[] []                                                                                                                                                                                                                           சைக்கோ                                                     விக்னேஷ் மாரிமுத்து  நூல் :சைக்கோ ஆசிரியர் : விக்னேஷ் மாரிமுத்து மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com தொலைபேசி எண் :9444452564   மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                     நூல் குறிப்பு     சைக்கோ: பொதுவாக மனஇறுக்கத்தால் புத்தி செயலற்றவர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது . இன்றைய சமுதாயா கலாச்சார  சூழ்நிலைகளில் தம் கடமைகளை உண்மையாய் செய்பவரும் யாவருமே சைக்கோ வாக பார்க்கும் நிலை உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறக்கும் ஒருகுழந்தையின்  இன்பம், துன்பம்,கோபம் ,ஏமாற்றம் முதலியனவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியே "சைக்கோ".  இக் கவிதை நிகழ்வுகள் யாவும் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் மனிதர்கள் மட்டும் அல்ல ஒரு நொடி நம் சுய நிகழ்வுகளையும் சுமந்துச்செல்லும்.   ஆசிரியர் குறிப்பு                                                                                                                      நான் விக்னேஷ் மாரிமுத்து ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா சேர்ந்தவன்.இது என் முதல் புத்தகம் .ஏதேனும் குறைகளோ பிழைகளோ  இருப்பின் தயர்வுகூர்ந்து மன்னிக்கவும் .தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்   பொருளடக்கம் நூல் குறிப்பு 4  முன்னுரை 7  1. பிறப்பு 1  2. பெயர் சூடுதல் 3  3. பாசம் 5  4. கல்வி 7  5. நண்பன் 9  6. வளரிளம் பருவம் 11  7. வறுமை 13  8. மழலை காதல் 15  9. பள்ளி இறுதி காலம் 17  10. வாழ்க்கை 19  11. இளமை பருவம் 21  12. முதல் கவிதை 23  13. கல்லூரி காலம்- 1 25  14. முதல் பார்வை 27  15. முதல் காதல் 29  16. புது மாற்றம் 31  17. விரிசல் 33  18. பிரிவு 35  19. தனிமையும் தவிப்பும் 37  20. மாற்றம் 39  21. வருடும் நினைவுகள் 41  22. தோழி 43  23. என்னுள் நீ 45  24. முன்னேற்றம் 47  25. கல்லூரி காலம் -2 49  26. துன்பங்களிலும்இன்பம் 51  27. கலையாத கனவு 53  28. காதல் காலங்கள் 55  29. கல்லூரி இறுதி காலம் 57  30. குடும்பம் 59  31. ஆசை 61  32 பட்டம் 63  33. மகிழ்ச்சின் கடைசிநாள் 65  34. உயிர் போராட்டம் 67  35. மரணம் 69  36. நடை பிணம் 71  37. உயிர் எரித்தல் 73  38. அவமானம் 75  39. கண்ணீர் துளிகள் 77  40. முடிவிலா சோகம் 79  41. பொய் காதலி 81  42. துரோகம் 83  43. பிரிதலும் –புரிதலும் 85  44. நீ தரும் பரிசு 87  45. இமை ஓரம் உன் துரோகம் 89  46. கல்லாய் போன கடவுள் 91  47. காலனும் காலமும் 93  48. கவி கிறுக்கல்கள் 95  49. சாபம் 97  50. சைக்கோ 99  முன்னுரை         வாழ்வில் சந்திக்கும் சில தருணங்களை   நிழலும்  நிஜமுமாய் கண்ணாடி முன் நிறுத்தி .நான் கற்ற தமிழ் மொழியின் அழகில் -இக் கவியாய் வடிக்கிறேன் . இக் கவியில் வரும் நிகழ்வுகள் யாவும் பலர் தன் வாழ்வில் கடந்து வந்த பாதையும் கொஞ்சம் கற்பனை சாயலின் தொகுப்புகள். []   1. பிறப்பு                                                                                                        கனவுகளில் வரைந்த சித்திரம் ஒன்று கண் முன்னே கையில் தவழும் நேரம் இன்று   அணுவில் உருவான பிண்டம் ஒன்று சின்னஞ்சிறு புன்னகையில்   பூக்கிறது மெல்ல என் இதயம் நின்று .....     சுமை தாங்கிய வலிகள் சுகமானதேனோ ? என்  தாய்மையின்  அர்த்தமும் நீதானோ... ?   பெண்ணாக நீயும் பிறந்தால் மடிமீது கிடத்தி அழகு பாத்திருப்பேன் ஆணாக நீயும் வந்ததால் என் நெஞ்சோடு உனை  அணைத்து  ஆனந்தக் கண்ணீர்  கோத்திருக்குகிறேன் ...   உன் பிஞ்சு விரல்கள் என்னை தீண்டையில் இமை  ஓரம் கண்ணீர் துளிகள் என் வாழ்வை மேலும் அழகாக்க வந்த தேவலோக  பன்னீர் துளிகள் .....  பல நாள் கனவோடு  உன்னை  சுமந்தேன் எஞ்சி  உள்ள காலம் வரை இனி உன்னை என் இதயத்தில் சுமப்பேன்   என் வாழ்வில்  நான் வரையும்  செல்வச்சித்திரமே இனி நீயே என் வாழ்வின் புது அர்த்தமே......!!!!!!                                                                                                            []   2. பெயர் சூடுதல்   பெயர் சொல்ல பெற்று விட்டோம் ஒரு பிள்ளை இனி ஊர் சொல்ல பெயர் வேண்டும் பிள்ளை   கனிகளில் பெயர் வைத்தால் கனிவான வாழ்க்கை அமையுமா ? கற்பனை கதாபாத்திரங்களில் பெயர் வைத்தால்  கதை வளம்  தான் கூடுமா?   தந்தையின் தந்தை பெயர் வைத்தால் பரம்பரை பழக்கம் தான் மாறுமா? தாயின் தன்னார்வத்தில் பெயர் வைத்தால் தனித்துவம் தான் பெருமா?   சான்றோர் பெயர் வைத்தால் சமத்துவம் தான் காப்பானா? சங்ககால பெயர் வைத்தால் சகாப்தம் தான் படைப்பானா?   மொழிகளில் பெயர் வைத்தால் கலாச்சாரம் பார்ப்பானா ? நதிகளில் பெயர் வைத்தால் என் நிலைலையும் தன்  நிலை மாறானா ?   யோசனைகள் இறுதில் சில போதனைகள் முடிவில் தமிழ் மொழியில் சில சாதனைகள்....   பிறர் வினை தீர்க்கும் எம் ஈசன் மகனே - முடிவில் நீயே என் மகனின் பெயரும் ஆனாயே....!!!!!! []   3. பாசம்   சின்னஞ்சிறு குருவி கூட்டினுள் புது வரவு இன்னிசை கொஞ்சும் புது உறவு ..   