[] []   சலனம் - குறு நாவல் என். எஸ். தரன் nsdar2222@gmail.com      அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com    வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   பொருளடக்கம் சலனம் - குறு நாவல் 2  முன்னுரை 4  1. பூசையில் நுழைந்த கரடி 6  2. அசத்துறீங்க ! ! 11  3. தவறு செய்துவிட்டேன் 15  4. வாட்ஸ் அப்பால் வந்த ஆபத்து 19  5. எனக்குப் பிடிக்கல 23  6. கண் கெட்ட பிறகு ... 28  7.எப்படியாவது போகட்டும் ! ! 30  8. கல் கனியானது 33  9. முகநூலில் நேரடி ஒலிபரப்பு 35  10. வனிதையின் சங்கடம் 40  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 44  கணியம் அறக்கட்டளை 52  பணி இலக்கு  – Mission 52  தற்போதைய செயல்கள் 52  கட்டற்ற மென்பொருட்கள் 52  அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள் 53  வெளிப்படைத்தன்மை 54  நன்கொடை 55      முன்னுரை நம்முடைய வாழ்க்கையில்  எத்தனையோ ஆண்களையும் பெண்களையும் சந்திக்க நேருகிறது. பள்ளியிலோ  கல்லூரியிலோ, அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கெங்கோ சந்திக்கிறோம். எல்லாரிடமும் நாம் நட்பு பாராட்டுவதில்லை.  சிலரிடம் நட்பாக இருக்கிறோம். நல்ல நட்பானால் தொடருகிறது. நட்பில் உள் ஒன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பதை மறக்கக் கூடாது. நன்றி மறந்த மக்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் போட்டுக்கொடுப்பவரின் நட்பை முறித்துவிட வேண்டும். மனதுக்குச் சங்கடம் தரும் நட்பையும் தவிர்க்க வேண்டும். இப்போதுள்ள நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன், முகநூல், வாட்ஸ் அப்  பயன் படுத்தாதவர்களே இல்லையெனலாம். அதன் மூலம்   ஆண் பெண் நட்பு சீக்கிரம் ஏற்பட்டு விடுகிறது. முகத்தைப் பார்க்காமலே முகநூலிலும், அலைபேசியில் நட்பு சீக்கிரம் வளருகிறது, விளைவை யோசிக்காமல்  துணிச்சலுடன் ஒருவரின்  அபிப்பிராயத்தைத் தெரிவிக்க முடிகிறது. பட்டால்தான் புத்தி வருகிறது. ஆண் பெண் நட்பு நன்றாகப் போகிற வரையில், எல்லை மீறாத வரையில்   பிரச்சனை இல்லை. கருத்து வேறுபாடு தோன்றிவிட்டால் பேசும் நட்பு பேசா நட்பாகி விடுகிறது. . ”சலனம்” குறுநாவல்  ஆண் பெண் நட்பு பற்றிய கதை.   ஒரு கதையின் மூலம் வாழ்க்கையில் ஒருவர் எப்படி வாழலாம் என்பதையோ அல்லது  எப்படி வாழக்கூடாது என்பதையோ  கூறலாம். குறுநாவலைப் படித்து விட்டு உங்கள் கருத்தை எனக்குத் தெரிவிக்கும்படி   கேட்டுக்கொள்கிறேன். பிரியமுடன் என். எஸ். தரன் nsdar2222@gmail.com       சலனம் 1. பூசையில் நுழைந்த கரடி பைரவிக்கு அலுவலகத்திலிருந்து வரும் போதே எட்டரை மணி ஆகிவிட்டது. இரண்டு தோசையைச் சுட்டு சாப்பிட்டு விட்டு முகநூலில் நுழைந்து விட்டு பின் வாட்ஸ் அப் வரும்போது பத்து மணி ஆகி விட்டது. பைரவிக்கு நாற்பது வயது. கட்டான உடலுடன் காண்பவரை வசீகரிக்கும் அழகு மிக்கவள். மிகவும் முன் ஜாக்கிரதை  குணமுடையவள். மனதிலிருப்பதை வெளிப்படையாய் பட் என்று சொல்லிவிட மாட்டாள். . பொய் சொன்னால் தப்பில்லை என்று என்னுபவள். எப்போதும்  ஜாலியா பேசுவாள்.   குறும்பு அவள் கூடப்பிறந்த குணம். கண்களில் குறும்பு மின்னும். இதழ்களில் குறும்பு மிளிரும். செயல்களில் குறும்பு கூத்தாடும்.   கல்யாணம் ஆகி இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. கல்யாணம் ஆன மறு வருடமே வினோத் பிறந்து விட்டான். பையன்  பொறியியல் கல்லூரியில்  படித்துக் கொண்டிருக்கிறான். அவளுக்கு ஈரோடில் முருகன் எக்ஸ்போர்ட் என்னும் பிரபலமான  நிறுவனத்தில் பணி செய்கிறாள். மாமியார் வீட்டில் குழந்தையைக் கவனித்துக் கொண்டதால் அவளால் வேலையை விடாமல் தொடர முடிந்தது.   கணவன் ராஜேந்திரன் குடிப் பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டான். அவன் அம்மாவும் எவ்வளவோ நல்லதனமாகச் சொன்னாள். பைரவி தற்கொலைச் செய்து கொள்வேன் என்று மிரட்டினதோடு மட்டமல்லாமல் பூச்சி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றாள். ஆனால் நல்ல இரும்பு சங்கிலியால் கட்டப் பட்ட ஒருவன் எப்படி அதை அறுத்துக் கொண்டு வெளியே வர முடியாதோ அந்த நிலையில் ராஜேந்திரன் இருந்தான். ராஜேந்திரன் அடிக்கடி வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு குடிக்க ஆரம்பித்தான். அவனைப் பைரவி வெறுக்கும் அளவுக்கு அவன் நடத்தை இருந்தது. அவனை விட்டு விலகிவிட வேண்டுமென்று நினைப்பாள். ஆனாலும் தன் பையனை நினைத்து தன் மனதை மாற்றிக் கொள்வாள்.   அவளுடைய அப்பா வானுலகம் அடைந்துவிட்டார்.  அம்மா அடுத்த தெருவில்தான் வசிக்கிறாள். பைரவி அடிக்கடி போய் அம்மாவைப் பார்த்து விட்டு வருகிறாள். எப்போதாவது அம்மாவும் வீட்டுக்கு வந்து பைரவியைப் பார்ப்பாள். அலைபேசியில் அடிக்கடி நலம் விசாரிப்பாள்.     அவளுடைய ஆத்தா ஆசிரியராக இருந்ததால் அவளுக்கு ஆங்கிலம் நன்றாக வரும். அவளது தமிழ் அறிவும், ஆங்கில அறிவும் கேட்பவரை வியக்க வைக்கும்..  காதல் திருமணம் செய்துகொண்டதாலோ என்னமோ அவளுக்குக் காதல் என்றால் மிகவும் பிடிக்கும். காதல் பாட்டுக்களை யூ டியூபில் விரும்பிக் கேட்பாள். காதல் பாட்டுக்களைப் பாடுவாள். காதல் பாட்டுக்களை கவிதையாய் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவாள்.    பைரவிக்குக் கல்யாணம் ஆகும் போது  ப்ளஸ் டூ மட்டும் படித்திருந்தாலும்  மேலும்  முன்னேற அஞ்சல் வழியில் பி.பி.ஏ படித்தாள். பிறகு  எம்.ஏ தமிழ்  படித்தாள். அதோடு நிற்கவில்லை. எம்பிஏ படித்தாள். ராஜேந்திரன் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது .கல்யாணம் ஆன புதிதில் நிறையச் சம்பாதித்து வீட்டுக்குக் கொடுத்தான். அவர்கள் ஆசையோடு இருந்ததெல்லாம் கல்யாணம் ஆன  முதல் ஐந்து வருடங்கள்தான். அப்புறம் அவன் ஆசை மதுவின் மேல் போய்விட்டது.அது மட்டுமல்ல . பைரவியின் புத்திசாலித்தனம்  அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிட்டது. அவன் உந்துதல் எதுவும் இல்லாமல் குடிகாரனாய் வாழ்ந்தான். வேலைக்குக் கூட அடிக்கடி மட்டம் போடுவான். பைரவியிடம் இருக்கும் துடிப்பு அவனிடம் இல்லை. காதலிக்கும்போது பைரவி அவன்  உடல் அழகை மட்டுமே கவனித்தாள். ஒருவன் நல்லவனா அல்லது  கெட்டவனா ? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் உந்துதல்  உள்ளவனா ? என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டாள். காலம்தான் நாம் செய்யும் முடிவுகளுக்கு விடை கூறுகிறது.   பைரவி ஈரோடில் பேருந்து நிலையம் அருகில்  வசிக்கிறாள். காலை ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி அலுவலகம் சென்றால் அவள் திரும்பி வரும்போது எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். கடின உழைப்பாளி . கணவன் குடும்பத்துக்குப் பணம் எதுவும் தரமாட்டான்,    அவளுடைய பிறந்த நாளின்போது அவளது தோழி பூரணி  ஒரு விலையுயர்ந்த அலைபேசியை பரிசாகக் கொடுத்தாள். பூரணியும் பைரவியும் சிறுவயதிலிருந்தே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிரச்சனை வரும்போது பூரணிதான் அவள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பாள். பைரவி குறும்பும் விளையாட்டுக் குணமும்  உள்ளவள். பூரணி   அதற்கு நேர்மாறாக முதிர்ச்சியும் பொறுப்பும் உள்ளவள்.   பைரவியிடம் உள்ள  வசீகரம் அவளின் இனிமையான பேச்சு.  சுவாரஸ்யமாகப் பேசும் அவளின் குணம் காந்தம் போல் அனைவரையும் அவள் பால் ஈர்த்தது. அவளுக்கு நண்பர்கள் அதிகம். ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் ஏராளம். முகநூலில் அவளுக்கு நிறையப்  பேரிடம் நண்பர்கள் கோரிக்கை வரும். அவள் தினந்தோறும் அல்லது எப்போது முடியுமோ அப்போது முகநூலில் வருவாள். அவளுக்கு நண்பர்கள் எண்ணிக்கை முந்நூற்றைக் கடந்து விட்டது. அவளிடம் இருப்பதோ நவீனமான அலைபேசி. . அதனால் அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வாட்ஸ் அப்பில் பிராட்கேஸ்ட் என்னும் ஒரு முறை இருக்கிறது. நண்பர்கள் முந்நூறு பேரையும் தேர்ந்தெடுத்து செய்தி அனுப்பினால் அவர்களுக்குத் தனியாகச் செய்தி வந்தது போல்தான் தெரியும். அவர்கள் பதில் கொடுத்தால் அனுப்பியவருக்கு வந்துவிடும். இந்த முறையை உபயோகித்து பைரவி தினந்தோறும் திருக்குறளோ அல்லது பொன்மொழியோ...  ஏதாவது ஒரு  செய்தியை அனுப்புவாள். தன் இச்சைபோல் செயல்படுவாள். அவளுடைய தொடர்பு உடைய நண்பர்களிடமிருந்து நன்றி, சுப்பர் என்றெல்லாம் பதில் வரும். அவளுடைய கான்டக்டில் பிரபலமான நபர்களும்  உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாய்  வாட்ஸ் அப் ஐகானில்  அழகான  பூங்கொத்து அல்லது  குழந்தைப் படம் ஏதாவது இருக்கும். ஆனால் அவளுடைய வாட்ச் அப் ஐகானில் பத்து வருடத்துக்கு முன் எடுத்த அவளுடைய அழகான              புகைப்படங்களை அடிக்கடி மாற்றி மாற்றி அனுப்பிக் கலாய்ப்பாள்.ஆனால் ஒரு அழகியின் பெண்ணின் புகைப்படம் அதாவது  அவளின் மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படமென்றால் பார்ப்பவர்களைக் கிறங்க வைக்காதா? இது பைரவிக்குத் தெரியும். ஆனால் அவள்தான் குறும்புக்காரி ஆயிற்றே.  