[] []                   சிலப்பதிகாரமும் சந்திரமுகியும் (தமிழில் செவியுறை நாடகங்கள்)       முனைவர் த. டான் ஸ்டோனி தமிழாய்வுத்துறை தூய வளனார் கல்லூரி திருச்சிராப்பள்ளி prof.donstony@gmail.com        மின்னூல் வெளியீடு : freetamilebooks.com    உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0    கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.    மின்னூலாக்கம் - சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com                                            பொருளடக்கம் 1 சிலப்பதிகாரமும் சந்திரமுகியும் 4  2 "ரம்மி”(A Political Game) 12  3 மனக் கணக்கு 18  4 பெண்கள் 27  5 மூன்றாம் உலகம் 32  6 யார் குற்றவாளி 38  7 வால் நட்சத்திரம் 44  8 பிணம் 49  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 55    1 சிலப்பதிகாரமும் சந்திரமுகியும்    இடம் : அரசவை          நாடக மாந்தர்கள் : அரசர், அரசி, அமைச்சர்கள், புலவர், காவலாளிகள்          காட்சி – 1                  (மேடையின் திரைசீலை ‘ட்டங்’ என்ற மணியோசையுடன் விலக்கப்படுகிறது. தண்டோராக்காரன் கையில் தண்டோராவை ‘டம டம’வென அடித்துக் கொண்டு மைக் முன்னால் வந்து நின்று...)          காவலாளி : “ராஜாதி ராஜ..” (கரண்ட் கட் ஆகிவிடுகிறது. ‘அய்யோ’ என்கிறான் கரண்ட் வருகிறது)          காவலாளி : மீண்டும், “ராஜ குலத்திலக”(கரண்ட் கட்)          (தலையில் அடித்துக் கொள்கிறான். கரண்ட் வருகிறது)          காவலாளி : ‘காத்தவராய’ (கரண்ட் கட்)                  காவலாளி : யோவ் ஜென்ரேட்டரை போடுய்யா (உம்ம் என்று ஜென்ரேட்டர் போடும்சத்தம்) (‘அப்பாடி’ என்று சொல்லத் தொடங்குகிறான்)          காவலாளி : ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க,ராஜ மார்த்தாண்ட          கிருஸ்ண காம ராஜ வருகிறார். பராக் பராக்.... (பேக்கிரவுண்டில் ‘சந்திரமுகி’ மியுசிக் போடப்படுகிறது. ராஜா கம்பீரமாக வர.. மக்கள் அனைவரும் அவருக்கு தலை வணங்குகின்றனர். ஆசிர்வதித்து அரியணையில் அட்டகாசமாக அமர்கிறார். மக்கள் கீழே அமர்கின்றனர்)          காவலாளி : மன்னா ! தங்களை காண… நம்         அவைப்புலவர் வந்துள்ளார்          அரசர் : வரச் சொல்லுங்கள். (என்றவுடன் ‘புலவர்’ஓருவர் வருகிறார். அனைவரும் எழுந்து தோத்திரம் சொல்கின்றனர்)          புலவர்     :          அவையோர் அனைவருக்கும்         தோத்திரம். நாம் எந்த         ஒரு செயலைத் தொடங்கும் போதும் இறைவனை துதித்தி விட்டுத் தொடங்குவதே நம் அரசகுலமரபு. எனவே நாம் அனைவரும் இறைவனைத் தொழ எழுந்து நிற்போம். (என்று சொல்லி..திடிரென்று “சாலபுல்லா சாலபுல்லா” என்றுஅந்நிய பாஷையில் கத்தத் தொடங்க..)          மன்னர் : (கண்கள் மூடி இருக்கும் புலவரைத் தொட்டு)         புலவரே..புலவரே     (புலவர் மீண்டும் வேகமாகக் கத்தத் தொடங்க..) புலவரே (என்று வேகமாக கத்த..பயந்த புலவர்)                  புலவர் : மன்னா..          மன்னர் : 10 நிமிடம் தான் நமக்கு டைம் தந்துள்ளார்கள்.          புலவர் : ஓகே…ஓகே.. ஸாரி மன்னா..          மன்னர் : நீர் வந்தது?          புலவர் : மன்னா இன்று ஒரு அருமையான situation மன்னா.          அரசர் : என்னsituation புலவரே!          புலவர் : தனியாக இருக்கும் காதலன், தன் காதலியை நினைத்து ஏக்கத்துடன் பாடுவது போல் ஒரு பாடல் எழுதி வந்துள்ளேன் மன்னா.          அரசர் : எங்கே பாடும்?          புலவர் : ‘முட்டுவென் கொல் தாக்குவென்கொல்ஓரேன்யானும்’          அரசர் : புலவரே வந்தவுடன் ஆரம்பிக்கிறீர்களே !!!.ம் ட்யுனே சரியே இல்லையே !!! மீண்டும் ஒரு முறை situationனைச் சொல்லுங்கள் பார்ப்போம்.          புலவர் : தனியாக இருக்கும் காதலன், தன் காதலியை நினைத்து ஏக்கத்துடன் பாடுவது போல் ஒரு பாடல். எழுதி வந்துள்ளேன் மன்னா.          அரசர் : அதாவது தனிமைப்பாடல்          புலவர் : Super மன்னா          அரசர் : தனியாக தவிக்கின்றேன்துணை வேண்டாம்         அன்பே போ          புலவர் : Exactly மன்னா (தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ         பாடல் ஒலிக்கிறது)          அமைச்சர் : ஆகா அற்புதம்...          அரசர் : இல்லை ஏதோ ஒன்று         Miss ஆகிறது.          அமைச்சர் : ஆம். Speed இல்லை மன்னா.          காவலாளி : வேண்டுமென்றால் Remix பண்ணி பாருங்களேன்.          அரசர் : இப்படி நகருங்கள் (Remix என்று கூறி பண்ணுகிறார்.)      (என்று கூறி தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ Remix பாடல் ஒலிக்கிறது. எல்லோரும் சேர்ந்து ஆடுகிறார்கள். பின்னால் இருந்து அரசி இவர்கள் ஆடுவதைக் கண்டு கோபமடைந்து...)          அரசி : Stop it          அமைச்சர் : எவ அவ???? அய்யய்யோ ராணியம்மா???          அரசி : இது என்ன அரசவையா? இல்லை எழவு வீடா? என் கால் சிலம்பு தொலைந்து போய் நான்கு நாளகிறது.அதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலை இல்லை. ஆனால், எப்போது பார்த்தாலும் ஓரே கூத்தும், பாட்டும் தான்.          அரசர்      : (ஆவேசமாக) ராணி நிறுத்து.!!!                  ஆன்றோரும் சான்றோரும் அமர்ந்திருக்கும் இந்த அவையில்,     தவறான சொல்லாட்சியைப் பயன்படுத்தாதே! (மிடுக்குடன்)          இது ஒன்றும் கூத்துப் பாட்டு அல்ல. குத்துப்பாட்டு (என்று சொல்லி ஆடுகிறார்)         (அப்போது பொற்கொல்லன் ஒருவன் ஓடி வருகிறான்)          கொல்லன் : மன்னா சிலம்பு கிடைத்து விட்டது.          அரசி : என்ன? சிலம்பு கிடைத்து விட்டதா? எங்கே? எங்கே         என் சிலம்பு?          கொல்லன் : என் கடையில் உள்ளது மன்னா?(ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்).          அரசர் : உன் கடையிலா?          கொல்லன் : ஆமாம் மன்னா! என் கடையில் தான் உள்ளது.          அரசர் : ம்ம். உன் கடையில் எப்படி என் ராணியின் சிலம்பு???. (இழுக்கிறார்).                  அமைச்சன் : அய்யோ சந்தேகப்படாதீர்கள் மன்னா!!! இவன் முன்பே என்னிடம் சொன்னான். அதைச் சொல்லலாம் என்று வந்தேன். அதற்குள் கூத்தும் பாட்டும் என்று ஒரே கும்மாளம் ஆகிவிட்டது.          அமைச்சர் : அமைச்சரே கூத்துப் பாட்டு அல்ல… குத்துப்பாட்டு. சாரி         சாரி மன்னா!! அண்டை நாட்டிலிருந்து ‘விகடன்’ என்பவன் இவன் கடைக்கு வந்துள்ளான். அவன் கையில் தான் ராணியின் சிலம்பு உள்ளதாம்.          அரசர்      :          விகடனா? அவன் பெயர் கோவலன் தானே!!          அமைச்சன் : மன்னா பெயரை மாற்றி வைத்தால் தான் யாரும் பிரச்சனை பண்ண மாட்டார்கள். விகடன் தான் என்றால் 56 மார்க் வேறு போட்டு பாஸ் பண்ணி விடுவார்கள்          அரசி : நிறுத்துங்கள்!! என் சிலம்பை நான் உடனே பார்க்க வேண்டும். ஏய் யார் அங்கே?          அரசர் : ராணி அவசரப்படாதே… இந்த டயலாக் எல்லாம்         நான்தான் சொல்ல வேண்டும். ஏய் யார் அங்கே?          காவலாளி : (கையை புல்(சரக்கு) பாட்டில் போல காண்பித்து)         மன்னா!! ஓகே! ஓகே! வாங்கிட்டு அந்தப்புரம் வந்து விடுகிறேன்.                  அரசர் : அட… த்தூதூ…. நம் ராணியின் சிலம்பை ஒருவன் வைத்திருக்கானாம். உடனே அவனைக் கொன்று வாருங்கள்.          காவலாளி 2                 : உத்தரவு மன்னா..          அமைச்சன்                 : மன்னா வரவர         உங்கள் வாய் ரொம்பவும் திக்குகிறது. “அவனைக் கொண்டு வாருங்கள்” என்பதற்குப் பதிலாகக் “கொன்று வாருங்கள்” என்றல்லவா சொல்லி விட்டீர்கள்.          அரசர் : அப்படியா சொன்னேன். ஏய் யாரங்கே?          அமைச்சன் : க்கும். அவர்கள் போய்விட்டார்கள்.          அரசர் : பார்த்தீர்களா அமைச்சரே! எவ்வளவு கடமை உணர்ச்சி!!!          அமைச்சன் : கடமை உணர்ச்சியா? (எகத்தாளமாக) இல்லை மன்னா!          நம் அரசவையில் ஆடுவதற்கு நடன மங்கை ஒருத்தி வந்துள்ளாள். அவளை அழைத்து வரத் தான் இப்படி தலை தெறிக்க ஓடுகிறார்கள்.          அரசர் : அப்படியா? ம்..வரட்டும் பார்க்கிறேன். (நடனமங்கையை அழைத்து வருகிறார்கள். நடன மங்கை அன்ன நடையில் நடந்து வருகிறாள். உடன் வரும் இரு காவலாளிகளைப் பார்த்து)          அரசர் : உங்களை எங்கே போகச் சொன்னேன்….          காவலாளி : ஆட்டக்காரியைப் பார்க்கவும் மனது தடுமாறி         விட்டது          மன்னா… அந்தக் கள்வனை இதோ ஒரு நொடியில் இழுத்து வந்து விடுகிறோம்.          காவலாளி : அரசே! நடனத்தை ஆரம்பிக்கலாமா?          அரசர் : அவர்களும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் வரும் வரை ஒன் டூ த்ரி சொல்லி ஆரம்பியுங்கள்.1…2….3…4.. Start     (பின்னணியில் சந்திரமுகி பாடல் ஒலிக்கிறது. நடன மங்கை வந்து சந்திரமுகி பாடலுக்கு ஆடுகிறாள். அப்போது கோவலனை இழுத்து வருகிறார்கள். பாடலின் இடையில் ரஜினி போல “லக்கலக்க“ என்று சொல்லி, கோவலனின் தலையை வெட்டுகிறான். நடன மங்கை ஆஆஆஆ என்று ஓடுகிறாள். )          அமைச்சன் : என்ன மன்னா தீர விசாரிக்காமல் இப்படி வெட்டி விட்டீர்கள்? என்ன நினைப்பார்கள் மக்கள்?          அரசர் : ஆஆஆஆஆ என்ன நினைப்பார்கள் இந்த மானங்கெட்ட மக்கள்?          அமைச்சன் : இல்லை மன்னா!! போராட்டம் அது இது என்று?          (அரசர் பயங்கரமாக சிரிக்கிறார்)          அரசர் : இந்த மக்களா? போராட்டமா? என்ன அமைச்சரே? இந்த நாட்டில்தானே இருக்கிறீர்கள்? 24மணி நேரத்தில் வெறும் 6மணி நேரம் தானே மின்சாரம் வழங்குகிறோம்? அதற்கு என்ன போராட்டமா? நடந்தது? அமைச்சர் : அது தான் மன்னா எனக்கும் புரியவில்லை? அதைப் பற்றி ஒரு பய சிரிக்கியும் வாயவே திறப்பதில்லை.          அரசர் : அது தான் அமைச்சரே ராஜதந்திரம்.          அமைச்சர் : ராஜதந்திரமா? மின்சாரத்தில் எப்படி மன்னாராஜதந்திரம்?          அரசர் : இந்த மாதிரி நேரங்களில் தான் இவர்களை யோசிக்கவே விட கூடாது. எரிபொருள் விலையை எப்படி ஏற்றி ஏற்றி இறக்குவோமோ?          அமைச்சர் : எரிபொருளா?          அரசர் : அட அதுதான்யா பெட்ரோல்.. கொஞ்சமாவது தமிழில் பேசவிடும்மய்யா.பெட்ரோலைப்போல...மின்சாரத்தையும் மாற்றி மாற்றி கட் பண்ண வேண்டும்.          அமைச்சர் : புரியவில்லை மன்னா…          அரசர் : முதலில் 4மணி நேரம் கட் பண்ண வேண்டும். திட்டுவார்கள். பிறகு ரெண்டு மணி நேரமாக மாற்றவேண்டும். அப்பாடா என்பார்கள்.டப்புனு ஆறு மணி நேரம்         ஆக்கனும். திட்டுவார்கள். திட்டு பழகிவிடும். 6றை எட்டாக்கி, எட்டை 12ஆ மாத்தனும்.கடைசியில்...குரங்குக்கு வாழைப்பழத்தை குடுத்து குடுத்து எடுப்பது போல...ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் விட்டு விட்டு கட் பண்ணினால்… அவர்களே டையர்டு ஆகி விடுவார்கள். எப்படி நம் ஜடியா!!!          அமைச்சர் : அபாரம் மன்னா!! ஆனால்..ஒரு நாள் பொங்கி எழுந்தால்..          அரசர் : அதற்குத் தான் இருக்கவே இருக்கு. நம்ம சாதி கலவரம்.          அமைச்சர் : கரண்ட்டுக்கும் சாதி கலவரத்திற்கும் என்ன         சம்பந்தம். குழப்புகிறீர்களே மன்னா?          அரசர் : தெளிவாக சொல்லுகிறேன்.ஏய் இங்கே வா!!! (காவலாளி வருகிறான். அவனிடம் ஒரு செருப்பைக் கொடுத்து)இதைப் போய் ரோட்டோரமாக ஒரு தலைவரின் சிலை இருக்கும். அவர் கழுத்தில் இதை மாலையாக போட்டு விடு. உத்தரவு அரசே.          அரசர் : ஏய் போகும் போது பத்து பதினைந்து காவலாளிகளைஅழைத்துப் போய் பாதுகாப்போடு போட்டு விடு.          காவலாளி : உத்தரவு அரசே.          அமைச்சர் : மன்னா இன்னொரு செருப்பு மீதி இருக்கே!!!          அரசர் : ஏய் நீ இங்கே வா!!! (மற்றொரு காவலாளி வருகிறான். அவனிடம் மற்றொரு செருப்பைக் கொடுத்து) இதைப் போய் அந்த ரோட்டோரமாக இன்னொரு தலைவரின் சிலை இருக்கும். அவர்         கழுத்தில் இதை மாலையாக போட்டு விடு.          காவலாளி   :    உத்தரவு அரசே!!!          அமைச்சர்    :  இனி என்ன நடக்கும் மன்னா?          அரசர் :   காலையில் பார்…. ஒரே கலவரம் தான். வடக்கில் உள்ள பரமக்குடியில் ஒரு கலவரம்.                                    தெற்கில் மதுரையில் ஒரு கலவரம். மேற்கில் தர்மபுரியில் ஒரு         கலவரம். வர டிசம்பர்ல திண்டுக்கல்ல ஒரு கலவரம் என மாதத்திற்கு ஓரு கலவரம் என்று தொடங்கி வைத்தால்….அவன் அவன் இதைப் பத்தியே பேசிக்கொண்டே.. இருப்பானுக..நமக்கு ஐஞ்சு வருசம் போயிடும்...அடுத்த வருடம் ‘இது இலவசம்… அது இலவசம்’ என்று தேர்தல் அறிக்கை விட்டோம் என்றால்…. மெஜாரட்டி வராதா…?.          அமைச்சர் : வரும்… ஆனால் அந்தச் சாதி கட்சி தலைவர்கள் இதை கேட்க மாட்டார்களா? மன்னா?          அரசர் : இருவரையும் அழைத்து வரும் தேர்தலில் உனக்கு 18 உனக்கு 24         என்றால் …. அறிக்கை மட்டுமே வாசித்துக் கொண்டிருப்பார்கள்..          அமைச்சர் : அப்படியும் நாம் ஆட்சிக்கு வராவிட்டால்…          அரசர் : நெக்ஸ்ட்….ரெஸ்ட்…          அமைச்சர் : ஒரு வேளை அடுத்த ஆட்சி வந்தால் இதெல்லாம் சரி ஆகிவிடுமா? மன்னா?          அரசர் : இதே பல்லவி தான் அவர்களும் பாடுவார்கள்…. அவர்கள் மட்டும் எங்கே போவார்கள்….? கொல்லப்புரத்தில் இருந்தா கொண்டு வருவார்கள். (அப்போது ஒரு காவலாளி ஒருவன் வருகிறான்)          காவலாளி : மன்னா?          அரசர் : என்னா?          காவலாளி : மன்னா! தங்களைச் சந்திக்க அழகான நெற்றி ! வளைந்த lips, சுண்டிழுக்கும் கண்கள்,போத்தீஸ் பட்டுபுடவை கட்டி, Lose Hair–ல் ஒரு Figer, sorry ஒரு பெண் வந்துள்ளாள் மன்னா! (அனைவரும் எங்கே? எங்கே? என ஆவலாக ஓடி வருகிறார்கள்.)          காவலாளி : பெண்ணே!! நில். நீ யார்?          ஆனந்தா : நானா.. திருச்சி ஜில்லா, 7வா கிராஸ், சோழ மாதேவி தெரு,          மூணாவது குறுக்கு சந்தில் இருந்து ஸ்ரீமான் நக்கீரன் மகள் “ஆனந்தி வள்ளி” ….சுருக்கமாக என்னை “ஆனந்தா” என்று அழைப்பார்கள்.          அரசர் : வாருங்கள். வந்து அமருங்கள்          ஆனந்தா : (கோபமாக) நான் இங்கு அமர வரவில்லை.                  அமைச்சன் : (ஜொல்லு விட்டுக் கொண்டு) பின்பு எதற்கு வந்தீர்கள்?                  ஆனந்தா : நீதி கேட்டு வந்துள்ளேன்.          அரசர் : (சீரியஸாக) என்ன உளறுகிறாய் பெண்ணே! என்ன         வேண்டும்?          ஆனந்தா : (கண்கள் சிவக்க) என் கணவர் வேண்டும். (‘ஹேய்’ என்று கத்தி அனைவரும் கை கொடுத்து கொண்டு வரிசையாக நிற்கிறார்கள்.)          அரசர் : சொல். இதில் யார் உன் கணவன்?          ஆனந்தா : மன்னா! இவர்கள் எல்லாம் என் கணவர் இல்லை. (உடனே, அனைவரும் அரசருக்கு கை கொடுக்கிறார்கள். அரசர் வெட்கத்தில் போதும் போதும்’ என்று கை அமர்த்திவிட்டு கண்ணகியை ரெமாண்டிக் லுக் விடுகிறார்)          ஆனந்தா : (மிக கோபமாக) மன்னா! ‘கள்வன்’ என்று சொல்லி      ஒருவர் கழுத்தை வெட்டீனீர்களே! அவர் மனைவி நான்!! என் பெயர் ஆனந்தா! (பேக்கிரவுண்ட்டில் “ஆனந்தா என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்ற சிவாஜி வசனம் கேட்கிறது.)          அமைச்சன் : ஓஓஓ நீதான் அந்த ஆனந்தாவா?          ஆனந்தா : மன்னா நிறுத்து உன் கேலி பேச்சை…          அமைச்சன் : சரி. இரண்டு நாட்களுக்கு முன்னரே அவனைப் பிடித்து வந்து விட்டோம். தலையும் வெட்டப்பட்டு விட்டது. அன்றே வராமல் இன்று வந்து கேட்பதற்கு என்ன காரணம்?          ஆனந்தா : ம். அந்த நாதரி!!! எங்காவது மாதவி,ரம்பை என்று         எவள் உடனாது டிஸ்கொதோ, பப்பு என்று அலையும் என்று அசால்டாக இருந்து விட்டேன். பின்னர் தான் நீ அவரை ‘கள்வன்’ என்று கூறி தலையை வெட்டி விட்டாய் என்று தெரிந்தது.          அரசர் : கள்வனைக் கொல்வது தானே முறை          அமைச்சன் : ஆமாம். கள்வனைக் கொல்வது கடுங்கோன்மை அன்று?          ஆனந்தா : என் கணவன் கள்வன் அல்லன்.          அரசன் : இல்லை. உன் கணவன் கள்வன் தான்.          ஆனந்தா : இல்லை. என் கணவன் கள்வன் அல்லன்.          அரசன் : அதை எவ்வாறு நிருபிப்பாய்?          