ஆண்டுதோறும் அறிக்கை அளிக்கப்படும். சபைக் குழுவின் தலைவர்கள் தன் கடமைகளை முன்னெடுக்க பொருத்தமான ஆதரவு வழங்கப்படும், எ.கா. தங்கள் வீட்டில் ஒரு நிர்வாக உதவியாளருக்கு சலுகைகள் நிறுவனம் செய்தல். 14.2.6. மதிப்பீடு மற்றும் பொறுப்புத்திறன்: NRF நாட்டில் ஆராய்ச்சி செய்ய நடப்பு நிதி மற்றும் ஆதரவு வழிமுறைகளை சீரமைப்பது மட்டுமின்றி, அது பொறுப்புணர்வான ஒரு ஆராய்ச்சி கலாச்சாரம் மற்றும் பொறுப்பான முறையில் நிதி பயன்படுத்துவது முன்மொழிவுகள் தெளிவாக இருந்தால், சிறந்த அளவுகோல்களாக இருகின்ற செயல்திட்டத்திற்கு ஆரம்ப முதலீடு வழங்கப்படும். முன்னேற்ற அறிக்கைகளாகிய நிதியின் பயன்பாட்டை, அடையப்பட்ட முடிவுகளை வெளிப்படையாக தெரிவித்து அவை எழுத்தாளர்கள் மற்றும் நிதியளிக்கும் திட்டங்களின் கீழ் வரும் ஹோஸ்ட் நிறுவனங்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்கப்படும். தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஹோஸ்ட் நிறுவனங்களின் ஆராய்ச்சி திட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதை எதிர்பார்க்கும், மற்றும் இந்த நோக்கத்திற்காக குறிப்பிட்ட அறிக்கை வழிமுறைகள் ஹோஸ்ட் நிறுவனங்கள் அமைக்கும்; NRF மேலும் அவ்வப்போது நிதி சம்பந்தமான உரிய பொறுப்புகளை உறுதிப்படுத்துவதற்கான தணிக்கை நடத்தப்படும். மதிப்பீடு ஆராய்ச்சியின் முடிவுகள் ஆண்டுதோறும் தர அளவீட்டில் நடத்தப்படும் முன்னர் குறிப்பிடப்பட்டு ஏற்றுகொள்ளப்பட்டது. (ஆராய்ச்சி உள்ளார்ந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் NRF மேலும் உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் ஆரம்ப முதலீட்டை நன்றாக கையாளக்கூடிய ஆய்வாளர்கள் மட்டுமே எதிர்காலத்தில் புதிய நிதி பெறுவார்கள். 14.2.7. ஆய்வாளர்களிடமிருந்து அறிவுசார் சொத்து: விதிமுறைப்படி சர்வதேச சிறந்த நடைமுறையின்படி, அனைத்து அறிவார்ந்த சொத்து உரிமைகள், வெளியீடுகள் மற்றும் காப்புரிமைகள் உட்பட, NRF- ஆராய்ச்சி நிதியை ஆராய்ச்சியை மேற்கொள்வோருக்கு மட்டுமே முற்றிலும் தக்கவைக்கப்படும், அரசாங்கத்திடம் கொடுக்கப்படுகின்ற (அதன் நியமிக்கப்பட்ட முகவர் உட்பட) பயன்பாடிற்கான உரிமம், நடைமுறை, அல்லது செயல்படுத்த ஆராய்ச்சி / கண்டுபிடிப்பு (அல்லது எந்தவொரு வெளியீடும்) பொது நலனுக்கு கருதி எந்தொரு உரிமமும் மற்றும் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்துதல். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான NRF நிதியுதவியை ஒரு பொதுத்துறை, தனியார் அல்லது பரம்பரையியல் நிறுவனம் வழங்கினால் (பிரிவு 14.4 ஐப் பார்க்கவும்), அந்த நிறுவனம் அரசாங்கத்துடன் சேர்ந்து, ஆராய்ச்சி மற்றும் அதன் வெளியீட்டைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை இலவசமாக பெறலாம். 14.3 - அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் திறனை உருவாக்குதல். சக குழு மேற்பார்வை செய்யப்பட்ட ஆய்வு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தலோடு சேர்த்து ஆராய்ச்சிக்கான வித்திட்டு, அதை வளர்த்து ஊக்குவிப்பதும் தே.ஆ.அ-இன் தலையாய பொறுப்பாக உள்ளது. தற்போது இந்திய கல்வி நிறுவனங்களில் இதற்கான வசதி வாய்ப்புகள் மிகக் குறைந்த அளவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சி திறன் உருவாக்கும் தே.ஆ.அ.அணுகுமுறையின் ஒரு முக்கிய அம்சமாக எற்கனவே உள்ள, ஆராய்ச்சி நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் அல்லது ஓய்வு பெற்ற திறன்மிக்க ஆராய்ச்சியாளர்களை அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிறுவப்பட உள்ள ஆராய்ச்சி மையங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருந்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவச் செய்தல்; தற்போது மாநில பல்கலைக் கழகங்களில் இயங்கிவரும் ஆராய்ச்சி மையங்களை தனிசிறப்பு வாய்ந்தனவாக மாற்ற தே.ஆ.ம.-இல் முன்னுரிமை அளிக்கப்படும். இறுதியாக முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்களோ அல்லது முனைவர் படிப்பு நிறைவு செய்த திறமைவாய்ந்த இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மேன்மேலும் உள்நாட்டில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஊக்கமளித்தல். இவையே நம் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சி திறனை உருவாக்குவதற்கான தே.ஆ.அ.-இன் முப்பரிமாண அணுகுமுறையாகும். NRF கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கு வித்திட்டு, அதை வளர்த்தெடுத்து, அதற்கான வசதிகளைச் செய்து தரும். ஆராய்ச்சியாளர்கள், அரசு, தொழில் துறை ஆகியவற்றுக்கிடையே பயனுள்ள தொடர்புகளையும் உருவாக்கித் தரும். மிகச் சிறந்த ஆய்வுகளை உரிய வகையில் அங்கீகரிக்கும். 14.3.1. மாநில பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் விதமான திட்டங்களை ஊக்குவித்தல்: மாநில பல்கலைக் கழகங்கள் மற்றுமுள்ள இதர பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகளில் தற்போது ஆராய்ச்சிகளுக்கான வசதி வாய்ப்புகள் மிகக் குறைந்த அளவே உள்ளன. இக்குறைபாட்டை களைந்து இப்பல்கலைக் கழகங்களில் / கல்லூரிகளில் ஆராய்ச்சி திறன் மேம்படுத்த பல்வேறு விதமான சிறப்புத் திட்டங்களை முன்மொழிய வேண்டியுள்ளது. (அ) ஆராய்ச்சி வழிகாட்டிகள் மூலமாக மாநில பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்கான வித்திடல்: ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் தற்போது பணியாற்றிவரும் அல்லது பணி ஓய்வு பெற்ற / பணி ஓய்வு பெற உள்ள, முக்கியமாக தற்போது ஆராய்ச்சிகளில் தீவிரமாக செயல்பட்டுவரும் ஆசிரியர்களை, ஆராய்ச்சி வழிகாட்டிகளாக மாநில பல்கலைக்கழகங்களில் பணியாற்ற செய்தல். இத்தகைய தகுதி வாய்ந்த ஆராய்ச்சி வழிகாட்டிகள் மாநில நிறுவனங்களின் முதன்மை ஆராய்ச்சியாளராக செயல்படுவர். இவர்கள் மாநில நிறுவனங்களில் உள்ள ஆசிரிய பெருமக்கள் மற்றும் துறையின் தலைவர்களோடு இணைந்து செயல்படுவர். மேலும் இவர்கள் அந்தந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியிலுள்ள ஆசிரியர்கள், புதிய ஆசிரியர்கள், மேலும் உள்ள முனைவர் பட்டம் பெற்ற மற்றும் பெற உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களின் பணி குறித்தும் புதியதாக அமைய உள்ள ஆராய்ச்சி மையத்தில் அவர்களுடைய பங்கேற்பு குறித்தும் ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து தே.ஆ.ஆ.யிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கூறிய இத்திட்டத் தயாரிப்பின்போது புதிய ஆராய்ச்சி வழிகாட்டிகளை ஒருங்கிணைத்து ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக முதன்மை ஆராய்ச்சியாளரோடு இணைந்து பல்கலைக்கழக முக்கிய நிர்வாகியும் இருப்பார். ஆரம்பக் கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 3-5 வருடங்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டிகளுக்கான ஊதியம் வழங்கப்படும், (ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்கு வரவேண்டிய அசல் ஊதியம் கிடைக்கப் பெறும் வகையில் ஓய்வூதியத்தோடு சேர்த்து மீதமும் ஊதியமாக வழங்கப்படும்) மேலும் ஆராய்ச்சி திட்டங்களுக்கான நிதியும், உள்கட்டமைப்பு, முனைவர் படிப்பு நிறைவுக்கு பிந்தைய ஆராய்ச்சி மற்றும் பட்டதாரிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்படும். மாநில பல்கலைக் கழகங்களில் உள்ள முதன்மை ஆராய்ச்சியாளர்களின் பணி ஆய்வு திட்டங்களை மேற்கொள்வதோடு மட்டும் நிறைவடையவில்லை. ஆராய்ச்சியோடு தொடர்புடைய குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு பாடப்பிரிவையாவது அவர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வேண்டும். இதன் மூலமாக அவருக்கும் பல்கலைக் கழகத்திற்குமான உறவு மேம்படும். (ஆ) வழிகாட்டிகளாக இருப்பவர்களுக்கு வயது வரம்பு இல்லை: அவர்கள் வழிகாட்டிகளாகவும் நிறுவனத்திற்கு மதிப்பு சேர்ப்பவர்களாகவும் இருக்கும்வரை அவர்கள் நிதிக்கு விண்ணப்பவும் வழிகளாக இருக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது நாட்டிலுள்ள ஒய்வு பெற்ற ஆய்வளர்களின் திறமை மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களை இந்த ஆய்வுபணியில் ஈடுபடவைப்பதன் மூலம் நாடு முழுவதும் ஆய்வு மனப்பான்மையை விரிவுபடுத்த விலைமதிப்பற்ற ஒரு வாய்ப்பாகும். (இ) பல்கலைகழகங்களில் நடைபெறுகின்ற ஆராய்ச்சி வளரும்: மிகவும் தரமான ஆராய்ச்சிக்கான திட்டத்தை நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கேட்கப்படும். இருப்பினும், மாநில பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்குவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக, உள்கட்டமைப்பை உருவாக்கவும், பயண மற்றும் கூட்டு ஆய்வு நிதி ஒதுக்கவம் மற்றும் ஆராய்ச்சிப் பட்ட மாணவர்கள் மற்றும் முதுநிலை ஆராய்ச்சி பட்ட மாணவர்களும் தரமான ஆராய்ச்சிக்கும் தற்போது நடைபெறும் ஆராய்ச்சிகளை வளர்க்கவும் அல்லது புதிய தரமான ஆராய்ச்சி நடத்தப்படுமிடங்களுக்கு நிதி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படும் (ஈ) தேசிய ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வுபட்டபடிப்பு மற்றும் முதுநிலைஆய்வு பட்டபடிப்பு: இளம் ஆராய்ச்சியாளர்களின் திறமையை கல்வி நிறுவனங்களில் கொண்டுவருவது ஆய்வு மனப்பான்மையை உருவாக்கும். இந்த நோக்கத்திற்காக, தேசிய ஆராய்ச்சி அமைப்பு இந்த நோக்கத்திற்காக, ஒரு பெரிய மற்றும் மதிப்புமிக்க ஆய்வுப் பட்டபடிப்பு மற்றும் முதுநிலை ஆய்வுப் பட்டபடிப்பு தோழமையை(fellowships) மாநில பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தும். மேற்குறிப்பிட்ட (அ) மற்றும் ஆ லிருந்து வெற்றிகரமான ஆராய்ச்சி திட்டத்திற்கு தேவையான இடம் பற்றிய தகவல்களை தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஒரு பட்டியலை பராமரிக்கும் மற்றும் அதை நாடுமுழுவதுக்கும் விண்ணப்பம் வேண்டி அழைப்பு விடுக்கும். திறமையான விண்ணப்பதாரர்கள் ஒன்று அல்லது அதற்கு மேல் தங்களுடைய புலமையை பொறுத்து விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள (அ), (ஆ) மற்றும் (இ) ஆகியவற்றின் அனைத்து சக மதிப்பாய்வுகளும் மற்றும் மதிப்பீடுகளும் மிகவும் கடுமையான முறையில் திறமையான குழு கொண்டு தகுதிதேர்வுமுறையின் (merit) அடிப்படையில் உருவாக்கப்படும். இதில் (இ) இருக்கும் பட்சத்தில் முதன்மை அல்லது இணை ஆய்வாளர்களால் அவர்களுடைய திட்டத்திற்கு தகுதியும் திறமையுமான வேட்பாளர்கள் என்பதை ஆலோசிக்கப்படலாம். 14.3.2. பெரிய, நீண்ட கால அல்லது மெகா திட்டங்கள் மூலம் திறன் வளர்த்தல் ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் பிற திறன்களை பல்கலைக்கழக அளவில் அல்லது சமூகத்தில் நேரிடையாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது மற்ற வழிமுறையில் அடிப்படை அறிவுத்திறனை வளர்க்க தேசிய மற்றும் சர்வதேசிய அளவிலான பெரிய திட்டங்களுக்கு தேசிய ஆராய்ச்சி அமைப்பு நிதி ஒதுக்குவதை கருத்தில் கெள்ளும். இது போன்ற பெரிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள் நதிகளை சுத்தம் செய்ய தேசிய அளவிலான திட்டங்கள்: கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி பற்றிய சுழலின்போது நதிகளை சுத்தம் செய்வது குறிதத சமீபத்திய ஆராய்ச்சியைப் பற்றிக் கலந்துரையாடுவது மற்றும் தங்களுடைய சொந்த ஆறுகளை சுத்தம் செய்வது குறித்து நேரடியாக பெரிய அளவில் பங்கேற்க செய்வதன் மூலமாக நேரடியான செயல்முறை ஆராய்ச்சிகளை நதிகள் அருகமை அமைத்துள்ள பல்கலைக்கழகங்கள் எடுத்துக்கொள்ளலாம். (அறிவியல் முன்னேற்றம் மற்றும் சமூஇரண்டும்இடை இவை பொறுப்புணர்வு இவை இரண்டும் வளர்க்கும் ) கிராமங்களுக்கு சுத்தமான ஆற்றலைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள்: நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களருகிலுள்ள கிராமங்களுக்கு சுத்தமான ஆற்றலுக்கான தீர்வு மற்றும் அதை தங்கள் பகுதியில் நடைமுறைப்படுத்தவும் உதவலாம். மலேரியா போன்ற நோய்களை முற்றிலும் ஒழிப்பதற்கான தேசியளவிலான திட்டங்கள்; இந்தியா முழுவதுள்ள பல்கலைக்கழகங்கள் இலக்கியத்தை புதிய முறையில் கற்றுக்கொடுக்க அல்லது தங்களுடைய உள்ளூர் மொழி கலைகள் அல்லது கலச்சாரங்களை வளரதொடுக்கவும் மற்றும் அதை நடைமுறைபடுத்தவும் ஆராய்ச்சிகளை செய்யலாம். பாதுகாத்து பல பல்கலைக்கழகங்கள் ஒன்று சேர்ந்த பெரியளவிளான அறிவியல் திட்டங்கள் பகுப்பாய்வு செய்வதிலும் மற்றும் கிடைத்த தரவுகளை புரிந்துகொள்ள செய்வதிலும் பங்கேற்கலாம். இறுதியாக திறன் வளர்த்தல் (capacity building), புதிய தொழில்நுட்பம் உருவாக்குதல், பல்வகையான தொழில்நுட்பங்களின் தரம் உயர்த்தல் மற்றும் அடிப்படை ஆய்வுகளை மேம்படுத்துதல் அத்தோடு உலக அளவிலான அறிஞர்களின் பரிமாற்றங்களை எளிதாக்குதல் போன்றவற்றை கையாளுவதில் தேசிய ஆராய்ச்சி அமைப்பு உதவி செய்யலாம் . மற்ற எல்லா நன்கொடை வழங்கும் நிறுவனங்களோடு மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேசிய ஆராய்ச்சி அமைப்பு உடன் பணியாற்றும். 14.3.3. சர்வதேச கூட்டுபணிக்கான நிதிஒதுக்குதல்: தேசிய ஆராய்ச்சி அமைப்பு, சர்வதேச ஆய்வு கூட்டுநடவடிக்கையை ஊக்குவிப்பது மற்றும் ஒத்துழைப்பு அளிப்பது செய்யும். குறிப்பாக இன்னும் இந்தியாவுக்கு போதுமான புலமையில்லாத ஆனால் தேவையான ஆய்வுகளுக்கு. குறிப்பாக , சிறப்பு முயற்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் புலம்பெயர்ந்தோருக்கு சர்வதேச கூட்டு ஆய்வு ஏற்கனவே உள்ள கற்றவைகளை நமக்கு நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போகவும் இது நாட்டில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆகியோருக்கு முக்கிய பலமானதாக கருதப்படுகிறது 14.3.4. மானியத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் வெளிப்பாடுகளை வழிநடத்துவது தேசிய ஆராய்ச்சி அமைப்பு நிதியை மட்டும் வழங்காது மாறாக ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக திறன் மேம்படுத்துதல், ஆரம்பகட்ட ஆய்வுநிலையுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுதல் ஆனால் தேசிய ஆராய்ச்சி அமைப்பிடமிருந்து நிதி பெறுகின்ற சாத்தியமுள்ள ஆய்வுதிட்டத்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிகாட்டுனர்களால் தேசிய ஆராய்ச்சி மையத்திலிருப்பார்கள் - இவர்கள் தேசிய ஆராய்ச்சி அமைப்பால் அதற்கு எற்ற தரஅளவுள்ள ஆராய்ச்சி விண்ணப்பங்களை விண்ணப்பக்குழுவின் முன்பாக சமர்பிக்கப்படும் முன்பாக அதை ஆய்வு செய்து தரமுள்ளதாக எழுதுவதற்கு வழிகாட்டும் நோக்கத்திற்காக இந்த அமைப்பு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படியான ஆய்வாளர்களுக்கு நிதிவழங்கியும் மேலும் அவர்கள் ஆய்வு நடத்தவும் மற்றும் கிடைக்கவேண்டிய ஆய்வு வெளிப்பாடுகள் கிடைக்கவும் தேவைக்கேற்ப வழிநடத்தவும் ஆதரிக்கவும் மேற்படி வகை ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற விஞ்ஞானிகள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் மற்ற துறைகளில் ஆராய்ச்சியாளர்கள் வழிகாட்டுனர்களாக பணியாற்ற அழைக்கப்படுவார்கள். பங்களிப்புக்கேற்ப அவர்களுக்கு உகந்த வகையில் ஈடுசெய்யவும் மற்றும் ஊக்கமளிக்கவும் செய்யப்படுவார்கள். ஒரு பெரிய, பயிற்றுவிக்கப்பட்ட, வல்லுநர்கள் கொண்ட குழு இந்த மகத்தான ஆனால் முக்கியமான பணியை எடுத்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். 14.3.5. கல்வியின் பங்கு: தேசிய ஆராய்ச்சி அமைப்பின் முயற்சிக்கு தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி மற்றும் இவைகளோடு தொடர்புடைய அறிவியலாளர்கள், மனிதநேயங்களில் மற்றும் சமூக அறிவியல்களில் கற்றுக் கொண்ட சமூகங்கள் கணிசமான மதிப்பை சேர்க்க முடியும். ஆராய்ச்சி மற்றும் ள்ல்வியில் அரசாங்க கொள்கையின் சிக்கல்களுக்கு குறிப்பாக அரசாங்கத்தின் நேரடி முயற்சிகளுக்கு உதவும் பல்வேறு தலைப்புகளில் குறிப்பிடத்தக்க ஆலோசனையை வழங்குவதற்காக தேசிய ஆராய்ச்சி அமைப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் கற்ற சமூகங்களை கேட்டுக்கொள்ளுவ. ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு திறனை வளர்ப்பதில் கல்வி அமைப்பு பெரிதும் பங்களிக்க முடியும்: பல்கலைக்கழக துறைகள் மற்றும் கல்லூரிகள் தங்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளின் தரத்ததை உயர்த்த முயகிறார்கள் அவர்களுக்கு இந்த அமைப்பின் உறுப்பினாகள் வழிகாட்டியாக இருக்க முடியும். தேசிய ஆராய்ச்சி அமைப்பு இத்தகைய இணைப்புகளை, குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருக்கும். 14.4. அரசு, தொழில் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பயனுள்ள தொடர்பை உருவாக்குதல் தற்சமயம் , நாட்டில் நடத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் அரசு அமைப்புகளிடையே (மத்திய மற்றும் மாநிலங்கள்) நேரடியான தொடர்புயில்லை, இது சமுதாய நலனுக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றங்களை மேலும் கடினமாக்குகிறது. தேசிய ஆராய்ச்சி அமைப்பு இந்த இணைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும். மேலும் இந்த தேசிய ஆராயச்சி அமைப்பு ஆராயச்சியாளர் மற்றும் அரசை தொழில் வர்த்தகத்தோடு தொடர்பை உருவாக்க பங்காற்றும். ஒத்துழைப்பு, கூட்டாக பலத்தை ஆராய்ச்சியில் பெற, புதுமையான மற்றும் அதை இந்த மூன்று அமைப்புகளுடன் நடைமுறை படுத்தவும் உதவிசெய்யும். இந்த நோக்கத்திற்காக தொழில் வர்த்தக நிறுவனத்துடன் நிர்வாக வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். மேலும், இந்தியா அரசிடமிருந்து வருடத்திற்கான நிதியோடு, தேசிய ஆராய்ச்சி அமைப்பு பல்வேறு இந்தியா அமைச்சகங்களிடமிருந்தும் மற்றும் மாநில அரசிடமிருந்தும் நிதியை ஆராய்ச்சிக்காக கூடுதலாக பெறும். இதேபோல், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை, மற்றும் தொண்டு நிறுவனங்களும் ஆராய்ச்சிக்காக நிதியை தேசிய ஆராய்ச்சி அமைப்பு வழியாக வழங்க ஊக்கப்படுத்தப்படும். ஆராய்ச்சி திட்டங்களின் முழுமையான சுழற்சிக்கு தேவையான , திட்டங்களை மதிப்பீடு செய்தல், நிதியை ஒதுக்குதல், திட்ட இலக்குகளை அடைய உதவி செய்வதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆராய்ச்சி விளைவுகளை வழக்கமாக கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற அனைத்துவிதமான தேவைகளையும் அதற்கான உள்கட்டமைப்புகளையும் உருவாக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பால் உருவாக்கப்படும். தங்களின் சொந்த முயற்சியால் செய்யப்படும் ஆராய்ச்சி அமைச்சகத்திற்கும் மற்ற நிறுவனத்திற்கும் விலைமதிப்பற்றது. மத்திய அமைச்சகத்திற்கும் மற்றும் பிற அரசு நிறுவனத்திற்கும், தொழில்துறை மற்றும் தொண்டு நிறுவனத்திற்கிடையே பல்வேறு வகையான வழிமுறைகள் ஆராயப்படும் 14.4.1. அமைச்சகங்களின் ஆய்வு தேவை: பல அரசு அமைச்சங்களுக்கு ஆய்வு தேவைப்படுகிறது ஆனால் இப்பொழுது செயல்படாமல் உள்ளது. பல அமைச்சங்களில் ஆய்வு செல்கள் இருந்தும் பெரிதாக செயல்படவில்லை. தேசிய ஆராய்ச்சி அமைப்பு, அமைச்சகங்கள் எதிர்பார்க்கின்ற ஆய்வு மேற்கொள்ள முன்வருகிறது. ஆய்வுகளுக்கு தேவையான நிதியை தேசிய ஆராய்ச்சி அமைப்பு வழங்குகிறது. தேசிய அழைப்புகளை முன் வைத்தல் சக்தி வாய்ந்த குழுமங்களின் மதிப்பாய்வு, நிதி ஒதுக்கீடு மற்றும் அளித்தல் முன்னேற்றம் பற்றிய ஆலோசனை மற்றும் கண்காணிப்பு போன்ற ஆய்வுகளுக்கு அவர்களின் பட்ஜெட்டை விட 2 சதவீதம் அதிகமாக வழங்குகிறது. 14.4.2. மாநில அரசுக்கு தேவைப்படும் ஆய்வுகள்: மாநில அரசும் ஆய்வுகளை இதுவரை நிராகரிக்கப்பட்டுதான் வந்துள்ளது. டிஎஸ்டீ பொருத்தவரை பட்ஜெட்டில் 7 சதவீகிதம் மட்டுமே 2015-16 ஆண்டு செலவு செய்துள்ளது. மாநில அரசு நிலவியல் சம்மந்தமான ஆய்வுக்கு தேசிய ஆராய்ச்சி அமைப்பு மூலம் நிதி ஒதுக்க நினைக்கலாம் உதாரணமாக சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு, நாட்டு மொழியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, இலக்கியம், கலை, கலாச்சாரம், கலை பொருட்கள், கையெழுத்து பிரதிகள் , பாரம்பரிய தளங்கள் மற்றும் பல (மீண்டும், மாநில பிரதிநிதி தேவைப்படுமானால் அந்த துறை சார்ந்த குழுவில் சேர்க்கப்படும்) 14.4.3. திட்டமில்லாத (Non-strategic) அம்சங்களின் ஆராய்ச்சிக்கான திட்டங்கள் : அடிப்படை ஆராய்ச்சி பல பகுதிகள், காரணத்துறைகள் தங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்கள், திரவ இயக்கவியல், மறைகுறீயீட்டகம் (), குறியீட்டு கோட்பாடு, வளிமண்டல அறிவியல், மின் ஒளியியல், லேசர், நானோ அறிவியல், எரிபொருள் போன்ற ஹைட்ரஜன் விஞ்ஞான அம்சங்கள், மின்னழுத்தம், இயந்திரவியல் தொடர்பான கற்றல், அடிப்படை அரை-கடத்தி இயற்பியல் அதே போல் பல் வேறு விதமான ஆய்வு சமூகவியல், மனிதநேம் மற்றும் மொழி தொடார்பாகவும் அடிப்படை ஆய்வுகளை உள்ளடக்கியதாகும். விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை ஆராய்ச்சி செயல்பாடுகளின் தேவைகள் திட்டமிடல் துறை மூலமாக வெளிப்படும் ஆராய்ச்சிகளை , திட்டமில் அமைப்பு (strategic sector) சேர்ந்த ஆராய்ச்சிகளோடு தேசிய ஆராய்ச்சி அமைப்பின் மூலமாகவே கொண்டுபோகலாம். 14.4.4. மற்ற அரசு நிறுவனங்களின் ஆய்வு தேவைகள்: அரசின் மற்ற பிற அமைப்புகளும் (மாநிலஅரசுகளை உள்ளடக்கி) தேசிய ஆராய்ச்சி அமைப்புகள் போல் ஆய்வுகளை அவர்களின் தேவைக்கேற்ப எடுத்துச் செல்லலாம். 14.4.5. தொழில் மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சித் தேவைகள்: தேசிய ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சி வழிமுறைகளில் பங்கேற்க தொண்டு நிறுவனங்களை உள்டக்கிய பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். தேசிய ஆராய்ச்சி அமைப்பின் மூலமாக ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்குதல் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான புலமைபெற்ற கல்விசார் குழுக்களை அடையாளம் காண உதவும். தேசிய ஆராய்ச்சி அமைப்பு குறிப்பிட்ட ஆராய்ச்சி குழுவை ஒதுக்குவதன் மூலமாக இந்த கல்விசார் குழுக்கள் தங்களை போன்ற இணையான ஆய்வுக் குழுவிடமிருந்து மதிப்பாய்வு பெறுவதன் மூலமாக பயன்பெறுவார்கள் மேலும் தங்களுடைய ஆய்வு போதுமான மேற்பார்வை செய்யப்பட்டதும் உறுதிபடுத்தபடும். தேசிய ஆராய்ச்சி அமைப்பின் மூலமாக நிதி உதவி செய்வதால் கல்வி மற்றும் சம்பந்தப்பட்ட பொது மற்றும் தனியார் தொழிற்துறை நிறுவனங்களும் மற்ற நிறுவனங்களும் பயன் பெறும். தேசிய ஆராய்ச்சி அமைப்பின் தலைப்பு குழுக்கள் ஒரு பிரதிநிதி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதியளிப்பு பற்றிய விவாதத்தின் போது இருக்கக்கூடும். கொடுக்கப்பட்ட எந்த ஒருவருடத்திலும், குறிப்பிட்ட ஆராய்ச்சியின் கோரிக்கைக்கு தேசிய ஆராய்ச்சி அமைப்பின் பட்ஜெட்டிக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேல் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து வராது. இது போன்ற எல்லா கோரிக்கைகள் ஒவ்வொன்றும் தேசிய ஆராய்ச்சியின் நிர்வாக குழு மற்றும் பிரதேசக்குழு மதிப்பிட்டு முடிவு செய்யும். அதில் தேசிய நலனுக்கான சாத்தியக்கூறு , நிதி வழங்குவது, தேசிய ஆராய்ச்சி அமைப்பின் திறன் , புலமை மற்றும் பொது பகுதியில் முந்திய ஈடுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யும். தேசிய ஆராய்ச்சி அமைப்புக்கு பொதுவான நன்கொடை, அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அதாவது உடல்நலன், விவசாயம், இலக்கியம், இயற்பியல் முதலியவைக்கு , எந்த அமைப்பிலிருந்தும் நன்கொடை வழங்கப்படுவதற்கு வரம்பு - கட்டுப்பாடுகள் இல்லை. 14.4.6. தொழிற்சாலையிலிருந்து வரும் நன்கொடை: அனைத்து பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் ஒரு சிறிய தொகையை, அதாவது குறைந்தபட்சம் அவர்களின் வருடாந்திர இலாபத்திலிருந்து 0.1% ஐ (தேசிய ஆராய்ச்சி அமைப்புக்கு கொடுக்க வேண்டும் ) ஆராய்ச்சிக்கு வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அது சிஎஸ்ஆர் நிதியிலிருந்தோ அல்லது அதற்கு வெளியிலிருந்த, இருக்கிற நிதியை நன்கொடையாக வழங்கலாம் அதற்கு வரிச் சலுகையும் உண்டு 14.4.7. ஆய்வாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு பாலமாக நிர்வாக குழு: தேசிய ஆராய்ச்சி அமைப்பின் செயல்பாட்டை நிர்வாக குழு கண்காணிக்கும். இந்த கண்காணிப்புப் பணியில், நாட்டில் நடைபெறும் மிக சிறந்த ஆராய்ச்சி முன்னேற்றத்திற்காக தலைப்பு குழு (Subject Committees) மற்றும் பிரதேசக் குழுக்களிடமுந்து பரிந்துரைகளை பெறும் .அது அரசு நிறுவனங்களுக்கு அல்லது பொது-தனியார் பாங்காளர்களுக்கு நாட்டின் நலனுக்காக நடைமுறைப்படுத்த வாய்ப்பு ஆய்வுகளை தெரிவிக்கலாம். மாறாக, தேசத்தின் ஆராய்ச்சிகளுக்கு முக்கிய வழிகாட்டல்களோடு வழிநடத்திட தேசிய ஆராய்ச்சி அமைப்புக்கு அரசு மற்றும் தொழிற்சாலைகளிடமிருந்து வரும் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் உதவும். ஆய்வாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு பாலமாக நிர்வாக குழு தேசிய ஆராய்ச்சி அமைப்பின் செயல்பாட்டை நிர்வாகக் குழு கண்காணிக்கும். இந்த கண்காணிப்புப் பணியில், நாட்டில் நடைபெறும் மிக சிறந்த ஆராய்ச்சி முன்னேற்றத்திற்காக தலைப்பு குழு (Subject Committees) மற்றும் பிரதேசக்குழுக்களிடமுந்து பரிந்துரைகளை பெறும் .அது அரசு நிறுவனங்களுக்கு அல்லது பொது-தனியார் பாங்காளர்களுக்கு நாட்டின் நலனுகாக நடைமுறைப்படுத்த வாய்ப்பு ஆய்வுகளை தெரிவிக்கலாம். மாறாக, தேசத்தின் ஆராய்ச்சிகளுக்கு முக்கிய வழிகாட்டகல்களோடு வழிநடத்திட தேசிய ஆராய்ச்சி அமைப்புக்கு அரசு மற்றும் தொழிற்சாலைகளிடமிருந்து வரும் பரிந்துரைகள் மற்றும கோரிக்கைகைகள் உதவும். 14.5. விருதுகள் மற்றும் தேசிய கருத்தரங்குகள் மூலம் சிறந்த ஆராய்ச்சியை அங்கீகரித்தல்: தேசிய ஆராய்ச்சி அமைப்பிலிருந்து நிதி பெறுவதே ஒரு மதிப்புமிக்க ஆராய்ச்சியாளருக்கு அங்கீகாரமாக இருக்கும். இருப்பினும் தேசிய ஆராய்ச்சி அமைப்பு நிதி வழங்கிய சிறப்பான ஆராய்ச்சியையும் நாட்டின் மற்ற சிறப்பான ஆராய்ச்சியும் அங்கீகரிக்கும் ஒரு இறுதிக்கட்ட வேலையை செய்யும். நாடு முழுவதற்குமான எல்லா துறை-சார்ந்த சக அறிஞர்களை கொண்டு விரிவான மறுபார்வைசெய்து ஆராய்ச்சி விண்ணப்பங்கள் அறிக்கைகள் மற்றும் புது தகவல்களுக்கு தேசிய ஆராய்ச்சி அமைப்பு மையமாக இருப்பது மதிப்பிடுவதற்கும் அங்கீகரிபதற்கும் அதன் மூலம் நாட்டின் சிறப்பான ஆராய்ச்சிகளை விருதுகள் பரிசுகள் தேசிய கருத்தரங்குகள் மூலம் ஊக்குவிக்கும் ஒரு தனித்துவம்பெற்ற நிலையில் இருக்கிறது. 14.5.1. நாட்டில் நடக்கும் உண்மையில் வெற்றிகரமான ஆராய்ச்சிகளுக்கு குறிப்பாக Nசுகு நிதியுதவியளித்த ஆராய்ச்சிகளுக்கு விருதளிக்கும் முறையை Nசுகு நிர்வாகிக்கும். எல்லா பிரிவுகளுக்கும் பாடங்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விருதுகள் வழங்கப்படும். எ.கா. வெற்றிகரமான முயற்சியால் வளர்ச்சியடைந்த ஆராய்ச்சிகளுக்கு வேலை செய்த முனைவர்கள் இளம் வயது பணியாளர்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு (அதன் உட்பட்ட நபர்களுக்கும்) அளிக்கப்படும். தேசிய ஆராய்ச்சி அமைப்பு தேசிய அளவிலான கருத்தரங்குகளை நடத்தி ஆய்வுகளை, மிகச் சிறந்த ஆய்வுகளை ஊக்குவித்து மற்ற அறிஞர்கள் உறுப்பினர்களை முக்கியமான பொதுப் பிரச்சனையில் பங்கேற்க வைப்பது. ஆசிரியர் கல்வி நோக்கம்: ஆசிரியர் கல்வி முறையை பல்துறை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுவதன் மூலம் ஆசிரியர்களுக்கு உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள் மற்றும் பயிற்சி முறைகளில் மிகவும் தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்தல்; நான்கு வருட ஒருங்கிணைந்த இளங்கலை பட்டத்தை அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தபட்ச தகுதி என நிறுவுதல். அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் ஆசிரியர்களின் குழுவை உருவாக்குவதில் ஆசிரியர் கல்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆசிரியப் பணி, மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற உயர்மட்ட சேவைப் பணியை போன்றது; இங்கு மக்களின் வாழ்வு முழுமையாக பழகுநர் இடம் உள்ளது. அதற்கு மிக உயர்ந்த தரம் வாய்ந்த கல்வி மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது . ஆசிரியர்களை தயார்ப்படுத்துதல் என்பது மிகப் பெரிய செயல்முறை, அதற்கு பல்வகை கண்ணோட்டம் மற்றும் அறிவு, மனநிலை மற்றும் மதிப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் நடைமுறை வளர்ச்சி போன்றவை தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் இந்திய மதிப்புகள், அறநெறி, அறிவு, மரபுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், அதே சமயத்தில் சமீபத்திய கல்வி மற்றும் கற்பித்தல் முறைகள் பற்றி நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித் துறையானது மிகவும் சாதாரணமாக கையாளப்படுவதும், வணிக மயமாக்கலின் காரணமாக ஊழல் நிறைந்து காணப்படுவது மனவருத்தம் அளிக்கிறது. இன்று பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே ஒரு குறுகிய திட்டத்தை மட்டும் வழங்கும், ஆசிரியர் கல்வியை தனியார் துறையின் சிறிய கல்லூரிகள் மூலம் வழங்கி வருகிறது, மேலும் அங்கு தரமான ஆசிரியர்களை உருவாக்கும் அர்ப்பணிப்பில் பொதுவான குறைபாடு காணப்படுகிறது, உண்மையில், AISHE (All India Survey on Higher Education) யின் 2015- 16 ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை பாடமாக மட்டுமே வழங்கப்படுகிறது, கிட்டத்தட்ட 90 சதவீத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மேலும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி J.S.வர்மா ஆணைக்குழுவின்படி பெரும்பாலான தனிநிலை கல்வியல் நிறுவனங்கள் -10 ஆயிரத்திற்கும் அதிகமானவை- தீவிர ஆசிரியர் கல்வியை முயற்சிப்பது கூட இல்லை; ஆனால் அடிப்படையில் பட்டங்களை விலைக்கு விற்பவையாக உள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட ஒழுங்கு முறை முயற்சிகளால் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை குறைக்கவும் பண்பிற்கான அடிப்படை தரத்தையும் அமல்படுத்த முடியவில்லை, உண்மையில், எதிர்மறை விளைவுகளால் இத்துறையில் சிறப்பான மற்றும் புதுமையான வளர்ச்சி தடைபட்டது. அதன் தரத்தை உயர்த்திடவும், நேர்மை, நம்பகத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றை மீட்டெடுக்கவும் மேலும் ஆசிரியர் கல்வி அமைப்பின் சிறந்த தரத்திற்காகவும், அத்துறையும் ஒழுங்குமுறை அமைப்பும் தன்னுடைய தீவிர நடவடிக்கை மூலம் புத்துயிர் பெறவேண்டியது உடனடி தேவையாகிறது. ஆசிரியர் கல்வி அமைப்பின் நேர்மை மற்றும் நம்பகத் தன்மையை மீட்டெடுத்தல்: ஆசிரியர் கல்வி சிறிதும் நடைபெறாமல் முழுக்க முழுக்க லாப நோக்கத்திற்காக இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களால், ஆசிரியர் கல்வி அமைப்பின் நேர்மையும் நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அது பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆசிரியர் கல்வியை உயர்த்துவதற்கும்,அதன் மீதான நம்பகத்தன்மை மற்றும் நேர்மை அதன் இயல்பு நிலையை அடைந்து, ஆசிரியப் பணியின் மாண்பினை மீட்டெடுப்பதற்கும் அதன் மூலம் வெற்றிகரமான ஒரு கல்வி அமைப்பை அடைவதற்கும் இவ்வாறான தரம் குறைந்த நிறுவனங்கள் உடனடியாக மூடப்படவேண்டும் அதேவேளையில் நேர்மறை நோக்கம் கொண்ட நிறுவனங்கள் Section 15.1 யில் வரையறுக்கப்பட்டுள்ளபடி பலப்படுத்தப்பட வேண்டும். நேர்மையற்ற மற்றும் தரம் குறைந்த நிறுவனங்கள் கண்டிப்பாக இயங்க அனுமதிக்க கூடாது. அவை உடனடியாக மூடப்பட வேண்டும். இதை செய்வதற்கான ஆணையை இக்கொள்கை மிகத்தெளிவாக அளிக்கிறது. ஒவ்வொரு தடையின் போதும், இந்த நடவடிக்கை வேகம் மற்றும் விருப்பத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நமது நாட்டின் எதிர்காலத்திற்கு இதில் உண்மையில் பங்கு இருப்பதால் இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை போலியான கல்லூரிகளை தொடர்ந்து இயங்க அனுமதித்தால் நமது பள்ளியின் அடிப்படைகளையும் ,நமது ஆசிரியர் கல்வி அமைப்பின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க முடியாத சூழல் ஏற்படும். பன்முக கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உறுதியான கல்வியியல் துறைகளை அமைப்பதன் மூலம் ஆசிரியர் கல்வி அமைப்புக்கு செயல்திறனும் உயர் தரமும் அளித்தல்: இயல் 5-ல் கொடுக்கப்பட்டுள்ளபடி, ஆசிரியர் கல்விக்கு பன்முக உள்ளீடுகளும், உயர் தரத்துடன் கூடிய உள்ளடக்கங்களும் கற்பித்தல் முறையும் தேவைப்படுகிறது, இவை இணைந்த பன்முக கல்வி நிலையங்கள் மூலமாக ஆசிரியர்களை தயார் செய்யும்பொழுது அது உண்மையாக கிடைக்கப் பெறுகிறது. இவ்வகையில் முழுமையான நிறைந்த கல்வியை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான காரணம், பிறகு அவர்களும் இதே போன்ற முழுமையான கல்வியை நமது பள்ளி குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதே. மேலும் உயர் கல்வியை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும், முழுமையான மற்றும் பன்முக கற்றலை அளிக்கும் இடங்களாக மாறவிருக்கின்றன. எனவே அவ்வகை முழுமையான மற்றும் பன்முக கற்றலை குறிப்பாக ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். உயர்கல்வித் துறையின் அனைத்து நிலை கல்வியிலும் மற்றும் அனைத்து தொலைத்திட்ட பகுதியிலும் ஆசிரியர்களை தயார் செய்வதில் ஒருங்கிணைந்த பட்ட முறை அவசியம் கொண்டுவரப்பட வேண்டும், அதேவேளையில் ஒற்றை பட்டங்கள் மட்டும் அளிக்கும் முறை நிறுத்தப்பட வேண்டும். இறுதியாக அனைத்து பன்முக பல்கலைக்கழகங்கள், பொது பல்கலைக்கழகங்களும் அனைத்து மாதிரி பன்முக கல்லூரிகளும் கல்விக்கென்று தனியாக ஒரு துறை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும், மேலும் கல்வியில் பல்வேறு புதுமையான ஆராய்ச்சிகளையும் முன்னெடுக்க வேண்டும், வருங்கால ஆசிரியர்களை உருவாக்கிட, மற்ற துறைகளான உளவியல், தத்துவவியல், சமூகவியல், நரம்பியல், இந்திய மொழிகள், கலை, வரலாறு மற்றும் இலக்கியம், அதே போன்று பிற சிறப்பு பாடங்களான அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றுடன் இணைந்த இளங்கலை கல்வியியல் பாடப்பிரிவை கொண்டிருக்க வேண்டும். மேலும் தற்பொழுது இயங்கிவரும் நேர்மையான ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 2030 க்குள் பன்முக உயர்கல்வி நிறுவனங்களாக மாற இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆசிரியர் கல்வியில் ஏற்படும் இந்த முக்கிய மாற்றம், நவீனக் கல்வியின் பன்முக தேவையின்படி தரமான ஒரு அமைப்பை திரும்ப ஏற்படுத்தும். 15.1.ஆசிரியர்களின் நேர்மையை மீட்டெடுத்தல்: 15.1.1. தரமற்ற மற்றும் செயல்படாத ஆசிரியர் கல்வி நிறுவனங்களை மூடுதல்: அடிப்படை கல்வி தகுதியே இல்லாத, தரமற்ற மற்றும் செயல்படாத நிறுவனங்கள் மூடப்படும். இம்முயற்சியானது, திடமான அரசியல் விருப்புடனும், நேர்மறை நிர்வாக நோக்குடனும் மற்றும் ஒரு பயனுள்ள செயல்பாட்டு யுக்தியுடனும் MHRD யால் பொற்காலம் முறையில் அமல்படுத்தப்படும். அனைத்து ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களும், அந்தந்த பாடத்துறைக்கு அனுமதி பெறுவதற்கு தேவையான அடிப்படை பகுதிகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும், இதற்கு தீர்வு காண வழங்கப்படும் ஒரு வருட கால அவகாசத்திற்கு பிறகு, இதில் ஏதேனும் வரம்பு மீறல் கண்டறியப்பட்டால், அது தீர்வு காணப்படவில்லை எனில் உடனடியாக அந்நிறுவனங்கள் மூடப்படும். இந்த செயல்முறை திறம்பட செயலாற்றுகிறது என்பதை உறுதிப்படுத்த ஒரு வலுவான சட்ட அணுகுமுறையும் உருவாக்கப்படும். 2023 க்குள், கல்வியில் சிறந்த ஆசிரியர்களையும், முழுமையான ஆசிரியர்களையும் உருவாக்கும் பாடப்பிரிவுகள் மட்டுமே இந்தியாவில் இயங்க வேண்டும் - மற்றவை அனைத்தும் மூடப்பட வேண்டும். 15.1.2. கடுமையான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் மூலம் ஆசிரியர் கல்வி துறையை தூய்மையாக்குதல்: இந்த தெளிவான நோக்கம் கொண்ட தூய்மைப்படுத்தல் திட்டத்திற்கென, ஒரு மாதிரி நீதி அமைப்பும் உருவாக்கப்படலாம். இப்பணியில் ஏற்படும் முன்னேற்றங்களை 3 மாதத்திற்கு ஒரு முறை NHERA வும், 6 மாதத்திற்கு ஒரு முறை RSA வும் ஆய்வு செய்யும். அனைத்து ஆசிரியர் கல்வியும் பன்முக கல்வி நிலையங்களில் நடக்கும். ஆசிரியர் கல்வி இனி கல்வி அமைப்பின் ஒரு அங்கமாக மாறும். 15.2. ஆசிரியர் கல்வியை பன்முக கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுதல் இன்று மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வித் தரத்தில் உள்ள பல சிக்கல்கள் ஆண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆசிரியர் கல்வியின் புறக்கணிப்புக்கு இடமளிக்கின்றன. தற்போது அளிக்கப்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி பாடத் திட்டங்கள் மிகக் குறுகிய கண்ணோட்டத்தையும் செயல்திறனையும் உருவாக்குகிறது - கடை திட்டம் மற்றும் வகுப்பறை செயல்முறைகள் யாவும் காலாவதியானதாகவும், தற்போதைய பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியதிலிருந்து மிகவும் வேறுபட்டு நிற்கிறது. ஆசிரியர் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனும் பெரிய சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு நிற்கின்றனர். ஆசிரியர் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை ஆகியவை கல்வியின் கண்ணோட்டம், பாடப்பொருள், கற்பித்தல் முறை ஆகியவற்றின் தீவிரமான கோட்பாடு புரிதலுடன், வலுவான கோட்பாடு - பயிற்சி தொடர்புடன் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் கல்வியுடன் ஆழமாக இணைந்து இருக்க வேண்டும் - அதன் வரலாறு, நோக்கங்கள், சமூகத்தின் உடனான தொடர்பு மற்றும் அதன் நெறிமுறை பிடிப்புகள். ஒரு ஆசிரியருக்கு பாடம் தொடர்பான கருத்தியல் புரிதல் மற்றும் எவ்வாறு கற்பித்தல் என்று கற்றுக் கொள்ளுதல், இவற்றையெல்லாம் கடந்து ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் கற்றல் சமூக சூழல் போன்றவற்றை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை பற்றிய கண்ணோட்டம் இருக்க வேண்டும். ஆசிரியரை தயார்ப்படுத்துவதில், ஆசிரியர் என்ற அடையாளத்தை உருவாக்குவதுடன், கல்வி பற்றிய கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கும், மற்றும் பாடும் மற்றும் கற்பித்தல் முறைகளை புரிந்து கொள்வதற்கும் போதுமான நேரமும் இடைவெளியும் தேவைப்படுகிறது, இதற்கு, கோட்பாடுகள் தொடர்ந்து வரிசைப்படுத்தப்பட்ட நடைமுறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இவை முழுமையான பன்முக அறிவு சூழலில் மட்டுமே சாத்தியமாகும். சிறந்த ஆசிரியர் கல்வி, கல்விக்கு தொடர்புடைய அனைத்து பகுதியிலும் சிறப்புத் திறன் பெற்று இருக்க வேண்டியதாகிறது, முன்பருவ கல்வியில் நிபுணத்துவம், பாடப்பகுதி பற்றிய புரிதல் மற்றும் கற்பித்தல் முறை, மதிப்பீடு கலைத்திட்டம் மற்றும் கருவிகளை உருவாக்குதல், பள்ளி தலைமை மற்றும் நிர்வாகம், அத்துடன் உளவியல், தத்துவம், சமூகவியல், இந்தியாவை பற்றிய அறிவு, கல்வி வரலாறு. ஆசிரியர் கல்வியுடன், பல்வேறு பாடங்களையும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களையும் வழங்கும் பொழுது, அது ஆசிரியரை தயார்ப்படுத்தும் முறைக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. தற்போதுள்ள பெரும்பாலான ஆசிரியர் கல்வி நிலையங்கள் தனிநிலை நிறுவனங்களாக உள்ளன - இவை மற்ற உயர் கல்வியில் இருந்து அறிவுசார் மற்றும் தொழில்சார் நிலையில் தனிமைப்பட்டு நிற்பதற்கு வழிவகுக்கிறது. தனிநிலை ஆசிரியர் கல்வி நிறுவனங்களால் சிறந்த ஆசிரியர் கல்விக்குத் தேவையான பன்முகம் கொண்ட பணியாளர்களை உருவாக்க முடியாது. இறுதியாக, ஆசிரியர் கல்வி பேராசிரியர்கள் தற்பொழுது நடைபெறுவதுபோல புத்தகங்களை மனனம் செய்து அதை அப்படியே கற்பித்தல் கூடாது, மாறாக தமிழ் உள்ளிட்டு துறை சார்ந்த ஆழ்ந்த அனுபவத்துடன் கற்பித்தல் பற்றிய திடமான மற்றும் நேர்மறை அனுபவங்கள் பெற்று வரவேண்டும். 15.2.1. ஆசிரியர்களை தயார் செய்யும் அனைத்து பாடப்பிரிவுகளையும் பன்முக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றுதல்: கல்வியியல் துறைகளை உருவாக்குதல்; உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கும் இடையே தொடர்பினை ஏற்படுத்துதல்: 5.5.1 ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, 2030க்குள், நான்கு வருட ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியியல் (B.Ed), பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக மாற்றப்படும். ஆசிரியர் பணியின் நவீன தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், பன்முக அனுபவங்களையும், கல்வியின் அவசியத்தையும் அவர்களுக்கு அளித்து, ஒரு சிறந்த ஆசிரியர்களாக மாறுவதற்கும், இனி அனைத்து முன் சேவை ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளும் பன்முக உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்படும். இறுதியாக, உயர்தர கல்வியியல் துறைகள் மற்றும் ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளை நிறுவுவதிலும், பன்முக உயர் கல்வி நிறுவனங்கள் செயல்படும். மேலும், இந்த இலக்கினை அடைவதற்கு தேவையான ஆதரவை அரசுகள் வழங்கும். அவ்வகை உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்புப் படங்களுடன் கல்வி மற்றும் அதை சார்ந்த துறைகளின் வல்லுநர்களை போதுமான அளவு கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களும் அருகாமையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அங்கு திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பர். (சமூக சேவை, வயது வந்தோர் மற்றும் தொழிற் கல்வி அளித்தல் போன்ற பிற ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களும் பள்ளி வளாகங்களில் இணைந்து செயல்படலாம்). இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் கல்வி தொடர்புடைய பாடங்களிலும் சிறப்புப் பாடங்களிலும் பலப்படுத்தும் முழுமையான ஆசிரியர் கல்வி பாடப் பிரிவுகளை உருவாக்கும். புதுமையான கற்பித்தல் முறைகளை அளிப்பதை கடந்து, கலைத்திட்டத்தில் சமூகவியல், வரலாறு, அறிவியல், தத்துவவியல், உளவியல், முன்பருவ கல்வி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, இந்தியா மற்றும் அதன் மதிப்புகள்/அடிப்படை கூறுகள் /கலை/ பண்பாடுகள் மற்றும் பல துறை பற்றிய அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். 2030இல், ஆசிரியர் கல்வி பாடப்பிரிவு அளிக்கும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பன்முகம் கொண்டதாக, 4 வருட ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியியல் (B.Ed) பாடப் பிரிவை அளிக்கும். 4 வருட ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியியல் (B.Ed) என்பது கல்வியியல் உடன் ஒரு சிறப்பு பாடம் ( மொழி, வரலாறு, இசை, கணிதம், கணினி, அறிவியல், வேதியல், பொருளாதாரம் போன்றவை) கொண்ட இரு முதன்மை தாராள இளங்கலை பட்டமாக இருக்கும். தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அளித்து வரும் இரு வருட பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளும் வணிக நிறுவனங்கள் அளிக்கும் ஒருங்கிணைந்த 4 வருட இளங்கலை கல்வியியல் (B.Ed) பாடத்திட்டத்திற்கு மாற்ற முடியும். ஏற்கனவே இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்வியியல் படிக்க விரும்பினால், அவர்களுக்கு என்று P.5.5.2 இல் வரையறுக்கப்பட்டுள்ள படி, நான்கு வருட ஒருங்கிணைந்த கல்வியியல் (B.Ed) அளிக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், அதன் வளாகத்திற்குள்ளாகவே 2 வருட இளங்கலை கல்வியியல் பட்டத்தையும் (B.Ed) உருவாக்கிக் கொள்ளலாம். இத்தகைய ஒரு வளர்ச்சிக்கு பின்னர், பிற சிறப்பான மற்றும் மிகவும் தனித்துவமான பி எல் பாடப்பிரிவுகளை கற்பித்தலுக்கான ஆழ்ந்த அனுபவம் அனுபவம் மற்றும் மனப்பாங்குடன் ஆகியவற்றுடன் மிகவும் தகுதியான அவருக்கு அளிப்பதன் மூலம், சிறந்த ஆசிரியர்கள் அத்தகைய உயர்கல்வியியல் நிறுவனங்களால் உருவாக்கப்படலாம். சிறந்த ஆசிரியர் பயிற்றுனர்களால், சிறந்த ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர் - ஆசிரியர் கல்வி பயிற்றுநர்கள் பல்வேறு துறைகள், கருத்தியல் மற்றும் செயல்முறை இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். 15.2.2. முன் பணி ஆசிரியர் உருவாக்கும் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை: முன் பணி ஆசிரியர் உருவாக்கும் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை, மற்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கையில், தேசிய சோதனை முகமையால் (National Testing Agency) நடத்தப்படுவது போலவே, பெரும்பாலான பாட மற்றும் திறனறி சோதனைகள் மூலம் மேற்கொள்ளப்படும்.. 15.2.3. கணிசமான புதிய ஆசிரியர் தயாரிப்பு திறனை உருவாக்குதல்: ஒருபுறம், 4 வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் தயார்படுத்தும் பாடப்பிரிவுகள் எனும் அடிப்படை மாற்றம் மறுபுறம் சரிவர செயல்படாத கல்வி நிறுவனங்களின் மூடல் ஆகியவற்றால் கணிசமான புதிய ஆசிரியர் தயாரிப்பு திறனை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது: கணிசமான பொது பங்களிப்பு இத்துறைக்கு தேவைப்படும் - அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு தோறும் மதிப்பீடு செய்யப்படும், மேலும் முன்னுரிமையை பொறுத்து அவை வழங்கப்படும். ஒவ்வொரு பொது பல்கலைக்கழகமும் (2024 ஆண்டில்) மற்றும் மாதிரி பன்முக கல்லூரியும் (2029 ஆண்டில்) நான்கு வருட ஆசிரியர் பாடத்திட்டத்தை வழங்கும். RSA வால் வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டம் மூலம் இத்துறையில் தொண்டு முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். 15.2.4. தனி நிலை ஆசிரியர் கல்வி நிலையங்களை பன்முக நிலையங்களாக மாற்றுதல்: 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து தனிநிலை ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் பன்முக நிலையங்களாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன் பிறகே, அவர்கள் நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் உருவாக்கும் பாடப்பிரிவை வழங்க வேண்டும். 15.3. பல்கலைக் கழகங்களில் கல்வியியல் துறை பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வியியல் துறை, கற்பித்தல் செயல்பாட்டுடன், கல்வி ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கான இடமளித்து, தன்னை பலப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். இவையே உயர்ந்த இலக்குகள். மேலும் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வியியல் துறை, கல்வி சார்ந்த பிற துறைகளுடன் அனைத்து வழிகளிலும் இணக்கமான தொடர்புகள் மூலம் ஆசிரியர் பாடப்பிரிவுகள் வழங்குவதில் மையமாக தன்னை உருவாக்கி கொள்ள வேண்டும். அவர்கள் உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்றுவிப்பாளர்களாகவும் அதேவேளையில் உயர்கல்வியில் பணியாற்றுபவர்களாக செயல்பட வேண்டும். அவை ஆசிரியர் கல்வியில் பணியாற்றத் தேவையான கற்றல் பொருட்களை தயார் செய்ய வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். அத்தகைய துறையில் பணிபுரிபவர்கள் இயல்பாகவே பன்முகம் கொண்டவர்களாகவும், அதிக ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் மேற்கொண்டவராகவும், நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவை இருப்பதால், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் போன்றவற்றில் சிறப்பான நிலைகளை அடைய ஊக்கப்படுத்த வேண்டும். இந்நிலையங்கள் இணைந்த மற்றும் பகுதிநேர பாடப்பிரிவுகளை இவர்களுக்கு அளித்து அவர்களின் உயர்கல்வியை தொடர்வதற்கும் தொழில்முறையில் விருப்பத்துடன் இயங்குவதற்கும் வழிவகை செய்யலாம். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்ற படிப்புகள் மற்றும் செயல்பாடுகளும் உருவாக்குதல், தொடக்க நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பாடப்பிரிவுகளையும் வழங்கலாம். 15.3.1. பல்கலைக்கழகங்களில் கல்விக்கான சிறப்பு மையங்கள்/துறைகள்: ஆசிரியர் கல்விக்கான அரசு நிதியுதவி முன்னுரிமை அடிப்படையில் கணிசமாக அதிகரிக்கப்படும். பள்ளி மற்றும் உயர் கல்வியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் கல்வியில் தொடர்புடைய பேராசிரியர்கள் தேவைக்காக முன்கணிப்பு தரவுகள் பகுப்பாய்வு முறை (Predictive data analysis) அடிப்படையில் , விருப்பமுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வியியல் துறை/ ஆசிரியர் கல்விக்கான சிறப்பு மையங்கள் நிறுவப்படும். இந்த கல்வியியல் துறை, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் பாடப்பிரிவுகளை பணி முன் மற்றும் பணியில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும், மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயர்கல்விக்கான பணியாளர்களை தயார்ப்படுத்துவதற்காக ஆராய்ச்சி பாடப்பிரிவுகளையும் அளிப்பதை நோக்கமாக கொண்டு இயாங்கும். இக் கல்வி துறைகள், பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தயார்படுத்தும் பணியில் ஈடுபடும் பிற துறைகளுடனும், அருகில் உள்ள பள்ளிகள் உடனும் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்ளும். 15.3.2. ஆசிரியர் கல்விக்கான திறன் திட்டமிடல்: RSA மூலம் கவனமான மற்றும் விரிவான திட்டமிடல் உடனடியாக மேற்கொள்ளப்படும், பின்பு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, மத்திய அளவிலும் மாநில அளவிலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் கல்வியில் உள்ள பயிற்றுநர்களின் தேவை மற்றும் அளவு சரிபார்க்கப்படும். கணிப்புகள் மூலம் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, பள்ளிகளில் தேவைப்படும் பாட ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின் எண்ணிக்கையாக கருதப்படும். நான்கு வருட இளங்கலை கல்வியியல் (B.Ed) பாடப்பிரிவை அளிக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். 15.3.3. ஆசிரியர் கல்வி பேராசிரியர்கள்: ஆசிரியர் தயாரிப்புக்காக உயர்ந்த நிபுணத்துவம் பெற்ற பன்முக பேராசிரியர்கள் கல்வியியல் துறையில் இருக்க வேண்டும். கற்பித்தலில் அனுபவம் மற்றும் அறிவு, சமூகம் மீதான பன்முகப்பார்வை, கல்வியின் நோக்கம், இயல்பான அறிவு மற்றும் உணர்வு, கற்பித்தல் முறை, பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடுகள் பற்றிய அறிவு. மேலும் அந்தப் பேராசிரியர் சிறந்த ஆய்வு பதிவுகளையும், வெளியீடுகள், களப்பணி மேலும், பள்ளி மற்றும் கற்பித்தலில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் இருக்க வேண்டும். சிறந்த தர்க்க அறிவு மற்றும் கண்ணோட்டமும் கொண்டு, அரசியலமைப்பு மதிப்புகளில் வேரூன்றியவர்கள் மற்றும் நடைமுறை அமைப்பில் அனுபவம் உள்ளவர்கள் என பல்வகை ஆசிரியர்களை உருவாக்குவதற்கு, பல்வேறு சிறப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் சமநிலை கொண்ட பேராசிரியர்களை தயார் படுத்துவது அவசியமாகிறது. 15.3.4. இணைய வழி கல்வி: இந்நிலையங்கள் இணைந்த மற்றும் பகுதிநேர பாடப்பிரிவுகளை ஆசிரியர்களுக்கு அளித்து அவர்களின் உயர்கல்வியை தொடர்வதற்கும் தொழில்முறையில் விருப்பத்துடன் இயங்குவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்ற படிப்புகள் மற்றும் செயல்பாடுகளும், தொடக்க நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பாடப்பிரிவுகளும் வழங்கப்படவேண்டும். முழு நேர பாடப்பிரிவுடன், வழங்கப்படும் அனைத்து பாடங்களும் பகுதிநேர, மாலைநேர, இணைந்த மற்றும் இணையம் என அனைத்து முறைகளிலும் கிடைக்க வேண்டும். பணிபுரியும் ஆசிரியர்களை கல்வியியல் துறையின் முக்கியமான மாணவர்களாக பார்க்க வேண்டும், அவர்கள் ஆய்விற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகள், மற்றும் உயர்கல்வி ஆர்வத்தினை வளர்க்க வேண்டும். 15.3.5. ஆராய்ச்சி சார்ந்து ஆசிரியர்களை உருவாக்குதல்: பல்வேறு கலை ஆய்வுகளை நடத்தும் துடிப்பான ஆராய்ச்சி குழுக்களுக்கு கல்வியியல் துறை உதவும், மேலும் அனைத்து பேராசிரியர்களையும் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளிக்கும். கடந்த 30 ஆண்டுகளில் மாணவன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான், ஆசிரியர்களை தயார்படுத்துதல் மற்றும் தரமான கற்றலை அடைவதற்கு ஒரு பள்ளி எவ்வாறு இயங்க வேண்டும் போன்ற கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் புரிதலில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. சர்வதேச ஆராய்ச்சி மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதுமையான கள ஆய்வுகள் மூலமாக இம்மாற்றங்கள் சாத்தியமாயிற்று. இந்திய முயற்சிகள் மற்றும் புதுமைகள், மற்றும் உலக அளவில் சிறந்த கருத்துக்களை தேர்ந்தெடுத்து, அவற்றுள் சிறந்த கல்வியின் பண்புகள் மற்றும் ஆசிரியர் கல்வி முறைகள் தேர்ந்தெடுத்து அவற்றை உயர் புரிதல் மற்றும் நடைமுறைகளுடன் மாணவர் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆராய்ச்சி மையங்களில் நடைபெறும் ஆசிரியர் தயார்படுத்துதல் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். கள நடைமுறைகள் ஆராய்ச்சிக்கான ஒரு துடிப்பான சூழலை கொடுக்கும் மற்றும் படைப்புகள் மூலம் அறிவு மற்றும் நடைமுறைகள் உருவாகும். ஆராய்ச்சி அடிப்படையில் கற்பித்தல் மற்றும் தனித்திறன் போன்றவை அறிவும் நடைமுறையும் சமகாலத்தவை மற்றும் புதுப்பிக்கபடுபவை என்பதை உறுதிப்படுத்தும், மேலும் பள்ளி மற்றும் உயர்கல்வியில் தற்போதுள்ள சூழ்நிலையை தொடர்புபடுத்தும். 15.3.6. சிறப்பு பாடங்களுக்கான துறைகளுக்கு இடையில் இணைந்து செயல்படுதல்: பல்கலைக்கழகங்களில் உள்ள கலை, நுண் கலை மற்றும் நாட்டுப்புற கலைகள் போன்ற துறைகளை உருவாக்குதல் அல்லது கல்விதுறையுடன் இணைந்து செயல்படுதல், ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டத்தினை வழங்குதல் போன்றவற்றை ஊக்கப்படுத்தலாம். ஆசிரியர் கல்வியில் இது ஒரு சிறப்பு கல்வியாக வெளிப்படும் வரை, கலை மற்றும் நுண்கலை பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆசிரியர்களை தயார் செய்யும் பாடப்பிரிவுகளை வடிவமைத்தல் மற்றும் பங்கெடுத்தல் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். முதுகலை கல்வியியல் பாடப்பிரிவுகள், சிறப்பு முதுகலை அறிவியல் பாடப் பிரிவுகள் மற்றும் கலை கல்வியில் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் போன்றவை நிறுவப்படும். அதேபோன்று மற்ற துறைகளுடனும் இணக்கமான தொடர்பு கல்விக்கு தேவைப்படுகிறது, அதனால் பாட ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறப்பு பாட ஆசிரியர்களைக் கொண்டு, இருக்கும் நிலைக்கேற்ற தயாரிப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த துறைகளுக்கு இடையில் இணைந்து செயல்படுதலை பல்கலைக்கழக நிர்வாகங்கள் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். 15.3.7. முதுகலை மற்றும் முனைவர் பாடப்பிரிவுகள்: கற்பித்தல், கற்பித்தல் முறைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய அறிவு வளர்ச்சி, மற்றும் கல்வி சார்ந்த பிற அம்சங்களான சமத்தன்மை, புறக்கணிக்கப்படுதல், பொருளாதாரம் மற்றும் நிதி கொள்கைகள், நிர்வாகம் மற்றும் தலைமை போன்றவை, பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை கல்வி, முனைவர் பாடப்பிரிவு போன்று, கல்வியில் ஆய்வு, உயர் பட்டங்கள் படிக்கும்போது வளர்க்கப்பட வேண்டும். சிறப்பு முதுகலை கல்வியியல் மூலம் பல்வேறு பாடத்திட்ட பகுதியில் உள்ள கற்பித்தல் முறையில் ஆய்வு, மதிப்பீடு பள்ளித் தலைமை, நிர்வாகக் கொள்கை ஆய்வுகள் கல்வியின் அடிப்படை பகுதிகளான உளவியல், சமூகவியல், வரலாறு மற்றும் தத்துவவியல், கல்வி நிதி, ஒப்பிட்டு முறை மற்றும் சர்வதேச கல்வி, தகவல் தொடர்பு தொழில் நுட்பம் (ICT) மற்றும் கல்வி போன்றவற்றில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குகிறது. 15.4. ஆசிரியர் கல்விக்கான பேராசிரியர்கள் ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்திற்கான பேராசிரியர்கள் பன்முக கண்ணோட்டத்தில் இருந்து சிறந்த திறன்களை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டிய தேவை, இன்றைய ஆசிரியர் தயார்படுத்துவதில் உள்ளது. ஒரு பேராசிரியர் கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை, அடிப்படை பகுதியான தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றில் தனித்திறன் கொண்டவராகவும், தீவிர கல்வியாளராக ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. அறிவியல் கல்வி, உளவியல், அறிவாற்றல் ஆய்வு, மனித மேம்பாடு, மொழியியல் மற்றும் பிற துறையின், முதுகலை மற்றும் அறிவியல் பட்டங்களை கொண்ட பேராசிரியர்களுக்கு இணையாக இவர்கள் இருக்க வேண்டும். கற்பித்தல் அனுபவம் களநிலையில் ஆய்வு அனுபவம், கல்வி மற்றும் அதைச் சார்ந்த துறையில் பன்னாட்டு ஆய்வு இதழ்களில் கட்டுரைகளை வெளியிடுதல் போன்றவை வேறு சில முக்கிய திறன்கள் மற்றும் தகுதிகள், இவை சிறந்த கல்வியியல் துறையின் முழுமையான பேராசிரியர் என்பதை நோக்கி உங்களை உருவாக்கும். 15.4.1. பேராசிரியர்களை தயார்ப்படுத்துதல்: அனைத்து நிலைகளிலும் துறைகளிலும் பள்ளி ஆசிரியர்களை உருவாக்குவதற்கு தேவையான பெரிய நோக்கம் கொண்ட கற்பித்தல் பாடப்பிரிவிற்கு ஒரு பரவலான குறிப்பிட்ட நிபுணத்துவம் கொண்ட பேராசிரியரின் தேவையை சுட்டிக்காட்டுகிறது. கல்வியில் முனைவர் மற்றும் சார்ந்த பல துறைகளான கல்வி, அறிவியல், கணிதம், கல்வி உளவியல், குழந்தையின் வளர்ச்சி சமூகவியல், மொழியியல் போன்றவற்றில் முனைவர் பட்டங்களை சர்வதேச தரத்துடன் கூடிய புகழ் பெற்ற கல்லூரிகளில் முடித்தவர்களை இத்துறையில் நுழையவும், ஆசிரியர் கல்வி பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர்களாக பங்காற்ற அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதேவேளையில் அவர்கள் கற்பித்தலில் சிறந்த வல்லுநர்களாக இருந்தாலும், ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சிகள் அவர்களுக்கு அனுபவம் குறைந்து காணப்படலாம், அத்தகைய பேராசிரியர்கள் கற்பித்தல் பணியை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அவர்களுக்கு ஒரு தூண்டல் மற்றும் நெறிப்படுத்தும் பயிற்சியை ஏற்பாடு செய்யலாம். அவர்களுடைய பேராசிரியர்களுக்கான, இவ்வகை தூண்டுதல் நிகழ்வுகளை வடிவமைப்பதும், நன்கு அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் வழங்குவதும், அந்தந்த தனிப்பட்ட துறையை சார்ந்ததாகும். 15.4.2. பேராசிரியர்கள்: கல்வியியல் துறையில் உள்ள பேராசிரியர்கள் பன்முகம் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கற்பித்தல் அனுபவம் மற்றும் கள ஆய்வு அனுபவம் போன்றவை உயர் மதிப்புகளாக கொள்ளப்படும். ஆசிரியர்களின் பன்முக கல்வியை வலுப்படுத்துவதற்கும், தீவிரமான கருத்தியல் வளர்ச்சியை வழங்குவதற்கு, பள்ளிக் கல்வியுடன் நேரடி தொடர்புடைய பகுதிகளான சமூக அறிவியல் (எ.கா உளவியல், குழந்தை வளர்ச்சி, மொழியியல், சமூகவியல், தத்துவவியல், அரசியல் அறிவியல்) மேலும் அறிவியல் கணினி கணிதம் கல்வி சமூக அறிவியல் கல்வி மற்றும் மொழி கல்வி போன்ற பாடப்பிரிவுகளில் நன்கு பயிற்சி பெற்ற பேராசிரியர்களை ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஈர்த்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் பணியாற்றிய அல்லது ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்களாக இருப்பது விரும்பத்தக்கதாக இருக்கும், மற்றும் குறைந்தது 50 சதவீத பேராசிரியர்கள் இத்தகைய அனுபவங்கள் கொண்டவராக இருப்பதை உறுதி செய்யலாம். பேராசிரியர்கள் கல்வியியலில் ஏதேனும் ஒரு பட்டம் (M.Ed அல்லது முதுகலை பட்டம் அல்லது கல்வியியலில் முனைவர் பட்டம்) பெற்றிருப்பது விரும்பத்தக்கதாக இருக்கும் ஆனாலும், அது கட்டாயம் அல்ல. பன்முக நிபுணத்துவம் மற்றும் அனுபவம் உடைய முழு வளர்ச்சி அடைந்த பேராசிரியர்களை உருவாக்குவதே கல்வியியல் துறையின் திட்டம். 15.5. உயர்கல்வியில் பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் அவர்களது துறையில் கல்வி வளர்ச்சி, கலைத் திட்டம், கற்பித்தல்முறைகள் மற்றும் மதிப்பீடுகள் போன்றவற்றில் தங்களுடைய புரிதலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும். கற்பித்தலில் உள்ள தற்கால கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் வளங்களின் பயன்பாடு ஆகியவற்றால் தூண்டப்பட்டு வெளிப்படுபவர்களாக அவர்கள் இருக்கவேண்டும். உயர் கல்வி பேராசிரியர்களுக்கு தேவையான சில பங்களிப்பு மற்றும் பயன்கள் இதில் அடங்கும்: அமைப்பின் ஆழமான புரிதலை வளர்ப்பது, அவர்களது துறையிலுள்ள பாடப் பொருளை அலகுகள் மற்றும் பாடங்களாக வடிவமைக்க வழிவகுத்தல், பாடுபொருள் மற்றும் கற்றல் அனுபவத்தை தேர்ந்தெடுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை (ICT) கற்பித்தலுடன் இணைத்தல், இணைந்து செயல்படுதல் மற்றும் குடும்ப கருவிகளில் அனுபவங்களை வளர்த்துக் கொள்ளுதல், கற்பவர்களுக்கு தொடர்புடைய நம்பகமான மதிப்பீடுகளை வடிவமைத்தல் மற்றும் கற்றல் அனுபவங்களை வடிவமைத்தல். பேராசிரியர்கள் அவர்களது வகுப்பறையின் சமூக பன்முகத்தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. 15.5.1. முனைவர் பாடத்திட்டத்தில் கற்பித்தலை அறிமுகப்படுத்துதல்: புதிதாக முனைவர் பட்டம் பெற விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் முனைவர் பயிற்சி காலத்தில், தங்கள் முனைவர் ஆய்வு பாடத்திற்கு தொடர்புடைய கற்பித்தல், கல்வி, கற்பித்தல் முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தை தெரிந்தெடுக்க வேண்டும். பல ஆராய்ச்சி அறிஞர்கள் பேராசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் கற்பித்தல் நடைமுறை, கலை திட்ட வடிவமைப்பு, நம்பகத்தன்மையான மதிப்பீட்டு அமைப்பு போன்றவற்றின் அறிமுகம் தேவை. கற்பித்தலுக்கான உதவிகள் மற்றும் பிற வழிமுறைகள் மூலம் குறைந்தபட்ச நேரமாவது முழுமையான கற்பித்தல் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கும் முனைவர் பாடத்திட்டங்கள் இந்த நோக்கத்திற்காக மாற்றியமைக்கப்பட வேண்டும். முனைவர் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, PhD மாணவர்கள் உதவி பேராசிரியர்களாக, பேராசிரியர்களுக்கு உதவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். 