[] 1. Cover 2. Table of contents திருகோணமலைத் தமிழ் கல்வெட்டுகள் 30 திருகோணமலைத் தமிழ் கல்வெட்டுகள் 30   தம்பலகாமம். த. ஜீவராஜ்   tjeevaraj78@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - தம்பலகாமம். த. ஜீவராஜ் - tjeevaraj78@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thirukonamalai_tamil_inscriptions_30 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation என்னுரை […] வன்செயல் நிமித்தமாக எங்களுடைய வீட்டில் இருந்து நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு கடைசி அறை என்று செல்லமாக அழைக்கப்பட்ட அறையில் ஒரு குட்டி நூலகம் அப்பாவின் பெரும் முயற்சியால் அமைக்கப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக இன வன்முறை காலங்களில் அந்நூலகம் முற்றாக அழிந்து போனது. ஆரம்ப காலங்களில் தான் கற்பிக்கும் விஞ்ஞான பாட நூல்களுக்கு அப்பால் தன் பார்வையைச் செலுத்தாத அம்மா அவருடைய இறுதி காலத்தில் என்னுடைய இரண்டாவது நூலான தம்பலகாமம் ஊர்ப் பெயர் ஆய்வினை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டு செயல்பட்டார். நான்கு முறை கைவிடப்பட்டிருந்த நூலாக்கம் அவரது இடையறாத தூண்டுதலால்தான் நூலுருப்பெற்றது. எனவே அவர் நினைவாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது கல்வெட்டுகளை சிறுகுறிப்போடு பதிவு செய்திருக்கின்றேன். நமது இளைய தலைமுறைக்கு வரலாற்றில் நாம் கடந்து வந்த காலங்களை ஞாபகப்படுத்துவதாக இக்கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன. இக்கல்வெட்டுக்களோடு இங்கே தவற விடப்பட்ட பல கல்வெட்டுகளின் முழுமையான விளக்கங்களோடும், ஆய்வாளர்கள், உதவியவர்களின் குறிப்புகளோடும் ஒரு பெருநூலாக திருகோணமலை வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களால் வருங்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்முடைய கனவாகும். நட்புடன் ஜீவன். Dr.த.ஜீவராஜ் ( MBBS, MCGP) www.geevanathy.com tjeevaraj78@gmail.com சமர்ப்பணம் [அமரர் திருமதி ஜீவரெத்தினம் தங்கராசா] கல்வெட்டு 01 வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் கல்வெட்டு ஸ்ரீ ஸுப்ரமண்ய நம தெற்கு ம தில் கயில வன்னி யனாருமயம் திம ர்சா மகன் பழை யிற் சி(த)ம்பரப்பிள்ளை மேற்குப் பிற ம(தி)ல் ம ட்டக்கழப்பூரவர் நிகொ ம்புக்கரையூரவர் வ டபுறம் செட்டியழுப யம் உ 17ஆம் நூற்றாண்டு வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தின் மதில் சுவரின் தெற்குப் பகுதியை கொட்டியாரத்தில் அரசு புரிந்த கயில வன்னியனாரும் ஏனைய பகுதிகளை நீர்கொழும்புக் கரையூரவர் மற்றும் மட்டக்களப்பு ஊரவர், பழையிற் பிரதானி, செட்டியார்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கட்டினார்கள் என்பதை இக் கல்வெட்டு ஆதாரப்படுத்துகிறது. இதன் மூலம் இக்காலப் பகுதியில் இவ்வாலயம் ஒரு தேசத்துக் கோயிலாகச் சிறப்புற விளங்கியதைப் புரிந்து கொள்ளலாம். […] […] கல்வெட்டு 02 முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி 1.பாக்கையும் நண்ணற் கரு முரண் மண்ணைக் கடக்கமும் 2.பொருகடல் ஈழத்தரையர் தம் முடியும் ஆங்கவர் 3.தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென் 4.னவர் வைத்த சுந்தர முடியும் இந்திர நாதமும் தென்டிரை 5.ஈழ மண்டல முழுவதும் எறிபடைக் கெரளந் முறைமையிற் 6.சூடும் குலதநமாகிய பல புகழ் முடியும் செங்கதிர் மாலையும் 7.சங்கதிர் வெலைத் தொல் பெருங் காவல் பல பழந்தீவும 8.மாப் பொரு தண்டால் கொண்ட கொப்பரகெசரி மன்மான உடையார் 9.சிறி சோழ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு —-வது என்று வாசிக்கப்பட்ட சிதைந்த துண்டமான அச்சாசனம் திருகோணமலை வரலாற்றைக் குறித்து முக்கியமான தகவல்கள் எதனையும் வழங்காதபோதும் சோழர்களின் நிர்வாகத்தில் திருகோணமலை கொண்டிருந்த முக்கிய இடத்தினைத் தெரிவிப்பதாக உள்ளது. ஒஸ்றன்வேர்க் கல்வெட்டு என்று குறிப்பிடப்படும் இச்சாசனம் கங்கை, கடாரப் படையெடுப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டிராதபடியால் இம் மெய்க்கீர்த்தி முதலாம் இராஜேந்திரனின் ( 1012 - 1044 ) ஆரம்ப ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. […] கல்வெட்டு 03 மானாங்கேணிச் சாசனம் மானாங்கேணி என்று அழைக்கப்பட்ட பிரதேசம் இன்று திருகோணமலை நகர மத்தியில் பரபரப்பு நிறைந்த மின்சார நிலைய வீதியில் கட்டடங்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. இங்கு அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயமாகும். பரம்பரை வழி வந்த கதைகளின் படி பண்டைய நாட்களில் திருக்கோணேஸ்வர ஆலய மகோற்சவ முடிவில் கோணேசர் நகர்வலம் வரும்போது ஒருநாள் இவ்வாலயத்தில் தங்கிச் செல்வதாகவும், கோணேஸ்வர ஆலய தெப்பத்திருவிழா இவ்வாலயத்திற்கு அருகில் இருந்த குளமான மானாங்கேணியில் இடம்பெற்று வந்ததாகவும் கருதப்படுகிறது. குளக்கோட்டு மன்னன் திருக்கோணேச்சரத்தில் திருப்பணிகள் செய்தபோது அமைக்கப்பட்ட இக்குளத்தின் பெயரான மானாங்கேணியே அதனைச் சூழ்ந்த பிரதேசத்திற்கும், ஆலயச் சூழலுக்கும் வழங்கி வந்ததை காணக்கூடியதாக உள்ளது. வெள்ளை வில்வமரங்களால் சூழப்பட்ட இவ்வாலயமும் அருகில் இருந்த மானாங்கேணி குளமும் 1624 ஆம் ஆண்டில் திருக்கோணேச்சரத்தை போர்த்துக்கேயர் இடித்தழித்ததைத் தொடர்ந்து பராமரிப்பற்றுக் கைவிடப்பட்ட நிலையில் சிதைந்து போனது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆலயச்சூழலை துப்பரவு செய்தபொழுது ஒரு கல்வெட்டும், மகாவிஷ்ணு, பார்வதி ஆகியோரின் கற்சிற்பங்களும், ஒரு நந்திதேவரும், ஆவுடையாரும் கண்டெடுக்கப்பட்டன. திருத்த வேலைகளுக்காக நிலத்தினை அகழ்ந்த பொழுது அங்கு ஒரு புராதன ஆலயமொன்று இருந்து அழிவடைந்தமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றது. 1. ரான உடையார் ஸ்ரீ சோழ இல(ங்கேஸ்) 2. வரதேவற்கு யான் எ(ட்டாவது) 3. (மும்மு)டி சோழ மண்ட(லத்து) 4. (இராஜே)ந்த்ர சோழ வள நாட்(டு) 5. சோழ வளநாட்(டு) ….த் திருக்கோ 6. (ண) மலை ஸ்ரீ மத்ஸ்ய (கஸ்வ) 7. வரமுடையார் மூலஸ்தானமு(ம்) 8. ஸ்வரமுடையார் கோ(யிலும்) 9. (சோ)ழ மண்டலத்து (இராஜே) 10. (ந்த்ரசி)ங்க வளநாட்டு த்… 11. (—நா)ட்டு(க்) க(ஞ்)—ங் 12. வேளாண் கணபதி(எ) 13. (டு)த்த தளிக்—–கு(ம) 14. ------------------------------------------------------------------------ சாசனத்தின் முதல்வரி சோழ இலங்கேஸ்வரனைக் குறிக்கிறது. இரண்டாவது வரி இச்சாசனம் சோழ இலங்கேஸ்வரனின் ஏழாவது அல்லது எட்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்டது என்பதனை வரையறுக்கிறது. மூன்றாவது வரி முதல் ஐந்தாவது வரையுள்ள வரிகள் இலங்கையான மும்முடிச் சோழமண்டலத்தில் இருந்த வளநாடான இராஜேந்திர சோழவள நாட்டினைக் குறிப்பிடுகிறது. ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றுதான் திருகோணமலையைச் சேர்ந்த இராஜேந்திர சோழவளநாடு. திருகோணமலை நகரமும், கந்தளாயும் உள்ளடங்கிய பகுதியான இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் ஆறு முதல் எட்டுவரையுள்ள வரிகள் திருகோணமலை ஸ்ரீ மத்ஸ்யகேஸ்வரத்தின் மூலஸ்தானம் பற்றியும் ஈஸ்வரமுடையார் கோயில் ஒன்றினைப் பற்றியும் சொல்கிறது. அதன் பின்வரும் பகுதி சோழமண்டலத்து இராஜேந்திரசிங்க வளநாட்டு மூவேந்த வேளாண் கணபதி பற்றியதாக அமைந்திருக்கிறது. […] […] கல்வெட்டு 04 பளமோட்டைச் சாசனம் இக்கல்வெட்டு முதலாம் விஜயபாகு ( கி.பி. 1055 – 1110 ) மன்னனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. அம்மன்னனின் 42 ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது. இது ஒருதான சாசனமாகும். தானம் செய்தவர் ஒரு பிராமணப் பெண். அவளது பெயர் நங்கை சானி. அவள் தனது கணவனான கிரமவிந்தன் எனும் பிராமணன் இறந்ததன் நினைவாக இத்தானத்தினைச் செய்திருக்கிறாள். 