பிஞ்சி இதழ் உதிர்த்து மழலை அழகு என் கண்ணே பிறக்கிறது  ஒரு தந்தை மகன் உறவு ..    தவழும் வயதில் கோடி உறவுகள் செல்லமே உன்னை கொஞ்சி விளையாட கோடி கைகள்   தூங்கும் அழகிலே மயங்கிய மாலை பொழுதுகள் தெய்வமே இவையா ? என் புதிய உறவுகள்...   ஆழும் பொது அரவணைக்க அன்னை மடி இனிய குறும்புகளில் கிடைத்தது செல்ல அடி   பால் பல் முளைக்கா வயதில் தாய் பால் தேன் சுவையானது முதல் பல் முளைத்த பிறகு புட்டி பால் என் உறவானது ...   முதல் அடி  நடக்கிறேன் தலைவனே என்னோடு நீயும் வா என் இறைவனே .....!!!!! []   4. கல்வி நவீன ஆயுதம் கொண்டு அறிவு என்னும் நல் விதை பூட்டும் மந்திரம் ...   என் சின்னஞ்சிறு கைகளில் தவழும் ஒரு வெள்ளை குச்சி வியந்து பார்க்கிறேன் ! நீயா என் வாழ்வாதாரமோ  நானே எனை கேட்கிறேன் ?   தமிழ் சுவையின் முதல் சுவை ஆம் “அ”  கனிவாய் வரைகிறேன் அனைத்தும் கற்ற மேதையாய் எண்ணி நகைக்கிறேன் ...   வாடகைக்கு  வாங்கி வந்த ஆங்கில மொழியாய் ரசிக்கிறேன் உன்னால் தான் என் எதிர்காலமோ ? என்று வியக்கிறேன் ...   அன்னை அடுத்து அன்பு காட்டும் ஒரு மூன்றாம் உள்ளம் கனிவாய் என்னை மடி அமர்த்தி எழுத வைத்த சர்க்கரை வெல்லம்   என் சின்னஞ்சிறு அறிவை  செதுக்கும் என் ஆசிரியர் வாழ்க்கையின் அழகு ஒளிர்கிறது   மழலை பருவம் மகிழ்ச்சியாய் கடக்கிறது மனமும் பட்டாம்பூச்சியாய் வானில் சிறகு விரிகிறது .....!!!!! []   5. நண்பன் தோளுக்கு  துணை நிற்க தம்பி இல்லை தோல்விகளில் எனை காக்க அண்ணனும் இல்லை   எதிர்பாரா வந்த உறவு எதிர்பாரா தருணங்கிளில் கைகோர்த்த  உறவு   மகிழ்ச்சியின் மிச்சங்களில் அள்ளி  தெளிக்கும் ஒரு உறவு உறவுகள்  ஒருநாள் மாறிப்போயின என் உணர்வு   விடுமுறையில் சிறந்த பொழுதுபோக்கு நீயானாய் நான் விழும் தருணங்களில் நீயே என்னை காக்கும் கரமானாய்     ஓடி விளையாடிய பருவங்களில் ஒன்றாய் அலைகிறோம்   இலக்குகள் இல்ல பறவை போல இன்பமாய் திரிகிறோம்   என் கல்வி சோம்பலில்  தலையணையும் நீ என் நாட்கள் நகர்த்தும் நாட்காட்டியும் நீ   என் தோளோடு தோள் நிற்கும் உடன் பிறவா அண்ணனே இரு வேறு வயிற்றில் பிறந்ததால் நீயும் ஆனாய் என் தோழனே ......!!!!!!! []   6. வளரிளம் பருவம்   மழலை மொழிகள் உறங்கும் நேரம் மதியூகம் துளிர் விடும் காலம்   கவலைகள் இல்லா காலங்கள் என்னை கடக்கிறது எதார்த்த சூழல்கள் எதிர்கொள்ள வாழ்க்கை பயணிக்கிறது   பிரம்மன் கணக்கில் இப்பருவவும் ஒரு கிளைதானோ ? உயிர்களை உலகிற்கு படை சாற்றும் இடமும் இதுதானோ ?   சின்ன சின்ன சிரிப்புகள் சிறகுகள் ஆயின வாழும் வாழ்க்கைக்கு அர்த்தங்கள் தேடியே நாட்கள் ஓடின   கல்விச்  சுமையின் ஆழம் புரிகிறது கண்ணீர் வழி ஈரமும் உலர்க்கிறது ...   புது புது மனிதர்களின் தரிசனம் இதுதானோ வாழக்கை என்பதே நிதர்சனம்   கால்களும் நடக்கிறது கனவு காலங்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ...!!!!!! []   7. வறுமை   தேவைகளின் குறைபாடு கோலுன்றிய காலம் தேவைக்காக பிறரிடம் கை நீட்டும் அவல கோலம்   விதியின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா ? வீதியில் நிற்கும் நிலையும் அதில் உண்டா ?   மங்கிய விளக்காய்  புன்சிரிப்புகள் மங்கின மாத வாடைக்கும் மானியம் இல்லாமல் நாட்கள் ஓடின ...   கஷ்டங்களை கருவுக்கு  தெரியாமல் கரைகின்றனர் கண்ணீரில் கருவுக்கோ தன் நிலை உணர்கிறது - வாடிய கண்ணீர் துளிகளில் ....   பிறருக்கு உதவியதின் பயனா இது? - அல்ல கர்மா வினையின் கடனா இது ?   காலமோடு கடனும் கைகோர்க்கம் தருணம் கடவுளே  நீயும் கொஞ்சம்  மனமிரங்கி வரணும்...   புவி விசையில் நாட்கள் நகர்கிறது - நாட்களோடு எங்கள் நடையும் கொஞ்சம் தளர்கிறது கண்களில் வறுமை துளிகள்....!!!!! []   8. மழலை காதல்   மழலை மொழி மாற எனக்குள் மீசை முடி துளிர் விட்ட காலம் ....   பொம்மை வைத்து விளையாடிய பெண் பதுமை பால் மனம் மாற அவளும் ஒரு கைக்குழந்தை   அவள் மெல்ல கடக்கும் நொடி இதய நாளங்களில் கோடி இடி   அவள் என் பெயர் சொல்லி அழைக்கும் நொடி இனம் புரியா வியாதிகளின் கோர வெடி   பாடங்கள் பார்க்காமல் உனை பார்க்கிறேன் உன் அழகிய பிஞ்சு  விரல் தீண்ட நேரம் பார்க்கிறேன்   கோபமாய் ஒவ்வெரு நொடியும் என்னை கொல்கிறாய் காதல் என்று ஒன்று அறியா வயதில் என் இருதயம் வெல்கிறாய் ...   முதல் காதலுக்கு முத்தங்கள் தர நினைக்கிறேன் முதல் காதலோ முடிகிறது முழுஆண்டு தேர்வோடு ....!!!!! []   9. பள்ளி இறுதி காலம்   கள்ளம் கபடமில்லா நாட்களை  கரைக்கிறேன் கவலைகள் இல்லா நாட்களை அணைக்கிறேன்   புத்தம் புது அனுபவங்கள் எதிலும்  புதுமையாய் அந்த நினைவுகள் மனதை  என்றும் ஆட்கொள்ளும் பசுமையாய் ...   தோளுக்கு மேல் வளர்ந்ததால் குருவுக்கே தோழனானோம் சிறு சிறு  தொல்லைகளால் வகுப்புகளில் பிரபலமானோம் ...   வெளியில் வேடிக்கை பார்க்க முட்டிபோட்டோம் அனைவரும் ஒருதாய் குழந்தை  என சட்டம் போட்டோம்   கல்வி சுமைக்கு நடுவிலும் கண்டோம் கனா காணும் காலங்கள் அவை யாவும் நெஞ்சை விட்டு அகலா வண்ண கோலங்கள்   வாங்கிய அடிகள் யாவும் வரமாய் மாறும் எல்லாம் ஓர்நாள் இனிய நினைவாய் இருதயம் கீறும் ...   மெல்ல நாட்கள் முடிகிறது பள்ளி காலமும் பல இனிய நினைவோடு கரைகிறது .....!!!! []     10. வாழ்க்கை   விளையாட்டுகளுக்கு விடைகொடுக்கும் நேரம் விதியின் விளையாட்டு அரங்கேறும் காலம்   மின்மினி பூச்சியாய் வட்டமிட்டு திரிந்த நேரங்கள் இனி திட்டம் போட்டு வாழ்க்கை  நகர்த்தும் நேரங்கள்     மரத்துக்கு மரம் தாவும் குரங்காய் வயதும் தாவுகிறது அழகாய்...   