[] []   நூல் : தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்  ஆசிரியர் : தே. ஆக்னஸ் ஷர்மீலி  வகை : முனைவர் பட்ட ஆய்வேடு  அட்டைப்படம் : சத்யா  மின்னஞ்சல் : experimentsofme@gmail.com    மின்னூலாக்கம் :   அ.ஷேக் அலாவுதீன்    தமிழ் இ சர்வீஸ், மின்னஞ்சல் : tamileservice17@gmail.com     வெளியீடு :   FreeTamilEbooks.com   உரிமை :   CC BY SA               பொருளடக்கம் தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் 11   ஆய்வாளர் உறுதிமொழி 13  நன்றியுரை 14  சுருக்க குறியீடுகள் விளக்கம் 18  அடிக்குறிப்பு விளக்கம் 19  இயல் - 1 25  முன்னுரை 25  1.1. ஆய்வுத் தலைப்பு 30  1.2. முந்தைய ஆய்வுகள் 31  1.3. ஆய்வின் நோக்கம் 31  1.4. ஆய்வின் எல்லை 33  1.5 ஆய்வு சிக்கல் 33  1.6. கருதுகோள் 34  1.7. ஆய்வின் அணுகு முறை 35  1.8. ஆய்வு முறை 35  1.9. ஆய்வேட்டின் வடிவமைப்பு 36  இயல் - 2 39  இஸ்லாமிய சமயம் - ஓர் அறிமுகம் 39  2.1. இஸ்லாம் சமயம் 41  2.1.1. இஸ்லாம் சமய அடிப்படைக் கொள்கைகள் 44  2.2. முகம்மது நபி (ஸல்)" (570-632) 45  2.3. திருக்குர்ஆன் 49  2.4. திருக்குர்ஆன் போதனைகளின் சாரம் 51  இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகள் 51  2.41. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (கலிமா) 52  2.4.2. தொழுகை (இறைவழிபாடு) 53  2.4.2.1. தொழுகை செய்யும் நேரப்பட்டியல் 53  2.43. ரம்ஜான் எனும் ஈகைத்திருநாளில் நோன்பு 56  2.4.4. ஜக்காத் 57  2.4.5. புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் 58  2.5. அல்பாத்திஹா 60  2.6. தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வருகை 62  2.6.1. தமிழகம் 62  2.6.2 தமிழர்களும் - அரேபியர்களும் 63  2.6.3. தமிழகத்தில் இஸ்லாமியர் வருகை 66  2.7. தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் 74  2.7.1. நத்ஹர்வலி தப்லே ஆலம் பாதுஷா வாழ்க்கை வரலாறு 76  2.7.2 நாகூர் சாகுல்ஹமீது நாயகம் 79  2.8 தமிழகத்தில் முதல் இஸ்லாமிய படையெடுப்பு 81  2.9. மாலிக்காபூரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு அமீர்குஸ்ருவின் கூற்று56 83  2.10. முடிவுரை 83  இயல் - 3 85  தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் தோற்றம் மற்றும் வரலாறு 85  3.1.ஃபக்கீர்கள் அறிமுகம் 86  3.1.1. நபிகள் நாயகம் (ஸல்) (570-632) 87  3.1.2. சஹாபாக்கள் 87  3.1.3. கலீபாக்கள் 88  3.1.4.தர்வேஷ்கள் 88  3.15. சூஃபிக்கள் 89  3.1.5.1. சூஃபிக்களின் ஞானநிலைகள் 92  3.1.5.2. சூஃபிக்களின் நான்கு பயிற்சி நிலைகள் 93  3.1.53. தமிழக இஸ்லாமிய சூஃபிக்கள் 94  3.15.4 தரீக்கா (Tarigah) 95  3.1.5 5. சூஃபிக்களின் அடையாளப் பொருட்களான அணிகலன்கள் 97  3.1.6. இறைநேசர்கள் (அவுலியாக்கள்) 98  3.2. தர்ஹா 100  3.2.1. ஃபக்கீர்கள் வரலாறு 101  3.2.2.1. மிஸ்கீன்கள் 104  3.2.2.2. முஸாஃபர்கள் 105  3.3. தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் 105  3.4 ஃபக்கீர் பெயர் விளக்கம் 106  3.4.1 ஃபக்கீர் சொல் திரிபுகள் 107  3.4.1.1. பக்கீர் ஓர் ஆன்மீக பணியாளர் 108  3.4.1.2 ஃபக்கீர் ஓர் வறியவர் 109  3.4.1.3. ஃபக்கீர் ஓர் நாடோடி 110  3.4.1.4. ஃபக்கீர் ஓர் பொழிவாளர் 110  3.4.1.5. ஃபக்கீர் ஓர் பெருமைமிக்கவர் 111  3.4.1.6.ஃபக்கீர் ஓர் இசைக்கலைஞர் 112  3.5. ஃபக்கீர் பிரிவுகள் 113  3.5.1. ஷாபானுவா பிரிவு 117  3.5.2. ஷா தப்காத்தி மண்டல் தாரி பிரிவு ஃபக்கீர்கள் 118  3.5 3. ஷாசடை மலங்கு பீர் பிரிவு ஃபக்கீர்கள் 119  3.5.4. ஷ ஜலாலி பிரிவு ஃபக்கீர்கள் 120  3.5.5. ரிஃபாயி பிரிவு ஃபக்கீர்கள் 121  3.6. சாதாரண இஸ்லாமியர் ஃபக்கீராகுதல் 123  3.6.1. சற்குருவை தேர்ந்தெடுத்தல் 124  3.6.2. பாவமன்னிப்பு உடன்படிக்கை 125  3.6.3. கலிமா சொல்லுதல் 126  3.6.4. ஸ்பரிச தீட்சை 126  3.6.5. நிர்வாண தீட்சை 127  3.6.6. கபன் ஆடை அணிதல் 128  3.6.7. பெயர் வைத்தல் 129  3.6.8. தல்கீன் உரைத்தல் 129  3.6.9. பியாலா கொடுத்தல் 130  3.7. ஃபக்கீர்கள் பெறும் பட்டங்கள் 132  3.8. ஃபக்கீர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகள் 133  3.9. தமிழக ஃபக்கீர்களின் ஆடை அணிகலன்கள் 135  3.10. ஃபக்கீர்கள் காணிக்கை பெறும் முறை 138  3.11. இந்து மரபில் உஞ்ச வ்ருத்தியும் இஸ்லாமிய ஃபக்கீர் மரபில் 142  காணிக்கை பெறுதலும் 142  3.11.1. பக்கீரர்களும் உஞ்சவிருத்தியும் 144  3.12. பக்கீர்கள் வாழும் இடங்கள் 145  3.12.1. தமிழ்நாட்டில் ஃபக்கீர்கள் அதிகமாக வாழுமிடங்கள் 145  3.12. 2. தர்காவில் ஃபக்கீர்கள் தங்குமிடம் 148  3.13. பாடல் தவிர்த்து ஃபக்கீர்களின் பிற தொழில்கள் 150  3.13.1. மந்திரித்தல் 150  3.13.1.1. மந்திரிக்கும் முறை 151  3.13.2. தகடு எழுதுதல் 152  3.13.3. சாம்பிராணி புகைக்கட்டுதல் 153  3.14 முடிவுரை 153  இயல் - 4 இயல் நான்கு 155  தமிழக ஃபக்கீர்களும் இசையும் 155  4.1.ஃபக்கீர்களது இசைப் பயிற்சி 156  4.2. பாடல்கள் 157  4.3. குரல் வளம் 157  4.4. பாடுமுறை 158  சந்தன கூடு விழா 163  4.6. பாடும் நேரம் 164  4.7. குழு பாடற்பயிற்சி 165  4.7.1. குழு பாடல் பாடும் முறை 165  4.8. தமிழக ஃபக்கீர்களின் இசைக்கருவிகள் 167  4.8.1. டங்கா 168  4.8.2. பாங்கா 169  4.8.3. மார்கோ பாஹ்ரா 170  4.8.4. தாயிரா அமைப்பும் விளக்கமும் 171  4.8.4.1. தாயிராவின் வகைகள் 172  4.8.4.2. தாயிரா வாசிக்கும் முறை 174  4.9. கதைப்பாடல் பாடும் முறை 176  4.10. தமிழக ஃபக்கீர்கள் பாடல்களில் இசைச்சிறப்புகள் 177  4.10.1. தனிப்பாடல்கள் 181  4.10.2. நெடும் பாடல்கள் 182  4.10.3. கதைப்பாடல்கள் 182  4.11. முடிவுரை 183  இயல் - 5 185  5.1. போற்றிப் பாடல்கள் 188  5.1.1. முகம்மது நபி மீதான பாடல் (எடுத்துக்காட்டு) 190  5.1.2. முகம்மது நபி மீதான பேச்சு வழக்கில் அமைந்த பாடல் 193  5.1.3. முகம்மது நபி பட்டத் துன்பங்களை விளக்கும் பாடல் 196  5.2. அவுலியாக்கள் மீதான புகழ்மாலைப் பாடல்கள் 197  5.2.1. முகைதீன் அப்துல் காதர் ஜீலானி மீதான பாடல் (எடுத்துக்காட்டு) 198  5.2.2. அவுலியாக்கள் மீதான பொதுவான பாடல் (எடுத்துக்காட்டு) 201  5.3. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள 203  5.4. தக்கலை பீர் முகம்மது அப்பா மீதான பாடல்: 204  5.5. மதுரை கோரிப்பாளையம் சுல்தான் அலாவுதீன் 206  5.6. தத்துவப்பாடல்கள் 207  5.7. செல்வம் நிலையாமையை வலியுறுத்தும் பாடல் 209  5.8. உயிர் நிலையாமையினை வலியுறுத்தும் பாடல் 214  5.8.1. மரண விளக்க பாடல் 215  5.8.2. இறந்த உடல் தன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தார்களைக் கண்டு பேசுவது போன்ற 220  5.9. பெண்புத்தி மாலைப் பாடல் (தாய் மகள் ஏசல்) 223  5.10. பெண் கடமைப் பாடல் 233   5.11. நிகழ்வுப் பாடல்கள் 236  5.12. பாடலும், உரைவிளக்கமும் 241  5.12.1. முகம்மது நபியின் பிறப்புச் சரித்திரம் 241  5.12.2 பாத்திமா நாயகி திருமண நிகழ்ச்சி 249  5.12.3. சைத்தூண் கிஸ்ஸா 253  5.13. வினா - விடை பாடல் அமைப்பு 255  5.14. முடிவுரை 277  இயல் - 6 278  தமிழ் இலக்கியம் சுட்டும் பாணர்களும் தமிழக ஃபக்கீர்களும் - ஓர் ஒப்பாய்வு 278  6.1. பாணர் வகையினர் 280  6.2. பாணர் குடியிருப்பு 281  6.3. பாணர் வாழ்வு 283  6.4. பாணர் தம்மை புரத்தல் 285  6.5. பாணர் பெற்ற பரிசுகள் 287  6.6. ஆற்றுப்படுத்துதல் 290  6.7. பாணரும் இசையும் 292  6.8. தமிழ் இலக்கியப் பாணர்களும் - தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களும் 295  6.8.1. வறுமை நிலை 296  6.8.2. நாடோடி நிலை 297  6.8.3. இசை 300  6.8.4. தெருக்களில் பாடுதல் 302  6.8.5. இசைக்கருவிகள் 303  6.8.6. துயிலொடை நிலை 308  6.8.7. போர் 310  6.8.7.1. விடுதலைப் போரில் ஃபக்கீர்களின் பங்கு 313  6.8.8. தொழில் 316  6.9. முடிவுரை 319  இயல் - 7 320  தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் இன்றைய நிலை 320  7.1. தற்கால ஆன்மீக நிலை 321  7.2. தற்கால சமூகநிலை 323  73. கல்வியில் தற்கால நிலை 326  7.4. பொருளாதார நிலை 328  7.5. இன்றைய ஃபக்கீர்களின் இல்லறச் சடங்குகள் 330  7.5.1. திருமண வாழ்வு 331  7.5.2. ஃபக்கீர்களின் இறப்புச் சடங்கு 334  7.6. சமுதாய மரியாதை 335  7.7. மசூதிகளில் மரியாதை 335  7.8. தற்கால ஃபக்கீர்களின் இசை 336  7.8.1. பாடுகளம் 337  7.8.2. பாடும் முறை 337  7.8.3. இசைக்கருவிகள் 338  7.8.4. பாடல் பதிவு 339  7.8.5. ஃபக்கீர்களின் தற்கால தொழில்கள் 339  7.9. முடிவுரை 340  முடிவுரை 342  முடிவுரை 342  ஆய்வின் முடிவு 346  ஆய்வின் பயன் 346  மேல் ஆய்வுக்கு வழி செய்வன் 347  துணை நூற்பட்டியல் 349  I. தமிழ் நூல்கள் 349  II. ஆங்கில நூல்கள் 359  III. கலைக்களஞ்சியங்கள் 359  IV. இதழ்கள், விழா மலர்கள் 360  V. ஆய்வுக் கட்டுரைகள் 361  VI. ஆய்வேடுகள் 361  VII. இணையத்தளங்கள் 361  பின்னிணைப்புகள் 363  பின்னிணைப்பு - 1 363  தகவலாளிகள் பட்டியல் 363  I. ஃபக்கீர்கள் 363  II. ஃபக்கீர் அல்லாமல் தகவலளித்தோர் 369  பின்னிணைப்பு - 2 370  வினா நிரல் 370  (1) தனிநபர் விபரம் 370  (2) கல்வி நிலை 371  (4) பாடும் முறை 372  தற்கால நிலை: 373  பின்னிணைப்பு - 3 374  நேர்காணல் (மாதிரி) 374  பின்னிணைப்பு - 4 379  புகைப்படங்கள் 379  பின்னிணைப்பு - 5 382  பின்னிணைப்பு – 6 388            தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்   பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு  இசையில் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெறும் ஆய்வேடு    ஆய்வாளர் தே. ஆக்னஸ் ஷர்மீலி  (Ref.No.14386/Ph.D2Music/PT July 2006)   நெறியாளர் முனைவர் மார்கரெட் பாஸ்டின்  கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது  திருச்சிராப்பள்ளி - 620 001, இந்தியா          நெறியாளர் சான்றிதழ்  முனைவர். மார்கரெட் பாஸ்டின், முதல்வர், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 001.   'தமிழக  இஸ்லாமிய  ஃபக்கீர்கள்'  என்னும்  தலைப்பில்  தே. ஆக்னஸ் ஷர்மீலி   (14386Ph.D. 2/Music /Part-Time July 2006) அவர்கள் மேற்கொண்ட இந்த  ஆய்வு  பாரதிதாசன்  பல்கலைக்கழக  முனைவர்  பட்டத்திற்காக கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி இசைத்துறையில் பகுதி நேரமாக அவர் ஆய்வு  செய்த  காலத்தில் தன்னியலாக எழுதப்பட்டது என்றும், இந்த ஆய்விற்காக வேறு எந்தப் பட்டமும் ஆய்வாளருக்கு அளிக்கப் பெறவில்லை என்றும் சான்று அளிக்கின்றேன். நாள் : முனைவர் .மார்கரெட் பாஸ்டின், (நெறியாளர் மற்றும் முதல்வர்)       ஆய்வாளர் உறுதிமொழி நாள்:   தே. ஆக்னஸ் ஷர்மீலி, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 001.     'தமிழக  இஸ்லாமிய  ஃபக்கீர்கள்'  என்ற  தலைப்பில்  அமையும்  இவ்வாய்வேடு  கலைக்காவிரி  நுண்கலைக் கல்லூரி  இசைத்துறையில்  பகுதி நேர ஆய்வாளராகப் பயின்ற காலத்தில் என் சொந்த முயற்சியில் உருவானதென்றும், இதற்கு முன் வேறு எந்தப் பட்டத்திற்கும் இவ்வாய்வேடு அளிக்கப்படவில்லை  என்றும்  உறுதியளிக்கின்றேன்.   தே. ஆக்னஸ் ஷர்மீலி ஆய்வாளர் முனைவர் .மார்கரெட் பாஸ்டின், நெறியாளர்   நன்றியுரை எல்லாம்  வல்ல  இறைவனுக்கு  நெஞ்சம்  நிறை  நன்றிகள்  பல.   'தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்' என்னும் தலைப்பில் இவ்வாய்வேடு உருவாவதற்கு என்னை ஊக்குவித்து, எப்பொழுது அணுகினாலும் வேண்டிய அறிவுரைகள் நல்கி நெறிப்படுத்திய எனது ஆய்வு நெறியாளர், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்களுக்கு என்  நெஞ்சார்ந்த  நன்றியைத்  தெரிவித்துக்  கொள்கின்றேன்.   பகுதிநேர ஆய்வாளராக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பளித்த கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி நிறுவனர் தந்தை அமரர் மோன்சிங்ஞோர் எஸ். எம். ஜார்ஜ் அடிகளார் அவர்களுக்கும் எனது நன்றி மலர்களை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன். மேலும் செயலர் அருட்தந்தை அந்துவான் அடிகளாருக்கும் முன்னாள்  செயலர்  அருட்தந்தை  சூசை அலங்காரம் அவர்களுக்கும் என்னை செதுக்கிய இசைத்துறை பேராசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்த வாய்ப்பளித்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும்  எனது  நன்றி  உரியது.   இவ்வாய்வேடு உருவாகப் பெரிதும் உதவிய திருச்சிராப்பள்ளி ஜமால் முகம்மது கல்லூரி தமிழாய்வுத்  துறைத்தலைவர், இணை பேராசிரியர் முனைவர்  மீ.அ.ச. ஹபீபுர்ரஹ்மான்  அவர்களுக்கும், வரலாறு  துறை பேராசிரியர் முனைவர் அக்பர் ஹீசைன் அவர்களுக்கும், அரபித்துறை துணை பேராசிரியர் திரு. காஜாமைதீன்   அவர்களுக்கும், வரலாற்று  எழுத்தாளர்  மற்றும் ஆய்வறிஞர் செ.திவான் (திருநெல்வேலி) அவர்களுக்கும் முன்னாள் தமிழ்நாடு ஆவணக் காப்பாளர் முனைவர் ராஜா முகம்மது (புதுக்கோட்டை) அவர்களுக்கும் எனது நன்றி.   இவ்வாய்வுக்கு பல தகவல்களைத் தந்து ஆலோசனைகள் நல்கிய அன்பு  சகோதரர்  வ. ரஹமத்துல்லா (தமிழாசிரியர்,  அல்அமீன் உயர்நிலைப்பள்ளி, மதுரை) அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும்  இஸ்லாமிய  ஃபக்கீர்களை  நேர்காணலின்  பொருட்டு சந்திக்க உதவியும், பல தகவல்களையும் தந்தும் ஊக்கமூட்டிய  எழுத்தாளர்  கழனியூரன் அவர்களுக்கும் திரு. ஏ. சேக் அப்துல்லா அவர்களுக்கும் எனது நன்றி என்றும் உரியது.   இவ்வாய்வுக்கு அழகியதொரு நேர்காணல் வாழ்வியல் முறைக் கூறுகளின் விளக்கம், பாடல்கள் நல்கி இவ்வாய்வேடு உருவாகப் பெரிதும் உதவிய தமிழக இஸ்லாமிய ஃபக்கீர் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   ஆய்வுக்குத் தேவையான நூல்களை கொடுத்து உதவியும், என்மீது முழு அன்புக் கொண்டு ஆலோசனைகள் பலவும் வழங்கிய நூலகர் திருமதி. வித்யா ஆண்டனி அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி  ஜமால் முகம்மது கல்லூரி துணை நூலகர் திரு. மஹபூப் ஷெர்ஃப் அவர்களுக்கும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகர்களுக்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகர்களுக்கும் எனது நன்றிகள். ஆய்வு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வின் போக்கை ஆய்வு செய்து  பல்கலைக் கழகத்திற்கு  அறிக்கையளித்த  பேராசிரியர்  முனைவர்  ரீட்டா ராஜன், சென்னை அவர்களுக்கு எனது நன்றி. கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் அர்ப்பண பணியாளரும் முன்னாள் ஆய்வுத்துறை ஒருங்கிணைப்பாளருமான MS.சாருமதி அவர்களுக்கும், இந்நாள் ஒருங்கிணைப்பாளர் இசைத்துறை துணைப்பேராசிரியர் முனைவர் உமாமகேஸ்வரி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.   என்னை இசைத்துறையில் அறிமுகப்படுத்தியவரும், எனது முதல் இசை ஆசானும், எனது எல்லா சூழ்நிலைகளில் எண்ணற்ற உதவிகள் செய்து ஊக்கமூட்டி ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் மனதார மகிழ்ந்து வாழ்த்தி ஆசீர் வழங்கிய அன்பு அண்ணன் அருட்தந்தை முனைவர் ப.ரஸல்ராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.   என்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி இந்த ஆய்வின் பொருட்டு என்னோடு பயணித்து ஊக்கமூட்டி துன்ப வேளைகளில் எல்லாம் தோள் கொடுத்த அன்புதந்தை தே. தேவராஜ், தாயார் எஸ். ஜேனட் அவர்களுக்கும், எனது அன்பு கணவர் திரு. லியோ ராபர்ட், சகோதரி சுமிதா பாக்கியம், சகோதரர் சந்தோஷ் லியோ அவர்களுக்கும், களஆய்வின் பொருட்டு வெளியூர் செல்லும் போதெல்லாம் பல சிரமங்களை பொறுத்துக் கொண்ட அன்பு மகள் சினேகா ஷாரன், மகன் கெவின் விஜய் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.   இவ்வாய்வேட்டினை  அச்சேற்றிய பிரின்ஸ் கணினி நிறுவனர் திருமதி. ர. ஷீபா  அவர்களுக்கும்  எனது  நன்றிகள். இதற்கொரு முழு வடிவம் தந்த கோல்டன் நெட் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தார்க்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   நன்றியுடன், தே. ஆக்னஸ் ஷர்மீலி   சுருக்க  குறியீடுகள்  விளக்கம் ஆசி ஆசிரியர் தொ .ஆ. தொகுப்பு ஆசிரியர் ப.ஆ . பதிப்பு ஆசிரியர் க. ஆ. கட்டுரை ஆசிரியர் ப பக்கம் பக். பக்கங்கள் மேலது இதன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல் புறம். புறநானூறு அகம். அகநானூறு ம.கா. மதுரைக்காஞ்சி சிலம்பு. சிலப்பதிகாரம் குறு. குறுந்தொகை நற். நற்றிணை பதிற்று. பதிற்றுப்பத்து தொல். தொல்காப்பியம்  ஐங்குறு. ஐங்குறுநூறு எ-டு. எடுத்துக்காட்டு P Page PP Pages     அடிக்குறிப்பு விளக்கம் ஆய்வேட்டில் மேற்கோளாகச்  சுட்டிக்காட்டப்பட்டிள்ள தமிழ் இலக்கிய பாடலடிகள் அருகே அடைப்புக் குறிக்குள் அச்செய்தி  இடம் பெற்றுள்ள நூல், பாடலடி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் வசனங்களின் அத்தியாய எண், வசன எண் ஆகியனவும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற மேற்கோள்களின் விவரங்கள் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன. ஆய்வேட்டில்  பயன்படுத்தப்பட்டுள்ள உருது, அரபிச் சொற்களின் தமிழ் பொருள் அகராதி   ஆய்வேட்டில்  பயன்படுத்தப்பட்டுள்ள உருது, அரபி சொற்களின் தமிழ் பொருள் அகராதி    அல்லாஹ் இறைவன்  அலிப் மீம் அரபு அரிச்சுவடியில் உள்ள இரண்டு எழுத்துக்கள்  அவுலியா இறைநேசர்கள் ஒலியுள்ளா ,வழி, அலி இறைநேசர்  ஆகிர் இறுதியானவன் ஆகிறம் மறுமைநாள்  ஆசித் அமைதி  ஆதம் முதல் மனிதன், முதல் நபி ஆமின் அப்படியே ஆகுக ஆயத் திருக்குர்ஆனின் ஒரு வசனம் இஸ்லாம் இஸ்லாமிய மார்க்கம் இசுறாயில் உயிரைக் கவர்ந்து செல்லும் வானவரின் பெயர் இத்தா கணவன் இறந்தவுடன் பெண்கள் நாற்பது நாட்கள் பிற  ஆடவர் கண்ணில் படாது ஒதுங்கி வாழும் காலம் இபாதத் வணக்கம் இப்லீஸ் சாத்தான் (சைத்தான்) இமாம் தொழுகைக்கு தலைமை ஏற்று நடத்துபவர் இலாஹ் இறைவன் இன்ஸான் மனிதன் ஈமான் இறைநம்பிக்கை உமாத் மரணம் உஸ்தாது ஆசிரியர் கஃபா மக்காவில் உள்ள பள்ளிவாசல் கப்ரு இறந்தவரை அடக்கம் மண் அறை கபன் இறந்த  இஸ்லாமியரின் உடலில் நல்லடக்கத்தில்  அணியப்படும்  ஆடை கல்ஃப் இதயம் கலீபா முகம்மது நபிக்கு அடுத்து மதத் தலைமை தாங்கிய  நால்வரை குறிக்கும் பெயர் கலிமா இஸ்லாமியர்களின்  மூல மந்திரத்தைக் குறிக்கும் சொல் காமில் பரிபூரணம் கியாமத் இறுதி தீர்ப்பு நாள் காபீர் ஓர் இறை மறுப்பு குர்ஆன் இஸ்லாமியரின் வேதநூல் சகாபாக்கள் முகம்மது நபியின் தோழர்கள் சக்காத் கட்டாய ஏழைவரி சக்ராத் மனிதனின் உயிர் பிரியும் இறுதிநிலை சதக்கா தருமம் சந்தூக்கு இறந்த இஸ்லாமியரின்  உடலை  நல்லடக்கம்  செய்யும் பொருட்டு  எடுத்துச்  செல்லும்  பெட்டியின்  பெயர் சரீயத் (ஷரீயத்) இஸ்லாமிய மார்க்கச் சட்டம் சரிபு சிறப்பு சறகு இஸ்லாமிய தெய்வீகச் சட்டம் சலாம் அமைதி சில்சிலத்து மரபுவழி சங்கிலித் தொடர் சுபஹானல்லாஹ் இறைவன் தூய்மையானவன் சுருமா கண்ணில் பூசப்படும் ஒருவகை மை சூஃபி இஸ்லாமியரின் மெய்ஞானி சைகு ஆன்மீக வழிகாட்டி தக்பீர் ’அல்லாஹ் அக்பர்’ என முழக்கம் இடுதல் தர்கா இறைநேசர்களின் அடக்கவிடம் தரீக் ஞானப்பாதை தரீகத் சூஃபி மார்க்க பிரிவுகளில் ஒன்று தவ்ஹீத் இறைவன் ஒன்றான தன்மை ஏகத்துவம் தருஜாத் நற்பலன் தஸ்தகீர் கரம்பிடித்துக் காப்பவர் திக்ரு இறை தியானம் தீன் இஸ்லாமிய மார்க்க நெறி துஆ பிரார்த்தனை துனியா உலகம் நபி இறைத்தூதர் நபிசு ஆசை ஃபக்கீர் இஸ்லாமிய இரவலர் பயான் விளக்கம் பரக்கத் இறையருள் பனா நிலையற்றது ஃ அழிவு பாத்திஹா ஆரம்பம்  திருக்குர்ஆனில்  முதல் அத்தியாயத்தின்  பெயர் பாதுஷா அரசர் பாங்கு தொழுகைக்கான அழைப்பொலி பிஸ்மீ தொடங்குதல் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயரால் புகரா ஃபக்கீர்களின் குழு புருகான் குர்ஆனின் மற்றொரு பெயர் ரூஹ் உயிர் மசலா இஸ்லாமிய இலக்கிய வகை ஒன்றின் பெயர் மலக்கு வானதூதர் மவுத்து மரணம் மௌலூது மத சான்றோர்களின் நினைவாக பாடப்படும் புகழ்மாலை  மரஹபா பாராட்டு மஃரிபத் மெய்ஞானம் மிஸ்க்கீன் ஏழை எளியவர் மினா கனவு முசாஃபர் பயணம் செய்பவர் முரீது ஃபக்கீர்களின் உபதேச  சடங்கின்  பெயர் முஹபத் அன்பு முமீன் நம்பிக்கையாளன் மையத்து சடலம் யா விளிச்சொல் யாமுகைதீனே ஏன்  முகைத்தீனே  என  அழைத்தல் வஹ்துல் ஒருமை ரஹீம் அன்புடையோன் ரகுமான் அருளாளன் ரஹ்மத் அருள் ரசூல் தூதுவர் ரப்பிப் பாடுதல் ரமலான் இஸ்லாமியர்  நோன்பு  நோற்கும் மாதத்தின் பெயர் ஜனாஸா உயிரற்ற சடலம் ஜல்தி விரைவு ஜிப்ரீல் வானதூதர் ஹக்கன் உண்மையானவன் அல்லாஹ்வின் திருப்பெயர்களுள்  ஒன்று ஹகீகத் உண்மை ஹயாத் உயிர் ஹால் நிலைமை ஸல் ‘ஸல்லல்லாஹி  அலைஹி  வஸல்லம்’ அவர் மீது அல்லாஹ் அருள் பாவித்து சாந்தி பொழிவானாக  இயல் - 1   முன்னுரை மனித வாழ்வை மாண்புறச் செய்வன கலைகள். கலைகளில் சிறந்தது இசைக்கலையே. ஒலியின் அடிப்படையில் இசைக்கலை அமைகிறது. ஒலியை நுட்ப உணர்வால் செவிப்புலனின் நுகர்வுத் திறன் கொண்டு பாகுபடுத்தி ஒலிப்பகுதிகளை முறையாக ஒன்றுடன் ஒன்றாகச் சுவை தரும் வண்ணம் இணைந்து இன்னிசை எழுமாறு அமைத்துக் காட்டுவதே இசைக்கலை. இசைக்கலை ஓர் தெய்வீகக் கலை. இசைக்கலையை ஐந்தாம் வேதமாக காந்தர்வவேதம் என்று  குறிப்பிடுவது உண்டு. இசைக்கலை தனித்தன்மைகளை உடையது. கேட்போரைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எந்த ஒரு கருத்தும் இசையின் வழி எளிதாகச் சென்றடைகிறது. இறைவனை வழிப்படுவோரை இறையோடு இணைக்கும் மாபெரும் சக்தி இசைக்கு உண்டு. இதனாலேயே  நாதவடிவமான இறைவன் கலைகளுக்கெல்லாம் உறைவிடமாகத் திகழ்கின்றார். இதனையே பேராசிரியர் சாம்பமூர்த்தி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.   "Siva plays the damaru (drum), Krishna plays the flute and Saraswathi plays the vina. The celestials like Narada and Tumburu are associated with musical instruments”   மேற்கண்ட செய்தி இசைக்கலையின் தெய்வீகத் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் அமைந்ததாகும்.   இறைவன் இசை வடிவமாயிருக்கிறான் என்பதால்   "ஏழிசையாய் இசைப்பயனாய்..."2 என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ''ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே...'3 என்று அப்பர்  பெருமானும்  பாடியுள்ளனர். இவற்றால் இசை  தெய்வீகக் கலை  என்பது  புலனாகின்றது.   ஒரு நாட்டின் கலாச்சார உயர்வு என்பது இசை, நடனம் போன்ற நுண்கலைகளிலும், இலக்கியங்களிலும், மொழியிலும், வாழ்க்கைத் ____________________________________________________________________________________________ Padma Bhushan Prof. P. Sambamoorthy, South Indian Music Book – Vol. I, 1980, p.3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் (7ம் திருமுறை), 2006, ப.139. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், (6ம் திருமுறை, திருத்தாண்டகம்), 2006, ப.105.   தரத்திலும் எந்த அளவு உயர்ந்திருக்கின்றது என்ற அளவுகோலை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றது. இசைக்கலைஞர்களைத் தன்னகத்தே கொண்டிராத நாட்டின் வரலாறு வெறுமையாகத்தானிருக்கும். இசைக்கலைஞர்கள் வெறும் கலைஞர்கள் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அரிய கருவூலமும் கூட. இசைக்கலை மிகவும் தொன்மையானது, அருள்மயமானது. இந்த இசைக்கலை மேலான இன்பத்தைக் கொடுக்கும் சுகமான கருவியாகும். மக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த இனியதோர் அருங்கலையே இசைக்கலை. இசை  மனிதர்களை மட்டுமின்றி விலங்குகள், மரங்கள், செடிகளையும் இசைய  வைக்கின்றது.  இதனை மகாகவி பாரதியார்,   "காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும் பாட்டின் சுவையதனைப் பாம்பறியும்..."   என்கிறார்.   இசை, மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் அவனோடு பின்னிப்பிணைக்கப்பட்டுவிட்ட அருங்கலையாகும். மனிதன் பிறந்தால் தாலாட்டுப் பாட்டு, மகிழ்ச்சியில் பாட்டு, ஒவ்வொரு சடங்கிலும் பாட்டு, துக்கத்திலும் பாட்டு, உழைக்கும் போது களைப்பைப் போக்க பாட்டு, காதல் பாட்டு, வழிநடைப் பாட்டு, தூங்கும் போது பாட்டு, இறக்கும் போது பாட்டு என அவன் வாழ்வோடு இரண்டறக் கலந்தே இசைக்கலை பயணிக்கிறது.   இத்தகைய இசைக்கலையானது சமுதாயத்தில் அடிநிலையில் வாழ்வோர் முதலாய், தங்களின் நோக்கத்திற்கேற்ப இசைக்கலையினை வளர்த்து, பயன்படுத்தி வருகின்றனர். இசையில் நாட்டுப்புற  இசை, செவ்வியல் இசை என இரு பெரும் பிரிவுகள் உண்டு. வரலாற்றைப் பார்க்கும் பொழுது நாட்டுப்புறக் கலைகள் தான் முதன்முதலில் தோன்றியவை. இவை மக்கள் வாழ்வோடும், வழிபாட்டோடும்  ஒன்றோடு  ஒன்று இணைந்து காணப்படுகின்றன. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இயற்கையோடு வாழ்வை  நெருக்கமாக்கிக்  கொண்டவர்கள்தான்  நம்   * பாவேந்தர் பாரதியார், பாரதியார் கவிதைகள், 1998, ப. 209.   பழந்தமிழர்கள்.  தொடக்கக் காலத்தில் வேட்டைக்குச் செல்லும் போது வழிகாட்டுவதற்காகப் பாறைகளில் குறிப்புகளை வரைந்து கருத்துக்களைப்  புலப்படுத்தினார்கள். வேட்டையில்  கிடைத்த மகிழ்ச்சியில் குலவையிட்டார்கள். இது வாய்மொழி ஊடகமாகி இசைக்கலைக்கு  அடித்தளமிட்டது. மகிழ்ச்சியால் குதித்து ஆடியது ஆட்டக்கலைக்கு  அடித்தளமிட்டது.  இவ்வாறுதான் நாட்டுப்புறக் கலைகள் தோன்றின என்று  கருதுவதுண்டு.  பழந்தமிழ் மக்கள் அவர்களின் இன்ப, துன்பங்களில் வெளிப்படுத்திய உணர்வுகள் நாட்டுப்புறக் கலைகளாகின. அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் இசை முக்கியப் பங்கு வகிக்க ஆரம்பித்தது. இங்ஙனம், தோன்றிய இசையானது இன்றளவும் பல்வேறு பரிணாமங்களுடன்  வளர்ந்து  ஓர்  உன்னத  நிலையை அடைந்துள்ளது.   இந்தியா,  வேற்றுமையில் ஒற்றுமையை கொண்ட பெருமைமிகு  நாடு. இங்கு இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என பல மதத்தவரும், பல்வேறு இன, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட மக்களும் வாழ்கின்றனர். எனினும் இசை என்பது இனம், மொழி, மதம் ஆகிய இவை அனைத்தையும் கடந்து அனைவருக்கும் பொதுவான  ஒன்றாகவே  காணப்படுகின்றது.   உலக மக்களால் பல்வேறு சமயங்கள் பின்பற்றப்படினும் உலக அளவில் இரண்டாவது பெரிய சமயமாகக் காணப்படுவது இஸ்லாமிய சமயமாகும். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் மேலை நாட்டவராலே அறிமுகப்படுத்தப்பட்ட மதமாகும். பழங்காலத் தொட்டே இந்நாட்டில் வாழ்ந்து வந்த பூர்வீக மக்களே சூழ்நிலைக்கேற்ப  இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைத் தழுவினர். எனினும் பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றை நோக்குங்கால் நம் தமிழக மண்ணின் பாரம்பரியத்தையே  இவர்கள்  பின்பற்றுவதைக்  காண்கின்றோம்.   தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் 5.57 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். பிற  சமயங்களான இந்து மற்றும் கிறிஸ்தவ சமய மக்களைப் போன்று இசைக்குத் தங்கள் வழிப்பாட்டில் அதிக முக்கியத்துவம் தராத ________________________________________________________________________ http://census2001.tn.nic.in/religion.aspx   போதிலும், இவர்களில் ஒரு பிரிவினரான ஃபக்கீர்கள், இசையினைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு, சமய நெறிகளையும், நல்லொழுக்கக் கருத்துக்களையும், தத்துவக் கருத்துக்களையும் பாடலாக வீடு தோறும் பாடி வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் வாழ்கின்ற ஃபக்கீர்களது தோற்றம், வாழ்வியல் முறை, இசைக் கலைஞன் என்ற வகையில் இசையுடன் கொண்ட தொடர்பு, பாடும் பாடல்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள், பாடல்கள் பாடும் இடங்கள், இசை பயிற்சி மேற்கொள்ளும் முறை, பாடல்களில் இசை மற்றும் இலக்கியக்  கூறுகள்  ஆகியன  இவ்வாய்வுக்கு  எடுத்துக்  கொள்ளப்பட்டுள்ளது.   தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் நாடோடி வாழ்வை மேற்கொண்டவர்கள், வறியவர்கள் எனினும் இசைமூலம் இஸ்லாமிய சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தும். இனிய தொண்டாற்றி வருகின்றார்கள். இன்றைய  காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பிலான இசை பற்றிய ஆய்வுகளும், இசையின் வரலாறுகள், நுணுக்கங்கள், வாக்கேயக்காரர்கள், இசைக்கலைஞர்கள் பற்றிய  ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ஒரு சமூகத்தின் தனித்தன்மைகளையும் அவற்றில் காணப்படுகின்ற முரண்பாடுகளையும்  அறிந்து  கொள்ள  வாய்ப்புகள்  அதிகம்.   அவ்வகையில், இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான தமிழக ஃபக்கீர்களின் வாழ்வியல் முறைகள் யாவும் பிற இஸ்லாமியர்களிடமிருந்து பெரிதும்  வேறுபட்டு பல தனித்தன்மைகள் கொண்டு விளங்குகின்றன. இவர்களின் வாழ்வு இறைபக்தியிலும், இசையிலும், நம்பிக்கைகளிலும் பன்முகத்தன்மைகள் கொண்டவையாக காணப்படுகின்றது. எனவே தமிழக ஃபக்கீர்களின் தனித்துவமிக்க வாழ்வியல் கூறுகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி, நாட்டுப்புற பாடலின் கூறுகளைக் கொண்ட இவர்களின் பாடல்களின் சிறப்புக்களையும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஆய்வாளருக்கு ஏற்பட்டது.   1.1. ஆய்வுத் தலைப்பு 'தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்' என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   1.2. முந்தைய ஆய்வுகள் தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் வாழ்வியல் முறை, நாடோடித் தன்மை, இசையோடு கூடிய தொடர்பு, பாடல்களில் இலக்கியக் கூறுகள், பழந்தமிழ் இசைக்கலைஞர்களான பாணர் தம் வாழ்வியலுடன் ஃபக்கீர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுக் காணும் ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை .  எனினும்  ஏ.கே. ரிபாயி (1988),  கழனியூரன் (1995), தொ. பரமசிவன் (2001),  வ. ரஹமத்துல்லா (2007) ஆகியோர் ஃபக்கீர்கள் பற்றிப் பொதுவான  கட்டுரைகளை  எழுதியுள்ளனர். மேற்கண்ட கட்டுரைகள் ஃபக்கீர்களை அறிமுகப்படுத்தும் நிலையில் சில குறிப்பிட்ட தகவல்களையே அளிக்கின்றன.   1.3. ஆய்வின் நோக்கம்   இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான தமிழக ஃபக்கீர்கள், இசையினைத் தங்கள் வாழ்வாகக் கொண்டு, சமயநெறிகளையும், நல்லொழுக்கக் கருத்துகளையும், தத்துவக் கருத்துக்களையும் பாடலாகப் பாடிப் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை 'புதிய பார்வை ' (டிசம்பர் 1-15, 2004) என்ற பத்திரிக்கையில் காண நேர்ந்தது.  ஆய்வாளர்  இச்செய்தியின்  அடிப்படையில் சில ஃபக்கீர்களை  சந்திக்க,  நமது சங்ககால பாணர்களை ஒத்து இவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண முடிந்தது.  அதன் அடிப்படையிலும் இவ்வாய்வு கீழ்கண்ட நோக்கங்களைக் கருத்தில் கொண்டும் மேற்கொள்ளப்பட்டது.   - ஃபக்கீர்  என்போரின்  தோற்றம்  மற்றும்  வரலாற்றினைக்  கண்டறிந்து கூறுவது. - ஃபக்கீர்களின் தனித்தன்மை வாய்ந்த வாழ்வியல் கூறுகளையும் சடங்குகளையும்  வெளிக்கொணர்வது - ஃபக்கீர்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு, பின்பற்றும் இசைமுறை, இசைப்பயிற்சி மேற்கொள்ளும் முறை, பயன்படுத்தும் இசைக்கருவிகள் போன்றவற்றைப்  பற்றிய  உண்மைகளை  வெளிக்கொணர்வது. - பண்டைய தமிழக நாடோடிக் கலைஞர்களான பாணர்களுக்கும், தற்கால தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்து  கூறுவது. - ஃபக்கீர்களின்  இன்றைய  நிலையினை  ஆய்ந்து  கூறுவது.   இதுவரையில் ஃபக்கீர்களைப் பற்றி வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளின் பின்னணியிலும் ஆய்வின் நோக்கத்தின் அடிப்படையிலும் கீழ் வரும்  வினாக்களுக்கு  விடை காண  இவ்வாய்வு  முயலுகின்றது.   - ஃபக்கீர் என்போர் யார்? அவர்களின் தோற்றம் மற்றும் வரலாறு யாது?   - ஃபக்கீர்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு யாது?   - ஃபக்கீர்கள் பயன் படுத்தும் இசைக்கருவிகள் எவை?   -   நாடோடி வாழ்வை மேற்கொண்டு, இசையை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த  சங்க  காலப் பாணர்களுக்கும்,  தற்கால ஃபக்கீர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்  யாவை? பழங்கால ஃபக்கீர்களுக்கும் தற்கால ஃபக்கீரர்களுக்கும் இடையே காணப்படும்  வேறுபாடுகள்  எவை?   1.4. ஆய்வின் எல்லை இஸ்லாமியர்  உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களில் ஒரு பிரிவினரானக் கருதப்படும் ஆன்மீகவாதிகளான ஃபக்கீர்கள் உலகில், குறிப்பாக  இந்தியாவில் பல மாநிலங்களில் வாழ்ந்து  வருகின்றனர்.  இவர்களுள் தமிழகத்தில் வாழ்கின்ற ஃபக்கீர்கள் மட்டுமே இவ்வாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்  என்பதுவே  இந்த  ஆய்வின்  எல்லையாகும்.   1.5 ஆய்வு சிக்கல் சங்ககாலப்  பாணர்களைப்  போன்றே  நாடோடிப்  பாடகர்களான தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் வாழ்வு முறையும் அமைந்துள்ளது. இவற்றிடையே பல ஒற்றுமையைக் காணமுடிகின்றது. வெவ்வேறு இடங்களுக்குச்  சென்று  பாடித்  தங்களது வாழ்வை நடத்துபவர்கள் என்பதால் ஒரு இடத்தில் இவர்கள் தங்கி வாழ்வது இல்லை. எனவே இவர்களை ஒரு குறிப்பிட்ட  இடத்தில்  சென்று  காணமுடியாமல்  சிக்கல்கள் எழுந்தன. ஆய்வாளர்  வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் எல்லா  இஸ்லாமிய  ஃபக்கீர் அன்பர்களிடம் இருந்தும் கருத்துக்களைப் பெறுவதில் சிரமமிருந்தது. (பல ஃபக்கீர்கள் 'அல்லாவின் உத்தரவு இல்லை' என்ற வகையில் பதிலளித்தனர்) மேலும் இந்த ஆய்வானது இருபத்தொன்றாவது நூற்றாண்டிலான ஆய்வு என்பதால்  மக்கள்  தொடர்புச் சாதனங்கள் அவர்களது பழமையான பாடல்களுக்கு  ஒரு  புதுமை  வண்ணம் தீட்டியிருப்பதை அறிய முடிகின்றது. அதன்  பழமையை அறிந்து கொள்ள இயலாத ஒரு சூழ்நிலையை இது தருகின்றது.  மேற்கண்டவை  களப்பணியில்  அடைந்த  சிக்கல்களாகும்.   1.6. கருதுகோள்   மேற்கூறப்பட்ட ஆய்வு வினாக்களின் பின்னணியில், ஆய்வு முடிவுகளைத் துல்லியமாகவும், தெளிவாகவும் பெற ஏதுவான முறையில் கருதுகோள்கள்  முன்வைக்கப்பட்டுள்ளன. - தமிழக   இஸ்லாமிய  ஃபக்கீர்கள்  இசைபாடும்  இரவலர்களாகிய ஆன்மீகவாதிகள் - ஃபக்கீர்கள் பாடும் பாடலின் இசையானது தமிழக நாட்டுப்புற இசையின் மெட்டமைப்பினை  ஒத்துக்  காணப்படுகின்றது. - ஃபக்கீர்கள் ஸ்ருதிக்கான தனி வாத்தியங்கள் பயன்படுத்தவில்லை மாறாக தாளக்  கருவிகளையே  பயன்படுத்துகின்றனர். - பாடல்கள்  கருத்துச் செறிவு மிக்கனவாகவும், இலக்கண  அழகுகள் நிரம்பப் பெற்றனவாகவும்  அமைந்துள்ளன.   - சங்க கால பாணர்களைப் போன்று பல பண்பு நலன்களில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. - தற்கால சமூக மாற்றங்களுக்கு ஏற்றார் போல் ஃபக்கீர்களின் வாழ்விலும், இசையிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. 1.7. ஆய்வின் அணுகு முறை தமிழ்நாட்டில் இஸ்லாமிய ஃபக்கீர்கள் அதிகமாக வாழும் தர்காக்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதியிலும்  களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. களஆய்வில் முறைப்படுத்தப்பட்ட வினாப்பட்டியல், மற்றும் முறைபடுத்தப்படாத திறந்த நிலை வினாக்கள் உதவியுடன்  நேர்காணல்,  உற்றுநோக்கல், பேட்டிகள் இவற்றின்  மூலம்  கிடைத்த தரவுகளே ஆய்விற்கான முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டன. இவை தவிர புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், செய்தித்துணுக்குகள் வழி திரட்டப்பட்ட தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளாக  கொள்ளப்பட்டன.   1.8. ஆய்வு முறை விளக்கவியல் ஆய்வுமுறை மற்றும் வரலாற்றாய்வு முறைகளின் உத்திகளோடு ஒப்பாய்வும் செய்து இவ்வாய்வு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.   1.9. ஆய்வேட்டின் வடிவமைப்பு   முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஏழு இயல்களைக் கொண்டு இவ்வாய்வேடு அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலிலும் அந்தந்த இயலுக்குரிய செய்திகளை  விளக்கி,  முடிவுகள்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.   இயல்  ஒன்றில்  முன்னுரை, ஆய்வுத் தலைப்பு, முன் ஆய்வுகள், ஆய்வு நோக்கம், ஆய்வு சிக்கல், கருதுகோள், ஆய்வுக்களம், ஆய்வின் எல்லை, ஆய்வின் வடிவமைப்பு ஆகியன விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஏழு இயல்களிலும் நிரூபிக்கப்பட்ட கருதுகோள்கள் ஒட்டுமொத்தமாக இணைத்து முன்னுரையில் தரப்பட்டுள்ள பொதுவான கருதுகோள்களை நிரூபிக்கின்றன. அது  முடிவுரையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.   இயல் இரண்டில் இஸ்லாமிய சமயம் பற்றிய அறிமுகம், இஸ்லாம் சமய அடிப்படைக் கொள்கைகள், முகம்மதுநபி(ஸல்) (570-632), திருக்குர்ஆன், ஐம்பெருங் கடமைகளின் விளக்கம், தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வருகை, தமிழகத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம், தமிழகத்தில் முதல் இஸ்லாமிய படையெடுப்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளது.   இயல்  மூன்றில்  தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஃபக்கீர்கள் பற்றிய அறிமுகம், ஃபக்கீர்களின் முன்னோடிகளான சஹாபாக்கள், கலீபாக்கள், தர்வேஷ்கள், சூஃபிக்கள், தரீக்கா, சூஃபிக்களின் அடையாளப் பொருட்களான அணிகலன்கள், இறைநேசர்கள், தர்ஹா, ஃபக்கீர்கள் வரலாறு, தமிழக இஸ்லாமிய இரவலர் பிரிவுகள்,  தமிழக  இஸ்லாமிய  ஃபக்கீர்கள், ஃபக்கீர் பெயர் விளக்கம், ஃபக்கீர் சொல் திரிபுகள், ஃபக்கீர் பிரிவுகள், சாதாரண இஸ்லாமியர் ஃபக்கீராகுதல், ஃபக்கீர்கள் பெறும் பட்டங்கள், ஃபக்கீர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகள், தமிழக ஃபக்கீர்களின் ஆடை அணிகலன்கள், ஃபக்கீர்கள் காணிக்கை பெறும் முறை,  இந்து  மரபில்  உஞ்ச  வ்ருத்தியும்  இஸ்லாமிய  ஃபக்கீர் மரபில் காணிக்கை  பெறுதலும் - ஒப்பாய்வு,  பக்கீர்கள்  வாழும் இடங்கள், ஃபக்கீர்களின் பிற  தொழில்கள்  ஆகியன  ஆய்வு  செய்யப்பட்டு  விளக்கப்பட்டுள்ளது.   இயல் நான்கில் ஃபக்கீர்கள் இசை பயிற்சி மேற்கொள்ளும் முறை, பாடல்கள் பதிவு, குரல்நிலை , பாடும் முறை, குழு பாடற்பயிற்சி, குழு பாடல் பாடும் முறை, பாடுகளம், பாடும் நேரம், தமிழக ஃபக்கீரர்களின் இசைக்கருவிகள், டங்கா, பாங்கா, மார்கோ பாஹ்ரா (கொம்பு), தாயிரா அமைப்பும் விளக்கமும், தாயிராவின் வகைகள், தாயிரா வாசிக்கும் முறை, கதைப்பாடல் பாடும் முறை, தமிழக ஃபக்கீர்கள் பாடல்களில் இசைச் சிறப்புகள், தனிப்பாடல்கள், நெடும் பாடல்கள், கதைப்பாடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.   இயல் ஐந்தில் ஃபக்கீர்பாடும் பாடல்களான போற்றிப் பாடல்கள், முகம்மது  நபி  மீதான  பாடல்கள்,  அவுலியாக்கள் மீதான புகழ்மாலைப் பாடல்கள், தத்துவப்பாடல்கள், செல்வம் நிலையாமையை வலியுறுத்தும் பாடல்கள்,  உயிர்  நிலையாமையினை வலியுறுத்தும் பாடல், பெண்புத்தி மாலைப் பாடல், பெண்  கடமைப் பாடல், பாடலும் உரைவிளக்கமுமாக அமைந்த முகம்மது நபியின் பிறப்புச் சரித்திரம், பாத்திமா நாயகி திருமண நிகழ்ச்சி, சைத்தூண் கிஸ்ஸா, நூறு மசலா - வினாவிடைப் பாடல் கதை சுருக்கம் ஆகியனவற்றில் காணப்படும் இலக்கியக்கூறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இயல் ஆறில் தமிழ் இலக்கியம் சுட்டும் பாணர்களையும் தமிழக ஃபக்கீர்களையும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பாணர் வகையினர், பாணர் குடியிருப்பு, பாணர் வாழ்வு, பாணர் பசியாற்றுதல், பாணர் பெற்ற பரிசுகள், ஆற்றுப்படுத்துதல்,  பாணரும் இசையும் ஆகியன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தமிழ்  இலக்கியப்  பாணர்களும் – தமிழக  இஸ்லாமிய ஃபக்கீர்களும் ஒப்பாய்வாய் வறுமை நிலை, நாடோடித் தன்மை, இசை, தெருவில் பாடுதல் இசைக்கருவிகள்,  துயிலொடை நிலை,  போர்,  விடுதலைப் போரில்  ஃபக்கீர்களின் பங்கு,  தொழில்  ஆகியன  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இயல் ஏழில் இன்றைய காலக்கட்ட தமிழக ஃபக்கீர்களின் ஆன்மீக நிலை, சமூக நிலை, கல்வி நிலை, குடும்ப வாழ்வு நிலை பொருளாதார நிலை, தற்போது இசையினை பயன்படுத்தும் விதம் போன்றவை ஆய்வுச் செய்யப்பட்டுள்ளது.   இயல் - 2 இயல் இரண்டு இஸ்லாமிய சமயம் - ஓர் அறிமுகம்   உலகில் பல்வேறு சமயங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் தோன்றியுள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கொள்கைக்களையும், கோட்பாடுகளையும் கொண்டிருந்தன. பொதுவாகச் 'சமயம்' என்னும் சொல்லுக்குச் 'சமைத்தல்'. 'பக்குவப்படுத்தல்' என்றெல்லாம் பொருளுரைக்கின்றனர். அதாவது சமயங்கள் உலகில் உள்ள மக்களின் மனங்களைச்  சமைத்துப்  பக்குவப்படுத்தி,  நேரான  பாதையில்  செலுத்துகின்றன. ''சமயம் மனிதனது பழக்கவழக்கங்கள், வழிபாட்டுச் சடங்குகள், செய்யக்கூடாத  செயல்கள், நன்னடத்தை, ஒருங்கிணைதல் இவற்றை  உள்ளடக்கி  விளக்குகிறது.  இது  சமயக் குழுக்களுக்கு  உட்பட்டோ  உட்படாமலோ மனிதனுக்கும்  இறைவனின்  சக்திக்கும்  புனிதத்தன்மைக்கும்  உள்ள அடிப்படைத்  தொடர்பாக  அமைகிறது''    என்று  சமுதாயவியல்  கலைக்களஞ்சியம்  விளக்கம்  தருகின்றது.   உலகில் உள்ள பல்வேறு சமயங்களுள் ஒன்று இஸ்லாமிய சமயம். இதனை  'மதம் அல்ல மார்க்கம்'  என்று  குறிப்பிடுகின்றனர்.  தென்மேற்கு  ஆசியப் பகுதியில் தோன்றிய இந்த சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் முகம்மது நபி (ஸல்) (கி.பி.570-632) என்பவர் ஆவார். பிற சமயங்களைப் போலவே, இஸ்லாமும் மிகக் குறுகிய காலத்தில் மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமயமாக  வளர்ச்சி  பெற்றது. இதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தது, முகம்மது நபி (ஸல்)  அவர்களின்  சீரிய  முயற்சியும்,  அவர்  போதித்த போதனைகளுமாகும். நபியின் போதனைகள் கொண்ட இஸ்லாமியக் கருத்துக்களை ஆயிரக் கணக்கான இஸ்லாமியப் பற்றாளர்கள் உலகநாடுகள் முழுவதற்கும் எடுத்துச்  சென்று பரப்பினர்.  இவ்வாறே  இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய சமயம் பரவியது.  முகம்மது நபி (ஸல்) அவர்களின் காலம் தொட்டு  இன்று வரை இஸ்லாம் மதம் தமிழகத்தில் நிலைத்து இருக்கின்றது.  முகம்மது நபி அவர்களின் காலத்திற்குப் பின் இஸ்லாமிய  சமயம்  பரவ வில்லியம், சமுதாயவியல் கலைக்களஞ்சியம், ப. 345.   முக்கிய காரணமாக இருந்தவர்கள் இஸ்லாமிய இறைநேசர்களாகிய அவுலியாக்களும்  அவர்களின்  சீடர்களான  ஃபக்கீர்களுமாகும்.   இந்திய  மாநிலங்களில்  தென்கோடியில் அமைந்த மாநிலம் தமிழ்நாடு. வேற்றுமையில் ஒற்றுமையைத் தன்னகத்தே கொண்ட தன்னிகரில்லா  மாநிலம். இங்கு  பெரும்பான்மை சமயங்களான சைவ, வைணவ மதங்களைப் போல் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களும் வேரூன்றி வளர்ந்து வந்துள்ளன. சைவ, வைணவத் திருக்கோயில்கள் இம்மாநிலம் முழுவதும் பரந்து காணப்படுவது போல் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களான பள்ளி வாசல்கள் மற்றும் தர்காக்கள் மாநிலம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. இதில் தர்காக்களைச் சுற்றியுள்ள பகுதியிலேயே பாடலை முதன்மைத் தொழிலாகக் கொண்டு, நாடோடி வாழ்வினை மேற்கொண்டு வாழ்ந்து வரும் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.   இந்த  ஆய்வானது தமிழகத்தில் தற்போது வாழ்ந்து வரும் ஃபக்கீர்களின் வாழ்க்கைமுறை, அவர் தம் பாடல்களில் அமைந்துள்ள இசை மற்றும் இலக்கிய கூறுகள் பற்றி விளக்குவதால் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு இஸ்லாம் என்ற சொல்லிற்குரிய விளக்கத்தினையும், நபிகள் நாயகம் வரலாறு, இஸ்லாமிய சமய அடிப்படைக் கொள்கைகள், ஐம்பெருங்கடமைகள் குறித்தும் ஓரளவேனும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. ஆதலால் அவற்றைப் பற்றிய விளக்கங்கள் இவ்வியலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.   2.1. இஸ்லாம் சமயம் இஸ்லாமிய சமயத்தினை 'சாந்த மார்க்கம்' எனவும் அழைப்பது உண்டு.   "இஸ்லாம் என்ற அரபு சொல்லிற்கு அடிபணிதல் என்று பொருள். முஸ்லீம் என்ற  சொல்லிற்கு  அடிபணிபவன்  என்று  பொருள். மேலும் இஸ்லாம் என்பதற்கு சாந்தி எனவும் முஸ்லீம் என்பதற்கு சாந்தமானவர் என வேறு  பொருள்களும் உள்ளன.  மேலும்  இதற்கு  ஈடேற்றம் பெறச் செய்வது என்ற பொருளும் உண்டு”.   அப்துல் ரஹீம், இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், 1979, ப. 275. இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து அதன்மூலமாக சாந்தி பெற்று உலகில் சாந்தம், அமைதி ஆகியவற்றை நிலை பெறச் செய்து இம்மை மற்றும்  மறுமையில்  ஈடேற்றம்  பெறுவது  என்பதேயாகும். "இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து, அமைதியாக வாழ்ந்து, இம்மை  மறுமைகளில்  ஈடேற்றம்  பெற மனிதனுக்கு வழிகாட்டும் இறைநெறியே  இஸ்லாம்"   என்று  இஸ்லாமியக்  கலைக்களஞ்சியம்  கூறுகிறது.   "இஸ்லாம்  என்பதை ஒரு மதம் அல்லது சமயம் என்று கூறுவதைவிட, வாழ்க்கை நெறிமுறைகள்  அடங்கிய  வழிமுறைகளை வகுத்துக்  காட்டும் மார்க்கம்  என்பதே  பொருத்தமுடையதாக  அமையும்''   என்கிறார்  பீ.மு.அஜ்மல்கான். எனவே இஸ்லாம் என்ற சொல்லே மனிதனைச் 'செம்மைப்படுத்துதல்' என்னும் பொருளைக் கொண்டிருப்பதை அறியலாம்.   இஸ்லாம் என்பதற்குக் கீழ்கண்டவாறு எச்.வைத்யநாதன் தமது வழிபாடும்  சமயமும்  என்ற  நூலில்  விளக்கம்  அளித்துள்ளார்.   ''சாந்தி பெறுவதற்குரிய நெறிதான் இஸ்லாம். 'ஸலாமத்' என்ற சொல்லிலிருந்து இஸ்லாம் என்ற சொல் பிறந்தது. இறைவனே தன்னைப் படைத்தான்.  அவன் கட்டளைகளை மீறுதல் கூடாது. தகாத ஒழுக்கங்களை விலக்க  வேண்டும்.  பிறருக்கு உதவி செய்தல், கருணை காட்டுதல் வேண்டும். இத்தகைய நன்னெறிதயை ஏற்றுக் கொண்டவனே இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தை  அடைகிறான்.   மனிதன் தன்னை  ஒழுங்குப்படுத்தி நேரான வழியில் செல்ல இஸ்லாம்  சமயம்  வலியுறுத்துவதை  இதன் மூலம்  அறிய முடிகின்றது.   இஸ்லாமிய  சமயம் முகம்மது நபியால் பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கம் ஆகும். இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவினவர்கள் 'இஸ்லாமியர்' எனவும் 'முஸ்லீம்'  எனவும்  அழைக்கப்படுகின்றனர். என் மணவை முஸ்தபா,  இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், 1991, ப. 47. பீ. மு. அஜ்மல்கான்,  இஸ்லாம் வரலாறும் தத்துவமும், 1995, ப.7. எச். வைத்யநாதன்,  வழிபாடும் சமயமும், 1977, ப.107.   "தீன்  வழி வாழ்வோர்  முஸ்லீம் ஆவார். முஸ்லீம்  என்ற அரபுச்  சொல்லிற்கு   “அல்லாஹ்வுக்கு  (இறைவனுக்கு)  முற்றிலும் அடி பணிபவர்,  சாந்தி பெற்றவர்  என்ற பொருள்களுண்டு”.   என என். மணவை முஸ்தபா (1991:134) விளக்கியுள்ளார். மேலும் கா.மு.ஷெரிப் (1981:32), மா.இராமலிங்கம் (1977) போன்றோரும் இஸ்லாம் என்பதற்குரிய  விளக்கத்தினை  இதுபோன்றே  அளித்துள்ளனர். இஸ்லாம் சமயம் 'இறைவன் ஒருவனே, அவனே அல்லா' என்ற இறையொருமைக் கோட்பாட்டை உடைய சமயம். இஸ்லாம் சமயத்தினர் இறைவனால் அருளப்பட்டதாகக் கருதப்படும் வேதமாகிய 'திருக்குர்ஆனையே’ பின்பற்றியொழுகுகின்றனர். உருவ வழிபாடற்ற முறையில் 'தொழுகை' என்பதன் மூலம், தங்கள் வணக்கத்தினை இறைவனுக்குச் செலுத்தி வருகின்றனர். இறுதி நபியாகிய  முகம்மது  நபியின் பொன்மொழிகளைக் கடைப்பிடித்து வருபவர்களாக உள்ளனர்.   2.1.1. இஸ்லாம் சமய அடிப்படைக் கொள்கைகள் இஸ்லாம் சமயத்தினர் தனித்தன்மை வாய்ந்த சில அடிப்படைக் கொள்கைகளைத்  தம்மகத்தே கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் இறைவனுக்கும், இறைவனை வேண்டுகின்ற பக்தனுக்கும் இடையே இடைத்தரகர்  ஒருவரும் இல்லை. வேண்டுதல்  செய்கின்ற  மனிதன் நேரடியாக இறைவனை வழிபடவும், தம் குறைகளைக் கூறி குறைதீர்க்க இறைவனிடம் வேண்டவும் இஸ்லாமிய சமயம் அறிவுறுத்துகிறது.  இறையான அல்லாவிடத்து விருப்பு வெறுப்பு இல்லை. அல்லாவின் முன்னால் அனைவரும் ஒன்றே. இறைச்சட்டம் எல்லோருக்கும் ஒன்றே. ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்ற பாகுபாடு இல்லை. தண்டிப்பதைவிட மன்னிப்பதையே  பெரிதாகப் போற்றுகிறது.  இஸ்லாமிய சமயத்தில் எந்தவொரு நிர்ப்பந்தமோ, சிறுமைப்படுத்துதலோ இல்லை. இஸ்லாமிய சமயத்தில், எந்தப் பிரிவினராக இருப்பினும் அவர்களிடையே இறை ஒன்று, மறை ஒன்று, முறை ஒன்று என்ற அடிப்படைக் கொள்கையே நிலவுகின்றது.   என். மணவை முஸ்தபா,  இளைஞர்  இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், 1991, ப.134. கா.மு. ஷெரீப்,  வள்ளல்  சீதக்காதி வரலாறு, 1981, ப. 32. மா. இராமலிங்கம்,  இருபதாம்  நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், 1977, ப.10.   இஸ்லாமியர் பின்பற்றுகின்ற ஏக தெய்வக் கொள்கை முகம்மது நபி (ஸல்) அவர்களால் முதன்முதலாக போதிக்கப்பட்டதன்று. இஸ்லாமியர் தத்துவங்களை நிலைநாட்டவும், இஸ்லாமியர் நெறியைப் பரப்பவும் 1,24,000 இறைதூதர்கள் (நபிமார்கள்)  மண்ணுலகில்  தோன்றினர். எனினும் முகம்மது நபி (ஸல்) அவர்களையே இறுதி நபியாக ஏற்று, அவரே. 'அல்லாவின் தூதர்' என நம்புகின்றனர். இதுவே இஸ்லாமிய சமயத்தின் தலையாய கோட்பாடாக இருக்கின்றது. ''மனித சமுதாயம் தீய வழியில் செல்லாது தடுத்து, அச்சமூட்டி எச்சரிக்கை  செய்வதற்கு  இறைவன்  இவ்வுலகிற்கு ஆதம் நபி முதல் முஹம்மது நபி (ஸல்)  வரை  1,24,000  நபிமார்களை  அனுப்பியுள்ளான்".   இஸ்லாமியர்களின்  திருமறையான  திருக்குர்ஆனில்  இருபத்தி ஐந்து  நபிமார்கள்  மட்டும்  தான்  குறிப்பிடப்பட்டுள்ளனர்.  இந்த  நபிமார்கள் செய்த  பணியைத் தொடர்ந்து இறுதி நபியாக முகம்மது நபி (ஸல்) அவர்கள் வந்து நிறைவு செய்தார்கள் என்றும், அவர்கள் மூலமாக இறைவன் அருளிச் செய்த  திருக்குர்ஆன் முழுமையடைந்தது என்பதால் புனிதர் முகம்மது நபி (ஸல்) அவர்களே இறுதி நபிகள் என்றும், அவருக்குப் பின் வேறு எந்த நபியும் தோன்றப்  போவதில்லை  என  நம்பப்படுகின்றது.   2.2. முகம்மது நபி (ஸல்)" (570-632)   முகம்மது நபி கி.பி.570ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் குன்றுகளுக்கிடையே அமைந்த மக்கா நகரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்னரே தந்தையையும், தன் சிறுவயதில் தாயையும் இழந்தார். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களாலும் வளர்ந்தபின், பெரிய தகப்பனார் அபுதாலிப் அவர்களாலும் வளர்க்கப்பட்டார்.  இவர் தன் இளவயதில் தன் பெரிய தகப்பனாரின் தொழிலில் அவருக்கு உதவி புரிந்தார். பின்னர் மக்கா நகரில் செல்வச் சீமாட்டியாக வணிகம் செய்து வந்த கதீஜா என்னும் விதவையின் வாணிபத்திற்கு உதவியாக இருந்தார். இவரது வணிகத் திறமையினையும் நேர்மையையும் கண்டு  மகிழ்ந்த பீ. மு. அஜ்மல்கான், இஸ்லாம் வரலாறும் தத்துவமும், 1995, ப.142. அப்துல் அல் ஜப்பார் முகையதீன், மார்ட்டின் லிவிங்ஸ் மூல நூல்களின் அடிப்படையில் முகம்மது அவர்களின் வாழ்வு - தமிழாக்கமும் மதிப்புரையும், 1985, ப.38. கதீஜா, முகம்மதுவையே திருமணம் புரிந்துக்கொண்டார். அமைதியான  முறையில்  இல்லறம்  நடத்திய முகம்மது, அரேபியர்களின் உருவ வழிபாட்டு முறைகளையும், தீய பழக்கவழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும்  கண்டு  மனதில்  வேதனையடைந்தார். இம்மக்களைத் திருத்த வழிவகையறியாமல் வேதனையுடன் மக்கா நகருக்கு அடுத்துள்ள குன்றுகளுக்குச் சென்று தனிமையில் தியானம் மேற்கொண்டதில் மன அமைதிக் கண்டார். இப்படியாக ஒரு நாள் ஹிரா என்ற மலைக்குகையில்  தனிமையில், ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது பிரகாசமான ஒளி தோன்றியது. அவ்வொளியைத் தொடர்ந்து ஒரு தேவதூதர் தோன்றி  'நான் ஜீப்ராயீல்' (தேவதூதன்) என்று கூறிச் சில வாசகங்களைக் காண்பித்து படிக்கச் சொன்னார். இதற்கு முகம்மது, தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது  என்றுரைக்க, மீண்டும் ஜிப்ராயீல் 'ஓதுவீராக' என்று சொல்ல, முகம்மதுவால் அந்த வார்த்தைகளை வாசிக்க முடிந்தது. அதன்  பின்னர்  அந்த ஒளியும், தேவதூதரும், வாசகங்களும் மறைந்தன.  இவ்வாறு பல ஆண்டுகள் பலமுறை ஒளியும், தூதரும், வாசகங்களும் தோன்றின. அவற்றை முகம்மது மனதில் நிறுத்திக் கொள்வார், பின்பு அந்த வாசகங்களை முகம்மது கூற, அவற்றை அபுபக்கர்11 முதலிய நபித்தோழர்கள் குறித்துக் கொள்வர்.  இவ்வாறு  குறித்துக் கொண்டதன் தொகுப்பே 'திருக்குர்ஆன்' என அழைக்கப்படுகின்றது. திருக்குர்ஆனில் உள்ள வாசகங்கள் அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை, அவற்றையே முகம்மது நபி ஓதிக்காட்டி அறிவுறுத்தினார்கள் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கை.  வசனங்கள் 'ஆயத்து'  என  அழைக்கப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, "காடு மலை செல்லாது உலகத்தை வெறுக்காது இல்லறத்தை நல்லறமாய் இயந்தும் வள்ளல் அதிலும் ஒரு புதுமாதிரி எல்லோருக்கும் முன்மாதிரி” என்று வலம்புரிஜான் குறிப்பிடுகின்றார். அபுபக்கர்  என்பவர், முதல் கலீபா (மக்கள் பிரதிநிதி) ஆவார். மேலும் நபிகள் நாயகத்தின் காலத்திற்குப் பின் முதன்முதலில் மக்களை வழி நடத்திய வரும்  இவரே. வலம்புரி ஜான், நாயகம் எங்கள் நாயகம், 2000, ப.33.   