ஆனந்தா : என் சிலம்பில் உள்ள மணிகள் முத்து மணிகள்.          அமைச்சன் : எங்கள் ராணியின் சிலம்பிலுள்ள மணிகளும் முத்து மணிகள் தான்          அரசன் : நீ எந்தக் கடையில் வாங்கினாய்?          ஆனந்தா : “போராடுவோம் போராடுவோம்” என்று நம்மை எல்லாம் போராட்டத்திற்கு அழைப்பாரே இளைய திலகம் பிரபு... அவர் வாங்க சொன்ன கல்யாண் ஜுவல்லரியில் வாங்கினேன்.          காவலாளி : “நம்பிக்கை அதானே எல்லாம்”          ஆனந்தா : நீங்கள் எந்தக் கடையில் வாங்குனீர்கள் அரசன் : நாங்கள், தங்கள் அம்மாவின் தொங்கலை ஆட்டிவிட்டுக்கொண்டே தங்கம் வாங்க சொல்வாரே அந்தத் தங்க புள்ள விஜய்.. அது சொன்ன…. அந்த ஜோஸ் ஆலுக்காஸில் தான் வாங்கினோம்.          ஆனந்தா          : அப்படியென்றால், என் மற்றொரு சிலம்பில் K.Jஎன்ற முத்திரைதான் உள்ளது. அதாவது கல்யாண் ஜுவல்லரி முத்திரை. என் கணவனை கள்வன் என்று சொல்லி பிடித்து வந்து அபகரித்த சிலம்பில் என்ன முத்திரை உள்ளது? சற்று பாருங்கள். (மற்றொரு சிலம்பை கொண்டு வந்து பார்க்கிறார்கள்.)                   அமைச்சன்          :     மன்னா!!! மோசம் போய் விட்டோம். மற்றொரு சிலம்பிலும்     K.J. என்றமுத்திரையே        உள்ளது மன்னா!! அதாவது கல்யாண் ஜுவல்லரி முத்திரையே உள்ளது.          காவலாளி : “நம்பிக்கை அதானே எல்லாம்”          அரசர்                    :                  அய்யோ!!! சரி வர ஆராயாமல் தீர்ப்பு வழங்கி விட்டேன்.. இது என் குலத்திற்கே அவமானம். நான் பாவி! நான் பாவி!!! ஆனந்தா என்னை மன்னித்து விடு. இதோ இந்த உயிரை. (அரசி கணவனின் வாயை பொத்தி)                  அரசி : மன்னா எனக்கு முன்பே தாங்கள் உயிரைப் போக்கிக்கொள்ளவேண்டாம். தங்களுக்கு முன் என் உயிரை போக்கிக் கொள்கிறேன்.          அரசர் : என்ன ஒரு பத்தினி தன்மை.          அரசி : அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்களாவது பரவாயில்லை 18 மணி நேர கரண்ட் கட்டிற்கு.... இதோ இப்போது வருகிறது! இதோ அப்போது வருகிறது. என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டு ஆட்சி நடத்துகிறீர்கள்.. என்னால் அப்படியெல்லாம் மானங்கெட்டத்தனமாகவும் ஆட்சி நடத்த முடியாது...... அதுவும் நீங்கள் போய் விட்டால், பூ இல்லாமல்,பொட்டு இல்லாமல், அதுவும் ‘வீக்லி ஒன்ஸ்’ பியுட்டி பார்லர் போய் ‘டச்’ பண்ணாமல், கேவலம் ‘பிளக்’ பண்ணக் கூட முடியாமல் என்னால் வாழவே முடியாது. இதோ இப்போதே.....ஆஆஆஆஆ (மன்னன் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்துக் குத்திக் கொண்டு உயிரை விடுகிறாள்.)          அரசர் : அரசி போனபின்பு, நான் மட்டும் (அரசனும் கத்தியால் தன்னை குத்திக் கொண்டு சாகப் போகும் போது)         ஆனந்தா : மன்னா!! நீ செய்த தவறுக்கு அப்படியொன்றும் தப்பித்துப் போக முடியாது.          அரசர் : ஆனந்தா!!!! நீ வேண்டுமானால் இந்த ஊரை எரித்து விடு.          அமைச்சர் : என்ன? ஊரை எரிக்க வேண்டுமா? நீ செய்த தவறுக்கு         ஏன் ஊரை எரிக்க வேண்டும்? நான் அப்போதே சொன்னேன். மக்கள் பொங்கி எழுவார்கள்..போராட்டம்          பண்ணுவார்கள் என்று…. நீ தான் அதற்கெல்லாம் ராஜதந்திரம் உள்ளது என்றாய்…. இப்போது என்ன ஆகிவிட்டது. இதோ ஒற்றை பெண் வந்துள்ளால்… இப்போது காட்டு உன் ராஜதந்திரத்தை…          அரசர் : அமைச்சரே நிறுத்து….          அமைச்சர் : அமைச்சரா? ஆஆஆஆஆஆ அது போன வாரம் (என்று கூறி ‘லக்க்லக்க’ என்று அரசன் முகத்தை பார்த்து சொல்லி, பின்ணனியில் சந்திரமுகி மீயுசிக் ஒலிக்க அமைச்சன் ஆயணையில் அமருகிறான்)                       அமைச்சர் : ஆனந்தா என்ன வேண்டும் உனக்கு…. (சந்திரமுகி க்ளைமெக்ஸ் போல அரசனை வெட்டிக் கொன்று விட்டு தரையில் சாய்வது போல Freezs ஆகிறாள். அதைப் போல எல்லோரும் அவரவர் இடத்தில் Freezs ஆகி நிற்க. பின்ணனியில் குரல் ஒலிக்க.. நாடகம் முடிவடைகிறது.)                   **************************          2 "ரம்மி”(A Political Game)      நாடக மாந்தர்கள்     :     சீட்டு ஆடுபவர்கள், ஐயப்ப பக்தர்கள் ,கேரளஅரசியல்வாதிகள், தமிழக              அரசியல்வாதிகள், அரசியல் அடிபொடிகள் காட்சி -1      (மேடையின் நான்கு புறமிருந்தும் “சாமியே ஐயப்பா, சாமி சரணம்,     ஐயப்பா சரணம். ஐயப்பா சாமியே” எனப் பாடிக் கொண்டே மேடை மீது ஏறுகிறார்கள்.)      பக்தர் 1 : “ சாமியே ஐயப்பா      குழு : சாமி சரணம்,      பக்தர் 2 : ஐயப்பா சரணம்”      குழு : ஐயப்பா சாமியே      (அப்போது, மேடையில் சீட்டுக்கட்டு நான்கு பேர் அமர்ந்து விளையாட.... (பின்னணியில் விளையாடு மங்காத்தா பாடல் ஒலிக்கப்படுகிறது.)      பக்தர் 1 : சாமி ஐயப்பன் சாமி கோயிலுக்கு இன்னும் எவ்வளவு தூரம்          போகனும். (காதில் வாங்காமல்)      சீட்டு ஆடுபவர் 1 : போடு ...      சீட்டுஆடுபவர் 2 : இந்தா. .     ரம்மி. .      பக்தர் 1 : சாமி.. சாமியோவ்..ஐயப்பன் சாமி கோயிலுக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகனும் சாமி? (சீட்டு விளையாடுபவர்கள் இவர்களைக் கண்டு கொள்ளாமல்)          சீட்டு ஆடுபவர் 3 : இங்க பார் எனக்கும் ரம்மி. .      சீட்டு ஆடுபவர் 4  : அது எப்படி இரண்டு ரம்மி. . ஏமாத்தாட. .      சீட்டு ஆடுபவர் 5    : நீ தான் ஏமாத்துறது. .      சீட்டு ஆடுபவர் 4 : நீ தான் ஏமாத்துறது. .      சீட்டு ஆடுபவர் 5  : நீ தான் ஏமாத்துறது. .(கை கலப்பு ஆகிறது)          பக்தர் 1   : என்ன சாமி நல்லா ஒத்துமையா இருந்தீங்க. ஒருசீட்டுசாமிக்காக இப்புடி அடிச்சுக்குறீங்களே சாமி.       சீட்டு ஆடுபவர் 1     : என்னது ஒரு சீட்டா? ஓரு சீட்டா     இருந்தாலும் ரம்மி சீட்டுயா.      பக்தர் 2 : எனக்குப் புரியல சாமி. .இங்க எல்லாம் ஒரு சீட்டு தான் பிரச்சனை அதுதான் ரம்மி சீட்டு. (அப்போது. . . டேய் அமைச்சர் செத்துப் போயிட்டாருடா”..என ஒருவன் கத்திக் கொண்டே வருகிறான்)          சீட்டு ஆடுபவர் 1 : யார்டா செத்தா ?      சீட்டு ஆடுபவர் 2 : இடுக்கியில. .      பக்தர் 1 : என்னது இடுக்கியில குத்திக்கிட்டு     அமைச்சர் செத்துப்போயிட்டாரா?      சீட்டு ஆடுபவர் 1 : யோவ். . சும்மா இருய்யா. . “இடுக்கி”ன்றது     ஒரு மாவட்டம்..      சீட்டு ஆடுபவர் 2 : யார்டா செத்தா. .?      சீட்டு ஆடுபவர் 3 : உணவு அமைச்சர் ஜேக்கப். .      சீட்டு ஆடுபவர் 4 : அமைச்சர் ஜேக்கப்பா. . .அய்ய்யோ. (என்று சத்தமாகக் கத்துகிறான். துடிக்கிறான்)      சீட்டு ஆடுபவர் 1 : ஏன் சொந்தக்காரரா இப்புடி அழுவுற. .      சீட்டு ஆடுபவர் 4 : சொந்தக்காரர் இல்லடா. . என் சொந்தம் எல்லாம் பறிபோகப் போகுதுடா. அய்ய்யோ.      சீட்டு ஆடுபவர் 2 : டேய் என்னாட குழப்புற. . கொஞ்சம் தெளிவா சொல்லுடா.      சீட்டு ஆடுபவர் 3 : ஏன்டா செத்துப் போனது ?      சீட்டு ஆடுபவர் 2 : காங்கிரஸ் கட்சி எம்.எல்..ஏ ?      சீட்டு ஆடுபவர்3 : புரியலையாடா? நம்ம மாநிலத்தில்     மொத்த எத்தன சீட்டுடா?      சீட்டு ஆடுபவர் 2 : 140 சீட்டு.      சீட்டு ஆடுபவர் 4 : அதுல. ..     எதிர்கட்சி?      சீட்டு ஆடுபவர் 3 : 68 சீட்டு ஜெயிச்சாங்க. . .      சீட்டு ஆடுபவர் 4 : மீதி      சீட்டு ஆடுபவர் 3 : இது தெரியாதா? 72 சீட்டு . ..      சீட்டு ஆடுபவர் 2 : அத புடிச்சி தான் காங்கிரஸ் ஆட்சி     அமைச்சிச்சு.. .      சீட்டு ஆடுபவர் 1 : 72ல்ல 1 சபாநாயர் போக மீதி 71சீட்டு      சீட்டு ஆடுபவர் 2 : அந்த 71ல்ல தான்டா 1 சீட்டு ஜேக்கப் போயிட்டாரு.      சீட்டு ஆடுபவர் 3 : அதுக்கு என்ன இப்ப?      சீட்டு ஆடுபவர்5 : அவரு செத்துப் போனதாலா. . ஜனவரியில இடைத்தேர்தல் வரும்டா?           சீட்டு ஆடுபவர் 3 : எதிர்க்கட்சி ஜெயிச்சா 69. . ஆளும்கட்சி தோத்த 70.      சீட்டு ஆடுபவர் 4 : அய்யோ. . தமிழ்நாட்டுல இருக்கிற. . என் சொந்தம் எல்லாம் போச்சே. ..      சீட்டு ஆடுபவர் 3 : இதுக்கும் தமிழ் நாட்டுல இருக்கிற ஒன்     தங்கச்சிக்கும் என்னாடா சம்மந்தம்?      சீட்டு ஆடுபவர் 4 : சம்மந்தம் படுத்திடுவானுகடா.....(அப்போது ஒருவன்)          சீட்டு ஆடுபவர் 5 : மாப்புள ரம்மிடா      சீட்டு ஆடுபவர்1 : இந்த ஒரு சீட்டு ரம்மியில்லடா. . இனிமே நம்ம அரசியல்வாதிக. . ஆடுவானுக பார். ஒரு ஆட்டம். . .அது தான்டா ரம்மியாட்டம். ஒரு சீட்டுக்காக அவனுகஆடுற ஆட்டத்தப்பாருடா.  (பப்பப்பாம். . .மங்காத்தா இசை மெதுவாக ஒலிக்கிறது.)               காட்சி – 2      இடம் : கேரளா அரசியல் தலைவர் வீடு      கதைமாந்தர்கள் : கேரளா அரசியல் தலைவர் & தொண்டர்கள்      (கேரளா காங்கிரஸ் தலைவர் மற்றும் கட்சிக்காரர்கள் தம் கட்சியில் ஒருவர் இறந்தவுடன் அடுத்து என்ன செய்வது எனப் பேசிக் கொள்கிறார்கள்)      தலைவர்             : சரி நடந்தது நடந்து போச்சு.. இப்ப இடுக்கியில வர்ர   இடைத்தேர்தல்ல எப்படி ஜெயிக்கப் போறோம். . .      தொண்டர் : தலைவரே. ஒரே சீட்டு ஆட்சியே போய்விடும். எதிர்க்கட்சி வேற ஸ்ட்ராங்கா இருக்கு.      தொண்டர் : ஜெயிச்சே ஆகனும். .      தொண்டர் : ஜெயிச்சே ஆகனும். .      தலைவர் : என்னப் பண்ணலாம்?      தொண்டர் : தலைவரே ஒரு ஐடியா!!!!!      தலைவர் : என்னய்யா?      தொண்டர்       :   கர்நாடவுக்கு காவிரி மாதிரி. 30 வருசமா இருக்கவே    இருக்கு முல்லைப் பெரியாறு.      தலைவர்      : அத வைச்சு எப்புடியா அரசியல் பண்ணுறது. ..      தொண்டர் : டாம் உடையப்போகுது ….4இலட்சம் மக்கள் சாகப்போறாங்கனு சொல்லுங்க.      தலைவர்      : நாம சொன்னா நம்புவாங்களா. .      தொண்டர் : நம்ம மாட்டானுக. ...      தலைவர்      : நாம சொன்ன நம்ம பொண்டாட்டிகளே நம்ப மாட்டாளுக. மக்கள் எப்படி நம்புவானுக.      தொண்டர் : தலைவரே. . தமிழ்நாட்டுக்காரனுகளும் சரி…நம்ம கேரளா ஜனங்களும் சரி… சினிமாக்காரன் சொன்னா மட்டும் எல்லாத்தையும் நம்புவானுக.      தலைவர் : அப்ப யாரவச்சு சொல்லுறது?      தொண்டர் : ஏன் சொந்தக்காரன் ஒருத்தன் அமெரிக்கால இருக்கான். அவனுட்டச் சொல்லி. . சும்மா டைட்டானிக் ரேஞ்சுஎடுத்து 4 இலட்சம் மக்கள் அடிச்சுட்டு போற மாதிரி கிராப்பிக்ஸ்ல எடுத்தா. . சும்மா அள்ளிக்கிட்டுப் போயிடாது. .      தொண்டர் :      அப்புடியே. . தமிழ் நாட்டுல . இருக்குற நம்ம ஆளுகளுட்ட சொல்லி ‘தமிழ் நாட்டில் படத்துக்குத் தடையும் போட சொல்லிரலாம்.      தலைவர் : இது எதுக்குய்யா?      தொண்டர் : ஒரு பப்ளிசிட்டி தான் தலைவரே!!!      தலைவர் : எப்புடி. .      தொண்டர் : ஒரு படம் வராததற்கு முன்னாடியே. . அந்த நடிகருக்கும் இந்த நடிகைக்கும் கசமுசனு கிசுகிசு போடுவானுகளே..அது மாதிரி.     ஒரு பப்ளிசிட்டி.      தொண்டர் : போட்டா . . .எதிர்பார்ப்பு எகிறும்ல்லா. ..      தொண்டர் : பாக்ஸ் ஆபிஸ்லும் ஹிட்டு தலைவரே. . ..      தொண்டர் : பேரு என்ன வைப்பீங்க. ..      தொண்டர் : 999 டாம்னு. . டம்னு வைப்போம். .. .      தொண்டர் : அது என்னான்னே.     999      தொண்டர்   : முல்லைப் பெரியாறு கட்டுறதுக்காக சொத்து பத்தஎல்லாம் வித்தாரே ஒருவெள்ளக்கார துரை.      தொண்டர் : யாருண்ணே? பென்னி குக்கா?      தொண்டர் : ம்... அவரும் நம்ம திருவாதங்கூர் ராஜாவும் 999 வருசத்திற்குனு ஒரு உடன்படிக்கைதிட்டம் போட்டங்கள்ள.அதையேபேரா வைச்சுடுவோம்.      தலைவர் : வைக்கிறோம். . .. ஆட்சிய புடிக்கிறோம். (டாம் 999 என்ற திரைப்படத்தின் தீம் மீயுசிக்     போடப்படுகிறது. படம் பார்ப்பது போல நடித்துக் காட்டப்படுகிறது.)      காட்சி – 3      இடம் : கேரளா எல்லை      கதைமாந்தர்கள் : கேரளா அரசியல்வாதிகள் சிலர் ,போராட்டக்குழுவினர்      மக்கள்      : அய்ய்யோ டாம் உடைஞ்சிடுச்சாம் (கூச்சல்)      மக்கள்      : அய்ய்யோ டாம் உடைஞ்சிடுச்சாம் (கத்தல்)      கேரள அரசு : மக்கள் அமைதி காக்கவும்      மக்கள்    : அய்ய்யோ டாம் உடைஞ்சிடுச்சாம் (குழப்பம்)      கே.அரசியல்வாதி : வன்முறையைக் கையில் எடுக்க வேண்டாம்      மக்கள் : போடுடா அவன் மண்டையில. .      கேரள அரசியல் : எல்லையோரத்தில் பல இலட்சம்தமிழ்மக்கள் உயிர் வாழ்கிறார்கள்      மக்கள் : கொளுத்துடா அவன் வீட்டை.      காட்சி – 4      இடம் : தமிழக எல்லை      கதைமாந்தர்கள் : தமிழக அரசியல்வாதிகள் சிலர், போராட்டக்குழுவினர்      தமிழக அரசியல் : எல்லையோரத்தில் பல இலட்சம் கேரளாமக்கள் உயிர் வாழ்கிறார்கள்.      மக்கள் : ஒருத்தனையும் விடாத..      தமிழக அரசியல் : இங்க இருந்து தான் அரிசி போகுது      மக்கள் : நிப்பாட்டு      தமிழகஅரசியல் : இங்க இருந்துதான் தக்காளி போகுது      மக்கள் : தூக்குடா மூட்டைய. .      தமிழக அரசியல் : இங்க இருந்து தான் கரி போகுது      மக்கள் : மடக்குடா. . (மீண்டும் கேரளா எல்லை.)               காட்சி – 5      இடம் : கேரளா எல்லை      கதைமாந்தர்கள் : கேரளா அரசியல்வாதிகள் & தமிழக எல்லையோர மக்கள்      தமிழக மக்கள் : நாங்கள் கோர்ட்டுக்குப் போவோம். .      கே.அரசியல்வாதி : போ.30 வருஸமா அங்க தான போற.      கே.அரசியல்வாதி : மத்திய அரசு…?     அதுவும் எங்க காங்கிரஸ் அரசு      கே.அரசியல்வாதி : மாநில அரசு..?அதுவும் எங்க காங்கிரஸ் அரசு. .      கேரளா பிஜேபி : நாங்க கேரளா பிஜேபி.அணை உடையும்      தமிழக பிஜேபி : நாங்க தமிழக பிஜேபி.அணை உடையாது      கேரளா கமினிஸ் :   நாங்க கேரளா கமினிஸ்ட்டுகள்.அணை உடையும்      தமிழக கமினிஸ் : நாங்க தமிழக கமினிஸ்ட்டுகள். அணை உடையாது. (அப்போது அங்கு தமிழக சபரிமலை பக்தர்கள் வருகிறார்கள்)      சபரிமலை பக்தர் : “ சாமியே ஐயப்பா, சாமி சரணம்,      கேரளா அரசியல் : ஓடுடா. . தமிழ்நாட்டுக்கு      சபரிமலை பக்தர் : ஓடனுமா? வருசம் வருசம் நாங்க வரதுனால, எங்களால வருசத்துக்கு 2 கோடி லாபம் உங்க ஐயப்பன் கோயிலுக்கு.      கேரளா அரசியல் : ஒரு சீட்டுல ஆட்சி கவுந்தா 2000 கோடி நட்டம் எங்களுக்கு.      சபரிமலை பக்தர் : 999 உயில் . .?      கேரளா அரசியல் : அது உயில் இல்லடா. . .. மயிறு.      சபரிமலை பக்தர்1 : அப்ப டேம் காவலுக்கு நாங்க எங்க வரிப்பணத்துல நாங்க தர்ற 12 இலட்சம்?      சபரிமலை பக்தர் 2 : டேம் உள்ள இடத்துக்கு வாடகையா நாங்க தர்ர 2 இலட்சம்?      சபரிமலை பக்தர் 3 : தேக்கடி சுற்றுலா தளத்தில் வர்ற வருமானம்?      சபரிமலை பக்தர் 4 : என்னைய அடிச்சா.... அங்க உன் சொந்தகாரன.. என்நாட்டுக்காரன் அடிப்பான்.      கேரளா அரசியல் : என் சொந்தகாரன் எல்லாம் அமெரிக்கால  இருக்காண்டா. . .      சபரிமலை பக்தர் 5 : ஏன்டா. . சீட்டுக்கட்டுல இருக்குற ரம்மி     மாதிரி செத்துப் போன ஒருத்தன் சீட்டக்காக. இவ்வளவு சண்டையா. ..      சபரி மலை பக்தர் 1 : 30 வருஸமா இப்படியேபோய்கிட்டே இருக்கே      சபரி மலை பக்தர் 2 : இதுக்குத் தீர்வே கிடையாதா?      சபரி மலை பக்தர் 3 : கேரளா முல்லைப் பெரியாறு. .      சபரிமலை பக்தர் 4 : கர்னாடாவுல      சபரிமலை பக்தர் 5 : காவேரி ஆறு பிரச்சனை.      சபரிமலை பக்தர் 1 : ஆந்திராவுல      சபரிமலை பக்தர் 2 : கிருஸ்ணா நதிப்பிரச்சனை. .      சபரிமலை பக்தர் 3 : இப்படி எல்ல நதியும் பிரச்சனையாவே ஓடுதோ…      சபரிமலை பக்தர் 4 : அய்யோ இதுக்குக் தீர்வேகிடையாதா.....?      சபரிமலை பக்தர் 1 : இருக்கு. . .இந்த பிரச்சனைய தீர்க்க ஒரே ஒரு ஐடியாஇருக்கு?      சபரிமலை பக்தர் 4 : என்ன ஐடியா. . .?      சபரிமலை பக்தர் 5 : தேசிய நதிநீர் திட்டம் கொண்டு வரச்     சொல்லுறார். . .      சபரிமலை பக்தர் 2 : தேசிய நதிநீர் திட்டம்ன்னா? அப்புடினா. . ?      சபரிமலை பக்தர் 1 : கேரளா,கர்நாடகா ஆந்திராக்கெல்லாம் போற இரயில். ரோடு. எல்லாத்தையும் இது கேரளா இரயிலு..இது கர்நாடக ரோடுனுனா     செல்லுவானுகளா?      சபரிமலை பக்தர் 2 : இல்லை.High Way சொல்வாங்க..      