[] சுயாட்சி விதி கள ஆய்வுக்குறிப்புகள்- தரவிதிகள் சத்யாகிரகத்திலிருந்து தொடக்கச் செய்திகள் இந்த வெளியீட்டுக்கு உரிமைகள் செறிக்கப்பட வில்லை, இது பொதுக்களத்திற்குக் கொடையளிக்கப் படுகிறது. ஒயருக்கு அளித்த நேர்முகம் அனுமதியோடு மறுஅச்சுச் செய்யப் பட்டுள்ளது. ஆரோன் ஸ்வார்ட்ஸின் கட்டுரை முதலில் அவரது வலைப்பூவில் 2009இல் வெளியாகியது. பிறகு லாரல் ரூமா, டேனியல் லாத்ராப் பதிப்பித்த 'ஓபன் கவர்ன்மெண்ட்'டில் (ஓ ரெய்லி மீடியா, செபாஸ்டபோல் 2011) வெளியாயிற்று. மார்ட்டின் ஆர். லூகாஸ், டாமினிக் உஜாஸ்டிக், பெத் சைமன் நோவாக், தர்ஷன் சங்கர், அனிருத் தினேஷ், அலெக்ஸாண்டர் மாக் கிலிவ்ரே ஆகியோருக்கு அவர்கள் மறுபார்வை செய்து உதவியதற்கு ஆசிரியர்கள் நன்றி செலுத்த விரும்புகிறார்கள். அட்டை வடிமைப்பு, உற்பத்தி உதவி, பாயிண்ட் பி. ஸ்டூடியோ. இந்தப் புத்தகத்துக்கான எழுத்துரு, Noto Serif Tamil Condensed. புத்தகம் எச்டிஎம்எல் 5 இல் எழுதப்பட்டு, சிஎஸ்எஸ் நடைத்தாள்கள் மற்றும் பிரின்ஸ் எக்ஸ்எம்எல் திட்டத்தின் வாயிலாக பிடிஎஃப்-ஆக மாற்றப்பட்டது. இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இ-பாஷா சேது லாங்வேஜ் சர்வீஸஸ் (eBhasha Setu Languages Services) மூலமா செய்யப்படுகிறது. Website: http://ebhashasetu.com காந்தி நிழற்படங்கள் மகாத்மா காந்தியின் சேகரிப்புப் படைப்புகள் (CWMG)சிடபிள்யூஎம்ஜியில் இருந்து வந்தவை. அவற்றின் மின்னணுப் பதிப்பு கிடைக்குமாறு செய்ததற்காக ஆசிரியர்கள் சாபர்மதி ஆசிரமத்துக்கு நன்றியுரைக்கிறார்கள். வரலாற்று நிழற்படங்கள் இந்திய அரசாங்கத்தின் தகவல் அமைச்சகத்திலிருந்து பெறப்பட்டவை. அவற்றை ஆன்லைனில் கிடைக்கச் செய்தமைக்கு அந்த அமைச்சகத்துக்கு ஆசிரியர்கள் நன்றி உரைக்கின்றனர். இப் புத்தகத்தின் சோர்ஸ்கோட்: https://public.resource.org/swaraj வெளியீடு: பப்ளிக் ரிசோர்ஸ்.ஓஆர்ஜி.ஐஎன்சி., செபஸ்டபோல், கலிஃபோர்னியா, 2018. உரிமை செறிவில்லை. ஐஎஸ்பின் 978-1-892628-12-1 (தாள்கட்டுப் பதிப்பு) 10 9 8 7 6 5 4 3 2 1  சுயாட்சி விதி கள ஆய்வுக் குறிப்புகள் தரவிதிகள் சத்யாக்கிரகம் கார்ல் மாலமூத் சாம் பித்ரோதா [1906. சிடபிள்யூஎம்ஜி, பாகம் 5, ப. 368, காந்திஜி, இந்திய ஆம்புலன்ஸ் படையின் தலைவர், 1906.] 1906. சிடபிள்யூஎம்ஜி, பாகம் 5, ப. 368, காந்திஜி, இந்திய ஆம்புலன்ஸ் படையின் தலைவர், 1906. உள்ளடக்கம் வாசகருக்கு சாம் பித்ரோதா, அகமதாபாத், 2016 அக்டோபர் 3. இந்தியப் பொறியியலாளர் நிறுவனத்தின் முன்னர் ஆற்றிய சொற்பொழிவைத் தொடர்ந்து கூடுதல் குறிப்புகள் கார்ல் மாலமூத், 2016, அக்டோபர் 5, ஏர் இந்தியா 173 விமானத்திற்குள் சாபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டது பற்றிய குறிப்பு 2017, ஜூன் 14, இணையக் காப்பகம், சான் பிரான்சிஸ்கோ அமெரிக்காவிலும் இந்தியாவிவிலும் அறிவுக் கிடைப்பு, டாக்டர் சாம் பித்ரோதாவின் குறிப்புகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அறிவுக் கிடைப்பு, கார்ல் மாலமூதின் கருத்துகள் கார்ல் மாலமூத், நேஷனல் ஹெரால்ட், 2017, ஜூலை 8, சிறப்பு 75 ஆண்டு நினைவுப் பதிப்பு டிஜிட்டல் (எண்ணியல்) யுகத்தில் சத்தியாகிரகம்: ஒரு தனிநபர் என்ன செய்ய முடியும்? 2017 அக்டோபர் 15, ஹேக் கீக் கீக்அப் (வருகைதரு திறானளர்களின் பொதுச் சொற்பொழிவுகள்), நியூமா (NUMA) பெங்களூரு. தகவல் உரிமை, அறிவின் உரிமை: டாக்டர் சாம் பித்ரோதாவின் குறிப்புகள் தகவல் உரிமை, அறிவு உரிமை: கார்ல் மாலமூதின் கருத்துரைகள் தி ஒயர், அனுஜ் ஸ்ரீநிவாஸ், 2017 அக்டோபர், 26 (அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது) நேர்முகம்: "இந்தச் சிறிய யுஎஸ்பி இயக்கி 19,000 இந்தியத் தரவிதிகளை அடக்கியிருக்கிறது. இதைப் பொதுமக்களுக்கு அளிக்கவேண்டாமா? கார்ல் மாலமூத், கலிஃபோர்னியா, 2017 டிசம்பர் 4-25 சுயாட்சி விதிகள் மீதான குறிப்பு பின்னிணைப்பு: அறிவு பற்றிய கீச்சுகள் பின்னிணைப்பு: வெளிப்படைத் தன்மை எப்போது பயனுள்ளது? தேர்ந்தெடுத்த நூல்கள் தொடர்புகள் அட்டவணை [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 5 (1905-1906), முகப்பு, நாள் குறிப்பிடப் படவில்லை.] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 5 (1905-1906), முகப்பு, நாள் குறிப்பிடப் படவில்லை.. வாசகருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் பேச்சுகள் மற்றும் அறிக்கைகளின் பதிவுகள் இந்தக் களக் குறிப்புகளில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் சொற்கள், சிறு சிறு திருத்தங்களுடன், நாங்கள் பேசிய சொற்களே ஆகும். இந்தப் பதிவு, எங்களை ஒன்றாக இணைத்த இந்தியத் தரவிதிகள் என்ற பிரச்சினையில் தொடங்குகிறது. அத்தகைய ஆவணங்கள் 19,000 உள்ளன. அவை அனைத்தும் இந்திய அரசால் வெளியிடப் பட்டவை. இந்தத் தரவிதிகள் உலகத்தைப் பாதுகாப்பாக நிர்வகிக்க வேண்டிய தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருக்கின்றன. அவை பாதுகாப்புப் பற்றிய சட்டங்கள். பொது மற்றும் தனியார் கட்டிடங்களின் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பு, தொழிலகங்களில் துணிநெய்யும் எந்திரங்களின் பாதுகாப்பு, அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்லுதல், உணவுகள், மசாலாப் பொருள்களின் கலப்படக் கட்டுப்பாடு, நீர்ப்பாசன, வெள்ளக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் போன்ற நமது நவீன தொழில்நுட்ப உலகிற்கு முக்கியமான பல தலைப்புகளை இந்தியத் தரவிதிகள் உள்ளடக்கியுள்ளன. அந்த ஆவணங்கள், உலகின் மற்ற பகுதிகளில் உள்ளதுபோலவே இந்தியாவிலும் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அவை கிடைக்கவில்லை. அவை பதிப்புரிமைக்கு உட்பட்டிருந்தன, நியாயமற்ற தொகைகளுக்கு விற்கப்பட்டன, தொழில்நுட்ப வழிகளால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. நாங்கள் அந்தத் தரங்களை வாங்கி, இலவசமான, தடையற்ற பயன்பாட்டிற்காக இணையத்தில் பதிவிட்டோம், இந்திய அரசாங்கத்திற்குக் கடித வாயிலாகவும் பின்னர் எங்கள் நடவடிக்கைகளின் முறையான கோரிக்கைகளாலும் தெரிவித்தோம். தரங்களுக்கான புதுப்பிப்புகளை அரசாங்கம் வழங்க மறுத்தபோது, ​​தில்லியிலுள்ள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை நாங்கள் கொண்டு வந்தோம். இதை சத்தியாக்கிரகமாக, "ஆத்ம-சத்தியம்" என்ற முறையில் ஒரு வன்முறையற்ற எதிர்ப்பு நடவடிக்கையாக நாங்கள் செய்தோம். நாங்கள் மகாத்மா காந்தியின் சீடர்கள் என்றும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நீதிக்கும் ஜனநாயகத்திற்குமான போராட்டங்களின் வரலாற்று மாணவர்களாக இருக்கிறோம் என்றும் நாங்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்கிறோம். பொறியியலாளர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும், நகரங்களைப் பாதுகாப்பாக வைக்கவும், குடிமக்களுக்குத் தெரிவிக்கவும் நாங்கள் இச் செயல்களில் ஈடுபட்டோம். இச் செயல்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்க மாட்டோம். இந்த ஆவணங்களை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த மதிப்புமிக்க தகவல்களைப் பரப்புவதற்கு ஓர் அழுத்தமான தேவை இருந்தது. ஒரு காரணத்திற்காக இந்த புத்தகத்தை "சுயாட்சி விதித்தொகுப்பு" என்று அழைக்கிறோம். நாம் "விதித்தொகுப்பு" என்று கூறும்போது, ​​நமது கணினிகள் இயங்கும் மூலக் குறியீடு அல்லது இணையம் வரையறுக்கும் நெறிமுறைகளை விட அதிகமான அர்த்தத்தை அளிக்கிறோம். விதித்தொகுப்பு அல்லது விதிநூல் என்ற சொல்லினால், இணையத்தை இயக்கும் நெறிமுறை களையும், நமது ஜனநாயகத்தின் இயக்க முறைமைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான நெறிமுறைகளையும் குறிக்கிறோம். அதேபோல், சுயராஜ்யம் என்பது சுய ஆட்சிக் கொள்கை. ஓர் அரசாங்கம் மக்களுக்குச் சொந்தமானது, அது மக்களின் பொது விருப்பத்தால் ஆளப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. சுயாட்சி விதி என்பது ஒரு வெளிப்படையான ஆட்சிப் புத்தகம், மக்களுக்குச் சொந்தமான, மக்கள் அறியவேண்டுகின்ற ஒரு புத்தகம். ஒரு வெளிப்படையான விதிப்புத்தகம் இல்லாவிட்டால், இணையம் நம்மிடையில் மிக வித்தியாசமாக இருந்திருக்கும். நமது உட்கட்டமைப்புகள் யாவும் வெளிப்படையாக, யாவரும் காணக்கூடிய விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம், அந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் அதை மேலும் மேம்படுத்த முடியும் என்பதையும் எவரும் புரிந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையாகும், தகவலை ஜனநாயகப் படுத்தல், நுழைவுக்கான தடைகளை அகற்றுதல் என்று சொல்வதன் அர்த்தம் இதுதான். உண்மையான சுயாட்சிவிதியைக் கொண்ட ஒரு சமுதாயத்தில், எல்லா மனித அறிவையும் உலகமுழுவதும் கிடைக்கச் செய்வது போன்ற உற்சாகமான இலக்குகளை அடைய, மேலும் போராடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். நமது மிகப் பெரிய கனவுகளையும் தாண்டி ஒரு வெளிப்படையான அமைப்பு வளர முடியும் என்பதை இணையம் கற்றுத் தந்துள்ளது. அந்தப் பாடத்தை இன்னும் பரந்த அளவில் பயன்படுத்த வேண்டும். சுதந்திரத்திற்கான காந்தியின் இயக்கம், இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றியது மட்டுமல்ல. உலகெங்கிலும் சுய ஆட்சி, ஜனநாயகம், காலனிய நீக்கம் ஆகியவற்றைப் பற்றியதுமாகும். எல்லோருக்கும் சம வாய்ப்பு, தகவலை ஜனநாயகப்படுத்தல், தர்மகர்த்தா முறை, பொது நலன்களை போஷிக்கும் நம்பிக்கை ஆகியவை காந்தியின் சிந்தனைகளிலும் அவர் வழிவந்தவர்களிடமும் ஆழமாகப் பதிந்துள்ளன. நாம் பயன்படுத்தும் நுட்பங்கள் நமக்கு முன்னால் இருந்தவர்களிடமிருந்து தூண்டப்பட்டவை. நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் இக்கட்டுகளும், ஆபத்தானவை என்று சொல்லக் கூடியவை அல்ல. அவற்றைத் தொடர்ச்சியான போராட்டத்தின் படிப்பினைகளாக நாம் ஏற்கிறோம். சத்தியாக்கிரகத்தின் உத்திகளையும் முறைகளையும் பெரிய, சிறிய பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தலாம், ஆனால் ஜனநாயகத்தை இயங்கவைப்பதற்காக முயற்சி செய்யவேண்டும் என்பதே முக்கியம். நாம் ஜனநாயகரீதியாக இயங்கும் அரசாங்கங்களைக் கொண்டிருக்கிறோம். நாம் பொதுச் சேவையில் ஈடுபடாவிட்டால், நாமும் கல்விபெற்று, நமது ஆட்சியாளர்களுக்கும் கல்வி அளிக்காமல் இருந்தால் உலகின் அறங்காவலர்கள் என்ற நமது நிலையை இழந்துவிடுவோம். இந்த புத்தகத்தில் அதிக எண்ணிக்கையில் நிழற்படங்களை நாங்கள் சேர்த்துள்ளோம். இந்தப் புத்தகம் ஒரு கலவையாக உள்ளது. மகாத்மா காந்தியின் தொகுப்புப் படைப்புகளிலும், தகவல் அமைச்சகத்தின் காப்பகங்களிலும் இருந்த பழைய நிழற்படங்களைப் பார்க்க ஆசைப்பட்டு இதில் சேர்த்திருக்கிறோம். காரணம், நாம் நிழற்படங்களால் எழுச்சி பெறுகிறோம். எல்லா அறிவும் ஏற்கெனவே இருந்ததன்மீது கட்டப்படுவதாகும். எல்லாருக்கும் இணையத்தில் கிடைக்கக்கூடிய விஷயங்களைக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்த அற்புதமான வளங்களை ஆராய்வதற்கு உங்கள் நேரத்தைச் செலவிட்டு, உங்கள் சொந்தப் பணியிலும் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். அறிவு உலகமுழுவதும் கிடைக்க வேண்டியது மனித உரிமைளில் ஒன்று. ஆனால் நாம் வெறுமனே அறிவை நுகருவதை விட அதிகமாகச் செயலில் ஈடுபட வேண்டும். பொதுப் பணியில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் தொழில்நுட்பக்காரர்கள். நாங்கள் வாழ்நாள் முழுவதும் தொலைத்தொடர்பிலும் கணினிகளிலும் வேலை செய்தவர்கள். உலகத்தையே மாற்றிய இணையம் ஓர் அற்புதப் படைப்பு. ஆனால் அதற்கு உள்ளார்ந்த ஆற்றல் மேலும் உள்ளது. எங்களைப் போன்ற தொழில்நுட்பவாதிகள் நிறையப் பேர் தங்கள் நாட்களைப் புதிய செயலிகளில் செலவிடுவதையும் மேலும் விளம்பர கிளிக்-இல் ஈடுபடுவதையும் நாங்கள் மனக்கண்ணில் காண்கிறோம். உலகில் மேலும் மேலும் சமமின்மை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் அதிக அளவிலான உலக வணிகங்கள் மத்தியஸ்தம் அல்லது ஏகபோகத்தின் வாயிலாகத் தனிப்பட்ட அனுகூலங்களைப் பெற்று மேலும் சமமின்மையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன. நமது சக ஊழியர்கள் பலரும் பொதுப் பணிக்கு நேரம் செலவிட்டு, தனிப்பட்டோர் ஆதாயத்தை மட்டும் தேடாமல் பொதுநலத்தில் கவனத்தைக் குவிக்கின்ற ஒரு சிறந்த இடமாக நமது உலகத்தை மாற்றுவதற்கு காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். தகவல்களை ஜனநாயகப் படுத்துவது சிலருக்கு ஒரு கடினமான இலக்காகவும், பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இக்காலத்தில் ஈடுபடுவதற்குத் தகுதியற்ற ஒன்றாகவும் தோன்றக்கூடும். மக்கள் பட்டினியில் வாடும்போது, நமது பூமி அழிக்கப்படும்போது நாம் கணினிகள். மற்றும் இணைய வலைப்பின்னல்களில் எவ்வாறு கவனத்தைக் குவிக்க முடியும் என்று சந்தேகவாதியான ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்கக்கூடும். இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலில், கணினிகளும் இணைய வலைப்பின்னல்களும் நமது படைப்புகள். நாம் விரும்பும் அனைத்தையும் அவற்றால் செய்ய முடியும். ஆனால் நமது மெய்யான விடை, அறிவு கிடைப்பதென்பது ஒரு கட்டடம் என்றால், தகவலை ஜனநாயகப் படுத்தல் ஓர் இலக்கிற்கான வழி, அனைவரும் மேற்கட்டக்கூடிய ஓர் அடித்தளம் ஆகும். இந்த அடித்தளத்தை நாம் சரியான இடத்தில் இட்டால், நம் உலகத்தை மறுகண்டுபிடிப்புச் செய்வோம் என நம்புகிறோம், பற்பல நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் பலர் தங்கள் உலகங்களை மறுகண்டுபிடிப்புச் செய்துள்ளனர். பொதுவான நன்மைக்கு பதிலாக ஒரு சிலரின் கைகளில் வளங்களை மேலும் மேலும் செறிப்பதில் கவனம் செலுத்துகின்ற நமது நிதி அமைப்பிலுள்ள ஆழமான குறைபாடுகளை நாம் மாற்ற முடியும். சுகாதாரப் பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு, உறைவிடம் ஆகியவற்றை நாம் வழங்குகின்ற முறைகளில் நாம் புரட்சியைச் செய்யலாம். நாம் நமது குழந்தைகளுக்கு, நமக்கும் எவ்வாறு கல்வி அளிக்கிறோம் என்பதில் புரட்சியை ஏற்படுத்தலாம். நமது அரசாங்கங்கள் வேலைசெய்யும் முறையில் நாம் புரட்சியை ஏற்படுத்த முடியும். நமது பூமியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தத் தொடங்குவோம். தகவலை ஜனநாயகப்படுத்தல் உலகத்தை மாற்ற இயலும். அறிவைக் காலனி நீக்கம் செய்வதன் மூலம் உலகை மாற்ற முடியும். நாம் இந்தப் பயணத்தில் ஒன்றாக ஈடுபடுவோம். கார்ல் மாலமூத், மற்றும் சாம் பித்ரோதா. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 3 (1898-1903), முகப்பு. 1900த்தில் ஜொஹன்னஸ்பர்க் ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 3 (1898-1903), முகப்பு. 1900த்தில் ஜொஹன்னஸ்பர்க் [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 9 (1908-1909), முகப்பு, லண்டனில் காந்திஜி, 1909. ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 9 (1908-1909), முகப்பு, லண்டனில் காந்திஜி, 1909. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 20 (1921), முகப்பு, 1921இல் காந்திஜி. ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 20 (1921), முகப்பு, 1921இல் காந்திஜி. இந்தியப் பொறியியலாளர் நிறுவனத்தின் முன்னர் ஆற்றிய சொற்பொழிவைத் தொடர்ந்து கூடுதல் குறிப்புகள் சாம் பித்ரோதா, அகமதாபாத், 2016 அக்டோபர் 3. [உரையை முடிக்கிறார்] நன்றி! [கை தட்டல்] எனக்கு இணையத்தில் கடந்த 25 அல்லது 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கார்ல். இணையத்தில் முதல் வானொலி நிலையத்தை உருவாக்கியவர். [கை தட்டல்] கார்ல், அரசாங்கத் தகவல்களை எடுத்துப் பொதுமக்களுக்கு அளிக்கும் செயல்பாட்டாளராக உள்ளார். ஆனால் அரசாங்கம் தனது தகவல்களைப் பொதுமக்களுக்கு அளிக்க விரும்பவில்லை, எனவே கார்ல் தனித்த இலாப நோக்கமற்ற ஓர் அடிப்படை நிறுவனத்தை வைத்துள்ளார். உங்களின் சிந்தனைக்காக இச்செய்தி. எடுத்துக்காட்டாக இந்தியாவில், கட்டடம், பாதுகாப்பு, குழந்தைகளின் பொம்மைகள், எந்திரங்களுக்கு என இந்தியத் தர நிறுவனத்தின் விதிகள் 19,000 உள்ளன. இந்தத் தரவிதிகள் இந்தியத் தர நிறுவனத்தின் மூலம் வெளியிடப் படுகின்றன, ஆனால் மக்களுக்கு இவை கிடைப்பதில்லை. நீங்கள் அதை விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது. தரவிதிகளைப் பொதுவாக்க வேண்டும் என்று உலக முழுவதும் வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவில் தரவிதிகளின் ஒரு தொகுதியை நாங்கள் வாங்கினோம். கார்ல் அதை இணையத்தில் இட்டார். இந்திய அரசாங்கம் பீதியடைந்தது, "நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது. அது பதிப்புரிமை உடையது" என்று கூறியது. அது கிடைக்கிறது, ஆனால் அது உங்களுக்கான தரவிதியாக இல்லை. பொதுமக்கள் அதற்காகப் பணம் செலவழித்துள்ளனர். அது பொதுத் தரவிதி, பொதுமக்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம்பப் படுகிறது. அரசினர் இதை ஒப்புக்கொள்வதில்லை. "நீங்கள் அதைப் பொதுவாக்க முடியாது. நீங்கள் பணம் செலுத்த வேண்டும்" என்று அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் ஒரு கட்டடத்தின் தரவிதியை வாங்க விரும்பினால், அதற்கு 16,000 ரூபாய் ஆகும். இந்தியாவுக்கு வெளியே இருந்தால் நீங்கள் இந்தியக் கட்டுமானத் தர விதியை வாங்க 160,000 ரூபாய் ஆகும். நான் கட்டுமானப் பொறியியல் மாணவனாக இருந்தால், நான் கட்டடத் தரவிதிகளைப் பற்றி அறிய விரும்புகிறேன் என்றால், இந்திய அரசாங்கத்திடம் இருந்து விதிகளை விலைகொடுத்து வாங்க வேண்டும். "இல்லை, அது பொதுத் தகவல்" என்று நாங்கள் கூறுகிறோம். கார்ல் இதற்காக இந்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. "எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது, எங்கும் இது உண்மை. அமெரிக்காவிலும் இது உண்மைதான். ஏனென்றால் நீங்கள் அந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதை அரசு விரும்பவில்லை" என்று நாங்கள் சொல்கிறோம். இந்தப் போராட்டம் அனைத்து மட்டங்களிலும் நடக்கிறது. நாங்கள் அமெரிக்காவிலும் போரிடுகிறோம், ஐரோப்பாவிலும் அதைச் செய்கிறோம். [கை தட்டல்] எண்ணியல் (டிஜிடல்) துறை வளர்ச்சிக்காக இந்தப் போரில் சேருமாறு மக்களை அழைக்கிறோம். எண்ணியல் துறை வளர்ச்சி வன்பொருள் அல்லது மென்பொருளைப் பற்றியது அல்ல. இது போன்ற முயற்சிகளைப் பற்றியதும் ஆகும். உங்கள் சுகாதாரத் தகவலைப் பாருங்கள். அதை யார் வைத்திருக்கிறார்கள்? இது உலகளாவிய ஒரு பெரிய பிரச்சினை. உங்கள் சுகாதாரத் தகவலைக்கொண்டு என்ன செய்வீர்கள்? தனியுரிமைச் சிக்கல்கள், திருட்டு. அமைப்பை வெளிப்படையாக்குவது நமது முக்கியச் சவால். வெளிப்படையான அரசு, வெளிப்படையான தகவல்கள், வெளிப்படையான தளங்கள், வெளிப்படையான மென்பொருளை நாம் பெறவேண்டும். நேற்று நான் காந்தி ஆசிரமத்தில் அஹிம்சையைப் பற்றிச் சிந்தித்தவாறு முழு நாளையும் கழித்தேன். காந்திஜி வெளிப்படையான அரசாங்கத் தளங்களை விரும்பினார். காந்திஜி திறந்த-மூல மென்பொருட்களை விரும்பினார். காந்திஜி இன்று இருந்தால் இதுபற்றி டவிட்டரில் கீச்சுகளை இடுவார். காந்திஜி இன்று முகநூலில் இருப்பார். காந்திஜி இன்று பதிவுகளை இதுபற்றி இடுவார். ஏனென்றால் இது செய்தி ஊடகம், வெளியீடு, அச்சிடுதல், பத்திரிகைகளை அனுப்புவதை-பரிமாற்றத்தைப் பற்றியது. இந்த தகவல்களை அரசு எப்படி, தனக்காக வைத்திருக்க முடியும் என்று கேட்கிறோம். நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டும். காந்திய அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். எண்ணியல் உலகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துங்கள். சத்தியாக்கிரகம் என்றால், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து, அரசாங்கத்திற்கு விளக்கி, "நீங்கள் செய்வது தவறு, பொதுமக்கள் செய்வது சரி. இது பொதுத் தகவல். இது உங்களது தகவல் அல்ல" என்று சொல்லுவது. இது எண்ணியல் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். நான் சொல்வதை நம்புங்கள், பலரும் இதைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் இதன்பின்னுள்ள பெரிய சிக்கலைப் புரிந்துகொள்பவர்கள் உலகில் வெகுசிலர் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் இக்கடமையில் சிறு பங்குண்டு. எங்களுக்கு ஒரு நண்பர்கள் குழு உள்ளது. நான் உலகளாவிய வலைத் தளத்தின் அமைப்பில் இருக்கிறேன். அமைப்பில் என்னுடன் டிம் பெர்னர்ஸ்-லீ இருக்கிறார். வலைத்தளத்தைக் கண்டுபிடித்தவர் அவர். நான் அதை மேம்படுத்துவதில் அவருடன் வேலை செய்கிறேன். எங்களுடன் வேலை செய்யும் எங்கள் நண்பர் வின்டன் செர்ஃப், இணையத்தின் தந்தை ஆவார். டிம் பெர்னர்ஸ்-லீயோ வலைத்தளத்தின் தந்தை. வின்டன் இணையத்தின் தந்தை ஆவார். இந்த மக்களோடெல்லாம் நீங்கள் இருக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள அவர்களுடன் பணிசெய்ய வேண்டும், இவை அனைத்தும் அன்பினால் செய்யப்படும் பணியாக இருக்க வேண்டும். இது ஒரு ஊதிய-வேலை அல்ல. யாரும் வின்ட் செர்ஃபுடன் பணியாற்ற உங்களை நியமிக்கவில்லை. "வலைத்தளக் கண்டுபிடிப்பாளருடன் நண்பர்களாக இருங்கள்" என்று எந்த அரசாங்கமும் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். யாராவது அதைச் செய்ய வேண்டும். கார்லும் நானும் ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டோம். அவர் ஆறு ஏழு நாட்களாக என்னுடன் இருந்திருக்கிறார். அவருக்கு இந்தியாவில் நீதிமன்ற வழக்குத் தாக்கல் செய்வது ஊதியத்துக்கான வேலை அல்ல. அவர் இங்கே போராட வரவில்லை, ஆனால் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது பொது நலத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. இது பொதுநல வழக்காக இருக்க வேண்டியுள்ளது. இங்கு பொதுநலம்தான் இல்லை. எண்ணியல் இந்தியாவில் காந்தியச் சத்தியாக்கிரகங்கள் மிகுதியாகத் தேவைப்படுகின்றன. நன்றி. கார்ல், நீங்கள் இங்கே (மேடைக்கு) வர விரும்புகிறீர்களா? யாரோ உங்களுக்கு ஒரு சிறிய- [கை தட்டல்] கார்லிடமும் இந்த சிறிய சிப்பம் உள்ளது என்பதை மறந்துவிட்டேன். இந்த வட்டில் (டிஸ்கில்), சுதந்திர இந்திய காலப்பகுதியின் படங்கள் 90,000 உள்ளன. [கை தட்டல்] காந்திஜியுடன் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் உள்ளனர். சுயாட்சி இந்தியாவைப் பற்றிய 400,000 பக்க ஆவணங்கள் இதில் உள்ளன. [கை தட்டல்] 19,000 இந்தியத் தரவிதிகளும் உள்ளன. [கை தட்டல்] 435 ஜிகாபைட் நினைவகத்தில் அவை உள்ளன. கார்ல், நீங்கள் இதை அவர்களுக்குப் பரிசாக அளிக்க வேண்டும். [கை தட்டல்] [நிறுவனத்திற்கு வட்டு இயக்கி (டிஸ்க் டிரைவ்) வழங்கல்] [கார்லுக்கு மலர்களை வழங்குதல்] [எஞ்சிய கேள்வி-பதில் நேரத்தின்போது சிறப்பு விருந்தினர்களுடன் கார்ல் மேடையில் அமருமாறு அழைக்கப்பட்டார்] [பொறியாளர்கள் நிறுவனத்தின் சொற்பொழிவுக்குப் பிறகு சாம் பித்ரோதா நிழற்படங்கள் எடுப்பதற்காக நிற்கிறார். ] பொறியாளர்கள் நிறுவனத்தின் சொற்பொழிவுக்குப் பிறகு சாம் பித்ரோதா நிழற்படங்கள் எடுப்பதற்காக நிற்கிறார். [சொற்பொழிவுக்குப் பிறகு வகைமாதிரியான ஒரு கூடுகை. ] சொற்பொழிவுக்குப் பிறகு வகைமாதிரியான ஒரு கூடுகை. [இந்து சுயாட்சிச் சேகரிப்பு மற்றும் 19,000 இந்தியத் தரவிதிகள் கொண்ட டெராபைட் வட்டு இயக்கி ஒன்றை சாம் காட்டுகிறார். ] இந்து சுயாட்சிச் சேகரிப்பு மற்றும் 19,000 இந்தியத் தரவிதிகள் கொண்ட டெராபைட் வட்டு இயக்கி ஒன்றை சாம் காட்டுகிறார். [காந்தி இயக்கிகள் 10இல் 4 தயாரிக்கப்படும் காட்சி. ஒவ்வொரு 1 டெராபைட் மேற்கத்திய டிஜிட்டல் இயக்கியிலும் 19,000 தரவிதிகள், மகாத்மா காந்தியின் தொகுப்பு நூல்கள், 129 அகில இந்திய வானொலி ஒலிபரப்புகள், 12,000 நிழற்படங்கள் உள்ளன. ] காந்தி இயக்கிகள் 10இல் 4 தயாரிக்கப்படும் காட்சி. ஒவ்வொரு 1 டெராபைட் மேற்கத்திய டிஜிட்டல் இயக்கியிலும் 19,000 தரவிதிகள், மகாத்மா காந்தியின் தொகுப்பு நூல்கள், 129 அகில இந்திய வானொலி ஒலிபரப்புகள், 12,000 நிழற்படங்கள் உள்ளன. [காந்தி நடக்கும் படத்தை அச்சிட்டிருக்கும் பருத்தித் துணியால் ஒவ்வொரு இயக்கியும் சுற்றப்பட்டு அதிகாரபூர்வ சிகப்பு நாடாவினால் கட்டிப் பாதுகாக்கப்படுகிறது. ] காந்தி நடக்கும் படத்தை அச்சிட்டிருக்கும் பருத்தித் துணியால் ஒவ்வொரு இயக்கியும் சுற்றப்பட்டு அதிகாரபூர்வ சிகப்பு நாடாவினால் கட்டிப் பாதுகாக்கப்படுகிறது. [காந்தி வட்டியக்கியை குஜராத் வித்யாபீடத் துணைவேந்தர் அனாமிக் ஷாவுக்கு கார்ல் மாலமூத் வழங்குதல். ] காந்தி வட்டியக்கியை குஜராத் வித்யாபீடத் துணைவேந்தர் அனாமிக் ஷாவுக்கு கார்ல் மாலமூத் வழங்குதல். [இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பரிசு வழங்குதல். ] இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பரிசு வழங்குதல். [பேர்ஃபுட் கல்லூரியின் நிறுவனர் திரு. பன்கர் ராய்க்குப் பரிசு வழங்குதல். ] பேர்ஃபுட் கல்லூரியின் நிறுவனர் திரு. பன்கர் ராய்க்குப் பரிசு வழங்குதல். [காந்தி வட்டியக்கியுடன் சாபர்மதி ஆசிரமத்தின் தீனா பட்டேல்.] காந்தி வட்டியக்கியுடன் சாபர்மதி ஆசிரமத்தின் தீனா பட்டேல். சாபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டது பற்றிய குறிப்பு கார்ல் மாலமூத், 2016, அக்டோபர் 5, ஏர் இந்தியா 173 விமானத்திற்குள் இந்தியாவில் அகமதாபாதில் சாபர்மதி ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையை எங்கள் கார் சிரமப்பட்டுக் கடந்தது. இந்த ஆசிரமத்தில்தான் காந்தி வாழ்ந்தார். இங்குதான் அவர் அரசின் தடையைமீறி தமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உப்புத் தயாரிக்கும் பயணத்தை மேற்கொண்டார், இந்தக் கடைசி 18 ஆண்டுகால உந்துதலின் தொடக்கம், இறுதியில் இந்தியாவின் சுயாட்சிக்கு வழிவகுத்தது. எங்கள் காரில் முன் இருக்கையில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில், குஜராத் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு வியாஸ் இருந்தார், குஜராத் மாநிலத்தில்தான் அகமதாபாத் இருக்கிறது. பின்புறத்தில் எனக்குப் பக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இரயில்வே அமைச்சருமான தினேஷ் திரிவேதி இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் புகழ்பெற்ற சாம் பித்ரோதா. இவர் முக்கியத் தொழில்நுட்ப அதிகாரியும் இரண்டு பிரதமர்களின்கீழ் கேபினட் அமைச்சரும், ஒவ்வொரு கிராமத்திலும் தொலைபேசி வசதியைக்கொண்டுவந்து இந்தியாவில் தொலைத் தொடர்புப் புரட்சியைக் கொண்டு வந்தவரும் ஆவார். ஆசிரமத்தின் நுழைவாயில்களில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருந்தது. அன்று அக்டோபர் 2, காந்தியின் பிறந்த நாள். தேசிய விடுமுறை. குஜராத் ஆளுநரும், நாடு முழுவதும் உள்ள பிரமுகர்களும் அவரது பிறந்த நாளில் நடைபெற்ற வரன்முறையான பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எங்கள் கார் வாயிலை நெருங்கியபோது, ​​உடனடியாக நாங்கள் போலீஸ்காரர்களால் சூழப்பட்டோம்; நாங்கள் திரும்பிச் செல்லவேண்டும் என்று கூச்சலிட்டார்கள். ஹிமான்ஷு தனது ஜன்னலைக் கீழே இறக்கி "சாம் பித்ரோதா! தினேஷ் திரிவேதி! பாராளுமன்ற உறுப்பினர்!" என்று கத்தினார். வாயிற்கதவு விரைவாகத் திறந்தது. எங்கள் கார் சேறு நிறைந்த நிறுத்துமிடம் வழியாக விரைந்து சென்றது. பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நெருக்கமான ஒரு கட்டிடத்திற்கு அருகில் ஒரு நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது. கட்டிடத்தின் நுழைவாயிலில் ஆளுநரின் காரும், ஒரு டஜன் இராணுவ வாகனங்களும் ஆசிரமத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருந்தன. நாங்கள் எங்கள் காரில் இருந்து இறங்கினோம், சாமையும் தினேஷையும் மக்கள் சுயநிழற்படம் எடுப்பதற்காவும் அவர்களுடைய முன்னாள் நண்பர்கள் அவர்களுக்கு வணக்கம் சொல்லவும் சூழ்ந்துகொண்டார்கள். சாம், தினேஷ் இருவரும் கூட்டதில் இருந்து தங்களை விடுவித்துகொண்டு ஆளுநருக்கு வணக்கம் கூற விரைந்தார்கள். நான் பாதுகாப்பாளர்களால் வெளியேற்றப் பட இயலாதவாறு அவர்களின் பக்கத்திலேயே இருந்தேன். ஆளுநருக்கு அவர்கள் மரியாதை செலுத்திய பின்னர், சாமுடனும் தினேஷுடனும் படம் எடுத்துக்கொள்ளவும் அவர்களுக்கு வாழ்த்துக்கூறியவாறும் ஒரு பெருங்கூட்டம் கூடியது. இந்த மங்கலகரமான தினத்தன்று நாங்கள் ஆசிரமத்திற்கு வந்தமைக்கும், ​​சாம் என்னை இந்தியாவுக்கு அழைத்துவந்தமைக்கும் காரணம், "காந்தியும் வன்முறை தொடர்பான உரையாடலும்" என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததுதான். இரண்டு மாதங்களுக்கு முன்னர் சாம் என்னிடம் கவலையுடனும் மனச்சோர்வுடனும் பயங்கரவாதிகளின் சமீபத்திய குண்டுவெடிப்பு, மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒருவர் மற்றவருக்கு எதிராக நிகழ்த்திய வன்முறை பற்றிப் பேசினார். "நாம் ஏதாவது செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார். ஆசிரமத்தில் இந்தப் பணிமனைக்கு ஏற்பாடு செய்ய அவர் முடிவு செய்தார். மேலும் அவருடன் இந்தியாவுக்கு நானும் வருவேனா என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இது சாதாரணப் பேச்சாக, உலகத்தை பற்றி நம்முடைய வருத்தத்தை வெளியிடுவதாக மட்டும் இருக்கலாகாது, இந்தப் பணிமனை சமாதானத்திற்கான இயக்கத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும், நமது நவீன உலகில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு காந்தியின் போதனைகளையும் உத்திகளையும் பயன்படுத்துவதற்கான ஒரு இயக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். சாம் என்னை ஏதாவது செய்ய வேண்டுமென்று கேட்டால், ​​நிச்சயமாக, நான் ஒப்புக் கொள்வது வழக்கம். அடுத்த நாள், ஆசிரமத்தில் இருப்பவர்களைக் கூப்பிட்டு அவர்களால் எங்களை அழைக்க முடியுமா என்றும் மற்றவர்களை எங்களுடன் இணைந்துகொள்ள முடியுமா என்றும் தொலைபேசியில் கேட்டார். நான் என் விசா விண்ணப்பம் தொடர்பான பணிகளைத் தொடங்கினேன். … சாமும் தினேஷும் அவர்களின் இரசிகர்களுக்கு வணக்கம் சொல்லியபோது நான் அந்தக் காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். ஆசிரமத்தில் குழுக்களாக நிரம்பியிருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கட்டடங்களைச் சுற்றி நடந்து கொண்டிருந்தனர். இசைக்கலைஞர்கள் ஒரு கட்டிடத்திற்கு வெளியில் பாரம்பரியமான பஜன்களை (பிரார்த்தனை பாடல்களை), குறிப்பாக காந்திஜிக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மாணவர்கள் தரையில் உக்கார்ந்து நூல் நூற்றுக் கொண்டிருந்தார்கள். காந்தியின் வசிப்பிடத்திற்கு வெளியே அவருக்கு அஞ்சலிசெலுத்துவதற்காக மக்கள் கூடியிருந்தனர். நான் அங்கு நின்று கொண்டிருந்தபோது, ​​சிவப்புச் சட்டை அணிந்த ஒரு உயரமான இளைஞர் என்னை அணுகித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பெயர் ஸ்ரீனிவாஸ் கோடாலி. நான் அவரை அதற்கு முன் சந்தித்ததில்லை, ஆனால் பல ஆண்டுகளாக அவருடன் இணையத்தில் நெருக்கமாகப் பணியாற்றி வந்திருக்கிறேன். ஸ்ரீனிவாஸ் ஓர் இளம் போக்குவரத்துப் பொறியியலாளராக இருந்தார், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கில் என்னுடன் இணைந்திருந்தார் . நான் அவரை அன்பாக வரவேற்றேன். அவர் காணாமல் போய்விடாமல் இருக்க அவரை என் அருகிலேயே இருக்கும்படி எச்சரித்தேன். சாம், கூட்டத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டு தினேஷின் முழங்கையைப் பற்றிக் கொண்டு, என்னிடம் "செல்லலாம்'' என்று கத்தினார். ஸ்ரீநிவாஸ் கோடாலி பின்தொடர, நாங்கள் காந்தியின் இல்லம், ஆசிரமப் புத்தக நிலையம், பிறகு தெருவைக் கடந்து காலை உணவாக இட்லியும் உப்புமாவும் பரிமாறப்படும் இடத்தை அடைந்தோம். காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் எங்களுடைய பணிமனை நிகழும் நிர்வாகக் கட்டடத்திற்கு வழியைக் கண்டுபிடித்தோம். தரையில் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கு ஒரு பால்கனியில் மாணவர்கள் கூடியிருந்தார்கள். விருந்தினர்கள் நிகழ்வைக் காணக் கூடியிருந்தார்கள். சாம் அறைக்கு நடுப்பகுதிக்குச் சென்று அமர்ந்தார். தினேஷும் நானும் அவரின் இருபுறமும் அமர்ந்தோம். இடம் சிறியது. பல டஜன் பங்கேற்பாளர்கள் குழுமியதால் நெரிசலாக இருந்தது. எனது வலதுபுறம் எங்களின் விருந்தோம்புநரான கார்த்திகேய சாராபாய் இருந்தார். அவர் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல்வாதி. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை உருவாக்கியவரின் மகன். கார்த்திகேய சாராபாய், ஆசிரமத்தின் அறங்காவலர்களில் ஒருவர். அன்றைக்கு எங்களின் விருந்தோம்புநர். நான் என்னைச் சுற்றி நோக்கிய போது, சிறந்த ​​காந்திய அறிஞர்கள், ஆர்வலர்கள், வரலாற்றாளர்கள் அணிவரிசையைக் கண்டேன். எங்களுக்கு நேர் எதிரில், 1955 முதல் ஆசிரமத்தில் வசித்து வருகின்றவரும், வினோத் பாவாவுடன் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவருமான அமிருத் மோதி பாரம்பரிய வெள்ளைக் கதர் உடையில் இருந்தார். அவருக்கு அருகில் இலா பட் இருந்தார். அவர் 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகளிர் சுய வேலைவாய்ப்புச் சங்கத்தை நிறுவியவர். டெஸ்மண்ட் டூடூ மற்றும் பிறருடன் ‘தி எல்டர்ஸ்’ அமைப்பின் உறுப்பினராகச் சேர்ந்தவர். இலாவுக்கு அருகில் தீனா படேல் இருந்தார். அவருடைய தந்தை, மகாத்மா காந்தியின் 100-தொகுதி, 56,000 பக்கம் படைப்புகளை தொகுப்பதற்கு உதவிசெய்வதில் 40 ஆண்டுகள் கழித்தவர். கடந்த ஏழு வருடங்களாக, சேகரிக்கப்பட்ட படைப்புகளின் மின்னணுப் பதிப்பை உருவாக்க உழைத்தவர். மூலத் தொகுதிகளின் அனைத்துப் பிழைகளையும் துல்லியமாகச் சரிசெய்வதற்கு ஒளிக்குறி வாசிப்பின் மூலம் மகாத்மாவின் எழுத்துகளின் ஒரு மிகச் சிறந்த பதிப்பை உருவாக்க முனைந்தவர். தீனா, உலகின் காந்திய முன்னணி வல்லுனர்களில் ஒருவர். நீண்ட காலமாக அவரது அனைத்துப் படைப்புகளின் ஒவ்வொரு சொல்லையும் படித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் நான் தில்லியில் அவரைச் சந்தித்தேன். காந்தியின் வாழ்க்கை பற்றிய கதைகளை ஒன்றின் மேல் ஒன்றாகக் கூறி அசத்திவிட்டார். காந்தி பற்றி நான் இதுவரை படிக்காத புத்தகங்களைப்பற்றி ஆலோசனை அளித்தார். காந்திக்கு ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் தீனா எனலாம். தனது கதைகளை அவர் உணர்ச்சி பூர்வமாகவும் கவர்ச்சியாகவும் சொல்கிறார். அன்றைக்கு முதல்நாள் சாமும் நானும் இராஜஸ்தானில் இருந்தபோதே ஒரு சிறிய குழுவினர் ஆசிரமத்தில் சந்தித்து ஓர் உரையாடலைத் தொடங்கினார்கள். சாம் இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் வேந்தர். அதனால் அவர் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளில் தலைமை வகித்தார். கார்த்திகேயன் அவர்கள், உலகின் வன்முறை பற்றிய முந்தைய நாள் விவாதத்தின் சுருக்கத்துடன் காலைப்பொழுதைத் தொடங்கினார். நமது உலகில் நிகழும் வன்முறையின் வேரைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பது நமது அடிப்படைப் பணி. காந்தியின் போதனைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியவற்றைக் கேட்கவும், ஓர் இயக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். அந்த இயக்கம் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும். உள்ளார்ந்திருக்கும் வன்முறைப் பிரச்சினையை நாம் ஒரு நாளில் தீர்த்துவிட முடியாது. தனிநபர்களாக நீண்ட கால அளவில் நாம் என்ன செய்யலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும், நம் குரலை உரக்க ஒலிக்க ஒரு சமூகமாக நாம் திரளமுடியுமா என ஆராயவும் நாங்கள் அங்கு கூடினோம். எனக்குப் பதற்றமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு என்னை சாம் அழைத்திருந்தார். ஒரு வட்டியக்கியிலிருந்து மற்றொன்றுக்கு அரசாங்கத் தகவலை நகலெடுக்கும் என் அன்றாட வேலையிலிருந்து நீண்ட் தொலைவுள்ள ஒரு விசாரணை இது. இப்படிப்பட்ட கடுமையான விசாரணை என்னை பாதித்தது. நீண்ட காலமாக சட்டத்தின் ஆட்சி போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தி வந்ததால், உலக அமைதி, வன்முறைத் தடுப்பு, காந்தியின் போதனைகள் போன்ற பரந்துபட்ட பிரச்சினைகள் எனக்கு விருப்பமான அறிவுப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. இவற்றிற்கு என்னிடம் விரைவான பதில்களோ வெளிப்படையான ஆழ்நோக்கோ இல்லை. முந்தைய நாள் பற்றிய கார்த்திகேயனின் சுருக்கம் மூன்று விஷயங்களைக் கொண்டிருந்தது. முதலாவதாக, சகிப்புத்தன்மையையும் வேறுபாட்டையும் ஊக்குவிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்வதோடு, உண்மையில் கருத்து வேற்றுமையை ஊக்குவிக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், நாம் பயமின்மையின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று குணங்களும் காந்தியின் போதனைகளின் மையமாகும். சாம் பித்ரோதா அன்றைய விவாதத்தைத் தொடங்கினார். அவர் எங்களை அழைத்தது ஏன் என்று விளக்கினார். ​​நான் அவர் பேசுவதைக் கேட்டபோது, கடந்த சில மாதங்களாக அவர் எழுதிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தைப் பற்றி விவாதித்தார். அப்போது மேற்கூறிய செய்திகள் பலவற்றைக் கேள்விப் பட்டிருந்தேன். நாம் நமது உலகத்தை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டும் என்பது சாமின் முடிபு. கடைசி முறை மறுகட்டமைப்பு, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் சபையையும், சர்வதேச நாணய நிதியத்தையும், இன்று நாம் அறிந்த பிற நிறுவனங்களையும் உருவாக்கியது. இந்த உலகம் சில செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்த நாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறைந்தபட்சம் இந்த அமைப்பின் வடிவமைப்பாளர்களின் மதிப்பீட்டில், இந்த உலகம் "மூன்றாம் உலகக்" காலனிகளாலும், வறுமையில் வாடும், ஜனநாயகமற்ற ஏழை நாடுகளாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால், கீயின்ஸ், மார்ஷல், மற்ற அனைவரும் காந்தியைக் கருத்தில் கொள்ளவில்லை. காந்தியின் முயற்சிகள் இந்தியாவின் சுகந்திரத்திற்கு மட்டும் வழிவகுக்கவில்லை, உலகளாவிய குடியேற்ற எதிர்ப்பு இயக்கமாகவும் பரவியது. இன்று, சோவியத் ஒன்றியம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் பெரும் பிரிட்டனை இழந்துள்ளது. இந்தியாவும் சீனாவும் சாதனை விகிதங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனாலும், நம் உலகம் சரிவர இயங்கவில்லை. இது வேறு ஒரு காலத்திற்கென வடிவமைக்கப்பட்ட காரணத்தால் உடைந்து விட்டது, ஏனெனில், ஒரு வேறுபட்ட உலகம் இது. இந்தியா உணவுப் பொருட்களை உபரியாக உற்பத்தி செய்கிறது. ஆனால் இன்னும் பசியில் மக்கள் வாடுகிறார்கள். உலகெங்கிலும், வருமான சமத்துவமின்மை குறைவதற்கு பதிலாகப் பெரிதும் அதிகரித்துள்ளது. நோய், போதிய நீர் இன்மை, வறுமை ஆகியவை உலகில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. அடுத்தது, இங்குள்ள வன்முறை. மற்ற மாநிலங்களுக்கு எதிராகவும், மற்றும் தனது சொந்த மக்களுக்கு எதிராகவும் அரசின் வன்முறை. ஒரு சமூகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் இடையில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வன்முறை. கற்பழிப்பு, கொலை, துஷ்பிரயோகம் போன்ற தனிப்பட்டவரின் வன்முறை. சாம் தொழில்நுட்பத்தில் மகிழ் நோக்குடையவர். நவீன காலத்தில் இணையற்ற வாய்ப்பு அதில் கிடைப்பதாக அவர் நம்புகிறார். நோயை குணப்படுத்த முடியும். சுத்தமான தண்ணீரைப் பெற முடியும். இணையத்தில் உயர் வேகத்தைப் பெற்று உலகளாவியதாக்கி, அதை இலவசமாகவும் தர முடியும். புவி வெப்பமடைதலைத் தீர்க்கவும் முடியும். ஆனால், இவற்றை எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நமது நிர்வாக முறைமையையும் நமது உலகம் இப்பொழுது இயங்கும் முறையையும் மறுவடிவமைப்புச் செய்ய வேண்டும். மனித உரிமை மீறல்களில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதாது, மானிடத் தேவைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று சாம் அடிக்கடி சொல்கிறார். சாம் பேசி முடிந்ததும் திரிவேதி பேசினார். பாராளுமன்றத்தில் நீண்ட கால உறுப்பினராகவும், ஆழ்ந்த ஆன்மீக வாதியாகவும், மதவாதியாகவும் இருந்த அவரது தில்லி வீட்டில் சாமும் நானும் தங்கியிருந்தோம், அவரை நான் ஆழமாகப் போற்றும் நிலைக்கு வந்தேன். . பிற சமூகங்களை கண்மூடித்தனமாக ஒரு சமூகம் வெறுப்பது நம் நவீன உலகில் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று என்று தினேஷ் கூறினார். பொதுமையாக்கப் பட்ட இந்த வெறுப்புணர்வு, தனிநபர்களுக்கு இதில் பொறுப்பில்லை என்று நம்ப வைக்கிறது. காரணம் வெறுப்பு நிகழும் முறை ஒருமனதாக நடக்கிறது, இது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்கள் தனிப்பட்ட மனிதர்கள் அல்ல, வெறுக்கத்தக்க மற்றவர்கள் என்று .பொதுமைப்படுத்துகிறது. இந்த வன்முறை தேசிய அல்லது இன வேறுபாடுகளிலிருந்து பெரும்பாலும் உருவாகிறது, ஆனால் மிகப் பெரும்பாலும் மதத்திலிருந்து வருகிறது. "நாம் நம்மை நோக்க வேண்டும், உலகத்தின் தேவை மதத்தின்மீது கவனம் குவிப்பதல்ல, ஆன்மிகத்தின்மீது கவனம் குவிப்பதுதான், நம்மை நாம் மாற்றிக்கொண்டால், மற்றவர்கள் தானே மாறுவார்கள்" என்று தினைஷ் கூறினார் பிறகு தீனா படேல் பேசினார். "நீ வன்முறையை நிறுத்துகின்ற வழி, நீயே அதை நிறுத்துவதுதான். வியட்நாம் போரின்போது எழுதப்பட்ட ஒரு இளைஞனின் கதையை அவர் கூறினார். அவன் ஐன்ஸ்டீனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு எழுதினான். ஐன்ஸ்டீன் ஒரு எளிய பதிலை எழுதினார்: "காந்தி போலச் செய்யுங்கள்." அந்த பையன் குழம்பிப்போய், ஐன்ஸ்டீனுக்கு "நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டு எழுதினான். ஐன்ஸ்டீன் "சட்டத்தை மீறுங்கள்" என்று பதிலளித்தார். அந்தப் பையன் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தான். அந்தப் பையன்தான் ஜெனீ ஷார்ப். அஹிம்சையை போதிப்பவர்களில் ஒருவராக மாறினார். அவரது பணி, உலகம் முழுவதும் நிகழ்ந்த அமைதிப் புரட்சிகள்மீது செல்வாக்கு ஏற்படுத்தியது. உரையாடல் பின்னர் மெதுவாகச் சென்றது . நான் சில குறிப்புகளையும் சில படங்களையும் எடுத்தேன். சுருக்கமான சில குறிப்புகளை எடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நிகழ்வைப்பற்றித் தெரிந்துகொள்ளுமாறு, ட்விட்டரில் பதிவிட்டேன். நான் என்ன சொல்வது என்றும் கவலை கொண்டேன். கையால் எழுதப்பட்ட எனது குறிப்புகளுடன் கூடுதலாகச் சேர்த்தேன். நான் வியந்து பார்த்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களும் இப்படியே கலக்கத்துடன் நான் செய்வதையே செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். குஜராத் மாநிலத்தில் கிராமப்புறப் பெண்களை சுய-சார்புடையவர்களாக ஆவதற்கு உதவுகின்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியவர் சுஷ்மா ஐயங்கார். பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி மெளனமாக இருப்பதன் மூலம் நாம் வன்முறையைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறோம் என்பதைப் பற்றிப் பேசினார். சில வன்முறை வடிவங்கள் மற்றவற்றைக் காட்டிலும் முக்கியமானவை. நாம் அதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி நோக்க வேண்டும். எல்லோரும் பாலியல் துன்புறுத்தல்களையும், ஏன் பாலியல் வன்முறையையும்(கற்பழிப்பையும்) சட்டபூர்வமாக்குகிறோம், ஆனால் அந்தப் பெண் எதிர்வினை செய்தும் எதிர்த்தும் நின்றால், அந்த பதிலை சட்டபூர்வம் அற்றதாக்கி அவளைக் குற்றம் சாட்டுகிறோம். வன்முறைக்கு பதில் வன்முறை என்பதை காந்தி ஒருபோதும் ஏற்கவில்லை. பிரிட்டிஷ் அரசில் மாபெரும் கொடூரமும் அடக்குமுறையும் இருந்தன, மக்களுக்கு எதிரான அரசு வன்முறையின் கட்டமைப்பு அவிழ்த்து விடப்பட்டது, இருந்தபோதிலும் அவர் 1857 கிளர்ச்சியைக் குறைகூறவே செய்தார். 1946இல் கல்கத்தாவில் மக்கள் ஒருவரை ஒருவர் கொன்றபோதும் பீகாரில் பெரும் கலவரத்திற்குப்பிறகும் அவை நிறுத்தப்படும்வரை, ​​காந்தி உண்ணாவிரதம் இருந்தார். வன்முறையை உடனடியாக நிறுத்தாவிட்டால் தான் இறந்துபோகவும் தயாராக இருந்தார். "காந்திக்குள் ஆப்பிரிக்க அம்சம்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் அனில் நௌரியா, தென் ஆப்பிரிக்காவில் அமைப்புரீதியிலான நிறவேற்றுமை அடிப்படையிலான வன்முறை பற்றிப் பேசினார். நிறவேற்றுமை என்பது ஒரு இனத்திற்கு எதிரான கடுமையான வன்முறை. மண்டேலா போன்ற தலைவர்கள் பலத்துக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதைப் பற்றிப் பேசினாலும் ஆப்பிரிக்காவின் பலவேறு தலைவர்களைப்போல மண்டேலாவும் காந்தியின் சீடரே ஆவார். காந்தி தமது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஈடுபட்ட விவாதம், எதற்கும் வளையாத விட்டுக் கொடாமை இருந்தால், ​​சிறிது வன்முறை அவசியமாக இருப்பதைப் பற்றியது. நெல்சன் மண்டேலா, காந்தியின் வார்த்தைகளைப் படித்த பிறகு, நாம் எளிய எதிர்ப்பை விட அதிகமாகச் செய்ய வேண்டும் என்றாலும், வேறு வகையான வன்முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார். உயிரிழப்பைக் குறைப்பதற்காக நாச வேலையைத் தேர்வு செய்யலாம் என்றார். 1.3 மில்லியன் பெண்களின் கூட்டமைப்பான சுய வேலைவாய்ப்பு மகளிர் சங்கத்தை உருவாக்கிய இலா பட் அடுத்ததாகப் பேசினார். சமாதானம் என்பது நாம் விரும்புகின்ற குறிக்கோள் ஆகும். நாம் இதை எப்பொழுதும் சாதிக்க முடியவில்லை என்றாலும் நாம் அதற்கு முயற்சிசெய்ய வேண்டும் காரணம் இருள் மீண்டும் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இலா காந்தியைமட்டுமல்ல, கிங்கையும் எதிரொலித்தார். அகிம்சையின் உயிர்நாடி வன்முறை யின்மை மட்டுமல்ல, அன்புடன் இருப்பதுமாகும். தனது சொற்பொழிவுகளிலும் உரைகளிலும் கிங் அடிக்கடி "வெறுப்பு வெறுப்பை வெளியேற்ற முடியாது, அன்பு மட்டுமே அப்படிச் செய்ய முடியும்" என்று கூறிவந்தார் என்றார் இலா. இலாவின் கருத்துகளைத் தொடர்ந்து மிகுதியான கருத்துரைகள் வந்தன. அவர் எப்பொழுதும் மக்களைச் சிந்திக்க வைக்கிறார். அதன் பின் அறைக்குள்ளிருந்தோரின் உணர்வு, வன்முறையின் வேர்கள் சமூகக் கட்டமைப்பில் உள்ளன என்பதாக இருந்தது. குண்டுகள், துப்பாக்கிகளுக்கு அப்பால் அது சமூகங்களின் அமைப்பு வரையிலும் வன்முறை சென்றது. 1920 ஆம் ஆண்டில் "காந்தி பல்கலைக் கழகம்" என்றழைக்கப்பட்டகுஜராத் வித்யா பீடத்தை நிறுவியவர் அனாமிக் ஷா. இப்போது அவர் அதன் துணை வேந்தராகவும் இருந்தார். அடுத்து அவர் பேசினார். "இந்தப் பல்கலைக் கழகம் அனைத்து வகுப்புப் பாடங்களிலும் காந்திய ஒழுக்க மதிப்புகளைச் சொல்லிக்கொடுக்க முயல்கிறது. மாணவர்கள் நூல்நூற்றலிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடுவது அவர்கள் படிப்பின் வழக்கமான செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது" என்றார். உடல்நலப் பாதுகாப்பின் வன்முறை, அதாவது மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் மருந்துகளை வாங்குவதற்குப் பணமின்மை என்ற காரணத்தினால் இறந்து போவதைப்பற்றிப் பேராசிரியர் ஷா பேசினார். இதற்கான வேர் பொருளாதார வன்முறை. உலகில் என்றும் விரிகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக அவ்வன்முறையில் மனிதனின் தேவைகள் தியாகம் செய்யப்படுகின்றன சொத்தினை மறுவரையறை செய்வதன் மூலமும்,மக்கள் தங்களை எவ்வாறு நிர்வகித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படை அம்சத்தை மறுவடிவமைப்பதன் மூலமும் சுகாதார வன்முறையை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை அனாமிக்ஜீ கூறினார். ஜப்பானில், காப்புரிமை முறையில் மாற்றம் செய்யப்பட்டு, அதனால் காப்புரிமைகள் சுகாதாரத் தொடர்புடைய வணிகரீதியற்றபயன்பாடுகளுக்குப் பயனின்றிச் செய்யப்பட்டது. அதாவது, ஒரு அரசாங்கம் அல்லது அமைப்பு, மக்களுக்கு வழங்க ஒரு மருந்து தயாரிக்கிறது என்றால், அவர்கள் அதைச் செய்ய முடியும். அமெரிக்காவின் காப்புரிமைகள் பற்றிய என் நீண்ட கால ஆய்வின் போது கட்டாய அறிவுக் கிடைப்பைப் பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை. இந்தக் கருத்து எனக்கு வியப்பாக இருந்தது. நாள் முழுவதும், இந்த வகையான சிந்தனைகள் எனக்கு வந்தவண்ணமே இருந்தன. ஒருவர் பின் ஒருவராக, மக்கள் கவனமாகக் கூறிய வரலாற்றுக் கதைகளுடனும் ஆழ்நோக்குகளுடனும், நமது நவீன உலகில் இந்தப் பாடங்களின் நடைமுறைப் படுத்தலுடனும் காந்தியின் தந்துவங்களில் நுழைந்தனர். காந்தியின் முன்னணி வரலாற்றாளர்களில் ஒருவரான பேராசிரியர் சுதீர் சந்திரா, நமது சவாலைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். முதலில் வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு தில்லி நகரின் தெருக்களுக்குப் பெயர் சூட்டப்பட்டது. பிறகு தற்போதைய நிகழ்வுகளுக்கு ஏற்ப மக்கள் அவற்றுக்குப் பெயர் மாற்றம் செய்தனர். இப்போக்கு எவ்வாறு தொடங்கியது என்பதை உதாரணத்துடன் அவர் குறிப்பிட்டார். பேராசிரியர் சந்திரா இந்தப் போக்கை "நிகழ்காலத்தை பாதுகாக்கும் சமுதாயம்" என்று அழைத்தார். ஒரு ஆரம்பப் பள்ளி மாணவன் பயன்படுத்தும் பலகையில் அன்றைய பயிற்சி முடிந்தபிறகு சுத்தம் செய்துவிடுவது போல நாம் வரலாற்றைப் பயன்படுத்தலாகாது என்றார். நாம் வரலாற்றை வாழ்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். … அருகிலுள்ள உணவகத்தில் கறிகள், டோக்லா, மோர் ஆகியவற்றைக்கொண்ட மகிழ்ச்சியான மதிய உணவுக்குப் பிறகு நாங்கள் ஆசிரமத்திற்குத் திரும்பினோம். எனனைச் சில கருத்துக்கள் கூறும்படி கேட்டனர். நான் தைரியத்தை வருவித்துக கொண்டேன். பேச்சு பதிவு செய்யப்படவில்லை. அடுத்த நாள் என்னிடம் கையால் எழுதப்பட்ட இரண்டு பக்கக் குறிப்புகள் தரப்பட்டன. ஆனால் அமெரிக்காவுக்கு எனது 17 மணிநேர விமானப் பயணத்தில் உலகின் வன்முறையைச் சட்டத்தின் விதி என்ற கருத்துடன் இணைத்து நோக்க என் முயற்சியை மறுகட்டமைப்புச் செய்தேன். 1963 ஆம் ஆண்டில் ஜான் எஃப். கென்னடி இலத்தீன் அமெரிக்க இராஜதந்திரிகளின் குழுவில் உரையாற்றினார். "அமைதியான புரட்சியை நாம் சாத்தியமற்றது ஆக்கினால் வன்முறைப் புரட்சி தவிர்க்க முடியாதது" என்று அவர் கூறினார். ஜான் எஃப். கென்னடி ஒரு பைத்தியக்காரனின் வன்முறைச் செயலால் கொல்லப்பட்டார், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மார்ட்டின் லூதர் கிங் வியட்நாம் போருக்கு எதிராகப் பேசியபோது அவரது வார்த்தைகளை மேற்கொண்டார். வியட்னாம் போர், வியட்நாமிய மக்களுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் வன்முறைச் செயலாகும் என்று கிங் கூறினார். அமெரிக்கப் பையன்களுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறை அப் போர். தாங்கள் புரிந்துகொள்ளாத அல்லது ஆதரவளிக்காக ஒரு போரில் அவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அமெரிக்க மாநிலத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் செயல், கருப்பின ஆண்கள்-பெண்கள் மீதான வன்முறை என்றும் கிங் குறிப்பிட்டார். "ஒழுக்க மதிப்புக்களுக்கான தீவிரப் புரட்சி" என்று கென்னடி கூறிய வழிமுறையை நாம் முறித்துக் கொண்டதாக கிங் கூறினார். நமது சமூகத்தின் வேர்க் காரணங்களைக் கண்டறிய வேண்டுமானால் "நாம் பொருள் சார்ந்த சமூகத்தில் இருந்து மனிதன் சார்ந்த சமூகமாக மாற வேண்டும்" என்றார் கிங். நமது உலகத்தை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டும் என்றும் கூறினார் நமது இவ்வுலகில் உள்ள இந்த வகையான கட்டமைப்பு சூழ்நிலைகளை ஆராய வேண்டுமானால் நம்மை நாமே எவ்வாறு ஆள்கிறோம் என்பதை மாற்றியமைப்பதுதான் வழி. சட்டத்தின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் இதைச் செய்கிறோம். அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தினாலும் அரசியலமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்தினாலும்தான் அடிமைத்தனம் முடிவுக்குவரத் தொடங்கியது. எதிர்பார்க்கப்பட்ட அடிமை முறையின் முடிவு, அமெரிக்காவில் உடனே பங்கு அறுவடைக்கு எதிரான போராட்டமாக மாறியது. இந்தியாவில், உள்நாட்டு நீலச்சாய விவசாயிகளிடையில் பங்கு அறுவடை இருந்தது. வெளிநாட்டு ஒப்பந்த முறையை காந்தி தென்னாப்பிரிக்காவில் எதிர்த்தார். 