1. ஸ்வஸ்தி ஸ்ரீ.கோ சிரி சங்கபோதி 2. வர்ம்மரான உடையார் ஸ்ரீ விஜயபா 3. ஹ{ தேவர்க்கு யாண்டு 42 ஆவது கந்தளா 4. யான விஜயராஜ சதுர்வ்வேதி மங்கலத்து தென் 5. கைலாசமான ஸ்ரீ விஜயராஜ ஈஸ்வரம் உடையார்க் 6. கு - இவ்வூர் இருக்கும் ப்ராஹ்மணன் காராம்பிச் n 7. சட்டு யக்ஞக்ரமவித்தன் தர்ம்ம பத்நியாந 8. நங்கைச் சானி தன் பர்த்தாவான யக்ஞீய க்ரமவித்தன் ம 9. ரித்த பின்பு அவனை நோக்கிச் செய்த தர்ம்மமாவது 10. அறு கழ்ஞ்சு பொன்னால் முடியும் முக்கழஞ்சு 11. பொன்னால் மாலையும் ஸந்தி விளக்கொன்றுக்கு 12. இட்ட காசு 1ம் திருநந்தவானஞ் செய்வானுக்கு நி 13. லைப்பொலியூட்டுக்கு இட்ட காசு 8ம் இதில் பொன் 14. அழிவு சோர்வுக்கு இட்ட காசு 1ம் இதின் 15. அழிவு சோர்வுக்கு இட்ட காசு 2ம் தே 16. வரடியாராகப் பெண்டுகள் எழுவரைத் தலை இ 17. லைச்சினை யிட்டு இவர்களுக்கு நிலை 18. பொலியூட்டடு நிபந்தமாக இட்ட காசு 23 ஆ 19. க முதல் நிற்கப் பொலியூட்டினால் நிலை நிப 20. ந்தஞ் செல்வனவான இட்ட காசு 35 பொ 21. ன் ஒன்பதின் கழஞ்சு இப்படி செய்யப்பட்ட 22. இத்தர்ம்மம் அழிவு வாராமல் நிலைநிறுத்து 23. வாராக ஸ்ரீ விக்கிரமசலாமேகத் தெரிந்த வல 24. ங்கை வேளைக்காறநென்று திருநாமம் சாத்தியது ஸ்ரீ இத்தானம் விஜயராஜ சதுர்வேதி மங்கலத்தில் அமைந்திருந்த தென்கைலாசம் என்று போற்றப்பட்ட விஜயராஜேஸ்வர உடையாருக்குச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து இங்கு ஒரு ஆலயம் இருந்ததும் அது ‘ஈச்சரம்’ என அழைக்கப்பட்டதும் அறியப்படுகிறது. ராஜராஜ சதுர்வேதி மங்கலம் எனும் ஊர்ப்பெயர் முதலாம் விஜயபாகு மன்னனின் காலத்தில் மாற்றப்பட்டதைப் போலவே ஆலயத்தின் பெயரும் இராஜராஜேஸ்வரம் என இருந்து பின்னர் விஜயராஜேஸ்வரம் எனப் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம் என்பதனைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாலயம் அக்காலத்தில் தென்கைலாயம் என போற்றப்பட்டிருக்கிறது. இங்கு உடையார் என்பது இறைவனைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. இடத்தின் பெயர் , ஆலயம் என்பவற்றிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது தானம் அளித்த நங்கை சானியின் பொருளாதார நிலை. கணவன் இறந்த பின்னால் அவன் நினைவாகத் தானமளித்த இப்பெண் விஜயராஜேஸ்வரத்திற்கு அளித்த தான விபரம் வருமாறு. • ஆறு களஞ்சு பொன்முடி, • சந்தி விளக்கொன்றினை எரிப்பதற்காக ஒரு காசு , • நந்தவனம் வைத்திருப்பதற்கு எட்டுக்காசு, • இவற்றுக்கு ஏற்படும் அழிவுசேர்வுகளை ஈடுசெய்வதற்கு என ஒரு காசு, • தேவரடியார் எழுவரைத் தலை இலட்சினையிட்டு பராமரிப்பதற்கென்று இருபத்திமூன்று காசு என்பனவற்றை ஆலயத்திற்கு தானமாக வழங்கினாள் என இச்சாசனம் உறுதிப்படுத்துகிறது. மேற்கூறிய தான விபரங்கள் நங்கை சானியின் பொருளாதார நிலையினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விளக்கெரித்தல் , நந்தவனங்களைப் பராமரித்தல் போன்ற ஆலயக் கடமைகளுக்கு அப்பால் தேவரடியார்கள் தொடர்பிலும் நங்கை சானியால் தானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. […]! … கல்வெட்டு 05 நிலாவெளி தான சாசனம் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலாவெளி தான சாசனம் நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ் (வஸ்தி ஸ்ரீ)… சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி) கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும் ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல் லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான் கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே ஸ்வரரஷை இது ஒரு தான சாசனமாகும். இக்கல்வெட்டு மத்ஸ்யகேஸ்வரம் என்னும் கோயிலுக்கு வழங்கப்பட்ட தேவதானம் பற்றிய விபரங்களை விரிவாகத் தருகிறது. கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் ,சந்திரனும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும் என்பதாக அமைந்திருக்கிறது இக்கல்வெட்டு. திருகோணமலையில் சோழர் ஆட்சிக்காலத்தின் ஆரம்ப காலகட்டத்திற்குரியதான இக்கல்வெட்டில் முதற்பகுதி அழிந்து விட்டதால் அது எழுதப்பட்ட காலத்தின் அரசனின் பெயரை அறிய முடியாமல் இருக்கிறது. இச்சாசனம் திருகோணமலை வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. முதலில் திருகோணமலை என்ற பெயரினைப் பதிவு செய்த முதலாவது வரலாற்று ஆவணம் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் இப்பிரதேசத்தின் பெயரினை கோணமாமலை என்றும் இக்கல்வெட்டு அழைக்கிறது. ஏழாம் நூற்றாண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் திருக்கோணமலைப் பதிகத்தில் கோணமாமலை என்ற பெயர் வடிவம் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.திருகோணமலைக்கு புராண காலம் முதல் வழங்கப்பட்டு வந்த பெயர்களில் ஒன்றான மச்சகேஸ்வரம் இச்சாசனம் எழுதப்பட்ட காலத்திலும் வழக்கத்தில் இருந்ததை இக்கல்வெட்டு பதிவு செய்திருக்கிறது. அத்தோடு நிலாவெளிக்குள் அடங்கியிருந்து தற்போது வழக்கொழிந்து போய்விட்ட இரு இடப்பெயர்களான உரகிரிகாமம், கிரிகண்டகாமம் என்ற இடப்பெயர்களை இக்கல்வெட்டு ஆவணப்படுத்தியிருக்கிறது. இச்சாசனம் எழுதப்பட்ட காலத்தில் நில எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்ததை அதன் குறிப்புகள் உணர்த்துகிறது. திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சுமார் 250 வேலி (1700 ஏக்கர்) நிலம் தானமாக கொடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலப்பகுதியில் மச்சகேஸ்வரத்தில் தினமும் ஆராதனைகள் இடம்பெற்றதை உறுதிப்படுத்துகிறது. […] கல்வெட்டு 06 திருகோணமலையில் முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி   மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்தவர் பேரரசன் முதலாம் இராசராசன்.  இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுக்கள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன. திருகோணமலையில் சோழராட்சியின் ஆதாரப்படுத்தல்களாக அவர்களது மெய்க்கீர்த்திகளைச் சொல்லும் மூன்று சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் கட்டப்பட்ட போது அவ்வாலயத்தில் வைத்துக் கட்டப்பட்ட தூணாகும். இந்தத் தூணின் நான்கு பக்கங்களிலும் முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தூணின் ஒரு பகுதி பூச்சினால் மறைந்துவிட ஏனைய மூன்று பக்கங்களிலிருந்த வாசகங்கள் மட்டுமே வாசிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாசகங்களிலிருந்து வரலாற்றுரீதியான முக்கிய விடையங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதனை ஒரு ஆலயத்திற்கான நன்கொடைச் சாசனமாகக் கருதமுடியும்.      