சபரிமலைபக்தர்3 :   அத தான் ஐடியா. எல்லா நதிகளையும் எல்லா அணைகளையும்                                                         மத்திய அரசேஎடுத்துகிட்டா. எந்தப் பயலும் இது கர்நாடகா ஆறு                                                         இது கேரளா ஆறு. இது ஆந்திரா அணைனுபிரச்சனை பண்ண மாட்டனுக      சபரி மலை பக்தர் 4 : ண்ணே.சூப்பர்ண்ணே. .      சபரி மலை பக்தர் 2 : ண்ணே..அது மாதிரி தேசிய நதிநீர்திட்டம் வந்துட்டா என்ன நடக்கும்.      சபரி மலை பக்தர் 3 : அப்புறம் என்ன? எல்லோரும்ஒற்றுமையா. (அனைவரும் குழுவாக) : “ சாமியே ஐயப்பா, சாமி சரணம்,     ஐயப்பா சரணம்” ஐயப்பாசாமியேனு  சந்தோசமா இருக்கலாம்ண்டா (மெதுவாகமங்காத்தா சிரிப்புடன்     நாடகம் முடிகிறது.)      ****************************                3 மனக் கணக்கு முன்னுரை    தமிழ் நாடக வரலாற்றிக்கு நீண்ட பெரும் வரலாறு உண்டு. நாடு + அகமே நாடகமாயிற்று என்பர். நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. மேலை நாடுகளில் நாடகங்கள், நம்மூர் பாஸ்கா நாடகம் போல இரண்டு மூன்று நாட்கள் அல்லது வாரக்கணக்கில் கூட நடக்குமாம். அவ்வாறு நடக்கும் நாடகங்களின் இடையே ஏற்படும் சிறு சிறு இடைவேளைகளின் போது (உடை மாற்றுதல், ஒப்பனைச் செய்தல், மேடை அலங்காரம் போன்ற காரணங்களுக்காக) குறுநாடகங்கள் சில நடிக்கப்படும். அக்குறு நாடகங்களே பிற்பாடு ஓரங்க நாடகமாயிற்று.    இவை பெரும்பாலும் மேடையில் நடத்தப்படாமல் வெட்டவெளிகளிலே நடிக்கப்பட்டன. இவ்வோரங்க நாடகங்கள் பெரும்பாலும் அரை மணிநேரம் மட்டுமே நடிக்கப்பட்டன. இதன் கரு, எல்லோருக்கும் தெரிந்த செய்திகளை அல்லது சிக்கல்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டது. 1903 லண்டனில் புகழ்பெற்ற “வெஸ்ட் எண்ட்” தியேட்டரில் நடை பெற்று வந்த லூயி என்.பார்க்கரின் ‘தி மங்கீஸ் பா‘ (குரங்கின் பாதம்) என்ற ஓரங்க நாடகமே மிகப் புகழ் பெற்ற நாடகமாகும். இதனைத் தொடர்ந்தே அதிகமான ஓரங்க நாடகங்கள்   வரத் தொடங்கின. இதன் அடிப்படையில் தமிழிலும் ஓரங்கநாடகங்கள் மொழிபெயர்த்தும், பழைய புராண இதிகாசங்களில் உள்ள கதாபாத்திரங்களை மையப்படுத்தியும், சிறுசிறு கதையாடல்களை மையப்படுத்தியும் ஓரங்க நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு சிறு முயற்சியே இவ்வோரங்க நாடகம் ஆகும். Sevan selaves என்ற ஆங்கில நாடகத்தின் கதைக்கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு தமிழுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.    நாடக மாந்தர்கள் :   அரசர், அமைச்சர், இளவரசர், வீரமாதேவி (இளவரசரின் காதலி), தங்கப்பல்      கவிராயர், வைரப்பல் கவிராயர், அடிமை நம்பர் 1, அடிமை நம்பர் 2,      அடிமை நம்பர் 3 காட்சி : 1    (அரியணையில் அரசர் அமர்ந்திருக்க இரகசிய ஆலோசனைக்காக அமைச்சர் நம்பி மட்டும் அரசரைப் பார்க்க வருகிறார். வந்தவுடன் அரசர் புகழ் பாடத் தொடங்குகிறார்.)    அமைச்சர் : மாசில்லாத் தமிழ்த் தலைவா ! வற்றாத பொன்னிவளம் மலிந்த செல்வா! வீசு புகழ் செங்கோலின் முடியரசே! குடியரசே! வேந்தர் வேந்தே! பாசமுடன் தமிழகத்தை ஒன்றாக்கிப் பாராளும் நும் திறனைப் பாட ஆசையினால் முந்துகிறேன். அருள் ஆசியினை எமக்குத் தாரும் கோவே!    அரசர்          : என்ன அமைச்சரே? எங்கே காப்பி அடித்தீர்?        எதுகை மோனை எல்லாம் சரளமாக வருகிறது?    அமைச்சர் : இல்லை அரசே. “ஓப்பனிங் பில்டப்” என்றால் தங்களுக்குப் பிடிக்கும் என்பதால் தான்.... (இழுக்கிறார்)      அரசர் : எனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது என்பதெல்லாம்… என் மனைவியை விட உமக்குத் தான் அதிகம் தெரிகிறது.    அமைச்சர் : உங்களுக்கு ஒரு மனைவி இருந்தால் தானே   ..மன்னா (வார்த்தையை இழுக்கிறார்)      அரசர் : அமைச்சரே! நிறுத்தும்மய்யா. எங்கு வந்து   எதைப் பேசுகிறீர்? சரி அதை விடும். எல்லா அரசர்களைப் போலவே நானும்கேட்கிறேன். (கம்பீரமாக) எப்படி உள்ளது எம் ஆட்சி? எப்படி உள்ளனர் எம் மக்கள் ?      அமைச்சர் : ம்.எல்லோரைப் போலவே நானும்   கூறுகிறேன். சோற்றுக்குக் குறைவில்லை சொகுசான காவேரி ஆற்றுக்கும் குறைவில்லை அழகான சோலை வளர். காற்றுக்கும் குறைவில்லை    கைகூப்பி நன்றியுடன் போற்றுகிறேன் மன்னா! நின் புகழ் வாழிய வாழியவே!    அரசர்   :           என்ன அமைச்சரே! நைட் அடித்த சோமபானத்தின்மயக்கம் குறையவில்லையோ!                           ம்…ஒரே பாடலாகவே வருகிறதே! ம். ம்.இருக்கட்டும். சரி. (கம்பீரமாக) எப்படி உள்ளது நம் போர்ப்படை? எப்படி உள்ளது நான் போட்டத்திட்டங்கள் எல்லாம்?    அமைச்சர் : “வெல்லுவதற்கு மறவாத வீரவாள் வேந்தே!    அரசர்        : அமைச்சரே!!!? நிறுத்துமய்யா. சாதாரணமாகத்தான் பேசுமய்யா.    அமைச்சர் : சிறப்பு மன்னா! சிறப்பு. தங்கள் ஆட்சியின்கீழ் எதற்குப் பஞ்சம் மன்னா? மக்களுக்கு அனைத்தும் இலவசமாக கிடைப்பதால் அனைவரும் ஆனந்தமாவே இருக்கிறார்கள்!! கலப்புத் திருமணத்திற்குக் காசு – முதல் கர்ப்பத்திற்கும் காசு. பிரசவமும் இலவசம். நூறு நாள் கட்டாய வேலை வேறு. பொங்கலுக்கு இனாம்    தீபாவளிக்கு போனஸ்.    இலவச சைக்கிள் இலவச கேஸ் இலவச வேட்டித்துண்டு இலவச கலர் டி.வி ஒரு மாத டி.டி எச் வசதி. .செட்டாப் பாக்ஸ்சோட என நீண்டு கொண்டே போகிறதே மன்னா! உம் இலவசப் புகழ்.    அரசர்    :    இதில் உமக்கு என்னய்யா வருத்தம்?    அமைச்சர் : அரசே! முன்பு எல்லாம் நாங்கள் தான், உம்புகழ் பாடி பரிசில் பெற்று வந்தோம்..ஆனால் இன்று, வாரவாரம் ஆரவாரமாக அனைத்துத் தொலைக்காட்சியிலும் உன் புகழ் பாடிக் கொண்டே இருக்கிறார்களே மன்னா!    அரசர்                         :               நீர் என்ன? எதிர்நாட்டுமன்னனைப்போல்                                                                 ‘அறிக்கையே’ விடுவாய் போலஇருக்கிறதே?    அமைச்சர் :    படுத்துக் கொண்டே அறிக்கை விடுவதற்கு எல்லாம் கொடநாட்டில் தனியாகப் பண்ணை வீடும், உயிர்த்தோழியும் இருக்க வேண்டும் மன்னா!!!    அரசர்          :    போகிற போக்கைப் பார்த்தால் என் ஆட்சிக்கே ஆப்பு வைத்திடுவாய் போல இருக்கிறது. முதலில் நீர் வந்த விஷயத்தை விரைவாகக் கூறுமய்யா.    அமைச்சர் :    மன்னா ! ‘‘காதலெனும் சக்தியின்றேல் காசினியே நில்லாது கோதில்லா வாழ்வு தரும் காதலினை நம்பிடுவேன் காதலே தெய்வமெனக் கவிபாடிக் கும்பிடுவோன்’’ என காதலே தெய்வமென காலம் கடத்தி வருகிறார் ஒருவர்.    அரசர் : புரியவில்லையே !    அமைச்சர் : ‘சிக்கில்லா   உன் கூந்தலிலே நான் சிக்கிக் கொண்டேனடி என் சின்னவளே’ என்று, ஒருவர்   இருக்கும் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு சிக்கு எடுத்துக்கொண்டிருக்கிறாம்   சிக்கு‘ என ஊருக்குள் ஓரே பேச்சாக இருக்கிறது மன்னா.!    அரசர் : அமைச்சரே! புரியவில்லை என்று சொன்னது யார் அந்த இருவர் என்பதுபற்றி. விளக்கமாகக்கூறும்?    அமைச்சர் : நான் சொன்னால் என்னைக் கழுவேற்றிவிடக்கூடாது.    அரசர்      : கூறும். அது நீர் கூறும் பதிலைப் பொறுத்து.    அமைச்சர் : நம் இளவரசர் ராஜவர்மன் தான்.    அரசர் : ராஜவர்மனா?    அமைச்சர் : ஆம் மன்னா. நம் இளவரசரே தான்.    அரசர் :   யாரைக் காதலிக்கிறார்?. சேரநாட்டு இளவரசியா? பாண்டியநாட்டு இளவரசியா? அல்லது குட்டநாட்டு இளவரசியா? எந்த நாட்டு இளவரசியைக் காதலிக்கிறார்?    அமைச்சர் : மன்னிக்க வேண்டும் மன்னா? நம் அரண்மனையைத் துப்புரவுசெய்யும் துப்பரவுத் தொழிலாளி மகள் வீரமாதேவியை.!!!    அரசர்      :        என்ன துப்புரவு தொழிலாளி மகள்வீரமாதேவியா?                                  என்ன அமைச்சரே உளறுகிறீர்? நடக்காது. ஒரு நாளும் இதற்கு வாய்ப்பில்லை.    அமைச்சர் :             உளறவில்லை மன்னா! உண்மையைத்தான் கூறுகிறேன் மன்னா.    தற்போது நம்நாட்டு சுவர்களிலெல்லாம், இவர்கள் இருவர் பெயர்தான்            கரிக்கொட்டையால்   எழுதி வைக்கப்பட்டுள்ளது வேண்டுமானால் நீங்கள்          அவரையே   அழைத்து விசாரியுங்கள் மன்னா!    அரசர்        :       ஏய் யாரங்கே?    இளவரசன்        : அதற்கு அவசியமே இல்லை. என்னிடமே கூறி விடுங்கள். நானே வந்து விட்டேன். என்ன அமைச்சரே? வந்த வேலை முடிந்தா? நீர்பேசாமல் அமைச்சர் வேலையை விட்டுவிட்டு மாhhhhh.. . . . .    அரசர்      : நிறுத்து. இவர் சொல்வது எல்லாம்.. . ?    இளவரசன்      : உண்மை தான் அப்பா.    அரசர்    : அப்பாவா? இப்படி பட்ட காரியத்தை நமக்கும் நம் பரம்பரைக்கும் செய்து விட்டு என்னை அப்பா என்கிறாயே? வெட்கமாயில்லை உனக்கு?    இளவரசன் : எனக்கு நீங்கள் அப்பா இல்லையென்றால், நீங்கள் தான் அதற்கு வெட்கப்பட வேண்டும்!!    அரசர்    : நிறுத்து உன் வார்த்தை ஜாலத்தை. என்னைக் கோபப்படுத்தி பிரச்சனையை வேறு விதமாக மாற்றிவிடலாம் என மனக்கணக்கு போடாதே!!    இளவரசன் : என்ன மனக்கணக்கா?    அமைச்சர் : ஓரங்க நாடகத்தின் பெயர் மணக்கணக்குத் தானே. ஒரு இடத்திலாவது அதைச் சொல்ல வேண்டாமா?    இளவரசன் : ம். மனக்கணக்கு போடுவது என் வேலை இல்லை. அதுவும் இது பிரச்சனையும்    இல்லை. (கமல் குரலில்)   ‘இது காதல். என் காதல் என்னான்னு சொல்ல ஏங்கும்     போது அழுகை அழுகையா வருது. நான் அழது, என் சோகம் என் வீரமாதேவியா        தாக்கி வெளியில நிக்கிற அவ உள்ள வந்திட்டா..   அது தான் யோசிக்கிறேன்.      அரசர்        :    என்ன வெளியில் நிற்கிறாளா?        ஒரு துப்புரவு தொழிலாளி மகள் அரசவை வாசலிலா?        ஏய் இழுத்து வாருங்கள் அவளை.    இளவரசன் : இழுத்து வர வேண்டியவள் இல்லை அவள். அழைத்து வர வேண்டியவள் அவள். என் அன்பு அவள். என் ஆசை செல்வம் அவள். என் உடல் அவள். என் உயிரும் அவள் தான். ‘வலது காலை எடுத்து வைத்து வா.. வா என Backgrond musicகோட அழைத்து வரவேண்டியவள் அவள்.    அரசர்          :          அமைச்சரே! இங்கே என்ன நாடகமா நடக்கிறது.               அமைச்சர் : ஓரங்க நாடகம் மன்னா.    அரசர்              : நிறுத்துமய்யா.எங்கே அவள்? அவளை இழுத்து வரச்சொல்லுங்கள்.    வீரமாதேவி    : அதற்கு அவசியமே இல்லை. என்னிடமே கூறி விடுங்கள். இழுத்து வந்தால் மேக்கப்  எல்லாம் கலைந்து விடும். அதுவும் கும்பல் எல்லாம் கூட்டினால் “டயலாக்” வேறு  மறந்து விடும். டயலாக்கை வேறு மாற்றி மாற்றி கூறிகுழப்பி விடுவார்கள்.    அரசர் : என்ன தைரியம். இப்படி எல்லாம் பேச யார் உனக்கு சொல்லிக் கொடுத்தது.?    வீரமாதேவி : இளவரசர் தான் சொல்லிக் கொடுத்தார்.    அரசர் : அமைச்சரே ! எனக்கு தலையே வலிக்கிறது. முதலில் இவளின் கணக்கை முடியுங்கள்.    இளவரசர் : அப்படியென்றால் முதலில் என் கணக்கை முடியுங்கள். (அப்போது அரசவைக்குள் குண்டு குண்டாக மூன்று அடிமைகளும், 2 செல்வந்தர்களுமாக, 5 பேர் கும்பலாக நுழைகிறார்கள். அதில் ஒருவன்…..)    மகன் 1    : அரசே முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    மகன் 2    : ஆம் அரசே! எங்கள் கணக்கை முடியுங்கள்.    அரசர்      : ஏய் ஏய்.. யார் நீங்கள் ? உங்களை யார் உள்ளே விட்டது.    மகன் 2      : ஆம். அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள். (அப்போது அடிமைகளாகச் சும்மா நின்று கொண்டிருக்கும் மூவரும்)    அடிமை 1    : ஆமாம் அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    அடிமை 2 : ஆமாம். அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    அடிமை 3    : ஆமாம். அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    அமைச்சர்    : ஏய்!! நீங்கள் ஏன் கூறியதே கூறிக்   கொண்டிருக்கிறீர்கள்??.    அடிமை 1      : எங்களுக்கும் டயலாக் உண்டு என்று சொல்லி தானேஅழைத்து வந்தீர்கள்?    அடிமை 2 : ஆனால்? இதுவரை எந்த டயலாக்கும் தரவே இல்லையே.    அடிமை 3 : “நாங்களும் நாடகத்தில் நடிக்கிறோம்”… “நாங்களும் நாடகத்தில் நடிக்கிறோம்” என்று எங்கள் பிரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லி விட்டு தானே மேடையில் நிற்கிறோம் பேஸ்புக்கில் அப்லோடு செய்ய டயலாக் பேசுவது போன்று போட்டோ வேறு போட வேண்டும் அல்லவா?    அடிமை 1 : அதனால் தான் நாங்கள் டயலாக் பேசுகிறோம். தொடங்கலாமா??    அடிமை 1    : ஆமாம் அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    அடிமை 2    : ஆமாம் .அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    அடிமை 3    : ஆமாம். அரசே! முதலில் எங்கள் கணக்கை முடியுங்கள்.    அமைச்சர் : ஏய் யாரடா நீங்கள்.? (உடனே முதல் மகன் முன் வந்து)    மகன் 1 : அரசருக்கும் … அவையோருக்கும் … வணக்கம்.   நாங்கள் சோழபுரியில் நன்றாக வாழ்ந்து சமீபத்தில் மறைந்து போன முத்துப்பல்                                  கவிராயாரின் மகன்கள். என் பெயர் தங்கப்பல் கவிராயர். இதோ இங்கே நிற்கிறானே இவன் என் தம்பி வெள்ளிப்பல் கவிராயர்.    அரசர்      : சரி. இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?    மகன் 2      : அரசே! எங்கள் இருவருக்கும் ஒரு தீராத சொத்துப்பிரச்சனை. தங்கள் ஆட்சியின் கீழ் சீரும்         சிறப்புமாக வாழ்ந்து வந்த எம் தந்தையருக்கு மொத்தம் மூன்று அடிமைகள்   இருந்தனர்.         இதே,  அடிமை நம்பர் 1  அடிமை நம்பர் 2  அடிமை நம்பர் 3    அரசர்      : படுத்துறானே. . .ஏய் நீர் கூறும் அய்யா.    மகன் 1      : இம்மூன்று அடிமைகளும் நாங்கள் பிறக்காததற்கு முன்பே, எம் வீட்டில் சேவகம் செய்து        வருகிறார்கள்.    அமைச்சர் : நல்லது. அதற்கு என்ன?    மகன் 2      : எம் தந்தை இறக்கும் வரை நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.    அமைச்சர் : ஆமாம் உன் தந்தை எப்படி இறந்தார்?    மகன் 1    : இயற்கையாகத் தான் இறந்தார்.    அரசர்      : அமைச்சரேஏஏஏஏஏ! விசயத்திற்கு வரச்சொல்லும்மய்யா.    மகன் 2    : விசயம் இதுதான் மன்னா!   (ஓலைச் சுவடியை எடுத்து நீட்டுகிறான்)      அரசர்      : இதில் என்னய்யா விசயம் இருக்கு.    மகன்1    : மன்னா! இது என் தந்தை எழுதி வைத்து விட்டுப் போன உயில். வாசிக்கிறேன். கேளுங்கள்.திருச்சிராப்பள்ளி மேலமாசி வீதி , முதலியார் சத்திரம் பகுதியைச் சார்ந்த ஸ்ரீமான் சொத்தைப்பல் கவிராயரின் மகனான முத்துப்பல் கவிராயரான நான் சுக ஜீவியத்துடனும் நிலையான மனத்துடனும் எழுதி வைப்பது என்னவெனில் , ‘‘என் சொத்தில் பாதிபங்கை என் மூத்த மகனுக்கும், மீதி உள்ள பாதிபங்கு சொத்தில் அரைபகுதியை இரண்டாவது மகனுக்கும், அதிலும் மீதமுள்ள மீதிபங்கை, பிரித்துக் கொடுப்பவரே எடுத்துக்கொள்ளலாம் ”      அமைச்சர் : நிறுத்து. நிறுத்து. உன் தந்தை என்ன புத்தி   சரியில்லாமல் இருந்தாரா? ம். மூணரை பங்கு, கால் பங்கு, மீதம் உள்ள கால் பங்கு, என்று கூறியிருக்கிறாரே? எப்படி பிரிக்க முடியும்?    மகன் 2    : இல்லை அமைச்சரே! எம் தந்தை, தமக்கு உள்ள பிறசொத்துக்களை எப்படி மூன்றில் ஒரு பங்காக   பிரித்தாரோ அதே போல இவ்வடிமைகளையும்   பிரிக்கச் சொல்லி எழுதி விட்டார்.    அரசர்        :    நல்லா எழுதினார். மற்றவை எல்லாம் ஜடப்பொருள்கள். இவர்கள் மனிதர்கள். இவர்களை எப்படி அரைப்பங்காகவும் கால்பங்காகவும் பிரிக்க முடியும்? இருப்பதில் அரைப்பங்கு என்றால்… இருப்பது மூன்று பேர். அதில் அரைப்பங்கு என்றால் மூன்றில் அரை ஒன்னரை இதை எப்படிப் பிரிக்க முடியும்? அரை கால் ம். . ம.;. . ம். . புரியவில்லையே! அமைச்சரே ! உமக்கு ஏதேனும் புரிகிறதா?    அமைச்சர்    : இல்லை மன்னா! அவர் ஏதோ சொத்தைப் பிரிப்பது போல பிரிக்கச் சொல்லி இருப்பார் போல. தேர்தல் நேரத்தில் நமக்கு ஏன் வேண்டாத வேலை. முடியாது என்றாலும் ஓட்டு போய்விடும். அதனால் அவர் கூறியது போலவே வெட்டியே கொடுத்து விடலாம்.    அடிமை 1    : மன்னா எங்களை வெட்டி விடாதீர்கள்.    அடிமை 2    : மன்னா எங்களை வெட்டி விடாதீர்கள்.    அடிமை 3    : மன்னா எங்களை வெட்டி விடாதீர்கள்.    மகன்1    : மன்னித்து விடுங்கள் அமைச்சரே! நாங்கள் கடந்த ஆறுமாதமாக போகாத உறவினர் இல்லை. பாக்காத பஞ்சாயத்து இல்லை. தங்களின் பெருமை அறிந்தே இங்கு வந்தோம்.   