[] []   சம் தியரீஸ்‌ இன் மூவிஸ்‌   லூத்விக்‌ ஆலன்‌       மின்னஞ்சல் : Lotsofcinema@gmail.com    அட்டைப்படம் :   மொழிபெயர்ப்பாளர் பெயர்: லூத்விக்   மின்னூலாக்கம் - விக்னேஷ் ஜெயராமன் - vigs.vj@gmail.com    வெளியிடு : FreeTamilEbooks.com   மின்னூலின் காப்புரிமை: Creative Commons Attribution -NonCommercial-ShareAlike (யாரும் பகிரலாம், விற்பனை கூடாது)    முன்னுரை    'கோட்பாடு' (தியரி) என்றவுடன்‌, சினிமாவுக்குண்டான சில விதிமுறைகள்‌ அல்லது வரைமுறைகள்‌ குறித்து பாடமெடுக்கும்‌ அலுப்புத்தட்டும்‌ புத்தகமென்று, நீங்கள்‌ இதனை எண்ணியிருக்கலாம்‌. அப்படியானால்‌, உங்களின்‌ யூகம்‌ முற்றிலும்‌ தவறானது. ஏனெனில்‌, இப்புத்தகம்‌ சினிமாவிற்கான கோட்பாடுகளைப்‌ பற்றியது அல்ல. பதிலுக்கு, இப்புத்தகம்‌ உங்களின்‌ சினிமா பார்வையின்‌ கோணத்தையே முற்றிலும்‌ மாற்றியமைக்கக்‌ கூடியது. இதுவரை வெளிவந்திருக்கக்‌ கூடிய சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள்‌ யாவும்‌, திரைப்பட விமர்சனங்கள்‌ நிறைந்த கட்டுரைகளாகவோ (அல்லது) திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப அறிமுகங்களை வழங்குபவையாகவோ இருந்திருக்கலாம்‌. அவற்றுள்‌ ஒருசில புத்தகங்கள்‌, ஆய்வுக்‌ கட்டுரைகளாகவும்‌ வெளிவந்திருக்கலாம்‌. அவ்வாறு வெளியான ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ நிறைந்த புத்தகங்களுள்‌ 'சினிமாவின்‌ வண்ணக்‌ கோட்பாடு' என்கிற புத்தகம்‌ மிக முக்கியமானது. இதுவரை வெளிவந்திருக்கக்‌ கூடிய பிரலமான திரைப்படங்களை அடப்படையாக வைத்துக்‌ கொண்டு, அதில்‌ பயன்படுத்தப்பட்டிருக்கும்‌ வண்ண ஓஒப்புமைகளை, பகுப்பாய்வு செய்வதாக இப்புத்தகம்‌ அமைந்திருக்கும்‌. இவ்வாறாக, சினிமாவின்‌ மீது ஆய்வு நடத்தும்‌ புத்தந்களைக்‌ காண்பது மிகமிக அரிது. ஏனெனில்‌, இவ்வகையான புத்தகங்களை எழுதுவதற்கு, நீண்டகாலம்‌    செலவிடவேண்டியிருக்கும்‌. ஆகையால்‌, வணிக நோக்குடன்‌ எழுதும்‌ பெரும்பாலான புத்தக ஆசிரியர்கள்‌, இதுபோன்ற சிரத்தைமிகு முயற்சி எடுத்துக்‌ கொள்வதை தவிர்த்துவிடுகின்றனர்‌. இருப்பினும்‌ லட்சியவாத நோக்கத்துடன்‌ நீண்டகாலம்‌ செலவுசெய்து, ஆய்வுக்கட்டுரைகள்‌ நிறைந்த புத்தகமொன்றை வெளியிடுவது மட்டுமே, ஒவ்வொரு எழுத்தாளருக்குமுண்டான தலையாயக்‌ கடமையாகும்‌. எஸ்‌.ராமகிருஷ்ணன்‌ அவர்களின்‌ 'சிறிது வெளிச்சம்‌' என்ற புத்தகத்தினை, இந்த வகைமைக்கு எடுத்துக்காட்டாகச்‌ சொல்லலாம்‌. ஏனெனில்‌, உலக சினிமாக்களைக்‌ குறித்த அவருடைய முந்தைய புத்தகங்கள்‌ யாவும்‌, வெறுமனே திரைப்படங்களை அறிமுகஞ்செய்யும்‌ விமர்சனக்‌ கட்டுரைகளாக தொகுக்கப்பட்டிருக்கும்‌. ஆனால்‌, இந்த 'சிறிது வெளிச்சம்‌' புத்தகம்‌, அவற்றிலிருந்து முற்றிலும்‌ மாறுபட்டது. சினிமாவுடன்‌ சேர்த்து, தம்முடைய அனுபவங்களையும்‌, தேடல்களையும்‌, ஞானத்தையும்‌ ஒன்றாக கோர்த்து, முற்றிலும்‌ வித்தியாசமான முறையில்‌ பகுப்பாய்வு செய்திருப்பார்‌. தம்முடைய எழுத்து பாணிக்கே, ஒரு புது யுக்தியைக்‌ கொடுத்திருப்பார்‌. ஆகவே, 'கோட்பாடு' என்று இங்கு நாம்‌ குறிப்பிட்டிருப்பது, எதைப்பற்றியதென்று நன்கு விளங்கிகொண்டிருப்பீர்கள்‌.     நாம்‌ அன்றாடம்‌ பிரயோகிக்கும்‌ கோட்பாடுகளில்‌ பல வகைகள்‌ உண்டு. (௨-தா) அறிவியல்‌ கோட்பாடு, ஆன்மீக கோட்பாடு, வாழ்வியல்‌ கோட்பாடு, சமூகக்‌ கோட்பாடு, சமயக்‌ கோட்பாடு, சம்பிரதாயக்‌ கோட்பாடு..     இவ்வாறு தாவோ சித்தாத்தாந்தம்‌ தழைத்தோங்கும்‌ முன்பிருந்தே, நாம்நம்‌ அன்றாட வாழ்வில்‌ பல்வேறு கோட்பாடுகளை பின்பற்றி வருகிறோம்‌. சினிமாவில்‌ 'தத்துவார்க்க திரைப்படங்கள்‌' என்றொரு வகைமை உண்டு. மனிதனின்‌ 'பசி, வலி, சோகம்‌, காமம்‌' போன்ற உணர்ச்சி மற்றும்‌ உணர்வுகள்‌ குறித்தும்‌, 'இருத்தலியல்‌, இறப்பு, இல்லாநிலை, கடவுள்‌' போன்ற மெய்ஞான கருத்துகள்‌ குறித்தும்‌, அண்டம்‌, பிரபஞ்சம்‌, ஆகாசம்‌' போன்ற கருப்பொருட்கள்‌ குறித்தும்‌ இவ்வகையான திரைப்படங்கள்‌ பெரும்பான்மையாக அலசுகின்றன. பொதுவாக, இவ்வகை படங்கள்‌ ஆர்ட்ஹவுஸ்‌' சினிமாவாக மட்டுமே கருதும்‌ வழக்கம்‌ தொடர்கிறது. ஆனால்‌, ஒரு கமர்சியல்‌ மசாலா திரைப்படத்திலும்‌ கூட 'தத்துவார்க்க கோட்பாடுகளை தீர்க்கமாக சொல்லிவிடமுடியும்‌; சொல்லப்பட்டிருக்கிறது; சொல்லப்பட்டுக்‌ கொண்டிருக்கிறது.     தத்துவ கோட்பாடுகளைத்‌ தவிர, ஏனைய (அறிவியல்‌, சமூக, சம்பிரதாய) கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு வெளிவரும்‌ திரைப்படங்கள்‌ யாவும்‌, ஒரு குறிப்பிட்ட (ஆர்ட்ஹவுஸ்‌) வரையறைக்குள்‌ அடங்குவதில்லை. ஆகவே, அவையாவும்‌ கமர்சியல்‌ திரைப்படங்களாகிவிடுகின்றன. உலக சினிமாக்களிலும்‌, கமர்சியல்‌ கட்டிப்புரலும்‌ ஹாலிவுட்‌ சினிமாக்களிலும்‌ கூட, 'நகைச்சுவை, நையாண்டி, சாகசம்‌, அதிரம, திகில்‌' போன்ற கமர்சியல்‌ கூறுகளுடன்‌ 'கோட்பாட்டு திரைப்படங்கள்‌' வெளிவந்திருக்கின்றன. நம்மூரில்‌ வெளியான 'மாநாடு', 'ஜீவி' போன்ற படங்களும்‌ கோட்பாட்டு     ரீதியிலான திரைப்படங்கள்‌ தாம்‌. ஆனால்‌, அந்த கோட்பாடுகள்‌ குறித்து பக்கம்‌ பக்கமாக வசனம்‌ பேசுவதாலோ (அல்லது) படத்தின்‌ ஏதோவோரிடத்தில்‌ கோட்பாட்டை பற்றி மென்மையாக தடவிச்‌ சென்றுவிடுவதாலோ.. அவைகளெல்லாம்‌ கோட்பாட்டு ரீதியான படங்கள்‌ ஆகிவிடாது.     வெறுமனே கோட்பாட்டு வசனங்களை ஆங்காங்கே தெளித்துவிட்டு, இதுதான்‌ 'கோட்பாட்டு திரைப்படம்‌' என்று சொல்வதல்ல, நம்முடைய வாதம்‌.   சினிமாவில்‌, கோட்பாடுகளை பற்றி வெறுமனே பேசாமல்‌, சினிமாவுக்குள்‌ கோட்பாடுகளை எவ்வாறு கொண்டுவர வேண்டும்‌ என்பதைக்‌ குறித்து அலசிவதுதான்‌ நம்முடைய வாதம்‌. அவ்வாறு, இப்புத்தகத்தில்‌ நாம்‌ அலசவிருக்கும்‌ திரைப்படங்கள்‌ மற்றும்‌ கட்டுரைகள்‌ யாவும்‌, கோட்பாட்டு ரீதியில்‌ சினிமாவின்மீது ஆதிக்கம்‌ செலுத்துபவையாகும்‌. இப்புத்தகம்‌, உங்களின்‌ சினிமா பார்வை கோணத்தினை சற்றே மாற்றியமைக்கூடியது.           ஆசிரியர்‌ குறிப்பு     வணக்கம்‌ நண்பர்களே...!   தங்களைப்‌ போலவே, தீராத ஆவலுடன்‌ கலையை அணுகும்‌ சாதாரண கலைஞன்‌ நான்‌...! 'பூபாலன்‌' என்கிற இயற்பெயர்‌ கொண்ட நான்‌, 'லூத்விக்‌ ஆலன்‌' என்கிற புனைப்‌ பெயருடன்‌ எழுதிவருகிறேன்‌.! சிறுவயது முதலே திரைப்படங்கள்‌, புத்தகங்கள்‌ என பொழுது போக்காக அல்லாமல்‌, வாழ்க்கையாகவே மாற்றிக்‌ கொண்ட என்னுள்‌, எழுத வேண்டுமென்கிற உத்வேகம்‌ சமீப காலத்தில்‌ உதித்தது தான்‌. கடந்த மூன்று ஆண்டுகளாக, சினிமா சார்ந்த விமர்சனங்களை கட்டுரைகளாக எழுதிவந்த நான்‌, முழுமையான புத்தகமொன்றை எழுத வேண்டுமென முடிவெடுத்தேன்‌. அதுவரை எழுதியிருந்த சினிமா கட்டுரைகளையெல்லாம்‌ ஒன்றாக கோர்த்து, ஐம்பது தலைப்பின்‌ கீழ்‌ ஒரு புத்தகமாக வடிவமைத்தேன்‌. 'நானறிந்த உலக சினிமா' என்கிற பெயரில்‌, அது புத்தகமாக வெளிவந்தது. அதனைத்‌ தொடர்ந்து, 'அயல்‌ நாட்டு ஆவணப்படங்கள்‌' என்ற மற்றுமொரு சினிமா கட்டுரைகள்‌ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டேன்‌. இந்த புத்தகம்‌ 'Some Theories in the Movies' எம்முடைய மூன்றாவது, சினிமா சார்ந்த புத்தகம்‌ ஆகும்‌. இது வழக்கத்திற்கு மாறாக புதுமையான முறையில்‌ எழுதப்பட்ட புத்தகம்‌  என்பதில்‌ மிகையில்லை. சமீ பத்தில்‌ டாட்டூக்களைப்‌ பற்றியொரு புத்தகத்தை காண நேர்ந்தது; அதில்‌   சினிமாக்களில்‌ கதாபாத்திரங்களுக்கு குத்தப்பட்டருக்கும்‌ டாட்டூவுக்கும்‌, அந்த கதாபாத்திரங்களின்‌ மனநிலையையும்‌ பொருத்தி பார்க்க முடியுமென்பது குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புத்தகமே, சினிமாக்களின்‌ குறிப்பிடபட்டுள்ள டாட்டூவின்‌ இரகசியம்‌ பற்றியது தான்‌.     [] இதேபோல சினிமாக்களில்‌   குறிப்பிட்டிருக்கும்‌ பெண்‌ கதாபாத்திரங்களை பூ குறித்தும்‌,   சினிமாக்களில்‌ வரும்‌ கனவுக்‌காட்சிகளைக்‌குறித்தும்‌   ஆய்வுமுறையின்‌ அடிப்படையில்‌,   புத்தகங்கள்‌ அக எழுதப்பட்டியிருப்பதாக அறிந்துகொண்டேன்‌. சமீபத்தில்‌ உருகுவே நாட்டுப்படமான 'ப்ரோக்கன்‌ கிளாஸ்‌ தியரி' என்ற திரைப்படத்தினை காண நேர்ந்தது. ஓர்‌ அறிவியல்‌ தியரியை, சலிப்பூட்டும்‌ வகையில்‌  வகுப்பெடுக்காமல்‌, பாமரருக்கும்‌ புரியும்‌ வண்ணம்‌, எளிமையாக நுட்பமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தின்‌ தாண்டுதலால்‌ தான்‌, நான்‌ இதுவரை கண்ட திரைப்படங்களில்‌, கோட்பாடுகளை எவ்வாறு  பயன்படுத்தியிருக்கிறார்கள்‌..?! என்கிற யோசனை கிளர்ந்தெழுந்தது. சுமார்‌ நான்கு வாரங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பதினைட்டு கோட்பாடுகளை எடுத்துக்‌ கொண்டு, அவற்றை திரைப்படங்களில்‌ எவ்வாறு பயன்படுத்தி யிருக்கிறார்கள்‌...?! என்பதை வாசகர்களுக்கு எளிமையாக புரியும்‌ வண்ணம்‌ கொடுக்க முயற்சித்திருக்கிறேன்‌. இந்த பதினெட்டு கோட்பாடுகளும்‌, அறிவியல்‌,பொருளாதாரம்‌, ஆன்மீகம்‌, மீமெய்யியல்‌, மருத்துவம்‌, உளவியல்‌, பாலியியல்‌, அரசியல்‌, மானுடவியல்‌, சமூகவியல்‌' போன்ற பல துறைகளைச்‌ சார்ந்த முக்கியமான கோட்பாடுகள்‌ ஆகும்‌.     நாம்‌ கோட்பாடில்லாமல்‌ இருக்க முடியாது; இயங்கவும்‌ முடியாது. நவீன உலகம்‌ கோட்பாட்டு ரீதியாகத்‌ தான்‌ இயங்கிக்‌ கொண்டிருக்கிறது. ஆனால்‌ நமக்கும்‌ கோட்பாட்டிற்கும்‌ எந்த சம்பந்தமுமில்லாதைப்‌ போலவே, சாவிகொடுத்த பொம்மைகளைப்‌ போல உலவிவருகிறோம்‌. நம்மைச்‌ சுற்றி அமைந்திருக்கும்‌ அமைப்புமுறைகள்‌ எல்லாமும்‌, கோட்பாட்டு ரீதியாக அமைக்கப்பட்டவை தாம்‌. விரும்பினாலும்‌, விரும்பாவிட்டாலும்‌, நாம்‌ கோட்பாடுகளின்‌ அங்கங்களாகவே இருக்கிறோம்‌ என்பதை உணர வேண்டும்‌. திரைப்படங்கள்‌, பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை' என்கிற எண்ணம்‌ போய்‌, நடப்பு வாழ்க்கையின்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்தும்‌ அளவிற்கு, திரைப்படங்களின்‌ சக்தியுள்ளது என்பதை மறந்துவிடக்‌ கூடாது. அவ்வாறான சக்தி வாய்ந்த ஓர்‌ ஊடகத்தின்‌ வாயிலாக, 'நம்மைப்‌ பற்றியும்‌ நம்மை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்‌ கட்டமைப்பு பற்றியும்‌' திரைப்படங்களில்‌ அவ்வப்போது கோட்பாட்டு ரீதியில்‌ சொல்லப்படுகிறது. பொழுதுபோக்கின்‌ வழியாகவாவது, மக்களுக்கு கோட்பாடுகளை புரிய வைக்க வேண்டுமென்கிற உத்வேகத்தினால்‌ தான்‌, இவ்வாறான திரைப்படங்களை உலகம்‌ முழுக்க எடுக்கிறார்கள்‌. இனிவரும்‌ காலங்களில்‌ பொழுதுபோக்கிற்காக சினிமா பார்ப்பதை தவிர்த்து, அறிவார்ந்த சமூகமொன்று உருவாகும்‌ என்ற நம்பிக்கையிலேயே இப்புத்தகத்தை, நான்‌ எழுதியிருக்கிறேன்‌. சினிமாவின்‌ மீதான உங்களின்‌ வழக்கமான பார்வையை, நிச்சயமாக இப்புத்தகம்‌ மாற்றியமைக்கும்‌ என்ற நம்பிக்கையில்‌...     உங்கள்‌ அன்பு நண்பன்‌   லூத்விக்‌ ஆலன்‌.       பொருளடக்கம்‌ 1- ப்ரோக்கன்‌ கிளாஸ்‌ தியரி (Broken Glass Theory) 9  2- கான்டியன்‌ தியரி (Kantian Theory) 12  3- ப்ரௌனியன்‌ மூவ்மெண்ட்‌ தியரி (Brownian Movement Theory) 14  4- லிங்குஸ்டிக்‌ தியரி (Linguistic Theory) 16  5- கேம்‌ தியரி (Game Theory) 18  6- காக்னிடிவ்‌ சைன்ஸ்‌ தியரி (Cognitive Science Theory) 21  7- ஆஷ்‌ தியரி (Asch Theory) 24  8- ட்ராஃபிக்‌ வேவ்‌ தியரி (Traffic Wave Theory) 27  9- ஹாலலோ எர்த் தியரி (Hollow Earth Theory) 29  10- ட்வின்‌ பிளேம்‌ தியரி (Twin Flame Theory) 32  11- ஜெர்ம்‌ தியரி (Germ Theory) 34  12- நீலிஸ்டிக் தியரி (Nihilistic Theory) 36  13- டீ ஹிமனிஷேஷன் தியரி (Dehumanization Theory) 39  14- மாடர்ன்‌ ஃபுட்‌ தியரி (Modern Food Theory) 41  15- சோசியல் கான்ஃபிலிக்ட் தியரி (Social Conflict Theory) 44  16- தி பெனாப்டிகன் தியரி (The Penopticon Theory) 47  17- ஸ்ட்ரிங்‌ தியரி (String Theory) 49  18- ஆர்க்யூமெண்டேஷன் தியரி (Argumentation Theory) 52  FreetamilEbooks.com – எங்களைப் பற்றி 54          1- ப்ரோக்கன்‌ கிளாஸ்‌ தியரி (Broken Glass Theory)   []   உருகுவே நாட்டு திரைப்படமான (Broken Glass Theory) கடந்த வருடம்‌ 2021-ம்‌ ஆண்டு வெளிவந்து, உலக அரங்கில்‌ மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. 70-களின்‌ பிற்பகுதியில்‌ அமெரிக்காவில்‌ உருவாக்கப்பட்ட இந்த கோட்பாட்டைப்‌ பற்றி, அந்த காலகட்டத்தில்‌ பெரிதான அனுமானங்கள்‌ எதுவுமில்லை. ஆனால்‌, சமகாலங்களில்‌ இந்த கோட்பாட்டைக்‌ குறித்து, வளர்ந்த நாடுகளின்‌ உலக அரசாங்கங்கள்‌ அச்சம்‌ கொள்ள துவங்கிவிட்டன. லண்டனின்‌ ரியோட்‌ சம்பவம்‌, பிரான்சின்‌ எல்லோ ஜாக்கெட்‌ போராட்டம்‌, நம்மூரில்‌ ஜல்லிக்கட்டு மற்றும்‌ ஸ்டெர்லைட்‌ முற்றுகை போராட்டம்‌ என நாளுக்குநாள்‌ மக்களின்‌ தேவைகளுக்கிணங்க போரட்டங்கள்‌ வெடித்துக்‌ கொண்டேயிருக்கின்றன. அப்படியானால்‌ அரசாங்கங்களின்‌ கடமை, மக்களின்‌ பக்கம்‌ நின்று மக்களுக்கு நீதியைப்‌ பெற்று தருவது தானே..?! ஆனால்‌, இங்கு நடப்பதோ நேர்‌ எதிராகல்லவா இருக்கின்றது...?! மக்களுக்கும்‌, அரசாங்கங்களுக்கும்‌ இடையிலான உறவுமுறை முறிவதற்கு காரணம்‌ என்ன?! மக்களால்‌ உருவாக்கப்பட்ட அரசாங்கமே, மக்களுக்கு எதிராக நின்று அநீதி இழைப்பது ஏன்‌...?! இந்த கேள்விகளுக்கெல்லாம்‌ ஓரே பதிலாக வந்து சேர்ந்திருப்பதுதான்‌, இந்த 'Broken Glass Theory'.    முதலில்‌, 'Broken Glass theory' என்றால்‌ என்ன ?! 'ஒரு தெருவின்‌ ஏதாவதொரு வீட்டின்‌ கண்ணாடி ஜன்னல்‌ உடைத்திருக்கும்‌ பட்சத்தில்‌, அந்த ஜன்னல்‌ சீரமைக்காமல்‌ அப்படியே விடப்படுமானால்‌, நாளடைவில்‌ அந்த தெருவிலிருக்கும்‌ அனைத்து வீடுகளின்‌ ஜன்னல்களும்‌ உடைந்திருக்கும்‌ (அல்லது) உடைக்கப்பட்மருக்கும்‌'     அதாவது, 'வீட்டின்‌ ஜன்னல்‌ உடைந்திருப்பது' என்ற சம்பவம்‌, யதார்த்தமான நிகழ்வாகக்கூட நடந்திருக்கலாம்‌. ஆனால்‌, அதை பார்க்கும்‌ மூன்றாம்‌ தரப்பு மக்களால்‌, அங்கொரு அசம்பாவிதம்‌ நடந்திருக்கக்கூடும்‌' என்ற அச்சத்தை அவர்களின்‌ ஆழ்மனதில்‌ விதைக்கக்கூடும்‌. ஆரம்பத்தில்‌ அச்சமாக விதைக்கப்படும்‌ அது, நாளடைவில்‌ துணிச்சலாக இலைவிடத்‌ தொடங்கும்‌. அதாவது, ஒரு குற்றமோ (அல்லது) அசம்பாவித சம்பவமோ நடந்தால்‌, அதை முளையிலேயே கிள்ளி எரியாமல்‌ விட்டுவிட்டால்‌, அது பல்கிப்‌ பெருகி மிகப்பெரிய பிரளயமாக உருவெடுத்துவிடும்‌.     சரி..! அப்பாவி பொதுமக்களுக்கும்‌, குற்றவாளிகளுக்கும்‌ என்ன சம்பந்தம்‌...?! 'Broken Glass theory' சொல்கிறது... 'குற்றவாளிக்கும்‌ (சமூகவிரோதி), பொதுமக்களுக்கும்‌ எந்த சம்பந்தமுமில்லை. ஆனால்‌, ஒரு மெல்லிய தொடர்பு இருக்கின்றது. (உ-தா) கோவையில்‌ நடந்த இந்து-முஸ்லிம்‌ மதக்‌ கலவரத்தில்‌, செல்போன்‌ கடைக்குள்‌ புகுந்து (உடைத்து), செல்போன்களை திருமச்‌ சென்ற சம்பவம்‌ அனைவரும்‌ அறிந்ததே. திருடியவர்கள்‌, அனுபவமிக்க கயவர்களையெல்லாம்‌ கிடையாது; எல்லோரையும்‌ போன்ற சாதாரண அப்பாவி பொதுமக்கள்‌ தாம்‌. ஆக, அசம்பாவிதங்களை காரணங்காட்டி, சாதாரண பொதுமக்களுங்கூட குற்றவாளிகளாக மாறக்‌ கூடும்‌. மாற்றப்படக்‌ கூடும்‌.     (௨-தா) பிரான்சின்‌ எல்லோ ஜாக்கெட்‌ போராட்டம்‌. இது ஆரம்பத்தில்‌, பெட்ரோல்‌ டீசல்‌ விலையைக்‌ குறைக்க தொடரப்பட்ட அமைதிவழி போராட்டம்‌ தான்‌. ஆனால்‌, நாளடைவில்‌ பெட்ரோல்‌ டீசல்‌ விலை பாதியாக குறைக்கப்பட்ட பின்னருங்கூட போராட்டம்‌ நீடித்தது. காரணம்‌, போராட்டக்காரர்களின்‌ தேவைகளும்‌ அவசியங்களும்‌ மாறின. பெட்ரோல்‌ டீசலிலிருந்து, பால்‌ தண்ணீர்‌ என மாறி, பிரான்சில்‌ அகதிகள்‌ அடைக்கலம்‌ வரை' போராட்டக்காரர்களின்‌ தேவைகள்‌ கூடிக்கொண்டே போயின. இதேபோலத்தான்‌ ஜல்லிக்கட்டு போராட்டமும்‌ நல்ல முறையில்‌ ஆரம்பித்தது. அது வெற்றியடைந்தவுடன்‌, 'கோக்‌ கொக்கோ கோலா குளிர்பானங்களுக்கு தடை' என்கிற கோசங்கள்‌ எழுந்தன. அதே போராட்டகளத்தில்‌..     ஆக, போராட்டக்காரர்கள்‌ அனைவரின்‌ நோக்கமும்‌ ஒரே போல இருக்காது. சில நபர்களுக்கு, தேவையே வேறெதாவதொன்றாக கூட இருக்கலாம்‌. ஆனால்‌, அவர்களும்‌ போராட்ட களத்தில்‌ குதித்திருப்பார்கள்‌. கலவரத்தை காரணமாக காட்டி எது செய்தாலும்‌, நம்மீது தனிப்பட்ட முறையில்‌ எவ்வித நடவடிக்கையும்‌ எடுக்கப்படமாட்டது என்கிற துணிச்சல்‌, சாதாரண பொதுமக்களுக்கோகூட எழலாம்‌.(௨-தா) மலையாள படமான 'மின்னல்‌ முரளி' படத்தில்‌, வில்லன்‌ செய்த குற்றங்கள்‌ யாவும்‌, ஹீரோவின்‌ மீது வந்து விழும்‌. ஆகவே, ஒரு அரசாங்கம்‌ செய்யும்‌ ஒரே கடமை..' கலவரத்தைக்‌ கட்டுப்படுத்துவது' மட்டுந்தான்‌. யார்‌ குற்றவாளி...?! யார்‌ நிரபராதி..?! என்றெல்லாம்‌ பகுப்பாய்வு செய்ய இயலாது.     'Broken Glass Theory' என்கிற இந்த திரைப்படத்தின்‌ ஆரம்ப காட்சியில்‌, மூன்று இளைஞர்கள்‌ நள்ளிரவு நேரத்தில்‌, கையில்‌ பெட்ரோலுடன்‌ சைக்கிளிலில்‌ வந்து, தெருவோரமாக நின்றிருந்த கார்‌ ஒன்றை தீக்கிரையாக்குகின்றனர்‌. படத்தின்‌ நாயகன்‌, தனியார்‌ கார்‌ நிறுவனமொன்றின்‌ இன்சுவரன்ஸ்‌ பிரிவில்‌ பணிபுரிபவன்‌. இரவு தீக்கரையாக்கப்பட்ட காரினைப்‌ பற்றிய தகல்களை அறிந்துவரும்படி, நிறுவனத்தால்‌ நிர்பந்திக்கப்படுகிறான்‌, நாயகன்‌. பெருநகரிலிருந்து, சம்பவம்‌ நடந்த சிற்றூருக்கு பயணப்படும்‌ அவனுக்கு, அதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம்‌, அதே ஊரின்‌ தெருவில்‌ இன்னும்‌ சில கார்களும்‌ எரிந்திருக்கின்றன.   []   சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்தறிய முயலும்‌ அவனுக்கு, நாளுக்கு நாள்‌ தோல்வியே பலனாக கிடைக்கின்றது. ஏனெனில்‌, முதல்‌ சம்பவம்‌ நடந்த அன்றிலிருந்து, தினசரி இரவு நேரங்களில்‌ தெருவிலுள்ள ஒவ்வொரு காரும்‌ தீக்கிரையாக்கப்படுகின்றது. இச்சம்பவங்களுக்கெல்லாம்‌ யார்‌ காரணம்‌..?! ஏன்‌ இதை செய்கிறார்கள்‌..?! என்கிற கோணத்தில்‌, இரவு நேர ரோந்து பணியிலும்‌ ஈடுபடுகிறான்‌ நாயகன்‌.     காரணம்‌, தெருக்களில்‌ மக்கள்‌ நடமாட்டம்‌ குறைந்துவிட்டது. மக்களுக்கே, மக்களின்‌ மீது பயமும்‌ பதற்றமும்‌ அதிகரித்துவிட, காவல்துறையின்‌ காரும்‌ கூட தீக்கிரையாக்கப்பட்டுவிட்டது. ஒருகட்டத்தில்‌, அசம்பாவிதங்களுக்கு காரணமான அந்த மூன்று இளைஞர்களையும்‌, கையும்‌ களவுமாக நாயகன்‌ பிடித்துவிடுகிறான்‌. அவர்களை நீதிமன்றத்தில்‌ நிறுத்தும்‌ பொருட்டு, கூண்டிலேறிய நாயகன்‌ அதிர்சியான பல உண்மைகளை பரபரப்பாக வெளியிடுகிறான்‌.     'அதாவது, முதலில்‌ நடந்த சம்பவத்திற்கு காரணம்‌ அந்த மூன்று இளைஞர்கள்‌ தாம்‌. ஆனால்‌, அதைத்‌ தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களுக்கெல்லாம்‌, நகரிலிருந்த ஒவ்வொரு நபரும்தான்‌ காரணம்‌'     என்கிற அதிர்ச்சிகரமான செய்தியை, ஆதாரத்துடன்‌ நிரூபிக்கிறான்‌. தன்னுடைய கார்‌ எரிந்துவிட்ட ஆதங்கத்தில்‌, பக்கத்துவீட்னுகாரனின்‌ காரை பற்ற வைக்கும்‌ நபர்‌., சொந்தப்பகை காரணமாக தன்‌ உறவினனின்‌ காரை எரித்த நபர்‌.., கால்துறையின்‌ மீதுள்ள அதிருப்தியினால்‌ ஆதங்கத்தில்‌ காரை எரித்த நபர்‌.., என பட்டியல்‌ நீண்டு கொண்டே செல்ல... ஒருவழியாக, குற்றத்திற்கு எது காரணம்‌ என்பதை கண்டறிந்துவிடுகிறான்‌ நாயகன்‌. இதே கோட்பாட்டின்‌ அடிப்படையில்‌ பிரான்சில்‌ 'லெஸ்‌ மிசரபில்ஸ்‌", டென்மார்‌ நாட்டு படமான 'இன்‌ஃபோர்ஸ்மெண்ட்‌' ஹாலிவிட்‌ படமான 'க்ளாக்‌ வொர்க்‌ ஆரஞ்ச்‌' போன்ற படங்கள்‌ வெளிவந்திருந்தாலும்‌ கூட, அவைகளைல்லாம்‌ குற்றவளிகளின்‌ பார்வையிலிருந்து சொல்லப்பட்டவையாகும்‌. ஆனால்‌, இந்த திரைப்படம்‌ மட்டுந்தான்‌, இக்கோட்பாட்டை குறித்து நன்கு அலசி ஆராய்கிறது. மெல்லிய நகைச்சுவையுடன்‌ நல்லதொரு பொழுதுபோக்கு படமாக வெளிவந்திருக்கக்‌ கூடிய இத்திரைப்படம்‌, 'கோட்பாடுகளை சினிமாவில்‌ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்‌' என்பதற்கான நல்ல உதாரணம்‌ ஆகும்‌.     படத்தின்‌ எந்தவொரு இடத்திலும்‌, இந்த கோட்பாட்டை குறித்து பக்கம்‌ பக்கமாக பாடமெடுக்கவோ, (அல்லது) ஆங்காங்கே வசனங்களால்‌ தெளித்துவிடவோ இல்லை. படத்தின்‌ தலைப்பில்‌ மட்டும்‌ பெயரை வைத்துவிட்டு, முழுக்க முழுக்க அந்த கோட்பாட்டு ரீதியிலேயே படம்‌ இயங்குவது ஆச்சர்யமான உண்மை.     'Broken Glass Theory' இது நூறு சதவிகிதம்‌ சாத்தியம்‌ என அறிவியலாளர்களால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட கோட்பாடு அல்ல. இருப்பினும்‌, இந்த தியரியைக்‌ காரணங்காட்மடத்‌ தான்‌, உலக அரசாங்கள்‌ அனைத்தும்‌ தங்களின்‌ சுய லாபத்திற்காக, மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்‌.         2- கான்டியன்‌ தியரி (Kantian Theory)   []    ஹாலிவுட்‌ முதல்‌ கோலிவுட்‌ வரை, இக்கோட்பாட்டினைத்‌ தழுவி எண்ணற்ற திரைப்படங்கள்‌ வந்தாகிவிட்டன. இதை 'கான்டியன்‌ தியரி' என்பதைவிட, 'கான்டியன்‌ தத்துவக்‌ கோட்பாடு' என்றுதான்‌ அழைக்க வேண்டும்‌. ஏனெனில்‌, இது வாழ்வியல்‌ விதிமுறைகள்‌ குறித்து மிக ஆழமாக பேசுகின்றது. எனவே, 'கான்டியன்‌ கோட்பாடு' என்பதை ஒரு குறிப்பிட்ட வரையறைகளுக்குள்‌ அடக்கிவிட முடியாது. சுருக்கமாக இதை 'தத்துவம்‌' என்பதைவிட 'தத்துவங்கள்‌' என்று அழைப்பது சரியாக இருக்கும்‌. இம்மானுவேல்‌ கான்ட்‌ என்ற கிருத்துவ பாதிரியாரால்‌, ஐரோப்பாவில்‌ உருவாக்கப்பட்ட இந்த வாழ்வியல்‌ தத்துவங்களை அடிப்படையாகக்‌ கொண்டுதான்‌, மேலைநாடுகளின்‌ அரசியல்‌ சட்டங்கள்‌ வகுப்பட்டிருக்கின்றன. கான்ட்‌ தத்துவங்களை அப்படியே ஏற்றுக்‌ கொண்ட, அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகள்‌, அவற்றை நடைமுறைப்படுத்துவதில்‌ சிக்கல்களைச்‌ சந்தித்தன.     அந்த சிக்கல்கள்‌ இன்றளவும்‌ தொடர்கின்றது. எனவே, ஸ்டான்லி குப்ரிக்கின்‌ 'கிளாக்‌ ஒர்க்‌ ஆரஞச்' திரைப்படம்‌ முதல்‌ கிரிஸ்டபர்‌ நாலனின்‌ 'டார்க்‌ நைட்‌' திரைப்படம்‌ வரை ஏராளமான திரைப்படங்கள்‌, கான்டியன்‌ கொள்கைகளை விமர்சனம்‌ செய்திருக்கின்றன. 'ஐரோப்பிய தத்துவங்கள்‌' என்று தமிழில்‌ ஒரு புத்தகம்‌ வெளியிடப்பட்டிருக்கின்றது. இப்புத்தகத்தில்‌ 'கான்டின்‌ கொள்கைகளால்‌' ஏற்படும்‌ பிழைகள்‌ குறித்து, நன்கு ஆழமாக வெளிக்கொணரப்‌ பட்டிருக்கிறது.     சரி.. ஹாலிவுட்டில்‌ (மேற்குலகில்‌) இவரின்‌ கொள்கைகளை விமர்சிப்பதில்‌ தவறில்லை. நம்மூரில்‌ (கோலிவுட்‌) இவரின்‌ கொள்கைகளை ஏன்‌ விமர்சிக்க வேண்டும்‌..?! முதலில்‌ கான்டியன்‌ கொள்கை என்றால்‌ என்னா ?!     "ஒரு தனி மனிதனுக்கு முழு சுதந்திரம்‌ அளிக்கப்பட்டுவிட்டால்‌, அது சமுதாயத்திற்கு குந்தகம்‌ விளைவிக்க கூடும்‌. ஆகவே, சமுதாயம்‌ நன்றாக இயங்கவேண்டுமெனில்‌, தனிமனிதன்‌ தன்‌ சுதந்திரத்தை இழந்தாக வேண்டும்‌''     இதுதான்‌, பரவலாக கான்ட்‌ அவர்களின்‌ தத்துவங்களுள்‌ ஒன்றாக மேற்குலக நாடுகளால்‌ பாவிக்கப்படுகிறது. இதனடிப்படையில்‌ தான்‌, மரண தண்டனைகள்‌ வலியுறுத்தப்பட்டன. (௨-தா) 'டெட்‌ மேன்‌ வாக்கிங்‌' என்ற படத்தில்‌, மரண தண்டனைக்‌ கைதி ஒருவனை மையப்படுத்தி திரைக்கதை நகரும்‌.     வெளிப்படையாகவே அவன்‌ குற்றவாளி என்று தெரிந்த பின்பும்‌, அவன்மீது இரக்கம்‌ (கருணை) காட்டுவதில்‌ என்ன தவறு இருக்கின்றது...?! என்கிற வாதத்தை முன்வைக்கிறது இத்திரைப்படம்‌. சமகால வளர்ந்துவிட்ட நாடுகளனைத்தும்‌ தங்களின்‌ அரசியல்‌ கொள்கைகளிலிருந்து சற்றே விலகி, மரணதண்டனைக்கு எதிர்‌ முகமாக நிற்கின்றனர்‌. 'மனிதநேயம்‌' உயர்வாக பாவிக்கப்படும்‌ இன்றைய காலகட்டத்தில்‌, இச்சார்பையே நாகரீகமாக உலக நாடுகள்‌ கருதுகின்றன. எனவே, கான்ட்‌ அவர்களின்‌ கூற்று மறுதளிக்கப்படுகிறது.     "ஒரு தனிமனிதனுக்காகவும்‌, தனி மனிதனின்‌ நலனுக்காகவும்‌ உருவாக்கப்பட்டது தான்‌, இச்சமூகம்‌ (அரசாங்கம்‌). அடுத்த நபரை பாதிக்காதவண்ணம்‌ அவரின்‌ சுதந்திரம்‌ இருப்பின்‌, அதில்‌ எந்தவொரு அரசாங்கமோ சட்டதிட்டமோ தலையிடக்‌ கூடாது"     இதுவும்‌ கூட கான்ட்‌ அவர்களின்‌ கொள்கைளுள்‌ ஒன்றுதான்‌. கான்ட்‌ அவர்கள்‌ ஒரு இருமைவாதி என்றுகூட பலர்‌ அழைப்பதுண்டு. அவர்‌ ஒரே நேரத்தில்‌ சமுதாந்த்திற்கு ஆதரவாயும்‌, தனி மனிதனின்‌ சுதந்திரத்திற்கு ஆதரவாயும்‌ கொள்கைகளை தீட்டியிருந்தார்‌. (உ-தா) பேட்‌ மேனின்‌ கொள்கை கோட்பாடும்‌, ஜோக்கரின்‌ கொள்கை கோட்பாடும்‌, ஒரே நோக்கம்‌ கொண்டவை தான்‌. ஆனால்‌, பேட்‌ மேன்‌ சமுதாயத்திற்கு ஆதரவாயும்‌, ஜோக்கர்‌ தனி மனித சுதந்திரத்திற்கு ஆதரவாயும்‌ குரல்‌ கொடுப்பார்கள்‌.     இவை இரண்டின்‌ நோக்கமும்‌ ஒன்றுதான்‌: சமூக சீர்திருத்தம்‌. ஆனால்‌, இரண்டையும்‌ ஒருசேர நடைமுறைப்படுத்த இயலாது, என்பதை பின்நாட்களில்‌ கான்ட்‌ அவர்களே புரிந்து கொண்டுவிட்டிருந்தார்‌.     []   தமிழில்‌ 'மகான்‌' என்ற திரைப்படம்‌ வந்தது நினைவிருக்கலாம்‌. இத்திரைப்படத்தில்‌ 'காந்திய கொள்கைகள்‌' என பெயர்‌ மாற்றம்‌ செய்து, 'கான்டிய கொள்கைகளைத்‌ தான்‌ விமர்சனம்‌ செய்திருப்பார்கள்‌. நம்மூர்காரர்களுக்கு தெரிந்த அறிந்த முகம்‌ காந்தியினுடையது என்பதால்‌, அவர்களுக்கு இப்பெயர்‌ தோதாகப்‌ போய்விட்டது. தவிர, காந்திய கொள்கைகளுக்கும்‌, கான்டிய கொள்கைகளுக்கும்‌ எவ்வித தொடர்புமில்லை. 'மது அருந்தக்‌ கூடாது' என்கிற காந்திய கொள்கையை மையமாக எடுத்துக்‌ கொண்டு 'கான்டிய கோட்பாடுகளைத்‌ தான்‌ கவனமாக சித்தரித்திருப்பார்கள்‌. ஹாலிவுட்‌ படமான 'கான்‌ பேபி கான்‌' படத்திலும்‌ கூட, 'தனிமனித ஒழுக்கம்‌, சமூக மதிப்பீடு இவைகளைப்‌ பற்றித்‌ தான்‌ ஆழமாக     பேசப்பட்டிருக்கிறது. சில நேரங்களில்‌, சமூக மதிப்பீடுகள்‌ அனைத்தும்‌ தவறாகிவிடக்‌ கூடிய ஆபத்தையும்‌, நாம்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌ என்பதை, மிக அழகாக இத்திரைப்படத்தில்‌ சொல்லியிருப்பார்கள்‌.     எனவே, கான்டிய கொள்கைகளுக்கு எதிர்‌ முகமாக தோன்றியது தான்‌ 'அனார்சிசம்‌' என்கிற அராஜகப்போக்கு' என்றுசொன்னால்‌ அது மிகையாகாது. அராஜபோக்கை வலியுறுத்தி 'ஜோக்கர்‌ கதாபாத்திரம்‌' மட்டுமல்ல.. 'வெண்டிட்டா (விஃபார்‌ வெண்மடட்டா திரைப்பட) கதாபாத்திரம்‌', கேப்டன்‌ அமெரிக்கா சிவில்வார்‌ படத்தில்‌ 'கேப்டன்‌ அமெரிக்கா' சார்பு படைப்பிரிவுகள்‌' என ஏராளமான கமர்சியல்‌ கதாபாத்திரங்களும்‌ உருவாக்கப்பட்டுவிட்டன. தற்காலத்தில்‌ கான்டிய தியரியினை மேற்குலக நாடுகள்‌ புறக்கணித்துவிட்டாலும்கூட, அவரின்‌ தீட்சமான சிந்தனைகள்‌ யாவும்‌, இன்றளவும்‌ சமூக ஆர்வளர்களால்‌ ஆய்வுகுட்படுத்தப்பட்டு கொண்டேயிருக்கின்றன.       3- ப்ரௌனியன்‌ மூவ்மெண்ட்‌ தியரி (Brownian Movement Theory)   []   ௬லபமான உதாரணமொன்றைச்‌ சொல்லி, சென்ற நூற்றாண்டின்‌ அபாரமான இயற்பியல்‌ கண்டுபிடிப்பான, இக்கோட்பாட்டினை எளிமையாக விளக்கிவிடலாம்‌. பழமையான கிரேக்க நாகரீகத்திலேயே இந்த இயற்பியல்‌ கோட்பாடானது, இனங்கண்டறியப்பட்டு விட்டது. ஆனால்‌, சென்ற நூற்றாண்டில்‌ தான்‌, பல்வேறு அறிவியலாளர்களால்‌ (தாமஸ்‌ பிரெளன்‌, ஐன்ஸ்டீன்‌, சிக்மண்ட்‌ பிராய்ட்‌) அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச்‌ செல்லப்பட்டது. ஜன்ஸ்டீனும்‌ அவருக்கு பின்வந்த அணுவியல்‌ ஆய்வாளர்களும்‌, இக்கோட்பாட்டிற்கு சூத்திரங்களை வகுத்து, 'வானியல்‌, உயிர்‌ மரபியல்‌, மருவத்துவவியல்‌, வேதியியல்‌, அணுக்கரு இயற்பியல்‌' என பல்வேறு தளங்களில்‌,  இக்கோட்பாட்டினை பயன்படுத்தத்‌ தொடங்கினர்‌.     அதாவது, கிரேக்க நாகரீக காலத்திலேயே கண்டறியப்பட்ட ஒரு இயற்பியல்‌ கோட்பாட்பாட்டானது, 19-ம்‌ நூற்றாண்டில்‌ பட்டி மங்கரிங்‌ அடிப்பட்டு சூத்திரமாக (Equation) நவீனத்துவபடுத்தப்பட்டது. நவீனத்துவம்‌ செய்யப்பட்ட 'ப்ரெளனியன்‌ கோட்பாட்டினை, மேலும்‌ அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றவர்தான்‌ 'சிக்மண்ட்‌ பிராய்ட்‌' அவர்கள்‌. அவர்‌, இக்கோட்பாட்டினை நவீனத்திலிருந்து, பின்நவீனத்துவத்திற்கு கொண்டு செல்கிறார்‌. பின்நவீனத்துவம்‌ செய்யப்பட்ட இக்கோட்பாடே, இந்‌ நவீனவுலக அமைப்புமுறை சிக்கல்களுக்கு (பாலியல்‌ ஒழுக்கம்‌, உறவுமுறை, குடும்பம்‌) தோதாகவும்‌ அமைந்துவிட்டது. 'ஆக அப்படி என்னதாம்ப்பா.. ப்ரெளனியன்‌ தியரி செல்லுது...?!'     "வீட்டின்‌ கதவிடுக்கு வழியாக சூரிய ஒளி ஊடுருவி வரும்போது, அந்த வெளிச்சத்தில்‌ புழுதி பறப்பதை பார்த்திருக்கிறீர்களா ?"   வெளிச்சத்தில்‌ தூசுத்‌ துகள்கள்‌, அங்குமிங்கும்‌ அலைபாய்ந்து, சீரற்ற முறையில்‌ இயங்கிக்‌ கொண்மருக்கும்‌. அதாவது, தேன்கூட்டினை ஈக்கள்‌   மொய்ப்பதைப்‌ போல..     இந்த நிகழ்வினை வைத்துத்தான்‌, 'அணுக்கள்‌' உண்மையாகவே இருக்கின்றன, என்கிற நம்பிக்கை கிரேக்கர்கள்‌ காலத்தில்‌ பிறந்தது; ஆனால்‌, நிரூபிக்க முடியவில்லை. 'திரவ மற்றும்‌ வாயுப்‌ பொருட்களின்‌ பரப்பில்‌ உள்ள துகள்கள்‌ (அணுக்கள்‌), சீரற்ற முறையில்‌ இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌. ஆதலால்‌ தான்‌, அவற்றிற்கு நிலையான உருவென்பது இல்லை.' ஆனால்‌, அந்த துகள்கள்‌ நிலையற்ற சீரற்ற இயக்கத்தைக்‌ கொண்டிருந்தாலும்கூட, 'ஒரு குறிப்பிட்ட சுழற்சி பாதையில்‌, ஒன்றையொன்று இடையூறு செய்யாமல்‌ இயங்கக்‌ கூடியது'. இதைத்தான்‌, பிற்காலத்தில்‌ விஞ்ஞானிகள்‌ கண்டறிந்தனர்‌.     'சரி, இந்த தியரிக்கும்‌, சிக்மண்ட்‌ பிராய்ட்‌-க்கும்‌ என்ன சம்பந்தம்‌..?!'     நாம்‌ நம்‌ சமூகத்தில்‌, பல்வேறு அமைப்புமுறைகளுடன்‌ ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம்‌. ஆனால்‌, பிரெளனிய கோட்பாடு என்னசொல்கிறதென்றால்‌, 'இரு மனிதன்‌ ஒன்றாக சேரும்போது உருவாவதுதான்‌ சமுதாயம்‌. அவ்வாறிருக்க, அவன்‌ தனிமைப்படும்பட்சத்தில்‌ சீரற்ற, அமைப்புகளற்ற, நெறிமுறைகளற்ற, ஒழுக்கமற்ற போக்கினை செய்வானானால்‌, அது சமூகத்தை பாதிக்காது.' அதாவது, பிராய்ட்‌ என்ன சொல்கிறாரென்றால்‌, ஒரு தனிமனிதனுக்குள்‌ அடக்கப்பட்டிருக்கும்‌ 'ஆசை, காமம்‌, குரோதம்‌' போன்ற செய்கைகளை, 'பிரெளனிய தியரியைச்‌ சொல்லி, ஞாயப்படுத்த முயற்க்கிறார்‌; அந்த விசயத்தில்‌ வெற்றியும்‌ கண்டார்‌.     []   டச்சு திரைப்படமான 'Brownian Movement (2010)' திரைப்படத்தினை உதாரணமாக எடுத்துக்‌ கொள்வோம்‌. சிறந்த நரம்பியல்‌ பெண்‌ மருத்துவர்‌ ஒருவர்‌, தன்னிடம்‌ வரும்‌ நோயாளிகளில்‌, அழகானவர்களாய்‌ பார்த்து தேர்ந்தெடுத்து அவர்களுடன்‌, உடலுறவு வைத்துக்‌ கொள்கிறார்‌. அவருக்கு, ஏற்கனவே அழகான குடும்பம்‌ குழந்தைகளெல்லாம்‌ இருக்கின்றன. ஆனால்‌, அவரோ தன்‌ தீராத பாலியல்‌ தேவைகளுக்காக, இவ்வாறு நடந்துகொள்கிறார்‌. ஒருநாள்‌, இந்த விவகாரம்‌ குறித்து தன்‌ குடும்பத்திற்கு தெரிந்துவிடவே, அவரின்‌ இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. ஆனால்‌, அவர்‌ அதனை எவ்வாறு கையாண்டு, மீண்டும்‌ சரிசெய்தார்‌ ? என்பதே, படத்தின்‌ கதை. கள்ள உறவுகளைப்‌ பற்றி பேசும்‌ (அ) ஞாயப்படுத்தும்‌, எல்லாத்‌ திரைப்படங்களும்‌ 'பிரெளனிய கோட்பாட்டினை' அமப்படையாக கொண்டு எடுக்கப்பட்டவை அல்ல. ஏனெனில்‌, இந்த திரைப்படம்‌, தகாத பாலியல்‌ உறவை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை; அது, இயல்பானது, அது யதார்த்தமானது என்று வாதாடுகிறது.     கருப்பையில்‌ விந்தணுக்களின்‌ இயக்கத்தை கவனியுங்கள்‌. அது சீரற்ற முறையில்‌ இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌... ஆனால்‌, அண்ட துகள்களின்‌ சேர்க்கையினால்‌, அது அடங்கிவிடுகிறது. சீரான இயக்கத்திற்குள்‌ வந்துவிடுகிறது. குழந்தை உருவெடுக்கிறது. பிரெளனிய கோட்பாடுங்கூட அவ்வாறானது தான்‌. 'தனிமனிதர்கள்‌ சீரற்ற முறையில்‌ தங்களின்‌ சுதந்திரத்திற்கேற்ப இயங்கிக்‌ கொண்டாருந்தாலுங்கூட, சமூகமாகிவிடும்‌ பட்சத்தில்‌ சீரான ஒழுக்கரீதியான இயக்கத்தை மேற்கொள்கின்றனணர்‌."           4- லிங்குஸ்டிக்‌ தியரி (Linguistic Theory)   []   மொழி எவ்வாறு உருவானது..?, மொழி' யாரால்‌, யாருக்காக உருவாக்கப்பட்டது..?, மொழி ஏன்‌ உருவானது...?, மொழியின்‌ நோக்கம்‌ தான்‌ என்ன... இவ்வாறான பலவித கேள்விகளுக்கான ஒரே பதில்‌, எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காக' என்று சுருக்கமாக சொல்லி நிறுத்திவிடலாம்‌. ஆனால்‌, மொழி என்பது மிக ஆழமாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யவேண்டிய மிகப்பெரும்‌ பிரிவு ஆகும்‌. சென்ற நூற்றாண்டின்‌ தலைசிறந்த தத்துவ ஞானியாகவும்‌, மொழியில்‌ ஆய்வாளருமாக கருதப்பட்ட 'லூத்விக்‌ விட்கைன்ஸ்டைன்‌' அவர்கள்‌, 'மொழி ஏன்‌ உருவானது...? அதன்‌ நோக்கம்‌ என்ன..?' என்பது போன்ற பல விளக்கமுடியாத கேள்விகளுக்கு விரிவான ஆய்வறிக்கையை சமர்பித்து சென்றிக்கிறார்‌. அவரின்‌ மொழியியல்‌ (Encounter of language Theories) ஆய்வுக்‌ கட்டுரைகளை, அவ்வளவு எளிமையாக யாராலும்‌ வாசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. 'மொழி எவ்வாறு பிறந்தது..? ஏன்‌ அது நிலத்திற்கு நிலம்‌ மாறுபடுகிறது..?' என்கிற தலைப்புகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு, 'விட்கென்ஸ்டைன்‌' (1993) என்ற ஹாலிவுட்‌ சோதனைத்திரைப்படம்‌ வெளிவந்தது. இதேபோல..'லாஸ்ட்‌ லேங்குவேஜ்‌' போன்ற திரைப்படங்கள்‌, மொழியின்‌ அவசியம்‌ குறித்தும்‌, அது (பழங்குடி மொழிகள்‌) அழிவுப்‌ பாதையை நோக்கி சென்றுகொண்டருக்கின்றன, என்பது பற்றியும்‌ ஆழமாக கூறிச்‌ சென்றன. மொழியியல்‌ ரீதியாக பல பேசும்‌ படங்களும்‌, பல்வேறு வகையான சோதனைப்படங்களும்‌, இந்நாள்‌ வரையில்‌ வந்தாகிவிட்டன. ஆனால்‌, எதிர்கால மொழி எப்படி இருக்கும்‌..? என்னவாக இருக்கும்‌..? என்பது பற்றி ஒருசில திரைப்படங்களே ஆய்வு செய்கின்றன.     'பேசும்‌ படங்கள்‌ வந்த புதிதில்‌ சார்லி சாப்ளின்‌ அவர்களுக்கு, சினிமா முற்றிலுமாக அழியும்‌ தருவாயில்‌ இருப்பதாக கருதி இசை சம்‌ கொண்டாராம்‌'     அதுபற்றி, வெளிப்படையாகவும்‌ கருத்து வெளியிட்டாராம்‌. 'கவைட்‌ ப்ளேஸ்‌' (Quite place) போன்ற திரைப்படங்களை காணும்போதும்‌, 'ஹங்கர்‌ கேம்ஸ்‌' போன்ற திரைப்படங்களில்‌, மூன்று வரலை முத்தமிட்டு வானத்தை நோக்கி காட்டி, தங்களின்‌ எதிர்ப்பு குரலை பதிவுசெய்வதை காணும்போதும்‌.. 'நிச்சயமாக எதிர்காலத்தில்‌ யாரும்‌ பேசப்போவதில்லை' என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த திரைப்படங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்‌ கொண்டு, எதிர்காலத்தில்‌ மொழியே இல்லாமல்‌ போகும்‌ ஆபத்து உள்ளது..,என எவ்வாறு நிரூபிக்க முடியும்‌..?     விட்கென்ஸ்டைன்‌ அவர்களின்‌ ஆரம்பகால ஆய்வுகளை மட்டுமே தீவிரமாக வாசித்த வாசகர்கள்‌, அவரின்‌ இறுதி காலத்தில்‌ வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளை வாசிக்க மிகவும்‌ சிரமப்பட்டனர்‌. ஏனெனில்‌, அது அவ்வளவு கடினமான பாணியில்‌ எழுதப்பட்டிருந்தது. அந்த இறுதிகட்ட ஆய்வறிக்கைகள்‌ சொல்வது யாதெனில்‌, 'மொழி என்பது காட்டுமிராண்டிகளால்‌ (நாகரீகமற்ற மக்களால்‌) உருவாக்கப்பட்ட செயற்கையான, பழமையான யுக்தி' இது அறிவியல்‌ முன்னேறிய காலம்‌. இந்த காலகட்டத்திலும்‌ கூட, இதே பழமையான யுக்தியை கையாள்தென்பது அவசியமற்றது. 