கிழக்கு                      -               தெற்கு              -           மேற்கு     பக்கம் 1                       -             பக்கம் 2                -      பக்கம் 3 1. ஸ்வ ஸி ஸ்ரீ த          -        1. சுந்தர       -              1. திருத்தகு 2. திருமன்னிவ               -    2. முடியும்       -          2. முடியும் 3. ளர இரு தில              -       3. இந்திர           -       3. பய(ங்)கொடு 4. மட(ந்தை)                 -        4. னாரமு          -         4. பழிமிக 5. யு(ம்)(பொ)ற்ச           -        5. ம் தெண்    -             5. முயங் 6. யப் (பாவை)              -         6. டிரை ஈழ  -               6. கியில் 7. (யு)ம் தன்                -            7. மண்டல      -            7. முதுகி 8. (பெருந் தெவி)            -      8. முழுவது         -        8. ட்டு ஒ- 9. யராகி இ-                -              9. ம் எறிப         -         9. (ழித்த) 10. ன் (புற) நெ           -              10. டைக் கெர         -      10. ஜ(ய)சி 11. டுதியல் ஊ              -         11. ளன் முறை ம         -   11. (ங்) கன் 12. ழியுள் இட            -             12. யிற் (சூடுங்)         -     12. அளப்பரும் 13. (துறை) நா (டும்)       -      13. (குலதந) மா     -        13. புகழொ 14. (தொடர்வந)                -      14. கிய பல(h)         -      14. டு பீடி 15. வெலிப் (படர்)             -        15. புகழ் மு-      -          15. யல் இ 16. (வன) வா(சி)            -            16. டியும்     -              16. ரட்டபா 17. யும் சுள்ளிச்                -       17. செங்கதி      -          17. டி ஏழ 18. (சூ) ழ்மதில் கொ    -           18. ர் மாலை        -        18. ரை இலக் 19. ள்ளிப்பா                -               19. யும் சங்      -           19. கமும் ந 20. க்கையும்                     -         20. கதிர் வெ       -         20. வ(n)நதிக் 21. தண்ண                         -        21. லைத் தொ     -         21. குலப்பே 22. ற் கரு முர              -            22. ல் பெருங்கா        -      22. ருமலை 23. ண் மண்                        -       23. வற் பல்ப    -            23. களும் 24. ணைக்கட              -              24. ழந் தீவும்     -           24………. 25. க்கமும்                    -           25. செருவில் (சி)      -       25………. 26. பொருகட                 -             26. னைவி இரு         -     26………. 27. லீழத்த                -                  27. ப(த் தொரு) கா    -       27………. 28. ரைசர்தம்             -               28. ல் அரைசு       -        28………. 29. முடியும்           -                   29. (க) ளை கட்ட      -      29……….  30. ஆங்கவர்                  -             30. பரசுராமன்     -          30……….. 31. தெவியர் ஓ-          -              31. மெவரும்      -          31………  32. ங் கெழில்                    -         32. சா(ந்)தி ம(த்)     -        32……… 33. முடியும்                       -        33. தீவரண் க      -         33……… 34. முன்னவர்             -               34. ருதி (இரு)      -        34……… 35. பக்கல் தெ               -           35. த்திய செ          -      35……… 36. ந்நவர்                       -            36. ம் பொற்   -             36……… 37. வைத்த                         -         37. …………..       -       37……… […] […] கல்வெட்டு 07 சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ஸ்ரீ சங்கவர்மரான உ டையார் ஸ்ரீ சோழ இலங்கேஸ்வர தேவற்கி யாண்ட்டு பத்தாவது ராஜேந்த்ர சோழ வளநாட்டு ராஜவிச்சாதிர வளநாட்டு ப்ரகமதே ஸம் ஸ்ரீ ராஜராஜச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி பெருமக்க ளோம் இய்யாட்டைக் கும்ப நாயற்று பூர்வ பகூத்து த் வாதஸியும் செவ்வாய்க் கிழ மையும் பெற்ற ஆயிலெயத்து நான்றிரவு நம்மூர் தண்டுகின்ற முத்தங்கை கோயில் மானி …………………………. நில….. வன் பணி….. வாந……….(த்)த பரிசா(வது) ண்……..(டு)……..வ் வூ(ர்) க்கு(டி)…. வை……ஒலோ(கவி) டங்க… ண்டாரத்து……… (க)ர சு மூன்று இக்(காசு) மூன்றில் இர(ட்டிப்பா) ன காசு ஆறுக்(கு) கல்லூர் நீர்நிலத்தில் வாசுதேவ…. ற்கு….. விக்கிரம சொழ வாய்க்கால்(இர) ண்டராங் கண்ணாற்று மூன்றாஞ் சது(ரத்து நீர் நிலம்) மூன்று மாவும் இங்கே நா…. இங்கே மூன்றாங் கண்… இச்சாசனம் “சங்கவர்மன்” எனும் பட்டப்பெயருடைய முதலாம் இராஜேந்திர சோழனின் மகன் சோழ இலங்கேஸ்வரனாக பதவி வகித்த காலத்துக்குரியது. இது கந்தளாய்ப் பிராமணக்குடியிருப்பினை “ஸ்ரீ இராஜராஜ சதுர்வேதி மங்கலம்” எனப்பெயரிட்டு அழைக்கின்றது. இக்கல்வெட்டின் காலம் சோழ இலங்கேஸ்வரனின் பத்தாவது ஆட்சியாண்டுக்குரியது என்பதனை இச்சாசனம் குறித்து நிற்கிறது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் இச்சாசனம் விபரிக்கின்ற நிகழ்ச்சி கி.பி.1033 இல் அல்லது கி.பி.1047 இல் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கின்றனர். எனினும் இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் இச்சாசன காலத்திற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே வழக்கில் இருந்திருக்கவேண்டுமென கருதப்படுகிறது. திருகோணமலையில் சுவாமி மலையினை அடுத்துள்ள கடற்பகுதியில் சிவலிங்கத்துடன் மீட்கப்பட்ட இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி (குடமாலை) நாடுங் கொல்லமு(ம்) என்ற ஆரம்பப் பகுதியைக் கொண்டிருந்தது. இது கி.பி. 993க்கு முதல் எழுதப்பட்ட இராஜராஜனின் மெய்க்கீர்த்தி வடிவங்களை ஒத்தது என்பதனால் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய சோழசாசனமாகக் கருதப்படுகிறது. எனவே கி.பி. 993 க்கு முன்பாகவே திருகோணமலையில் சோழர்களின் செல்வாக்கு நிலவிவந்ததை ஊகிக்க முடிகிறது. இதனால் இராஜராஜ சோழன் காலம் முதலே இப்பிராமணக்குடியிருப்பு இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதே பொருத்தமானதாக இருக்கிறது. இராஜராஜ சதுர்வேதி மங்கலமான கந்தளாயில் வாழ்ந்த பெருங்குறிப் பெருமக்கள் கந்தளாய்க் குளத்துடன் தொடர்புடைய விக்கிரமசோழ வாய்க்கால், வாசுதேவ வாய்க்கால் என்பன தொடர்பிலும், அவற்றின் மூலம் பாசனம் பெறும் வயல் நிலங்களுக்கான வரிதொடர்பாகவும் ஏதோ ஒரு தீர்மானம் நிறைவேற்றியதைச் சொல்கின்றது இக்கல்வெட்டு. கல்வெட்டு முழுமையாக கிடைக்காமையால் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிய முடியாமல் இருக்கின்றது. எனினும் இதையொத்ததாக பேரரசன் முதலாம் இராஜராஜனால் திருச்சியில் உருவாக்கப்பட்ட உய்யகொண்டான் ஆற்றுநீரை முறைப்படுத்தி பயன்படுத்த அமைக்கப்பட்ட ஏரிவாரியத்தைப் போன்றது எனக்கருதலாம். இவ்வேரிவாரியம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் சபையோரால் நிர்வகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. இந்தத்தகவல்கள் மூலம் சோழ இலங்கேஸ்வரன் காலத்தில் கந்தளாய்க்குளத்தின் வாய்க்கால், கண்ணாறு என்பன தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை இராஜராஜ சதுர்வேதி மங்கலமாக இருந்த கந்தளாய் கொண்டிருந்தது என்பதை அறியலாம். இக்கூட்டத்தில் அக்காலத்தில் கந்தளாயில் இருந்த அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த ஒரு இளம் பிராமணன் வரிசேகரிப்பாளனாக கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. […] […] கல்வெட்டு 08 கங்குவேலிச் சிவன் கோவில் கல்வெட்டு முதல் பக்கம் மலையில் வ ன்னியனாரும் ஏழூர் அடப்ப ர்களும் கூடி தம் பிரானார் கோணை நாதனுக்கு கங் கு வேலியில் வெ ளியும் புல்நடப்(ப) ம் ஆக விட்டோம் யிதுக்கு யாதொ ருவன் ஆகிலு ம் அகுதம் நி னைத்தவர்க ள் கெங்கை இரண்டாம் பக்கம் கரையிலே காரம் பசு வைக் கொ(ன்) ற பாபம் கொ ள்ளக் கடவர் ஆகவும் யிப்ப டிக்கு யிரண் டு முதலிமை யும் தானம் வரிப்பற்று ம் உ கொட்டியாரப் பற்று சுதந்திரச் சிற்றரசாக இருந்த காலப்பகுதி தொடர்பான தகவல் பதின்நான்காம் நூற்றாண்டில் கிடைக்கிறது. கங்குவேலிச் சிவன் கோவில் கல்வெட்டு அதற்கான ஆதாரமாக அமைகிறது. இது ஒரு பூமிதானம் தொடர்பான கல்வெட்டு. இதனைப் பொறித்த வன்னிபத்தை திருகோணமலை வன்னியனார் என இனங்காண முடிகிறது. இவ்வன்னிபம் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் கொட்டியாபுரப் பற்றில் அதிகாரம் பெற்றவராக இருந்திருக்கிறார். அத்துடன் அவ்வன்னிபம் மேலாதிக்கம் செலுத்தும் அதியரசன் எவருமில்லாமல் சுதந்திரமாக ஆட்சிபுரிந்தவன் என்பதையும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. […] […] கல்வெட்டு 09 இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி திருகோணமலையில் சோழராட்சியின் ஆதாரப்படுத்தல்களாக அவர்களது மெய்க்கீர்த்திகளைச் சொல்லும் மூன்று சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று சுவாமி மலையினை அடுத்துள்ள கடற்பகுதியில் சிவலிங்கத்துடன் மீட்கப்பட்ட இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியாகும். இச்சாசனம் இயற்கையான கற்பாறைகளும் சைவக்கோயிலொன்றின் இடிபாடுகளும் குவிந்து கிடக்கும் கடற்பரப்பிலிருந்து சுழியோடிகளினால் மீட்கப்பட்டது. இங்கு மீட்கப்பட்ட சிவலிங்கம் முற்காலக் கோணேசர் கோயிலின் தொல்பொருள்ச் சின்னமாகக் கருதப்படுகிறது. 