முகம்மது நபி போதித்த போதனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் மக்கா நகரில் எதிர்ப்பு தோன்றிய போது மக்காவை விட்டு கி.பி. 622 ஆம் ஆண்டு யதிரிப் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.  இந்நாளையே 'ஹிஜ்ரா' என அழைத்து சிறப்பிக்கின்றனர். இந்த நாளிலிருந்தே இஸ்லாமியர்களின் முதல் ஆண்டு கணக்கிடப்படுகிறது. யதிரிப் நகர மக்கள், முகம்மது நபியை உற்சாகமாக வரவேற்றனர். முகம்மதுவையும் இஸ்லாத்தையும் இந்நகர மக்கள் இனிது ஏற்றுக் கொண்டனர்.  யதிரிப் நகரின் பெயர் தேவதூதரின் நகர் என்னும் பொருள்பட 'மதினா' (மதீனத்துன்னபி - நபியின் நகரம்) என்று அன்று முதல் மாற்றப்பட்டது.   முகம்மது நபி (ஸல்) உலகம் முழுவதும் தம் சீடர்களை அனுப்பி இஸ்லாமிய  சமயம் உலகளாவிய நிலையில் பரவிடச் செய்தார்.  முகம்மது நபி போதித்த அறிவுரைகள் பல. அவற்றில் முக்கியமானவை "தம் கொள்கையை ஏற்றவர்கள் எல்லோரும் உடன் பிறந்தவர்களாவர் அவர்களிடையே உயர்வு - தாழ்வு என்பது இல்லை. இக்கொள்கையைத்தான் இஸ்லாமிய சமயத்தின் உயிர்நாடியாகக் கொண்டுள்ளனர். முஸ்லீம்கள் முகம்மது நபி தம் அறுபத்து மூன்றாம்  வயதில்  கி.பி.633- ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தனர்.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயற்கரிய சாதனைகளையும் போதனைகளையும்  அறிந்த  தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார், ''அரேபியா நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த மகமது நபியே - போற்றி தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் வாழக் கரவிலா மறையை தந்த கருணையே போற்றி போற்றி ”13   என வியந்து போற்றுகிறார்.   13. சி.நயினார் முஹம்மது (க.ஆ), இஸ்லாமியப் பண்பாடும், தமிழ் பண்பாடும், ஐந்தாம்  உலக  இஸ்லாமியத் தமிழ் இலக்கிய  மாநாட்டுச் சிறப்பு மலர், ப.34.   2.3. திருக்குர்ஆன் இஸ்லாமிய சமய நெறியின் விளக்காகத் திகழ்வது 'திருக்குர்ஆன்’ என்னும் 'இறைநூலாகும்'. ''குர்-ஆன்' என்ற அரபுச் சொல்லுக்கு 'ஓதுதல்' என்பது பொருள். இது இறைவனால் நபிகள் நாயகத்தின் மூலம், அரபு நாட்டில் மக்கா நகரத்திற்கு அருகில் உள்ள 'ஹிரா' என்ற மலையில் இறைத் தியானத்தில் இருந்த பொழுது ஜிப்ராயில் என்ற வானவர் மூலம் இறைவசனம் அருளப்பட்டு உலகிற்கு அளிக்கப்பட்டது.'' 14   ''திருமறையில் 'இக்ரஉ' எனத் தொடங்கும் ஐந்து இறைவசனங்கள் ஜிப்ரில் (அலை) அவர்களால் பெருமானார்க்கு முதன்முதலாக அருளப்பட்டன. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதம் 27 ஆம் நாளன்று இரவு ஹிரா குகையில் நடைபெற்றது.  இதன்பின்  நாற்பது  வயதிலிருந்து  பெருமானார்  மறைவு வயதான 63 ஆம் வயது வரை 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக வெளிப்பட்டு முழுமையடைந்தது.  இதைப்பற்றி  இறைவன்  தன்  திருமறையில் மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக இறக்கி வைத்தோம்' எனக் கூறியுள்ளான். இவ்வாறு  சிறுகச்  சிறுகப்  பெறப்பட்ட இறைவசனங்கள் உதுமான் (ரலி) ஆட்சியில் முழுமையாகத் தொகுக்கப்பட்டது. அதுவே இன்றைக்குள்ள திருக்குர்ஆன்  திருமறை”.15   இது  இருபத்தி  மூன்று ஆண்டுகளில், நானூற்று எண்பத்து ஆறு முறை இறைவனால் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பின் மொத்த இறைவசனங்கள் ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்தியாறு. மொத்த அத்தியாயங்கள்  நூற்றுப்பதினான்கு.  இத்திருமறையை  ஒட்டியே  முகம்மது நபி (ஸல்)  அவர்களின்  போதனைகள் அமைந்துள்ளன. குரானின் கூற்றுகள் முகம்மது  நபியின்  கூற்றுகளாகக் கருதப்படுவது கிடையாது. குரானின் கூற்றுகள்  இறைவனின்  கூற்றுகள்  என்றே  கருதப்படுகின்றன.   திருக்குர்ஆன் ஓதும்போது, மெல்லிய குரலில் தெளிவாகவும், நிதானமாகவும்  ஒத  வேண்டும்  என்று  பணிக்கப்பட்டுள்ளது. ______________________________________________________ அப்துல் ரஹீம்,  இஸ்லாமிய  கலைக்களஞ்சியம்  தொகுதி  மூன்று, 1979, ப.18. மேலது ப.18.       "குர்ஆனைத்  தெளிவாகவும்  நிறுத்தியும்  ஓதுவீராக"  (73:4)16   "நீங்கள்  குர்ஆனில்  உங்களுக்கு  சுலபமான அளவு  ஓதுங்கள்" (73:20)17   2.4. திருக்குர்ஆன் போதனைகளின் சாரம்   இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகள்   1. அல்லாஹ்வைத்  தவிர  வேறு  இறைவன்  இல்லை.  முகம்மதுவே அல்லாஹ்வின்  தூதர். 2. நாளும்  ஐந்து  வேளைத்  தொழுகை  (இறைவணக்கம்) 3. தன் வருமானத்தில் கட்டாயமாகச் செலுத்த வேண்டிய 'ஜகாத்' என்னும் ஏழை வரி (ஒரு மனிதனின் வருவாயில் இரண்டரை சதவீகிதத்தை ஏழைகளுக்காக  ஈவது) 4. ரம்ஜான்  மாதத்தில்  நோன்பு  நோற்றல் 5. மக்காவுக்குப்  புனித  'ஹஜ் பயணம்'  மேற்கொள்ளுதல்  ஆகிய ஐந்தும்  இஸ்லாமிய  சமயத்தின்  அடிப்படைச்  சட்டங்களாகும். 6. ஐம்பெருங்  கடமைகளின்  விளக்கம் 7.   2.41. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (கலிமா)   அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை இஸ்லாமியர்களின்  நம்பிக்கைக்குரிய  சட்டமான  "லா இலாஹ இல்லல்லா ஹூ முகம்மதுர் ரஸூலுல்லாஹி" என்ற அரபி வாக்கியத்தின் மூலம் உறுதிப்படுத்தி நம்புகின்றனர்.  இதுவே கலிமா என்ற மூலமந்திரம் ஆகும், இதன் தமிழ் பொருள் யாதெனில் "அல்லாஹ் ஒருவனே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.  முகம்மதுவே அல்லாஹ்வின் தூதர் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியரும் ஏற்று நம்பிக்கை வைக்க வேண்டும்" என்பதே. 16 . டாக்டர் S. முகம்மதுஜான், திருக்குர்ஆன் (மூலமும் தமிழ் உரையும்), 1983, ப. 863. 17 . மேலது ப.864.   'கலிமா'  இஸ்லாத்தின்  முதலாவது  கடமையாக  இடம் பெறுகிறது. இதனை , ''நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களிடம் ஈமான் என்பது யாது என் ஜீப்ரயீல் (அலை)  அவர்கள்  மனித வடிவில் தோன்றி வினவிய போது பெருமானார் அவர்கள் 1.    அல்லாஹ்வையும் 2.   வானவர்களையும், 3.   வேதங்களையும்,   4.   நபிமார்களையும்   5.   இறுதித் தீர்ப்பு நாளையும், 6. நன்மை தீமை ஆகிய அனைத்தும் இறைவன் வசம் உண்டு என்பதையும் 7. மரித்தவர்களை அல்லாஹ் மீண்டும் எழுப்பிக் கேள்விக்கேட்டான் என்பதையும் நம்புவது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று விடையளித்தார்கள்” 18 என்று   நபிமொழி கு றிப்பிடுகின்றது.   2.4.2. தொழுகை (இறைவழிபாடு) ஐம்பெருங்கடமைகளில் இரண்டாவது கடமையாக அமைவது தொழுகையாகும். "தொழுகை என்பது இறைவனை வணங்குவதாகும். அது அடியான் இறைவனுக்குச் செய்யும் நன்றிக் கடன். ஒவ்வொரு நாளும் வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்தது முதல் இரவு  படுக்கைக்குப் போகும் வரை உள்ள காலத்தில் இறைவனை  நினைத்து,  அவனது  அருளை  வேண்டி  தன் மனம் உருகி இறைவனை அடிபணிந்து தொழுது, இறைவனுக்கும் தனக்கும் தொடர்பு ஏற்படுத்தி, அந்த நீங்காத தொடர்பினாலேயே தம் வாழ்வை அமைத்துக் கொள்வதாகும்.''19   2.4.2.1. தொழுகை செய்யும் நேரப்பட்டியல் ஓவ்வோர் இஸ்லாமியனும் நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம் தொழுதல் வேண்டும். அவையாவன. 1. பஜ்ரு - சூரியன் உதயமாவதற்கு முன் (வைகறைப் பொழுது காலை கிழக்கு  வெளுத்ததிலிருந்து  சூரியன்  உதிக்கும் வரை 2. ளுஹ்ரு - நடுப்பகலுக்கு சிறிது நேரம் கழித்து (மதியம்) பகல்   (சுமார் 1.00மணி)   3. அஸர் - சூரியன் மறைவதற்கு முன் மாலை (சுமார் 4.00 மணி) 4. மஹ்ரிப் - சூரியன் மறைந்த பின் மாலை (சுமார் 6.00 மணி) 5. இஷா - முன் இரவு (சுமார் 8 மணி)     …………………………………………………………………………………………………………………… 18  அர. அப்துல் ஜப்பார்,  இஸ்லாம்  ஓர்  அறிமுகம், 1989, ப.13. 19 அப்துல் ரஹீம்,  இஸ்லாமிய  கலைக்களஞ்சியம், 1979, பக். 901-908.     ஆகிய  நேரங்களில்  தனிமையிலோ  அல்லது  பள்ளிவாசல் சென்றோ  தொழுகை செய்ய வேண்டும்.  தொழுகை  நடத்து முன் நீரால் கை, கால், முகம் இவற்றைத் தூய்மை செய்து கொண்டு மெக்கா இருக்கும் திசை நோக்கித் தொழ வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை மேற்குத் திசையை நோக்கித்  தொழுகின்றனர்.  தனிமையான  இடத்தைவிட கூடுமானவரை அருகில் உள்ள பள்ளிவாசல் சென்றே கூட்டுத் தொழுகை செய்கின்றனர்.  இதுவே சிறப்பு வாய்ந்தது ஆகும்.  ஒவ்வொரு வேளைத் தொழுகைக்கும் பள்ளிவாசலில் இருந்து அழைப்பு விடுப்பார்கள். தொழுகை நேரம் வந்த உடன் தொழுகைக்காக அழைக்கும் விதத்தில் ' இறைவன் பெரியவன்' என்னும் பொருள் கொண்ட வாசகம் 'அல்லாஹு அக்பர்' என்று பள்ளிவாசல்களிலும், தர்காக்களிலும் அழைப்பு விடுதலே'  பாங்கு  எனப்படும். இதற்கு 'பாங்கு ஒலி' என்று பெயர். இந்த பாங்கு ஒலி கேட்டவுடன் இஸ்லாமியர்கள்  பள்ளி வாசலுக்குச்  சென்று தொழுகை செய்வர். இந்த தொழுகை  பற்றிக்  திருக்குர்ஆனில்  பின்வருமாறு  கூறப்படுகிறது. ''பகலின்  இருமுனை (களாகிய காலை, மாலை) களிலும்  இரவின் சில  பகுதிகளிலும்  நீங்கள்  (தவறாது)  தொழுது வாருங்கள் நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப்  போக்கிவிடும்'' (திருக்குர்ஆன் 11:114)   இந்த இறை வசனத்தில் மேற்கண்ட தொழுகைகளின் பெயர்கள் வரவில்லை  எனினும்  இதில்  அந்தத் தொழுகைகளின்  நேரம்  வந்துள்ளது.   ''தொழுகையை  நிலைநாட்டுபவர்கள்  இறையச்சமுடையோ' (திருக்குர்ஆன் 2:3) என்பதன் மூலம் தொழுது வருபவர்கள் இறையச்சம் உடையவர் ஆவார்  என்பது  புலப்படுகிறது. ''தொழுகையாகிறது சன்மார்க்கத்தின் தூணாக இருக்கும் எவன் அதைச்  சரிவரக் கொண்டு செலுத்துகிறானோ  அவனே  சன்மார்க்கக்  கட்டிடத்தை  நிலை நிறுத்தியவனாவான். எவன் தொழுகையை சரிவரக் கொண்டு  செலுத்தவில்லையோ  அவன் சன்மார்க்கக் கட்டிடத்தை இடித்தவனைப்  போன்றவனாவான்". 20 (நூல்: ஷமாயில் திர்மிதி)   என்பன தொழுகை பற்றிக் கூறும் நபி மொழிகளாகும். இத்தொழுகையின்  முக்கியத்துவத்தை  ஃபக்கீர்கள்  தங்களது பாடல்களில் (பெண் புத்திமாலை)  பாடுகின்றனர்.   2.43. ரம்ஜான் எனும் ஈகைத்திருநாளில் நோன்பு இஸ்லாமிய மறைநூலான திருக்குர்ஆன் இறைவனால் முகம்மது நபிக்கு இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமாகிய ரம்ஜான் (ரமலான்) மாதத்தில் தான் முதன்முதலாய் அருளப்பட்டது.  இம்மாதத்தில் முதல் பிறை கண்டது  முதல் தொடர்ந்து  முப்பது  நாட்கள்  நோன்பு  இருப்பர்.   "நோன்பு இரவுகளில், இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்,  பின்னர்,  இரவு  வரும்  வரை  நோன்பைப்  பூர்த்தி  செய்யுங்கள்'' திருக்குர்ஆன் (2:187)21    என்ற வாசகத்தின்படி நோன்பு நோற்கும் காலத்தில் அதிகாலையிலேயே  உண்ணுவதையும், பருகுவதையும் விடுத்து மாலையில் சூரியன் மறைந்த பிறகே மறுபடியும் உண்ணவோ, பருகவோ செய்வர். இதுவே ரம்ஜான்  நோன்பு  என்று  அழைக்கப்படுகிறது.   டாக்டர் ரிச்சர்ட்டு என்பவர் "உள்ளத்தைத்  தூய்மைப்படுத்த  விரும்புவோர் அனைவரும் அதிகமாக நோன்பு நோற்பது கடமையாகும். நோன்பு நோற்க விரும்பும் எனது கிறித்துவ நண்பர்களை முஸ்லீம்களைப் பின்பற்றும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால், நோன்பு பற்றிய செய்தியில் முஸ்லீம்கள் கையாளும்  முறைதான்  சிறந்ததாகத்  திகழ்கின்றது" என  குறிப்பிட்டுள்ளார். 20 டி. எஸ். கே. முகம்மது இப்ராஹீம் (மொ.பெ.ஆ),                ஷமாயில் திர்மிதி (அரபி மூலமும் தமிழ் உரையும்), 1982, ப.26. 21 டாக்டர் S. முகம்மது ஜான்,                 'திருக்குர்ஆன் (மூலமும் தமிழ் உரையும்', 1983, ப.41. 22 ரிச்சர்டு,  இஸ்லாம்  ஓர்  அறிமுகம் (இரண்டாம் பகுதி), 2004, ப.101.   முப்பது  நாட்கள்  நோன்பு முடித்த மகிழ்ச்சியை ரம்ஜான் பெருநாளாகக் கொண்டாடி மகிழ்வர். இம்மாதத்தில் ஏழை எளியவர்களுக்குத் தம்மால் இயன்ற தானம் செய்து மகிழ்வர். இதனாலேயே  இப்பண்டிகை  'ஈகைத் திருநாள்'  என்று அழைக்கப்படுகின்றது. ரம்ஜான் மாத நோன்பு செல்வந்தர்கள் பசிக் கொடுமையை உணரவும், அதன் காரணமாக ஏழைகளின்  துயர் துடைக்கத் தங்களின் செல்வத்தை அறவழியில் செலவழிக்கும் இயல்பையும் பெற ஏதுவாகிறது."23   2.4.4. ஜக்காத் தர்மம் செய்தல் எல்லா மதத்திலும் வலியுறுத்தப்படும் பொதுவான பண்பு. தர்மம் செய்தல் சிறந்த அறங்களில் ஒன்றாகும். தர்மம் தலைகாக்கும் என்பார்கள்.  இத்தர்மத்தைப்  பற்றி ''துடியான செல்வ மிருக்கும் போதே தருமம் தானஞ் செய்வது மேன்மையாம்'' 24 என  தே.ப. அப்துர்ரஹ்மான்  குறிப்பிடுகிறார்.   ஒவ்வொரு இஸ்லாமியரும் இறைவணக்கம் செய்தால் மட்டும் போதாது. அவர் தம் வருமானத்தில் இருந்து சேமிக்கப்படும் சேமிப்பிலிருந்து நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.  'ஜக்காத்'  என்னும்  அரபுச்சொல்  'தூய்மைப்படுத்துதல்' என பொருள்படும்.   ஜக்காத் என்ற ஏழை வரி குறித்து திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது.   ''(நபியே)! அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்து கொண்டு அதன்மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக!. (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும் அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்)  பிரார்த்திப்பீராக!'' (திருக்குர்ஆன் 9:103) 23 ஆய்வாளர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வரலாற்றுத்துறைப்  பேராசிரியர்  பெருமக்களிடம் இஸ்லாத்தைப் பற்றியும், அதன் விளக்கத்தையும், நபிகள் நாயகம் வரலாற்று சுருக்கத்தையும் நேரில் கேட்டு அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும். 24.தே.ப. அப்துர் ரஹ்மான், திருநபிச்சதக்கம், ப.61.   2.4.5. புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் உலகில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது வாழ்நாட்களில் ஒருமுறையாவது 'மக்கா' நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் வேண்டும். இதனை 'ஹஜ் பயணம்' என அழைப்பர். வாழ்நாட்களில் ஒருமுறை உலகில் வாழும் ஏனைய இஸ்லாமியருடன் ஒன்றுகூடி உடன்பிறப்புத் தன்மையையும், மனித ஒருமைப்பாட்டுத் தன்மையையும் வலியுறுத்துவதே இதன் உள்நோக்கம். ஹஜ் பயணம் மேற்கொண்டோர் பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜி'  என்ற அடைமொழியினை இடுவது இஸ்லாமியரின் வழக்கம்.   ஹஜ் கடமையைப் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நிறைவேற்ற முடியும். துல் ஹஜ் மாதம் பிறை 8,9,10,11,12 ஆகிய ஐந்து நாட்களும் ஹஜ்ஜுடைய நாட்களாகும். ஹஜ்ஜுக்காகச் செல்பவர்கள் இஹ்ரம் உடை அணிய வேண்டும். ஆண்கள் மேனியில் ஒரு வெள்ளைத் துண்டு, இடையில் ஒரு வெள்ளை முண்டும், பெண்கள்  முகத்தை   மூடாமல் முக்காடிட்டு ஆடை  அணிவது இஹ்ரம் உடையாகும். ஹஜ் பயணம் குறித்து பீ.மு. அஜ்மல்கான்   ''உலக மனித சமூகத்தின் சகோதரத்துவம், ஹஜ் பயணத்தின் போது வெளிப்படுத்தப்படுகிறது. இனம், மொழி, நாடு, பிறப்பிடம், வர்க்கம் ஆகிய வேறுபாடின்றி  முஸ்லீம்கள் கலந்து  கொள்ள  வேண்டுமென்பதற்காகவும், அப்படி அவர்கள் கலந்து வாழும் போது சகோதர, சமத்துவ உணர்ச்சிகளைப் பெற வேண்டும்  என்பதற்காக  ஹஜ்  என்னும்  புனிதப்பயணம் ஒரு முஸ்லீமின் இறுதிக் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட இந்த ஐந்து அடிப்படைக் கடமைகளுடன் கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெறிகளை இறைமதியாகிய திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன.   2.5. அல்பாத்திஹா அல்பாத்திஹா  என்பது திருக்குர்ஆனில் முதல் அத்தியாயத்தில் ஒன்று  முதல்  ஏழு வரை உள்ள  இறைவசனங்கள் ஆகும். ஒரு இஸ்லாமியர் இந்த  அல்பாத்திஹா  என்ற ஜெபத்தினை ஒரு நாளில் இருபது முறை சொல்லுதல்  வேண்டும். ________________________________ 23.- பீ. மு. அஜ்மல்கான், இஸ்லாம் வரலாறும் தத்துவமும், 1995, ப.17.   '''பாத்திஹா' என்பதன் பொருள் 'தோற்றுவாய்' என்பதாகும் இது திருக்குர்ஆனின் துவக்கத்தில் இடம் பெற்றிருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது  என்று  அண்ணல்  நபி (ஸல்) கூறியுள்ளார்' 26   என்பதை இஸ்லாமிய கலைக்களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. எந்தவொரு செயலையும் செய்யும் முன் இறைவனால் அருளப்பட்ட முதல் அத்தியாய ஆயத்துக்களை (வசனங்களை) ஓதித் துவங்குவதை 'பாத்திஹா ஓதுதல்' என்று கூறுகின்றனர். இளம் சிறுவர்களுக்குக் கல்வியறிவு துவக்கம் , மார்க்க அறிவு போதனையின் துவக்கம், வியாபார ஆரம்பம், புதுத்தொழில் தொடக்கம், திருமணம், புதுமனை புகுதல் போன்ற எல்லா நிகழ்வுகளிலும் இறையருள் வேண்டி பாத்திஹா ஓதுவர். இதன் முக்கியத்துவத்தினை இஸ்லாமிய நாடோடிப் பாடகர்களான ஃபக்கீர்கள் தங்கள் பாடல்களில் வலியுறுத்துகின்றனர்.   திருக்குர்ஆன் அத்யாயம் ஒன்று    அல்ஃபாத்திஹா - தோற்றுவாய் ருகூஃ  : 1 மக்கீ வசனங்கள் :7   1. "அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப்  பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். 2. (அவன்)  அளவற்ற  அருளாளன்  நிகரற்ற  அன்புடையோன் 3. (அவனே நியாயத்)  தீர்ப்பு  நாளின் அதிபதி(யும் ஆவான்). 4. (இறைவா!)  உன்னையே  நாங்கள்  வணங்குகிறோம். உன்னிடமே  நாங்கள்  உதவியும் தேடுகிறோம். 5. நீ  எங்களை  நேர்வழியில்  நடத்துவாயாக. 6. (அது)  நீ  எவர்களுக்கு  அருள்புரிந்தாயோ  அவ்வழி 7. (அது)  உன்  கோபத்துக்கு  ஆளானோர்  வழியுமல்ல, நெறிதவறியோர் வழியுமல்ல.”27   பல்வேறு ஆசிரியர்களின் கருத்துக்களைக் கொண்டு இஸ்லாம் சமயமானது  'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்ற திருமூலரின்  வாக்கிற்கு ஏற்ப இயங்கி வரக்கூடிய சமயமாகும். மனிதனுக்கு சாந்தி, சமாதானம், இறை நம்பிக்கை,  கூட்டுணர்வு  போன்றவை கிடைக்க இஸ்லாம் வழிவகை செய்கிறது என்பதை அறியமுடிகிறது.   26   அப்துல் ரஹீம், இஸ்லாமிய கலைக்களஞ்சியம், 1979, ப.515. 27   டாக்டர் S. முகம்மது ஜான்,   ஷாஜி முகம்மது ஜான், திருக்குர்ஆன் மூலமும் தமிழ்  உரையும், 1983, ப.1. 2.6. தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வருகை 2.6.1. தமிழகம் ''ஆசியாவின்  நடு  மேட்டு நிலத்திற்குத் தெற்கிலுள்ள பகுதி முழுவதும் சம்புத்தீவு அல்லது நாவலந்தீவு என்று அழைக்கப்பட்டது. நாவலந்தீவில் விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பகுதி தட்சிணாபதம் அல்லது தென்னாடு என்றும், அதன் தென்கோடியில் தமிழர் வாழும் இடம் தமிழகம் (தமிரிகெ) என்றும் அழைக்கப் பெற்றன. கீழ் கடலுக்கும் மேல் கடலுக்கும் இடையே  தமிழ் என்ற ஒரே ஒரு மொழி மட்டும் பேசப்பட்ட இந்த நாட்டின் வடக்கே வேங்கட மலையும், அதற்கு அருகே வடக்கில் வாழ்ந்த மக்கள் வடுகர் என்றும், தெற்கே குமரிமுனையும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிக் கடலுமே இருந்தன”.28   தமிழ்நாடு  இயற்கை  வளங்கள்  நிரம்பிய மாநிலம் இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ளது. மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. தொன்மையான கலாச்சாரமும் பண்பாடும், உயர்ந்த இலக்கிய வளங்களும் நிரம்பப் பெற்ற மாநிலம். பண்டையக் காலந்தொட்டு இஸ்லாமியர்கள், கிரேக்கர்கள், ரோமர், ஆங்கிலேயர் என மேலைநாட்டவர்கள் தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்டவர்கள். 28 செ.திவான், விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள், 1993, ப. 1.     []       2.6.2 தமிழர்களும் - அரேபியர்களும்   "அரேபியாவில் இஸ்லாமிய மார்க்கம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே தமிழகத்திற்கும் அரேபியர்களுக்கும் வணிகத் தொடர்புகள் இருந்ததை  வரலாற்றுக்  குறிப்புகள்  எடுத்துக்  கூறுகின்றன".29   அரேபியர்கள் இந்தியாவின் வடக்குப் புறத்தில் போர் புரிந்து ஆட்சி செய்து வந்தனர் என்றாலும்,  இந்தியாவின்  தென்கோடியான  தமிழ்நாட்டில் தான் முதன் முதலாக குடியேறி வாணிபம் செய்து வாழ்ந்தனர் என்பதே பல்வேறு வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.   "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்தனர். இதில் சோழர்களின் தலைநகரமாகத் தஞ்சாவூரும்,  தற்போது திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக விளங்கும் உறையூரும் இருந்தன. 30   சேரர்களுக்கு தலைநகரமாக திருவாங்கூரும் பாண்டியர்களின் தலைநகரமாக மதுரையும் இருந்தது. "கிறிஸ்து சகாப்தம் துவங்கிய பின்னரும், கிழக்கு மேற்குத் தொடர்புகள் நீடித்தன. தமிழகத்திலிருந்து ரோமப் பேரரசின் கிளாடியஸ் சீஸர் அவைக்கு அரசின் தூதுக்குழு வந்ததை கி.பி.41 ஆம் ஆண்டில் 'பிளினி' குறித்துள்ளார்”31   தமிழகத்தில்  அரேபியர்களின்  வருகையானது, வாணிபம்  நிமித்தமே முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது.  அதுவும்  கிரேக்கர், உரோமர் போன்றோர் தமிழகத்திற்கு  வருவதற்கு முன்னரே அரேபியர்கள் குடியேறியுள்ளனர். இதனைக்  கீழ்கண்டவற்றிலிருந்து  அறிந்து  கொள்ள முடியும்.   ''தமிழர்களுடன்  உறவு  வைத்துக் கொண்ட கிரேக்கர், உரோமானியர் போன்றோர் வெகுதூரத்தில் உள்ளவர்களாவார். ஆனால் அரேபியர்கள் அரபிக்கடலைக் கடந்தாலே தமிழ் நாட்டிற்குள் வெகு விரைவில் வந்து விட முடியும்.  ஆதலால் தமிழகத்திற்கு  குறுகிய தொலைவில் உள்ள அரேபியர்களே முதன்முதலில்  வந்திருக்கக்கூடும்" 32 என்று கா.மு.ஷெரிப் குறிப்பிட்டுள்ளார். 29 கே.கே. பிள்ளை , தென் இந்திய வரலாறு, 1988, ப.33. 30 ஏ. கே. ரிபாயி, தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, 1988, ப. 22. 31 K.A. Nilakata Sastri, Foreign Notices of South India, p.50 32 கா.மு. ஷெரிப், வள்ள ல் சீதக்காதி வரலாறு, 1981, ப. 26.   ''அரேபியா  நாட்டில்  இருந்து  வணிகர்கள் கடல்வழியாக இந்தியாவின் தென்கோடியான தமிழகக் கடற்கரையில் இறங்கி வியாபாரம் செய்துள்ளனர். அரேபியர்களுக்கு வாசனைப் பொருட்கள் மீது இயல்பாகவே ஈடுபாடு இருந்து வந்தது. ஆதலால் அவர்களது வணிகத்தில் புனுகு, சந்தனம் போன்ற இந்திய நாட்டு வாசனைப் பொருட்களும், இந்திய நாட்டு எஃகினால் தயாரிக்கப்பட்ட போர் வாள்களும்   பெருமளவில் இடம்  பெற்றிருந்தன” 33   வர்த்தகப் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதுடன் மட்டும் இத்தொடர்பு நின்றுவிடவில்லை. பொருட்கள் விற்கப்பட்டன மற்றும் வாங்கப்பட்டன.  ஒருவர் நாட்டில் மற்றொருவர் குடியமரவும் செய்தனர். அத்துடன் கலாச்சாரப் பரிமாற்றங்களும் இயல்பாகவே, இயற்கையாகவே நடைபெற  ஆரம்பித்தன.  ஒரு  கூட்டத்தினர் மற்றவர்களது பழக்க வழக்கங்களை, கலாச்சாரங்களை, கலைகளை, நடை உடை பாவனைகளைத் தெரிந்து கொண்டனர். மேலும், ஒருவர் பின்பற்றிய கொள்கைகளும், கோட்பாடுகளும்  கூட  மற்றவர்களால்  அங்கீகரிக்கப்பட்டன.   உதாரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, இந்தோசீனா போன்ற பிரதேசங்களில், ஒரு காலத்தில் இந்துமதம் அங்குள்ள மக்களால் பின்பற்றப்பட்டது.  பின்னர் புத்த மதத்தை அவர்கள்  பின்பற்றி  இருக்கின்றார்கள். இம்மதங்கள் அனைத்தும் தமிழர்கள் மூலமாகவே அப்பகுதி மக்களுக்கு அறிமுகமாகி  இருக்கின்றன. தமிழர்கள் வணிகம் செய்யப் புறப்பட்டதும், தங்களது கலை, கலாச்சாரம், நாகரீகம், கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்று இருக்கிறார்கள். இவற்றை அந்தந்தப்  பகுதி  மக்களும், அக்காலக் கட்டங்களில்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தோனேஷியாவில் காணப்படும் இந்துக் கோயில்களும், புத்த ஆலயங்களும் இந்த உண்மையைத் தான் உலகத்திற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அழியாத இவ்வரலாற்று ஆதாரங்களே உண்மையான வரலாறு ஆகும்.   2.6.3. தமிழகத்தில் இஸ்லாமியர் வருகை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திய காலத்திற்குள்ளாக அரேபியர்கள் அனைவரும்  இஸ்லாமியக்  கொள்கைகளைத்  தீவிரமாகப்  பின்பற்ற ஆரம்பித்தனர்.  மேலும் இவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் முகம்மது நபி அவர்கள் கொண்டு வந்த செய்திகளையும், போதனைகளையும் எடுத்துச் சென்றனர். 33  Joseph Hell, The Arab Civilization, Lahere, pp. 78-79.     ''அரேபியா நாட்டினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தி, அரபு வணிகர் மூலமாக ஒரு சில ஆண்டுகளுக்ககுள்ளாகவே கேரளாவில் மலபாருக்கும்,  தமிழகத்திற்கும்  எட்டிவிட்டது. இதற்கு ஆதாரமாக கன்னியாகுமரி மாவட்டத்தின்  கோட்டாறு  நகரில்  ஈராக்  நாட்டு  கர்ஸிம் என்கிற  இறைநேசரின்  அடக்கவிடம் அமைந்துள்ளது. அதில் ஹிஜ்ரி 4 (கி.பி. 624) என்று குறிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி  மாவட்டத்தில் கோதரிஸா மலையில் உள்ள அப்துல் ரஹ்மான் என்கிற இறைநேசரின் அடக்கவிடத்தில் ஹிஜ்ரி (கி.பி. 628)  எனப்  பொறிக்கப்பட்டுள்ளது.” 34 மேலும்,  இதற்கு ஆதாரமாக மகாத்மா காந்தியின் ஆத்ம நண்பர் டாக்டர் சுந்தர் லால் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதைக் காணலாம் (ஹிந்த் நாமா, 15.07.1949, ப.56).   "இந்த நாட்டில் இஸ்லாமும், இந்து சமயமும் ஒன்றோடொன்று சந்தித்துப்  பன்னிரண்டு  நூற்றாண்டுகளுக்கு மேல் அதிகமாகிவிட்டன. இஸ்லாம்  வடமேற்கிலிருந்து  தரைமார்க்கமாக வந்தது என்பது பிழையாகும். அது  கடல்  மார்க்கமாகத் தெற்கில் வந்து தக்காணத்தில் இருந்து வடக்கே வந்தது.  இவ்வாறு  இஸ்லாமியப்  பிரச்சாரகர்கள் ஆப்கானிஸ்தான் சென்று, அங்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பி அங்கு இருந்த புத்த மதத்தையும், சைவ மதத்தையும்  பின்பற்றுவோரை  இஸ்லாம் மார்க்கத்தில் இணைத்தனர்.  முஸ்லீம்  அரசாங்கங்களின்  ஆதரவில் இஸ்லாம் பரவியது என்னும் பொதுவான கருத்தும் பிழையேயாகும். முஸ்லீம் பாதுஷாக்களும், முஸ்லீம் படையெடுப்பார்களும் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரபு வணிகர்கள், ஃபக்கீர்கள்  தர்வேஷ்கள்  ஆகியோருடன் இஸ்லாம் மார்க்கமும் இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. பின்பு இது தெற்கிலிருந்து வடக்கு வரை பரவ ஆரம்பித்தது”.35   இங்ஙனம்  மேற்கண்ட  கருத்தை ஸையத் இப்ராஹிம் தம் 'இஸ்லாமிய வரலாறு' என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இக்கருத்தையே வரலாறு  ஆய்வாளர் செ.திவான், 'விடுதலைப்போரில் முஸ்லீம்கள்' என்ற நூலில் கீழ்கண்டவாறு ஆழமாகக் குறிப்பிட்டுள்ளார். ___________________________ 34 முனைவர் எஸ். எம். கமால், முஸ்லீம்களும் தமிழகமும், 1990, ப.15. 35 ஸையித் இப்ராஹீம், இசுலாமிய வரலாறு -9, 1976, ப. 25.   "மிகத் தொடக்க காலத்திலிருந்து,  தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தைக் கவர்ந்து வந்தன. கிட்டத்தட்ட  கி.மு. ஆயிரத்தில் சாலமன் ஆட்சியின் போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தர்ஷிஷின் கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தமிழகத்திலிருந்து சென்றன  என்று  வி.கனகசபை ஆங்கிலத்தில்  எழுதிய நூலை பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை தமிழில் மொழிபெயர்த்த 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு  முற்பட்ட  தமிழகம்'  என்ற  நூலில்  (ப.59)  குறிப்பிடுகிறார்.   படிப்படியாக அரேபியர்களும் கிரேக்கர்களும் தமிழகத்தில் வாணிபத்தைத்  தொடர்ந்து  நடத்தி  வந்தனர். கி.பி. ஆறாவது நூற்றாண்டில் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக் கரைக்கும், கிழக்குக் கரைக்கும் வியாபாரம் நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலை வணக்கக்காரர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஷாபியீன்கள் போன்றோர் இருந்தனர். ஆனால் கி.பி. ஏழாவது நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில்  தீவிரப்  பங்கெடுத்துக்  கொண்டிருந்தனர். கோவளத்தில்  தமிமுன் அன்சாரி (ரலி)  அவர்களது  அடக்கத்தலமும், தென்னாற்காடு  மாவட்டம்,  முஹம்மது  பந்தரில் (பரங்கிப்பேட்டையில்) ஹஸரத் அபிவாக்காஸ் (ரலி) அவர்களது அடக்கத் தலமும் இருக்கின்றன. இவர்கள் நபிகள் நாயகத்தின் தோழர்கள் (சஹாபாக்கள்) என்ற அந்தஸ்தைப் பெற்றவர்கள் சஹாபாக்கள் பலரும், சமயப் பிரச்சாரத்திற்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உலகின் பல திக்குக்கும் சென்று, திரும்பி வரும் நினைப்பில்லாத பயணத்தை மேற்கொண்டனர். ஏற்கனவே, இந்தியாவோடு இருந்து வந்த வணிகத் தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்து கொண்டது.  சரக்குகளோடு குதிரைகளோடும் வாணிப்பதிற்காக வந்தவர்களும், அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர். திருமண உறவுகளைக் கொண்டனர். இஸ்லாமிய நெறிமுறையை ஏற்றுக் கொண்ட அவர்களது  வாழ்வு  தமிழகத்தில்  தொடர்ந்தது.''36   சங்க  காலங்களில்  இருந்தே  காவிரிக் கரையிலுள்ள உறையூர் முக்கிய நகராக விளங்கி வந்திருக்கின்றது. உறையூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளில் சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கியது.37 வாணிபத்திற்குத்  தமிழகம்  வந்த  அரேபியர்கள்  அக்காலத்தில்  சோழத் தலைநகரமான உறையூருக்கும் வந்தனர். இன்று நமக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளில் தமிழகத்தில் கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசல் திருச்சிராப்பள்ளி  மாவட்டத்திலேயே  காணப்படுகிறது. 35  செ.திவான், விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள், 1993, பக்.2-3. 37 தற்பொழுது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாநகரில் ஒரு சிறு பகுதியாக    உறையூர் இருந்து வருகிறது.   தமிழகக் கடற்கரை நெடுகிலும் அங்கு வாழ்ந்த இஸ்லாமியர்கள் தங்களது ஐங்காலத் தொழுகைக்காக பள்ளிவாசல்களை அச்சமயமே நிர்மானித்திருக்கத்தான் செய்திருப்பார்கள். ஆனால் அவை குறுகியகால ஏற்பாடுகளாகவே அமைந்திருக்க வேண்டும். காலத்தின் சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாது அப்புராதன சின்னங்கள் அழிந்திருக்கும். பிற்காலங்களிலேயே  அத்துறைமுகப்  பட்டிணங்களில் கற்பள்ளிகள் எழுந்திருக்க வேண்டும். "கி.பி. 642  இல்  மலபார்  கரையிலுள்ள  முசிறி துறைமுகப்பட்டினத்தில் இன்றைய  கொடுங்கானூரில் அன்றைய தமிழகத்தில் முதல்  பள்ளி வாசல்  கட்டப்பட்டது".38   கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தின் கடற்கரை நெடுகிலும் இஸ்லாமிய மக்கள் குடியேறி பழவேற்காடு, கோவளம், பரங்கிப்பேட்டை, தொண்டி, பெரியப்பட்டணம், காயல்பட்டணம், தேங்காய் பட்டணம், கோட்டாறு, குளச்சல் போன்ற ஊர்களில் வாழத் தொடங்கிவிட்டனர்.   உறையூரில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள், ஆரம்ப கட்டத்திலேயே நிலையானதொரு பள்ளிவாசலை உருவாக்கி இருக்கின்றார்கள். அப்பள்ளிவாசல் திருச்சிராப்பள்ளி மெயின்காட்கேட்டில் இருந்து உறையூருக்குச் செல்லும் பாதையில் மேம்பாலத்திற்கு அருகில், கோட்டை புகைவண்டி நிலையத்தின் எதிரேயும், புனித திருச்சிலுவை பெண்கள் கல்லூரியின் பின்புறத்திலும் ஒரு சிறிய கல் மண்டபம் போன்ற பள்ளி ஒன்று அமைந்துள்ளது.   38 ஏ. கே. ரிபாயி, தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, 1988, பக். 40-41.                                             திருச்சிராப்பள்ளியில்  உள்ள கி.பி. 738ம் ஆண்டு பள்ளிவாசல்  (தற்காலத் தோற்றம்) []     அரபி  எழுத்துகளால்  ஆன  கல்வெட்டு    []   இப்பள்ளிவாசலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் அரபி வாசகத்திலிருந்து கி.பி.738ம் ஆண்டு (ஹிஜ்ரி 116ம் ஆண்டு) ஹாஜி அப்துல்லா இப்னு  அன்வர்  என்பவரால்  அது கட்டப்பட்டது  என  தெரிய  வருகின்றது.39   திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் சதுர வடிவில், சிறிய பரப்பளவை கொண்டதாக அமைந்துள்ளது. சுமார் முப்பது பேர் இதில் தொழலாம். சுவர்கள் முற்றிலும் கல்பாளங்களால் கட்டப்பட்டுள்ளது. உத்திரங்களும்,  தூண்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள கல்வெட்டு அரபி எழுத்துக்களால் தூணின் மேல்புறம் குடைந்து எழுதப்பட்டுள்ளது.  “தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,  கி.பி. எட்டாம் நூற்றாண்டில், தமிழகத்திலேயே  மிகப் பழமையான பள்ளிவாசல் அமைந்திருப்பதும், அதற்கு ஆதாரமாக கல்வெட்டு எழுத்து பொறிக்கப்பட்டிருப்பதும், தமிழகத்தில் இஸ்லாம் குறித்த ஆதாரச் சின்னமாகத் திகழ்கிறது”.40   39 கே. பி. எஸ்.ஹமீது (க.ஆ), இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - மலர், 1973, பக். 50-54. 40 ஏ. கே. ரிபாயி, தமிழகத்தில்  இஸ்லாமியர்  வரலாறு, 1988, பக். 76.   "அல்லா  எனை  வந்து  சந்தியும்  நந்தா  வகை  தொழும்  சீர்  நல்லார்”   என்று களவியற்காரிகை அகப்பொருள் இலக்கண நூலில் இடம் பெற்றுள்ளது.   வணிகம் செய்யும் பொருட்டு தமிழகம் வந்த இஸ்லாமியர் கீழக்கரையைத் தலைமை இடமாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். இதனை கீழ்வரும்  செய்தி  வாயிலாக  அறியலாம். "தமிழகத்தில் கீழக்கரையில் தான் முதன்முதலில் அரேபியாவில் இருந்து இஸ்லாமியர் வந்து தங்கினர் என்றும், பின்னர் அங்கேயே நிலையாகத் தங்கி பல ஊர்களிலும் சென்று வாழ்ந்தனர் எனக் கொள்வதே சரியான கணிப்பாகும்” என்று  கா.மு.ஷெரீப்  குறிப்பிட்டுள்ளார். "இஸ்லாத்தை தமிழகம் ஏற்றுக் கொள்ளத் துவங்கிய போது காவிரிக்குத் தெற்கே பாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும், ஆட்சிபுரிந்து வந்தனர். தமிழகத்தில் அப்போது சைவ, வைணவ, புத்த மதக் கொள்கைகள் பின்பற்றப்பட்டு வந்தன'.42   அரேபியர்கள் முதன்முதலில் கீழக்கரையில் குடியேறி வாழ்ந்தனர் என்றும்,  பின்னர் வாணிபம் நிமித்தமாக தமிழகத்தின் துறைமுகப் பட்டிணங்களில் குடிபெயர்ந்து, தாங்கள் குடியிருந்த எல்லையை விரிவுபடுத்தியுள்ளனர்  என்று  அறிய முடிகிறது.   2.7. தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் தமிழகத்தில் இஸ்லாமைப் பரப்பும் பொருட்டு பல்வேறு காலக்கட்டங்களில் ஞானவான்களான இறைநேசர்கள் பலர் வருகை தந்து சமயத்தைப்  பரப்பியுள்ளனர்.   இந்தியாவில் கடல்வழியாக காலடி வைத்த இஸ்லாமிய இறைநேசர் (அவுலியா) நத்ஹர்வலி  தப்லே ஆலம் பாதுஷா ஆவார்.   "தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரத்தின் பொருட்டு சிரியா நாட்டில் பிறந்த இவர் 900 சீடர்களுடன் (ஃபக்கீர்கள் உட்பட) 41 கா.மு. ஷெரீப்,  வள்ளல் சீதக்காதி வரலாறு, 1981, ப. 51. 42 செ.திவான்,  விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள், 1993, ப.4.   கி.பி. பதினோராம் நூற்றாண்டில் முதலாவது ராஜேந்திரசோழன் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் திருச்சிராப்பள்ளி வந்தடைந்தார்”.43   நத்ஹர்வலி தப்லே ஆலம்பாதுஷா பற்றிய முழுமையான வரலாறு, இதுவரை  வரலாறு நோக்கில் ஆராய்ந்து  தனி  நூலாக  வெளிவரவில்லை.   "இவரின் தன்னலமில்லாத இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தால் திருச்சிராப்பள்ளி  மக்கள்  மனமுவந்து  இஸ்லாம்  மதத்தில்  இணைந்தனர்”.44   "நத்ஹர் வலியுல்லா அவர்களின் சீடர்களான பக்கீர்களும், மிஸ்கின்களும் இந்தியாவின் பல இடங்களுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்று, இஸ்லாமியப் பிரச்சாரப் பணி செய்தனர்”.45   இவரால் மதமாற்றம் அடைந்த இஸ்லாமியர்களை கி.பி.1311 ஆம் ஆண்டில் படையெடுத்து வந்த மாலிக்கப்பூர் கண்டு வியந்தார் என அவருடன் வந்த  வரலாற்று  ஆசிரியர்  அமீர்  குஸ்ரு  குறிப்பிட்டுள்ளார். 2.7.1. நத்ஹர்வலி தப்லே ஆலம் பாதுஷா வாழ்க்கை வரலாறு சிரியா நாட்டின் மன்னராக இருந்த அகமது கபீர், பத்தாயிஷா பீவி என்கிற  தம்பதிகளுக்கு  கி.பி.949 இல் நத்ஹர்வலி பிறந்தார். நத்ஹர்வலி அவர்கள் ஏழு வயதுப் பாலகராக இருந்த போது பேரரசர் சையிது அகமது கபீர் காலமானார்.  தந்தையின் மறைவைத் தொடர்ந்து  ஏழு வயதினரான நக்ஹர்வலி அவர்களே மன்னராக முடிசூட்டப்பட்டார். பதினைந்து ஆண்டுகள் மன்னராக இருந்த  நத்ஹர்வலியின்  மனதில் மன்னராசையைவிட ஆன்மீகத்திலேயே அதிக ஈடுபாடு ஏற்பட்டது. தான் கண்ட ஓர் கனவின் வாயிலாக தனது இருபத்தி இரண்டாம் வயதில் மன்னர் பொறுப்பை தனது தம்பி சையித் ஜலாவிடம் ஒப்படைத்துவிட்டு தனது இரு மந்திரிகள் உள்பட தொள்ளாயிரம் சீடர்களுடன் (ஃபக்கீர்கள் உள்பட) புனிதப் பயணமாக  மெக்கா - மதினா சென்றார்." ______________________________________ 43. நத்ஹர் ஒலியுல்லாஹ் 1000வது ஆண்டு மலர், 1999, ப.276. 44.  சையித் இப்ராகிம், இஸ்லாம் எப்படி பரவியது, 1979, ப.308. 45.  அ.கி. பரமானந்தர், மதுரை நாயக்கர் வரலாறு, 1981, ப. 28. 46.  தப்லே ஆலம் பாதுஷா - 1000 ஆவது ஆண்டு உரூஸ் சிறப்பு மலர், 1998, ப.48.   அங்கு ஒரு வருட காலம் தங்கி இறை தியானத்திலும், வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.  ஒரு இரவில் நத்ஹர்வலி அவர்களின்  கனவில் நபிகள் நாயகம் அவர்கள் தோன்றி கீழ்திசைக்குச் சென்று இஸ்லாத்தைப் பரப்புவதற்குக் கட்டளையிட நத்ஹர்வலி மகிழ்வுடன் தன் சீடர்களோடு கப்பலில் கீழ்த்திசை நாட்டிற்குப் பிரயாணத்தை மேற்கொண்டு இறுதியில் திருச்சிராப்புரம் (திருச்சிராப்பள்ளி) வந்தடைந்தார். பின்பு திருச்சிராப்பள்ளி  தாயுமானவர் மலை (மலைகோட்டை) உச்சி  மீது தனது தோழர்களுடன் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்தார். பின்னர் இலங்கைக்குச் சென்று ஆதம் மலையில் நாற்பது நாட்கள் தியானத்தில் கழித்து விட்டு மீண்டும் திருச்சிராப்பள்ளிக்கே திரும்பி வந்தார்.47 "பின்பு திருச்சிராப்பள்ளி மக்களிடம் இஸ்லாமிய மார்க்கத் தத்துவங்களைப்  பிரச்சாரம்  செய்தார்”. 48   "தனது சீடர்களை இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று இஸ்லாமிய  மார்க்கத்தைப்  பரப்பும்படி கூறினார்”. 49   இதன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் இஸ்லாம் சமயத்தை தழுவினர். 50 நத்ஹர் வலி என்ற இறைநேசர் தமது 71ஆவது வயதில் கி.பி.1039 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 417) புனித ரமலான் 14 ஆம் பிறையன்று தொழுகை நிறைவேற்றிக்  கொண்டிருக்கும் போது  இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். திருச்சிராப்பள்ளியிலேயே  நல்லடக்கமாகியுள்ள  ஹஜ்ரத் நத்ஹர்வலி அவர்களின் தர்ஹாவில் ஆண்டுதோறும் ரமலான் மாதம் 14, 15 பிறைகளில்  உரூஸ் என்னும் சந்தனக்கூடு நினைவுநாள் விழா மிக விமரிசையாக இன்றளவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 47 மேலது ப. 49. 48 சையித் இப்ராஹிம், இஸ்லாம் எப்படி பரவியதும், 1979, ப. 308. 49 மேலது பக். 309. 50 மேலது பக். 308   திருச்சிராப்பள்ளி ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா  []     நத்ஹர்வலி அவர்களுக்கு ஹஜ்ரத் நத்ஹர் வலி, பாபாவலி , தப்லே ஆலம் பாதுஷா, படே தாதா என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.''51   "நத்ஹர்  வலி  அவர்கள் மறைந்த அறுநூறு  ஆண்டுகளுக்குப் பின் நாகூர்  ஆண்டகை  சாகுல்ஹமீது  நாயகம்  திருச்சிக்கு  வந்தார்.” 52   நாகூர் ஆண்டகை நத்ஹர் வலி அவர்களின் தர்ஹாவில் பல நாள் தங்கியிருந்தார்.  அங்கு  நாற்பது  நாட்கள்  கடும் தியானம் மேற்கொண்டார்.  நாகூர் ஆண்டகை தியானத்தில் இருந்த இடம் இப்பொழுதும் மேடை போன்ற அமைப்பில் உள்ளது. நத்ஹர் வலி அவர்கள்  நாகூர் ஆண்டவர் கனவில் தோன்றி குறிப்பிட்ட ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு சென்று சன்மார்க்கப் பணிபுரியுமாறு உள்தூண்டுதல் செய்ய, அதன் பேரிலே அவர் இஸ்லாமியப் பணி மேற்கொள்ள  நாகூர்  சென்றடைந்தார். 53 51  நர்கிஸ் - நத்ஹர்வலி தர்ஹா சிறப்பு மலர், 1996, ப.91. 52 மேலது ப.90. 53 நாகூர் ஆண்டவர் வாழ்க்கைச் சரிதம், 1971, பக்.50-51.     2.7.2 நாகூர் சாகுல்ஹமீது நாயகம் தமிழகத்தில்  இஸ்லாமிய சமயம் வளரக் காரணமாக இருந்தவர்களுள் மிக முக்கியமானவர் நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல்ஹமீது அவுலியா என்பார் ஆவார். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்தார். இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் மாணிக்கபூர் என்ற ஊரில்  நபிகள் நாயகத்தின் இருபத்து மூன்றாவது தலைமுறையராக ஹிஜ்ரி (கி.பி. 1490) ஆம்  ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறந்தார்.   குழந்தைப் பருவம் முதற்கொண்டு பல அற்புதங்கள் செய்து வந்த சாகுல் ஹமீது தமது பதினெட்டாம் வயதில் எல்லா வகை கல்வியிலும், மார்க்கங்களிலும் தேர்ச்சி பெற்றார். பின்பு ஆன்மீகத் தாகம் கொண்டு ஞானக் குருவைத் தேடி குவாலியருக்குச் சென்றார். அங்கு 'ஷைகு இஸ்லாம் சையிது முகம்மது கவுது'  என்ற  மகானிடம் பத்து ஆண்டுகள் தங்கி ஞான உபதேசம் பெற்று 'முரீது' என்ற ஞான தீட்சையைப்  பெற்றார். பின்னர்,  தம்மால் உபதேசம் பெற்று  இஸ்லாமியத்தில் இணைந்த  நானூறு பேர்களுடன் நண்பர்களான ஷைகு, முயினுதீன், இபுராஹீம், முகம்மது ஹசன், முகம்மது ஹீசைன் ஆகியோரையும் தம்முடன் அழைத்துச் செல்லுமாறு சற்குருவானவர் சொல்லவே அதன்படி நானூற்று நான்கு ஃபக்கீர்களுடன் புறப்பட்டு பல இடங்களில்  சுற்றி  சமயப்பணி  செய்யத்  துவங்கினார்.   "நாகூர்  ஆண்டவருடன் எப்பொழுதும் நானூற்று நான்கு ஃபக்கீர்கள் இருப்பார்கள். செயற்கரிய செயல்கள் பலவற்றை அம்மகான் செய்து காட்டியுள்ளார். அதன் காரணமாக மக்களும் கவரப்பட்டார்கள். எல்லோரும் அவரிடம் பெரிதும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். அவர் சென்ற ஊர்களில் எல்லாம் அக்காலத்திலேயே இஸ்லாமியர் கணிசமான அளவில் வாழ்ந்து வந்துள்ளனர். பல்வேறு தரப்பட்ட மக்களின் குறைகளையும், சிரமங்களையும் தீர்த்து வைப்பதில் அம்மகான் உதவி செய்தார். இவரது மகிமையை உணர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக இசுலாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்"   என ஏ.கே. ரிபாயி தமது தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 54 _________________________ 54 ஏ. கே. ரிபாயி, தமிழகத்தின் இஸ்லாமியர் வரலாறு, 1988, பக். 159-160. 'சாகுல்ஹமீது'  அவுலியாவின்  அடக்க  இடமே  நாகூரில் அமைந்துள்ள  'சாகுல் ஹமீது தர்கா'.  இது தமிழகத்தில் புகழ் பெற்ற தர்காக்களில் ஒன்று. நாகூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர் (கி.பி. 1580-1614) இவ்விடத்தை தானமாகக் கொடுத்தார் என்பதை  தர்காவில்  உள்ள கல்வெட்டுச் செய்தியின் மூலமாக அறியமுடிகின்றது. (ஃபக்கீர் இப்ராஹீம் அலிஷா என்ற தகவலாளி இன்னும் மன்னரால்  வழங்கப்பட்ட  இடத்திலே தற்காலத்தில்  வாழ்ந்து  வருகின்றார்.)   நாகூர் சாகுல்ஹமீது தர்கா  []   இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் உரூஸ் எனும் சந்தனக்கூடு நினைவு  விழாவின் போது  தமிழக ஃபக்கீர்கள்  குழுவாக  சென்று நாற்பது நாட்கள்  தங்கிப்  பாடல்களைப் பாடுகின்றனர்.       நாகூர்  தர்காவில்  பக்கீர்கள்  குழுவாக  பாடுதல்  []     2.8 தமிழகத்தில் முதல் இஸ்லாமிய படையெடுப்பு "தமிழ்நாட்டில் முதல் இஸ்லாமிய படையெடுப்பு, டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சி காலத்தில், அவரின் படைத்தளபதி மாலிக்காபூர் தலைமையில்  ஏற்பட்ட  படையெடுப்பே  ஆகும்"56   என  ம. இராசசேகர தங்கமணி தனது 'பாண்டியர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.   வட இந்தியா  முழமையையும்  வெற்றி பெற்ற அலாவுதீன் கில்ஜி தென் இந்தியாவின் மீது படையெடுக்க எண்ணி கி.பி. 1307 ஆம் ஆண்டில் மாலிகாப்பூர்  என்பவரின் தலைமையில் ஒரு மிகப் பெரிய படையை அனுப்பினார்.   மாலிக்காபூர்,  யாதவ நாட்டின் தலைநகரான தேவகிரி மீது கி.பி. 1307 ஆம் ஆண்டில் படையெடுத்து வென்றான். அதன்பின் கி.பி.1310ஆம் ஆண்டில் காகதீய பேரரசை வெல்ல தேவகிரி வழியாக வாராகல் வந்து, காகதீய மன்னன் இரண்டாம் பிரதாபருத்தினை வென்று பெரும் ___________________________________ 55   ம. இராசசேகர தங்கமணி, பாண்டியர் வரலாறு, 1978, ப.531   செல்வத்துடன்  டெல்லி சென்று அவற்றை வேந்தனிடம் சேர்ப்பித்தான். அதன்பின் போசள நாட்டின்மீது படையெடுத்து பெருவீரரான வீரவல்லாளனை வென்றான்.   2.9. மாலிக்காபூரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு அமீர்குஸ்ருவின் கூற்று56 []   [] 2.10. முடிவுரை   மேற்கண்ட கருத்துக்களிலிருந்து, இஸ்லாமிய சமயம் உலகில் இரண்டாவது மிகப்பெரிய சமயம் என்பதையும் தென்மேற்கு ஆசியப் பகுதியில் தோன்றிய இந்த சமயத்திற்கு புத்துயிர் ஊட்டியவர்ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியையும் சார்ந்த முகம்மது நபி (ஸல்) என்பதையும் அறிய முடிகின்றது. இஸ்லாம்  சமயத்திற்கு 'சாந்த மார்க்கம்' என்று பொருள். இஸ்லாமியர் அனைவரும், இறைவனால் நபிகள் நாயகத்தின் வழியாக அருளப்பட்ட  திருக்குர்ஆனையே  போற்றி  ஒழுகுகின்றனர்.   இஸ்லாமியர் ஒவ்வொருவரும் ஐம்பெருங்கடமைகளான 'அல்லாஹ்வே இறைவன், என்னும் உறுதியான நம்பிக்கையுடன் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ்  புனிதப்பயணம்' ஆகியவற்றைக்  கடைப்பிடிக்கின்றனர்.   இஸ்லாமிய மார்க்கம் இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே பரவத் துவங்கியது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில்  நத்ஹர்வலி மற்றும் நாகூர் சாகுல் ஹமீது அவுலியா ஆகியோர் இஸ்லாமியப் போதனைகளை பரவச் செய்தவர்களில் மிக முக்கியமான  இறைநேசர்கள்  ஆவார்.   நாகூர் சாகுல் ஹமீதுடன் வந்த நானூற்று நாலு ஃபக்கீர்களும் பாடல் பாடுவதை முதன்மையாகக் கொண்டவர்கள். இஸ்லாமியக் கருத்துக்களை தங்கள் பாடல் மூலம் பரப்பி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. ஃபக்கீர்களின் தோற்றம் மற்றும் வரலாறு குறித்து அடுத்த இயலில் விரிவாகக் காணலாம்.   இயல் - 3   இயல் மூன்று தமிழக  இஸ்லாமிய  ஃபக்கீர்களின்  தோற்றம் மற்றும்  வரலாறு   இசையினை ஒரு கருவியாக கொண்டு, பாடல்வழி சமயக் கருத்துக்களையும்,  வாழ்வியல் நெறிகளையும் போதித்து வருகின்ற  நாடோடிப் பாடகர்களாகிய ஃபக்கீர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சுமார் ஐந்து நூற்றாண்டுகளாக, அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களின்  வாழ்க்கை முறை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலும், தமிழ்ப் பண்பாட்டின் மரபிற்கு ஏற்பவும் அமைந்துள்ளது. எனினும், ஃபக்கீர்கள் தங்களுக்கென்று  தனித்த  சில  வாழ்வியல் கூறுகளையும், அடையாளங்களையும் கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்வியல் முறை பிற இஸ்லாமியர்களின்  வாழ்வியல்  முறைகளிலிருந்து  வேறுபட்டுள்ளது.   உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாமியர் வாழ்கின்ற  பகுதிகளில்  ஃபக்கீர்  இன  மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் இவர்கள் வெவ்வேறு பெயர்களில் சுட்டப்படுவதாகத் தகவலாளிகள் கூறுகின்றனர். இவ்வியலில் ஃபக்கீர்களின் முன்னோடிகள், அவர்களின் ஞான நிலைகள், ஞானப்பாதைகள், ஃபக்கீர்களின் வரலாறு, பக்கீர் என்ற சொல்லின் விளக்கங்கள் பக்கீர்களின் பிரிவுகள், சாதாரண இஸ்லாமியர் ஃபக்கீராக மாறும் சடங்குகள், ஃபக்கீர்கள் பெறும் பட்டங்கள், ஃபக்கீர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக வாழும் பகுதிகள், ஃபக்கீர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் தொழில்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.   3.1.ஃபக்கீர்கள் அறிமுகம்   இஸ்லாமிய இரவலர் பிரிவினருள் இசை மூலம் சமய நெறிகளைப் பரப்பி யாசகம் புரிந்து, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, துறவிகள் போன்று எளிமையான வாழ்க்கை வாழும் நாட்டார் இசைக்கலைஞர்களே ஃபக்கீர்கள். இஸ்லாமிய  சமயத்தை  உலகெங்கும் பரவச் செய்தவர்களில் முதன்மையானவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள். இவர் போதித்த கொள்கைகளை உலகில் உள்ள நாடுகள் முழுவதும் எடுத்துச் சென்ற ஞானப் பணியாளர்கள் அனைவரும் பல்வேறு காலக்கட்டங்களில், பல குழுக்களாக, பல்வேறு பெயர்களால் சூட்டப்பட்டு வாழ்ந்து வந்துள்ளனர். அதனை கீழ்கண்ட வரைபடம்  மூலம் அறியலாம். []   3.1.1. நபிகள் நாயகம் (ஸல்) (570-632) இஸ்லாம்  சமயத்தில் வந்த இறைத்தூதர்களில் இறுதி தூதர் ஆவார். இறை அருளால் திருக்குர்ஆனை எழுதியவர். நபிகள் நாயகத்தை தொடர்ந்து சமயப் பணியினைச் செய்தவர்கள் முகம்மது நபியின் தோழர்களான சஹாபாக்களும்,  அவர்களுக்கு  பின்  வந்த கலீபாக்களும் ஆகும்.   3.1.2. சஹாபாக்கள் சாஹிப் என்னும் சொல் 'சஹிப்' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது.   "'சஹிப்' என்ற சொல்லிற்கு 'உறுதுணையாக' அல்லது உடன் செல்லுதல் எனப் பொருள். எனவே, 'சாஹிப்' என்பது உறுதுணையாக உடன் செல்பவர்  எனப்  பொருள்படும்.''   எனவே தான், நபிகள் நாயகம் தன் தோழர்களை 'சஹாபே'  என்றோ 'அஸ்ஹாப்'  என்றோ  அழைக்கின்றார்  என்று  அப்துல்  ரஹீம்  குறிப்பிட்டுள்ளார்.   முகம்மது  நபியின்  காலத்திற்கு  பின், அவரது  கொள்கைகளை அவரது  தோழர்கள்  எடுத்துச்  சென்று  பரப்பியுள்ளனர்.   3.1.3. கலீபாக்கள் சஹாபாக்களைப் போலவே நபிகள் நாயகத்திற்கு பின் வந்த கலீபாக்கள் பலரும் இஸ்லாமிய சமயக் கருத்துக்களையும் முகம்மது நபியின் போதனைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வாழ்ந்துள்ளனர். 'அபுபக்கர்' என்பவர்  முதல்  கலீபா  ஆவார்.   3.1.4.தர்வேஷ்கள் பாரசீக நாட்டில் 'தர்வேஷ்' என்ற பெயரில் பல நூறு சமயப் பரப்பாளர்கள்  வாழ்ந்து  வந்துள்ளனர்.  'தர்வேஷ்'  என்பது  ஒரு பார்ஸி   1 அப்துல் ரஹீம், இசுலாமிய கலைக்களஞ்சியம், 1979, ப.91.   சொல்லாகும். இதற்கு வாசல் என்று பொருள். 'தர்' என்ற மூலச் சொல்லில்  இருந்து பிறந்தது. 'வேஷ்' என்றால் 'செல்பவர்' எனப் பொருள். தர்வேஷ் என்றால் வாசலுக்கு, வாசல் செல்பவர் எனப் பொருள்.2 பாரசீக தர்வேஷ்களே  ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்டனர். தர்வேஷ்  போன்று  ஆன்மீக வாதிகளான  சூஃபிகளும்,  இறை நேசர்களும்  சமயத்தை பரப்பி வந்தனர்.   3.15. சூஃபிக்கள் இஸ்லாமிய ஆன்மீகவாதிகளை சூஃபிகள் என்று அழைப்பர். சூஃபி என்பது  அரபுச் சொல். தமிழில்  சித்தர்  என பொருள்படும். ஃபக்கீர்கள் சூஃபிக்களைப்  போலவே  ஆன்மீக  நெறிகளை  பின்பற்றிச்  செல்வதால், சூஃபிக்கள் குறித்தும் அவர்கள் பின்பற்றிச் சென்ற ஆன்மீக வழிகள் குறித்தும் இங்கு  விளக்குவது  பொருத்தமுடையது ஆகும். அவ்வகையில் சூஃபிக்கள் குறித்த  செய்திகள்  சுருக்கமாகக்  கீழே  விளக்கப்பட்டுள்ளன.   'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் மூலச் சொல் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 'தூய்மை' என்ற பொருள் கொண்ட 'ஸாஃபா' (safa) என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது தான் 'சூஃபி' என்பர். மேலும், சூஃபி என்பதற்கு அணி (வரிசை), மறைவியல் ஞானம் என்ற பொருள்களும் உண்டு. சுஃபா (Suba) என்ற அரபுச் சொல்லிற்கு கம்பளி உடை என்று பொருள். இவர்கள் கம்பளி உடை அணிந்திருந்ததால் சூஃபி என அழைக்கப்பட்டனர் எனக் கருத இடமுண்டு.   "ஆடம்பர வாழ்வைத் துறந்து மனோவிச்சைகளை அடக்கி, எளிய வாழ்வினை ஏற்று, கம்பளி ஆடைகளை விரும்பி அணிந்தவர்களை சூஃபிக்கள் என்று அழைப்பர்" என்று  மணவை  முஸ்தபா  விளக்கம் அளித்துள்ளார்.   மேலும்,  வா.கமாலூதீன் ஆலீம் 1993 (ப.129), மு. அப்துல் கறீம், 1982 (ப.89), வாழ்வியல் களஞ்சியம் தொகுதி ஒன்பது (ப.307), இஸ்லாமிய கலைக்களஞ்சியம் தொகுதி மூன்று (ப.266) போன்ற   2 மேலது ப. 243. 3  என்.மணவை முஸ்தபா, சிந்தைக்கினிய சீறா, 1989, ப.1.   நூல்களில் 'சூஃபி' என்பதற்கு ஒரே மாதிரியான விளக்கங்களே கொடுக்கப்பட்டுள்ளன. சமூக வாழ்வில் அமைதியின்மை ஏற்படவே, எளிமையான, தூய்மையான வாழ்வை பெரும்பாலானோர் மறந்து ஆடம்பர வாழ்வை மேற்கொண்டனர். இந்த சூழ்நிலையைக் கண்டு வருந்திய இஸ்லாமியரில்  ஒரு பிரிவினர் சமூக வாழ்வில் இருந்து தம்மை விடுத்து இறை வழிபாட்டில் மட்டும் ஈடுபடுத்தினர். நாளடைவில் இவர்களின் எண்ணிக்கை பெருகலாயிற்று.   இங்ஙனம் ஆடம்பர உலக வாழ்வைத் துறந்து, தங்களுக்கு என்று தனித்த ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள்  'சூஃபிக்கள்'  என அழைக்கப்பட்டனர்  என்பதை  மேற்கண்ட பல்வேறு நூல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்லாமிய மெய்ஞானத்தை 'தஸவ்வுஃப்' என்று அரபு மொழியில் குறிப்பர்.   இறைவனால்  படைக்கப்பட்டவன்  மனிதன். இறைவனை அடிபணிந்து  வணங்க வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறை. இருப்பினும் இறைவனை அன்பாலும் அடைய முடியும் என புதியதோர் வழிபாட்டு முறையினை  சூஃபி  சிந்தனைவாதிகள்  உருவாக்கினர். "உலகத்தைப்  புடமிட்டுத்  தூய்மைப்படுத்தி,  மாசற்ற  உயர் பண்புகளை வளர்த்து அகத்தையும், புறத்தையும் ஒரு சேரப் பரிபக்குவப்படுத்துவதற்கான  வழிவகைகளை  அறிந்து கொள்ள உதவும் ஞானமே 'தஸவ்வுஃப்' அல்லது 'சூஃபிசம்' என்பதாகும். நிலையான பேரின்பப் பேற்றைப்  பெறுவது  தான்  அதன் நோக்கம்" 4 என்று  மணவை  முஸ்தபா  கூறுகின்றார்.   "தமிழ்நாட்டுச் சித்தர்கள் அவர்களின் இறைவழிக் கொள்கைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளை மேற்கொள்வது போன்று  சூஃபிக்கள்  'ஷரீஅத்'  'தரீகத்'  'மஃரிபத்'  'ஹரீகத்' என்ற நான்கு பயிற்சி நிலைகளை மேற்கொண்டுள்ளனர்”5   என்பதை ஸையித் இப்ராஹீம் குறிப்பிடுகிறார். ________________________ 4 என். மணவை முஸ்தபா, சிந்தைக்கினிய சீறா, 1989, ப.9. 5 ஸையித் இப்ராஹிம், இசுலாமும் அதன் உட்பிரிவுகளும், 1964, ப.34   மேற்கண்ட அக ஒழுக்கத்தை கடைப்பிடித்த சூஃபிக்கள் கீழ்கண்ட நிலைகளுக்குள்  தங்களை  மாற்றிக் கொண்டு  வாழலாயினர்.  அவையாவன  , "எல்லாவற்றையும் விட்டுவிட்டு இறைவனைத் தழுவியிருத்தல்    1. இறைவன்  மீதே  வாழ்வையும்,  மரணத்தையும்  குறித்த நம்பிக்கை  வைத்தல் 2. நல்ல  நடத்தைகளைப்  பேணிக்  கடைப்பிடித்து  வாழ்தல். 3. எல்லோரையும்  சரிசமமாக  நினைத்து  பழகுதல். 4. நல்ல குணத்துடன்  வாழ்தல்”. என்று இ.எஸ்.டி.செ.ஞானன் சூஃபிக்களின் உண்மையான வாழ்க்கை முறைகள் இன்னது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். அகத்தூய்மை, இறைநம்பிக்கை, பொது நலச் சிந்தனை போன்றவற்றைக் கொண்டவர்கள் சூஃபிக்கள் என்பதை அறிய முடிகின்றது.   இஸ்லாமிய சூஃபிக்களை 'அன்பிற்குரிய நேசர்', 'மெய்ஞானி', 'முஸ்லீம் சித்தர்', 'ஆத்மீகஞானி', 'ஆன்மீகஜீவன்', 'முக்தர்' என்று பல்வேறு பெயர்களில்  குறிப்பதுண்டு.   3.1.5.1. சூஃபிக்களின் ஞானநிலைகள் சூஃபிக்களின் ஞானநிலைகளைக் குறித்து எஸ்.எம்.சுலைமான் கீழ் கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார் "சூஃ.பிக்கள் ஏழுவிதமான ஞானநிலைகளைப் படிப்படியாக பெறுகின்றனர். இந்த ஏழு நிலைகள் 'மகாமத்' என அழைக்கப்படுகின்றது. அவையாவன, 1. தவ்பா : தாங்கள் செய்த பாவங்களுக்கும்,    தீமைகளுக்கும்  மனமுருகி  வருந்துதல். 2. வரா : சுகபோகங்களை  வெறுத்து தங்களையே  ஒடுக்கி  கொள்ளுதல் 3. ஜீஹத் : உலக  வாழ்க்கையிலிருந்து விலகிக்  கொள்ளுதல் 4. ஃபக்ரு : ஏழ்மையை  வலிய  ஏற்றுக் கொள்ளுதல் 5. சப்ரு : பொறுமையைப்  பின்பற்றுதல் 6. தவக்கல் : இறைவன்  மீது  நம்பிக்கை  வைத்தல் 7. ரளா : இறை  திருப்திக்  கொள்ளுதல்"7   மேற்கண்ட பல்வேறு நிலைகளைக் கடந்த பின்னரே சூஃபியானவர் இறைவனின்  சந்நிதானத்தை  அடையப் பெறுகிறார். * இ.எஸ்.டி. ஞானன், சூஃபிக்களின் வாழ்வும் தத்துவமும், 1994, ப.349. 'எஸ்.எம்.சுலைமான்,  இசுலாமியப் பண்பாடும் - தமிழ் பண்பாடும், 1977, ப.69. 3.1.5.2. சூஃபிக்களின் நான்கு பயிற்சி நிலைகள் 1. ஷரீஅத்    : 'ஷரா' என்னும் இஸ்லாமிய சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். மனதில் எப்பொழுதும் 'ஷெய்கை' மறவாதிருக்க வேண்டும். தியானத்தில் தன்னை இழந்தவனாக இருத்தல் வேண்டும். 2. தரீகத்             : புறச்சடங்குகளை அகற்றி, அகத்திலேயே வழிபாடும், தியானமும் செய்தல் வேண்டும். மிகுந்த பக்தியும், அறவொழுக்கமும் , மனஉறுதியும்  வேண்டும். 3. மஃரிபத்         : இந்த நிலையில் இயற்கைக்கு மேலான ஞானம் பெற்றுத் தேவதூதர்களுக்கு இணையான நிலையைப் பெறுதல். 4. ஹரீகத்   : கடவுளுடன் கலந்து  விடுபவர், பார்க்குமிடமெல்லாம் இறைவனையே  காணுதல்.   சூஃபிக்களின் 'தஸவு ஃப்' என்ற மெய்ஞானப் பாதை அவர்கள் பின்பற்றும்  ஆன்மீகப்  படி முறைகள் அனைத்தும் சைவ சமயத்தில் உள்ள நான்கு படிநிலைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க, எல்லா சமயத்திலும் ஆன்மீகத்திற்குரிய பொதுத் தன்மைகளை உணர முடிகின்றது.   3.1.53. தமிழக இஸ்லாமிய சூஃபிக்கள் தமிழில் சூஃபிக்களை  'இஸ்லாமிய சித்தர்', ' ஆன்மீகஞானி'  எனக் கூற இடமுண்டு.  தமிழகத்தில்  வாழ்ந்த  இஸ்லாமிய  சூஃபிக்கள்  தங்கள்  அருள்பெரும் ஞானத்தைத் தமிழ் மரபுடன் இணைத்து இலக்கிய உருவமளித்துள்ளார்கள்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு, தக்கலை பீர் முகம்மது சாஹிபு, கோட்டார் செய்கு தம்பி ஞானியார் சாஹிபு, காலங்குடி மச்சரேகைச் சித்தர்,  ஐய்யம்பேட்டை அப்துல்கனி சாகிபு, கோடை நகர் செய்கு முகைத்தீன் மலுங்கு, வாலை மசுத்தான், செய்யிது முகம்மது காதிரி, கணியபுரம் செய்கனர் செய்கு உதுமான் ஒலி, மேலப்பாளையம் முகைதீன் பசீரொலி, கோட்டாறு செய்கு பாவா சூசெய் சுலைமான், காயலம்பதி அம்சாலெப்பை, செய்யது அலிவாலை குருமசுத்தான், ஆழ்வார் திருநகரி செய்கு முகம்மது அப்துல்லா முதலானவர் ஆவர்.   3.15.4 தரீக்கா (Tarigah) சூஃபிக்கள் பின்பற்றும் நெறிமுறைகள் மற்றும் ஆன்மீக பாதைகள் பல உள்ளன.  அதனை 'தரீக்கா' என அழைக்கின்றனர். "மெய்ஞானப் பாதையை அரபு மொழியில் 'தரீக்கா' என்று அழைக்கின்றனர். 'தரீக்'  என்பதன்  நேரடியானப் பொருள்  'ஆன்மீக வாழ்க்கைப் பயணம்' என்பதாகும். இச்சொல்லை சூஃபிக்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஞானப்பாதைக்குக் கொள்ளலாயினர். 'தரீகத்' என்ற உருது சொல்லுக்கு 'ஞானவழி'  என்ற  பொருளும்  உண்டு”8 என்று  வ.கமாலூதீன்  ஆலீம்  குறிப்பிட்டுள்ளார். ஆன்மீகத்திற்கு  செல்வதற்கானப்  பல்வேறு  படிநிலைகளைச்  சொல்லி  தருகின்ற  ஞான வழிப்பாதையே 'தரீக்கா' என்ற சொல் குறிப்பதை அறிய  முடிகிறது. ''நடைமுறை  வாழ்க்கைக்குரிய  சட்டதிட்டங்களை வகுத்துத் தருவது  'தரீக்கா’வாகும். இந்த 'தரீக்காக்கள்’  அண்ணலாரின்  காலத்தவர்களான அஸ்ஹாபுல்  ஸஃப்ஃபாக்களிடமிருந்து  தோற்றம்  பெறுகின்றன"9   என்று  மீ.அ.மு.நாசிர்அலி  குறிப்பிடுகின்றார்.   ஆன்மீகப்  பாதைக்குரிய  தொடக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  காலம் முதல் இருந்திருப்பதை  அறிய முடிகின்றது. "ஆன்மீகப் பாதைக்குரிய நெறிமுறைகளைக் கற்றுத் தருகின்ற 'தரீக்கா' க்கள்  உலகில்  நாற்பது  உள்ளது"10   என்று  அஸ்ஹானுல் ஆலம், முகம்மது காசிம் மரைக்காயர் என்னும் நூலில் விளக்கியுள்ளார். இந்த தரீக்காக்கள் அனைத்தும் 'சாரீபீர் சவுதார் கான் வாதா' என்று சொல்லக்கூடிய நான்கு பீர்களிலிருந்தும், பதிநான்கு கான்வாதாக்களில் இருந்தும் ஆரம்பமாகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.11 அதாவது  ஒவ்வொரு தரீக்காவிற்கும் நான்கு முக்கியமான தலைமை பீடங்களும், பதிநான்கு துணைப்பீடங்களும் உள்ளன. இப்பீடங்களைத் ________________________ 8. வ.கமாலூதீன் ஆலீம், தஃப்லீக்கும் தரீக்காவும், 1993, பக். 106-107. 9.  மீ.அ.மு.நாசிர் அலி,     இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் சூஃபி தத்துவம், 1991 ப.15 10.அஸ்ஹானுல் ஆலம், முகம்மது காசிம் மரைக்காயர், ப.145 எம். ஜி. முஹம்மது 11.ஹுசைன் சாஹிபு (தொ.ஆ), மாபெரும் ஜோதி ஷாஜா முயனுதீன் சிஷ்தி, ப.61.   தலைமையாகக் கொண்டு அதன்வழி நடக்கும் ஆன்மீகப் பாதை 'தரீக்கா 'வாகும்.   இதன்  விளைவாகவே  சூஃபிக்களின் ' கானிகா'  என்ற  துறவு மடங்கள், 'தர்கா' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. முதலில் இவை 'தரீக்' என்றே அழைக்கப்பட்டிருந்தன.   இந்தியாவைப் பொறுத்தமட்டில் கீழ்கண்ட தரீக்காக்கள் பிரபலமாக உள்ளவை.         []   தென் இந்தியாவில் அதிகமாக பின்பற்றக்கூடிய தரீக் அப்துல்காதர் ஜீலானி  உருவாக்கிய காதிரிய்யாத் தரீக் ஆகும்.   3.1.5 5. சூஃபிக்களின் அடையாளப் பொருட்களான அணிகலன்கள் சூஃபிக்கள் தாயிரா, மணிச்சோட்டா, ஷாலியாக்கயிறு, திருச்சக்கரம், கண்டகோடாரி, திருவோடு, காவி அல்லது வெள்ளை உடை, கண்ட மாலை, அல்மதர், ஆசாகோல், தபீசு, ஜோல்னாப்பை போன்றவற்றை அணிகலன்களாக அணிந்துள்ளனர். (இஸ்லாமியர்களில் இசை பாடும் துறவிகளான ஃபக்கீர்கள் இன்றளவும் சூஃபிக்களின் நெறிமுறைகளையே _________________ 12  சூப்பிக்களும் ஆன்மீக ஒருமைப்பாடும், சமண பௌத்த இசுலாமிய கிறிஸ்தவ தமிழ் இலக்கிய கருத்தரங்கு மலர், ப.9.   கடைப்பிடித்து வருகின்றனர். சூஃபிக்கள் பயன்படுத்திய அணிகலன்களை அடையாளமாக பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பற்றி விரிவாக பின்னால் விளக்கப்பட்டு உள்ளது).   'தரீக்' என அழைக்கப்பட்ட துறவு மடங்கள் பிற்காலத்தில் 'தர்கா' என அழைக்கப்பட்டு அவுலியாக்கள் என்னும் இறைநேசர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களாகவும், இஸ்லாமியர் சென்று வேண்டுதல் செய்யும் இடமாகவும் திகழ்கின்றது. மேற்கண்டவைகளிலிருந்து, இஸ்லாமியச் சட்டதிட்டங்களை உருவாக்கியப் பெரும் தலைவர்களைப் போன்று ஆன்மீகத் துறையில், மக்களிடையே இறை ஒருமைப்பாட்டையும், இறை நம்பிக்கையையும் ஆழமாக வேரூன்றச் செய்வதர்கள் சூஃபிக்கள். இவர்கள் உயர்ந்த எண்ணங்களுடைய எளிய வாழ்வின் சிறப்பை எடுத்துக் கூறினர். தாங்களும் அவ்வாறே வாழ்ந்து காட்டினர். இவர்களின் வாழ்க்கை , சமயக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டுக் காணப்பட்டது. சூஃபிக்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல் கசாலி (Al-Gazzali), உரூமி (Rumi), கவுதுல் ஆலம் அப்துல் காதர் ஜீலானி (Ghaud-ul-Alam Abdul Ghadar Jilani) முதலியோர் ஆவர்.   3.1.6. இறைநேசர்கள் (அவுலியாக்கள்) சூஃபிக்களைப் பின்பற்றி இஸ்லாமிய சமயப் பணிகளை புரிந்தவர்கள் இறைநேசர்கள் எனப்படும்  அவுலியாக்கள் ஆகும். ஃபக்கீர்கள், சூஃபிக்களைப் போல் இறைநேசர்களையும் பின்பற்றி அவர்களின் பெருமைகளைப் பாடலாகப் பாடி வருவதால் இங்கு இறை நேசர்களைப் பற்றிச் சுருக்கமாக குறிப்பிடுவது சாலப் பொருந்தும். இறைநேசர்கள் என்பவர் இறைவனின் நேசர், இறைவனின் அன்பிற்குரியவர், ஆன்மீகவாதி, இறைவனின் நல்லடியார், அற்புதம் செய்பவர். வலிமார்கள்,  அவுலியாக்கள்  என்ற  பெயர்களில்  அழைக்கப்படுகின்றனர். உதாரணமாக, நத்ஹர்வலி அவுலியா நாகை சாகுல்ஹமீது அவுலியா தக்கலை பீர் முகம்மது அவுலியா  போன்றவர்களைக்  குறிப்பிடலாம்.   "'வலி' என்ற அரபி சொல்லிற்கு பல பொருட்கள் இருப்பினும் திருக்குர்ஆனில் நெருங்கியவர்' என்பதைக் குறிக்கும் விதத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இறைவனுக்கு நெருக்கமானவர்களான இறைநேசர்களையே 'வலிமார்' என்று அழைக்கின்றனர். வலிமார்களைக் குறிக்கும் பன்மைச் சொல் 'அவுலியாக்கள்' என்பதாகும்"3   என்று  ஜே.எம். சாலி  குறிப்பிட்டுள்ளார். இதற்கு  சான்று  கூறும்  வகையில், "தன்னை உணர்ந்து, தன் தலைவனாகிய அல்லாஹ் (இறைவன்) வையும் நன்குணர்ந்துள்ள மகான்களே அவுலியாக்கள். இறைநேசர்களாகிய இவர்கள் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகவே பாவிக்கின்றனர். இவர்களுக்கு  இறைவனைத்  தவிர்த்து வேறு யாரிடத்தும் அச்சமேற்படுவதில்லை ”14 என்று மணவை முஸ்தபா கூறுகின்றார்.   இக்குறிப்புகளின்  வழி அவுலியாக்கள் என்போர் இறைவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள், பிறருக்கு முன்மாதிரியான வாழ்வை மேற்கொண்டவர்கள் என்பதனை அறியமுடிகின்றது. (ஒவ்வொரு அவுலியாவும் முதலில் ஃபக்கீராக இருந்தவர்களே. மனிதர்கள் தங்கள் நற்செயல்களால் புனிதர்களாய் மாறுதல் போல ஒழுக்க நெறிகளையும் உயர்ந்த ஆன்மீக நெறியையும் முழுமையாக பின்பற்றிய ஃபக்கீர்களே பிற்காலத்தில் அவுலியாவாக திகழ்ந்துள்ளனர். இவர்களைப் பின்பற்றியே இஸ்லாமிய ஃபக்கீர்களின் வாழ்வும், வாழ்விடங்களும் அமைந்துள்ளன.   3.2. தர்ஹா   அவுலியாக்கள் அடங்கியிருக்கும் இடம் தர்ஹா எனப்படும்.   "கப்ரு, மக்பரா என்ற வார்த்தைகள் அரபி மொழியிலும், மயானம், சுடுகாடு என்ற வார்த்தைகள் தமிழ் மொழியிலும் இறந்த மனிதனை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு உபயோகிக்கப்படுவதை நாம் எல்லோரும் அறிவோம். 'தர்ஹா' என்ற வார்த்தை அல்லது சொல் எந்த மொழியைச் சார்ந்தது என்பதை யாராவது விளக்கமளிப்பார்களா என்பது ஐயமே. அரபு மொழியிலோ அல்லது தமிழ் மொழியிலோ 13  ஜே. எம். சாலி, தமிழகத்து  தர்காக்கள், 1981, ப.8. 14 என். மணவை முஸ்தபா (தொ.ஆ), தமிழில் இசுலாமிய மெய்ஞான இலக்கியங்கள், 1989, ப.65.   இல்லாத ஒரு சொல்லை இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லீம்கள் மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர். குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இந்த வார்த்தையில்லை. அரபு மக்களிடமும் இந்த வார்த்தை அறியப்படவில்லை ”.15   எனவே தர்கா வழிபாடு இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு சற்று முரண்பாடாக உள்ளது.   இக்கருத்தினை மு.ஹம்சா ''ஓர் இறைக் கொள்கையை வலியுறுத்தும் இஸ்லாமியச் சமயத்தில் காலப்போக்கில் இக்கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட சமாதி வழிபாடு தோன்றியது. முஸ்லீம்கள் இறைநேசச் செல்வர்களின் சமாதிகளாகிய தர்காக்களுக்குச் சென்று  அவர்களை  வழிபட்டனர்”16   எனக் குறிப்பிடுகிறார்.   3.2.1. ஃபக்கீர்கள் வரலாறு ஃபக்கீரர்களின் தோற்றம் முகம்மது நபி(ஸல்) அவர்களின் காலந்தொட்டே தொடங்கிவிட்டது. உலகின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம் ஃபக்கீர்கள் வெவ்வேறு பெயர்களில் சுட்டப்பட்டு, வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பாரசீக  நாட்டிலே அதிக அளவில் ஃபக்கீர்கள் வாழ்ந்துள்ளனர். 'ஃபக்கீர்' என்பதே ஓர் பாரசீகச் சொல். பாரசீக நாட்டில் ஃபக்கீர்களை தர்வேஷ்கள் என்று அழைத்தனர். தமிழகத்தைப்  பொறுத்தமட்டில் அரேபியர்களின் படையெடுப்பிற்கு முன்னரே கடல் மார்க்கமாக ஃபக்கீர்கள் தமிழகத்தில் வந்தடைந்துள்ளனர்.  இதனைக்  கீழ்கண்டவற்றில்  இருந்து  அறியலாம்.   "கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்ட தர்வேஷ்களும் கடல் மார்க்கமாக வந்த | இந்த நாட்டின், வெவ்வேறு பாகங்களில் வசித்தனர். இவர்கள் பொதுவாகத் தங்கள் மார்க்க அறிவு, நல்லொழுக்கம் ஆகிய இரு பண்புகளால் புகழ் பெற்றனர். ஆயிரமாயிரம் மக்கள் இவர்களின் நேர்மை, தூய்மை, ஆன்மீக உயர்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இவர்களை நாற்புறம் சூழ்ந்து கொள்வர். இவர்களின் ஆசிரமங்களில் மற்றும் புனித மன்றங்களில் மனிதர்கள்  அன்போடு  நடத்தப்பட்ட   15  ஹெச்.ஓ. நஜ்முதீன் (க.ஆ.), நர்கீஸ் மாத இதழ், 2007, ப. 19. 16 மு.ஹம்சா, இஸ்லாமியத் தமிழ் நாவல்களில் இஸ்லாமியம், 2002, ப.138.   காட்சி அனைவரையும் தன்பால் ஈர்க்கச் செய்தது. இந்தியாவில் ஃபக்கீர்கள், தர்வேஷ்கள் ஆகியோரின் வசீகர சக்தியின் காரணத்தால் இஸ்லாம் மிகுதியாகப்  பரவியது”17   என ஸையித் இப்ராஹிம் தனது 'இஸ்லாமிய வரலாறு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை பொருத்தவரையில் ஃபக்கீர்களின் தோற்றம் 'நத்ஹர்வலி'யின் காலத்திலேயே ஆகும். தமிழகத்திற்கு வந்த இறைநேசர்களில் நத்ஹர்வலியின் சீடர்கள் 'கலந்தர்கள்' என்றும் கி.பி.16ஆம் வாழ்ந்த நாகூர் சாகுல்ஹமீது வலியின் சீடர்கள் ஃபக்கீர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.   கலந்தர்கள் அனைவரும் தொடக்கத்தில் சமயப் பணி செய்து வந்தாலும், அவர்கள்  தமிழகத்தில் நிலையாக வாழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. மாறாக தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கக் கூடும் என்று 'ஏ.கே.யூசுப் (2001, பக்.196), மு. அப்துல் கறீம் (1996, பக்.174), ஜே.எம். சாலி (1981, பக்.170) போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.   நத்ஹர்வலியைப் போலவே, இறைநேசர் சாகுல்ஹமீது, நானூற்று நான்கு சீடர்களை தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனை கீழ்கண்ட வாய்மொழிப் பாடல் வரிகளின் மூலம் அறியலாம். 'நானூத்தி நாலு சீடர்களாம் சாகுல் வலி அவர்களுக்கு நானூத்தி நாலு சீடர்களாம் பக்கீருமாருடன் வழிகடந்தார்  சாகுல் வலி அவர்கள் பக்கீருமாருடன் வழிகடந்தார் ...'   இவர்கள் அனைவரும் சாகுல்ஹமீதுவலியுடன் தங்கியிருந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று சமய உபதேசங்கள் செய்து வந்ததற்கான சான்றுகள் நிரம்ப உள்ளன. சாகுல் ஹமீதுவலி இறந்த பின்னரும், பல நூறு சீடர்கள்  ஃபக்கீராக  மாறி  தமிழகத்தில்  இஸ்லாமிய 17 ஸையித் இப்ராஹிம், 'இசுலாமிய வரலாறு - 9,1976, ப.252.   சமயப்  பணியினை செய்தனர். இவர்களைத் தொடர்ந்து இப்பணி இன்று வரையிலும் இவர்களது வாரிசுகளால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.   3.2.2. தமிழக இஸ்லாமிய இரவலர் பிரிவுகள் தமிழக  இஸ்லாமியர்களில்,  மரைக்காயர், லப்பை, ராவுத்தர், பட்டாணி ஆகிய பொதுப்பிரிவினர் காணப்பட்டாலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிய வாழ்க்கை மேற்கொள்ளும் இரவலர் பிரிவினர், மூன்று காணப்படுகின்றனர்.  இப்பிரிவினருள்  ஃபக்கீர்களும் அடங்குவர்.   3.2.2.1. மிஸ்கீன்கள் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எந்தவிதமான உடைமைப் பொருட்களும் இல்லாதவர்கள். பச்சை நிற தலைப்பாகையை அணிந்திருப்பர். மசூதி மற்றும் தர்கா வாயில்களில் அமர்ந்திருப்பர். தெருக்களில் சென்று ஒரு போதும் இவர்கள் யாசிப்பதில்லை. இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தில், உறவினர்கள், அனாதைகளுக்கு அடுத்தப்படியாக வறுமையைப் பொறுத்துக் கொண்டு தெருக்களில் சென்று யாசகம் கேட்காத மிஸ்கீன்களுக்கு உதவுமாறு திருமறையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.18 இஸ்லாமியர் தர்மம் செய்ய விரும்பும் போது மிஸ்கீன்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளிப்பர். மிஸ்கீன்களுக்கு ஆன்மீகப் பணி இசை இவற்றில் எவ்விதத் தொடர்பும் இல்லை. 3.2.2.2. முஸாஃபர்கள் 'முஸாஃபர்'  என்ற  அரபுச் சொல்லுக்கு வழிப்பயணி என்று பொருள் என் இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.19 இவ்வகை இஸ்லாமியர்கள் நாடோடி வாழ்வினை மேற்கொள்ளும் யாசகர் ஆவார். மிஸ்கீன்களைப் போன்று எந்த உடைமையும் அற்றவர்கள். வழிப்பயணத்தின் போது  கிடைக்கும் பணம் மற்றும் உணவினைப் பெற்று வாழ்ந்து வருகின்றவர்கள். இசைக்கும் முஸாஃபர்களுக்கும் தொடர்பு எதுவும் இல்லை . இவர்கள் யாசகர்களே. _______________________ 18 அப்துல்ரஹீம், இசுலாமியக் கலைக்களஞ்சியம், 1979, ப. 687. 19 மேலது ப.440.   3.3. தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் இவர்களுக்கு யாசகம் என்பது முதல் நோக்கமன்று, சமயப்பணி செய்தலும், எளிய வாழ்க்கை வாழ்தலுமே ஆகும். இவர்கள் பிற இஸ்லாமியர்களிடம் இருந்து பெரிதும் வேறுபட்டவர்கள். இசையோடு தொடர்புடைய நாட்டார் கலைஞர்கள் இவர்களே. (ஃபக்கீர்களைப் பற்றி அடுத்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது).   []   3.4 ஃபக்கீர் பெயர் விளக்கம் ஃபக்கீர் என்பது பாரசீகச் சொல். 'பகீர்' என்ற மூலச்சொல்லே மறுவி ‘ஃபக்கீர்' என்ற சொல்லாகப் பிறந்தது. தமிழில் இதற்கு 'இரப்பவர்' என்று பொருள்.20 “Faqir – Persian darwesh. The Arabic word faqir signifies 'poor, but it is used in the sense of being in need of mercy, and poor in the sight of God, rather than in need of wordly assistance. Darwesh is a Persian word, derived from dar, 'a door'. i.e those who beg door to door. The terms are generally used for those who lead a religious life, religious faqirs and divided into two great classes, the 'ba shar' (with the law), or those who govern their conduct according to the principles of Islam and the 'be shar' (without the law)”. 21 ________________ 20 அப்துல்ரஹீம், இசுலாமிய கலைக்களஞ்சியம், 1979, ப.440. 21 Thomas Patrick Hughes, Dictionary of Islam, 1978, p. 121.   மேலும்,  'பக்கர்'  என்பதற்கு  'ஓர்  இனத்தைக்  குறிக்கும் சொல்' என்றும்,   "ஃபக்கீர்கள் என்பதற்கு இஸ்லாமியப் பரதேசி, இஸ்லாமிய யாசகர், இரவலர்கள் என்றும் தமிழ் அகராதிகளில் சுட்டப்பட்டுள்ளன. 'பக்ரு' என்ற அரபுச் சொல்லுக்கு 'வறுமை', 'தின்மை' என்று பொருள், அதாவது வாழ்க்கையில் எவ்வித வசதியும் இல்லாதவர்கள் என்பது இதன் பொருள்”.22   3.4.1 ஃபக்கீர் சொல் திரிபுகள் ஃபக்கீர்  ஊர் சுற்றித் திரிபவர்கள் என்பதால், ஃபக்கீர்  என்னும் சொல்லின் திரிபுகள் பிற மக்களிடமும் வழக்கில் உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்களைப் பார்த்து 'பக்கி மாதிரி  சுற்றித் திரிகிறாயா? எனக் கேட்பதைக் காணலாம். 'பக்கி' என்பதைப் ஃபக்கீர் என்பதின் சுருக்கச் சொல்லாகவும் கொள்ளலாம். ஃபக்கீர்களின் தோற்றத்தைக் கண்ணுற்ற மக்கள், யாரேனும் ஒருவர் அழுக்கான துணியை உடுத்தியிருந்தாலும் கலைந்த தலை முடியைக் கொண்டிருந்தாலும் அவரைப் பார்த்து 'என்ன பக்கீர் மாதிரி இருக்கிறாய்?’ என்று கேட்பதைக் காணலாம். இஸ்லாமியச் சமூகத்தில் பொருளாதார வசதியில் உயர்வானவர்களாகவும், தாழ்வானவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள 'இருந்தா  நவாபு இல்லாட்டி பக்கீரு' என்று சொல்வதையும் காணலாம். ஃபக்கீர் என்பவர் பொருளாதார வசதியற்றவன் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.   தேசத்தந்தை காந்தியடிகளை 'அரை நிர்வாண பக்கிரி" (Half naked Fakir) என  வின்ஸ்ட ன் சர்ச்சில் (Winston Churchil1) 1930, ஆஸ்திரேலியாவில்  குறிப்பிட்டது கூட இந்த ஃபக்கீர்களின் எளிமையும், இல்லாமைத் தன்மையும் வைத்துத்தான்.   "It is alarming and also nauseating to see Mr. Gandhi, a seditious middle temple lawyer, now posing as a fakir of a type well known in the east, striding half-naked up the steps of the viceregal palace, while he is still organizing ______________________________ 22 அ. வசந்தா (க.ஆ), தமிழகத்தில் நாடோடிகள் சங்க காலம் முதல் சமகாலம் வரை, 2003, ப.291. 23 http://www.kamat.com/mmgandhi/churchill.htm       and conducting a defiant campaign of civil disobedience, to parley on equal terms with the representative of the king-emperor."24   மேற்கண்டதில் இருந்து ஃபக்கீர் இனம் பிற மக்களின் வாழ்க்கையோடு அறிமுகமானவர்கள் என்பதைக் காணமுடிகின்றது. சமுதாயத்தில் அவர்களின் நிலையையும் உணரப்படுகின்றது.   3.4.1.1. பக்கீர் ஓர் ஆன்மீக பணியாளர்   பொதுவாக எல்லா மதங்களிலும், தங்களை முழுமையாக ஆன்மீகத்திற்கு என்று அர்பணிப்பவர்கள் உண்டு. அந்த வகையில் ஃபக்கீர்கள் சூஃபிக்களைப் பின்பற்றி, தங்களை முழுமையாக இறைவனைப் போற்றுவதற்கும் இறைதொண்டு புரிவதற்கும் அர்பணித்து வாழ்கின்றனர். ஃபக்கீரர்களின் ஆன்மீக நிலையை 'Dictionary of Islam' என்ற நூல் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது “The more zealous faqirs devote themselves to the most qustere acts, and shut themselves up in their cells, so as to give themselves up for whole hours to prayer and meditation. The others pass very often a whole night in pronouncing the words Hū and Altah, or rather the phrase, 'La itaha ili ā llah”. 25   3.4.1.2 ஃபக்கீர் ஓர் வறியவர் ஃபக்கீர் என்ற சொல்லிற்கு 'வறியவர்' என்ற பொருளும் உண்டு. இதனைக் கீழ்கண்டவாறு எம்.ஏ. ஹைதர் அலி தமது நூலில் குறிப்பிடுகிறார். "ஃபக்கீர் என்ற சொல்லிற்கு ’புகரா' (ஏழை) என்ற பொருளும் உண்டு. இச்சொல்லின் நேர்பொருள் தேவையற்றவர்' என்பதே. ஈருலகத் தேவைகளையும் குறைத்துக் கொண்டு 'ரிலா' என்னும் இறைவனின் பொருத்தத்தை விரும்புவர். மனிதர்களிடையிலான தார் தம்மியம் அவர்களுடைய ஞானத்தைப் பொருத்ததேயல்லாமல், செல்வத்தைப் பொறுத்ததல்ல. அதனால் செல்வந்தர்களாகிய  அமீர்களை (உம்றா) விட,  பக்கீர்கள் நூற்று  முப்பத்து ஒன்பது மடங்கு பதவியில் உயர்ந்தவர்கள். ஆதலால் அரசர்களும் இம்மை மறுமைப்  பலன்களைப்  பெறுவதற்காகத்  தேடிச் செல்வது  ஃபக்கீர்களையே”26 ____________________________ 24 மேலது 25  Thomas Patrick Hughes, Dictionary of Islam, 1978,pg.128. 26  எம்.ஏ. ஹைதர் அலி, இஸ்லாமியத்தில் வாழ்வியல் தத்துவங்கள், 1981, பக். 71-72.   ஏழையாகவும், வறுமை நிலையிலும் வாழ்பவர்களே ஃபக்கீர்கள் என்பதை  மேற்கண்டவற்றில்  இருந்து  அறிய முடிகின்றது.   3.4.1.3. ஃபக்கீர் ஓர் நாடோடி ஃபக்கீர் என்ற சொல்லிற்கு நாடோடி என்ற பொருளும் உண்டு. இதனை முசாஃபர் என்றச் சொல்லால் சுட்டுவர். சபர் என்னும் அரபு சொல் பிரயாணம் செய்தலை, தேச சஞ்சாரத்தில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. சபர் என்றச் சொல்லின் அடியாகப் பிறந்த பெயர்ச் சொல்லான முசாஃபர் என்பது பயணியை, நாடோடியைக் குறிக்கின்றது. இஸ்லாமியத்தில் விதிக்கப்பட்ட கட்டாயக் கொடையைப் பெற தகுதியுடைய ஃபக்கீர்கள் கூட்டத்தவருள் பயணிகளான முஸாஃபர்களும் இடம் பெறுகின்றனர்.27   3.4.1.4. ஃபக்கீர் ஓர் பொழிவாளர் ஃபக்கீர் என்பதற்கு 'செய்திகளை அறிய வைப்பவர்' என்ற பொருளும் உண்டு.   ''’கபர்' என்ற அரபுச் சொல்லுக்கு 'செய்தியை அறிய வைத்தல்' என்ற பொருளும் உண்டு. இச்சொல்லின் எழுத்துக்கள் இடம் பெயர்ந்து 'பகர்' 'பக்கீர்' என மாறியது என்பர். 'பகர்' என்பதற்கு பகர்தல், பேசுதல் என்ற பொருள்களும் உண்டு. ”28   இஸ்லாமிய சமயக் கருத்துக்களையும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் இறைநேசர்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள் போன்றவற்றை ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசிப்பதாலும், பாடல்வழி உணர்த்துவதாலும் பகர்தல், பேசுதல், அறியவைத்தல் போன்ற பொருள்களோடு ஃபக்கீர்கள் தொடர்புடையவர்களாய் இருப்பதால், அவர்களை பொழிவாளர் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் எனலாம். _________________ 27   ம.முகம்மது உவைஸ், பீ. மு. அஜ்மல்கான், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, (தொகுதி-1), 1986, ப.12. 28 வாழ்வியல் களஞ்சியம், தொ.II, 1986, பக்.868-869.   3.4.1.5. ஃபக்கீர் ஓர் பெருமைமிக்கவர்   இஸ்லாமியர், பொதுவாக 'ஷா' என்ற எழுத்தை மதிப்பின் பொருட்டு பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்வது உண்டு. அவ்வகையிலேயே ஃபக்கீர்களை, 'ஃபக்கீர்ஷா' என்று அழைப்பர். இறைவன் முன்னால் இவர்கள் பெருமைமிக்கவர்கள் என்பதைக் குறிப்பதே இவர்களை இந்த 'ஷா' என்ற அடைமொழியோடு  அழைப்பது  ஆகும். ஃபக்கீர்கள் இறைவனோடு நெருங்கிய நிலையில் இருப்பவர்கள், 'இறைவழியில் சென்று சமயப் பணியை ஆற்றும் ஃபக்கீர்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும்  இறைவனே வந்து காப்பற்றி விடுவான்'  என்று கூறும் சர்குரு ஹைதர் அலிஷா (நத்ஹர்வலி தர்கா) என்ற ஃபக்கீர் தகவலாளி கீழ்வரும் கதையைக் கூறுகிறார்.29    ‘பக்கீர் ஒருவர் இஸ்லாமியக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துக் கூறும்  பொருட்டு  ஊர்  ஊராகச் சென்று கொண்டிருந்தார். அப்படிச் செல்லும் போது பெரியகாடு ஒன்று குறுக்கிட்டது. அந்தக் காட்டை கடந்தால்தான் மக்கள் வாழும் இடத்தினை சென்றடைய முடியும். ஃபக்கீரானவர் காட்டை கடக்கும் நேரத்தில், முழுவதும் இருட்டி விடவே அவரால் ஒன்றையும் காண இயலவில்லை.  ஃபக்கீர்  அந்த  இருட்டில் செல்லும் போது வழியில் சில திருடர்கள் எதிர்கொண்டு ஃபக்கீரை தாக்க துவங்கினர். உடனே அந்த ஃபக்கீர் யாரையும் உதவிக்கு அழைக்காமல், இறைவனை தியானம் செய்யத் துவங்கினார். அப்பொழுது அருகே சலசலப்பான ஓசை மட்டும் கேட்டது. மேலிருந்து  ஒரு கை மட்டும் நீண்டு திருடர்களைத் தாக்கி புறமுதுகுக் காட்டி ஓடச் செய்தது. ஃபக்கீரின்  கையைப்  பிடித்து  காட்டை  தாண்டி கொண்டு விட்டது. ஃபக்கீரானவர்  சுற்று  முற்றும்  பார்க்க, அங்கு எவரும் தென்பட வில்லை. அதனைக் கண்டு வியப்புற்ற அந்த ஃபக்கீரானவர், எல்லாம் அல்லா செயல் என்று கூறி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்', _______________________ 29 சர்குருஹைதர் அலிஷா (ஷா ஜலாலி) அவர்களின் நேர்காணலின் போது கேட்டறிந்த செய்தி (நாள் 17.10.2010), இடம் : நத்ஹர்வலி தர்கா , திருச்சிராப்பள்ளி.   இறைவழியில் செல்லும் ஃபக்கீர்களுக்கு, தங்களின் தியானத்தினால், இறைவனின் அருளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெற்றுவிடுவார் என்பதையே இக்கதை உணர்த்துகின்றது.   3.4.1.6.ஃபக்கீர் ஓர் இசைக்கலைஞர் தமிழ் நாட்டை பொறுத்த மட்டில் ஃபக்கீர்கள் தங்கள் இறைநெறி கருத்துக்களை மக்களிடையே பரப்ப இசையையே பிரதான கருவியாகக் கொண்டுள்ளனர்.  தமிழக  இஸ்லாமியர்களில் இசையை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்கள் ஃபக்கீர்களே. எனவே ஃபக்கீர்களை இசைக்கலைஞர்  எனக்  கொள்ளுதல்  சாலப்பொருந்தும்.   மேற்கண்ட பல்வேறு கருத்துக்களைக் கொண்டு ’பக்கீர்' என்றச் சொல்லிற்கு  'யாசகர்', 'பிச்சைக்காரர்' என்று சுட்டப்படுவதை விட, 'துறவி', 'ஏழை', 'பொழிவாளர்', 'நாடோடி', 'ஆன்மீகவாதி', 'இறைவனின் நல்லடியார்', 'இசைக்கலைஞர்'  என்ற  பொருள்  விளக்கங்களே  சாலப் பொருந்தும்.   3.5. ஃபக்கீர் பிரிவுகள் ஃபக்கீர்களின் முன்னோர்களிடையே 'மஜ்சூப்', 'அஸாத்', 'சாலிக்' என்னும் மூன்று பெரும் பிரிவினர் இருந்துள்ளனர். அதனை தாமஸ் பேட்ரிக் எழுதிய கலைக்களஞ்சிய நூலில் தரப்பட்டுள்ள கீழ்கண்ட பகுதியிலிருந்து அறியலாம்.   “The Majzūb faqirs are totally absorbed in religious reverie. The Azād shave their beards, whiskers, moustaches, eye -brows, and eye -lashes, and lead lives of celibacy.The Azād and Majzūb faqirs can scarcely be said to be muhammadans, as they do not say the regular prayers or observe the ordinances of Islam, so that a description of their various sects does not fall within the limits of this work. The salik faqirs are divided into very numerous orders, but their chief difference consists in their silsilah, or chain of succession, from their great teachers, the Khalifahs Abu Bakr and Ali who are said to have beent he founders of the religious order of faqirs”.30 _______________________________ 30 Thomas Patricks Hughes, Dictionary of Islam, 1978, p. 121.   கி.பி.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் சாகுல்ஹமீது வலியின் சீடர்களான நானூற்று நான்கு ஃபக்கீர்கள் நான்கு பிரிவினராகப் பிரிந்தனர் (ஒரே தலைமையின் கீழ் இருந்த சீடர்கள் எந்தக் காரணத்தின் அடிப்படையில் அவ்வாறு பிரிந்து சென்றனர் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை) எனினும் கீழ்கண்ட ஒருசில காரணங்களினால் ஃபக்கீர்கள் பிரிந்து சென்றிருக்க கூடும் என்று கருத இடமுள்ளது.   1. தனித்தனிக் குழுவாகப் பிரிந்து செல்வதினால் அனைத்து இடங்களிலும், சமயக் கருத்துக்களைப் பரப்பி விடலாம் என்ற நோக்கம். 2. அன்றையக் காலக்கட்டத்தில் இஸ்லாமியத்தை ஒடுக்குவதற்காக தமிழகத்தில் இருந்த சூழல். 3. கி.பி.17,18ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த இஸ்லாமியர்களுக்கும், அக்காலக் கட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த போர்ச்சுகீசியர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே ஏற்பட்ட சமய மற்றும் அரசியல் மாற்றங்களின் விளைவாக ‘ஃபக்கீர் இயக்கம்' என்ற ஓர் அமைப்பு தமிழகத்தில் உருவாகியது. இதனை தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு என்னும் நூல் தரும் கீழ்வரும் செய்தி மூலமாக அறியலாம்.   "ஃபக்கீர் இயக்கங்கள் பற்பல தோன்றின. ஒவ்வொரு கூட்டத்தினரும், தங்களுக்கென ஒரு தலைவரை நியமித்து கொண்டார்கள். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. ஒரு கூட்டத்தின் தலைவர்கள், தங்களது  பெயரின் இறுதியில் 'அலி' என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்வார்கள். மற்றொரு கூட்டத்தின் தலைவர்கள், தங்களது பெயர்களின் பின்னால் 'ஷா' என்ற எழுத்தை சேர்த்துக் கொள்வார்கள். மற்றுமொரு இயக்கத்தினர் 'பீர்ஸதா' என்ற அடைமொழியை உபயோகப்படுத்தலாயினர். இப்படி பலப்பல அணிகள் ஃபக்கீர் இயக்கத்தில் உருவாயின. ஆனால் எல்லாவற்றின்  குறிக்கோளும்  ஒன்று தான்"31.   இங்ஙனம்  ஏ.கே.ரிபாயி  குறிப்பிடுகிறார். __________________________ 31 ஏ.கே.ரிபாயி, தமிழகத்தில் இசுலாமியர் வரலாறு, 1988, பக். 215 - 216.     தற்பொழுது வாழும் ஃபக்கீர் பிரிவினர் மேற்கண்ட பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், சமயக் கருத்துக்களைப் பரப்ப ஃபக்கீர்கள் தனித்தனிப் பிரிவுகளாக பிரிந்து சென்றிருக்கின்றனர் என்பதனை மேற்கண்ட செய்தியின் வழியாக அறியமுடிகிறது. கி.பி.766ஆம் ஆண்டு முதல் கி.பி.1750ஆம்  ஆண்டு வரை ஃபக்கீர்களின் முன்னோடிகள் பலர் பலப் பிரிவுகளைத்  தோற்றுவித்தாலும்,  இடைப்பட்ட  காலத்தில் 'ரிஃபாயி' என்ற ஃபக்கீர் பிரிவும் தமிழகத்தில் உருவாயின. இவர்கள் தமிழகத்தில் மதுரையிலேயே அதிக அளவில் வாழ்கின்றனர். கி.பி. 1182ஆம் ஆண்டு மதுரையில்  வாழ்கின்ற ரிஃப்பாய்  பிரிவு  ஃபக்கீர்களை  தோற்றுவித்தவர்  செய்யத் அகமது ‘ரிஃப்பாய்'  ஆவார்.   மேற்கண்ட  ஐந்து  ஃபக்கீர்  பிரிவுகளும்  “ஃபக்கீர் ஜமா” என்று பொதுவாக சுட்டப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ஐந்து பிரிவைச் சேர்ந்த ஃபக்கீரும் கூட்டம், கூட்டமாக இருப்பதனால் அதற்கு 'ஜமா' என்று பெயர் வைத்துள்ளனர். []     ரிஃப்பாய் பிரிவு ஃபக்கீர்களில் 'அகமதியா ஃபக்கீர்கள்', 'ஹைதூருசியா ஃபக்கீர்கள்' என்ற இரு உட்பிரிவு ஃபக்கீர்கள் காணப்படுகின்றனர்.   தர்காக்களில் ஃபக்கீர்கள் தங்குவதற்கென மேற்கண்ட ஐந்து பிரிவுகளுக்கு ஏற்ப ஐந்து இடங்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருப்பதை இன்றளவும் காணலாம்.   தர்காக்களில்  பக்கீர்கள்  தங்குவதற்கென  ஒதுக்கப்பட்ட  திண்ணைகள்  []   ஃபக்கீர்களின் இந்த ஐந்து பிரிவினரும் ஆன்மீக நெறியில் செல்வதனால், ஆன்மீகத்திற்குரிய தனிப்பட்ட அடையாள அணிகலன்களைக் கொண்டுள்ளனர். அவற்றைக் கீழ்கண்டவற்றில் இருந்து அறியலாம். 3.5.1. ஷாபானுவா பிரிவு இதன் ஆன்மீக பிரிவு 'காதிரியா தரீக்கா' என்பதாகும். ஷா பானுவா பிரிவினை நிறுவியவர் 'முகைதீன் அப்துல் காதிர் ஜிலானி' என்பவர் ஆவார். இப்பிரிவின் கீழ் வந்த ஆன்மீகத் தலைவர்களை 'சற்குரு' (பாவா) என்று அழைக்கின்றனர். பொதுவாக ஆன்மீக தலைவர்களை ஆந்திரா மாநிலம் பெனுகொண்டா என்னும் இடத்தில் அமைந்த 'பாபா பஹ்ருதீன் தர்காவிலே பிற ஃபக்கீர்கள் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்கின்றனர். இஸ்லாமிய சமயம் சார்ந்த கருத்துக்களை உபதேசம் செய்வதே தலைவரின் (சற்குருவின்) பணியாகும். 'முரீது’32 பெற்றிருக்கும் எந்த ஒரு ஃபக்கீரும் சற்குரு ஆவதற்கு தகுதி பெற்றவரே. தலைவரின் பதவி காலம் இரண்டரை ஆண்டுகள். 'ஷா பானுவா ___________________________ 32 இது ஓர் ஆன்மீகச் சடங்கு, இந்த இயலின் பின்னால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ‘ஃபக்கீர்கள்' தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் முன்னூற்று அறுபத்து நான்கு தர்காக்களுக்கு சென்று சமயப்பணி ஆற்றுகின்றனர்.   இவர்கள்  பச்சை  வண்ணத்திலான  தலைப்பாகையை  அணிகின்றனர். ஃபக்கீர்களின் முரீது பெறும் போது வயது இருப்பதை அடைந்திருக்கவேண்டும். சற்குருவானவர் திருமணம் செய்து கொள்வது இல்லை. ஆனால் சீடர்கள் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஷா பானுவா ஃபக்கீர்களில்  வேறு  எந்த ஆன்மீகப் பிரிவும் காணப்படவில்லை . இவர்கள் மட்டும் ஃபக்கீர் பிரிவுகளில் இசைக்கருவிகளை  பயன்படுத்தாதவர்கள்.   3.5.2. ஷா தப்காத்தி மண்டல் தாரி பிரிவு ஃபக்கீர்கள் ஷா தப்காத்தி மண்டல் தாரி யின் ஆன்மீக பிரிவு அல்லது தரீக்கானது 'மதாரியா' என்பது ஆகும். இதனை தோற்றுவித்தவர் 'ஹஜரத் ஜிந்தா ஷா மதார்' என்பவர் ஆவார். இப்பிரிவின் கீழ் வந்த ஆன்மீகத் தலைவர்களையும் சற்குரு (பாவா) என்றே இஸ்லாமியர் அழைக்கின்றனர். இவர்களை (சற்குருக்களை) தஞ்சாவூர் சம்ஸ்பீர் பள்ளி தர்காவில் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் பணி பாடல் வழி உபதேசம் மற்றும் சமய நெறிகளை பரப்புவது ஆகும். ஷா தப்காத்தி மண்டல் தாரி பிரிவு ஃபக்கீர்களின் பரம்பரை வழி வந்தவர்களே சற்குருக்களாக பதவி வகிக்க முடியும். இவர்கள் தங்கள் ஆயுட்காலம் முடியும் வரையில் இப்பதவியை வகிக்கலாம்.   இப்பிரிவினர் பொதுவாக தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் உள்ள தர்காக்களுக்கே அதிகமாகச் செல்லுகின்றனர். இவர்கள் அணிகின்ற தலைப்பாகை பச்சை அல்லது வெள்ளை நிறத்தினாலானது.   'ஷா தப்காத்தி' மண்டல் தாரி பிரிவின் சத்குரு திருமணம் செய்து கொள்வது வழக்கம். அதேபோல் சீடர்களும் திருமணம் செய்து கொள்ளுவது உண்டு. இப்பிரிவில் ஆன்மீக உட்பிரிவுகள் ஒன்றும் இல்லை .   இவர்கள் 'டங்கா', 'பாங்கா' மற்றும் 'தப்ஸ்' ஆகிய இசைக்கருவிகளைத் துணைக்கருவிகளாக கொண்டு பாடல்களைப் பாடி சமயப்பணியினை செய்கின்றனர்.   3.5 3. ஷாசடை மலங்கு பீர் பிரிவு ஃபக்கீர்கள் இப்பிரிவின் ஆன்மீக பிரிவு பெயர் அல்லது 'தரீகள் மலங்கு' என்பது ஆகும். இதனைத் தோற்றுவித்தவர் 'ஹஜரத் ஜமான் ஜத்' என்பவர் ஆவார். இந்த பிரிவில் வழி வந்த தலைவர்களை 'பீர்' அல்லது 'பீர் பாவா' என்று அழைக்கின்றனர். பீர் பாவாவையும், தஞ்சாவூர் சம்ஸ் பீர் பள்ளி தர்காவிலே தேர்ந்தெடுக்கின்றனர். இவரின் பணியும் உபதேசம் செய்வதே ஆகும். பரம்பரை பரம்பரையாகவே பீர்பாவாவைத் தேர்வு செய்கின்றனர். பீர்பாவா தான் விரும்பும் வரை தலைவர் பதவியினைத் தொடரலாம். ஷாசடை ஃபக்கீர் மலங்கு பீர் பிரிவினர் பொதுவாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தர்காக்களைச் சுற்றியே தங்கள் வாழ்வினை மேற்கொள்கின்றனர். இவர்கள் தங்கள் அடையாளமாக வெள்ளை நிற தலைப்பாகையினை அணிகின்றனர். இப்பிரிவில் பீர்பாவா திருமணம் செய்து கொள்வது இல்லை. (தற்பொழுது இந்நிலை மாறியுள்ளது) சீடர்கள் திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். இவர்களிலும் உட்பிரிவுகள் ஒன்றும் இல்லை. இசைக்கருவிகளாக 'டங்கா', 'பாங்கா' ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் நகராவையும் இசைக்கின்றனர்.   3.5.4. ஷ ஜலாலி பிரிவு ஃபக்கீர்கள் ஜலாலியா என்ற ஆன்மீக பிரிவின் கீழ் வருபவர்களே இப்பக்கீர்கள். ஷா ஜலாலி பிரிவினைத் தோற்றுவித்தவர் ஹஜரத் ஸய்யித் ஜலால் புகாரி என்பவர் ஆவார். ஆன்மீகத் தலைவர்கள் 'சற்குரு', 'பாவா' என்ற பெயர்களிலேயே சுட்டப்படுகின்றனர். சற்குருக்கள் பெரும்பாலும் ஆந்திரா மாநிலம் பெணுகொண்டாவில் அமைந்துள்ள பாபா பஹ்ருதீன் தர்காவிலே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் பணி உபதேசம் செய்தல், முரீது சடங்கு நடத்துதல், இசைபயிற்சி அளித்தல் போன்றவை ஆகும். யார் வேண்டுமானாலும் முரீது பெற்றவர்களில் சற்குருவாக அமரலாம். இருபது வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தாங்கள் விரும்பும் வரை இப்பணியினைத் தொடரலாம். இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களையே சுற்றி வருகின்றனர். சிறப்பு அழைப்புகளின் பேரில் தற்காலம் மலேசியா, சிங்கப்பூர், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஆன்மீகப்  பணியின்  பொருட்டு  சென்று  வருகின்றனர்.   ஷா ஜலாலி ஃபக்கீர்கள் பச்சை மற்றும் வெள்ளை வண்ணத்தால் ஆன தலைப்பாகையை அணிகின்றனர். இப்பிரிவின் கீழ் உள்ள ஃபக்கீர்கள் திருமணம் செய்து கொள்வதுண்டு. ஷா ஜலாலி பிரிவு ஃபக்கீர்களில் உட்பிரிவுகள் ஒன்றும் இல்லை. சற்குருவானவர்  முரீது  பெற்ற ஃபக்கீர்கள் அனைவருக்கும் துவக்கத்தில் இருந்தே இசைப்பயிற்சியினை அளிக்கின்றார். இவர்கள் மாக்ரோ, பஹ்ரா (கொம்பு), என்ற காற்று இசைக்கருவிகளையே பயன்படுத்துகின்றனர்.   3.5.5. ரிஃபாயி பிரிவு ஃபக்கீர்கள்   ஃபக்கீர் பிரிவினருள் முழுவதும் இசையை, ஆன்மீகப் பணிக்கு என பயன்படுத்தியவர்கள் ரிஃபாயி பிரிவு ஃபக்கீர்களே ஆவர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களும் இப்பிரிவினரே. இதன் ஆன்மீகப் பிரிவின் பெயர் ரிஃபாயிய்யா என்பதாகும். இதனை தோற்றுவித்தவர் ஹஜரத் அஹ்மத் கபீர் ரிஃபாயி என்பவர் ஆவார். இப்பிரிவின் ஆன்மீகத் தலைவர்களையும் சற்குரு, சற்குருபாவா, பாவா என்று அழைக்கப்படுகின்றனர்.   சற்குருவானவர் நாகூர், பொட்டல் புதூர்தர்க்காவிலே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். சற்குரு, உபதேசம் செய்தல், முரீது சடங்கு செய்தல், பாடல் வழி இறைப்பணி செய்தல், பாடல்களை சீடருக்கு கற்ப்பித்தல் போன்ற பணிகளை செய்கின்றார். சற்குருவாக ஒரு ஃபக்கீரை பரம்பரை பரம்பரையாகவே நியமிக்கின்றனர். பதவி வகிப்பவர் தங்கள் ஆயுட்காலம் முழுவதும் இப்பதவியில் நீடிக்கலாம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள தர்காக்களைச் சுற்றியே இவர்கள் வாழ்வு அமைந்துள்ளது. எனினும் மதுரையில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.   ரிஃபாயி பிரிவு ஃபக்கீர்கள் அணியும் தலைப்பாகை பச்சை நிறத்தாலானது. டக்கியாஹ் என்ற பின்னப்பட்ட துணியிலான, ஆறு முதல் பதினெட்டு வரையிலான மடிப்புகளைக் கொண்ட தலைப்பாகையை அணிகின்றனர். இப்பிரிவில் சற்குருவும், சீடர்களும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். இவர்களும் ஆன்மீக உட்பிரிவுகளாக அஹமதியா, ஹைதுருசியா என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளனர். 'தப்ஸ்' என்ற 'தாளக்கருவியை பிரதான இசைக்கருவியாகக் கொண்டுள்ளனர்.   மேற்கண்ட பிரிவுகளில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ரிஃபாயி பிரிவு ஃபக்கீர்களே அதிக அளவில் வாழ்கின்றனர். இப்பிரிவினர் தவிர்த்து 'காதிரிஸ் ஃபக்கீர்கள்', 'கில்லாடிஸ் ஃபக்கீர்கள்' என்ற சிறுபான்மைப் பிரிவினரும் உள்ளனர். அதில் காதிரிஸ் ஃபக்கீர்கள் கறுப்பு நிற நீண்ட அங்கியை அணிவதோடு, தங்களின் காலணிகளுக்கு கறுப்பு ரோமத்தை பயன்படுத்துகின்றனர். கில்லாடிஸ் ஃபக்கீர்கள் தங்கள் உடைமையாக வளைந்த மரத்தாலான அல்லது இரும்பினால் ஆன குச்சியை அக்குள் இடுக்கில் சொருகி வைத்திருப்பர். நீண்ட தாடியையும், தலைமுடியையும் தங்கள் இறைத்தூதர் நினைவாக வளர்த்திருக்கின்றனர். 'மெளலவிய்யா ஃபக்கீர்கள்' என்ற சிறுபிரிவினரும் உயர்வான குல்லாவை அணிகின்றனர்.   சாதாரண இஸ்லாமியர் ஃபக்கீராக மாற சில சடங்கு வழி முறைகளை பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு சடங்கிற்கும் சில ஆன்மீக உட்பொருள் உள்ளடங்கியுள்ளது. இதன் வழி முறைகளை இனிக்காணலாம்.   3.6. சாதாரண இஸ்லாமியர் ஃபக்கீராகுதல் இந்திய சமயங்கள் அனைத்திலும் ஆன்மீகத்தில் செல்வோருக்கு எனச் சில சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சைவ சமயம் மற்றும் கிறிஸ்தவ துறவிகளுக்கு என பின்பற்றப்படும் சடங்கு வழி முறைகள் போல் இஸ்லாமியத் துறவிகளான ஃபக்கீர்களுக்கு என சில ஆன்மீகச் சடங்குமுறைகள் உள்ளன. இச்சடங்குக்கு 'முரீத்' அல்லது 'முரீது' என்று பெயர். பொதுவாக எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்தே ஃபக்கீர்கள் உருவாகுகின்றனர்.   தமிழ்நாட்டில் மதுரை பல்கலைக்கழகத்திற்கு மேற்கே உள்ள மேலக்கால் கணவாயில் உள்ள ஷா ஹுசைன் பர்சி ஒலியுல்லா தர்காவிலும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் வெள்ளை கலீஃபா சாஹிப் தெருவில் உள்ள 'ரிஃபாய் தைக்கா தர்கா' விலும் இச்சடங்கு நடத்தப்படுகின்றது. உஸ்தாத், அவருக்கு அமைச்சரைப் போல் உள்ள குதபால் என்பவரும், பணியாளர் ஒருவரும் சேர்ந்து இந்தச் சடங்கை நிறைவேற்றுகின்றனர் மறைவான ஒருபகுதியில் வைத்தே இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகின்றது.   சடங்குகள் 1. சற்குருவை தேர்ந்தெடுத்தல் 2. பாவமன்னிப்பு உடன்படிக்கை 3. கலிமா சொல்லுதல்   4. ஸ்பரிச தீட்சை 5. நிர்வாண தீட்சை 6. கபன் ஆடை அணிதல் 7. பெயர் சூட்டுதல் 8. தல்கீன் உரைத்தல் 9. பியாலா கொடுத்தல் 10. ஃபக்கீர் நாமா பெறுதல்   3.6.1. சற்குருவை தேர்ந்தெடுத்தல் எந்த ஒரு மதத்திலும் ஆன்மீக வழியில் செல்வோர்கள், முதலில் தனக்கு ஓர் ஞான குருவை தேர்ந்தெடுப்பது மரபு. அந்த வகையில் ஃபக்கீர்கள் ஆக விரும்பும் இஸ்லாமியர், தமக்கு எந்த குருவைக் கொண்டு ஆன்மீகப் பயிற்சிப் பெற விருப்பமோ அந்த குருவைச் சந்திக்கிறார். குருவிடம் சென்று 'நான் ஃபக்கீராக விரும்புகின்றேன்' என்ற தமது விருப்பத்தை அழுத்தமாக உறுதியுடன் சொல்ல வேண்டும். அதன் பின்பு குருவானவர் ஃபக்கீராக விரும்புவரின் பெற்றோரிடம் முறைப்படி விருப்பத்தையும், ஒப்புதலையும் கேட்கின்றார். பின்பு, சற்குருவானவர் சீடரை நோக்கி, ஆன்மீக வழியில் செல்பவர்கள் பேண வேண்டிய கடமைகளை எடுத்துரைப்பார். பின்னர் சீடரின் முழு சம்மதத்தையும் பெறுகிறார். சற்குருவைத் தேர்ந்தெடுத்து சம்மதம் கூறிய பின் பாவமன்னிப்பு உடன்படிக்கை செய்யப்படுகிறது.   3.6.2. பாவமன்னிப்பு உடன்படிக்கை சைவ சமயத்தில் பாவ மீட்சிப் பெறுவதை 'க்ஷாயத் தீட்சை’ என்று கூறுவர். கிறிஸ்தவர்கள் இதனை 'பாவசங்கீர்த்தனம்' என்று அழைப்பர். இறைவனின் அருளைப் பெற விரும்பும் ஒருவர், தான் செய்த பாவங்களை இறைவனிடம் அறிக்கை செய்ய வேண்டும். 'தாம் செய்த பாவங்களை மீண்டும் செய்தல் இல்லை' என்ற உடன்படிக்கையைக் கூற வேண்டும். இது உலக சமயங்கள் அனைத்திற்கும் பொதுவானது. இதன்படி ஃபக்கீராக விரும்புபவர் தமது குருவின் முன்பாக அமர்ந்து பாவமன்னிப்பு உடன்படிக்கையை செய்து கொள்கின்றனர்.   ஃபக்கீராக விரும்புவரை முதலில் குருவானவர் தமக்கு எதிரில் அழைத்து இரண்டு கால் முட்டிகளை தரையில் மடக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் கால்களோடு சேர்த்து வைத்து தொழுவதற்கு உட்காருதல் போல் உட்கார வேண்டும். அப்பொழுது பாவமன்னிப்பிற்குரிய திருக்குர்ஆன் வசனத்தை குருவானவர் சீடருக்கு எடுத்துக் கூறுவார். பாவமன்னிப்பு கோருதலை 'கிஸ்திக்பார்' என்று கூறுவர். பாவமன்னிப்பின் போது "அறிந்தும் அறியாமலும் இது நாள் வரை செய்திருக்கின்ற பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கோருகின்றேன். மேலும், குருவின் முன்பாக அல்லாவும், அவனது தூதர் முகம்மது நபியின் சாட்சியாக இனி பாவங்கள் செய்வதில்லை என பிரமாணம் செய்கிறேன்" 33 என்று சீடர் குருவிடம் உடன்படிக்கை செய்து கொள்கின்றார். மேற்கண்ட வசனத்தை குருவானவர் மூன்று முறை கூறச் சொல்வார். ______________________ 33   எம். ஜி. முகம்மது ஹீசைன் சாஹிபு, மாபெரும் ஜோதி ஷாஜா முயனுத்தீன் சிஷ்தி, 1986, ப.40.   3.6.3. கலிமா சொல்லுதல் 'கலிமா' என்ற மூலமந்திரத்தை குருவானவர் சீடருக்குச் சொல்லிக் கொடுக்கின்றார். கலிமா என்ற மூலமந்திரமாவது  "லா இலாஹா இல்லல்லாஹூ முகம்மதுர் ரசூலுல்லாஹி" என்பதாகும். இதன் பொருள் ''அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மதுவே அல்லாவின் திருத்தூதர்" என்பதாகும். இந்த மந்திரத்தை கூறிய பின்பு சீடரை மறுபடியும் முழங்காலிட்டு குருவானவர்  போதனை  செய்கின்றார்.   3.6.4. ஸ்பரிச தீட்சை 'கலிமா' என்ற மூலமந்திரத்தை சொன்ன பிற்பாடு 'ஸ்பரிச தீட்சை என்ற சடங்கு நடத்தப்படுகின்றது. ஆன்மீகக் குருவானவர் தமது கரங்களால் சீடனைத் தொடுவது 'ஸ்பரிச தீட்சை' எனப்படும் 'ஸ்பரிசம்' என்றால் 'தொடுதல்' என்று  பொருள்.   குருவானவர் தமது இரண்டு கைகளின் பெருவிரல்களை இறுகப் பிடித்து,  சீடரின் வலது  கையை தமது கையில் குரு இறுகப் பற்றிக் கொள்கின்றார். இதுவே ஸ்பரிச தீட்டையாகும். இவ்வாறு ஸ்பரிசம் தீட்சையின் மூலம் ஆன்மாவிற்கு ஞானம் உண்டாவதாக கருதப்படுகின்றது. இவ்வாறு செய்தபின்னர் திருக்குர்ஆன் ஆயத்தில் அதிகாரம் 48, வசனம் 10ஐ மெளனமாக குருவானவர்  சீடரிடம்  கூறுகின்றார்.  சீடர்  அதைக்  கேட்கின்றார்.   "நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பை அத்து (வாக்குறுதி) செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பை - அத் செய்கின்றனர் - அல்லாஹ்வின்  கை  அவர்களுடைய  கைகளின் மேல் இருக்கிறது. ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை  விரைவில்  வழங்குவான் ”34 ______________ 34 * திருக்குர்ஆன் (மூலமும் தமிழ் உரையும்), 1983, அத் 48:10 ப.765.   3.6.5. நிர்வாண தீட்சை இதன் முதல் நிகழ்ச்சியாக முரீத் வாங்குபவரின் உடலில் அனைத்து ரோமங்களும் களையப்படுகின்றன.  ரோமமானது அகற்றப்படுதல் முதலில் வலது காதின் செவிமடல் பின்புறத்தில் இருந்தே துவங்குகின்றனர். பொதுவாக இஸ்லாமியர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப்  பின்பற்றி எந்த ஒரு செயலையும் வலது பக்கத்தில் இருந்தே துவங்குகின்றனர். உதாரணமாக திருக்குர்ஆனை வாசிப்பது கூட வலப்பக்கம் முதல் இடதுப் பக்கமாகவே வாசிக்கின்றனர்.   பின்பு அவரைக் குளிப்பாட்டி, ஒரு சிறிய வெள்ளைத் துணியால் இடுப்பின் முன்புறம் மறைத்து, குரு முன்னால் அமர வைக்கின்றார். பின்பு திருகுர்ஆன்  வசனம்  48:27  ஓதப்படுகிறது. "நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட கனவை உண்மையாக்கிவிட்டான். அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந் தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் - (அப்போது எவருக்கும்)  நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான். (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய  ஒரு  வெற்றியையும் (உங்களுக்கு)  ஆக்கிக்  கொடுத்தான்".35   சைவ மரபிலும் துறவியாகச் செல்பவர்களுக்கு இவ்வித நிர்வாண தீட்சை அளிக்கப்படுகின்றது. இதன் உள்நோக்கம் சீடரானவர், இவ்வுலக இன்பங்கள், ஆசைகள், செல்வங்கள், உடைமைகள் போன்ற எல்லாவற்றையும் துறந்து வெறுமையானவர் என்பதை புலப்படுத்தவே என்பதுவே இதன் உட்பொருள் ஆகும்.   3.6.6. கபன் ஆடை அணிதல் நிர்வாண தீட்சை அளித்தப் பின் ஃபக்கீராக மாறும் சீடருக்கு, இஸ்லாமியர் இறந்தவருக்கு அணியும் வெள்ளாடையை சாத்துகின்றனர். இந்த ஆடை 'கபன்' ஆடை என்று பெயர்.36 _____________________ 35 மேலது,ப.769, அத். 48:27 36 அப்துல் ரஹீம், இசுலாமிய கலைக்களஞ்சியம், தொகுதி III, 1979, ப. 687.   இஸ்லாமியத்தில் பயன்படுத்தும் இந்தக் கபன் ஆடையைப் போல் முற்காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் துறவிகளுக்கும் இறந்தோருக்கும் ஆடை அணிதல் போல் அணிவது உண்டு. பிற்காலத்தில் இந்தச் சடங்கு மாற்றப்பட்டது. இதன் உள்நோக்கம் உலகிற்கு இறந்து இறைவனுக்காக வாழத் தொடங்குதல் என்பதனைக்  குறிப்பதாகும். இந்த ஆடையை அணிவதன் நோக்கம், ஃபக்கீராக மாறுபவர் தான் இறந்து மறுபடியும் பிறப்பதே ஆகும். இது இவர்களின் பற்றற்ற நிலையைக் சுட்டுகின்றது. சைவத்துறவிகள் காவி உடை அணிதலும், கிறிஸ்தவ துறவிகள் நீண்ட வெள்ளை அங்கியை அணிவதையும் ஒப்பிடலாம்.   3.6.7. பெயர் வைத்தல் கடன்  ஆடை  அணிந்த பிறகு குருவானவர் சீடருக்கு ஏற்கனவே இருந்த பெயரை மாற்றி, புதிய பெயர் ஒன்றை சூட்டி அழைப்பார். இதன் பிறகே சீடரை ஃபக்கீர் என அழைக்கப்படுவார். இதன் பின்னர் நெஞ்சில் சந்தனத்தைத் தடவி,  கண்களுக்கு  மை  தீட்டப்படும்.   தலையில் தலைப்பாகை, கழுத்தில் கண்டமணி மாலை ஆகியவை அணிவிக்கப்படுகிறது. பின் அவரை பத்து ஃபக்கீர்கள் கூடிய சபைக்கு முன்னால் உட்கார வைப்பர்.  இப்பொழுது தலைவர் (உஸ்தாத்) பால் மற்றும் பழத்தினை, தான் முதலில் உண்டுவிட்டு  முரீத்  வாங்குபவருக்கு  புகட்டுவார்.   3.6.8. தல்கீன் உரைத்தல் மேற்கண்ட சடங்குகள் நிறைவு பெற்ற பின்பு குருவானவர் தப்ஸ் (தப்சு) என்ற, ஊசி போன்ற சிறு இரும்புக் கம்பி கொண்டு முதுகில் 'ஹலம்' என்ற சொல்லை பாலில் தொட்டு மூன்று முறை எழுதுவார். இதற்கு 'பர்ஸக் கலீமா எழுதுதல்' என்று பெயர். ஹலம் என்றால் அமைதி என்று பொருள். திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களில்  இதுவும்  ஒன்று.   இந்த சடங்குகளை ஃபக்கீர் நாமா கொடுத்தல்', 'பைஅத் செய்தல்', 'தல்கீன் உரைத்தல்'  என்ற  கூற்றுகளில்  சுட்டப்படுவது  வழக்கில்  உள்ளன.   3.6.9. பியாலா கொடுத்தல் ஆன்மீக குருவின் மூலம் சீடருக்குக் கொடுக்கப்படும் தீர்த்தத்திற்கு 'பியாலா' என்று பெயர் இந்த தீர்த்தம் 'காஃபுரன்' என்றும் 'ஜன்ஜ்பீல்' என்றும் அழைக்கப்படுகிறது. குருவானவர் சீடருக்கு பியாலா கொடுப்பதற்கு முன்பு ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பைக் கரைப்பர், நீர் தெளிந்ததும் அந்த தண்ணீரை வைத்து திருக்குர்ஆன் வசனம் 76:21, 22 என்ற வரிகளை  ஓதி  முதலில்  குருவும்  பின்பு  சீடரும்  அருந்துவர். "அவர்களின் மீது ஸன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சைநிற பூம் பட்டாடைகள் இருக்கும் இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும் அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்.  உங்களுடைய  முயற்சியும்  ஏற்றுக்  கொள்ளப்பட்டதாயிற்று"37 என்று அவர்களிடம் கூறப்படும்.   ஷா ஜலாலி, ரிஃபாயி பிரிவு ஃபக்கீர்கள் சுண்ணாம்பு கலந்த நீருக்குப் பதிலாக சீனி, பால், எலுமிச்சை ரசம் இம்மூன்றும் கலந்த கலவையைப் பயன்படுத்துகின்றனர். பியாலா அருந்துவது அகத்தூய்மை அடைவதன் அடையாளமாக கொள்கின்றனர்.   மேற்கண்ட சடங்குகளுக்கு 'முரீத் கொடுத்தல்' அல்லது 'முரீது நாமா பெறுதல்' என்று பெயர். சடங்கு முடிந்தவுடன் சீடரானவர் அனைவரிடமும் ஆசி பெற்றுக் கொள்கிறார். பின்பு புதிய ஃபக்கீரது வீட்டில் சற்குரு மற்றும் பிற ஃபக்கீரர்களுக்கு  விருந்து  அளிக்கப்படுகின்றது.  பின்னர்  குரு  இறை  மர்மங்களை சீடரின்  அறிவுத்  திறனுக்கு  ஏற்றவாறு  கொஞ்சம்  கொஞ்சமாக  போதிக்கின்றார். _________ 37 திருக்குர்ஆன் (மூலமும் தமிழ் உரையும்), 1983, ப.873, அத் 76:21-22.   