எல்லாம் ஒழுங்காகப் போய் கொண்டிருந்தது. என்னதான் இருந்தாலும் சில சமயம் அவளுக்கு வாட்ஸப்பில் வரும் மெசேஜ் அவளை அதிர்ச்சி அடையச் செய்யும்.  ’அழகோவியம்’  ’அழகி’, ’சூப்பர்’, ’பிரமாதம்’ என்றெல்லாம் வரும்.. அவள் எதற்கும் பதில் போடமாட்டாள். சில நாள் அவளுக்கு நூறு மெசேஜ் வந்துவிடும். அவள் ஒருமுறைதான் வேகமாய் பார்ப்பாள். சிலவற்றைப் படிக்க கூட மாட்டாள்.ரொம்ப அவசியமானதிற்கு ரத்தின சுருக்கமாய்  பதில் அளிப்பாள்.  வாட்ஸ் அப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து அவள் வாழ்க்கை முறை மாறி விட்டது. இரவில் அலுவலகம் விட்டு வந்ததும் சாப்பிட்டு முடித்துவிட்டு  வாட்ஸ் அப் பார்ப்பாள். அலுவலகத்தில் நேரம் கிடைக்கும்போது அதாவது அவளுடைய மேலாளர் அலுவலகத்தில் இல்லாதபோதும் அவள் வாட்ஸ் அப் பார்ப்பாள். சாதாரணமாய் பத்து மணிக்குத் தூங்கப்போகும் அவள் வாட்ஸ் அப் பார்ப்பதால் சில சமயம்  பன்னிரண்டு மணிக்குத்தான் உறங்கச் செல்வாள். வாட்ஸ் அப்பில் கடைசியாய் எப்போது நுழைந்தார்கள் என்பது அறிந்துகொள்ள முடியும்.   நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் சேடிங் செய்வாள். முதன்முறை செய்யும்போது   அவளுக்குத் தான் தவறு செய்கிறோமோ என்று தோன்றியது. நட்புக்காக எதுவும் செய்யலாம். அதனால்  இதெல்லாம் தவறில்லை என்று அவள் மனம் சொல்லியது.. அவள் பொதுவான விஷயம் பற்றித்தான் சேடிங் செய்வாள். நலமா? எப்படி இருக்கிறாய் ?  ... இதுபோல்தான் அவள் சேட்டிங் இருக்கும். யாராவது அத்து மீறுவது போல் தோன்றினால் அவள் சேடிங் செய்வதை விட்டு வெளியே வந்து விடுவாள். அந்த நண்பரை வாட்ஸ் அப் தொடர்பிலிருந்து தடை செய்துவிடுவாள்.   கணவன் குடிப்பதற்கு அடிமையாகி விட்டான். மனைவியோ வாட்ஸ் அப் என்னும் மீண்டெழ முடியாத புதைகுழிக்குள் மூழ்கி விட்டாள். ஒரு மல்லி செடி எப்படி ஒரு கொம்பு மேல் படருகிறதோ அது போல் பைரவி வாட்ஸ் அப் என்னும் மாயாஜால நண்பனின் பிடியில் கொடி போல் படர்ந்து நன்றாகச்  சிக்கிச் கொண்டு விட்டாள்.   ராஜேந்திரனிடம் சாதரண அலைபேசிதான்  உள்ளது, அவன் அவள் போனைத் தொடமாட்டான். அவனுக்கு வாட்ஸ் அப் பற்றி எதுவும் தெரியாது. அவள் மொபைல் விஷயத்தில்  முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறாள்.. பைரவி வாட்ஸ் அப் பார்ப்பதைத் தன் ஆசைப் பொழுதுபோக்காய் வைத்திருந்தாள்.    “எதுக்காக என்கிட்டே வந்தாயோ” என்னும் சினிமா பாடலை அவள் உதடு முணு முணுத்தது. கட்டிலில் படுத்து வாசுவிடம் வாட்ஸ் அப்பில்  சேட்டிங் செய்துகொண்டிருந்த பைரவி அவளுக்கு வந்த மெசேஜை பார்த்து அதிர்ந்தாள். ”என்னைப் பிடிச்சிருக்கா?” அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுவும் பதில் அளிக்காமல்  வாட்ஸப்பிலிருந்து  வெளியே வந்தாள். ” இந்த ஆண்களே இப்படித்தான். அசட்டு ஆண்கள் !! சபல புத்திக்காரர்கள். ஒரு பெண் சிரித்துப் பேசினால் போதும் உடனே வழிவார்கள். குழைவார்கள். அதுவும் அழகான பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பணிவு அதிகம் காண்பிப்பார்கள் ” மனசுக்குள் சிரித்துக்கொண்டே தன் தோழி பூரணியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டாள். இரவு பத்து மணி ஆகிவிட்டதே . தோழி தூங்கி விட்டிருப்பாளோ அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பாளோ என்று அவள் யோசிக்கவில்லை. தன் நெருங்கிய தோழி என்பதாலும் தனக்குப் பிரச்சனை வந்தால்  தோழியிடம் ஆலோசனைக் கேட்பதும் அதன்படி நடப்பதும் அவளுக்கு வாடிக்கை என்பதாலும் அவள் எப்போதும் தயங்காமல் போனில் பூரணியிடம் பேசுவாள்.    எப்போது வேண்டுமானாலும் அவள் பூரணியைத் தொடர்பு கொள்வாள். உயிர்த் தோழி  என்பதால்  பூரணி எதுவும் சொல்ல மாட்டாள் . பூரணியின் கணவன் பாலசந்தர் மனைவியை அரவணைத்து அன்பைப் பொழிந்து கொண்டிருக்கும்போது அலைபேசி சிணுங்கவே எரிச்சலுடன் , ”யாரடீ பூசையில் கரடி போல் நுழைவது  ? “ எரிச்சலோடு  கர்ஜித்தான்.     **********   2. அசத்துறீங்க ! ! வாசு ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறான். பி.காம் பட்டதாரி. மாத வருமானம் பிடித்தம் போக கைக்கு ஐம்பதாயிரம் வருகிறது. வயது நாற்பது முடிந்தது இரண்டு மாதம் ஆகிறது . உயரமாய் ஒல்லியாய் இருப்பான். கோவையில்  வசிக்கிறான்.  மிகவும் மென்மையான மனசு உடையவன். யாரவது ஏதாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து விடுவான். பொய் பேசுவதில்லை என்பதை விரதமாகக் கையாண்டு உண்மையே பேசி வருகிறான். நட்பை உயிர்போல் போற்றுபவன்.  அவனுக்கு இதுவரை கல்யாணம் ஆகவில்லை. விருப்பமில்லை என்று சொல்ல முடியாது. கல்யாணத்துக்குப் பல வருடங்கள் பெண் தேடியும்  கிடைக்காத காரணத்தால் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பெண் கிடைத்தால் உடனே கல்யாணம் செய்துகொள்ளத் தயாராய்  இருக்கிறான்.  அவனுடைய பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது மற்றும் வாட்ஸ் அப் பார்ப்பது. அலுவலகத்திருந்து கிளம்பிய வாசு வரும் வழியிலேயே ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டை அடையும்போது இரவு மணி ஒன்பது.  கட்டிலில் படுத்துக் கொண்டே அலைபேசியில் வாட்ஸ் அப் பார்க்க ஆரம்பித்தான்.. அவன் மனம் நடந்ததை அசை போட்டது. முதன் முதலில் பைரவியை ஒரு வருடத்துக்கு முன் அவன் மதுரையில் ஒரு புத்தகக்கடையில் ஒரு நாவல் வாங்கும்போது சந்தித்தது. அவள் இருப்பிடம்  ஈரோடு என்று அறிந்ததும்.  அவளுடன் உற்சாகத்துடன் பேசியது.  பின் அவளுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டது. அவள் வாட்ஸ் அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பியது.  ஒரு முறை  ”சிரிங்க” என்று நகைச்சுவை செய்தியை அனுப்பியதற்கு அவள் ”சிரிச்சாச்சு” என்று பதில் அனுப்பினாள்.   மின்னஞ்சல் முகவரியைக் கேட்டதிற்கு, “உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று மின்னஞ்சல் முகவரியை அவள்  தந்தது. அவள் அழகைச் சிலாகித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியது பேச்சுவாக்கில் சில நண்பர்களின்  அலைபேசி எண்ணைத் தடை செய்தது பற்றி அவள் கூறியது  எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.  தனக்கும் அப்படி ஒரு நிலமை வரும் என்று அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ”நாம் தூய நண்பர்களாக இருப்போம்” என்று அவன் அவளிடம் ஒருமுறை சொன்னான். அவள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் தன்னை ஓரம் கட்டுகிறாள் என்பதை அவன் அப்போது  உணரவில்லை. ஒரு முறை பைரவிக்கு அனுப்பிய மெசேஜ்க்கு இரண்டு நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை. எனவே மூன்றாம் நாள் அலைபேசியில் தொடர்பு கொண்டு,” ஏன் பதில் கொடுக்கவில்லை. உடல்நிலை சரியில்லையா ?” என்று கேட்டான். ”நான் கேம்ஸ்குள்ளே நுழைந்துட்டேன். அதனால்தான்...” சிரித்துக்கொண்டே கூறினாள்.. ”என்னது கேம்ஸா” என்று அதிர்ந்தான். ”முகநூல், வாட்ஸ் அப் மற்றும் கேம்ஸ் போதைக்கு அடிமை  ஆயிட்ட மாதிரி சிக்கிட்டீங்களே. மேலும் உங்க கண் என்னத்துக்கு ஆகும்”என்று வருத்தப்பட்டான்.   அவள் மனசுக்குள், ”கரிசனத்தைப் பார்” என்று எண்ணிக்கொண்டு  “ நான் எப்போவாவது கேம்ஸ்க்குள் போய்விடுவேன்” என்றாள். அவள் பொய் சொல்லுகிறாள் என்பதை அறியாமல் அவளுக்காக  மிகவும் பரிதவித்தான். அவளுக்குச் சினிமா பாட்டின் மீது காதல் உண்டு . ஒரு சினிமா பாட்டை இசையோடு பாடி ஸ்முலே என்னும் இசை செயலியில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பினாள்.  வாசு அவள் பாடியதைக் கேட்டு ரசித்தான். குதூகலித்தான், பாராட்டினான்.. பைரவிக்கு அன்று சீக்கிரம் விழிப்பு வந்துவிட்டது. கடிகாரத்தைப் பார்த்தாள். அப்போது மணி நான்கு  ஆகியிருந்தது. அலைபேசியை எடுத்து வாட்ஸ் அப் பார்த்தாள். அவள் சிந்தனை பின்னோக்கிச் சென்றது. முன்பு ஒரு முறை அதிகாலை சுமார் நான்கு மணிக்கு அவள் வாசு அனுப்பிய மெசேஜ்க்கு ’சூப்பர்’ என்று பதில் அனுப்பியிருந்தாள்., ”பைரவி, என்ன, விடியற்காலையில் மெசேஜ் அனுப்பியிருக்கிங்களே” என்று வாசு கேட்டதிற்கு, “தப்பா நினைக்காதிங்க.எனக்குத் தூக்கம் வரவில்லை. அதனால் விடியற்காலையில் அனுப்பினேன்” என்று சொன்னதற்கு  அவன் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லை என்பதை அறிந்ததும் அவளுக்குப் பரம திருப்தியாய் இருந்தது.   ஐகான் புகைப்படத்தில் அவள் அணிந்திருந்த கருப்பு மணி மாலையைப் பார்த்து, கருக மணி மாலை நல்லா இருக்கு என்று வாசு மெசேஜ் அனுப்பினான், ”அந்த கருக மணி மாலை பிஞ்சு போச்சு” என்று அவள் பதில் அளித்தாள். ஒரு முறை பைரவி தான் எழுதிய ஒரு கதையை  வாட்ஸ் அப்பில் வாசுவுக்குப் படிக்க  அனுப்பினாள். அதை அவன் படித்துவிட்டுப் பாராட்டினான். வாசு அதோடு நிற்கவில்லை. அவனும் ஒரு கதை எழுதி வாட்ஸ் அப்பில் அவளுக்கு அனுப்பினான். வாட்ச் அப்பில் உரையாடல் தொடர்ந்தது. பைரவி, ”வெல்கம் எழுத்தாளரே !  