[] 1. Cover 2. Table of contents சமூகப் பெண் போராளிகள் சமூகப் பெண் போராளிகள்   ஏற்காடு இளங்கோ   yercaudelango@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/social_woman_activists மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc என்னுரை மனித உரிமைகளுக்கானப் போராட்டம் என்பது உலக அளவில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. கல்வி கற்கும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை, விவாகரத்து, சொத்துரிமை மற்றும் பாலின சமத்துவம் போன்றவை காலம் காலமாகப் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. பற்பல பெண்ணியவாதிகளும், பெண் தலைவர்களும், பெண் புரட்சியாளர்களும் தொடர்ந்து போராடியதன் விளைவாகத் தற்போது இந்த உரிமைகளைப் பெற முடிந்தது. மேலும் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இன ஒழிப்புக்கு எதிராகவும் பெண்கள் போராடினார்கள். ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் எனப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். அது தவிர ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலும் பல நாடுகளில் பெண்கள் ஈடுபட்டனர். பல பெண்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். பலர் சிறைக் கொடுமைகளையும் அனுபவித்தனர். இப்படி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாகவே மனித உரிமையும், பாலின சமத்துவமும் கிடைக்கப் பெற்றன. இருப்பினும் முழுமையான சமத்துவம் என்பது இன்னும் கிடைக்கவில்லை. பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக முற்போக்கு அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து இவர்களுடன் சேர்ந்து போராடுகின்றனர். ஒரு சமத்துவமான சமூக அமைப்பு தோன்றும் வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்த புத்தகத்தை எழுதுவதற்கு என உதவிபுரிந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தை தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும், பிழைத் திருத்தம் செய்துக் கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருமிகு. நா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. எனது 105ஆவது புத்தகத்தை வெளியிட்ட Free Tamil Ebooks.Com அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளுடன் ஏற்காடு இளங்கோ சாவித்திரிபாய் பூலே […] இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்கிற பெருமைக்குரியவர் சாவித்திரிபாய் பூலே (Savitribai phule) ஆவார். இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூகச் சீர்திருத்தவாதி, கல்வியாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். பெண்களின் கல்விக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும், தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்துப் போராடி வந்தார். இவர் இந்தியப் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்தார். பிறப்பு இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகோன் (Naigaon) என்னும் கிராமத்தில் 1831ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று பிறந்தார். இக்கிராமம் புனேவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இவரது தந்தை ஒரு பணக்கார விவசாயி மற்றும் கிராமத்துத் தலைவராகவும் இருந்தார். அக்காலத்தில் நிலவிய வழக்கப்படி இவருக்கு 9 வயது இருக்கும் போது, 13 வயதுடைய மகாத்மா ஜோதிராவ் பூலே (Jyotirao Phule) என்பவருக்கு சாவித்திரிபாயை 1840ஆம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தனர். ஜோதிராவ் பூலே முற்போக்கு சிந்தனை கொண்டவர். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். பெண்களும் கல்வி பயில வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். ஆசிரியர் திருமணத்தின் போது சாவித்திரிபாய் கல்வியறிவு இல்லாதவராக இருந்தார். அக்காலத்தில் கல்வி உரிமை என்பது பெண்களுக்கு கிடையாது. மேலும் பிறப்படுத்த மக்களுக்கும் கல்வி என்பது மறுக்கப்பட்டு வந்தது. ஜோதிராவ் பூலே கல்வியறிவு உடையவர். அவர் யாருக்கும் தெரியாமல் தன் மனைவி சாவித்திரிபாய்க்கு 4 ஆண்டுகள் கல்வி கற்றுக் கொடுத்தார். சாவித்திரிக்கு கல்வி கற்றுக் கொடுப்பது தெரிந்தவுடன் இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். வெளியேறிய போதிலும், அவர் படிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து படித்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது கணவர் மூலம் பெற்றார். பிறகு அகமத் நகரில் உள்ள ஒரு அமெரிக்க மிஷனரி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். இது சிந்தியா பரார் (Cynthia Farrar) என்பவரால் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மேலும் ஒரு ஆசிரியர் பயிற்சியை புனாவில் இயங்கிய நார்மல் ஸ்கூலில் (Normal School) முடித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்கிறப் புகழைப் பெற்றார். கல்விப் பணி […] ஆசிரியர் பயிற்சியை முடித்தப் பிறகு புனேவில் உள்ள மஹர்வாடாவில் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சாவித்திரிபாய் தொடங்கினார். ஜோதிராவ், சாவித்திரிபாய் இருவரும் புனேவில் உள்ள பிடே வாடா (Bhide wada) என்னும் இடத்தில் பெண்களுக்கான முதல் நவீன பெண்கள் பள்ளி ஒன்றை நிறுவினர். இதில் 9 மாணவிகள் சேர்ந்தனர். இப்பள்ளி 6 மாதத்தில் மூடப்பட்டு, பிறகு வேறு ஒரு இடத்தில் தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக சாவித்திரிபாய் இருந்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் தலைமையாசிரியர் என்கிற பெருமைக்கும் உரியவர் ஆனார். சாவித்திரிபாய் மற்றும் ஜோதிராவ் பூலே ஆகிய இருவரும் ஜோதிராவின் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தனர். சாவித்திரிபாய் பெண்களுக்கு கல்வி போதிக்கும் பணி பிடிக்காததால் தம்பதியரை வீட்டை விட்டு வெளியேற்றினார். ஜோதிராவின் நண்பரான உஸ்மான் ஷேக்கின் வீட்டில் இவர்கள் குடியேறினர். அங்கு பாத்திமா பேகம் ஷேக்குடன் சாவித்திரிபாய் நெருக்கமாக பழகினார். பின்னர் மிக நெருங்கிய தோழியாக மாறினர். பாத்திமா ஷேக்கிற்கு ஏற்கனவே படிக்கத் தெரியும். அவரை ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள ஜோதிராவ் ஊக்குவித்தார். அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றதன் மூலம் இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியர் என்கிறப் பெருமையைப் பெற்றார். சாவித்திரிபாய் மற்றும் பாத்திமா ஆகிய இருவரும் ஷேக் வீட்டில் ஒரு பள்ளியை 1849ஆம் ஆண்டில் திறந்தனர். சாவித்திரிபாய் பூலே மற்றும் ஜோதிராவ் பூலே ஆகிய இருவரும் சேர்ந்து இரண்டு கல்வி அறக்கட்டளைகளை 1850ஆம் ஆண்டில் நிறுவினர். பிற்படுத்தப்பட்டவர்கள், சூத்திரர்கள் என பின்தங்கிய பெண்களுக்குக் கல்வி புகட்டினர். […] பெண்களின் நிலையை