தள்ளாடும் வாழ்க்கையில் வழிநடத்த யாரும் மில்லாமல் நாட்கள் நகர்கிறது   வறுமை ஒரு  பக்கம் காலத்தின் வினைப்பயன் மறுபக்கம்   என்னவென்று நானும் சொல்ல நகர்கிறேன்  சுழற்சில் மெல்ல   மழலை அத்தியாயம் முடிகிறது வாழ்க்கையின் அத்தியாயம் மேலும் துளிர்விடுகிறது ....!!!!! []   11. இளமை பருவம்         வெண் பனி  துளிர் விடும் காலம் புதியதாய் நான் உடுத்தும் இளமை கோலம்   பால் வண்ண கன்னங்களில் பருக்களின் பிரவேசம் புது மாற்றங்களுக்கு உடல்  கேட்கிறது  அவகாசம்   பொம்மைகள் பார்த்த காலம் எல்லாம் கனவாய் தெரிகிறது கண்ணாடியில் என் பிம்பம் பார்த்தே என் நாட்களும் கரைகிறது   நாட்கள் நகர நகர உணர்கிறேன் வித்தியாசம் எனை அறியாமல் ஏங்குகிறேன் புது காதல் வாசம்   சிந்தனைகளில் புதுமை புகுத்த நினைக்கிறேன் அரும்புப மீசை இன்னும் வளருமா வெகுளியாய் நானும் கேட்கிறேன்   என்நிலை நானும் மறந்து நடக்கிறேன் புது கவிதையாய் நானும் பிறக்கிறேன்   தினம் தினம் மாற்றம் காணும் இவ்வுலகமே     என் நிலையிலும்  புது மாற்றம் காணுவாய் என் உலகமே .....!!!!! []   12. முதல் கவிதை   ஆர்வத்தை அஸ்திவாரம் ஆக்கி தமிழ் எழுத்துக்களை அள்ளி  தெளித்து வரைகிறேன் ஒரு கவிதை   எதை பற்றி தான் நான் எழுதுவது ? வெகு நேரம் சிந்தனையில் சிந்தும் யோசனைகள்   முடிவில் பெற்றெடுக்கிறேன் ஒரு கவிதையை என்னை பெற்றடுத்தவளுக்காக வரைகிறேன் என் முதல் கவிதையை   இரவு பகல் பார்க்கமாட்டாய் இமை மூடி நீயோ  தூங்கமாட்டாய்..   மூன்று கிலோ எடை ஒன்று வயிற்றில் எட்டு மாதம் சுமந்து சென்று   பெற்று எடுத்தாய் ஒருவழியாய் அதற்கு நீ தந்ததோ விலையாய்  - உயிர் வலியாய்    இவைகள் யாவும்  வரிகளாய்  நானும் வடிக்கிறேன் உன்னால்தான் நானும் இங்கு ஒரு புதுக்கவிதை படைக்கின்றேன் .....!!!!! []   13. கல்லூரி காலம்- 1   எதிர்ப்புகள்  இல்லா தொடங்கும்  வாழ்க்கை   எனக்கு ஏனோ  ஏளன சிரிப்பில் தொடங்குகிறது  கல்லூரில் வாழ்க்கை   பறவையாய் வாழ நினைத்து கலை கல்லூரி வாசல் நின்றேன் விதியின்  சதியோ கணிப்பொறி காதலால் பொறியியல் வாசல் அடைந்தேன்    இதுவரை பார்த்திரா புது முகங்கள் ஏனோ என் சுயநிலை கட்டிக்கொள்ளும் தருணங்கள்   தனிமையின் உரசல்கள் முதன் முதலில் உணர்கிறேன் ஒரு கூட்டத்தின் நடுவிலும் நானும் தனிமையை உணர்கிறேன்   உறவுகள் இருந்தும் தனிமரமாய் வேதனைகள் தள்ளாடஅழுகிறேன் மறைமுகமாய்   மொத்தம்  படித்தும் மெத்தன மதிப்பெண்கள் இறைவனின் கணக்கு  இதுவோ ? இதழோரம் சிறு புன்னகைகள்     தனிமையின் அரவணைப்பில் சில நேரம்   கண்ணீர் மடியில் பல நேரம் உருண்டோடுகிறது - புரியாத வாழ்க்கை புது வாழ்க்கை .....!!!!! []   14. முதல் பார்வை   என்நிலை மறந்து நான் ரசித்த ஓவியம் பிரம்மன் தீட்டிய வண்ண காவியம்   தனிமையில் நடந்த எனக்கு கிடைத்த துணை  நீயடி ஆனந்த கண்ணீர் துளிகளிலும் உன் பிம்பம் தானடி    நைல் நதி அழகில் கிளை நதியும் அழகு - உன் ஆறடி கூந்தல் அசைவிடும் அழகு   வெயில் கால நிழல் போல உன் இமைகள்  அரவணைப்பு - ஏனடி நீ மட்டும்  உணர்ந்தாய் என் இருதய  தவிப்பு   இடைவிடா உரையாடல்கள் தினம் தினம் முதல் பார்வையில் உருகுகிறேனடி அனுதினம்   உன் விழி படிக்க  காத்திருக்கிறேன் உன் விழிக்கு புது உரைநடை எழுத காத்திருக்கிறேன்   புரியாத புதிராய் போன வாழ்க்கையில் புரிதல் நீயடி என் முதல் காதல் காட்டும் கண்ணாடியே எனை கொஞ்சம் கண் பாரடி ....!!!!!! []   15. முதல் காதல்   மண்ணில் முத்தமிட்டு வளரும்  வேர் போல உன்னால் நெஞ்சில் முத்தமிடும் வளர்கிறது  முதல் காதல்   வேப்பமர  காற்றும் ஏனோ ? அனல் காற்றாய் மாறிப்போயின   காதல் அமிலங்கள் குருதியில் ஒன்றாய் கலந்து ஓடின   ஆசையில் உன் கன்னங்களில் ஒரு  முத்தம் தலைக்கேறியது முதல் காதல் பித்தம்   உன்னால் நானும் கவிதைகளை  ரசிக்கிறேனடி உன்னை வடித்தே புது கவிஞனாய் பிறக்கிறேனடி   கண்கள் முழுக்க காதல் வண்ணங்கள் உன்னால் என் மனதில் கலர் கலர் எண்ணங்கள்   சத்தம்மில்லா யுத்தம் ஒன்று இருவர் விழிகளில் ஆயுதமில்லா  அகிம்சை வழி இருவர் இதழ்களில்   அலை உரசும் கடலாய் உன்  இதயம் உரசுகிறேன் இரு மீனகள் மாட்டிகொள்ளும்  ஒருதூண்டிலாய் "முதல் காதல்"....!!!!!!  []   16. புது மாற்றம்   கால் ஓடிய  ஓட்டங்கள் யாவும் அர்த்தமாயின சிந்திய கண்ணீர் யாவும் கானல் நீர் ஆயின   தனியாய் போன நாட்களெல்லாம் துணையாய் வந்தாய் நீயடி   இரு உடலை ஓர் உயிரில் கோர்த்த என் அனுவின் ஆக்சிஜன் ஆனாய்  நீயடி     நித்தமும் உன் நினைவுகள் இமை மூடி காண்கிறேன் காதல் கனவுகள்   இரு விரல்  கோர்க்கும் தருணம் காண்கிறேன் விண்வெளி பயணம் உன் தோள்  உரசும் நேரம் உன் விழிகளுக்கோ வெண்ணிலாக் கோலம்   என் ஹார்மோன்கலின் அகராதியே நான் மீட்ட துடிக்கும் ஸிம்பஹ்னி இசையே   உன் காதலால் காண்கிறேன் புது ஏற்றம் உன்னால் தானோ என் வாழ்வின் இன்று புது மாற்றம்… []   17. விரிசல்     இனம்புரியா உன் மௌனங்கள் காண்கிறேன் சிலநாளாய்  இரு இதய வெறுப்பை உணர்கிறேன் கொஞ்ச நாளாய்   இடைவிடா உன் உரையாடல்கள் யாவிலும் காண்கிறேன் இடைவெளி ஏனோ என்னை காண தவிர்க்கிறது உன் விழி   கனிவான அன்புகள் யாவும் காணாமல் போனது உன் கைகோர்த்த காலம் யாவும் கனவாய்  ஆனது   என் நடை கொஞ்சம் தளர்கிறது ஏனோ அதை உன் இதயம் உணர தவர்கிறது   விடியும் ஒவ்வெரு  நாட்களும் புது கதை சொல்லும் உன் இதழ் உதிர்த்த மறுக்கும் கனம் உன் மௌனமே  எனைக் கொல்லும்     காரணம் இன்றி என் காதலை  கலைக்காதே