15.5.2. கல்வியியல் துறையில் மனிதவள மேம்பாட்டு மையம் மற்றும் ஆசிரியர்கள் தொடர் தொழில்முறை வளர்ச்சி: பணியில் இருக்கும் பொழுது CPD (தொடர் தொழில்முறை வளர்ச்சி)க்காக கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர்கள் HRDC ( மனிதவள மேம்பாட்டு மையம்) மூலம் தொடரலாம். இருப்பினும் அவை தற்போது தனித்து இயங்கும் அமைப்புகளாக இருப்பதைவிட, இந்த மையங்கள் பல்கலைக்கழகங்களுடன் முழுமையாக இணைந்து நடத்தலாம். ஏற்கனவே உள்ள கல்வியியல் துறையில் ஒரு பகுதியாகவும் அல்லது அத்தகைய துறை உருவாவதற்கான தொடக்கமாக மனிதவள மேம்பாட்டு மையம் இருக்கும். பல்கலைக்கழக அமைப்பில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், ஒரு குறிப்பிட்ட அல்லது பிற HRD மையத்தில் உள்ள, தாங்கள் விரும்பும் பாடத்தினை தேர்வு செய்வதை உறுதிப்படுத்த, அனைத்து HRDCகளுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்பு வழிமுறை ஏற்படுத்தப்படும். RSAவால் நடத்தப்படும் திட்டமிடல் பணிக்குப் பிறகு மனிதவள மேம்பாட்டு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். மனிதவள மேம்பாட்டு மையத்திற்கான நிதி இரண்டு தனிப் பிரிவுகளாக வழங்கப்படும்: i. மையம் மற்றும் பணியாளர்களுக்காக பல்கலைக்கழக நிதித்திட்டத்தின் பகுதியாக வழங்கப்படும் நிதி. ii) ஆசிரியர் கல்வி பாட பிரிவிற்கான நிதி. தனியார் துறையில் உள்ள ஆசிரியர்களை தயார்படுத்துவதற்கும் உருவாக்குவதற்கும் HRDCகள் அனுமதிக்கப்படும். 15.5.3. ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பேராசிரியர்களின் பணிக்கு உதவுவதில் தொடர் கவனம்: ஆசிரியர்கள் சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், கல்வி அமைப்பை மாற்றுவதற்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது, ஆசிரியர்களுக்கு உள்ள சிக்கல்கள் & கவலைகள் குறித்து உடனடியாக பேச வேண்டும். இணைச்செயலாளர் நிலைக்கு கீழ் இல்லாத, மத்திய மாநில அரசின் மூத்த நிர்வாகிகள், ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாளர்களாக உருவாக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் குறைகளை RSAவிடமோ அல்லது மாநிலங்களில் இதற்கு இணையான அமைப்புகளிடமும் தெரிவிக்க முடியும். இத்துறையில் நிலையான புதுமை மற்றும் முன்னேற்றத்தை உருவாக்குவதற்காக, தரமான கல்வியின் மையமாக இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் அனைத்து உயர்கல்வி பேராசிரியர்கள் போன்றோரின் பணிகளுக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். தொழில்சார் கல்வி நோக்கம்: பரந்துபட்ட திறன்வளர்ப்பை உறுதிசெய்தல் மூலம் 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்களுக்குத் தேவையான , தொழில்சார் திறனாளர்கள் தயாரிப்பில் ஒரு முழுமையான அணுகுமுறையினை உருவாக்குதல். சமூகமனிதவள தேவைக்கு தொழில்சார் நெறிகளோடு உயர்ந்தபட்ச தரமான தொழில்சார் திறனாளர்களை உருவாக்குவதன். இன்றியமையாமையை புரிந்துகொள்ளுதல். தொழில்சார் கல்வியானது தனிப்பட்ட நபர்கள் தமது கோட்பாட்டுரீதியான அறிவோடு குறிப்பிட்ட திறன்களை இணைத்து ஒரு பலமான அடித்தளத்தோடு வளர்த்தெடுப்பதாக அமையவேண்டும்.. கோட்பாடுகளை செயல்முறைகளோடு இணைத்தல், தமது தொழில் எவ்வாறு சமுதாயத்தை செழுமையுறச்செய்கிறது, சமுதாயத்தால் தமது தொழில் எவ்வாறு மேம்படுகிறது என்று புரிந்துகொள்ளுதல், முடிவுகளை மேற்கொள்ளுதல், விமரிசனபூர்வமாக சிந்தித்தல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல், மற்றும் தொடர்புகொள்ளுதல், தொழில்சார் நெறிகளுடனான தன்மை, ஆக்கபூர்வமான, பங்களிப்பு செய்யக்கூடிய குடிமக்களை போன்ற அடிப்படைத் திறன்களை உறுதிசெய்தல். சுதந்திரமான கல்வியோடு தொழில்சார் கல்வியை இணைப்பதற்கான இப்படிப்பட்ட நோக்கங்களை அடைதல். இந்தியாவில் அளிக்கப்படும் வேளாண்மை,சட்டம்,சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி போன்ற தொழில்சார் கல்விகள், உயர்கல்வியோடு எவ்விதமான தொடர்புமில்லாத வகையில் தனிப்பட்ட பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில்நுட்பம், மருத்துவ சுகாதார அறிவியல், சட்டம் மற்றும் வேளாண்மை தொடர்பான கல்விக்காகவும் அவ்வகையான கல்வியை அளிக்கும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும் உருவாக்கப்படும் தனித்தனி பல்கலைக்கழகங்கள் இந்த தொடர்பின்மையை பலப்படுத்துவதாக அமைகிறது. தொழில்சார் கல்வியானது அதன் உடனடி வெளிப்பாடாக , உடனடி பணிகளுக்காக மாணவர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, இதனால் விரும்பும் மாற்றங்கள் கைவிடப்படுகின்றன.. தொழில்சார் கல்வியானது தொழில்சார் பழகும் முறையிலிருந்து பிரிக்கப்படவேண்டும். உதாரணமாக சுகாதாரப் பணிகள் துறையில், சுகாதாரப் பணிகளானது தொழில்சார் திறனாளர்களின் குழுமத்தால் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கண்காணிக்கப்படவேண்டும். மேலும் மருத்துவர்களுக்கும், மருத்துவம் பழகுவோருக்கு தம் துறையில் பயன்படுத்தப்படவேண்டிய நெறிகளையும், நடைமுறைகளையும், தொடர்ச்சியான வகையில் தமது அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும். ஒரே வகையான தொழில்சார் குழுமங்களான இந்திய மருத்துவக் குழுமம்,இந்திய செவிலியர் குழுமம், இந்திய பல் மருத்துவக் குழுமம் போன்றவையே தொழில்சார் நடைமுறைகளையும் கட்டுப்படுத்திக்கொண்டு அதற்கான கலைத்திட்டத்தினையும் பரிந்துரைக்கும் விரும்பத்தத் தகாத போக்கு உடனடியாக சீர் செய்யப்படவேண்டும். தொழில்சார் குழுமங்கள் கல்விக்கான தமது பங்களிப்பென்று வரும்போது PSSB (தொழில்சார் கல்விக்கான தரத்தினையும் வரையறுப்பது) என்ற விதத்தில் மட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். தொழில்சார் கல்வியினை அளிக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் பொறுப்பில் கல்வி தொடர்பான கலைத்திட்டம், கற்பித்தல் முறை போன்றவற்றின் உருவாக்கம் விடப்படவேண்டும். மீதமுள்ள பொறுப்புகளான நிர்வாகம், கட்டுப்படுத்துதல்,தரச்சான்றளித்தல், மற்றும் நிதிவழங்குதல் போன்றவை பொதுக்கல்வித் துறையோடு RSA (பார்க்க பகுதி 32) NHREA NAAC HEGC போன்ற அமைப்புகள் தொழில்சார் கல்வியை வழங்கும் வகையில் ஒப்படைக்கப்படவேண்டும். தொழில்சார் கல்வியானது ஒட்டுமொத்த உயரகல்வியின் இன்றியமையாத பாகமாகவேண்டும் நம் நாட்டில் தொழில்சார் திறனாளர்களுக்கான பற்றாக்குறை அளவுக்கதிகமாகவே உள்ளது. குறிப்பாக சுகாதாரத் துறையில் இது மிகவும் அதிகம். தொடர்ச்சியான இடைவெளியில் உயர்கல்வியின் பல்வேறு துறையில் தேவைப்படும் தொழில்சார் திறனாளர்களின் தேவையினை கவனமாகத் தகவல்களைத் திரட்டி தேவையான அளவு கல்வி நிறுவனங்கள் உருவாக்கவேண்டும்.. வேளாண்மை,சட்டம்,மருத்துவம்,,மற்றும் தொழில்நுட்ப கல்வியின் தேவைகளை கண்டெடுத்து முழுமையாக புணரமைக்க ஒரு தனிப்பட்ட குழு அமைக்கப்படவேண்டும். அதே நேரத்தில் இந்த கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களும், உயர்கல்வியினை புணரமைக்கும் அணுகுமுறைகளும் தொழில்சார் கல்விக்கும் பொருந்துவதாக அமையும். பொதுக்கல்வியோடு தொழில்சார் கல்வியினை தொடர்புபடுத்துவதற்காக இக்கொள்கையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளும் ஒவ்வொரு துறைக்கான சீர்திருத்தங்களும் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன. 16.1. இளநிலைக் கல்வி ஒவ்வொரு தொழிலும் அதன் பயன்படுத்தப்படும் சூழலை ஒட்டி குறிப்பிடத்தக்க விழுமியங்களையும் பொதுவான விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மிகவும் சிறிதான அளவில் இருப்பதால் தொழில்சார் கல்வி சமூகத்தின் மீதும் பொருளாதாரத்தின் மீதும் செலுத்தும் தாக்கமானது சரியான விகிதத்தில் இல்லை. மனித உரிமைகள் மற்றும் தொழில்சார் நெறிகள், சுற்றுச்சூழல் , சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய கூறுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தொழில்கள் செயலாற்றும் சூழலானது மறுவரையரை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப தொழில்களானது தொடர் மாற்றத்துக்குட்படுவதாகவும் வேறுபடுவதாகவும் உள்ளது. இந்த சவால்களுக்கு ஈடுகொடுப்பதாக தொழில்சார் இளநிலைக்கல்வி அமையவேண்டும். 16.1.1. உயர்கல்வியோடு தொழில்சார் கல்வியினை மீளஒன்றுபடுத்துதல் : சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் மிகு தாக்கத்தின் அடிப்படையில் தொழில்சார் திறனாளர்கள் உருவாக்கமானது கீழ்க்கண்ட கூறுகளை உள்ளடக்கவேண்டும். 1. பொதுத் தேவையின் முக்கியத்துவம் கருதியும் தொழில்சார் அறத்தின் பாற்பட்டதாக கல்வி அமைதல் 2. ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான தேவையை உணர்ந்து அதற்கு அது ஆற்றவேண்டிய நோக்கங்களை உணர்வதான கல்வி 3. தொழில்சார் பழகுதலை ஊக்குவிக்கும் கல்வி தனிப்பட்ட நிறுவனங்களாக அமையாமல் உயர்கல்வியை மேற்கொள்ளும் சூழலில் ஒரு பாகமாக அமையும் நிலையிலேயே மேற்கண்ட கூறுகளை சிறப்பாக அடைய இயலும். தொழில்சார் கல்வியை அளிப்பவை உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பல்வேறு கல்விப்புலத்தினையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி தாம் அளிக்கும் கல்வியின் வீச்சை பரந்துப்பட்டதாக ஆக்கும். அளவிலான திறன்பெற்றதாக ஆக்கப்படும். 16.1.2. தொழில்சார் கல்விக்கூறுகளுக்கிடையில் ஒருங்கிணைந்த கல்வி அனைத்து விதமான புதிய வேளாண் கல்லூரிகளும் வேளாண்மை தொடர்புடைய தோட்டக்கலை,, கால்நடைகள், வேளாண்கானகம், நீர் உயிரியல் உணவுத் தயாரிப்பு முறைகள் உள்ளிட்ட பலவற்றை ஒருங்கிணைப்பதாக இருக்கும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களும் இதனை கூடுமானவரை ஒருங்கிணைக்க முயலவேண்டும். தேசிய அளவிலான ஆய்வுநிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு இணைப்பைப் பலப்படுத்திக்கொண்டு பயிற்சி, வணிகம் தேருதல், புதியோர்களுக்கான வாய்ப்புகளுக்கு போன்றவற்றிற்கு உதவ வேளாண்மைப் பல்கலைக்கழங்கள் ஊக்குவிக்கப்படும். இது இம்மாதிரியான பட்டதாரிகள் தமது திறன்களையும்,பார்வையினையும் அகலப்படுத்திக்கொள்ளவும் தமது கல்வியின் பரப்பெல்லையையும் பரந்துபடுத்திக்கொள்ள உதவும். சுகாதாரசேவைகள் மற்றும் தொழில்நுட்பக்கல்வியிலும் இது போன்ற உத்திகள் கையாளப்படும். உதாரணமாக கட்டடவியலில் தற்போது உள்ள தீர்வை நோக்கி நகர்த்தும், பயன்பாட்டு அணுகுமுறைக்கு மாற்றாக ஊரக திட்டமிடல், சமூக அறிவியல் மற்றும் பொருளாதாரம் தொடர்புடைய கூறுகள் இணைவதான இயல்கள் இணையும் அணுகுமுறை உருவாக்கப்படும். இது எதிர்கால கட்டட வல்லுநர்கள் மக்களின் விருப்பங்களுக்கேற்ப வாழும் சூழலை உருவாக்கிக்கொள்ளவும் தொழில்நுட்ப கூறுகளுக்கிடயிலான இடைவெளிகளைத் தீர்ப்போராக உருவாக உதவும். மற்றுமுள்ள இயல்களிலுமுள்ள தொழில்சார் கல்வியானது பரந்துபடுத்தப்படும். 16.1.3. தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி சுகாதாரம்,தொழில்நுட்பம்,வேளாண்மை போன்ற துறைகளில் இலட்சக்கணக்கான இந்திய இளையோருக்கு தொழிற்கல்வி அளிப்பதன் சவால் மிகவும் பேசப்படுகிறது. உதாரணமாக வேளாண்மைக்கல்வி அதனோடு தொடர்புடைய தோட்டக்கலை, உரம் மற்றும் பூச்சிகொல்லி,உணவு பதப்படுத்துதல், மீன்வளம், கால்நடை போன்றவற்றோடு தொடர்புபடுத்துவதாக அமையவேண்டும். அதுபோலவே தொழில்நுட்பக் கல்வியானது பொறியியல் தொழில்நுட்பம்,மேலாண்மை,கட்டடவியல் ஊரக திட்டமிடல், மருந்தகம், உணவகமேலாண்மை,சமையற்கலை, போன்றவற்றில் பட்டயங்களும் பட்டங்களையும் உள்ளடக்கவேண்டும். அதே நேரத்தில் சுகாதாரக்கல்வியானது அதனோடு தொடர்புடைய மருத்துவம்தொடர்பான பணியாளர்களான கதிரியக்கவியலாளர், ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்கள்,மருத்துவர்கள், முதியோரை பராமரிக்கும் பணியாளர்கள் போன்றவர்களை பயிற்றுவிப்பதாக அமையவேண்டும். இப்பணிகளுக்காக மட்டும் சுமார் 80 மில்லியன் பணிகள் உலகம் முழுவதும் உருவாக வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவின் நன்மைக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இதுபோன்ற துறைகள் மிகவும் முக்கியத்துவமானதாகும். எனவே பல்வேறு வகையில் தொழிற்கல்வியானது அணுகப்படவேண்டும். இவ்வாறான துறைகளின் அரசுப்பணியாளர்கள், தொழிலாளர்கள் தொடர்புடைய திறன்வளர்ப்புக் குழுமங்களும் ஏனைய பாக்கியதாரரகளும் ஒன்றாக இணைந்து இதனை அணுகுவதாக அமையவெண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இதற்கான திறன்களை வழங்கி இளையோர்களை பயிற்றுவிப்பதன் இலக்கை அடைவதில் கல்வி நிறுவனங்களின் பங்கானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொதுவான பயன்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொழில்சார் அறத்தினை வலியுறுத்துவதாக தொழில்சார் திறனாளர்கள் தயாரிப்பு அமையவேண்டும். கல்வி ஒரு துறையாகவும் பயன்பாடு ஒரு துறையாகவும் பிரிந்து இருக்கும் தொழில்சார் கல்வி மற்றும் சிறப்புத் துறையினை தனிமைப்படுத்தும் தொழில்சார் கல்வியாகவும் இருக்கக் கூடாது. 16.1.4. தொழில்சார் கல்வி அளிக்கும் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற்கல்வி அளிப்பதற்கான வாய்ப்புகள் பொதுக்கல்வி அளிப்பதோடு தொழில்சார் கல்வி அளிக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளும் இளநிலை அளவில் பல்வேறு தொழிற்கல்வி அளித்து பட்டயங்களும், மேம்படுத்தப்பட்ட பட்டயங்களும், பட்டங்களும் தொழிற்கல்வியில் இளநிலை, வழங்கும் வகையில் வலுப்படுத்தப்படும். இந்த சான்றிதழ்களானது தேசிய திறன் தகுதி திட்டம் 5,6,7 (NSQF)க்கு இசைவதாக அமையும். தேசிய தொழில் தரம் நிர்ணயத்தின் தகுதித் தொகுப் (NOS-Qps) பின் வரையரைப்படி தேசிய திறன் வளர்ப்பு ஆணையத்தின் தரநிர்ணயத்திற்கேற்றதாக இதற்கான தரநிர்ணயத்தினை துறைரீதியான திறன் குழுமமும் (SSC) தொழில்சார்கல்விக்குழுமங்களும் அமைக்கும். பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களின் பொறுப்பில் இதற்கான பாடத்திட்டமும் கலைத்திட்டமும் உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தொழிற்கல்வி அளிக்கும் கல்விநிறுவனங்களுக்கு நிதிவழங்கும் பொறுப்பு உயர்கல்வி நிதிநல்கை குழுவிடம் (HEGC) இருக்கும். 16.1.5. மேநிலைக்கல்வி அளவில் தொழிற்கல்வி அளிப்பதற்கான வாய்ப்பு: தேசிய திறன் தகுதி திட்டத்தின் 1 முதல் 4 வரையிலான அம்சங்கள் பள்ளிக் கல்வியோடு ஒருங்கிணைக்கப்படும் என்ற வகையில் (பார்க்க பகுதி 20) தொழிற்கல்வி திறன் வாரியத்தின் (VESB) மூலமாக விவசாயம், சட்டம், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரப்பணிகளுக்கான தொழிற்கல்விக்கான கலைத்திட்டத்தினை உருவாக்கும் பொறுப்பு துறைத் திறன் குழுமத்திடம் (SSC) ஒப்படைக்கப்படும். இது தொழிற்கல்வி திறன் வாரியத்தோடு இணைந்து செயல்படும். பள்ளிக்கல்வியோடும், மேநிலைக்கல்வியோடும் தொழிற்கல்வியை இணைக்கும் பணியானது தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமம் மற்றும் தொழிற்கல்வி திறன் வாரியத்திடம் ஒப்படைக்கபபடும்.இது அதன் சவால் மிக்க பணியாக இது அமையும். தொழிற்கல்வியை பள்ளிகல்வியோடு இணைப்பதற்கான நிதி ஆதாரங்கள் பள்ளித் தொகுப்புத் திட்டங்கள் மூலம் மாநில அரசுகள் வழங்கும். 16.1.6. பல்வகை சேர்க்கை விலகலுடனான பல்துறையிடையிலான கல்வி பல்துறையிடையிலான கருத்துக்கள் பரிமாற்றத்தினை ஒருங்கிணைப்பதற்கு வழிவகைசெய்யும் வண்ணம் தொழிற்கல்வியின் திட்டங்களில் பல்துறை வாய்ப்புகளை பயன்படுத்தும் வண்ணம் பல்வகை சேர்க்கை முனையங்கள் உருவாக்கப்படும். தொடர்புடைய துறைகளில் செயல்வழி அனுபவம் பெறும் வண்ணமும் திறன்களை செய்துகாட்டும் வண்ணமுமாக பயிற்சியாளர்கள் பயன்பெறும் வண்ணம் ஒருங்கிணைக்கப்படும். தொழிற்கல்வியில் முன்னறிவினை அங்கீகரிக்கும் வாய்ப்பு (RPL) மற்றும் உடனியங்கும் மதிப்பீட்டு திட்டம் போன்றவை கொண்டுவரப்படும். இதனை செயல்படுத்த ஒவ்வொரு தொழிற்கல்வித் துறையோடும் தேசிய திறன் தகுதி திட்டம் (NSQF) மற்றும் அதற்கு இணையான தேசிய உயர்கல்வி தகுதி திட்டம் NHEQSF போன்றவை கொண்டுவரப்படும். தேசிய கல்வி நிறுவனம் (RSA) இந்த செயல்பாடுகளை மேற்கொள்ள தேசிய ஒருங்கிணைப்புக்குழுவுக்கு (SSC) உதவும். இப்பயிற்சிகளில் சேரும் காலம் மற்றும் வயது போன்றவை நெகிழ்வுடையதாக மாற்றப்படும். இடையில் தேவைப்பட்டால் விடுப்பு எடுப்பது மற்றும் கற்ற கல்வியின் தேர்ச்சிகளை (credits) பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்படும். 16.2. நிபுணர்களுக்கான அளவை திட்டமிடல்: மருத்துவர் செவிலியர் கதிரியக்க வல்லுநர் வேளாண் பட்டதாரி போன்ற வல்லுநர்கள் அளவு குறைவாக உள்ளது, அதேவேளையில் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பல் மருத்துவர்கள் அதிக அளவில் உள்ளதால் தொழிற்கல்வி கல்வித்துறை மிகவும் பாதிக்கப்படுகிறது. சிறந்த தரவுகள் சேகரிப்பை அடிப்படையாகக்கொண்டு சிறந்த திட்டமிடல் மூலம் குறைவான கல்வி வளங்கள் சிறப்பாக அமைய வேண்டும்.  16.2.1. அளவினை உருவாக்குவதற்கான முன்னோக்கு திட்டங்கள்: விரிவான தரவுகள் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்திய தொழிற்கல்விக்கான விரிவான முன்னோக்கு RSA நியமிக்கும். அத்தகைய முற்போக்கு திட்டங்கள் வளர்ந்து வரும் தொழிற் கல்வியை கண்டறிந்து தேவையான கல்வி நிறுவனங்கள் அல்லது பாடத்திட்டங்களை உருவாக்கும், தற்போது நம் நாட்டிற்கு தேவையான தொழில்நுட்ப மனித வளங்கள் (தேவை மற்றும் வழங்கலில் உள்ள  பிராந்திய  ஏற்றத்தாழ்வுகள் உட்பட ) மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வளர்ச்சியுறும் துறை ஆகியவற்றை மதிப்பீடும். புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனுமதி அளிக்க பரிசீலனை செய்யும் பொழுது NHERA இந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்ளும், மாநில அரசுகள் , அதன் முடிவுகளில் உள்ளீடுகளாக இம் முன்னோக்கு திட்டத்தை பயன்படுத்தும். CESD (பார்க்க P6.1.5) உள்ள NIEPA, பொதுக்கல்விக்கு மட்டுமல்லாது  தொழிற்கல்விக்கும் தகவல் திரட்டுவதற்காக அதன் செயல்பாடுகளை விரிவு படுத்தும். பல்வேறு வகையான பட்டப் படிப்புகள் வழங்குவதற்கும், புதிய மற்றும் வளர்ந்துவரும் துறைகளிலும், பணி அளிப்போர் எதிர்பார்க்கும்  தகுதி, பல்வேறு பட்டப் படிப்புகளின் தரம், போன்றவற்றின் வருடாந்திர தரவுகள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பரவலான தகவல்கள் ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் செயல்முறைகள் செயல்படுத்தப்படும். இந்த தகவல்கள் கல்வி நிறுவனங்களுடன் பகிரப்பட்டு, பாடத்திட்டங்களை திட்டமிட பயன்படுத்தப்படும். 16.3. முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி: தொழில்சார் பட்டப் படிப்புகளில் முதுகலை கல்வி கணிசமான அளவு பலப்படுத்தப்பட வேண்டும். சமூக மற்றும் தேசிய உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பிற்கு தயார்படுத்துதல், கல்வி திறன் தன்னம்பிக்கை மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி போன்றவற்றை முதுநிலை பட்டதாரிகள் பெறுவதை கலைத்திட்டம் உறுதி செய்ய வேண்டும். ஒரு சிறிய பகுதி மட்டும் ஆராய்ச்சி தொடர்வதுடன், முதுநிலை பட்டதாரிகள் உயர் நிலை தொழில்சார் பயிற்சிகளோ அல்லது கற்பித்தலை தேர்ந்தெடுத்து பேராசிரியர்களாக மாறலாம். இவ்விரு நிலைகளிலும், அவர்கள் சிறந்த  வல்லுநர்கள் போல  வெளிப்பட வேண்டும், எனவே அடுத்த தலைமுறையினர் சிறந்த கல்வியை பெற முடியும். 16.3.1. முதுகலை கல்வி மறு சீரமைக்கப்படும்: ஒவ்வொரு சிறப்பு சூழலிலும் தொழில் முறை நடைமுறைகான அனுபவத்தை உறுதிப்படுத்த முதுகலை கல்வி பாடத்திட்டம் மற்றும் கற்பிக்கும் அணுகுமுறை  சீரமைக்கப்படும். இதற்கு நம் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வகை தொழில்சார் நிறுவனங்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு தேவைப்படும்.  16.3.2. ஆராய்ச்சி: கட்டிடக்கலை மற்றும் நுண்கலை போன்ற தொழில்சார் கல்வியில் பல துறைகள் நடைமுறை அடிப்படையிலானவை மற்றும் இந்தப் பகுதிகளில் ஆராய்ச்சி ஒரு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. உதாரணமாக, பல நிறுவனங்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் தலையினை நவீனமயமாக்கும் பணியினை செய்கின்றன, அப்பகுதிகளில் கணிசமான அளவு ஆராய்ச்சியின் தேவை உள்ளது.  மற்ற கல்வித் துறை களிடமிருந்து பெரும் ஆராய்ச்சி முறையானது, ஆராய்ச்சி தலைப்புகளை தேர்வு செய்வதற்கு வழிவகுக்கும், அவை வெறும் கோட்பாடுகளாகவும் அடிப்படை உண்மையிலிருந்து வேறுபட்டும் உள்ளது. அதேசமயம் இத்துறைகள் ஒவ்வொன்றிலும் பல தீர்க்கப்படாத சிக்கல்கள் உள்ளன, குறிப்பாக சமுதாயத்துடன் அவற்றின் தொடர்புகள், தீவிர கல்விசார் ஆய்வுகளுக்கு தொடக்கப்புள்ளியாக இவை மாற வேண்டும். மிகவும் பொருத்தமான ஆராய்ச்சிக்கு, தொழில்சார் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். அனைத்து தொழில்சார் துறைகளின் ஆராய்ச்சி NRF மூலம் நிதி பெற தகுதியானதாகும். ஏற்கனவே உள்ள முகமைகளான ICMR மற்றும் ICAR போன்றவையும் தங்கள் நிதி உதவியினை தொடரும்.  புதிய அறிவுசார் தலைமுறைக்கும், தொழில்சார் கல்வியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் இது ஆராய்ச்சிகள் அடிப்படையாக இருக்கும். தேசிய அளவில், புதிய நிறுவனங்களை அமைத்து அதில் முடிவு எடுக்கும் தீர்மானங்கள் உட்பட கொள்கை உருவாக்கம் மற்றும் முன்னோக்கு திட்டத்திற்கான அடிப்படையை இது வழங்கும். கல்விநிலையங்கள் அளவில், அது கலைத்திட்ட மற்றும் கற்பித்தல் முறையின் முன்னேற்றத்தை எளிதாகும். 16.4. ஆசிரிய குழாம் தொழில்சார் கல்வியில் ஆசிரியர் கல்வி திட்டங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மட்டத்தில் பரந்த நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடங்கள் கற்பிப்பதில் நிபுணத்துவம் பெறுமாறு பயிற்சிகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் புரிந்து கொள்ளல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்து கொள்வதற்கும் இடையே சார்பு உள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் விளைவுகள் இல் மாற்றம் நிகழ்கிறது கூடவே ஆசிரியருக்கு மிகுந்த அழுத்தமும் ஏற்படுகிறது. ஒருங்கிணைந்த மற்றும் செயல்பாட்டு கற்பித்தல் முறைகள் மற்றும் தொழிற்கல்வி நெறிமுறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இது ஆசிரியர் கல்வியை முறை படுத்துவதன் மூலமே முன்னேற்ற முடியும். எதிர்வரும் காலத்தில் ஆசிரியர்கள் முதுநிலை கல்வி பெற்றவர்களாக இருப்பது தொடர்ந்து தொழில் கல்வி துறையில் நிலைத்திருக்க உதவும். தொழிற்கல்வி என்பது தொழிற்சாலை வணிகம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் அனுபவம் பெற்றவர்களை அழைத்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் கற்பித்தலை மேற்கொள்ள செய்ய வேண்டியது ஆகும். புதிய ஆசிரியர்களுக்கு அறிமுகப் பயிற்சி மற்றும் தொடர்ச்சியாக சேவை சார்ந்த தொழில் முறை மேம்பாட்டு பயிற்சி அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 16.4.1. தொழில் துறைக்கு ஆசிரியர்களை தயார்படுத்த கல்வித்துறைகள் அமைத்தல். தொழில் முறைக் கல்வி துறையில் ஆசிரியர் கல்வியை உறுதிப்படுத்த கல்வித்துறைகள் நிறுவப்படவேண்டும் ஏற்கனவே இல்லாத பட்சத்தில் எல்லா பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொழில் முறைக் கல்வியை எப்படியாவது ஏற்படுத்த வேண்டும். இந்த பல்கலைக்கழகங்கள் பன்னாட்டு நிறுவனமாக செயல்பட எதிர்பார்க்கப்படும். தொழில் சார்ந்த துறையில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் முதுநிலை கல்வி பெறுதல் மூலம் ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டங்களை வளர்க்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புநிலை முதுநிலை கல்வியை பெற்றெடுத்த ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய தகுதியாகும். பாடநெறி அபிவிருத்தி கல்வி மற்றும் மதிப்பீடு நுட்பங்கள் போன்ற துறைகளில் பயிற்சி ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் வழங்கப்படும். பகுதி நேரம் அல்லது ஆன்லைன் மூலம் அல்லது கலந்தோ தரப்படும் பயிற்சிகள் மூலம் தொழில் சார்ந்த பணிகளை அணுகலாம். 16.4.2. துறைகளில் பற்றாக்குறை முழுவதும் கட்டுப்படுத்த, தணிக்க. பல்கலைக்கழகங்களில் மற்றும் தொழில் நிறுவனங்களில் பல வழிகளில் ஆசிரியர்களை அதிகப்படுத்த ஊக்கப்படுத்த வசதி செய்யப்பட வேண்டும். ஆசிரியரை ஈர்த்து நிலைப்படுத்த செய்ய வேண்டுமென பற்றிய அளந்து அறிய வேண்டும். அருகில் உள்ள நிறுவனங்களில் தொடர்பு கொண்டு ஆசிரியரை பகிர்ந்து கொள்ள வேண்டும் அறிவியல் அறிஞர்கள் பேராசிரியர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள் போன்றோரை சுழற்சி முறையில் அழைத்தல் சிறந்த மற்றும் சிறப்பான முறையாகும். தனியார் துறையில் உள்ள அறிவில் சிறந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் போன்றோரை மருத்துவத்துறை பயிலும் மாணவர்களுக்கு கற்பித்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள தகுதியை வளர்த்துக்கொள்ள முக்கியத்துவம் தர வேண்டும். மாணவர்கள் பயிலும் போதே அவர்கள் வாழ்க்கை குறித்த ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள் செய்வது அவசியம் இது விரும்பத் தக்க ஒன்றாகும். மூத்த மாணவர்கள் மற்றும் இளையவர்கள் இடையே அறிவு செறிந்த சாய்வு இணைப்பு ஏற்பட வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அறிவு செறிந்த நன்மதிப்பு பெற்றவர்கள் சில துறைகளில் கற்பித்தலுக்கு உதவ அங்கீகரிக்கப்படலாம். 16.4.3. ஆசிரியர்களின் தொழில் மேம்பாடு ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்காக தொடர்ச்சியான கல்வி நிகழ்வுகளை பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகங்கள் செய்ய கல்வித்துறை வலியுறுத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஆராய்ச்சி செய்ய வலியுறுத்த படமாட்டார்கள் மாறாக கற்பித்தல் முறை வகுப்பறை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆசிரியர்களை மதிப்பிடுவதில் மாணவர்களின் உதிர்தல் போன்றவை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் பாடப்புத்தகங்கள் எழுதுதல் பல்வேறு மொழிகளிலிருந்து இலக்கிய மொழிபெயர்ப்பு செய்வதற்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கப்படும். 16.4.4. ஆசிரியர்களுக்கான தொழில்சார் சபைகள். ஆசிரியர்களுக்கான தொழில்சார் சபை இருக்க ஒவ்வொரு தொழிற்கல்வி பிரிவு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு ஆசிரியரும் புத்துணர்வு பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் உதாரணமாக மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான ஒரு தொழில்முறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் அப்போதுதான் ஒவ்வொரு ஆண்டிலும் ஆசிரியர்கள் தங்கள் அறிவை அடுத்த நிலைக்கு மேம்படுத்திக்கொள்ள உதவும். மருத்துவத் துறையின் அனைத்து பிரிவுகளிலும் இந்த நோக்கம் சார்ந்த செவிலியர்கள் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரிவுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும். 16.5. ஆட்சி, ஒழுங்குமுறை மற்றும் அங்கீகாரம்   RSA பொருத்தமான வழிமுறைகளின்படி உயர் கல்வியுடன் கூடிய தொழில்முறை கல்வி பரிணாம வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும்.இவ்வழிகாட்டுதலின் கொள்கை உயர் கல்வியை ஒரு முழுமையான வழியில் புனிதமான பார்வையில் பார்க்க வைப்பதே ஆகும். உயர் கல்விக்காக உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு கட்டமைப்பும் தொழில்முறை கல்விக்கு நீட்டிக்கப்படும், அதற்கு NHERA மட்டுமேஒழுங்குமுறை அதிகாரமாக இருக்கும். தொழில் கல்வியை பொருத்த மட்டில் மற்ற 17 க்கும் மேற்பட்ட தொழில்முறை குழுக்களின் பங்கானது, நிலையானதொழில்முறை அமைப்பு என்று மாற்றப்படும். அவர்கள் பாடத்திட்டத்தை வகுக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் தொழில்முறை தரங்களையும் பாடத்திட்டகட்டமைப்பையும் குறிப்பிடுவார்கள். அதைக்கொண்டு கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த பாடத்திட்டத்தை தயார் செய்யும். பாடத்திட்டங்களில் சீர்திருத்தங்கள், கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை தயார்படுத்துதல் உள்ளிட்ட கல்வி செயல்திறன் முன்னேற்றம் HEI க்களுக்குதன்னாட்சி வழங்குவதன் மூலம் செய்யப்படும். தொழில்சார் கவுன்சில்களுடன் கலந்துரையாடலுடன் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் கவுன்சில் மூலம்அங்கீகரிக்கப்படும் அங்கீகார முகவர்களால் தொழில்முறை கல்வியை வழங்கும் எல்லா நிறுவனங்களும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைஅங்கீகரிக்கப்படும். தொழில் கல்வியின் பல்வேறு வகை நிறுவனங்களையும் அங்கீகரிக்க தேவையான தகுதிகளுடன் சுயாதீன அங்கீகார முகவர்கள்உருவாக்கப்படுவர்.. 16.5.1. தொழில்முறை கல்விக்கான கட்டணம் தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்தத்திட்டத்தை தாமே அமைத்துக்கொள்ள தன்னாட்சி அங்கீகாரம் தரும் அதே வழியில் அவங்களின் கட்டண நிர்ணயங்களையும் தங்கள் மேலாண்மைக்குழுவே தீர்மானிக்க விட்டு விடலாம். இருப்பினும் அவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பலவீனமான பிரிவுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற அவர்களின் சமூக கடமைகளை நிறைவேற்ற வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு தகுதி பெரும் மாணவர்களுள் குறைந்தது 50% மாணவர்களுக்கு சிறு அளவில் கல்வி உதவித்தொகைகளும் 20% மாணவர்களுக்கு முழு உதவித்தொகைகளும் வழங்க வேண்டும். 16.5.2. தரம் வாய்ந்த தொழில்முறை கல்விக்கு சமமான வாய்ப்பு   அனைவருக்கும் சமமான வாய்ப்பே புதிய நிறுவனங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல் முடிவுகளிலும் உள்கட்டமைப்பை மேம்பாடு மற்றும் கல்விவளங்களின் முதலீடுகளிலும் மிக முக்கியமான கோட்பாடாக இருக்க வேண்டும். தொழில் முறை  கல்வியின் ஒவ்வொரு துறையிலும் அதன் வேறுபட்ட பண்புகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.   தொழில்முறை கல்விக்கென தனியாக பல்கலைக்கழகங்களை நிறுவுவது நடைமுறையில் நிறுத்தப்படும். தொழில்முறை கல்வியோ, பொது கல்வியோ தனித்து வழங்கும் நிறுவனங்கள் இரண்டையும் வழங்கும் நிறுவனங்களாக மாற வேண்டும் 16.6. வேளாண்மை மற்றும் கூட்டுப் பிரிவு தற்போது, ​​அமெரிக்காவின் நில மானிய மாதிரிகளில் 67 வேளாண் பல்கலைக்கழகங்கள்(AUs) அமைக்கப்பட்டுள்ளன, அவை மாநில மற்றும் மையங்களில் இருந்து நிதி பங்களிப்புகளை உள்ளடக்கியவை, அதே போல் பல்கலைக்கழகத்தின் ஆதார மூலமும் உள்ளடங்கும். நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் வேளாண் பல்கலைக்கழகம் சுமார் 9 சதவிகிதம், வேளாண் மற்றும் அதனுடன் இணை இணைந்த அறிவியல் படிப்புகளில் சேர்க்கையாவது, உயர் கல்வியில் அனைத்துப் சேர்க்கைகளில் பார்க்கும்போது அது 1% க்கும் குறைவானதாகும். வேளாண் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் மேம்பாட்டுத் துறையின் அதிக தேவை உள்ளது மற்றும் விவசாயத்தின் அம்சங்கள் கொண்ட அனைத்து தனியார் துறையிலும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக உயர் மதிப்பு விவசாய தொழில், உணவு பதப்படுத்தும், நீர் திறனை, உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் போன்ற சிறப்பான அறிவார்ந்த பகுதிகளில் தேவை அதிகரித்து வருகிறது. விவசாயத்தில் பொது மற்றும் சிறப்பு கல்வி இரண்டுமே தேவை. சிறந்த திறமையான பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், புதுமையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் இணைக்கப்பட்ட சந்தை அடிப்படையிலான நீட்டிப்பு/விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். 16.6.1. விவசாய வேளாண் கல்வி: வேளாண் துறையில் இளங்கலை பட்டம் தற்போது விவசாய தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை மற்றும் குறிப்பாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு விவசாய வணிகத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. விவசாய பல்கலைக்கழகங்களின் தேவை தற்போதைய திறனை விட இருமுறை அதிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியை விவசாய, கால்நடை அறிவியல் மற்றும் அனைத்து துறைகளில் வழங்குவதற்கான திறன் அதே போல் பொதுக் கல்வியிலும், தற்போதுள்ள நிறுவனங்கள் மற்றும் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களை அமைப்பதன் மூலம் கூர்மையாக அதிகரிக்கப்படும். இந்த துறையின் அதிகரித்துவரும் தேவை இருப்பினும், இளைஞர்களை இந்த துறையை கவர்ந்திழுக்கவில்லை. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விவசாயத் துறையில் இருக்கும் வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு கட்டாய தேவை இது. இது அவர்கள் ஒரு நல்ல தேர்வு செய்ய உதவும். 16.6.2. ஒருங்கிணைந்த விவசாய/ வேளாண் கல்வி: விவசாயம் ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடாக இருக்கிறது, எனவே கல்வி வழங்கப்பட்டால் அது முழுமையான முறையில் செய்யக்கூடிய அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். எனவே, a. வேளாண், தோட்டக்கலை, கால்நடை அறிவியல், வேளாண் வனவியல், மீன்வளர்ப்பு மற்றும் அனைத்து உணவு உற்பத்தி அமைப்புகள் ஆகிய பரவலான அம்சங்களையும் உள்ளடக்கிய அனைத்து புதிய வேளாண்மை பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்படும். அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச முகவர் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் பல முறை பரிமாற்றங்கள் மூலம் தீவிரமாக தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். b. நான்கு வருட இளங்கலை பட்டப்படிப்பின் துவக்க நிலை கணிசமாக அடிப்படை அறிவியல், மனிதநேய மற்றும் சமூக அறிவியல் துறைகளில் பொருளாதாரம், விவசாய மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் கிராமப்புற சமூகவியல், மற்றும் விவசாய நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவை அடங்கும். மேலும், பாடத்திட்டம், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிககளுக்கு அறிவு, திறமைகள் மற்றும் தொழில்முனைவோர் திறன் மற்றும் சுய நம்பிக்கையைப் கொடுக்கிறது. இதனால் அவர்கள் சமூக மற்றும் தேசிய உற்பத்தித்திறன் தயாரிப்பாளர்களாக வளர்கின்றனர். c. விவசாயம் ஒரு கலப்பு பொருளாதார நடவடிக்கையாகும், AUs அனைத்து தொடர்புடைய தேசிய ஆய்வுக்கூடங்களுக்கும் மற்று பல்கலைக்கழகங்களுடனான பயிற்சி, வணிக காப்பீட்டு, தொடக்க நிறுவனங்களுடனான போன்ற வலுவான தொடர்பைக் கொண்டிருப்பதற்கு ஊக்குவிக்கப்படும். d. உணவு பாதுகாப்பு, தரமான உத்தரவாதம், சமூக அறிவியல், பொருளாதாரம், வேளாண் வணிக மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் கிராமப்புற சமூகவியல் மற்றும் விவசாய நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேளாண் கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் செய்ய பொருத்தமான கட்டமைப்பு உருவாக்கப்படும். 16.6.1. தொழில்முறை கல்வி மற்றும் சமூக / நீட்டிப்பு(விரிவாக்கம்) சேவைகள்: கல்வி நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் சமூகங்களை ஒன்று நேரடியாக அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளிலோ பயனடைய வைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. உதாரணமாக, வேளாண் பல்கலைக் கழகங்கள் சிறிய அளவிலான சிறு மற்றும் குறு விவசாயிகளை நிறைய அளவிற்கு தக்கவைக்க உதவுகின்றன. ஒவ்வொரு விவசாய பல்கலைக்கழகங்களும் விவசாயிகளின் உள்ளூர் குழுக்களுடன் ஈடுபடுவதோடு நீட்டிப்புச்((விரிவாக்கம்) சேவைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் - எ.கா. குறுகிய கால படிப்புகள் மூலம் வேளாண் செயலாக்கத்திலும் பிற பகுதிகளிலும் எவ்வாறு தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதையும், அவற்றின் அபாயங்களைக் குறைக்க உதவும் (பூச்சிகளை கையாளுதல், முதலியன) வழிகளையும் அவர்களுக்கு அவர்கள் கற்பிக்க வேண்டும். வேளாண்மை பல்கலைக்கழகம் தொழில்நுட்ப தொழிற்துறை பூங்காக்களை அமைத்து தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் பரப்புதலை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொள்ள வேண்டும். HEGC மூலம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்கப்படும். 16.6.41. மாநில, யூனியன் பிரதேசங்களில் விவசாய கல்வித் மற்றும் ஆராய்ச்சி துறை: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில் நுட்பம், மீன்வளத்துறை(முதலியன தற்போது தனி அமைச்சகங்கள் / துறைகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன) ஆகியவற்றுடன் மாநில / யூனியன் பிரதேச மட்டங்களில் சிறந்த ஒருங்கிணைப்புக்கான பொருத்தமான கட்டமைப்புகள் மற்றும் இயக்க முறைமையை ஸ்தாபிப்பதற்கு இந்த கொள்கை ஊக்கப்படுத்துகிறது. ஒரு முழுமையான நோக்கத்தை வழங்கும் பங்குதாரர்களிடையே சினெர்ஜினை உறுதிப்படுத்துவதால் மேம்பட்ட உற்பத்தித்திறன், துறை வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பயன்பாடு மற்றும் பரவலான பரவலை உருவாக்கவழிவகுக்கும் 16.6.5. பொது மானியங்களை மேம்படுத்துதல்: மையம்-மாநில கூட்டுக்களை நிறுவுவதன் மூலம் ஒரு பரஸ்பர ஒப்பு அடிப்படையில் நில மானிய முறைகளுக்கு மேலதிகமாக, வேளாண் பல்கலைக் கழகங்கள் நிதியளிக்க, போதுமான பொது மானியத்துடன் ஆதரிக்கப்படும். 16.6.6. விவசாய வேளாண் கல்வி: வேளாண் துறையில் இளங்கலை பட்டம் தற்போது விவசாய தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை மற்றும் குறிப்பாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு விவசாய வணிகத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. விவசாய பல்கலைக்கழகங்களின் தேவை தற்போதைய திறனை விட இருமுறை அதிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியை விவசாய, கால்நடை அறிவியல் மற்றும் அனைத்து துறைகளில் வழங்குவதற்கான திறன் அதே போல் பொதுக் கல்வியிலும், தற்போதுள்ள நிறுவனங்கள் மற்றும் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களை அமைப்பதன் மூலம் கூர்மையாக அதிகரிக்கப்படும். இந்த துறையின் அதிகரித்துவரும் தேவை இருப்பினும், இளைஞர்களை இந்த துறையை கவர்ந்திழுக்கவில்லை. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விவசாயத் துறையில் இருக்கும் வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு கட்டாய தேவை இது. இது அவர்கள் ஒரு நல்ல தேர்வு செய்ய உதவும். 16.6.7. விவசாய வேளாண் கல்வி: வேளாண் துறையில் இளங்கலை பட்டம் தற்போது விவசாய தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை மற்றும் குறிப்பாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு விவசாய வணிகத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. விவசாய பல்கலைக்கழகங்களின் தேவை தற்போதைய திறனை விட இருமுறை அதிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியை விவசாய, கால்நடை அறிவியல் மற்றும் அனைத்து துறைகளில் வழங்குவதற்கான திறன் அதே போல் பொதுக் கல்வியிலும், தற்போதுள்ள நிறுவனங்கள் மற்றும் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களை அமைப்பதன் மூலம் கூர்மையாக அதிகரிக்கப்படும். இந்த துறையின் அதிகரித்துவரும் தேவை இருப்பினும், இளைஞர்களை இந்த துறையை கவர்ந்திழுக்கவில்லை. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விவசாயத் துறையில் இருக்கும் வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு கட்டாய தேவை இது. இது அவர்கள் ஒரு நல்ல தேர்வு செய்ய உதவும். 16.6.8. விவசாய வேளாண் கல்வி: வேளாண் துறையில் இளங்கலை பட்டம் தற்போது விவசாய தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை மற்றும் குறிப்பாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு விவசாய வணிகத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. விவசாய பல்கலைக்கழகங்களின் தேவை தற்போதைய திறனை விட இருமுறை அதிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த இளங்கலை கல்வியை விவசாய, கால்நடை அறிவியல் மற்றும் அனைத்து துறைகளில் வழங்குவதற்கான திறன் அதே போல் பொதுக் கல்வியிலும், தற்போதுள்ள நிறுவனங்கள் மற்றும் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களை அமைப்பதன் மூலம் கூர்மையாக அதிகரிக்கப்படும். இந்த துறையின் அதிகரித்துவரும் தேவை இருப்பினும், இளைஞர்களை இந்த துறையை கவர்ந்திழுக்கவில்லை. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விவசாயத் துறையில் இருக்கும் வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு கட்டாய தேவை இது. இது அவர்கள் ஒரு நல்ல தேர்வு செய்ய உதவும். 16.7. சட்ட கல்வி 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய அரங்கில் சரியான இடத்தை எடுத்துக் கொள்ளும் நமது கனவை நிறைவேற்றுவது, ஆட்சிக்கு உட்பட்ட நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்தும் திறனைப் பொறுத்தது. ஆளும் அமைப்புகளின் ஒரு முக்கிய அம்சம் மாநில மற்றும் தனியார் நலன்கள் அரசியலமைப்பு மதிப்புகளை கடைப்பிடிக்க திறன் உள்ளதா என்பதே. மற்றும் நிறுவப்பட்ட ஆவணங்களில் தோன்றியது போல சட்டத்தை நிறுவுதல், ஆதரித்தல் மற்றும் பராமரித்தல். சமூக-அரசியல் நிறுவனங்களின் பராமரிக்க மற்றும் வளர்க்க வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்ட துணை மற்றும் நிர்வாக ஊழியர்கள் உட்பட நீதிமன்ற நீதிபதியின் வல்லுநர்கள் தேவைப்படும். சமூக-அரசியல் நிறுவனங்களை பராமரிக்கவும் மற்றும் வளர்க்கவும் நீதித்துறை அமைப்பில் நிபுணர்களின் குழு தேவைப்படுகிறது, அதில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்ட துணை மற்றும் நிர்வாக ஊழியர்கள் இருக்க வேண்டும். இந்த வேலைகள் அனைத்திலும் சட்ட கல்வியில் தொடர்ந்து வளர்ச்சி தேவைப்படுகிறது. மேலும், இந்த கொள்கை ஒரு சட்டக் கல்வியை வழங்குகிறது, அது அரசியலமைப்பு மதிப்புகள் நீதி மற்றும் அறிவுறுத்தலுடன் வெளிப்படுகிறது - சமூக, பொருளாதார மற்றும் அரசியல் - ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் மூலம் தேசிய புனரமைப்புக்கு வழிநடத்தும். சட்டம் சார்ந்த தொழில்களுக்கு சமூக பொறுப்புகளாகக் கொண்டிருப்பதை இது அங்கீகரிக்கிறது. சட்டம் சார்ந்த தொழில்கள் மூலம் நீதி எட்டாத நாட்டிலுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளுக்கு நீதி அடையும்படி செய்ய சமுதாய அளவில் அல்லது சமூக நீதி சார்ந்த நீதித்துறை செயல்பாட்டின் மூலம் இதை நடைமுறை படுத்தலாம். எனவே, சட்ட கல்வி ஒரு தனியார் நலனுக்கு பதிலாக பொது நலமாக காட்சிப்படுத்தப்படுகிறது. அரசு, சமுதாயம் மற்றும் சந்தைகளில் உள்ள அவர்களின் பங்களிப்புடன் தொடர்புடைய தனித்துவமான நலன்கள் மற்றும் நியாயமான மற்றும் சமமான வளர்ச்சிக்கு எதிர்பார்ப்புகள் உள்ளடக்கியது. இறுதியாக, தொழில்முறை சட்டக் கல்வி உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடியது, சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை நீதியுடன் அணுகுவதற்கும், நியாயமான நேரத்தை வழங்குவதற்கும் நியாயமானது. எதிர்கால மாற்றத்திற்கான திசைகளை வழங்குவதற்கு ஒரு புதிய சட்டக் கல்வியின் கொள்கையானது கட்டாயமாகும். 16.7.1. சமூக கலாச்சார சூழல்களை பிரதிபலிக்கும் சட்ட பாடத்திட்டம்: இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை மாணவர்களுக்கு வழங்குவது சட்டப்பூர்வ கல்வியின் செயல்பாடு ஆகும். சட்டரீதியான ஆய்வுகள், அவசியமான சமூக பொருத்தத்தை மற்றும் ஏற்புடைமையை வழங்குவதற்காகவும் சட்டப்பூர்வ கல்வி செயல்படும். அவ்வாறு செய்வதன் மூலம், சட்டத்தின் பாடத்திட்டமானது, பண்டைய சட்ட நிறுவனங்களின் வரலாறு, மக்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை பிரதிபலிக்க வேண்டும். அதர்மத்தின் மீது தர்மம் வெற்றிபெற்றது போன்றவை பெரும்பாலும் இந்திய இலக்கியத்திலும் புராணங்களிலும் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகம் முழுவதிலும் வளர்ந்துவரும் ஒருமித்த கருத்து, சட்டத்தின் ஆய்வு மற்றும் பாரம்பரிய சட்ட நூல்கள் ஆய்வு உட்பட, யாவும் நடைமுறை சமுதாயத்தின் கலாச்சாரத்தில் இருந்து எந்தவிதத்திலும் சுயாதீனமாக இருக்க முடியாது. எனவே, பல்கலைக்கழகங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாடத்திட்டத்தை ஒரு ஆதாரத்தின் அடிப்படையில், சட்ட சிந்தனையின் வரலாறு, நீதி நியமங்கள், நீதித்துறை நடைமுறை மற்றும் பிற தொடர்புடைய உள்ளடக்கங்களை சரியானதாக மற்றும் போதுமானதாக பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 16.7.2. பன்மொழி கல்வி: இந்த புதிய கல்வி கொள்கையை 2019தை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு புதிய தலைமுறை குழந்தைகள் முழுமையாக பன்மொழி அறிந்தவராகலாக இருக்கும் வரை வளருவார்கள். இதற்கிடையில், சட்ட கல்வி போன்ற தொழில் சார்ந்த கல்வியின் சில பகுதிகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட சவாலுக்கும் புதுமையான தீர்வுகள் தேவைப்படும். கீழ் நீதிமன்றங்களில் உள்ள சட்ட பரிவர்த்தனைகள் தங்கள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன, அதே சமயம் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆங்கிலத்தில் செய்யப்படுகின்றன. இது சட்டப்பூர்வ முடிவுகளில் கணிசமான தாமதத்திற்கு பங்களிக்கிறது, ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரேயே வழக்குகள் தொடர முடிகிறது. சட்டக் கல்வி வழங்கும் அரசு நிறுவனங்கள் இருமொழியில் வழங்க வேண்டும், எதிர்கால வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் இக் கல்வியை - ஆங்கிலம் மற்றும் சட்டம் திட்டம் அமைந்துள்ள மாநில மொழியில் வழங்க வேண்டும். இந்த மாற்றத்தை எளிதாக்க, பிராந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த ஆசிரியர்களைத் ஊக்குவிக்க வேண்டும், உரை நூல்கள் மற்றும் ஆய்வுப் பொருட்கள் இரண்டு மொழிகளிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும், மற்றும் பரீட்சை எந்த மொழிகளிலும் எழுதப்பட்ட ஊக்குவிக்க வேண்டும். கூடுதலாக, சட்ட பொருட்களை (கோப்புகள் மற்றும் ஆவணங்கள்) மொழிபெயர்ப்பதற்கான சிறப்புச் செல்கள் அமைத்து. இரண்டு மொழிகளிலும் சரளமாக உள்ள மாணவர்கள் மொழிபெயர்ப்பு கலங்களின் வேலைக்கு பங்களிப்பு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். 16.8. சுகாதாரக் கல்வி சுகாதாரத்தில் உலகளாவிய மாற்றம் இப்போது உருவாகி உள்ளது, சிகிச்சையளிக்கும் மருத்துவ நடைமுறையில் இருந்து இன்னும் ஒரு முழுமையான அணுகுமுறை நகருகிறது. இது ஆரோக்கியம், வெளிப்பாடு மற்றும் குணப்படுத்துவதை சமப்படுத்துகிறது. இது இந்தியாவின் மருத்துவ கல்விக்கான ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மருத்துவ முறைகளில் இருந்து உதவி பெற வேண்டுமெனில், இந்தியர்களிடம் சுகாதாரப் பணிகளில் பன்முக விருப்பங்களை எப்போதும் பயன்படுத்துகின்றனர். ஒரு ஒருங்கிணைந்த சுகாதார விஞ்ஞான கட்டமைப்பில் மருத்துவ கல்வியை வழங்குவதற்கும், இந்தியாவில் வழங்கப்படும் தற்போதைய அமைப்புகளை மாற்றுவதற்கும் இது முக்கியமானதாகும். திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் குறிப்பிட்ட ஒழுக்க நெறிகளுடன் இணைந்து பன்முக சுகாதார கல்வி முன்னோக்குகளை பாராட்டுகின்ற ஒரு திட்டத்தில் பயிற்றுவிக்கப்படுகிறார்களா என்பதை சுகாதாரக் கல்வி உறுதி செய்ய வேண்டும். மருத்துவப் பணிகளில் சீர்திருத்தங்கள், மருத்துவ விநியோக தரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ கல்விக்கான இலக்குகள் மற்றும் தரநிலைகள் “அனைவருக்குமான நவீனமாக, தரம், மற்றும் மலிவான விலை சுகாதாரம்” ஆகியவற்றின் பார்வைகளிலிருந்து பெறப்பட வேண்டும். சுகாதார கல்வியில் சீர்திருத்தங்கள் முதன்மை மற்றும் இரண்டாம்நிலை உடல்நலப் பாதுகாப்பு, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கான சுகாதாரப் பயிற்றுவிப்பை மேம்படுத்துதல், கல்வி செலவினங்களைக் குறைப்பது ஆகியவை இந்த இலக்கை அடைய முக்கியமானதாகும். 16.8.1. MBBS பட்டத்தின் உயர் தரத்தை உறுதிப்படுத்துதல்: சமூகத்தின் எதிர்பார்ப்பு ஒரு மருத்துவரிடம் இருந்து வேறு எந்த தொழிலை விட அதிகமாகவும் உள்ளது. ஆயினும்கூட, MBBS டாக்டர்களின் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை இரண்டுமே மோசமடைந்து வருகின்றன. அனைத்து MBBS பட்டதாரிகளும் (i) மருத்துவ திறன்கள்; (ii) கண்டறியும் திறன்; (iii) அறுவை சிகிச்சைகள்; மற்றும் (iv) அவசர திறன்கள்; அவசியமாக வேண்டும் மற்றும் மருத்துவ மாணவர்களின் சீரமைக்கப்பட்ட கல்வி இதை உறுதி செய்ய வேண்டும். பாடத்திட்டம், கல்வி, மதிப்பீடு மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றின் ஆய்வய்களின் போது வேலை அனுபவத்தை பெற இந்த அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். முதன்மை பராமரிப்பு மற்றும் இரண்டாம்நிலை ஆஸ்பத்திரிகளில் வேலை செய்ய மாணவர்களை குறிப்பிட்ட திறன் தேவை, நன்கு வரையறுக்கப்பட்ட அளவுருக்களும் இடைவெளியில் மதிப்பீடும் செய்ய வேண்டும். கட்டாய சுழற்சி இன்டர்ன்ஷிப், ஆனால் இது கிட்டத்தட்ட இல்லாததாக மாறிவிட்டது, இதை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, மேலும் வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் ஆகிவிடும். 16.8.2. பன்முகத்தன்மை சுகாதார கல்வி மற்றும் விநியோகம்: MBBS, BDS, நர்சிங் அல்லது பிற சிறப்புப் பணிகளை எடுத்துக் கொள்ளும் போது, MBBS பாடத்திட்டத்தின் முதல் வருடம் அல்லது இரண்டு வருடங்களில் அனைத்து அறிவியல் பட்டதாரிகளுக்கும் பொதுவான காலமாக அதை வடிவமைக்கப்பட வேண்டும். மருத்துவ பன்முகத்தன்மை அடிப்படையாகக் கொண்ட பொதுவான அடித்தளக் கோட்பாடுகள், குறிப்பிட்ட அமைப்புகளில் கவனம் செலுத்தும் முக்கிய படிப்புகள் மற்றும் ஊக்குவிக்கும் தேர்ந்தெடுப்புக்கள் ஆகியவற்றைப் பின்பற்றும் அமைப்புகள் முழுவதையும் பிணைத்தல் வேண்டும். நர்சிங், பல் போன்ற பிற மருத்துவ துறைகளில் பட்டதாரிகள் MBBS படிப்பில் பக்கவாட்டு நுழைவில் அனுமதிக்கப்படுவார்கள். இதைச் சாதிக்க ஒரு மருத்துவ கல்வித் தகுதி கட்டமைப்பு ஒன்றை NMC உடன் இணைந்து உருவாக்கப்படும். நாட்டில் பன்முக சுகாதார பராமரிப்பு மரபு உள்ளது, ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை பாதுகாப்பு, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற பல்வேறு சுகாதார அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, மற்றும் சிறந்த முறையில் AYUSHயை அணுக பொது வசதிகளில் இணை-இடம் மூலம் இந்த சிகிச்சை அளிக்கப்படும். AYUSHன் புகழ்க்கு வழிவகுத்தது தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் முன்னுரிமையாகும் மற்றும் மருந்துகள் குறைந்த செலவில் கிடைக்கவும், PHY / CHC மட்டங்களில் AYUSH மருத்துவர்கள் நியமனம் மதிப்பீடு மற்றும் தேவையை பொறுத்து தழுவி கொள்ளலாம். 16.8.3. MBBS கல்விக்கான மையப்படுத்தப்பட்ட வெளியேறும் தேர்வு: MBBSக்கான ஒரு பொதுவான நுழைவு தேர்வாக NEET அறிமுகப்படுத்தப்பட்டது போலவே, MBBS க்கான ஒரு பொதுவான வெளியேறும் பரீட்சை அறிமுகப்படுத்தப்படும் (தேசிய மருத்துவ ஆணைய குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது) இது முதுகலை பட்டப்படிப்பில் நுழைவதற்கான நுழைவு தேர்வு என்ற இரட்டைப் பாத்திரத்தை வகிக்கும் திட்டம். இந்த வெளியேறும் பரீட்சை MBBS இன் நான்காவது வருடம் இறுதியில் நிர்வகிக்கப்படும், மாணவர்கள் தனியாக கற்றுக் கொள்ளும் சுமையைக் குறைத்து, இந்த நுழைவு தேர்வு மூலம் வெளியேறும் போது, அவர்கள் மதிப்புமிக்க திறனை பெற்று தங்கள் வசிக்கும் காலத்தை செலவிட முடியும். அதேபோன்று பல் மருத்துவ கல்வி மற்றும் பிற துறைகளில் தேவைப்படும் பொதுவான வெளியேறும் தேர்வுகள் நடத்தப்படலாம். 16.8.4. நர்சிங் கல்வி மற்றும் செவிலியர்கள் வாழ்க்கை முன்னேற்றம்: நீண்ட காலமாக, நர்ஸ்கள் ஒரே நுழைவு நிலை தகுதியாக BSc நர்சிங் மட்டுமே இருக்கிறது. இருப்பினும், நர்சிங் ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறை, ஜி.எம்.எம்.(GNM) பாடத்திட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கும் போது கவனமாக முடிவு எடுக்கப்படும். நர்சிங் கல்வியின் தரம் (சிறப்பாக பாடத்திட்டம்) மேம்படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும். நர்சிங் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அங்கீகாரம் பெற்ற வேண்டியதாகும். இந்த நோக்கத்திற்காக நர்சிங் கல்வி மற்றும் இதர துணை கல்விக்கான தேசிய அங்கீகாரம் குழு உருவாக்கப்படும். செவிலியர் பயிற்சி படிப்புகள் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படும், இதனால் மருத்துவர்கள் கிடைக்காத இடங்களில் நர்ஸ்கள் ஈடு செய்ய முடியும். பல்வேறு தகுதிகளின் அளவுகளுடன் கூடிய செவிலியர்களுக்கான நிபுணத்துவ மேம்பாட்டு வழிகள் உருவாக்கப்படும். நர்சிங் கல்வி தொடரவும் (CNE) மற்றும் உரிம வழிகாட்டு நெறிமுறைகளை புதுப்பித்தல் அனைத்து நர்சுகளுக்கும் இந்திய நர்சிங் கவுன்சில் (INC) உருவாக்கும். ஒரு இந்திய செவிலியர் பதிவு மையம் உருவாக்கப்படும். INC இன் பங்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுவதும் தேவையாய் இருக்கிறது. 16.8.5. குறைந்த செலவிலான உடல்நலப் பாதுகாப்புக்கான அனைத்துலக சுகாதார கல்வி: ஜெனரல் டூட் அசிஸ்டண்ட்ஸ் (GDA), அவசர மருத்துவ வல்லுநர்கள்-அடிப்படை (EMT-B) முதன்மை சுகாதார மையங்களில்(PHC) மற்றும் பிற அரசாங்க அமைப்புகளில் பணியாற்றும்ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான “சான்றிதழ் அடிப்படையிலான பயிற்சித் திட்டம்” மூலம் சுகாதாரத்தை வழங்குவதை பலப்படுத்தும் வகையில் இது அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டங்கள் இந்தியா முழுவதிலும் ஒரே போல தரம் உயர்த்தப்படும். ஹெல்த்கேர் பல்கலைக்கழகங்களுடனும், கூட்டுறவு சுகாதார அறிவியல் வாரியங்களுடனும் இணைந்து, ஹெல்த்கேர் உள்ளீடுகளை உள்ளடக்கியது துறை திறன்கள் கவுன்சில்கள், இணைந்து பாடத்திட்டங்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டும். இந்த பயிற்சி திட்டங்கள் எந்த மருத்துவமனைகளில் போதுமான வசதிகள், நவீன சிமுலேஷன் வசதிகள், மற்றும் போதுமான மாணவர்-நோயாளி விகிதம் இருக்கிறதோ அங்கே நடத்தப்படும். இந்த படிப்புகள் கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் அணுக எளிதாகவும் மற்றும் கற்றுக்கொள்ள குறைந்த செலவு ஆகும். முன்னுரிமைப் பகுதிகளான பிசியோதெரபி, மருத்துவமனை மேலாண்மை, மருத்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், முதலியவைகள் மேல் கவனம் செலுத்தப்படும். 16.8.6. சுகாதார கல்வியை எடுக்கும் மாணவர்களை அதிகரித்தல்: நாட்டில் 600-க்கும் அதிகமான மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவமனைகளை கற்பிப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட மருத்துவ சிறப்பு மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் ஆரம்பத்தில் தகுதிவாய்ந்த கற்பித்தல் ஆசிரியர்களை நிறுவுதல் போன்றவற்றால் மேம்படுத்தப்படும். மருத்துவமனைகளும் கற்பிக்கும் நிறுவனங்கள் இரண்டும் அவர்கள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக அங்கீகரிக்கப்படும். முதலீடு மற்றும் மேம்பாட்டு திட்டம் மாவட்ட மருத்துவமனைகளுக்கு உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்யும். இது எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்மருத்துவர், முதலியன மட்டுமல்லாமல், குறைந்த அளவில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ பயிற்சி தேவைப்படும் இணை-சுகாதார சேவைகளுக்கான பல இடங்களுக்கும் அதன் தேவைகளை பூர்த்தி செய்யும். ஒரு குறிப்பிடத்தக்க நடைமுறையை நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ, பல் மருத்துவம், நர்சிங், ஆயுஷ்யம் மற்றும் அதனுடன் இணைந்த ஆரோக்கியம் ஆகிய அனைத்து துறைகளிலும் மனிதவள மேம்பாடு செய்யும் அடிப்படையில், CESD ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நடைமுறையை சொல்லும். 16.8.7. முதுகலை கல்வி விரிவாக்க: பல மருத்துவத் துறைகளில் முதுகலைப் படிப்புகளில் அவற்றின் இடங்களின் எண்ணிக்கையில் ஒரு பற்றாக்குறை உள்ளது, குறிப்பாக மருத்துவக் கல்வியிலும், மருத்துவக் முதுகலைப் பட்டப்படிப்பு கல்வியில் உள்ள இடங்களின் எண்ணிக்கை, MBBS இடங்களின் எண்ணிக்கையில் பாதி தான். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்புகளை விரைவாக அதிகரிக்கும். நோயாளிகளுக்கும், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரிய ஆசிரியர்களுக்கும் புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் முதுகலை படிப்புகள் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைகளில் அவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவர வேண்டும். நோயாளிகள் மற்றும் நன்கு பயிற்றப்பட்ட கற்பிக்கும் ஆசிரியர்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கொண்டுவர வேண்டும். மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் அதனோடு இணைக்கப்பட்ட ஒரு மருத்துவ கல்லூரி கொண்டுவர வேண்டும். மும்பை வைத்தியர்கள் மற்றும் அறுவை சிகிச்சை கல்லூரிகளால் அளிக்கப்படும் ஒரு வகை டிப்ளமோ படிப்புகள், நாடு முழுவதும், ஊக்குவிக்கப்படும். இது இடைநிலை வல்லுநர்களின் போதுமான எண்ணிக்கையிலான எண்ணிக்கையை உருவாக்கும். 16.9. தொழில்நுட்ப கல்வி தொழில்நுட்ப கல்வி, என்பது, தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டிடக்கலை, நகர திட்டமிடல், மருந்தகம், ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பம் இவைகளில் பொறியியல் பட்டம், டிப்ளமோ திட்டங்கள், அடங்கும். இந்த பிரிவுகளில் பல இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமானவை. இந்த துறைகளில் தொடர்ச்சியாக பல தசாப்தங்களாக நன்கு தகுதியுள்ள நபர்களைக் கோருகின்றனர், அது மட்டும் அல்ல, கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை தூண்டதொழில் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைபடும் என்பதையும் சுட்டி காட்டுகின்றது. மேலும், அனைத்து மனித முயற்சியிலும் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில், தொழில்நுட்ப கல்வி மற்றும் பிற துறைகளுக்கு இடையே உள்ள குழிகள் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முறை கல்வி கற்பித்தலில் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்கிறது, ஏனெனில் இந்த துறைகளானது முற்றிலும் அறிவை அடிப்படையாகக் கொண்டதும் அல்ல முற்றிலும் திறனை அடிப்படையாக கொண்டதும் அல்ல. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே படைப்பாற்றல் மற்றும் அறிவு மற்றும் திறமை ஆகியவை தேவைப்படுகிறது. பல துறைகளில் போதுமான உரை புத்தகங்கள் இல்லாமை மேலும் சிரமத்தை அதிகரிக்கிறது மாணவர்களின் சாதனை, கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அவர்களின் ஆசிரியர்களின் தரத்தை பெரிதும் சார்ந்துள்ளது. 16.9.1. பட்டப்படிப்பு பட்டங்களை வலுப்படுத்தும் பாடத்திட்டம்: புலத்தில் ஆழமாக ஈடுபடுவதற்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் மற்றும் மற்ற துறைகளில் உள்ளடங்கியிருக்க வேண்டும்.நடப்பு மற்றும் எதிர்கால நடைமுறைகள் இரண்டிற்கும் நன்றாகத் தயாரான தொழில் வல்லுனர்களைத் தயாரிப்பதற்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் டிகிரி மறுசீரமைக்கப்படும், மேலும் வளர்ந்து வரும், மாறி வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் திறனைப் பயன்படுத்தி சமூக பொருளாதார சுற்றுச்சூழல் சூழல்களுக்கு பதிலளிக்கும் படியாக அமையும். தற்போதைய தீர்வு-உந்துதல், பயன்மிக்க அணுகுமுறை கட்டமைப்புகளில் உள்ள திட்டங்களை ஒரு பலதுறை அணுகுமுறையாக மாறும். பயன்மிக்க அணுகுமுறை கட்டமைப்புகளில் நகர திட்டமிடல், சமூக விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை அடங்கும். தொழில்நுட்ப பரிசீலனைகள் மற்றும் மக்களுடைய அபிலாஷைகளுடன் ஒரு வாழும் இடத்தை உருவாக்க வேண்டிய அவசியத்திற்கான இடைவெளி இது ஆகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வடிவங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நெட்வொர்க்குகள் பற்றிய புரிந்துணர்வுடன், சமுதாயத்தின் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்யும் திறனாளர்களை தயாரிப்பதிலும், முழுமையான தீர்வுகளை வளர்க்கும் திறனை தயாரிப்பதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு நடைமுறைகளுக்கு இடையே உள்ள இடைவெளி, அகற்றப்படும். மற்ற துறைகளிலிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்புடன், கோட்பாடு மற்றும் நடைமுறைகளை இணைக்கப்படும், தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு வகையான இன்டர்ன்ஷிப் ஆகியவற்றை கொண்டு அனைத்து துறைகளிலும் பாடத்திட்டங்கள் அடிக்கடி புதுப்பித்துக்கொள்ளப்படும். பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் போது மாணவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் கொடுக்கும் திறமையையும் வெவ்வேறு, அதிகம் தெரியாத, அமைப்புகள், மற்றும் தொழில்முறை மனநிலையை மற்றும் நெறிமுறைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். 16.9.2. தொழில்முறை கல்வியில் புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் உந்துதல்: தொழில்நுட்ப நுண்ணறிவு, 3-D எந்திரம், பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப கல்வியில் இயந்திர கற்றல் போன்ற, மிகவும் மேம்பட்ட விரைவாக முக்கியத்துவம் பெறும் பகுதிகளிலும் மரபணு ஆய்வுகள், உயிர் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், நரம்பியல் போன்ற அறிவியல் கல்வியிலும் தொழில் வல்லுனர்களை தயாரிப்பதில் மற்றவர்கள் மத்தியில் இந்தியா முன்னணி வகிக்க வேண்டும். இந்த தலைப்புகள் மற்றும் இது போன்றவை, ஆரம்பத்தில் இருந்தே இளங்கலை கல்வியில் பிணைக்கப்பட வேண்டும், மூன்று நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் (NAS) மற்றும் இந்திய தேசிய அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவற்றின் ஆதரவுடன் (INAE) முறையான பாடத்திட்டத்தை திட்டமிட வேண்டும். ஓய்வுபெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஈடுபடுத்தலாம். 