முன்னேற்ற அவர்களுக்கு கல்வி அறிவைப் புகட்டினார். இவர் பெண் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதை தனது சாதி சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. அவரது தந்தை வீட்டை விட்டு துரத்தினார். பள்ளிக்கு இடம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. மக்களும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லை. கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக் கூறி, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தார். இத்தம்பதியினர் மொத்தம் 18 பள்ளிகளைத் திறந்தனர். சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கண்டு பழமைவாதிகளும், மேல் சாதியினரும் கடுமையாக எதிர்த்தனர். இவர் பள்ளிக்குச் செல்லும் போது சேற்றையும், சாணத்தையும், மனித மலத்தையும் இவர் மீது வீசி, கெட்ட வார்த்தைகளால் திட்டினர். இதையெல்லாம் இவர் சகித்துக் கொண்டார். பள்ளிக்குச் செல்லும் போது வேறோர் மாற்று சேலையும் எடுத்துச் சென்றார். பள்ளிக்குச் சென்ற பிறகு வேறு சேலையை அணிந்து கொண்டார். பிற பணிகள் இவர் சிறந்த கவிஞரும் ஆவார். அனைவரும் சமம் எனும் மனித நேயத்தை உயர்த்திப் பிடித்தார். விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து, நாவிதர்களை திரட்டி 1863ஆம் ஆண்டில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். தனது வளர்ப்பு மகன் யஸ்வந்த் ராவ் மற்றும் சாவித்திரியும் சேர்ந்து ஒரு மருத்துவமனையை அமைத்தனர். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஓடோடி உதவி செய்தார். கங்காராம் என்பவரை தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சாவித்திரிபாய் மருத்துவமனையில் மயங்கி விழுந்தார். சாவித்திரிபாய் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு 1897ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று உயிரிழந்தார். இந்த கங்காராம் உயிர் பிழைத்துக் கொண்டார். சாவித்திரிபாய் பள்ளி துவங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடியவர்தான் இந்த கங்காராம். புகழ் பெண்களின் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த “மகிளா சேவா” அமைப்பை நிறுவினார். சாதி பாகுபாடு இல்லாமல் பெண்கள் அனைவரும் ஒரே பாயில் அமர வைத்தார். சிசுக் கொலைக்கு எதிராக, “சிசுக்கொலை தடுப்பு இல்லம்” என்ற பெயரில் ஒரு பெண்கள் தங்குமிடத்தைத் திறந்தார். குழந்தை திருமணத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். விதவை திருமணத்திற்கு ஆதரவு தந்தார். விதவைகள் மற்றும் விதவைகளின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தைத் தொடங்கினார். பெண் கல்வி, விதவை மறுமணம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உயர்வு என தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். இவரை சிறப்பிக்கும் வகையில் சாவித்திரிபாய் பூலே பெயரில் ஒரு விருதினை மகாராஷ்டிர அரசு ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. புனே பல்கலைக் கழகம் இவரது நினைவாக “சாவித்திரிபாய் பூலே புனா பல்கலைக் கழகம்”­ என 2015 இல் மறு பெயரிடப்பட்டது. சாரா கார்னெசன் தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அங்குள்ள தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைப்பத்தில் பெரும் பங்கு வகித்தவர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு எதிராகவும், எதேச்சதிகார, பாசிச அரசை எதிர்த்தும் போராடியவர். தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் நலனுக்காகவே வாழ்ந்தவர்தான் சாரா கார்னெசன் (Sarah Carneson) ஆவார். அவர் தனது வாழ்நாள் இறுதிவரை ஒரு சமூகப் போராளியாக வாழ்ந்து மறைந்தார். பிறப்பு […] சாராவின் பெற்றோர்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள் ஆவார். இவரது தந்தை ஸெலிக் ரூபின் (Zelic Rubin) ஒரு தையல்காரர் மற்றும் லிதுவேனியாவைச் சேர்ந்தவர். தாயார் அன்னா ரூபின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை (SACP) நிறுவியவர்களில் மிக முக்கியமானவர்கள் இந்த பெற்றோருக்கு மகளாக சாரா 1916ஆம் ஆண்டில் ஜொகனெஸ்பர்க் என்னும் நகரில் பிறந்தார். சாரா தனது 15ஆவது வயதிலேயே இளம் கம்யூனிஸ்ட் லீக்கில் உறுப்பினர் ஆனார். பின்னர் தனது 18 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார். கட்சி அலுவலகத்தில் எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளர்களுக்கு இரவுப் பள்ளி மூலம் எழுதப் படிக்க கற்றுத் தந்தார். ஒரு இளம் பெண்ணாக பாசிசம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு எதிராக முழு நேரமும் போராடினார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகவும் செயல்பட்டார். மேலும் கட்சியின் புத்தகக் கடையிலும் பணியாற்றினார். தொழிற்சங்கம் தொழிற்சங்கப் பணிகளிலும் சாரா தன்னை இணைத்துக் கொண்டார். அவர் 1936 முதல் 1940 வரை டர்பன் நகரில் புகையிலைத் தொழிலாளர்கள் மற்றும் இந்திய சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்து, அவர்களின் நலனுக்காகப் பாடுப்பட்டார். பின்னர் தென்னாப்பிரிக்க ரயில்வே மற்றும் துறைமுகத் தொழிலாளர் சங்கங்களின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். எனவே இவர் ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியாக விளங்கினார். வாழ்க்கை […] சாரா 1943ஆம் ஆண்டில் ஃப்ரெட் கார்னெசன் (Fred Carneson) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார். இவர்கள் 1945ஆம் ஆண்டில் கேப் டவுன் நகரில் குடியேறினர். கேப் டவுனில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக ஃபிரெட் செயல்பட்டார். மேலும் இவர் 1946ஆம் ஆண்டில் கேப் மாகாண சபைக்கான தேசிய பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதியதாக ஆட்சிக்கு வந்த தேசிய கட்சி (National Party) அரசாங்கம் 1950இல் கம்யூனிஸ்ட் கட்சியினரை அடக்குவதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதனடிப்படையில் சாரா மற்றும் கார்னெசன் ஆகிய இருவருக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் தலைமறைவாக இயக்கப்பணி செய்தனர். ஃபிரெட் கார்னெசன் மிக முக்கியமான நபராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் மம்மத் (Mammoth) தேச துரோக வழக்கு விசாரணையில் கார்னெசன் கைது செய்யப்பட்டார். அவருடன் 156 பேர் கைது செய்யப்பட்டனர். கைது சாரா தனது 3 குழந்தைகளுடன் சேர்ந்து 156 குடும்பங்களுக்காக நிதி சேகரித்து வழங்கினார். 1960ஆம் ஆண்டில் அவசரகாலச் சட்டம் (Emergency) கொண்டு வரப்பட்டது. சாரா கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கார்னெசனும் சிறையில் இருந்தார். 3 குழந்தைகளும் தினசரி வாழ்வில் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் கைதுக்கு எதிராக தடை உத்தரவு பெற்றார். இருப்பினும் வாரம் ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆக வேண்டி இருந்தது. […] ஃபிரெட் கார்னெசன் 1965ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு ஆளானார். 