என் காதலியே என்னை நீயும் வெறுக்காததே   தாய் தேடும் பிள்ளையாய்  விடை  அலைகிறேன் அது விடை அல்ல உன் இதய விரிசல் பின்பு உணர்கிறேன் .....!!!!!! []   18. பிரிவு     நான் தருகிறேன் பிரியா இதயம் உனக்கு நீயோ தருகிறாய் பிரியா  விடை  எனக்கு   இடைவிடா உரையாடல்களுக்கு இறுதிஅஞ்சலி உன்னை நினைத்த என் இதயத்திற்கும் சேர்த்து   காரணமே இல்லா உன் சண்டைகள் சினத்தின் உச்சியில்  உதிர்க்கிறேன் நானும் சில வார்த்தைகள்   கிடைத்து விட்டது உனக்கோ புது காரணம் விடாமல் பிடித்து கொண்டு நீயும்  விடைகொடுத்தாய்   பேச வழி  இன்றி நானும் விழிக்கிறேன் இதய வலியில் நானும் தவிக்கிறேன்   விடிகிறது உனக்கென  ஓர்  காலை துளிகள் என்னை ஏனோ கட்டி அணைக்கிறது இமையோரம் கண்ணீர் துளிகள்   உன் விரல்  கோர்த்த நாட்களுக்கு விடை தருகிறேன் என் இமை துளிகளில் உன் காதலை கரைக்கிறேன் - உன் பிரிவால் நான் ....!!!!! []   19. தனிமையும் தவிப்பும்     உன் காதலால் இமை வருடிய காலம் யாவும் இன்று கண்ணீர் இமைகளில் வருடும் கோலம்   மூன்றே வார்த்தையில் என் மொத்த  வாழ்வும் நீயானாய் இன்று அதே வார்த்தையில் நீயே என் காலனும் ஆனாய்   வழித்துணையாய்   நீயும் வந்த  நாட்கள் வலியாகி  போகிறது வாழும் வாழ்வு நானும் முடிக்க உன் காதலே வழிகாட்டிச்செல்கிறது     நீ தந்த புன்னகை  யாவும் சாபம்  ஆயின நான் வடித்த கண்ணீர் யாவும் கவிதை ஆயின   இறைவனே ஏன் ? இருதயம் படைத்தாய்   என் இதயத்தில் ஏன் ? நீயும் உணர்வை விதைத்தாய்   தனிமையில் கதறுகிறேன் சூழ்நிலை கைதியாய் தவிப்புகளில் தவிக்கிறான் உயிர் இல்லா பொம்மையாய்   உன் பெயரை தீட்டியே காதலை வளர்த்தேன் -உன்   பெயரை திட்டியே கவிதை வளர்க்கிறேன் - தனிமையில் தவிப்புகளில்  நான் ....!!!! []   20. மாற்றம்   கணக்கில்லா கண்ணீர் துளிகள் இமை உறங்கா கொடிய இரவுகள்   வாழ்க்கையை நோக்கி ஒரு பயணம் திசை அறியா பறவையாய் ஒரு பயணம்   கொஞ்சி சிரித்த நினைவுகள் கண் முன் ரணம் ஆரும்முன்  நீயோ வேறொரு ஆணின் பெண்   ரணங்களை சுமந்த இதயம் ஒன்று இன்று இடிகளை சுமக்கிறது உன் கண்முன் நின்று    தளர்ந்த நடையில் வீதியில் நடக்கிறேன் இவை யாவும் என் கர்ம விதியோ மெல்ல மறுக்கிறேன்   சிதறிய கண்ணாடிகளை ஒன்றாக திரட்டி என்னையே செதுக்குகிறேன் கனவுகள் தீட்டி     மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமா ???? மனமே நீயும்  உணர்ந்துகொள் மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாம்….!!!!! []   21. வருடும் நினைவுகள்     துளிர் விடும் இலையாய்  வாழ்க்கை  மெல்ல துளிர்கிறது கண்களில் கண்ணீரின் ஓட்டம் மெல்ல தளர்கிறது   உணர்கிறேன் என்னுள் நானும் காண்கிறேன் புது வாழ்கையை  நானும்   முன்னேறும்  முடிவுகளில் சில தடைகள் கண் மூடி கடக்கிறேன் அந்த நொடிகள்   உதிக்கிறது இனம் புரியா ஒரு தெளிவு உந்தி பிடித்து கடக்கிறேன் அந்த கொடிய நினைவு   சிறு சிறு  மாற்றங்கள் அடிமனதில் விருப்பமின்றி ஏற்றுக்கொள்ளும் புது நினைவுகள்   பனிபோல காலம் கரைகிறது உன் நினைவுகளும் மெல்ல என் மனம்விட்டு அகல்கிறது   புது அத்தியாயம் தொடங்கும் நேரமிது உன் வருடும் நினைவுகளுக்கு விடை கொடுக்கும் தருணமும் இது .....!!!!! []   22. தோழி     எதிர்பாரா சந்திப்புகளில் ஒரு பயணம் எதையும்  எதிர்பாரா பெயர் தெரியா உறவில் ஒரு பயணம்   தனிமையில் வாடிய எனக்கு  நிழல்போல ஒரு உறவு சுயநல மில்லா  உன்னத உணர்வு   கண்ணீர் கடலில் தத்தளித்த எனக்கு வாய்த்த ஒரு துடுப்பு காலம் ஓட ஓட நீயே ஆனாய் என் இருதய துடிப்பு   காதலால் ஆனா காயத்திற்கு காலமே மருந்தாகும் என்னுள் இதயம் கண்ட காயத்திற்க்கு நின் கனிவே மருந்தாகும்   நீண்ட யுகத்திற்கு பிறகு முதல் புன் சிரிப்பு என் இதழோரம் பெண்னே உன்னால் மட்டுமே இவை யாவும்  சாத்தியம்   கோபங்கள் இருந்தாலும் உன் அன்பிற்கு என்றும்  குறைவில்லை சண்டைகள் போட்டாலும் உன் மேல் நான் காட்டும் அன்பும் குறைவதில்லை   காலங்கள் உருண்டோட நீயே என் கால்தடம் ஆனாய் என் கவிகளை வாசிக்கும் தோழியே - நீயோ என் காதலியும் ஆனாய் .....!!!!!!! []   23. என்னுள் நீ     என் இருண்ட வாழ்க்கையின் ஒளியும் நீ என் வாழ்வின் தேடலின் பொருளும் நீ   என் ரணங்கள் ஆற்றும் மருந்தும் நீ என் விரல் கோரக்க பிறந்த பெண்ணும் நீ   என்னுள் மாற்றம் காண  வைத்தவளும் நீ என்னுள் உந்தும் விசையும் நீ   திசை அறியா  என் பயணத்திற்கு வழிகாட்டியும் நீ என் வாழ்வோடு ஒன்றிப்போன நாள்காட்டியும் நீ   தனிமையின் அரவணைப்பும் நீ அழகிய திமிறின் பிறப்பிடமும் நீ   என் வாழ்வின் வண்ணமும் நீ என் இதயம் கவர்ந்த பெண்ணும் நீ   என்னை கடத்தும் காதலியும் நீ என் கலையாத கனவின் காவியமும் நீ -என்னவள் என்றும் நீ........!!! []   24. முன்னேற்றம்     வாழ்விற்கு புது வட்டம் போட்டு முன்னேற புது திட்டம்  போட்டு   முட்டி மோதி முன்னேறுகிறோம் புது சரித்திரமாக முயல்கிறோம்   கவலைகளுக்கு கடைசி விழா கனவுகள் மெய்ப்பட இதுவே புது தொடக்க விழா   இமை உறங்கா பாடு படுகிறோம் நாளை புது சிகரம் தொட  வருகிறோம்   துவட்டி எடுத்த துன்பங்கள் யாவும் துகளாக என்னவள்  வந்தபின் என் வாழ்வு மேலும் அழகாக   முயற்சிகள் யாவும் முழு வெற்றியாய் என்னவளே நீயே என் பாதி வெற்றியாய்   என் வாழ்வின் அதிர்ஷ்டமும் நீயடி உன்னால்  நானும் இன்று முன்னேறுகிறேன் பாரடி ..........!!!!! []   25. கல்லூரி காலம் -2     பட்டதெல்லாம் பழைய கதை பட்டம் பெறப்போகும் அத்யாயம் இதுவே புது கதை   உடலால் பெரும் மாற்றங்கள் உழைப்பாலும்  அநேக மாற்றங்கள்   மதிப்புகள் உயரும் காலம் இதுவோ ? நண்பர்கள் துணை  நிற்கும் காலமும் இதுவோ ?   