'ஆதலால்‌ நாகரீக மக்கள்‌ யாவரும்‌, அவர்கள்‌ தங்களுக்காக புதிய லட்சியவாத மொழி ஒன்றை உருவாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌' இல்லாவிடில்‌ 'மொழியே இல்லாமல்‌ தங்களின்‌ எண்ணங்களை   பகிர்ந்துகொள்ள புதிய வழிகளை கண்டறிய வேண்டும்‌'.. இதனால்‌, மொழியியல்‌ வேற்றுமை அகன்று, மனிதநேயம்‌ தலைத்தோங்கும்‌. 'பியிங்‌ ஜான்‌ மேல்கோவிச்‌' படத்தில்‌, கம்யூட்டர்‌ ப்ரோகிராமைப்‌ போல, இரண்டே வார்த்தைகளை எல்லா செயல்களுக்கும்‌ பயன்படுத்துவார்கள்‌. இது வேடிக்கையாக தெரியலாம்‌; ஆனால்‌, கம்யூட்டரில்‌ சாத்தியமாகும்போது, ஏன்‌ நடைமுறையில்‌ சாத்தியாமாக கூடாது..? 'வாயை மூடி பேசவும்‌' என்ற படத்தில்‌ தொற்றுநோய்‌ ஒன்றின்‌ காரணமாக, பேசுவதையே நிறுத்திக்‌ கொண்டு சைகயிலேயே உரையாடிக்‌ கொள்வர்‌. எதிர்காலத்தில்‌ மொழிகள்‌ இல்லாமல்‌ போவதற்கு, ஏன்‌ ஒரு தொற்று நோய்‌ காரணமாக இருக்க கூடாது...?     []   அண்மையில்‌ மறைந்த தலைசிறந்த பிரஞ்சு இயக்குனர்‌ 'கோடர்ட்‌' அவர்கள்‌ இயக்கத்தில்‌ வெளிவந்த 'குட்பை லேங்குவேஜ்‌' (2014) என்ற திரைப்படம்‌, மொழி இல்லாமலேயே திரைப்படம்‌ இயங்க முடியும்‌,  மக்களுடன்‌ உறவாட முடியும்‌ என்பதை, சோதனைமுறையில்‌ நிரூபித்திருக்கிறது. பழைய ஊமைத்‌ திரைப்படங்களுக்கும்‌, இந்த திரைப்படத்திற்கும்‌ என்ன பெரிய வித்தியாசம்‌..? என்றால்‌, 'ஊமைப்படங்கள்‌, தாங்கள்‌ சொல்லவந்த கருத்தை சைகளையிலாவது சொல்லி சென்றுவிடும்‌' ஆனால்‌ இந்த திரைப்படம்‌, 'பார்வையாளர்களிடத்தில்‌ உரையாடுகிறது, அது பேசுகிறது, அது தன்‌ கருத்தை உணர்சிகளை வெளிப்படுத்துகிறது; மொழிகள்‌ எதுவும்‌ இல்லாமலேயே!' ஆதலால்‌, மொழியியல்‌ ஆய்வென்பது, மொழியின்‌ அவசியம்‌ பற்றி பேசுவதைவிட, எதிர்காலத்தில்‌ மொழி அவசியமா..? என்று சொல்லி, நாகரீக மனிதனின்‌ ஈகோவை சீண்டி பார்க்கிறது. 'பண்ட்டி பூல்‌' (Ponty pool) என்ற கனேடிய நாட்டு படத்தில்‌, ஆங்கில மொழி பேசும்போது குறிப்பிட்ட வைரஸொன்று பரவுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. அதனால்‌, அந்த குறிப்பிட்ட மொழி பேசுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும்‌. இதை கற்பனையான கதையாக இருந்தாலுங்கூட, ஏன்‌ சாத்தியமாகும்‌ வாய்ப்பு இருக்கக்‌ கூடாது...? ஏனெனில்‌, மொழி என்பது வெறுமனே எண்ணங்களை பகிர்ந்து கொள்வதுமட்டுமல்ல, அது உள்ளிருந்து (ஆன்மாவிலிருந்து) இயற்கையாக பிறப்பது. ஆகவே, நிலவியியல்‌ அமைப்பு சூழ்நிலை, காலநிலை மாற்றம்‌ போன்ற காரணங்களால்‌, ஒரு தொற்றுவியாதி ஏன்‌ உருவாக கூடாது..? இயற்கையை சமநிலைப்படுத்தும்‌ பொருட்டு ஏன்‌ அதாவது பேரழிவாக இருக்கக்‌ கூடாது...? இந்த முற்போக்குதனமான கற்பனையின்‌ அமப்படையில்தான்‌, நம்மூரில்‌ வந்த வாயை மூடி பேசவும்‌ திரைப்படமும்‌ வந்திருக்கின்றது. 'சமகாலத்தில்‌ நோய்தொற்று காரணமாக முக கவசம்‌ என்ற பெயரில்‌, பொதுமக்களின்‌ வாய்‌ அடைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, எதிர்கால அடிமைச்‌ சமுதாயத்தை உருவாக்கும்‌ முன்னேற்பாடக, ஏன்‌ இருக்கக்‌ கூடாது..? உதாரணத்திற்கு, க்வைட்‌ பிளேஸ்‌ திரைப்படத்தையே எடுத்துக்‌ கொள்வோம்‌. இதில்‌ ஒரு கொடூரமான ஜந்து, மனிதர்கள்‌ பேசிக்‌ கொள்வதை சாதகமாக பயன்படுத்திக்‌ கொண்டு, தன்‌ பசி வேட்டையையாமு வருகின்றது. ஏன்‌ அது ஒரு உருவகமாக இருக்கக்‌ கூடாது...? அந்த கொடுரமான ஜந்து 'ஏன்‌ கொடூரமான ஒரு அரசாங்கமாக இருக்கக்கூடாது..?' ஒருதடவை 'ஹங்கர்‌ கேம்ஸ்‌' திரைப்படத்தை உன்னிப்பாக பாருங்கள்‌, புரியும்‌.       5- கேம்‌ தியரி (Game Theory)   []   மிகப்‌ பிரபலமான கோட்படான இதற்கு, 'நடத்தை கோட்பாடு' என்று மற்றொரு பெயரும்‌ உண்டு. இது, மனோதத்துவம்‌ சார்ந்த கணிதவியல்‌ கோட்பாடாகும்‌. 'எ பியூட்டிபுல்‌ மைண்ட்‌'  திரைப்படத்தினை அனைவரும்‌ பார்த்திருக்கக்‌ கூடும்‌. இந்த படம்‌ விஞ்ஞானி 'ஜான்‌ நாஷ்‌' அவர்களின்‌ வாழ்க்கை பற்றிய திரைப்படம்‌. இந்த படத்தில்‌ ஜான்‌ நாஷ்‌, மனித நடத்தைகள்‌ குறித்து, கணிதவியல்‌ ரீதியாக கணிக்க முற்படுவார்‌. அவரது, வாழ்நாள்‌ ஆராய்ச்சியும்‌ இதைப்பற்றியது தான்‌; அதற்காக அவருக்கு நோபல்‌ பரிசும்‌ வழங்கப்பட்டது. ஆனால்‌, இந்த படத்தில்‌ கேம்‌ தியரியைப்‌ பற்றி, ஆழமான அளவில்‌ கூறாமல்‌ விட்டிருப்பார்கள்‌. காரணம்‌, இது வெறும்‌ பயோபிக்‌ திரைப்படம்‌ மட்டுந்தான்‌.     மனித வாழ்க்கையில்‌, ஏதாவதொரு காலகட்டத்தில்‌ முடிவெடுப்பதில்‌ சிக்கல்கள்‌ (அ) குழப்பம்‌ ஏற்படலாம்‌. இதை 'கேட்ச்‌ 22' என்றும்‌ அழைப்பார்கள்‌. இந்த முடிவுதான்‌ மனிதர்களின்‌ நடத்மை என்று அறியப்படுகிறது. நாம்‌ எப்படி நடந்துகொள்ள வேண்டும்‌..? எது நல்லது...? எது கெட்டது...? இந்த சமுதாயத்தில்‌ நம்முடைய பாத்திரம்‌ என்ன..? எது மதிப்பு வாய்ந்தது..? போன்ற கேள்விகளால்‌ அன்றாடம்‌ மனிதர்கள்‌, ஒரு குறிப்பிட்ட முடிவை எடுத்துக்‌ வேண்டும்‌. அந்த முடிவிற்குப்‌ பின்னால்‌, ஒரு ஞாயம்‌ இருக்க வேண்டும்‌ (௮) ஏற்றுக்‌ கொள்ளும்படியான சாத்தியம்‌ இருத்தல்‌ வேண்டும்‌. இவ்வாறு இருக்கும்பட்சத்தில்‌, முடிவெடுப்பதில்‌ எவ்வித குழப்பமும்‌ நேராது. 'டோன்னி டார்க்கோ' என்ற படத்தில்‌ நாயகனுக்கிருக்கும்‌ பெருங்குழப்பமே, முடிவெடுப்பதில்‌ ஏற்படும்‌ குழப்பம்‌ தான்‌. காரணம்‌, அவன்‌ யதார்த்த உலகில்‌ வாழ்பவன்‌. யதார்த்த உலகில்‌, பெரும்பான்மை கருத்தே, ஞாயமாகவும்‌ நீதியாகவும்‌ பார்க்கப்படுகிறது. ஆக, அவன்‌ எதிர்கொள்ளும்‌ பிரச்சனைக்கு, பெரும்பான்மையிலிருந்து சற்றே விலகி, ஒரு தீர்க்ஜஸமான தனித்த முடிவோன்றை எடுத்துக்‌ வேண்டும்‌. இதைப்போலத்தான்‌, நம்முடைய முடிவு என்பதும்கூட, சமூகத்தின்‌ பெரும்பான்மை முடிவாகவே உள்ளது. ஆக, கேம்‌ தியரி என்றால்‌ என்னவெனில்‌, ஒரு சமுதாயத்தின்‌ (௮) பெரும்பான்மையோர்களின்‌ ஒட்டுமொத்த முடிவைக்‌   கொண்டு, நடத்தையைக்‌ கொண்டு, ஒரு தனிமனிதரின்‌ மதிப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. (உ-தா) வாக்குமுறை தேர்தல்‌.     இந்த கேம்‌ தியரியைக்‌ கொண்டுதான்‌, சமகாலத்தில்‌ பொருளாதார சிக்கல்கள்‌, பங்குச்சந்தை முன்னறிவிப்புகள்‌, அரசியல்‌ நடவடிக்கை கணிப்புகள்‌, சுற்றுச்‌ சூழல்‌ கணிப்புகள்‌ ஆகியவை முன்கூட்டியே கணிக்கப்படுகின்றன. 'தி டார்க்‌ நைட்‌' படத்தில்‌, பேட்மேனுக்குள்‌ பெருங்குழப்பமொன்று நீடிக்கும்‌. ஆனால்‌, ஜோக்கருக்குள்‌ எந்த குழப்பமுமில்லை. இதேப்போலத்தான்‌ 'விக்ரம்‌ வேதா' படத்திலும்‌ நாயகன்‌ 'மாதவனுக்கு' பெருங்குழப்பமொன்று நீடிக்கும்‌; அவன்‌ இந்த சூழ்நிலையில்‌ என்ன முடிவெடுத்தாக வேண்டும்‌..? ஏனெனில்‌, அந்த முடிவுதான்‌ எதிர்காலத்தின்‌ நுழைவாயிலாக இருக்கும்‌ பட்சத்தில்‌, அது மிகவும்‌ முக்கியமானவொரு தருணம்‌. பேட்மேனுக்கும்‌, விக்ரமுக்கும்‌ (மாதவன்‌) ஒரேபோல முடிவெடுப்பதில்‌, குழப்பம்‌ நீடிக்கின்றது. இதே குழப்பம்தான்‌, சராசரி மனிதர்களான நமக்கும்‌ அன்றாடம்‌ நிலவுகின்றது. நாம்‌ கதாநாயகர்களாக இல்லாவிட்டலும்கூட, ஒருசில நேரங்களில்‌ தீர்க்கமான ஓர்‌ முடிவை எடுத்துக்‌ வேண்டும்‌. 'கிரிக்கெட்டில்‌ எந்த அணியை ஆதரிப்பது...?' ஏன்‌ ஆதரிக்க வேண்டும்‌..? அந்த குறிப்பிட்ட அணி வெற்றிபெற்றால்‌, நாமே வெற்றியடைந்ததைப்‌ போல சந்தோசப்படுகிறோமே ஏன்‌..? இதெல்லாக்‌ கேள்விக்குமான ஓரே பதில்‌, 'கூட்டு  மனப்பான்மை (௮) ஹார்ட்‌ மெண்டாவிட்டி'   []   'ஹங்கர்‌ கேம்ஸ்‌' படத்தில்‌, எதிர்காலத்தில்‌ உணவுக்காக நடக்கும்‌ கொடூரமான ஒரு போட்டியை, கட்டயபடுத்தி ஞாயப்படுத்த முயற்சித்திருப்பார்கள்‌. சமகால இலக்கியங்கியங்கள்‌, நாகரீக மனிதர்களின்‌ சிந்தனைகள்‌ போன்றவை, எதிர்காலத்தில்‌ இப்படியான இக்கட்டான சூழ்நிலைக்கு வழிவகுக்குமா..? என கேட்டால்‌, திரைப்படம்‌ 'ஆம்‌' என்றே பதிலளிக்கிறது. சமகால உலகின்‌ பொருளாதாரம்‌, மக்களின்‌ அறமற்ற சிந்தனை, டார்வினிய கோட்பாடு, போன்றவை தற்கால மனிதர்களின்‌ உயிர்வாழ்தற்கான நெறிமுறைகளையே முற்றிலுமாக மாற்றிவிட்டிருக்கின்றது. ஒருவேளை, 80-களில்‌ இதுபோன்ற ஒரு கணிப்பை நடத்தியிருந்தால்‌, நிச்சயமாக முடிவு வேறொன்றாக இருந்திருக்கும்‌. ஆனால்‌, இன்றைய காலத்தில்‌     பெறப்பட்ட தரவுகளையும்‌, மதிப்பீடுகளையும்‌ அடிப்படையாக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால்‌, எதிர்காலத்தில்‌ 'ஹங்கர்‌ கேம்ஸ்‌' போன்ற சூழ்நிலை சாத்தியமாவதற்கு 100 சதவிகிதம்‌ சாத்தியமுள்ளது. உதாரணத்திற்கு, நாஜி கால ஜெர்மனியை எடுத்துக்‌ கொள்வோம்‌. அந்த காலகட்டத்து (1920-1940) திரைப்படங்கள்‌, இலக்கியங்கள்‌, இசை, நாடகம்‌ என எல்லாத்‌ தலங்களிலேயும்‌, பூத எதிர்ப்பு என்பது புரையோடிக்‌ காணப்பட்டது. இது ஜெர்மனியைக்‌ கடந்து, பிரான்ஸ்‌, ரஸ்யா மற்றும்‌ மொத்த ஐரோப்பிய கண்டம்‌ முழுக்கவே புரையோடி காணப்பட்டது. ஆனால்‌, ஹாலிவுட்‌ திரைப்படங்களில்‌ காட்டப்டுவதுபோல, ஏதோ நாஜிகள்தான்‌, திட்டமிட்டே மக்களின்‌ மனமில்‌ நஞ்சினை விதைத்ததாகவும்‌, ஹிட்லரின்‌ மீதிருக்கும்‌ பயத்தினால்‌ தான்‌, யூதர்களை விரோதிகளாக பாவித்ததாகவும்‌ காட்டுகின்றனர்‌. இது முழுக்கவே முட்டாள்தனமான வாதம்‌. ஏனெனில்‌, உண்மையாகவே அன்றைய ஐரோப்பிய மக்களின்‌ மனநிலை யூதர்களுக்கு எதிராக தான்‌ இருந்தது. அதைத்தான்‌, ஹிட்லர்‌ தம்‌ அரசியலுக்கு பயன்படுத்திக்‌ கொண்டரே தவிர, அவர்‌ திட்டம்போட்டெல்லாம்‌ அதை செய்யவில்லை (௨-தா) ஹிட்லர்‌ மறைந்த பின்னும்‌ 'நியோ நாஜிக்கள்‌' என அமெரிக்காவில்‌ உலவி வந்தனர்‌. 'ஜெர்மானிய நாஜிக்களுக்கும்‌ அமெரிக்க நியோ நாஜிக்களுக்கும்‌, எவ்வித தொடர்புமில்லை. கொள்கைர்தியாக உடன்பாடு கொண்டவர்கள்‌ அவ்வளவுதான்‌. நாஜிக்கள்‌ அழிப்பட்டதை தொடர்ந்து, மக்களின்‌ மனநிலையில்‌ மாற்றம்‌ எதுவும்‌ ஏற்படவில்லை. ஆனால்‌, இலக்கியங்கள்‌ திரைப்படங்கள்‌, கல்வி நிலையங்களின்‌ வாயிலாக, மனிதநேயம்‌ பற்றி எடுத்துச்செல்லி யூதர்களின்‌ மீது கருணை மழையை பொழிய வைத்தனர்‌. யூத எதிர்பாளர்களுங்கூட, பல்லைக்‌ கடித்துக்‌ கொண்டு, தம்முடைய சமூக அந்தஸ்தை நிலைநாட்டிக்‌ கொள்வதற்காக, யூதர்களை எதிர்ப்பதை விட்டுவிட்டனர்‌. ஒருவேளை நாஜி ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தால்‌, நிலையமையே தலைகீழாக மாறியிருந்திருக்கும்‌. அங்கேயும்‌ மனிதநேயம்‌ பேசப்பட்டிருக்கும்‌; யூதர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதற்கு எவ்வளவு நேரமாகியிருக்கும்‌..? 'இன்க்ளோரியஸ்‌ பேஸ்டர்ஸ்‌' படத்தில்‌, இதைத்தான்‌ நேர்மையாக அணுகியிருப்பார்கள்‌. அந்த படத்தில்‌ யார்‌ பக்கம்‌ ஞாயம்‌..? யார்‌ பக்கம்‌ தர்மம்‌..? இந்த கேள்விக்கு, 'வெற்றி பெறுபவர்களே ஞாயவான்கள்‌' என்று ஒற்றை பதிலையே சொல்லியிருப்பார்கள்‌.           6- காக்னிடிவ்‌ சைன்ஸ்‌ தியரி (Cognitive Science Theory)    []   பொதுவாக விஞ்ஞானம்‌ வேறு; மெய்ஞானம்‌ வேறு, கணிணி அறிவியல்‌ வேறு; ஜோதிட மெய்ஞானம்‌ வேறு, உடலைப்பற்றிய ஆய்வுகள்‌ வேறு; மனதைப்‌ பற்றிய கணிப்புகள்‌ வேறு, என்கிற எண்ணங்கள்‌ பரவலாக காணப்படுகின்றன. விஞ்ஞானத்திற்கும்‌ மெய்ஞானத்திற்கும்‌ சம்பந்தமேயில்லாததைப்‌ போலவும்‌, இரண்டையும்‌ வெவ்வேறு கிரகங்களை சார்ந்த தனித்தனி கூறுகளாகவும்‌ எண்ணிக்‌ கொண்மருக்கின்றனர்‌. விஞ்ஞானத்திற்கும்‌, மெய்ஞானத்திற்கும்‌ எவ்வித சம்பந்தமும்‌ இல்லாமல்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, எல்லாமே மனிதனின்‌ அறிவு தான்‌ என்பதை மறந்துவிடக்கூடாது. 'மனிதனின்‌ அறிவு' அல்லது 'மனித அறிவின்‌ எல்லை மூலம்‌' என்று சொல்வார்கள்‌. பரிணாம வளர்ச்சியடைந்த மனிதன்‌, அவன்தன்‌ தேவைகளுக்காகவும்‌ வசதிகளுக்காகவும்‌, தம்‌ கற்பனையின்‌ எல்லை வரை சென்று, அறிவினை பெற முயற்சி செய்கிறான்‌. அவ்வாறு பெறப்பட்ட அறிவினை அடுத்த தலைமுறைக்கும்‌ விட்டுச்‌ செல்கிறான்‌. அவன்‌ விட்டுச்‌ சென்ற இடத்திலிருந்து, அடுத்த தலைமுறை மேலும்‌, அறிவினை பெற்றுவிட முயற்சி செய்கின்றது. 'லூசிபர்‌' என்கிற சாத்தானால்‌ வழங்கப்பட்ட அறிவின்‌ எல்லையை அடைவதற்காகவே, நவீன மனிதர்கள்‌ ஒவ்வொருவரும்‌ போராடிவருகின்றார்கள்‌. இதனை சுருக்கமாக எபிஸ்டோமோலஜி (Epistemology) என்றும்‌ அழைப்பார்கள்‌. மனிதனின்‌ அறிவானது, ஒவ்வொரு துறையிலும்‌ வளர்ச்சியடையும்போது, அவன்‌ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்‌..? அவன்‌ இந்த சமூகத்தினை எவ்வாறு வழிநடத்தவேண்டும்‌..? அவன்‌ முழுமையான அறிவினை அடைந்துவிட்ட பிறகு, மனித இனத்தின்‌ நிலை என்னவாக இருக்கும்‌...? என்பதுபோன்ற, தனிமனிதனின்‌ பரிணாம வளர்ச்சி குறித்து மட்டுமே அக்கறை செலுத்தும்‌ ஆழமான எண்ணம்தான்‌, இந்த எபிஸ்டமோலஜி ஆகும்‌. இந்த எபிஸ்டோமோலஜியை தான்‌, நவீன விஞ்ஞானிகள்‌  AIஎன்று அழைக்கிறார்கள்‌. ஆனால்‌, காக்னடிக்‌ சைன்ஸ்‌ என்பது, AI(செயற்கை நுண்ணறிவு) கிடையாது. கான்னமடிக்‌ சைன்ஸ்‌-ன்‌ நோக்கம்‌, மனிதனின்‌ பரிணாம வளர்ச்சி மட்டும்தானே தவிர, மனிதனால்‌ உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது அல்ல.     'மேட்ரிக்ஸ்‌' என்கிற திரைப்படத்தில்‌, மனிதனால்‌ உருவக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவிற்கும்‌, பரிணாம வளர்ச்சியில்‌ உச்சம்‌ தொட்ட மனிதனுக்கும்‌ இடையில்‌ நடக்கும்‌ யுத்தம்‌, விவரிக்கப்பட்டிருக்கும்‌. ஆக மனிதன்‌ அடைய நினைப்பது, கடவுளின்‌ நிலையைத்‌ தான்‌. அவனே கடவுளாகிவிட வேண்டுமென்று எண்ணுகிறானே தவிர, அவனால்‌ உருவாக்கப்பட்ட அறிவினை அல்ல. மறைமுகமாக நாகரீக மனிதன்‌, 'லூசிபர்‌' சாத்தனோடு தான்‌ யுத்தம்‌ செய்து வருகிறான்‌. அவனால்‌ வழக்கப்பட்ட அறிவினைக்‌ கொண்டே, அவனை வீழ்த்த எண்ணுகிறான்‌. பெரும்பாலான ஹாலிவுட்‌ திரைப்படங்களில்‌, மனிதனின்‌ அறிவியல்‌ வளர்ச்சி மட்டுமே பேசப்பட்டிருக்கும்‌; ஆனால்‌, ஒருசில திரைப்படங்களில்‌ மட்டுமே, அறிவின்‌ அழிவுபற்றி வெளிப்படையாக கூறப்பட்மடருக்கும்‌. டெர்மினேட்டர்‌, சோர்ஸ்‌ கோட்‌, எக்ஸ்‌ மெசினா, மெட்ரோபோலிஸ்‌ போன்ற திரைப்படங்களை உதாரணமாக சொல்லலாம்‌.     அறிவியலை, அறிவியலாக அணுகும்‌ வழக்கமே ஆரம்பத்தில்‌ ஹாலிவுட்‌ திரைப்படங்களில்‌ நீடித்தது. அப்போதைய இலக்கியங்களிலும்கூட (ஐசக்‌ அசிமோவ்‌), அவ்வாறான அணுகுமுறையே     காணப்பட்டது. ரஷ்ய புதியலை இயக்குநர்களின்‌ வருகையினாலும்‌, ஐரோப்பிய மெட்டாபிஸிகல்‌ இலக்கியவாதிகளின்‌ வருகையாலும்தான்‌, 'அறிவியல்‌ விஞ்ஞானமும்‌, ஆன்மீக மெய்ஞானமும்‌' ஒரே நேர்கோட்டில்‌ இணைப்பட்டன. அதைத்‌ தொடர்ந்துதான்‌, இன்றைய நவீன ஹாலிவுட்‌ படங்கள்‌, மனத சிந்தனையை கிளர்வுற செய்திருக்கின்றன. (௨-தா) மார்ஸ்‌ அட்டாக்ஸ்‌ போன்ற வணிக நோக்கமுடைய படங்களின்‌ நோக்கம்‌, மக்களின்‌ சிந்தனையை கிளர்வுற செய்வதன்று. அது வெறுமனே, கொஞ்சம்‌ கற்பனை பொழுதுபோக்கு திரைப்படம்‌ அவ்வளவுதான்‌. செவ்வாய்‌ கிரகத்திலிருந்து, பூமியை நோக்கி செவ்வாய்‌ கிரகவாசிகள்‌ படையெடுத்தால்‌, பூமிவாசிகள்‌ தங்களை தற்காத்துக்‌ கொள்ள, என்னவெல்லாம்‌ செய்திருப்பார்கள்‌..? என்கிற ஒரு எட்டு வயது குழந்தையின்‌, குழந்தைத்‌ தனமான கற்பனைதான்‌ அந்த திரைப்படம்‌. 'பேர்ட்‌ பாக்ஸ்‌’, 'கொய்ட்‌ ப்ளோஸ்‌' போன்ற படங்களில்‌, வேற்று கிரகவாசிகள்‌ பூமிவாசிகளை அழிக்க வந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. ஆனால்‌, இதில்‌ அந்த வேற்றுகிரக வாசிகள்‌ உண்மையா..? பொய்யா...? (௮) மனிதனின்‌ கற்பனைக்கெட்டாத கற்பனையா..? என்கிற கேள்வி, படம்‌ முடிந்த பின்னும்‌ நம்மை பின்தொடரும்‌. 'பேர்ட்‌ பாக்ஸ்‌' திரைப்படத்தில்‌, எதனை வேற்றுகிரக வாசிகளாக காட்டியிருப்பார்கள்‌...? நேருக்குநேர்‌ பார்த்தால்‌ நாம்‌ த்துவிடுவோமா..? இதென்ன முட்டாள்‌ தனமான கற்பனை..? ஒருவேளை, அப்படியொரு ஏலியன்‌ இருப்பதாகவே வைத்துக்‌ கொள்வோம்‌, புவியிலுள்ள பறவைகளுக்கும்‌, அந்த ஏலின்களுக்கும்‌ என்ன தொடர்பு..? இந்த படம்‌ முழுக்கவே, அபாரமான மெட்டாபிஸிகல்‌ கற்பனை கூறுகள்‌ இடம்பெற்றிருக்கும்‌. அதாவது, புவிமாசுபடு (Environment Issue) பற்றித்தான்‌, இந்த படம்‌ மெட்டா கற்பனையுடன்‌ பேசுகிறது. இதேபோலத்தான்‌ 'அண்டர்‌ தஸ்கின்‌' என்ற திரைப்படமும்‌, 'தோல்‌ சார்ந்த பாலியியல்‌ விழிப்புணர்வை' பற்றி மெட்டா கற்பனையுடன்‌ சொல்லியிருக்கும்‌.    []   'அனியரா' என்ற சுவீடிஸ்‌ படத்தில்‌, விண்வெளி ஓடத்தில்‌ கதை நடப்பதாக காட்டப்பட்டிருக்கும்‌. பூமிக்கிரகம்‌ அழிவை சந்தித்து, அதிலிருந்து தப்பிய மனித இனம்‌ ஒரு கூட்டமாக, விண்வெளி ஓடத்தில்‌ வாழ்வாழ்வாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. இதே படத்தினை ஹாலிவுட்டில்‌ எடுத்திருந்தால்‌, விண்வெளி பற்றிய அறிவியல்‌ தகவல்களை மட்டுமே பாடமாக எடுத்திருப்பார்கள்‌. ஆனால்‌ இந்தபடத்தில்‌, மக்களின்‌ உணர்வுகள்‌, அவர்களின்‌ புதிய மதம்‌, அவர்களின்‌ கொள்கைகள்‌, அவர்களின்‌ சிந்தனை என்பது போன்ற பல தளங்களிலிருந்து பேசப்பட்டிருக்கும்‌. அறிவியல்‌ வளர்ச்சி என்பது, பழமையை (அ) பழமை வாதக்‌ கருத்தை சிதைத்துவிடாது, பதிலுக்கு பழமைவாத கருத்தை புதிய தளத்திற்கு கொண்டு செல்லும்‌, என்பதற்கு இப்படலே ஒரு உதாரணம்‌. ஹாலிவுட்டில்‌ வெளினா 'இண்டர்ஸ்டெல்லார்‌' படமும்‌, இரஸ்ய மொழியில்‌ வெளியான 'சொலாரிஸ்‌' படமும்‌ ஒரே கதை தான்‌. இரண்டுமே, பிரபஞ்சத்தில்‌ உயிர்வாழ்வதற்கு ஏதுவன கிரந்தத்தை தேடச்‌ செல்லும்‌ சாகசப்படங்கள்‌ தாம்‌. ஆனால்‌, இரண்டிற்கும்‌ ஓர்‌ மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஹாலிவுட்‌ படத்தில்‌, வெறுமனே விண்வெளி கோட்பாடுகள்‌ மட்டுமே விளக்கப்பட்டிருக்கும்‌. ஆனால்‌, ரஸ்ய படத்தில்‌, மனித ஆன்மா, அறிவின்‌ எல்லை மூலம்‌, மனித ஆற்றலுக்கும்‌ பிரஞ்ச ஆற்றலுக்குமன சம்பந்தம்‌ போன்ற மெய்ஞான கருத்துகளும்‌ பேசப்பட்டிருக்கும்‌. ஆக, அறிவியல்‌ என்பது 'விஞ்ஞானம்‌ மட்டுமல்ல'. மெய்ஞானமும்‌ சேர்ந்தது தான்‌, முழுமையான அறிவியல்‌ ஆகும்‌. ஹெர்‌ என்ற படத்திலும்‌, டிஸ்னியின்‌ வால்‌-இ படத்திலும்‌ விஞ்ஞான அறிவியல்‌ மட்டுமே பேசப்படுவதில்லை; தீவிரமான காதலைப்‌ பற்றிதான்‌ பேசுகிறது. ஆக, பெரும்பாலான ஹாலிவுட்‌ படங்களில்‌ காட்டப்படுவது யாதெனில்‌, 'அறிவியல்‌ என்பது, மனித நடத்தைக்கு (சிந்தனைக்கு) அப்பாற்பட்ட, மனிதர்களை எந்திரங்களாக மற்றும்‌ ஓர்‌ ஞானம்‌'. ஆனால்‌, உண்மை என்னவென்றால்‌, அறிவியல்‌ என்பது 'மனித சிந்தனையினூாடே, அவர்களின்‌ யதார்தமான உணர்வுகளினூாடே, மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சி) கொண்டுசெல்ல உதவும்‌, ஓர்‌ மேன்மையான ஞானம்‌'. (௨-தா) அவரதார்‌ போன்ற அறிவியல்‌ புனைவு படங்களில்‌, அறிவியல்‌ கருத்துக்களுக்கு முக்கியத்துவம்‌ அளிக்காமல்‌, ஏன்‌ 'அனாமிசம்‌' எனப்படுகின்ற மெய்ஞான கருத்திற்கு முக்கியத்துவம்‌ வழங்கப்பட வேண்டும்‌..? ஒரு மரத்தை ஆன்மீக சின்னமாக காட்டுவது விந்தையல்ல; அந்த மரத்திற்கு சக்தியுண்டு, அது அங்குள்ள மக்களுக்கு சக்தியை வழங்குகிறது, என்பது தான்‌ விந்தையான விடையம்‌. ஆக, அவதார்‌ படம்‌, விஞ்ஞான அறிவியல்‌ புனைவல்ல. அது, தூய்மையான அறிவைத்‌ தேடும்‌ அறிவியல்‌ புனைவுப்படம்‌ ஆகும்‌.           7- ஆஷ்‌ தியரி (Asch Theory)   []     ஊரோடு ஒத்து வாழ வேண்டும்‌..! என்றொரு பழமொழி உண்டு. இதன்‌ உள்ளர்த்தம்‌ யாதெனில்‌, 'ஊராரின்‌ கருத்துக்கும்‌, சிந்தனைக்கும்‌ ஒத்துப்போக வில்லையானால்‌, நீங்கள்‌ ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்‌'. இதுவொருவகையில்‌, தனிமனித சுதந்திர பறிப்பு தான்‌. ஆனால்‌, இந்த முட்டாள்தனமான கொள்கையைத்‌ தான்‌ நாகரீகமடைந்த சமூகமுங்கூட பின்பற்றுகின்றது. (௨-தா) தேர்தல்‌ அரசியலில்‌, பெரும்பான்மை சமூகம்‌ எந்த கட்சியை ஆதரிக்கிறதோ, அதுவே சரியானதாகவும்‌, தலைமைப்பண்புக்குரிய தகுதியுடனும்‌ இருக்கும்‌ எனும்‌ கூற்று. தேர்தலில்‌ வாக்களிக்கும்‌ மக்கள்‌, சரியான தகுதியான நபரைத்தான்‌ தேர்ந்தெடுக்கிறார்களா..? அப்படியிருந்தால்‌, ஏன்‌ சமூகத்தில்‌ வறுமை   நிலவுகிறது..? ஏன்‌ சமூகத்தில்‌ அநியாயங்கள்‌ நடக்கின்றது...? ஏன்‌ சட்டம்‌ ஒழுங்கு பாதுகாக்கப்படுவதில்லை..? தேர்தல்‌ அரசியல்‌ இல்லாவிட்டாலுங்கூட, ஒரு தலைவனால்‌ கூட்டத்தை வழிநடத்தும்‌ பொருட்டு, மக்களே ஒரு தலைவனின்‌ பின்னால்‌, ஆட்டு மந்தைகளைப்போல சென்றுவிடுவதுகான்‌, காட்டுமிராண்டி மக்கள்‌ சமூகத்தின்‌ இயல்பு. இது பண்டைய காலத்திலிருந்து, நவீனகால நாகர்க மனிதன்‌ வரை பின்தொடர்கிறது.     சரி, நவீனகால மனிதன்‌, தன்‌ சுய சிந்தனையின்‌ அடிப்படையிலும்‌, தன்‌ ஆறாம்‌ அறிவான பகுத்தறிவின்‌ அடிப்படையிலுந்தான்‌, தன்னுடைய தலைவனைத்‌ தேர்ந்தெடுக்கிறானா..?! இந்த கேள்விக்கு பதிலளிப்பது சற்று கடினமான விடையம்தான்‌. ஏனென்றால்‌, 'மந்தை மனப்பான்மை' (Heard Behaviour) நாகரீக மனிதன்‌ விதவிதமான ஆடைகளையுடுத்தி வெவ்வேறுவிதமான வேடங்களைத்‌ தரித்து ஏமாற்றுவதைப்போல.., ஆயிரத்தெட்டு நவீன பெயர்களையிட்டு மந்தை மனப்பான்மையை மடைமாற்ற நினைத்தாலுங்கூட, அது அவன்‌ மரபணுவைவிட்டு அகழ்வதில்லை. இந்த அழிக்கமுடியாத மந்தை மனப்பான்மையை, ஞாயப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடுதான்‌ 'ஆஷ்‌ தியரி' ஆகும்‌. ஆஷ்‌ தியரியை முட்டாள்தனமான கோட்பாடு எனசொல்லி, புறந்தள்ளிவிட நவீன விஞ்ஞானிகள்‌, ஒரு சோதனை ஆய்வை மேற்கொண்டனர்‌. அதாவது, 50 ஒருவருக்கொருவர்‌ அறிமுகமில்லாத இளம்‌ மாணவர்களை தனித்தனியாக அழைத்து, ஒரு கேள்வியை கேட்டனர்‌. அந்த கேள்வி என்னவென்றால்‌, 'ஒரு சராசரி மனிதனின்‌ ஆயுட்காலம்‌ எவ்வளவு...?' இந்த கேள்விக்கு அனைத்து மாணவர்களும்‌ மிகச்சரியான பதிலையே வழங்கினர்‌. 75, 80, சிலர்‌ 100 என. இதே கேள்வியை, 50 மாணவர்களையும்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாக உட்காரவைத்து கேட்கப்பட்டது. அந்த 50 மாணவர்களுக்கிடையில்‌ மேலும்‌ 50 மாணவர்களை (நடிகர்களை) உட்புகுத்தி, இதே கேள்வி கேட்கப்பட்டது. 'ஒரு சராசரி மனிதனின்‌ ஆயுட்காலம்‌ எவ்வளவு...?' கூட்டத்திலிருந்த, நடிகர்களை மட்டுமே எழும்பச்‌ செய்து அவர்களிடம்‌ இக்கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள்‌ அனைவருமே தவறான பதிலை அளித்தனர்‌. அதாவது, 30, 40, ஒருசிலர்‌ 20 என்றுகூட சொன்னார்கள்‌. நடிகர்களைத்‌ தொடர்ந்து, சாதாரண மாணவர்‌ ஒருவரோை எழுப்பி, இதே கேள்விக்‌ கேட்கப்பட்டது. அவர்‌ பதில்‌ சொல்ல திணறினார்‌. வேறுவழியின்றி, நடிகர்கள்‌ சொன்ன அதே வயதினை அவர்‌ ஒப்புக்‌ கொண்டார்‌. ஏனெனில்‌, கூட்டத்தின பெரும்பான்மை கருத்தே, நடிகர்களின்‌ கருத்து தான்‌. ஆக, இதையெல்லாம்‌ அறிந்திடாத அந்த மாணவர்‌, தவறான கருத்தைக்கூட சரியென ஒப்புக்‌ கொண்டார்‌. இந்த சோதனையில்‌, சோதனைக்காக பயன்படுத்தப்பட்ட சாதாரண மாணவர்களும்‌, நடிகர்களும்‌... ஒரே எண்ணிக்கை கொண்டவர்கள்‌ தாம்‌ (50-50). ஆனால்‌, மாணவர்களைவிட, நடிக்க வந்தவர்களின்‌ எண்ணிக்கையும்‌, அவர்களின்‌ கருத்துமே பெரும்பான்மையாக உள்ளதைப்போல ஒரு போலித்‌ தோற்றத்மை உருவாக்கி, ஒரு பொய்யான கருத்தைக்‌ கூட, ஞாயமானதாகவும்‌ உண்மையாகவும்‌ ஆக்கப்பட்டுவிட்டது. இந்த சோதனை முடிவில்‌, ஒரு சராசரி மனிதனின்‌ ஆயுட்காலம்‌ 35 ஆக இருக்கலாம்‌, என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. ஆக, ஆஷ்‌ தியரி தவறில்லை; அது, மந்தை மனப்பான்மை இன்னமும்‌ மக்களிடத்தில்‌, நிலவி வருவதை விளங்கச்‌ செய்கிறது. ஆனால்‌, ஆஷ்‌ தியரியை ஆதரிக்க வேண்டுமா..? அதை நிராகரிக்க வேண்டுமா..? என்று முடிவெடுக்கும்‌ கட்டத்திலிருக்கும்‌, பகுத்தறிவுள்ள மனிதன்‌, மந்தை மனப்பான்மையுடன்‌ செயல்படக்‌ கூடாது. 'தி எக்ஸ்பெரிமெண்டர்‌' (2015) என்ற ஹாலிவுட்‌ திரைப்படம்‌ 'ஆஷ்‌' தியரியின்‌ நம்பகத்‌ தன்மையை பற்றிய சோதனையை மேற்கொள்கிறது. 'தி ஆக்ஸ்‌ பெள இன்சிடெண்ட்‌' மற்றும்‌ 'ஃபுல்‌ மெட்டல்‌ ஜாக்கெட்‌', போன்ற படங்கள்‌ மந்தை மனப்பான்மையுடன்‌ செயல்படும்‌ நவீனமனிதர்களின்‌ தவறுகளைச்‌ சுட்டிக்‌ காட்டப்படுகின்றன. இந்த படத்தில்‌ காட்டப்படும்‌ மனிதர்கள்‌ யாவரும்‌, சமூக சிந்தனையுடன்‌ (social Psychology) செயல்படுவார்கள்‌.     அவர்களைப்‌ பொருத்தமட்டில்‌, அந்த கருத்து மிகச்‌ சரியானதாகவே பார்க்கப்படும்‌. ஆனால்‌, நடுநிலையாளராக படம்‌ பார்க்கும்‌ நமக்குத்தான்‌, அவர்களின்‌ தவறை சுட்டிக்காட்ட இயலும்‌.     []   'ஃபுல்‌ மெட்டல்‌ ஜாக்கெட்‌' படத்தில்‌, ஈவு இரக்கமற்ற அமெரிக்க இராணுவ வீரர்களின்‌ மீது எந்த தவறுமில்லை. அவர்களின்‌ குழப்பமும்‌ பயமும்‌ நிறைந்த அலைபாயும்‌ மனநிலையே, அவர்களை மிருகமாக்கியது, என இராணுவ வீரர்களின்‌ தரப்பு ஞாயத்தை எடுத்துரைத்திருப்பார்கள்‌. சரிதான்‌, உலகெங்கிலும்‌ உள்ள இராணுவங்களின்‌ மீது எந்த தவறுமேயில்லை. ஏனெனில்‌, எல்லா இராணுவங்களின்‌ மனநிலையும்‌ ஏறக்குறைய இவ்வாறுதானே உள்ளது..?! அப்படியானால்‌, இங்கு யாரைக்‌ குற்றஞ்சாட்ட முடியும்‌..? அவர்களைத்‌ தூண்டிவிட்ட அரசியல்வாதிகளையா..?! அரசியல்‌     வாதிகளைத்‌ தூாண்டவிட்ட, அரசியல்‌ கொள்கைகளையா..? அரசியல்‌ கொள்கைக்கு ஆதாயமான, நாட்டின்‌ பொருளாதாரத்தை குறை சொல்வதா..? யாரை குறைசொல்வது...? எதனை குறை சொல்வது..? அமெரிக்க பொருளாதாரத்தையா..? ஏழ்மையுடனிருக்கும்‌ அப்பாவி வியட்நாமையா..?     'ஃபுல்‌ மெட்டல்‌ ஜாக்கெட்‌' படத்தில்‌ மட்டுமல்ல, வியட்நாம்‌ போரைக்‌ குறித்து 'ஒவ்வொரு அமெரிக்கர்களின்‌ பார்வையுமே, தங்களை ஞாயப்படுத்தும்‌ விதமாகத்‌ தான்‌ உள்ளது. அப்பாவி வியட்நாமை குற்றஞ்சொல்ல இயலாது, ஆக ஒப்புக்கு, யாரையாவது குற்றவாளியாக்கிவிட்டு, மொத்த அமெரிக்கர்களையும்‌ நிரபராதிகள்‌ என வாதாடுகின்றனர்‌. இதுதான்‌ அமெரிக்க முதலாளித்துவ மந்தை மனப்பான்மையின்‌ நாகரீக வடுவம்‌. 2018-ம்‌ ஆண்டு வெளிவந்த 'அஸ்ஸாசினேசன்‌ நேஷன்‌' என்ற படம்‌, ஆஷ்‌ தியரியின்‌ தவறுகளை தெள்ளத்‌ தெளிவாக சுட்டிக்‌ காட்டுகிறது. அமெரிக்காவில்‌ சேலம்‌ என்கிற நகரத்தில்‌ அதிகரித்துவரும்‌, போதைப்பழக்கம்‌, கொலைகள்‌, கொள்ளைகள்‌, கற்பழிப்புகள்‌ போன்ற பலதரப்பட்ட குற்ற செயல்களை, அந்த பகுதி மக்கள்‌ ஞாயப்படுத்தினால்‌, எப்படியிருக்கும்‌..?! (௨-தா) நம்மூரில்‌ 20 வருடங்களுக்கு முன்‌, ஒரு குடிகாரரைக்‌ காண்பது மிகமிக அரிதானது. ஆனால்‌, இன்றோ வீட்டுக்குவீடு முழுநேர குடிகாரர்களைக்‌ காண்பது, யதார்த்தமாகிவிட்டது. ஓர்‌ இளைஞன்‌ குடிப்பழக்கம்‌ இல்லாதவனாக இருந்துவிட்டால்‌, அவனை இச்‌ சமூகம்‌ விஷமக்‌ கண்களுடன்‌ பார்க்கிறது. அவனை வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவனைப்போல, ஒதுக்கி வைக்கிறது. ஆக, ஒரு சமூகத்தில்‌ தனிமனிதனின்‌ மதிப்பீடு என்பது, 'மந்தை மனநிலை' என்கிற முட்டாள்‌ தனமான கோட்பாட்டினால்‌ உருவாக்கப்படுகிறது, என்பதில்‌ ஆச்சர்யமில்லை. அப்படியானால்‌, சமூகத்தில்‌ 75% தீயவர்களும்‌, தீயவர்களாலும்‌ வழிநடத்தப்படுமேயானால்‌, மீதமுள்ள 25% சதவிகித அப்பாவி நல்லவர்களுங்கூட, தீயவர்களாக மாறிவிடும்‌ கட்டாயம்‌ தேவைப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள சேலம்‌ நகரத்தில்‌, பெருகிவரும்‌ குற்றச்செயல்களால்‌ மொத்த சமுதாயமும்‌, குற்றவாளிகளாக்கப்படுகிறது.       8- ட்ராஃபிக்‌ வேவ்‌ தியரி (Traffic Wave Theory)   []   நெரிசல்‌ மிகுந்த நகர சாலைகளில்‌, ஏதேனும்‌ ஓரிடத்தில்‌ சிறு விபத்தொன்று ஏற்பட்டாலும்கூட, மொத்த போக்குவரத்துமே ஸ்தம்பித்துவிடும்‌. ஓட்டுநர்‌, எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலுங்கூட, எதிர்பாராத ஓர்‌ டிராபிக்‌-ஐ எதிர்கொள்வதென்பது, மிகவும்‌ கடினமான விடையம்தான்‌. ஓட்டுநரின்‌ கவனமெல்லாம்‌, தனக்குமுன்‌ செல்லும்‌ வாகனத்தின்‌ மீதுதான்‌ இருக்கும்‌. அவருக்கு, விபத்து பற்றியோ (௮) அதனை முன்னரே கணித்து, அதை தவிர்ப்பது பற்றியோ எந்தவித அக்கறையும்‌, அறிவும்‌ இராது. ஆக, ஒரு நெடுஞ்சாலையிலோ (௮) போக்குவரத்து நெரிசல்‌ நிறைந்த நகரத்திலேயோ, ஏதாவதொரு இடத்தில்‌ அசம்பாவிதம்‌ ஏற்பட்டுவிட்டால்‌, மொத்த போக்குவரத்துமே பாதிக்கப்படும்‌; பெருங்குழப்பம்‌ ஏற்படும்‌. இதைத்தான்‌ 'பாண்டம்‌ ட்ராஃபிக்‌ ஜாம்‌'  (Phantom Traffic Jam) என்று அழைப்பார்கள்‌. இந்த தியரியை, சமூக கட்டமைப்பு, பொருளாதாரம்‌, கல்வி, மருத்துவம்‌ போன்ற ஏராளமான துறைகளில்‌ பயன்படுத்துகிறார்கள்‌. அதாவது, ஒரு நெடுஞ்சாலையில்‌ 'பாண்டம்‌ டிராபிக்‌ ஜாம்‌' ஏற்பட்டால்‌, அந்த சிக்கலிலிருந்து மீளூவதற்கு, ஒரு ட்ராஃபிக்‌ அதிகாரி தேவைப்படுவார்‌. அவர்‌, போக்குவரத்து விதிமுறைகளை, சரியாக உபயோகித்து, போக்குவரத்து சிக்கலை தீர்த்து வைப்பார்‌. இதேபோல, பொருளாதாரத்தில்‌, மந்தநிலை (அ) வீழ்ச்சி ஏற்படுமாயின்‌, அதன்‌ எதிரொலியாக 'மக்களின்‌ அன்றாட இயல்புநிலை பாதிக்கும்‌' அபாயம்‌ உள்ளது. (௨-தா) கொரோனா லாக்டவுன்‌ காரணமாகவோ (௮) டீமானிடேஷன்‌ (1000,500 ரூபாய்‌ நோட்டுகள்‌ மதிப்பிழப்பு) போன்ற காரணங்களால்‌, மக்களின்‌ இயல்புநிலை பாதிக்கப்பட்டது; இது நாட்டின்‌ பொருளாதாரத்திலும்‌ எதிரொலித்தது. ஆக, இந்த பொருளாதார நிலைமையை சீர்செய்ய, புதுப்புது திட்டங்கள்‌ வங்கிகளின்‌ வாயிலாக அறிமுகம்‌ செய்யப்பட்டன. 'டிஜிட்டல்‌ கரன்சி, மணி ட்ரான்ஸ்பர்‌, அத்தியாவசிய பொருட்களின்‌ டெலிவரி சர்விஸ்‌, இணையதள வரிக்கட்டண வசதி, போன்ற பல்வேறு சேவைகள்‌, இணைதளத்தின்‌ வாயிலாக அறிமுகம்‌ செய்யப்பட்டன. இதனால்‌, பாதிக்கப்பட்ட மக்களின்‌ குழப்பமான நிலையமையை, மீண்டும்‌ இயல்புநிலைக்கு கொண்டுவர, அரசாங்கமும்‌, வங்கிகளும்‌ டிராபிக்‌ அதிகாரியைப்‌ போல செயல்பட்டன. ஒரு அரசாங்கத்தின்‌ முக்கியமான பணி யாதெனில்‌, எக்காரணங்கொண்டும்‌ 'பாண்டன்‌ ட்ராபிக்‌ ஜாம்‌'-ஐ உருவாக்கிவிடக்‌ கூடாது. எவ்வளவுபெரிய சிக்கலான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டலுங்கூட, அதை மக்களிடத்தில்‌ கொண்டுசெல்லும்முன்பே தடுத்து, மாற்றுபாதையை உருவாக்க வேண்டும்‌. ஆகவே ஒவ்வொரு துறையிலும்‌ தேர்ந்த அறிஞர்களைக்‌ கொண்டு, எதிர்கால திட்டங்களையும்‌, அவசரகால நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ள, அரசாங்கம்‌  சிரத்தையெடுத்துக் கொள்ள வேண்டும்‌.     []   'கான்ட்டைஜன்‌' மற்றும்‌ 'தி இன்வேசன்‌' போன்ற படங்களில்‌, இனம்கண்டறியப்படாத வைரஸ்‌ பரவுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. இதேபோன்ற பல ஹாலிவுட்‌ திரைப்படங்கள்‌ வெளிவந்திருக்கின்‌ றன. எல்லா படத்திலும்‌, மக்கள்‌ தங்களின்‌ உயிர்காத்துக்‌ கொள்ள, கண்ணுக்குத்‌ தெரியாத வைரஸை கண்டு பீதியடைந்து, ஏதாவதொரு வீட்டில்‌ அடைந்துகிடப்பார்கள்‌. இந்தநிலையை 'பாண்டம்‌ ட்ராபிக்‌ ஜாம்‌' உருவாகிவிட்டதை குறிக்கின்றது. 'கிமி' என்ற திரைப்படம்‌, 'கான்ட்டைஜன்‌' திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குநர்‌ (ஷ்டீவன்‌ சோடர்பெர்க்‌) அவர்களால்‌, இயக்கி வெளிவந்தது. இப்படம்‌, லாக்டவுன்‌ சமயத்தில்‌ நடப்பதாகவே காட்டிப்பட்டிருக்கும்‌. ஆனால்‌, வைரஸ்‌ தொற்றைப்பற்றிய அச்சமோ (௮) வைரஸ்‌ பற்றிய எந்த தகவல்களுங்கூட இப்படத்தில்‌ இடம்பெற்றிருக்காது. இப்படம்‌ முழுக்கவே, உலகலாவிய முழுஅடைப்பினால்‌, ஏற்பட்ட பொருளாதார சூழ்நிலை, அதனால்‌ ஏற்பட்ட மனோ ரீதியான பாதிப்புகள்‌ பற்றி மட்டுமே த்ரில்லர்‌ ஜானரில்‌ பேசியது. மலையாளத்திலுங்கூட 'சன்னி' என்றொரு திரைப்படம்‌ இதே கருத்தை முன்மொழிந்து வெளிவந்திருந்தது. ஆக, லாக்டவுன்‌ பற்றி பேசும்‌ பெரும்பாலான திரைப்படங்கள்‌, வைரஸைப்‌ பற்றியோ அதிலிருந்து எதிர்காலத்தில்‌ நம்மை பாதுகாப்பது எப்படி..? என்பது பற்றியோ பேசவில்லை. பதிலுக்கு, 'உலகளாவிய அளவில்‌ மிகப்பெரிய பாண்டம்‌ ட்ராபிக்‌ ஜாம்‌' எல்லாத்‌ துறைகளிலும்‌ உருவாகியுள்ளது; அதனை சரிசெய்ய என்ன வழி...? என்பது பற்றியே, எல்லா திரைப்படங்களும்‌ பேசுகின்றன. 'பிளாக்‌ மிரர்‌' என்ற அந்தாலஜி சைன்ஸ்‌ பிக்‌க்ஷன்‌ தொடரின்‌ ஒரு பகுதியில்‌, 'மக்கள்‌ அனைவரும்‌ இனம்புரியாத வைரஷெொன்றினால்‌,   ஜோம்பிக்களாக மாறிவருவதாக' காட்டப்படும்‌. ஆனால்‌, உண்மையில்‌ அவர்கள்‌ எந்த வைரஸினாலும்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ அல்ல. அவர்கள்‌, அடிப்படை வசதிகளைக்‌ கூட பெற இயலாத, அழுத்தட்டு மக்களே ஆவர்‌. அவர்களை நசுக்கும்‌ பொருட்டு, வைரஸ்‌ பாதிக்கப்பட்டவர்களாக (ஜோம்பிக்களாக) சித்தரிக்கப்படுவார்கள்‌. இந்த குறிப்பிட்ட பகுதியுங்கூட, பொருளாதாரத்தில்‌ ஏற்பட்ட மந்தநிலை குறித்துதான்‌ இலைமறைவாக பேசுகிறது. இதே பிக்ஷன்‌ தொடரின்‌ மற்றொரு பகுதியில்‌, 'சோசியல்‌ க்ரெடிட்‌' எனும்‌ சிஸ்டம்‌ நடைமுறையிலிருப்பதாகவும்‌, பணத்திற்கு பதில்‌ சோசியல்‌ மீடியா லைக்குகளும்‌ ஸ்டார்களுமே மதிப்புமிக்கவையாக கருதப்படும்‌. இது கூட, எதிர்காலத்தில்‌ பொருளாதாரத்தில்‌ ஏற்படும்‌ 'ட்ராபிக்‌ ஜாமை தவிர்பதற்காக உருவாக்கப்பட்ட, எதிர்கால பொருளாதார சிந்தனை தான்‌.       9- ஹாலலோ எர்த் தியரி (Hollow Earth Theory)   []   உலகம்‌ தட்டையானது, என்ற மூட நம்பிக்கையை தவிடுபொடியாக்கி நிராகரிக்கும்‌ நவீன அறிவியலால்‌ கூட, 'ஹால்லோ எர்த்‌ கோட்பாட்டினை முற்றிலுமாக நிராகரிக்க முடியவில்லை. ஏனெனில்‌, நவீன அறிவியல்‌ சொல்வதைப்போல 'உலகம்‌ உருண்டையானது என்றே, 'ஹால்லோ எர்த்‌' கோட்பாடும்‌ சொல்கிறது. ஆனால்‌ உலகம்‌ என்பது, நமக்கு தெரிந்த, நம்‌ அறிவுக்கெட்டிய நடைமுறை உலகம்‌ அல்ல. 'உலகம்‌' என்பது 'மேல்‌ உலகம்‌' 'பாதாள உலகம்‌' என இருவேறு உலகங்கள்‌ சேர்ந்தது. மனிதர்களாகிய நாம்‌ இடையில்‌ வசிக்கிறோம்‌; வாழ்கிறோம்‌. இந்த கோட்பாடு முற்றிலுமாக முட்டாள்தனமானதாகப்‌ படலாம்‌. ஆனால்‌, அறிவியல்‌ முறைப்படி (நவீன அறிவியலின்‌ பார்வையிலேயே)   இக்கோட்பாட்டினை ஞாயப்படுத்த முயன்றால்‌..?! நாம்‌ உலகைப்‌ பற்றி, எண்ணிக்‌ கொண்மருக்கும்‌ எல்லா ஊகங்களும்‌ பொய்யாகி போகுமானால்‌..?! நவீன அறிவியலால்‌ கூட, சில தர்க்கப்‌ பூர்வமான   கேள்விகளுக்கு விடை காண முடியாவிட்டால்‌...?!     'ஜர்னி ௫ த சென்டர்‌ ஆஃப்‌ எர்த்‌' என்ற படத்தில்‌, பூமிக்கடியில்‌ ஓர்‌ அழகான உலகம்‌ பொதிந்து கிடப்பதாகவும்‌, அங்கு அரியவகை உயிரினங்களும்‌, ஏற்கனவே அழிந்துவிட்ட உயிரினங்களுங்கூட, இன்னும்‌ வாழ்வதாகவும்‌ சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. கல்லுக்குள்‌ வாழும்‌ தேரைக்கு, உயிர்வாழும்‌ சாத்தியக்கூறுகள்‌ இருப்பதைப்போல, பூமிக்கடியிலும்‌ அதற்கான சாத்தியக்கூறுகள்‌ இருக்குமானால்‌, அது ஏன்‌ பாதாள உலகமாக இருக்கக்‌ கூடாது..?! அதை அவ்வாறுதானே அழைக்க கூடும்‌..?! இன்னும்‌ மனித வாடையே படாத காடுகளிலும்‌, தீவுகளிலும்‌ எத்தனை எத்தனையோ அரிய உயிரினங்கள்‌ வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. டார்வின்‌ கொள்கைபமி, தகுதி உள்ளவை தப்பி பிமைக்கும்‌'. இறந்துவிடுவோமென்று தெரிந்தும்கூட சேவல்‌, தன்‌ உயிரைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள, குறைந்தபட்ச போராட்டத்தையாவது செய்கிறதா..? இல்லையா..?! இயற்கை நியதிப்படி, 'வாழ்வதற்காகவே உயிர்கள்‌ உருவாக்கப்பட்டிருக்கின்றன'. ஆக, அழிந்துவிட்ட உயிரினங்களாக, நாம்‌ எண்ணிக்‌ கொண்மருக்கும்‌   டைனோசர்களுங்கூட, நம்‌ அகண்ட பார்வைக்கு     அகப்படாமல்கூட இருக்கலாம்‌ இல்லையா..?! 