நீங்கள் சொல்வது போல் பிரித்தால் இருவருக்கும் பயன் இல்லாமல் போய்விடும். எனவே அருள் கூர்ந்து நல்ல தீர்பை வழங்கிடுமாறு வேண்டுகிறேன். (இப்படிப் பட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்க. . ஆனால் எதுவும் அறியாதவர்கள் போல இளவரசனும் வீரமாதேவியும் தனியாக அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.)    அரசர்        :      (இளவரசரைப் பார்த்து ஆவேசமாக..) ராஜவர்மா! வருங்கால மன்னன் நீ. குடிமக்களுக்கு      ஏதேனும் பிரச்சனையென்றால், அதைத் தீர்த்து வைப்பதை விட்டு விட்டு   அங்கே கடலைப் போட்டுக் கொண்டிருக்கிறாய். அதுவும் ஒரு துப்புரவு பெண்ணோடு. காதலாம் காதல். இதை நினைத்தாலே எனக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது.      இளவரன்    : அப்பா நிறுத்துங்கள்.    அரசர்    : என்னை அப்பா என்று கூப்பிடாதே!!!    இளவரன் : சரி சித்தப்பா நிறுத்துங்கள். என்னைப் பற்றி என்னவேண்டுமானலும் பேசுங்கள். அவளைப்பற்றியோ! அவள் குலத்தைப் பற்றியோ பேசுவதை… இனி ஒருக் காலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் இப்படியே நீங்கள் பேசிக் கொண்டே இருந்தீர்கள் என்றால்.. நாங்கள் இருவரும், எங்காவது கோயில் குளம் என்று ஓடி போய் திருட்டுக் கல்யாணம் செய்து கொள்வோம்.    அரசர்    : ராஜவர்மா? நீயும் ஓடிப்போயே திருமணம் செய்துகொண்டால் நம் குலத்திற்கே அழகல்ல. அதனால் நீ அப்பெண் வீரமாதேவியையே திருமணம் செய்து கொள். (அனைவரும் கைத்தட்டுகிறார்கள்)ஆனால், ஒரு கன்டிசன்.      இளவரசன் : மிக்க மகிழ்ச்சி அப்பா. கன்டிசன் எதுவாக இருந்தாலும் கூறுங்கள். காதலுக்காக     அவன் அவன் கழுத்தையே கொடுக்கிறான். கன்டிசன் தானே.    அரசர்   : இவர்கள் கணக்கை முடித்தால் மட்டுமே உனக்கு கல்யாணம். இல்லாவிட்டால் …..உன் காதலும் உன் காதலியும் கழுவேற்றப்படுப்படுவார்கள்.    அமைச்சர்       : சபாஸ். சரியான முடிவு.    இளவரசர்   :    இது அநியாயம். மன்னனுக்கு எதற்குக் கணக்கெல்லாம் என்று நீங்கள்தான்            வாள்சண்டை, குத்துச்சண்டை, குதிரை ஏற்றம், அந்தப்புரப் பராமரிப்பு என        அதில் கவனம் செலுத்தச்   சொன்னீர்கள். எனக்குக் கணக்கு வராது என்று அறிந்தே    இப்படி ஒரு கன்டிசன் போடுகிறீா்கள். என்னால் முடியாது.    அரசர்      : முடியாது என்றால் காதலும் கிடையாது. காதலியும் கிடையாது.    இளசரசர்    : அப்படியென்றால் ஒரு வாரம் டைம் தாருங்கள்.    மகன்கள் : ஒரு வாரம் எல்லாம் டைம் தார முடியாது.    அரசர்        : ஏய் (பிரகாஸ் ராஜ் குரலில்) நீ ஏன் அதெல்லாம் சொல்லற. இது என் டயலாக். நான் தான்        சொல்லுவேன்(கவுண்டமணி குரலில்) ஒரு வாரம் டைம் எல்லாம் தர முடியாது.       இளவரசன் : அப்படியென்றால் என்னாலும் முடியாது.    அரசர்      : என்னாலும் முடியாது.    அமைச்சர் : என்னாலும் முடியாது.    அடிமைகள் : (கோரஸாக) எங்களாலும் முடியாது.      வீரமாதேவி : முடியும். என்னால் முடியும்.    அரசர்      : உன்னால் எப்படி முடியும். நீ ஒரு பெண்.    அமைச்சர் : அதுவும் துப்புரவுப் பணிபுரியும்   பெண்.    வீரமாதேவி : ஆமாம் துப்புரவுப் பணிசெய்யும்   பெண்தான். ஆனாலும்.. என்னால் முடியும்.    அரசர்        : நீ எல்லாம்   இங்கே பேசுவதற்கே அனுமதி இல்லை.    இளவரசன் : அப்படியென்றால்   ஓடி போய் கல்யாணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.    அரசர்          : அப்படியென்றால் நீ கூறு.    வீரமாதேவி : நான் கூறினால் எனக்கு என்ன தருவீர்கள்??. அரசராலும் அமைச்சராலும் முடியாதப் பிரச்சனையை நான் முடிக்கிறேன். இதில் எனக்கு என்ன லாபம்?    அமைச்சர் : வேண்டுமென்றால் அரண்மனை முழுவதும் கழுவுவதற்கு நீயே contract   எடுத்துக் கொள்.    அரசர்    : அமைச்சரே நிறுத்தும். நீ கூறு. உனக்கு என்ன   வேண்டும்?.    வீரமாதேவி : எனக்கு என் காதல் வேண்டும்.    அரசர்        : கணக்கைத் தீர்க்கா விட்டால் உன் கணக்கை நான் தீர்த்து விடுவேன்.    வீரமாதேவி : கணக்கைத் தீர்த்து வைக்கிறேன்.    அரசர்        : சரி. கணக்கைத் தொடங்கு.    வீரமாதேவி : அந்த உயிலை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.    மகன் 1      : ஸ்ரீமான் . .   .    அமைச்சர் : ஏய் விசயத்தை மட்டும் சொல்.    மகன் 2    : ‘‘என் சொத்தில் முதல் பாதி என் மூத்த மகனுக்கும் மீதி உள்ள பாதி சொத்தில்        அரைபகுதியை இரண்டாவது மகனுக்கும் அதிலும் மீதமுள்ள மீதியை பிரித்துக்           கொடுப்பவரே எடுத்துக் கொள்ளலாம்.    வீரமாதேவி    : எத்தனை அடிமைகள் ? ? ?    மகன் 1    : மூவர்.    வீரமாதேவி : அவர்களை இங்கே நிறுத்து. மூவரில் பாதி ஒன்னரை.ம்..ம்    அமைச்சர்      : ஆமாம் பாதி கால். இதை தான் ஏற்கனவே சொல்லி. . .    வீரமாதேவி    : அமைச்சரே சற்று பொறுங்கள். அரசே, இங்கே நிற்கும் நம் நால்வரில் யாரேனும் ஒருவர் அந்த அடிமைகளின் அருகில் நிற்க வேண்டும்.    அரசன்        : அடிமைகளின் அருகில் அரசனா? முடியாது.    அமைச்சர்    : என்னாலும் முடியாது.    இளசரசன்    : காதலுக்காக நான் நிற்கிறேன்.    வீரமாதேவி    :      ஆக நால்வர். உயிலின்படி சொத்தில் முதல்பாதி என்றால் நால்வரில் பாதி இருவர்..             இவ்விருவரை முதல் மகனான நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து, மீதி பாதியில்   அரைப்பங்கு என்றால் மீதி இருப்பவர் இருவர். இருவரில் அரைப்பங்கு என்றால் இருவரில் பாதி ஒருவர்.   இவரை இரண்டாவது மகனான நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.  ம்… மீதம் இருப்பவரை உயில்படி பிரித்துக்கொடுப்பவர் எடுத்துக் கொள்ளலாம் என்று இருப்பதால் மீதம் இருப்பவர் ஒருவர். அவர் என்னவர்.   அவரை நானே எடுத்துக் கொள்கிறேன்.    மகன் 1      : அற்புதம்    மகன் 2      : அபாரம்    அடிமை 1 : என்ன மதி நுட்பம்    அடிமை 2 : எங்களை வெட்டாமல் பிரித்துக் கொடுத்த வீரமாதேவி வாழ்க!    அடிமை 3 : வருங்கால இளவரசி வீரமாதேவி வாழ்க! வாழ்க!.    அரசர்    : நன்று வீரமாதேவி நன்று. நான் உன்னை பெண் என்றும், அதுவும் துப்பரவுப் பணி செய்யும் ஒரு பெண் என்று நினைத்தேன். ஆனால் உன் அறிவு திறத்தால் என் அகந்தையை அழித்து விட்டாய். மிக்க நன்றி. வீரமாதேவி. உன்னை விட என் மகனுக்கும் இந்த நாட்டுக்கும் சிறந்த தலைவி கிடைக்க மாட்டாள். எனவே அடுத்த முகூர்த்த நாளில் உனக்கும் இளவரசனுக்கும் திருமணம்.    வீரமாதேவி : நன்றி மன்னா.    இளவரசன்    : மன்னா இல்லை. மாமனார். வீரமாதேவி    : (வெட்கத்துடன்) ச்சீப் போங்கள்.          (என்று வீரமாதேவி வெட்கப்படுகிறாள்) (நாடகம் முடிகிறது)       4 பெண்கள்   அனைவருக்கும் வணக்கம்.மற்ற விழாக்களில் எல்லாம் நாங்கள் உங்களை மகிழ்விக்க நடனம் ஆடுவோம். நாடகம் நடிப்போம்…பல்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் உங்களைப் பரவசப்படுத்துவோம்.இவற்றின் மூலம் நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தோம். இப்போதோ நாங்கள் உங்களுக்குக் கொடுக்கப் போவது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை… அதாவது மனக்கண்ணாடியை… இந்நாடகம் முடிந்தப் பிறகு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மனக்கண்ணாடியில் உங்கள் முகங்களைக் கொஞ்சம் அதில் பாருங்கள்…. உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் முகம் இரசிக்கிறீர்களா? முகம் சுளிக்கிறீர்கள் ?என்று…. இதோ எங்கள் மனக்கண்ணாடி நாடகம் தொடங்குகிறது.      நாடக மாந்தர்கள் : பூமித்தாய், பாரதமாதா, நீர்த்தாய், ஆண்கள், பாதிக்கப்பட்டப் பெண்கள்    காட்சி – 1    மேடை இருளாக உள்ளது.(பின்னணியில் மெல்லிய மெலடி இசை இசைக்கப்படுகிறது)இருள் விலகுகிறது.ஐந்து மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மேடையின் முன் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார்கள்.(பின்னணி இசை “சரட்”ரென்று வேறுவிதமாக மாறுகிறது.)வணக்கம் சொன்ன மாணவிகள் கையில் பிடித்திருக்கும் சேலையை திரைச்சீலைப் போல நீட்டி மேடையை மறைக்கின்றனர்.இவர்கள் இவ்வாறு மறைக்கின்ற போது நான்கு மாணவிகள் மேடையின் உள்ளே வந்து தாமரை மலர் போன்று அமர்ந்துள்ளனர்.(பின்னணி இசை மாறுகிறது) திரையைப் பிடித்திருக்கும் மாணவிகள் திரை விலகுவது போலவே (பின்னணி இசைக்கு ஏற்ப) மேடையில் இருந்து நகர்கின்றனர்.தாமரை மலர் போன்று அமர்ந்திருக்கும் மாணவிகளில் ஒருத்தி எழுந்து பார்வையாளர்களை நோக்கி வருகிறாள்.(பின்னணியில் “நீராரும் கடல் உடுத்த” பாடல் மெதுவாக ஒலிக்கிறது) பாடலுக்கு ஏற்ப அன்ன நடை நடந்து வருகிறாள். மேடையின் முன்பு வந்து பார்வையாளர்களை நோக்கி…      தமிழ்த்தாய் : நான் தான் தமிழ்த்தாய்.Back ground Music-லேகேட்டிருப்பீர்கள் அல்லவா? என் உடலைத் தான் நிலம் என்கிறார்கள்.மலை என்கிறார்கள்.கடல் என்கிறார்கள்.என் உதிரத்தில் இருந்து வந்ததுதான் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்கிறார்கள்.தமிழ் நாட்டில் என்னைப் பற்றிப் பாடாமல்… என் பாட்டுக்கு எழுந்து நிற்காமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது… அவ்வளவு உயர்ந்தவள் நான்…. (பின்னணியில் “நீராரும் கடல் உடுத்த” பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. அவள் மெல்ல நடந்து சென்று மேடையின்   நான்கு மூலைகளில் ஓர் இடத்தில் போய் நிற்கிறாள்.) (நான்கு பேரில் மற்றொருப் பெண் மெதுவாக நடந்து பார்வையாளர்கள் முன் வருகிறாள்.)    பாரதமாதா : நான் தான் பாரதமாதா… என்னில்தான் இந்தத் தமிழ்த்தாயே அடக்கம்.தமிழ்,கர்நாடகம், ஆந்திரா ஓரிசா என எல்லாம் என்னில் தான் அடக்கம்.தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ் நாட்டில் மட்டுமே பாடுவார்கள்.ஆனால் என்னைப்பற்றி பாடும் போது எறும்பு கடித்தால் கூட சொறிந்து கொள்ளாமல் விரைப்பாக நிற்பார்கள்.வேண்டுமானால்    இப்பொழுது என் பாட்டை போடுகிறேன்..chief gustடே   எழுந்து நிற்பார்கள் பாருங்கள்… (என்று கூற.. பின்னணியில் பாடல் “ஐன கன” பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது.) (உடனே வரிசையில் நிற்கும் மூன்றாவது பெண் வேகமாகப் பார்வையாளர்களை நோக்கி ஓடி வந்து..)    நீர்த்தாய் : நிறுத்துங்கள் (பாடல் நிறுத்தப்பட்டு வேறு இசை இசைக்கப் படுகிறது) விழா முடிந்து விட்டது என்று அனைவரும் எழுந்து போய் விடப் போகிறார்கள்.      பாரதமாதா : என் பாட்டை நிப்பாட்டச் சொல்ல நீ யார்?    நீர்த்தாய் : நான்தான் நீர்த்தாய். அதாவது உங்கள் நாட்டில் ஓடும்   அனைத்து தண்ணீர்களுக்கும் நான்தான் தாய்.கடலாகவும் ஆறாகவும், ஏரியாகவும்,   குளமாகவும், அருவியாகவும் நடந்து நடை போட்டு வருகிறேன்.தமிழ்த்தாயாக                     இருந்தாலும் சரி, இந்தியத்தாயாக இருந்தாலும் சரி… உலகம் முழுவதும் நான்                                  இல்லையென்றால் நீங்கள் யாரும் உயிர் வாழவே முடியாது. (தீம்தனனான எனும் சினிமாப் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது) என்னைத்தான்கங்கைத்தாய்,யமுனைதாய் காவேரித்தாய்,சிந்துமாதா, பொன்னிஅம்மா, தாமிரா, என்று பலவாறு போற்றிப் பாதுகாக்கிறார்கள்.நான் இல்லையென்றால்..தெய்வமும் இல்லை என்று வள்ளுவரே சொல்லியுள்ளதை நீங்கள் கேட்டதில்லையா? எனில் நானே உயர்ந்தவள்… (என்று சொல்லும் போதே இறுதியாக நிற்கும் பெண் வேகமாகப் பார்வையாளர்களை வேகமாக வந்து நின்று… பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை நோக்கி..)    தெய்வத்தாய் : நிறுத்து ..நான் ஒருத்தி இங்கு இருக்கும் போது என்ன நீங்கள் பிதற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்.    நீர்த்தாய் : என்னைப்பார்த்து யார் என்று கேட்கிறாய்? என் ஆடை அலங்காரங்களைப் பார்த்தப் பின்பும்மா புரியவில்லை?நான் தான் தெய்வத்தாய்... என்னைத்தான்.        கிறிஸ்தவர்கள் பூண்டி மாதா, வேளாங்கண்ணி மாதா, ஆரோக்கிய மாதா, வியாகுலமாதா என்றும்..இந்துக்கள்காளி,பத்ரகாளி,தேவி பார்வதி, பகவதியம்மா என்றும்,முஸ்லீம்கள் அலிமா,கலீமா, பாத்திமா என்று பல்வேறு விதமாக துதிக்கிறார்கள்.நான் இல்லையென்றால் இங்கு யாருமே இல்லை. (என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீழே அமர்ந்திருக்கும் ஐந்து ஆண்கள் இவர்கள் நால்வரையும் பார்த்து ரொம்ப நக்கலாக சிரிப்பார்கள்)    நால்வரும் : ஏய் யார் நீங்கள் ?ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?    நபர் 1 : நீங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து தான் எங்களுக்குச் சிரிப்பு வருகிறது?    நபர் 2 : நீங்கள் யார் என்று தெரியுமா?    பூமித் தாய் : நான் பூமித் தாய்    நீர்த்தாய் : நான் நீர்த்தாய்    இந்தியத்தாய் : நான் இந்தியத் தாய்    தெய்வத்தாய் : இவர்களுக்கு மேலாக நான் தான் தெய்வத்தாய்    நபர் : ஆனால் நீங்கள் எல்லாம் கேவலம் பெண்கள்?    பூமித்தாய் : என்ன கேவலம் பெண்களா?    நீர்த்தாய் : பெண்கள் என்றால் உங்களுக்குக் கேவலமா?    இந்தியத்தாய் : மக்கள் தொகையில் 112 கோடி மக்களில்         பெண்கள் மட்டும் 56 கோடி பேர் உள்ளோம்!!    நதித்தாய் : அதாவது உங்களில் சரிபாதி    தெய்வத்தாய்                 :             கள்ளிப்பால் கொடுத்து கொன்னது போக…    இந்தியத்தாய் : முழுநெல் கொடுத்து கொன்னது போக    நதித்தாய் : குச்சி வைத்து கொன்னது போக       தமிழ்த்தாய் : தனியார் மருத்துவமனை கலைத்தும் கரைத்துத் தள்ளியது போக 56 கோடி பேர் உள்ளோம்       தெய்வத்தாய் : நாங்கள் இல்லையென்றால் இங்கே ஒரு புல் கூட முளைக்காது.    தமிழ்த்தாய் : நான் ஒரு ஆட்டம் ஆடினால் தமிழகமே இருக்காது    இந்தியத்தாய் : நான் ஒரு குலுங்கு   நிலநடுக்கம்    நதித்தாய் : நான் கடலில் பொங்கினால் சுனாமி..நதியில் சிரித்தால் வெள்ளம்..    தெய்வத்தாய் : நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த உலகையே அழித்துவிடுவேன்.    ஆண் : ஆனாலும் நீங்கள் வெறும் பிகர் தானே    தமிழ்த்தாய் : இதே வார்த்தையை உன் குடும்பத்தினரைப் பார்த்து சொல்வாயா?    தெய்வத்தாய் : இந்த பிகர் என் தங்கை    தமிழ்த்தாய் : பின்னால் வரும் பிகர் என் தாய்    நதித்தாய் : இதோ என்னுடன் நடந்து வரும் பிகர் என்   மனைவி    தெய்வத்தாய் : அதோ வெள்ளை உடை உடுத்தி முன் செல்கிறாளே அந்த பிகர் என் மகள் என்று உன் குடும்பத்தை பார்த்துச் சொல்வாயா?    நதித்தாய் : எங்களைக் கண்டால் பிகர் என்கிறீர்கள்,    தெய்வத்தாய் : துடி இடை    தமிழ்த்தாய் : கொடி இடை    இந்தியத்தாய் : மூங்கில் தோள்    நதித்தாய் : எங்கள் விழி வண்டாம்    தெய்வத்தாய் : எங்கள் பல் பச்சரிசியாம்    தமிழ்த்தாய் : கூந்தல் மேகமாம்    இந்தியத்தாய் : இதெல்லாம் யார் கேட்டது    நதித்தாய் : வார்த்தை வேசம் போடுகிறீர்கள்.    தெய்வத்தாய் : உங்களை நாங்கள் வர்ணித்தால் என்னவாகும்    தமிழ்த்தாய் : பானை வயிறு    இந்தியத்தாய் : சூம்பிய தோள்கள்    நதித்தாய் : வற்றித் தொங்கும் நெஞ்சு    தெய்வத்தாய் : மாட்டுப்பல்    தமிழ்த்தாய் : கோரை முடி    இந்தியத்தாய்      : குடித்துக் குடித்து வற்றிப் போன முகத்தில இடுங்கிய கண்    நதித்தாய் : பாலம் பாலமாய் பிளந்து கிடக்கும் பாதம்    தெய்வத்தாய் : பல வருடமாய் வெட்டப்படாத கால் நகம்    தமிழ்த்தாய் : என்று நாங்கள் உங்களை வர்ணிக்கவா?    நபர் : ஏதோ நீங்கள் தெய்வங்களாக இருப்பதால்      இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?    தெய்வத்தாய் : ஏன் என்ன செய்வீர்கள்    நபர் 1 : என்ன செய்வோமா?    நபர் : இவையெல்லாம் களைத்து விட்டு சாதாரணப் பெண்ணாக        ஒரு பஸ்ஸில் போகும் மாணவியாக..    நபர் : வேலைக்குப் போகாத மனைவியாக    நபர் : பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியாக..    