வைகறை நதிபோல நாளும் ஓடுகிறது இலக்கில்லாமல் நாளும் கடக்கிறேன்  கொஞ்சமும் கவலை இல்லாமல்   உள்ளிருக்கும் ஆற்றல் உந்தி செல்கிறது என் உணர்வுகள் என்னை உருப்படியாக்கிறது   பெற்றவர்கள் கனவு காணும் நேரமிது பெற்றவர்க்கு கடமை ஆற்றும் என் நேரமிது   கடின உழைப்புகளில் கண்டெடுத்த  மாணிக்கம் இறைவா உன் அருளால் என்  வாழ்க்கையும் இனி பிரகாசிக்கும் ...........!!!!! []   26. துன்பங்களிலும்இன்பம்     காலங்கள் நெருங்குகிறது கல்லூரியின்  கடைசி அத்யாயத்திற்கு கண்கள் இரண்டும் விழித்து கொண்ட காலமும் அது   அதுவரை காதல் காயம்  கண்ட  எனக்கு காண்கிறேன் என்னை பெற்றவரின் காயம்   கடமைகளும் பொறுப்புகளும் இனி என் பொறுப்பு பலர் வெறுப்புகளுக்கு முன்  வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற தவிப்பு    பெற்ற  கடன் ஒரு பக்கம் தான் பெற்ற  கடன் மறுபக்கம்   சுமைகளை குறைக்கும் நேரமும் இது நான் பெற்ற கடனுக்கு வட்டி கட்டும் நேரமிது   காலமும் காதலும் இரு கண்கள் ஆயின நடுவர்க்கத்தின் சாபக்கேடு  இதுவோ?   கனவுகள் நோக்கி பயணிக்கிறேன் துன்பத்திலும் இன்பத்தை  நானும் அனுபவிக்கிறேன் ......!!!!!! []   27. கலையாத கனவு     கல்லூரியின் இறுதி நாட்கள் இணையில்லா நாட்கள் கலையாத கனவாய்  காலம் முழுதும்  கதை பேசும் நாட்கள்   காதல் பாடம் கனிவாய் போகிறது கல்லூரி பாடமும் கையேடு இன்றி ஆனது   இடைவிடா காதல் உரையாடல்கள்   இரண்டு வருடம் கடந்துபோன  இன்பச் சுவடுகள்   உன்னை தொடாமல் உன் இதயம் தொட்டேனடி நீயே ஆனாய்  என் இலக்கணமில்லா புது கவிதையடி   கல்லூரி நாட்கள் கலகலப்பாய் காதல் நாட்களும் செல்வச் செழிப்பாய்   பிறக்கிறது புது ஆண்டு நானும் பிறக்கிறேன் புது ஆணாய்   நன்றிகள் கோருகிறேன்  இறைவனே என் வாழ்வில் புது அதிகாரம் தொடங்குவாய்  என் தலைவனே ....!!!! []   28. காதல் காலங்கள்     என் காதலுக்கு அகவை இரண்டு கரு சுமந்து பெற்றெடுத்த பிள்ளை போல உன்னை சுமக்கிறேன்   என் சிறு துளி கோபம் உன்னை வாட்டுமோ? மௌன புன்னகையிலே காதலை வளர்க்கிறேன்   நீ காட்டிய அன்பில் நான் என்ற ஆணவம் ஆயிரம் ஆம் உன்னவள் நான் என்ற ஆணவம் ஆயிரம்   குழந்தை செய்கையில் கோடி காதல் ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியோ வியக்கிறேன்   உன்   இமைக்கா நொடிகளில் ஓர பார்வை என் கோபங்களுக்கு கொள்ளி போடும் பார்வை   கடமைகளோ என் கண் முன் காதல் முழுதும் வெளிக்காட்ட காலம் இன்றி தவிக்கிறேன்   என் வாழ்வின் நான் சிரித்த காலங்கள் யாவுக்கும் நீ பொறுப்பு இனி நீ சிரிக்கும் வருங்காலம் யாவும் என் பொறுப்பு -காதல் களங்களில் நாம் ......!!!!!! []   29. கல்லூரி இறுதி காலம்     சமூகத்தோடு உறவாடும் நேரம் கடை நொடி துளிகளாய்  கல்லூரிக்காலம்   வேண்ட வெறுப்பாய் வந்தோம் இணைபிரியா பிறப்பாய் பிரிகிறோம்   கால ஓட்டங்கள்  யாவும் மாறி போயின இனி வேலை ஓட்டங்கள் எதிர்பார்ப்புகளாயின   பெற்ற கடன்  செலுத்தும்  நேரம் பெற்றவர்களை கனிவாய் காப்பாற்றும் காலம்   கல்லூரி காதல் கடந்துபோன சம்பவங்கள் மனதில் அசைபோடும் பசுமை நினைவுகள்    யாரும் அறியா காதலோடு கல்லூரி முடிக்கிறேன் கனவுகள் எதிர்நோக்கி என் துடுப்பை செலுத்திக்கிறேன்   பலர் வயிற்றெச்சலில் உருவான தீபம் நானே ஒருநாள் பலர்வாழ  ஒளி வீசும் சுடரும் ஆவேன் ......!!!!!!! []   30. குடும்பம்     வட்டம் போட்டு வாழ்ந்த வாழ்க்கை யாவும் திட்டம் போட்டு கனவு காணும் நேரம்   முடிகிறது கல்லூரி படலம் உணர்கிறேன் நமக்கும் இருக்கிறது குடும்பச்சுமை   காதல் ஒரு பக்கம் குடும்பம் மறுபக்கம் இரு தவில்  கொட்டாய் அடிகள்   எதிர்காலம் என்னும் மாயை அணிவிக்கிறது பொறுப்பு என்னும் மாலை   முகம் கோணாமல் ஏற்கிறேன் பலர் முன்  வாழ எதிர்பார்க்கிறேன்   தந்தையின் அன்பு உணரும் நேரமிது எண்ணி பார்க்கிறேன் அவர் செய்த தியாக கனவுகள்   கசிகிறது கண்ணீர் துளிகள் இமையோரம் - கண்களை துடைத்து கொடு சிந்திக்கிறேன் என் குடும்ப எதிர்காலம் ....!!!!!!!         []                                                                                                                  31. ஆசை     பெற்றவர்கள் கண்களில் பூரிப்பு பட்டம் வாங்க போகும் களிப்பு   நெடுநாள் கண்ட  கனவு கண்முன்னே இனி எதிர்கால சிரிப்பாகும்  பின்னே   தந்தையின் மனதில் சொல்லமுடிய தவிப்பு நான் உணர்கிறேன் அவர் விழி பார்வையில்   தயக்கங்கள் களைத்து அறிய முயல்கிறேன் ஒரு  ஆசையை உயிர் ஓட்டமாய் நானும் காண்கிறேன்   எதுவும் என்னிடம் கேட்கா என் தந்தையின் முதல் ஆசை உயிரை கொடுத்தேனும் சாதிக்க வேண்டும் என்ற கர்வம்   வாய்ப்புகளை அனைத்தும் உதறுகிறேன் எனக்காக வாழும் என் தந்தைக்காக   இடைவிடா சுமைகளுள் காதல் சுமையும் அனைத்தும் மனதார ஏற்கிறேன்  தந்தையின் முதல் ஆசைக்காக.....!!!!!!                                                               []   32 பட்டம்     பட்ட கஷ்டத்திற்கு பரிசாய் கிடைத்த பட்டம் பலர் தூற்ற வான் பார்க்கும் எம் பட்டம்   சொந்தங்களின் வெறுப்பில் சம்பாதித்த பட்டம் இனி எனக்கு சோறுபோடும் எம் பட்டம்   ஒரு தலைமுறையின் முதல் பட்டதாரி பட்டம் நாளைய உலகை கணிக்கும்  எம் பட்டம்   பட்ட வலிக்கு மருந்தாய்  ஒரு பட்டம் நாளை என் நிலை மாற்றும் எம் பட்டம்   என் கனவுகள் நான் அடைய கிடைத்தது பட்டம் என் பெற்றோர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் காண வைத்த  எம் பட்டம்   சுய உழைப்பில் கிடைத்தை முதல் பொன்  பட்டம் நாளை செல்வச்  செழிப்பில் எனை  மாற்றும் என் பட்டம்   என் தந்தையில் ஆசைக்கு ஒரு பட்டம் நான் பெற்ற கடன் அடைக்கபோகும் என் பட்டம்....!!!!!!         []                                                                                                   33. மகிழ்ச்சின் கடைசிநாள்     வலிகளை  கடத்தி  கனவுகள் அடைய நான் கொண்ட முயற்சி   கல்லூரி முடித்ததும் தொடர்கிறேன் விடா முயற்சி   ஒரு ஏழை தந்தையின் ஆசை நோக்கி ஒரு பயணம் இடைவிடா வலிகள் இருந்தும் விடாது ஒரு பயணம்   காதலுக்கு சிறு இடைவெளி காதலியை கரம் பிடிக்கவே  இவ்இடைவெளி   விடாமல் ஓடிய ஓட்டங்கள் கண்ணீர் வரவழைக்கும் வலிகள்   பொறுத்துக்கொள்கிறேன் அனைத்துமே எந்த எதிரிபார்ப்பும் இல்லா என் பிதாவுக்காக   ஊரே சிரிக்கிறது வாய்ப்புகள் தவறவிட்டவன் என்று தளராமல் நடக்கிறேன் கனவுகள் நோக்கி- மகிழ்ச்சியின் கடைசி நாள் என்று தெரியாமல்.....!!!!!       []                                                                                          34. உயிர் போராட்டம்     கனவு தேர்வுகள் எதிர்கொள்ளகிறேன் இன்று என் கனிவான தந்தையின் கனவையும் எதிர்கொள்ளகிறேன்   நம்பிக்கை தந்து வழிஅனுப்பினாய் என் முழு முயற்சியும் நீ வெளிக்காட்டினாய்   மனநிறைவோடு உன்னை எதிர்கொள்கிறேன் இனியாவது உறக்கம் கிடைக்குமா ? எதிர்பார்க்கிறேன்   கவலைகள் மறந்து விடு என்று நீ சொன்னாய் அதுவே உன் கடைசி வார்த்தை என ஏன் சொல்ல மறந்தாய்?   என்னை இதயத்தில் சுமந்தத்திலோ உனக்கு வந்தது இருதய வலி தள்ளாடி போகிறேன் நானும் உன்னோடு   மெத்த படித்த எனக்கு எழுதவராவில்லை மூன்று நாட்கள் உண்ணாமல் உனை காணும் நிலை   கோடி கனவுகள் சுமந்து சுயநினைவற்று கிடக்கிறாய் நீ ஒரு முறை என்னை நீயும் அழைப்பாய் என்ற ஏக்கத்தில் நான் - உனக்காக ......!!!!!!!!!         []                                                 35. மரணம்     காலனே உன்னை சபிக்கிறேன் கண்களில் குருதி வர ஏனோ ? நீயும் சபித்து விட்டாய்   உயிராய் என்னை  சுமந்த இதயம் ஒன்று உயிர் அற்று கிடக்கிறது வாழ்வே  சூனிய  இருளாய் கண்னமுன் கிடைக்கிறது   கதறுகிறேன் வாய்மூடாமல் நானும் கலங்குகிறேன்  கண்ணீர் குருதியில்  நாளும்   நீ என்னோடு வந்த நாட்களெல்லாம் நிழல் படமாய் போனது என்னை அணைத்து கொண்ட உன் கரங்களோ மண்ணுக்கு இரையானது   இருபத்தியொரு வருடங்கள் வாழ்ந்த வாழ்கையில்  புரியவில்லை உன் அருமை இன்று நீ இல்லா இந்நொடி உணர்கிறது உன் அருமை   இனி எனை  தட்டி கேட்கவும் யாரும் இல்லை தட்டி கொடுவாவும் யாரும் இல்லை   கனவிலும்  கண்டதில்லை இதுபோல் ஒரு நாளை  இறைவா நீ வெறும் கல் தானா  உன்னை நானும் சபிக்கிறேன் - எரிகிறது உயிர்       கொள்ளி......!!!!!!!!       []                                                                                                                                                                          36. நடை பிணம்     விதியின் சதிதான்  இதுவோ ? கண் மூடி காணும் கெட்ட சொப்பனம் இதுவோ ?   ஊர் அறிய விடை பெறுகிறது தந்தை பிணம் இதய நாளங்களில் கசிகிறது ரணம்   தாய் முகம் பார்க்க வலிக்கிறது தந்தை முகம் கடைசியாய் பார்க்க இமைகள் தவிக்கிறது   அப்பா என்று நான் அழைக்கப்போகும் கடைசி நாள் இதுவோ ? என் பாவத்தின் சன்மானம் தான் இதுவோ?   பட்டம் ஏந்தப்போகும் கைகளில் கொள்ளிக்கட்டை இறைவன் என்னும் மிருகத்தின் கொடிய வேட்டை   விரைவாக நடக்கிறது சம்பிரதாய சடங்குகள் என் வயதில் பாட்ககூடாத கொடிய நிகழ்வுகள்   கால்கள் மெல்ல அசைபோடுகிறது இடுகாட்டிற்கு ஒரு பிணத்திற்கு பின்  இரு பிணம் -உயிர் இருந்தும் நடக்கும்  நடைப்பிணம் ......!!!!!!!       []                                                                                                     37. உயிர் எரித்தல்     இமைமூடி திறப்பதற்குள் இருக்கிறேன் இடுகாட்டில் ஈம சடங்குகள் இறுதியாய் நடக்கிறது இடுகாட்டில்   ஒரு  உன்னத உறவின் இறுதி துளிகள் இமையோரம் வருடுகிறது ரணத்துளிகள்   சட்டியில் சோறு வைத்து ஊட்டி விட்ட நினைவுகள் கண்முன் இன்று அதையே சட்டியை தோள்  சுமந்து உடைக்கிறேன்   தேர் காண தோள்மீது நீ தூக்கிய நிமிடங்கள் இன்று உன்னை தூக்கி இடுவரையில் வைக்கும் கோலம் காண்கிறேன்   என் பிஞ்சு கைகளில் ஒருவாய் நீ ஊட்டி மகிழ்ந்த நிகழ்வுகள் கரைவதற்குள் உன் வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேன் உயிர் அற்ற சவமாய்   கண்ணீர்துளிகளும் வறண்டுவிட்டது உயிர் இருந்தும் உணர்வோ செத்துவிட்டது   தந்தை மகன்  பந்தங்கள்  யாவும் முடிகிறது தீ பந்தத்தில் எரிகிறது என் பாதி உயிர் உள்ளுக்குள்  எரிந்து முடித்தது என் மீதி உயிர் -உயிர் எறிதல் ......!!!!!!!       []                                                            38. அவமானம்     தெய்வ மிருகம் தொடரும் முடிவிலா வேட்டை உயிரோடு ஒருதெய்வம் பறித்தும் மனம் நிறையா கொடிய வேட்டை   என் நிலையின் வீழ்ச்சி சொந்தங்களில் இதழ்களில் மாற்றட்ட மகிழ்ச்சி   கிடைத்த நல்தருணங்கள் யாவும் காற்றில் கரைந்தன தந்தையின் கனவே குறிக்கோளாய்  ஆயின   விடாமல் துரத்துகிறேன் என் கனவுகளை விடாமல் என்னை துரத்த காண்கிறேன் வீழ்ச்சிகளை   கண்ணீரோடு என் மானமும் கரைகிறது கையாலாகாதவனாய் நாட்கள் கரைகிறது   கட்டணமில்லா அறிவுரைகள் ஓய்வில்லாமல் உதவி கரம்  நீட்ட ஏங்குகிறேன் ஆளில்லாமல்   வேலையில்லா தருணம் காதலிக்கும் உள்ளுக்குள் வேகும் வெகுளியான  வாழ்க்கை கடக்கிறேன் வெந்தனலாய் .......!!!!!!!!!!           []                                                                39. கண்ணீர் துளிகள்     கிடைத்த நல் வேலைகள் யாவும் தட்டிவிட்டேன் முழுமுயற்சிகள் யாவும் தந்தை கனவுகளில் கொட்டிவிட்டேன்   சொந்தங்களின்  ஏளன சிரிப்பு மேல்தட்டு வர்கத்தின் வயிறெறிப்பு   இடைவிடா குடச்சல்களில் வேலைதேடி ஒருபயணம் திசைதெரியாமல் தொடர்கிறேன் ஒரு இலக்கில்லா பயணம்   விதியின் சாதியோ வீழ்ச்சிகளே உச்சம்  நடுத்தெருவில் நிற்கும் நிலைதான் மிச்சம்   உதறிய உறவுகளிடம் உதவி வேண்டிய நிலை உயிரோடு என்னை புதைக்கும் அவல  நிலை   காதலிக்கோ கனவுகள்  கைகூடியது கண் திறந்து என் நிலை பார்க்காமல் என்னை கடந்து சென்றது    கேலி சிரிப்பும் அனுதாப பார்வைகளுமே என் சொத்துக்கள் உயிரற்ற சவமாய்  வழிகிறது இமையோர கண்ணீர் துளிகள் .......!!!!!!!!!!                                                           []                                                                   40. முடிவிலா சோகம்     சொந்தங்கள் தரும் சோகம் ஒரு பக்கம் உன் காதலின் வலிகளோ மறுபக்கம்   இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறேன் என் தந்தையின் நினைவுகளால் எரிகிறேன்   உன்னுள் காண்கிறேன் புது மாற்றங்கள் உன் வாழ்வில் உதிக்கிறது புது சொந்தங்கள்   கண்டுகொள்ளலாம் உன் வாழ்க்கை  நீ காண்பதை காண்கிறேன்   சூரிய ஒளி புழுவாய் உள்ளுக்குள் புளுகி சகுகிறேன்   தினம் தினம் கண்ணீர் படலங்கள் அனைவரின் வாழ்க்கையும் ஆனது கலர் படங்கள்   வறுமை கயிறோ இறுக்க  பிடிக்கிறது விழிபிதுங்கி என் இதயமும் தவிக்கிறது   திறமைகள் யாவும் திராணியற்று கிடக்கிறது முடிவிலா பல சோகங்கள் உள்ளுக்குள் கொட்டிக்கிடக்கிறது ......!!!!!!                                                       []                                                    41. பொய் காதலி     புது மாற்றங்கள் உன்னுள் என் உயிர் காதலியே உன் நிஜ தோற்றங்கள் என் கண்ணுள்   என்னை இமைமூடவிடாமல் நீ பேசிய காதல் பாஷைகள் காணல்  நீராய் கரையும்  அழகை கண்ணகிறேன்   புதுல் நபரின் ஈர்ப்புகள் மெல்ல துளிர்விடும் அழகையும்  நான் பார்க்கிறேன்   வேதனைகளில் இருப்பிடமான என் வாழ்க்கையில் புது வேதனையாய் நீ முளைத்தாய்   என் வாழ்வின் பிடிமானம் நீ மட்டுமே என்பதை ஏன் மறுத்தாய் புது நபரின் உரையாடல்கள் மணிக்கணக்காய்   நீ செய்யும்  துரோகங்கள் எழுத தொடங்குகிறேன்  பாவக்கணக்காய் என் வேதனைகள் யாவும் ஒருகணம் கூட விளங்கவில்லை   உன் மீது கொண்ட நம்பிக்கை யாவும் மெல்ல உடைத்தாய் காதலியே வாய்மூடாமல் பொய் உரைக்கும் நீயே ஆனாய்  -என் பொய் காதலியே .......!!!!!!!!                                                          []                                                                        42. துரோகம்     உயிர் எரித்த தந்தையின் வலிகள் ஆறுவதற்குள் என்னை கட்டி அணைக்கிறது  உன் துரோகங்கள்   கனவிலும் நான் கண்டதில்லை உயிரோடு ஒன்றாகி உயிர் எரிக்கும் வேதனை   வேலை இல்லா என் வாழ்க்கை வேதனைகளிலேயே  முடிகிறது வேலையுள்ள ஒருவனின் கரம் உன் உடலை தீண்டுகிறது   கண்முன்னே காண்கிறேன் உன்னை நானும் அவனுடன் ஒருதுளி குற்றம் இல்லாமல் பொய்யுரை உடனுக்குடன்   என் நிலை புரியா உனக்கு புது உறவின் ஆடம்பர அணிவகுப்பு   வாய் விட்டு கதறுகிறேன் என் காதலுக்காக வீதியில் விட்டுவிட்டு செல்கிறாய் காசுக்காக   இறப்புகள் ஆறுமுன் இழப்புகள் ஆரா வடுவாய்  இருதயத்தில் -உன் துரோகம்....!!!!!!!                                              []                                                    43. பிரிதலும் –புரிதலும்     கண்னோடு பேசிய வார்த்தை யாவும் காற்றோடு கரைகிறதே -உன்னோடு  பேசிய நாட்கள் யாவும் நெருஞ்சி முள்ளாய்  நெஞ்சை தேய்கிறதே   கட்டு கடங்கா  காதல் காட்டியவள் நீயடி பல காரணங்கள் காட்டி கழட்டி விட்ட பொய்காதலியும் நீயடி   உன்னை தொடாமல் காதலித்ததுதான் பாவமோ ? உன்னை மட்டுமே காதலித்ததுதான் சாபமோ   வேதனைகளின் இணை இல்லா விளையாட்டு நீ நடத்தும் பொய் காதல் விளையாட்டு   விழிக் கண்ணீரில் சபிக்கிறேன்  என் மரணம் வரை மன்னிக்காது உன் துரோக துளிகள்    எதை நினைத்து நானும் அழுவது விழி இருந்தும் உணர்கிறேன் கார் இருளை   இடைவிடாமல் தொடர்கிறது உன் புது காதல் பணம் படைத்தவனின் ஆடம்பர காதல் -பிரிதலில் புரிதல் ..........!!!!!!!                                                  []                                                    44. நீ தரும் பரிசு     ஏமாளியாய் போன வாழ்க்கையில் கோமாளி வேஷம் எனக்கு  நடைப்பிணம் எப்போது ஆகுமோ சவப்பிணம்  என்ற ஏக்கம் உனக்கு   கொஞ்சிய நாட்கள் யாவும் நினைவில்  வைத்தாயடி விழி கண்ணீரோடு உன் கால்களிலும் என்னை விழவைத்தாயடி   ஏமார்ந்து வலிகள்  என்னுள் -வெடிக்கிறது அக்னி பிழம்பாய் என் நாவினுள்    நீ வேண்டும் என்ற பிடிவாதம் என்னுள் நான் வேண்டாம் என்ற பிடிவாதம் உன்னுள்   புது உறவின் பண போதை மயக்கம் காண்கிறேன் பண போதை மயக்கத்தில் உன்னையும் காண்கிறேன்   நடுத்தவர்கத்தின் சாபக்கேடு என்பது தான்  இதுவோ ? என் தகுதி மீறிய ஆசையின்  விலைதான் இதுவோ ?   