[]   தவழும் பருவம்         ஆசிரியர்                  : என்.சி.மோகன்தாஸ்   மூங்கள் பெற்றது      : GNUஅன்வர், gnuanwar@gmail.com   அட்டைப்படம் : manoj kumar, socrates1857@gmail.com   மின்னூலாக்கம்        : பிரசன்னா, udpmprasanna@gmail.com   மின்னூல் வெளியீடு : http://www.freetamilebooks.com   உரிமை                      :Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.   மூலம் : http://www.lakshmansruthi.com/cineprofiles/Thzluwum%20Paruvam/Thazluwumparuvam1.asp       பொருளடக்கம் வாசகர் நோக்கில்... 4  என்னுரை : 5  1. 6  2. 9  3. 12  4. 16  5. 20  6. 24  7. 28  8. 32  9. 36  10. 40  11. 44  12. 48  13. 52  14. 56  15. 60  16. 64  17. 68  18. 72  19. 76  எங்களைப் பற்றி 79  உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 84    வாசகர் நோக்கில்...   என்.சி. மேகன்தாஸ் வழங்கிய ‘தவழும் பருவம்’ நாவல் மிக அருமை. பெண்ணுக்கு பெண் விட்டுக்கொடுக்கும் சாம்பவியைப் போல் 100-க்கு ஒரு பெண் இருந்தால் அதுவே உலக அதிசயம். –எம்.சுதா, வடிவீஸ்வரம்.   நோயுற்ற கணவனை தாசியின் வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்றாளாம் அக்காலத்து நளாயினி. அவளைப் போலத்தான் தன்னால் சுகப்பட முடியாத கணவனின் வாழ்வுக்காக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறாள் சாம்பவி யாருடைய தியாகம் பெரிது? –என்.பாபு, எழமூர்.   ‘தவழும் பருவம்’ கதை என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. –கே.சி.தேசிங்கு, டேராடூன் (உ.பி.)  கதையில் வரும் சாம்பவியை நினைத்து நாங்கள் அழுதே விட்டோம். -ஜே.பஷீர், நஜீமாபேகம், கோபாலபட்டினம்.   சினிமாவுக்கு வேண்டுமானால். இந்த முடிவு பொருந்தும். வாழ்க்கைக்கு உதாவாது. -மு.மகாலிங்கம், வேடசத்தூர்.  கண்கள் மயங்கிய போது.....   என்.சி. மோகன்தாஸ் எழுதிய ‘கண்கள் மயங்கிய போது’ தரமான நல்ல குடும்பக் கதை. –கே.புஷ்பராஜ், கனியக்காவிளை.  பெண்ணுக்கு கற்புதான் முக்கியம் என்பதை நாசூக்காக கூறி ரதிலா என்ற பாத்திரத்தின் வழியாக அதை வலியுறுத்தி உள்ளார் மோகன்தாஸ். –எஸ்.லதா, சொர்ணகுப்பம். கே.ஜி.எப்.  ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் படித்து பாதுகாக்க வேண்டிய நாவல். –ஏ.கே.ஜெ.ஜெய் புன்னிசா, கூத்தா நல்லூர்.   ரதிலா பட்ட கஷ்டம் மனதை, இன்னும் நெருடுகிறது. -எம்.பிரேமலதா, மதுக்கூர் படப்பைகாடு.  பெண்கள் அடங்கி கிடக்கவும் கூடாது; அடங்காப் பிடாரியாகவும் இருக்கக் கூடாது என்பதை ரதிலா கேரக்டர் மூலம் உயர்த்தியிருக்கிறார். –ஜி.எம்.ஞானசுந்தரி பி.ஏ.புதுப்பள்ளி.   ரதிலாவின் கேரக்டர் கல்லூரி மாணவிகளுக்கு ஒரு படிப்பினை. –சி.லதாசந்திரன், மேலபுதுப்பள்ளி.       என்னுரை :    இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற தவழும் பருவம்  நாவல் தேவியின் கண்மணி இதழில் வெளியாகி எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.  மர்மக் கதை, காதல், அரசியல், மாந்திரீகம் என பலதரப்பட்ட கதைகள் எழுதினாலும் கூட குடும்ப நாவல்களில் கிடைக்கும் திருப்தியே தனி!  அதுவும் தேவியின் கண்மணி இதழுக்கென்று தனி பாணியும், கொள்கையும் வைத்திருக்கிறார்கள் விரசம் கூடாது; கதையில் நல்லதொரு மேஸேஜ் இருக்க வேண்டும். அதுவும் பெண் இனத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் இருப்பதோடு விறுவிறுப்பும் வேண்டும். இந்த பாணியில் எழுதுபவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் தனிச்சிறப்பு.  இந்த  நாவல் கண்மணியின் ஆசிரியர் குழுவுடன் பலமுறை கலந்து பேசி விவாதித்து உருவாக்கியது. ஆகையால் இதன் வெற்றியில் அவர்களுக்கும் பங்குண்டு.  அவர்களுக்கும் புத்தகமாய் வெளியிடும் வள்ளி புத்தக நிலையத்தாருக்கும் எனது நன்றி.  அன்புடன் என்.சி.மோகன்தாஸ்   14-4-93       1. காலை ஒன்பது மணிக்கெல்லாம் நாகர்கோவிலின் கடைவீதி கலகலப்பிற்கு வந்திருந்தது. தமிழுமில்லாமல் மலையாளமும் இல்லாமல் தமிழ்யாளம் பேசிக்கொண்டு ஜனங்கள் நேசமணிக்கும், டவுன் பஸ்சிற்கும் காத்திருந்தனர். ரோடோரம் தென்னைகள் குளிர் காற்றையும் நிழவையும் வீசின. டீ கடையில் கேரள பாணியில் நேந்திர பழதார்களும், சிப்ஸ்களும் தொங்கின. வெள்ளை அப்பமும் குழாய் புட்டுகளும் ருசிக்கப்பட்டன.   மீனாட்சிபுரத்தில் இருந்தது விஜயகுமாரின் வீடு. அவன் முப்பத்தேழு வயதில் சற்று தொந்தியும், சற்று வழுக்கையுமாக வீட்டிற்குள் உலா வந்து கொண்டிருந்தான்.   கிச்சனில் சாப்பாடு கிளறி டிபன் பாக்சில் திணித்தான். பாலை காய்ச்சி பாட்டிலில் ஊற்றினான். பிளாஸ்டிக் கூடையில் குழந்தையின் ஜட்டி, பிஸ்கட், மாற்றுடை, டவல், கிலு கிலுப்பை போன்றவற்றை எடுத்து வைத்தான். பிளாஸ்க்கையும் பால் பாட்டிலையும் இடைவெளியில் திணித்தான்.   அதற்குள் குழந்தை விஜி தத்தி தத்தி நடந்து விழுந்தது. அழுதது.   “அச்சச்சோ... விழுந்திட்டியா? அழாதே...அழாதே!” என்று கொஞ்சினான்.   “ஏங்க!” சாம்பவி படுக்கையில் கிடந்தபடி அழைக்க, “இதோ நான் வந்துட்டேன்” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவளிடம் சென்று “என்ன?” என்றான்.   “பசிக்கிறதா. டிபன் ரெடி” “பசியில்லை, குழந்தையை இங்கே விடுங்களேன். நான் பார்த்துக்கறேன்”  “நீயா? வேண்டாம் வேண்டாம்.  நீ சும்மா படுத்திரு” என்று விட்டு கிச்சனிற்கு வந்தான். “அழாதம்மா... அழாதே கண்ணு. நான் போய் அம்மாவுக்கு புவ்வா கொடுத்திட்டு வரேன்”   தட்டில் சாம்பார் சாதம் கொண்டு வந்து ஸ்டூல் போட்டு அமர்ந்து கொண்டான். சுவற்றில் தலையணையை சரித்து கொண்டு சாம்பவியை நிமிர்த்தி அமர வைத்தான். கலைந்திருந்த அவளது ஈரக் கூந்தலை ஒழுங்குபடுத்தினான்.   ஸ்பூனால் சாப்பாடு எடுத்து ஊட்டினான். சாப்பிட்டு முடிந்ததும் அவளுடைய கண்கள் பனிந்தன. அவளுக்கு வாய் கழுவி படுக்க வைத்து விட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பும்போது சாம்பவி, ‘உங்ககிட்டே நான் பேசணும்’ என்றாள் குழறலுடன்.   அவன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் “ஆயா வந்திருவா, வெறும் கதவை மூடிட்டு போகிறேன்” என்று குனிந்து அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு “வாம்மா விஜி! அம்மாவுக்கு டாட்டா சொல்லு” “நான் உங்களிடம் பேசணும்னு சொன்னேன்” அவன் கேட்டிடம் வந்தபோது ஆயா அவனுக்கு வழி விட்டு நின்றாள்.   “சாம்பவியை பத்திரமா பார்த்துக்கோ ஆயா. நீ பாட்டுக்கு அரட்டைக்குன்னு அக்கம் பக்கத்து வீடுகளுக்கு போயிராதே” “ஏய்!” என்று அவள் கேரள பாணியின் தோள்களை குலுக்கினாள். நான் அப்படி எல்லாம் போகமாட்டேன் என்று அர்த்தம்.  விஜயகுமார் சைடில் கேரியர் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் குழந்தையை அமர வைத்து “எழக்கூடாது ஆமா...” என்று செல்லமாய் கடிந்து கொண்டு வண்டியை கிளப்பினான்.  வடசேரியில் இருந்து குழந்தைகள் காப்பகத்தில் விஜியை ஒப்படைத்து விட்டு வயர் கூடையை கொடுத்து விட்டு தயங்கி நிற்க, மூதாட்டி ஒருத்தி “குழந்தை இனி எங்க பொறுப்பு. யோசிக்காம ஆபீஸ் கிளம்புங்க” என்று சிரித்தாள்.  அவனுக்கு சங்கடமாய் இருந்தது. இது தினசரி அவஸ்தை. மனைவி இருக்கும்போதே குழந்தையை அவளிடமிருந்து பிரித்து காப்பகத்தில் விட்டு, பிறகு மாலையில் திரும்ப வாங்கிக் கொண்டு போய் சோறு கொடுத்து, தூங்கவைத்து...  குழந்தை மேல் தாய்க்கு அன்பில்லாமல் இல்லை. சீராட்டி பாராட்டி வளர்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் பஞ்சம் இல்லை.  ஆனால் தாயையும் சேயையும் ஒன்று சேர விடாமல் நோய் தடுக்கிறதே என்ன செய்ய? அவள் மட்டும் நன்றாக இருந்தால் குழந்தையை இப்படி அனாதை போல விட்டு விடுவாளா?   அவன் மன பாரத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.  அன்று ராத்திரி.   விஜி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள்.   விஜயகுமார் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அதுவரை இந்தி பேசின டி.வி.யை ஆப் பண்ணினான்.   கதவெல்லாம் தாழ் போடப்பட்டு இருக்கின்றனவா என்று செக் பண்ணினான்.   ஹாலில் சாம்பவி சும்மான்னாலும் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கும் தொட்டிலுக்கும் இடையே கட்டிலை நகர்த்தி   விஜயகுமார் படுக்கையை விரித்துப் போட்டான்.   “சாம்பி தூங்கிட்டாயா?”   “இல்லை” என்றாள் வறட்சியுடன்.   “ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கிறது. தண்ணி வேணுமா?” “வேண்டாம்” என்று ஒரு வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டாள்.  அவள் என்னவோ சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. என்ன சொல்லப் போகிறாள் என்பதையும் யூகிக்க முடிந்தது.   “இப்படி காட்டு” என்று அவளது வலது கை, வலது காலை பிடித்து விட்டான். ஆயுர்வேத களிம்பை தடவினான், குனிந்து அவளது நெற்றியில் முத்தம் பதித்து விட்டு “தூங்கு” என்று லைட்டை நிறுத்தி விடிவிளக்கை ஆன் பண்ணினான்.   அறைக்குள் நீல ஒளி ராஜ்யம் நடத்திற்று. ஃபோன், ஓசை எழுப்பிற்று.   சாம்பவி அவன் பக்கம் கழுத்தை திருப்பி “தூக்கம் வருதா. நான் உங்ககிட்டே பேசணும்னு சொன்னேனே” என்றாள்.   “ஓ! உனக்கில்லாத உரிமையா பேசு...”   “இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பாடு?” என்றாள்.   அந்த வார்த்தைகள் அத்தனை கிளியராய் வரவில்லை. சற்று நசுங்கிப் போய் வெளிப்பட்டன. கொஞ்ச நாட்களாகவே அவளுடைய பேச்சு அப்படித்தான் இருக்கிறது. அப்படித்தான் பேச முடிகிறது அவளுக்கு.   “நீங்க படற கஷ்டத்தை என்னால பார்த்துட்டிருக்க முடியவில்லை. தகிக்கிறது. வெளியே ஓடியாடி வியாபாரம் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் இங்கும் உங்களுக்கு நிம்மதியில்லை. ஓய்வெடுக்க முடியவில்லை. சதா வேலை... வேலை... இந்த பாரத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு சுமப்பதாய் உத்தேசம்?”  “சாம்பி நேரமாகிறது தூங்கேன்”  “இல்லை. இதற்கு ஒரு முடிவு தெரியாமல் என்னால் தூங்க முடியாது. இன்று ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். உங்களுடைய சிரமம் என்னை போட்டு வதைக்கிறது”  “எனக்கென்ன சிரமம்... நான்...?”  “வேண்டாம். வியாக்யானம் ஒண்ணும் தேவையில்லை. என் மேல் நீங்கள் நிஜமாலுமே அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால் என் பேச்சை கேட்டாகவேண்டும். உடனே நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொண்டாக வேண்டும்.”     2.   “உடனேயேவா... காலைல போதாதா?” என்று அவன் சிரிக்க, “தமாசெல்லாம் போதும். நான் சீரியசாகத்தான் சொல்கிறேன். இத்தனை பிரச்சனைகளை சுமந்து கொண்டு உங்களால் எப்படி சிரிக்க முடிகிறது? உங்களோட வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கிறது.”  “இன்னொரு கல்யாணம் பற்றி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனக்கு அப்படி ஒரு சிந்தனையே வரலை சாம்பவி.”  “வரணும். கல்யாணம் பண்ணிட்டு நீங்க சந்தோஷமா இருக்கணும்.”   “எப்படி சாம்பி. எப்படி முடியும்? நீ இந்த நிலைமையில இருக்கும் போது...   “நான் இருந்தால் அது என்னோட தலைவிதி. அனுபவிச்சுட்டுப் போறேன். அதுக்காக நீங்க ஏன்...? நீங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்? நீங்க ஏன் வறுத்திக்கணும்?” ‘உனக்கு ஒண்ணுன்னா அது எனக்கும் இல்லையா? இன்பம்னாலும் சரி. துன்பம்னாலும் சரி. ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிறதுதானே முறை?’ “இன்பத்துல சரி. துன்பத்துல எப்படி பங்கு போட்டுக் கொள்ள முடியும்? என் வேதனை எனக்கு. நீங்க சந்தோஷத்தை அனுபவிக்காம இருந்தால் என் வலி போயிருமா, இல்லை எனக்குதான் குணமாயிருமா?” “இருந்தாலும்...நான் இப்போ இத்தனை சவுகர்யமாயிருக்கேன்னா அதுக்கு காரணம் நீ. உன் அன்பு, உன்னுடைய தூண்டுதல். உன்னுடைய ஒத்தாசை. மொத்தத்துல இந்த வளர்ச்சியே உன்னாலதானே!”  அவள் சற்று நேர மவுனத்திற்கு பின், “உங்களோட தளர்ச்சிக்கும் நான் காரணமாயிரக் கூடாதுன்னுதான் சொல்கிறேன். ப்ளீஸ்... இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு நீங்க முக்கியம். நம் குழந்தையும்,” அப்போது தொட்டிலிலிருந்து ஜலம் ஒழுகிற்று. குழந்தை விசும்பலுடன் புரள, விஜயகுமார் எழுந்து அதை தூக்கி, அடியிலிருந்த துணியை மாற்றி படுக்க வைத்தான். தரையில் சிதறியிருந்த ஈரத்தை துணியால் துடைத்து பாத்ருமிற்கு போய் கை கழுவி வந்தான்.   “இந்த வேலையையெல்லாம் இன்னும் எத்தனை நாளுக்குதான் நீங்களே செய்து கொண்டிருக்க முடியும்?” “அதுக்காக...? கல்யாணம் ஒண்ணுதான் வழியா. வேலைக்காரி வைத்தால் போறாதா?”   “போறாது. நான் சொல்வதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வீட்டு வேலை மட்டும் இங்கு பிரச்சினையில்லை. வெறும் வேலை என்றால் வேலைக்காரி போதும். இங்கே உங்களுக்கு தேவை வேலைக்காரி இல்லை. நல்லதொரு துணை. உங்களுடைய செயல்களுக்கும் பிசினஸிற்கும் ஒத்தாசை செய்கிற, உதவுகிற, ஆலோசனை சொல்கிற ஒரு பார்ட்னர்!” “அதற்கு தான் நீ இருக்கிறாயே; அப்புறம் எனக்கென்ன கவலை...”   “நான் இருந்து என்ன பிரயோசனம்? இன்னும் இருப்பதுதான் என் கவலையே. கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லி முடித்து விடுகிறேன்” என்று குறுக்கே பேச வந்தவனை தடுத்தாள். ‘பிசினஸில் உங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அதையெல்லாம் தலைமுழுகிவிட்டு வீட்டுக்கு வரும்போது நானும் என்னுடைய நோயும் உங்களுக்கு பாதிப்பு தரக்கூடாது. வீட்டுக்கு வந்தால் உங்களுக்கு நிம்மதி வேண்டும். ஓய்வு வேண்டும்; சந்தோஷம் தர வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறேன். என்ன சொல்கிறீர்கள்...?”   அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, பேசாமல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.  அவள் இன்று நேற்று ஒன்றும் இதை ஆரம்பிக்கவில்லை. ஒரு மாதமாகவே அவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் இதுவரை பிடியே கொடுக்கவில்லை. அவளும் அவனை விடுவதாயில்லை.   சாம்பவிக்கு தூக்கம் வர மறுத்தது. வெளியே நாய் ஒன்று குரைத்தது. சைக்கிள் வண்டியில் மணியாட்டிக் கொண்டு பலகாரம் நகர்த்திப் போனார்கள். ஃபேன் காற்றையும் மீறிக் கொண்டு கொசுக்கள் காதிடம் வந்து நர்த்தனம் புரிந்தன.  அவளுடைய சிந்தையெல்லாம் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.  நான்கு வருடங்களுக்கு முன்பு.  அவன் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது தென் மாவட்டங்களுக்கு டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அவள் ஈரோடில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா அங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டூரில் அவளுடன் தோழிகள் பட்டாளமே வந்திருந்தது. அவர்கள் அரட்டையும் சந்தோஷமுமாய் திருச்செந்தூருக்கு போய் விட்டு கன்னியாகுமரி வந்தனர்.   அங்கே கியூவில் நின்று படகு ஏறி, ஓடி, அடி வயிறு கலங்கி, விவேகானந்தர் பாறை பார்த்து விட்டு திரும்புவதற்குள் நேரமாகி விட்டிருந்தது. பஸ் கிளம்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினர்.  அவர்களுக்கோ தாகமாயிருந்தது. ரோடோரத்தில் விஜயகுமார் வண்டியில் இளநீர்களை குவித்து வைத்துக் கொண்டு நிற்க அங்கே ஒடினார்கள். அவன் பேண்ட்டும் பனியனும் போட்டுக் கொண்டு அத்தொழிலுக்கு லாயக்கில்லாதவன் போலிருந்தான். அவர்களை மலையாளி என நினைத்து, “கரிக்கு வேணுவோ...?” என்றான்.   அதை கீதா திரித்து, “ஏய் சாம்பவி... உன்னை கருப்பு என்கிறான்டி!” என்று இடித்தாள். “மிஸ்டர். நான் கருப்பாகவா இருக்கேன்...” என்று சாம்பவி வேண்டுமென்றே அவன்மேல் ஏவுகணைகளை ஏவ, அவன் ஒரு நொடி ஆடிப் போனான்.  “இல்லை...இல்லை! நான் இளநீ வேணுமான்னு தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க! உங்களோட அழகையும், வனப்பையும் பார்த்ததும் நீங்கல்லாம் மலையாளின்னு நினைச்சுட்டேன்?” என்று அவன் வழிய.  “ஐஸ்! ஐஸ்!” என்று ஒருத்தி கத்தினாள்.  “ஐஸ் வைக்கலீங்க. நிஜமாதான் சொல்றேன்!” அதற்குள் அந்த பக்கம் ஐஸ் வித்துக் கொண்டிருந்தவன், “கூப்பிட்டீங்களாம்மா” என்று வர, அவர்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை.  விஜயகுமார் எங்கே தன் வியாபாரம் போய் விடுமோ என்று “இல்லேப்பா போ!” என்று அவனை விரட்டி விட்டு கொடுவாளை அவசரமாய் எடுக்க, அது தவறி விழுந்தது. அதை எடுத்து “வெட்டட்டா...” என்று கேட்டு சரக்சரக் கென வெட்டி துளை போட்டு, ஸ்ட்ரா போட்டு கொடுத்தான். ஐந்து நிமிடத்திற்குள் இருபத்தைந்து பேர்களுக்கு அசராமல் சப்ளை பண்ணினான். அவனுடைய சுறுசுறுப்பும் அப்பாவி பேச்சும் சாம்பவியை கவர்ந்தன.   அவர்கள் குடித்து முடிப்பதற்குள் பஸ்சிலிருந்து மேடம் அவசரப்படுத்தினார். டிரைவர் ஹாரனடிக்க, அவர்கள் மட்டையை தூக்கி போட்டுவிட்டு ஒட ஆரம்பித்தனர்.   “ரூவா...ரூபா!” “ஏன்ய்யா பறக்கிறே...பஸ்கிட்டே வா. அங்கே பேகில் பர்ஸ் இருக்கு எடுத்து தரேன்” என்று சாம்பவி அவனை அழைத்துக் கொண்டு ஓடினாள். அவள் ஏறவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது.     3.   “ஐயோ...என் பணம்! பணம்!” என்று அவன் பின்னாவலேயே ஓடினான். “ஹோல்டன்...ஹோல்டன்! ஸ்டாப்...ஸ்டாப்!” அவன் கத்திக் கொண்டு ஓடி வருவதை பார்த்து சிட்டுக்கள் சிரித்தன. கையசைத்து உற்சாகம் பெற்றன. சாம்பவி ஜன்னல் வழியாய் எட்டி நூறு ரூபாய் நோட்டை அவன் மேல் வீசினாள்.  அவன் அதை பிடிக்க வேண்டி தாவினான். ஆனால் அது பஸ் போன ஸ்பீடில் பின்னாலேயே அடித்துக் கொண்டு போயிற்று. அவனும் தம் பிடித்து ஓடி தாவ, அங்கேயிருந்த கல்லில் கால் இடறி பொலத்தொன்று குப்புற விழுந்தான்.   விழுந்த வேகத்தில் அவனுடைய கிளி மூக்கு உடைந்து ரத்த தானம் செய்தது. பனியனையும் மீறி நெஞ்சில் சிராய்த்திருந்தது. முழங்கை, முழங்காலெல்லாம் தோல் பிறாண்டி எரிந்தது. அத்தனை வலிக்கிடையிலும் அவன் பணம் போய் விட்டதே என்று கவலைப்பட்டான்.   அவன் எழ முடியாமல் படுத்திருக்க, பெண்கள் கூவி பஸ்சை நிறுத்தினர். சாம்பவி முதலில் இறங்கி அவனிடம் வந்தாள். ரத்தத்தையும் அவனுடைய முனகலையும் பார்க்க அவளுக்கு பரிதாபமாயிருந்தது.   மெல்ல அவனை தூக்கி, “அடி பட்டிருச்சா?” என்று கேட்டு, “ஸாரி. வெரி ஸாரி” “பணம்! பணம் நூறு ரூபா!” “அதான் கொடுத்தேனே!” “பறந்து போச்சு” என்று அவன் கண் கலங்கினான். அதற்குள் மேடம் கடுகடுப்புடன் வந்து, “சாம்பி! யு ஆர் க்ரூயல்! பணத்தை அங்கேயே கொடுக்கறதுக்கென்னவாம்?” என்று கத்தினார்.   “ஸாரி மேடம்... பணம், பஸ்ஸிலிருந்தது.” “ஷட் அப்! உன்னால் டென்மினிட்ஸ் லேட்! பணம் எங்காவது கிடத்திறதா பாருங்கள்!” சிட்டுக்கள் மாடர்ன் டிரெசுடனும், சேலையுடனும் அங்குமிங்கும் தேடின. சலித்துக் கொண்டன. “பஸ்சை நிறுத்தியிருக்கவே கூடாது. எல்லாம் உன்னால வந்தது சாம்பவி!” அந்த நூறு ரூபாய் நோட்டு பறந்து விட்டிருந்தது. “தென் வாட் டு டூ? பணத்தை யார் அழறது...?” மேடம் கொந்தளித்தார்.   கூட வந்தவர்கள் நமக்கேன் வம்பு என்று நழுவி சாம்பவி ‘ஐ ஷல் பே!’ என்று அவனது கையில் திணித்தாள். அதை வாங்கிக் கொள்ளும்போது அவனுடைய கண்கள் அவளுடைய கண்களை நன்றியோடு சந்தித்து தாழ்ந்தன.   அந்த நொடிகள் அவளுக்குள் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தின. அவனை நோகடித்து விட்டோமே என்று வருந்தினாள்.  “கம்...கம்...லெட்ஸ் கோ!” மேடம் அவளை அழைத்துக் கொண்டு நடந்தாள். பஸ் புறப்பட்டு, புழுதியில் மறைகிற வரை சாம்பவி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  அடுத்த சில நாட்களுக்கு அவளால் அவனை மறக்க முடியவில்லை. அவன் பிழைப்பிற்காக இளநீர் விற்கிறான். அவனும் மனிதன்தான். பணத்தை அங்கேயே கொடுத்திருந்தால் அந்த மாதிரி அவன் ஓடி வந்திருக்க வேண்டியிருந்திருக்காது. அத்தனை பேர் மத்தியில் விழவும் வேண்டியிருக்காது.  பெண்கள் அதுவும் வயதில் குறைந்த பெண்கள் கேலி செய்தபோது அவனது மனம் எத்தனை காயப்பட்டிருக்கும்...? அவன் எந்த ஊரோ...என்ன பெயரோ...?  அதன் பிறகு அவள் அந்த சம்பவத்தையே மறந்து போனாள். அவனை திரும்ப பார்ப்போம் என்று கூட அவள் நினைக்கவில்லை.   