நபர் : சொந்தக்காரன் வீட்டில் தங்கிப் படிக்கும் உறவுக்காரப் பெண்ணாகவெல்லாம்       பிறந்து,இருந்து பார்த்தீர்கள் என்றால் இப்படி   எல்லாம் பேச மாட்டீர்கள்.    நதித்தாய் : ஏன் என்ன செய்வீர்கள்?    நபர்   :அதோ அப்படிப் பிறந்தவர்களின் கதியைப் பார்த்து விட்டு பிறகு   சொல்லுங்கள் (அனைவரும் மேடையில் இருந்து பார்ப்பது போல நிற்கிறார்கள். இருள் கவிழ்கிறது.திரை மூடப்பட்டு பின்னணி இசையோடு திரை விலகுகிறது.)     (டெல்லி நிகழ்வு நடித்துக் காட்டப்படுகிறது.)   (பஸ் வரும் ஓசை கேட்கிறது.மாணவிகளே பஸ் போல நடிக்கிறார்கள். மேடையின் ஓரத்தில் ஓர் ஆணும் பெண்ணும் நிற்கிறார்கள்.அவர்களைக் கண்டு   பஸ் நிற்க…எங்கே செல்வது என்று கேட்டு பஸ்ஸில் ஏற்றிக்   கொள்கிறார்கள்.பஸ் கிளம்புகிறது.பெண்ணின் அலறல் கேட்கிறது.கம்பி ஒன்று   உருவும் சத்தம் கேட்கப்படுகிறது.பெண் அலறல் நிற்கிறது.பெண் தூக்கி   வீசப்படுகிறாள்.உடன் வந்தவனும் தூக்கி எறிப்படுகிறான்.நடுரோட்டில்   நின்று போக வர இருக்கும் வாகனங்களை நிற்கச் சொல்லி வேண்டுகிறான். யாரும் நிற்காமல் போய்க் கொண்டே உள்ளனர்) (மெதுவாக இருள் பரவுகிறது.)      காட்சி -2    தெய்வத்தாய் : அய்யோ… இது என்ன கொடுமை.    நபர் : ம்..இப்படி இரவு நேரத்தில் ஆண்கள் போடும் ஆண்சட்டையைப் பெண்கள்உடுத்திக் கொண்டு வந்தால்….அப்படி தான் செய்வோம்..    நதித்தாய் : ஏன் பெண் போலீஸ் கூட ஆண் சட்டைப் போட்டுக்கொண்டு        தான் இரவு நேரத்தில் பணி புரிகிறார்கள்.அவர்களை இப்படிச் செய்வீர்களா?    நபர் : நிறுத்துங்கள். பெண்கள் உடலமைப்பே ஆண்களுக்காகப் படைக்கப்பட்டது தானே?    தெய்வத்தாய் : என்ன   ஆண்கள் புணரவா? பெண் உயிர்களின் உடலமைப்பு அவ்வாறு படைக்கப்படவில்லை என்றால் நீயும் உன் சந்ததியும்…பால் குடிக்காமல் கத்திக் கத்தி தொண்டை வறண்டு செத்துப் போய் இருப்பீர்கள்..    இந்தியத்தாய் : உன் அம்மாவின் உடலமைப்பு அப்படி இல்லையென்றால்..கர்ப்பப் பையில் இருந்து எப்படி வழிக்கிக் கொண்டு வெளியே வருவாய்?          தமிழ்த்தாய் : தெருவில் போகும் நாய் கூட …சம்மதம் பெற்றப்   பிறகு தானே பெண் நாயைத் தொடுகிறது…இந்த அறிவு கூட இல்லாமலா மனிதர்கள் உள்ளனர்.?    தெய்வத்தாய் : பெண்ணாக பிறந்த பாவத்திற்காக மட்டுமா?        பெண் இப்படித் தெருவில் வீசப்படுகிறாள்.?? (பள்ளி நிகழ்வு) (ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது போல ஊமை நாடக வடிவில் நடித்துக் காட்டப்படுகிறது.)    தெய்வத்தாய் : அப்பங்காரன், தன் பெத்த மகளை   அடுத்தவன் ரூம்க்குள்ள நம்பி அனுப்புறது மூணே பேர்கிட்டதான்.    தமிழ்த்தாய்      : ஒன்ணு அவள கைப்பிடிச்சி கொடுக்கிற கணவன்கிட்ட    இந்தியத்தாய் : இரண்டாவது டாக்டருகிட்ட மூணாவது ஒன்ன மாதிரி வாத்தியாரு கிட்டதான்டா?    தெய்வத்தாய் : ஏண்டா நம்பி அனுப்புற புள்ளய இப்படி நாசம் செய்றீங்களே?இது நியாமா? நாளைக்கு ஒன் பொண்ண இப்படி செஞ்சா ???? அங்கப் பாருங்க… சொந்தச் சித்தப்பாவே மகளா பாக்க வேண்டியவள… அடச்சீ…. (இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றொரு நிகழ்வு நடித்துக் காட்டப்படுகிறது.)    இந்தியத்தாய் :அவன் வம்பு இழுக்கிறான்!! இவன் கையப் புடிச்சி இழுக்கிறான் உறவுக்காரன்கிட்ட        சொன்ன காலம் போய்…இன்னக்கி உறவுக்காரர்களே இப்படி செஞ்சா? (என்னும் போது மற்றொரு ஊமை நாடக வடிவில் ஒரு பெண் மீது ஆசிட் வீசப்படுகிறது.)       தமிழ்த்தாய் : ஒரு பொண்ணா பிறந்த பாவத்திற்கு லவ் பண்ணா அப்பங்காரன் அடிக்கிறான்… லவ் பண்ணாட்டி ஆசிட் அடிக்கிறான். என்னானு சொல்ல பெண்கள் நிலையை?? (என்று சொல்லி அழ.. திரை மெல்ல மூடுகிறது)         ****************************             5 மூன்றாம் உலகம் காட்சி - 1                  தமிழில் கூறப்பட்டு வரும் “பகடி கதைகள்” போன்ற முறையில் யோசிக்கப்பட்ட சிறுமுயற்சியே இந்நாடகம். பொதுவாக, எல்லா மதத்தினரும் “ உலகைத் தங்கள் கடவுள் தான் படைத்தார் ” என நம்புவதுண்டு. அதுபோல், நம் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இன மக்களும் “ இவ்வுலகை தாங்கள் தெய்வமாக நம்பும் துறவி தான் படைத்தார்” என நம்புகின்றனர். அத்துறவியும் நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் அழிக்கச் செய்து விடுகிறார். (அழிவது போல மியுசிக்). அனைத்தையும் அவசரப்பட்டு அழித்துவிட்ட துறவிக்கு…. போரடிக்கவே மீண்டும் உலகைப்படைக்கிறார். இம்முறை உலகை, 6 நாட்களில் படைத்து 7ஆம் நாள் ஓய்வு எடு்க்காமல்,         மூன்றே நாட்களில்         உலகைப் படைத்துவிடுகிறார். இதோ அது குறித்த ஒரு காட்சி… ( “ஓம் சிவோகம் ஓம் சிவோகம் ருத்ர தாண்ட….” என்ற பின்னணி இசையுடன்.. திரை விலகுகிறது… புகை மூட்டங்களின் நடுவே உயரமாக ஆசனத்தில் வெண்மையான தாடியுடன் “போதி தர்மர்” கெட்டப்பில் அமர்ந்திருக்கிறார்.) (முன்னால் வைக்கப்பட்டுள்ள சட்டியில் வரும் புகையில் “ஓம்” என்று சொல்லி சாம்பிராணியை அடிக்க… புகை மேலே எழும்புகிறது. புகையிலிருந்து ஒருவன் எழுந்திருக்கிறான்.)          ஆதவா : “நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்தேன் ஊருக்குள்ள” பாடலுக்கு ஆடுகிறான்.          துறவி : நிறுத்து … நிறுத்து என்ன பாட்டு …          ஆதவா : குருவே… opening Song குருவே.. Hero introducing Song…          துறவி : ஆமாம்… இங்கே யார் ஹீரோ? நானா? நீயா?          ஆதவா : நீங்கள் தான் குருவே          துறவி : பிறகு என்னைப் பாடமல் உன்னைப் பாடிக் கொண்டிருக்கிறாய்          ஆதவா : இதோ உடனே பாடுகிறேன்.         (“சுனாமியின் பினாமியே… பச்ச.. மஞ்ச ” பாடல்)                  துறவி : நிறுத்து நிறுத்து என்ன பாட்டு இது? பச்ச மஞ்ச என்று… போ.. போய் விலங்கினங்களுக்கு பெயர் வை.          ஆதவா: (போகும் போது)         “ காக்கைக் குருவி எங்கள் சாதி, கடலும் மலையும் எங்கள் சாதி”        (என்று கூறிக் கொண்டு போக..)          துறவி : ஆதவா! என்ன பெயர் வைக்கச் சொன்னால், சாதிப்பெயரையும் சேர்த்து வைக்கிறாய்?          ஆதவா : ஒரு identification குருவே..          துறவி          :          எதற்கு identification. செத்ததுக்குப் பிறகு ஊரு         புல்லா         கண்ணீர்         அஞ்சலி போஸ்டரில் போட்டு கொள்ளவாசாதி identification. எதுவும்         வேண்டாம். குருவி கொக்கு     என்று மட்டும் வைத்தால் போதும். போ… போய் பெயரை வை.          ஆதவா : ப்பா… நம் சாயலில் ஒருவனைப் படைக்கலாம் என்றால் இப்படிப்படுத்துகிறானே? ஆண்      என்றால்தான் இப்படி… ம்..ஒரு பெண்னை வேண்டுமென்றாலும் படைத்துப் பார்க்கலாம்.     மீண்டும் அமர்ந்து தியானத்தில் அமர்கிறார்.          துறவி :         ஓம். அருணாச்சலலே வர நமக… (இடையில் பெண் முனகும்         சப்தம் கேட்கிறது. குரு டிஸ்டப்         ஆகிறார்)ஓம் அருணாச்சலலேவர நமக.. (மீண்டும் பெண் முனகும்/சிரிக்கும்         சப்தம் கேட்கிறது).          எமி : (மேகம் கருக்குது.. மின்னல்         அடிக்கிறது.. பாடலுடன் வருகிறாள்)          துறவி : என்னம்மா ஆடையெல்லாம் நனைந்து வருகிறாய்? தண்ணி லாரியில் சண்டை போட்டு வருகிறாயா?          எமி : ம்..“வானம் பொழிகிறது ஆடை நனைகிறது..உனக்கேன் அது தெரியவில்லை. கண்கள்                 தெரியவில்லையா?     இல்லை காது தான் கேட்கவில்லையா?          துறவி :                  ம்… (சலிப்பாக) பெண்கள் என்றாலே கேட்ட        கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீர்களோ?          எமி : குருவே.. கேள்வி கேட்பது சுலபம். பதில் சொல்வது தான் கடினம்.          துறவி : அப்படி ஒன்றும் கடினம் இல்லையே.?          எமி : அப்படியென்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்? பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.          துறவி : கேள்.          எமி : முன்பெல்லாம் 6 நாட்கள் உலகைப் படைத்தீர்கள்.     ஆனால் இப்போது ஏன் 3 நாட்களிலே உலகைப் படைத்து முடித்துவிட்டீர்கள்.?          துறவி : முன்பு படைத்தபோது வாரத்திற்கு 7நாள் என்றால் 7 X4 =28 என மாதத்திற்கு    முப்பது நாட்கள் ஆகிவிடுகிறது. 30 நாட்களும் நீங்கள் உழைப்பதனால்…. 30 நாட்களுக்குரிய சம்பளம் …அது இது எனப் பெரிய பட்டியல் ஆகிவிடுகிறது. 3 நாட்கள் என்றால் 3 X4=12 நாள்தான் எல்லாம் குறைந்து விடும்….பென்சன்.. போராட்டம்…இதெல்லாம் தேவையில்லை என்பதால் தான்.. வாரத்திற்கு 3 நாளாகக் குறைத்தேன். எப்படி?          எமி         :     ஆகா… உம் அறிவே.. அறிவு குருவே.. இவ்வேளையில்         உம் அறிவைப் புகழ்ந்து      பாடியே ஆக வேண்டும் போல் இருக்கிறது குருவே…     ஒரே ஒரு பாட்டு பாடிக் கொள்ளட்டுமா?          துறவி : ம். நல்லப் பாட்டாக பாடும் “ நான் ஆளான         தாமர”     என்றபாட்டெல்லாம் போட்டு விடாதே!          எமி :          குருவே பயப்படாதேயும் .. லேட்டஸ் ஹிட்டாகவே பாடுகிறேன். (five five பாடல் ஒலிக்கிறது)          துறவி : எமி… எமி ஜாக்ஸன்.. போம்மா         போ… போய் பூக்களுக்கு பெயர் வைக்கும் வேலையைப் பார். போம்மா … அவள் மறுபடியும் பாடத் தொடங்க.. (“ஜெயம்” பட ஸ்டைலில்) ப்ப்போஓஓஓ… என்று கத்துகிறார். அவள் ஓடிவிடுகிறாள். (கடுப்பாகி) ப்ப்பா இப்பவே கண்ண கட்டுது… இதுக்கு ஆதவாவே பரவாயில்ல போல..(இங்கும் அங்கும் நடக்கிறார்.) ம்… நேரமே ஓட மாட்டேங்குதே…. என்ன செய்யலாம்….மீண்டும் மூன்று நாட்கள் எக்ஸ்டெண்ட் செய்யலாமா? (கையை மேலும் கீழும் ஆட்டுகிறார். “சர் சர்” என சப்தம் கேட்கிறது. மீண்டும் ஆட்டுகிறார். கேபிள் சரி ஆவது போல சப்தம் கேட்கிறது)         நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டி.வியின்” குரல் கேட்கிறது.         " உங்கள் விஜய்” ஒலி கேட்கிறது. "ஜெய டி.வி” ஓசைக் கேட்கிறது. மக்கள் டி.வி ஓசை கேட்கிறது. ஒரு டி.வியை உருவாக்குகிறார்.) ஆ.. என்ன இது புதுவிதமான பொருளாகத் தெரிகிறதே! அட டி.வி… அப்படியென்றால் ரிமோட்? ரிமோட் ரிமோட்….ம் வாழ்நாளில் ரிமோட்டைத்                                  தேடியே பல நாட்கள் போய்விடும் போல் இருக்கிறது.         இதோ இங்கே இருக்கிறது. டி.வியை ஆன் செய்கிறார். “மானாட மயிலாட” ஓடுகிறது. “ என் தேசம் என் மக்கள்” “ அம்மாக்களே அப்பாக்களே சமைத்துப் பாருங்கே” “ நேர்பட பேசு” “சத்தியமே ஜெயதேவ்” “ஜெயா டி.வி நேருக்கு நேர்” நிகழ்ச்சி ஓட… குரு  குறட்டை விடும் ஓசை கேட்கிறது….         (அப்போது,“ஆளவந்தான்” படத்தில் வரும் “கடவுள் பாதி மிருகம் பாதி” இசையோடு சாத்தான் வருகிறான்.)         (தூங்கிக் கொண்டிருக்கும் கடவுளைப் பார்த்து விட்டு டி.வியைத் திருடிக் கொண்டு ஓடுகிறான்.) (இருள் சூழ்கிறது.)         திரை விலக… “பூ பூக்கும் ஓசை .. அதை கேட்க தான் ஆசை” பாடல் பாடிக் கொண்டு எமி பூக்களுக்குப் பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறாள். அவள் பாடப் பாட சத்தானின் “ஆளவந்தான்” பாட்டும் உடன் சேர்ந்து ஒலிக்க..          எமி : Disturb பண்ணாதே         சாத்தான்!         குரு கொடுத்த கடமையைச் செய்யவிடு.                   சாத்தான் :          Disturb செய்ய வரவில்லை. Disrepute பண்ண வந்துள்ளேன். இதோ…. (டி.வியைக் காட்டுகிறான். “புது வெள்ளை மழை” இசை)          எமி : என்ன இது?          சாத்தான் : இது தான் மாயப் பெட்டி          எமி : அப்படியென்றால்?          சாத்தான் : இதை .. இந்த ரிமோட் கொண்டு ஆன் செய்தால் உலகையே நீ மறக்கலாம். இது உன்னை எந்த வேலையும் செய்யவிடாது!! இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும்      போது…குழந்தை அழுதால்…மேலும் அடிப்பாய் !!! குழந்தை சிரித்தால் எரிச்சலாவாய்!!வேலை முடித்து வரும் ஆதவனுக்கு உணவு போட  மாட்டாய்.அப்படியே போட்டாலும்கமர்சியல் பிரேக்கில் தான் சாம்பாரே ஊற்றுவாய்…பக்கத்து வீடு பற்றி எரிந்தால் கூடபதட்டப்படாமல்  டி.வி பார்ப்பாய்… இந்தா இதை வாங்கிக் கொள்.          எமி : வேண்டாம் இதைப் பார்க்கப் பயமாக இருக்கிறது. குரு வேறு திட்டுவார்.          சாத்தான் : பயப்படாதே இதைப் பார்க்க ஆரம்பித்தவுடன்         குருவையே எதிர்த்துப் பேசுவாய்… ஒரு முறை இந்தக் கனியைச் சுவைத்துப் பார்.. பிறகு நீயே வேண்டாம்     என்றாலும் அது உன்னை விடாது.          எமி : வேண்டாம் இதெல்லாம் ரொம்ப செலவாகும்.          சாத்தான் : செலவா? இந்தா எமி.. இந்தா டி.வி மட்டும் இலவசம் அல்ல. கூடவே.. ஒரு வருட செட்டாப் பாக்ஸ்ம் இலவசம்.செட்டாப் பாக்ஸ்     வாங்கினால் செல்போன்          இலவசம்.செல்போனை வாங்கினால் சிம் இலவசம்.சிம் வாங்கினால் SMS இலவசம்.அப்புறம் … நீ உனக்குப் பிடித்தப் பாடலை SMS செய்தோ .. கால் செய்தோ     கேட்கலாம்.உன் பெயர் கீழே ஸ்க்ரோலிங்கில் எல்லாம்.          எமி : அய்யா என் பெயர் டி.வியில் வருமா?          சாத்தான் : ஆமாம்..         இந்தா வாங்கிக் கொள்…          எமி : நன்றி சாத்தானே!! நன்றி…          சாத்தான் : ஆளவந்தான்… ஆளவந்தான்… (பாடல் பாடிக் கொண்டே சென்று விடுகிறான்.) (எமி உட்கார்ந்து டி.வி. ஆன் செய்கிறாள்)          “சித்தி”… தொடர் ஆரம்பிக்கிறது. (மாற்றுகிறாள்) “அய்ய்ய்” எனக் கத்துகிறாள்.          “சரவணன் மீனாட்சி…”(மாற்றுகிறாள்) சந்தோசத்தில் துடிக்கிறாள்.                  “ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” குரல் கேட்கிறது.          “என் கணவன் என் தோழன்”(மாற்றுகிறாள்) துள்ளி குதிக்கிறாள்.         (அப்போது ஆதவா விலங்குகளுக்கு எல்லாம் பெயர் வைத்துவிட்டு பசியோடு வருகிறான்)          ஆதவா : எமி.. எமி ஜாக்ஸன். எமி.. பசியா இருக்குடா… எமி (சொல்வதெல்லாம் உண்மை. சவுண்டு கேட்கிறது) எமி… (கோபமாக க த்துகிறான்)          எமி : என்ன கத்துறீங்க… (டி.வியைக் காண்பித்து)         அந்த பொண்ணு பாவம்.         பொறுக்கி பய… இப்படியா செய்வான்…          ஆதவா : ஏய் பசிக்கிதுனு சொல்றேன்… யாரு பாவம்          எமி:இங்கேரு… சும்மா கத்திகிட்டு இருந்த…“யுத்தம் செய்”யுக்காக மொட்டைய அடிச்ச   அந்த அம்மவே முடி வளர்லன்னு      கடுப்புல எல்லாத்தையும் திட்டிக்கிட்டு இருக்கு….   அப்புறம் நானு போய் உட்கார்ந்து கிட்டு “அதட்ர திட்டுரனு” சொல்லிப்புடுவேன்.          ஆதவா : அதெல்லாம் ஒண்ணும் வேணாடி எமி குட்டி….. டி.வி தான பாக்கனும்… இந்தா நானும் பாக்குறேன். நீ மேலேயே உட்காரு… நான் கிழ உட்கார்ந்துக்கிறேன்…          எமி : நூடுல்ஸ் எதாவது செய்யவா…          ஆதவா : வேணாண்டி செல்லம்… பழைய பாப்கான் எதாவது இருந்தா கொண்டு வா… (அவள் போகும் போது… இவன் மேட்ச் பார்க்க தொடங்க)          எமி : ஏன் மேட்ச் போட்டீங்க.. மாத்துங்க..          ஆதவா : இல்ல ஒரு ஓவர் தான். (அப்போது குரு அங்கே வந்து நிற்கிறார். அவர் நிற்பது கூட தெரியாமல்…)          எமி : இல்ல         “ சொல்வது எல்லாம் உண்மை” போடு          ஆதவா : இல்ல .மேட்ச்…. (இருவரும் சண்டை இட்டுக் கொள்கிறார்கள்) (அப்போது சாத்தான் வந்து அங்கே நிற்கிறான். (கமல் பட மியுசிக்)          குரு : நிறுத்துங்கள்… நான் ஊர் முழுக்க இந்த டி.வியை தேடிக் கொண்டு இருக்கிறேன்.   இங்கே யார் திருடிக் கொண்டு வந்தது?          ஆதவா :  குருவே ! எனக்கு ஒன்றும் தெரியாது.        இதோ  இவள் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். என்னையும் பார்க்கச் சொல்லி வம்பிழுத்தாள்.          எமி :  பாவி போட்டு விடுறீயா? குருவே… எனக்கும் ஒன்றும் தெரியாது. இதோ! இந்த சாத்தான் தான் கொண்டு வந்து கொடுத்தது. ப்ரி வேறு…          குரு : நிறுத்து. கடமைய மறந்து விட்டு டி.வி.         பார்த்தது மட்டும் அல்லாமல்         என் மகன் ஆதவனையும் கெடுத்திருக்கிறாய். ஆதவா!!! நீயும் கடமையைச் செய்யாமல் டி.