நிறையக்  கதை எழுதுங்கள்” ”நீங்கள் தான் என் குரு” ”ஆஹா” ” உள்ளதை சொல்றேன். உங்க கிட்டேயிருந்து வருகிற ஆஹா, சபாஷ்  மெசேஜ் என் மனசுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகின்றன. உள்ளத்துக்கு  உத்வேகத்தையும் உந்துதலையும்  கொடுக்கின்றன. பைரவி நான் என்ன மாதிரி கதை எழுதுவது ? சிருங்கார கதைகளா” என்று குறும்பாகக் கேட்டான். ”நோ, நோ, நார்மல் கதைகள்” என்றாள் பைரவி. ”விளையாட்டுக்குச் சொன்னேன்”. ’கே’ என்றாள். பைரவி எப்போதும் சிக்கனமாய்தான் வாட்ஸ் அப்பில் வார்த்தையை உபயோகிப்பாள்.  ஓ கே என்பதற்கு ’கே’ என்றும் ஆங்கிலத்தில்   ஒய் இ எஸ் என்பதற்குச் சுருக்கமாய் ’எஸ்’ என்றும் ஒற்றை ஆங்கில எழுத்தைப் பயன் படுத்துவாள். குட் மார்னிங் என்பதற்கு ஜிஎம் என்பாள். ஒரு முறை அவள் டிசி என்று மெசெஜ் அனுப்பியிருந்தாள். வாசுவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை . ”அப்படி என்றால் என்ன ?” என்று கேட்டான். “டிசி என்றால் டேக் கேர்” ”நான் உங்களிடமிருந்துதான் இந்த வார்த்தையை  கற்றுக் கொண்டேன்.” “பொய் சொல்றீங்க” ”சத்தியமாய் சொல்கிறேன். எனக்கு ஆங்கிலத்தில் சுருங்கிய  வார்த்தைகள் அதிகம் தெரியாது”. ஒருமுறை வாசு வாட்ஸ் அப்பில் பைரவியின் ஐகான் புகைப்படத்தைப் பார்த்து அவளுக்குப் போன் செய்தான். அவளிடம்,” நீங்க அசத்துறீங்க ! ! ” என்றான். ”எதனாலே சொல்றீங்க?” ” உங்க வாட்ஸ் அப்பில்  உங்க  புகைப்படம் ரொம்ப அழகாக இருக்கு. அதனாலே சொன்னேன்.” இப்படி வாட்ஸ் அப்பில் அவர்கள் நட்பு தொடர்ந்தது. பைரவி அலைபேசியைத் துண்டித்து விட்டாள். என்னமோ தெரியவில்லை திடீரென்று அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் சொல்லிய வார்த்தை அவள் மனத்தை நோக அடித்துவிட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? அது பைரவிக்கு மட்டும்தான் தெரியும்.  ஒருவரைப் பிடித்திருந்தால் அவர்களின் குறைகளும் குற்றங்களும் பெரிதாகத் தெரியாது.  பிடிக்கவில்லையென்றால் அவரின் சிறு குறைகளைக்கூட மலை போல்  கருதுவது மனித இயல்பு. அவன் அசத்துறீங்க என்று சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை . ”கொஞ்சம் இடம் கொடுத்தால் வர்ணிக்கிறானே பாவி” என்று நினைத்தாள். வாசு இந்தத் தருணத்தில் என்ன ஆனாலும் பைரவியுடன் உள்ள நட்பை விட்டு விடக் கூடாதுதென்று முடிவு செய்தான்.   ********** 3.  தவறு செய்துவிட்டேன் மனைவியிடம் முத்தம் கொடுத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கும்போது அலைபேசியின் சிணுங்கியதால் கடுப்பு அடைந்த பாலசந்தர்  , ”யாரடி,  பூசையில் கரடி போல் நுழைவது?” என்று கத்தினான்.   கணவனின் அன்பு பிடியிலிருந்து சிறிது விலகி பக்கத்திலிருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு, “பைரவி கிட்டேயிருந்து வந்திருக்கு” என்றவள், ”என்னடி இந்த வேளையிலே?” என்றாள்.   ”இந்த நேரத்தில் தொல்லைத் தருவதற்கு  மன்னிச்சுடு. வாட்ஸ் அப்பில் அந்தத் தடியன் வாசு ’என்னைப் பிடிச்சுருக்கான்னு’ கேட்கிறான்?”  “ நீ என்ன பதில் சொன்னாய்?” ”நான் பதில் சொல்லாமல் வெளியே வந்துட்டேன்”. “நான் இப்போ விரிவா பேச முடியாது. நாளைக் காலை தொடர்பு கொள்” என்று அலைபேசியை அணைத்தாள். அவளை அணைத்த பாலசந்திரனின் அன்பு பிடியில் கட்டுண்ட அவள் தன்னை மறந்தாள். அவ்விருவரும் இரவை இன்பமாய் கழித்தனர்.   அடுத்த நாள் காலை பைரவி அலுவலம் சென்றதும் முதல் வேலையாக அலைபேசியில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேனேஜர் வந்ததை அவள் கவனிக்கவில்லை. ”வந்தவுடனே வாட்ஸ் அப் ? முதலிலே வேலையைக் கவனியுங்க” என்று மேனேஜர் அவளைக் கடிந்து கொண்டார்.  ”சாரி சார்” சிரித்துக் கொண்டே சொன்ன  பைரவி வேலையைச் செய்ய தொடங்கினாள். மேனேஜர் வெளியே போயிருந்த சமயம். சுமார் பதினோரு மணி இருக்கும். பைரவி அலுவலகத்தில் மாடியில் இருக்கும் அறைக்குச் சென்றாள். அங்கு யாரும் வரமாட்டார்கள். மதியம் சாப்பிடுவதற்கு வசதியாய் ஒரு மேஜையும் நான்கு நாற்காலிகளும் போடப்பட்டிருக்கும்.  அங்குப் போய் பூரணியுடன் அலைபேசியில் பேசினாள்.   ”என் கணவர் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்.” என்றாள் பூரணி  . ”சாரிடி, அந்தத் தடியன், என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. நான் கடிகாரத்தைப் பார்க்காமல் உன்னைக் கூப்பிட்டு விட்டேன். அப்புறம்தான் என் தவற்றை உணர்ந்தேன்.” ”பரவாயில்லை. உன்னை நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.. நீ என்னுடைய உயிர்த் தோழியில்லையா? உனக்காக நான் எதுவும் செய்வேன். ”நேற்று இரவு நீ செம மூடிலே இருந்தபோது    சங்கடம் கொடுத்தற்கு வருந்துகிறேன்”. அதுக்கப்புறம் ’ததிங்கிண தொம் தக ததிங்கண தொம் தக திகு ததிங்கணதொம் தொடர்ந்ததா?” சிரித்துக்கொண்டே கேட்டாள் பைரவி.  அவள்  எப்பவும்  ஜாலியாய் பேசுவாள்.  . ”உக்கும். நான் சொல்ல மாட்டேன்.” நாணத்துடன் சிணுங்கினாள் பூரணி. . பூரணியும்  பைரவியும் முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். பச்சை நிற கண்கள் பூரணியைத் தனியாய் காட்டும்.  பூசினாற் போல் இருப்பாள். கணவன் சொல்லைத் தட்டாத பதிவிரதை.  அவளும்  ஈரோடில்தான் இருக்கிறாள் என்பதால் தோழிகள்  இருவரும் மனம் விட்டுப் பேசுவார்கள். பைரவி தனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் பூரணியிடம்தான் சொல்லி ஆறுதல் அடைவாள். வழி கேட்பாள். ” அவன் லொள்ளு தாங்க முடியலே. அந்தப் பொறுக்கிக்கு என்ன பதில் சொல்றது ?” என்று பைரவி கேட்டாள். ”ஆண்கள் பலவிதமாய் இருப்பார்கள். எல்லோரையும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. சில  கயவர்களும் இருப்பார்கள்.  அடுத்தவன் பெண்டாட்டியிடம் ’என்னைப் பிடிச்சிருக்கான்னு’ கேட்கிறவன் எப்படி நல்லவனாய் இருக்க முடியும் ?  ஆண்களிடம் வாட்ஸ் அப்பில் அதுவும் இரவு நேரத்தில்  சேடிங் செய்யாதே என்று முன்பே சொன்னேன். நீ கேட்க மாட்டேன் என்கிறாயே”. ”சும்மா விளையாட்டுக்குத்தான் சேட்டிங் செய்கிறேன்.  நான் எப்போதும்  பொதுவாகத்தான் பேசுவேன்.  அவர்கள் அத்து மீறுகிறார்கள் என்று உணர்ந்தால் நான் வாட்ஸ் அப்பை விட்டு வெளியே வந்து விடுவேன். ஒரு சிலரைத் தவிர எல்லா ஆண்களும் பெண் என்றால் வழிகிறார்கள்”. ” ’வாட்ஸ் அப் என்னும் புதைகுழியில் நீ நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாய் பைரவி.  அதிலிருந்து நீ வெளியே வந்தால்தான் எனக்கு நிம்மதி.  பெண்கள் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் சாமர்த்தியத்துடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும். கொஞ்சம் இடம் கொடுத்தால் ஆண்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.அந்த ஆளின் நட்பைத் துண்டித்து விடு.”. ”அப்படியே செய்கிறேன் பூரணி” “இன்னொரு விஷயத்தையும் உன்னிடம் சொல்ல வேண்டும்”. ”சொல்லு பைரவி” ”என் நண்பர் ஒருவருக்கு நான் விளையாட்டுத்தனமா இரவு படுக்க போவதற்கு முன்பு ’குட் நைட் மெசேஜ்’ அனுப்பினேன். அடுத்த நாள் எனக்கு உடம்பு சரியில்லைதாதலால் நான் மருத்துவமனைக்குச்சென்றேன். டாக்டர் எனக்கு மாத்திரை கொடுத்திருக்கலாம். அவர் என்னை மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டு  நர்ஸிடம் சலைன் வாட்டர் கொடுக்க  ஏற்பாடு செய்யச் சொன்னார்.. நான் படுக்கையில் இருக்கும்போது  அவரிடமிருந்து பத்து முறைப் போன் வந்தது. குறுஞ்செய்தியில் என்னைப் பேச வேண்டாம் . நானே பேசுகிறேன் என்று அனுப்பியிருந்தார். மாலை ஆறு மணிக்குத்தான் அவர் என்னுடன்  பேசினார். எனக்கு நான் அனுப்பிய குட் நைட் மெசேஜை அவர் மனைவிப் பார்த்துவிட்டு சண்டைப் போட்டாள் என்றும் இனிமேல் வாட்ஸ் அப் மெசேஜ் எதுவும் தயவு செய்து அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். என்றன் அலைபேசியை என் வீட்டில் யாரும் பார்க்க மாட்டார்கள். அதுபோல் அவருடைய அலைபேசியையும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நான் நினைத்துத் தவறு செய்துவிட்டேன். இது எனக்கு ஒரு பாடம்.   ”அடிப்பாவி,, இன்னொரு குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி விட்டாயே. வாட்ஸ் அப்பில் நிறைய நண்பர்கள் வேண்டாம். ஆபத்து என்று சொன்னேன். நீ கேட்கல. என்றன்  காண்டக்டில் இருக்கிறார் என்று பெருமை பட்டுக் கொண்டாய்.  இப்போ பார் ! ஆபத்திலே கொண்டு வந்து விட்டிருக்கு. சில பெண்கள் தன் கணவனை தங்கள் உடைமை பொருளாகக் கருதுகிறார்கள். நல்ல காலம் , அவர் மனைவி உனக்குப் போன் செய்து உன்னிடம் சண்டை போடாமல் இருந்தாளே. அதுக்கு நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்” என்றாள் பூரணி . ”இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் பூரணி ”.என்ற பைரவி அலைபேசியைத் துண்டித்தாள். அன்று அலுவலகத்தில் பைரவிக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு ஏராளமான வேலை. அன்று இரவு வழக்கம்போல் ஒன்பது மணிக்கு மேல் வாட்ஸ் அப்பில் வாசுவை தொடர்பு கொண்டாள். ஐஸ்கீரிம் சாப்பிட்டு குழந்தையைப் போல் குதுகலித்த அவன் , ”ஹலோ” என்றான். பதிலுக்குஅவள் “ எப்படி இருக்கீங்க ” என்றாள். ”நேற்று பதில் சொல்லாமல் போய் விட்டாய்? என்னைப் பிடிச்சிருக்கான்னு நான் கேட்ட  கேள்விக்கு என்ன பதில்?” என்றான். ”என்னுடைய எல்லா நண்பர்களையும் எனக்குப் பிடிக்கும். என்னுடைய  எல்லா நண்பர்களுக்கும் என்னைப் பிடிக்கும்” என்றாள் குறும்புடன்.   