[]     டெக் ஹைக்கூ     M விக்னேஷ்               டெக் ஹைக்கூ M விக்னேஷ்   © ஆசிரியர் | முதல் பதிப்பு: ஏப்ரல் 2019     Designed by [Image]     முன்னுரை   தமிழ் ஹைக்கூ படைப்புகளில் ஒரு சோதனை முயற்சி. தமிழ் ஹைக்கூ நூல்கள் பல காதல்,சமூகம்,இயற்கை பண்பாடு,போன்றவற்றை சார்ந்து எழுதப்பட்டது. காலங்களின் மாறுதலுக்கேற்ப சிந்தனைகளில் சற்று புதுமைகள் புகுத்தி,புத்தகமாக வடிக்கிறேன். ” தமிழின் முதல் எந்திர கவி ஹைக்கூ புத்தகம்.” “எதார்த்த உலகில் இயற்கையோடு நாம் கடக்கும் எந்திரங்களும், இனி தினம் கவி பேசட்டும்” என்ற ஒற்றைவரி தொகுப்புகளே .,   டெக் ஹைக்கூ…!   [Image]     விரலோடு விழியோடு தொடரும் வசியம் நவீன கால போதைப்பொருள்   கைபேசி…! (Cell Phone)   [Image]     ஒட்டிக்கொள்கிறது உன்மேல் ஒருதலை காதல் நீ விழ நான் உடைகிறேன்   Tempered glass…!   [Image]     இடைவிடா தீண்டலின் விளைவு உருவாகிறது தீண்டாமை இல்லா ஓர் உலகம்   தொடுதிரை…!! (Touch Screen)   [Image]     பட்டறிவு பகுத்தறிவு வேறுபாடுகள் கலைகிறது மை தடவா கைநாட்டில்   Finger Print…!!   [Image]     ஆண்களின் ஆபரண ஆசைகள் நிறைவேறுகிறது காதோரம் இசைத்தோடுகள்   கேட்பொறி (Headphone)…!!   [Image]       உயிர் தரும் செயற்கைத்தாய் நவீன காலத்து தொப்புள்கொடி   மின்னூட்டி...!!! (charger)   [Image]     ஆடம்பர தொழில்நுட்பங்களின் ஈர்ப்புவிசை கண்டும் காணாமல் நகரும் ஏழை ஸ்டீவ் ஜாப்ஸ்கள்   ஐபோன்…! (IPhone)   [Image]     செயல் படா மனித செயல்கள் தினம் தீர்மானிக்கும் புது நிறுவல்கள்(Install)   செயலி…! (App)   [Image]   கூட்டிப்பெருக்கா 6 அங்குல வாசல் ஆண் பெண் பாகுபாடின்றி போடும் மாக்கோலம்   Pattern lock...!   [Image]     செயலற்ற மனிதர்களின் செயலிகள் மேற்கொள்கிறது நவீன கால சிறுசேமிப்புத் திட்டங்கள்   Battery saver…!   [Image]     வெள்ளைக்கோடுகளில் ஒட்டிக்கொள்ளும் ரோடுகள் இணைய இணைப்பு கிடைக்கும்வரை தொடரும் தேடல்   Google Maps…!   [Image]     முடிவில்லா பக்கங்கள் கொண்ட செய்தித்தாள் தடவலில் தொடரும் வாசிப்புகள்   News Feeds…!   [Image]       சமூக அவலங்கள் தாங்கி நிற்கும் கேலிச்சித்திரங்கள் படித்தவன் செதுக்கும் சிற்பம்   போன்மி…! (Memes)   [Image]     விசைப்பலகையில் விரல் கொஞ்சும் புது மொழி இணைய வழி இதய தொடர்பு   புலனம்…! (WhatsApp)   [Image]     உணர்வுகள் சுமக்கும் உயிரில்லா பொம்மைகள் மௌனமொழி பரிணாமம்   Emoji…!   [Image]       பகிர்ந்து வாழும் பழக்கம் மெல்ல குறைகிறது இரவு நேர hotspot தரவு   Share...!   [Image]       இதழோடு இதழ் பரிமாற்றம் ஏனோ எச்சில் சுமக்கும் தொடுதிரை   video calling…!   [Image]     இருவிரல் காட்டி நாவை கொஞ்சம் நீட்டி சிரிப்பை தொலைத்த புகைப்படம்   தாமி…! (Selfie)   [Image]     மெருகேற்ற பூசப்படும் புகைப்பட சாயம் அழகு சாதன பொருட்கள் மிச்சம்   Filters…!   [Image]   அழகில்லா அழுக்கு முகம் ஆறங்குல திரையில் கிளியோபாட்ராவாய் உருமாறும்   Candy Cam…!   [exede_antenna]     அடைமழை அனல் வெயிலிலும் உதவா குடை அலைவரிசையின் அடைக்கலம்   Dish Antenna   [Image]     ஓர் பெருவிரல் தீண்டலில் முற்றும் என் இமை தேடல்கள்   ரிமோட் …! (Remote)   [Image]     மதுபோதை ஏதுமில்லை தண்ணீரில் தள்ளாட்டம்   Washing Machine…!   [Image]     ஐநூறு மரங்கள் வெட்டி கட்டிய மாளிகை துப்புகிறது மின்சாதனம் குளிர்காற்று   Air Cooler …!   [Image]     விறகில்லா புகையில்லா அடுப்புகள் வியர்வை வரா சமைக்கும் மாடர்ன் மகளிர்   Micro Wave Oven…!   [Image]   பதப் படுத்தப்படும் பழையசோறு அழிவின் விளிம்பில் ஆரோக்கியம்   குளிரூட்டி…! (Refrigerator)   [Image]     வெட்டுண்டு விழும் என் ரோமங்கள் காரணமாகும் உன் இதழ் முத்தங்கள்.   