16.9.3. தொழிற்துறை தொடர்புகளை ஊக்குவித்தல் புதுமைக்கு இட்டுச்செல்லும் தொடர்பு தொழில்நுட்ப கல்வி மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் ஆராய்ச்சி கணிசமாக பலப்படுத்தப்பட வேண்டும். அங்கீகாரம் / தரவரிசை அத்தகைய பரஸ்பர செயல்களை ஊக்குவிக்க,ஊக்கமளிக்கும்: a. தொழிற்துறை-கல்வி சார்ந்த கூட்டு நிறுவனங்கள், நிறுவனங்களில் சிறப்பான தொழிற்பாட்டு மையங்களை உருவாக்குதல் மற்றும் நிறுவனங்களில் காப்பீட்டு செல்கள் உருவாக்குதல் (கூட்டு நிதியளித்தல் மற்றும் அறிவார்ந்த சொத்துகளுக்கான பாதுகாப்பு). b. கல்வித் தகுதிகளுடன் கூடுதலாக ஆராய்ச்சி மற்றும் தொழிற்துறை அனுபவங்களைக் கொண்ட ஆசிரியர்களை நியமித்தல்; இருப்பினும் தொழில்முறை அனுபவம் மட்டும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு போதுமான தகுதிகள் என கருதப்படாது. c. ஆய்வாளர்கள் குழுவுடன் இணைக்கப்பட்ட தொழிற்துறை நிபுணர்களுக்கான இடங்கள் மற்றும் துணை ஆசிரியர் பதவிகளை வழங்குதல். d. இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அருகிலுள்ள தொழில்துறைகள் வைத்து தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். அவர்களின் வருடாந்த அறிக்கையில் CSR செலவினங்களுடனான இது போன்ற கூட்டு நடவடிக்கைகளை தொழில் துறை அறிக்கை செய்ய வேண்டும். e. தொழில்களோடு விலையுயர்ந்த உபகரணங்களை பகிர்ந்து அல்லது குறிப்பாக வேறு இடங்களில் உள்ள வளங்களை அணுகுவதற்கு மெய்நிகர் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கல்வியின் நோக்கங்களுக்காக நவீன வளங்களைப் பயன்படுத்துதல் சாத்தியமாகிறது 16.9.4. சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப கல்வியாய் மேம்படுத்துதல்: தொழில்நுட்ப கல்வியின் URG களில் இருந்து மாணவர்கள் பதிவுகளை அதிகரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு அரசு-ஆதரவு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி திட்டங்களை வழங்கும் நிறுவனம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது; தொழில்நுட்ப கல்விக்காகவும், உயர் தரமான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்காகவும், மாணவர்களுக்கான தகுதி அடிப்படையிலான ஸ்காலர்ஷிப்பை URGகள் வழங்கும்; மற்றும் தொழில்நுட்ப கல்வியில் பக்கவாட்டு நுழைவு பெற விரும்பும் மக்களுக்கு உதவ வழிகாட்டி படிப்புகளையும் வழங்கும். கூடுதலாக, தனியார் நிறுவனங்கள் கூடுதல் நிதியைப் பயன்படுத்துவதன் மூலம் வளங்களை இன்னும் திறமையாக பயன்படுத்தப்படும். (எ.கா. நிறுவனங்கள் செயல்திட்ட திட்டங்களை வழங்கலாம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான திறன்கள் மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஆய்வகங்களைப் பயன்படுத்தலாம்) மாணவர்களுக்கான கூடுதல் ஆதரவை வழங்க இந்த நிதியைப் பயன்படுத்த URG ஊக்கமளிக்கும். உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான அதிகாரமுடைய ஆளுகை மற்றும் திறம்பட்ட  தலைமைப்பண்பு நோக்கம்: நெறிமுறை மற்றும் திறன் வாய்ந்த தலைமை பண்புடன் உடைய சுதந்திரமான சுயாட்சி உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு நிறுவனத்தின் அனைத்து அம்சங்களையும் தலைமை பண்பு  மற்றும் ஆளுகை ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது . உறுதியான ஆளுகை மற்றும் திறன் வாய்ந்த தலைமை பண்பால் அனைத்து பெரு முயற்சிகளையும் நல்ல நிறுவனங்களை மேம்படுத்த ஒன்றிணைக்க முடியும். ஆனால் அந்த முயற்சிகள் பலமற்ற நிறுவன ஆளுமை மற்றும் மோசமான தலைமைப்பண்பால் வீணடிக்கப்படும். தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு,முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சூழலில் உள்ள அறிவுசார் கிளர்ச்சி தேவைப்படுகிறது உயர்கல்வி நிறுவனக்களின் அந்த ஆளுகை இந்த சூழலை தீர்மானிக்கிறது. இந்தியாவில் சுயாட்சி வழங்கப்படட நிறுவனங்கள் , உறுதியான சுயஆளுமை மற்றும் நல்ல தலைமைப்பண்புகளுடன்  உலக பெற்ற நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. ரொம்ப ____ ன் காலமாகவே தொடர் சிறப்பை கொண்ட நிறுவனங்களை நாம் கொண்டுள்ளோம்.ஏனென்றால் உறுதியான ஆளுமை செயல்பாடுகளின் ஆதரவுடன் அவைகள் கொண்டுள்ள கல்வி மற்றும் செயல்படும் தலைமை பண்புகளாலே பலவீனமான தலைமைப்பண்பு மற்றும் ஆளுமை துரதிஷ்டாவசமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆளுமை மற்றும் தலைமை பண்பு கடுமையாக சமரசம் செய்யப்படுகிறது.இந்த நிலைகளில் வெளி தலையீடுகளால்,நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த வெளிதாக்கம் நிறுவனத்தின் சுதந்திரம் மற்றும் திறனை நீர்த்துப்போக வைக்கிறது வெளி அமைப்புகளின் முறையற்ற அதிகார செயல்பாட்டுடன் நிறுவனங்களின் ஆளுமை மற்றும் தலைமை பண்பும் உயர்கல்வியில் முறையான அமைப்புகளால்  சக்தியற்றதாக ஆகிறது. நிறுவன ஆளுமை மற்றும் தலைமை பண்பு சார்ந்த பல அம்சங்களின் தொடர்பான முடிவுகள் பல்கலைக்கழக மானியக்குழு நிலை அல்லது மாநில மற்றும் மத்திய அமைப்பு நிலைகளில் எடுக்கப்படுகிறது.அவை கல்லூரிகள் பல முக்கியமான வழிகளால் பல்கலைக்கழகத்தினால் கட்டுப்படுத்தபடுவதால் சொந்த பாடப்பிரிவுகளை நடத்த முடிவதில்லை. மாநில மற்றும் வேறு அதுபோன்று அமைப்புகளின் உயர்கல்வி துறைகள் ,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை அவைகளின் நிலையின் வெளிப்பாடாக எடுத்து நடத்துகிறது.இவை அனைத்தும் கல்விநிறுவனங்களின் சுயாட்சியை தாழ்த்துகிறது. நிறுவன ஆளுகையின் பல்வேறு அமைப்புகள் (உதாரணம் நிருவாகக்குழு கல்விக்குழு ) அடிக்கடி நிறுவன அமைப்பின் பொறுப்பு மற்றும் பொறுப்புடைமை சங்கிலியில் கலந்து நிறுவன அமைப்பின் பொறுப்புடைமையை பரவலாக்குகிறது. நிறுவனத்தின் நன்மைக்காக அர்ப்பணிப்பு உடைய திறமைவாய்ந்த நபர்களை உறுதிப்படுத்ததா தேர்தெடுங்கும் முறை இந்த அமைப்புகளில் உள்ளது.நியமனம் அல்லது பரிந்துரை சாதகத்தை பரவலாக்க சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் தலைவர்கள் அடிக்கடி இந்த பணியில் இல்லாதவர்களாக உள்ளனர். அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை தலைமை தாங்கி செல்லும் திறன் குறைந்தவர்களாக பெரும்பாலனோர் உள்ளனர்.அதிக விகிதாசாரம் அடிப்படையில் பெரும்பான்மையானோர் எந்த ஒரு நிறுவனத்தையும் தலைமை தாங்குவதற்கு முக்கியமான நிறுவன அர்ப்பணிப்பு ,நெறிமுறை மற்றும் பொதுநல உணர்வு குறைத்தவர்களாக உள்ளனர்.இது தேர்தெடுக்கும் முறை மற்றும் நியமன முறை விளைவின் ஒரு பகுதியாக இருக்கின்றது .இந்த நடைமுறைகள் நிறுவனத்தின் நன்மைக்காக போதுமான அர்ப்பணிப்பு இல்லாத நபர்களால் ,ஆட்பற்று கொண்டு செல்லப்பட்டு மற்றும் முடிவெடுக்கப்படுகிறது .அவர்கள் கற்பனையில் கூட நல்லா தலைமை பண்பின் தைரியம் அற்றவர்களாக இருக்கிறார்கள் . அவர்கள் , முக்கிய அம்சத்தை இழந்துள்ள நடைமுறைகளில் பிடிக்கப்படுகிறார்கள் . அடிக்கடி வயது முதிர்வு , சரியான அளவில் இல்லாது , திறன் மற்றும் தலைமைப்பண்பு தன்மைகளைக் காட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .இந்த விஷயங்களை மோசமாக்கும் விதமாக அரசியல் முதல் லஞ்சம் வரை பல நிகழ்வுகளில் , இந்த நடைமுறைகள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் பலவீனமாக உள்ளது. 17.1. அதிகாரமிக்க ஆட்சி மற்றும் திறன்மிக்க தலைமை பட்டம் வழங்க மற்றும் புதுப்பிக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கு இடமாக சமுதாயத்தில் உள்ள பல்கலைகழகத்தின் சிறப்பு —காக நிலை சமுதாய உத்யோகம் மற்றும் புனிதமாக்கும் செயலை உயர்வான பதவியில் இருப்பவர்களான குறிப்பிட்ட அலுவல்கள் செயல்பாடுகள் மூலம் பெறும் . இந்த செயல்பாடுகள் இந்திய ஜனாதிபதி மாநில கவர்னர்கள் மற்றும் உயர்வான மக்கள் அவர்களால் பங்காற்றிய வருகைபுரிவோர் அல்லது உயர்கல்வி கற்றலின் வேந்தர்களால் மேற்கொள்ளப்படும் . அனைத்து உயர்கல்வி நிறுவனகளும் , சுதந்திர நிறுவனங்களாக , தகுதி வாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புக் கொண்ட குழுவால் ஆளுமை படுத்தப்படும் . உயர்வான திறன் கொண்ட மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்ட குழுவிற்கு நிறுவனங்களை ஆளுகை செய்ய அதிகாரம் கொடுத்தால் சிறப்புத்தன்மை ஏற்படும் : இந்த கல்வி மற்றும் நிர்வாக தலைமைப் பண்புகளை வழங்கும்போது , குழுவானது எந்த அரசியல் தலையீடிலிருந்து விலகி , நடுநிலைமையோடு பொது நலக் கருத்தை உடையதாக இருக்க வேண்டும் . இந்த குழு நிறுவனத்தின் குழுவை உருவாக்கும் . இப்போது உள்ள குழுக்களின் செயல்பாடு , அதிகாரம் மற்றும் முறையிடும் அமைப்பு திரும்ப அமைக்க வேண்டி இருப்பதால் , முறையான சட்ட செயல்பாட்டின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் பொறுப்புடைமை இணைப்பை ஏற்படுத்தலாம் . ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் , ஒரு சுதந்திரமான குழுவால் ஆளப்படும் . இது ஒரு தெளிவான பொறுப்பு மற்றும் பொறுப்புடைமை இணைப்பை உறுதிப்படுத்தும். உயர்கல்வி நிறுவனங்களின் பொது பொறுப்புடைமைக்கு, போதுமான எண்ணிக்கை கொண்ட சுதந்திரமான மற்றும் உயர்வான திறமை வாய்ந்த பொது நபர்களை குழுவில் நியமிப்பதற்கு தெளிவான நெறிமுறைகள் இருக்கும் . மற்றும் எங்கெல்லாம் தேவையோ (பின்னர் விரிவாக சொல்லப்பட்டுள்ளது) பொதுமக்களின் பிரதிநிதியை உயர்கல்வி நிறுவனங்களின் நீதிமன்றக் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம் . உயர்கல்வியின் செயல்பாடுகள் மற்றும் பொருளை புதுப்பிக்க நகர்வதால் , நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்போர்களின் தேர்வு மற்றும் தொழில் சார் முன்னேற்ற செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும் , கடுமையான பாகுபாடற்ற திறன் அடிப்படையிலான செயல்பாடுகள் , தலைமைப்பதவிக்கு வரும் நபர்களை தேர்ந்தெடுக்க மிகச்சரியான ஒவ்வொரு நிலைக்கும் விளக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் அந்த பங்கிற்கு தேவையான திறன்களுடன் , தேர்ந்தெடுக்க வேண்டும் . நிறுவனத்தின் அனைத்து தலைமைப் பண்பு பதவிகளும் (தலைமை பதவி மட்டும் அல்ல ) மிகவும் பொருத்தமான நபருக்கு வழங்கப்பட வேண்டும் . அது வயது முதிர்வு அடிப்படையில் வழங்கக்கூடாது .தலைமை மற்றும் மேலாண்மை பதவிக்கு வரும் நபர்களை தேர்ந்தெடுத்து , கல்வி நிறுவன முதல்வர்களாக நியமிக்கும் போது உணர்ச்சி ஆட்படும் நிலை மற்றும் திறன்களை முக்கிய கூறுகளாக இருக்க வேண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் திறனை கொண்டதால் உயர்கல்வி நிறுவன தலைவர்களிடம் கல்வி திறன் , தலைமைப் பண்பு மற்றும் நிர்வகிக்கும் திறன் , முக்கியமான மற்றும் இன்றியமையாதது .உயர்கல்வி நிறுவனங்களில் தலைவர்களை நியமிக்கும் செயல்பாடு இவை அனைத்தையும் கடுமையாகவும் , திறனை பாரபட்சமின்றி மதிப்பீடு செய்து வெளிப்படுத்தியவர்களின் மீது ஆக்கப்பூர்வமான சக்தியுடன் தைரியமான சூழலை எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் . இந்திய மற்றும் உலகின் சிறந்த நிறுவனங்கள் இந்த திறமையை காண்பித்த தலைவர்களால் கட்டப்பட்டது .ஆனால் , நிறுவன தலைவரின் பாரம்பரிய கருத்துக்களுக்கு பொருத்தமாக இல்லாமல் இருக்கலாம் . தலைவர்கள் அரசியல் அமைப்பு மதிப்புகள் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொலை நோக்கி பார்வையை உறுதியாக இணைப்பதை வெளிப்படுத்தி , உறுதியான சமுதாய அர்ப்பணிப்பு ,குழு பணியால் நம்பிக்கை , பன்முகத்தன்மை , வேறுபட்ட நபர்களுடன் பணியாற்றும் திறன் மற்றும் நேர்மறையான கண்ணோட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும் . இந்த பண்புகள் மற்றும் திறன்கள் அனைத்து தலைமைப்பண்பு உடையோர்களுக்காக நிறுவனத்தில் மட்டும் இல்லாது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள தலைமைப் பண்பை கொண்டவர்களுக்கு முக்கியமானது . நாம் நிறுவன தன்னதிகாரம் நோக்கி நகர்வதால் உறுதியான மற்றும் நெறிமுறை தலைமை குழுக்கள் மற்றும் தலைவர்களை ஆளுமைப்படுத்த வேண்டியது மிகவும் கட்டாயமானது . தலைமை மாற்றம் மிக கவனமாக திட்டமிடப் பட்டு , நிறுவனத்தின் நல செயல்பாடுகள் உறுதிபடுத்தப்பட வேண்டும் . அந்த முயற்சி கல்வி மற்றும் கல்வி சாராத உறுப்பினர்களை உள்ளடக்கிய உறுதியான வேறுபட்ட அணிகளை உருவாக்க வேண்டும் .தொடர்ச்சியான ஒரு சில நபர்கள் எடுத்த முடிவைக் காட்டிலும் , கூட்டமாக எடுத்த திட்டங்கள் , நிறுவனங்களின் குறிக்கோளை நோக்கி முன்னேற்றத்திற்கான அடிப்படையாக இருக்க வேண்டும் . போதுமான நிதி, கல்வி மற்றும் நிர்வாக சுதந்திரம், சட்டபூர்வ  வசதி வழங்குவதுடன், நிறுவனங்கள், அவைகள் அமைந்துள்ள பகுதியின் சமுதாயத்தோடு இணைத்து செயல்பட வைக்க, நீதி பொருட்புணர்வோடு ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும். நிறுவன ஆளுமை முழு சுதந்திரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் கல்வி, நிர்வாக மற்றும் நிதி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உறுதித்தன்மை மற்றும் ஆதரவோடு 17.1.1. சமுதாயத்திலிருந்து உத்வேகம் மற்றும் நேத்திக்கடன் சமுதாயத்தில் பல்கலைக்கழகங்களின் சிறப்பு அந்தஸ்த்தாகிய பட்டங்களை வழங்குவது மற்றும் அதனை புதுப்பிக்கும் இடமாக, குறிப்பிட்ட அலுவலகங்கள், செயல்பாடுகளை உயர்வான மாண்புமிக்க மக்களால் செய்யப்படும் சமுதாய உத்வேகம்  மற்றும் நேர்த்திக் கடனைப் பெற முடியும். a. மத்திய பல்கலைக்கழகங்கள் / உயர் கல்வி நிறுவனங்கள். வகை 1) அல்லது 2) பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து, பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை பார்த்து அறிவுரைகளை வழங்குபவராக இந்திய ஜனாதிபதி இருப்பார். அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தரை / மாண்புமிக்க அந்த வருகைபுரிவரால் நியமிக்கப்படுவார்.அந்த வேந்தர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தலமைப் பொறுப்பேற்று நடத்துவார், மற்றும் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள (17.1.3) நீதிமன்றத்தில் தலைவராக இருப்பார்.(17.4.3 ஐ பார்க்கவும்) (b) மாநில பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்கள் (வகை 1 அல்லது 2) பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில ஆளுநர், பட்டமளிப்பு விழாவினை நடத்தி, பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை, அப்போது மறு ஆய்வு செய்து அறிவுரை வழங்குவார். c. தனியார் பல்கலைக்கழகங்கள்: எந்த மாநிலத்தில் அந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதோ அந்த மாநிலத்தின் ஆளுநர் வருகைபுரிவோராக இருந்து பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவார். பல்கலைக்கழகத்தின் நிதி உதவி அமைப்பு, உயர் பதவியில் இருக்கும் நபரை வேந்தராக நியமிக்கும் அவர் அப்போது பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மறு  ஆய்வு செய்து அறிவுரை வழங்குவார். (d)    இந்த அலுவலகங்களுக்கு கீழ், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், ஒரே மாதிரியான ஆளுமை கட்டமைப்பை கொண்டுள்ளதை இந்த அத்தியாயத்தில் விபரமாக உள்ளது. ஏதேனும் வேறுபாடு எந்த வகையான நிறுவனத்திற்கு இருந்தால், அது பொறுத்தமாக இந்த அத்தியாயத்திற்குள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. 17.1.2. சுதந்திரமான ஆளுநர் குழு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பொது மற்றும் தனியார் சுதந்திரமான ஆளுநர் குழுவால் ஆளுமைப்படுத்தப்படும். அந்த ஆளுமை குழு முழுமையான சுதந்திரத்துடன் நிறுவனத்திற்கான இணைப்பு அமைப்பாக இருக்கும். வெளி தாக்கத்தை அல்லது தலையீட்டை (உதாரணம் : அரசியல், அரசாங்கம்) வெளியேற்றுவதை அந்த சுதந்திரமான ஆளுநர் குழு உறுதிப்படுத்த வேண்டும். வர்த்தக அமைப்பாக இன்றி, சமுதாய உணர்வுடைய அமைப்பாக, சிறப்பு தன்னடக்காக உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை ஆளுநர் குழு உறுதிப்படுத்த வேண்டும். கல்வி, ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் நல்ல திறமை வாய்ந்த, மேம்பட்ட நிர்வாகத்திற்கும், வெளிப்படைத்தன்மையுடைய, ஆரோக்கியமான கல்வி, நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு ஆளுநர் குழு பொறுப்புடைமை கொண்டிருக்க வேண்டும். இந்த விளைவுகளை, மதிப்பீடு செய்வது, முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளுநர் குழு மற்றும் அதன் நிதி உதவி குழுவிற்கு (பொது அல்லது தனியார்) கூறுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். 17.1.3. உயர்கல்வி நிறுவனங்களின் வழி பொது பொறுப்புடைமைக்கான முறைகள் a. ஆட்சி குழுவின் அரசியல் அமைப்பு மாண்புமிக்க ஒருவராகிய, நிறுவனத்தின் வேந்தரால் தலைமை தாங்கப்படுகிறது. b. ஆட்சிகுழுவானது இப்போது மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்ந்த செயல்பாடுகளை கொண்டு, உயர் கல்வி நிறுவனங்களின் அதிகாரத்தில் விளக்கப்பட்டது போன்று அமைக்கப்படலாம். பொது நல பிரதியாக மாண்புமிக்க நபர்களை உள்ளடக்கி, அது இருக்க வேண்டும். அந்த வேந்தர் ஆட்சிக்குழுவை தலைமை தாங்குகிறார்.ஆளுநர் குழு, ஆட்சிக் குழு முன் பொது மக்கள் பங்களிப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றத்தை ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும். c. 50% குறைவாக உள்ள ஆளுநர் குழு உறுப்பினர்கள் பொது நல பிரதிநியாக சுதந்திரமாக இருக்கலாம். உதாரணம் : எந்த அரசாங்க அமைப்பின் செயல்பாடு / நிர்வாகம் / செயலாற்றும் பணியில் இல்லாமல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் எந்த பங்கும் இல்லாதவராக. இரண்டாவது அணுகுமுறை எளிமையானதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் நீண்ட காலத்திற்கும் இருக்கும். 10 வருடங்களுக்குப் பின் “அ” பிரிவை தேர்ந்தெடுத்த நிறுவனங்கள் ஒரு மறுபார்வையை நடத்தி “ஆ” பிரிவிற்கு மாறலாம். அங்கே ஏதேனும் மாற்றம் பொருத்தமானது என்று கருதினால், 17.1.4. அந்த ஆளுநர் குழு அவர்களிடம் ஒருவரை அல்லது வெளியிலிருந்து நடுவரை, கடுமையான கண்டுபிடிப்பு செயல்பாட்டிற்கு பின் (உதாரணம் : தேடும் குழு) தேர்ந்தெடுக்கலாம் . அவர் , நிர்வாகி அல்லாத பங்கை கொண்டிருக்க வேண்டும் 17.1.5. உயர்ந்த அமைப்பாக ஆளுநர் குழு . ஆளுநர் குழு ,உயர் கல்வி நிறுவனத்தின் உயர்ந்த அமைப்பாக இருக்கும் .அதற்கு ஈடான அமைப்பு இல்லை . உள் ஆளுமை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அமைப்புகள் மறுவடிவமைப்பு மற்றும் மாற்றியமைக்கப்படலாம் . அனைத்து உயர்கல்வி நிறுவன அமைப்புகளும் , துணை வேந்தர் / இயக்குனர் மூலம் , அறிக்கையை ஆளுநர் குழுவிடம் தாக்கல் செய்யவும் இந்த மறு வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை உருவாக்குவது ) ஆளுநர் குழுவின் தனியுரிமையாகும் . இதற்கு , குறிப்பிட்ட சட்ட செயல்படுத்துதல் பல்கலைக்கழகங்களிடையே , சட்டத்தில் மாற்றம் தேவைப்படலாம் . 17.1.6. ஆளுநர் குழுவின் கூட்டமைவு :- ஆளுநர் குழுவை அமைத்து , நியமிப்பதால் ஒரு நிறுவனத்தின் ஆற்றலுக்கு முதுகெலும்பாக இருக்கும் . ஆளுநர் குழு 10-20 உறுப்பினர்களை கொண்டிருக்கலாம் . அதில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் அந்த உயர்கல்வி நிறுவனத்திலிருந்து இருக்கலாம் .(உதாரணம் – ஆசிரியர்கள் , நிர்வாக தலைவர்கள் ) அந்த சம்பந்தமான அரசாங்கங்கள் (பெரும்பாலான நிதி வழங்கும் அரசாங்கம் , உயர்கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கம் ) சேர்ந்து , 3 நியமினிகளை ஆளுநர் குழுவில் கொண்டிருக்கலாம் . அனைத்து பிற உறுப்பினர்களும் நிறுவனத்திற்கு ஈடுபாட்டுடன் பங்களிக்கும் ஆற்றலுக்காக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் .ஆளுநர் குழுவில் முன்னாள் மாணவர்கள் , உள்ளூர் சமூகம் மற்றும் உயர் கல்வி நிறுவனத்திற்கு ஏற்ற பல்வேறு துறை நிபுணர்களை பிரதிநிதிகளாக பெற்றிருக்க வேண்டும் . ஆளுநர் குழுவில் உள்ள அனைத்து புது உறுப்பினர்களும் ,ஆளுநர் குழுவால் அமைக்கப்பட்ட குழுவினால் , அடையாளம் காணப்படலாம் . அதற்குபின் ஒவ்வொருவரின் உறுப்பினர்தன்மையின் மீது ஆளுநர் குழு வாக்களிக்கலாம் . பெரும்பான்மை யர்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் தலைவர் புது உறுப்பினரை ஆளுநர் குழுவிற்கு வரவேற்கலாம் . ஆளுநர் குழுவில் உள்ள உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை பொதுப்படையாகவும் ,வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் . 17.1.7. ஆளுநர் குழுவின் பொறுப்புகள் நிறுவனம் அனைத்து சுதந்திர குழுக்களின் நிறுவனங்களின் பொறுப்புகளுக்கு , ஆளுநர் குழு பொறுப்பாக இருக்கும் . இந்த பொறுப்புகளில் , நிறுவனத்தின் குறிக்கோளை நிலைநிறுத்துதல் ,அதை புதுப்பித்தல் , திட்டங்கள் , வனங்கள் , நிகழ்ச்சிகள் , அமைப்புகளை ஒருங்கிணைப்பது , மேலும் பலவற்றை , இந்த குறிக்கோள்களை சாதிப்பதும் அடங்கும் . துணைவேந்தர் /இயக்குனர்களை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும் அடங்கும் . உதாரணம் – உயர்கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் தலைமை நிர்வாகி மூலம் , உயர் கல்வி நிறுவனத்தின் வேறு ஊழியர்களை நியமனம் செய்தல் , அவர்களுக்கு பணி நிபந்தனை மற்றும் இழப்பீடு வழங்குவதும் ஆகும் .(P17.1.10 , P17.1.14 ஐ பார்க்கவும் ) இதில் முதல்வர் , ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிர்வாக ஊழியர்களை தேர்ந்தெடுத்து , நியமனம் செய்வதும் அடங்கும் . ஆளுநர் குழு இந்த பொறுப்புகளை செயல்படுத்தி பொறுப்பேற்க அதிகாரத்தைக் கொண்டிருக்கும் . உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அதனுடைய மறு ஆய்வு மற்றும் நடவடிக்கைகளின் பதிவுகளை வெளிப்படையாக வெளியிட இணையான பொறுப்புடன் , அது இருக்கும் . மனித உரிமை கழகம் வரையறுத்த நெறிமுறைகளின் படி , இருப்பதற்கும் அது பொறுப்பாகும். பயனுள்ள மற்றும் வலுவான கல்வி, நிதி, மற்றும் நிர்வாக செயல்பாடுகள். மேம்படுத்தப்பட்டு, பராமரிக்கப் படுவதை அது உறுதிபடுத்தவேண்டும். இதை தலைமை நிர்வாகி மூலம் ஆளுநர் குழுவால் செய்யலாம். இந்த ஆளுநர் குழு நீண்டகால (10-15 ஆண்டுகள்) நடுத்தரகால (5 ஆண்டுகள்) மற்றும் குறுகிய கால (1-3ஆண்டுகள்) நிறுவன முன்னேற்ற திட்டத்தை முன்னேற்றி அதனுடைய கல்வி, ஆராய்ச்சி வெளிப்பாடுகளை, தரம் மற்றும் அமைப்பு முன்னேற்றத் திட்டங்களை, பட்டியலிடவேண்டும். நிறுவன முன்னேற்ற திட்டத்துடன், நிறுவன முன்னேற்றத்தை ஆளுநர் குழு கணக்கிட்டு, அதனுடைய மறு ஆய்வை மக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். 17.1.8. பொது நிறுவனங்களுக்கான ஆளுநர் குழு: நிதிப் பெற்ற அனைத்து பொது உயர்கல்வி நிறுவனங்கள் ஆளுநர் குழுவை 2020க்குள் அமைக்க வேண்டும். கொள்கையில் குறிப்பிட்டபடி இப்போது உள்ள உயர் ஆளுமை அமைப்பு அதனுடைய உறுப்பினர் சேர்க்கையுடன், முதலாவது ஆளுநர் குழுவை அமைக்கலாம். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படலாம். அதற்குப்பின், அனைத்து புது உறுப்பினர்களும் ஆறு ஆண்டுகாலத்திற்கு நியமிக்கப்படலாம். எந்த உறுப்பினரும் தொடர்ச்சியாக, இரண்டுமுறை இருக்கக்கூடாது. ஆளுநர் குழு உறுப்பினர்கள், ஆளுநர் குழுவால் இருந்து ஓய்வு பெறலாம். அல்லது ஒழுங்கான பங்கீடு இல்லாததால் மற்ற ஆளுநர் குழு உறுப்பினர்களால் நீக்கப்படலாம். இதற்கான வழிகளை தலைவர் தான் ஆரம்பிக்கவேண்டும். 17.1.9. தனியார் நிறுவனங்களுக்கான ஆளுநர் குழு, பொது நிறுவனங்களை போன்று, நிதி அளிக்கும் அமைப்பு உயர்கல்வி நிறுவனங்களில் ஆளுநர் குழுவை அமைக்கும். அந்த குழுவில் தேர்ந்தெடுத்து, நிதி அளிக்கும் அமைப்பினால் ஒப்புதல் பெறப்பட்டு, வருகைப் புரிபவரால் (ஜனாதிபதி அல்லது ஆளுநர்) உறுதி படுத்தப்படவேண்டும். 17.1.10. உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள தலைமை நிர்வாகியின் பங்கு துணைவேந்தர்/ நிர்வாகி, உயர் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்து, அறிக்கையை ஆளுநர் குழுவிற்கு அனுப்புவார். அனைத்து அமைப்புகள்/ அதிகாரங்கள்/ அமைப்புகள், உயர் கல்வி நிறுவனத்திற்குள் அவரிடம் அறிவிக்கும். தலைமை நிர்வாகி உயர்வான திறமை, நேர்மை மற்றும் பொது நல உணர்வு உடையவராக இருக்கும் நபராக இருக்கவேண்டும். ஆளுநர் குழுவின் பொறுப்பு இந்த மதிப்பீடாகும். தலைமை நிர்வாகியை தேடி, தேர்ந்தெடுக்கும் குழுவானது தலைவரால் அமைக்க படலாம். அந்த தலைவர், தலைமை நிர்வாகியாக நியமிப்பார். உயர் கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாகி மற்றும் அதை போன்று வேறு தலைமை பதவிகளுக்கு மிகச்சிறந்த சாதனையாளர்களை வரவேற்க ஆளுநர் குழு ஒப்புதலோடு, வேறு எந்த நடைமுறையின் வழிகளில் செல்லாமல் இருக்குமாறு, நியமிக்கும் செயல்பாடு இருக்கும். இந்த வாய்ப்பு, வெளியில் இருக்கும் மிக சிறந்த நபர்களுக்கும் மற்றும் அதை நன்றாக முன்னேறியவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும். மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் தொடர்ச்சியான திட்டமிடும் செயல்படுகளால் அடையாளம் காணமுடியும். நிறுவனங்களில் தலைமை பண்பு பணிகள் அந்த பணிக்கு மிகப்பொருத்தமானவருக்கு வழங்கலாம். உணர்வு திறன் மற்றும் தலைமை பண்பு மற்றும் நிர்வகிக்கும் திறன் தான், நிறுவனத்தலைவர்களை நியமிக்கும்செயல்பாடுகளின் கூறுகளாகும். கல்விதிறன் இன்றியமையாததாக இருந்தும் தலைமை பண்பு மற்றும் நிர்வாக திறன் முக்கியமானது. உயர் கல்வி நிறுவனங்களில் தலைவர்களை நியமிக்கும் செயல்பாடு இதை தீவிரமாக, வெளிப்படையாக மதிப்பீடு செய்து, படைப்பாற்றல் கொண்டு தைரியமான முடிவுகளை திறமையானவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். பாரம்பரிய கருத்துக்களுக்கு தகுதியற்றவர்களை நிறுவன தலைவர்களாக நியமிப்பதில் எந்தவித தயக்கமும் இருக்கக்கூடாது. அந்த தலைமை நிர்வாகி, நிறுவன முன்னேற்ற திட்டத்தை நிலைநிறுத்தி, உயர்க்கல்வி நிறுவனத்தின் அனைத்து அம்சங்களுக்கும் அதனுடைய தலைமை நிர்வாகியாக பொறுப்பாகிறார். ஆளுநர் குழுவின் ஒப்புதல் உடன், தலைமை நிர்வாகி பொருத்தமான உள் ஆளுமை அமைப்பு, பல விவரங்களுக்கான செயல்பாடுகளாகிய, ஆராய்ச்சிக்குழு, நிர்வாகக்குழு, மற்றும் பல போன்றவற்றை அமைக்க முடிவெடுக்கலாம். ஆளுநர் குழு ஒப்புதலுடன், இப்போது உயர்க்கல்வி நிறுவனங்களை உறுப்புரிமை நிறுத்த, மாற்றி அமைக்க, கட்டுப்பாடு, வேறு எந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக எந்த அமைப்பில் இருக்க மாட்டார்கள். 17.1.11. வேறு தலைமை பண்பு பங்கிற்கான தேர்வு வெறுக்கவி மற்றும் செயல்பாடும், தலைமை பண்பு நிலையில் உள்ளவர்கள் (உதாரணம் - கல்வி தலைவர், துணைத்தலைவர்கள்) தலைமை நிர்வாகியை போன்று, கடுமையான பாரபட்சமின்றி, நன்றாக ஒவ்வொரு நிலைக்கும் விளக்கப்பட்ட திறன்சார் செயல்ப்பாடுகள் மூலம், அந்த பதவிக்கு தேவைப்படும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த செயல்பாடுகளின் வழிகாட்டுதலால் இந்த அணைத்து நியமனங்களும், தலைமை நிர்வாகியால் மேற்கொள்ளப்படும். 17.1.12. தலைமை பண்பு முன்னேற்றத்தை உருவாக்குதல் தலைமை பண்பு திறன் உடையவர்களை அவர்களின் பணிக்காலத்தின் ஆரம்பத்தில் அடையாளம்கண்டு, திறன் மேம்பாட்டை அவர்களுக்கு அனுபவம் மூலம் அளிக்கவேண்டும். (உதாரணம் - கூடுதல் பொறுப்புகள், பல்வேறு மக்களை கையாளும் பங்கீடு, தலைமை பண்பு மற்றும் சட்ட/ நீதி பிரச்சனை பற்றிய படிப்புகள்). அது அவர்களை சரியான நேரத்தில் தயார்படுத்தி இருக்கும் அனைத்து தலைமை பண்பு பங்கீடு, தொடர் தலைமை பண்பிற்கான திட்டமிடுதல் மற்றும் தலைமை நிர்வாகியின் தலைமை பண்பை உள்ளடக்கியது இருக்கவேண்டும். நிறுவன முன்னேற்றத்திட்டம், தொடர் திட்டமிடும் செயல்பாடுகளை கொண்டிருக்கவேண்டும். 17.1.13. பதவிக்கால ஸ்திரதன்மை மற்றும் மென்மையான மாற்றம்: தலைமை பதவியின் ஸ்திரதன்மை உறுதிப்படுத்தவேண்டும். (குறைந்தது ஐந்து ஆண்டுகாலம்). தலைமை பொறுப்பிற்கு வெளியே செல்பவர்களிடமிருந்து உள்ளே வருபவர்க்கு நன்றாக திட்டமிடப்பட்டு, மென்மையாக வசதி ஏற்படுத்தப்பட்டு, ஒருபோதுமான கால அளவுடன் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கவேண்டும். 17.1.14. நிறுவன தலைவர்கள் மற்றும் வேறு தலைமை பதவியில் இருப்போர்களுக்கும் தொழில்சார் தொடர் முன்னேற்றம்: தலைமை பதவியில் இருப்போர்களுக்கு, தொடர் தொழில்சார் வாய்ப்புகள் கிடைக்க உருவாக்கவேண்டும். புது தலைவர்கள் முறையான மற்றும் முறைசாரா வழிகாட்டுதலின் மூலம் ஆதரிக்கப்படவேண்டும். இது, தலைவர்கள் மென்மையான மாற்றத்திற்கு உதவி புரியும். வேறு செயல்பாடுகளாகிய நியமனத்திற்கு பந்தைய தொழில்சார் கருத்தரங்கு/ மாநாடுகளில், அதே பதவியில் இணையாக பணியாற்றும் நபர்களுடன், தொழில்சார் பயற்சி நிகழ்ச்சி அல்லது முறையான முன்னேற்ற படிப்பு கிடைக்க அந்த தலைமை பண்பில் இருப்பவர்களுக்கு செய்யவேண்டும். மக்கள் நிர்வாகம், நிதி நிர்வாகம், திட்ட நிர்வாகம் கிடைக்க செய்யவேண்டும். துணைவேந்தர்கள்/ தலைமை நிர்வாகிகள் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த அமைப்பை ஏற்படுத்தி, ஒவ்வொருவரிடம் கற்றுக்கொள்வதை ஊக்குவித்து மேம்படைய செய்யவேண்டும். 17.1.16. துடிப்பான கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான கல்வி தரத்திற்கான கல்வி குழு: கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி குழு, உயர்வான கல்விதரம் பராமரிப்பதை உறுதி படுத்தவேண்டும். அனைத்து கல்வித்திட்டம், பாடத்திட்டம், மதிப்பீடு திட்டங்கள் மற்றும் கல்வி தரத்தை கொண்டுள்ள விவரங்கள் கல்வி குழுவால் ஒப்புதல் பெறவேண்டும். ஆளுநர் குழுவால் உறுப்பினர் சேர்க்கை விதிப்படி ஒப்புதல் பெறப்பட்டு, கல்வி குழுவானது தலைமை நிர்வாகியால் உருவாக்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் மற்றும் வெளிநபர்களை, கல்விக்குழு உறுப்பினர்களாக கொண்டு, தலைமை நிர்வாகியால் தலைமை தாங்கப்படும். 17.1.17. வள மேம்பாட்டை உயர்த்துவதற்கான உறுதியான அமைப்பு மற்றும் செயல்பாடுகள்: உயர் கல்வி நிறுவனங்கள், வளங்களை நிலையாக மேம்படுத்தும் முறைகளை கட்டமைத்து மேம்படுத்த, அதிகாரம் அளிக்கப்பட்ட பயனுள்ள அமைப்புகளை நிறுவவேண்டும். அந்த ஒரு முன்னேற்ற அலுவலகம், போதுமான வளம் அளிக்கப்பட்டு, வளத்தை முன்னேற்றும் முயற்சிகளை உலகத்தலைவர்களிடமிருந்து பெறுவது கற்றுக்கொள்ள வசதிவாய்ப்பு ஏற்படுத்திடவேண்டும். அந்த முன்னேற்ற அலுவலகத்திற்கு பொருத்தமான நபர்கள் பணி அமர்த்த படவேண்டும். முன்னேற்ற அலுவலகத்திற்கு பொருத்தமான நபர்கள் பணி அமர்த்த படவேண்டும். முன்னேற்ற அலுவலகத்திற்கு பெறப்படும் நிதி பொது நிதிக்காக பதிலாக இருக்க கூடாது. உயர்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு கூடுதலாக இந்த நிதி inthaஎப்போதும் இருக்கவேண்டும். அதாவது, முன்னேற்ற அலுவலகத்தின் வெற்றியுடன் பொது நிதி குறைக்கப்படக்கூடாது. 17.1.18. சமுதாயத்துடன் உள்ள தொடர்பிற்கான பயனுள்ள அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள்: நேரடியாக மற்றும் பயனுள்ள பங்களிப்பை உள்ளூர் சமுதாயம் மற்றும் பரவலான சமுதாயத்திற்கும் மற்றும் தேவைக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட மற்றும் பயனுள்ள அமைப்புகளை (உதாரணம் - சமுதாய பங்களிப்பு குழு அல்லது சமுதாய பங்கெடுப்பு குழு) உயர் கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்க வேண்டும். இந்த அமைப்புகள் பொருத்தமான மக்களால் வளமாக்க படவேண்டி இருப்பதால், ஆசிரியர்கள் அவர்களின் நிபுணர்த்துவத்தின் மூலம், இந்த முயற்சிகளில் பங்களிக்க எதிர்பார்க்கப்படுவார்கள். இது அவர்களின் மதிப்புகள் ஒரு பகுதியாக உருவாகும். 17.1.19. பொது நிறுவனங்களின் நிதி: பொது நிதி நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் மொத்த நன்கொடையாக பொது நிறுவனங்களுக்கு வழங்கலாம். இதற்கு உயர்கல்வி நிறுவனம் மற்றும் நிதி அளிக்கும் சம்மந்தப்பட்ட அரசுத்துறை/ அமைப்பிற்கு இடையே நீண்டகால மற்றும் நடுத்தரகால நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில், உடன்படிக்கை இருக்க வேண்டும். இது நீண்ட கால பொறுப்பான, நிறுவனத்தை நடத்த அனைத்து அடிப்படை செலவுகள், அனைத்து ஊழியர்களுக்கான இழப்பீடு, அனைத்து வசதிகளையும் பராமரிப்பது (உதாரணம் - உட்கட்ட அமைப்பு, கற்றல் வளங்கள்). பாட பிரிவுகளுக்கான மீண்டும் ஏற்படும் செலவுகளை உள்ளடக்கியது. (உதாரணம் - பரிசோதனை கூடங்கள், பயற்சிக்கால சேர்க்கை போன்றவைகளுக்கான செலவு), மற்றும் பல. நுண்ணிய நிர்வாக செலவு அல்லது குறுகிய கால நிறுவன மேம்பாட்டு திட்டங்களில், அரசாங்கம் தலையிட கூடாது. உயர் கல்வி நிறுவனங்கள், பொது நிதியை நன்றாக பொறுப்பாக பயன்படுத்துவதற்கு பொறுப்பாக வேண்டும். அதே நேரத்தில், இது உயர் கல்வி நிறுவனத்தின் தன்னதிகாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. அது வெளி தலையீடு நிதி கொள்கையின் மாற்றங்கள் மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும். போதுமான நிதி அளிக்கப்படும் போது ஒரு சில வெற்றிகரமான உயர் கல்வி பொது நிறுவனங்கள் சாதித்த ஒரு அழகான நிலை தேவைபடுகிறது. இந்த கொள்கை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பான சம நிலை ஏற்படுவதற்கான கட்டமைப்பு கட்டும். இது, இறுதியாக பல்வேறு பங்குகளை எடுத்துக்கொள்ளும். பொருத்தமான பங்கை சார்ந்தே இருக்கும். 17.1.20. கல்வி மற்றும் நிர்வாக தன்னதிகாரம்: உயர் கல்வி நிறுவனங்கள் உண்மையான மற்றும் முழுமையான தன்னதிகாரத்தை கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி கொண்டு அவர்களின் முழு ஆற்றலை, சிறப்பு தன்மைக்காக வெளிப்படுத்தலாம். இது ஒரு குறிப்பிட்ட காலம் செயல்பட்டு, உயர்கல்வி நிறுவனங்கள் தனது ஆற்றல் மற்றும் அமைப்பை மேம்படுத்தி, தன்னதிகாரத்துடன் திறமையாக செயல்படுத்த முடியும். பொருத்தமான உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வேறு சில நிறுவனங்களின் வழிகாட்டுதல் மூலம், இந்த முன்னேற்ற பாதையில், உயர்கல்வி நிறுவனங்கள் ஆதரவு அளிக்கப்படலாம். வேற விதமான ஆதரவும் அளிக்கப்படலாம். உதாரணமாக - அனுபவம்வாய்ந்த அறிவுடையாளர்கள் மக்கள் நிர்வாக அமைப்பு போன்றவைகளின் விவரங்களின் மீது அனுபவங்களை பங்கெடுக்க ஒருங்கிணைப்பு அமைப்புகள். (அ). கல்வி தன்னதிகாரம், அனைத்து துறைகளிலும் பாட பிரிவுகளை ஆரம்பிக்க சுதந்திரம், திட்டமிட்டு கல்வி திட்டத்தை முடிவு செய்ய, கல்வி வளங்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தகுதிகளை முடிவுசெய்தல், ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்தி, அவர்களை தொடர்வது மாணவர் அமைதிக்கான எண்ணிக்கையை மற்றும் கட்டளை விதிகளை முடிவு செய்தல், பல வளாகங்களை நிறுவி நடத்துதல், திறந்த மற்றும் தொலைதூர படிப்புகளை நடத்துதல், மற்றும் அனைத்து கல்வி சம்பந்தமான விசியம்களும் அடங்கும். உயர் கல்வி நிறுவனங்கள் வைத்துள்ள தன்னதிகார கல்வி விவரங்களை பொதுவாக மற்றும் வெளிப்படையாக வெளியிடவேண்டும். அறிவு, கல்வி மற்றும் நெறி கலந்த பொறுப்பு கல்வி தன்னதிகாரத்தை உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். அவர்களுடைய பாட பிரிவுகள், நன்றாக தொழில்கள் தகுதியை பெறப்படுவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மற்றும் பொது கல்விக்குழு தெரிவித்த கற்றல் வெளிபாடுகளின் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். (ஆ). சுய ஆளுமை சுதந்திர அமைப்புகள் மூலம், உயர்வான சுதந்திரமான குழுவுடன், நிர்வாக சுதந்திரம், உயர்கல்வி நிறுவனங்களால் சாதிக்க முடியும். இந்த குழு, துணைஆளுநர்/ நிர்வாகி/ தலைமை நிர்வாகியை நியமித்து, நிறுவனத்தின் அனைத்து விவரங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும். வெளிப்படையான வெளிக்காட்டுதலின் மூலம், பொது மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும். இதில் அனைத்து பணியாளர்களின் பணி நியமனம் மற்றும் நிர்வாகத்தில் சுதந்திரம் (இழப்பீடும் சேர்த்துக்கொள்ளப்பட்ட, குறைப்பது அனுமதிக்கப்படாதது); உள் ஆளுமையை மற்றும் நிர்வாக அமைப்பை தோற்றுவிப்பது. அதனுடைய வளர்ச்சியில் கட்டுப்பாடு மற்றும் முன்னேற்றத்தில் கவனம். அந்த தலைமை நிர்வாகி நிறுவனத்தை தலைமை தாங்கி மற்றும் அந்த குழு நிர்வாகத்தை தலைமை நிர்வாகி மூலம் செயலாற்றுவார். ஒழுங்குபடுத்தும் அமைப்புகளில் மாற்றங்கள் கொணர்தல் நோக்கம்: பயனுள்ள ,செயல்படுத்த மற்றும் பதிலளிக்க கூடிய சிறந்த ஊக்குவிப்பதற்கான கட்டுப்பாடு மற்றும் உயர்கல்வி போது ஆற்றல் இந்தியாவின் உயர்கல்வி அமைப்பு தான் உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.அதற்கடுத்து ஐக்கிய மாநிலங்கள்(US) நான்காவது இடத்திலும், சீனா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. கடந்த காலத்தில் சில சகாப்தங்களாக தனியார் நிறுவங்களில் விரைவாக விரிவாக்கம் நடந்தேறியது.ஒருங்கிணைப்பு மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கான கட்டுப்பாடுகள் உருவானது. உயர்கல்வியில் வளர்ச்சியையும் பொதுமக்கள் பங்களிப்பையும் அதிகரிக்க ஒழுங்குமுறைகள் இத்தகைய ஒரு பெரிய அமைப்பை நிர்வகிப்பது உள்ளார்ந்த சவால்களை கொண்டுள்ளது, சிலது வெற்றி அடைந்தது, மற்றும் சில வெற்றி அடையவில்லை. பொதுக்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு சமமான மற்றும் நியாயமான கல்வியை கொடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளே இந்த சவால்கள் உருவானதன் காரணம். மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளை துவங்குவதில் அடிப்படையில் நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவை. மற்றும் சில தரநிலைகளின் அடிப்படையில் ஒழுங்குமுறைகளை நிர்ணயித்தல் அவசியம் ஆகும். அடிப்படையிலேயே . சுயாட்சி என்பது ஓவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சட்டங்கள், தொலைநோக்கு மற்றும் புவியியல் ஆகியவற்றால் வரையறுக்கபட்டு அதன் தனித்துவமான கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மாறாத அடிப்படைத் தேவையாகும்.. ஒழுங்குமுறையானது பதிலளிக்கக்கூடிய மற்றும் சிறிய ஒளி ,ஆனால் பொது ஆற்றல், சமநிலை, சிறப்பம்சங்கள் , நிதிசார் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை, நல்ல ஆட்சியுடன் உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய சவால்: ஒழுங்கு முறை ஆணையங்களின் சட்டங்கள் காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவானது(UGC) நிதி வழங்குதல் விதிமுறைகளை நிர்ணயித்தல் போன்ற இரண்டிற்கும் பொறுப்பாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் (எ.கா தொலைதூர கல்விக்கு ஒரு திட்டத்தை ஆரம்பித்தல் ,ஒரு புதிய துறை /பள்ளி திறத்தல், ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்தல் அனைத்திற்கும் யூஜிசி(UGC) அனுமதி தேவை. இது கல்வி வளர்சிக்கான அபாயமாகும்.. தொழில்முறை படிப்புகளை ஒழுங்கு படுத்தும் சுயாதீன அமைப்புகள் போதுமான அளவில் இல்லாதிருப்பது நிலைமையை மோசமாக்குகிறது. .இதனால் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. உலகம் முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான தேவைகளை இந்தியா கொண்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டிலேயே இயங்கிவரும் அமைப்புகளின் செயல்பாடுகளும் திருப்திகரமானதாக வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இல்லை. இவ்வாறாக தற்போதைய ஒழுங்குமுறை அமைப்பானது பிரச்சனை மிகுந்த நிறுவனங்களை களைவதாக அல்லாமல் அவற்றை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. என்ன செய்ய வேண்டும்? அடிப்படையில் கட்டுப்பாடு, கல்வி, நிதியுதவி, அங்கீகாரம் மற்றும் தர நிர்ணயம் போன்றவை சுயாதீனமான மற்றும் சக்தி வாய்ந்த அமைப்புகளால் நடத்தப்பட வேண்டும். செறிவை அகற்றுவது அவசியமாகும். ஒட்டுமொத்த கல்வித்துறையிலும் பொதுவான ஒழுங்கு முறை ஆட்சி இருக்க வேண்டும்.கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை அனுமதிக்கும் வகையில் மிக அடிப்படையான விஷயங்களை நிர்ணயிப்பதை மட்டும் இவ்வமைப்புகள் ஏற்றுக்கொண்டு பிற முடிவுகளை நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்; அதிகாரத்தின் நிறுவனங்களின் சுயாட்சிக்கு அத்தியாவசியமான உயர்கல்வி நிறுவனங்களின் தீர்ப்புகளை விட்டுவிட வேண்டும் . கற்றல் அடைவுகள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து அங்கீகாரங்கள் வழங்கும் நிறுவனங்கள்AI) தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும். சமூகத்தின் பங்களிப்பு மற்றும் கண்காணிப்போடு நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மை கொண்டவையாக இவை இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.. அதிகாரம் மற்றும் கருத்து வேறுபாடுகளின் தாக்கங்களிலிருந்து விடுவித்து தர நிர்ணயம், நிதி வழங்கல், அங்கீகாரம் வழங்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய அனைத்தும் சுயாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டுவரப்படும். 18.1. ஒழுங்கு முறை அமைப்பின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு 18.1.1. ஆட்சியின் அமைப்பு மற்றும் கலாச்சாரம் பற்றிய அடிப்படை வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டுக் கோட்பாடுகள் : செயல்பாடுகளை பிரித்தல்: கட்டுப்பாடு, கல்வி ,நிதியளித்தல், அங்கீகாரம் மற்றும் தரநிலை அமைத்தல் ஆகியவற்றின் செயல்படுகள் பிரிக்கப்பட்டன. இவை அனைத்தும் சுயாதீனமான அமைப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும் . ஒழுங்கு படுத்தும் தன்மை: பொது ஆற்றல், நிதி ஸ்திரத்தன்மை ,நம்பகத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி ஆகியவற்றை உறுதிபடுத்துவதற்கு ஒழுங்கு முறை அமைப்பு பொறுப்பேற்கும். பொது கருத்து நீதிமன்றம் HEI மற்றும் ஒழுங்கு முறை அமைப்பில் உள்ள அனைத்து பிற நிறுவனங்களின் தகவல்களின் வெளிப்படுத்தலை உறுதிப்படுத்தும் ஒழுங்கு முறை தேவைகளால் செயல்படுத்தப்பட வேண்டிய முக்கிய பங்கை கொண்டு இருக்க வேண்டும் . ஒழுங்கு முறை வடிவமைப்பு: ஒழுங்கு முறை அமைப்பானது உள்ளீடுகளின் மீது கவனம் செலுத்தாமல் ,விளைவுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் தார்மீக தலைமை வழங்குவதாகவும் இருக்கும் . பொது மற்றும் தனியார் HEIகள் அதே வரையறைகளிலும் ,செயல்முறைகளிலும் கட்டுப்படுத்தப்படும். தொழில் மற்றும் தொழில்துறை கல்வி உட்பட முழு உயர்கல்வித்துறையிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கும் . HEI களுக்கான அங்கீகாரத்தை ஒரு சுயாதீன நிறுவனமே தீர்மானிக்கும். நிலையான அமைப்பு: ஒரு குறிப்பிட்ட பிரிவு கற்றல் மற்றும் நடைமுறையில் உள்ள எதிர்பார்ப்புகளை கட்டமைக்கும். அனைத்து கல்வி மற்றும் ஆதார முடிவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ,இந்த தர நிலைகளுக்கு விடையளிப்பதற்கான தேவை மற்றும் சமுதாயத் தேவையின் சொந்த மதிப்பீடு போன்ற பிற கருத்துக்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும் நிதியியல் வழிமுறைகள் பொது நிறுவனங்களின் நிதியளித்தல் ஒழுங்குமுறை ,நிலையான அமைப்பு மூலம் கையாளப்படும் . இந்த குறிப்பிட்ட நோக்கத்திற்க்காக அதிகார சக்திகள் இருக்கலாம். நீண்டகாலமாக இருக்கும் HEI யின் IDF கள் ஏற்றுக்கொள்ளப்படும் . கணக்கீட்டு நிறுவனங்கள்: இந்த அமைப்பில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் பொறுப்புணர்வுடன் RSA மூலம் ஒரு அமைப்பு நிறுவப்படும்.இந்த கொள்கைகள் ஒரு முழு ஒழுங்குமுறை அமைப்பு ஆட்சியை விவரிக்கின்றன.தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் தொழில் யூர்கல்வி உட்பட அனைத்து உயர்கல்விக்கும் ஓரே சீராக இருக்கும். தொழிற்கல்வி உட்பட்ட அனைத்து உயர்கல்விக்கும் தேசிய உயர்கல்வி ஒழுங்கு முறை ஆணையம்(The National Higher Education Regulatory Authority -NHERA) மட்டுமே ஒழுங்குபடுத்து நிறுவனமாகத் திகழும். 18.1.2. நெறிமுறைக் கட்டமைப்பு: NHERA மட்டுமே தொழிற்கல்வி (பார்க்க 18.1.4) உயர்கல்வி அனைத்திற்குமான ஒரே நெறிமுறை அமைப்பாகும். NAAC பல அங்கீகார நிறுவனங்களின்(AI) கூட்டமைப்பை உருவாக்கி, அங்கீகார செயல்முறைகளை மேற்பார்வையிடும் தொழிற்துறை கல்வி உட்பட்ட அனைத்து உயர் கல்வித் துறைகளுக்கும் அபிவிருத்தி நிதியம் மற்றும் கூட்டுறவுகளை வழங்குவதற்கு HEGC யே பொறுப்பாகும். தற்போதைய UGC HEGC க்கு மாற்றப்படும் (P18.4.1 ஐப் பார்க்கவும்) தற்போதுள்ள மற்ற ஒழுங்குமுறை அமைப்புகள் அனைத்தும் PSSB களுக்குக்கு மாற்றப்படும். NCTE, MCI, BCI மற்றும் AICTE இதில் அடங்கும். இவை தொழிற்கல்விகளுக்கான தரங்களை நிர்ணயிக்கும். (எ.கா. ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், செவிலியர்கள், முதலியன) உயர் கல்வித் திட்டங்களின் ‘கற்றல் விளைவு நோக்கங்களை’ GEC அமைக்கும், இவற்றை ‘பட்டதாரி பண்புக்கூறுகள்’ எனலாம். கூடுதலாக, தவிர மதிப்பெண் பரிமாற்றம் மற்றும் நிகர்நிலைத் தகுதி ஆகியவற்றையும் NHEQF மூலம் வரையறுக்க GEC உதவும் (பார்க்க பி 18.3.2). இத்தகைய புதிய நெறிமுறைகளுக்கும் கட்டமைப்புக்கும் மாற அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்பதை கல்விக்கொள்கை உணர்கிறது. சில மாற்றங்களை நிகழ்த்த 5 முதல் 7 ஆண்டுகள் கூட ஆகலாம். இவ்விவரங்களைக் கீழே காணலாம். 18.1.3. புதிய கட்டமைப்பில் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகள்: புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்படும். இப்போதுள்ள நெறிப்படுத்தும் அமைப்புகளின் சட்டதிட்டங்கள் ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்படும். அதே நேரம் இவ்வமைப்புகள் ஒவ்வொன்றும் மற்றும் ஒட்டுமொத்தமாகவும் இந்த நாட்டின் கல்வி நிலைத்தரத்திற்குப் பொறுப்பாகும். அமைப்புகளின் இடையேயான அதிகார வரம்பில் குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உச்ச அமைப்பான RSA ஆல் நிர்ணயிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்கான முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும், ( பார்க்க 23). இதற்காக, ஒவ்வொரு அமைப்பும் தகுதி, நேர்மை, சேவை மனம் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய தனிநிர்வாகக் குழு (Indpendent Board)க்களால் நிர்வகிக்கப்படும். வேறுவகையில் குறிப்பிடாதவரை, அனைத்து தனி நிர்வாகக் குழுக்களும் RSA வினால் ஏறுபடுத்தப் படவேண்டும். விதிவிலக்குகளில் கூட, உதாரணத்துக்கு, PSSBகளின் தனி நிர்வாகக் குழுக்களும் RSAவினால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். இந்த அமைப்புகள் அவற்றின் தனி நிர்வாகக் குழுக்களின் (IB ) மூலமாக RSAன் பொறுப்பிலடங்கவேண்டும். இவ்வமைப்புகள் ஒவ்வொன்றின் மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த செயல்திறனையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வல்லுநர்கள் மூலம் RSA மதிப்பீடு செய்யும், இந்த மதிப்பீட்டின் முடிவுகளின் படி செயல்பாட்டை மேம்படுத்த செயல் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை வெளிப்படியாய்ப் பகிரப்படும். 18.1.4. உயர் கல்வித் துறையின் ஒரே நெறியாண்மை அமைப்பு: NHERAவே அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே நெறியாண்மை அமைப்பாகச் செயல்படும். நல்ல நிர்வாகம், நிதி நேர்மை மற்றும் நிலைத்தன்மை, மற்றும் சிறந்த கல்வி விளைவுகள் ஆகிய கூறுகளின் அடிப்படியில் ன் நெறியாண்மை இருக்கும் நெறியாண்மைக் கூறுகளும் அளவீடுகளும் நியதிக்காகவோ, நிர்ப்பந்திப்பதாகவோ, மேம்போக்காகவோ இல்லாமல் சமுதாய, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஈடுகொடுப்பனவாக அமையவேண்டும். தவிர, HEI களின் சுயாதிகாரத் தன்மைக்கு ஊறு செய்யும் அளவிற்கு இவை கடுமையாக இருக்கக் கூடாது. இவ்வடிப்படைகளைத் தழுவியமைந்த “நெறியாண்மைக் கூறுகளை” கீழே காணலாம் நல்ல நிர்வாகம்: தெளிவான நிர்வாக வழிமுறைகள் இருப்பதையும் இவ்வழிமுறைகளை HEI நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதுமே இக்கூற்றின் நோக்கமாகும். IB இனால் நடத்தப்படும் உயர்கல்வி, சமூக மற்றும் தொழில் நிறுவனங்களி ல் பின்பற்றப்படும் நிர்வாக முறைகளைத் தழுவி நல்ல நிர்வாகத்திற்கான பரிந்துரைக் கட்டமைப்பு உருவாக்கப்படும். இருப்பினும் இவற்றைத் தழுவி, தமக்குரிய நிர்வாகச் செயல்முறைகளை HEI சுயமாக வடிவமைத்துக் கொள்ளலாம். இச்செயல்முறைகளையும் அவை பின்பற்றப்படுவதையும் வெளிப்படையாகக் காட்டுவதே நெறியாண்மையின் நோக்கமாகும். நல்ல நிர்வாகக் கொள்கைகளின் பட்டியலை இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள பெட்டியில் காணலாம். நிதி நேர்மை மற்றும் நிலைத்தன்மை: HEI இன் அனைத்து நிதி நிர்வாகங்களும் சட்டப்படியும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். நிறுவனங்கள் நிதி நிலைத்தன்மை கொண்டிருப்பதையும் கல்விச் செயல்பாடுகள் தடைபடாமலும் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகாமலும் இருப்பது மற்றும் கட்டணங்கள் மற்றும் உதவித்தொகைகள் சொல்லியவண்ணம் செயல்படுத்தப் படுவதையும் உறுதிசெய்யவேண்டும். இதற்கு, இந்திய கணக்காளர் நிறுவனம் பரிந்துரைத்த தணிக்கை முறைகளை பின்பற்றலாம். சிறந்த கல்வி விளைவுகள்: இதன் நோக்கம், ஒவ்வொரு HEI ம் குறிப்பிட்ட கல்வி விளைவுகளை தம் இலக்குகளாகக் கொண்டிருப்பதையும் இலக்குக்கு ஏற்ப தம் செயல்திறனை சிறந்த கல்வி விளைவுகள் அளவீடு செய்து அவற்றை வெளிப்படுத்தையும் உறுதிசெய்வதாகும். ஆனால் இக்கல்வி விளைவுகளையோ அளவீடுகளையோ நெறியாண்மை நிர்ணயம் செய்யாது. கல்வி விளைவுகளுக்கு உதாரணங்களாக மாணவர் எண்ணிக்கை, அவர்களின் பங்குத்தன்மை, பாட மதிப்பீடுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றைக் கூறலாம். மாணவர்கள் மற்றும் HEI இன் பாதுகாப்பு தவிர, இதை எண்ணிக்கை, வழிமுறை, கட்டமைப்புகள் போன்றவற்றை வைத்து அளவிடாமல் விளைவுகளின் தரத்தை வைத்து மட்டுமே அளவீடு செய்யப்படவேண்டும். குறைகள் தீர்ப்பதற்காக நாடுமுழுதும் போதுமான எண்ணிக்கையிலான தீர்ப்பாயங்களை NHERA அமைக்கும். NHERA நீதித்துறைக் கோட்பாடுகளைக் கொண்டு விவகாரங்களின் வேகமான தீர்மானத்திற்கு வழிவகுக்கும். இத்தீர்ப்பாயங்கள் நாடு முழுவதும் போதிய அலுவலகங்கள் கொண்டிருக்கும். விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிழைக்கும் HEI களை மூடவோ, அங்கீகாரங்களை ரத்து செய்யவோ அல்லது பிற வகைகளில் தண்டிக்க முழு அதிகாரம் கொண்டிருக்கும். NHERA மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் செயல்படத் தொடங்கும் வரை, தற்போது இருக்கும் நெறியாண்மை அமைப்புகள் HEIக்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு நெறிப்படுத்த முழு அதிகாரங்கள் அளிக்கப்படவேண்டும். இந்த நெறியாண்மை அமைப்புகள் உரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி HEI கள் தவறான நடத்தைகள் மற்றும் ஊழல்களின்றி செயல்படுவதைக் கண்காணிப்பதுடன் தவறுகள் நடந்தால் தண்டிக்கவோ அல்லது நிறுவனத்தை மூடவோ செய்யவேண்டும, இதன் மூலம் நல்ல மற்றும் சமூக நோக்கமுள்ள நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் ஊழல் நிறுவனங்களை மூடவும் செய்யவேண்டும். இந்தத் திட்டத்தையும் அதன் செயல்பாடுகளையும் RSA கண்காணிக்கும். 18.1.5. புதிய நெறியாண்மையை நடைமுறைப்படுத்துதல்: NHERA அமைக்கப்பட்ட 6 மாதங்களுக்குள், NAAC மற்றும் தகுந்த அமைப்புகளுடன் இணைந்து விரிவான செயல்திட்டத்தை உருவாக்கும். NHERA, NAAC, PSSBs, GEC, HEGC, AIs, HEIs, முதலிய அனைத்து நிறுவனங்களுக்கும் அவற்றின் பாத்திரங்கள், செயல்பாட்டு வழிமுறைகள், அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றின் விவரங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் RSA அதை ஆய்வு செய்து அங்கீகரிக்கும் 18.2. ஒழுங்குமுறைக்கான அடிப்படை அங்கீகாரம் 18.2.1. உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் பற்றியது : உயர் கல்வி நிறுவனங்கலின் அங்கீகாரமானது , ஒழுங்குமுறை அமைப்பின் முதுகெலும்பு ஆகும். NAAC அமைப்பானது புதுபிக்கப்பட்டு ,UGC அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு , முற்றிலும் சுயமான , தன்னாட்சி அமைப்பாக ஆக்கப்பட்டு , அனைத்து நிறுவனங்களுக்கும் (எல்லா துறைகளும்) அங்கீகாரம் வழங்குவதை மேற்பார்வையிடும் பொறுப்பு அளிக்கப்படும். NAAC அதன் புதிய பொறுப்பில் , மேல் நிலை அங்கீகாரம் வழங்கும் அமைப்பாகவும் மற்றும் அங்கீகாரம் வழங்கும் அமைப்புகளுக்கு (AI) , அதிகாரம் வழங்கும் பொறுப்பும் இருக்கும். அங்கீகாரம் வழங்கும் அமைப்புகள் ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கொருமுறை உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் பணிச்சுமையினையும் சமாளிக்க வேண்டும். NAAC அமைப்பு AI அமைப்பிற்கு பயிற்சி அளிப்பதுடன் , அவற்றுக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை தீர்க வேண்டும். RSA நிறுவனம் , AI அமைப்பிற்கு , நிறுவன அங்கீகார கட்டமைப்பை (IAF) பயன்படுத்தும் விதத்தில் ஏற்படுத்த வேண்டும். இதில் சம்பந்தபட்ட அனைத்து பங்குதாரர்களின் (NHERA, NAAC, HEIs, AIs, PSSBs மற்றும் பல) ஆலோசனையையும் பெற்று அதன்பின் ஏற்படுத்த வேண்டும். RSA நிறுவனம் பொறுப்போடும், பதில்தரக்கூடியதும் மற்றும் வளைவானதாகவும் இருக்க வேண்டும். மிகவும் இருக்கமாகவும் ,கற்பனை செய்யமுடியாததாகவும் இருக்க கூடாது. மேலும் தரத்திலும், விளைவுகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும் , உள்ளீடுகளிலும் , செயல்முறைகளிலும் அல்ல. P18.1.4 ல் சொல்லப்பட்டுள்ளபடி , கட்டுப்பாடுகள் (செயல்பட மற்றும் தொடர்ந்து செயல்பட உரிமம்) ஒழுங்குமுறையில் உள்ள பல பரிமாணங்களை பொறுத்தே அமையும் ; மற்ற பரிமாணங்கள் அல்லது அளவுருக்கள் நிறுவனங்களை மேம்படுத்தவும் , திறன் அதிகரிக்கவும் பயன்படும். ஒழுங்குமுறையின் இந்த பரிமாணங்கள் அங்கீகரத்தின் தனித்துவமான பகுதியாக இருக்கும். கட்டுப்பாடுகள் இதை அடிப்படையாக கொண்டிருக்கும் மற்றவை HEI ‘களால் அவர்களின் முன்னேற்றதிற்கும் , பொது வெளியில் பகிரவும் பயன்படும். IAF ஆனது , முதன் முறை செயல்படுத்த பட்டதிலிருந்து 7 ஆண்டுகளுக்கொருமுறை பொது மக்கலின் கருத்துகளுக்கு ஏற்ப திருத்தபட வேண்டும். அங்கீகார அமைப்பு ஏற்படுத்தி , HEI கள் அங்கீகாரம் பெறும் வரை , தற்போதுள்ள ஆட்சி தொடர்புடைய கட்டுபாடுகள் தொடரும் , பல்வேறு திட்டங்கள் தொடங்குதல் உட்பட. அடுத்த 10 ஆண்டுகளுக்கு , தகுதியும் , தரமும் வாய்ந்த சுயாட்சி கொண்ட உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ஏற்கனவே இருக்கும் அமைப்பில் தொடரும். இது 2020’ல் முன்னேற்றதிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். 10 ஆண்டுகளுக்கு பிறகு (2030’ல்) , ஆம் அல்லது இல்லை என்கின்ற அங்கீகாரம் மட்டும் இருக்கும் – பைனரி அங்கீகாரம் (BA). இந்த நிலை , உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழுமையான அதிகாரம் அளிப்பதோடு தன்னாட்சியும் வழங்கும். BA அமைப்பு 2022 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் அறிமுகபடுத்தபடவேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் 2030 வரை BA அல்லது GA முறையினை அவர்களாகவே முடிவு செய்து கொள்ளலாம். ஒரு உயர்கல்வி நிறுவனம் , அங்கீகாரத்திற்கும் , சுயாட்சிக்கும் 12 முதல் 24 மாதங்களுக்கு இடையில் ஒரு இடைவெளியை தேர்ந்தெடுத்துக்கலாம். மேலும் இந்த கால கட்டத்தில் சுயாட்சியை படி படியாக அமுல் படுத்தலாம். இது உயர்கல்வி நிறுவனங்களின் IDP இன் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும். எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் 2030 ற்குள் , அங்கீகாரம் பெற்று விட வேண்டும் அல்லது செயல்படுவதை நிறுத்த வேண்டும். இதில் அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களும் அடங்கும் – பொது , தொழில்முறை , தொழிற்துறை ஆகிய படிப்புகளுக்கு மாணவர்களுக்கு பட்டம் அல்லது பட்டயம் வழங்கும் முறை. மேலும் எந்த முறையில் படித்தாலும் இது பொருந்தும். அங்கீகாரம் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்கள் , அவற்றுடன் இனைக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனகளின் கல்வி சார்ந்த முடிவுகளுக்கு பொறுப்பாகும். அங்கீகாரம் நிறுவனத்தை சார்ந்தது என்றாலும், திட்டம் (அல்லது படிப்பு) சார்ந்த அங்கீகாரம் உயர்கல்வி நிறுவனத்தின் தன்னிட்சையான முடிவாகும். அப்படிப்பட்ட திட்டம் சார்ந்த அங்கீகாரம் , பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டாலும் , முழுமையான பாடத்திட்டத்தின் சுயாட்சியுடன் இயங்கும் உயர்கல்வி நிறுவனத்தை இது கட்டுப்படுத்தாது. நிறுவன அங்கீகார நெறிமுறைகள் , ODL விவகாரத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் இவை , கவனமின்றியும் , தெரிந்தும் தெரியாமலும் தவறாக பயன்படுத்தபட்டு அவைகளின் தரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது உயர்கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் , அவை அதிக திறனுள்ள ODL களை வழங்க முடியுமா என்று மதிப்பெடு செய்யப்படும். தவறும் பட்சத்தில் , ODL கள் இல்லாத அங்கீகாரம் வழங்கப்படும். சீரமைக்கப்பட்ட தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் தலைமையிலான ஒரு அங்கீகார முறை உருவாக்கப்படும். 18.2.2. அங்கீகாரம் மற்றும் சுயாட்சி மாற்றத் திட்டம் தற்போதுள்ள கல்லூரிகள் பத்தாண்டிற்குள் அங்கீகாரம் பெற்று தன்னாட்சி பெற முறையான படிப்படியான முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். மறுசீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்ட அங்கீகார முறையை அடிப்படையாகக் கொண்டு கல்லூரிகளின் தரம் மதிப்பீடு செய்யப்படும். ஏற்கெனவே அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தகுந்த மதிப்பீட்டுத் தன்னாட்சி வழங்கப்படும். சுயநிர்ணயத்திற்காக தயார்படுத்த விரும்புகின்ற பொது கல்வி நிறுவனங்களுக்கு (அரசு கல்லூரிகள் உட்பட) ஒரு சிறப்பு நிதி உருவாக்கப்படும்; அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்படும். புதிதாக தன்னாட்சி பெற்ற அரசு கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஒரு முறை மானியங்களுக்கு வழங்கப்படும், இதனால் அவர்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். மாநில அரசுகள் இதே போன்ற நிதி ஒன்றை உருவாக்கி, அதைக்கொண்டு தங்கள் மாநிலத்திலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு தாராள மானியம் வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்களின் தன்னாட்சித் தகுதியை தக்கவைக்க இயலும். இந்த திட்டங்கள் புதிய உயர்கல்வி நிறுவன கட்டமைப்பை நிறுவுவதற்கான மாநில அரசின் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், எம்.என் மற்றும் எம்.டி. திட்டமாகவும் இருக்கும். 18.2.3. ஒரு புதிய தேசிய அங்கீகார மதிப்பீட்டு குழு: புதிய உயர்கல்வி அமைப்பில் NACC முக்கிய பங்கு வகிக்கும். இதற்கு குழுவில் முழுக்க முழுக்க புது கற்பனாத்திறனும், இந்த கடமைகளை சிறப்பாக செய்யும் பொருட்டு குழுவின் திறனை மேம்படுத்தலும், மேலும் பரிபூரணத்தையும் சிறப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதன் ஆளுமை மற்றும் நிர்வாகத்தை மாற்றியமைத்தலும் தேவைப்படும். 18.2.4. அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் உயர்தர மற்றும் உயர்ந்த ஒருங்கிணைந்த சூழல்: முடிந்த அளவு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்குள் உயர்தர ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குதல் தேசிய அங்கீகார மற்றும் தன்னாட்சி குழுவின் மிக அவசரமான பணியாகும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் நூறு முதல் இருநூறு உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கலாம். இந்த மதிப்பீட்டை ஒவ்வொரு இரண்டு- மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தல் வேண்டும். ‘Meta-accreditation’ எனப்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகச் செயல்படும் உரிமம் என்பது கணிசமான பொது மற்றும் இலாப நோக்கற்ற தனியார் கல்விக்கூடங்களுக்கு NAACyaal வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களும் பிற இலாப நோக்கற்ற நிறுவனங்களும் அங்கீகார முகவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தங்கள் செலவுகளை மீட்டெடுக்க சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமானது மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த NAAC வழிமுறைகளை வகுத்து செயல்படுத்தும். அங்கீகார வழிமுறை மற்றும் அதன் அளவுருக்கள் பற்றிய பொதுவான புரிந்துணர்வு உள்ளது. அது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் குறுகிய வேறுபாடுகளில் பிரதிபலிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை தங்களுக்குள்ளேயே 3-5 ஆண்டுகளாக ஒருமுறை கண்டிப்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். அவர்களே தங்கள் முடிவுகள், முடிவு எடுப்பவர்கள் போன்ற விவரங்களை தொகுக்கும் பணிகளுக்கு பொறுப்பாவார்கள். வழிகாட்டிகள் மற்றும் AI க்கள் பொது மக்களுக்கு தெரிந்திருப்பதோடு அவர்கள் அங்கீகரிக்கும் நிறுவனங்களின் தரத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிபந்தனையின் படியே அங்கீகாரம் செய்யப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் மதிப்பீடும் தரவரிசையும் பொதுமக்கள் மற்றும் சந்தை நிலவரங்களிடம் விட்டுவிடலாம் கல்விச்சூழல் மற்றும் அதன் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டம் வரும் ஜூன் 2020க்குள் NAAC ஆல் தயாரிக்கப்பட்டு RSA வின் ஆய்விற்கும் ஒப்புதலுக்கும் சமர்ப்பிக்கப்படும். இந்த திட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் எந்த உயர்கல்விக்கூடங்களுக்கும் ஒதுக்கப்படலாம். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் ஆண்டுக்கொருமுறை NEHRA க்கு ‘அங்கீகார கட்டணம்’ செலுத்த வேண்டும், அதைக்கொண்டே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் செலவுகள் நடக்கும். ஒவ்வொரு அங்கீகாரத்தின் போதும் NEHRA அந்நிறுவனங்களுக்கு வழங்கும். 18.2.5. வழிகாட்டிகளாகும் அங்கீரம் பெற்ற நிறுவனங்கள்: அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தங்களைப்போலவே மற்ற நிறுவங்களும் தங்கள் தகுதியை பெருக்கிக்கொண்டு அங்கீகாரம் பெறுவதற்கான தேவைப்படும் வழிகாட்டுதல்களை அவர்களோடு இணைந்து செய்ய வேண்டும். அனைத்து எதிர்கால அங்கீகார முயற்சிகள் நிறுவனங்களுக்கான திறனைக் கூட்டும் பயிற்சிகளாக மாறும். ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் வழிகாட்டியாய் விளங்கும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் நிறுவனமாக இருக்க முடியாது. 