ஆறு மாதங்களுக்குப் பிறகு மதுரைக்கு அவள் இண்டர்வியூ ஒன்றிற்குப் போன போது அவனும் அங்கே இருக்க. அவளுக்கு ஆச்சர்யம்! இவன் எப்படி இங்கே...?  இளநீர் விற்றவனுக்கு இங்கே என்ன வேலை...? மனதிற்குள் அந்த சந்தேகம் எழுந்தாலும்கூட, அவனை திரும்ப பார்க்க முடிந்ததற்கு சந்தோஷப்பட்டாள். அப்போது அவன் அன்று பார்த்த முகமாய் இருக்கவில்லை.  மிடுக்குடன் சட்டையை இன் பண்ணி ஜீன்ஸ் அணிந்திருந்தான். டிப்டாப்பாக தெரிந்தான். அவனுடைய முகத்தில் ஒரு களை இருந்தது. இன்டர்வியூ முடிகிறவரை அவன் அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவளுக்கு படபடப்பாக இருந்தது.  அவளுக்கு இண்டர்வியூ முதலில் முடிந்துவிட, அவனும் வரட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததும், “என்னை ஞாபகமிருக்கிறதா?” என்றாள் புன்னகையுடன் “மறக்க முடியுமா சாம்பி?” “அட! என் பெயர் உங்களுக்கு எப்படி...பியூன் அழைத்த போது கவனித்தீர்களா...?  “இல்லை. அன்று உங்களுடைய தோழிகளும் மேடமும் அழைத்த போது...” “ஸாரி...வெரிஸாரி. அன்றைக்கு உங்களை ரொம்பவும் ரத்தம் சிந்த வைத்துவிட்டேன். நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் நான் ஒன்று கேட்கலாமா... நீங்கள் எப்படி இங்கே...?” “இளநீர் விற்றவன் இங்கே எப்படி என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். நானும் கூட டிகிரி படித்தவன்தான், வீட்டில் வறுமை, அன்று அம்மா அப்பா வெல்லாம் நாகர்கோவில்ல இருந்தார்கள். வேலைக்காக அலைந்து, திரிந்து ஏமாந்து கடைசியில் இளநீரைத் தேர்ந்தெடுத்தேன். நாகர்கோவில் என்றால் வீட்டில் தெரிந்து விடும் என்று கன்னியாகுமரியில் கடை போட்டேன். சைடு-பை-சைடு வேலைக்கும் அப்ளை பண்ணிகிட்டிருக்கேன்.” “உங்களுக்கு சொந்த ஊர்...? சாம்பவி கேட்டுக் கொண்டே நடந்தாள்.   “நாகர்கோவில்ல புதுகுடியிருப்புலதான் தங்கியிருந்தோம். அங்கே தான் எங்க வீடு” ரோடில் இளநீருடன் ஒருவர் அழைக்க. “குடிப்போமா...?” என்றாள். புன்முறுவலுடன் “எனக்கு சலிப்பு” என்று ஒதுங்கினான். “சும்மா வாங்க! எத்தனை பேத்துக்கு வெட்டி கொடுத்திருப்பீங்க. ஒரு நாளைக்கு அடுத்தவங்ககிட்டேயிருந்து வாங்கி தான் குடியுங்களேன்!” என்று அழைத்துப் போனாள்.   “ரெண்டு இளநீர்ப்பா!” சொல்லிவிட்டு சாம்பவி அவனை பார்த்தாள். அந்த இளநீர்க்காரன் தொழிலுக்கு புதிது போலிருக்கிறது. காயை எடுத்து வெட்டத் தெரியாமல் வெட்டினான். விட்டால் கையையே வெட்டிக் கொள்வான் போலிருக்க விஜயகுமாருக்கு பக்பக்கென்று இருந்தது.   “இப்படி கொடுப்பா!” என்று அவனிடமிருந்து வாங்கி நிமிடத்தில் வெட்டி அவளுக்கும் கொடுத்து அவனும் குடித்தான். இளநீர்க்காரன் அவனை வினோதமாய் பார்க்க-“என்னப்பா அப்படி பார்க்கறே... எனக்கும் ஜோலி இது தான்!” பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது “ஆனாலும் நீங்கள் உங்கள் தொழிலை பீற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை?” என்றாள்.  “ஏன் இளநீர் விற்பது அவமானமா?” “அப்படியில்லை. படிக்க முடியாதவர்கள் அந்த தொழிலை பார்க்கட்டும். நீங்கள் நல்ல வேலை தேடலாமே!” “தேடி களைத்துப் போனேன். அரசாங்க வேலைக்கு அப்ளை செய்ய வயது காலாவதியாச்சு. தொழில் ஒன்றுதான் எனது நம்பிக்கை!” “அப்போ வேறு தொழில் பாருங்க! கொஞ்சம் முதலீடு போட்டு...” “அங்கே தானே மேடம் பிரச்சினை! முதலீடு யார் போடுவா... எங்கிருந்து...?” “உங்களுக்கு தேவை முதலீடுதானே? பேங்கில் கேட்டுப் பாருங்களேன்”...  “எல்லாம் கேட்டுப் பார்த்தாச்சு. ரெகமண்டேசன் வேணும்; செக்யூரிட்டி வேணும்,” அதற்குள் அவளுக்கு பஸ் வந்துவிட, “நான் வருகிறேன். இந்த அட்ரஸிற்கு எழுதுங்கள்! என்று அவள் ஓடி ஏறிக் கொண்டாள். அவசரத்தில் அவனுடைய விலாசத்தை வாங்காமல் போனதை பின்னால்தான் அவள் உணர்ந்தாள். அவளுக்கு வெறுப்பாய் வந்தது. அவன் தொடர்பு கொள்வான் என்று பார்த்தாள். அவன் எழுதவே இல்லை. அவளை சந்தித்து விட்டுப்போன இடைவேளையில் அவனுக்கு விபத்தொன்றின் மூலம் பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்திருந்தது. அந்த பஸ் விபத்து அவனுடைய பெற்றோர்களை கொண்டுபோயிற்று. அவன் அனாதை போலுணர்ந்தான். அந்த துக்கத்தில் இருந்து விடுபட ரொம்பவும் சிரமப்பட்டான். இடையில் இளநீர் பிசினசும் போயிற்று. அதில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.   சாம்பவி அவனுக்கு வேலை கிடைத்ததோ என்னவோ என்று எப்போதாவது நினைப்பாள். அவன் ஏன் கடிதம் எழுதவில்லை...? நாமாவது போய் பார்ப்போமா என்று கூட யோசிப்பாள். அவன் கொடுத்திருந்த அடையாளத்தை வைத்து எப்படியும் அவனை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அங்கே நமக்கென்ன வேலை...? தனியாக போவதற்கு வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். ஒருமுறை மதுரைக்கு தனியாய் இண்டர்வியூ போனதற்கே அம்மா திட்டினாள்.   என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தெய்வமே அவர்களை சேர்த்து வைப்பதுபோல அவளுடைய அப்பாவிற்கு நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பர் ஆயிற்று.      4.   டிரான்ஸ்பருக்காக அம்மா விசனப்பட, அவள் சந்தோஷப்பட்டாள். நாகர்கோவிலுக்கு போனதும் அவனை கண்டுபிடிக்க அவளுக்கு சிரமம் இருக்கவில்லை. வாடிப் போயிருந்த அவனுக்கும், அவளுடைய சந்திப்பு தெம்பளித்தது.   சோகத்திற்கு சுகம் தந்தது. சாம்பவியின் சிரிப்பும், பேச்சும் அவனுக்கு மருந்தளித்தது. உற்சாகத்தை கிளப்பி விட்டது. இனி எதற்காக சம்பாதிக்க வேண்டும். வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டுமே என்றிருந்த மந்த தனத்தை விரட்டிற்று.   அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தனர். “லைப்ரரி போயிட்டு வரேம்மா” என்று சொல்லி விட்டு அவள் அவனுடன் பார்க்குக்குப் போவாள்.   அங்கே அவனுடன் பூச்செடிகளுக்கிடையே அமர்ந்து கவிதை சொல்வாள். தன் கண்களால் அவனுடைய மனதை உழுவாள் அன்பை விதைப்பாள். ஆசையை அறுவடை செய்வாள்.   அவனோ, “என் இதயவானில் உதயமான நட்சத்திரம் நீ! மாக்கோலமிட்ட உன் விரல்களில் இதென்ன நீர்க்கோலம்? விழிமேகம் துளிர்த்து விட்ட பனித் துளிகளா...?” என்று கவிதை சொல்வான். இது உங்கள் கவிதையா என்பாள். இல்லை நண்பர்களிடமிருந்து கடன் வாங்கினது என்று சிரிப்பான். கவிதைகூட கடன் வாங்கணுமா என்று அவள் நகைப்பாள்.  “தென்றலை தாவணியாய்  உடுத்திக் கொண்டவளே!  மின்னலை கண்களில் மையாய் பூசிக் கொண்டவளே;  தேன் சிந்தும் வார்த்தைகளை உதிர்ப்பவளே!” விஜயகுமார் தன் கண்களை மூடிக் கொண்டு சொல்ல “கொஞ்சம் இருங்க இது யாரோடது...?” என்று நிறுத்துவாள்.   “சக்தி சுப்பிரமணின்னு ஒரு கவிஞரோடது. ஏன் உனக்கு பிடிக்கலியா...?” “பிடிக்குது. அதுக்காக இரவல் கவிதையாகவே சொல்லணுமா... உங்களுக்கு முடிந்தால் நீங்களாவே கவிபாடுங்கள். இல்லாவிட்டால் கவிதையே வேணாம்?” இப்படியே அவர்களுடைய அன்பும் நட்பும் வலுப்பெற ஆரம்பித்தது. ஆரல்வாய்மொழி அணைக்கு போனபோது அவன் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டான். “சாம்பவி! வீட்டு வறுமையால எனக்கு வாழ்க்கை மேலேயே ஒரு பிடிப்பு இல்லாம இருந்தது. அவனவன் இந்த வயசுக்கு எப்படியெல்லாம் அனுபவிக்கிறான். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமைன்னு நான் நினைச்சு நினைச்சு ஏங்குவேன். நமக்கு கார் இருக்கக் கூடாதா, பங்களா இருக்கக் கூடாதா? சொகுசா வாழ மாட்டோமன்னு எப்பொதும் பெருமூச்சு விட்டுக்கிட்டிருப்போன்!” அவன் சொல்லி வாய்மூடும் முன்பு சாம்பவி தன் காதை அவனுடைய முகத்திற்கு நேரே திருப்பி, “எங்கே பெருமூச்சை காணோமே?” என்று சிரித்தாள்.   “பெருமூச்சு சிறுமூச்செல்லாம் இப்போ நின்னு போச்சு!” “ஐயையோ...ஏன்? கார், பங்களாவெல்லாம் கிடைச்சிருச்சா...?” “இல்லை, நீ! நீ கிடைத்திருக்கிறாயே!” “அம்மாடி... என்னை பார்த்தால் கார், பங்களா மாதிரியா தெரியுது?” என்று எழுந்தாள். “கார், பங்களா வெல்லாம் என் மூலம் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” “சீச்சீ... என்னை நீ தப்பாக புரிந்துக் கொண்டாயே! யாருக்கு வேணும் உங்க வீட்டு பணம்...? நீ வந்ததும் எனக்கு அந்த ஆசையெல்லாம் விட்டு போச்சுன்னு சொல்லவந்தேன் உன்னை பார்க்கும்போது மனசுல சந்தோஷம் ஊறுது கண்கள்ல இன்பம் பொங்குது. ஆகா... காலம் பூரா இப்படியே உன்னை பார்த்துக்கிட்டிருக்க மாட்டோமாங்கிற ஏக்கம் பிறக்கிறது.” ஆமா...இப்படியே பார்த்துக்கிட்டிருந்தா பொழப்பு என்னாகறது...?” “பொழப்பா... எனக்கு அப்படின்னு எதுவுமே இல்லை. எல்லாமே இனி நீ தான்!” “அம்மாடியோவ்! வர வர ரொம்பவே புலம்பறீங்க! இனியும் இப்படியே ஊர் சுற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. முதல்ல எழுந்திரிங்க!” “ஏன் சாம்பவி...? என்னுடன் சுற்றுவது உனக்கு பிடிக்கவில்லையா...?” “ரொம்ப பிடிக்கிறது; அதுக்காக எப்பவுமே சுத்திகிட்டிருந்தா ஆச்சா? நம்முடைய எதிர்காலத்தை பார்க்க வேண்டாமா?” “எதிர் காலத்தை நினைத்து நிகழ் காலத்தையும் கோட்டை விட வேண்டும் என்கிறாயா...?” யார் உங்களை கோட்டை விடச் சொன்னார்கள் கோட்டை கட்ட வேண்டும். அங்கே நாம் போய் குடியிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோன்” “சரி வா. இப்படி உட்கார்! கண்களை மூடு! உனக்கு எந்த மாதிரி கோட்டை வேண்டும் என்று சொல். உடனே கட்டிவிடுவோம்!” “விஜி கண்ணா! முதல்ல கையை எடுக்கறீங்களா...? நான் கேட்டது கற்பனை கோட்டை இல்லை. நிஜக் கோட்டை!” “அப்படியா... நிஜக்கோட்டை என்ன. நீ கேட்டால் நான் மலைக் கோட்டையையே வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன். ஆனால் வேலை கிடைக்கணுமே” “வேலை தானாவா கிடைக்கும்...நாம தான் தேடணும்” “இனி தேடாதே இடமில்லை” “அப்போ ஏதாச்சும் பிசினஸ் பார்ப்போம்” “பிசினஸ்! ஹா ஹஹா! இங்கே புவ்வாவுக்கே லாட்டரியாம்! இதில் பிசினஸிற்கு ஏது பணம்” “பிசினஸிற்கு பணம் மட்டும் இருந்தால் போதுமா? புத்தியும் வேணும்” “அது எங்கே கிடைக்கும்” “சும்மா தமாஷ் பண்ணிக்கிட்டிருக்காம விஷயத்துக்கு வாங்க. ஐ ஆம் ஸீரியஸ். முதல்ல லாபகரமா ஒரு தொழில் தேடுங்க. அதோட மூலதனம். ஆட்கள், மெஷின்கள், உற்பத்தி பொருள், மார்க்கெட்டிங் மத்ததைப் பத்தியெல்லாம் ஆராய்வோம். ஓரளவுக்கு லாபகரமானதுன்னு தெரிஞ்சாக்கூடப் போதும். வேலையில்லாப் பட்டதாரிங்கிற அடிப்படையில பாங்கிலே லோன் போடலாம். ரெண்டு பேருக்குமே கிடைக்கும்.” “ஆனா தொழில்...?” “இனி அதை தேடுவது தான் நம் தொழில்” என்று சாம்பவி தினம் ஆவலுடன் ஊர் ஊராய் சுற்றினாள். அங்கே புதிதாய் எந்த தொழிலுமே தெரியவில்லை. நாகர்கோவிலை பொருத்தவரை ஹோட்டலும், மளிகை, காய்கறி கடைகள் தான் தெரிந்தன. கைத் தொழிலோ, மிஷின் தொழிலோ எதுவுமே தெரியவில்லை.  அவர்கள் ஒரு சமயம் திருவனந்தபுரம் போய், அங்கே கோவளம் கடற்கரையை சுற்றிவிட்டு திரும்பும்போது அவனுடைய நண்பன் அல் அமீன், “உனக்கு ஒரு பிசினஸ் தானே வேணும், நான் சொல்கிறேன்” என்று யோசனை சொன்னான்.   கேரளா, தமிழ்நாடு பார்டர்கள்ல ரப்பர் மரங்கள் அதிகம். அதில் முதலில் ஒரு ஏக்கர் குத்தகையா பேசி பால் எடுக்கலாம். எடுத்து பதப்படுத்தி ரப்பர் ஷீட்டா மாற்றி பாம்பேக்கும், மெட்ராசுக்கும் அனுப்பினா நிறைய லாபம் கிடைக்கும்” “ரப்பர்ஷீட்டை வச்சு அவங்க என்ன பண்றாங்க” “ரப்பரை அடிப்படையா வச்சு பெரிய பெரிய தொழிற் சாலைகளே இருக்கு. ரப்பர்ஷீட், சின்தடிக் ரப்பர், ஆர்கானிக் ரப்பர்ன்னு கெமிக்கல் கலந்து என்னென்னவோ தயாரிக்கிறாங்க. ஸ்பேர்பார்ட்ஸ் ஆயிரகணக்குல இருக்கு.” “அதை நாமே தயாரிச்சா என்னவாம்” “முதல்ல ரப்பர் தோட்டத்தை பிடி. அப்புறமா தயாரிப்பு பத்தி பேசலாம்.” “இதுக்கே ஒரு லட்சம் பக்கமா மூலதனம் வேண்டியிருக்கும். டப்பு இருக்கா?” “ஒரு லட்சமா?” என்று விஜயகுமார் அதிர்ந்துப் போனான். சாம்பவியிடம் இதுபற்றி பேசினபோது, என் தோழி ஒருத்தியோட ஹஸ்பெண்ட் பேங்குல ஆபீசரா இருக்கார், அவர் மூலமா லோன் கேட்டுப் பார்ப்போம் நாம இரண்டு பேருக்கும் சேர்த்து ஐம்பதாயிரம் கிடைக்கும்,” “பாக்கிக்கு?” “என் நகை இருக்கிறது” “வேண்டாம் சாம்பவி நகையெல்லாம் விற்கக்கூடாது. நாம அதிகமா ஆசைப்படறோம். பிசினஸ் எப்படி வருமோ என்னவோ தெரியாது. ஆழம் தெரியாம காலை விடக் கூடாது. முதல்ல லோன்ல கிடைக்கிற பணத்தை வைத்து அரை ஏக்கர் ரப்பர் தோட்டத்தை குத்தகை பேசுவோம் பிறகு பார்த்துக் கொள்வோம்.” சாம்பவி உடன் காரியத்தில் இறங்கினாள். பாங்க் லோன் கிடைத்தது. ரப்பர் மரங்கள் குத்தகை பேசப்பட்டன. அவர்களுடைய நேரம் நன்றாக இருந்ததாலோ என்னவோ அவைகள் நிறைய பால் சுரந்தன. ரப்பர் பால் பதப்படுத்தப்பட்டு ஷீட்டுக்களாக மாற்றப்பட்டு லாரி லாரியாய் வெளியூருக்குப் போயின.   ஒரு சீசனிலேயே போட்ட முதல் இரட்டிப்பாயிற்று. அவர்களுக்கு பிசினஸ் நம்பிக்கை பிறந்தது. ஆர்வமும் வந்தது, அரை ஏக்கர் ஒரு ஏக்கராயிற்று. விஜயகுமார், சாம்பவியின் ஊக்கத்தில் புத்துணர்ச்சி பெற்றான். பிசினஸ் வளரும் அறிகுறி தெரிந்தது.        5.   ரப்பரை வைத்து ஏன் நாமே தொழில் தொடங்கக் கூடாது என்று அது சம்ப்ந்தமாய் ஆராய்ச்சி நடத்தினான். மெஷின்களுக்கு ஆர்டர் கொடுத்தான். மூலதன பற்றாக் குறைக்கு சாம்பவியின் நெக்லஸ் கூட இரையாயிற்று.   வீட்டில் தாய், “நெக்லஸ் எங்கேடி” என்று கேட்ட போது, “டேம் பார்க்கப் போனபோது விழுந்து விட்டது” என்று பொய் சொல்லி, “உனக்கு கொஞ்சன்னாலும் பொறுப்பிருக்கா” என்று வாங்கிக் கட்டிக் கொண்டாள்.   ஐந்து பவுனாயிற்றே! பவுனு இப்போ என்ன விலை விற்கிறது தெரியுமா உனக்கு?” என்று தாய் இடித்தது. சாம்பவி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அவளுடைய நினைவில் விஜயகுமாரின் வளர்ச்சி மட்டுமே இருந்தது.   அவன் வளர வேண்டும். செழிக்க வேண்டும். தழைக்க வேண்டும் என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. தான் நினைத்தமாதிரி காரியங்கள் நடந்து வருவதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. இதற்கிடையில் வீட்டில் சாம்பவியின் திருமண பேச்சை எடுத்த போதெல்லாம் அவள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சமாளித்து வந்தாள்.   “மேற்படிப்பா, எதுவும் படிக்கிற மாதிரி தெரியலையே?” என்று அம்மா கேட்க, உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா. நான் கரெஸ்பாண்டென்ஸ்ல சேர்ந்திருக்கேன். எம்.பி.ஏ, படிக்கப் போகிறேன்” என்று புழுகுவாள். பேப்பரில் மதுரை காமராஜ் பல்கலைக் கழக அறிவிப்பு வர சும்மான்னாலும் அப்ளை பண்ணி வைத்தாள்.   அவள் எத்தனை மறைத்தும் கூட விஜயகுமாருடன் கூடிய அவளது தொடர்பை வீட்டிற்கு தெரியாமல் மறைக்க இயலவில்லை. விஷயம் தன் காதிற்கு எட்டியவுடன் அம்மா கொதித்தாள். விஜயகுமார் வேறு ஜாதி என்பதை வைத்து அவள் எதிர்க்க ஆரம்பித்து விட்டாள்.  சாம்பவியின் கெஞ்சலும், வேண்டுகோளும் அவளிடம் பலிக்கவில்லை. அவள் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். அப்பா, ஜாதியை பற்றி பெரிதாய் கவலைப்படா விட்டாலும்கூட அவனுடைய பின்னணி பற்றி கவலைப்பட்டார்.   “அவனுக்கு சொத்து எவ்ளோ தேறும்?” “காதலுக்கு சொத்தாப்பா முக்கியம்?” “காதலுக்கு முக்கியமில்லாம இருக்கலாம். ஆனால் கல்யாணத்திற்கும் குடும்பம் நடத்துவதற்கும் பணம் முக்கியம்மா. ஒண்ணுமில்லாத ஓட்டாண்டிக்கு போய் எப்படியம்மா என் மகளை நான் கொடுக்க முடியும்?” “அவர் ஒண்ணும் ஓட்டாண்டி இல்லேப்பா. ரப்பர் பிசினஸ் பண்றார். ஓகோன்னு வருவார்.” “அதுல மூலதனம் எவ்ளோ?” “ஏன் ஒரு லட்சம் இருக்கும்.” “லோன்” “அது வந்து” “சும்மா சொல்லு. அதுவும் ஒரு லட்சம் வருமா? அப்போ இதுல  அவனோட முதலீடு எவ்ளோ?” “அப்படி பார்த்தா பிசினஸ் பண்றவங்க எல்லாம் சொந்த  பணத்தை போட்டா பண்றாங்க” “இல்லே ஒத்துக்கிறேன். ஆனா பிசினஸ்ல ஒரு அடின்னா அதை தாங்கக் கூடிய சக்தி மத்தவங்களுக்கு இருக்கும். ஒண்ணுல நஷ்டம்னா அடுத்ததுல சம்பாதிச்சு இதை தூக்கி நிறுத்துவாங்க. அந்த கெப்பாசிடி இவன் கிட்டே இருக்கா?” “விடாமுயற்சியும், கடும் உழைப்பும் இருக்குப்பா. போதும் போதாதிற்கு நல்ல மனசு வேற” “நல்ல மனசை தூக்கி ஒடப்புல போடு. பி பிராக்டிக்கல்! நாளைக்கே அவனுக்கு ஏதாச்சும் ஆகி உழைக்க முடியாம போகுதுன்னு வச்சுக்கோ, அப்போ லோன் கொடுத்தவன் சும்மா விட்டுருவானா? அத்தனையையும் அள்ளிகிட்டு போயிடமாட்டான்?” “ஏம்ப்பா உங்களுக்கு நல்லதே நினைக்க வராதா?” “இல்லேம்மா. ஒரு காரியத்துல இறங்கும் முன்பு நாலும் சிந்திக்கிறது நல்லதில்லையா? அவன் எப்போ லோனை அடைச்சு முடிக்கிறது, எப்போ பணம் சம்பாதிக்கிறது. அதுவரை என் மகளை நான் வைத்திருக்க முடியுமா?” “என் கல்யாணத்திற்கு என்னப்பா அவசரம்? அப்பா, இத்தனை நாட்கள் என் விருப்பத்திற்கெதிராய் நடக்காத நீங்கள் இப்போது மட்டும் ஏம்ப்பா?” “எல்லாம் உன் நன்மைக்காகத்தான் சாம்பி. இத்தனை நாட்கள் நீ ஆசைப்பட்டதெல்லாம் வெறும் ஆசைதான். அழகு பார்க்கத்தான். ஆனால் இது அப்படியில்லைம்மா. நீ ஆசைப்படுகிறாயே என்று அவசரப்பட்டு சம்மதித்து விட்டால் பின்னால் அதுவே உனக்கு பெரிய பாவமாகிவிடும்.” “நிச்சயமாய் அப்படியெல்லாம் ஆகாதுப்பா. அவர் நல்லவர். திறமை மிக்கவர். இன்னும் இரண்டாண்டுகளில் பாருங்களேன். அவர் எத்தனை உயரப் போகிறார் என்று” ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. இனியும் விட்டு வைத்தால் முதலுக்கே மோசம் என்று வேறு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். அவளுக்கு அதற்கு மேலும் அங்கே இருக்க முடியவில்லை.   அவளால் விஜயகுமாரை மறக்கவும் முடியவில்லை. அவனை தவிர வேறு எவரையும் தன் கணவனாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பெற்றோர் மீது கோபம் கோபமாக வந்தது. வெண்ணெய் திரண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் இவர்கள் அவசரப்படுகிறார்களே என்று வருத்தப்பட்டாள்.   ஒரு அளவு வரை பொறுத்திருந்த சாம்பவி, ஒரு நல்ல தினத்தில் வீட்டை விட்டு வெளியேறினாள். விவரத்தை சொன்னதும் விஜயகுமார் ஆடிப் போனான்.   “இது தேவைதானா சாம்பி. உன்னைப் பற்றி அவங்க எத்தனை கனவுகள் கண்டு கொண்டிருந்திருப்பார்கள்?” “நான் உங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறேன் குமார்.” “என்ன இருந்தாலும் அவங்க பெத்தவங்க இல்லையா?” “பெத்தவங்கதான். மகளுக்கு யாரை விருப்பமோ அவரை கட்டி வச்சுட்டா ஏன் நான் ஓடிவரப் போகிறேன்” “ஆனாலும் நீ அவசரப்பட்டு விட்டாய்” “இதுவே லேட்டு குமார். இனியும் தாமதித்தால் நாம் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டிவரும். என்ன யோசிக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு பாரமா?” “ஏய் நானே எனக்கு பாரம். என் பிழைப்பே இன்னும் உறுதிப்படலே. என் காரியமே எனக்கு இன்னும் புரியல. நம் கல்யாணத்தை வேறு வச்சுக்கிட்டு என்ன செய்ய” “இதோ பாருங்க குமார், கல்யாணத்துக்கு நான் ஆசைப்படலே. அவசரமும் படலே. ஆனால் நிலைமையை யோசிக்கும் போது நாம் உடனே கட்டிக்கணும்னு தோணுது” “உடனே எப்படி முடியும்” “ஏன் முடியாது? உங்களோட நண்பர்களையெல்லாம் கூப்பிடுங்க. வானவில் இலக்கிய வட்டத்துல தான் உங்களுக்கு நண்பர்களாயிற்றே. நேரா ரிஜிஸ்தர் ஆபீசுக்குப் போவோம். அவங்களை சாட்சியா வச்சு ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிப்போம்” “மேரேஜ் செஞ்சுகிட்டு” “மேரேஜ்ங்கிறது சும்மா ஒரு பாதுகாப்பிற்குத்தான் அதுக்கு பிறகு நாம எப்படியும்போல பிரண்ட்சாவே இருப்போம். நமக்குள்ளே ஒட்டும் வேணாம். உறவும் வேணாம். பிசினசில் கவனம் செலுத்துவோம். ரெண்டு பேரும் சேர்ந்து பாடுபடுவோம். பணம் சம்பாதிப்போம். ஒரு உயரத்தை தொட்டு விட்டு அப்புறமாய்...” “எனக்கென்னவோ பயம் தோணுதுடா. நாம ஜெயிப்போமா?” “நிச்சயமா. இதில் என்ன சந்தேகம் தலைவா?” சாம்பவி கொடுத்த தெம்பில் அவன் புத்துணர்ச்சி பெற்றான். அவர்கள் ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொண்டதை அறிந்ததுமே சாம்பவியின் பெற்றோர் உடைந்து போயினர். அவள் தங்களுடைய மகளே இல்லை என்று எளிதாய் கைகழுவி விட்டு, கழுதை எக்கேடாவது கெடட்டும். இனி நம் பார்வையிலேயே படக்கூடாது என்று அப்பா தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய் விட்டார். விஜயகுமாருக்கும், சாம்பவிக்கும் அப்போது நேரமும் நன்றாக இருந்தது. அத்துடன் அவர்களுடைய உழைப்பும், முயற்சியும் சேர்ந்து கொள்ள, பிசினஸ் செழிக்க ஆரம்பித்தது. லோன் தீர்ந்ததும் அவர்கள் தெய்வசாட்சியாய் திருமணம் செய்து கொண்டனர். போனவருடம் விஜி பிறந்தாள். அதுவரை அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாகவே கழிந்து வந்தது. சாம்பவி அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி வந்தாள். அவன் தளரும்போதெல்லாம் தட்டிக் கொடுத்தாள். அவளின் சத்துணவில் அவன் மீனாட்சிபுரத்தில் வீடு கட்டினான். அதில் குடியும் புகுந்து விட்டனர். அப்போதுகூட பிரச்சினையில்லை. இரண்டு மாதம் முன்பு அவளுக்கு திடீரென தலை சுற்றல் எடுத்தது. மயக்கமாய் வந்தது. கைகால்களில் மதமதப்பு எழுந்தது. ஆரம்பத்தில் அவள் அதை அத்தனை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒய்வெடுத்தால் சரியாகப் போகும் என்று நினைத்தாள். பிறகு வாந்தி மேல் வாந்தியாக வரவும் அவளுக்கே சந்தேகம் வந்தது. அருகில் நிரஞ்சம் கிளீனிக்கிற்கு போய்.     