உள்ளக்காதலை உன்னிடம் கேட்கிறேன் புதுக்காதலனின் புகைப்படம் நீ காட்டுகிறாய் - நீ  தந்த பரிசு .....!!!!!!                                             []            45. இமை ஓரம் உன் துரோகம்     சுமந்த அன்னையின்  அரவணைப்பில் கரைகிறது காலம் அனைத்தும் இழந்து அணிகிறேன் ஆண்டிக்கோலம்   முயற்ச்சிகளோ  முடிவிலா வினைவாய் போனது முயன்றதால் என் வாழ்க்கையும் வினைவானது   வேலைதேடி அழைக்கிறேன் திசை இல்லா பறவையாய் புது காதலோடு நீயும் மகிழ்கிறாய் புது காதல் பறவையாய்   நீ  தந்த அழுத்தங்கள் ஆகின மனஅழுத்தங்கள் நீ தந்த நினைவுகள் யாவும் ஆகின உயிர்கொள்ளி  நிமிடங்கள்   இறைவா வந்து அணைத்துக்கொள்ள உன் பாத சுவடுகளில் அரவணைத்துக்கொள்   கடக்கும் இரவுகள் யாவும் கண்ணீரோடு போராட்டங்களே வாடிக்கையாய் என் வாழ்க்கையோடு   நீ தந்த துரோகம் என்றும் மறக்காதே கண்மணியே  இமை தாண்டி வழிகிறது குருதியில் உன் துரோகங்கள் ......!!!!!!     []                                                46. கல்லாய் போன கடவுள்     திக்கற்றோருக்கு தெய்வமே துணையாம் நான்  சிந்தும் கண்ணீர்க்கும்  தெய்வமும் துணையாம்   கல்லாய் போன மனங்களை  காண்கிறேன் முதல்முறை கல்லாய் போன கடவுளைக் காண்கிறேன்   அளவிலா துரோகங்கள் நீ கொடுத்தாய் ஏனோ இருக்கரங்கள் நீட்டி காக்க மறந்தாய்   இறைவா உன்னை நிந்திக்கிறேன் பிரிவிலும்  அவளை சந்திக்கிறேன்    உடலில் உயிரும் பாரமானதேனோ ? வாழ்வில் கண்ணீரும் என் உறவுதானோ ?   கிடைத்த அனைத்து  உறவுகளும் விலகியதே உயிர் மட்டும் என் உணர்வாய் உலவுகிறதே   வரம் வேண்டும் எனை  படைத்த இறைவனே வலி இல்லா மரணம் தருவாய் … கல்லாய் போன என் இறைவனே ......!!!!!!!!                                            []                                                     47. காலனும் காலமும்     கூற்றுவனே ஒரு உண்மை கூர்வாயா ? வலி இல்லா ஒரு நொடியில் மரணம் தருவாயா ?   விதியின் பெயரில்  என் பிதாவை அழைத்துக்கொண்டாய் வீதியில் நிற்கும் என்னை ஏனோ அழைக்க மறுக்கிறாய்   தினம் தினம் புது புது துரோகங்கள்  தேடுகிறேன் நான் செய்த பாவங்கள்   விழிநீரும் வினாவாக ???? முகம் சிரித்த நாட்கள் யாவும் கனவாக   பிழைக்க வழியில்லை பிழைகளாய்  ஆனது   என் வாழ்க்கையின் எல்லை    காலமே கொஞ்சம் கருணை காட்டு இறைவனே ஒருநாள்    நானும் உறங்க கொஞ்சம் இரக்கம் காட்டு   விழி  நீரும் வியர்வையாய்  கசிகிறது காலனின் காலத்தின் விளையாட்டு முடிவிலா தொடரும் விளையாட்டு .......!!!!!!                                                     []                                                 48. கவி கிறுக்கல்கள்     வலிகளை வரிகளில் வடிக்கிறேன் வலியில்லா வாழ்க்கை வேண்டுகிறேன்   மை  தொட்டு வரைந்த வரிகள் யாவும் இன்று கண்ணீர் துளிகளில் வரைகிறேன்   கண் இருந்தும் குருடனாகி போகிறேன் காதலில்  கவி கிறுக்கி வடிக்கிறேன் அவள் பொய் காதலை   வெற்றுக்காகிதமாய் போகிறது வாழ்க்கைக் காவியம்   வலிகளில்  வடிக்கிறேன் ஒரு உயிர் ஓவியம்   கவி கிறுக்கியே கிருக்கனாகிறேன் இன்று ஊரறிந்த கிருக்கனாகிறேன்   நல்லவனாய் நான் வாழ்ந்ததற்கு நீ தந்த பரிசு மனங்களில் ரணகளங்கள் காணும் இமையே பரிசு   வேதனையின் உளறல்கள் யாவும் கிறுக்கல்கள்   இடைவிடா வலிகளில் கிறுக்கியே  கிருகனாய் -கவி கிறுக்கனாய் ......!!!!!!!!       []                                                                                                                                     49. சாபம்     போன ஜென்ம பாவங்கள் விடாமல் துரத்துகிறது விடைதேடி ஓடியே கால்கள் தளர்கிறது    மனமோ  ஆனது ஊமையாய்  பித்தனாய் அலைகிறேன்  பலநாளாய்   விழாத கால்களும் இல்லை விழி இரண்டில் தூக்கமும் இல்லை   உறவாடிய உறவுகளுக்கு உறுபடாதவன் நான் காசு கேட்கும் காதலிக்கு கையாலாகாதவன் நான்   கர்மாவே எரித்து விடு என் ஆன்மாவே நான் உயிர் வாழ ஒரு பொருள் என் காட்டிடு பராமபிதாவே     சபலமில்லா காதலுக்கு கிடைத்த பெயர் சைக்கோ உன் முன் முழு பித்தனாய் வாழும்  நிலைதான் எனக்கோ ?   சுமக்கிறேன் நீ செய்த பாவத்தையும் உனக்காக காதலியே  என்  இறுதி மூச்சில் கலப்பாய எனக்காக -உன் காதல் சாபம் .........!!!!!!!                                                                                                                                                                      []                                                                                50. சைக்கோ     உண்மைக் காதல் யாவரும் சைக்கோ பெண் பொய் காதலும் சைக்கோ   நல்லவனாய் வாழும் நடுநிலை மனிதனும் சைக்கோ பிறர் வாழ வழிவிடுபவரும்  இங்கு சைக்கோ   பிறர் மனம் நோகா வாழ்பவனும் சைக்கோ பிறர்பொருள் ஆசைகொள்ளா இருப்பவனும் சைக்கோ   உண்மை பேசும்  யாவரும் சைக்கோ பிறர் புறம் பேசாதவாறும் ஒருவகை சைக்கோ   கிடைத்ததை வைத்து திருப்தி கொள்பவன் சைக்கோ - பிறர் மேல் பொறாமை கொள்ளா இருப்பவனும் சைக்கோ   வறுமையிலும் தன்மானம் பார்ப்பவனும் சைக்கோ தன்மானம் காக்க சினங்கொள்பவனும்  சைக்கோ   இத் தகுதிகள்  யாவும் இருந்தால் நீயும் ஒரு சைக்கோ இத் தகுதிகளால் வாழ்க்கை  தொலைத்த நானும் ஒரு சைக்கோ...........!!!!!!!!                                                                                                                                                                            99             []