18.2.6. பொது வலைத்தளங்களில் அங்கீகாரம் தொடர்பான தகவல்கள்: அங்கீகாரம் தொடர்பான அனைத்து தரவு, செயல்முறைகள், மதிப்பீடுகள், முடிவுகள் மற்றும் விதிமுறைகளும் இணையத்தின் மூலமாக எளிதாக பொது மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக கிடைக்கும்படி இருக்க வேண்டும். பூரண வெளிப்படைத்தன்மை மூலம் உயர்ந்த நம்பகத்தன்மை அளிப்பதே இதன் குறிக்கோள். 18.3. தர நிர்ணயிப்பு அமைப்புகள் 18.3.1. தற்போதைய ஒழுங்குமுறை  அமைப்புகள் தொழில்முறை தரநிர்ணயிப்பு அமைப்புகளாக மாற்றப்படுதல்: தற்போதைய ஒழுங்குமுறை அமைப்புகளான  NCTE, AICTE MCI மற்றும் BCI ஆகியவை தங்களின் முறைப்படுத்தும் அதிகாரத்தை NHERA க்கு மாற்றுவதன் மூலம் , NHERA உயர் கல்வியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டாளராகலாம். இவை தங்களை தொழில்முறை தரநிர்ணய அமைப்புகளாக (PSSB)  மாற்றிக்கொள்ளலாம். இந்த அமைப்புக்கள்(PSSB) க்கள் அந்தந்த தொழில்சார்பான அறிவுசார் தலைமைத்துவத்திற்கான கலங்கரை விளக்கங்களாக திகழ்வதற்கேற்ப பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இத்தகைய உருமாற்றத்திற்கான விரிவான திட்ட விளக்கம், கட்டமைப்பு மற்றும் நிர்வாக முறைமைகள்,    அந்தந்த தொடர்புடைய  அமைச்சகங்களால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். PSSBக்கள் செயலாக்க முறைமைகளுக்கான வழிமுறைகளை தொழில்முறை தரத்தோடு நிர்ணயிக்கும்.  அந்த வழிமுறைகள் பயிற்சிக்களங்களை வழிநடத்தும். கல்வி முறை இந்த தரநிர்ணயங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்.  உயர்தர கல்வி முறை,பாடத்திட்டம்,கற்பிக்கும் முறை, ஆசிரியர் தகுதி மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் சிறந்ததரத்தை உறுதி செய்தலுக்கு  உயர்கல்வி நிறுவனங்கள் (HEI) முன்னுரிமை வழங்குவதன் பொருட்டு அவை தன்னாட்சி பெற்றவையாகத் திகழும். இதனை HEIக்கள் செயல்படுத்த ஏதுவான பாடத்திட்ட கட்டமைப்பை PSSBக்கள் உருவாக்கும். படிப்புகளுக்கான அடிப்படைத் தர நிர்ணய  சான்றிதழ் வழங்குதல் வழக்கமாக்கப்படும். ஆனாலும் இத்தகைய தரநிணய சான்றிதழ் பெறுவதென்பது , HEIக்களின் விருப்பம் சார்ந்ததாகவே அமையும். அந்த அமைப்புகள் எந்த படிப்புகளுக்களையும் நடத்துவதில் இருக்கும் தன்னாட்சியை தரச் சான்றிதழ் எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த செயல்திட்டத்திற்கான அடிப்படைக்கொள்கை என்பது தொழில்கல்வியின் கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாடு கல்வித் துறையின் ஒரு பகுதியாகும். அதேநேரம் தொழில்சார்அமைப்புகள் அது சார்ந்த, தொழில்துறையை நிர்வகிக்கும். கற்றலின வெளிப்பாடு சார்ந்த உயர்கல்வி தகுதிநிர்ணயம் NHEQFஆல் வரையறுக்கப்படும் தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு ஆணையமானது உயர்கல்வியில் கற்றல்தொ டர்பான அனைத்து தகுதி நிர்ணயங்களையும் வரையறுக்கும். 18.3.2. கல்விக்கான பொதுச் சபையின் செயல்பாடுகள் உயர்கல்வியில் பட்டம் பெறுவதற்கான மாணவர்களின் தகுதி மற்றும் தரத்தை நிர்ணயிக்கும் கல்விசார் தலைமை அமைப்பாக GEC கடடமைககப்படும். அனைத்து துறைகள் மற்றும் புலங்களின் இளங்கலை, படடம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கும் இது பொருந்தும் சிறந்த கல்வியின் வெளிப்பாடுகளான துறைசார் அறிவு, உணர்வு மேலாண்மை, நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படைத் தகுதிகளை உள்ளடக்கியதாக இத்தகைய பட்டம் பெறும் தகுதிகள்  நிர்ணயிக்கப்பட வேண்டும் . இந்த காரணிகள் அடிப்படையிலான மாணவர்களின்  மதிப்பீடுகளை மாதிரிகளைக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை RSA செய்யும். GEC ஆல் உருவாக்கப்டும் NHEQF , NSQF உடன் ஒத்திசைந்து செயல்படும். NHEQF பட்டம்/ பட்டயம்/சான்றிதழ் இவற்றைப் பெறுவதற்கான தகுதியை வரையறை செய்யும்.இதனை MHRD ன் அங்கமான இந்திய கல்வி தர நிர்ணய அமைப்பை விரிவாக்குவதன் மூலம் செயலாக்கலாம். இந்த விரிவாக்கம் வகைவகையான கல்வித் தகுதிகளின் ஒவ்வொரு படிநிலையிலும் அடைய வேண்டிய தகுதிகளை நிர்ணயிக்கும். இந்த வரையறைகள் , பல்கலைக்கழகங்கள் தங்களுடைய தனிப்பட்ட பாடத்திட்டங்களின் கட்டமைப்பை சீரமைக்கவும், அது தேசிய , உலக அளவில் ஒப்பீட்டுத் தன்மை உடையதாக அமையவும் உதவும். கிரெடிட் மதிப்பீடு பரிமாற்றங்களை அனுமதிப்பதன் மூலம் கீழகாணும் வகைகளில் NHEQF நெகிழ்வுத் தன்மையுடன் விளங்குகிறது. கற்கும் புலங்களின் மாற்றம் ( கலைக்கல்வியிலிருந்து அறிவியல் சார் கல்வி, தொழில்முறைக் கல்வியிலிருந்து அறிவியல் கல்வி ), வேறுபட்ட துறைகளின் ஒருங்கிணைந்த கல்வி (இசை மற்றும் வேதியியல்) எளிதான சேர்க்கை, விலகல் மற்றும் நிறுவனங்கள், துறைகளுக்கிடையேயான மாற்றங்கள். நாடு முழுவதும் மாணவர்கள் எங்கு வேண்டுமாலும்  கல்வியைத் தொடர்வதில்  தடை மற்றும் தடங்கல் ஏற்படாமல்  இருக்கும் வகையிலான   தேசிய அளவிலான விதிமுறைகளை கிரெடிட் மாற்றங்கள், படிப்புகளின் ஒனறுக்கொன்றான சமநிலை இவற்றில் GEC வகுக்கும். RPLதொடர்பான அமைப்பும் கட்டமைக்கப்டும். மற்ற நாடுகளுடனான பட்டங்களை அங்கீகரிக்கும் ஒப்பந்தங்களுக்கான அடிப்படை நிர்ணய அமைப்பாக NHEQF செயல்படும். உயர்கல்வி நிறுவனங்கள்( HEI) தங்களுக்கான பாடத்திட்ட வரையறைகளில் தன்னாட்சிக்கு முழுமையாக தகுதிபெறும் வரை ,  GEC இவற்றுக்கான பாடத்திட்ட கட்டமைப்புகளை மேற்கொள்ளும். இந்த கட்டமைப்புகள் வழிகாட்டும் மற்றும் அறிவுரைக்கும் தன்மையிலானவையே தவிர, கட்டயமாக பின்பற்ற வேண்டியவை அல்ல. 18.4. மற்ற அமைப்புகளின் பங்கு 18.4.1. உயர்சல்வி மானியக் கூட்டமைப்பின் பங்களிப்பு பல்கலைக் கழக மானியக் குழு ,  தகுந்த நிறுவனங்களையும் , தனி நபர்களையும் கண்டறிவதோடு தன்னை HEGC உயர்கல்வி பொது கூட்டமைப்பாக உருமாற்றிக் கொள்ளல்.நிறுவனங்களுக்கான நிதியளிப்பு நெறிமுறறைகள், மீளாய்வு செய்யப்பட்டு, எளிதாக்கப்பட்டு நெறிப்படுத்தப்படவேண்டும். AICTE யினுடைய நிதியளிக்கும் அதிகாரம் உயர்கல்வி பொதுக் கூட்டமைப்பிடம் அளிக்கப்டும். உயர்கல்வி நிறுவன பணியாளர்களது ஊதியத்தை நிர்ணயிப்பதோ , வேறு சட்டதிட்டங்களை வரையறுப்பதிலோ உயர்கல்வி பொது கூட்டமைப்பின் பங்கு எதுவுமில்லை.HEGC ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதிலும் பங்கேற்காது. தேசிய ஆராய்ச்சி நிதி ( NRF) அதற்கு முழு பொறுப்பாகும். ஆராய்ச்சிக் கட்டமைப்புகளுக்குத்தேவையானஂநிதியும் NRF வழங்கும்.HEGC புதிய ஆராய்ச்சித் துறைகளையும் புலங்களையும் உருவாக்குவதிலும், படிப்புதவித் தொகைகளை பிரித்தளிப்பதிலும் தன் முழு கவனத்தை செலுத்தும். 18.4.2. மாநில உயர்கல்வித் துறை மற்றும் மாநில உயர்கல்வி கூட்டமைப்பு இந்த கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, மாநில உயர்கல்வித் துறை ,மாநில அளவிலான உயர்கல்வி வளர்ச்சி, வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்கல், ஒருங்கிணைத்தல், திட்டமிடல் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு மேம்பாடு   ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதியை அவற்றின் (IDP) உலகலாவிய வளர்ச்சித் திட்டங்களின் பங்களிப்பைப் பொறுத்து வழங்குதலும் மாநில உயர்கல்வித் துறையின் பணியில் சேரும்..  மாநில உயர்கல்வி கூட்டமைப்பு மாநிலங்களிலுள்ள உயரகல்வி நிறுவனங்களுக்கிடையேயான பகிர்தலையும் ,ஒருவருக்கொருகிடையேயான பங்களிப்பையும்  எளிதாக்கும் நிறுவனமாகும். மாநில கல்வித் துறையோ,மாநில உயர்கல்வி கூட்டமைப்போ ,மாநிலத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் மீது எந்தவிட கட்டுப்பாடோ, நிர்வாக அதிகாரமோ கொண்டதல்ல. 18.4.3. தர சமநிலையில் அரசாங்க பங்களிப்பு மிக்ச் சிறந்த உயர்கல்வித் துறையை உருவாக்குவதிலும், முன்னேற்றுவதிலும் அரசாங்கம் பெரும் பங்கு வகிக்கும். உயர்கல்விக்கான நிதி ஆதார அதிகரிப்புகளை  அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நிதி ஆதாரங்களை வழங்கும் அமைப்புகள்,  உயர்கல்வி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை நிதியைப் பொறுத்து விதிப்பதையும் தலையிடுவதையும்  தவிர்க்கவும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கவுமான வழிவகையாக, அரசாங்கம் நிதி ஆதாரங்களுக்கு பொறுப்பாக்கப்படுகிறது. நிதி ஆதார காப்பாளர்களாகத் திகழும் அந்தந்த அமைச்சகங்களும் துறைகளும் தற்போதைய  நிலையிலேயே தொடர்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு RSAவால் மீளாய்வு செய்யப்படலாம்.சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களுக்காள நிலங்களை , உள்ளாட்சி அமைப்புகளின் தலையீடின்றி  வழங்கிட அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். 18.4.4. தனியார் நிறுவனங்களில் காப்பாளர்களின் பங்களிப்பு. நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு எந்த சமரசமும் நேராத வகையில் சரியான வழியில் நிலையான நிதி ஆதாரங்கள் விளங்குவதை  நிதிவழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும். 18.5. புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல் 18.5.1. புதிய உயர்கல்வி நிறுவனங்களை கட்டமைத்தல் எந்த ஒரு உயர்கல்விநிறுவனமும் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்ட மன்றம் அல்லது NHERA வின் தேசிய உயர்கல்வி பட்டயச் சட்டம் மூலமாக மட்டுமே நிறுவப்பட வேண்டும். புதிய உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல் எளிதானதாக்கும் அதே நேரத்தில்அவை முறையான பொது நன்மைக்கான நோக்கத்துடன், சரியான ,நிலையான நிதி ஆதாரங்களை கொண்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட காரணிகளின் மீதான வெளிப்படையான மதிப்பீடுகளைப் பொறுத்தே உயர்கல்வி பட்டயச் சட்டம் நிகழ்த்தப்பட வேண்டும். மிகச்சிறந்த தரமுடைய நிறுவனங்களை கட்டமைக்கும் பொருட்டு  பொது நன்மையைக் கொண்ட நோக்கம், நிலைத்த நிதி ஆதாரஙகள், உறுதியான நிர்வாகம், நிறுவனம் சார்ந்நதவர்களின் நம்பக்த் தன்மை ஆகியவையும் வரைமுறைகளாக NHERA வால் வரையறுக்கப்படுகின்றன. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் நிறுவனங்கள் தொடங்கபபட்டு செயல்பட்டாலும், அவை நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகள் நடைபெறும். NHERA ,ஒரு பொது மாதிரிஂசட்டத்தை உருவாக்குவதன் மூலம் , சட்ட அமைப்புகளுக்கான மாதிரியை உருவாக்கலாம். இந்த மாதிரிச சட்டம், உயர்கல்வி கொள்கையின் நோக்கத்தை உறுதி செய்யும் வகையிலும், நிறுவப்படும் உயர்கல்வி நிறுவனத்திற்கு மிக அதிக சுத்ந்திரம் தரும் வகையிலும் அமைய வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் புதிய உறுப்புக கல்லூரிகளையும், தொலைதூர வளாங்கங்களையும் தொடங்குதல் எளிதாக இருக்க வேண்டும் .  எந்த புதிய ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதல்களும் தேவைப்படாது. உறுப்புக் கல்லூரிகள் அவற்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். துவங்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தக் கல்லூரிகள் தரநிர்ணயச் சான்றிதழ் பெறுதல் அவசியம். அடுத்த ஐந்து ஆண்டுக்ளுக்குள் , மற்றொரு தரச்சான்றிதழை, முதலில் வழங்கிய நிறுவனமல்லாத மற்றொரு நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும்.. 18.5.2. புதிய உயர்கல்வி நிறுவனங்களின் வகைப்பாடுகள் 2020ம் ஆண்டிலிருநது தொடங்கப்டும் அனைத்து கல்லாரிகளும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் மட்டுமே.2020ம் ஆண்டுக்குப் பின் பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் எதுவும் புதியதாக தொடங்கப்படாது.2030ம் ஆண்டுக்குப்பின் எந்த ஒரு பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லூரியாக செயல்படாது. அனைத்து கல்லூரிகளும் தன்னாட்சி பெற்ற கல்லூரியாகவோ , பல்கலைக்கழகமாகவோ தன்னை தரமுயர்த்திக் கொள்ள வேண்டும் 18.6. பொதுவான ஒழுங்கு முறை ஆணை 18.6.1. பொதுவான ஒழுங்கு முறை ஆணை- அனைத்து த.உ.க.நி-அரசு மற்றும் தனியார் துறை- இரண்டுக்கும் பொதுவான ஒழுங்கு முறை ஆணை பிறப்பிக்கிறது. கல்வியில் தனி மனித ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் கல்வியில் வியாபார நோக்கத்தை நீக்குகிறது. அனைத்து த. க. நி ௧ளின் நிதி அறிக்கை IDP யின் மூலம் தணிக்கை செய்யப்பட்டு ஆணையத்தின் ஒப்புதலின்படி பொதுவெளியில் வைக்கப்படும். அனைத்து தனியார் உ. க. நி களும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தாலொழிய அரசு உ. க. நி போன்று ஒழுங்கு படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படும். தனியார் உ. க. நி களில் உள் மாநில மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு இடம் ஒதுக்கீடு வழிகாட்டுதல் கட்டாயமாகப் படவில்லை. அரசு மற்றும் தனியார் துறை இரண்டிற்கும் சமமான முறையில் நடத்தப்படும் 18.6.2. தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கான செயல் திட்ட வழிகாட்டுதல்கள்:(பல்கலைக்கழகங்கள்) தனியார் உ. க. நி அமைப்பதற்கான அனைத்து பொதுவான தேசிய சட்ட வழிகாட்டுதல்களை RSA வழங்கும். இந்த பொதுவான குறைந்த பட்ச வழிகாட்டுதல் தனியார் உ. க. நி தின் அனைத்து கொள்கை களையும் பிரதிபலிக்கும், ௭னவே தனியார் மற்றும் பொது உ. க. நி களின் பொது ஒழுங்கு முறை வரைவாக செயல் படுகிறது. இந்த பொது வழிகாட்டுதல்கள் சிறந்த நிர்வாகம், பொருளாதார உறுதித்தன்மை, பாதுகாப்பு, கல்வியில் நல்ல முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை செயல் படுத்துகிறது. இது’HEI charter’ மற்றும் ‘model act’ ஐ ஒத்து செயல் படுகிறது. இந்த நடவடிக்கையினால் தனியார் உ.க.நி கள் நிறுவுதல் மற்றும் நடத்துதல் லாப நோக்கற்ற பொது மக்களுக்கு பயனுறும் வகையில் வியாபார நோக்கற்றதாக உறுதி செய்கிறது. நிறுவப்பட்டுள்ள பொது உ. க. நி களும் இக் கொள்கை களின் உட்கருவினை முழுமையாக ஏற்று அதன் நிறுவுதல் மற்றும் செயல் படுத்து தலில் பிரதிபலிக்கும். 18.6.3. தனியார் உ. க. நி கட்டணம் பற்றிய பொது உட்கரு கொண்ட வெளிப்படையான ஆணை தனியார் உ. க. நி பொது மனித நேயத்துடன் கட்டண உயர்வை தீர்மானிக்க கூடிய ஆணை. இந்த ஆணை த. உ. க. நி தன்னிச்சையாக கல்வி கட்டணத்தை தீர்மானிக்க மற்றும் குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் கட்டண சலுகை வழங்க அனுமதிக்கிறது. இந்த கட்டண ஆணையின் முலம் த. உ. க. நி மிருந்து சமூக பொறுப்புடன் நிதி மீட்டெடுக்கப்படும். த. உ. க. நிதின் கட்டண நிர்ணயம் வெளிப்படையாகவும் ஒரே கல்வியாண்டில் இருப்பவர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் மிகையாகாமலும் இருக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டுக்கு முன்பு கட்டண உயர்வு செய்து கொள்ள முடியும். அனைவரிடம்மும் த. உ. ௧.நி த்தினர் வசூலிக்கப்படும் கட்டணம் பயன்பாட்டிற்கானதன்றி வசிப்பிடதற்கானதன்று. த. உ. க. நி களின் மாணாக்கர் சேர்க்கை பாரபட்சமற்ற முறையில் செயல் படும் மற்றும் சேர்ந்த மாணவர்களின் கல்வி நிதி உதவி பெறுவதற்கான வழிவகை களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். த. உ. க. நி ௧ள் ஒவ்வொரு வகுப்பிலும் 50% மாணவர்களுக்கு 25% முதல் 100% கட்டண சலுகை அளிக்க வேண்டும் அவர்கள் சமூக- பொருளாதாரத்தில் கட்டணச்சலுகை வழங்கும் வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு பாடப்பிரிவில் 20% மாணவர்களுக்கு 100% கட்டண விலக்கு அளிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு பாடப்பிரிவில் 30% மாணவர்களுக்கு 100% முதல் 25% கட்டணச்சலுகை அளிக்க வேண்டும், NSSO சர்வேயில் 75 சதவீத வருமானத்திற்கு உட்பட்டவர்களாலும் கட்டணம் செலுத்தும் வகையில் சலுகை நிர்ணயம் செய்ய வேண்டும். த. உ. ௧.நிகள் அதன் அனைத்து கட்டண சலுகை முறைகளை அனைத்து வகுப்பு களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் அமல் படுத்த வேண்டும் இல்லையேல் அந்த நிறுவனத்திற்கு கல்வி நடத்துவதற்கு தடை செய்யப்படும். நியாயமான நீதி நெறி முறைகளுடன் கூடிய கட்டண சலுகை நேர்மையான நிதி ஒழுங்குமுறையை அங்கீகரிக்கிறது. மாணவர்கள் எந்த தயக்கமும்மின்றி அவர்கள் புகார்கள் மற்றும் விதிமீறல்கள் பற்றி குறைத்தீர்க்கும் அமைப்பான NHERA வை அணுகலாம். 18.6.4. பொதுவான ஒழுங்கு முறை ஆணை உ. ௧.நி களுக்கு கீழ் வராத நிறுவனங்கள்- உ. ௧.நி களுக்கு கீழ் வராத நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட ஒழுங்கு முறைகளில் உள்ளடக்கியது. இது அதன் துறை சார்ந்த அதிகாரியால் கண்காணிக்கப்படும். நல்ல ஆட்சி முறைக்கான கொள்கைகள்: கொள்கை 1: நிறுவனங்கள் அதன் தொலைநோக்கு பார்வை, உத்திகள் இவற்றில் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் மற்றும் நிறுவன உறுப்பினர்கள் ஆர்வத்துடன் செயல்படுவதை உறுதி செய்யும். கொள்கை 2: நிறுவனங்களின் கலாச்சார நெறிமுறைகளை ஆணையம் நிர்ணயிக்கும். கொள்கை 3:அனைத்து இயக்குனர்களும் அவர்கள் சுதந்திர மாகவும் தனித்துவமாக வும் நிர்வகிக்க இயலும். நிறுவனத்தின் தொலைநோக்கு செயல்பாடு களுக்கு உட்பட்டு உறுப்பினர்கள் தங்கள் பதவியில் தனித்து செயல்பட முடியும். கொள்கை 4: நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நன்மையை கருத்தில்கொண்டு தகுதி, திறமை, அனுபவம் மற்றும் நல்ல பின்னனி உள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டு தொலை நோக்கு பார்வையுடன் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய இயக்குனர்களை ஆணையம் நிர்ணயிக்கும். ஆணையத்தின் தலைவராக ஒருவரும் தலைமை நிர்வாகியாக வேறொருவரும் இருப்பர். கொள்கை 5: ஆணையமானது பொருத்தமான அமைப்பின் மூலம் பிரச்சினைகளையும் சவால்களையும் முன்கூட்டியே கனித்து அதை தவிர்ப்பதற்கான அல்லது சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும். கொள்கை 6: இயக்குநர்கள் விடாமுயற்சியுடன் சரியான தகவல்கள் அடிப்படையில், துல்லியமாக தொடர்புடன், சரியான நேரத்தில் ஆதாரங்களுடன் செயலபடுவர். கொள்கை 7: பொதுவாக ஆணையம் சில வேளைகளில் நிர்வாகத்தில் அதன் பிரதிநிதிகளை நியமிக்கிறது. பணிகள் அவர் வசம் ஒப்படைப்பது தெளிவாக தெரிகிறது. இதில் சுயாட்சி முக்கியமாக கல்வி சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. கொள்கை 8: ஆணையம் தலைமை நிர்வாகியை நியமிக்கிறது மேலும் தொடர்ந்து அவரது செயல் திறனை வெளிப்படையாக மதிப்பீடு செய்கிறது. கொள்கை 9: ஆணையம் நிறுவனம் மற்றும் பங்குதாரர்களிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட பதவிகளை பற்றிய தேவையான விவரங்களை கேட்டறிந்து கொள்கிறது. கொள்கை 10: ஆணையத்தின் செயல்பாடுகள் ( தலைவரின் நடவடிக்கை ,தலைமை நிர்வாகி மற்றும் முக்கிய உப குழுக்களின் நடவடிக்கைகள்) தொடர்ந்து விதிகளுக்குட்பட்டு கண்காணித்து குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பகுதி III - முக்கிய கவனப் பகுதிகள் கல்வியில் தொழில்நுட்பம் குறிக்கோள்: கல்வியின் அனைத்து நிலைகளிலும் அதற்கேற்ற வகையான தொழில்நுட்பத்தை சேர்த்தல் – கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் மேம்படுத்தல்; கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செயல்முறைகளை மேம்படுத்தல்; பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி அணுகலை அதிகரிக்கச் செய்தல்; கல்வித்திட்டமிடலில் ஒருங்கிணைந்த தன்மை, நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கு ஆதரவளித்தல். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் முன்னேறிய துறையான விண்வெளி போன்ற பிற அதிநவீன களங்களில் இந்தியா உலகளாவிய தலைவராக உள்ளது. டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் முழு இந்தியாவையும் மின்னணுவியலில் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றம் பெற உதவியுள்ளது. இந்த மாற்றத்தில் தரமான கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் கல்வி செயல்முறைகள் மற்றும் அதன் வெளிப்பாடுகளை மேம்படுத்துவதில் தொழில்நுட்பமே முக்கிய பங்கு வகிக்கும். எனவே, அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்திற்கும் கல்விக்கும் இடையிலான உறவு இருதிசையில் சென்று கொண்டு இருக்கிறது. கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பரவலாக நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படலாம், இதில் மூன்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை செயல்முறைகள் ஆகியவற்றுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. முதலாவது மற்றும் மிக முக்கியமான பகுதி கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் அவற்றின் சிபிடி ஆகும். கல்வியின் வெளிப்பாடுகளை இன்னும் மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கு ஆசிரியர்கள் போதுமான பயிற்சி பெற வேண்டியது அவசியம். கற்பித்தல் முன் தயாரிப்பு என்பது தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தானாகவே தயாரித்துக் கொள்ளுதல் (எ.கா. ஆன்லைன் படிப்புகளை பயன்படுத்துவது மூலம்), ஆனால் இதன் தரம் மிக உயர்ந்த தரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக வகுப்பறை செயல்முறையில் கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் மீது தாதொழில்நுட்பம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது முக்கியமான பகுதி ஆகும். தொடர்ச்சியான செயல்பாட்டில், இந்த பகுதிகளில் உள்ள சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். கூடுதல் புதியவற்றை உருவாக்காமல் சவால்களை எதிர்கொள்வதை உறுதிசெய்ய கருவிகள் கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மூன்றாவது பகுதி, பின்தங்கிய குழுக்களுக்கு கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும், இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பெண்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மாணவர்களும் உள்ளனர். நான்காவது பகுதி முழு கல்வி முறையின் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகும். தொழில்நுட்பம் விரைவாக மாறக்கூடியது என்றாலும், கல்விக்கு உதவக்கூடிய தற்போதைய தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் மேம்படுத்தக்கூடிய வழிகளையும் அடையாளம் காண முக்கிய தொழில்நுட்ப போக்குகளை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக மின்சக்தியை அதிகரிப்பதற்கான அணுகல் ஆகும், மின்சார கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள் காரணமாகவும், சூரிய மின் சக்தி பயன்பாடு போன்ற உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் செலவுகள் குறைகின்றன. இந்த போக்கைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தொழில்நுட்பம் சார்ந்த அனைத்துக்கும் மின்சாரம் என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதால், இந்தக் கொள்கை அனைத்து கல்வி நிறுவனங்களையும் விரைவாக மின்மயமாக்கலை பரிந்துரைக்கிறது. இரண்டாவதாக கணிணிமயம், தரவு சேமிப்பு மற்றும் தரவு இணைப்பு ஆகியவற்றின் விலைகுறைவு ஆகும். இந்த தொழில்நுட்ப போக்கு பெரும்பாலும் சந்தை சக்திகளால் இயக்கப்படுகிறது, மேலும் இது தரவை சேகரிக்க, செயலாக்க மற்றும் பகிரக்கூடிய அதிநவீன கல்வி பயன்பாடுகளின் சாத்தியத்தை மேம்படுத்துகிறது (எளிமையான, தனித்த பயன்பாடுகளுக்கு மாறாக). இது உடனடியாக மூன்றாவது தொழில்நுட்ப போக்குடன் இணைகிறது, அதாவது தரவின் முக்கியத்துவம். தரவைச் சேகரித்து செயலாக்குவது எளிதானது மட்டுமல்லாமல், அதிநவீன தரவு பகுப்பாய்வைச் செய்வதற்கான கருவிகள் பயன்படுத்த எளிதாகி வருகின்றன. எனவே தவறான பயன்பாட்டிற்கு எதிராக தரவு பாதுகாக்கப்படுவதையும் தனியுரிமைக் பாதுகாப்புகள் கவனமாக கவனிக்கப்படுவதையும் உறுதி செய்வது முக்கியம். இந்தத் தரவைப் பகுப்பாய்வு செய்ய பொருத்தமான நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், மேலும் இந்த பணி CESD க்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது NIEPA இல் அமைக்கப்பட உள்ளது (பார்க்க P6.1.5). இறுதியாக, இவை தவிர பாதகம் விளைவிக்கும் தொழில்நுட்பங்களின் எண்ணிக்கையும் அதன் விகிதமும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த போக்குகளைப் பார்க்கும்போது, உள்கட்டமைப்பு, வன்பொருள் பயன்பாடு, மென்பொருள் மேம்பாடு, பகிர்ந்தளிப்பு மற்றும் தரவு ஆகியவற்றின் மீது அவற்றின் மதிப்பு தாக்கங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் மின்சாரம், வன்பொருள் மற்றும் அவற்றுடன் இணைக்கும் தொடர்பு பொருட்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளில் கணிசமான முதலீடு தேவைப்படும். தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த அடிப்படைகள் (மின்சாரம், வன்பொருள் மற்றும் நம்பகமான இணைப்பு) அணுகல் இல்லை, மேலும், இந்த நிலைமை ஒவ்வொரு பள்ளிவரை மட்டுமல்லாமல் நிச்சயமாக பள்ளி வளாகங்களின் அனைத்து மட்டத்திலும் விரைவாக சரிசெய்யப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். வன்பொருள் பயன்பாட்டை பொறுத்தவரை, கல்வி நிறுவன சாதனங்களான  மேசைக் கணினிகள், வகுப்பறை ப்ரொஜெக்டர்கள், வைஃபை ரவுட்டர்கள் மற்றும் தனிப்பட்ட சாதனங்களுக்கு (ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவை) இடையே வேறுபாட்டைக் காண்பது முக்கியம். ஒருங்கிணைந்தகற்றல் மற்றும் கணினி சார்ந்த ஆய்வகங்கள் போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய கல்வி நிறுவனங்கள் நிறுவன சாதனங்களை வாங்கவும் பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டும். இந்த இடங்களில் இவை தொடர்புடைய அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருட்களையும் பயன்படுத்தவும் பராமரிக்கவும் உள்ளூர் நிபுணத்துவம் கிடைக்காதது கவலைக்குரிய முக்கிய அம்சமாகும். பயிற்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நிதி, உதாரணமாக பள்ளி வளாகங்களில், தேவைக்கேற்ப வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், பயிற்சியளிக்கப்பட்ட உள்ளூர் இளைஞர்களை, பொறியாளர்கள் அல்லது வன்பொருள் மற்றும் மென்பொருளில் போதுமான தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களை இந்த இடங்களில் பணியமர்த்துவதன் மூலம் இந்த முயற்சியை தற்காலிகமாகப் பூர்த்தி செய்யலாம். அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் சிறப்பு, ஒப்பந்த, பெல்லோஷிப்கள் வழங்கப்பட வேண்டும், அந்த நேரத்தில் அவை பள்ளிகள், பள்ளி வளாகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிற கல்வி நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு தொழில்நுட்பத்தின் தூண்டுதல் மற்றும் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும். [பார்க்க ப 19.4.5] இவை போன்ற முக்கிய தேவையான நிறுவன சாதனங்கள்,  அவற்றை வாங்குவதற்கான வளங்கள் ஒரே மாதிரியாக கிடைக்காத காரணத்தினாலும், ஓரளவுக்கு உபகரணங்களை பராமரிப்பதற்கு உள்ளூர் மட்டத்தில் தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும் சிறிதளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, தனிப்பட்ட சாதனங்களின் அதிகரித்துவரும் கிடைக்கும் தன்மையை கவனமாக பரிசீலிக்க வேண்டும். இன்று, குறைந்த விலையில் தனிப்பட்ட சாதனங்கள் தரவுத் தொடர்பு, கணினி மற்றும் மல்டிமீடியாவை ஒரே மேடையில் வழங்குகின்றன, மேலும் மாணவர்கள் அவற்றை விரைவாகவும் திறமையாகவும் இயக்க கற்றுக்கொள்கிறார்கள். எனவே, தனிப்பட்ட சாதனங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி தலையீடுகளை ஆதரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், அத்தகைய சாதனங்களுக்கான அணுகல் உலகளாவியதல்ல, மேலும் அவற்றுக்கு அடிமையாகும் நிலை மற்றும் கவனத்தை சிதறடிக்கும் நிலை ஏற்படும் என்பதால் கற்றலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும்  நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. கல்வி நிறுவனங்களில் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு நன்கு சிந்திக்கக்கூடிய அணுகுமுறை தேவை. கல்விக்கான மென்பொருளை உருவாக்குவதற்கான பல மாதிரிகள் உள்ளன, MHRD ஆல் நியமிக்கப்பட்ட SWAYAM போன்ற மென்பொருள் தளங்கள் நாடு முழுவதிலும் பயன்படுத்தப்படுகின்றன, ஐ.ஐ.டி பம்பாய் போன்ற கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் மென்பொருள்கள் வரை சோதிக்கப்பட  மற்றும் அளவிடப்பட வேண்டும், மற்றும் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட மென்பொருள் பயன்பாடுகள் பயனுள்ளதாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட்டு சேர்க்கப்பட வேண்டும். கடந்த 2-3 தசாப்தங்களாக பல புதுமையான மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தாலும், சுழற்சியை இயக்குவதற்கான ஒரு மெக்கானிசம் பின்வருவனவற்றில் பின்தங்கியே உள்ளது: பயன்படுத்துபவரின் (மாணவர், ஆசிரியர், நிர்வாகி) தேவைகளை அடையாளம் காண்பது, இந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குதல், இந்த தீர்வுகளை பொருத்தமான வகைகளின் கீழ் மதிப்பீடு செய்தல், மற்றும் அவற்றை அளவில் வரிசைப்படுத்துதல், இந்த அமைப்பில் எதேனுக் விடுபட்டு இருந்தால் தேவையான அரசாங்க நிதியுதவி அளித்தல். இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு இதற்கென  சிறப்பு குழுவை இந்த பணிக்காக பணியமர்த்தலாம். (பார்க்க   ப 19.1.1) மென்பொருள் மேம்பாடு மற்றும் அவற்றை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு மேலிருந்து-கீழ் மற்றும் கீழிருந்து மேல் என இரண்டு நிலையிலான அணுகுமுறைகளும் தொடர்ச்சியான அடிப்படையில் ஆதரிக்கப்பட வேண்டும். கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வெற்றிகரமான மென்பொருள் தீர்வுகளை மாநில வாரியாக அல்லது தேசிய அளவில் அளவிடுவது மற்றும் ஒப்பீடுவதை எளிதாக்குகிறது. இந்த கொள்கையை நன்கு விளக்கும் எடுத்துக்காட்டுகளில் ஐ.சி.டி (என்.எம்.இ.சி.டி) மூலம் கல்விக்கான தேசிய மிஷனின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட மென்பொருள்கள் அடங்கும், அதாவது மெய்நிகர் ஆய்வகங்கள், அறிவியல் மற்றும் பொறியியலின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஆய்வகங்களுக்கு தொலைதூர அணுகலை வழங்கும், மற்றும் மாணவர்கள் கற்றுக்கொள்ளவும் திறக்க பயன்படுத்தவும் உதவும் பேச்சுவழி பயிற்சியகங்கள். இந்திய மொழிகளில் ஆடியோ வர்ணனை கேடக கூடிய மென்பொருள். சில வகையான கல்வி மென்பொருட்களை (மாநில/தேசிய மட்டங்களில்) தரப்படுத்தலாம், இது ஒரு நபர்/ நிறுவனத்திற்கு வளர்ச்சி மற்றும் செயல்பாட்டு செலவுகளின் அளவைக் கட்டுப்படுத்தும். கல்வியில் கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது என்பது கணிசமான ஆதரவு தேவைப்படும் மற்றொரு பகுதியாகும், மேலும் தற்போதுள்ள FOSSEE (கல்வியில் இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்) முயற்சி மிகவும் பரவலாக இருக்க வேண்டும். இலவச மற்றும் கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான சவால் நிச்சயமாக ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனத்திலும் தேவைப்படும் உயர் மட்ட தொழில்நுட்பத் திறமையாகும், மேலும் இந்த சவாலையும் கவனிக்க வேண்டும் (ப 19.4.5 ஐப் பார்க்கவும்). கூடுதலாக, கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், கல்விக்கான முக்கிய மென்பொருட்கள் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களை, நிறுவனங்கள் பேணிக்காக்க வேண்டும், இந்த தீர்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, கல்வி நிறுவனங்களில்  உருவாக்கப்பட்டு/ தீவிரமாக சந்தைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். கடந்த காலங்களில், ஆசிரியர்களாக இருந்துகொண்டு, தொழில்நுட்பத்தில் அல்லது பிற பகுதிகளில் தொழில் முனைவோர் மாறுவது என்பது தீவிரமாக ஊக்கமளிக்கப்படவில்லை. இது இப்போது மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் ஆசிரிய மற்றும் மாணவர் குழுக்கள் தொழில் முனைவோராக ஈடுபடுவதற்கு அதிக ஊக்கம் தேவை. அவர்களின் செயல்திறன் மதிப்பிடப்பட்டு வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். இதனால் தான் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT பம்பாய் அல்லது ஹோமிபாபா விஞ்ஞானக் கல்விக் கழகம் (HBCSE) ஆகியவற்றில் இருந்து பல்வேறு மென்பொருட்களுக்கான முன்முயற்சிகள் உருவாக்கப் பட்டுள்ளன, இந்த மென்பொருள் தீர்வுகள் நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கிடைக்கச் செய்யும் பணியில் போதுமான கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கான செலவுத்தொகையும் அளிக்கப்பட வேண்டும். இது இலக்கு குழுவினரின் அளவு, தேவைப்படும் கால அளவு மற்றும் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளில் மூலம் தேர்வு செய்து கொள்ளும்படி கிடைக்கச் செய்யப்பட வேண்டும்: இப்போது  டெவலப்பர்கள்  மத்தியில் மட்டுமே  பிரபலமாகி இருக்கும் இவை பின்னர் தொழில்நுட்பத்தில் முக்கிய தீர்வுகளை அளிப்பதில்  சிறப்பாக இருக்கும்; அவர்களால் இவற்றை மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (CDAC) போன்ற நிறுவனங்களுக்கு ஒப்படைக்க முடியும், இதனால் அவர்கள் கல்வி நிறுவனங்கள் பெறக்கூடிய 24x7 ஹெல்ப் டெஸ்க் மூலம் அவற்றை பராமரிக்க முடியும்; இந்த தீர்வை மேற்கொள்வதற்கான ஆதரவு மற்றும் பராமரிப்பை கல்வி நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஒரு புதிய நிறுவனம் டெவலப்பர் நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது. இவற்றிற்கான PPP மாதிரிகள் விரிவாக்கப்படலாம், மேலும் தனியார் துறையால் உருவாக்கப்பட்டவைகளுக்கான பணம் செலுத்துவதை அரசாங்கத்தால் பரிசீலிக்க முடியும். சேவை பெறுநர்களின் கல்வி நிறுவனங்கள் ‘PULL’ மாதிரியில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கும் பின்பற்றுவதற்கும் பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெறலாம் அல்லது ‘PUSH’ மாதிரியில் மாநில அல்லது மத்திய அரசு மூலம் கிடைக்கச் செய்திருக்கலாம். இரண்டு விருப்பவிருப்ப தேர்வுகளும் வெவ்வேறு சூழல்களில் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவை சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் வாங்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருட்கள் பல நிறுவனங்களில் இன்று பயன்படுத்தப்படாமல் இருக்கும். தரவைப் பொறுத்தவரையில், குறைந்தது மூன்று பிரிவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். சில தரவுகள் ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்கள் போன்ற தனிநபர்களுக்கு சம்பந்தப்பட்டது. தனியுரிமையைப் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்களின் வெளிப்படையான அனுமதியின்றி தனிப்பட்ட தரவைப் பகிர முடியாது என்பதை உறுதிப்படுத்த கடுமையான தனியுரிமை கொள்கை அவசியம். சில தரவுகள் தனிநபர்களின் குழுக்களுடன் தொடர்புடையதாக இருக்கும் (எ.கா. ஒரு குறிப்பிட்ட வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்), மேலும் அத்தகைய தரவை தனியுரிமையை உறுதிப்படுத்த பொருத்தமான பாதுகாப்புகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். மூன்றாவது வகை என்பது கல்வி பயன்பாடுகளால் உருவாக்கப்பட்ட மற்றும் நுகரப்படும் தரவைக் கொண்டுள்ளது. இத்தகைய பயன்பாடுகள் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் அதிநவீனத்தில் வளர பயன்படுத்துகின்றன, எனவே அத்தகைய தரவுகளின் மதிப்பு வளர்ந்து வருகிறது. இதுபோன்ற கொள்கை தொடர்பான வழிகாட்டுதல்களின் படி வளர்ந்துவரும் தொகுப்பின் தேவையை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது, அது தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்கிறது. 19.1. ஒரு புதிய தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்தை அமைத்தல் கடந்த இருபது ஆண்டுகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் கல்வியின் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த பல சோதனைகள் மற்றும் பைலட் ஆய்வுகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் அவற்றின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும், அத்துடன் அவை பயன்படுத்தப்பட வேண்டிய வெவ்வேறு சூழல்களிலும் பயன்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இது ஒரு ஆழ்ந்த பணி நிபுணத்துவம் தேவைப்படும் ஒரு சிக்கலான பணியாகும். கற்றல் மேம்பாடு, மதிப்பீடு, திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த கருத்துக்களை இலவசமாக பரிமாறிக்கொள்வதற்கான தளமாக தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் இருக்கும். 19.1.1. தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (NETF): கற்றல், மதிப்பீடு, திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பலவற்றை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த இலவச கருத்துப் பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்குவதற்கான ஒரு தன்னாட்சி அமைப்பாக, தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (NETF) உருவாக்கப்படும். இந்த மன்றமானது கல்வி நிறுவனங்களுக்கு தலைமையேற்று புதிய தொழில்நுட்பம் உருவாக்குதல், வரிசைப்படுத்தல் மற்றும் பயன்பாடு குறித்து முடிவெடுப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை அளிப்பதோடு மத்திய மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து சமீபத்திய அறிவு மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை கலந்தாலோசிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கிறது. 19.1.2. தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்தின் பங்கு மற்றும் செயல்பாடு: NETFக்கு பின்வருவற்றின் மீதான செயல்பாடுகள் இருக்கும்: a. மத்திய மற்றும் மாநில அரசு முகைமைகள் தொழில்நுட்ப அடிப்படையிலான குறுக்கீடுகளை அளிக்கும் போது அவர்களுக்கு தனிப்பட்ட ஆதார அடிப்படையிலான ஆலோசனை வழங்குதல்; b. கல்விசார் தொழில்நுட்பத்தில் அறிவுசார் மற்றும் நிறுவன திறன்களை கட்டமைத்தல்; c. இந்த திணைக்களத்தின் மூலோபாய தேவைப் பகுதிகளை அடையாளம் காணுதல்; மேலும் d. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை புதிய திசைகளில் புகுத்துதல். வேகமாக மாறிவரும் கல்வி தொழில்நுட்பத் துறையின் போக்குகளை தக்கவைத்துக்கொள்ள, கல்வி தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட உண்மையான தரவுகளின் உள்ளீடுகளை NETF பராமரிக்கும், குறிப்பாக அடித்தள மட்டத்தில் இருந்து, பலவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தரவை பகுப்பாய்வு செய்வார்கள். கிடைக்கப்பெற்ற தரவைப் பயன்படுத்தி அனைவருக்கும் பொதுவாக தொழில்நுட்பத்தை வழங்குவது மற்றும் பயன்படுத்துவதற்கான ஒரு மன்றமாக இது செயல்படும், இது, குறிப்பாக நாட்டில் உள்ள இளைஞர்களுக்கிடையே புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வழிநடத்துதலுக்கான திறனை தொடர்ந்து நிரூபிக்கும், அதே நேரத்தில் இந்த முயற்சிகளின் ஒட்டுமொத்த தாக்கம் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பதையும் அறிவார்ந்த முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளது. 19.1.3. தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்திற்கான நிதி மற்றும் ஆதரவு: கல்வித்துறை மீதான ஆழ்ந்த அக்கறையை உறுதிசெய்ய, NETF ஆனது CIET / NCERT / NIEPA அல்லது RSA ஆல் தீர்மானிக்கப்படும் எந்தவொரு பொருத்தமான அமைப்பிற்குள்ளும் சேர்க்கப்படலாம். ஆரம்பத்தில் பொது நிதியுதவியுடன் ஆதரிக்கப்படும் NETF அதே வேளையில், உறுப்பினர் போன்ற பிற மூலங்களிலிருந்தும், மற்றும் பிற நடுநிலை தொழில்நுட்ப தொழில் நிறுவனங்களான NASSCOM போன்றவற்றிலிருந்தும் நிதியுதவி பெற முடியும். NETF இன் பணிகள் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட நிறுவன கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும், மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அவை குறிப்பிட்டவை RSAவால் முடிவு செய்யப்படும். 19.1.4. ஒட்டுமொத்த மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை ஏற்றுக்கொள்வது: இந்த துடிப்பான அமைப்பின் அறிவு மற்றும் செயல்முறையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, தேசிய மற்றும் சர்வதேச கல்வி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து உள்ளீடுகளை கோர NETF பல பிராந்திய மற்றும் தேசிய மாநாடுகள், பட்டறைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும். பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப வல்லுநர்கள், தற்போதைய சிறந்த நடைமுறைகளுக்கு எதிராக இந்த உள்ளீடுகளை மதிப்பீடு செய்ய, கல்வி, உளவியல், சமூக மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல கோணங்களில் இருந்து அவற்றை வடிகட்டவும் NETF உதவும்: a. ஏற்கனவே உள்ள சிறந்த நடைமுறைகளை குறிப்பிட்ட சூழல்களில் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் தேவையான தலையீடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; b. உறுதியளிக்கும் தலையீடுகளுக்கு, கூடுதலாக பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, NRF ஆல் நிதியளிக்கப்படலாம்; மேலும் c. பொருத்தமற்ற தலையீடுகளுக்கு, அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகைய பகுப்பாய்வு தொடரும் மற்றும் பகிரங்கமாகப் பரப்பப்படும், மேலும் கல்வி தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப் பயன்படும், இதில் ஏற்பட்ட தலையீடுகள் உட்பட அவை தொடரலாம் அல்லது நிறுத்தப்படலாம். NRF நிதியுதவியைக் கருத்தில் கொள்வதற்காக கல்வி தொழில்நுட்பத்தில் மூலோபாய உந்துதல் பகுதிகள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்மொழிய இந்த பகுப்பாய்வை NETF பயன்படுத்தலாம். 19.2 தொழில்நுட்ப உருவாக்கலுக்கான அணுகுமுறை வகுப்பறை செயல்முறைகள் மற்றும் கற்றல் வெளிப்பாடுகளில் தொழில்நுட்பத்தின் விளைவுகள், குறிப்பாக மிகச் சிறிய குழந்தைகளுக்கு, சுமாராகவும் மற்றும் பல சமூகவியல் மற்றும் உளவியல் பக்க விளைவுகளை உள்ளடக்கியுள்ளதாகவே உலகளாவிய சான்றுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சற்று வயது முதிர்ந்த குழந்தைகளுக்கு கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் பல வேறுபட்ட பயன்பாடுகள், மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், தொழில்நுட்பத்தைத் உருவாக்கும் போது நேர்மறையான மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை பின்பற்றப்படும், கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட நிதிகள் மற்றும் கல்வி தொழில்நுட்பத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆற்றல்கள் உகந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். 19.2.1. ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றும் வகையில் உருவாக்கப்படும் தகுதிவாய்ந்த கல்வி தொழில்நுட்பத்திற்கான ஆதரவு: தொழில்நுட்பத்தின் அனைத்து பயன்பாடுகளும் கல்வியின் பல அம்சங்களை மேம்படுத்த ஆதரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும், இந்த தலையீடுகள் அவை அளவிடப்படுவதற்கு முன்னர் தொடர்புடைய சூழல்களில் கடுமையாகவும் வெளிப்படையாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. கல்வி தொழில்நுட்பம் என்பது ஒரு ஆசிரியர் அவளது/அவரது பணியில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் மற்றும் முறைமைகளின் மிக சக்திவாய்ந்த அம்சங்களை உள்ளடக்கிய தொகுப்புகளில் ஒன்றாகும். வகுப்பறைகளில் பொருத்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பத்தின் மற்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் தலைமை தாங்குவதற்கு போதுமான பயிற்சி மற்றும் ஆதரவு மூலம் ஆசிரியர்கள் முழுமையாக அதிகாரம் பெறுவார்கள். 19.2.2. கல்வி அமைப்புகளில் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு: கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய உத்தியாக தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு அமைந்துள்ளது. உயர் தரமான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும் கவனம் செலுத்தாமல், தொழில்நுட்பத்தை பின்வரும் வகைகளில் பயன்படுத்துவதற்கும் கவனம் செலுத்துகிறது: பல மொழிகளில் மொழிபெயர்ப்பதை உள்ளடக்கத்தை ஆதரித்தல்; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவுதல்; அறிவார்ந்த பயிற்சி முறைமைகள் மற்றும் தகவமைப்பு மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கற்பித்தல்-கற்றல் செயல்முறைகளின் தரத்தை மேம்படுத்துதல்; புதிய வகையான ஊடாடும் மற்றும் அதிவேக உள்ளடக்கத்தை உருவாக்குதல் (எ.கா. பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்); கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் தேர்வு முறை மற்றும் நிர்வாக செயல்முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருதல்; ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றுக்கு உதவி செய்து கல்வியை நிர்வகிக்க உதவுதல்; மற்றும் ODL முறையை மதிப்பிடுதல், அதவது பள்ளி கல்வி, உயர் கல்வி, தொழில்முறை மற்றும் தொழிற்கல்வி, வயது வந்தோர் கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றில் அனைத்து வயதினரிடமிருந்தும் வளர்ந்து வரும் கல்விக்கான தேவைக்கு இதன்மூலம் பதிலளிக்க முடியும். 19.2.3. கல்வி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மையங்கள்: முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற சிறந்த கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் அவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப தீர்வுகளை எடுப்பதற்கான ஆதரவு செயல்பாடுகளை மேற்கொள்ள கல்வி தொழில்நுட்ப சிறப்பு மையங்கள் நிறுவப்படும். இந்த சிறப்பான மையங்கள் NETF இல் பிரதிநிதித்துவம் செய்யப்படும், மேலும் அவற்றில் இருந்து தொழில்நுட்ப அறிவைப் பகிர்வதற்கும் அறிவைப் பெறுவதற்கும் NETFன் மற்ற உறுப்பினர்கள் ஒரு உரையாடலில் ஈடுபடுவார்கள். P19.2.4. தொழில்நுட்ப அடிப்படையிலான தலையீடுகளுக்கான பொதுவான வழிகாட்டுதல்கள்: பெரும்பாலான தொழில்நுட்ப அடிப்படையிலான தலையீடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மூன்று முக்கிய கூறுகள் கருதப்படும் அவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவு. பொதுவாக, பின்வரும் வழிகாட்டுதல்கள் இவற்றுக்காக பயன்படுத்தப்படும். இந்த வழிகாட்டுதல்களில் விதிவிலக்குகள் ஏதேனும் இருந்தால் அவை கவனமாகவும் பகிரங்கமாகவும் நியாயப்படுத்தப்படும். a. வன்பொருள்: இவற்றைப் பொறுத்தவரையில் சந்தையில் உள்ள மேகக்கணிமை அடிப்படையிலான வணிகரீதியான உள்கட்டமைப்பு கொண்ட சாதன்ங்கள் மற்றும் இறுதி பயனர்களுக்கான தனிப்பட்ட கணினி சாதனங்கள் ஆகியவை பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. b. மென்பொருள்: கல்வி பயன்பாட்டிற்கான மென்பொருளாக FOSSEE தேர்வு செய்யப்படும். தேவையானபோது, மென்பொருளை தொழில் ரீதியாக மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசாங்கம் பணம் செலுத்துகிறது, மேலும் அதை கற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதன் இலவச மற்றும் வரம்பற்ற ஆஃப்லைன் பயன்பாட்டிற்காக விநியோக உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும். இந்த மென்பொருட்கள் பிரபலமான மற்றும் மலிவுவிலை இறுதி பயனர் கணினி சாதனங்களுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். c. தரவு: பொதுவெளியில் பகிரப்பட்ட அனைத்து தரவுகளும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை மற்றும் அவை கல்வித் தரநிலைகளை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் (பிரிவு 19.6 ஐப் பார்க்கவும்). தனிநபர்கள் தங்கள் சொந்த தரவின் முழு உரிமையையும் தக்க வைத்துக் கொள்ளலாம், அவை அவர்களின் வெளிப்படையான அனுமதியின்றி பயன்படுத்தப்பட மாட்டாது. திறந்த தரவு முன்முயற்சியுடன், தரவு பாதுகாப்பில் சிறந்த நடைமுறையின் படி, அநாமதேயமாக்கப்பட்ட கல்வித் தரவு, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக ஒரு வழக்கமான அடிப்படையில் அனைவருக்கும் பொதுவில் கிடைக்கும். 19.3 ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன்தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப் பெரிய முயற்சி தேவைப்படும். ஆன்லைன் கற்றல் உபகரணங்கள்/ செயலிகள்/ பயன்பாடுகள் முதல் தலைமுறையில் கற்கும் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்படாது, அவர்களுக்கு வகுப்பறைச் சூழல் மட்டுமே தேவைப்படுகிறது, இது சக மாணவர்களுடன் சேர்ந்து கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது, அத்துடன் ஆசிரியர்களிடமிருந்து நேரடியாக கற்றுக்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல் அனுபவங்களும் கிடைக்கின்றன. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகளை அதிகம் பயன்படுத்தக்கூடிய வகுப்பறை கற்பித்தலில் அதிக முதிர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பொறுத்தவரை இது உண்மையல்ல. பெரும்பாலான ஆசிரிய உறுப்பினர்களுக்கு அவர்களின் பாட அறிவின் தரத்தை உயர்த்திக்கொள்ள இது தேவைப்படும், இது ஆன்லைன் கல்வியின் மூலமும் செய்யப்படலாம். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed. படிப்பு மூலம் அளிக்கப்படும் பள்ளி ஆசிரியர் கற்பித்தல் முன்தயாரிப்பு மற்றும் அவற்றின் நிரல், பரிசீலனைகள் அனைத்தும் அனைத்துவகையான இளங்கலை பாடப்பிரிவுகளுடன் ஒத்தவை. அவற்றை பெற ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கல்வி இரண்டையும் பயன்படுத்தலாம், ஆனால் மிகவும் நியாயமான முறையில். வகுப்பறைகளில் கல்வி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆசிரியர்களும் தயாராக இருக்க வேண்டும். 19.3.1. கல்வித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆசிரியர் கற்பித்தல் முன்தயாரிப்பு: கல்வித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து மட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் திறனை வளர்த்தல், அனைத்து ஆசிரியர் முன்தயாரிப்புத் திட்டங்களிலும் தொழில்நுட்ப அடிப்படையிலான வளங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்தல், இணைக்கும் போது ஏற்படும் பொதுவான சிக்கல்களை அடையாளங்கண்டு அவற்றை கையாளுவதற்கான பயிற்சி மற்றும் சாதனங்களைப் பராமரித்து அவற்றை பாதுகாப்பான முறையில் இயக்குதல், மின்முறை-உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான கற்பித்தல் உத்திகள் (ஒரு தலைகீழ் பயன்முறையில் வகுப்புகளை திறம்பட நடத்துதல் மற்றும் MOOCகளை மேம்படுத்துதல் உட்பட), மற்றும் கற்பித்தல் கற்றல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துதல் (எ.கா. CWSNக்கு உதவுவதற்கான கருவிகள் மற்றும் வகுப்பறை நடைமுறைகளை படமாக்குவதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பாணிகளைப் பிரதிபலிக்க உதவும் கருவிகள்). திறந்த கல்வி களஞ்சியத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்திற்கான வீடியோக்கள் (ப19.5.2ஐப் பார்க்கவும்) ஆசிரியர் பயிற்சி விவாதங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களின் திறன்களை மதிப்பிடுவதற்கு, அவை மட்டுமின்றி, கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான கல்வி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள திறமை உள்ளிட்ட பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள் உருவாக்கப்படும். ஆரம்பத்தில், அனைத்து ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கும் ஒரே கட்டமாக பயிற்சி அளிக்க சான்றளிக்கப்பட்ட முதன்மை ஆசிரியர்களுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படும். எனவே, ஒரு பொருத்தமான முயற்சி CIET ஆல் தொடங்கப்பட்டு ஒரு தொலைநோக்கு பயன்முறையில் 5-6 ஆண்டுகள் வரை இயங்கும்.. 19.3.2. தொடர்ச்சியான ஆசிரியர் நிபுணத்துவ வளர்ச்சிக்கு கல்வி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: ஒரு ஆன்லைன் பயிற்சி தளம் - குறிப்பிட்ட பகுதிகளில் பயிற்சியளிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான பொருத்தமான வழிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது – தொழில் நுட்பங்களில் கல்வித்துறை மேம்பட்டு இருக்கச்செய்வதற்கு கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் பணியில் உள்ள ஆசிரியர்களை மேம்படுத்துவதற்கான அதிகாரம் உருவாக்கப்படும். ஆசிரியர்கள் தங்களது தனிப்பட்ட கம்ப்யூட்டிங் சாதனங்களுக்கான (எ.கா. ஸ்மார்ட்போன்கள்) அணுகலை அதிகரிப்பதால், இந்த பயிற்சி தளத்தை அணுகுவதற்கும், அவர்களின் கற்பிதத்தில் இணைக்க உயர் தரமான ஆன்லைன் கல்வி வளங்களை ஆராய்வதற்கும், ஆன்லைன் ஆசிரியர் சமூகங்களில் பங்கேற்பதற்கும் அனைத்து சேவை ஆசிரியர்களுக்கும் போதுமான இணைப்பு வழங்கப்படும். சிறந்த நடைமுறைகள் பகிரப்படலாம். ஆன்லைன் தளம் ஆசிரியர்களுக்கு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் கற்பிதத்தை வெளிப்படுத்தவும் அனுமதிக்கும்; சிறந்த மற்றும் இலாகாக்களைக் கொண்ட ஆசிரியர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச பயிற்சி அமர்வுகள், மாநாடுகள், பட்டறைகள் போன்றவற்றில் பங்கேற்பதற்கான நிதி உதவி மற்றும் NETF நிகழ்வுகளில் தங்கள் பணிகளை வழங்குவதற்கான அழைப்புகள் உள்ளிட்ட சரியான அங்கீகாரம் வழங்கப்படும். 19.3.3. குறிப்பிட்ட தொழில்நுட்பம் தொடர்பான கொள்கை நடவடிக்கைகள்: SWAMAM போன்ற தளத்தில் ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட படிப்புகள் அவசியமான தலையீடுகளின் கீழ் சேர்க்கப்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கும் உயர் கல்வியில் ஆசிரியர்களுக்கும் SWAYAM கற்றலின் தத்துவார்த்த அம்சங்களை அளிக்க முடியும். அதே நேரத்தில், DIET கள் மற்றும் HRDC கள் முறையே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வியில் ஆசிரியர்களுக்கு கல்வி ஆதரவை வழங்கும். பாடத்திட்டங்கள் ஆன்லைன் முறைமைக்கு மறுகட்டமைக்கப்பட வேண்டும், மேலும் வகுப்பறை இடைத்தொடர்புகளின் பதிவுகள் மட்டும் அல்ல. இதேபோல், சான்றிதழ் மதிப்பீடு ஆசிரியர்களுக்கு வசதியான வகையில் வடிவமைக்கப்பட வேண்டும், ஆனால் அது அதே சமயத்தில் தரமதிப்பை உருவாக்கும் அளவுக்கு கடுமையானதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர் நிபுணத்துவ கற்றல் சமூக ஊடக குழுக்களின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டின் மூலம், ஆசிரியர்கள் அதே பாடங்களைக் கற்பிக்கும் சக ஆசிரியர்களுடன் உரையாடலாம் மற்றும் அறிவு, அனுபவம் மற்றும் கல்வி உள்ளடக்கம் ஆகியவற்றைக் கூட பரிமாறிக்கொள்ளலாம் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய தலையீடாகும், இது சில மாநிலங்களில் ஏற்கனவே பெரும் தாக்கத்துடன் பயன்பாட்டில் உள்ளது. இது பல மாநிலங்களையும் வெவ்வேறு பாடங்களையும் உள்ளடக்கும் வகையில் ஊக்குவிக்கப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். 19.4 கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளை மேம்படுத்துதல் இண்டர்நெட் என்பது கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய உரை, ஆடியோ மற்றும் வீடியோவின் பொக்கிஷ புதையல் ஆகும். போதுமான எண்ணிக்கையிலான அணுகல் சாதனங்கள் (பெருகிவரும் ஸ்மார்ட் போன்கள் அல்லது ஐபாட்கள் மற்றும் அவற்றுக்கு இணையான சாதனங்கள்) மற்றும் இணையத்திற்கான கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் (பாதுகாப்பு நோக்கங்களுக்காக) கிடைப்பது என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை அளிக்கும், மேலும் அவர்கள் பலவற்றை உருவாக்க பங்களிக்கும். அவர்கள் பல வகையான கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடலாம், செயல்திட்டங்களைச் செய்வதற்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்தலாம், சுய கற்றல் மற்றும் குழு கற்றல் முறைகளில் ஈடுபடலாம், இதன்மூலம் பெரும்பாலான இன்றைய இந்திய வகுப்பறைகளில் நிலவும் ‘கரும்பலகை மூலம் பயிற்றுவித்தல்’ மாதிரிகளிலிருந்து கல்வியை வழங்குவதை முழுமையாக மாற்றலாம். 19.4.1. பள்ளி பாடத்திட்டத்தில் கல்வி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல்: பள்ளி மாணவர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்படுத்தவும், STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் வடிவமைப்பு, மற்றும் கணிதம்) கல்வியில் முன்முயற்சிகளை மேம்படுத்தவும், பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: a. 6 வயதிலிருந்து, கணக்கீட்டு சிந்தனை திறன் பயிற்சிகள் (கணினிகள் திறம்பட செயல்படுத்தக்கூடிய வழிகளில் சிக்கல்களையும் தீர்வுகளையும் வகுப்பதில் உள்ள சிந்தனை செயல்முறைகள்) பள்ளி பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். இது டிஜிட்டல் யுகத்தின் ஒரு அடிப்படை திறமையாகும், மேலும் இது திறம்பட வடிவமைக்கப்பட்ட காகித பணித்தாள்களின் துணைகொண்டு கற்பிக்கப்படும். b. சாதனங்களின் பரவல் மற்றும் அவற்றின் மலிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாணவர்களும் 2025க்குள் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கணினி சாதனங்களுக்கான அணுகலைப் பெற வாய்ப்புள்ளது. பள்ளி பாடத்திட்டம் இந்த தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கும், மேலும் கிடைக்கக்கூடிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு (கணினி ஆய்வகங்கள், டிங்கரிங் ஆய்வகங்கள், தயாரிப்பாளர் இடங்கள், முதலியனவை). c. மேல்நிலை மற்றும் இரண்டாம் நிலை பள்ளி பாடத்திட்ட நிலைகளில் நிரலாக்கம் மற்றும் பிற மேம்பட்ட கணினி அடிப்படையிலான செயல்பாடுகளை மையமாகக் கொண்ட விருப்ப பாடங்கள் வழங்கப்படும். 19.4.2. கல்வி மென்பொருட்களை உருவாக்குதல்: அனைத்து மட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏராளமான கல்வி மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு கிடைக்கச் செய்யப்படும். இதுபோன்ற அனைத்து மென்பொருள்களும் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் கிடைக்கும், மேலும் இவை சி.டபிள்யூ.எஸ்.என் மற்றும் மாற்றுதிறன் கொண்ட மாணவர்கள் உட்பட பலதரப்பட்ட பயனர்களால் அணுகப்படக் கூடியதாக இருக்கும், மேலும் அவற்றில் அடங்கியுள்ளவை: a. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கற்பதற்கு உதவக்கூடிய மென்பொருள் (எ.கா. பார்வைத்திறன் அற்ற / பகுதியளவு பார்வையற்ற மாணவர்களுக்கு அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் உரை-க்கு-பேச்சு மென்பொருள்). b. எண்கள் (கணிதம்) மற்றும் அடித்தள கல்வியறிவை ஊக்குவிக்க அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் நுண்ணறிவு பயிற்சி முறைகள். c. தீவிரமான விளையாட்டுகள், உருவகப்படுத்துதல்கள் மற்றும் பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் யதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்ட செயலிகளின் வடிவத்தில் கல்வி மென்பொருள். d. கற்றல் படிநிலை உள்ளடக்கப் (வாசிப்புகள், வீடியோக்கள், ஊடாடும் பணித்தாள்கள் போன்றவை) பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தனிப்பட்ட கற்போருக்கும் ஏற்ற வகையில் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் படிநிலைகள் உருவாக்கப்பட்ட வகையில் அமைந்த மென்பொருள். e. சுய கற்றல் அல்லது சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்றல் போன்ற தீர்வு நடவடிக்கைகளை எடுக்க கற்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கருத்துக்களை வழங்கும் தகவமைப்பு மதிப்பீட்டு கருவிகள். இந்த மென்பொருட்கள் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் ஏற்கத்தக்க மதிப்பீடுகளை உருவாக்குதல், உருவாக்குதல் மற்றும் சுருக்கம், மதிப்பீடுகளை மதிப்பிடுதல் மற்றும் கற்பவர்களுக்கு பொருத்தமான பின்னூட்டங்களை வழங்குதல். இத்தகைய மதிப்பீடுகள் மூலம் பொருள் உணராமல் மனப்பாடம் செய்வதன் முக்கியத்துவம் குறைக்கவும், அதற்கு பதிலாக விமர்சன மற்றும் ஆக்கபூர்வமான சிந்தித்து பதிலளித்தல், தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட கருவிகளின் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நிறுவன செயல்திறனை பிரதிபலிக்கும் இத்தகைய கருவிகளால் உருவாக்கப்பட்ட தரவு, அடுத்தடுத்த பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக NRED இல் சரியான முறையில் பதிவு செய்யப்படும் (பார்க்க ப6.1.5). 19.4.3. வீடியோ பார்க்கும் உபகரணங்கள்: திறந்த கல்வி களஞ்சியத்தில் உள்ள உள்ளடக்கத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த ஏதுவான சாதனங்கள் மலிவானவை மற்றும் சிறிய வீடியோ பார்க்கும் கருவிகளுடன் (எ.கா. சூரிய சக்தியில் இயங்கும் வீடியோ பின்னணி மற்றும் திட்ட சாதனங்கள்) ஆதரிக்கப்படும். இதுபோன்ற வீடியோக்களை கற்பித்தல்-கற்றல் செயல்முறைகளில் ஒருங்கிணைக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள், அவர்களுடைய சொந்த போதனையுடன் சேர்த்து இவற்றை ஒரு மதிப்பு கூட்டும் விஷயமாக சேர்க்கிறார்கள். 19.4.4. மேம்பட்ட ஆன்லைன் படிப்புகள்: ஆன்லைனில் குறிப்பிட்ட வகை படிப்புகளை (குறிப்பாக மேம்பட்ட தேர்வுகள்) முடிக்கும் மாணவர்களுக்கு பாடநெறி வரவுகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும், எ.கா. SWAYAM அல்லது எதிர்காலத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பிற தளங்கள் வழியாக. ஐடி இயக்கப்பட்ட சேவைகள் (ஐ.டி.இ.எஸ்) போன்ற தலைப்புகள் மற்றும் ஆன்லைன் கல்விப் பயன்களால் பயனடையக்கூடிய தொழிற்கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி போன்ற பிற துறைகள் இதில் அடங்கும். 19.4.5. பொருத்தமான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான ஆதரவு: பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்கள் வன்பொருள் மற்றும் மென்பொருளைப் பராமரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் சிரமத்தைக் கொண்டுள்ளன. மூத்த இடைநிலை படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு ஏராளமான மதிப்புமிக்க ‘ஐ.டி தூதர்’ பெல்லோஷிப்களை உருவாக்குவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடியும். சில நாடுகளில் இராணுவ சேவைக்கு ஒத்த கிராமப்புற சேவையின் பதிப்பில் அவர்கள் தங்கள் ஐ.