'காட்ஸில்லா' படத்தில்‌, ராட்சத உயிரினமொன்று கடலுக்கடியிலிருந்து வந்ததாகவும்‌, அணுஉலைக்‌ கழிவுகளால்‌ கடலுக்கடியில்‌ உள்ள உயிரினங்களின்‌ மரபணுவில்‌ ஏற்பட்ட குழறுபடிகளால்‌, காட்ஸில்லா என்ற ராட்சத உயிரினம்‌ உருவானது, என்றும்‌ கூறப்பட்டருக்கும்‌. ஜப்பானிய புனைவுக்‌ கதாப்பாத்திரமான இது, பழமையான ஜப்பானிய புராணங்களில்‌ கூறப்படும்‌ கதைகளில்வரும்‌ ஓர்‌ அதிசய உயிரினத்துடன்‌ ஒப்புமைப்படுத்தப்பட்டிருக்கும்‌. அதற்கு பெயர்தான்‌ 'காட்ஸில்லா' என்றும்‌ கூறுவார்கள்‌. அது, பாதாள உலகத்திலிருந்து வந்ததாகவும்‌, பூமியின்‌ தோற்றத்திலிருந்தே அந்த உயிரினம்‌ இன்னமும்‌ உயிர்வாழ்ந்து வருவதாகவும்‌, பூமிக்கு ஏதேனும்‌ அசம்பாவிதம்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌, உலகத்தை ஆபத்திலிருந்து காக்கும்‌ பொருட்டு, பாதாள உலகத்திலிருந்து வெளியே வந்து, உலகை காக்குமாம்‌. புராணப்படியாக சொல்லப்பட்ட இந்த கதை வேண்டுமானால்‌ புரளியாக இருக்கலாம்‌. ஆனால்‌ அறிவியில்‌ முறைப்படி, பூமியின்‌ தோற்றத்திலிருந்தே பூமியில்‌ இன்னமும்‌ வாழ்ந்துகொண்டிருக்கும்‌ உயிரினங்கள்‌ இருக்கலாம்‌ இல்லையா..?!  'கோர்‌' என்ற படத்தில்‌, நிலத்தில்‌ துளையிட்டு பூமியின்‌ நடுப்பகுதிக்கு செல்வார்வாகள்‌. அதேபோல, 'சன்சைன்‌' என்ற படத்திலும்‌, சூரியனை நோக்கி விண்கலத்தில்‌ சென்று, சூரியனின்‌ மையப்‌ பகுதியை அடைவார்கள்‌. பூமியின்‌ மையத்திலும்‌, சூரியனின்‌ மையத்திலும்‌, வெளிப்புற வெப்ப நிலையைவிட, மிதமான தட்பவெட்பமே காணப்படும்‌ எனவும்‌, உயிர்கள்‌ வாழ்வதற்கான சாத்தியக்‌ கூறுகள்‌ இருப்பதாகவும்‌, கூறியிருப்பார்கள்‌. 'லேண்ட்‌ ஆஃப்‌ தி லாஸ்ட்‌' படத்தில்‌, பூமிக்கடியில்‌ பல்லியின்‌ தோற்றத்தைக்‌ கொண்ட மனிதர்கள்‌ வாழ்வதாகவும்‌, அதற்கு பெயர்‌ 'ரெப்டிலியான்கள்‌' எனவும்‌ கூறப்பட்டிருக்கும்‌. ஆக தட்பவெட்ப நிலையைப்‌ பொறுத்து, தோற்றத்தில்‌ மாறுபாடு இருக்கலாமே ஒழிய, உயிரினங்களே இருக்காது என்று சொல்ல, நவீன அறிவியலால்‌ கூட முடியாது.     'அப்ஸைட்‌ டவுன்‌' படத்தில்‌, இணை கிரகங்கள்‌ (பேர்லல்‌ யூனிவர்ஸ்‌) இருப்பதாகவும்‌, 'தி ஒன்‌' படத்தில்‌ முடிவிலி உலகம்‌ (மல்டி வெர்ஸ்‌) இருப்பதாகவும்‌, அறிவியல்‌ முறைப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. ஆனால்‌ இந்த திரைப்படங்களில்‌, அறிவியல்‌ உதாரணங்களாக எதனைக்‌ கட்டுகிறார்கள்‌..?! பேர்லல்‌ யூனிவர்ஸ்‌ இருக்கின்றது, என்பதை நிருவுவதற்காக, நிழலையும்‌ நிஜத்தையும்‌ உதாரணங்காட்டுகிறார்கள்‌. பூமியின்மேல்‌ ஒரு பொருள்‌ நேராக நிற்க வேண்டுமானாலுங்கூட, அதற்கு இணையான தலைகீழ்‌ சமநிலை இருந்தாக வேண்டும்‌ என்கிறது. இதே கதையைத்தானே, புணாங்களும்‌ சொல்கிறது..?! அந்த காலத்தில்‌ களியும்‌ கம்பங்கூலும்‌ உதாரணமாக சொல்லப்பட்டது; இன்றைய காலத்தில்‌ பீட்ஷாவும்‌ பர்கரும்‌ உதாரணங்களாக சொல்லப்படுகிறது. தவிர விசயம்‌ ஒன்றேதான்‌. பழைய சூப்பர்மேன்‌ படத்தில்‌, கிரிப்டான்‌ கிரகத்திலிருந்து அதிசய சக்திகொண்ட குழந்தையொன்று பூமிக்கு வந்ததாகவும்‌, கிரிப்டான்‌ கிரகத்திலுள்ள வைரங்கள்‌ (கிரிஸ்டல்ஸ்‌) தான்‌, அந்த குழந்தைக்கு அதிசய சக்திகளை வழங்கியதாகவும்‌, அந்த குழந்தைதான்‌ 'சூப்பர்மேனாக பூமியில்‌ கொண்டாடப்படுவதாகவும்‌ சொல்லப்பட்டிருக்கும்‌. கேள்வி: லேண்ட்‌ ஆஃப்‌ தி லாஸ்ட்‌ படத்தில்‌, பூமிக்கடியில்‌ உயிர்வாழும்‌ மனிதர்கள்‌, பல்வியை போன்ற தோற்றத்தில்‌ இருப்பார்கள்‌ என சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. அதேபோல, 75% நீரும்‌ 25% நிலமும்‌ கொண்ட இந்த பூமியில்‌ கூட, தட்ப வெட்பத்தை பொறுத்து, ஒவ்வொரு நிலப்பகுதிக்கும்‌ 'நிறம்‌, தோற்றம்‌, உயரம்‌' என எல்லாவிதங்களிலும்‌ வேற்றுமைகள்‌ காணப்படுகிறது. ஆனால்‌, கிரிஸ்டல்கள்‌ நிறைந்த கிரிப்டான்‌ கிரகத்திலிருந்து வந்த சூப்பர்மேன்‌ மட்டும்‌, எப்படி சுத்தமான அமெரிக்கரைப்போல காட்சியளிக்கிறார்‌...?! நல்லவேளையாக, சமீபத்தில்‌ வெளியான சூப்பர்மேன்‌ வரிசைப்படங்களில்‌, இந்த லாஜிக்‌ மிஸ்டேக்குகளை அடைக்க முற்பட்டிருக்கின்றனர்‌.     []   சமீபத்தில்‌ வெளியான 'ஸ்பைடர்மேன்‌ மல்டிவெர்ஸ்‌' படத்தில்‌ வெவ்வேறு பரிணாமங்களில்‌ வாழும்‌ ஸ்பைடர்மேன்‌களை ஒன்றாக இணைத்துள்ளனர்‌. வெவ்வேறு பரிணாமங்களில்‌ வெவ்வேறு ஸ்பைடர்‌ மேன்கள்‌ வாழ்வது அறிவியல்‌ முறைப்படி உண்மை என்றால்‌, பாதாள உலகத்தில்‌ வாழும்‌ ரெப்டிளியான்களும்‌, பரலோகத்தில்‌ வாழும்‌ கடவுள்களும்‌ உண்மைதானே..?!     அறிவியல்‌ விதிப்படி காலத்தை நையாண்டி செய்து, 'மல்டிவெர்ஸ்‌', 'பேரிலல்‌ யூனிவர்ஸ்‌', 'வேற்று கிரகங்கள்‌' இதெல்லாம்‌ சாத்தியமாகும்‌ வாய்ப்புகள்‌ இருக்கும்போது, கண்டிப்பாக பாதாள உலகம்‌, பரலோக உலகம்‌ இதெல்லாம்‌ சத்தியமாக இருப்பதற்கு வாய்ப்புகளுண்டு. ஃபின்னிஸ்‌ படமான 'ஜயர்ன்‌ ஸ்கை 2' படத்தில்‌, 1945-ம்‌ ஆண்டோடு அழிந்துவிட்ட நாஜிக்கள்‌, நிலவின்‌ மறுபகுதியில்‌ மறைந்து வாழ்ந்த கொண்டிருக்கின்றனர்‌. 2047-ம்‌ ஆண்டு மீண்டும்‌ பூமிக்கு வந்து ஆட்சி நடத்தினால்‌ எப்படி இருக்கும்‌...?! என்பதுபோன்ற திரைக்கதை அமைக்கப்பமழூருக்கும்‌. நாஜிக்கள்‌ மீண்டும்‌ அவதாரமெடுத்தால்‌, நாஜி மாடல்‌ உலகத்தை உருவாக்குவதற்கு அவர்களுக்குத்‌ தேவை 'ஹால்லோ எர்த்‌ கோட்பாடு தான்‌. இந்த படமும்கூட, ஹாலோ எர்த்‌ கோட்பாடை அடிப்படையாகக்‌ கொண்டுதான்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌. 'நாஜி மாடலுக்கும்‌, ஹாலோ எர்த்‌ கோட்பாட்டிற்கும்‌, உலகம்‌ உருண்டை என்கிற நவீன அறிவியலுக்கும்‌ என்ன சம்பந்தம்‌..?! பிற்பகுதியில்‌ இதுபற்றி காண்போம்‌.       10- ட்வின்‌ பிளேம்‌ தியரி (Twin Flame Theory)   []   மலையாள படமான 'சார்லி' திரைப்படத்தில்‌, விசித்திரமான சிப்பாயைப்‌ பற்றியொரு கதை சொல்லப்பட்டிருக்கும்‌. அந்த சிப்பாயின்‌ உயிர்‌, எங்கோ கடலுக்குள்‌ வாழும்‌ ஒரு மீனுக்குள்‌ வைத்து பூட்டப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கும்‌. ஒருகட்டத்தில்‌, அந்த மீனும்‌ சிப்பாயும்‌ இணைந்தாக வேண்டும்‌ என்கிற நிர்பந்தம்‌ ஏற்படும்‌. அதுதான்‌ விதியும்கூட.. கிழக்காசிய புராணங்களில்‌ கூறப்பட்டிருக்கும்‌ நம்பிக்கைகளின்படி, 'இப்பூமியில்‌ பிறக்கும்‌ ஒவ்வொரு உயிரும்‌, பகுதி (பாதி) ஆன்மாவுடன்‌ தான்‌ பிறக்கின்றது. அதன்‌ மீதி ஆன்மா, வேறொரு உயிரிடத்தில்‌ புதைத்து வைக்கப்பட்டருக்கும்‌. ஆக, இரு உயிரினங்களுக்கு, ஓர்‌ ஆன்மா என்ற விகிதத்திலேயே, இம்மொத்த பிரஞ்சமுமே இயற்கையால்‌ உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக, பாதியான இந்த இரு ஆன்மாக்களைத்‌ தான்‌ 'ட்வின்‌ ஃபிளேம்‌' (இரட்டை பிளம்பு) என்பார்கள்‌. இதைத்தான்‌ தாவோ சமயத்தில்‌ 'யிங்‌ & யாங்‌' என்றும்‌ கூறுவார்கள்‌... 18-ம்‌ நூற்றாண்டில்‌, மேற்கத்திய உலகிற்கு அறிமுகமான இந்த கோட்பாடு, பின்னாளில்‌ பைபிளோடும்‌ தொடர்புபடுத்தி மெருகேற்றப்பட்டது. 'சார்லி' படத்தில்‌ கூறப்படும்‌ 'சிப்பாய்‌-மீன்‌' இவை இரண்டும்‌, வெவ்வேறு உயிரினங்கள்‌; ஆனால்‌, ஆன்மா ஒன்றுதான்‌. இதுதான்‌ பழமையான ட்வின்‌ ஃபிளேம்‌ கோட்பாடு ஆகும்‌. அதே சார்லி படத்தில்‌, 'சார்லி-பார்வதி' கதாபாத்திரங்களுக்கு உடல்கள்‌ வெவ்வேறாக இருந்தாலும்கூட, ஆன்மா ஒன்றுதான்‌. இதேபோலத்தான்‌ அதேபடத்தில்‌ வரும்‌ வயதான 'போஸ்ட்மேன்‌- மீனாட்சி' கதாபாத்திரங்களும்‌ கூட. ஆனால்‌, இந்த இடத்தில்‌ ஆன்மா, இரண்டு மனிதர்களிடத்தில்‌ சரிபாதியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும்‌, ஒருத்தர்‌ ஆணாகவும்‌, இன்னொருத்தர்‌ பெண்ணாகவும்‌ சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான்‌ நவீன 'ட்வின்‌ ஃபிளேம்‌ தியரி' தலைதாக்கி நிற்கிறது. ஏனெனில்‌ பைபிளைப்‌ பொறுத்தமட்டில்‌, ஒரு ஆணுக்கு இணை, இன்னொரு பெண்ணாகத்தான்‌ இருக்க முடியும்‌. ஆதாமின்‌ இணை, ஏவாலாகத்‌ தான்‌ இருக்க முடியுமே தவிர, ஒரு நாயாகவோ (௮) இன்னொரு ஆணாகவோகூட இருக்க முடியாது. கிருத்துவம்‌, ஓரினச்‌ சேர்க்கையை எதிர்க்கிறது; சக உயிரங்களிலிருந்து மனிதனை, வேறுபடுத்தி உயர்ந்தவானாக பாவிக்கிறது. சார்லி படம்‌, என்னதான்‌ 'ட்வின்‌ ஃபிளேம்‌' தியரியை அடிப்படையாகக்‌ கொண்டு அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தாலுங்கூட, யதார்த்தத்தையும்‌ இயற்கையையும்‌ மறுதலித்தே எடுக்கப்பட்டிருக்கின்றது. நைட்‌ சயமாலனின்‌ தி லாஸ்ட்‌ ஏர்பிண்டர்‌' படத்தில்‌, ட்வின்‌ ஃபிளேம்‌ தியரியை மிக ஆழமாகவும்‌, குழப்பமின்றியும்‌ காட்சிபடுத்தியிருப்பார்கள்‌; ஆனால்‌, பார்வையாளர்கள்‌ அதனை வெறும்‌ ஃபேண்டசி படமாக மட்டுமே கண்டார்கள்‌. பனி பிரதேசத்தில்‌ வாழும்‌, தண்ணீரை கட்டுப்படுத்தும்‌ சக்திகொண்ட மனிதர்கள்‌ வசித்து வருவார்கள்‌. அவர்களிடத்தில்‌ யின்‌& யான்‌ என்கிற இரண்டு மீன்கள்‌ இருக்கும்‌; அந்த இரண்டு மீன்களின்‌ உள்ளேதான்‌, சூரிய சந்திர ஆன்மாக்கள்‌ பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்‌. அதிலுள்ள ஒரு மீனைக்‌ கொன்றுவிட, சந்திரன்‌ தன்‌ சக்தியை இழந்துவிடும்‌ ஆபத்து ஏற்படும்‌. பின்னர்‌... அந்த மக்களின்‌ இளவரசியாக வரும்‌ பெண்ணின்‌ ஆன்மாவை மீனுக்குக்‌ கொடுத்து, மீனை உயிர்பெறச்‌ செய்வாள்‌; சந்திரன்‌ மீண்டும்‌ பிரகாசிக்கத்‌ தொடங்கிவிடும்‌. அதாவது, மீனுக்குள்‌ பாதி ஆன்மாவும்‌, மீதி ஆன்மா இளவரசிக்குள்ளும்‌ இருக்கும்‌. மீன்‌ இறந்தவுடன்‌, மீனின்‌ பாதி ஆன்மாவான, இளவரசியால்‌ மட்டுமே மீண்டும்‌ மீனுக்கு உயிர்கொடுக்க முடியும்‌. அவ்வாறு மீனும்‌-இளவரசியும்‌ பாதிப்பாதி ஆன்மாக்களாக உயிரோழருக்கின்ற பட்சத்தில்‌, சந்திரன்‌ என்ற பிரபஞ்ச பொருண்மை நிலைபெற்றருக்கும்‌. இந்த படத்தில்‌, டேவிட்‌ ஃபிளெம்‌ தியரியைக்‌ கடந்து, ட்வின்‌ பிளேம்களுக்கும்‌, பிரஞ்சத்திற்கும்‌ என்ன தொடர்பு..?! என்பதுபற்றி விரிவாக சொல்லப்பட்டருக்கும்‌. படத்தில்‌ வரும்‌ ஏனைய கதாபாத்திரங்களெல்லாமுமே, இயற்கையின்‌ மறு அவதாரங்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. கிருத்துவ மதத்தை பொறுத்தமட்டில்‌, ட்வின்‌ பிளேம்களாக இப்பூமிக்கு வந்த இரு உயிர்களின்‌ நோக்கம்‌, ஒன்றாக இணைந்து, ஓர்‌ உரியிராக இயற்கையுடன்‌ இணைந்துவிட வேண்டும்‌' என்பதுதான்‌. அவ்வாறே 'செரன்டிபிட்டி', 'ஐ ஆர்ஜின்‌'", 'நோட்புக்‌', 'லேக்‌ ஹவுஸ்‌', அப்சைட்‌ டவுன்‌' போன்ற திரைப்படங்களும்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌. நைட்‌ சயமாலனின்‌ அண்பிரேக்கபிள்‌' படத்திலுங்கூட, இதே தியரியை பயன்படுத்தியிருப்பார்‌. இயற்கையில்‌ இருவேறு எதிரெதிர்‌ சக்திகொண்ட இருநபர்கள்‌ சந்தித்துக்‌ கொண்டால்‌, எப்படி இருக்கும்‌..?! என்பதுதான்‌ அவரின்‌ கற்பனை. எதிரெதிர்‌ சக்திகொண்ட அந்த இறுவேறு நபர்களும்‌ ஒன்றாக இணைகையில்‌, அவர்களின்‌ பலம்‌ இருமடங்காகும்‌ என்பதை அவரின்‌ கிளாஸ்‌ படத்தில்‌ சொல்லியுருப்பார்‌. அந்த எதிரெதிர்‌ சக்திகொண்ட   இறுவேறு நபர்களும்தான்‌, ஒரே ஆன்மாவை உடைய ட்வின்‌ ஃபிளேம்கள்‌ ஆவர்‌. அவர்கள்‌ இருவரும்‌ ஒன்றாக இணைய வேண்டும்‌ என்பதுதான்‌, இயற்கையின்‌ விதி. அதேவேளையில்‌, அவர்களிருவரும்‌ ஒரே பாலினத்தை சார்ந்தவர்கள்தாம்‌, என்பதை மறந்துவிடக்‌ கூடாது.     []     'ரேடியஸ்‌' என்கிற கனேடிய அறிவியல்‌ புனைவு படத்தில்‌, நினைவுகள்‌ அழிக்கப்பட்ட இருவேறு நபர்கள்‌, தங்களின்‌ கடந்தகாலத்தைத்‌ தேடுவதாகவும்‌, நிகழ்காலத்தில்‌ தங்களின்‌ அடையாளத்தை கண்டறிவதாகவும்‌, திரைக்கதை அமைக்கப்பட்மருக்கும்‌. இப்படத்தில்‌, நாயகன்‌ நாயகி இருவருமே நினைவுகளை இழந்தவர்களாக கண்விழிப்பர்கள்‌. அவர்களின்‌ கடந்தகால நினைவுகளைப்‌ பற்றி தேடும்‌ படலத்தில்‌, பல அசம்பாவிங்கள்‌ நடந்தேறும்‌. அவற்றிற்கு தர்க்கப்‌ பூர்வமான எந்த காரணங்களும்‌ சொல்லப்படுவது கிடையாது. தொடர்ந்து, அவர்களின்‌ இடைவெளிக்‌ குறைய குறைய, அசம்பாவிதங்கள்‌ அதிகரிக்கின்றன. நினவுகளை இழந்த அந்த இருநபர்களுந்தான்‌ ட்வின்‌ ஃபிளேம்கள்‌' ஆவர்‌. அவர்கள்‌ இருவருக்குமான இடைவெளி குறையக்‌ குறைய, இருவரின்‌ எதிரெதிர்‌ அதிர்வெண்களின்‌ காரணமாக, கதிரியக்க பேராபத்துகள்‌ நடந்தேறும்‌..(ஒரு அணுக்‌ கருவின்‌ மையத்தினுள்‌ எலக்ட்ரானும்‌, நியூட்ரானும்‌ இயங்குவதைப்போல) உயிர்கள்‌ செத்து மடியும்‌, நிலம்‌ வறண்டு போகும்‌..ஆனால்‌, அவர்களிருவருக்கும்‌ எவ்வித ஆபத்தும்‌ நேரிடாது. படத்தில்‌, இரட்டை ஆன்மாக்களாக சித்தரிக்கப்படும்‌ அவர்கள்‌ இருவரும்‌ இணையக்கூடாது என்பதே, இயற்கை விதியாக சொல்லப்பட்டிருக்கும்‌. ஆக, கிருத்துவத்தில்‌ (மேற்குலகில்‌) குறிப்பிடப்படும்‌ 'ட்வின்‌ பிளேம்‌' தியரிக்கும்‌, கிழக்காசியாவில்‌ உருவான ட்வின்‌ ஃபிளேம்‌ தியரிக்கும்‌ ஏராளமான விதிமுறை   வேறுபடுகள்‌ உண்டு.       11- ஜெர்ம்‌ தியரி (Germ Theory)   []   பிராட்‌ பிட்‌ நடிப்பில்‌ வெளியான 'வேர்ல்‌ வார்‌ ஜீ' படத்தில்‌, நோய்த்தொற்று பேரிடரால்‌ பொதுமக்களின்‌ இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும்‌. பாதிக்கப்பட்ட மக்கள்‌, ஜோம்பிக்களாக மாறிவிடுகின்றனர்‌; தடுப்பு மருந்துகள்‌ எதுவும்‌ வேலைசெய்வதில்லை; அரசாங்கங்களும்‌ கைகளை விரித்துவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில்‌, நாயகனான பிராட்‌ பிட்‌ அவர்களின்‌ குடும்பமும்‌ அடக்கம்‌. அவர்தன்‌ குடும்பத்தையும்‌, தன்னையும்‌ எவ்வாறு காத்துக்‌ கொள்ளப்‌ போராடினார்‌ என்பதே படத்தின. கதையாக சொல்லப்பட்டருக்கும்‌. இந்த படத்தில்‌ வைரஸ்‌ தொற்றானது, ஓர்‌ உடலிலிருந்து மற்றொரு உடலுக்குப்‌ பரவிச்‌ செல்ல, ஜோம்பி' எனும்‌ காரணம்‌ தேவைப்படுகிறது. ஜோம்பிக்கள்‌ ஒரு ஆரோக்கியான நபரை கடித்து பரப்பினாலொழிய, வைரஸ்‌ வேரெந்த வகையிலும்‌ பரவாது. ஆக, நாயகனுக்கு ஒரு சிந்தனை உதையமாகும்‌. ஆரோக்கியமான தன்‌ உடவில்‌, காய்ச்சல்‌ வைரஸ்‌ ஒன்றை செலுத்திக்‌ கொள்வான்‌. அது சாதாரண காய்ச்சலை ஏற்ப்படுத்தும்‌ வைரஸ்தான்‌. இப்போது, ஜோம்பிக்களுக்கு நடுவே தைரியமாக நடந்து சென்று, ஆய்வு மேற்கொள்வான்‌. அவனை எந்த ஜோம்பிக்களும்‌ தீண்டுவதில்லை. அவன்‌ சோதனையில்‌ வெற்றிப்பெருகிறான்‌; அவனைப்போலவே தன்‌ குடும்பத்திற்கும்‌ செயற்கையான முறையில்‌, சாதாரண வைரஸ்‌ காய்ச்சலை செலுத்தி, பெருந்தோற்றான ஜோம்பி வைரஸ்களிடமிருந்து, தன்னையும்‌ தன்‌ குடும்பத்தையும்‌ காத்துக்‌ கொள்வான்‌. ஆக, ஜோம்பிக்கள்‌ என்பவை யாது...?! அவை சுயமாக சிந்திக்குமா...?! மிருகங்களைப்போல மூக்கால்‌ நுகர்ந்து, காதால்‌ சத்தத்தை உணரும்‌ தன்மை மட்டுமே கொண்ட ஜோம்பிக்களுக்கு, ஆறாம்‌ அறிவான பகுத்தறிவு எங்கிருந்து வந்தது...?! இது ஆரோக்கியமான உடல்‌, இது ஆரோக்கியமற்ற உடல்‌ என்று எவ்வாறு பகுப்பாய்வு செய்தது...?! நுண்ணியிரிகள்தான்‌ நோய்த்‌ தொற்றுக்கு காரணம்‌. நூண்ணுயிர்களின்‌ வேலையே, நோயைப்‌ பரப்புவது தான்‌.-- என்று நவீன மக்கள்‌ நம்பத்‌ தொடங்கிவிட்டனர்‌. ஆனால்‌, நுண்ணுயிர்களின்‌ தந்‌தை என அழைக்கப்படும்‌ லூயி பாஸ்டர்‌ அவர்களின்‌ நுண்ணுயிர்‌ கொள்கை இதுவல்ல. 'தி தவ்‌' என்கிற படத்தில்‌, ஆர்டிக்‌ பனிப்பிரதேசத்திக்கு பயணம்‌ மேற்கொள்ளும்‌ ஆய்வுக்குழு வொன்று, அங்கே மர்மமான உடலொன்றை கண்டறிவார்கள்‌. நீண்டகாலங்களாக பனியில்‌ புதையுண்ட கிடந்த அந்த உடலை, ஆய்வுக்குட்படுத்தும்‌ ஆராய்ச்சிக்‌ குழுவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள்‌ காத்துக்‌ கொண்டிருக்கும்‌. ஆய்வில்‌ ஈடுபட்ட ஒவ்வொரு நபருக்கும்‌, தீராத தொற்றுநோயின்‌ பாதிப்பு உண்டாகியிருக்கும்‌. அந்த நுண்ணுயிரி, ஆரோக்கியமான உடலின்‌ இரத்த செல்களில்‌ கலந்து, கொ௫ர மரணத்தை நோக்கி இட்டுச்‌ சென்றுவிடும்‌. ஆய்வுக்குழு நோய்த்தொற்றிலிருந்து தப்பித்தார்களா...? இல்லையா..? என்பதே படத்தின்‌ கதையாக சொல்லப்பட்டருக்கும்‌. இந்த படத்தில்‌, இனங்கண்டறியமுடியாத அந்த நுண்ணுயிரியின்‌ வேலை, இரத்த செல்களை சிதைவடையச்‌ செய்வது தான்‌. பனி பிரதேசம்‌ என்பதால்‌, உடலை உணவாக உட்கொள்ளும்‌, எந்த நுண்ணுயிர்களும்‌ தோன்றுவதற்கான வாய்ப்புகள்‌ இல்லாத. ஆனால்‌, ஏற்கனவே இறந்த ஓர்‌ உடலிலுள்ள, திரவ பொருட்களை மறுசுழற்சி செய்யும்‌ பொருட்டு, இயற்கையால்‌ உருவாக்கப்பட்டதுதான்‌ அந்த நுண்ணுயரி ஆகும்‌. அந்த நுண்ணுயிரியை கிளரிவிடும்போது தான்‌, விபரீதம்‌ ஆரம்பிக்கிறது. லூயி பாஸ்டரின்‌ ஜெர்ம்‌ தியரி என்ன சொல்கிறதென்றால்‌, நுண்ணுயிர்கள்‌ தான்‌, இந்த உலகின்‌ மிக முக்கியமான துப்புரவாளர்கள்‌ என்கிறது. 