1917 ஆம் ஆண்டு இந்தியப் புலம்பெயர்தல் சட்டத்தின்படி, கிர்மிட்டி என்ற கொடூரமான முறையை வெளியேற்றிய பிறகுதான் இந்தியாவில் இவ்வாறான தன்னிச்சையற்ற அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது. வாக்குப்பதிவுக்கான போராட்டம் வாக்களிக்கும் உரிமையுடன் முடிவடைந்தது. தென்னாபிரிக்காவில் நிறவெறி முடிவுக்குவந்தவுடன் 1964 ஆம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டத்தின் மூலம், பிரிவினை பேசப்பட்டது . ஒவ்வொரு போராட்டமும் முடிவடைந்து மற்றொன்று ஆரம்பித்தது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த பிரச்சினைகள் உண்மையாகத் தீர்ந்து விடவில்லை, ஆனால் தொடர்ச்சியான போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமே அவற்றை நோக்க முடியும். அடிமைத்தனம் இன்னும் நம் உலகில் உள்ளது. அமெரிக்கா, யாவருக்கும் வாக்குரிமை என்கிறது. ஆனால் வாக்கெடுப்பு வரிக்கு பதிலாக இப்போது இனப்பிரிப்பு வாக்காளர் அடையாள சட்டங்களாக மாறியிக்கிறது. வாக்காளர் மோசடிச் சிக்கலைத் தவிர்ப்பதற்கு இச்சட்டங்களால் பயனில்லை, ஆனால் மக்கள் வாக்களிப்பதைக் குறைக்கிறது. நாம் ஒருபோதும் நம் உலகத்தை முழுமையானதாக மாற்றமுடியாது. ஆனால், ஒரு தீமைக்கு பதில் மற்றொரு தீமை வருகிறது. அப்போது ​​நம்மிடமுள்ள கருவிகளைப் பயன்படுத்த வேண்டும், அவற்றில் மிகவும் வலிமை வாய்ந்தது சட்டத்தின் விதி. ஒரு ஜனநாயக சமூகத்தில், அரசாங்கம் நமக்கு (மக்களுக்கு)ச் சொந்தம். அதன் மக்களாக நாம் விதிகளையும் நம் கடமைகளையும் வரையறுக்கிறோம். நமது அரசாங்கங்கள் பெரும்பாலும் நமக்குத் தொலைவில உள்ளன. அக்கறையற்றும் உள்ளன. (உண்மையிலே அப்படித்தான் உள்ளன). ல் நமது சொந்தத்தையும் சட்டத்தின் விதியையும் பயன்படுத்தினால் உண்மையான மாற்றம் நிகழும். சட்டத்தின் ஆட்சிக்கு மூன்று விதிகள் உள்ளன. முதலாவதாக, நாம் சட்டத்தை முன்னதாக இயற்ற வேண்டும். போகிறபோக்கில் சட்டத்தை இயற்றி, பின்னோக்கிப் பார்த்து, இவ்விதச் செயல்கள் சட்டத்துக்குப் புறம்பானவை என்று சொல்லக்கூடாது. இந்தக் கொள்கையைத்தான் ஜான் ஆடம்ஸ் வாக்குச் சாதுரியத்துடன் குறிப்பிட்டார். இது மனிதர்களுக்கான தேசம் அல்ல, ஒரு சட்டத்தின் பேரரசு என்றார் அவர். இரண்டாவது விதியும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். சட்டத்தை அறியாமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இந்த கொள்கை மிகவும் தெரிளிவாகவும் சுலபமாகவும் இருக்கிறது. ஆனால் அதிகமாகச் சட்டத்தை மீறுபவர்கள் இதையே காரணமாகக் கூறுகிறார்கள் என்பதை எனது கடுமையான அனுபவத்தின்மூலம் அறிந்துகொண்டேன். முதல் இரண்டு கொள்கைகளின்படி, சட்டத்தை இயற்றுவதும் அனைவருக்கும் தெரியப்படுத்துவதும் மிகவும் தேவை. ஆனால் இவை போதுமானவை அல்ல. அமெரிக்காவில், தெற்கில், வெள்ளையர்க்கான சேவைமுகப்புகளில் கருப்புநிற மக்கள் உண்ணக்கூடாது என்பது சட்டம். மேற்கண்ட இரண்டு கொள்கைகளின்படி இதை அனைவருக்கும் அறிவிக்கலாம். இது சட்டத்தின் விதிதான், ஆனால் சட்டத்தின் விதியும் அல்ல. மூன்றாவது விதி, சட்டங்கள் யாவருக்கும் பொதுவானவை என்பது. அவை ஒரு நபருக்கு அல்லது ஒரு குழுவிற்கு மட்டுமானவை அல்ல. "இந்தியர்களும், ஆசியர்களும்" தங்களைத் தாங்களே பதிவு செய்ய வேண்டும், ஒரு பவுண்டு பதிவு வரி செலுத்த வேண்டும், அவர்களது பதிவு ஆவணங்களை எல்லா நேரங்களிலும் எடுத்துச்செல்ல வேண்டும், என்பது இந்த அடிப்படை விதியை மீறுவதாகும். இதற்காகத்தான் காந்தி தென் ஆப்பிரிக்காவில் சத்தியாகிரகம் மூலம் போராடினார். நமது நவீன உலகில் வன் முறை உள்ளது, அதை நீக்க நாம் மீண்டும் போரடவேண்டும். சாம் பேசிய வன்முறை, அரசின் வன்முறை, பயங்கரவாத வன்முறை, அண்டை நாடுகளுக்கு எதிரான மக்களின் வன்முறை போன்ற வன்முறைகள் உள்ளன. ஆனால் உடல் ரீதியான வன்முறைக்கு அப்பால் மேலும் நிறைய உள்ளது. உலகத்தில் அதிர்ச்சியூட்டும் வெப்பமயமாதல் மற்றும் மாசுபாட்டு வன்முறை உள்ளது. நோய், நீர்ப் பற்றாக்குறை, உணவு மிகுதியாக உள்ள காலத்தில் பஞ்சம் போன்றவற்றின் வன்முறையும் உள்ளன. சட்டத்தின் விதி சட்டம் அனைத்துக்கும் பொதுவானது என்கிறது, ஆனால் இன்று அப்படி இல்லை. நாம் அதைச் சரிசெய்ய வேண்டும், ஆனால் நமக்கு மேலும் பல தேவை. பொருளாதார வாய்ப்பில் சமத்துவம், அரசியல் வாய்ப்பில் சமத்துவம் வேண்டும். நமது அரசாங்கங்கள் இயங்கும் முறையை மாற்றி, உலகத்தை மறுவடிவமைப்பதன் மூலம் மட்டுமே இன்று இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். நமது இண்டர்நெட் உலகில், நாம் இன்னொரு பிரச்சினையையும் தீர்க்க வேண்டும், அது அறிவு கிடைப்பதற்கான சமத்துவம். இணையத்தின் பெரும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், நாம் பெரும்பாலும் எல்லா அறிவையும் மறைத்து வைத்திருக்கிறோம். அறிவு பெறுவதற்குத் தனியாரின் அனுமதி தேவைப்படுகிறது. அறிவு உலக அளவில் கிடைப்பது நம் காலத்தின் பெரும் வாக்குறுதி, நமது தலைமுறையின் மிகப்பெரிய சவால். இது நமது வாய்ப்பு. எதிர்காலத்துக்கு நாம் விட்டுச்செல்லும் கொடை. எல்லாவற்றையும் சரிசெய்யும் ஒன்று எதிர்காலம்தான். அது நமக்கு அடித்தளத்தை அமைக்க முடியும். எனவே நாம் ஜனநாயக சமூகங்களில் நம்மை நாம் எவ்வாறு ஆளுகின்றோம் என்ற கேள்விகளில் நாம் பங்கேற்கிறோம். … 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாமுடன் நான் செய்த பயணம் என் கண்களைத் திறந்து விட்டது. அமெரிக்காவில் 10 ஆண்டுகள் நடத்திய போராட்டத்திற்கு அது ஒரு மாற்று மருந்தாக இருந்தது, சட்டவிதிகளை வெளியிடுவதற்காக நான் வழக்குத் தாக்கல் செய்தேன். அதனுடன் கூட்டாட்சி நீதிபதிகள் பொதுப் பாதுகாப்பு விதிகள்பற்றி நான் பேசியதை அனுமதிக்கவில்லை. இந்தப் பயணம் இந்திய வாழ்க்கை பற்றி என் கண்களைத் திறந்தது. ஆனால், நாம் போராடினால், உலகத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கையையும் அளித்தது. காந்தியின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்தது, இராஜஸ்தானில் ஆற்றிய உரைகள், தில்லியில் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தது, இவையெல்லாம் நான் பொக்கிஷமாகப் போற்றும் அனுபவங்கள். நான் முதலில் தில்லி வந்த போது பயணம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று எனக்கு தெரியும். சாம் சில மணி நேரங்களுக்கு முன்னரே வந்திருந்தார். விமானத்தின் கதவருகில் ​​விமான நெறிமுறை அதிகாரியைச் சந்தித்து விமான மரபுகளை நிறைவேற்றினேன். தினேஷ் திரிவேதியின் அரசு பங்களாவை வந்தடைந்தேன், முதல் முறையாக தினேஷை நேருக்குநேர் பார்த்தேன். அங்கு மேலும் இருந்தவர், மானவ் சிங். ஒரு கவர்ச்சிகரமான தொழிலதிபர், விமான ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல விமானப் போக்குவரத்து சேவைகளின் உரிமையாளர், தினேஷுக்கும் சாமுக்கும் பழைய நண்பர். தாஜ் ஹோட்டலில் ஜப்பானிய உணவு விடுதியில் இரவு உணவிற்கு மானவ் எங்களை அழைத்துச் சென்றார். நாங்கள் மாத்சுதேக் சூப் குடித்து சுஷியைச் சாப்பிட்டபோது, ​​அன்னை தெரசா பற்றிய பேச்சு வந்தது. மானவ் "ஓ! அவர் சிறந்தவர்!" என்று குறிப்பிட்டார். நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். மானவ் சிறித்தவாறு தெரசா தனது பெயரிடும் விழாவில் தலைமை தாங்கினார் என்று என்னிடம் கூறினார். அவர் கத்தோலிக்கரா என்று கேட்டேன், அவர் சிரித்து, அது பிரச்சினை இல்லை என்று சொன்னார். அவர் குடும்பத்தின் பழைய நண்பர் என்றார். அவர் தனது கைப்பையை வெளியே எடுத்து புன்முறுவல் செய்யும் அன்னை தெரசாவுடன் தான் குழந்தையாக இருந்த நிழற்படத்தைக் காட்டினார். நான் அப்படத்தினால் ஈர்க்கப்பட்டேன். சாம் சொன்னார் "ஆமாம், அவர் தளராதவர். என்னை ஒரு முறை விமானத்தில் சந்தித்தபோது ஒரு விவிலியப் புனிதச் சொற்கள் இருந்த அட்டையைக் கொடுத்து படிக்க சொன்னார்." அவர் அவ்வாறு நிறையச் செய்தார் என்றார் சாம். அவர் இன்னும் அவரது அட்டைகளை வைத்திருக்கிறார். இது மெய்யாகவே மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் கூறினேன். நாங்கள் நான்கு பேர் இரவு உணவை அருந்துகிறோம், எங்களில் இருவர் அன்னை தெரசாவை அறிந்திருந்தார்கள். சாமும் மானவும் சிரிக்கத் தொடங்கினார்கள். தினேஷ் கொல்கத்தாவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். அங்குதான் அன்னை தெரசாவின் தலைமையகம் இருந்தது. தினேஷ் சிரித்தார், அவரும் அவருடைய மனைவியும் அன்னை தெரசாவைத் தனது சிறிய காரில் நகர் முழுவதும் கூட்டிச்சென்றுள்ளதாகக் கூறினார். அவர் முன் இருக்கையில் அமர்ந்து, தினேஷுக்கும் அவரது மனைவிக்கும் எங்கே போக வேண்டும் எப்படி ஓட்ட வேண்டும் என்று சொல்வது வழக்கம். அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்று திரும்பி வந்தபோது, ​​தினேஷ் தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு அவருடன் பயணம் செய்தார். அவரது வீட்டிற்கும் சென்றார். "அவர் மிகவும் வலிமையான விருப்புறுதி படைத்தவர்," என்றார் தினேஷ். இரவு உணவருந்திய எங்கள் நான்கு பேரில், மூன்றுபேர் அன்னை தெரசாவைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள். நான் இதில் ஈர்க்கப்பட்டேன். மெய்யாகவே இந்தியா எனக்கு கற்பிக்க நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த சத்தியாக்கிரக இயக்கத்தின் சாத்தியமான வெற்றியில் எனது நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டத்தின் மீது நிகழ்ந்த தாக்குதல்களால் நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன், இந்தியாவில் சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு ஒளியைக் கண்டேன். இந்தியாவில் மக்கள் என் சொல்லைக் கேட்பார்கள். நீதிபதி ரானடே மிகவும் பொருத்தமாகக் குறிப்பிட்டவாறு, எனக்குக் கல்வி தரவும், என் ஆட்சியாளர்களைக் கற்கச் செய்யவும் நான் அடிக்கடி இந்தியா திரும்பத் தீர்மானித்தேன். அறிவு கிடைப்பது என்பது நம் காலத்தின் பெரும் குறிக்கோள் ஆகும். அது நம் காலத்தின் மிகப் பெரிய சவாலும் ஆகும். என் முயற்சிகளை புதுப்பிப்பதில் உறுதியுடன் நான் இந்தியாவிலிருந்து திரும்பினேன். [சாபர்மதி ஆசிரமத்தில் பணிமனையில் சாம் பித்ரோதா தகவல்களைக் குறிப்பெடுக்கிறார். ] சாபர்மதி ஆசிரமத்தில் பணிமனையில் சாம் பித்ரோதா தகவல்களைக் குறிப்பெடுக்கிறார். [சாபர்மதி ஆசிரமத்தில் சாராபாய்ஜி (கோப்புறை வைத்திருப்பவர்) காலை உணவு அருந்துதல். ] சாபர்மதி ஆசிரமத்தில் சாராபாய்ஜி (கோப்புறை வைத்திருப்பவர்) காலை உணவு அருந்துதல். [கார்ல், சாம், தினேஷ் திரிவேதி மூவரும் சாபர்மதி ஆசிரமத்தில் நிழற்படங்களுக்கென நிற்றல். ] கார்ல், சாம், தினேஷ் திரிவேதி மூவரும் சாபர்மதி ஆசிரமத்தில் நிழற்படங்களுக்கென நிற்றல். [கோச்ரப் ஆசிரமத்தில் மாணவர்கள் நூல் நூற்றல். ] கோச்ரப் ஆசிரமத்தில் மாணவர்கள் நூல் நூற்றல். [கோச்ரப் ஆசிரமத்தில் காந்தி தபால் கார்டுகளை இலா பட் பார்வையிடுகிறார். ] கோச்ரப் ஆசிரமத்தில் காந்தி தபால் கார்டுகளை இலா பட் பார்வையிடுகிறார். [பள்ளி மாணவர்கள் சாபர்மதி ஆசிரமத்தில் கூடுதல். ] பள்ளி மாணவர்கள் சாபர்மதி ஆசிரமத்தில் கூடுதல். அமெரிக்காவிலும் இந்தியாவிவிலும் அறிவுக் கிடைப்பு, டாக்டர் சாம் பித்ரோதாவின் குறிப்புகள் 2017, ஜூன் 14, இணையக் காப்பகம், சான் பிரான்சிஸ்கோ தூதர் வெங்கடேசன் அசோக் அவர்களே, என் நண்பர் கார்ல். அவரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். எங்கள் விருந்தோம்புநர் திரு. காலே அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அனைவருக்கும் மாலை வணக்கம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அறிவைப் பகிர்வது பற்றிப் பேசுவதற்கு இந்த விசேஷ நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 2006ஆம் ஆண்டு ஏறத்தாழ நடுப்பகுதியில் டாக்டர் மன்மோகன் சிங் அமைத்த தேசிய அறிவு ஆணைக்குழுவின் தலைவராக நான் இருந்தபோது, ​​இந்தத் திட்டத்தில் தெளிவாக எனது ஆர்வம் ஆரம்பமானது. அந்தச் சமயத்தில், 21ஆம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை இயக்க இந்தியாவுக்குத் தேவைப்படும் நிறுவனங்களையும், உள்கட்டமைப்பையும் கட்டியெழுப்புவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். உண்மையில் நாங்கள் அறிவு கிடைப்பதன் மீது கவனத்தைக் குவித்தோம். நூலகங்கள், வலைத்தளங்கள், மொழிபெயர்ப்புகள், உறுதியான செயல் திட்டம், இட ஒதுக்கீடு, அகண்டஅலைவரிசை வலைத்தளங்கள் ஆகியவைகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம். தொடக்கநிலை முதல் உயர்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, மருத்துவக் கல்வி, தொலைநிலைக் கல்வி, திறந்த நிலைக் கல்வி, ஆசிரியர்கள் பயிற்சி ஆகிய அனைத்து வகையான கல்விநிலைகளையும் நாங்கள் நோக்கினோம். அறிவை உருவாக்குதல், அறிவை யார் உருவாக்குகின்றனர், அறிவு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது பற்றியும் நாங்கள் சிந்தித்தோம். அதனுடன் சேர்ந்து, அறிவுச் சொத்து, காப்புரிமைகள், பதிப்புரிமை, வணிகச் சின்னங்கள் விவசாயம், சுகாதாரம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களில் அறிவைப் பயன்படுத்துவதைப் பற்றியும் நோக்கினோம். இறுதியாக, நிர்வாகத்தில் அறிவின் பங்கினையும் நோககினோம். இந்த முயற்சியின் விளைவாக, தேசிய அறிவு வலைப்பின்னலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சுற்றுச்சூழல், ஆற்றல், நீர், ஆசிரியர்கள் பயிற்சி ஆகியவற்றிற்கான பல்வேறு வகையான இணையதளங்களை நாங்கள் உருவாக்கினோம். இறுதியாக, நாங்கள் மகாத்மா காந்திக்காக ஒரு பெரிய வலைவாசலை உருவாக்கினோம். என்னுடைய ஆரம்ப நாட்களில் நான் 10 வயதில் ஒரு காந்தியப் பள்ளிக்குச் சென்றேன். எங்கள் தினசரி வாழ்க்கையில் காந்திய மதிப்புகள் யாவும் அடங்கியிருந்தன. ஒடிசாவில் வசிக்கும் குஜராத்தி குடும்பத்தினர் நாங்கள். குஜராத்திற்கும் என் பெற்றோருக்குமான தொடர்பு காந்தி மட்டுமே. எங்கள் தினசரி நடவடிக்கைகளின் மூலம், நாங்கள் தொடர்ந்து காந்தியை உயிரோடு வைத்திருக்கிறோம், நாங்கள் காந்தி வலைமுகப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ​​கார்லுடன் தொடர்பு கிடைத்தது. நாங்கள் இணைந்தோம். அரசாங்க ஆவணங்களில் இருந்து தரவிதிகளை எடுத்து இணையத்தில் இடும் பணியைக் கார்ல் மேற்கொண்டிருந்தார். அது ஒரு மிக முக்கியமான முன்முயற்சியாக இருந்தது என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கார்ல் அதைச் செய்ய முயன்றபோதும், அரசாங்கங்களின் நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டார். பாதுகாப்பு, தீ, அல்லது கட்டடவிதித் தொகுதிகள் போன்ற பொதுத் தரவிதிகள் அனைத்தும் அரசாங்கத்தின் சொத்துகள் என்று எல்லா அரசாங்கங்களும் எண்ணுகின்றன. கார்ல் இதனை இணையத்தில் இடுவது IP [அறிவுச் சொத்து] சட்டங்களை மீறுவதாக கூறுகிறார்கள். அதைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, ​​எனக்கு இன்னும் உற்சாகம் அடைந்தேன். ஏனென்றால் அது காந்தியச் சத்தியாக்கிரக வழி என்று எனக்குத் தோன்றியது. "கார்ல், இந்தச் சண்டையில் நாம் போரிட வேண்டும். அவர்கள் சட்டபூர்வமாகச் சரியாக இருக்கலாம், ஆனால் ஒழுக்க ரீதியில் தவறானவர்கள்" என்று நான் கூறினேன். [கை தட்டல்] இந்தத் தரங்கள் யாவும் மெய்யாகவே பொதுப் பாதுகாப்பிற்காகவும் பொது நலனுக்காகவும் உள்ளவை. பிறகு எப்படி நீங்கள் இதனைப் பெரிய அளவில் மக்கள் அணுகுவதை அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என் வீட்டில் தவறான மின்கம்பி இணைப்புச் செய்திருந்தால் அது ஆபத்தை விளைவிக்கும் என்று எனக்குத் தெரியும்போது அதில் மின்கம்பி இணைப்புச் செய்வதற்கான தரவிதிகளைப் பணம்கொடுத்து ஏன் வாங்க வேண்டும்? ​ நீங்கள் அப்படிச் செய்ய அரசாங்கங்கள் அனுமதிக்கவில்லை. கார்ல் உலகம் முழுவதும்-ஜெர்மனியில், இந்தியாவில், மற்றும் பல நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். இதற்கு எதிராகப் போராட வேண்டியது நமது வேலை. முக்கியமாக தார்மீக அடிப்படையில். இது பொதுத் தகவல். இது பொது மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் பழைய, வழக்காற்றில் இல்லாத சட்டங்களை நாம் பார்க்கக் கூடாது. நான் இணையத்தின், அதன் சக்தியைப் பார்க்கும் போது, அறிவும் ​​இணையமும் வழங்கும் வாய்ப்புகளைப் பெறுவதில் நமது மன அமைப்பில் உண்மையில் பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் பல முறை, நமக்குப் 19ஆம் நூற்றாண்டின் மனஅமைப்பு, 20ஆம் நூற்றாண்டின் செயல்முறைகள், 21ஆம் நூற்றாண்டின் தகவல்யுகத்தின் வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறியிருக்கிறேன். தரவிதிகள் தொடர்பாகக் கார்ல் செய்ய முயலுவது, நமது சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதைப் பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவருவதுதான். உங்களைச் சுற்றிப் பார்த்தால், செயல்முறைகள் அனைத்தும் வழக்கற்றவையாக இருப்பதைக் காண்பீர்கள். எந்த இடத்திலும் பழைய செயல்முறையில் இருப்பவர்கள் எழுந்து நின்று, "இது போக வேண்டும், புதிய செயல்முறை களையும், புதிய சட்டங்களையும் உருவாக்க வேண்டும்" என்று கூறுவதைக் காண இயலாது. சில இடங்களில் நடக்கிறது, ஆனால் சரியான வேகத்தில் அது நிகழவில்லை. அறிவாற்றல் பொருளாதாரத்தைப் பார்க்கையில், எதிர்கால ஜனநாயகத்தில் நான்காவது தூணாக இருப்பது அறிவு என்பது புரியும். இன்று, ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் உள்ளன: நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம். நாளைய ஜனநாயகத்தில் அறிவும் தகவலும் முக்கியமானவை என்று நாங்கள் நம்புகிறோம். எப்படியோ, இந்த செய்தி உண்மையிலேயே ஏராளமான மக்களுக்கு திறம்படத் தெரிவிக்கப்படவில்லை. இன்று, ஒரு புறத்தில், நாம் பற்றாக்குறைப் பொருளாதாரத்தின் சட்டங்களைப் பெற்றுள்ளோம். ஆனால் வளமான பொருளாதாரத்தைக் கொண்ட உலகில் வாழ்கிறோம். இந்தியாவில் நாம் நிறைய உணவுப் பொருட்களைத் தயாரிக்கமுடியும். ஓர் உதாரணம் தரவேண்டுமானால், நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தியா 600 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடியாது என்று போதித்தார்கள். இந்தியா ஒரு மூடிய அமைப்பு என்று கருதப்பட்டது. இன்று, இந்தியா 1.2 பில்லியன் பேருக்கு உணவளிப்பது மட்டும் அல்ல, அதனிடம் உபரி உணவும் உள்ளது. ஆனால், 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் பசியோடு இருக்கிறார்கள், ஏனெனில் தேவைப்படும் மக்களுக்குச் சரியான நேரத்தில் உணவை வழங்குவதற்கான எல்லாத் தளவாடங்களையும் பெறுவதற்குத் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. புதிய மனஅமைப்பு, புதிய சிந்தனை தேவைப்படும் சவால்கள் இவை. இது கொஞ்ச காலமாக நான் வேலை செய்யும் பகுதிக்கு மெய்யாகவே என்னைக் கொண்டுவருகிறது. உலகம் அடிப்படையில் மறுவடிவமைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். கார்லும் நானும் இரண்டுவருடங்களாக இதுபற்றி உரையாடி வருகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க ஐக்கிய நாட்டினால், ஐ.நா. சபை, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், நேட்டோ, உலக வணிக அமைப்பு போன்றவற்றுடன் ஜிடிபி, ஜி.என்.பி., தனிநபர் வருமானம், பணச் சமநிலை, வர்த்தக பற்றாக்குறை போன்ற அனைத்து வகைக் காட்டிகளுடனும் உலகம் மறுசீரமைக்கப்பட்டது. அந்த வடிவமைப்புக்குப் பிறகு, உலகம் ஒரு குறுகிய காலப்பகுதியில், 20 ஆண்டுகளில், காலனி ஆதிக்கத்தில் இருந்து மீண்டது. டெங் ஜியாவோபிங் வந்து, "நான் கம்யூனிசத்தை முதலாளித்துவத்துடன் இணைக்கப் போகிறேன்" என்றார். கோர்பச்சேவ் வந்து இதற்கு எதிர்மாறுதான் சோவியத் ஒன்றியத்திற்குத் தேவை என்று சொன்னார். அவர் தனது பரிசோதனையில் தோல்வியடைந்தார், ஆனால் பல சிறிய நாடுகளின் ஆற்றலை வெளிப்படுத்துவதில் அவர் இந்தப் பரிசோதனையில் வெற்றியும் பெற்றார். ஜனநாயகம், சுதந்திரச் சந்தை, முதலாளித்துவம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கான இதேபோன்ற எதிர்பார்ப்புகளுடன் எல்லோரும் வெளியே வந்தனர், இது பழைய வடிவமைப்பின் அடிப்படை முடிபாக இருந்தது. அமெரிக்காவுக்கு அந்த வடிவமைப்பு நன்றாக வேலை செய்தது. ஆனால் உலகில் ஏராளமான நாடுகளுக்கு இது தகுதியற்றது, விரும்பத்தகாதது, இயலாதது. அனைவரையும் உள்ளடக்கல், மானிடத் தேவைகள், புதிய பொருளாதாரக் கருவிகள், மறுஉற்பத்தி செய்யும் பொருளாதாரம், சுற்றுச்சூழலில் கவனக் குவிப்பு, நுகர்வுக்கு எதிராக இயற்கைப் பாதுகாப்பு, இறுதியாக அஹிம்சை போன்றவற்றில் கவனம் குவிக்கின்ற புதிய வடிவமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பைத் தகவல் நமக்கு வழங்குகிறது. [கை தட்டல்] மீண்டும், அது காந்தியச் சிந்தனையுடன் உறவை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குத் தற்போது காந்தி மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என நான் நம்புகிறேன். இணையத்தின் மூலம், நாம் காந்திய சிந்தனையை இளம்வயதினர் பலருக்கும் நாம் கொண்டுசேர்க்க முடியும். உலகில் நமக்கிருக்கும் புதிய தொழில் நுட்பத்தினாலும் சாத்தியக்கூறுகளாலும் போரிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை, ஏனெனில் அடுத்த 20 ஆண்டுகளில் நீண்டகால வாழ்க்கை, உற்பத்தி, உணவு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, மருத்துவம், சுற்றுச்சூழல், ஆற்றல் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. இது நமது சமூகங்களை மறுகட்டமைப்புச் செய்ய முழுமையான புதிய வழிமுறையைத் தரவேண்டும். இன்று மறுபரிசீலனை செய்வது பற்றிய உரையாடல் பெரும்பாலும் இல்லை. எல்லோரும் பழைய வடிவமைப்புக்குள் முடங்கியிருக்கிறார்கள். எல்லோரும் அமெரிக்காவை நகலெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம், 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த அமெரிக்க வடிவமைப்பு இனி பயன்படாது என்று உறுதியாக நம்புகிறவர்களில் நானும் ஒருவன். தகவலை ஜனநாயகப் படுத்துவது, மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, தங்களின் சொந்த எதிர்காலத்தை உருவாக்க மேலும் அதிக உரிமைகளை வழங்குவது, அவர்களை ஜனநாயகத்தில் பங்கேற்க வைப்பது இவற்றைத்தான் கார்லும் இணையதளப் பணியாளர்களும் பிற யாவரும் செய்ய முயலுகிறார்கள் என்று கருதுகிறேன். இன்று, பல நாடுகளிலும் ஜனநாயகம் இருக்கிறது, ஆனால் செயல்பட மிகக் குறைந்த சுதந்திரம் மட்டுமே இருக்கிறது. இணையக் காப்பகம், இணையம் ஆகியவை இந்த ஆவணங்களை அதிகமான மக்களுக்கு அளிக்கின்றன. எப்போதும் கிடைப்பதாக, எந்த நேரத்திலும் அணுகக் கூடியதாக, இலவசமாக இந்த ஆவணங்கள் இருப்பதால் உலக எதிர்காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட பல பரிமாணங்களை அளிக்கின்றன. நமக்கிருக்கும் சாத்தியப்பாடுகள் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நானும் இதில் ஒருவனாகப் பங்கேற்க விரும்புகிறேன். இங்கே கார்லுடன் இருக்கக் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சியடைகிறேன். கார்லும் நானும் சென்ற ஆண்டு அக்டோபரில், அக்டோபர் 2ஆம் தேதி, கார்லும் நானும் இந்தியாவுக்கு வந்தோம். காந்தி ஆசிரமத்தில் நாங்கள் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அங்கு நான் அமைத்த கூட்டத்ததில் நூறு பேர் கலந்து கொண்டார்கள். காந்தியச் சிந்தனையை எப்படி யாவருக்கும் கொண்டுசேர்ப்பது என்று எல்லோரும் ஒரு நாள் சிந்தித்தோம். இல்லங்கள், சமுதாயங்கள், நகரங்கள், மாநிலங்கள், மற்றும் நாடுகளில் வன்முறையை எப்படி நாம் முடிவுக்குக் கொண்டுவருவது? துரதிருஷ்டவசமாக, உலகில் வன்முறை இல்லாத நிறுவனம் எதுவும் இல்லை. அரசு உள்ளறைகளில் சமாதானத்தைப் பற்றி பேசும் அனைவரும் அடிப்படையில் இராணுவத்தில் இருந்து வந்தவர்கள். அஹிம்சையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. அஹிம்சை ஒருபோதும் கற்றுத்தரப் படுவதில்லை. நான் சிகாகோவில் வாழ்கிறேன். நான் சிகாகோவில் 53 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். அனைத்துத் தொழில்நுட்பமும் செல்வமும், அனைத்து நிபுணத்துவங்களும், சிகாகோவில் இருப்பினும் அது 53 ஆண்டுகளாக மாறவில்லை என்றுதான் சொல்லுவேன். சிகாகோவின் எல்லாப் பக்கங்களிலும் முன்னெப்போதையும் விட அதிகமான துப்பாக்கிச் சப்தம் கேட்கிறது. இவ்வன்முறைக்கு எவ்விதக் காரணமும் இல்லை. அமெரிக்காவில், கிட்டத்தட்ட ஒரு சதவீத மக்கள் சிறையில் இருப்பதை அறிந்தால் வியப்படைவீர்கள். சதவீத அளவில், அதிகமான கைதிகள் அமெரிக்கச் சிறைகளில்தான் இருக்கிறார்கள். உலகமக்களில் சராசரியாக ஆயிரத்தில் ஒருவர் சிறையில் இருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் நூற்றுக்கு ஒருவர் சிறையில் இருக்கிறார். சிந்திக்க இயலாததாக இது இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் மூலம், இன்று நாம் செய்கின்ற அனைத்தின் வாயிலாகவும், அறிவை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குப் பரப்பவேண்டும் என்று நான் நினைக்கிறேன். மகக்ளுக்குச் சரியான கருவிகளைக் கொடுங்கள். நாம் இங்கே அதைத்தான் செய்ய முயல்கிறோம். இந்தியாவிலிருந்து 500,000 புத்தகங்களை எடுத்து இணையக் காப்பகத்தில் இடுவது ஒரு பாரிய பணியாகும். குஜராத்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் சில சிறந்த புத்தகங்கள் உள்ளன. அவை உலக வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த நூல்கள் அர்த்தமுள்ளவை என்பதும்கூட அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு முறை மக்கள் இலக்கியங்களைப் பற்றிப் பேசும்போதும் அது ஆங்கில இலக்கியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. தமிழ் இலக்கியம் பற்றி எவரும் நினைப்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். தமிழ்நாட்டின் நூலகம் ஒன்றில் ஒரு புத்தகத்தை அவர் பார்த்தார். 600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் புத்தகத்தில். குழந்தை வளர்ப்புப் பற்றிய ஒரு இயலைப் படித்ததாகக் கூறினார். "இன்று ஆங்கிலத்தில் இந்த இயல் மொழிபெயர்க்கப் பட்டால், எல்லா மருத்துவர்களும் ஆச்சரியப்படுவார்கள்" என்றார். ஆனால் உள்ளூர் மொழியில் இருப்பதால் அந்த நூற்கருத்துகள் இழக்கப்படுகின்றன. இந்த வெவ்வேறு மொழிகளிலிருந்து நிறைய நல்ல புத்தகங்களை எந்திர மொழிபெயர்ப்புச் செய்து ஆங்கிலத்தில் வைக்கின்ற சாத்தியம் வேண்டும். கார்ல் இணையக் காப்பகத்தில் இந்திய மொழிப் புத்தகங்கள் சிலவற்றை வைக்க முயற்சி செய்திருக்கிறார். இது பெரும் பங்களிப்பாகும். இது ஒரு நல்ல தொடக்கம். பிற இந்திய மொழிகளிலிருந்து மேலும் அதிகப் புத்தகங்கள் இணையக் காப்பகத்தில் கிடைக்கும் என்று நம்புகிறேன். கார்ல், உங்களுடைய எல்லாக் கடின உழைப்புகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்தனவற்றை உண்மையிலேயே பாராட்டுகிறேன். இணையக் காப்பகம் பற்றியும், அதில் நீங்கள் இட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்கள் பற்றியும், இன்னும் என்ன பணிகள் நடக்கின்றன என்பது பற்றியும் மேலும் கொஞ்சம் அதிகமாக நீங்கள் சொல்லலாம் என்று நான் கருதுகிறேன். இணையக் காப்பகத்திற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு கோவிலுக்கு வருவது போலவே இருக்கிறது. இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளது, ஏனென்றால் இது ஓர் அறிவுக் கோவில். இதற்கான கட்டடத்தை பற்றி எனக்கு தெரியாது. நான் அதைப்பற்றிப் படித்திருக்கிறேன். கார்லிடமிருந்து கேட்டிருக்கிறேன். அதனால் இங்கே வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடன் பங்கேற்கவும், உங்களுடன் பணிபுரியவும், இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மெய்யாகவே கொஞ்சம் கற்றுக்கொள்ளவும் நான் அடிக்கடி இங்கு வருவேன் என்று நம்புகிறேன். அத்துடன், நீங்கள் யாவரும் இங்கு வந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இக்குழுவிலுள்ள என் சகாக்களுக்கு முதலில் நன்றி கூற விரும்புகிறேன். நான் பெயரைக் குறிப்பிட வேண்டிய சில முக்கியப் பேர்களும் இங்கு உள்ளனர். அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர். அவர்கள் இங்கே இருக்கிறார்கள். முதலில், என் பேத்தி, ஆரியா இங்கே வந்திருக்கிறாள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். [கை தட்டல்] நான் பேசுவதை அவள் கேட்கும் முதல் முறை இதுதான். அவள் என்னை தாதா என்று அழைப்பது வழக்கம். "தாதா" என்றால் தாத்தா. "நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள்?" என்றாள், "எனக்குத் தெரியாது" என்றேன். "நீங்கள் குறிப்புகள் வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டாள். நான் "இல்லை" என்றேன். [சிரிப்பு] "நீங்கள் இந்தியாவில் உங்கள் தொலைபேசிப் பணியைப் பற்றிப் பேசப் போகிறீர்களா?" என்று கேட்டாள். "இல்லை" என்றேன். "ஆனால் நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள்?" என்று அவள் மறுபடியும் கேட்டாள், அவள் இங்கே இருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி. என் மகளும் இங்குதான் இருக்கிறார். நான் பொதுமேடையில் பேசும்போது அவரைப் பற்றிதான் பயம். நான் நன்றாகப் பேசவில்லை என்றால், "அப்பா, அது நன்றாக இல்லை" என்று என்னிடம் சொல்லிவிடுவார். [சிரிப்பு] இங்கே என் மனைவி இருக்கிறார், என் மருமகளும் இருக்கிறார். என்னுடைய நெருங்கிய நண்பரும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் திரிவேதியும் அவரது குடும்பத்தாரும் அவருடைய மனைவியும் அவருடைய மகனும் வந்திருக்கிறார்கள். [கை தட்டல்] என்னுடைய மற்றொரு நண்பர் ரஜத் குப்தா இங்கே இருக்கிறார். அவரது வருகைக்கு நன்றி. [கை தட்டல்] கடைசியாக என்னுடைய மற்றொரு நண்பரான நிஷித் தேசாயும் அவரது குடும்பத்தாரும் மும்பையில் இருந்து வந்திருக்கிறார்கள். நன்றி, நிஷித் பாய். இங்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றி. எங்களை விருந்தோம்பியமைக்கும் மிக்க நன்றி. [ஜூன் மாதம் 2017 நிகழ்வில், அந்தச் சந்தர்ப்பத்தினைக் குறிக்கவேண்டி, காந்தி சுவரொட்டிகள் கட்டிடத்திற்கு வெளியே வைக்கப்பட்டன நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] ஜூன் மாதம் 2017 நிகழ்வில், அந்தச் சந்தர்ப்பத்தினைக் குறிக்கவேண்டி, காந்தி சுவரொட்டிகள் கட்டிடத்திற்கு வெளியே வைக்கப்பட்டன நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். [சமோசாக்கள், நான், மாம்பழ லஸ்ஸி, மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஊறுகாய், மசாலாவில் உலர்ந்த பழங்கள் ஆகியவை பரிமாறப் பட்டன. நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட் . ] சமோசாக்கள், நான், மாம்பழ லஸ்ஸி, மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஊறுகாய், மசாலாவில் உலர்ந்த பழங்கள் ஆகியவை பரிமாறப் பட்டன. நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட் . [நிகழ்வுக்கு முன் இணையக் காப்பகத்தில், தினேஷ் திரிவேதி (இடது) ஊறுகாயும் சமோசாக்களும் உண்டு மகிழ்கிறார். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] நிகழ்வுக்கு முன் இணையக் காப்பகத்தில், தினேஷ் திரிவேதி (இடது) ஊறுகாயும் சமோசாக்களும் உண்டு மகிழ்கிறார். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். [புரூஸ்டர் காலேவும் சாம் பிட்ரோதாவும் நிகழ்ச்சிக்கு முன்பாகக் கலந்துரையாடுகின்றனர். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] புரூஸ்டர் காலேவும் சாம் பிட்ரோதாவும் நிகழ்ச்சிக்கு முன்பாகக் கலந்துரையாடுகின்றனர். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். [தினேஷ் திரிவேதியும் அவர் குடும்பத்தினரும் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] தினேஷ் திரிவேதியும் அவர் குடும்பத்தினரும் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். [இணையக் காப்பகத்தில், நிகழ்வு முடிந்த பிறகு மாம்பழ லஸ்ஸி அருந்துகிறார்கள். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] இணையக் காப்பகத்தில், நிகழ்வு முடிந்த பிறகு மாம்பழ லஸ்ஸி அருந்துகிறார்கள். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். [இணையக் காப்பகத்தில், மதிப்பிற்குரிய தூதர் வெங்கடேசன் அசோக், பூசை மணியின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] இணையக் காப்பகத்தில், மதிப்பிற்குரிய தூதர் வெங்கடேசன் அசோக், பூசை மணியின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். [மாற்றப்பட்ட ஒரு தேவாலயத்தில் அமைந்துள்ள அறிவுக் கோயிலான இணையக் காப்பகத்திற்கு 20 பவுண்டு எடைகொண்ட பூசை மணியைத் தூதர் அசோக் வழங்குகிறார். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். ] மாற்றப்பட்ட ஒரு தேவாலயத்தில் அமைந்துள்ள அறிவுக் கோயிலான இணையக் காப்பகத்திற்கு 20 பவுண்டு எடைகொண்ட பூசை மணியைத் தூதர் அசோக் வழங்குகிறார். நிழற்படம் டேவிட் க்ளென் ரைன்ஹார்ட். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அறிவுக் கிடைப்பு, கார்ல் மாலமூதின் கருத்துகள் ஜூன் 14, 2017, இணையக் காப்பகம், சான் பிரான்சிஸ்கோ நன்றி சாம். அக்டோபரில் சாம் உடன் சேர்ந்து பயணம் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் இந்தியாவிலிருந்து கருத்துகளைக் கேட்டவாறு சென்றார். காந்திஜியின் பிறந்த நாளில் சாபர்மதி ஆசிரமத்தில் நாங்கள் பேசினோம், ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தில் மேயோ ஆடவர் கல்லூரியில் இந்தியப் பொறியியலாளர் நிறுவனத்திற்கென உரைகள் இருந்தன, எல்லா இடங்களிலும் அவருடைய ஆர்வலர்கள் கூடினார்கள். நாங்கள் காந்தியின் ஆசிரமத்தில் இருந்து காரைவிட்டு வெளியே வந்தபோது, ​​அவரைச் சுற்றியிருந்த குறைந்தபட்சம் 100 பேர் சுயநிழற்படம் எடுக்கக் கூடினர். இந்தியாவில் அவரது பங்களிப்பு ஐம்பதாண்டுகளுக்கும் மேலானது. தொலைபேசிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டுவந்ததில் இருந்து உணவு வங்கிகள் தொடங்குவதில் பிரதம மந்திரிக்கு அறிவுரை வழங்கியதுவரை இன்னும் பல இருக்கின்றன. இன்றைய இரவு நீங்கள் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி. நிறைவாகச் சொல்ல என்னிடம் சில கருத்துகள் உள்ளன. இதற்கு முன்னால் இன்றைய இரவு நிகழ்விற்கு அனைத்து வகையிலும் உதவிய சிலருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். கார்னீகி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர் ராஜ் ரெட்டி மற்றும் டீன் குளோரியா செயிண்ட் கிளேர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வந்த மில்லியன் புத்தகங்கள் திட்டத்தின் வியத்தகு முயற்சி இல்லையென்றால் இந்தியாவின் கணினி நூலகம் சாத்தியமே இல்லை. இந்தியாவில், இந்தியாவின் கணினி நூலக திட்டம், ஒரு புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி, பேராசிரியர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் தலைமையில் உள்ளது. இந்தியாவின் கணினி நூலக திட்டம் இப்போது இந்தியா முழுவதும் 25 ஸ்கேன் மையங்களைக் கொண்ட ஒரு திட்டமாகும், இது ஒரு பெரிய முயற்சியாகும். இந்த நூலகத்தில் 550,000 புத்தகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன, இவற்றில் 400,000 க்கும் அதிகமான இணைய உலாவல்கள் இணையக் காப்பகத்தில் உள்ளன. திட்டத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய மொழிகள் என்று வரும்போது, ​​இது ஒரு குறிப்பிடத்தக்க சேகரிப்பு ஆகும். இந்தியில் 45,000 க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன, 33,000 சமஸ்கிருதத்தில், 30,000 வங்காளி மொழியில், மேலும் பல. இதில் மொத்தத்தில் 50 வெவ்வேறு மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன. இணையக் காப்பகத்தில் புத்தகங்கள் இருந்தால், நீங்கள் அடிப்படை PDF கோப்பாக மட்டும் இல்லாமல் கூடுதலாக, அவை ஒளிக் குறி வாசிப்பு முறை (OCR) மூலம் இயக்கப்படுவதைக் காணலாம். OCR க்கு கூடுதலாக, புத்தகங்கள் உங்கள் மின்புத்தக வாசிப்பான், கிண்டில் மற்றும் உங்கள் டேப்லெட் ஆகியவற்றோடு வேலை செய்யும் வடிவங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் மேம்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்தி சேகரிப்புகளைத் தேடலாம், மேலும் நீங்கள் புத்தகங்களுக்குள்ளும் தேடலாம். நாங்கள் சேகரிப்பில் செய்ய முயற்சிக்கும் விஷயங்களில் ஒன்று மேற்தகவல்களை மேம்படுத்த உதவுவது. இணையக் காப்பகத்தில் உள்ள பொறியாளர் ஒருவர், ஒவ்வொரு புத்தகத்தின் ஐஎஸ்பிஎன் எண்கள் மற்றும் வெளிப்படை நூலக அட்டை விவர அட்டவணை போன்ற அடையாளங் காட்டிகளுடன் இணைக்க மற்றும் இணைக்க தலைப்புகள், படைப்பாளிகள் மற்றும் பிற மேற்தகவல் புலங்களில் தெளிவான பொருத்தத்தை பரிசோதித்து வருகின்றார்கள். இந்தியாவின் கணினி நூலக திட்டத்தில், ஒவ்வொரு உருப்படியின் கீழும் உங்கள் "மதிப்புரை" என்ற ஒரு இடம் இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞர் பேராசிரியர் டொமினிக் வுஜாஸ்டிக், அந்த இடத்தைப் பயன்படுத்தி, சிறந்த அவர் அறிந்த டஜன் கணக்கான நூல்கள் பற்றிய மேற்தகவல்களை அவர் அளித்திருக்கிறார். நீங்களும் அதையே செய்ய முடியும்! உதாரணமாக நீங்கள் குஜராத்தி மொழி பேசுபவராக இருந்தால் 13,000 குஜராத்தி நூல்களைப் படிக்க முடியும், மேலும் சிறந்த நூல்கள் அல்லது எழுத்தாளர்கள் இருக்கின்றார்களா என்று எங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மதிப்புரை வழங்கும் இடத்தைப் பயன்படுத்துங்கள், அல்லது அதில் ஏதாவது தவறுகள் இருந்தால் உங்களின் உதவி எங்களுக்கு தேவை. இன்றிரவு எங்கள் இரண்டாவது தொகுப்பு இந்து சுயராஜ்யம். நிறைய வேடிக்கைகளை இந்தத் திட்டத்தில் இணைத்து வைத்திருக்கிறோம். நான் சிறிது காலம் முன்பு சாமைப் பார்க்க சென்ற போது இது தொடங்கியது. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ​​அவர் தமது மடிக்கணினியை இழுத்து, "உங்களிடம் ஒரு குற்றியக்கி (பென்டிரைவ்) இருக்கிறதா?" என்று கேட்டார். நான் அவரிடம் ஒரு USB இயக்கியைக் கொடுத்தேன் மற்றும் நாங்கள் தொடர்ந்து பேசினோம். இறுதியில், அவர் எனக்கு ஒன்பது ஜிகாபைட் PDF கோப்புகள் கொடுத்தார். அவை என்ன என்று கேட்டபோது மகாத்மா காந்தியின் புதிய நூல்களில் நூற்றுக்கணக்கான மின் பதிப்பு என்று அவர் சொன்னார் . நான் ஆச்சரியப்பட்டேன். மகாத்மாவின் படைப்புகளின் இந்த உறுதியான மின்னணுப் பதிப்பை உருவாக்க தன்னார்வத் தொண்டர்கள் குழுவுடன், சாபர்மதி ஆசிரமத்தில், குறிப்பாக தீனா பட்டேல் பல வருடங்களாக கஷ்டப்பட்டார். இது ஒரு மிகப்பெரிய சாதனை! இப்போது 100 நூல்களின் இந்திப் பதிப்பை உருவாக்குவதற்கான வளங்களை அவர் தொகுத்து வருகின்றார். அவருடன் வேலை செய்வது ஒரு மெய்யான மகிழ்ச்சி. நான் சேகரித்த படைப்புகளை இணையத்தில் வெளியிடப்பட்டபோது, ​​இதே போன்ற முறையில் ஜவஹர்லால் நேருவின் முழு படைப்புகளையும் ஒரு அரசாங்க வழங்கியில் பார்த்தேன், ஆனால் அவை பயனுள்ள வடிவத்தில் இல்லை, நான் அவற்றை PDF கோப்புகளாக தொகுத்தேன். மூன்று தொகுதிகளைக் காணவில்லை, நான் அவற்றைக் கண்டுபிடித்து, இரண்டை ஸ்கேன் செய்தேன். கடைசி ஒன்றைக் கேட்டுள்ளேன். 78 தொகுதிகளில் 77ஐ நாங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். அதேபோல் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் முழு படைப்புகளின் முதல் 20 தொகுதிகளும் அரசாங்க இணைய சேவையகத்தில் இருந்தன. இப்போது நாங்கள் கடைசி ஆறு தொகுதிகளைச் சேகரித்து கூடுதலாக இணைத்துள்ளோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தொகுப்பும் இப்போது கிடைக்கிறது. இந்தச் சேகரிப்பு, புத்தகங்களைக் காட்டிலும் உயர்வானது. அகில இந்திய வானொலியில் காந்திஜி பேசும் 129 ஒலிக் கோப்புகள் உள்ளன. அந்த ஒலிக் கோப்புகளில் ஒவ்வொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சேகரிப்பில் அல்லது அறிக்கையில் இருந்து பிரித்தெடுத்து அதனையும் இணைத்துள்ளோம். இந்த உரையை கேட்டபிறகு, நீங்கள் அந்த மொழிபெயர்ப்பைப் படிக்கலாம், பிறகு காந்திஜீ அதற்கு அடுத்த நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் என்ன கூறினார் என்பதை சேகரிக்கப்பட்ட பகுதியில் கிளிக் செய்து, அவரது அற்புதமான கடைசிக் கால வாழ்க்கையுடன் பயணிக்கலாம். நேரு, ரவீந்திரநாத் தாகூர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பேராசிரியர் ராதாகிருஷ்ணன், சர்தார் படேல் மற்றும் பலர் பேசிய பல ஒலிக் கோப்புகள் உள்ளன. நேரு சிறையில் இருந்தபோது எழுதிய இந்தியாவின் வரலாறு (டிஸ்கவரி ஆஃப் இந்தியா) 1988 ஆம் ஆண்டின் தூர்தர்ஷன் தயாரிப்பான பாரத் ஏக் கோஜ் என ஒளிபரப்பப்பட்டது. அதன் 53 பாகங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன, அனைத்து 53 அத்தியாயங்கங்களிலும் ஆங்கிலத்தில் துணைத் தலைப்புகள் உள்ளன. நாங்கள் ஈ-பாஷா மொழி சேவை என்ற பெயரில் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். காந்தி வாழ்க்கைச் சம்பவங்கள், இராமாயண நிகழ்வுகள் இரண்டையும் உள்ளடக்கிய ஆறு அத்தியாயங்களுக்கு-ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தி, உருது, பஞ்சாபி, மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்போது நாங்கள் துணைத் தலைப்புகள் ஏற்றியிருக்கிறோம். இந்தியாவிலும் உலகிலும் உள்ள அனைத்துக்குழந்தைகளும் இந்தியாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு இந்த 53 அத்தியாயங்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. இந்தியா தொடர்பான இரண்டு ஆதார வளங்களை நாங்கள் கொண்டுள்ளோம். முதலாவதாக, 90,000 புகைப்படங்கள், தகவல்துறை அமைச்சகத்தின் வழங்கிகளில் அனைவரும் காணும் வகையில் இருக்கின்றன, ஆனால் அவை மிகவும் வசதியாக இல்லை. அவைகளில், உயர்தரமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2,000 புகைப்படங்களை எடுத்து ஃப்ளிக்கரில் போட்டு வரிசைப்படுத்தியிருக்கின்றேன். நேருவும் இந்திரா காந்தியும் சிறியவர்களாக இருந்த போது எடுத்த புகைப்படம், இரயில்கள், கோவில்கள் அல்லது கிராமப்புற இந்தியா, அல்லது கிரிக்கெட் புகைப்படங்களை நீங்கள் பார்க்க விரும்பினால் பார்க்கலாம். இறுதியாக, நான் மிக அதிக நேரம் செலவிட்ட ஒரு தொகுப்பு இது. இது இந்தியாவின் தொழில்நுட்ப பொதுப் பாதுகாப்புத் தரவிதிகள், 19,000க்கு மேல் அதிகாரபூர்வ இந்திய தரநிலைகள் ஆகும். அவற்றை இணையக் காப்பகத்திலும், என் வழங்கியிலும் law.resource.org இல் காணலாம். நமது உலகம் இன்று ஒரு தொழில்நுட்ப உலகாகும். இந்தியாவின் தேசிய கட்டட விதி, பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பான பயன்பாட்டுக்கான தரவிதிகள், மசாலா பொருட்கள் மற்றும் உணவுக்கான தரவிதிகள், ஜவுளி இயந்திரங்களின் சரியான செயல்பாட்டின் தரவிதிகள், பாலங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்கான தரவிதிகள் மற்றும் அதிகமான தொழில்நுட்ப பொது பாதுகாப்பு தரவிதிகள் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. இந்த தரவிதிகள் சட்டத்திற்குத் தேவைப்படுபவை . அல்லது பிறகு சட்டமாகும். சிமெண்ட், வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள், மற்றும் தானியங்கி உபகரணங்கள் போன்ற டஜன் கணக்கான பொருட்களைத் தரச் சான்றிதழ் பெறாமல் இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வணிகம் செய்வதற்கு தொழிற்சாலைகள், அவற்றின் தயாரிப்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சட்டங்களைப்பற்றி அறிந்திருப்பது அவசியம். இந்த விதிகளைப் பின்பற்றாமல் பொருட்களை நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியாது. இந்தத் தரவிதிகளே சட்டங்கள்தான். ஆனால், இதில் பொருளாதாரத்தை விட .அதிக விஷயம் உள்ளது. இந்திய நகரங்கள் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இந்தியத் தரவிதிகள் உறுதிப்படுத்துகின்றன. எப்படி அபாயகரமான பொருட்களை கொண்டு செல்ல வேண்டும், பள்ளிகளில் மற்றும் பொது கட்டிடங்களில் பாதைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும், எப்படி மின்சாரம் பாதுகாப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை விளக்குகின்றன. ஒவ்வொரு நகர அதிகாரியும், பள்ளித் தலைமை ஆசிரியரும், கட்டிட உரிமையாளரும், மற்றும் சம்பந்தப்பட்ட குடிமக்களும் இந்த முக்கியமான அரசாங்க தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் . இது பொருளாதாரம், பொதுப் பாதுகாப்பு பற்றியது மட்டுமல்ல, இது கல்வி பற்றியதும் ஆகும். இந்தியத் தரவிதிகள் இந்தியாவின் தொழில்நுட்ப உலகின் சிறந்த விதித்தொகுப்பறிவை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. இந்த தரவிதிகளைப் புகழ்பெற்ற பொறியாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தத் தரவிதிகள் இந்திய பல்கலைக்கழகங்களில் ஆறு மில்லியன் பொறியியல் மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான கல்விக் கருவியாகும். இந்தியத் தரவிதிகளுக்கு, ஆவணங்களை வெறுமனே ஸ்கேன் செய்து பதிவிடுவதை விட அதிகமான பணி செய்துள்ளோம். 1,000 முக்கியத் தரவிதிகள் நவீன HTML ஆக மாற்றப்பட்டுள்ளன. வரைபடங்களை யாவரும் வாசிக்கக்கூடிய SVG வடிவில் மாற்றினோம், அட்டவணையை மீட்டமைத்தோம். இதனை உங்கள் கைப்பேசி மூலம் பார்வையிடலாம். உங்கள் காகித அல்லது மென்பொருள் திட்டத்தில் உயர் தர விளக்கப்படங்களாக வெட்டி ஒட்டவும் இவை எளிதானவை. மேலும் பயன்பாட்டிற்கு மிகவும் எளிதாகியுள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தொழில்நுட்ப பொது பாதுகாப்புச் சட்டங்கள் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றில் பல நகல் எடுக்கத் தடைசெய்யும் கடுமையான பதிப்புரிமை அறிவிப்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, இந்தியாவின் தேசிய கட்டிடத் தரவிதி, 13,760க்கு விற்கப்படுகிறது. அதாவது அதன் விலை 213 டாலர். ஒரு புத்தகத்திற்கு அவ்வளவு விலை! இந்தியாவில்! மேலும், நீங்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வாங்க விரும்பினால், வெளிநாட்டு விலை 1.4 லட்ச ரூபாய். 2000 டாலர். ஒரு கட்டாயமான கட்டடத் தரவிதிக்கு! சட்ட ஆவணத்தின் கௌரவம் பெற்றுள்ள, நமது சமுதாயத்தின் பாதுகாப்பை நிர்வகிக்கும் இந்த ஆவணங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் இந்த பொதுப் பாதுகாப்புச் சட்டங்கள் கடுமையான விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படை. இது உலகளாவிய பிரச்சினையாகும். இது அரசியல் சிக்கல்கள், அரசியல் பிளவுகளுக்கு அப்பாற்பட்ட சிக்கலாகும். இந்தச் சூழ்நிலையை மாற்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் முற்பட்டேன், இது ஒரு நீண்ட பயணம். இந்தியாவில், இந்த அரசாங்க ஆவணங்களை இன்னும் வெளிப்படையாக வழங்குவதற்காக எங்கள் வழக்கை அமைச்சகத்திற்கு ஒரு முறையீடாக வழங்கினோம். இந்த விண்ணப்பத்தில் சாம், இணையதளத்தின் தந்தையான விண்ட் செர்ஃப் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற பொறியியல் பேராசிரியர்களிடமிருந்து வாக்குமூலங்களுடன் நானும் இணைக்கப் பட்டேன். மனு நிராகரிக்கப்பட்டபோது, ​​புது தில்லியில் உள்ள உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தோம். அது இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் என்னுடைய சகாக்களான திரு. ஸ்ரீநிவாஸ் கோடாலி (போக்குவரத்து பொறியாளர்) டாக்டர் சுஷாந்த் சின்ஹா (அனைத்துச் சட்டங்களையும் அணுகுவதற்கான இலவச, பொது அமைப்பான கானூனை உருவாக்கியவர்) இருவருடனும் நானும் மனுதாரராக இருக்கின்றேன். நிஷித் தேசாயும் அவரது நிறுவனமும், மதிப்பிற்குறிய முன்னாள் சட்ட அமைச்சரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சல்மான் குர்ஷிதும் எங்கள் சார்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்குரைத்தனர். இன்றிரவு திரு. தேசாய் நம்மோடு இங்கே இருக்கிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சட்டஅறிவு கிடைப்பது இந்தியாவிற்கு மட்டும் அல்ல, ஒரு உலகளாவிய சவால் ஆகும். அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இதேபோன்ற வழக்கு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டாய பாதுகாப்புத் தரங்களைப் படிப்பதற்கும், பதிவு செய்வதற்கும் குடிமக்களின் உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜெர்மனியின் நீதிமன்றங்களில் நாங்கள் போராடுகிறோம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் எங்கள் வழக்குக்கு நாங்கள் ஈஎஃப்எஃப் மற்றும் பென்விக் & வெஸ்ட் மூலம் கொலம்பியா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறோம். EFF இன் மிட்ச் ஸ்டால்ட்ஸ் இங்கே பார்வையாளராகக் கலந்துகொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உலகளாவிய சட்டபூர்வப் பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், திரு. தேசாய் மற்றும் திரு. குர்ஷித் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களும் இலவசமாகப் பணியாற்றுகிறார்கள். உலகெங்கிலும் ஒன்பது சட்ட நிறுவனங்கள் அரசாங்கங்களுக்கு முறையீடுகள் செய்ய எங்களுக்கு உதவுகின்றன, பல்லாயிரக்கணக்கான மணி நேரம் இலவச சட்ட உதவிக்கென பங்களிப்பு செய்கின்றன. சட்டத்தின் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும் நாடுகளில், சட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், ஏனென்றால் சட்ட அறியாமை மன்னிக்கக் கூடியது அல்ல. ஒரு ஜனநாயகத்தில், சட்டங்கள் மக்களுக்கு சொந்தமானவை, அவை மக்கள் படிப்பதற்குக் கிடைக்க வேண்டும். அரசாங்கம் மக்களுக்காகப் பணிபுரிகிறது, சட்டங்கள் நமக்குச் சொந்தம். நாம் நாட்டின் அறிவறிந்த குடிமக்களாக இருக்க வேண்டும் என்றால் நம் உரிமைகளையும் நம் கடமைகளையும் அறிந்திருக்க வேண்டும். இதனைப் பொறுத்ததுதான் ஜனநாயகம். தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது, ​​அவர் ஒரு வழக்கறிஞரை விட திறமையானவராக இருந்தார். அவர் ஒரு வெளியீட்டாளராகவும் இருந்தார். நீதிமன்றங்கள், மனுக்களைக் கொண்டு உலகத்தை மாற்றியமைக்க அவர் முயன்றார். சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவர் உலகை மாற்றியமைக்க முயன்றார். அவர் ஒரு செய்திவெளியீடு நடத்துபவராகவும், செய்தி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அவர் பதிப்பகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உயர் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார். பீனிக்ஸ் ஆசிரமத்தைத் திறந்தபோது, ​​அவர்கள் செய்த முதல் விஷயம் டர்பனில் இருந்துவந்த அச்சகத்தை அகற்றி, நான்கு வண்டிகளில் ஏற்றினர். ஒவ்வொன்றும் 16 காளைகளால் இழுக்கப்பட்டது. அந்த அச்சகத்தைக் காட்டு வெளியில் கொண்டு வந்தனர். அவர்கள் ஃபீனிக்ஸ் புதிய தளத்திற்கு வந்தபோது, ​​அதுவரை எந்த கட்டிடமும் இல்லை. அவர்கள் செய்த முதல் கட்டிட வேலை அச்சகத்திற்கான கட்டிடம். அந்த வேலை முடியும்வரை அவர்கள் வெளியில் தங்கினார்கள். ஃபீனிக்ஸில் அனைவரும் தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டார்கள், அனைவரும் தங்கள் நேரத்தை அச்சகத்தில் செலவிட்டனர். காந்திஜீ கைத்தொழில் என்று குறிப்பிட்டது ஒவ்வொரு நாளும் யாவரும் தங்கள் கைகளால் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான். ஆதியாகமம் 3: 19 "உன் புருவ வியர்வையால் உன்னுடைய உணவை உண்பாய்" என்று கூறுகிறது. அது காந்தியின் தத்துவத்தின் மையக் கோட்பாடாக மாறியது. காந்திஜி கூறினார்: "உணவுக்கான நுண்ணறிவுமிக்க கைத்தொழில் என்பது சமூக சேவையில் உயர்ந்த வடிவம் ஆகும். ஒரு மனிதனுக்கு தனது தனிப்பட்ட உழைப்பு மூலம் நாட்டிற்கு பயனுள்ள செல்வத்தைச் சேர்க்கும் விஷயத்தைவிடச் சிறந்தது எது? 'உலகில் இருப்பது' என்பது 'பணி செய்வது' ஆகும். நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய கூற்று இது. நாம் எல்லோரும் உழைக்க வேண்டும், காந்தி கூறியது போல சமூகத்திற்காக உழைக்க வேண்டும். நமது சமூகத்தைச் சிறப்பாக அமைப்பதற்காகவும் உழைக்க வேண்டும். காந்திஜீ "சுயநலத்திற்கு பதிலாக சேவை என்னும் பாடம் "என்று கூறுகிறார். கைத்தொழில், சமூக சேவை இரண்டும் காந்தியின் தத்துவத்தின் அடிப்படைகள் ஆகும். அந்த போதனைகள் பொதுவான குறிக்கோளோடு ஒன்றிணைய மக்களை ஊக்குவித்தன. இன்று நம் உலகம் ஒரு குழப்பமான இடமாக உள்ளது. நான் 15 ஆண்டுகளாக வாஷிங்டன், டி.சி. யில் பணியாற்றினேன், அத்தகைய குழப்பத்தில் நமது அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை. அமெரிக்கா மட்டுமே இத்தகைய குழப்பங்களுக்கு ஆளான நாடு அல்ல. ஆனால் நாம்தான் முன்னாளில் கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் குழப்பத்தைக் கொண்டுவந்துள்ளோம் என்று தோன்றுகிறது. உலகம் முழுவதும் போர்கள், மாநிலங்களுக்குள்ளாக வன்முறை, மக்களுக்கு எதிராக மாநிலத்தின் வன்முறை, மக்களுக்குள் வன்முறை, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை, சற்று வேறுபடும் மக்களுக்கு எதிரான வன்முறை. அதிர்ச்சியும் கொடூரமும் கொண்ட பயங்கரவாத செயல்கள் உலகில் நிகழ்கின்றன. பஞ்சம் மற்றும் நோய் உள்ளது, நம்மிடம் திறன் இருந்தால் அதனைத் தடுத்து நிறுத்த முடியும். நமது பூமியில் அதிர்ச்சி தரும் வன்முறை அரங்கேறுகிறது. கடந்த காலங்களில் நாம் அறியாமையினால் வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் இன்று நாம் முழுமையும் அறிந்தே செய்கிறோம். தனிநபர்கள் என்ற முறையில் எதிலும் தலையிடாமல் இருப்பது, தினசரி வாழ்க்கையை வழிநடத்த நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றும் விஷயங்களை புறக்கணிப்பது, பொது வாழ்வில் பங்கு பெறுவதைத் தவிர்ப்பது, தலைவர்களைத் தவறுகளுக்குப் பொறுப்பாக்காமல்மறுப்பது என்பவை மகிழ்ச்சியாக உள்ளன. ஆனால், அது தவறு. நாம் அமைதியான வழியில் புரட்சி செய்யாவிட்டால், வன்முறைப் புரட்சி தவிர்க்க இயலாதது என்று ஜான் எஃப். கென்னடி ஒரு முறை கூறினார். நமது உலகில் குழப்பம் நிலவியபோதிலும், நம்பிக்கையும் இருக்கிறது என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இண்டர்நெட் உலகளாவிய தகவல்தொடர்புகளை சாத்தியமாக்குகிறது, அனைத்து அறிவும் உலகமுழுவதும் கிடைப்பதைச் சாத்தியமாக்குகிறது. இவை புரட்சியின் அமைதியான வழிகள், ஆனால் அவற்றை நாம் தழுவினால் மட்டுமே நன்மை செய்யும். கல்வி என்பது நாம் சமுதாயத்தை எப்படி மாற்றியமைக்க முடியும் என்பது பற்றியது. நாம் நமது குழந்தைகளுக்கு கல்வியைப் போதிக்க வேண்டும். நமது ஆட்சியாளர்களுக்குக் கல்வி போதிக்க வேண்டும். நமக்கு நாமே கற்றுக்கொள்ள வேண்டும். ஜான் ஆடம்ஸ் எழுதினார்: "நமது நிறுவனர்களும் ஆண்களும் பெண்களும் கற்றவர்கள், வரலாற்றை அறிந்தவர்கள் என்பதால் அமெரிக்கப் புரட்சி சாத்தியமாயிற்று. அறியாமையும் அக்கறையின்மையும் மனிதகுல அழிவிற்கு இரண்டு பெரிய காரணங்கள்." குடிமக்கள், தகவலறிந்தவர்களாக இல்லாவிட்டால் ஒரு ஜனநாயகம் செயல்படாது என்றும் அவர் கூறினார். "நாங்கள் மென்மையாகவும், தயவாகவும், ... அறிவின் வழியை போற்றுவோம். படிப்போம், சிந்திப்போம், பேசுவோம், எழுதுவோம். மக்கள் மத்தியில் ஒவ்வொரு கட்டளையும் ஆணையும் அவர்கள் கவனத்தைப் பெற வேண்டும். அவர்களின் தீர்மானத்தைப் பெற வேண்டும்" என்றார். இந்தியாவில், ஒரு புதிய தேசத்தின் பிறப்புக்கு வழிவகுத்த சுயராஜ்யத்துக்கான துணிச்சலான நீண்ட போராட்டம், எதிர்காலவிதியுடன் உடன்படிக்கை செய்த போராட்டம், உலகம் முழுவதையும் செயலுக்கு தூண்டிய ஒரு போராட்டம்- அந்த போராட்டம் தகவலறிந்த குடிமக்களை அடிப்படையாகக் கொண்டது. காந்திஜி, நீதிபதி இரானடேயின் கூற்றாக "நமது ஆட்சியாளர்களை எச்சரிப்பதற்கு நாம் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும், நீதியைத் தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறினார். நவீன உலகில் இந்தியாவை வழிநடத்திய ஆண்களும் பெண்களும், அறிஞர்களாகவும் சரித்திர ஆசிரியர்களாகவும் மற்றும் தலைவர்களாகவும் இருந்தார்கள். நேரு சிறைச்சாலையில் எழுதிய அற்புதமான புத்தகங்களைப் பாருங்கள். அரசியலமைப்பின் வரைவுத் திட்டத்தை வகுத்த டாக்டர் அம்பேத்கரின் ஆழமான அறிவைப் பாருங்கள். பதவியில் இருந்தபோதும் முழுநேரமும் கற்றுக்கொண்டிருந்த அறிஞர் பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் உலகளாவிய புகழைப் பாருங்கள். நமது உலகில் மிகப்பெரிய ஜனநாயகங்களான இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நாம் அறிவறிந்த குடிமக்களாக இருக்கவேண்டிய சிறப்புக் கடமை இருக்கிறது. நாம் அனைவருமே செயல்ஈடுபாடுள்ள குடிமக்களாக இருக்க வேண்டும், நாம் எல்லோரும் உழைக்க வேண்டும், நாம் அனைவரும் சமூகப் பணியாளர்களாக இருக்க வேண்டும். உலகமுழுவதும் அறிவு கிடைக்கச் செய்வது நம் காலத்தின் மிகப்பெரிய நிறைவேற்றப் படாத வாக்குறுதி ஆயிற்று. நமக்கு நாமே அறிந்து கொள்வதால், நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதால் காலம் நம்மைத் தோற்கடிக்காமல் இருக்க முடியும். உலகை மாற்றப் போராடுவதற்கு வளர்ச்சிப் பாதையில் நாம் ஒன்றாக நடைபோட வேண்டும். மார்டின் லூதர் கிங் அடிக்கடி சொல்லுவார்: "கோணலான வழிகள் நேர் செய்யப் படவேண்டும், கடினமான சாலைகள் மென்மையாக்கப்பட வேண்டும்." ஒவ்வொருவராக இணைந்து, நாம் அந்த மலைமீது பிரகாசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறோம், அனைத்து அறிவும் கிடைக்கக்கூடிய, ஒரு இலவச நூலகம் கொண்ட இடம் இது. எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் பரிசளிக்கக்கூடிய நூலகம் இது. இப்படிப்பட்ட நூலகத்தை உருவாக்க எங்களுக்கு உதவுங்கள். இது உணவுக்கான உழைப்பு. இது பொதுமக்களுக்கான பணி. ஜெய் ஹிந்த்! அமெரிக்காவைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! நன்றி! [1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லியில், ஜாமா மசூதி அருகே ஒரு வயதான முஸ்லிம் பெண்ணுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படுதல். ] 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லியில், ஜாமா மசூதி அருகே ஒரு வயதான முஸ்லிம் பெண்ணுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படுதல். [தில்லியில் 1946ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு மையம். ] தில்லியில் 1946ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு மையம். [தில்லி நகராட்சித் தேர்தல்கள், 1951 அக்டோபர் 15. ] தில்லி நகராட்சித் தேர்தல்கள், 1951 அக்டோபர் 15. [தில்லியில் அழியாத மை பயன்படுத்தப் படுகிறது, 1952 ஜனவரி. ] தில்லியில் அழியாத மை பயன்படுத்தப் படுகிறது, 1952 ஜனவரி. [1951 செப்டம்பர், தில்லிக்கு அருகே நாக்லாய் கிராமவாசிகள் வாக்களிக்கின்றனர். ] 1951 செப்டம்பர், தில்லிக்கு அருகே நாக்லாய் கிராமவாசிகள் வாக்களிக்கின்றனர். [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 71 (1939-1940), ப. 337, ராம்கட் காங்கிரஸில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துடன். ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 71 (1939-1940), ப. 337, ராம்கட் காங்கிரஸில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துடன். [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 72 (1940), முகப்பு, தில்லி ஜமுனாலால் பஜாஜ்-உடன். ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 72 (1940), முகப்பு, தில்லி ஜமுனாலால் பஜாஜ்-உடன். டிஜிட்டல் (எண்ணியல்) யுகத்தில் சத்தியாகிரகம்: ஒரு தனிநபர் என்ன செய்ய முடியும்? கார்ல் மாலமூத், நேஷனல் ஹெரால்ட், 2017, ஜூலை 8, சிறப்பு 75 ஆண்டு நினைவுப் பதிப்பு இண்டர்நெட் நமது தலைமுறைக்கு அறிவை இலவசமாக அணுகத் தனித்ததொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அமெரிக்க மற்றும் இந்தியாவின் அரசாங்கங்களால் எதிர்க்கப்படும் இந்த ஆசிரியர், எப்படி என்று நமக்கு தெரியப்படுத்துகிறார். நமது உலகம் கொந்தளிப்பில் உள்ளது. உலகளாவிய வன்முறை மற்றும் பயங்கரவாதம் உலகின் அனைத்து மூலைகளிலும் பரவியுள்ளது, நாம் செயல்படவில்லையென்றால் (நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கவில்லை), நமது உலகத்தில் வருவாய்ச் சமநிலையின்மை,பசி, பஞ்சம் தொடர்ந்து பரவும். அத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்ளும்போது ஒருவர் என்ன செய்யமுடியும்? இதற்கான பதில், பல ஆண்டுகளாக இந்த உலகில் போதித்த, ஒளிகாட்டும் பெரியோரின் போதனைகளில் இருக்கிறது. அவர்கள் தவறுகளைச் சரிசெய்வதற்குப் போராடினார்கள். இந்தியாவிலும் அமெரிக்காவிலும்-நமது நவீன உலகில் மிகப்பெரிய, மாபெரும் ஜனநாயகங்களான நாம் அவர்களைப் பார்க்க முடியும். இந்தியாவில், காந்தியின், நேருவின், பிற அனைத்துச் சுதந்திரப் போராளிகளின் போதனைகள் இதற்கு ஊக்கம் அளிக்கின்றன. அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங், துர்குட் மார்ஷல், மற்றும் மனித உரிமைகளுக்காக பல ஆண்டுகள் கடினமாகப் போராடிய அனைவரையும் முன்னோடிகளாக நோக்க முடியும். தனிநபர்களாகச் செயல்படுவதற்கு முக்கியமானவை தொடர்ந்து கவனம் செலுத்துவதும் கவனம் குவிப்பதுமாகும். உலகத்தை மாற்றுவதற்குத் தொடர்ந்து கவனம் செலுத்துதல் என்பது, ஒரு குறுகிய முகநூல் பக்கம் அல்லது ஒரு ட்வீட்டை விட அதிகமான முயற்சி என்பதாகும். நீடித்த கவனம் என்பது, தவற்றைச் சரிசெய்வதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம், தென் ஆப்பிரிக்காவில் காந்தி நமக்கு நாமே கற்றுக் கொள்வதைத் தொண்டர்களுக்கு போதித்தார். அத்துடன் இந்தியாவில் காங்கிரஸ்காரர்களுக்கு காந்தி கற்பித்தது ஒழுக்கவியல், அறநெறி, நற்பண்பு ஆகியவற்றை காந்தி போதித்தார். இன்று தலைவராக விரும்பும் அனைவரும் செரிக்க வேண்டிய பாடம் இது. கவனக்குவிப்பு என்பது காந்திஜியிடமிருந்தும் அமெரிக்காவில் லூத்தர் கிங்கிடம் இருந்தும் கற்றுக்கொள்ளகூடிய முக்கியமான பாடம். குறிப்பிட்ட முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். யதார்த்தமான ஒன்றைச் செய்யுங்கள். உப்பு வரிகளை நீக்குதல், ஒரு உணவக முகப்பில் மதிய உணவு சாப்பிடுவதற்கான உரிமை, பள்ளிக்குச் செல்லும் உரிமை, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, பங்குதாரரை நீக்குதல் போன்று குறித்தவோர் இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். பல ஆண்டுகளாக, நான் ஒரு குறிப்பிட்ட இலக்கில் கவனத்தைக் குவித்து வருகிறேன், சட்ட விதிகளை மேம்படுத்துவது. ஜான் எஃப் கென்னடி ஒரு முறை சொன்னார், நாம் அமைதிப் புரட்சியின் வழியைச் சாத்தியமற்றது ஆக்கினால், வன்முறைப் புரட்சி தவிர்க்க இயலாததாகும். ஒரு நீதிமிக்க சமுதாயத்தில், ஒரு வளர்ந்த ஜனநாயகத்தில், நம்மை நிர்வகிப்பதற்கான விதிகளை நாம் அறிந்திருக்க வேண்டும். நமது உலகத்தை சிறப்பாகச் செய்ய இந்த விதிகளை மாற்றுவதற்கான திறனை நாம் கொண்டுள்ளோம். > பொதுப் பாதுகாப்பு விதிகளின் அணுகல் ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது? நமது நவீன உலகில் சில சிறப்புவகையான விதிகள் உள்ளன, அவை பொதுப் பாதுகாப்பு விதிகள். பாதுகாப்பான வீடுகளையும் அலுவலகங்களையும் கட்டுவது, ஆலைகளில் இயந்திரத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களை பாதுகாப்பது, பூச்சிக்கொல்லிகளை ஒழுங்காகப் பயன்படுத்துவது, வாகனங்களின் பாதுகாப்பு, நமது நீரோடைகள் மற்றும் கடல்களைப் பாதுகாத்தல் இன்னும் பல உள்ளன. இவை நமது மிக முக்கியமான சட்டங்களில் சில. உலகெங்கிலும், ஒருசில விதிவிலக்குகள் தவிர, சட்டத்தின் வலிமை கொண்ட பொதுப் பாதுகாப்பு விதிகள் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மாகாணங்களில், பல தொடர்ச்சியான அரசுசார்பற்ற நிறுவனங்கள் நமது கட்டிட மற்றும் தீப்பாதுகாப்பு விதிளை உருவாக்குகின்றன, பின்னர் அவை சட்டமாக்கப்படுகின்றன . ஆயினும், இந்த விதிகள் நகல் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் வீதம் விற்கப்படுகின்றன, மிக முக்கியமாக அதனால் பதிப்புரிமை உறுதிப்படுத்தப்படுகிறது, எனவே எந்த ஒரு நபரும் ஒரு தனிப்பட்ட நபரிடம் இருந்து உரிமம் பெறாமல் சட்டத்தைப் பேச முடியாது. இந்தியாவில், இதே விஷயம் நடந்திருக்கிறது, ஆனால் இங்கு அரசே முக்கிய பொதுப் பாதுகாப்புத் தகவலை விநியோகம் செய்வதைக் கட்டுப்படுத்துகிறது. இந்திய தரநிலைகள் அமைப்பு இவ்விதிகளின் பதிப்புரிமைகளை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் தேசிய கட்டட விதிக்கு INR 13,760 வசூலிக்கப்படுகிறது. இந்த முக்கியமான பொதுப் பாதுகாப்புத் தரங்கள் தங்கள் தனிப்பட்ட சொத்து என்பதையும், உள்ளடக்கத்தை வாசிக்க அல்லது பேச விரும்பும் எவரும் உரிமம் பெற வேண்டும், கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. மிக முக்கியமாக, எந்தவொரு நபரும் குறியீடுகளின் பயன்படுத்தக்கூடிய பதிப்பை அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்றும் அமைப்பு கூறுகிறது, அப்படி வெளியிடுவதை அவ்வமைப்பு அனுமதிக்காது. அரசாங்கத்தின் பேரழிவு ஆயத்தப் படைக் கூட்டத்தில், ​​அனைத்து அரசு அதிகாரிகளும் அவசரக் காலத்தில் இந்த முக்கியப் பாதுகாப்பு விதியின் நகல்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டபோது, ​​ஒவ்வொரு அலுவலக அதிகாரியும் அதனைப் பெறுவதற்கு ஒர் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு INR 13,760 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். எவ்வித நகலாக்கமும் அனுமதிக்கப்படவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சூழ்நிலையை மாற்ற நான் முயன்றேன். நான் தொடங்கிய சிறிய அரசு சாரா அமைப்பு, உலகெங்கிலும் இருந்து சட்டத்தின் ஆற்றல்பெற்ற பாதுகாப்புக் குறியீடுகளை வாங்கத் தொடங்கியது. அமெரிக்காவில், நான் வாங்கி, ஸ்கேன் செய்து, 1,000 க்கும் மேற்பட்ட கூட்டாட்சிப் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டேன். இந்தியாவில், 19,000 இந்தியத் தரநிலைகளை வாங்கி, அவற்றை இணையத்தில் வெளியிட்டேன். காகிதப் பிரதிகள் வாங்கி அவற்றை ஸ்கேன் செய்வதைவிட அதிகப் பணி செய்தோம். நாங்கள் பல முக்கிய ஆவணங்களை எடுத்து நவீன வலைப் பக்கங்களாக அவைகளை மறுதட்டச்சு செய்து, அனைத்து விளக்கப்படங்களையும் மறுபடி வரைந்து, நவீன அச்சுகளைப் பயன்படுத்தினோம். ​​பார்வைக் குறைபாடுள்ளவர்கள் ஆவணங்களில் மேலும் திறம்பட செயல்படுமாறு தரங்களை விதிகளாக மாற்றினோம். கிடைத்த விதிகளை மின்நூல்களாக மாற்றினோம். முழுப்பனுவல் தேடல், புத்தக அடையாளங்கள் மற்றும் பாதுகாப்பான வலைத் தளத்தை வழங்கினோம். > அமெரிக்க, இந்திய அரசாங்கங்கள் மகிழ்ச்சியடையவில்லை அந்தச் சக்திகள் மகிழ்ச்சியடையவில்லை. அமெரிக்காவில் எங்கள்மீது ஆறு வாதிகள் தீவிரமாக வழக்குத் தொடர்ந்தனர். சட்டத்தைப் பற்றி பேசுவதற்கான உரிமை பற்றிய எங்கள் வழக்கு இப்போது அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ளது. இந்தியாவில், தர அமைப்பு எங்களுக்கு மேலும் எந்த ஆவணத்தையும் விற்க மறுத்தது-அமைச்சகத்திற்கு அளித்த நிவாரண மனுவை அது நிராகரித்தது-இந்தியாவில் எங்கள் சகாக்களுடன் சேர்ந்து, தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுத்திருக்கிறோம். எங்கள் வழக்கறிஞர்கள் இலவசமாகத் தங்கள் நேரத்தைச் செலவிட்டுள்ளனர், மேலும் அவர்கள் 10 மில்லியன் டாலர்கள் எங்கள் பணியைத் தற்காப்புச் செய்யசட்ட உதவிக்கு நன்கொடை அளித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நீதியை வேண்டும் அதேவேளையில், இந்த ஆவணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு இண்டர்நெட்டில் கிடைக்கச் செய்கிறோம். இந்தியத் தரநிலைகள் சிறந்த இந்தியப் பொறியியல் நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன, மாணவர்களும் பேராசிரியர்களும் தங்கள் கல்விக்கு அவசியமான முக்கியமான தரநிலைகளை எளிதில் அணுகுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒரு பணிக்கான வாய்ப்புள்ளது. இணையம் நமது உலகத்திற்கு உண்மையிலேயே சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது: அனைத்து மக்களுக்கும் உலகளாவிய அறிவு கிடைக்கச் செய்கிறது. அரசாங்கத்தின் கட்டளைகளை, நமது பெரும் ஜனநாயங்களின் சட்டங்களை அணுகுவதில் நான் கவனம் செலுத்துகிறேன், ஆனால் அது ஒரு பெரிய வாக்குறுதியின் ஒரு சிறிய பகுதியாகும். நம் பார்வையை மேல்நோக்கிச் செலுத்த வேண்டும். நமது நவீன உலகில், அறிவு இலக்கியம், தொழில்நுட்ப ஆவணங்கள், சட்டம் அல்லது அறிவின் பிற களஞ்சியங்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துவதை மன்னிக்க முடியாது. பர்த்ருஹரியின் நீதிசதகம் நமக்கு "அறிவு என்பது யாரும் கொள்ளையடிக்க முடியாத செல்வம்" என்று போதிக்கிறது. அறிவு என்பது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். அறிவும் சட்ட விதிகளும் உலகளாவிய அளவில் கிடைப்பது இன்று நம்மால் எதிர்கொள்ள முடியாதவை எனத் தோன்றும் இந்த அபாயகரமான தடைகளைச் சமாளிக்க உதவும். ஆனால், காந்தி அவ்வப்போது நமக்குச் சொல்லியதுபோல நாம் பொது வேலைகளில் ஈடுபட்டால் மட்டுமே அது நடக்கும். மேலும், நாம் அனைவரும் குறிப்பிட்ட குறிக்கோள்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலமும் மட்டுமே இது நடக்கும். மார்டின் லூதர் கிங், தவிர்க்க முடியாத தன்மை கொண்ட பாதைகளில் மாற்றம் வருவதில்லை என்று நமக்குக் கற்பித்தார், அது தொடர்ந்த போராட்டத்தினால் மட்டுமே வருகிறது. நாம் உலகத்தை மாற்றலாம், ஆனால் நாம் போராட வேண்டும். நாம் அவ்வாறு செய்தால், அது நமக்கு அறிவைக்கொடுக்கின்ற, உச்சியில் உள்ள அந்த மலைமீது இருக்கும் ஒளிமிக்க நகரத்திற்கு நம்மைக்கொண்டு செல்லும். அங்கு நீதி நீராகப் பாயும், உண்மை வலிமை மிக்க நீரோடையாக இருக்கும். [1954 அக்டோபர் 28இல் ஷாங்காய் நகரில் இளம் முன்னோடிகளின் அரண்மனைக்குச் செல்கிறோம். ] 1954 அக்டோபர் 28இல் ஷாங்காய் நகரில் இளம் முன்னோடிகளின் அரண்மனைக்குச் செல்கிறோம். [1956 டிசம்பர் 16, பென்சில்வேனியாவில் ஜனாதிபதி ஐசன்ஹோவரின் பண்ணையில். ] 1956 டிசம்பர் 16, பென்சில்வேனியாவில் ஜனாதிபதி ஐசன்ஹோவரின் பண்ணையில். [1957 நவம்பர் 14 அன்று புது டெல்லியில் சிறார் தினக் கொண்டாட்டம் ஒன்றில் பிரதம மந்திரி நேரு. ] 1957 நவம்பர் 14 அன்று புது டெல்லியில் சிறார் தினக் கொண்டாட்டம் ஒன்றில் பிரதம மந்திரி நேரு. [1958 செப்டம்பர் 16 அன்று தனது பூட்டான் பயணத்திற்கான சாலையை அமைத்த தொழிலாளர்களுடன் பிரதம மந்திரி. ] 1958 செப்டம்பர் 16 அன்று தனது பூட்டான் பயணத்திற்கான சாலையை அமைத்த தொழிலாளர்களுடன் பிரதம மந்திரி. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 73 (1940-1941), முகப்பு, சிம்லாவில் அரசப் பிரதிதியைச் சந்திக்கச் செல்லும் வழியில் ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 73 (1940-1941), முகப்பு, சிம்லாவில் அரசப் பிரதிதியைச் சந்திக்கச் செல்லும் வழியில் [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 84 (1946), பக்கம் 81, ஜவஹர்லால் நேருவுடன். ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி 84 (1946), பக்கம் 81, ஜவஹர்லால் நேருவுடன். தகவல் உரிமை, அறிவின் உரிமை: டாக்டர் சாம் பித்ரோதாவின் குறிப்புகள் 2017 அக்டோபர் 15, ஹேக் கீக் கீக்அப் (வருகைதரு திறானளர்களின் பொதுச் சொற்பொழிவுகள்), நியூமா (NUMA) பெங்களூரு. நண்பர்களுக்கு, மதிய வணக்கம். உங்களுடன் இருப்பது எனக்கு கிடைத்த சிறப்பு பாக்கியம். நான் எதற்குள் நுழைகிறேன் என்பதை உணரவில்லை. நான் இங்கு வந்த போது, ​​கார்ல் என்னிடம் சொன்னார், இன்று பிற்பகல் ஒரு கூட்டம் இருக்கிறது, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற விஷயத்தின் பின்னணியை நேற்றுச் சிறிது விளக்கினார், அதனால் நான் நியூமாவில் இங்கு வந்துள்ளேன். "நாம் சரியான இடத்தில் இருக்கின்றோமா? " என்று நான் கேட்டேன். ஆனால் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களாகிய நீங்கள் இந்தியாவில் செய்வதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். பழங்குடி மக்களுடன் வேலைசெய்யும் ஒருவரைச் சந்தித்தேன். சட்டங்களில் வேலை செய்யும் வேறு ஒருவரையும் சந்தித்தேன். புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப மிகவும் ஆர்வமாக உள்ள உங்களில் பலரைச் சந்தித்திருக்கிறேன். உங்களில் சிலரைப் பார்க்கும்போது, ​​இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பயணம் நீண்ட ஒன்று. நான் 1942 இல் பிறந்தேன். எனக்கு 75 வயதாகிவிட்டது, இந்தியச் சுதந்திரத்தின் ஆரம்ப நாட்கள் அவை. வளர்ந்தபோது, மகாத்மா காந்தி, நேரு, படேல், அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் எங்கள் எண்ணத்தில் இலட்சியங்களாக இருந்தார்கள். நாங்கள் காந்தியுடன் வளர்ந்தோம், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல், சத்தியம், நம்பிக்கை, சுய நம்பிக்கை, எளிமை, தியாகம், தைரியம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டோம். மேற்கண்ட அந்த வார்த்தைகள் அனைத்தும் சிறிய குழந்தைகளாக இருந்தபோது மிகவும் அர்த்தமுள்ளவையாக இருந்தன. என் தந்தை கல்வி கற்றவர் அல்ல. ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பெரிய புகைப்படங்கள் இருந்தன, அந்த ஐந்து புகைப்படங்களும் மேலே கூறிய தலைவர்களின் புகைப்படங்கள், நாங்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றபோது எங்கள் மனத்தில் இந்தியாவைப் பற்றிய அவர்களது கருத்து மிகவும் முக்கியமானதாக இருந்தது. 1964இல் அமெரிக்காவுக்குச் சென்றேன், 60களில் நான் கொஞ்சம் கல்வி கற்றபோது இந்தியாவில் மூன்று அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன என்பதை உணர்ந்தேன்: வேறுபாடுகள், மக்கள்தொகை, வளர்ச்சி. உண்மையில் இதனைச் சமாளிக்க முதல்தேவை ஒருங்கிணைப்பு. 1979இல் நான் தில்லிக்கு வந்தேன், சிகாகோவில் இருந்த என் மனைவியிடம் தொலைபேசியில் பேச முடியவில்லை, அதுவும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து. எனவே, சிறிது பெருமையுடனும், நிறைய அறியாமையுடனும் நான் "நான் இந்த மோசமான விஷயத்தைச் சரிசெய்யப் போகிறேன்" என்று சொன்னேன். என் வாழ்க்கையின் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைபேசிகளைச் சரிசெய்ய முயற்சி செய்தேன். ராஜீவ் காந்தி எனக்கு அரசியலில் நாட்டத்தை ஏற்படுத்தினார், ஒன்றுசேர்தல் இன்றித் தொடக்கம் இல்லை என்பதை உணர்ந்தேன். பிறகு நாங்கள் இரண்டு மில்லியன் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுவந்தோம். இந்த வேலைக்கு 15 வருடங்கள் தேவைப் பட்டது. அது உங்களுக்குத் தெரியாது, ஆனால் உங்கள் தாத்தாவுக்குத் தெரியும், உங்கள் அப்பாவுக்கும் தெரியாமல் இருக்கலாம். இன்று, நம்மிடம் 1.2 பில்லியன் தொலைபேசிகள் உள்ளன. ஒரு பில்லியன் இணைப்புகளைக் கடந்த நாடு நம் நாடு. இந்த இணைப்புகளைக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியக் கேள்வி. இரண்டாவது சவால் அறிவு. யாவருக்கும் பொதுவாக அறிவைக் கொண்டுவருவதற்கு, நீங்கள் இந்த ஒன்றுசேர்தலைப் பயன்படுத்த வேண்டும், தகவலை ஜனநாயக மயமாக்க வேண்டும். எனவே, அறிவூட்டல் குழு, தகவல் அறியும் உரிமை, அறிவுக்கான உரிமை போன்றவற்றைத் தொடங்கினோம், இவை அனைத்தும் மக்களிடையில் அதிகம் பேசப்படவில்லை. நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதுபற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. நான் தொலைபேசியில் என் வேலையை ஆரம்பித்தபோது எனக்கு நினைவிருக்கிறது: உணவு மற்றும் வேளாண்மையைப் பற்றி கவலைப்பட வேண்டிய இந்தியாவில் தொலைபேசிகளைச் சரி செய்ய முயல்கின்ற இந்த ஆள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், என்ன சாதிக்கப்போகிறார் என்று பல முக்கியமான முன் பக்க விமரிசனக் கதைகளை எழுதினார்கள். அவர்களுக்கு என் பதில் : "வேளாண்மையை எப்படிச் சரிசெய்வது என்று எனக்குத் தெரியாது, அதற்கு வேறு யாரையாவது தேட வேண்டும். என் வேலையை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும். நான் தொலைபேசிகளை சரி செய்ய முயற்சி செய்வேன், நான் அதைச் செய்ய முடியும் என்ற உத்தரவாதம் இல்லை, ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு சிறிய விஷயமும் முக்கியம். நீங்கள் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும், வேறு ஒருவர் வேறு ஒன்றை அறிந்திருக்கிறார், நாம் எல்லோரும் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிறு துளிகளைச் சேர்க்கிறோம், அது ஒன்று சேரும் என நம்புவோம். " பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் கனவு கண்ட விஷயங்கள் அனைத்தையும் இன்று உண்மையில் நீங்கள் நிகழ வைக்கிறீர்கள். உங்கள் ஆதரவு இல்லாமல், எங்கள் வேலை அனைத்தும் பாதிக்கப்படும். இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனக்கு, வெளிப்படையான அரசாங்கம் முக்கியமானது. தரவுகள் வெளிப்படையாக இருப்பது அதன் அடித்தளமாகும். எனவே ஒபாமா இங்கு வந்தபோது, ​​அவரும் நானும் அரை மணிநேரம் பேசினோம். இந்தியாவில் கிராமப்புறப் பகுதிகளை இணைப்பதற்கு மேலும் கண்ணாடியிழைகள் பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் விளக்க முயன்றோம், அவரை இராஜஸ்தானுடன் இணைத்தோம். இணைப்புத் தளம், ஜிஐஎஸ், யூஐடி, தரவு மையங்கள், இணையப் பாதுகாப்புப் பயன்பாடுகள் போன்ற தளங்களில் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் விளக்கியபோது அவர் ஆச்சரியப்பட்டார். "சாம், நீங்கள் எல்லாம் இப்படிப்பட்ட விஷயங்களை எப்படிச் சிந்திக்கின்றீர்கள்?" என்று அவர் கேட்டார். "நாங்கள் அப்படி சிந்திக்கவில்லை என்றால், புதிய இந்தியாவை உருவாக்க முடியாது." பழைய கருவிகளைக் கொண்டு புதிய இந்தியாவை உருவாக்குவது மிகவும் கடினம். புதிய கருவிகள் மற்றும் இளைஞர் திறமைகளைப் பயன்படுத்துவதுதான் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை. நான் இந்தியாவின் இளம் திறமையாளர்களை உறுதியாக நம்புகிறேன். 1984 இல் நான் CDOT [டெலிமாடிக்ஸ் அபிவிருத்தி மையம்] தொடங்கிய போது, ​​நிறுவனத்திலுள்ளோரின் சராசரி வயது 23. அங்கே மிகவும் திறமையான இளைஞர்கள், கடின உழைப்பாளிகள், நேர்மையான, உறுதியான, தைரியமான, அர்ப்பணிப்புடைய, தேசியவாதிகள் இருந்தார்கள். அவர்கள் விஷயங்களைச் செயல்பட வைத்தார்கள். "நீங்கள் ஏன் இளைஞர்களை மட்டும் பணியமர்த்துகிறீர்கள்?" எனச் சிலர் கேட்டார்கள், "அவர்கள் புதிதாக இருப்பவர்கள், அவர்கள் ஆற்றல், உற்சாகம் நிறைந்தவர்கள், தங்கள் மனநிலையில் கெட்டுப் போகாதவர்கள்" என்று சொன்னேன் இந்தியாவில் நிறைய பிரச்சினைகள் உள்ளன, அதனால் நமக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள பிரச்சினைகளைப் பற்றி மக்கள் என்னிடம் சொல்லும்போது, ​​"இந்தியாவில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிய உங்களுக்குத் திறமைமிக்கவர்கள் தேவையில்லை" என்றனர். இந்தியாவில் தீர்வுகளை அடையாளம் காண உங்களுக்கு திறமை உடையோர் தேவை இல்லை. இந்திய மக்களுக்கு ஏதாவது செய்ய, செய்யத் தயாராக உள்ள தைரியமான மக்கள்தான் தேவை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகம். அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமக்கு வேலை ஏற்கெனவே உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன், "உலகின் சிறந்த மூளைகள் பணக்காரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பரபரப்பாக இருக்கின்றார்கள், உண்மையில் அவர்களுக்குத் தீர்ப்பதற்குப் பிரச்சினைகள் இல்லை." இதன் விளைவாக, ஏழைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான திறமை மிக்கவர் இல்லை. ஏழைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உலகில் வேறு எங்கும் ஒப்பிடமுடியாத திறமைகளைக் கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள 400 மில்லியன் மக்களை உயர்த்துவதற்கான தீர்வை இந்தியா காண வேண்டும், பின்னர் அந்தத் தீர்வு உலகின் மற்றப் பகுதிகளில் பயன்படுத்தப்ப முடியும். நாம் முரண்பாடுகளைக் கொண்டவர்கள். இந்தியாவைப் பற்றி நான் சொல்லக்கூடிய எதையும் நீங்கள் எதிர்த்துப் பேச முடியும், நீங்கள் 100% சரிதான். அதுதான் இந்தியாவின் அழகு. பன்முகத்தன்மைதான் புதுமையைக் கொண்டுவருவதற்கு வளமான இடமாகும், மற்றும் நாம் உலகின் மிகவும் வேற்றுமைகள் கொண்ட நாடு. ஒருவேளை அவர்கள் 'பெயர்பெற்ற' இந்தியர்கள் போல் இல்லாமல் இருக்கலாம். ஒருமுறை மெக்ஸிகோவில் இருந்த சமயத்தில் நான் இந்திய தூதருக்காகக் காத்திருந்தேன் . 500 பேர் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில் நான் ஒரு பிரதான பேச்சாளராக இருந்தேன். யாரோ ஒருவர் "இந்தியத் தூதர் வருகிறார்" என்று சொன்னார். எனவே அவரை வரவேற்கத் தயாரானேன், அவரைப் பார்க்க முடியவில்லை. இறுதியாக "அவர் எங்கே?" என்று கேட்டேன். "ஓ, அவர் உங்களுக்காக காத்திருந்தார், அவர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கின்றார்" என்று ஒரு நபர் கூறினார். நான் போனேன், அவர் சீனர் போல் இருந்தார். ஏனென்றால் அவர் வடகிழக்கில் இருந்து வந்தவர். என் பின்புலத்தை வைத்து, இந்தியத் தூதர் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுதான் இந்தியாவின் அழகு. இந்தியா கொண்டாடப்பட வேண்டியநாடு, ஆனால் இன்று நான் இந்தியாவைப் பார்க்கும் போது கவலைப்படுகிறேன். மக்கள் தகவலைத் தாங்களே வைத்துக் கொள்ள முயற்சிக்கும்போது, ​​சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பும்போது, சுதந்திரத்தை தாக்கும்போது அது கவலைப்படத் தக்கதாக இருக்கிறது. அதுதான் நீங்கள் எல்லோரும் பணிசெய்ய வேண்டிய இடம். குறைந்தபட்சம் கணினிவெளியில் அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும். அது அனைவரின் முன்னேற்றத்திற்கும் முக்கியம். இத்திட்டம் ஒரு பிராந்தியத்திற்கோ பிராமணர்களுக்கோ, இந்து அல்லது முஸ்லீமுக்கோ சொந்தமானதல்ல. இதில் எந்தவிதமான தீண்டாமையும், வேறுபாடுகளும் இல்லை. சாத்தியமான எல்லா வழிகளிலும் அனைவரையும் நாங்கள் இணைத்துக் கொள்கிறோம். தகவல் அனைவருக்குமானது. இன்று இந்தியாவில் நடக்கும் விவாதம் மிகவும் சாதாரணமானது. நாம் உண்மையில் இந்தியாவில் உரையாடலின் தளத்தை உயர்த்த வேண்டும். நான் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் சில வருடங்களுக்கு முன் என் பேத்திக்காக நான் ஒரு புத்தகம் எழுதினேன் . இப்பொழுது என் பேத்திக்கு ஆறு வயது. சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்து வருகிறாள். ஒருநாள், "75 ஆண்டுகளுக்கு முன்பு, 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வசித்த வந்த இந்த முதியவர் யார்?" என்று அவள் வளர்ந்து கேள்வி கேட்பாள். அவரது தந்தை, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர், வித்தியாசமாக இருப்பார் என்று சொல்லப் போகிறார். அவளுடைய தந்தைக்கு எனக்குத் தெரிந்த வறுமை தெரியாது. இந்தியாவில் ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் நான் பிறந்தேன், என் அம்மா வீட்டிலேயே எட்டுக் குழந்தைகளைப் பெற்றாள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. மருத்துவர் கிடையாது, செவிலியர் இல்லை, மருத்துவமனை இல்லை, மருந்து இல்லை. பள்ளிகள் இல்லை. நான் அவர்களிடம் சொல்லும் போதும், அப்பா சும்மா கதை சொல்கிறார் என்று நினைப்பார்கள். இது யதார்த்தமாக இருக்க முடியாது. இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களை உயர்ந்துவதற்குத் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லையெனில், நாம் நமது வேலையைச் செய்யவில்லை என்று அர்த்தம். மேலும் கோடீசுவரர்கள் உள்ள ஒரு இந்தியாவை உருவாக்க நாம் விரும்பவில்லை. அவர்கள் இருப்பதானால், அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பார்கள்.. அவர்களுக்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்தையும் மாற்றும் தொழில்நுட்பத்தை நான் பயன்படுத்த விரும்புகிறேன். அது அறிவிலிருந்து மட்டுமே வர முடியும். அது உங்களைப் போன்றவர்களிடமிருந்து மட்டுமே வர முடியும். அது வெளிப்படைத் தன்மையில் இருந்துதான் வர முடியும். எனக்கு, வெளிப்படைத் தன்மை, கிடைப்பு, செயலுக்குப் பொறுப்பேற்றல், வலைத்தளம், ஜனநாயகமயமாக்கல், அதிகார மையமழிப்பு ஆகியவற்றைத் தகவலறிவுதான் கொண்டுவருகிறது. இவை அனைத்தும் காந்திய வழி. இன்று காந்தி இருந்தால், உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவார். அகமதாபாத்தில் நாளை மறுநாள் நான் பேசுகிறேன். உண்மையில், கார்லும் நானும் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் நாளை சாபர்மதி ஆசிரமத்தில் கழித்தோம், காந்தியின் கருத்துக்களை இந்தத் தகவல் யுகத்தில் பரப்புவதில் உண்மையாகவே கவனத்தைக் குவிக்க முயன்றேன், ஒருங்கிணைவது பற்றியும் எவ்விதம் மனித வரலாற்றில் காந்தி எந்தக் காலத்தையும்விட இப்பொழுது மிகவும் அவசியமாக இருக்கின்றார் என்பது பற்றியும் மக்களிடம் சொல்லவேண்டும். இரண்டாவது புத்தகம் பற்றிச் சற்றுமுன் நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் உலகத்தை மறுவடிவமைப்பதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுகிறேன். இன்று நாம் வடிவமைத்துள்ள உலகம் முற்றிலும் பயனற்றது. கடைசி வடிவமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. ஐ.நா, உலக வங்கி, நேட்டோ, சர்வதேச நாணய நிதியம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, தனிநபர் வருமானம், பரிமாற்றச் சமநிலை, ஜனநாயகம், மனித உரிமைகள், முதலாளித்துவம், நுகர்வு மற்றும் போர்கள் இவை யாவும் அமெரிக்காவின் வடிவமைப்புகள். இந்த விஷயங்கள் எதற்கும் இனி அர்த்தமில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்திஎன்பதற்குச் சற்றும் அர்த்தமே இல்லை. ஆனால் நாம் இன்னும் அதைப் பின்பற்றுகிறோம். இன்று அளவீடுகள் அனைத்தும் பெரிய தரவு, மறைமுகக் கணினியாக்கம், பகுப்பாய்வு ஆகியவற்றிலிருந்து பயன்பெற முடியும். முன்னாளில் அது சாத்தியமில்லை, நீங்கள் எல்லோரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதை ஒப்புக் கொண்டீர்கள். இன்று நீங்கள் சென்று பல சிறிய விவரங்களை விட்டுவிடலாம், ஏனெனில் நீங்கள் ஆய்வு செய்யப பெரிய தரவுகள் உள்ளன. நீதிமன்றத்தில் இருந்து அனைத்து தரவுகளையும் எடுத்து, வலைத்தளத்தில் வைத்திருப்பதாக இங்கே யாரோ கூறினார்கள் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் நமது தலைமை நீதிபதிகள் அனைவரிடமும் ஏழு ஆண்டுகள் போராடினேன். ஒவ்வொரு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும்போதும், அடுத்த நாள் அவருடன் பேசினேன், அவரது வீட்டிற்கு சென்றேன். டீ சாப்பிடுகிறோம். பிறகு, "நீதியைப் பெறுவதற்கு 15 வருடங்கள் ஏன்? உங்கள் அறிக்கைகள் அனைத்தையும் கணினிமயமாக்குவது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? மூன்று வருடங்களில் நீதி கிடைக்க வழி செய்யக்கூடாதா?" என்று அவரிடம் கேட்பேன். அவர் "ஆம் சாம் பித்ரோதா, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறோம், நல்ல யோசனை, அப்படியே செய்வோம்" என்று சொல்வார். பிறகு எதுவும் நடக்காது. எட்டு மாதங்களில், புதிய தலைமை நீதிபதி வருவார். எனவே நான் மீண்டும் அவரிடம் செல்வேன். அவர் கூறுவார், "நீங்கள் மிகவும் சரியாகச் சொல்கின்றீர்கள், இந்தமுறை கண்டிப்பாகச் செய்கிறோம்." நல்ல எண்ணத்துடன் சொல்கிறார்கள், செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. இந்தியாவில் ஒரு வழக்கில் தீர்ப்புக் கூற ஏன் 15 ஆண்டுகள் ஆகிறது? நீங்கள் அனைத்து நிபுணத்துவத்தையும் கொண்டு செய்தால், அது ஒரு ஆண்டு, அல்லது இரண்டு, ஒருவேளை மூன்று ஆண்டுகளில் முடிக்கலாம். எனவே, நீங்கள் இதனை மாற்றத் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சமுதாயத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்கு நீங்கள் இங்கு உள்ளீர்கள். வீடுகளில் இருந்து வேலை இடத்திற்கு, காவல் நிலையத்திற்கு, நீதிமன்றத்திற்கு, சுகாதார சேவைகளுக்கு, விவசாயத்திற்கு, கல்விக்கு, அரசுக்கு, எல்லாவற்றுக்கும் உங்களுக்குத் தேவையான கருவி, அடிப்படையில் தகவல், தகவல், தகவல்தான். தகவலுக்கு அறிவு, ஞானம், செயலைக் கூட்டுங்கள். தைரியமுள்ள இளைஞர்கள் இணைந்து வேலைசெய்ய வேண்டும். இந்தியாவில் நீங்கள் 45 வயதுக்கு மேல் உள்ள எவரையும், என்னையும் சேர்த்து நீக்கிவிடலாம். அவர்கள் இந்த உலகத்தை கையாளுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல. இந்தியாவில் எல்லோரும் கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. இது இராமனின் வரலாற்றைப் பற்றியது என்பார் ஒருவர். உடனடியாக யாரோ ஹனுமான் பற்றிப் பேசுவார், இன்னொருவர் மற்றொரு கடவுள் பற்றிப் பேசுவார், எல்லாரும் இது நம் பாரம்பரியம் என்று கூறுவார்கள். எதிர்காலத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. நமது பாரம்பரியம் முக்கியம்தான். நமது பாரம்பரியம், கலை, கலாச்சாரம், இசை பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம். சுமார் 15 வருடங்களுக்கு முன், ஒரு மில்லியன் நூல்களின் கையெழுத்துப் படிகளை எடுத்து, அதை கணினிமயமாக்கினோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு. 40 ஆண்டுகளுக்கு முன்பு, 37 ஆண்டுகளுக்கு முன்னர், நாங்கள் கபில வாத்ஸ்யாயன் நூல்களில் தொடங்கி இந்திரா காந்தி நிறுவனத்தில் மைக்ரோஃபில்மில் நமது அனைத்துக் கலைகளையும் சேமித்து வைத்தோம். இந்த விஷயங்கள் எல்லாம் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்ற நிலைக்கு வந்துள்ளன. முன்னதாக நம்மிடம் சரியான கருவிகள் இல்லை. இப்போது, ​​சேமிப்பு மலிவானது. உங்கள் யோசனைக்காக இது: 16-பிட் ரேம் 16 டாலருக்கு வாங்கினேன். நான் சொல்வது என்ன என்பது சிலருக்கு புரியும் என்று நம்புகிறேன். நான் 37 டாலருக்கு நான்கு உள்ளீடு NAND கேட்டுகள் வாங்கினேன். முதல் நுண்செயலி இன்டெல்லினால் வடிவமைக்கப்பட்டபோது, ​​நான் அங்கு இருந்தேன். அனைத்து இன்டெல் நிறுவனர்களும் என் நண்பர்கள், பாப் நோய்ஸ், லெஸ்டர் ஹோகன், கார்டன் மூர் ஆகியோர். முதல் நான்கு பிட் செயலியை நான் தொலைபேசிக்குப் பயன்படுத்தினேன். அது ஒரு அதிசயம் என்று நாங்கள் நினைத்தோம். "கடவுளே, என்ன சக்திவாய்ந்த கருவி" என்று நாங்கள் நினைத்தோம். இன்று உங்களிடம் என்ன இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். இன்று ஜிகாபைட்டுகள் மற்றும் டெராபைட்டுகளுடன் உட்கார்ந்திருக்கிறீர்கள், உங்கள் கைப்பேசியின் செயலாக்க சக்தி மிகவும் அதிகம், இதுதான் மாறும் இந்தியா. ஆனால் அதை நீங்கள் மாற்ற விரும்பும் விதத்தில் மாற்ற வேண்டும், அமெரிக்கவிலுள்ள யாரோ ஒருவர் விரும்பும் வகையில் இந்த மாற்றம் இருக்கக் கூடாது. நமக்கு உள்ளூர் உள்ளடக்கம், உள்ளூர் பயன்பாடுகள், உள்ளூர் தீர்வுகள், வளர்ச்சிகள் வேண்டும். மாற்றம் இந்தியாவுக்குரியதாக இருக்க வேண்டும். மாற்றம் மேற்கத்தியப் பிரதியாக இருக்க கூடாது. எல்லோரும் அமெரிக்கர்களைப் போன்று இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் மோசமானது. மேற்கத்திய மாதிரி மேம்பட்ட, நிலையான, வடிவமைக்கக்கூடிய அல்லது பராமரிக்கக் கூடிய ஒன்று அல்ல. நாம் இந்திய மாதிரி முன்னேற்றத்தை உருவாக்க வேண்டும், அதுதான் காந்தியின் வழிநடத்துதல். நான் இங்கே சில இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ​​"எனக்கு ஒவ்வொரு மாவட்டத்தின் தரவுத் தொகுதியையும் பெற்றுத்தர முடியுமா?" என்று கேட்டேன். நீதிமன்ற வழக்குகள், காவல்துறை, ஆசிரியர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் பற்றிய தகவல்கள்--ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லாத் தேவையும் ஆன்லைனில் கிடைக்க வேண்டும். இந்திய தேசியத் தகவல் தளங்களைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நிச்சயமாக அது முக்கியம்தான், அதை முக்கியம் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் மாவட்ட அளவில் வேலை செய்ய வேண்டும். மாவட்ட அளவில் எனக்கு 500 ஆசிரியர்கள் தேவைப்பட்டால் நான் தில்லி சென்று “அவர்களைப் பணிக்கு அமர்த்த எங்கே போக வேண்டும்?” என்று கேட்கக் கூடாது. அங்கேயே அவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். எல்லாவற்றையும் மையமழிக்க வேண்டும். இன்று, இந்தியாவில் அதிகாரம் இரண்டு இடங்களில் உள்ளது. பிரதமரிடமும் முதலமைச்சரிடமும். பெங்களூர் நகரத்தலைவருடன் (மேயருடன்) இன்று காலை ஒரு சந்திப்பு. "நாம் முதலில் நகரத் தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்" என்றேன். நகரத் தலைவருக்கு இந்தியாவில் எந்த அதிகாரமும் இல்லை. யார் மேயர் என்றுகூட யாருக்கும் தெரியாது. அவர் தலைவராக ஒரு வருடம் மட்டுமே இருப்பார். வேடிக்கை. குளியலறைக்கு எங்கு செல்லப் போகிறோம் என்று கூட ஒரு ஆண்டில் தெரிந்துகொள்ள முடியாது. நீங்கள் செய்ய வேண்டியதைத் தெரிந்துகொள்ள மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் தேவை. அப்படி இருக்கும்போது பதவிக்காலம் ஒரு வருடம் என்பதன் பின்னணி என்ன? பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு நேரம் தரப்படக்கூடாது என்பதே காரணம். எனவே ஓராண்டில நாம் இதுவரை எதைச் செய்துகொண்டிருந்தோமோ அதைத்தான் செய்ய முடியும். எனவே, நான் ஐந்து ஆண்டு கால எல்லையைப் பெற அவரிடம் வலியுறுத்தினேன். மாவட்டத்திலும் அதே நிலைதான். மாவட்டத் தலைவர் யார்? மாவட்ட ஆட்சியர். மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுத்த உறுப்பினர் எவரும் பதவியில் இல்லை. நீங்கள் செய்வதை வைத்து மாவட்ட மட்டத்தில் எப்படி வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும்? உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை, ஆனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் நிறைய, நிறைய விஷயங்கள் என்னிடம் உள்ளன. உங்களுடன் நான் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நான் பழைய ஆள். எனக்கு அது தெரியும், நான் அதை மதிக்கிறேன், ஆனால் நான் இன்னும் வேலை செய்து கொண்டு, 'பிஸி'யாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் நான் தினமும் காலை 8 மணிக்கு என் வேலையை ஆரம்பித்து 11, 12 வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட வேலை செய்கிறேன், ஏனென்றால் எனக்குத் தெரிந்த ஒரே வேலை இதுதான். எனக்கு விடுமுறை இல்லை. 50 ஆண்டுகளில் நான் விடுமுறை எடுக்கவே இல்லை. ஏனென்றால் இந்தியாவில் அதிக வேலை இருக்கிறது. ஓய்வாகக் கடற்கரைக்குச் சென்று ஏதாவது பானம் அருந்துவதைவிட இப்படி பிஸியாக இருப்பது நல்லது என நினைக்கிறேன். கடற்கரைக்குச் செல்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உங்களில் பலரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உண்மையில், ஞாயிறு பிற்பகலில் நீங்கள் வந்ததைப் பாராட்டுகிறேன், ஏனெனில் நான் அந்த நேரத்தில்தான் உங்களைப் பார்க்க முடியும். எனவே என்னுடைய நண்பரான கார்லிடம் சொன்னேன். கார்ல் ஒரு சுவாரசியமான மனிதர். உங்களுக்குக் கார்ல் பற்றித் தெரியுமா என்று எனக்கு தெரியாது, ஆனால் நீங்கள் கார்ல் பற்றி கூகுளில்பார்க்க வேண்டும். கார்ல் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரும் நானும் அனைத்து வகையான வேடிக்கை விஷயங்களையும் செய்திருக்கிறோம். நாங்கள் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் ப்ரூஸ்டர் காலேயுடன் இணைந்து இந்தியாவில் இருந்து 450 ஆயிரம் புத்தகங்களை எடுத்து, ஆன்லைனில் இட்டோம். இந்திய அரசாங்கம் பயந்தது. "கொஞ்சம் காத்திருங்கள், நீ எப்படி இப்படிச் செய்ய முடியும்? இது பதிப்புரிமை உடையது" என்றது. நாங்கள் சொன்னோம்," கவலைப்படாதீர்கள். அவர்கள் எங்கள்மீது வழக்கு தொடுக்கட்டும், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்." ஏனென்றால் இந்திய அரசாங்கம் எதைப் படிக்க வேண்டும் எதைப் படிக்க கூடாது என்று நமக்கு விதிக்கக் கூடாது. உலகில் உள்ள அனைவரும் இந்த அமைப்பை எதிர்கொள்ள வேண்டும். கார்லும் நானும் ஒருமுறை இந்திய தரநிலைகள் அனைத்தையும் எடுத்து ஆன்லைனில் இட முடிவு செய்தோம். இந்தியத் தரநிலைகள் இந்தியாவில் 14 ஆயிரம் ரூபாய்க்கும், வெளிநாட்டினருக்கு 1.4 இலட்சம் ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இவை நமது பாதுகாப்புத் தரநிலைகள், நெருப்பு தரநிலைகள், இவை நமது சட்டங்கள். ஒரு குடிமகனாக நீங்கள் அதை அணுக முடியாது, ஆனால் நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும். வேடிக்கையான விஷயம். நீங்கள் ஆன்லைனில் இடும்போது, ​​"கொஞ்சம் காத்திருங்கள், நீங்கள் இதைச் செய்ய முடியாது" என்று அரசாங்கம் சொல்கிறது. இதற்கு விடை, நமக்குக் கடுமையான நிலை என்பதுதான். ஆனால் நாங்கள் அதைச் செய்ய போகிறோம். இந்த அணுகுமுறையைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களிடம் போர்க்கால அணுகுமுறை வேண்டும் என்றும் விரும்புகிறேன். இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இதை நீங்கள் செய்ய முடியாது என்று யாரும் உங்களிடம் சொல்ல முடியாதவாறு செய்யுங்கள். காந்தி போரிட்டது போன்று போராட வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த உறவினருடன் போராடுவது வித்தியாசமானது, அந்தச் சண்டை கடினமானது. எனவே, நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன், இந்த சிறிய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. நான் கார்ல் பேசுவதைக் கேட்கக் காத்திருக்கிறேன், பிறகு நாம் பரந்த உரையாடலில் ஈடுபடுவோம். எனக்கு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியும், ஒருவேளை நான் ஐந்து நிமிடம் அதிகம் எடுத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் இது போன்ற பார்வையாளர்களை நான் எங்குப் பெறுவேன்? உங்களுக்கு என் அன்பு. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 84 (1946), ப. 161, ஜவஹர்லால் நேருவுடனும் சர்தார் படேலுடனும். ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 84 (1946), ப. 161, ஜவஹர்லால் நேருவுடனும் சர்தார் படேலுடனும். [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 86 (1947), ப. 224, ஒரு கடற்கழிக்குக் குறுக்கே மூங்கில் பாலத்தின் மீது. ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 86 (1947), ப. 224, ஒரு கடற்கழிக்குக் குறுக்கே மூங்கில் பாலத்தின் மீது. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 38 (1928-1929), முகப்பு. ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 38 (1928-1929), முகப்பு. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 86 (1946-1947), முகப்பு, ஏக்லா சலோ என்பது தலைப்பு. ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 86 (1946-1947), முகப்பு, ஏக்லா சலோ என்பது தலைப்பு. [சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 100, முகப்பு, தியானத்தில் காந்தி, சபர்மதி ஆசிரமம், 1931. ] சிடபிள்யூஎம்ஜி, தொகுதி. 100, முகப்பு, தியானத்தில் காந்தி, சபர்மதி ஆசிரமம், 1931. தகவல் உரிமை, அறிவு உரிமை: கார்ல் மாலமூதின் கருத்துரைகள் ஹாஸ்கீக் கீக்அப் (வருகைதரு கணினி-ஆர்வலர் தரும் பொதுமக்களுக்கான சொற்பொழிவுகள்), பெங்களூரு, 2017 அக்டோபர் 15. சரி, சாம், நன்றி. உங்களுக்கு என் குரல் கேட்கிறதா? இது ஒரு அழகான வசதி. எங்களை அழைத்ததற்காக நியூமாவுக்கு நன்றி சொல்ல விழைகிறேன். குறிப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக ஹாஸ்கீக்குக்கு நன்றி. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் மிக அற்புதமான பணியை சந்தியா ரமேஷ் செய்துள்ளார். அழகிய அறிமுகத்திற்காகப் பிராணேஷுக்கும், ஸ்ரீநிவாஸ் மற்றும் டி.ஜே.வுக்கு அவர்கள்தம் அறிவூட்டும் உரைகளுக்காகவும் நன்றி. சாம், என்னை மறுபடியும் இந்தியாவுக்கு வரவழைத்தமைக்காக உங்களுக்கும் நன்றி. இங்கே வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது பணி விசித்திரமானது. நான் பொதுமக்களுக்கான (பொதுநல) அச்சாளன். உங்களுக்குத் தனிப்பட்ட அச்சாளர்களைத் தெரியுமல்லவா? அவர்கள் ஹாலிவுட்டில் கதை எழுதுகிறார்கள், பிறவற்றையும் வெளியிடுகிறார்கள். பலப்பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பொதுமக்களுக்கான (பொதுநல) அச்சிடல் தொடங்கிவிட்டது. அக்காலத்தில் பொதுநல அச்சாளர் ஒருவர் இருந்தார்-பேரரசர் அசோகன். யாவராலும் விரும்பப் பட்டவர். அவர் அரசாங்க ஆணைகளைத் தூண்களில் பொறித்து இந்தியா முழுவதும் பரப்பினார். சட்டத்தையும், தர்மத்தையும், விலங்குகளை முறையாக நடத்தவேண்டும் என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் செய்தார். வெவ்வேறு மதங்களும் சகிப்புத்தன்மையுடன் ஏற்கப்பட வேண்டும் என்றார். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ரோமில் மக்கள் ஆட்சியாளர்க்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். "நீங்கள் சட்டங்களை எழுதி வைக்க வேண்டும், ஒவ்வொரு முறை நாங்கள் நீதியவைக்குச் செல்லும்போதும் புதிதுபுதிதாகச் சொல்லக்கூடாது" என்றார்கள். ரோமானியச் சட்டத்தின் பன்னிரண்டு சட்டகங்களை எடுத்தார்கள். அவற்றை வெண்கலத்திலும், மரத்திலும் பொறித்தார்கள். மக்கள் சட்டங்களைத் தெரிந்து கொள்ளுமாறு ரோமானியப் பேரரசில் ஒவ்வொரு சந்தையிலும் வைத்தார்கள். ஏனென்றால், மக்களுக்கான அச்சிடல் என்பது நம் யாவருக்கும் உரியது. இது தனியார் அச்சிடுவதிலிருந்து வேறுபட்டது. தனியார் ஏதோ கொஞ்சம் பணத்துக்காக அச்சிடுகிறார்கள், அது 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அல்லது இந்த நாளில், இந்தச் சமயத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் களத்திற்கு வரும். ஆனால் பொதுநல அச்சு என்பது நமக்கான தகவல்களை அச்சிடுவதாகும். கலாச்சாரச் சேகரிப்புகள் முதலாகச் சட்டம் வரை எல்லாவற்றையும் அச்சிடுவதை நான் அமெரிக்க ஐக்கியநாட்டில் 37 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். அரசாங்கத்திற்குச் சொந்தமான 6,000 வீடியோக்களை ஆன்லைனில் பதிவிட்டேன். அவற்றை நகலெடுத்து, யூ-ட்யூபில் பதிவிட்டோம். 50 மில்லியன் பார்வைகள். அவை அதிலேதான் இருக்கின்றன. உதாரணமாக, பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத் திலிருந்து ஒரு பொதுக்குழுமத்தின் அறிக்கையையும், அவர்களின் ஐபிஓ அறிக்கையையும் பெற 30 டாலர் செலவழிக்க வேண்டும். நாங்கள் அதை இலசமாகக் கொடுத்தோம். இப்போது பல நூறு மில்லியன் மக்கள் அந்தத் தகவலைப் பயன்படுத்துகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் நான் இந்தியத் தகவல்களைப் பதிவிடத் தொடங்கினேன். அமெரிக்காவில் தொடர்ந்து இப் பணியைச் செய்து வருகிறேன். ஆனால் இப்போது அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளிலும் செய்கிறேன். என்னிடம் ஐந்து தொகுப்புகள் உள்ளன. முதலில் நிழற்படங்கள்: தகவல் அமைசச்கம் ஒரு பெரிய நிழற்படத் தொகுதியை ஆன்லைனில் வைத்திருக்கிறது. ஆனால் அது மறைவாக உள்ளது. உங்களால் அதைக் காணமுடியாது. ஒரு உள்ளடக்கப் பக்கத்தை எடுத்தால் ஆயிரக்கணக்கான நிழற்படங்கள் உள்ளன. நீங்கள் சரியான படத்தைப் பெற, க்ளிக் செய்துகொண்டே போகவேண்டும். நான் அவற்றை ஆராய்ந்து 12,000 நிழற்படங்களைத் தேர்ந்தெடுத்து, ஃப்ளிக்கரில் போட்டேன். இவை அற்புதமான விஷயங்கள். 47', 48', 49' களில் நேருவின் படங்கள், பல ஆண்டுகளாகக் குடியரசு நாள் கொண்டாட்டங்களின் படங்கள், மக்கள் கிரிக்கெட் விளையாடுவது பற்றிய ஆயிரம் படங்கள், ஒலிம்பிக்ஸ், விலங்குகள், இந்தியாவின் கோயில்கள்-மிக அழகான விஷயங்கள். இன்னும் அதிகமாக இவை இருக்க வேண்டும், உயர் தெளிவில் வேண்டும். இரண்டாவது, இந்தியத் தர அமைப்பு: இந்தியாவின் கட்டுமான விதி, 14000 ரூபாய். இந்தியாவில் படிக்கின்ற ஒவ்வொரு மாணவரும், ஓராண்டுக்கு 650,000 பேர், இந்த ஆவணத்தைக் காண வேண்டிய தேவை இருகிறது. அவர்கள் நூலகத்துக்குச் சென்று இருக்கும் ஒரு குறுவட்டினை அல்லது இருக்கும் ஒரே ஒரு புத்தகத்தைக் காண வேண்டும். நாங்கள் அதை ஆன்லைனில் பதிவிட்டோம். அவற்றை இப்போது ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான பேர் பார்க்கிறார்கள். உண்மையில், இந்திய அரசாங்கம் எங்கள்மீது வழக்குப் போடவில்லை. பல்வேறு தர நிறுவனங்களால் எங்கள்மீது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வழக்குப் பதியப்பட்டது. ஆனால் இந்தியத் தர நிறுவனம் எங்களுக்குப் பிறவற்றை மேலும் விற்க மறுத்து விட்டது. காரணம், அவர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம். ஒவ்வோராண்டும் அந்தத் தரவிதிகளை வாங்க நான் 5,000 டாலர் கட்டணம் செலுத்தினேன். இரண்டாண்டுகள் அவ்விதம் செய்த பிறகு, அவர்கள் எனக்குப் புதுப்பித்தல் அறிவிக்கை அனுப்பினார்கள். "சரி, புதுப்பிக்கலாம். ஆனால் இங்கே எல்லா விதிகளும் இருக்கின்றன. அவை பெரிய விஷயம் அல்லவா? நான் உங்களுக்கு அதன் எச்.டி.எம்.எல். பதிவைத் தரட்டுமா?" என்று கேட்டேன். ஏனெனில், இம்மாதிரித் தரங்கள் பலவற்றை நாங்கள் இந்தியாவுக்கு அனுப்பினோம். அவற்றை எச்டிஎம்எல்-லில் மறுதட்டச்சுச் செய்தோம். எஸ்விஜிக்குள் படங்களை மறுவரைவு செய்தோம். சூத்திரங்களை மேத்-எம்எல்-லில் குறியாக்கம் செய்தோம். அதனால் அதை நீங்கள் உங்கள் செல்-பேசியில் பார்க்கலாம், ஒரு படத்தை எடுக்கலாம், அதைப் பெரிதாக்கலாம், உங்கள் ஆவணத்தில் ஒட்டிக் கொள்ளலாம். இப்போது மக்கள் நலத்துக்கென இந்திய அரசாங்கத்தின்மீது வழக்குப் போட்டுள்ளோம். ஸ்ரீநிவாஸ் கோடாலி என்னுடன் வழக்கில் சேர்ந்துள்ளார். இங்கே இருக்கும் எனது நண்பர் சுஷாந்த் சின்ஹா, 'இந்தியன் கானூன்' என்ற, எல்லாவித நீதியவை வழக்குகளுக்கும் சேவையளிக்கும் வியத்தக்க பத்திரிகையை நடத்துபவர், எனது சக-விண்ணப்பதாரர். நிஷித் தேசாயும் அவரது கூட்டாளிகளும் தில்லி உயர்நீதி மன்றத்தில் எங்களுக்காக இலவசமாக வாதிடுகிறார்கள். இந்த வழக்கில் எங்களுக்கு மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித். மீண்டும் நவம்பரில் நடுவர் முன்னால் நிற்கவேண்டும். அவற்றிற்கான தாள்கள் தயாராகி விட்டன. மத்திய அரசாங்கம் நான்காவது முறையாக, எதிர்வினை புரியவில்லை. நாங்கள் வாய்மொழி விவாதம் பெற்று வழக்கில் வெற்றியடைய இருக்கிறோம். ஏனெனில் இந்தியாவில் அரசாங்கத் தகவலறி உரிமை அரசியல் சட்ட அடிப்படையிலானது. இந்தத் தரங்கள் அரசாங்க ஆவணங்கள், எனவே சட்டப்படியான சக்தி அவற்றுக்கு உண்டு. மூன்றாவது, அதிகாரபூர்வ அரசிதழ்களின் சேகரிப்பு. ஸ்ரீநிவாஸ் அதைப் பற்றிப் பேசினார். இதுபற்றிய வேலையில் இப்போதுதான் இறங்கியுள்ளோம். இந்தியாவின் அரசிதழ்களைப் பெற்றுள்ளோம். இப்போது, கர்நாடகா, கோவா, தில்லி, மேலும் இரு அரசிதழ்களைப் பெற்றுள்ளேன். தரவேற்றம் செய்யுத் தயாராக உள்ளன. எப்படி மீதியிருக்கும் அரசிதழ்களைப் பெறுவது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நான்காவது சேகரிப்பு, இந்து சுயராஜ்யம். நான் சாம்-ஐ ஒரு நாள் பார்க்கச் சென்றேன். அவர் "உங்களிடம் யுஎஸ்பி-சிற்றியக்கி (பென்டிரைவ்) இருக்கிறதா?" என்றார். "என்ன?" உடனே அவருக்கு ஒரு சிற்றியக்கியை எடுத்துக் கொடுத்தேன். அதை அவர் கணினியில் இட்டுப் பதினைந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் திருப்பிக் கொடுத்தார். "இது என்ன?" என்று கேட்டேன். அவர் பதிலளித்தார். "மகாத்மா காந்தியின் படைப்புகளின் தொகுப்பு, 100 பாகங்கள் முழுவதும், 50,000 பக்கங்கள்". "உங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்டேன். "ஆசிரமம்தான் எனக்குக் கொடுத்தது." "சரி, இதைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?" "அவர்கள் இதை ஓர் இணையதளத்தில் இடப் போகிறார்கள்" என்றார் சாம். நான் இயக்கியை மறுபடியும் பார்த்தேன். "சரி, நான் இதை இணைய தளத்தில் போடட்டுமா?" என்று கேட்டேன். "சரி, செய்யுங்கள்" என்று நம்பிக்கையுடன் சொன்னார் சாம். "அவர்கள் எரிச்சல் அடைய மாட்டார்களா?" "இல்லை. யாரும் இதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை." ஆகவே அவற்றை ஆன்லைனில் இட்டேன். நாங்கள் அந்தச் சேகரிப்பை-100 பாகங்கள் முழுவதும்-வெளியிடப் போவதால், நீங்கள் அதனுள் சென்று காணலாம், ஒரு மின்-புத்தகமாக இறக்கிக் கொள்ளலாம். மற்றொரு அரசாங்க இணைய வழங்கிக்குச் சென்றேன். அதில் நேருவின் தேர்ந்தெடுத்த படைப்புகளைக் கண்டேன். ஆனால் அதில் மூன்று பாகங்கள் இல்லை. ஆகவே அவற்றை எடுத்தேன். அந்த மூன்று பாகங்களையும் கண்டுபிடித்தேன். அவை ஆன்லைனில் உள்ளன. இப்போது எங்களிடம் நேருவின் படைப்புகளின் முழுத் தொகுதி உள்ளது. அம்பேத்கரின் முழுத் தொகுப்பும் உள்ளது. டாக்டர் அம்பேத்கர் தொகுதி மகாராஷ்டிரா வழங்கியில் இருந்தது. ஆனால் அதில் மிக முக்கியமான ஆறு பாகங்கள் இல்லை. நான் அந்த ஆவணங்களை வழங்கியிலிருந்து எடுத்து, மீதியிருக்கும் பாகங்களை வாங்கினேன், இப்போது எங்களிடம் இணையதளப் பாதுகாப்பகத்தில், இந்து சுயராஜ்யம் தொகுதியில் அம்பேத்கரின் மிக முழுமையான தொகுப்பு உள்ளது. காந்திஜி அகில இந்திய வானொலியில் ஆற்றிய 129 உரைகளும் உள்ளன. தமது வாழ்நாளின் கடைசி ஆண்டில், இரண்டு நாளுக்கு ஒருமுறை, அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசுவது வழக்கம். அந்த வியத்தக்க வாழ்க்கையில், அவர் மெய்யாகவே உரையாடுவதைக் கேட்க முடியும். அடுத்து நீங்கள் அவரது படைப்புத் தொகுதிக்குள் சென்று அப்பேச்சின் ஆங்கில ஆக்கத்தைக் கேட்கலாம். பிறகு அவரது அடுத்த சொற்பொழிவுக்குச் செல்லலாம். அவரது வாழ்க்கைக்குள் ஓர் வியக்கத்தக்க பயணம் அது. நாங்கள் தூர்தர்ஷன் அலுவலகத்துக்குச் சென்றோம். நேரு எழுதிய "இந்தியாவின் கண்டுபிடிப்பு" (Discovery of India) 1980களில் இந்தியில் தொடராக வெளிவந்தது. இப்போது அந்தத் தொடர் முழுவதும் ஆன்லைனில் உள்ளது. அவற்றில் பலவற்றிற்கு நாங்கள் தெலுங்கு, உருது மொழிகளில் உபதலைப்புகளும் இட்டுள்ளோம். ஐந்து மொழிகளில் உபதலைப்பிட வழியிருக்கிறது. முழு வேலையையும் இவ்வாறே செய்ய உத்தேசித்துள்ளோம். நாங்கள் இப்போது வேலைசெய்யும் முக்கியமான விஷயம் இந்தியாவின் கணினி (ஆன்லைன்) நூலகம். அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்த அரசாங்க வழங்கியில் 550,000 புத்தகங்கள் உள்ளன. குறைந்தபட்சம் அவ்வளவு இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஓராண்டுக்கு முன்னால், நான் சாமுடன் அமர்ந்திருந்தேன். நாங்கள் அதற்கு முன்புதான் இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஒருவார சுற்றுலாவை முடித்திருந்தோம். அமெரிக்காவுக்குச் செல்லும் பின்னிரவு விமானத்திற்காகக் காத்திருந்தோம். எனக்கு உடல்நலமில்லை. சாம் பலபேரைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மக்கள் வந்தவாறு இருந்தார்கள். நான் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்திய நூலகம் கண்ணில் பட்டது. நான் அதைப் பார்த்தேன். அதிலிருந்து எடுக்க முடியும் என்று தோன்றியது. புத்தகங்கள் இருந்தன, ஆனால் எடுப்பதற்குக் கடினமாக இருந்தது. ஆகவே எழுத்து ஒன்றினை உருவாக்கினேன். அது வேலை செய்தது. விமானப் பயணத்துக்குப் பிறகு நான் வீடு சேர்ந்ததும் எனது வழங்கிக்குச் சென்றேன். கொஞ்சம் புத்தகங்களைச் சேகரித்திருந்தோம். அடுத்த மூன்று மாதங்களுக்கு நான் புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். அதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. ஏறத்தாழ 30 டெராபைட் தகவல்கள். வெற்றிகரமாக என்னால் 463,000 புத்தகங்களைப் பெற முடிந்தது. சில புத்தகங்களைப் பெற முடியவில்லை. சிலவற்றின் யுஆர்எல்கள் உடைபட்டிருந்தன. ஆனால் 463,000 பிடிஎஃப் கோப்புகளைப் பெறமுடிந்தது. கடந்த ஆண்டின் (2016) டிசம்பரிலும் அடுத்த ஜனவரியிலும். இணையப் பாதுகாப்பகத்திற்கு அவற்றைத் தரவேற்றம் செய்தேன். இவ்வளவு காரியத்தை நீங்கள் செய்யவும் அவற்றை ஏற்றம் செய்யவும் சில காலம் பிடிக்கிறது. ஏனெனில் தகவல்கள் கிடைக்கும் வரை, என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது அந்தச் சேகரிப்பை விரிவாகப் பார்க்க முனைந்தேன். வெவ்வேறு ஐம்பது மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில் 30,000 புத்தகங்கள் உள்ளன என்று நம்புகிறேன். குஜராத்தி, வங்காளி, இந்தி, பஞ்சாபி, தெலுங்கு மொழிகளில் பத்தாயிரக்கணக்கான புத்தகங்கள்-பெயரைச் சொல்லுங்கள், அந்தப் புத்தகம் இருக்கும். ஏறத்தாழப் பாதிப் புத்தகங்கள் ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும் ஜெர்மனிலும் உள்ளன. இருப்பினும் அது ஒரு தனித்த சேகரிப்பு. அதில் பிரச்சினைகள் இருந்தன. அதை நகலெடுக்க முயன்றபோது வழங்கி கணினியின் 500ஆம் விதித் தவறுகளைக் காட்டியவாறே இருந்தது. அது தொடர்ந்து இடையூறுபட்டது. எனவே என் எழுத்துகளும் உடைபட்டன. மறுநாள் போய் எழுத்துகளை ஆரம்பித்தால், கொஞசம் தகவல் கிடைக்கும், பிறகு டிஎன்எஸ்-ஐ இழந்துவிடும். அவற்றின் டிஎன்எஸ் வழங்கிகள் கீழ்ச் சென்று கொண்டிருந்தன. அதனால் டிஎன்எஸ் பெயரைக் கேட்டால், அது வழங்கி கிடைக்கவில்லை என்று சொல்லும். எனவே நான் ஐபி முகவரிகளை எந்திரக் குறியாக்கம் செய்யத் தொடங்கினேன். அது தான் தகவல்களைப் பெற ஒரே வழி. மோசமான வழங்குதலுக்குமேல், வேறு பிரச்சினைகளும் இருந்தன. பல தலைப்புகள் உடைந்திருந்தன. சில ஸ்கேனிங்குகள் நன்றாக இருந்தன, பிற அவ்வாறில்லை. நிறைய இரட்டைகள் (நகல்கள்) இருந்தாலும் அது ஒரு தனித்த சேகரிப்புதான். சில புத்தகங்களில் பதிப்புரிமையில் மிகத் துணிச்சலான பதிவுகளைக் கண்டேன். அதைப் பார்த்ததும், "சரி, இவை மிகவும் அண்மைக் காலத்தியவை" என்று தீர்மானித்தேன். ஆனால் பதிப்புரிமைப் பகுதியில் பார்த்தால், "பதிப்புரிமை இல்லை" என்றிருந்தது. ஆகவே, "அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துதான் செய்கிறார்கள் போலும்" என்று நினைத்தேன். இம்மாதிரி சேகரிப்புகளில் நான் செய்வது இதுதான். அவற்றை நாங்கள் ஆன்லைனில் இடுவோம். மக்கள் புகார் செய்தால், "ஓகே, நாங்கள் அதை நீக்கிவிடுவோம்" என்று கூறுவோம். ஆகவே இதையும் ஆன்லைனில் இட்டேன். இந்த ஆண்டு பிப்ரவரியில் அது வெளியிடப்பட்டது. இதுவரை எட்டரை மில்லியன் பார்வைகள் அதற்குக் கிடைத்திருக்கின்றன. ஆக இந்தச் சேகரிப்பும் ஆன்லைன் சென்றது. கூகிள் அதை நோக்க ஆரம்பித்தது. மக்கள் அதைப் பார்த்தார்கள். அரை டஜன் பேர் "என் புத்தகத்தை எடுத்துக் கொண்டீர்கள்" என்றார்கள். வழக்கமாக அமெரிக்காவி டிஎம்சிஏ-வில் செய்வதுதான். பிரச்சினையில்லை. நல்லது, நாங்கள் அந்தப் புத்தகங்களை நீக்கி விடுவோம். வட கரோலினா பல்கலைக்கழக அச்சகம் எங்களுக்கு எழுதியது. முப்பத்தைந்து புத்தகங்களின் பட்டியல் அவர்களிடம் இருந்தது. அவர்கள் குறிப்பு நன்றாக இருந்தது. "உங்களிடம் எங்கள் புத்தகங்கள் ஆன்லைனில் முன்பாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால நாங்கள் அவற்றின் பழைய கோப்புகளை ஆன்லைனில் வெளியிட்டு விற்பனை செய்வோம். ஆகவே நீங்கள் அவற்றை வைத்திருக்காமல் இருப்பது நல்லது." நாங்கள் அந்தப் பட்டியலைப் பார்த்தோம். எங்கள் தகவல் தளத்தையும் தேடினோம். அவர்கள் கண்ணுக்குப் படாத சில புத்தகங்கள் இருந்தன. அவர்களுக்கு நாங்களும் ஓர் அழகிய கடிதம் எழுதினோம். "இதோ இவை உங்கள் புத்தகங்கள். மேலும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தெரிவியுங்கள்." மொத்தம் 127 புத்தகங்களை எடுத்திருந்தோம். பெரிய பேரம் ஒன்றும் இல்லை. ரஷ்யாவில் ஓர் ஆள் இருந்தார். அவர் தனது தந்தையின் புத்தகத்தை இணையக் காப்பகத்தில் கண்டார். இந்தியாவின் டிஜிடல் நூலகத்துடன் தொடர்புள்ள ஒரு பேராசிரியரை அவருக்குத் தெரியும். அவரிடம் சென்று கத்தினார். வழக்கிடப் போவதாகக் கூறினார். மிக மிக கோபத்துடன் இருந்தார். பதிலுக்கு, இந்த திட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்கள்-அனைவரும் மூத்தவர்கள்-அவர்களும் காட்டுத்தனமாகக் கத்தினார்கள். அவர்கள் அரசாங்கத்திடம் சென்றார்கள். அரசாங்கமும் கலக்கமுற்றது. எனக்கு "நீங்கள் எல்லாப் புத்தகங்களையும் நீக்கிவிட வேண்டும். அவற்றைக் கைவிட வேண்டும்" என்ற குறிப்புகள் வந்தன. "நான் அப்படிச் செய்யப் போவதில்லை" என்று எழுதினேன். அவர்கள் தங்கள் வழங்கியை மூடிவிட்டார்கள். இப்போது எங்களிடம் இணையத்தில் இந்திய ஆன்லைன் நூலகப் படி மட்டுமே இருந்தது. எவ்வகையிலோ நாங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அந்தப் பெயர் தோன்றியது போலும். அதனால் நான் அதன் பெயரை மாற்றிவிட்டேன். எனவே "இப்போது நாங்கள் இந்தியாவின் பொது நூலகம்" என்று எழுதினேன். ஆகவே அவர்கள் தங்கள் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துவிட்டார்கள். இப்போது நீங்கள் மேற்தகவலை வைத்துத் தேடினால், புத்தகம் கிடைக்காது. மீண்டும் அவர்கள் நோக்கியபோது, இந்தப் பெயரறியாத அறிவிப்பு இருந்தது. "பதிப்புரிமை மீறல்கள் காரணமாக இது கிடைக்காது. மீண்டும் வருக" என்றிருந்தது. பிறகு மேற்தகவல்கள் கிடைத்தன. பிறகு வழங்கி முற்றிலும் மறைந்துவிட்டது. மறுபடியும் பதிப்புரிமை அறிவிப்பு தோன்றியது. இப்போது அது போய்விட்டது. முற்றிலும் அவை இணையத்திலிருந்து மறைந்து விட்டன. என்ன நிகழ்கிறது என்று நான் புரிந்துகொண்டவரை, அரசாங்க அதிகாரிகளின் ஒரு குழு, இந்தப் பத்து வெவ்வேறுபட்ட நூலகங்களுக்கும், ஸ்கேனிங் மையங்களுக்கும் பரவிச் சென்றது. அங்கே அவர்களுக்குப் புத்தகங்கள் கிடைத்தன. அவர்கள் பட்டியலில் ஒவ்வொன்றாகப் பார்த்து, எந்தப் புத்தகங்கள் கிடைக்கம், எவை கிடைக்காது என்று முடிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். எவை கிடைக்கும் என்பதை எங்களுக்கு அறிவிப்பதாகக் கூறினார்கள். அவர்கள் முதலில் கோபமுற்ற போது, நான் எனது கணினியில் இன்னும் நன்றாகப் பார்த்தேன். எதையும் நீக்கக்கூடாது என்பது என்று முதலில் தோன்றியது. "ஒரு மாதத்துக்கு ஒரு மில்லியன் பார்வை பெறும் 500,000 புத்தகங்களை நாங்கள் நீக்க முடியாது. அப்படிச் செய்யப் போவதில்லை" என்றேன். "சரி, 1900க்குப் பிறகு உள்ளவற்றை நீக்கிவிடுங்கள்" என்றார்கள் அவர்கள். அதற்குப் பிறகு எங்களிடம் 60,000 புத்தகங்கள்தான் இருக்கும் "ஏன் 1900?" என்றேன். ஏதோ ஒரு நாளைக் குறிப்பிட்டு விட்டார்கள். அதனால் முதலில் "1923க்குப் பிறகு உள்ளவற்றை நீக்குகிறேன்" என்றேன். அதன்பின் 200,000 புத்தகங்கள் என்னிடம் இருக்கும். பிறகு என்னிடமிருந்த 250,000 புத்தகங்களைப் பார்த்தேன். பட்டியலை கவனத்துடன் நோக்கினேன். அவற்றில் பல அரசாங்க இதழ்கள். அல்லது மகாத்மா காந்தியின் படைப்புகள். அவற்றிற்குப் பதிப்புரிமை இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அல்லது வேறு விஷயங்கள். ஆகவே பட்டியலை கவனமாகப் பார்த்தபிறகு எனக்கு 314,000 புத்தகங்கள் கிடைத்தன. அதை நீங்கள் பார்க்கமுடியும். இப்போதும் அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்று சொல்வது அரசாங்கத்தின் வேலை அல்ல என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது: பதிப்புரிமை ஓர் இருமை விஷயம் அல்ல. உதாரணமாக, இந்த எல்லாப் புத்தகங்களையும், பார்வையற்ற ஒருவருக்கும் கிடைக்குமாறு என்னால் செய்ய முடியும். பார்வையற்றோருக்குப் புத்தகங்களைக் கிடைக்கச் செய்யும்போது பதிப்புரிமை செல்லுபடியாகாது என்று சர்வதேச உடன்படிக்கை உள்ளது. பதிப்புரிமைச் சட்டத்திலுள்ள முற்போக்கான செய்திகளில் இது ஒன்று. ஏதோ ஒரு நேரத்தில் பதிப்புரிமை இல்லாமல் போய்விடலாம், ஏனெனில் பதிப்புரிமை காலாவதி ஆகக்கூடியது. அது எப்போது என்று எனக்குத் தெரியாது. ஆகவே நாங்கள் அவற்றை நீக்கப் போவதில்லை. ஏனெனில் காலப்போக்கில் நாங்கள் அதைக் கிடைக்கச் செய்ய முடியும். உங்களுக்கு தில்லிப் பல்கலைக்கழக வழக்கு தெரிந்திருக்கும். ஒரு கல்வியமைப்பில் பாடம் நடத்துகையில் ஆசிரியர் மாணவர்க்கு இடையில் புத்தகத்தைக் கிடைக்கச் செய்யலாம் என்ற பதிப்புரிமைச் சட்டத்தை தில்லிப் பல்கலைக்கழகம் மேற்கோள் காட்டியது. எனவே ஒரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நாங்கள் இந்த எல்லாப் புத்தகங்களையும் கிடைக்கச் செய்ய முடியும். புத்தகங்களை நீக்குதல் சரியான விடையல்ல. மேற்தகவல்களை நிர்வாகம் செய்து, அதை இன்னும் சிறப்பாக்க வேண்டும். மொழிபெயர்ப்புகள் மீதும் பணியாற்றி வருகிறோம். ஓசிஆர் நன்றாகச் செய்கிறோம். சில மொழிகளை ஓசிஆர் செய்ய முடியும் சிலவற்றை முடியாது. அதை மேம்படுத்துகிறோம். பதிப்புரிமைப் பிரச்சினைகளுக்கு எதிர்வினை புரிகிறோம். கணினி நூலக வழங்கியைப் பற்றிய ஒரு செய்தி. நான் முதலில் நகல் எடுக்க முனைந்தபோது, அது ஆன்லைனில் இருந்தபோது, அவற்றை எழுத முயற்சி செய்தேன். எனக்கு விடை எதுவும் வரவில்லை. சிறப்புமிக்க பேராசிரியர் ஒருவர் இறுதியாக என்னிடம் வந்தார். "எங்களிடம் கேட்காமல் இதைச் செய்தீர்கள்" என்றார். "பாருங்கள், இந்தத் தகவல் 2015 முதல் சுற்றி வருகிறது" என்றேன். "நாங்கள் அங்கு யாரும் இல்லை, யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தோம். யாருடனாவது பேச நான் விரும்பியிருப்பேன். ஆனால் ஒருவரும் பேசுவதில்லை. ஆகவே நானாகச் சென்று அதை எடுத்துக் கொண்டேன்." அது மட்டுமல்ல, இவை புத்தகங்கள். அவை இணையத்தில் வந்த பிறகு, நான் உங்கள் வழங்கியிலிருந்து பெற (ஹாக் செய்ய) முடியாது. ஆனால் பொதுமக்களுக்கான தகவல் அரசாங்கம் வழங்கும் ஒன்று. அப்படிப்பட்டதை நான் எடுத்துக் கொள்ளும் உரிமையும் பார்க்கும் உரிமையும் இருக்கிறது. தொடர்ந்து பதிப்புரிமைச் சிக்கல் வரும் என்றால் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எனவே இவற்றை நாங்கள் கையாண்டு கொள்கிறோம். ஆக, நூலகம் இப்போது ஆன்லைனில் உள்ளது. இப்போது நீங்கள் கேட்கலாம், "இந்த விஷயத்தைப் பற்றி ஏன் அக்கறை? எதற்காக உங்களுக்குப் பொதுநல அச்சிடல் தேவைப் படுகிறது?" இப்போது உலகம் ஒழுங்கின்றி இருக்கிறது. இப்போது உலகத்தைப் பற்றி உங்கள் உணர்ச்சிகள் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஊதியத்தில் சமமின்மை அதிகரித்து வருகிறது. ஏழ்மையும் நோயும் பட்டினியும் அதிகரிக்கின்றன. இந்தியாவிடம் மிகையான உணவு இருக்கிறது, ஆனால் 200 மில்லியன் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். நாம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். தட்வெப்ப மாறுதல்கள். நம் பூமிக் கிரகத்துக்கு எதிரான குற்றங்கள். உலக வெப்பமயமாதலை நோக்குங்கள். இது ஒன்றும் எங்கிருந்தோ கொண்டுவந்த கருத்து அல்ல, இது மெய்யானது. இது அறிவியல். சகிப்புத்தன்மை இன்மை. பிற மதங்கள் சார்ந்த மக்களுக்கு எதிரான வன்முறை. பிற இனங்களைச் சேர்ந்த மக்கள்மீது வன்முறை. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை. பெங்களூரில் கௌரி லங்கேஷை பயங்கரமாகச் சுட்டார்கள். போலிச் செய்தியா? முகநூலில் நாஜிகள் (இனவாதிகள்) புகுந்து விட்டார்களா? போலிச் செய்திகளுடன் வந்து, அமெரிக்காவின் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க உதவி செய்கிறார்களா? இம்மாதிரி விஷயங்களுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு தலைமுறைக்கும், ஒவ்வொரு காலப் புள்ளிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். நீங்கள் தொழில்நுட்பவாதி என்றால், 1960களின் தொடக்கம் என்றால், சாம்-ஐப் போல இருந்திருப்பீர்கள். டிஜிடல் தொலைபேசி ஸ்விச் கண்டுபிடித் திருக்கலாம், அல்லது கணினிகளைக் கண்டுபிடித்திருக்கலாம். 1950களில் நீங்கள் இருந்திருந்தால், ஏரோஸ்பேஸில் பணிபுரிந்திருப்பீர்கள். சமூக விஷயங்களுக்கும் இது பொருந்தும். 