6.   டாக்டரிடம் செக்கப் பண்ணிக் கொண்டதில் அவளுக்கு பி.பி. இருப்பதாகவும் கொலஸ்ட்ரால் இருப்பதாகவும் சொன்னார்கள் அதை கண்ட்ரோல்  பண்ணாவிட்டால் ஆபத்து என்றனர். இந்த இளம் வயதில் இத்தனை கொலஸ்ட்ரால் கூடாது, உடனே கவனிக்கவில்லையென்றால் ரத்தத்குழாய் வெடித்து விடும் அபாயம்கூட உண்டு என்றனர். ஆரம்பத்தில் இது விஷயம் எதுவுமே விஜயகுமாருக்கு தெரியாது.   எதற்கு அவனிடம் சொல்லி அவனுக்கும் கவலையளிக்க வேண்டும் என்று சாம்பவி அலட்சியமாகி விட, ஒருநாள் அவளுடைய வலதுகை, வலதுகால் செயலிழந்து போயிற்று. வாய் குழறிற்று. பேச்சு சிதறிற்று.   மருத்துவமனைக்கு கொண்டு போய் செக்கப் பண்ணின போது அவளுக்கு வாதம் என்று குண்டை தூக்கிப்போட்டனர். ஸ்கேன் பண்ணினதில் அவளுடைய மூளையின் இடது பாகத்து ரத்தக் குழாயில் ரத்தக்கட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் அது ‘செரிப்ரல் த்ராம்போ’ ஸில் (Cerebral Thrombosis) என்றும் அதன் காரணமாய் அவளுக்கு பாரலிசிஸ் அட்டாக் ஆகியிருப்பதாகவும் சொன்னார். அதைக் கேட்டதும் விஜயகுமார் அப்படியே அடங்கிப் போனான். அதை தேற்றிக் கொள்ள ரொம்ப சிரமப்பட்டான்.  “இதை சரிபண்ண முடியாதா டாக்டர்?” “சரி பண்றதுக்கு சிகிச்சைன்னு எதுவும் இல்லை. மெல்ல மெல்ல பயிற்சினாலதான் குணப்படுத்தணும். அதுவும் பேஷண்டுக்கு பி.பி. இருக்கிறதால முழுசும் கியூர் பண்ணிர முடியும்னு சொல்ல முடியாது?” “இதுக்கு எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை டாக்டர். இந்தியாவுக்குள்ளே எங்கேன்னாலும் சரி. இல்லை அமெரிக்கா போனாதான் குணப்படுத்த முடியும்னா அதுக்கும் நான் தயாராக இருக்கேன் டாக்டர்” “உணர்ச்சிவசப்படாம நான் சொல்றதை அமைதியா கேளுங்க. நிஜத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நீங்க செலவு பண்றதை பத்தி இல்லை. உங்ககிட்ட பணம் இருக்கலாம். ஆனால் நோ யூஸ் விஜய். டாக்டர்ஸ் ஆர் ஹெல்ப்லஸ். நான் கொஞ்சம் மருந்துகள் எழுதித் தருகிறேன். பயிற்சிகள் சொல்லித் தருகிறேன். அவற்றை விடாமல் கடைபிடித்து வாருங்கள்” “அப்போ என்னோட மனைவி இனி எழவே மாட்டாளா டாக்டர்” “அப்படின்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பிழைச்சுக்கலாம். லெட் அஸ் ஹோப் சோ” விஜயகுமார் அன்று உடைந்துப் போனவன்தான். இது வரை தெளியவேயில்லை. அவளிடம் வெளியே சகஜமாகப் பழகினாலும்கூட உள்ளுக்குள் அழுது கொண்டேயிருந்தான்.  நாங்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்; எதற்காக இப்படி ஒரு தண்டனை என்று நினைத்து வருந்தாத நாளில்லை. அந்த வருத்தத்தையெல்லாம் அவன் தனக்குள்ளே அடக்கிக் கொண்டான்.   தவறியும்கூட அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவன் காட்டிக் கொள்ளாவிட்டாலும்கூட சாம்பவியால் அவனுடைய நிலைமையையும் கஷ்ட நஷ்டங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது.   நான் பாவி! நம்மால் தான் அவருக்கு எத்தனை சிரமம். அவருக்கு நாம் பணிவிடை செய்வதை விட்டுவிட்டு அவர் நமக்கு செய்து கொண்டிருக்கிறாரே?’ என்று நினைத்து அழுவாள்.  சாம்பவிக்கு விஜயகுமார் தினமும் பயிற்சிகள் செய்து வந்தான். கைகால்களை தூக்கி, மடக்கி, நீட்டி அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பயிற்சி. அப்புறம் பென்சன்டின். லாசிக்ஸ், அடென்னா கோன்ற மருந்துகள்.   ஊரில் சில பேர் ஆயுர்வேதமும், சித்த வைத்தியமும் பாருங்கள் என்க, அதையும் கூட முயற்சித்து விட்டார்கள். எந்த பலனுமே தெரியவில்லை. குணமாகி விடும் என்கிற நம்பிக்கையே சாம்பவிக்கு போயிற்று.   அதன் பிறகு எதிர்காலம் அவளை பயமுறுத்திற்று. கணவனுக்கு தொழிலில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அவற்றிற்கெல்லாம் நாம் உதவாமல் போனாலும், அட்லீஸ்ட் அவன் வீட்டிற்கு வரும் போதாவது நிம்மதி தர வேண்டும். ஓய்வு தரவேண்டும். இதே கணக்கில் போனால் அவர் உடைந்து போவார். பாடுபட்டு சம்பாதித்ததற்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும். தவிர. பெண் குழந்தை வேற அவளுடைய தேவைகளையும், ஆசாபாசங்களையும் எந்த அளவிற்கு அவரால் பூர்த்தி செய்து விடமுடியும்! விடியற்காலையில் குழந்தை அழ, சாம்பவிக்கு தூக்கம் போயிற்று. ஏற்கனவே தூங்க முடியாமல் அரைகுறை மயக்கத்தில் படுத்திருந்தவள் கணவனை திரும்பி பார்த்தாள்  அவன் அலுப்பில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். குழந்தை ஓயாமல் அழுதது. அதன் சப்தம் அவனை கொஞ்சங்கூட பாதித்ததாகவே தெரியவில்லை. பாவம், பகல் முழுவதும் ஓடி களைத்து அலுப்பு அவனுக்கு.   அவனை எழுப்பலாம் என்று எம்பி பார்த்தாள். எழ முடியவில்லை வலதுகையும், காலும் மரக்கட்டை போல கிடந்தன. இடது கையையும் காலையும் மட்டும் வைத்துக் கொண்டு அவளால் உடலை திருப்பக் கூட முடியவில்லை. எரிச்சலாய் வந்தது.  குழந்தை அழுகையை நிறுத்துவேனா என்க. “ஏங்க” என்று அழைத்தாள். அந்த வார்த்தைகள் அவனுடைய காதில் விழும் முன்பே மடிந்து போயின.   அவள் தன் இடது காலை மெல்ல எக்கி அவனை நிரட, “ம்...என்னா சாம்பவி?” என்று எச்சிலை துடைத்துக் கொண்டு எழுந்தான்.   “குழந்தை ரொம்ப நேரமா அழுவுது பசிக்கும்னு நினைக்கிறேன்.  “சாரி எனக்கு சுத்தமாவே கேட்கலை. அடிச்சு போட்ட மாதிரி தூக்கம்” என்று எழுந்து லுங்கியை சரி பண்ணிக் கொண்டு போய் விஜியை தூக்கினான்.   “அழாதே அழக்கூடாது பசிக்குதா? ங்கா வேணுமா? இப்போ தரேண்டா?” அடுப்படிக்கு போய் பால் காய்ச்சி பாட்டிலில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தான். வயிறு நிறைந்ததும் குழந்தை தூங்கிப் போனது.   “பயிற்சி பண்ணி விடட்டா?” விஜயகுமார் கேட்க, “படுத்து தூங்குங்க காலைல பார்த்துப்போம். இதுக்குதான் சொன்னேன் கல்யாணம் பண்ணிக்குங்கன்னு” “எதுக்கு பயிற்சி செய்து விடவா” என்று சிரித்தான்.   “கல்யாணம் பண்ணிகிட்டா வர்றவ குழந்தையை கவனிச்சுக்குவா இல்ல? உங்களுக்கு எதுக்காக இத்தனை பிடிவாதம். நமக்கு பெண் குழந்தை என்பதை மறந்துவிட வேண்டாம். அதுக்கு அன்பு செலுத்தவும், ஆதரவு காட்டி வளர்க்கவும் நிச்சயமா உங்களால் முடியாது” “நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை?” “நான் இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினைன்னா சொல்லுங்க செத்துப் போகிறேன்” அவள் சொல்லி முடிக்கும் முன்பு விஜயகுமார் சட்டென எழுந்து அவளுடைய வாயை பொத்தினான். “சாம்பி! ஏன் இப்படி யெல்லாம் அபத்தமாக பேசுகிறாய்” “விடுங்க எது அபத்தம்? நான் உயிரோடு இருப்பதா இல்லை பேசுவதா? நானும் எத்தனை நாளா சொல்லிக் கிட்டிருக்கேன். என் பேச்சை கொஞ்சம்னாலும் காதுல வாங்கறீங்களா? இவள் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது இவள்தான் முடங்கிக் கிடக்கிறாளே என்று அலட்சியப்படுத்துகிறீர்கள்” “அப்படியில்லை சாம்பி” “அப்புறம் எப்படியாம்? கடவுள் என்னை ஏன் இப்படி போட்டு சித்திரவதை பண்றானோ தெரியலை பேசாம கொண்டு போயிட்டா யாருக்கும் தொந்தரவு இருக்காதில்லை” “சாம்பவி என் இதயத்தை குத்தாதே என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. உன்னை வைத்த இடத்தில் இன்னொருத்தியை வைத்துப் பார்க்க என்னால் முடியவே முடியாது” “அதுக்காக உங்களை நீங்களே அழிச்சிக்கணுமா? எனக்கு என்ன முடிவுன்னும் எப்போ முடிவுன்னும் தெரியாது. அதுவரை எனக்காக காத்திருந்து... அப்புறம் உங்களுக்கு வயசாகிவிடும்” “சாம்பி, கொஞ்சம் யோசிச்சு பார் இதே நிலைமை எனக்கு வந்திருந்தா நீ வேறு கல்யாணம் செய்து கொள்வாயா?” “இது இடக்கு கேள்வி வந்திருந்தான்னு யோசிக்கிறது அனாவசியம் இப்படியே வந்திருந்தாலும் ஆணையும் பெண்ணையும் ஒரே மாதிரி வைத்து பேசக்கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலளவிலும் மனதளவிலும் வித்தியாசம் இருக்கு விரும்பியோ விரும்பாமலோ” “போகட்டும் விடு. உன் பேச்சுப்படியே நான் ஓக்கே சொல்றேன்னே வைச்சுக்கோ. என்னை எந்த பெண் கட்டிக்க முன் வருவா” ‘ஏன் உங்களுக்குகென்ன குறை?’ “எனக்கு வயசு முப்பத்தி ஏழு” “இது ஒரு வயசே இல்லை. இப்போதும் என் புருஷன் மாப்பிள்ளை மாதிரிதான் இருக்கான்” சாம்பவிகண்களை தன் இடது கையால் துடைத்துக் கொண்டு சொன்னாள்.   “எனக்கு யார் பெண் தருவார்கள்” “அந்த கவலை உங்களுக்கு ஏன்? தரகரை வரச் சொல்லுங்கள். நான் பேசறேன். டவுரி வேணாம். தோல் சிகப்பு வேணாம். அடக்கம் ஒடுக்கமா குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருந்தாப் போதும்” “ஆனா அவ நம் குழந்தையை பாத்துக்கணுமே சாம்பி” “அதெல்லாம் பாத்துப்பா. தைரியமா உங்களோட முடிவை சொல்லுங்க” என்று அவள் நிர்ப்பந்திக்கவும், “எனக்கு இதில் விருப்பம் இல்லை அப்புறம் உன் இஷ்டம்” அவன் வேண்டா வெறுப்புடன் ஒப்புக் கொண்டான்.     7.   மறுநாளே தரகர் வரவழைக்கப்பட்டார். தங்களுடைய கல்யாணம் நாள் நட்சத்திரம் பார்க்காமல், ஜாதக பொருத்தம் பார்க்காமல் நடந்ததால் தான் தனக்கு இப்படி நேர்ந்ததோ என்கிற கவலை சாம்பவியை வாட்டிக் கொண்டிருந்தது.  இனி நடக்கிற கல்யாணமாவது எல்லா பொருத்தங்களும் பார்க்கப்பட்டு நடக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். வருகிறவளாவது எந்தவித நோய் நொடிக்கும் ஆளாகாது கடைசிவரை கணவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.   அதற்கு வேண்டி தரகரிடம் தன் கணவரின் ஜாதகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னாள்.   “தரகரே! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. இன்னும் ஒரு மாசம்தான் டயம். அதுக்குள்ளே எம் புருஷனுக்கு நல்ல பெண்ணா பார்த்து தந்திரணும். ஆமா சொல்லிபுட்டேன்” “அம்மா உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியலை. கட்டின புருஷனுக்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்கிற முதல் பெண்டாட்டி நீங்களாகதாம்மா இருப்பீங்க” “புகழ்ந்ததெல்லாம் போதும். போய் ஆகவேண்டியதை பாருங்க, போங்க” விஜயகுமார் அவளடைய விருப்பம் எதிலும் தலையிடவில்லை. கல்யாணமே வேண்டாம் என்றிருந்தவனை மாற்றியவள் அவள். அவளுடைய விருப்பத்திற்காகத்தான் இந்த கல்யாணம். அவளை கவனித்துக் கொள்ள பொறுப்பான ஒருத்தி கிடைப்பாளே என்கிற நப்பாசையிலும் நம்பிக்கையிலும்தான் அவன் கல்யாணத்திற்கே சம்மதித்திருந்தான்.   அப்படியிருக்கும்போது பெண்ணை அவளே தேர்ந்தெடுப்பதுதான் முறை. அதுதான் நல்லது என்று அவன் ஒதுங்கிக் கொண்டான்.  அடுத்த வாரத்திலேயே தரகர் ஒரு கட்டு ஜாதகத்துடனும், போட்டோக்களுடனும் வந்தார். சாம்பவி சில படங்களை தேர்வு செய்து கொடுத்து இவர்களின் ஜாதக பொருத்தங்கள் பார்த்து வாருங்கள் என்றாள்.   அவற்றில் மூன்று ஜாதகங்கள் விஜயகுமாரின் ஜாதகத்தோடு பொருந்தின.   “ஏங்க இப்போ என்ன பண்ணலாம்?” “மூணெல்லாம் எனக்கு தாங்காதுப்பா” “சீ. நான் ஒருத்தி உங்களை படுத்தறது போதாதா? ஒண்ணுபோதும். இதுல ஏதாவது ஒரு பெண்ணை செலக்ட் பண்ணுங்களேன்” “சாம்பி இப்போதுதான் நீ என்னை படுத்துகிறாய். நீயாச்சு பெண்ணாச்சு. ஆளைவிடு” என்று அவன்வெளியேறினான்.  சாம்பவி அந்த மூவரில் ஒரு படத்தை காட்டி, இந்த பொண்ணோட பேரு என்ன தரகரே? என்றாள்.   “வந்து லதிகா”  “இதோட பேக்கிரவுண்டு என்ன?” “பொண்ணு நல்ல சிகப்பு. உங்களை மாதிரியே அழகாக லட்சணமாக இருக்கும்” “நான் அதை கேட்கவில்லை” “இருங்கம்மா, அவசரப்படறேளே. ஒவ்வொண்ணா தானே சொல்லிட்டு வரமுடியும்? டிகிரி படிச்சிருக்கா. தங்கமான குணம். வீட்டில் வறுமை. அப்பா, அம்மா இல்லை. ஏறக்குறைய அனாதை மாதிரிதான். அண்ணன்காரன் இருக்கான். மேற்கொண்டு படிக்கணும்ங்கிறது லதிகாவோட ஆசை. தூத்துக்குடி டவுன்லயே டைப்ரைடிங் இன்ஸ்டிடியூட்ல வேலை செய்யுது” “எங்க குடும்பத்தை பத்தின விவரத்தையெல்லாம் சொன்னீரா?” “ஓ” “என்னை பற்றியும் என் நிலை பற்றியும்?” “ஓ எல்லாம் சொல்லியாச்சு” “அப்போ அதுக்கு ரெண்டாதாரமாய் வாக்கப்பட முழு சம்மதம்னா இங்கே அழைச்சு வாங்க. நான் கொஞ்சம் பேசணும்” “ஓ போஷா அழைச்சு வரேனே” “வரும்போது உம்ம ஓவை விட்டுவிட்டு வாரும்” தரகர் ‘ஓ’ என்று சிரித்துக் கொண்டு வெளியேறினார். மறுநாளே தரகர் அவர்களை டாக்சியில் அழைத்துக் கொண்டு வந்தார். லதிகா என்ற அந்தப் பெண் சாம்பவி எதிர்பாத்ததை விட சற்று அழகாகவே இருந்தாள். சாம்பவியை விட அவள் நிறமும் அதிகம். பருமனும் அதிகம்.   அவள் முடியை அகலப்பின்னி கிளிப் போட்டு பூ வைத்திருந்தாள். மணப்பெண் மாதிரி பட்டுப்புடவையுடன் நாணத்தையும் சுற்றியிருந்தாள். அவளுடன் அவளுடைய அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள்.   அவர்களை பார்த்தாலும் நல்லவர்களாத்தான் தெரிந்தார்கள். லதிகா, சாம்பவியிடம் வந்து நமஸ்கரித்துவிட்டு தரையில் அமர்ந்து கொண்டாள்.   “எழுந்திரிம்மா. எழுந்து நாற்காலியில உட்கார்” “பரவாயில்லைக்கா” ‘அக்கா’ அந்த வார்த்தையை கேட்டதுமே அவளுக்கு குளிர்ந்தது. அவளுடைய பணிவும். அடக்கமும் சாம்பவிக்கு மகிழ்ச்சியை தந்தது. இவள்-இவள்தான் நாம் தேடின பெண். இவள்தான் நம் கணவருக்கு ஏற்றவள்.   அவளுக்கு சில நொடிகள் கண்கள் நிறைந்து போயின. “எங்க குடும்பத்தோட நிலைமை உங்களுக்கு தெரியும் தானே? கட்டின பொண்டாட்டியே தன் கணவனுக்கு வேறு பெண் பார்ப்பது உங்களுக்கு விசித்திரமா இருக்கலாம். ஆனால் இதில் விகற்பமில்லை. வாழ்க்கைல நாம என்னன்னவோ எதிர்பார்க்கிறோம். என்னன்னவோ மனக்கோட்டைகளை கட்டறோம். எத்தனையோ கனவுகள் காண்கிறோம். எல்லாமே எல்லாருக்கும் சாத்தியமாயிடறதில்லை. என் நிலைமையும் கூட அப்படித்தான். நானும் அவரும் ஒருவரை ஒருவர் நேசிச்சோம். உயிரா பழகினோம். வீட்டுல ஒத்துக்கலை. தனியா வந்து எங்களை யாருமே பிரிக்க முடியாதுன்னு இறுமாப்போட வாழ்ந்துக்கிட்டிருக்கிறப்போ நோய் நானிருக்கேன்னு வந்திருச்சு. எனக்கு எது வந்தாலும் பரவாயில்லை. அவர் நல்லா இருக்கணும். வாழ்க்கைல அவர் ரொம்பவும் அடிபட்டு வந்திருக்கார். முன்னேறணுங்கிற உறுதியில படிப்பையெல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு இளநீர் விற்றவர். எந்த தொழிலையும் மட்டமா நினைக்காம உழைச்சு உழைச்சு முன்னுக்கு வந்திருக்கார்.   அவரோட ஆர்வத்துக்கும் கடும் முயற்சிக்கும் நான் இத்தனை நாள் எண்ணெய் போல இருந்து குடும்ப விளக்கை பிரகாசமா எரிய வச்சிட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமா இப்போ எண்ணெய் வத்திப் போச்சு. ஆனாலும் இந்த விளக்கு மங்கிடக் கூடாது, அணைஞ்சு குடும்பத்துல் இருள்சூழ்ந்திடக் கூடாது. திரும்ப ஒளி ஏத்தறதுக்கு ஒரு பெண் தேவை. எந்த விதத்திலேயும் என்னால அவர் பாதிக்கப்படக் கூடாது. என் கதை முடிஞ்சு போன ஒண்ணு. ஆனா அவருக்கு இன்னும் வயசு இருக்கு அவர் எபோதும் சந்தோஷமா இருக்கணும். அதை பார்த்துகிட்டு நான் கண்களை மூடணும். அதுதான் என் ஆசை” அதை சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு நாக்கு குழறியது. தொண்டை கமன்றது. அவள் விக்கி விக்கி அழ, அதன் பாதிப்பு வந்தவர்களுக்கும் கூட தொற்றிக் கொண்டது. லதிகா எழுந்து சாம்பவியின் தலையை வருடி விட்டு, “உங்களுக்கு கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாப் போகும்க்கா! என்று ஆறுதலாய் பேசினாள்.   “இனி சரியாய் போனால்தான் என்ன, போகாட்டி தான் என்ன? அதான் நீ வரப் போகிறாயே... உன்னை பார்த்ததும் என் கவலையெல்லாம் தீர்ந்து போச்சு, சார்! நல்லா யோசிச்சுதானே உங்க தங்கையை தருவதற்கு சம்மதிச்சீங்க...?” “அம்மா! ரெண்டாந்தாரம்ன்னதும் நான்கூட யோசிச்சேன். இவதான் பரவாயில்லைன்னு முன்வந்தா. இப்போ உங்களை பார்க்கும்போது ஏன் யோசிச்சோம்னு நானே வெக்கப்படறேன்.” லதிகாவின் அண்ணன் சொல்லி விட்டு உணர்ச்சி வசப்பட்டான். “கவலையே படாதீங்கம்மா. என் தங்கை உங்களை பொன் போல பார்த்துக்குவா. ஆனா நாங்க ஏழைபட்டவங்க, எங்களால பெரிசா எதுவும் செய்துட முடியாது!” “வேணாம் சார். நாங்க எதுவுமே எதிர்பார்க்கலே. தரகரே, நீங்க சொல்லலியா இவங்ககிட்டே?” “ஓ...நான் சொன்னேனே!” “அவர் சொன்னார்...சொன்னார். இருந்தாலும் கூட நாங்க எங்க நிலைமையை வெளிப்படுத்தணுமில்லையா...?” சற்று நேர மவுனத்திற்கு பின் சாம்பவி, “லதிகாவோட நான் கொஞ்சம் தனியா பேசணும். அதுக்கு அனுமதிப்பீங்களா...?” என்றதும் அவர்கள் எழுந்து வெளியே போய் அமர்ந்து கொண்டார்கள்.   சாம்பவி அவளை பரிவுடன் பார்த்து, “இப்படி வந்து பக்கத்துல உட்காரும்மா” என்று அழைத்து அமர்த்திக் கொண்டாள். அவளை பரிவுடன் பார்த்து, “லதிகா! உனக்கு எங்க வீடு பிடிச்சிருக்கா...?  “ம்” என்று அவள் வெட்கப்பட்டாள்.   “அவரை பார்த்தாயா...?” “இல்லை. அண்ணனும் அண்ணியும் பார்த்துட்டு வந்தாங்க. அவங்களுக்கு பிடிச்சிருக்கு. எனக்கு அதுபோதும்” 8.   “போதாது நீயும் பார்க்கணும். உனக்கும் அவரை பிடிக்கணும். கல்யாணம்ங்கிறது வெறும் விளையாட்டில்லை. இங்கே அவர் மட்டுமில்லை. தவழுகிற பருவத்தில் என் குழந்தையும், தவழ முடியாமல் நானும் இருக்கிறேன். எங்களுடைய தேவைகள் எல்லாம் உன் பொறுப்பு. உன்னுடைய சுமை. எல்லாவற்றையும் நீ சுமந்தாக வேண்டும். அவர் நல்லவர். தங்கமான குணம் படைத்தவர். தகுதியும் திறமையும் இருக்கு. ஆனால் இப்போ உற்சாகம் கொடுக்க ஆள் இல்லை. அதுக்குதான் நீ! நான் மனந்திறந்து கேட்கிறேன். நீயும் அதே வகையில் பதில் சொல்ல வேண்டும். உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம்தானே? வெறும் அனுதாபத்தாலோ இல்லது நிர்பந்தத்தாலோ இதற்கு சம்மதிக்கவில்லையே...?” “இல்லைக்கா” “சரி, கல்யாணத்திற்கு பிறகு உனக்கு வேலைக்குப் போக விருப்பமா?” “அப்படியெல்லாம் இல்லை. வீட்டு கஷ்டத்தால் தான் வேலை பார்க்கிறேன்.” “நல்லது இனி விட்டிரு. இங்கே பணத்திற்கு கஷ்டமில்லை. அவர் நிறைய சம்பாதிக்கிறார். குடும்ப பொறுப்பை ஏத்துக்கத்தான் ஆள் வேணும். என்ன தெரிஞ்சுதாம்மா?...” “சரிக்கா.” சாம்பவி ஆயாவை அழைத்து அவர்களை உபசரிக்கச் சொல்லிவிட்டு கணவனுக்கு சொல்லி அனுப்பினாள். விஜயகுமார் அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.   விருந்துகளை பார்த்ததும் வெட்கப்பட்டு, “என்ன விஷயம் சாம்பவி... சீக்கிரம் சொல்லிவை. நான் போகணும்!” “என்ன அவசரம்... உட்காருங்க. அது தான் பொண்ணு. பேரு லதிகா” என்று அறிமுகப்படுத்தவும், விஜயகுமார் ஒரு நிமிடம் அவளை நேரிட்டு, சட்டென தலையை தாழ்த்திக் கொண்டான்.  “பிடிச்சிருக்கா...?” என்று அவள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். “உன்னையுந்தாம்மா கேட்கிறேன். அய்! சிரிக்கிறாயா இல்லை வெட்கப்படுகிறாயா ஏங்க உங்களுக்கு...?” “நீ பார்த்து ஓ.கே. சொன்னா சரிதான். எனக்கு வேலையிருக்கு. உடனே போகணும். அப்போ நான் வரேன் சார்! வரேம்மா!” எல்லோருக்கும் கும்பிடு போட்டு விட்டு விஜயகுமார் ஓடிப் போனான். லதிகாவிற்கு அவனை பார்த்ததிலிருந்து படபடப்பாகவே இருந்தது.   அடுத்த மாதத்திலேயே நல்ல நாள் பார்க்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை விமர்சையுடன் நடத்த வேண்டும் என்று சாம்பவி பிரியப்பட்டாள்.   “எதுக்கு சாம்பி...? எதுக்காக விளம்பரப்படுத்தணும்? பேசாம கோவில்ல வச்சு தாலி கட்டி, மாலை மாத்திகிட்டாப் பத்தாதா...”?  “பத்தாது” “ஆனாலும் உனக்கு பிடிவாதம் ஜாஸ்தி. திருமணத்துக்கு நான் ஒத்துக்கொண்டிருக்கவே கூடாது. இது ரெண்டாம் கல்யாணம்தானே? இதில் விமர்சை எதற்கு?” “உங்களுக்கு வேண்டுமானால் அது ரெண்டாங் கல்யாணமாய் இருக்கலாம். ஆனால், அவளுக்கு...? அவளுடைய நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அவளும் பெண்தானே! கல்யாணத்தை தடபுடலா நடத்தணும், ஊரறிய தாலி கட்டிக் கொள்ளணும்னு அவளுக்கு மட்டும் ஆசையிருக்காதா...?” “ஆசையிருக்குங்கிறதுக்காக எல்லாத்தையும் செய்திட முடியுடமா... உன்னோட இந்த நிலைமையில...” “என்னோட நிலைமையை அடிக்கடி ஞாபகப்படுத்தாதீங்க. கேட்டுகேட்டு சலிச்சுப் போச்சு. என்ன செலவானாலும் சரி. கல்யாணத்தை சிறப்பாகத்தான் நடத்தியாக வேண்டும்.” “சாம்பி... நான் செலவுக்கா பார்க்கறேன்? எனக்கு குறு குறுப்பா இருக்கு. வெளியே சொல்லிக்கவே கூச்சமாயிருக்கு.” “நீங்க எதுக்காக கூச்சப்படணும்...? என்ன தப்பு செஞ்சீங்கன்னு குறுகுறுக்கணும்...?” “நீ நோயை அனுபவிக்கும்போது கல்யாணம் பண்ணிக்கிறது என்னோட சுயநலம்தானே. இன்பத்தை ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிட்டோம். துன்பத்திலும் அந்த பங்கு வேண்டாமா?” “உங்க புராணத்தை மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா. போங்க! மசமசன்னு நிக்காம புது மாப்பிள்ளையா லட்சணமா ஆக வேண்டியதை பாருங்க. பத்திரிகை அடிக்கணும், பந்தல்காரன், மேளக்காரன்னு எத்தனை வேலையிருக்கு...? வீடியோவுக்கும், போட்டோவுக்கும் சொல்லி வையுங்க” விஜயகுமார்-லதிகா திருமணம் சாம்பவி விரும்பியபடி விமர்சையாக நடந்து முடிந்தது.   தாலி கட்டின கையோடு விஜயகுமார், லதிகாவை சாம்பவியிடம் அழைத்து வந்து “ஆசீர்வாதம் வாங்கிக்கோ. இவதான் இந்த வீட்டுக்கு மூத்தவ மூத்தவ மட்டுமில்லை. என்னோட எல்லாமுமே இவதான்!” என்றான்.   அதை கேட்டதும் அவளுடைய அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்னவோ போலிருந்தது. அவர்களுடைய முகம் வாடிப் போயிற்று. லதிகா புன்னகை மாறாமல் தரையில் விழுந்து, “என்னை ஆசீர்வதிங்கக்கா...!” என்றாள்.   “சீ...சீ... எழுந்திரிம்மா அவர் சொல்றார்ன்னு நீயும் விழுகிறாயே. நான் அப்படி என்ன தள்ளாமையாகி கிடக்கேன்...?” என்று கேட்டு கண் கலங்கினாள். அவர் சொன்னார்ங்கிறதுக்காக நீ வருத்தப்படாதே நான் மூத்தவளா இருந்தாலும் இங்கே உனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இனி இந்த வீட்டு ராணி நீதான்!” அன்று ராத்திரி.   அறையில் பூக்கள் வாசமடித்து கட்டில் அவங்கரிக்கப் பட்டிருக்க, லதிகா வெட்கத்துடனும் பதட்டத்துடனும் அமர்ந்திருந்தாள். பழங்களும், பட்சணங்களும் தாம்பாளத்தில் அழகு காட்டின.  விஜயகுமார் ஹாலில் சாம்பவியிடம் அமர்ந்திருந்தான். அவனுடையமுகம் இறுகிப் போயிருந்தது. உம்மென்று அமர்ந்திருந்தான். மனத்திரையில் அவளை சந்தித்தது, இளநீர் வெட்டிக் கொடுத்தது, இண்டர்வியூ. ஊர் ஊராய் சுற்றின தெல்லாம் மின்னலாய் அடித்தன. பிசினஸ் ஆரம்பித்தது. சாம்பவி உதவினது, உற்சாகம் தந்தது எல்லாமே நினைவிற்கு வந்து அவனை அலைக்கழித்தன.   தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதனருகில் கயிறு கட்டி அதை தன் கையில் பிடித்தபடி ஆயா தூங்கிக் கொண்டிருந்தாள். இல்லை அவள் தூங்கவில்லை. தூங்குவதாக பாவனை பண்ணிக் கொண்டிருந்தாள். அவளுடைய காதுகள் ஹாலின் மேல் கூர்மையாய் கவனம் செலுத்தின.   “மாப்பிள்ளை சார்! கொஞ்சம் சிரிக்கிறது. சிரித்தால் என்ன குறைந்து போவீர்களாம்...?” சாம்பவி கேட்டு விட்டு அவனை அர்த்தத்துடன் பார்த்தாள்.   “லதிகாவை உங்களுக்கு பிடிச்சிருக்கா...?” அவன் பதில் சொல்லவில்லை. அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.   “அவ நல்லவங்க. குணம்னா அவ்ளோ குணம்! என்னவோ கூட பிறந்தவ மாதிரி அக்கா அக்கான்னு எம் மேல உயிரையே விடறா. சரி, சரி...இன்னும் ஏன் இங்கே... கிளம்புங்க நேரமாச்சு” “சாம்பி... இதெல்லாம் தேவைதானா...?” “நிச்சயமா.. கல்யாணம்னு நடக்கும்போது முதலிரவும் தேவை தானே. போங்க, பாவம் அவ காத்துக்கிட்டிருப்பா!’ “சாம்பி! என்னை ஏன் இப்படி போட்டு படுத்துகிறாய்? எனக்கு அழுகையாய் வருகிறது. உன்மேல் ஆத்திரமாய் வருகிறது. என்னை உசத்தி விட்ட நீ ஜடமாட்டம் படுத்திருக்கும்போது நான் போய் இன்னொரு பெண்ணை அனுபவிக்கணும். இது எந்த விதத்தில் நியாயம்?” “மெல்ல பேசுங்க. அவங்க அண்ணன் அண்ணியெல்லாம் பக்கத்து ரூம்லதான் படுத்திருக்காங்க. அவங்களுக்கு கேட்டால் சங்கடப்படுவாங்க” “சங்கடப்படட்டும், எனக்கென்ன? நானா இதையெல்லாம் கேட்டேன்? சும்மா இருந்தவனை பிடித்து...” “அச்சோ... ! போதும், போதும்! பாக்கியிருந்தா காலைல பேசிக்கலாம். முதல்ல எழுந்திருங்க கெட்அவுட், உங்களை யாரு ரூமை விட்டு வெளியே வரச் சொன்னது...? இப்போ போறீங்களா இல்லை ஆயாவை கூப்பிட்டு உள்ளே தள்ளச் சொல்லட்டா...?” அவன் வெறுப்புடன் அறைக்குள் போக சாம்பவி தன் கண்களை மூடிக்கொண்டு விம்மினாள். அவனும் அவளும் ஒரு முறை குற்றாலத்திற்கு போனபோது நடந்த சம்பவம் மனதில் மறுபடியும் வந்தது.   குற்றாலத்தில் விஜயகுமார் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வரும்போது யாரோ ஒருத்தி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சாம்பவிக்கு அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.  ‘முழியை பாரேன் முந்திரி பழமாட்டம்!’ என்று கறுவினாள்.   ‘ஏன் இப்படி திட்டுகிறாய்... பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டும். விடேன்?” “அதெப்படி விட முடியும்? எம் புருஷனை பார்க்கிறதுக்கு அவளுக்கென்ன உரிமை...?” ”பார்க்கிறதுக்கெல்லாமா உரிமை வாங்க முடியும்? விடுங்கிறேனில்லே...?     9.   ‘ரோடில் போகிற-வருகிறவளெல்லாம் உங்களை பார்ப்பாள். நானும் விட்டுக் கொடுத்திடணுமாக்கும்...?’   ‘விட்டுக் கொடுக்க மாட்டியாக்கும்! சண்டைக்கு போவியாக்கும்!’ ‘ஆமா சண்டைக்குத்தான் போவேன். எம் புருஷனை நான் எதுக்கு விட்டுக் கொடுக்கணும். என் உயிர் போனாலும் சரி, யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்!’ அன்று யாரோ ஒருத்தி அவனை பார்த்ததிற்கே கோபப்பட்டதும், விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சண்டை பிடித்ததும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அன்று உயிர் போனாலும் சரி விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றோம்.   ஆனால் இன்று...?  அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. என்னதான் அவளாகவே தீர்மானித்து, ஆசைப்பட்டு, பெண் பார்த்து முடித்து வைத்திருந்தாலும் கூட, யதார்த்தமான பெண் மனம் அவளை வாட்டவே செய்தது. நமக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை, நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்? என்று அவளால் நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.   வருத்தத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு இயல்பிற்கு வர முயன்றாள். லதிகா நல்லவள். நம் கணவனையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொள்வாள். நமக்கு அது போதும். இப்படி ஒரு பெண் அவருக்கு நாம் கொடுத்து வைக்க வேண்டும். அதற்காக பெருமைப்படு சந்தோஷப்படு.   அறைக்குள்.   விஜயகுமார் வந்ததுமே லதிகாவிற்கு படபடப்பு அதிகமாயிற்று. அவனை ஏறெடுத்து பார்க்கமுடியாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். ஊதுபத்தி புகைந்து வாசத்தை பரப்பி விட்டு சாம்பலாகிக் கொண்டிருந்தது. அவன் அருகில் வந்ததும் லதிகா அவனுடைய காலை தொட்டு வணங்கினாள். பிறகு பால் எடுத்து பவ்யத்துடனும், மரியாதையுடனும் அவனிடம் நீட்டினாள். அந்த சமயத்தில் அவனுடைய கண்கள் கலங்கியிருப்பதை கண்டு பதறிப்போனாள்.    அவன் பாலை வாங்கி ஸ்டூலில் வைத்து விட்டு அமர்ந்தான். அவளை வெறித்துப் பார்க்க,லதிகாவிற்கு சங்கடமாயிருந்தது.  “உங்க கண்கள் ஏங்க கலங்கியிருக்கு? அக்காவுக்கு இப்படி ஆயிபோச்சேன்னா...?” அவன் எதுவும் பேசவில்லை. “பேசுங்க. எம்மேல ஏதாச்சும் கோபமா... என்னை உங்களுக்கு பிடிக்கலியா...? நான் ஏதாச்சும் தப்பிதமா நடந்துக்கிட்டேனா...?” “இல்லை, இப்படி வந்து உட்கார். உங்கிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு” லதிகா கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.   “லதிகா! நான் எந்த சூழ்நிலையில் உன்னை கட்டி கிட்டிருக்கேன்கிறது உனக்கும் தெரியும். என் நிலைமையும் கூட புரியும். புரியணும். புரிஞ்சுக்கணும். நீ படித்தவள். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அனுசரித்து போவாய் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.” “முகவரி வேண்டாம். நேராய் விஷயத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்.” “வருகிறேன். எனக்கு நீ ஒரு உறுதிமொழி தருவாயா...?” “என்ன வேணும். கேளுங்க!” “சாம்பவி எனக்கு மனைவி மட்டுமில்லை. தெய்வம் மாதிரி, என்னோட இந்த வளர்ச்சி அவளால்தான்.   அவதான் என்னோட மூலதனம். என்னோட சொத்தும். என்னை பாடுபட்டு தூக்கி நிறுத்திட்டு அவ படுத்துகிட்டா. என்னால இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. வாஸ்தவத்தில் சொல்லப் போனால் இன்னொரு கல்யாணத்துக்கே எனக்கு இஷ்டமில்லை. அவள்தான் வற்புறுத்தினா.   நானும் ஆரம்பத்தில் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். அப்புறம் யோசிச்சப்போ, நம்மால குழந்தையையும் அவளையும் பராமரிக்க முடியுமாங்கிற சந்தேகம் வந்தது. என்ன இருந்தாலும் நான் ஆண். பிசினசை பார்க்க போய் விட்டேன் என்றால் குழந்தையின் தேவைகளை யார் கவனிப்பது...? அம்மாவும், அப்பாவும் கண் முன்னிலேயே இருக்கும்போது எதற்காக காப்பகத்தில் போய்விட வேண்டும் என்று தோன்றிற்று. எனக்கு என்னைவிட சாம்பவி முக்கியம்.” “அவங்க என் அக்கா மாதிரிங்க.” “அதே அளவு குழந்தையும் முக்கியம். அவளுக்கு அம்மா பாசத்தில் எந்த குறையும் வரக் கூடாது!” “விஜி இனி என் குழந்தைங்க. அவளுக்கு எந்தவித குறையுமில்லாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.” “சந்தோஷம் லதி! உன்னோட இந்த பொறுப்புணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது. உன்னை கட்டிக்கிட்டதுக்கு நான் பெருமைப்படறேன். அப்புறம் விஜி மட்டும் நமக்கு போதாதா...?” “என்ன கேட்கறீங்கன்னு எனக்கு புரியலே?” “நமக்கு விஜி ஒரு குழந்தை. சாம்பவி இன்னொரு குழந்தை. அப்படி இருக்கும்போது இன்னொரு குழந்தை எதுக்கு...? வேண்டாமேன்னு சொல்றேன்.” லதிகா இதற்கு பதில் சொல்லவில்லை. பேசாமல் அமர்ந்திருந்தாள். “பால் ஆறிபோகுது குடிங்க!” “முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்.” “என்ன கேட்டீங்க...?” “குழந்தை வேணாம்னு கேட்டதுக்கு உன் சம்மதத்தை இன்னும் நீ சொல்லவில்லை.” “சம்மதம்னு சொல்லாம சொல்லதான் பாலைக் கொடுத்தேன். பால் விடும் தூது!” என்று அவள் சிரிக்க. “ரொம்ப நன்றி லதிகா. என் கவலையெல்லாம் தீர்ந்து போச்சு. நான் நிஜமாலுமே உன்னை அடைய பாக்கியம் செஞ்சிருக்கணும்!” என்று நெகிழ்ந்து போனான்.   லதிகாவிற்கு இந்த வீடு ரொம்பவும் பிடித்திருந்தது. வந்து இரண்டு நாட்களிலேயே அவள் எல்லோருடனும் அன்யோன்யமாய் பழக ஆரம்பித்திருந்தாள். பம்பரமாய் சுழன்று வேலைகளையெல்லாம் செய்து வந்தாள்.   அக்கா அக்காவென்று வாய்கொள்ளாமல் சாம்பவியை சுற்றிச் சுற்றி வந்தாள். அவளுடைய தேவைகளை கவனித்துக் கொண்டாள். மருந்து தடவுவது, பயிற்சி பண்ணி விடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டி விடுவது எல்லாமே அவளது பொறுப்பு.   அவற்றை கொஞ்சங்கூட சலிப்பில்லாமல் செய்து வந்தாள். சாம்பவிற்கும் அவளை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. ஆனால் விஜயகுமார்தான் இயல்பாய் இருக்கவில்லை, எதையோ பறிகொடுத்தது போலிருந்தான். லதிகாவுடன் சரியாய் பேசுவதில்லை.   “லதிகாவை உங்களுக்கு பிடிக்கலையா?” சாம்பவி அவனிடம் கேட்கவும் செய்தாள். அவன் இல்லையென தலையாட்ட, “அப்புறம் அவளுடன் பேசி நான் பார்க்கவேயில்லையே. உங்களுக்கு என்ன பிரச்சினை சொல்லுங்கள். அருமையாய் ஒரு பொண்டாட்டி வாய்த்திருக்கிறாள். அனுபவிப்பதை விட்டு விட்டு வியாபாரத்தில் எதுவும் முடையா?” “இல்லை” “அப்புறம் ஏன்? இன்னும் பழசையே நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா? இனிமே மதியம் ஹோட்டல்ல சாப்பிட வேண்டாம். இங்கே வந்து சாப்பிட்டுப் போங்க” ”அதற்கெல்லாம் நேரமிருக்காது” “அப்போ லதிகாவை கொண்டு வரச் சொல்கிறேன்” “வேண்டாம் வேண்டாம். அவள் இங்கேயே இருக்கட்டும். நானே வர முயற்சிக்கிறேன்” “அப்புறம் இன்னொரு விஷயம் நீங்கள் எப்போதும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது சரியில்லை. அவளுக்கு மனசு நோகும். காம்ப்ளெக்ஸ் வரும். எந்த விஷயமானாலும் அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” சாம்பவியின் அந்த வார்த்தை மட்டும் அவனுடைய காதில் ஏறவில்லை. வீட்டிற்கு வந்தான் என்றால் அவளுடன் தானிருப்பான். அவளுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பான். லதிகாவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ராத்திரி தூங்கப் போகும் போதுதான் அவளையே ஏறிடுவான். அப்போதும்கூட சரியாய் பேசுவதில்லை. அலுப்பாய் இருக்கிறது என்று தூங்கி விடுவான்.   அவன் பகலில் பேசாவிட்டாலும் ராத்திரியிலாவது ஆசையுடன் பேசுவான், கொஞ்சுவான் என்று எதிர்பார்ப்போடு அறைக்குள் வருபவளுக்கு ஏமாற்றமாயிருக்கும். ஆரம்பத்தில் சிலநாட்கள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பாவம், அக்காவின் சோகம் அவரை பாதித்திருக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்தாள்.   ஆனால் சரியாகிற மாதிரி தெரியவில்லை. அவனுடைய நிலையில் எந்தவித மாற்றமும் தெரியாமல் போகவே அவளுக்குள் ஒரு ஆதங்கம் முளைக்க ஆரம்பித்தது. அது வளர்ந்தது. துளிர்த்து கொழுத்து.   இவருக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன். எல்லோரையும் அனுசரித்துதானே போகிறேன். இருந்தும் என்னை ஏன் இவர் ஒதுக்குகிறார் என்று நினைத்து வருந்த ஆரம்பித்தாள், என்னை ஒதுக்குகிறாரா இல்லை வெறுக்கிறாரா?       10.   கட்டின பொண்டாட்டியுடன் பேச முடியவில்லை. கொஞ்ச முடியவில்லையென்றால் அப்புறம் எதற்கு கல்யாணம்? இங்கே நான் யார்? வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் ஜந்துவா? அதற்கு பொண்டாட்டி எதற்கு. வேலைக்காரி போதாதா?  அவளையுமறியாமல் உள்ளுக்குள் புகைச்சல் கிளம்பியிருந்தது. கஷ்டப்பட்டு அதுமாதிரி வந்த எண்ணங்களை அடக்கிக் கொண்டாள். சாம்பவியை பார்க்கும்போது அந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் அடங்கிப்போகும்.   ஒரு சமயம் அவள், “அக்கா வீட்டு வேலைகளைத்தான் நான் கவனிச்சுக்கிறேனே அப்புறம் ஆயா எதுக்கு நிறுத்தி விடலாமே” என்றாள்.   அதை கேட்கவும் சாம்பவிக்கு சந்தோஷமாக இருந்தது. “உனக்கு வேணாம்னு தோணுச்சுன்னா நிறுத்திடும்மா” “அப்புறம் ஏங்க்கா, விஜியை இன்னும் எதுக்கு    காப்பகத்தில் கொண்டு போய் விடணும், நான் பார்த்துக்க மாட்டேனா?” “எதுக்கும்மா உனக்கு சிரமம்?” “எனக்கென்ன சிரமம். சமையலை முடிச்சா அப்புறம் எனக்கென்ன வேலை இங்கே” “அதுக்காக சொல்லலை லதி. இப்போதான் கல்யாணம் ஆகி வந்திருக்கே. கொஞ்ச நாளைக்கு ப்ரீயா இரேன். அவரையும் அழைச்சிட்டு வெளியே எங்கேயாச்சும் போய்வாயேன்” “அவருக்கு நேரம் கிடைக்கணுமே” அவருக்கு நேரம் கிடைக்கும்போது போகலாம்னு இருந்தாய் என்றால் கிழவியாகி விடுவாய். அப்புறம் குச்சி ஊன்றிக் கொண்டுதான் போக வேண்டி வரும். ஆம்பளைங்க எதிலுமே அலட்சியமாகத்தான் இருப்பாங்க நாமதான் ப்ரோகிராம் பண்ணி நச்சரிக்கணும்” “எனக்கு பயமாயிருக்குக்கா” “நானிருக்கும்போது உனக்கேன் பயம். ஓண்ணு செய்கிறாயா, அவரையும் அழைச்சுகிட்டு இன்னிக்கு படத்துக்கு போய் வாயேன்” “என்ன படம், எந்த தியேட்டர்னு எனக்கு தெரியாதேக்கா” “அதெல்லாம் அவருக்குத் தெரியும். வேலைக்காரனை அனுப்பி ரிசர்வ் பண்ணிட்டு வரச்சொல்லு” “எந்த தியேட்டருக்கு?” “பத்து பனிரெண்டு தியேட்டர் இருக்கு. வேணும்னா செட்டிக்குளத்துக்கு சக்ரவர்த்திக்கு அனுப்பேன்” என்றவள் வேலைக்காரனை அழைத்து, எந்த படம்ப்பா நல்லா இருக்கு?” அவன், “யுவராஜவுல நல்ல படமாம்” என்றான்.   “சரி அதுலயே ரிசர்வ் பண்ணிறேன்” “அவர் வருவாராக்கா” “அதான் ரிசர்வ் பண்ணிட சொன்னேனே” லதிகா சமையல் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வேலைக்காரனை அனுப்பி கோவில் திடலுக்கு போய் யுவராஜாவில் மாலைகாட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளை புக் பண்ணிவிட்டு வரச் செய்தாள்.   கணவனுடன் முதன் முதலில் வெளியே கிளம்புகிறோம், சினிமா பார்க்கப் போகிறோம் என்று நினைத்த போது அவளுக்கு மனம் குளிர்ந்தது. உல்லாசம் பாடியது. நான்கு மணியிலிருந்து அவனுக்காக காத்திருந்தாள்.   சாம்பவி தன்னுடைய பட்டுப் புடவைகளையும் நகைகளையும் அவளை எடுத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தாள். லதிகா மறுத்துங்கூட அவள் விடவில்லை.   “இனி எனக்குன்னு இந்த வீட்டுல எதுவுமே இல்லை. எல்லாமே உன்னோடதுதான். உனக்குத்தான்” அவளால் மறுக்க முடியவில்லை. அக்காவின் புடவையில் நம்மை பார்த்தால் அவர், அக்காவை பார்ப்பது போலவே உணருவார். சந்தோஷப்படுவார். அவருக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் ஏன் நாம் உடுத்திக் கொள்ளக் கூடாது?  லதிகா சாம்பவியின் புடவையையும் நகைகளையும் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டாள். அவளுக்கு பொருமிதமாகவும், பூரிப்பாகவும் இருந்தது. இத்தனை நகைகளை அவள் இதுவரை போட்டுக் கொண்டதே இல்லை. அதற்கான வசதியும் இல்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை.  இப்போது முதன்முறையாக போட்டுக் கொண்ட போது உடல் புல்லரித்தது. சாம்பவிக்கு மனம் நன்றி சொன்னது. அலங்காரத்துடன் அவளிடம் போய்,   “நல்லாருக்காக்கா” சாம்பவி அவளைப் பார்த்து பிரமித்துப் போனாள். “லதி, உன் பெயர் லதி இல்லை. ரதி தேவதை மாதிரி இருக்கிறாய். உன்னை பார்த்தால் அவர் அசந்து போகப் போகிறார் பார்” “அவருக்கு என்ன ஹேர்ஸ்டைல் பிடிக்கும்?” “அப்படி பிரத்யேகமாய் எதுவுமில்லை. தலைநிறைய மல்லிகை பூ வச்சுகிட்டா ரசிப்பார். போய் வாங்கி வந்து வச்சுக்கோ...” “இதே...” என்று லதி பணம் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். தெருமுனையில் பூ வாங்கிக் கொண்டு வரும்போது விஜயகுமார் ஆபீசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான்.  ஸ்கூட்டரை நிறுத்தும்போது அவளது அலங்காரத்தையும், சாம்பவியின் புடவை, நகைகளையும் கண்டதும் அவனுக்கு சட்டென்று கோபம் வந்தது.   “என்ன இதெல்லாம்...?” “அக்கா கொடுத்தாங்க. இந்த புடவை எனக்கு நல்லாருக்காங்க...?” கேட்டு விட்டு அவள் வாசலில் நிற்க. அவன் பதில் சொல்லவில்லை. முறைத்தான்.   “நாம சினிமாவுக்கு போகலாமாங்க, குழந்தையையும் தூக்கிட்டுதான்.” “குழந்தை அழுவா.” “நான் பார்த்துக்கிறேன்.” “சாம்பவியை விட்டுட்டா...?” “அக்கா தான் போய் வரச் சொன்னாங்க. டிக்கட்கூட ரிசர்வ் பண்ணியாச்சுங்க. இதே...” என்று அவள் நீட்ட, அதை பிடுங்கி சரக்கென கிழித்து அவளது முகத்தில் எறிந்தான், ஆசையுடனும், ஆர்வத்துடனும் நின்றிருந்தவளுக்கு அது பேரிடியாய் விழுந்தது. அவன் அப்படி நடந்து கொள்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்கக வில்லை. அவளுடைய முகம் வாடிப்போயிற்று. கன்னம் கசங்கிப் போனது. கண்கள் நனைந்தன.   “அக்கா தாங்க ரிசர்வ் பண்ணிட்டு வரச் சொன்னாங்க.” “அவ சொன்னா உடனே செய்துரணுமா? உனக்கு அறிவு எங்கே போச்சு...? அவ படுக்கையில் கிடக்கும்போது நாம சினிமாவுக்கு போய் மகிழணுமா? ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ. இங்கே அவள்தான் முக்கியம். அவள்தான் எனக்கு முதல்ல. அதற்கு பிறகுதான் நீ! அவளுக்கு அனுபவிக்க முடியாத எந்த விஷயமும் நமக்கு வேண்டாம். உனக்கும் வேண்டாம். இன்னைக்கு சொல்றதுதான். மனசுல நல்லா வாங்கிக்கோ. சும்மா சும்மா சொல்லிகிட்டேயிருக்க முடியாது ஆமாம்!” அவன் விருட்டென உள்ளே போனான். அவளுக்கு மனது வலித்தது. அந்த வார்த்தைகள் வேதனை தந்தன. நான் அப்படி என்ன தவறு செய்து விட்டேன். ஆசைபடக் கூடாதா எதற்கு ஆசைப்பட்டு விட்டேன்? இத்தனை கோபப்படுகிற அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்?   