13 மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டார். சாரா விட்டுக்காவலில் வைக்கப்பட்டார். வெளியே எங்கும் செல்ல முடியாமல் தவித்தார். பொருளாதார பிரச்சனையும் ஏற்பட்டது. கார்னெசன் 5 ஆண்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சந்திக்க சாராவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. போலீஸ் அத்துமீறி வீட்டில் பரிசோதனை செய்ததைத் தட்டிக் கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தினர். குண்டு அவரது மகனின் தலைக்கு அருகில் சென்றது. சாரா மீண்டும் 1967ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை இரத்து செய்ய போராடினார். பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். எனவே சாரா 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கு மார்னிங் ஸ்டார் (Morning Star) என்னும் செய்தித்தாளில் பணிபுரிந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டு தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர்களுக்காக உழைத்தார். ஃபிரெட் கார்னெசன் வாழ்வில் 60 தடவை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கத்தது. அவர் 1972ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் லண்டன் சென்று குடும்பத்துடன் சேர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக விதித்த உத்தரவு நீக்கப்பட்டது. அதன் பின்னர் 1991ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பிவந்து கேப்டவுனில் குடியேறினார். வானவில்லின் சிகப்பு தென்னாப்பிரிக்காவில் 1994ஆம் ஆண்டு முதன் முதலாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் கேப் டவுன் பெருநகர மற்றும் கேப் பிராந்திய கவுன்சிலுக்கானப் பிரதிநிதியாக ஃபிரெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2000ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் 103ஆவது ஆண்டு விழா 2014ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போது தனது வாழ்நாள் முழுவதும் இனவெறிக்கு எதிராகப் போராடியவர் சாரா எனப் புகழப்பட்டார். சாரா தனது 99வது வயதில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று இயற்கை எய்தினார். அந்நாள் தேசிய நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சாராவிற்கு அஞ்சலி செலுத்தினர். ஏற்கெனவே 2011ஆம் ஆண்டில் சாராவின் சுயசரிதையை அவரது மகள் லின் (Lynn) எழுதி வெளியிட்டிருந்தார். வானவில்லின் சிகப்பு (Red in the rainbow) என்ற தலைப்பில் சாரா மற்றும் ஃபிரெட் கார்னெசனின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க வரலாற்றில் சாராவின் பங்கு மகத்தானது. அவர் தென்னாப்பிரிக்காவில் தோன்றும் வானவில்லின் சிகப்பு நிறமாகவே ஜொலித்துக கொண்டிருக்கிறார். ரோசா பார்க்ஸ் இன்றைய நாகரீக உலகத்திலும் மனிதர்களிடம் இனப் பாகுபாடு, சாதியப் பாகுபாடு மற்றும் உயர்வு தாழ்வு என இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் சாதியப் பாகுபாடு இருப்பது போல் வளர்ந்த நாடு, முன்னேறிய நாடு என அழைக்கப்படும் அமெரிக்காவிலும் இனப்பாகுபாடு உள்ளது. நிறத்தின் அடிப்படையில் இந்த பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. அமெரிக்காவில் வெள்ளையர், கருப்பர் என்னும் பிரிவினையால் கருப்பு இனத்தினர் அனுபவித்தக் கொடுமைக்கு அளவே இல்லை. பள்ளி, குடிநீர், நீரூற்றுகள், உணவகங்கள், பேருந்து என அனைத்து இடத்திலும் பாகுபாடு இருந்தது. பள்ளி பேருந்துகளில் வெள்ளையர் குழந்தைகளை ஏற்றிச் சென்றாலும், கறுப்பினக் குழந்தைகள் அப்பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டி இருந்தது. 1900ஆம் ஆண்டில் இரு இனத்தவர்களுக்கும் பேருந்தில் தனித்தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டம் இருந்த போதிலும் நடைமுறையில் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. ரோசா பார்க்ஸ் […] அனைத்து பேருந்துகளிலும் கருப்பு இனத்தவர்கள் பயணம் செய்ய முடியாது. பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் வெள்ளையர்கள் அதிகம் ஏறி விட்டால் கருப்பர்கள் இறக்கி விடப்படுவர். சில பேருந்துகளில் கருப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இருந்தாலும், வெள்ளையர்கள் அமர இடம் இல்லை என்றால், இருக்கையை காலி செய்து அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். பேருந்தில் ஏறிய வெள்ளையர்களுக்கு எழுந்து இடம் கொடுக்க மறுத்ததால் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவர் தனது உரிமைக்காகப் போராடினார். கருப்பு இனத்தவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். இந்தப் போராட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. இறுதியாக இருக்கையில் அமர்வதற்கான உரிமை கிடைத்தது. இந்த உரிமைக்கான போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் ரோசா பார்க்ஸ் (Rosa Parks) ஆவார். ஆகவே இவரை “மனித உரிமைகளின் தாய்” என அழைக்கப்படுகிறார். கல்வி ரோசா பார்க்ஸ் 1913ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டஸ்க்கீ என்னும் நகரில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ரோசா லூசி மெக்காலே (Rosa Louise Mccauley) என்பதாகும். இவரது தந்தை ஜேம்ஸ் மெக்காலே ஒரு தச்சர். இவரது தாய் லியோனா எட்வர்ட்ஸ் மெக்காலே என்பவர் ஒரு ஆசிரியை ஆவார். ரோசாவிற்கு இரண்டு வயது இருக்கும் போதே அவரது அப்பாவும், அம்மாவும் பிரிந்துவிட்டனர். தாயுடன் மாண்ட்கோரிக்கு வெளியே உள்ள பைன் லெவலில் தாய் வழி தாத்தா பாட்டியின் பண்ணையில் குடியேறினர். தாத்தா பண்ணை வேலைக்காரராக இருந்தார். ரோசாவிற்கு ஆறு வயதாக இருக்கும் போது தாத்தா இறந்து விட்டார். இவரின் குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதி, வீட்டிலேயே தனது தாய் மூலம் கல்வி கற்றார். பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு, குடும்பச் சூழ்நிலைக் காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிருத்திக் கொண்டார். பண்ணை வேலைகளில் ஈடுபடுவது, சமைப்பது மற்றும் துணி தைக்கவும் கற்றுக் கொண்டார். தையல் செய்யும் பெண்மணியாக மாறினார். ஒடுக்கு முறை கருப்பு இன மக்கள் அடக்கு முறைகளை அனுபவித்து வந்ததை ரோசா பார்க்ஸ் சிறு வயதிலிருந்தே பார்த்தும், அனுபவித்தும் வளர்ந்தார். கருப்பினத்தவர்கள் ஒதுக்குப் புறமான இடங்களில் வாழ்ந்தனர். கல்வி கற்பதிலும் பிரச்சனை இருந்தது. அக்காலத்தில் கல்வி கற்ற கருப்பர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இவர்களுக்கு என தனி நீக்ரோ தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள் இருந்தன. பேருந்துகளில் தனியான இடம் வழங்கப்பட்டன. வெள்ளை இன வெறியர்களால் அடிக்கடி