1961ஆம் ஆண்டு இவையிரண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போதும் 1972 ஆம் ஆண்டிலேயே இச்சாசனங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1.(குடமாலை) நாடுங் கொல்லமு(ம்) 2.———– பொழில் ——— 3.———–எண்டிசை (புகழ்) 4.(நர ஈழமண்)டலந் நின் 5.(டிறல் வென்றித்த) ண்டாற கொண் (டதன்) 6.(னெழில் வள)டூழியுள் ளெ(ல்ல யான்) 7.(டுந்தெ)ழுநம விள(ங்கும் யான்) 8.(டெய் செ)ழியரைத் நே(சு கொண்) 9.(கோ)ராஜ கேசரி வ(ர் மரான) இச்சாசனம் துண்டமானது. இதனுடைய முதற்பகுதியும் இறுதிப் பகுதியும் உடைந்து விட நடுப்பகுதியே சுழியோடிகளால் மீட்கப்பட்டிருந்தது. இச்சாசனத்தில் அடங்கியிருப்பது இராஜராஜனின் மெய்க்கீர்த்தியின் சுருங்கிய வடிவமாகும். இது கி.பி 993க்கு முதல் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி வடிவங்களை ஒத்தது என்பதனால் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய சோழசாசனமாகக் கருதப்படுகிறது. இச்சாசனம் பண்டைய நாட்களில் திருகோணமலையில (கோகர்ணத்தில் ) இருந்த ஒரு சிவாலயம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட தானமொன்றினைப் பதிவுசெய்யும் ஆவணமாக வரலாற்றாய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. அத்துடன் இராஜராஜனின் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அதாவது கி.பி.993க்கு முன்பாகவே ஈழமண்டலத்தைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்பதனை உறுதி செய்யும் ஆவணமாகவும் இச்சாசனம் கருதப்படுகிறது. […] கல்வெட்டு 10 இராஜராஜப் பெரும்பள்ளி  (வெல்கம் விகாரை )கல்வெட்டுகள் திருகோணமலையில் பெரியகுளம் பகுதியில் இருக்கும் வெல்கம் விகாரை என அழைக்கப்படுகின்ற இராஜராஜப் பெரும் பள்ளியில்  11, 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 ஆண்டுகளில் இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம். வெல்காமம் என்னும் ஊரில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை சோழர் காலத்து(14) தானசாசனங்கள். இச்சாசனங்கள் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிச் சொல்கிறது. தானகாரர்களின் பெயர், அவரது ஊர்ப் பெயர் , பதவி அல்லது விருதுப் பெயர், அவர் வழங்கிய நன்கொடை என்பன அச்சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விளக்கு, பசுக்கள், எருமைகள், காசு என்பன இராஜராஜ பெரும்பள்ளிக்குத் தானமாக வழங்கப்பட்டது என்பதை இங்குள்ள தமிழ் கல்வெட்டுகள் ஆதாரப்படுத்துகிறது. ஆதித்தப்பேரரையன் ஒரு நந்தா விளக்கும் 84 பசுங்களும் வழங்கினான். இராஜேந்திர சோழரின் 12ஆம் ஆட்சி ஆண்டிலே புவனதேவன் நந்தா விளக்கொன்றும் 4 காசும் கொடுத்தான். தானம் சங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விளக்கெரிப்பதற்கு வேண்டிய எண்ணையைக் கொடுக்கும் பொறுப்பினை சங்கத்தார் ஒப்புக்கொண்டனர். காயாங்குடையானானஅமுதன் சாத்தன் இராஜேந்திர சோழ தேவரின் 25 ஆம் ஆட்சியாண்டில் நந்தா விளக்கொன்றையும் ,10 பசுக்களையும் ,10 எருமைகளையும் தானமாகக் கொடுத்தான். ஏறாநாடன் கண்டன் யக்கன் நந்தா விளக்கு ஒன்றினை நன்கொடையாக வழங்கினான். இராஜேந்திர சோழதேவரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் 35 பசுக்களும் , 5 எருமைகளும் பெரும்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்டன. இவ்வாறு இந்த தமிழ் பௌத்தப் பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்களை விபரமாக இக் கல்வெட்டுக்களில் சில பதிவு செய்திருக்கிறது. இங்குள்ள பெரும்பாலான சாசனங்களில்; ஏற்பட்ட சிதைவினால் தானம் செய்யப்பட்ட விபரங்களை பூரணமாக அறிந்து கொள்வது சிரமமாக உள்ள போதிலும் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் இலங்கை தமிழ் சாசனங்கள் என்ற நூலில் திருத்தியமைக்கப்பட்ட சில இராஜ இராஜ பெரும்பள்ளி கல்வெட்டுகள் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு 10 11. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர (இ) 12. (ரு) நில மடந்தையும் போற் (ச) 13. (ய) பாவையும் சீர்தனிச் (செ) 14. ல்வியும் தன் பெருந் தேவிய 15. (ராகி) இன்புற நெடுதியலூ 16. (ழி)யுள் இடைதுறை – நாடுந் 17. தொடர் வனவேலி படர் வன 18. வாசியு (ஞ்) சுள்ளி சூழ் மதிற் கொ 19. (ள்ளிப்) பாக்கையும் நண்ணற் 20. (கரு ம)ரண் மண்ணைக் கடக்க 21. மும் பொருகடல் ஈழத்தரைசர் 22. தம் முடியும் ஆங்கவர் தேவி  23. யர் ஒங்கெழில் முடியும் முன் - 24. னவர் பக்கல் தென்னவர் வை 25. த்த சுந்தர முடியும் இந்திர 26. (ந)ரமும் தெண்டிறல் ஈழ மண்ட 27. ல முழுவதும் எறிபடை 28. க்கேரளன் முறைமையிற் சூடும் 29. குலதனமாகிய பல்புகழ் முடி- 30. யும் செங்கதிர் மாலையும் சங் 31. திர் வேலைத் தொல்பெருங் கா 32. (வற்) பல்பழந் தீவும் செருவிற் சி- 33. னவில் இருபத்தொருகால் அ- 34. ரைசுகளை கட்டப் பரசுராமன் 35. (மே) வருஞ் சாந்திமத்தீவரண் க(ருதி) 36. (இருத்)திய செம்பொற் றிருத்த 37. கு முடியும் பயங்கொ(டு) பழி 38. (மிக) (மு) யங்கி(யில்) முடுகித் கல்வெட்டு 11 4. (மிக) மு(ய)ங்கியில் மு(துகிட்டொழி) – 5. (த்)த ஜயசிங்கன் அள(ப்) (பரும் புகளொ) 6. டு பீடியில்லிரட்டபா(டி) (யேழரை இல) – 7. க்கமும் நவநெதிக் குல(ப்) (பெருமலைகளு) 8. ம் விக்கிரம வீரர் சக்கர(க்) கோட்டமும் முதிர்) – 9. (ப)ட வல்லை மதுரமண்டலமும் (காமிடை) – 10. வள நாம(ணை) ய் கோணை(யும்) வெ (ஞ்) 11. (சினவீரர்) பஞ்சபள்ளியும் (ப) (hசடை) 12. (ப்) பழன(ம்) மாசுணித்தேசமும் (அயர்)- 13. வில் வண் (கீர்)த்தி ஆதிநகரவை(யி) (ல் சந்) 14. திரன் (தொ) ல் (குல) லத்திந்திராதனை வி (ளை அ) 15. (ம)ர்களத்துக் - கி(ளை) யொடும் (பிடித்து)- 16. ப் பலதனத் (தெடு நிறை ……… கல்வெட்டு 12 1. …………………. 2. யும் வன் மலை (யூரெ) (யி) 3. ற்றொந் மலையூரும் ஆழ்(க) 4. டல் அகல் சூழ் மாயிருடிங் 5. கமும் கலங்கா வல்(வினை) இ - 6. லங்கா சோகமும் கோப்புறு நி 7. றை புனை மாப்பப்பாலமும் 8. காவலம் புரிசை மேவிளிம் 9. பங்கமும் விளைப்பந்தூருடை 10. வலைப்பந்தூரும் கலைத் 11. தக்கோர் புகழ் தலைத் தக் - 12. கோலமும் (தி) த்தமர் வல் (வி) – 13. (னை)ள மாத்தமாலிங்கமும் கலா 14. (மு) திர் கடுந்திறல் இலாமுரி – 15. (..)தசமும் தேநக்கவார் (பொ) – 16. (ழி)ல் மாநக்கவாரமு (ந்) தொடு (க) 17. (ட)ற் காவற் கடுமுரட் கிடார(மு) …….. கல்வெட்டு 13 1. ஸ்ரீ பலவன் புதுக்கு 2. டி யான் ஆதித்தப் 3. பேரரையன் ஸ்தவ்;யா 4. றாமய னா மானாவதிளானா 5. ட்டு வெல்க வேரான இ 6. ராஜராஜ பெரும்பள்ளிக்கு 7. வைத்த னொந்தா வி 8. ளக்கு 1 பசு 8 9. 4 கல்வெட்டு 14 1. கோ பரகேசரி 2. பத்மரான ஸ்ரீ ராஜேந்த்ர 3. சோழ தேவர்க்கு யா 4. ண்டு 12 டாவதில் கோ 5. லத்து தரிய நன் புவன 6. (தே)வன் வெல்கவேரத் 7. து தேவ (ர்)க்கு வை 8. ச்ச னந்தா விளக்கு 9. 