டி உள்கட்டமைப்பை நிர்வகிப்பதன் மூலம் பள்ளி வளாகங்களை ஆதரிக்க முடியும். கணினி வன்பொருள் மற்றும் பராமரிப்பு, அத்துடன் மென்பொருள் நிறுவல் மற்றும் பராமரிப்பு (குறிப்பாக திறந்த மூல மென்பொருளுக்கு) பயிற்சி இந்த மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். முடிந்தவரை, உள்ளூர் மக்களுக்கு இந்த பெல்லோஷிப் வழங்கப்பட வேண்டும். இது பிற்காலத்தில் இந்த உறுப்பினர்களிடையே தொழில்முனைவோரை உருவாக்கவு அவர்களை மேம்படுத்தவும் உதவும். 19.4.6. குறிப்பிட்ட தொழில்நுட்பம் தொடர்பான கொள்கை நடவடிக்கைகள்: இவை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன, தேவையான தலையீடுகள் மற்றும் நம்பிக்கைக்குரிய தலையீடுகள். கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீட்டில் தேவையான சில தலையீடுகள் பின்வருமாறு: a. இந்திய மொழிகளில் கல்வி உள்ளடக்கத்திற்கான தகவல் களஞ்சியங்கள்: உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதற்கான தலையங்க செயல்முறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை சேர்ந்து ஒரு சிறந்த உள்ளடக்கத்தை முன்னணியில் கொண்டு வர அனுமதிக்கும். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் உள்ளடக்கம் கிடைக்க வேண்டும். திறந்த கல்வி வளங்களுக்கான தேசிய களஞ்சியம் (NROER) அத்தகைய ஒரு எடுத்துக்காட்டு, ஆனால் இது அதிக விழிப்புணர்வு கட்டமைப்போடு கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும், இதனால் ஆன்லைனில் அதிகமான உள்ளடக்கம் வருகிறது, மேலும் அதிகமான மக்கள் அதைப் பயனுள்ளதாகக் காணலாம். அத்தகைய களஞ்சியத்தைத் தக்கவைக்க பொருத்தமான நிதி மாதிரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளடக்க களஞ்சியத்தை விருப்பமாக கட்டண அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க முடியும், இதனால், உள்ளடக்க படைப்பாளர்களுக்கு உள்ளடக்கத்தை பங்களிப்பதற்காக சிறிய வழியில் ஈடுசெய்ய முடியும். இது புதுமையான வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை உருவாக்க பல ஆசிரியர்களை ஊக்குவிக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி களஞ்சியங்களை உருவாக்குவது அல்லது அனைத்து உள்ளடக்கங்களையும் ஒரே களஞ்சியத்தில் வைத்திருப்பது போன்ற முடிவை NETF ஆல் பொருத்தமான நிதி மாதிரிகளின் அடிப்படையில் எடுக்க முடியும். b. உள்ளடக்க களஞ்சியத்தில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்தின் தானியக்க இயந்திர மொழிபெயர்ப்பு: மொழிபெயர்ப்பின் தரத்தை சரிபார்க்க இதில் கூடுதலாக பிழைதிருத்த செயல்முறைகளுடன் இருக்க வேண்டும், இதனால் எந்த மொழியிலும் நல்ல தரமான உள்ளடக்கத்தை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க முடியும். சில நம்பிக்கைக்குரிய தலையீடுகள் பின்வருமாறு: c. கல்வி சார்ந்த அல்லது பாடப் புத்தகங்களை பதிப்பிக்கும் மென்பொருள்: ஆசிரியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளடக்கக் களஞ்சியங்களிலிருந்து இலவச உள்ளடக்கத்தைத் தொகுக்க வேண்டும், சுவாரஸ்யமான பாடங்களை இதன் மூலம் உருவாக்கலாம், அவற்றை மாணவர்களுடன் பி.டி.எஃப் வடிவத்தில் பகிரலாம். பல்வேறு பழைய பல்கலைக் கழகங்கள் அச்சிடும் பிரிவுகளைக் கொண்டுள்ளன, அவை கல்விப் பொருட்களின் ஒப்பீட்டளவில் மலிவான அச்சு நகல்களை அச்சிடப் பயன்படுகின்றன. d. ஆன்லைன் மதிப்பீடுகள்: திட்ட செயல்முறைகளுடன் இணைந்த ஆன்லைன் கொள்குறி வகை தேர்வுகள் இந்த மதிப்பீடுகளில் அடங்கும் மேலும் இவை ஆசிரியர்களால் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும். சில பயன்பாட்டு அடிப்படையிலான பல தேர்வு தேர்வுகள் அமைப்புகள் இப்போது ஏற்கனவே கிடைக்கின்றன, வினாடிவினாக்களை நடத்த ஆசிரியர்களுக்கு மிகவும் இது எளிதானது. 19.5. கல்வி அணுகலை மேம்படுத்துதல் ICTயின் பொருத்தமான பயன்பாடு தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களைச் சென்றடைய உதவுவதன் மூலம், பெண்கள், CWSN, பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்கள், பெரியவர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வியைத் தேடும் பலர் உள்ளிட்ட எந்தவொரு மாணவரும் கல்வியில் பின்தங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த உதவும். எனினும், இந்த குறிப்பிட்ட தேவைகளுக்கான கல்வி உள்ளடக்கத்தை உருவாக்க சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.. 19.5.1. தொலைதூர பகுதிகளில் தொழில்நுட்பத்திற்கான அணுகல்: அணுகமுடியாத இடங்களில் இருப்பவர்களை சென்றடைவதற்கான இணைப்பு முகைமைகளால பள்ளி வளாகங்கள் மாற வேண்டும்.இதற்காக, அவை மின்சாரம், கணினிகள் / ஸ்மார்ட் போன்கள் அல்லது பிற அணுகல் சாதனங்களைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் இணைய அணுகல் இல்லையெனில் அணுக முடியாதவர்களை சென்றடைவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்படாது. 19.5.2. திறந்த கல்வி களஞ்சியங்களில் கிடைக்கக்கூடிய உயர் தரமான சிறப்பு உள்ளடக்கம்: கற்பவர்கள் அனைவருக்குமான உயர்தர கல்வி உள்ளடக்கம், பாடப்புத்தகங்கள், உதவிக்குறிப்பு புத்தகங்கள், வீடியோக்கள் (வசன வரிகள் கொண்டவை), கற்பித்தல்-கற்றல் பொருட்கள் போன்ற பதிப்புரிமை இல்லாத கல்வி வளங்கள் அணுகல் இருப்பதை உறுதி செய்தல் அனைத்து மட்ட கல்வி மற்றும் பல இந்திய மொழிகளில் தேசிய மற்றும் உலகளாவிய மூலங்களிலிருந்து உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும், மேலும் ஒரே ஆன்லைன் டிஜிட்டல் களஞ்சியத்தில் கிடைக்கும். தேசிய டிஜிட்டல் நூலகம் அல்லது NROER. இந்த களஞ்சியத்தை ஒழுங்கமைக்க வேண்டும், இதனால் எவரும் விரைவாகவும் எளிமையாகவும் கண்டுபிடிக்க முடியும் மற்றும் அனைத்து தொடர்புடைய உள்ளடக்கத்தையும் பதிவிறக்கலாம். அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அடைய, குறைந்தபட்ச கட்டணத்திற்கு இந்த உள்ளடக்கத்தை எந்த வடிவத்திலும் விநியோகிக்க வசதி மற்றும் ஊக்குவிக்கப்படும். 19.5.3. உள்ளடக்கத் தரத்தைப் பராமரித்தல்: ப19.5.2இல் உள்ளபடி களஞ்சியம் ஒரு உயர் தரமான மற்றும் புதுப்பித்த வளமாக இருப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியமானது, இதனால் இது முறையான கல்வி முறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, வாழ்நாள் முழுவதும் கற்பவர்களின் சக்திவாய்ந்த செயல்பாட்டாளர் ஆகும். எனவே இந்த கற்றல் வளங்களை உருவாக்குவதற்கும் மதிப்பாய்வு செய்வதற்கும் ஒரு வழிமுறை வகுக்கப்படும். (எ.கா. பயனர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரிடமிருந்தும் உள்ளடக்கத்தின் தரம், பொருத்தம் மற்றும் பயன் ஆகியவை குறித்த பின்னூட்டங்கள் ஆன்லைன் மூலமாகவும், சிறந்த உள்ளடக்க உருவாக்கத்திற்கான தேசிய அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் போட்டிகள் மூலமாகவும்). இவ்வாறு, இந்த மேடையில் சிறந்த ஆசிரியர்களின் பணிகள், முன்மாதிரியான பாணிகளில் கற்பித்தல், நாடு முழுவதும் ஒவ்வொரு பாடத்திலும், மட்டத்திலும், மொழியிலும் காண்பிக்கப்படும். ஒரு முறை துவக்கப்பட்டு, NETF ஆல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட மேடையே (அனைத்து பகிரப்பட்ட வளங்களையும் போல), சி.டி.ஐ.சி போன்ற சிறப்பு அமைப்புகளால் அல்லது தனியார் தொழில்துறையால் பராமரிக்கப்பட வேண்டும். பகிரப்ப்படும் வளங்களின் இந்த வகையான தொழில்முறை பராமரிப்பிற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படும். 19.5.4. கல்வி உள்ளடக்கத்தின் தானியங்கி மொழி மொழிபெயர்ப்பிற்கான கருவிகளின் மேம்பாடு: அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் கல்வி உள்ளடக்கத்தை தானியங்கு மற்றும் / அல்லது பல்வேறு மனிதர்களிடம் இருந்து பெறப்பட்ட மொழிபெயர்ப்பிற்கான கருவிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு NRF முன்னுரிமை அளிக்கும், இதனால் ஒரு மொழியில் கூடுதலாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை விரைவாக பிற மொழிகளில் கிடைக்கும்படி உருவாக்க முடியும். 19.5.5. குறிப்பிட்ட தொழில்நுட்பம் தொடர்பான கொள்கை நடவடிக்கைகள்: கட்டாயமாக தேவைப்படும் தலையீடுகளைப் பொறுத்தவரை, சிறப்புத் தேவைகளைக் கொண்ட அனைத்து வயது குழந்தைகளுக்கும் தகவமைப்பு கற்றலுக்கான மென்பொருள் தயாரிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்கான கல்வியியல் குறித்து கணிசமான ஆராய்ச்சி தேவைப்படும், இதற்கு பல்கலைக்கழகங்களில் கல்வித் துறைகளில் NRF நிதியுதவி செய்யலாம். இதேபோல், அறிவார்ந்த பயிற்சி முறைகள் மற்றும் பலவற்றை செய்ய வேண்டும். NRED ஆனது நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான டிஜிட்டல் வடிவில் உள்ள அனைத்து பதிவுகளையும் பராமரிக்க வேண்டும். 19.6. கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை நெறிப்படுத்துதல் விவாதபொருளாக பார்த்தால், ICTயிலிருந்து மிக முக்கியமான நன்மைகள் ஆளுகை மற்றும் நிர்வாகத்தின் பகுதியில்தான் உள்ளன, அங்கு தகவல் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு மற்றும் பதிவுசெய்தல் ஆகியவற்றுக்கு ICT கருவிகள் உதவக்கூடும். நீண்ட காலமாக இந்தத் துறையை பாதித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் மலிவான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ICT பிரதான கல்வியில் உதவ முடியும், போலி பட்டங்கள் பெறும் சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். 19.6.1. கல்வித் தரவின் தேசிய களஞ்சியம்: கல்வித் தகவல்களை திறம்பட மற்றும் பாதுகாப்பாக பராமரிப்பதற்காக ICT நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான அனைத்து பதிவுகளும் என்.ஆர்.இ.டி.யில் டிஜிட்டல் வடிவத்தில் ஒரு ஏஜென்சியால் பராமரிக்கப்படும், அவை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படலாம் (பி 6.1.5ஐப் பார்க்கவும்). NRED இவற்றைச் செய்யும்: a. அங்கீகரிக்கப்பட்ட நிறுவன பயனர்களுக்கு தரவை உள்ளிடவும் புதுப்பிக்கவும் பொருத்தமான அமைப்புகளை உருவாக்குதல். தொடர்ச்சியான அடிப்படையில் தரவை சேகரித்தல், நிர்வகித்தல் மற்றும் கடத்துதல் ஆகியவற்றில் ஆசிரியர்கள் மீதான குறிப்பிடத்தக்க சுமையை எளிதாக்குவதற்காக, ஆசிரியர்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் நான்கு முறை தரவை உள்ளிடுமாறு கேட்கப்படுவார்கள். கண்காணிப்பு, அங்கீகாரம், தரவரிசை, மதிப்பீடு மற்றும் அரசாங்க திட்டங்களுக்கான தகுதி ஆகியவற்றின் நோக்கங்களுக்காக நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுக்கு (மாநில மற்றும் மத்திய இரண்டும்) தரவை வெளிப்படுத்தும் ஒரே வழிமுறையாக இது இருக்கும். b. ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பதிவுகளை சரிபார்த்தல் மற்றும் கற்பவர்கள் சம்பாதித்த வரவுகளை (யாராக இருந்தாலும், எ.கா. அவர்களின் ஆதார் எண்களால் அடையாளம் காணப்படுவார்கள்). உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களுக்கிடையில் ஆசிரியர்களின் இடமாற்றம் மற்றும் கல்வி முறைக்கு மீண்டும் நுழைவது போன்ற கற்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது செயல்முறையை எளிதாக்கும். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களைக் கண்காணிப்பதில் கைமுறை முயற்சியைக் குறைக்கும். c. தனிப்பட்ட கற்பவர்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்திறனை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கற்றல் விளைவுகளை மதிப்பிடுவதற்கான முயற்சிகளை (எ.கா. NAS) பூர்த்தி செய்தல், மற்றும் விளைவுகளைச் சந்திப்பதில் தோல்விகளைக் கணிக்க முயற்சித்தல், இதனால் செயலில் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். d. தேசிய விதிமுறைகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் தரவின் தனியுரிமை தொடர்பான சட்டங்களை பின்பற்றும்போது பதிவுகளை பராமரித்தல். “தெளிவின்மையால் பாதுகாப்பு” அடிப்படையிலான நடைமுறைகள் வெளிப்படையாக நிராகரிக்கப்படும். அனைத்து தனிநபர்களின் தனியுரிமையையும் விரைவாகப் பாதுகாக்க சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தக் கொள்கை மேலும் கூறுகிறது. e. தரவின் நேரத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த பொருத்தமான வழிமுறைகளை உருவாக்குதல், இதனால் கொள்கைகள் உயர் தரமான தரவின் அடிப்படையில் இருக்க முடியும். மாநில மற்றும் மத்திய நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட தற்போதைய சிறந்த நடைமுறைகளைப் படித்து அவற்றை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தலாம். f. முக்கியமான போக்குகள் (நேர்மறை மற்றும் எதிர்மறை) அவை வளர்ந்து வரும் போது, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட, மற்றும் இந்த பகுப்பாய்வுகளை ஆண்டு அடிப்படையில் பொதுவில் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்தல். இந்த பகுப்பாய்வுகளில் மாவட்ட அளவில் பள்ளி கல்வியின் தரம் குறித்த மதிப்பீடுகளும் அடங்கும். g. புலம்பெயர்ந்த மாணவர்களை கண்காணித்தல் மற்றும் அடிக்கடி இடம்பெயர்வு காரணமாக அவர்களின் நல்வாழ்வுக்கு இடையூறுகளின் எதிர்மறையான தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அவர்களின் உடல்நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கண்காணித்தல். கல்வித் தரவின் தேசிய களஞ்சியம் நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் டிஜிட்டல் வடிவத்தில் பராமரிக்கும். 19.6.2. ஆளுகை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம்: சமூக கண்காணிப்புக்கான கல்வி தகவல் மேலாண்மை அமைப்புகள் உருவாக்கப்பட்டு NRED உடன் ஒருங்கிணைக்கப்படும். கல்வித் திட்டமிடல், சேர்க்கை, வருகை, மதிப்பீடுகள் போன்றவற்றுடன் தொடர்புடைய கைமுறை செயல்முறைகளை சீராக்க இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படும். உள்ளூர் சமூகங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் SMCக்கள் தரவைப் பார்த்து அதைப் புரிந்துகொள்ள முடியும். சேர்க்கை, உதவித்தொகை, மதிப்பீடுகள், ஆலோசனை, வேலைவாய்ப்பு, அங்கீகாரம் போன்ற அமைப்புகள் உட்பட செயல்திறன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்தக்கூடிய அனைத்து நிர்வாக பணிகளுக்கும் ICT அடிப்படையிலான கருவிகள் உடனடியாகப் பயன்படுத்தப்படும். மேலும் திறமையான தகவல் பரப்புதல் மற்றும் தரவுகளுக்கு ICT பயன்படுத்தப்படும் முடிவெடுப்பதை நோக்கி சேகரித்தல். பங்குதாரர்களிடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க, அனைத்து கல்வி நிறுவனங்களும் உத்தியோகபூர்வ நிறுவன தொடர்பு சேனல்களுக்கு (எ.கா. நிறுவன மின்னஞ்சல்) அணுகலுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் (மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்கள்) வழங்கும். 19.6.3. குறிப்பிட்ட தொழில்நுட்பம் தொடர்பான கொள்கை நடவடிக்கைகள்: மின்னஞ்சல் வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், நமது கல்வி நிறுவனங்கள் பலவும் தங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நிறுவன மின்னஞ்சலை வழங்குவதில்லை. நிறுவன மின்னஞ்சல் மற்றும் பட்டியல் சேவையகங்கள் மூலம் கொண்டு வரக்கூடிய தகவல்தொடர்புகளின் செயல்திறன் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மேலும் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். போலி பட்டங்களின் சிக்கலை இப்போது புதிய பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் மிக நேர்த்தியாக தீர்க்க முடியும். ஒவ்வொரு மாநில அரசும் மாநிலங்களுக்குள் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ‘தேசிய கல்வி வைப்புத்தொகை’ போன்ற சான்றிதழ்களை சொந்தமாக டெபாசிட்டரி செய்ய வேண்டும். கல்வியின் நிர்வாகம் மற்றும் கணினிமயமாக்கல் நிர்வாகம் ஆகியவௌ கணிசமான அளவில் ஏற்கனவே நடந்துள்ளது, சேர்க்கை, மாணவர் பதிவுகள் மற்றும் தேர்வுகளின் ஆன்லைன் மதிப்பீடு போன்ற பல அம்சங்கள் மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அளவிடப்பட வேண்டும். 19.7. சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் கல்வி உள்ளிட்ட மனித சமூகத்தின் பல அம்சங்களை தொழில்நுட்பம் பெருகிய முறையில் சீர்குலைக்கிறது. சில தடைச்செய்யும் தொழில்நுட்பங்கள் கல்விக்கான தெளிவான விண்ணப்பங்களைக் கொண்டிருக்கும், மற்றும் NETF இன் ஈடுபாடு மூலம் கல்வி முறையில் இந்த தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கு வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. கல்வி, ஆராய்ச்சி, திறன் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடான தொழில்நுட்பங்களின் பரந்த விளைவுகள் குறித்து இந்த பிரிவு கவனம் செலுத்துகிறது. 1986/1992 ஆம் ஆண்டின் கல்விக்கான தேசிய கொள்கை வடிவமைக்கப்பட்ட போது, குறிப்பாக இணையத்தின் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பிற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களின் தாக்கங்களை மேம்படுத்துவதில் உள்ள சிக்கலான விளைவுகளை கணிப்பது கடினம். நமது தற்போதைய கல்வி முறை இந்த விரைவான மற்றும் சீர்குலைக்கும் மாற்றங்களை சமாளிக்க இயலாமல் ஒரு போட்டியிடும் உலகில் ஒரு அபாயகரமான குறைபாடு எங்களுக்கு (தனித்தனியாக மற்றும் தேசிய அளவில்) ஏற்படுகிறது. உதாரணமாக, கணினிகளே உண்மையான மற்றும் செயல்முறை அறிவைப் பயன்படுத்துவதில் மனிதர்களை அதிகம் தாக்கியுள்ள போதினும், அனைத்து மட்டங்களிலும் உள்ள எங்கள் மாணவர்கள் தங்கள் உயர்ந்த ஒழுங்கு திறன்களை வளர்ப்பதில் செலவழிக்கையில் இத்தகைய அறிவை அதிக அளவில் பெறுவார்கள். நான்காவது தொழில்துறை புரட்சி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கொள்கை வருகிறது, மேலும் செயற்கை நுண்ணறிவு போன்ற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன. அதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தகவல் இடைவெளிகளை நிரப்புவதற்கு (“இந்த நோயாளியின் அறிகுறிகள்” போன்றவை) இருக்கும் தரவைப் பயன்படுத்தும் முன்கணிப்பு பணிகளின் விலையைக் குறைக்கிறது (“இந்த நோயாளிக்கு என்ன நோய்?” போன்றவை). செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணிப்பின் விலை வீழ்ச்சியடைவதால், செயற்கை நுண்ணறிவு சில முன்கணிப்பு பணிகளில் மருத்துவர்கள் போன்ற திறமையான நிபுணர்களுடன் கூட பொருந்தவோ அல்லது விஞ்சவோ முடியும், எனவே அவர்களின் பணியில் அவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க உதவியாக இருக்கும். எனவே, செயற்கை நுண்ணறிவின் சீர்குலைக்கும் திறன் தெளிவாக உள்ளது. NITI ஆயோக் சமீபத்தில் “செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய வியூகம்: #AIForAll” என்ற தலைப்பில் கலந்துரையாடலை ஒரு சரியான நேரத்தில் உருவாக்கியது, MHRD மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பரிந்துரைகளையும், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் சவால்களை அடையாளம் காணவும், ஒரு தேசிய முன்னெடுப்பை வெளிப்படுத்தவும் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான செயல்திட்ட நிகழ்ச்சி நிரலாக இது அமைந்தது. இந்த கொள்கை கல்வி தொடர்பான NITI ஆயோக்கின் பரிந்துரைகளை பரவலாக அங்கீகரிக்கிறது. சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான கொள்கை நடவடிக்கைகள் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கு செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்குகிறது என்று அது மேலும் குறிப்பிடுகிறது. எனவே, கீழேயுள்ள ஒவ்வொரு கொள்கை நடவடிக்கைகளும் செயற்கை நுண்ணறிவுக்கு அதன் பயன்பாடு குறித்த கருத்துகளைத் தொடர்ந்து வருகின்றன. பிளாக்செயின் மற்றும் மெய்நிகர் உண்மைபொருள் ஆகிய இரண்டும் கல்வியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய தொழில்நுட்பங்களில் பிற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் ஆகும். 19.7.1. சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களை கண்காணித்தல்: RSA இன் ஆலோசனைக் குழுவின் நிரந்தர பணிகளில் ஒன்று (அத்தியாயம் 23ஐப் பார்க்கவும்) வெளிவரும் தொழில்நுட்பங்களை அவற்றின் சாத்தியமான மற்றும் இடையூறுக்கான மதிப்பிடப்பட்ட காலக்கெடுவின் அடிப்படையில் வகைப்படுத்துவதும், அவ்வப்போது இந்த பகுப்பாய்வை RSA க்கு முன்வைப்பதும் ஆகும். இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், கல்வி முறையிலிருந்து பதில்களைக் கோரும் தொழில்நுட்பங்களை ஆர்எஸ்ஏ முறையாக அடையாளம் காணும். தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை கருத்தில் கொண்டு, கல்வி கொள்கை திருத்தத்தின் பாரம்பரிய சுழற்சி இத்தகைய இடையூறுகளுக்கு பதிலளிப்பது என்பது மிகவும் மெதுவாக இருக்கலாம். RSA இன் ஆலோசனைக் குழு தேசிய மற்றும் சர்வதேச முன்னோக்குகளின் அடிப்படையில் தொழில்நுட்பம் சார்ந்த பதில்களை முன்மொழிகிறது, அவை கல்வித்துறை, தொழில் மற்றும் பொதுமக்களுடன் பரந்த அளவில் கலந்தாலோசித்து வகைப்படுத்தப்படும். இந்த பதில்கள் RSA இன் தேர்தல் ஆணையத்தால் வழிநடத்தப்படும். கல்வி முறைமையில் சில சுறுசுறுப்பு அவசியம் என்றாலும், ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் சீர்குலைக்கும் திறனை மதிப்பிடும் போது கவனமாக விவாதிக்க வேண்டியதன் அவசியம் செயற்கை நுண்ணறிவால் நன்கு விளக்கப்பட்டுள்ளது (இது பல தனித்துவமான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது). பல தசாப்தங்களுக்கு முன்னர், சில வல்லுநர்கள் விதிகளின் அடிப்படையிலான நிபுணத்துவ அமைப்புகளை உடனடி சீர்குலைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக கருதினர். செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய ஆதாயங்கள் உண்மையில் 1990களில் உருவாக்கப்பட்ட வெவ்வேறு நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை (பின்னூட்டங்களுடன் கூடிய பல அடுக்கு வலைப்பின்னல் நெட்வொர்க்குகள்) மற்றும் முதன்மையாக கணக்கீட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பெரிய தரவு-தொகுப்புகள் கிடைப்பதன் மூலம் தூண்டப்பட்டன. NITI ஆயோக்கின் விவாதக் கட்டுரை மாதிரிகள் தொழில்நுட்ப-குறிப்பிட்ட கொள்கை மாற்றங்களை ஆலோசனைக் குழு முன்மொழியக்கூடிய ஒரு கொள்கை மாற்றத்தை அளிக்கின்றன. 19.7.2. இடையூறான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி: ஒரு புதிய சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தை RSA ஆனது முறையான அங்கீகாரத்திற்கு உட்படுத்தும் வகையில், NRF ஆனது டொமைனிலுள்ள அடிப்படை ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் சமூக-பொருளாதார தாக்கத்தை மதிப்பீடு செய்தல் போன்ற பொருத்தமான இடங்களில் ஆராய்ச்சி முயற்சிகளைத் தொடங்குகிறது அல்லது விரிவுபடுத்துகிறது. சில சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களை தடுக்க, சர்வதேச ஒத்துழைப்புடன் இணைந்து மெகா திட்டங்களுக்கு NRF நிதியளிக்கலாம். செயற்கை நுண்ணறிவின் சூழலில், NRFஇன் மூன்று வலுவான அணுகுமுறையைக் கருத்தில் கொள்ளலாம்: a. முக்கிய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை மேம்படுத்துதல், b. பயன்பாட்டு அடிப்படையிலான ஆராய்ச்சியை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல், மேலும் c. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சுகாதாரம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பகுதிகளில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஆராய்ச்சி முயற்சிகளை நிறுவுதல். 19.7.3. திறன் மற்றும் மறு திறன்: உயர்கல்வியில் புதிய நிறுவன அமைப்பு மாணவர்களை திறமைப்படுத்துவதற்கும் தற்போதைய பணியாளர்களை விரைவாக மீண்டும் திறன்மிக்கவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமானது. வகை 1 மற்றும் வகை 2 நிறுவனங்கள் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் மட்டுமல்லாமல், அதிநவீன களங்களில் அறிவுறுத்தல் பொருட்கள் மற்றும் படிப்புகளின் ஆரம்ப பதிப்புகளை உருவாக்குவதிலும் (ஆன்லைன் படிப்புகள் உட்பட) செயலில் பங்கு வகிக்கும் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அவற்றின் தாக்கத்தை மதிப்பிடுவது தொழில்முறை கல்வி. தொழில்நுட்பம் முதிர்ச்சியின் அளவை அடைந்தவுடன், வகை III நிறுவனங்கள் இந்த கற்பித்தல் மற்றும் திறன் முயற்சிகளை அளவிட சிறந்த முறையில் வைக்கப்படுகின்றன, இதில் பணித் தயார்நிலைக்கு தயாராகுதல் பயிற்சியும் கூட அடங்கும். சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் சில வேலைகளை தேவையற்றதாக ஆக்கும், எனவே திறமை மற்றும் திறமைக்கான அணுகுமுறைகள் திறமையானவை மற்றும் தரத்தை உறுதி செய்வது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இத்தகைய பயிற்சியை வழங்க நிறுவன மற்றும் நிறுவன சாரா கூட்டாளர்களை அங்கீகரிக்க நிறுவனங்களுக்கு சுயாட்சி இருக்கும், அவை திறன்கள் மற்றும் உயர் கல்வி கட்டமைப்போடு ஒருங்கிணைக்கப்படும். செயற்கை நுண்ணறிவின் சூழலில், வகை I மற்றும் வகை II நிறுவனங்கள் பி.எச்.டி மற்றும் முதுநிலை திட்டங்களை முக்கிய பகுதிகளில் (இயந்திர கற்றல் போன்றவை) அத்துடன் பலதரப்பட்ட துறைகள் (“செயற்கை நுண்ணறிவு எக்ஸ்”) மற்றும் தொழில்முறை பகுதிகளில் (சுகாதாரம், விவசாயம் மற்றும் சட்டம்) SWAYAM போன்ற தளங்கள் வழியாக இந்த பகுதிகளில் அதிகாரப்பூர்வ படிப்புகளை உருவாக்கி பரப்பலாம். விரைவான ஏற்றுக்கொள்ளலுக்காக, வகை III நிறுவனங்கள் ஆரம்பத்திலியே இந்த ஆன்லைன் படிப்புகளை இளங்கலை மற்றும் தொழில் திட்டங்களில் பாரம்பரிய கற்பித்தலுடன் இணைக்கலாம். தரவு சிறுகுறிப்பு, பட வகைப்பாடு மற்றும் ஸ்பீச் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட சங்கிலியை ஆதரிப்பதற்காக வகை III நிறுவனங்கள் குறைந்த நிபுணத்துவம் வாய்ந்த பணிகளில் இலக்கு பயிற்சி அளிக்கலாம். இயற்கை மொழி செயலாக்கத்தின் (என்.எல்.பி) சூழலில், சில குறைந்த நிபுணத்துவ பணிகளும் (எளிய வாக்கியங்களை மொழிபெயர்ப்பது போன்றவை) ஒரு கற்பித்தல் நிலைப்பாட்டில் இருந்து மதிப்புமிக்கதாக இருக்கலாம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு மொழிகளைக் கற்பிப்பதற்கான முயற்சிகள் இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கான என்.எல்.பியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைக் கொண்டுள்ளன.இருக்கலாம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு மொழிகளைக் கற்பிப்பதற்கான முயற்சிகள் இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கான என்.எல்.பியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைக் கொண்டுள்ளன. 19.7.4. விழிப்புணர்வை ஏற்படுத்துதல்: சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் உருவாகும்போது, பள்ளிக்கல்வி மற்றும் தொடர்ச்சியான கல்வி ஆகியவை பொது மக்களுக்கு இவ்வகை தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வையும் அவை பற்றிய மதிப்பையும் உயர்த்த உதவுகின்றன, மேலும் இது தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்க உதவும். இந்த விழிப்புணர்வு இந்த தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய விஷயங்களில் பொது ஒப்புதல் பெற வேண்டும். பள்ளியில், நெறிமுறை சிக்கல்கள் (பிரிவு 4.6.8 ஐப் பார்க்கவும்) மற்றும் நடப்பு விவகாரங்கள் (பிரிவு 4.6.10 ஐப் பார்க்கவும்) ஆர்எஸ்ஏவால் அடையாளம் காணப்பட்டவை போன்ற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த விவாதம் ஆகியவை இதில் அடங்கும். தொடர்ச்சியான கல்விக்கு சரியான வழிமுறை மற்றும் விவாதப் பொருட்கள் தயாரிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களுக்கு தரவு ஒரு முக்கிய தேவையாகு, மேலும் தனியுரிமை, சட்டங்கள் மற்றும் தரவுகளை கையாளுதல் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. வளர்ச்சி மற்றும் வரிசைப்படுத்தல் தொடர்பான நெறிமுறை சிக்கல்களை முன்னிலைப்படுத்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அவசியத் தேவையாகிறது. இந்த சிக்கல்களைச் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த முயற்சிகளில் கல்வி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்கல்வி குறிக்கோள்: தொழிற்கல்வியை அனைத்து கல்வி நிறுவனங்களுடனும் - பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைத்தல். மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தது 50% பேருக்கு தொழிற்கல்விக்கான அணுகலை 2025க்குள் வழங்குதல். தனிநபர்களை பணிச்சூழலுக்கு தயார்படுத்துவதில் உயர் கல்வி முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி, அனைத்து உயர் கல்வியும் மக்களை அர்த்தமுள்ள பணிகளுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இருப்பினும், சில வகையான கல்வித் திட்டங்கள் குறிப்பிட்ட தொழில்களுக்கு மக்களை தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொழிற்கல்வி என்று குறிப்பிடப்படுகிறது. 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2012-2017) 19-24 வயதுக்குட்பட்ட இந்தியத் தொழிலாளர்களில் 5%க்கும் குறைவானவர்கள் முறையான தொழிற்கல்வியைப் பெற்றதாக மதிப்பிட்டுள்ளனர்; இதை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 52%, ஜெர்மனியில் 75%, தென் கொரியாவில் 96% என உள்ளது. இந்த எண்ணிக்கைகள் இந்தியாவில் தொழிற்கல்வியின் பரவலை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தொழிற்கல்வியை வழங்குவதற்கான போதிய நிறுவன கட்டமைப்பும் ஒரு தீவிரமான கவலையாக உள்ளது, ஏனெனில் 1986இல் கல்விக்கான தேசியக் கொள்கையை அமல்படுத்தும்போது அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை அல்லது பெருமளவில் தேக்கமடைந்துள்ளது எனலாம். தொழிற்கல்வி கல்வி என்பது வழக்கமாமான கல்விமுறையில் இருக்கும் அறிவு மற்றும் திறன்களை குறிப்பிட்ட நடைமுறை சவால்கள் மற்றும் பொருளாதாரத்தில் வேலை சூழ்நிலைகளுடன் நெருக்கமாக இணைப்பதன் மூலம் வேறுபடுத்த படுகிறது. குறிப்பிட்ட பணிப் பிரிவுகளில் வரையறுக்கப்பட்ட நடைமுறைத் திறன்களை மாணவர்கள் பெறுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, அந்த தொழில்துறை தொடர்பான அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகள் இதற்குத் தேவை மேலும் இதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. தொழில்சார் கல்வியின் பரந்த வரையறை என்பது தொழில்முறை நிபுணத்துவக் கல்வியையும் (எ.கா. சட்ட கல்வி, மருத்துவ கல்வி) உள்ளடக்கியிருக்கும். இந்தியாவில் தொழில்சார் கல்வியுடன் தொடர்புடைய நிறுவன மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், நாம் அதை 18ஆம் பிரிவில் தனித்தனியாக விவாதிக்கிறோம். மேலும் இந்த கொள்கையில் ‘தொழிற்கல்வி’ என்ற பதம் தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி என்ற அர்த்தத்தில் பெரும்பாலும் இங்கு பயன்படுத்தப்படுகிறது. தொழிற்கல்வி என்பது திறமை மற்றும் திறமைபெறுதல் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும். தொழிற்துறை கல்வி என்பது குறிப்பிட்ட தொழிலுக்கான அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களின் ஒரு சிக்கலான ஒருங்கிணைப்பை ஒருங்கிணைக்கிறது. இவ்வாறு அமையப்பெற்ற திறன்கள் தொழிற்கல்வியின் ஒரு பகுதியாகும். ஒரு சில தொழில்களுக்கு தொழில்சார் கல்வியின் தேவை அவசியமில்லாமல் போகலாம், ஆனால் சில திறமைகளில் பயிற்சி தேவைப்படலாம். எடுத்துக்காட்டாக வீட்டில் மின்பராமரிப்புச் சேவைகளைச் செய்யும் ஒரு எலெக்ட்ரீசியனுக்கும் ஒரு தொழிலகத்தின் மின்சாரத் பராமரிப்புக்கு பொறுப்பாக உள்ள எலெக்ட்ரீசியனுக்கும் வேறுபாடு இருப்பதோடு, உள்நாட்டு கட்டுமானத்திற்காக ஒரு கட்டுமானப் பணி திட்டத்திற்காக பொறுப்பாளராகவும் இருப்பது அதிலும் வேறுபடுகிறது. தொழிற்பயிற்சி அல்லது சமநிலை திறனற்றதாக இல்லாத பகுதிகளில் தொழில்சார் கல்வி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது பயிற்சிக்குத் தயாராக இருப்பது போதுமானது. நிச்சயமாக, திறமை தேவைப்படும் தொழில்கள் மற்றும் தொழிற்கல்வி தேவைப்படும் தொழில்கள் தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றன, மேலும் தனிநபர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தேவையான வளர்ச்சியுடன் முன்னேறலாம். ஆனால் இந்த அமைப்பில் தனிநபர்களின் திறமையுடன் சேர்த்து தொழில்சார் திறமை மற்றும் தொழில்சார் கல்விக்கும் இடையில் ஒரு வேறுபாட்டை உருவாக்குவது முக்கியம். இது இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் தொழிற்துறை கல்வியும் கைத்தொழிலும் சற்றே தளர்வாகவும், ஒன்றுக்கொன்று மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில்சார் கல்வியில் கைத்தொழில் திறன் மட்டுமல்லாமல், கோட்பாட்டு அறிவும், மனப்பான்மையும், மனநிலையும், குறிப்பிட்ட தொழில்களுக்குத் தேவைப்படும் மென் திறன்களும், ஒரு பரந்த அடிப்படையிலான கல்வி மூலம் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு ஒரு வேகமான முடிவை எடுக்க முடியும் மற்றும் பணி உலகத்தை மாற்றவும் முடியும். தொழிற்கல்வி என்பது பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். சமூகப்படிநிலையும் தொழில் கல்வியும் பணிகளில் உள்ள சமூகப்படிநிலை என்பது உயர் கல்வியை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது. இது தொழில்சார் கல்வியைப் பற்றிய பொதுமக்களின் கணிப்பை கணிசமாக பாதித்துள்ளது, இதனால் மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுக்கிறார்கள். மாணவர்கள் தொழிற்கல்வியை மிகவும் குறைந்த அளவிலேயே விரும்புகிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. தொழிற்கல்வி குறித்த இந்த கருத்தை மற்ற காரணிகளும் பாதித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், தொழிற்கல்வியை வழக்கமான கல்வி மற்றும் தொழில்முறை கல்வியிலிருந்து பிரிப்பது என்பது, பள்ளியிலிருந்து நிறுவன மற்றும் பாடத்திட்டப் பிரிவினைகளில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, தொழிற்கல்வி நிறுவனங்கள் இதன் தரம் குறித்து பெரும்பாலும் அலட்சியம் மிக்க பங்காற்றுகின்றன. இந்த நிலைமையை அவசரமாக மாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழிற்கல்வி என்பது மாணவர்கள் தேர்வு செய்ய ஏதுவான ஒரு கவர்ச்சியான விருப்பமாக மாற வேண்டும். மில்லியன் கணக்கான மக்கள் இருக்கும் இந்த நாட்டில் பணியிடத்தில் சிறப்பாக செயல்புரிவதன் நன்மைக்காக இது மிகவும் முக்கியம். இது தேசிய பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த கொள்கை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாயின் - உடனடி மற்றும் நீண்ட காலத்திற்கு - இந்த விஷயம் முடிவுக்கு கொண்டுவரப் படும். தொழிற்கல்விக்கு ஒரு புதிய அணுகுமுறை மிக அடிப்படையான மற்றும் முக்கியமான ஒரு படியாக, தொழிற்கல்வியை நடைமுறைப்படுத்துவது மேம்படுத்தப்பட வேண்டும். இது அனைத்து பரிமாணங்களிலும் இருக்க வேண்டும் - ஆசிரியர் வளர்ச்சி மற்றும் ஆட்சேர்ப்பு, பாடத்திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு. இந்த அடிப்படை முக்கியமான படியுடன், இந்தியா தொழிற்கல்வியின் மீதான பிம்பத்தை மாற்றி கல்வியின் அனைத்து நிலைகளிலும் அதன் சரியான நிலையை மீட்டெடுக்க வேண்டும். தொழிற்கல்வியானது ‘பிரதானமைய’ கல்வியிலிருந்து தனிப்படுத்தப்பட்டு உருவாக்கப்படக்கூடாது. இது பிரதான கல்வியுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இதனால் அனைத்து மாணவர்களும் தொழிற்கல்விக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் மற்றும் தொழிற்கல்வியின் குறிப்பிட்ட பிரிவுகளைத் தொடர விருப்பம் உள்ளவர்களுக்கு தகுதிகள்/சான்றிதழ்கள் மற்றும் கடன் கட்டமைப்புகளின் தெளிவான சமநிலை மூலம், தொழில் மற்றும் பொது கல்வித் துறைகளில் எளிதான வகையில் உள்நுழையும்படி இருக்க வேண்டும். இது தொழிற்கல்வியை விரிவுபடுத்துவதற்கு உதவும், அது பற்றிய சமூக ஏற்றுக்கொள்ளலை அதிகரிக்கும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையானால் தொழிற்கல்வியை மட்டும் தொடர வாய்ப்பளிக்கும் அல்லது தொழில்முறை பிரிவுகள் மற்றும் பிற கல்வித் துறைகளுடன் தொழிற்கல்வியும் இணையும். இந்த மறுவடிவமைப்பின் சாராம்சமானது அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தொழிற்கல்வியை தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, இந்த விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்து படிப்பதற்கு பொருத்தமான காலத்தை செலவழிக்கிறது, அதே நேரத்தில் பரந்த அடிப்படையிலான படிப்புகளுக்கான அணுகலுக்கும் வழிவிடுகிறது பயனடைகிறது. இதனால் ஒரு உயர் தொழிற்பயிற்சியைத் தொடரலாம் அல்லது மற்றொரு பிரிவில் வேறு ஒரு படிப்பை தொடர பின்னர் தேர்வு செய்யலாம் என்பதைக் குறிக்கும். சாராம்சத்தில், இந்த நெகிழ்வுத்தன்மை ஒவ்வொரு மாணவருக்கும் பல வாய்ப்புகளைத் திறந்து வைக்கும், முதன்முதலில் தேர்வு செய்ததை மட்டுமே தொடரமுடியும் என்கிற தற்போதைய நிலைமைக்கு மாற்றாக இது அமையும். கல்வியின் இந்த புதிய முன்மொழிதல் தனிநபர்கள் மற்றும் தேசத்தின் பொருளாதார இலக்குகளுக்கு பல வழிகளில் பங்களிக்கும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட பொருளாதார சுதந்திரத்திற்கான தனிநபர்களின் திறன்களையும் மனநிலையையும் வளர்க்கும். தற்போதைய கடுமையான படிநிலைகளை உடைப்பதன் மூலம், வெவ்வேறு பணிகள் மற்றும் தொழில்களின் உருவாக்கம் சமூக கட்டமைப்புக்கும் பங்களிக்கும். இந்த கொள்கையில் உள்ள தாராளவாதக் கல்வியின் முன்மொழிவு - ‘கல்வியியல்,’ ‘தொழில்முறை’ மற்றும் ‘தொழிற்கல்வி’ ’கல்வி ஆகியவற்றை ஆழமாகவும் சிக்கனமாகவும் ஒருங்கிணைத்து – அவற்றை ’பிரதானக்கல்வியுடன் இணைப்பதாக இருக்கும். இந்த புதிய அணுகுமுறையின் முக்கிய அம்சங்கள் 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான தேசிய கொள்கை (என்.பி.எஸ்.டி.இ) 25% கல்வி நிறுவனங்கள் தொழிற்கல்வியை வழங்குவதை இலக்காக கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டது. இந்த கொள்கையிலிருந்து 25% மட்டுமல்ல, அனைத்து கல்வி நிறுவனங்களும் - பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் - தொழிற்கல்வித் திட்டங்களை ஒரு கட்டமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை நாங்கள் குறிப்பிட விழைகிறோம். அனைத்து பள்ளி மாணவர்களும் 9-12 வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு தொழிற்துறையிலாவது தொழிற்கல்வியைப் பெற வேண்டும். அவர்களது பிராந்தியத்தில் பயிற்சி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதன் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் வழங்கும் படிப்புகளில் ஒன்றிலிருந்து தேர்வு செய்வார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில்களில், நான்கு ஆண்டு இடைநிலைப் பள்ளியின் மூலம், அவர்களின் ஆர்வத்தின் அளவைப் பொறுத்து, அவர்கள் மாறுபட்ட அளவுகளில் நிபுணத்துவம் பெறுவார்கள். HEIகள் இளங்கலை கல்வித் திட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்பயிற்சிகளையும், ஒரு பொதுவான கல்வி அமைப்பினுள் வழங்கப்படும் தேவையான தத்துவார்த்த பின்னணியுடன் போதுமான செயல்பாட்டு அனுபவத்தை ஒருங்கிணைக்கும் பாட உள்ளடக்கத்தை இது வழங்கும். எவ்வாறாயினும், குறுகிய காலத்தில் பல சவால்கள் உள்ளன, தற்போது பல அமைச்சகங்கள் மற்றும் பல பிற பங்குதாரர்களின் தொழில் கல்வியை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன. ஆகையால், தொழிற்கல்வியின் ஒருங்கிணைப்பின் பல அம்சங்களுக்கு இன்னும் விரிவான ஆய்வு தேவைப்படும், மேலும் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குதல், கற்பனை மற்றும் செயல்படுத்த. தொழிற்துறை கல்வி ஒருங்கிணைப்புக்கான ஒரு தனி தேசிய குழு (NCIVE) அமைக்கப்பட வேண்டும், அமைச்சுக்களில் இருந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும், இங்கே கோடிட்டு காட்டப்பட்டுள்ள நீண்டகால இலக்குகளை மீளாய்வு செய்யவும் அவற்றை நிறைவேற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும். இந்த அத்தியாயத்தில் பல்வேறு இடங்களில் NCIVE கருத்தில் கொள்ள வேண்டிய சில சிக்கல்களை நாங்கள் குறியிடுவோம். முழு கல்வித் துறை - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரிய மற்றும் மேலாண்மை - அதனது மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு, இந்த வழியில் தொழில் ரீதியிலான கல்விக்கு மீண்டும் வர வேண்டும். இதுவரை இந்தத் துறையை பாதித்துள்ள தொடர்ச்சியான குறைபாடுகளைச் சமாளிக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம். தொழிற்கல்வியை ஒருங்கிணைப்பது கல்வியாளர்களுக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்துகிறது. தொழிற்துறையினுள் மற்றும் சாத்தியமான முதலாளிகளுடன் அவர்கள் நெருக்கமாக பணியாற்ற வேண்டியிருக்கும், இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளுக்கு அவர்களின் கல்வியின் முடிவில் போதுமான வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே, கல்வி நிறுவனங்கள், இந்த எதிர்பார்ப்புகளை வழங்குவதற்கு கணிசமான நிபுணத்துவத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் உருவாக்க வேண்டிய சில நிபுணத்துவம், அனைத்து கல்வி நிறுவனங்களின் மேலாண்மை, நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடையே பின்வருவனவற்றைச் செய்வதற்கான திறன் ஆகும்: IT ஐ.டி.ஐ.க்கள், பாலிடெக்னிக்ஸ், உள்ளூர் தொழிலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், பண்ணைகள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் நடைமுறை திறன் பயிற்சி பெறக்கூடிய பிற அனைத்து வசதிகளுடன் ஒத்துழைத்தல், இந்த நடைமுறை பயிற்சியை தொடர்புடைய தத்துவார்த்த அறிவுடன் இணைக்கக்கூடிய தொழிற்கல்வி திட்டங்களை உருவாக்குதல், முக்கிய நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது கல்வி. தகவல்தொடர்பு திறன், டிஜிட்டல் மற்றும் நிதி கல்வியறிவு, தொழில் முனைவோர் போன்ற வாழ்க்கைத் திறன்களில் முக்கியமான முக்கியமான படிப்புகளை இந்த திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும்; பண்டிட் சுந்தர்லால் ஷர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனம் (PSSCIVE) மூலமாகவும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழிற்கல்விக்கான பாடத்திட்டங்கள் மற்றும் துணை கல்விப் பொருள்களை உருவாக்குவதற்கும் SCERTகளுடன் (அவர்கள் இருக்கும் மாநில தொழிற்கல்வி நிறுவனங்கள் மூலம்) NCERT உடன் இணையும். இது கணிசமான முயற்சி மற்றும் திறன் தேவைப்படும் ஒரு மகத்தான பணியாகும். அனைத்து பங்குதாரர்களுடனும் ஒத்துழைப்புடன் NCVIE ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்; வெவ்வேறு தொழில்களில் உள்ள பல நிபுணர்களை வெளியில் இருந்து தருவித்து, பகுதிநேர அல்லது முழுநேரமாக, ஆசிரியர்களாக ஈடுபடுத்தி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கண்காணிப்பை அவர்களுக்கு வழங்கப்படும். பல்வேறு வயதுக் குழுக்களின் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கான பொருத்தமான பயிற்சி தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் பட்ட்தாரிகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் தொழிற்கல்வியை வழங்குவதில் பங்களிக்க பள்ளிகளில் உள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கும், HEIகளுக்கும் பயிற்சியளிக்கவும். பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த பணி தற்போது PSSCIVE ஆல் கையாளப்படுகிறது, ஆனால் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு அளவிடக்கூடிய மாதிரி தேவைப்படும், இது பள்ளி வளாகங்கள் மற்றும் DIETகளின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறைகளுக்கான திறன்களைப் பயன்படுத்துகிறது. உயர்கல்வியில் ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகங்கள் இதில் ஈடுபடுத்தபடும்; செயல்முறை திறன் பயிற்சி அளிக்கும் கூட்டாளர்களுடன் இணைந்து அனைத்து தொழிற்கல்வி படிப்புகளின் மதிப்பீடுகளை நடத்துதல். இது மீண்டும் மிகவும் சிக்கலான மற்றும் மகத்தான பணியாகும். இந்த பணிக்கு கல்வி நிறுவனங்கள் பிராந்திய திறன் மேம்பாட்டு குழுக்களுடன் (SSC) ஒத்துழைக்க வேண்டும் NSQF நிலைக்கு ஏற்ற முன் கற்றலை இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அளித்து அவர்களின் திறனை மதிப்பீடு செய்து மற்றும் சான்றிதழ் அளித்தல். முன் கற்றல் அங்கீகாரம் (ஆர்.பி.எல்) என அழைக்கப்படும் இந்த செயல்பாடு, ஒரு நன்கு புரிந்து கொள்ளப்படும் கருத்தாக அமைகிறது. இருப்பினும், இத்தகைய மதிப்பீடுகளை நடத்துவதற்கான நன்கு சிந்திக்கக்கூடிய செயல்முறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்கள் இத்தகைய மதிப்பீட்டு செயல்முறைகளை உருவாக்குவதற்கும் தரப்படுத்துவதற்கும் பங்களிக்க வேண்டும், இதனால் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்டோர் தங்கள் நிபுணத்துவத்திற்காக மதிப்பிடப்படலாம். மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் திறனை வளர்ப்பதற்கான இந்த ஆயத்த முயற்சிகளுக்கு தாராளமாக நிதியளிக்க வேண்டும், மேலும் தொழிற்கல்வியை அளவிடுவதற்கான தேசிய இலக்கை வழங்க கல்வி நிறுவனங்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஒரு ஒருங்கிணைப்புக் குழு கல்வி நிறுவனங்களிலிருந்து ஆரம்பக் கற்றலைச் சேகரித்து பதிவுசெய்து பரவலாகப் பரப்பலாம். வழக்கமான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் மூலம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தரமான தொழிற்கல்வியை வழங்குவது தொடர்பான அறிவைப் பரப்புவதை விரைவுபடுத்துவதற்கும், அத்தகைய ஒரு அமைப்பு அனைத்து பங்குதாரர்களையும் - ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஒன்றிணைக்க முடியும். NCVIE யில் இதைக் காணலாம். தொழில்சார் கல்விக்கான புதிய அணுகுமுறையை செயல்படுத்துவதற்காக, கொள்கை பின்வருமாறு கருதுகிறது: RPL, வயது வந்தோர் கல்வி, ஆன்லைன் கற்றல் போன்ற வழிமுறைகள் மூலம் ஏற்கனவே தொழிலாளர் தொகுப்பில் உள்ள இளைஞர்களின் திறன்களை முறைப்படுத்துவதற்கான முயற்சிகளுடன், திறன் வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் வாய்ப்புகளை அளித்தல் மூலம் தொழிற்கல்வியை பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியுடன் தொடர்புபடுத்தல் மற்றும் அர்த்தமுள்ள ஒருங்கிணைப்பு எற்படுத்தல். அனைத்து கட்டங்களிலும் மாணவர்களின் கற்றல் மற்றும் வெளிப்பாட்டை மேம்படுத்தும் முயற்சியில் அமைச்சுக்கள், அமைப்புகள் / முகவர் நிலையங்கள் மற்றும் உள்ளூர் தொழிலகங்கள் மற்றும் தனிநபர்களைக் கொண்ட வலைப்பின்னல். உள்கட்டமைப்பை வளர்ப்பதில் போதிய முதலீடு, அத்துடன் தொழிற்கல்வியை திறம்பட கொண்டு சேர்க்க தேவையான தனிநபர்களை பணியமர்த்தல் செய்தல், தயாரித்தல் மற்றும் ஆதரித்தல். தரவுத்தளங்களின் பராமரிப்பு மற்றும் தொழில்சார் கல்வியின் சாத்தியமான மாதிரிகளை ஆய்வு செய்வது, இது எங்கள் சூழலில் பயன்படுத்தப்படலாம். சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சீரமைப்பதன் மூலம் நிறுவனங்கள் மற்ற பிரிவுகள் முழுவதும் தொழிகல்வி பெற்றவர்களின் நடமாட்டத்தை உறுதி செய்தல், மற்றும் பாடத்திட்டங்கள் மற்றும் மதிப்பீடு NHEQF மற்றும் NSQF உடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உயர் கல்வி நிலையிலும், கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளிலும் தொழிற்கல்வியின் மேம்பட்ட திறன். உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணிகளை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்தல், அவர்களின் பணிகளைப் பற்றி இன்னும் பரவலாக பரப்புவதற்கான நடவடிக்கைகள். தொழிற்கல்வியானது உயர்நிலைப் பள்ளிக்கல்வியின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டு NSFQ உடன் இணைக்கப்படும் 20.1. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொழிற்கல்வியை ஒருங்கிணைத்தல் இந்த அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும்: (i) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE), MHRD, மற்றும் தொழிற்கல்வியில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அனைத்து அமைச்சகங்களும்; (ii) தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NSDA), இப்போது தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET), மாநில திறன் மேம்பாட்டு பணிகள் (SSDMs), SSCக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற போன்ற தொழிற்கல்வியை செயல்படுத்துபவர்கள்; (iii) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஐ.டி.ஐ.க்கள், பாலிடெக்னிக்ஸ், தொழில்கள், வணிகங்கள் மற்றும் பிற பயிற்சி வழங்குநர்கள் போன்ற அமைப்புகளை செயல்படுத்துதல்; மற்றும் (iv) பயனாளிகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள்; என அனைவரும் சேர்ந்து தொழிற்கல்வியை பிரதான கல்வியுடன் ஒரு அர்த்தமுள்ள முறையில் ஒருங்கிணைப்பதற்கான சவாலை சமாளிக்க வேண்டும். 20.1.1. அனைத்து இடைநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் தொழிற்கல்வியை ஒருங்கிணைத்தல்: அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரு தசாப்த காலப்பகுதியில் தொழிற்கல்வியை தங்கள் கல்விச் சலுகைகளில் ஒரு கட்டமாக ஒருங்கிணைக்க வேண்டும். இது நோக்கி, அவர்கள் ஐடிஐக்கள், பாலிடெக்னிக்ஸ், உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழில்கள், மருத்துவமனைகள், பண்ணைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பார்கள். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்கள் பிராந்தியங்களில் கிடைக்கும் வேலைகள் பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையில், அவர்கள் வழங்க விரும்பும் ஒரு சில பகுதிகளை கவனமாக தேர்வு செய்யும். ஒரு பரந்த அடிப்படையிலான கல்வியுடன் நடைமுறை திறன்களின் வளர்ச்சியும் அதனுடன் தொடர்புடைய தத்துவார்த்த அறிவையும் மையமாகக் கொண்டிருக்கும். 20.1.2. கல்வி நிறுவனங்களிடையே அறிதல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதற்கு உதவுதல்: அறிவை வழிநடத்துவதற்கும் பகிர்வதற்கும் முறையான வழிமுறைகள் வைக்கப்படும். ஒரு செயல்படுத்தும் அமைப்பு இந்த பணிக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அத்தகைய அமைப்பின் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சேவை செய்ய முடியும், இதனால் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி முழுவதும் ஒத்துழைப்புகளைக் கொண்டுவர உதவும். 20.1.3. திறன்கள் இடைவெளி பகுப்பாய்வு மற்றும் உள்ளூர் வாய்ப்புகளை கண்டறிதல்: NSDC ஏற்கனவே பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு தேவையான மதிப்பீடுகளை நிர்ணயிப்பதில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் பணியை முன்னெடுத்துச் செல்லுதல், மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலுள்ள பயிற்சித் தேவைகளை மிகச் சுலபமாகப் பிரித்தெடுத்தல். கல்வி நிறுவனங்கள், மாநில அளவிலான பணிவாய்ப்புகளை அடையாளம் காணுதல், மனித வளங்களைக் கொண்டு திட்டமிடப்பட்ட இடைவெளியை நிரப்ப அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வசதிகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சாத்தியமான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பயிற்சியளித்தல். 20.1.4. அனைத்து கல்வி நிறுவனங்களுடனும் தொழிற்கல்வியை ஒருங்கிணைப்பதற்கான நிதியுதவி: தொழிற்கல்வியின் பாடத்திட்ட ஒருங்கிணைப்புக்கு ஆசிரியர் தயாரிப்பு மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாடு, கல்வி நிறுவனங்களில் உள்ளூர் உள்கட்டமைப்பு (உபகரணங்கள் மற்றும் ஆய்வகங்கள் போன்றவை) உருவாக்கவும் வளஆதாரங்களுக்காகவும் நிதி தேவைப்படும். தேவைப்படும் இடங்களில் உள்நாட்டில் கிடைக்கும் வளங்கள், தொழிற்கல்வியின் பல்வேறு துறைகளில் நிபுணர்களை கௌரவ சம்பளத்தில் பணியமர்த்தல் போன்றவை. தொழிற்கல்வியை கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைப்பதற்கான தனி நிதியம் அமைக்கப்படும். இந்த நிதிகளை வழங்குவதற்கான முறைகள் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான செயல்முறைகள் ஆகியவற்றை NCIVE செயல்படுத்தும். 20.1.5. MHRD மற்றும் MSDE இடையேயான ஒருங்கிணைப்பு: மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கு தொழிற்கல்வியை விரைவாக வழங்குவதில் பிரதான கல்வி நிறுவனங்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, MHRD மற்றும் MSDE மற்றும் திறன் முன்னேற்ற பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது இதனுடன், பணி வழங்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுகளும் இணைய வேண்டியது அவசியம். MSDE ஆல் நிர்வகிக்கப்படும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பின் பிற கூறுகளுடன் கல்வி நிறுவனங்களின் தொடர்புகளை எளிதாக்குவதற்கு, தற்போது NSQFஇன் பாதுகாவலராக இருக்கும் NCVET, மற்றும் தொழில்முறை தரங்களை வரையறுத்து மதிப்பீடுகளை நடத்தும் SSC கள் போன்றவை நெருக்கமான ஒத்துழைப்புடன் இருக்கும். மத்தியிலும் மாநிலங்களிலும் இதை சாதிக்க உதவுவதில் RSA அதன் SCC மூலம் முக்கிய பங்காற்றும். 20.1.6. தொழிற்கல்வியின் பங்காற்றலுக்கான தரவு சேகரிப்பு, எம்ஐஎஸ் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு: கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வியின் மேம்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு கணிசமான அளவு தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவை தொடர்ச்சியான அடிப்படையில் செய்யப்பட வேண்டும். NCVET தற்போது ஒரு தொழிலாளர் சந்தை தகவல் அமைப்பு (LMIS)ஐ வழங்குகிறது, இது சான்றளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், படிப்புகள், பயிற்சி வழங்குநர்கள், பயிற்சியாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் பலவற்றைக் கண்காணிக்கிறது, அவை கல்வித் துறையில் விரிவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தை கணிசமாகப் பயன்படுத்துதல்: (i) குறிப்பிட்ட நிலப்பரப்பில் தேவைப்படும் படிப்புகளின் வகைகள் மற்றும் தன்மையைத் தீர்மானிப்பதற்கான தரவு சேகரிப்பு; (ii) பொருளாதாரத்துறையின் கீழ் அனைத்து நிறுவனங்களால் நடத்தப்படும் வெற்றிகரமான பாடதிட்டங்களின் தரவுகளுக்கான MIS; மற்றும் (iii) கூட்டான ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக அடைவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான தொழில் தளங்கள் மற்றும் தொழிற்கல்வியை ஆரம்பம் முதல் இறுதி வரை வழங்குவதற்கான தொழில்நுட்ப தளங்கள் தேவைப்படும். அத்தகைய தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான ஒரு திட்டம் NCIVE ஆல் உருவாக்கப்படும். 20.2. கட்டமைப்புகள் மற்றும் தரநிலைகள் ஒவ்வொரு நாடுகளிலும் மாணவர்கள் கொண்டிருக்க வேண்டிய கற்றல் விளைவுகளையும் திறன்களையும் வரையறுக்கும் தகுதி கட்டமைப்புகள் மூலம் பொது மற்றும் தொழிற்கல்விக்கு இடையிலான இடைவெளியைக் கட்டுப்படுத்தும் பணியில் பல நாடுகள் உள்ளன. இந்த கட்டமைப்புகள் ஆறு மற்றும் பன்னிரண்டு இடங்களுக்கிடையே உள்ள நிலைகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. NSQF ஆனது 2013 இல் பத்து அளவுருக்களுடன் அறிவிக்கப்பட்டது. கற்றல் விளைவுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பொதுவான அளவுருக்கள் பொதுவாக தொழில்முறை அறிவு, திறன்கள் மற்றும் திறனாய்வு உள்ளிட்ட நான்கு அல்லது ஐந்து எண்ணிக்கையில் உள்ளன. NSQF இல் அனைத்து பணிகளுக்கான தகுதி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதிகள் NSQF திறன் நிலைகளின் அடிப்படையில் வரையறுக்கப்படும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது. தற்போது பணிபுரியும் மாணவர்களுக்கு பிற்காலத்தில் உயர்கல்வியில் தடையின்றி செல்ல உதவுவதற்கு இது நோக்கமாக உள்ளது, ஏனெனில் தேவையான திறன்களை கடன் அடிப்படையிலான அமைப்பு மூலம் காலப்போக்கில் பெற முடியும். கற்றல் விளைவுகளைக் குறிப்பிடுவது, மாணாவருக்கு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை சிறப்பாகக் காணவும், அவர்களின் அறிவுத்திறன் மற்ற படிப்புகள் மற்றும் திட்டங்களுடன் எவ்வாறு இணைகிறது என்பதைப் பார்க்கவும் அனுமதிக்கிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அவர்களின் பட்டதாரிகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பணிவழங்கும் முதலாளிகள் அறிந்து கொள்வார்கள், இதனால் கல்வி வழங்குநர்களிடமிருந்து பொறுப்புக்கூறல் தேவைகளை வலுப்படுத்துகிறது. பல வழிகளில், முறையான, மற்றும் முறைசாரா கல்வி மூலம் திறன்களைப் பெற முடியும் என்பதால், NSQF தொழில் மற்றும் பிரதான பொதுக் கல்வியை மட்டுமல்லாமல், பணியில் முறைசாரா முறையில் பெறப்பட்ட திறன் பயிற்சியையும் ஒருங்கிணைக்க உதவும், இந்த திறன்களை மாணவர்கள் சுயாதீனமாக மதிப்பீடு செய்ய முடியும், தேவையெனில் NSQFவிற்க்ய் ஒரு குறிப்பிட்ட அளவு இணங்கியிருந்தால் அதற்கான சான்றளிக்கப்படும். 20.2.1. தேசிய திறன் தகுதி கட்டமைப்பைப் பற்றி விரிவாகக் கூறுதல்: NSQF இன் குடை கட்டமைப்பால் ஒவ்வொரு 10 நிலைகளிலும் வரையறுக்கப்பட்ட பொதுவான திறன்கள் வெவ்வேறு துறைகளில் உள்ள ஒவ்வொரு துறைகள் / தொழில்கள் / தொழில்களுக்கான விவரக்குறிப்புகளாக மொழிபெயர்க்கப்படும். பாடநெறி உள்ளடக்கம் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் பொருத்தமான பாடத்திட்ட மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகள் கல்வி நிறுவனங்களால் இந்த நிலைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு பிற பங்குதாரர்களுடன் இணைந்து தரப்படுத்தப்படும். NSQF நிலைகளின் விவரக்குறிப்புக்கு இதுவரை கல்வி நிறுவனங்களின் அனுபவத்தின் அடிப்படையில் மாற்றங்களுடன் முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது. இந்த பணிகளை NCIVE ஆல் ஒருங்கிணைக்க முடியும். 20.2.2. தேசிய தொழில்சார் தரநிலைகள் மற்றும் சர்வதேச தரநிலைகளுடன் பொருந்தக்கூடிய தன்மை: இந்தியத் தரங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) ஆல் பராமரிக்கப்படும் சர்வதேச தரநிலை தொழில் வகைப்பாடு (இஸ்கோ) உடன் இணைக்கப்பட வேண்டும்; இந்த அடிப்படையில், சர்வதேச தரங்களுடன் சீரமைப்பதை உறுதிப்படுத்த தகுதி பொதிகள் - தேசிய தொழில் தரநிலைகள் (QPs-NOS) மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். இது முடிந்ததும், முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு வேலை பாத்திரங்களுக்கும் மிகவும் பொருத்தமான தரங்களைக் குறிப்பிடலாம் மற்றும் கல்வியாளர்கள் அதே தரங்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இஸ்கோ 2008 உடன் இணைந்து தேசிய தொழில் வகைப்பாடு 2015 (என்.சி.ஓ -2015) ஐ அறிவித்துள்ளது. என்.சி.ஓ -2015 QP- NOS உடன் அளவிடப்பட்டிருப்பதாக்க் கூறுகிறது. எவ்வாறாயினும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கான கட்டளையின் படி, அனைத்து அமைச்சகங்களிலும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான அனைத்து தரங்களையும் என்.சி.ஐ.வி மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியமானது, மேலும் அவை ஒருவருக்கொருவர் மற்றும் தொடர்புடைய சர்வதேச தரங்களுடன் சீரமைக்கப்படுகின்றன. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் பாடதிட்டங்களை வழங்கும். 20.2.3. தேசிய தகுதி பதிவேடு: இது NCVET ஆல் நிர்வகிக்கப்படுகிறது, NQR மற்றும் NSQF உடன் இணைக்கப்பட்ட அனைத்து தகுதிகளின் அதிகாரப்பூர்வ தேசிய பொது பதிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு NSQF-உடன் சீரமைக்கப்பட்ட தகுதியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பயிற்சித் திட்டங்களின் விவரங்களை NQR போர்ட்டலில் உள்ளிடலாம், பின்னர் அவை பிற நிறுவனங்களால் பயன்படுத்தப்படலாம். ‘கிரியேட்டிவ் காமன்ஸ்’ வகை உரிமங்களைப் பயன்படுத்துவது போன்ற NQR இல் பாடநெறி உள்ளடக்கம் மற்றும் பொருள்களைப் பகிர்தல் மற்றும் பரவலாகப் பயன்படுத்துவதற்கான கொள்கைகள் வைக்கப்படும். மேலும், NQR இல் பாட உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து வெளியிடுவதற்கான வலுவான மற்றும் மிகவும் பதிலளிக்கக்கூடிய பொறிமுறை கிடைக்கும். MSDE மற்றும் MHRD உடன் கலந்தாலோசித்து, NCIVE இதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும். 20.3. மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி தொழிற்கல்வியை கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் ஒரு தொழிற்துறையிலாவது பயிற்சி பெறுவதை உறுதி செய்வார்கள், மேலும் அவர்கள் ஆர்வமாக இருந்தால் மேலும். மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டு காலம், 9-12 ஆம் வகுப்பு, ஒரு மாணவரை வெவ்வேறு தொழில்களுக்கு வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், அவன் / அவள் தேர்வு செய்யும் தொழிலில் கணிசமான அளவு நிபுணத்துவத்தை படிப்படியாக உருவாக்க உதவலாம். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மாணவர் எடுக்கும் தொழிலின் தேர்வு மற்றும் நிபுணத்துவத்தின் அளவு (படிப்புகளின் எண்ணிக்கை) அவர்களின் விருப்பத்தற்கே முற்றிலும் விடப்படும். பள்ளி வளாகங்களில் அவற்றை அறிமுகப்படுத்துவது மற்றும் செயல்முறை திறன்களை வழங்குவதற்கான வசதிகளைக் கொண்ட பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்த உதவும். மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது இந்த வசதிகளில் பணி / செயல்முறை அனுபவத்தைப் பெறுவதற்கு தங்கள் நேரத்தின் ஒரு பகுதியை செலவிட மாணவர்கள் செயல்படுத்தப்பட வேண்டும். மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகள், மொழிகளில், கணிதம், தொழிற்கல்வி மற்றும் பலவற்றில் மாணவர்கள் தேர்வு செய்யக்கூடிய தாராளவாத அணுகுமுறை மற்றும் செமஸ்டர் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், 9-12 வகுப்புகளில் அவர்கள் எதிர்கொள்ளும் நான்கு ஆண்டுகளில் அவற்றை கற்கலாம் (பி4.1.1 ஐப் பார்க்கவும்), மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான விதிமுறைகளை தளர்த்துவது தொழிற்கல்வியை அறிமுகப்படுத்த உதவும். 