'எவோலேசன்‌' என்கிற ஹாலிவுட்‌ படத்தில்‌, வேற்றுகிரக நுண்ணுயிர்களால்‌ இப்பூமியில்‌ உள்ள உயிரினங்கள்‌ பாதிப்படுகிறது. பாதிக்கப்பட்ட உயிரினங்கள்‌, பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதர்களுக்கே இடையூறாக மாறுகின்றன. இந்தப்‌ போர்ச்‌ சூழலை எதிர்கொள்ளும்‌ நாயனும்‌, அவன்‌ கூட்டாளிகளும்‌ தலைக்குத்‌ தேய்த்து குளிக்கும்‌ சாம்புவை தண்ணீரில்‌ கலந்து, பாதிக்கப்பட்ட உயிரனங்களின்மீது தெளித்துவிட, அவை நுண்ணுயிர்‌ தொற்றிலிருந்து மீளுவதாக, படத்தில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌. சாம்புவில்‌ உள்ள கரிம வேதியியல்‌ பொருட்களின்‌ தாக்கம்‌ தாங்கமுடியாமல்‌, வேற்றுகிரக நுண்ணுயிர்கள்‌ அழிவை சந்திக்கின்றன. ஆக, இந்த படத்தில்‌ கூறப்படுவதென்ன...?! மற்ற உயிரினங்கள்‌ பரிணாம வளர்ச்சியடைவது தவறா..?! அல்லது மனிதர்களுக்கு அவை இடையூறாக அமைந்துவிடுவது தவறா..?! ஆக, நுண்ணுயிர்கள்‌ என்பவை அழிவை ஏற்படுத்துமா..?! 'ஐயம்‌ லெஜண்ட்‌' போன்ற படங்களில்‌, ஜோம்க்களை சக உயிரினமாக சித்தரிப்பது ஏன்‌...?! 'வார்ம்‌ பாடிஸ்‌' படத்தில்‌ நாகரீக வளர்ச்சியடைந்த மனிதன்‌, ஜோம்பியுடன்‌ ஒப்புமைபடுத்தப்பட்டு நையாண்டியாடப்‌ பட்டிருப்பான்‌. 'இடியோ கிராசி' படத்தில்‌ எதிர்கால முட்டாள்‌ மனிதர்கள்‌, நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டவர்களாகவும்‌, க்யூவில்‌ நின்று மருத்துவம்‌ செய்துகொள்ளவே தங்களின்‌ அன்றாட பொழுதை செலவழித்து கழிப்பதைப்‌ போலவும்‌ சித்தரிக்கப்‌ பட்டிருக்கும்‌. எக்ஸ்‌ &ஃபைல்ஸ்‌' என்ற படத்தில்‌, ஃபிமா ஸல என்ற தன்னார்வ நோய்தடுப்பு மற்றும்‌ சுகாதார நிலையமொன்று, பழங்கால வைரஸ்களை பதப்படுத்தி வைத்து, தேவைப்படும்‌ நேரத்தில்‌ செயற்கையாக பரவச்‌ செய்து, தங்களின்‌ அரசியல்‌ காரியங்களை சாதித்துக்‌ கொள்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌.     []   நுண்ணுயிரிகளைப்‌ பற்றி பொதுவெளியில்‌ மக்களுக்குத்‌ தவறாக கற்பிக்கப்படுகின்றது. ஆனால்‌, மக்களின்‌ எண்ணம்‌ அதற்கு நேர்மாறாகவும்‌, பேராபத்தாகவும்‌ மாறியிருக்கின்றது. ஆன்டி வைரல்‌' என்ற கனேடிய படத்தில்‌, எதிர்காலத்தில்‌ ஆரோக்கியமாக இருக்கும்‌ மக்கள்‌, தாங்களாகவே முன்வந்து வழியச்‌ சென்று தங்களின்‌ உடலில்‌ நோய்ப்‌பரப்பும்‌ நுண்ணுயிர்களை, செலுத்திக்‌ கொள்வார்கள்‌. நோய்‌ உண்டாக்கும்‌ வைரஸ்களை ஆரோக்கியமான மக்களுக்கு விற்று, அதை காசாக்கும்‌ நிறுவனங்கள்‌ பெருகிவிட்டிருக்கும்‌. மக்கள்‌, தாங்களாகவே முன்வந்து நோயுண்டாக்கும்‌ வைரஸ்களை, தங்களின்‌ உடலில்‌ செலுத்திக்‌ கொள்வது, ஒரு &பேஷனாகவே உருமாறியிருக்கும்‌. இந்த ட்ரெண்டை விளம்பரப்‌ படுத்துவதற்காக, பல செலிபிரெட்டிகளும்‌ உதவி செய்வார்கள்‌. செலிபிரட்டி (பிரபலங்கள்‌) விளம்பரங்களை காணும்‌ பொதுமக்கள்‌, தங்களின்‌ விருப்பத்திற்குரிய பிரபலத்தைப்‌ போலவே, தாங்களும்‌ நோய்தொற்றினால்‌ பாதிக்கப்படுவார்கள்‌.  இந்த படங்களிலிவிருந்து, நாம்‌ ஒருவிடையத்தை புரிந்துகொள்ள முடியும்‌. நோய்‌ உண்டாவதற்கு நுண்ணுயிரிகள்தான்‌ காரணமா..? ஒரு தொற்றுநோயை எவ்வாறு எதிர்காலத்தில்‌ எதிர்கொள்வது..?! என்பது பற்றிய சிந்தனையெல்லாம்‌ தேவையற்றது. கூட்டம்‌ எதனை ஏற்றுக்‌ கொண்டதோ.. அதை மட்டுமே நம்பு!       12- நீலிஸ்டிக் தியரி (Nihilistic Theory)   []     மேற்கத்திய திரைப்படங்களில்‌ குறிப்பாக ஐரோப்பிய படங்களில்‌, பொத்தாம்‌ பொதுவாக ஒருவித திரைக்கதை வறட்சி காணப்படும்‌. பெரியளவில்‌ நகைச்சுவைகள்‌ இருக்காது; பண்டிகைகள்‌ கொண்டாட்டங்கள்‌ என எதுவும்‌ இருக்காது; காதல்‌, பாசம்‌, குடும்பம்‌, நண்பர்கள்‌ என எல்லாம்‌ இருந்தும்கூட, ஏதோவொன்றில்லாத்தைப்‌ போலவே காணப்படும்‌. அதற்கு காரணம்‌ என்னவெனில்‌, நீலிச  மனப்பான்மை ஆகும்‌. மொத்தமாக, மேற்குலகமே நீலிச மனப்பான்மைக்குள்‌ மூழ்கிவிட வில்லை. ஆனால்‌ பெரும்பான்மையான மக்கள்‌, அப்படித்தான்‌ இருக்கிறார்கள்‌. தங்களுக்கென்ற தனிப்பட்ட கடமை, தங்களுக்கென்ற தனிப்பட்ட இலட்சியம்‌, தனிப்பட்ட ஆசாபாச உறவுகள்‌..என எதையும்‌ வைத்துக்‌ கொள்ளாதவர்களைத்‌ தான்‌ நடந்துகொள்கிறார்கள்‌.     19-ம்‌ நூற்றாண்டில்‌ இரண்டாம்‌ மகாயுத்த காலத்தில்‌ பொதுவெளியில்‌ அறியப்பட்ட இது, தற்காலத்தில்‌ அறிவார்ந்த சமூகத்தின்‌ கழுத்தை நெறிக்கத்‌ தொடங்கிவிட்டது. நீலசத்தின்‌ தந்தை என நீட்ஷே சொல்லப்படாலும்‌, நீட்ஷே-வை தெரியாத மக்களும்கூட, இந்த மனநோயினால்‌ பாதிக்கப்படுகின்றனர்‌. அப்படி என்னதான்‌ சொல்கிறது இந்த தியரி..?!     'பிறப்பின்‌ நோக்கம்‌ என்பது எதுவுமில்லை. வாழ்க்கை பொருளற்றது; மனித வாழ்க்கையே பொய்யானது தான்‌; இங்கு நாம்‌ அடைய வேண்டியதென்பது எதுவுமில்லை; இலக்குகளற்ற இன்பமற்ற வெறுமை நிறைந்தது தான்‌, இந்த நிலையற்ற வாழ்க்கையின்‌ இரகசியம்‌'     -- இதுவொரு பற்றற்ற ஞானியின்‌ மனநிலையையொத்த, வெற்றுச்‌ சிந்தனையாக படலாம்‌. ஆனால்‌, ஒரு ஞானியின்‌ மனநிலையும்‌, நீலிச மனநியையும்‌ நேர்‌எதிரானவை. ஒன்றுக்கொன்றெ சம்பந்தம்‌ இருந்தாலும்‌, வெவ்வேறு தளஙதளங்களில்‌ இயங்குபவை. இந்தியாவில்‌ ஒரு நபர்‌ பற்றற்ற நிலையை உணர்ந்தால்‌, அவர்‌ ஞானியாக போற்றப்படுகிறார்‌; அவருக்கு எதிர்காலம்‌ உண்டு. ஆனால்‌, மேற்குலகில்‌ ஒருநபர்‌ பற்றற்ற நிலையை உணரும்போது, அவர்‌ நிர்கதியாக நிற்கின்றார்‌. அவர்‌ பைத்தியமாகிவிட வேண்டும்‌; அல்லது மரணித்துவிட வேண்டும்‌'. மேற்கத்திய நாடுகளின்‌ கட்டமைப்பு என்பது, மனித அறிவினால்‌ உண்டாக்கப்பட்டது. அங்கு மனம்சார்ந்த அணுகுமுறைகள்‌ எதுவுமில்லை. இரண்டாம்‌ மாகா யுத்தம்‌ முடிந்தவுடன்‌, மேற்கத்திய உலகம்‌ எழுச்சிபெற ஆரம்பித்தது. எல்லா துறைகளிலும்‌, அவர்களுக்கு அடைய வேண்டிய இலக்கு என்பது நீண்டுகொண்டே சென்றது. ஆனால்‌, 20-ம்‌ நூற்றாண்டில்‌ நவீன அறிவியல்‌ வளர்ச்சியால்‌, மனித அறிவே கேள்விக்குரியாகும்‌ நிலை ஏற்ப்பட்டுள்ளது. இங்கு, மனித அறிவும்‌ கற்பனையும்‌ வெறும்‌ குப்பையாகிப்‌ போய்விட்டன. ஆக, மேற்கத்திய உலகம்‌ இலக்கின்றி பறக்கும்‌, காற்றாடியைப்போல தனித்து விடப்பட்டிருக்கிறது. எனவேதான்‌, மேற்கத்திய படங்களில்‌ நம்மூரைப்போன்ற மசாலாப்‌ படங்களை காண்பது அரிது. 'கும்மோ' என்ற படத்தில்‌ காட்சிகள்‌ நகரும்‌, கதாப்பாத்திரங்கள்‌ அறிமுகமாவார்கள்‌, பேசுவார்கள்‌; சிரிப்பார்கள்‌; சண்டையிடுவார்கள்‌; பாலுறவில்‌ ஈடுபடுவார்கள்‌. ஆனால்‌, இந்த படத்தில்‌ கதை என்று எதுவும்‌ இருக்காது. 'நீலிச மனப்பானமை மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்படுத்தும்‌ திரைப்படங்களில்‌ இது முக்கியமானது. பிரபலமான திரைப்படங்களான 'ஃபைட்‌ கிளபகிளப்‌', 'க்ளாக்‌ வொர்‌ ஆரஞ்ச்‌', அமெரிக்கன்‌ சைக்கோ' 'ஃபன்னி கேம்ஸ்‌' 'நோ கன்ட்ரி ஃபார்‌ ஓல்ட்‌ மேன்‌' போன்ற படங்களில்‌ மனநோயினால்‌ பாதிக்கப்பட்ட சைக்கோ ஒருவனைப்பற்றி பேசியிருப்பார்கள்‌. அந்த சைக்கோவின்‌ மனநிலை என்பது நீலிச மனப்பான்மை தான்‌. நம்மூர்‌ திரைப்படங்களில்‌ காட்டப்படுவதைப்‌ போல சைக்கோவை ஒரு பெருங்‌ குற்றவாளியாக மேற்குலகில்‌ காட்டுவதில்லை. அவர்களை ஷீரோக்களாக காட்டவதற்கான காரணம்‌ என்னவென்றால்‌, நீலிச மனப்பான்மை கொண்டவன்‌ அறிவு முதிர்ச்சி பெற்றவனாகத்‌ தான்‌ இருப்பான்‌. அவன்‌ மூளைக்கு இலக்குகளின்‌ எல்லை தீர்ந்துபோகும்‌ பட்சத்தில்‌, இதுவரை இருந்துவந்த நெறிமுறைகளையும்‌, வரைமுறைகளையும்‌ மீறி புதிய கலாச்சாரத்தை உருவாக்க எண்ணுகிறான்‌. அறிவியளாளர்‌ ஜான்‌ நாஷ்‌, ஆலன்‌ டுயூரிங்‌ போன்றோர்களும்‌ கூட இவ்வாறான மனநோயினால்‌ பாதிக்கப்பட்டவர்கள்தாம்‌. 'ஃபைட்‌ க்ளப்‌' போன்ற படங்களில்‌, இந்த மனோநிலைக்கான மருந்தாக, புது கலாச்சாரமொன்றை, புது சமூகமொன்றில்‌ உருவாக்க எண்ணுவார்கள்‌. ரெடி பிளேயர்‌ ஒன்‌' படத்தில்‌ சைபர்‌ உலகமொன்றை கணிணியில்‌ உருவாக்கி, மனித எண்டங்களை அதில்‌ உலவ விட்டருப்பார்கள்‌. ஒருவேளை, சைபர்‌ உலகம்‌ சாத்தியமாகமல்‌ இருந்திருந்தால்‌, மேற்கத்திய உலகம்‌ தன்‌ நம்பிக்கையை இழந்திருக்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை. கடந்த 50 வருடங்களில்‌ எண்ணற்ற இலக்கிநங்கள்‌   படைக்கப்பட்டாயிற்று. மனிதநேயம்‌, பாலியல்‌, சமூகம்‌, நெறிமுறை, தத்துவம்‌, வானியியல்‌ என எல்லா துறைகளிலும்‌ எல்லைகளைத்‌ தொட்டாயிற்று. ஆனால்‌, இதெல்லாம்‌ எதற்கு...?! என்ற கேள்விக்கு பதில்‌ ஒன்றுதான்‌. மனிதனுக்கு தேவை மகிழ்ச்சியான இன்பம்‌ !     []     செவன்‌' படத்தில்‌ சைக்கோ கொலையாளியாக சித்தரிக்கப்படும்‌ அந்நபர்‌ நன்கு கற்றறிந்தவர்‌. பைபிளை தன்‌ உயிரினும்‌ மேலாக மதிப்பவர்‌. அவர்‌ கொலைகளுக்கு சொல்லும்‌ காரணம்‌ ஞாயமானதுதான்‌. ஆனால்‌, மனிதநேயம்‌ போற்றும்‌ பைபிளில்‌ கெற்றம்‌ செய்பவர்களை தண்டிக்க சொல்லவில்லையே! பின்‌ எதற்காக அவர்‌ அந்த செயல்களை செய்தார்‌..?! பைபிளை காரணங்காடி, எளிமையாக தப்பித்துக்‌ கொள்ளும்‌ அவர்‌, ஒரு நீலிச மனப்பான்மை கொண்டவர்‌. கெவின்‌ கொஸ்ட்னரின்‌ மிஸ்டர்‌ ப்ரூக்ஸ்‌ படத்தில்‌ அவரது கதாபாத்திரமும்‌, அமெரிக்கன்‌ சைக்கோ படத்தில்‌ கிரிஸ்டியன்‌ பேல்‌ நடித்த கதாபாத்திரமும்‌, நீலிச மனப்பான்மை கொண்டவை தான்‌. மனிதநேயம்‌ பற்றி எவ்வளவோ இலக்கியங்கள்‌ வந்தாயிற்று; இனியும்‌ அதுபற்றிபேசுவதற்கு ஒன்றுமில்லை. மேலே நகர்ந்து செல்வதற்கு எந்த வழியுமில்லை என்கிற நிலை வரும்போது, நீலிச மனப்பான்மை தோன்றுகிறது. அது புது கலாச்சராம்‌ ஒன்றை உருவாக்க தூண்டுகிறது; புது நெறிமுறைகளை உருவாக்க துடிக்கிறது. '29 நீடில்ஸ்‌' என்கிற படத்தில்‌ கதாநாயகனிடம்‌ பாலியல்‌ விரக்தி காணப்படும்‌. ஓரினச்சேர்க்கை, பிடிஎஸ்‌ எம்‌, கூட்டுக்கலவி போன்ற சமூகத்தால்‌ புறந்தள்ளப்பட்ட எல்லாவிடையங்களை செய்தும்‌, அவனுக்கு திருப்தி ஏற்படாது. ஆகையால்‌, அவன்‌ பாலியல்‌ ஈர்ப்பையே புறந்தள்ள எண்ணுவான்‌. மேலைநாட்டவரின்‌ மனநிலையும்‌ தற்காலத்தில்‌ இவ்வாறாகத்தான்‌ உள்ளது.       13- டீ ஹிமனிஷேஷன் தியரி (Dehumanization Theory)   []     மனிதநேயம்‌ செத்துவிட்டது; மனிதர்கள்‌ உணர்ச்சிகள்‌ அற்ற எந்திரங்களாகிக்‌ கொண்டருக்கிறார்கள்‌; எதிர்காலத்தில்‌ மனிதநேயம்‌ தலைதாக்காவிட்டால்‌, மனிதர்கள்‌ மனிதத்‌ தன்மையுடன்‌ இருப்பதே அரிது. -- இவ்வாறாக பக்கம்‌ பக்கமாக மனித நேயத்மை பற்றி பேசும்‌ கற்றறிந்த சமூகம்‌, எதிர்காலத்தில்‌ மனிதநேயம்‌' என்கிற மதம்‌ மட்டுமே, மனிதனை காக்கும்‌ என நம்புகிறது. ஒருவேளை மனிதநேயம்‌ என்பதே பொய்யாகிப்‌ போனால்‌...?!நாம்‌ இத்தனை வருடங்களாக நம்பிக்கொண்டிருந்த மனிதநேயம்‌ என்ற வார்த்தையே, நமக்குச்‌ சொல்லப்பட்ட பொய்யாக இருந்தால்‌..?! அது மனிதர்களின்‌ மீதே தீவிரவாத செயலைத்‌ தூண்டும்‌, ஜடியாலஜியாக இருந்தால்‌..?!     மனிதநேயம்‌ பற்றி வாய்கிழிய பேசும்‌ நபர்களை பார்த்து, மனிதநேயம்‌ என்றால்‌ என்ன..?! என்கிற கேள்வி எழுப்பினால்‌, அவர்‌ என்ன பதில்‌ சொல்வார்‌..?! மனிதநேயத்திற்கான வரையறைகளாக எதையெதை கூறுவார்‌..?! மனித தன்மைக்கும்‌, மிருக தன்மைக்கும்‌ என்ன வேறுபாடு..?! உண்மையிலேயே மனிதநேயம்‌ என்ற ஒன்று, மனிதர்களிடத்தில்‌ உள்ளதா..?!     பிளேட்‌ ரன்னர்‌ 2049 என்ற 2049-ம்‌ வருடத்தில்‌ நடக்கும்‌ படத்தில்‌, ரயான்‌ கோஸ்லிங்‌ கே என்ற கதாபாத்திரம்‌ ஏற்று நடித்திருப்பார்‌. அவரின்‌ வேலை, மனித உருவிலிருக்கும்‌ ரெப்டைல்களை கண்டறிந்து அழிப்பது தான்‌. இந்த ரெப்டைல்கள்‌ என்பவை, மனிதனால்‌ உருவாக்கப்பட்ட எந்திரங்கள்‌ ஆகும்‌. இந்த எந்திரங்கள்‌, எதிர்காலத்தில்‌ பல்கி பெருகிவிடுகின்றன. ஒரு எந்திரம்‌ மற்றொரு எந்திரத்தை உருவாக்கி (எந்திரன்‌ படத்தில்‌ நடப்பதைபோல) மனிதர்களைவிட எண்ணிக்கையில்‌ அதிரித்துவிடுகின்றன. மனிதர்கள்‌ சிறுபான்மை இனமாக வாழ்ந்துவருகிறார்கள்‌. கே என்ற கதாபாத்திரத்தின்‌ வேலை, மனிதர்களைப்போலவே தோற்றத்திலும்‌, குணத்திலும்‌, செயலிலும்‌ நடந்துகொள்ளும்‌ அந்த இயந்திரங்களை இனங்‌ கண்டறிந்து அழிப்பதுதான்‌, அவரின்‌ வேலை. மனிதர்களினால்‌, கனிசமான அளவிற்கு அழிவை சந்தித்த எந்திரங்கள்‌, ஒருகட்டத்தில்‌ சமூகமாக வாழ     பழகிக்‌ கொள்கின்றன. அதாவது, மனிதர்களைப்போலவே குடும்பம்‌, பிள்ளைக்‌ குட்டி என. ஆனால்‌, நவீன மனிதர்களினால்‌ உருவாக்கப்பட்ட பெருநிறுவனம்‌ ஒன்று, தன்னர்வ அமப்படையில்‌ மனித இனத்தை காக்கும்‌ பொருட்டு, மனித இனத்தை தூய்மையாக்கும்‌ பொருட்டு, மனிதர்களுக்கு நடுவே மறைந்து வாழும்‌, இந்த எந்திரங்களைக்‌ இனங்‌ கண்டறிந்து அழிக்க வேண்டுமென முடிவெடுக்கிறது. அந்த பெருநிறுவனத்தினால்‌ நியமிக்கப்பட்ட வேலைக்காரன்தான்‌, இப்படத்தின்‌ கதாநாயகன்‌ கே. அவன்‌, தன்னுடைய கடந்தகாலத்தை முற்றிலும்‌ மறந்துவிட்டவனாகவும்‌, அவனுக்கு பெரெநிறுவனத்தினால்‌ வழங்கப்பட்ட வேலையை மட்டுமே பொறுப்புணர்வுடன்‌ செய்பவனாகவும்‌ செயல்படுகிறான்‌. ஒருகட்டத்தில்‌, அவன்‌ தன்னுடைய கடந்த காலத்தை அறிந்துகொள்ள வேண்டுமென ஆவல்‌ கொள்கிறான்‌. அப்பொழுதுதான்‌ ஒருசில சந்தேகங்கள்‌ அவனுக்கு எழும்புகிறது. எந்திரங்களை மனிதநேயமற்ற முறையில்‌ அழித்தொழிக்கிறோமே, உண்மையிலேயே நான்‌ மனிதன்‌ தானா..?! மனிதநேயம்‌ என்றால்‌ என்ன...? நவீன மனிதன்‌ தன்னுடைய மனித தன்மையை இழந்துவிட்டான்‌; எந்திரங்கள்‌ மனித தன்மையுடன்‌ நடந்துகொள்கின்றன. அப்படியானால்‌,   உண்மையிலேயே மனிதர்கள்‌ என்பவர்கள்‌ யார்‌ ..?     மனித தன்மையை இழந்த நவீன மனிதனா..? மனிதநேயம்‌ போற்றும்‌ எந்திரங்களா...?! இந்த சந்தேகங்களின்‌ முடிவில்‌, அவன்‌ ஒரு கேள்வியை மட்டுமே விட்டுச்‌ செல்கிறான்‌. மனிதநேயம்‌ என்பது நவீன மனிதனால்‌ உருவக்கப்பட்ட ஐடியாலஜியா..?! அப்பாவி மனிதர்களை காவு வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட, போலி வாசகமா..?! கே என்ற கதாபாத்திரம்‌ உண்மையில்‌ ஒரு ஹைபிரேட்‌ எந்திரம்‌ தான்‌. அதாவது ரெப்டைல்‌ என்று யாரை கொல்ல தேடி அலைகிறார்களோ, அந்த வகையைச்‌ சார்ந்தவன்‌ தான்‌. பழமையான மனித இனத்தை அழிப்பதற்காக,   நவீன மனிதனால்‌ உருவாக்கப்பட்ட ஓர்‌ எந்திரம்‌.     ஹாலிவுட்‌ படங்களில்‌, ஜோம்பிக்களை பற்றிய வர்ணனைகளை நீங்கள்‌ கண்மருக்கலாம்‌. ஜோம்பிக்கள்‌ மனித தன்மையுடன்‌ நடந்துகொள்ளாது; அவை குருட்டு மிருகங்கள்‌; மதியை இழந்த இரத்த பசிகொண்ட மிருகங்கள்‌. ஆக, ஜோம்பிக்களை எதிர்கொள்ளும்‌ மனிதர்கள்‌, அதனை துச்சமாக நினைத்து அறுப்பதும்‌ வெட்டுவதும்‌, இரத்த களரி செய்வதும்‌ திரையில்‌ காட்டப்படுகிறது. நன்கு கூர்ந்து கவனித்தால்‌ உங்களுக்கு புரியலாம்‌. உண்மையிலேயே மிருகம்‌ யார்‌..?! வைரஸை கமுக்கமாக, ஓருடலிலிருந்து மற்றோர்‌ உடலுக்கு கடத்தும்‌ ஜோம்பிக்களா..?! கைவேறு கால்‌ வேறாக   வெட்டி வீழ்த்தும்‌, குரல்‌ எண்ணங்கொண்ட நவீன     மனிதர்களா...?! ஜோம்பிக்கள்‌, தங்களின்‌ உணவாக செயலற்ற இறந்த உடல்களை தின்னுமாம்‌. இறந்த உடல்தானே ஜோம்பியாக மாறியது...?! அதென்ன செயலற்ற இறந்த உடல்‌...?! காலங்காலமாகவே நவீன   மனிதர்களிடத்தில்‌ கடத்தப்பட்டுவரும்‌ வெஜிடேரியன்‌ சிந்தனைதான்‌ ஜோம்பிக்களாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.     []   பர்ன்‌ இன்‌ ஃபேம்ஸ்‌ என்ற படத்தில்‌, எதிர்கால உலகில்‌ சோசியலிச அரசாங்கம்‌ அமைக்கப்பட்டுவிடுமானால்‌, உலகம்‌ எப்பட இருக்கும்‌..?! என்பதுபற்றி சொல்லியிருப்பார்கள்‌. மனிநேயம்‌ பற்றி பேசுவதில்‌ மார்க்சிய சிந்தனையை விட மேலான சிந்தனை வேறெதுவுமில்லை. அந்த மார்க்சிய சிந்தனையில்‌ அமைந்த அரசங்கம்‌, எதிர்கால உலகை மனிதநேயம்‌ என்கிறபெயரில்‌ ஆளுமானால்‌, அந்த உலகம்‌ எப்படி இருக்கும்‌...?! படம்‌ பாருங்கள்‌ உங்களுக்கே புரியும்‌. அவதார்‌ படத்தில்‌, இந்த கண்ணாடிக்கு பின்னாவிருப்பவர்களெல்லாம்‌ உயிர்களே கிடையாது; அவைகளைல்லாம்‌ மிருகங்கள்‌' என சொல்வதும்‌, நியூட்டன்‌ என்ற ஹிந்தி படத்தில்‌, இந்த காட்டிற்கு அந்த பக்கத்திவிருப்பவர்களெல்லாம்‌, பாக்கிஸ்தானிய தீவிரவாதிகள்‌' என இந்திய ராணுவ வீரர்கள்‌ சொல்வதும்‌' மனிதநேயத்துடன்‌ கூறப்பட்ட வாசகங்கள்‌ தானா..?! மனிதநேயம்‌ என்ற வார்த்தைக்கே இதுவரை அர்த்தம்‌ காணமுடியாத பட்சத்தில்‌, தீவிர மனித நேயத்தை போதிக்கும்‌ எந்த அமைப்பானாலும்‌ (மார்க்சியம்‌, மதம்‌, நவீன மருத்துவம்‌, நவீன அறிவியல்‌, நாட்டுப்‌ பற்று, போர்கள்‌, புனித நூல்கள்‌...) அது அப்பாவி மனிதர்களை காவுவாங்குவதற்காக புத்திசாலித்தனமாக, உருவாக்கப்பட்ட வெற்று வாசகம்‌ தான்‌' என தெளிவது மிக மிக அவசியம்‌.     14- மாடர்ன்‌ ஃபுட்‌ தியரி (Modern Food Theory)   []   உணவு அரசியலைப்‌ பற்றி எத்தனையோ ஆவணப்படங்களும்‌, திரைப்படங்களும்‌ வந்து கொண்டுதான்‌ இருக்கின்றன. ஆனால்‌, அவைகளைல்லாம்‌ செய்திகளை தாங்கிய தகவல்களாகவும்‌, வசனங்களைத்‌ தாங்கிய பிரச்சாரங்களாகவுமே வந்திருக்கின்றன. திரைப்படத்தில்‌ உணவைப்‌ பற்றியும்‌, அதுசார்ந்த விழிப்புணர்வை குறித்தும்‌, ஒருசில திரைப்படங்களே, திரைப்பாணியிலே ஆழமாக சொல்லிச்‌ செல்கின்றன. நவீன உணவு கோட்பாடு சொல்வதில்‌ முதல்‌ படி, 'உணவு பாதுகாப்பு; உணவை வீணாக்ககூடாது!' ஸ்பானிய திரைப்படமான 'ஃப்ளாட்ஃபார்ம்‌' படத்தில்‌, நவீன நுகர்வு கலாச்சாரம்‌ குறித்தும்‌, எதிர்கால உணவு அரசியல்‌ குறித்தும்‌ பேசப்பட்டிருக்கும்‌. பசிக்காக உணவை உட்கொள்வதை விட, ருசிக்காவும்‌ சொகுசிற்காகவும்‌ வீண்டிப்பது, சமகால வாடிக்கையாகிவிட்டது. 