வி பார்த்துக் கொண்டிருந்ததற்காக(பயங்கரமான இசை) “வாழ் நாள் முழுமையும் கேபிள் கணைக்சனுக்கு பணம் கட்டுவதற்காகப் பணம் பணம் என்று அழைவாய்…. (எமியிடம் நோக்கி)        எமி…“நீ வாழ் நாள் முழுவதும் சீரியல் பார்த்துக் கொண்டு எப்போதும் அழுது கொண்டே இருப்பாய்”                  குரு : குருவே… நிறுத்துங்கள்.. இது அநியாயம்..அக்கிரமம்… டி.வியைப் படைத்தது நீர். நீர் ஒரு ஆண். டி.வியைத் திருடியது சாத்தான். அவனும் ஓர் ஆண். நீங்கள் ஆண்கள் எல்லாம் ஒரு செயலைச் செய்துவிட்டு… பெண்ணான என்னைத் தூண்டி விட்டீர்கள். இது பெண்ணடிமைத் தனம். ஆணாதிக்கச் சிந்தனை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். போராடுவோம்.. போராடுவோம்..          குரு : நிறுத்து..          எமி : குருவே… உம்மால் முடிந்தால் இதோ சாத்தானை சபித்துப்பாரும்.          சாத்தான் : என்னையா? உன் குருவாலா? (கடவுள் பாதி பாடல்) ம்..நீ படைத்த டி.வியை வைத்துக் கொண்டே எப்படி எல்லோரையும் ஆட்டி வைத்தேன். பார்த்தீர்களா??குருவுக்கு அடிபணிந்த உங்களை அடிபணியாமல் செய்தேன். கணவன் மனைவிக்குள் சண்டையை வளர விட்டேன்… என்னை ஒன்றும் செய்ய முடியாது. (கர்ஜிக்கிறான்.)                  குரு : ஏழேழு உலகத்தையும் படைத்த என்னிடமே… சவால் விடுகிறாயா? இதோ 40 நாட்கள் பெருமழைப் பெய்யச் செய்து… இவ்வுலகையே அழிக்கிறேன். பார்… பாவா.. பாவா..          பாவா : குருவே…          குரு : உடனே… நீண்ட பேழை ஒன்றை செய்து கொள். அதில்…இவ்வுலகில் உள்ள அனைத்திலும் இரண்டு பொருட்கள் எடுத்து வைத்துக் கொள். 40 நாட்கள் பெருமழை பெய்யச் செய்து உலகை அழிக்கப் போகிறேன்…நான் ஆணையிடுகிறேன்…. கடல் பொங்கட்டும்…          எமி : குருவே வேண்டாம்..இப்போது அழிக்காதீர்கள். 12மணிக்கு மேல் அழித்துக் கொள்ளுங்கள். (கெஞ்சுகிறாள்)                  குரு : ஏன் ஏதேனும் பூவுக்கு பெயர் வைக்க மறந்து விட்டாயா?          எமி : இல்லை..இல்லை.11.30மணிக்கு“கிச்சன்கில்லாடிகள்”          குரு : ஆஆஆ… என்ன தைரியம்?? நீர் நிலைகள் வழிந்து ஓடட்டும்.. உலகம் நீரால் சூழட்டும். (உலகம் அழியும் ஓசை கேட்கிறது.) 40 நாட்களுக்குப் பிறகு… பறவைகள் ஒலி கேட்கிறது.. விலங்குகள் ஒலி கேட்கிறது.          குரு : பாவா… பாவா… எங்கே பாவா         (இரண்டடி முன்னே செல்கிறார்.)          (“சகலகலா வல்லவன்” பாடலில் வரும் ம்.ம்க்கும் .ச்சச்சா.. ச்சீ என குரல் கேட்கிறது. )          குரு : ச்சீ… பாவா என்ன இது …          பாவா : குருவே சூப்பர் சிங்கர் பைனல் குருவே….          குரு : என்ன கொடுமை. 10வயது குழந்தை பாடும் பாட்டா இது? இதை வேறு அக்குழந்தையின் பெற்றோரும் பார்த்து ஆனந்தத்தில் அழுது கொண்டிருக்கிறார்கள்? என்ன கொடுமை இது… இதற்காக வா இந்த உலகைப் படைத்தேன்.          பாவா : கடவுளே… அது ஜீனியர் 1234 என்று வருடக்கணக்காக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி இது குருவே..          குரு : குழந்தைகள் இப்படி நாராசமாகபாடிக் கொண்டிருப்பதை         அங்கே படித்தவர் யாரும் கேட்க மாட்டார்களா?          பாவா : மனதுக்குள் மட்டும் கேட்டுக் கொள்வார்கள். இதை எதிர்த்து ஒரு sms கூட பண்ண மாட்டார்கள் குருவே.          குரு : இதற்காகவா இந்த உலகைப் படைத்தேன். இதற்காகவா இந்த டி.வியைப் படைத்தேன். இங்கே எப்படி டி.வி.. அதுவும் இரண்டு டி.வி.வந்துள்ளது.?          பாவா : குருவே… நீங்கள் தான் இரண்டு இரண்டு பொருட்கள் எடுத்து வைக்கச் சொன்னீர்கள்.          குரு : என்னால் முடியவில்லை மீண்டும் உலகை…(கடவுளின் செல்போன் அடிக்கிறது)                  போன் : சார்.நாங்க விஜய் டி.வியில இருந்து பேசுறோம்.          குரு : ஓகே… ஒன் லேக் ஆகும்.. ஓகே.. வரேன். (விஜய் டி.வி. நீயா..நானா நிகழ்ச்சி டெலிகாஸ்ட்)                  கோபிநாத் : இது ஆச்சிமசாலா நீயா? நானா? கோபிநாத்தின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். கடவுள் படைத்த பொருட்களில் எது சரியானது? எது தவறானது? என இருதரப்பிலும் வைக்கப்பட்ட வாதத்தை கேட்டோம். பல்வேறுவிதமான கருத்துகள் இங்கே முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு விடை கூறுவதற்கு பிஜி என்ற தீவிலிருந்து அங்கே கடவுளாகப் போற்றப்படும் சின்னசுவாமிஜீ இங்கே வந்துள்ளார். (குருவிடம் திரும்பி) கூறுங்கள்.. நீங்கள் படைத்த பொருட்களில் மேசமான பொருள் எது? மீண்டும் உலகை அழித்துவிட்டு படைப்பதென்றால் எந்த பொருளைப் படைக்க மாட்டீர்கள்.                           குரு : நான் படைத்தப் பொருளில் மிக நல்லப்பொருளும், மோசமான பொருளும் டி.விதான்.. அது மட்டும் அல்லாமல் (பேசிக் கொண்டு இருக்கும் போதே கோபி இடையில் புகுந்து….)                   கோபி : இங்கே நம் ஷோவிற்கு வந்திருந்து பல நல்லக் கருத்துகளைச்  சொன்ன இவருக்கு நளாஸ் ஆப்பக்கடை வழங்கும் ஒரு கலர் டி.வி. பரிசு.          (என்று கூறி கடவுள் கையில் கலர் டி.வி. ஒன்று பரிசளிக்கப்பட கடவுள்… பின்னணியில் இளையராஜாவின் “தென்பாண்டி சீமையிலே” பாடல் ஒலிக்க… கடவுள் பரிதாபமாக டி.வியைத் தூக்கிக்         கொண்டு அலைய… திரை மூடுகிறது.)                           **********************          6 யார் குற்றவாளி         இடம் : சொர்க்கலோகம்   நாடக மாந்தர்கள் : மூன்று கடவுள்கள் (சிவன்,ஏசு,அல்லா) , பிரதமர், வனத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர்   காட்சி – 1   (மேடையில் இருள் விலகுகிறது. மூன்று கடவுள்களும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர். சுற்றிலும் கருப்பு உடையணிந்தவர்கள் செத்துக் கிடக்கின்றனர். படுத்துக்கிடக்கும் ஒருவரில் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒருவர். அவரை எழுப்புகின்றனர்)   சிவன் : எழுந்திரு மகனே.. எழுந்திரு…   பிரதமர் : (மெல்ல கண் விழித்து) நான் யார்? நான் எங்கே இருக்கேன்?   (தன்னுடன் செத்துக் கிடப்பவர்களைப் பார்த்து) ஆ… இவர்கள் யார்?  (அவர் முன் நிற்கும் கடவுளர்களைப் பார்த்து)  ஆமாம் நீங்கள் எல்லாம் யார்?     சிவன் : அஹகம் பிரம்மாஸ்மி!!!   பிரதமர் : ம்..   அல்லா : நாங்கள் கடவுள்..   பிரதமர் : நகை நட்டெல்லாம் காணோம்?   சிவன் : சினிமா கடவுள் தான் நகை நட்டெல்லாம் போட்டு வருவார்கள். நாங்கள் நிஜக்கடவுள்..   பிரதமர் : நீங்க கடவுள். அப்ப நானு?   அல்லா : நீ பிரதமர்..பாரத பிரதமர்?   பிரதமர் : ஆமா..நான் பிரதமர்.. நான் எப்படி இங்க.. ஏன்? என்னைக்கொன்று இங்கே கொண்டுவந்தீர்கள்   ஏசு : நாட்டுல நடக்குற எல்லா அநியாங்களும் நீ தானே காரணம்?   பிரதமர் : நானா? நாட்டுல ரொம்ப பேரு இப்படி தான் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க!!! நான் வெறும் ரப்பர் ஸ்டாம்புங்க கடவுளே !!!   சிவன் : நீ ரப்பர் ஸ்டாம்பா? அழிரப்பர் ஸ்டாம்பா?   எங்களுக்குத் தெரியாது. ஆனா நாட்டுல நடக்கும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டிற்கும் நீ தானே காரணம்?   பிரதமர் : அது எப்படி என்னைப் பார்த்த மட்டும்எல்லோருக்கும் கேள்வி கேட்கத் தோணுது? அதுவும் என் பதவிக் காலம் முடியும் முன்பு என்னை ஏன் இங்கு கூட்டிக் கொண்டு வந்தீர்கள்?   ஏசு : உன் ஆயுட்காலமே முடிந்து விட்டது. அதைப்பற்றி நீகவலைப்படாமல் பதவிக் காலம் பற்றிக் கவலைப்படுகிறாயே??   பிரதமர் : ஆயுட்காலம் போனால் பரவாயில்லை! பதவிக்காலம் போய்விட்டதே?     சிவன் : உன் ஆயுட்காலத்தைப் பற்றியே உனக்கு கவலை இல்லை? நீ எப்படி மற்றவர்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படுவாய்?   பிரதமர்          :      நான்யார் உயிரைப்பற்றியும்கவலைப்படவில்லை?   ஏசு : அந்த மூன்று பேரின் தூக்கு!!!   பிரதமர் : அவர்கள் கொலையாளிகள்!! அதுவும்ராஜிவ் கொலையாளிகள்.   அல்லா : உங்கள் மகாத்மா காந்தியைக் கொன்றவன் யார்?   பிரதமர் : கோட்சே.   ஏசு : எந்த இயக்கத்தைச் சார்ந்தவன்?   பிரதமர் : RSS   சிவன் : அந்த இயக்கத்தைச் சார்ந்தவன் பின்னாளில் பிரதமர்  ஆகலாம்.    சிவன் : உங்கள் கட்சியைச் சார்ந்த இந்திராகாந்தியைக் கொன்றவர் எந்த இனத்தைச் சார்ந்தவர்?   பிரதமர் : எங்கள் சிங் இனத்தைச் சார்ந்தவர்.   ஏசு : அந்த இனத்தைச் சார்ந்த நீ பிரதமர் ஆகலாம்.   பிரதமர் : கடவுளரே!! என்ன சொல்ல வரீங்க??   ஏசு                   :     அப்ப… ராஜிவ் காந்தியைக் கொன்னதாக் சொல்லப்படும்     விடுதலைப்புலிகள்  மட்டும் ஆளக்கூடாதா? ஆள்வது என்ன?     வாழக்கூட நீங்கள் அனுமதிக்கவில்லையே.. அதில் மூணு பேருக்குத் தூக்கு வேறு???   பிரதமர் :      அய்யோ கடவுளே!! இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க எதுவாக இருந்தாலும் அவுங்கள கேட்டுக் கொள்ளுங்கள்.   ஏசு : சரி.. உன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை  முதலில் கேட்டு விடுகிறோம்.   பிரதமர் : அப்படி வாருங்கள் வழிக்கு…   சிவன் : எவ்வளவு அழகாகப் படைத்துக் கொடுத்தோம் இந்த உலகை.. ஏன் இப்படி பாழ்படுத்தி விட்டீர்கள்?   பிரதமர் : இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?  நான் என்ன செய்து விட்டேன்? உலக நாடுகளில் கேட்க வேண்டியக் கேள்வி இது?   அல்லா : உலகிலேயே மிகவும் பிடித்த நாடு எது தெரியுமா? இந்தியா. அதனால் தான் இங்கு அனைத்துமே சரிசமமாக படைத்துக் கொடுத்தோம். அதிக மழையும் பெய்யாது. அதிக வெயிலும் அடிக்காது… அப்படிக் கொடுத்த நாட்டை ஏன் இப்படிச் செய்தீர்கள்?   பிரதமர் : நாங்கள் என்ன செய்தோம்?   ஏசு : என்ன செய்தீர்களா?   சிவன் : மலைகளைப் பிளக்கிறீர்கள்.   அல்லா : ஆற்றைத் தடுக்கிறீர்கள்.   ஏசு : காட்டை அழிக்கிறீர்கள்.   சிவன் : பறவைகள்,விலங்குகள்,தாவரங்கள்என  எல்லாவற்றையும் இல்லாமல் செய்கிறீர்கள்?   அல்லா : எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட்டு எங்கே வாழ்வீர்கள்.   ஏசு : எல்லாவற்றையும் விற்றுபிள்ளைகளுக்குச் சேமித்து  வைக்கிறீர்களே? எங்கே வாழும் உம் சந்ததியினர்? நெப்டியுனிலா? புளுட்டோசிலா? உலகை விடுத்து?எங்கய்யா வாழுவீர்கள்? சொல்லுங்கள்?   பிரதமர் : கடவுளே.. எனக்கு ஒன்றுமே தெரியாது.. இதற்கு முன்  ஆட்சி செய்தவர்களை விட்டு விட்டு என்னை மட்டும் இப்படி நரகத்தில் தள்ளுவது நியாயமா?   சிவன் : பதவியில் இருந்து விட்டுப் போனவனுக்கு வாழ்க்கை முழுவதும் நரகம் தானடா? நீ சொல்….எங்கே வாழுவாய்?   பிரதமர் : இதற்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை.. அதற்கு என்று தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கேளுங்கள்..   அல்லா : நீயே எழுப்பு…   பிரதமர் : கடவுளே..இவர்கள் அனைவரும் இறந்துக் கிடக்கிறார்கள்.   ஏசு : இப்போது பார். (உரத்தக் குரலில்)  பாராளுமன்றம் முடிந்தது.  (என்று கூறியவுடன் தூக்கத்திலிந்து எழுந்து செல்பவர்கள் போல அனைவரும் எழுந்து வெளியே செல்ல முற்படுகிறார்கள். பிரதமர் அருகில் நிற்பதைக் கண்டவுடன் அவரை வணங்குகின்றனர். பிரதமர் கடவுளைக் கைக்காட்டி கடவுள் என்று சொல்ல.. அனைவரும்  அவர் அவர் கடவுள்களைப் பார்த்து வணங்குகின்றனர்.)   சிவன் : இதில் வனத்துறை அமைச்சர் யார்?   வனத்துறை : நான் தான் கடவுளே   ஏசு                    :      ஏன் நாங்கள் படைத்தளித்தக் காடுகளை ஏன் அழிக்கிறாய்?   வனத்துறை : அழிக்கவில்லையே   அல்லா : நீ அழிக்கவில்லை என்றால் காடுகளை,அணைக்கட்ட.சாலைஅமைக்க.. தொழிற்சாலைக்கு.. வப்பாட்டிக்கு என 388 ஹெக்டேர் காடுகளையேக் காணோமே… வனத்துறை அமைச்சர் நீ.. இது உனக்குத் தெரியாதா?   வனத்துறை : (அமைச்சர் மவுனம்)    சிவன் : காடுகளில் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் நரிக்குறவர்களாக பிளாட்பாம்களில் பிச்சைக்காரர்களாகவாழ்கிறார்களே?? இதற்கு யார் காரணம்?   வனத்துறை : கடவுளே… மக்கள் தொகை பெருக பெருக சிட்டி டெவலப்மெண்ட் ஆவது தானே முறை…(எகத்தாளமாகச் சிரிக்கிறார்)     ஏசு : எது? இருந்த இடத்தை விட்டுட்டு.. இன்னொரு இடத்துல பிச்ச எடுக்கிறதுக்குப் பேரு சிட்டி டெவலப்மெண்ட்டா?     அல்லா : காட்டை அழித்து.. மரத்தை வெட்டி லாரி லாரியாக ஏத்துறான்.. லாரிக்கு சைடுல “மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்” போர்டு தொங்குது..என்னாட உங்க லாஜிக்??   சிவன் : 20வருஸமா உயிர் வாழுற மரம்.இந்த உலகத்துக்கு  3 இலட்சம் மதிப்புள்ளஆக்ஸிஜன் வெளியிடுது.   அல்லா   : 60 வருஸமா உயிர் வாழுற மனுசன்… இந்த பூமிக்கு என்னாடா கொடுக்கிறீங்க… கொடுக்க வேணாம்… அழிக்காமவாது இருக்கலாம் அல்லவா?     சிவன்       :    அடுத்து சுற்றுச் சூழல் அமைச்சர் யார்?   சுற்றுச்சூழல் :     கடவுளே.. நான் தான் கடவுளே. என்னைத் தெரியலையா? போன மாசம் கூட உன்       சந்நதிக்கு வந்து கோடி கோடியா கொட்டினேனே…என்னைத் தெரியவில்லையா?..   சிவன் :   என்னைப்பார்க்க பத்து காரில் வந்தவன் நீ தானே?     சுற்றுச்சூழல் :   ஆமாம் கடவுள்..   வனத்துறை :   நான் அமைச்சர்?   சிவன்          :  ஆமான்டா! அமைச்சர் ஆண்டினு எல்லாப்பயலுகளும் காருலபைக்குலனு.. என் ஊரையையே நாசப்படுத்திக்கிட்டே போங்க..   ஏசு :   மெட்ராசுல மட்டும் நீங்க வெளிய தள்ளும் புகை ஒரு நாளைக்கு எவ்வளவு      தெரியுமா?  ஒரு டன்  இரண்டு டன் இல்ல. ஒரு நாளைக்கு. ஒரு மாசத்துக்கு      எவ்வளவு..  அப்புறம் ஏன்டா குடல் வெடிக்காது?கேன்சர் வராது? நுரையீரல்      பொங்காது? எல்லாத்தையும் நீங்களே தேடிக்கிட்டு எங்கள காப்பத்து       காப்பாத்துனா? எப்படி?   அல்லா :   விவசாயத்துறை யாரு?   விவசாயம் :   நான் தான் கடவுளே.   சிவன் :   இந்தியாவுல மட்டும் இன்னைய தேதிக்கு 100000டன் பூச்சிக் கொல்லி மருந்து     கொட்டப்படுகிறது. பயிருக்குப் போற தண்ணி.. என்ன கலருல போகுது…      பச்சகலரு ஜிங்குச்சா மஞ்ச கலரு ஜிங்குச்சானு கலர் கலரா போகுது..ஏன்? ஏன்டா?   விவசாயம் :   அது ஜவுளித்துறையால கடவுளே?   ஏசு :   மத்த நாட்டுல எல்லாம் நூற்பாலை இருக்கு.ஆனா  சாயப்பட்டறை கிடையாது    உங்க நாட்டுல நூற்பாலை கம்மி சாயப்பட்டறை அதிகம். ஆதனால் தான்    ஆறெல்லாம் கலர் கலரா போகுது.   சிவன்                    :    மனுசனுக்கு வர வியாதில 80 சதவீதம்தண்ணியாலதாண்டா வருது. இது ஏன்டா உங்களுக்கு புரிய மாட்டேங்குது.   ஏசு      :     எல்லாத்தையும் அழிச்சட்டு யார் கூட குடும்பம்  நடத்தப் போறீங்க?   குழுவாக      : “கடவுளே! உமக்குத்தெரியாதது ஒன்ணும் இல்ல. அமைச்சரான நாங்க எல்லாம்   சும்மா தான்.உண்மையில இந்த நாட்டை ஆளுவது அதிகாரிகள்தான் கடவுளே.   சிவன்     : யார்அவர்கள்?   அமைச்சர்     : இதோ நிற்கிறார்களே இவர்கள் தான்.   வியாபாரி    : கடவுளே நாங்கள் வியாபாரிகள். கிடைக்கும் பொருட்களைச் சந்தையில் விற்கத் தானே செய்வோம்.   அல்லா : கிடைக்கிறது என்பதற்காக இரத்தம் வரும் வரை தாய்ப்பாலை உறிஞ்சி தாயையே கொன்று விடுவாயா?   சிவன் :   இருக்குற 100 சதவித தண்ணீயை 97சதவீத நீர் உப்பு தண்ணிரா கடலிலும் 2சதவீத நீர் பனிக்கட்டியாவும். 1சதவித தண்ணீர் தான் குடிதண்ணீரா கொடுத்திருக்கோம்..   அல்லா :    அந்த 1 சதவித தண்ணீரையும் வியாபாரம் என்ற பெயருல இப்படி உறிஞ்சுகிட்டே இருந்தா உன் பேரப் புள்ளைங்கக எதை குடித்து வளரும்.     எல்லாத்துக்கும் தண்ணீர் தானே ஆதாரம்?   சிவன் :    கிணறுசொந்தக்காரன்கிட்ட 1000 லிட்டர்தண்ணீருக்கு வெறும் 3.30 காச    கொடுத்திட்டு நல்லா இருக்கிற தண்ணீயில கெமிக்கல கொட்டி அதை   மினரல் வாட்டா;…. கருமம் அதையும் பிளாஸ்டிக்ல அடைச்சு 1 லிட்டர் தண்ணீய 25ரூபா  30ரூபானு பூமியை உறிஞ்சி உறிஞ்சி விக்கிறேயே…. இது நியாயமா?   ஏசு    :    கடந்த 10 வருசத்தில மட்டும் 10 ஆயிரம் கோடி ருபாய் சம்பாதிக்கிறீயே…..    இன்னும் எவ்வளவு நாளைக்கு நான் கொடுத்த இந்த பூமியை    ஓட்ட போட்டுகிட்டு இருப்பீங்க…   அல்லா :    கேரி பேக்ன்னு சொல்லி எங்க பார்த்தாலும் சுருட்டி சுருட்டி போடுறீங்களே..     என்னடா இது நியாயம்?   