1 காசு 4 இப்பள்ளிச் 10. சங்கத்தார் விள 11. க் கெண்ணையு (ம்) 12. (வை) ப்பதாகவு 13. ம் கல்வெட்டு 15 1. (ஸ்வஸ்தி உடையார்) 2. ஸ்ரீ ராஜேந்த்ர (சோழ) தே 3. வற்கு யாண்டு 5 சாவது 4. மும்முடி சோழ மண்டல 5. த்து மேலா (ந) ங்ங னாட்டு 6. வீரபரகேசரி வளநாட்டு 7. பனாவாசத்துளாகாமத்து 8. பாத்தரவிதாரமந் வெல்கம் 9. வேரமான ராஜராஜ பெரும் 10. பள்ளி புத்தர்க்குப் புண்ணி 11. யத்துக்கு வைத்த பசு 12. 35 எருமை 5 கல்வெட்டு 16 1. (பூர்வதேசமும் கங்கையும் 2. கடாரமுங் கொண்ட) கோப்பரகேசரிபந் 3. மரான உடையார் இராஜேந்த்ர 4. சோழ தேவற்கு யாண்டு 5. 25 ஆவது இராஜேந்த் ரசி 6. ங்க வளநாட்டு அப யாஸ்ரய வ 7. ளநாட்டு வெல்காமப் பள்ளி n 8. வல்கம் வேரமாந ராஜராஜ 9. ப் பெரும்பள்ளி புத்தர்க்கு 10. பணிமகன் காயாங்குடைய 11. hந் அமுதன் சாத்தந் சந்த்ராதி 12. த்தவல் நின்றெரிய வை 13. த்த திரு நொந்தா விளக் n 14. காந்றி(னு) க்கு நிசதம் மூந்று 15. உழக்குக்கு நிவந்த ம(hக) 16. வைத்த எருமை பத்து கல்வெட்டு 17 ஞ்சாம் பக்கத்துப் பூசம் பெற்ற வியாழக்கிழமை நான்று இட்ட இருபது சாணே நால் விரல் நீளத்து தாராநிலை விளக்கு ஒன்று இது திருநொந்தா விளக்காய்ச் சந்திராதித்தவல் நின்றெரிய நிசதிப்படி கல்வெட்டு 18 ஏறாநாடன் கண்டன் யக்கன் இட்ட திரு நூந்தா விளக்கு மேலே உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் தானகாரர்களில் சிலர் சோழர்களின் நிர்வாக அதிகாரிகள். அவ்வாறு தானம் வழங்கியவர்களில் 1. ஆதித்தப்பேரரையன்  2. புவனதேவன் 3. அமுதன் சாத்தன் 4. கண்டன் யக்கன்  5. பாத்தரவித ராமன் போன்றவை தானசாசனங்களில் தெளிவாகத் தெரியும் பெயர்களாகும். இவற்றுடன் இராஜேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்திகள் பலவும் இச்சாசனங்களில் இடம்பெற்றுள்ளன. இச்சாசனங்களில் ஒன்று புதுக்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்தப்பேரரையன் இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஒரு விளக்கினையும் , 8 பசுக்களையும் மற்றும் பல பொருட்களையும் (சாசன எழுத்துக்கள் தெளிவில்லையாதலால் குறிப்பிட முடியவில்லை) தானமாகக் கொடுத்த செய்தியைப் பதிவுசெய்கிறது. இங்கு குறிப்பிடப்படும் ஆதித்தன் என்பது அவனது இயற்பெயர். பேரரையன் என்பது சோழரின் நிர்வாகத்தில் சேவைபுரிந்த பிரதானிகளில் ஒரு வகையினருக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர். அவனது ஊர் புதுக்குடி.  புதுக்குடி என்னும் பல ஊர்ப்பெயர்கள் இலங்கையில் உள்ளதால் ஆதித்த பேரரையன் சோழரின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த இலங்கைத் தமிழனா என்ற சந்தேகத்தைத் தருகிறது. எனவே திருகோணமலையில் தமிழர்களின் வரலாறு தொடர்பான தேடல்களில் வெல்காமப்பள்ளி என்கின்ற வெல்கம் விகாரை தொடர்பான ஆதாரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  பெரியகுளத்து இராஜராஜ பெரும்பள்ளி ஒரு பௌத்த கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் , அது சோழர் ஆட்சிக்காலத்தில் புனர்நிர்மாணம் பெற்றது என்பதையும் அதன் கட்டுமானம் திராவிட கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இராஜராஜப் பெரும்பள்ளியில் கிடைக்கப்பெற்ற சாசனங்கள் அனைத்தும் தமிழ்ச் சாசனங்கள் என்பதோடு தமிழர்களே இவ்விகாரைக்கு தானங்களை வழங்கியுள்ளார்கள் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் சிலர் சோழர் நிர்வாகத்தில் பதவி பெற்றிருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இராஜராஜப் பெரும்பள்ளிச் சாசனங்கள் தொடர்பில் இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளரும், கல்வெட்டியலாளருமான பேராசிரியர் சேனரத் பரணவிதான அவர்களின் கீழ்வரும் கருத்து அதிக கவனம்பெறுவதாக இருக்கிறது.  இந்தத் தமிழ் விகாரையின் அடித்தளப் படைகளின் வேலைப்பாடுகள் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகியவற்றில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாகும். அவை பொலன்னறுவையிற் சோழர்கள் அமைத்த இந்துக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றனவாகும்.  தென்னிந்தியாவிலே பல பௌத்தப் பள்ளிகள் இருந்தபோதும் இதுவரை தமிழ்நாட்டில் அவற்றைச் சேர்ந்த தொல்பொருட்கள் கிடைக்காத படியால் பெரியகுளத்திலே கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களின் கவனத்திற்கும் உரியதாகும். […] […] […] […] […] கல்வெட்டு 19 வீரபாண்டியனின் வெற்றித்தூண் திருகோணமலை நகரில் வாழும் அன்பர்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வீரபாண்டிய மன்னனால் நிறுவப்பட்ட வெற்றி துணைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயிலில் காணப்படும் இந்த வெற்றித் தூண் ஜடவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1251 -1268) இளைய சகோதரனும் துணை அரசனாகிய வீரபாண்டியனால் நிறுவப்பட்டது. வென்றி மலர்பொதிவேல் கையருள வேந்தர்க்கு நன்றி முக மண்டபத்தே நாட்டினானொன் றோ பொற்கரசை மாமதுரைப் புத்தபிய வைத்த வீரன் கற்கால திருநிலைவான் காப்பு இக்காலப்பகுதியில் ஆட்சி செய்த சாவகனான சந்திரபாணு மன்னனை திருகோணமலையில் இடம்பெற்ற போரின் போது வீரபாண்டிய மன்னன் வெற்றி கொண்டு அதன்பின் திருகோணமலையில் வெற்றி விழா நிகழ்த்திய பொழுது இந்த வெற்றித் தூண் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது. பாண்டியப் படை வீரர்கள் தாம் அடைந்த வெற்றிக்கு நன்றிக் கடனாக முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்து, தானதர்மங்கள் புரிந்து இந்த வெற்றிச் சின்னத்தை நாட்டியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இக்காலப்பகுதியில் வில்லூன்றி கந்தசுவாமி ஆலயம் திருப்படைக் கோயிலாக காணப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. முருகப்பெருமானின் படைக்கலமாகிய வேலினை ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைத்து வணங்கும் கோயில்களை திருப்படைக் கோயில் என்று அழைப்பது வழக்கம். இந்த வெற்றி துணினை புராதன ஆலயத்தின் முக மண்டபத்தில் நாட்டினார்கள் என்பது கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. எனவே திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வரலாறு 750 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. […] […] கல்வெட்டு 20 திருகோணமலையில் திருப்பள்ளியெழுச்சி தொடர்பான கல்வெட்டு திருகோணமலையில் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் கி.பி 12 / 13 ஆம் நூற்றாண்டில் கந்தளாயில் கிடைக்கிறது. 1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோ அபய 2. சலாமேக பர்ம்மரான சக்ர 3. வத்தி ஸ்ரீ ஜயபாகு தேவற்கு யா 4. ண்டு 35ஆவது கந்தளாயாங விஜ 5. ய ராஜ சதுர்வ்வேதி மங்கலத்து ஸ்ரீ கை 6. லாசமான விஜயராஜேஸ்வர முட 7. யார்க்குத் திருப்பள்ளியெழுச்சி மத்ய 8. போஙகம் அமுதுக்கு காசு இட்டார் பத்து இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கந்தளாயில் இருந்த விஜயராஜேஸ்வரம் என்கின்ற சிவாலயத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டதையும் அதன்போது மந்திர போனகம் அமுது வழங்குவதற்காக காசுகள் வழங்கப்பட்டதையும் இந்தக் கல்வெட்டு பதிவு செய்திருக்கிறது. திருகோணமலையில் திருப்பள்ளியெழுச்சி ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப்பாடப்பட்டு வருகிறது என்ற கல்வெட்டு ஆதாரத்தை இன்றும் கந்தளாயில் உள்ள சிவாலயத்தில் நீங்கள் காணலாம். […] கல்வெட்டு 21 திருகோணமலைக் கோட்டை வாசல் கல்வெட்டு திருகோணமலைக் கோட்டை வாசலின் தூணில் இரட்டை மீன் (இணைக் கயல்கள்) இலட்சினை காணப்படுகிறது. இது சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய ஆட்சிக்காலத்தில் (கி.