1880களில் இருந்தால் கட்டாய அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியிருப்பீர்கள். காந்தியைப் பின்பற்றியிருப்பீர்கள். நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, நாம் இதுவரை சந்திக்காத வாக்குறுதி, அறிவை உலகமுழுவதும் கிடைக்கச் செய்தல். இதை நம்மால் செய்ய முடியும். இதற்கான காரணம் அர்த்தமுள்ளது. இது ஜனநாயகம். அது மக்களுக்குச் சொந்தமானது. கற்றறிந்த குடிமக்கள்தான் ஜனநாயகத்தின் திறவுகோல் . எனவே மாற்றத்திற்கான திறவுகோலை நான் நம்புகிறேன். இன்று நீங்கள் உலகவெப்பமயமாதலைத் தீர்க்க முடியாது. ஆனால் நம் எல்லாருக்கும் நமது சுற்றுச்சூழலில் என்ன நிகழ்கிறது என்று தெரிந்திருந்தால், நாம் நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்போம். மாற்றத்துக்கான திறவுகோல் இரண்டு விஷயங்களில் உள்ளது. மாற்றத்துக்கான ஒரு திறவுகோல் அன்பு என்று அவர் சொன்னார். நாஜிக்களைக் கண்டால் நீங்கள் சென்று அவர்களை அடிப்பதில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இப்போது நடக்கும் விவாதத்தில் நான் விரும்பாத விஷயம், "நம்மிடம் அதிகாரம் இருக்கிறது, சரியா? சரி". பிறகு சிலர் சொல்வதைக் காண்கிறோம், "நாஜிகளை அடித்துக் கொல்வோம்." சரி, விடை அது அல்ல. காந்தியும் லூத்தர் கிங்கும் நமக்கு அன்புதான் விடை என்று கற்பித்தார்கள். அவர்கள் வேறு ஒன்றையும் நமக்குக் கற்பித்தார்கள். அதாவது, உலகத்தை நாம் மாற்ற வேண்டும் என்றால்-இங்கே நீதிபதி ரானடே சொன்னதை நினைவு கூர்ந்தால்-நாம் உலகத்தை மாற்ற வேண்டுமானால், நாம் நமக்கும் கல்வி பெற வேண்டும், நமது ஆட்சியாளர்களுக்கும் கல்வி அளிக்க வேண்டும். கிங்கும் காந்தியும், சத்யாக்கிரகத்தில் அவர்கள் ஈடுபடுவதற்கு முன்னால், தாங்கள் கற்றறிந்து கொள்வதில் மிக அதிக நேரத்தைச் செலவிட்டார்கள். பிறகு ஆட்சியாளர்களுக்குக் கற்பித்தார்கள். தண்டிக்குச் செல்வதன் முன் அவர் ஆசிரமத்தில், தனக்கும் தன்னுடன் நடப்பவர்களுக்கும் பயிற்சி அளித்தவாறு ஒரு மாதம் செலவிட்டார். அரசாங்கத்திற்கு "நான் இன்னவாறு செய்யப் போகிறேன்" என விண்ணப்பங்கள் அனுப்பினார். ஆகவே நான் கல்வியும், அன்பும் முக்கியமானவை என நினைக்கிறேன். ரவீந்திரநாத் தாகூரும் அப்படித்தான் நினைத்தார். பிரிட்டிஷ் பள்ளிகளை விரும்பாத காரணத்தால் காந்தி அடிப்படைக் கல்வியை நீக்க முயன்றபோது, தாகூர் 'உண்மைக்கு அழைப்பு' என்பதை வெளியிட்டார். அவர் கூறினார், "நமது இதயம் அன்பின் உண்மையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுபோலவே நம் மனம் அறிவின் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்." சரிதானா? இரண்டையும் நீங்கள் செய்ய வேண்டும். போலிச் செய்திகளுக்கு விடை அறிவு என்று நான் நம்புகிறேன். போலி அறிவைத் தணிக்கை செய்வதன்மூலம் அதைத் தீர்க்க முடியாது. அப்படி உங்களால் செய்ய இயலாது. ஆனால் நீங்கள் அதைவிட நல்ல செய்திகளைப் பெறமுடியும். உண்மைச் செய்திகளைப் பெற முடியும். பொருளாதார வாய்ப்புகள் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் நாம் உதவி செய்ய வேண்டும். அது தானாக நிகழ இயலாது. "உடலுழைப்புக்கு உணவு" என்பதன் ஆர்வலராக காந்தி இருந்தார். அது பைபிள் மேற்கோளிலிருந்து வருகிறது. அவருக்கு உழைப்புக்கு உணவு என்பது முதலில் அச்சிடுவதாகத்தான் இருந்தது. காந்தி ஃபீனிக்ஸ் ஆசிரமத்துக்குச் சென்றபோது, ஒவ்வொருவரும் தனது அச்சுக் கருவியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அச்சுக் கருவியை வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் உடலுழைப்பில் ஈடுபட வேண்டியிருந்தது. பின்னர் அது இராட்டையாக (சர்க்காவாக) மாறியது. காந்தி இன்றிருந்தால் 'திறந்த மூலங்களுக்காக மென்பொருளைக் குறியாக்கம் செய்வதுதான் உழைப்புக்கு உணவு' என்பார். மெய்யாக அப்படித்தான் உள்ளது. உடல் உழைப்பு- அதுதான் உலகத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் மெய்யான ஏதோ ஒன்றை அதில் செய்கிறீர்கள். அடுத்து காந்தி சொல்லிக் கொடுத்தது, பொதுமக்கள் பணி. நமது நேரத்தில் ஒரு பகுதியை அதற்காகச் செலவிட வேண்டும். ஒரு தொழிலை வைத்திருப்பது நல்லது, பணத்தைச் செய்வது நல்லது. ஆனால் நாம் நமது அரசாங்கங்களை நமக்காக வைத்திருக்க வேண்டுமானால்-அப்படித்தான் ஜனநாயகத்தில் செய்கிறோம்-அதன் பகுதியாக நாம் இருக்க வேண்டும். நான் பதிவிட்ட தரவிதிகள் ஒவ்வொன்றின் மேலும் ஓர் மேலுறை இருக்கும். அதன்மேல் யானைகள் இருந்தன, நிறுவன முத்திரை இருந்தது, பிற அலங்காரச் சித்திரங்களும் இருந்தன. ஆனால் அடியில் நீதி சதகத்திலிருந்து ஒரு மேற்கோள், "அறிவு திருடப்பட இயலாத செல்வம்" என்று கூறுகிறது. அதை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். அறிவு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதுதான் நமக்குரிய வாய்ப்பு. ஆக, உங்கள் அனைவருக்கும் நன்றி. சாமும் நானும் இப்போது கேள்விகளை எதிர்கொள்வோம். [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 87 (1947), ப. 193, அப்துல் கஃபார் கானுடன் காலை நடை. ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 87 (1947), ப. 193, அப்துல் கஃபார் கானுடன் காலை நடை. [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 90 (1947-48), ப. 449, பிரார்த்தனைக் கூட்டத்துக்கு காந்தி வருதல். ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 90 (1947-48), ப. 449, பிரார்த்தனைக் கூட்டத்துக்கு காந்தி வருதல். [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 88 (1947), முகப்பு, கஷ்மீருக்குப் போகும் வழியில் லாகூர் இரயில் நிலையத்தில். ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 88 (1947), முகப்பு, கஷ்மீருக்குப் போகும் வழியில் லாகூர் இரயில் நிலையத்தில். [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 13 (1915-17), முகப்பு, 1915இல் இந்தியாவுக்கு காந்தி வந்தபோது. ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 13 (1915-17), முகப்பு, 1915இல் இந்தியாவுக்கு காந்தி வந்தபோது. [திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் 1952 மார்ச் 9ஆம் நாள் எல்லோராவுக்கு வருகை தந்தபோது அங்கு சுற்றிக் காட்டப் படுகிறார். ] திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் 1952 மார்ச் 9ஆம் நாள் எல்லோராவுக்கு வருகை தந்தபோது அங்கு சுற்றிக் காட்டப் படுகிறார். [திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் மைசூர் விமான நிலையத்தில் மைசூரின் நிதி மற்றும் தொழில் அமைச்சாரான திரு. எச். சி. தாசப்பாவினால் வரவேற்கப்படுகிறார்.] திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் மைசூர் விமான நிலையத்தில் மைசூரின் நிதி மற்றும் தொழில் அமைச்சாரான திரு. எச். சி. தாசப்பாவினால் வரவேற்கப்படுகிறார். [1952 மார்ச் 7ஆம் நாள் திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் மைசூருக்கு வந்தபோது அங்குள்ள மையஅரசின் உணவுத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் ஆய்வகங்களில் ஒன்றைப் பார்வையிடுகிறார். ] 1952 மார்ச் 7ஆம் நாள் திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் மைசூருக்கு வந்தபோது அங்குள்ள மையஅரசின் உணவுத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் ஆய்வகங்களில் ஒன்றைப் பார்வையிடுகிறார். [1952 மார்ச் 13ஆம் நாள் திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் ஜெய்பூருக்கு வந்தபோது அவர் மஹாராணி பெண்கள் பள்ளியைப் பார்வையிடுகிறார். ] 1952 மார்ச் 13ஆம் நாள் திருமதி எலியனார் ரூஸ்வெல்ட் ஜெய்பூருக்கு வந்தபோது அவர் மஹாராணி பெண்கள் பள்ளியைப் பார்வையிடுகிறார். [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 57 (1934), முகப்பு. ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 57 (1934), முகப்பு. [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 61 (1935), முகப்பு, பிளேக் நோய் தாக்கிய போர்ஸாட் கிராமத்திற்குச் செல்லுதல். ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 61 (1935), முகப்பு, பிளேக் நோய் தாக்கிய போர்ஸாட் கிராமத்திற்குச் செல்லுதல். [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 24 (1924), முகப்பு, 1924இல் காந்திஜி.] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 24 (1924), முகப்பு, 1924இல் காந்திஜி. நேர்முகம்: "இந்தச் சிறிய யுஎஸ்பி இயக்கி 19,000 இந்தியத் தரவிதிகளை அடக்கியிருக்கிறது. இதைப் பொதுமக்களுக்கு அளிக்கவேண்டாமா? தி ஒயர், அனுஜ் ஸ்ரீநிவாஸ், 2017 அக்டோபர், 26 (அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது) இந்தியத் தர நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள விதிகளையும ஒழுங்குமுறைகளையும்பொது மக்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக வெளியிடுவதற்காகச் சட்டபூர்வத் தேடலில் ஈடுபட்டுள்ளவரும், Public.Resource.Org-இன் நிறுவனருமான கார்ல் மாலமூத் அவர்களுடன் ஒரு நேர்முகம் (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) வணக்கம். பொதுத்தகவல்களை யாவருக்கும் கிடைக்கச் செய்வது பற்றிய ஒயரின் இன்றைய விவாதத்திற்கு வரவேற்கிறேன். என் பெயர் அனுஜ் ஸ்ரீநிவாஸ், இன்று நமது விருந்தினர் கார்ல் மாலமூத். இணையத்தின் சொந்தத் தூண்டுநர் என்பது முதல் அமெரிக்காவின் அதிகாரபூர்வமற்ற பொது அச்சிடுநர் என்பது வரை பலவிதமாகக் கார்ல் வருணிக்கப்படுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் பெறக்கூடிய அல்லது கிடைக்கின்ற தகவலை யாவரும் மேலும் அடையக் கூடியதாகவும் யாவருக்கும் மேலும் கிடைக்கக் கூடியதாகவும் ஆக்குவது கார்லின் பணியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக அவரது பெரும்பான்மைப் பணி சட்டமியற்றல், சட்டவிதித் தரங்கள், இன்ன பிறவற்றை மையமாகக் கொண்டுள்ளது. பல சமயங்களில், தேர்ந்தெடுத்த ஒரு சிலருக்காகத் தகவலைக் கட்டுப்படுத்தவோ ஒரு சிலருக்கு மட்டும் தகவலை அளிக்கவோ அரசாங்க அதிகாரிகள் சிலர் முற்படுகிறார்கள். அதனால் இப்பணி இவரை அவர்களுடன் பெருமளவில் மோதலில் கொண்டுவிட்டுள்ளது. கார்ல், நீங்கள் எங்களுடன் விவாதிக்க வந்தமைக்கு நன்றி. (கார்ல் மாலமூத்) எனக்கு மகிழ்ச்சி, மிகவும் மகிழ்ச்சி. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) உங்களது பணியைப் பற்றித் தெரியாத எங்கள் பார்வையாளர்களுக்காக, தகவலைப் பொதுவாக்குவது என்றால் என்ன, மேலும் பொதுவான முறையில் அதைக் கிடைக்கும் வகையில் செய்வது எப்படி என்பதைத் தெரிவிக்க முடியுமா? (கார்ல் மாலமூத்) பெரும்பாலான மக்கள் தகவல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் ஏதோ காரணத்தினால் அது அப்படி இல்லை. சோம்பேறித்தனம், அரசாங்க முகமை அந்தப் பிரச்சினையைத் தொழில்நுட்ப ரீதியாகக் கையாள முடியாமை, தானே அவற்றின் வியாபாரியாக இருக்கச் சிலர் விரும்புவது-எதனாலோ அது ஒரு கட்டணத் தடையின்பின் பூட்டி வைக்கப்படுகிறது. அமெரிக்கக் காப்புரிமைத் தளம் போன்ற மிகப் பெரிய தகவல் தளங்களையே நான் தேடுகிறேன். காப்புரிமை அலுவலகம் விற்ற எல்லாத் தகவல்களையும் நான் வாங்கினேன். அதற்குச் சிலநூறாயிரம் டாலர் ஆகியது. அப்பணத்தை நான் திரட்டினேன். தகவல்களை ஆன்லைனில் இட்டேன். இப்போது மில்லியன் கணக்கான மக்கள் அதைப் பயன்படுத்து கிறார்கள். நான் காப்புரிமை அலுவலக அதிகாரியின் கதவைத் தட்டி, "இது உங்கள் வேலை, தெரியுமா? நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டும்" என்றேன். காப்புரிமைத் தொழிலோ வேறொரு தொழிலோ-அதில் ஈடுபடுவது என் இலட்சியமல்ல. அரசாங்கத்தை மேம்படுத்த வேண்டும். மக்கள் உண்மையில் இந்தத் தகவல்களில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை உணர்த்த வேண்டும். சாதாரண அமெரிக்கர் யாரும் இதில் அக்கறை காட்டுவதில்லை என்று நினைப்பதாகக் காப்புரிமை ஆணையர் கூறினார். அதை ஆன்லைனில் போட்டேன், மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) சில விஷயங்களில், உதாரணமாக ஒரு தகவல் கட்டணம் செலுத்தினால் மட்டும் மக்களுக்குக் கிடைக்கிறது, ஆனால் அரசாங்க முகமையே இதிலிருந்து பணம் சம்பாதிக்கிறது என்றால் எப்படி அதைச் சமாளிக்கிறீர்கள்? (கார்ல் மாலமூத்) சரி, அரசு முகமை, அரசு சாரா முகமை எதுவாயினும் வருவாய் மிக முக்கியம். காப்புரிமை அலுவலகத்தைப் பொறுத்தவரை அவர்கள் அவற்றை விற்று ஆண்டுககு 40 மில்லியன் டாலர் வருவாய் பெற்றனர். காப்புரிமைகளுக்காக, அமெரிக்க ஐக்கியநாட்டு அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பாக இந்த ஒரே தகவல் தளம்தான். அது விற்பனைக்காக அல்ல. அவர்கள் வேறு செயல்களைச் செய்து பணம் ஈட்டலாம், தகவல்களை விற்கலாம். கேள்வி இதுதான். நான் தகவலை வாங்கிய பிறகு, அதை மேலும் பயன்பாட்டுக்கு உரியதாக என்னால் மறு-பதிப்புச் செய்ய முடியுமா? தகவல் சேவைக்காகக் கட்டணம் வசூலிக்கப் பட்டாலும் பரவாயில்லை. அதற்குப் பிறகு உரிமம் இன்றி, நீங்கள் அந்தத் தகவலைப் பயன்படுத்தவும், அதை மேம்படுத்தவும், சக- குடிமக்களுக்கு வழங்கவும், அதை வைத்து வேறெதுவும் செய்யவும் உங்களுக்கு அனுமதி உண்டா என்பதுதான் கேள்வி. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளில் உங்கள் பணிகளில் கொஞ்சம் இந்தியாவிலும் விரிந்துள்ளது. உதாரணமாக, எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் இந்தியத் தர நிறுவனத்துடன் ஒரு சட்டப் போராட்டத்தில் இருக்கிறீர்கள். முதலில் எப்படி அது தொடங்கியது, அதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் பேச முடியுமா? (கார்ல் மாலமூத்) நல்லது. சில சட்டங்களின் வகைகள், சட்டபூர்வ . விஷயங்கள். அரசாணைகள், பாராளுமன்றச் சட்டங்கள், அரசாங்க ஒழுங்குமுறைகள் உள்ளன; ஆனால் நமது நவீன உலகில் பாதுகாப்புத் தரங்கள், மிக முக்கியமான சட்டங்களாக உள்ளன. இந்தியாவின் தேசியக் கட்டுமான விதி, பணியாளர் களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆடைநெசவு எந்திரத் தரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் பற்றிய தரங்கள். இந்த இந்தியத் தரங்கள் யாவும் அதிகாரபூர்வ அரசிதழ்களில் அறிவிக்கப்படுகின்றன. அவற்றிற்குச் சட்டத்தின் சக்தி உண்டு. பல சூழல்களில், இந்தியாவில் சான்றிதழ் இன்றிப் பொருள்களை விற்க முடியாது. அவை தரமாக இல்லை எனில் பிஐஎஸ் சான்றிதழ் வழங்காது. இந்தத் தரங்கள் எல்லாம் அரசாங்கப் பதிப்புகள். இப்படி இருப்பினும் பதிப்புரிமை அறிவிப்பு மட்டுமல்ல, "எங்கள் அனுமதி இன்றி நீங்கள் இந்த விஷயத்தை நகல் எடுக்கக்கூடாது" என்ற அறிவிப்பும் இருக்கிறது. அவர்கள் அதை விற்கிறார்கள். இந்தியாவின் தேசியக் கட்டுமான விதியின் விலை ரூ. 14,000. இந்தியாவின் ஒவ்வொரு பொறியியல் மாணவனும் படிக்க வேண்டிய ஒரு புத்தகத்துக்கு இது மிக அதிகமான விலை. இதை வெளிநாட்டில் வாங்கினால், விலை இதைப்போல் பத்து மடங்கு, 1.4 லட்சம் ரூபாய். இந்தியாவில் நீங்கள் வணிகம் செய்ய வேண்டுமானால், உங்களுக்கு இந்தியாவின் பாதுகாப்பு விதிகள் தெரிந்திருக்க வேண்டும். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) சரியாகச் சொன்னீர்கள். 2013இல் நீங்கள் இந்தத் தகவலைச் சிறிது எடுத்துப் பொதுமக்களுக்கு வெளியிட்டீர்கள். ஆனால பிஐஎஸ் அதைப் பாராட்டவில்லை. (கார்ல் மாலமூத்) ஆம், பிஐஎஸ் அதை கவனிக்கவில்லை. முதலில் நான் இந்தியத் தரங்கள் பலவற்றை வாங்கினேன். நான் ஒளிப்பதோ மறைப்பதோ இல்லை. அப்போது மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தில் பணிபுரிந்து வந்த சாம் பித்ரோதாவை அழைத்தேன்; "பித்ரோதாஜி, நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்". போய்ப் பார்த்தேன். தரங்களின் நகல்களைக் கொண்டுசென்றேன். சூழ்நிலையை விளக்கி, "இவற்றை நான் ஆன்லைனில் இடப் போகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" "நல்லதுதான்" என ஒப்புக் கொண்டார். "சரி, இந்தியத் தர நிறுவனம் (பிஐஎஸ்) கோபம் அடையும் என்று உங்களுக்குத் தெரியும்." "இது முக்கியத் தகவல். மக்களுக்குக் கிடைக்க வேண்டும்" என்றார் அவர். அவர்கள் கவனிக்கவில்லை. மொத்த 19,000 தரங்களையும் எடுத்தேன். ஆன்லைனில் பதிவிட்டேன். டிவிடிக்காக ஆண்டுக்கு 5,000 டாலர் செலவிட்டேன். எனது சந்தாவைப் புதுப்பிக்கும் நேரம் வந்தது. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) நிச்சயம். (கார்ல் மாலமூத்) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். "இது வாங்குவதற்கான ஆணை. நான் என் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்கிறேன். ஆனால், இவை எல்லாம் தரவிதிகள். நாங்கள் இவற்றில 971ஐ எடுத்து எச்டிஎம்எல்-இல் மாற்றியிருக்கிறோம். அதன் படங்களை எஸ்விஜி கிராஃபிக்ஸ்-இல் மறுபடியும் வரைந்திருக்கிறோம். சூத்திரங்களை மேத்எம்எல்-இல் குறியாக்கம் செய்திருக்கிறோம். அந்த எல்லாவற்றின் நகல்களும் வேண்டுமா?" என்று கேட்டேன். 'நிறுத்து. உடனே நிறுத்த வேண்டும்' என்று எனக்கு பதில்-கடிதம் வருகிறது. எனது சந்தாவைப் புதுப்பிக்க மறுத்து விட்டார்கள். நாங்கள் அவற்றை விட்டுவிட வேண்டும் என்று கேட்டார்கள். காரணத்தை விளக்கி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்திய அரசாங்க அமைப்பின்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், தகவலறி உரிமைச் சட்டத்தின் கீழ், இது பொதுத் தகவல் என்பது எனது நம்பிக்கை. அவர்கள் உடன்படவில்லை. அடுத்த படியாக நாங்கள் அமைச்சகத்துக்கு விண்ணப்பம் அனுப்பினோம். மிக வசீகரமான விண்ணப்பம். பித்ரோதா ஒரு உறுதிப் பத்திரம் அளித்தார். இணையத்தின் தந்தையான விண்டன் செர்ஃப் ஓர் உறுதிப் பத்திரம் அளித்தார். நீர்ப் பொறியியல், போக்குவரத்துத் துறைகளின் மிக முக்கியமான பேராசிரியர்கள் பலர் உறுதியிதழ்கள் அளித்தனர். அந்தத் தரங்கள் ஏன் சிறப்பாக இருக்கின்றன, நாங்கள் ஏன் அவற்றின் மதிப்பைக் கூட்டி யிருக்கிறோம் என்பதற்கு உதாரணங்கள் எங்களிடம் இருந்தன. இப் பிரச்சினை அமைச்சகத்துக்குச் சென்றது. சில நாள் கழித்து, "நீங்கள் இதைச் செய்யலாகாது" என்று பதில் வந்தது. அடுத்த நிலை, பொதுநல ஆர்வ வழக்குப் போடுதல். போக்குவரத்துத் துறையின் மிகத் திறமை வாய்ந்த இளம் பொறியியலாளரும் என் சகாவுமான ஸ்ரீநிவாஸ் கோடாலியும் அற்புதமான இந்தியன் கானூனின் ஆசிரியர் டாக்டர் சுஷாந்த் சின்ஹாவும் வழக்கில உடன் இருந்தனர். வழக்குப் பதிவு செய்தோம். நிஷித் தேசாயின் நிறுவனம் இலவசமாக எங்களுக்குச் செய்ய ஒப்புக் கொண்டது. அவர்கள் எவ்விதக் கட்டணமும் பெறவில்லை. முன்னாள் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் எங்கள் சார்பாக மூத்த வழக்குரையாளராக ஊதியமின்றி வாதாட முன்வந்தார். புது தில்லியில் மதிப்புக்குரிய தில்லி உயர்நீதிமன்றத்தில் நிற்கிறோம். பிஐஎஸ் எங்கள் புகாருக்கு பதிலளித்திருக்கிறது என்ற வகையில் எழுத்துவேலை முடிந்துவிடடது. மத்திய அரசு இன்னும் விடை அளிக்கவில்லை. நவம்பர் 13ஆம் நாள் நாங்கள் மறுபடியும் நீதியவைக்குச் செல்ல வேண்டும். முதன்மை நடுவர், அல்லது தலைமை தாங்கும் நடுவர், அடுத்த வசந்த காலத்தில் ஒரு வாய்மொழி விவாதத்திற்கு ஏற்பாடு செய்வார் என்பது எங்கள் நம்பிக்கை. நாங்கள் எங்கள் தரப்பைக் கூறுவோம், அரசாங்கம் அதன் தரப்பை எடுத்துரைக்கும். பிறகு அதன் தீர்ப்பு கிடைக்கும். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) நிச்சயம். கார்ல், ஒன்று, பிஐஎஸ்-சின் தற்காப்புவாதம் பதிப்புரிமையைச் சார்ந்துள்ளது. மற்றொன்று, இந்தத் தரங்களைத் தாங்கள் உருவாக்கியதற்கான ஊதியம் தேவை என்று அது பேசுகிறது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று, அமெரிக்காவில், பின்பு சட்டமாகவோ ஒழுங்காகவோ மாறக்கூடிய தரங்கள், தனியார்களால் உருவாக்கப் படுகின்றன. இந்தியாவில் பிஐஎஸ் ஒரு சட்டபூர்வ அரசாங்க அமைப்பு. அது வெளியிடும் பெரும்பாலான தரங்கள் காலப்போக்கில் சட்டத்தின் ஆற்றலைப் பெறுகின்றன. குறித்த எல்லைவரை, அதன் வருவாய் இந்தத் தரங்களைக் குழுமங்களுக்கும், கல்லூரிகளுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் விற்பதனால் கிடைக்கிறது. பிஐஎஸ்ஸின் வருவாய்க்கான இந்த வழிமுறையை நீங்கள் எதிர்க்கிறீர்களா? இந்த நாளில், இந்தக் காலத்தில் அது பொதுவாக்கப்பட வேண்டும், முதலில் அந்தத் தரங்களை உருவாக்குவதற்கு ஆன செலவைப் பற்றி நாம் கவலைப் படக் கூடாது என்கிறீர்களா? (கார்ல் மாலமூத்) முதலில் நாம் இந்தியாவை கவனிப்போம். பிறகு உலகின் பிறபகுதிகளுக்குச் செல்லலாம். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) சரி. (கார்ல் மாலமூத்) இந்தியாவில் இவை யாவும் அரசாங்க ஆவணங்கள். அவர்கள் வருவாயில் 4%க்கும் குறைவாகத்தான் தரங்களை விற்பதால் வருகிறது. நீங்கள் ஒரு பொருளை இந்தியாவில் விற்க வேண்டுமென்றால் அதற்குச் சான்றிதழ் வேண்டும். சான்றிதழ் பெற எதற்காக நீங்கள் கட்டணம் கட்டுகிறீர்கள்? இந்தியத் தர நிறுவனம்தான். அவர்களுக்கு இதில் பெரும் பணம் கிடைக்கிறது. அது மட்டுமல்ல, இது அவர்கள் பணிக்கு மிகவும் உயிரானது. பொதுமக்களின் பாதுகாப்பு. தரங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதால் உங்களால் பொறியியலாளர்களுக்குக் கல்வியளிக்க முடிவதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர்களால் இயன்றவரை கட்டுமானத் தரத்தைச் செயல்படுத்த நீங்கள் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இவற்றில் ஒன்றை வாங்க அவர்கள் 14,000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. மக்கள் பாதுகாப்புக்கான தகவலைக் கட்டுப்படுத்துவது, அவர்களது பொதுப்பணிக்கு இடையூறு செய்கிறது. பிஐஎஸ்-க்கு இந்தப் பணம் தேவையில்லை. பிற இடங்களிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் பணம் அதிகம். உலகத்தின் பிற பகுதிகளில் அரசு-சாரா அமைப்புகள் (என்ஜிஓக்கள்) தரங்களை நிர்ணயிக்கின்றன. பிறகு அரசாங்கம் அவற்றைச் சட்டமாக்குகிறது. ஓரிரண்டு செய்திகளைச் சொல்கிறேன். என்ஜிஓக்கள் இவை சட்டமாக வேண்டுமென்று விரும்புகின்றன. அமெரிக்காவின் தேசிய மின்சார விதியின் முழு நோக்கமும் அதுதான். பிறகு கூட்டாட்சியிலும் 50 அரசுகளிலும் அதுதான் சட்டம் என்று அவர்கள் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு அது தேவை. மிகப் பெரிய அளவு பணத்துக்கு அதை விற்கிறார்கள். அதற்குமேல் அவர்களுக்குச் சான்றிதழ் அளித்தல், கையேடுகள், பயிற்சியளித்தல் முதலியவற்றால் வருமானம். கூட்டாட்சி அரசு தேசிய மின்சார விதி நாட்டின் சட்டம் என்று கூறினால், அமெரிக்க மக்களின் ஒப்புதலான பொன்முத்திரை அவர்களுக்கு கிடைக்கிறது. பொதுப் பாதுகாப்புக்கான தகவலைக் கட்டுப்படுத்தாமல் அவர்கள் அந்த முத்திரையினால் சம்பாதிக்க முடியும். பணம் தேவை என்கிறார்கள். ஆனால் அது காரணம் என்று தோன்றவில்லை. இது கட்டுப்பாட்டைப் பற்றிய விஷயம். அவர்கள் எப்போதுமே இப்படித்தான் செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இணையம் உலகத்தின் ஒவ்வொரு தொழிலையும் தனது வணிக மாதிரியை மாற்றிக் கொள்ள வைத்துள்ளது. காலம் நமது வணிக மாதிரிகளை மாற்றிக் கொள்ளச் செய்கிறது. 1970இல் நியாயமான பணத்துக்குத் தரத்தை விற்பதில் அர்த்தமிருந்தது. ஆனால் இந்த நாளில் இந்த யுகத்தில் ஒரு கட்டுமான விதி, ஒரு புத்தகம் 14,000 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. இந்த யுஎஸ்பி இயக்கியில் 19,000 தரங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மாணவருக்கும், குறைந்தபட்சம், வணிகரீதியற்ற முறையில் இது ஏன் கிடைக்கலாகாது என்பதற்குக் காரணம் இல்லை; ஆனால் இது ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு உள்ளூர் அதிகாரிக்கும் கிடைக்க வேண்டும். அதன் வாயிலாகத்தான் நாம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் சட்டத்தை அறிகிறார். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) உண்மைதான், சரி கார்ல், உங்கள் பணியின் ஒரு பகுதி, பிற பல பொதுத்தளப் பணிகளின் பகுதி, இந்தத் தகவல் இலசவசமாக யாவருக்கும் கிடைக்கவேண்டும் என்று முன்வைக்கிறது; ஆனால் அது கிடைப்பதன் தரமும் நன்றாக இருக்கவேண்டும். உதாரணமாக, தேவையான ஆவணங்களைப் பெரிதாக்கிக் காணலாம், அதை ஆய்வுக்காக மக்கள் பயன்படுத்துமாறு இன்னும் அழகிய வடிவத்தில் அளிக்கலாம். இந்தப் பணியில் சிறிதளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் இந்திய இணைய நூலகத்திற்கு விரிகிறது. அதைப் பற்றி சிறிது விரிவாகச் சொல்வீர்களா? (கார்ல் மாலமூத்) தரங்களுக்காக, கட்டுமான விதி உள்பட நாங்கள் அவற்றை எச்டிஎம்எல்-இல் மறுதட்டச்சுச் செய்தோம். படங்களை மறுபடி வரைந்தோம். சூத்திங்களை மறுகுறியாக்கம் செய்தோம். இந்திய இணைய நூலகம் தங்களிடம் அரசாங்க வழங்கியில் 550,000 புத்தகங்கள் இருப்பதாகச் சொல்கிறது. வெகுநாளாக இந்தியா முழுவதும் புத்தகங்களை ஸ்கேன் செய்யும் திட்டம் நடந்து வருகிறது. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) அவை எப்படிப்பட்டவை? (கார்ல் மாலமூத்) இந்திய அரசாங்கம். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த திட்டத்தின் புரவலர். இந்த இந்திய இணைய நூலகத்தைக் கண்டேன், நுழைந்து நோக்கினேன். இரண்டு குறைகள். ஒன்று, அது எளிதில் அடையக்கூடியதாக இல்லை. தேடுவது கடினமாக இருந்தது. வழங்கி அவ்வப்போது முடங்கியது. டிஎன்ஸ்-ஐ இழந்து கொண்டே இருந்தது. திடீரென்று வழங்கி மறைந்துவிடும்; ஆகவே நான் ஒரு பிரதி எடுத்து அதை ஆன்லைனில் இட்டேன். அதை கவனமாக நோக்கினேன். தகவல்தளத்தில் சில பதிப்புரிமைப் பிரச்சினைகள் இருந்தன. அவை ஒழுங்கற்றிருந்தன. மேற்தகவல்கள் மோசம். தலைப்புகள் தவறு. ஸ்கேனிங் கொஞ்சம் ஒழுங்கற்றதாக இருந்தது. பக்கங்கள் சாய்ந்திருந்தன, விடுபட்டிருந்தன, அல்லது பாதிப் புத்தகமே காணப்படாது. அல்லது அதன் தெளிவைக் குறைத்திருந்தனர். நாங்கள் பிரதி எடுத்து அதை மேம்படுத்தும் நோக்கில் ஆன்லைனில் இட்டோம். இந்தத் தளத்திற்கு ஒரு மில்லியன் பார்வைகள் மாதத்திற்குக் கிடைத்தன. யாவருக்கும் தெரிந்ததாயிற்று. நீக்கவேண்டும் என்ற சில அறிவிப்புகளும் வந்தன. பெரிய குழுமங்களில் இப்படி ஏற்படுகிறது. நீக்கக் குறிப்பைப் பெறுகிறீர்கள், அவர்களுக்குச் சொல்கிறீர்கள், "சரி, நாங்கள் அதை நீக்கிவிடுகிறோம்." (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) சில விஷயங்களில் அவர்களுக்கு ஒத்துச் செல்வதில் உங்களுக்கு மகிழ்ச்சிதான். (கார்ல் மாலமூத்) ஆம், முற்றிலும் சரி. யாராவது, ‘ஒரு புத்தகம் பதிப்புரிமை உள்ளது’ என்றால் பிரச்சினை இல்லை. உடனே நீக்கி விடுவோம். பெரிய விஷயமல்ல. லட்சக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கும்போது, அல்லது இணையக் காப்பகத்தில் ப்ரூஸ்டர் காலே கோடிக்கணக்கான புத்தகங்களை வைத்திருப்பது போல இருந்தால், அறிவிப்புகள் வருகின்றன. தவறுகள் சகஜம். அரசாங்கம் கோபமுற்றது. காரணம், அது பெருமளவு தெரிந்ததாகி விட்டது. சிலபேர், "எனது புத்தகத்தை வைத்திருக்கிறீர்கள்" என்று அறிவிப்புகள் அனுப்பினார்கள். அரசாங்கம் தங்கள் தகவல் தளத்தை மூடி விட்டார்கள். எங்களையும் முழு தகவல் தளத்தையும் மூடுமாறு கூறினார்கள். "நாங்கள் அப்படிச் செய்வதற்கில்லை" என்று சொன்னேன். "அப்படியானால் 1900 முதலாக வந்த புததகங்களை நீக்கிவிடுங்கள்" என்றார்கள். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) இந்த சேகரிப்பில் எந்த மாதிரிப் புத்தகங்கள் உள்ளன? (கார்ல் மாலமூத்) இது ஒரு வியத்தக்க சேகரிப்பு. 50 வெவ்வேறு மொழிகள். பாதியளவு ரொமான்ஸ் மொழிகளில்-ஆங்கில, ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழிகளில். வரலாற்றுப் புத்தகங்கள், புதினமல்லாதவை, இந்தியாவின் அரசிதழ்கள். வெவ்வேறு மாநிலங்களுக்கான பலவேறு வகை அரசிதழ்கள். 50,000 புத்தகங்கள் சமஸ்கிருதத்தில். 30,000 குஜராத்தியில். இந்த எண்ணிக்கைகள் உறுதியாக எனக்குத் தெரியாது. ஆனால் பத்தாயிரக் கணக்கில். பஞ்சாபியில் பத்தாயிரக் கணக்கில். திபேத் மொழியில் புத்தகங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய புத்தகங்கள். உலகத்தில் வேறெங்கும் கிடைக்காத ஒரு வியத்தக்க, தனித்தன்மையுள்ள சேகரிப்பு. உலகமுழுவதுமுள்ள இந்தியக் கல்விமான்கள், "ஆ, இது பெருமைக்குரியது" என்று எனக்குக் குறிப்புகள் அனுப்புகிறார்கள். நாங்கள் வேறுவிதமாக அவற்றை அளிக்கிறோம். நீங்கள் எளிதாக இதில் துழாவிப் பார்க்கலாம். மக்கள் பார்த்து, "ஓ, மேற்தகல்வகள் தவறாக உள்ளன" என்று விரைவாகக் குறிப்பு அனுப்பலாம். நாங்கள் உடனே அதைச் சரி செய்வோம். நாங்கள் அதை மேம்படுத்த முயலுகிறோம். அரசாங்கம், "இல்லை இல்லை, நீங்கள் அதை ஆஃப்லைனுக்குக் கொண்டுசெல்லுங்கள். நாங்கள் எது சரி என்று சொல்வோம். ஏனெனில் நாங்கள் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்ந்து எது பதிப்புரிமை உள்ளது எது இல்லாதது என்று முடிவு செய்வோம்" என்கிறது. முதலில், எது பதிப்புரிமை உள்ளது, எது இல்லாதது என்று கண்டறிவதில் அவர்கள் நிபுணர்கள் அல்ல என்று கருதுகிறேன். பதிப்புரிமை என்பது ஓர் இருமை விஷயம் அல்ல. ஒருவர் பார்வையற்றவராக இருந்தால், அவருக்குச் சர்வதேச உடன்படிக்கையின்கீழ் இலவசமாக எந்தப் புத்தகத்தையும் என்னால் அளிக்க முடியும். இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தில் அது ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் கல்வி நோக்கத்திற்காக உள்ளது. அதைப் பற்றியதுதான் தில்லிப் பல்கலைக்கழக வழக்கு. ஆகவே அது ஓர் இருமை விஷயம் அல்ல. நீங்கள் எதைப் படிக்க வேண்டும் எதைப் படிக்கக் கூடாது என்று சொல்வது அரசாங்கத்தின் வேலை அல்ல. அதைவிட எந்தப் புத்தகங்கள் இணையத்தில் கிடைக்க வேண்டும் என்று எனக்குச் சொல்வது அவர்கள் வேலையே அல்ல. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) மிகச் சரி. உண்மைதான். (கார்ல் மாலமூத்) ஏதாவது தேசப் பாதுகாப்பு சம்பந்தமானது, அது போன்றது என்றால் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் "எங்களுக்குப் பிடிக்கவில்லை" என்று சொல்வது, "எனக்கு இதைப் பற்றிக் கவலையில்லை" என்று சொல்வது போன்றது. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) உண்மை. இப்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தங்கள் நூலகத்தை மூடி விட்டார்கள், உங்களுடையது மட்டுமே இருக்கிறது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். (கார்ல் மாலமூத்) ஆம். அது பைத்தியக்காரத்தனம், முழுப் பைத்தியக்காரத்தனம். அரசாங்கத்துடன் இந்தச் சண்டை போடுவதற்கு பதிலாக, நான் தகவல்தளத்தை மேம்படுத்தி இருக்கலாம், அதாவது அவர்களுடன் பணியாற்றி இருக்கலாம், இன்னும் அதிகப் புத்தகங்கள் ஸ்கேன் செய்திருக்கலாம். இந்து சுயராஜ்யம் சேகரிப்பில் என்ன செய்தோமோ அதைத்தான் இதிலும் செய்துகொண்டிருக்கிறோம். அது மிக உயர்தரமான பொருள். அதைப் பற்றிச் சொல்லலாமா? (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) ஆம், நிச்சயமாக. (கார்ல் மாலமூத்) இந்து சுயராஜ்யச் சேகரிப்பு, மகாத்மா காந்தியின் எழுத்துத் தொகுதிச் சேகரிப்புடன்-மொத்தம் 100 பாகங்கள்-தொடங்கியது. அது ஆன்லைனில் கிடைக்கிறது, யாரும் அதைப் படிக்கலாம். பிடிஎஃப்-களை இறக்கலாம், மின்னஞ்சல் புத்தகங்களை (ஈ-புக்) இறக்கிக் கொள்ளலாம். காந்தி பேசிய 129 உரைகளை அகில இந்திய வானொலியில் கண்டேன். அவை அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டில் இருநாட்களுக்கு ஒருமுறை பேசியவை. நீங்கள் அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டுக்குள் பயணம் செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் நான் அவரது சேகரிப்பிலிருந்து பொருத்தமான பகுதியை எடுத்து எச்டிஎம்எல்-இல் இட்டேன். ஆகவே நீங்கள் இந்தியில் அல்லது குஜராத்தியில் அவர் பேசுவதைக் கேட்கலாம். ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கலாம். பிறகு நீங்கள் சேகரிப்புத் தொகுதியில் க்ளிக் செய்து அன்றைக்கு என்ன கடிதங்கள் எழுதினார் என்று பார்க்கலாம். அதற்கு மறுநாள் என்ன செய்தார் அதற்கு முந்திய நாள் என்ன செய்தார் என்று அறியலாம். எங்களிடம் நேருவின் தேர்ந்தெடுத்த படைப்புகள் உள்ளன. அவற்றில் பல அரசாங்க வழங்கியில் இருந்தன. ஆனால் அவற்றில் சில பாகங்கள் இல்லை. அந்த பாகங்களை நான் தேடிப் பெற்றேன். இப்போது முழுமையான பகுதி எங்களிடம் உள்ளது. அம்பேத்கரின் படைப்புத் தொகுதிகள், மகாராஷ்டிரா அரசு வழங்கியில் இருந்தன. அவற்றில் கடைசி ஆறு பாகங்கள் இல்லை. இப்போது எங்களால் முழுத் தொகுதியும் கிடைக்கிறது. டிஸ்கவரி ஆஃப் இந்தியாவின் அடிப்படையில் அமைந்த 'பாரத் ஏக் கோஜ்' மிக அழகான ஒரு தயாரிப்பு. மிக நன்றாகச் செய்யப் பட்டது. அது 1980களில். தூர்தர்ஷன் ஒரு அரசாங்க முகமையாக இருந்தபோது. ஆகவே அதை நாங்கள் ஆன்லைனில் இடவில்லை. பலவேறு மொழிகளில் உபதலைப்புகள் மட்டுமே இட்டோம். எல்லாப் பகுதிகளுக்கும் அல்ல, ஐந்து பகுதிகளுக்கு மட்டும். காரணம் போதியபணமில்லை. அவற்றிற்கு இந்தியில் உபதலைப்புகள் உள்ளன. அவர்கள் செய்யாதது. அவர்களிடம் ஆங்கில உபதலைப்புகள்தான் இருந்தன. மேலும் உருது, தெலுங்கு, இன்னும் பிற மொழிகளில். நாங்கள் அதை மேலும் சிறப்பாக்கவும் பயனுள்ளதாக்கவும் முயற்சி செய்தோம். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) நிச்சயம், நிச்சயம். சிலபேர், நீங்கள் செய்யும் வகையிலான பொதுக்கள முன்னேற்றப் பணி, பதிப்புரிமைக்கு முழுமையாக எதிர்ப்பானது என்று நோக்குகிறார்கள். ஒருவேளை சிலசமயம் நீங்கள் திருட்டு என்னும் எல்லையை மீறலாம் என்றும் நினைக்கிறார்கள். (கார்ல் மாலமூத்) நான் திருடன் அல்ல, கொள்ளையன் அல்ல. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) உங்கள் சொந்த வேலையில் எப்போது ஒரு திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? அது பொதுநலம் பற்றியதா? அதுதான் உரிய சோதனை என்று நீங்கள்... (கார்ல் மாலமூத்) சரி, அதில் ஒரு பகுதி பொதுநல ஆர்வம். நான் எல்லாவித விஷயங்களையும் பார்க்கிறேன். முதலில் இதைச் சொல்கிறேன். நான் தொழில்ரீதியான எழுத்தாளராகப் பிழைப்பு நடத்தி வந்தேன், சரியா? நான் ஒரு இசைக் கலைஞன். எனக்குப் பதிப்புரிமையில் நம்பிக்கை உள்ளது. அது ஒரு ஆச்சரியமான விஷயம், ஆனால் பதிப்புரிமையின் நோக்கம், பயன்படு கலைகளை முன்னேற்றுவது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அறிவை மேலும் கிடைக்கச் செய்யும் வழி. பதிப்புரிமைக்கு எல்லைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. உங்களிடம் தனியாக வீடுகள் இருப்பினும், பொதுமக்களுக்கான பூங்காக்கள் நடுநடுவே வேண்டும். இரண்டும் இல்லாமல் நகரம் இல்லை. வணிகமும் தேவை, அதேபோல நாகரிக வாழ்க்கையும்தான் தேவை. நான் இதைப் பார்க்கிறேன், என்னைக் கேட்டுக் கொள்கிறேன். அது அரசாங்கத் தகவலா? பதிப்புரிமை உறுதிமொழி நியாயமானதா? அது பொதுநல நோக்கில் உள்ளதா? இந்தத் தகவலுக்குக் கட்டாயத் தேவை உள்ளதா? பொதுமக்கள் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் அரசாங்கத் தகவலாக இருந்தால், அல்லது கூட்டுக்குழுமங்களின் செயல்பாடாக இருந்தால், அல்லது அரசாங்கத்தின் காரியங்களைக் குடிமக்களுக்குத் தெரிவிக்கும் அதிகாரபூர்வ முறையாக இருந்தால், அது தெளிவாகவே பொதுக்களம், முழுமையாக, தெளிவாக பொதுமக்களுக்கானது. அதை நான் கவனமாக ஆராய்கிறேன். நிறையப் பேர் இந்த மாதிரி வேலையைச் செய்கிறார்கள், ஆனால் நீங்கள் கணினிக்குள் திருடுகிறீர்கள் என்று நினைக்கிறார்கள். எனக்குத் தொழில்நுட்பத் திறன்கள் உள்ளன. சந்தேகமில்லை. இப்போது படித்துவரும் இளைஞர்களிடம் இருக்கிறதே அந்த அளவு கிடையாது, ஆனால் இதை வெகுநாட்களாகச் செய்து வருகிறேன். பெரிய தகவல்தளங்களிலும், பனுவல் விஷயங்களிலும் நான் திறமையாளன். ஏதாவது ஒன்றை ஆன்லைனில் இடும்போது மிக மிக கவனமாகச் சிந்திக்கிறேன். அதைப் படிக்கிறேன், மிக அதிகமாக ஆய்வு செய்கிறேன். இந்தியத் தர விஷயத்தில், நான் உடனே இறங்கிவிடவில்லை. வெகுகாலம் செலவழித்தேன். நான் வழக்கறிஞர் அல்ல என்றாலும், அரசியல் சட்டத்தின் மூன்று பாகங்களையும் மிக எச்சரிக்கையாகப் படித்தேன். பிறகு சாம் பித்ரோதாவைச் சென்று சந்தித்தேன். பல பேரிடம் பேசினேன். இவற்றை எல்லாம் செய்த பிறகுதான், "சரி, இது பொதுத் தகவல்" என்ற முடிவுக்கு வந்தேன். நான் செய்வது தவறு என்றால், விளைவுகளை ஏற்றுக் கொள்வேன். இம்மாதிரி வேலையைச் செய்வதன் மறுபகுதி இது. தவறு செய்தால், அபராதம் செலுத்தியாக வேண்டும். அதற்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கவேண்டும். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) உண்மைதான். இங்கே சற்று நமது விஷயத்தை விட்டுவிட்டு, அரசாங்கத்தைப் பற்றிப் பேசலாம். இந்திய அரசாங்கம் மட்டுமல்ல, பொதுவாக உலக முழுவதும், நீங்கள் செய்யும் வகையான வேலைக்கு அரசாங்க எதிர்வினை பற்றி. இப்போது, இந்தியாவில், இந்த அரசாங்கம், மோதி அரசாங்கம், இதற்கு முன்னிருந்த அரசாங்கம், இரண்டுமே நாங்கள் தொழில்நுட்பதை மேலும் வெளிப்படைத் தன்மைக்காகப் பயன்படுத்துகிறோம், தொழில்நுட்பத்தை மேலும் பொதுமக்களுக்குத் தகவல் கிடைப்பதற்காகப் பயன்படுத்த நினைக்கிறோம் என்று மக்களிடம் கூறினார்கள். ஈ-கவர்ன்ன்ஸ் என்பது போன்றவை. ஆனால் சில சமயங்களில் இப்படி யாராவது முன்வந்து இம்மாதிரி வேலையைச் செய்தால் அவர்களது முதல் முதல் எதிர்வினை எதிர்ப்பாகவே இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் இந்தியாவில் சட்டரீதியான எதிர்ப்பினைப் பெறுகிறார்கள். நீங்களே சுட்டிக்காட்டியதுபோல, ஒரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அரசாங்கம் தாங்கள் நிற்பதாகச் சொல்லும் கொள்கைக்கும், அவர்களது உண்மையான செயல்பாடுகளுக்கும் ஒரு முரண்பாடு இருக்கிறதா? இதில் உங்கள் பங்கினை எப்படி நோக்குகிறீர்கள்? (கார்ல் மாலமூத்) இம்மாதிரி விஷயங்களை அதிகாரிகள் ஆட்சி எதிர்க்கத்தான் செய்யும். நான் சாம் பித்ரோதாவைப் பார்த்தபோது, "செய்யுங்கள்" என்றார். ஆனால் இந்தியத் தர நிறுவனம், "இல்லை இல்லை, நாங்கள் இப்படித்தான் எப்போதும் செய்துவருகிறோம், மற்றவர்களும் இப்படித்தான் செய்கிறார்கள்" என்கிறது. நீங்கள் வெளிப்படைத் தன்மைக்கு வாதாடுபவராகவோ, ஒரு அமைச்சராகவோ, குறிப்பாக ஓர் அரசாங்க அமைச்சராக அவர்களிடம் சென்றால், இப்படிச் செய்தால் வானம் ஏன் இடிந்து விழும் என்று விளக்குவதற்காக 15 பிஐஎஸ் நிர்வாகிகளுடன் எட்டுமணி நேரக் கூட்டம் நடத்துவார்கள். அரசாங்க நிர்வாகத்தில் நீங்கள் எச்சரிக்கையாக நுழைய வேண்டும். திறந்த தன்மைக்காகப் போராடினாலும் காரியங்களைச் சிதைத்துவிடக் கூடாது. ஒபாமா நிர்வாகம் இதில் மிக நன்றாகச் செயல்பட்டது-ஆனால் இவ்வளவு தொலைவுதான் உங்களால் செல்ல முடியும். குடிமக்கள் சமூகத்துடன் சேர்ந்து பணிபுரிவது முக்கியமானது. என்றாலும், நீங்கள் சிலசமயங்களில் வெறுப்பைச் சம்பாதிக்க நேர்கிறது. நாங்கள் செய்வதை ஏன் செய்கிறோம், ஏன் இது சரியான விஷயம் என்று விளக்க முயற்சி செய்வதே என் வேலையில் பெரும்பகுதியாக இருக்கிறது. என் முதன்மையான உத்திகளில் ஒன்று, எனக்குத் தகவல்களைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்கள் கிடைக்கிறார்கள். திடீரென்று ஒரு அரசாங்க நபர், " நீ இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும்" என்கிறார். "மில்லியன் கணக்கான பொறியியல் மாணவர்கள் இந்தியாவில் இந்தத் தகவலை தினமும் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் இது வெளிப்படையாக இருக்க வேண்டும். பார், இதனால் இடி விழுந்துவிடவில்லை. இன்னும் அந்தத் தரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்" என்று சொல்லத் தோன்றுகிறது. எல்லாத் தரவிதிகளையும் நான் கொடுத்துவிட்டாலும், அவற்றின் சான்றிதழ்ப் படிகளைப் பெற வேண்டுபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்கள் முந்திய வடிவங்களின் எல்லாப் பதிப்புகளையும் கேட்கத்தான் போகிறார்கள். சட்ட முக்கியத்துவம் உள்ளவற்றைப் பற்றியே எனது அக்கறை. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) பொதுமக்களுக்குத் தகவல் கிடைப்பில் அரசாங்கம் தனது வேலையை மேலும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அக்கறை உள்ளவர் என உங்களைக் காண்கிறீர்களா? (கார்ல் மாலமூத்) அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். நான் இந்த வேலையிலிருந்து வெளியேற விரும்புகிறேன். இந்தியத் தரங்களைச் செய்ய விரும்பவில்லை. என்னைவிட பிஐஎஸ்-க்கு அந்த வழி நன்றாகத் தெரியும். என்னிடம் மூலக் குறிகள் இல்லை. நான் ஒரு பிடிஎஃப் கோப்பை எடுத்து அதை மறுதட்டச்சுச் செய்து எச்டிஎம்எல்-ஆக மாற்ற வேண்டியுள்ளது. அல்லது அதிர்ஷ்டம் இருந்து, அது ஏற்கெனவே கணினி ஆக்கம் பெற்றிருந்தாலும், அதற்கு மறுவடிவம் தரவேண்டும். அதை பிடிஎஃப்-இலிருந்து எடுக்க வேண்டும், பத்திக் குறிகள், சாய்வெழுத்துகள், அடிக் குறிப்புகள், மேற்குறிப்புகள். மிக அதிக அளவு வேலை. அசலான ‘வேர்ட்’ கோப்பு அவர்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவ்விதம் இருந்தால், இந்த வேலை மிகச் சிறியது. அவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் இறக்கிக் கொள்ளுமாறும் அதை மொத்தமாகக் கிடைக்குமாறும் செய்யவேண்டும். உதாரணமாக, இந்தியன் கானூன் தங்கள் தேடுகருவிக்குள் அதை உள்ளடக்க முடியும். அது நல்ல விஷயம். திடீரென்று எல்லாத் தரங்களும் எல்லாருக்கும் கிடைத்துவிடும். ஒவ்வொருவருக்கும் பாதுகாப்புத் தரங்கள் தெரியும்: நமது உலகம் மேலும் பாதுகாப்படையும். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) நிச்சயம். உண்மை. பாதுகாப்பான உலகம் என்ற இந்தக் கருத்துடன் இந்த விவாதத்தை முடிப்போம். பொதுவாக, உங்கள் முந்தைய பேச்சுகளிலும் உரையாடல்களிலும் பொதுமக்களுக்குத் தகவல் கிடைப்பதற்கும் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை மெய்யாகப் புரிந்துகொள்வதற்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரண்டும் தொடர்புள்ளவை என்று ஏன் நம்புகிறீர்கள்? (கார்ல் மாலமூத்) நமது உலகத்தில் ஒழுங்குபடுத்த இயலாதவையாக, தீர்க்க இயலாதவையாகத் தோன்றுகின்ற பல பிரச்சினைகள் உள்ளன. உதாரணம் உலகம் வெப்பமயமாதல். நிறையப் பேர் அது உண்மை என்று நம்பவில்லை. அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை. அல்லது அவர்களின் சுயநலம். "நான் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்வதால் நடவடிக்கை எடுக்கவில்லை: அதில் அதிகப் பணம் கிடைப்பதால் நான் மாசுபடுதலை விரும்புகிறேன்." மற்றப் பேர்களைச் சகித்துக் கொள்ள இயலாமை. ஏழ்மை. ஏழ்மையிலிருந்து விடுபடும் வழி கல்வி. பஞ்சம், நோய். இந்தப் பிரச்சினைகள் பற்றி நாம் என்ன செய்ய முடியும் என்பது கேள்வி. அறிவு யாவருக்கும் கிடைப்பதே நாம் முன்னேறுவதற்கு ஒரே வழி என்று நம்புகிறேன். எல்லாக் குடிமக்களும் தட்பவெப்ப மாறுபாடு பற்றிப் புரிந்து கொள்ளத் தொடங்கினால், ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் நடவடிக்கை வேண்டுமென்று கேட்பார்கள். ஏனெனில் உண்மையிலேயே இது ஒரு உலகளாவிய நெருக்கடி. அதிக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த அரசாங்கம் என்று நான் கவலைப்படவில்லை, அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் எல்லாரும் எழுந்து நின்று, "உலகம் வெப்பமயமாகிறது! கடவுளே, நாம் எதையாவது செய்தாக வேண்டும். இந்தப் புயல்களைப் பாருங்கள், இந்த நெருப்புகளைப் பாருங்கள், இந்தப் பஞ்சங்களைக் காணுங்கள்" என்று ஒன்றாகக் கூச்சலிட்டால், நமக்கு மாற்றம் வரும். இன்று கல்வி என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று. நோய். அதற்கான தீர்வுகள் எங்கிருந்து வரப்போகிறது என்று உங்களுக்குத் தெரியாது. இணையத்தில் நான் பார்த்த ஒன்று, நான் மொத்தமாகத் தகவலை ஆன்லைனில் இடும்போது, யாரோ ஒருவர் வந்து அதை மேம்படுத்துகிறார். நீங்கள் ஒருபோதும் நினைத்திராத ஒருவர். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சங்கற்பம் இருக்கிறது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது ஏரோநாடிக்ஸ்-ஆக இருக்கலாம். விருப்பமற்ற அடிமைத்தனத்தை ஒழிப்பதாக இருக்கலாம். அனைவருக்கும் வாக்குரிமையாக இருக்கலாம். தொழில்நுட்பமாக இருக்கலாம். சமூக மாற்றமாக இருக்கலாம். இணையம் நமது பெரிய நம்பிக்கை. அது வேலை செய்கிறது. எல்லா அறிவையும் எல்லாருக்கும் கிடைக்கச் செய்வது நாம் செய்யக்கூடிய ஒன்று; அது உலகத்தை இன்னும் சிறந்த இடமாக மாற்றும் என்று உறுதியாக நான் நம்புகிறேன். (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) மகிழ்ச்சி, நல்லது. கார்ல், உங்கள் நேரத்தை எங்களுக்கு ஒதுக்கியமைக்கு நன்றி. (கார்ல் மாலமூத்) உங்களுக்கு மிக மிக நன்றி. (அனுஜ் ஸ்ரீநிவாஸ்) நாங்கள் உங்கள் வழக்கையும் நெருக்கமாகப் பணிபுரியும் பிரச்சினைகளையும் ஒயரிலும் பின்தொடர்வோம். நன்றி. © தி ஒயர், 2017. Permission https://thewire.in/191059/interview-little-usb-holds-19000-indian-standards-not-made-public/ [20-07-1947. மைக்ரோஃபோனின் முன் பண்டித ஜவஹர்லால் நேரு ] 20-07-1947. மைக்ரோஃபோனின் முன் பண்டித ஜவஹர்லால் நேரு [1948 மே-யில் ஜம்மு ஆர்ஏஎஃப் மெஸ்ஸில் அதிகாரிகளுடன் பில்லியர்ட்ஸ் விளையாடுகிறார். ] 1948 மே-யில் ஜம்மு ஆர்ஏஎஃப் மெஸ்ஸில் அதிகாரிகளுடன் பில்லியர்ட்ஸ் விளையாடுகிறார். [1948 மே-யில் கஷ்மீரில் ஒரு படகுப் போட்டியில். ] 1948 மே-யில் கஷ்மீரில் ஒரு படகுப் போட்டியில். [1948 மே-யில் விடுமுறையின்போது சிம்லா இராஜப் பிரதிநிதி மாளிகையில் நேரு. ] 1948 மே-யில் விடுமுறையின்போது சிம்லா இராஜப் பிரதிநிதி மாளிகையில் நேரு. [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 43 (1930), ப. 185. நாள் இல்லை. ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 43 (1930), ப. 185. நாள் இல்லை. [1958 செப்டம்பர் 20. பூட்டானுக்குச் செல்லும் வழியில் திருமதி இந்திரா காந்தி ஒரு யாக் மீது ஏறிச் செல்கிறார். ] 1958 செப்டம்பர் 20. பூட்டானுக்குச் செல்லும் வழியில் திருமதி இந்திரா காந்தி ஒரு யாக் மீது ஏறிச் செல்கிறார். [1954 டிசம்பர் 6. வருகை தந்த சீனப் பிரதிநிதிக் குழுவுடன் செல்லுதல். ] 1954 டிசம்பர் 6. வருகை தந்த சீனப் பிரதிநிதிக் குழுவுடன் செல்லுதல். [இந்தியாவின் பிரதமரான மாண்புமிகு பண்டித ஜவஹர்லால் நேரு 1949 அக்டோபர் 28இல் சிகாகோவுக்குச் சென்றபோது திரு. வில் ஸ்மித்-இன் பண்ணையைச் சென்று பார்க்கிறார், அமெரிக்காவின் இந்தியத் தூதர் திருமதி விஜயலட்சுமியும், திருமதி இந்திரா காந்தியும் உடனிருக்கின்றனர். ] இந்தியாவின் பிரதமரான மாண்புமிகு பண்டித ஜவஹர்லால் நேரு 1949 அக்டோபர் 28இல் சிகாகோவுக்குச் சென்றபோது திரு. வில் ஸ்மித்-இன் பண்ணையைச் சென்று பார்க்கிறார், அமெரிக்காவின் இந்தியத் தூதர் திருமதி விஜயலட்சுமியும், திருமதி இந்திரா காந்தியும் உடனிருக்கின்றனர். [பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவும் திருமதி இந்திரா காந்தியும் பூட்டானுக்குச் செல்லும் வழியில் திபேத்-பூட்டான் எல்லையில் சீன மக்கள் குடியரசின் ஜெனரல் டாங் குவான் சானுடன் (இடது கோடி) காணப்படுகிறார்கள். ] பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவும் திருமதி இந்திரா காந்தியும் பூட்டானுக்குச் செல்லும் வழியில் திபேத்-பூட்டான் எல்லையில் சீன மக்கள் குடியரசின் ஜெனரல் டாங் குவான் சானுடன் (இடது கோடி) காணப்படுகிறார்கள். [குலு பள்ளத்தாக்கின் நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் திருமதி இந்திரா காந்தியின் நிழற்படம். 1958 ஜனவரி 29. ] குலு பள்ளத்தாக்கின் நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் திருமதி இந்திரா காந்தியின் நிழற்படம். 1958 ஜனவரி 29. [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 14 (1917-18)), முகப்பு, 1918இல் காந்திஜி. ] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 14 (1917-18)), முகப்பு, 1918இல் காந்திஜி. [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 78 (1944), முகப்பு.] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 78 (1944), முகப்பு. சுயாட்சி விதிகள் மீதான குறிப்பு கார்ல் மாலமூத், கலிஃபோர்னியா, 2017 டிசம்பர் 4-25 அக்டோபர் இறுதியில் இந்தியாவிலிருந்து திரும்பிவந்தேன். முன்பு முடிக்கப்படாமல் விட்டுச் சென்ற பணிகள், பயணத்தின்போது சேர்ந்து கொண்ட புதிய பணிகள் என்னும் வெள்ளத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் மிக முக்கியமாக இருந்தவை நீதிமன்ற வழக்குகள். அவை அனைத்திற்கும் என் கவனம் தேவைப்பட்டது. ஆனால் முதலில் எனக்காக நேரம் ஒதுக்கிக் கொண்டேன் எனது அலுவலகத்துக்கு வெளியே மொத்தம் 463 பவுண்டு எடையுள்ள ஒன்பது பெரிய பெட்டிகள் எனக்காகக் காத்திருந்தன. அவற்றிலிருந்தவை 312 புத்தகங்கள். காந்தி திரைப்படத்தைத் தயாரிக்க ஆயத்தம் செய்ய ரிச்சட் ஆட்டன்பரோ பிரபு பயன்படுத்திய புத்தகங்கள் இவை. அவரது மரணத்திற்குப் பிறகு அவருடைய தயாரிப்பாளர்களில் ஒருவர் 2015இல் இவற்றை ஏலத்தில் எடுத்தார். அண்மையில் அவர் கான்சல் ஜெனரலும் இந்தியத் தூதருமான அசோக்கைத் தொடர்புகொண்டு, இப் புத்தகங்களை நன்கொடையளிக்கப் பயனுள்ள இடம் ஏதாவது தெரியுமா என்று கேட்டார். தூதர் என்னைக் கைகாட்ட, அக்கப்பற் சரக்கு இறுதியாக வந்து சேர்ந்தது. அச் சேகரிப்பு உண்மையில் நம்ப இயலாததாக இருந்தது. பெட்டிகளில் ஒன்றில் அப்படத்திற்கான அசல் திரைக்கதை எழுத்துகள், வரவுசெலவுக் கணக்கு ஒதுக்கீடு, பட அழைப்பாணைகள், ஏலவிடுதி இரசீது, பட்டியல் முதலியவை இருந்தன. அந்தப் புத்தகங்களில் பியாரேலால் நய்யாரின் எட்டுப் பகுதி காந்தி-வரலாறு, காந்தி தொகுப்பு நூல்களின் பாகங்கள் போன்ற ஏற்கெனவே என்னிடமிருந்த நூல்களும் இருந்தன. ஆனால் அக்கப்பற் சரக்கில், காந்தியினாலும் காந்தியைப் பற்றியும் ஆக்கப்பட்ட நவஜீவன் அறக்கட்டளை நூல்களும்-இவை நான் இதுவரை பார்க்காதவை-இருந்தன. எளிதாக அஞ்சலில் அனுப்பத் தக்க 47 புத்தகங்களை நான் தேர்ந்தெடுத்தேன். அவற்றில் ஜி. டி. பிர்லா காந்தியுடன் கொண்ட கடிதத்தொடர்பின் 4 பா'கச் சேகரிப்பு போன்ற சில மாணிக்கங்களும் இருந்தன. காந்தி தாம் கொல்லப்பட்டபோது பிர்லாவின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர்கள் 44 ஆண்டுகளாக அடிக்கடி கடிதத் தொடர்பில் இருந்தனர். மேலும் என் அலுவலகத்திற்கு வெளியே, நான் வருவித்திருந்த நேருவின் தேர்ந்தெடுத்த படைப்புகளின் மிக அண்மைப் பகுதிகள் ஒன்பதும், நம்பமுடியாத அளவு மிகப் பெரிய புத்தகங்களான விடுதலைக்கான போராட்டத்தின் மூல ஆவணங்களான பல பாகங்களைக் கொண்ட தொகுதியும் இருந்தன. மூல ஆவணங்கள் எனக்குப் பிடித்தமான வரலாற்றாசிரியர்களில் ஒருவரான சப்யசாசீ பட்டாச்சார்யாவினால் தொகுக்கப்பட்டவை. இவை யாவற்றையும் சேகரித்துக் கொண்டு 'ஸ்கேன்' செய்வதற்காக இணைய-ஆவணக் காப்பகத்திற்கு எடுத்துச் சென்றேன். இப் பொருள்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, தூதர் அசோக் என்னை வேறொரு மேன்மகனுக்கு அறிமுகப் படுத்தினார். அவரிடமும் நன்கொடையளிக்கவென இந்தியாவைப் பற்றிய மிகப் பெரிய புத்தகச் சேகரிப்பு ஒன்று இருந்தது. கப்பற் கட்டணத்தைச் செலுத்த நான் ஒப்புக் கொண்டேன். விரைவில் 763 பவுண்டு கட்டணம் செலுத்தவேண்டிய 212 பெரும் புத்தகங்களைக் கொண்ட 25 பெட்டிகள் வந்துசேர்ந்தன. இவ்வளவு புத்தகங்கள் இருந்ததால், நான் மேலும் புத்தக அலமாரிகள் வாங்க வேண்டி வந்தது. ஆனால் அது ஏற்கத்தக்க செலவுதான். கவனிப்பை வேண்ட முனையும் நீதிமன்ற வழக்குகள் நவம்பரில் எனது தலையாய பணி நீதிமன்றத்தின் நடைமுறைகளை கவனிப்பதாக இருந்தது. முதலில் இந்திய வழக்குகள். நாங்கள் 2015 டிசம்பரில் தில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்குப் பதிவு செய்திருந்தோம். இந்தியாவில், பொதுவாக ஒரே சமயத்தில் இரண்டு கட்சிகளுக்கு எதிராக வழக்குப் பதிய நேர்கிறது: எதிர்க்கப்படும் முகமைகள், இங்கு, இந்தியத் தர நிர்ணயத் துறை மற்றும் இந்திய அரசாங்கமாக இருந்தன. அத்துறை முதலில் பதிலளிக்கவில்லை. ஆனால் நீதிமன்றம் சற்றே இசைவித்த பிறகு, 2016 ஜூனில் எங்கள் கேட்பிற்கு ஒருவிதமாக பதிலளித்தார்கள். ஆனால் மைய அரசு திரும்பத்திரும்ப எதிர்வினை புரியாமலே இருந்தது. எதிர்வினை புரியாதது மட்டுமல்ல, அவர்கள் நீதிமன்றத்திற்கும் வரவில்லை. நிஷித் தேசாய் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் இப்படிப்பட்ட நடைமுறையைப் பலமுறை சந்தித்திருந்தனர். ஒவ்வொரு முறை அவர்கள் நீதி மன்றத்திற்கு வரும்போதும் அரசாங்கம் எவரையும் அனுப்புவதில்லை. உண்மையில் தரநிர்ணயத் துறையும் கூட முதலில் வரவில்லை. ஒருமுறை ஒருவர் வந்தபோது இந்தியாவிலிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது நினைவிருக்கிறது. ஆனால் நீதிமன்றம் அவரைத் தரநிர்ணயத் துறை சார்பாகவா, அல்லது மைய அரசு சார்பாகவா- எதன் சார்பாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டது. அவருக்குத் தெரியவில்லை. அதனால் யார் சார்பாக என அறிய அவர் திருப்பி அனுப்பப் பட்டார். நவம்பர் 13 அன்று எங்களுக்கு மற்றொரு கேட்பு இருந்தது. மைய அரசை வரச்சொல்லிக் கேட்ட நான்காவது முறை இது. ஒருவேளை நான்கு என்பது ஒரு மந்திர எண்ணாக இருக்கலாம். தரநிர்ணயத் துறையின் பதிலே மைய அரசின் பதிலாகவும் கொள்ளப்படும் என்று நீதியவை விதித்தது. 2018 பிப்ரவரி 27 அன்று வாய்மொழி விவாதத்திற்கான ஆணை இடப்பட்டது. இது மிக ஆச்சரியமான ஒன்று. இரண்டு ஆண்டுகள் எழுத்துவேலை, செயல்முறைகளுக்குப் பிறகு தகுதிக்கேற்ப எங்கள் வழக்கு கேட்கப்பட இருந்தது. அன்று மாலையே நான் இரண்டாம் வழக்கிற்காக ஜியார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவுக்கு ஒரு விமானத்தைப் பிடித்துச் செல்ல வேண்டியிருந்தது. ஜியார்ஜியா அரசு நான் ஒருவித பயங்கரவாதத்தைச் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தது. காரணம், கட்டணமின்றி எவரும் இணையத்தில் படிக்குமாறு ஜியார்ஜியாவின் அதிகாரபூர்வ விதித் தொகுப்பை விளக்கத்துடன் பதிவிட்டிருந்தேன். தங்கள் பதிப்புரிமையை இது மீறிவிட்டதாக அரசுக்குத் தோன்றியது. ஜியார்ஜியா சட்டமன்றத் தலைவருக்கு இதுபற்றி விளக்கி எண்ணற்ற கடிதங்கள் அனுப்பி யிருந்தேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்த விதிகளுக்குப் பதிப்புரிமை கிடையாது. ஏனெனில் இச்சட்டங்களின் உரிமை மக்களுடையதே. ஆனால் என் விளக்கங்கள் அதிகாரிகள்மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ஜியார்ஜியா சட்டமன்றத்தின் ஒவ்வொரு தனிச் சட்டமும் இச் சொற்களுடன் தொடங்குகிறது: "ஒரு விதி. ஜியார்ஜியாவின் அதிகாரபூர்வ விதியைத் திருத்தம் செய்வதற்கான விளக்கம்." ஜியார்ஜியாவில் ஒரே ஒரு அதிகாரபூர்வச் சட்டம்தான் உண்டு. அது இதுதான். பதிப்புரிமை அரசின் பெயரால் இருந்தது. அது அந்நிலத்தின் சட்டம். எனது நன்காலோசித்த கருத்தின்படி அது அரசாங்கத்தின் ஓர் ஆணை. அரசின் நிலைப்பாடு இதுதான். அவர்கள் ஜியார்ஜியாவின் அதிகாரபூர்வச் சட்ட விளக்கத்தைத் தயாரிக்க ஒரு விற்பனையாளரைப் பயன்படுத்தினார்கள். சட்டத்துக்குப் பதிப்புரிமை ஒருவேளை இல்லாமலிருக்கலாம் என அவர்கள் ஒப்புக் கொண்டாலும், அதன் விளக்கவுரை மீது அரசின் பேரால் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று நம்பினார்கள். அதிகாரபூர்வ விதிக்குப் பலவகை விளக்கங்கள் உண்டு. ஆனால் அவற்றில் அரசு கவனத்தைச் செலுத்தியது, சட்டத்துக்குப் பொருத்தமான நீதிமன்ற வழக்குகளின் சுருக்கங்கள் பற்றியது. அவை அவர்களின் விற்பனையாளரால் தயாரிக்கப்பட்டன. அவருக்குப் பல நூறு டாலர்களுக்கு அதை விற்க முழுமையான உரிமை தராவிட்டால் அதிகாரபூர்வ விதியைத் தயாரிக்க அவருக்கு ஊக்கம் இருக்காது என்றும் இது வரி செலுத்துவோருக்கு எண்ணற்ற மில்லியன் செலவு வைக்கக்கூடும் என்றும் அரசு கருதியது. ஒரு தனிநபருக்கு ஏகபோகச் சலுகை அளிப்பதன் வாயிலாக அவர்கள் வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல ஏற்பாடு செய்வதாக நினைத்தார்கள். இந்த விளக்கம் ஒருவேளை ஜியார்ஜியா அரசுமனையின் கூடங்களில் எதிரொலித்திருக்கலாம். ஆனால் எனது அனுபவத்திலிருந்து ஒரு வாடகைவண்டியிலோ, மதுக்கூடத்திலோ நான் சந்தித்த எவரும், அல்லது நான் பேசிய மாணவர்களும் அரசின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை என்று கூறுவேன். அரசின் ஒரே ஒரு சட்டத்தை நீங்கள் பேசக்கூடிய துண்டுகளாகவும், பேசமுடியாத துண்டுகளாகவும் உடைத்துச் சிதைக்க முடியாது. மாவட்ட நீதியகங்களின் சில சட்ட நூலகங்களில் அதன் ஒரு பிரதியை அரசு வைத்திருக்கிறது, ஆகவே அது மக்களுக்குக் காணக் கிடைக்கிறது என்ற கொள்கையைச் சிரமத்துடன் அரசு கூற முனைந்தது. என்பிசி செய்தி இத்தகைய பிரதிகளை நீதியக நூலகங்களில் தேடி ஒரு புலனாய்வு அறிக்கை தயார் செய்தது. பெரும்பாலான இடங்களில் இந்தச் சட்டங்கள் ஒரு பின்னறையில் பூட்டப் பட்டிருந்தன, அல்லது அப்புத்தகங்கள் தொலைந்து போயிருந்தன அல்லது பாழ்பட்டிருந்தன என்று அவர்கள் கண்டார்கள். என்பிசி இந்த அறிக்கைக்காக எம்மி விருதைப் பெற்றது. அனுமதியின்றி ஜியார்ஜியாவின் அதிகாரபூர்வ விதியைப் பயன்படுத்த முடியாமல் போனவன் நான் மட்டுமல்ல. மாவட்ட நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எங்கள் அறிக்கைகளில் ஒன்று, ஃபாஸ்ட்கேஸ் என்ற சட்ட அளிப்புக் குழுமத்திலிருந்து வந்தது. ஃபாஸ்ட்கேஸின் உயர்நிர்வாக அதிகாரியும் உடன் நிறுவனருமான எட் வால்டர்ஸ், எனது இயக்குநர் குழுவின் நீண்ட கால உறுப்பினர். ஃபாஸ்ட்கேஸ், அனைத்து 50 மாகாணங்களுக்குமான சட்டங்கள் மற்றும் சட்டவிதிகள் கிடைக்குமாறு செய்துவந்தது. மாகாண வழக்கறிஞர் சங்கங்களுடன் பேரம் செய்து பெறுவதை இதற்கான முதன்மையான வழியாகக் கொண்டிருந்தது. ஜியார்ஜியாவின் அரசு வழக்கறிஞர் சங்கத்திற்கு-அதாவது அரசின் வழக்கறிஞர்கள் எல்லாரையும் பிரதிநிதிகளாகக் கொண்ட அமைப்பிற்கு, ஃபாஸ்ட்கேஸ் அதிகாரபூர்வச் சட்டம் வழங்கும் அமைப்பாக நியமிக்கப்பட்டிருந்தது. அதனால் சங்கத்தில் உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் எவரும் ஃபாஸ்ட்கேஸில் இலவசமாகச் சட்டங்களைப் பெறலாம். ஃபாஸ்ட்கேஸ், அரசையும் அவர்கள் விற்பனையாளரையும் அணுகி அதிகாரபூர்வ விதிக்கு உரிமம் வழங்குமாறு கேட்டது. அதைப் பெற்றால் அது ஜியார்ஜியாவின் ஒரே அதிகாரபூர்வச் சட்டத்தை ஜியார்ஜியாவின் வழக்கறிஞர்களுக்கு வழங்க முடியும். ஆனால் "எந்த ஒரு விலைக்கும்" ஃபாஸ்ட்கேஸ் ஜியார்ஜியாவின் அதிகாரபூர்வச் சட்டங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் இப்போராட்டத்தில் தோற்றுப் போனோம். நீதிபதி நாங்கள் கூறியதை எவ்விதத்திலும் ஏற்க வில்லை. நீதியக அலுவலகங்களில் உள்ள நகல்களே போதுமானவை என்று தீர்ப்பளித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட வியாபாரி சட்டங்களை எடுத்துக் கொண்டு நீதிமன்றச் சுருக்கங்களை எழுதியிருந்தால், அந்தச் சுருக்கங்கள் பதிப்புரிமைக்கு ஆட்படும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அதிகாரபூர்வ விதியை நான் விநியோகம் செய்யவோ, எனது இணையதளத்தில் அதைப் பற்றி எவ்விதத்திலும் எடுத்துரைக்கவோ கூடாது என்ற தடையாணை இட்டார். சட்டத்தைப் பேசுவதிலிருந்து கூட்டாட்சித் தடையின் மூலமாக என் வாய் அடைக்கப்பட்டுவிட்டது. நீதிமன்ற வழக்குகளின் சுருக்கங்கள் தனியார் மூலமாகத் தயாரிக்கப் பட்டால் அவை பதிப்புரிமை கொண்டவை என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் ஜியார்ஜியாவின் அதிகாரபூர்வ விதி, ஏதோ ஒரு அதிகாரபூர்வமற்ற தனியார் தொகுப்பல்ல என்பதும், ஜியார்ஜியாவின் அரசுத் தலைமை அதிகாரத்தின் பெயரால் வெளியிடப் பெற்ற திட்டவட்டமான அதிகாரபூர்வச் சட்டம் என்பதும் எங்கள் வாதமாகும். உண்மையில், அந்த விதியின் 1-1-1 பிரிவு, "அதிகார பூர்வமற்ற தொகுப்புகளைப் பயன்படுத்துவோர் தாங்கள் பேரிழப்பு அடைவதன் அடிப்படையிலேயே அவ்வாறு செய்ய முடியும்" என்று கூறுகிறது. இப்போது நாங்கள் பதினோராம் சுற்றாக, அமெரிக்க முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னால் ஆஜரானோம். இப்போது விஷயங்கள் சற்றே வேகமாக நகர்ந்தன. நாங்கள் எங்கள் முறையீட்டு அறிக்கையை 2017 ஏப்ரல் 7ஆம் நாள் தாக்கல் செய்தோம். எங்கள் முறையீட்டுச் சுருக்கம் மே 17ஆம் தேதி அனுப்பப் பட்டது. முறையீட்டுச் சுருக்கம் தாக்கல் செய்யப் பட்டால், எங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்க விரும்பும் வெளியார் எவராயினும் தங்கள் நீதியவை-நட்பு (ஆமிகஸ் க்யூரே) மனுவை மே 24 வரை அளிக்கலாம். எங்கள் சார்பாக மூன்று சுருக்கங்கள் அளிக்கப்பட்டன. முதலாவது குடிமைச் சுதந்திரச் சமுதாயத்திலிருந்து அளிக்கப்பட்ட சிறப்பான ஒன்று. அதில் ஏசிஎல்யூ முக்கியப் பங்கேற்றது. தெற்கு ஏழ்மைச் சட்ட மையம் போன்ற பிற குழுக்கள் அதில் சேர்ந்திருந்தன. ஸ்டான்ஃபோர்டு சட்டப்புலத்தின் சட்ட மருத்துவமையம் மற்றொரு சுருக்கத்தைத் தாக்கல் செய்தது. சாதாரண மக்களுக்குச் சட்டம் எளிதாகக் கிடைக்குமாறு செய்யும் பெருமுயற்சிகளில் ஈடுபட்ட,ஊதியம்-கருதும், மற்றும் ஊதியம்-கருதாப் புதுமையாக்கக் குழுக்களின் அமைப்புச் சார்பில் அது செய்யப் பட்டது. வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த முதன்மையான கொள்கைக்குழுவான பப்ளிக் நாலஜ் என்பதும் ஒரு சுருக்கத்தைத் தாக்கல் செய்தது. இச்சுருக்கம், சட்டப் பேராசிரியர்கள் மற்றும் நூலகர்களின் மிகப் பெரிய தொகுதியினர், மற்றும் அமெரிக்க நூலகச் சங்கம், சட்டநூலகங்களின் அமெரிக்கச் சங்கம் போன்ற சங்கங்களின் சார்பாக அளிக்கப்பட்டது. இது மிக வலுவானதோர் நிலை. நான் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தேன். எங்கள் தஸ்தாவேஜுகள் அளிக்கப்பட்ட பிறகு அரசும் அவ்வாறே செய்யவேண்டும். 