6-8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் திறன்வெளிப்பாடு மற்றும் நோக்குநிலையைப் பெற வேண்டும், பள்ளி வளாகத்தில் வழங்கப்படும் பயிற்சியின் ஆரம்பக்கட்ட அறிமுகங்களின் மூலம் அவர்கள் தங்களது 9-12 வகுப்புகளில் தகவலறிந்த விருப்பத்தேர்வுகளை கொண்ட பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். 20.3.1. உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிக்கல்வி - 9-12 வகுப்புகள்: பள்ளி வளாகங்களில் NSQF அளவிட்டின் படி நிலைகள் 1 முதல் 4 வரை சீரமைக்கப்பட்ட பாடத்திட்ட விநியோகத்தில் நிபுணத்துவத்தை உருவாக்க வேண்டும், அதோடு செயல்முறை பயிற்சியும் பள்ளியிலோ அல்லது வெளியிலோ வழங்கப்படுகிறது, வெளிப்புற பங்குதாரர்களுடன் இணைந்து. ‘திறன் அறிவு வழங்குநர்கள் (எஸ்.கே.பி)’ என்ற வகையில் பொருத்தமான பயிற்சி அளிக்கும் பள்ளி வளாகங்கள் தங்கள் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்கல்விகளின் விருப்பத்தேர்வை பாதிக்கும். உள்ளூர் எஸ்.கே.பி-களின் பயன்பாடு உள்ளூர் பகுதியில் பொருத்தமான தொழில்களுக்கு மாணவர்கள் பயிற்சியளிக்கப்படுவதை உறுதிசெய்யவும், 12-ஆம் வகுப்புக்குப் பிறகு அவர்கள் உள்ளூரிலேயே வேலை தேடுவதற்கான வாய்ப்பை மேம்படுத்தவும் உதவும். பள்ளி வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆலோசகர்கள் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவியைப் பெற வேண்டும். பள்ளிக்கல்வியில் 12ம் வகுப்பு முடிந்த பிறகு பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும், மாணவ, மாணவியர்களுக்கும், தகவல் தொடர்பு திறன்களுக்கும், டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வியும், தொழில் முனைவோர் மற்றும் பல. பகுதிநேர பயிற்சி மற்றும் திறன் பயிற்சி மீதமுள்ள நேரத்தில் பள்ளியில் கல்வியுடன் கூடுதலாக வழங்கப்படலாம். மாலை / இரவு வகுப்புகளின் பயன்பாட்டையும் ஆராயலாம். மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்பது ஒரு முழுமையான கல்வியுடன், அவர்கள் பணி செய்யும் உலகில் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும். 20.3.2. பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு: பாடத்திட்டத்தை உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி செய்ய வேண்டும், இது ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மாதிரியைக் குறிப்பிடுகிறது. தொழிற்துறைக் கல்வி மதிப்பீடு அவசியமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும், SKP ஆல் மதிப்பீடு செய்யப்படும் அனுபவக் கூறுடன் ஆன கல்வி நிறுவனம் மற்றும் / அல்லது BOA (P8.1.8 ஐப் பார்க்கவும்). இதற்கான பொருத்தமான கட்டமைப்பானது PSSCIVE உடன் இணைந்து மற்றும் மாநில அளவிலான நிறுவனங்கள் மற்றும் BOA உடன் பணி புரிவதற்காக NCSS ஆல் உருவாக்கப்பட்டது. 20.3.3. ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்: தொழிற்கல்வியை வழங்குவதில் பயிற்சி பெற்ற வழக்கமான ஆசிரியர்களைத் தவிர, பல்வேறு தொழில்களில் நிபுணத்துவம் பெற்றதற்காக சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் ஏராளமான பயிற்சியாளர்களை ஈர்க்க வேண்டும். அவர்கள் அவ்வபோது வருகைதரும் ஆசிரியர்களாக கொண்டு வரப்படலாம் மற்றும் அவர்கள் தொழிற்கல்வியின் பிரதான கோட்பாடு மற்றும் செயல்முறை இரண்டையும் அந்தந்த தொழில்களில் வழங்கலாம் அல்லது செயல்முறை பயிற்சியை மட்டுமே கூட வழங்க முடியும். பள்ளிகளுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கு சிறப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்படும் சந்தர்ப்பங்களில், தத்துவார்த்த அம்சங்களை கற்பிக்க வெளிப்புற பயிற்சியாளர்களையும் அழைத்து வரலாம். DIET களில் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மூலம், கல்வி வளாகத்தில் வசதியாகவும், மாணவர்களைக் கையாளவும், பாடத்திட்ட மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பின் பரந்த வரையறைகளுக்கு இணங்கவும் பள்ளி வளாகங்கள் உதவ வேண்டும். 20.3.4. ஆசிரியர் பயிற்சி: தொழிற்கல்வியை வழங்குவதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன் ஆசிரியர்களின் பயிற்சியளிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்க வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் முன்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்குள் செயல்படும் கல்வித் திணைக்களத் துறைகள் மற்றும் மாநில அரசாங்கங்களால் நடத்தப்படும் SCERT கள், DIET கள், SIVE கள் மற்றும் பள்ளிகள் மூலமாக ஆசிரியர் பயிற்சி தொகுப்புகள் மற்றும் ஆசிரியர் கையேடுகளை உருவாக்குவதற்கு PSSCIVE உதவ வேண்டும். இந்த நோக்கத்திற்காக குறுகிய கால பயிற்சி வகுப்புகள் முன்னணி கல்வி நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில், SCERT கள் மற்றும் DIET கள் மூலம் பரவலாக பகிரப்பட வேண்டும். CRCs, BRCs மற்றும் DIETs ஆகியவற்றில் உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தங்கள் பயிற்சியில் நிபுணர்களாக இருக்கும் வெளிப்புற பயிற்சியாளர்களையும் அழைக்கலாம். அதிக எண்ணிக்கையிலான வெளி, பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் வழக்கமான ஆசிரியர்களின் பயிற்சி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விருப்பங்களை NCIVE ஆராயலாம். 20.3.5. தொழிற்கல்வியை வழங்குவதற்காக PSSCIVE மற்றும் மாநில அளவிலான உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்: PSSCIVE க்கு கணிசமான பலப்படுத்துதல் தேவைப்படும், மனித வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வதன் மூலம், தொழிற்கல்வியை பெருக்குவதில் அது முக்கிய பங்காற்ற முடியும். இதேபோல், பல மாநிலங்களில் SIVEகள் செயலில் இல்லை என்பதும், பெரும்பாலும் தொழிற்கல்வியை மேற்பார்வையிடும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் என்பதும் தனிப்பட்ட மாநில அரசாங்கங்களால் மாநில அளவிலான நிறுவனங்களை வலுப்படுத்துவது மிக முக்கியமானதாகும். ஒரு புதிய, மிகவும் ஒத்திசைவான, மூலோபாயம் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும், தேவைப்படும் புதிய நிறுவனங்களும், ஒவ்வொரு மாநிலத்திலும் NCIVEயால் உருவாக்கப்பட வேண்டும், RSAஇன் SCC (பி 23.10 ஐப் பார்க்கவும்) உடன் இணைந்து (அத்தியாயம் 23ஐப் பார்க்கவும்) திட்டம் செயல்படுத்தப்படும். 20.4. உயர் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழிற்கல்வி தொழிற்கல்வியை ஏற்றுக்கொள்வது என்பது விரைவாக வளர்ந்து இந்த கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டுமென்றால், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தொழிற்கல்வியை ஒருங்கிணைப்பது கட்டாயமாகும். புதிய B.Voc பட்டப்படிப்புகள் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், ஆனால் நான்கு ஆண்டு படிக்கும் கலைத் பாடப்படிப்புகள் உட்பட அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் சேரும் மாணவர்களுக்கும் தொழிற்கல்வியும் இருக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் இவற்றை ஏற்கும் தனிப்பட்ட நிறுவனங்கள், பணித்திட்ட மாதிரிகள் மற்றும் செயல்முறைகளைக் கண்டுபிடிப்பதற்கு புதுமையான வழிகளை உருவாக்க வேண்டும், பின்னர் இவை NCIVE அமைத்த வழிமுறைகள் மூலம் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், இவ்வாறு பகிரப்பட்டவை தொழிற்கல்வியின் பயன்பாட்டை விரிவாக்க உதவும். முன் கற்றலை மதிப்பீடு செய்வதற்கும் அங்கீகரிப்பதற்கும் பொருத்தமான வழிமுறை உருவாக்கப்படும். 20.4.1. இளங்கலை கல்வி மட்டத்தில் தொழிற்கல்வியின் விரிவாக்கம்: இளங்கலை மட்டத்தில் தொழிற்கல்வி விரிவுபடுத்தப்பட்டு, 2025 ஆம் ஆண்டுக்குள் ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் (மொத்த சேர்க்கையில் 50% வரை) சேர்க்கை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும், இது தற்போது 10%க்கும் குறைவான சேர்க்கை அளவிலிருந்து அதிகரிக்கப்பட்டு பல துறைகளில் தொழிற்கல்வி ஏற்கனவே B.Voc பாடத்திட்டங்கள் மூலம் இளங்கலை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் தொடங்கி ஆர்வமுள்ள அனைத்து HEI களும் HEGC ஆல் ஆதரிக்கப்படும் (P18.4.1 ஐப் பார்க்கவும்), சிறப்பாக உருவாக்கப்பட்ட நிதியம் மூலம், இளங்கலை அளவில் டிப்ளோமா, மேம்பட்ட டிப்ளோமா மற்றும் B.Voc பட்டங்கள் மூலம் தொழிற்கல்வியை வழங்குவதற்காக NSQF நிலைகள் 5-7 உடன் சீரமைக்கப்படும். HEIக்கள் ஒரு பள்ளிக்கல்வி / தொழிற்கல்வித் துறையை நிறுவலாம் மற்றும் உயர் கல்வியுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்கல்வியை வழங்கலாம், அவை சொந்தமாகவோ அல்லது தொழில்துறையுடன் கூட்டாகவோ இருக்கலாம், மேலும் இரு பிரிவுகளின் மூலமும் மாணவர்களின் தடையற்ற பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் செயல்படலாம். துறைகள், வகைகள் மற்றும் படிப்புகளின் காலம் போன்றவற்றின் தேர்வு ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனத்தின் முடிவுக்கு விடப்படும், ஆனால் அவர்கள் தங்கள் படிப்புகள் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்த தரவுகளை NQR மற்றும் / அல்லது NCIVE பரிந்துரைத்த பிற அமைப்புகளுக்கு பகிர்வு மற்றும் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக சமர்ப்பிப்பார்கள். 20.4.2. பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்விக்குள் மாணவர் சேர்க்கைகள்: தாராளவாத கலைகளில் இளங்கலை திட்டங்களில் முதன்மையான மற்றும் இணையான தொழிற்கல்விகள் வழங்கப்படும். நான்கு ஆண்டு இளங்கலை பட்டங்களை வழங்கும் தன்னாட்சி HEIக்கள் தங்கள் மூலம் பரந்த அளவிலான தொழிற்கல்வி படிப்புகளை சேர்க்க தேர்வு செய்யலாம். சில சிறந்த நிறுவனங்கள் புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்கி சுமார் ஐந்து ஆண்டுகளுக்குள் அவற்றை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இவை பின்னர் பிற நிறுவனங்களுக்கு வழிகாட்டவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உதவும். பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரிவுகள் முழுவதும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை அறிய மேலும் உதவுவதற்காக NHEQF ஆனது NSQF உடன் இணக்கமாக இருக்கும் (P12.1.3 ஐப் பார்க்கவும்). 20.4.3. பணியுடன் ஒருங்கிணைந்த பயிற்சி மற்றும் பிற மாதிரிகள்: தொழிற்கல்வியின் பல மாதிரிகள் பிற நாடுகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எந்தவொரு மாதிரியின் முன் பல்வேறு மாதிரிகள் பற்றிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், அல்லது மாதிரிகள் கலவை பயன்படுத்த பரிந்துரைக்கப்படலாம். அத்தகைய ஆய்வுக்கு ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பை NCIVE ஏற்கும். 20.4.4. பயிற்சி பெற்றவர்களை ஊக்குவித்தல்: இந்த கொள்கையானது மாணவர்களுக்கு அதிக பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு, பணியுடன் ஒருங்கிணைந்த பயிற்சிக்கான பிற வாய்ப்புகளும் உருவாக்கியுள்ளதால் அவை NCIVEஆல் ஆராயப்பட வேண்டும். தொழிற்கல்விக்கு நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்குகளை அடைவதில் SKP-களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது, மேலும் மாணவர்களுக்கு மேலும் சிறந்த பயிற்சி வாய்ப்புகளை வழங்க அவர்களை ஊக்குவிப்பதற்கான வழிகளை என்.சி.ஐ.வி ஆராய வேண்டும். NCIVE பல்வேறு அமைச்சகங்களின் நிகழ்ச்சிகள் / திட்டங்களின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒத்த விதிமுறைகளை பரிந்துரைக்க வேண்டும், இதனால் மாணவர் சேர்க்கை எளிதாக்கப்படும். ஒவ்வொரு துறையின் தேவைகள் மற்றும் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்கைகளை தீர்மானிக்க கல்வி நிறுவனங்களுக்கு சிறிது சுதந்திரம் வழங்குவதற்கான சாத்தியமும் ஆராயப்பட வேண்டும். 20.4.5. பிரதான கல்வியில் மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்: தொழிற்கல்வியை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஒருங்கிணைந்த உயர் கல்வி முறைக்கு மாறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும், மற்றும் குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், மென் திறன்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்களான தகவல் தொடர்பு திறன், கணினி கல்வியறிவு, டிஜிட்டல் கல்வியறிவு , அடிப்படை நிதி கல்வியறிவு, தொழில் முனைவோர் மற்றும் இதுபோன்ற பல தலைப்புகள் இடைக்காலத்தில் மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அத்தகைய படிப்புகளின் விருப்பத்தேர்வு அனைத்து கல்விநிறுவனங்களிலும் உள்ள மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும், இதனால் அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். இந்த இலக்குகளை அடைய பல்வேறு வழிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். 20.4.6. பாடத்திட்டம் மற்றும் பயிற்சியாளர்கள்: தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் சுயாட்சியைக் கொண்டிருக்கும், மேலும் அவற்றில் புதுமையான பாடத்திட்டம் மற்றும் விநியோக முறைகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு பிரிவுகள் / துறைகளுக்குள்ளான பாடத்திட்டங்கள் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எளிமையாக கிடைக்கும்படியான இணைப்பு படிப்புகள் தேவைப்படும். பணியுடன் ஒருங்கிணைந்த பயிற்சி கூறு இல்லாத பிற குறுகிய மற்றும் நீண்ட கால சான்றிதழ் படிப்புகள், இன்டர்ன்ஷிப் மற்றும் பிற கற்றல் முறைகளைச் சார்ந்து இருக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள் தங்கள் தொழில் கூட்டாளர்களுடன் இணைந்து நிறுவ வேண்டிய நடைமுறைகள். ஒரு வரைபடத்தை உருவாக்குவதன் மூலம் NCIVE இந்த முயற்சிகளுக்கு உதவ முடியும். தொழிற்கல்விக்குத் தேவைப்படும் பயிற்சியாளர்களின் தகுதிகள் மிகவும் பரந்த அளவிலான நிபுணத்துவத்தை உள்ளடக்கியதாகும். பயிற்சியாளர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து பெறப்பட வேண்டும், மேலும் அவர்களின் பணி அனுபவம் கல்வித் தகுதிகளுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும். அவர்களை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ HEI களால் பணியமர்த்தலாம். அத்தகைய பயிற்சியாளர்களுக்கான குறுகிய கால தூண்டல் பயிற்சியை சில முன்னணி HEI க்கள் வடிவமைத்து வடிவமைத்து ஆன்லைனில் பரவலாக பகிர்ந்து கொள்ளலாம் 20.4.7. இன்குபேஷன் மையங்கள் மற்றும் சிறப்பு ஊக்குவிப்பு மையங்கள்: மாணவர்களின் கருத்துக்களை வளர்ப்பதற்கும் அவர்களுக்குள் ஒரு தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் ஆதரிப்பது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொழில்முனைவு காப்பீட்டு மையங்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும். பல்கலைக்கழகங்களில் தொழில் நுட்பத்துடன், அவர்கள் சேவை செய்யும் சமூகங்களின் சிறப்பியல்பான சிறப்புத் திறன்களில் சிறப்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மையங்களை உருவாக்க ஊக்குவிக்கப்படும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் ராஜஸ்தானில் நகை வடிவமைப்பில் இருக்கும். அத்தகைய மையங்கள், HEI கள் மற்றும் அவற்றின் உள்ளூர் சமூகங்களுக்கிடையேயான தொடர்பு கொள்ளும் மையமாக மாறும், மேலும் HEI க்கும் வருவாய் ஈட்டும். 20.5. பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்கல்வி ஆரம்பத்தில் NSQF மற்றும் QPs-NOS உடன் இணைந்த பாடத்திட்டத்தை உருவாக்குவதில் நிபுணத்துவம் கட்டமைக்கப்பட வேண்டும், மேலும் இதை RPL மதிப்பீட்டு பொறிமுறையுடன் இணைப்பதன் மூலம் அனைத்து இளைஞர்களும் பெரியவர்களும் தங்களது முந்தைய கல்வி அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் மூன்றாம் நிலை கல்வியைப் பெற முடியும். 20.5.1. இடைநின்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்தல்: NIOSஇல் தொழிற்கல்வியின் உயர்வு குறித்த தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் தேவைக்கேற்ப தொழிற்பொருள் கூறு பலப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அவ்வாறு செய்யாத மாநில அரசுகள், 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்கும் குறிக்கோளை செயல்படுத்துவதற்காக திறந்தநிலை கல்வி நிறுவனங்களை (SIOS) திறக்க ஊக்குவிக்கப்படும். பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்களையும் மீண்டும் வழக்கமான பள்ளிகளுக்கு கொண்டு வரலாம் அவர்களுக்கு இணைப்பு படிப்புகள், அவர்களின் முந்தைய கற்றல் மற்றும் ஆர்.பி.எல் சான்றிதழ் ஆகியவற்றின் மதிப்பீடு. அவர்களுக்கு தொழிற்துறை ஆலோசனை வழங்கப்பட வேண்டும், மேலும் பொதுக் கல்விப் படிப்புகளுடன் ஒருங்கிணைந்த கூடுதல் தொழிற்கல்வி படிப்புகளுக்கான அணுகல், PSSCIVE அல்லது NCIVEயின் பணியின் விளைவாக அமைக்கப்பட்ட மற்றொரு அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20.5.2. முன் கற்றலின் மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்: தற்போதைய பணியாளர்களின் தற்போதைய திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு மதிப்பீட்டு கட்டமைப்பானது, இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்கள் தொழில்களில் முறையான பயிற்சி பெறாத, மற்றும் சுயமாக கற்றுக்கொள்ளப்பட்ட, பொருத்தமான RPL சான்றிதழைப் பெற உதவும். தேவை மற்றும் சான்றிதழ் மீதான மதிப்பீட்டின் அத்தகைய பொறிமுறையானது, NSQF இன் அளவுகளுடன் தொடர்புடைய திறன்களின் விரிவான விவரக்குறிப்பை நிறைவு செய்யும் போது பூர்த்தி செய்யும், மேலும் இது இளைஞர்களுக்கு கிடைமட்ட மற்றும் செங்குத்து இயக்கத்தை வழங்க உதவும். வயது வந்தோருக்கான கல்வியை வழங்குபவர்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும், தொழிற்கல்வியில் சுறுசுறுப்பாக செயல்படுவதைக் கையாளும் நபர்களும் உள்வரும் மாணவர்களுக்கு RPL சான்றிதழை வழங்குவதற்காக, அவர்களின் ஆர்வமுள்ள துறைகளில் மதிப்பீட்டை நடத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். 20.5.3. மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு தேவைகள்: புதிய மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதை விட இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் மீட்டெடுப்பதற்குமான திட்டமிடப்பட்ட தேவை பல மடங்கு பெரியது. இந்த தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை HEIக்கள் பரிசீலிக்கலாம், மாலைநேர படிப்புகள், ஆன்லைன் படிப்புகள் மற்றும் பலவற்றின் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவை பெரும்பாலும் குறுகியகால படிப்புகளின் வடிவத்தில் இருக்கும். ஒரு கல்வி நிறுவனம் பாடத்திட்டத்தையும், செயல்முறை திட்டங்கள், மற்றும் அவர்களின் மாணவர்களுக்கான மதிப்பீட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றை வழங்கியதும், அவர்கள் அதன் மூல சமூகத்தின் உறுப்பினர்களுக்கு கூடுதல் வருவாய்க்கு வழங்க முடியும். நிறுவனத்துடன் வருவாய் பகிர்வு ஏற்பாடுகள் மூலம் இதைச் செய்ய ஆசிரியர்களை ஊக்குவிக்க முடியும். இந்த பணிக்கு பல்வேறு துறைகளில் இத்தகைய திறனின் தேவை பற்றிய கணிப்புகள் தேவைப்படும் (எ.கா. திறன் இடைவெளி பகுப்பாய்வு). 20.5.4. அமைப்புசாரா துறைக்கு தொழிற்கல்வி: இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் பெரும் சதவீதம் அமைப்புசாரா துறையிலும் சிறு வணிகங்களிலும் உள்ளது. திறமையற்ற அல்லது அரை திறமையான தொழிலாளர்களாக பணியமர்த்தப்படுவதிலிருந்து அதற்கு பதிலாக திறமையான தொழிலாளர்களாக மாறுவதற்கும் அதற்கேற்ப அதிக ஊதியம் வழங்கப்படுவதற்கும் அவர்களுக்கு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களில் பலர் தொழில்முனைவோர், நிதி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு போன்ற துறைகளில் பயிற்சி பெறுவதன் மூலமும் பெரிதும் பயனடைவார்கள். இந்த தேவைக்கு மாதிரிகள் தேவைப்படுவதற்கு HEI கள் ஊக்கமளிக்க வேண்டும். வயதுவந்தோர் கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் கல்வியும் அவர்களுக்கு வேலை நேரத்தில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும். 20.5.5. ஆன்லைன் கல்வி மூலம் சான்றிதழ் படிப்புகள்: தொழில்சார் படிப்புகளின் தத்துவார்த்த அம்சங்களைக் கையாள ஆன்லைன் கல்வி பயன்படுத்தப்படலாம், ஏனெனில் மாணவர்கள் வேலைக்குப் பிறகு அல்லது வார இறுதி நாட்களில் அவற்றை அணுகலாம். பள்ளி வளாகங்கள் மற்றும் HEI கள் அத்தகைய குறுகிய படிப்புகளை உருவாக்கி, அவற்றை ஆன்லைன் தளத்தின் மூலம் கிடைக்கச் செய்யலாம், அவை NCIVE ஆல் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான அமைப்பால் வழங்கப்படலாம். சான்றிதழை உள்ளடக்கிய ஆன்லைன் தேர்வுடன் இதை இணைக்கும் போது, இது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பயனளிக்கும். மாணவர்கள் தங்கள் செயல்முறை பயிற்சியை உள்ளூரிலேயே முடிக்க முடியும், மேலும் அதற்கான பயிற்சி வழங்குநரால் உள்ளூரிலேயே மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கோட்பாடு மற்றும் அவர்களுக்கு கட்டாயமாக உள்ள பிற படிப்புகளுக்கு ஏற்ப, அவர்கள் ஆன்லைன் பதிப்புகளை எடுக்கலாம். 20.6. சிறப்பு கவனத்திற்குறிய துறைகள்   சரக்கு மற்றும் சேவை தொடர்பான, உற்பத்தி, மேம்படுத்துதல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியா நூற்றாண்டுக்களுக்கான அறிவு மற்றும் கல்வியைதன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக நேர்த்தியான அதே நேரம் மிகவும் சிக்கலான ஜவுளி மற்றும் எம்பிராய்டரி (தையல்) முதல் பிரம்மாண்டமானவரலாற்று கட்டிடவடிவமைப்பு, மருத்துவம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், நீர்வளப்பாதுகாப்பு போன்ற எண்ணற்ற துறைகளில் ஞானம் மற்றும்திறமை கொண்டிருந்தது. இந்த மகத்தான ஞானத்தை, (லோக் வித்யா என்பர்) வாழ்க்கைத் தொழிலாக நன்கு பேணிப்பாராமரித்து அதைச்செய்பவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அதை அடுத்த தலைமுறைக்கு முறைப்படுத்தப்பட்ட வழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதுஇந்தியாவின் சமூக கலாச்சார தன்னிறைவுக்கு மட்டுமல்லாமல் இலட்சக்கணக்கான கைவினைஞர்களுக்கும் நன்மை பயக்கும். 20.6.1. கைவினைஞர்;களை செழுமைப்படுத்துதல். முன் குறிப்பிட்ட லோக்வித்யா மிகப்பெரிய பொருளாதார வல்லமை படைத்தது. ஆகவே, இவற்றை முறையான பாடத்திட்டத்துடன் உள்ளடங்கிய தொழிற்பயிற்ச்சியை அனைவருக்கும் கிடைக்கும் படி பரவலாக்கப்பட வேண்டும். கணிணி சார்ந்த வடிவமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற தொழில் நுட்பங்களை பரவலாக்கச் செய்வதன் மூலம் இத்தகைய கைவினைகளைப் பேணி செழுமைப்படுத்தி அதனுடைய பயன்பாடு மற்றும் எல்லையளவை உயர்த்தலாம். லோக் வித்யா - இந்தியாவால் உண்டாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஞானத்தை தொழிற்கல்வியின் உள்ளடங்கிய பகுதியாக இருக்கச் செய்தல் வேண்டும். 20.6.2. கிராமப்புறச் சிறப்பு கவனம்: கல்வியில் பின்தங்கிய ஒவ்வொரு மாவட்டமும் உயர் தரத்திலான தொழிற்கல்வியை இளநிலை பாடத்திட்டத்தில் உள்ளடங்கியதாக அளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களை பெற்றிருக்கும் (பார்க்க P.11.1.3) . இந்த உயர்கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள பள்ளிகள் தொழிற்பயிற்சிப்பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றுடன் இணைந்து தொழிற்பயிற்சியை அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளவர்கள் தரமான இப்பயிற்சியை பெற உறுதி செய்யப்படும். 20.6.3. மலைவாழ்ப்பகுதி மற்றும் பழங்குடியினச்சிறப்பு கவனம்: பழங்குடியின உயர்கல்வி மாதிரி வடிவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பழங்குடியின இளைஞர்களின் கனவான மையநீரோட்ட கல்வியுடன் இடம் சார்ந்த பொருளாதாரத்திற்குறிய தொழிற்பயிற்ச்சிக் கல்வியை ஒருங்கிணைந்தவாறு வழங்கமுடியும். உதாரணமாக மூங்கில் ஆராய்ச்சி மையம் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அல்லது பாரம்பரிய மருத்துவ முறையியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து இவற்றை வழங்க முடியும். இப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி வளாகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டம் வகுத்தல் மேம்படுத்துதல் மற்றும் கற்பித்தலில் ஈடுபட நிதி உதவி மற்றும் அனைத்து வித ஆதரவும் வழங்கப்பட வேண்டும். வயது வந்தோர் கல்வி நோக்கம்: 2030ஆம் ஆண்டிற்குள் இளையோர் மற்றும் வயதுவந்தோரிடையே 100% எழுத்தறிவை அடைதல் மற்றும் வயதுவந்தோர் கல்வி, தொடர் கல்விச் செயல்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக்குதல் . அடிப்படை எழுத்தறிவு மற்றும் கல்வியறிவை அடைதலும் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளலும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். வயதுவந்தோருக்கு தரமான கல்வியை உறுதிப்படுத்துவது இந்த அடிப்படை உரிமையை அடைவதற்கு அத்தியாவசியமாகும். வயதுவந்தோர் கல்வி வயதுவந்தோர்க்கு அறிவை வளர்த்துக்கொள்ளவும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கல்வித்தகுதிகளையும் சான்றிதழ்களையும் பெறவும் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவுவதன் மூலம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வகை செய்கிறது. அதிக எழுத்தறிவுற்றோரைக் கொண்ட ஒரு நாடானது இயல்பாகவே அதிக உற்பத்தியைச் செய்யக்கூடிய நாடாக உருமாறுகிறது. இந்த மாற்றமானது சுகாதாரம், நீதித்துறை, உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய வயதுவந்தோர் கல்வியானது தேசிய எழுத்தறிவு இயக்கம்- National Literacy Mission(NLM) (1998-2009), சக்‌ஷார் பாரத் Sakshar Bharat(2009-2017), வயதுவந்தோர் கல்வி மற்றும் திறன் வளர்ப்பில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் Scheme of Support to Voluntary Agencies for Adult Education and Skill Development மற்றும் சமீபத்தில் துவங்கப்பட்ட வீட்டில் உள்ள பெற்றோர்க்கு பள்ளிக் குழந்தைகள் மூலம் கற்பித்தல் திட்டம் Padhna Likhna Abhiyaan(2019 onwards) போன்ற திட்டங்களின் மூலமாக அனைத்துத் தரப்பிரும் அணுகும்படியாக முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்து வருகிறது. இத்திட்டங்கள் வாசித்தல் எழுதுதல் கணிதச்செயல்பாடுகள் போன்ற அடிப்படைத்திறன்கள் மட்டுமல்லாது நிதி, கணினி, தேர்தல், சுற்றுப்புறம், சட்டம் போன்ற பொதுத்துறைகள் குறித்த அடிப்படை அறிவையும் திறன்களையும் கூட வயதுவந்தோர்க்கு கற்பிக்கின்றன. இதன் விளைவாக 2001-2011 காலகட்டத்தில் இந்தியாவின் எழுத்தறிவு 9 சதவீதம் அதிகரித்து 74% ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இன்னும் 15-24 வயது வரம்பில் 3.26 கோடி எழுத்தறிவற்றவர்களும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 26.5 கோடி எழுத்தறிவற்றவர்களும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கைக்கு இணையானதாகவும் உலக அளவில் எழுத்தறிவற்றோரில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கைக்கு இணையானதாகவும் உள்ளது. 1988ல் துவங்கப்பட்ட தேசிய எழுத்தறிவு இயக்கமானது(NLM) பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதன் விளைவாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மட்டுமல்லாது மதுப்பழக்கம் போன்ற சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுக்கும் விவாதங்களுக்கும் இது வழிவகுத்தது. தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் ‘விழிப்புணர்வு பிரச்சாரங்கள்’ (Total Literacy Campaign) 1991-2001 காலகட்டத்தில் எழுத்தறிவு சதவீதத்தை அதிகரிக்க வகை செய்த ஒரு வெற்றிகரமான முக்கிய செயல்பாடாகும். விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தன்னார்வலர்களை அடிப்படையாகக் கொண்டு வாழிடங்களுக்குத் தக்கவாறு வடிவமைக்கப்பட்டு பலன்களை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டன. பள்ளிகளும் சமூக நிறுவனங்களும் இதில் பெருமளவில் பங்கேற்றன. இத்தகைய தன்னார்வலர் பங்களிப்பின் மூலமாக பெண்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான வயதுவந்தோர் தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் பயன்களைப் பெற வழி ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இயக்கத்தின் இறுதி ஆண்டுகளில் தன்னார்வலர் பங்களிப்பு நீர்த்துப்போனதில் இயக்கம் தனது முக்கியத்துவத்தையும் பலன்களையும் இழந்தது. நிறுவனப்படுத்துதல், முறையான திட்டமிடல், போதுமான நிதி உதவி அளித்தல், தன்னார்வலர்களது திறன் மேம்படுத்தல் போன்றவற்றில் அரசு செலுத்தும் உண்மையான ஈடுபாட்டோடு தன்னார்வலர்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பானது வயதுவந்தோர் கல்விக்கு அத்தியாவசியமானது என்பது இந்தியா மட்டுமின்றி சீனா ப்ரேசில் உள்ளிட்ட உலக அளவிலான கள ஆய்வுகளிலும் கூட நிறுவப்பட்டுள்ளது. வயதுவந்தோர் கல்விக்கான தன்னார்வலர்களது சிறப்பான பங்களிப்பானது வயதுவந்தோர் எழுத்தறிவை அதிகரிப்பது மட்டுமின்றி எல்லா வயதினருக்குமான கல்வியின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்த மாபெரும் விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி நேர்மறையான சமூக மாற்றங்கள் மற்றும் சமூகநீதிக்கு வழிவகுக்கின்றன. மாபெரும் சமூக மாற்றங்கள் அரசு செயல்பாடுகள் மூலம் மட்டுமே அடையப்பெறுவதில்லை. அரசின் நிலையான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவோடு ஒட்டுமொத்த சமூகத்தின் மற்றும் தன்னார்வலர்களது பங்களிப்பும் அதற்கு அத்தியாவசியமாகிறது. எனவே தன்னார்வலர்களது பங்களிப்பை மீண்டும் ஊக்கப்படுத்துவது 100% எழுத்தறிவு என்னும் இம்மாபெரும் இலக்கை அடைய அத்தியாவசியமாகும். எனவே 2030 ஆம் ஆண்டிற்குள் இளையோர் மற்றும் முதியோரிடையே 100% எழுத்தறிவு எனும் இலக்கை எட்ட எழுத்தறிவு இயக்க செயல்பாடுகளை தன்னார்வலர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தி முழு உத்வேகத்துடன் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகிறது. இது வயதுவந்தோர்க்கு வாழ்நாள் முழுமைக்கும் தொடர் கற்றலை பெறுவதற்கும் வலுவான வருமான வாய்ப்புகளையும் உற்பத்தித் திறன்களையும் அடைவதற்கும் வழிவகுக்கும். இந்திய நாட்டின் மாபெரும் மூலதனமான மனித வளத்தின் வலிமையை முழுமையாகப் பெறுவதற்கு இது ஒன்றே வழியாகும். வயதுவந்தோர் கல்வியின் முக்கியத்துவம் சமூகத்தின் எழுத்தறிவற்ற உறுப்பினராக வாழ்வை மேற்கொள்ளும் ஒருவர் கீழ்க்கண்ட வகைகளில் பிறரைவிடப் பின்தங்கியவராகிறார் தினசரி வாங்குதல் விற்றல் தொடர்பான பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல்; விற்பனை மையங்களில் விலைக்குத் தகுந்த தரமும் எடையும் அளிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்தல்; வேலை மற்றும் வங்கிக்கடன்களுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல்; அரசின் சுற்றறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசித்துப்புரிந்து கொள்ளுதல்; வியாபாரம் சார்ந்த தகவல் தொடர்புகளை கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளுதல்; கணினி, இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாழ்வையும் தொழிலையும் மேம்படுத்திக்கொள்ளுதல்; சாலை மற்றும் மருந்துப்பொருட்களில் திசைகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகளை வாசித்துப் பின்பற்றுதல்; வீட்டில் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்; நாட்டின் குடிமகனாக அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து வைத்தல்; கலை மற்றும் இலக்கியத்தைக் கொண்டாடுதல்; எழுத்தறிவு தேவைப்படும் நடுத்தர மற்றும் உயர்தர உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பிற்குத் தகுதி பெறுதல் போன்றவை அவற்றுள் சில. இவ்வாறாக எழுத்தறிவு மற்றும் அடிப்படைக் கல்வி ஒரு தனிமனிதனது தனிப்பட்ட சமூக பொருளாதாரத் தளங்களில் தொடர் கற்றலுக்கு வகை செய்து அவரது சொந்த மற்றும் தொழில் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சமூக மற்றும் நாட்டின் கோணத்தில் அனைத்து வகை வளர்ச்சிப்பணிகளின் வெற்றிக்கான உந்துசக்தியாக எழுத்தறிவு திகழ்கிறது. உலக அளவிலான புள்ளிவிவரங்கள் எழுத்தறிவானது எங்கனம் நாட்டின் உற்பத்தி மற்றும் வருமானத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது என்பதை நிறுவுகின்றன. கடந்த காலத்தில் பள்ளிக்கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கத்தவறியதன் விளைவாக நம்நாட்டில் தற்போது எழுத்தறிவற்ற வயதுவந்தோர் பெருமளவில் இருந்து வருகின்றனர். இக்குறைபாட்டினை வயதுவந்தோர்க்கான வலுவான செயல்பாடுகளின் மூலமாகவே நாம் சரிசெய்ய முடியும். வயதுவந்தோர் கல்வியை பயனுள்ளதாகவும் அனைவராலும் அணுகத்தக்கதாகவும் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? வயதுவந்தோர்க்கான பாடத்திட்டத்தினை உருவாக்குதல்: மாறுபட்ட தன்மையுடைய வயதுவந்தோரின் கல்வித்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான பயனுள்ள சிறப்பான பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். வயதுவந்தோரின் வாழ்விடத்தையும் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அக்கல்வித்திட்டமானது கீழ்கண்ட ஐந்து வகை செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். - அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு; - வாழ்க்கைக் கல்வி (நிதி, கணினி, வணிகம், சுகாதாரம், குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்ப நலன் சார்ந்து); - தொழிற்கல்வி (வாழ்விடத்திலேயே வேலைவாய்ப்பினை அடையும் நோக்குடன்); - தொடர் கல்வி (கலை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, விளையாட்டு, மனமகிழ் செயல்பாடுகள் உள்ளிட்ட வயது வந்தோர்க்கு ஆர்வமும் பயனும் உள்ள துறைகள்; குறிப்பாக அடிப்படை வாழ்க்கைக்கான திறன் மேம்பாடு) வயதுவந்தோர் கல்விக்கான பாடத்திட்டமானது தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின்(NCERT) புதிய மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பினரால் உருவாக்கப்படும். எழுத்தறிவு எண்ணறிவு தொழிலறிவு அடிப்படைக்கல்வி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்பாடத்திட்டமானது பள்ளிக்குழந்தைகள் மற்றும் வயதுவந்தோரின் கற்றல் முறைகளில் உள்ள வித்தியாசங்களை மனதில் கொண்டு கவனமாகத் தயாரிக்கப்படும். புதிய மற்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள பிற அரசு உட்கட்டமைப்புகளை பகிர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அனைவராலும் அணுகக்கூடியதாக வயதுவந்தோர் கல்வியை மாற்றுதல்: போதுமான மற்றும் பொருத்தமான உட்கட்டமைப்பு வயதுவந்தோர் கல்வியின் ஓர் அடிப்படை அம்சமாகும். பள்ளிக்கட்டிடங்கள் (மாலை நேரங்கள் மற்றும் வார இறுதிகள்) மற்றும் பொதுநூலகங்களை இதற்காகப் பயன்படுத்தலாம். இவற்றில் தொழில்நுட்ப வசதிகளை அரசு ஏற்படுத்தலாம். பள்ளி, வயதுவந்தோர் மற்றும் தொழிற்கல்விக் கூடங்களைப் பகிர்ந்து பயன்படுத்தும் போது அது மனித வளத்தையும் சிறப்பான முறையில் பகிர்ந்து பயன்படுத்த வகை செய்கிறது. மேலும் இம்மூன்று துறைகளுக்குள்ளும் உரையாடல்களையும் ஒருங்கிணைவுகளையும் இது சாத்தியமாக்குகிறது. இதன்பொருட்டு பள்ளிக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக வயதுவந்தோர் கல்வி மையங்கள் மாற்றப்படும். ஏற்கனவே செயல்பட்டுவரும் வயதுவந்தோர் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்படுவதுடன் புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மையங்கள் பள்ளிகள் நூலகங்கள் மற்றும் தொழிற்கல்வி மைய வளாகங்களில் துவங்கப்படும். திறன்வாய்ந்த பயிற்சியாளர்களை வயதுவந்தோர் கல்விக்காக உருவாக்குதல்: பாடத்திட்டங்களை வயதுவந்தோர் திட்டத்தின் பயனாளிகளுக்கு முறையான வகையில் கொண்டு சேர்க்க திறன்வாய்ந்த பயிற்சியாளர்கள் குழுவானது இன்றியமையாததாகும். தேசியக் கல்வித்திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து வகையான கல்வித்திறன்களையும் சரியான முறையில் கற்பிப்பிப்பதற்கும் தன்னார்வலர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கும் வயதுவந்தோர் கல்வி மையங்களை நிர்வகிப்பதற்குமான பயிற்சி தேசிய/மாநில/மாவட்ட அளவிலான கருத்தாளர்களால் இப்பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வயதுவந்தோர் கல்விப் பயிற்றுநராகவோ தனிப்பயிற்சியாளராகவோ செயல்பட வாய்ப்பு வழங்கப்படும். நாட்டின் முன்னேற்றத்திற்கான இவர்களது சேவை அங்கீகரிக்கப்படும். பங்களிப்பை உறுதி செய்தல்: வயது வந்தோர் கல்விக்கான தேவையும் ஆர்வமும் இருக்கும் பொதுமக்களிடையே வயதுவந்தோர் கல்விக்காக அவர்கள் பகுதியில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பங்கேற்பு உறுதிசெய்யப்படுதல் வேண்டும். பள்ளிசெல்லாக் குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியாளர்கள் வயது வந்தோர் கல்வியில் பயன்பெறவும் கற்பிக்கவும் ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்த தகவல்களையும் சேகரிக்க வேண்டும். இவர்கள் குறித்த தகவல்களை தங்களது பகுதியில் செயல்படும் வயதுவந்தோர் கல்வி மையத்திற்குத் தெரிவிக்கலாம். மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற உள்ளூர் அமைப்புகள் மூலமாகவும் வயதுவந்தோர் கல்விச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படலாம். சமூகப் பங்கேற்பு: வயதுவந்தோர் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டுவதற்கு உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களது பங்கு இன்றியமையாததாகும். வயதுவந்தோர் கல்விப் பயிற்றுநராகச் செயல்பட தகுதியும் விருப்பமும் உடைய தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்கப்பட்டு தேசத்திற்கான அவர்களது சேவை அங்கீகரிக்கப்பட வேண்டும். எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் பிற வயதுவந்தோர் பாடத்திட்டங்களை வயதுவந்தோர் கல்வி அமைப்பின் ஒருங்கிணைப்பளர்களின் வழிகாட்டுதலின்படி இவர்கள் கற்பிக்கலாம். அரசானது தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்படுதல் மற்றும் அவர்களுக்கு அத்தியாவசியமான உதவிகளை நல்குதல் மூலம் வயதுவந்தோர் கல்வியில் 100% இலக்கை எட்டப் பாடுபடும். அத்தியாயம் 2ல் கூறப்பட்டுள்ளபடி, கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியனும் கல்வியறிவு பெறாத ஒரு இந்தியனுக்குக் கற்பிக்க முடிவு செய்தால் நாட்டின் நிலையையே அது புரட்டிப் போடும். இம்முயற்சியானது அதிக அளவில் ஆதரவளிக்கப்படும். அதிகத் திறனும் எழுத்தறிவும் கொண்ட இந்திய மனித ஆற்றலானது நாட்டின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் வியக்கத்தக்க வகையில் பங்களிக்கும். இதுவே ஒவ்வொரு இந்தியரின் முதன்மையான நோக்கமாக இருத்தல் வேண்டும். வயது வந்தோருக்கான தேசிய அளவிலான பாடத்திட்டமானது எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, வாழ்க்கைத்திறன்கள், தொழிற்திறன்கள், அடிப்படைக் கல்வி மற்றும் தொடர் கல்வி போன்ற ஐந்து விரிவான கருதுகோள்களின் அடிப்படையில் உருவாக்கப்படும். 21.1. வயதுவந்தோர் கல்விக்கான பாடத்திட்டத்தினை உருவாக்குதல் 21.1.1. வயது வந்தோர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் ஆதார வளமையங்களை நிறுவுதல்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(NCERT) கீழ் தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வயதுவந்தோர்க்கான தேசிய பாடத்திட்டம்(NCFAE) உருவாக்கப்படும். இவ்வமைப்பு வயதுவந்தோர் கல்விக்கான தரமான கற்றல் கற்பித்தல் கையேடுகள் உருவாக்கத்திலும் வயதுவந்தோர் கல்விச் செயல்பாடுகளை திட்டமிடுதல் செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தலிலும் துணை நிற்கும். வயதுவந்தோர் கல்விக்கான துறை ஒன்று ஒவ்வொரு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும்(SCERT) மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்திலும்(DIET) ஏற்படுத்தப்பட்டு வயதுவந்தோர் உள்ளடக்கிய கல்வி(CIAE) செயல்பாடுகளின் உள்ளூர் தேவைகளுக்கும் மாறுபட்ட தன்மைகளுக்கும் இணங்கிய வகையில் மாநில பாடத்திட்டம் தயாரித்தல், தொடர்புடைய கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல், மற்றும் மாநில மாவட்ட அளவில் திட்டமிடல் செயல்படுத்தல் கண்காணித்தல் பணிகளை மேற்கொள்ளும். 21.1.1.378 21.1.2. வயதுவந்தோர் கல்விக்கான தேசிய பாடத்திட்டம்: திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டமானது வயதுவந்தோர் உள்ளடக்கிய கல்வி அமைப்பின்(CIAE) கீழ் பின்வரும் ஐந்து கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். (i)எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு; (ii) அத்தியாவசிய வாழ்க்கைத்திறன்கள்; (iii) தொழிற்திறன்கள்; (iv) அடிப்படைக் கல்வி மற்றும் (v) தொடர்/உயர் கல்வி. மனிதவள மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் 2011 ஆம் ஆண்டில் வயதுவந்தோர் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அப்பாடத்திட்டமானது தற்காலத்தின் தொழில்நுட்ப மற்றும் கணிணிமயமாக்கலின் தேவைகளுக்கேற்ப, வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் வழிகாட்டுதல் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் அவ்வப்போது மேம்படுத்தப்படும். பாடத்திட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் உள்ளூர் தேவைகளுக்கேற்ப மாற்றப்படுவதற்கும் ஒவ்வொரு ஊரின் கலை இலக்கிய மொழி கலாச்சார பண்பாட்டு அறிவுசார் பழக்கவழக்கங்களை உள்ளடக்குவதற்குமான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். அ. அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு: இத்தலைப்பின் கீழான பாடத்திட்டமானது துவக்கத்தில் அடிப்படை எண் மற்றும் எழுத்துருக்களை வாசிக்கவும் எழுதவும் கற்பித்து அடையாளக் குறிகள், விலைப்பட்டியல்கள், ரசீதுகளை வாசித்தல் படிவங்கள் நிரப்புதல், கடிதங்களில் முகவரி எழுதுதல் போன்ற தினசரி வாழ்வின் செயல்பாடுகளை மேற்கொள்ள வயதுவந்தோரைத் தயார்படுத்துகிறது. அடுத்த கட்டமாக அறிவுரைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், கையேடுகள், பத்திரிக்கைகள் புத்தகங்களை வாசிக்கவும் கடிதங்கள் கள ஆய்வுப் படிவங்களை நிரப்பவும் தக்கவாறு அடிப்படைக் கணித மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் கற்பிக்கப்படும். முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கான அடிப்படைக்கற்பித்தல் முறையிலிருந்து வேறுபட்டு, வயது வந்தோர் கல்வியானது மாபெரும் இலக்கியங்கள், குழந்தை வளர்ப்புக் கதைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும், குழந்தை வளர்ப்பு, குழந்தைத்திருமணம், பெண் உரிமை மற்றும் மதுப்பழக்கம் போன்ற அன்றாட வாழ்வின் பிரச்சனைகள் குறித்து விழிப்பூட்டும் படியான உரையாடல்களுக்கு வாய்ப்பளிப்பதாகவும் வடிவமைக்கப்படும். ஆ. அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்கள்: நவீன வாழ்க்கை முறைக்குத்தேவையான அடிப்படைத் திறன்களை புதிதாக எழுத்தறிவு பெறுவோர்க்கு கற்பித்தலே இதன் நோக்கமாகும். வங்கிக்கணக்கு துவங்கி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளல்; கணினி மற்றும் நவீன தொடுதிரை தொலைபேசிகளை உபயோகித்து மின்னஞ்சல் அனுப்பவும் திறந்தநிலைப்பள்ளி நிறுவனத்தில்(NIOS) கற்கவும், தொழில்களை மேற்கொள்ளவும் அறிந்திருத்தல்; இணையத்தின் பாதகங்களிலிருந்து குழந்தைகளையும் இளையவர்களையும் தற்காத்துக் கொள்ளல்; குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் மற்றும் 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கிடையே குழந்தை வளர்க்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளல்; குடும்ப மற்றும் தொழில் சார்ந்த கணக்குகளை பராமரித்தல் மற்றும் குடும்ப நலம் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. உள்ளூர் சார்ந்த சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் குறிப்பாக கவனத்தில் எடுத்துக்கொண்டு இப்பாடத்திட்டம் தயாரிக்கப்படும். இ. அடிப்படைக் கல்வி: அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைத் தாண்டி தொடக்க நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பாடத்திட்ட வரையறைகளுக்கு ஈடான கல்வியை முறையான பள்ளிகள் அல்லது திறந்த நிலைப்பள்ளிகள் மூலமாக புதிய வயதுவந்தோர் கல்வி பயனாளர்களுக்கு அளிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். தேசிய எழுத்தறிவு இயக்கத்தினால்(NLM) நிர்ணயிக்கப்பட்டுள்ள தரம்1, தரம் 2, மற்றும் தரம் 3 தேர்ச்சி நிலைகளை முறையான பள்ளியில் பெறப்படும் தொடக்க நிலை நடுநிலை மற்றும் மேல்நிலைக் கல்வித் தகுதிக்கு இணையாகக் கருதுதலும் அதன்படி சான்றிதழ் வழங்குதலும் இத்திட்டத்தின் அடிப்படையாகும். P21.1.2.379 ஈ. தொழிற்கல்வித் திறன்களை வளர்த்தல்: வயதுவந்தோர் கல்வி பயனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதலும் வருமானம் ஈட்டும் திறனை அதிகரித்தலும் இத்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும். தச்சு, குழாய்ப்பராமரிப்பு, மின்கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, தையல் மற்றும் பூ வேலைகள், அழகுக்கலை, சுகாதாரம், ஆடை வடிவமைப்பு, கணினி, மோட்டார் வாகன பழுதுபார்ப்பு, விவசாயம், குடிசைத் தொழில் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல், துணி நெய்தல், கட்டுமானம், போக்குவரத்து, கணக்கு பராமரிப்பு, புத்தக பாதுகாப்பு, உணவுத் தயாரிப்பு போன்ற துறைகள் சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சிகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். உள்ளூர் தேவைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கள ஆய்வின் அடிப்படையில் எந்தத் துறை சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்படும். உ. தொடர் கல்வி: அடிப்படை எழுத்தறிவு மற்றும் வாழ்க்கைத் திறன் குறித்த கற்றலைத் தாண்டி பிற துறைகள் குறித்து வாழ்க்கை முழுவதும் கற்பதற்கான வாய்ப்புகளை வயதுவந்தோர் கல்வி உறுப்பினர்/பயனாளிகளுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சுகாதார விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு; நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் சேகரிப்பு; சுத்தம்; கல்வி; AIDS/STD; நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு; சட்ட அறிவு; சமகால சமூகப் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள்; இலக்கியம் குறித்த விவாதங்கள்; விளையாட்டு கலாச்சார மற்றும் மனமகிழ் செயல்பாடுகள்; இசைப் பயிற்சி; தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்கள் குறித்த காட்சிப்படுத்தல்: தேர்தல் மற்றும் வாக்களித்தல் குறித்த அறிவு மற்றும் இன்னபிற உள்ளூர் தேவைகள் சார்ந்த தலைப்புகளில் குறுகிய காலப் பயிற்சிகள் அளிப்பது இத்திட்டத்தின் அங்கமாகும். 21.1.3. தரமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்: வயதுவந்தோர் எழுத்தறிவு மற்றும் வாழ்க்கைத் திறன்களுக்கான பாடப்புத்தகங்கள், கையேடுகள் மற்றும் பிற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் CIAE அமைப்பினால் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தினரால் தன்னார்வலர்களின் உதவியோடு அந்தந்த மாநில மொழிகளில் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடப்புத்தகங்களைப் போலவே உற்பத்திச் செலவிற்கே இக்கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் விற்பனைக்கு வழங்கப்படும். பள்ளிப்பாடப்புத்தகங்களும் கூட அச்சிட்ட விலைக்கே வயது வந்தோர் கல்வி பயனாளிகளுக்கு வழங்கப்படும். 21.1.4. தரம் நிர்ணயித்தலும் கற்றல் அடைவுகளை மதிப்பிட்டு சான்றிதழ் வழங்குதலும்: தேசிய எழுத்தறிவு இயக்கம், சக்‌ஷார் பாரத் இயக்கம், திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் போன்ற அமைப்புகளால் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, திறன் மேம்பாடு போன்ற பாடங்களுக்கு நிறுவப்பட்டுள்ள தர நிர்ணயங்களும் மதிப்பீட்டுத் தாள்களும் CIAE மற்றும் மாநில கல்வி நிறுவனங்களால் வயதுவந்தோர் கல்வி பயனாளர்களை மதிப்பிடுவதற்குத் தக்கவாறு மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு அதனடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும். 21.2. வயது வந்தோர் கல்வி அனைவராலும் அணுகக்கூடியதாகவும் சிறந்த உட்கட்டமைப்பை கொண்டிருப்பதாகவும் இருப்பதை உறுதி செய்தல்: 21.2.1. பொருத்தமான உட்கட்டமைப்பு மற்றும் ஆதார வளமையங்களை உருவாக்குதல்: வயதுவந்தோர் கல்வியை அனைவராலும் அணுகக்கூடியதாக ஆக்குவதற்கும் 100 % எழுத்தறிவை விரைவில் அடைவதற்கும் ஏதுவாக முறையான நிறுவனங்களும் உட்கட்டமைப்புகளும் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும். உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கற்றல் உபகரணங்கள், மற்றும் மனித வளத்தை பள்ளிகள் தொழிற்கல்விக் கூடங்கள் மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தினிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் செலவீனங்களை முறைப்படுத்துவதற்கும் இம்மூன்று அமைப்புகளினிடையேயான ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கும் வழி உண்டாகும். பள்ளி வளாகங்களுக்குள்ளேயே வயது வந்தோர் மையங்கள் அமைக்கப்பட்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் மனிதவளம் பகிர்ந்து கொள்ளப்படலாம். ஏற்கனவே இயங்கிவரும் பள்ளிகளும் நூலகங்களும் மத்திய மற்றும் மாநில அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு குழந்தைகள் மற்றும் வயதுவந்தோரின் மாறுபட்ட, உள்ளூர் சார்ந்த தேவைகள் பூர்த்திசெய்யப்படும். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் செறிவான, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வயதுவந்தோருக்கான திறன் வளர்ப்பு மையங்கள் (AESDC) மற்றும் ஜன்சிக்‌ஷான் சந்தாஸ் மேம்படுத்தப்படுவதோடு வாய்ப்புள்ள போது பள்ளி நூலக தொழிற்கல்வி வளாகங்களில் புதிய மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முறையாகப் பகிர்ந்து கொள்ளப்படும். அனைத்து வயது வந்தோர் கல்வி மையங்களுக்கும் பயிற்றுநர்களுக்குத் தேவையான புத்தகங்கள் பயிற்சிக்கையேடுகள் உள்ளிட்ட தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும். உயர்தர பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிக்கையேடுகள் விருப்பமுள்ள வயதுவந்தோர்க்கு தயாரிப்பு விலையிலேயே வழங்கப்படும். 21.2.2. கற்றலுக்கான பல்வேறு வழிமுறைகள்: பல்வேறு வகையான முறையான மற்றும் முறைசாராக் கல்வித் திட்டங்களின் (ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர், திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்வித்திட்டங்கள், நிகழ்நிலைப் புத்தகங்கள் மற்றும் செயலிகள்) வாயிலாக நாட்டின் பொருளாதார மற்றும் திறன் தேவைகளுக்கேற்றவாறு இளைஞர்களையும் வயதுவந்தோரையும் தயார்படுத்த முடியும். குறிப்பாக தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டு விருப்பமுள்ளோர்க்கு வெவ்வேறு வகையான படிப்புகளை (அடிப்படை, தொழில் மற்றும் தொடர் கல்வி தொடர்புடைய) தொலைநிலைக் கல்வி வாயிலாகத் தேர்ந்தெடுத்துக் கற்க வகை செய்யப்படும். தேசிய தொலைநிலைக் கல்வி (NIOS) மையத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் கீழ் வெவேறு மாநில மொழிகளிலான பாடத்திட்டங்கள் மாநில தொலைநிலைக் கல்வி மையங்களால் உருவாக்கப்படும். வயதுவந்தோர் கல்வி மையங்களில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால் பல்வகைப்பட்ட மின்நூல்கள் மற்றும் செயலிகள் வடிவமைக்கப்பட்டு வயதுவந்தோர் கல்வி மையக் கணினிகள் மற்றும் பயனாளிகளின் அலைபேசிகளின் வாயிலாகக் கற்றல் நிகழும். அத்தகைய மின்நூல்கள் மற்றும் புதிய செயலிகளை அனைத்து இந்திய மொழிகளிலும் தரமாக விலைகுறைவாக எளிதாக பதிவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைப்பதற்கான போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மின்னூல்கள் மற்றும் செயலிகள் மூலமாக எழுத்தறிவையும் கற்றல் வாய்ப்புகளையும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். 21.3. வயதுவந்தோர் கல்விச் செயல்பாடுகளுக்காக தன்னார்வலர் படை ஒன்றைப் பயிற்றுவித்தல் 21.3.1. வயதுவந்தோர் கல்வி மையங்களுக்கான மேலாளர்களையும் பயிற்றுநர்களையும் உருவாக்குதல்: வட்டாரக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்(BIET), மாவட்டக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்(DIET), வட்டார வளமையம்(BRC), குறுவளமையம்(CRC) போன்ற மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கல்வி நிறுவனங்களில் பயிற்சிகள் வழங்குவதன் மூலம் சான்றிதழும் தகுதியும் உடைய மேலாளர்களும்(மேலாண்மை மற்றும் பயிற்சிக்காக) பயிற்றுநர்களும்(பயிற்சிக்காக) வயதுவந்தோர் கல்வி மையங்களை மேலாண்மை செய்வதற்கும் பாடங்கள் கற்பிப்பதற்கும் ஏதுவாக உருவாக்கப்படுவார்கள். உள்ளூரில் இருக்கும் கல்வித்தகுதியுடைய தன்னார்வலர்களே பயிற்றுநர்களாகச் செயல்படுவார்கள். சமூகப் பணியாளர்கள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் கல்வித்தகுதியுடைய தன்னார்வலர்களைக் கண்டறிந்து 100 % எழுத்தறிவு என்னும் நோக்கத்தை அடையும் முயற்சியில் முக்கியப்பங்காற்றுவர். இப்பயிற்றுநர்களுக்கு மாநில அரசால் சான்றிதழ்கள்(அவர்களது பணியின் தன்மை, பயிற்றுவித்த மொத்தக்காலம் மற்றும்/அல்லது அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பயனாளர்களது எண்ணிக்கையைக் குறிப்பிட்டு) வழங்கப்படும். வயதுவந்தோர் கல்விப் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியவையாக இருக்கும்: வயதுவந்தோர் கல்வி மையங்களையும் பயனாளிகளையும் ஒருங்கிணைத்தல்; சமூகப் பணியாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து செயல்படுதல்; வயதுவந்தோருக்கான தேசிய பாடத்திட்டம்; எழுத்தறிவு மற்றும் வயதுவந்தோர் கல்வி பாடத்திட்டத்தை வகுப்பறையில் பயிற்றுவித்தல்; ஓர் ஆசிரியர்- ஒரு மாணவர் முறையில் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்; பாடப்புத்தகங்கள், கையேடுகள், நவீன கைபேசி மற்றும் பிற கற்பித்தல் உபகரணங்கள்; மற்றும் தேர்வு/மதிப்பீட்டிற்கான வழிமுறைகள். வயதுவந்தோர் கல்வி மையங்களுக்கான மேலாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் அடங்கிய ஓர் குழுவும், தேசிய வயதுவந்தோர் கல்வி பயிற்றுநர் திட்டத்தின் கீழ் ’ஓர் ஆசிரியர்-ஒரு மாணவர்’ முறையில் கற்பிப்பதற்கான ஒரு மிகப்பெரிய அணியும் வயதுவந்தோர் கல்வியை செயல்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படும். 21.3.2. புதிதாகத் துவங்கப்பட்டுள்ள தேசிய வயது வந்தோருக்கான ஆசிரியர் திட்டத்தின்(NATP) கீழ் ‘ஓர் ஆசிரியர்- ஒரு மாணவர்’ வகையில் கற்பிக்க ஒரு மாபெரும் அணியை உருவாக்குதல்: பள்ளிகளுக்கான தேசிய ஆசிரியர் அமைப்பைப்(NTP) போல தேசிய வயதுவந்தோருக்கான ஆசிரியர் அமைப்பு(NATP) ஒன்றின் கீழ் கல்வியறிவு பெற்ற தகுதியுடைய ஆசிரியர்கள் பணியிலமர்த்தப்பட்டு சக வயதுவந்தோருக்கு எழுத்தறிவு மற்றும் அடிப்படைக் கல்வியைக் கற்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தேசிய வயதுவந்தோருக்கான ஆசிரியர் அமைப்பின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் வயதுவந்தோர் கல்வி மையத்தின் கீழ் பணியாற்றுவர். NATPன் கீழ் கல்வியறிவு பெற விரும்புவோரோடு இவர்கள் இணைக்கப்படுவர். இவர்களுக்கு மாநில அரசால் சான்றிதழ்கள்(அவர்களது பணியின் தன்மை, பயிற்றுவித்த மொத்தக்காலம் மற்றும்/அல்லது அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பயனாளர்களது எண்ணிக்கை) வழங்கப்படும். 21.4. வயது வந்தோர் கல்வியில் பரவலான பங்கேற்பை உறுதி செய்தல்: 21.4.1. சமூகத்தில் உள்ள வயது வந்தோர் கல்வி பயிற்றுநர்கள் மற்றும் பயனாளர்களைக் கண்டறிந்து வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் இணைத்தல்: பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் பணியின் (P3.7 மற்றும் P3.8ல் குறிப்பிட்டுள்ளபடி) ஊடுபாவாக வயதுவந்தோர் கல்வித்திட்டத்திற்கான பயனாளிகளையும் பயிற்றுநர்களையும் கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்படும்.: பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூகப் பணியாளர்கள் (தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள ஜில்லா சக்‌ஷர்த சமிதி அமைப்புகளின் துணையோடு) வயதுவந்தோர் கல்வியின், குறிப்பாக எழுத்தறிவு, மூலம் பயன்பெற வாய்ப்புள்ளவர்களது விவரங்களையும் சேகரிப்பர். இவர்களது விவரங்கள் வயதுவந்தோர் கல்வி மையங்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் தொடர்புடைய வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் இணைக்கப்படுவர். பள்ளிக்குழந்தைகளின் கற்றலில் உதவும்படியாக அவர்களது பெற்றோருக்கு எழுத்தறிவு மற்றும் அடிப்படைக்கல்வி அளிப்பது குறித்து இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் எழுத்தறிவற்றவர்களாக இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை வயது வந்தோர் திட்டத்தில் சேர்ப்பதன் வாயிலாகவோ NTP மற்றும் RIAP போன்ற குறைதீர் கற்றல் முடித்து முறையான பள்ளிகளில் மீண்டும் சேர்ப்பதன் வாயிலாகவோ கல்வி அளிக்கப்படும். சமூகப் பணியாளர்கள், சமூக அமைப்புகள், பொதுச்சேவை அறிவிப்புகள் மூலமாகவும் ஆர்வமுள்ள கற்ற வயதுவந்தோர் வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாகவும் ஆசிரியர்களாகவும் சான்றிதழ் பெற்ற பயிற்றுநர்களாகவும் சேர்க்கப்பட்டும் வயதுவந்தோர் கல்வி மையத்தின் நோக்கமான 100% எழுத்தறிவு என்னும் இலக்கை அடைய உதவுவர். சமூகத்தின் ஒவ்வொரு கற்ற உறுப்பினரையும் எழுத்தறிவற்ற ஒரு உறுப்பினருக்கு, வயதுவந்தோர் கல்வி மேலாளராகவோ, ஆசிரியராகவோ, ‘ஓர் ஆசிரியர்-ஒரு மாணவர்’ திட்டத்தில் பணியாற்றுவதன் வாயிலாகவோ கல்வியளிக்க வைப்பதன் மூலம் நாட்டின் எழுத்தறிவின்மையைப் போக்கலாம். 21.4.2. மாநில மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து வயதுவந்தோர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துதல்: P21.1.2ல் குறிப்பிட்டுள்ள ஐந்து தலைப்புகள் சார்ந்த கல்வித்திட்டங்கள் பல்வேறு வகையான மாநில மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்போடு வயது வந்தோர் கல்வியின் கீழ் செயல்படுத்தப்படும். சமூக அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள், உள்ளூர் தொழில் நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வயதுவந்தோர் கல்விக்கான பயிற்றுநர்கள் மற்றும் பயனாளிகளைக் கண்டறிவதன் வாயிலாகவும் உள்ளூர் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களைத் திட்டமிட்டு வடிவமைக்க உதவுவதன் வாயிலாகவும் எழுத்தறிவினமையைப் போக்க தங்களது பங்களிப்பை நல்க முடியும். குறிப்பாக “Fund for Literacy” எனப்படும் எழுத்தறிவிற்கான நிதி ஆதாரம் வயதுவந்தோர் கல்வியில் ஈடுபட்டுள்ள மாநில அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் பொருட்டு தோற்றுவிக்கப்படும். ’பொது’(Formula grant) மற்றும் ’தனி’(discretionary grant) என இரண்டு வகையாக நிதி விடுவிக்கப்படும். பொது வகை நிதியானது வயதுவந்தோர் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு நேரடியாக விடுவிக்கப்படும். தனி வகை நிதியானது வயது வந்தோர் கல்வித்திட்ட பயனாளிகளின் உள்ளூர் சார்ந்த தேவைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப விடுவிக்கப்படும். இத்தனி நிதியில் ஒரு பங்கானது வயது வந்தோர் கல்வியை சிறப்பாகக் கொண்டுசேர்க்க முயலும் மையங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப மற்றும் பிற வசதிகளைச் செய்து கொடுக்க உபயோகப்படுத்தப்படும். சமூகத்தின் ஒவ்வொரு கற்ற உறுப்பினரையும் ஒரு எழுத்தறிவற்றவருக்கு வாசிக்கக் கற்றுக் கொடுக்க ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முதன்மைக் குறிக்கோளாகும். 21.4.3. உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு: உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது சமூக சேவை முன்னெடுப்புகள் வாயிலாக வயதுவந்தோர் கல்விக்கு துணை நிற்கும். உயர்கல்வி நிறுவன மாணவர்கள் சமூக சேவையாகவோ தங்கள் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாகவோ வயதுவந்தோருக்கான கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். வயதுவந்தோர் கல்வி குறித்த ஆய்வுகளில் ஈடுபடவும் வயதுவந்தோருக்கான துறைகளை ஏற்படுத்தவும் உயர்கல்வி நிறுவனங்களில் திட்டமிடப்படும். தொலைநோக்காக, 100 % எழுத்தறிவும் பள்ளி அளவிலான அனைவருக்குமான கல்வியும் சாத்தியப்படுத்தப்பட்ட பின்னர் வயதுவந்தோர் கல்வியின் தொழிற்கல்வி மற்றும் தொடர்கல்வித்திட்டங்கள் பல்கலைக்கழகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும். 21.4.4. பெண்கள் மற்றும் சமூக பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்: ஒட்டுமொத்த எழுத்தறிவற்றோர் எண்ணிக்கையில் பெண்கள், சமூக பொருளாதார அடிப்படையில் பிந்தங்கியோர் மற்றும் பிற சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வயதுவந்தோர் கல்வியின் அனைத்து செயல்பாடுகளும் மேற்கண்ட பிரிவினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதாக வடிவமைக்கப்படும். கிராமப்புறங்கள் மற்றும் எழுத்தறிவில் பிந்தங்கியுள்ள மாநிலங்கள் எழுத்தறிவில் சீரான முன்னேற்றம் அடைவதற்கு ஏதுவாக சிறப்பு கவனம் அளிக்கப்படும். 21.4.5. எழுத்தறிவு இயக்கம் குறித்த விழிப்புணர்வை பரந்துபட்ட அளவில் ஏற்படுத்துதல்: 100% எழுத்தறிவு என்னும் தேசத்தின் இலக்கு குறித்தும் அதுதொடர்பாக தன்னார்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் வேண்டும். மாபெரும் பொதுச்சேவை அறிவிப்புகள், ஊடகங்கள் வாயிலான பிரச்சாரங்கள் மற்றும் வயதுவந்தோர் கல்வி மையங்களுக்கும் பொதுமக்களுக்குமிடையேயான நேரடி உரையாடல்கள் போன்றவற்றின் மூலம் அத்தியாயம்2ல் விவாதிக்கப்பட்டுள்ளவாறு இளைஞர் எழுத்தறிவிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வயதுவந்தோர் கல்வி மற்றும் எழுத்தறிவுத் திட்டங்களில் சேர்க்கையை அதிகப்படுத்துதலும் தன்னார்வலர்களை ஆசிரியர்களாக NATP, RIAP, NTP உள்ளிட்ட அமைப்புகளில் பள்ளி மற்றும் வயதுவந்தோர் கல்விக்காக இணைத்தலும் இதன் முக்கிய நோக்கமாகும். கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு குடிமகனும் எழுத்தறிவற்ற ஒரு குடிமகனுக்கேனும் வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்னும் திட்டமானது அதிகம் பரப்பப்பட்டு அதீத ஆதரவுடன் செயல்படுத்தப்படும். 