தாக்கப்பட்டனர். இரவு படுக்கச் செல்லும் போது தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகளுடன் படுக்கைக்குச் செல்வது வழக்கம். ஆபத்து என்றால் உடனே தப்பித்துச் செல்ல தயாராக இருக்க வேண்டும். இவரது குடும்பத்தினரும் இனவெறியை அனுபவித்தனர். திருமணம் […] இவர் 1932ஆம் ஆண்டில் ரேமண்ட் பார்க்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் முடிதிருத்தும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். சமூக சீர்த்திருத்த சிந்தனை உடையவர். அமெரிக்காவில் வாழக்கூடிய ஆப்பிரிக்கர் முன்னேற்றச் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அவர்களின் உரிமைக்கான போராட்டங்களிலும் கலந்து கொண்டார். ரோசா பார்க்ஸும் கணவருடன் இணைந்து சங்கத்தில் செயல்பட்டார். பேருந்து பயணம் மாண்ட்கோமரி நகரப் பேருந்தில் வெள்ளையர்கள் அமருவதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தாலும் கருப்பர்கள் அமரக் கூடாது. ஆனால் பேருந்தில் வெள்ளையர்களை விட கருப்பர்களே அதிகம் பயணம் செய்தனர். தினமும் 70 சதவீத கருப்பர்கள் பயணம் செய்து வந்தனர். பேருந்தின் பின் வரிசையில் சில இருக்கைகள் கருப்பர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளையர்கள் அதிகம் ஏறிவிட்டால் அந்த இருக்கையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து எழுந்து விட வேண்டும். ரோசா 1943ஆம் ஆண்டில் பேருந்தின் முன்புறம் ஏறி முன் வரிசையில் அமர்ந்தார். ஓட்டுநர் பின் இருக்கையில் அமரச் சொன்னார். ரோசா பின் வரிசை இருக்கைக்குச் சென்ற போதும் ஓட்டுநர் இவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். மிகவும் சிரமப்பட்டு, வேதனையோடு வீடு வந்து சேர்ந்தார். இவர் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று பேருந்தில் பயணம் செய்த போது ஒரு சம்பவம் நடந்தது. கருப்பர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து இருந்தார். வெள்ளையர்கள் அதிகம் ஏறியதால் அவர்களுக்கு இடம் கொடுக்குமாறு ஓட்டுநர் உத்தரவிட்டார். இவரின் அருகில் அமர்ந்து இருந்த 3 பேர் எழுந்து இடம் கொடுத்தனர். ஆனால் ரோசா பார்க்ஸ் இருக்கையை விட்டு எழ மறுத்துவிட்டார். அதனால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போராட்டம் […] நீதிமன்ற தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். 1955 அன்று டிசம்பர் 5 அன்று கருப்பினத்தவர்கள் அனைவரும் பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பர்கள் நடந்தே பயணம் செய்தனர். இப்போராட்டம் தீப்பொறி போல் பரவியது. இந்தப் போராட்டம் 381 நாட்கள் நீடித்தது. இந்த ஒன்றுபட்ட போராட்டம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று நல்ல தீர்ப்பு வழங்கியது. வெள்ளையர் மட்டும் என்ற விதிமுறை மாற்றப்பட்டது. இருக்கையில் அமர்ந்து செல்லும் உரிமையை கருப்பர்கள் அனைவரும் பெற்றனர். இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரோசா பார்க்ஸ். ஆகவே அவரை “சிவில் உரிமைகள் இயக்கத்தின் தாய்” என அழைக்கப்பட்டார். இறுதி வாழ்க்கை இவர் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கருப்பின மக்களின் நலனுக்காக செலவிட்டார். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டார். ஆகவே “விடுதலைப் போரின் தாய்” எனவும் அழைக்கப்பட்டார். இவர் தனது 92 ஆவது வயதில் இயற்கை எய்தினார். மாண்ட்கோமெரி அரசு இவருக்கு மரியாதை செலுத்தியது. பேருந்துகளின் முன் இருக்கையில் கருப்பு ரிப்பன்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன. உலகளவில் 24 பல்கலைக் கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கின. பல்கலைக் கழகம், நூலகம், நகரங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. பல விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டது. பேருந்தில் ரோசா பார்க்ஸை கைது செய்த டிசம்பர் 1ஆம் தேதி “ரோசா பார்க்ஸ் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது. ரோசா லம்சம்பர்க் […] ஐரோப்பாவில் கம்யூனிச இயக்கத்தை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகித்த, செல்வாக்கு மிக்க பெண் என இவர் போற்றப்படுகிறார். இவரது புரட்சி வாழ்க்கை இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாய் விளங்குகிறது. இவர் ஒரு சமூகவாதி, மார்க்சிய தத்துவவாதி, சோசலிச செயல்பட்டாளர், பாட்டாளி வர்க்கத்திற்காக பாடுபட்டவர், போர் எதிர்ப்பாளர் என பல்வேறு சிறப்புக்கு உரியவர். இவர் ஐரோப்பாவில் பூத்த சிவப்பு மலர். சாதாரண மனிதர்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர். போலந்து நாட்டில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவரே ஆவார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற உலகின் முதல் பெண்களில் இவரும் ஒருவர். சோசலிஸ்டுகளாலும், மார்க்சியவாதிகளாலும் மாபெரும் புரட்சி வீரராகக் கருதப்படுவர் ரோசா லம்சம்பர்க் (Rosa Luxemburg) ஆவார். பிறப்பு இவர் 1871 ஆம் ஆண்டு ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நாட்டில் சாமொஸ்க்கில் என்னும் நகரில் பிறந்தார். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மரவியாபாரி. எலியாஸ் லக்சம்பர்க் மற்றும் லைன் லோவெண்ஸ்டீன் ஆகிய தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரின் உண்மையானப் பெயர் ரோஜாலியா லுக்சென்பர்க் (Rozalia Luksenburg) என்பதாகும். […] இவரது தந்தை யூத சீர்திருத்த இயக்கத்தை ஆதரித்தார். போலந்து நாட்டில் கட்சிக்காரர்களுக்கு நிதி சேகரித்துக் கொடுத்தார். அதுமட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கினார். இவரது தந்தையின் தாராளவாத கருத்துக்களால் ரோசா லம்சம்பர்க் ஈர்க்கப்பட்டார். தாய் மத நம்பிக்கையுடையவர். அதிக புத்தகங்களைப் படிக்கக் கூடியவராகவும் இருந்தார். ஆகவே புத்தகங்கள் படிக்கும் பழக்கும் குழந்தை பருவத்திலேயே ஏற்பட்டது. இவரது வீட்டில் போலந்து மற்றும் ஜெர்மன் மொழி பேசப்பட்டது. மேலும் லம்சம்பர்க் ரஷிய மொழியையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பம் 1873ஆம் ஆண்டில் வார்சாவிற்கு இடம் பெயர்ந்தது. இவர் ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது இடுப்பில் பிரச்சனை ஏற்பட்டது. இடுப்பு வலியால் அவதிப்பட்டார். பல மாதங்கள் படுத்த படுக்கையாகவும் இருந்தார். இடுப்பு வலியால் இவர் ஒரு நிரந்தர ஊனமுடையவர் ஆனார். பத்து வருடங்கள் நோயால் அவதிப்பட்டார். பிறகு ஓரளவு நோய் குணமடைந்தது. தனது உடலில் உள்ள குறைபாட்டை மறைக்க இவர் சிறப்பு காலணிகளை அணிந்தார். இவர் விடா முயற்சியுள்ள மாணவியாக விளங்கினார். வார்சாவில் உள்ள பெண்கள் பள்ளியில் 1887ஆம் ஆண்டு வரை பயின்றார். இங்கு போலந்து விண்ணப்பத்தாரர்களை அரிதாகவே ஏற்றுக் கொண்டனர். மேலும் யூதக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்வதில் விதிவிலக்கானது. இங்கு