அதிகாரிகள் :    கடவுளே .. அதற்கெல்லாம் நாங்கள் காரணம் அல்ல. நாங்கள் எதைக் கொடுத்தாலும்..எவ்வளவு விலைக்கு கொடுத்தாலும் அதை எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கிச் செல்கிறார்களே இந்த மக்கள் அவர்களைப் கூப்பிட்டுக் கேளுங்கள்.   கடவுள்கள் : மக்களையா? எவன் கூப்பிடுறது?பொம்பளைங்க பாதி பேரு டி.வி.யோடவே வாழ்றாங்க.. ஆம்பளைங்க கவலையோடவே வாழுறானுக…. இதுல யார கூப்பிடுறது.     அதிகாரி : படிச்ச அந்தப் பையனைக் கூப்பிடலாம். (அங்கு வந்தும் செல்போன் பேசிக்கொண்டே இருக்கிறான்)   கடவுள்கள் : தம்பி இப்படி பேசிகிடடே இருக்கீங்களே இதுனால எவ்வளவு பிரச்சனை வருது தெரியுமா?   இளைஞன் : நான் பேசுனா உங்களுக்கு என்ன பிரச்சனை?   சிவன் : அலை அலையா சுத்துற இந்த வேவ்ஸ்ஸால.எதைப் பார்த்தாலும் கூடு கட்டும் தூக்கணாங்குருவி அவ்வளவு பெரிய செல்போன் டவர்ல மட்டும் ஏன் கூடு கட்ட மாட்டேங்குது. ஏன் தெரியுமா?   இளைஞன் : இது அதோட ப்ராப்ளம். இதை அதுகளுட்ட போய் கேட்கணும். நான் கூட தான் எங்க வீட்டுலேயே இருக்கிறதில்ல. ஆமா நீங்க எல்லாம் யாரு?   மூவரும் : நாங்கள் கடவுள்கள்.   இளைஞன் : யாரு ஆர்யாவா?கெட்டப்மாத்திட்டிங்களாசார்?   மூவரும்         :     உன் கெட்டப் தான் மாத்திட்டோம். நீ செத்து போய் வேற கெட்டப்புல இருக்க!   இளைஞன் : நான் செத்துதட்டனா? யாரு உங்களுக்கு இந்த ரைட்ஸ் கொடுத்தா?   சிவன் : கடந்த 2000 வருசத்துல மட்டும்   அல்லா : 106 வகையான மிருக இனங்களையும்……   ஏசு : 139 வகையான பறவை இனங்களையும்…   சிவன் : 1000க்கும் மேற்பட்ட தாவர இனங்களையும் இருந்த இடம் தெரியாம கொன்னு குவிச்சிட்டிகளேடா….. எங்களுக்கு எப்படி இருக்கும்.   சிவன் : எத்தனை ஆறு?   அல்லா : எத்தனை மலை?   ஏசு : எத்தனை காடு   அல்லா : எத்தனை வயல்   சிவன் : எவ்வளவு பெரிய கடல்   ஏசு : குறிஞ்சி, முல்லை, மருதமுனு எத்தனை வகையான நிலம்?   அல்லா : எத்தனை ஊர்வன   சிவன் : எத்தனை பறப்பன   ஏசு : எத்தனை வீட்டு விலங்கு   அல்லா : எத்தனை காட்டுவிலங்கு   சிவன் : எத்தனை பூக்கள்   அல்லா : எத்தனை காய்கள்? எத்தனை கனிகள்   சிவன் : எத்தனை சுனை? எத்தனைஅருவி     ஏசு : எல்லாத்தையும் ஒத்த மனுச இனம் அழிச்சிட்டிங்களடா?   மூவரும் : (மேடையின் முன் புறம் உள்ள மக்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.)   எங்கடா போய்ச்சு….நாங்க கொடுத்தத… திருப்பித் தாங்கடா……   ( என்று கூறி அழுகிறார்கள். மக்கள் தலைகுனிந்து இருக்க… திரைச்சீலை மேடையை மூடுகிறது.)      *********************   7 வால் நட்சத்திரம்          நாடக மாந்தர்கள்         : மூன்று ராஜாக்கள், ஊர்மக்கள், ஊர்த்தலைவர், இயேசுகிறிஸ்து          காட்சி -1          (இயேசு பிறந்த 30 ஆண்டுகள் கழித்து வானில் மீண்டும் வால் நட்சத்திரம் தோன்றுகிறது. அவ்வால் நட்சத்திரத்தினை மீண்டும் அம்மூன்று குறுநில மன்னர்களும்பார்க்கின்றனர்.)          ராஜா 1 : (வானை நோக்கிப் பார்த்து) ஓ… அது என்ன?வானில் மீண்டும்         வால்நட்சத்திரம் தோன்றுகிறதே?          ராஜா 2 : 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறைமகன் இயேசு பிறந்தபோது தோன்றிய         வால் நட்சத்திரம் ஆயிற்றே?          ராஜா 1 : இதன் மூலம் கடவுள் நமக்கு அறிவிப்பது         என்ன?          மூவரும் : ம்… 30 வருடங்கள் ஆயிற்று.          ராஜா 1 : நடை தளர்ந்து விட்டது ?          ராஜா 1 : என் கழுதைக்கும் கால் உடைந்து விட்டது. நான்         எப்படி அந்த இடத்திற்குச் செல்வேன்?          ராஜா 1 : நடப்போம் (மூவரும் )                   காட்சி -2          (ஒருவன் கூட்டத்தினின்று ஓடி வருகிறான்.)          ஒருவன் : அய்யோ… ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள்…              நம் குழந்தைகளைக்கொன்ற பாவி வருகிறார்கள்.          மற்றொருவன்: எங்கே? எங்கே?          ஒருவன்         : அதோ வருகிறார்கள்? (மூவரும் வருகிறார்கள்)                  ஒருவன் : நில்லுங்கள்… எங்கே வந்தீர்கள்?          ஒருவன் : நீங்கள் உள்ளேச் செல்லக் கூடாது          ஒருவன் : வெளியே போங்கள்          ராஜா 1 : ம்..நாங்கள் யார் என்று தெரிந்தால் இப்படி எல்லாம் பேச மாட்டீர்கள்          ஒருவன் : தெரியும் நீங்கள் மூன்று ராஜாக்கள்          ஒருவன் : 30 வருடங்களுக்கு முன் இயேசுவின் பிறப்பை அறிவிக்க வந்தவர்கள்          ராஜா1 : சரியாகச் சொன்னீர்கள்… பிறகு ஏன் தடுக்குறீர்கள்.          ஒருவன் : தடுக்குறோமா?          ஒருவன் : 30 வருடங்களுக்கு முன்பு வந்த நீங்கள்          ஒருவன் : ஏரோது மன்னனிடம் சென்று          ஒருவன் : யூதர்களின் அரசர் பிறந்துள்ளார் என்று         கூறினீர்கள்          ராஜா 2 : ஆம்.. அதற்கென்ன.?          ஒருவன்                  : அதற்கென்னவா?          ஒருவன்                  : அந்த ஏரோது என்ன செய்தான் தெரியுமா?          ராஜா3 : என்ன செய்தான்…          ஒருவன் : ஊரில் உள்ள அத்தனை ஆண்குழந்தைகளையும்          ஒருவன் : ஒன்று விடாமல் கொன்று குவித்து விட்டான்.          ஒருவன்          : அவன் எங்கள் ஆண் குழந்தைகளை         எல்லாம் வெட்டியபோது தெளித்த ரத்தங்கள்          ஒருவன் : இதோ இங்கே பாருங்கள்          ஒருவன் : எங்கள் சுவர்களில் எல்லாம் இன்னும்         கறையாகவே உள்ளது.          ராஜா 1 : அப்படியென்றால் அந்தக்குழந்தை?          ஒருவன் : அது மட்டும் தப்பிச் சென்று விட்டது          ராஜா 2 : இப்போது எங்கே அவர்?          ராஜா 3 : எங்கே எங்கள் இயேசு ராஜா?          ஒருவன் : அவரைச் சிறையில் அடைத்துள்ளோம்?          ராஜா 1          : என்ன? இரட்சகர் இயேசு சிறையிலா?          ராஜா 2          : விண்ணகத் தந்தை ஜெயிலிலா?          ராஜா 3          : என்ன சொல்கிறீர்கள்?          ராஜா 1          : அவரை ஏன் சிறையில் அடைத்துள்ளீர்கள்?          ஒருவன் : தேசத்திற்குப் புறம்பானவற்றைச் செய்கிறார்.          ராஜா 2          : என்ன செய்தார்?          ஒருவன் : அவர் குஷ்டரோகிகளை தொட்டுப் பேசுகிறார்?          ஒருவன் : முடவர்களின் கால்களைப் பிடிக்கிறார்?          ஒருவன் : விபச்சாரிகளுக்குப் பரிந்து பேசுகிறார்?          ஒருவன் : கோயில் வாசலில் வியாபாரம் செய்ய விடவில்லை?          ஒருவன் : அதனால் தான் அவரை ஜெயிலில் அடைத்துள்ளோம்.          ராஜா 1 : அவர் அவ்வாறு எல்லாம் செய்ய வரவில்லையே.          ராஜா 2 : யூதர்களின் ராஜ்ஜியத்தை ஆளவே அவர் வந்தார்?          ராஜா 3 : இதெல்லாம் அவர் ஏன் செய்தார் என்று         அவரிடமே நாங்கள் கேட்கிறோம்?          ராஜா 1 : நாங்கள் அவரைப் பார்க்க வேண்டும்          ராஜா 2 : அனுமதி தாருங்கள்          ஒருவன் : முடியாது          ராஜா 3 : அனுமதி தாருங்கள்          ஒருவன் : முடியாது          ராஜா 1 : அனுமதி தாருங்கள்          ஒருவன் : முடியாது          ராஜா 2 : இவற்றையெல்லாம் அவர் ஏன் செய்தார்         என்று ஒருமுறை அவரைக் கேட்க விடுங்கள்          ஒருவன் : முடியாது          ராஜா 3 : அவர் பிறந்ததை நாங்கள் தான் உங்களுக்குச் சொன்னோம்.          ஒருவன் : முடியாது          ராஜா 3          : அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்று         கேட்டுச் சொல்கிறோம். ஒருவன் : முடியாது.. முடியாது (கூட்டத்தில் ஒருவர்) ஏய்எல்லோரும்நிப்பாட்டுங்கள்.                  ஒருவன் : அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.          ஒருவன்         :     நம்மிடம் தான் அவர் ஒன்றுமே                 சொல்லவில்லை.          ஒருவன் :          இவர்களிடமாவது ஏதாவது சொல்கிறாரா? பார்ப்போம். போய்ப்பாருங்கள்.          ஒருவன் : வாருங்கள் நாமும் போய்ப் பார்ப்போம். (அனைவரும் செல்கின்றனர். விளக்குகள்    அணைக்கப்படுகின்றன.)          காட்சி – 3          (விளக்குகள் ஆன் செய்யப்பட.. இயேசு கிறிஸ்து அங்கே கண்கள் மூடி அமர்ந்துள்ளார். அவர் அருகில் குடிக்க ஒரு தண்ணீர்ப் பாத்திரம் இருக்கிறது.)          ராஜா 1 : மனுநீதி அளிக்க வல்லோனே?          ராஜா 2 : மகா உலகையும் ஆளவந்த எம் அரசே ! என்ன இது கோலம்?          ராஜா 3 : இவர்கள் கூறுவது உண்மையா?          ராஜா 1 : வியாபாரம் செய்யவிட வில்லையாமே?          ராஜா 2 : விபச்சாரிகளுக்குப் பரிந்து பேசுகிறீகளாமே?          ராஜா 3 : குஷ்டரோகிகளைத் தொட்டுப் பேசுகிறீர்களா?          ராஜா 1 : குள்ளமனிதன் சக்கேயுக்கு வழிவிடச் சொல்கிறீர்களா?          ராஜா 2 : அய்யோ எனக்குத் தாகமாக இருக்கிறது         எனக்குத் தண்ணீர் வேண்டும். (அவன் ஓடிச் சென்று இயேசுவின் அருகில் உள்ள தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துப் பார்க்கிறான். அதில் தண்ணீர் இல்லை.)          ராஜா 1 : எனக்குத் தண்ணீர் வேண்டும்          ராஜா 2 : எனக்குத் தண்ணீர் வேண்டும். தாகமாய் இருக்கிறது          ராஜா 3 : நீதான் மெசியாவாயிற்றே? ராஜா 1 : இந்தக் காலிக்கோப்பையில் தண்ணீர் வர விடும்.          ராஜா 2 : நீர் தான் தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்ற வல்லவரே!          ராஜா 3 : இந்தக் காலிக்கோப்பையில் தண்ணீர் வர விடும்.          ராஜா 1 : ஆமாம் நானும் நீண்ட தூரம் போக வேண்டும்          ராஜா 2 : என் கழுதையின் கால் உடைந்து விட்டது அதையாவது சரிசெய்யும். (எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார்.)          ஒருவன் : எல்லாம் பொய்…          ஒருவன் : எல்லாம் பொய்…          ஒருவன் : எல்லாம் ஏமாற்று….          ஒருவன் : எல்லாம் புரட்டு….          ஒருவன் : இவரைத் தூக்கில் இடுங்கள்…          ஒருவன் : இவரைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்…          ஒருவன் : இவரைச் சிலுவையில் அறையுங்கள் (இயேசுவை இழுத்துச் செல்கிறார்கள்)          ராஜா 3 : ஆண்டவரே!! நான் உம்மை விசுவசிக்கிறேன். உம்மால் உடைந்த பாத்திரத்தில் தண்ணீர்   வர வைக்க முடியும்.. நான் உம்மை நம்புகிறேன். உம்மால் கழுதையின் காலினை   குணமாக்க முடியும். நான் உன்னை விசுவசிக்கிறேன்.          ஒருவன் : மூடனே அவையெல்லாம் பொய்          ஒருவன் : இன்னுமா நம்புகிறாய்?          ராஜா 3 : ஆண்டவரே நான் உம்மை விசுவசிக்கிறேன் ஆண்டவரே நான் உம்மை விசுவசிக்கிறேன் (இழுத்துச் செல்லும் கடவுள் திரும்பிப் பார்க்கிறார். அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டேச் சொல்கிறார்)          இயேசு : என்னை விசுவசிக்கிறவன் தாழ்ச்சி அடையான்          ராஜா 3 : ஆண்டவரே நான் உம்மை நம்புகிறேன்          இயேசு : என்னை நம்புகிறவன் கைவிடப்படமாட்டன்          ராஜா 3 : ஆண்டவரே உம்மைச் சிலுவையில் அறையப் போகிறார்கள்.          இயேசு : நான் மீண்டும் வருவேன். என் வருகை சமீபமாய் இருக்கிறது. (அனைவரும் இழுத்துச் செல்கின்றனர்) (அப்போது கால் உடைந்த கழுதை எழுந்து நிற்கிறது. கையில் வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் வழிகின்றது. அவன் ஆனந்தமாகி..)                   ராஜா 3 : அய்யோ மக்களே அவரே மெசியா … அவரே உன்னதர்… உங்கள் பாவங்களைப் போக்கவே அவர் வந்துள்ளார். இதோ கழுதையின் கால் குணமாகிவிட்டது. உடைந்த பாத்திரத்தில் தண்ணீர் வழிகிறது. அற்புதம்.. அற்புதத்திற் கெல்லாம்         அவரே ஊற்று. (இயேசுவைச் சிலுவையில் அறையும் சப்தம் மட்டும் கேட்கிறது) கதறுகிறான்.         அவர் இறக்கவில்லை… மீண்டும் மனிதனாகப் பிறப்பார். அவர் இறக்கவில்லை… மீண்டும் மனிதனாகப் பிறப்பார். அவர் இறக்கவில்லை… மீண்டும் மனிதனாகப் பிறப்பார். (திரை மெல்ல மூடுகிறது.)                   **********************************          8 பிணம் நாடக மாந்தர்கள் : இராபர்ட், சின்னா, குழுவினர் காட்சி -1 (மாணவர்கள்,மேடையின் வலது புறம் இருந்து பறை ஒலித்துக் கொண்டு மேடையின் உள்ளே வருகிறார்கள்.)      இராபர்ட் : அட.. அண்ணமாரே.. தம்பிமாரே.. அக்காமாரே      குழு : (இராகமாக) அக்காமாரே..          சின்னா : அட.. அத்தைமாரே.. மாமன்மாரே.. மச்சினமாரே      குழு : (இராகமாக) மச்சினமாரே..          இராபர்ட் : உங்க எல்லாத்துக்கும்      குழு : உங்க எல்லாத்துக்கும்      சின்னா : வணக்கம்.. வணக்கம்…      குழு : வணக்கம்.. வணக்கம்… (பறையோசை வேகமாக,உற்சாகமாகக் கொட்டப்படுகிறது)      இராபர்ட் : நாம. இங்க கூடியிருக்கிறது எதுக்குன்ன??      குழு : எதுக்குன்னே…      சின்னா : ஒரு பெரிய காரியத்துக்கு      குழு : பெரிய காரியத்துக்கா??      இராபர்ட் : இல்ல… பெரிய்யய காரியத்துக்கு..      குழு : அப்பிடினா..      சின்னா : அங்கப்பாரு தெரியும். (மாணவர்களில் ஒரு பிரிவினர் தனியாகப் பிரிந்து பின்னால் இருந்து வருகிறார்கள். அவர்களில் நால்வர் ஒரு பிணத்தை ஏந்தி வருவது போன்று மேடையின் முன்புறம் வந்து பிணத்தை நாற்காலியில் அமர வைக்கின்றனர். சாவுக்கு அடிக்கப்படும் பறை ஓசை அடிக்கப்படுகிறது.)      குழு : அண்ணே?? யாருணே இவரு? எங்கேயோ பாத்த    மாதிரி இருக்குது??      இராபர்ட் : இவுருதாண்டா Mr.பொதுசனம்.      குழு : பொதுசனம்னா? கவர்மெண்ட் ஆளுகளா ண்ணே?      சின்னா : யாரு, காலையில பத்தரைமணிக்குவேலைக்கு போயிட்டு…11மணிக்கெல்லாம் டீ சாப்பிடுறேன்னு..  வெளியிலபோயிட்டு…வாங்குற 80 ஆயிரம் சம்பளமும் பத்தலை பத்தலைனு..ரோட்டோரத்துலஸ்ட்ரைக் பண்ணுவாங்களே!!! அவுங்கள சொல்லுறீயா???      குழு : ஆமாணே!!! அவுரா இவுரு?      இராபர்ட் : அவுருதான் வைச்சுக்கோ…      குழு : அண்ணே பாத்தா படிச்ச புணம் மாதிரில இருக்கு!!      சின்னா : (பாடுகிறான்) படிச்சவரு… படிக்காதவரு.. டாக்டரு.. வக்கீலு.. ஆசிரியரு.. பேராசிரியரு..          (பாடல் முடித்து)     இப்படி யார இருந்தாலும், நாட்டுல எது நடந்தாலும் பாத்துகிட்டு  சும்மாவே இருக்கிறவன.. பெணமுணு சொல்லாம வேற என்னாணு சொல்லுறது?          குழு : அண்ணே.. அப்ப பொதுசனம் எல்லாம் செத்துப் போச்சுனு சொல்லுறீயாண்ணே?      இராபர்ட்      : அட … ஆமாண்டா தான் உண்டு தான் வேல உண்டு இருக்குற எல்லாப் பயலுகளுமே செத்த பொணமுணு தாண்டா சொல்லுவேன்.      குழு : சரி விடுனுனே.. அதுதான் பொதுசனம் செத்துப்  போச்சுனு சொல்றீங்க.. அப்புறம் அவுங்களப்              பத்தியே     பேசிகிட்டு…. (எகத்தாளமாக)செத்துப் போனவங்கள எதுக்கு பேசிட்டு??          சின்னா : தம்பீ… செத்துப்போன பொணத்த எழுப்ப முடியாது? ஆனா செத்தவன் மாதிரி நடிக்கிறவன எழுப்பலாமுள்ள? எப்புடி எழுப்புறேன் பாரு?      குழு : ண்ணே.. என்னானே.. கொழப்புற..செத்துப்போனவங்கள எழுப்புவியா? அது எப்புடி?      இராபர்ட் : இப்பாரு…(சத்தமாக) ரேசன்ல்ல இலவசமா சாணி போடுறாங்களாம்..சாணி போடுறாங்களாம்…சாணி போடுறாங்களாம்..     (இதைக் கேட்ட உடன் பிணம் தன் கட்டுகளை எல்லாம் அவிழ்த்துக் கொண்டு எழுந்து ஓடி வருகிறது.)      பிணம் : எங்க.. எங்க.. போடுறாங்க…           சின்னா : ஆங்… உன் வாயிலதான் போடுறாங்க…      பிணம் : (பிணம் போல, தான் உடலில் சுற்றிருக்கும் துணிகளைப் பார்த்து)     எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் இப்புடி இருக்கேன்?          இராபர்ட் : நீ செத்துட்ட?      குழு : இல்ல நான் சாகல!!      சின்னா : இல்ல நீ செத்த பொணம்?      குழு                  : இல்ல நான் பொணம் இல்ல… என் இதயம் துடிக்கிது.      இராபர்ட் : என்ன     உன் இதயம் துடிக்கிதா? 16 கிலோ மீட்டருக்கு அங்கிட்டு 90 ஆயிரம் தமிழர்கள… உன் இரத்தச் சொந்தங்கள கொன்னு குவிச்சாங்காளே… அப்ப ஒன் இதயம் துடிக்கிலையா? சும்மதானே இருந்துச்சு. சும்மா இருந்தா .. அது பொணத்துக்குச் சமம் தானே… அப்ப நீ பொணம்தான்டா.. (ஆங்காரமாக பறையோசை ஒலிக்கப்படுகிறது.)      பிணம்          :      யோவ்… நிப்பாட்டுய்யா.. யாரு சும்மா இருந்தா? டி.