Trimmer…!   [Image]     சில்லறை இல்லா வர்த்தகம் உருவாக்கும் பணக்கார பிச்சைக்காரன்   டெபிட் /கிரெடிட் கார்ட் …! (Debit / Credit Card)   [Image]     தொடுதிரை ஓரம் நீர்ப்படலம் எச்சில் தொட்டு புத்தகம் திருப்பும் தாத்தாவின் கணிப்பலகை   இபுக் …! (E-Book)   [Image]     இறக்கை இல்லா பறவைகள் வட்டமிட்டு ஆகிறது வான்வெளி குப்பைகள்   செயற்கைக்கோள்…! (Satellite)   [Image]     ஆறாம் அறிவின் அவசரநிலை உண்டாயின சிந்தனைகளின் ஆயுள்தண்டனை   Google…!   [Image]     அள்ளிக்குவிக்கும் தள்ளுபடி விற்பனை கட்டைப்பை இல்லா கார்பரேட் கடைகள்   Amazon / Flipkart   [Image]       மருந்தறிந்த மருத்துவர் நாளும் கேட்கும் Ear வழி இதய பாடல்.   Stethoscope …!   [Image]     மேடுபள்ளம் வாழ்க்கையை உணர்த்தும் நிழற்படம் இதயமிட்ட கை யொப்பம்   ECG …!   [Image]     பிடிக்காத பாடங்களில் முதன்மை ஆகிறது கணிதம் 0,1 ஐ தாண்ட வில்லை இன்றும்   கணினி …! (Computer)   [Image]     சிலிகான் சிப்களில் வளரும் சிந்தனை ஆறறிவின் ஆர்வக்கோளாறு   CPU (Central Processing Unit) …!   [Image]     உயிர் இல்லா wire இனம் இருவிரல் தொடல் குற்றமல்ல   Mouse …!   [Image]     பழையதை மறக்கும் எந்திரங்கள் உணர்த்துகிறது இது மனித கன்டுபிடிப்பு   RAM …!   [Image]     தகவல் சேமிப்பு திட்டம் எந்திர நினைவாற்றல்   Database …!     [Image]     எதிர்பாலினம் பெற்ற வரம் நினைவாற்றல் புலப்படுகிறது இக்கால சேமிப்பு சாதனங்களில்   Pen Drive…!   [Image]     காற்றில்லா ஜன்னல்கள் காட்டுகிறது மடியில் ஓர் உலகம்   Windows…!   [Image]     இலக்கில்லா மனித இனம் இலக்காகும் நான்கு இலக்கு எண்கள்   கடவுச்சொல்…! (Password)   [Image]     முப்பரிணாமத்தின் அதீத வளர்ச்சி மின்னுகிறது வறண்ட விளைநிலங்களும் வயல்வெளியாய்   Graphics ...!   [Image]     உடலில்லா உடம்பில் உண்டான நோய் மருந்து இல்லா தீர்வு   Virus …!   [Image]     அளவுகோல் இல்லா கோடுகள்(coding) நிர்ணயிக்கிறது எங்கள் மாத சம்பளம்   மென்பொருளாளர் …! (Software Engineer)   [Image]     பிழையில்லா நிரல்(program) வடிவம் இலக்குகள் நிறைவேறுகிறது ஓட்டங்களில்   C - Program...!   [Image]     காற்றின் தரவுகளில் கனமாகும் கணினிகள் உருவமில்லா உன்னத சேமிப்பான்   Cloud Computing …!   [Image]     பாதுகாப்பில்லா உலகம் பாதுகாப்பு வேண்டி நடத்தும் எண் எழுத்துகளின் கலப்பு திருமணம்   Cipher Text…!   [Image]   கர்பம் தரிக்கா தொழில்நுட்பம் பெற்றெடுக்கும் பிள்ளை   செயற்கை நுண்ணறிவு …! (Artificial Intelligence)   [Image]     முடிவு காணும் மனித இனம் தினமெழுதும் ஓர் முடிவுரை   Shutdown …!     ஆசிரியர் குறிப்பு   என் பெயர் விக்னேஷ் .M , கவிதை படைப்புகளில் இது என் ஏழாவது புத்தகம்.தமிழ் மேல் கொண்ட பற்றை , பயின்ற கணிப்பொறியியல் வழி மேம்படுத்தும் நோக்கத்தோடு,மின்னணு புத்தகங்கள் எழுதத் தொடங்கி, இன்று என் ஏழாவது புத்தகத்தை வெளியிடுகிறேன் .மேலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ,சுயஎழுத்தாளர்களின் படைப்புக்களை மின்னணு மாற்றமாக பதிப்பிட வழிவகைசெய்யவும்,மின்கவி”(https://www.minekavi.com ) என்ற வலைத்தளத்தை உருவாக்கி நிறுவியுள்ளேன் . தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் . மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் . “வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவும் மற்றும் புத்தகம் தொடர்பான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன “. புத்தகம் மற்றும் நூல் ஆசிரியர் தொடர்பான கருத்துக்களை பதிவிட   https://mvigneshportfolio.wordpress.com/     Ph.no: 9626227537 Mail id: vykkyvrisa@gmail.com