உடனே அவனுடைய  வாட்ஸ் அப்பை விட்டு வெளியே வந்து விட்டாள். வேறு ஒரு நண்பருடன் சேடிங் செய்ய ஆரம்பித்தாள். வாசு அவள் கொடுத்து பதிலால் மகிழ்ச்சியடைந்தான். பைரவி தன்னை வெறுக்கவில்லை. நட்புடன் பேசுகிறாள். அவள் நட்பு வட்டத்துள் நானும் ஒருவன் என்று குதுகலமடைந்தான். அன்று  வாசு வெகுநேரம் அவளுடைய வாட்ஸ் அப் வருகைக்காகக் காத்திருந்தபிறகு ஏமாற்றத்துடன்  உறங்கிவிட்டான். **********       4. வாட்ஸ் அப்பால் வந்த ஆபத்து காலை எழுந்திருக்கும்போதே வாசு மகிழ்ச்சியுடனிருந்தான். அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்குச் சென்று விட்டான். அலுவலுகத்தில் அவன் கூட பணி புரியும் அவனுடைய செகரட்டரி காயத்ரி இன்னும் வரவில்லை.  கணினியில் ஒரு புரோகிராமை சரி செய்து கொண்டிருக்கும்போது அவள் அவனருகில்  வந்தாள்.. ”சார் இன்னைக்கு சீக்கிரமாய் வந்து அதிர்ச்சி கொடுக்கிறீங்க”. அவள் அவனைக் கலாய்ப்பாள்.  எவ்வித தயக்கமும் இல்லாமல் அவனுடன் பேசுவாள். அவனும் அவளுடைய அதிகாரி போல் இல்லாமல் தோழன் போல்தான் நடந்து கொள்வான். அவளைச் சீண்டுவான். வாசு அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவள் படுகவர்ச்சியாய் பார்ப்பவரை வசீகரிக்கும்  ஆடை அணிந்திருந்தாள். அழகுப் பதுமைபோல் இருந்தாள்.  சில பெண்களுக்கு தன்னை அழகுப் படுத்திக் கொள்வதில் மிகுந்த இன்பம். அதுவும் பிறர் தன்னைப் பார்ப்பது அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் கவனிக்காவிட்டால் கவலைப்படுவார்கள் காயத்ரியைப் போல. ”என்ன விஷயம் ? அழகி போட்டிக்குப் போகிறமாதிரி இன்று அலுவலகம் வந்திருக்கிறாய். லிப் ஸ்டிக் தூக்கலாய் இருக்கு “. ”அப்பவாது நீங்கள் என்னைக் கவனிக்கிறீங்களான்னுதான்”. வாசு கலகலவென்று சிரித்தான்.   ”அப்படி இருப்பதுதான்  என் இயல்பு. என்னுடைய  குணத்தை மாற்ற முடியாது.  ஆமாம் இது என்ன தோள் பட்டையில் கிழிச்சல் ?”. ”ஐயோ அது கிழிச்சல் இல்லை.பேஷன். என்னுடைய தோள் சந்தன கலரில்  அழகாய் இருப்பதை எல்லோருக்கும் காண்பிக்க வேண்டாமா?”. நல்ல பேஷன் !!  வீட்டில் உன் கணவர் எதுவும் சொல்வதில்லையா? அவர் எனக்கு ஆடை விஷயத்தில் முழுசுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவள் வாசுவிடம் மிகவும் தோழமையுடன் பழகினாள். அவனை விழுந்தது விழுந்தது கவனிப்பாள். அவன் சொல்லும் வேலையைப் உற்சாகத்துடன் செய்வாள்.  இரவு எட்டு மணி ஆனாலும்  வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுப் போவாள். நம்பி அவளிடம் வேலையைக் கொடுக்கலாம். அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தில் உள்ள உறவினர்கள் போல் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு ஜாலியாய் சிரித்துக் கொண்டு பொழுதைப் போக்குவார்கள்.. வாசு பைரவிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான். அப்புறம் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ”அதுக்கு பதில் வந்துவிட்டதா ?” என்று அலைபேசியில் பார்த்தான். இரண்டு நீல டிக்குகளை பார்த்தவுடன், அப்பாடா அவள் பார்த்து விட்டாள்” என்று நிம்மதியுடன்  பெருமூச்சு விட்டான். காயத்ரி ஒரு தோலிலான பையை அவன் மேசையின் முன் வைத்து, இன்னைக்கு வங்கியில் பணம் எடுத்து வர வேண்டும் என்றாள். ஆமாம் . இன்று தேதி ஐந்து அல்லவா ? ஊழியர்கள் எல்லாருக்கும்  மாத சம்பளம் கொடுக்க வேண்டும். சுப்பையா வந்தாச்சா. அவர் வந்ததும் நாங்க இரண்டு பேரும் போய் வங்கியில் பணம் எடுத்து வருகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ”போலாமா சார்” என்று கேட்டுக் கொண்டே சுப்பையா வந்து விட்டான். வாசு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் பணிபுரிகிறான். ஊழியர்களுக்கு மாதசம்பளத்திற்கு ரூபாய் ஆறு இலட்சம் வங்கியிலிருந்து எடுத்து வர வேண்டும். அதனால் வாசுவும் சுப்பையாவும் போய் எடுத்துவரக் கிளம்பினார்கள்.   அன்று வங்கியில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சீக்கிரமே பணத்தை எடுத்து விட்டு முதல் மாடியிலிருந்து இருவரும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். வாசு இடது கையில் தோல் பையையும் வலது கையில் அலைபேசியை வலது கையிலும் வைத்துக் கொண்டு சுப்பையா பின்னால் வர படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தான். தோல் பையில் ஆறு இலட்சம் பணமிருக்கிறது. வாசு அலைபேசியில் வாட்ஸ் அப்பில் பைரவியிடம் வந்த மெசேஜைப்  பார்த்துக்கொண்டே இறங்கினான். அப்போது படிக்கட்டில் மேலேறி வந்த ஒருவன் வாசுவின் கையிலிருந்த தோல் பையைப் பறித்துக் கொண்டு கீழே குதித்தோடி  வேகமாக ஓடினான். சுப்பையா, உரத்தக் குரலில், திருடன் ! திருடன்  ! என்று கத்திக்கொண்டே வேகமாகத் தாவினான். அவன் கைப் பட்டு வாசு கால் தடுக்கி கீழே விழுந்தான். பணப்பையைப் பறித்து ஓடியவன் வேகமாக கீழே இறங்கி அங்கே இரண்டு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து தயாராய் காத்துக் கொண்டிருந்த ஒருவன் வண்டியில் ஏறி  உட்கார்ந்ததும்  அது பறந்தது.   சுப்பையா ஓடி வந்தவன் அங்கு பைக்கில் வந்த ஒருவனிடம், “ அந்த வண்டியை பாலோ பண்ணுங்கள் அவன் பணத்தைத் திருடிக் கொண்டு ஒடுகிறான்” என்று கெஞ்சிக் கேட்டு  அவனுடைய பைக்கில் அமர்ந்து முன்சென்ற வண்டியைத் தொடர்ந்தான். பைக் பயங்கர வேகத்தில் போய் இரண்டு சக்கர வாகனத்துக்கு முன் பிரேக் போட்டு நின்றது . சுப்பையா பின் சீட்டில் உட்கார்ந்த ஆளிடம் இருந்து தோல் பையை பிடுங்கிக் கொண்டான். அவன் போட்ட சப்தத்தில்  பொது ஜனங்கள் கூடி விட்டார்கள் . அவர்கள் திருடர்கள் என்று அறிந்ததும் அவர்களை நன்கு மொத்தினார்கள். சுப்பையா பணப்பையுடன் வங்கிக்குத் திரும்பினான். வாசு காலில் அடிப்பட்டு வலியுடன்  காத்திருந்தான். ”காலில் நல்ல அடியா சார்” என்று சுப்பையா கேட்டான். ”பலமான  அடியில்லை. நீ துடிப்புடன் செயல்பட்டதால் பணம் கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால் போலீஸ் புகார் என்று நாம் அலைய வேண்டியதிருக்கும். எல்லாம் உன்னால்தான் ....  உன் சாகச செயலை  மேனேஜரிடம் சொல்கிறேன்”. ”நான் ஒண்ணுமே பண்ணல.  நீங்கள் என்னுடன் இருப்பதே எனக்குப் பலம்.  உங்களுக்கு வலிக்கிறதா?” லேசா சிராய்ச்சிருக்கு அவ்வளவுதான். மருந்து போட்டால் சரியாகி விடும் . நல்ல காலம் , ஃபிராக்சர் எதுவுமில்லை என்று சந்தோஷப்பட்டான் வாசு. அவர்கள் அலுவலகம் வந்ததும் ஊழியர்கள் அனைவரும் அந்தத் திருட்டைப் பற்றிப் பேசினார்கள். பணம் கிடைத்து விட்டது என்று சந்தோஷப்பட்டார்கள். வாசுவின் காலில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்து மிகவும் பதறிப்போன  காயத்ரி,”முதலில் டாக்டரிடம் போய் மருந்து போட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் செப்டிக் ஆகிவிடும்” என்று கரிசனத்தோடு கூறினாள். வாசு மருத்துவ மனைக்குச் சென்று காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டான்.”எல்லாம் வாட்ஸ் அப்பால் வந்த ஆபத்து” என்று நினைத்துக் கொண்டான்.                             **********               5. எனக்குப் பிடிக்கல வாசுவை தன்னுடைய வாட்ஸ் அப் காண்டாக்ட்லிருந்து பைரவி  எடுத்து விட்டாள். இனிமேல் அவன் அவளிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள முடியாதபடி செய்து விட்டாள். அவன் அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான். முடியவில்லை. அவளுடன் முன்பு அலைபேசியில் பேசியது அவன் நினைவுக்கு வந்தது. ”ஞாயிற்றுக் கிழமை உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா? நீங்கள் எப்போது ஃபிரியாக இருப்பீர்கள் ? ” என்று கேட்டதிற்கு  அவள், “நான் ஞாயிற்றுக் கிழமை எப்போதும் ஃபிரிதான். காலையில் மட்டும் கொஞ்சம் நேரங்கழித்து எழுந்திருப்பேன். நீங்க எப்போ வேணுமானாலும் காண்டக்ட் பண்ணலாம்.” என்றாள். அப்படிச் சொன்னவள் எப்போதுமே போனை எடுக்க மாட்டேன் என்கிறாள் என்று வருந்தினான்.   மறுநாள் எப்படியும் பைரவியிடம் பேசிட வேண்டும் என்று வாசு அலைபேசியில் முயற்சி செய்தான். மாடியில் ஒரு பைலை எடுக்கச் சென்ற பைரவி அலைபேசி எண்ணைச் சரியாகப் பார்க்காமல் பேசத் தொடங்கினாள். வாசுவின் குரலைக் கேட்டதும் ”நான் நம்பரை சரியாகப் பார்க்கவில்லை. உங்க கிட்டேயிருந்துதான்னு போன் என்று எனக்குத் தெரியாது “. ”மூன்று நாட்களாக உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ரொம்ப பிஸியா?” என்றான் வாசு. ”மாடிக்கு வந்தேன். அலைபேசியில் எண் சரியாகத்தெரியவில்லை.” எண் சரியாகத் தெரிந்திருந்தால் எடுத்திருக்க மாட்டேன் என்பதை மறைமுகமாக அவள் சொல்கிறாள் என்பதை அந்த அப்பாவி உணரவில்லை. ”அன்று வாட்ஸ் அப்பிலிருந்து திடீரென்று சொல்லாம போய்விட்டீர்களே . நான் ரொம்ப நேரம் காத்திருந்தேன்” என்றான். ”நீங்க போய் விட்டிருப்பீங்கன்னு   நினைச்சேன்” என்றாள். அவ்வளவுதான் அவள் அதற்கு மேல் பேசவில்லை. அதன் பிறகு வாசு அலைபேசியில் பலமுறை அவளுடன்  தொடர்பு கொள்ள முயன்றான். அவள் எடுக்கவில்லை. அவன் விடுவானா? இன்னொரு அலைபேசியிலிருந்து தொடர்பு கொண்டான். அவன் குரலைக் கேட்டதும் மெளனமே அவள் பதிலானது. குறும்செய்தி, மின்னஞ்சல், முகநூல் ஒன்றைக்கூட அவன் விடவில்லை. வெற்றி அவன் பக்கம் வராமல் அவனுக்கு எதிர் திசையிலியே  இருந்தது. என்ன செய்தும் அவளுடைய மெளனத்தைக் கலைக்க அவனால் முடியவில்லை. ”பைரவி ஏன் என்னை ஒதுக்கி விட்டாள் ?. அவள் எதற்காக என்னை வெறுக்கிறாள் என்பது தெரியவில்லை.  