விஜயகுமார் செருப்புக்களை உதறிவிட்டு நேராய் சாம்பவியிடம் போனான். கட்டிலில் அவளுக்கருகில் அமர்ந்து கொண்டு, “மாத்திரை சாப்பிட்டாயா சாம்பி...?” “சாப்பிட்டேங்க. விஜியை அழைச்சு வரலே...?” “இன்னும் நேரமிருக்கு.” “லதியும், நீங்களும் வெளியே போயிட்டு சினிமா பார்த்துட்டு வாங்க. வீட்டுக்குள்ளேயே அவளுக்கு போரடிக்கும்ல்லே...?” “எனக்கு தலைவலிக்கிறது சாம்பி” “வெளியே காத்தோட்டமாய் போய் வந்தால் எல்லாம் சரியாகி விடும்” “இன்று வேண்டாம். அலுப்பாய் இருக்கிறது.” “அப்போ அந்த டிக்கட்டுகள்...?” “குழந்தையை அழைக்கப் போகும்போது யாருக்காவது கொடுத்தாப்போச்சு!” என்று பொய் சொன்னான்.   “பாவம்ங்க அந்த பொண்ணு. சினிமாவுக்கு போகலாம்னு எத்தனை ஆசைகளோடும், கனவுகளோடும் இருக்கு தெரியுமா...?” “சினிமா வேணும் என்றால் டி.வி.யில் பாருங்கள். டெக் வாங்கி தருகிறேன். கேசட் எடுத்து ரெண்டு பேரும் பாருங்கள்!” “எனக்கு தான் தலைவிதி. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கணும்னு. அவ என்ன பாவம் பண்ணினா...? தியேட்டர்ல அழைச்சு போய் காண்பியுங்களேன்”       11.   “அதான் சொன்னேனே...இன்னைக்கு எனக்கு மூட் இல்லை!” விஜயகுமார் சொல்லிவிட்டு முகம் கழுவிக் கொண்டு தன் அறைக்கு போனான்.   அவன் அப்போது என்றில்லை. எப்போதுமே அப்படித்தான் நடந்து கொண்டான். லதிகாவை வெளியே அழைத்துப் போவதை எந்த விதத்திலாவது தகர்த்துக் கொண்டே வந்தான். அது அவளுக்குள் ரணத்தை ஏற்படுத்திற்று. ஆனாலும் கூட பொறுத்துக் கொண்டாள்.   நாட்கள் ஓடின. மாதங்களாய் நகர்ந்தன.   லதிகாவிற்கு சாம்பவியை ரொம்பவும் பிடித்திருந்தது. அவளடைய குணம் அவளை சாந்தப்படுத்தி கட்டிப் போட்டிருந்தது. மாலை வேளைகளில் அவள் சாம்பவியை வீல்சேரில் அமர்த்தி, மடியில் குழந்தையை அமர வைத்து தோட்டத்தில் சுற்றி வருவாள். குந்தையுடன் பந்து விளையாடுவாள். அவளுக்காக பேப்பரும், வார இதழ்களும் படித்து காட்டுவாள்.   அலுவலகத்திற்கு போன் பண்ணி, சாம்பவியை கணவனுடன் பேசச் சொல்லி ரசிப்பாள். மொத்தத்தில் லதிகா தன்னால் அந்த வீட்டில் எந்த பிரசினையும் வந்து விடக்கூடாது என்று பொறுமையாய் இருந்தாள். அங்கு அவளுக்கென்று எதுவுமே செய்வதில்லை. சமையலிலிருந்து காய்கறிகள் வரை எல்லாமே சாம்பவியின் முடிவுதான்.   சாம்பவிகூட சமயத்தில், “என்னையே எதற்கு கேட்கிறாய். உன்விருப்பப்படி செய்யேன்!” என்பாள்.   “இங்கே என் விருப்பம்னு எதுவுமே இல்லைக்கா. உங்க விருப்பம்தான் எங்கள் விருப்பம்!” என்று சொல்லி சிரிப்பாள்.  அவள் அனுசரித்துப் போக, போக விஜயகுமார் அவளை ரொம்பவே நோகடித்துக் கொண்டிருந்தான். லதிகாவின் அண்ணனும், அண்ணியும் அவளை தீபாவளிக்கு ஊருக்கு அழைக்க வேண்டி வந்திருந்தனர்.   அனால் அவனோ, “எனக்கு இந்த தீபாவளி, பொங்கல் எல்லாம் பெரிசில்லை. சாம்பவி இப்படி ஆன பின்பு நான் பண்டிகையே கொண்டாடுவதில்லை” என்று முகத்திலடித்த மாதிரி சொல்லி விட்டான்.   “ஆனாலும் இது தலை தீபாவளியாயிற்றே. நீங்கள் அவசியம் வர வேண்டும். அதுதானே முறை...?” “முறையை பார்த்தால் முடியுமா. நான் அங்கே வந்து விட்டால் சாம்பியை யார் பார்த்துக் கொள்வார்கள்...? நாங்கள் வந்து அங்கே அனுபவிக்க வேண்டும். பட்டாசு விட வேண்டும். சாம்பி இங்கே அனாதையாய் கிடக்க வேண்டுமா? ஸாரி, நாங்கள் வருவதாயில்லை” என்று அவர்களை அனுப்பி விட்டான்  “அக்காவை விட்டுட்டு நாம ஊருக்கு போறது சரியில்லைதாங்க. ஆனா இங்கேயே தீபாவளி கொண்டாடலாமில்லே...! இங்கேயே பட்டாசு கொளுத்துவோம்!” “லதிகா!” என்று அவன் கத்தினான். “உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அது சாம்பவியும் பங்கு கொள்கிற மாதிரி தான் இருக்க வேண்டும். அவள் பங்கு பெறாத எந்த பண்டிகையுமே வேண்டாம். இது பற்றி அவளிடம் மூச்சு விட்டாய் என்றால் தெரியும் சேதி” என்று அவளை மிரட்டி வைத்தான்.   சாம்பவி பட்டாசு வாங்கி வரச் சொன்னபோது “தீபாவளி கொண்டாடலேன்னா என்ன சாம்பி...?” என்றான்.   “ஊரல்லாம் கொண்டாடும்போது நாம் சும்மா இருக்க வேண்டுமா? போங்கள், போய் வாங்கி வாருங்கள்!” என்று அவள் விரட்ட, அவன் அப்படியே பிளேட்டை மாற்றி, “வேண்டாம் சாம்பி! லதிகாவிற்கு பட்டாசு என்றால் அலர்ஜியாம். பயப்படுவாளாம். அதனால்தான் சொல்கிறேன்!” என்று சமாளித்தான்.   “லதி! அப்படியா... உனக்கு பட்டாசு என்றால் பயமா...?” “ஆமாங்க்கா!” என்று அவளும் பொய்யாய் தலையாட்டி விட்டு படுக்கையில் போய் விழுந்து விம்ம ஆரம்பித்தாள்.   மாதங்கள் வேகமாய் நகர்ந்தன.   அவர்களுடைய திருமணநாள் வந்தது. லதிகா திருமண நாள் என்று பெரிதாய் எதுவும் கனவு காணவில்லை. நாம் பாட்டிற்கு கனவு கண்டு. எதிர்பார்போடு எல்லா ஏற்பாடுகளும் செய்து, கடைசியில் அவர் கலைத்து விட்டார் என்றால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று அவள் பேசாமலிருந்தாள்.   ஆனால் சாம்பவி விடவில்லை.   “லதிகா உன் வெட்டிங்டேக்கு என்ன பிரசண்டேஷன் வேணும் சொல்லு?” “பிரசண்டேசனா, வெட்டிங்டேயே கொண்டாடுவதா இல்லை” “ஏன் ஏன் அப்படிச் சொல்கிறாய்? ஒரு பெண்ணுக்கு கல்யாண நாள் தான் வாழ்க்கைல திருப்பம் தருது. அதை எளிதாய் மறந்திர முடியுமா? காலம் பூரா நினைச்சு நினைச்சு சந்தோஷப்படற நாளாச்சே அது. உனக்கு என்ன வேணுமானாலும் சொல்லு. வாங்கித் தாரேன்” லதிகா எதுவும் சொல்லவில்லை. “எனக்கு எதுவும் வேண்டாம்க்கா அவரை சந்தோஷமா பேசச் சொல்லுங்க. அதுவே போதும்” என்று சொல்ல நினைத்தாள்.   “என்னம்மா பதிலேயே காணோம்? அவர் உங்கிட்ட பிசினஸ் பத்தி பேசுகிறாரா? கணக்கு வழக்கு பத்தியெல்லாம் பேசுவாரா?” “இல்லை” “ஏன்? எங்கிட்ட வந்து எல்லாம் ஒப்பிப்பாரே. இப்போதும் ஒப்பிக்கிறாரே!” சாம்பவி சொன்னதும் லதிகாவின் முகம் சோம்பிப் போயிற்று. “நீங்கள் அவருக்கு வேண்டும். நீங்கள்தான் அவருக்கு முக்கியம். நான்தான் வேண்டாதவளாயிற்றே. இந்த வீட்டில் எனக்கென்ன அந்தஸ்து? நான் வேலைக்காரிதானே?” “லதி! நீ வீட்டு பொறுப்புகளை மடடும் கவனிச்சாப் போதாது. அவரோட பிசினஸ் பத்தியும் தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டணும். சமயத்துல அவர் வெளியூர் போக வேண்டியிருக்கும். அந்த நேரத்துல நீதான் போய் பார்த்துக்க வேண்டியிருக்கும் என்ன?” “சரிக்கா” என்று நழுவினாள். பிசினஸ் பற்றி தெரிஞ்சுக்க நானா ஆர்வமில்லாமலிருக்கிறேன். அவர் வாயைத் திறந்தால்தானே!  விஜயகுமார் வந்ததும் சாம்பவி, “நாளைக்கு உங்களோட வெட்டிங்டே! ஞாபகமிருக்கில்லே” என்றாள்.   “அதற்கென்ன இப்போ” என்றான் அலட்சியமாய்.  “அதற்கென்னவா? அதை சிறப்பா கொண்டாட வேணாமா?” “எதுக்கு? நம்மோட வெட்டிங்டேயும்தான் போன மாதம் வந்தது. அதை யாரும் இங்கே கொண்டாட வில்லையே. கொண்டாட தோன்றவில்லையே?” “அது வந்து... நம்மோட வெட்டிங்டே இனி எதற்கு. லதிகா வந்த பின்னால் அது தேவையில்லாத ஒண்ணு இனிமே இதைத்தான் கொண்டாடணும்.” “நோ. யார் வந்தும் யாரும் அடிபட்டுப் போகக்கூடாது. நீ என்றைக்கும் நீதான். எனக்கு என்றுமே நீதான்.” “ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க. அவ காதுல விழுந்தா எத்தனை வருத்தப்படுவா.” “வருத்தப்பட்டா படட்டும். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என் மனசை மாத்திக்க முடியலை. என்னால இயல்பா இருக்க முடியலை. மனசுல உன்னை வச்சுக்கிட்டு வெளியே வேஷம் போடுவது என்னால முடியாத காரியம்” அவர்கள் பேசிக் கொண்டிருந்தது லதிகாவின் காதிலும் விழவே செய்தது. இங்கே நான் வேண்டாம் என்றால் எதற்காக என்னை கட்டிக் கொள்ள வேண்டும்? கட்டிக் கொண்டு விரோதி போல நடத்த வேண்டும்.  என்னிடம் என்ன குறை? ஏழை என்பது ஒரு பலவீனம். பணம் இல்லை டவுரி கொண்டு வரவில்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?   அவள் உடைந்து போனாள். நானும் பெண்தானே எனக்கு மட்டும் ஆசாபாசங்கள் இல்லையா இருக்கக் கூடாதா? அக்காவுடன் அவர் பேசக் கூடாது என்றா சொல்கிறேன். எனக்கும் கொஞ்சநேரம் ஒதுக்குங்கள் என்று தானே கேட்கிறேன். இது தவறா? என்று ஒரு பக்கம் அவள் நினைத்து வருந்தினாலும் இன்னொரு பக்கம் அவன் சாம்பவியின் மேல் வைத்திருக்கிற பாசத்தை நினைத்து மனம் பிரமித்து வியந்தது.   எத்தனையோ பேர் பெண்டாட்டி நல்ல நிலையிலே இருக்கும்போதே அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்டாட்டி தளர்ந்த போதும் கூட அவளையே நினைத்து அவளுக்காகவே உருகுகிறாரென்றால் இவர் நிச்சயம் சாதாரண மனிதர் இல்லை. கோவிலில் வைத்து பூஜிக்க வேண்டியவர். அப்படிப்பட்டவர் நம்மையும் நிச்சயம் கைவிட மாட்டார். நமக்கும் ஒரு காலம் வரும். நம் மீதும் அன்பு செலுத்துவார். அதுவரை பொறுமையாக இருப்போம் என்று லதிகா தன் மனதை தேற்றிக் கொண்டாள்.   மறுநாள் சாம்பவி, விஜயகுமாரை கட்டாயப்படுத்தி லதிகாவையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போய் வரும்படி அனுப்பினாள். வழியில் எக்ஸிபிஷன் ஒன்று நடக்க, அதற்கும் போய் வாருங்கள் என்றிருந்தாள்.   அவன் கோவிலுக்கே வேண்டா வெறுப்பாகத்தான் போனான். எக்ஸிபிஷன் போகும் வழியிலெல்லாம் அவளை கடுப்படித்தான்.  12.   மனுஷனுக்கு நிற்க நேரமில்லாமல் அலையறானாம். இதில் எக்ஸிபிஷன் பார்க்காததுதான் குறை. எல்லாம் என் தலையெழுத்து” என்று திட்ட, அதுவரை அவனை எதிர்த்து பேசாத லதிகா வெடிக்கலானாள்.   “நானா உங்களை எக்ஸிபிஷன் அழைச்சு வரச் சொன்னேன்? விருப்பமிருந்தா வாங்க, இல்லாட்டி போங்களேன்” “ஏய், உனக்கு அவ்ளோ திமிரா போச்சா? இத்தனை வருட பழக்கத்தில் சாம்பவி என்னை ஒரு வார்த்தை எதிர்த்து பேசியிருப்பாளா? நேற்று வந்த உனக்கு இத்தனை வாய் கொழுப்பு” “இதோ பாருங்கள் வாய்கொழுப்பு, அதுஇதுன்னு பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்.” அங்கே விவாதம் வளர்ந்தது. சூடு பிடித்தது. வேண்டாத விதத்தில் திரும்பியது,   “நான் அப்படித்தான் பேசுவேன். என்னடி பண்ணுவே நீ?” “என்ன பண்ணி விடுவேன் என்கிற மதர்ப்பில்தானே இத்தனை அலட்சியப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு அவங்கதான் வேணும். அவங்கதான் முக்கியம்னா எதுக்காக என்னை கட்டிக்கொள்ள வேண்டும்? என் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும்?” “ஆமாம், நான் உன் வாழ்க்கையை சீரழிக்க வேண்டிதான் கட்டிக் கொண்டேன். உன் மீது எனக்கு ஜென்ம பகை இருந்தது. அதனால் தான் கட்டிக் கொண்டேன். போதுமா? இன்னொண்ணும் சொல்கிறேன் கேட்டுக் கொள். சாம்பவியிடம் கோள் சொல்லி அது வேண்டும், இது வேண்டும் என்று எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று மட்டும் நினைக்காதே. உன் விஷயத்தில் என்னால் இவ்வளவு தான் முடியும். எனக்கு சாம்பவிதான் முக்கியம். அவளுக்கு பிறகு தான் நீ. எல்லாவற்றையும் அனுசரித்து காலந்தள்ள முடியும் என்றால் நீ இங்கே இரு. இல்லா விட்டால் ஓடிப்போ!” விஜயகுமார் கிறுக்கு பிடித்த மாதிரி போசினான். அவள் என்ன தப்பு செய்து விட்டாள். எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறோம் என்று அவன் யோசிக்கவே இல்லை. சாம்பவியின் மேல் அவனுக்கிருந்த அன்பும் ஆதங்கமும் அவனுடைய கண்களை மறைத்தன. எத்தனை முயன்றும் கூட அவனால் அவளை மறக்க முடியவில்லை. லதிகா வந்து தங்களிடையே நிற்கிறாள். தங்களை பிரிக்கப் பார்க்கிறாள் என்றே நினைத்தான். அதனால் அவனை பொருத்தவரை அவள் எதிரியாகவே பட்டாள்.   “இதோ பாருங்க, உங்களுக்கு என்னை பிடிக்கலேன்னா நேரிடையா சொல்லிடுங்க. அதுக்காக உங்க பேச்சை யெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கணும்னு எனக்கொண்ணும் தலையெழுத்தில்லை. நான் எங்கண்ணன் வீட்டுக்குப் போறேன்” “போறதுண்ணா போயேன். நீஇல்லாட்டி இங்கே ஒண்ணும் நடக்காதா?” அன்று ராத்திரி லதிகா தூங்கவேயில்லை. தனியாகபடுத்து விம்மிக் கொண்டிருந்தாள். எதிர்காலம் அவளுக்கு சூன்யமாய் தெரிந்தது. திருமண நாள் என்று எல்லோரும் எத்தனை சந்தோஷப்படுவார்கள். எத்தனை ஆர்ப்பரிப்பார்கள்.  மனைவியை வைத்த இடத்தில் வைக்காமல் கொஞ்சுவார்கள். ஆனால் இங்கேயோ... இனியும் இவற்றை தாங்கிக் கொண்டிருக்க முடியாது. பேசாமல் அண்ணன் வீட்டிற்கு போக வேண்டியதுதான்.  அங்கே போகலாம். ஆனால் அவர் வருத்தபடுவாரே? எத்தனை நாட்களுக்கு அங்கு தாக்கு பிடிக்க முடியும். கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைத்து ஆளாக்கினார். கல்யாணமும் பண்ணி வைத்தார். இப்போது புருஷனோடு சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன் என்றால் அவருடைய மனது எவ்வளவு பாடுபடும். இது தேவை தானா? இது முறைதானா?   ஒரு பெண்ணிற்கு கல்யாணம் நடக்காமலிருப்பதைவிட கொடுமை வேறெதுவுமில்லை. அதைவிட கொடுமை வாழாவெட்டி என்கிற பட்டம். கடவுளே...எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? என் பாகத்தில் என்ன தப்பு?  இத்தனை நாட்கள் எல்லோருடனும் அனுசரித்து போகவில்லையா? இவர் சொல்வதையெல்லாம் கேட்க வில்லையா? அக்காவை பார்த்துக் கொள்ளவில்லையா? விஜியை என் குழந்தையாக கவனித்துக் கொள்ளவில்லையா? அப்புறம் ஏன் இவர் என்னை விரட்டி விரட்டியடிக்கிறார்? இதற்கு ஒரு முடிவே இல்லையா?   காலம் முழுவதும் நான் கண்ணீர்விட வேண்டியது தானா? அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பொறுமை, பொறுமை என்று மனது அவளை அமைதிப்படுத்திற்று. அவசரப்படாதே. காலம் கனியும். அதுவரை காத்திரு. காற்று எப்போதும் ஒரே பக்கத்தில் அடிப்பதில்லை. அதன் காட்டமும் குறையும். திசையும் மாறும்.   சாம்பவி கடந்த ஒரு வாரமாகவே லதிகாவை கவனித்து வந்தாள். அவளுடைய முகத்தில் ஒளி இல்லை. அவள் சரியாய் பேசுவதில்லை. அவளுக்கும் கணவனுக்குமிடையே என்னவோ நடந்திருக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.  இத்தனை நாள் சந்தோஷத்துடன் உலா வந்தவளுக்கு இப்போது என்னாயிற்று? கணவன் கண்டித்திருப்பாரோ...?   அவனிடம் விவரம் கேட்க, “ஏன் ஒண்ணுமில்லையே... நாங்க எப்போதும் போலதானே இருக்கோம்” என்று நழுவினான். அந்த நழுவலிலேயே என்னவோ இருக்கிறது என்பது புரிந்து போயிற்று.  லதிகா எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. சும்மா இருந்தவளை பிடித்து வந்து நாம் தான் கட்டி வைத்தோம். அவளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதற்கு நாம்தான் பொறுப்பு. நாம் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும். எப்படி தீர்த்து வைப்பது? என்ன பிரச்சினை என்று எப்படி தெரிந்து கொள்வது?  விஜியகுமார் கிளம்பிப் போனதும் சாம்பவி அவளை அழைத்தாள். அழைத்து தன்னருகில் வைத்துக் கொண்டு “லதி! நான் ஒரு விஷயம் கேட்டால் மறைக்காமல் சொல்வாயா?” “என்ன விஷயம்க்கா...” “எனக்கு நோய் என்றதும் பயந்து போனேன். குழந்தையையும், கணவனையும் இனி யார் பராமரிப்பார்கள் என்று உடைந்து போயிருந்த மனத்திற்கு நீ உரம் போட்டாய். நானிருக்கிறேன் என்று சேவகத்திற்கு வந்தாய். ஆனால்...” “என்னக்கா” “நீ சந்தோஷமாய் இருக்கிறாயா?” “எனக்கென்ன குறைச்சல்! ஐ ஆம் ஆல்ரைட்” “நீ சொல்லும் தோரணையே உன்னைக் காட்டிக் கொடுக்கிறது. உன் கண்கள் பொய் சொல்லவில்லை. நீ மகிழ்ச்சியாய் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவர் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறார்” “நல்லாதான் நடந்துக்கிறார்” “அப்படி ஒண்ணும் தெரியவில்லையே. கல்யாணமாகி ஒன்றரை வருடமாகிறது. அதற்கான அறிகுறியே தெரியவில்லையே. உனக்கு குழந்தை மேல் ஆசையில்லையா?” “குழந்தை மேல் ஆசைப்படாத பெண்ணும் உண்டா?” “அப்புறம் ஏன் இன்னும் நீ உண்டாகாமல் இருக்கிறாய்?” “அது வந்து வந்துக்கா...” என்று அவள் தயங்கினாள். இதுதான் சந்தர்ப்பம். எல்லாவற்றையும் போட்டு உடைத்து விடலாமா? நமக்கு விடிவுகாலம் என்று ஒன்று உண்டென்றால் அது இவர்கள் மூலமாகத்தான் வரவேண்டும் என்று நினைத்தாள்.  “சொல்லும்மா” “வந்து விஜி இருக்கும்போது இனி எதுக்காக உண்டாகணும்? நமக்கு விஜி போதாதாக்கா” “அப்படின்னு அவர் சொன்னாரா!” “இல்லை. எனக்கு அடுப்படியில் வேலையிருக்கு. அப்புறமா பேசலாம்” என்று அவள் எழ,   “லதி, ஏன் நழுவுகிறாய்? உட்கார். இங்கே அடுப்படி முக்கியமில்லை. அடுப்பு காய்ந்தாலும் பிரச்சினையில்லை நீ காயக் கூடாது. உனக்குன்னு ஒரு குழந்தை வேணும். பத்து மாதம் சுமந்து பெத்துக்கொள்கிற சுகத்தையும், வேதனையையும் நீயும் அனுபவிக்கணும். அதில்லைன்னா அப்புறம் பெண்ணுக்கு என்ன பெருமை?” “அவர் சம்மதிக்க மாட்டார்க்கா” “நான் சொல்றேன்” “வேண்டாம்” என்று அவள் அவசரமாய் மறுத்தாள். “நீங்கள் எளிதாய் சொல்லி விடுவீர்கள். அப்புறம் அவர் என்னை அடிப்...” “அடிப்பாரா? அந்த அளவிற்கு அவர் உன்னிடம் கொடூரமாய் நடந்து கொள்கிறாரா?” ‘இல்லைக்கா இல்லை... அவர் நல்லவர். அப்படியெல்லாம் செய்ய மாட்டார்” “லதி, உட்கார் இப்படி! இத்தனை தூரம் நீ பட்டிருக்கிறாய். அடி வாங்கியிருக்கிறாய். ஏன் என்னிடம் இது பற்றி சொல்லவே இல்லை?” லதிகா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்கிக் கொள்ள முயன்றாள். அவளையும் மீறிக் கொண்டு கண்கள் வெடித்தன.   நாம் வாயை திறந்திருக்கவே கூடாது. நமக்கு குழந்தை இல்லா விட்டாலும் பரவாயில்லை. நம்முடன் அவர் அன்பாய் நடந்து கொள்ளாவிட்டாலும்கூட போகட்டும். எக்காரணம் கொண்டும் நம்மை வீட்டை விட்டு அனுப்பி விடக் கூடாது. நம் துன்பம் நம்முடனேயே இருக்கட்டும். அண்ணனுக்கும், அண்ணிக்கும் தெரிய வேண்டாம்.     13.   நான் சந்தோஷமாக இருப்பதாக அவர்கள் நினைத்து நிம்மதியடைகிறார்கள். அவர்களுடைய சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும்? இப்போது குழந்தை வேண்டாம் என்று அவர் சொன்னார் என்று அக்காவிடம் சொன்னால், அவரிடம் போய் கேட்பார்கள். அவர் உடனே வெடிப்பார் ‘போடி வீட்டை விட்டு’ என துரத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   “லதிகா, நான் கேட்கிறேனில்லே அவர் குழந்தை வேண்டாம்னு சொல்லியிருக்கலாம். நீ பெத்துக் கொண்டால் விஜியை கவனிக்காம விட்டுருவயோன்னு பயந்திருக்கலாம். ஆனால் நீ அப்படிப்பட்டவள் இல்லை என்பதும் எந்த அளவிற்கு ஈடுபாட்டோட அவளை பாதுகாக்கிறாய் என்பதையும் தான் நாங்கள் பார்க்கிறோமே. நீ நல்லவள். உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரிடம் எடுத்துச் சொல்லி பெற்றுக் கொள்” லதிகா அப்போதும் கூட பேசவில்லை.   “லதி, உங்களுக்கு குழந்தை வேண்டாம்னு மட்டும் தான் சொன்னாரா, இல்லை உறவே வேண்டாம் என்றாரா?” லதிகாவிற்கு அதற்கு மேலும் அங்கே இருக்க முடியவில்லை. அழுது கொண்டு தன் அறைக்கு ஓடிப்போனாள். அவளுடைய நிலைமை சாம்பவியை பாதித்தது. சே! கொடுமை இது! எப்படி எப்படியோ வாழ வேண்டிய பொண்ணு! நம்மால் இங்கே வந்து அசைப்பட்டு துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இது தேவைதானா? இதற்கு தானா நாம் ஆசைப்பட்டோம்?   எத்தனை பெரிய லட்சியத்துடன் அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம். எல்லாவற்றையும் சிதைத்து விட்டாரே. அவள் எத்தனை ஆசைகளையும், கனவுகளையும் மனதில் சுமந்திருப்பாள்! புது கணவன் நம்மை அங்குலம் அங்குலமாக பாராட்டுவான், சீராட்டுவான் என்று...   எல்லாமே போயிற்று. இத்தனை நாட்களாக நாமும் அசட்டையாக இருந்து விட்டோம். முன்பே தலையிட்டு அவரை கண்டித்து இருக்க வேண்டும். ஒரு புஷ்பம் கண் முன்னாலேயே வாடிக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம்.  வெளியே சிரித்து சிரித்து பேசுகிறாளே, முகம் கோணாமல் நடக்கிறாளே... அவர் சந்தோஷமாக தான் வைத்திப்பார் என்று தப்பு கணக்கு போட்டு விட்டோம். வெளியே அழைத்து போகாத போதுகூட வேலைப் பளுதான் காரணம் என்றல்லவா நினைத்தோம்.   எல்லாவற்றிற்குமே காரணம் நான் தானா? என் மேலுள்ள அன்பினால்தான் அவளை வெறுக்கிறாரா? இந்த மாதிரி நடந்து கொள்வார் என்று தெரிந்து இருந்தால் கல்யாண பேச்சையே எடுத்திக்க மாட்டேனே! பாவம் அவள்! ரெண்டாம் தாரம் என்பதையும், அதிக வயது என்பதையும் பொருட்படுத்தாது வந்தவளுக்கு எத்தனை பாதிப்புகள். ஒரு பெண்ணால் இந்த கொடுமையை எத்தனை நாட்களுக்கு தான் தாங்கிக் கொள்ள முடியும்?   