21.4.6. வயதுவந்தோர் கல்விக்கான ஆதார மற்றும் வள மையங்களின் மறுமலர்ச்சி: 2030ஆம் ஆண்டிற்குள் 100% எழுத்தறிவை அடைதல் என்னும் நோக்கத்தினை செயல்படுத்தும் விதமாக மத்திய மாநில மற்றும் உள்ளூர் அளவில் வயது வந்தோர் கல்விக்கான மாநில இயக்ககங்கள் மற்றும் ஜிட்டா சக்‌ஷர்டா சமிதிகள் மறு நிர்மாணம் செய்யப்பட்டு வயதுவந்தோர் கல்வி தொரர்பான அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் மையங்களாக அவை இயங்கும். இந்திய மொழிகளை ஊக்குவித்தல் குறிக்கோள்:அனைத்து இந்திய மொழிகளும் பாதுகாப்பு, வளர்ச்சி, மற்றும் துடிப்புடன் இருப்பதை உறுதி செய்தல். உலகின் மிக வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமான மொழிகளுள் இந்திய மொழிகள் சில, உலகின் சிறந்த இலக்கியம் மற்றும் அறிவைக் கொண்டிருக்கின்றன. அவை உண்மையாகவே செயல்படும் மொழிகள். கோடிக்கணக்கில் மக்கள் பேசவில்லை என்றாலும் லட்சக்கணக்கில் பேசப்படும், நூற்றாண்டுகளாக இல்லையென்றாலும் முழுப்பிராந்தியங்கள் மற்றும் தலைமுறைகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. பழங்குடி மொழிகள் உட்பட, அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொருத்தமான மரியாதை கொடுக்கப்பட்டால் மட்டுமே ஒவ்வொரு பிராந்தியத்தின் மரபுகளையும், பண்பாட்டையும் பாதுகாக்க முடியும். பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் உண்மையான புரிதலை ஏற்படுத்த முடியும். தொழில்நுட்பரீதியில் மேம்பாடு அடைந்த நாடுகள் (தென்கொரியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து போன்றவை) சர்வதேச மொழியினுள் அவர்களின் மொழிகளை நேர்த்தியாகப் பாதுகாத்துள்ளது போல இந்தியாவில் இந்திய மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள பண்பாடு, பாரம்பரியம், கல்வி, இலக்கியம் ஆகியவற்றால் இந்தியா அளப்பரிய களஞ்சியமாக உள்ளது. மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாக உள்ள பாடப்புத்தகங்கள் தற்போது அவர்களின் தாய்மொழிகளில் இல்லாதது மாணவர்களுக்கு இழப்பாகும். பரப்புவதற்கான சரியான அணுகுமுறை இல்லாததால் சில பள்ளிகள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களிடம் மட்டுமே இந்திய மொழிகளில் உள்ள அசல் பாடநூல்கள் மற்றும் கல்விசார் வேலைகள் ஆகியவற்றைத் தங்கள் மொழிகளில் அணுகமுடிகிறது . பெரும்பாலான மாணவர்கள் சரியான முறையில் வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வீட்டில் / உள்ளூரில் உள்ள சிந்தனை, ஆராய்ச்சி, மற்றும் விளக்கங்கள் ஆகியவற்றைச் செய்ய முடிவதில்லை. மொழிபெயர்ப்பு முக்கியம் என்றாலும் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விசார் பொருட்கள் ,கல்வி சம்பந்தமான வேலைகளில் அசல் பொருட்களை உருவாக்க வேண்டியது அவசியமானதும் அவசரத் தேவையும் ஆகும். அசல் பாடப்புத்தகங்கள், கதைகள், மற்றும் இந்திய மொழிகளில் உள்ள மற்ற கல்விசார் பொருட்கள் ஆகியவற்றின் மாபெரும் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதற்கான செயல்முறைகளைத் தனிநபர்களிடம் விட்டுவிடக் கூடாது. அவை அரசு மற்றும் மனிதநேய முயற்சிகள் மூலம் நிறுவனமயமாக்கப்பட்டதாக இருக்கவேண்டும். மேலும்,இந்திய மொழிகளில் அறிவு வளர்ச்சி சார்ந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போதுமான சொல்லகராதி இருக்கவேண்டும். அப்போதுதான் உலகெங்கிலும் இருந்து அறிவுவளர்ச்சி சார்ந்த முன்னேற்றங்களைப் பெறமுடியும். இவற்றை (குறைந்தபட்சம்) எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளுக்காவது ஒருங்கிணைக்க வேண்டும். பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளில் மத்திய மற்றும் மாநில அளவிலான கல்வி நிறுவனங்கள், தங்கள் மொழிகளின் வளர்ச்சி வேகத்தை நிலைநிறுத்துதல், வளரவைத்தல் மற்றும் கவனத்துடன் உள்ளூர் கலாச்சாரக் கூறு வேறுபாடுகளும் பாதுகாக்கப்படுதலுக்கு உதவுகின்றன. இந்தியா அதன் மொழிகளின் வளர்ச்சி வேகத்தைக் காக்க அதே போல் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் உயர்கல்வி மட்டங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் மிகச்சிறந்த திட்டங்களை இந்திய மொழிகளில் வழங்கவேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்திய மொழிகளில் திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும். இதனால், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும்; இந்திய மொழிகளில் துறைகள் மற்றும் அவர்களது மிகச்சிறந்த இலக்கியமரபுகள் துறைகள் அமைக்கப்பட வேண்டும். இந்தத்துறைகள் மூலம் பயிற்சி பெறும் மொழி ஆசிரியர்கள் பின்னர் நாடு முழுவதும் பள்ளிகளில் பயன்படுத்தப் படுவார்கள். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்காக எங்கள் குழந்தைகள் தங்கள் சொந்தத்தாய் மொழியுடன் பிற இந்திய மொழிகளையும் நன்கு அறிய வேண்டும். இந்தச்சுழற்சி கல்வி அமைப்பின் பங்களிப்பின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வளர்ச்சி, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மரபுகள் அமைந்திருக்கும். நமது இன்றைய குழந்தைகளுக்காகவும் மற்றும் வருங்காலச் சந்ததியினருக்காகவும், இதற்குமுன் பல தசாப்தங்களாக இல்லாத வகையில், இந்திய மொழிகள் புத்துணர்ச்சியூட்டப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். பாலி, பாரசீக மற்றும் பிராகிருத மொழிகளுக்கான தேசிய நிறுவனம் அமைக்கப்படும். 22.1. உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதும் மிகவும் திறமையான மற்றும் வலுவான இந்திய மொழி மற்றும் இலக்கியத் திட்டங்கள் உள்ளனவாக இருக்க வேண்டும்: இந்திய மொழி திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள திறன்களை புதுப்பிக்கவும் ,பல்கலைக்கழகங்கள் ஆதரவு தர வேண்டும். மற்றும் இது வகைகள் 1, 2, 3 மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் (HEI- Higher Education Institutions)முழுவதும் நடக்கவேண்டும். அட்டவணை 8 மொழிகளில் மட்டுமே வரையறுக்கப்பட்டு விடுவதோடு இல்லாமல் அதன் தொடர்ச்சியாக பிறமொழிகளில்( எ.கா. பழங்குடிமொழிகள் ) உள்ள திறன்களும் புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும் அவை எங்கு பொருத்தமானது என்று கண்டறிந்து அனைத்து வலுவான இந்தியமொழி கூறுகளைச் செயல்படுத்த வேண்டும். .நான்கு ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பி.எட் திட்டங்களில் பள்ளிக்கல்விக்கான ஆசிரியர் கல்வியில் இந்த மொழிப்பாடத்திட்டங்களை போதுமானதாக ஒருங்கிணைக்க வேண்டும். 22.2. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம்: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் (HEI) உயர்தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் மூன்று இந்திய மொழிகளிலும், உள்ளூர் மொழியைக் கூடுதலாகவும் தெரிந்து பயிற்றுவிப்பவர்களாகக் கட்டாயமாக இருக்கவேண்டும் . அனைத்து மாநிலங்களிலும் பள்ளிவளாகம் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு ஆசிரியரையாவது ஒரு உள்ளூர் மொழியைத் தவிர பிற மொழி கற்பிக்கும் ஆசிரியராக நியமிக்க வேண்டும். 22.3. ̀ இந்தியமொழிகள், இலக்கியம், மொழிகல்வி, மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய கூறுகள் தொடர்பான ஆராய்ச்சி இந்திய மொழிகள், இலக்கியம், மொழிகல்வி, மற்றும் தொடர்புடைய கலாச்சார பகுதிகள் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை( NRF-National Research Foundation) போதுமான நிதியுதவி மூலம் ஆதரிக்கப்படும் இயற்பியல், வேதியியல், புவியியல், வானவியல் போன்ற அறிவியல் பாடங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளும் புதுப்பிக்கப்பட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்பசொற்கள் உருவாக்க அவசியமானதும் கட்டாயமானதுமாக உள்ள ஆணையம் அமைக்கப்படும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சொல்லகராதி உருவாக்கும் ஆணையம் கட்டாயமாக அமைக்கப்படும். (CSTT -Commission for Scientific and Technical Terminology) 22.4. பாரம்பரியமொழிகள்: பாரம்பரிய மொழிகள் மற்றும் இலக்கியங்கள் மேம்பாட்டுக்கான குறிப்பிட்ட சிறப்பான திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் (HEI- Higher Education Institutions) மூலம் கட்டாயம் உருவாக்கப்படும். இந்த நிறுவனங்கள் மூலம் தேசிய மொழிகள் உட்பட பாரம்பரிய மொழிகளை விரிவடையச் செய்வதுடன் பலப்படுத்தப்படும். பாலி, பாரசீக மற்றும் பிராகிருதம் ஆகியவற்றிற்கான ஒரு தேசிய நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. மொழிப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஆதரிக்கப்படும். அவை பல்கலைக்கழகங்களில் அமைந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்பட்டு, மொழிகளின் இலக்கியங்களை ஒப்பீட்டளவில் ஆய்வு செய்ய நிதியளிக்கப்படும் . 22.5. இந்திய மொழிகளில் சொல்லகராதி (சொற்களஞ்சியம்): அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சொல்லகராதி உருவாக்கும் ஆணையம் கட்டாயமாக அமைக்கப்பட்டு (CSTT -Commission for Scientific and Technical Terminology) இயற்பியல் ,வேதியியல், புவியியல், வானவியல் போன்ற அறிவியல் பாடங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாகவும் பரந்த அளவில் விரிவாக்கமும் புதுப்பிக்கப்பட்டதுமான சொற்களஞ்சிய அகராதி உருவாக்கப்படும். இதற்கு போதுமான பணியாளர், நிபுணர்களின் வழக்கமான கூட்டங்கள், மூலமும் அதன் குறிக்கோள்களை உறுதி செய்வதற்கு நிதி அளிக்கப்படும். இதே போன்ற சொற்களஞ்சிய அகராதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிராந்திய அமைப்புகள் / கல்விநிலையங்கள், CSTT (Commission for Scientific and Technical Terminology ) அமைப்புடன் ஒருங்கிணைந்து 22 அட்டவணை 8 மொழிகளுக்கு மாநில / யூ.டி. அளவுகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவவை மொழியியல் அறிஞர்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டு மொழியியலின் புதிய சொற்களை சேர்த்தல், இருப்பு மற்றும் தரநிலை ஆகிய இரண்டிற்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மொழியியல் கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டு சொற்களஞ்சிய அகராதிகள் உருவாக்கப்படும். ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில், இவை ஒரு மாநிலத்துடன் முதன்மையாக இணைக்கப்படாததால், மத்திய மொழியியல் நிறுவனங்களால் இது குறித்து ஆலோசனைகள் முடிவுகள் எடுக்க முடியும். பிறமொழிகளில் முதன்மையாக எடுக்கப்படும் சொற்களஞ்சியங்கள் குறித்துமாநிலங்களில் உள்ள மொழியியல் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்க முடியும், பொருத்தமான மத்திய / மாநில ஒருங்கிணைப்புடன் பொதுவான அதிகபட்ச சொற்கள், சொற்களஞ்சியங்களை உருவாக்க முடியும். இந்த மொழியியல் அமைப்புகள் / கல்வி அமைப்புகள் ஒவ்வொன்றும் விரிவான மேம்படுத்தப்பட்ட அகராதியை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைவெளியிடும். ஒவ்வொரு மொழியிலும் உருவாக்கப்பட்ட தரமான அங்கீகரிக்கப்பட்ட மொழி அகராதிகளைப் பயன்படுத்தி மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களிலுள்ள பாடத்திட்டங்கள் தரமான சொற்களஞ்சியங்களுடன் கூடிய பாடத்திட்டங்களாக வெளியிடும். இந்த நிறுவனங்களால் உருவாக்கப்படும் சொற்களஞ்சியம், அகராதிகள் முதலியன உயர்கல்வி , செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், முதலிய வடிவில் பரவலாக்கலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மற்றும் ஆசிரியர்களின் விரிவான பயன்பாட்டை எளிதாக்குவதாகவும் இருக்கும். Part IV உருமாறும் கல்வி இராஷ்ட்ரிய ஷிக்சா அயோக் RSA குறிக்கோள் : இந்தியாவின் கல்வி முறையின் ஒருங்கிணைந்த செயல்பட, அனைத்து மட்டங்களிலும் சமத்துவம் மற்றும் உயர்ந்த கல்வியை வழங்குவது என்ற இலக்கை நடைமுறை படுத்த புதிய ராஷ்ட்ரிய சிக்ஷா வழி நடத்துகிறது. புதிய இந்தியாவின் பேராவலான சமூக, பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான மையg; புள்ளி ஒரு நல்ல கல்வி முறையே. மறுபுறம், கல்வி என்பது அதன் இயல்பு மற்றும் இலக்குகளால் அசாதாரண மற்றும் சிக்கலான துறை போல இருக்கிறது. இந்தியாவின் துடிப்பான/அசைகின்ற வேறுபாடுகள்/வேற்றுமைகள் இந்த சிக்கலை அதிகரிக்கிறது. மேலும் இந்த புதிய கல்வி கொள்கை மேலே உள்ள அத்தியாயங்களில் இருந்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் என்பதை வலியுறுத்துகிறது, இது கல்வியில் பல பரிமாணங்களையும் அத்துடன் அதன் முழுமையான இயற்கை தன்மையையும் அங்கீகரிக்கும் என்பது தெளிவாக உள்ளது. இந்த நாட்டில் தற்போதைய நடைமுறையில் கல்விக்கான ஆளுமை இந்த இலக்கை அடைய குறைந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது. இது, கூடுதலாக சிக்கல்களை மற்றும் இந்த கொள்கை செயல்படுத்த சவால்களை உருவாக்கும். இந்த பின்னணியில், தற்போதைய ஆட்சி முறைமை, அதன் கட்டமைப்புகள் மற்றும் தலைமை வழிமுறைகள் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, எடுத்துக்காட்டாக, இந்த புதிய கல்வி கொள்கை வேலை செய்ய, பல இணைப்புகள் மற்றும் கல்வி சூழலின் மாறும் தன்மை இவற்றுடன் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் முகவர் இடையே சேர்ந்து ஒத்துழைக்கிற ஒருங்கிணைப்பை கொண்டு வர வேண்டும் என்பதை அங்கீகரிக்க வேண்டும். இதனால் இந்த கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, தேசிய, மாநில, நிறுவன மற்றும் தனிப்பட்ட மட்டங்களில், ஒரு நீண்ட கால பார்வை, நீடித்த அனுபவத்தில் நிபுணத்துவம் கிடைக்கும் அடிப்படையில், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்கேற்பாளர்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த நடவடிக்கை, ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த சூழலில், இந்த கல்வி கொள்கை, ஒரு தேசிய கல்வி ஆணையம் (NEC) / RSA ஐ உருவாக்குவதைக் குறிக்கிறது, இது இந்திய கல்விக்கான உச்சகட்ட குழு ஆகும். அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்திலான செயற்பாடாக, பிரதம மந்திரி இந்தத் குழுக்கு தலைவராக இருப்பார், அவர் கல்வி தொடர்பான இந்த பெரு முயற்சியை, அதாவது கல்வி பற்றிய பார்வை /இலக்கு மற்றும் இயக்கத்தின் அதிகாரத்தை இயக்கி கொண்டு வருவார். மேலும், அத்தகைய ஒரு படிமுறை நாட்டில் கல்வி பல பரிமாணங்களுக்கு இடையில் தேவையான ஒற்றுமை மற்றும் சினெர்ஜியை உறுதி செய்யும். ஒருங்கிணைந்த இலக்கு, பிரதான தலைமையின்கீழ் சிறந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஒரு குழு, அறிவுசார் சமுதாயத்தின் சிக்கலான கோரிக்கைகளில் அவர்களின் முழுமையான புரிதலுடன், தேசிய கல்வி முயற்சிக்கு ஒரு சிறந்த உயர் மட்ட திசையை வழங்கும் என்பதே. NEC / RSA இது நெகிழ்வான, பதிலளிக்கக்கூடிய மற்றும் வேகமான மாறும் சூழலின் கட்டாயத்திற்கு ஏற்றதா என உறுதிசெய்யும். இந்த கல்விசார் ஆளுமை, சமுதாயத்தின் மற்ற பாகங்களில் சரியான அணுகுமுறை மற்றும் கலாச்சாரம் என்று வரையறுக்காவிட்டால், இது ஒரு முழுமையான முயற்சியாக இருக்காது. இந்த கல்வி கொள்கையை ஸ்தாபிப்பதற்காக, வரும் ஆண்டுகளில் நிச்சயமாக கல்வி ஆளுமையில், அசாதாரணமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடும், இது முன்னோடியில்லாதது, மேலும், இந்தியாவின் வளர்ச்சியை அடைவதற்கான சூழலில், மற்ற தேசிய முயற்சிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல பின்பற்றுவதையும் இருக்கும். ஒரு புதிய உச்ச குழு, ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்படும். இது பிரதம மந்திரி தலைமையில் இருக்கும் 23.1. ஒரு புதிய உச்ச குழு, ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் : இந்த கல்வி கொள்கை, ஒரு தேசிய கல்வி ஆணையம் (NEC) / RSA உருவாக்கப்படும். இது இந்திய கல்விக்கான உச்சகட்ட குழு ஆகும். RSA, கல்விக்கான பார்வை / இலக்கை உருவாக்குவதும், வெளிப்படுத்துவதும், செயல்படுத்துவதும், மதிப்பீடு செய்வதும், மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பொறுப்பையும் கொண்டுள்ளது. இது இந்த நோக்கத்தை அடைய உதவும் நிறுவன கட்டமைப்பை உருவாக்கி மேற்பார்வை செய்யும். 23.2. கல்வி அமைச்சகம்: கல்வி மற்றும் கற்றலில், மீண்டும் கவனத்தை கொண்டு வருவதற்காக, தற்போதுள்ள MHRD கல்வி அமைச்சகம் (MoE) என மறுசீரமைக்கப்படும். 23.3. புதிய உச்ச குழு, ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் இன் தலைவர்: RSA இன் தலைவர், இந்திய பிரதமர் ஆவார். பிரதமர் RSA இன் கூட்டத்தை குறைந்த பட்சம் கூட்டும் வருடம் ஒரு முறை, அல்லது எப்போது தேவைப்பட்டாலும் அவர்கள் கூட்டத்தை ஒழுங்கமைக்க முடியும், அதன் மொத்தத்தில் இந்தியாவில் கல்வி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யவும் மற்றும் தேவைப்படும்போது பிரதமரின் அதிகாரத்தின் மூலம் RSA அவர் சரியான அதிகாரம் கொடுத்து ஊக்கப்படுத்துவார். 23.4. புதிய உச்ச குழு, ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் இன் துணை தலைவர் : RSA இன் துணைத் தலைவர் மத்திய கல்வி அமைச்சர்(UME) ஆவார். UME தனது தலைமைத்துவத்தை வழங்குவதோடு, RSA இன் முக்கிய இயக்க அமைப்புகளுக்கு தலைமை தாங்கும். அது பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. 23.5. புதிய உச்ச குழு, ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் இன் உறுப்பினர் : RSA சுமார் 20-30 உறுப்பினர்கள் கொண்டிருக்கும். இதன் உறுப்பினர்கள், சுழற்சிக்கான முறையில, மத்திய அமைச்சர்கள் சிலர், அதன் அமைச்சகங்களை நேரடியாக கல்விக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் (எ.கா. சுகாதார, பெண் மற்றும் குழந்தை வளர்ச்சி, நிதி), மற்றும் சுழற்சி முறையில் சில மாநில முதலமைச்சர்கள், பிரதமரின் பிரதம செயலாளர், அமைச்சரவை செயலாளர், நீட்டி ஆயோக் துணைத் தலைவர், மூத்த செயலாளர் கல்வி அமைச்சகம், மற்றும் அரசாங்கம் பொருத்தமானது என கருதுகிற அத்தகைய மூத்த அதிகாரத்துவங்கள் / நிர்வாகிகள் ஆவர் . குறைந்தது 50% உறுப்பினர்கள் கலை, வியாபாரம், சுகாதாரம், விவசாயம் மற்றும் சமூக வேலை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த கல்வி வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முன்னணி நிபுணர்களாக இருப்பார்கள். இந்த அனைத்து உறுப்பினர்கள் அதிக நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் மற்றும் சுதந்திரம் வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். 23.6. ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் இன் நியமனம் குழு: RSA நியமனம் குழு இந்திய பிரதமர், இந்தியாவின் தலைமை நீதிபதி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், லோக் சபாவின் சபாநாயகர், மற்றும் RSA இன் பிற முக்கிய, தொடர்புடைய நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை நியமிக்க UMEயை அமைக்க வேண்டும். 23.7. ராஷ்ட்ரிய ஷிக்ஷா ஆயோக் இன் கொள்கைகளை நிர்வாகக் குழு : RSA யில் EC(Exceutive Council) கொள்கைகளை நிறைவேற்றக்கூடிய குழு இருக்கும். அது RSA இன் துணைத் தலைவராக தனது திறமையுடன் இருக்கும் UMEஇன் தலைமையில் இருக்கும். RSA இன் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான நிறைவேற்றுக் குழு அமைக்கப்படும், அது பாடசாலை, உயர்கல்வி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளானது விரும்பிய திசையில் நகர்வது, தொடர்ந்து தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் எடுத்துக் கொள்ளுதல் தேவைப்படும் சரியான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அது உறுதி செய்யும். சட்டமன்றம், நிர்வாகி மற்றும் நீதித்துறை, மற்றும் மாநிலங்கள் முழுவதிலும், மற்றும் யூனியன் பிரதேசங்க அதற்கான ஆதரவைப் பெற்றதன் மூலம் RSA இன் EC(Exceutive Council) கொள்கைகளை நிறைவேற்றக்கூடிய குழு வின் தலைவர் UME உதவுகிறது. நாட்டில் கல்வியின் தோற்றத்தை உருவாக்குவதற்கான, நாட்டின் கல்வியைப் பற்றி வெளிப்படையாகக் கூறும், நாட்டின் கல்வியைப் புதுப்பிப்பதற்காக, நாட்டின் கல்வியின் மதிப்பை மதிப்பிடுவதற்கு, நாட்டிலுள்ள கல்வியின் பார்வையை மறுசீரமைப்பதற்காக பொறுப்பான பொறுப்பாளியாக ராஷ்டிரிய ஷிக்ஷா ஆயோக் இருக்கும் 23.8. Rashtriya Shiksha Aayog இன் நிர்வாக இயக்குநர்: RSA இன் நிர்வாக தலை, நிர்வாக இயக்குநராகவும் (ED) இருக்கும், அவர் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் ஒருங்கிணைப்புக்கான ஸ்டாண்டிங் கமிட்டிகளின் உறுப்பினராகவும் இருப்பார் (SCCs; see P23.10). ED, நிர்வாக இயக்குனரால் RSAAC ஆல் நியமிக்கப்படும் அது மாநில அரசின் தரவரிசையில் இருக்கும். நிர்வாக இயக்குநர் கல்வியில் சிறப்பான ஒரு நபராக, இந்தியாவின் கல்வி முறை பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டவர் ஒரு நபராக, பொது பங்களிப்பில் ஒரு சாதனை நட்சத்திர நபராக, மற்றும் நிர்வாகத்தின் பரந்த அனுபவம் மற்றும் தலைமைத்துவம் அனுபவம் கொண்ட ஒரு நபராக விளங்குபவர். அவருடைய நியமனம் காலவரையறையை ஐந்து ஆண்டுகள் நீடிக்கும், இது ஒரு முறை புதுப்பிக்கத்தக்கதாகவும் இருக்கும் 23.9. நிர்வாகக் குழுவின் உறுப்பினர்: நிர்வாகக் குழு 10-15 உறுப்பினர்களை கொண்டிருக்கும், RSA ஆல் பரிந்துரைக்கப்படும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒருமுறை மட்டும் இது புதுப்பிக்கத்தக்கதாக இருக்கும். நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிபுணத்துவம், நேர்மை, மற்றும் மக்கள் இருக்கும் தங்கள் துறைகளில் தனித்துவம் உடையவர்களாய் இருப்பார்கள். குழுவின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையிலிருந்து இருக்க வேண்டும். EC யின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு நிர்வாகத்தில் கொள்கை, மற்றும் பிற வளர்ச்சிக்களங்களில் குறிப்பிடத்தக்க தலைமைத்துவ பாத்திரங்களைக் கொண்டவர்கள் இருக்க வேண்டும். கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள், நிதி அமைச்சகத்தின் செயலாளர், மற்றும் நிடி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் இதில் அடங்கும். மாநிலங்களில் மாநில அளவிலான மாநில அமைப்புகளை ராஜ்ய சிக்ஷா ஆயோக் அல்லது மாநில கல்வி ஆணையம் என்று அமைக்கலாம். 23.10. ஒருங்கிணைப்புக் குழுவில் ஸ்டாண்டிங் கமிட்டிகள்: RSA துணைத் தலைவர் இரண்டு SCC களுக்கு தலைவராக இருப்பார். RSAவில் எல்ல மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் இருப்பார்கள். SCCவில் கல்வியோடு தொடர்புடைய அனைத்து அமைச்சகககங்களிலிருந்து அமைச்சர்கள் இருப்பார்கள். அவர்கள் கூட்டுப் பார்வை மற்றும் கண்காணிப்பு வாரியத்தால் (JRMB) ஆதரிக்கப்படுவார்கள் (பார்க்க P.23.14) RSA வெளிப்படுத்திய கல்விக்கான நோக்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மற்றும் இலக்குகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை சரியான நேரத்தில் ஒருங்கிண த்தல் மற்றும் உறுதிசெய்தல் இவர்களுடைய பணியாகும் 23.11. Rashtriya Shiksha Aayog மற்றும் கல்வி அமைச்சகத்தின் விரிவான பங்கு/பாத்திரங்கள் : தற்போதைய MHRD (மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களில்) இருக்கும் செயல்பாடுகளை மற்றும் நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு, RSA அதன் ஆதரவு கட்டமைப்புகள் மற்றும் அணிகளின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் உட்பட, அனைத்தோடும் ஒருங்கிணைக்கப்படும். UME தலைமையிலான குழுவின் தலைவரும், ED யும், UME ஆல் நியமிக்கப்பட்ட சில உறுப்பினர்களும் இந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், நிலைகள் மற்றும் செயல்பாடுகளை உறுதிப்படுத்தப்பட்டு, RSA ஒரு பாராளுமன்ற சட்டம் மூலம் அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்படும். 23.12. Rashtriya Shiksha Aayog இன் ஆலோசனைக் குழு: RSA 20-30 பேர் கொண்ட, கல்வியில் முதன்மையான தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் உட்பட்ட, ஒரு ஆலோசனை குழுவின் (AC) ஆதரவுடன் செயல்படும். AC, RSAற்கான சிந்தனையாளராக சேவை செய்வர். இது NITI Aayog, மாநிலங்கள், நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படும். இது EC உடன் தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் புலனாய்வுத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கும் பொருத்தமான கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதற்கும் செயல்படும். ஆலோசகர் கவுன்சிலுக்கு, RSA ல் இருந்து ஒரு சிறந்த கல்வியாளர் தலைமை வகிப்பார் மற்றும் அதன் உறுப்பினராக ED இருப்பார். 23.13. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்: RSA,AC உறுப்பினர்களை பரிந்துரைக்க வேண்டும் மற்றும் அதன் தலைவர் நியமிக்க வேண்டும். ACல் அங்கத்தினர்களை கொண்டிருக்கும் பின்வரும் குழுக்கள்: a. இந்தியாவிலிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள், மற்றும் b. கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான சிவில் சமூகம் மற்றும் பிற துறைகளில் உள்ள உறுப்பினர்கள். அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐந்து ஆண்டு கால அவகாசம் இருக்கும். ஒரு வருடத்தில் சில முறை கூட்டப்படும். EC மற்றும் RSA இரண்டும் அதன் பரிந்துரையை கருத்தில்கொள்ளும். 23.14. கூட்டு மதிப்பாய்வு மற்றும் கண்காணிப்பு வாரியம்: மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய ஆர்.எஸ்.எஸ்.ஏ மூலமாக ஜே.ஆர்.எம்.பி. நிறுவப்படவுள்ளதுடன், முறையான கல்வி மேம்பாடு மற்றும் இலக்குகளை சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தவும் உறுதி செய்யப்படுகிறது. JRMB ஒரு குழுவாக இரண்டு ஆண்டு காலதிற்கு பணிபுரியும். JRMB RSA இன் அனைத்து பகுதிகளுக்கும் EC, SCCs, மற்றும் AC அவற்றின் செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த ஆதரவளிக்கும். 23.15. Rashtriya Shiksha Aayog இன் செயலகம்: RSA ஒரு வலுவான செயலகம், அதிகாரத்துவ மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பல அடுக்குகள ஆதரிக்கப்படும். செயலகம், RSA இன் பல்வேறு முடிவுகளை திறமையாகவும் திறம்படமாக முன்னேற்றும். RSA இன் செயலகம் போதுமான பணியாளர்கள் மற்றும் வளங்களைக் கொண்டிருக்கும், மேலும் அவர்களின் வீடுகள் RSA / MoE வளாகத்திற்குள்ளேயே இருக்கும். 23.16. கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு: பின்வரும் தேசிய அளவிலான தலைமை நிர்வாகிகள் RSA க்கு அறிக்கை அளிக்க வேண்டும், இது அவர்களின் சமமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டை மேற்பார்வை செய்யும். RSA தலைவர்களையும், தலைமை நிர்வாகிகளையும் மற்றும் அதற்குரிய அனைத்து சபைகளின் வாரிய உறுப்பினர்களையும் நியமிப்பார்: முன்மொழியப்பட்ட) தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் National Accreditation and Assessment Council தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் முன்மொழியப்பட்ட) பொது கல்வி கவுன்சில் முன்மொழியப்பட்ட) உயர் கல்வி மானியங்கள் கவுன்சில் National Council of Educational Research and Training தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் National Institute of Educational Planning and Administration தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் நிறுவனம்முன்மொழியப்பட்ட) தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை 23.17. முரண்பாடுகள் மற்றும் தீர்வு இயந்திரம் (Mechanism for conflict resolution) : ஒழுங்குமுறை அமைப்புகளின் பல்வேறு கூறுகளின் செயல்பாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டால், சரியான வழிமுறைகளை அமைப்பதன் மூலம் அதை சரிசெய்ய ED பொறுப்பாகும். 23.18. வரவு செலவுத் திட்டங்களின் மதிப்பீடு: கல்வி தொடர்பான இந்தியாவின் அனைத்து முகவர்களின் பட்ஜெட் மற்றும் எந்த வகையிலுமான அவற்றின் பயன்பாடும் RSAவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். 23.19. ராஜ்ய சிக்ஷா ஆயோக் / மாநில கல்வி கமிஷன்கள்: RSA போலவே, ஒவ்வொரு மாநிலத்திலும் RJSA / மாநில கல்வி ஆணையம் (SEC) ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட வேண்டும் முதலமைச்சரின் தலைமையில் கல்வி அமைச்சர், துணைத் தலைவர் பதவிக்கு தலைவர் பரிந்துரைப்பார். அந்தந்த SECகள், அதன் உறுப்பினர்கள் கல்வி அமைச்சர்களாக இருக்கலாம், மற்ற பங்குதாரர்களாக கல்வி தொடர்பான அமைச்சர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் தொழில் மற்றும் RSA இன் மூத்த பிரதிநிதிள் நியமிக்கப்பட்டலாம். மாநிலங்களில் SECன் உருவாக்கம் மையத்துடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படும். சொற்பொருள் விளக்கம்: “RSA” / “NEC”, இந்த கொள்கை ஆவணத்தில் பயன்படுத்தப்படுகையில், RSA மற்றும் RSA ஐ ஆதரிக்கும் பிற கட்டமைப்புகள் அல்லது பாத்திரங்கள் ஆகியவற்றின் ஆகியவற்றை குறிப்பதற்காக அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. பின்னிணைப்புகள் கனவு மெய்ப்பட செய்வோம் பின்னிணைப்பு - 1 நிதி 21 ஆம் நூற்றாண்டில் தனிமனித, சமூக மற்றும் தேச முன்னேற்றத்திற்கு கல்வி இன்றியமயாததாகும். அத்தகைய முன்னேற்றதை அடைய நியாயமான மற்றும் தரமான கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் அதற்கு கணிசமான நிதி தேவைப்படும். இந்த கொள்கை, கல்வியில் பெருமளவு நிதி ஆதாரங்களை பெருக்க தெளிவான முனைப்புடன் இருக்கும். பொது முதலீடுகள் மற்றும் தனியார் நன்கொடைகள் மூலம் இது செயல்படுத்தப்படும். குறிப்பாக, இந்த கொள்கை, அனைத்து நிதியுதவிகளையும், கல்வியில் செலவிடும் நிதியையும், முதலீடு எனக் கருதுமே தவிர, செலவீனம் எனக் கொள்ளாது. கல்வியில் செலவிடும் நிதி தேசத்தின் எதிர்காலத்திற்கு செய்யப்படும் முதலீடு. A1.1. கல்வி – சமுதாயத்தின் ஆகச்சிறந்த முதலீடு கல்வியின் தன்மையை பல பொருளியலாளர்கள் ‘பகுதி சமூக நன்மை’ எனக்கூறுவர். ஒரு தனிமனிதனின் கல்வி அவன் சார்ந்த சமூகத்துக்கும் பயன்படுகிறது என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது பொருளாதாரம் என்பதை தவிர்த்து, வலுவான ஜனநாயகம், நியாயமான சமூகம் மற்றும் உயிர்துடிப்புள்ள கலாசாரம் போன்ற கல்வியின் முக்கியமான குறிக்கோள்ளையும் உள்ளடக்கியது என்பதை தாண்டிய புரிதலுடன் உணரவேண்டும். கல்வியின் பயன்களை நிதி ஆதாரங்களை கொண்டுமட்டும் பார்க்க கூடாது எனினும் பின்வரும் புள்ளிகளில் கல்வியின் முதலீடு சார்ந்த பொருளாதார சாத்தியங்களை காணலாம். பொருளாதார கோணத்தில் கல்வியை முதலீட்டின் மீதான வருவாய் என பார்க்கப்படுவதுண்டு(ROI). அந்த வகையிலும் இந்த வருவாயை பல அடுக்குகளில் நோக்கவேண்டியுள்ளது. மிக அடிப்படயில், இந்த முதலீடின் மீதான வருவாய் என்பது கல்வியால் ஒரு தனி நபரின் வாழ்நாளுக்கான ஊதியத்தின் வளரச்சி என கொள்ளப்படும். இதனை தனியார் அல்லது தனிப்பட்ட வருவாய் என்பர். அடுத்த நிலையில், மற்ற தனிநபர் நன்மை பயக்கும் கல்வி கற்றோர் (Externalites என பொருளாதாரம் கூருகிறது.) எ.க. மேம்பட்ட சுகாதாரம், வாழ்நாள் நீட்டிப்பு, மற்றும் தொழில்முறை/சமூக உறவுகள் மூலமாக அடையும் பயன்கள். இப்பயன்களில் பல நிதியை சார்ந்த்தது இல்லயெனினும் இவற்றின் சில பகுதி நிதியை சார்ந்தது. உதாரணமாக, மேப்பட்ட சுகாதாரம், தனிமனித மற்றூம் அமைப்புகளின் செலவீனங்களை பெருமளவு குறைக்கும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமனில் இது மாபெரும் நலனின் ஒரு பகுதியே அதாவது பணம் மட்டுமே ஒரு மனிதனின் அவன் குடும்பத்தின் சுகாதார நலன்களை தீர்மானிப்பதில்லை. கல்வியால் சமூகம் பெறும் நலன்களை நிதியினால் அதன் ஒரு பகுதியை மட்டுமே அளவிட முடியும் ( ‘சமூக வரவு’ என கூறுவர்). அவற்றை பலதரப்பட்ட ஆதாரங்களில் மூலம் பெறலாம். உதாரணத்திற்கு கல்வியறிவு கொண்ட தொழிளலர்களால் மேம்படும் ஊற்பத்தி, தொழில்நுட்பத்தால் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஊக்கம், ஆராய்ச்சி மற்றும் கல்வி மேப்பாட்டு கொடுக்கும் கண்டுபிடிப்புகள், முக்கிய வேளைகளில் அதிகளவு பெண்களின் பங்கேற்பு, சமூக சுகாதார மேம்பாடு, குறையும் குற்றங்கள், குறைந்த சிசு இறப்பு விகிதம், மேம்பட்ட குடும்ப கட்டுப்பாடு மற்றும் வாழ்நாள் நீட்டிப்பு போன்ற பல. மேலும் மற்ற பல முக்கிய நுணுக்கங்களை கல்வியின் பொருளாதார நோக்கில் காணலாம். அவற்றுள் சில, கல்வியில் பரவலான கலச்சார/சமூக குழுக்களின் (எ.கா. வறுமையில் இருக்கும் பெண்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகள்) அதிக முதலீட்டின் மீதான வருவாய் (ROI) கல்வி நிலைகளின் முதலீட்டின் மீதான வருவாய் (எ.கா. ஆரம்ப கல்வி, உயர்கல்வி, மேற்படிப்புகள்) மேற்படி நிலைகளில், முதலீட்டின் மீதான வருவாய் பின்வருமாறு. இது அனைத்தையும் உள்ளடக்கிய பட்டியல் இல்லைனெறாலும் பொதுவானது என்பதை கருத்தில் கொள்க. உலகெங்கும் காலம் காலமாக இதனைத் தொட்டு பல ஆராய்ச்சி முடிவுகள் இருப்பினும் இந்தியாவில், பிற விஷயங்களைப்போல் இதனினும் போதுமான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. ஆதனால் கீழ்வரும் புள்ளிவிவரங்கள் நம்மில் வளர்ந்த, நம்மில் கீழ்லுள்ள பொருளாதாரங்களின் பிரதிகளை கொண்டு விவாதிக்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள முதலீட்டின் மீதான வருவாய் பொதுவான அளவீடுகளில் கணக்கிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது அதவது ஒவ்வொறு கல்விநிலையின் (கல்லூரி வரையிலான) முதலீட்டின் மீதான வருவாயின் சதவிகிதம் ‘%’ ஒவ்வொரு வருட கல்வியும் ஒரு தனி நபரின் வருவாயில் சராசரி 6-12% பங்காற்றூகிறது. முதலீட்டின் மீதான வருவாய் குறிப்பாக பெண்கள் மற்றும் பிதங்கிய வகுப்பினருக்கே அதிகமாக இருக்கிறது: பெண்களுக்கு சராசரியாக ஒரு சதவிகிதம் கூடுதலாக ஆண்களை காட்டிலும் அதிகம். குறிப்பாக ஆரம்ப கல்வியில் இந்த விகிதம் சற்று கூடுதல்; அது சராசரியாக 13%; பொதுவாக 7%-18% என்ற வரம்புக்குள் இருக்கிறது. இதற்கு காரணம், தனிநபர்கள் அவர்களின் ஆரம்பகால கல்வியும் சுகாதாரமும் கிடைக்கப்பெற்று நன்மை அடைந்திருக்கிறார்கள். பல்வேறு வகைகளில் கல்வி பொருளாதார நன்மைகளை ஒரு தனி நபருக்கு அளித்திருந்தாலும், அவற்றுள் சில கணக்கிட இயலாததெனினும், கல்வியால் அடையும் மேப்பட்ட சுகாதாரத்தால் 3-4% போன்ற ஒரு சில விளையாபுள்ளிகளில் (Externalites) அதிக முதலீட்டின் மீதான வருவாயை அடைய முடியும். மிகச்சில சமூக அளவிலான நன்மைகளை நிதியை கொண்டு அளவிடலாம். அவற்றுள் ஒன்று உலக நாடுகளில் தனி நபர் கல்வி கற்ற ஆண்டுகளுக்கும் அந்நாடுகளின் தனிநபர் உற்பத்திக்குமான தொடர்பில் அறியலாம். இம்முறை நமக்கு உணர்த்துவது கல்வியின் மூலம் சமூக அளவிலான வருவாய் தனி நபர் வருவாயை விட 3-4 மடங்கு என்பதேயாகும். அதாவது, சமூக வருவாய் 25%-30% தனிநபர் வருவாய் 6-12%ம் இருக்கிறது. இதில் குறிப்பாக நோக்க வேண்டியது, பொருளாதார வரைமுறைகளுக்குள் கொண்டு வர எயலாத உழைப்பு கணக்கில் கொள்ளப்படவில்லை. மேற்படி புள்ளிவிவரங்களை மற்ற பொருளாதார முதலீடுகளுடன் ஒப்பு நோக்க வேண்டியுள்ளது.ஒரு ஒப்பீட்டுக்காக, நீண்டகால ஆராய்ச்சி முடிவில் சொல்லப்படுவது யாதெனில் உலகின் பங்குசந்தயில் பதிவிடப்பட்ட நிறுவனங்களின் சராசரி வருவாய் 5% ஆனால் கடன் பத்திரங்கள் போன்றவறில் வரும் வருவாய் 1.8% மட்டுமே. ஆகையால் உணரப்படுவது, குறுகிய பார்வை கொண்டு நோக்கினும் கல்வியின் மீதான முதலீடு அவசியமாகிறது. மேலும் கல்வியை விட அரிய முதலீட்டை சமூகத்தில் காண்பது அரிதினும் அரிது. அதனாலேயே கல்வியின் நன்மைகளை பொருளாதாரம்/நிதியின் அடிப்படையில் பர்ப்பதற்கில்லை ஆகயால் எந்த ஒரு நிதி சார்ந்த பகுப்பாய்வும் இதில் மேற்கொள்ளப்படவில்லை. கல்வியின் நன்மைகள், சமமான சமூகம், நல்ல சுற்றச் சூழல், மனித உரிமைகள் மற்றும் வலிமையான ஜனநாயகம் போன்ற மதிப்பிட முடியாத கூறுகளில் இருக்கிறது. மேலும் தெளிவிக்க, இந்த பகுதியில் பயன்படுத்தபட்ட வருவாய் (Return) எனும் சொல் பொருளாதார விளக்கங்களில் கல்வியின் வருவாயய் குறிக்க கையாளப்படும் அளவில் உபையோகப்படுத்தப்பட்டுளதே ஒலிய, ‘லாபம்’ என்பதை குறிப்பதல்ல. இந்த கொள்கை கல்வியை லாப நோக்கிலாத ஒரு சமூக நிறுவனம் என்பதை தெளிவாகவும் வெளிப்படையாகவும் கருதுகிறது. A1.1.1. பொதுக்கல்வியின் முக்கியத்துவம் கல்வியில் முதலீட்டின் பொருளாதார மற்றூம் பொருளாதாரம் அல்லாத மிகப்பெரும் சமூகப் பயன்கள் தெளிவாயின. இப்பயன்கள் தனி மனித பயன்களை (தனியார் வருவாய்) காட்டிலும் பெரிது என கண்டோம்.ஆகவே, பொதுக்கல்வியில் முதலீடு செய்வது சமூகத்துக்கு முக்கியமாகிறது. அப்படியான முதலீடுகளுக்கு நேரடியான பயன்கள் உண்டு. ஏனெனில் அதன் பயனாளர்கள் பெரும்பலும் கல்வியில் முதலீடு செய்ய இயலாதவர்களாய் இருக்கிறார்கள். சுருக்கமாக கல்வியில் செய்யும் முதலீடே தேசத்திற்கான சிறந்த முதலீடு. இக்கொள்கை கல்வியை சாத்தியப்படுத்தும் முதலீட்டின் துனணயுடன் ஒரு மாபெரும் கல்வி அமைப்பை உருவாக்கும் கனவை கைக்கொண்டது. A1.2. முதலீடு பற்றாகுறையும் மற்றும் இதர நிதி பிரச்சனைகளும் நிதி சார்ந்த விஷயங்களில் இந்திய கல்வி பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்தித்துள்ளது. பின்வரும் பகுதியில் சில முக்கியமானவற்றையும் அதை இந்த கொள்கை அனுகும் முறைகளையும் பார்க்கலாம். A1.2.1. முதலீடு பற்றாகுறை 2017-18 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தியில் இந்தியா 2.7% கல்விக்காக அதன் பொது செலவினதில் இருந்து செலவு செய்தது. இது அரசுகளின் (மத்திய & மாநில) -மொத்த செலவில் 10% ஆகும் (பொருளாதார கணக்கெடுப்பு 2017-18). 1968ஆம் கொள்கையில் நாட்டின் மொத்த உற்பத்தியில் கல்விக்கான பொது செலவை 6% என எதிர்பர்த்தோம், மீண்டும் 1986 கொள்கயில் வலியுறுத்தினோம், 1992ஆம் ஆண்டு செயல் திட்டத்தில் மீண்டும் உருதியளித்தோம் ஆயினும் இன்னும் அடைய முடியவில்லை. உலகின் பல நாடுகளில் இந்தியாவை காட்டிலும் அதிக பொது முதலீடு(செலவினம்) கல்விக்காக மேற்கொள்ளப்படுகிறது. இது அனைத்து பொருளாதாரத்துக்கும் பொருந்தும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் கல்விக்கான வருடாந்திர பொது முதலீடு, நாட்டின் மொத்த உற்பத்தியில் 3%ஐ ஒட்டியுள்ளாது. பின்வரும் நாடுகளில் (ஒப்பீட்டுக்கு) பூட்டான், ஜிம்பாப்வே மற்றும் சுவீடன் 7.5%, கோஸ்டா ரிக்கா மற்றும் ஃபின்லேண்ட் 7%, கிர்கிஸ்தான், தென் ஆப்ரிக்கா, பிரேசில் 6%, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பாலஸ்தீனம் 5.5% மலேசியா,கென்யா, மங்கோலியா, கொரியா மற்றும் அமெரிக்கா 5% (OECD & UNESCO,2017) இதில் கவனிக்கவேண்டியது யாதெனில், பெரும்பாலான நாடுகள் குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்ற நிறுவனம் (OECD) ல் அங்கம் வகிக்கும் நாடுகளும், நடுத்தர வருமானமுடைய நாடுகளும் கல்விக்கான சிறிது பொது முதலீட்டை எதிர்பார்க்கும் காலகட்டத்தில் இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் கல்வி அமைப்பு ஸ்திரமாகவும் அனைவராலும் அனுகவும், பெரும் பயன் தரும் முடிவுகளையும் காட்டியுள்ளது. ஆதனால் அதற்கான நிதி ஒதுக்கீடு அந்த கல்வி அமைப்புகளை நடத்துவதற்கு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் எதிரே, இந்தியாவில் திறன் பெருக்கத்திற்கான பெருமுதலீடும், அமைப்பை நடத்துவதற்கான செலவினமும் ஒருசேர ஏற்படுகிறது. அதனுடன் சேர்த்து நம் உயர்தர பயன்முடிவுகளை அடையவும் குறிப்பிடத்தகுந்த கூடுதல் முதலீடு செய்யவேண்டியுள்ளது. தேவையான பொது முதலீட்டுக்கும் கையிருப்புக்கும் இடையே உள்ள இந்த இடைவெளி தரத்தை சமரசம் செய்து கொண்ட பயன் முடிவுகளிலும் முன்னேற்றத்திலும் எதிரொலிக்கிறது. தற்போது இயங்கும் கல்வி அமைப்பில், கல்விக்கான மிகப்பெரும் செலவினம் உள்ள ஊழியர்களுக்கே செலவிடப்படுகிறது ( ஆசிரியர்கள் உட்பட). அதனால் மற்ற விஷயங்களுக்கு செலவிடப்படுவதில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எ.கா. கற்பிக்கும் உபகரணங்கள், பள்ளிகளின் பராமரிப்பு, ஆய்வகங்கள், மதிய உணவு போன்றவை. மேலும் கல்வி அமைப்பை சீர்திருத்தவும் முன்னேற்றவும் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது. கல்வி அமைப்பில் சீர்திருத்தமும் முன்னேற்றமுமே அதீத பயன் முடிவுகளுக்கு தேவை. மேலும் அவசர தேவையான மனிதவளங்களும் (எ.கா.ஆசிரியர்கள், உதவியாளர்கள்) சேர்க்கப்படுவதில்லை, அல்லது குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுகிறார்கள். மேற்சொன்ன அனைத்தும் நிதி பற்றாக்குறை நிலவுவதன் நேரடி விளைவுகள் ஆகும். A1.2.2. கல்வி முதலீட்டில் இக்கொள்கையின் அணுகுமுறை இந்த கல்வி கொள்கை, கல்வி மீதான முதலீட்டை பெருக்குவதை கனவாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி மீதான முதலீடு, பொது செலவுகளின் 10% ல் இருந்து 20% ஆக உயரும். படிப்படியான நிதி அதிகரிப்பினால் இக் கொள்கையின் செயல்பாடுகள் நேர் செய்யப்பட்டு, தேவையான நிதி கிடைக்க வகை செய்யப்படும். இதன் மூலம் திட்டமிடவும் இந்த நிதி அதிகரிப்பை செயல்படுத்தவும் அரசுக்கு சுதந்திரம் கிடைக்கும். இந்திய பொருளாதரத்தின் இரு பெரும் போக்குகள் கல்வி மீதான முதலீட்டுக்கு உறுதுணையாய் இருக்கும். முதலில், அதிவேகமான பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் பொருளாதாரத்தை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக 2030-32 க்குள் மாற்றும். இந்த மதிப்பீட்டின் (நிதி ஆயோக் 2016) படி தற்போதிருக்கும் 2.8 ட்ரில்லியன் USD ல் இருந்து 10 டிரில்லியன் USD ஆக இருக்கும். இரண்டாவதாக, அரசின் சீரிய முன்னெடுப்புகளால், வரி வகைக்கும் மொத்த உற்பத்திக்குமான விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 1.5% ஆக முன்னேறியதை தொடர்ந்து இது முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு, கல்வியில் பொது முதலீட்டை இந்த வழிகாட்டுதல்கள்படி பெருக்கி, தக்க ஒதுக்கீடுகளை செய்யும் என்பது இக்கொள்கை நம்பிக்கையுடன் உள்ளது. இந்த அத்தியாயத்தின் A1.4 பகுதியில் இந்த்த குறிப்பின் சுருக்கம் உள்ளது. A1.2.3. கல்வியில் ஏற்படும் செயல்பாட்டு பிரச்சனைகளும் அதிலுள்ள நிதி கசிவுகளும் நிதி அமைப்பின் திறனின்மை மற்றும் செயல்பாட்டு பிரச்சனைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளின் செயல்படுகள் மீதே விழுகின்றன. நமது பொது அமைப்பில் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது மாபெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு , கல்லூரிகளில் பயிற்றுவிப்போருக்கு ஊதியங்கள் மாதக்கணக்கில் தாமதப்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் மதிய உணவுக்கான நிதியிலும் இந்த தாமதம் நிலவுகிறது. மற்றும் அன்றாடத் தேவைகளுகான நிதியும் பல தவணைகளில் ஒதுக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த நிதிகள் அதன் பயன்பாட்டாளர்களுக்கு அந்த நிதியாண்டின் இறுதியில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால் இரு பிரச்சனைகளில் ஒன்று இந்த குறுகிய காலத்தில் நிதி போதுமான அளவு பயன்படாமல் போவதுண்டு. எ.கா. இந்த நிதியைக் கொண்டு கல்விக்கான தளவாடப் பொருட்கள் வாங்குவதற்கும், உயர்தர பயிற்சிகள் நடத்துவதற்கும் சிரமங்கள் உள்ளன. மற்றும் இந்த நிதியை செலவு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் செய்யப்படும் செலவினங்களால் எந்த நன்மையும் விளைவதில்லை. சரியாக பயன்படுத்தாத இந்நிதி அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டையும் பாதிக்கும். மேலும் இப்பிரச்சனை தொடரும். இதனினும் மிக அடிப்படை பிரச்சனை என்னவென்றால் மனித திறன் மேம்பாடு மற்றும் உருவாக்கத்தில் நிலவும் பெரும் நிதி பற்றாக்குறை. இது கல்வியில் ஒரு சங்கிலித்தொடர் விளைவை பல வழிகளில் மிக ஆழமாக பாய்ச்சுகிறது. கல்வியின் பயன்கள் மீது ஆதிக்கம் செழுத்துகிறது. இது மேற்சொன்ன நிதி பயன்படுத்தாமைக்கு வழிகோலும். எ.கா. மாவட்ட கல்வி மற்றும் கற்பித்தல் நிறுவனங்களில் (DIET) ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் 45% காலியாக உள்ளது (கருத்துபெறும் அறிக்கை -2017), மேலும் நியமிக்கப்பட்டவர்களும் பெரும்பாலும் அதற்கான தகுதி பெறாதவர்களாக இருப்பதாலும், இதனால் DIETன் நிதி சரியாக பயன்படுத்தபடாலும் போகிறது. இந்த விஷயங்களில் நேர்மை மிக முக்கியமானது. கல்வி அமைப்புகளும், நாட்டின் மற்ற இதர அமைப்புகளைப்போல இந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. இதன்னால் நடக்கும் நிதி கசிவுகளால் மாணவர்கள் தங்களுக்கான முன்னேற்றத்துக்கான ஆதாரங்களை அடைய இயலாமல் போகிறது. A1.2.4. கல்வியில் நிலவும் செயல்பாட்டு பிரச்சனைகள் மற்றும் அதிலுள்ள நிதி கசிவுகள் மீதான இக்கொள்கையின் அணுகுமுறைகளும் இக்கொள்கை ஒட்டுமொத்தமாக நிதி மேலான்மையையும் அதற்கான வரைவையும் உருவாகும் நோக்கமுடையது. இதன் மூலம் நிதி ஆதாரங்களை உரிய நேரத்தில், உரிய வகையில், சரியான வழியில், நேர்மையான முறையில் கொண்டுசெல்ல முனையும். ஒரு தெளிவான அதிகார வரைமுறைக்குள் செய்ய முற்படுகிறது. உதாரணத்துக்கு , பள்ளிக் கல்வி நடத்துவது – பள்ளிக் கல்வி இயக்குனரகம்; கட்டுப்படுத்துதல் – மாநில பள்ளிக்கட்டுப்பாட்டு அதிகாரி (SSRA); அதிகாரமளித்தல் மற்றும் தன்னாட்சி (எ.கா. மேல்நிலை கல்வி நிறுவனங்கள் [HEIS]) மற்றும் பள்ளி வளாகங்கள் ; தகுதியுடையோர்க்கு தலைமை பணிகள் (எ.கா. தொகுதி கல்வி அதிகாரி [BEO] மற்றும் இயக்குனர்) அளித்தல்; தன்முனைப்புள்ள தனியார் முன்னெடுப்புகள் மீதான மேற்பார்வைகள் (எ.கா. பள்ளி மற்றும் இயக்குனர் குழுக்கான (BoGs – HEIs)அதிகாரம் பெற்ற நிர்வாக குழுக்கள். ; கடுமையான திட்டமிடல் முறை (எ.கா. பள்ளிகளுக்கான முன்னேற்ற திட்டங்கள் (SDPs); மற்றும் ராஜ்ய ஷிக்‌ஷா ஆயோக் (RjSA) மற்றும் ராஷ்ட்ரிய ஷிக்‌ஷா RSA களின் திறமையான வழிகாட்டுதல்கள். மேலும் இக்கொள்கை, திறன்உருவாக்கம் மற்றும் மேம்பாட்டை அனைத்து நிலைகளிலும் உருவாக்க பாடுபடும். இவ்வாறான முன்னெடுப்புகளைப்பற்றி விரிவாக பின்வரும் அத்தியாயங்களில் (அத் 7,8,17 & 18)காணலாம். இவ்வத்தியாயங்களில் சில சுருக்கமான வழிகாட்டுதல்களும் இடம் பெற்றுள்ளன. A1.2.5. பொது முதலீடு அல்லாத பிற நிதிகளில் பங்கு இந்திய வரலாற்றில் தனியார் கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கல்விக்கு எடுத்துவந்த முன்னெடுப்புகளும், உத்வேகமும், சுதந்திரத்துக்கு பிறகான அரை நூற்றாஅண்டு காலகட்டத்தில் காணாமல் போயின. 1960-80 ஆம் காலகட்டத்தில் அரசின் நேரடி தலையீடுகளாலும் லாபம் ஈட்டும் நோக்கில் நடத்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் மீதான அத்திருப்தியும் காரணமாக இருக்கலாம். பல தனியார் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகளான பிறகு, ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்’ என்பதில் ஒரு தெளிவின்மை நிலவ தொடங்கியது. 1990களின் பிறகான உலகமயமாக்கல் காலத்துக்கு பிறகான தனியார் முதலீடு என்பது வேறாக இருக்கிறது. நடைமுறையில் பெரும்பான்மையான தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, கல்வி, ஒரு லாபம் ஈட்டும் நடவடிக்கையாகவே இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் பல்கலை கழகங்களுக்கான உரிமம் வழங்குவதில் தனி மனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் அரசியல் தலையீடுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதனை ஒடுக்கும் பொருட்டு அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளாலும் கட்டுப்பாடுகளாலும், நிறுவனங்களின் தன்னாட்சி முயற்சிகளுக்கும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வியின் மேல் விதிக்கப்பட்டுள்ள வெகுவான தேவையற்ற கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் லாபம் ஈட்டும் தரமற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துவதிலோ உண்மையான நோக்கங்களை உடைய பொது நிறுவனங்களை வளர்த்தெடுப்பதிலோ அல்லது பொதுவான கல்வி பயன்களை மேம்படுத்துவதற்கோ பயன்படவில்லை. பொதுநலனில் அக்கறையுடைய லாபநோக்கமற்ற நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் வேறாக உள்ளது. உதாரணமாக பொது அமைப்புகளில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பயன்பாட்டுக்கு இட்டுச்செல்லும் வழியின்மை மற்றும் இவற்றை ஆதரிக்கும் அரசு ஊழியர்களின் ஆர்வமின்மை ஆகியவற்றை கூறலாம். மற்ற நாடுகளைப்போல் நமக்கும் தனியார் முதலீட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தும் அதனை அறுவடை செய்ய நாம் செல்ல வேண்டிய இலக்கு தொலைவில் உள்ளது. உதாரணத்துக்கு, உலகின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்கள் தனியார் கொடையாளிகளால் நிதியுதவி செய்யப்படுகிறது. இந்தியாவிலோ அப்படியான நிறுவனங்கள் வெகு சில. இப்போதுள்ள நிலையில் தனியார் கொடையாளர்களின் முன்னெடுப்புகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், பொதுநலன் சார்ந்த தனிநபர்களின் , குறிப்பாக செல்வந்தர்களின் பிரச்சனையயும் சேர்த்து நோக்க வேண்டியுள்ளது. A1.2.6. கல்வியில் லாப நோக்கமற்ற பொதுநலன் கொண்ட தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க இக் கொள்கையின் அணுகுமுறைகள் இக்கொள்கை, கல்வித்துறையில் தனியாரின் கொடைகளை புத்துயிர் தந்து, முன்னெடுத்து, அவற்றை ஊக்குவிக்க அறைகூவலிடும். இந்த நன்கொடை முன்னெடுப்புகளை, கல்வி வளர்ச்சி அலுவலகங்கள், மேல்நிலை கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சிக்கான முதலீடுகளை தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NRF) போன்றவற்றின் மூலம் ஊக்குவிக்கப்படும். இக்கொள்கையில் ‘நன்கொடை, கொடையாளி’ போன்ற சொற்கள் கல்வியில் பொதுநலம் மற்றும் லாப நோக்கமற்ற என்ற பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நன்கொடைகள் (சிறிது முதல் பெரிய தொகைகள் உட்பட) தனிமனிதர்கள், நிறுவனங்களின் சமூக பொறுப்பு (CSR)நிதி மற்றும் சமூக குழுக்கள் சேகரிக்கும் நிதிகளையும் உள்ளடக்கியது. இக் கொள்கை கல்வியில் நியாயமான கல்விக் கட்டணம் வசூலிக்கும் முறையை பரிந்துரைக்கும். இதன் மூலம் மேனிலை கல்விக்கு வசதியுடைய மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்தாலும், மேல் நிலை கல்வி நிறுவனங்களின் நிதி பற்றாக்குறையை போக்க பொது நிதி கொடையாளிகளின் உதவி தேவைப்படும். (பார்க்க 18.6.3) கல்வி வியாபாரமாவதை இக்கொள்கை பல முனைகளில் எதிர் கொள்கிறது. குறிப்பாக, ‘இலகுவான ஆனால் உறுதியான’ கட்டுப்பாடுகள் கொண்ட அணுகுமுறைகளாலும், பொதுக்கல்வியில் குறிப்பிடத்தக்க முதலீடுகளாலும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடைய நல்ல நிர்வாக வழிமுறைகளாலும் செயல்படுத்தப்படும். விரிவாக இயல் 8,17 மற்றும் 18ல் காணலாம். A1.3. கல்வியில் தரம் மற்றும் சம வாய்ப்பை மேம்படுத்த அதிக முதலீட்டை பெருக்குவது கல்வியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது முதலீடுகள் வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்படும். அதுவே தேசத்தின் இப்போதைய தேவை. அதனுடன் மற்ற முதலீடுகளும் பெருக்கப்படும். A1.3.1 பொது முதலீடுகள் மூலம் கல்வியின் தரம் மற்றும் சம வாய்ப்புகளை பெருக்குதல் இக்கொள்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ தேசத்திற்கு செலவிட முனைப்புடன் இருந்தாலும் அது வரிக்கும் உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் உயர்வதில் தான் இருக்கிறது. சமீபத்திய உறுதியான நடவடிக்கைகளாலும் அதன் பயன்களையும் நோக்கும் போது இந்த 6% என்ற இலக்கு வருங்காலங்களில் கண்டிப்பாக சாத்தியப்படும். குறுகிய மற்றும் நடுத்தர காலகட்டங்களில் கல்வியில் பொது முதலீடுகளை செலவினங்களின் ஒரு பகுதியாக பார்க்கும் சாத்தியங்கள் உருவாகியுள்ளது. அதனாலேயே இக்கொள்கை எடுக்கப்போகும் செயல்பாடுகளால் மொத்த பொது செலவினங்களில் (மத்திய மற்றும் மாநில செலவுகள் சேர்த்து) 20% கல்விக்கென மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறது. கல்வியில் மிதமான ஆனால் உறுதியான நிதி ஒதுக்கீடு நடைபெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது மற்ற அரசு நிதி ஒதுக்கீடுகளிலும் நடக்க வேண்டும். நமது பொருளாதார வளர்ச்சியின் அளவை நோக்கும் போது நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீராக இருக்கப்போவதில்லை. ஆதலால், இந்த வளர்ச்சியில் கல்விக்கென தனியான நிதி வழிவகைகளை வகுக்க வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு cess வரி. அல்லது உருவாகும் வருவாயில் ஒரு பெரும் பங்கை காலப்போக்கில் வளர்த்தெடுக்க வேண்டும். 1.3.1.1 மொத்த பொது செலவுகளில் கல்விக்கு 20%ஐ எட்டும் வரையில் பொது முதலீட்டை பெருக்குவது பொதுவான நடைமுறையில், உதாரணத்துக்கு ஆண்டுக்கு 1% பொதுச்செலவில் கல்விக்கான முதலீடு இருக்குமெனில் இன்னும் 10 ஆண்டுகளில் இது 10% இல் இருந்து 20% ஆகும். நிதியை பயன்படத்தக்க வகையில் உபையோகித்தால் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை தரமானகல்வியை சாத்தியப்படுத்த முடியும். மேலும் அனைத்து கல்வி நிலைகளிலும் ஒரு கட்டத்தில் முதலீடுகள் தேவைப்படும். இந்த நிதியை கையாள அனைத்து நிலைகளிலும் (பள்ளிகள் முதல்) தன்னாட்சியுடன் கூடிய பொறுப்புணர்ச்சியும் வேண்டியதாகிறது. இக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்களுக்கு நிதியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இவ் வத்தியாயத்தின் இறுதியில் உள்ளது. 1.3.1.2 பொது முதலீட்டுக்குமேல் மற்ற பல நிதி ஆதாரங்களை ஈட்டுதல் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பல நிதி ஆதாரங்கள் உள்ளன. அரசாங்க வருவாய் சார்ந்த நிதி, ‘நன்கொடைகள்/புரவு’ , தொழில் சார்ந்த நிதி போன்றவை. உதாரணத்துக்கு, பொது செலவுகள் மத்திய மாநில அரசுகளின் வருவாயில் இருந்து மட்டுமல்ல, தனியார் துறைகள் (கம்பெனிகள் சட்டம் 2013)ன் படி ஒதுக்கும் சமூகப் பொறுப்பு நிதியையும் (CSR) சேர்த்தது. இக்கொள்கை நோக்கியுள்ள இலக்கை உத்வேகத்துடன் அடைய இப்படியான நிதியை கூடுதல் ஆதாரமாக கொள்ள வேண்டும். 1.3.1.3 மத்திய அரசின் கல்வி மீதான செலவுகள் இரட்டிப்பாக வேண்டும் ஒட்டுமொத்த பொது செலவுகளில் கல்விக்கான முதலீடு 20% ஆக மத்திய அரசின் செலவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர வேண்டும். அதற்கான ஆதாரம் வரி வருவாயில் இருக்கிறது. தற்போதைய போக்குகளும் கணிப்புகளும் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. எ.கா. சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) புதிதாக மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50% உயர்ந்துள்ளது. மற்றும் நவம்பர் 2016ல் 18 லட்சம் தனிநபர் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை (பொருளாதார கணக்கெடுப்பு 2017-18) தொடரும் பட்சத்தில், நிதி ஒதுக்கீடும் விரைவாய் நடக்கும். 1.3.1.4 மொத்த பொது செலவுகளில் கல்விக்கு 20%ஐ எட்டும் வரையில் பொது முதலீட்டை பெருக்குவது பொதுவான நடைமுறையில், உதாரணத்துக்கு ஆண்டுக்கு 1% பொதுச்செலவில் கல்விக்கான முதலீடு இருக்குமெனில் இன்னும் 10 ஆண்டுகளில் இது 10% இல் இருந்து 20% ஆகும். நிதியை பயன்படத்தக்க வகையில் உபயோகித்தால் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை தரமானகல்வியை சாத்தியப்படுத்த முடியும். மேலும் அனைத்து கல்வி நிலைகளிலும் ஒரு கட்டத்தில் முதலீடுகள் தேவைப்படும். இந்த நிதியை கையாள அனைத்து நிலைகளிலும் (பள்ளிகள் முதல்) தன்னாட்சியுடன் கூடிய பொறுப்புணர்ச்சியும் வேண்டியதாகிறது. இக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்களுக்கு நிதியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இவ்வத்தியாயத்தின் இறுதியில் உள்ளது. 1.3.1.5 மற்ற அனைத்து கல்வி சார்ந்த விஷயங்களுக்குமான நிதி ஒதுக்கீடு. தேவையான நிதியை அனைத்து விஷயங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு எந்தவகையிலும் நிதியுதவி தேவையானவற்றுக்கு, சமரசம் செய்யப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும். எ. கா. கற்றல் தளவாடப் பொருட்கள், மாணவர்கள் பாதுகாப்பு மேம்பாடு, சத்துணவு, போதுமான ஊழியர்கள், ஆசிரியர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான உதவிகள். இதன் மூலம் சமூகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களை முன்னேற்றும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு கிடைக்க செய்யப்படும். A1.3.2. பொது நிதியை திறம்பட பகிர்ந்தளிப்பு – செயல்பாட்டு பிரச்சனைகளை கையாளல் பொதுக்கல்வி அமைப்பில் அமைப்பு, நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை திறம்பட கையாளுவதைப் பற்றி மற்ற அதிகாரங்களில் பார்க்கலாம் (எ.கா. பார்க்க பகுதி 18.6). இந்த மேம்பட்ட அமைப்பின் மூலம் ஒரு வலிமையான நிதி மேலான்மை ஏற்படும். ஆதலால் இந்த அமைப்பில் உள்ள தடைகள் ஒவ்வொன்றாக களையப்படும். இந்த நிதி அமைப்பு வெளிப்படை தண்மையையும் நேர்மையையும் உறுதிப்படுத்தி அதிலுள்ள இன்னல்களை களைவதன் மூலம் செயலூக்கம் அளிக்கும். சரியான நேரத்தில் நிதி அளித்து அதை பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும். 1.3.2.1. நிதியளித்தல் - சரியான நேரத்தில்: ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் சரியான நேரத்தில் பங்கிடப்படுவது மிகவும் முக்கியமானது, மேலும் நிதிகளின் ஓட்டம் சரியான நேரத்தில் பயன்படுத்த உதவுகிறது. வரவுசெலவுத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஒதுக்கப்பட்ட நிதியின் எந்த பகுதியையும் நிறுத்தி வைக்க எந்த காரணமும் இருக்கக்கூடாது. நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களில் (IDPs) ஒப்புக்கொண்டபடி நிதி அளித்தல் முழுமையாக செய்யப்படும். திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கும் இது அவசியம், எனவே மீறப்படக்கூடாது. நிதி அளிக்கப்பட்டதை வெளிப்படையாக இடுகையிடுங்கள், அவை செலவழிக்கப்பட வேண்டிய கடைசி அலகு அடையும் வரை எந்த மட்டத்திலும் தாமதமின்றி நிதி வழங்கப்படும். நிதி விநியோகத்தின் செயல்முறைகள் முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும், அவை எளிதில் கண்காணிக்கப்படலாம் மற்றும் பொறுப்புணர்வை அனைத்து மட்டங்களிலும் சரி செய்ய முடியும். 1.3.2.2 ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துதல்: வழங்கப்பட்ட நிதியை முழுமையான மற்றும் சரியான நேரத்தில் பயன்படுத்துவது கல்வி நிதியத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒதுக்கப்பட்ட நிதி IDPன் படி நிதியாண்டின் தொடக்கத்தில் அந்தந்த கணக்கில் வெளியிடப்படும் மற்றும் வழங்கப்படும், மேலும் அந்த தொகையின் பயன்பாடு ஆண்டு முழுவதும் அல்லது IDPன் படி குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடப்படுகிறது. திட்டத்தை நிறைவேற்றுவதை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்திற்கான விலகல்கள் நிதியாண்டுக்குள் அனுமதிக்கப்படும்; இருப்பினும், நிதியாண்டின் இறுதியில் நிதிகளின் மொத்த தொகை பயன்பாடு ஊக்கமளிக்கும். 1.3.2.3 நிதியை நேர்மையாக பயன்படுத்துதல் IDPன் வழிகாட்டுதல் படி ஒதுக்கப்படும் நிதியை அதை பயன்படுத்தும் அனைத்து நிலைகளிலும் உள்ள ஊழியர்கள் அதை தேவையுள்ள இடங்களுக்கு கொண்டுசெல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் அனைத்து மட்டங்களுக்கும் இக்கொள்கையை செயல் படுத்த தன்னாட்சி கிடைக்கும். திட்டத்தில் ஏதேனும் மாற்றமோ அதற்கான சூழ்நிலை ஏற்பட்டாலோ அதற்காக போதுமான விலக்கு அளித்து செயல்படுத்தலாம். நிதியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற பழக்கத்தை கைவிட்டு நிதியை உண்மையாக தேவை உள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவது வழக்கமாக வேண்டும். நேர்மையான நோக்கத்தை மட்டுமே கொண்டு இந்நிதியை பயன்படுத்தும் நிர்வாகத்தின் படிநிலைகளில் உள்ளோர் அதனை எந்தவொரு அச்சமும் இன்றி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். இக்கொள்கையை செயல்படுத்துவது மற்றும் எதிர்ப்பதில் உள்ள நேர்மை அளவிடப்படும். ஆதலால் இத்திட்டத்தின் பங்குராரர்களுக்கு வெளிப்படைதன்மையை உணர்த்துவதன் மூலம் கல்வி நிதியின் முழுமையான பயன்பாட்டை பற்றியும் இதில் ஏற்படும் செலவுகள் பற்றியும் அறிய முடியும். 1.3.2.4 நிதியை கையள்வதில் திறன் மேம்பாடு தனிமனித மற்றும் நிறுவன திறன் மேம்பாட்டுக்கென கணிசமான மற்றும் போதுமான நிதி ஒதுக்கப்படு அதன் மூலம் நிதி மேலான்மை மேம்படுத்தப்படும். A1.3.3. பல்வேறு வழிகளில் வரும் கல்வி கொடைகளை ஊக்கப்படுத்துதலும் அதற்கான வாய்ப்புகளும் இந்த கொள்கை பொது முதலீட்டை பெருக்குவதில் உறுதியாய் உள்ளது. ஆயினும் அவ்வாறு உயரும் முதலீட்டில் பொது நலன் கொண்ட தனியார் முயற்சிகளுக்கு இடையூராக இருத்தல் கூடாது. பொது மற்றும் தனியார் முன்னெடுப்புகள் போட்டியின்றி ஒன்றுக்கொன்று இனக்கமாக இருத்தல் அவசியம். லாப நோக்கற்ற, பொதுநலனில் அக்கறையுள்ள தனியார் கல்வி முன்னெடுப்புகள் ஊக்குவிக்கப்பட்டு ஆதரவளிக்கப்பட வேண்டும். அதனேடு லாப நோக்கங்களை தற்போதுள்ள சட்டங்கள் மூலம் கவனமாக கட்டுப்படுத்துதல் அவசியம். இந்த விவகாரத்தில் லாப நோக்கற்ற தனியார் கல்வி கொடையாளிக மற்றும் நிறுவன சமூக பொறுப்பு (CSR) போன்ற முன்னெடுப்புகள் கல்வி அமைப்பை உதவ ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. 1.3.3.1 புரவல் அளிக்கும் சூழல் உருவாக்குதல் கல்வி கொடையளிப்பதை ஊக்குவிக்கும் வழிமுறைகளையும் சூழலையும் மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். அம்முயற்சிகளின் வரவேற்பும் அதற்கு அமைப்பின் ஆதரவும் அதன் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன. ஆகவே சூழலையும் திறனையும் கல்வி அமைப்பிலேயே உருவாக்க வேண்டும். குறிப்பாக இந்நிதியை கையாளும் நிலைகளிலேய இது நடக்க வேண்டும். சிறிய மற்றும் போதிய முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். 