பி 1251 -1271)அவனது துணை அரசனாக விழங்கிய வீரபாண்டிய மன்னனின் வெற்றிச் சின்னமாகும். மேற்படி இரட்டைக்கயல் சின்னத்தின் கீழ் தடித்த வெண்மை பூசப்பட்ட இடத்தில் முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை … என்று தொடங்கும் கல்வட்டு காணப்படுகிறது. (மு)ன்னே குள (க்)கோட்டன் மூட்டு (தி)ருப்பணியை (ப்)பி ன்னே பறங்கி (பி) (ரிக்)கவே மன்ன(வ) (பி)ன் பொண்ணா(த ) (தனா)ன யியற் (றஃவ) (ழித்)தே வைத்து (எண்)ணா (ர் வரு) (வேந்தர்)கள் என்ற கல்வெட்டின் வரிவடிவங்கள் பதினேழாம் நூற்றாண்டை ஒத்ததாக காணப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் திருகோணமலைக் கோட்டையை போத்துக்கீசரின் ஆதிக்கத்திலிருந்து கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தர் படையெடுத்துச் சென்றனர். இதன்போது அவர்களுக்கு உதவியாக கிழக்கிலங்கையில் செயற்பட்டு வந்த வன்னி சிற்றரசுகள் போரில் ஈடுபட்டன. மட்டக்களப்பிலிருந்து 500 படையினரும் கொட்டியாரத்திலிருந்து 400 பேரும் சம்மாந்துறை படையும் கலந்து கொண்டனர். போத்துக்கீசரிடமிருந்து திருகோணமலைக் கோட்டை ஒல்லாந்தர் ஆதிக்கத்தின் கீழ் வந்த பின்னர் இப்படையெடுப்பில் கலந்துகொண்ட மட்டக்களப்பு, சம்மாந்துறை, கொட்டியாரம் ஆகிய வன்னிப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவரனரால் இச்சாசனம் பொறிக்கப்பட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே மன்னாகேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போனபின் மானே வடுகாய் விடும் என்று இன்றும் திருமலை மக்களிடம் செவிவழியாக பேணப்பட்டுவரும்; பாடல் இக்கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. […] கல்வெட்டு 22 மாங்கனாய் தான சாசனம் இச்சாசனம் இன்றைக்கு சுமார் 850 வருடங்களுக்கு முன்னர் 1153 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. ------------------------- ----------------------- முதலாம் முகம் இரண்டாம் முகம் 01.ஸ்வஸதி ஸ்ரீ அ 01. நிருபதி த 02. பையசலாமே 0 2. ந் குறிப்பு 03. கபந்மரான ச 0 3. க்கு மானா 04. க்கரவர்த்திக 0 4. புரண தே 05. ள் ஸ்ரீ ஜயப3 h ஹ 0 5. வர் க ஐ3வ3h 06. தேவற்க்கு யாண் 0 6. ஹ hதேவர் 07. டு 43 ஆவது தி 0 7. செய்தது செ 08. ருப்பள்ளிச் சிவi 0 8. யலென்று 09. கயாரில் கண்கா 0 9. அருளி திருமு 10. ணி மிந்தன் கொ 1 0. கம் வர்க்கா 11. ற்றநேன் க3 ஜபா3 1 1. ட்டிச் சிலா 12. ஹதேவர் எநக்கு ஜீ 1 2. லேகம் செ 13. வுpதமாக இட்ட இ 1 3. ய்து குடுத் 14. த் தெல் வெசாரும் 1 4. தது இது 15. கிரது நராது வெ 1 5. க்கு ஒரு வி 16. சாரும் இதில் நாற் 1 6. கு;க (ன)ஞ் செய்(ய) 17. பால் எல்லை பெரு 1 7. (லெந்று) ளம 18. மாள் க3 ஜப3h 1 8. திப் புத்தரா 19. ஹதேவர் வெய் 1 9. ஞ்ஞை வ 20. கு வேரத்தாள்வா 2 0. ல்லவ (ரை) 21. இட்டருளிநார் 2 1. யன் சூள 22. றவு ------------------------- ----------------------- மிந்தன் கொற்றன் என்கின்ற தமிழ் பௌத்தன் அரண்மனையில்  ஒரு குழுவினரின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்திருக்கிறார். இவருடன் தொடர்புடைய நிலதானம் தொடர்பான விடயங்களை இக்கல்வெட்டு உள்ளடக்கியிருக்கிறது. இக்கல்வெட்டில் என்னைக்கவர்ந்த மூன்று விடயங்கள் இருக்கிறது. 1.  இங்கு தானம் அளிக்கப்பட்ட விகாரையில் இருந்த  புத்தர் படிமத்தை இக்கல்வெட்டு வேரத்தாள்வார் என்று குறிப்பிடுகிறது. வைணவ மரபில் திருமாலுடைய அடியார்களை ஆழ்வார் என்று அழைப்பது வழமை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இக்கல்வெட்டில் கூறப்பட்டிருக்கும் தானத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு எதிராக இரண்டு வெவ்வேறு தெய்வங்கள் மீது சத்தியம் செய்யப்பட்டிருப்பதை கீழ்வரும் வாசகங்கள் உணர்த்துகிறது. இதனை கல்வெட்டும் மரபில் ஓம்படைக்கிளவி என்று கூறுவார்கள்.  ’…இதுற்கு ஒரு விக்னஞ் செய்(ய)     (லெஞ்று)மை திப் புத்தராஞ்ஞை     வல்லவரையன் சூளறவு’ 2. புத்தராஞ்ஞை  -  புத்த பெருமான் மீது ஆணை என்பதனை குறிக்கிறது. 3. வல்லவரையன் சூளறவு  - விநாயகர் மீது சத்தியம் என்பதை குறிக்கிறது. வல்லவர் என்பது விநாயகரின் 32 நாமங்களில் ஒன்று என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. இக்கல்வெட்டு திருகோணமலையில் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் பௌத்தர்களிடையே இந்துசமயம் கொண்டிருந்த செல்வாக்கினை விளக்குவதாக அமைந்திருக்கிறது. […] […] கல்வெட்டு 23 எல்லைக் கல் சாசனம் இரண்டாம் கஜபாகு மன்னன் காலத்துக்குரிய இக் கந்தளாய் கல்வெட்டு இடையர்கல் எனும் இடத்தில் எல்லைக்கல் நாட்டப்பட்டதை பதிவு செய்கிறது. 1. ஸ்வஸ்தி ஸ்ரீ ல 2. ங் கேஸ்வரந் க3 3. ஜப3 hஹ தே3வர் 4. கந்தளாய் ப்3ர 5. ஹ்ம தே3யம் பிடி 6. நடந்த பூ4 7. மி இடையர் 8. கல்லில் ஊ 9. ரார் திக்கு நாட்டி 10. ன எல்லைக் கல் எல்லையாக தீர்மானித்த இடத்தில் நீரூற்றி பெண் யானையினை அந்த இடத்தில் நடத்தி அதில் கள்ளி, கல்லு போன்றவற்றை எல்லைக்கு அடையாளமாக வைப்பது அக்கால வழக்கம். […] கல்வெட்டு 24 மயிலன் குளத்து வேளைக்காறரின் கல்வெட்டு 1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில்  மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது. 1. ஸ்ரீ அபைய ச – 2. லா மேகச் ச – 3. க்கரவர்த்திகள் 4. ஸ்ரீ ஜயபா3 ஹ தே – 5. வர்க்கு யாண்டு ப – 6. தின் எட்டாவது தம் 7. பால் ஜீவிதமுடைய 8. கணவதித் தண்டநாத 9. நார் உதுத்துறை விக் 10. கிரமசலாமேகர் நால் 11. படையையும் ஆஸ்ரி 12. த்து பேருமிட்டு விக் 13. கிரிம சலாமேகன் 14. பெரும் பள்ளி திருவே 15. ளைக்காறர் அபையம் கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. சோழருடைய ஆட்சி விலக்கப்பட்ட பின்னரும் திருகோணமலையில் செல்வாக்கு கொண்டிருந்த தமிழ்ப் படையான வேளைக்காறப் படை இங்கு விக்கிரமசலாமேகன் நாற்படை என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இதிலிருந்த நாற்படையினர் பௌத்த சமயச் சார்புடையவர்கள் என்பதனையும் அறியக்கூடியதாக இருக்கிறது. […] கல்வெட்டு 25 தம்பலகாமம் கள்ளிமேட்டு ‘நடுகல்’ தம்பலகாமத்தைச் சேர்ந்த கள்ளிமேட்டில் வசித்த அமரர் கந்தப்பர் கணபதிப்பிள்ளை அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அண்ணளவாக 1916 / 1917 காலப்பகுதியில் இறைவனடி சேர்ந்த செய்தியை இக்கல்வெட்டுச் சொல்கிறது. 1. நள வருடம் தை.மீ.உ.(ங)   -  (பரவளைவாக எழுதப்பட்டது) 2. காராள குல 3. கந்தப்பர் மகன் 4. கணபதிப்பி(ள்ளை) 5. தேகவியோகம் 6. தம். கள்ளிமேடு 7. மகன் 8. க.ஐயாத்துரை இறுதியாக நடுக்கல்லினைப் பொறிக்கச் செய்தவர் பற்றிய தகவல் ஏழாம், எட்டாம் வரிகளில் இடம்பெற்றுள்ளது. அவர் இறந்தவரின் மகன். அவரது பெயர் க.ஐயாத்துரை என்பதாகும். […] கல்வெட்டு 26 தம்பலகாமம் கல்வெட்டு தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணமான இக்கல்வெட்டு இன்றைக்கு சுமார் 800 வருடங்களுக்கு முற்பட்டது. இச்சாசனம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. தம்பலகாமம் கல்வெட்டு எல்லாமாகப் இருபத்தி மூன்று வரிகளைக்கொண்டது. 