குழந்தை வேண்டாம் என்பதே கொடுமை. அதிலும் கொடுமை உறவே வைத்துக் கொள்ளாமலிருப்பது. இவளால் எப்படி இத்தனை நாட்கள் தாங்கிக் கொள்ள முடிந்தது... லதி! நீ ஒரு தெய்வம். இதே நிலைமையை வேறு எவரோ ஏன் நானே கூட சந்தித்து இருந்தால் இந்நேரம் கலகம் மூண்டிருக்கும். அவரை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பேன்.   நடந்ததொல்லாம் நடந்து விட்டது. இனி நடப்பதையாவது உடனே சீர் செய்தாக வேண்டும். லதியை அவர் வெறுக்க காரணம் என்ன? அவளிடம் என்ன குறை?   நீண்ட யோசிப்பில், குறை எதுவுமில்லை. அவர்களுக்கு குறுக்கே நிற்பது நாம்தான் என்பது சாம்பவிக்கு புரிந்தது. நாம் இருப்பதால் தான் அவரால் அவளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நெருங்க மறுக்கிறார்.   நம்மை பார்க்கும் போதெல்லாம் அனுதாமும், குறுகுறுப்பும் அவரை வாட்டி படைக்கிறது போலும். அதனால் தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார்.   அதுதான் அவர்களுடைய விரிசலுக்கு காரணம் என்றால் உடனே ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இந்த பூவை இனியும் வாடவிடக் கூடாது. இந்த தளிர் தளர்ந்து போக அனுமதிக்கக் கூடாது.   நாம்தான் இப்படியாகி விட்டோம். நமக்கென்று இனி எதுவும் இல்லை. நாம் ஒரு முற்றுப்புள்ளி. அவன் எப்போது அழைக்கிறானோ அப்போது கண்களை மூட வேண்டியது தான்.  ஆனால் அவள் அப்படியா! வாழ வேண்டியவள். அனுபவிக்க வேண்டியவள். நாம் தான் அவளை இங்கே கொண்டு வைத்தோம். நாமே அவளுக்கு இடைஞ்சலாக இருந்தால் எப்படி? இங்கிருக்கக் கூடாது.   பாழாய்ப் போன கடவுள் நம்மை அழைத்துக் கொள்ள மாட்டேன்கிறானே. இதை எல்லாம் பார்த்து வெம்ப வேண்டும் என்று தலையெழுத்து.   தலையெழுத்தில்லை. இது நாமாகவே இழுத்துப் போட்டுக் கொண்டது. இதை நாமாகத்தான் தீர்த்து வைக்க வேண்டும். அவரை விட்டுப் பிரிந்து போக வேண்டும். பிரிந்திருந்தால் அவருக்கு நம்மேலுள்ள குறுகுறுப்பும் அன்பும் குறையலாம். நம்மை அருகில் வைத்துக் கொண்டு அவளுடன் பழகுவதற்கு சங்கோஜம் இருக்கலாம்.   நாம் தள்ளிப் போய்விட்டால் ஒவ்வொரு காரியத்திற்கும் அவர் அவளைத்தான் நாடியாக வேண்டும். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் வளரும். அன்பு பெருகும். அவளுடைய சேவையையும், தேவையையும் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதன் பின்பு அவள் மேல் வெறுப்பை கொட்ட மாட்டார். கொட்டவும் இயலாது   லதிகாவைப் பொருத்தவரை அவள் நல்லவள். நம் குழந்தையை நம் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்பதில் சந்தேகமில்ல. ஆகையால் உடனே நாம் இங்கிருந்து அகன்றாக வேண்டும்.   சாம்பவி ஒரு முடிவுக்கு வந்தாள்.   இங்கிருந்து போவது எப்படி? எங்கே போவது? கணவன் அதற்கு அனுமதிப்பானா? என்கிற கேள்வி எழுந்தது. அவள் அந்த ஆயாவை விட்டு தரகரை அழைத்து வர சொன்னாள் அவரிடம் தனிமையில் சில காரியங்களை விசாரித்தாள். அவரை விசாரித்து வரச் சொன்னாள்.   அவரும் அவள் கேட்ட தகவல்களை சேகரித்து வந்து கொடுத்தார். அதன் பிறகு அவளுக்கும் ஒரு தெம்பு வந்தது. இப்போதாவது இதை உணர்ந்தோமே என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.  ஆனால், விஜியைப் பார்க்கும்போதுதான் அவளுடைய மனது தளர்ந்து போனது. குழந்தையை பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம்? இதென்ன கேள்வி. இருந்துதான் ஆக வேண்டும். அவள் தன் மனதை கல்லாக்கிக் கொண்டாள்.   மறுநாளே சாம்பவி கணவனை அழைத்து, “நான் உங்களுடன் பேச வேண்டும்” என்றாள்.   “தினம் தினம் பேசுகிறோமே. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” அவன் இயல்பாய் கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தான்.  “எனக்கு இங்கிருப்பது நரகத்தில் இருப்பது போல் இருக்கிறது. என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள்?” “சாம்பவி என்ன சொல்கிறாய் நீ?” என்று அவன் அதிர்ந்து போனான்.   “ஆமாம்! நான் சொல்வது நிஜம்தான். நன்றாக யோசித்து தான் சொல்கிறேன். என்னால் உங்களுக்கு எதுக்கு சிரமம்? டாக்டரே கை கழுவின பின்பு நான் உங்களுக்கெல்லாம் பாரம்!” "அப்படின்னு யார் சொன்னா. லதி சொன்னாளா?” “ஏன் அவள் மேல் பாய்கிறீர்கள்? இதை யார் சொல்ல வேண்டும்? நான் என்ன குழந்தையா? எனக்கு எதுவுமே தெரியாதா? நானாகவே உணர்கிறேன். எனக்குள்ளே பெரிய போராட்டமே நடக்கிறது. தரைப்போர், ஆகாச போரெல்லாம் வெடிக்கிறது. நான் ஒருத்தி இங்கிருப்பதால் வீடு வீடாக இல்லை. நல்லது பொல்லாதது நடப்பதில்லை பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. எல்லாம் ஏன்? என்னால்தானே...?  என்னென்னவோ கற்பனை பண்ணிக் கொண்டு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன். என் நோக்கம் தவறி விட்டது. நானே அதற்கு காரணமாகி விட்டேன். என்னால் இந்த கேள்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை...” “சாம்பவி நிறுத்து, நிறுத்து. உனக்கு என்னாச்சு. யார் என்ன குறை வைத்தார்கள்? நாங்கள் வருந்தி வருந்தி கவனித்துக் கொள்கிறோமே” “அதுதான் என் வருத்தமே. எனக்கு வேண்டி நீங்கள் ஆடுவதும் ஓடுவதும் என் உணர்ச்சிகளை அதிகமாக்குகின்றன. நாம் இப்படி எல்லாருக்கும் பாரமாய் ஆகிவிட்டோமே என்கிற துக்கம் என்னை அழுத்துகிறது. வர வர போரடிக்கிறது. படுக்கை குத்துகிறது. வெளிய போய் வர மாட்டோமா என்று மனசு ஏங்குகிறது. அதனால்தான் சொல்கிறேன். ப்ளீஸ் என்னை ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்துவிடுங்கள்.” “உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை சாம்பவி. ஏன் இந்த திடீர் முடிவு?” “முடிவு வேண்டுமானால் திடீரென எடுக்கலாம். ஆனால் இந்த எண்ணம் எனக்குள் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. குழந்தையை பார்க்கும் பொழுதெல்லாம் பாசம் பொங்குகிறது. அதனுடன் ஓடிவிளையாட வேண்டும் போல வெறி எழுகிறது. நம்மால் முடியாது என்கிற பட்சத்தில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கே என் மேல் வெறுப்பு வருகிறது. எனக்கு ஏன் இந்த நிலைமை என்று யோசித்து பேசாமல் செத்துப் போகலாம் என்று கூடத் தோன்றுகிறது. 14.   இதை எல்லாம் தவிர்க்கத்தான் என்னை வெளியே சேர்த்துவிடச் சொல்கிறேன். அங்கே என்றால் ஒரு மாறுதலாய் இருக்கலாம். நாலு பேர் வருவதும் போவதுமாய் இருப்பார்கள். மனதுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும். என்ன சொல்கிறீர்கள்?” “சாம்பி நீஇல்லாம நான் எப்படி?” “நான் இல்லாம எங்கே போயிடறேன்? இதோ டவுனில்தானே இருக்கப் போகிறேன். உங்களுக்கு பார்க்கணுன்னு தோணும்போது வந்து பார்க்கலாமே...   “முதியோர் காப்பகத்தில் சேர்க்கிற அளவிற்கு உனக்கு என்ன வயசாயிற்று. இது தேவைதானா?” ‘முதியோர் காப்பகம்னா முதியோர்தான் இருக்கணும்னு என்ன விதி? இயலாதவங்க யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்குவாங்க. நீங்க என்ன சும்மாவா சேர்த்து விடப்போறீங்க. மாசா மாசம் மெடிசனுக்கும் சாப்பாட்டுக்கும் பணம் கட்டிடத்தானே போறீங்க?” “அப்போ அங்கே போறதா நீ முடிவே எடுத்து விட்டாய்” “ஆமாம் எப்போ என்னை கொண்டு போய் சேர்க்கப் போறீங்க?” அவள் கேட்டு விட்டு புன்னகைத்தாள்.   “நீ உன்னளவில் பார்த்துக் கொள்கிறாய். என்னைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாய். உன்னைக் கொண்டு போய் சேர்த்து விட்டால் ஊரில் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்?” “யாராவது ஏதாவது பேசிட்டுப் போகட்டுமே என்னை உங்களுக்கு தெரியும். உங்களை எனக்கும் தெரியும். அப்புறம் என்ன?” விஷயமறிந்து லதிகா, ஆனாலும் இந்த முடிவு கொடூரம்க்கா” என்று சாடினாள்.   “எனக்கு நல்லது செய்யுறதா நினைச்சுக்கிட்டு உங்களை நீங்களே அழிச்சுக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகிட்டு போகட்டும். கவலையில்லை. நான் அனுபவிச்சுட்டு போறேன். அதுக்காக நீங்க வீட்டை விட்டு போக வேண்டாம். இங்கேயேதான் இருக்கணும்.” “லதி, என்னை மன்னிச்சுக்கோ. நான் முடிவெடுத்தாச்சு. இனி அதில் எந்த மாற்றமும் இல்லே. நடக்கிறதெல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சு சந்தோஷப்படு. எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் லதி...” “என்ன சொல்லுங்கக்கா?” “விஜியை பார்க்கணும்போல தோணினால் சொல்லி அனுப்புறேன். கொண்டு வந்து காட்டறியாம்மா. என்னை சாகடிக்காம பிடிச்சு வைத்திருப்பதே இந்த பிஞ்சுதான்.” சாம்பவி கண்ணீர் சிந்த, லதிகா ஆதரவாய் துடைத்து விட்டாள். “நீங்க கவலையேபட வேண்டாங்க்கா விஜியை தினம் நான் கொண்டு வரேன்” அந்த முதியோர் காப்பகம் பார்வதிபுரத்தில் இருந்தது. நகரத்தின் இரைச்சலை விட்டு ஒதுங்கி பத்து பதினைந்து ஏக்கராக்களை வளைத்துப் போட்டு பெரிய காம்பவுண்டிற்குள் பெரிய ராஜ்யமே அங்கு நடந்து கொண்டிருந்தது.   உள்ளே இருந்த கட்டிடங்களை ஓங்கி உயர்ந்திருந்த தென்னை மரங்களும், மா, பலாக்களும் மறைந்திருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாகவே இருந்தது.   கட்டிடங்களை எல்லாம் தாண்டி நெல் வயல்களும், வாழை தோப்புகளும் தெரிந்தன. காம்பவுண்டிற்குள் ஆங்காங்கே கை, கால் விளங்காதவர்கள், கண் பார்வை போனவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தன. எல்லோருமே வசதியானவர்கள் தான். ஆனால் ஏதாவது ஒரு விதத்தில் குறை உள்ளவர்கள்.   அங்கே எல்லா வசதிகளும் இருந்தன. சிகிச்சைக்கான உபகரணங்களும் மருந்துகளும் இருந்தன. டாக்டர்கள் அவ்வப்போது வந்து அவர்களை கவனித்துச் செல்வார்கள்.  அது தவிர சர்ச், மைதானம், லைப்ரரி, சின்ன சின்ன கைத்தொழில் கூடங்களும் இருந்தன. வசதி இருந்தால்கூட ஏதோ ஒரு விதத்தில் ஊனமுற்றவர்கள் மற்றவர்களுக்கு பாரமாக வேண்டாமே என்பதற்காகவும் ஒரு மாறுதலுக்காகவும் அங்கே சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு ஒத்தாசை செய்வதற்காக கன்னிகாஸ்திரீகள், நர்சுகள், ஆயாக்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.   சாம்பவி அங்கே தான் சேர்ந்திருந்தாள். அவளுக்கு தனி அறை ஒதுக்கி இருந்தனர். அந்த அறையிலேயே எல்லா வசதிகளும் இருந்தன. அவளை கவனித்துக் கொள்வதற்காக வான்மதி எனும் நர்சை நியமித்து இருந்தனர். அவள் அன்பாய் பேசினாள். அவள் பக்கத்து ஆஸ்பிட்டலில் வேலை செய்பவளாம், அங்கே டெபுடேசன் மாதிரி அனுப்பி இருந்தார்கள்.   “அக்கா...இங்கே சாதாரணமாய் ஆதரவில்லாதவர்கள் தான் வருவார்கள். நீங்கள் தாங்க...? உங்களுக்கு கணவரும் குழந்தையும் இருப்பதாய் கேள்விப்ட்டேனே...” ‘எனக்கு எல்லோருமே இருக்காங்கம்மா. ஆனால்...” என்று அவள் தன் கதையைச் சொன்னாள். அதைக் கேட்டதும் வான்மதிக்கு கண்கள் சுரந்தன.   “சாதாரணமா பெண்களுக்கு ஆசை அதிகம்னும், சுயநலவாதிகளா இருப்பாங்கன்னும் சொல்லுவாங்க. என் வீடு, என் குடும்பம், என் கணவன், என் குழந்தைன்னு சின்ன வட்டம் போட்டுக்கிட்டு அதுக்குள்ளேயே சுத்தி சுத்தி வருவாங்க. ஆனா உங்களுக்கு பெரிய மனசுக்கா. கணவனுக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சு, அவங்களோட சந்தோஷத்தை கெடுக்கக் கூடாதுன்னு ஒதுங்கி வந்திருக்கீங்க பாருங்க... நீங்க நிஜமாலுமே  பெரிய தியாகி!” “ஏய் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்லி என்னை குளிப்பாட்டாதே! ஏற்கனவே நான் பேஷண்ட். இன்னும் ஜன்னி கண்டுவிடப் போகுது” சாம்பவியின் தேவைகளையெல்லாம் வான்மதியே கவனித்துக் கொண்டாள். அவளை சக்கர நாற்காலியில் அமர்த்தி மாலை வேளைகளில் வெளியே அழைத்துப் போவாள், சர்ச்சுக்கு கூட்டிப்போய் பிரார்த்திப்பாள். புத்தகங்கள் படித்துக் காட்டுவாள். அவள் ஒரு கவிதை பிரியை.   சாம்பவிக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த இடத்தின் பசுமை அவளது மனதிலும் பசுமை வளர்த்தது. இங்கே எத்தனையோ பேர் கவனித்துக் கொள்ள ஆதரவில்லாமல் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். நமக்கு எல்லோருமே இருக்கிறார்கள். அன்பை பொழிகிறார்கள். பாழாய் போன பக்கவாதம் மட்டும் வந்திருக்காவிட்டால் அதை நினைக்கும்போது மட்டும் அவளுக்கு அழுகை முட்டும்...   வேறு எந்த நோய் என்றாலும் பரவாயில்லை. எத்தனை செலவு பண்ணியாவது பார்த்து விடலாம். ஆனால் இதற்கு? உலகம் வளர்ந்து விட்டது என்கிறார்கள். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு என்கிறார்கள். ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு ராக்கெட் விடுகிறார்கள். ஸ்கட் ஏவுகிறார்கள். ஆனால் ஆக்கத்திற்கு ஒன்றையும் காணோம். இந்த நோய் இன்று நேற்றா வருகிறது? தொன்றுதொட்டு வருகிறதே. இதனால் ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் பாதிக்கப்படுகிறார்கள். யாராவது இதை முறியடிக்கக் கூடாதா?   அவளுக்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் கோபம் எழும் வீட்டிலிருந்தவரை அத்தனை கவலை தெரியவில்லை. தன் கவலை கணவனையும் பாதித்துவிடும் என்று அடக்கிக் கொண்டு இருந்தாள். அடக்கிக் கொள்ளவும் முடிந்தது. அங்கே குழந்தை இருந்தது. அதை பார்க்கிற சக்தியாவது இருக்கிறதே என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடிந்தது.   ஆனால் வந்த ஒரு வாரத்திலேயே அவளுக்கு வீட்டு நினைவு எடுத்தது. எத்தனை முயன்றும்கூட கணவனை அவளால் மறக்க முடியவில்லை. என்னவோ பெரிதாய் வசனம் பேசிவிட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த சுகம் மறக்க வில்லையே. கை, கால்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடல் பாதிக்கப்படவில்லை உணர்ச்சிகள் சாகவில்லை. பெண் என்கிற புனிதம் அவளை ஆட்டி படைத்தது. உணர்வுகள் முறுக்கேறி முள்ளாய் குத்தியது.  அவளுக்கு வடிகால் தேவைப்பட்டது. மனதை திசை திருப்பும் ஆயுதம் தேவைப்பட்டது. அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் சாம்பவி வான்மதியை அழைத்துக் கொள்வாள்.   வான்மதி, கவிமுகில், கலை, தளிர், பூஞ்சோலை, சரண்யா என்று இலக்கிய பத்திரிகைகளை வாரிக் கொண்டு வருவாள். அவற்றில் உள்ள கவிதைகளை படித்து காட்டுவாள். விவாதிப்பாள், இப்போதுகூட வான்மதி படிக்க, சாம்பவி, “நிறுத்து நிறுத்து உனக்கு காதல் அனுபவம் ஜாஸ்தி போலிருக்கு உன்னிடம் காதல் கவிதைகளா கேட்டேன்?” “ஐயோ அக்கா. இது என்னோட கவிதையில்லை. பி.டி.சி.சூரியநாராயணனோடது. காதல்ங்கிறது அத்தனை இளப்பமா என்ன? ஊரில் நிறைய கவிஞர்கள் காதலை வச்சுதான் கவிதை கோட்டையே கட்டுகிறார்கள். கஸ்தூரி ரங்கன்னு ஒருத்தர் ‘நிலவை கண்டால் அல்லிகள் மலருமாம் உன்னை கண்டதும் என் முகம் மலர்ந்ததன் காரணம் இப்போதல்லவா புரிகிறது’ங்கிறார். புதுவை சேகரன்னு ஒருத்தர், ‘ஒருவரைப் போல் உலகில் ஏழு பேர். ஆனால் உன்னைப்போல் ஒருத்தி மட்டுமே அது பவுர்ணமி நிலவு‘ங்கிறார்” “அம்மா வான்மதி, போதும் போதும். உன் பெயரிலேயே நிலவு. என்னுடைய நினைவுகளையும், காதலையும், கனவுகளையும் மறக்கத்தான் நான் உன்னை அழைத்தேன். நீ என்னடாவென்றால் காதல் கவிதைகளாக சொல்லி என்னை கிளறி விடுகிறாய்” சாம்பவியின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து அவளும் கலங்கிப் போனாள்.   “சாரிக்கா. உலகத்துல வயசு வித்தியாசமில்லாம சாதி மத வித்தியாசமில்லாம எல்லோருக்கும் ஒன்று போல இன்பம் தருவது காதல் சமாச்சாரம்தான்னுதான் நான் படிச்சேன். கவிதைகள் சொல்லி உங்களை சந்தோஷபடுத்தலாம்னு நினைச்சேன் ஆனா அது உங்களை ரொம்பவே பாதிச்சிருச்சுன்னு தோணுது. சாரி. வெரி சாரிக்கா” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது லதிகா விஜியை அழைத்துக் கொண்டு வந்தாள். குழந்தை ஜீன்சும், பனியனும் போட்டு அவளை நோக்கி ஒடி வந்தது. நான்கு பற்களில் சிரித்தது. “அம்மா” என்று அவள் மேல் தொற்றிக் கொண்டு மொச்மொச்சென்று முத்தம் பதிக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். சாம்பவி அவளை தன்னோடு சேர்த்து கட்டிக் கொள்ள, அது விலகி ஓடிற்று.   அவளது அன்பையும், உணர்ச்சிகளையும் வான்மதியால் புரிந்து கொள்ள முடிந்தது. “நீங்க பேசிகிட்டிருங்க” என்று அவள் கிளம்பினாள்.   லதிகா குழந்தையை கீழே இறக்கிவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த விளையாட்டு சாமான்களை கீழே கொட்டி, “விளையாடு கண்ணு. நானும், அம்மாவும் பேசிக்கிட்டிருக்கோம்” என்க, குழந்தை “சரிம்மா” என்று தரையில் அமர்ந்தது. சாமான்களையும். பொம்மைகளையும் அடுக்க ஆரம்பித்தது.  “இங்கே எல்லாம் சவுகரியமாய் இருக்காக்கா? நீங்க வந்ததும் வீடே வெறிச்சோன்னு ஆயிப் போச்சு” “அவர் எப்படி நடந்துக்கிறார்” “முதல்ல எம்மேல கோபமாயிருந்தார். நான்தான் உங்களை விரட்டிட்டேன்னு சொல்லி எங்கூட முகம் கொடுத்தே பேசலை இப்போ பரவாயில்லை. அவ்வளவா கோபப்படறதில்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் தெரியுது” “எப்படியோம்மா, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாயிருந்தா சரி. அவர் நல்லவர் லதி. ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டாலும் நீதான் பொறுத்துக்கணும். அவரை அனுசரிச்சுப் போகணும்” “சரிக்கா, உங்களோட வனவாசம் இன்னும் எத்தனை நாளைக்கு?” “தெரியல” என்று வெளியே சொன்னாலும், சாகும் வரை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அப்படி ஒரு நினைவு வந்தவுடனேயே நெஞ்சு துடித்தது. துக்கம் கரை புரண்டது,  அதையெல்லாம் வெளியே கொட்டி விடாமல் “சரிம்மா நீ கிளம்பு நேரமாகிறது” என்றாள்.  “இந்தாங்கக்கா சாப்பாடு” என்று லதிகா கூடையிலிருந்து கேரியரை வெளியே எடுத்தாள். “உனக்கெதுக்கும்மா சிரமம். இங்கேதான் நல்ல சாப்பாடாய் போடுகிறார்களே?”       15.   “எனக்கென்ன சிரமம்ங்க்கா? என்னையும், அவரையும் ஆளாக்கிவிட்டுட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிற உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரதை சிரமமா நினைச்சா அது பாவம். ஆ காட்டுங்க,” “இருக்கட்டும் லதி, அப்புறமா சாப்பிடுகிறேன். வான்மதி இருக்காளே” “என் கையால உங்களுக்கு ஊட்டி விடணும்னு ஆசைக்கா, ஆ காட்டுங்க!” ஒருத்தி ஆசையுடன் ஊட்டிவிட இன்னொருத்தி ஆனந்தத்தடன் சாப்பிடுகிற காட்சியை தூரத்திலிருந்து கவனித்த வான்மதிக்கு நெஞ்சம் கலங்கிற்று. பெண்கள் என்றால் போட்டி இருக்கும். இவை எதுவுமே இல்லாமல் இவர்களால் எப்படி இத்தனை பாசமாய் பழகிக் கொள்ள முடிகிறது என்று நினைத்து அவள் வியந்தாள்.   ஒருவேளை அக்காள்தான் படுத்துவிட்டாளே. இனி எங்கே தனக்கு போட்டியாக வரப் போகிறாள் என்கிற தெம்பா? இல்லை அனுதாபமா? அக்காளுக்கு ஒரு வேளை குணம் ஆகிவிட்டதென்றால் இதே லதிகா இத்தனை பாசத்தை கொட்டுவாளா? அதெல்லாம் நமக்கு ஏன்? என்று அவள் அவர்களிடம் வந்தாள்.   “அடடா எனக்கு வேலை இல்லாமல் பண்ணி வீட்டீர்கள் போலிருக்கிறதே லதிகா. எனக்கும் உங்க வீட்டு சாப்பாடு கிடைக்குமா?” என்று அவள் சிரித்தாள்.   “ஓ. உங்களுக்கும் சேர்த்துத்தான் கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுங்க,” “நான் சும்மாதான் கேட்டேன். விட்டால் ஊட்டியே விடுவீர்கள் போலிருக்கிறதே.” லதிகா, “அப்போ நான் வரேங்க்கா” என்று கிளம்பினாள். “அடுத்த முறை வரும்போது உங்களுக்கு என்ன செய்து கொண்டு வர வேண்டும். உங்களுக்கு பிடித்ததைச் சொல்லுங்கள்.” “எனக்கு பிடித்ததெல்லாம் இருக்கட்டும். முதலில் அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள். அவருக்கு பிடித்ததை செய்து போட்டு உன் கைக்குள் வைத்துக் கொள்.” நாட்கள் ஓடின மாதங்களாயின. மாதங்களும் ஓட ஆரம்பித்தன.  விஜயகுமார் அவளை பார்க்க வந்திருந்தபோது, “சாம்பவி! இதுல ஒரு கையெழுத்து போடு” என்று ஒரு பாரத்தை நீட்டினான்.   “என்னங்க இது?” “நம்மோட ரப்பர் இண்டஸ்ட்ரிக்கு ஏகப்பட்ட டிமாண்ட். பழசை மட்டும் வச்சுகிட்டு சப்ளை பண்ண முடியலே. செங்கோட்டைல ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இடம் வாங்கி போட்டிருக்கேன், லோன் அப்ளை பண்ணதான்,” “அதுக்கு என் கையெழுத்து எதுக்கு?” “கம்பெனி உன் பெயரிலதானே. நீதானே அதன் முதலாளி,” “எதுக்குங்க என் பெயர்? பேசாம உங்க பெயரிலேயே ஆரம்பிச்சிருக்கலாமே?” “ஆரம்பிச்சிருக்கலாம். அப்படி செய்யாததுக்கு ரெண்டு காரணங்கள். எங்களோட மூலதனமே நீதான்கிறது ஒண்ணு. அடுத்தது இன்கம்டாக்ஸ் பிரச்சினை” “டாக்ஸ் பிரச்சினை வரும்னா லதிகா பெயர்ல ஆரம்பிச்சிருக்கலாமே” “நான் கேட்டேன். அவளும் சேர்ந்துதான் உன் பெயரை சஜஸ்ட் பண்ணினா” அவளும் சேர்ந்துதான் என்று அவன் சொன்னது அவளுக்கு சந்தோஷம் தந்தது. அப்போ இருவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். நம்மோட லட்சியம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.  “லதிகாவும் குழந்தையும் எப்படியிருக்காங்க,” “அவங்களுக்கென்ன குறைச்சல்? லதிகாவுக்கு அக்கா அக்கான்னு எப்போதும் உன் பேச்சுதான். விஜியை அவள் வைத்த இடத்தில் வைப்பதில்லை. தானே பெத்திருந்தாக் கூட அவ்ளோ அன்பு செலுத்துவாளோ என்னவோ தெரியாது. அப்படியே அன்பால குளிப்பாட்றா.” அதை கேட்க கேட்க சாம்பவிக்கு சந்தோஷமாயிருந்தது. “அப்புறம் உனக்கு தெரியுமா? விஜியை கிண்டர்கார்டன்ல சேர்த்து விடப் போகிறேன்.” “இவ்ளோ சீக்கிரமாவா” “அய்யோ அவளை வைச்சுகிட்டு சமாளிக்க முடியலை. விட்டால் ஊரையே விலைக்கு வாங்கற மாதிரி பேசறா. அப்போ நான் வரட்டுமா. லதிகா சாப்பாட்டை எடுத்து வச்சுகிட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருப்பா. நான் சாப்பிடலேன்னா அவளும் சாப்பிடமாட்டா. எல்லாம் உன்னை போலவேதான். உன்னை மாதிரியே அவளுக்கும் எல்லாத்துலயும் பிடிவாதம். நீ சாப்பிடலே.” “நீங்க கிளம்புங்க. வான்மதி வந்ததும் நான் சாப்பிட்டுக்கிறேன்.” அவன் போனதும் அவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். நாம் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடக்கின்றன. சந்தோஷம். இவரும் மூச்சுக்கு மூச்சு லதிகா லதிகா என்கிறார். இவர் சாப்பிடவில்லையென்றால் அவளும் சாப்பிட மாட்டாளாம். என்ன கனிவு! போகிற போக்கை பார்த்தால் இவர் நம்மையே மறந்து விடுவார் போலிருக்கறதே. குமார் என்னை நீங்கள் மறந்து விடுவீர்களா?  மறந்தால் தான் என்னவாம்? மடிந்து போகிற கட்டைதானே நான்? நம்மோட வாழ்க்கைதான் முற்றுப் பெற்று விட்டதே! இந்த நரக வேதனை இன்னும் எத்தனை நாட்களுக்கோ. மனிதனுக்கு நோய் வரவேகூடாது. அப்படியே வந்தாலும் ஒன்று சரியாகிவட வேண்டும். அல்லது அப்போதே அன்றைக்கே செத்துப் போகவேண்டும். இது மாதிரி இழுத்துக் கொண்டேயிருக்கக் கூடாது.   அடுத்த வாரத்தில் லதிகா பால்பாயாசம் செய்து கொண்டு வந்தாள். வந்தவுடனேயே “என்ன விசேஷம்னு சொல்லுங்கக்கா பார்க்கலாம்” என்று புதிர் போட்டாள்.   “என்ன விசேஷம் நீ முழுகாமல் இருக்கியா” “சீ. நம்ம விஜிக்கு கிண்டர் கார்டன்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு” “அதுக்காகவா இத்தனை ஆர்ப்பரிப்பு” “அட நீங்க வேற. உங்களுக்கு உலக நிலவரமே தெரியலையே. இந்த காலத்துல கிண்டர் கார்டன்ல எல்.கே.ஜியும் யூ.கே.ஜியும் கிடைக்கிறதுன்னா எத்தனை கஷ்டம் தெரியுமா? மந்திரிசபை இருந்தா மந்திரியோட சிபாரிசு இல்லேன்னா கவர்னரோட சிபாரிசும் பண்ணனுமாக்கும். பால் பாயசத்துக்கு இன்னொரு காரணம்கூட இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்” சாம்பவி யோசித்து விட்டு “எனக்கு தெரியலேயேம்மா சஸ்பென்ஸ் வைக்காம நீயே சொல்லிரேன்” “இன்னிக்கு என்ன நாள்” “ஏன்? வெள்ளிக்கிழமை” “சே...நான் அதை கேட்கலை. நல்லா யோசிச்சுப் பாருங்க. நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி விடுங்கசுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் மேதகு விஜயகுமார் அவர்களுக்கும் மேதகு சாம்பவி அக்காவிற்கும் இன்றுதானே டும்டும் நடந்தது. மறந்துட்டீங்களா. இன்று உங்களுடைய வெட்டிங் டே” இன்று நமக்கு திருமணநாளா? சாம்பவிக்கே அப்போது தான் ஞாபகம் வந்தது. யார் அதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஞாபகம் வைத்திருந்து தான் என்ன பண்ணப் போகிறோம். கொண்டாட போகிறோமா. கோவிலுக்குப் போகப் போகிறோமா இல்லை அவருடன் கொஞ்சி குலாவத்தான் போகிறோமா? சாதாரணமாய் வெட்டிங் டே என்றாலோ, பிறந்தநாள் என்றாலோ பழையதை நினைத்து அசை போடுவோம். நினைவுகளை மலர வைப்பதில் ஒரு சுகம் இருக்கும். ஆனந்தம் பிறக்கும். ஆனால் அவளுக்கோ அம்பாக குத்தியது. பழைய சம்பவங்கள் அவளுடைய துன்பத்தை அதிகப்படத்தவே செய்தன.   வேண்டாம், பழசெல்லாம் வேண்டாம் என்று இருக்கும் போது இவள் வந்து ஞாபகப்படுத்துகிறாள்.   “என்னக்கா அப்படியே அசந்து போய் உட்கார்ந்துட்டீங்க. கல்யாணமும் முதலிரவும் ஞாபகம் வந்திருச்சா” என்று கேட்டு லதிகா தன் நாக்கை கடித்துக் கொண்டாள். “சாப்பிடுங்கக்கா ப்ளீஸ்” “அவர் என்ன பண்றார்” “புது கம்பெனி விஷயமா யாரையோ பார்க்கப் போயிருக்கார்க்கா. முடிஞ்சா வந்து உங்களை பார்க்கறேன்னார்” முடிந்தால் வருகிறாரா. கல்யாணமான அன்று என்ன பேசிக் கொண்டோம். நம்முடைய உயிர் பிரிகிறவரை இந்த நாளில் நாம் பிரியக்கூடாது, என்ன வந்தாலும் சரி. எங்கே இருந்தாலும் சரி ஒன்று சேர்ந்துவிட வேண்டும்; ஒன்று சேர்ந்து குளிக்க வேண்டும், ஒன்றாய் கோவிலுக்குப் போக வேண்டும். ஒன்றாய் சாப்பிட்டு ஒன்றாய் தூங்கி...   அந்த வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போயிற்றா? சேச்சே அவர் அப்படிப்பட்டவர் இல்லை நம்மை எந்த நிலையிலும் மறக்க மாட்டார். அவருக்கு அவருடைய பிரச்சினை. பிசினஸ் நெருக்கடி. இதற்கிடையில் இதை யெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமா? சொல்லப் போனால் நாமேகூட மறந்து விட்டோம். அப்புறம் அவரை குற்றம் சொல்லி என்ன பயன்?      16.   எதுக்காக குற்றம் சொல்ல வேண்டும்? போன வருடம் அவர் திருமண நாள் கொண்டாட முனைந்தபோதே வேண்டாம் என்று விட்டோமே. பொதுவாய் பெண்களுக்கு தான் இந்த மாதிரி சென்டிமெண்ட்ஸ்களில் கவனம் அதிகம். கல்யாண நாள், பிறந்தநாள், வேலைக்கு சேர்ந்த நாள், கர்ப்பமான நாள் என்று ஒவ்வொன்றையும் இழுத்து போட்டுக் கொண்டு அசைபோடுவோம். நாமே ஒதுக்கி விட்ட நிலையில் இனி அதை நினைத்து எதற்காக கவலைப் படவேண்டும்?   “அவர் வரலேன்னு உங்களுக்கு வருத்தமாக்கா. நான் வேணுமானால் அவரை போன் போட்டு வரச் சொல்லட்டா” “வேணாம் லதிகா குழந்தை எப்படியிருக்கா?” “சமத்தா ஸ்கூல் போயிட்டு வர்றா. ஏபிசிடியெல்லாம் சொல்றா. ஆக் ஷனோட ரைம்ஸ் ஒப்பிக்கிறா” அப்புறம் ஒரு சந்திப்பில் லதிகா, “அக்கா கண்ணை மூடுங்களேன்” என்றாள்.   ஏம்மா நான் கண்ணை மூடறதுல உனக்கு என்ன அவ்ளோ சந்தோஷம் என்று மனதில் நினைத்துக் கொண்டு “என்ன விஷயம்” என்றாள்.   “மூடுங்க சொல்றேன். அப்படியே வாயை திறங்க. திறந்துட்டீங்களா?” என்று லதிகா சாம்பவியின் வாயில் சாக்லெட்டை திணித்தாள்.   “என்னடியம்மா விசேஷம்?” “விஜிக்கு விளையாட துணை இல்லையாம் நச்சரிச்சுக்கிட்டேயிருந்தா அதனால...” “அதனால...” “ஏன் குறை வைக்கணும்னு அவர்கிட்டே கேட்டேன் சரி பெத்து கொடுத்திருன்னுட்டார். நான் இப்போ மூணு மாசம்” என்று குதித்தாள்.   “அடி கள்ளி. இத்தனை நாளா எங்கிட்டே சொல்லவே இல்லையே நீ” ‘உங்களுக்கு சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னுதான் சொல்லலை” “சந்தோஷம் லதி. இனிமே நீ ஜாக்கிரதையா நடந்துக்கணும். கொஞ்ச முன்னாடி குதிச்சது போல குதிக்கக் கூடாது. கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. வேலைக்காரி வச்சுக்கோ. நல்லா சாப்பிடு. நிறைய ரெஸ்ட் எடு. என்ன தெரிஞ்சுதா?” “சரிக்கா” என்று அவள் கண்கலங்கினாள்.   “ஏய் என்னாச்சு உனக்கு? ‘உண்டாகி‘யிருந்தா சந்தோஷப்படறதை விட்டுட்டு கலங்கிப் போகிறாயே’ “அக்கா எங்களுக்கெல்லாம் சந்தோஷம் தந்தீங்க எங்களோட நன்மைக்காக ஒதுங்கி வந்தீங்க. இன்னும் எத்தனை நாளைக்குக்கா உங்களுக்கு இந்த அவஸ்தை? இதை குணப்படுத்தவே முடியாதா? நீங்க குணமாகி வீட்டுக்கு வரணும்னு என் மனசு பிரார்த்திச்சுக்கிட்டே இருக்குக்கா. அவர் எங்கிட்ட ரொம்ப அன்பா இருக்கார்க்கா. நான் கேட்காமலேயே எல்லாத்தையும் வாங்கிதரார். அவர் பழைய மாதிரி கோபிக்கறதே இல்லை. பிசினஸ் பத்தி எங்கிட்டே கலந்துக்குவார். யோசனை கேட்பார். நானும் எனக்கு தெரிஞ்சதை சொல்லுவேன். கேட்டுக்குவார். நல்ல யோசனையா பட்டுதுன்னா ஏத்துக்குவார்.  மொத்தத்துல அங்கே பெரிய மாறுதலே நடந்திருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நீங்கதாங்க்கா, உங்களோட பெருந்தன்மை. எங்கே என் வாழ்க்கை ஸ்தம்பிச்சு போகுமோன்னு பயந்துக்கிட்டேயிருந்தேன். உங்களோட சமயோசித முடிவால் எல்லாமே சரியாகிடுச்சு.   அவர் எம்மேல கவனம் செலுத்த மாட்டேங்கறார் கோபப் படறார்ன்னுதானே நீங்க வீட்டை விட்டு வெளியே வந்தீங்க. இப்போதான் அவர் மாறிட்டாரே. என்னை நன்றாய கவனிச்சுக்கிறாரே. உங்களோட நோக்கம் நிறைவேறிடுச்சில்லே. அப்புறமும் ஏனிந்த வனவாசம். இனிமேலாவது நீங்க வீட்டுக்கு திரும்பக் கூடாதாக்கா? ஏன்க்கா பேச மாட்டேன்கிறீங்க. வீட்டுக்கு வந்தால் என்னவாம். இங்கே அந்நியன்ங்க கவனிச்சுக்கிற அளவுக்கு நாங்க உங்களை கவனிச்சுக்க மாட்டோமா?” “லதி, கவனிச்சுக்க மாட்டீங்கன்னு இல்லேம்மா” “அப்புறம்” “இப்போ அவர் உங்கிட்டே அன்பா நடந்துக்கலாம். சரி, நான் வந்திட்டா அப்புறம் பழையபடி மாறிட்டார்ன்னா” “அதெல்லாம் மாறமாட்டார்க்கா. நீங்க தைரியமா வரலாம். அப்படியே அவர் மாறினாலும் மாறிட்டுப் போகட்டும். அதனால என்ன நஷ்டம்? எனக்குத்தானே பாதிப்பு. என் சந்தோஷம்தானே போகும். பரவாயில்லைக்கா. எங்களுக்க வேண்டி நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கும்போது உங்களுக்காக நான் இதை பொறுத்துக்கக் கூடாதா? ப்ளீஸ்க்கா நாங்களெல்லாம் இருக்கும் போது அனாதை மாதிரி இங்கே வந்து இருக்கறது எங்களை வாட்டுது நான் இத்தனை சொல்றேனே. உங்களுக்கு மனமே இளகலையா?” “இளகாம இல்லை லதி. எனக்கே இப்ப என்மேல நம்பிக்கையில்லை. வெறுப்பாய் இருக்கு. நீ சந்தோஷமாய் இருக்கறதை பார்த்தால் எங்கே பொறாமைப்பட்டு விடுவேன்னு பயப்படறேன். அதுவுமில்லாம எனக்கும் அவருடன் குடும்பம் நடத்தணும்னு ஆசை வந்திருமோன்னும் இருக்கு” “அதுல என்ன தப்பு” “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? ஆசைக்கும் ஒரு தகுதி வேண்டாமா?” “பரவாயில்லை வாங்கக்கா. நீங்க வீட்டுக்கு வந்தால் போதும். மத்தபடி எனக்கு என்ன இழப்பு வந்தாலும் கவலையில்லை.” “இல்லைம்மா என்னை வற்புறுத்தாதே. நேரமாகிறது கிளம்பு. அடுத்த முறை வரும்போது விஜியையும் அழைத்துவா” “சரிக்கா. அப்புறம் ஒரு விஷயம். நாளைக்கு குமார கோவிலில் ஒரு பூஜைக்கு சொல்லியிருக்கிறோம். அதுக்கு போய்வரப் போகிறோம். பூஜை எதுக்கு தெரியுமா? உங்களுக்கு சீக்கிரமே குணமாகணும்னுதான்.  ”லதிகா போனதும் சாம்பவிக்கு தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. அவளை பார்த்தால் பொறாமையாயிருக்கும் என்று சொன்னோமே அது நிஜமா? அப்படி நாம் சொல்லலாமா என்று தன்னையே கடிந்து கொண்டாள் .  அந்த மாதிரி நினைவு நமக்கு எப்படி வரலாம்? நாமே எல்லாவற்றையும் செய்து வைத்து விட்டு இப்போது பொறாமைப்படுவதென்றால் அது எத்தனை பெரிய அசிங்கம்!  இல்லை, பொறாமையில்லை. பொறாமைப்படக் கூடாது. நான் பட மாட்டேன்.   என்னுடைய பேச்சும் மூச்சும் இருக்கும்வரை அவர்களுடைய நன்மையையே நினைப்பேன். அவர்களுடைய சந்தோஷம்தான் என் சந்தோஷம்.   கணவன் தவிக்கக் கூடாது. அவனது வாழ்க்கை வீணாகக் கூடாது என்றுதானே அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம். அவனா கல்யாணத்திற்கு அலைந்தான். வேண்டாம் வேண்டாம் என்றவனை கட்டாயப் படுத்தி செய்து வைத்து, அவன் அவளை வெறுக்கிறான்-நம்மை அதிகமாய் துதிக்கிறான் என்று வெளியே வந்துவிட்டு இப்போது பொறாமைப்படுவதென்றால் அதற்கு என்ன அர்த்தம்?   நம்முடிடைய நோக்கமே இங்கே அடிபடுகிறதே? வான்மதி என்னவோ நம்மை தியாகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். இதுவா தியாகம்? அந்த வார்த்தைக்கே களங்க மல்லவா பொறாமை?   மாதங்கள் ஆக ஆக, லதிகாவிற்கு வயிறு பெருத்தது. மூச்சு வாங்கிற்று. அவள் ஓடியாடி வேலை செய்வதும் குறைந்தது. முன்பு மாதிரி அடிக்கடி சாம்பவியை பார்க்க போக முடியாமல் தவித்தாள்.   விஜயகுமாரும், சதா பிசினஸ் பிசினஸ் என்று அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் நேரம் ஒழியவில்லை. தவிர அவளை போய் பார்க்கும் தெம்பையும் அவன் இழந்து வந்தான். மனதின் குறுகுறுப்பு அவனை தடுத்துக் கொண்டேயிருந்தது.  அவள் ஆடிப்போயிருக்கும்போது கொஞ்சங்கூட கூச்சமேயில்லாமல், விவஸ்தையே இல்லாமல் லதிகாவுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறோம். இது எந்தவிதத்தில் நியாயம் என்று நினைத்தான்.   ஒருவேளை அவளுக்கு பதில் நமக்கு வாதம் வந்து படுக்கையில் கிடந்தால், சாம்பவியின் வாழ்வு பாழாகிறதே அவளது இளமை வீணாகிறதே என்று அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்து குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதித்திருப்போமா?  எல்லாவற்றிற்கும் பெருந்தன்மை வேண்டும். பெரிய மனசு வேண்டும். நாம் நம்முடைய ஆசாபாசத்திற்கு அடிமையாகி விட்டோம். அவள் எப்படி போனால் என்ன என்று ஒதுக்கி விட்டோம். இந்த நிலையில் அவளுடைய முகத்தை எப்படி ஏறிடமுடியும்? அவனுக்கு குறுகுறுத்தது.   அதனாலேயே அவளை பார்க்கப் போவதை தவிர்த்து வந்தான். அவ்வப்போது போன் பண்ணி அவளுடன் பேசுவான். எப்படியிருக்கிறாய் சாம்பவி எனக் கேட்டு விஜியின் லீலைகளை சொல்லி, பிசினசின் விரிவாக்கத்தைச் சொல்லி வைத்து விடுவான்.   போன் ஒரு தற்காப்பு ஆயுதம். காரியத்திற்கு காரியமும் நடக்கும், அடுத்தவர்களுடன் பேசும்போது அவர்களின் அவஸ்தை நம்மை தாக்காது. அவர்கள் கண்கள் நம்மை கவராது. பிடித்து இருக்காது. சாட்டையால் அடிக்காது. ரொம்ப பாதுகாப்பான நழுவலுக்கு போன் ஒரு உபயோகமான சாதனம்.   லதிகாகூட அவனை, “அக்காவை போய் பாருங்க” என்று விரட்டுவாள். “என்னாலதான் போக முடியலையே நீங்க போகக் கூடாதா” “போகக் கூடாதுன்னு இல்லைடி, நேரம் கிடைக்க வேணாமா?”    17.   “இங்கே இருக்கிற பார்வதிபுரத்திற்கு எவ்ளோ நேரம் வேணும். நேரமில்லைன்னு சொல்லி ஊரை ஏமாத்தாதீங்க அது உங்களுக்கே அடுக்காது.” “ஆமாண்டி, நான் ஊரை ஏமாத்தறேன். ஊரை ஏமாத்தித்தான் இந்த சொத்துக்களை சம்பாதிச்சேன் உன்னை கட்டிக் கொண்டேன். என்னைவிட உனக்குத்தான் அவள் மேல் அக்கறையா. நான் அவளை எவ்ளோ நேசிச்கிறேன்னு தெரியுமா” என்று உணர்ச்சிகளை கொட்டுவான்.   “சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையே பெரிசா எடுத்துட்டு பேசறீங்களே. அக்கா மேல உங்களுக்கிருக்கிற பிரியம் எனக்கு தெரியாதா என்ன?” “தெரிஞ்சுதான் இப்படி பேசறியாக்கும். காலைலகூட அவகிட்டே போன்ல பேசினேன் தெரியுமா உனக்கு?” “ஏங்க போன்ல பேசினா போதுமா? அக்கா தப்பா எடுத்துக்க மாட்டாங்க? உங்களுக்கு நேரம் கிடைச்சா நேரில் போய்வாங்க இல்லாட்டி விட்டிருங்க. போனிலெல்லாம் பேச வேண்டாம்?” “ஏண்டி” “உங்களுக்கு வேணுமானா அவங்க தேவைப்படாம இருக்கலாம். உங்களுக்கு நான் இருக்கலாம். அவங்களுக்கு யார் இருக்கா? நீங்க மட்டும்தானே. அப்படியிருக்கும்போது உங்களை பார்ககணும், உங்ககிட்டே எண்ணங்களை பகிர்ந்துக்கணும்னு அவங்களுக்கும் தோணுமில்லை. ஏனிந்த ஓரவஞ்சனை” அவள் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்கும் புரிந்தது. மறு நாளே சாம்பவியை பார்க்கப் போனான்.   அவனை கண்டதும் அவள் கண் சொரிந்து உணர்ச்சி வசப்பட்டாள். புசுபுசுவென்று பெருமூச்சு விட்டாள். “லதிகா எப்படிங்க இருக்கா. ஒழுங்கா சாப்பிடறாளா. செக்கப்புக்கு போய் வராளா?” “போய் வரா சாம்பி” ‘ஏன் உங்க உடம்பு இளைச்சிருக்கு. சரியா சாப்பிடற தில்லையா?” “அலைச்சல். வேறொண்ணுமில்லை” “அதுசரி, அவளுக்கும் இப்போ ஏழுமாசமில்லை?” “அப்படின்னுதான் நினைக்கிறேன்” “நினைக்கிறீங்களா. இதுதான் நீங்க அவளை பார்த்துக் கொள்கிற லட்சணமா? இது ஏழாவது மாசம்தான். சீமந்தம் நடத்த வேணாம்?” “அவங்க அண்ணனும் அண்ணியும் நடத்தறோம்னாங்க. நான்தான் வேணாம்னுட்டேன்” “ஏன்?” “எனக்கு பிடிக்கலே” “அதுதான் ஏன்னேன்?” “நீ இல்லாம சீமந்தம் எப்படி? நீ வீட்டுக்கு வருகிறாயா ஜாம்ஜாம்னு நடத்தச் சொல்றேன்” “சரிங்க நான் வந்தாதான் நடக்கும்னா வரேன். ஆனா ஒரு கண்டிஷன்” “என்ன?” “அது முடிஞ்சதும் திரும்ப வந்திருவேன். என்னை அங்கேயே இருக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது” இதற்கு அவன் பதில் சொல்லவில்லை.   “பிரசவத்துக்கு அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பப் போறீங்களா?” அதுதானே முறை. அவங்கண்ணன் அழைச்சுட்டு போறேன்னு தான் சொன்னார்” “வேணாங்க. அவங்களுக்கு எதுக்கு சிரமம்? நம்ம வீட்டிலேயே நடக்கட்டும். அவங்க அண்ணனும் அண்ணியும் வேணுமானா இங்கே வந்து தங்கட்டும். லதிகா போய் விட்டால் விஜி ஏமாந்து போவா. உங்களுக்கும் கஷ்டமாயிடும். கையுடைஞ்ச மாதிரி இருக்கும்.” “சாம்பி! எப்போதும் எங்களை பத்தியே கவலைப் படுகிறாயே. உன்னை பத்தியே நினைக்க மாட்டாயா. உனக்கு கவலையே கிடையாதா?” “இனி கவலைப்பட்டு எதுக்காகுது. போங்க கண்ணா. போய் வளைகாப்பிற்கு விமர்சையாய் ஏற்பாடு பண்ணுங்க. அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகளோட கைகள் எல்லாம் அன்னிக்கு கலகலக்கணும். என்ன தெரிஞ்சுதா? இன்னும் ஏன் கவலை. அதான் வரேன்கிறேனில்லை. சந்தோஷமா கிளம்புங்க” லதிகாவின் சீமந்தம் சிறப்பாய் நடந்து முடிந்திருந்தது. சாம்பவியையும் அங்கு அழைத்துப் போயிருந்தார்கள். சுற்றமும் நட்பும் வீட்டை நிறைத்து கலகலவென்றிருக்க, அவளுக்கு பெருமிதமாக இருந்தது.   சாம்பவி விசேஷம் முடிந்த கையோடு தன்னை விடுதியில் கொண்டு விடும்படி கணவனை கேட்டுக் கொண்டாள். அவனும் லதிகாவும் எத்தனையோ வற்புறுத்தியும் கூட அவள் கேட்கவில்லை. போயே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்து விட்டாள்.   அத்தனை பேருக்கு மத்தியில் தான் மட்டும் மரக்கட்டையாய் கிடப்பது அவளுக்கு சங்கடம் தந்தது. ஆனந்தமாய் இருப்பவர்களுக்கு தான் ஒரு முட்டுக்கட்டை என்று நினைத்தாள் புழு போல நெளிந்தாள்.   குழந்தைகள் வளையல் குலுக்கி நடக்க அவளுக்கு ஏக்கம் பிறந்தது. ஸ்கூல் பருவம் ஞாபகத்தில் பிசிறியது. அப்போதெல்லாம் அவள் சரியான வளையல் பைத்தியம் வீட்டில் விருந்தென்று யார் வந்தாலும் காசு வசூலித்து வளையல் வாங்கி விடுவாள்.   ஊரில் யார் வீட்டில் சீமந்தம் நடந்தாலும் ஒடிப் போய் பிரசண்ட் சொல்லி விடுவாள். ஓசியில் சாப்பிட்டு, கைகளை நிரப்பிக் கொண்டு குலுங்க குலுங்க ஓடி வருவாள். அழகு பார்த்து பூரித்துப் போவாள்.   “ஏண்டி இப்படி வளையல் வளையல்ன்னு அலையறே...” என்று அம்மா திட்டுவாள்.   “அடுத்தவங்க வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது?” என்று கண்டிப்பாள்.   “அப்போ நீயே வாங்கித் தா!” “நேத்துதானேடி பால் நோட்டுலே இருந்த ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு போனாய்...? அந்த வளையல் என்னாயிற்று?” “உடைஞ்சு போச்சும்மா” என்று கப்பல் கவிழ்ந்த மாதிரி விசனப்படுவாள். அப்பா தலையிட்டு, “சரி வாம்மா நான் வாங்கித் தரேன்” என்பார். அம்மா விடமாட்டாள். “வேண்டாங்க. வாங்கி தராதீங்க. இந்த முண்டம் அஞ்சு நிமிஷம்கூட வெச்சிருக்க மாட்டா?” என்று தடுப்பாள். அம்மாவுக்கு தெரியும் சாம்பவியின் லீலைகள்.   பழையதை நினைத்தபோது தாய் தந்தை பாசம் போங்கிற்று. அவர்கள் எத்தனை செல்லமாய் வளர்த்தார்கள்! கேட்பதையெல்லாம் வாங்கித் தருவார்களே... அப்படிப் பட்டவர்களை பகைத்துக் கொண்டு வந்ததால் தான் நமக்கு இந்த தண்டனையா?   வீட்டை விட்டு வந்தபோது பெற்ற வயிறு எப்படி எரிந்திருக்கும்...? அப்பா எத்தனை பாடுபட்டு இருப்பார்? அவர்களின் சாபம் தான் என்னை வாட்டுகிறதோ என்று கூட நினைத்தாள்.   நான் இப்படி கிடக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியுமா...? சொல்லி அனுப்புவோமா? வேண்டாம். அன்று எத்தனை வீராப்புடன் வந்து விட்டு இப்போது சொல்லி அனுப்பினால் அது அசிங்கம். தவிர அவர்களுக்கு தெரிந்து விட்டால் மட்டும் நமக்கு சரியாகி விடப் போகிறதா என்ன?   லதிகாவிற்கு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை சாம்பவி தானே பெற்றெடுத்தது போல பூரித்துப்போனாள். ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜாகி போகிறபோது லதிகா குழந்தையுடன் சாம்பவியை பார்க்க வந்திருந்தாள்.   