குழந்தைகள் ரஷிய மொழியில் மட்டுமே பேச அனுமதித்தனர். இப்பள்ளியில் இவர் புத்திசாலித்தனமான மாணவி என்கிற பட்டத்தையும் பெற்றார். சுவிட்சர்லாந்து பள்ளியில் படிக்கும் போது போலந்து கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும் இரகசிய வட்டங்களின் கூட்டங்களில் கலந்து கொண்டார். இவர் 1886ஆம் ஆண்டு போலந்து இடதுசாரி பாட்டாளிக் கட்சியில் சேர்ந்தார். இது தடை செய்யப்பட்டக் கட்சியாக இருந்தது. இவர் ஒரு பொது வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். அப்போது இக்கட்சியின் முக்கிய தலைவர்கள் நால்வர் கொல்லப்பட்டனர். அதனால் கட்சி கலைக்கப்பட்டது. இருப்பினும் இவர் தனது தோழர்களை ரகசியமாக சந்தித்து வந்தார். பாட்டாளி வர்க்கக் கட்சியின் மறைமுக நடவடிக்கைக் காரணமாக சாரிஸ்ட் காவல் துறையால் இவர் தேடப்பட்டார். கிராமப்புறங்களில் மறைந்து வாழ்ந்தார். இவர் 1889ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து தப்பிச் சென்றார். வைக்கோல் ஏற்றிச் செல்லும் வண்டியில் மறைந்து பயணம் மேற்கொண்டார். பல முறை மூச்சு திணறல் இவருக்கு ஏற்பட்டது. இவர் சூரிச் பல்கலைக் கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார். இவர் 1897ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தொழிலாளர் குரல் இவர் சுவிட்சர்லாந்தில் தனது போராட்ட அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். லியோ என்பவர் போலந்தில் இருமுறை சிறை தண்டனை அனுபவித்தவர். இவர் பொதுவுடமைவாதி. மீண்டும் பிடிபடும் தருவாயில் போலந்தில் இருந்து தப்பி சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தார். இவர் துணிச்சல் மிக்கவர். […] இவர் ரகசியமாக செய்தித்தாள் அச்சடித்தல், தடை செய்யப்பட்ட நூல்களை அச்சடித்து வெளியிட்டு வந்தார். இருவரது துணிவும், அறிவும், நிதானமும், உறுதியும் ரோசாவை வெகுவாக கவர்ந்தது. இவரும் தோழர்களாக இணைந்தனர். இருவரும் சேர்ந்து 1893ஆம் ஆண்டில் “தொழிலாளி குறிக்கோள்” என்னும் செய்தித்தாளை போலந்து மொழியில் வெளியிட்டனர். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்க முடியும் என ரோசா எழுதினார். ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக பாட்டாளிகள் அணி திரள வேண்டும் என்றார். செங்கொடி இவர் 1898ஆம் ஆண்டில் குஸ்தாவ் லூபெக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஜெர்மனி நாட்டின் குடியுரிமையைப் பெற்று பெர்லின் நகருக்கு குடியேறினார். இவர் ஜெர்மனி சமூக மக்களாட்சிக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். ஜெர்மன் சோசலிஸ்டுகளின் நம்பிக்கையை பெற்றார். 1901ஆம் ஆண்டில் லெனினைச் சந்தித்தார். மேலும் லெனினின் நண்பராகவும் மாறினார். ரஷ்யாவில் 1905ஆம் ஆண்டு நடந்த புரட்சியை நேரில் கண்டார். புரட்சியின் ஜனநாயக மாக்கலின் திறனை கவனித்த முதல் எழுத்தாளர்களில் லம்சம்பர்க்கும் ஒருவர். 1905 முதல் 1906 ஆம் ஆண்டுகளில் மட்டும் போலந்து மற்றும் ஜெர்மன் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். புரட்சி பற்றிய உரைகளையும் உருவாக்கினார். இவர் 1907ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். முதலாம் உலகப் போருக்கு எதிராக குரல் கொடுத்தார். போர் என்ற பைத்தியக்கார வெறிக்கு ஒரே மாற்று சோசலிசப் புரட்சி மட்டுமே என்றார். லம்சம்பர்க் ஜூனியர் என்ற புனைப் பெயரில் எழுதினார். ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கத்தைப் போருக்கு எதிராகத் திரட்டினார். இதன் காரணமாக இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெர்மனி சமூக மக்களாட்சிக் கட்சி முதலாம் உலகப் போரை ஆதரித்தது. இதனால் இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெகட்டுடன் இணைந்து புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி (Spartacist League) என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் ஜெர்மனியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயராக மாறியது. செங்கொடி என்ற பத்திரிக்கை ஆரம்பித்தும் நடத்தினார். இறப்பு இவர் பல முறை சிறை தண்டனையை அனுபவித்தார். 1919ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டாவது புரட்சி வெடித்தது. ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் தனது படையினருக்கு இடதுசாரிகளை ஒழிக்க உத்தரவிட்டார். 1919ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லம்சம்பர்க் வலதுசாரி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். ஒட்டோ ரூஞ்ச் என்பவன் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தினான். ஹெர்மன் சூக்கோன் என்பவன் அவரை சுட்டுக் கொன்றான். அவரது உடல் பெர்லினில் லாண்ட்வெர் கால்வாயில் வீசப்பட்டது. அப்போது அவருக்கு வயது 48. சில மாதங்கள் கழிந்த பின்னர் ஜூன் 1 அன்று அவரது சிதைந்த உடல் எடுக்கப்பட்டது. ரோசா மொத்த உலகிலும் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் நினைவில் இருப்பார். அவருடைய நூல்கள் கம்யூனிஸ்டுகளின் பல தலைமுறைக்கு பாடமாக விளங்கும் என லெனின் குறிப்பிட்டார். மேலும் “ரோசா தொழிலாளி வர்க்கத்தின் கழுகு” என்று லெனின் புகழாரம் சூடினார். கிளரா ஜெட்கின் உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை பல்வேறு பெண்கள் அமைப்பினர் கொண்டாடுகின்றனர். இது முதலாளித்துவ பெண்ணியம் என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. உலக மகளிர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கான தினம் அல்ல. சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம் நடைபெற்ற தினம் தான் இது. இந்த தினத்திற்கு என ஒரு வரலாறு உண்டு. மகளிருக்கு என ஒரு சிறப்பு தினம் கொண்டு வர வேண்டும் பல பெண் போராளிகள் விரும்பினர். பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட காலம் இருந்து வந்தது. இதை தகர்த்தெறிய பல பெண்கள் போராடினர். உலக மகளிர் தினம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் “கிளாரா ஜெட்கின்” (Clara Zetkin) ஆவார். தொழிலாளி வர்க்க மக்களிடையே கல்விப் பணிபுரிந்த முதல் ஜெர்மனியப் பெண்மணி என்கிற […]சிறப்புக்கு உரியவர். இவர் ஒரு மார்க்சிய தத்துவவாதி, கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டார். ஜெர்மனியப் பெண் புரட்சியாளர். மேலும், பெண்கள் இயக்கத்தில் தலைமைப் பங்கு வகித்தவர். சமூகத்தில் பெண்கள் தங்களது உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி, வெற்றியும் பெற்றனர். உலகளவில் பெண்களை ஒன்று திரட்டவும், போராடவும் ஒரு குறிப்பிட்ட நாள் வேண்டும் என்பதன் அடிப்படையில் உலக மகளிர் தினம் தோன்றியது. பிறப்பு கிளாரா ஜெட்கின் 1857ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று ஜெர்மனி நாட்டில் சாக்சோனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை காட்பிரைடு எய்சனர். இவர் ஒரு பள்ளி