நான் ஏதோ. தவறு செய்து விட்டதால்தான் அப்படி அவள் நடந்து கொள்கிறாள் போலத் தெரிகிறது.  என்று நினைத்த அவன்,  அவளிடம் நேராகப்போய் மன்னிப்பு கேட்டுவிட வேண்டுமென்று  முடிவு செய்தான். அவன் இருப்பதோ கோவையில். பைரவி இருப்பதோ ஈரோடில். அதிக தூரமில்லையே.. இன்று நான் அலுவலகம் வந்தாலும் வருவேன் என்று அலுவலக மேனேஜரிடம்  சொல்லிவிட்டு பேருந்தில் ஏறி ஈரோடை அடைந்தான். அவன் மனசு பரபரப்பாய் இருந்தது. பைரவி வேலை செய்யும் அலுவலகம் பற்றி ஏற்கனவே அவனிடம் சொல்லியிருக்கிறாள். அவன் அலுவலகத்தை அடைந்து வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம், , ”பைரவியைப் பார்க்க வேண்டும்” என்றான். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு , ”நீங்க யாரு ? என்ன விஷயமாய் பைரவியைப் பார்க்க வேண்டும் ?” என்றாள். ”அவங்க எனக்குத் தெரிஞ்சவங்க. நான் கோவையிலிருந்து வந்திருக்கிறேன்.” ”கொஞ்சம் வைட் பண்ணுங்க. நான் சொல்லி அனுப்புகிறேன்”. அவள்  ஒரு ஆளிடம் சொல்லி அனுப்பி விட்டாள். அவன் நாற்காலில் உட்கார்ந்து அவளுக்காகக் காத்திருந்தான். பதினைந்து நிமிடம்  ஆயிற்று. பைரவி அவனிருக்குமிடம் வந்தாள். சிவந்த முகத்துடனும் செவ்விதழுடன் தங்கச் சிலையாய் பார்க்கத் தேவதை போல இருந்தாள். ”வ...ண...க்கம்”  முகத்தில் மகிழ்ச்சி பொங்க கைகூப்பினான் வாசு. அவனைப் பார்த்ததும் பைரவியின் முகம் பாறை போல் இறுகியது. அந்தச் சமயம் பார்த்து அவள் புடவையின் தலைப்பு தோள் மேலிருந்து வெட்கத்துடன் நழுவியது.. பெண்களுக்கே உரிய நாணத்துடன் புடவை தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு  அவனைக் கவனித்தாள். அவன் தலையை இடது புறம் திருப்பி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். பரவாயில்லை. இவனுக்கு இங்கிதம் தெரிந்திருக்கிறது. பெண்மையை மதிக்கிறான் என்று எண்ணியவள்,”என்ன விஷயம் ?” என்றாள். ”நான் அறிந்தோ அறியாமலோ அல்லது தெரிந்தோ தெரியாமலோ    தவறு செய்திருந்தால் என் பிழையை பொறுத்தருள வேண்டும். வாட்ஸ் அப்பில் உங்களுக்கு நான் மெசேஜ் போடமுடியாதப்படித் தடுத்து விட்டிருக்கீங்க. நீங்கள் எப்போது கடைசியாய் வந்தீர்கள் என்று வாட்ஸ் அப்பில் பார்ப்பேன். என்னைத் தடை செய்து விட்டதால் உங்கள் வாட்ஸ் அப் வருகையைப் பற்றி ஒன்றும் அறிய முடிவதில்லை.  அலைபேசியில் அழைத்தாலும் எடுப்பதில்லை. எனக்கு ஏன் இந்த உச்ச பட்ச தண்டனை ?”. ”எனக்குப் பிடிக்கல. அதனாலேதான்”. ”மன்னிச்சுடுங்க” .என்று பணிவுடன்  கேட்டும் என்னை மன்னிக்க மாட்டீங்களா ? நான் என்ன தவறு செய்தேன் என்று சொன்னால் நான் என் தவறை திருத்திக் கொள்கிறேன். மீண்டும் அந்தத் தவறை கண்டிப்பாகச் செய்ய மாட்டேன்”. ”நான் சொல்ல மாட்டேன்”. ”என்னைப் பார்த்தா அயோக்கினா தெரியறதா?” ”மனசுக்குள்ளே கயவனா இருந்தா எப்படி கண்டுப்பிடிக்கிறது?” ”பைரவி நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் . நம் நட்பு தூய்மையானது. உன்னைத் தோழியாகத்தான் நட்புடன் பார்க்கிறேன்: பழகுகிறேன். நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். நீ என் மனதில்  உயர்ந்த இடத்தில் இருக்கிறாய் என் நேசத்தை உனக்கு எப்படிப் புரிய வைக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை   ”பைரவி, பைரவி, தயவு செய்து ... “ என்று கெஞ்சினான். என்னைப் ’பொறுக்கி’ என்று வேண்டுமானாலும் திட்டிவிடு. மெளனமாக இருந்து என்னைக் கொல்லாதே. “ கண்களில் கோபம் மின்னப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். ” உளராதீங்க.” நான் சொல்றதை...” எல்லாம் கேட்டாச்சு. இனிமேல் என்னைப் பார்க்க வராதீங்க” என்று வெறுப்புடன்  சொல்லிவிட்டு  அவள் அறைக்குப் போய் விட்டாள். . இடி விழுந்தது போல் தலையில் கையை வைத்து அவன் வரவேற்பறையில் அமர்ந்தான். ஒரு பெண் ஆணை நிராகரித்து விட்டால் அதை ஒரு ஆணால்  தாங்க முடியாது. வாசு அதற்கு விதி விலக்கல்ல.  வாசுவைப் பொறுத்தவரை பைரவி காரணம் எதுவும் சொல்லாமல் அவனை நிராகரித்துவிட்டாள். எனக்கு என் எல்லா நண்பர்களையும் பிடிக்குமென்று சொல்லி விட்டு வாட்ஸ் அப் காண்டக்ட்லிருந்து விலக்கி விட்டால் அவள் மனதில்   இருப்பது  அவனுக்கு எப்படித் தெரியும் ? வாசு பைரவி மனசு மாற ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தான். மறுபடியும் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான். அவள் எடுக்கவில்லை.. .அவள் தன்னைக் காயப்படுத்தி விட்டாள். சே எல்லாப் பெண்களும் இப்படிதானா என்று நினைத்தான். . வெகுநேரம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான்,  அலைபேசி சிணுங்கியது. பைரவியிடமிருந்துதான் போன் வந்திருக்கும் என்று துள்ளியெழுந்து அலைபேசியை எடுத்தான், அவனுடைய அலுவலகத்திலிருந்து காயத்ரி போன் செய்தாள்  அவனை உடனே வரச்சொல்லி. கம்பெனியின் டைரக்டர் டில்லியிலிருந்து வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கணும்ன்னு சொல்றார் என்றாள்.  மதியம் வருகிறேன் என்று சொல்லி விட்டு அவ்விடத்தை  விட்டு உடனே கிளம்பினான். கிளம்பும்போது பைரவியிடம் சொல்லிவிட்டுப் போகலாமென்று  ரிஷப்ஷன் அருகில் சென்று பைரவி எங்கே? நான் சொல்லிவிட்டுப் போகிறேன். அவங்க வரமாட்டாங்க என்றவளிடம் , ”பைரவியிடம் சொல்லி விடுங்கள், நான் வருகிறேன்” என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். கோவைச் செல்லும் பேருந்தில் ஏறினான். பயணச்சீட்டு வாங்கி சன்னல் ஓரமாய் உட்கார்ந்து பைரவியைப் பற்றியே கோவை வரும்வரை யோசித்துக் கொண்டு வந்தான்.  உடைந்த மனசுடன் அலுவலகத்தில் வாசு நுழையும் போது நேரம் மாலை நான்கு  மணி. உடனே டைரக்டரைப் போய் பார்த்தான். ஒரு மணி நேரம் அவருடன் செலவழித்தான். அவர் கிளம்பியவுடன் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்து சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ”என்ன சார் உடம்பு சரியில்லையா ? என்னைக் கவனிக்காம சுவத்தை[ வெறித்துக் கொண்டிருக்கிங்களே” என்று கலாய்த்தாள் காயத்ரி. அவன் மனம் இன்னும் ஈரோடில்தான் இருந்தது. பைரவி என்று நினைத்து  காயத்ரியின் கைகளைப் பிடித்து, ‘ என்னை மன்னித்துவிடு” என்றான். ”என்ன சார் ஆச்சு உங்களுக்கு? என்றாள் காயத்ரி வியப்புடன். வாசு சுதாரித்துக் கொண்டு,”என் மனசே சரியில்லை. சாரி காயத்ரி” என்றான். ”வீட்டுக்குப் போய் ஓய்வு எடுங்க சார்.நல்ல நல்ல புத்தகம் ஏதாவது படியுங்கள்..” என்றாள் காயத்ரி கரிசனத்துடன். ”ரொம்ப தேங்க்ஸ் காயத்ரி. நா நல்லா தூங்கினா சரியாயிடும் ‘ என்று சொல்லிவிட்டு வாசு கிளம்பிவிட்டான். நடைப்பிணம் போல் தான் வீட்டுக்குள் நுழைந்தான். ********** 6. கண் கெட்ட பிறகு ... பைரவி, பூரணியிடம் வாசு வந்து தன்னைப் பார்த்ததைப் பற்றியும் அவனிடம் தான் நடந்து கொண்டதைப் பற்றியும் கூறினாள். ”எல்லாம் பாழாய்ப்போன இந்த வாட்ஸ் அப்பால் வந்த வினை. அவர்களுக்கு இடம் கொடுக்கும் நாமும் ஒரு காரணம். வாசுவைப் பார் உன் மேல் உள்ள சினேகத்தால் உன் அலுவலகத்துக்கே வந்து விட்டான். உன் வீட்டு முகவரி தெரிந்திருந்தால் அங்கும் வந்துவிட்டிருப்பான்.. ஆண்களிடம் பழகும்போது ஜாக்கிரதையாய் இரு” என்றாள். ”நான் நெருப்புன்னு உனக்குத்தெரியாதா பூரணி? எனக்கு  யாரிடமும் நெருங்கிய சினேகிதம் கிடையாது. நலமா? எப்படி இருக்கீங்க? என்று கேட்பதோடு சரி. நட்புக்கு எல்லைகோடு இருக்கிறது. அதைத் தாண்டி விட்டால் அதுக் காதலாகி  பிரச்சினையை உண்டாக்கி விடும். அதற்கு நா இடம் கொடுக்க மாட்டேன். எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் சிலர் மிகவும் மோசம்.. அதனால் நான் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பேன்”. ”நீ புரிந்து கொண்டால் எனக்கு மகிழ்ச்சி”. அன்று ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் காலையில் நேரம் கழித்து எழுந்தாள் பைரவி . எப்போதும் அவள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். ஞாயிற்றுக் கிழமை அவளும் மாமியாரும் சேர்ந்து சமையல் செய்வார்கள். அன்று நண்பர்கள் தினம் என்பதால் நூறு பேருக்கு மேல் வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தார்கள். அவள் பொதுவான மெசேஜ் ஒன்றை அனுப்பி அதன் மூலம் எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்பினாள். அவளுக்குச் சரவணன் என்னும் நண்பரிடமிருந்து