1.3.3.2 செயல்படுத்தும் நோக்கில் புது வகையான கொடையளிக்கும் தனியார் நிறுவனங்கள் மிக நேர்மையான, தனியார் தரும் கல்வி கொடைகளை (புதிய மற்றும் பழைய நிறுவனங்களுக்கு) பகிர்ந்தளிக்க புதிதாய் ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். அரசு அதன் முயற்சிகள் மூலம் இந்நிறுவனத்துக்கு தனியார் கொடையாளிகளிடம் (தனி நபர் மற்றும் அறக்கட்டளைகள்) நிதியுதவி மற்றும் ஒழுங்கு முறைக்கான ஆலோசனைகளையும் பெறலாம். அதாவது இம்முயற்சிகள் செயல்படுத்த தற்போதிருக்கும் அறக்கட்டளை வடிவையே பயன்படுத்திக்கொள்ளலாம். 1.3.3.3 தரமான முறைப்படுத்துதல் நோக்கிய நகர்வு கல்வியில் லாப நோக்கற்ற தனியார் முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தவும், அதை செயல் படுத்தவும், கேட்டுப்பெறவும் வேண்டும். அப்படிப்பட்ட புரவல் நிதியை நேரடியாக தலையிட்டு அதற்கான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நேரடி தலையீடு இரு தளங்களில் செயல்படும். அ) தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பெறப்படும் நிதியின் தரத்தையும்ம பயன்பாட்டையும் மேப்படுத்த வேண்டும். ஆ) தற்போதிருக்கும் நிறுவனங்கள் மூலம் நேரடி பயனாளர்களை அடைதல். லாபநோக்குடைய கல்வி செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்படும். 1.3.3.4 அனைவரையும் உள்ளடக்கும் உயர்தர கல்வி கொடையாளர் நிறுவனங்களை உருவாக்குவதில் உதவி. அனைத்து மாநில அரசுகளும் லாப நோக்கமற்ற வகையில் உருவாக்கப்படும் நிறுவனங்களுக்கு, அவற்றுக்கான அனுமதி, கட்டிடங்களுக்கு அனுமதி பொன்றவற்றை முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும். அவற்றை தொடங்குபவரின் பொருளாதாரம் அதை ஆரம்பிப்பதற்கு மட்டுமின்றி அதை தொடர்வதற்கான மானியம்/நிதியுதவி அளிப்பவராக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் தேசம் தழுவிய செயல்பாட்டிலுள்ள இன்னல்களை களைய வேண்டும். அதே நேரத்தில் அவற்றின் தரத்தை அளக்க தெளிவான பொருளாதார அளவுகோள்களும் வகுக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு அவர்கள் தங்கள் செலவுகளுக்காக கல்வி கட்டணத்தை 25% மேல் நம்பியிருக்க கூடாது, பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதம் 30:1 மேல் இருத்தல் ; மேல்நிலை பள்ளிகளில் அது 20:1 ஆக இருத்தல் வேண்டும், பள்ளிகள் சிறு நகரங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருக்க வேண்டும். (பார்க்க அத். 6) அம்மாதிரி நிறுவனங்களுக்கு சமுதாய-பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் நீண்ட கால திட்டம் இருக்க வேண்டும். அவர்கள் பட்டம் பெறும் வரை தேவையான வழிகாட்டுதல்களும்அவசியம். அதே போல பகுதி 17.1ல் குறிப்பிட்டுள்ளது போல் அதிகாரம் பெற்ற தன்னாட்சி மற்றும் திறமையான தலைமை (பார்க்க 17.1.20 அண்ட் 17.1.2.1) குறிப்பிட்டது போல இந்நிறுவனங்கள் முழுநிதி மற்றும் கல்விசார் தன்னாட்சியுடன் இருத்தல் வேண்டும். இந்த புதிய தரமான நிறுவனங்கள் உருவாக்கும் முன்னெடுப்புகள் சில முக்கியமான விஷயங்களில் கவனம் செழுத்தும். எ.கா. பூகோல ரீதியில் முழுமையாக கல்வி சென்று சேராத இடங்களில்ஆரம்ப கல்வி மற்றும் விடுபட்ட மக்கள்தொகையினர் மேல் நிலை படிப்புகளில் பட்டங்கள் பெற, விடுபட்ட இனங்கள் ஆசிரியர்கல்வி மற்றும் மருத்துவ படிப்புகளில் வேலைவாய்ப்புகளுக்கு தயார் படுத்தப்படுவர். தொழில் அமைப்புகளின் துணையுடன் தொழிற்கல்வியின் தரமும் மேம்படுத்தப்படும். 1.3.3.5 தற்போதிருக்கும் நிறுவனங்களில் தனியார் நிதியை நெறிப்படுத்தும் புள்ளிகள் தற்போதிருக்கும் தனியார் நிறுவனங்களில் கல்வி நன்கொடைகளை முக்கியதேவைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இக்கொள்கை தனியார் மற்றூம் பொது நிறுவனங்களில் அப்படி நிதி அவசியமான இடங்களை கண்டறிந்து அதில் நான்கு முக்கிய இடங்களை பற்றி பேசுகிறது. இது நீண்ட பட்டியல் இல்லை. மேலும் தேவைப்படும் போது இது போன்ற இன்னும் பல புள்ளிகள் சேர்க்கப்படும். அ) தனியார் கல்வி ஊக்கத்தொகை நெறிப்படுத்தப்படும் கல்வியில் அனைத்து நிலைகளிலும் உள்ள தேவை சார்ந்த, சாதனைகள் சார்ந்த உதவித்தொகைகளை தேசம் முழுவாதிலும் இருந்து கோர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை முன்சொன்ன கொடையளிக்கும் நிறுவனங்கள் நிர்வகிக்க வேண்டும். அதற்கான செயல்பாடுகள், தெளிவாகவும் அதிகார தலையீடுகள் குறைவாகவும் அனுபவம் மிக்க புரவல் குழுக்களால் நிர்வாகிக்கப்பட வேண்டும். மேல்நிலை ஆசிரியர்களின் முனைவர் படிப்புகளுக்கு இது பெரிதும் உதவும். ஆ) கட்டமைப்பில் தனியார் முதலீடுகளை நெறிப்படுத்துதல் வெகு கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை உருவாக்க பெரும் நிதி தேவைப்படுகிறது, கொடையளிக்கும் நிறுவனங்களின் உலகலாவிய நிதி திரட்டல்கல் மூலம் உருவாக்கப்படும் கட்டமைப்புகள் மிக முக்கியமானவை. தேசிய மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் பெரும் பங்காற்ற முடியும். இக்கட்டமைப்புக்கு தேவையான உல்டனடி நிதியை இந்நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் அடைய முடியும். இ) தொழிற்கல்வியில் ஆசிரியர் தேர்வு மற்றும் பயிற்சியில் தனியார் முதலீடுகளை நெறிப்படுத்துதல் தற்போதிருக்கும் நிறுவனங்களில் இந்த நிதியின் மூலம் ஆசிரியர் இடங்கள் நிரப்பப்படும். போதுமான பயிற்சியின்மையால் இந்நிறுவனங்களில் கற்பித்தலும்,ஆராய்ச்சிகளின் தரமும் முன்னேற இயலவில்லை. அவ்வாறான பயிற்சிகளுக்கு இந்நிதியை பயன் படுத்தலாம். மேல்நிலை கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘இருக்கைகள்’ இதற்கு சிறந்த உதாரணம். இப்படி தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நன்கொடை அளிக்கப்படும் இருக்கைகள் நாட்டின் மேல்நிலை கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். ஈ) பள்ளி கல்வியில் ஆசிரியர்களுக்கு தொழில்முறை பயிற்சி மற்றும் அமைப்புகளின் நிதியுதவி பொதுக்கல்வி அமைப்பில் ஆசிரியர் தொழில்முரறை பயிற்சிக்கு போதுமான நிதி அளிக்கப்படாமல் இருக்கிறது. இதுவே அரசு-தனியார் முதலீட்டுக்கான புள்ளி. கல்வி நிறுவனங்களில் தற்போதிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை நிர்வகிக்க இம்முயற்சிகள் அவசியமானது. மாநில அரசு தனியார் அறக்கட்டளைகளை அமைத்து பள்ளிகளுக்கு கொடையாளிகள் அளிக்கும் நிதியை தேர்ந்த கல்வியாளர்களைக் கொண்டு நெறிப்படுத்தலாம். எ.கா. கட்டமைப்பை உருவாக்க, மதிய உணவை மேம்படுத்த, புத்தகம் வாங்க. அறக்கட்டளைகள், அளிக்கப்படும் நிதியை பொதுக்கல்விக்கு சரியாக பயன்படுத்தும். 1.3.3.6 ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் நன்கொடைகளை ஊக்குவித்தல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு தலங்களில் நன்கொடைகள் ஊக்குவிக்கப்படும். இதில், NRF அதற்கான வாய்ப்புகளை வழங்கும். மேலும் பொது அமைப்புகள் முதலீடு செய்ய அஞ்சும் விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கப்படும். இது பல கூட்டு முயற்சிகளை உருவாக்கி கடினமான மற்றூம் அதி நவீன வேலைகளை செய்ய ஊக்கமளிக்கும். அதன் பயனை கற்றலிலும், பொது கல்வி மேம்பாட்டிலும் பயன்படுத்தலாம். A1.3.4. சில குறிப்பிடத்தக்க நன்கொடை நிதி ஆதாரங்கள் அனைத்து தனி மனித, நிறுவன மற்றும் சமூகங்களின் வழியாபெறப்படும் நிதி ஆதாரங்கள் ஊக்கமளிக்கப்படும். கல்விப்பணியில் ஆர்வமுடைய ஆனால் தனது பொருளாதார நிலையால் குறைந்த நிதியளிப்பவரையும் இக்கொள்கையில் ஊக்கப்படுத்தப்படும். A1.3.3ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளும் செயல் திட்டங்களும் அனைத்துவகையான நிதிக் கொடைக்கும் பொருந்தும் என்றாலும் மற்ற பிற விஷயங்கள் நிறுவனங்களையும் சமூக குழுக்களையும் சார்ந்தது. A1.3.4.1. தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கம்பெனிகள் சட்டம் 2013, உலகின் குறிப்பிடத்தக்க சட்டங்களில் ஒன்று. அதன் மூலம் நிறுவனங்களின் சமூக பொறுப்பு (CSR) நிதி அளவிடப்பட்டு நெறிப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 1, 2014 ல் நடைமுறைக்கு வந்த இச்சட்டம் மொத்த மதிப்பு 500 கோடிக்கு மேலோ அல்லது 1000 கோடிக்கும் மேலான அளவு அல்லது 5 கோடிக்கும் நிகர லாபம் உள்ள தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் தங்களின் சராசரி நிகர லாபத்தில் 2% சமூக பொறுப்பு (CSR) நிதிக்கு செலவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதில் முக்கியமாக கல்வியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கவும், பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்முறை பயிற்ச்சியும், வாழ்வாதார முன்னேற்ற திட்டங்களுக்கும் செலவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமூக பொறுப்பு (CSR) நிதியை கொண்டு மேற்சொன்ன விஷயங்களை வழுப்படுத்தவேண்டியது அவசியம். அ) நிறுவன சமூக பொறுப்பு (CSR) கல்வியில் குறிப்பிடத்தக்க முதலீட்டை கொண்டு வர வெண்டும்: பெரு குழுமங்களும் வணிக நிறுவனங்களும் தேசத்தின் இந்த கல்விக்கான பெருமுயற்சிக்கு உதவிட, ஊக்கப்படுத்த வேண்டும்.. ஆ) பொதுத்துறை நிறுவனங்களின் சமூக பொறுப்பு: பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அமைந்துள்ள இடங்களின் அருகிலுள்ள பிந்தங்கிய சமூகங்களின் கல்வியின் மீது கவனம் செலுத்தி அவர்களை முன்னேற்றலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களை ஒரு முக்கிய நிதி ஆதாரமாக கருதலாம். பொதுவாக முன்னாள் மாணவர்கள் அவர்கள் கற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தாலும் அவர்களுக்கு அதை எப்படி செயதென வழிவகை தெரிவதில்லை. மேலும் உள்ளூர் சமூகத்தை அணுகி அவர்கள் உதவிகளை கோருவதும் பெரிதாக நடப்பதில்லை. நம் நாட்டில் மேற்சொன்னவற்றில் வெற்றிகரமான பல உதாரணங்கள் இர்க்கிறது. அதிலிருந்து நாம் கற்க வேண்டும். அ) முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்புகளை பெறுதல் கல்வியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்புகளை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இம்மாதிரியான நிதி ஆதாரத்தை பெறுவதற்கு வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். பெரும்பாலும் இவை பாரம்பரியம் மிக்க பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். அளிக்கப்படும் நிதி சரியான பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தினால் இது ஒரு முக்கியமான நிதி ஆதாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்நிறுவனங்களில் நிதியைப் பெற வழிமுறைகள் வகுக்க ஊக்குவிக்கப்படும். மேனிலை கல்வி நிறுவனங்களில் (HEI) ‘மேம்பாட்டு அலுவளகங்கள்’ ஏற்படுத்தப்பட்டு (பார்க்க P17.1.17 Strong Structures and Mechanisms for Raising Resources – Development office ) அதற்கு முதாற்படியாக முன்னாள் மாணவர்களைப்பற்றிய ஒரு கோப்புத்தொகுப்பை உருவாக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மேனிலை கல்வி நிறுவனங்களில் இது பழக்கப்படுத்தப்பட வேண்டும். ஆ) நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் மத நிறுவனங்களை பங்கெடுக்க ஊக்கப்படுத்துதல்: இந்து மடங்கள் மற்றூம் ஆசிரமங்கள், கிருத்தவ மிஷனரி நிறுவனங்கள், இஸ்லாமிய அறக்கட்டளைகள், புத்த மற்றூம் ஜைன மத முன்னெடுப்புகள், குருதுவாராக்கள் போன்றவை நமது பல கல்வி முன்னெடுப்புகளுக்கு வரலாறு நெடுக உதவியுள்ளன. இக்கொள்கையின் ஒட்டுமொத்த இலக்கையும் அடைய, வழுப்பெற செய்ய இம்மாதிரியான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும். A1.4. எங்கே கூடுதல் நிதி உதவி தேவைப்படும்? இந்த கொள்கையை செயல்படுத்த கூடுதல் நிதியுதவிகள் தேவைப்படும். சில கூடுதல் நிதி ஒருமுறை மட்டுமே தேவைப்படும்.( பார்க்க A1.5; அட்டவணை A1.9); சில நிதி உதவிகள் தொடர்ச்சியாக தேவைப்படும்(பார்க்க அட்டவணை A1.1 முதல் A1.8) வரும் நாட்களில் நாட்டின் ஒட்டுமொத்த பொது செலவினத்தில் 20%க்கு கல்விக்கு செல்விடுவது இக்கொள்கையை முழுமையாக செயல்படுத்த உதவும். இந்த பகுதியில் கொள்கையின் ஒவ்வொரு விஷயத்துக்குமான தேவையான கூடுதல் நிதி மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒரு வழிகாட்டுதலுக்கான குறியீடுகளே, நிஜ தேவைகள் காலம், நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் சமூக போக்குகள் சார்ந்து மாறுபடும். இது பொது நிதிக்கு மட்டுமே பொருந்து, தனியார் நன்கொடைகள் முதலீடுகள் இந்த மதிப்பீட்டின் மேல் சேர்த்து கணக்கிடப்படும். A1.4.1. கூடுதல்/தொடர் செலவினங்கள் பற்றிய கண்ணேட்டம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதங்கள், மொத்த அரசு செலவினங்களின் அந்தந்த செலவுகளின் விகிதமே. இது (பட்ஜட் 2017-18 மதிப்பீட்டுகள்) லில் குறிப்பிட்ட மொத்த செலவினங்கள் ஒட்டி எடுக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகும் – நிஜ மதிப்பீடுகள் பொது நிதியின் வளர்ச்சியை ஒட்டி வளரும். [] *recurring / will grow with the public finance growth *all percentages are rounded off to the closest first decimal NTP: National Tutors Programme RIAP: Remedial Instructional Aides Programme அட்டவணை A1.1 அடுத்தகட்ட விளக்கமும் மேல் அட்டவணையில் A1.1 குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் தோராயமான கனக்கீடுகளும் பின்வரும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. A1.4.2. ஆரம்பக்கல்வி – விரிவாக்கம்/மேம்படுத்துதல் ஆரம்பகல்வி மேம்படுத்தப்பட்டு அதை பள்ளிக்கல்வியின் ஒரு பகுதியாக மாற்றாப்படும் மற்றும் கல்வி பெறும் உரிமை (RTE)ன் கீழ் கொண்டுவரப்படும். [] அட்டவணை A1.2 ஆரம்பக்கல்வியின் முதலீடு அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும், கற்றல் இடு பொருட்களை உருவாக்குவதிலும், ஆசிரியர் திறன் மேம்பாட்டிலும் ஊட்டச்சத்து சொடுப்பதிலும் செலவிடப்படும். கட்டமைப்பை இரு தாளங்களில் உருவாக்க வேண்டும். தற்போதிருக்கும் அங்கன்வாடிகளை தரமுயர்த்துவதுடன், இருக்கும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி குழுக்களை உருவாக்கிட புது கட்டமைப்புகளை உருவாக்குதல் அவசியம். அனைத்து ஆரம்பகல்வி நிலையங்கலும் போதுமான வசதிகள் செய்து தரப்படவேண்டும். உதாரணத்துக்கு குழந்தைகள் பாதுகாப்பு, மகிழ்ச்சியான சூழலை உருவாக்குதல் போன்ற சில. கற்றலுக்கான வசதிகளை மேம்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். தற்போதிருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சியளித்து அவ்ர்களை ஆரம்ப கல்வி பயில்விப்பவராக உயர்த்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக அவர்களின் திறனை மேம்படுத்தி அசிரியராக ஆக்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். போதுமான ஆசிரியர்களும் இந்த கல்விநிலையில் பணியமர்த்தப்படவும். அங்கன்வாடி பனியாளர்களின் வேலை சூழலையும் மேம்படுத்தவும் வேண்டும். ஊட்டச்சத்தை அனைத்து குழந்தைகளுக்கும் உறுதிசெய்வதில் ஆரம்ப கல்வி நிலையங்கள் மிகவும் முக்கியம். தற்போதிருக்கும் அங்கன்வாடிகளின் நிலையையும் வெகுவாக மேம்படுத்தவேண்டியுள்ளது. A1.4.3. அடிப்படை எண்ணியல் மற்றும் எழுத்தியல் அடிப்படைக்கல்வியில் எண்ணியல் மற்றும் எழுத்தியல் குறித்த உடனடிக்கவனம் மிக அவசியம். இத்துறைகளில் கடும் வீழ்ச்சியில்இருக்கிறோம். இது தொடர்பாக தேசிய பயிற்றுநர் நிகழ்வுக்களம் (NTP)ஒன்றையும் மற்றும் பயிற்றுவித்தலில் மறுசீரமைப்புக்களம் (RIAP) ஒன்றையும் தோற்றுவித்தல் அவசியம். இவ்விரண்டு குழுக்களும் தேசிய அளவிலான பயிற்றுவிக்கப்பட்ட தன்னார்வலர்களைக்கொண்ட அமைப்பாக இருக்கும். இவ்வமைப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான பெரிய இடைவெளியைக்குறைக்கும் - உடனடித்தீர்வுகளைக்காண முயலும். [] Table A1.3 இந்த இரண்டு குழுக்களும் (NTP / RIAP) மத்திய கால அளவீடுகளில் ஒன்றாக அமையும். ”அடிப்படை எண்ணியல் எழுத்தியலில் தன்னிறைவு” என்பதை இலக்காகக்கொண்டு பயிற்றுவிப்பாளர்களும், ஆசிரியர்களும் மிகச்சிறந்த பயிற்சியினை தொடர்ந்து வழங்க வேண்டும். முறையான புத்தகங்களை வடிவமைப்பதே அடிப்படை எண்ணியல் மற்றும் எழுத்தியலின் பெரும் சவாலாகும். அதனால், எல்லா பள்ளிகளுக்குமே முறையான நூலக வசதிகளை உருவாக்குதல் அவசியம். வகுப்பு நூலகங்கள், பள்ளி நூலகங்கள் மற்றும் எளிதில் அணுகக்கூடிய முறையில் உள்ளூர் நூலகங்கள் பலவும் உருவாக்கப்படவேண்டியது அவசியம். இது தொடர்பான முதலீடுகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் என பல்நோக்கு கொண்டதாக அமையும். இவ்வகையான புத்தகங்கள் பயிற்றுவிக்கும் சாதனங்கள் என்ற அளவோடு நின்றுவிடாது, அடிப்படைக்கல்வி பயிலும் குழந்தைகளின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் அமைவது அவசியம். A1.4.4. எல்லா பள்ளிகளிளும் தேவையான மற்றும் போதுமான உள்கட்டமைப்புகள் / வசதிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை முழுமையான உபயோகப்படுத்திற்கு உட்படுத்துதல் எல்லா பள்ளிகளுக்கும் தேவையான மற்றும் போதுமான உட்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இவற்றில் பள்ளிக்கட்டிடங்கள், புத்தகங்கள், கற்றல் கையேடுகள் , மனித வள மேம்பாட்டு தொடர்பான ஆதாரங்கள், ஆசிரியர்கள் என அனைத்துத்துறைகளும் அடங்கும். இதற்கு பள்ளி வளாகங்களை ஒரு கல்வி மேலாண்மை அலுவலகங்களாக அணுகுதல் அவசியம். அதன் மூலமாக கல்வியில் தன்னிறைவு பெற முடியும். [] அட்டவணைA1.4 காலியாக உள்ளா அனைத்து பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களும், முறையான ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் நிரப்பப்படும். சிறப்புக்கல்வி, யோகா, விளையாட்டு, மேடைப்பயிற்சிகள் போன்ற கற்பித்தல் முறைகளுக்கும், முறையாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த நியமனங்கள் அனைத்துமே மொத்த பள்ளிக்குமான தன்னிறைவு பெற்ற ஆசிரியர் எண்ணிக்கை, ஆரம்ப்பள்ளிகளுக்கான முழுமையான ஆசிரியர்களை நிரப்புதல், சிறப்புக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பல்பயிற்றுநர்களைக்கொண்ட வளாகங்களாக பள்ளிகளை மாற்றுவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும். சமூகக்களப்பணியாளர்கள் பள்ளிகளில் நியமனம் செய்யப்படுவார்கள். கூடுதலாக, தேவையான பணி உதவியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். கற்றல் கையேடுகள், புத்தகங்கள் , கணினி வழிக்கற்றலுக்கான முறையான செயல்பாடுகள், ஆய்வக உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுவதோடு, தேவையான நேரத்தில் அதனை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவற்றில் குழந்தைகளுக்கான கற்பித்தல் கையேடுகள், விளையாடு, இசை மற்றும் தொழில் முறை சார்ந்த கல்விகளும் அடங்கும். பள்ளிகளின் மின்சாரம், தண்ணீர் மற்றும் பொதுவான உட்கட்டமைப்புகளின் பராமரிப்புகளுக்குத் தேவையான நிதி போதிய அளவு வழங்கப்படும். A1.4.5. உணவு மற்றும் ஊட்டச்சத்து மாணவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்குவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்படும். பள்ளிகளின் மதிய உணவுத்திட்டம் மாணவர்களின் நலனில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனாலும் சமீபகாலங்களில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் மதிய உணவின் தரம் குறைந்து வருகிறது.  மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் விதமாக பள்ளிகளின் உணவு வழங்கல் திட்டங்கள் மேம்படுத்தப்படும். [] Table A1.5 தனிப்பட்ட மாணவருக்கான உணவு ஒதுக்கீட்டிற்கான நிதி, அந்தந்த மாணவரின் வயது, அந்த வயதிற்குத்தேவையான ஊட்டச்சத்து என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அதிகரிக்கப்படும். இந்த ஒதுக்கீடானது உணவு வீக்கத்திற்கான கணக்கீடுகளுடன் இணைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உணவையும், ஊட்டச்சத்தையும் அந்தந்த வருடங்களுக்கு தகுந்தவாறு கணக்கீடு செய்து சுணக்கமில்லாமல் வழங்க வகை செய்யப்படும்.  பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளில், காலை உணவும் சேர்க்கப்படும். மதிய உணவு வழங்கல் திட்டம் 12ம் வகுப்பு வரை விரிவு படுத்தப்படும். பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகள் முறையான ஊட்டச்சத்து, உள்ளூர் உணவுகளின் தேர்வுகள் மற்றும் பலதரப்பட்ட உணவுமுறைகளின் தேர்வின் அடிப்படையில் நியாயமான முறையில் வழங்கப்படும்.  இதற்கான போதுமான நிதியாதாரங்கள் ஒதுக்கப்படும் 1.4.6. ஆசிரியர் ஒதுக்கீடுகள் மற்றும் அவர்களுக்கான தொடர்ந்த கற்றல் மேம்பாடுகளை வழங்குதல் முறையான ஆசிரியர் பயிற்சி அமைப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக நேர்த்தியான திறமை வாய்ந்த கற்றல்முறைகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல் அவசியம். [] Table A 1.6 ஆசிரியர் கல்வி முறையாக தரப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட நான்கு வருட இளநிலை ஆசிரியர் படிப்பாக வழங்கப்படும் (B.Ed.). இதற்கு கணிசமான நிதி ஒதுக்கீடும் திறன் மேம்பாடும் அவசியம். இந்த உயர்தர பள்ளிக்கல்விப்பயிற்சிக்கு உட்கட்டமைப்பு முன்னேற்றங்களும், ஆசிரியர் பயிற்று நர்களின் தரமுயர்த்துதலும் அவசியமானது. ஆசிரியகளுக்கான தொடர்ந்த கல்வித்தர மேம்பாடு என்பது பயனுள்ள, பல்மாதிரிப்பயன்பாடுகள் மற்றும் உயர்தர மேம்பாட்டு வாய்ப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். A1.4.7. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயர்கல்விக்கான புதிய மேம்பாட்டுக்கொள்கையை கல்வி நிறுவனங்களில் சுதந்திரமாக செயல்படுத்த குறிப்பிடத்தக்க முதலீடுகள் அவசியம். இவற்றில் பயிற்றுநர்கள், கல்வி வழங்கற் கருவிகள், உட்கட்டமைப்பு, பராமரிப்பு என அனைத்தும் அடங்கும் [] Table A1.7 சிறிய உயர் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பெருமளவிலான பல்வகை நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவை திறமான முன்னேற்றத்தை கொடுக்கும் சாத்தியக்கூறுகளாகும். இருப்பினும், ஒட்டுமொத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற போதுமான வசதிகள், கற்றல் வளங்கள், மற்றும் ஆசிரியர்கள் மிகவும் தேவை. மேலும், type 1 மற்றும் type 2 நிறுவனங்களில் நியமிக்கும் ஆசிரியர்கள், கற்பித்தலோடு மட்டும் அல்லாமல் ஆராய்ச்சியிலும் சிறந்துவிளங்கவேண்டும். முக்கிய கல்வியில் உள்ள உயர்தர தொழிற்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு கணிசமான ஆதரவு தேவைப்படும். A1.4.8. ஆராய்ச்சி ஆராய்ச்சிக்கான நிதியுதவியை பல்வேறு துறைகளாலும் அணுகும்படி இருக்கவேண்டும். ஒட்டுமொத்த துறையின் துடிப்பான வளர்ச்சிக்கு உயர்தர ஆராய்ச்சி என்பது மிகவும் அவசியம். NRF ஆனது ஆராய்ச்சியை கட்டமைக்க எளிதானதாக இருக்கும். NRF ஆனது ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்த அமைப்பு நிதி மற்றும் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வழிகளை நல்கும் . [] Table A1.8 A1.5. ஒரு முறை செய்யும் செலவுகள் பலதுறைகளில் செய்யும் மேலதிக முதலீடுகளோடு, சில நேரங்களில் ஒரு நேர செலவும் இருக்கும். இந்த ஒரு முறை செய்யும் செலவு என்பது, உள்கட்டமைப்பை செய்யும் வளங்களை மேம்படுத்துதலாக இருக்கும். [] Table A1.9 பின்னிணைப்பு - 2 முன்னெடுத்தல் குறிக்கோள்: செயல்திட்டமானது கல்வியுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரகளின் ஓத்திசைவோடும் தகுந்த திட்டமிடலோடும் அதன் முழுமையாக உள்ளடக்கத்துடன் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல். எந்த ஒரு செயல்திட்டமும் அது நிறைவேற்றப்பட்டால் மட்டுமே முழுமையடையும். இந்தியாவில் கல்வி முன்னேற்றமடைய தேசிய கல்விக் கொள்கை 2019 அதன் முழுமையான உள்ளடக்கத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு பலதரப்பட்ட வல்லுனர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். மேலும், இதற்கு பயன்படுத்த வேண்டிய உத்திகளை முன்னிருத்தி அதற்குத் தகுந்த காலவரைவை முடிவு செய்ய வேண்டும். A2.1. செயல்திட்டத்தை நிறைவேற்றுதல். ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை திறந்த மனதோடும் வளமான கொள்கைகளோடும் தனித்திறனுடன் அனைவருக்கும் சமமான முறையில் நிறைவேற்றியதற்கான சான்றுகள் இந்திய வரலாற்றில் நிறைய உண்டு. ஆனாலும், இதற்கு பல்வேறு வல்லுனர்களின் ஒத்துழைப்பும் முன்னெடுப்பும் தேவைப்படுகிறது. மேலும் மதிப்பாய்வு செய்தல், தொடர் பிழைதிருத்துதல், தகவல் தொடர்பு, தக்கச் சூழலை உருவாக்குதல், ஆலோசனை அளித்தல், தகுந்த முதலீடு போன்றவை தேவைப்படுகின்றன. இந்த சிக்கல்கள் எல்லாம் சேர்ந்து செயல் திட்டத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே தொடர்பின்மை, திட்டம் குறைவாக நிறைவேற்றப்படுதல், அல்லது துண்டு துண்டாக குறுகிய கால கண்ணோட்டத்துடன் அணுகப்படுதல், ஒருமித்த பொதுவான இலக்கை அடைய ஒத்திசைவில்லாமல் இருத்தல், ஒன்றுடன் ஒன்று சேராமல் பொருத்தமற்றுப் போகுதல், தவறான கண்காணிப்பு வழிமுறைகள், கண்காணிப்பு விதிமுறைகளின் போதாமை மற்றும் தெளிவில்லாத கண்காணிப்பு வழிமுறைகள் போன்றவற்றுக்கும் வழிவகுக்கின்றன. சில வழிகாட்டும் கொள்கை விளக்கங்கள், அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்த வரைபடங்கள் இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. இவை உயர்நிலை வழிகாட்டியாக விளங்கினாலும், இன்னும் விரிவான திட்டமிடல்களை அதிகாரிகள் கூடுதலாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. A2.2. தேசிய கல்விக் கொள்கை 2019 – ஐ செயல்படுத்த உதவும் கொள்கை வழிகாட்டுதல்கள்: கொள்கையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் பின்வரும் வழிகாட்டுதல்கள் பயன்படும். 2.2.1. உட்பொருளும் நோக்கமும்: கொள்கையின் நோக்கத்தையும் உட்பொருளையும் சரியாகச் செயல்படுத்துவது மிகவும் அவசியமானது ஒன்று. செயல்திட்டத்தில் அதிக விவரங்கள் இருப்பினும் அதை அதன் நோக்கத்தைத் தெளிவாக உணர்ந்து செயல்படுத்துவது முக்கியமானதாகும். .2.2.2. படிப்படியாக செயல்படுத்துதல்: செயல்திட்டத்தைப் படிப்படியாக செயல்படுத்துவது முக்கியமானதாகும். a. கொள்கையின் ஒவ்வொரு அலகுக்கும் நிறைய படிகள் இருக்கும். b. ஒவ்வொரு படியும் அடுத்த நிலையின் அடித்தளமாக இருப்பதால் ஒவ்வொரு படியும் முக்கியத்துவம் வாய்ந்தது. c. படிப்படியாக செயல்படுத்தப்படுதல் மூலம் கொள்கையினை சிறப்பாக ஒருங்கிணைக்கலாம். 2.2.3. முதன்மைப்படுத்துதல்: வரிசைக்கிரமமாக செயல்படுத்துதலில் முதன்மைப்படுத்துதல் முக்கியமானதாகும். 1. கொள்கையானது கல்வியில் விரிவானதொரு மாற்றத்தை உருவாக்க முனைந்தாலும், முதன்மைப்படுத்துதலோடு கூடிய படிப்படியான அணுகுமுறை தேவைப்படுகிறது. 2. முதன்மைப்படுத்துதல் மூலம் முக்கியத்துவமும் அவசரமும் வாய்ந்த செயல் முதலில் செயல்படுத்தப்பட்டு நல்ல அடித்தளம் அமையப் பெருகிறது. 2.2.4. பரந்துபட்டதன்மை: இதன் பரந்துபட்ட தன்மையானது துண்டுதுண்டாக இல்லாமல் முழுமையான கல்வி அமைப்பையும் செயல்திட்டத்தோடு இணைத்து செயல்படுத்த உதவுகிறது. a. இந்தக் கொள்கையானது நம் தேசத்தின் கல்விமுறையை விரிவான முறையில் மாற்றுவதன் மூலம் முழுமையான செயலாக்கம் பெறுகிறது. b. எனவே இதன் அணுகுமுறை முழுநீள அளவில் குறிக்கோளை அடையும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. 2.2.5. ஏற்கனவே உள்ள அடிதளத்தின் மேல் கட்டமைத்தல்: முடிந்த வரையில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட அமைப்புகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும் அல்லது பலப்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அமைப்புகள் உருவாக்குவதற்கு அல்லது அதில் மாற்றங்கள் செய்வது இரண்டாம் பட்சமாக வைத்துக் கொள்ளல் வேண்டும். a. எந்த ஒரு நல்ல கொள்கையும் ஏற்கனவே இருப்பவற்றை சிறப்பாக கட்டமைப்பதே சிறந்தது – முக்கியமாக அமைப்புகளிலும் நிறுவனத்திலும்; எனவே இந்தக் கொள்கையின் படி ஏற்கனவே உள்ள கட்டமைப்பை வலுப்படுத்துவதே முதன்மைப் பணியாகும். b. புதிய கட்டமைப்புகளும் நிறுவனங்களும் இதனை தங்கு தடையின்றி செல்ல ஒருங்கிணைக்கும். 2.2.6 ஒன்றாக கண்காணிப்பதும் ஒருங்கிணைந்து செயல்படுத்துதலும்: கல்வியென்பது ஒரே நேரத்தில் நடைபெறும் நிகழ்வென்பதால் ஒன்றாக கண்காணிப்பதும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதும் கவனமாக திட்டமிடப்பட வேண்டியிருக்கிறது. 2.2.7 போதிய வளத்தைப் பெறுவது: உள்கட்டமைப்பு, தேவையான நிதி, மனித வளம் போன்றவற்றை சரியான நேரத்தில் உட்செலுத்துவது திருப்திகரமாக செய்து முடிப்பதற்கான வழிமுறை. 2.2.8 ஆய்வுகளும் மதிப்பீடுகளும்: எவ்வித துவக்க முயற்சிகளுக்கும் கவனமான ஆய்வுகளும் சரியான பிணைப்பு ஏற்படுத்த இணைப்புகளுக்கிடையே செயல்படுத்தப்படும் பலவிதப் படிகளின் மீதான மதிப்பீடுகளும் அவசியமானதாகும். இது தவிர அடுத்தடுத்தத் திட்டங்களுக்கும் வலிமையான அடித்தளத்திற்கும் குறிப்பிடத்தக்க முதலீடுகளும் நடவடிக்கைகளும் தேவையானதாகும். A2.3. செயல்திட்ட வரைபடத்திற்கான அணுகுமுறை: பல்வேறு துறைகளின் முக்கியச் செயல்கள் பின்வரும் பிரிவு தேசிய கல்விக் கொள்கை – 2019 கூறும் செயல்திட்டத் துவக்கத்திற்கான பொறுப்புகள் பற்றியும் அதன் பரந்த காலவரிசையையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் செயல்திட்டத்தை அதன் ஒவ்வொரு படிகளிலும் முழுமையாக செயல்படுத்த கடைசி நாள் சதுர அடைப்புக் குறிகளுக்குள் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு செயல்திட்டத்தை சரியான வகையில் செயல்படுத்த மத்தியில் அதிகாரி/அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதன்மூலம் சீர்திருத்தம் செய்யப்படும். இது பிற படிநிலைகளைச் செயல்படுத்தும் அமைப்புகளையும் கண்காணித்து திட்டம் சரியான முறையில் நடக்க உறுதுணையாக இருக்கும். உதாரணமாக NHERA எனும் உயர்கல்வியைக் கட்டுப்படுத்தும் அமைப்பு NAAC மற்றும் AIs உடன் இணைந்து செயல்படும். ஒவ்வொரு படிநிலையிலும் செயல்திட்டத்தின் துவக்கப் புள்ளிகள் வரைபடப்படுத்தி அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கொள்கையைச் செயல்படுத்துவதற்கு அதிகப்படியான விவரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை குறிப்பிட்ட படிநிலையை நிர்வகிக்கும் அதிகாரிகள் முறையாகத் திட்டமிட்டு சொல்லப்பட்டிருக்கும் கொள்கையைச் சரியாக பின்பற்றிச் செய்து முடித்தல் வேண்டும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்கள் வளர்ச்சிகள் ராஷ்ட்ரிய ஷிக்சா ஆயோக் (RSA) / தேசியக் கல்விக் கமிஷன் (NEC) இரண்டிற்கும் இந்த செயல்திட்டத்தை விரிவாகவும் முழுமையாகவும் செயல்படுத்துதல் முதன்மையான பணியாகும். MHRD.1 RSA / NEC இரண்டு அமைப்புகளும் நிறுவப்படும். இதற்குத் தேவையான அனைத்தும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செய்யப்படும். [2019] MHRD.2 RSA நியமன கமிட்டியில் (RSAAC) பிரதம மந்திரி, தலைமை நீதிபதி, சபாநாயகர், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர், கல்வித்துறை அமைச்சர் போன்றவர்கள் பொறுப்பாளர்களாகவும் அதன் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்திலும் இருப்பர் [2019] MHRD.3 MHRD கல்வித்துறை அமைச்சகமாக மாற்றியமைக்கப் படும் (MoE). [2019] கல்விக்கான தேசிய ஆணையம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் : MHRD-ன் 13 முடிந்த பின்னர், ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் மற்றும் கல்வி அமைச்சகம் கிழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கும். RSA-MOE.1 ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக், அதன் உறுப்புகள் மற்றும் அதைச்சார்ந்த நியமனங்களும் ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் நியமன கமிட்டியால் ஏற்படுத்தப்படும். இதில் நிறைவேற்றுக் குழுவும், ஒருங்கிணைப்பு குறித்த நிலைக் குழுக்களும், ஆலோசனைக் குழுவும் அடங்கும். ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்கின் நிர்வாக இயக்குனர் நியமனமும் இதில் அடங்கும். கொள்கையில் மேற்கோளிட்டுக் காட்டியுள்ள மாற்றமானது, கல்வி அமைச்சகம், ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் மற்றும் அதன் உறுப்புகளின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. [2020] RSA-MOE.2 மொத்த உயர் கல்வி ஒழுங்குமுறை அமைப்பும் ஒற்றை ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றப்படும், மற்றும் தற்போதுள்ள பல ஒழுங்குமுறை அமைப்புகள் புதிய பொறுப்புகளை ஆற்றுவதற்கு மாற்றப்படும். தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையமானது ஒட்டுமொத்த உயர்கல்வி பிரிவிற்கான ஒற்றை ஒழுங்குமுறை அமைப்பாக அமைக்கப்படும். யுஜிசி மற்றும் தற்போதுள்ள ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவை முறையே உயர் கல்வி மானிய கவுன்சில் (HEGC) மற்றும் தொழில்முறை தரநிலை அமைப்பு அமைப்புகளாக (PSSBs) மாற்றப்படும். பொது கல்வி கவுன்சில் (GEC) என்ற தலைப்பில் ஒரு கல்வித் தலைமையகம் அமைக்கப்படும். [2020] RSA-MOE.3 MoE-SDoE-1-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியானது அனைத்து அம்சங்களிலும் பள்ளிக் கல்வியுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த மாற்றத்துடன், ஆரம்பகால குழந்தை பருவ கல்வி மேற்பார்வை என்பது, MoE-ன் பொறுப்பாக இருக்கும், அதே நேரத்தில் MWCD மற்றும் MHFW தொடர்ந்து தங்களது கட்டளைகளுக்கு பொறுப்பாக இருக்கும். இந்தப் பொறுப்புகளைக் கல்வி அமைச்சகமானது, MWCD, ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் மற்றும் மாநில அளவில் சம்மானவர்களுடன் ஒருங்கிணைக்கும். [2020] கல்வி உரிமைச் சட்ட கொள்கைகளை செயல்படுத்த முழுமையான மதிப்பாய்வு செய்யப்படும். இலவச மற்றும் தரமான கட்டாய முதன்மை கல்வி கிடைப்பது கல்வி உரிமைச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக சேர்க்கப்படும். 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இலவச மற்றும் தரமான கட்டாய கல்வி கிடைப்பதும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக சேர்க்கப்படும். [2020] பல்லியல் கல்வி அணுகுமுறையின் மாதிரிகளாக தாராளவாத கலைகளுக்கான இந்திய நிறுவனங்கள் (IILAs) பன்மடங்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் (MERUs) நிறுவப்படும். மேலும் தொழிற்துறை மற்றும் தொழில்முறை கல்விகளை முக்கிய உயர் கல்வியுடன் ஒருங்கிணைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். [2025] RSA-MOE.4 கல்வி உரிமைச் சட்ட கொள்கைகளை செயல்படுத்த முழுமையான மதிப்பாய்வு செய்யப்படும். இலவச மற்றும் தரமான கட்டாய முதன்மை கல்வி கிடைப்பது கல்வி உரிமைச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக சேர்க்கப்படும். 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இலவச மற்றும் தரமான கட்டாய கல்வி கிடைப்பதும் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக சேர்க்கப்படும். [2020] RSA-MOE.5 பல்லியல் கல்வி அணுகுமுறையின் மாதிரிகளாக தாராளவாத கலைகளுக்கான இந்திய நிறுவனங்கள் (IILAs) பன்மடங்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் (MERUs) நிறுவப்படும். மேலும் தொழிற்துறை மற்றும் தொழில்முறை கல்விகளை முக்கிய உயர் கல்வியுடன் ஒருங்கிணைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். [2025] RSA-MOE.6 ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் தாராளவாத கல்விப்பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு உயர்கல்வி நிறுவனமாவது அமைக்கப்படும். இந்த முயற்சியானது கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் இருந்து தொடங்கப்படும். [2025] RSA-MOE.7 2035 அளவில் 50% GER இலக்கை அடைய, மூன்று வகைகளில் உயர்ந்த தரநிலை உயர்கல்வி நிறுவன்ங்கள் நாடு முழுவதும் சமமாக ஏற்படுத்தப்படும், பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். நாளந்தா மற்றும் தக்‌ஷசீலா திட்டங்கள் மூலம் தரமான உயர்கல்வி கிடைக்க வாய்ப்புகள் உருவாக்கப்படும். [2035] RSA-MOE.8 உயர்கல்வி முறைமையில் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்தவும் துடிப்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) நிறுவப்படும். [2020] RSA-MOE.9 சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதோடு, கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றி ஆய்வு செய்ய ஒரு தன்னாட்சி தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (NETF) அமைக்கப்படும். [2020] RSA-MOE.10 ஆளுமை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தின் திறன், தேசிய தரவரிசை கல்வி தரவு (NRED) அமைப்பதன் மூலம் எளிதாக்கப்படும். [2020] ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் மற்றும் மாநில கல்வித்துறையின் நடவடிக்கைகள்: RSA-SDOE.1 PMO-MHRD.1-3 மற்றும் RSA-MOE.1 ஆகியவை முடிந்த பின் மாநிலங்களுக்கும் ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்-க்கும் இடையிலான இணைப்பு வழிமுறைகள் நிறுவப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த முதலமைச்சர்கள் தலைமையில் கல்வி அமைச்சரைத் துணைத் தலைவராகக் கொண்டு ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக் மற்றும் மாநில கல்வி ஆணையம் அமைக்கப்படும். இந்த உறுப்புகளின் அமைப்பு, அரசியலமைப்பு ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்-ன் ஒத்த நெறிமுறைகளைக் கொண்டிருக்கலாம், மேலும் மாநிலத்திற்குள்ளேயே இதேபோன்ற செயல்பாடுகளை செய்யலாம். [2020] மாநில அரசுகள் மற்றும் மாநில அரசின் கல்வி துறையின் செயல்பாடுகள்: SG-SDOE.1 அனைத்து பள்ளிகளுக்கும் போதுமானதான வகையில் வளமான விரிவான திட்டங்களை அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து அந்தந்த மாநிலத்திற்கான கல்வி துறைகள் மூலமாக உருவாக்கப்படும். மேலும், மக்கள் தொகை, அனைத்து பள்ளிகளுக்குமான இணைப்பு மற்றும் இதர பரிசீலனைகளுக்காக பள்ளி பாடசாலைகளை பள்ளி வளாகங்களாக மாற்றியமைக்கப்படும். பள்ளி வளாகங்களின் அளவு மற்றும் அமைப்பு மாறுபட்டபோதிலும், மாணவர்கள் மற்றும் அதன் குடும்பத்திற்கு பாதுகாப்பான அணுகுமுறையை செயல்படுத்துதல், நிர்வாக வசதி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒருஆதரவு போன்றவற்றை அக்குழுவானது நல்க உறுதிசெய்யும். போதுமான ஆசிரியர்கள், பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் வளங்கள் மற்றும் அதற்கான வசதிகள் ஆகியவற்றை வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் உறுதிசெய்யப்படும். மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளை (<20) ஒருங்கிணைக்க திட்டங்கள் வகுக்கப்படும். அவ்வாறு செய்யும் ஒருங்கிணைப்பு, பள்ளிக்கு ஏதும் பாதிப்பு இல்லாமல் செய்யப்படும் [2020]. அனைத்து பள்ளிகளுக்கும் போதுமானதான வகையில் வளமான விரிவான திட்டங்களை அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து அந்தந்த மாநிலத்திற்கான கல்வி துறைகள் மூலமாக உருவாக்கப்படும். மேலும், மக்கள் தொகை, அனைத்து பள்ளிகளுக்குமான இணைப்பு மற்றும் இதர பரிசீலனைகளுக்காக பள்ளி பாடசாலைகளை பள்ளி வளாகங்களாக மாற்றியமைக்கப்படும். பள்ளி வளாகங்களின் அளவு மற்றும் அமைப்பு மாறுபட்டபோதிலும், மாணவர்கள் மற்றும் அதன் குடும்பத்திற்கு பாதுகாப்பான அணுகுமுறையை செயல்படுத்துதல், நிர்வாக வசதி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒருஆதரவு போன்றவற்றை அக்குழுவானது நல்க உறுதிசெய்யும். SG-SDOE.2 SG-SDOEல் உள்ள திட்டம் செயல்படுத்தப்படும் . ஆசிரியர் சேர்க்கை, வகைப்படுத்துதல் ஆகியவை பள்ளி மற்றும் அதன் பல்நிலை அமைப்புகளின் விரிவான திட்டமிடல் மற்றும் தேவை மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அமைப்புக்குள் வரும் பள்ளிகளுக்கு எல்லா பாடங்களுக்குமான குறிப்பிட்ட ஆசிரியர்கள் கிடைப்பது உறுதியாகும். ஆசிரிய தொழில் வளர்ச்சி, சேவை அமைப்புகள், செயல்திறன் மேலாண்மை, போன்றவை மீது போதிய கவனம் செலுத்தப்படும். அனைத்து பள்ளிகளுக்கிடையே ஒரு அமைப்பின் கீழ் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் வேளையில்,கொள்கையின் தேவை பூர்த்தி செய்யும் விதமாக, ஒவ்வொரு பள்ளிக்கும் போதிய வளங்கள் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். [2022] SG-SDOE.3 SCERTன் பாடத்திட்டச் சீர்திருத்தங்களுடன் சிறப்பாக இயங்கக்கூடிய ஒரு சூழலும் உருவாக்கப்படும். மேலும், புதிய பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை வழங்க ஏதுவாக எல்லா பள்ளிகளுக்கும் கல்வி வளங்கள் ஏற்பாடு செய்யப்படும். [2023] மத்திய மற்றும் மாநில கல்வித்துறை அமைச்சகங்களால் எடுக்கப்படும நடவடிக்கைகள் MOE-SDOE.1 SG-SDOE. 3: MWCD, RSA மற்றும் மாநில அரசு அமைப்புகளின் உதவியுடன் முன்பருவ மழலைக்கல்வி பள்ளிக் கல்வியுடன் நிர்வாகம், பராமரிப்பு, கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் உள்ளிட்ட அனைத்து கூறுகளுடனும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும். இருப்பினும் இதன் வெளிப்புற கட்டமைப்புகள் இணைக்கப்படாது. RSAவுடன் இது இணைக்கப்படும்.[2020] MOE-SDOE.2 MOE - SODE 1 செயல்படுத்தப்பட்ட பிறகு முன்பருவக் கல்வி வழங்குதல் பற்றி கல்வி நிறுவன அளவில் உள்ளூர் தேவைகள் மற்றும் புவியியல், உள்கட்டமைப்பு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் திட்டமிடப்படும். NCERT 1 மற்றும் SCERT 1 ல் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் போன்று 2022க்குள் முன் பருவ மழலைக் கல்விக்கான அறிவார்ந்த கலைத் திட்டம் உருவாக்கப்பட்டு 2028ல் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படும். இது SG - SDOE 2 உடன் இணைக்கப்படும்.[2022 - 2028] MOE-SDOE.3 பள்ளிக்கல்வி கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவை உள்ளார்ந்த ஒத்திசைவு மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் ஒத்த வயது பிரிவினருக்கு பின்வரும் வழிகளில் மறுசீரமைக்கப்படும். 5 ஆண்டுகள் அடிப்படை நிலை (fundamental stage) - 3 ஆண்டுகள் முன் பருவ மழலைக் கல்வி, வகுப்பு 1 மற்றும் 2. 3 ஆண்டுகள் தயாரிப்பு நிலை (Preparatary stage) - வகுப்புகள் 1 , 2 மற்றும் 3. 3 ஆண்டுகள் நடுநிலை வகுப்புகள் (Upper primary stage) - வகுப்புகள் 6 , 7 மற்றும் 8. 4 ஆண்டுகள் உயர்நிலை வகுப்புகள் (secondary stage) - வகுப்புகள் 9 முதல் 12 வரை. 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள நான்கு ஆண்டு உயர்நிலை கல்வியானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செமஸ்டர்களை கொண்ட 8 செமஸ்டர்களாக மாற்றப்படும்.[2022] MOE-SDOE.4 அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணித செயல்பாடுகளில் உள்ள குறைகள் முறைசாராத அளவீடுகள் மூலம் உடனடியாக சரிசெய்யப்படும். சமூகத்தின் பெரிய அளவிலான பங்கேற்பு மற்றும் ஈடுபாடு இந்த நோக்கத்திற்காக கையாளப்படும். RIAP (Remedial Instructional Aides Programme) மற்றும் NTP ( National Tutors Programme) ஆகியவை ஆசிரியர்களுக்கு உதவியாக செயல்படுத்தப்படும். RIAP மற்றும் NTP ஆகியவற்றை வழிநடத்துவதற்காக பள்ளி ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். மேலும் அனைத்து மாணவர்களிடையிலும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணித செயல்பாட்டு திறனை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படுவார்கள். இதில் அனைத்து பொது பள்ளி ஆசிரியர்களும் உட்படுத்தப்படுவார்கள்.[2022] MOE-SDOE.5 புதிய கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றுக்கான கற்றல் வளங்கள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்குதல் மூலம் MOE - SDOE 3-4, NCERT 1-2 மற்றும் SCERT 1-3 ஆகியவற்றின் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.[2023] MOE-SDOE.6 உயர்கல்விக்கான புதிய நிறுவன கட்டமைப்பு மூன்று வகையான நிறுவனங்களை கொண்டிருக்கும். வகை 1 நிறுவனங்கள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கும். வகை 2 நிறுவனங்கள் கற்பித்தலை முதன்மையான பணியாக மேற்கொண்டாலும் கணிசமான அளவு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். வகை 3 நிறுவனங்கள் கற்பித்தலை மட்டும் மேற்கொள்ளும். உயர்கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிலைகளின் அடிப்படையில் இந்த மூன்று வகை நிறுவனங்களில் மாற்றம் செய்ய தேவையான திட்டம் உருவாக்கப்படும். இந்த திட்டம் RSA - MOE 6 க்கு தெரிவிக்கப்படும்.[2020] MOE-SDOE.7 HEI களில் உள்ள அனைத்து கல்வி மற்றும் கல்விசாரா பதவிகள் நிரந்தரமாக(பதவி) நிரப்பப்படும். HEI க்கள் மற்றும் தேசிய மட்டத்தில், ஆசிரியர்களின் தொழில் மேம்பாட்டுக்கான செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த பொறுப்பை நிறைவேற்ற MOE மற்றும் மாநில கல்வி தன் துறைகள் NHERA உடன் ஒருங்கிணைக்கப்படும். [2023] MOE-SDOE.8 கல்வியின் அனைத்து மட்டங்களிலும் கல்வி ரீதியாக பின்தங்கிய மற்றும் குறைவான பிரதிநிதித்துவமுள்ள குழுக்கள், நாடு முழுவதும் கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள சிறப்பு கல்வி மண்டலங்களுக்குள் இடம்பெற இலக்குக்கான நிதியுடன் முனைப்புகள் மேற்கொள்ளப்படும். . இது பள்ளி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். தேசிய அளவிலான நிதிநிலைகள் பள்ளி மற்றும் உயர் கல்வி மட்டங்களில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக உருவாக்கப்படும். மேலும் இந்த நிதியை ஒருங்கிணைத்தலை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம். குறிப்பிட்ட URG களுக்கு அவைகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப இலக்கிற்கான ஆதரவு மற்றும் திட்டங்கள் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் RSA-MoE.7 மற்றும் SG-SDoE.2 உடன் ஒருங்கிணைக்கப்படும் MOE-SDOE.9 குழந்தைகள் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வை ஆன்லைன் நிகழ்ச்சிகள் மூலம் பெற்றோர், ஆசிரியர், மற்றும் மாணவர்களுக்கு ஏற்படுத்தி பள்ளிகளில் செயல்முறைகளை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். SSRA இது குறித்து பின்பு அறிவிக்கும். MOE-SDOE.10 செயல்பாட்டு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். தொடக்கக்கல்வி மூலம் பின்பற்ற வேண்டும். தொடர் கல்வி திட்டங்கள் மூலம் திறன் வளர்க்க வேண்டும்ம் திட்டங்கள் குறிப்பாக பெண்களை, பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பின்தங்கிய குழுக்களில் உள்ள தனிப்பட்டவரை மையப்படுத்த வேண்டும். MOE-SDOE.11 நிறைந்த கல்விசார் உபகரணங்களுக்காக இந்திய மொழிகளுக்கும் இடையே மொழிமாற்றம் செய்யப்பட்டவை மற்றும் இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளுக்கு இடையே மொழிமாற்றம் செய்யப்பட்டவை உட்பட அனைத்து உயர்தர வளங்களும் ஆன்லைன் தொகுப்புகளாக கிடைக்கப்பெறும். மூலநூல் நியமிக்கப்பட்டு, அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்கப்படும், முதலில் எட்டு அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தொடங்கப்படும், இருப்பினும் அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளப்படாது (2030). MOE-SDOE.12 ஆசிரியர் கல்வி முறை முழுமையாக மாற்றப்படும். அனைத்து பள்ளி நிலைகளுக்கான ஆசிரியர் பயிற்சி நான்கு வருட பாட பிரிவாக பன்முக பல்கலைக்கழகங்களில் மட்டுமே வழங்கப்படும், அதில் தற்போதுள்ள ஆசிரியர் பயிற்சியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பாடத்திட்டங்கள் மற்றும் செயல்முறைகள் புதுப்பிக்கப்படும். தற்போது இரண்டு வருட பாடப்பிரிவை அளித்து வரும் நிறுவனங்கள் இந்த முறைக்கு மாற்ற வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும்; புதிய 2 வருட பாடப்பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. MoE மற்றும் மாநில கல்வித்துறை, NHERA மற்றும் NCTE உடன் இணைந்து PSSB’S போல இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும. மாநில கல்வித்துறைகளின் (SDOE) செயல்பாடுகள்: SDOE.1 மாநில பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் (SSRA) என்பது தனித்து செயல்படும் பாதி நீதிவரம்பிற்கு உட்பட்ட ஒரு மாநில துறை. இந்த துறை, மழலையர்களின் ஆரம்ப கல்வி உட்பட முழு பள்ளி கல்வியையும் சீரமைக்கும் ஒரு கட்டமைப்பை தீர்மானிக்கும். அதனோடு, துறையின் மேம்பாடு மற்றும் அதற்கான அங்கீகாரம் வழங்குதல் போன்ற அனைத்து பொறுப்பும் இந்த ஆணையத்தின் (SSRA) செயல்பாடுகளாகும். தனியார் திருப்திகரமான முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, பொதுமக்களுக்கு நல்ல கல்வித் தரத்தை உறுதி செய்வதற்கும் இவ்வாணையம் பொது மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டையும் ஒரே விதத்தில் அணுகு. . DSE செயல்பாடுகளை கையாளும். அந்த முழு மாவட்டத்தின் பொதுக் கல்வி துறையின் செயல்பாடுகள DSE ஆல் கையாளப்படும் [2020] . SDOE.2 ஆசிரியர் நியமனம் மற்றும் அதற்கான நிர்வாக செயல்பாடுகள் அனைத்தும் மாற்றிஅமைத்து மேம்படுத்தப்படும் [2023]. SDOE.3 பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படும் [2023]. மாநில பள்ளி ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள்: SSRA.1 மாநிலத்தின், NIEPA உடன் இணைந்து உருவாக்கப்பட்ட பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பை (SQAAS), SSRA- யின் ஒழுங்குமுறை நடைமுறைக்கு பயன்படுத்தப்படும் மற்றும் அது LSS க்கான தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் [2023]. பள்ளி கல்வி இயக்ககத்தின் (DSE) செயல்பாடுகள்: DSE.1 ஆட்சி அதிகாரத்தை மேம்படுத்தும் முறைகள்: மாவட்ட கல்வி கவுன்சில்கள் / ஜில்லா ஷிக்‌ஷா பரிஷத்/ (கலெக்டர் / மாவட்ட நீதவான் தலைமையின் கீழ்) அமைக்கும் அரசியலமைப்பின் மூலம் பள்ளி தலைமை மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பின் மூலம் , பள்ளி மற்றும் அதன் வளாகத்தின் ஆளுமை வழிமுறைகளில் சம்மந்தப்பட்ட, பள்ளிக் கல்வி முகாம்/பள்ளி வளாக முகாமைக்கும் குழுகளின் மூலம் [2023]. DSE.2 அனைத்து பள்ளி தலைவர்களும், தங்களின் பணி மூப்பு அடிப்படையில்லாமல், அவர்களது தலைமை வகிக்கும் திறன் மற்றும் அந்த பதவியிற்கு ஏற்ற தகுதியின் அடிப்படையிலே நியமிக்கப்படுவார்கள். அனைத்து பள்ளி தலைவர்களுக்கும், தொடர்ச்சியான நிபுணத்துவ வளர்ச்சிக்கான ஆதரவை அளிக்கப்படும் [2023]. தேசிய அளவிலான கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி அமைப்பின் (NCERT) செயல்பாடுகள்: NCERT.1 மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரையில் இருக்கும் அனைத்து பள்ளி நிலைகளுக்கான ஒரு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை, MOE-SDOE.3 இல் புதிய கற்பிக்கும் கொள்கைக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்படும். அந்த கட்டமைப்பு கீழ்கண்டவற்றின் அடிப்படையில் அமையும்: - ஒருங்கிணைந்த மற்றும் நெகிழ்வான அணுகுமுறை - அத்தியாவசிய கற்றல் மற்றும் ஆழ்ந்த சிந்தனையை மேம்படுத்தும் விதத்தில் - நெகிழ்வுத்தன்மை - பன்மொழி, - மொழிகள் மற்றும் இலக்கியம், - தகவல்தொடர்பு, - பகுத்தறியும் திறன் - படைப்பாற்றல் - உடல் ஆரோக்கியம், - தொழில்முறை வெளிப்பாடு - நெறிமுறை மற்றும் தார்மீக காரணம், - டிஜிட்டல் கல்வியறிவு, - இந்தியா மற்றும் தற்போதைய நாட்டின் பொதுச்செயல்பாடுகள் பற்றிய பொதுஅறிவு மழலையர்க்கான பருவ கல்வியை, NCERT கட்டமைப்பில் கண்டிப்பாக விரிவாக்கப்படும் [2020]. NCERT.2 NCERT.1 உடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய மதிப்பீடு, முக்கிய கருப்பொருள்கள் மற்றும் திறன்களை மதிப்பீடு செய்வதன் அடிப்படையிலே அதிக கவனம் செலுத்துகிறது. பல்வேறு வழிகளில் மதிப்பீடுகள் செய்து கற்றல் திறனை மேம்படுத்தப்படும். ஒவ்வொரு பகுதியிலுமுள்ள புதிய மதிப்பீடிற்கு ஏற்ற தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான மதிப்பீட்டூக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும் [2021]. ஒவ்வொரு மாநிலத்துக்குமான மாநில அளவிலான கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி அமைப்பின் (அல்லது அதற்கு நிகரான நிறுவனங்கள்) (SCERT) செயல்பாடுகள்: SCERT.1 NCERT.1 செயல்பாடுகள் முடிந்தவுடன், SCERTs (அல்லது அதற்கு நிகரான நிறுவனங்கள்) தேசிய பாடத்திட்ட கட்டமைப்புடன் இணைந்த மாநில பாடத்திட்ட கட்டமைப்புகளை உருவாக்கும் [2021]. SCERT.2 NCERT.2 மற்றும் SCERT.1 உடன் இணைந்த மாநில மதிப்பீட்டுக்கான முரண்பாடுகள் உருவாக்கப்படும் [2022]. SCERT.3 மாநில பாடத்திட்ட கட்டமைப்புகள் மற்றும் SCERT.1-2 இல் மதிப்பீட்டின் முரண்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து பாடத்திட்டங்களுக்கும் பலவிதமான மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் பொருட்கள் உருவாக்கப்படும் [2023]. தேசிய அளவிலான கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி அமைப்பு (NCERT) மற்றும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான மாநில அளவிலான கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி அமைப்பின் (அல்லது அதற்கு நிகரான நிறுவனங்கள்) (SCERT) செயல்பாடுகள்: N/SCERT.1 ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சி அமைப்பை அனைத்து மாநிலங்களிலும் மறுவடிவமைப்பு செய்யப்படும். CRC கள், BRC க்கள், Bites, DIET கள் மற்றும் SCERT ஆகியவைகளை போதுமான அளவிலான உயர் தர மக்களின் நியமனம், கட்டமைப்பு மற்றும் அதிகார முன்னேற்றம் ஆகியன அடிப்படையில் புதுப்பிக்கப்படும்; நிர்வாகப் பணிகளில் தங்களை அவர்கள் ஆட்படுத்த மாட்டார்கள் என்று உறுதி செய்யப்படும். NCERT, SCERT களுக்கு இந்த பொறுப்பை நிறைவேற்ற உதவும் [2023]. N/SCERT.2 தொழில்நுட்பத்தை திறம்பட பயிற்றுவித்தல், மற்ற பாடத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேலாண்மையின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் நிறுவன தலைவர்களை பயிற்றுவிக்கப்படும் [2025]. தேசிய அளவிலான கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி அமைப்பு (NCERT) மற்றும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான மாநில அளவிலான கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி அமைப்பின் (அல்லது அதற்கு நிகரான நிறுவனங்கள்) (SCERT) செயல்பாடுகள்: CB-SB.1 NCERT.1-2 ஏற்ற பாடத்திட்டங்கள் மற்றும் SCERT.1-2 மதிப்பீடு சீர்திருத்தங்களின்படி மத்திய மற்றும் மாநில வாரியங்களின் சான்றிதழ் தேர்வுகள் மறுவடிவமைப்பு செய்யப்படும். குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விரிவான தேர்வுகள் அகற்றப்பட்டு, 9 மற்றும் 12- ஆம் வகுப்புக்கான இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பீட்டு கட்டமைப்பை மாற்றியமைக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் அதன் இடைப்பட்ட காலத்திற்கான இறுதி சான்றிதழ் தேவைகளை மறுவடிவமைப்பு செய்யப்படும். குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சான்றிதழ் தேர்வுகள், செமஸ்டர் மற்றும் மாடுலர் தேர்வு அடிப்படையிலான திட்டத்தை பிரதிபலிக்கும். பள்ளிக்கல்வி முடியும் தருவாயில் மாணவர்களின் திறன்களை சான்றிதழ் மூலமாக மதிப்பாய்வு ஆணையத்தின் மூலம் கையாளப்படும் போதும், பாடத்திட்டத்தை (பாடநூல்கள் உட்பட) தீர்மானிப்பதில் ஆணையத்தின் பங்கு ஏதுமில்லை [2023]. கல்வி அமைச்சகம் (MoE) மற்றும் தேசிய சோதனை நிறுவனத்தின் (NTA) செயல்பாடுகள்: MOE-NTA.1 வருடத்தின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பாடத்திற்கான தேர்வுகளை மற்றும் aptitude தேர்வுகளை தன்னாட்சியான நிறுவனமான NTA-வால் நிர்வகிக்கபடும் [2023]. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) செயல்பாடுகள்: NAAC.1 NAAC ஆனது முழு வளர்ச்சியடைந்த அங்கீகார சுற்றுச்சூழலை உருவாக்கும். NAAC ஆனது, 100-150 அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை உள்ளடக்கியது. அந்த 100-150 அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திற்குள் அனைத்து HEI களுக்கும் தொடர்ந்து அங்கீகாரம் வழங்கப்படும் [2032]. தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் (NHERA) செயல்பாடுகள்: NHERA.1 அனைத்து HEI க்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டபிறகு, முழுமையான நிர்வாக, கல்வி மற்றும் நிதி சுயநிர்ணய உரிமை மற்றும் திறமைமிக்க தன்னாட்சியான ஆளுநர் அமைப்பைக் கொண்டிருக்கும். Affiliated - பல்கலைக்கழகங்களின் அமைப்பை நிறுத்தப்படும். NHERA, NAAC யுடன் இணைந்து இப்பொறுப்புக்களை நிறைவேற்றும் [2030]. NHERA.2 அடிப்படை வசதிகளற்ற, மோசமாக இயங்கும் ஆசிரிய கல்வி நிறுவனங்களை மூடப்படும்[2023]. உயர் கல்வி மானிய கவுன்சிலின் (HEGC) செயல்பாடுகள்: HEGC.1 பொது நிதிக்கான நியாயமான மற்றும் வெளிப்படையான அமைப்பு என்பது அங்கீகார நெறிமுறைகளின் அடிப்படையிலான நிதியளிப்பாக இருக்கும் [2023]. பொது கல்வி கவுன்சிலின் (GEC) செயல்பாடுகள்: GEC.1 கற்றலின் விளைவாக பெறப்படும் டிகிரி/டிப்ளமோ/ சான்றிதழ்களை கோடிட்டுக் காட்டுவதே தேசிய உயர் கல்வி தகுதி கட்டமைப்பாகும் (NHEQF). தனித்த நிலையான தொழிற்துறை அமைப்பை கொண்ட அமைப்புகளின் உதவிகளில்லாமல், பல்துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களை அடக்கிய வழிகாட்டி ஆவணங்களை போன்று NHEQF வின் கட்டமைப்பும் மேம்படுத்தப்படும். தொழிற்கல்வி ரீதியான படிப்புகளில், சமன்பாடுகள் மற்றும் mobilityயை கட்டமைக்க, தேசிய திறமைகளை தகுதியாய் கொண்ட கட்டமைப்புகள் இடையே உள்ள தொடர்பை NHEQF உடன் நிறுவப்படவேண்டும் [2023]. தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் (NHERA) மற்றும் பொது கல்வி கவுன்சில்களின் (GEC) செயல்பாடுகள்: NHERA-GEC.1 நெறிமுறைகள், தரநிலைகள் மற்றும் திறந்த மற்றும் தொலைதூரக் கல்விக்கான (ODL) கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை, NHERA ஆல் தயாரிக்கப்படும். அனைத்து HEI களுக்கான பரிந்துரைக்கப்படும் ODL தரமானது, GEC ஆல் வடிவமைக்கப்படும் [2023]. உயர்கல்வி நிறுவனங்களின் (HEI) செயல்பாடுகள்: HEI.1 அனைத்து இளநிலை தொழிற்கல்வி மற்றும் தொழிற்துறை சார்ந்த பட்டபடிப்புகளை, பல்துறை அணுகுமுறைகளின் மூலம் கடுமையான சிறப்பம்சத்துடன் liberal கல்வி திட்டங்களுக்கான சலுகையாக வழங்கப்படும். இந்த கல்வி திட்டத்தில் பல்வேறு வெளியேறும் விருப்பங்கள் இருக்கும்; அந்த கொள்கைக்கு ஏற்றாற்போல அனைத்து இளநிலை பட்டபடிப்புகளும் மாற்றிஅமைக்கப்படும். அவ்வாறு மாற்றியமைப்பதை, RSA-MoE.5 மூலம் உறுதிசெய்யப்படும் [2023]. HEI.2 பல்வேறு தொழில்முறை மற்றும் தொழில்துறை சார்ந்த படிப்புகளை (உதாரணம் - இன்ஜினியரிங், மருத்துவம், சட்டப்படிப்பு மற்றும் ஆசிரிய கல்வித்துறை) உயர்கல்வி துறையுடன் இணைக்கப்பட்டு, liberal கல்வி கொள்கையை பின்பற்றப்படும். இதற்கான பொறுப்பை, ஒழுங்குமுறை ஆணையம், GEC மற்றும் PSSBs ஆகியவற்றால் எளிதாக்கப்படும் [2023]. HEI.3 NFHEQ அடிப்படையிலான நிறுவப்பட்ட புதிய, துடிப்பான, பாடத்திட்டங்கள் கற்றலின் அனுபவங்களை தூண்டவும் மற்றும் வளர்ச்சியை மதிப்பிடவும் வழிவகுக்கும். இதன் செயல்பாடுகளை GEC.1 உடன் இணைக்கப்படும். அனைத்து HEI களுக்கும் இடையே பயனுள்ள மற்றும் அறிவூட்டும் கற்கும் சூழல் இருக்கப்படும். இந்த பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு GEC மற்றும் அதன்சார்ந்த PSSB-கள், HEI-களுக்கு ஆதரவளிக்கப்படும் [2030]. HEI.4 ODL திட்டங்களின் அனைத்து pedagogy, பாடத்திட்டம் மற்றும் அதற்கான சமமான அணுகுநிலையை, சிறந்த class-in திட்டங்களுக்கு நிகரான தரத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து உறுதிசெய்யப்படும். இந்த பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு, NHERA- வால் HEI-களுக்கு ஆதரவளிக்கப்படும். இதன் செயல்பாடுகளை, NHERA-GEC.1 உடன் இணைக்கப்படும் [2030]. HEI.5 HEIs-அளிக்கப்படும் மாணவர்களுக்கான ஆதரவுஎன்பது, கல்விரீதியாக மட்டும் வெற்றியடைய இல்லாமல்; மாணவர்கள் தங்கள் நலன் மற்றும் முழுமையான வளர்ச்சி அடைய ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பார்கள். இதன் செயல்பாடுகளை, MoE-SDoE.8 உடன் இணைக்கப்படும் [2030]. சம்பந்தப்பட்ட அமைப்பு /குழு-களை நியமிக்கப்படும் அமைப்புகளின் (ALL) செயல்பாடுகள்: ALL.1 அனைத்து துறை மற்றும் அமைப்புகளின் (உதாரணம் - RSA, NHERA, NCERT, NIEPA, SCERT, BITE, DIET, பள்ளி தலைவர்கள், etc.,) தலைவர்களை, கடுமையான மற்றும் வெளிப்படை தன்மையோடு பொதுமக்களின் கண்காணிப்பிலே நியமிக்கப்படும். ஒருங்கிணைந்த, மிக உயர்ந்த மற்றும் வலுவான கல்விக் தகுதியை கொண்டவர்கள் மட்டுமே தலைமைத்துவ பதவிகளில் வைக்கப்படுவர். மேலும், நியமிக்கும் அதிகாரிகள் தங்களின் பொறுப்புகளை, வெளிப்படையாக மற்றும் அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும் [2020]. மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளின் செயல்பாடுகள்: UG-SG.1 20% வரை பொது முதலீடு அடையும்வரை, பொது முதலீட்டின் அதிகரிப்பு படிப்படியாக அதிகரிக்கும் [2030]. A2.4. முடிவுரை: நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் முன்னேற்றத்தை வருடாந்தர முறையில் மதிப்பீடவும் மற்றும் அதற்கேற்ற இலக்குகளை அடைய, RSA மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநில அமைப்பால் நியமிக்கப்பட்ட குழுவால் பரிசீலிக்கப்படும். சில மாநில இலக்குகளுக்காக மறுசீரமைக்கும் விதிகள் இருக்கும். சரியான நேரத்திற்குள்ளாக முடிக்க இயலாத சில மாநில இலக்குகளை அடையமுடியாததற்கான காரணங்களை கண்டறிந்து, அவ்விலக்குகளை மறுதிட்டமிடுதலுக்கு உட்பட விதிகள் அளிக்கப்படும்; பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 2030 க்குள், கடந்த நூற்றாண்டு போதுமான வாய்ப்புகளை வழங்கியிருக்கும் என்றும், நன்றாக சரிபார்த்து, முக்கியமான மாற்றங்களை, செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முழுமையான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிலை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். 2030-40 ஆம் நூற்றாண்டில், ஒட்டுமொத்த கொள்கையும் செயல்பாட்டில் இருக்கும். அப்போது, அதைப்பற்றி மேலும் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நிச்சயமாக, வருடாந்திர விமர்சனங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.