மேற்கண்ட அனைத்து  நிகழ்வுகளும் நிறைவு பெற்ற பின்பு ஃபக்கீராக மாறியவர் நாற்பது நாள் பிறர் கண்ணில் படாதவாறு 'இத்தா'38 இருப்பார். இவருக்கு, இறந்தவர்களுக்கு செய்யப்படுவது போல், மூன்றாம் நாள், நான்காம் நாள்  சடங்குகள்  செய்யப்படுகிறது.   'இத்தா' குறித்து முனைவர் இக்பால், ''கணவன் மரணமடைந்த பிறகோ, விவகாரத்துக்குப் பிறகோ மறுமணம் செய்வதற்கு முன் மனைவி காத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட தவணைக் காலத்திற்கு 'இத்தா' என்று பெயர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட விவாகரத்தினால் உண்டாகும். 'இத்தா' காலம் மூன்று மாதமாகும். கணவன் இறந்த நிலையில் பெண் வீட்டார் இருக்கக்கூடிய இத்தா காலம் நான்கு மாதம்  பத்து  நாள்  ஆகும்."39   என தமது முனைவர் பட்ட ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்.   முரீத் சடங்கு நிகழ்ச்சியினை கூர்ந்து நோக்குகின்ற பொழுது, ஃபக்கீராகும் ஒருவருக்கு, இறந்தோருக்குச் செய்யப்படுகின்ற சடங்குகள் சில செய்யப்படுவதை  இங்கு  காணலாம். அதன்மூலம் அவர் தன்னுடைய பிறப்பினை  இழந்து உஸ்தாத்தின் குழந்தையாக, புதிய பிறப்பினை அடைந்ததாகப் பொருள். இந்த புதிய பிறப்பு ஃபக்கீரை சமயப் பணிக்கு மட்டும் உரியவராக்குகின்றது.  முரீத் சடங்கின் உட்பொருள் இதுவே என்பது ஆய்வாளரின் கருத்து.   3.7. ஃபக்கீர்கள் பெறும் பட்டங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் துறவியான ஒருவர் முதலில் அருட்தந்தை என்ற பட்டத்தினையும் பின்பு ஆயர், பேராயர், கர்தினால், போப்பாண்டவர் என படிப்படியாகப் பட்டங்கள் பெறுவது உண்டு. அதேபோல் ஃபக்கீர்களுக்கும் தங்கள் ஆன்மீகப் பணிகளுக்கு ஏற்ப பல்வேறு பட்டங்கள் அளிக்கப்படுகின்றது. சாதாரண  இஸ்லாமியர் ஃபக்கீராக மாறி இரண்டு வருடங்கள்  ஆன்மீகப்  பயிற்சி  முடித்தவுடன் _________________________ 38 ''இத்தா' என்பது இஸ்லாமியர்களின் கணவன் இறந்த பின்பு பெண்கள் நாற்பது நாட்கள் பிற ஆடவர் கண்ணில் படாது ஒதுங்கி வாழும் காலம் ஆகும். ஃபக்கீர்களுக்கும் இதனையே பின்பற்றுகின்றனர். 39 முனைவர் க. இக்பால், ஹிமானா சையத் சிறுகதைகளில் இஸ்லாமிய வாழ்வியல், முனைவர் பட்ட ஆய்வேடு, 2011, ப. 96.   அவருக்கு 'ஜரீதா' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பயிற்சி முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்த பிற்பாடு அவருக்கு 'கலீபா' என்ற பட்டம் அளிக்கப்படுகின்றது. மேலும், ஃபக்கீர்களுக்கென நிலைகள் மற்றும் அனுபவங்களுக்கேற்ப கீழ்கண்ட பட்டங்கள் வழங்கப்படுகின்றது. அவையாவன:   1. உஸ்தாத் (தலைவர்) 2. கொத்துவார் 3. பண்டாரி 4. டக்காரி 5. பாஜிதார் 6. ஜோர் 7. இஸ்தி   போன்றவையாகும்.   3.8. ஃபக்கீர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகள்   ஃபக்கீர்கள் தங்களுக்கென சில ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கின்றனர். அவையாவன: 1. ஃபனா : உலக ஆசைகள் அனைத்தையும் துறந்து எப்பொழுதும் துறவு  நிலையிலே இருத்தல்.   2. வஜிபனம் : எப்பொழுதும் பொறுமையைக் கடைப்பிடித்தல்   3. கனாஅத் : பேராசையைத் தவிர்த்து போதும் என்ற நிறைந்த மனதுடன் எப்பொழுதும் வாழ்தல்   4. செவி : தன் செவியை இறைவனின் வார்த்தைகளின் பேரில் எப்பொழுதும் நிலைத்து வைத்திருத்தல்.   5. உடை : இறைவனை நினைத்து மனோவிச்சைகளை அகற்றி  எளிய  உடை  அணிதல்   6. திக்ரு : எப்பொழுதும் இறைவனை நினைத்து தியான நிலையில் இருத்தல்   7. கிஷ்க் : அனுதினமும் இறைவனை அண்டியே   வாழ்தல்   8. மிஸ்கினா : ஏழையாக இருத்தல்   9. சுன்னத் : இஸ்லாமிய மார்க்க சட்டங்களை பேணுதல்   மேற்கண்ட ஒழுக்க நெறிகளே ஃபக்கீர்கள் பின்பற்ற பணிக்கப்படுகின்றனர். மார்க்க நெறிகளையும், ஒழுக்க நெறிகளையுமே சற்குருவானவர் புதிய பக்கீருக்கு போதிக்கின்றார்.   3.9. தமிழக ஃபக்கீர்களின் ஆடை அணிகலன்கள்   ஃபக்கீர்கள் அணிந்துள்ள ஆடை அணிகலன்களைக் கொண்டு அவர்களின் தனித்த அடையாளத்தையும், பிற இஸ்லாமியர்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதையும் உணரலாம். ஃபக்கீர்கள் தலையில் பச்சை அல்லது வெள்ளை நிறத்திலான தலைப்பாகையையும், கழுத்தில் கண்ட மாலை40 எனப்படும் பல பாசிமணி மாலைகள் இரண்டினையும் முழுக்கை ஜிப்பாவும் அணிந்திருப்பர்.   தமிழக  இஸ்லாமிய  ஃபக்கீர்  அடையாளம் []       _________________________________ 40 பல வண்ணத்திலான மாலை        ஃபக்கீர்களை பிற இரவலர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் கையில் வைத்திருக்கின்ற தாயிரா என்ற தாளக்கருவியே ஆகும். (தாயிரா பற்றி பின்னால் விளக்கப்பட்டுள்ளது). ஃபக்கீர்கள் தங்கள் பிரிவினைத் தோற்றுவித்தவர்களின் அடையாளமாக, சூஃபிக்கள் பயன்படுத்திய அணிகலன்களான தாயிரா, மணிசோட்டா, ஷாலியா கயிறு, திருச்சக்கரம், கண்ட கோடாரி, திருவோடு, காவி உடை, கண்டமாலை, அல்மதர், ஆசாகோல் தபீசு, ஜோல்னா பை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை அணிந்து கொள்கின்றனர். ஒரு ஃபக்கீரின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை மு.மு.இஸ்மாயில் (1984:394-95) கீழ்வரும் பாடல் வரிகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். "கையினில் இறுந்தடியும் அகல் பெருங் கிஸ்தியும் அணிபல மணிகளும் சிரத்தின் மிக நெடுந்தாசும் கையொலி உடையும் மேனியை மறைந்துளற் கபனும் திகழ் எழில் வயதும் உள் பக்கீனு ஒருவர் திருமனம் வந்து தோன்றினாரே"41   இப்பாடல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ள 'கிஸ்தி' என்பது திருவோட்டைக் குறிக்கும் சொல்லாகும். ஒவ்வொரு ஃபக்கீர் ஜமாவிலும் திருவோடு (கிஸ்தி)  வைத்திருப்பர்.   ஒரு ஃபக்கீர் கையில் தண்டம், கிஸ்தி போன்ற திருவோடு வைத்திருப்பார். கழுத்தில் கண்ட மணிமாலை, தலையில் தலைப்பாகை (தாசு), கபன் உடை போன்றவற்றை அணிந்திருப்பது வழக்கம். இதனையே மேற்கண்ட பாடல் வரிகள் உணர்த்துகின்றது.   வலது கையில் தாயிராவினையும், இடது தோளில் ஜோல்னாப் பையையும் அணிந்திருப்பர். ஜோல்னாப் பையில் மந்திரித்தல் தொழிலுக்கான மயிலிறகு மற்றும் பிற இஸ்லாமியர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்றப் பொருட்கள் இடப்பட்டிருக்கும்.   முற்காலங்களில் ஃபக்கீர்களின் ஒவ்வொரு பிரிவிலும், தங்கள் பிரிவை வேறுபடுத்திக் காட்டுவதிலும், அந்தந்த பிரிவினருக்குண்டான _____________ 41 மு.மு.இஸ்மாயில் , இனிக்கும் இராஜநாயகம், 1984, பக். 394-95.   ஆடை அணிகலன்களை அணிவதிலும் அதிக முக்கியத்துவம் அளித்தனர் என்பதை தாமஸ் பேட்ரிக் ஹீக்ஸ் (Thomas Patrick Hughes) என்பவர் தமது 'Dictionary of Islam' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.   அதாவது "ஃபக்கீர்களில் ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுக்கென்று தனிப்பட்ட வழிமுறைகள், சட்டதிட்டங்கள், மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதோடு, தாங்கள் அணியும் ஆடைகளிலும் தனிப்பட்ட முறையைக் கையாண்டனர்.   ஷேக் ஃபக்கீர்கள் வெள்ளைநிற நீண்ட அங்கியை அணிந்திருந்தனர். 'காதிரிஸ் ஃபக்கீர்கள்' என்பவர்கள் கறுப்பு நிற அங்கியை அணிவதோடு, தங்கள் காலணிகளுக்கு கறுப்புநிற ரோமத்தைப் பயன்படுத்தினர். 'மெளலவி ஃபக்கீர்கள்' உயரமான குல்லாவையும்' 'ரிஃபாய்' பிரிவு ஃபக்கீர்கள் குள்ளமான குல்லாவையும் அணிந்திருந்தனர். இந்த தலைப்பாகையில் ஆறு முதல் பதினெட்டு மடிப்புகள் காணப்பட்டன. மேலும், முற்கால ஃபக்கீர்கள் சிலர் தங்கள் உடைமையாக மரத்தால் அல்லது இரும்பாலான குச்சியைத் செம்மறியாட்டுத் தோலினால் செய்யப்பட்ட 'கேஸ்குல்' என்ற தனிப்பை ஒன்றையும் வைத்திருந்தனர். பொதுவாக எல்லா ஃபக்கீர்களும் தாடி மற்றும் மீசை வளர்த்தனர். குறிப்பாக காதிரிஸ், ரிஃபாய், கல்வாடிஸ், குல்சானிஸ் போன்ற பிரிவினர் மிக நீண்ட தலைமுடியைத் தங்கள் இறைத்தூதர் நினைவாக வளர்த்தனர். சிலர் தங்களின் தலைப்பாகைக்குள் சுருட்டி பிடித்து வைத்தனர். தங்கள் கைகளில் மணிமாலையைக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.42   3.10. ஃபக்கீர்கள் காணிக்கை பெறும் முறை தமிழக ஃபக்கீர்கள் தங்களுக்கென்று உரிய தாயிரா என்ற இசைக்கருவியால் தாளமிட்டு, உரக்க குரலினில் பாடல்களைப் பாடியவாறு, இஸ்லாமியர் வீட்டு வாசலில் சென்று நிற்பார். இதனை உணர்ந்து வீட்டில் உள்ளவர்கள், வீட்டின் வெளியே வந்து ஃபக்கீர்  பாடும் _________________ 42 Thomas Patrick Hughes, Dictionary of Islam, 1978, p. 128.   பாடலை முழுமையாக கேட்டபின், காணிக்கையாக பணம், அரிசி, உணவு போன்றவற்றை வழங்குவார். ஃபக்கீர் அந்தப் பொருட்களை தாழ்மையோடு பெற்றுக் கொண்டு தாங்கள் வைத்திருக்கும் ஜோல்னாப் பையில் சேமித்து வைப்பர்.                       0     ஃபக்கீர் காணிக்கைப் பெறுதல் []   சில வீடுகளில் யாசகம் அளிக்கப்படவில்லை என்றாலும், அதே இடத்தில் நின்று பொருட்களைப் பெற்றுச் செல்கின்ற பிடிவாதக் குணம் என்பது இவர்களிடம் இல்லை என்பதே தகவலாளி ஃபக்கீரின் கருத்து. தமிழகத்தில் பல்வேறு தர்காக்களைச் சுற்றி வாழும் ஃபக்கீர்கள் சாதாரணமான நடைமுறை வாழ்க்கையில், பிற இஸ்லாமியர்களுடன் கலந்து பழகுபவர்களாகக் காணப்படுகின்றனர். தெருக்களில் செல்லும் பொழுது அவர்களுக்குரிய தனிப்பட்ட ஆடை அணிகலன்களை அணிகின்றனர்.   முப்பது நாட்கள் இஸ்லாம் சமயத்தினர் ரமலான் மாதத்தில் மேற்கொள்கின்ற விரதமே ரமலான் நோன்பாகும். அதிகாலைப் பொழுதில் நோன்பு துவங்கி அந்திப் பொழுதில் முடிப்பது வழக்கம். மறந்திடாது இருக்க, அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, தாயிராவைக் கொண்டு, இஸ்லாமியர் வாழும் தெருக்களில் அதிகாலைப் பொழுதில் பாடல்களைப் பாடியவாறு மக்களைத் துயிலெழுப்புவது வழக்கம். நோன்பு நோற்கின்ற முப்பது நாட்களும் தம் முன்னோர்களின் வழி நடக்கின்றனர். இதற்கு காணிக்கையாக ரம்ஜான் பண்டிகையன்று பணம், அரிசி, உணவு முதலான பொருட்களை ஃபக்கீர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.   மேலும் இஸ்லாமியர் வீடுகளில் நடைபெறுகின்ற திருமண விழாக்களில் கலந்து கொண்டு, 'மெளலூது'  என்னும்  புகழ் மாலைகளைப் பாடுவர். அன்று திருமண வீட்டார் ஃபக்கீர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு பணம் அல்லது பொருள்  அளிப்பர், அதனை காணிக்கையாகப் பெற்றுக் கொள்கின்றனர்.   தர்காக்களில் வருடத்திற்கு ஒருமுறை அவுலியாக்களின் நினைவு நாள் அன்று சந்தனக்கூடு விழா நடைபெறும். விழாவின் துவக்கத்தில் கொடியேற்றம் செய்வது மரபு. அன்று ஃபக்கீர்கள் பலர் ஒன்றுகூடி தாயிராவை இசைத்தவாறு கொடியை ஏந்தி, ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை தர்காவைச் சுற்றி பாடல் பாடியவாறு வருதல் வழக்கம். அதற்கு சன்மானமாக பணம் அளிக்கப்படுகிறது. மேலும், தர்காவில் அவுலியாக்கள் பெயரால் பெற்ற உண்டியல் வருமானத்தில், மூன்றில் ஒரு பங்கு ஃபக்கீர்களுக்கு பிரித்து நிர்வாகத்தினர் தானமாக அளிக்கின்றனர்.   முற்காலத்தில்  ஃபக்கீர் பிரிவினருள், முல்லாங்கு பிரிவினர் பித்தளைக் கொம்பினாலான ஊதுக்குழலினைக் கொண்டு ஊதியவராக மக்களிடையே 'பாத்திஹா' எனப்படும் வேண்டுகோள் பாடல்களைப் பாடிப் பொருட்களை காணிக்கையாகப் பெற்றனர். ஜலாலியா பிரிவினர் நீண்ட சாட்டையினால் தங்கள் முதுகில் அடித்துக் கொண்டு காணிக்கை பெற்றனர். 'பீர்மலங்கு' பிரிவினர் மாட்டுத் தோலினால் ஆன  'நகரா' என்ற  இசைக்கருவியில் ஒலி எழுப்பியவாறு காணிக்கை பெற்றனர். தல்காத்தி பிரிவினருக்கென்று எந்தவொரு தனி இசைக்கருவியும் அடையாளமாக கொள்ளவில்லை, ஆனால் இவர்களை விரும்பி வீடுகளில் அழைக்கின்றவர்களிடத்தில் சென்று எலுமிச்சைபழம் பெற்று, திருக்குர்ஆனில் 'ஆயத்து' என்று சொல்லப்படும் வேத வரிகளை அப்பழத்தின் மீது ஓதி, அதனை வழங்கி, பின் மக்களிடம் காணிக்கையாகப் பொருட்களைப் பெறுகின்றனர்.   3.11. இந்து மரபில் உஞ்ச வ்ருத்தியும் இஸ்லாமிய ஃபக்கீர் மரபில் காணிக்கை பெறுதலும்   தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் காணிக்கைப் பெறுதலிலும், இந்து மரபில் உஞ்சவிருத்தி செய்கையிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றது. பொதுவாக இந்து, கிறிஸ்தவ  இஸ்லாம் என எல்லா சமயங்களிலும் 'ஈகை' என்பது  முதன்மையான ஒன்று. ஈகையைப் போல், தமது அன்றாட தேவைகளுக்கு மட்டுமே பொருள் ஈட்டி எதிர்காலத்திற்கு எனச் சேர்த்து வைக்காமல்  முழுமையாக இறைவன்பால் நம்பிக்கை வைத்து வாழ்தல் என்பதும் சிறப்பான ஒன்றாகும். அந்த வகையில் இந்து மரபில் துறவிகளாலும், பிரமணர்களாலும் 'உஞ்சவ்ருத்தி' என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.   'உஞ்ச' என்றால் பிச்சை என்று பொருள் 'வ்ருத்தி' என்றால் தொழில் என்று  பொருள்.  இந்து  வேத  ஆகமம்  நூலின்படி ப்ராமணீயம் என்பது   1. பூணூல் அணிதல் - இறைவனின் தொண்டன் என்ற பொருள் பட வாழ்தல். 2. சாத்வீகம் - சாதுவாக இருத்தல் 3. உஞ்சவிருத்தி - யாசித்து உண்ணல் 4. தயை இருத்தல் - எல்லா உயிர்களிடமும் அன்பு, இரக்கம் பாராட்டுதல்   போன்ற குணங்களுடன் இருத்தல் ஆகும். இதில் பூணுல் சடங்கின் போது 'யாசித்து உண்ணல்' என்பதற்கு அடையாளமாக புதிதாய் பூணுல் அணிந்தவர் தம் முன்னே அமர்ந்திருக்கும் பெரியோர்களிடம் 'பவதி பிக்ஷாம் தேஹி' அதாவது 'எனக்கு பிச்சை அளிப்பாயாக'  என  வேண்டி அரிசி மற்றும் பணம் பெற்றுக் கொள்ளும் மரபு இருந்து வருகின்றது. பிராமண பெரியோர்கள் சாஸ்த்திரத்தை அனுசரித்து கோயில் வீதிகளில் பகவத் கீதை குணங்களை உச்ச ஸ்வரத்தில் கானம் செய்து கொண்டு போகும் வேளையில், அக்ஷய பாத்திரத்தில் சேரும் அரிசியை 'உஞ்சம்' எனச் சொல்லி அனுஷ்டித்து வருகின்றனர். மேலும், பிச்சையை அப்படியே நேராக வாங்குவது தோஷம், ஆனால், பாத்திரத்தில் வாங்குவது தோஷமில்லை.   "பிரம்மசாரியானவன்  பிச்சைக்குப் போகுங்கால் இடது கையில் பிச்சை பாத்திரமும், வலது கையில் தீர்த்த பாத்திரமும் வைத்துக் கொண்டு, பிச்சை வாங்குங் காலத்தில் இடது கையிலிருக்கும் பாத்திரத்தால் பிச்சை வாங்குவதும், வலது கையால் பிச்சை பாத்திரத்தை முடியிருக்கும் துணியினை எடுப்பது மரபு”43   என்று  'ஸந்தேஹ  த்வாந்த  பாஸ்கரம்'  என்ற  நூல்  குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு பஜனை சம்ப்ரதாயத்தின் போதும் பஜனையின் ஆரம்பத்திலோ  அல்லது  முடிவிலோ உஞ்ச விருத்தி நடைபெறுதல் உண்டு. உஞ்ச வருத்தியின் போது தலையில் துண்டு கட்டிக் கொள்வது வழக்கம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் (4.5.1767 -- 6.1.1847) தம் வாழ்நாளில் உஞ்சவ்ருத்தியை  கடைப்பிடித்தே  வாழ்ந்தார்.   3.11.1. பக்கீரர்களும் உஞ்சவிருத்தியும் இஸ்லாமிய துறவிகளான ஃபக்கீர்களும் சமயநெறி சார்ந்த தத்துவங்களையும், இறைவனைப் பற்றிய போற்றிப் பாடல்களையும் இஸ்லாமியர்களிடையே பாடி கிடைக்கின்ற பொருள் கொண்டே வாழ்க்கை நடத்துகின்றனர். மேலும், இஸ்லாமிய சமயம் சார்ந்த விழாக்களில் பங்கு பெற்று அதன் மூலம் கிடைக்கக்கூடிய பிச்சையினைக் கொண்டு அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.   ஃபக்கீர்கள் யாசகத்தின் போது இடது தோளில் ஜோல்னாப் பையை அணிந்திருக்கின்றனர். வலதுகையில் 'தாயிரா' என்ற தாளக் - கருவியினை இசைத்து தாளமிட்டுப் பாடல் பாடுகின்றனர். இந்து மதத்தினர் பாடல் மற்றும் பஜனையின் போது உஞ்சவிருத்தி செய்வது போல் ஃபக்கீர்களும் தங்களது சமயம் சார்ந்த பாடல்களை பாடும் போது யாசகம் புரிகின்றனர்.   மேற்கண்ட கருத்துக்களை நோக்குங்கால் எளிமையாக வாழ்தல், எதிர்காலத்திற்கு என் அதிகப் பொருட்களை சேமித்து வைக்காதிருத்தல், _______________________________________ 43 ஆதம்பார் பாரத்வாஜ், ராமசாமி, ஸந்தேஹ த்வாந்த பாஸ்கரம், 1937, ப.13.   இறைவனை மட்டும் நம்பி வாழ்தல் போன்ற அடிப்படை தன்மைகள் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இருத்தலை உணர முடிகின்றது.   3.12. பக்கீர்கள் வாழும் இடங்கள்   ஃபக்கீர்களின் வாழ்விடங்கள் பெரும்பாலும் தர்காக்களைச் சுற்றியே அமைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதிகளில் ஃபக்கீர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு 17,18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஃபக்கீர் இயக்கம்' ஓர் சான்றாகும். தமிழகம் முழுவதும் ஃபக்கீர்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழுமிடங்கள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களை ஒட்டியே உள்ளன. தற்பொழுது நகர்புறங்களிலும் குடியேறியுள்ளனர்.   3.12.1. தமிழ்நாட்டில் ஃபக்கீர்கள் அதிகமாக வாழுமிடங்கள் தமிழக ஃபக்கீர்கள் தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் பரவலாக இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதியிலும், தர்காக்கள் அமைந்துள்ள இடங்களிலும் வாழுகின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் தர்காக்கள் அமைந்திருக்கும் எல்லாப் பகுதிகளிலும் ஃபக்கீர்கள் வாழ்கின்றனர். இருப்பினும் திருச்சிராப்பள்ளி, பொதக்குடி தஞ்சாவூர், நாகூர், ஏர்வாடி, இராமநாதபுரம், அத்திக்கடை, கடையநல்லூர், பண்ரூட்டி, கோரிப்பாளையம், தென்காசி, நாகப்பட்டினம், கீழக்கரை, கொடிக்கால்பாளையம், கூத்தாநல்லூர், திட்டச்சேரி, பொட்டல்புதூர், திருநெல்வேலி, மேலப்பாளையம், ஆவூர், முத்துப்பேட்டை, மேலூர் (மதுரை), அதிராம்பட்டினம், இளையான்குடி, கடையநல்லூர், அடியக்கமங்கலம், வலுத்தூர், காரைக்கால், தோப்புதுறை ஆகிய ஊர்களில் அதிக அளவில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்களில் சுமார் ஐயாயிரத்து இருநூற்று ஐம்பது ஃபக்கீர்கள் உள்ள னர் என்று புகரா மன்றம் (Fakir Association)" நிறுவனர் சர்குரு இப்ராஹிம் அலிஷா என்ற தகவலாளி கூறுகின்றார். __________________________ 44 Anjuman-c-Fugra Association,3/100, Taikkal street, Aavur, Valangaimaan taluk,Thiruvaroor Dt.   ரிஃப்பாயி பிரிவு ஃபக்கீர்கள், இஸ்லாமியர் வாழும் ஒவ்வொரு ஊர்களிலும் குறைந்தபட்சம் இரண்டு குடும்பங்களாகவது இருப்பதை களப்பணியின் போது அறிந்து கொள்ள முடிந்தது. தொடக்கத்தில் வாழ்ந்த ஃபக்கீர்களின் வாழ்விடம் எதுவும் இல்லாத நிலையிலே இருந்துள்ளனர். தர்காக்கள் மற்றும் தொழுகை நடத்தும் பள்ளி வாசல்கள் போன்றவற்றில் தங்கி வாழ்ந்துள்ளனர்.  இந்நிலை காலப்போக்கில் மறைந்து ஃபக்கீர்கள் தங்களுக்கென்று வாழ்விடம் அமைத்து வாழத் தொடங்கியுள்ளனர் என்பதை கீழ்கண்ட  செய்தியின்  வாயிலாக  அறியலாம்.   தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலர் தர்காவிற்கும் ஃபக்கீர்களுக்கும் நிலங்களையும்,  தங்குமிடங்களையும்  தானமாக  கொடுத்துள்ளனர்  என்பதை "தஞ்சை நகரில் இருந்த 'ஹம்ஸ்பீர் பள்ளி' எனும் முகமதியர் வழிப்பாட்டுத் தலத்தின் ஆக்கத்திற்காக, அந்த பள்ளியினை நிர்வாகிக்கும் ஃபக்கீரும்  நாஞ்சிக் கோட்டை  பண்ணையாருக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழு வேலி நிலத்தினைக் கொடுக்குமாறு செவ்வப்ப நாயக்கர் உத்தரவிட்டார்கள்”46   என்று குடவாயில் பாலசுப்ரமணியம் (1999, பக்.95) குறிப்பிட்டுள்ளார். மேற்கண்டவற்றிலிருந்து தர்காக்களை நிர்வகிக்கும் பொறுப்புகள் பல ஃபக்கீர்கள் நிர்வகித்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.   இதனால் மன்னர் கொடுத்த நிலங்களிலே அவர்கள் குடியிருப்பும் அமைந்திருக்க வேண்டுமென கருதவும் இடமுண்டு. தங்களுக்கென்ற உடைமையாக, சொந்த நிலங்கள் இல்லாமல் இருந்த ஃபக்கீர்கள், மன்னன் கொடுத்த மானிய நிலங்களில் குடில்களை அமைத்து வாழ்வதற்கு வழிகோலின எனலாம். இருப்பினும் மன்னர்களின் மானிய நிலங்கள் எல்லா ஃபக்கீர்களுக்கும் கொடுக்கப்பட்டனவா என்பது ஆய்வுக்குரியது.   ஃபக்கீர்கள் வாழுமிடம் 'தைக்கால்' என்று பெயர். தைக்கால் என்ற அரபுச் சொல்லிற்கு ஃபக்கீர்கள் தங்குமிடம்' என்று பொருள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் 'தைக்கால்' என அழைக்கப்படும் இடங்கள் உள்ளன. ____________________________________ 45 * குடவாயில் பாலசுப்ரமணியம், தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, 1999, ப.95.   தைக்கால் என்ற பெயரில் ஊர்ப் பெயர் இருப்பதைக் காணலாம். ஃபக்கீர்கள் தங்கியிருக்கும் தெருக்களைத் 'தைக்கால் தெரு' என்று அழைக்கின்றனர். ஒரு தைக்காவில் குறைந்த பட்சம் பத்து ஃபக்கீர் குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலும் இவை பிற இஸ்லாமியர் வீடுகளை ஒட்டியே உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டில் வையம்பட்டியில் உள்ள இலங்கா குறிச்சி என்னும் இடத்தில் 'தைக்கா ஷஹிபு'  என்னும்  இடம்  உள்ளது.   இங்கு ஃபக்கீர் ஷாஹிபு என்பவரின் அடக்க இடம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முற்காலத்தில் ஃபக்கீர்கள் வாழ்ந்துள்ளனர். அதனாலேயே அப்பெயர் சூட்டப்பட்டது என்பதை அவ்வூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் ஹபிபு ரஹ்மான்46 என்பவர் கூறுகின்றார்.   3.12. 2. தர்காவில் ஃபக்கீர்கள் தங்குமிடம் ஃபக்கீர்கள் ஆன்மீகப் பணியின் நிமித்தம் தர்காக்களில் தங்குவது பன்னெடுங்காலமாக  இருந்து  வருகின்ற  வழக்கமாகும். []     ________________________________________ 46. பேராசிரியர் ஹபிபு ரஹ்மான், HOD, தமிழ்த்துறை, ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி,   தமிழகத்தில் புகழ் பெற்ற தர்காக்களில் (திருச்சி, நாகூர், ஏர்வாடி ) ஃபக்கீர்கள் ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியே தங்குவதற்கு என்று தனித்தனி இடங்கள், தர்கா முற்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கு 'சவுக்கண்டி' என்று பெயர். சவுக்கண்டிகள் ஒவ்வொன்றும் நீண்ட வராண்டாப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கந்தூரி விழா நேரங்களில் ஒவ்வொரு ஃபக்கீர் பிரிவினரும்  அவர்களுக்குரிய  இடத்தில்  தங்கிக்  கொள்வர். தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள், தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டாலும் ஊர் ஊராக சுற்றித்திரியும் இயல்பு உடையவர்களாதலால், ஓரே இடத்தில் நெடுங்காலம் தங்கியிருத்தல் என்பது இல்லை. மேலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு, அங்கு வாழும் தமிழக இஸ்லாமியர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் பாடல்கள் மற்றும் குழு நிகழ்ச்சிகளை தற்காலத்தில் நிகழ்த்தி வருகின்றனர் என்கிறார் மேலப்பாளையத்தில்  உள்ள  குலாம் மைதீன் ஃபக்கீர் என்ற தகவலாளி. 3.13. பாடல் தவிர்த்து ஃபக்கீர்களின் பிற தொழில்கள் தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் பாடுவதை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். துணைத்தொழிலாக மந்திரித்தல், தகடு எழுதுதல், சாம்பிராணி புகை காட்டுதல் போன்றவற்றைச் செய்கின்றனர். இவற்றின் மூலம் கிடைக்கும் சிறு வருமானம் கொண்டு தங்கள் அன்றாடத் தேவைகளை எதிர் கொள்கின்றனர்.   3.13.1. மந்திரித்தல் இஸ்லாம் சமயத்தில் 'மந்திரித்தல்' என்ற சொல்லை பயன்படுத்துவது இல்லை. மாறாக 'ஓதுதல்' என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். மேலும், ஃபக்கீரர்களின் மந்திரித்தல் முறையினை 'ஓதி கொடுத்தல்' என்றும் 'ஓதிப் பார்த்தல்' என்றும் கூறுவர்.   பேய் விரட்டுதல், திருஷ்டி நீக்குதல், வியாபாரத்தில் விருத்தியடைய செய்தல், நோய் நீக்குதல், செய்வினையைப் போக்குதல், குழந்தைப் பேறு கிடைத்தல் போன்ற பல்வேறு நம்பிக்கைகளுக்காக தகடு, தாயத்து, எலுமிச்சைப்பழம், தண்ணீர் போன்றவற்றைப் ஃபக்கீர்கள் ஓதிக் கொடுக்கின்றனர். 3.13.1.1. மந்திரிக்கும் முறை ஃபக்கீர்கள் தாங்கள் மந்திரிக்கும் வேளையில் தமக்கு இறை ஆற்றல் உணர்வு அதிகம் ஏற்படுவதாக கூறுகின்றனர். - திருக்குர்ஆனில் உள்ள வேத வரிகளை கறுப்பு கயிறுகளின் மேலாக ஓதி, குழந்தைகள் முதல் பெரியவர்களின் கைகளில் அல்லது கழுத்தில் கட்டிவிடுகின்றனர். தங்களையோ அல்லது தங்கள் குழந்தையையோ தீய ஆவிகள் தீண்டிவிட்டது என எண்ணினால் ஃபக்கீர்களிடம் மந்திரித்துக் கொள்ள முன் வருகின்றனர். • கண்ணேறு கழித்தலுக்கு மக்கள் ஃபக்கீரையே அதிகம் நாடுகின்றனர் . ஃபக்கீர்கள் ஓதும் மந்திரம் தங்களைச் சூழ்ந்துள்ள கேடுகளை நீக்கிவிடும் ஆற்றலுடையது என்பது மக்களின் நம்பிக்கை. . பொதுவாக இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்து சமயத்தினர் சாதி, மத, பேதமின்றி ஃபக்கீர்களிடம் மந்திரிக்கின்றன. ஃபக்கீர்கள் மந்திரித்தல் தொழில் மூலம் சுமார் ரூபாய் இருபது முதல் ஐம்பது வரை காணிக்கையாகப் பெறுகின்றனர். []     ஃபக்கீர் ஓருவர் மந்திரித்தல் மற்றும் பேய்விரட்டும் காட்சியினை 2009ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி என்ற தமிழ் திரைப்படத்திலும், 2011ஆம் ஆண்டு வெளி வந்த காஞ்சனா என்ற திரைப்படத்திலும் சற்று மிகைப்படுத்திய நிலையில் படம் பிடித்திருப்பதைக் காணலாம். இது பின்னிணைப்பாய் குறுந்தகட்டில் இணைக்கப்பட்டுள்ளது. 3.13.2. தகடு எழுதுதல் ஃபக்கீர்களிடம் இறையருள் நிரம்ப இருத்தலை கண்டு மக்கள் அவர்களிடம் தகட்டில் எழுதும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். "உலோகத் தகட்டில் எழுதுவதை ஃபக்கீர்கள் நக்ஷா எழுதுதல் என்று அழைக்கின்றனர். நக்ஷா என்பதன் பொருள் கட்டம் வரைதல் என்பதாகும். உருது மொழியில் எண்களைக் கணக்கிட்டு (அப்ஜத் முறை) அவற்றை கட்டங்களில் எழுதி அவற்றை தஃவீஸ் (ஓதி) செய்து அணிந்து கொள்ளவோ, கரைத்துக் குடிக்கவோ செய்யின் நற்பலன்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது" என்று அப்துல் ரஹீம் குறிப்பிடுகிறார்.   3.13.3. சாம்பிராணி புகைக்கட்டுதல் ஃபக்கீர்கள், இஸ்லாமியர்களின் வியாபார இடங்களில் மாலை ஐந்து முதல் ஆறு மணியளவில் சாம்பிராணி புகையினை தயாரித்து, கடைவீதியில் ஒவ்வொரு, கடைகளிலும் புகையினை காட்டுகின்றனர். இதனால் கடையினுள் தீய சக்திகள் எதுவும் அண்டுவதில்லை என்பதே நம்பிக்கை. இத்தொழிலின் மூலம் ரூபாய் பத்து முதல் இருபதைப் பெறுகின்றனர். மேற்கண்டவைகளிலிருந்து தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே காணப்படுகின்றனர் என்பதை உணரமுடிகின்றது. ________________________________ 47 அப்துல் ரஹீம், இசுலாமிய கலைக்களஞ்சியம் தொகுதி 3, 1979, பக். 170-71.   3.14 முடிவுரை ஃபக்கீர்கள் என்பவர்கள் இஸ்லாமிய யாசகர் பிரிவினருள் ஒருவர், எனினும் இவர்கள் ஆன்மீகவாதிகள். மற்ற இரவலர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களுக்கு முன்னோடியாக சூஃபிக்களும், அவர்களைப் பின்பற்றி அவுலியாக்கள் எனப்படும் இறைநேசர்களும் அவர்களில் முக்கியமானவர்களாய் நத்ஹர்வலி மற்றும் சாகுல்ஹமீது அவுலியா ஆகியோரும் திகழ்ந்துள்ளனர். சாதாரண இஸ்லாமியர்கள் ஃபக்கீராக மாற செய்யப்படும் சடங்குகள் அனைத்தும், முழு ஆன்மீகவாதியாக, இறைப்பணி செய்யும் வகையில் அவரை மனதளவில் தயார் செய்யும் முகமாக உள்ளன. தமிழ்நாட்டில் ஃபக்கீர்களில் மொத்தம் ஐந்து பிரிவினர் உள்ளனர். இதில் ரிஃப்பாயி பிரிவு ஃபக்கீர்களே இசையோடு அதிகம் தொடர்பு உடையவர்கள். மேலும், ஃபக்கீர் பிரிவுகள் ஒவ்வொன்றின் தனித்த மற்றும் பொதுவான கூறுகள், ஃபக்கீர்களிடம் பிற மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் ஆகியவை கண்டறியப்பட்டு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.   இயல் - 4  இயல் நான்கு தமிழக ஃபக்கீர்களும் இசையும்   இசை ஓர் பொதுவானக்கலை. வான் பொழிகின்ற மழை நீர், இவ்வையக மக்களுக்கு பாகுபாடின்றி பொதுவாக பெய்து பின் மாந்தரின் விருப்பிற்கேற்ப, வெவ்வேறு விதமாய் பயன்படுதல் போல், இசைக்கலையும் சமுதாயத்தின் கடைநிலையில் இருப்போர் முதலாய் வாழ்விற்குப் பலவிதமாய் பயன்படுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் உடன் பயணிக்கின்றது.   இசை என்ற கருவியினை சிலர் இறைவழிப்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். சிலர் நிலையான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். பொழுது போக்கிற்கென கொள்ளுவோரும் சிலர். மேலும், தாலாட்டு முதலாய் இறப்பு வரை இசையை ஓர் சடங்கின் பாகமாய் கொள்வோர் பலர். இசையே உலக ஒற்றுமையின் சாவி. சாதி, மத, இன, மொழி என எல்லா வேற்றுமைகளையும் களைந்தெறியும் ஆற்றல் கொண்டது இசைக்கலை.   இத்தகைய இசையினை இஸ்லாமிய இரவலர்களும் ஆன்மீகவாதிகளுமான ஃபக்கீர்கள் தங்கள் சமயம் சார்ந்த கருத்துக்களையும், நீதிக்கருத்துக்களையும் பிறருக்கு அறிவிக்கவும் இறைவனைப் போற்றுவதற்கும் ஓர் கருவியாகக் கொண்டுள்ளனர். பொதுவாக எந்த ஒரு கருத்தையும் இசையின் மூலம் சொல்வதால் எளிதாக பிறரைச் சென்றடையும் என்பதை உணர்ந்தோ உணராமலோ ஃபக்கீர்களும் இசைவழி இறைநெறியைப் பரப்புகின்றனர்.   இந்த இயலில் ஃபக்கீர்கள் இசை பயிற்சி மேற்கொள்ளும் முறை, பாடல்கள் பதிவு, குரல் நிலை , பாடும் முறை, குழு பாடற்பயிற்சி முறைகள், குழு பாடல் பாடும் முறை, பாடுகளம், பாடும் நேரம், தமிழக ஃபக்கீர்களின் இசைக்கருவிகள், அவற்றின் அமைப்பும் விளக்கமும், தாயிராவின் வகைகள், தாயிரா வாசிக்கும் முறை, கதைப்பாடல் பாடும் முறை, தமிழக ஃபக்கீர்கள் பாடல்களில் இசைச்சிறப்புகள், தனிப்பாடல்கள், நெடும் பாடல்கள், கதைப்பாடல்கள் ஆகியவை விளக்கம் பெறுகின்றன.   4.1.ஃபக்கீர்களது இசைப் பயிற்சி ஃபக்கீரர்களுக்கு, இசைப்பயிற்சியின் ஆசிரியர்கள் அவர் தம் முன்னோர்களும், சற்குருக்களுமே. பெரும்பாலும் தங்கள் தந்தையர்களிடம் இருந்தே இசைப் பயிற்சியினைத் துவங்குகின்றனர்.   இல்லங்களில் உள்ள பெரியவர்கள், தொழிலுக்குச் சென்று வந்த பிறகு ஓய்வான நேரங்களில், சிறுபிள்ளைகளை அழைத்து, தங்கள் முன்னால் அமரச் செய்து, பறையை ஒத்த தாயிரா என்ற தாளக்கருவியினை இசைத்தவாறு பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பாடி காட்டுவர். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாடுவார்கள். நன்றாகக் கற்றபின் பாடலின் முழு வரிகளையும் பெரியவர் கற்றுக் கொடுக்க சிறுவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.   திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் ஆசுராம் கீழத்தெருவைச் சார்ந்த ஆதி ஃபக்கீர் குலாம் மைதீன் என்ற தகவலாளி, தாங்கள் பாடச் செல்லும் பொழுது, அணிகின்ற ஆடையான பச்சை தலைப்பாகை, நீண்ட கைகளை உடைய ஜிப்பா மற்றும் கண்டமணி மாலையினை அணிந்தவுடன் தங்களுக்குள் ஓர் அருள் உணர்வை அடைவதாகவும், இறையருள் வருவதாகவும் உணர்வதாக கூறுகின்றார். மேலும், இதன் விளைவால் பாடல்கள் அனைத்தையும் தான் மனப்பாடமாக பாடுவதாகக் கூறுகின்றார்.   செவ்வியல் இசையில் ஆரம்பப் பாட பயிற்சிகளான ஸரளி ஜண்டை வரிசைகள் போல், ஃபக்கீர் பாடற்பயிற்சிக்கென தனி ஆரம்ப பாட பயிற்சிகள் எதுவும் இல்லை .   4.2. பாடல்கள் ஃபக்கீர்கள் தாங்கள் பாடுகின்ற பாடல்களின் சாஹித்யங்களை பெரும்பாலும் மனப்பாடம் செய்தே வைத்துள்ளனர். சற்று கல்வியறிவு உடைய ஃபக்கீர்கள் அவற்றை புத்தகங்களில் எழுதி வைத்துப் பாடுகின்றனர்.   முகம்மது மைதீன் ஃபக்கீர் என்ற நாகூரில் வாழும் தகவலாளி,   "தாம் சிறுவயது முதலாய் ஊர் ஊராகச் சென்று வாழ்ந்ததன் விளைவால் பல பேரிடம் பாடல்களைக் கற்றுக் கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தது"1 என்கிறார்.   4.3. குரல் வளம் ஃபக்கீர்கள் தாயிராவை மட்டுமே துணைக்கருவியாகவும், தாளக்கருவியாகவும் கொண்டு பாடுகின்றனர். ஸ்ருதிக்கு என தனிப்பட்ட இசைக்கருவியைப் பயன்படுத்தவில்லை . அவரவர் தம் குரல்வளத்திற் -கேற்றவாறு, முறையான ஸ்ருதி என்ற வகையில் இல்லாமலே பாடுகின்றனர். பெரும்பாலும் மத்திய ஸ்தாயியிலே பாடுகின்றனர். கீழ் ஸ்தாயி அல்லது தார ஸ்தாயியில் அதிகம் பாடுவதில்லை. நன்றாக தேர்ச்சி பெற்றவர்கள், கனத்தக் குரலில் மேல் ஸ்தாயியில் பாடுகின்றனர்.   பாடல்களில் உள்ள சொற்களுக்குத் தகுந்தவாறு தங்கள் குரலை உயர்த்தியும், தாழ்த்தியும் பாடுகின்றனர். இதற்குத் தகுந்தவாறு தாயிராவை ஓங்கியும், மெதுவாகவும் இசைக்கின்றனர்.   4.4. பாடுமுறை ஃபக்கீர்கள், தெருக்களில் மக்களிடத்தில் பாடுகின்ற பொழுது, இடத்தின் சூழ்நிலைக்கேற்றவாறு கேட்பவரின் விருப்பத்திற்கிணங்க பாடல் வகையினையும், பாடும் முறையினையும் மாற்றிக் கொள்கின்றனர்.   ஃபக்கீர்கள் தம் பாடல்களை குறுந்தனிப் பாடல்களாகவும், நெடுங்கதைப் பாடல்களாகவுமே பாடுகின்றனர். இல்லங்களில் உள்ளோர் சிறிது நேரம் இன்னும் பாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொண்டால், அந்த நேரத்திலேயே சமயப் பெரியவர்கள் (அவுலியாக்கள்) செய்த நிகழ்ச்சிகளுள் ஏதேனும் ஒன்றை அவர்களின் மனதில் எளிதாக பதியும்படி புன்முறுவலுடன் பாடுகின்றனர். அவ்வாறு பாடுகின்ற பொழுது இசைக்கருவியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது காதின் __________________________ முகமது மைதீன் ஃபக்கீர்ஷா அவர்களின் நேர்காணலின் போது அறிந்த செய்தி நாள் 07.09.2009, இடம் : நாகூர் தர்கா.   ஓரமாக வைத்து வலது கை விரல்களால் தட்டி இசை எழுப்பியவாறு பாடுவர். பாடலின் ஆரம்பத்திலும், முடிவிலும் தாயிராவில் சில நிமிடங்கள் (கர்நாடக இசையில் சில ஆவர்த்தனங்கள் முடிப்பு வாசிப்பது போல்) மோரா2 இசைக்கப்படுகின்றது.   பாடல் பாடும் பொழுது தாயிராவின் மையப் பகுதியிலும், தாள முடிப்பின் பொழுது தாயிராவின் பின் சட்டமான மரப்பகுதியையும் தட்டி இசை எழுப்புவர். இவ்வாறு இசைத்தல் பாடலுக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைகிறது. []   சில ஃபக்கீர்கள் பாடுகின்ற பொழுது பாடல்களின் தன்மைக்கேற்ப, கைகளை உயர்த்தியும், தாழ்த்தியும், முக பாவனைகளுடன் சொற்களுக்கு ஏற்றம் இறக்கம் கொடுத்தும் பாடுகின்றனர். தெருக்களில் சிலர் இவர்களின் பாடல் மேல் கொண்ட விருப்பத்தினால் தம் வீடுகளுக்கு விரும்பி அழைத்துச் சென்று பாடல்களைப் பாட செய்து காணிக்கையளிக்கின்றனர். ______________________ 2 தாள முடிப்பு.   5. பாடுகளம்  []   தமிழக ஃபக்கீர்களுக்கு பாடுவதற்கென்று தனி அரங்கம் கிடையாது. இஸ்லாமியர் அதிகம் வாழும் தெருக்களே பாடுகளமாகத் திகழ்கின்றது. தெருக்களில், வீடுகளில் உள்ள திண்ணைகளில் வீடுகளில் உள்ளோர் அமர்ந்து கொள்ள, ஃபக்கீர் நின்ற நிலையில் பாடுகின்றார். சிலர் வீடுகளுக்குள்ளே அழைக்க, உள்ளே அமர்ந்து பாடல் பாடி காணிக்கைகளைப் பெற்று திரும்புகின்றார். []   ஃபக்கீர்கள் தர்கா முற்றத்தில் பாடுதல்  []       மேடைகளில் நின்று, நீண்ட நேரம் பாடும் பழக்கம் இவர்களிடம் இல்லை. குழுப்பாடலின் போது, தர்காவைச் சுற்றியுள்ள முற்றங்களில் அல்லது தரையில் வட்டமாக அமர்ந்தும் பாடுகின்றனர்.   []     தர்காக்களில் அவுலியாக்களின் நினைவு நாளன்று நடத்தப்படுகின்ற சந்தனக்கூடு விழா மற்றும் கொடிமரம் கட்டும் நிகழ்வின் போது ஃபக்கீர்களின் பாடல்களுக்கே முதன்மை அளிக்கப்படுகின்றது.   சந்தன கூடு விழா சந்தனக் கூடு என்பது பொன், வெள்ளி, பித்தளை, ஐம்பொன், எவர்சில்வர் போன்ற உலோகங்களில் ஏதேனும் ஒன்றால் செய்யப் பட்ட குடத்தில் சந்தனக் கட்டையை அரைத்து குடத்தில் நிரப்புகின்றனர். குடத்தின் வாயை பச்சைத் துணியால் மூடி சுற்றிலும் பூவால் அலங்கரிப்பர். பொதுவாக எல்லா ஊர்களிலும் உள்ள தர்காக்களில் ஏதேனும் ஒரு உலோக குடத்திலேயே சந்தனத்தை நிரப்புகின்றனர், ஆனால் திருச்சிராப்பள்ளி நத்ஹர்வலி தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் ஐந்து வகை உலோகத்தாலான ஐந்து குடம் எடுக்கப்படுகின்றது. இந்தக் குடத்தை தேர் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் கூட்டில் வைத்து தெரு வழியே ஊர்வலமாக வருவர். ஃபக்கீர்கள் அவ்வூர்வலத்தில் சந்தன கூட்டின் முன்னால் தாயிராவை இசைத்தவாறே பாடல்களைப் பாடி அணிவகுத்து வருகின்றனர். கொடி மரம் கட்டும் நிகழ்வின் போது ஃபக்கீரர்கள் பத்து பேர் கூடி ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தாயிராவை இசைத்து பாடல்களைத் தொடங்கி தர்காவில் கொடி கட்டும் இடத்தில் வந்து முடிக்கின்றனர். பின்னரே கொடியேற்றம் நிகழும்.   4.6. பாடும் நேரம் ஃபக்கீர்கள் இஸ்லாமிய வீடுகளில் சென்று பாடும் பொழுது பகல் பொழுதிலேயே செல்கின்றனர். ரமலான் மாதத்தில் நோன்பு காலத்தில் தொழுகையின் பொருட்டு அதிகாலையில் எழுப்புதல் வேண்டி அதிகாலை மூன்று அல்லது நான்கு மணியளவில் தெருக்களில் ஓங்கிய குரலில் நின்று இறைப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். நீண்ட கதைப் பாடல்களை இரவு நேரங்களில் பாடுகின்றனர். இரவு ஒன்பது மணி முதல் பன்னிரெண்டு மணி வரை இப்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எப்பொழுதும் போல் பாடல்களை தலைப்பாகைக் கட்டிக் கொண்டே பாடுகின்றனர். இதற்கென தனியே ஒப்பனைகள் எதுவும் இவர்கள் செய்து கொள்ளவில்லை.   4.7. குழு பாடற்பயிற்சி ஃபக்கீர்கள், தாங்கள் பாடும் பாடலான நூறுமசலா, பெண்புத்திமாலை போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசை வடிவமான வில்லுப்பாட்டின் அமைப்பில், கேள்வி-பதில் என்ற வகையில் அமைந்துள்ளது. (பாடல்கள் மெட்டு பின்னிணைப்பில் குறுந்தகட்டில் இணைக்கப்பட்டுள்ளது) இப்பாடல்களில் பதிலுரைப் பாடல் வரிகளைக் குழுவினர் பாடுகின்றனர்.   பொதுவாக இத்தகைய பாடல்களை அவுலியாக்களுக்கு விழா எடுக்கும் போதே பாடுவதால் தலைமைப் பாடகரான ஃபக்கீரும், மற்றும் சில ஃபக்கீர்களும் இணைந்து நிகழ்ச்சிக்குப் பத்து நாட்களுக்கு முன்பாகவே சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.   4.7.1. குழு பாடல் பாடும் முறை குழு பாடல்களின் போது தலைமைப் பாடகர் தவிர்த்து ஒரு குழுவில் ஐந்து முதல் ஏழு ஃபக்கீர்கள் இடம் பெறுகின்றனர். ஒருக் குழுவில் இடம் பெறுவோர், நீண்டகாலம் அக்குழுவிலேயே இடம் பெறுகின்றனர். அடிக்கடி மாறுகின்ற பண்பு இல்லை. இதனால் குழுப்பாடல்கள் தரமிக்கதாக காணப்படுகிறது. []     தலைமைப் பாடகர் பாடலைப் பாடி இடையிடையே வசனமும் கூறுகின்றார். எல்லோர் கைகளிலும் தாயிரா உள்ளது. தலைமைப்பாடகர் பாடும் பொழுது பின்பாட்டுக்காரர்கள் இடையிடையே கதையின் கருத்திற்கேற்ப 'ஆமா, ஓகோ, அப்படியா, சரிதான், அடடா, யா அல்லாஹ், சுபஹானல்லா, அல்ஹம்தினில்லா, அடப்பாவி, அப்புறம், சொல்லுங்கோ '   போன்ற வார்த்தைகளை இடையிடையே கூறுகின்றனர். மேலும் குழுவில் ஒருவர் ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய வினாக்களைக் கேட்பார், அதற்கு தலைமைப் பாடகர் பதில் சொல்லிக் கொண்டு பாடலைப் பாடுவார்.   தர்காக்களில் தலைமைப் பாடகரை சுற்றி வட்டமாக அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ பாடல்களைப் பாடுகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் இருபத்தி இரண்டிற்கு மேல் குழுப் பாடல்கள் பாடும் குழுக்கள் உள்ளன. பெரும்பான்மையான குழுப்பாடல் பாடும் ஃபக்கீர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், மேலப்பாளையம், பொட்டல்புதூர் ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர். இங்ஙனம் பாடுகின்ற கூட்டுப் பாடலின் இசை கம்பீரமாகவும் கேட்பவர்களுக்கு இனிமையாகவும், உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது. 4.8. தமிழக ஃபக்கீர்களின் இசைக்கருவிகள் பாடல் என்பது இருக்குமிடத்தில் இசைக்கருவிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. பொதுவாக செவ்வியல் இசைக்கருவிகளை நான்கு பெரும்பிரிவாகப் பிரிப்பர். 1. தந்திக்கருவிகள் - (எ-டு.) வீணை, வயலின் காற்றுக்கருவிகள் - (எ-டு.) புல்லாங்குழல், நாதஸ்வரம் தோற்கருவிகள் - (எ-டு.) மிருதங்கம், கஞ்சிரா, தவில், போன்றவை. உலோகக் கருவிகள் - (எ-டு.) தாளம், ஜால்ரா போன்றவை.   மேற்கண்ட வகையினுள் ஸ்ருதிக்கென பயன்படும் இசைக்கருவிகள் தம்புரா, ஒத்து போன்றவை.   நாட்டுப்புற இசையில் துந்தினா என்ற வில்லின் உதவியால் இசைக்கப்படும் தந்திக் கருவி புல்லாங்குழல், நாதஸ்வரம், கொம்பு போன்ற காற்றுக்கருவிகளும், தவில், முரசு தப்பட்டை, பம்பை, உறுமி, சிறுபறை, பறை, உடுக்கை, இடக்கை போன்ற தோற்கருவிகள் பழங்காலந்தொட்டே வழக்கில் உள்ளன.   மேற்கண்டவைகளை நோக்குங்கால் ஃபக்கீர்கள் எல்லா இசைக்கருவிகளையும் இசைக்கவில்லை, பிரதானமான துணைக்கருவியாக 'தாயிரா' எனப்படும் தாளக்கருவியினையே பயன்படுத்துகின்றனர். (டங்கா, பாங்கா, பாஹ்ரா (கொம்பை ஒத்த இசைக்கருவி , காற்றுக் கருவியின் வகையைச் சார்ந்தது) முற்காலத்தில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகின்றது. எனினும் இவைகள் பற்றிய குறிப்புகள் சிலவே இன்று கிடைக்கப் பெற்றன.   4.8.1. டங்கா இது ஓர் தாள இசைக்கருவி. முரசு வகையைச் சார்ந்தது. மேற்பக்கம் அகன்றும், கீழ் பக்கம், அடியில் குறுகியும் காணப்படுகிறது.   இது அளவில் சிறியதாகும். இதன் உடல் பகுதி மரத்தினாலும் மேற்பகுதி தோலினாலும் மூடப்பட்டிருக்கும். இதனை இசைக்க இரு சிறுமரக்குச்சியினை பயன்படுத்துகின்றனர். டங்காவை, அமர்ந்த நிலையில் இருந்து இரு கால்களுக்கிடையில் வைத்து, இரு குச்சிகளைக் கொண்டு கீழே குனிந்து கைகளால் மாற்றி மாற்றி அடித்து இசையை எழுப்புகின்றனர். ஃபக்கீர்கள் டங்காவில் எழுப்புகின்ற தாள ஒலியானது தாள ஒழுங்கிற்கு வராது.   [] 4.8.2. பாங்கா பாங்கா காற்றுக்கருவி வகையினைச் சேர்ந்தது. பித்தளையால் செய்யப்பட்டது. கையில் பிடித்துக் கொண்டு வாயில் வைத்து தலைக்கு மேலே உயர்த்தி ஊதுவர். []   4.8.3. மார்கோ பாஹ்ரா இக்கருவியும் காற்றுக்கருவி வகையைச் சேர்ந்தது அளவில் மிகவும் சிறியது. மாட்டுக் கொம்பால் ஆனது. கையில் பிடித்து வாயில் வைத்து ஊதுவர். மிகக் குறைந்த இசைத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது. தற்கால தமிழக ஃபக்கீர்கள் இக்கருவிகளை அதிகமாக பயன்படுத்தவில்லை. தமிழக ஃபக்கீர்கள் ஸ்ருதிக்கு வேண்டி தனிப்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தவில்லை . எனினும், சிலர் தற்காலத்தில் ஆர்மோனியம் இசைத்து பாடல் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.   4.8.4. தாயிரா அமைப்பும் விளக்கமும் இசையின் இரு கண்களாகப் போற்றப்படுவது ஸ்ருதியும், தாளமும் ஆகும். எனவே, தான் நம் முன்னோர் 'ஸ்ருதி மாதா லயப் பிதா' எனக் கூறுவர். இதில் தாளம் என்பது அளவுகோல், இதுபாட்டின் போக்கை வரை முறைப்படுத்தி எடுத்துக் கொண்ட காலப்பிரமாணம் சீராகச் செல்ல, ஒரு கால அளவை நிர்ணயிக்கின்றது. தாளத்திற்கு, தாள இசைக்கருவிகளே பெருந்துணைபுரிகின்றது. 'தஃப்' அல்லது 'தாயிரா' என்பது ஓர் தாளக்கருவி. 'தாயிரா' என்பது அரபுச் சொல். இதனை 'தப்சு' எனவும் அழைப்பர். தமிழக நாட்டுப்புற இசையில் பயன்படும் தாளக்கருவியான 'தப்புவின் அமைப்பை ஒத்துக் காணப்படுகின்றது. ஃபக்கீர்கள் பயன்படுத்தும் சிறு பறைக்கே தாயிரா என்று பெயர். இதனை முதன்முதலில் 'துபல் இப்னு லபக் மஸ்வூதி’3 என்பவரே கண்டுபிடித்தார். இஸ்லாமிய திருமணங்களிலும் தாயிரா இசைக்கப்படுகின்றது. ஃபக்கீர்களே இதனை இசைக்கின்றனர்.   துவக்கத்தில் சலங்கை இல்லாத தாயிராக்களையே பயன்படுத்தி வந்தனர். பின்னர் இசையின் இனிமையை அதிகரிக்கும் பொருட்டு சுற்றிலும் சலங்கைகள் கோர்த்து இசைக்கத் துவங்கியதாக ஃபக்கீர்கள் கூறுகின்றனர். 'தப்ஸ்' என்ற சொல்லிற்கு சலங்கை என்றும் பொருள் உண்டு. இதனை தாரா, தஃப், டேப், டபேலா, கொட்டு என்ற _____________________ 3 ஃபக்கீர் தகவலாளி திரு. மௌலானா என்பவர் மூலம் அறிந்த செய்தி.   பெயர்களாலும் சுட்டுகின்றனர். பெரும்பாலும் தாயிரா அல்லது தாகிரா என்ற பெயர்களாலேயே அதிக அளவில் சுட்டப்படுகின்றன. இக்கருவி தொடக்கக்காலங்களில் தோலினாலும், தற்போது ஃபைராலும் (Fibre) செய்யப்படுகிறது என்று ரிஃபாயி பிரிவு ஃபக்கீர் கூறுகிறார்.   4.8.4.1. தாயிராவின் வகைகள் இது இரண்டு வகையில் அமைந்துள்ளது. 1. சிறிய விட்ட தாயிரா  2. பெரிய விட்ட தாயிரா   சிறிய விட்ட தாயிரா சிறிய வகை அல்லது சிறிய விட்ட தாயிராவின் விட்டம் இருபத்தைந்து செ.மீ அளவு. உயரம் ஐந்து செ.மீ அளவு தாயிராவின் சட்டமானது 'ஆயினி பலா' மரத்தினாலானது. ஆயினி பலா மரப் பலகையை வட்டமாகச் செதுக்கி இரு முனைகள் சிறு இரும்பு ஆணிகள் கொண்டு இணைக்கப்பட்டு உள்ளது. மேல் பகுதி ஆட்டின் தோல் கொண்டு போர்த்தப்பட்டுள்ளது. ஓரங்களில் பித்தளையினால் ஆன வாரால், உறுதியாக இறுக்கிப் பிடிக்கும் பொருட்டு சிறு ஆணிகளால் இணைக்கப்பட்டுள்ளன.   பெரிய விட்டத் தாயிரா பெரிய வகை அல்லது பெரிய விட்டத் தாயிராவும் அமைப்பில் சிறிய விட்டத் தாயிராவை ஒத்தே காணப்படுகின்றது. ஆனால் அளவில் மட்டும் வேறுபட்டு காணப்படுகின்றது.   பெரிய தாயிராவின் விட்டம் முப்பது செ.மீ. உயரம் ஏழு செ.மீ அளவு. 'ஜல்' என்ற ஓசை தரும் விதத்தில் வட்ட வடிவான உலோக சலங்கைகள். தாயிராவின் வட்டத்தில் ஐந்து இடங்களில், இரண்டு இரண்டாக மொத்தம் பத்துச் சலங்கைகள் காணப்படுகின்றன. []     []     4.8.4.2. தாயிரா வாசிக்கும் முறை முதல் முறை இடதுகையினால் தாயிராவினை, மார்புக்குச் செங்குத்தாக இணைத்துப் பிடித்து வலது கை விரல்களில், சிலர் தவில் வித்வான்களைப் போன்று கூடு (தொப்பி அணிந்து ஓங்கி தட்டி இசையெழுப்புவர். []     இரண்டாம் முறை தாயிராவினை வலதுகையில் அழுத்தமாகப் பிடித்து, இடது கையின் உள்ளங்கைப் பகுதியில் தட்டி இசை எழுப்புகின்றனர். பாடல்கள் முடிவு பெறும் பொழுது சில தட்டுகள் அடுத்தடுத்ததாகத் தட்டி (மிருதங்கத்தில் மோரா வாசிப்பது போல்) முடிக்கின்றனர்.   பாடல்களிடையே வசனங்கள் பேசும் போது தாயிராவை பயன்படுத்தாமல், பாடும் பொழுது மட்டுமே தாயிரா மூலம் தாளப் போக்கினை கொண்டு செல்கின்றனர். பாடி முடித்தப் பின் தாயிராவை தங்களின் தோள் பையினுள் கச்சிதமாக வைத்த பின்னரே பொருட்களைத் தானமாகப் பெறுகின்றனர் தமிழக ஃபக்கீர்கள்.   4.9. கதைப்பாடல் பாடும் முறை தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் பாடும் பாடல் வகையினுள் கதைப்பாடல்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. ஏதேனும் இஸ்லாம் சமயம் சார்ந்த கதைகளையோ அல்லது சமயம் வளர்க்க அரும்பணி புரிந்த இறைநேசர்களின் கதையையோ பாடல், சொற்பொழிவு என்ற வகையில் ஃபக்கீர்கள் மாற்றி மாற்றிப் பாடுகின்றனர். கதையினைக் கேட்போருக்கு எளிமையாக, செவிகளுக்கு இனிமையாக, சிந்தனையைத் தூண்டி கதையை விட்டு விலகாவண்ணம் கதையின் பின்னலை அமைத்துப் பாடுவர். (எ.கா) "வாழ்ந்து வருகின்ற காலமதில் .... என்ன செய்தார்கள்? பாதுஷா நாயகமும் உண்ணு கின்ற நேரமதில் .... என்ன செய்தார்கள்? பாதுஷா நாயகமும் .. “ (நாகூர் ஆண்டவர் கதைப்பாடல்) மேற்கண்ட பாடல் வரிகளில் கதை மாந்தர்கள் அடுத்தடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்பதைக் கேள்வியாகக் கேட்டு அதனைப் பின்னர் பாடலாகவோ அல்லது கதையாகவோ பாடகர் கூறிச் செல்கின்றார். இவ்வாறு கதையை கேள்விகள் கேட்டு பின்னர் விடையை சொல்வதினால் கேட்போர் ஆர்வத்தைத் தூண்டச் செய்கின்றது. கதைப்பாடல்கள் கதாகாலட்சேபத்தோடு ஒத்துக் காணப்படுகின்றது.   4.10. தமிழக ஃபக்கீர்கள் பாடல்களில் இசைச்சிறப்புகள் தமிழக இஸ்லாமிய ஃபக்கீர் பாடல்களின் இசையானது எளிமையாக, இனிமையாக, அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் மெட்டிலேயே அமைந்துள்ளது. மேலும் நாட்டுப்புறப்பாடல்களின் தன்மைகளையேக் கொண்டிருக்கும்.    ஃபக்கீர்கள் பாடுகின்ற பாடல்களின் இசை எல்லை பெரும்பாலும் மத்திய ஷட்ஜத்திற்கும், தாரஸ்தாயி பஞ்சசமத்திற்கும் இடைப்பட்ட ஸ்தாயி எல்லைக்குள் அமைந்திருக்கின்றன. இப்பாடல்களின் இசையமைப்பு மிக எளிமையாகவும், சிரமமின்றி கிரகித்துப் பாடும் வகையிலும், கேட்போர் மனதைக் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமைந்திருக்கும். கர்நாடக சங்கீதத்தில் விருத்தம் பாடுதல் போன்று ஃபக்கீர்கள், பாடல்களுக்கு முன்போ அல்லது தனியாகவோ விருத்தமாக சில பாடல்களை பாடுகின்றனர்.   எடுத்துக்காட்டு ராகம்: ஹரிகாம்போஜி ராக அடிப்படையில் அமைந்த பாடல்   காமாக காமாக காமாக அல்ஹந்து இல்லாஹி அப்துல்லாயீம்   காகாமகாரீ ஸாஸாஸா ரீகரீ அல்லாஹு என்றவுரை சொல்லால் காம காகா காகா அன்பு தந்து அருள் காகாரீ ரிகமகாரீஸாஸாஸா  அல்லாஹுமான் அன்பருளால் எனதரிம்புகழ்  காகாரீஸா ஸாஸாரீகா ரீஸா  ஆதரித்து  அருள் புரிவாய்   பொதுவாக நாட்டுப்புற பாடல்களில் சங்கதிகள், கமகங்கள் இசை அலங்கார அணிகள் எதுவும் வருவதில்லை . கலப்பு (சங்கீர்ண) இராகங்களிலும், சுலபமான தாளங்களிலும் அமைக்கப்பட்டு இருக்கும்.   அவ்வாறே ஃபக்கீர்களின் பாடல்களிலும் இசை இலக்கண அழகுகள் குறைவாகக் காணப்படுகின்றது.    ஃபக்கீர்கள், கர்நாடக இசையின் இராகங்கள் குறித்து முறையான அடிப்படை பயிற்சியும், இலக்கணங்களும் தெரியாத போதும் அவர்கள் பாடுகின்ற சில பாடல்களின் மெட்டானது இயற்கையாகவே மாயாமாளவகௌளை, மோகனம், சிந்து பைரவி, ஹரிகாம்போஜி போன்ற ராகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.   எடுத்துக்காட்டு மோகனராக அடிப்படையில் அமைந்த பாடல் காகாகா ரிக்கா காரிக்கா, ரிரிகரீஸா ஸரிரீகா விதியினை என்றும் கருத்தாக எண்ணாதே மயிலே ரீ, ஸா, ஸாரீரீ ரீரீகா ரிஸ்ஸா ;  வேடன் வலையில் அகப்பட்ட மான்போல் விழப்பாயே குயிலே ரிக்காகா ரிக்காகா ரிக்காரீ ஸரிரிகா விதியினால் வாழுவார் மேதினில் உள்ளோர் மயிலே ஸாஸா ஸரிரீரீ ஸரிரீரீ ஸரிரீரீ ஸரிரீரீ ரிஸ்ஸா ; நம் மதியினால் வாழும் வல்லமை இல்லையோ குயிலே காகாபா பாதாதா பாதாபா காகாகா கபபதா, ஈமானை நெஞ்சினில் இதயம் பண்ணிக்கோ மயிலே ;பாதா ஸாஸாதா பாகா; தாதாபா காரீகா ரிஸ்ஸா நல்ல சீமானார் நிதம் தேர்ந்து கொள்வாயடி குயிலே –   *தாளங்கள் சமஎடுப்பாகவும், அதீத எடுப்பாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலும் பாடல்கள் திஸ்ர மற்றும் சதுஸ்ர நடைகளில் இயற்றப்பட்டுள்ளது.   எடுத்துக்காட்டு (சதுஸ்ர நடை) அல்லாஹ் புகழ் பாடல் தாளம்: சதுஸ்ர நடை ராகம்: சிந்துபைரவி ;ககரீகா ரீஸாஸாஸா ரீகா;ரீ ஸா ; ;; ஆமீனல்லா ஆமீனல்லா .... மிய்யா ..... ;ககரீகா ரீஸஸகா கா;ர் ஸா;;; ஆதமெல்லாம் நிறைந்த வொனை ;ககரீகா ரிஸாஸ ஈஸஸா  ஆதமெல்லாம் நிறைந்த வொனை ;ககரீகா ரிஸாஸ ஸாஸா  ஆளுகின்ற யாரைஹீமை ;பாபபபா ;கபா,தநீநிததா நிததா பபபா  எங்கும் நிறைந்தவனே ரஹ்மான்  ;தாததாரிமகாரீ ;ரீகரிரீ கரிரீ ஸா;;; ஏகத்திலில்லாத மீ   னை  முன்னவனே முதலவனே முடிவில்லா ஆண்டவனே  ;பாபாபா ;கப,தஸா நீதா;தா தா;பாபா  தன்னவனை தனியவனை ரஹ்மான்  ;தாததாரிமகாரீ ;ரீகரிரீ கரிரீ ஸாஸா தாய் தந்தை இல்லாதவனே   எடுத்துக்காட்டு (திஸ்ர நடை) பெண் புத்தி மாலை தாளம்: திஸ்ர நடை (3/4) ராகம் : மோகனம் ராக அடிப்படையில் காகாகா ரிககாகா ரிக கா,ரிரிகரீஸா ஸரிரீகா கட்டும் கணவனை விட்டுப் பிரியாதே மயிலே ஸா, ரீரீரீ ஸாரீரீரீரீரீ ரீரீகா ரிஸ்ஸா ; விட்டால் நட்டாற்று நீரைப்போல் கெட்டலைவாயடி குயிலே  ரிக்காகா ரிக்காகா ரிக்காரீ ஸரிரிகா உந்தன் கணவனுக்கு சதி செய்தாய் நீ பாவி ஸாஸா ஸரிரீரீ ஸரிரீரீ ஸரிரீரீ ஸரிரீரீ ரிஸ்ஸா ; அவர் வெந்து நரகில் விசனப் படுவாரே குயிலே காகாபா பாதாதா பாதாபா காகாகா கப்பதா, ஏழை புருசனை எள்ளனம் பேசாதே மயிலே பாதா ஸாஸாதா பாகா; தாதாபா காரீகா ரிஸ்ஸா நாளை வாளைக்குந்தும் நாளைப் பிறப்பாரே குயிலே   ஃபக்கீர் பாடல்களுக்கு சுருதி வாத்யம் என்று எதுவும் பின்னணி இசையாக இசைப்பதில்லை, என்றாலும் சில பாடல்களில் சிலர் ஆர்மோனியத்தினை ஸ்ருதிக்கென பயன்படுத்துகின்றனர்.   பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுப்புகள் இல்லை . மாறாக பல்லவி, வபலச் சரணங்கள் என்று இயற்றப்பட்டுள்ளது.   4.10.1. தனிப்பாடல்கள்   தனிப்பாடல்களின் மெட்டுகள் தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் சாயலை ஒத்ததாக காணப்படுகின்றது. இதில் இலக்கண வழுக்களும், ஸ்ருதி, தாளம் போன்ற வகையினுள் இசை வழுக்களும் மிகுந்து காணப்படுகின்றன. எனினும் இனிமையும் எளிமையும் இசைத்தன்மையில் கொண்டிருப்பதால் கேட்போரை மகிழச் செய்கின்றது. பண்டைய கிராமிய இசை மெட்டுக்களை மறையா வண்ணம் வழிவழியாக கொண்டு செல்வதாய் தனிப்பாடல்களின் மெட்டுக்கள் அமையப் பெற்றுள்ளன.   4.10.2. நெடும் பாடல்கள் இவற்றின் விளக்கம் அடுத்த இயலில் விளக்கப்பட்டுள்ளது. நெடும்பாடல்கள் பொதுவாக ஏதேனும் ஒரு கதையினை மையக் கருத்தாகக் கொண்டு, நூறு முதல் இருநூறு வரையிலான வரிகளைக் கொண்ட பாடல்களாய் அமையப் பெற்றவை. இவை கதாகாலேட்சபம் மற்றும் வில்லுப்பாட்டின் பாணியில் அமைந்துள்ளதால் பாடலும், வசனமும் என்ற வகையிலேயே பாட்டின் போக்கு அமையப் பெற்றுள்ளது. இவற்றை பெரும்பாலும் திஸ்ரம் மற்றும் சதுஸ்ர நடையிலே பாடுகின்றனர். எனினும் தாளத்தில் ஆவர்த்தன கணக்கிற்குள் அடங்காவண்ணமே பாடல் அமைந்துள்ளது. இந்த வகைப்பாடல்களும் எளிமையாகவும், இனிமையாகவும் அமைந்துள்ளதால் சொல்லப் போகும் கருத்தானது மக்களிடம் எளிதாக சென்றடைகின்றது. வீடுகளில் வாழும் வயதான இஸ்லாமிய பெண்மணிகள் இன்றளவும் ஃபக்கீர்கள் பாடியப் பாடல்களில் உள்ள கதைகளையும், மெட்டையும் நினைவு வைத்திருப்பதை ஆய்வாளர் களஆய்வின் போது கண்டறிய முடிந்தது. இது ஃபக்கீர்கள், பாடல்களை எளிமையான மெட்டமைப்பில் பாடியதன் விளைவால் நிகழ்ந்ததே.   4.10.3. கதைப்பாடல்கள்   நபிகள், சூஃபிக்கள், இறைநேசர்கள் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் மற்றும் கதைகளை, ஏதேனும் தங்களுக்குத் தோன்றிய மெட்டில் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு பாடுகின்றனர். (எடுத்துக்காட்டு) பாபா கதைப்பாடல்கள். பாடல்கள் வழி வழியாகப் பாடப்பட்டு வந்தாலும் சில பாவாக்கள் (ஃபக்கீர்கள்) அந்த நேரத்திலே சொந்தமாகப் பாடல்கள் இயற்றுவது உண்டு என்று அபீப் பக்கீர் என்ற திருச்சிராப்பள்ளி ஆழ்வார் தோப்பைச் சேர்ந்த ஃபக்கீர் கூறுகின்றார்.   