ஆசிரியர், தேவாலய அமைப்பாளர் மற்றும் பக்தியுள்ள புராட்டஸ்டன்ட் ஆவார். இவரது தாயார் ஜோசபின் விட்டேல் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். உயர் கல்வி படித்தவர். இவரது குடும்பம் 1872ஆம் ஆண்டு லீப்ஜிக் என்னும் இடத்திற்கு குடிபெயர்ந்தது. தாராள உள்ளம் கொண்ட இவரது தந்தையே இவருக்குக் கல்வி கற்பித்தார். பின்னர் பெண்களுக்கான லீப்ஜிக் ஆசிரியர் கல்லூரியில் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே பெண்கள் உரிமை மீதும், பெண்களின் நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். படிக்கும் போதே சமூக ஜனநாயகக் கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். திருமணம் இவர் ஓசிப் ஜெட்கின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஓசிப் ஜெட்கின் மார்க்சிய தத்துவத்தை பின்பற்றக் கூடிய ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக இருந்தார். கம்யூனிச சித்தாந்தங்களை ஓசிப் ஜெட்கின் மூலம் கிளாரா நன்கு கற்றுக் கொண்டார். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் 1870ஆம் ஆண்டில் சோசலிச இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினர். 1878ஆம் ஆண்டில் சோசலிச நடவடிக்கைக்கு ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டது. கிளாரா, ஓசிப் ஜெட்கின் மற்றும் சில முன்னணி தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். 1882ஆம் ஆண்டில் ஜூரிச் சென்று பின்னர் பாரிஸ் சென்றனர். கிளாரா பாரிஸில் ஒரு பத்திரிக்கையாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் படித்தார். குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துக் கொண்டே இருவரும் சமூக போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். பாரிஸ் நகரில் சர்வதேச சோசலிசக் குழுவிற்கு அடித்தளம் அமைத்தனர். இவர்களுக்கு மாக்சியம் மற்றும் கான்ஸ்டான்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். […] ஓசிப் ஜெட்கின் 1889ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அவர் ஜூன் மாதம் இறந்தார். தனது கணவனை இழந்த கிளாரா தனது இரண்டு குழந்தைகளுடன் ஸ்டட்கார்ட்டு பகுதியில் குடிபெயர்ந்தார். அச்சமயத்தில் பாரிஸ் நகரில் சர்வதேச மகளிர் மாநாடு இரண்டாவது முறையாக நடைபெற்றது. இதில் கிளாரா கலந்து கொண்டார். சமத்துவம் ஜெர்மன் சோசலிசத் தொழிலாளர் கட்சியில் கிளாரா 1878ஆம் ஆண்டில் சேர்ந்தார். இது 1890ஆம் ஆண்டில் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றப்பட்டது. இவர் பெண் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் பேசினார். இது உலகில் உள்ள அனைத்து பெண்கள் இயக்கங்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. சோசலிஸ்டுகள் மீதான தடையை ஜெர்மனி அரசு 1890ஆம் ஆண்டில் நீக்கியது. இதன் பிறகு மீண்டும் ஜெர்மனி திரும்பினார். ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி பெண்களுக்கு என கிளைச்சீட் என்னும் பத்திரிகையை வெளியிட்டது. இதற்கு சமத்துவம் என்று பொருள். சமத்துவம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக கிளாரா நியமிக்கப்பட்டார். இவருக்கு ரோசா லம்சம்பர்க் உதவியாக இருந்தார். இவர்களின் தோழமை நட்பு 20 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. சமத்துவம் பத்திரிகையின் பிரதிகள் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கிலேயே வெளியானது. இது பின்னர் 91 மகளிர் இயக்கத்தின் பத்திரிகை என அழைக்கப்பட்டது. காலம் செல்ல செல்ல மிகவும் பிரபலம் அடைந்தது. 1914ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் வெளிவந்தன. மகளிர் தினத்தின் தோற்றம் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட கிளாரா துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பரான பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளிவராத அக்காலத்தில் 15000 பெண்களைத் திரட்டி பாரிஸில் பேரணி நடத்தினார். பெண்களுக்கு சம உரிமை, ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை என பேரணியில் முழங்கினார். இதனால் உலகளவில் தெரியத் தொடங்கினார். ஜெர்மனி ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக சோசலிச பெண்கள் மாநாடு 1907ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலக முழுவதும் ஒருங்கிணைப்பதற்காக ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் செயலாளராக கிளாரா ஜெட்கின் தேர்வு செய்யப்பட்டார். டென்மார்கின் தலைநகரான கோபன் ஹேகனில் 1910ஆம் ஆண்டு உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. 17 நாடுகளில் இருந்து 100 பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு என ஒரு சிறப்பு மகளிர் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்க வேண்டும் என பலர் பேசினர். அப்போது உலகம் முழுவதும் 5 லட்சம் பெண்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். பெண்களுக்கு சம உரிமை, ஆண்களுக்கு சமமான ஊதியம் வேண்டும் என முழங்கி 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நியூயார்க் தெருக்களில் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். காவலர்களால் தாக்கப்பட்டு பலர் இரத்தம் சிந்தினர். நியூயார்க் மகளிர் எழுச்சியின் நினைவாக மார்ச் 8 ஐ உலக மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்னும் தீர்மானத்தை கிளாரா கொண்டு வந்தார். இத்தீர்மானம் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. […] உலகளவில் சர்வதேச மகளிர் தினம் 1911ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக டென்மார்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு நாடுகளில் இது நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டில் மார்ச் 8 ஐ சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது. அரசியல் வாழ்க்கை சர்வதேச சோசலிச பெண்கள் அமைப்பின் சார்பாக போருக்கு எதிராக ஒரு மாநாட்டை 1915இல் பெர்லினில் நடத்தினார். தொழிலாளர்களுக்கு இந்தப் போரினால் எந்தப் பயனும் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான அனைத்தையும் இழக்க நேரிடுகிறது என்றார். ஜெர்மனியில் 1919ஆம் ஆண்டு ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் மத்தியக் குழு உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு இவர் மாஸ்கோ சென்றார். பாசிசம் வெற்றி பெற்றால் உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்கு முறைக்கு ஆளாகும் என எச்சரிக்கை விடுத்தார். இவர் தனது 76 ஆவது வயதில் 1933 ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று மாஸ்கோவில் காலமானார். சூசன் பிரவுனெல் அந்தோனி அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையென அறிவித்தது. ஓட்டு போடும் உரிமை என்பது பெண்களுக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. வாக்குரிமை வேண்டி உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் போராடியே இந்த உரிமையைப் பெற்றனர். […] உலக அரசியல் ஆண்களுக்கு ஆதாரவாகவே இருந்தது. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என சட்டம் கூறவில்லை. பெண்களுக்கு போதிய அறிவு கிடையாது. பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், குழந்தைகளை பராமரிக்க வேண்டும், வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என ஆண்கள் கூறி வந்தனர். அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆண்கள் மட்டுமே நாட்டை நிர்வகிக்கும் தகுதி படைத்தவர்கள் எனக் கூறினர். பெண்கள் வாக்குரிமை இயக்கம் 1780ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. இப்படிப்பட்ட இயக்கம் உலகின் பல நாடுகளிலும் தோன்றியது. பல பெண் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வாக்குரிமைக்காக கடுமையாக உழைத்தனர். இறுதியில் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்தான் சூசன் பிரவுனெல் அந்தோனி (Susan Brownell Anthony) ஆவார். சூசன் அந்தோனி என்பவர் அமெரிக்க சமூக சீர்திருத்தவாதி மற்றும் உலக வரலாற்றில் மிகவும் பிரபலமான பெண் உரிமை போராளி. அடிமை ஒழிப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் என பல்வேறு இயக்கங்களில் ஈடுபட்டார். பெண்கள் வாக்குரிமை இயக்கத்தில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். திருமணம் செய்து கொள்ளாமல் சம உரிமைக்காக போராடிய பிரபல வாக்குரிமையாளர். பிறப்பு சூசன் 1820ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று மாசசூசெட்ஸ் பகுதியில் உள்ள ஆடம்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை டேனியல் என்பவர் ஒரு விவசாயி மற்றும் உள்ளூர் பருத்தி ஆலையின் உரிமையாளராகவும் இருந்தார். இவரது தாயார் லூசி, நன்கு கல்வியறிவு பெற்றவர். லூசி அமெரிக்கப் புரட்சியில் போராடிய குடும்பத்தில் பிறந்தவர். அதுமட்டும் அல்லாமல் லூசியின் பெற்றோர்கள் மாசசூசெட்ஸ் மாநில அரசாங்கத்தில் பணியாற்றினர். […] சூசனின் குடும்பம் குவாக்கர் கொள்கையை பின்பற்றியக் குடும்பம். கடவுளின் கீழ் அனைவரும் சமம் என்பது குவாக்கர் கொள்கையாகும். சூசன் சுதந்திரமாக வளர்க்கப்பட்டார். பல குவாக்கர்களைப் போலவே ஆண்களும், பெண்களும் படிக்க வேண்டும், சமமாக வேலை செய்ய வேண்டும், சமமாக வாழ வேண்டும் என இவரது பெற்றோர்களும் விரும்பினர். மேலும் உலகில் நடக்கும் கொடுமை மற்றும் அநீதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்களாக இருந்தனர். அனைவரும் சமம் என்ற கொள்கையால் சூசன் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார். இவருக்கு ஏழு சகோதர சகோதரிகள் இருந்தனர். அவர்களில் சிலர் நீதி மற்றும் அடிமை விடுதலைக்காக போராடினர். இவரது பெற்றோர்கள் 1826ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் உள்ள பேட்டன்வில்லிக்கு குடிபெயர்ந்தது. பிலடெல்பியாவுக்கு அருகில் உள்ள குவாக்கர் பள்ளியில் சூசன் சேர்க்கப்பட்டார். இவரது தந்தையின் வணிகம் தோல்வியடைந்ததால் 1830ஆம் ஆண்டு குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக வீடு திரும்பினார். இங்கு இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அதன் பிறகு 1840ஆம் ஆண்டு நியூயார்க் பகுதியில் ரோசெஸ்டர் என்னுமிடத்தில் உள்ள ஒரு பண்ணைக்கு குடிபெயர்ந்தனர். இயக்கம் […] சூசன் தனது தந்தையின் நண்பர்களான வில்லியம் லாயிட் கேரிசன் மற்றும் பிரடெரிக் டக்ளஸ் ஆகியோரைச் சந்தித்தார். இவர்கள் புகழ்பெற்ற அடிமை முறை ஒழிப்புவாதிகளாக இருந்தனர். சூசன் தனது 17 ஆவது வயதிலேயே அடிமை முறைக்கு எதிராகப் போராடினார். 1840ஆம் ஆண்டில் இருந்து அடிமைத் தனத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டார். இது அடிமை ஒழிப்பு இயக்கம் என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது எளிதான காரியம் அல்ல. பெண்கள் பொது இடங்களில் உரை நிகழ்த்துவது முறையற்றது என பெரும்பாலான மக்களின், கருத்தாக இருந்தது. சூசன் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அடிமைத்தனத்திற்கு எதிராக பல உணர்ச்சிகரமான உரைகளை நிகழ்த்தனார். இவரது பேச்சால் பலர் ஈர்க்கப்பட்டனர். சூசன் ஒரு பிரபலமான பெண்ணாக மாறினார். மது அருந்துவது பாவம் எனக் கருதினார். ஆண்களின் குடிப்பழக்கத்தால் வறுமை, வன்முறை ஏற்படுகிறது. இதனால் அப்பாவி பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை நேரில் கண்டார். ஆகவே மதுவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார். தனது முழு நேரத்தையும் சமூகப் பிரச்சனைக்காக ஒதுக்கினார். பெண்களின் உரிமைக்காகவும் போராடினார். நிதான இயக்கம் நடத்திய மாநாட்டில் ஒரு பெண் என்ற காரணத்தால் சூசனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்காத வரை யாரும் பெண்களை அரசியலில் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை சூசன் உணர்ந்தார். வாக்குரிமை இயக்கம் சூசன் 1851ஆம் ஆண்டில் நடைபெற்ற அடிமை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது எலிசபெத் கேடி ஸ்டாண்டன் (Elizabeth Cady Stanton) என்பவரைச் சந்தித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களின் உரிமைக்காக போராடினர். இவர்கள் நியூயார்க் மாநில பெண் உரிமைகள் குழுவை உருவாக்கினர். பிறகு 1869ஆம் ஆண்டில் தேசியப் பெண் வாக்குரிமை சங்கத்தை நிறுவினர். சூசன் தொடர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்தார். பெண்ணின் வாக்களிக்கும் உரிமையை ஆதரிக்க, மற்றவர்களை நம்ப வைக்க நாடு முழுவதும் உரையாற்றினார். பெண்களின் சொத்துரிமை, அடிமை எதிர்ப்பு, மது ஒழிப்பு என பல்வேறு பிரச்சாரங்களையும் சேர்த்து நடத்தினார். […]ஓட்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 1872ஆம் ஆண்டில் நடந்த போது சூசன் இத்தேர்தலில் வாக்களித்தார். சட்ட விரோதமாக வாக்களித்தார் எனக் காரணம் காட்டி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் செய்த குற்றத்திற்காக 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. சூசன் வழக்குத் தொடுத்தார். அபராதத்தை கட்ட மறுத்துவிட்டார். பிறகு இவர் மீது இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் பரவியது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்டத்தை அமெரிக்க சட்டமன்றத்தில் கொண்டு வர 1878ஆம் ஆண்டில் சூசன் முயற்சி செய்தார். மேலவை உறுப்பினர் ஆரன் சார்செண்ட் என்பவர் இத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. வெற்றி பெண்கள் உரிமை இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தடுக்க தேசிய அமெரிக்கப் பெண் வாக்குரிமை சங்கம் என்ற புதிய பெண்கள் வாக்குரிமை அமைப்பை 1890இல் உருவாக்கினார். எலிசபெத் கேடி. இதன் முதல் தலைவராகவும், சூசன் இதன் இரண்டாவது