1 —- 2 ———-மாதி 3 —— 4 யிரண் —-தி 5 ருக்கோணமலை 6 உடையான் நிச்ச 7 யித்த ஜகதப்ப 8 கண்டன் சந்தி  9 க்கு நிலையாக (தர) 10 தம்பலகாம ஊ 11 ரை நான் கெல்  12 லைக்கு உள் எல்லா  13 வினியோ 14 கங்கொள்  15 ளும்படிக்கு 16 ம் இதுக்கு 17 மேற் பன்னி 18 நான் ஒரு –  19 —————  20 –மாகில்  நா 21 – காகத்து 22 க்கும் பிறந் 23 தாராவர்கள். என்றமைகிறது கல்வெட்டின் வாசகங்கள். இந்த சாசனம் தம்பலகாமம் என்ற இடப்பெயரின் தொன்மையைப் பதிவு செய்வதோடு அது அக்காலப்பகுதியில் கொண்டிருந்த அரசியல் , சமுதாய முக்கியத்துவத்தினையும் விபரிக்கிறது. இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உடையார் (6. உடையான் நிச்ச) என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இங்கு குறிப்பிடப்படும் உடையார் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பது சாசனத்தின் ஐந்தாவது வரிமூலம் அறியமுடிகிறது. அடுத்து வரும் ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது ‘ஜகதப்ப கண்டன்’ என்ற விருதுப்பெயரால் பெயரால் வழங்கிய படையொன்று இங்கு இருந்துள்ளது என்பதனை உறுதிப்படுத்துகிறது. இச்சாசன செய்தி மூலம் தம்பலகாமம் அக்காலப்பகுதியில் ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ’ஜகதப்ப கண்டன்’என்ற போர்வீரர் படையொன்றின் ஒன்றின் பொறுப்பில் விடப்பட்ட ஒரு பட்டினமாக இருந்திருக்க வேண்டுமென்பதை உணர்த்துவதாய் இருக்கிறது. [IMG-20191008-WA0007.jpg][IMG-20190831-WA0016.jpg] கல்வெட்டு 27 மூதூர் பட்டித்திடல் கல்வெட்டு திருகோணமலை மூதூரில் இருந்து 10 KM தூரத்தில் இந்த பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் உள்ள இந்தக்  கிராமம் பல இடப்பெயர்வுகளையும், படுகொலைகளையும் முன்னைய காலங்களில் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  பண்டையகாலங்களில் நிகழந்த நிகழ்வுகள், போர்வெற்றிச் செய்திகள், ஆலயங்களுக்கான தானங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை கற்சாசனங்களில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது நாம் அறிந்ததே. அதுபோலவே 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களும் சில முக்கிய செய்திகளைப் பதிவு செய்ய கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதனை ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் இவை. வாசலில் உள்ள கற்தூண் 21.09.1976 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆலய கும்பாவிஷேக நிகழ்வினை பதிவு செய்திருக்கிறது.  […] கல்வெட்டு 28 ஸ்ரீ குலோத்துங்க சோழக் காலிங்கராயன் கல்வெட்டு கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில்  திருகோணமலை மாவட்டத்தில் தனிநிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. 1)… … க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3]நௌ ம்ருகே3விம்ச0தி ப4. 2)…. …..ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ … 3. [த்திகள் ?] [ஸ்ரீகுலோ]த்துங்கசோழக் கலிங்கராயநேன் ஈழ[ம 4. ண்டலமான மும்முடி]சோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க வி- 5. ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட- 6. [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ- 7. [ணமாமலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய- 8. நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா 9. ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப் 10. ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[து] நாட்டில் ல- 11. ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில- 12. மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய 13. மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட 14. இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று- 15. க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோத3கம் ப- 16. ண்ணிக் குடுத்தேன்இ …. லுள்ளாரழிவு படாமல் 17. …ண்ண..ட்ட……ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய் 18. நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும் 19. மாக . . டையார் பி… கெங்கைக் கரையிலாயிரங் 20. குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா- 21. ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு … 22. மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின்[சொல்படி] … … 23. த்தியஞ் செய்வார் செய்வித்தார் ||¬¬— மும்முடிச் சோழ மண்டலம் , குலோத்துங்கசோழக் காலிங்கராயன் , கங்கராஜ காலிங்க விஜயபாகு (கலிங்க மாகன்) வீராபிஷேகம் , திருக்கோணமாமலையுடைய நாயனார், திருக்காமக்கோட்ட நாச்சியார் , மாநாமத்துநாடு போன்ற விடயங்களை உள்ளடக்கிய இக்கல்வெட்டு திருகோணமலை வரலாற்றின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய கல்வெட்டாகும். […] […] கல்வெட்டு 29 திருகோணமலை பெரிய முற்றவெளி கல்வெட்டு 2014 ஆம் ஆண்டு திருகோணமலை பெரிய முற்றவெளி மைதானத்தில் கட்டுமானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு நீண்ட காலம் மறைவாக வைக்கப்பட்டிருந்து. முழுமையாக வாசிக்கப்படாத இக்கல்வெட்டு குயவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதை விரிவாக சொல்கிறது. திருக்கோணேச்சரத்தில் ஆலயக் கடமைகளைச் செய்வதற்காக குளக்கோட்டு மன்னனால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் தொழும்பாளர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சந்ததி சந்ததியாக அவ்வாலயக் கடமைகளைச் செய்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு வயல் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் மண்ணுடையான் தொழும்பும் (குயவன்தொழும்பு) ஒன்றாகும். மண்ணுடையான் தொழும்பினை தற்பொழுதும் செய்து வருகின்ற தொழும்பாளர்கள் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் தொண்டு செய்து வருகிறார்கள். ஆலய உற்சவ காலங்களில் தேவைப்படும் மட்பாண்டங்களை ஆலயத்திற்கு வழங்க வேண்டியது இவர்களுக்குரிய பணியாகும். இதற்காக இவர்களுக்கு வயல் நிலங்கள் மானியங்களாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். […] கல்வெட்டு 30 TANJAVUR BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தின் கணக்கன் கொட்டியாரம், மாப்பிசும்பு கொட்டியாரம் ஆகிய பகுதிகளின் கிராமங்களில் இருந்து தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நெல்லும், இலுப்பைப் பாலும் கொண்டு செல்லப்பட்டதை இக்கல்வெட்டு சொல்கிறது. தஞ்சை இராஜராஜேஸ்வரத்தில் இக்கல்வெட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINE No. 92. ON THE SOUTH WALL, THIRD TIER.[15] To territorial divisions of Ceylon are mentioned, viz., Mappisumbu-kottiyaram and Kanakkan-kottiyaram. The former was called Rajaraja-valanadu and the latter Vikrama-Chola-valanadu, while Ceylon itself was known as Mummadi-Chola-mandalam. The fiscal terms pavumanaittum payappagadi and taranduvachchal I am unable to explain. But the fact that five villages in Ceylong were required to contribute to the expenses of the Tanjore temple shows that the island was a province of the Chola empire during the reign of Rajaraja I. TRANSLATION. Hail ! Prosperity ! (The village of) Perayur in Perayur-nadu, (a subdivision) of Oyma-nadu, (a district) of Tondai-nadu alias Jayangonda-Sora-mandalam, had (its) previous owners replaced and ryots removed. The revenue paid by this village as tax, including karanmai and miygatchi and exce or deficiency (in measurement) is . . . . . . . . . . . . .. . . . . . . six kalam . . . . . . . . . . . . . . . three nari of paddy, measured by the marakkalcalled (after) Adavallan, which is equal to a rajakesari. The gold (due from the same village) is one hundred and nine karanju, nine manjadi. . . . . . . . . . . . . . . . . . . . 2. . . . . . . . . . . . . . . . . . . . had (its) previous owners replaced and ryots removed. The revenue paid by this village as tax, including karanmai and miygatchi and exce or deficiency (in measurement), is . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. of paddy measured by the marakkal called (after) Adavallan, which is equal to a rajakesari. The gold (due from the same village) is two hundred and two karanju, [thirteen] manjadi, one-tenth and three-fortieths. 