4.11. முடிவுரை இசையைப் பொறுத்தமட்டில் ஃபக்கீர்கள் எளிமையாக, இனிமையாகப் பாடுகின்றனர். எந்த ஒரு முறையான அடிப்படைப் பயிற்சிகள் இல்லாதபோதும் இயற்கையாகவே இசையறிவைக் கொண்டுள்ளனர்.   பாடல்கள் பாடும் பொழுது இறையருள் இருப்பதை உணர்வதாகக் கூறுகின்றனர். பாடல்களின் சாஹித்யங்கள்4 மனப்பாடம் செய்தே வைத்துள்ளனர். பாடல்களில் உள்ள வார்த்தைக்களுக்கேற்ப தங்கள் குரலை ஓங்கியும், தாழ்த்தியும் பாடுகின்றனர். பெரும்பாலும் மத்ய தாரஸ்தாயிகளிலேயே பாடல்கள் அமைந்துள்ளது. பாடல்களின் மெட்டுக்கள் நாட்டுப்புற மெட்டமைப்பிலே காணப்படுகிறது என்பதை கள ஆய்வின் வழி அறிய முடிந்தது. சிலப் பாடல்கள் மோகனம், சிந்துபைரவி, ஹரிகாம்போஜி, மாயாமாளவகொளை போன்ற ராகங்களில் அமைந்துள்ளது. தாளங்களை நோக்குங்கால் சதுஸ்ர, திஸ்ர நடைகளில் அதிகமாக பயின்று வருகின்றது. தாளத்திற்கு 'தாயிரா' என்ற தாளக்கருவியே _______________________________ 4 பாடல் வரிகள் தமிழகத்தில் உள்ள எல்லா ஃபக்கீர்களும் பயன்படுத்துகின்றனர். 'தாயிரா' ஃபக்கீர்களை தனியே அடையாளப்படுத்தும் இசைக்கருவியாகத் திகழ்கின்றது என்பதை மேற்கண்ட ஆய்வின் வழி அறிய முடிகின்றது. ஃபக்கீர்கள் பாடல்களில் காணப்படும் இசைச் சிறப்புகள் போல், இலக்கிய அழகு நிறைந்து கிடக்கின்றன. அவற்றை அடுத்த இயலில் விரிவாகக் காணலாம்.   இயல் - 5   இயல் ஐந்து  ஃபக்கீர் பாடும் பாடல்களின் கரு மற்றும் இலக்கியக்கூறுகள்    ஃபக்கீர்கள் வழிவழியாய் பாடி வருகின்ற பாடல்களில் கருத்துச் செறிவும், இலக்கண அழகுகளும் மலிந்து காணப்படுகின்றன. ஃபக்கீர்கள் பாடும் பாடல்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றது.   I. தனிப்பாடல்கள்   1. போற்றிப் பாடல்கள் 2. முகம்மது நபிகள் மீதானப் பாடல்கள் 3. அவுலியாக்கள் மீதானப் பாடல்கள் 4. செல்வம், உயிர் நிலையாமைக் குறித்த பாடல்கள்   II. நெடும்பாடல்கள் 1. பெண்புத்திமாலை 2. சரித்திரப் பாடல்கள் 3. கிஸ்ஸா பாடல்கள் (சைத்தூண் கிஸ்ஸா) 4. மசாலா பாடல் வகை (நூறு மசாலா பாடல்)   சொல்லமைப்பு பாடல்கள் அழகியத் தமிழில் அமைந்துள்ளது, பாமர மக்களின் வட்டார வழக்குச் சொற்களும், அயல் மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளது.   'தொல, தாவம், தோணுது, ரவிக்கை , அலறி, புருசன், சண்டாளி, தொண, கெடந்து, டோலக்கு' போன்ற வட்டார பேச்சு மொழிச் சொற்கள் பாடல்களில் இடம் பெறுகின்றது.   அதுபோன்று 'ஜிம்ஆதி, துஆ, பிஸ்மில்லாஹ், ஹஜ்ஜி, சுபஹானல்லா, சகன், கப்ரு, மலாக்கு, ரூக, பாவா, ஜிந்தாபாத்' போன்ற அரபு மற்றும் பாரசீக மொழிச் சொற்களும் இடம் பெறுகின்றது.   மேற்கூறப்பட்ட பாடல் வகையினுள், கீழ்க்கண்ட இலக்கண அழகுகள் மலிந்து காணப்படுவது வரிசையாக விளக்கப்படுகிறது.   எதுகை ஒரு சொல்லில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையணி ஆகும்.   "நாட்டுப்புறப் பாடல்களில் தடுமாற்றமின்றி எதுகைகள் அமைந்திருப்பது நாட்டுப்புறப்பாடல் பண்புகளில் ஒன்றாகும்" 1   என்று ஆறு. அழகப்பன் (1999: 51) குறிப்பிடுகின்றார்.   மோனை சொற்களில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனையணி ஆகும். ஃபக்கீரர்களின் பாடல்களில் மோனையணி மலிந்து காணப்படுகின்றன.   சொற்பொருட் பின்வருநிலையணி "சொல் பின்னர் பல இடங்களில் வந்தும் ஒரு பொருளையே தந்து நிற்றலின் இது சொற்பொருட் பின்வருநிலை யாயிற்று".2   மேற்கூறப்பட்ட வகையில் ஃபக்கீர் பாடல்களில் சொற்பொருட் பின்வருநிலையணி பல இடங்களில் வருவதை பின்வருமாறு காணலாம்.   அடுக்குகள் பொதுவாக பாடல்களில் அடுக்கிக் கூறுவது மரபு. ஒருவர் சொல்ல வருகின்ற கருத்திற்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டி அடுக்கி கூறுதல் ஆகும்.   இங்ஙனம், ஃபக்கீர்களின் பாடல்களில் காணப்படும் இலக்கியக் கூறுகளையும், பாடல்களையும், அதன் சிறப்புகளையும் அடுத்து கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து அறியலாம். _______________________________ 1. ஆறு அழகப்பன், நாட்டுப்புற பாடல்கள் - ஒரு திறனாய்வு ,1999, ப.151. 2. வ.த. இராமசுப்ரமணியம், தண்டியலங்காரம் மூலமும் தெளிவுரையும், 1998, ப. 161.   5.1. போற்றிப் பாடல்கள் இறைவனைப் போற்றி வினைகளை துவங்குவது எல்லா சமயத்தாருக்கும் பொதுவானது. அத்தப் மரபில் பாடல் தொழிலை மேற்கொள்ளுகின்ற தமிழ்நாட்டு ஃபக்கீர்களும் அல்லாவின் சிறப்புக்களைக் கூறித் தமக்கு அருள்வேண்டி, இறைவனைப் பாடித் தங்கள் பாடல் தொழிலைத் தொடங்குகின்றனர்.   ஃபக்கீர்கள் தாங்கள் பாடுகின்ற போற்றிப் பாடல்களில் முதலில் இறைவனை வணங்குகின்றனர். அடுத்த நிலையில் இறுதி நபியாகிய முகம்மது நபியையும், இறைநேசர்களாகிய அவுலியாக்களுள் முதன்மையான இடத்தைப் பெற்று விளங்குகின்ற முகைதீன் அப்துல்காதர் ஜீலானியின் புகழை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடுகின்றனர். இவை தவிர, அந்தந்த வட்டாரத்தில் புகழ் பெற்று விளங்கும் அவுலியாக்கள் மீதும் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுகின்றனர்.   போற்றி பாடல்கள் (எடுத்துக்காட்டு) இறைவன் மீதான வேண்டுதல் பாடல் "அருளை வேண்டி அன்பை வேண்டி அல்லா உன்னை நாடினேன் பாடினேன் உலகில் வாழ உன் கருணை வேண்டி - (இருமுறை) காக்கும் இறைவா நாடினேன் நாடினேன் - (அருளை) அன்பில் உருவான அலிப்பில் பெரியோனே அல்லா உன்னை கெஞ்சிக் கேட்கிறேன் - (இருமுறை)  அகந்தை எண்ணம் நீங்கட்டும் அறிவும் வளரட்டும்....... (இருமுறை) பண்போடு கேட்கிறேன் பாவம் நீங்கட்டும் - (அருளை) எங்கும் நிறைந்தோனே ஏக வல்லோனே என்றும் என் வாழ்வில் இணைந்து நிற்போனே ஈன எண்ணம் நீங்கட்டும் தூய்மை வளரட்டும் - (இருமுறை) கோமானே! ஈமானே! குறையைத் தீர்ப்பாயே ! - (அருளை) மண்ணின் ஒளியாக அண்ணல் பெருமானை தந்த இறையோனே! அந்தம் இல்லானே! - (இருமுறை) வயதினில் அருளோடு வாழ்வைத் தருவாயோ - (இருமுறை) வாழ்வும் நீ வளமும் நீ கருணைத் தருவாயே!......." (அருளை)   ஃபக்கீர்கள் இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ள இறைத்தூதராகிய முகம்மது நபிகள் மீதானப் பாடல்களைப் பாடுகின்றனர்.   இஸ்லாம் சமயத்தில் இறைத்தூதுவர்களை நபிமார்கள் என்பர். மனித இனத்திலிருந்து சிலரை இறைவன் தமது தூதுவர்களாக அனுப்பியுள்ளார் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. இந்த நபிமார்கள் மனிதர்களை நேர்வழிப்படுத்தி, இறைவனின் தேவையை எடுத்துக்கூறி, வேதங்களை மக்களிடையே பரப்பி வருதலையே தமது கடமையாகக் கொண்டிருந்தனர். ஆதம் அவர்கள் முதல் நபியாகவும், முகம்மது நபி அவர்கள் இறுதி நபியாகவும் கருதப்படுகின்றனர். இஸ்லாமியரின் நம்பிக்கையின் அடிப்படையில் மொத்தம் வந்த ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களில், முகம்மது நபிநாயகம் இறுதி தூதுவர் ஆவார்.   ஃபக்கீர்கள் பாடும் கீழ்க்கண்ட பாடலின் வழி முகம்மது நபியின் சிறப்பினையும் அவர் இவ்வுலகில் ஆட்சி செய்த சிறப்பினையும் பாடுதலைக் காணலாம்.   5.1.1. முகம்மது நபி மீதான பாடல் (எடுத்துக்காட்டு) "ஆதி ரஹ்மானவன் தன்னொளியினால் தெளிவாகப் பிறந்த நபியே! நபியே! ஆதி ரஹ்மானவன் தன்னொளியினால் தெளிவாகப் பிறந்த நபியே! நபியே! ஆச மயில் வேசமாய் நேர விசுவாசமாய் அருள் பெற்று வந்த நபியே! நபியே! தோதி நபி ஆதம் தொடுத்து வரும் நபிமார்களில் தொல்லுலகில் வந்த நபியே! சொல்லரிய வந்த சினம் கொண்ட குபிரோர்களை துரத்தியே வென்ற நபியே! நீதி முறை தவறாது வேதன் அருள் நீதியினை நிறுத்தி அரசாளும் நபியே! நிச்சயம் வைத்தாளும்மன் திக்கவைத்தோதும் முறை நேர்மை கொண்டருளும் நபியே! ஆதி ரஹ்மத்தானை எட்டு சுவர்க்கத்தையும் பரிவித்து அழைத்த நபியே! மாறா மணங்கமழும் மேனி நபியே! தூய வஹ்துல் நல் நபியே! நீர் மேவும் செய்யது ரசூல் மேல் கார் மேகம் சித்திரையின் செந்தமிழால் யான் இனிய கவி பாட கருத்தென உதவிட காப்புத் தாயேன்... ஆதி அருள் கொண்ட வேதமே! அலிப் என்ற அச்சரமே! அமைந்திட்ட புருகானே! ஜோதியே உடையாகி துய்யோனே ரஹ்மத்தை செய்குவாய்!”   மேற்கண்ட பாடல் அல்லாவின் பெருமைகளை மிக எளிமையாக அனைவரும  புரிந்து கொள்ளும் வகையில் ஃபக்கீரால் பாடப்படுகின்றது.   பாடல் பொருள் ஆதியான அல்லாவின் பேரொளியினால் படைக்கப்பட்டு, அவரது அன்பையும், அருளையும் பெற்றவர் நபி. இம்மண்ணில் முதன்முதலாக ஆதம் நபியை மனிதனாக அல்லாஹ் படைத்தார். அந்த வழிமுறையில் வந்த முகம்மது நபி மதப்பிரச்சாரத்தின் போது எதிர் நின்ற பகைவர்களை எல்லாம் விரட்டி வென்றவராவார். இறைவனால் அருளப்பட்ட திருமுறை திருக்குர்ஆனின் சொற்படி முகம்மது நபி ஆட்சிபுரிந்தார். அத்தகைய நபி காட்டிய வழியை மனத்தில் நிறுத்தி ஓதுவார்க்கு நேர்வழியை அருளக்கூடியவர். முகம்மது நபியின் தாய் தந்தையராகிய ஆமினா, அப்துல்லாஹ் இருவரும் குழந்தை வேண்டி நோன்பு நோற்றிருக்கும் வேளையில், அல்லாஹ் எட்டு சுவர்க்கங்களையும் ஒன்றுசேர்த்தாற் போன்று ஆமினாவின் வயிற்றில் முகம்மது நபியை ஒளியாகப் படைத்தான். முகம்மது நபியின் மேனி மாறாத மணங்கமழும் செந்தாமரையின் மலரைப் போன்ற தூய்மையான நிறத்தினை உடையது என்று பொருள்பட ஃபக்கீர்கள் பாடுகின்றனர். இலக்கிய நயம் மேற்கண்ட பாடல் தமிழ்நாட்டில் வாழும் எல்லா ஃபக்கீர்களாலும் பிரபலமாகப் பாடப்படுகின்றப் பாடல். இது ஓர் காப்புப் பாடல் ஆகும்.3 எளிய தமிழில் அமைந்துள்ளது. எதுகை, மோனை அழகுகள் மலிந்து காணப்படுகின்றன.   எடுத்துகாட்டு: "ஆதி ரஹ்மான் ஆச மயில் தொல்லுலகில் ________________________________________ 3 பாடல் பாடும் முன் இறைவன் தன்னைக் காத்தருள் வேண்டி பாடும் பாடல்.   சொல் லரிய நீர் மேவும் கார் மேகம் ...''   இயைபு "ஆதி அருள் கொண்ட வேதமே அலிப் என்ற அச்சாரமே அமைந்திட்ட புருகானே"   முகம்மது நபி தம் கனவில் வந்து அருள்புரிய வேண்டும் என்ற ஃபக்கீரின் ஆசையினை கீழ்கண்ட பாடல் மூலம் பாடுகின்றார்.   கருத்தாய்வு மேற்கண்ட பாடல் முகம்மது நபியின் குணநலன்களை கூறுவதோடு முகம்மது நபியை பின்பற்றுவதால் ஃபக்கீரின் வாழ்வில், சிந்தையில் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கின்றது.   5.1.2. முகம்மது நபி மீதான பேச்சு வழக்கில் அமைந்த பாடல் "வரவேணும் எனதாசை என் மகமூதரே கனவில் வரவேணும் எனதாசை ...... (இருமுறை) தரவேணும் தருஜாத்தே தவ்ஹீத் முஹத்தே (இருமுறை) தங்க முகம்மதர் இங்கிதராஜர் மங்க ஆயிஷா மண்வள் ரானோரே வரவேணும் எனதாசை என் மகமூதரே கனவில் வரவேணும் எனதாசை.. வந்தால் விருது தரணும் வள்ளல் நபி நாயகமே (இருமுறை) ஆகாயத் திருக்கரத்தில் தனித்திருந்த தாயகமே (இருமுறை) வந்து வணங்கிடும் சிந்தை துலங்கிடும் ..... (இருமுறை) வரவேணும் என தாசை என் மகமூதரே சுந்தர மகமூத நபியே ...... (வர வேணும்) மக்கத்து அதிபதியே மகமூதர் என் கனியே ...... (இருமுறை) ஹக்கண் அருள் பெறும் மிக்க வளம் தரும் சொக்கன் அருள் பெறும் என் நபியே வரவேணும் என தாசை என் மகமூதரே கனவில் வரவேணும் எனதாசை ...... அன்பர்கள் பேட்டை வாசல் அருள் பெற்ற பாப்பு சீசன் ...... (இருமுறை) ஆடிடாமல் பாடினேனே அடியேன் பேரு டேப்பு தாசன்... (இருமுறை) திருநபி உமதிரு வனமலர் அணிதினம்... (மூன்று முறை) தீர்க்க கரசரே! திருநபி நீரே! தீன் நபி தீன் முஸ்தபாவே .... வந்து வணங்கிடும் சிந்தை துலங்கிடும் .... (இருமுறை) சுந்தர மகமூதர் திரு நபியே...” (வர வேணும்)   பொருள் எனக்கு விருப்பமான முகம்மது நபியே என் கனவில் வரவேண்டும் என்பது எனது நீண்டநாள் அவா, அவ்வாறு, கனவில் வரும் பொழுது உண்மையினை நிலைநாட்டும் அன்பையும், உயர்வையும் அளிக்க வேண்டும். கொடையாளரான முகம்மது நபி கனவில் வந்தால், எனக்கு விருதினை அளிக்க வேண்டும்.   ஆகாயம் என்னும் இவ்வுலகில் தாயாக விளங்கும் முகம்மது நபியை வணங்குவதால் சிந்தை தெளிவடைகின்றது. அதனால், கனவில் வர வேண்டும் உலகத்திற்கு எல்லாம் மையமாக விளங்குகின்ற மக்கா நகரத்தில் மனதிற்கு இனிமையாக ஆட்சி செய்தவரே, இறைவனின் அருள் பெற்று வந்த நபியே, நான் வளம் பெறுவதற்கு நீங்கள் என்னுடைய கனவில் வரவேண்டும். அதுவே என்னுடைய ஆசையாகும். அழகிய திருமுகத்தைத் தினமும் பார்க்க விரும்புகின்றேன். அதனால், நான் ஆடாமல் உன்னருள் வேண்டி பாடிய வண்ணம் நிற்கின்றேன். எனது ஆசை நிறைவேறக் கனவில் வரவேண்டும் என்றும் போற்றிப் பாடுகின்றார்.   இலக்கிய நயம்   மேற்கண்ட பாடல் எளிய தமிழில், பேச்சுவழக்கில் அமைந்துள்ளது. எதுகை, மோனை மற்றும் இயைபுநிரம்பக் காணப்படுகின்றது. "வரவேணும் எனதாசை என் மக மூதரே தரவேணும் தரு ஜாத்தே”   "வந்தால் விருது தரணும் வள்ளல் நபி நாயகமே ஆகாயத் திருக்கரத்தில் தனித்திருந்த தாயகமே"   "சுந்தர மகமூத் நபியே மக்கத்து அதிபதியே மகமூதர் என் கனியே''   மேலும் இப்பாடல் தமிழுடன் அரபுச் சொல்லும் கலந்து மணிப்பிரவாளமாக வருகின்றது. 'தரவேணும் தருஜாத்தே' தவ்ஹீத...”   பேச்சு வழக்குச் சொல் "..... அன்பர்கள் பேட்டை வாசல் அருள் பெற்ற பாப்பு சீசன் ...”   "ஆடிடாமல் பாடினேனே அடியேன் பேரு டேப்புதாசன்...”   5.1.3. முகம்மது நபி பட்டத் துன்பங்களை விளக்கும் பாடல் "விண்ணோரும் மண்ணோரும் மறை ஓதும் மா நபியே எல்லோரும் போற்றும் என் நபி முகம்மதே  நிலைமாறும் தெருவோரம் மறை ஓதும் போது கொடியோர்கள் பலர்கூடி நபியை உதைத்தார்... (விண்ணோரும்) தாளாத பெருந்துயரத்தினில் தனித்து வந்த பெருபதம் தினம் ஓதி உகந்து வந்த ஜோதியே! தேனான திருமறையை திகட்டாமல் ஓதிடவே யான் இன்பம் பெறும் ஜோதியே! வாழ்வினிலே கொடியோர்கள் பலர் கூடி நபியை உதைத்தார்... (விண்ணோரும்) இறையோனின் மன்றத்திலே மன்றாடும் நேரத்திலே என்பாதம் நாளும் சொர்க்கம் தேடுதே.... (இருமுறை) மக்காவின் தங்கமிது மதினாவின் வைரமிது...... (இருமுறை) வாழ்வினிலே கொடியோர்கள் பலர்கூடி நபியை உதைத்தார். (விண்ணோரும்)”   மேற்கண்ட பாடல் முகம்மது நபியின் பெருமைகளை கூறுவதுடன் தான் வாழ்ந்த காலத்தில் கொடியோர்களால் நபிகள் நாயகம் பட்ட துன்பத்தினையும் தங்கள் பாடல் வழி எடுத்தியம்புகின்றனர்.   5.2. அவுலியாக்கள் மீதான புகழ்மாலைப் பாடல்கள் இஸ்லாம் சமயத்தில் நபிமார்கள் பெற்ற சிறப்பிற்கு அடுத்த நிலையில் இறைநேசர்களான அவுலியாக்கள் இடம் பெறுகின்றனர். ________________________________ 4. ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இடம் பெறுதல் மணிப்பிரவாளமாகும்  5. நற்பலன் 6. இறைவனில் ஒன்றான தன்மை   அவுலியாக்கள் : அ + வலி + யாக்கள் இதில் 'வலி' என்பது நெருங்கியவர்கள், நண்பர்கள் என்ற பொருளில் குர்ஆனில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளன. "தன்னை அறிந்து, தன் இறைவனையும் அறிந்து அவ்விறைவனின் பேரருளையும் அன்பையும் நாடி தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இறைநேசர்கள் ஆவார். இறைவனுக்கு மிக நெருங்கியவர்கள் என்ற பொருளில் இறைநேசர் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது” என்று கா.ரஷீத் அலி7 கூறுகின்றார். (இறைநேசர்களை குறித்து இயல் மூன்றில் விளக்கப்பட்டுள்ளது.) ஃபக்கீர்கள், தங்கள் பாடல்களில் இஸ்லாமிய சமயத்திற்கு அவுலியாக்கள் ஆற்றிய சமயப் பணிகளை குறித்து பாடலாகப் பாடுகின்றனர். அவுலியாக்கள் எனப்படும் இறைநேசர்களில் முதன்மை இடத்தைப் பெற்றவரான முகைதீன் அப்துல்காதர் ஜீலானி பற்றிய பாடல்களைப் ஃபக்கீர்கள் முதலில் குரு வணக்கமாக பாடுகின்றனர்.   5.2.1. முகைதீன் அப்துல் காதர் ஜீலானி மீதான பாடல் (எடுத்துக்காட்டு) "மீரான் மீரான் மீரான் மீரான் முகையத்தீனே வாராய்! என் குருவே! யாபகதூர் தாதா! பாரில் உம்மை புகழ்ந்திடுவேன் நான் பாதமலர் பணிந்திடுவேன் மாமதினா நன்நபியின் பெயரால் ....... (இருமுறை) (மீரான்) நீங்கள் அவுலியாக்கள் எல்லோருக்கும் அலிப்பே உம்மை அழைக்கிறது தெரியலையோ சாகிபே... (இருமுறை) யாகுசலா மென்னும் தஸ்தகீரே! என் நடையிலே என்ன குத்தம் குறை இருக்கிறது என்று தெரியலே... (இருமுறை) மீரான் மீரான் மீரான் மீரான் யான் எண்ணிடாத எடுத்த ஜென்மம் போதுமா இறைவன் என் தலையில் விதி அளித்ததாகுமா.... (இருமுறை) (மீரான்) எட்டடியின் தீவுக்கரை ஓரமா- கதை எட்டுடனே நாவு ஒன்று சேருமா- கையில் கிட்டிடாத கவி எனக்கு கிடைத்திடுமா- அல்லது  __________________________ 7. கா.ரஷீத் அலி, மதுரைத் தர்காக்களின் நடைமுறைகளும் விழாக்களும், ப.31.   கெட்ட விதி வந்து என்னைத் தடுத்திமா மீரான் மீரான் மீரான் மீரான் நான் இல்லறத்தில் நன்மை பெற நாடினேன் இந்த இல்லறத்தில் மேன்மை பெற நாடினேன் யாமுகையத்தீனே! உங்களை நான் தேடினேன் ஏழை கை எடுத்து கண்ணீரோடு மேவினேன் யான் கை எடுத்து கண்ணீரோடு மேவினேன் கவி வாலை தாசன் உங்கள் புகழ் பாடினேன் பாரில் உம்மை புகழ்ந்திடுவேன் பாத மலர் பணிந்திடுவேன் மாமதினா நன்நபியின் பெயரால்....... (இருமுறை)”   பொருள் என் குருவாகிய முகையத்தீனே, இவ்வுலகில் உங்கள் பாதம் வணங்கி புகழ் பாடுவேன். நான் நபியின் பெயரால் உள்ள அவுலியாக்கள் அனைவருக்கும் முதன்மையானவரே எனது பழக்கத்தில் என்ன குற்றம் கண்டதால் நான் உங்களை அழைத்தது உங்களுக்குப் புரியவில்லை. இறைவனின் நேசரே எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேச வேண்டும். கருணை உள்ளம் கொண்டவரே அருள் பெரும் பொருட்டு, ஏழைகள் கூடி உங்கள் சந்நிதியைத் தேடி வருகின்றோம். "நான் இல்லறத்தில் நன்மை பெற நாடினேன் இந்த இல்லறத்தில் மேன்மை பெற நாடினேன் யாமுகையத்தீனே! உங்களை நான் தேடினேன் ஏழை கை எடுத்து கண்ணீரோடு மேவினேன் யான் கை எடுத்து கண்ணீரோடு மேவினேன்..."   மேற்கண்ட பாடல் மூலம் ஃபக்கீர்கள் முகைதீன் அப்துல்காதர் ஜீலானியின் பெருமையைப் பாடுவதுடன் தங்கள் வறுமை நிலையினையும் தங்கள் முன்னால் நிற்போருக்கு மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர்.   5.2.2. அவுலியாக்கள் மீதான பொதுவான பாடல் (எடுத்துக்காட்டு) "சந்தனம் பூச்செண்டு சூடு ஒலிமார்கள் பாதம் நீ நாடு அருள் சேருமே இருள் தீருமே வளமான வாழ்வு வந்தாகுமே... (சந்தனம்) ஆசித்தான சூஃபியாக்கள் அமைத்தானே உலகில் அ என்றால் அவுலியா என்றானே திருமறையில்   உந்தன் இதயம் ஒளிவீச உடையோனின் ஆசையே... (சந்தனம்) ஆடும் பேய்கள் அரண்டும் ஓடும் அற்புதமே கண்டு சூனிய நோய்கள் சுழன்று ஓடும் காட்சிதனை கண்டு ஒலிமார்கள் உடல் என்றும் மடியாது மண்ணிலே... (சந்தனம்) அண்ணலே நபியே மறைவாய் இருந்து மகத்துவம் தந்தார்கள் போகின்ற பாதையில் புண்ணியம் என்று புரிந்து கொண்டார்கள் அவுலியாக்கள் உடல் என்றும் மடியாது மண்ணிலே அருள் சேருதே இருள் தீருதே மணமான வாழ்வு வந்தாடுதே.... சந்தனம் பூச்செண்டு சூடு ஒலிமார்கள் பாதம் நீ நாடு...   மேற்கண்ட பாடல், மக்கள் அவுலியாக்களைச் சென்று வணங்குவதால் கிடைக்கும் பேறுகளை விளக்குகின்றது.   சந்தனம், பூசெண்டு சூடி அவுலியாக்கள் பாதம் நாடினால் அருள் சேரும், இருள் எனும் இன்னல்கள் நீங்கி வளமான வாழ்வு வந்து சேரும். மேலும், திருமறை குர்ஆனிலே 'அ' என்ற எழுத்திற்கு அவுலியா என்று பொருள் உரைத்துள்ளனர். அதனாலேயே அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டவர்களாகச் சூஃபிக்கள் உலகிற்கு வந்தனர். எனவே, அவுலியாக்கள் பாதத்தினை நாடினால் மனது ஒளி வீசும் எனப் பாடுகின்றனர்.   மேலும், அவுலியாக்களின் அற்புதச் செயல்கள் பலவற்றைக் கண்டு ஆடுகின்ற பேய்கள் பயந்து ஓடிவிடும். அவர்களுடைய சக்தியினால் உங்களைப் பிடித்திருக்கின்ற நோய்கள் தூரவிலகிவிடும். அவுலியாக்களின் உடல் என்றுமே இம்மண்ணில் மடியாது. எனவே நீங்கள் அவுலியாக்களின் பாதத்தை நாடிச் செல்ல வேண்டும் என்று பாடுகின்றனர்.   இலக்கிய நயம் மேற்கண்ட பாடலில் இயைபுநிரம்பக் காணப்படுகின்றது.   ''சந்தனம் பூச்செண்டு சூடு ஓலிமார்கள் பாதம் நீ நாடு”   "அருள் சேருமே இருள் தீருமே வளமான வாழ்வு வந்தாகுமே''   இறைநேசர்களை அடக்கம் செய்த தர்க்காக்களின் பெண் பால் அவுலியாவிற்கு என உள்ள ஒரே தர்கா நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள ஆற்றங்கரை என்ற ஊரில் அமைந்த ஆற்றங்கரை நாச்சியார் தர்கா. ஆற்றங்கரை நாச்சியாரை தாயாக நினைத்து கீழ்கண்ட பாடலை ஃபக்கீர் பாடுகின்றார்.   5.3. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள ஆற்றங்கரை என்ற ஊரில் அமைந்த 'ஆற்றங்கரை நாச்சியார் தர்கா' மீது பாடிய பாடல்   "ஆத்தங்கரை தாயே அம்மா அடிபணிந்த நாங்கள் அம்மா.... (இருமுறை) சையதலி பாத்திமா சஞ்சலத்தை தீரம்மா.... (இருமுறை) வையகத்தில் வேறேதும் கதியே எனக்கு இல்லை .... (இருமுறை) உன்பாதம் தஞ்சம் என்று நாடி வந்தோம் எங்கள் தாயே ...... (ஆத்தங்கரை) அறுத்த சேவல் கூவுதம்மா அம்மா உன் தர்காவிலே ....... (இருமுறை) ஓடாத பேய்பிணிகள் ஓடுதம்மா உன் பேரு சொன்னால்... (இருமுறை) கோழி ஒன்று நேர்ந்து விட கூடுதலாய் முட்டையிட மறுகோழி நேர்ந்து விட கோழியும் சேவலாகி விட ... (ஆத்தங்கரை) கோடானு கோடி மக்கள் குறைகளை தீர்த்தவரே ...... (இருமுறை) எங்கள் குறை தீர்க்க வேண்டும் ஏகனருள் பெற்ற மாதா - சையதலி பாத்திமா எங்கள் கவலையைத் தீரம்மா... (ஆத்தங்கரை)”   கருத்தாய்வு மேற்கண்ட பாடல் மூலம் ஆற்றங்கரை நாச்சியார் தர்கா மீது சேவல், கோழி போன்றவற்றை ஃபக்கீர்கள் நேர்ந்து விடும் பழக்கத்தை கொண்டிருந்தனர் என்பது புலனாகின்றது. பாடல் வரிகள் பேச்சு வழக்கிலேயே இயல்பாக அமைந்துள்ளன.   5.4. தக்கலை பீர் முகம்மது அப்பா மீதான பாடல்: தமிழகத்தின் தென் கோடியான குமரி மாவட்டத்தில், தக்கலை என்னும் இடத்திற்கு அருகில் (தக்கலைப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில்) அமைந்துள்ளது. தக்கலை பீர்முகம்மது தர்கா. இங்கு அடக்கமாகியிருக்கும் பீர்முகம்மது அவுலியாவின் மீது ஃபக்கீர்கள் மனமுருகி பாடல் பாடுகின்றனர்.   "பாட்டொன்று சொல்வேன் பரவசம் ஆவேன் கேட்டு இன்புறுவேன் பாதம் நான் பணிவேன். தக்கலை பீர் முகம்மதுவே..... (இருமுறை) தென்பாண்டி ஊராம் வஞ்சியின் பெயராம் தரிசனம் தருவீரா! தரிசனம் தருவீரா! நாதா! தரிசனம் தருவீரா!....... (இருமுறை) தன் காத்துண்டு கலையமுதுண்டு ரப்புடன் கலந்தீரா ஆடிய ஆட்டம் ஆடி முடிந்தது பாடிய பாட்டும் பாடி முடிந்தது நாளது போல தோணுது உலகம் ஞானக் கண்ணாலே ... (இருமுறை ) பாதம் நான் பணிவேன் தக்கலை பீர் முகம்மதுவே .... மெளத்துக்கும் முன்னே முகூத்தான உமது வயதும் முந்நூ றோ- நாதா வயதும் முந்நூ றோ....... (இருமுறை) அல்லாஹ்வை தவிர எல்லாம் மறந்து இருந்தீர் சில நாளாம்… (இருமுறை) ஆடிய ஆட்டம் ஆடி முடிந்தது பாடிய பாட்டும் பாடி முடிந்தது நாளது போல தோணுது உலகம் ஞானக் கண்ணாலே ... (இருமுறை) பாதம் நான் பணிவேன் தக்கலை பீர் முகம்மதுவே.... (பாட்டொன்று)"   கருத்தாய்வு இப்பாடல், தக்கலை பீர்முகம்மது என்பவர் முந்நூறு வயதுவரை வாழ்ந்தார். சில காலம் அல்லாவை மறந்து இருந்தார் என்றும், அவர் தன் "காத்துண்டு, கலையமுதுண்டு ரப்புடன் (இறைவனுடன்) சேர்ந்த பின்னர், அவர் ஆடிய ஆட்டங்களும், பாடிய பாடல்களும் முடிவுக்கு வந்தன” என்று ஃபக்கீர்கள் பாடுகின்றனர். 5.5. மதுரை கோரிப்பாளையம் சுல்தான் அலாவுதீன் (அவுலியா) மீதான பாடல் மகா மகா ராஜாரே மல்லிகைப்பூ வாசரே.... (இருமுறை) காஜா சுல்தான் அலாவுதீன் ஜிந்தாபாத் உறஜரத் காஜா சுல்தான் அலாவுதீன் ஜிந்தாபாத் ..... (மகா மகா) நல்ல அரபுநாட்டில் பிறந்தவரே நல்ல அற்புதங்கள் செய்தவரே....(இருமுறை) இறைவனின் ஆணையை இதயத்தில் ஏற்று இந்நாடு வந்தீரே..... ஏழைகளுக்காக இறையோனிடத்திலே – இந்த ஏழைகளுக்காக இறையோனிடத்திலே துஆ கேட்க வேண்டும் பாவா! ஜிந்தாபாத் .... எங்களுக்காக துஆ கேட்க வேண்டும் பாவா! ஜிந்தாபாத்.... (மகா மகா) நல்ல கருணை உள்ளம் கொண்டவரே நல்ல காரணத்தில் சிறந்தவரே அருள் பெற நாடி ஏழைகள் கூடி உங்கள் தருபாரை தேடி...... (இருமுறை) ஏழைகளுக்காக இறையோனிடத்திலே - இந்த ஏழைகளுக்காக இறையோனிடத்திலே துஆ கேட்க வேண்டும் பாவா! ஜிந்தாபாத்...   5.6. தத்துவப்பாடல்கள் ஃபக்கீர்கள் பாடும் பாடல்களில், மனிதன் நல்வாழ்வு மேற்கொள்ளும் பொருட்டு பல தத்துவங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.   மனது எனும் கால் "தவழ்ந்து நடக்கையிலே நான்கு கால்களடா தனித்து நடக்கையிலே இரண்டு கால்களடா தளர்ந்து நடக்கையிலே மூன்று கால்களடா தலைவன் அழைக்கையிலே எத்தனை கால்களடா .......... (இருமுறை) மனதின் கால்கள் ஒழுங்காய் நடந்தால் மனிதனின் கால்கள் ஒழுங்காய் நடக்கும் ............... (இருமுறை) உனது எனது சண்டை ஓய்ந்தால் உலகத்தில் கால்கள் அமைதியடா... (தவழ்ந்து) ஆசையின் கால்கள் ஒழுங்காய் இருந்தால் வாழ்க்கையின் கால்கள் ஒழுங்காய் இருக்கும் ஆசையின் கால்கள் மாறிடும் போது வாழ்க்கையின் கால்கள் மாறுதடா ...... (தவழ்ந்து) நமக்கு முன்னால் உள்ளவர் சென்ற பாதையில் போயாகும் கால்கள் நன்மையடா வந்தது வரட்டும் என்பவரின் பாதை மாறிடும் கால்களடா ... (தவழ்ந்து)”   கருத்தாய்வு மேற்கண்ட பாடல், மனிதன் பிறந்தது முதல் இறந்தது வரை அடையக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் அவனது மனநிலையைப் பொறுத்தே அமைகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. உலகில் மனிதன் பிறந்தவுடன் தன்னுடைய இரண்டு கால்களுடன் இரண்டு கைகளையும் சேர்த்து நான்கு கால்களாகத் (தவழ்ந்து) நடக்கின்றான். சுற்று வளர்ச்சி அடைந்த பின் இரண்டு கால்களால் நடக்கின்றான், வயது முதிர்ந்த காலத்தில் தன் இரண்டு கால்களுடன், ஊன்றுகோலையும் கொண்டு மூன்று கால்களில் நடக்கின்றார். அதே மனிதன் இறைவன் தன்னை அழைக்கும் போது எத்தனை கால்கள் கொண்டு நடக்கப் போகின்றான் என்பதை உள்முகமாக பாடும் விதமாக அமைந்துள்ளது.   மேலும், ஒவ்வொரு மனிதனின் மனக்கால்கள் ஒழுங்காக நடந்தால் அவன் வாழ்க்கைக் கால்கள் ஒழுக்கமான வாழ்க்கை நோக்கியே நடக்கும், அதாவது ஒருவன் தன் எண்ணத்தை நல்வழியில் பயன்படுத்தினால் அவன் வாழ்க்கையும் நல்லமுறையில் அமையும் என்றும், உலகத்தில் ஒவ்வொருவனும் உனது, எனது என பொருளின் மேல் கொள்ளும் ஆசைகளைத் துறந்தால், உலகத்தின் வாழ்க்கை எனும் கால்கள் அமைதியடையும். மேலும் நம் முன்னோர்கள் சென்ற பாதையினைப் பின்பற்றினால் நமக்கு நன்மையே கிடைக்கும். தன் மனத்தில் எழும் ஆசை எனும் கால்களை கட்டுப்படுத்தி வாழ்ந்தால், அவன் வாழ்க்கை எனும் கால் அமைதியடையும் என்ற கருத்துக்களை அழகாகப் பாடல்வழி சுட்டுகின்றனர்.   இலக்கிய நயம்   எதுகை மேற்கண்ட ஃபக்கீர் பாடும் பாடலில் எதுகையணி நிரம்பக் காணப்படுகின்றது. "தவழ்ந்து நடக்கையில் நான்கு கால்களடா தனித்து நடக்கையில் இரண்டு கால்களடா தளர்ந்து நடக்கையில் மூன்று கால்களடா” "மனதின் கால்கள் ஒழுங்காய் நடந்தால் மனிதனின் கால்கள் ஒழுங்காய் நடக்கும்”   இப்பாடலை ஃபக்கீர்கள் எளிய நாட்டுப்புற மெட்டிலேயே பாடுகின்றனர். தாயிராவில் 'திஸ்ர’8 நடையினை வாசிக்கின்றனர். ______________________________ 8. தகிட தகிட என்ற திஸ்ரநடை குறித்த இலக்கணம் அவர்களுக்கு முறையாகத் தெரியாத      போதும், இயற்கையாகவே அந்த தாளத்தில் இசைக்கின்றனர்.   5.7. செல்வம் நிலையாமையை வலியுறுத்தும் பாடல் (எடுத்துக்காட்டுகள்) ஒருவன் தான் வாழ்கின்ற கால எல்லையினுள் செல்வம் சேர்ப்பதிலும், மனைவி மக்கள் என பொழுது செலவழிப்பதைக் காட்டிலும் இறைவனை நாடி அருள் பெறுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஃபக்கீர் பாடலாகப் பாடுகின்றனர்.   பாடல் : 1 ரூக பிரிக்கும் இஸ்ராயில் வந்திடும் போது யார் கதி இறைவனோடு உறவாடி இறைவனை முன் மறவாதீர்.... (இருமுறை) மண்ணில் பிறந்து மறையும் முன்னே மன்னவன் அருளைப் பெறுவீரோ- அந்த வல்லவன் ஏவல் வந்திடும் போது வேதனைப் படுவீர் மண்ணிலே... (ரூகபிரிக்கும்) கண்கள் இரண்டும் கால்கள் இரண்டும் கலங்கி நிலைமை தடுமாறி - அந்த வல்லவன் ஏவல் வந்திடும் போது வேதனைப் படுவீர் மண்ணிலே ..... (இருமுறை) மனைவி மக்கள் பணத்தைப் பார்த்து மறந்து ரப்பை திரியாதே......... (இருமுறை) கடைசி யாத்திரை போகும் போது காசு பணம் உதவாது..... (இருமுறை) ரூக பிரிக்கும் இசுரானில் வந்திடும் போது யார் கதி இறைவனோடு உறவாடி இறைவனை முன் மறவாதீர்!"   பாடல் : 2 (செல்வம் நிலையாமை) "நெஞ்சகமே நெஞ்சகமே நிஜம் அறியாய் நித்தியமே ....... (இருமுறை) அன்பகமே ஒரு தினமே நீ அறிவாய் நித்தியமே .... (இருமுறை) - நெஞ்சகமே நூற்றுப்பத்து ஆண்டு வாழ்ந்ததாக நூகூரூகம் சென்றதே வானில் கோட்டை யாவும் திகழ்ந்த மண்ணில் வீழ்ந்ததே மாடியும் மனையும் மறுமையில் வராது தேடிய லாபம் உனக்கு உதவாது மூச்சோடிப் போகும் முன்னே முடிவை எண்ணு இந்நாளில் முன்னோர்கள் தன்னை நாடு கல்ஃபில் ..... (நெஞ்சகமே) பாறை மலைகள் பஞ்சாய்ப் பறந்திடும் போது நீர் இட்ட குமரனுக்கு நிகர் இடம் ஏது இருப்பது சில நாள் முறைப்படி வாழு திருக்குர்ஆனின் குரலோசைக் கேளு அளவில்லா ஆசைக் கொண்டால் அப் பூதிக்கு ஆகாது தீன் கூறுவது வாய்மை கொண்டு தப்பாது ... (நெஞ்சகமே)   பாடல் : 3 (செல்வம் நிலையாமை) "மண்ணுக்கு தியாகம் தந்த மன்னவன் தன்னை மறவாதே விண்ணுக்கு மேகம் தந்த வேந்தன் உரை சொல் தவறாதே உடல் இது சதமில்லை உயிர் இது நிலையில்லை உனக்கும் எனக்கும் இது உதவாது..... (மண்ணுக்கு) கோடி திரவியம் குமித்திருந்தாலும் கூடமதிலே குடியிருந்தாலும் யாவும் இறக்கும் போது உதவாது.... சொந்தம் பந்தம் சூழ்ந்திருந்தாலும் சொர்க்கம் போல சுகமிருந்தாலும்   யாவும் இறக்கும் போது உதவாது.... தகீபீர் அது தப்பாது தனியோன் தன்னை எப்போதும் ........... (இருமுறை) கனிந்தேன் மனம் பணிந்தேன் ஒரு நாள் காக்கும் அப்போது .......... (மண்ணுக்கு) வல்ல இறையவன் வழங்கிய வேதம் நல்ல நபிகள் முழங்கிய ஓதம் நாளும் நாடிட தவறாதே... எண்ணிப் பாரு இறந்தவர் வாழ்வே நாளும் நாடிட தவறாதே... இரவல் ஏதும் இனிக்காது இன்பம் யாவும் நிலைக்காது அப்துல் ஆலிம் கூறும் உண்மை அறிந்தால் தீமை நம்மை தொடராது... (இருமுறை) (மண்ணுக்கு)"   கருத்தாய்வு மேற்கண்ட பாடல்கள், செல்வம் என்பது நிலையற்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. ஃபக்கீர் தன்னுடைய நெஞ்சிற்குக் கூறுவது போல் பாடல் அமைந்திருந்தாலும் இவ்வுலகில் சமயக்கடமைகளை மறந்து பொருளாசை உள்ளோருக்கு எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.   செல்வம் சேர்த்து தேடிய லாபம் மறுமை வாழ்விற்கு உதவாது மூச்சடங்கும் முன்பே முன்னோர்கள் காட்டிய நல்வழியில் வாழ்ந்து, திருக்குர்ஆனின் குரலோசையைக் கேட்டு, அளவில்லா ஆசை கொள்ளாமல் வாய்மையுடன் வாழ்தல் வேண்டும் என ஃபக்கீர் தன் நெஞ்சத்திற்கு கூறுதல் போல், எளிய நடையில் பாடப்பட்டுள்ளது. மேலும், கோடி திரவியம் ஒருவரிடம் குவிந்திருந்தாலும், சொந்தம் பந்தம் சூழ்ந்திருந்தாலும், சொர்க்கம் போல் சுகமிருந்தாலும், எவருக்கும் உயிர் பிரிதலின் போது ஒன்றும் உதவாது என்ற உயரிய கருத்து அழகாகப் பாடப்பட்டுள்ளது.   இலக்கிய நயம் மேற்கண்ட மூன்று பாடல்களிலும் எதுகை, மோனை மற்றும் கடையழகுகள் நிரம்பக் காணப்படுகின்றன.   (எ.கா) எதுகை 'மண்ணில் பிறந்து மறையும் முன்னே மன்னவன் அருளைப் பெறுவீரே ... " 'கடைசி யாத்திரை போகும் போது காசு பணம் உதவாது...' மோனை 'மாடியும் மனையும் மறுமையில் வராது தேடிய லாபம் உனக்கு உதவாது...' 'மண்ணுக்கு தியாகம் தந்த மன்னவன் தன்னை மறவாதே.. விண்ணுக்கு மேகம் தந்த வேந்தன் உரைசொல் தவறாதே...'   'தனியோன் தன்னை எப்போதும் கனிந்தேன் மனம் பணிந்தேன்...'   இயைபு 'பாறை மலைகள் பஞ்சாயப் பறந்திடும் போது நீர் இட்ட குமரனுக்கு நிகர் இடம் ஏது இருப்பது சில நாள் முறைப்படி வாழு திருக் குர்ஆனின் குரலோசையைக் கேளு..'   பாடல் மூன்றில் 'அப்துல் ஆலீம்' என்ற ஃபக்கீர் தமது பெயரை முத்திரையாகக் குறிப்பிட்டுள்ளார்.9 _________________________________ 9. முத்திரை என்பது பாடல் இயற்றிய பாடியோரை அடையாளப்படுத்தும் ஓர் சொல்.     5.8. உயிர் நிலையாமையினை வலியுறுத்தும் பாடல் தமிழக ஃபக்கீர்கள் பாடும் பிரசித்திப் பெற்ற பாடல்களுள் ஒன்று மரண விளக்கப் பாடல். இஸ்லாமிய சமயம் மரணத்தை வலியுறுத்துவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்திய சமயங்களில் இந்து சமயம் மரணத்திற்குப் பின்பு மறு ஜன்மம் (மறுபிறப்பு) உண்டு என்பதை வலியுறுத்துகின்றது. ஆனால் இஸ்லாம் சமயம், மரணத்திற்கு பின்பு மறுபிறப்பு என்ற கொள்கையில் மாறுபாடான கருத்தினையே கொண்டுள்ளனர். அதாவது, ஒரு மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் செய்கின்ற நன்மை, தீமைகளுக்கு ஏற்ப கியாமத் நாளில் (இறுதி தீர்ப்பு நாளில்) கேள்வி கணக்குக் கேட்கப்படும், அந்தக் கணக்கின்படி ஒருவருக்கு சுவர்க்கம், நரகம் நிச்சயிக்கப்படும் என நம்புகின்றனர். "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிக்கிறோம். பின்னர் நீங்கள் நம்மிடையே கொண்டு வரப்படுவீர்கள்” (திருக்குர்ஆன் 21:35).   இக்கருத்தினையே விளக்குவதாக 'மரண விளக்கம்' என்ற தலைப்பில் பாடல் ஃபக்கீர்கள் பாடுகின்றனர்.   5.8.1. மரண விளக்க பாடல் எடுத்துக்காட்டு: அழிவில்லா வல்லவனே அடங்கலை அமைத்தவனே எல்லாம் அழித்தபின் எழுப்புதல் செய்பவனே எந்நாளும் எங்கள் பிழை எல்லாம் பொறுப்பவனே மரணவிளக்கம் பாடுவதற்கு மன்னவா - நீ காப்புத்தாயேன்....  மரணம் விடாது எமன் மலக்கென்னும் மௌத் உன்னை மறந்து விடாது இருகோடி வயதுக்கு நீ இருந்து ஆண்டாலும் இபுராஹிம் நபி சொல்லை நீ எழிலாக கேட்டாலும் சாவது பொய்யென்று சந்தோஷம் கொண்டாலும் சாக மாட்டோமென்று சாட்டிக்கழித்தாலும் ...... (மரணம்)   உள்ளூரில் பேதி வந்து ஊரை விட்டு ஓடினாலும் அல்லும் பகலும் தீனி அனுதினங் குறைந்தாலும் கல்லுக்குள் துளை செய்து தேரைப் போலிருந்தாலும் கருங்கல் கோட்டைக்குள் மறைவாக ஒளிந்தாலும்.... (மரணம்) கடலும் திடலும் விட்டு கண்ணிமை மறைந்தாலும் கணக்கற்ற மருந்தையும் தின்று சுமந்தாலும் கோடி மனிதர்களுக்குள் கூடிக்கொண்டிருந்தாலும் கணக்கற்ற அரசர்கள் கைக்குள் இருந்தாலும்... (மரணம்) மந்திரக் காரர்களுடன் கூடித்திரிந்தாலும் வேத சரகம் நூலை வாங்கி சுமந்தாலும் எந்தவிதமும் மௌத் பிடித்து திரியுமே இறையோனிடத்தில் எந்நாளும் செல்வாய் யோசியே... (மரணம்) நகையும் முதலுமிழந்து நாமல் பிரிய வேண்டுமே நகரும் இழந்து அந்த கப்ரு போக வேண்டுமே வீடு வாசல் காடு தோட்டம் நீங்குமே ஆடு மாடு வாகனங்கள் நீங்குமே நீங்கள் ஆசை வைத்து சேர்த்ததுமே சேர்த்த பொருள் எல்லாம் நீங்குமே ஆகையாலே இது நிலையில்லாத வாழ்வுதான் - அந்த ஆகிரமே நிலமகள் கப்ரு என்று ஓதுங்கள்........... (மரணம்) அடே...   இந்த துன்யா யாருக்கும் சதமில்லையே இங்க யாருமிருந்து நீடோடி வாழ்ந்தவர்கள் உண்டுமா! இந்த துன்யாவை நம்பின் பாவிகள் மோசமே அந்த ஆகிரத்தை நம்பினோருக்கு அங்கு பாசமே இந்த துன்யாவில் பிறந்திடாமல் நாம் இருக்க வேண்டுமே பிறந்ததாலே மௌத் இப்ப நமீமள சேர்ந்ததே .... மௌத் கஷ்டம் போல கஷ்டங்கள் உண்டுமா மெளத்தை விட்டு தப்பித்தோரே துன்யாவில் நாம் கண்டோமா? அல்லாஹி................   நம்முடைய அந்த ரூகூ பிரியும் வேளையில் தண்ணீர் தண்ணீர் என்று சொல்லி மையத்து பட்டு பட்டென்று இரண்டு முழிகள் மட்டுமே பரிதவிக்கும் கத்தி பேசிக் கொண்டிருந்த இந்த நாவுந்தான் கத்திடாமல் மூடிடும் சாராத்து வேளையில் கடந்தவேளை செய்திருந்த கைகள் இரண்டும் தான் கெடந்து சோம்பி தூங்குமே நாளை சக்ராத்திலே நடக்க மடக்க ஓடியிருந்த கால்கள் இரண்டும் தான் நீட்டி வைத்து தூங்குமே நாளை சக்ராத்திலே சகல கடலு தண்ணீரை நாம் குடித்த போதிலும் சற்று மடங்காது தாகம் நாளை சக்ராத்திலே அல்லாஹ்..........   எலந்தை முள்ளில் மெலிந்த துணியைப் போட்டு காண எடுக்க இழுக்கும் போலவே நாம் நாளை சக்ராத்திலே கோழியறுத்து சாறு பிழிவது நமக்கு இங்கு லேசுதான் கர்த்தன் மலக்கு சாறாக புழிவார்கள் நாளை சக்ராத்திலே அடே...   எங்கும் போயி திரும்பி வருவோமென்று எண்ணுவோமே இறந்து போனால் துன்யாவுக்கு திரும்பி வருவதும் தான் சொல்லுமே அல்லாஹ் ........ கருத்து ஃபக்கீர்கள் மேற்கண்ட 'மரண விளக்கம்' என்ற பாடலை பாடும் முன் இறைவனை காத்தருளும் பொருட்டு காப்பு வேண்டுகின்றனர். தமிழக நாட்டுப்புற கலைகளான வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பொம்மலாட்டம் - போன்றவற்றில் காப்பு பாடல்கள் முதலிடத்தினைப் பிடிக்கின்றன.   உலகில் இரண்டு கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்து, மரணம் என்பது இல்லை என நினைத்து மகிழ்ச்சியாக இருப்பினும் எமன் என்னும் வானவர் மரணத்தை மறந்து இருந்துவிட மாட்டார்கள்.   வாழ்கின்ற ஊரில் பேதியின் வடிவமாக மரணம் வந்தது என்று ஓடி, கல்லினுள் துளை செய்து தேரைப் போல் ஒளிந்தாலும், கருங்கல் கோட்டையினுள் மறைவாக ஒளிந்திருந்தாலும் மருந்துகள் பல உண்டு கோடி மனிதர்களுக்குள் கூடியிருந்தாலும், பல அரசர்களின் அன்பைப் பெற்றிருந்தாலும், மந்திரக்காரர்களுடன் இணைந்து வேதம் முதலான நூல்களைக் கற்றிருந்தாலும் மரணம் என்பது நிச்சயமே என பாடல் வழி வலியுறுத்துகின்றனர்.   மேலும் இப்பாடல் மூலம் நாம் இறக்கின்ற பொழுது அடையக்கூடிய துன்பத்தைப் போன்று இவ்வுலகில் வேறு துன்பம் இல்லை. நம் உயிர் பிரியும் நேரத்தில் தண்ணீர் எனக் கதறி கண்கள் பரிதவிக்கும், அந்த நேரத்தில், ஓங்கிப் பேசிய நாவு சுத்தமாக நின்றுவிடும். பொருளுக்காகத் தேடி அலைந்த இரண்டு கை, கால்களும் ஒடுங்கிக் கிடக்கும் என்றும், எலந்தம் பழ மரத்தின் முள்ளின் மது மெல்லிய துணியைப் போட்டு எடுத்தால் எவ்வாறு காணப்படுமோ, அதனைப் போன்றே 'சகராத்’10 நேரத்தில் அடையும் துன்பம் இருக்கும். மேலும், இந்நாளில் கோழியை அறுத்து சாறு பிழிவது லேசாக இருக்கும். ஆனால், மறுமை நாளில் ________________________________ 10 உயிர் பிரியும் நேரத்தில்   நல்வினை, தீவினைக்கேற்ப மலக்குகள்11 நம்மைச் சாறாகப் பிழிவார்கள் என்றும், நாம் எங்கு ஓர் இடத்திற்குச் சென்றாலும் திரும்பி வருவோம் என எண்ணுவோம், ஆனால் இவ்வுலகை விட்டுச் சென்றால் யாரும் திரும்பி வரப்போவதில்லை.   இவ்வாறு, ஃபக்கீர்கள் பாடல் மூலம் மரணத்தின் தன்மையினையும், உயிர் பிரிகின்ற நிலையில் நாம் அடையக்கூடிய வேதனைகளையும் எடுத்தியம்புகின்றனர். உயிர் வாழ்கின்ற காலங்களில் நன்மைகள் செய்து வாழ்தலே சிறப்பு என்பதை உணர வைக்கின்றனர்.   5.8.2. இறந்த உடல் தன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தார்களைக் கண்டு பேசுவது போன்ற            பாடல்   இது ஃபக்கீர்களின் அழகான ஓர் கற்பனைப் பாடல். தற்காலத்தில் இயற்றப்படுகின்ற இத்தகையப் பாடல்களுக்கு இது முன்னோடி. இறந்தவர் தம்மை சுற்றியுள்ளோரை பார்த்துப் பாடும் பாடல்   "மக்களழும் போது மையத்தறிந்து சொல்லுமே என் மக்களே! என் மனிதரே! கண்மணிகளே! என் அருமை மக்களின் பேரரே! என் பெருமை முடிக்க விதிகள் ஆச்சுதே பாவி நான்............... இந்த வயதில் மௌத் தேதென்று நம்பியிருந்தேனே எனக்கு மூத்த மாமுகளா எத்தைனையோ பேர் இங்கிருக்கையில் எனக்கு உகந்த நாள் இதுதானா இரக்கமற்ற சிறியோர்கள் துன்யாவில் இருக்கையில் என்னைத்தேடி இசுறாயில் பிடித்தாரே... அல்லாஹ் ............ கூட்டுக்கிளியை பூனை பிடித்தது போலவே கர்த்தன் மலக்கு என்னைத் தேடி பிடித்தாரே அருமை பொருளும் பெரும் நகையும் இழந்தேனே என் கூட்டத்தாரை குடும்பத்தாரை இழந்தேனே என் சொந்த பந்தங்களே ஏனழுக வந்தீர்கள் எனக்காக அழுவதினால் ஏதுனக்கு லாபம் எனக்காக அழுவதினால் ஏதுமுக்கு நன்மை உமக்குள்ள சாவை உணர்ந்தழுக மறக்காதீர் எந்தன் உயிர்திண்ட மக்களே என்முன்னே அழுகாதீர்கள் நீங்கள் அழுவதனால் எனக்கெங்கே நன்மை காசிருந்த படியாலே கலந்தழுக வந்தீர்களா காசிழந்து கப்ருபோறேன் கதறி நொந்தழுகாதீர்கள்". ________________________________ 11 வானவர்கள்   கருத்தாய்வு 'என் அருமை மக்களே கண்மணிகளே என் மக்களின் பேரரே...’ 12 என் பெருமை முடிவில் வர விதிகள் ஆனது. இந்த வயதில் மௌத்12 இல்லை என நம்பினேன். எனக்கு வயதில் மூத்தோராய் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது, என்னை இசுறாயில்14 பிடித்துச் சென்றாரே கூண்டுக்கிளியே பூனை பிடித்தது போல் வானவர் என்னைத் தேடி பிடித்தனரே. இதனால், என் பொருள், என் நகை, என் குடும்பத்தார் அனைவரையும் இழந்தோர் என் சுற்றத்தாரே நீங்கள் என்னைச் சுற்றி அழுவதனால் அடையும் நன்மை ஒன்றும் இல்லை. எனவே, இப்பொழுதாவது உங்களது மரணத்தை நினைத்து அழுங்கள். என்னிடம் காசிருந்த படியால் கலந்து அழவந்தீர்களா, காசை எல்லாம் இழந்து மண்ணறைக்கு செல்கின்றேன் அழ வேண்டாம் எனப் பாடுகின்றனர்.   இவ்வாறாக, ஃபக்கீர்கள் தம் 'மரண விளக்கம்' என்ற பாடலின் மூலம் மனிதனுக்கு வரக்கூடிய மரணத்தைப் பற்றியும் அம்மரணத் தருவாயில் கூட அவன் நன்மைகள் செய்ய வேண்டும் என்பதையும் இறைவன் ஒருவனே மரணத்திற்குப் பின் மனிதனுக்கு துணை நிற்பான் என்பதையும் வலியுறுத்தி, மக்களுக்கு மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இறை வழிபாட்டில் ஈடுபடச் செய்கின்றனர். மேலும், மரணத்தை மனதில் வைத்து வாழ்கின்ற காலத்தில் நன்மை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.   இலக்கிய நயம் மேற்கண்ட பாடல் எளிய நடையில் அமைந்துள்ளது. இடையிடையே பல உருதுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடல்களில் எதுகை, மோனை, கடையழகுகள் நிரம்பக் காணப்படுகின்றது. ________________________ 12 இறந்தவரின் இரண்டாம் தலைமுறை (பேரன்கள்) 13 மரணம் 14 இஸ்லாமியர் நம்பிக்கையின் படி உயிரைக் கவர்ந்துச் செல்லும் வானவர் பெயர்.   மோனை  (எடுத்துக்காட்டு) "அல்லும் பகலும் தீனி அனுதினம் குறைந்தாலும் கல்லுக்குள் துளை செய்து தேரைப் போல் இருந்தாலும் ...'' "வீடு வாசல் காடு தோட்டம் நீங்குமே ஆடு மாடு வாகனங்கள் நீங்குமே...''   எதுகை (எடுத்துக்காட்டு) "இந்த துன்யா யாருக்கும் சதமில்லையே இங்க யாருமிருந்து நீடோடி வாழ்ந்தவர்கள்...."   "எலந்தை முள்ளில் மெலிந்த துணியைப் போட்டு எடுக்க இழுக்கும் போலவே நாம் ....'   இயைபு (எடுத்துக்காட்டு)   "இந்த துன்யாவை நம்பின பாவிகள் மோசமே அந்த அகிரத்தை நம்பினோர்க்கு அங்கு பாசமே"   "எங்கும் போயி திரும்பி வருவோமென்று எண்ணுவோமே இறந்து போனால் துன்யாவுக்கு திரும்பி வருவதும் தான் சொல்லுமே"   5.9. பெண்புத்தி மாலைப் பாடல் (தாய் மகள் ஏசல்) தமிழக ஃபக்கீர்கள் பாடுகின்ற பெண்புத்திமாலைப் பாடலானது நூற்று முப்பது வரிகளை கொண்ட நெடும் பாடலாகும். இப்பாடல் ஒரு தாய், மகளின் உரையாடல் போன்று அமைந்துள்ளது. இஸ்லாமிய சமயத்தின் ஐம்பெருங் கடமைகளை நிறைவேற்றத் தவறுவதால் ஏற்படும் தீமைகளையும், இஸ்லாமியர் நம்பிக்கையின் அடிப்படையில் மறுமை நாளில் அவருக்கு அளிக்கப்படும் தண்டனைகளைப் பற்றியும் இப்பாடல் மூலம் அறிவுறுத்தப்படுகின்றது. இதற்கு தாய் மகள் ஏசல் என்றப் பெயரும் உண்டு.   பெண்புத்திமாலை (எ-டு) உச்சிதனை மூலதன்னே குருதினை வடிவதன்னா மகளே உன்னை உதைப்பதன்ன தூதர் நான் உயர்ந்த கொண்டை பூ முடிந்து ஒய்யாரமாய் திரிந்தேனம்மா - பாவி நான் திரிந்த பாவம் தாயே   உனது தலைதன்னிலே நெருப்புச் சாட்டி தனலாக மலக்கு வைத்து எரிப்பதன்னா மகளே உன்னை அடிப்பதென்ன தூதர்  சண்டாளி தலையை திறந்து நானும் தனிவழியே நடந்தேனம்மா - பாவி நான் நடந்த பாவம் தாயே   இந்த உச்சந்தான் தலையில் உருக்காணி கொண்டு கதற கதற கப்ரு தன்னில் அடிப்ப தன்ன மகளே நான் பொழிவான வாங்கு எடுத்து இந்த தெருவீதியிலே தெளிவாக நடந்தேனம்மா - பாவி நான் நடந்த பாவம் தாயே,   மகளே ! கூந்தலிலே கொடி நெருப்பு - அம்மா கொளுந்து விட்டு எரிவதென்ன மகளே உன்னை உதைப்பதன்னா தூதர் இந்த அழகான கூந்தலை தெரு வீதியில் நின்று விரித்தேனம்மா சண்டாளி விரித்த பாவம் தாயே.....   மயில்வாகனம் போல் இருந்த கூந்தல் - அம்மா வகுந்து கட்டி அடிப்பதன்ன கபுரில் மலக்கு உன்னை உதைப்பதன்ன தூதர் நான் வாடுகின்ற என் கணவனுக்கு நான் வணங்காமல் திரிந்தேனம்மா - பாவி நான் திரிந்த பாவம் தாயே   இளம்பிறை போல் நெற்றியிலே இளம் நாகம் தீண்டுவதன்னா மகளே நான் இலங்க வர்ண பொட்டு வைத்து இந்த தெருவீதியினிலே துலங்க வழங்க நடந்தேனம்மா சண்டாளி நான் நடந்த பாவம் தாயே - இந்த   வேப்பிளைப் போல் மேப் புருவம் - அம்மா வெண் நாகம் தீண்டுவதென்ன மகளே உன்னை அடிப்பதென்ன தூதர் நான் வேற்று கணவரை முகம் பார்த்து கண் சுழித்தேனம்மா சண்டாளி சுழித்த பாவம் தாயே - இந்த சண்டாளி சுழித்த பாவம் தாயே   செங்கமலம் போலிருந்த உனது கண்கள் இரண்டும் சிவந்த தன்ன கபூரில் உன்னை உதைப்பதன்ன தூதர் நான் காரமான சினிமாக்களை இந்த கண் குளிர பார்த்தேனம்மா சண்டாளி பார்த்த பாவம் தாயே   மூக்குச் செவிகளிலே - அம்மா  மெழுகை காய்ச்சி வார்ப்பதன்னா மகளே உன்னை அடிப்பதென்ன தூதர் நான் மூக்குத்தி போட்டு முகம் மினிக்கி வேற்று முகம் பார்த்தேனம்மா - பாவி நான் பார்த்த பாவம் தாயே - இந்த   நைப்பவளம் போல் உதட்டை - அம்மா நட்டுவாக்காழி கொட்டுவதென்ன மகளே உன்னை அடிப்பதன்ன தூதர் நான் நார் உறிஞ்சி வெற்றிலைப் போட்டு நவநாகரீகமாக பேசினே னம்மா - பாவி நான் பேசின் பாவம் தாயே - இந்த   பச்சரிசி போல் இருந்த பல்லைத் தட்டி உதைப்பதென்ன மகளே - பாவி நான் பல காவி பல்லில் இட்டு பாவி பக்கம் சிரித்தேனம்மா சண்டாளி சிரித்த பாவம் தாயே   இந்த நாக்கை பிடித்து இழுத்து நரகத்திலே நல் தூண்டி போடுவதென்ன கபுரில் மலக்கு உன்னை அடிப்பதென்ன தூதர் நான் நல்லோர்களை நாவில் வைத்து நகைத்தேனம்மா - பாவி நான் நகைத்த பாவம் தாயே - இந்த   செந்தாமரை புஷ்பம் போல இருந்த முகம் தனல் கொதித்து வேகுவ தன்னா மகளே நான் மேலோர் சொன்ன குஷன் முழுக்க - பாவி முழுகாமல் திரிந்தேனம்மா... சண்டாளி திரிந்த பாவம் தாயே   இந்த கழுத்தைச் சுத்தி கருநாகம் மகளே! கதற கதற கடிப்பதென்ன கப்ரில் உன்னை உதைப்பதென்ன தூதர்- பாவி நான் இரவல் நகையை வாங்கி இணை இணையாய் அணிந்தேனம்மா சண்டாளி சிரித்த பாவம் தாயே   இந்த கிரண்டை கை இரண்டையுமே முறுக்கி உன்னை ஒடிப்பதென்ன மகளே நான் கை நிறைய வளையலிட்டு இந்த தெருவீதியிலேயே கை வீசி நடந்தேனம்மா சண்டாளி நடந்த பாவம் தாயே   இந்த உள்ளங்கை இரண்டிலேயும் உருக்காணி கதற கதற அறைவதன்ன கபரில் மலக்கு- சண்டாளி தாயில்லா பிள்ளைகளை பாவி தலைமேல் அடித்தேனம்மா பாவி அடித்த பாவம் தாயே   இந்த ஐந்து விரலுக்குத் தான் பழுக்க ஊசி குத்துவதென்ன மலக்கு உன்னை உதைப்பதன்ன தூதர் என்னை பெத்த தாயை பார்க்க வைத்து - சண்டாளி பெருமையாக தின்றேனம்மா - பாவி நான் உண்ட பாவம் தாயே ......   பத்து விரலுக்கும்தான் பந்தம் கெட்டி எரிப்ப தன்னா மகளே உன்னை உதைப்பதன்ன தூதர் - நான் கல்யாணப் பந்தியிலே - சண்டாளி கைகருமம் செய்தேனம்மா - பாவி நான் செய்த பாவம் தாயே   இந்த நெஞ்சு சதுரம் எல்லாம் - அம்மா நிலம் கொதித்தது போல் வேகுவதென்னா மகளே உன்னை உதைப்பதென்ன தூதர் நான் மேல வர்ண குப்பாய்கள் போடாமல் திரிந்தேனம்மா - சண்டாளி திரிந்த பாவம் தாயே....   உனது இடுப்பைச் சுத்தி மலப் பாம்பு - அம்மா இறுக்கி உன்னை ஒடிப்பதன்ன மகளே உன்னை அடிப்பதென்னா தூதர் - நான் இலங்க வர்ண பட்டு உடுத்தி இந்த தெரு வீதியிலே துலங்க நடந்தேனம்மா- பாவி நான் நடந்த பாவம் தாயே   உனது முழங்கால் இரண்டையுமே - அம்மா முறிக்கி ஒடிப்பதென்ன மகளே உன்னை அடிப்பதென்ன தூதர்   கள்ள புருஷன் வீடு - சண்டாளி கால் போக நடந்தேனம்மா - பாவி நான் நடந்த பாவம் தாயே   இந்த கிரண்டை கால் இரண்டையுமே - அம்மா தட்டி நொறுக்கி எரிப்பதென்ன மலக்கு நான் தண்டை கொலுசு போட்டு இந்த தெரு வீதியிலே சலசலவென்று நடந்தேனம்மா- பாவி நான் நடந்த பாவம் தாயே இந்த உள்ளங்கால் இரண்டிலேயும்   குழிப்பாம்பு கடிச்சு உன்னை இழுப்பதென்ன உன்னை அடிப்பதென்ன நரகில் இந்த இறையவன் பூமியைத்தான் அதிர மிதித்து கடு வேகமாக நடந்தேனம்மா - பாவி நான் நடந்த பாவம் தாயே ......   நான் என்ன செய்யப்போறேன் எங்கள் பிழை எல்லாம் பொறுத்தருள்வாய்!   கருத்தாய்வு மேற்கண்ட பாடல் எளிய நடையில் அமைந்துள்ளது. சமுதாயத்தில் பெண்களின் ஒழுக்கம் மிக முக்கியமானது என வலியுறுத்தும் வகையில் சற்று அச்சுறுத்தும் விதமாகப் பாடப்படுகின்றது. []   []   []     ஃபக்கீர் பாடும் மேற்கண்ட பாடல் வரிகள் சற்று கற்பனையாகவும், தமிழக கலாச்சாரமான திலகம் இடுதல், வளையில் அணிதல், தண்டைக் கொலுசு அணிதல் போன்றவையும் தவறாக சுட்டுவதாக தெரிகிறது. 5.10. பெண் கடமைப் பாடல் ஃபக்கீர்கள் வீட்டினுள்ளே முடங்கியிருக்கும் பெண்களுக்கு இஸ்லாமியப் பண்பாட்டினை எடுத்து இயம்பும் வகையிலேயே பாடல்களைப் பாடுகின்றனர். ஆண்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காட்டிலும், சமுதாய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.   "பெண்ணாய் பிறந்தால் பாத்திமாவைப் போல பூமியில் வாழ்ந்திடணும் கண்ணும் கருத்தும் தீனின் வழியை என்றும் நாடிடணும் – (பெண்ணா ) பாங்' கைக் கேட்டு பணிவாய் நீயும் தொழுகையை நடத்திடணும் நல்ல பண்பாய் கணவர் சொல்லை வணங்கி அன்பாய் வாழ்ந்திடணும் நல்ல அன்பாய் கணவர் சொல்லை வணங்கி பண்பாய் வாழ்ந்திடணும் - பெண்ணாப் பிறந்தால் மாயா இது உலகம் நீ எண்ணி பார்த்திடம்மா மகமூதர் நபிநாதர் சொன்ன பொன்மொழி பேசிடம்மா மறை ஓது, தினம் நீயே அல்லாவை எண்ணு மனம் என்ற திருவீட்டில் ஈமானை பேணு இருகையேந்தி பெண்ணே சொல் ஏந்தி இறையோனை நீ நாடு அன்போடு அருள் பேணு - (பெண்ணா) அன்பும் நல்ல பண்பும் மனத்தூய்மை செய்கிறது அதனாலே இந்த ஊரே உன்னைப் போற்றிப் பாடுகிறது ஒரு நாளும் தவறாமல் கலிமாவை ஓது .... (இருமுறை) கையேந்தும் எளியோர்க்கு விசுவாசம் காட்டு உன் கை பட்டு மணக்குது இம்முட்டு... (இருமுறை) இளவேனில் இசுலாத்தின் மேலோங்கும் பண்பாடு... (பெண்ணா ) அன்பான கணவனை என்றும் நீயும் வணங்கிடனும்... (இருமுறை) அல்லாவைக் கூறவல்ல அலிப் தினமும் மறவாதே தள்ளாடி விழும் வரை அலிப் தினமும் மறவாதே - (பெண்ணா ) சினிமாவை .............. ஐ...................... ................ ஆகா! சினிமாவே சினிமாவே சிறப்பைத் தராது எந்நாளும் காலையில் நற்கதி பல செய்தால் உடல் முழுவதும் சுகமாகி கணவன் முன்னாலே கனிவாக நின்றுவிடு - (பெண்ணா) அல்லாவின் சொல்படி அனுதினமும் தொழுதிடணும்... (இருமுறை) அன்னை அண்ணல் கபீரை சுந்தரமாயை மறவாமல் வணங்கிடனும்..... கை பட்டு மணக்குது இம்முட்டு - இளவேனில் இசுலாத்தின் மேலோங்கும் பண்பாடு - (பெண்ணா)   கருத்தாய்வு இந்தப் பாடல் பெண்ணானவன் முகம்மது நபியின் மகள் பாத்திமா பீவியின் குணநலன்களுடன் வாழ்தல் வேண்டும். தவறாது பாங்கு ஒலி கேட்டதும் தொழுதல் வேண்டும், கணவன் சொல்லைக் கேட்டு பணிவுடன் நடத்தல் வேண்டும். ஏழை எளியோருக்கு உதவிடுதல் வேண்டும் போன்ற திருகுர்ஆன் கூறும் அறிவுரைகள் பாடலில் வலியுறுத்துப்பட்டுள்ளது.   இலக்கியநயம் எதுகையணி "மாயா இது உலகம் நீ எண்ணி பார்த்திடம்மா மகமூதர் நபிநாதர் சொன்ன பொன்மொழி பேசிடம்மா மறை ஓது தினம் நீயே அல்லாவை எண்ணு மனம் என்ற திருவீட்டில் ஈமானை பேணு"   மோனையணி "பெண்ணாய் பிறந்தால் . . . கண்ணும் கருத்தும் .... ” 5.11. நிகழ்வுப் பாடல்கள் ஃபக்கீர்கள் பாடுகின்ற சில பாடல்கள் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. பாடலினூடே பாடல் மாந்தரின் பெருமைகளையும் சாகித்யங்களில் (பாடல் வரிகளில்) வெளிப்படுத்துகின்றனர்.   நாகூரில் சாகுல்ஹமீது (அவுலியா) மீதான வரலாற்று நிகழ்ச்சி பாடல் (எடுத்துக்காட்டு) நாகூர் கடற்கரை ஓரத்திலே நாதர் திருமுடி இறக்கும் பொழுது தந்தை இறைந்த யூசுப் சாகிபு தகப்பனார் இருக்கும் பொழுது..... காரணிப் பட்டு பாவா பகருதீன் காட்டு பாவா சையது அன்று மாலை இருக்கும் பொழுது அன்று மாலை கருக்கடல் நடுவினிலே ஒரு கப்பல் அவதிப்படும் நேரத்திலே கப்பலில் இருந்த மக்கள் எல்லாம் - எஜமானே நாகூர் எஜமானே என்று கையேந்தி துஆ கேட்டார்களே... (இருமுறை) நாகூர், சாகுல் ஹமீது பாதுஷா ஆண்டகையே எங்கள் கப்பல் கரை வந்து சேர வேண்டும் நாங்கள் உன்னிடத்தில் காணிக்கைத் தர வேண்டும் கப்பல் கரை வந்து சேர வேண்டும் எங்கள் குழந்தைகள் எல்லாரும் குடும்பத்தோடு உங்களைக் காண வேண்டும் நாதா! கப்பல் அவதிப்படுதே எஜமானே கருணை இன்னும் பிறக்க வில்லையா நாதாவே... ஏந்தி துஆ கேட்டார்கள் எஜமானிடம் குறை அனைத்தும் கூறினார்கள் கையில் இருந்ததோர் கண்ணாடியை எஜமான் சாகுல் ஹமீது பாதுஷா அண்ணல் துஆ ஓதி பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் விர்ரஹீம் என்று கடலில் தூக்கி எறிந்தாரே. . . . . . . தூக்கி எறிந்த துண்டுக் கண்ணாடி கப்பலின் துளையை அடைக்க கப்பலில் இருந்த மக்களுக்கு எந்தவொரு குறைபாடில்லாமல் அல்லாஹ்வுடைய துஆ பரக்கத்தினால் எம்பெருமான் அன்னாருடைய பேரனாகப் பட்டவர்களின் துஆவில் கப்பல் கரை வந்தது .... கோடானு கோடி மக்கள் எஜமானை தரிசனம் செய்யவே வந்தார்கள் மக்களோ பாத்திடறா நேர்த்தியுடன் எஜமானே காணவே வந்தார்கள் ஐந்து மினராவாம் அலங்கார வாசலாம்.... (இருமுறை) பூரா கொடியுமே நேராய் பறக்கவே .... (இருமுறை) மாடப்புறாக் கூட்டம்மம்மா மகிழ்ந்து நின்று கூவிடுமாம் காரணம் இதை அறிந்தனரே உன்னை நாடி வந்தேன் நாகூர் சாகுல் மீரான் ஒலியே தீராத பிணியைத் தீர்ப்பார்கள் நாடிய நல்லோர்க்கு நிறைவினைத் தருவார்கள் ஓடாத பேய்களையும் ஓடும் படி தீக்கை செய்வார்கள் பாத்திஹா முழங்கிடும் தர்கா சரீபிலே15 .... (இருமுறை) மெளலூது முழங்கிடும் தர்கா சரீபிலே இராத்திரி பூரா திரிவார்கள் பலர் மக்கள் கூடி ஐந்து ஜமாத்தார்களும் ரப்பிப்பும் செய்வார்கள் எஜமானிடம் நாகூர் மீரான் நாகூர் மீரான்....." பாடல் : 2 "உம்மை நாடி வந்தேன் பேரொலியே அருள் தர வேணும் நாகூர் சாகுல் மீரான் ஒலியே... (இருமுறை) மாணிக்காப்பூர்தனில் பிறந்தவரே தீன் பணி செய்ய தேசம் இங்கு வந்தவரே அண்ணலே காரணரே! அருள் நேசரே அருள் தர வேணும் நாகூர் சாகுல் மீரான் ஒலியே -உம்மை கௌதுல் குத்துஸ் வழியில் வந்தவரே அந்த நபிகள் பேரில் ஆனவரே தேகம் மனங்கமழும் நாதாவே தெய்வீகக் காதர் ஒலியுல்லாஹ்வே - (உம்மை) தஞ்சை மாநகருக்கு வந்தவரே தனராஜன் பிணியையும் தீர்த்தவரே காராம் பசுவையும், அது கதறிட்ட காரணத்தால் அழைத்தவரே அண்ணலே காரணரே! அண்ணலே பூரணரே! திருமால் ஊர் தன்னில் வந்தவரே கருங்கல் தேரையும் ஓட்டியே பின் வைத்தவரே - (இருமுறை) திருமலைச் செட்டியாரின் தற்கொலையை மீட்டி தந்தீர் அண்ணலே காரணரே! அண்ணலே பூரணரே! அருள் தர வேணும் நாகூர் மீரான் ஒலியே... (உம்மை )”   கருத்தாய்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் உறங்கும் சாகுல் ஹமீது, அவர்கள் கடலில் தத்தளித்த கப்பலில் இருந்த மக்கள் அனைவரும் கப்பலில் ஓர் துளை ஏற்பட்டு, தங்களைக் காப்பாற்ற வேண்டி வேண்டுதல் செய்ய, தன் கையில் இருந்த ஓர் கண்ணாடித் துண்டினை 'பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் விர்ரஹீம்’16 என வேண்டுதல் செய்து கடலில் எறிய கண்ணாடித் துண்டானது கப்பலின் துளையை அடைத்தது __________________________________________ 15   மரியாதைச் சொல் 16   ''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்''   என்ற செய்தியை மேற்கண்ட பாடல் மூலம் எடுத்துக் கூறுகின்றனர். மேலும், இறைப்பணி செய்யும் பொருட்டு தஞ்சை வந்தவர், கருங்கல்லால் ஆன தேரை ஓட்டி பின் வைத்தவர், திருமலைச் செட்டியார் என்பவரை தற்கொலையிலிருந்து காப்பாற்றியவர் என்பது தெரிய வருகின்றது.   