வி.யிலஎவ்ளவோ                       புதுப்படம்     போடுறான்… அதைப்பாக்கவே இங்க நேரம் இல்ல.. .               இதுல யார் செத்தா எனக்கென்ன? போன வாரம் என் பாட்டி கூடதான் செத்துப்போச்சு… அதுக்கென்ன பண்ண முடியும்?          இராபர்ட் : அதுக்கு என்ன? பண்ண முடியுமா? நாட்டுல எது நடந்தாலும் இப்படி வாய பொழந்துகிட்டு டி.வி. பாத்துகிட்டு இருக்கிறீங்களே உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல?நீ இப்படி டி.வி. பாக்குற நேரத்துல தான் அவன்கோடி கோடியா கொள்ளை அடிக்கிறான்.      குழு : நான் டி.வி. பாக்குறதுல அவன் எப்படி கோடி கோடியா கொள்ளை அடிக்க முடியும்? என்ன               கதை இது??      சின்னா : ம்.. உன் டி.வியில     super singer, மானாட மயிலாட அது இதுனு வாரம் புல்லா போடுறானே நிகழ்ச்சி..அப்ப அப்ப இடையில இந்த நிகழ்ச்சி புடிச்சிருந்தா sms அனுப்புங்கனு sms அனுப்புங்கனு … அனுப்பச்     சொல்லாறேனே?      குழு : ஆமா      சின்னா : என்னா நோமா… டேய் தமிழ் நாட்டுல மொத்தம் எத்தன கோடி பேரு இருக்கானுக      குழு : 6 அரை கோடியோ? ஏழு கோடியோ இருக்காங்க?      இராபர்ட் : ம். அதுல செல்போன் வைச்சிருக்கவுனுக மட்டும் நாலுகோடி… ஒரு, ஒருகோடி பேரு Sms அனுப்புறானு வைச்சுக்கோ..      குழு : ம்      சின்னா : ஒரு Sms க்கு எவ்வளவு காசு புடிக்கிறான்.      குழு : ஆறு ரூபாண்ணே      சின்னா : ம். ஒரு கோடி பேரு ஆறு ரூபாண்ணா என்னாச்சு..      குழு : அட ஆமாண்ணே.. ஆறு கோடி ரூபா ஆச்சு      இராபர்ட் : அது இல்லாம.. நீ பாக்க பாக்க Trb ரேட்டிங் வேற ஏற     ஏற.. நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாகி விளம்பரம் அது     இதுனு ஏகப்பட்ட காசயையும், ஒன் நேரத்தையும்     புடிங்கிட்டு இருக்காண்டா புடிங்கி..      குழு : ண்ணே..      சின்னா : ஏய் காச புடிங்கிட்டு இருக்காணு சொன்னேன்.      இராபர்ட் : அட.. இவுனுக நாம எதப் பேசினாலும் நொட்ட     சொல்லுவானுக!!! விடுண்ணே… ஸ்பெக்ரெட்டத்தேயே     மறந்துட்டானுக…      குழு : ண்ணே… கேட்கனும் கேட்கனும் நெனைச்சேன்.. ஸ்பெக்ட்ரம்ண்ணா என்னான்ணே?      குழு : அடப்பாவி.. ஏகப்பட்ட வாய்தா வாங்கியும் அதப்பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்கியேடா… இது தாண்டா      நம்ம பொதுசனம்னு சொல்லுறது.      குழு : அட சொல்லுண்ணே…      சின்னா : அடேய்…     ரோட்டுல லாரி போணவோ… இல்ல நம்ம மேல     நாயிஆயி போனாக் கூடத்     தெரியாம எப்பப்பாரு காதுல வைச்சு நொய்யி நொய்யினு பேசிகிட்டு இருக்கோமே செல்லுபோனு..      இராபர்ட் : ஆமா செல்போனு      குழு : அதுக்குத் தேவை அலைக்கற்றை… இத வாங்குறதுக்கு எல்லா செல்போன் கம்பெனிக்காரனுக்கும் ஏகப்பட்ட போட்டிக… அந்த அலைக்கற்றைய 400 கோடிக்கு நம்ம கவர்மெண்ட்கிட்ட டாடா கம்பெனிக்காரன் இருக்கானுல்ல…      குழு : ஆமாண்ணே டாடா கம்பெனி      சின்னா : அந்த டாடா கம்பெனிக்காரன் 400 கோடிக்கு வாங்கி ஜப்பான்ல்ல இருக்குற டோகோமோ கம்பெனிக்கு 12000 கோடிக்கு வித்திட்டானுக… அவன் மறுபடியும் 12000 கோடிக்கி மேல லாபம் வைச்சு நம்மகிட்டேயே வித்திட்டான்.      குழு : 400 கோடிக்கி வித்த நாமலே 12000 க்கு வாங்கிட்டோமா?.      இராபர்ட் : ஆமா… இதுல ஏற்பட்ட கடன.. நாம தான் இனிமே 10 ரூபாயுக்கும் 20 ரூபாயுக்கும் டாப்அப் பண்ணி அடைக்கனும்.      சின்னா : இதுல 10 ரூபாயுக்கு டாப்அப் பண்ணா 6 ரூபாதான்     ஏறுது. மீதி நாலு ரூபா எங்கடா போகுது .. எங்க போகுது? வட்டி     எடுக்குறான்டா… கந்து வட்டிக்காரன் கூட 10 ரூபாவுக்கு 2 ரூபாதாண்டா எடுக்குறான்… ஆன அரசாங்கம் 4 ரூபா எடுக்குது.. பெரிய பகல் கொள்ளையாவுல இருக்கு.      குழு : ஏண்ணே..      ராபாட் : ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கரண்ட் கட் பண்ணுறாணே? இதுனால என்ன பிரச்சனை தெரியுமா?      குழு : யாருக்குத் தெரியும் நான் தான் அப்ப ஆபிஸ்ல இருப்பேன்! என்ன இரண்டு மணி நேரம் தூங்க      முடியாது!      சின்னா : தூங்க முடியாதா? இன்னைக்கி இருக்குற விலைவாசிப் பிரச்சனைக்கு அதுதானே காரணம்?      குழு : கரண்ட்கட்- க்கும் விலைவாசிக்கும் என்னய்யா சம்பந்தம்?      இராபர்ட் : (பாடலாகப் பாடுகிறான்) விலைவாசி ஏறிகிட்டு     விண்ணத் தொலைச்சிப் போனாலும்      குழு : விண்ணத் தொலைச்சிப் போனாலும்      சின்னா : மண்ணெண்ண பாமாயில் மாயமா மறைஞ்சாலும்      குழு : மாயமா மறைஞ்சாலும்      ராபர்ட் : பெட்ரோலு டீசலு ஏறிக்கிட்டே போனாலும்      குழு : ஏறிக்கிட்டே போனாலும்      சின்னா : சும்மாவே இருக்குற நீ பொணந்தாண்டா     பொணந்தாண்டா      குழு : பொணந்தாண்டா பொணந்தாண்டா      சின்னா : பொணந்தாண்டா பொணந்தாண்டா      குழு : அண்ணே! இவ்வளவு நல்லா பேசுறீங்க.. நல்லா பாடுறீங்க… எங்கண்ணே வேலை பாக்குறீங்க      இராபர்ட் : வேலையா எங்கடா கெடைக்குது? எவன்டா தரான்? (பாடலாகப் பாடுகிறான்)     கல்வித்துறைக்கு போனா எக்ஸாம் வைக்கிறான். முன்னாடியேQuestionன விக்கிறான். மருத்துவம் படிக்க ஸீட்டு கேட்டா லஞ்சம் கேக்குறான்.30 லட்சம் கேக்குறான். இதுக்கு காரணமானவன் வீட்ட சோதனை போட்டா      குழு : சோதனை போட்டா 600 கிலோ தங்கமும், 60 கோடி ரொக்கப் பணமும் கிடைக்குது. நாட்டோ             பொருளாதரத்த சேதப்படுத்துற இவனை எல்லாம் சும்மா விட்டுட்டு      சின்னா : சின்ன சின்ன தப்பு பண்ணவன சுட்டுக்கொல்லுறான் கேட்டா எண்கவுண்டர் என்கிறான். கிலோ அரிசி கொடுக்குறாங்க     சும்மா நமக்கு காய்கறி விலை இப்போ ஏறிப் போயி     கழுத்தறுக்குது.போலியோ சொட்டுமருந்து எடுத்துகிட்ட குழந்த செத்துப் போகுது… கேட்டா காலாவதி மருந்து மாத்திர நடப்புல இருக்குது நாட்டுல நடக்குற ஊழல் எத்தனனு சொல்லுறேன் கேட்டுக்கோ      குழு : செத்த பொணம் இல்ல தமிழா….செத்த நேரம் சிந்திச்சிப்பாப்போம்.. தமிழா..          ஆதர்ஸ் ஊழல்…..நிலக்கரி ஊழல்     கிராண்னைட் ஊழல்…வங்கி ஊழல்…          எல்.ஜ.சி. ஊழல்      சின்னா : நம்மள 200 வருசம் ஆண்ட வெள்ளக்காரன் அடிச்ச     கொள்ள 973 கோடி.      ஆனா அதை விட கடந்த 20 வருசத்துஊழல்ல     இவனுக அடிச்ச கொள்ள இருக்கே..      ஏஏஏஏ அப்ப்ப்ப்ப்பபபபா…?      குழு : இதெல்லாம் கோர்ட் பாத்துக்காதா?      ராபர்ட் : கோர்ட்டாம் கோர்ட்….சொல்றேன் கேளு.. போன முறை ஆட்சி செஞ்ச முதலமைச்சர்… இப்ப இருக்குற     முதலமைச்சர் மேல போட்ட கேசு மட்டும் 1டஜன். அதுல எல்லாம் காலாவதி ஆகி ஒரே ஒரு கேசு     மட்டும் தான் பாக்கி இருக்கு. அதுவும் அது வெறும் 15கோடி… 15 கோடிக்கே 15 வருசமுணா… 176000 கோடிக்கு எத்தன     வருசமுனு நீயே கூட்டிக்கோ… கோர்ட் பாத்துக்குமாம்.. கோர்ட்…      குழு : ஏன்னே இதெல்லாம் எதிர்கட்சிகாரன் தட்டி கேட்கமாட்டானுகளா?      இராபர்ட் : எதிர்கட்சியா… எதிரிகட்சி வரைக்கும் அடிக்கிறதுல பாதி அவனுக்குதாண்டா போகுது?     காசு கரெக்ட்டா போயிட்டா அமைதியா இருப்பான். போகல.. சட்ட சபையில இருந்து சாக்கடை வரைக்கும் மேடை போட்டு வாயி கிழிய கத்துவான்.தெரியாதா உங்க எதிர்கட்சி லட்சணம்?      குழு : ண்ணோ சும்மா நிறுத்துண்ணே… எதுக்கு எடுத்தாலும் கவர்மெண்ட்              குத்தம் சொல்லிகிட்டு… இருந்து பாத்தாத் தான் தெரியும்.      குழு : ண்ணே… மானியமுனா என்னான்னே?           சின்னா : மானியமுனா.. அரசு நமக்கு கொடுக்கிற காச …. நாம     திருப்பி கட்டத் வேணாமுனு சொன்னா…அதுக்கு பேருதாண்டா மானியம்      குழு : ம் … சொல்றீங்க… எவ்வளவு மானியம் தருது.வீடு     கட்ட.. மாடு வாங்க.. ஆடு வாங்கனு மானியம் தருதுல      இராபர்ட் : ஆமா… உனக்கு 60 ஆயிரம் 70 ஆயிரமுனு கொடுத்துட்டு… நோக்கியோ கம்பெனி இருக்குல்ல நோக்கியோ கம்பெனி      குழு : ஆமாண்ணே போன் கம்பெனி.      சின்னா : அந்த கம்பெனி நம் நாட்டுல வியாபாரம் செய்றதுக்கு 650 கோடி முதலு போட்டதுக்கு நம் மத்தியஅரசு     அவனுக்குஎவ்வளவு தெரியுமா மானியம் கொடுத்துருக்கு650 கோடிக்கு 650 கோடி மானியம்?      குழு : 650 கோடிக்கு 650 கோடி மானியமா? அநியாயமாமுள்ள இருக்கு?      இராபர்ட் : அநியாயம் இல்ல, ஜனநாயகம்.. ஜனநாயகம்…      சின்னா : ஜனநாயகமுன்னா..????      ராபர்ட் : ஓட்டுப் போட்டு நமக்காக நாம தேர்ந்தெடுக்கிறது தான் ஜனநாயகம்…      குழு : ஓட்டுப் போட்டுத் தானே தேர்ந்தெடுக்குறோம்…          இராபர்ட் : ஓட்டுப் போட்டா தேர்ந்தெடுக்கிற… நாயி எலும்பு துண்ட கவ்விட்டுப்போற மாதிரி மூக்குத்திக்கும், பட்டுப்புடவைக்கும், பட்டச் சாராயத்துக்கும்நாக்கத் தொங்க போட்டுக்கிட்டுல்ல ஓட்டு போடுற…வெட்கமாயில்ல     உனக்கு? இதுல சாதி வேற…      சின்னா : இதுல எந்த தொகுதியில எந்த சாதிக்காரன் அதிகமா இருக்கானோ அந்தச் சாதிக்காரனத் தான்     நிப்பாட்டுறான். நீயும் அவன் நல்லவனா.. நாதாரியானு பாக்காம…கஞ்சா வித்தவன்சாராயம் வித்தவனெல்லாம்     சாதிக்காரரென்ற ஒரே காரணத்துக்காக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்குற….      ராபர்ட் : இதுல பாதி பேரு ஓட்டுப் போடுற அன்னைக்கி ஏதோ     கவர்மெண்ட் லீவு மாதிரி பப்பரக்கானு படுத்துகிட்டு     டி.வி பாத்துகிட்டு இருந்துட்டு…. அப்புறம் அது சரியில்ல இது சரியில்லனு… நொட்ட சொல்லிகிட்டு இருக்குறது..      சின்னா : ரேசன் கடையில 1000 ரூபா கொடுத்தா மட்டும் க்யூல நின்னு 100 சதவீதம் காச வாங்கிட்டுப் போறானுக… ஆன ஓட்டு போட வாடானுன்னா மட்டும் 50 சதவீதம் 30 சதவீதம்… அப்புறம் எப்படிடா சரியாகும் ?      குழு : இதுக்கு என்னா தான் வழி.      இராபாட் : வரணும்.. வரணும் எல்லோரும் ஓட்டு போட வரணும்… வந்தா தான் மாறும் … மாத்தனும்…     வராம செத்த பொணம் மாதிரி படுத்துக்கிடக்காத… (பாடுகிறான்) செத்த பொணமாடா நீ தமிழா     செத்த நேரம் சிந்திச்சிப்பாரு தமிழா…      குழு : செத்த பொணமாடா நீ தமிழா     செத்த நேரம் சிந்திச்சிப்பாரு தமிழா…      இராபர்ட் : செத்த பொணமாடா நீ தமிழா செத்த நேரம் சிந்திச்சிப்பாரு தமிழா… செத்த பொணமில்லடா நமமெல்லாம் உயிரோட இருக்குற மனுசனுக…      சின்னா : ஓட்டு போட்டதோடு நாம கடமை முடிச்சினு நெனைக்காம தப்பு எங்க நடந்தாலும்         தட்டிக் கேட்டாத்தான் நீ மனுசன், இல்ல நீ.. நான்.. அதோ     முன்னாடி உட்காந்திருக்கிற     நாம எல்லாம் பொணந்தாண்டா.. நாம மனுசனா இருக்கனுமா.. செத்த பொணமா இருக்கனுமா… சொல்லு      இராபர்ட் : செத்த பொணம் இல்ல நாம் தமிழா…. செத்த நேரம் சிந்திச்சிப்பாப்போம்.. தமிழா.. செத்த பொணம் இல்ல நாம் தமிழா…. செத்த நேரம் சிந்திச்சிப்பாப்போம்.. தமிழா..                                                        FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி    மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:   மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:      ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.      தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:      தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.      சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.      எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.      சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?      சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.      நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.      அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.      எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.      தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?      கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.      அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.      அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.      வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.      பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்   வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.   FreeTamilEbooks.com   இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.   PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT   இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.   அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.   அவ்வளவுதான்!   மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:   1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்   2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?   யாருமில்லை.   இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.   மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.      இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?      ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்   எழுதித்தரப்போவதில்லை.   ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.   அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.   தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.      நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?      உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com   2. www.badriseshadri.in   3. http://maattru.com   4. kaniyam.com   5. blog.ravidreams.net      எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.   <துவக்கம்>   உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].   தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.   இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.comஎனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.   இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.   இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.   எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.   இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.   http://creativecommons.org/licenses/   நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.   e-mail :freetamilebooksteam@gmail.com FB :https://www.facebook.com/FreeTamilEbooks   G +:https://plus.google.com/communities/108817760492177970948      நன்றி.      மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.   முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.   கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.   ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?   அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.   ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.   அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.      மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?   ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.   நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம்.  அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-Iபகுதி-IIஎன்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.   தவிர்க்க வேண்டியவைகள் யாவை?   இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.      எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?      நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.   - email : freetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?      குழு – http://freetamilebooks.com/meet-the-team/      Supported by   - Free Software Foundation TamilNadu, www.fsftn.org   - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/