2017 ஜூன் 30 அன்று தங்கள் சுருக்கத்தை அவர்கள் சமர்ப்பித்தனர். அரசின் சார்பாக எவ்வித 'ஆமிகஸ்' சுருக்கங்களும் வராத காரணத்தினால் அரசுக்கு நண்பர்கள் எவரும் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. வாய்மொழி விவாதத்தில் எங்களுடன் சேர அனுமதி வேண்டி ஏசிஎல்யூ ஒரு சிறப்புக் கோரிக்கையை அவைமுன் வைத்தது. நாங்கள் உடனே ஒப்புக் கொண்டோம்! ஜியார்ஜியாவின் மிகப் புகழ்பெற்ற சட்டநிறுவனமான ஆல்ஸ்டன் அண் பேர்ட்-இல் பணிபுரியும் நன்கறியப்பட்ட அறிவுச்சொத்து நிபுணரான எலிசபெத் ரேடர் எங்கள் வழக்கறிஞர். அவருடன் அவர்கள் சேர்ந்து கொண்டனர். எலிசபெத்தும் ஆல்ஸ்டனில் அவரது சகாக்களும் இந்த வழக்கினைச் சமாளிக்க மாவட்ட மற்றும் முறையீட்டு அவைகளில் மிகப் பெரிய அளவு நேரத்தையும் முயற்சியையும் செலவழித்திருந்தனர். அவர்கள் முயற்சிகளை நான் பெரிதும் பாராட்டினேன். வாய்மொழி விவாதத்தை நீதிபதிகள் எவ்விதம் கையாளுகிறார்கள் என்று பார்ப்பதற்காக நீதியவை அறையில் முன்னாளே அமர இடம் கிடைக்க வேண்டி நான் முன்னதாகவே அட்லாண்டாவுக்கு வந்துவிட்டேன். முறையீட்டு அவைக் கேட்புகளில் பெரும்பாலும் "சூடான-இருக்கை" என்பதைக் காணலாம். அதாவது நீதிபதிகள் மிகுந்த அளவு கேள்விகளைக் கேட்பார்கள். சிலசமயங்களில் வழக்கறிஞர், "கோர்ட்டாரின் கவனத்திற்கு" என்று தொடங்குவதற்கு முன்பாகவே நீதிபதிகள் குறுக்கிட்டுக் கேள்விகளை வீசத் தொடங்கிவிடுவார்கள். எங்களதும் உறுதியாக ஒரு சூடான இருக்கைதான். மூன்று நீதிபதிகளும் வழக்கறிஞர்களை எவ்விதம் வாட்டி எடுக்கப் போகிறார்கள் என்பதைக் காண்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நவம்பர் 16 வியாழக்கிழமையன்று எங்கள் முறை. நாங்கள் மூன்று நீதிபதிகள் குழுவின் முன் ஆஜரானோம். அவர்கள் தயாராகவே இருந்தார்கள். எங்களைக் கடுமையாக வறுத்தனர், ஆனால் எங்களைவிட ஜியார்ஜியா அரசை மேலும் கடுமையாக வறுத்தனர். 'விளக்கங்கள் அதிகாரபூர்வமாகத் தேவையில்லை என்றால் ஏன் அதிகாரபூர்வ விதியில் அவற்றைச் சேர்த்தார்கள்' என்று கேட்டனர். 'முழு விதியுமே சட்டம்தான்' என்று காட்ட அதிகாரபூர்வ விதியிலிருந்து ஆங்காங்கு பிரிவுகளை எடுத்துக் காட்டினர். அவற்றுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு அரசு வழக்கறிஞர்களை விளாசினர். விதியின் கிடைப்புப் பற்றியும் கேட்டனர். எங்களையும் எளிதாக விட்டுவிடவில்லை. ஆனால் நாள் இறுதியில் நீதியவை எங்கள் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒருவேளை அவர்கள் எங்களுடன் உடன்படாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அரசு தான் கொண்ட நிலைப்பாட்டை ஏன் எடுத்தது என்பதைப் புரிந்து கொண்டார்களா என்பது தெளிவாகவில்லை. விளக்கங்கள் இலவசமாகக் கிடைக்கலாகாது என்று கருதினால் அதிகாரபூர்வ விதியை விளக்கங்கள் இன்றி ஏன் அரசு பதிப்பிக்கலாகாது என்று கேட்டனர். வாய்மொழி வாதம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அந்த வாரத்தில் நீதியவை கேட்ட எந்த ஒரு வழக்கின் நேரத்தையும் விட இது இரண்டு மடங்கு. முடிவில், தலைமை நீதிபதி எழுந்து "ஆர்வத்தைத் தூண்டும் வழக்கு!" என்று குறிப்பிட்டார். இது ஒரு நல்ல அறிகுறி என்று எனக்குத் தோன்றியது. நீதிபதிகள் ஆர்வமூட்டும் வழக்குகளை விரும்புகிறார்கள். வழக்கு அவையிலிருக்கும்போது பின்னர் என்ன நிகழப் போகிறது என்று தெரியாது என்றாலும், எங்களுக்கு நல்வாய்ப்பு இருக்கிறதென்ற நம்பிக்கையோடு நான் வெளியே வந்தேன். மறுநாட்காலை, 6 மணி விமானத்தைப் பிடித்துக் கலிஃபோர்னியா (பே ஏரியா)வுக்குவந்து சேர்ந்தேன். பெரிய "தரவிதிகள்தான் சட்டங்கள்" என்னும் வழக்கு நாங்கள் மற்றுமொரு நீதியவை வழக்கினைச் சந்திக்க வேண்டியிருந்தது. இது கொலம்பியா மாவட்டத்தின் அமெரிக்க ஐக்கிய நாட்டு முறையீட்டு அவையில் இருந்த பெரிய தர விதிகள் வழக்கு. இந்தியாவில் போலவே நான் சட்ட விஷயங்களை கவனத்துடன் நோக்கி, தொழில் நுணுக்கப் பொதுமக்கள் பாதுகாப்புத் தரங்கள் குறித்த விதிகளைச் சட்ட ஆற்றலுடன் வாங்கி அவற்றை இணையத்தில் வெளியிட்டேன். கட்டுமான விதிகள், ஆபத்தான பொருள்களின் பாதுகாப்பு, தொழிலகத் தளத்தில் பணியாளர் பாதுகாப்பு, நீரில் ஈயம் இருப்பதைச் சோதிப்பதற்கான முறைகள், அமெரிக்காவில் கூட்டாட்சி அல்லது அரசு மட்டத்தில் உட்சேர்க்கப்பட்ட மற்றும் பல சட்டங்களைக் கண்டேன். எல்லாமாக, இப்படிப்பட்ட 1400 சட்டங்களுக்குமேல் வெளியிட்டிருந்தேன். 979.95 டாலருக்கு வாங்கிய கலிஃபோர்னியா கட்டுமான விதியை நான் வெளியிட்டதிலிருந்து இந்தப் பணி 2008இல் தொடங்கியது. 2012 அளவில் எல்லா மாநிலங்களுக்கும் உரிய தவிர்க்கலாகாத கட்டுமான விதிகளை மட்டுமல்ல, குழாய்ப் பணி, தீ, மின்சாரம், எரிபொருள், வாயு மற்றும் பிற தொடர்பான விதிகளையும் வெளியிட்டிருந்தேன். கூட்டாட்சிச் சட்டத்திற்குத் தேவைப்படும் எண்ணற்ற தரவிதிகளையும், மெக்சிகோ வளைகுடாவிலும் ஆர்க்டிக் பெருங்கடலிலும் எண்ணெய்ச் சிதறல்களைத் தடுப்பதற்கான சட்டபூர்வத் தேவைகள், இரயில்பாதைப் பாதுகாப்புக் குறிப்பீடுகள், பொம்மைகள் பாதுகாப்புத் தரங்கள், கார் இருக்கைகள், குழந்தைத் தொட்டில்கள், விளையாட்டுப் பேனாக்கள், குழந்தை உலாவிகள், ஊஞ்சல்கள், குளியல் தொட்டிகள் போன்ற குழந்தைகள்-சிசுக்கள் உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் தரங்களையும் வெளியிட முனைந்திருந்தேன். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டங்கள் மீது மூன்று தரநிர்ணய நிறுவனங்கள் 2013இல் என்மீது வழக்குப் போட்டிருந்தன. அடுத்த ஆண்டு, மேலும் மூன்று வாதிகள் இரண்டாவதாக ஒரு வழக்குப் பதிவுசெய்தனர். ஆறு வாதிகள் மற்றும் அவர்களின் நான்கு பகட்டான வெள்ளைக் காலணிச் சட்ட நிறுவனங்கள் வாயிலாக இந்த இரு வழக்குகளும் ஒன்றாகவே நீதியவைகளில் முன்னேறின. ஒரு முக்கியமான விஷயத்தில் எங்களுக்கும் வாதிகளுக்கும் இடையில் உடன்பாடின்மை இல்லை: என்மீது போடப்பட்ட ஒவ்வொரு வழக்கிற்கான விதிகளும் அந்த தேசத்தின் சட்டம் ஆகும். ஆனால் வாதிகள், இந்தச் சட்டங்களைத் தாங்கள் பொருத்தமென நினைத்த எந்த வழியிலும் விநியோகிக்க முழுமையான உரிமை வேண்டும் என்று நினைத்தனர். அந்தச் சட்டத்தை மேற்கோள் காட்ட விரும்பும் எந்தத் தனிநபரும் அல்லது அரசாங்க அதிகாரியும் அவர்களுடைய அனுமதியை முதலில் கேட்க வேண்டும் என்று விரும்பினர். அந்த அனுமதி மன்ம்போன போக்கில் வழங்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது. உதாரணமாக, மாணவர்கள் தங்கள் வகுப்புக்கான திட்டப் பணிகளில் பாதுகாப்பு விதிகளிலிருந்து சூத்திரங்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுத்தனர். நாங்கள் தரங்களை வெளியிடுவதென்பது வெறுமனே ஸ்கேன் செய்து அப்படியே போட்டுவிடுவது அல்ல. நமது அரசாங்கம் மெதுவாக இயங்குவதால், இப்போது சட்டப்படி செயல்படுத்தப் படும் பல விதிகள் தர அமைப்புகளிடம் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் அவற்றுக்குப் புதிய வடிவங்கள் வந்துவிட்டன. இந்த ஆவணங்கள் பலவற்றின் பிரதிகளைத் தேடி அமேசான், ஆபிபுக்ஸ், ஈபே ஆகியவற்றின் பழைய புத்தகச் சந்தைகளை நான் அலசினேன். ஓர் ஆவணத்தை நான் பெற்ற பிறகு, அவற்றை வெளியிடுவதற்கு ஆயத்தம் செய்ய மிக விரிவான நடைமுறையின் ஊடாக நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. எல்லாத் தரங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு, ஒளிக் குறியீட்டு வாசிப்பின் (ஓசிஆர்) வாயிலாகச் செலுத்தப்பட்டன. பிறகு அந்த ஆவணத்திற்கான உறையட்டை மீது எந்த முகமை வாயிலாக அது சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்ற விளக்கம் இணைக்கப்பட்டது. பாதுகாப்புக்குக் குறிப்பாக முக்கியமான பல நூற்றுக்கணக்கான தரங்களின் முழுமையான விதிகளை நாங்கள் நவீன எச்டிஎம்எல் மொழியில் மறுதட்டச்சு செய்தோம், படங்களை மறுபடி வரைந்தோம், பார்வைக் குறைபாடுள்ள மக்கள் திறனுடன் அவற்றினூடாகப் பயணிக்குமாறு மறுஅமைப்புச் செய்தோம், பிறகு எல்லா ஆவணங்களையும் எங்கள் தளத்திலும், இணைய ஆவணக்காப்பகம் போன்ற பொதுப் பார்வை இடங்களிலும் கிடைக்குமாறு பதிவிட்டோம். தங்கள் தளத்திலுள்ள எல்லா ஆவணங்களுக்கும் செய்வது போலவே, இணையதளக் காப்பகம், இவற்றை மின்புத்தக வடிவங்களில் மாற்றுதல், எளிதாக இவற்றைக் கண்டறிய கூகிள் போன்ற தேடுகருவிகளுடன் இணைத்தல், பயனாளர்கள் மேலும் தகவல்களுடன் கருத்துரைகளையும் மதிப்புரைகளையும் வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற கூடுதல் பயன்பாடுகளை வழங்கியது. தர அமைப்புகள் மகிழ்ச்சியடையவில்லை, வழக்குகளும் கடுமையாக இருந்தன. 2015இல் நாங்கள் 23 நாட்கள் சட்டபூர்வச் சான்றறிக்கைத் தயாரிப்புக்கு ஆட்பட்டோம். இவற்றில் மூன்று நாட்கள் எனது வாக்குமூலத்திற்கெனச் செலவிடப்பட்டன. எனது வாக்குமூலத்திற்கு, ஒவ்வொரு நாளும் 12-14 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. என் தரப்பில் நான்கு வழக்கறிஞர்கள் இருந்தனர். அவர்கள் தரப்பில் ஆறு வழக்கறிஞர்களும், ஒரு சுருக்கெழுத்தரும், காட்சிப் பதிவாளரும் இருந்தனர். விசாரணை மிகக் கடுமையாக இருந்தது. மாவட்ட நீதியவையில் நாங்கள் தோற்றோம். நீதிபதி எங்கள் வாதத்தை எவ்விதத்திலும் ஏற்கவில்லை. இவை எல்லாம் சட்டங்கள் என்று அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்தச் சட்டங்கள் பதிப்புரிமை பெறாதவை என்றால், பேரவை அதைத் தெளிவுபடுத்தி ஒரு சட்டம் வெளியிட்டிருக்கலாம் என்றார். ஒரு சமயத்தில், அமெரிக்கத் தலைநகரின் பக்கமாகச் சுட்டிக்காட்டி, நாங்கள் மலைமீதுள்ள பெரிய வெள்ளை மாளிகையின் கதவைத் தட்டவேண்டும் என்ற ஆலோசனையையும் கூறினார். 2017 பிப்ரவரியில் நாங்கள் மேல்முறையீட்டு அறிவிப்பைத் தாக்கல் செய்தோம். ஆனால் கொலம்பியா மாவட்டத்தில் பணிகள் மெதுவாக நடந்தன. கால அட்டவணை தயார் செய்ய நீதிஅவை மிகுந்த காலம் எடுத்துக் கொண்டது. இறுதியாக, ஆகஸ்டில் நாங்கள் எங்கள் சுருக்கத்தைத் தாக்கல் செய்தோம், செப்டம்பர் இறுதியில் எங்கள் ஆமிகஸ் சுருக்கங்கள் அளிக்கப் பட்டன. எங்கள் தரப்பு மிக வலுவாக இருந்தது. அமெரிக்க நூலகச் சங்கம், அமெரிக்கச் சட்ட நூலகங்கள் சங்கம் இவற்றுடன், பப்ளிக் நாலஜ் அமைப்பு அளித்த சுருக்கத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான சட்டப் பேராசிரியர்களும் சட்ட நூலகர்களும் சேர்ந்துகொண்டனர். 18 ஆண்டுகளாகக் கூட்டாட்சிப் பதிவு அலுவலகத்தை நடத்திவந்த ரேமண்ட் மாஸ்லி உள்பட, குடியரசுத் தலைவர் ஜியார்ஜ் டபிள்யூ. புஷ் நியமித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொது அச்சகத்தினர் உள்பட, மிக அதிக எண்ணிக்கையிலான முன்னாள் அரசாங்க அதிகாரிகள் சுருக்கத்தில் கையெழுத்திட்டிருந்தனர். கூட்டாட்சி ஒழுங்குமுறைகள் விதி உள்ளிட்ட அதிகாரபூர்வ அரசாங்கச் சஞ்சிகைகளைத் தயாரிக்க கூட்டாட்சிப் பதிவு அலுவலகம் அரசாங்க வெளியீட்டு அலுவலகத்துடன் சேர்ந்து இயங்குகிறது. கூட்டாட்சிச் சட்டத்தை வெளியிடும் அதிகாரபூர்வப் பொறுப்பிலுள்ளவர்கள் இவர்கள்தான். என் முயற்சிகளுக்கு ஆதரவாகத் தங்கள் பெயர்களை இணைத்து ஒப்பமிட்டனர். இவர்களுடன் எனது முன்னாள் எஜமானர் ஜான் டி. பொடேஸ்டாவும், முன்னாள் தொழிற் செயலர் ராபர்ட் ரீக்கும், தொழில்ரீதியான பாதுகாப்பு மற்றும் உடல்நல நிர்வாக (ஓஷா) முன்னாள் இயக்குநர் டாக்டர் டேவிட் மைக்கேல்சும் சேர்ந்து கொண்டனர். தனிக் குடிநபர் ஒருவர் சட்டத்தைப் படிக்க விரும்பினால் முதலில் தனிவியாபாரி ஒருவரிடமிருந்து அனுமதிபெற வேண்டும் என்பது, ஜான் பொடேஸ்டா என்னிடம் ஒரு தொலைபேசி அழைப்பில் கூறியதுபோல "முழுப் பைத்தியக்காரத்தனம்" என்ற கூற்றை ஆதரிக்க வேண்டி இத்தனை அரசாங்க அதிகாரிகளும் என்னுடன் நின்றனர். நன்கறியப்பட்ட வணிகமுத்திரை கொண்ட பேராசிரியர்களால் மற்றொரு சுருக்கம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ்-பெண்மணி லாஃப்கிரன், காங்கிரஸ்-நபர் ஈஸா ஆகியோரும், ஜனநாயகத்தில் சட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூறி எங்கள் சார்பாக ஒரு சுருக்கம் அளித்தனர். இருவருமே பேரவை நீதிக்குழுவில் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்கள். இந்தப் பிரச்சினையில் சட்ட எல்லை உடைய நீதியவைகள், அறிவுச் சொத்து, இணையம் ஆகியவற்றின் உட்குழுவின் தலைவராக காங்கிரஸ்-நபர் ஈஸா இருக்கிறார். நவம்பரில் வாதிகள் தங்கள் சுருக்கத்தை அளித்தனர். அமெரிக்க ஐக்கியநாட்டின் முன்னாள் அரசுச் சட்டத் தலைமை ஆலோசகராக இருந்த ஒரு வக்கீலைப் புதிய வழிகாட்டியாக அமர்த்தியிருந்தனர். டிசம்பர் தொடக்கத்தில் அவர்களுடைய நண்பர்களும் சேர்ந்துகொண்டனர். ஸ்தாபனம் தெளிவாகவே கவலை கொண்டது. அமெரிக்கக் காப்பீட்டுச் சங்கமும் சர்வதேச வணிகமுத்திரைச் சங்கமும் தங்கள் சுருக்கங்களை அளித்தன. அமெரிக்க மருத்துச் சங்கத்துடன் அமெரிக்கப் பல்மருத்துவர் கழகமும் அமெரிக்க மருத்துவமனைச் சங்கமும் சேர்ந்துகொண்டன. கடைசியாக அமிகஸ் சுருக்கத்தை அளித்தது அமெரிக்கத் தரநிர்ணய நிறுவனம். அதனுடன் ஜெனிவாவிலுள்ள சர்வதேசத் தரப்படுத்தல் அமைப்பு உட்படப் 10 தர அமைப்புகள் இணைந்தன. அவர்களின் வாதம் எளியது: எங்களுக்குப் பணம் வேண்டும். எங்களுக்குப் பணம் தேவையாக இருக்கிறது. சட்டத்தை விற்கும் முழுமையான உரிமை எங்களுக்கு இல்லை என்றால், எங்களால் உயர்தரப் பாதுகாப்புத் தரங்களை உருவாக்க முடியாது. இந்த வாதத்திற்கு நான் முற்றிலும் உடன்படவில்லை. தர அமைப்புகள் மிக அதிக எண்ணிக்கையிலான தரங்களை உருவாக்குகின்றன. அவற்றில் ஒருசிலவே சட்டமாகின்றன. தேசிய மின்சார விதி போன்ற ஒன்று எல்லா 50 மாகாணங்களிலும் சட்டமாகும்போது, அவை பத்திரிகைப் பிரசுரங்களை வெளியிடுகின்றன, தங்கள் ஆண்டறிக்கைகளில் அவற்றைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்றன. தர அமைப்புகள் இந்த ஆவணங்கள் சட்டமாக வேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுக்கின்றன. இதனால் அமெரிக்க மக்களுடைய ஒப்புதல் என்னும் தங்கமுத்திரை கிடைக்கிறது. அதைத் தங்கள் சேவைகளைச் சந்தைப் படுத்துவதில் பெரும் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியாவில் போலவே, தரநிர்ணய ஆவணங்களை விற்பதினால் அதிகப் பணம் கிடைப்பதில்லை. விளைபொருள்களுக்குச் சான்றிதழ் வழங்குவது போன்ற வருவாய் வழிகளில்தான் பணம் இருக்கிறது. விளக்குக் குமிழ்கள், துவைப்பு எந்திரங்கள் போன்ற நுகர்பொருள்களுக்குச் சான்றிதழ் வழங்கும் அண்டர்ரைட்டர்ஸ் லெபாரடரீஸ் என்னும் அமைப்பு, ஆண்டுக்குச் சான்றிதழ் வழங்குவதன் வாயிலாக இரண்டு பில்லியன் டாலர் பணம் பண்ணுகிறது. இந்தியாவிலும் இவ்வமைப்புகளின் மிகப் பெரும்பான்மை வருவாய் இதுபோன்றே கட்டாயச் சான்றிதழ வழங்குவதால்தான் கிடைக்கிறது. சான்றிதழ் வழங்குவதோடு, கையேடுகள், பயிற்சி, உறுப்பினர் கட்டணங்கள், இன்னும் பிற வசீகரமான வருவாய் வழிகள் பல உள்ளன. கடந்த காலத்தில் நீதியவைகள் சுட்டிக்காட்டியிருப்பது போல, இந்தத் தரங்கள் சட்டமாகின்றன என்பது மட்டுமல்ல, அந்தந்தத் தொழில் உறுப்பினர்களே சட்டத்தை எழுதுவதில் உதவி செய்வதால்தான் அவை சட்டமாகின்றன. சில ஆவணங்களை விற்பதால் பெரிய பணம் கிடைப்பதில்லை, மாறாக, அந்தத் தொழில், "நாங்கள் சட்டத்துடன் ஒத்துழைக்கிறோம்" என்று சொல்வதால் அதற்குக் கிடைக்கும் பாதுகாப்புக் கவசத்தில்தான் பெரும்பணம் இருக்கிறது. அதிகப் பணத்திற்கு வேறொரு உதாரணமும் இருக்கிறது. தர அமைப்புகளுக்கு ஏன் பணம் தேவையில்லை, அவை பேராசைத்தனமாக மாறிவிட்டன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அல்லது வேறொரு அதிகப்பணம் ஊதியம் பெறுகின்ற, சோம்பேறி நிர்வாகிகளைப் பற்றி ராஸ் பெரோட் அழகாக வருணித்தது போல, அவர்கள் "பருத்தும், சுகமாகவும், சற்று முட்டாள்களாகவும்" ஆகிவிட்டார்கள். பிற எல்லாத் தர அமைப்புகளையும் போலவே, அமெரிக்க தேசியத் தர நிறுவனமும் சர்வதேச வருவாய்ச் சேவை அமைப்பிடம் சான்றிதழ் பெற்ற அரசு-சாரா தர்மசேவை அமைப்பாகப் பதிவு செய்திருக்கிறது. அவர்கள் 2015இல் 44.2 மில்லியன் வருவாயைச் சம்பாதித்தார்கள். அந்த வருவாயில் மில்லியன் கணக்கான டாலர்கள் ஒருசில மூத்த மேலாளர்களுக்கே ஊதியமாகச் செல்கிறது. தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டுச் சம்பளமாக 2 மில்லியன் டாலரக்ளுக்கு மேல் பெறுகிறார். மூத்த மேலாளர்கள் அனைவரும் தாங்கள் வாரத்திற்கு 35 மணிநேரம் பணிபுரிவதாகக் காட்டுகின்றனர். ஒரு தர்மஸ்தாபனத்துக்கு இவை மிகப் பெரிய ஊதியத் தொகைகள். அவர்கள் சேவையைவிட உயர்வாகப் பணத்தை மதிக்கிறார்கள், தங்கள் சேவை உணர்வை இழந்துவிட்டார்கள். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்: இந்நிறுவனங்களில் பல மிக உயர்ந்த தரமுள்ள விதிகளையும் தரநிர்ணயங்களையும் வெளியிடுகிறார்கள். நம்பமுடியாத உண்மையான வேலையைச் செய்கிறார்கள். ஆனால் இந்த வேலைகள் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களால் செய்யப்படுகிறதே அன்றி, பின்- அலுவலகத்திலுள்ள அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகளால் அல்ல. தேசிய மின்சார விதியை எழுதுவதற்கு ஒருவருக்கும் ஊதியம் அளிப்பதில்லை. கூட்டாட்சி, அரசு, உள்ளாட்சிப் பணியாளர்கள் எண்ணற்றோர் உள்ளிட்ட, தொழில்ரீதியான, பொதுச் சேவை மனம் கொண்ட ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களால் அது உருவாக்கப்படுகிறது. … இச்சமயத்தில், எனது சட்டப் போராட்டங்களில் மிகப் பெரிய அளவு காரியங்கள், பொதுப் பணத்தினால் நடைபெறும் சட்ட நிறுவனங்களால் செய்யப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஆம், நான் எல்லாச் சுருக்கங்களையும் படிக்கிறேன், எல்லையற்ற அளவு நேரத்தைச் சட்டச் செயல்முறைகள், எனது வழக்கின் தகுதிகள் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்ளச் செலவழிக்கிறேன். குறிப்பாக நாங்கள் கண்டுபிடிப்பு, வாக்குமூலங்கள் ஆகியவற்றின் தீவிரச் செயல்முறைகளுக்குள் செல்லும்போது நான் ஆழமாக ஈர்க்கப்படுகிறேன், அது எப்போதுமே அவ்வளவு நல்லதல்ல. சட்டவல்லுநன் அல்லாதவன் (நான் ஜியார்ஜ்டவுன் சட்டப் புலத்தில் முதலாண்டை முடித்தபிறகு படிப்பை விட்டுவிட்டேன்) என்றாலும் எனது முட்டாள்தனமான கேள்விகளாலும் அனுபவமின்மையாலும் என் வழக்கறிஞர்களைப் பைத்தியமாக்கிவிடுவேன். ஆனால் என் வழக்கின் மெய்ம்மைகளை நான் அறிந்திருப்பதாலும், கடின வேலை செய்வதாலும் அவர்கள் என்னைப் பொறுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு சட்ட நிறுவனத்தைப் பணத்துக்கு நியமிக்கும்போது, நீங்கள் வாடிக்கையாளர், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்கிறீர்கள், அவர்கள் உங்கள் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி நடப்பதில்லை. வழக்கறிஞர்கள், குறிப்பாக என்னுடன் தொடர்புள்ள அனுபவமிக்க மூத்த வழக்காடிகள் என்னைவிடச் சட்ட அறிவில் மிகமிக மேம்பட்டவர்கள். பெரும்பாலும் அவர்களின் பணி வழக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்வதுதான். நீங்கள் உங்கள் வழக்கறிஞர்களுக்குக் கட்டளை இடுகிறீர்கள், அவர்கள் அவற்றை நிறைவேற்றுகிறார்கள் என்பது கட்டணமற்ற சட்டப் பிரதிநிதிகள் உலகில் இன்னும் உண்மைக் குறைவானது. உலக அளவில், கட்டணமற்ற அடிப்படையில் பொதுமூலவளத்தின் பிரதிநிதிகளாக இருக்க ஒப்புக் கொண்ட ஒன்பது முக்கியச் சட்ட நிறுவனங்களின் உதவிக்கு நான் நன்றியோடு இருக்கிறேன். 2015இல் அவர்கள் 2.8 மில்லியன் டாலர் சட்டநேரத்தை எனக்கு அளித்திருக்கிறார்கள், 2016இல் அது 1.8 மில்லியனுக்கு மேல், 2017இல் ஒரு மில்லியனுக்கு மேல். அவர்களின் உதவியின்றி நாங்கள் சந்திப்பதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட முடியாது. என்னிடம் அவ்வளவு பணமில்லை, ஆகவே என் சங்கதிகளை முடக்கிக் கொண்டு போராடுவதை விட்டுவிட வேண்டியதுதான். உண்மையான மெய்ம்மைகள் மீது மீண்டும் பணி, எனது "உணவுக்கான உழைப்பு". நவம்பர் இறுதி நெருங்கியபோது, நான் இந்தியாவில் மீதியிருக்கும் பணிகளைத் தொடர்ந்தேன். அவற்றில் மிக முக்கியமானது இந்தியாவின் மின்னியல் நூலகம். அதை நான் இந்தியாவின் பொதுநூலகம் என மறுபெயரிட்டுள்ளேன். அரசாங்கம் இன்னும் தங்கள் வடிவத்தை இணையத்தில் வெளியிடவில்லை. சமஸ்கிருதப் பண்டிதர்கள் என்னிடம் கூடுதல் தகவல்களை வேண்டிக் குறிப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்திலிருந்து 4450 புத்தகங்களைச் சேர்த்த பிறகு, நாங்கள் ஆன்-லைனில் இருந்த மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கையை ஏறத்தாழ 400,000 அளவுக்குக் கொண்டுவந்துவிட்டோம். இந்தியாவின் அதிகாரபூர்வ அரசிதழ்களும் (கெஜட்டுகளும்) அதிக நேரம் எடுத்துக் கொண்டன. தேசிய அரசாங்கத்தின் அரசிதழைப் பிரசுரிப்பது நேரடியானது. பொது நூலகச் சேகரிப்பில் நான் சுதந்திரத்திற்கு முன்னாலிருந்தும் பல நூறு பழைய அரசிதழ்களைக் கண்டேன். அவைகளும் எங்கள் சேகரிப்பில் சேர்க்கப்பட்டன. ஆனால் மாநில அரசாங்கங்களின் மற்றும் பல பெரிய நகரங்களின் அரசிதழ்கள்தான் மிகக் கடினமாக இருந்தன. ஓர் உதாரணம், ஒடிஷா கெஜட். 43 மில்லியன் மக்களைக் கொண்ட ஓர் மாநில அரசின் வெளியீடு. அதன் 38,073 பிரசுரங்களை பிடிஎஃப் கோப்புகளாக வெளியிடுவதற்கு ஒரு எழுத்துமுறையை எழுதினேன். ஆனால் சில கோப்புகள் இந்த எழுத்துமுறைக்கு வரவில்லை. அவை பிடிஎஃப்-இல் பதிக்கமுடியாத ஒரியா மொழியின் வேறொரு எழுத்துருவைக் கையாண்டன. அவ்வாறாயின் கோப்பில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துருவிற்கு பதிலாக அந்தக் குறித்த எழுத்துரு கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என்று கணினி தேடுகிறதென்று அர்த்தம். தொடர்ச்சியாகப் பல எழுத்துருக்களைப் பயன்படுத்திய பிறகு, 35,705 கோப்புகளில் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று கண்டறிந்தேன். இவற்றை இணையக் காப்பகத்தில் வெளியிடு முன்பாக அவற்றின் எழுத்துருக்களைப் பதிக்க வேண்டும். ஆனால் அவற்றிலுள்ள எழுத்துருக்கள் உங்கள் அமைவில் கண்டறியப்படாத ஒன்றாக இருக்கும். அது ஏதோ ஒரு இந்திய ஆய்வு நிறுவனத்தால் பல்லாண்டுகள் முன்பு உருவாக்கப் பட்டதாகலாம். பல நாட்கள் முயன்றபிறகு, அது விற்பனைக்கோ இறக்கத்துக்கோ கிடைக்கவில்லை என்பதை அறிந்ததால், ஒடிஷா கோப்புகளை அப்போதைக்கு ஒதுக்கி வைத்தேன். மற்ற மாநிலங்களின் வேலை மேலும் கடினமாக இருந்தது. ஒடிஷா கெஜட்டிலுள்ள பிரச்சினைகளின் நீண்ட பட்டியல்கள் பற்றிய கோப்புச்சுட்டிகளை எடுக்க முடிந்தது. ஒவ்வொரு பிடிஎஃப் கோப்புக்கும் நேரடியான யுஆர்எல் அந்தக் கோப்புச் சுட்டியில் இருந்தது. முதலில் சுட்டிகளை இறக்கம் செய்துகொண்டு, பிறகு அவற்றின் மீத்தகவலுக்காக அதை அலகிட்டால், எல்லா பிடிஎஃப் கோப்புகளையும் இறக்குவது எளிது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் வேலை இவ்வளவு நேராக இல்லை. பெரும்பாலான மாநில கெஜட்டுகள் ஏதோ ஒரு மைக்ரோசாஃப்ட் சேவை மென்பொருளின் அடிப்படையில் அமைந்தவை. அம் மென்பொருள் இணையதள முகவரியை வெளிப்படுத்துவ தில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகளை அடைவதில் ஒவ்வொரு தனித்த ஊடுருவ இயலாத வழி இருந்தது என்பதுதான் சிக்கல். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொன்றும், தில்லி போன்ற பெரிய நகராட்சிகளுக்கு ஒவ்வொன்றுமாக டஜன் கணக்கான அதிகாரபூர்வ அரசிதழ்கள் இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறான முறையில் எழுதப்பட்டிருந்தன. தொகுப்பில் நாங்கள் மொத்தம் 163,977 பிடிஎஃப் கோப்புகளைச் சேர்த்திருந்தோம். ஆனால் இதைச் சரிவரச் செய்ய, இவற்றைப் பற்றிய கடுமையான வேலையில் 2018இல் நாங்கள் ஈடுபட வேண்டும். எல்லா அரசிதழ்களுக்கும் கோப்புகள் கொண்டு வரப்படுவது மட்டுமல்ல, உண்மையில் பயனுள்ளதாக இருக்க, அச்சேகரிப்பு மேம்படுத்தப்பட வேண்டும். நாங்கள் மெய்யாகவே காண விரும்பிய கெஜட்டுகளில் தேடுவதற்கான வகையை அனுமதிக்க, நாங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட கெஜட்டுகளில் உயர்தர ஒளிக்குறியீட்டுக் கண்டுபிடிப்பு (ஓசிஆர்) பிரச்சினைக்குத் தீர்வுகண்டாக வேண்டும். இப்பிரச்சினையை இந்தியப் பொது நூலகத்திலும் சந்தித்தோம். மேலும், கூட்டாட்சி அரசாங்கம், மாநில அரசுகள், நகரங்கள் ஆகியவற்றின் கெஜட்டுகளை இறக்கம் செய்தபோது அவற்றில் சிலவேனும் தவறாகப் பெயரிடப் பட்டிருந்தன, சில காணாமற் போயிருந்தன என்பது தெளிவாயிற்று. ஆகவே கொஞ்சம் பொறுப்பான தர உறுதிப்பாடு தேவையாயிற்று. எந்த நாட்டிலும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் நோக்கம், அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிக் குடிமக்கள் தெரிந்துகொள்ள அனுமதிப்பதே ஆகும். அமெரிக்க ஐக்கியநாட்டில் கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரபூர்வப் பிரசுரமான கூட்டாட்சிப் பதிவேட்டின் தோற்றம் இதுதான். உச்ச நீதிமன்றத்தை அடைந்த ஒரு புகழ்பெற்ற வழக்கில் பெரும் பொருளாதாரச் சரிவின்போது ஒழுங்குவிதிகளை ஒரு குழு கடைப்பிடிக்கவில்லை என்று அரசாங்கம் வழக்கிட்டிருந்தது. ஆனால் அந்த ஒழுங்குவிதிகள் பிரசுரம் செய்யப் படாததால் அவற்றை எவரும் கண்டுபிடிக்க முடியவேயில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி பிராண்டீஸின் தூண்டுதலின்பேரில் "சட்டம் தெரியாத அரசாங்கம்-நிர்வாகச் சட்டங்களை நன்கு வெளியிடுவதற்கான வேண்டுகோள்" என்ற முக்கியமான கட்டுரையை ஒரு ஹார்வர்டு சட்டப் பேராசிரியர் எழுதினார். இது ஒரு முறையான செயல்முறையில் முடிந்தது. இதன்படி, அரசாங்கத்தின் எல்லா ஒழுங்குவிதிகளும் முதலில் "பிரஸ்தாபித்த விதிசெய்தல் பற்றிய அறிக்கை" என்ற ஒரு அடிப்படைப் பாணியில் வெளியிடப்படும். இதனால் குடிமக்கள் என்ன நிகழும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம், பிறகு இறுதிவிதிகளும் வெளியிடப்படும். மொத்தச் செயல்முறையும் தொகுக்கப் பட்ட ஓர் ஆவணத்துக்குள்-கூட்டாட்சி ஒழுங்குமுறைகளின் விதி என்பதில்-சேர்க்கப்படும். திருத்தங்கள், நீக்கங்கள், உதவிகரமான வரலாற்றுக் குறிப்புகள், பயனுள்ள சட்டவிதிகளுக்கான சுட்டிகள் எல்லாவற்றுடனும் அது மேம்படுத்தி வைக்கப்படும். கூட்டாட்சித் தளத்தில் சட்ட ஆற்றலுடைய தொழில்நுட்பத் தரங்களைக் கிடைக்குமாறு செய்யும் எனது போராட்டத்தில், கூட்டாட்சி ஒழுங்குமுறைகளின் விதியில் மிகப் பெரிய காணாமற்போன ஒழுங்குகளின் இடைவெளி ஒன்றைக் கண்டுபிடித்தேன். கூட்டாட்சி ஒழுங்குமுறை விதியில் ஏறத்தாழ 30 சதவீதத்திற்கும் மேல், அதிகச் செலவு செய்யாமலும், தனி வியாபாரி ஒருவரின் அனுமதியைப் பெறாமலும் குடிமக்களுக்குக் கிடைக்காது என்று மதிப்பிட்டேன். இவை சந்தர்ப்பத்தினால் உட்சேர்க்கப் பட்ட முன்மாதிரியான விதிகளும் தரங்களும் ஆகும். அவற்றிற்கு முழுஅளவு சட்ட ஆற்றல் உண்டு. ஆனால் அவற்றிற்குள் அவை சேர்க்கப்படவில்லை. அசலாக இச் செய்கையின் நோக்கம் இடத்தைச் சேமிப்பதுதான். ஆனால் குடிமக்களுக்கு இவை கிடைப்பதைக் கட்டுப்படுத்தவும், அவர்களிடமிருந்து நியாயமற்ற கட்டணங்களைத் தனியார் அமைப்புகள் வசூலிக்கவும் இது ஒரு வாய்ப்பாகிவிட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசாங்க அச்சாளர்களுக்கான போட்டியில் எனது பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு அமெரிக்கச் சட்டத்தைப் பொதுமக்களுக்கு அச்சிடுகின்ற பிரச்சினையில் நான் நீண்டகாலமாக ஆர்வம் காட்டிவந்தேன். இப்பதவி கூட்டாட்சி நிலையில் சட்டத்தை அமுல் படுத்துவதற்கான பொறுப்புடைய மூத்த அதிகாரமும் அரசாங்க அச்சு அலுவலகத்தின் இயக்குநர் பொறுப்பும் கொண்டது. எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஆனால் தேர்வுக்குரியோர் பட்டியலில் என் பெயர் இருந்தது. வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவரின் அதிகாரிகள் அலுவலகம் எப்படி இயங்குகிறது என்பதை நேரடியாக என்னால் காண முடிந்தது. அச்சு அலுவலகத்தைப் பற்றியும் நான் மிகப் பெரிய அளவு தெரிந்துகொண்டேன். அந்த அனுபவம் மிகத் தேவையான ஒன்று. அரசாங்க அச்சிடலில் எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக, இந்தத் துறையில் உலகெங்கும் பணியாற்றியவர்களின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. அவர்களில் ஜான் ஷெரிடன் என்பாரும் ஒருவர். ஐக்கிய நாட்டின் தேசியக் காப்பகங்களின் சார்பில் சட்டத்தை வெளியிடுவதில் உலகிலேயே மிகச் சிறந்த அமைப்பை உருவாக்கியவர். அது சிறப்பானதொரு அமைப்பு. அதில் இங்கிலாந்தில் எக்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கான உறுதியான பிரதியை எவரும் தேடி எடுக்கலாம். சான்றாக, மகா சாசனத்தினை சட்டமாக்கியபோது இருந்த அதன் வடிவத்தையும், மறுமுறை சட்டமாக்கியபோது அதன் வடிவத்தையும், அது காலப்போக்கில் எவ்விதம் மாறிவந்தது என்பதையும் நீங்கள் காணமுடியும். இந்தியாவில், சட்டக் கிடைப்பு பற்றிய பிரச்சினை மேலும் வெளிப்படையாக இருக்கிறது. நிஷித் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இரண்டு வழக்கறிஞர்கள், கௌரீ கோகலே மற்றும் ஜயதீப் ரெட்டி, வான்டேஜ் ஆசியா பத்திரிகையில் "செயல்முறை நிச்சயத்துக்கான அழுத்தம்" எனத் தலைப்பிட்ட ஓர் ஆழ்நோக்குள்ள கட்டுரையை வெளியிட்டார்கள். அதில் ஒழுங்குமுறைகள், சட்டவிதிகள் ஆகியவற்றின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதில் பலவித நிச்சயமின்மைகள் இருப்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர். எனது நண்பரும், தரங்களின் வழக்கில் உடன்-மனுதாரருமான சுஷாந்த் சின்ஹா, இந்தியச் சட்டத்தில் எல்லா நீதியவை வழக்குகள், சட்டங்களின் தொகுப்பினையும் ஆன்லைனில் இலவசமாக வைத்துள்ளார். அவரும் இந்த விஷயத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளார். தரங்கள் வழக்கில் எங்களுடைய மற்றொரு உடன்-மனுதாரர் ஆன ஸ்ரீநிவாஸ் கோடலி, அதிகாரபூர்வ கெஜட்டுகளின் தொகுப்பினைத் தொடங்கிவைத்தவர். நாங்கள் தனியாக இல்லை. 2017 செப்டம்பரில் தில்லி உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதிபதி மன்மோஹன் தான் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் சட்டத்தின் கிடைப்புநிலை பற்றிக் கேள்விப்பட்டு, எல்லா மையஅரசுச் சட்டங்களையும் கீழ்ப்பட்ட சட்டங்களையும் ஒரு மத்திய தளத்தில் கிடைக்கச் செய்ய உதவுகின்ற சிறப்பான ஒழுங்கமைப்பினை உருவாக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகத்துக்கு ஆணையிட்டார். சட்டங்கள் "கணினி படிக்கக்கூடிய பிடிஎஃப் வடிவத்தில்" கிடைக்க வேண்டும் என்று ஆணை கூறியது. இதனால், பிடிஎஃப் கோப்பிலுள்ள பிரதியை எவரும் பெற்றுக் கொள்ளலாம், அதைப் பெருந்தகவல் பகுப்பாய்வுக்கும் எச்டிஎம்ல் மாற்றத்துக்கும், மேலதிக மீத் தகவல்களுக்கும் பிற பயன்பாடுகளுக்கும் உட்படுத்தலாம் என்று பொருள். இந்தத் துறை 2018இலும் அதற்கு அப்பாலும் குறிப்பிட்ட(அதிக) அளவு கவனத்தைப் பெறும் என்பது தெளிவு. நான் அரசு வேலைகளை ஏன் புறக்கணித்தேன் காந்தியை 'ஸ்கேன்' செய்தவாறும், எனது காப்பகத்திலுள்ள 6000 அமெரிக்க அரசாங்கத் திரைப்படங்களைப் பராமரித்தவாறும், அதிகாரபூர்வ அரசிதழ்களைப் பார்த்தவாறும் எனது நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இவற்றில் எதுவும் நான் செய்யவேண்டிய வேலை அல்ல. மாறாக அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பணிகளில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிடுவது தான் நான் செய்ய வேண்டியிருந்த வேலை. பெரும்பாலான தேசியப் பதிப்புரிமை அமைப்புகள் போலவே, அமெரிக்க ஐக்கியநாட்டிலும், பதிப்புரிமைக்கு அப்பாற்பட்ட விஷயங்களின் பட்டியல் உண்டு. இம்மாதிரி விதிவிலக்குகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள். இவை அமெரிக்க ஐக்கிய அரசாங்கப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகள் தங்கள் அலுவலகக் கடமைகளின்போது செய்பவை. அந்தப் பணியாளர்கள், மக்களின் சேவகர்கள். அவர்களுக்கு மக்கள் ஊதியம் வழங்கியிருக்கிறார்கள், ஆகவே அவர்களது உற்பத்தி, அதன் எஜமானர்களான மக்களுக்கே உரியது என்பதுதான் இந்த விதிவிலக்கின் காரணம். இது ஓர் எளிமையான, ஆனால் சக்தி வாய்ந்த கருத்தாகும். 1990களின் தொடக்கத்தில் காப்புரிமை மற்றும் காப்புப் பத்திரங்களின் பரிவர்த்தனைத் தகவல் தளங்களைத் தனது வருவாய்க்கான வழியாக அரசாங்கம் உயர்ந்த விலையில் விற்றுக் கொண்டிருந்ததால் நான் அந்தத் தகவல் தொகுதிகளை விடுவிக்க முடிந்தது. ஒவ்வோராண்டும் இத்தகவல் தளங்களை வாங்கப் பல லட்சம் டாலர்கள் செலவிட வேண்டும். என்னால் இவ்வளவு பணத்தைச் சேர்க்கமுடியும் என்றால் சரி. நான் தகவலை வாங்கியபிறகு, அதற்குப் பதிப்புரிமை கிடையாது. அத் தகவல் தொகுதியை இணையத்தில் வெளியிட எனக்கு அனுமதி உண்டு. ஆனால் இந்த அரசாங்க ஆவணங்களை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வாங்கி மக்களுக்கு இலவசமாகத் தருவதற்கு, அரசாங்கத்தின் மற்றொரு பகுதியான தேசிய அறிவியல் அடிப்படைநிறுவனத்திடம் (என்எஸ்எஃப்) நன்கொடையாகப் பணம் கேட்டு விண்ணப்பித்தாக வேண்டும் என்பது வேடிக்கை. என்எஸ்எஃப் அக்காலப்பகுதியில் இணையத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அப்பிரிவின் இயக்குநர் ஸ்டீஃபன் வுல்ஃப் அந்த நன்கொடையை எனக்கு வழங்கும் அளவுக்குத் துணிச்சலான மனிதராக இருந்தார். இந்தப் புதிய திட்டத்தைப் பற்றிய செய்தி பரவியதும், சக்தி வாய்ந்த 'ஹவுஸ் எனர்ஜி' குழுவின் தலைவர் டிங்கெல், "இந்தத் தகவலைக் கொடுத்து, நீங்கள் ஏன் தனியார் துறையுடன் போட்டியிடுகிறீர்கள்" என்று கேட்டு மிக மூர்க்கமான கடிதம் ஒன்றை தேசிய அறிவியல் அடிப்படை நிறுவனத்துக்கு எழுதினார். துணைக் குடியரசுத் தலைவர் கோரே இதை "அமெரிக்கப் பொதுமக்களுக்கு மிகப் பெரிய வெற்றி" என்று கூறியது மேற்கோள் காட்டப் பட்டதும்தான் விஷயங்கள் முடிவுக்கு வந்தன. அதற்குப் பிறகு நான் அல் கோரேவின் மிகப் பெரிய ரசிகனாக இருக்கிறேன். தரங்களை ஆன்-லைனில் வெளியிடுகின்ற எனது வேலையின்போது இந்த முக்கியமான பாதுகாப்பு விதிகளுக்கு அரசுப் பணியாளர்கள் மிக அதிகக் கொடை அளித்திருக்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். என்றாலும் தனியார் தர அமைப்புகள் அவற்றுக்குப் பதிப்புரிமையை உறுதிப் படுத்துவதில் கண்ணாக இருக்கிறார்கள். கல்வியியல் வெளியீடுகளிலும் இதே நடைமுறை இன்னும் பரவலாக விரிந்திருந்தது. எனது சட்டத்துறை வேலையினால், ஜனாதிபதி ஒபாமாவின் கல்வித் தேடல்களை ஆர்வத்துடன் பின்பற்றி வந்திருக்கிறேன். ஹார்வர்டு சட்ட ரிவ்யூ பத்திரிகையில் அவர் வெளியிட்ட ஒரு கட்டுரையை கவனமாகப் படித்திருக்கிறேன். ஹார்வர்டு சட்ட ரிவ்யூ இதழ் அவரது கட்டுரை மீது பதிப்புரிமை கொண்டாடுவது எனக்குப் புதுமையாக இருந்தது. சயன்ஸ் போன்ற பிற பத்திரிகைகளில் அவர் சிறுகட்டுரைகளை வெளியிட்ட போதும் அவைகளும் இதே நடைமுறையைப் பின்பற்றின என்பதைக் கண்டேன். 2016இல் ஓர் அடிப்படை நிறுவனம் இந்த நிலைமைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென என்னை அணுகியது. 2017க்கு 500,000 டாலரும் 2018க்கு 400,000 டாலரும் இத்துறையில் பணிசெய்ய அளிப்பதற்கு 2016 அக்டோபரில் முன்வந்தனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் எங்கள் இயக்குநர்கள் குழுவில் இடம் கேட்டனர். குறித்த இலக்குகளை அடைவதற்காக அடிக்கடி எனக்குப் பணம் தருவது மட்டுமல்ல, என் பணியின்மீது விரிவான கட்டுப்பாட்டை மேற்கொள்ள அவர்கள் விரும்பினர். தினேஷ் திரிவேதியின் பங்களாவில் உட்கார்ந்து அமெரிக்காவுக்குத் தொலைபேசி அழைப்பில் இந்த நிபந்தனைகளைத் தெரிந்து கொண்டேன். பிறகு வரவேற்பறைக்கு வந்து 900,000 நன்கொடையை விட்டுவிட்டேன் என்று தினேஷுக்கும் சாமுக்கும் கூறியதை நினைவு வைத்திருக்கிறேன். அவர்கள் வேலை எங்களை அரசாங்கத்தின் வேலைகளின் பிரச்சினையை ஆழமாக ஆராய அனுமதிக்கும் என்றும், ஏதேனும் மீறல்களைக் கண்டுபிடித்தால் அதை வெளியீட்டாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் தெரிவிக்க உதவும் என்றும், பிறகு ஒருவேளை பொதுவெளியில் தெளிவாக எந்தக் கட்டுரையையும் வெளியிடலாம் என்றும் அந்த அடிப்படை நிறுவனத்துக்கு நான் விளக்கினேன். என்றாலும், இந்தப் பணத்தின் பெரும்பகுதி சஞ்சிகைக் கட்டுரைகளை ஸ்கேன் செய்வதற்குச் செல்லும் (பெரிய அளவில் செய்தால் இது அதிகச் செலவு பிடிக்கும் திட்டம் இது). நூலக அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்களுக்கும் இதுபோன்ற பிறவற்றிற்கும் உதவும். என்றாலும், இந்தக் கொடை சட்டச் செலவுகளை உள்ளடக்காது. தெளிவாகவே பொதுவெளியில் மிகப் பெரிய அளவிலான சஞ்சிகைக் கட்டுரைகளை நாங்கள் கண்டடைந்தாலும் பதிப்பாளர்கள் வழக்குப்போடுவதில் சமர்த்தர்கள். பழிவாங்கல் நோக்கிலோ தாங்கள் தீயவழியில் பெற்ற வருவாய் வழிகளைக் காப்பதற்குக் காலம் கடத்தும் உத்தியாகவோ அவர்கள் வழக்குப் போடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வேறுவகையில் கூறினால், இது மிகுந்த இடர்ப்பாடு கொண்ட திட்டம். ஓர் அடிப்படை நிறுவனத்து அதிகாரி, அதிலும் குறிப்பாக நான் இதுவரை சேர்ந்து பணியாற்றாத ஒருவர், எங்கள் குழுவில் சேர்ந்து எங்கள் காரியங்களை திசைப்படுத்த நான் அனுமதிக்க முடியாது. ஆகவே அந்தப் பணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சில அடிப்படை நிறுவனங்கள் பணிசெய்தால் பணம் தருகின்றன. அவர்கள் மனத்திலிருக்கும் ஏதோ ஒரு திட்டத்தை நீங்கள் செய்து முடித்தால் பணம் தருவார்கள். ஆனால் நாங்கள் அவ்விதம் வேலை செய்வதிலலை. நாங்கள் பணத்தைவிடச் சேவையை எப்போதும் மதிக்கிறோம். அந்த நிறுவனம் இறுதியாகத் திரும்பிவந்து 2017 ஜனவரியில் 250,000 டாலர் தருவதாக ஒப்புக் கொண்டது. திட்ட அறிக்கை அளித்தபிறகு ஜூலையில் மேலும் 250,000 டாலர் பணம் தருவதாகவும், மீதியிருக்கும் 400,000 டாலரை 2018இலும் 2019இலும் தவணைகளாகத் தருவதாகவும் கூறினர். நான் காண விரும்பியதைவிடப் பணத்தைச் சிறுசிறு தொகைகளாகக் கொடுப்பதாக இது இருந்தது. ஆனாலும், நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். பதிப்பாளர்களின் மறைவான செயல்களைத் தணிக்கை செய்தல் 2017இன் முதல் ஆறுமாதங்களில் அரசாங்கப் பணிகளின் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டேன். வட கரோலினா பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள், ஒரு பட்டப் படிப்பு மாணவர் ஆகியோருடன் சேர்ந்து, கலிஃபோர்னியா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகங்களின் நூலகங்களின் உதவியுடன் ஆசிரியர் மூலங்களைத் தேடிக் கல்விசார் நூல்களில் தீவிரமான தேடலை நடத்தினோம். ஆசிரியர் பெயர்ச் சேர்ப்புகள் பலவிதமான வழிகளில் எழுதப்படலாம் என்பதால் சஞ்சிகைத் தகவல் தொகுதிகளைத் தேடி இந்தத் தகவலைப் பெறுவது எளிய வேலை அல்ல. நாங்கள் அடிப்படையில் செய்தது இது: நூலகங்கள் பயன்படுத்தும் வெவ்வேறு மூன்று வணிகத் தேடுகருவிகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அரசாங்க முகமையையும் உள்ளிட்டு முடிவுகளைப் பார்த்தோம். நீங்கள் "நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள்" என்று தேடினால், அமெரிக்க முகமையிலிருந்து மட்டுமல்ல, அவர்களின் சீன முகமைகளிலிருந்தும் கட்டுரைகள் கிடைக்கும். உங்கள் தேடலை நுணுக்கமாக்க, முகமையின் பெயருடன் யு. எஸ்., யுனைடட் ஸ்டேட்ஸ் அல்லது அட்லாண்டா என்ற சொற்களில் ஒன்றை இணைக்க வேண்டும். நாங்கள் கண்டறிந்த முடிவுகளின் எண்ணிக்கை அசாதாரணமாக இருந்தது. எங்கள் தொடக்கத் தணிக்கையில 1264,429 கட்டுரைகள் அரசாங்கப் பணியாளர்கள் உருவாக்கியவை எனத் தோன்றியது. அந்த முதன்மைப் பட்டியலிலிருந்து பல கேள்விகளுக்கு விடை தேடி இரண்டாம் நிலை ஆய்வு ஒன்றை நடத்தினோம். அரசு நிதி இல்லாமல், ஒரு கூட்டாட்சிப் பணியாளருக்கு தங்கள் சொந்த நேரத்தில் கட்டுரை ஒன்றை எழுதுவது சாத்தியமே. பணியாளரின் சொந்தத் திறன் உள்ள துறையின் எல்லைக்குள் அது இருந்தாலும், அது அரசாங்கப் பணி அல்ல. அது ஒரு படைப்பாகவும் பதிப்புரிமை அற்றதாகவும் கருதப்பட, தங்கள் அதிகாரபூர்வக் கடமைகளின் நேரத்தின் ஊடாக அது செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். சட்டத்திற்குத் தேவைப்படுவது போல, பதிப்புரிமை அற்றவை என்று அந்தக் கட்டுரைகள் முறையாக அடையாளமிப் பட்டுள்ளனவா என்பது எங்களுக்கு எழுந்த கேள்வி. எங்கள் ஆய்வுக்கென அந்த 1.2 மில்லியன் கட்டுரைக் குறிப்புகளை இரு வகையாகப் பகுக்கலாம். அவர்கள் டிஜிடல் குறியீடுகளைப் பயன்படுத்தியிருந்தனர், அதனால் எங்களால் எத்தனை அரசாங்க வேலைகள் எந்தப் பதிப்பாளரிடமிருந்து சாத்தியம் என்பதை நிர்ணயிக்க முடிந்தது. ரீட் எல்செவியரின் கூட்டுநிறுவனக் கிளை ஒன்று, உதாரணமாக, 293,769 கட்டுரைகளைக் கொண்டிருந்தது. அமெரிக்க மருத்துவச் சங்கத்திற்கு 5961 கட்டுரைகள் இருந்தன. மேலும், நாங்கள் முகமை என்ற தேடற்சொல்லைப் பயன்படுத்தியதால், முகமையின் வாயிலாகக் கட்டுரைகளை எடுக்க முடிந்தது. உதாரணமாக, இராணுவப் பொறியியல் படைப் பணியாளர்களின் 20,027 கட்டுரைகளையும், தேசிய உடல்நல நிறுவனங்களின் 45,301 கட்டுரைகளையும் கண்டோம். முக்கியப் பதிப்பாளர்கள் 29 பேரில் ஒவ்வொருவருக்கும் புள்ளியியல் ரீதியாகச் செல்லத்தக்க உதாரணக் கட்டுரைகள் எடுக்கப்பட்டன. சிறிய பதிப்பாளர்களுக்கு 50 கட்டுரைகள் முதல் பெரிய பதிப்பாளர்களுக்கு 500 வரை இருந்தன. இதே செயல்முறை அரசாங்க முகமைகள் 22இல் ஒவ்வொன்றுக்கும் கையாளப்பட்டது. இறுதியில், ஏறத்தாழ 10,000 கட்டுரைகளை எடுத்தோம். முதற்பக்கத்தில் பதிப்புரிமை உறுதிப்பாட்டிற்கான சான்றுகளைத் தேடி ஒவ்வொன்றையும் கைகளால் நேரடியாகச் சரி பார்த்தோம். போலிப் பாசிடிவ்களால் எங்கள் தேடல் முடிவுகளின் துல்லியத்தைச் சோதித்தோம். மதிப்புரைகளுக்குத் தங்கள் சகாக்கள் உதவியதற்கு ஆசிரியர்கள் நன்றி கூறுதல் போன்ற அதிகார பூர்வத் தன்மைக்கு அல்லது அவர்கள் அரசுப் பணியில் சேர்வதற்கு முன்பாக அந்தப் பணியைச் செய்தார்களா என்பதற்கான காட்டிகளைத் தேடினோம். முடிவுகள் தெளிவாக இருந்தன. நாங்கள் பார்த்த கட்டுரைகளில் பெரும்பாலானவை உறுதியாக அமெரிக்க அரசாங்கத்தினுடையவை. ஏறத்தாழ எல்லாவற்றிலும் பதிப்பாளரது முறையான பதிப்புரிமைத் துறப்பு காணப்படவில்லை. பெரும்பாலான கட்டுரைகள், ஒரு கட்டணத் தடைக்குப் பின் கவனமாக மறைக்கப்பட்டிருந்தன. ஆகவே அரசாங்க இணையதளத்தில் அவை காணக் கிடைக்கவில்லை. தேசிய ஆவணக்காப்பகப் பதிவுகளின் அமைப்புத் திட்டங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவற்றிலும் இந்தக் கட்டுரைகளின் பிரதிகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பெரிய அளவு நூலடைவுத் தேடல் பெரும்பாலான அறிவுத் துறைகளுக்கு உதவியது. ஆனால் தொழில்நுட்பத்தை வேண்டுமென்றே அறியாதிருப்பதைப் பெருமையாகக் கருதுகின்ற சட்டத் தொழிலுக்கு இது உதவவில்லை. ஒரு பொது நியமமாகவே, சட்ட இலக்கியம் முழு அளவில் உரிமை கொண்ட வியாபாரிகளால் இறுக்கிப் பூட்டப்பட்டிருக்கிறது. அதனால் நூலடைவுத் தேடல் கருவிகளின் நோக்கத்திற்கு அது ஒத்து வருவதில்லை. ஆனால், சட்டச் சஞ்சிகைகளில் கடைப்பிடிக்கப் படும் பொது நடைமுறை என்ன என்பதை நான் அறிய விரும்பினேன். ஏனெனில இதுவும் சட்டக் கேள்வியே ஆகும். நாட்டிலுள்ள சட்ட மாணவர்களை இது பற்றிக் கேட்டேன். இதற்கு யேல் சட்டப் புலத்தின் மிஷா குடன்டாக் என்னும் எனது தன்னார்வலர் தலைமையில் சட்ட மாணவர்கள் உதவினர். அவர்கள் சில முக்கிய சட்ட இதழ்களை ஒன்றின்பின் ஒன்றாக எடுத்து அவற்றின் கட்டுரைப் பட்டியலை விரிதாளில் இட்டனர். அவை அரசாங்கப் பணியாளர்களால் செய்யப் பட்டன என்று தோன்றியது. பல்கலைக் கழகச் சட்டச் சஞ்சிகைகள் அன்றி சட்ட வெளியீட்டில் மற்றாரு முக்கிய ஆற்றல் வாய்ந்த கருவி அமெரிக்கச் சட்டவல்லுநர் (பார்) சங்கம். அந்த வேலையை நானே எடுத்துக் கொண்டேன். வெவ்வேறான சில டஜன் வெளியீடுகளிலிருந்து பல தசாப்தங்களின் கட்டுரைகளை நானே சோதித்துப் பார்த்தேன். அரசுப் பணியாளர்கள், ஒருவேளை தங்கள் அலுவலகக் கடமைகளின் போது, உறுதிப்படவே எழுதியதாக 552 கட்டுரைகள் தோன்றின. அரசு வணிகக் குழுவின் ஆணையர் அடுத்த ஆண்டிற்கான முகமையின் ஒழுங்குச் செயல் முறைகள், சீர்திருத்தங்கள் பற்றிய சுருக்கங்களை கூட்டுக்குழும எதிர்வணிகச் சட்டவல்லுநர் குழுவுக்கு (ஆண்டி-டிரஸ்ட் பாருக்கு) அளித்தார் என்பது ஓர் உதாரணம். இராணுவ அதிகாரிகள் தங்கள் அலுவலகக் கடமைகளின் ஒரு பகுதியாகக் கொள்முதல் சட்டத்தில் உயர் பட்டத்தைப் பெறவேண்டி, அதற்காகச் சஞ்சிகையில் ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் என்பது மற்றொரு உதாரணம். இந்த விஷயங்கள் எதிலும், கட்டுரைகள் அரசாங்கப் பணியாக அடையாளம் காணப்படவில்லை. பொது நோக்குக் கல்வி ஆய்வுசார் கட்டுரைகள், சட்ட இலக்கியம் ஆகியவற்றைத் தேடி பெரிய அளவு சான்றுகளைத் தொகுக்கின்ற வேலையோடு, அரசாங்கச் சட்டவிதிக் கூறுகளுக்கான பணிகளின் தோற்றம் பற்றியும அவை எப்படி நீதியவைகளில் விளக்கப்படுகின்றன என்பது பற்றியும் புரிந்து கொள்வதற்காக நான் சட்ட நூல்களை ஆழமாகத் தேடிக் கொண்டிருந்தேன். இதில் 1895இன் அச்சிடுதற் சட்டவிதித் தோற்றம் பற்றித் தேடி எடுக்க முடிந்தது. ஜனாதிபதிகளின் கட்டுரைகளின் தொகுப்பு பற்றிய பதிப்புரிமையைத் தனக்கென உறுதி செய்ய முயன்ற செனேட்டர் ஒருவர் எழுப்பிய தகராறு பற்றியும் தெரிந்தது. அந்தச் சட்டக்கூறு 1909இல் பதிப்புரிமைச் சட்டத்தின் பகுதியாக்கப்பட்டு, அவ்வாறே பின்வந்த சட்டங்களிலும் நீதியவைகளால் ஏற்கப்பட்டதை, பின்வந்த சட்டமன்ற, நீதிமன்ற வரலாற்றில் பிறகு நான் காட்டினேன். வழக்கறிஞர் சங்கத்திற்கு(பாருக்கு) நான் செல்லுதலும், வெளியேறுமாறு இடப்பட்ட கட்டளையும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு உத்தியைக் கருதினேன். அமெரிக்கச் சட்டவல்லுநர் குழு(ஏபிஏ)வின் சார்பாளர் மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவருவதே அது. இதைச் செய்பவர் ஒரு வழக்கறிஞராக இருக்கவேண்டும். எனது குழு உறுப்பினர்களில் இருவர் ஏபிஏ உறுப்பினர்கள். இந்தப் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் ஓர் இணையாசிரியராகக் கட்டுரை எழுதுவது, பிறகு ஏபிஏ சார்பாளர் மன்றத்தில் தீர்மானத்தை முன்வைப்பது என்பது என் எண்ணம். அதன்பின் பதிப்புரிமைச் சட்டத்தின் அளிப்புகளை நாங்கள் யாவரும் பின்பற்றுவதற்கு ஏபிஏவின் ஆதரவைக் கேட்கலாம். இது ஓர் அர்த்தமுள்ள திட்டமாகத் தோன்றியது. வழக்கறிஞன் இல்லை என்றாலும், மன்றத்தின் சிறப்புரிமைகளைப் பெற்றதன் வாயிலாக 2016இல் நான் அதன் சார்பாளர்கள்முன் உரைநிகழ்த்த முடிந்தது. அப்போதைய தலைப்பு, அரசுச் சட்டத்திற்குள் ஆலோசனை வாயிலாகச் சேர்க்கப் பட்ட தரங்கள் கிடைப்பதைப் பற்றிய தீர்மானம். இந்தத் தொழில்நுட்பச் சட்டங்கள் "வாசிப்புக்கு மட்டும்" என்ற முறையில் கிடைப்பதற்கு ஏபிஏ தீர்வு கூறியது. அதனால் பணம் கொடுக்காமல் எவரும் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த அமைவில், தனியாரின் அனுமதி இன்றிச் சட்டத்தை எவரும் பேச இயலாது. இலவசக் கிடைப்புக்கு எதிரான தர அமைப்புகளும் இதை எதிர்த்தன, நானும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தேன். நாங்கள் இருவருமே இதை எதிர்த்ததால் தீர்மானத்தை முன்வைத்த பிரிவுகள் தாங்கள் சாலமன் குழந்தையைப் பாதியாக வெட்டிக் கொடுத்த தீர்ப்புபோன்ற ஒரு சாதனையைச் செய்துவிட்டதாகக் கருதின. எனது கடுமையான மறுப்புகளுக்குப் பிறகும் அவர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர், ஆனால் குறைந்தபட்சம் எனது குரலை எழுப்ப வாய்ப்புத் தந்தனர். சட்டபூர்வப் பிரசுரத்தின் சட்டகத்துக்குள் பிரச்சினைகள் பற்றிய நேர்மையான விவாதம் ஒன்று நடந்து, ஆய்வறிவு மற்றும் கல்வியின் பரந்துபட்ட எல்லாக் குறிப்புகளும் முன்வைக்கப் பட்டால், ஒருவேளை இதனை அமெரிக்கப் பதிப்புரிமைச் சட்டத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க ஏபிஏ ஒரு வாய்ப்பாகக் கருதக்கூடும். அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை பற்றிய வேலையில் வசந்த காலத்தைச் செலவழித்தேன். எங்கள் தணிக்கையின் முடிவுகளையும், சட்டத்தின் தோற்றம், பயன்பாடு பற்றிய வரலாற்றையும் கூறுகின்ற, 69 அடிக்குறிப்புகளைக் கொண்ட 15 பக்கக் கட்டுரை (இதுதான் அனுமதிக்கப்பட்ட உச்ச அளவு)யாக ஆக்கினோம். தீர்மானம் மிக எளியது. அலுவலகப் பணியின்போது ஒரு பணியாளர். ஏதேனும் கட்டுரை எழுதினால் அதன் ஒரு நகலை அரசாங்கப் பிரசுர அலுவலகத்தில் தரவேண்டும் என்று அது கூறியது. அரசு அச்சிடும் பிரசுரங்களுக்கு இது ஏற்கெனவே நிபந்தனையாக இருந்தது. அதைச் சஞ்சிகைக் கட்டுரைகளுக்கும் பொருந்துமாறு நீட்டிக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். (ஏபிஏ உள்ளிட்ட) பதிப்பாளர்கள் பிரசுரத்தின்போது அரசின் எந்தப் பணிக்கும் முறையாகப் பொருள்விளக்கச் சீட்டு (லேபல்) இட வேண்டும், சட்டத்தின்படி எந்தப் பகுதிகள் பதிப்புரிமை கொண்டவை அல்ல என்பதை அதில் குறிப்பிட வேண்டும் என்பது தீர்மானத்தின் இரண்டாவது பரிந்துரை. இது ஏற்கெனவே இருப்பதை மீண்டும் கேட்பதுதான், புதிய அல்லது தீவிர மாற்றத்தை வேண்டுகின்ற ஒன்று அல்ல. இத்தீர்மானம் எதிர்நோக்குக் கொண்டது: எதிர்காலத்தில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளுக்கு இது பொருந்தும். தவறாக லேபல் இடப்பட்ட பழைய விரிவான கோப்புகளுக்கு இது பொருந்தாது. விதிகள் மற்றும் காலண்டர் குழுவிடம் எனது தீர்மானம் அளிக்கப்பட்டது. அவர்களுடைய மிகத் துல்லியமான விதிகளுக்கு ஒப்ப நான் மிக விரிவான திருத்தச் செயல்முறைக்கு உட்பட வேண்டியிருந்தது. உதாரணமாக, அமெரிக்கச் சட்டவல்லுநர் சங்கத்தில் நான் ஒரு இணைஉறுப்பினர் என்றாலும் முழு உறுப்பினர்களால்தான் அவையில் தீர்மானத்தை வைக்க முடியும். நடைமுறை வக்கீலாக நான் இல்லாத காரணத்தால், எனக்கு அந்தத் தகுதி இல்லை. நான்தான் எனது எழுத்தின் முழுமையான ஆசிரியர் என்றாலும் அதைக் குறிப்பிட்டபோது தீர்மானம் ஏற்கப்படவில்லை. ஆசிரியர்களில் என் குழு உறுப்பினர்களோடு எனது பெயரையும் சேர்த்தாலும் அது புறக்கணிக்கப் பட்டது. என் பெயரை நீக்கியபிறகுதான் அது ஏற்கப்படத் தகுதி எனப்பட்டது. நாளிறுதியில் என் தீர்மானம் ஏற்கப்படத் தகுதியாயிற்று. நியூ யார்க்கில் ஆகஸ்டு மத்தியில் நடக்க இருக்கும் அவை விவாதத்திற்கென அது சேர்க்கப் பட்டது. ஏபிஏவில் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சார்பாளர்கள், அதிகாரிகள், குழுக்கள், விதிகள் கொண்ட தளம் உள்ளது. பலவேறு அதிகாரப் பிரிவுகள், விதிப் புத்தகங்கள் ஆகியவற்றின் ஆழம் கிளர்ச்சி ஊட்டுவதாக உள்ளது. ஏதேனும் ஒரு பிரிவு தீர்மானத்தை அளிக்கிறது. தனி உறுப்பினர்கள் தீர்மானத்தை மொழியலாம் என்றாலும் அது அபூர்வம். ஒரு பிரிவு தீர்மானத்தை அளித்தவுடனே, அது பிற பிரிவுகளுக்கும் உடன்-ஏற்புக்காக அனுப்பப் படுகிறது. ஏபிஏ நடைமுறையில், பல தீர்மானங்கள் பல பிரிவுகளால் முன்வைக்கப்படுகின்றன, பெரும்பாலானவற்றுக்கு எதிர்ப்பு இருப்பதில்லை. எனது தீர்மானம் மே மாதம் ஏற்கப்பட்டது. ஆனால் அடுத்த மூன்று மாதங்கள் எந்தப் பிரிவிலிருந்தும் தொடர்பு இல்லை. அறிவுச் சொத்து, கூட்டுக்குழுமஎதிர்ப்பு, அறிவியல்-தொழில்நுட்பம் போன்ற பல பிரிவுகளின் தலைவர்களையும் சார்பாளர்களையும் நானே அணுகி, பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் விவாதிக்க விரும்புவதாகக் கூறினேன். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. யாரும் என்னிடம் பேசவில்லை என்றாலும் உள்ளுக்குள் அதிக விவாதம் நடந்து கொண்டிருந்தது என்பது தெரிந்தது. கூட்டத்திற்காக நான் நியூ யார்க்கிற்குச் செல்ல இருந்த வாரத்திற்கு முன்வாரத்தில், தீர்மானத்தைப் பற்றித் தொலைபேசியில் விவாதிக்க நான் இருக்க வேண்டும் என்ற அவசரத் தகவல் வந்தது. நான் மட்டுமல்ல, எனக்கு வயதுவந்தோர் மேற்பார்வை தேவை என்பதால் தீர்மானத்தின் பட்டியலில் அதிகாரபூர்வமாக இடம் பெற்றிருந்த ஏபிஏ உறுப்பினர் ஒருவரும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த அழைப்பை எதிர்கொண்டோம். அது ஒரு மணிநேரம் நீடித்தது. அது நன்றாக இல்லை. என் பக்கத்தில் இயக்குநர் குழுவின் நிறுவன உறுப்பினரும், ஏபிஏ உறுப்பினருமான டிம் ஸ்டேன்லியும், யேல் சட்டப் புலத்தின் தன்னார்வலரான மிஷா குட்டன்டேகும் இருந்தனர். மறுபுறத்தில் அறிவுச் சொத்து, கூட்டுக்குழும எதிர்ப்பு, அறிவியல், நிர்வாகச் சட்டப் பிரிவுகளில் இருந்தவர் உட்பட சட்டவல்லுநர் சங்கத்தின் சினமுற்ற உறுப்பினர்கள் எட்டுப் பேர் இருந்தனர். அவர்கள் நிலைப்பாடு தெளிவாக இருந்தது. தீர்மானத்தை நாங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது சட்டவல்லுநர் சங்கத்தின் முழுக் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும். கூட்டுக்குழும எதிர்ப்புச் சஞ்சிகையிலிருந்து நான் எடுத்த 75 கட்டுரைகளையும் தான் பார்வையிட்டதாக அந்தப் பிரிவின் பிரதிநிதி கூறினார். அந்தக் கட்டுரை ஒவ்வொன்றும் தங்கள் பணியாளர்களால் தங்கள் நேரத்தில் செய்யப் பட்டவை என்றும் அரசாங்கத்தின் வேலைகள் அல்ல என்றும் தன்னால் உறுதியளிக்கமுடியும் என்றார். ஒவ்வொரு கட்டுரையும் தனியார் சொத்து என்று நான் நம்பவில்லை எனத் தெரிவித்தேன், ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். அரசாங்க வணிகக் குழுவின் அமர்வு-ஆணையர்களால் செய்யப்பட்ட குறைந்தது 17 பிரசுரங்களை நான் காட்டினேன். அரசாங்க வணிகக்குழு அமுல்படுத்தும் முதன்மைகள் "அவர்களின் அலுவலகக் கடமைகளின்" போதன்றி வேறுவிதமாக எப்படி இருக்க முடியும் என்ற வியப்பைத் தெரிவித்தேன். அறிவியல் பிரிவிலிருந்த பெண்மணி, நான் அவைக்குத் தீர்மானத்தைக் கொண்டுவந்தால், எனது ஆர்வங்களின் முரண்பாடுகள் குறித்துப் பேசி பெரிய அருவருப்பை ஏற்படுத்துவோம் என்றார். எனக்கு வியப்பு ஏற்பட்டது. அந்த முரண்பாடுகள்தான் என்ன என்று கேட்டேன். அரசாங்கத் தகவல்களை எல்லாருக்கும் கிடைக்கும்படியாக என் வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு வந்தேன், ஆனால் ஜியார்ஜியா அரசுடன் எனக்கு வழக்கு உள்ளது, ஆகவே நான் சுயநலம் பிடித்தவன், அந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தத் தவறிவிட்டேன் என்றார். மிக மோசமான, கீழ்த்தரமான முறையில் அதைக் கூறியதால், அதே மனப்பான்மையோடுதான் அவைக்கு வருவார் என்று தெரிந்தது. அறிவுச் சொத்துப் பிரிவினர் மெய்யாகவே நகரில் சென்று சுற்றி, நான் சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்றார்கள். ஒரு பணியாளரின் சொற்கள் அரசாங்கத்தின் வேலை என்றாலும், அது ஓர் எழுத்துருவில் பக்கமிடப்பட்டு அச்சிடப்பட்டால், பதிப்புரிமையில் பதிப்பாளருக்கு பொதுமக்கள் எல்லையைக்கு மேலாக ஒரு கூடுதல் தன்மை உள்ளது என்றார்கள். ஆகவே பதிப்பாளரின் பதிப்புரிமையை மீறாமல் அந்தப் பணியை கிடைக்கச்செய்ய இயலாது. ஆனால் இது முட்டாள்தனம் என்றும் அமெரிக்கப் பதிப்புரிமைச் சட்டத்தில் இதற்கு ஆதரவில்லை என்றும் நம்புகிறேன். எழுத்துருவைத் தேர்ந்தெடுப்பதிலோ பக்க அமைப்பிலோ பதிப்புரிமை கிடையாது. கட்டுரையின் உண்மையான இணை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பதிப்புரிமையைப் பகிர்ந்து கொள்ள முடியும். அங்கு நான் சட்ட விவாதத்தை மேற்கொள்ள வில்லை. இந்தத் திட்டத்திற்கென எனது ஆலோசனைக் குழுவில் சேர்ந்து கொண்ட பதிப்புரிமை நிபுணர்களின் திறன்படைத்த குழுவினர் செய்த ஆழமான ஆய்வு மற்றும் மறுஆய்வு அடிப்படையில் அமைந்தது என் கருத்து. நாங்கள் சட்டத்தைச் சரியானபடி கொண்டிருக்கிறோம் என்பதில் அழுத்தமான உறுதி எனக்கு உண்டு. நாங்கள் வெறுமனே ஒரு பிரச்சினையை உருவாக்கிப் புகை மண்டச் செய்யவில்லை. மன்றத்தில் ஒரு விவாதச் சேற்றின் ஊடாக எங்களை இழுக்கப் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இதெல்லாம் பரவாயில்லை. இதைவிட மோசமானது: ஏற்கெனவே எட்டுப் பிரிவுகளேனும் தங்கள் சார்பாளர்களுக்குத் தீர்மானத்தை எதிர்க்குமாறு அறிவுரைத்துவிட்டதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தனர். ஆகவே நான் எவ்வளவு சிறப்பாக, ஏற்கும் திறனோடு நான் வாதிட்டாலும், எனக்கு எதிர்ப்பாகப் பொய்யாக வாக்குகளை உருவாக்கிவிட்டார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் தவறு செய்தார்கள் என்பது தெரிந்தது. ஆனால் சார்பாளர்கள் அவையில் நாங்கள் வரும் தைரியம் இருந்தால், எங்களைக் கொன்றுவிடுவோம் என்று அவர்கள் சொன்னதை நான் நம்பினேன். இதில் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று கண்டதால், நியூ யார்க்குக்கு நான் செல்லவேண்டிய தினத்துக்கு இரு நாட்கள் முன்பு என் பயணத்தை ரத்து செய்துவிட்டேன். பணத் தொல்லைகள் மீண்டும் எழுகின்றன சார்பாளர் மன்றத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்ள நான் சென்றிருப்பேன். ஆனால் இரண்டாவதாக ஒரு பிரச்சினை எழுந்தது. 