இலக்கிய நயம் எதுகை ''நாகூர் கடற்கரை ஓரத்திலே நாதர் திருமுடி இறக்கும் பொழுது... தந்தை இறைந்த யூசுப் சாகிபு தகப்பனார் இருக்கும் பொழுது..."   மோனை   "திருமால் ஊர் தன்னில் வந்தவரே கருங்கல் தேரையும் ஒட்டியே பின் வைத்தவரே... திருமலைச் செட்டியாரின் தற்கொலை...''   இயைபு   பெரும்பாலும் மேற்கண்ட பாடல் 'ஏ' என்ற ஒலியிலேயே இனிமையாக முடிந்துள்ளது. உதாரணம், "மாணிக்கப்பூர்தனில் பிறந்தவரே தீன் பணி செய்ய தேசம் இங்கு வந்தவரே அருள் தர வேணும் நாகூர் சாகுல் மீரான் ஒலியே"   "அண்ணலே காரணரே அண்ணலே பூரணரே"   5.12. பாடலும், உரைவிளக்கமும் ஃபக்கீர்கள் பாடுகின்ற பாடல் அமைப்புகளில் ஒருவகை 'உரை விளக்கத்துடன் கூடிய பாடல்'. ஏதேனும் ஒரு சரித்திரம் அல்லது நிகழ்ச்சியினை மையக் கருத்தாகக் கொண்டு, அவற்றைப் பாடலாகவும், பின்பு அதன் விளக்கத்தை உரையாகவும் கூறுவது ஆகும்.   5.12.1. முகம்மது நபியின் பிறப்புச் சரித்திரம் முகம்மது நபியின் தாய், தந்தையரான ஆமினா அப்துல்லா இருவரும் திருமணம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகள் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தனர். ஒரு நாள் ஆமினா கனவு ஒன்று கண்டார். அக்கனவில் எட்டு சுவர்க்கத்தையும் ஒன்று சேர்த்தது போன்று, பேரழகான ஒளியுடன் கூடிய குழந்தை ஒன்று தன் மடியில் இருப்பதைக் கண்டார்கள். பின்பு அக்குழந்தைக்கு அல்லாஹ்வை 'முகம்மது' என்று பெயர் வைத்து அழைக்குமாறு ஜிப்ரீல் (தேவதூதர்) வந்து கூறியதாகத் தன் கணவனிடம் கூறினார்.   கனவும் நனவாகிட பிறந்த குழந்தைக்கு 'முகம்மது' என பெயரிட்டு அழைத்தனர். இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஃபக்கீர்கள் பாடி, அதற்கு உரை விளக்கம் கூறுவதை கீழ்கண்டப் பாடல் மூலம் காணலாம்.   முகம்மது நபியின் பிறப்புச் சரித்திரம் "எங்களுக்கு அறிவு தந்தோர் இறை குர் ஆனை ஓதி தந்தோர் வந்து வன்பொருளாய் உள்ளாய் சொந்தமாய் இறைஞானம் எல்லாம் சொல் பிழை பொறுத்து இந்த நாளும் அருள் கிருபை செய்யும் சமாதான முகையத்தீனே இலங்கும் இறைஞான பேரின்பக்கடலில் இன்னமுதம் எடுத்து எனக்கு அளிப்போனே இணங்கிய தேசம் பொருத்தமாய் இன்னலைப் போக்கிடுவாய் வணங்கிய தவத்தோர்க்கும் அருள்புரிய வந்தவராய் மாதவ தோர்க்கெல்லாம் ...... சற்குணங் குடி கொண்ட பாதுஷாவான என் குரு நாதர் முகையத்தீன் காற்பாத்தம் போற்றி”   உரை விளக்கம் சுபகானல்லாஹ்! எப்புகழும் ஏகவல்லவானாகிய அல்லாஹ் சுபஹானல்லாவின் கிருபையாலே! மரஹபா! அண்ணலாரின் துஆ பரக்கத்தினாலே எல்லா ஒளிகளும் எல்லாம் மேலாய் வந்த மகபூப் சுப் ஹானி முகையத்தீன் அப்துல் காதர் ஜீலானியின் துஆ பரக்கத்தினாலே! மரஹபா!   இந்த இருளடைந்த உலகத்திலே! இந்த இருள் படர்ந்த பூமியிலேயே அல்லாஹ்வின் ஆசைக்கடலிலே மூழ்கிய முத்தாக எம்பெருமான் இந்த துன்யாவில் இறக்கித் தந்தான். யாருடைய வழியிலே இறக்கித் தந்தான் அல்லா! ஆமினா அப்துல்லாஹ் என்ற இருவரும் வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள்.   இவ்வாறு, ஃபக்கீர்கள் முகம்மது நபி (ஸல்) இம்மண்ணில் தோன்றிய வரலாற்றுச் சிறப்பினைப் பாடலாகவும், உரை விளக்கமாகவும் பாடுகின்றனர்.   பாடல் "ஆதி முதல்வன் ஒளியே! ஒளியே முகம்மது ரசூலே... (இருமறை) அல்லா ஜோதி மதி பொருளே மன்றாடும் சுவர்க்கப் பொருளே அல்லா விண்ணவர் கண்மணியே அல்லா வேதமதிக் கடலாம். (இருமுறை) அல்லா செல்வ மகனாராம் நபிதீன் முகம்மதுவாம் ஆமினா அப்துல்லா இருவரும் அன்பாய் இருக்கையிலே ஆமினா நேந்திட்டு வர்றேன் என்று ஆமினம்மா நெய்யால் விளக்கேற்றி அல்லா காணிக்கை நேர்ந்ததல்லவோ ஆமினம்மா காத்துட்டு வாவி இருந்தார் அல்லா பாலகர் இல்லாமல்    ஆமினம்மா பாங்காட்டு துஆ இருந்தார்கள் அல்லா செல்வர்கள் இல்லாமல் ஆமினம்மா சிறப்பாற்றுவார் இருந்து நேந்துட்டு வாறேன் என்று - ஆமினம்மா நெய்யால் விளக்கேற்றினார்...''   உரை விளக்கம்  சுபஹானல்லாஹ் பட்டணத்திலே காபாஷரீபுக்கும் மதினாவுக்கும் இடையே அன்னாருடைய அன்னை ஆமினா அவர்கள் பன்னிரண்டு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். அல்லா இடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள். செல்வர்கள் இல்லாமல் துஆ செய்தார்கள், காணிக்கை ஏத்தினார்கள். அப்படி இருக்கக்கூடிய நேரத்திலே, ஒருநாள் திங்கட்கிழமை இரவினிலே, ஆமினம்மா இஷா தொழுகைக்குப் பின் ஆழ்ந்த நித்திரையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.   பாடல் "திங்கட்கிழமை நாளாம் ஆமினம்மா நித்திரை ஆகும் போது ஆமினம்மா நித்திரை ஆகும் போது அந்த ஜிபிரில்களும் ஆமினம்மா கனவில் கூறினார்கள் அம்மா எந்தன் ஆமினம்மா தாயே இன்புற்ற தாயகமே உங்கள் வயிற்றினில் உதிப்பவர்தான் முகம்மது தான் அவர் பேரு முகம்மது என்று பெயரிட்டு அழைக்கச் சொன்னார் அல்லாவும் பெயரிட்டு அழைக்கச் சொன்னார் இந்த விதமா ஆமினாவும் கண்டு ஆமினம்மா இன்புறக் கண்டாரம்மா ஆமினம்மா எழுந்திருக்கக் கண்டாரம்மா - அல்லா வடிவால் குழந்தைப் புரள மினாவும் கண்டு அல்லா எட்டு சுவர்க்கங்களும் ஆமினம்மாவின் கர்ப்பத்தில் அமையக்கண்டு ..... (இருமுறை) வடிவால் ஒரு குழந்தை தவழ ஒரு மினாக்கண்டார் இந்தவிதமாக மினாக் கண்டு ஆமினம்மா எழுந்து வெகு நேரமா....... (இருமுறை) துய்யோனைத்தான் தொழுதார் கஃபாவின் முன் பக்கமாய் இருக்கின்ற மஃபாவின் ஓடையில் குளிச்சுதலை முழுகி ஆமினம்மா துய்யோனைத்தான் தொழுதார் ஆதாம் மகன் இபுராஹிம் அடங்கப்பட்ட கப்ரடி போய் நின்று பாத்திஹாதானும் ஓதி   ஆமினம்மா ஸ்நானத்தை தன் முடித்தார்...''   உரை விளக்கம் திங்கட்கிழமை அன்று ஆமினம்மா தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில், அல்லாவுடைய மலாயிகத்துமார்கள் அவர்கள் கனவில் தோன்றி அன்னையரே! உங்களுடைய வயித்திலே அல்லா எம்பெருமான் (ஸல்) அவர்களை அனுப்பியுள்ளான். அவர்களுக்கு பெயர் 'முகம்மது' என்று சூட்ட வேண்டும் என்று ஜிப்ரில் கூறினார்கள். ஆமினம்மா பன்னிரெண்டு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தவர்கள்.   கனவில் ஒரு குழந்தை புரள கண்டார்கள். எட்டு சுவர்களும் அவர்களுக்கு நிறைந்தது போல் இருந்தது. இந்த கனவு கண்டு ரொம்ப நேரமாய் உட்கார்ந்திருந்து சுபுஹு நேரத்தில் தொழுதுவிட்டு, காபா என்ற ஆற்றில் குளித்து முழுகிவிட்டு, அன்னை ஆமினா அவர்கள் ஆதாம் மகன் இப்ராஹிம் கப்ருக்கு சென்று துஆ செய்கிறார்கள். பிறகு தம் வீட்டிற்கு வந்த சமயம் அப்துல்லாவைப் பார்த்து தான் கண்ட மினாவைக் சொன்னார்கள்.   பாடல் "என் கணவரான இமாமே இன்புற்ற நாயகமே .... (இருமுறை) நான் இன்று கண்ட மினா கனவினில் நான் ஒருபொழுதும் கண்டதில்லை - இமாமே வடிவால் ஒரு குழந்தை மடியில் புரள மினாவும் கண்டேன்.... (இருமுறை)   எட்டு சுவர்க்கங்களும் கர்ப்பத்தில் அமைய மினாவும் கண்டேன்... (இருமுறை) பொழுதும் புலரும் வேளையில் மடியில் குழந்தை புரளவும் மினாவும் கண்டேன் - இந்த மினாவும் கண்டேன் நாயகனே என்னென்று சொல்வேன் - அல்லா பெயர் முகம்மது என்று குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னார்கள்"   உரை விளக்கம் ஆமினா அவர்கள் தன்னுடைய கணவனிடத்தில் வந்து நின்று, இமாமே என்னுடைய கணவரே! நமக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத காரணத்தால் துஆ செய்தேன். அப்போது கனவொன்று கண்டேன். அல்லாவுடைய வானவர்கள் இறங்கக் கண்டேன். அவர்கள் உங்கள் வயிற்றில் வளரக்கூடிய குழந்தைக்கு முகம்மது என்று பெயர் வைக்கச் சொன்னார்கள். அப்பொழுது எட்டுச் சுவர்க்கமும் மடியில் ஒன்றாகப் புரளக் கனவு கண்டேன் என்றார்கள். அந்த வார்த்தை கேட்டு,   பாடல் "அல்லா அப்துல்லா அண்ணல் அவர்கள் ரஹ்மான் தன்னால் மகிழ்ச்சியாகி அப்துல்லா நெத்தியில் முகம்மதை முத்தாகத்தான் பதித்து ஆமினம்மா வயிற்றில் முகம்மது காமிலாகத்தான் படைத்தார் எச்சில் தரித்தவர்கள் நபி பேரொளியால் ஆனவர்கள் அல்லா ஹக் என்ற முத்தான கமழத்தில் உருகினார்கள் ஆகாய திருக்கரத்தில் நபி ஒரு வான்மயிலாய் இறங்கி அல்லா எட்டு சுவர்க்கங்களும் பாங்காய் ஒளிவாகி..."   உரை விளக்கம் அப்துல்லா நெத்தியில் முத்து ஒளி போன்றதும், அன்னை ஆமினாவின் வயிற்றினில் முகம்மது, காமிலா போன்று இருந்தார்கள். முத்துக்குள் முத்தாகவும் வைரத்துக்குள் வைரமாகவும் வயிற்றினில் இருந்தார்கள். ஆகாய திருக்கரத்தில் முகம்மது ஒரு பச்சை மயிலைப் போல வெகு நாட்களாக இருந்திருக்கிறார்கள். கருத்தரித்த நாற்பதாவது நாளிலேயே மனைவி வார்த்தை கேட்டு சந்தோசத்துடன் நான் செட்டுக்கு போறேன் என்று அப்துல்லா சென்றார்கள். ஆமினா துஆ செய்தார்கள். அப்துல்லா ஒட்டகத்தில் ஏறினார்கள்.   பாடல் "அல்லா ஏத்து முதல் ஏத்தி இல்லல்லா ஏழு ஒட்டகமாம் அந்த ஏழு ஒட்டகத்திலே அப்துல்லா ஏத்தி சரக்கு ஏத்தி சாம்தேசம் பட்டணத்திலே அப்துல்லா கூடாரம் போய் - ஒன்றடித்தார் அல்லா செட்டு பிழைத்திடுமாம் நம்ம தீன் அப்துல்லாவுக்கு..”   உரை விளக்கம் அப்துல்லா அவர்கள் பன்னிரெண்டு வருடம் குழந்தை இல்லாமல் இருந்ததற்கு, தன் மனைவி சந்தோஷமான காரியத்தை கூறியவுடனே அல்லாஹ்வுடைய கட்டளை என்று வியாபாரத்திற்கு சென்றார்கள். ஏழு ஒட்டகத்தில் தமக்கு வியாபாரத்திற்கு தேவையான பொருட்களையெல்லாம் ஏற்றி பக்கத்திலுள்ள சாம்தேசம் பட்டணத்திற்கு சென்று கூடாரம் அடித்து வியாபாரம் நடத்தினார்கள். அல்லாஹ்வுடைய கிருபையால் வியாபாரம் நன்றாக நடந்தது. அல்லாஹ்வின் கிருபையினால் எம்பெருமானார் (ஸல்).   பாடல் "அல்லா முகம்மது பிறந்ததும் திங்கட்கிழமை வளர்ந்ததும் திங்கட்கிழமை ஹஜ் பழித்ததும் திங்கட்கிழமை வபாத்தும் திங்கட்கிழமை ... கேட்டிருந்த பேர்களின் கோத்திரங்கள் தழைக்க வேணும் பார்த்திருந்த பேர்களுடைய பாவத்தையும் நீக்க வேண்டும் பாடி வந்தேன் இந்த பக்கீரும் ......''   5.12.2 பாத்திமா நாயகி திருமண நிகழ்ச்சி ஃபக்கீர்கள் நபிமார், அவுலியாக்கள் ஆகியோரின் வரலாற்று நிகழ்ச்சியைப் பாடுவதோடு மட்டுமல்லாது இஸ்லாமிய பெண் குலத்தில் உயர்வாகப் போற்றக்கூடிய 'பாத்திமா நாயகி’யின் வாழ்வில் நிகழ்ந்த சிறப்புகளையும் பாடுகின்றனர். இப்பாடலில் ஃபக்கீர்கள் கதையை உரைநடையாகக் கூறி, இடையிடையே பாடலாய் வரிகளைப் பாடுகின்றனர்.   முகம்மது நபியின் மகளான பீவீ பாத்திமாவின் பேரழகு வடிவும், நல்ல ஒழுக்கமும், உயர்ந்த பண்பும், அல்லாவுடைய பாச விசுவாசமும், நம்பிக்கையும், ஈமான் உறுதியும், நல்ல அழகையும், தெளிவையும் கண்ட மதினா மாநகரத்து பெரும் செல்வர்கள் எல்லாம் மணமுடிக்க எண்ணினர்.   ''மணமுடிக்க வேண்டுமென்று மனதில் எண்ணி எங்க மகமுதர் நல்நபி இடத்தில் வந்து வள்ளல் முகம்மது நபியிடம் வந்து அவர்கள் வாய்திறந்து கேட்பதற்கு மனம் பதைத்தார்கள்.''   பாத்திமாவை மணம் முடிக்க வேண்டும் என்று மதினா மாநகரத்து வாழ்ந்த பெரும் பெரும் செல்வர்கள் எல்லாம் அருமை நபியிடத்து வந்தார்கள். நபியிடம், பாத்திமாவை மணம் முடித்து கேட்க தயங்குகிறார்கள். ஒருநாள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களும், உமர் கத்தாப் (ரலி) அவர்கள் இருவரும் வந்து முகம்மது நபியிடம் வந்து பெண் கேட்கிறார்கள். அருமை நபி அவர்களே! அல்லாவுடைய ரசூலே! தாங்களுடைய பீவி பாத்திமாவை மணம் முடித்து தாருங்கள் என்று கேட்கிறார்கள். இது கேட்ட நபி மௌனமாக இருந்தார். இவ்வாறு வந்து கேட்கின்ற எல்லோருக்கும் பதில் சொல்லாமல் இருந்தார்கள்.   ஒருநாள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களும், உமர் கத்தாப் (ரலி) அவர்கள் இருவரும் 'மஸ்ஜித் நபவி' பள்ளியில் இருந்த 'ஹஜ்ரத் அலி'யைப் பார்த்து, உங்களிடத்தில் நல்ல செய்தி ஒன்று சொல்ல வந்திருக்கிறோம்.   "வீரம் பொருந்தியதோர் ஹஜ்ரத் அலியே நல்லதொரு செய்தி ஒன்று சொல்லக்கேணும்...''   வீரமிக்கவரே! அலியே! உங்களுடைய நபியின் மகளாகிய பாத்திமாவை அனைவரும் பெண் கேட்டு வாரார்கள். நீங்கள் போய் நபியிடம் கேளுங்கள். உங்களுக்கு தருவார் என்று நம்புகிறோம். அதனைக் கேட்ட ஹஜ்ரத் அலிக்கு பாத்திமாவை நமக்கு மணம் முடித்த தருவார்களா? என்ற ஐயம் ஏற்பட்டது. பின் நபியிடம் சென்று சலாம் கூறிகிறார்கள்.   ''அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூல்லுல்லா"   அல்லாஹ்வுடைய நபியே! என்னுடைய உள்ளத்தில் நெடுநாட்களாக சேர்த்து வைத்த எண்ணத்தை சொல்லுகிறேன். தங்கள் பீவி பாத்திமாவை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என்று கேட்கிறார்கள்.   ''சங்கை பொருந்தியதோர் பாத்திமாவையும் தகுமான மணம் முடித்து தாருங்களேன் சீரும் புகழுமான பாத்திமாவை செல்வ மங்களம் பொருந்த முடித்துத் தாருங்கள்''   ஹஜ்ரத் அலி அங்கிருந்து 'மஸ்ஜித் நபவி' சென்று கையேந்தி அல்லாவிடத்தில் துஆ கேட்கிறார்கள். என்னுடைய எண்ணதை கல்லாக்கி தருவாயாக! மங்கையர் அரசியான பாத்திமாவை மணம் முடித்து தருவாயாக என்று கேட்கிறார்கள்.   ஹஜ்ரத் அலியின் துஆவை நிறைவேற்றும் பொருட்டு அல்லா ஜிப்ரீல்களுக்கு உத்தரவிடுகிறார்கள். ஏழு உலகங்களையும் எட்டு சுவர்க்கத்தையும் ஒன்றாகக் கூட்டி அலங்கரிக்கச் சொல்கிறாள். 'சுபாயத்' என்னும் மரத்தடியின் கீழ் வைத்தது அல்லா ஹஜ்ரத் அலிக்கும் பீவி பாத்திமாவுக்கும் திருமணம் முடிக்கின்றார்.   ''எங்கள் அழகு பொருந்திய பாத்திமாவுக்கும் ஹஜ்ரத் அலிக்கும் வானவர்கள் பார்க்க மணம் முடித்தார்" (இருமுறை)   அல்லாஹ்வின் அரசில் வைத்து மணம் முடித்தனர். அல்லாவுடைய நல்லடியார்களே! இதுவரை நடக்காத ஒரு காரியத்தை அல்லா பீவி பாத்திமாவுக்கும், ஹஜ்ரத் அலிக்கும் மணம் முடித்து வைத்தான். இதனை முகமது நபிக்கு தெரிவிக்க அல்லா, ஜிப்ரீலிடத்தில் சொல்கிறார். அதனைப் போன்று உலகத்தில் மணம் முடிக்குமாறும் சொல்லி அனுப்புகிறார்.   ஜிப்ரீல் வந்து நபியிடத்தில் சொர்க்கத்தில் இருவருக்கும் அல்லா வக்கீலாக இருந்து மணம் முடித்ததை சொல்லுகிறார்கள். நபியும் மனம் நிறைவு பெறுகிறார். பிறகு நபி தன் சகாபாக்களை அழைத்து இச்செய்தியினை மக்களிடத்தும், ஹஜ்ரத் அலியிடத்தும் சொல்லி அனுப்புகிறார்.   இச்செய்தியினை முகம்மது நபி பாத்திமாவிடத்தில் நேரடியாகக் சென்று சொல்லுகிறார். அது கேட்ட பாத்திமா அப்படியானால் நாளை கியாமத் நாளில் பெண்களுக்காக வாதாடி பதிலளிக்கும் பொறுப்பை அல்லா எனக்கு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். அது கேட்டு நபி அவர்கள் ஜிப்ரீல் இடத்து சொல்லுகிறார்கள். ஜிப்ரீலும் அல்லாவிடத்திலும் சொல்லி சம்மதம் பெற்று வருகிறார். பிறகும் பாத்திமா இதனை அல்லா தனக்கு எழுத்து வடிவத்தில் ஆக்கித் தர வேண்டும் என்று கூற, அல்லாவும் அதனைப் பட்டு ஓலையால் எழுதி ஜிப்ரீலிடம் கொடுத்து அனுப்புகிறார். இதனை பெற்றுக் கொண்ட பாத்திமா கண்ணில் ஒற்றிக் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.   முகம்மது நபியும், ஹஜ்ரத் அலி, பீவி பாத்திமா அவர்களின் திருமணத்தை ஊர் அறிய நன்முறையில் முடித்து வைக்கிறார்கள். இவ்வாறான முறையில் ஹஜ்ரத் அலிக்கும், பீவி பாத்திமாவுக்கும் திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! பெண்களே! நீங்களும் பாத்திமா நாயகி அவர்களின் இத்தகைய வாழ்க்கையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.   5.12.3. சைத்தூண் கிஸ்ஸா கதைச் சொல்லுதல் என்ற பொருளையுடைய 'கஸஸ்' என்ற அரபுச் சொல்லின் திரிபே 'கிஸ்ஸா' ஆகும். இச்சொல் கதை என்ற பொருளைக் குறிக்கும்.17   ஃபக்கீர்கள் பாடுகின்ற இக்கதையுடன் கூடிய பாடல் இஸ்லாம் சமயத்தைத் தம் முன்னோர்கள் எம்முறையில் பரப்பினர் என்பதைக் பாடலுடன் கூடிய கதை வடிவில் கூறுவதைச் சுட்டிக் காட்டுகின்றது.   கதை 'மதினா மாநகரத்தில் நான்காவது அரசராக (கலீபாவாக) ஆட்சி செய்து வந்த 'ஹஜ்ரத் அலி' என்பவரின் மகன் 'முகம்மது ஹனீபா'. இவர் தன் நான்கு வீரர்களுடன் காட்டிற்கு வேடையாடச் செல்கிறார். அப்பொழுது இறம் தேசத்து மன்னன் மகள் சைத்தூன் என்பவர் முகம்மது ஹனிபாவை கண்டதும் அவரை அடித்து, துன்புறுத்தி மயக்கமுற செய்து, அவருடன் வந்த நான்கு வீரர்களையும் பிடித்து தன் நாட்டில் சிறை வைக்கின்றாள். இதனை அறிந்த முகம்மது ஹனிபாவின் தாயார், முகம்மதுவை இழிவாக பேசுகின்றார். இதனைக் கேட்ட முகம்மது ஹனிபா ஒரு சபதத்துடன் சைத்தூனையும், அவள் தந்தையையும் வென்று, அவள் நாட்டு மக்களையும் இசுலாத்தில் சேர்த்த பின்னரே தன் நாடு திரும்பி வருவேன் எனக் கூறி செல்கிறார்.   முதலில் ஹனிபா, சைத்தூணுடன் போரிட்டு வென்று அவனையும், அவள் அடிமைப் பெண்களையும் இஸ்லாமியத்தில் சேர்த்து தன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பின்பு சைத்தூனின் தந்தையான இறம் அரசனையும், அவன் நாட்டு மக்களையும் இஸ்லாமியத்தில் சேர்க்கும் பொருட்டு நாட்டு மன்னனையும் வென்று, இறுதியில் இறம் அரசனையம் வென்று, அவனையும் இஸ்லாமியத்தில் சேர்த்து, தம் நாடு திரும்புகின்றார். அங்கு அன்னையின் ஆசியுடன் சைத்தூனை மணந்து ஆட்சி செய்கின்றார். இக்கதையையே ஃபக்கீர்கள் பின்வருமாறு பாடி உரைவிளக்கம் கூறுவதைக் காணலாம். _____________________________________ 17 மு. அப்துல் கரீம், இஸ்லாமும் தமிழும், 1982, ப.217.   பாடல் ''ஆதி அனுப்பிய வேத முறையின் படி அறிந்து சகலோரும் அனுவளவாகினும் பிசகில்லாமல் அதபுடனே நடக்க மானும் புலியும் ஒரு துறை தண்ணீர் மகிழ்வுடனே குடிக்க பாம்பும் கீரீயும் ஓர் தரையில் படுத்து நித்திரை செய்ய இப்படி அரசர் உமறுகத்தாபு இருந்தார் அரசாண்டு சுகல தேசத்து ராஜாக்களெல்லாம் இவர் கைக்குள்ளாக அடங்கி யொடுங்கி அரசாண்டு வருகின்ற அந்த நாளையிலே ஒருநாள் முகம்மது ஹனிபா காட்டுக்கு உற்ற வேட்டையாட நாடி தன்கூட நாலு பேர்கள் தன்னை நடத்திட தானழைத்தார் இரண்டு வீரர்கள் அபூபக்கர் சித்திக்கு உற்ற பிள்ளைகளாம் இரண்டு சூரர்கள் உமர் கத்தாபு உற்ற பிள்ளைகளாம்...''  இவ்வாறாக, சைத்தூண் கிஸ்ஸா' என்றக் கதையுடன் கூடியப் பாடலை ஃபக்கீர்கள் உரை விளக்கம் கூறி இடையிடையே பாடல்களைப் பாடுவதோடு, இப்பாடல்களில் எளிய வருணனைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடியிருப்பதையும் அறிய முடிகின்றது.   5.13. வினா - விடை பாடல் அமைப்பு தமிழில் 'வினா-விடை' போக்கில் அமைந்துள்ள பாடலை இஸ்லாம் சமயத்தில் 'மசலா' எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். 'மசலா' என்ற சொல் குறித்து மு. அப்துல் கறீம் பின்வருமாறு கூறுகின்றார். ''ஸ்ஆல் என்ற அரபுச் சொல்லுக்கு வினாத் தொடுப்பது என்பது பொருள். அச்சொல்லின் அடிப்படையில் 'மசலா' என்ற அரபு இலக்கியம், மார்க்க உண்மைகளை 'வினா – விடை' வழியாக விளக்குவதற்கு எழுந்தது. அவ்வரபு இலக்கிய அமைப்பினைத் தழுவித் தமிழ் இஸ்லாமிய புலவர்களும், அரபு, பாரசீக மொழிகளில் அமைந்த மார்க்க விளக்கங்களைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த 'மசலா' என்ற புதுவகை இலக்கியத்தைப் புனைந்தனர்”.18   நூறு மசலா - வினாவிடைப் பாடல் கதை சுருக்கம்   'ஐந்தமா நகரில் அகமதுஷா என்பவர் தன் மனைவி மரியம்பீவியுடன் ஆட்சி புரிந்து வந்தார். வெகுநாட்களாக இவர்களுக்கு குழந்தை இல்லை. பின்பு இறைவன் அருளால் ஒரு குழந்தையை பெற்றெடுக்கின்றனர். அக்குழந்தைக்கு அப்பாஸ் எனப் பெயரிடுகின்றனர். _____________________________________ 18 மு. அப்துல் கறீம், இஸ்லாமும் தமிழும், 1982, ப.217.   சூழ்நிலை காரணத்தால் தன் நாட்டை இழந்து இருவரும் தன் குழந்தையுடன் வனவாசம் செல்கின்றனர். அங்கு, அப்பாஸ் தன் தந்தையை பிரிந்து சீன மாநகரை வந்தடைகின்றார்.   சீன மாநகரில் 'நூறரசி' என்னும் பட்டம் பெற்ற மெகர்பானுவல்லி வாழ்ந்து வருகிறாள். அவள் தன்னை மணமுடிக்கக் கேட்டு வருபவர்களிடம் நூறு கேள்விகள் கேட்டு, அதில் விடை கூறி வெற்றிப் பெற்றவரை மணமுடிப்பது என்பதே நோக்கமாகும். அந்நிலையில் ஏராளமான அரசர்களும், மந்திரிகளும் போட்டியில் தோல்வியுற்று அவளிடம் அடிமை வேலைப் பார்த்து வந்தனர். ஒருநாள் இச்செய்தியினை அறிந்த அப்பாஸ், எப்படியும் வல்லியை வென்றாக வேண்டும் என்ற முடிவோடு, மசலா நடைபெறுகின்ற மணிமண்டபத்திற்கு வந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் மெகர்பானு வல்லியை வென்று மணமுடிக்கின்றார்.   நூறு மசாலா பாடல் அமைப்பு நூறு மசாலாவில் முற்பகுதி அப்பாஸ் அரசரின் பிறப்பு, வளர்ப்பு நிகழ்ச்சிகளையும் அவர் தாய் தந்தையர் பட்ட இன்பத் துன்பங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. முற்பகுதி முழுவதும் தனிப்பாடல்கள், பாடலும் உரை விளக்கம் என்ற வகையிலான பாடல்கள் பாடப்படுகின்றது.   நூறுமசலாவின் பிற்பகுதி வினாவிடைப் பாடல் அமைப்பில் அமைந்துள்ளது. பிற்பகுதியில் அப்பாஸ் மன்னருக்கும் மெகாபானு வல்லிக்கும் இடையே நடைபெறுகின்ற 'வினா-விடை' போட்டியானது பாடலாக பாடப்படுகின்றது.   நூறுமசலாவின் முன்பகுதி (பாடலும் உரைவிளக்கமும்) ஃபக்கீர்கள் முதலில் அப்பாஸ் அரசர் பிறந்து வளர்ந்த நிகழ்ச்சியைப் பின்வருமாறு பாடுகின்றனர்.   உரை விளக்கம் இப்னு உமர்கத்தாப் ரவி (அல்) மதின மாநகரத்தில் இரண்டாவது கலிபாவாக இருந்து ஆட்சி செய்து வந்த நாளையிலே, அவர்களுடைய காலத்தில் நீதி நிலைநாட்டி அநீதிகளை ஒழித்து, சர்வதேச அரசர்கள் எல்லாம் அவருக்கு திறை அளக்கக் கூடிய முறையிலே, நீதியான முறையில் பரிசோதித்து வருகிறார்கள். அப்படி வரக்கூடிய நாளையில் ஒரு நாளன்று ஹஜ்ரத் அலி அவர்களின் மகனாகிய முகம்மது ஹனிபா அவர்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடி வரவேண்டும் என்று தன்னுடன் நான்கு வீரர்களையும் அழைத்து கொண்டார்கள். இரண்டு வீரர்கள் அபூபக்கர் சித்திக் மக்கள்கள். இரண்டு பேர்கள் உமர்கத்தாபு மகன்கள். இப்படி ஐந்து பேர்களும் ஒன்றாக கூடினார்கள்.   பாடல் ''ஐந்து ராசர்களும் ஒன்றாகக்கூடி ஆலோசனை செய்து காட்டுக்கு போயி வேட்டைகளாடிட கொண்டா ரந்நேரம் வேட்டையின் ஆயுதமெடுத்தார்கள் கைகளில் வேண்டுமானதெல்லாம் கத்தி கட்டாரி ரம்பம் வாள்முதல் கனத்த கேடயமாம் ஈட்டியை எடுத்து கையில் பிடித்தார் எந்தன் அலிமகனார் சக்கரம் எடுத்து கையில் பிடித்தார் சாமார்த்தியம் காட்ட...''   உரை விளக்கம் இந்தவிதமாக ஐந்து அரசர்களும் வேட்டைக்கு வேண்டுமான ஆயுதங்களை எடுத்து பூட்டி, இன்னும் அவர்கள் ஏறிச்செல்வதற்கு பஞ்ச கல்யாணி எனும் குதிரையைக் கொண்டு வரச்செய்து, இந்த ஐந்து பேர்களுக்கும் ஒன்றுபோல் புலியைப் போலானா பரியில் ஏறி அமர்ந்து, முகம்மது ஹனிபா அவர்கள் தன்னுடைய குதிரைக்கு தானே இசாராச் செய்தார்கள். இசாரத் செய்தவுடனே அந்த நான்கு வீரர்களும் முகம்மது ஹனிபாவும் ஆக ஐந்து பேர்களும் எப்படி குதிரைகளை நடத்திச் செல்கின்றார்களேயானால்,   பாடல் ''நான்கு கால்களும் நளினங்கள் ஆடிட ஓட்டிய குதிரைகள் வானத்துக்கு ஏறிட சோலை மரங்களும் தலைதூக்கி ஆடிட காட்டில் மான்மறைகள் கண்டதும் ஓடிட ஹனிபா வழி நடத்தினாரே ......”   இந்த விதமாக வீரமுள்ள ஐந்து பேர்களும் ஒன்றாக மதின மாநகரத்தை விட்டு நீங்கி காட்டுக்குள் வேட்டையாடிட வருகின்றார்கள்.   பாடல் ''அண்ணலான அலிமகனார் வீரமுள்ள ஹனிபா வேட்டையாடி வரும் பொழுது கண்ணாலே கண்டிடுவாரு...''   உரை விளக்கம் ஐந்து வீரர்களும் காட்டில் வேட்டையாடி வந்துக்கொண்டிருந்தார்கள். அப்படி வேட்டையாடி வரக்கூடிய நேரத்திலேயே அவுங்க கண்ணுக்கு முன்னாலே இருந்து இருந்தாற் போன்று நாற்பத்தோரு குதிரைகள் வரக்கூடிய காட்சியைத்தானே பார்க்கின்றார்கள்.   (அ) நூறு மசலாவின் முன்பகுதி (பாடல் - உரை விளக்கம்) நூறுமசலாவான அந்த நூறு கேள்விகளை, அந்த மார்க்க விஷயங்களை பற்றி தொழுகையினுடைய விவரங்களைப் பற்றி, அல்லாவுடைய குர்ஆன் ஷரிபிலே கூறப்பட்டுள்ள பரிசுத்தங்களைப் பற்றி ஞான அலங்காரவல்லி ஒரு இந்து பெண், அவள் கலிமா சொல்லாத பெண்ணாக இருந்தும் மார்க்க கல்விகளை அறிந்து தெரிந்து, மார்க்க நூல்களை நன்றாக உணர்ந்து, அப்பாஸ் மன்னரிடத்தே நூறு கேள்விகளைக் கேட்கும், இந்த நூறு மசாலாவெனும் சரித்திர வரலாற்றை நாங்கள் சொல்லலாம் என்று ஆரம்பம் செய்கிறோம். அல்லாவுடைய நல்லடியார்களே! அல்லாவிடத்தில் எங்களுக்கு நல்லருளுமாறு துஆ செய்யுமாறு கேட்டு, இதனை ஆரம்பம் செய்கின்றோம்.   ''ஐந்த மாநகர்பதி ஆண்டு வந்தார் அகமதுஷா அகமதுஷா மரியம்பீவி இருவரும் வாழ்ந்து வந்தார் அண்டாள் பவனமெல்லாம் அடக்கியே அரசாண்டு வந்தார் சொத்திலேயும் சுகத்திலேயும் பணத்திலேயும் காசிலேயும் பாதுஷா வாழ்ந்து வந்தார்- மன்னர் அகமது வாழ்ந்து வந்தார்...''   உரைவிளக்கம் ஐந்த மாநகர் பதி என்னும் நீர்வளம், நிலவளம், பணவளம் பொருந்திய நாட்டை அரசான செய்து பரிபாரணம் நடத்தி வாழ்ந்து வந்தார்கள். அகமதுஷாவும், மரியம் பீவியும் கண்ணும் இமையும் போன்றும், நகமும் சதையும் போன்று வாழ்ந்து வந்தார்கள். அப்படி வாழ்கின்ற போது, எல்லாம் வல்ல இறைவன் வேண்டிய ரஹ்மத்துகளை கொடுத்திருந்தான். ஆனால் இரு பேர்களுக்கும் ஒரே ஒரு மனக்குறை இருந்தது. அந்த மனக்குறை என்னெவன்று கேட்டால், ஆண்டவனிடத்தில் இரவும் பகலும் அறுபது நாளாக மரியம்பீவியும், அகமதுஷா அவர்களும் என்ன துஆ கேட்கிறார்கள். ''சொத்தை வைத்து ஆளுவதற்கு குட்டி இரண்டு இல்லையம்மா பட்டம் சூட்டி ஆளுவதற்கு அம்மா பாலகனும் இல்லையம்மா நேந்துதான் இருந்து நெய்யான விளக்கேற்றி ஏந்திழையார் கேட்ட துஆ , படைத்த இறையோனும் - கிருபை செய்தான்...''   உரைவிளக்கம் அல்லாஹ் தஆலா! இறைவன் கபூலாக்கி கொடுத்தான். அவர்கள் நாளும் கணக்காக அவுங்களுடைய வயித்திலேதானே அமலாக தரித்து, வளர்பிறை வளர்த்தது போல் பத்து மாதம் நிறை சுமந்து மரியம்பீவி அவர்கள் ஐந்தமாநகரில் பெற்றெடுத்தார்கள்.   பாடல் "பெற்றெடுத்தார் குழந்தையும் பெரியோனின் கிருபையினால் தந்தை போல் சிகப்பழகும் தாயைப்போல் முகத்தழகும் காலழகும் கையழகும் மனது போல் புயத்தழகும் ஆசை கொள்வார் சில கோடி அண்டி நிற்பார் சில மகளிர் அறிவு பல கோடி அண்டி நிற்பார் சில கோடி நேசம் வைத்த மங்கையர்கள் நின்றும் அவரை கொஞ்சிடுவார்..."   உரைவிளக்கம் மகன் பிறந்த ஆசையினால் ஐந்த மாநகரில் உள்ள ஏழை எளியவர்கள், இல்லாத பக்கீர்களுக்கு எல்லாம் பாதுஷா அவர்கள் மகன் பிறந்த சந்தோஷத்தில் பணம், காசுகளை எல்லாம் வாரிவாரிக் கொடுத்தார். அள்ளி அள்ளி ஹதியா கொடுத்தார். பசியால் வருகின்ற பசியாளிக்கு பசி அமர்த்தினார். எத்தீம்களுக்கு உடை கொடுத்தார். மகராஸா கட்டடிம் கொடுத்தார்கள். இப்படி வேண்டிய உதவிகள் செய்தார்கள்.   அல்லாவின் கிருபையினால் அந்த குழந்தைக்கு ஒரு வயது ஆனது. பல நாட்டிலுள்ள பெரியோர்களை, சூஃபிகளை வரவழைத்து அந்த பாலகருக்குத்தானே அழகான பேர் வைத்தார்கள். என்ன பேரு வைத்தார்களேயானால் அப்பாஸ் என்று தானே வைத்தார்கள். அகமது ஷா மன்னரும்,   "அல்லா ......... பேர் நாமம் சூடிதான் பாலகரையும் வளர்த்து வந்தார் நாளொரு மேனியாக பொழுதொரு மேனியாக இளம்பிறை வளர்வது போல் பாலகனும் வாழ்ந்து வந்தார் வளர்ந்து வரும் நாளையில் ஐந்தாவது வயதுமானார் ஐந்தாவது வயதினிலே பள்ளியில் ஓதிவந்தார் நல்ல நல்ல வேதம் கற்றார் அல்புர்கான் ஓதக் கற்று அப்பாஸீ இனிய தமிழ் படிப்பும் கற்றாரு...''   அல்லாஹ்வின் உதவியினால் குர்ஆனும், தொண்ணூற்றாறு தத்துவங்களையும் கற்று, அறுபத்து நான்கு கலைகளையும் கற்று, ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்தாறு ஆயத்துகளையும் அறிந்தார்கள்.   (ஆ) நூறு மசாலாவின் பிற்பகுதி (வினா - விடைப் பாடல்) ''ஆமினல்லா ஆமினல்லா ஆழமெல்லாம் நிறைந்தவனே ஆழமெல்லாம் நிறைந்தவனே ஆளுகின்ற வல்லவனே வல்ல பெரியோனே! அல்லா உன்னை மறப்பதில்லை ஒரு காலமும் .... வஞ்சியோடு தான் கூறிய வந்தாள் ஞானவல்லி கொஞ்சியவள் பூங்காவனம் கூடி விளையாடும் போது வந்து விளையாடயிலே அந்த பாவையவள் மயக்கப்பட்டாள் பாவையவள் மயக்கப்பட்டு அந்த பாங்கியர்கள் மடியின் மீது பாங்கியர்கள் மடியின் மீது வல்லி படுத்திருக்கின்ற செய்கையிலே சங்கீதத்த ஞான வல்லி அப்போது கண்டாலே கனவொன்று காணாத சொப்பனங்கள் வல்லி அப்போது மிகவும் கண்டாள் பதறி முழித்தெழுந்து தன்னுடைய பாங்கிகளைத்தான் அழைத்தாள் யாரடியோ பாங்கிகளே எந்தனுடைய தாதிகளே காணாத சொப்பனங்கள் இப்பொழுது நானும் கண்டேன் நான் கண்ட கனவானது  இப்பொழுது கருத்துடனே சொல்லக் கேளு வெட்டுங் கைவாள் ஒடிந்து - நான் வீரமணிமாலை சூடக் கண்டேன் கனவு நான் கண்டேனே..... பதினெட்டு வயதுள்ள பாலகனுக்கு பாரியாகக் கண்டேனே - கனவு நான் கண்டேனே.... மலர் வைத்த கூந்தலிலே நான் சாணி கூடை இருக்கக் கண்டேன் இந்த கனவு கண்டேன் அல்லா எந்தனுடன் தாதிகளே இந்தவிதமாக வல்லோ வல்லி எடுத்துரைக்கும் வேளையிலே ...''   ஐந்தமெனும் நகரத்தை இனிதெனும் செங்கோல் நடத்தி அரசு புரிந்து வரக்கூடிய அகமதுஷாவுடைய மகன் அரசர் சிகாமணியுடன் திருநாமம் பெற்ற அப்பாஸ் சிகாமணி அவர்கள், சீன மாநகர் தன்னிலே சிகரமென்னும் சிகாதி பெற்று இயற்கொடி நாட்டி வாழ்ந்து வரும் பாகவதி அரசுடைய மகளாகிய நூறரசி என்னும் திருநாமம் பெற்ற மெகர்பானுவாகப்பட்ட ஞான அலங்காரவல்லி குளித்து ஸ்நானங்கள் செய்து, தன்னுடைய பூங்காவனத்திலே நித்தரை செய்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு கனவு கண்டாள். அந்த கனவைக் கண்டதுடனே பதறி முழித்து எழுந்து, தன்னுடைய அடிமை வேலைக்காரப் பெண்களைப் பார்த்து தான் கண்ட கனவைச் சொன்னார்கள். சொல்லிக் கொண்டுள்ள தருணத்தில் அப்பாஸ் அரசு சிகாமணி பட்டவர்கள் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு நாடு நகரங்கள் அத்தனையும் கடந்து, சில நாட்களுக்கு பின் அந்த மசாலா மணிமண்டபத்தில் வந்து சேர்ந்தார்கள்.   ''மசாலா மணிமண்டபத்தில் வாகுடனே வந்து சேர்ந்து ஆசையா மணியானதே அகமதுஷா மகன் அடியே ஆராய்ச்சி மணியோசையே - அந்த நூறரசி காதில் கேட்டு யாரடியே பாங்கிமாரே என்னுடையத் தாதிகளே ஆராய்ச்சி மணியோசை தான் - அல்லா இப்பொழுது கேட்கிறது. ஒரு வருட காலமாக கேட்காத இந்த மணியோசை இன்று இத்தருணத்திலே - பெண்ணே இப்பொழுது கேட்கிறது. ஆசையா மணியானதே அடித்தார் பார்த்து வாங்க இந்த விதமாகத் தானே - அந்த நூறரசி தானும் சொல்ல...''   ஒருவரிடம் ஒன்றரை வருட காலமாக இந்த மசாலா மணிமண்டபத்தில் இந்த ஆராய்ச்சி மணியோசையாகப்பட்டது கேட்கவில்லை. ஆகா! இன்று ஒன்றரை வருடத்திற்கு பின்பதாக இந்த மணி ஓசை கேட்கிறது. யாரோ! ஓரு மன்னவன் வந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு இந்த உலகத்துடைய வாழ்க்கையாகப்பட்டது முடிந்து விட்டது போல் தெரிகிறது. அதனால் தான் இந்த ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டுள்ளான் அவன் யாரு? எவன்? என்று, அவன் எந்த நகரத்தில் பிறந்தவன் என்று கேட்டு வாருங்கள் என்று தன்னுடைய பாங்கிப் பெண்களைப் பார்த்து நூறரசியாகப் பட்டவள் சொன்னாள். "அந்த மொழி கேட்டதுடன் அந்த எஜமானன்தான் தாதிப் பெண்கள் மசாலா மணிமண்டபத்தில் - அவர்கள் வாகுடனே வந்து சேர்ந்து.... மசாலா மணிமண்டபத்தில் வந்து நின்று பார்க்கும் பொழுது சந்திரன் உதயம் போல நம்ம அப்பாஸையும் தானும் பார்க்க அவர்களுடைய அழகைக்கண்டு அவர்கள் சிந்தைகளும் தான் கலங்கி சிந்தைகளும் தான் கலங்கி பாங்கிகள் வாகுடனே ஏது சொன்னாரு - அடே எந்த ஊரு ராஜேனோ நீ மன்னா! எத்தனை பேரு அதிபதியோ- அடே வந்தவர்கள் மீண்டதில்லை எந்தனுட வல்லியிடம் மன்னா தன் நாட்டை ஆளாமலே உன் தலை எழுத்தா இங்கு வந்தாய் உந்தன் உயிர் வேண்டுமானால் மன்னா குதிரை கொண்டு ஓடும் மன்னா...''   ஏய் மன்னவரே! உன்னைப் பார்க்கும் பொழுது பதினாராம் நாள் சந்திரனைப் போல் இருக்கிறாய். செந்தாமரை புஷ்பமாக்கப்பட்ட மலரைப் போல் அழகாக இருக்கிறாய். ஆனால் எங்களுடைய அரசியாகப் பட்டவள் நூறரசி இருக்கிறாளே. ஐந்நுாறு அரசர்களை வென்றவள். இவர்கள் அவளுடைய பூந்தோட்டத்தில் வேலைக்காரர்களாக உள்ளனர். ஆகையால் மன்னவரே! என்னுடைய அரசிக்கு தெரியாமல், இந்த நாட்டை விட்டு உயிர் தப்பித்து ஓடிவிடு என்று அப்பாஸ் அரசரை பார்த்து சொன்னார்கள். ஆகா! அந்த வார்த்தையைக் கேட்டு அரசராக்கப்பட்டவர் என்ன சொன்னார்.   ''போங்கடிய தாதிகளே புத்தி கெட்ட பாங்கிமாரே ஓடவும் நான் வரலே   ஒழியவும் நான் வரலே அப்பேர்பட்ட வல்லியைத்தான் இப்பொழுது நான் உகந்து அவளைக் கண்டு மாலை சூடி – நான் அவள் தலையில் விறகை வைத்து – எந்தன் அரண்மனைக்கு அழைத்துப் போக – இந்த அகமதிஷ மகனும் வந்தேன்..... நான் சொன்ன மொழி மறவாதே உந்தனுடைய வல்லியுடன் நீங்களும்தான் சொல்லும் என்றார்''   அல்லாஹ்வுடைய கிருபையினால் அருமை நபிகள் எம்பெருமானாரின் துஆ பரக்கத்தினால், அப்பேர்பட்ட வல்லியை வெல்வதற்குதான் என்னுடைய நாட்டை விட்டு இப்பேர்ப்பட்ட நகரத்திற்கு வந்துள்ளேன். அதனால் அவளிடத்தில் நான் சொன்ன விபரங்களைப் போய் சொல் என்று அரசர் அப்பாஸ் சிகாமணி அவர்கள் பாங்கிப் பெண்ணைப் பார்த்து சொன்னார்கள். அந்த வார்த்தையை கேட்ட பாங்கிப் பெண்களும் மசாலா மணிமண்டபத்தை விட்டு ஓடிவந்து தன்னுடைய அரசியாகிய மெகர்பாவிடத்தில் சொல்கின்றனர். அந்த வார்த்தையைக் கேட்டு நூறரசியாகிய மெகாபானுவும் மசாலா மணிமண்டபத்திற்கு வந்து சேர்கிறாள்.   அப்பாஸ் அரசர் மசலாமணி மண்டபத்திற்கு வந்து, அங்குள்ள மணியை அடித்துத் தன்னுடைய வருகையை வல்லிக்கும், அவன் அரண்மனையார்க்கும் தெரிவிப்பதை ஃபக்கீர்கள் பின்வருமாறு பாடிச் செல்வதைக் காணலாம். "மன்னாதி மன்னர்களும் மகுடமுடி ராஜர்களும் மந்திரி பிரதானிகளும் மாஞானிகளும் சூழ்ந்திருக்க யானைப் படை சேனைப் படை அந்த காலாட்படை இருக்க அவரவர்கள் சூழ்ந்திருக்க அந்தா அகமதிஷா மகனிருக்க கூடியிருந்த சபைதனிலே வல்லி கூறுகிறாள் மசாலாவே... வல்லவன் நான்தானென்று வந்து இம்மேல் சபையில் கூறும்! வெல்வேன் என்று சொன்ன வேந்தனே நான் சொல்லக் கேளு .... வல்லி நான் சொல்லும் மசாலாவில் பதில் சொல்லாதிருந்தால் கொல்வேன் கைவாள் அரிவாளினால் கோதை அறிவார்கள் பார்க்க....''   இந்த வார்த்தையைக் கேட்டு அப்பாஸ் அரசன் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா! மெகாபானுவல்லி முதல் கேள்வியாக அப்பாஸ் அரசரைப் பார்த்து கேட்கிறாள்.   மன்னாதி மன்னனே! மகுடமுடி ராஜனே என்று சொல்லி சப்ததோடு, ஆங்காரத்தோடு கேட்கின்றாள்.   எந்தனைக் கொல்வதென்ற இளமயிலேக் கேளு வந்திடும் விதிகள் வந்தால் மாந்தர்கள் என்ன செய்வார்கள் உந்தன் தன் மசாலாத்தன்னை உகந்துமே சொல்வேயானால் அந்த பொருளைக் கொண்டு ஆதி ரஹ்மான் கிருபையாலே...''   என்னின் சுடர்மணியே! நீ சொல்லுகின்ற மசாலாவுக்கு பதில் சொல்ல தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உன் மாமசாலாவைச் சொல் என்று சொன்னார்கள். ஆகா! அந்த வார்த்தையைக் கேட்டு மெகர்பானுவாகப்பட்டவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா!   ஏய் மன்னாதி மன்னனே! மகுடமுடி ராஜனே! என்று சொல்லி சப்தத்தோடு ஆங்காரத்தோடு என்ன கேட்கின்றாள்.   வினா "தாண்டும் பரிகள் ஏறி மீண்டும் இங்கு வந்தோரே தாசியராய் வந்த கோசிரியரே நீர் இங்கு கேளும் நீர் யார்மகனு காணும் நீர் இப்ப சொல்லா விட்டால் நேரே பிளப்பேன் யானும்..."   தாண்டும் பரி ஏறி வந்தவரே நீ யார் மகன், யார் உன்னை வளர்த்தது என்று கேட்கிறாள்.   விடை "அடீ ஞானப்பெண்ணே கொல்வேன் என்று சொன்ன குங்குமச் சந்தனமே கோதையராகிய மாத்ரே நீர் கேளு- நான் ஆதம் மகன்தானடி - பெண்ணே ஓதும் வேதம்தானடி என்னை அல்லா வளர்த்தானடி - பெண்ணே உன்னை ஒரு சொல்லால் வெல்லத்தானடி..."   நான் ஆதம் மகன் என்றும், அல்லாஹ் தஆலா என்னை வளர்த்தான் என்றும் விடை அளித்தார். தான் ஆதம் மகன் என்றும் அல்லாஹ் தஆலா தான் என்னை வளர்த்தார் என்று அப்பாஸ் விடையளிக்கின்றார்.   வினா "ஏய் மன்னவா! தாண்டும் பரிகள் ஏறும் முன்னே தங்கி இருந்த இடமென்ன ஊன்றும் பரிகள் ஏறும் முன்னே உயர்ந்திருந்த இடமென்ன இம்மசாலா போல் ஆயிரம் மசாலா உள்ளது விளங்கும் படி சொல்லும் மன்னா சொல்லும் மன்னா வெல்லும் மன்னா - இங்கு பல பேர் முன்னிலையில்......   ஏய் மன்னவா தாண்டும் பரிகள் ஏறும் முன் தங்கியிருந்த இடம் எங்கே? ஊன்றும் ஏறும் முன்னே உயர்ந்திருந்த இடமென்ன? என்று கேட்கிறாள்.   விடை "அடி ஞானப்பெண்ணே! தாண்டும் பரிகள் ஏறும் முன்னே தங்கி இருந்தேன் தகப்பன் வீட்டில் ஊன்றும் பரிகள் ஏறும் முன்னே உயர்ந்திருந்தேன் தாயின் வயிற்றில் இதுதானா உன் மசாலா வென்று என்னை வெல்ல வந்தாயடீ ....." என்று பதில் அளிக்கிறார்.   மேற்கண்ட முதல் நாள் மசலா மூலமாக, ஒரு மனிதன் இவ்வுலகில் தோன்றிய நாள் முதல் இறைவனே அவனை, காத்து வளர்க்கின்றான் என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது. இவ்வாறாக முதல் நாள் முடிவடைகிறது. ஜ இரண்டாம் நாள் மசலா வினா "மன்னாதி மன்னனே! மகுடமுடி ராஜனே! என்னை வெல்ல வந்த மன்னா இருந்து நல்லா கேளு மன்னா - அடே உங்கள் நபி மார்க்கத்திலேயே நல்ல முகம்மதியர் வேதத்திலே நாலாவது மார்க்கத்திலேயே நபிகள் சொன்ன சரகின் படி மானிலேயும் பெரிய மானு அறுபடாத மானுமென்னா? மீனிலேயும் பெரிய மீனு அறுபடாத மீனுமென்னா? மாவுலேயும் நல்ல மாவு இடிபாடாத மாவுமென்ன? இடிபடாத மாவானதை எந்தனுக்கு சொல்லும் மன்னா சொன்னா உயிர் பிழைப்பாய் - மன்னா சொல்லா விட்டால் தலையறுப்பேன்...''   விடை "அந்த மொழி கேட்டதுடன் - நம்ம அகமதிஷ திருமைந்தன் கேளடீயே! ஞானவல்லி கிருபையுள்ள நூறு மசாலா எங்கள் நபிமார்க்கத்திலே நல்ல முகம்மதியர் வேதத்திலே – அல்லா நாலாவது மார்க்கத்திலேயே நபிகள் சொன்ன சரகின் படி மானிலேயும் பெரிய மானு - பெண்ணே அறுபடாத மானானது - அல்லா அறுபடாத மானானது - அது ஈமானடி மெகர்பானே மீனிலேயும் பெரிய மீனு அறுபடாத மீனானது - அது ஆமின் என்ற தாகுமே.. மாவுலேயும் நல்ல மாவு - பெண்ணே இடிபாடாத மாவானது - அல்லா இடிபாடாத மாவானது ஐந்து நல்ல கலிமா பெண்ணே ... இது தானே உன் கதைகள் இந்த மன்னனுக்கு சொல்ல வந்தே...'   மனிதனுக்கு முதலில் வேண்டியது இறை நம்பிக்கை (ஈமான்) ஆகும். இறைநம்பிக்கை கொண்ட மனிதன் இறைவனிடத்தில் நம்பிக்கையுடன் வேண்டுதல் (ஆமீன்) செய்கிறான். பின்னர் இறைவன் காட்டிய வழியில் இறைவேதத்தின் சூத்திரங்களை (கலிமா) ஒதி இசுலாத்தில் இணைகிறான். இந்த மூன்று படிநிலைகளை விளக்குவதே மேற்கண்ட பாடலின் விளக்கமாகும்.   மூன்றாம் நாள் மசலா  வினா ''மன்னாதி மன்னவனே ! மகுடமடி ராஜோனே! என்னை வெல்ல வந்த மன்னா இருந்து நல்லா கேளு மன்னா ஆதத்துடைய மக்களுக்கு அல்லா படைத்தான் ஆறுவீடு ஆறு வீட்டு பேரானதை அறியும் படி சொல்லும் மன்னா சொல்லும் மன்னா வெல்லும் மன்னா..." விடை அந்த மொழி கேட்டதுடன் அந்த சிந்தையுள்ள அப்பாஸ் அரசர் கேளடியே ! கிளிமொழியே! கிருபையுள்ள நூ றுமசாலா - இந்த ஆதத்துடைய மக்களுக்கு அல்லா படைத்தான் ஆறு வீடு முதல் வீடு தகப்பன் வீடு - பெண்ணே இரண்டாவது வீடு தாய் கருவு வீடு - அல்லா மூன்றாம் வீடு துன்யா வீடு நான்காம் வீடு கப்ரு வீடு ஐந்தாம் வீடு கேள்வி வீடு ஆறாம் வீடு சொர்க்கம் நரகம் வீடு...''   தந்தையிடத்து கருப்பொருளால் உதிக்கின்ற மகன் தாயின் கருவறையில் வளர்கிறான். 'துன்யா' எனும் இவ்வுலகில் வாழ்ந்து முடிந்தவுடன் 'கப்ரு' என்னும் மண்ணறைக்குள் செல்கிறான். கியாமத் (இறுதித் தீர்ப்பு) நாளில் இறைவன் மனிதனை எழுப்பி கேள்வி கேட்கிறான். அம்மனிதன் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப அவனை சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்புகிறான் என்பதே இந்த விடையின் பொருள். வினா "ஏய் மன்னவா! நெத்தி படாத தொழுகை என்ன? நேரமில்லாத பாங்கும் என்ன? கத்தி படாத கறியும் என்ன? முள்ளும் இல்லாத மீனும் என்ன? மன்னா –   இதன் பொருளை விளக்கி சொல்லும் மன்னா..'' விடை "அடீ ஞானப்பெண்ணே ! நெத்தி படாத தொழுகை ஜனாசா தொழுகை நேரமில்லாத பாங்கு பேர்கால வீட்டு பாங்கு கத்தி படாத கறியானது பறவையிட்ட முட்டையாகும் முள்ளு இல்லாத மீனாவது பிஸ்மீன்...'' வினா ''மரத்துக்குள்ளே பூப்பூத்து - மன்னா குடத்துக்குள்ள காய் காய்க்கும் காயானது பழமானது - அது கனிந்து தான் கீழே விழுந்தது கனிந்து கீழே விழுந்துதான் - திகட்டாமல் இனிக்கும் கனி, அந்தக் கனி - மன்னா அது எந்தக் கனி ..... எக்கனி என்று சொல்லும் மன்னா சொல்லா விட்டால் நான் கொல்வேன்...'' விடை "அடீ ஞானப்பெண்ணே ! விளையாட்டுக்கதையைப் போட்டு வெற்றி பெறவா நினைத்தாயடி மரத்தில் பூப்பூத்து குடத்திலே காய்காய்த்தது காயானது பழமாகி - கனியானதும் கனிந்து கீழே விழுந்ததாம் - அந்த கனி உலகத்தில் தெகட்டாத பிள்ளைக்கனி.”   இவ்வாறாக மூன்று நாட்கள் மசலா மணிமண்டபத்தில் அப்பாஸ் அரசருக்கும், மெகர்பானு வல்லிக்கும் நடைபெற்ற போட்டியில் அப்பாஸ் அரசர் வெற்றி பெற்று மெகாபானுவை மணம் முடிக்கின்றார்.   இவ்விதமாக ஃபக்கீர்கள் 'நூறுமசலா' என்ற பாடல் மூலமாக இஸ்லாமியக் சமயக் கடமைகளையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு எளிய முறையில் விளக்குகின்றனர்.   5.14. முடிவுரை இந்த இயலில் மேற்கண்ட ஆய்வின் மூலம் ஃபக்கீர்கள் பாடுகின்ற பாடல்கள் இறையுணர்வு, பொதுநல சிந்தனை, ஈகை உணர்வு, கூட்டுணர்வு, இறைநம்பிக்கை போன்றவற்றை மக்கள் வளர்த்துக் கொள்ள துணைநிற்கின்றன. எதுகை, மோனை, அடுக்குகள், திருப்புகள், சொற்பொருட் பின்வருநிலையணி, முத்திரை, மணிப்பிரவாளம் போன்ற இலக்கண அழகுகள் நிரம்ப காணப்படுகின்றன என்பதை அறிய முடிகின்றது. இயல் - 6   இயல் ஆறு  தமிழ் இலக்கியம் சுட்டும் பாணர்களும் தமிழக ஃபக்கீர்களும் - ஓர் ஒப்பாய்வு தமிழ் சமுதாயத்தில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட தொன்மையான பழங்குடி மக்கள் பாணர்கள். இவர்கள் பண் பாடுபவர்கள். தொழில் வழி மரபினருள் பாணர்கள் பாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். பாடுதல் மட்டுமல்லாது யாழ், முழவு, வயிர் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதிலும் திறம் பெற்றவர்கள். ஊர் ஊராய் பண் பாட செல்லும் இயல்புடையவர்கள். பாணர்கள் குழுவாக வாழ்ந்துள்ளனர். தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர் காலங்களில் பாணர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது. பாணர்கள் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. அவை அக்காலக் கட்டத்தில் பாணர் தம் வாழ்வு சிறந்து விளங்கியதை உணர்த்துகின்றது. பாணர் தம் வாழ்வினை ஒத்தே தமிழக இஸ்லாமிய ஃபக்கீரர்களின் வாழ்வு அமைந்துள்ளது. எனவே தமிழ் இலக்கியங்கள் சுட்டும் பாணர் மரபினரை குறித்து ஓரளவேனும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. அவற்றைப் பற்றிய விளக்கங்கள் இவ்வியலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.   பாணர் பெயர் காரணம் "பாண் + அர் = பாணர். பண், பாண், பண் - இசை பாணர்கள் சங்கக் காலத்தில் வாழ்ந்த இசைக்கலை வாழ்க்கையர்கள். இவர்கள் ஊர் ஊராய் சுற்றித் திரிந்து இசைப்பாடியும், கருவிகளை இசைத்தும், நாடகம் நடத்தியும் நடனம் ஆடிப் பாடியும் வாழ்ந்தவர்கள்”1 என பாணர் பெயர் குறித்து வி.பா. கா. சுந்தரம் குறிப்பிடுகின்றார். இதனை "பண் என்னும் சொல்லை முதனிலையாகப் பெற்றது பாணர் என்னும் சொல். பாணர் என்பார் பாடுவாரும் யாழிசைப்பாரும் என இரு வகையினர்."2 ___________________________________ 1 வீ.பா. கா. சுந்தரம், தமிழிசை கலைக்களஞ்சியம் தொகுதி III, (த-ந - ப்), 1997, ப.280. 2 பெ. வரதராஜன், தமிழ் பாணர் வாழ்வும் வரலாறும், 1973, ப.8.   என பெ.வரதராஜன் குறிப்பிடுகின்றார். இங்ஙனம் பண் இசைத்தவர்கள் பாணர்கள் என்பதை அறிய முடிகின்றது. மேலும் பாணர் என்பாரை   "பாடுவாரும் ஆடுவாரும் கருவியிசைப்பாரும் கருவி செய்வாரும் அவர் தம் பெண்டிரும் கூடிய ஒரு பெருந்தொகுதியினரே பாணர் என்பவராம்”3   என புலவர் இரா. இளங்குமரன் கூறுகின்றார்.   6.1. பாணர் வகையினர் பாணர் வகையினருள் கூத்தர், வயிரியர், சென்னியர், செயிரியர், மதங்கர், மாகதர், வேதாளிகதர், கோடியர், பொருநர், அகவுநர், இன்னிசைக் காரர் எனப் பலவகையினர் இருந்துள்ளனர். பெண்களில் விறலியர், பாடினியர், பாண்மகளிர், பாடுமகள், பாட்டி, மதங்கியர் என பாண் மரபின் பெண்களைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது.மேலும் "துடியன் பாணன் பறையன் கடும்பனென் றிந்நான் கல்லது குடியும் இல்லை" (புறம் 335:7-8)  என்பது மாங்குடி கிழாரின் கூற்று. அதாவது அவரவர் செய்த தொழிலின் அடிப்படையில் இக்குடிப் பெயர்கள் தோற்றம் பெற்றுள்ளது. துடி என்ற இசைக்கருவியை இசைத்தவர்கள் துடியர்கள். பாட்டு மற்றும் யாழினை இசைத்தவர்கள் பாணர்கள். பறை இசைத்தோர் பறையர்கள். மற்றும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட இசைக்கருவியை இசைத்தவர்கள் கடம்பன். இங்ஙனமே குடிப் பெயர்கள் தோன்றியது. இதனையே வாழ்வியல் கலைக்களஞ்சியம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.   "இசைப்பாணர் என்பவர்கள் இசை பாடுநர், யாழ்ப் பாணர் என்பவர் யாழ் இசைப்பவர்கள். துடி கொட்டுபவன் துடியன், பறை கொட்டுபவன் - பறையன், கடம்பன். வயிரியர் - வயிர் என்றும் ஊதுகொம்பு இசைப்போர். கோகுடியர் - கோடு என்னும் வளைகொம்பு இசைப்போர் - மண்டை போன்ற ஒருவகை உண்கலத்தை வைத்திருப்பவரே மண்டைப் பாணர் எனப் புகலுவார்கள்".4 ___________________________ 4. புலவர் இரா. இளங்குமரன், பாணர், 1987, ப.2. 5. வாழ்வியல் கலைக்களஞ்சியம், தொகுதி 2, 1986, ப.330.   6.2. பாணர் குடியிருப்பு பாணர்கள் ஊர் ஊராக பண் பாட செல்லும் இயல்புடையவர்கள். நிலையாக ஒரே இடத்தில் வாழ்வது இல்லை. நாடோடிக் கலைஞர்கள், அவ்வாறுச் செல்லும் போது பொது இடங்களில் தங்குவார்கள். வைகை ஆற்றின் கரையில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பாணர் குடியிருப்பை 'பெரும்பாண் இருக்கை' என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது.   ''வையைத் துறை துறை தோறும் பல்வேறு பூத் திரட் தண்டலை சுற்றி அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்” (மதுரை. 340-342)   ஏழு ஸ்வரங்களில் குழலையும், யாரையும் தவறாது இசைக்கும் நற்பண்பினை உடையப் பாணர்கள் குடியிருப்பை இளங்கோவடிகளும் ''பெரும்பாண் இருக்கை...'' என்றேக் குறிப்பிட்டுள்ளார்.   ''குழலிலும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அறம்பொன் மரபின் பெரும்பாண் இருக்கை" (சிலம்பு. 5:35-37)   பாணர் தம் குடியிருப்பு 'பாண்சேரி' என்றும் அழைக்கப்பட்டுள்ளதை மதுரைக் காஞ்சி (269), புறநானூறு (348) குறிக்கின்றது. ''விரிந்த அறிவுடையோர் இடத்தே அறிவிலார் புகுந்து புல்லிய சொற்களைச் சொல்லுதல் கலை வளம் உடைய பாண்சேரியில் போய்பாட அறியாத ஒருவன் வாயைத் திறப்பது போலாகும் என்னும் கருத்தை ளிெயிடும் இப்பழமொழி பாணர்தம் இசைத் திறத்தைப் பறையறைந்து முழக்குவதாம்.”5   என்ற கூற்று பாணர் தம் இசைத்திறமையை உணர்த்துவதுடன் பாணர் வாழ்ந்த இடம் 'பாண்சேரி' என அழைக்கப்பட்டதையும் அறியலாம். தற்காலத்தில் 'பாணன் குளம்' 'பாணன் ஏரி', 'பாணன் வயல்' போன்ற பெயர்களில் பல இடங்கள் சுட்டப்படுகின்றன. இவை பாணர் வாழ்ந்த இடம் அல்லது பாணர் பயன்படுத்தியப் பகுதிகள் எனக் கொள்ள இடமுண்டு. _________________________ 5 புலவர் இரா. இளங்குமரன், பாணர், 1987, ப. 34.   பசும்பொன் மாவட்டம் திருப்பத்தூரில் 'பாணன் வயல்' என்ற இடம் உள்ளது. காமரசர் மாவட்டத்திற்கு (விருதுநகர்) தென் எல்லையில் 'பாணாங்குளத்துப்பட்டி' என்னும் ஊர் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் செல்லும் வழியில்) 'பாணன் குளம்' என்னும் ஊர் உள்ளது.   6.3. பாணர் வாழ்வு புலமை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் வறுமை குடி கொண்டிருக்கும் என்றக் கூற்றிற்கேற்ப பாணர்களோடு வறுமை நீங்காது தங்கியிருந்தது. பாணர்களின் வாழ்வு வறுமையும், வளமையும் மாறி மாறி வரும் வாழ்வாகவே அமைந்து இருந்துள்ளது. மன்னர்களிடமிருந்து எவ்வளவு விலையுயர்ந்த பரிசினை பெற்றாலும் அதனை எதிர்காலத்திற்கு என சேமிக்க அறியாதவர்கள். இவர்களது வறுமை நிலையினைப் போக்க வள்ளல் பெருமக்கள் விரும்புவர், ஆனால் இவர்களோ மீண்டும் மீண்டும் அதே சூழ்நிலையில் இருப்பர். "வறுமையர் பாணர் பூ இல் வறுத்தலை போல..."   "பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை...'' (புறம். 173.2) பாணனும் பாணனின் சுற்றத்தாரும் வறுமை வயப்பட்டிருந்தனர் என்பதை இப்பாடலடிகள் தெளிவுப்படுத்துகின்றன. பாணன் உடல் வறுமையினால் எலும்பும், தோலுமாக காணப்பட்டது. உடும்பு என்னும் விலங்கின் இறைச்சிக்காக தோலினை உரித்த பிறகு சதையும், எலும்பும் உந்திக் கொண்டு இருப்பதைப் போன்று வறுமையால் வாடும் பாணனின் விலா எலும்புகள் வெளிப்படத் தோற்றமளிக்கும். இதனை,   ''உடும்புரித் தன்ன என் பெழு மருங்கில் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது" (புறம். 68-1-2) என்னும் பாடலடிகள் கூறுகின்றது.   "பரு இழை போகி நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி...." (புறம். 376:10-11)    பாணன் உணவு உண்ணாத காரணத்தால் உடல் மெலிந்து, கண்கள் நீரால் நிறைந்து உடல் வியர்த்து இருந்தான். அவர்கள் இடுப்பில் கட்டியிருந்த ஆடைகள் கிழிந்தும், நைந்தும் இருந்தன. அதில் நூற்ற நூல்களைக் காட்டிலும், தைக்கப்பட்ட நூல்களே அதிகமாக இருந்தன. மேலும் கந்தை ஆடை அணிந்திருந்ததை "கையது கடனிறை யாழே மெய்யது புரவலர் இன்மையிற் பசியே அரையது வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் ஓம்பி யுடுத்த வுயவற் பாண...'' (புறம். 69-14) கையிலே யாழ் உடலிலே பசி ; இடையிலே மறைக்கும் அளவுக்கு அமைந்த உடை அதுவும் தன்னிழையோடு வேற்றிழை நுழைந்து வேர்வையால் நனைந்த கந்தை என புறநானூறு குறிப்பிடுகின்றது. ''யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப இழைவலத்த பஃறுன்னத்து இடைப்புரைப் பற்றிப் பணிவிடாஅ ஈர்க்குழாத்தோடு இறைகூர்ந்த பேஎன் பகையென ...." (புறம். 136.1-5) யாழின் பத்தரைத் தையல் போட்டிருப்பதைப் போன்று ஆடைகள் தைத்திருந்தனர். தையல் இடைவெளிகளில் ஈரும் பேனும் தங்கியிருந்தது. இத்தகைய ஆடையினையே பாணர்கள் உடுத்தியிருந்தனர்.   மேற்கண்டவற்றிலிருந்து பாணர்கள் எளியவர்கள், வறுமையால் துன்புற்றவர்கள், உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாதவர்கள் ஒரே இடத்தில் நிலையாக வாழாமல் நாடோடி வாழ்வினை மேற்கொண்டவர்கள் என்பது புலனாகின்றது.   6.4. பாணர் தம்மை புரத்தல் பண்டையத் தமிழ் மன்னர்கள் தம்மை நாடி வரும் பாணர்களின் பசியினை ஆற்றுவதை தம் இன்றியமையாத கடமையாகக் கொண்டிருந்தனர். இதனையே 'பாண்கடன்' என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.   "பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்...." (புறம். 203.11) "ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய " (புறம். 2014)   இப்புறநானூற்று பாடல்வரிகளிலிருந்து புலிகடிமால் என்ற மன்னன், பாணர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்பவன் என்றும் இளஞ்சேட் சென்னி பாணருக்கு உதவுவதை கடமையாகக் கருதிக் கொடையளிப்பவன், அவர்களை முறையாய் காப்பாற்றுபவன் என்பதையும் அறிய முடிகின்றது. ''....குறுந்தாள் உடும்பின் விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு வருவிருந்து அயரும் பாணரொடு...'' (புறம். 326:9-12)   மறக்குடி தலைவனின் மனைவியானவள் குறுகிய காலையுடைய உடும்பினது தசையை இட்டுச் சமைத்துத் தயிருடன் கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு உணவுப் பொருளையும் பாணருக்கு வழங்கியதாக புறப்பாடல் ஒன்று கூறுகின்றது. மற்றொருப் பாடலில் தயிர், தொடரிப் பழம், கள், தீயில் வாட்டிய தசைத்துண்டுகள், அரிசியில் நெய் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவு முதலியவற்றைப் பாணரின் பசி நீங்க உண்ணுவதற்குத் தலைவன் தருவான். பாணரை உண்ணச் செய்யும் ஆராவாரத்துக்கு மத்தியில் நெற்றியில் அணியத்தகும் பொன்னாலாகிய பட்டம் முதலானவற்றைப் பரிசிலாக வழங்குவான். கள்ளும் ஆட்டிறைச்சியையும் தந்து என்னுடைய வறுமையைப் போக்கினான் எனச் சீறூர் மன்னர்களின் விருந்து போற்றும் திறத்தினை கீழ்கண்ட பாடலடிகள் தெளிவுறுத்துகின்றன.   "வெள்ளத் திரும்பால் உள்ளுரை தொடரியொடு களவுப் புளியன்ன விளைகள் .. வாடூன் கொழுங் குறை கொய் குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத் துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு உண்டு இனி திருந்த பின்றை ...'' (புறம். 328:7-12)   6.5. பாணர் பெற்ற பரிசுகள்  பாணர்கள் பாடுதலும், அரண்மனைகளுக்குச் செல்லுதலும், பாடல்கள் பாடி வள்ளல் பெருமக்களிடம் பரிசில் பெறுவதும், அவற்றை தம் போல் துன்பமுருவோர்க்கு பகிர்ந்தளித்தலும் அவர்களை ஆற்றுப்படுத்தலும் பாணர்களின் இயல்பு.பாணர்கள் பெற்றப் பரிசுகளாவன   களிறு பெறுதல் ''........ பாணர் உய்த்தெனக் களறில் வாகிய புல்லரை நெடுவெளில்” (புறம். 127:2-3) "அமர் அடிதோறும் களிறுபெறு வல்சீப் பாணன்' (அகம் 106:11-12) "பாணர் உவப்பக் களிறு பல தரீஇ..." (மதுரை . 219)   மேற்கண்ட பாடலடிகள், மன்னர்கள் யானையை பரிசாக பாணர்களுக்கு வழங்கியதை தெளிவுறுத்துகின்றது. ஆய் அண்டிரன் தன்னிடமிருந்த களிறுகள் அனைத்தையும் பாணருக்கு பரிசாக வழங்கியவன். பாண்டிய மன்னன் போர்களங்களில் வெல்லுந்தோறும் யானையினைப் பரிசிலாக வழங்குபவன். பாணர்கள் யானையைப் பரிசிலாகப் பெற்று உண்வைப் பெறுவார்கள்.   குதிரைப் பெறுதல் பொறையன் என்னும் மன்னன் பாணர்களுக்கு நல்ல குதிரைகளைப் பரிசிலாக வழங்கியதை “....... பாணர் பரிசில் பெற்ற விரியுளை நன்மான் கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி இரவலர் மெலியாது ஏறும் பொறையன் ஊரைசால் உயர்வரைக் கொல்லி” (நற். 185:4-8)  எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகின்றது.     “பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின் கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய வழியில், வருத்தமின்றி இரவலர் ஏறும் பொறையனது புகழமைந்த கொல்லிமலை.”6 என்பது இதன் பொருளாகும்  . செல்வம் பெறுதல் "அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்...'' (புறம். 34:14-15) "நகைவர் ஆர நன்கலம் சிதறி...'' (பதிற்று. 37.4) ''ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும் துளங்குகுடி...'' (பதிற்று . 32:5-7) மன்னர்கள் பாணர்களுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வழங்கி மன நிறைவு கொள்ளும்படி அதிகமான அணிகலன்களை வழங்கியுள்ளனர். பகை நாட்டிலிருந்து கொண்டு வந்த அரிய பொருட்கள் அனைத்தையும் பாணருக்கும் அவருடைய கூட்டத்திற்கும் வழங்குபவன் எனப் பல்வேறு மன்னர்களின் கொடையுள்ளத்தினை, மேற்கண்ட பாடலடிகளின் மூலம் அறிய முடிகின்றது.   ஊர்கள் பரிசாய் பெறுதல் சீறூர் என்னும் மன்னன், தனக்குரிமையுடைய ஊர்களில் சிலவற்றைப் பரிசாக பாணர்களுக்கு வழங்கியுள்ளான். குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்களைக் வழங்கினான் என்றச் செய்தியை, "...... பாணர்க்கு ஓக்கிய நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்” (புறம். 302:6-7) என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. ____________________________________ 6 முனைவர் வெ.வரதராசன், தமிழ்ப்பாணர் வாழ்வும் வரலாறும், 2007, ப.52.   பாணர்களின் பசியினைப் போக்கி, அவர்களை மட்டுமல்லாது சுற்றத்தினரையும் பாதுகாக்கும் தன்மை கொண்டவரெனக் கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் புகழ்கின்றார். மேலும் திதியன் என்ற மன்னன் தன் அரசவைக் களத்தில் மது உண்டு மகிழ்ந்திருக்கும் சூழலில் பாணர்கள் அரிய இசைக்கூறுகளைப் பாடிப் பரிசு பெற்றதை மாமூலனார். "அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ் பாணர் ஆர்ப்ப, பல்கலம் உதவி நாளவை இருந்த நனை மகிழ் திதியன்" (அகம் 331:10-12) என்ற பாவடிகளில் கூறியுள்ளார். மேற்கண்டவற்றிலிருந்து பாணர்கள் வறுமையில் வாழ்ந்திருந்த போதும், அவர்கள் மேல் அன்பு கொண்டு மன்னர்கள் உணவு, பொருள், பொன், களிறு, குதிரை, நிலம் போன்றவற்றை வழங்கியுள்ளனர் என்பதை அறியலாம். பாணர்கள் வள்ளல் பெருமக்களிடம் பெறும் பரிசில்களை பாடல் பாடும் பொருட்டு பெறும் காணிக்கைகள் என் கொள்ளவும் இடமுண்டு.   6.6. ஆற்றுப்படுத்துதல் பாணர்களிடம் இயற்கையாய் அமைந்த குணம் ஆற்றுப்படுத்துதல். இவர்கள் வள்ளல் பெருமக்களிடம் சென்று பெற்ற பரிசினை குறித்து தம் சுற்றத்தாரிடம் கூறி அவர்களையும், அவ்வாறு சென்று புகழ்ந்து பாடி பரிசு பெற்று வருமாறு ஆற்றுப்படுத்துவர். "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க்கு கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பாக்கமும்" (தொல். பொருள். புறத். 36) தன்னலம் கருதாது தானும் வாழ்ந்து, தம் சுற்றத்தையும் வாழ வைக்கும் உயர்ந்த உள்ளம் பாணர்களிடம் இருந்ததை உணர முடிகின்றது.   பாணர்கள் தங்களைப் போல் பிறரையும் அன்பு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என்பதை கீழ்வரும் பாடலடிகள் சுட்டுகின்றது.   ''உடா பேரா ஆகுதல் அறிந்தும் படாஅ மஞ்ஞை கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்" (புறம். 141)   வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி பரிசு பெற்று செல்லும் பாணரைக் கண்டு மற்றொரு பாணன் வியப்பு அடைகின்றான். பரிசு பெற்ற பாணன், 'யாம் வள்ளல் பேகனைக் காண்பதற்கு முன்பு உன்னைவிட வறியவராய் இருந்தோம். நீயும் விரைவில் சென்று வள்ளல் பேகனிடம் பரிசு பெற்று வா' என்று ஆற்றுப்படுத்துகின்றார்.   6.7. பாணரும் இசையும் பாணர்களின் வாழ்வில் இசையானது ஒன்றோடு ஒன்று கலந்ததாகும். பாடுதல், இசைக்கருவிகளை மீட்டுதல், என பன்முகத் திறமை வாய்ந்தவர்களாய் வாழ்ந்துள்ளனர். பாணர்களில் இசைப்பாணர்கள், யாழ்பாணர்கள், மண்டை பாணர்கள் போன்ற பிரிவினர்கள் இருந்தனர் என்பதை தொல்காப்பியம் கீழ்கண்டவாறு எடுத்தியம்புகின்றது. "இசைப்பாணர் என்பார் வாய்ப்பாட்டு இசைப்பார் யாழ்பாணர் என்பார் நரம்பு கருவி இசைப்பார் மண்டைப் பாணர் என்பார் தோற்கருவி இசைப்பார்" (தொல். புறத் 30) பாணர்களில் பெரும் பாணர், சிறுபாணர் என இரு வகையினர் உள்ளனர்.   பாணர்களில் "பேரியாழ் வாசித்தவர்கள் பெரும்பாணர் என்றும், சீறியாழ் வாசித்தவர் சிறுபாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர்”7 ____________________________________ 7 வாழ்வியல் கலைக்களஞ்சியம், 1986, ப. 330. என வாழ்வியற் கலைக்களஞ்சியம் பொருள் கூறுகின்றது. இதனை வீ.பா.கா. சுந்தரம் தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தில் கீழ்கண்டவாறு பொருள் கூறுகின்றார். "குழலிலும் யாழிலும் முதன்மைப் பெரும் பண்ணையும் அதன் 21 கிளைப் பண்களையும் (வழித்திறங்களையும்) வாசித்து இசைத்திறமை காட்டுபவன் பெரும்பாணன். இவ்வாறு ஏழு பெரும்பண்களையும் அவற்றின் திறப்பண்களையும் (கிளைப் பண்களையும்) அவயைாவன, 7 x 21 = 147 பண்களையும் வாசித்துத் திறம் காட்டுபவனே பெரும்பாணன் என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்".8 மேலும், கீழ்கண்டவாறும் விளக்கப்படுகின்றது. "இசைப்பாணர் என்பவர்கள் இசை பாடுநர், யாழ்ப் பாணர் என்பவர் யாழ் இசைப்பவர்கள். துடி கொட்டுபவன் - துடியன், பறை கொட்டுபவன் – பறையன், கடம்பன் வயிரியர் - வயிர் என்னும் ஊதுகொம்பு இசைப்போர் கோகுடியர் - கோடு என்னும் வளைகொம்பு இசைப்போர்”9   பாணர்கள் இசையோடு பாடவும், ஆடவும் செய்தனர். இவர்கள் பாடும் மரபுடையவர்கள் என்பதைப்   ''பாடிச் சென்றோர்...” (புறம் 337:3)  என்னும் மூலம் அறியலாம். மெல்லிய குரலில் வலம்புரிசங்கு ஒலிப்பதைப் போன்று பாணர்கள் பாடுவர். "விருந்தினர் பாணர் விளர் இசை கடுப்ப, வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்" (நற்.172:7-8) பாணர்கள் கூடி வாழ்கின்ற இடத்தில் பாடலும், ஆடலும் உண்டாக்கும் ஓசை எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதைப், ''புணர்ந்து உடன் ஆடும் இசையோ அனைத்தும் அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப” (மதுரை . 266-67) எனும் பாடலடிகள் மூலம் அறிந்துக் கொள்ளலாம். ____________________________________ 8 வீ.பா.கா.சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம், 1997, ப.280. 9 மேலது ப. 278.   பாணர்கள் யாழிசைப்பதில் வல்லவர்கள். இவர்கள் இசைத்த யாழினைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளதைக் காணலாம்.   "பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்” (நற். 186.6) "ஒரு திறம் , பாணர் யாழின் தீங்குரல் எழ, ...'' (பரி.17:9) "தொல் இயல் புலவ நல் யாழ்ப் பாண" (பரி. 3:86) மேற்கூறிய பாடலடிகள் பாணன் நன்கு யாழ் வாசிப்பவன், கேட்டாரைக் கவரும் தன்மையுடையன், பாணரின் யாழினில் இனிமையான இசையெழும், நல்ல யாழ் வல்ல புலவன் என்பதை அறிய முடிகின்றது. மேலும் உயிர்களை இசையின்பத்தில் படியச் செய்யும் யாழில் பாணர் இசைப்பர் என்பதை "நயந்த காதலித் தழீஇ, பாணர்...'' (ஐங். 407:1) என்ற பாடலடி மூலம் அறிய முடிகின்றது. பாணர்கள் மிக நல்ல சீறியாழில் வண்டோசைப் போல இம்மென இசைத்தலை "பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின், இம்மென இமிரும், ...'' (நற். 30:2-3) என்ற பாடலடி கூறுகின்றது. சிறிய யாழை பாணன் இசைப்பான் என்பதை   "களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடு இன் பனுவற் பாணர் உய்த்தென..." (புறம். 398:4)  என்னும் பாடலடிகள் கூறுகின்றது.   6.8. தமிழ் இலக்கியப் பாணர்களும் - தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களும் தமிழ் இலக்கியங்கள் காட்டும் பாணர்களின் இசையோடு கூடிய வாழ்விலும், தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் வாழ்விலும் பாடுதல் என்பது பொதுவான ஒன்று என்ற போதிலும் வாழ்வு முறைகளில் பல அடிப்படை ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வறுமை நிலை, நாடோடி நிலை, இசைக்கலைஞர்கள், தங்களுக்கென இசைக்கருவிகளைக் கொண்டிருத்தல், கலைத்திறனால் பெற்ற பொருள்களையேத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருத்தல். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளுக்கும் உரிய பாடல்களைப் பாடுவதற்கு மக்கள் இவர்களையே பயன் படுத்துகின்ற நிலை போன்றவற்றுள் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. 6.8.1. வறுமை நிலை பொருளாதார நிலையினை நோக்குங்கால் பாணர்களும் ஃபக்கீர்களும் மிகவும் வறியவர்களாகவே காணப்படுகின்றனர். ''பாணர்கள் புறவாழ்க்கையில் இரவலராகக் காட்சியளிக்கின்றனர். மதிப்பிற்குரியவர்களாகவும் இருக்கின்றனர்”10   இதனை கீழ்கண்டவற்றிலிருந்து அறியலாம் ".... வறுமையர் பாணர் பூ இல் வறுந்தலை போல...'' (குறுந். 19:1-2) மேலும் 'பழுத்த மரத்தை தேடியலையும் பறவைப் போல் பசியால் வாடி சோர்ந்து அழும் சுற்றத்தாருடன் ஓடித்திரிந்து பொலிவிழந்து, உடலையம் வாழ்வையும், வெறுத்துக் கூறும் வாயினை உடைய பாணனே..'' என்று பாணனின் வறுமை நிலையையும், கொடுப்போரை நாடிச் செல்லும் தன்மையும் பெரும்பாணாற்று பாடலடிகள் கீழ்கண்டவாறு கூறுகின்றது. ''பழுமரம் தேடும் பறவைப் போல குல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண்...' பெரும்பாண் (19-21) மேற்கண்டவை பாணர்கள் வறுமையால் வாடியவர் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டும் சில உதாரணங்கள். ___________________________ 10  இரா. கலைவாணி, சு.தமிழ்வேலு, சங்க இலக்கியத்தில் இசை, 2005, ப.81. "செல்வரை அண்டி வாழும் நிலையிலாத எளிய நிலை,  பாணர் தம் மண்டைப் பாத்திரம் கொண்டு இரவல் ஏற்றனர். இவர்களை வறுமை வாட்டியது.'' என முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.   பாணர்களைப் போல் ஃபக்கீர்களும் மிகவும் ஏழ்மையானவர்கள். வீடுகள், தெருக்கள், தர்கா போன்ற இடங்களில் பாடல்களைப் பாடி கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். கிழிந்த ஆடை, ஒட்டிய வயறு, சோர்ந்த முகம் என்றேக் காட்சியளிக்கின்றனர். பாணர்கள் அரசர்களை நாடிப் பாடல்கள் பாடி பரிசில்கள் பெற்றதுப் போல், ஃபக்கீர்கள் செல்வந்தர்கள் மற்றும் இஸ்லாமியர் வீடுகள் தோறும் சென்று பாடல்கள் பாடி பரிசில்கள் (காணிக்கைகள்) பெற்றனர். பாடுதலை முதன்மையாகக் கொண்ட பாணர்களும், ஃபக்கீர்களும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், வறுமையால் வாடியவர்கள், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பிறரையே எதிர்ப்பார்த்துள்ளனர் என்பது அறியமுடிகின்றது.   6.8.2. நாடோடி நிலை   நாடோடித் தன்மை என்பது நிலையாக ஒரே இடத்தில் வாழாமல் ஊர் ஊராய் சுற்றி வாழ்தல் ஆகும். "தமிழகத்தில் நாடோடிகள் இருநிலைகளில் காணப்படுகின்றனர். 1) தன்னியல்பான, எவ்வகையான கட்டுப்பாடுமற்ற 'சுயேச்சை நாடோடிகள்' ஒரு பிரிவினர். இவர்களுக்கென்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எங்கும் எவரையும் அணுகி வருவாயை ஈட்டிக் கொள்ளலாம்.  2) மறுவகையினர் அவரவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தங்கள் ஆதரவாளர்களாக, காப்பார்களாக ஏற்றுக் கொண்டு அவர்களிடம் தங்கள் வசூலையும் மரியாதையையும் பெறும் வகையினர். இவர்கள் 'குடிப்பிள்ளைகள்' எனப்படுவர்”12   என்று 'தமிழகத்தில் நாடோடிகள்' என்ற நூல் குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் நாடோடி வாழ்வை மேற்கொண்ட பாணர்கள் சுயேச்சை _______________________ 11 முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம், சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், 1998, ப. 47. 12 12 பக்தவத்சல பாரதி (ப.ஆ), தமிழகத்தில் நாடோடிகள் சங்க காலம் முதல் சமக்காலம் வரை, 2003, ப.14.   நாடோடிகளாகவும், தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் குடிப்பிள்ளை நாடோடிகளாகவும் உள்ளனர். எனினும் அடிப்படையில் பாணர்களும் ஃபக்கீர்களும் நாடோடி வாழ்வினையே மேற்கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் நிலையாக வாழ்தல் என்பது இல்லை. சங்க காலத்தில் பாண்மரபினர் புலம் பெயரும் வழக்கம் கொண்டிருந்தனர். அங்ஙனம் புலம் பெயரும் பொழுது தங்களின் இசைக்கருவிகளையும் பிற பொருட்களையும் சுருக்கிக் கட்டி காவடிகளில் வைத்து கொண்டு செல்வர். அவ்வாறு கட்டிச் செல்லும் பையைக் கலப்பை என்று சொல்லும் வழக்கம் உண்டு. அக்கலப்பை உடையவரைக் கலப்பையர் என்று அழைப்பர். "..... சிறுபல் இயத்தொடு பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென தலைப்புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர்” (அகம் : 301:20-22) பாணர்கள் ஊர் ஊராய் செல்லும் பொழுது, அவர்களின் வருகையை கேள்வியுற்ற மக்கள் மகிழ்ந்தனர். இதனை குறுந்தொகை பாடலடி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது. "......... பாணர் புலிநோக்கு உறழ்நிலை கண்ட கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே...'' (குறுந் 328:6-8) அன்றைய காலக்கட்டத்தில் பாணர்களின் யதார்த்த நிலையை உரைக்கும் வண்ணம் தொல்காப்பியம், மிக நீண்ட தொலைவு பயணம் செய்து செய்தி உரைப்பதற்கு உரியவராக, கூத்தரும் பாணரும் குறிக்கப்படுகின்றனர் என்பதை கீழ்வரும் பாடலடி மூலம் எடுத்தியம்புகின்றது. ''நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல் கூத்தருக்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய” தொல். கற்பியல். 28 பாணர்களும், கூத்தர்களும் ஊர் ஊராக, நாடு நாடாக அலையும் வாழ்வினர் ஆகையால் வழியறிவும், பயணிக்கும் திறமும் இவர்களுக்கு மிகுதி. இத்தகைய நாடோடித் தன்மையையே தமிழக இத்தகைய இஸ்லாமிய ஃபக்கீர்களும் கொண்டிருந்தனர். நிலையான ஒரே இடத்தில் தங்குதல் என்பது இல்லை. பெரும்பாலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள தர்காக்களில் நடைபெறும் சந்தனக் கூடு நிகழ்வுகளில் பாடும் பொருட்டு தங்கள் இசைக்கருவியான தாயிராவை தோளில் தொங்கவிடப் பட்டிருக்கும் பையினுள் வைத்து ஊர் ஊராய் சென்று பாடுகின்றனர். இவர்களின் வரவைக் கண்டு இஸ்லாமிய மக்கள் பெரிதும் மகிழ்கின்றனர். ஃபக்கீர்களின் வரவாலேயே சந்தனக்கூடு நிகழ்வுக்கு மேலும் சிறப்பு. 6.8.3. இசை பாணர்கள் சங்கக்காலத்தில் வாழ்ந்த இசைக்கலைஞர்கள். பாணர் பெயர் பண் இசையால் பெற்றதை வீ.பா.கா. சுந்தரம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.   "பாணர்கள் ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து, இசை பாடியும் கருவிகளை இசைத்தும், நாடகம் நடத்தியும் நடனம் ஆடிப் பாடியும் வாழ்ந்தவர்கள். பாணர் பெயர், பண் இசையால் பெற்ற பெயர். பண் = இசை.''13   பாணர்களின் இசை சிறப்பினைக் கருதியே இளங்கோவடிகள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.   ''குழலிலும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அறம்பொன் மரபின் பெரும்பாண் இருக்கை" (சிலம்பு. 5:35-37) மேற்கூறிய பாடலடிகள் மூலம் பாணர்கள் குழல் மற்றும் யாழ் இசைக்கருவியில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு ஸ்வரங்களை தவறாது இசைக்கும் நற்பண்பினை உடையவர்கள் என்பதை அறிய முடிகின்றது.   யாழிசையில் வல்லவர்களாகிய பாணர்கள் மாலை வேளையில் வீடுகளில் சென்று யாழிசைத்து வருவது வழக்கம். அவ்வாறு யாழ் இசைத்து வரும் போது இல்லங்களில் உள்ள கணவன், மனைவியர் தம் பிள்ளைகளோடு பாணரின் யாழிசையைக் கேட்டு இன்புற்று வந்த இனிய காட்சியினை ஐங்குறுநூறு கீழ்கண்டவாறு விளக்குகின்றது. ___________________________________ 13 வீ.ப.கா. சுந்தரம், தமிழிசை கலைக்களஞ்சியம், 1997, ப.280. ''மாலை முன்றில் குறுங்கால் கட்டில் மனையோள் துணைவி ஆக, புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித் தம்ம - பாணனதி யாழே" (ஐங். 410)   பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டும் பாணர்களின் வாழ்வு இசையோடு ஒன்றி இருந்ததுப் போல் தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் வாழ்வும் இசையோடு ஒன்றி இருந்து வருகின்றது. பொதுவாக இஸ்லாமிய சமயம் தங்கள் வாழ்க்கையிலும், வழிபாடுகளிலும் பெரிதும் இசையை ஆதரிப்பதில்லை என்ற போதும் ஃபக்கீர்கள் கொண்டு தாயிரா என்னும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு வீடுகள் தோறும் எளிமையான நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டமைப்பில் ஒழுக்கம், இறைவனை போற்றுதல், அறியாமையினை விளக்குதல், பகிர்ந்து வாழ்தல், வீட்டிலே முடங்கியிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு சமயம் சார்ந்த அடிப்படை நெறிமுறைகளை விளக்குதல் போன்றவற்றை பாடலாகப் பாடி சமய, சமுதாயத் தொண்டு புரிகின்றனர். ஃபக்கீர்கள் பாடும் பாடலின் எளிமையும் இனிமையும் எளிதாக கேட்போரை கவர்ந்திழுக்கின்றது.   இங்ஙனம் பாடல் பாடுதல் என்னும் அடிப்படையில் பாணர்களும், ஃபக்கீர்களும் ஒத்த பண்புடையவர்களாய் காணப்படுகின்றனர்.   6.8.4. தெருக்களில் பாடுதல் பாணர் பிரிவினருள் ஒருவர் வயிரியர். 'வயிர்' என்ற இசைக்கருவியை கொண்டிருந்ததால் வயிரியர் என்று பெயர் பெற்றனர். வயிர் என்பது நீண்டு உள்ளீடு இல்லாத மூங்கில் குழலாகும். வயிரியர் இரவு நீண்ட பொழுது நிகழ்வு நடத்திய பின்னரே தூங்க செல்வர் என்பதை மலைபடுகடாம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.   "உள்ளினிர் சேரிர் ஆயின் பொழுது எதிர்ந்த...” (மலை .ப.க. 65.) இவர்கள் இசைக்கும் இடம் குறித்து விளக்குமிடத்து பதிற்று பத்து இவ்வாறு கூறுகின்றது   ................... மறுகு சிறைபாடும் வயிரிய மாக்கள் ................. (பதி. பத்து 23.5-6) ''வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ முன்றநண்ணி மறுகு சிறைபாடும்” (பதி. பத்து 29.8-9) இதில் மறுகு என்பது வரிசையில் உள்ள வீடுகளின் தெருவைக் குறிக்கின்றது. எனவே இவர்கள் வரிசையாக உள்ள தெருக்கள் தோறும் இசைப்பாடினர் என்பது அறிய முடிகின்றது. இதைபோன்றே தமிழக இஸ்லாமிய ஃபக்கீரர்களின் பாடுகளங்களில் ஒன்று தெருக்கள். இஸ்லாமியர் அதிகம் வாழும் தெருக்கள் தோறும் சென்று பாடல்களை பாடி கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தகின்றனர். (இயல் நான்கில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது) இங்ஙனம் தெருவில் பாடுதல் என்னும் அடிப்படையில் பாணர்களும், ஃபக்கீர்களும் ஒத்த பண்புடையவர்களாய் காணப்படுகின்றனர்.   6.8.5. இசைக்கருவிகள் பாணர்கள் மிடற்றிசையினை14 மட்டுமின்றி யாழ், குழல், தண்ணும்மை , முழவு, பறை, தூம்பு, தடாரி, வயிர், மரமுழவு போன்ற இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறம் பெற்றவர்களாய் திகழ்ந்துள்ளனர். இதனை கீழ்வரும் பாடலடிகள் மூலம் அறியலாம்.   1. யாழ் "யாழ் பாணர் என்பார் நரம்புக்கருவி இசைப்பார்" (தொல். புறத்36) "கைவல் சீறியாழ் பாண...” (ஐங். 472:1) ''முல்லை நல்யாழ்ப் பாண...." (ஐங்.478:5) _________________________________________ 14 குரலிசை   மேற்கண்ட அடிகள் பாணர்களின் யாழிசைக்கும் திறமையை வெளிக்காட்டுகின்றது.   2. குழல் குழல் இசைப்பதில் திறம் பெற்ற பாணர்களையும் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது.   "குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்" (சிலம்பு. 5:35-36) 3. முழவு முழவு இசைத்ததை "சுரம் சொல் கோடியர்15 முழவின் தூக்கி...'' (மலை . 143) 4. தூம்பு தூம்பு எனும் கருவி இசைத்ததை "ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் ...." (அகம். 111:8-9)  என்ற பாடலடிகள் சுட்டுகின்றது.   5. பறை பறை இசைத்ததை கீழ்வரும் வரிகளிலிருந்து அறியலாம்.   "கொடும் பறைக் கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்..." (மதுரை. கா.523) பாணர் பெருமக்கள் பறையினை கொன்றைக்காயினைப் போன்ற குறுந்தடியினால் அடித்து ஒலியெழுப்புவர்.   6. தண்ணும்மை தண்ணும்மையை வளம் பொருந்திய ஓலியுடன் இசைப்பர். மேலும் தலைவி வயிற்றில் அடித்து அழுவதைப் போன்று தண்ணும்மையைப் பாணர் அடித்து இசைப்பர் என்னும் செய்தியை _______________________________________ 15 பாணர் வகையினருள் ஒருவர். முழவு, பறை ஆகிய இசைக்கருவிகளை இசைத்தலில் திறம் பெற்றவர்கள்.   "................ கொன்றை அம் தீம் கனி பறை அடி கடிப்பின் ...'' (நற். 46:6-7) “........................ பாணன் கையதை வள் உயிர்த் தண்ணுமை ...” (நற். 310:9-10)   "................ பாணர் எறியும் தண்ணும்மைக் கண்ணின் அலை இயல் தன் வயிறே...'' (அகம். 106:12-13) இப்பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது.   7. தடாரி தடாரி இசைத்தலை "கை கசடிருந்த வெண் கண்ண கண்தடாரி இருசீர்ப் பாணி கேற்ப விரிகதிர்...'' (பொரு. 70-71) 8. வயிர் வயிர் இசைத்தலை ''பாணர் வருக பாட்டியர் வருக யாண புலவரோடு வயிரியர் வருகென இருங்கிளை புரக்கும்....” என்ற பாடலடிகள் கூறுகின்றது. மேலும் பறை, குழல், யாழ், மரமுழவு போன்றக் கருவிகளை இசைத்த செய்தியை பரிபாடல் தெளிவுப்படுத்துகிறது. "பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர் நாநவில் பாடன் முழவெதிர்ந் தன்ன" (பரி.பா.15:42,43) மேற்கண்ட கருத்துக்களிலிருந்து வறியவரான, நாடோடித் தன்மை கொண்ட, பாணர்கள் பாடுதல் மட்டுமின்றி யாழ், குழல், பறை, முழவு, வயிர், தும்பு, தடாரி போன்ற பழந்தமிழர் இசைக்கருவிகளை இசைத்தலில் திறம் பெற்றவர்கள் என்பதை அறிய முடிகின்றது. பாணர் போன்று ஃபக்கீர்களும் பாடுதல் மட்டுமல்லாது இசைக்கருவிகளோடும் தொடர்பு கொண்டுள்ளார்கள்.   பழங்கால ஃபக்கீர்கள் டங்கா என்ற முரசு வகையை சேர்ந்த தாள் இசைக்கருவியினையும், காற்றுக்கருவி வகையினைச் சேர்ந்த 'பாங்கா' என்ற பித்தளையால் செய்யப்பட்ட ஊதுகுழலையும், 'மார்கோ பாஹ்ரா' என்ற மாட்டுக் கொம்பாலான காற்றுக்கருவியையும் இசைத்துள்ளனர்.   தற்காலத்தில் 'தாயிரா' என்ற தாளக்கருவியை இசைத்து உரக்கக் குரலில் தெருக்களிலும் வீடுகளிலும் பாடல் பாடுகின்றனர். (தாயிரா நமது பழங்கால பறையின் அமைப்பை ஒத்து இருந்தது. தற்போது அமைப்பில் சற்று மாற்றம் பெற்றுள்ளது. பாணர்களும் ஃபக்கீர்களும் பாடல் பாடுவது மட்டுமல்லாது இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறம் பெற்றவர்கள் என்பதை மேற்கூறியவற்றில் இருந்து அறிய முடிகின்றது.   6.8.6. துயிலொடை நிலை துயிலொடை நிலை என்பது துயில் எழுப்பும் நிலையாகும். இறைவனை பாடல் மூலம் துயிலெழுப்பச் செய்வது தமிழ்ச் சமூக மரபில் பன்னெடுங்காலமாய் இருந்து வந்த மரபு. இதனை கீழ் வரும் செய்தி வழியாய் அறியலாம்.   "தொல்காப்பியத்தில் பாணர்கள் (I) துயில் எடைநிலை பாடுநர் - பெரும் புகழை நாடி இருந்த பேரரசர்கள் தூங்கி எழும் போது அவர்களுடைய முன்னோரின் புகழையும் போற்றிப் பாடித் துயில் எழுப்பும் பாணர்கள் ஒரு வகையினர். தாவில் நல்லிசை கருதிக் கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயில் எடை நிலையும்.'' (தொல். புறத். 36) என வீ.பா.கா.தமது தமிழிசை கலைக்களஞ்சியத்தில்16 குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்கருத்தினை கீழ்கண்டவற்றிலிருந்தும் அறியலாம்.   "இசைக்கலையில் வல்ல பாணர்கள் வைகறையில் அரண்மனைக்கும் பிற இடங்களுக்கும் சென்று அவர்கள் உறக்கம் விட்டு எழுமாறு இனிய இசை பாடுவார்கள். நாட்டுப்பாடல்கள் பல அந்த காலத்தில் துயில் எழுப்பும் பாடல்களாக இருந்திருக்கின்றன. சங்க காலத்தில் அந்த பாடல் மரபு 'துயிலொடை நிலை’ என்று கூறப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்களின் துயில் எழுப்பும் பாடலானது 'திருப்பள்ளியெழுச்சி' என்ற பெயரால் ________________________________ 16 வீ.பா. கா. சுந்தரம், தமிழிசை கலைக்களஞ்சியம், 1997, ப. 279.   வழங்கப்பட்டது. மாணிக்க வாசகர், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் கோயில்களில் பூபாள இராகத்தில் ஓதப்பட்டு வருகின்றன''17 என்று மு. வரதராசன் குறிப்பிட்டுள்ளார்.   இங்ஙனமே தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் ரமலான் மாதம், நோன்பு நோற்கும் முப்பது நாட்களிலும், தினமும் அதிகாலையில் இரண்டரை மணி முதல் நான்கரை மணி வரை தாயிராவை இசைத்துக் கொண்டு பாடுகின்றனர். காலை தொழுகைக்கு பாங்கு ஒலி கேட்பதற்கு முன்பாகவே ஃபக்கீர்களின் துயிலெழுப்பும் பணி நிறைவேற்றப்படுகின்றது.   ரமலான் மாதத்தில் செய்யப்படும் இத்தகைய சமயப் பணியின் பொருட்டு, ரம்ஜான் நாளில் இஸ்லாமியர் அதிக அளவில் ஃபக்கீர்களுக்கு பொருள் வழங்குகின்றனர். இன்றளவும் இது சிறப்பாக நடை பெறுதலை திண்டுக்கல், மணப்பாறை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மேலப்பாளையம் போன்ற இடங்களில் காணலாம். ஒரு ஊருக்கு ஒரு ஃபக்கீர் என்ற வகையில் துயிலெழுப்பும் பணியைச் செய்கின்றனர்.   பாணர்கள் இறைவனை துயிலெழுப்பும் விதமாய் பாடியுள்ளனர். ஃபக்கீர்கள் இறைவனை போற்ற எழும் பக்தர்களை துயிலெழுப்பும் விதமாய் பாடுகின்றனர். எனினும் துயிலெழுப்புதல் என்ற நிலையில் இருவருக்கும் உள்ள ஒற்றுமை அறியமுடிகின்றது.   6.8.7. போர் பழந்தமிழர் தம் வீரம் பாணர்களிடமும் காணப்பட்டது. போர்களம் சென்று மறம் பாடி வீர உணர்வைத் தூண்டியுள்ளனர்.   கொற்றவையைப் போற்றித் துடியன் என்னும் பாணன் துடியை முழக்கி, 'வெற்றி கொடுத்தருள்க' என வேண்டுவான். இதனை தொல்காப்பியம் கீழ்கண்டவாறு எடுத்தியம்புகின்றது. "மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே...'' (தொல். புறத்.4) _______________________________________ 17 மு. வரதராஜன், தமிழ் இலக்கிய வரலாறு, 2001, ப.137.   மேலும் போர்க்களங்களிலும் பாசறைகளிலும் பாணர்கள் தங்கியிருந்ததை கீழ்வரும் செய்தி வழி அறியலாம்.   மன்னன் ஒருவன் போர்ப் பாசறையில் தனக்கு அளித்த கள்ளினைத் தேர்ந்த வீரன் ஒருவனுக்கு அளித்துப் பெருமைப்படுத்திய செய்தியைக் கண்டு பாணன் ஒருவன் வியப்படைகிறான். அச்செயலினை கழாத்தலையார் என்னும் புலவர் தமது புறப்பாடலில்   "பசும்பொன் மண்டை இவற்கு ஈக என்னும் அதுவும் அன் றிசினே கேட்டியோ வாழி பாண பாசறைப் பூக்கோள் இன்று.." (புறம். 289:6-9) என்று குறிப்பிடுகின்றார். 'எவ்வி' என்னும் குறுநிலத் தலைவன் விழுப்புண்பட்டுப் போர்களத்தில் விழுந்த பொழுது வணங்குதற்குரிய யாழின் வளம் பொருந்திய வளைந்த கோட்டைப் பாணர்கள் ஒடித்துப் போட்டனர் என்னும் செய்தியினை   ''எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன்பரிந்து இடூஊப் பழிச்சிய வள் உயிர் வாணர் மருப்பு அன்ன .." (அகம் 115:8-10)  என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன. போர்களம் சென்று மறம் பாடிய பாணர்கள், வேந்தர்களின் போர் வெறியைத் தணிக்கும் வடிகால்களாகவும் திகழ்ந்துள்ளனர். போர் வேட்கை மிகுந்து நாளும் போர்ச் செயலில் ஈடுபட்டிருந்த வேந்தனிடம் கூகைக் கோழியார் கீழ்கண்டவாறு கூறுகிறார்.   "வாடா மாலை பாடினி அணியப் பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க மையிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்திக் காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப உண்டுந் தின்று மிரப்போர்க் கீந்தும் மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே" (புறம் 364) பாணர், பாடினியருக்குப் பொன் அணிகலன்கள் அணியத் தந்து, அவர்களுடன் கூடி கள்ளருந்தி, நல்ல கொழுவிய இறைச்சி உண்டு இரப்போர்க்கு ஈந்து மகிழ்ந்திருப்போம் என்று மன்னனை அழைக்கிறார். பாணருடன் கூடிக்களித்த உண்டாட்டு நிகழ்ச்சிகள், மன்னரின் போர் வெறியைத் தணிக்கப் பயன்பட்டிருக்கின்றன.   பாணர் பாடியது அரசவைகளில் மட்டுமல்ல. ஆனிரைக் கவர வீரர் சென்ற போது உடன் சென்று பாடினார்கள். பாசறையில் வீரர் தங்கியிருந்த போது அவர்களது சோர்வும், வலியும் மாறுதற்கு அங்கு இருந்து பாடுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்கள். காஞ்சிப் பண் பாடி யாழும், குழலும் இசைத்தார்கள்.   பாணர்களைப் போல் ஃபக்கீர்களும் ஆன்மீகப் பணியில் மட்டுமல்லாது பாடல்வழி தங்கள் பங்களிப்பினை ஆங்கிலேயர்களுக்கெதிரான இந்திய சுதந்திரப் போரில் வழங்கியுள்ளனர்.   "கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபக்கீர்கள் ஓர் இயக்கமாக சேர்ந்து மைசூரை தலைமை இடமாக கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை பொருள்பட பேசுவதிலும், பாடுவதிலும் திறம்படைத்த இவர்கள் விடுதலை போராட்ட பாடல்களை மக்களிடையே பாடி பரப்பியுள்ளனர் என்ற செய்தி பேராசிரியர் சின்னையன் எழுதிய 'The First struggle for freedom’, இயக்கம் பற்றி தன்னுடைய 'வேலூர் சிப்பாய்களின் போர் 1806' (The Vellore Mustiny, 1806) என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபக்கீர்கள் திப்புசுல்தானின் வாழ்க்கை வரலாற்றை பாடல்களாக இயற்றினார்கள். இப்பாடல்களின் தொகுப்பிற்கு 'முஹபத்' (அன்பு செலுத்துதல்) என பெயர் சூட்டப்பட்டது. பாடல்களில் திப்பு சுல்தானின் வீரசாகசங்கள், பூர்னையாவின் துரோகம், மிர்சாதிக்கின் துரோகம் போன்றவை இடம் பெறுகின்றது" .18   6.8.7.1. விடுதலைப் போரில் ஃபக்கீர்களின் பங்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் ஃபக்கீர்களின் பங்கு அளப்பறியது. ''ஆங்கிலேயர்களுக்கெதிராக திட்டங்களைத் தீட்டி பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்”.19   _____________________________ 18 செ.திவான், விடியல் பத்திரிக்கை , 2004, ப.22. 19 மேலது பக்.19-20.   விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான திப்புசுல்தான் அவர்களை 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் ஆங்கிலேயர்கள் தூக்கிலே போட்டார்கள். பின்பு அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.   "குடும்பத்தவர் அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவ்வாறு வேலூர் சிறைக்குச் கொண்டு வரப்படும் போது 3000 பேர் உடன் வந்திருந்தார்கள். இவர்கள் வேலூரைச் சுற்றி குடியமர்ந்தார்கள். இப்படி இந்தக் குடும்பத்தோடு வந்தவர்களில் ஃபக்கீர்களும் அடங்குவர். இந்த ஃபக்கீர்கள், கோலார், மைசூர், பெங்களூர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இடங்களைச் சார்ந்தவர்கள்.   திப்புவின் குடும்பத்தவர்கள் கோட்டைக்குள் இருந்து கொண்டே நாடு முழுவதும் குறிப்பாக வடஇந்திய மக்களையும், மன்னர்களையும் தொடர்பு கொண்டார்கள். அதற்காக கடிதங்களை கொண்டு செல்லவும், பதில் கடிதங்களைக் கோட்டைக்குள் கொண்டு சென்றிடவும் ஃபக்கீர்கள் பக்குவமாய் பயன்பட்டார்கள். காடுமேடுகளையெல்லாம் நடந்தே கடந்து சென்று மக்களிடம் ஆங்கிலேயர்களை எதிர்த்தே ஆக வேண்டும் நாட்டை ஆங்கிலேயர்களின் கைகளிலிருந்து மீட்டேயாக வேண்டும் என்ற செய்தியையும் பரப்பினார்கள். இப்படி ஃபக்கீர்கள் முழு அர்ப்பணிப்புடன் திப்புவின் குடும்பத்தை சுற்றி வந்தார்கள்”.20   மேற்கண்ட செய்தி வழி ஃபக்கீர்கள் தங்களால் இயன்ற அளவு ஆங்கிலேயர்களுக்கு எதிரான செய்திகளை தங்கள் பாடல் மூலம் மக்களிடையே பரப்பியதைறியமுடிகின்றது. மேலும்   "தென்னக ஃபக்கீர்களுக்கு மைசூர் தலைநகர். பெங்களூர், வேலூர், நந்தி துர்க், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், பாளையங்கோட்டை போன்ற இடங்களில் முகாம்கள் அமைந்திருந்தார்கள். திருச்சியில் மஹாட்டலிஷா, தஞ்சை அம்மா பேட்டையில் நூர் அலிஷா, முகைதீன் ஷ. மொய்ரூன்ஷா என்ற ஃபக்கீரும் (மதுரையில் பிறந்தவர்). தென்னகம் முழுவதும் திரிந்து பணியாற்றினார். அப்துல்லாஹ் ஹோட்டா என்பவர் ஃபக்கீர் இயக்கத்திற்கு நீண்ட நாட்களாக தலைவராக இருந்தார்”.21   இந்தியர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களை ரகசியமாக ஆங்கிலேயர்களுக்கெதிராக திருப்பிடவும் ஃபக்கீர்கள் இடைவிடாமல் __________________________________ 20 செ.திவான், விடியல் பத்திரிக்கை , 2004, ப. 20. 21 மேலது,ப.24.   பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்கள். இதில் ஏழைகள் இரப்பவர்கள் என்ற ஃபக்கீர்களின் நிலை மிகவும் நன்றாகவே பயன்பட்டது. 'புகை செல்லாத இடத்திலும் புகராஃபக்கீர்களின் குழு) சென்றுவிடும்' என்பது ஓர் வழக்குச் சொல். "ஃபக்கீர்களால் இராணுவ முகாம்களில் வேடிக்கைக் காட்டுபவர்கள் என்ற பெயரில் நுழைந்து வேடிக்கைக் காட்டி செய்திகளைச் சொல்லிட முடிந்தது. இந்திய வீரர்களின் மனநிலைகளை அறிந்து வந்து மகாராணிகளிடமும் திப்புசுல்தானின் மனைவிமார்களிடமும் சொல்லிட முடிந்தது" 22   மேற்கண்டவைகளிலிருந்து பாணர்கள் ஒற்றர்களாகவும், போர் முனையில் செய்தி கூறுபவராகவும் செயல்பட்டது போன்று ஃபக்கீர்கள் விடுதலைப் போரில் தூதுவர்களாகவும் இசைமூலம் விடுதலை உணர்வை தூண்டுபவர்களாகவும் செயல்பட்டுள்ளனர். போர் என்ற நிலையில் பாணர்கள் மற்றும் ஃபக்கீர்களின் செயல்பாடுகள் ஒத்துள்ளதை அறியமுடிகின்றது.   6.8.8. தொழில் பாணர்கள் பாடுதல் மட்டும் இல்லாது பல்வேறு சூழலில் மீன்பிடிப்பவர்களாகவும் காட்சியளிக்கின்றனர். பாணர்கள் மீன்பிடித்து தம்முடைய உண்கலத்தில் இட்டு வைப்பர். நெய்தலங்கழியில் பாணன் தூண்டிலிட்டு மீன்பிடிக்கும் வழக்கமுடையவன் என்னும் செய்தியைப், "பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல" (குறுந்.169:4) ''சூழ்கழி மருங்கின் நாள் இரை கொளீஇச் சினைக் கயல்மாய்க்கும்" (ஐங் 111:1-3)   இப்பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. மேலும் மீன்களை பிடிக்கக்கூடிய பாண் மகனின் தலையில் இழுத்துக் கட்டப்பட்ட பெரிய மூங்கிற் கோலாகிய தூண்டில் நடுங்கும் படியும் கயிற்றில் இணைக்கப்பட்ட வளைந்த வாயினை உடைய தூண்டிலினது மடிதலை _________________________ 22 மேலது,ப.20. இரையின்றித் திணிக்கும் படியும், அந்த தூண்டில் இரும்பு மறையைப் பொதிந்த இரையைக் கௌவிக் கொண்டு அகப்படாமல் போன பெரிய வாயுடைய வாளை மீன் என்ற செய்தியினை பெரும்பாணாற்றுப்படை பாடலடிகள் குறிப்பிடுகின்றது. "கோள்வல் பாண்மகன் நிலைவலித் தியாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண்கொளீஇக் கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப பொதியிரை கதுவிய போழ்வால் வாளை" (பெரும்பாண் 284:7-10)   பாண் மகள் மீன்கள் நிறைந்த இடத்திற்குச் சென்று தூண்டில் கயிற்றில் இரையை பொருத்தி அதனை உண்ண வரும் சினைப்பட்ட கயல் மீன்களை பிடித்துக் கொல்லும் இயல்புடையவள் என்ற செய்தியினை அகநானூறு குறிப்பிடுகின்றது.   ''நாண்கொள் துண்கோலின் மீன்கொள் பாண்மகள்" (அகம் 26:1)  பாணர்கள் மீன்பிடித்தல் மட்டுமின்றி தினை விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற உபத்தொழில்களும் செய்துள்ளனர். இதனை பாணர்களில் ஒருப்பிரிவினரான பொருநர்களை "ஏர்களம் பாடும் பொருநர்"23 என புறநானூறு குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.   “கொல்லிப் பொருநன்" (புறம். 152.3) பாணர்கள் மேற்கண்ட தொழில்களுடன் பேயோட்டுபவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். ''வீரர்கள் போரில் புண்பட்டுத் துன்புற்ற போது, புண்ணில் வடியும் இரத்தத்தை உறிஞ்சப் பேய்கள் வரும் என்பது அக்கால நினைப்பு. அவற்றை ஓட்ட பாணர்கள் வேப்பிலையும் இளந்தழையும் பயன்படுத்தினார்கள். பல்லியங்களை இசைத்தார்கள். ஆம்பற்குழலை ஊதினார்கள், மணியடித்தார்கள், காஞ்சிப்பண் பாடினார்கள்” 24 என தமிழிசை இலக்கண வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ____________________________________ 23 பொருத்த வேடமிட்டு ஆடி பாடுபவர். 24 மு. அருணாச்சலம், தமிழிசை இலக்கண வரலாறு, 2009, ப. 579.   பாணர்கள் பாடுதல் தவிர்த்து பிறத் தொழில்கள் புரிந்ததுப் போல் ஃபக்கீர்களும் பாடுதல் மட்டுமல்லாது உபத்தொழில்கள் புரிந்துள்ளனர். அவையாவன, • பேயோட்டுதல் • மந்திரித்தல் • சாம்பிராணி புகை காட்டுதல் • கைத்தொழில்கள் செய்தல் • மீன்பிடித்தல் (இயல் மூன்றில் விளக்கப்பட்டுள்ளது). இங்ஙனம் பாணர்களும் ஃபக்கீர்களும் பாடுதல் மட்டுமல்லாது பிற உபத்தொழில்களும் புரிந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றன. இதில் பேயோட்டலின் போது பாணர்கள் வேப்பிலையினை பயன்படுத்தியுள்ளனர். ஃபக்கீர்கள் மயிலிறகை பயன்படுத்துகின்றனர். இங்ஙனம் தொழில்கள் என்ற வகையிலும் ஃபாணர்களுக்கும் ஃபக்கீர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதை அறியலாம்.   6.9. முடிவுரை சங்கக்கால தமிழரின் வாழ்வியல் செய்திகளை பதிவு செய்துள்ள சங்க இலக்கியங்கள் பாணர்கள் பற்றிய செய்திகள் பலவற்றையும் வெளிப்படுத்தியுள்ளன. அதன்வழி பாண் மரபினர் வாழ்வியல் அறியப்படுகின்றது.   பாணர்கள் இரப்பவராக வாழ்ந்துள்ளனர். மன்னர் பெருமக்களோடு நெருங்கிப் பழகுபவர்களாகவும், மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும் இருந்துள்ளனார். நாடோடிக் கலைஞர்களான இவர்கள் பிறரை ஆற்றுப்படுத்துதல், ஏர்களம், போர்கள் பாடுதல், மீன்பிடித்தல், பாடுதல், ஆடுதல் இசைக்கருவிகளை இசைத்தல் என பன்முகத் தன்மை கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.   இவர்களைப் போன்றே தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களும் காலத்தால் பிந்தியவர்கள் என்ற போதும் பாணர்களின் பண்பு நலன்களை கொண்டு ஒத்துக் காணப்படுகின்றனர். ஏழ்மைநிலை, நாடோடித்தன்மை, இசைத்திறமை, துயிலொடை நிலை, போரில் பங்களிப்பு, தொழில் போன்ற நிலைகளில் ஒத்தப் பண்புடையவர்களாய் திகழ்கின்றனர். தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களும் தமிழ் இலக்கியப் பாணர்கள் போன்றவர்களே என்பதை அறிய முடிகின்றது.   இயல் - 7   இயல் ஏழு  தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் இன்றைய நிலை   தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் இஸ்லாமியர்களில் ஒருப் பிரிவினர் ஆவர். தமிழ்நாட்டில் இஸ்லாம் சமயம் அறிமுகமான காலந்தொட்டு இன்றைய காலம் வரை மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற சமயம். கால மாற்றங்களால் ஏற்பட்ட சமூக, பொருளாதார, மாற்றங்களாலும், அறிவியல் மாற்றங்களாலும் பிற சமூக அமைப்புகளில் கொள்கைகளிலும் பண்பாடு, கலாச்சாரங்களிலும் மாறுதலும், பாதிப்புகளும் அடைந்திருப்பதைப் போன்று ஃபக்கீர்கள் சமூகத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள், ஊடகங்களின் வளர்ச்சி, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவையே இவற்றிற்குக் காரணம்.   இந்த இயலில், இன்றைய காலக்கட்டத்தில் தமிழக ஃபக்கீர்களின் ஆன்மீக நிலை, சமூக நிலை, கல்வி நிலை, குடும்ப வாழ்வு நிலை பொருளாதார நிலை, தற்போது இசையினை பயன்படுத்தும் விதம் போன்றவை ஆய்வுச் செய்யப்பட்டுள்ளது.   7.1. தற்கால ஆன்மீக நிலை   ஃபக்கீர்கள் சூஃபிகளின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள். சூஃபிக்கள் ஞானநிலையை அடைவதற்கு மேற்கொண்ட பயிற்சி நிலைகளாவன.   ஷரீஅத் - இஸ்லாமிய மார்க்க சட்டம் தவ்ஹீத் - இறைவனில் ஒன்றான நிலை ஹகீகத் - உண்மை மஃரிபத் – மெய்ஞானம்1 என்பன ஆகும். தக்கலை பீர்முகம்மது அப்பா தமது ஞானமணி மாலையில் மெய்ப்பொருள் அறிவு நிலை (ஷரகு) பற்றிக் கூறும் பொழுது இந்நான்கு நிலைகளையும் குறிப்பிடுகின்றார். ________________________________________________ 1 டாக்டர்.பீ. மு. அஜ்மல்கான், இஸ்லாம் வரலாறும் தத்துவமும், 1995, ப.183.   "ஆதியை அறிய வேண்டின் அழகிய நிலைமை நாலாம் ஓதிய ஷரீஅத் தென்றம் உவந்திடு தரீகத் தென்றும் நீதிசேர் ஹக்கத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் கணாலாமென் றகுமதர் அருளிச் செய்தார்"2 (ஞானமணி மாலை -11)   இந்த நான்கு நிலைகளுள் சூஃபிக்கள், மஃரிபத் எனும் உள்வணக்க வழியை மேற்கொண்டவர்களாக இறைவனைக் காண முற்பட்டனர். இத்தகைய ஆன்மீக நெறிமுறைகளைத் தாமும் கடைப்பிடிப்பதாகவே ஃபக்கீர்கள் தங்களை கருதுகின்றனர். ஆனால், இன்றளவில் இந்நிலைகளை ஃபக்கீர்களிடம் காணமுடியவில்லை.   தொடக்கக் காலத்தில் ஒரு ஃபக்கீர் தம் குருவிடம் தீட்சைப் பெற்று முரீத் வாங்குவதற்கு, அவர் தனிப்பட்ட முறையில் இறையனுபவம் பெற்று அதனை தன் குருவிடம் பரம ரகசியமாகக் கூறியப் பின்னரே அவருக்கு 'முரீத்' வழங்க வேண்டும் என்கின்ற வழக்கம் இருந்து வந்துள்ளது.   மேற்கூறிய கருத்தின்படி தமிழக ஃபக்கீர்கள் நடத்துகின்ற 'முரீத்' சடங்கின் இன்றைய முறை தொடக்கக் காலத்தில் இருந்த முறையைக் காட்டிலும் வேறுபட்டுள்ளதை அறிய முடிகின்றது. அதாவது முற்காலத்தில் 'முரீத்' வாங்கியவர் நாற்பது நாட்கள் 'சில்லா' எனும் நெறியைக் கடைப்பிடித்தனர். அதன் பின்னரே தெருக்களில் தாயிராவையும் கொண்டு பாடுவர். ஆனால் தற்காலத்தில் முரீத் வாங்கிய மூன்றாம் நாளிலேயே பாடுவதற்குச் சென்று விடுகின்றனர்.   தமிழகத்தில் கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினொட்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமை வளர்க்க ஞானிகளும், அவர்களின் கீழ் பல நூறு சீடர்கள் இருந்தனர் என்பதையும் முன்னர் கண்ட ஆய்வின் வழி அறிய முடிகின்றது. அதன் பிந்தையக் காலக்கட்டங்களில் நூறுக்கு மேற்பட்ட ஞானிகள் வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்களைப் பின்பற்றும் சீடர்களின் எண்ணிக்கை இருபது, முப்பது என்ற வகையில் குறையத் துவங்கின. பொதுவாக ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடும் ஃபக்கீர்களின் எண்ணிக்கை முற்காலத்தைவிட குறையத் துவங்கியதை ஆய்வின்வழி அறிய முடிகின்றது. ______________________________ 2 எச். முகம்மது சலீம், 'தயக்கம்', கா.முகம்மது பாரூக் (ப.ஆ), மெய்ஞானி பீர்முகம்மது அப்பா இலக்கிய ஆய்வுக் கோவை, (ப.58).   இஸ்லாம் பரவிய தொடக்கக் காலகட்டத்தில் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையோர் தங்களின் ஆண் குழந்தைகளை சமயப் பணிக்கென ஆன்மீகத்தில் ஈடுப்பட செய்தனர். (கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் இறைப்பணிக்கென துறவறம் மேற்கொள்ளச் செய்வது போல்). ஆனால் தற்கால இஸ்லாமிய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீகப் பணியின் முக்கியத்துவத்தினைக் காட்டிலும் உலகம் சார்ந்த செயல்களிலேயே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒரு குருவின்கீழ் இருக்கும் சீடர்கள் முற்காலத்தில் தங்கள் குருவுடனே அதிக நேரம் செலவழிப்பர். ஆனால் தற்காலத்தில் எப்போதும் குருவுடன் இருப்பதில்லை. தர்க்காக்களில் நடைபெறும் கந்தூரி விழாவின் போது மட்டும் குருவிடம் வந்து சேர்கின்றனர். அங்கு சில நாட்கள் மட்டும் தங்கி இருக்கின்றனர். இதனால் முழு நேரமும் ஆன்மீக நிலையில் நிலைத்திருத்தல் என்பது இயலாத ஒன்றாக உள்ளதை கள ஆய்வின்  மூலம் அறிய முடிகின்றது.   7.2. தற்கால சமூகநிலை இஸ்லாமியர் சமயத்தினருள், ஃபக்கீர்கள் சமூக நிலையில் பின்தங்கியவர்களாகவேக் காணப்படுகின்றனர். சமூக நிலையில் ஏழைப் பணக்காரர் என்ற பாகுப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் ஃபக்கீர்கள் விமர்சிக்கப்படுகின்றனர். ஃபக்கீர்கள் சமயப் பாடல்களைப் பாடி பணம் மற்றும் உணவுப் பொருட்களை காணிக்கையாகப் பெற்று வாழ்க்கை நடத்துவதால், தம் வயிற்றுப் பசியை தீர்க்கும் பொருட்டு வீடுதோறும் சென்று பணம், பழைய சோறு பெற்று தெரு ஓரங்களில் தங்கும் பிற இரவலர்களைப் போன்று கருதப்படுகின்றனர்.   இதன் விளைவாலேயே ‘இருந்தா நவாபு இல்லாட்டி ஃபக்கீரு' என்ற பழமொழி வழக்கில் வந்தது. ''நவாப் என்ற சொல் நாயிப் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். முகலாயர் காலத்தில் மாநில ஆளுநருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டு வந்தது. நவாப் என்றச் சொல் ஈரானில் இளவரசருக்கு பயன்படுத்த வந்தச் சொல். இது கெளரவப்பட்டமாக வழங்கப்பட்டது"3 என்று அப்துல் ரஹீம் தமது நூலில் கூறியுள்ளார்.   செல்வத்தில் உயர்ந்தவர்களை நவாபு என்றும், நேர் எதிரானவரை ஃபக்கீர் என்றும் சுட்டுவர். ஃபக்கீர் என்றால் ஏழை என்றுப் பொருள். இங்ஙனம் கருதப்படுதலை தற்கால ஃபக்கீர்கள் விரும்பவில்லை.   தங்களின் தோற்றம், தொழில் போன்றவற்றை பிற சமூகம் விமர்சித்தலை தற்கால ஃபக்கீர்கள் பெரிதும் விரும்பவில்லை. தாங்களும் தங்கள் சமுதாயத்தில் பிறரைப் போல் உயர்ந்த நிலையில் வாழ விருப்பம் கொண்டுள்ளனர். இதனால் தங்கள் வாரிசுகளை மார்க்க கல்வியை விட இதரக் கல்வியை கற்பிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஃபக்கீர்கள் ஏழைகள் என்றப் போதிலும் திருமண உறவுகளை ஃபக்கீர்களுக்குள்ளேயே வைத்துள்ளனர். பிற இஸ்லாமியர்களுடன் அதிக அளவில் பெண் கொடுத்தோ அல்லது எடுத்தோ பழக்கங்கள் இல்லை. என்றாலும் பிற இஸ்லாமிய வீடுகளில் நடைபெறுகின்ற அனைத்து சடங்குகளிலும் ஃபக்கீர்கள் ஈடுபடுகின்றனர். இதேப்போல் ஃபக்கீர்கள் வாழும் சிறு இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் அல்லது சடங்குகளில் பிற இஸ்லாமியர் வந்துக் கலந்துக் கொள்கின்றனர். முற்காலத்தில் இந்நிலை இல்லை. இஸ்லாமிய இல்லங்களில் ஃபக்கீர்களை அன்போடு அழைத்து உணவு அளிக்கின்றனர்.   தற்காலத்தில் ஃபக்கீர்கள் தெருக்களில் பணிவான நிலையில் சென்று, பொருட்களை யாசிக்கின்றவர்களாகவே உள்ளனர் (எல்லா ஃபக்கீர்களுக்கும் இது பொருந்தாது இளைய தலைமுறையினர் யாசித்தலை விரும்பவில்லை). தங்களுடை அன்றாட வாழ்க்கைக்குப் பிறருடைய கையை எதிர்ப்பார்த்தவராக வாழ்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் நடத்துகின்ற முரீத் சடங்கு நிகழ்ச்சியைக்கூட, பிறரிடமிருந்து யாசகமாகப் பெற்ற பொருட்களைக் கொண்டே நடத்துகின்றனர். _____________________________________ 2 அப்துல்ரஹீம், இசுலாமிய கலைக்களஞ்சியம், தொகுதி -3, 1979, ப. 409.   இஸ்லாமிய இல்லத்தில் ஃபக்கீர்களுக்கு உணவு அளித்தல் []     மேலும் ஃபக்கீர்கள் ஒரு கலைஞனுக்குரிய தோற்றமளித்தாலும், சமயப் பணி என்ற நிலை குறைந்து தொழில்முறைக் கலைஞராகவே திகழ்கின்றனர். முற்கால ஃபக்கீர்கள் கையில் தண்டம், கிஸ்தி போன்ற திருவோடு வைத்திருப்பார். கழுத்தில் கண்ட மணிமாலை, தலையில் தலைப்பாகை (தாசு), கபன் உடை போன்றவற்றை அணிந்திருப்பது வழக்கம், ஆனால் தற்கால எல்லா ஃபக்கீர்களிடையேயும் இதை காண்பது குறைவு.   73. கல்வியில் தற்கால நிலை இந்திய அரசியல் அமைப்பின் சட்டப்படி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பதாகும். எனினும் எல்லா சமூகத்தினரும் தங்கள் கல்வியைப் பெற்றிருக்கின்றனரா என்பது கேள்விக் குறியே. அங்ஙனமே தமிழக ஃபக்கீர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை கற்றுக் கொள்ள முன்வராத நிலையிலே உள்ளனர்.   இந்நிலையிலேயே தங்கள் வேதமாகிய திருக்குர்ஆனையும், பிற மார்க்க செயல்பாடுகளையும் அரபிப் பள்ளிகளுக்குச் சென்று கற்று கொள்ள இயலாத நிலையிலேயே உள்ளனர். எனினும் சில ஃபக்கீர்கள் தங்கள் பிள்ளைகளை பொருளாதார வசதி வாய்ந்த இஸ்லாமியர்களின் உதவியுடன் அரபிப் பள்ளிக்குச் சென்று, மார்க்க கல்வியினை கற்றுக் கொண்டவர்கள் உள்ளனர் என ஃபக்கீர் மைதீன் பாட்சா4 என்ற தகலவாளி கூறுகின்றார்.   ஃபக்கீர்கள் திருக்குர்ஆனில் இடம் பெறுகின்ற சில முக்கிய ஆயத்துக்களை மட்டும் பிறர் சொல்லக் கேட்டு மனனம் செய்கின்றனர். அவற்றை தம்முடைய பாடல்களில் மற்றும் மந்திரித்தல் தொழிலுக்குப் பயன்படுத்துகின்றனர்.   தற்கால ஃபக்கீர்கள் தங்களுடைய மார்க்க கல்வியை முழுமையாக கற்றுக் கொள்ள இயலாமைக்கு பொருள் வசதி இல்லாமை என்பது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றாலும், இவர்களுக்கு மார்க்கச் செய்திகளை அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. மேலும் இவர்களின் எண்ணம் முழுமையும் தொழில் ரீதியாகச் சென்றுவிடுவதே இதற்குக் காரணம் என்பதை ஆய்வின் வழி அறிய முடிந்தது.   பெரும்பாலும் ஃபக்கீர்கள் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை அதிகம் கல்வி கற்றுள்ளனர்.சர்குரு. இப்ராஹீம் அலிஷா (கும்பகோணம்) என்ற தகவலாளி பொறியியல் கல்வி கற்றுள்ளார், அவரின் கூற்று படி அதிகம் கற்றவர்கள் ஃபக்கீர் நிலையில் அதிகம் தொடர்வதில்லை பிற பணிகளுக்கு செல்வதில் அதிக முக்கியத்தவம் அளிக்கின்றனர்.   7.4. பொருளாதார நிலை தமிழக ஃபக்கீர்கள் தற்காலத்தில் பொருளாதாரத்தில் பிற இஸ்லாமியர்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். முற்கால ஃபக்கீர்கள் இதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களுக்கு ஆன்மீகப் பணி ஒன்றே வாழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் கால மாற்றத்தாலும், சமூக வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதல்களின் விளைவாலும் ஃபக்கீர்களும் பொருளாதார நிலையில் ___________________________________ 4 ஃபக்கீர் மைதீன் பாட்சா, மீனாட்சிபுரம், மதுரை சந்தித்த நாள்: 20.12.2009. 5 வேதவரிகளை   ஏற்றம் பெற முயலும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்றளவில் பொருளாதாரத்திற்காக பிறரை எதிர்பார்க்கும் நிலையிலே உள்ள னர்.   தர்காக்களில் மான்யங்கள் ஃபக்கீர்களுக்கு வழங்குவது வழக்கம். எனினும் ஆன்மீக குருக்களுக்கே (சத்குருக்களுக்கு) அதிகமாக வழங்கப்படுகின்றது. இதர ஃபக்கீர்களுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே காணிக்கைகள் வழங்கப்படுகின்றன. இதனால் பல நேரங்களில் உணவு, உடை போன்றவையும் இல்லாமல் ஏழ்மையான சூழலில் வாழ்கின்றனர்.   தர்காக்களில் வருடத்திற்கு ஒருமுறை அவுலியாக்களின் நினைவு நாளன்று சந்தனக்கூடு விழாவின் போது முதலில் கொடி ஏற்றும் மரபு உண்டு. அன்று ஃபக்கீர்கள் பலபேர் கூடி தாயிராவை இசைத்து பாடல் பாடியவாறு, கொடி மரம் ஏந்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் துவங்கி தர்கா வாயிலில் வந்து முடிப்பர், அதற்கு சன்மானமாக ஃபக்கீர்களுக்கு பணம் அளிக்கப்படுகின்றது. இவைத் தவிர சில தர்காக்களில் அவுலியாக்களின் பெயரால் பெற்ற உண்டியல் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு ஃபக்கீர்களுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது. உதாரணமாக மதுரை வட்டாரத்தில் வாழ்கின்ற ஃபக்கீர்களுக்கு மதுரை, கோரிப்பாளையத்தில் 'சுல்த்தான் அலாவுதீன்' என்னும் அவுலியாவின் நினைவால் வரும் தர்காவில் வரும் உண்டியல் வருமானம் பிரித்து அளிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.   இஸ்லாமியர்கள் பொதுவாக அதிகாலைப் பொழுதில் நோன்பு நோற்று, அந்திப் பொழுதில் முடிப்பது வழக்கம். அந்நிலையில் மக்கள் தமது சமயக் கடமையினை மறந்திடாது இருக்க, அவர்களுக்கு நினைவூட்டும் விதமாய் ஃபக்கீர்கள் தாயிராவை இசைத்து உரக்க குரலில், இஸ்லாமியர் வாழும் தெருக்களில் பாடல்களைப் பாடியவாறு மக்களை எழுப்புவர். தற்காலத்திலும் நோன்பு நோற்கின்ற முப்பது நாட்களும் ஃபக்கீர்கள் இதனை ஒரு சமயப்பணியாக ஏற்றுத் தம் முன்னோர்களின் வழி நடக்கின்றனர். இதற்கு காணிக்கையாக இஸ்லாமியர் ரம்ஜான் பண்டிகையன்று அவரவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் அல்லது பொருட்களை ஃபக்கீர்களுக்கு வழங்குவர். மக்கள் இதனை தங்களுக்குரிய ஜக்காத் (ஏழைவரி) என்ற முறையிலே கொடுக்கின்றனர். இவ்வருவாயில் தங்கள் பண்டிகை நாட்களைப் பொருளாதாரச் சிக்கலின்றி இனிய முறையில் கொண்டாட முடிகின்றது.   