குழந்தை லதிகாவின் சிகப்பையும், கணவனின் முகத்தையும் உரித்துக் கொண்டிருந்தது. சாம்பவிக்கு பெருமிதம் பிடிபடவில்லை. விஜி, “தொடாதம்மா இவன் என் தம்பி! என் தம்பி... !” என்று கிள்ளி கிள்ளி கொஞ்சினாள். முத்தம் கொடுத்தாள். கட்டிக்கொண்டு குழந்தையை திணறவைத்தாள்.   “லதி! குழந்தையை நல்லா பார்த்துக்கோ, உடம்பை கவனிச்சுக்கோ. லேகியம் சாப்பிடு. வயிறு தளர்ந்து போகாம பெல்ட் போட்டுக்கோ. தவறாம உடற்பயிற்சி செய்” என்று தாயின் ஸ்தானத்திலிருந்து சாம்பவி ஆலோசனைகள் வழங்கினாள்.  “அக்கா! திரும்பத் திரும்ப கேட்கிறேனேன்னு நினைக்க வேண்டாம். இனிமேலாவது நீங்க வீட்டுக்கு வரக் கூடாதா?” “நேரம் வரும்போது வருகிறேம்மா” என்று அவளை சமாதானப்படுத்தி அனுப்பினாள். அந்தநேரம் வருமா. எப்போது வரும் என்று அவள் காத்துக் கொண்டிருந்தாள்.   அந்த நேரம் விரைவிலேயே வருவதற்கான அறிகுறிகள் தெரிகிற மாதிரி இருந்தது. அன்று வான்மதி இல்லை. வெளியே யாரையோ பார்க்கப் போயிருந்தாள். தனிமை அவளை வாட்டிற்று. மனம் பலகீனப்பட்டு என்னென்னவோ கற்பனை பண்ணின.   உள்ளம் புழுங்க ஆரம்பித்தது. இன்னும் நான் எதற்காக இருக்கிறேன்...? யாருக்காக...? வீணாய் மண்ணிற்குப்பாரம். மனக் கஷ்டம். ஆண்டவா...என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்ளக் கூடாதா?   டாக்டர் மாதம் ஒரு முறை வந்து அவளை செக்கப் பண்ணிவிட்டு போவார். வழக்கம் போல அன்றும் வந்திருந்தார். அவளுடைய பி.பி.யை பார்த்தவருக்கு வியப்பு. நார்மலாக இருந்தது. கொலஸ்ட்ரால் சுகரெல்லாம் டெஸ்ட் பண்ணி பார்த்து விட்டு, “எல்லாமே குறைந்திருக்கிறதம்மா கீப் இட் அப்” என்று வாழ்த்தினார்.       18.   எது குறைந்து என்ன பிரயோஜனம். பாழாய் போன நோய் குணமாக வேண்டுமே.   “சாம்பவி! உங்க மனசுல எந்தவித கவலையுமில்லாம பார்த்துக்குங்க. மன உறுதியோட இருக்கணும். தளர்ந்து போக்கூடாது. தெம்பும் நம்பிக்கையும் இந்த சமயத்துல ரொம்ப ரொம்ப முக்கியம். விடா முயற்சியாலயும் மனோ தைரியத்தாலும் எந்த நோயையும் குணப்படுத்தலாம். ஃபார் எக்சாம்பிள் எம்.ஜி.ஆரையே எடுத்துக்கங்களேன். அவருக்கும் ஆரம்பத்துல பாராலிஸிஸ் அட்டாக் ஆகியிருந்தது. பின்னால அது கிட்னியை பாதிக்கிற அளவுக்குப் போன போது கூட அவர் மனம் தளரலே. அத்தனை சிவியரான நோய்க்கு இடையிலும் அவர் தாக்கு பிடிச்சார்னா அதுக்கு காரணம் அவருடைய துணிச்சலும், கரையேறிவிடலாம் என்கிற நம்பிக்கையும் தான்” டாக்டர் அவளுக்கு தெம்பு தந்தார். அட்வைஸ் பண்ணினார். அவருடைய பேச்சு கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது. அட்வைஸ் என்பது எளிதான ஒன்று. அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லி விட்டு நாம் பாட்டிற்கு போய்க் கொண்டே இருக்கலாம். அனுபவித்து பார்த்தால் தான் அருமை புரியும்.  சாம்பவி படுக்கையில் கிடக்க முடியாமல் நெளிந்தாள். டாக்டர் போனதும் அவளுக்கு போரடித்தது. தூக்கம் பிடிக்கவில்லை. எத்தனை நேரம்தான் தூங்கிக் கொண்டே இருப்பதாம், கட்டியில் பொதிகை தமிழரசனிம் ‘மீண்டும் வருவேன்’ கவிதை தொகுதி இருக்க எடுத்து பிரித்தாள்.   ‘ஜோடி குருவியோடு கூடிக்களிக்கும் நேரம் வந்தாச்சு! சுபவேளை.  நெருங்கியாச்சு; ஊரோடும் உறவோடும் வீதியுலாவரும் நேரமாச்சு;  ராத்திரிக்கு மூச்சு காத்து ஒண்ணா சேர ரகசிய பேச்சு ஆரம்பாமாச்சு; பூத்திருந்த மனசுக்குள்ளே இன்பத்தேன் வடியுதுபாரு காத்திருந்த காமம் வந்து கண்ணுக்குள்ளே கோலம் போடுது; தீயக் கிரகங்கள் நிழல்படா நாள்பார்த்த, நேரம் பார்த்த   தம் இனத்தோடு பொருத்தம் பார்க்கப் புறப்பட்டன சிட்டுக்கள்’ வரவேற்பு முழங்க ஆண்குருவி வீட்டாரை அழைத்து. புதிய  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விரிப்பில் அமர வைத்தன;  கவிதை படிக்க படிக்க கணவன் நினைப்பெடுத்தது. அவனை பார்க்க மாட்டோமா பேச மாட்டோமோ என்றிருந்தது. ஆசை பொங்கிற்று. இந்நேரம் விஜி என்ன பண்ணிக் கொண்டிருப்பாள்?  ஸ்கூலில் இருப்பாளா? இன்று சனிக்கிழமை ஆயிற்றே. வீட்டில்தான் இருப்பாள். தம்பியோடு விளையாடிக் கொண்டிருப்பாள். அவள் யோசித்துக் கொண்டிருந்து போது ஆயா வந்து, “உங்களை பார்க்கிறதுக்கு இரண்டு பேர் வந்திருக்காங்க. வரச் சொல்லட்டுமா?” என்றாள்.   “யாராம்?” “உங்களோட அப்பாவும் அம்மாவும்...” “அப்பா...அம்மாவா?” அவளுக்கு அழுகை முட்டிற்று. கண்கள் மடை திறந்தன. “உடனே வரச்சொல்!” என்று குதூகலித்தாள்.  அவள் ஆவலுடன் வாசலையே பார்த்திருக்க உள்ளே நுழைந்த அம்மா, “சாம்பவி!” என்று ஒடிவந்து கட்டிக் கொண்டாள். “உனக்கு இந்த கதியா வரணும்? உன்னை இந்த நிலைமையிலா நாங்க பார்க்கணும்” என்று ஒப்பாரி வைக்காத குறை.   அப்பாவும் அவளுடைய கையை பிடித்துக்கொண்டு மவுனமாய் அழுதார்.   “எங்களுக்கு இன்னைக்குதாம்மா விஷயம் தெரியும். இங்கே ஒரு வேலையாய் வந்தோம். அப்போதான் பக்கத்து வீட்டு மாமி சொன்னா” அம்மாடி! ஆனாலும் உனக்கு இத்தனை வைராக்கியம் கூடாதுடி நல்லா இருந்தப்போ போடலேன்னாலும் சீக்கா இருக்கும் போது கூட கடிதம் போட உனக்கு தோணலியே... கடவுளே...எம்மக என்ன பாவம் பண்ணினா? அவளுக்கு ஏனிந்த தண்டனை? எங்களை பகைச்சுக்கிட்டு போனாலும் எங்கேயாவது சந்தோஷமா இருந்தா சரின்னு இருந்தோமே...” அம்மா தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் புலம்ப ஆரம்பித்தாள்.   “அது சரி நீ ஏன் இங்கே இருக்கணும். வீடு என்னாச்சு?” “நானாதாம்மா இங்கே வந்துட்டேன் அவருக்கும் குழந்தைகளுக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம்னு” “காதலிச்சு கட்டிக்கிட்டவனுக்கு சிரமம் கொடுத்தா என்னம்மா? நீ முடங்கிக் கிடக்கும்போது உன்னை கவனிச்சுக்கிறதை விட வேறு என்ன வேலை அவனுக்கு...” “ஏண்டி கத்தி ஊரை கூட்டறே? சாம்பவி! எங்களோட ஊருக்கு வந்திரும்மா எங்களுக்கு எந்த சிரமமும் இல்லே. நீ போனதிலிருந்து வீடுவிடா இல்லை சூன்யம் பிடிச்சு கிடக்கு” “வேண்டாம்ப்பா இங்கே சிகிச்சை நடந்துக்கிட்டிருக்கு ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறாங்க ஐ ஆம் ஹாப்பி!” “டாக்டர் என்னம்மா சொல்றாங்க?” “நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்குங்கிறார். சீக்கிரமே நான் எழுந்து நடமாடுவேன் என்கிறார்” “என்று கூசாமல் பேசினாள்.   “சாம்பி! உன் குழந்தையை நான் பார்க்கலாமா?” “என்னம்மா இப்படி கேட்கிறாய்? உனக்கில்லாத உரிமையா வீட்டுக்கு போய் பாரும்மா அங்கே லதிகா கூடப் பிறக்காத தங்கச்சியா இருக்கா. உங்களை பார்த்தால் அவ ரொம்ப சந்தோஷப்படுவா” “சரியென்று வீட்டிற்கு போனவர்களை விஜயகுமாரும், லதிகாவும் வருந்தி வருந்தி உபசரித்தார்கள், அன்பை பொழிந்து நெகிழ வைத்தார்கள். இரண்டு நாட்களாவது இருந்து விட்டுதான் போகவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.   “மாப்பிளை! இத்தனை நாளா உங்களை புரிஞ்சிக்காம இருந்துட்டோம். எங்களை மன்னிச்சிருங்க. நான் ஒரு அவசர வேலையா வந்தேன். இனி நாங்க அடிக்கடி வரோம் அம்மா லதி! இனி நீயும் கூட எங்க மகதாம்மா” என்று அவர்கள் மனபாரத்துடன் கிளம்பி போயினர்.   சாம்பவிக்கு தன் பெற்றோர்களை பார்த்ததும் துக்கம் அதிகாமயிற்று. அவர்களை பார்க்க மாட்டோமா என்கிற ஏக்கம் போய் ஏன் பார்த்தோம் என்றாயிற்று. அவர்களும் கவலைப் படும்படியாயிற்றே என்று நினைத்து வருந்தினாள்.  எல்லோருக்கும் நான் ஒரு காட்சிப் பொருளாகவும் கவலைப் பொருளாகவும் ஆகிவிட்டேன். இதிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா? அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஓவென கதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஓசை வரவில்லை.  நாக்கு வறண்டு போனது. தொண்டை செருமிற்று தண்ணீ குடித்தால் தேவலாம் போலிருந்தது.  “ஆயா” என்றாள். ஆனால் அந்த வார்த்தை வெளியே வராமலேயே அடங்கிப் போயிற்று.   “ஆயா...ஆயா” என்று கத்திப் பார்த்தாள். கரகரப்புதான் வெளிப்பட்டது. யாரையும் அழைத்து புண்ணியமில்லை என்பது புரிந்தது. வெளியே பிள்ளைகள் கரேமுரேவென்று விளையாடிக் கொண்டிருந்தன. சங்கு வேறு ஊதிற்று.   வலது கைக்கு எட்டுகிற தூரத்தில்தான் தண்ணீர் ஜக் இருந்தது. அனால் எப்படி? எட்டி எடுக்க வேண்டுமே நம்மால் முடியுமா? புரண்டு படுக்க முயன்றாள். முடியவில்லை. முட்டி எல்லாம் வலித்தது. பிடித்து இழுத்தது.   தலையை திருப்பி வலது கையை நீட்ட வேண்டும் என்று முயன்றாள். வலி உயிர் போயிற்று. வலது கையே எடு. அந்த தண்ணீரை எடு, மூளை உத்தரவு கொடுத்து ரொம்ப நேரமாகியும் கூட அது அப்படியே கிடந்தது.   அவளுக்கு அழுகையாய் வந்தது. நாக்கு வறண்டு போய் இருமல் வந்தது. குலுங்கி இரும்மிய போது வலது காலும் எம்பி தாழ்ந்தது. முதலில் அவள் அதை உணரவில்லை. அடுத்த முறை இருமிய போது வலது கையும் கூட அசைந்த மாதிரி தெரிந்தது.  என்ன ஆச்சரியம்! அவளுக்கு உற்சாகம் பிறந்தது. விரல்களை அசைத்துப் பார்த்தாள். அசைந்து கொடுத்தன. அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. இத்தனை நாட்கள் முடங்கிக் கிடந்தனவே...இப்போது எப்படி...? இது நிஜமா? கனவா... இல்லை நனவா?   இது நாம்தானா? நம் கைதானா? இவைகள் நன்முடைய விரல்கள் தானா?   சாம்பவிக்கு அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை நரம்புகள் புடைத்தன. மகிழ்ச்சி தலைக்கேறியது. அவளுக்கு எங்கிருந்து அத்தனை சக்தி வந்ததென தெரியவில்லை. பலம் முழுவதையும் வலது கையில் செலுத்தி முயல கை மெல்ல மெல்ல எழும்பிற்று.   “ஹையா! நமக்கு கை வருகிறது! எம்புகிறது! இதோ...இதோ இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்... போடா ராஜா போ” கை ஜக்கிடம் நெருங்கிற்று, அவள் தம் பிடித்து அதை கவ்வ முயல, ஜக் தட்டி விடப்பட்டு கீழே விழுந்து தண்ணீரை கொட்டியது.  தண்ணீர் போனால் போகட்டும். நமக்கு கை வந்து விட்டது. அது போதும். இதோ காலையும் அசைக்க முடிகிறது. தாங்க் காட்.   ஓ! வாட் எ ஒன்டர் மிர்ரக்கிள். அதிசயம் ஆனால் உண்மை. நாம் குணமடைந்து விட்டோம். நம் கட்டுக்கள் விலகிவிட்டன. அவளுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. மனமும் உடலும் ஆர்ப்பரித்தது. ஆரவாரம் செய்தது. ஹை! கையை தூக்கு மடக்கு. நீட்டு! உதறு. காலே நீயும் நீளு. மடங்கு குதி! நட ஓடு லெப்ட் ரைட்! லெப்ட் ரைட்! ஒன் டூ த்ரீ ஃபோர்  ஆ!  ஹா...ஊ...தும், கும்! அட்டென்ஷன்! ஸ்டாண்ட் அட் ஈஸ்! லெப்ட் டர்ன்! சாம்பவி! ஒபே த ஆர்டர்ஸ். ரைட் டர்ன்! எபவுட் டர்ன். ஆன் யுவர் மார், லெப்ட் ரைட், லெப்ட் ரைட்! சாம்பவி அறைக்குள் இங்குமங்கும் நடந்தாள். குழந்தை போல துள்ளினாள். குதித்தாள். என்ன இது இப்படி எல்லாம் சிறு பிள்ளைத்தனமாய் நடந்து கொள்கிறோம் என்று அவள் நினைக்கவில்லை.   முகத்தில் தென்றலடித்த மாதிரி ஒரு மலர்ச்சி கண்களில் ஒரு புத்துணர்ச்சி ஓ... ஓ... எனக்கு கை வந்து விட்டது. கால் வந்து விட்டது. இழந்த துன்பத்தை எல்லாம் நான் திரும்ப பெற்று விட்டேன். இதை உடனே எல்லோருக்கும் அறிவித்தாக வேண்டுமே! வான்மதி! வான்மதி! இங்கே கையை நீட்டுகிறேன். இதோ மடக்குகிறேன். இதோ கட்டிலில் இருந்து குதிக்கிறேன். நான் பூரண குணம் அடைந்து விட்டேன். எனக்கு இனி யாருடைய உதவியும் தேவையில்லை. யாருக்கும் நான் பாரமில்லை.  அம்மா! அப்பா உங்கள் மகள் தேறிவிட்டாள். குமார் உங்களுடைய மனைவி பிழைத்துக் கொண்டேன் பாருங்கள். ஆமாம் லதிகா! உன் பிரார்த்தனை பலித்துவிட்டது   விஜி! உங்க அம்மா மறு பிறப்பு எடுத்துட்டேன்டி அவள் உல்லாசத்தில் மிதக்க அப்போது உள்ளே வந்த வான்மதி, அப்படியே ஸ்டன் ஆகி நின்றாள். அவளுடைய கண்கள் விரிந்தன. மகிழ்ச்சியை கொட்டின.   “அக்கா வாட் எ சர்ப்ரைஸ். நீங்க குணமாயிட்டீங்க. உங்க ரத்தக் குழாயில் இருந்த கிளாட் கரைஞ்சு போயிருக்கணும். உங்களுடைய துன்பமெல்லாம் போயிருச்சு” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.   “உங்களை பார்த்ததும் எனக்கு கை கால் வரலேக்கா இந்த செய்தியை உடனே அறிவித்தாக வேண்டும். இருங்கள் உங்கள் கணவருக்கு போன் போட்டு வரவழைக்கிறேன்” .       19.   “வேண்டாம் வான்மதி! நானே அங்கே போய்க் கொள்கிறேன். திடீரென நேரில் போய் குதித்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன்.” “உங்களால தனியா போக முடியுமா? நானும் வரட்டுமா?” “வேணாம் நான் ஆட்டோவில் போய்க் கொள்கிறேன்” என்று அவளிடம் பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். வான்மதி இன்னமும் பிரமையில் இருந்து விடுபட முடியாமல் நின்றிருந்தாள்.   ஆட்டோவில் போகும்போது அவளுக்கு குஷி பிறந்தது. வெளிக்காற்று இதம் தந்தது. வாகனங்களைப் பார்த்து கையாட்ட வேண்டும் போல வெறி எழுந்தது.   பொதிகை தமிழரசனின் ‘இனி என்றும் வசந்தம்’ கவிதைகள் அவளுடைய மனதில் ரீங்கரித்தன. ‘ ‘செண்பகப் பூவனத்தினில் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரத்திலும்,   துள்ளிமேலெழுந்து விழுந்து உடைந்து சிதறாமல் மெல்லியதாய் நாதமெழுப்பும் என் வேதனைக்குரல் இரண்டறக் கலந்து விட்டது;  இனி செவிகளில் விழும் ஒவ்வொரு ஓசையும் உன் உயிரின் அடிவேரை உரசிப்பார்க்கும் ஆமாம் பெண்ணே! கிளைகளின் மது பூத்துக்குலுங்கும்   வசந்தத்தின் முகவரியை உன் விரல்கள் தான் மீட்டு கின்றன;  என் இரண்டு கைகளின் உழைப்பின் பிம்பமாய் ஒளி விடும் பத்து சூரிய விரல்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்போது என் வாழ்வில் இனி என்றும் வசந்தம்தான்...” குமார், வீட்டுக்கு வா வா என்றீர்களே... இதோ வந்து கொண்டிருக்கிறேன். லதிகா, நேரம் வரட்டும் வருகிறேன் என்றேனே, எனக்கு அந்த நேரம் வந்து விட்டதம்மா. விஜி, விஜி கண்ணு உங்கம்மா உன்னை தேடி வரேண்டா.   அவளுக்கு புத்துணர்ச்சி வந்திருந்தது. ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் அழைத்து சொல்ல வேண்டும் போல அவேசம் எழுந்தது’ “ஆட்டே... சீக்கிரம் போப்பா...” ஆட்டோ சிக்னலில் நிற்க அந்த நொடிகள் அவளுக்குயுகமாய் தெரிந்தன. எட்டி எட்டிப் பார்த்தாள். அம்மாடி இந்த இரண்டு வருடங்களில் எத்தனை பாடுபட்டிருப்போம். எத்தனை ராத்திரிகளை வீணடித்திருப்போம். இப்போ விடுதலை. இனி கனவில் மிதக்கலாம் குடும்பம் நடத்தலாம்.   ஆட்டோவை தள்ளி நிறுத்தி இறங்கிக் கொண்டாள் நாம் பதுங்கி பதுங்கிப் போய் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்போம் என்று நடந்தவளுக்கு கண்கள் நனைந்தன. இந்த வாசல் படியை மிதித்து எத்தனை நாட்களாகிறது. கேட்டின் விளிம்பில் கண்களை வைத்து பார்த்தவள் அங்கே தோட்டத்தில் கணவனும் லதிகாவும் விஜியை தூக்கிக் கொண்டு கட்டிப்பிடித்தபடி கொஞ்சிக் கொண்டிருப்பதை கவனித்ததும் அப்படியே பின்வாங்கினாள். அவளுடைய தலையில் பளீரென சாட்டையடித்தது.   சாம்பவி! நில். அவர்கள் இப்போது சந்தோஷமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷத்தை நீ கெடுக்கத்தான் வேண்டுமா?   நீ செயலிழந்து விட்டாய் என்று சும்மா இருந்த லதிகாவை அழைத்து வந்து மணமுடித்து வைத்தாய். உன்னையே நினைத்துக் கொண்டிருந்த அவன் இப்போது தான் மனம் மாறியிருக்கிறான். இப்போதுதான் அவள் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்திருக்கிறான். இந்த சமயத்தில் நீ போனாய் என்றால் மறுபடியும் அவன் அவளை ஒதுக்க ஆரம்பித்து விடுவான். இது தேவைதானா? முறைதானா? இதுதான் உன் நோக்கமா? இதுதான் நீ அவளுக்கு செய்யும் கைமாறா?   கேள்விகள் விசுக் விசுக்கென அடித்தன. அதன் நிஜமும், வேதனையும் பொறுக்க முடியாமல் சாம்பவி சட்டென வெளியே வந்து ஆட்டோ பிடித்தாள்.   நம் வாழ்க்கை என்றோ அஸ்தமித்து விட்டது. நாம் என்றோ செத்து விட்டோம். நம்முடைய மறுவாழ்வு அவளுடைய வாழ்வை அழித்து விடக் கூடாது. ஒரு முடிவுடன் அவள் காப்பகத்திற்கு திரும்ப,   வான்மதி, “ஏன்க்கா திரும்பிட்டீங்க? வீட்டுக்குப் போகலியா?” என்று வழிமறித்தாள்.   “இல்லை” “அதான் ஏங்க்கான்னேன்?” “வான்மதி! ஏதோ ஒரு வேகத்துல உணர்ச்சி வசப்பட்டுட்டேன். என்னையே நான் மறந்திட்டேன். ஆசைப்படக்கூடாததற்கு ஆசைப்பட்டுட்டேன்” என்று கண் கலங்கினாள்.   “என்னக்கா சொல்றீங்க நீங்க...?” “ஆமாம்மா. நான் போனால் அவர் லதியை ஒதுக்க ஆரம்பிச்சுடுவார். அவளோட சந்தோஷம் பாழ்படும். அதை என்னால தாங்கிக்க முடியாது. அவர்களை பொருத்தவரை நான் இன்னும் நோயாளிதான். இனியும்கூட முடம்தான். வாழ்நாள் பூரா அப்படியே இருந்துட்டுப் போறேன், வான்மதி இந்த உண்மை என்னோடும் உன்னோடும் மட்டுமே புதைஞ்சு போகட்டும். தயவு செஞ்சு யாருக்கும் சொல்லிராதம்மா. ப்ளீஸ் வான்மதி” என்று சாம்பவி அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.  வான்மதி, சாம்பவியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாளா? இல்லை வீட்டிற்கு தெரிவித்துவிட்டாளா என்பது வாசகர்களின் யூகத்திற்கு.  *********  எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.  தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:   தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.  சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.  எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.  சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.  அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது.  ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.  அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.  வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.  பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.  FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT , இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:    - ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் - தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் - சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை.  இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.  இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.  ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com   2. www.badriseshadri.in   3. http://maattru.com   4. kaniyam.com   5. blog.ravidreams.net   and more - http://freetamilebooks.com/cc-blogs/   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.   <துவக்கம்>   உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].   தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.  எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/     நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.     e-mail : freetamilebooksteam@gmail.com   FB : https://www.facebook.com/FreeTamilEbooks     G +: https://plus.google.com/communities/108817760492177970948           நன்றி.   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே  உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.  1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி .    2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –  கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்   http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101   https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/    3.  மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.     நூலின் பெயர்     நூல் அறிமுக உரை     நூல் ஆசிரியர் அறிமுக உரை     உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்     நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)   இவற்றை freetamilebooksteam@gmail.com  க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.  நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –  தமிழில் காணொளி offline method  – https://youtu.be/0CGGtgoiH-0   press  book  online  method   - https://youtu.be/bXNBwGUDhRs     A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/     எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum     நன்றி !