போன் வந்தது. முன்பு ஒரு முறை அவன், நீ குணத்தாலும், பணத்தாலும் கோடீஸ்வரி என்று செய்தி அனுப்பியிருந்தான்/ பைரவி பதிலுக்கு நான் குணத்தில் கோடீஸ்வரி. பணத்தில் இல்லை என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பினாள். அவனும் விடாமல் நீங்கள் சீக்கிரம் பணத்தாலும் கோடீஸ்வரி ஆகிவிடுவீர்கள் என்று பதில் தந்தான். அவன் அடிக்கடி வாட்ஸ் அப்பில் ஏதாவது கேள்வி கேட்டு  லொள்ளு செய்யும் ஆள் என்பதால் அவனை அவளுக்குப் பிடிக்காதென்பதால் அவள் அலைபேசியை எடுக்கவில்லை. ஐந்தாவது முறை வந்ததும் எரிச்சலடைந்தாள். சிறிது யோசித்துவிட்டு   அலைபேசியில் இருக்கும் குரல் மாற்றும் செயலியை உபயோகித்து ’ஹலோ’ என்றாள். அந்தப் பக்கம் சரவணுக்குக்கு ஆண் குரலில் ’ஹலோ’ என்று கேட்டதும் பதில் பேசாமல் போனைத் துண்டித்து விட்டான். பூரணியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொன்னாள். ”அடிக்கள்ளி ! குறும்புக்காரிடி நீ ! ! “ என்றாள் பூரணி பைரவி ஒரு நாள் காலை வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவளுக்குக் கண் வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாததால் உடனே கண் டாக்டரிடம் போய் காண்பித்தாள். டாக்டர் கண்ணைப் பரிசோதித்து விட்டு,“வாட்சஸ் அப், முகநூல் பார்ப்பீர்களா?” என்று கேட்டார். ”எப்பவாது பார்ப்பேன்” என்று பொய் சொன்னாள்.  ஸ்மார்ட் போனிலிருந்து வெளிவரும் நீல கதிர்கள் உங்கள் கண்ணைப் பாதித்து விட்டன. உடனே கண்ணில் அறுவை சிகிட்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கண் பார்வை போய் விடும்” என்று டாக்டர்  சொன்னதால் அம்மாவை  உடனே வரச்சொன்னாள். விஷயம் தெரிந்து அம்மா மருத்துவமனை வந்தாள். , ”நான் அடிக்கடி உன்னிடம் வாட்ஸ் அப் ரொம்ப நேரம் பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன். நீ கேட்கல. இப்போ  கண் கெட்ட பிறகு ... என்பதுபோல்  வாட்ஸ் அப்புக்கு விடை கொடுத்துடு” என்றாள். ” அம்மாவிடம் பூரணிக்குப் போன் செய்து தான் ஆஸ்பத்திரியில் இருக்கும் விஷயத்தைச் சொல்லி உடனே வந்துப் பார்க்கும்படிச் சொல்லச்  சொன்னாள் பைரவி. பைரவியின் அம்மாவும் போன் செய்து பூரணியிடம் பேசினாள். ”தன் கணவர் வந்தவுடன் உடனே வருகிறேன்” என்றாள் பூரணி.                                  **********  7.எப்படியாவது போகட்டும் ! ! மொபைல் போன் வந்தவுடனே பூரணி உடனே போய் பைரவியைப் போய்ப் பார்க்க வேண்டுமென முடிவு செய்தாள். . அவள் கணவர் பாலசந்தர்  சாயந்தரம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் போய் பார்க்கவேண்டுமென நினைத்தாள். பூரணி எல்லா வேலையையும் முடித்து விட்டு யூடியுபில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது மதியம் மணி இரண்டு. அப்போது  காலிங் பெல் சப்தம் கேட்கவே யாரென்று போய்க் கதவைத்திறந்தவள் திகைப்புடன்,” நீங்களா?” என்று வியந்தாள். . வந்தது பாலசந்தர் . “ தீடிரென்று சீக்கிரம் வந்து விட்டீர்கள் ? உடம்பு சரியில்லையா ? இன்று இரவு  நான் ஊட்டிப்போக வேண்டும் அதனால்தான் சீக்கிரம் வந்துவிட்டேன். ”நீங்கள் வந்தது ஒரு விதத்தில் நல்லதாயிற்று. பூரணி ஆஸ்பிடலில் இருக்கிறாள். அவளுக்குக் கண் அறுவை சிகிட்சை இந்நேரம் முடிந்திருக்கும். என்னை ஆஸ்பிட்டலில் கொண்டுபோய் விடுங்கள்” என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்ட பாலசந்தர்  சிறிதுகூட கவலைப்படாமல், ”அவ கிடக்கிறா. நீ வா என் என்று அவளை அப்படியே குண்டு கட்டாய் தூக்கி அவளைக் கட்டிலில் கிடத்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான். ”ஏங்க பைரவி ஆஸ்பிட்டலிலே இருக்கா . அவளைப் போய் பார்க்கணும். என்னை  விடுங்க”என்று பூரணி திமிறிக் கொண்டு எழுந்தாள். ”நான் இன்று இரவு  ஊட்டிக்குப் போகணும். திரும்பி வர நான்கைந்து நாட்கள் ஆகும்.பைரவியை நாளைக்குப் போய் பார்த்துக்கோ . இன்னைக்கு விட்டா .... .அதனால்தான் சீக்கிரம் வந்தேன்” என்றான்.  “அவள் நான் வராவிட்டால் தப்பாக எடுத்துக் கொள்வாள். தயவு செய்து என்னைப் போக அனுமதியுங்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன். போய் விட்டு உடனே வந்து விடுவோம் ” என்று கெஞ்சினாள் பூரணி . அவளின் வேண்டுகோளுக்கு பாலசந்தர் மசியவில்லை. அவளைக் கட்டிப் பிடித்து இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனுடைய முரட்டுப்  பிடியிலிருந்து வெளிவர  அவள்  முயற்சி செய்தாள்.. அவனைப் பிடித்துத் தள்ளினாள்.  அவன் கோபத்துடன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான் . பூரணிக்குத் தலைச் சுற்றியது. அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள். ” பைரவி எப்படியாவது போகட்டும் . நான் சொல்றதை நீ கேட்காவிட்டால் உன்னைக் கொன்னுடுவேன்” என்று கத்தினான். அவளால் அவனை மீறி அந்தத் தருணத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. பூரணி வருவாள் என்று காத்திருந்தாள் பைரவி. வெகுநேரம் ஆகியும் அவள்  வரவில்லை. ”ரொம்ப நேரம்  காத்திருக்க முடியாது” என்ற டாக்டர் பைரவியின் கண்களுக்கு அறுவை சிகிட்சை செய்து விட்டார். பூரணி உம்மென்று இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை . பூரணியின் கணவர் தான் போகவிருந்த பயணத்தில் திடீரென்று ஒரு மாற்றம் செய்தான். அன்று இரவு  அவர் ஊட்டிக்குக் காரில் செல்லும்போது வரமாட்டேன் என்று  கதறியும்  பூரணியை தன்னோடு அழைத்துச் சென்று விட்டான்.” சாரி பைரவி நான் வரவேண்டுமென்றுதான் பார்த்தேன். ஆனால் என் கணவர் ஒத்துழைக்கவில்லை. நான் நேரில் பார்க்கும்போது எல்லாவற்றையும் உன்னிடம் சொல்கிறேன்” என்று மனசுக்குள் நினைத்தாள். பூரணி தன்னை வந்து பார்ப்பாள் என்று பைரவி எதிர்பார்த்தாள். அறுவை சிகிட்சை ஆன அன்று அவள் மருத்துவ மனைக்கு வரவில்லை. மூன்று நாட்கள் ஆனபோதும் அவள் வந்து பார்க்கவில்லை. அவள் படுக்கையில் படுத்திருந்தாள். அவள் அம்மாதான் வேளா வேளைக்குக் கண்ணுக்கு மருந்து போடுவாள் . ”உன் உயிர்த் தோழின்னு சொன்னாயே . அந்தப் பூரணி ஒரு முறை கூட வந்து பார்க்கல. அவளை நீ ரொம்ப அந்நோன்யமாய்  நினைக்கிறாய். ஆனால் அவ செய்யறத பார்த்தாயா. உன்னைப் பார்க்க வரல”. ”அம்மா அவள் நல்லவதான். ஊரிலே இருக்கிறாளோ என்னவோ தெரியல. அவளுக்குத் என் அறுவைசிகிட்சை பற்றித் தெரிந்தால் உடனே வந்து பார்த்திருப்பாள்”. ”நல்லவளா இருந்தா உடனே வந்திருக்கு வேண்டும். நீ வெள்ளேந்தியா இருக்கே. அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்” என்றாள் அம்மாவின் வார்த்தைகள்  பைரவியின் மனசில் பூரணியைப் பற்றி தவறான எண்ணத்தை உண்டாக்கி விட்டன. . பைரவிக்கு அம்மா சொல்வது சரி என்று  தோன்றியது. ”உயிர்த் தோழி என்று நினைத்தேன் என் அந்தரங்க விஷயம் எல்லாம் அவளிடம் பகருவேன்.. என்னை வந்து பார்க்க முடியாதபடி அவளுக்கு என்ன முக்கியமான வேலை. நட்பு என்பது இதுதானா? சே, அவளைப் போய் என் உயிர்த் தோழி என்று நினைத்தேனே, ஆபத்து வரும் சமயத்தில் தான் நட்பைச் சோதிக்க முடியும் போலிருக்கிறது. அவளது புத்தி தெரிந்து விட்டது.  நான் ஒரு முட்டாள். இனிமேல் அவளுடன் நெருங்கிப் பழகக் கூடாது ”என்று எண்ணினாள். பூரணி எத்தனையோ உதவிகளைப் பைரவிக்குச் செய்திருக்கிறாள். காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்ற வள்ளுவரின் வாக்கு  பைரவிக்கு ஞாபகம் வரவில்லை. பூரணி  ஆஸ்பத்திரிக்கு வந்து தன்னைப் பார்க்காததுதான் அவளுக்குப் பெரிய குற்றமாகத்தோன்றியது.                                    **********    8. கல்  கனியானது பைரவியின் மாமியார் ஒரு தட்டில் நான்கு இட்லி ,ஒரு கிண்ணத்தில் சட்னியை வைத்து அவளுக்குச் சாப்பிட கொடுத்தார். அவள் சாப்பிட்டு விட்டு கையைக் கழுவினாள்., மேசை மீதிருந்த தட்டை அவள் மாமியார் எடுத்துச் சென்றார். பைரவி சிந்தனையில் ஆழ்ந்தாள். சாதாரணமாய் நாம் ஒரு செயலைச் செய்யும்போது அது நமக்குச் சரியானதாய் தோன்றும். நம் கண்ணில் குறை எதுவும் தெரியாது. மற்றவரின் செய்கை நமக்குக் குறையுள்ளது போல் தோன்றும். பூரணி செய்தது தவறு என்று பைரவிக்குத் தோன்றியது. பூரணிக்கு பைரவி செய்தது சரியில்லையென்று தோன்றியது. பூரணி நெருங்கியத் தோழியானத் தனக்குக் கொடுக்க வேண்டிய முக்யத்வத்தைக் கொடுக்கவில்லை என்று பைரவி  வருந்தினாள். ”அவள் ஒரு போன் போட்டாவது என் நலத்தை விசாரித்திருக்கலாம். பாவி எதுவும் செய்யவில்லை. கேட்டால் சந்தர்ப்பம் சரியில்லை. அதனால்தான் வந்து பார்க்கவில்லை என்கிறாள் நான் என்னத்தைச் சொல்ல?” என்று நினைத்தாள். அப்போது அவளுக்குத் திடீரென்று வாசுவின் ஞாபகம் வந்தது.  தான் வாசு விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ எண்ணம் அவ மனசை உறுத்தியது.  ”வாசு  நாய் மாதிரி  என் பின்னால்  வந்தான். அவனிடம் சிறிது கடினமாக நடந்து கொண்டு விட்டோமோ என்று நினைத்தாள். முதலில் என் அழகை அவன் பாராட்டியபோது அவனுக்குத் ’ தேங்ஸ் ’ என்று சொன்னேன். அது நான் செய்த பிசகு.  