250,000 டாலரைச் செலவழிப்பதில் நான் மிக எச்சரிக்கையாக இருந்தேன். அதில் மூன்றில் இரு பங்கு பணத்தை மட்டுமே செலவழித்திருந்தேன். ஏபிஏ கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் செலவழிப்பதைக் கூட்டிக் கொள்ளலாம் என்பது எனது எண்ணம். எவ்விதம் சர்சசை செல்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் செலவினை மேற் கொள்ளலாம். ஜூன் தொடக்கத்தில் எனது அறிக்கையை அடிப்படை நிறுவனத்துக்கு அளித்தேன். ஜூலை 31 அன்று எங்களது இரண்டாவது தொகையை அவர்கள் அளிக்கவேண்டும். அறிக்கையை அளித்த பிறகு எனது திட்ட மேலாளர் அல்லது அறக்கொடை அலுவலர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆகவே அறிக்கை சரியாக இருக்கிறதா, சரியான வழியில் சென்றிருக்கிறோமா என்பதைச் சிலமுறை சரிபார்த்துக் கொண்டேன். நான் கேள்விப்பட்டது திருப்தியாக இருந்தது. ஜூலை 31 நெருங்கியபோது அடிக்கடி எனது வங்கிக் கணக்கைச் சோதித்தேன். ஆனால் பணம் வரவில்லை. பிறகு அவர்கள் உரிய தவணைக்கு இரண்டு நாள் முன்னால் அவர்கள் பணம் தரமாட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. காரணம், நாங்கள் போதிய பணத்தைச் செலவழிக்காததால் நன்கொடை விதியைப் பின்பற்றவில்லையாம். முன்கணிப்பிலிருந்து நாங்கள் எங்கே விலகினோம் என்பது பற்றியும், எப்படிச் செலவு செய்யப் போகிறோம் என்பதைத் துறைரீதியாக விளக்கமான வரவுசெலவுக் கணக்குத் திட்டங்களுடன் விளக்க வேண்டி வந்தது. எங்கள் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் ஒப்புக் கொள்ளப் படுமானால், எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக நான் கூறினேனா என்பதற்கான அடையாளமும் இல்லை. வேறுசொற்களில் கூறினால், எங்கள் அமைப்பைத் திறம்பட நடத்துவதில், நாங்கள் முன்பு நடந்ததை அறிவிக்கின்ற முக்கியப் பிரச்சினையிலிருந்து எதிர்கால ஒப்புதலுக்கான பிரச்சினைக்கு மாறிவிட்டோம். நான் ஒரு சமாதானத்தைக் கூறினேன் . எங்கள் உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டு, தங்கள் தங்கள் வழியில் செல்வோம், ஏற்கெனவே எங்களிடம் உள்ள பணத்தை நான் அப்படியே வைத்துக் கொள்வேன், 250,000 டாலரும் செலவானதும் எப்படி அது செலவிடப்பட்டது என்ற அறிக்கையை அளிப்பேன், அந்தக் கொடை நிறுத்தப்படும். மீதியுள்ள 650,000 டாலரை அவர்களே வைத்துக் கொள்வார்கள். இது அவ்வளவு நல்ல திட்டமல்ல, நிலையான வருவாயும், தொழில்ரீதியான வளர்ச்சி அலுவலர்களும் கொண்ட நீடித்த திட்டத்துடன் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதே அடிப்படை நிறுவனத்துக்கு ஆதாயம். எங்களைப் போன்ற இலாபம் கருதா அமைப்புகள் அடிப்படை நிறுவனங்களுடன் வேலை செய்வது எப்போதுமே கடினமானது. செயல்கள்-மையமிட்ட இணைய அமைப்புகளை நடத்தும் என் தோழர்களுடன் பலமுறை உரையாடல் நிகழ்த்தியுள்ளேன். அந்தப் பணியை மேலே கொண்டு செல்வதற்கான பணத்தின் தேடல் முடிவற்றது. தாங்கள் மனத்தில் வைத்திருக்கும் சொந்த நிகழ்ச்சிநிரல்கள் அல்லது பெரிய திட்டங்களுக்கு அடிப்படை நிறுவனங்கள் விரைவாகப் பணம் தருகின்றன. ஒருவேளை அது திட்டமேலாளர் கருத்தில் வைத்திருக்கும் பணிமனையாகவோ, மென்பொருள் செயல்படுவதாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களிடம் சென்று நீங்கள் ஏற்கெனவே செய்துவருவதைக் கூறினால், உடனே அவர்கள் "நாங்கள் ஒரு புதிய திட்டத்திற்குப் பணம் தருவோம், ஏற்கெனவே இருக்கும் திட்டத்திற்கு அல்ல" என்று கூறிவிடுவார்கள். எல்லாரும் ஒரு "புதிய" திட்டத்தில் இருக்க விரும்பும்போது, ஒரு குறிப்பிட்ட கடினமான இலக்கில் நீண்டகாலம் கவனத்தைக் குவிப்பது கடினம். இது ஆதாயமற்ற குழுமங்களுக்கு மட்டுமல்ல. புதிய திட்டங்களை வைத்திருக்கும் சிலிகான் சமவெளியிலுள்ள என் நண்பர்களுக்கும் இது பிரச்சினைதான். ஏற்கெனவே இருக்கும் மக்களுக்கும் திட்டங்களுக்குப் பணம் தருவதற்கு பதிலாக முதலீட்டாளர்கள் திடீரென நுழைந்து தங்கள் குழுமத்தைத் தங்கள் சிந்தனைக்கான செயற்களமாகப் பயன்படுத்துவார்கள். ஏற்கெனவே வேலை செய்யும் குதிரைக்குத் தீனிபோடுவதற்கு பதிலாக ஒரு பளபளக்கும் புதிய யூனிகார்னை (ஒற்றைக் கொம்பு புராண மிருகம்) விரும்புவார்கள். பப்ளிக் ரிசோர்ஸ் (எங்கள் கம்பெனி) இதில் அதிர்ஷ்டகரமானது. எங்கள் பணத்தை இரண்டு இடங்களிலிருந்து பெற்றோம். பிரிட்டனில் லிஸ்பெட் ரௌசிங்-பீட்டர் பால்ட்வின் ஆகியோரின் தர்மநிதியான ஆர்க்கேடியா போன்ற தொலைநோக்குள்ள பல நிறுவனங்கள் பல ஆண்டுகளாக எங்களுக்கு உதவி செய்தன. ஓமிட்யார் வலைத்தளத்திலிருந்து தொடக்க நிதி ஒன்றைப் பெற்றோம். கூகிள் தங்கள் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக "உலகத்தை மாற்றுவதற்கான சிந்தனைகளுக்கு" ஐந்து பரிசுகளை (ஒவ்வொன்றும் 2 மில்லியன் டாலர்) அளித்தபோது அதில் ஒன்றை நாங்கள் பெற்றோம். நிதி பெறுவதற்கு இரண்டாவது வழி: பல ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த பலபேர், சமவெளியில் கொஞ்சம் பணம் சேர்த்தவர்கள், திரும்பத் தர விரும்புகிறார்கள். உதாரணமாக அலெக்சாண்டர் மெக்கிலிவ்ரே கூகிளில் தொடக்க வக்கீலாக இருந்தவர். ட்விட்டரில் பொது வழக்கறிஞர் ஆனார். பிறகு ட்விட்டரைவிட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் துணைத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி யானார். தனது அரசாங்கப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாகத் தனது நிதியளிப்பு அறிவுறுத்துவோரிடம் எங்களுக்கு பத்தாயிரம் டாலர் காசோலை அனுப்புமாறு கூறினார். பின்னர் ஒபாமா நிர்வாகத்தை விட்டுச் சென்றபோது மீண்டும் ஒரு காசோலை அனுப்பினார். இதேபோல முன்னாள் அமெரிக்க உதவி அட்டர்னியான கில் எல்பாஜ், அவர் மனைவி எலிஸா இருவரும் நாங்கள் தொடங்கியதிலிருந்து எங்களுக்கு ஆண்டுதோறும் ஆதரவளித்து வந்தனர். கில்லின் குழுமம் ஐபிஓவுக்குச் சற்று முன் கூகிளால் வாங்கப்பட்டது. அவர்கள் தாங்கள் சேர்த்ததிலிருந்து பலவேறு இலாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்தனர். 'பப்ளிக் ரிசோர்ஸ்'இல் என்னைப் பற்றிய பக்கத்தில் இந்தப் பெயர்களை, எங்கள் சார்பாக வாதிடும் ஒன்பது சட்ட நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள், எங்கள் குழு இவற்றின் பெயருடன் சேர்த்து வெளியிட்டேன். அரசாங்க அல்லது வேறு பொது அமைப்புப் போல, ஒரு இலாபநோக்கற்ற அமைப்பு என்ற முறையில் நாங்கள் யார், எங்கிருந்து பணத்தைப் பெறுகிறோம் என்பதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் சொல்வதைப் பின்பற்றுபவன். எங்களுக்கு சுயநல விரோத அமைவு. சட்ட விரோதச் செயல்களை எடுத்துரைப்பவர், நிதிப் பயன்பாடு, நிதிக் கட்டுப்பாடுகள், பிற கூட்டுக்குழுமக் கொள்கைகள் ஆகிய கடினமான விதிகள் உள்ளன. அதற்காக கைட் ஸ்டார் என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழுவின் தங்க முத்திரை கிடைத்துள்ளது. இவ்வளவு ஆதரவு இருந்தாலும் பணம் எப்போதும் பற்றாக் குறைதான். 2016இல் எனது ஒப்பந்தக்காரர்களுக்குப் பணம் தர வேண்டி ஆண்டில் எட்டு மாதங்கள் விடுப்பில் இருந்தேன். 2017இல் பணியில் சேர்ந்து மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அடிப்படை நிறுவனம் பின்வாங்கிய பிறகு, நான் மீண்டும் ஊதிய வழங்கு குழுமத்தை அழைத்து டிசம்பரிலிருந்து எனக்கு ஊதியம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் பெரிய பணியாளர் குழுவை வைத்திராமைக்கு (உண்மையில் நான் ஒருவன்தான் பணியாளன்) காரணம் சமயத்தில் பணம் கிடைக்காமைதான். எங்கள் முக்கியச் செலவினங்களை மிகக் குறைவாக வைத்திருப்பதால் பஞ்சக் காலங்களிலும் உயிர்தரிக்க முடியும். தவறாக மனத்தில கொள்ள வேண்டாம்: நான் ஒற்றைப் பணியாளனாக இருப்பினும், 'பப்ளிக் ரிசோர்ஸ்' என்பது கடவுளுக்கு அடுத்து நேர்மையான, அரசு சான்றிதழ் பெற்ற இலாபநோக்கற்ற, மில்லியன் கணக்கான மக்களுக்குப் பணி புரியும், சிற்றளவு நிறுவனம். எங்களுக்குச் சிறப்புமிக்க, உதவிகரமான இயக்குநர் குழுவும், வணிகத் தொழிலில் மிகச் சிறந்த ஒப்பந்தக்காரர்கள் சிலரும் உள்ளனர். இணையத்தில் எனது ஆழமான அறிவின் காரணமாக, கணினிச் சேமிப்பு, அலுவலக உதவி, பிற வசதிகளை என்னால் தர முடிகிறது. அது சிலிகான் சமவெளியில் நல்ல நிதிவளத்துடன் தொடங்கப் பெறும் எந்த முனைவையும் பொறாமைக்குள்ளாக்கும். எங்களுக்கு மிகப் பெரிய கொடைகள் கிடைக்கும்போது மிகுதியான பணியாளர்களை அமர்த்துவதற்கு பதிலாக நான் முதலீடுகளைப் பெறச் செலவிடுகிறேன். உதாரணமாக அமெரிக்க மேல்முறையீட்டு அவைக் கருத்துகளை வாங்குவதற்காக 600,000 டாலரும் பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை வாங்குவதற்கு 250,000 டாலரும் செலவிட்டேன். 1891இல் அமெரிக்க மேல்முறையீட்டு அவை தொடங்கியது முதலாக அதன் ஒன்பதாம் சுற்றுச் சுருக்கங்களின் 3.5 மில்லியன் பக்கங்களை இணையக் காப்பகம் ஸ்கேன் செய்வதற்காக 300,000 டாலர் செலவிட்டேன். நான் ஏன் அச்சிடுகிறேன் பலபேர், ஸ்டார்ட்டர் போன்ற கும்பல்வளப் பயன்படுத்துத் தளங்களை நான் பணம் தேடுவதற்குப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினர். நான் அதைச் சில முறை முயன்று பார்த்திருக்கிறேன். அது ஒருபோதும் வெற்றிகரமாக அமையவில்லை. ஏதாவது மிகப் புதிய, வேறெங்கும் கிடைக்காத வன்பொருள், புத்தகம், அல்லது பருப்பொருளைத் தருவதாக மக்களுக்குக் கூறும்போது கிக்ஸ்டார்ட்டர் போன்ற தளங்கள் நன்கு பயன்படுகின்றன. ஆனால் அந்த உலகத்தில், ஒரு நல்ல சேவையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகப் புத்தகங்களையோ பிற பரிசுகளையோ அளித்தாலும் நமக்கு நேரம் நல்லதாக இருப்பதில்லை. விடுமுறை நாட்களில் சிறிய கொடைகளுக்கு வேண்டுகோள் விடுக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் வெளிப்படை யாகவே மக்களுக்குத் தங்கள் தனித்த கொடைகளை இடுவதற்கு நான் பரிந்துரை செய்யக்கூடிய முக்கியமான இடங்கள் பல உண்டு. ஈ.எஃப்.எஃப் போன்ற வலைத்தளச் செயல்களில் அல்லது இணையக் காப்பகத்தில் தொடங்கி, நிஜமான உலகத்தில் உணவு வங்கி, இடர் மீட்பு, இன்னும் பலப்பல நல்ல அறக்கொடைகள் உண்டு. கும்பல் வளப் பயன்படுத்துத் திட்டங்கள் மிகப் பெரிய வேலைதான்-நிதி திரட்டலுக்காக இருப்பினும், பேசர் கட்டணம் போன்ற பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்ப்பதாக இருப்பினும். பொது மக்களைக் கவர்வதற்காக அன்றி இலக்கை நோக்கிச் செலுத்தப்படும் எனது சொந்த அச்சிடும் முயற்சியில் அந்த வேலையை ஈடுபடுத்தல் மிகவும் பயனுள்ளது என்று கண்டிருக்கிறேன். உதாரணமாக, இந்தியாவின் கட்டட விதியை எச்டிஎம்எல்-மொழிக்கு நல்ல படங்களுடன் நாங்கள் மாற்றிய பிறகு, நான் இரண்டு-பாக அழகான கெட்டியட்டையில் தூசுபடியா உறைகளுடனும் இந்தியக் கட்டடங்களிலிருந்து புத்தக வரலாற்று அச்சுகளுடனும் அச்சிட்டேன். அதை வடிவமைத்தது பாயின்ட். பி. ஸ்டுடியோ. நான் ஒரு டஜன் பிரதிகள்தான் அச்சிட்டேன், ஆனால் அவை கண்ணுக்கினியவையாக இருந்தன. நான் செய்து வரும் பணிக்குரிய ஆற்றலை எடுத்துக் காட்ட இந்தப் பிரதிகளை சாம் பிட்ரோடா போன்ற நபர்களுக்கும் இந்தியத் தர நிறுவனத்துக்கும் அனுப்பினேன். நான் இதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறேன், என் முயற்சி நிஜமானது என்பதையும் இந்த எல்லாப் பணியும் மெய்யான மேம்படுத்தலுக்குக் கொண்டு சென்றது என்பதையும் அவர்களுக்குக் காட்ட விரும்பினேன். இதேபோல டிலாவேர் கூட்டுக்குழும விதியின் சட்டத்துக்குப் புறம்பான வடிவம் ஒன்றை நான் உருவாக்கினேன். அரசுச் செயலரின் அனுமதியின்றி அதிகாரபூர்வமற்ற உருவாக்கத்துக்கு விதிப்படி சிறைத்தண்டனை உண்டு. அவர்கள் கவனத்துக்குப் பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டி அந்தப் பிரதிகளை அரசுச் செயலர், அட்டர்னி ஜெனரல் ஆகியோர்க்கு அனுப்பினேன். புதிதாகப் பணி ஏற்க வந்த பூ பிடேனுடன் ஒரு நண்பர் மூலமாகத் தனிப்பட்ட தொடர்பு கொண்டாலும், அவர்களிடமிருந்து எனக்கு எவ்விதத் தகவலும் இல்லை. கௌரவ விருந்தினருக்கு மிக விரிவாக அச்சிட்ட ஆவணத்தை அளிக்கின்ற மரபு இந்தியாவில் உண்டு. அதனால் தூண்டப்பட்டு நான் பல அறிக்கைகளையும் உரைகளையும் அச்சிட்டேன். உதாரணமாக, சொற்பொழிவுகள் ஆற்றியபோது காந்தி இப்படிப்பட்ட அறிமுக உரைகள் சிலவற்றைப் பெறுவதுண்டு. அந்த உரைகள் அதைப் பெறுவோரின் பற்பல சிறப்புகளையும் எடுத்துரைப்பவை, மிக அழகாகப் பொறிக்கப்பட்டு சட்டமிடப் பட்டவை. நான் பார்த்த அறிமுகங்கள் மிக அழகாக இருந்தன. அவற்றை ஸ்கேன் செய்து அனுப்ப என் கண்கள் ஒரு தகுதியான மூலத்தைத் தேடின. வேண்டுகோள் விடுக்காதபோது காந்தியின் சுவரொட்டிகளை அச்சிடுவதில் அதிக நேரத்தைக் கழித்தேன். அவற்றை சாபர்மதி ஆசிரமத்துக்கும், அமெரிக்காவில் எனக்குப் பலவேறு முயற்சிகளில் உதவி செய்தவர்களுக்கும் அளித்தேன். காந்தியின் அஞ்சலட்டைகள், சட்டபூர்வ உருவங்கள், பிற கலை வேலைப்பாடுகளைச் செய்வதும் எனக்கு விருப்பமே. (சொல்லலாம் என்றால்) மரபான லேபல்கள், அஞ்சல் முத்திரைகள் ஆயிவற்றை அச்சிடுவதில் நான் நிபுணன். சிப்பத் தொகுப்பு என்றால், ஒரு சிலருக்குப் பின்னால் இருப்பேன். மிக விரிவான அச்சு வேலைகளை நான் செய்வதன் காரணம் எனக்கு அச்சிடுவதில் விருப்பம். மேலும் அது எனது பொறுப்புணர்வின் அடையாளமும் ஆகும். அரசு விதிகளை விடுவிப்பதில் நான் ஈடுபட்ட போது, வெளியீட்டு அறிக்கையின் பெரியதொரு வடிவத்தைத் தட்டையாகச் சிப்பம் செய்து பளபளப்பான சிவப்பு '19 X 22' அளவு குமிழித்தாள் உறையில் ஜியார்ஜியா சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பினேன். அது அவரைக் கவரவில்லை. எனினும் அவருக்குச் செய்தி புரிந்திருக்கும். அவர் பதிலளிக்காவிட்டால் நான் விடப்போவதில்லை என்பதை அவர் அறிந்திருப்பார். இதே அறிக்கையை எனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞருக்கும் அனுப்பினேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இலவசமாகவே இந்த வழக்கில் பப்ளிக் ரிசோர்ஸ்-க்குச் சார்பாக வாதிட முன்வந்தார். ஒரு அலங்காரமான அச்சு வேலை விநியோகிக்கப்படும்போதே பெரும்பாலும் கவனிப்பைப் பெறுகிறது. கூட்டுக்குழும, அரசாங்க மூத்த அதிகாரிகளில் நாம் பெற விரும்புவோர்க்குச் சிப்பத்தைச் சேர்த்துவிடுவது மட்டுமே ஒரு முடிந்துவிட்ட காரியம் அல்ல. பெறுபவர் அந்த ஆவணத்தை நான் தயாரிப்பதில் மிகுந்த நேரம் செலவழித்திருக்கிறேன் என்று உணர்வார், அதனால் ஒருவேளை அவர் அந்த விஷயத்தில் அக்கறை காட்டக்கூடும். சிலபேருக்கு வன்-நகல் பிடிப்பதில்லை, அல்லது நான் சொல்ல வருவது பிடிப்பதில்லை. அச்சிட்ட கொடிகள் இருக்கும் பெட்டி ஒன்றில் ஓர் அறிக்கையுடன் சேர்த்து, அமெரிக்கக் கொடி போலத் தோற்றமளிக்கின்ற, சிவப்பு, வெள்ளை, நீலம் வரிசையாக வருகின்ற ஒரு கசக்கல்-சிப்பமாக அனுப்பியபோது அமெக்க தேசிய தர நிறுவனம் என்னைப் பைத்தியம் என்று நினைத்தது. வெள்ளை மாளிகையின் காஸ் சன்ஸ்டீன் அலுவலர்களைப் பெட்டியை அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பச் சொன்னதால் அது பெரிய பிளாஸ்டிக் பையில் வந்து சேர்ந்தது. மாறாக, வெள்ளை மாளிகையில் மேற்குப் பகுதிக்கு வண்டிகளில் சிப்பங்களைக் கொண்டுவரும் அஞ்சல் அளிப்பு அலுவலர்கள் என் சிப்பங்களால் பெரிய பாராட்டைப் பெற்றார்கள் என்று ஜான் பொடேஸ்டாவின் உதவியாளரிடமிருந்து கேள்விப்பட்டேன். அமெரிக்காவின் ஆவணகர் எனது சிப்பத்தை விரும்பினார். "மிக அழகான காட்சிப்படுத்தல்" என்று மின்னஞ்சல் மூலமாக என்னைப் பாராட்டினார். காங்கிரஸ்-நபர் டேரல் இஸ்ஸா அந்தச் சிப்பத்திலிருந்த அமெரிக்கக் கொடியினால் மிகவும் கவரப்பட்டு அதன் நிழற்படத்தை எனக்கு ட்வீட் செய்தார். கூட்டாட்சி வணிகக் குழுவின் தலைவர ஜான் லேபோவிட்ஸ் எனது சிப்பவேலையை மிகவும் விரும்பியதாகக் கூறினார். பிரபலமான போயிங் போயிங் என்ற வலைப்பதிவு அந்த விஷயத்தை எனது சட்ட நினைவுக்குறிப்புடன் கூடிய செய்தியாக வெளியிட்டது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார். ஒரு வணிகக் குழுத் தலைவர் வலைப்பதிவுகளைப் படிப்பார் என்று யாருக்குத் தெரியும்? (அநேகமாக) மானிட அறிவு முழுமையையும் பெறும் வாய்ப்பு நிதி கிடைக்காமல் போய், ஏபிஏவும் என்னை முடக்குவதற்கு இடையில், அரசாங்கப் பணிகளுக்கு அறிக்கை எழுதி, சட்டத்தை உடைக்கின்ற குற்றத்தை எடுத்துக் காட்டப் போதுமான என் கண்டுபிடிப்புகளை, அதில் ஈடுபட்டுள்ள டஜன் கணக்கான பதிப்பாளர்களுக்கு அனுப்புகின்ற வேலையில் என் மனம் செல்லவில்லை. அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. நான் என் இலக்குத் திட்டத்தை மறுகணிப்புச் செய்துகொண்டிருந்தேன். இந்த ஆய்வை மேற்கொண்டதில் எனக்கு மூன்று முக்கியக் கேள்விகள் இருந்தன. முதலாவது, பிரச்சினையின் சட்டப் பகுப்பாய்வு. அதை முடித்துவிட்டேன். இரண்டாவது, அரசாங்கப் பணிகளை அடையாளம் காண்பது. அதிலும் எங்கள் ஆய்வில் எங்களுக்குத் திருப்தி இருந்தது. மூன்றாவது சஞ்சிகைக் கட்டுரைகளின் நகல்களைப் பெறுதல். எனது முதல் எண்ணம், நூலகங்களிடம் சஞ்சிகைகளைக் கடன்பெற அனுமதிபெற்று, பிறகு இணையக் காப்பகம் அவற்றை ஸ்கேன் செய்யச் சொல்வதாக இருந்தது. இந்த மாபெரிய பணியைச் சாதிப்பதற்கான கொடையைப் பெறுவதற்கு, பெருமளவில் எங்கள் வரவுசெலவுத் திட்டம், நூலகங்கள் மற்றும் இணையக் காப்பகத்திற்கான நிதிகள் அடிப்படையில் அமைந்திருந்தது. ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டுரைகளைத் தேடி எடுப்பது கடினம். நூலகங்கள் ஒருவகையில் கஷ்டங்களைத் தவிர்க்கவே விரும்புகின்றன. ஆனால் இரண்டு நூலகங்களேனும் எங்கள் திட்டத்தை ஏற்க முன்வந்தன. இந்தக் கட்டுரைகள் எல்லாம் தகவல்தளங்களில் உள்ளன, மின்னியல் முறையில் கிடைக்கின்றன, எனவே ஸ்கேன் செய்வது உண்மையில் மிகையான வேலைதான். ஒருவர் எளிதாக ஒரு பதிப்பாளரின் தளத்தில் நுழைவது (லாக் செய்வது) இயலாது. காரணம், பயன்படுத்துவதற்கு கெடுபிடியான சட்டவிதிகளும் தொழில்நுட்பத் தடைகளும் உள்ளன. அவை வரையறுத்த வழிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுமாறு இந்தக் கல்வியியல் ஆய்வைப் பூட்டி வைக்கின்றன. கஜக்ஸ்தானின் இளம் பெண்விஞ்ஞானி அலெக்சாண்ட்ரா எல்பக்யானுக்கும் உலகமுழுவதும் உள்ள அவரது உடனாளர்கள், பணித்தோழர்களுக்கும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. இன்று அறிவு பூட்டிவைக்கப்பட்டு காலனியப் படுத்தப் பட்டிருக்கிறது. ஏதோ 'சிறப்பான' சில பல்கலைக் கழகங்களில் படிக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் எல்லையின்றி அறிவைப் பெறும் முழுவாய்ப்பிருக்கிறது. ஆனால் உலகின் பிற பகுதிகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அலெக்சாண்ட்ரா இதற்கு ஒரு வழி கண்டார். ரஷ்யாவை அடித்தளமாக வைத்து ஸை-ஹப் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன்வழியாக சஞ்சிகைகளின் 66 மில்லியன் கட்டுரைகளைப் பெறலாம். முன்பு அறிவுசார் இலக்கியத்தைப் பெற முடியாதிருந்த உலகமுழுவதுமுள்ள் விஞ்ஞானிகளுக்கு ஸை-ஹப் மிகவும் பயனுள்ளதாக இருப்பது உறுதி. 2017இல் ஸை-ஹப்பின் அதிகபட்சமான 24.9 மில்லியன் கட்டுரைகளின் தரவிறக்கம், சீனாவிலிருந்து செய்யப் பட்டது. இரண்டாவது இந்தியா, 13.1 மில்லியன் இறக்கங்கள். மூன்றாவது அமெரிக்க ஐக்கிய நாடு, 11.9 மில்லியன் இறக்கங்கள் செய்தது. உலகமுழுவதும் அறிவியல் கட்டுரைகள் கட்டுப்பாட்டிற்குள்ளாகி இருப்பதற்கு இது தெளிவான சான்று. பிரேசில், ஈரான், இந்தோனேசியா, ரஷ்யா, மெக்சிகோ ஆகியவையும் இந்தத் தகவல்தளத்தை விரிவாகப் பயன்படுத்துகின்றன. பதிப்பாளர்களுக்கு இதில் மகிழ்ச்சியில்லை. அதிலாபத்தையும் அயோக்கியத்தனமான லாபத்தையும் வேண்டி அவர்கள் நிர்வாகிகளின் முழு வெறியுடன் அலெக்சாண்ட்ராவுக்கு எதிராகச் சென்றுள்ளனர். பதிப்பாளர்களுக்கு ஈட்டுத்தொகை வேண்டும்தான். ஆனால் பொருத்தமற்ற பதிப்புரிமை உறுதிப்பாடுகளும், பிற சட்ட ஏமாற்றுவேலைகளும் இப்போது அவர்களது ஒழுக்கநிலையைச் சந்தேகப்பட வைத்துள்ளன. அவர்கள் அலெக்சாண்ட்ரா மீது நியூ யார்க்கில் வழக்குத் தொடுத்து அவர் வராததால் பல மில்லியன் டாலர்கள் அவர்மீது அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் புலப் பெயர்கள், இணையச் சேவை, இன்னவற்றை நீக்கவேண்டும் என்ற உத்தரவை அவர் பெற்றுள்ளார். வேறு வழக்குகளும் அவர்மீது நிலுவையில் உள்ளன. நான் அலெக்சாண்ட்ராவைச் சந்தித்ததில்லை. அவரைத் தெரிந்த சில நண்பர் சிலர் எனக்கு உண்டு. ஆனால் நாங்கள் தொடர்பு கொண்டதில்லை. யூ-ட்யூபில் அவரது நேர்முகத்தைக் கண்டேன். மிகுந்த நிதானத்துடனும் மிகுந்த இளமையுடனும், ஏன், மிகுந்த தைரியத்துடனும் இருந்தார். … ஏப்ரலில் எனக்கு எட்டு வட்டியக்கிகள் (டிஸ்க்-ட்ரைவ்கள்) கிடைத்தன. ஒவ்வொன்றும் எட்டு டெராபைட் சேமிப்புத்திறன். அந்த வட்டுகளில் மனித அறிவு பூராவும் இருந்தது. அல்லது குறைந்த பட்சம் அதன் அதிகமான பகுதி இருந்தது. இது ஸை-ஹப்பிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பகுதி. நான் தகவல்களை இரண்டு 'வட்டு-அணிகளில்'(அரேக்களில்) சேமித்தேன். ஒவ்வொரு வட்டு-அணிக்கும் எட்டு இயக்கிகள். நான் ஓர் அணியில் இரண்டு இயக்கிகளை இழந்தாலும் எனக்குத் தகவல் இழப்பு ஏற்படாது. இந்தச் செயல்முறையில் இரு மாதங்கள் சென்றன. தகவல்களைச் சோதிப்பதில் மேலும் இரு மாதங்கள் செலவிட்டேன். பிறகு எனது அலுவலகத்திலிருந்து அணிகளை வேறொரு இடத்துக்கு நகர்த்தினேன். தொடக்கத்தில் அரசாங்கத் திட்ட வேலைகளுக்காகத்தான் நான் தகவல்களைச் சோதித்தேன். தகவல் மாற்ற நோக்கத்துக்காகத் தகவல்தளத்தைப் பயன்படுத்தினேன். அதைச் சோதித்தது, கட்டுரைகள் மெய்யாகவே பொதுமக்கள்-களத்தில்தான் உள்ளனவா என்று காண்பதற்கும் அப்படி உள்ளனவற்றை மேலும் பரவலாக்குதற்கும்தான். மக்கள் தங்கள் நம்பிக்கைக்கு உரியனவற்றுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதும் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. ஆகவே நான் என்ன செய்தேன், எதற்காகச் செய்தேன் என்பதை உலகம் தெரிந்துகொள்ள ட்விட்டரில் பதிவு செய்தேன். விஷயங்களைச் சொல்லியாக வேண்டிய தேவை இருக்கிறது. அந்தக் கீச்சுகளை இப்புத்தகத்தில் பின்னிணைப்பாகத் தந்திருக்கிறேன். அரசாங்கப் பணிகளின் எங்கள் ஆய்வு முடிவுகளை நான் டிசம்பரில் எழுதிவிடுவேன் என்று எனக்குள் உறுதிசெய்து கொண்டேன், ஆனால் முடியவில்லை. பதிலாக, காந்தி 'ஸ்கேன்'களில் வேலை செய்தேன். பல ஆண்டுகளாக என் மனத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வார்த்தையைப் பற்றிச் சிந்தித்தேன். அந்த வார்த்தை "சுயாட்சி விதி". எப்படி இவ்வார்த்தையைப் பெற்றேன் என்பது நீண்டதொரு சுற்றுப்பாதை. அந்தப் பாதையின் தொடக்கம் வாஷிங்டன் டி.சி.யின் சதுப்புநிலங்களில் ஏற்பட்டது. வாஷிங்டன் டி.சி.யில் நான்கு கால-எல்லை வரையறைகளில் இயங்கினேன். நான் அந்த நகரத்தை நேசிக்கிறேன், ஆனாலும் அதை விட்டுத் தப்பும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. 2017இல் அங்கிருந்து மறுபடியும் தப்பினேன். ஃபெட்ஃபிளிக்ஸ், திரைப்படங்களில் நான் கழித்த நேரம் 'பப்ளிக் ரிசோர்ஸை' நிறுவியபோது சட்டத்தை யாவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் நான் தொடங்கிய பணி. 1990களில் சட்டத்தைப் பற்றி யோசித்தேன். ஆனால் அது மிகக் கடினமாகத் தோன்றியது. ஆகவே தனிக்காப்புரிமை, எஸ்ஈசி போன்ற பெரிய தகவல்தளங்களில் கவனத்தைக் குவித்தேன். ஆனால் அமெரிக்க முன்னேற்ற மையத்தில் ஜான் பொடேஸ்டாவுக்காகத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக வாஷிங்டன் டி.சி.யில் ஈராண்டுகள் வரை பணிசெய்த பிறகு நான் இலாபங்கருதா சிறிய அமைப்பொன்றை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று அவரிடம் கூறினேன். கலிஃபோர்னியாவுக்கு மறுபடியும் சென்று என் நண்பர் டிம் ஓ' ரேய்லியைப் பார்த்தேன். அவரது தலைமையகத்தில் ஓர் அலுவலகத்தை வாடகைக்குப் பெற்று, பணி செய்யத் தொடங்கினேன். இது நடந்தது 2017இல். நான் என்ன செய்கிறேன் என்பதில் முதலில் எனக்குத் தெளிவில்லை. வீடியோக்களில் அதிக நேரம் செலவிட்டேன். தேசியக் காப்பகங்களுக்குத் தன்னார்வலர்களை அனுப்பி எங்கள் ஃபெட்ஃபிளிக்ஸ் திட்டத்தின் பகுதியாக ஆயிரக்கணக்கான அரசு வீடியோக்களை நகலெடுத்துப் பதிவிட்டேன். தேசிய தொழில் நுட்பத் தகவல் சேவையுடன் மேலும் வீடியோக்களைப் பெறக் கூட்டுமுயற்சி ஒன்றைத் தொடங்கினேன். அவர்கள் தங்கள் விஎச்எஸ், பீட்டாகேம், யூமேடிக் நாடாக்களை அனுப்பினால் நான் கணினிப்பதிவு செய்து திரும்ப அவர்களுக்கு பதிவேற்றிய வீடியோக்களை வட்டியக்கியாக அனுப்புவேன் என்று கூறினேன். இதில் அரசாங்கத்துக்கு எச் செலவுமில்லை. இலவச உதவி. இதைத் தொடங்கிய பிறகு, பாதுகாப்புத் துணைச் செயலராக ஒபாமா நியமித்த ஒருவரைச் சந்தித்தேன். இராணுவத்தில் வீடியோக்களின் பெரிய தகவல்தளம் உண்டு. அங்குள்ள அமைப்பின்படி பணியிலுள்ள ஒருவர் டிவிடி-க்களைப் படிஎடுக்க களத்திற்கு அனுப்பலாம். பெரும்பாலான வீடியோக்கள் இரகசியமல்லாத பயிற்சிப் படங்கள் மற்றும் 'பறத்தலின் பெரிய வரலாறு' போன்ற வரலாற்று விஷயங்கள். எனக்கு 800 டிவிடிகளை அனுப்புமாறு அவரிடம் கூறினேன். 'மின்சாரம் எப்படி வேலைசெய்கிறது' போன்ற பழைய இராணுவப் படங்கள் யூ-டியூபில் மிகவும் பிரபலமானவை. பார்வையாளர் பதிவுசெய்த வகுப்பினை விட எப்படி ஒரு குறிப்பிட்ட வீடியோ மிகச் சிறப்பாக அந்தத் துறையை விளக்குகிறது போன்ற கருத்துரைகள் எனக்கு வந்தவாறு இருந்தன. எல்லாமாக, இணையதளக் காப்பகத்திலும் யூ-டியூபிலும் 6,000 வீடியோக்களை இட்டோம். எங்களுக்கு 72.3 பார்வைகளுக்கு மேல் கிடைத்தன. இந்த அரசாங்க வீடியோக்களை இடத் தொடங்கியபோது எனது யூ-டியூப் சேனல்கள், 'விஷய அடையாளப் பொருத்துகை' செய்யத் தொடங்கின. பதிப்பாளர் எவரேனும் தங்கள் சொந்த வீடியோக்களை இடும்போது, அவை ஊடகத்தில் முக்கிய விற்பனைப் பொருளாக இருப்பின், அவர்கள் யூ-டியூபின் இதே போன்ற வேறு வீடியோக்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ இருக்கின்றனவா என்று தேடச் சொல்லலாம். அதேபோன்ற வீடியோ கிடைத்தால் உள்ளடக்கப் பதிப்பாளர் மற்றவருடைய வீடியோவைக் கொடிக்குறியிடலாம், முறைப்படியான தடைக்குறிப்பு ஒன்றையும் அனுப்பலாம். தடைக்குறிப்பைப் பெற்றால், நீங்கள் பதிப்புரிமைப் புலத்திற்குச் செல்லும் வரை உங்கள் அக்கவுண்ட் பூட்டப் படுகிறது. பதிப்புரிமைப் புலத்தில் எது சட்டபூர்வம், எது இல்லை என்பது பற்றிய வினாக்கள் பலவும் விடையிறுக்கப் படுகின்றன. பதிப்புரிமைப் புலம் உங்களை விடுவித்தால் நீங்கள் உங்கள் அக்கவுண்டுக்குத் திரும்பலாம். ஆனால் உங்கள் சட்ட இடர்ப்பாடு நீங்கும் வரை அது குறைந்த சலுகைகளுடன் செயல்படுகிறது. மூன்று முறை தடை விதிக்கப்பட்டு உங்களால் தற்காப்புச் செய்துகொள்ள முடியவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படுகிறது. தடைக்குறிப்பு வந்தால், அச்சமயத்திலேயே நீங்கள் முறையான சட்டக் குறிப்பொன்றை எதிர்த்தரப்புக்கு அனுப்பலாம். அந்தச் சமயத்தில், அவர்கள் சொந்தமெனக் கூறும் சொத்தினை நீங்கள் நீக்காததால், உங்களை அவர்கள் கோர்ட்டுக்கு இழுக்கலாம். பலநூறு உள்ளடக்கப் பதிப்பாளர்கள் எந்த நிகர்மையை எங்குக் கண்டாலும், அது ஏற்கெனவே பொதுமக்கள் களத்தில் இருந்தாலும், (உதாரணமாக அரசாங்க வீடியோபதிவாளர்கள் ஒன்றைப் படமாக எடுக்கும்போது ஒரு வலைத்தளமும் அதையே எடுக்கலாம்) அதை உரிமை மீறல் என்றார்கள் என்பது நான் எதிர்கொண்ட பிரச்சினை. பெரும்பாலான சமயங்களில், எனக்குத் தடைக்குறிப்பு வந்தேபோது, உள்ளடக்க உரிமை யாருடையது என்பது பற்றி அந்தப் பதிப்பாளர் தவறாகக் கருதியிருக்கலாம், அல்லது அதைப் பயன்படுத்த நிரந்தர உரிமையை அவர் அரசாங்கத்திற்கு அளித்திருக்கலாம். வேறு சொற்களில், இவை அமெரிக்க அரசாங்கத்தின் படைப்புகள். நான் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்த முதல் சில ஆண்டுகளுக்கு இந்தப் போலியான உரிமைகோரல்களை எதிர் கொள்வதில் அதிக நேரத்தைச் செலவழித்தேன். 2011 அளவில் 5,900 வீடியோக்களுக்கான 325 உள்ளடக்க அடையாளக் கோரிக்கைகளில் வெற்றிகண்டேன். அவற்றில் இரண்டுதான் உண்மையிலேயே பதிப்புரிமை மீறல்கள். தாய்லாந்தைப் பற்றிய 1927ஆம் ஆண்டுப் படம் ஒன்று. 1940இன் டைம் குழுமப் படம் மற்றொன்று. கொடைதருபவர் கட்டுப்பாட்டுடன் சேர்ந்து இணையக் காப்பகத்தில் அது வைக்கப்பட்டிருந்தது. மீதியுள்ள யாவும் இலவசம், தெளிவானவை. எனது முடிவுகளை எழுதி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆவணச் சேகரிப்பாளர் டேவிட் ஃபெரியரோவுக்கு அனுப்பினேன். 2011 முதல் எனது சேனல், தடைகள் இன்றி அமைதி பெற்றிருந்தது. அதை மில்லியன் கணக்கானோர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். 2014 'பாப் ஹோப் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்வில்' ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஹோப் இறந்த பிறகு, வீடியோ கம்பெனியை நடத்தியவர் எங்களுடன் முரண்பட்டு, ஒத்துழைக்க மறுத்து விட்டார். 'பாப் ஹோப் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்வு' அரசாங்கத்தின் மிகப் பெரிய செலவில் வியட்நாமின் இராணுவதளம் ஒன்றில் எடுக்கப்பட்டதாயினும் அரசாங்கத்துக்கு வரையுறைப்பட்ட உரிமை மட்டுமே உண்டு என்றார் நடத்தியவர். அரசாங்கத்துடன் அவர்கள் செய்துகொண்ட அசல் ஒப்பந்தத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. எனவே அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். 2007இல் ஃபெட்ஃபிளிக்ஸ் சேனலை உருவாக்கியத்திலிருந்து மக்கள் அதைப் பார்ப்பதில் 207,066,021 நிமிடங்களைச் செலவு செய்திருந்தனர். அது 394 ஆண்டு பார்வை-நேரத்துக்குச் சமம். முன்னர் நிலவறைகளில் தூசுபடிந்து கிடந்த வீடியோக்களுக்கு இவ்வளவு யோகம் கிடைத்தது. எனது கண்ணீர்த் தீவு டிசம்பரில் மீண்டும் பதிப்புரிமைப் புலத்திற்கு என்னை அழைத்தது ஆச்சரியமாக இருந்தது. இச்சமயம் சார்லஸ் குகன்ஹீம் தயாரித்த "நம்பிக்கைத் தீவு, கண்ணீர்த் தீவு" படத்தை நான் வெளியிட்டதற்குத் தடைக்குறிப்பு அனுப்பப் பட்டது. எல்லிஸ் தீவினுடைய அழகிய கதையையும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குப் புலம் பெயர்ந்ததையும் ஜீன் ஹேக்மன் என்பவர் எடுத்துரைக்க, தேசியப் பூங்காச் சேவை அதைக் காட்டியது. தேசியத் தொழில்நுட்பத் தகவல் சேவை அந்த வீடியோவைக் கணினிமயப் படுத்த எனக்கு அனுப்பியது. நான் 2008இல் ஆன்லைனில் அதை வெளியிட்டேன். அதற்கு 80,000 பார்வைகள் கிடைத்திருந்தன. தேசியப் பூங்காச் சேவை அந்தப் படத்திற்கு ஒரு பக்கத்தை உருவாக்கியிருந்தது. நான் இணையக் காப்பகத்தில் வெளியிட்டிருந்த பிரதியைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர்கள் அதைத் தங்கள் வகுப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. தடைக்குறிப்பை அனுப்பியவர் வாஷிங்டனைச் சேர்ந்த உயர்வர்க்கப் பெண்மணி. தயாரிப்பாளரின் மகள் அவர். தயாரிப்பாளர் இறந்த பிறகு குழுமத்தை நடத்திவந்தார். நாங்கள் 'ஒரு மோசமான பிரதியை ஆன்லைனில் இட்டு அந்தப் படைப்பைக் கெடுத்துவிட்டோம், தேசியப் பூங்காச் சேவை நடத்தும் காட்சியகங்களில் மட்டுமே அது காட்டுவதற்குரியது, நான் ஆன்லைனில் இலவசமாக அதைத் தருவதன் மூலம் தேசியப் பூங்காச் சேவையின் பணத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்' என்று குற்றம் சாட்டினார். நான் படத்தின் முடிவிலுள்ள நன்றிகூறலை கவனமாகப் பார்த்தேன். அது குகன்ஹீமினால் இயக்கி, தயாரிக்கப் பட்டு தேசியப் பூங்காச் சேவையினால் "வழங்கப்பட்டது" என்று கூறியது. நான் பதிப்புரிமைப் புலத்தின் ஆணையை ஏற்று, யூ-ட்யூபிலும், இணையக் காப்பகத்திலும் அந்த வீடியோவைப் பொதுமக்கள் பார்க்காவண்ணம் நீக்கிவிட்டேன். ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். ஆயினும் கலக்கமடைந்தேன். குகன்ஹீம் புரொடக் ஷன்ஸ் அமேசான் வாயிலாக இதே வீடியோவை விற்றுவந்ததை கவனித்தேன். ஆகவே நான் அதிலிருந்து ஒரு பிரதியை வாங்கினேன். பிறகு தேசியக் காப்பகத்தின் டேவிட் ஃபெரேரோவுக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். அவர் அதை திரைப்படப் பிரிவுக்கு அனுப்பினார் போலும், ஏனெனில் ஏறத்தாழ ஒரு வாரத்திற்குப் பின் மூத்த சேகரிப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தேசியப் பூங்காச் சேவையின் ஒப்பந்தத்தின் நகல் ஒன்றை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். அது 'வாடகைக்குத் தருவதற்கான ஒரு படைப்பு என்றும் தயாரிப்பாளருக்கு அப் படைப்பின்மீது எவ்வுரிமையும் இல்லை' என்றும் தெளிவாகக் கூறியது. அது மட்டுமல்ல, தயாரிப்புக் குழுமம் 325,000 டாலர் மக்கள் வரிப்பணத்திலிருந்து இந்தப் படத்தைத் தயாரிக்க அளித்திருப்பதாகவும், அதற்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்-இடமிருந்து கொடையும் தரப்பட்டதாகவும் கூறியது. ஆனால் அவர்கள் இதை அமேசானில் விற்றதோடு பதிப்புரிமையையும் வைத்துக் கொண்டு வருமானம் பெற்றார்கள். அதாவது, பதிப்புரிமை என்பதே இதில் இல்லை. அவர்கள் எனக்கு அனுப்பிய தடைக்குறிப்பு வெற்றும் செல்லாததும் ஆகும். யூ-ட்யூப் அவர்களது தொடக்கத் தடையாணையை ஏற்குமுன்பு தயாரிப்பாளர்கள் பொய்ச்சான்றுக் குற்றத்தின்கீழ் தாங்கள்தான் படத்தின் நேர்மையான சொந்தக்காரர்கள் என்று உறுதியளித்திருந்தனர். தவறான தடையாணை அனுப்பினால் அவர்களுக்கு சட்டபூர்வ தண்டனை வழங்கப்படும் என்று தெரியும் என்று உறுதிமொழி கூறியிருந்தனர். நான் பதிப்புரிமையை மீறுகிறேனா என்பதை அறிய அவர்கள் ஐந்து சரிபார்ப்புக் கட்டங்களை, ஒவ்வொன்றும் மீறலை உறுதிப்படுத்துகிறதா என்று நோக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் முட்டாள்களாக இருக்கலாம். ஆனால் என்னைக் குற்றவாளி எனக்கூறி மிகுந்த தொல்லை கொடுத்துவிட்டனர். அதுதான் மிகவும் மோசம். எனக்கு ஒப்பந்தத்தை அளித்ததோடு, தேசியக் காப்பகம் ஒரு உயர்தெளிவு வீடியோக் கோப்பினை அனுப்புவதாகவும் கூறினர். நான் யூ-ட்யூப், இணைய ஆவணக்காப்பக வீடியோக்களை மறுபதிவிட்டேன். அமேசான் டிவிடியையும் பதிவிட்டேன். தேசியக் காப்பகத்திலிருந்து வந்த வட்டியக்கியில் 28 நிமிட 163 ஜிகாபைட் கோப்பாக அந்த வீடியோ மிகச் சிறந்த நிலையில் இருந்தது. அதையும் பதிவிட்டேன். சுருக்கப்படாத உயர்தெளிவு வீடியோ கோப்பிலிருந்து 276 நிலைப்படங்களை எடுத்துப் பதிப்புரிமை அற்ற இருப்புப் படங்களாக வெளியிட்டேன். அது தேசியக் காப்பகத்தின் பணியாளர்க்கு ஒரு புதிய, ஆர்வந்தரும் பயன்பாடாகத் தோன்றியது. நான் தொடர்ந்து தேசியக் காப்பகத்துடன் பணி புரிந்து வருகிறேன். அவர்கள் திரைப்படத்திலிருந்து கணினிப்படுத்திய பார்வை-நகல்களை மேலும் எனக்குத் தருவதாகக் கூறியுள்ளனர். பதிப்புரிமை என்பது ஒரு பழைய பிரச்சினை, ஓர் இருதரப்பு உடன்பாடு, அதில் சொந்தக்காரர்களின் உள்ளடக்கத்தை அத்து மீறிப் பயன்படுத்தித் தவறிழைப்பதாகப் பலபேர் நினைக்கிறார்கள். பதிப்புரிமை வழக்குகளில் எனது அனுபவம் பலபேர் தங்களுக்குச் சொந்தமில்லாத உள்ளடக்கத்திற்கு உரிமை கோருகிறார்கள் என்பதே. எனவே அவர்களின் உரிமை கோரல்கள், குறிப்பாக அது அரசாங்கத்தின் பணியாக இருந்தால், நுண்ணாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். காங்கிரஸ் பேரவையின் 'தற்செயலான' வீடியோ காப்பகம் நான் உண்மையில் ஃபெட்ஃபிளிக்ஸில் திரும்பச் சேர்ந்தேன். வீடியோ துறையில் எனது தொடக்க ஆர்வம் காங்கிரஸின் (பேரவையின்) நடப்புகளில் இருந்தது. ஜான் பொடேஸ்டா வுக்காகப் பணி புரிந்த போது, இரண்டாண்டுகள் வரை எல்லாக் காங்கிரஸ் நடப்புகளையும் ஆன்லைனில் ஒலிபரப்புத்-தரமான வீடியோக்களாக வெளியிட ஒரு திட்டத்தை மேற்கொண்டேன். அதை 'ஐ-ஸ்பேன்' (eye-span) என்று அழைத்தேன். இந்த திட்டத்தை வலியுறுத்தி அவைத்தலைவர் நான்சி பெலோசிக்கு அறிக்கைகள் அனுப்பினேன். பேரவையின் பணியாளர் குழுவையும் பலமுறை சந்தித்தேன். 2010இல் பேரவையில் பெரும்பான்மை பெற்று உள்வந்த குடியரசுக் கட்சியினரிடம் பேரவை வீடியோவை ஆன்லைனின் வெளியிட உதவி பெற்றேன். அவைத்தலைவர் ஜான் போயெனர் தனது முதல் நாள் பணியின்போதே, அவையின் மேல்விசாரணைக் குழுவுக்கு அவர்களின் முழுமையான சேகரிப்பை ஆன்லைனில் இடுவதற்கு உதவி செய்யவேண்டும் என்று எனக்குக் கடிதம் அனுப்பினார். நடப்புகள் முடிந்தவுடனே, நடப்புகளையும் எழுத்துக் குறிப்புகளையும் எனக்கு அவர்கள் அனுப்புமாறு செய்தேன். பலவேறிடங்களில் உயர்தெளிவுடைய வீடியோக்களை எப்படிப் பதிவிட வேண்டுமென்று அவர்களுக்குக் கற்பித்தது மட்டுமல்ல, கேட்க இயலாதவர்களுக்கென எழுத்துக்குறிப்புகள் சேர்ப்பதற்கும் கற்றுக் கொடுத்தேன். ஆக, பேரவையின் நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் முதன்முதலாக ஓர் உயர்தரப்பதிவு எங்களிடம் இருந்தது. அவையின் மேல்விசாரணைக் குழுவின் சேகரிப்புகளையும் நான் பார்ப்பதற்குப் பேரவையுடன் எனது ஒப்பந்தம் அனுமதித்தது. ஆனால் அவையின் ஒலிபரப்பு அரங்கிற்குச் சென்று அவர்கள் உதவியைக் கேட்டபோது, அவர்களுக்கு வேறுபல முக்கியப் பணிகள் இருப்பதாகக் கூறினார்கள். நானே தகவலைப் படியெடுத்துக் கொள்ள முன்வந்தேன். ஆனால் தகவல்கள் தொழில்முறை வடிவத்தில் இருப்பதாகவும் நான் அதைப் படிக்க இயலாதென்றும் கூறினர். கொஞ்சம் புகழ்ந்த பேசிய பிறகு, கமிட்டித் தலைவர் தொலைபேசியில் அழைத்த பின்னர், நான் படிக்க இயலுமா என்று அறிவதற்காக எனக்கு ஒரு சோதனைவட்டினை அனுப்புவதாகக் கூறினர். வீடியோக்களைப் பொறுத்தவரை, அவர்களது வட்டுகளைப் படிக்க முடியாத அளவு முட்டாள் அல்ல நான்! அடுத்து நடந்தது ஒரு வேடிக்கை. பேரவை ஒலிபரப்பு, ஃபெடரல் எக்ஸ்பிரஸ் வாயிலாக ஒரு இணைப்பியை (பைண்டரை) எனக்கு அனுப்பியது. அதில் 50 ப்ளூ-ரே டிவிடி வட்டுகள் இருந்தன. திறந்து பார்த்தால், எனக்குத் தேவையான பேரவை மேல்விசாரணைக் குழுவுக்கான தகவல்கள் மட்டுமல்ல, ஒலிபரப்புத் தரத்தில் 600 மணிநேரத்துக்கு மேலான எல்லாச் சமுதாயங்களுக்கும் தேவையான தகவல்கள் இருந்தன என்று தோன்றியது. நான் உடனே ஓடிப்போய் ஆறு ப்ளூ-ரே ரீடர்களை வாங்கி எனது மேக்-டெஸ்க்டாப் கணினியுடன் இணைத்தேன். தகவல்களை ஒருநேரத்தில் ஆறு வட்டுகள் வீதம் படியெடுத்தேன். இணைப்பியை அன்றிரவே கூரியர் வழியாக வாஷிங்டனுக்கு அனுப்பிவிட்டேன். தொடர்பாளரிடம் மறுநாள் பேசி, நன்றி கூறி, மேலும் அவர்களிடம் தகவல் இருக்கிறதா என்று கேட்டேன். "ஆம், எங்களிடம் இதுமாதிரி ஏராளமாக இருக்கிறது. இன்னொன்று வேண்டுமா? " ஆகவே எனக்கு மற்றொரு இணைப்பியை அனுப்பினர். அந்தக் கோடை முழுவதும் அவர்கள் மேலும் மேலும் இணைப்பிகளை அனுப்பிக் கொண்டே இருந்தனர். நான் அவற்றைப் படியெடுத்துக் கொண்டு திருப்பி அனுப்பினேன். வாஷிங்டனுக்கு நேரில் சென்று அவர்களிடம் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அவர்களது கருவியடுக்குகளின் பின்னால் ஏராளமான வட்டியக்கிகள் உள்ளன என்று தெரிந்தது. எனவே ஃபெட்எக்ஸ் கடையிலிருந்து சிப்பம் கட்டும் ஒட்டுகளும் பெட்டிகளும் வாங்கி எல்லாவற்றையும் ரே-பர்ன் கட்டடத்தின் நிலவறைக்குக் கொண்டுவந்து அனுப்புவதற்காகப் பொதியாகக் கட்டி வைத்தேன். இந்தக் கோடையின் முடிவுக்குள் காங்கிரஸ் நடப்புகளின் 14,000 மணிநேர வீடியோக்கள் என்னிடம் இருந்தன. பிறகு நான் முன்னோக்கிச் செல்லவேண்டிய திட்டங்களைப் பற்றி விவாதிக்க பேரவைத் தலைவரின் பொது-ஆலோசகரைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. பேரவையைத் தலைநகரின் நிலவறைப் பகுதி யிலிருந்து சி-ஸ்பேனுக்கும், பிறகு இணைய-2 பேக்-போனுக்கும் 2.4 ஜிகாபைட் லைனால் இணைக்கின்ற திட்டத்தை முன்வைத்தேன். இது ஒரேசமயத்திலான 48 நடப்புகளை ஒரே நேரத்தில் நேரலையாக நாடு முழுவதற்கும் ஒலிபரப்புத்-தரத்தில் வீடியோ வாயிலாகப் பரப்ப அனுமதித்திருக்கும். அதேசமயம் இணையக் காப்பகம், யூ-ட்யூப், உள்நாட்டுச் செய்தி நிலையங்கள், பிறர் யாவருக்கும் காங்கிரஸின் செயல்முறைகள் கிடைத்திருக்கும். பிற நோக்கங்களுக்காக வைத்திருந்த் 42,000 டாலர் பணத்தை நியமிக்கப்பட்ட வன்பொருள் குறியாக்கிகள், ஈதர்னெட் ஸ்விச்சுகள் மீது செலவழித்தேன். எல்லாவற்றையும் அடுக்கில் அடுக்கி அந்த அமைப்பின் நிழற்படங்களை எடுத்துக் கொண்டேன். "இதெல்லாம் அரசாங்கத்திற்கு ஒரு செலவும் வைக்காது, வன்பொருள் ஏற்கெனவே உள்ளதுதான், இந்த எல்லா விஷயங்களையும் 90 நாட்களில் செயற்பட வைக்கலாம்" என்று விளக்கினேன். அது பயன்படுத்தப்படத் தயாராக இருந்தது. பேரவை ஒலிபரப்பு நிலையத்திலிருந்து வரும் வீடியோக்களில் உள்வரும் ஃபைபர்களை இணைக்கக்கூடிய இடமான அமெரிக்கத் தலைநகர அடித்தளத்தின் மிகச் சரியான இடமும் எங்களுக்குத் தெரியும். எங்கள் சந்திப்பு 2011 செப்டம்பரில் நிகழ இருந்தது. நாம் இவற்றையெல்லாம் 2012 ஜனவரி அளவில் இயக்க முடியும் என்று பணியாளர் குழுவுக்குக் கூறினேன். அது காங்கிரஸின் இரண்டாவது கூட்டம் தொடங்கும் நேரம். தங்கள் தலைவரின் இயக்கமிக்க தலைமைக்கீழ் முன்னேற்றத்தின் மிகப் புதிய யுகத்தில் நுழையும் நேரமும் ஆகும். அவை அதி-பிரிதிறன் வீடியோக்களை அமெரிக்காவின் செய்தி யறைகளுக்குள் நேரடியாகக் கொண்டுவந்தால் அவை உள்நாட்டின் ஒவ்வொரு தொலைக் காட்சி நிலையத்திலிருந்தும் ஒளிபரப்பாகும். இது, "ஓர் அரசு-தனியார் கூட்டு, யாவருக்கும் இலாபகரமானது" என்று தெரிவித்தேன். அலுவலில் இருந்தபோது, அவையின் ஒலிபரப்புநிலையம் காங்கிரஸின் எல்லா ஆவணங்களையும் தவறுதலாக அனுப்பிவிட்டது என்று தனியாக, அவைத்தலைவரின் பணிக்குழாமிடம் குறிப்பிட்டேன். நான் ஒரு தனிநபர் குழுவாக வேலை செய்து வந்தேன் என்று நினைத்த அவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமாக இருந்தது. நமக்கிடையில் முறையான செயல்படு உடன்படிக்கை இல்லாததாலும், தகவல்கள் அரசின் வேலைகள், அவை பொதுக்களத்தில் உள்ளவை என்பதாலும், நான் இவற்றைப் பதிவிட்டால் யாருக்கேனும் ஏதாவது மறுப்பு இருக்கக்கூடுமா என்று கேட்டேன். நான் அவர்களுக்காகச் செய்த அடுக்கின் நிழற்படங்களையும், அந்த அமைப்புப் பற்றிய விரிவான படங்களையும் அட்டவணைகளையும் அவர்களிடம் விட்டுவந்தேன். பணிவிடுபாடு வேடிக்கைதான். காங்கிரஸின் நூலகம் மிக விரிவான (விலையுயர்ந்த) ஆடியோ-வீடியோ வசதியை வர்ஜீனியாவில் வைத்திருந்தார்கள். அவையின் ஒலிபரப்பு நிலையத்திலும், நிர்வாக அதிகாரத்திலும் அதிகமான பணியாளர்கள் இருந்தனர். நூலகப் பணியாளர் தொகுதியினர் இதெல்லாம் அவர்களுடைய பணி, காலப்போக்கில் அவர்கள் இவற்றைச் செய்திருப்பார்கள் என்று உறுதியாகக் கருதினார்கள். அல்லது செய்யத் தொடங்கிவிட்டால் அதை நன்றாகச் செய்யப் போகிறார்கள். எவ்வாறாயினும், நான் அதைச் செய்வதை அவர்கள் விரும்பவில்லை என்று தெளிவாகியது. ஆகவே முழுமையாக இவ்வேலையிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். காங்கிரஸ்-நபர் லுங்ரன், அவை நிர்வாகக் குழுவின் தலைவர். எனக்கு இனிமேல் தகவல்கள் தரக்கூடாது என்று ஓர் ஆணை பிறப்பித்தார். நூலகம், மிகவும் மோசமான கீழ்-அலைவரிசை ஒலிபரப்புத் தீர்வை நிறுவி, முழுச் சேகரிப்பும் பொதுவில் எவருக்கும் கிடைக்காமல் செய்ய மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டது. முன்பு அவர்கள் செய்ததைவிட (அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை) இது பரவாயில்லை என்றாலும் மிக மோசமாகத்தான் இருந்தது. எனக்கு வேலையில்லை. ஒரு வன்பொருள் தொகுப்புதான் இருந்தது. அது உள்ளூர் இணையச் சுழற்சிக் குவியலில் ஆறு ஆண்டுகள் கழித்துச் சேர்க்கப்பட்டது. எவ்வளவு வீண்! பேரவை நிர்வாகக் குழுவுக்கான வழக்கறிஞர்களை நான் சந்திக்க நேர்ந்ததும் ஒரு அபத்தமான விஷயம். நான் ஏற்கெனவே பெற்ற தகவலைப் பயன்படுத்தலாம், ஆனால் எந்தக் குழுவின் வீடியோவை வெளியிடும் முன்பும் அந்தக் குழுவின் தலைவர் அனுமதியைப் பெறவேண்டும் என்பதற்கு ஓர் ஒப்பந்தம் எழுதலாம் எனக் கூறித் தாளை எடுத்தனர். அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட வேண்டும் என விரும்பினர். நான் மறுத்துவிட்டேன். எனது 14,000 மணிநேர வீடியோ, இப்போது இணையக் காப்பத்தில் பத்திரமாக உள்ளது. வீடியோக்களின் ஊடே சென்று 6390 நடப்புகளுக்கு மேற்குறிப்புகளையும் இட்டுள்ளேன். நான் கையொப்பமிடாத முட்டாள்தனமான ஒப்பந்தம் உள்ளிட்டு, பேரவையுடன் எனது எல்லா மின்னஞ்சல்களையும் கடிதங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளேன். நீதியவைகள் எங்கள்மீது எஃப்.பி.ஐ-யை (கூட்டாட்சி அரசுப் புலனாய்வுக் கழகத்தை) ஏவுகின்றன வீடியோவில் வேலைசெய்வது மகிழ்ச்சியானதுதான், ஆனால் எனது முக்கிய உத்தேசம் அது அல்ல. என் கவலை சட்டத்தின்மீதுதான். என்னைப் பொதுமக்கள் எதிர்ப்பு என்பதை ஆராய்வதில் சட்டம்தான் ஆழமாகக் கொண்டு சென்றது. நான் முன்னுதாரண வழக்குச் சட்டத்தில் தொடங்கினேன். ஹார்வர்டு பேராசிரியர் லாரி லெஸிக் உதவியுடன் ஒரு விற்பனையாளரிட மிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேல்முறையீடுகளின் எல்லாப் பழைய கோப்புகளையும் வாங்கினேன். அந்தச் சேகரிப்புக்கு 600,000 டாலர் செலவானது. அக் கோப்புகளை இணையத்தில் பதிவிட்டேன். இந்தக் கருத்துரைகள் இணையத்தில் மாற்றமின்றி மக்களுக்கு இலசமாகக் கிடைப்பது இதுதான் முதல்முறை. அந்தச் செலவுக்கு இது உசிதமான செயல்தான். அமெரிக்க மேல்முறையீட்டு அவைகளுக்குப் பிறகு நான் அமெரிக்க மாவட்ட நீதியவைகள்மீது கவனத்தைக் குவித்தேன். அவை பேசர் (PACER-நீதியவை மின்னியல் ஆவணங்களுக்குப் பொதுமக்கள் அனுமதி) என்ற அமைப்பை வைத்திருந்தன. அது சுருக்கங்கள், கருத்துரைகள், தீர்ப்புகளின் பதிவு, பிற விஷயங்கள் ஆகியவற்றை மக்களுக்கு பக்கத்துக்கு எட்டு சென்ட் (இப்போது பத்துசென்ட் வரை) கட்டணத்துக்கு அளித்தன. இது எனக்கு முட்டாள்தனமாகத் தோன்றியது. எனவே பேசர் ஆவணங்களை "பேசர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏக்யூ-FAQ)" என்ற விரிவான தொகுதி வாயிலாக மறுசுழற்சி செய்தேன். அது இந்த மோசமான அமைப்பின் பொருளாதார, தொழில்நுட்பக் குறைகளை அலசியது. இது நடந்தது 2008இல். விரைவில் என் தொலைபேசி அழைத்தது. அழைத்தவர்கள் எம்ஐடி மாணவரான ஸ்டீவ் ஷூல்ட்ஸ் என்பவரும் அவர் தோழர் ஆரோன் ஷ்வார்ட்ஸும். ஆரோன் அச்சமயத்தில் ஒரு ஆற்றல்மிக்க தனி-உழைப்பாளராக இருந்தார். அவரை எனக்கு அவரது பன்னிரண்டு வயது முதலே தெரியும். அவர் லாரி லெஸிகின் சீடர். தொழிற்சாலைகளின் முறைசாராக் கூட்டங்களுக்கு அடிக்கடி வருபவர். ஐஆர்எஸ் போன்ற பல பிரச்சினைகளில் ஆரோனும் நானும் ஒன்றாகப் பணிசெய்திருந்தோம். இணையக் காப்பகத்தின் திறந்த நூலக அமைப்பினை உருவாக்குவதில் என் முன்னாள் மனைவி ரெபெக்கா மாலமூதுடன் நெருக்கமாகப் பணிசெய்திருந்தார். ஆரோனுக்கு எனது எஃப்ஏக்யூ பிடித்திருந்தது. அதை முறைப்படி மறுசுழற்சி செய்ய நூலக அமைப்பைப் பயன்படுத்த முடிவு செய்தார். பேசரில் உலவ ஓர் எளிய திட்டத்தை ஸ்டீவ் தயாரித்திருந்தார். ஆரோன் அதைப் பயன்படுத்திப் பார்க்க நினைத்தார். நாடு முழுவதும் 20 நூலகங்களில் "சாதாரண" மக்கள் பேசரைப் பயன்படுத்தக் கருதுகிறார்களா என்பதை அறிவதற்காக நீதியவைகள் ஒரு சோதனைச் சேவையை ஏற்படுத்தியிருந்தன. காங்கிரஸ் அலுவர்களுக்கு பேசரைப் பற்றிக் கடிதங்கள் தொடர்ந்து ஏன் வருகின்றன என்று அறிய அவர்கள் தந்த நீடித்த அழுத்தத்தினால் ஏற்பட்ட வில்லங்கம் இது. இரண்டாண்டுக்கான ஒரு முன்னோடிப் புலனாய்வு இதைத் தடுக்க எளிய வழி என்று நீதியவைகள் நினைத்தன. ஸ்டீவினுடைய திட்டக்குறிகளை எடுத்து ஆரோன் ஒரு பெரிய உலவு-திட்டம் (க்ராலர்) எழுதினார். நூலக அமைப்பு கிடைப்பதற்கான ஏற்பு ஒரு எளிய நினைவி (குக்கீ) அடிப்படையில் அமைந்திருப்பதைக் கண்டார். இதன்படி வாரத்தில் முதல்நாள் நூலகர் ஒரு முனையத்தில் அமர்ந்து திறப்புச் செய்தால், ஒரு வாரம் முழுவதும் எவர் வேண்டுமானாலும் அமர்ந்து பேசரைப் பயன்படுத்தலாம். இங்கு ஆரோன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சாக்ரமெண்டோ நூலகத்திற்கு வாரம் ஒரு முறை ஒரு தோழரை அனுப்பி நினைவியை நகல்செய்து தனக்கு அனுப்பச் சொன்னார். எப்படி ஆயினும் அவருக்கு ஒருவாரத்திற்கு ஒரு நினைவி கிடைத்தது. அதனை அவர் அந்த அமைப்பில் உலவப் பயன்படுத்த முடியும். சில மாதங்கள் கழித்து, தனக்குக் கொஞ்சம் தகவல் கிடைத்திருப்ப தாகவும் என் வழங்கியில் நுழையலாமா என்றும் ஆரோன் கேட்டார். நான் அப்படி எனது கணினிகளில் எவரும் நுழைய அனுமதி அளித்ததில்லை. ஆனால் ஆரோன் தனிச் சிறப்பானவர், எனவே அவருக்கு ஒரு கணக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன், அதைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை. பிறகு ஏறத்தாழ ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், அவர் 900 ஜிகாபைட் தகவலை வருவித்திருந்தார் என்று தெரிந்தது. அது மிகப் பெரிய அளவு. ஆனால் அவர் முயற்சிமிக்கவர். எனவே முற்றிலுமாக நான் வியப்படையவில்லை. அதைப் பற்றிக் குறித்துக் கொண்டேன், ஆனால் எங்களிடம் மிகுதியாக வட்டுகளில் இடம் இருந்ததால் அதைப்பற்றி மறுபடியும் நினைக்கவில்லை. பிறகு ஒரு தொலைபேசி அழைப்பு. ஆரோன் அழைத்திருந்தார். சோதனை நூலக அமைப்பை அரசாங்கம் திடீரென்று மூடிவிட்டது. தாங்கள் தாக்குதலுக்கு ஆளானதாக ஒரு அறிவிப்பு அனுப்பி எஃப்.பி.ஐ-யை (அரசுப் புலனாய்வுக் கழகத்தை) அழைத்தது. அவர்கள் இருபது நூலகங்களிலும் சோதனையை மூடிவிட்டனர். தாங்கள் திருடப்பட்டதாக அவர்கள் கூறினர். இது கடுமையான குற்றச்சாட்டு. … பிறகு இரண்டு விஷயங்கள் நடந்தன. ஒன்று, எனக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டேன், ஆரோனையும் ஒருரை அமர்த்திக் கொள்ளுமாறு கூறினேன். என்ன நடந்தது என்று இருவரும் நோக்கினோம். எதுவும் தவறாகச் செய்ததாகத் தெரியவில்லை. நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் சேவை நிபந்தனைகளையும் முறிக்கவில்லை. ஒரு பொது முனையத்திலிருந்து 900 ஜிபி தகவலை எவரும் எடுக்க முடியும் என்று நீதியவைகள் நினைத்திருக்காது என்பது உண்மை. ஆனால் நான் எஃப்.பி.ஐ-யிடம் "ஓர் அதிகாரவர்க்கப் பணியாளருக்கு வியப்பளிப்பது ஒரு குற்றமில்லை" என்று தெரிவித்தேன். இது பொதுத் தகவல், அதை நாங்கள் ஒரு பொதுச் சேவையிலிருந்து பெற்றோம். நாங்கள் குற்றம் அற்றவர்கள். இரண்டாவதாக, நாங்கள் தகவல்களை அந்தரங்க மீறல்களுக்காக அழுத்தமாகப் பார்க்க ஆரம்பித்தோம். நீதியவை ஆணைகளுக்கு எதிராக, சமூகப் பாதுகாப்பு எண்கள், முதிர்ச்சியடையாச் சிறார்களின் பெயர்கள், அந்தரங்கத் தகவலாளர்களின் பெயர்கள், சட்ட அதிகாரிகளின் வீட்டு முகவரிகள், வெளிப்படுத்தக் கூடாத மருத்துவ நிலைமைகளின் தனிநபர்க் குறிப்புகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஆயிரக் கணக்கான ஆவணங்களைக் கண்டேன். இதைச் செய்வதற்கு எனக்கு இரண்டு மாதங்கள் ஆயின. தணிக்கை முடிவுகள் எழுதிமுடிக்கப்பட்டு, சான்றிட்ட கடிதங்கள் 32 மாவட்ட நீதியவைகளின் தலைமை நடுவர்களுக்கும் அனுப்பப் பட்டன. அவர்கள் தணிக்கைகளை முதலில் புறக்கணித்தார்கள். ஆனால் நான் அனுப்பிக் கொண்டே இருந்தேன். ஆனால் மூன்றாவது முறை பெரிய சிவப்பு எழுத்துகளில் "மூன்றாவது இறுதி அறிவிப்பு" என்று அச்சிட்டு அனுப்பினேன். அமெரிக்க மாவட்ட முதன்மை நீதிபதிக்குக் கடிதம் எழுதுவதில் சற்றே மரியாதைக் குறைவுதான் இது, ஆனால் அவர்கள் கவனத்தைப் பெற்றது. அமெரிக்க செனேட்டும் இதை கவனித்தது, நாட்டிலுள்ள நீதிபதிகள் சம்மேளனத்துக்கு மிகக் கடுமையான சொற்களில் ஒரு கடிதம் அனுப்பியது. தங்கள் அந்தரங்க நடவடிக்கைகளில் நீதியவைகள் சில சிறிய மாற்றங்களைச் செய்தன. ஆனால் சில நடுவர்களேனும், நல்ல முறையில், இந்தப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் பெரும்பகுதி, எந்த மாற்றமும் நிகழவில்லை. இலவசக் கிடைப்புத் திட்டம் நிறுத்தப்பட்டது. நீதியவைகள் தங்கள் கட்டணத்தை உயர்த்தின. எஃப்பிஐ ஆரோனின் வீட்டை கண்காணிப்புக்கு உட்படுத்தியது, அவரை நேர்முகங்களுக்கு வருமாறு அழைக்க முயன்றது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். எஃப்பிஐ நீதியவைகளுக்கு நாங்கள் எத் தவறும் செய்யவில்லை என்று கூறியது. அதற்குப் பிறகு நியூ யார்க் டைம்ஸ் இதழ் இதைப் பற்றிய செய்திக்கதையை வெளியிட்டதும், நீதியவைகள் எஃப்.பி.ஐயை மறுபடியும் அழைத்து மீண்டும் நன்கு நோக்குமாறு கூறின. ஆனால் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை ஆதலின் எஃப்.பி.ஐ நீதியவைகளைத் தங்கள் நடவடிக்கைகளை விட்டுவிடுமாறு கூறிவிட்டது. … இச்சமயத்தில்தான் நான் குடிமக்கள் எதிர்ப்பைப் பற்றி தீவிரமாகப் படிக்கத் தொடங்கினேன். காந்தியும் மார்ட்டின் லூத்தர் கிங்கும் எதிர்கொண்ட வகையான அபாயங்களை நாங்கள் சந்திக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு அச்சுறுத்தும் சட்ட அதிகாரிகளோ சட்டபூர்வமற்ற கண்காணிப்பாளர்களோ இல்லை. சமூகநீதிக்கான போராட்டத்தை விட 'சட்டத்தின் எழுத்துப் பிரதி கிடைப்பது' என்பது ஒரு சாதாரண உலகியல் நடப்பு. அது ஒன்றும் ஒரு நாட்டு மக்களை விடுவிப்பது போன்ற செயலல்ல. அரசு அமைப்பு இயங்கும் முறையை மாற்றுவதற்கான முயற்சி எங்கள் பணி. எங்களுக்கு முன் இதுபோன்ற பணிகளில் பங்கேற்றோரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள ஏராளமாக இருந்தது என்பது தெரியும். மாற்றத்தைப் பயன்மிக்கதாக எப்படி ஆக்குவது என்பதையும் நான் தெரிந்து கொள்ளவேண்டும். சுவரில் தலையை மோதிக் கொள்வதோ காற்றாலையைப் பிடித்து உலுக்குவதோ மாற்றத்தை உருவாக்காது. பழங்காலத்தில் இது எப்படி நிகழ்த்தப் பட்டது என்பதையும், இன்றைய நடப்பைப் பற்றி வருத்தப் படுவதைவிட, எதிர்காலத்தில் மாற்றத்தைச் செய்வது எப்படி என்பதையும் மேலும் நான் அறிய வேண்டும். இந்த ஆய்வு 2011 வாக்கில் மேலும் கடுமையாகியது. நான் முன்னுதாரண வழக்குகளை அல்ல, இப்போது சட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்பத் தரங்கள் மீது கவனத்தைக் குவிக்கத் தொடங்கி யிருந்தேன். தாங்கள்தான் சட்டத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று நினைத்த தனியார்கள் இதனால் பல மில்லியன் டாலர் வருமானம் பெற்று வந்தனர். அவர்கள் நிச்சயமாகப் பெரிய சண்டையில் ஈடுபடப் போகிறார்கள். என்மீது வழக்கு எதுவும் இல்லை, ஆனால் சில இலாபநோக்கற்ற தர அமைப்புகளுக்குள் மிகுந்த பயவுணர்ச்சி இருந்தது என்பதும் மாற்றத்தை எந்த வகையிலும் எதிர்க்க முற்படுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இடையில் வேறொன்று நடந்தது. ஆரோனைக் கைது செய்தார்கள். ஜேஸ்டார் (JSTOR) என்ற அமைப்பிலிருந்து மிகுதியான எண்ணிக்கையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர் இறக்கம் செய்திருந்தார். அவருக்கு எம்ஐடியில் விருந்தினர் தனிஉரிமைகள் இருந்ததால் இதைச் செய்தார். பொதுவாக ஆரோன் போன்று தீட்சண்ய புத்தியுள்ளவர்களை சொற்பொழிவு செய்ய அழைப்பதுதான் வழக்கம். ஆனால் எம்ஐடி போலீஸை அழைத்தது. இதையேதான் எம்ஐடி வலைத்தளத்தை நடத்திய என் நண்பர் ஜெஃப் ஷில்லரை நான் அழைத்தபோதும் கூறினார். ஆனால் வலைத்தளம் இப்போது ஷில்லர் பார்வையில் இல்லை. வேறொருவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் போலீஸை அழைத்தாயிற்று. இப்போது பின்வாங்க முடியாது. நடந்தது நடந்துவிட்டது. அமெரிக்க அட்டர்னியிடம் இந்த வழக்கை போலீஸ் ஒப்படைத்தது. அவர் இதை ஒரு முன்னுதாரணமாக ஆக்க வேண்டுமென்று நினைத்து, ஆரோன்மீது 13 கடும்பழிகளைச் சுமத்தினார். அவற்றின் விளைவு மிகப் பெரிய அளவு அபராதமும், பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசமும். கடுங்குற்றம் என்பது வாக்குரிமையையும் தடைசெய்யக்கூடியது என்பது ஆரோனை அச்சுறுத்துவதாக இருக்கும். மேலும் விடுதலைக்குப் பிறகு அவர் கணினியையோ வலைத்தளத்தையோ தொடக்கூடாது என்ற உத்தரவும் இருக்கும். ஆரோனைப் போன்றவர்க்கு இது மிக பயங்கரமானது. அமெரிக்க அட்டர்னி இதை முழுவீச்சில் கொண்டு செல்வதாக இருந்தார். ஆரோனின் அட்டர்னியிடம் சிறைத்தண்டனை இன்றி இதை வெறும் முறையீட்டு பேரமாகக் கொள்ளப் போவதில்லை என்று கூறிவிட்டார். ஆரோன் செய்தது அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை இறக்கம் செய்ததுதான். அவ்வாறு இறக்கம் செய்வதும் ஜேஸ்டாரின் சேவையில் உள்ளதுதான். வளாகச் சேவையின் ஒரு பகுதியாக எந்த மாணவரும் ஜேஸ்டார் இதழ்க் கட்டுரைகளைப் படிக்க அனுமதி உண்டு. பிரச்சினை, ஆரோன் மிக வேகமாகப் படித்தார் என்பதுதான். இது சாட்டுவதற்குரிய ஒரு குற்றமா என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை. ஆரோன் இன்னும் அந்தக் கட்டுரைகளை வெளியிடவில்லை. ஆனால் அதுதான் நிகழும் என்று அமெரிக்க அட்டர்னி உறுதியாக இருந்தார். நான் அப்படி நினைக்கவில்லை. ஆரோன் பேசர் ஆவணங்களை இறக்கம் செய்தபோது, அவற்றை எனக்கு அளித்து சோதித்து வெளியிடச் சொன்னார். அவர் வழங்கி(செர்வர்)களை நடத்தவில்லை. ஆகவே என்னையோ ப்ரூஸ்டர் போன்றவர் களையோ சார்ந்திருந்தார். ஜேஸ்டார் தகவல்களை அவர் வெளியிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை பின் எப்போதோ ஒரு காலத்தில் அதை வெளியிட அவர் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அதற்கு இப்போது எவ்விதச் சான்றுமில்லை. நிச்சயமாக என்னைப் போன்றோ, இணையத்தில் இருந்த அவரது நண்பர்களைப் போன்றோ எவரோடும் சேர்ந்து அல்லாமல் அத்தகைய நடவடிக்கையை அவரால் எடுக்க இயலாது. முன்னரே அவர் மேற்கிலிருந்து மிகுதியான எண்ணிக்கையில் சட்டப் பத்திரிகைக் கட்டுரைகளை இறக்கம் செய்திருந்தார். அவர் அவற்றையும் வெளியிடவில்லை. மாறாக, அவர் ஒரு பெரிய தகவல் பகுப்பாய்வு செய்து சட்டப் பேராசிரியர்கள் தங்களுக்கு வேண்டிய கூட்டுக்குழுமங்களிடமிருந்து 'சுற்றுச் சூழல் சீர்கேட்டை உண்டாக்குவதன் சட்ட ஏற்பு' போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் உதவக்கூடிய கட்டுரைகளை எழுதி எவ்விதம் நன்கொடைகள் பெற்றார்கள் என்ற ஆதாரபூர்வக் கட்டுரையை எழுதினார். எனக்கும் அவருக்கும் நெருக்கமான பொது நண்பரான கிளே ஜான்சனிடம் தட்பவெப்ப மாறுபாட்டு ஆய்வில் ஊழல் நடந்ததற்கான சான்றுகளை ஜேஸ்டார் கட்டுரைகளில் தேடப் போவதாக ஆரோன் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட பிறகு, கிளேயிடம் அவர் பேசிய உரையாடலைப் பல ஆண்டுகள் கழித்தும் கிளே நினைவு வைத்திருந்ததன் படி, "ஆம், தகவல் இலவசமாகத்தான் இருக்கவேண்டும், ஆனால் தட்பவெப்ப மாற்றக் கட்டுரைகளுக்கு எவ்வளவு அன்பளிப்புக் கொடுத்தார்கள் என்பதைப் பற்றித்தான் நான் கட்டுரை எழுதப் போகிறேன்" என்றாராம். ஆரோன் இப்படிச் சொல்லக் கூடியவர்தான். ஆரோன் கைது செய்யப்பட்டு, தொழில்நுட்பத் தரங்கள் பிரச்சினையில் மேலும் மேலும் ஆழமாக ஆராய முற்பட்டபோது, நான் சரியாகத் தூங்கவில்லை. எண்ணற்ற இரவுகள் தூக்கமின்றிப் படித்துவந்தேன். 2013 ஜனவரியில் ஆரோன் தற்கொலை செய்துகொண்டார். இணையவலையகம் முழுவதும் அவருக்காக இரங்கியது. குறிப்பாக அவருடன் சேர்ந்து பணியாற்றும் உரிமையும் கௌரவமும் பெற்ற எங்களைப் போன்ற அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். நான் இன்னும் துக்கப் படுகிறேன். இந்து சுயராஜ்யம் 1909இல் காந்தி எழுதிய புத்தகம் 'இந்து சுயராஜ்யம்'. அவர் லண்டனிலிருந்து கப்பலில் திரும்பி வந்துகொண்டிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் தீவிரமாகச் செயலில் ஈடுபட இருந்தார். அவரது சத்யாக்கிரகப் போராட்டம் அதிர்வு தரத்தக்க வெற்றியில முடிந்தாலும் மிகுந்த கஷ்டமும் தியாகமும் அதற்குத் தேவைப் பட்டன. தமது நம்பிக்கைகளையும் அறிவையும் நேர்ப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தார் என நினைக்கிறேன். எஸ்எஸ் கில்தோனா கேசில் என்ற அந்தக் கப்பலில் ஒன்பது நாட்கள் காந்தி வேகமாக எழுதிக் கொண்டே இருந்தார். வலதுகை சோர்வடைந்தபோது இடது கையில் எழுதினார். அவர் அப்புத்தகத்தை வெளியிட்டபோது அதன்மீது கொட்டை எழுத்துகளில் "தனியுரிமைக் காப்பு இல்லை" என்று எழுதினார். அந்தப் புத்தகம் விசித்திரமானது, ஆனால் அறிவுசான்றதும் கூட. காந்திக்குப் பல சிந்தனைகள் இருந்தன. சிலவற்றை அவரது நண்பர்களால் புரிந்துகொள்ள முடிந்தது, பிறவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நேருவும் தாகூரும் அந்தப் புத்தகத்தை விரும்பவில்லை. "மருத்துவமனைகள் பாவங்களைப் பரப்பும் நிறுவனங்கள்" போன்ற சில சிந்தனைகள் இன்றும் எனக்குப் பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கடுமையான கூற்றுகளிலும் காந்திக்கு நிச்சயமாக ஏதோ நோக்கம் இருந்திருக்க வேண்டும். புத்தகத்தின் ஒவ்வொரு சொல்லையும் நீங்கள் ஏற்காவிட்டாலும், இந்தியாவும் இந்தியர்களும் சந்தித்தாக வேண்டிய பிரச்சினைகளின் உறுதியான பட்டியல் ஒன்றையும், அந்தப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்னும் உறுதியான கொள்கையையும் அப்புத்தகம் முன்வைக்கிறது. ஒரு விடையை காந்தி அளிக்கிறார். அது சரியான விடையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது மட்டுமே விடை அல்ல. ஆனால் ஒத்திசைவான விடை. ஒருவேளை உலகில் அடிப்படை மாற்றத்தை உருவாக்குவது எப்படி என்பது பற்றி அவரது முழுமையான முதல் விடையாகலாம். அவர் அந்த மாற்றம் எப்படி நிகழவேண்டும் என்பதை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருந்தார். அவரது சிந்தனைகள் எப்படிப் பரிணமித்தன என்பதையும் அவரது எழுத்தின் பிரம்மாண்டமான வீச்சையும் அவரது எழுத்துகளின் 100 பாகங்களின் தொகுப்பு காட்டுகிறது. இந்து சுயராஜ்யம் எனது புத்தக அலமாரியில் சிறப்பிடம் பெறுகிறது. அதில் ஆற்றல்மிக்க செய்தி ஒன்று அச்சிலே உள்ளது. அச்சுப் பிரசுரத்தின் ஆற்றலையும், ஏன் ஒவ்வொருவரும் தங்கள் சிந்தனைகளைப் பரப்ப அச்சாளர் ஆகவேண்டும் என்பதையும் அது காட்டுகிறது. இந்து சுயராஜ்யத்தைப் படித்ததிலிருந்து சுயாட்சி விதி என்ற சொற்கள் என் மனத்தில் சுழன்று கொண்டே இருந்தன. இந்து சுயராஜ்யம்-அதாவது இந்தியச் சுயாட்சி, புலன்களுக்கு எட்டுவதும் பெரியதுமான ஓர் இலக்கு. பெரியதொரு அபிலாஷைதான், ஆனால் அதில் சிறிதளவேனும் அடையவும் முடியும். கொஞ்சம் நிஜமானது. கொஞ்சம் பருமையானது. ஆகும். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியக் குறியீடு அது. சொற்கள் முக்கியமானவை, இந்து சுயராஜ்யம் என்பது கேட்டவர்களுக்கு ஏதோ ஒன்றை அர்த்தப்படுத்தியது. அந்தச் சொற்கள், ஒரு பெரிய, பொதுவான நோக்கத்திற்கு அடையாளமாயின. காந்தி பிற கருத்துகளையும் நமக்கு அறிமுகப்படுத்தினார். சத்யாக்கிரகம் என்பது போராட்டம்தான். ஆனால் வெறும், நன்மைக்கு எதிரான, வீணான, சுற்றிவளைத்த போராட்டம் அல்ல. அது ஒரு குறித்த இலக்கிற்கான போராட்டம். உப்பு எடுப்பதுபோன்ற, ஒரு குறித்த கட்டுப்பாட்டினை மீறுவதற்காக, பருமையான இலக்கினை உடைய ஒன்று. சத்யாக்கிரகத்திற்கு ஆழமாக ஆயத்தம் செய்ய வேண்டும். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சத்யாக்கிரகத்திற்குக் கொள்கை வேண்டும்: காந்தி கடலை நோக்கி நடப்பதற்கு முன்னர், அரசப் பிரதிநிதிக்குத் தம் நோக்கத்தைத் தெரிவித்தார். சத்யாக்கிரகத்தில் கவனக் குவிப்போடு இருக்க வேண்டும். முதல் இலக்கை அடைந்த உடனே, அதை நீட்டக் கூடாது. வெற்றியைப் பெற்ற பிறகு, மற்றொன்றிற்குச் செல்லவேண்டும். சத்யாக்கிரகப் போராட்டம் என்பது சுயராஜ்யம் போன்ற ஒரு பெரிய இலக்கினைப் பின்னணியாகக் கொண்ருக்க வேண்டும் என்பது மிகமுக்கியம். காந்தியிடமிருந்து இந்தச் செய்திகள் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பரவின. இந்தச் செய்திகள் காந்தியிடமிருந்து மண்டேலாவுக்கும் கென்யாட்டாவுக்கும், நிக்ருமாவுக்கும், ஆப்பிரிக்கா முழுவதும் பரவின. காந்தியிடமிருந்து இச் செய்திகள் லூத்தர் கிங்குக்கும் அமெரிக்காவில் கருப்பின நீதிக்கான போராட்டத்திற்கும் பரவின. இந்தச் செய்திகள் உலகத்தை மாற்றின. ஓர் அடையாளமாகவும் இலக்காகவும் இருக்கும் சுயாட்சி விதி சுயாட்சி விதி என்பது நமது விதிப்புத்தகங்கள் திறந்திருக்க (வெளிப்படையாக) வேண்டும் என்று எனக்கு அர்த்தப்படுகிறது. இணையம் உலகை மாற்றியிருக்கிறது. அது உலகத்தை மாற்றக் காரணம் திறந்த மூலாதார மென்பொருள்களையும் திறந்த வரைமுறைகளையும் அது கொண்டுள்ளது. வரைமுறைக் குறிப்புகளைப் படிக்க ஒருவர் நேரம் செலவிட்டால், எவராயினும் இணையம் எவ்விதம் வேலை செய்கிறது என்பதை அறியலாம். வரைமுறைக் குறிப்புகள் அனைவருக்கும் கிடைக்கின்றன. இணையம் என்பது முடிவுக்கு வந்துவிட்ட ஒன்றல்ல. நான் 1980களில் இணையத்தில் வேலைசெய்யத் தொடங்கியபோது, பல வலைத்தளங்கள் இருந்தன. பெரிய கூட்டுக்குழுமங்களும் அரசாங்கங்களும் உதவுகின்ற சர்வதேசத் தரப்படுத்தல் அமைப்பின் தலைமையின் கீழ் இருக்கின்ற அதிகாரங்களால் ஒரு வலைத்தளம் உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அது ஓபன் சிஸ்டம்ஸ் இண்டர்கனெக் ஷன் (ஓஎஸ்ஐ) என்று அழைக்கப் பட்டது. அவர்கள் பின்பற்றிய மாதிரியமைப்பு இன்றுள்ள தரநிறுவனங்கள் பயன்படுத்துகின்ற அதேதான். வரைமுறைக் குறிப்புகள் மிக இரகசியக் கட்டுப்பாட்டுச் செயல்முறையில் உருவாக்கப் பட்டன. அதன் வாயிலாகப் பெற்ற ஆவணங்கள் அதிக விலை உள்ளவையாக இருந்தன. தனியாரிடமிருந்து உரிமம் இன்றி இலவசமாக அவற்றை நகல் எடுக்க முடியாது. கணினி வலைத்தளங்கள் பற்றி அப்போது நான் தொழில்முறைப் பார்வைப் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கு அந்த ஓஎஸ்ஐ ஆவணங்களை மிக அதிகமாக வாங்க வேண்டி யிருந்தது. கணினி விற்பனைச் சஞ்சிகைகளுக்கும் நான் பத்திகள் எழுதிவந்தேன். என் பத்திககள், வலைதளத் தரங்களின் உயர்ந்த விலையும் இரகசியச் செயல்முறையும் எப்படி இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் உள்ளாற்றலை அழித்துக் கொண்டிருந்தன என்பது பற்றியே இருந்தது. இடையில், தற்காலிகமாகச் சேர்ந்த பொறியியலாளர் குழு ஒன்று, இணையப் பொறியியல் பணித் திட்பம் (ஐஈடிஎஃப்) என்ற அமைப்பை உருவாக்கியது. இக்குழு தானாக அமைந்த ஒன்று. இதன் எல்லா வரைமுறைகளும் திறந்தவையாகவும் இலவசமாகக் கிடைப்பவையாகவும் இருந்தன. மிக முக்கியமாக, அது 'செயல்படு விதி' என்பதன் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது, நீங்கள் இணையச் செயல்முறை யின் சில கூறுகளைத் தரப்படுத்த வேண்டும் என்று ஒரு வல்லுநர் கூட்டத்தில் நுழைய முடியாது. உதாரணமாக மின்னஞ்சல் தலைப்புகளின் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற உங்கள் முன்மொழிவை முதலில் நீங்கள் செயல்படுத்திப் பார்க்காமல் கோர முடியாது. இணையத்தின் வரைமுறைகள் உண்மையாக வேலைசெய்யும் விஷயங்கள்மீது அமைந்திருந்தன. ஆனால் ஓஎஸ்ஐ, கூட்டுக்குழும திட்டங்களின் பேரில் அமைந்திருந்தது. இணைய வரைமுறைகளில் எனது கொடை மிகச் சிறியது. ஆனால் ஐஈடிஎஃப்-இல் நான் அதிக நேரம் செலவழித்தேன். அது அரசாங்கப் பிரச்சினைகளில் பணிசெய்வதில் முடிந்தது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மற்றும் பிற முகமைகளின் அரசாங்க உபயதாரர்களிடமிருந்து அமைப்பின் இறுதிக் கட்டுப்பாட்டினைப் பறிக்கும் தீவிரவாதிகளின் குழுவில் நான் இருந்தேன். அவர்கள் இன்னும் இணையக் கட்டுமானக் கழகம் போன்ற மேற்பார்வை அமைப்புகளை நியமிப்பவர்களாகவும் கீழிருந் மேற்செல்லும் (பாட்டம்-அப்) நிர்வாகத்தை நோக்கிச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். கூட்டங்களுக்கு வரும் நபர்கள் தங்கள் சொந்தப் பார்வைகளை முன்வைப்பவர்களே ஒழியத் தங்களைப் பணியமர்த்தியோர் பார்வைகளை அல்ல என்பது போன்ற மைய விதிகளை நாங்கள் கடைப்பிடித்தோம். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், விண்ணப்பமோ உறுப்பினராதலோ இங்கு இல்லை. மேலும் ஐஈடிஎஃப் தகவல்தளத்தை உருவாக்கிய ஆவணங்களை எப்படிப் பெறுவது, எனது உடன் பணியாளரான மார்ஷல் டி. ரோஸ்-உடன் சேர்ந்து தரங்களுக்கான மொழியை எப்படி உருவாக்குவது என்ற பிரச்சினையில் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தேன். அந்த மொழி இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஓஎஸ்ஐக்கு எதிரான போராட்டத்தில் இணையம் வென்றது. தீர்க்க முடியாத பெரிய பிரச்சினை போல ஏதாவது வரும்போது நமது திறந்த வலைத்தளம் எப்போதுமே ஒரு தீர்வைக் கொடுத்துவிடும், யாராவது ஒரு பட்டதாரி இளைஞன் இன்னும் சரியான முறையில் செய்கின்ற வழியுடன் அதில் வந்துவிடுவார் என்பதை நாங்கள் கண்டோம். நமது பெருங்கனவுகளை எல்லாம் இணையம் கடந்துவிட்டது. அதன் வளர்ச்சிக்குக் குறுக்கே நாம் நிற்கலாகாது என்பதற்காகச் சிரமப்பட்டோம் என்பதில் எங்கள் பணி இருக்கிறது. ஓஎஸ்ஐ தளம் அந்தப் பாடத்தைக் கற்கவில்லை. இப்போது வரலாற்றில் அவர்கள் ஓர் அடிக்குறிப்பாக இருக்கிறார்கள். … சுயாட்சி விதி இணையம் போன்று முற்றிலும் சுதந்திரமானது. ஆனால் நாம் மேலும் மேலும் திட்டங்களுக்கான தடுப்புச் சுவர்களை மிகுதியாகக் காண்கிறோம். லினக்ஸை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் கணினி எவ்விதம் செயல்படுகிறது என்று அறியமுடியும். ஆனால் உங்கள் ஐ-ஃபோனின் மூலக் குறியீட்டை நீங்கள் பார்க்க முடியாது. இணைய வரைமுறைக் குறிப்புகள் திறந்தவை. ஆனால் சேவைகள் அதிபயங்கரமாக மையப்படுத்தப்பட்ட மூடிய சேவைகளை நோக்கிச் செல்கின்றன. இணைய நடுநிலைத் தன்மைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் பெருமளவு இணையம் திறந்திருக்கிறது. அவ்வாறே இருக்க நாம் போராடியாக வேண்டும். எனினும் நல்லது செய்ய விடாமல் தலைகீழாக்கி, அதை மூடிவிடக்கூடிய போலிச் செய்திகள், மோசமான சுயசெயலிகள் (அப்யூசிவ் பாட்), பிற அடையாளங்கள் போன்றவற்றின் தாக்குதலுக்கு இணையம் உள்ளாகியிருக்கிறது. நமது பார்வைகளைத் திறந்த வலைத்தளம் என்பதற்கும் மேலாக வைத்து, இதே தத்துவங்களை நமது வாழ்க்கையின் பிற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். சுயாட்சி விதி சட்டத்திற்கும் பொருந்துவதுதான். நாம் நம்மை ஆள உருவாக்கும் சட்டங்களைப் பெறுவதென்பது முழுமையின்றி, தொழில்நுட்பக் குறைபாட்டுடன், விலையதிகமாக இருக்கும்போது நாம் எப்படி ஒரு உண்மையான ஜனநாயகமாக இருக்கமுடியும்? ஜியார்ஜியா சட்டம் ஒரு குழுமத்திடம் முழுதுமாக ஒப்படைக்கப் பட்டுள்ளது. அது தொழில்நுட்பக் குறைபாடு உடைய மென்பொருள் வாயிலாகவும் தொந்தரவான பயன்படுத்து விதிகளைக் கொண்டும் அதை விற்கிறது. இது போன்று வியாபாரிகள் தரும் காலாவதியான அமைப்புகளால் வழக்கறிஞர்களும் இன்று சிரமப்படுகிறார்கள். அமெரிக்கக் கூட்டாட்சி அரசின் நீதியவைகளுக்கான பொது ஒழுங்கமைவுகள் போன்றவை கிடைப்பது கூட மிகவும் போதாமல் இருக்கிறது. அந்தரங்க மீறல்களுக்காகச் சோதிக்க வேண்டி, முழு மாவட்ட நீதியவை ஆவணங்களை ஆராய்வது போன்ற எளிய செயல்களையும் செய்ய விடாமல் தடுக்கும் அதிகப் பணச் செலவாகின்ற பதிவேடுகளின் பின்னால் அது முடங்குகிறது. சுயாட்சி விதி இணையத்தையும் சட்டத்தையும் விட அதிகத் தொலைவு செல்லக்கூடியது என்று நினைக்கிறேன். தொழில்நுட்பத் தரவிதிகளை விடுவிப்பதற்கான எங்கள் போராட்டம் இதற்கொரு சான்று. நமது உலகம் மேன்மேலும் தொழில்நுட்ப மயமாகும் ஒன்று. நமது முக்கியமான உள்கட்டமைப்புகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்வது உயிரானது. எப்படி விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதற்கான பொது ஒப்புதலைத் தரவிதிகள் முன்னிறுத்துகின்றன. தரவிதி என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமாயின் எல்லாரும் அதைப் படிக்கவும் அதைப்பற்றிப் பேசவும் அது கிடைக்கவேண்டும் என்று சுயாட்சிவிதி சொல்கிறது. தனியார் சட்டத்தைப் போலவே தனியார் தரவிதியும் முட்டாள்தனமாக இருக்கிறது. நமது இலக்குகளை அடைவதில் நாம் உயிர்மூச்சுடன் செயல்பட வேண்டும் என்று இலா பட் கூறினார் என்பதை நினைவு கூர்கிறேன். உடனடியாக உலக சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று நாம் நம்பாவிட்டாலும், அல்லது அது நிகழவே நிகழாது என்று கருதினாலும்கூட, அதற்காகப் பணிசெய்தே ஆக வேண்டும். நாம் அந்த முயற்சியைக் கட்டாயம் செய்தாக வேண்டும். அறிவு கிடைத்தலும் உயிர்மூச்சான ஒரு இலக்குதான். அதற்காக நாம் பணியாற்ற வேண்டும். இந்து சுயராஜ்யம் என்ற இலக்கு எப்படி இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய பரந்த உயிர்மூச்சான இலக்குகளோடு இணைக்கப்பட்டதோ, அதுபோல நாம் சுயாட்சி விதியை உலக முழுவதும் அறிவு கிடைப்பதற்கான தேடலுடன் இணைக்கமுடியும் என்று கருதுகிறேன். உங்களுக்கு ஒரு திறந்த விதித்தொகுதி இல்லை என்றால், தகவலை ஒருபோதும் உங்களால் ஜனநாயகப் படுத்த முடியாது. ஒரு ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே கட்டுப்படுத்துவதைப் பற்றியது இது. வெளிப்படை அரசாங்கம் என்ற மந்திரம் பாரக் ஒபாமா பதவி ஏற்றபிறகு ஓர் ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்ச்சியை நான் தொலைவிலிருந்து கண்டேன். பல ஆண்டுகளாக அரசாங்கத் தகவலுக்கான எனது போராட்டம் விசித்திரமான ஒன்றாக சிலிகான் சமவெளியில் கருதப்பட்டது. ஆனால் அரசாங்கத்தை மேம்படுத்த வேண்டித் தொழில்நுட்பத்தின் ஆற்றலில் பெரியதொரு அலைவீச்சை ஒபாமா கொண்டுவந்தார். கூகிளிலும் முகநூலிலும் இருந்த மூத்த பொறியாளர்கள் மிகுந்த ஊதியம் பெறும் தங்கள் வேலைகளை விட்டு வெள்ளை மாளிகைக்குப் பணி புரிய வந்தனர். ஜனாதிபதி ஒபாமா ஒரு தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியை நியமித்தார். அந்தப் பதவியிலிருந்த மூன்று பேருமே எனக்கு நண்பர்கள் என்று கருதுகிறேன். டேவிட் ஃபெரியரோ போன்ற தொலைநோக்கு மிக்க அதிகாரிகள் நடத்துவதற்கு முழு முகமைகள் அளிக்கப்பட்டன. அவருக்கு தேசியக் காப்பகங்கள் கிடைத்தது. பழமை நோக்குடைய குடியரசுக் கட்சியினர் பேரவையை நடத்தினர். ஆனால் அவர்களும்கூட தொழில்நுட்பத்தைத் தழுவிக்கொள்ள விரும்பியதுபோலத் தோன்றியது. உதாரணமாக தாராளவாதியாகிய நான், குடியரசுக் கட்சிக்குழுத் தலைவரும், காங்கிரஸ்நபருமான டேரல் இஸ்ஸாவுடன் சேர்ந்து பெரிய எண்ணிக்கையில் காங்கிரஸ் வீடியோக்களை விடுவிப்பதற்குப் பணிசெய்தேன். சர்வதேச அளவில், திறந்த அரசாங்கக் கூட்டாண்மைக்கு மிக அதிக அளவு முயற்சி வெள்ளை மாளிகையில் செய்யப்பட்டது. பலவேறு நாடுகளின் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து திறந்த அரசாங்கத் திட்டங்களையும் இலக்குகளையும் வளர்த்தனர். அமெரிக்க ஐக்கியநாட்டில், ஒவ்வொரு கூட்டரசு முகமையும் ஒரு திறந்த அரசாங்கத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எத்தனைத் தகவல் தொகுதிகளைப் பொதுமக்களுக்கு அளித்தனர் என்பதை வைத்து முகமைகள் தரவரிசைப் படுத்தப்பட்டன. ஒளிவுமறைவின்மை கோட்பாடாகியது. திறந்தநிலை என்பது இலக்காக இருந்தது. அரசாங்கச் சேவையில் மேலும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டுவர, ஐக்கிய நாட்டின் (பிரிட்டனின்) வழிவகுக்கும் முகமையான, வெளிப்படையான அரசாங்க ஆன்லைன் சேவைகளில் நேரடியாக நவீன கணினித் திட்டமுறைமையைக் கொண்டுவந்த, அரசாங்கக் கணினிச் சேவையை அமெரிக்கா பின்பற்றியது. புதிய அமெரிக்கக் கணினிச் சேவையுடன் 18F என்ற மற்றொரு குழு இணைந்து கொண்டது. அது பொதுச் சேவைகள் நிர்வாகத்தைச் சேர்ந்தது. அதன் பணித்தொகுதியில் தொழில்நுட்பத்தில் அறிவுக்கூர்மை மிக்க, அனுபவம் வாய்ந்த, இளைஞர்கள் ஏறத்தாழ நூறு பேர் இருந்தனர். அதன் காரியாலயக் கட்டடம் 18ஆம் தெரு, F தெரு இரண்டும் சந்திக்கும் மூலையில் இருந்ததால் 18F அமைப்புக்கு அந்த வேடிக்கையான பெயர். அச்சமயத்தை ஒட்டி, ஆரோன் ஸ்வார்ட்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அதைப் பின்னிணைப்பாகத் தந்துள்ளேன். வெறும் ஒளிவுமறைவின்மை ஒரு தவறான இலக்கு என்று அவர் எச்சரித்தார். அவரது அக்கறையை நான் பகிர்ந்து கொண்டேன். அரசாங்கத்தில் ஒளிவுமறைவின்மை வேண்டும் என்ற ஒரே விருப்பத்தின் காரணமாகவே எனது பணியைச் செய்கிறேன் என்று மக்கள் கூறும்போது எனக்குக் கோபம் வருவது வழக்கம். தவறாக எண்ண வேண்டாம். அரசு முகமைகள் மட்டுமல்ல, எனது அமைப்பு போன்ற பொது அற நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயற்படுவதற்கு ஒளிவு மறைவின்மை ஒரு வழி என்று முழுமையாகக் கருதுகிறேன். ஆனால் நாங்கள் செய்வதற்கு அது தவறான பெயர் என்று நினைக்கிறேன். ஒளிவுமறைவின்மை ஒரு தெளிவற்ற இலக்கு. ஒரு திறன்மிக்க சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவதற்குத் தேவையான தனிப்பயனுடைமை அதில் இல்லை. வெறும் ஒளிபெறுதல் என்பதே ஓர் இலக்கு ஆகாது. நான் செய்வதைச் செய்யக் காரணம், அது அரசாங்கத்தை மேலும் நன்கு செயல்பட வைத்தது. அரசாங்கம் எவ்விதம் சட்டத்தைத் தனக்கும், சட்டத்துறைக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்கச் செய்கிறது என்பதைச் சரியாக்குவதில்தான் எனது ஆர்வம். பேரவை நடப்புகளை நான் ஆன்லைனில் கொண்டுவர விரும்பியதன் காரணம் அது நாடுமுழுவதுமுள்ள மாணவர்கள் கல்விபெறுவதற்கான ஒரு கருவியாகியது. பேரவையின் பணித்தொகுதியினர் மேலும் சிறப்பாக அதை நடத்துவதையும் எளிதாக்கியது. திறந்த அரசாங்க இயக்கத்தில் நான் கண்டது இதுதான்: நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் பலர் ஒழுங்கமைவை உள்ளிருந்து தாங்கள் மாற்றப் போவதாக நினைத்தனர். இன்னும் தெளிவாகச் சொன்னால், அவர்களில் பலர் அதிகம் சாதிக்கவும் செய்தார்கள். ஒரு சிறிய ஸ்வாட் (SWAT) குழு, ஒப்பந்ததாரர் கடுந்துயர் தரும் நிலையிலிருந்து, உடல்நலப்பராமரிப்பு அமைப்பை (healthcare.gov) காப்பாற்றச் செய்த அருங்காரியத்தைப் பாருங்கள். ஆனால் பலபேர், உள்ளிருப்பது ஓர் மனமகிழ் மன்றம் என்றும், நீங்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டால், தீர்வில் உங்களுக்குப் பங்கில்லை என்றும் நினைத்தார்கள். அவர்களில் பலர் என்னிடம் பேசத் தயங்கினார்கள், பேசினால் போராட்டத்தையும் தீவிர மாற்றத்தையும் தாங்கள் தழுவிக் கொள்வது போலாகும் என்று கவலைப் பட்டனர். அரசாங்கம் உள்ளும் புறமும் திறம்படச் செயல்படுவது நமக்கு அவசியம் என நினைக்கிறேன். இந்தியாவிலும், அமெரிக்காவிலும், பொதுச் சேவைத் துறையின் திறன்களை நான் மிகவும் பாராட்டுபவன். சேவை-மையமிட்ட எந்த முகமைக்குள்ளும் சென்று பார்த்தால், அங்குள்ள தொழில்நுட்ப அறிவின் ஆழம், பொதுச் சேவையில் காட்டும் பொறுப்பு ஆகியவற்றைக் கண்டு வியப்படைவீர்கள். ஆனால் அரசாங்கத்தை உட்பகுதி மக்களிடம் மட்டும் விட்டுவிட முடியாது. நாம்தான் அரசாங்கத்தின் எஜமானர்கள். அது எப்படி நடக்கிறது என்பதில் நாம் தீவிரமாகப் பங்கெடுக்காவிட்டால், அவர்கள் தங்கள் இயலாற்றலை அடைய முடியாது. ஓர் இலக்கு என்ற முறையில் ஒளிவுமறைவின்மை போதுமானதன்று. இன்னும் துல்லியம் தேவை. அதனால்தான் சுயாட்சிவிதி வேண்டும். ஒரு சட்டம் என்றால் அது பொதுமக்களுக்காக இருக்க வேண்டும். ஒளிவுமறைவின்மை தனக்கானது அல்ல, நமது சட்டத்துறை மற்றும் தொழில்நுட்ப உள்கட்டுமானங்கள் திறம்படச் செயல்படவைக்க அது ஒரு கருவி. அது உள்ளிருந்து மட்டும் நிகழ இயலாது. பல ஆண்டுகளாக, உள்முயற்சி மட்டுமே பணிகளைச் செய்ய ஒரே வழி என்று தோன்றியது. ஐக்கிய நாட்டின் அரசாங்க எண்ணியல் (கணினிச்) சேவை தொழில்நுட்ப உலகம் முழுவதும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகு அது வெறும்கூடாக இருக்கிறது. அமெரிக்க ஐக்கியநாட்டில், அமெரிக்க எண்ணியல் சேவையும் 18F-உம் சட்டமியற்றல், நிர்வாகக் கிளைகளில் கொள்கை வகுப்போர் கவனம் கொள்ளச் செய்வதற்குப் போராடுகின்றன. அவை மிகப் பெரிய பணியைத் தொடர்ந்து செய்கின்றன. இந்த இரு முகமைகளின் பொறுப்பு நிர்வாகிகளும் என் தனிப்பட்ட நண்பர்கள் என்றே கருதுகிறேன். அவர்களின் பொதுச் சேவை உணர்வை மிகவும் போற்றுகிறேன். ஆனால் வெளியிலிருந்து நமது உதவி அவர்களுக்குத் தேவை. நாம் அரசாங்கத்திடமே நிர்வாகத்தை விட்டுவிட முடியாது. குடிமக்கள் என்ற முறையில் அது நமது பொறுப்பு. இந்தியாவுக்கேற்ற ஓர் அறிவுத் திட்டம் டிசம்பர் முடிந்து 2017 நிறையும் வேளையில், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் நாட்களைச் செலவிட்டேன். இந்தியாவில்தான் மேலும் வேலை செய்ய விரும்புகிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். இதைச் சுயநலக் காரணங்களுக்காகவே செய்கிறேன். இந்தப் பரந்த, வேற்றுமைகள் கொண்ட, வளமான வரலாறும் துடிப்புமிக்க மக்களும் கொண்ட நாட்டிலிருந்து நான் கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது. சாம் பிட்ரோதாவுடனான எனது பணி ஒரு வித்தியாசத்தை உருவாக்கி வருகிறது என்று நினைக்கிறேன். அவர் மூலமாக நான் இந்தியாவின் பிற மனிதர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முழுவதற்குமான நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. எதிர்காலச் செயல்பாட்டிற்கான திட்டத்தை வகுக்கின்ற சர்ச்சைகளோடு நான் இப்புத்தகத்தை முடிக்க நினைக்கிறேன். எனது சொந்தச் சிந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இப்படிச் செய்கிறேன். ஆனால் இந்தப் போராட்டத்தில் மற்றவர்களும் நம்மோடு சேர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நாம் பணிசெய்யக்கூடிய பத்துத் துறைகள் இருப்பதாக நினைக்கிறேன். அவற்றில் பல ஏற்கெனவே தொடங்கி நடந்து கொண்டிருப்பவை. பிறரிடம் வேறுபட்ட, இதைவிடச் சிறந்த பட்டியல்கள் இருக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எந்தவிதமான உறுதியான திட்டமாகவும் இந்தப் பத்தையும் முன்வைக்கவில்லை. காந்திஜி "மாற்றமாக இரு" என்று கூறியபோது, மக்கள் செயல்பட வேண்டும் என்று அவர் கருதினார் என்பது மட்டுமல்ல, மக்கள் தங்களுக்குள் நோக்கவேண்டும், பிறர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று அர்த்தப் படுத்தியதாகவே நான் நம்புகிறேன். 1. தொழில்நுட்ப அறிவு. தொழில்நுட்ப அறிவுக்கான சண்டை முதலில் வருகிறது. இது சத்தியாக்கிரகத்துக்கான விதி. இந்தத் துறையில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமுழுவதும் கேள்வி கேட்கப்படுகிறது. நாங்கள் பதிவிட்ட தரங்களை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி யிருக்கிறார்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள குடிமக்களுக்கு இதைச் சொல்லியிருக்கிறோம். இந்தத் தகவல் மேலும் பரவலாக வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பெரிய தேவை இருக்கிறது என்பது தெளிவு. தில்லியின் மாண்புமிகு உயர்நீதி மன்றம் மற்றும் அமெரிக்க மாண்புமிக்க மேல்முறையீட்டு அவைகளின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால் வெறுமனே காத்திருப்பதைவிட வேலை அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஆவணங்களைப் பயன்படுத்த வேண்டிய மக்கள், கல்வியாளர்கள், பொறியியலாளர்கள், நகர அதிகாரிகள், சாதாரணக் குடிமக்கள் எல்லார் மனத்திலும் இந்தப் பிரச்சினையை எழுப்ப வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து நமது சமூகத்தை நிர்வகிக்கும் தொழில்நுட்ப விதிகள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று குரலெழுப்பினால்தான் இது நடக்கும். 2. இந்தியாவின் பொது நூலகம். இந்தியப் பொது நூலகம் வாயிலாக எல்லாருக்கும் புத்தகங்கள் கிடைக்கச் செய்வது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் அதிக வேலை பாக்கி யிருக்கிறது. இந்தியாவின் எல்லா நூலக நூல்களையும் உயர்தெளிவில் ஸ்கேன் செய்வதில் இயலாற்றல் மிகுதியாக உள்ளது. அந்த இயலாற்றலை வெளிக் கொண்டுவர, தற்போதைய சேகரிப்புக்கு மேற்தகவல்களை நிச்சயப் படுத்தல், விடுபட்ட ஸ்கேன்களை இணைத்தல், மேலும் செய்திகளைச் சேர்த்தல் என அதிக வேலை உள்ளது. முன்னேறிய காட்சிக்குறி வாசிப்பினைப் பிரதிகளில் பயன்படுத்துவதற்கு மிகுந்த தேவை இருக்கிறது. இந்தியாவின் கணினி (எண்ணியல்) நூலகத்தை உருவாக்குவதில் அரசாங்கத்தின் முயற்சிகளை நான் போற்றுகிறேன். ஆனால் மொத்தப் புத்தகச் சேர்க்கையையும் மறுஸ்கேன் செய்ய வேண்டும் என நம்புகிறேன். குறிப்பாக இதுவரை செய்த ஸ்கேன்கள் குறைந்த தெளிவில் உள்ளன. பல பக்கங்கள் காணாமலும், திரிந்தும் உள்ளன. இது சேகரிப்பை முழுமை அற்றதாக்குகிறது. ஒளிக்குறி வாசிப்புச் செய்வது கடினமாக உள்ளது. இந்தியாவில் ஒரு மிகப் பெரிய பொதுத் தளம் அமைவது எல்லா மொழிகளிலும் மிகப் பெரிய அளவு கல்விப் பொருள்களைக் கிடைக்கச் செய்ய உதவும். இப்போதுள்ள சேகரிப்பில் 400,000 நூல்கள் உள்ளன. ஆனால் பல மில்லியன் கணக்கான நூல்களைச் சேர்க்க மேலும் முழுமையான முயற்சி தேவைப்படும் என்பது என் கணிப்பு. இது நடக்கக்கூடிய இலக்குதான். சில ஆண்டுகள் மட்டுமே தேவைப்படும். இந்தியாவின் எதிர்காலக் கல்விக்கு இது ஓர் அருமையான முதலீடாக இருக்கும். குடியரசுத் தலைவர் ஒபாமா அலுவல் ஏற்றபோது, நான் ஜான் பொடேஸ்டாவை அணுகினேன். நாங்கள் ஒபாமாவுக்கு இதேபோன்ற விதத்தில் ஒரு திறந்த கடிதத்தை அனுப்பினோம். நான் அந்தக் கடிதத்தை ஓர் இணைய தளத்தில் வெளியிட்டேன். அதன் பெயர் YesWeScan.org. அது ஜனாதிபதியின் "நம்மால் முடியும்" (Yes We Can) என்ற திட்டத்தின் முழக்கத்தை ஒட்டியது. அந்தக் கடிதத்தின் விளம்பர வார்த்தைகள் இவை: "ஒரு மனிதனை நிலவுக்கு நம்மால் அனுப்ப முடியும் என்றால், காங்கிரஸின் நூலகத்தையும் கணினிவெளியில் நிறுவமுடியும்." ஜான் எனது சக-ஆசிரியர் என்பதால் ஒரு நல்ல பதிலைச் சேகரிப்பாளர் டேவிட் ஃபெரியரோ வழியாக நிர்வாகம் அனுப்பியது. ஆனால் பயன் ஒன்றும் விளையவில்லை. புதிய அமெரிக்க எண்ணியல் பொது நூலகத்திற்கு இம்மாதிரிப் பெரியதொரு நாட்ட இலக்கில் ஆர்வம் ஊட்டலாம் என்று தைரியமாக முயற்சி செய்தேன். ஆனால் அதுவும் பயனளிக்க வில்லை. இந்தியா இந்தச் சவாலை மேற்கொண்டு எதிர்காலத் தலைமுறையினர் கல்விபெற ஓர் அறிவுக் கோயிலை நிறுவலாம் என்பது என் நம்பிக்கை. 3. அரசாங்கப் பிரகடனங்கள். அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இதழ்களை நவீனப்படுத்துதல் என்பது மூன்றாவது முயற்சி. இது அரசாங்கத்திற்குள்ளும், அதிகாரபூர்வ அரசிதழ்கள் போன்ற துறைகளில் அடித்தள உதவியோடும் வேகம் கொள்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் இந்தத் துறைக்கு மேலும் அதிக முயற்சி தேவை. அரசிதழ்களின் பழைய வெளியீடுகள் அவற்றின் புராதன தொழில்நுட்பத் திரைகளிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மிக முக்கியமாக, அரசிதழ்கள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள், உபவிதிகள், அரசாங்கத்தின் பிற எல்லாப் பிரகடனங்களும் பரவலாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கச் செயல்பாட்டாளர்கள் இந்த விஷயங்களை இலாபம் தருவதென்று நோக்கினால்தான் வெளியிடுவார்கள். நாம் நமக்குக் கற்பித்துக் கொள்வது போன்றே, அவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். அரசாங்கப் பிரகடனங்களை மேலும் பரவலாகக் கிடைக்கச் செய்ய நாம் செய்ய வேண்டிய இரண்டு முயற்சிகள் உண்டு. முதலாவது முற்றிலும் தொழில்நுட்ப முறையிலானது. மாநில மற்றும் நகராட்சி அரசிதழ்களைப் பிரதி எடுத்தல். இப்போதுள்ள ஆன்லைன் கோப்புகளையும் தாண்டி, பழைய பதிப்புகளையும் ஸ்கேன் செய்ய வேண்டும். இப்போதிருக்கும் ஆன்லைன் அரசிதழ்களைப் படி எடுப்பதற்கு கணினி திட்டமிடுவது கடினம், ஆனால் சற்று தொடர்ந்த முயற்சியால் இதைச் சாதிக்கலாம். அரசாங்கம், சட்டத்துறை, தொழில்நுட்ப உலகு ஆகியவற்றின் பிரதிநிதிகளை ஒரு மாநாட்டில், பேரவையில் அல்லது வேறுவிதக் கூட்டங்களில் ஒன்றாகப் பங்கேற்கச் செய்வது பயன் தருகின்ற ஒரு காரியம். அதிகாரபூர்வ சஞ்சிகைகளின் ஒழுங்கமைவு ஒன்றை உண்மையாகவே நவீனப்படுத்தவும், சட்டத்தை அமுல்படுத்தவும் சட்டமியற்றலில் சில மாற்றங்கள் ஒருவேளை தேவைப்படலாம். நிர்வாகத்திலும் செயல்முறையிலும் மாற்றங்கள் தேவை என்பதிலும் ஐயமில்லை. இந்தியாவில் அரசு ஆணையிடும் துறைகளில் பணி புரிபவர்களையும், ஐக்கிய நாட்டு ஒழுங்கமைவை உருவாக்கியவர்கள் போன்ற பிற திறனாளர்களையும் ஒன்றுசேர்ப்பதும் சில பருமையான நடவடிக்கைகளைத் தொடங்க உதவும். 4. இந்து சுயராஜ்யம். இந்து சுயராஜ்யத்தின் வியத்தக்க வளமான வரலாற்றை ஆவணப்படுத்துவது தனிப்பட்ட முறையில எனக்கு மிகப் பிடித்த வேலை. அந்தச் சேகரிப்பில் மேலும் நூல்களைச் சேர்ப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இங்கும் சில பிரச்சினைகள் உள்ளன. தொழில்நுட்பக் குறைபாடுகள், பதிப்புரிமை உறுதிப்படுத்தல்கள் வாயிலாக மகாத்மா காந்தியின் படைப்புகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. சுதந்திரப் போராட்டம் முழுமைக்குமான பதிவுகள், அடித்தளம் இட்ட தலைவர்களின் மூல ஆவணங்கள், உரைகள் போன்றவை குறிப்பாக, அவை அரசாங்க நிதியைப் பயன்படுத்திச் செய்யப்பட்டால், உறுதியாகக் கிடைக்க வேண்டும். சாபர்மதி ஆசிரமும்கூட காந்திஜியின் படைப்புகள்மீது பதிப்புரிமை கேட்கிறது, அவற்றைப் பயன்படுத்துவதில் தொழில் நுட்ப எல்லைகளைச் சுமத்துகிறது. தொகுப்புகளுக்கான பிடிஎஃப் கோப்புகளைப் பெற்றவுடன் நான் செய்த முதல் வேலை, அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த, அப்பக்கங்களைச் சிதைத்துக் கொண்டிருந்த காப்புரிமைக் கட்டுப்பாடுகளையும் நீர்க்குறிகளையும் நீக்குவதுதான் (இதனால் ஒரே தொகுதிக்குள்ளிருந்து பக்கங்களை எவரும் எடுத்துக் கொள்ளலாம்) என்பதை ஒப்புக்கொள்கிறேன். காந்தி போர்ட்டலில் உள்ள பொருள்களின் எல்லாப் பிரதிகளையும் நீர்க்குறிகள், பயன்படுத்துவதற்குரிய தொழில்நுட்பத் தடைகள் இன்றி எங்கள் சொந்த சுயராஜ்யத் தொகுதியில் சேர்க்குமாறு ஆசிரமத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்களுடனும், இந்தியாவில் உள்ள முக்கிய வரலாற்று விஷயங்களின் பொறுப்பாளர்களுடனும் நான் இதற்கான விவாதத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். படைப்புகளின் நேர்மையையும் அவற்றின் தவறான பயன்பாட்டிலிருந்தும் பாதுகாக்கவேண்டிச் செய்துள்ள சில கட்டுப்பாடுகளுக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த வரலாற்றுப் படைப்புகளைப் பூட்டி வைப்பதால் தவறான பயன்பாட்டைத் தடுக்க முடியாது. நேர்மையான பயன்பாட்டைத்தான் தடுக்கும். நாங்கள் யாவருமே ஒரு பொது நோக்கத்திற்குப் பாடுபடுவதால், இந்த விவாதத்தை அடுத்துவரும் சில ஆண்டுகளில் பலமுறை செய்ய வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். 5. இந்தியாவின் ஒரு நிழற்படப் பதிவு. நாம் அடுத்துச் செய்ய வேண்டிய வேலை, இந்தியாவின் நல்ல நிழற்படப் பதிவை அளித்தல் என்பது பணியாற்ற வேண்டிய ஐந்தாவது துறை என்று நான் நம்புகிறேன். தகவல் அமைச்சகத்தின் நாங்கள் பார்த்த நிழற்படங்கள் குறைந்த தெளிவில் இருந்தாலும் பிரமிக்கத் தக்கவையாக உள்ளன. இந்தியா முழுவதும் எண்ணற்ற நிழற்படக் காப்பகங்கள் பூட்டிவைக்கப்பட்டுள்ளன. பலசமயங்களில் உயர்தெளிவில் உள்ள ஸ்கேன்கள் கட்டணத் தடைக்குப் பின் உள்ளன. பிரிட்டிஷ் நூலகம் போன்ற இடங்களிலும் வியக்கத்தக்க சேகரிப்புகள் உள்ளன. அச்சிடல் முதலாக வலைத்தளம் வரை பயன்படத்தக்க உயர் தெளிவுள்ள நிழற்படங்களின் தளம் ஒன்றை உருவாக்குவது ஒரு ஏற்புடைய இலக்கு என்று நான் நம்புகிறேன். அந்நிழற்படத் தளம் தடையின்றிப் பயன்படுத்தக் கிடைப்பதாக இருக்க வேண்டும். இது ஒன்றும் கடினமல்ல. உதாரணமாக, தகவல் அமைச்சகத்தின் நிழற்படப் பதிவேட்டை உடனடியாகக் கிடைக்கச் செய்யமுடியும். அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எவ்விதக் காரணமும் இல்லை. 6. அகில இந்திய வானொலி. ஆறாவதாக, அகில இந்திய வானொலியில் காந்திஜி தமது வாழ்க்கையின் இறுதி ஆண்டில் 129 உரைகளை ஆற்றியிருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த வியப்பளித்தது. அகில இந்திய வானொலியின் பெட்டகங்களில் இன்னும் ஏராளமாக விஷயங்கள் இருக்கும் என்பது உறுதி. இந்த பொக்கிஷங்களில் சில இசை, பிற விஷயங்கள் பற்றிய வணிக வட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. அகில இந்திய வானொலி, அரசாங்கத்தின் ஒரு முக்கியப் பகுதி. அதன் சேகரிப்புகளை மேலும் பரந்த பயன்பாட்டிற்கு அளிப்பது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும் 7. இந்தியாவின் வீடியோ பதிவு. ஏழாவதாக, கேட்பொலிக் (ஆடியோ) காப்பகங்களுடன் நெருக்கமான உறவு கொண்டவை காட்சிக் (வீடியோ) காப்பகங்கள். முதன்முதலில் ஒளிபரப்பப் பட்டபோது எப்படி இருந்ததோ அதே அளவுக்கு இன்றும் பிரபலமாகவும் பொருத்தமாகவும் இருப்பது 'பாரத் ஏக் கோஜ்' (டிஸ்கவரி ஆஃப் இந்தியா). அதன் 53 பகுதிகளையும் நாங்கள் பதிவிட்டோம். இராமாயணத்தை ஏன் பதிவிடக்கூடாது? அல்லது இந்தியாவின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கொண்டாடுகின்ற பாட்டு, நடனம், கலை போன்ற வியக்கத்தக்க தயாரிப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை ஏன் வெளியிடக்கூடாது? அகில இந்திய வானொலி போலவே தூர்தர்ஷனும் அரசாங்கத்தின் பகுதியாக நீண்ட நாள் இருந்துள்ளது. இப்போது அது ஒரு சுயேச்சையான முகமை, இருப்பினும் ஒரு பொதுக் குறிக்கோள் கொண்டது. தூர்தர்ஷன் அன்றி, இந்தியா முழுவதும் பிற வீடியோ காப்பகங்கள் பல உள்ளன. அவை மேலும் பரவலாக கிடைக்கச் செய்ய முடியும். வீடியோக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் படைப்புகள் மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை விழைகிறார்கள் என்பதுதான் அமெரிக்க தேசியக் காப்பகங்களுடனான என் அனுபவம். எங்கள் தன்னார்வலர்கள் 6,000 வீடியோக்களை நகலெடுத்து அவறறை 75 மில்லியன் பார்வைகளுக்குமேல் கிடைக்கச் செய்தபோது, சேகரிப்பாளர்கள் சிலிர்த்துப் போயினர். சேகரிப்பகங்களை வணிகப் பயன்பாட்டுக்கான தவறான எண்ணத்தில் வீடியோக்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு செய்வது பரவலான விநியோகத்திலோ, குறித்த அளவு பணம் சம்பாதிப்பதிலோ கூட முடிவதில்லை. நமது வரலாற்றைத் தவறான நோக்கத்தில் மறைத்து வைப்பது பொது மக்களுக்குரிய முறையான சேவையும் அல்ல. மிகச் சிறந்த தரத்தில் வீடியோக்களையும், நிழற்படங்களையும், கேட்பொலியையும் கிடைக்கச் செய்வதில் கவனிக்க வேண்டிய மற்றொரு கூறு இருக்கிறது. ஒரு திரைப்படம் அல்லது செய்தித் தயாரிப்பு, அல்லது உயர்தர பத்திரிகைக் கட்டுரையில் மிகவும் கடினமான பகுதி பி-ரோல் அல்லது அச்சுக்கான நிலைப் படங்களைக் கண்டுபிடிப்பதுதான். நீங்கள் ஒரு பயணக் கட்டுரை எழுதினால், உங்களுக்கு தாஜ்மஹாலின் ஒரு நிழற்படம் தேவையாக இருக்கும். இந்தியாவைப் பற்றிய ஒரு திரைப்படம் எடுக்கிறீர்கள் என்றால் நேருவைப் பற்றிய ஒரு காட்சித் தொடர் உங்களுக்குத் தேவைப்படலாம். இம்மாதிரி வரலாற்றுப் பொருள்களைப் பெறுவது பல சமயங்களில் மிகவும் கடினமாக உள்ளது. வரலாற்றுப் பதிவின் பொதுமக்கள்-மையமிட்ட பகுதியைக் கணினிமயப் படுத்தி, அத்தகவல்களை இலசமான, தடையற்ற பயன்பாட்டுக்கு அளிப்பதால் அரசாங்கம் பாலிவுட்டுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் சிறிய தனித்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தங்கள் சொந்தப் படைப்புகளில் பயன்படுத்த விரும்பும் எழுத்தாளர்களுக்கும், ஏன் மாணவர்களுக்கும் கூட ஒரு நல்ல கொடையை அளிப்பதாகும். சாதாரண, பொதுமக்களுக்கான இவ்வித மையத்தை உருவாக்குவதால் தனியார் செயல்படு விதத்தையும் ஊக்கப்படுத்துகிறோம். மேற்கண்ட ஏழு துறைகளும் கடினமானவை, எனினும் பெருமளவு நேரியவை. நான் மேலும் மூன்று சவால்களை முன்வைக்க விரும்புகிறேன்: 8. பாரம்பரிய அறிவு; 9. நவீன அறிவியல் அறிவு; 10. தகவலை ஜனநாயகப்படுத்துவது என்ற பரந்த உயிர்மூச்சான இலக்கு. மரபுவழி (பாரம்பரிய) அறிவும் உயிரினத் திருடர்களும் மரபுவழி அறிவு எனக்குப் புதியதொரு துறை. அதில் நான் அதிகம் படித்ததில்லை. 2017 அக்டோபரில் எனது பயணத்திற்காக, சாம் சிகாகோவிலிருந்து பறந்துவந்தார். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து நான் பறநதுவந்தேன். இருவரும் தில்லி விமானநிலையத்தில் சந்தித்து நேரே பெங்களூரு சென்றோம். சாம் துணைவேந்தராக இருக்கும் ஓர் ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்திற்கும் மருத்துவ மனைக்கும் முதலில் சென்றோம். தனது நண்பர் தர்ஷன் சங்கருடன் சேர்ந்துசாம் இந்த அமைப்பை 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவ உதவினார். ஆயுர்வேதம் என்பது இந்திய சமஸ்கிருதப் பனுவல்களில் உள்ள மரபுவழி மருத்துவச் சிகிச்சை முறை. காலங்காலமாக அது கடத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. அதைச் செய்பவர்கள் ‘வைத்தியர்கள்’. ஆயுர்வேதத்திற்குத் தொடர்புடையது யுனானி. அது அரபு, பாரசீக நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறை. அதைச் செய்பவர்கள் முஸ்லிம் ஹகீம்கள். சாம் தனது குழுவுடனும் பேராசிரியர்களுடனும் கடமையாற்றிய போது, நான் பூங்காக்களைச் சுற்றி வந்தேன். டிரான்ஸ்-டிசிப்ளினரி (பல்துறைப்) பல்கலைக் கழகத்தின் (டிடியூ) பூங்காக்கள் மனம் கவரும் இடங்கள். இந்தியாவில் பயன்படும் மருத்துவத் தாவரங்கள் 6,500க்கு மேல் உள்ளன. அவை பழைய பனுவல்களில் ஆவணப்படுத்தப் பட்டும் உள்ளன. டிடியூவின் பூங்காக்களில் 1,640 இனங்கள் வளர்க்கப்படுகின்றன. விரிந்த மூலிகைக் காப்பகம் ஒன்றில் 4,500 இனங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன. டிடியூ, செவ்வியல் பனுவல்களின் பரந்த அறிவுடனும் முறைகளுடனும் நவீன அறிவியலை இணைக்கிறது. ஆயுர்வேதத்தின் செவ்வியல் உத்திகள் எப்படி, ஏன் பயன் அளிக்கின்றன (அல்லது அளிக்கவில்லை) என்பதைப் புரிந்துகொள்வதில் 50 பிஎச்.டி. மாணவர்களுக்கு மேல் மிக முன்னேறிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புலம் அண்மையில் இளங்கலைப் படிப்பையும் உள்ளடக்கும் விதமாக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. ஒரு மிகப் பெரிய மருத்துவ மனையையும் நடத்துகிறது. மேலும், டிடியூவில் 6,500 மருத்துவத் தாவரங்கள், சூத்திர ஆக்கங்கள், மருந்தியல், மருந்தாளுகை விதிகளும் முறைகளும், சிகிச்சை முறைகள், நோய்த்தோற்றம், உயிரிக் கட்டுப்பாடு, ஆயுர்வேதத்தின் பிற கூறுகள் பற்றிய கணினித் தகவல்தளம் உள்ளது. இந்த ஆய்வின் பல பிரிவுகளை நான் கண்டேன். உதாரணமாக, சில உணவுகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்று கூறும் ஆய்வுகள் உள்ளன. சிவப்பு ஒயின் இவ்வாறு செய்யும் என ஜனரஞ்சக ஆய்வுகள் காட்டியுள்ளன. ஆயுர்வேதத்தில் மாதுளைக்கு இவ்விதப் பண்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆயுளை நீட்டிக்கும் ஆயுர்வேதப் பிரிவு ரஸாயனம் எனப்படுகிறது. மாதுளை பற்றிய முற்கோளைச் சோதிக்க ஒரு பிஎச்.டி. மாணவர் பழ ஈக்களைப் (ட்ரோஸோஃபிலா) பயன்படுத்தினார். சில ஈக்களுக்கு சிவப்பு ஒயினும், சிலவற்றிற்கு மாதுளம் பழச்சாறும் தரப்பட்டது. பிற ஈக்கள் கண்காணிப்புக் குழு. ஒரு கொள்கலத்தின் மீது எவ்வளவு உயரம் ஈக்கள் ஏறமுடியும், எவ்வளவு நேரத்திற்கு என்பதை வைத்து அவற்றின் உயிர்ச்சக்தி, பலம் ஆகியவற்றை அளக்க முடியும். சிவப்பு ஒயின் குழு, கண்காணிப்புக் குழு ஆகியவற்றை விட மாதுளம் பழம் அளிக்கப்பட்ட ஈக்கள் குழு, நீண்ட வாழ்நாள் பெற்றது மட்டுமின்றி, அதன் இனப் பெருக்க ஆற்றலும் அதிகரித்தது என்பதை மாணவர் கண்டார். டிடியூ அறங்காவலர் குழுவின் உப-தலைவரும், முக்கிய நரம்பியல் நிபுணருமான டாக்டர் ராமஸ்வாமி இதைவிட மேலும் சுவாரசியமான சோதனை ஒன்றை வருணித்தார். மருத்துவத் துறையில் ஒரு மருந்தை எப்படி நிஜ உலகத்தில் (மனிதர்களிடம்) சோதித்துப் பார்ப்பது என்பது ஒரு பிரச்சினை. எலிகள், பழ ஈக்கள் ஆகியவற்றின்மீது ஆய்வகத்தில் சோதிக்கலாம், ஆனால் அவை மனிதர்களிலிருந்து வேறுபட்டவை. மனிதர்கள்மீது கொள்கைகளைச் சோதிப்பது கடினமானது. ஏனெனில் மிகப் பெரிய தீங்கு நிகழலாம். மேலும், கள ஆய்வுகளுக்குக் கடுமையான நெறிமுறைகள் உள்ளன. மருத்துவ ஆய்வுகள் எல்லாவற்றிலும் இது ஒரு கடினமான பிரச்சினை. மலேரியா நோயை குணப்படுத்த உதவும் மருந்துகள் உள்ளன என்றும் அவற்றின் திறனைச் சோதித்துப்பார்க்க விரும்பினார்கள் என்றும் டாக்டர் கூறினார். இதற்கு ஒரே வழி மருந்தைச் செலுத்திய ஈரலின் திசுச்சோதனை (பயாப்ஸி) செய்வதே. ஆனால் மலேரியாவால் பாதிக்கப் பட்டிருக்கும் உயிருள்ள மனிதன் மேல் இச் சோதனையைச் செய்ய முடியாது. அக்குழுவினர், ஒரு கையிலுள்ள தோல் செல்கள் மீது மிக முன்னேறிய ஸ்டெம்-செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். ஸ்டெம்-செல்களால் மனித உடலின் எந்தப் பாகத்தையும் வளரச் செய்ய முடியும். இவர்கள் ஈரல்களை வளர்த்தனர். அதில் ஒன்றில் மலேரியா நோயைப் புகுத்தினர். மற்றொன்றில் ஆயுர்வேத மருந்தைப் புகுத்தினர். இப்படியாக ஒரு பழைய மருந்தின் திறனைக் கண்டறிய முடிந்தது. இந்தப் பயணம் ஆர்வமூட்டுவதாக இருந்தது. என் சிந்தனைகள் இந்த மரபு வழி அறிவுக் களஞ்சியத்தை நோக்கித் திரும்பின. செவ்வியல் பனுவல்களில் காணப்படும் மருந்துகள், அவற்றின் நிழற்படங்கள், குறிப்புகள், பிற விஷயங்கள் ஆகியவை சேர்ந்த விரிவான தகவல்தளம் ஒன்று தங்களிடம் இருப்பதாக தர்ஷன் சங்கர் கூறினார். இந்த தகவல்தளத்தை ஆன்லைனில் வெளியிட முடியுமா என்று கேட்டேன். உயிரினப் பன்மியச் சட்டம் அதைத் தடுக்கும் என்று கூறினார். எனக்குப் புரியவில்லை, மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அன்று மாலை, மைசூர் மகாராணி மேதகு அரசி பிரமோதா தேவி உடையார், பெங்களூரு சமுதாயத்தின் சில டஜன் குறிப்பிடத்தக்க உறுப்பினர்களையும், டிடியூவின் மருத்துவர்களையும் பெங்களூர் அரண்மனையில் விருந்துக்கு அழைத்திருந்தார். உரை வழங்கலுக்குப் பிறகு, எங்களுக்கு தோசைகள், பானிபூரி உள்ளிட்ட ஒரு கண்கவர் தென்னிந்திய உணவு விருந்தாக அளிக்கப்பட்டது. உணவுக்குப் பிறகு தர்ப்பூசணிக் குடைவுக்குள் ஒரு தர்ப்பூசணி குல்ஃபியும், ஆரஞ்சுத் தோலுக்குள் ஆரஞ்சு குல்ஃபியும் அளிக்கப்பட்டன. விருந்தின்போது, நான் இணையத்தில் ஆயுர்வேத அறிவைப் பற்றியும், அந்த அறிவைப் பரப்புவதில் உயிரினப் பன்மியச் சட்டத்தின் உட்குறிப்புகள் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தேன். … கலிஃபோர்னியாவுக்கு நான் திரும்பிய பிறகு மரபுவழி அறிவைப் பற்றியும் உயிரினத் திருட்டைப் பற்றியும் ஒரு சுமைப் புத்தகங்களை வருவித்தேன். வந்தனா சிவாவின் முன்மாதிரியான புத்தகங்களிலிருந்து தொடங்கினேன். இந்தியாவில் நமது பொது நூலகத்தை ஊக்கத்துடன் பயன்படுத்துகின்ற செவ்வியல் மருத்துவ சமஸ்கிருதப் பண்டிதர்கள் சிலருக்குக் குறிப்புகள் அனுப்பி அவர்கள் கருத்தைக் கேட்டேன். ஆயுர்வேத மருத்துவ வரலாறுகளைப் படித்தேன். மரபுவழி அறிவின் காப்புரிமைகள் அறிவுச் சொத்து பற்றிய புத்தகங்களையும் படித்தேன். இரண்டு விஷயங்கள் என்னைக் குடைந்தன. முதலாவது, தர்ஷன் சங்கர் அவர்கள் விற்கும் 13 குறுவட்டுகளை எனக்கு அனுப்பி யிருந்தார். அவற்றின் தலைப்புகள் "ஹோமியோபதியில் மருத்துவத் தாவரங்கள்", "கேரளாவின் மருத்துவத் தாவரங்கள்" என்பன போன்று இருந்தன. ஒவ்வொரு குறுவட்டிலும் ஓர் எளிய தகவல்தள முகப்பு இருந்தது. அதில் தலைப்புகள், முக்கியச் சொற்கள், பிற விஷயங்கள் சேர்ந்த தாவரங்களின் படங்கள் இருந்தன. இந்த வட்டுகளை எளிதாக நல்ல இணைய முகப்பாக மாற்றமுடியும் என்று தோன்றியது. என்னைக் குழப்பிய மற்றொரு விஷயம் மரபுவழி அறிவு இணைய (எண்ணியல்) நூலகம் என்ற அரசாங்கப் பெருமுயற்சி. இந்த ஒழுங்கமைவு பலகாலமாக 150 புத்தகங்களுக்கு மேல் படியெழுத்துச் செய்தும் 297,183 மரபுவழி ஆயுர்வேத, யுனானி சூத்திர ஆக்கங்களைக் குறியாக்கம் செய்தும் அதிக உழைப்பினால் உருவாக்கப்பட்டது. பனுவல்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் புகழ்பெற்ற நிபுணர்கள். இந்தத் தகவல்தளம் இன்றைய நிலையில் மரபுவழி ஆயுர்வேதச் சூத்திரங்களின் முழு அளவு குறியாக்கத்தை அளிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சிக்கல். இந்தத் தகவல்தளம் பொதுமக்களுக்கானதல்ல. காப்புரிமைச் சோதகர்களுக்கு மட்டுமே உரியது. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் காப்புரிமைச் சட்டத்தினைப் பற்றி நீண்ட காலமாக நான் கவலை கொண்டிருந்தேன். பெரும்பான்மை மிகப் பெரு "வணிக முறை", "மென்பொருள்" காப்புரிமைகள் நன்மை செய்வதில்லை, தீமையைத்தான் செய்தன. அவை புத்தாக்கமோ தனித்தன்மையோ கொண்டவை அல்ல. 1994இல் இணையத்தில் அமெரிக்கக் காப்புரிமைத் தகவல்தளத்தை நான் வெளியிட்டேன். காப்புரிமை வழங்குவதில் உள்ள செயல்முறைகளை ஆராய்ந்தவாறும், காப்புரிமைகளைத் தங்கள் தினசரி வேலைகளில் பயன்படுத்துவோரிடம் பேசியவாறும் மிகுந்த நேரம் செலவிட்டுள்ளேன். உண்மையில், நான் காப்புரிமைத் தகவல்களை இணையத்தில் வெளியிட்ட போது, மோசமான, பழைய தேடுவசதிகளைக் கொண்ட அமெரிக்கக் காப்புரிமை, வணிகச்சின்ன அலுவலகத்தின் பணியாளர்கள் கணினியில் தங்கள் ஆய்வினைச் செய்ய என் வீட்டுக்கு வந்தனர். அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிட்ட வணிகமுறைகளுடனும், மென்பொருள் காப்புரிமைகளுடனும், மருத்துவத்திலும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக, அமெரிக்க, ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகங்கள் அதிகமும் கேள்விக்குரிய காப்புரிமைகளை வழங்கியிருந்தன. அவை தினசரி வாழ்க்கையில் மரபுவழி அறிவைப் பயன்படுத்தும் பெரிய வரலாற்றைக் கொண்ட இந்தியா, ஆப்பிரிக்கா, மற்றும் பிற இடங்களில் உணர்ச்சிகளை பாதித்திருந்தன. இவற்றில் புகழ்பெற்றது மஞ்சள் பற்றிய காப்புரிமை. மஞ்சளுக்கு காயங்களை ஆற்றுவது உள்பட குணமாக்கும் தன்மைகள் பல உண்டு என்று நீண்ட காலமாகத் தெரியும். இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் மஞ்சள் தூள் மற்றும் அதன் பயன்பாடு பற்றிக் காப்புரிமை வாங்கியிருந்தனர். இந்தியா கொதித்தெழுந்ததில் ஆச்சரியமில்லை. இந்தியாவில் பெரிய தேசிய அறிவிய்ல் ஆய்வகங்களை நடத்திவரும் அறிவியல் பெருந்தொழில் ஆய்வுமன்றத்தின் தலைமை இயக்குநரான டாக்டர் ஆர். ஏ. மாஷேல்கரின் மிகப் பெரு முயற்சியால் அந்தக் காப்புரிமை ரத்து செய்யப்பட்டது. மற்றொரு காப்புரிமை பாசுமதி அரிசி மீது அளிக்கப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக வங்காளத்தில் வளர்க்கப்படும் பயிர் இது. பாசுமதி அரிசியைக் குறும் பயிர்களோடு அயல்கலப்புச் செய்து பலம் பெற்ற வகையை உருவாக்குவதற்கு அளிக்கப்பட்டது இக் காப்புரிமை. இது ஒரு புத்தாக்கம் அல்ல. இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் கலப்பின அரிசியை உருவாக்குகிறார்கள். அது மட்டுமல்ல, இந்தக் காப்புரிமையில் பாசுமதி என்ற பெயரும் இடம் பெற்றிருந்ததால், அந்தச் சொல்லைக்கூட விவசாயிகள் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உருவாகியிருக்கும்! உயிரியல் பன்மியம் பற்றிய ஐக்கிய நாடுகள் சம்மேளனம் மரபுவழி அறிவின் அடிப்படையிலான காப்புரிமைகள், மேற்கத்தியக் கூட்டுநிறுவன உயிரினக் கொள்ளையர் சிலரின் வசமாகிவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டது. உள்ளூர்ச் சமுதாயங்கள் காலங்காலமாகக் கொண்டுள்ள அறிவை அவர்கள் கொள்ளையடிக்கலாகாது. நாடுகள் தங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுவதை அந்த மாநாடு ஊக்கப் படுத்தியது. இந்தியா 2002இல் உயிரினப் பன்மியச் சட்டத்தை அமுல் படுத்தியது. மேற்கத்தியக் குழுமங்கள் வட்டாரச் சமுதாயங்களின் அறிவை முழுமையாகப் பயன்படுத்தி இலாபம் அடையக்கூடாது, இலாபங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது மன்றத்திலும் இந்தச் சட்டத்திலும் ஏற்கப்பட்ட முக்கியக் கொள்கை. மரபுவழி அறிவின் மீது காப்புரிமை வழங்கப்பட்டால் இலாபங்கள் பகிர்நதுகொள்ளப்பட வேண்டும் என்பதை நானும் முழுமையாக உடன்படுகிறேன். மேலும் குறிப்பிட்ட மருத்துவ விளைவுகளை மரபு வழியாக அறிந்து பயன்படுத்தி வரும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் பரவலாகத் தாவர இனங்கள் அறுவடை செய்யப்பட்டால், அந்த இலாபங்கள் வட்டாரச் சமுதாயத் தினருடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். உயிரினப் பன்மியச் சட்டம் இந்தக் கொள்கைகளை உட்கொண்டுள்ளது. ஆனால் எனது பிரச்சினை இதுதான். அளிக்கப்பட்ட காப்புரிமைகள் எல்லாமும் இல்லாவிட்டாலும், மிகப் பெரும்பான்மையானவை, மஞ்சள் முதலாக பாசுமதி அரிசிவரை, இன்னும் பலப்பலவும் ஒட்டுமொத்தமான ஏமாற்றுகள். அவை அளிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் இன்னும் இதுபோன்ற மோசமான காப்புரிமைகள் அளிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. இணைய நூலகத்தின் பின்னுள்ள கொள்கை, காப்புரிமைச் சோதகர்கள் அப்படிப்பட்டவற்றைக் கண்டறிந்து மோசமான காப்புரிமைகள் வழங்குவதைத் தடுப்பதாகும். அமெரிக்க, ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகங்களுடன் இட்ட ஒப்பந்தங்கள் இணைய நூலகத்தில் உள்ளன. அவர்களின் காப்புரிமைச் சோதகர்கள் இந்தத்த தகவல்தளத்தை முறையான அடிப்படையில் பயன்படுத்தவேண்டும். இது ஓர் உடன்பாட்டுக் குரிய விஷயம். ஆனால் சிலர் தகவல்தளம் பரவலாகத் திறக்கப்படுவது எப்படியோ தீங்கானது என்று நம்புகிறார்கள். ஏனெனில் இந்த அறிவைத் தீய கூட்டுக்குழுமங்கள் பயன்படுத்திக் கொள்ளும். டிடியூவின் தகவல்தளத்தை ஆன்லைனில் அளிப்பதிலும் இதே போன்ற கவலை இருக்கலாம். ஆனால் எனக்கு இந்த வாதம் புரியவில்லை. முப்பதாண்டுகளாகப் பொதுமக்கள் தகவல்களை ஆன்லைனில் இட்டுவரும் எனது அனுபவத்தின் முகத்தில் இது அறைகிறது. இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு நான் பல பேருக்குக் குறிப்புகள் அனுப்பினேன். அவர்கள் எல்லாருமே, தகவல்தளத்தை இரகசியமாக வைப்பது மோசமான காப்புரிமைகளைத் தடுக்க உதவாது என்று என் போலவே ஒப்புக் கொண்டார்கள். இத் தகவலை இரகசியமாக வைப்பது பொதுக்கள அறிவைப் பரப்புதலுக்கு ஊறு செய்கிறது என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். பின்னிருக்கும் பனுவல்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் சூத்திர ஆக்கங்களை எவ்வாறேனும் தகவல் தளத்தில் போடுவதென்பது பழைய காலப் பழமொழியான "குப்பையை இட்டால் குப்பைதான் வரும்" என்பதை மெய்ப்பிக்கும் என்று சமஸ்கிருதப் பண்டிதர்கள் எச்சரிக்கிறார்கள். இருந்தாலும், தகவல்தளம் உள்ளது. அதன் தரம் மிக உயரியது என்ற கௌரவம் உள்ளது. இப் பயனுள்ள அறிவைப் பரப்புவதற்கு அதைப் பரவலாகக் கிடைக்கச் செய்வது உதவும் என்று நம்புகிறேன். தீய காப்புரிமைகளைத் தடுப்பதற்கு தகவல் பரவல் உதவும் என்றால், அந்தத் தகவலை மேலும் விரிந்த ஒரு காப்புரிமை அழிப்பாளர் குழுவுக்கு அளிப்பது இந்தச் சூழலுக்கு உதவிகரமாகத்தான் இருக்கும். தகவல் உயரிய தன்மை உள்ளதாக இல்லாவிட்டால் சமஸ்கிருத அறிஞர்கள் அதற்கு விளக்கம் தர அனுமதிப்பது பயனுடையது. மேலும், ஆயுர்வேத, யுனானி அறிவியல்களைப் பரப்புவது மிகவும் பயனுள்ளது. வந்தனா சிவா போன்ற காப்புரிமை அழிப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பது, சோதகர்களுக்கு மட்டுமான தகவல்தளத்தை உருவாக்குவதைவிட மிகச் சிறப்பான திட்டம். எனது சகாவான பெத் நோவெக், பாரக் ஒபாமாவின் திறந்த அரசாங்க முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியவர். அவர் சாம் பித்ரோதாவின் நல்ல நண்பரும்கூட. "காப்புரிமை உற்றுநோக்கு" (Peer To Patent) என்ற திட்டத்தின் முன்னோடி அவர். அதில் காப்புரிமைச் சோதகர்கள் இணையத்திலுள்ளோருடன் சேர்ந்து பழைய விஷயங்களின் உதாரணங்களைத் தேட முயற்சி செய்கிறார்கள். ஒரு சில காப்புரிமைச் சோதகர்களுக்கு மட்டும் தகவல்தளத்தை அளிப்பதற்கு பதிலாக இந்தத் திட்டம் இன்னும் மேலான முடிவுகளைச் சாதிக்கக் கோடிக்கணக்கான பேரின் ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. இதைப் பற்றிய விடைகள் எனக்குத் தெரியும் என்று நான் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அரசாங்கத்தின் மரபுவழி அறிவு கணினி நூலகத் தகவல்தளம் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அது பொதுமக்களுக்கான அறிவைக் கொண்டது, அரசாங்கத்தினால் பெருஞ்செலவு செய்து சேகரிக்கப் பட்டது. அதை யாவருக்கும் கிடைக்கச் செய்வது மரபுவழி அறிவுக்கு நன்மை தரும். அரசாங்கத்தின் முனைவு என்ற முறையில், பதிப்புரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசியல் சட்டம் ஆகிய யாவும் இந்த வெளிப்பாட்டுக்குச் சாதகமாக இருப்பது நல்லதென்று தோன்றக் கூடும். ஒரு வேளை என் எண்ணம் தவறாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இந்த உரையாடலை 2018இல் தொடங்க முடியும் என்பது எனது நம்பிக்கை. அது ஒருவேளை அரசின் தகவல்தளத்தை, வெறும் ஒரு போர்ட்டலில் அல்ல, மிகப்பெரிய இறக்கத்துக்கும் மறு-பயன்பாட்டுக்கும் உதவும் முறையில், மக்களுக்குத் திறப்பதற்காக அரசாங்கத்துக்கு ஒரு முறையான விண்ணப்பம் அளிப்பதில் முடியக்கூடும். அறிவியல் அறிவும் தில்லிப் பல்கலைகழக நகல் கடையும் ஒன்பதாவது பகுதி அறிவியல் அறிவு. அதாவது நவீன அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளியிடுவதைச் சொல்கிறேன். 2017இல் என் முயற்சிகளில் பெரும்பாலானவை அறிவியல் அறிவு கிடைப்பதற்கான தடைகள், குறிப்பாக அமெரிக்க அலுவர்களோ அதிகாரிகளோ தங்கள் கடமையாற்றும் நேரத்தில் வெளியிட்ட சஞ்சிகைக் கட்டுரைகளை வெளியீட்டாளர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டணத் தடைக்குப் பின்னால் ஒதுக்கிக் கொள்வது பற்றி அமைந்தன. அந்தப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு செய்வது, என் கண்டுபிடிப்புகளை அமெரிக்க வழக்கறிஞர் சங்கத்தின் முன்னால் வைத்து, முடியும் அல்லது முடியாது என்ற வாக்கினைப் பெறுவது, பிறகு டஜன் கணக்கான பதிப்பாளர்களுக்கும் முகமைகளுக்கும் அறிவிக்கைகளைச் சான்றஞ்சல்வழி அனுப்புவது என்பது என் அசலான திட்டம். பதிப்பாளர்கள் மீது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது, அவர்கள் அதற்கு 60 நாட்களுக்குள் கருத்துரை தர வேண்டும் என்று அந்தக் கடிதங்கள் அறிவிக்கும். அதற்குப் பிறகு என்ன என்ற கேள்வி என் மனத்தில் எழுந்தது. பொதுக்களப் பணிகளின் தவறான உறுதிப்பாடுகள் பற்றிக் கடிதம் அனுப்பும்போது நான் அவற்றைப் பதிவிட அனுமதி கேட்பதில்லை. உண்மையில் ஒரு கட்டுரை பொதுக்களத்தில் இருந்தால் எனக்கு அனுமதி தேவையில்லை. பிரச்சினைக்குரிய கட்டுரைகளின் நகல் என்னிடம் இருக்கிறது, இல்லையெனில் அது வெறும் கோட்பாட்டுப் பிரச்சினை என்பதைத் தெளிவு படுத்துகிறேன். கருத்துரைகள் கேட்பது என் வழக்கம், ஆனால் பெரும்பாலும் அவை வருவதில்லை. இச்சமயத்தில் அந்தக் கட்டுரையைப் பதிவிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அலெக்ஸாண்ட்ரா எல்பாக்யான் ஸை-ஹப் உடனும், ஆரோன் ஸ்வார்ட்ஸ் ஜேஸ்டாருடனும் பெற்ற அனுபவங்களால், தங்கள் நிதி ஆதாயங்கள் அச்சுறுத்தப்படும்போது பதிப்பாளர்கள் எவ்வளவு தீயமுறையில் மிருகத்தனமாக நடந்துகொள்வார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். அரசாங்கப் பணிகளைப் பற்றி நியாயமான விஷயங்களை அவர்கள் முன்னால் வைத்தாலும் பதிப்பாளர்கள் ஏறெடுத்தும் பார்ப்பார்கள் என்று நான் நம்பவில்லை. அவர்களுக்கு தரவிதிக்காரர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பது தெரியும். எனவே எல்லாத் ஆயுதங்களையும் போரிட எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். பொதுச் சொத்தை அவர்கள் அபகரித்திருக்கிறார்கள் என்று நான் நம்புவதால் அவர்களுக்கு அறிவிக்கைகளை உறுதியாக அனுப்புவேன். ஆனால் மலைமீதுள்ள அந்த ஒளிதரும் நூலகத்திற்கு (எனது லட்சியங்களுக்கு) வஞ்சகம் குறைந்த பிற வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இது போன்ற சூழல் ஒன்று இந்தியாவில் எழுந்தது. புகழ்பெற்ற தில்லிப் பல்கலைக்கழக நிழற்படநகல் கடை வழக்கு. அது ஒருவேளை வழி காட்டலாம். வழக்கமாகப் பேராசிரியர்கள் சஞ்சிகைக் கட்டுரைகளின் பட்டியலைக் கொண்டுவருவார்கள். கடையினர் நூலகத்திற்குச் சென்று நகல்களைக் கொண்டு வருவார்கள், பிறகு புத்தகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு ஒரு மிதமான விலையில் விற்பார்கள். அந்த ராமேஸ்வரி நிகழற்பட நகல்கடை மீது ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ், கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ், டெய்லர் அண் ஃப்ரான்சிஸ் ஆகியவை வழக்குத் தொடர்ந்தன. ஆயுதமேந்திய போலீசால் கடை சூறையாடப்பட்டது. அதன் உரிமையாளர் 'தி ஒயர்' பத்திரிகைக்கு, "அது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது--நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்ந்தேன்" என்று கூறினார். .