இஸ்லாமியர் வீடுகளில் திருமண நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு 'மெளலூது' எனும் புகழ்மாலைப் பாடல்களைப் பாடுகின்றனர். இதற்கு 'மெளலூது பாடுதல்' என்றுப் பெயர். இப்பாடல்களின் முலம், நபிகள் நாயகம் மற்றும் அவுலியாக்கள் பெற்ற சிறப்பினைக் கூறி அத்தகைய சிறப்பினை இம்மணமக்கள் பெற்று வாழ வேண்டும் என்பதாக வாழ்த்திப் பாடுவர். அன்று திருமண வீட்டார் ஃபக்கீர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு பணம் அல்லது பொருள் அளிப்பர். இன்று பெரும்பாலும் பணமாகவே இவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. மேற்கண்ட முறையிலெல்லாம் வருமானம் பெற்று, ஃபக்கீர்கள் தங்கள் பொருளாதார நிலையை வறுமையின் பிடியிலிருந்து ஓரளவு காப்பாற்றிக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.   7.5. இன்றைய ஃபக்கீர்களின் இல்லறச் சடங்குகள் ஆதி மற்றும் தற்கால ஃபக்கீர்களின் ஆன்மீகச் சடங்குகள் குறித்து இயல் மூன்றில் விவரிக்கப்பட்டுள்ளது பிற்காலங்களில், ஃபக்கீர்களின் இல்லறச் சடங்குகளான திருமண வாழ்க்கை நிலை மற்றும் இறப்பு சடங்கு நிலைகளைக் குறித்து கீழ்கண்டவற்றிலிருந்து அறியலாம்.   7.5.1. திருமண வாழ்வு இஸ்லாம் சமயத்தவருள் நான்கு பெரும்பிரிவுகள் காணப்படுகின்றது. அவை முறையே 1.ஹனபி, 2.மாலிக் 3. ஷாபி, 4. ஹம்பலி என்பவையாகும். இந்நான்கு பிரிவுகளும் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் நான்காவது வழித் தோன்றலில் ஏற்பட்டது. இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனையும், முகம்மது நபி (ஸல்) அவர்களால் அருளப் பெற்ற ஹத்தையும்  பின்பற்றியே  இந்நான்கு  பிரிவுகளும்  தோன்றின.   இஸ்லாம் சமயத்தினர் பிரிவுகளால் வேறுபட்டவராக இருப்பினும், வழிபாட்டு முறையில் எல்லோரும் ஒரே முறையையே கடைப்பிடிக்கின்றனர். அல்லாஹ்வை வழிப்படுதலும், இஸ்லாமிய சட்டமான ஷரீஅத் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட முறையிலேயே தங்களின் பிறப்பு, திருமணம், இறப்பு சடங்குகளிலேயே நிறைவேற்றி வருகின்றனர். தமிழக ஃபக்கீர்களில் பெரும்பான்மையோர் 'ஹனபி' பிரிவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். ஃபக்கீர்கள் 'நிக்காஹ்' என்னும் திருமணச் சடங்கை இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு உட்பட்ட முறையிலேயே நடத்துகின்றனர்.   சமூக அமைப்பிற்கு அடிப்படையான குடும்ப அமைப்பை நன்முறையில் அமைத்திட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. ஃபக்கீர்களின் ஆன்மீக நெறிக்குரிய, குறிப்பாக துறவறத்திற்குரிய சடங்கு முறைகளைச் செய்து கொள்கின்றனர் என்பதை இயல் மூன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இல்லறம் ஏற்கலாமா என்ற கேள்வி எழுகின்றது. "இஸ்லாமியத்தல் இல்லறத்தை வெறுத்துச் சென்று இறைவனின் தரிசனம் பெற விழையும் துறவறம் சிறப்பிடம் பெறவில்லை ” 6   திருமணத்தை மனித வாழ்வில் இன்றியமையாதவற்றுள் ஒன்றாகவே கருதுகின்றனர். "உங்கள் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும் உங்களுடைய ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாய் இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களைத் தனவந்தர்களாக்கு -வான்" (திருக்குர்ஆன் 24:32) என்றும் இறைவசனம் கூறுகின்றது. ஒருவன் வறியவனாக இருப்பினும் அவனுக்குத் திருமணம் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிகின்ற பொழுது அவன் மேன்மை பெறுகின்றான் என்பதையே இஸ்லாம் கூறுகின்றது. மேலும் நபிகள் நாயகம் ; _____________________________ கா. சாகுல் ஹமீது, 'இசுலாம் சமயத்தில் புனித ஹஜ் யாத்திரை' மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எம்.பில் ஆய்வேடு, 1985, பக். 9   "பரகத் என்னும் அபிவிருத்தி நிறைந்த சிறந்த திருமணம் சிரமமின்றி எளிய முறையில் செய்து கொள்ளும் திருமணமேயாகும்"7 எனக் கூறுகின்றார். திருமணங்கள் ஆடம்பரமாகத் தான் நடைபெற வேண்டுமென்பதில்லை. எளியமுறையிலும் நடைபெறலாம் என்பதை நபிகளின் வரிகள் மெய்ப்பிக்கின்றன.   இக்கொள்கைக்கிணங்க, ஃபக்கீர்கள் தம் முன்னோர்களான சூஃபிக்களின் நெறிகளில் இருந்து சற்று மாறுபட்டவர்களாக துறவறத்தைக் கைவிட்டு, இல்லறத்தை மேற்கொண்டவர்களாக தற்காலத்தில் உள்ளனர். இஸ்லாமியர் அனைவராலும் போற்றப்படும் அப்துல்காதர் ஜீலானியே திருமணம் செய்துக் கொண்டவர்.   தமிழக இஸ்லாம் சமயத்தினருள் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவிலிருந்து பெண் எடுத்தல் அல்லது பெண் கொடுக்கின்ற மரபு மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது. அவ்வழியில் ஃபக்கீர்களும் தங்கள் ஃபக்கீர் குடும்பத்திற்குள்ளேயே பெண் எடுத்து, பெண் கொடுக்கின்ற திருமண முறையைக் கடைப்பிடிக்கின்றனர். ஒரு சிலரே ஃபக்கீர் அல்லாத பிற இஸ்லாமிய குடும்பங்களில் இருந்து திருமண உறவை வைத்துக் கொள்கின்றனர். ஃபக்கீர்கள் திருமணம் செய்துக் கொள்கின்ற ஃபக்கீர் அல்லாத இஸ்லாமியர் குடும்பங்களும் மிகவும் வசதி குறைந்த நிலையிலே உள்ளது என்பதை கள ஆய்வின் போது அறியமுடிந்தது. ஃபக்கீர்கள் தங்கள் திருமணத்தின் போது கீழ்கண்ட சடங்குகளை கடைப்பிடிக்கின்றனர். • பெண் பார்த்தல் • நிச்சயம் செய்தல் •மஞ்சள் பூசுதல் •எண்ணெய் வைத்தல் • திருமணம் செய்தல்    _______________________________ 7 ஜைனும் ஆபிதீன் பீ , இஸ்லாமியத் திருமணம், 1996, ப. 15.   தமிழக ஃபக்கீர்கள், தங்களுடைய குடும்பத் திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர்களே தாயிராவை இசைத்து மணமக்களை வாழ்த்திப் பாடுகின்றனர். இந்நிகழ்ச்சிகளுக்கு ஃபக்கீர் அல்லாத பிற இஸ்லாமியரும் கலந்துக் கொள்ளகின்றனர்.   7.5.2. ஃபக்கீர்களின் இறப்புச் சடங்கு பொதுவாக எல்லா இஸ்லாமியர்களும் இறப்புச் சடங்குகளை 'ஷரீஅத்' சட்டத்திற்கு உட்பட்ட நிலையிலே இன்றளவும் கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமியர்கள் இறந்த உடலைக் குளிப்பாட்டியதற்கு பின்னால், 'கபன்' என்ற வெள்ளை நிற 'வாயில்' துணியினால் ஆன நீண்ட துண்டைக் கொண்டு உடல் முழுவதும் சுற்றி, 'சந்தூக்கு' எனும் பாடையில் வைத்து மசூதிக்குக் கொண்டு செல்வர். அங்கு 'ஜனாசா' எனப்படும் தொழுகை வழிப்பாட்டிற்குப் பின் அடக்க தளத்திற்கு கொண்டு சென்று, 'கப்ரு' எனும் மண்ணறைக்குள் அடக்கம் செய்வர். இது இஸ்லாமியர் பின்பற்றும் முறை. ஆனால் இந்நிலையிலிருந்து சற்று ஒருபடி மேம்பட்டவர்களாக தமிழக ஃபக்கீர்களின் இறப்புச் சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. அதாவது மேற்கூறிய முறையில் சடங்குகளைச் செய்து முடித்துவிட்டு, கப்ரு எனும் மண்ணறைக்குள் உடலை வைத்து மண்ணை மூடுவதற்கு முன்னதாக இறந்த அவரின் உடலின் மேல், தான் வழிவந்த மற்றும் வாழ்ந்த குறிப்புகள் அடங்கிய காகிதச் சுருளை வைக்கின்றனர். இதற்கு 'சில்சிலத்து' (Chain of succession) என்று பெயர். இதன் பின்னரே அடக்கம் செய்கின்றனர். இவ்வாறாக ஃபக்கீர்களது இறப்புச் சடங்கு நிறைவேற்றப்படுகின்றது.   7.6. சமுதாய மரியாதை பழங்காலங்களில் ஃபக்கீர்கள் ஆன்மீக வாதிகள், துறவிகள் என்ற நிலையிலே மதிக்கப்பட்டனர், போற்றப்பட்டனர். ஆனால் இன்றைய நிலையில் தமிழக ஃபக்கீர்கள் ஓர் இரவலர் என்ற நிலையிலே மதிப்பளிக்கப்படுகின்றனர் எனினும் பிற இரவலர்களுக்கு அளிக்கப்படுகின்ற மதிப்பினைக் காட்டிலும் சற்று உயர்ந்த நிலையிலே இவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. சமுதாயத்தில் இவர்கள் நாடோடிக் கலைஞனுக்குரியத் தோற்றத்தில் இருந்தப் போதிலும் இரவலர் அல்லாத பிற மக்களுக்கு அளிக்கப்படுகின்ற மரியாதைப் போன்று இவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.   7.7. மசூதிகளில் மரியாதை சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, இன்று மசூதிகளில் தொழுகை நடத்துகின்ற இமாம் (தலைவர்) களுக்கு அளிக்கப்படுகின்ற மரியாதைக் காட்டிலும், அதிக மரியாதை அளிக்கக்கூடிய நிலையில் மார்க்க மேதைகளாக ஃபக்கீர்களின் முன்னோடிகள் வாழ்ந்தனர் என்பது தகவலாளிகள் வழி அறிந்த செய்தி.   எனினும் இன்றைய சூழலில் இத்தகைய நிலை மிகவும் எதிர்மறையாக உள்ளது. இதற்கு காரணம் இவர்களே என சமய அறிஞர்கள் கருதுகின்றனர். அதாவது இஸ்லாம் சமயம் சார்ந்த பல கடமைகளை இவர்கள் கடைப்பிடிப்பது இல்லை என்பதே.   அதாவது இஸ்லாமியர்களின் அடிப்படைக் கடமையில் ஒன்றான 'நாளும் ஐந்து வேளைத் தொழுகை (இறைவணக்கம்)' என்பதை முழுமையாக கடைப்பிடிக்காமல், தர்காக்களில் சென்று அவுலியாக்களின் பெயரால் 'ஜியாரத்' என்கின்ற வழிபாட்டு முறையைக் கைக்கொள்வதேயாகும். (தர்கா வழிப்பாட்டினை திருக்குர்ஆன் ஆதரிக்கவில்லை).   இன்றைய காலக்கட்டத்தில் மசூதி சார்ந்த இடங்களில் ஃபக்கீரர்களுக்கு பெருமளவு மரியாதைகள் கிடைக்காத போதும், தர்காக்களில் இவர்களுக்கென்று தனி மரியாதை அளிக்கப்படுகின்றது.   7.8. தற்கால ஃபக்கீர்களின் இசை   தற்கால விஞ்ஞான வளர்ச்சிக்களுக்கேற்ப இசைத்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வண்ணமே இஸ்லாமிய பாமரப் பாடகர்களான ஃபக்கீரர்களின் இசையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.   7.8.1. பாடுகளம் தொடக்கக்காலத்தில் ஃபக்கீரர்கள் குழுவாகவோ அல்லது தனியாகவோ சென்று ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பள்ளிவாசல்கள், இஸ்லாமியர் அதிகம் வாழும் தெருக்கள், தர்காக்கள் மற்றும் இல்லங்களில் சென்று பாடலகளைப் பாடி வந்தனர். தற்போது கந்தூரி விழாவில் குழுவாக பாடுவதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சுமார் மூன்று ஃபக்கீர் பாடகர் குழுக்கள் உள்ளனர். இவர்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகையின் போது வெளிநாடுகளில் வாழும் தமிழக இஸ்லாமியர்களின் சிறப்பு அழைத்தலின் பேரில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சென்று குழுப்பாடல் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதாக, கள் ஆய்வில் தகவலாளிகள் வழியாக அறிந்தச் செய்தி.   7.8.2. பாடும் முறை பாடும் முறையில் முந்தைய காலங்களில் பயன்படுத்திய முறையினையே பின்பற்றுகின்றனர். எனினும் நாகூர் ஆண்டவர் தர்கா, மற்றும் மதுரை மேலவாயில் தர்காவிலும், சிறப்பு நிகழ்ச்சியாக ஃபக்கீரர்களின் பாடல் நிகழ்ச்சியினை ஒலிப்பெருக்கி வசதிகளுடன் ஏற்பாடு செய்கின்றனர். இங்கு இவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன ஒலிப்பெருக்கியின் உதவியுடன் பக்கீர்கள்பாடுதல்  []   இஸ்லாமியர் அதிகம் வாழும் தெருக்களில் உள்ள இஸ்லாமியர் இல்லங்களுக்குச் செல்லும் ஃபக்கீர்கள், தங்களுக்கு அவ்வேளையில் தோன்றும் மெட்டினையே பாடுகின்றனர். அனைவரையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நோக்கோடு திரைப்பட மெட்டுக்களை, தங்களின் பாடல்வரிகளுக்கு பயன்படுத்திப் பாடுகின்றனர். மேலும் எல்லா ஃபக்கீர்களும் தற்காலத்தில் பாடுவதில்லை என்பதை ஆய்வின் வழி கண்டறிய முடிந்தது.   7.8.3. இசைக்கருவிகள்   ஃபக்கீர்கள் பயன்படுத்தும் தாயிரா என்றத் தாளக்கருவி, தங்களை அடையாளப்படுத்தும் கருவியாக மட்டும் இல்லாது பிரதான தாளக்கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. இதைத் தவிர தற்போது குழு நிகழ்ச்சியின் போது ஆர்மோனியம் பயன்படுத்துகின்றனர். எனினும் எல்லா ஃபக்கீர்களும் இதனை பயன்படுத்தவில்லை. ஆர்மோனியம் இசைப்போர் இதற்கென தனி பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.   7.8.4. பாடல் பதிவு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியர் தங்களின் வீடுகளுக்கு பாடவரும் ஃபக்கீர்களை மிகுந்த ஆர்வமுடன் உள்ளே அழைத்து அவுலியாக்களின் வாழ்க்கைச் சரித்திரம், நூறு மசலா கதை போன்றவற்றைப் பாடச் சொல்லி கேட்பதையும், அவற்றை எழுதி மனனம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். முதிர்ந்த வயதுடைய இஸ்லாமியப் பெண்கள், ஃபக்கீர்கள் பாடியப் பாடல்களை நினைவுப்படுத்தி முறையாகச் சொல்வதை களப்பணியில் கண்டறியப்பட்டன. அன்றைய காலக்கட்டத்தில் ஃபக்கீர்கள் பாடுவதற்கென சூழல்களும், அதற்கான களங்களும் அதிகமாக இருந்தன.   தற்போது பாடல்கள் ஒலி நாடாக்களில் சிலர் பதிவுச் செய்கின்றனர். திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த ஃபக்கீர் ஷேக் முகையதீன், முழு நேரப் பாடகர். இவர் தன் குழுக்களுடன் பாடிய பாடல்களை முறைப்படி ஒலிப்பதிவு கூடத்தில் பாடி பதிவு செய்து வெளியிட்டுள்ளார். (இவர் பாடிய சிலப்பாடல்கள் பின்னிணைப்பு குறுந்தகட்டில் இணைக்கப்பட்டள்ளது.)   7.8.5. ஃபக்கீர்களின் தற்கால தொழில்கள் தற்கால தமிழக ஃபக்கீர்கள் அனைவருமே பாடுதல் என்பதை மேற்கொள்ளவில்லை . ஒரு சிலர் பிற வேலைகளில் ஈடுபடுகின்றனர். சிலர் தங்கள் வீட்டிலுள்ள பெண்களையும் பிற வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். அங்ஙனம் பீடி சுற்றுதல், தையல் வேலை, மண்பானைகள் செய்தல், சாம்பிராணி காட்டுதுல், பாசிமணி மாலைகள் விற்றல், மீன் பிடித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு சிறிய அளவில் பொருள் ஈட்டுகின்றனர். சில ஃபக்கீர்கள் கட்டட வேலையில் சித்தாளராகப் பணி செய்கின்றனர். 7.9. முடிவுரை ஃபக்கீர்களின் இன்றைய நிலையினை நோக்குங்கால், பழங்கால ஃபக்கீர்களின் எல்லா பண்புகளிலிருந்தும், நோக்கத்திலிருந்தும் பல மாறுதல்கள் காணப்படுவதை ஆய்வு செய்து அறிய முடிகின்றது. இன்றைய கால ஃபக்கீர்கள் ஆன்மீக நிலையில், தங்களின் முன்னோடிகளான சூஃபிக்கள் கடைப்பிடித்த ஆன்மீகப் பயிற்சி முறைகளிலும், ஒழுக்கநெறிகளிலும் மாறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.   சமூக நிலையில் பிற இஸ்லாமியர்களைவிட மிகவும் பின்தங்கியவர் -களாகவேக் காணப்படுகின்றனர். முற்கால தமிழக ஃபக்கீர்களைக் காட்டிலும் தற்கால ஃபக்கீர்கள் மார்க்க கல்வியைக் காட்டிலும் இதரக் கல்வியினைக் கற்பதில் ஆர்வம் காட்டி வருவதை அறியமுடிகின்றது.   ஃபக்கீர்கள் தங்களின் திருமண மற்றும் இறப்புச் சடங்குகளை பிற இஸ்லாமியர்கள் போன்றேக் கடைப்பிடிக்கின்றனர். எனினும் ஃபக்கீர்களின் இறப்புச் சடங்கில் இறந்த உடலின் மீது மரபுவழி குறிப்புக்களடங்கிய சில்சிலத்து என்ற காகிதச் சுருளினை சேர்த்து வைத்து அடக்கம் செய்தல் பிற இஸ்லாமியர்களின் இறப்புச்சடங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதை காணமுடிகின்றது.   பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். எனினும் தங்கள் வாரிசுகள் பிறரைப் போல் நன்றாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் விளைவால் பாடுதல் என்பது மட்டுமல்லாது பிறத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.   இசையினைப் பொறுத்தமட்டில் பாடுவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. எனினும் பாடலின் தரம் உயர்ந்துள்ளது. அவுலியாக்களின் பெயரால் நடைபெறும் கந்தூரி விழா, சந்தனக்கூடு நிகழ்ச்சி போன்றவற்றின் போது முற்காலங்களை விட தற்காலத்தில் அதிக இசைப்பயிற்சி எடுத்துக் கொள்வதை ஆய்வின் வழி அறிய முடிகின்றது.   பாடுவதற்கு புதிதாய் ஆர்மோனியத்தினை துணைக்கருவியாகக் கொண்டுள்ளனர். பாடல்களை ஒலிப்பதிவு செய்கின்றனர். தற்காலத்தில் தமிழக ஃபக்கீர்கள் குடும்ப உறவுமுறையில் கூட்டுக்குடும்பமாக இல்லாமல் தனிக் குடும்பமாக வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதை அறியமுடிகின்றது.   முடிவுரை முடிவுரை   மனிதனுடைய நல் வாழ்விற்கு துணை செய்வன கலைகள். கலைகளில் தலைச்சிறந்தது இசைக்கலை. மனிதனின் உணர்வுகளைத் தூண்டி இன்பத்தையும் மன அமைதியினையும் அளிக்க வல்லது இசைக்கலை. மக்கள் தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் இசையின் வழியாக காலங்காலமாக வெளிப்படுத்தி வருகின்றார்கள். இசை ஓர் சிறந்த ஊடகம், பாமரர் முதலாய் அனைவரும் இசையினை தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்டுள்ளனர். அத்தகைய இசையினை தங்களின் சமயம் சார்ந்த கருத்துக்களை பரப்பவும், நீதி நெறிகளை விளக்கவும் ஓர் உன்னதக் கருவியாக பயன்படுத்தி வாழ்பவர்கள் தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்.   இஸ்லாமியர்கள் பிற சமயங்களான இந்து மற்றும் கிறிஸ்தவ சமய மக்களைப் போன்று இசைக்குத் தங்கள் வழிப்பாட்டில் அதிக முக்கியத்துவம் தராத போதிலும், இவர்களில் ஒரு பிரிவினரான ஃபக்கீர்கள், இசையினைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு, சமய நெறிகளையும், நல்லொழுக்கக் கருத்துக்களையும், தத்துவக் கருத்துக்களையும் பாடலாக வீடு தோறும் பாடி வாழ்ந்து வருகின்றனர். இசைக்கு மதம், இனம், மொழி, மேலோர், கீழோர், கற்றோர், கல்லாதோர் என்ற பாகுபாடு இல்லை என்பதை தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றனர்.   உலக அளவில் உள்ள முக்கியமான சமயங்களில் இஸ்லாம் சமயமும் ஒன்று. இந்த சமயத்திற்கு புத்துயிர் ஊட்டியவர் முகம்மது நபி(ஸல்) (கி.பி.570-632) என்பவர். இஸ்லாம் சமயதிற்கு சாந்த மார்க்க ம் என்று பொருள். இஸ்லாமியர் அனைவரும் திருக்குர்ஆனைப் போற்றி ஒழுகுகின்றனர். தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் இஸ்லாம் மதம் கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே பரவத் துவங்கியது. இறை நேசர்களான நத்ஹர்வலி மற்றும் நாகூர் சாகுல் ஹமீது அவுலியா ஆகியோர் இஸ்லாமியப் போதனைகளைப் பரவச் செய்தவர்களில் மிக முக்கியமான இறைநேசர்கள் ஆவார். சாகுல் ஹமீதுவலியுடன் வந்த நானூற்று நான்கு சீடர்கள் ஃபக்கீர்கள் என்பதை அறிய முடிகின்றது.   ஃபக்கீர்களின் தோற்றம் முகம்மது நபி காலத்திலிருந்தே துவங்கியுள்ளது. பாரசீக நாட்டில் வாழும் தர்வேஷ்களே பிற்காலத்தில் ஃபக்கீர்கள் எனப்பட்டனர். தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் இஸ்லாமிய யாசகர் பிரிவினருள் ஒருவர் எனக் கருதப்பட்டாலும் இவர்கள் ஆன்மீகவாதிகள், இசைக்கலைஞர்கள், மற்றும் பிற இஸ்லாமிய இரவலர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பது ஆய்வின் முலம் கண்டறியப்பட்டது. இவர்கள் ஆன்மீகத் துறவிகள் என்பதற்கு முரீது சடங்கே சான்றாக திகழ்கின்றது. இசைக்கலைஞர்கள் என்பதற்கு தாயிராவை இசைத்து பாடல்கள் பாடுவது சான்றாக திகழ்கின்றது.   இசையைப் பொறுத்தமட்டில் நாடோடி இசைக்கலைஞர்களாகத் திகழ்கின்றனர். எந்த ஒரு முறையான அடிப்படைப் பயிற்சிகள் ஏதும் இல்லாத போதும் இயற்கையாகவே இசையறிவைக் கொண்டுள்ளனர். ஃபக்கீர்கள் பாடல்களில் இசை அமைப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். பாடல்களை அவரவர் தம் குரல் வளத்திற்கேற்றவாறு, முறையான ஸ்ருதி என்ற வகையில் இல்லாமலே பாடுகின்றனர். பெரும்பாலும் மத்திய ஸ்தாயியிலே பாடுகின்றனர். கீழ் ஸ்தாயி அல்லது தார ஸ்தாயியில் அதிகம் பாடுவதில்லை. நன்றாக தேர்ச்சி பெற்றவர்கள், கனத்தக் குரலில் மேல் ஸ்தாயியிலும் அழகாகப் பாடுகின்றனர். இவர்கள் பாடும் பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்களின் மெட்டமைப்பை ஒத்துக் காணப்படுகின்றது என்பதை கள ஆய்வின் வழி அறிய முடிந்தது. மேலும் தமிழகத்தில் வாழும் ரிஃப்பாய் பிரிவு ஃபக்கீர்களே இசைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவர்கள் தாயிராவை பிரதான தாள இசைக்கருவியாக பயன்படுத்துகின்றனர்.   தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் பாடும் பாடல்கள், இஸ்லாமிய சமயத்தை மையமாகக் கொண்டு அமைந்திருப்பினும் அறத்தை வலியுறுத்தும் பண்போடு திகழ்கின்றது. ஃபக்கீர்களின் பாடல் வழி இஸ்லாமிய மக்களின் பண்பாடு. சமய அமைப்பு, வாழ்வின் நெறிமுறைகள் ஆகியவை எளிதில் தெரிந்துக் கொள்ள முடிகின்றது. பாடல்களில் எதுகை, மோனை, இயைபு, அடுக்குகள், நாட்டார் வழக்குச் சொற்கள், பேச்சு வழக்குச் சொற்கள், முத்திரைகள், மணிப்பிரவாளம் ஆகியன பயின்று வருகின்றன.   தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் வாழ்வு , தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்டைய தமிழிசைக் கலைஞர்களாகிய பாணர்கள் வாழ்வினை ஒத்து அமைந்துள்ளது. பாணர்கள் வறியவராய் வாழ்ந்துள்ளனர். மன்னர் பெருமக்களோடு நெருங்கிப் பழகுபவர்களாகவும், மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும் இருந்துள்ளனார். நாடோடிக் கலைஞர்களான இவர்கள், ஏர்களம் பாடுதல், போர்கள் பாடுதல், ஆடுதல், இசைக்கருவிகளை இசைத்தல், பிறரை ஆற்றுப்படுத்துதல், மீன்பிடித்தல், என பன்முகத் தன்மை கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்களைப் போன்றே காலத்தால் பிந்திய தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களும் இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற போதும் பாணர்களின் பண்பு நலன்களை பல்வேறு வகையில் ஒத்து இருக்கின்றனர். ஏழ்மைநிலை, நாடோடிநிலை, இசைத்திறமை, தெருக்களில் பாடுதல், துயிலொடை நிலை, போரில் பங்களிப்பு, தொழில் போன்ற நிலைகளில் ஒத்தப் பண்புடையவர்களாய் திகழ்கின்றனர். தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களும் தமிழ் இலக்கியப் பாணர்கள் போன்றவர்களே என்பதை அறிய முடிகின்றது.   மேலும் இன்றையக் காலக்கட்டத்தில் தமிழக ஃபக்கீர்களின் ஆன்மீக நிலை, சமூக நிலை, பொருளாதாரம், கல்வி, இசை ஆகிய எல்லா கூறுகளிலும் பல மாறுதல்கள் அடைந்துள்ளன. நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள், ஊடகங்களின் வளர்ச்சி, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவையே இவற்றிற்குக் காரணம். பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். எனினும் தங்கள் வாரிசுகள் பிறரைப் போல் நன்றாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் விளைவால் பாடுதல் என்பது மட்டுமல்லாது கல்வியிலும் பிறத் தொழில்களிலும் அதிக அளவில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.   இசையினைப் பொறுத்தமட்டில் பாடுவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. எனினும் பாடலின் தரம் உயர்ந்துள்ளது. அவுலியாக்களின் பெயரால் நடைபெறும் கந்தூரி விழா, சந்தனக்கூடு நிகழ்ச்சி போன்றவற்றின் போது முற்காலங்களை விட தற்காலத்தில் அதிக இசைப்பயிற்சி எடுத்துக் கொள்வதை ஆய்வின் வழி அறிய முடிகின்றது. பாடுவதற்கு புதிதாய் ஆர்மோனியத்தினை துணைக்கருவியாகக் கொண்டுள்ளனர். சிலப் பாடல்கள் மோகனம், சிந்துபைரவி, ஹரிகாம்போஜி, மாயாமாளவகொளை போன்ற ராகங்களில் அமைந்துள்ளது. தாளங்களை நோக்குங்கால் சதுஸ்ர, திஸ்ர நடைகளில் அதிகமாக பயின்று வருகின்றது. பாடல்களை ஒலிப்பதிவு செய்கின்றனர். தெருக்களைக் காட்டிலும் தர்காக்களிலே அதிக அளவில் பாடுகின்றனர். தற்காலத்தில் மக்களை ஈர்க்கும் பொருட்டு பழைய மற்றும் புதிய திரைப்பட மெட்டுக்களை தங்களுடைய பாடல்களுக்கு பயன் படுத்துகின்றனர்.   ஆய்வின் முடிவு தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் என்ற தலைப்பின் கீழ் மேற்கொண்ட இந்த ஆய்வின் வழி நாடோடி வாழ்வை மேற்கொள்ளும் இசைக் கலைஞர்களாகிய தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள், இஸ்லாமியப் பாணர்கள் என வலியுறுத்தப் படுகின்றனர். சாமானியர்களாகிய இத்தகையோரது பாடல்களும் ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணமே.   ஆய்வின் பயன் 'தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்' என்ற இந்த ஆய்வின் வழி இஸ்லாமியர்களில் ஒருப்பிரிவினரான ஃபக்கீரர்களின் வாழ்வியல் முறை மற்றும் இசையுடன் கொண்ட தொடர்பு ஆகியன வெளிக்கொணரப்படுகின்றது. எளியவர்களும், நாடோடிக் கலைஞர்களுமான ஃபக்கீர்களின் பாடல்களில் பொதிந்துள்ள சமய, தத்துவ, நீதிக் கருத்துக்கள் இவ்வாய்வின் வழி உலகறியச் செய்யப்படுகின்றது.   மேல் ஆய்வுக்கு வழி செய்வன் > தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களைப் போல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வாழும் ஃபக்கீர்கள் இசைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வாழ்கின்றனர். இசைக்கலைஞர்கள் என்ற வகையில் இவர்களைக் குறித்த ஆய்வு மேற்கொள்ளலாம். > இசையை பிரதானமாகக் கொண்டு நாடோடி வாழ்வை மேற்கொள்ளும் தமிழக ஃபக்கீர்களைப் போல் தமிழகத்தில் குடியமர்ந்து வாழும் பூம் பூம் மாட்டுக்காரர்கள் ஓர் இசைக்கலைஞர்கள். பசு ஒன்றையும் இளங்கன்று ஒன்றையும் அலங்கரித்து உறுமி, நாதஸ்வரம் ஆகிய இசைக்கருவிகளை இசைத்து இராமாயணக்கதை, நல்லதங்காள் கதை, தேசிங்கு ராஜன் கதை, சிறுதொண்டர் கதை, கிருஷ்ண விலாசம் போன்ற கதைப்பாடல்களை இசைத்து நிகழ்த்துகின்றனர். இவர்களைக் குறித்த ஆய்வு மேற்கொள்ளலாம். > இஸ்லாமிய சமயத்தில் ஃபக்கீர்கள் போல் சமண சமயத்தில் (Jains) இசையைப் பிரதானமாகக் கொண்டவர்கள் 'மண்டல்கள்' என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் எல்லாவித சடங்குகளிலும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பாடல்கள் ஹிந்துஸ்தான் ராகங்களிலும், நாட்டுப்புறப் பாடலின் இசை அமைப்பிலும், கலப்பிசையாகவும் காணப்படுகின்றது. இவர்களின் இசை முறைகளையும் ஆய்வுச் செய்தல் சமயங்கள் வழியாக இசைக்கலையின் பயன்பாட்டினையும் வளர்ச்சியினையும் அறிந்துக் கொள்ள இயலும்.   துணை நூற்பட்டியல் I. தமிழ் நூல்கள் 1. அப்துல் கறீம் மு. : இஸ்லாமும் தமிழும், ஆயிஷா பதிப்பகம், உத்தமபாளையம் - 625 533. முதற்பதிப்பு, 1982. 2. அப்துல் அல் ஜப்ஃபார் : மார்டின் லிவிங்ஸ் மூல நூல்களின் அடிப்படையில் முகம்மது அவர்களின் வாழ்வு தமிழாக்கமும் மதிப்புரையும், ஸ்ரீலங்கா, 1985. 3. அப்துல் ஜப்பார். அர. (தொ.ஆ) : இஸ்லாம் ஓர் அறிமுகம் (முதற்பகுதி) குர்ஆன் மஜ்லிஸ், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 20. முதற்பதிப்பு 1989. 4. அப்துல் அல் ஜப்பார் : மார்டின் லிவிங்ஸ் மூல  முகையதீன் நூல்களின் அடிப்படையில் முகம்மது அவர்களின் வாழ்வு' - தமிழாக்கமும் மதிப்புரையும், ஸ்ரீலங்கா, 1985. 5. அருணாச்சலம் மு. : தமிழிசை இலக்கண வரலாறு (தொகுதி -2) கடவு பதிப்பகம், மதுரை - 625014. 2009 6. அழகப்பன் ஆறு. : நாட்டுப்புற பாடல்கள் - ஒரு  திறனாய்வு, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை , முதல் பதிப்பு 1999. 7. அஜ்மல்கான் பீ.மு. : தமிழகத்தில் முஸ்லீம்கள், முஸ்லீம் அசோசியேஷன் வெளியீடு, அரங்கக்குடி, மயிலாடுதுறை, 1985. 8. அஜ்மல்கான் பீ.மு. : இஸ்லாம் வரலாறும் தத்துவமும், அரசி பதிப்பகம், திண்டுக்கல், முதற்பதிப்பு – 1995  9. ஆதம்பார் பரத்வாஜ் ராமசாமி : ஸந்தேஹ த்வாந்த பாஸ்கரம், ஸ்ரீ பகவன் நாம் பப்ளிகேஷன்ஸ், சென்னை 1937. 10. இராசசேகர தங்கமணி ம . : பாண்டியர் வரலாறு, (முதல் பாகம்) தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், சென்னை - 6 1978 11. இராமலிங்கம் மா. : இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், திருவல்லிக்கேணி, சென்னை - 5 இரண்டாம் பதிப்பு:1977 12. இராம சுப்பிரமணியம் வ.த. : தண்டியலங்கார மூலமும் தெளிவுரை, முல்லை நிலையம், சென்னை - 14. 1998. 13. இளங்குமரன் இரா. : பாணர், மணிவாசகர் பதிப்பகம் முதல் பதிப்பு சிதம்பரம் 1987 14. இஸ்மாயில் மு.மு. : இனிக்கும் இராஜநாயகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 1984. 15. கமால் எஸ்.எம். : முஸ்லிம்களும் தமிழகமும், இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மைய வெளியீடு, இரண்டாம் பதிப்பு, சென்னை , 1990. 16. கமாலுதீன் ஆலிம் வ. : தஃப்லீக்கும் தர்க்காவும், காஜியார் புக் டிப்போ , தஞ்சாவூர், 1993 17. கலைவாணி இரா ., : சங்க இலக்கியத்தில் இசை, தமிழ்வேலு சு. ஏழிசை பதிப்பகம், மயிலாடுதுறை - 609 001. முதல் பதிப்பு, 2005. 18. குடவாயில் பாலசுப்பிரமணியம் : தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, சரஸ்வதி மஹால் நூலக வெளியீடு, முதல் பதிப்பு, தஞ்சாவூர், 1999. 19. சாமிநாதய்யர் உ.வே. (ப.ஆ) : புறநானூறு மூலம், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் நூல் நிலையம், இரண்டாம் பதிப்பு, சென்னை - 90 1993. 20. சாமிநாதய்யர் உ.வே. (ப.ஆ) : சிலப்பதிகாரம் அரும்பதவுரையும் - அடியார்க்கு நல்லாருரையும், தமிழ்ப் பல்கலைக்கழக மறுபதிப்பு, 1985. 21. சாமிநாதய்யர் உ.வே. (ப.ஆ) : குறுந்தொகை, மூன்றாம் பதிப்பு, சென்னை , 1955 22. சாமிநாதய்யர் உ. வே. (ப.ஆ) : நற்றிணை , ஐந்தாம் பதிப்பு, 1970. 23. சாலி ஜே.எம். : தமிழகத்து தர்காக்கள், நூர் பதிப்பகம், சென்னை 1981. 24. சுந்தரமூர்த்தி சுவாமிகள் : தேவாரம் (7ஆம் திருமுறை) காசித்திருமடம் வெளியீடு, திருப்பனந்தாள், 2006. 25. சுலைமான் எஸ்.எம். : இஸ்லாமியப் பண்பாடும் - தமிழ் பண்பாடும், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி 1977 26. சோமசுந்தரனார் பொ.வே. : சிறுபாணாற்று படை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே. சாலை, சென்னை -18. 1953 27. செந்துறை முத்து : திருமுறையும் தமிழிசையும், மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை, 1995. 28. ஞானன் இ.எஸ்.டி. : சூஃபிக்களின் வாழ்வும் தத்துவமும், முகம்மது பப்ளிகேசன்ஸ் மயிலாடுதுறை, முதல் பதிப்பு 1994 29. திருநாவுக்கரசு சுவாமிகள் : தேவாரம் (6ம் திருமுறை) திருதாண்டகம், காசித்திருமடம் வெளியீடு, திருப்பனந்தாள், 2006. 30. திவான் செ. : விடுதலை போரில் தமிழக முஸ்லீம்கள், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 1993. 31. நாசிர் அலி மீ.அ.மு. : இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் சூஃபி தத்துவம், எம்.ஐ.இ.டி. சொசைட்டி வெளியீடு, திருச்சிராப்பள்ளி, 1991 32. பக்தவத்சல பாரதி, (ப.ஆ) : தமிழகத்தில் நாடோடிகள் சங்க காலம் தல் சமகாலம் வரை, மானிடவியல் புலம் , புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, 2003. 31. பாலசுப்பிரமணியன் கு.வெ. : சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 1998. 32. பாவேந்தர் பாரதிதாசன் : பாரதியார் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை , 1998. 33. பிள்ளை கே.கே. : தென் இந்திய வரலாறு, எஸ்.எஸ். புழனியப்பன் பப்ளிஷர், சென்னை , முதல் பதிப்பு, 1988. 34. மணவை முஸ்தபா என். : சிந்தைக்கினிய சீறா, மீரா பப்ளிகேஷன்ஸ், சென்னை , இரண்டாம் பதிப்பு, 1989. 35. மணவை முஸ்தபா என். : தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள், (தொ .ஆ) மீரா பப்ளிகேஷன்ஸ், சென்னை, முதற்பதிப்பு, 1989 36. முகம்மது உவைஸ் ம. : இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அஜ்மல் கான் பீ.மு. வரலாறு (தொகுதி - I), பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625021 முதற்பதிப்பு 1986. 37. முகம்மது இப்ராஹீம் பி. எஸ். கே. : க்ஷமாயில் திர்மிதி (அரபி மூலமும் மொ .பெ.ஆ. தமிழ் உரையும்), புஸ்ரா பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, சென்னை -1, 1982. 38. முகம்மது ஹுசைன் சாஹிபு : மாபெரும் ஜோதி ஷாஜா முயனுதீன்  சிஷ்தி, (ப.ஆ) மில்லத் பிரிண்டர்ஸ், சென்னை , 1986. 39. முகம்மது பாரூக் (ப.ஆ) : மெய்ஞ்ஞானி பீர் முகம்மது அப்பா இலக்கிய ஆய்வுக்கோவை, நன்னெறிப் பதிப்பகம், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி, முதற்பதிப்பு, 1976. 40. முஹம்மது ஜான் : திருக்குர்ஆன் (மூலமும் தமிழ் உரையும்) ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரரி & சாரிட்டபிள் டிரஸ்ட், சென்னை, 1983. 41. ரஷீத் அலி : மதுரை தர்காக்களின் நடைமுறைகளும் விழாக்களும், முகமது ரஃபீக் பப்ளிகேஷன்ஸ், மதுரை, 1984. 42. ரிச்சர்டு : இஸ்லாம் ஓர் அறிமுகம் (இரண்டாம் பகுதி) குர்ஆன் மஜ்லிஸ், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி, நான்காம் பதிப்பு, ஆகஸ்ட் 2004. 43. ரிபாயி ஏ.கே. : தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, மிலாத் கிராபிக்ஸ், திருநெல்வேலி முதல் பதிப்பு, 1988. 44. வரதராஜன் பெ. : தமிழ்ப் பாணர் வாழ்வும் வரலாறும், பண்ணன் பதிப்பகம், சென்னை - 72. 1973. 45. வரதராஜன் மு. : தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, பதினாறாம் பதிப்பு, புது டெல்லி, 2001. 46. வரதராஜன் மு. : இலக்கியமரபு, பாரி நிலையம், 184, பிராட்வே , சென்னை - 8, 1993. 47. வலம்புரிஜான் : நாயகம் எங்கள் நாயகம், ஆசாத் பதிப்பகம், கோபாலபுரம், சென்னை - 86, மூன்றாம் பதிப்பு, 2000. 48. வைத்யநாதன் எச். : வழிபாடும் சமயமும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை , 1977. 49. ஸையித் இப்ராஹீம் : இசுலாமிய வரலாறு - 9, இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி (பகுதி I) ஜமால் முகம்மது கல்லூரி, வளர்மதி பதிப்பகம், தென்னூர், திருச்சிராப்பள்ளி, 1976. 50. ஸையித் இப்ராஹீம் : இஸ்லாம் எப்படி பரவியது, வளர்மதி பதிப்பகம், தென்னூர், திருச்சிராப்பள்ளி, முதல் பதிப்பு, 1979 51. ஸையித் இப்ராஹீம் : இஸ்லாமும் அதன் உட்பிரிவுகளும், வளர்மதி பதிப்பகம், தென்னூர், திருச்சிராப்பள்ளி. இரண்டாம் பதிப்பு, 1964. 52. ஷெரீப் கா.மு. : வள்ளல் சீதக்காதி வரலாறு, சீதக்காதி வெளியீட்டகம், சென்னை , 1981 53. ஹம்சா மு. : இஸ்லாமியத் தமிழ் நாவல்களில் இஸ்லாமியம், ராபியா பதிப்பகம், சோலையூர், சென்னை 2002. 54. ஜைனுல் ஆபிதீன் பீ. : இஸ்லாமியத் திருமணம், யாசிர் பப்ளிகேஷன்ஸ், மதுரை, எட்டாம் பதிப்பு, 1996. 55. ஹம்சா மு. : இஸ்லாமியத் தமிழ் நாவல்களில் இஸ்லாமியம், ராபியா பதிப்பகம், சோலையூர், சென்னை 2002 56. புறநானூறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை . 57. அகநானூறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக்  கழகம், சென்னை. 58. ஐங்குறுநூறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை . 59. நாகூர் ஆண்டவர் வாழ்க்கைச் சரிதம்,        நாகூர் ஆண்டவர் தர்ஹா நிறுவாகத்தினர் வெளியீடு, நாகூர், 1971.   II. ஆங்கில நூல்கள் 1. Nilakanta Sastri ,Foreign Notices of South India, (From Megasthenes to Ma Huan.) Madras 1972   2. Sambbamoorthy P. South Indian Music, Vol. I Indian Music publishing  House, Chennai 1980.   III. கலைக்களஞ்சியங்கள் 1. அப்துல் ரஹீம் , : இஸ்லாமிய கலைக்களஞ்சியம், தொகுதி மூன்று , யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை , முதற்பதிப்பு, 1979 2. உவைஸ் எம். எம். : தமிழ் இலக்கிய அரபுச் சொல் அகராதி , மதுரை காமராசர் பல்கலைக் கழகம், முதற்பதிப்பு, 1983. 3. சுந்தரம் வீ.பா.கா. : தமிழிசை கலைக்களஞ்சியம், தொகுதி மூன்று (த.ந.ப) பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு முதற்பதிப்பு, 1997 4. மணவை முஸ்தபா என். : இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், மீரா பப்ளிகேஷன்ஸ், அண்ணாநகர், சென்னை, முதல் பதிப்பு, 1991 5.வாழ்வியற் களஞ்சியம், தொகுதி இரண்டு,    தஞ்சை பல்கலைக் கழக வெளியீடு, தஞ்சாவூர், ஜீலை , 1986.   6. Thomas Patrick Hughes : Dictionary of Islam, Cosmo Publications, New Delhi 1978 IV. இதழ்கள், விழா மலர்கள் 1. ஹமீது கே.பி.எஸ். : இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 1 மலர், சென்னை 1973. 2. - தப்லே ஆலம் பாதுஷா - 1000 ஆவது  ஆண்டு உரூஸ் சிறப்பு மலர், நத்ஹாஷா தர்ஹா    வெளியீடு, திருச்சிராப்பள்ளி 1998. 3. - நர்கிஸ் - நத்ஹர்வலி தர்ஹாசிறப்பு மலர்,  மல்லிகைபுரம், திருச்சிராப்பள்ளி  1996. 4. அனிஸ் ஃபாத்திமா (க.ஆ) : நர்கிஸ் - இஸ்லாமிய பெண்கள் மாத இதழ், மல்லிகைபுரம், திருச்சி - 1, டிசம்பர் 2002. 5. ஹெச்.ஓ. நஜ்முதீன் (க. ஆ) : நர்கிஸ் - இஸ்லாமிய பெண்கள் மாத இதழ், மல்லிகைபுரம், திருச்சி - 1, செப்டம்பர் 2007 6. நத்ஹர் ஒலியுல்லாஹ் 1000வது ஆண்டு மலர், நத்ஹர் ஷா தர்ஹா வெளியீடு        திருச்சிராப்பள்ளி 1999. 7. கழனியூரன் (க. ஆ) : புதிய பார்வை , டிசம்பர் 1-15, 2004   8. திவான் செ. : விடியல் - விடுதலைப் போரில் ஃபக்கீர்கள், ஆகஸ்ட் 2004. V. ஆய்வுக் கட்டுரைகள் 1. ரஹமத்துல்லா வ. : ஃபக்கீர் இசைப்பாடலில் சமுதாய நல்லிணக்க பின்புலம், இஸ்லாமிய இலக்கியக் கழகம், இரண்டாவது மாநில மாநாடு 2009, உட்ஸ் சாலை, அண்ணாசாலை, சென்னை 2009 VI. ஆய்வேடுகள்  1. இக்பால் மு. : ஹிமானா சையத் சிறுகதைகளில் இஸ்லாமிய வாழ்வியல், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24, 2011. 2. சாகுல்ஹமீது கா. : இஸ்லாம் சமயத்தில் புனித ஹஜ் யாத்திரை, M.Phil. பட்ட ஆய்வேடு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை, 1985. VII. இணையத்தளங்கள் http://www.tamilvu.org/library/libindex.htm    http://www.kamat.com/mmgandhi/churchill.htm    http://census2001.tn.nic.in/religion.aspx       பின்னிணைப்புகள் பின்னிணைப்பு - 1 தகவலாளிகள் பட்டியல் I. ஃபக்கீர்கள் 1. சர்குரு ஹைதர் அலிஷா (ஷா ஜலாலி)  அஸ்தான இ. காதிரியா  ஹசரத் சர்ஜிரோ சையத்   காஜா பாபா திலதராலிஷா  (R.A.) தர்புவா ஷெரிப்  வயது : 27 சந்தித்த இடம் : நத்ஹர்ஷா தர்கா, திருச்சிராப்பள்ளி. சந்தித்த நாள் : 17.10.2010   2. அபீப் ஃபக்கீர்ஷா (உஸ்தாத்)  ஆழ்வார் தோப்பு திருச்சிராப்பள்ளி  வயது : 62  சந்தித்த இடம் : ஆய்வாளர் இல்லம்  வரவழைக்கப்பட்டு  சந்தித்த நாள் : 08.08.2007   3. சையித் அலி (ரிப்பாய்) (உஸ்தாத்)    2/3 வெள்ளை கலீஃபா சாஹிப் தெரு  மேலப்பாளையம் திருநெல்வேலி - 627 005. வயது : 60 சந்தித்த இடம் : உஸ்தாத் அவர்களின் இல்லம் திருநெல்வேலி சந்தித்த நாள் : 22.12.2009   4. ஃபக்கீர் திவான்ஷா இறைச்சி மஸ்தான் தர்கா தெரு, பெரிய தாராபுரம், ஈரோடு, வயது : 61 சந்தித்த இடம் : தென்னூர் பென்ஷனர் தெரு, திருச்சிராப்பள்ளி. சந்தித்த நாள் : 05.03.2012   5. சர்குரு ஹாசிமுல்லாஷ மெளலானா (ரிப்பாய்) நத்ஹர் வலி தர்கா திருச்சிராப்பள்ளி. தொலைபேசி எண் : 9952525837  வயது : 22 சந்தித்த இடம் : தென்னூர், பென்ஷனர் தெரு, திருச்சிராப்பள்ளி சந்தித்த நாள் : 05.03.2012   6. ஃபக்கீர் அர்ஷில்லாஷா நத்ஹர் வலி தர்கா திருச்சிராப்பள்ளி, வயது : 43 சந்தித்த இடம் : நத்ஹர் வலி தர்கா திருச்சிராப்பள்ளி சந்தித்த நாள் : 05.03.2012   7. ஷாகுல் (கலிஃபா) என்ற காதிருல்லலிஷா நத்ஹர்வலி தர்கா திருச்சிராப்பள்ளி. வயது : 50 சந்தித்த இடம் : 40/65, பென்ஷனர் தெரு, தென்னூர், திருச்சிராப்பள்ளி. சந்தித்த நாள் : 05.03.2012 8. ஃபக்கீர் காஜா மைதீன் ஜீவ நகர், இந்திரா காந்தி தெரு, திருச்சிராப்பள்ளி. வயது : 36 சந்தித்த இடம் : நாகூர் சாகுல் ஹமீது தர்கா சந்தித்த நாள் : 08.05.2009   9. ஃபக்கீர் ஹபீப் ஷா ஆழ்வார் தோப்பு திருச்சிராப்பள்ளி. வயது : 44 சந்தித்த இடம் : நாகூர் சாகுல் ஹமீது தர்கா சந்தித்த நாள் : 08.05.2009.   10. H. லியாத் அலி என்ற ரஹ்மதுல்லா ஷா (ரிப்பாய்) 1/34, கீழத்தெரு, வழுத்தூர், பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர். தொலைபேசி எண் : 99435 11316  சந்தித்த இடம் : ஃபக்கீரது இல்லம் சந்தித்த நாள் : 09.05.2009.   11. ஃபக்கீர் கலாமுல்லா ஷா பண்டாரவிடை, தஞ்சாவூர். வயது : 40 சந்தித்த இடம் : ஹஜ்ரத் ஷேகு முகம்மது வலியுல்லா தர்கா தஞ்சாவூர். சந்தித்த நாள் : 05.06.2010   12. ஃபக்கீர் அமீருல்லா ஷா பசுபதி கோவில் தஞ்சாவூர். வயது : 40 சந்தித்த இடம் : ஹஜ்ரத் ஷேகு முகம்மது வலியுல்லா தர்கா சந்தித்த நாள் : 05.06.2010   13. ஃபக்கீர் H. அப்துல் ஹலீம் என்ற மிஸ்கின்ஷா வடக்கு கோட்டை கொல்லை வீதி கீழவாசல், தஞ்சாவூர். வயது : 52 சந்தித்த இடம் : ஃபக்கீரது இல்லம் சந்தித்த நாள் : 09.05.2009   14. ஃபக்கீர் பிச்சை மொய்தீன் நத்ஹர் வலி தர்கா திருச்சிராப்பள்ளி. வயது : 40 சந்தித்த இடம் : நத்ஹர் வலி தர்கா சந்தித்த நாள் : 28.12.2010   15. ஃபக்கீர் ஷையது மசூது போஸ்ட் ஆபிஸ் தெரு, பொட்டல் புதூர், தென்காசி வழி, நெல்லை மாவட்டம்.   16. ஃபக்கீர் முகம்மது மைதீன்ஷா நாகூர் சாகுல் ஹமீது தர்கா தஞ்சாவூர் மாவட்டம். வயது : 39 சந்தித்த இடம் : நாகூர் சாகுல் ஹமீது தர்கா சந்தித்த நாள் : 07.09.2009.   17. ஃபக்கீர் ஷேக் அலாவுதீன் முந்திரி தோப்பு தெரு, ஆடுதுறை (மாயாவரம் வழி) வயது : 55  சந்தித்த இடம் : நாகூர் சாகுல் ஹமீது தர்கா சந்தித்த நாள் : 07.09.2009   18. ஃபக்கீர் பாஞ்சுபீர் பொட்டல் புதூர் தென்காசி வழி நெல்லை மாவட்டம். வயது : 42 சந்தித்த இடம் : முகைதீன் ஆண்டவர் தர்கா, பொட்டல் புதூர் சந்தித்த நாள் : 07.01.2011   19. சர்குரு H. அப்துல் அலீம் (முச்சுடர் சிலம்பு ஆட்ட ஆசான்) தெற்கு கொட்டை கொள்ளைத் தெரு, கீழவாசல், தஞ்சாவூர் வயது : 38 தொலைபேசி எண் : 9894159336 சந்தித்த இடம் : நாகூர் சாகுல் ஹமீது தர்கா சந்தித்த நாள் : 07.09.2009   20. ஃபக்கீர் சமீம் அன்சாரி திருமஞ்சன வீதி பண்டார வடை பாபநாசம் தாலுகா தஞ்சை மாவட்டம். வயது : 48 சந்தித்த இடம் : நாகூர் சாகுல் ஹமீது சந்தித்த நாள் :   II. ஃபக்கீர் அல்லாமல் தகவலளித்தோர் 1. செ.திவான் வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், 106, F4A, திருவனந்தபுரம் ரோடு, பாளையம் கோட்டை, திருநெல்வேலி - 627 002.   2. பேராசிரியர் ஹபீபு ரஹ்மான், HOD, தமிழ்த்துறை, ஜமால் முகம்மது கல்லூரி திருச்சிராப்பள்ளி.   3. தக்கலை ஹாமீம் முஸ்தபா துணைப் பொது செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்.   4. Dr. J. ராஜா முகம்மது முன்னாள் தமிழ்நாடு ஆவணக் காப்பாளர், 1/107, B. ஜீவா நகர், முதல் தெரு, புதுக்கோட்டை.   5. திரு. கழனியூரன், எழுத்தாளர், திருநெல்வேலி.   6. திருமதி. சுல்தானா உசேன், (உலக ஐக்கிய மனித உரிமைக் கழக மகளிர் அணி தலைவி) 40/65, பென்ஷனர் தெரு, தென்னூர், திருச்சி - 17.   பின்னிணைப்பு - 2 வினா நிரல் (1) தனிநபர் விபரம் 1. பெயர் 2. வயது 3. முகவரி 4. தமிழகத்தில் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்கள் : 5. தங்கள் சொந்த ஊர் 6. தங்கள் இஸ்லாத்தில் எந்த பிரிவைச் சேர்ந்தவர் 7. இதனை பூர்த்தி செய்யும் நாள் :   (2) கல்வி நிலை 8. தாங்கள் எதுவரை படித்துள்ளீர்கள் : 9. தங்களது குழந்தைகளின் கல்விநிலை : 10. தாங்கள் குர்ஆன் ஓதி முடித்தவரா? 11. தங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு குர்ஆன் ஓதத் தெரியும்? 12. தாங்கள் தினமும் ஐந்து வேளை தொழுகிறீர்களா? 13. தவறாது ஜீம்மா தொழுகையைக் கடைபிடிக்கின்றீரா? 14. ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் வழக்கம் உண்டா? 15. தாங்கள் பிறருக்கு ஜக்காத் கொடுக்கும் வழக்கம் உண்டா? 16. இஸ்லாமிய இரவலர்களில் எத்தனை பிரிவு உண்டு? 17. தாங்கள் அதில் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர் : 18. பக்கீர்கள் எத்தனை பிரிவுகளாக உள்ளனர் ? 19. தாங்கள் அதில் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர் : 20. தமிழ்நாட்டில் எந்தெந்த பிரிவினர்கள் வாழ்கின்றனர் : 21. தாங்கள் எத்தனை வருடம் பாடி வருகிறீர்கள் ? 22. தாங்கள் பாடல் கற்க ஆரம்பித்த வயது : 23. தாங்கள் பாடல் பாட ஆரம்பித்த வயது : 24. தாங்கள் பாட ஆரம்பித்ததின் காரணம் : 25. தங்களுக்கு பாடல் கற்றுக் கொடுத்த ஆசிரியர் பெயர்? 26. தாங்கள் ஒருவரிடம் மட்டுமே பாடல் கற்றுக் கொண்டவரா? 27. எந்த முறையில் கற்றுக் கொண்டீர்கள் ? 28. தாங்கள் பகுதியில் பாடல் கற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? 29. தாங்கள் யாருக்கும் பாடல் கற்றுக்கொடுத்துள்ளீர்களா? 30. தாங்கள் குடும்பத்தில் பெண்களுக்கு பாடும் வழக்கம் உண்டா? 31. தாங்கள் தெருக்களில் மட்டும் தான் பாடுவீர்களா? 32. வீட்டில் ஓய்வான நேரங்களில் பாடுவதுண்டா? 33. மந்திரிக்கும் முறை எப்படி வந்தது? 34. யாருடைய பெயரில் மந்திரிப்பீர்கள்? 35. தெருக்களில் மக்களிடத்தில் இரவலாக பெறும் பொருட்கள் எவை? 36. பணம், அரிசி தவிர்த்து வேறு பொருட்கள் பெறுவதுண்டா? 37. தங்களுக்கென்று சடங்கு முறைகள் ஏதும் நடத்துவதுண்டா? 38. சடங்கின் பெயர் என்ன? 39. சடங்கு நடத்துவதற்கான காரணம் ? யார் நடத்துபவர்? 40. தாங்கள் எந்தெந்த வகைப் பாடல்கள் பாடுகின்றீர்கள்? 41. தெருக்களில் எம்மாதிரியானப் பாடல்கள் பாடுகின்றீர்கள்? 42. எந்த நபிமார் மீது அதிகமானப் பாடல்கள் பாடுகின்றீர்கள்? 43. தாங்கள் பிணி தீர்க்க கூடிய மருத்துவப்பாடல் ஏதும் பாடுவதுண்டா ? 44. தாங்கள் தமிழ்ப்பாடல்கள் தவிர்த்து, பிறமொழிப் பாடல்கள் பாடுவதுண்டா?   (4) பாடும் முறை   45. தாங்கள் பாடும்போது அணியக்கூடிய ஆடைகள் உண்டா? 46. அந்த ஆடைகளை அணிவதற்கான காரணம்? 47. தாங்கள் பாடும் பொழுது துணை இசைக்கருவிகள் ஏதேனும் பயன்படுத்துவதுண்டா? 48. அக்கருவியை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? 49. தாங்கள் பாடும் பொழுது பின்பற்றும் பாணி உண்டா? 50. பாடலின் தொடக்கம், முடிவில் வாழ்த்துச் சொல்லும் மரபு உண்டா ? 51. வாழ்த்து யார் மீது சொல்வீர்கள்? 52. தாங்கள் பாடுவதெற்கென்று தனி இடம் (அரங்கம்) உண்டா ? 53. தாங்களால் உரத்தக்குரலில் இசைக்கருவியின்றி பாட இயலுமா? 54. தங்களாகவே இயற்றிப்பாடும் கட்டுப்பாடல்களை எப்போது பாடுவீர்கள்? 55. தங்கள் பாடலுக்கு உரை விளக்கம் தாய் மொழி தவிர்த்து வேறு எந்த மொழியில் விளக்குவீர்கள்?   தற்கால நிலை: 56. தாங்கள் முன்னோர் குறித்த செய்திகள் ஏதேனும் சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளீர்களா? 57. இன்றைய சமுதாயத்தில் தங்களுக்கும், தங்கள் பாடல்களுக்கும் தகுந்த மதிப்பளிக்கப்படுகின்றதா? 58. பிற சமயத்தினர் தங்களின் பாடலை விரும்பிக் கேட்பதுண்டா? 59. பாடல் தொழில் தவிர்த்து பிற சமயத்தினருடன் உறவுமுறை எவ்வாறு காணப்படுகிறது? 60. பக்கீர்களாகிய தங்களின் பிற பணிகள் எவை? 61. தங்கள் பிள்ளைகளை இந்தத் தொழிலில் ஈடுபடுத்துகின்றீர்களா? 62. தங்களின் பொருளாதர நிலை ஏற்றம் பெற்றுள்ளதா ? 63. எதிர்காலத்தில் தங்களின் திட்டம்? 64. ஏதேனும் சிறப்புச் செய்திகள் உள்ளனவா   பின்னிணைப்பு - 3 நேர்காணல் (மாதிரி) ஆய்வாளர் : வணக்கம் உங்களின் பெயர் ஃபக்கீர் : எனது பெயர் ஃபக்கீர் ஹாசிமுல்லா மெளலானா ஆய்வாளர் : உங்களின் வயது ஃபக்கீர் : முப்பத்தி இரண்டு வயது நிரம்பியுள்ளது. ஆய்வாளர் : தமிழகத்தில் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்கள். ஃபக்கீர்  : நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவன் பிறந்தது முதல் இங்கு தான் இருக்கிறேன். ஆய்வாளர் : உங்களின் பிறந்த ஊர் ஃபக்கீர்  : சொந்த ஊர் சேலம், ஆனால் அதிகமாக ஊரில் இருப்பதில்லை, தர்காக்களில் உரூஸ் விழாவில் எங்கள் பக்கீர் குழுவின் பாடல் இல்லாமல் சந்தனக் குடம் எடுப்பதில்லை . எனவே ஊர் ஊராய் தர்காக்கள் தோறும் சுற்றுவது வழக்கம். தற்பொழுது நத்ஹர்ஷா தர்காவில் நீண்ட நாளாய் தங்கியிருக்கின்றேன். ஆய்வாளர் : நீங்கள் இஸ்லாமியர்களில் எந்தப் பிரிவைச் சார்ந்தவர். ஃபக்கீர் :நான் லெப்பை பிரிவைச் சார்ந்தவன், ஃபக்கீராய் முரீது பெற்றப் பின் ரிப்பாய் பிரிவின் உள்ளேன். பாடுவது எங்கள் வழக்கம். ஆய்வாளர் : நீங்க எதுவரை படித்துள்ளீர்கள். பக்கீர்  : நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஆய்வாளர் : குர்ஆன் முழுவதும் ஓதி முடித்தவரா? ஃபக்கீர் : ஆம் ஆய்வாளர் : ஃபக்கீர்கள் எத்தனை பிரிவுகளாக உள்ளனர். ஃபக்கீர் : தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மொத்தம் ஐந்து பிரிவாக உள்ளோம். ஆய்வாளர் : அதில் நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர். ஃபக்கீர் : நான் ரிப்பாய் பிரிவைச் சேர்ந்தவன். ஐந்து பிரிவுகளும் ஒவ்வொரு விதமாக அல்லாவுக்கு வேலை செய்றாங்க, நாங்கள் மட்டும் பாடல் மூலம் அல்லாவுக்கு தொண்டு செய்றோம். ஆய்வாளர் : நீங்கள் எத்தனை வருடங்களாகப் பாடி வருகின்றீர்கள். ஃபக்கீர் : நான் எனது தந்தையின் மறைவுக்கு பிறகே பாட ஆரம்பித்தேன். சுமார் எட்டு வருடங்களாகப் பாடுகின்றேன். ஆய்வாளர் : நீங்கள் பாடல் பாட ஆரம்பித்த வயது. ஃபக்கீர் : பத்து வயதிலிருந்தே வாப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஆய்வாளர் : வேறு யாரிடமாவது பாடல் கற்றுக் கொண்டது உண்டா ? ஃபக்கீர்  : தனியாக இதற்கு என்று பயிற்சி எடுக்கவில்லை , குழுவோடு சேர்ந்து பாடுவதை கேட்டும், கூடவே பாடியும் பாடல்கள் முழுவதையும் கற்றுக் கொண்டேன். ஆய்வாளர் : உங்கள் பகுதியில் பாடல் பாடுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர். ஃபக்கீர் : எங்கள் குழுவில் மொத்தம் எட்டு பேர் உள்ளனர். ஆய்வாளர் : நீங்கள் யாருக்கும் பாடலைக் கற்றுக் கொடுக்கின்றீர்களா. ஃபக்கீர்  : எனது குழந்தைகளுக்கும், எனதுக் குழுவில் உள்ளோருக்கும் கற்றுக் கொடுக்கின்றேன். ஆய்வாளர் : உங்கள் வீட்டில் பெண்கள் பாடுவதுண்டா. ஃபக்கீர் : இல்லை , ஆனால் பாடல்கள் தெரியும். ஆய்வாளர் : நீங்கள் எங்கெல்லாம் பாடுகிறீர்கள். ஃபக்கீர் : முன்பெல்லாம் இஸ்லாமிய வீடுகள் அதிகம் உள்ளத் தெருக்களில் பாடுவோம், வீடுகளுக்குச் சென்று பாடுவோம், தர்காக்களில் சென்றுப் பாடுவோம்.   இப்பொழுது அதிகமாக தர்காவில் மட்டுமே பாடுகின்றோம். ஆய்வாளர் : மந்திரிக்கும் முறை எப்படி வந்தது. ஃபக்கீர் : எங்கள் முன்னோர்களிடம் இருந்து வந்தது. ஆய்வாளர் : வேறு எவை எல்லாம் மந்திரிப்பீர்கள்.  ஃபக்கீர் : கயறு, தகடு, எலுமிச்சைப் பழம், தண்ணீ ர். ஆய்வாளர் : மக்களிடம் எவை எல்லாம் காணிக்கையாகப் பெறுகின்றீர்கள். ஃபக்கீர் : : பெரும்பாலும் பணம் சிலர் அரிசி போன்ற பொருட்கள் தருகின்றார்கள். எல்லா ஃபக்கீரும் இவ்வாறு தற்காலத்தில் பெறுவதில்லை . சிலர் படிக்கிறாங்க , படித்ததும் வேறு வேலைக்கு செல்றாங்க ஆய்வாளர் : உங்களுக்கான சடங்கு முறைகள் எவை?  ஃபக்கீர் : நாங்கள் முரீது என்கின்ற சடங்கின் வழியே ஃபக்கீர் என்கின்ற அந்தஸ்தைப் பெறுகிறோம். சடங்கை யார் முன் நின்று நடத்துவார். உஸ்தாத் நடத்துவார். இவரே எங்கள் பிரிவின் தலைவர். ஆய்வாளர் :   தெருக்களின் எந்த வகைப்பாடல்களை எல்லாம் பாடுகிறீர்கள். முதலில் ஃபாத்திஹா ஓதுகிறோம். பின்பு அந்த ஊரில் அடக்கமாயிருக்கும் அவுலியாவின் புகழைப் பாடுவோம். நபிகள், பாத்திமா பீவியைப் பற்றியும் பாடுகின்றோம். ஆய்வாளர் : எந்த அவுலியா மீது அதிகமானப் பாடல்கள் பாடுகின்றீர்கள். ஃபக்கீர் : அப்துல் காதர் ஜீலானி மீது அதிகமாகப் பாடுவது உண்டு. ஆய்வாளர் : எந்தெந்த மொழிகளில் பாடுகின்றீர்கள். ஃபக்கீர் : தமிழ் அல்லாது உருதுப் பாடல்கள் பாடுகின்றோம்.   ஆய்வாளர் : பாடும் போது அணியும் ஆடைகள் ஏதேனும் உண்டா .   ஃபக்கீர் : எங்களின் முன்னோர்களின் வழி கண்ட மாலை, வெள்ளை அல்லது பச்சைநிற தலைப்பா அணிகின்றோம். நாங்கள் இதை அணிந்தவுடன் இறைவன் எங்களுள் வருவதை உணர்கின்றோம். இறையருளால் பாடுகின்றோம். ஆய்வாளர் : பாடும் போது பயன்படுத்தும் இசைக்கருவிகள் ஃபக்கீர் : தாயிராவை பயன்படுத்துகின்றோம். ஆய்வாளர் : நீங்கள் பாடுவதற்கென்று தனி அரங்கம் உள்ளதா? ஃபக்கீர் : தர்காக்களில் கொடிமரத்தின் கீழ் பாடுவோம், சிலவேளை தர்கா உள் முற்றங்களில் பாடுவோம். வீடு வாசல்களில் பாடுவோம். ஆய்வாளர் : இன்றைய சமுதாயத்தில் தங்களுக்கும் தங்கள் பாடகர்களுக்கும் தகுந்த மதிப்பளிக்கப்படுகின்றதா? ஃபக்கீர் : இளைஞர்களைவிட பெரியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தர்காக்களில் எங்களை சுற்றி நின்று அனைவரும் எங்கள் பாடலை விரும்பி கேட்கின்றனர். ஆய்வாளர் : பாடல் தவிர்த்து வேறு தொழில்கள் என்ன? ஃபக்கீர் காய்கறிகள் வியாபாரம் செய்வோம் சிலர் கட்டட வேலைகளுக்கு சித்தாளாகச் செல்கின்றனர். சிலர் சம்பிராணி புகைக்கின்றனர். ஆய்வாளர் : எதிர்கால திட்டம் ஏதேனும் உள்ளதா? ஃபக்கீர் : அரசாங்கத்தில் எங்களைக் குறித்து கூறி, சலுகைகள், பெற முயற்சித்தோம், தோல்வியிலே முடிந்தது. எங்களுக்கென்று மன்றம் துவங்கியுள்ளோம். அதன்மூலம் ஆன்மீகப் பணியினை இன்னும் அதிகரிக்க வேண்டும்.   பின்னிணைப்பு - 4 புகைப்படங்கள்   [] [] [] [] []     பின்னிணைப்பு - 5 ஃபக்கீர்களின் முன்னோடிகள் குறித்த அட்டவணை நகல் மற்றும்  முற்கால தர்வேஷ்களின் (ஃபக்கீர்கள்) உருவப்படம் நகல்  []   []   []   []   []   According to Herbert Ponting hindu sadhu, who took this photograph in 1907, this is 'a fakir in Benares' (Varanasi), India. Strictly speaking, a fakir is a Muslim religious mendicant, but here Ponting is referring to a Hindu holy man. He is a yogi, or one who practises yoga and has allegedly perfected the control of mind over body to such an extent that he can withstand the physical pain of the bed of nails on which he is sitting (any individual could do the same, as the fakir's mass is spread evenly over the nails and they pose no real danger to him). Deutsch: Ein Fakir in Benares (Varanasi), Indien Date 1907 Source http://en.wikipedia.org/wiki/File:RGS_13.jpg http://www.geocities.com/blackinkal4/RoyalGeographicalSociety_Asia_2.html Originally from en.wikipedia, description page is/was here.   []   English: A Fakir . It can also be used pejoratively, to refer to a common street beggar who chants holy names, scriptures or verses. These broader idiomatic usages developed primarily in Mughal era India, where the term was injected into local idiom through the Persian-speaking courts of Muslim rulers. It has become a common Urdu and Hindi word for beggar. Date 1869   பின்னிணைப்பு – 6 ஃபக்கீர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சிக்கான துண்டுப்பிரசுரம் நகல்    []   []   []   []     []   []   []     []   []   []     []