அடிக்கடி அவன் போன் செய்ததால்  அவனை எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. ஆனால் அதை உணர்ந்து மன்னிப்புப் கேட்டுக் கொள்வதும், தவறை சரி செய்ய முயல்வதும் நல்ல மனிதருக்கு அடையாளம். ”அவன் என் அழகை வர்ணித்தான். என்னிடம் பேச  அடிக்கடி அலைபேசியில் தொடர்பு கொண்டான். அது  எனக்குப் பிடிக்கவில்லை. காரணத்தைச் சொல்லி அவனைத்திட்டி இருக்கலாம். நானோ  காரணத்தை அவனிடம்  சொல்லாமல் மறைத்துவிட்டேன் . அது நான் செய்த தவறு ” என்னும் ஓலக்குரல் அவள் நெஞ்சில் எழுந்தது. ”எதையும் வெளிப்படையாய், நேர்மையாய்  சொல்லி விட்டால் புரிதல் நன்றாக இருக்கும். அவனிடம் எதுவும் சொல்லாமல்  மெளனமாய் இருந்து என் கோபத்தைக் காட்டினேன். என் மனசில் இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும் என்பதை நான் உணரவில்லை. வாசு. உன்றன்  சங்காத்தமே எனக்கு வேண்டாம் . ஆள விடு என்று சொல்லிவிட்டிருந்தால் வம்பே இல்லை. நான் அந்த மாதிரி சொல்லவில்லை. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விட்டதும் என்  தவறு என்பதை  இப்போது  புரிந்து கொண்டேன். அவன் மனசைப் புண் படுத்தி விட்டோமோ என்னும் எண்ணம் அவளுக்குள் ஏற்பட்டது. ”குறை இருந்தாலும் பொறுத்துக் கொள்வதுதான் நல்ல நட்புக்கு அடையாளம். அப்படிச் செய்யாமல் போட்டுக் கொடுப்பதோ அல்லது காலை வாரி விடுவதோ அல்லது குழி பறிப்பதோ நட்புக்கு எதிராகிவிடும்.. இந்த உலகில்  தவறு செய்யாதவர் யார் இருக்கிறார்கள்? ஏன் நான் தவறு செய்யவில்லையா? ஒருவரிடம் அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை. துவேஷம் காட்டக்கூடாது என்பதை அறியாமல் அவனிடம் துவேஷத்தைக் காட்டினேன். பகை, பொறாமை, துவேஷம் கோபம் இவற்றையெல்லாம் விட்டு விட்டு அன்பு, பாசம், நேசம் கரிசனம் ஆகியவற்றை மனதில் நிரப்பிக் கொள்வேன்” என்று எண்ணினாள். அவனைப் போனில் கூப்பிட்டு மன்னிச்சேன் என்று சொல்லி விடுவது நல்லா இருக்குமென்று அவளுக்குத் தோன்றியது. இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என்றும் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். வாசு என்றாலே வெறுக்கும் அவள் மனம் அவனுக்காக வருத்தப் பட்டது. அவளுடைய உணர்வுகள் கிளறப் பட்டு மனசில்  சலனத்தை ஏற்படுத்தியது.   அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று எண்ணினாள்.  எப்படியோ  இதுவரை  கல்லாக இருந்த அவள் மனம் இப்போது கனியாகி விட்டது. **********   9. முகநூலில்  நேரடி ஒலிபரப்பு அவனுக்கு மனசில் வலி இன்னும்  ஆறவில்லை. பைரவி தன்னை அலட்சியப்படுத்திவிட்டாள் என்று நினைத்து மனம் நொந்தான். உளநல ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லை. மனவழுத்தத்திலிருந்து  விடுபடவேண்டுமானால் தற்கொலைதான் வழி என்று முடிவெடுத்தான்.  எப்படி உயிரைப் போக்கிக் கொள்ளலாமென்று யோசித்தான். அவன் மனசில் உடனே தோன்றியது தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு சுலபமாக உயிரை விட்டு விடலாம் என்று அவனுக்குப் பட்டது. தன் முடிவைச் செயலாக்க மருந்து கடைக்குப் போக கிளம்பினான். தான் வசிக்கும் இடத்துக்கு அருகாமையில் இருக்கிற மருந்து கடைக்குப் போக வேண்டாம் . தூரத்தில் உள்ள கடைக்குப் போவதுதான் உசிதம் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் இரட்டை சக்ர வண்டியில் ஆர் எஸ் புரம் அடைந்தான் . அங்கிருந்து ஓட்டலில் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள மருந்து கடைக்குச் சென்றான். அவனுக்குச் சிறிது தயக்கமாய்தான் இருந்தது. ”என்ன சார் வேண்டும் ?” என்று கேட்டான் மருந்து கடைக்காரன். அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.  அப்போது தலையில் சுருள் முடியுடன் கூடிய ஒரு மூன்று வயது பையன் அவன் காலைப் பிடித்தான். யாருடைய குழந்தை என்று திரும்பிப் பார்த்தால் காயத்ரி புன்சிரிப்புடன் நிற்கிறாள். ”வாங்கச் சார் . இவன் என் பையன் பரத். நீங்க  எங்கே இந்தப் பக்கம்?”. என் வீடு எதிர் பக்கம்தான் இருக்கிறது. சன்னலிருந்து பார்க்கும்போது உங்களை மாதிரி தெரிந்தது . உங்களை என் வீட்டுக்குக் கூப்பிடலாமென்று ஓடி வந்தேன். ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு போங்கள். என் கணவரும் வீட்டில் இருக்கிறார், அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்”. வாசுவுக்கு எதிர்பாரத இந்தச் சந்திப்பு அதிர்ச்சையைக் கொடுத்தது. ”சகுனமே சரியில்லாதது போல் இருக்கிறதே. அச்சோ ! ! நான் போட்டத் திட்டம் போச்சு” என்று நினைத்தான், தலைவலியாய் இருந்தது . தலைவலிக்கு ஏதாவது மாத்திரை அல்லது  தைலம் வாங்கிப் போகலாம் என்று வந்தேன்” என்றான்.   ’வீட்டுக்கு வாங்க சூடா ஒரு காப்பி சாப்பிடுங்க , தலைவலி எல்லாம் பறந்து போய்விடும்’ என்றாள் புன்சிரிப்புடன். . அவன் வராவிட்டாலும் அவனை இழுத்துசென்று விடுவாள் போலிருந்தது. வேறு வழியில்லாமல் அவள் வீட்டுக்குச்  சென்று காபி சாப்பிட்டுவிட்டு தன் இருப்பிடம் அடைந்தான்.   முதல் முயற்சி தோற்று விட்டதால் அவன் மனம் தளர்ந்து விடவில்லை. இந்த முறையில் உயிரை மாய்த்துக் கொள்வதற்குக் கடவுளுடைய  விருப்பம் இல்லைபோல் இருக்கிறது. வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தான். எப்படியாவது தான் நினைத்ததை  வித்தியாசமாகச் செய்திட வேண்டுமென அவன் நினைத்தான்.  பைரவிக்கும் அதைத் தெரியப்படுத்த வேண்டுமென நினைத்தான்.  அவளைக் கடைசி முறையாய்  போனில் தொடர்பு கொள்ள முயன்றான். தொடர்பு கொள்ளும் எல்லைக்கு வெளியே உள்ளது அல்லது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று காதில் விழுந்தது. . கடிகாரத்தைப் பார்த்தான். அப்போது நேரம் இரவு ஒன்பது மணி. இந்த நேரத்தில் பைரவி கண்டிப்பாக முகநூலில் இருப்பாள். தான் செய்யப் போவதை நேரடி ஒளிபரப்பு செய்தால் அவள் பார்ப்பாள்  என்று அவனுக்குத் தோன்றியது.   “பைரவி, வாழ்க்கையில் யாரிடமும் துவேஷம் காட்ட வேண்டாம். வாழ்க்கையில் எல்லோரிடமும்  . அன்பைப்  பொழியுங்கள்... நான் உன் மனசைப் புண் படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடு.” என்று மானசீகமாக அவளுடன் பேசிவிட்டு பிறகு தான் நினைத்ததைச் செயல்படுத்த ஆரம்பித்தான். தன் கைப்பட ஒரு கடிதத்தையும் எழுதி மேசை மீது வைத்தான். துணி போடக்  கட்டியிருந்த நைலான் கயிற்றை எடுத்தான்., ” என்னுடைய முடிவுக்கு யாரும் காரணமில்லை  நான் உங்கள் எல்லாரிடமிருந்து விடை பெறுகிறேன் “ ஏன்று நேரடி அறிவிப்பு செய்தான். நைலான் கயிற்றை கட்டிலின் மீது ஒரு ஸ்டூலை போட்டு மேலேயிருந்த  ஃபேனில் கட்டினான்.  கயிற்றைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான். தன் இறுதி ஆசையை மனசில் நினைத்தான். பைரவி,  நீ  நீடுழி  வாழ் ! நான் இவ்வுலகத்தை விட்டே போகிறேன் “ என்று கூறி விட்டுத்  தன் காலுக்குக் கீழேயிருந்த ஸ்டூலை உதைத்தான். கயிறு அவன் நெஞ்சை இறுக்க, மூச்சு முட்டக் கண்கள் தெறிக்க அவன் உயிர் அவனை விட்டுப் பிரிவதை  முகநூலில் நேரடி ஒலிபரப்பில் பைரவியைத் தவிர  மற்ற  நண்பர்கள் பார்த்து அதிர்ந்தனர். அந்தச் சமயம் பைரவி படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சில் அலைபுரண்டு ஓடியது. வாசுவிடம்  பேச வேண்டுமென நினைத்து  கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். ஒன்பது அடித்து பதினைந்து நிமிடம். எல்லா நேரத்திலும் அனைத்து உண்மையையும் சொல்லக் கூடாது என்னும் கொள்கை உடையவள். இதுவரை அவனை அலைக்கழித்தது போதும்  உடனே போன் செய்து வெறுத்ததற்கான காரணத்தை சொல்லி அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்னும் எண்ணத்தில் தூரத்தில் இருந்த போனை எடுத்தாள்.  அவன்  போன் சிணுங்கியது கொண்டே இருந்தது. மூன்று முறை முயற்சி செய்தும் பலன் எதுவும் இல்லை. எப்போதும்   உடனே போனை எடுத்துவிடும் அவன் ஏன் போனை எடுக்கவில்லை?  என்பதறியாது திகைத்தாள். அடுத்த நாள் காலை செய்தித்தாளைப் படித்தவர்கள் மனத்தில், ’ யாராவது ஒருவர் கூட  ஏதாவது செய்து வாசுவின் தற்கொலையை தடுக்க ஏன் முயற்சி செய்யவில்லை’  என்னும் வினா எழுந்தது. ஊட்டியிலிருந்து திரும்பி வந்துவிட்ட பூரணியும் செய்தித்தாளில் விஷயத்தைப் படித்துவிட்டு அதிர்ந்தாள். தன் கணவரை நம்பிக் கொண்டிருந்தால் பயன் இல்லை என்பதை உணர்ந்த அவள் ஒரு ஆட்டோவைப் பிடித்து பைரவியின் இருப்பிடம் சென்றாள்,’ பைரவியைக் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள்.  “எப்படி இருக்கே பைரவி. வாசு பற்றிய விஷயம் கேள்விப்பட்டேன். உடனே பதைபதைக்க  ஒடி வரேன். நா ஊட்டிக்குப் போய் இருந்தேன். இன்று காலைதான் வந்தேன். உன் கண் அறுவை சிகிட்சை எல்லாம் நல்லா நடந்ததா ? என்னை மன்னித்து விடு . உன்னை முன்பே வந்து பார்க்க முடியவில்லை. என் கணவர்தான் அதுக்குக் காரணம். என்னை அவர் விடவில்லை. பைரவி அவளைப் பார்த்து முறைத்தாள். ”இவ செய்யறதையும் செய்துவிட்டு கணவர் மேல் பழியைப் போடுகிறாள் பார் . பொய் சொல்கிறாள்” என்று நினைத்த பைரவி,’எல்லாம் நல்லபடியாய் முடிந்தது. நீ வராததுதான் எனக்குக் குறை. போனிலாவது தொடர்பு கொண்டிருக்கலாமே’ என்றாள். “நானும் நிறைய முறை முயற்சி செய்தேன். எப்போது போன் செய்தாலும் அணைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்ற பதிலே வந்தது. அதற்குள் நான் ஊருக்குப் போய்விட்டேனா, என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்று காலை வந்ததும் உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டேன். வாசுவின் செயலால் உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே. கடவுள் கொடுத்து உயிரைப் போக்கி வாசு அவசரப்பட்டுவாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டான்,முட்டாள் ”. ”அவங்க அவங்க பிரச்சனையை அவங்க அவங்கதான் பார்த்துக்கணும்” என்று முகத்தில் அடித்த மாதிரி சொன்னாள். பூரணிக்கு முகம் சுருங்கி விட்டது. ”என் மேல் கோபமா?” பைரவி ”உன் மேல் கோபப்பட நான் யார் ?” ”நீ என் தோழி . நான் தப்பு செய்திருந்தால் நீ கோபப்படுவதில் தவறில்லை. நா தான் உண்மையைச் சொல்லிவிட்டேனே . என் கணவர் எனக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் நா என்ன செய்ய முடியும்? சொல்”. உடைந்த பீங்கான் கோப்பையை ஒட்டுவது கடினம். அது போல் விரிசல் விட்ட நட்பைப் பசைப் போட்டு ஒட்ட வைப்பது மிகவும் கடினம். ”ஆமாம் வாஸ்தவம்தான் . உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று கிண்டலாக சிரித்தாள் பைரவி. ” பைரவி மனம் மாறிவிட்டது பூரணிக்குப் புரிந்தது. நீ குழந்தை பைரவி. நீ ஒரு நாள் என்னைப் புரிந்து கொள்வாய். டேக் கேர் பைரவி. உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் தெரியப் படுத்து . நான் வருகிறேன் “ என்று சொல்லிவிட்டு பூரணி மனக்கிலேசத்துடன்   கிளம்பிய விட்டாள். ”நீயெல்லாம் ஒரு சிநேகிதி ! வந்துட்டா எதோ நேசம் இருக்கிற மாதிரி. மனசுக்குள்ளே இருக்கிறது ஒண்ணு, வாயிலே சொல்றது ஒண்ணு. அடிப்போடி சரிதான் ! ” என்று மனசுக்குள் நினைத்தாள் பைரவி.                                ********  10. வனிதையின் சங்கடம் பைரவி காலையில் எழுந்து குளித்து விட்டு நீல  வண்ண சேலையைக்  கட்டி நளினமாக  நாற்காலியில்  அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த சேலை அவள் மேனியின் வண்ணத்தை மேலும் மெருகூட்டியது. அவளுடைய கூந்தல் மயில் தோகை போல் முதுகில் படர்ந்திருந்தது. நெற்றியில் அழகாகக் குங்குமமிட்டு உச்சந்தலையிலும் குங்குமத்தை வைத்து மஹாலஷ்மியைப் போல் அதீத அழகுடன் இருந்தாள். செய்தித்தாளைப் புரட்டிய   அந்த அழகிய வனிதை திடுக்கிட்டாள். ” “யோசிக்காமல் செய்து விட்டானே. வாழ்க்கையில்  இடர் வந்தால் போராடி ஜெயிக்காமல் இப்படி அவசர முடிவு எடுத்து விட்டானே” என்று வருந்தினாள். அதனால்தான்  அலைபேசியில் பேச முயன்றபோது அவன் போனை எடுக்கவில்லை போலும். ஒருவேளை நான் தான் அவன் எடுத்து முடிவுக்குக் காரணமாய் இருப்பேனோ” என்று நினைத்தவள், சே, அப்படி எதுவும் இருக்காது என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். எதுவும் சாப்பிடாமல் அவனுக்காகத் துக்கம் அனுசரித்தாள். வாசுவின் அறைக்கு போலீஸ் வந்தது. தன் அவன் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு  அவன் அலைபேசியைச் சோதித்த  இன்ஸ்பெக்டர் அவனுக்குக் கடைசியாய் யாரிடமிருந்து போன் வந்திருக்கிறது என்று பார்த்து நம்பரை குறித்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து கிரைம் பிரான்ஞ் போலிஸ் இன்ஸ்பெக்டர் சாலினி விசாரணைக்காகப் பைரவியை அவள் வீட்டில் சந்தித்தாள்.. சாலினி போலிஸ் உடையில் செல்லாமல்  மஞ்சள் நிற புடைவை அணிந்து  மப்டியில்  இருந்தாள் . பைரவியை ஊடுரவி பார்த்து  மெல்லிய குரலில், ”என் பெயர் சாலினி. போலீஸ் இன்ஸ்பெக்டர். கோவையிலிருந்து என்றாள். அவள் சொன்னதைக்கேட்ட பைரவியின்  நெஞ்சம்   பகிரென்றது.  விதிர்விதிர்த்து மிரட்சியுடன் சாலினியைப்  பார்த்தாள். ” இன்ஸ்பெக்டர், இப்போதுதான் கண் அறுவை சிகிட்சை முடிந்தது நான் வீட்டில் இருக்கிறேன்.. அவனை எனக்குத் தெரியும் அவ்வளவுதான்.  நான் தற்சமயம் அவனிடம் பேசுவதில்லை. அவனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்கு ஒண்ணும் தெரியாது ” என்றாள் மனச் சஞ்சலத்துடன். ”உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்” . ” கேளுங்கள்” இன்ஸ்பெக்டர் “. ”அவன் உங்களுடன் எப்படி நடந்து கொண்டான்”. என்னைப் பொருத்தவரை கண்ணியமாகத்தான் நடந்து கொண்டான். என்னுடைய  வாட்ஸ் அப் காண்டாக்டில் முன்பு இருந்தான். இப்போது இல்லை “.   ” நானும் ஒரு பெண் என்பதால் உங்க உணர்வுகள் எனக்குப் புரிகிறது’ உண்மையை மட்டும் சொல்லுங்கள். போதும். அவனுடைய அலைபேசியைச் சோதித்ததில் நீங்கள்தான் வாசுவுக்குக் கடைசியாய் போன் செய்திருக்கிறீர்கள் என்று தெரிந்தது. அவன் போனை எடுக்கவில்லை என்பதால் மிஸ்ஸிடு காலாகத்தான் இருந்தது.  ”சொல்லுங்க பைரவி.  எதற்காக அவனுக்குப் போன் செய்தீர்கள்?”. ”அவன் என்னிடம் மன்னிப்பு கேட்க வந்தபோது நான் அலட்சியப் படுத்தி அனுப்பி விட்டேன். என் தவறை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்கத்தான் போன் செய்தேன். மேலும் அவனிடம் எதுவும் சொல்லாமல் அவனை நான் வாட்ஸ் அப்பில் பிளாக் தடை செய்துவிட்டேன். அதனால் போன் செய்து இனிமேல் என்னைத் தொந்தரவு செய்யாதே என்று சொல்வது இங்கிதம் என நினைத்தேன். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை.”. ”உயிர் போய்விட்ட நிலையில் அவனால் எப்படிப் பேச முடியும்? அவன் உங்களைப் பார்க்க வந்தபோதே நீங்கள் மன்னித்துவிட்டிருந்தால் அவன் தற்கொலையைத் தவிர்த்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது போகட்டும். உங்களுக்கும் அவனுக்கும் எப்படி  தொடர்பு எப்படிப் பட்டது ?” ” அவனை மதுரையில் ஒரு   புத்தகக்கடையில் முதன் முதலாகச் சந்தித்தேன். பின்பு வாட்ஸ் அப்பில் அடிக்கடி மெஜேஜ் பரிமாறிக்கொண்டோம். ஏனோ அவனை எனக்குப் பிடிக்கல. அதனால்  எங்களுக்குள் இருந்த நட்பு முறிந்து விட்டது. என்னைத் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்றான். அதற்கு எப்போதும்   நான்  இடம் கொடுக்கவில்லை. அவன் எண் வரும்போது நான் அலைபேசியை எடுப்பதைத் தவிர்த்தேன்.”. ”உங்கள் அலைபேசியைக் கொடுங்கள். நான் கேட்பது ஸ்மார்ட் போனை” ”அது என் அம்மாவிடம் இருக்கிறது. இருங்கள் என் அம்மாவை  எடுத்து வரச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு போன் செய்தாள். பத்து நிமிடத்தில் அவளுடைய ஸ்மார்ட் போன் வந்து விட்டது. சாலினி அந்தப் போனை எடுத்துப் பரிசோதித்தாள். வாட்ஸ் அப்பில் இருந்த பழைய மெசேஜ் எல்லாவற்றையும் நோக்கினாள். ”பைரவி, இதைச் சாட்சி பொருளாய் சமர்ப்பிக்க வேண்டும் ” போனைத்  தன்  ஹாண்ட் பேக்கில்   பத்திரமாய் வைத்துக்கோண்டாள். ”உங்கள் வாட்ஸ் அப்பை  பார்த்தால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பெண்கள் எப்போதும்  ஆண்களிடம் மிகவும்  ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இனிமேல் வாட்ஸ் அப்பில் ஆண்களிடம்  சேட்டிங் செய்வதைத் தவிர்க்கவும். இதை ஒரு இன்ஸ்பெக்டராகச் சொல்லவில்லை. உங்களைச் தோழியாக, சகோதரியாக நினைத்துச் சொல்லுகிறேன். ”. ”இனிமேல் சேடிங் செய்வதையே தவிர்க்கிறேன் மேடம். நான் இந்த மாதிரி தொந்தரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு இது பெரும் அதிர்ச்சியாய்தான் இருக்கிறது. ”பைரவி, இயற்கைக்குக் கூட  ஒழுங்கும் நெறிமுறைகளும் இருக்கின்றன, அப்படி இருக்கும்போது நாம் சில    நெறிமுறைகளுடன் வாழ வேண்டும்.  எப்படியும் வாழலாம் என்று  வாழக் கூடாது. ”நான் என் தவறை உணர்ந்து விட்டேன். இனிமேல் ஜாக்கிரதையாய் இருப்பேன்” ”அதிக ஆசையினாலோ அல்லது முட்டாள்தனத்தாலோ சில தவறுகளை நம்மை அறியாமலே செய்து விடுகிறோம். நாம்  ஜாக்கிரதையாய் இருந்து சின்ன சின்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும்”. ”அவன் தற்கொலை செய்து கொண்டால் நான் என்ன செய்ய முடியும் இன்ஸ்பெக்டர் . நான் அவனைக் கொல்லவில்லையே.” . ”துப்பாக்கி இல்லாமலேயே ஒரு பெண் மெளன ஆயுதத்தின் மூலம் ஒரு ஆணைக் கொன்று விடலாம்.  வாசு தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று கைப்பட எழுதி வைத்துவிட்டதால் நீங்கள் தப்பித்தீர்கள். நான் கிளம்புகிறேன்” என்று எழுந்தாள். பைரவி வாசல்வரை வந்து இரு கரங்களைக் கூப்பி விடை கொடுத்தாள். இன்ஸ்பெக்டர் தெருவில்  போவதைப் பார்த்துக்கொண்டிருந்த பைரவி, ”தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்பது போல் வந்த இடர்    நீங்கியதை  நினைத்து ”அப்பாடா” என்று நிம்மதி  பெருமூச்சு விட்டாள்.    ****** நிறைவு ******* FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி     மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/  Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/     கணியம் அறக்கட்டளை   தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்   - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். Kaniyam Foundation Account Number :  606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618