'யூ டியுப்‌' பொன்ற சமூக தளங்களில்‌, அதிகம்‌ சாப்பிடுவதை ஒரு பந்தையமாக நடத்துவது, பிரபலமாகிவருகிறது. கூடவே அந்த காணொளிகளுக்கு பார்வையாளர்களின்‌ எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது. அதிகம்‌ சாப்பிடும்‌ அந்த நபர்‌, போட்டியினுள்‌ நுழையும்‌ முன்‌, சமூக அக்கறைக்காக ஒரு வாசகத்தை முன்மொழிவார்‌. அது 'உணவை வீணாக்காதீர்கள்‌! உணவு கடவுளுக்கு சமமானது'. அவர்‌ சொன்னதில்‌ எந்த தவறுமில்லை. ஆனால்‌, அதைச்‌ சொல்லிவிட்டு அவர்‌ செய்வது ஞாயமா...?! உணவை வீணாக்காதீர்‌ என சொல்லிவிட்டு, அதிகம்‌ சாப்பிடுவதற்காக பந்தையத்திற்கு தயாராகிறார்‌. உணவை கீழே கொட்டி வீணாக்குவதும்‌, வயிற்று பசியைக்‌ கடந்து, மிகுதியான உணவை எடுத்துக்‌ கொள்வதும்‌ ஒன்றுதானே ! என்பதை அவர்‌ அறிவதில்லை. தற்கால நுகர்வு கலாச்சாரம்‌ இப்படித்தான்‌ தவறாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. பிளாட்‌ஃபார்ம்‌ படத்தில்‌, ஓவ்வொரு தளங்களாக இடம்பெயரும்‌ உணவையும்‌, இவ்வாறான நுகர்வு கண்ணோட்டத்தில்தான்‌, அதிளடைக்கப்பட்டருக்கும்‌ கைதிகள்‌ அணுகுவார்கள்‌. ஆனால்‌, ஒருகட்டத்தில்‌ படத்தின்‌ நாயகன்‌ சுயநலமாகவும்‌, அதேநேரத்தில்‌ பொதுநல நோக்குடனும்‌ சிந்திப்பான்‌. அதாவது, பொதுநல சிந்தனை கொண்ட ஒரு பொதுவான நபர்‌, உணவை சமமாக, எல்லோரின்‌ பசிக்கு தகுந்தாற்‌ போல பகிர்ந்தளித்தோமேயானால்‌, உணவும்‌ வீணாகாது. உணவிற்கான யுத்தமும்‌ நடவாது' என்ற தர்ம சிந்தனை அவனுக்கு தோன்றும்‌. உற்பத்தியாளருக்கும்‌ நுகர்வொரும்‌ இடையில்‌ நிற்கும்‌, பொதுநலன்‌ கொண்ட ஓர்‌ அமைப்பைப்‌ பற்றிய இந்த கோட்பாடு சரியானது தான்‌. ஆனால்‌, அந்த அமைப்பே நாளை, உணவு அரசியலை கையிலெடுக்குமேயானால்‌, நிலைமை தலைகீழாக மாறிவிடும்‌. அதாவது, ஒரு அரசாங்கத்தின்‌ தலைமையிலோ (அ) நிறுவனத்தின்‌ தலைமையிலோ, உணவு பாதுகாப்பு மற்றும்‌ பகிர்ந்தளிப்பு நன்முறையில்‌ நடக்குமேயானால்‌, பிற்காலத்தில்‌ மக்களின்‌ மீதான உணவு அரசியலை கட்டவிழ்க்கக்‌ கூடும்‌.   ஹங்கர்‌ கேம்ஸ்‌' திரைப்படமே அதைப்பற்றியது தான்‌. அதாவது, பசிக்கான விளையாட்டு'. எதிர்கால அமெரிக்கா பொருளாதார அமடப்படையில்‌, 13 மாகாணங்களாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாகாணங்களிலிருந்தும்‌, ஒருசில இளைஞர்களைத்‌ தேர்ந்தெடுத்து, ஆபத்தான விளையாட்டிற்கு தயார்‌ செய்து அனுப்புவர்கள்‌. உயிரைப்‌ பணயம்‌ வைக்கும்‌ அந்த விளையாட்டுப்‌ போட்டியில்‌, வென்றவர்களின்‌ மாகாண மக்களின்‌ வயிற்றுப்‌ பசி போக்கப்படும்‌. ஒவ்வொரு வருடமும்‌ விளையாடப்படும்‌   இப்போட்டிக்காக, தங்களின்‌ விருப்பு வெறுப்புகளை விட்டெறிந்தே, வீரர்கள்‌ கலந்துகொள்வார்கள்‌. ஒரு மகாயுத்தம்‌ நடந்துமுடிந்த பிறகு, சோசியலிச அரசாங்கமொன்று, அமெரிக்காவை ஆட்சி செய்யும்‌. யுத்தத்தின்‌ நினைவார்க்கமாக, ஒவ்வொரு வருடமும்‌ நடத்தப்படும்‌ இப்போட்டியில்‌ தான்‌, அமெரிக்க மாகாணங்களின்‌ சச்சரவில்லாத உணவுத்‌ தேவை பூர்த்தி செய்யப்படுவதாக காட்டப்பட்டிருக்கும்‌. கஸ்‌ வன்‌ சண்ட்‌ அவர்களின்‌ படமான 'ஃபாஸ்ட்‌ ஃபுட்‌ நேஷன்‌' என்ற படத்தில்‌, சமகாலங்களில்‌ மேலைநாடுகளில்‌, உணவு அரசியல்‌ எவ்வாறு நடத்தப்படுகிறது..? என்பதை துல்லியமாக பதிவு செய்திருப்பார்‌. உணவு பாதுகாப்பைப்‌ பற்றி பேசிக்கொண்டு, உணவு அரசியலை ஒருபுறம்‌ நடத்தும்‌ இதே அமைப்புகள்‌, மற்றொருபுறம்‌ அறிவுசார்‌ சூழல்‌ (Intellectual Environment) என்கிற பெயரில்‌ உணவு அரசியலை நடத்துகிறது. அதாவது, எதை சாப்பிடலாம்‌..?! எதை சாப்பிடக்‌ கூடாது..?! என்பதைப்பற்றிய விவாதம்‌. மலையாளத்தில்‌ வெளியான 'ஜல்லிக்கட்டு படத்தில்‌, உணவு பழக்கம்‌ குறித்த நவீன வாதத்தை முன்‌ வைத்திருப்பார்கள்‌. அதாவது, எருமையை உட்கொள்ளும்‌ மனித இனம்‌ எருமையைவிட மூர்க்கமாக நடந்துகொள்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. அதேபோல, அதற்கு நேர்மாறாக 'சேத்துமான்‌ என்ற தமிழ்‌ படத்தில்‌, சாப்பிடும்‌ உணவிற்கும்‌ மனிதனின்‌ குணத்திற்கும்‌   சம்பந்தமில்லை' என உணர்வுப்‌ பூர்வமாக சொல்லப்பட்டிருக்கும்‌. புஸ்ஸிங்‌ ஹாண்ட்ஸ்‌' என்ற ஆங்க்‌ லீ அவர்களின்‌ படத்தில்‌, நாயகன்‌ சீன தேசத்தை சார்ந்த, பழமைவாத கலாச்சாரம்‌ கொண்ட முதியவர்‌ தாம்‌. மேலைநாடான அமெரிக்காவில்‌ குடியேறிய தன்‌ மகனின்‌ வீட்டிற்‌ தஞ்சமடையும்‌ அவர்‌, தன்னுடைய கலாச்சாரப்‌ பின்னணியை விட்டுகொடுக்க மாட்டார்‌.   எனவே, ஆசிய கலாச்சார அடிப்படையில்‌, அவர்‌ பிற்போக்கு வாதியாக தன்‌ சொந்த மகனாலேயே ஒதுக்கப்படுவார்‌.     []   மார்வெல்‌ படமான 'வெனம்‌-2' படத்தில்‌, சிறார்களின்‌ மனதைக்‌ கவரும்‌ வகையிலும்‌, நகைச்சுவையாகவும்‌, 'சைவ உணவு கலாச்சாரம்‌ கமுக்கமாக உட்புகுத்தப்‌ பட்டிருக்கும்‌. 'வெனம்‌ என்ற உளன்‌ உண்டு உயிர்வாழக்கூடிய வேற்றுகிரக உயிரினம்‌, நாகரீக மனிதனின்‌ பழக்கம்‌ ஏற்பட்டு, சைவப்‌ பிராணியாக மாறிவிடுகின்றது. அது காதலிக்கிறது; சந்தோசப்படுகிறது; சிரிக்கிறது. நாகரீக மனிதனைப்‌ போலவே எல்லாவிதத்திலும்‌ நடந்துகொள்கின்றது. ஆனால்‌, வில்லன்களிடம்‌ மட்டும்‌ தன்‌ குரூர குணக்கதைக்‌ காட்டுகிறது. குணத்தை மாற்றிகொள்ளாத பட்சத்தில்‌, எதற்காக சைவ சாப்பாடு..?! 'கார்னேஜ்' என்ற பிரிட்டிஷ்‌ மாக்குமெண்டரி படத்தில்‌, 2067-ம்‌ வருடத்தில்‌, சைவ உணவு கலாச்சாரம்‌ எப்படியிருக்கும்‌ என்பதை மிக துல்லியமாகவும்‌, நாகரீக மனிதனின்‌ பரிணாம வளர்சியடைந்த அறிவு எப்படி இருக்கும்‌ ?! என்பதையும்‌ தெளிவாக காட்டிருப்பார்கள்‌. அசைவ உணவுப்‌ பழக்கத்தை விடமுடியாத நவீன மனிதர்கள்‌, அதனை 17% தொழிழ்நுட்பம்‌ மூலம்‌ அனுபவிப்பதும்‌, சைவ உணவு மதம்‌ என்கிற மதத்தையே உருவாக்கி அதற்கு கொடிபிடிப்பதும்‌, சாதாரண கோழி முட்டை சாப்பிடுவதைக்‌ கூட குற்றஞ்சாட்டுவதும்‌, அதற்கு தண்டனை வழங்குவதும்‌ 2067-ம்‌ ஆண்டு சகஜமாகிப்‌ போய்விடுகிறது, என படத்தில்‌ ஏகபோகத்திற்கு கலாய்த்திருப்பர்கள்‌.           15- சோசியல் கான்ஃபிலிக்ட் தியரி (Social Conflict Theory)   []   வர்க்க ஏற்றத்‌ தாழ்வு, இன வேறுபாடு, நிற வேறுபாடு, மொழி முரண்பாடு, சாதிய ஏற்ற தாழ்வுகள்‌ என உலகின்‌ பலதரப்பட்ட சமூக முரண்பாடுகளை குறித்து, ஏராளமான திரைப்படங்கள்‌ எடுக்கப்பட்டாகிவிட்டன. நேரடியாவோ (அ) மறைமுகமாவோ (அ) குறியீட்டு ரீதியாகவோ பல படங்களில்‌ பேசப்பட்டுவிட்டன. ஆனால்‌, இதே சமூக பிரச்சனையை முன்னிருத்தி சோதனை முறையில்‌, ஒருசில புதிய அலை இயக்குநர்கள்‌, வித்தியாசமான திரைப்படங்களைக்‌ கொடுத்திருக்கின்றனர்‌. அதாவது பாராசைட்‌, பர்னிங்‌ போன்ற கொரியப்‌ படங்களின்‌ கதை மற்றும்‌ திரைக்கதை வேறுவிதமாக இருந்தாலுங்கூட, கதைக்‌ கர என்பது 'சமூகத்தில்‌ காணப்படும்‌ ஏற்றத்‌  தாழ்வுகளை பற்றித்தான்‌ பேசுகிறது. 'ஸ்னோ பியர்சர்‌' திரைப்படம்‌, எதிர்காலத்தில்‌ நடப்பதாக காட்டப்படுகிறது. பெரும்‌ பேரிடரொன்றிற்குப்‌ பின்‌ தப்பிப்‌ பிழைக்கும்‌ மக்கள்‌, இரயிலொன்றில்‌ வசிப்பதாக காட்டப்படுகிறது. அந்த இரயிலின்‌ முன்பக்கமுள்ள பெட்டிகளில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ வசதி வாய்ப்புடன்‌ பொருளாதாரத்தில்‌ முன்னேற்றத்துடன்‌ காணப்படுகின்றனர்‌. அதேவேளையில்‌, இரயிலின்‌ பின்பக்கமுள்ள பெட்டிகளில்‌, சமூகத்தால்‌ ஒடுக்கப்பட்டு பொருளாதார மிகவும்‌ பின்தங்கிய மக்கள்‌ வசிக்கின்றனர்‌. இரயிலில்‌ நடக்கும்‌ வர்க்க ஏற்றத்தாழ்வு பிரச்சனையைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டு, படத்தின்‌ நாயகன்‌ இரயிலின்‌ முன்நோக்கிய பெட்டிகளுக்கு நகர்கிறான்‌. இரயிலின்‌ ஓட்டுநர்‌ பகுதியை அடையும்‌ அவனுக்கு, அதிர்ச்சியொன்று காத்திருக்கிறது. அப்போதுதான்‌ அவனுக்கு கொஞ்சம்கொஞ்சமாக உண்மை நிலவரம்‌ புரியத்‌ தொடங்குகிறது. 'எலிசியம்‌' படத்தில்‌, விண்வெளி மனிதர்களுக்கும்‌, புவி வாசி மனிதர்களுக்கும்‌, வர்க்க வேறுபாட்டு பிரச்சனை பற்றி சொல்லப்பட்டிருக்கும்‌. விண்வெளிவாசி மனிதர்களுக்கு கிடைக்கக்‌ கூடிய சாதாரண மருத்துவ சிகிச்சைகள்‌ கூட, புவிவாசிகளுக்கு பொருளாதார அமடப்படையில்‌ மறுக்கப்பட்டிருக்கும்‌. இந்த இரண்டு படத்திலுமே, வர்க்க வேறுபாட்டை உருவாக்கியவர்கள்‌, மேல்தட்டு   மக்கள்‌ மட்டுமல்ல. சமூக கட்டமைப்புகளை நன்கு உள்வாங்கிய, சமூகத்தால்‌ பெரிதும்‌ மதிக்கப்பட்டுவரும்‌, அதிகம்‌ கற்றறிந்த சான்றோர்கள்‌ எனப்படும்‌ அறிவாளிகள்‌' தான்‌. சுழற்ச்சிழுறை பொருளாதாரத்திற்கு மிகவும்‌ அத்தியாவசியமாக விளங்குவது, சமூக ஏற்றத்‌ தாழ்வுகள்‌ தாம்‌. அது இல்லாமல்‌ போகுமேயானால்‌, இந்த சுழற்சிமுறை நின்றுபோய்‌ பெருங்‌ குழப்பம்‌ (பெரும்‌ யுத்தம்‌) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரும்‌ யுத்தத்தை தவிற்பதற்காக, சின்னச்‌ சின்ன சச்ணரவுகளை தொடுத்துவிடுவதில்‌ தவறில்லை, என்பது அறிவார்ந்த சமூகத்தின்‌ வாதம்‌. 'எலிசியம்‌'  படத்தில்‌, பூமியில்‌ மக்கட்‌ தொகை அதிகரிப்பை சமாளிப்பதற்காக, விண்வெளியில்‌ கலன்களை அமைத்து, அங்கு பாதி மக்களை குடியேற்றியிருப்பார்கள்‌. பூமி எவ்வித இயற்கை வளங்களுமின்றி, சுடுகாடாக மாறிப்போயிருக்கும்‌. ஆதலால்‌, உணவிற்குக்‌ கூட ஏதோவொரு தன்னார்வ நிறுவனத்தை நம்பியிருக்கவேண்டிய கட்டாயம்‌ ஏற்ப்பட்டிருக்கும்‌. ஆனால்‌, விண்வெளி கலன்களில்‌ மக்களின்‌ தேவைகளனைத்தும்‌ பூர்த்திசெய்யப்பட்டு, சிறந்த நிர்வாகம்‌ நடந்துகொண்டிருக்கும்‌. ஆனால்‌, விண்வெளி கலன்களில்‌ சென்று வசிக்கவேண்டுமெனில்‌, அவர்கள்‌ பணக்காரர்களாக இருந்தால்‌ மட்டுமே சாத்தியமாகும்‌. ஆக, பொருளாதாரத்தில்‌ முன்னேறிய நபர்கள்‌ விண்வெளி   ஓடங்களிலும்‌, நலிவடைந்த மக்கள்‌ சுடுகாடான பூமியிலுமே விட்டுவிடப்படுகின்றனர்‌. சமூக ஏற்றத்‌ தாழ்வுகளை, யாரோ ஒரு நபர்‌ திட்டம்‌ தீட்டி உருவாக்க வேண்டியதில்லை. மக்களே சமூக காரணிகளுக்காக, ஏற்றத்‌ தாழ்வுகளை உருவாக்கிக்‌ கொள்வார்கள்‌ (அ) உருவாக்கப்பட்டு விடும்‌. 'தி பர்ஜ்‌' என்ற படத்தில்‌, சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைவதநற்காகவும்‌, நாட்டின்‌ பொருளாதார சிக்கல்களை கலைவதற்காகவும்‌, வருடத்தில்‌ ஒருமுறை குறிப்பிட்ட நாளொன்றில்‌, அரசியல்‌ சட்டதிட்டங்கள்‌ எதுவும்‌ வேலைசெய்யாது; அரசுத்‌ துறை நிறுவனங்கள்‌ எதுவும்‌ செயல்படாது, எனவும்‌ உத்தரவிடப்பட்டிருக்கும்‌. அந்த குறிப்பிட்ட நாளில்‌, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும்‌ எந்த செயலைச்‌ செய்தாலும்‌, அதற்காக தண்டனைகள்‌ வழங்கப்பட்ட மாட்டாது. இந்த பிரளய யுத்தத்திற்கு, பலியாகக்கூடிய பொதுமக்களிடமிருந்தே மிகப்பெரிய வரவேற்ப்பு காணப்படும்‌. 'பர்ன்‌ இன்‌ ஃபிளேம்‌' படத்தில்‌ எதிர்காலம்‌ பெண்ணியவாதிகளால்‌ ஆளப்படுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. அங்கே ஆண்கள்‌ சிறுபான்மை யினத்தவர்களாக, தண்டிக்கப்பட்டிருப்பார்கள்‌. பெண்ணியவாதிகளால்‌ உலகம்‌ ஆளப்படுமேயானால்‌, உலகம்‌ அமையதியும்‌, நேசமுடனும்‌, மனிதநேயத்துடனும்‌, ஏற்றத்‌ தாழ்வுகளற்ற சமூகமாக அல்லவா இருக்க வேண்டும்‌..?! அதுதான்‌ கிடையாது. எதிர்காலத்தில்‌, இரு பெரும்‌ பெண்ணியவாத பிரிவுகள்‌ உலகை ஆள்கின்றன. 1. சோசியலிச பெண்ணியவாதிகள்‌, 2. முதலாளித்துவ பெண்ணியவாதிகள்‌. இருபெரும்‌ பிரிவுகளுக்குள்ளும்‌, அதே சண்டை, அதே சச்சரவு, அதே ஏற்றத்‌ தாழ்வுகள்‌ தான்‌ நீட்டிக்குமே தவிர, அமைதி நிலவாது. ஆண்களால்‌ உருவாக்கப்பட்ட விலங்குமுறை அரசியல்‌ தவறு என்றால்‌, பெண்களால்‌ உருவாக்கப்படும்‌ தாவர முறையிலான அரசியலும்‌ தவறாகவே உள்ளது. அங்கேயும்‌ நிம்மதி இருப்பதாக தோன்றவில்லை. ஜார்ஜ்‌ ஆலிவர்‌ அவர்கள்‌ எழுதிய நாவலை அமப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அனிமல்‌ பார்ம்‌ படத்தில்‌, விலங்குகளுக்குள்‌ நடக்கும்‌ சமத்துவ புரட்சி பற்றி பகடியாடப்பட்டிருக்கும்‌. அதாவது, முதளாலித்துவ அரசாங்களினால்தான்‌ சமூக ஏற்றத்‌ தாழ்வுகள்‌ உருவானது, என்று எண்ணுவோரின்‌ சிந்தனையை சோசியலிசத்தின்‌ பக்கமுள்ள குறைகளைக்‌ காணவும்‌ தாண்டிவிடுகிறது. 'அக்குகர்‌' என்ற பிரேசிலிய படத்தில்‌, இலத்தின்‌ அமெரிக்க பெண்ணொருத்தி, தன்‌ பூர்வீக நிலத்திற்கு வருகை தருவாள்‌. ஆனால்‌, அந்த நிலம்‌ சட்டப்படி பூர்வக்குடி பெண்ணொருத்திக்குச்‌ சொந்தமானதாக, வழக்கு நிலுவையிலிருக்கும்‌. ஒருகட்டத்தில்‌, நிலம்‌ பூர்வீக்குட்‌ பெண்ணிற்கே உரியது, என தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்‌. தோல்வியை சிறிதும்‌ எதிர்கொள்ள விரும்பாத, அந்த லத்தீன்‌ அமெரிக்கப்‌ பெண்மணி, தன்‌ நிலத்தின்‌ மண்ணை வாரி,   தன்னுடைய பிறப்புருப்பில்‌ அமித்துக்கொண்டு அழுவாள்‌. ஏனெனில்‌, லத்தீன்‌ அமெரிக்கப்‌ பெண்ணான அவளின்‌ குடும்பம்‌, சமூகத்தில்‌ முற்போக்கு சிந்தனை கொண்டதாக மதிப்படுகிறது. ஆதலால்‌ அவள்‌, தம்முடைய முற்போக்குத்‌ தனங்களை  விட்டுகொடுக்கமுடியாமல்‌, மண்மீதான ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்துவாள்‌.     []     'டிஸ்ட்ரிக்ட்‌ 9' படத்தில்‌, வேற்றுகிரக வாசிகளின்‌ ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்ட பூமியில்‌, புவிக்குச்‌ சொந்தமில்லாத நுண்ணுயிரிகளின்‌ மூலமாக, தம்முடைய எண்ணிக்கையை அதிகரித்துக்‌ கொள்கின்றன. நுண்ணுயிர்க்‌ தொற்று ஏற்பட்ட ஒரு நபர்‌, சில நாட்களுக்குள்ளாகவே, வேற்றுகிரக வாசியாக மாறிப்போய்விட்டருப்பார்‌. அப்படியாக, வேற்றுகிரகவாசிகளாக மாறிப்போன மக்களை, டிஸ்ட்ரிக்ட்‌ 9 என்ற இடத்தில்‌ அடைத்து வைத்திருப்பார்கள்‌. அந்த இடத்தின்‌ உண்மை நிலவரத்தை அறிந்துவரப்‌ புறப்படும்‌ படத்தின்‌ நாயகனும்‌, நுண்ணுயிர்‌ தொற்றிற்கு ஆளாக வேண்டியிருக்கும்‌. சில காலத்திற்குள்ளாகவே அவனும்‌, வேற்றுகிர உயிர்களைப்போலவே மாறவிட, அப்போதுதான்‌ அவனுக்கு உண்மை புலப்படத்‌ தொடங்கும்‌. அங்கிருப்பவர்கள்‌ யாருமே, வேற்றுகிரகத்தை சார்ந்தவர்களுமில்லை; வேற்றுகிரக நுண்ணுயிரிகளுமில்லை. நவீன மனிதர்களால்‌ தவறுதலாக உருவாக்கப்பட்ட (கண்டறியப்பட்ட) செயற்கையான நுண்ணுயிரிகள்‌ தாமாக பரவிவிடுகின்றன. ஆரோக்கிய சமூகம்‌, தொற்றுகண்ட உடல்களை ஒதுக்கி வைக்கிறது. ஏற்றத்‌ தாழ்வு உருவாகிவிடுகிறது. இப்படம்‌ ஒரு புதுமுயற்சி. நோய்த்‌ தொற்றினால்‌ கூட சமூக ஏற்றத்‌ தாழ்வுகள்‌ உண்டாகும்‌ என்பதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம்‌.       16- தி பெனாப்டிகன் தியரி (The Penopticon Theory)   []     சிறைக்‌ கைதிகளை கண்காணிக்கும்‌ பொருட்டு, புத்திசாலித்தனமாகவும்‌, நுட்பமாகாகவும்‌ உருவாக்கப்பட்ட இந்த யோசனை, மிகமிகப்‌ பழமையானது தான்‌. 'ஸ்டார்‌ வார்ஸ்‌' படத்தில்‌, பலதரப்பட்ட கிரகங்களின்‌ பிரதிநிதிகளை ஒரேயிடத்தில்‌ கூட்டி, ஒரு காஸ்மோ பொலிட்டன்‌ தலைமையை உருவாக்குவர்கள்‌. அந்த தலைமை, மொத்த பிரபஞ்சத்திற்கும்‌ அதிபதியாக விளங்குவார்‌. பிரபஞ்ச சட்ட விதிமுறைகளை நேர்மையாக செயல்படுத்தி, வெவ்வேறு கிரகங்களுக்கிடையிலான சச்சரவுகளை கலைந்து, ஒற்றுமையையும்‌ அமைதியையும்‌ நிலைநாட்டச்‌ செய்வதே, அந்த தலைமையின்‌ கடமையாக சொல்லப்பட்மருக்கும்‌. 'பெனாப்டிகன்‌' அமைப்புமுறையிலான கட்டிடங்கள்‌, பலங்காந்தொட்டே பழமையான நாகர்கங்களிங்களில்‌ கண்டறியப்‌ பட்டிருக்கின்றன. குறிப்பாக, பேபல்‌ என்கிற பழமையான அழிந்துவிட்ட கட்டிடம்‌ கூட அவ்வாறான அமைப்புமுறையில்‌ அமைக்கப்பட்ட கட்டிடம்‌ தான்‌. தம்‌ குடிமக்களை ஒரேயிடத்தில்‌ வைத்து, அவர்க்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து, அவர்களைத்‌ தம்‌ கட்டுப்பட்டுக்குள்ளேயே வைத்துக்‌ கொள்வதுதான்‌, 'பேபல்‌ கட்டிடத்தின்‌ நோக்கம்‌. இதுவே, பெனாப்டிகன்‌ கோட்பாட்டின்‌ நோக்கமும்‌ கூட. சிதறிக்‌ கிடக்கும்‌ மக்களிடத்தில்‌, நீதியையும்‌ நேர்மையையும்‌ நிலைநாட்டுவது மிகமிக கடினம்‌. ஆனால்‌, அவர்களை முழுக்‌ கண்காணிப்பில்‌ வைத்திருக்கும்போது, (சிறைக்கைதிகளைப்போல) தவறுகளைத்‌ தவிர்த்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட இயலும்‌. நேஷன்‌ எஸ்டேட்‌' என்ற பாலஸ்தீன படத்தில்‌, எதிர்காலத்தில்‌ மீண்டும்‌ பேபல்‌ போன்ற வானுயர்ந்த கட்டிடங்கள்‌ கட்டப்பட்டதாகவும்‌, அதில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்‌ தங்க வைக்கப்படுவதாகவும்‌, காட்டப்பட்டிருக்கும்‌. அதாவது, இஸ்ரேல்‌ பாலத்தீன போர்‌ முற்றுபெற்று, பாலத்தீன பகுதிகளனைத்தையும்‌, இஸ்ரேல்‌ கைப்பற்றிவிடும்‌.நிலத்தை இழந்த பலத்தீன வாசிகளை, பேபல்‌ கட்டிடத்தில்‌ தங்க வைத்து, சிறைக்கைதிகளைப்‌ போல முழு கண்காணிப்புடன்‌ வைத்து, அவர்களுக்கு அடைக்கலம்‌ கொடுப்பார்கள்‌. பைபிளில்‌ கூறப்பட்டிருக்கும்‌ பேபல்‌ மீண்டும்‌ சாத்தியமானால்‌, அப்பாவி மக்கள்‌ எவ்வாறு துன்புறுத்தப்படுவார்கள்‌..?! என தெளிவாக இப்படத்தில்‌ காட்டப்பட்டருக்கும்‌.     எதிர்காலத்தில்‌ சாத்தியமாகக்‌ கூடும்‌ என நம்பபப்பட்ட 'பெனாப்டிகன்‌ கோட்பாடு', தன்‌ வடிவத்தையும்‌ தோற்றத்தையும்‌ உருமாற்றிக்‌ கொண்டு, நவீன வடிவம்‌ எடுத்துள்ளது. 'ஈகில்‌ ஐ' படத்தில்‌, நாயகன்‌ எங்கு சென்றாலும்‌, அவனை பின்தொடர்ந்து வரும்‌ மர்மக்‌ குரல்‌, அவனைக்‌ கட்டுப்படுத்தத்‌ தொடங்கும்‌. ஒருகட்டத்தில்‌, அந்த மர்மக்‌ குரலின்‌ இரகசியத்தை அறிந்துகொள்ளும்‌ நாயகன்‌, அதற்கு காரணமான கணிணி கட்டுப்பாட்டு மையத்தை அடைந்துவிடுவான்‌. அங்கு, பெனாப்டிகன்‌ அமைப்பு முறையில்‌ அமைக்கப்பட்டிருக்கும்‌, ஏராளமான கணிணி அமைப்புகளைக்‌ காண்பான்‌. அவை மின்னனு எந்திரங்களின்‌ வழியாக, தன்னைப்‌ பின்தொடர்ந்து கண்காணிப்பதை அறிந்துகொள்வான்‌. அதாவது, உலகையே ஓர்‌ பெனாப்டிகன்‌ கட்டிமாக உருவகம்‌ செய்து கொண்டால்‌, கண்காணிப்பு காமிராக்கள்‌, ஸ்மார்‌ஃபோன்‌ போன்ற மின்னணு கருவிகளின்‌ வழியாக, ஒரே இடத்திலிருந்து மொத்த உலகையும்‌ கட்டுப்படுத்த, வழிநடத்த இயலும்‌.' ஆக, பெனாப்டிகன்‌ கோட்பாடானது, தன்‌ வடிவத்தையும்‌ தோற்றத்தையும்‌ உருமாற்றிக்‌ கொண்டு, நவீன வடிவம்‌ எடுத்துள்ளது.       []   'ஏயன்‌ ஃபிளக்ஸ்‌' படத்தில்‌, எதிர்காலத்தில்‌ உடோபியன்‌ உலகம்‌ சாத்தியமானால்‌, மக்களின்‌ சமூக நிலமை எப்படியிருக்கும்‌..?! என்பதை காட்டியிருப்பார்கள்‌. சுற்றிலும்‌ பெரும்‌ மதில்‌ சுவர்கள்‌ எழுப்பப்பட்டு, அதனுள்‌ மனிதர்கள்‌ இணைந்து சமூகமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்‌. அவர்களைக்‌ கட்டுப்படுத்தும்‌ அமைப்பாக, அந்தரத்தில்‌ மிதக்கும்‌ இயந்திரக்‌ கலமொன்று நகர்ந்துகொண்டிருக்கும்‌. இதுவுங்கூட, பெனாப்டிகன்‌ கோட்பாட்டின்‌ நவீன வடிவமாகத்‌ தான்‌ சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மைனாரிட்டி ரிப்போர்ட்‌' படத்தில்‌, குற்றம்‌ நடப்பதற்கு முன்பாவே, காலத்தில்‌ பின்னோக்கி நகர்ந்து சென்று, குற்றம்‌ நடவாமல்‌ தடுக்கும்‌, ஓர்‌ அமைப்பு நிறுவனம்‌ செயல்படுவதாக காட்டப்பட்டருக்கும்‌. சூப்பர்‌ கணிணிகளைப்‌ பயன்படுத்தி, ஒரே இடத்தில்‌ மக்களின்‌ நடவடிக்கைகளை கண்காணிக்கும்‌ அந்த படத்தில்‌ சொல்லப்பட்டருக்கும்‌ அமைப்புங்கூட, பெனாப்டின்‌ கோட்பாட்டின்‌ நவீன வழவம்‌ தான்‌.     'ஹோக்கஸ்‌ ஃபோக்கஸ்‌' போன்ற மாயாஜாலப்‌ படங்களில்‌, மந்திரவாதியின்‌ இருப்பிடத்தில்‌, மாயாஜான கண்ணாமப்‌ பந்தொன்றைக்‌ காணலாம்‌. அந்த கண்ணாடிப்‌ பந்தின்‌ வழியாக, நினைத்த நபரின்‌ வாழ்க்கையை, இரகசியமாக காண முடியும்‌. இதுபோன்ற மாயாஜாலப்‌ படங்களில்‌ காட்டப்பட்டுவந்த, மாயாஜால கண்ணாயடுப்‌ பந்துதான்‌, தற்கால பெனாப்டிகனின்‌ நவீன வடிவம்‌ ஆகும்‌. குற்றமில்லாத உலகை கட்டமைக்க விரும்பியே, இந்த கோட்பாடு முன்மொழியப்பட்டது. ஆனால்‌, அனான்‌' என்ற படத்தில்‌, பெனாப்டிகன்‌ கோட்பாட்டின்‌ இருள்‌ நிறைந்த பக்கங்கங்களை தெளிவாக தோலுறித்துக்‌ காட்டப்பட்டிருக்கிறது       17- ஸ்ட்ரிங்‌ தியரி (String Theory)   []   முதல்‌ பக்கத்தில்‌ போடப்பட்டிருக்கும்‌ தலைப்புச்‌ செய்திக்கும்‌, நடுபக்கத்தில்‌ போடப்பட்டிருக்கும்‌ உலகச்‌ செய்திக்கும்‌, இடையிடையே வந்திருக்கும்‌ வரி விளம்பரங்களுக்கும்‌, உலக அரசியல்‌ முதல்‌ உள்ளூர்‌ அரசியல்‌ வரை, எல்லா நிகழ்வுகளுக்குப்‌ பின்னும்‌ ஏதோ ஓர்‌ சம்பந்தம்‌ இருப்பதாக 'தனி ஒருவன்‌' படத்தில்‌ ஜெயம்‌ ரவி கூறுவார்‌. குறைந்தபட்சம்‌, ஊருக்கு ஒருவராவது, ஜெயம்‌ ரவியைப்‌ போன்ற சிந்தனை கொண்ட நபர்‌ இருக்கத்‌ தான்‌ செய்கிறார்‌. அவர்களை 'கான்ஸ்பைரசி தியரிஸ்ட்டுகள்‌' எனவும்‌ அமழைப்பர்கள்‌. 'தரமணி' படத்தில்‌, மொட்டைத்‌ தலைக்கும்‌ முழங்காலுக்கும்‌ முடிச்சு போட முடியும்‌' என சொல்வார்‌. ஏங்கோ ஓர்‌ நாட்டில்‌ நடக்கும்‌ மீனவர்களின்‌ பிரச்சனையையும்‌, உள்ளூரில்‌ நடக்கும்‌ குடும்ப பிரச்சனையையும்‌ ஒன்றாக இணைக்க முயற்சித்திருப்பார்‌. அதில்‌ வெற்றியும்‌ அடைந்திருப்பார்‌. இந்த 'கான்ஸ்பைரஸி தியரிஸ்டுகள்‌' என அழைக்கப்படுபவர்களும்‌ அவ்வாறானவர்கள்‌ தாம்‌. மொட்டைத்‌ தலைக்கும்‌ முழங்காலுக்கும்‌ முடிச சு போட்டார்‌ போல, வதந்திகளைப்‌ பரவச்‌ செய்து மக்களின்‌ தூக்கத்தை கெடுப்பார்கள்‌. அவர்கள்‌ சொல்வதில்‌ (அ) அவர்களின்‌ கணிப்பில்‌ 4 விடையங்களல சரியானதென்றால்‌, 10 விடையங்கள்‌ பொய்யாகத்‌ தான்‌ இருக்கும்‌. ஆனால்‌, எல்லா கணிப்புகளுமே, அப்படியே உண்மையம்‌   போலவே நம்பும்படியாகவே இருக்கும்‌.     ஸ்ட்ரிங்‌ தியரி' என்ற சரக்‌ கோட்பாடு' என்பது, அணுக்களின்‌ இணைவைக்‌ குறிப்பதற்காக, கற்பனையாக வரையப்பட்ட கோடுகளாகத்‌ தான்‌ அறிமுகமானது. பின்நாட்களில்‌ இந்த கற்பனை கோடுகளை, எல்லா சம்பவங்களுக்கு நடுவிலும்‌ வரைந்து, இணைத்து பார்க்கும்‌ ஆய்வு மனம்‌ உருவானது. அதாவது, சக்ரா' படத்தில்‌ விஷால்‌ சம்பந்தமில்லாத நபர்களை, தொடர்‌ சம்பவங்களுடன்‌ இணைத்துப்‌ பார்பதைப்‌ போல. இதை ஓவர்‌ இம்மேஜன்‌ என்றுகூட சொல்லலாம்‌. இப்படி இருக்குமோ ?! அப்படி இருக்கும்‌..?! இந்த சம்பத்திற்கும்‌, அந்த சம்பவத்திற்கும்‌ ஏதாவது தொடர்பு இருக்குமோ...?! அமெரிக்காவில்‌ நடந்த கொலையும்‌, நம்மூரில்‌ நடந்த கற்பழிப்பு கொலையும்‌, ஒன்றாக இணைத்து ஓவர்‌ இமேஜ்‌ செய்ததால்‌ தான்‌, வேட்டையாடு விளையாடு' படத்தில்‌ கமலஹாசன்‌ அவர்கள்‌, உண்மையான குற்றவாளிகளை நெருங்க முடிந்தது. இன்வெஸ்டிகேஷன்‌ துறைகளிலேயே இதை 'கிரேசி போர்ட்‌' கோட்பாடு என்றழைப்பார்கள்‌. அதவாது, இன்வெஸ்டிகேஷன்‌ செய்யும்‌ அதிகாரி, சம்பவத்தையும்‌, சம்பவத்திற்கு காரணமாக சந்தேகப்படும்‌ சில நபர்களின்‌ புகைப்படங்களையும்‌, சாட்சியங்களையும்‌, ஆதாரங்களையும்‌ வைத்துக்‌ கொண்டு, இவை எல்லாவற்றையும்‌ தர்க்கப்‌ பூர்வமாக இணைக்க முயற்சி செய்வார்‌. ஒரு பலகையில்‌, சம்பந்தமில்லாத விசயங்களைக்கூட, சம்பவத்தோடு இணைத்து, தன்‌ இஷ்டத்திற்கு கற்பனைக்‌ கோட்பாடொன்றை உருவாக்குவார்‌.இதைத்தான்‌ ஸ்ட்ரிங்‌ தியரி (அ) கிரேஸி போர்ட்‌ என்று அழைப்பார்கள்‌.     ஆரம்பத்தில்‌ துப்பறிவாளர்களின்‌ கைகளில்‌ சிக்கிக்‌ கட்டுட்டுண்டு கிடந்த 'ஸ்ட்ரிங்‌ தியரி', இன்று சராசரி மக்களின்‌ மலிவான கோட்பாடாக மாறிவிட்டிருக்கின்றது. இன்றைய நவீன மக்கள்‌ ஒவ்வொருவருமே துப்பறிவாளர்களாகத்‌ தான்‌ சிந்திக்கிறார்கள்‌. 'கொரோனா தொற்றிற்க்கும்‌ 'பில்‌ கேட்ஸுக்கும்‌ சம்மந்தம்‌', 'ஏலியன்களுக்கும்‌ அமெரிக்காவுக்கும்‌ சம்பந்தம்‌', 'வங்கிகளுக்கும்‌ இங்கிலாந்து மகாராணிக்கும்‌ சம்பந்தம்‌' என மொட்டைதலைக்கும்‌ முழங்காலுக்கும்‌ முடிச்சுப்போட தொடங்கிவிட்டார்கள்‌. இதற்கு காரணம்‌ "ஸ்ட்ரிங்‌ தியரி' தானென்று சொல்லிவிட முடியாது. இந்த ஸ்ட்ரிங்‌ தியரிக்கு 'பட்டர்‌ பிளை எப்‌பக்ட்‌', 'டோமினோ எப்‌ஃபக்கட்‌', 'ட்ரையாங்கள்‌ தியரி', 'கர்மா தியரி', 'நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதி' இப்படி ஏராளமான கோட்பாடுகளும்‌ காரணந்தான்‌. ஏனெனில்‌ இதுபோன்ற கோட்பாடுகள்‌ தான்‌, உலகில்‌ நடக்கும்‌ சம்பவங்களெல்லாம்‌ தற்செயலானது கிடையாது. எல்லாவற்றிற்கும்‌ ஏதோவோர்‌ கண்ணுக்குத்‌ தெரியாத காரணம்‌ இருக்கின்றது. காரணமில்லாமல்‌ இங்கு எதுவும்‌ நடக்காது' என   மக்களை குழப்பி விட்டிருக்கின்றது.     என்‌ ஆளோட செருப்பை காணோம்‌' என்ற படத்தில்‌, எங்கோர்‌ இசுலாமிய நாட்டில்‌ தீவிரவாதிகளால்‌ கடத்தப்பட்ட தொழிலாளரையும்‌, நம்மூரில்‌ உள்ள ஓர்‌ நடுத்தர குடும்பத்தையும்‌ இணைத்து, உலக அரசியல்‌ பேசியிருப்பார்கள்‌. சம்பந்தம்‌ இருக்கோ இல்லையோ, உலகமயமாக்கப்பட்ட இந்த உலகில்‌, எந்த சம்பவத்தையும்‌, யாருடனும்‌ இணைத்து பேசும்‌ வழக்கம்‌ சகஜமாகிவிட்டது. 'சைரியானா' படத்தில்‌, உலகின்‌ பல நாடுகளில்‌ நடக்கும்‌ வெவ்வேறு சம்பவங்களை இணைத்து ஓரே படத்தில்‌   சொல்லியிருப்பார்கள்‌. படத்தில்‌, கச்சா எண்ணெய்‌ வியாபாரம்‌, அரசியல்‌, அதுசம்பந்தப்பட்ட போர்கள்‌' என படம்‌ விரியும்‌. ஆகவே, உலகின்‌ எல்லா நாட்டூற்கும்‌ மூலாதாரமாக விளங்கும்‌ கச்சா எண்ணெய்யை மையமாக கொண்டு, உலக நாடுகளின்‌. அரசியலை ஒன்றாக பொருத்தி பார்க்க இயலும்‌. ஆனால்‌ அதே மேட்‌ டாமன்‌ நடித்த 'ஹேர்‌ ஆஃப்டர்‌' படத்தில்‌ வருவதைப்போல, எங்கோவோரிடத்தில்‌ வாழும்‌ அமெரிக்கருக்கும்‌, எங்கோ ஓரிடத்தில்‌ வசிக்கும்‌ பிரஞ்சு பெண்மணிக்கும்‌ தொடர்பு உண்டெனவும்‌, காதல்‌ தேசங்களை கடந்தது; பெருங்கடலால்‌ பிரிக்கப்பட்டு கிடக்கும்‌ நிலத்தைக்கூட, காதல்‌ (கடல்‌ அலை உருவெடுத்து) சேர்த்து வைக்கும்‌' என மனிதநேயம்‌ பாராட்டுவதாக சொல்லி, புனைந்து புழுகுவது முறையானதல்ல.     555' என்ற அர்ஜெண்டீன படத்தில்‌, பெஞ்சமின்‌ சொலாரியோ பரவச்சீனி' என்ற ஓவியர்‌ ஒருவரைப்‌ பற்றிக்‌ குறிப்பிட்டிருப்பார்கள்‌. அவர்‌, எதிர்காலத்தை முன்கூட்டியே கணிப்பவராகவும்‌, அவ்வாறு கணித்த விடையங்களை ஓவியமாக வரைந்து வைத்துள்ளதாகவும்‌ கூறுவார்கள்‌. ஆனால்‌ படத்தின்‌ நாயகன்‌, ஒரு லாஜிக்‌ & தத்துவார்க்க பேராசிரியர்‌. ஆகவே, தர்க்கப்‌ பூர்வமாக இதனை நிரூபிக்க எண்ணுவார்‌. அதாவது, பெஞ்மின்‌ சோலாரியோ பரவச்சீனி என்ற ஓவியர்‌ வரைந்த   ஓவியங்களையும்‌, சமகாலங்களில்‌ நடந்தேறிக்‌ கொண்ரடாருக்கும்‌ சம்பவங்களையும்‌ ஒன்றாக இணைக்க வேண்டும்‌. அதாவது, மொட்டை தலைக்கும்‌ முழங்காலுக்கும்‌ லாஜிக்கலாக முடிச்சு போட வேண்டும்‌. எப்படி போடலாம்‌..?! மொட்டை தயையும்‌, முழங்காலும்‌ ஒரே உடம்பின்‌ அங்கங்களாகத்‌ தானே இருக்கின்றது...?! முடிச்சு போடலாமே..?! இவ்வாறாக லாஜிக்கையே ஏமாற்றி, லாஜிக்காக புனையப்பட்ட படம்‌ தான்‌ இந்த அர்ஜண்டீன படம்‌.     []   ஸ்டிங்‌ தியரி' யால்‌ நன்மையும்‌ இருக்கின்றது; அதே தியரியால்‌ வதந்திகள்‌ பரவும்‌ அபாயமும்‌ இருக்கின்றது. 'ஜே எஃப்‌ கே' திரைப்படத்தில்‌, ஜான்‌ F. கென்னடியின்‌ மரணத்தின்‌ மர்மத்தை உலகறியச்‌ செய்வதற்காக கெவின்‌ காஸ்ட்னர்‌ புறப்படுவார்‌. ஆனால்‌, அவர்‌ கண்டறிந்த விடையங்களால்‌, அவரே ஒரு தெளிவாதெளிவான முடிவிற்கு வர இயலாது. 'கார்பரேட்‌ சந்தைகள்‌, வங்கிகள்‌, பங்கு சந்தை   நிறுவனங்கள்‌, அரசியல்வாதிகளின்‌ சூழ்ச்சி, வியட்நாம்‌ போரினானல்‌ ஏற்பட்ட மக்களின்‌ அதிருப்தி' என பலதரப்பட்ட காலணங்களைச்‌ சொல்லி, இவை எல்லாமுமே தான்‌, அவர்‌ மரணத்தின்‌ மர்மம்‌ என சொல்லும்‌ அவரால்‌, சரியான குற்றவாளியை அடையாளங்காட்ட முடியாது. இதைக்கேட்ட நீதிமன்றம்‌ சிரிக்குமே தவிர, அவர்‌ சொல்வதை ஆதாரமும்‌, நிரூபணமும்‌ இல்லாமல்‌ முழுமையாக ஏற்றுக்‌ கொள்ள முடியாது. இதேபோலத்தான்‌ 'ஸ்ட்ரிங்‌ தியரி'யும்‌... மக்களை குழப்பமடையச்‌ செய்யுமே தவிர, தெளிவான ஓர்‌ முடிவிற்கு கொண்டுவந்து நிறுத்துவது அரிது.           18- ஆர்க்யூமெண்டேஷன் தியரி (Argumentation Theory)   []     காலங்காலமாக நடந்துகொண்மருக்கும்‌ போர்கள்‌, கலவரங்கள்‌, குழப்பம்‌ இவை எல்லாவற்றிற்கும்‌ கருத்து யுத்தம்‌' மட்டுமே ஒரே காரிய காரணமாக இருந்து வந்துள்ளது. கருத்து முதல்‌ வாதம்‌ தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை, வாதத்திற்கும்‌ வாக்கு வாதத்திற்கும்‌ மருந்தொன்றைக்‌ கண்டறிந்த பாடில்லை. அறிவியல்‌ வளர்ந்துவிட்ட இன்றைய நவீன காலத்திலும்கூட, வாதங்களும்‌ எதிர்வாதங்களும்‌ தோன்றி முடிந்த பாடில்லை. இந்த நவீன காலத்தில்‌, மக்கள்‌ தங்கள்‌ கருத்துக்களை சொல்ல, கோட்பாடுகளை நாடுகிறார்கள்‌. ஏனெனில்‌, இது தர்க்கபூர்வமாக விளக்கங்களை முன்வைத்தால்‌ மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌, என்கிற லாஜிக்கல்‌   உலகில்‌ நாம்‌ வசித்து வருகிறோம்‌. ஆக, முட்டாள்‌ தனமான, தேவையற்ற கருத்தைக்‌ கூட, பொதுவெளியில்‌ விதைப்பதற்காக, கோட்பாடு' எனும்‌ பேராயுதத்தை கையிலெடுக்கிறார்கள்‌. தன்‌ சொந்த கருத்துக்களை கோட்பாடுகளாக மாற்றி, பொதுநோக்கு வடிவில்‌ பொதுவெளியில்‌ உலவ விடுவதில்‌, நாகரீக மனிதர்களை அடித்துக்‌ கொள்வதற்கு ஆளில்லை. கம்யூனிசம்‌ என்ற தனிநபரால்‌ உருவாக்கப்பட்ட கோட்பாடு, பொதுவெளியில்‌ உலவ விடப்பட்டது. அது எளிய மக்களுக்கான அரசியலை முன்‌ பொழிந்தது; முதலாளித்துவ மனப்பான்மையை கடுமையாக எதிர்த்தது. ஆனால்‌ பின்னாட்களில்‌ நடந்தது என்ன...?! சோசியலிசம்‌ என்கிற வார்த்தையே, தீட்டாக பார்க்கும்‌ மக்களை இன்னமும்‌, சோவித்‌ நாடுகளில்‌ காண முடிகிறது. ஃபிளாட்‌ லேண்ட்ஸ்‌' என்ற அனிமேசன்‌ படத்தில்‌, 2D உலகிற்கும்‌, 3D உலகிற்கும்‌ இடையில்‌ நடக்கும்‌ கருத்து யுத்தத்தினை அழகாக காட்சிபடுத்தியிருப்பார்கள்‌. அதாவது, இரண்டு பரிணாமங்களை (2D) கொண்ட, 'வட்டம்‌, சதுரம்‌, செவ்வகம்‌, முக்கோணம்‌' போன்ற உயிர்கள்‌ இவ்வுலகில்‌ வசித்துக்‌ கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருக்கும்‌. அதேபோல, மற்றொரு பரிணாமத்தில்‌ (3D) 'கன சதுரம்‌, கன செவ்வகம்‌, கோளம்‌, கூம்பு' போன்ற உயிரினங்கள்‌ வசித்துக்‌ கொண்டருக்கும்‌. ஒருகட்டத்தில்‌, 2Dஉலகத்தில்‌ உள்ள உயிரினங்களும்‌, 3D உலகில்‌ வசிக்கும்‌ உயிரினங்களும்‌ சந்தித்துக்‌ கொள்ளும்‌. இரண்டும்‌, வெவ்வேறான   பரிணாமங்களில்‌ வசிப்பதால்‌, ஒன்றையொன்று பார்க்க முடியாது. ஆனால்‌, பேசுவதை மட்டுமே கேட்க முடியும்‌. 2)Dஉலகம்‌, ‘3Dஎன்று ஓர்‌ உலகம்‌ இருப்பதை நம்ப தயாராக இருக்காது.’    அதே நேரத்தில்‌ 3D உலகமும்‌, '2D என்ற உலகை லாஜிக்கலாக நிறுவினால்‌ மட்டுமே, அது இருப்பதாக நம்புவோம்‌' என விடாப்பிடியாக இருக்கும்‌. இரண்டு உலகமும்‌, வெவ்வேறு பரிணாமங்களை ஏற்றுக்‌ கொள்ள தயாராக இருப்பதில்லை. ஒருகட்டத்தில்‌ நேருக்கு நேர்‌ சந்தித்துக்‌ கொள்ளும்‌, 21 உலகமும்‌ 30 உலகமும்‌, கருத்து முரண்பாட்டினால்‌ போரில்‌ ஈடுபடுவார்கள்‌. இந்த படத்தில்‌ காட்டியுள்ளவாறுதான்‌, நாமும்‌ கோட்பாட்டு ரீதியாக வேறுபட்டருக்கிறோம்‌. சில கோட்பாடுகளை ஆதரிக்கிறோம்‌; சிலவற்றை நிராகரிக்கிறோம்‌. 'தி காலனி' என்ற அறிவியல்‌ புனைவுத்‌ திரைப்படத்தில்‌, எதிர்காலத்தில்‌ உலகமே பனி சூழ்ந்துவிட்டதாகவும்‌, நிலம்‌ (அ) தண்ணீரையே காணமுடியாது' என்பது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. இதைப்போன்ற பல திரைப்படங்களும்‌, அறிவியல்‌ புனைவு நாவல்களும்‌ வந்துவிட்டன. இவை எல்லாமே, 'ஐஸ்‌ ஏஜ்‌' என்கிற கோட்பாட்டின்‌ அடப்படையிலேயே புனையப்பட்டவை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாகவே, இந்த கோட்பாடு நம்பப்பட்டு வருகிறது. ஆனால்‌, எதிர்காலத்தில்‌ பனிபிரதேசங்கள்‌ உருகி, உலகமே தண்ணிரில்‌ மூழ்கிவிடும்‌ என்கிறது, மற்றுமொரு அறிவியல்‌ கோட்பாடு. 'வாட்டர்‌ வேர்ல்டு' போன்ற திரைப்படங்களும்‌ இந்த கோட்பாட்டினை ஆதரிக்கின்றன. எதிர்காலம்‌ எப்படி இருக்கும்‌...?! என்பதில்‌ நவீன அறிவியலுக்கே, முடிவெடுப்பதில்‌ சந்தேகம்‌ நிலவுகின்றது.     பர்ன்‌ இன்‌ ஃபிளேம்‌' என்ற படம்‌ 1983-ம்‌ ஆண்டு வெளிவந்தது. அந்த காலகட்டத்தில்‌, பெண்ணிய இயக்கங்கள்‌ மிகத்‌ தீவிரமாக வளர்ந்து வந்தன. இந்த படத்தின்‌ இயக்குநருங்கூட, தீவிரமான பெண்ணிய வாதிதான்‌. ஆக, எதிர்காலம்‌ (2020) எப்படி இருக்கும்‌...?! எதிர்‌ காலத்தில்‌ பெண்களின்‌ நிலைமை எவ்வாறு இருக்கும்‌..?! என்று சற்று மிதமிஞ்சிய கற்பனையுடனேயே இத்திரைப்படத்தில்‌ சொல்லியிருப்பார்‌. ஆனால்‌, அவர்‌ எதிர்காலமென குறிப்பிட்டிருந்த சமகாலத்தில்‌, அந்த திரைப்படத்தில்‌ குறிப்பிடப்பட்டிருந்ததை போல எந்த மாற்றமும்‌ அடைந்திருக்கவில்லை. பதிலுக்கு, முன்பைவிட தற்காலத்தில்தான்‌ பாலியல்‌ கொடுமைகள்‌ அதிகரித்திருக்கின்றன. இளம்‌ வயது திருமணங்கள்‌ அதிகரித்துவிட்டன. ஆணுக்கும்‌ பெண்ணுக்குமான இணக்கம்‌ அதிகரித்திருக்கின்றது. பர்ன்‌ இன்‌ ஃபிளேம்‌ படத்தில்‌, ஆண்கள்‌ சிறுபான்மையாக்கப்‌ பட்டிருப்பதாகவும்‌, பெண்கள்‌ செயற்கை முறையில்‌ கருத்தரிப்பதாகவும்‌, ஆணும்‌ பெண்ணும்‌ பிரிந்து 'பெண்‌ தம்பதிகளின்‌ எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும்‌' சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. படத்து இயக்குநரின்‌ கணிப்பு, ஓரளவிற்கு சரியானதாக இருக்கலாம்‌. ஒருவேளை, எதிர்காலத்தில்‌ கூட சாத்தியமாகும்‌ வாய்ப்புகள்‌ இருக்கின்றது. ஆனால்‌, இன்றைய காலத்தை பொறுத்தமட்டில்‌ அவரின்‌ முன்கூட்டிய கணிப்பு தவறாகிவிட்டது.     []   இடியோ கிராசி' படத்தில்‌, எதிர்கால நாகரீக மனிதர்கள்‌ யாவரும்‌, முட்டாள்களாக வாழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்‌. அந்த படத்து இயக்குநரின்‌ கணக்குப்படி, எவோலெஷன்‌ என்பது சுழற்சி பாதையில்‌ இயங்குவதாக கற்பனை செய்துள்ளார்‌. எவோலெஷன்‌ கோட்பாட்டையே சந்தேகித்து நிராகரிக்கும்‌ நாகரீக மனிதர்களின்‌ மத்தியில்‌, இடியோகிராசி' கோட்பாட்டினை கொண்டு வந்து பகடியாடுகிறார்‌ இயக்குநர்‌. மனிதன்‌ தன்‌ வசதிக்காவும்‌, சுயநலத்திற்காவும்‌ தான்‌ கோட்பாடுகளை உருவாக்குகிறான்‌'. அதேநேரத்தில்‌ வேறொருவர்‌ வழிபடும்‌ கோட்பாட்டினை நிராகரிக்கிறான்‌. இந்த உலகம்‌ கோட்பாடுகளால்‌ தான்‌ இயங்குகிறது. உலகம்‌ உருண்டையானது என்று சொல்லப்பட்ட காலத்திலிருந்துதான்‌, கண்டகண்ட கோட்பாடுகளெல்லாம்‌ உருவாக தொடங்கிவிட்டன. ஏனெனில்‌, எந்த கருத்தையும்‌ எதனுடனும்‌ முழுச்சுப்போட்டு, தன்‌ ௬ய லாபத்தை சம்பாதித்துக்‌ கொள்ள முடியும்‌ என்ற தன்னம்பிக்கை பிறந்தது. அரிஸ்டாட்டில்‌ சொல்வதைப்போல, இந்த உருண்டையான பூமியில்‌ நேரான கோடொன்றை வரையவே முடியாது. இதைச்‌ சொல்லி அவர்‌ பங்கிற்கு அவர்‌ தன்னை புரட்சியாளராக அறிவித்துக்‌ கொண்டார்‌; புகழ்பெற்றார்‌.     உலகம்‌ கோட்பாட்டு ரீதியாகத்தான்‌ இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நவீன உலகை பொறுத்தமட்டில்‌ தவறான கருத்துக்கும்‌ கூட, கோட்பாட்டு வடிவில்‌ சொல்லப்பட்டால்‌, சரியானதாக ஏற்றுக்‌ கொள்ளப்படுகிறது. ஆனால்‌, கோட்பாடுகளே எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன, என்பது முற்றிலும்‌ தவறான வாதம்‌'   வாசகர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி !   FreetamilEbooks.com – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948  நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – https://freetamilebooks.com/meet-the-team/  Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org   - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/