3. (The village of) Andak[kudi] in Perumbur-nadu, (a district) of Pandinadu alias Rajaraja-mandalam, had (its) previous owners replaced. The revenue paid by this village as tax,— including irai-kadan [ura] vukol-[nilan]-kasu, katchi-erudukasu and urkkaranju-kasu on the land of this village, (viz.,) sixteen and a half (veli), four ma, three kani and kir-arai,[21]— together with karanmai and miygatchi and exce or deficiency (in measurement) and excluding the land (mudal[22]) (set off against?) . . . . . . . . . . . . and paravirai which (constitute the) portion (vagai) of the cultivators (vellan),— is (one) hundred and twenty-three kalam, seven kuruni and seven nari of paddy, measured by the marakkal called (after) Adavallan, which is equal to a rajakesari. (The money due from the same village) is two hundred and eighty-four kasu and a half, two-twentieths and one-eightieth and one hundred and sixtieth. 4. (The village of) Alur in Padi-nadu, (a district) of Ganga-padi, had (its) previous owners replaced. The [gold] paid by this village as tax including karanmai and miygatchi and exce of deficiency (in measurement) is five hundred karanju. 5. (The village of) I . . . . . . . . . . . mur in . . . . . . . . . . . . . . . nadu, (a district) of Ganga-padi, had (its) previous owners [replaced]. The gold paid as tax including karanmai and miygatchi and exce or deficiency (in measurement) is [five hundred] karanju. 6. The revenue paid as tax by (the village of) Kusavur, a devadana and brahmadeya in Parivai-nadu, (a subdivision) of Nula[mba-padi alias Nigarili-Sora]padi, is [nin] thousand . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . of paddy measured by the marakkal called (after) Adavallan, which is equal to a rajakesari. 7. The revenue paid as tax by (the village of) Kudalur, a devadana and brahmadeya in Parivai-nadu, (a subdivision) of [Nulamba]-padi alias Nigarili-Sora-padi, is twelve thousand eight hundred and forty-two kalam . . . . . . . . . . . . . . . . . . . . . of paddy measured by the marakkal called (after) Adavallan, which is equal to a rajakesari. The gold (due from the same village). . . . . . . . . . . . . . . . . . . . 8. . . . . . . . . . . . . . . . . . . . . . including . . . . . . . . . . . . . . and [mi]ygatchi and exce or deficiency (in measurement). 9. . . . . . . . . . . . . . . . . . . . had (its) previous owners replaced. It was granted with karanmai and miygatchi and exce or deficiency (in meaurement). 10. (The village of) Pudukkodu in Vellappa-nadu, (a subdivision) of Malai-nadu, had (its) previous owners . . . . . . . . . . . . . . . . . . . . including . . . . . . . . . . . . . . . . . . . 11. . . . . . . . . . . . . . [of Vellappa-nadu in Malai]-nadu . . . . . . . . . . . . . . It was granted with . . . . . . . . . . . . . . . [mi]ygatchi and exce or [deficiency] (in measurement). 12. . . . . . . . . . . . . . . . . . . . Mappisumbu-kottiyaram alias Rajaraja-valanadu, (a district) of [Iram alias Mumma[di-Sora-mandalam. . . . . . . . . . . . . . . . . . The revenue paid as tax including . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . payappagadi taranduvachchal is three thousand one hundred and sixty-four kalam, two tuni and two nari of paddy, measured by the marakkal called (after) Adavallan, which is equal to a rajakesari ; and (the money) twelve and a half kasu ; (also) two kalam . . . . . . . . . . . . of iluppai-pal. 13. . . . . . . . . . . . . . . . . . . . in Mappisumbu-kottiyaram alias Rajarajavalanadu, (a district) of Iram alias Mummadi-Sora-mandalam . . . . . . . . . . . . . . . . . . . land (measuring) . . . . . . . . .. . . . and a quarter. The revenue paid as tax including pavumanaittum payappagadi tarandavachchal is [one hundred] and seventeen kalam, two tum, three kuruni, and two nari of paddy measured by the marakkal called (after) Adavallan, which is equal to a rajakesari ; and (the money) twenty-two kasu ; and iluppai-pal, three kalam, (one) kuruni and four nari. 14. The land in . . . . . . . . . . . nattu . vitti. In Mappisumbu-Kottiyaram alias Rajaraja-valanadu, (a district) of Iram alias Mummadi-Sora-mandalam (measuring) (one) hundred and eighty-three and three ma . . . . . . . . . . . . . . . . . . . . . . . . pavumanaittum . . . . . . . . . . . . . . . . . . . . . . . . by the mara[kkal] called (after) Adavallan which is equal to a rajakesari . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . six ; and iluppai-pal, four kalam and six nari. 15. The land in Masar, (a village) of Kanakkana-kottiyaram alias Vikkirama-Sora-valanadu, (a district) of Iram alias Mummadi-Sora-mandalam, (measuring) three hundred and fifty-three and two ma and a half . . . . . . . . . . . . . . . . . . . . . . . . including pavumanaittum payappagadi taranduvachchal . . . . . . . . . . . . . . . . . four hundred and fifty-eight and three-fourths. 16. The land I. n a., (a village) of [Kanakkan-kottiyaram] alias Vikkirama-Sora-valanadu – (a district) of Iram [alias Mummadi-Sora-mandalam] (measuring) . . . . . . . . . . . . . . one ma and a half . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . pavumanaittum payappagadi taranduvachchal . . . . . . . . . . . . . […] […] தமிழி கல்வெட்டுக்கள் ஈழத்துப் தமிழி கல்வெட்டுக்களில் வேள் (வேள) , ஆய் (அய) , உதி , சிவ , அபய, கமனி ஆகிய தமிழச் சிற்றரசர்களைக் குறிக்கும் பெயர்கள் காணப்படுகின்றன. வேள், ஆய் என்ற தமிழ் சிற்றரசர்களைக் குறிக்கும் பல கல்வெட்டுக்கள் அனுராதபுரம், களனி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, பூநகரி, பெரியபுளியங்குளம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு உரியவையாகும். இவற்றுடன் பல தமிழி சாசனங்களில் காணப்படும் பெருமக, பருமக என்னும் வடிவங்கள் தலைவன், தலைமகன் ,முதல்வன் எனப்பொருள்பட அமைந்தவை என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் கிடைத்த சில தமிழில் கல்வெட்டுகள். சேருவில, சோம ஆகிய இடங்களில் சிவ , அபய என்ற கல்வெட்டுகளும், குச்சவெளி நாச்சியார் மலைப்பகுதியில் உதி என்கின்ற கல்வெட்டும், இன்றைய வெல்கம் விகாரைப் பிரதேசத்தில் வேள் என்கின்ற கல்வெட்டும் கிடைக்கப்பெற்றது. இவை அப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர்களுடைய பெயர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்கல்வெட்டுக்கள் அனைத்தும் 2000 வருடங்களுக்கு முற்பட்டவை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. […] கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account