இந்த வழக்கு புதுதில்லியிலுள்ள தில்லி உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது. என் நண்பர் ஷம்நாத் பஷீர் இந்தியாவின் முன்னணி அறிவுச் சொத்து பற்றிய அறிஞர்களில் ஒருவர். அர்ப்பணிப்புள்ள பொதுப் பணியாளர். அவர் மாணவர்கள், கல்வியாளர்கள் சமூகத்தின் சார்பாகக் குறுக்கிட்டார். இந்தியாவின் பதிப்புரிமைச் சட்டம், எந்த ஒரு பதிப்புரிமைச் சட்டத்தையும் போலவே, சில விதிவிலக்குகளைக் கொண்டுள்ளது. அந்த இடங்களில் பதிப்புரிமை சற்றும் பொருந்தாது. அமெரிக்காவில், உதாரணமாக, அரசாங்கத்தின் படைப்புகளுக்குப் பதிப்புரிமையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அமெரிக்காவிலும், ஒரு புத்தகம் எப்படிப்பட்டது என்றாலும் பார்வையற்றோருக்காக ஒருவர் பதிப்புரிமையை மீறாமல் நகலெடுத்து அளிக்கலாம். இது சர்வதேச உடன்படிக்கை. இந்தியாவில் மாணவருக்கு ஆசிரியர் பாடம் சொல்லித் தரும்போது ஒரு பணியை நகலெடுப்பதற்குப் பதிப்புரிமையிலிருந்து விலக்கு உண்டு. இதில் பதிப்புரிமைக்கு வேலையில்லை. தில்லிப் பல்கலைக் கழகக் கடை தயாரித்த பாடப்புத்தகங்கள் இந்த விதிவிலக்கின் கீழ்தான் வருகின்றன என்று நீதியவை கூறியது. ராமேஸ்வரி நகல்கடை செய்ததில் பதிப்புரிமை மீறல் எதுவுமில்லை. ஏனெனில் அப் பாடப் புத்தகங்கள் குறித்த நோக்கத்திற்காக, அறிவுப் பரப்பலை மேம்படுத்துவதற்காக, பல்கலைக்கழத்தின் அங்கீகாரத்துடன் செய்யப் பட்டன. அதுதான் பதிப்புரிமையின் நோக்கமுமாகும். பதிப்புரிமைச் சட்டம் பொருந்தாது. வழக்கு தள்ளுபடி. தில்லிப் பல்கலைக்கழக வழக்கைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீதியவையின் தீர்ப்பு எனக்குள் அதிர்வுகளை உண்டாக்கியவாறு இருந்தது. வளாகத்திற்குள் நான் என் சஞ்சிகைக் கட்டுரைகளின் தகவல் தளத்துடன் அணுகினால் என்ன ஆகும்? இங்கும் அமெரிக்காவிலும் எங்கும் காணப்படும் தளளுவண்டி உணவுக்கடை போன்ற ஒன்றைத்தான் நான் நினைத்தேன். சஞ்சிகைக் கட்டுரைகளுக்கு, கணினிப்பொருள் கண்டுபிடிப்புக் குறிகளை ஒரு பேராசிரியர் அளிக்க முடியும் என்பது என் எண்ணம். அபபோது பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவர் ஜன்னலில் வரும்போது, நான் அவர்கள் பாடக்கிரமம் அடங்கிய ஒரு யுஎஸ்பி இயக்கியை அவர்களுக்குத் தருவேன். பிறகு மற்றொரு பல்கலைக்கழத்திற்குச் சென்று அங்கும் இவ்விதமே செய்வேன். அறிவைப் பரப்புவதற்கான எளிய வழிமுறை இது. இலவச யுஎஸ்பி இயக்கிகளுடன் மாணவர்களுக்குச் சிற்றுண்டியும் கூட அளிக்கலாம். இந்தியாவில் புகழ்பெற வாய்ப்புள்ள குவாகேமோல் உணவுத் தயாரிப்புகளின் ஓர் அற்புதமான சேகரிப்பு என்னிடம் இருக்கிறது. "இது நேரான விஷயம் இல்லையா?" என்று ஷாம்நதிடம் கேட்டேன். "யுஎஸ்பி-இயக்கி, பாடப்புத்தகத்துக்குச் சமமாகத்தான் தோன்றுகிறது, ஆனால் குறித்த மெய்ம்மைகளை ஒரு நீதியவை எப்படி விளக்கம் கொள்ளும், அவர்கள் எப்படி யுஎஸ்பியையும் தாளினால் ஆன பாடப்புத்தகத்தையும் சமமாகக் கருதுவார்கள் என்பது தெரியாது" என்றார். ஆனால் இருவருமே நிச்சயமாக இது நேரான விஷயம்தான் என்று ஒப்புக் கொண்டோம். பதிப்புரிமைச் சட்டத்தில் கல்விக்கான உரிமை என்பது ஆழமாக உள்ளடங்கியிருக்கிறது என்பது மட்டுமல்ல, இது இந்தியாவின் அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளில் முழுவதுமாகப் பரவியிருக்கிறது. உதாரணமாக, உங்கள் விருப்பப் படி நீங்கள் ஒரு தொழிலைச் செய்யலாம், ஆனால் அது சாதி பற்றிய உரிமையாக உள்ளது. ஆனால் சாதிக்கும் மேலே ஒன்று உண்டு. ஒரு தொழிலைப் பற்றி நன்கு கற்றறியாவிட்டால் அதை நீங்கள் நடத்த முடியாது. தொழில்நுட்பத் தரவிதிகள் பற்றி எனது நிலைப்பாடு இதுதான். இதே வாதத்தை நான் பொதுவாக அறிவுக்கும் முன்வைக்க முடியும். செயல்படும் ஜனநாயகம் என்பதன் அடிப்படையில் அறிவுமிக்க குடிமக்கள் அமைப்பு இருப்பது அவசியம். எல்லாருக்கும் அறிவியல் அறிவைக் கிடைக்கச் செய்வதற்கு மாறாக, நான் அதை இருபது மில்லியன் இந்திய மாணவர்களுக்கு ஒருவர் ஒருவராக அளிப்பதில் மகிழ்ச்சியடைவேன். அது ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துரைக்கும்: அறிவு கிடைப்பதென்பது ஓர் இருமை எதிர்வு அல்ல. தனியார் சொத்துரிமை என்பது இருந்தாலும், மாணவர்கள் தங்கள் கல்வியை மேம்படுத்த முயலும்போது, அறிவுச் சாலையின் இந்தக் கடன்காரர்கள் கடக்கமுடியாத ஒரு தடையாக மாறிவிட விடக்கூடாது. கல்விக்கு வேண்டுமென்றே தடைகளை எழுப்புவது ஒழுக்கக்கேடானது. ஒருவேளை இந்தத் தடைகளை நீக்க, இதில் ஒரு வாய்ப்பு இருக்கக்கூடும். அந்தத் தகவல்களை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும், இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது என் நம்பிக்கை. இதைச் செய்யக்கூடிய தைரியம் எனக்கு உண்டா என்பதும் அல்லது இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு என்னை வளாகத்திற்குள் அனுமதிக்கும் தைரியம் உண்டா என்பதும் தெரியவில்லை. பேராசைக்கார பதிப்பாளர்கள் எவ்விதம் எதிர்வினை புரிவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் செயல்பாடு, இந்தியச் சட்டங்களின் நோக்க இலக்குகளுக்குள் நேரடியாக வருகிறது என்பது தெரியும். இம்மாதிரி அறிவுப்பரப்பலுக்கு அறிவுச் சத்தியாக்கிரகம் ஒன்றுதான் வழி என்றால் அப்படியே ஆகட்டும். தகவலறிவை ஜனநாயகப்படுத்துதல் பத்தாவது துறை தகவலை ஜனநாயகப் படுத்துதல். இதுதான் எனது ஒட்டுமொத்தச் செயல்துறை எல்லாவற்றையும் உள்ளடக்குவது, ஒருவேளை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. எனது தனிப்பட்ட அக்கறை, பொது நிதியினால்-அதாவது, வழக்கமாக அரசாங்கத்தின் நிதியால், சேகரிக்கப்பட்ட மிகப் பெரிய தகவல்தளங்களைக் கண்டறிவதும் அவற்றைக் கிடைக்கச் செய்வதும் ஆகும். இது மேலிருந்து கீழ்நோக்கி நிகழ்வது. பெரும்பாலும் இந்திய அரசாங்கம் அல்லது அமெரிக்க அரசாங்கம் என்ற தளத்தில் கவனம் குவிக்கப்படுவது. ஏற்கெனவே இருக்கும் விஷயங்களைத் தேடி அவற்றை மக்களுக்கு அளிக்க நான் முயற்சி செய்கிறேன். ஆனால் அறிவு மேலிருந்து கீழ் வருவதல்ல. அறிவு மக்களிடம் தொடங்குகிறது. எனது 2016 பயணத்தில் பங்கர் ராயைச் சந்தித்த போது இதைப் பெரிதும் கண்டேன். மேட்டுக்குடி மேயோ கல்லூரியில் சாம் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டியிருந்தது. மறுநாள் அதிகாலையில், ராஜஸ்தானின் மத்தியப் பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் என்ற முறையில் பட்மளிப்பு விழாவுக்கு சாம் தலைமை தாங்கச் செல்வதற்கு முன், நாங்கள் பேர்ஃபுட் கல்லூரிக்கு அவருடைய பழைய நண்பர் பங்கரைச் சந்திக்கச் சென்றோம். பேர்ஃபுட் கல்லூரி ஒரு வியக்கத்தக்க இடம். பங்கர் அதை 1972இல் நிறுவினார். இப்போது அது இராஜஸ்தானின் மத்தியில் திலோனியா என்ற கிராமத்துக்கு அருகில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. அவர்களது தனித்த முன்னெடுப்புப் பணி, சூரிய விளக்குகள். உலகமுழுதும் உள்ள கிராமங்களிலிருந்து பெண்களை வருவித்து எப்படிச் சூரிய விளக்குகளை அமைப்பது, பாதுகாப்பது என்று கற்பிக்கிறார்கள். பற்றவைக்கும் முறை, திட்ட வரைபடங்களைப் படிப்பது எப்படி, பிறருக்குக் கற்பிப்பது எப்படி என்று கற்கிறார்கள். அப்பெண்கள் வீட்டுக்குச் சென்று தங்கள் கிராமங்களுக்கு ஒளி தர முடிகிறது, இருட்டிய பிறகு மாணவர்களுக்கும், முதியோருக்கும் கற்பிக்க முடிகிறது. கைப்பேசிகளுக்கு மின்னேற்றம் செய்வது உள்ளிட்ட பிற பல வேலைகளுக்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது. இதைத் தவிர, சூரிய ஒளி சமைப்பான்கள், நீர் மறுசுழற்சித் திட்டங்கள், சூரிய சக்தி நீர் உப்புநீக்கம், குப்பை அகற்றல் திட்டங்கள் மேலும் பலவற்றை பேர்ஃபுட் கல்லூரி உருவாக்கியுள்ளது. சிறார்கள் பகலில் வயல்களில் உழைத்தாலும் இரவில் கல்விபெறுவதற்கான கணினித் திட்டங்களை ஆப்பிள் குழுமத்துடன் சேர்ந்து அமைத்துள்ளது. அண்மைக்கால பிஎச்.டி. மாணவர்கள் மேனிலை ஆய்வுக்கென ஓராண்டு திலோனியாவுக்கு வந்து இன்னும் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் பிறகு அவற்றை கிராமப்புற இந்தியாவிலும் உலகத்திலும் பயன்படுத்தவும் முனைகிறார்கள். அறிவு மண்ணிலிருந்து உற்பத்தியாகிறது. தேசிய அரசாங்கங்கள் மீது கவனத்தைக் குவிக்கலாம்; ஆனால் அவ்விதம் செய்வது, எண்ணற்ற சிறிய நூலகங்கள், பள்ளிகள், கிராமப் பெரியவர்களின் அறிவு, கோயில்கள் ஆயுர்வேத மருந்தகங்கள் ஆகியவற்றில் உள்ள பரம்பரை அறிவையும், மற்ற பல சேமிப்புக் களஞ்சியங்களிலுள்ள அறிவையும் புறக்கணிப்பதாகும். தகவலை ஜனநாயகப் படுத்துவது, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒட்டுச்சேர்க்கை நடைபெறும் வாய்ப்பையும் அளிக்கும் ஓர் இலக்கு ஆகும். உதாரணமாக, இரு நாடுகளிலும் உள்ள விவசாயிகள், மென்பொருளைப் பயன்படுத்தவும் தங்கள் கிராம எந்திரங்களைப் பழுதுநீக்கவும் விதைகளை மறுபயன்பாடு செய்யவும் பொதுவான அக்கறைகளைக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் வலுவான நாட்டுப்புற மரபுகளையும் கிராமப் புறங்களில் சிறிய நகரங்களில் ஏராளமான வளங்களையும் கொண்டுள்ளன. அமெரிக்கா-பாரத் "பாய்-பாய்" என்ற முழக்கம் ஆற்றல் மிக்கதாக இருக்கும்! இந்தக் கூட்டுச் செயலை உருவாக்குவதன் வலுவான அடிப்படையாக உள்ளவர்கள் அமெரிக்காவிலுள்ள இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த 3.5 மில்லியன் மக்கள். சாம் பித்ரோதா பெரும்பாலும் தகவலை ஜனநாயகப் படுத்துவது பற்றிப் பேசுகிறார். இது மிக உயர்ந்த ஓர் இலக்கு. ஒற்றைத் தகவல் தளத்தை இதற்கு விடுவித்தால் போதாது. தகவலை ஜனநாயகப் படுத்துவது என்பது அறிவை உற்பத்திசெய்வதிலும், நுகர்வதிலும் ஏற்படும் அடிப்படை மாற்றம். அறிவு அனைவருக்கும் கிடைப்பது என்பது நமது காலத்தின் நன்னம்பிக்கை. அதன் விளைவு தகவலை ஜனநாயகப்படுத்துவது. இந்த உயிர்மூச்சான இலக்கை அடைய நாம் உழைக்க வேண்டும். இந்தியா பற்றிய என் சொந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவும் அமெரிக்காவும் உலகத்தின் இரு பெரிய ஜனநாயக நாடுகள். இரண்டிற்கும் சுதந்திரப் போராட்டம், சட்டத்தின் விதி இவற்றின் வளமான பாரம்பரியம் உள்ளது. நான் இங்கு வசிக்காதவன், இந்தியனல்லாதவன். என் போன்ற ஒருவன் இந்தியாவில் அறிவைப் பற்றி இவ்வளவு சிந்திப்பது ஒருவேளை அசட்டுத் துணிச்சலாக இருக்கலாம். ஆனால் எனது முயற்சிகள் எவ்வளவு நன்றாக இங்கு ஏற்கப் பட்டுள்ளன எனக் காணும்போது நான் உணர்ச்சிவயப் படுகிறேன், மகிழ்கிறேன். இந்த முயற்சிகளை இருமடங்கு ஆக்க விரும்புகிறேன். எல்லா அறிவையும் உலகமுழுவதும் அளிக்க, அறிவைக் காலனிய நீக்கம் செய்ய, ஓர் உலகளாவிய புரட்சி வேண்டுமென்றால், அப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்த இந்தியாதான் உலகத்தில் சிறப்பான இடம் என்று உறுதியாக நம்புகிறேன். ஏன் இவ்விதம் நம்புகிறேன் என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைச் சொல்லி முடிக்கிறேன். டாக்டர் கவிராஜ் நாகேந்திரநாத் சேன்குப்த எழுதிய இரு பாக ஆயுர்வேத மருந்து முறை என்ற புத்தகம், வங்காளியில் ஓர் செவ்வியல் படைப்பு. அது 1901இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. அதிலுள்ள ஒரு வாசகத்தைக் கண்டு நான் வியப்படைந்தேன். கல்கத்தாவில் நீண்ட காலமாகத் தொழில் செய்துவந்த குறிப்பிடத்தக்க வைத்தியர்கள், சமஸ்கிருதப் பண்டிதர்கள் குடும்பத்தின் வாரிசு சேன்குப்த. "அறிவு இந்த நாட்டில் ஒருபோதும் பணத்துக்கு விற்கப்பட்டது கிடையாது. இந்து மத நூல்களில் அறிவை விற்பனை செய்வது கண்டிக்கப் பட்டுள்ளது" என்று அவர் கூறியிருக்கிறார். அது எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மெய்யாகவே, இந்தியத் தரவிதிகளின் ஒவ்வொரு பதிவிலும் பர்த்ருஹரியின் நீதிசதகத்தின் ஒரு வாக்கியத்தை-"அறிவு ஒரு செல்வம், அதை எவரும் திருட முடியாது"-என்பதைப் பொறித்திருந்தேன். 1901இன் ஓர் ஆயுர்வேதப் புத்தகத்தில் அதை காண்பேன் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் நான் வியப்படைந்திருக்கக் காரணமில்லை. சேன் குப்த மீண்டும் எனக்கு வியப்பேற்படுத்தினார். காரணம் அவர் ஃபிரான்சிஸ் பேக்கன் பிரபுவின் செவ்வியல் பனுவலான "தி அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் லேர்னிங்" என்பதிலிருந்து மேற்கோள் தரச் சென்றார். அறிவு இலாபத்திற்கோ விற்பனைக்கோ ஆன ஒரு நிறுவனமாக இருக்கலாகாது என்றும், அது படைத்தவனின் புகழுக்கான வளமான களஞ்சியமாகவும் மனிதனின் நிலைமைக்கு ஆறுதலாகவும் இருக்க வேண்டும் என்றும் பேக்கன் கூறினார். டாக்டர் சேன் குப்த, பிறகு சாஸ்திரீயப் பனுவல்களில் ஆழப் புகுந்து, அவை பழங்காலத்தில் எவ்விதம் உதவின என்பதை விளக்கினார்: "ஏதாவது ஒரு துறையில் திறமை அடைந்தவன், அதில் சிறப்புப் பெற விரும்புகின்ற தகுதியான மாணவர்களுக்கு அதை அளிக்கக் கடவன். மாணவர்கள் தங்களுடன் தங்கியிருக்கும் காலம் வரை ஆசிரியர்கள் கற்பிப்பது மட்டுமல்ல, உணவும் உறைவிடமும் அளிப்பதும் வேண்டும். போதிப்பதில் கற்றோர் ஈடுபடும்போது பணக்காரர்களும் நிலக்கிழார்களும் அவர்களை ஆதரிக்கத் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும்." உண்மையில் இந்தக் கொள்கையைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் நோக்க வேண்டும். பிராமணர்கள் பலர் மத நூல்கள் பிறருக்குக் கிடைக்காமல் பாதுகாத்து வந்தனர். சூத்திரர்கள் யாராவது அவற்றைக் கேட்டால் அவர்கள் காதில் உருக்கிய ஈயத்தை ஊற்றித் தண்டனை கொடுக்கும் அளவுக்குச் சென்றனர் என்பதை ஷாம்நாத் பஷீர் எனக்கு நினைவுபடுத்தினார். சாதித் தடைகள், மற்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்தியாவின் வரலாற்றில் அறிவு அனைவருக்கும் உரியது என்ற கூற்று ஆழப் பதிந்துள்ளது என்றே நினைக்கிறேன். மரபுரீதியான அறிவைப் பற்றிப் படிக்கும்போது, எனக்குள் அதிர்வு ஏற்படுத்திய மற்றொரு சம்பவம் இருக்கிறது. மருத்துவரை உருவாக்கும் மரபுகள் பற்றி நான் படித்துக் கொண்டிருந்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆயுர்வேத சிகிச்சையை நவீனப்படுத்துவது பற்றிய ஆர்வமூட்டும் புத்தகம் அது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்தியக் கல்விமுறை பரவலாகி வந்தபோது, மருத்துவர்களின் புதிய வகுப்பினரில் ஆயுர்வேதக் காரர்களும் இருந்தார்கள். அவர்கள், வெப்பமானிகள், நுண்ணோக்கிகள், நிறுத்துகடியாரங்கள் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தினார்கள். புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வந்தன. மருந்தகங்கள் வளர்ச்சியடைந்து, மையப்படுத்தப் பட்டன. இவற்றிற்கிடையில், மருத்துவத்தை போதிக்கும் புதிய பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. புதிய அஷ்டாங்க ஆயுர்வேதக் கல்லூரி ஆரவாரத்துடன் அர்ப்பணிக்கப் பட்டபோது அவர்கள் தகவற்கல் நாட்ட காந்திஜியை அழைத்தனர். தமக்கே உரிய காரணங்களால் காந்தி, அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். தலைமை விருந்தினர் என்ற வகையில் ஆரவாரத்துடன் வரவேற்கப் பட்ட அவரைச், சில சொற்கள் சொல்லுமாறு வேண்டினர். அந்த முழு நிறுவனத்தையும் அவர் கிழித்துக் குப்பையில் எறிந்துவிட்டார்! 1925 மே 6இல் செய்யப்பட்ட அந்தச் சொற்பொழிவை, அவரது படைப்புத் தொகுதிகளில் 27ஆம் பாகம் பக்கம் 42இல் நீங்கள் படிக்கலாம். பெரிய மருத்துவமனைகளும் நாகரிக மருந்தகங்களும் எவ்வாறு விஷயங்களை மேம்படுத்துவதற்கு பதிலாக மோசமாக்குகின்றன என்று நீளமாகக் கூறினார். ஆயுர்வேத மருத்துவர்களிடம் துப்புரவு இல்லை, அடக்கமுமில்லை என்றார். அதுதான் தொடக்கம். இப்பிரச்சினையின் வேருக்குச் சென்று தம்மால் மட்டுமே முடியும் என்ற வகையில் கிழித்தெறிந்து விட்டார். காந்தி சென்ற பிறகு அங்கு ஒரே குழப்பம். அழைப்புக் குழுவினர் அவருக்கு எழுதி அவரது சொற்களை வாபஸ் பெறுமாறு கேட்டனர். அவர் மறுத்துவிட்டார். நான் இந்தப் பேச்சை சாம் பித்ரோதாவுக்கு அனுப்பினேன். அவர் பல விஷயங்களில் காந்தியுடன் ஒத்துச் செல்வதாக எனக்கு எழுதினார். சமூகம் நோய்த் தடுப்பின்மீது அக்கறை காட்ட வேண்டும், மருத்துவர்கள்-மருந்துகள்-மருத்துவமனைகள் ஆகியவை தொழில் நிறுவனங்களாக வளர்வதில் அக்கறை காட்டலாகாது என்றுதான் அவர் உண்மையில் கூறினார் என்றார் சாம். மேலும் எல்லாவற்றுக்கும் நமக்கு விடைதெரியும் என்றும் மருத்துவர்கள் கருதுவது தவறு என்றும், நவீன மருத்துவர்கள் ஆயுர்வேதத்தில் எல்லா விடைகளும் இருப்பதாக நினைக்கின்றனர் என்றும், அவர்களிடம் பணிவும், சாதாரண மக்களின் வட்டார அறிவில் நம்பிக்கையும் இல்லை என்றும் காந்திஜி கருதுவதாக எடுத்துரைத்தார். இந்த இரு நிகழ்வுகளும் எனக்கு இந்தியா ஏன் தகவலை ஜனநாயகப் படுத்துவதற்கும் காலனிய நீக்கம் செய்வதற்கும் சரியான இடமாக இருக்கிறது என்று காட்டுகின்றன. இந்திய வரலாற்றிலும் குடியரசின் நவீன ஜனநாயகச் சட்டகத்திலும் அறிவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்துள்ளது. மேற்கத்திய மருந்தின் உயர்ந்த விலைகள், மரபு அறிவின்மீதான காப்புரிமைகள், முழு விஞ்ஞான அறிவுத் தொகுப்பு அளிப்பதில் கட்டுப்பாடு ஆகிய விஷயங்களை மக்கள் ஏற்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். ஒருசில கூட்டுக்குழுமங்களின் தனிச் சொத்தாகக் கல்வி இருக்குமானால் சமூகம் எவ்வளவு மோசமாகத் துன்புறும் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொள்கிறார்கள். சமூகப் பிரச்சினைகளைப் பேசித்தீர்ப்பதில் இந்தியாவுக்கு நீண்ட மரபு இருக்கிறது. அஷ்டாங்கத்தில் காந்திஜி வெளிப்படையாகப் பேசிய போது அதைத்தான் செய்தார். எல்லா மதங்களையும் சகித்துக் கொள்ளும் தன்மை வேண்டும் என்றபோது பேரரசர் அசோகனும் அதைத்தான் செய்தார். மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்ட உதவியும் செய்தார். உலகமுழுதும் அறிவு கிடைக்கச் செய்வதைப் பற்றிய வெளிப்படையான உரையாடல் நிகழ்த்தவேண்டுமானால், அந்த உரையாடலை வைத்துக் கொள்வதற்கு இந்தியாவே சரியான இடமாகத் தோன்றுகிறது. நான் இந்தக் குறிப்பை முடிக்கும் வேளையில் கிறிஸ்துமஸ் கலிஃபோர்னியாவில் கொண்டாடப்படுகிறது. ஃபிப்ரவரியில் இந்தியாவுக்குத் திரும்ப வருவதற்கான பயணச்சீட்டைப் பதிவு செய்திருக்கிறேன். புத்தாண்டினை எனக்கும் மற்றவர்களுக்கும் அறிவு நிறைந்த ஆண்டாகச் செய்யும் நம்பிக்கை இருக்கிறது. இந்தப் பயணத்தில் என்னை ஈடுபடுத்தியமைக்கு என் நண்பர் சாம் பித்ரோதாவுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஜெய் ஹிந்த். சுயாட்சி விதி. [பெங்களூரு டிடியூவின் மூலிகைச் சேகரிப்பு. ] பெங்களூரு டிடியூவின் மூலிகைச் சேகரிப்பு. [பெங்களூரு டிடியூவின் மூலிகைச் சேகரிப்பகம். ] பெங்களூரு டிடியூவின் மூலிகைச் சேகரிப்பகம். [சாபர்மதி ஆசிரமத்தில் காந்தி வேலை செய்த இடம். ] சாபர்மதி ஆசிரமத்தில் காந்தி வேலை செய்த இடம். [ஆயுர்வேத மருத்துவத்தின் பாரம்பரிய சித்தாந்தமான ரஸாயனத்தின் கொள்கைகளை அறிவியல்ரீதியாகச் சோதனை செய்வது பற்றி டாக்டர் பட்ட மாணவர்களின் அறிவிப்புப் பலகை. ] ஆயுர்வேத மருத்துவத்தின் பாரம்பரிய சித்தாந்தமான ரஸாயனத்தின் கொள்கைகளை அறிவியல்ரீதியாகச் சோதனை செய்வது பற்றி டாக்டர் பட்ட மாணவர்களின் அறிவிப்புப் பலகை. [மாண்புமிகு மைசூர் மகாராணியுடன். ] மாண்புமிகு மைசூர் மகாராணியுடன். [இரவு உணவின்போது சாம் பித்ரோதாவுடன். மத்தியில் நிற்பவர் டிடியூவின் தர்ஷன் சங்கர். ] இரவு உணவின்போது சாம் பித்ரோதாவுடன். மத்தியில் நிற்பவர் டிடியூவின் தர்ஷன் சங்கர். [அகமதாபாத்தில் இலா பட்டும் அனாமிக் ஷாவும் பேசுகின்றனர். ] அகமதாபாத்தில் இலா பட்டும் அனாமிக் ஷாவும் பேசுகின்றனர். [குஜராத் வித்யாபீடத்தின் பட்டமளிப்புவிழா ஊர்வலம். ] குஜராத் வித்யாபீடத்தின் பட்டமளிப்புவிழா ஊர்வலம். [புத்தகங்கள், ரிச்சட் ஆட்டன்பரோ பிரபு சேகரித்த தொகுதியிலிருந்து. ] புத்தகங்கள், ரிச்சட் ஆட்டன்பரோ பிரபு சேகரித்த தொகுதியிலிருந்து. [நேருவின் படைப்புகளும், இந்தியாவின் கட்டமைப்பு விதியும், சுதந்திரத்திற்கான ஆவணங்களும் ஸ்கேனிங் செய்யப்படக் காத்திருக்கின்றன. ] நேருவின் படைப்புகளும், இந்தியாவின் கட்டமைப்பு விதியும், சுதந்திரத்திற்கான ஆவணங்களும் ஸ்கேனிங் செய்யப்படக் காத்திருக்கின்றன. [பேர்ஃபுட் கல்லூரியில் பிரம்மாண்டமான பொம்மைகளுடன். ] பேர்ஃபுட் கல்லூரியில் பிரம்மாண்டமான பொம்மைகளுடன். [பேர்ஃபுட் கல்லூரியில் பெண்கள் சூரிய விளக்குகளை அமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பயிலுகின்றனர். ] பேர்ஃபுட் கல்லூரியில் பெண்கள் சூரிய விளக்குகளை அமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பயிலுகின்றனர். [பேர்ஃபுட் கல்லூரியில் பங்கர் ராய் நீர் மீட்பு (மறுசுழற்சி) அமைவு பற்றி விளக்குகிறார். ] பேர்ஃபுட் கல்லூரியில் பங்கர் ராய் நீர் மீட்பு (மறுசுழற்சி) அமைவு பற்றி விளக்குகிறார். [தினேஷ் திரிவேதியின் வீட்டில் குஜராத்தி உணவு. ] தினேஷ் திரிவேதியின் வீட்டில் குஜராத்தி உணவு. [சல்மானின் அறையில் நிஷித் தேசாயின் நிறுவனத்தைச் சேர்ந்த அனந்த் மாலதியும் சல்மான் குர்ஷிதும். ] சல்மானின் அறையில் நிஷித் தேசாயின் நிறுவனத்தைச் சேர்ந்த அனந்த் மாலதியும் சல்மான் குர்ஷிதும். [சாம் பித்ரோதா குஜராத் வித்யாபீட மாணவர்களுடன் பேசுகிறார். ] சாம் பித்ரோதா குஜராத் வித்யாபீட மாணவர்களுடன் பேசுகிறார். [மும்பை இந்தியா கேட்டில் நிஷித் தேசாயுடன். ] மும்பை இந்தியா கேட்டில் நிஷித் தேசாயுடன். [தரவிதி அமைப்புகளுக்கு அனுப்பப் படும் அறிக்கைப் பெட்டிகளுடன். நிழற்படம் எடுத்தவர் கர்க் வால்டர். ] தரவிதி அமைப்புகளுக்கு அனுப்பப் படும் அறிக்கைப் பெட்டிகளுடன். நிழற்படம் எடுத்தவர் கர்க் வால்டர். [அமைப்பு-இணைப்புக்கான (குழுமம் உருவாக்குவதற்கான) அறிவிக்கை, சட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ] அமைப்பு-இணைப்புக்கான (குழுமம் உருவாக்குவதற்கான) அறிவிக்கை, சட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. [மனித அறிவு முழுமையின் பெரும்பான்மைப் பகுதியை 54.5 மில்லியன் சஞ்சிகைக் கட்டுரைகளின் வடிவத்தில் அடக்கியுள்ள இரண்டு வட்டு வரிசைகள். இவை பப்ளிக் ரிசோர்ஸ் அலுவலகங்களிலிருந்து நீக்கப் பட்டு, வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன.] மனித அறிவு முழுமையின் பெரும்பான்மைப் பகுதியை 54.5 மில்லியன் சஞ்சிகைக் கட்டுரைகளின் வடிவத்தில் அடக்கியுள்ள இரண்டு வட்டு வரிசைகள். இவை பப்ளிக் ரிசோர்ஸ் அலுவலகங்களிலிருந்து நீக்கப் பட்டு, வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன. பின்னிணைப்பு: அறிவு பற்றிய கீச்சுகள் கார்ல் மாலமுத், செபஸ்டபோல், கலிஃபோர்னியா, 2017 ஜூன் 6 @carlmalamud, 2:13 PM-2017 ஜூன் 6. 1/10 பப்ளிக் ரிசோர்ஸ் கல்வி-ஆய்வு இலக்கியம் பற்றி தீவிர தணிக்கை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்தின் பணிகள் மீது கவனத்தைக் குவித்துள்ளோம். Replying to @carlmalamud, 2:13 PM-2017 ஜூன் 6. 2/ கூட்டாட்சி (அரசு)ப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகள் எழுதிய 1,264,429 சஞ்சிகைக் கட்டுரைகள் பதிப்புரிமை அற்றவையாக உள்ளன என்று எங்கள் தணிக்கை நிர்ணயித்துள்ளது. Replying to @carlmalamud, 2:13 PM-2017 ஜூன் 6. 3/ மேலும் இந்த விஷயத்தை ஆய்வுசெய்ய, நான் ஸைஹப் என்று அறியப்படும் தகவல்தளத்தின் நகல்பிரதியை உருவாக்கி யுள்ளேன். அதில் 63+ மில்லியன் சஞ்சிகைக் கட்டுரைகள் உள்ளன. Replying to @carlmalamud, 2:14 PM-2017 ஜூன் 6. 4/ இந்தப் பிரதியின் நோக்கம் ஒரு பரிவர்த்தனைப் பயன்பாட்டை உருவாக்குவதாகும். பொதுத் தளத்தில் உள்ள ஸைஹப்பின் எல்லாப் பகுதிக்கூறுகளையும் பிரித்தெடுத்தலாகும். Replying to @carlmalamud, 2:14 PM-2017 ஜூன் 6. 5/ என்னிடம் மேற்தகவல்கள் உள்ள அரசாங்கச் சஞ்சிகைக் கட்டுரைகள் 1,264,429இல், நான் இப்போது 1,141,505 கோப்புகளைப் (90.2%) பயன்பாட்டுச் சாத்தியத்திற்கெனப் பெற முடிகிறது. Replying to @carlmalamud, 2:14 PM-2017 ஜூன் 6. 6/ மேலும், என்னிடம் உள்ள 2,031,359 கட்டுரைகள் 1923 அல்லது அதற்கு முந்திய காலத்தில் வெளியிடப்பட்டவை. இந்த இரண்டு வகைகளும் ஸைஹப்பில் 4.92% அளவு உள்ளன. Replying to @carlmalamud, 2:14 PM-2017 ஜூன் 6. 7/ சோதிக்க வேண்டிய கூடுதலான வகைகளில், பதிப்புரிமை முடிந்துவிட்ட பதிவுகள், கட்டுரைகளில் திறந்த பார்வை அற்றவை, ஆசிரியரே வைத்துக் கொண்ட பதிப்புரிமைகள் அடங்கியுள்ளன. Replying to @carlmalamud, 2:15 PM-2017 ஜூன் 6. 8/ அலெக்ஸாண்ட்ரா நூலகத்தில் பப்ளிக் ரிசோர்ஸ் உருவாக்கிய நூற்பகுதிப் பிரிப்புகள் விரைவில் கிடைக்கும். அவற்றைப் பதிப்பாளர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அனுப்பி வைக்கும். Replying to @carlmalamud, 2:15 PM-2017 ஜூன் 6. 9/ அலெக்ஸாண்ட்ரா எல்பாக்யான் ஸைஹைப்-ஐ உருவாக்கி, அறிவுக் கிடைப்பிற்கு மிகச் சிறந்த, தைரியமான பங்களிப்புச் செய்துள்ளார். நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். Replying to @carlmalamud, 2:16 PM-2017 ஜூன் 6. 10/ அறிவு முழுமையையும் மானிடர் யாவரும் பெறச் செய்வது நமது தலைமுறையின் சாதிக்கப்பெறாத மிகப் பெரிய வாக்குறுதி ஆகும். இணையத்தின் உதவியினால் இந்தக் கனவு மெய்யாக முடியும். [சிடபிள்யூஎம்ஜி பாகம் 85 (1946), முகப்புப் பகுதி, புது தில்லி பங்கி காலனியில் ஜவஹர்லால் நேருவுடன் காந்திஜி.] சிடபிள்யூஎம்ஜி பாகம் 85 (1946), முகப்புப் பகுதி, புது தில்லி பங்கி காலனியில் ஜவஹர்லால் நேருவுடன் காந்திஜி. [சிடபிள்யூஎம்ஜி பாகம் 48 (1931-32), ப. 80, லங்காஷயரின் துணிஉற்பத்தித் தொழிலாளர்களுடன் காந்திஜி. ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 48 (1931-32), ப. 80, லங்காஷயரின் துணிஉற்பத்தித் தொழிலாளர்களுடன் காந்திஜி. [சிடபிள்யூஎம்ஜி பாகம் 90 (1947-48), முகப்பு. ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 90 (1947-48), முகப்பு. [நுவாலா கிரீட் இணையக் காப்பகத்தில் வைத்துள்ள ஆரோன் ஸ்வார்ட்ஸ் சிலை. நிழற்படம், பி.இசட்.பெட்ராஃப்.] நுவாலா கிரீட் இணையக் காப்பகத்தில் வைத்துள்ள ஆரோன் ஸ்வார்ட்ஸ் சிலை. நிழற்படம், பி.இசட்.பெட்ராஃப். [இணையத்தில் பேச்சுச் சுதந்திரம் பற்றி ஆரோன் பேசுகிறார். நிழற்படம், டேனியல் ஜே. சியராட்ஸ்கி.] இணையத்தில் பேச்சுச் சுதந்திரம் பற்றி ஆரோன் பேசுகிறார். நிழற்படம், டேனியல் ஜே. சியராட்ஸ்கி. பின்னிணைப்பு: வெளிப்படைத் தன்மை எப்போது பயனுள்ளது? ஆரோன் ஸ்வார்ட்ஸ், 2009 ஜூன். வெளிப்படைத் தன்மை என்பது ஓர் நழுவும் சொல். சீர்திருத்தம் என்ற சொல்லைப் போல, நல்லதாகத் தோன்றுகிறது, அதனால் எந்தவிதமான அரசியல் விஷயத்தையும் யாராவது உயர்த்திப் பிடிக்க விரும்பினால் அதோடு சேர்த்துக் கொள்ளப் படுகிறது. "சீர்திருத்தம்" பயனுள்ளதா என்று கேட்பது மடத்தனமானது என்பதைப் போல(அது எந்தவிதமான சீர்திருத்தம் என்பதைப் பொறுத்தது), வெளிப்படைத்தன்மைபற்றிப் பொதுவாகப் பேசுவதும் வெகுதொலைவு கொண்டுசெல்லாது. பொதுக் கேட்புகள் முதலாக போலீஸ் விசாரணை வீடியோடேப் செய்யப்படுவது வரை எதையும் வெளிப்படைத் தன்மை எனலாம். இப்படிப்பட்ட பெரிய பொருள்வகை பற்றிப் பயனுள்ள எதையும் பெரிதாகக் கூறமுடியாது. பொதுவாக, யாராவது சீர்திருத்தம் அல்லது வெளிப்படைத் தன்மை என்று எக்கருத்தையேனும் விற்க முனைந்தால் சந்தேகப் படத்தான் வேண்டும். பொதுவாகவே சந்தேகம் நல்லது. குறிப்பாக, பிற்போக்கு அரசியல் இயக்கங்கள் தங்களை அழகான வார்த்தைகளில் மறைத்துக் கொள்ளும் நீண்ட வரலாற்றை உடையவை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தின் கூ-கூ (குட்-கவர்ன்மெண்ட், நல்லரசாங்கம்) இயக்கம் உதாரணம். முதன்மையான குழுமங்களால் நிதியளிக்கப்பட்ட அது ஊழலையும் நகர ஜனநாயகங்களைத் தடுக்கின்ற அரசியல் எந்திரங்களையும் ஒழிக்கப் போவதாகக் கூறியது. மாறாக, இடதுசாரி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு எதிராக வேலை செய்து, அந்தச் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தையே மூச்சடைக்கச் செய்வதாக முடிந்தன. கூ-கூ இயக்கவாதிகள் தேர்தல்களைப் பல ஆண்டுகள் ஒத்திப் போட்டனர். தேசிய அரசியலிலிருந்து நகர அரசியலை வேறாக வைப்பதற்காக என்றனர். ஆனால் அதன உண்மை நோக்கம் வாக்கு எண்ணிக்கையைக் குறைப்பது. அரசியல்வாதிகளுக்கு ஊதியம் தருவதை நிறுத்தினர். இது ஊழலைக் குறைக்கும் என்றனர். அதனால் பணக்காரர்கள்தான் அரசியலுக்கு வரமுடியும் என்று ஆயிற்று. தேர்தல்களைக் கட்சிசாராதவை ஆக்கினர். நகரத் தேர்தல்கள் உள்ளூர்ப் பிரச்சினைகள் பற்றியவை, தேசிய அரசியல் அல்ல என்பதால் இப்படிச் செய்தார்கள் போலும். ஆனால் இதன் விளைவாகப் பெயர்கள் முன்-நிறுத்தப் பட்டன. வாக்காளர்களுக்கு யார் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியாமல் போயிற்று. மேயர்களுக்குப் பதிலாக நகரமேலாளர்களைக் கொண்டுவந்தனர். எனவே தேர்தல்களில் வெற்றி பெறுவது மாற்றங்களை விளைவிக்கப் போதுமானதாக இல்லாமற் போயிற்று.1 நவீன வெளிப்படைத் தன்மை இயக்கம் பழைய கூ-கூ இயக்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டதுதான். ஆனால் இந்தக் கதை ஊதியம் கருதாதோர் உதவ முன்வருதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதைச் சொல்கிறது. வெளிப்படைத் தன்மையின் ஒரு குறிப்பிட்ட வகைச் சிந்தனை பற்றிச் சொல்லி, அது எப்படித் தவறிப்போகும் என்று காட்டுகிறேன். நாம் மறுக்கமுடியாத ஒரு கருத்தை வைத்து அது தொடங்குகிறது. ஆவணங்களைப் பொதுமக்களுடன் பகிர்தல் நவீன சமூகம். பணித்துறை (அதிகாரிகள்) ஆட்சிகளால் ஆனது. நவீன பணித்துறை ஆட்சிகள், நினைவுக் குறிப்புகள், அறிக்கைகள், விண்ணப்பங்கள், கோப்புகள் போன்று காகிதம் மீது நடப்பவை: இந்த உள் ஆவணங்களைப் பொதுவில் பகிர்ந்துகொள்வது நல்லதாகத் தோன்றுகிறது. தேசியப் பாதுகாப்புக் காப்பகத்தின் தவல் சுதந்திரச் சட்டம் (எஃப்ஓஐஏ) பல பத்தாண்டுகளாக அரசாங்கம் தவறு செய்தததை வெளிப்படுத்தியதுபோல அல்லது சோர்வற்ற கார்ல் மாலமூதின் ஸ்கேனிங் பயனுள்ள அரசாங்க ஆவணங்களை-சட்டங்களிலிருந்து திரைப்படங்கள் வரை எல்லாரும் இலவசமாகப் பெறுமாறு டெராபைட் கணக்கில் வெளியிட்டதைப் போல, இவற்றைப் பதிப்பிப்பதால் நல்லதும் அதிகமாக நடந்துள்ளது. "அரசாங்க ஆவணங்களை வலைத்தளத்தில் வெளியிடுவதை"த் தங்கள் அரசியல் முதன்மைகளின் பட்டியலில் எவரும் முதலாக வைப்பார்கள் என்பது சந்தேகமே. ஆனால் அது சுமாராக மலிவான திட்டம். (பொருட் குவியல்களை ஸ்கேனரில் இட வேண்டியதுதான்), அபாயம் ஏதுமில்லை. அந்தரங்கம் பற்றிய மிகப் பெரிய அக்கறை கவனத்தில் கொள்ளப்படுகிறது. அமெரிக்க ஐக்கியநாட்டில், எஃப்ஓஐஏவும் அந்தரங்கச் சட்டமும் (பிஏ) மக்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் அதே சமயம், எப்படி வெளிப்படுத்துவதை உறுதி செய்வது என்பதற்கான வழிமுறைகளையும் அளிக்கின்றன. அரசாங்க ஆவணங்களை ஆன்லைனில் வெளியிடுவதைவிட கார்ப்பரேட் மற்றும் ஆதாயமற்ற குழுமப் பதிவுகள் கிடைக்கச் செய்வது மேலும் பயனுள்ளதாக இருக்கலாம். முறையான அரசாங்கத்துக்கு வெளியில்-அதாவது எஃப்ஓஐஏ சட்டங்களுக்கு வெளியில்- மிகுதியான அரசியல் காரியம் நடக்கிறது. ஆனால் இவை வெளிப்படைத் தன்மை ஆதரவாளர்களின் கண்காணிப் புக்குள் இவை வருவதே இல்லை; அரசாங்கத்திடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைப் பெறுகின்ற அசுரக் கூட்டுக் குழுமங்கள் ஊடுருவ இயலாதவாறு இரகசியமாகவே வைக்கப் படுகின்றன. மக்களுக்கான தகவல்தளங்களை உருவாக்குதல் கொள்கைப் பிரச்சினைகள் பல மோதுகின்ற நலன்களின் சண்டைகளாக உள்ளன. திரும்புகையில் புரண்டு சென்று கொல்லுகின்ற கார்களை ஓட்டுநர்கள் வேண்டுவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கார்களை நிறுவனங்கள் விற்றுக் கொண்டே இருக்கின்றன. நீங்கள் காங்கிரஸ் (சட்டமன்ற) உறுப்பினராக இருந்தால், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம். ஒருபுறம் உங்கள் தொகுதிகள் உள்ளன, மறுபுறம் பெரிய கூட்டுக்குழுமங்கள். அவை உங்கள் மறுதேர்தலுக்குப் பணம் தருகின்றன. நீங்கள் இருவரில் எவரையும் பகைக்க முடிவதில்லை. ஆகவே காங்கிரஸுக்கு ஒரு சமரசப் போக்கு தேவைப்படுகிறது. அதுதான் சரக்குப் போக்குவரத்து மீட்பு மேம்பாட்டு, பொறுப்புடைமை, ஆவணப்படுத்தல் (டிஆர்ஈஏடி) சட்டத்தில் நிகழ்ந்தது. பாதுகாப்பான கார்களைக் கேட்பதை விட்டு, காங்கிரஸ் கார்க் கம்பெனிகளின் கார்கள் புரளுதல் எவ்வளவு சாத்தியம் என்று அறிக்கை தருமாறு கூறியது. வெளிப்படைத் தன்மை மறுபடியும் வென்றது! மேலும் மற்றொரு புகழ்பெற்ற உதாரணம்: வாட்டர்கேட்டுக்குப் பிறகு மிகப்பெரிய கூட்டுக்குழுமங்களிலிருந்து அரசியல்வாதிகள் மில்லியன் கணக்கான டாலர்களைப் பெறுவது பற்றிக் கலக்கம் அடைந்தார்கள். ஆனால், கூட்டுக்குழுமங்கள் அரசியல் வாதிகளுக்குப் பணம் தருவதை விரும்புகின்றன.எனவே அந்த நடைமுறையைத் தடைசெய்வதைவிட்டு, காங்கிரஸ், தங்களுக்குப் பணம் தரும் எவரைப் பற்றியும் அரசியல்வாதிகள் தகவல் வைத்துக் கொண்டு, அதைப் பொதுமக்கள் பார்வைக்கு அறிக்கை தர வேண்டும் என்று கூறிவிட்டது. இந்தமாதிரி நடவடிக்கைகள் கேலிக்கிடமாகத் தோன்றுகின்றன. ஓர் கட்டுப்பாட்டு முகமையை உருவாக்கும்போது, ஏதோ ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத்தான் மக்கள் குழுவை அமைக்கிறீர்கள். அவர்களுக்கு யார் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதைப் புலனாய்வு செய்து தண்டிக்கும் அதிகாரம் அளிக்கப் படுகிறது. மாறாக, வெளிப்படைத் தன்மை அரசாங்கத்திடமிருந்து வேலையைச் சாதாரணக் குடிமகனுக்கு மாற்றுகிறது. அவருக்கு இந்தக் கேள்விகளைப் புலனாயத் தேவையான காலமோ, இவற்றை விரிவாக ஆராயும் திறமையோ கிடையாது. அதைப் பற்றி எதுவும் செய்யவும் முடியாது. இது ஒரு கேலிக்கூத்து. ஏதோ ஒரு முக்கியமான பிரச்சினையில் உண்மையில் சம்பந்தப் பட்ட கார்ப்பரேட் புரவலர்களை ஆபத்துக்கு உட்படுத்தாமல் ஏதோ தான் நல்லது செய்து விட்டது போன்ற பிம்பத்தை காங்கிரஸ் உருவாக்கிக் கொள்ளும் வழி. மக்களுக்கு தகவல்தளங்களை விளக்குதல் இங்குதான் தொழில்நுட்பக்காரர்கள் நுழைகிறார்கள். "மக்களுக்கு ஏதாவது கடினமாக இருக்கிறதா?" என்று கேட்கிறார்கள். "எப்படிச் சரிசெய்வது என்று எங்களுக்குத் தெரியும்." இணையதளத்தின் பிரதி ஒன்றை இறக்கம் செய்து பொதுமக்கள் நுகர்வுக்கு அழகு படுத்தி அளிக்கிறார்கள். புள்ளிவிவரச்சுருக்கம் தயாரித்து, அழகான படங்களை அதைச் சுற்றி இட்டு, கவர்ச்சியான தேடுதல் பகுதியையும் இட்டு, சில காட்சிப்படுத்தல்களையும் தருகிறார்கள். இதனால் ஆர்வமிக்க குடிமக்கள் தங்கள் அரசியல்வாதிக்கு யார் பணம் தருகிறார்கள், எப்படி அவர்கள் கார்கள் அபாய நிலையில் உள்ளன என்பதை ஆன்லைனில் காணலாம். சிந்திக்கிறவர்கள் இதை விரும்புகிறார்கள். அரசுக் கட்டுப்பாட்டு நீக்கம், அரசுக்கு எதிரான வெறி ஆகியவற்றில் மூழ்கிய அவர்கள், அரசாங்கத்தைப் பற்றிச் சந்தேகப் படுகிறார்கள். ஒழுங்குபடுத்து பவர்களை நம்மால் கண்டுபிடிக்க இயலாது என்கிறார்கள். "தகவல்களை நாமே ஆராய வேண்டும்." தொழில்நுட்பம் இதற்கு முழுமையான தீர்வை அளிப்பதாகத் தோன்றுகிறது. எல்லா வற்றையும் ஆன்லைனில் போடுங்கள். எவரையும் நம்பாமல் மக்கள் தாங்களே தகவல்களை ஆராய முடியும். ஒரே ஒரு பிரச்சினை இருக்கிறது: ஒழுங்குபடுத்துபவர்களை நீங்கள் நம்பமுடியாவிட்டால், தகவல்களை மட்டும் எப்படி நம்பலாம் என்று நினைக்கிறீர்கள்? தகவல்தளங்களை உருவாக்குவதிலுள்ள பிரச்சினை அவை படிக்கக் கடினமானவை என்பதல்ல. புலனாயவும் அமுல் படுத்தவும் மக்களுக்கு ஆற்றல் இல்லை. இதற்கு இணைய தளங்கள் ஒன்றும் செய்ய இயலாது. அவற்றைச் சரிபார்க்க எவரும் இல்லாததால், வெளிப்படைத் தன்மைகூடிய தகவல் தளங்களில் வருகின்ற செய்திகள் பெரும்பாலும் பொய்கள்தான். சிலசமயம் பின் வருவது போலப் பச்சையான பொய்கள். சில தொழிலகங்களில் பணியிடத்தில் நிகழும் விபத்துகளைப் பற்றி இரண்டு புத்தகங்கள் வைத்திருப்பார்கள். ஒன்று துல்லியமானது. எல்லாச் செய்திகளையும் தரும். மற்றது, அரசாங்கத்துக்குக் காட்ட வேண்டியது. நடந்தவற்றில் 10% சதவீதத்தைத்தான் காட்டு வார்கள்.2 இன்னும் நுணுக்கமாகவும் செய்ய முடியும். படிவங்கள் தவறான கோப்பில் இடப்படும், அல்லது வகைமாதிரிகளால் பூர்த்தி செய்யப்படும். அல்லது அந்த விபத்து படிவத்தில் வராதவாறு மாற்றப்படும். இம்மாதிரி தகவல் தளங்களைப் படிக்க எளிதாக்குவது, பொய்களைப் படிக்க எளிதாக்கிவிடுகிறது. மூன்று உதாரணங்கள்: - காங்கிரஸின் செயல்பாடுகள் பொதுமக்களுக்குத் திறந்தவை என்று நம்பப்படுகிறது. ஆனால் பேரவைக்கு நீங்கள் சென்றால் (அல்லது அவர்கள் செய்வதைத் தரக்கூடிய ஒளிவுமறைவற்ற தகவல் தளத்திற்குச் சென்றால்) எல்லா நேரமும் அவர்கள் அஞ்சல் அலுவலகங்களுக்குப் பெயர் தந்துகொண்டிருப்பதைக் காணலாம். உண்மையான வேலையெல்லாம் அவசர நிலைமைகள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு, தீங்கற்ற மசோதாக்களின் உப-பிரிவுகளுக் குள் திணிக்கப் படுகின்றன. (வங்கிகளை அரசாங்கம் காப்பாற்றிய செய்கை, பால் வெல்ஸ்டோன் மனநலச் சட்டத்தில் வைக்கப் பட்டிருந்தது.) மாட் டைப்ளியின் 'மிகப் பெரிய நினைவுத் தடுமாற்றம்' (ஸ்பீகல் அண் க்ரா) இந்தக் கதையைத் தெரிவிக்கிறது. - இத்தளங்களில் பெரும்பாலானவை, நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத் தீர்கள் என்று சொல்கின்றன. ஆனால் அவர்மீதுள்ள தாக்கம் என்ன என்பதைச் சொல்கின்றனவா? 40 ஆண்டுகளாக, நியூ யார்க் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அதிகாரிகளால்-நகர மன்றம், மேயர், கவர்னர்- ஆளப்படுகிறோம் என்று நினைத்தார்கள். நியூ யார்க்கின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியவன் ஒரேஒரு மனிதன்-அவன் தேர்தலில் நின்ற போதெல்லாம் தொடர்ந்து தோற்கடிக்கப் பட்டவன்-யாருமே அவன் இந்தப் பொறுப்பில் இருந்தான் என்று நினைத்திருக்கவே முடியாது-அவன் பூங்காக்களின் ஆணையராக இருந்த ராபர்ட் மோசஸ் என்பதை ராபர்ட் காரோ தமது 'தி பவர் புரோக்கர்'-இல் (விண்டேஜ்) வெளிப்படுத்தினார். - இணையத்திலுள்ள பல தளங்கள் யாரிடம் உங்கள் பிரதிநிதி பணம் பெறுகிறார் என்பதைக் காட்டும், ஆனால் வெளிப்படுத்தப் பட்ட கொடைகள் என்பன ஒரு பனிப்பாறையின் சிறுமுகப்பு போன்வைதான். ஹார்ப்பருக்காகக் கென் சில்வர்ஸ்டீன் எழுதிய தொடரின் பகுதிகளில் (இவற்றில் சிலவற்றைத் தனது புத்தகமான துர்க்மேனிஸ்கேம்-இல் [ரேன்டம் ஹவுஸ்] வெளியிட்டுள்ளார்) காங்கிரஸின் உறுப்பினராக இருப்பது வசதிகளையும் பணத்தையும் அது எங்கிருந்து வருகிறது என்பதை ஒளித்து வைப்பதற்கு எல்லையற்ற வழிகளை அளிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். வெளிப்படைத் தன்மை ஆதரவாளர்கள் இதைச் சுற்றிவளைக்கப் பார்க்கிறார்கள். "சரிதான், ஆனால் கொஞ்சம் தகவலாவது துல்லியமாக இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் மக்கள் எப்படிப் பொய் சொல்கிறார்கள் என்பதைப் பற்றியாவது நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?" என்கிறார்கள். ஒருவேளை இது சரியாக இருக்கலாம். ஆனால் இதற்கு நல்ல உதாரணங்கள் கிடைக்கவில்லை. (வெளிப்படைத் தன்மைப் பணி மேலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதைத் தவிர உண்மையில் எதையும் சாதித்ததற்கு எந்த நல்ல உதாரணத்தையும் தரமுடிய வில்லை. ஆனால் ஒவ்வொன்றிற்கும் விலை இருக்கிறது. உலகத்தைச் சுற்றி நிகழும் வெளிப்படைத் திட்டங்களுக்கு நிதி உதவியளித்து பலநூறு மில்லியன் டாலர்கள் செலவிடப் பட்டுள்ளன. அந்தப் பணம் வானத்திலிருந்து குதிக்கவில்லை. ஒன்றுமில்லாததைவிட கொஞ்சம் வெளிப்படைத் தன்மை நல்லதா என்பது கேள்வியில்லை; இந்தப் பணத்தைச் செலவிட வெளிப் படைத் தன்மைதான் சிறந்த வழியா என்பதுதான் கேள்வி. வேறு திட்டத்தில் செலவிட்டால் இதைவிடப் பெரிய தாக்கம் இருக்குமா என்பதும்தான். இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பணம் எல்லாமே ஒரு நேரடி பதிலைப் பெறுவதற்குச் செலவிடப் படுகிறது. அதைப் பற்றிப் பிறகு எதுவும் செய்ய இயலாது. அமுல்படுத்தும் சக்தியின்றி, உலகில் மிக நன்கு வாசிக்கக்கூடிய தகவல் தளமும், அது மிகத் துல்லியமானதாக இருந்தாலும், ஒன்றும் சாதித்துவிட முடியாது. மக்கள் ஆன்லைனுக்குச் சென்று எல்லாக் கார்களும் அபாயமானவை, எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்மிக்கவர்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன செய்வதாக உத்தேசம்? சிறு மாற்றங்களை ஒருவேளை செய்யலாம். இந்த அரசியல்வாதி மற்றொருவரைவிடக் கொஞ்சம் குறைவான லஞ்சத்தைப் பெறுகிறார். ஆகவே அவருக்கு நான் வாக்களிப்பேன் என நினைக்கலாம். (மாறாக, அவர் சற்றே கூடுதலான பொய்யர் ஆகவும் இருக்கலாம், அவரது லஞ்சப் பணத்தை பிஏசிக்கள் அல்லது அடிப்படை நிறுவனங்கள் அல்லது பிரச்சாரகர்கள் வாயிலாகப் பெறலாம்)-ஆனால் அரசாங்கத்தைப் போலன்றி அவர்களால் பெரிய பிரச்சினையைத் தீர்க்கமுடியாது. அதாவது இணைய தளத்தைப் பார்க்கும் சிலர், கார் கம்பெனிகளைப் பாதுகாப்பான கார் உற்பத்தி செய்யவைக்க முடியாது. உண்மையான பிரச்சினையைத் தீர்க்க உங்களால் முடியவில்லை என்பதோடு மேலும் நம்பிக்கையற்ற நிலையாக அது தோன்றுமாறு செய்துள்ளீர்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்செய்பவர்கள், எல்லாக் கார்களுமே அபாயமானவை, சரி, உங்களால் என்ன செய்ய முடியும்? ஒரு மாற்றுவழி இதில் விசித்திரமானது, நீங்கள் ஏதாவது செய்ய இணையம் வழி தருகிறது என்பதுதான். குழுக்களை உருவாக்கவும், பொதுவேலை களில் இணைந்து வேலைசெய்யவும் அது மிக எளிதாக-முன் எப்போதையும் விட எளிதாக வழி செய்கிறது. இணைய தளத்தில் தகவலை ஆராய்வதால் அல்ல, மக்கள் ஒன்று சேர்வதனால்தான் மெய்யான அரசியல் முன்னேற்றத்தை அடைய முடியும். இதுவரை நாம் மிகச் சிறிய நகர்வுகளைத்தான் பார்த்தோம். மக்கள் வேறெங்கோ பார்ப்பதை நகல் எடுகிறார்கள், அதை அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கிறார்கள். விக்கிகள் நன்கு வேலை செய்வதாகத் தோன்றுகிறது. எனவே நீங்கள் ஓர் அரசியல் விக்கியை அமைக்கிறீர்கள். எல்லாருக்கும் சமூக வலைத் தளங்கள் பிடிக்கின்றன. எனவே நீங்கள் ஒரு அரசியல் சமூக வலைத் தளத்தை அமைக்கிறீர்கள். ஆனால் இந்தக் கருவிகள் தங்கள் அசல் பின்னணியில் வேலைசெய்தன. ஏனெனில் குறித்த பிரச்சினை களைத் தீர்க்க முயன்றன, மந்திரத்தால் அல்ல. அரசியலில் முன்னேற்றத்தை உருவாக்க, அதன் பிரச்சினைளை எப்படித் தீர்ப்பது என்று நன்கு சிந்திக்க வேண்டும். பிற துறைகளில் பயன்பட்ட தொழில் நுட்பங்களைக் காப்பியடிப்பதால் அல்ல. தகவல் ஆய்வு, மேம்பாட்டின் பகுதியாக இருக்கலாம், ஆனால் அது ஒரு பெரிய சித்திரத்தின் ஒரு பகுதிதான். தாங்கள் அக்கறை கொண்ட ஒரு பிரச்சினையைத் தீர்க்க-உணவுப் பாதுகாப்பு என்று கொள்வோம்-மக்கள் குழு ஒன்று முன்வருகிறது. உங்களிடம் பாதுகாப்புப் பதிவுகளில் நுணுகிப் பார்க்கும் தொழில்நுட்பக் காரர்கள் இருக்கலாம். புலனாய்வுச் செய்தியாளர்கள் ஃபோன் செய்யலாம், கட்டிடங்களில் வேவு பார்க்கலாம், வழக்கறிஞர்கள் ஆவணங்களில் புகுந்து வழக்குகள் போடலாம். பிறகு அரசியல் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டத்திற்கு ஆதரவாக ஆர்வலர்களை ஒருங்கிணைக்கிறார்கள், காங்கிரஸின் உறுப்பினர்கள் உங்கள் பிரச்சினைகளுக்கு கேட்புகளை வலியுறுத்துகிறார்கள், நீங்கள் வெளிப்படுத்தும் பிரச்சினைகளைத் தீர்க்கும் சட்டங்களை இயற்றுகிறார்கள், வலைத்தளக் காரர்களும் எழுத்தாளர்களும் தங்கள் முன் விரியும் உங்கள் கதைகளை எழுத்தில் தருகிறார்கள். கற்பனை செய்யுங்கள்: ஒரு புலனாய்வு அதிரடிக்குழுவினர், ஒரு பிரச்சினையை எடுத்து, உண்மையை வெளிப்படுத்தி, சீர்திருத்தத்திற்கு வலியுறுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தை மட்டும் அல்ல, அரசியலையும் சட்டத்தையும் பயன்படுத்து வார்கள். அதிகபட்சம், ஒரு வெளிப்படைச் சட்டம் நீங்கள் மேலும் காண்பதற்கு ஒரு தகவல் தளத்தை அளிக்கிறது. ஆனால் ஒரு வழக்கு (அல்லது காங்கிரஸின் புலனாய்வு)? நீங்கள் எல்லாத் தகவல் தளங்களையும், அதற்குப் பின்னாலுள்ள மூலப் பதிவேடு களையும் துருவ வேண்டும். இவற்றுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று மக்களின் உறுதிமொழியோடு, பேட்டிகாண வேண்டும். என்றோ ஒரு நாள் உங்களின் தேவையை முன்கணிப்புச் செய்வதற்கு பதிலாக உங்கள் தேவை என்ன என்பதைக் கேட்க முனைகிறீர்கள். இங்குதான் தகவல் ஆய்வு உண்மையாகவே பயன்பட முடியும். இணையத்தில் மேய்பவர்களுக்கு உறுதியான விடைகள் அளிப்பதற்கு அல்ல. மாறாக, பிறர் கைப்பற்றி, புலனாய்வு செய்யக்கூடிய பிறழ்வுகளையும், பாணிகளையும், பிரச்சினைகளையும் கண்டுபிடிக்கிறீர்கள். முற்றுப் பெற்ற திட்டங்களைக் கட்டுவதில் அல்ல, கண்டுபிடிக்கும் செயல்முறையில் ஈடுபடுகிறீர்கள். புலாய்வு அதிரடிக் குழு உறுப்பினர்கள் பிறருடன் இணைந்து பணியற்றினால்தான் இதைச் செய்ய முடியும். 'தொழில்நுட்பம்', 'இதழியல்', 'அரசியல்' ஆகியவற்றின் மனம்போன போக்கான பிளவுகளால் ஊனமுறாமல் தங்கள் இலக்குகளை அடைவதற்குத் தேவையானவற்றை அவர்களால் செய்ய முடியும். இப்போதே, எந்தப் பிரச்சினைக்கான எந்தத் தகவல் ஆயினும், அவற்றைப் பெறத் தொழில்நுட்பக்காரர்கள் நடுநிலையான தளங்களைக் கட்டுவதாகச் சொல்கிறார்கள். தாங்கள்தான் மெய்ம்மைகளின் புறவய நோக்குநர்கள் எனப் பத்திரிகைக் காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஏற்கெனவே தங்களிடம் விடைகள் இருப்பதாகவும் மேற்கொண்டு கேள்விகளைப் புலன் ஆராய வேண்டாமென்றும் அரசியல் வகையினர் சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பெட்டிகளுக்குள் அடைபட்டிருக் கிறார்களே ஒழிய முழுச் சித்திரத்தையும் அவர்களால் காண இயலவில்லை. நான் முழுச் சித்திரத்தை நிச்சயமாகக் கண்டேன். நான் பிரச்சினை களைப் பற்றி உணர்வபூர்வமாகக் கவலைப் படுபவன் . எனக்கு ஊழல் அரசியல்வாதிகள் தேவையில்லை. கார்கள் மக்களைக் கொல்லக் கூடாது. ஒரு தொழில்நுட்பவாதி என்ற முறையில் அவற்றைத் தீர்க்க என்னால் முடிவது நல்லது. அதனால்தான் நான் வெளிப்படைத் தன்மையின் வாக்குறுதி அலைக்குள் தள்ளப் பட்டேன். விதிகளை எழுதுவது, தகவல் தளங்களைச் சலித்தல் போன்ற என்னால் செய்யமுடிந்த விஷயங்களைச் சிறப்பாகச் செய்வதனால்- உலகத்தை மாற்ற முடியும் என நினைத்தேன். ஆனால் அப்படி நிகழவில்லை. வெளிப்படைத் தன்மை என்ற சொல் மிக அழகாக இருப்பதுபோல, தகவல் தளங்களை ஆன்லைனில் வெளியிடுவது எல்லாவற்றையும் தீர்த்து விடுவதில்லை. என்னை நான் ஏமாற்றிக் கொள்வது எளிது. நான் விஷயங்களை ஆன்லைனில் இட்டுக் கொண்டே இருந்தால் அது எங்கோ எவருக்கோ பயன்தரக்கூடும். அதுதானே தொழில்நுட்பக் காரர்களால் செய்ய இயலுவது? உலளாவிய வலைத்தளம் செய்தி களை வெளியிட மட்டும் வடிவமைக்கப் பட்டதல்ல. விஞ்ஞான வெளியீடுகளிலிருந்து இழிகலை வரை எதையும் ஆதரிக்கும் ஒரு நடுநிலைத்தளம் அது. அரசியல் அப்படியல்ல. ஒருகாலத்தில் நியூ யார்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் பிரச்சினைகளை வெளியிட்டால் அவை தீர்க்கப்படும் என்ற உறுதிப்பாடு இருந்தது. ஆனால் அக்காலம் மாறிவிட்டது. பிரச்சினைகளை முன்வைப்பதிலிருந்து, புலனாய்வு, அதிலிருந்து தகவல் வெளிப்படுத்தல், அதிலிருந்து சீர்திருத்தம் என்ற வழிமுறை உடைந்துபோய்விட்டது. தங்கள் விஷயங்களைப் பயன்படுத்துவார்கள் என்று தொழில்நுட்ப வாதிகள் பத்திரிகையாளர்களை நம்ப முடிவதில்லை, பத்திரிகை யாளர்கள் தாங்கள் வெளியிடும் விஷயங்களை அரசியல் செயல் வீரர்கள் சரிசெய்து விடுவார்கள் என்று நினைப்பதற்கில்லை. இம்மாதிரித் தங்கள் தங்கள் வழிகளில் செல்லும் ஆயிரக்கணக் கான பேரினால் மாற்றம் வருவதில்லை. ஒரு பொது இலக்கிற் கென மக்கள் ஒன்று திரண்டால்தான் மாற்றம் நிகழும். இதைத் தொழில்நுட்பவாதிகள் தாங்களே செய்துவிட இயலாது. ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதை தங்கள் இலக்கென அவர்கள் கொண்டால், தங்கள் திறமை, சாதுரியம் அனைத்தையும் அதற்கு அவர்களால் பயன்படுத்த முடியும். தங்கள் இணைய தளத்திற்கு வருகை தந்தோரின் எண்ணிக்கையால் அல்ல, எத்தனை பேரின் வாழ்க்கையைத் தாங்கள் போரிட்ட இலக்குகளால் முன்னேற்ற முடிந்தது என்பதை வைத்துத் தங்கள் வெற்றியை அவர்கள் அளக்கமுடியும். எந்தத் தொழில்நுட்பங்கள் உண்மையிலேயே மாற்றத்துக்கு உதவுபவை, எவை வெறும் நுகர்வுக்கானவை என்று கற்றுக்கொள்ள முடியும். அவர்களால் திரும்பச் செய்யவும், மேம்படுத்தவும், அளவிடவும் முடியும். வெளிப்படைத் தன்மை ஆற்றல் நிறைந்தது ஆகலாம், ஆனால் தனியாக அல்ல. எனவே தகவல்களை வெளியிடுவது மட்டுமே நமது வேலை, யாரோ ஒருவர் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று கண்டுபிடிப்பார் என்று பந்தை எதிர்ப்புறம் எறிய வேண்டாம். நமது வேலை உலகத்தின் நன்மைக்குப் போராடுவது என்று முடிவு செய்வோம். இந்த வியக்கவைக்கும் மூலவளங்கள் யாவும் அதற்குப் பயன்படப் போவதை நான் காண விரும்புகிறேன். குறிப்புகள் 1. மேலும் செய்திகளுக்குக் காண்க, http://sociology.ucsc.edu/whorulesamerica/power/local.html. 2. ஃபாஸ்ட் ஃபுட் நேஷன், எரிக் ஷ்லோஸர், ஹாஃப்டன் மிஃப்லின், 2001. [சிடபிள்யூஎம்ஜி பாகம் 74 (1941), முகப்புப் பகுதி, வில்-தக்ளியில் காந்தி நூல் நூற்கிறார். ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 74 (1941), முகப்புப் பகுதி, வில்-தக்ளியில் காந்தி நூல் நூற்கிறார். [சிடபிள்யூஎம்ஜி பாகம் 17 (1920), ப. 169, 1920 ஏப்ரலில் அகமதாபாதில் தாகூருடன் காந்திஜி. ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 17 (1920), ப. 169, 1920 ஏப்ரலில் அகமதாபாதில் தாகூருடன் காந்திஜி. [சிடபிள்யூஎம்ஜி பாகம் 25 (1924-25), ப. 177, உண்ணாவிரதத்தின்போது காந்தி, இந்திராவுடன். ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 25 (1924-25), ப. 177, உண்ணாவிரதத்தின்போது காந்தி, இந்திராவுடன். [சிடபிள்யூஎம்ஜி பாகம் 86 (1947), ப. 225, நவகாளியில், பிரார்த்தனைக்குப் பிறகு. ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 86 (1947), ப. 225, நவகாளியில், பிரார்த்தனைக்குப் பிறகு. [சிடபிள்யூஎம்ஜி பாகம் 89 (1947), முகப்புப் பகுதி. ] சிடபிள்யூஎம்ஜி பாகம் 89 (1947), முகப்புப் பகுதி. [சிடபிள்யூஎம்ஜி பாகம் 59 (1934), முகப்புப் பகுதி, பம்பாய் காங்கிரஸ் அமர்வில் சர்தார பட்டேலுடனும், மணிபென் பட்டேலுடனும்.] சிடபிள்யூஎம்ஜி பாகம் 59 (1934), முகப்புப் பகுதி, பம்பாய் காங்கிரஸ் அமர்வில் சர்தார பட்டேலுடனும், மணிபென் பட்டேலுடனும். தேர்ந்தெடுத்த நூல்கள் ஆடம்ஸ், ஜான், ஜான் ஆடம்ஸ்: ரெவல்யூஷனரி ரைட்டிங்ஸ், 1755-1775, லைப்ரரி ஆஃப் அமெரிக்கா, 2011. ஆலின்ஸ்கி, சவுல், டி., ரூல்ஸ் ஃபார் ரேடிகல்ஸ், விண்டேஜ், 1989. ஆலன், சார்லஸ், அசோகா: தி ஸர்ச் ஃபார் இந்தியா'ஸ் லாஸ்ட் எம்பரர், லிட்டில், பிரவுன், 2012. அம்பேத்கர், பி. ஆர்., அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட், செல்ஃப்-பப்ளிஷ்ட், 1936, வெர்சோ, 2014. ஆஸ்டின், கிரான்வில், தி இந்தியன் கான்ஸ்டிட்யூஷன்: கார்னர்ஸ்டோன் ஆஃப் எ நேஷன், கிளேரண்டன் பிரஸ், 1966. பேகன், லார்டு ஃபிரான்சிஸ், தி அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் லேர்னிங் அண் நியூ அட்லாண்டிஸ், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ், 1984. பட்டாச்சார்யா, சப்யசாச்சி, மஹாத்மா காந்தி தி ஜேர்னலிஸ்ட், பிரேஜர், 1984. பட்டாச்சார்யா, சப்யசாச்சி, மஹாத்மா அண்ட் தி போயட்; லெட்டர்ஸ் அண் டிபேட்ஸ் பிட்வீன் காந்தி அண் தாகூர் 1915-1941, நேஷனல் புக் டிரஸ்ட், 1977. பிங்கம், தாமஸ் ஹென்றி, தி ரூல் ஆஃப் லா, பெங்குவின் பிரஸ், 2011. பிராஞ்ச், டெய்லர், பார்டிங் தி வாடர்ஸ்: அமெரிக்கா இன் தி கிங் இயர்ஸ் 1954-63, சைமன் அண் ஷூஸ்டர், 1988. பிராஞ்ச், டெய்லர், பில்லர் ஆஃப் ஃபயர்: அமெரிக்கா இன் தி கிங் இயர்ஸ் 1963-65, சைமன் அண் ஷூஸ்டர், 1998 பிராஞ்ச், டெய்லர், அட் கேனான்'ஸ் எட்ஜ்: அமெரிக்கா இன் தி கிங் இயர்ஸ் 1965-68, சைமன் அண் ஷூஸ்டர், 2006. பிரவுன், ஜூடித் எம்., காந்தி'ஸ் ரைஸ் டு பவர்: இண்டியன் பாலிடிக்ஸ் 1915-1922, கேம்பிரிட்ஜ் யூனிவர்ஸிட்டி பிரஸ், 1972. பிரயன், வில்லியம் ஜெனிங்ஸ், ஸ்பீச்சஸ் ஆஃப் வில்லியம் ஜெனிங்ஸ் பிரயன், 2 பாகங்கள், ஃபங்க் அண் வாக்னல்ஸ், 1911. பைர்ட், ராபர்ட் சி., தி செனேட் ஆஃப் தி ரோமன் ரிபப்ளிக்: அட்ரஸஸ் ஆன் தி ஹிஸ்டரி ஆஃப் ரோமன் கான்ஸ்டிட்யூஷனலிசம், கவர்ன்மெண்ட் பிரிண்டிங் ஆஃபீஸ், 1995. சௌத்ரி, சுஜீத், மாதவ கோஸ்லா, அண் ப்ரதாப் பானு மேத்தா, (பதி) தி ஆக்ஸ்ஃபோர்டு ஹேண்புக் ஆஃப் தி இண்டியன் கான்ஸ்டிட்யூஷன், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ், 2016. கிளேடன், ரிச்சட் அண் டாம்லின்சன், ஹியூ, தி லா ஆஃப் ஹியூமன் ரைட்ஸ், இரண்டாம் பதிப்பு, இரண்டு பாகங்கள், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ், 2009. க்ராஸ், ஹெரால்ட் எல்., தி பீப்பிள்'ஸ் ரைட் டு நோ: லீகல் ஆக்சஸ் டு பப்ளிக் ரிகார்ட்ஸ் அண் ப்ரொசீடிங்ஸ், கொலம்பியா யூனிவர்ஸிட்டி பிரஸ், 1953. டார்ன்டன், ராபர்ட், சென்ஸார்ஸ் அட் வொர்க்: ஹௌ ஸ்டேட்ஸ் ஷேப்டு லிடரேச்சர், டபிள்யூ. டபிள்யூ. நார்ட்டன் அண் கம்பெனி, 2014. தேவ்ஜி, ஃபைஸல், தி இம்பாஸிபிள் இந்தியன்: காந்தி அண் தி டெம்டேஷன் ஆஃப் வயலன்ஸ், ஹார்வர்ட் யூனிவர்ஸிட்டி பிரஸ், 2012. டீசால்வோ, சார்லஸ் ஆர்., காந்தி: அட்டர்னி அட் லா, யூனிவர்ஸிட்டி ஆஃப் கலிஃபோர்னியா பிரஸ், 2013. டோக், ஜோசப் ஜே., காந்தி: இண்டியன் பேட்ரியட் இன் சவுத் ஆஃப்ரிகா, அகில் பாரத் சர்வ சேவா சங் ப்ரகாஷன், 1909. ஹர்ஸா, கை லால், அசோகா ஆஸ் டெபிக்டட் இன் ஹிஸ் எடிக்ட்ஸ், முன்ஷீராம் மனோஹர்லால் பப்ளிஷர்ஸ், 2007. காந்தி, எம். கே., ஹிந்த் ஸ்வராஜ்: எ க்ரிடிகல் எடிஷன், சுரேஷ் சர்மா அண் த்ரிதீப் சுஹ்ருத், (பதி), நவஜீவன் ட்ரஸ்ட், 1910, ஓரியண்ட் ப்ளாக் ஸ்வான், 2010. காந்தி, எம். கே., சத்யாக்ரஹா இன் சவுத் ஆஃப்ரிகா, எஸ். கணேசன், 1928. காந்தி, எம். கே., தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத், இரண்டு பாகங்கள், நவஜீவன் பிரஸ், 1927. காந்தி, சோனியா, (பதி)., ஃப்ரீடம்'ஸ் டாட்டர்: லெட்டர்ஸ் பிட்வீன் இந்திரா காந்தி அண் ஜவஹர்லால் நேரு 1922-1839, ஹாடர் அண் ஸ்டவுட்டன், 1989. கோஷ், அனிந்திதா, பவர் இன் ப்ரிண்ட்: பாபுலர் பப்ளிஷிங் அண் தி பாலிடிக்ஸ் ஆஃப் லேங்வேஜ் அண் கல்ச்சர் இன் எ கலோனியல் சொசைட்டி, ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிட்டி பிரஸ், 2006. கோபால், சர்வபள்ளி, ராதாதிருஷ்ணன்: எ பயாக்ரஃபி, அன்வின் ஹைமன், 1989. ஹாஃமெயர், இஸபெல், காந்தி'ஸ் ப்ரிண்டிங் ப்ரஸ், ஹார்வர்ட் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 2013. ஹண்ட், ஜேம்ஸ் டி., காந்தி இன் லண்டன், நடராஜ் புக்ஸ் (திருத்தப்பட்ட பதிப்பு), 1993. ஹட்டன்பேக், ராபர்ட் ஏ., காந்தி இன் சவுத் ஆஃப்ரிகா: பிரிட்டிஷ் இம்பீரியலிசம் அண் தி இண்டியன் க்வெஸ்சின், 1860-1914, கார்னெல் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 1971. ஜெஃபர்ஸன், தாமஸ், ஜெஃபர்ஸன்: ரைட்டிங்ஸ், லைப்ரரி ஆஃப் அமெரிக்கா, 1984. ஜான், ஏட்ரியன், பைரஸி: தி இண்டலெக்சுவல் ப்ராபர்ட்டி வார்ஸ் ஃப்ரம் குடன்பர்க் டு கேட்ஸ், யூனிவர்ஸிட்டி ஆஃப் சிகாகோ பிரஸ், 2010. குர்ஷித், சல்மான், சன்ஸ் ஆஃப் பாபர்: எ ப்ளே இன் ஸர்ச் ஆஃப் இண்டியா, ரூபா அண் கோ., 2008. கிங், ப்ளேர், பி., தி ப்ளூ ம்யூடினி, ஃபர்மா கேஎல்எம் பிரைவேட், 1977. குல்கர்ணி, சுதீந்த்ரா, ம்யூசிக் ஆஃப் தி ஸ்பின்னிங் வீல், அமாரிலிஸ், 2012. மாதவி, சுந்தர், ஃபரம் குட்ஸ் டு எ குட் லைஃப், இண்டலெக்சுவல் ப்ராபர்ட்டி அண் குளோபல் ஜஸ்டிஸ், யேல் யூனிவர்ஸிட்டி பிரஸ், 2010. மண்டேலா, நெல்சன், லாங் வாக் டு ஃப்ரீடம்: தி ஆட்டோபயாக்ரஃபி ஆஃப் நெல்சண் மண்டேலா, பேக் பே புக்ஸ், 1995. மாஷேல்கர், ரகுநாத், (பதி)., டைம்லெஸ் இன்பிரேட்டர்: ரிலிவிங் காந்தி, சகல் பப்ளிகேஷன்ஸ், 2010. மித்ரா, தீனபந்து, நீல் தர்ப்பண் ஆர் தி இண்டிகோ ப்ளாண்டிங் மிரர், பஸ்சிம்பங்க நாட்ய அகாதெமி, 1997. முகர்ஜி, ப்ரோஜித் பிஹாரி, டாக்டரிங் ட்ரெடிஷன்ஸ்: ஆயுர்வேத, ஸ்மால் டெக்னாலஜீஸ் அண் ப்ரெய்டட் சயின்ஸஸ், யூ. ஆஃப் சிகாகோ பிரஸ், 2016. முகோபாத்யாய, கிரீந்திரநாத், ஹிஸ்டரி ஆஃப் இந்தியன் மெடிஸின், மூன்று பாகங்கள், முன்ஷீராம் மனோஹர்லால், 1922, ரிபப்ளிஷ்ட் 2007. நந்தா, பி. ஆர்., தி நேரூஸ், மோதிலால் அண் ஜவஹர்லால், ஜே. டே கோ., 1963. நேஷனல் காந்தி ம்யூசியம், காந்திஜி ஆன் ஹிந்த் ஸ்வராஜ் அண் செலெக்ட் வியூஸ் ஆஃப் அதர்ஸ், நேஷனல் காந்தி ம்யூசியம், 2009. நவ்ரோஜி, தாதாபாய், பாவர்ட்டி அண் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா, ஸ்வான் சோனென்ஷீன் அண் கோ., 1901. நவுரியா, அனில், தி ஆஃப்ரிகன் எலிமெண்ட் இன் காந்தி, நேஷனல் காந்தி ம்யூசியம் அண் க்யான் பப்ளிஷிங் ஹவுஸ், 2006. நேரு, ஜவஹர்லால், தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா, வைகிங், 2004. நேரு, ஜவஹர்லால், கிளிம்ப்ஸஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்டரி, வைகிங், 2004. ராதாகிருஷ்ணன், சர்வபள்ளி, (பதி)., மஹாத்மா காந்தி: எஸ்ஸேஸ் அண் ரிஃப்ளெக் ஷன்ஸ் ஆன் ஹிஸ் லைஃப் அண் வொர்க், ஜைக்கோ பப்ளிஷிங் ஹவுஸ், 1994. சந்தியா, தோதாராம், மை ட்வென்டி-ஒன் யீயர்ஸ் இன் தி ஃபிஜி ஐலண்ட்ஸ், ஃபிஜி ம்யூசியம், 1991. சன்யால், சுக்ல, ரிவல்யூஷனரி பேம்ஃப்லெட்ஸ், ப்ராபகாண்டா அண் பொலிடிகல் கல்ச்சர் இன் கலோனியல் பெங்கால், கேம்பிரிட்ஜ் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 2014. சர்கார், சுமித், தி ஸ்வதேசி மூவ்மெண்ட் இன் பெங்கால் 1903-1908, ஓரியண்ட் ப்ளாக் ஸ்வான், 2011. ஸ்கேமர். சீன், காந்தி இன் தி வெஸ்ட்: தி மஹாத்மா அண் தி ரைஸ் ஆஃப் ரேடிகல் புரொடஸ்ட், கேம்ப்ரிட்ஜ் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 2011. ஸ்கியாவோன், ஆல்டோ, தி இன்வென்ஷன் ஆஃப் லா இன் தி வெஸ்ட், பெல்க்நாப், ஹார்வர்ட், 2012. சேர்வை, எச். எம்., கான்ஸ்டிட்யூஷனல் லா ஆஃப் இந்தியா, 3 பாகங்கள், நான்காம் பதிப்பு, யூனிவர்சல் லா பப்ளிஷிங் கோ., 1991. சேன், அமர்த்யா, தி ஆர்கியூமெண்டேடிவ் இந்தியன்: ரைட்டிங்ஸ் ஆன் இண்டியன் ஹிஸ்டரி, கல்ச்சர் அண் ஐடென்டிடி, ஃபரார், ஸ்ட்ராஸ் அண் கிரூ, 2005. சேன், அமர்த்யா, தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், ஹார்வர்ட் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 2009. சேன், அமர்த்யா, டிவலப்மெண்ட் ஆஃப் ஃப்ரீடம், ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 1999. சேனாபதி, ஃபகீர் மோஹன், சிக்ஸ் ஏகர்ஸ் அண் எ தேர்ட், மூல வடிவம் 1902இல் வெளியானது, ஆங்கில மொழிபெயர்ப்பு, யூனிவர்ஸிட்டி ஆஃப் கலிஃபோர்னியா ப்ரஸ், 2005. சேன்குப்த, கவிராஸ் நாகேந்திரநாத், தி ஆயுர்வேதிக் சிஸ்டம் ஆஃப் மெடிசின், 2 பாகங்கள், லோகாஸ் ப்ரஸ், 1919. ஷார்ப், ஜீன், தி பாலிடிக்ஸ் ஆஃப் நான்வயலண்ட் ஆக் ஷன், 3 பாகங்கள், போர்ட்டர் சார்ஜண்ட், 1973. சிவா, வந்தனா, பயோபைரஸி: தி ப்ளண்டர் ஆஃப் நேச்சர் அண் நாலஜ், சவுத் எண்ட் ப்ரஸ், 1999. சிவா, வந்தனா, ஹூ ரியலி ஃபீட்ஸ் தி வேர்ல்ட்?: தி ஃபெயிலியர்ஸ் ஆஃப் அக்ரிபிசினஸ் அண் தி ப்ராமிஸ் ஆஃப் அக்ரோஈகாலஜி, நார்த் அட்லாண்டிக் புக்ஸ், 2016. தல்வல்கர், கோவிந்த், கோபால கிருஷ்ண கோகலே: ஹிஸ் லைஃப் அண் டைம்ஸ், ரூபா, 2006. தாபர், ரொமிலா, அசோகா அண் தி டிக்ளைன் ஆஃப் தி மவுர்யாஸ், ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 1999. தாபர், ரொமிலா, தி பப்ளிக் இண்டலெக்சுவல் இன் இண்டியா, அலெஃப், 2015. தரூர், சசி, ஆன் ஈரா ஆஃப் டார்க்னஸ்: தி பிரிட்டிஷ் எம்பயர் இன் இண்டியா, அலெஃப், 2016. தரூர், சசி, நேரு - தி இன்வென்ஷன் ஆஃப் இண்டியா, பெங்குவின், 2003. தோரூ, ஹென்றி டேவிட், கலெக்டட் எஸ்ஸேஸ் அண் போயம்ஸ், லைப்ரரி ஆஃப் அமெரிக்கா, 2001. த்ரிவேதி, லிசா, க்ளோதிங் காந்தி'ஸ் நேஷன்: ஹோம்ஸ்பன் அண் மாடர்ன் இண்டியா, இண்டியானா யூனிவர்ஸிட்டி ப்ரஸ், 2007. வார்னர், மைக்கேல், (பதி)., அமெரிக்கன் செர்மன்ஸ்: தி பில்க்ரிம்ஸ் டு மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், லைப்ரரி ஆஃப் அமெரிக்கா, 1999. வாஷிங்டன், ஜேம்ஸ், எம்., (பதி)., எ டெஸ்டமெண்ட் ஆஃப் ஹோப்: தி எசென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் மார்ட்டின் லூத்தர் கிங், ஹார்ப்பர் அண் ரோ, 1991. வெபர், தாமஸ், ஆன் தி சால்ட் மார்ச்: தி ஹிஸ்டாரியோக்ராஃபி ஆஃப் மஹாத்மா காந்தி'ஸ் மார்ச் டு டண்டி, ரூபா, 2009. உஜாஸ்திக், டாமினிக், எட் ஆல்., பதிப்பாளர்கள், மெடிகல் டெக்ஸ்ட்ஸ் அண்ட் மேன்யூஸ்க்ரிப்ட்ஸ் இன் இண்டியன் கல்ச்சுரல் ஹிஸ்டரி, மனோஹர், 2013. [கோச்ரப் ஆசிரமத்தில்.] கோச்ரப் ஆசிரமத்தில். [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 37 (1928), முகப்பு.] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 37 (1928), முகப்பு. [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 13 (1917), ப. 368 கத்தியவாடின் தலைப்பாகை அணிந்து காந்தி.] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 13 (1917), ப. 368 கத்தியவாடின் தலைப்பாகை அணிந்து காந்தி. தொடர்புகள் அட்டவணை இணையக் காப்பகம், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அறிவுக் கிடைப்புரிமை https://archive.org/details/A2KInIndiaAndAmerica சாம் பித்ரோதா, எண்ணியல் (கணினிமய) இந்தியா https://www.youtube.com/watch?v=sSGCLBt1juo பெங்களூர் நியூமாஹாஸ்கீக் நிகழ்வு https://archive.org/details/in.hasgeek.2017.10.15.1 இந்தியாவின் நிழற்படங்கள் https://www.flickr.com/photos/publicresourceorg/collections/72157666804055474/ இந்தியாவின் பொது நூலகம் https://archive.org/details/digitallibraryindia இந்து சுயராஜ்யத் தொகுப்பு https://archive.org/details/HindSwaraj இந்தியாவின் அரசிதழ்கள் https://archive.org/details/gazetteofindia உலகளாவிய பொதுமக்கள் பாதுகாப்பு விதிகள் https://archive.org/details/publicsafetycode சாம் பித்ரோதா https://sampitroda.com/ @sampitroda கார்ல் மாலமூத் https://public.resource.org/ @carlmalamud [சிடபிள்யூஎம்ஜி, பாகம் 96, முகப்பு, தி இண்டர்நேஷனல் பிரிண்டிங் பிரஸ், ஃபீனிக்ஸ்.] சிடபிள்யூஎம்ஜி, பாகம் 96, முகப்பு, தி இண்டர்நேஷனல் பிரிண்டிங் பிரஸ், ஃபீனிக்ஸ்.