தலைவராகவும் இருந்தார். எலிசபெத் கேடி இறக்கும் வரை சுமார் 50 ஆண்டுகள் இணைந்தே போராடினார். சூசன் ஓட்டுரிமைக்காக கையெழுத்து இயக்கம், பேரணி, பொதுக் கூட்டம் என தொடர்ந்து நடத்தினார். தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். இவர் 1906ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று இயற்கை எய்தினார். அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைக்காக நீண்ட காலம் போராட்டம் நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 அன்று அமெரிக்க அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்தது. ஆண்களைப் போலவே குடியுரிமையின் அனைத்து உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு பெண்கள் தகுதியானவர்கள் என அறிவித்தது. சூசனின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது. சோஜோர்னர் ட்ரூத் சோஜோர்னர் ட்ரூத் (Sojourner Truth) என்பவர் ஒரு அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் உரிமைப் போராளி ஆவார். இவர் அடிமையாக இருந்து விடுதலை அடைந்தப் பெண். அடிமை ஒழிப்பு மற்றும் பெண் சமத்துவத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். இவர் உலகின் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பிற்காலத்தில் ஒரு சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். 2009ஆம் ஆண்டில் அமெரிக்க தலைமை பார்வையாளர்கள் மையத்தில் உள்ள எமன்சிபேஷன் ஹாலில் இவரது மார்பளவு நினைவு சிலை வைக்கப்பட்டது. கேபிடல் கட்டிடத்தில் சிலை வைக்கப்பட்டிருக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் ட்ரூத் ஆவார். 2014ஆம் ஆண்டில் ஸ்மித்சோனியன் இதழில் எல்லாக் காலத்திலும் 100 மிக முக்கியமான அமெரிக்கர்கள் பட்டியலில் இவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பிறப்பு […] இவரது தந்தை ஜேம்ஸ் ஒரு கூலித் தொழிலாளி. இவர் கானா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட அடிமை. இவரது தாயார் எலிசபெத் பாம்ப்ரீ ஆவார். இவர் கினியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட அடிமைகளில் ஒருவர். இந்த தம்பதியருக்கு 10 குழந்தைகள், இவர்களின் இளைய மகள் தான் சோ ஜோர்னர் ட்ரூத். இவரின் உண்மையான பெயர் இசபெல்லா பாம்பிரீ (Isabella Baumfree) என்பதாகும். செல்லமாக பெல்லா என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர்களை கர்னல் சார்லஸ் ஹார்டன்பெர்க் என்னும் பணக்காரர், அடிமை வியாபாரிகளிடம் இருந்து விலைக்கு வாங்கினார். நியூயார்க் நகரின் வடக்கே 153 கி.மீ. தொலைவில் உள்ள ஈசோபஸ் நகரில் இவர்களை குடி வைத்தான். இது டச்சு மொழியில் ஸ்வார்டேகில் என அழைக்கப்படும் இடமாகும். இன்றைக்கு ரிப்டனுக்கு சற்று வடக்கே உள்ளது. இது ஒரு மலைப்பாங்கான இடம். இங்குள்ள எஸ்டேட்டில் தான் வாங்கிய அடிமைகளை வேலைக்கு வைத்துக் கொண்டான். அடிமைகளும் இவரின் சொத்தின் ஒரு பகுதியாகவே மதிப்பிடப்பட்டனர். குழந்தைப் பருவத்திலேயே ட்ரூத் இங்குள்ள எஸ்டேட்டில் அடிமையாக வேலை செய்தார். இவரது முதலாளி 1806ஆம் ஆண்டில் இறந்தார். ஒன்பது வயது இருக்கும் போது ட்ரூத் மற்றொருவருக்கு விற்கப்பட்டார். செம்மறி ஆட்டு மந்தையுடன் ஜான் நீலி என்பவர் 100 டாலருக்கு இவரை ஏலத்தில் விலைக்கு வாங்கி, கிங்ஸ்டன் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். ட்ரூத் அதுவரை டச்சு மொழியில் மட்டுமே பேசினார். அங்கு சென்ற பிறகு ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ஆனால் ஆங்கிலத்தை டச்சு உச்சரிப்புடன் பேசினார். இவரின் புதிய எஜமானர் நீலி மிகவும் கொடூர மனம் கொண்டவர் மற்றும் கடுமையானவர். இவரை தினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக அடிப்பது நீலியின் பழக்கமாக இருந்தது. ஒரு முறை இரும்பு கம்பியால் அடி வாங்கினேன் என ட்ரூத் குறிப்பிட்டார். திருமணம் நீலி 1808 ஆம் ஆண்டில் இவரை நியூயார்க்கின் போர்ட் ஈவெனின் உணவகக் காப்பாளர் மார்டினஸ் ஷ்ரைவர் என்பவருக்கு 105 டாலருக்கு விற்றான். இவர் 18 மாதங்கள் அங்கு வேலை செய்து வந்தார். பின்னர் 1810ஆம் ஆண்டில் நியூயார்க்கின் வெஸ்ட் பார்க் உரிமையாளர் ஜான் டுமாண்ட் என்பவருக்கு மீண்டும் விற்கப்பட்டார். […] புதிய எஜமானர் ஜான் டுமாண்ட் மிகவும் மோசமானவன். அவன் பலமுறை ட்ரூத்தை பாலியல் பலாத்காரம் செய்தான். முதலாளியின் கொடுமையால் வாழ்க்கை துன்பகரமாக இருந்தது. மேலும் ஜான் டுமாண்டின் மனைவி எலிசபெத்தும் ட்ரூத்தை கொடுமைபடுத்தினார். ஒரு அடிமைப் பெண் தனது எஜமானர்களால் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க வேண்டி இருந்தது. அடிமைக்கு உயிர் வாழ்வதை தவிர வேறு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. ட்ரூத் 1815ஆம் ஆண்டில் அதாவது தனது 18 ஆவது வயதில் தனது பண்ணைக்கு அருகில் உள்ள வேறு ஒரு பண்ணையில் வேலை செய்த ராபர்ட் என்ற அடிமையைக் காதலித்தார். இது ராபர்ட்டின் முதலாளிக்கு பிடிக்கவில்லை. இருவரும் தனி, தனி உரிமையாளர்களிடம் அடிமையாக இருந்ததால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவில்லை. ராபர்ட்டை அவனது முதலாளி கடுமையாக தாக்கினான். இதனால் ராபர்ட் இறந்து போனான். இந்த அனுபவம் அவரது வாழ்நாள் முழுவதும் வேதனையை கொடுத்தது. டூமாண்டிற்கு சொந்தமான தாமஸ் என்ற மற்றொரு அடிமையை ட்ரூத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். தாமஸ் என்பவர் வயதான ஒரு கிழவர் ஆவார். இவர்களுக்கு ஜேம்ஸ், டயானா, பீட்டர், எலிசபெத் மற்றும் சோபியா என ஐந்து குழந்தைகள் பிறந்தன. விடுதலை நியூயார்க் மாநில அரசு அடிமைத் தனத்தை ஒழிக்க 1799ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. ஆனால் இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் விடுதலை கிடைக்க 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. அதாவது 1827ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று தான் முழு விடுதலை நிறைவேறியது எனலாம். […] அரசு விடுதலை அளிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ட்ரூத்தை விடுதலை செய்வதாக டூமாண்ட் வாக்குறுதி அளித்தான். குறிப்பிட்ட தேதி வந்தவுடன் அவன் மனம் மாறி ட்ரூத்தை விடுதலை செய்ய மறுத்துவிட்டான். ட்ரூத்திற்கு உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக குறைந்த உற்பத்தியை மட்டுமே செய்ய முடிந்தது. விடுதலை தருவதாக கூறி ஏமாற்றியதால் கோபமடைந்தார். முதலாளியைத் திருப்திபடுத்த 45 கிலோ கம்பளியை உற்பத்தி செய்து கொடுத்தார். ட்ரூத் தனது கைக்குழந்தை சோபியாவுடன் 1826ஆம் ஆண்டு பிற்பகுதியில் விடுதலை பெற்றார். விடுதலைச் சட்டத்தின் அடிப்படையில் விடுதலை அடையாதக் காரணத்தால் தனது மற்ற நான்கு குழந்தைகளையும் பண்ணையில் விட்டுச் சென்றார். ஏனென்றால் அவர்கள் சட்டப்படி டூமாண்டிற்கு கட்டுப்பட்டிருந்தனர். வழக்கில் வெற்றி நியூயார்க்கின் நியூ பாஸ்ட்ஸ் என்னும் இடத்திற்கு ட்ரூத் தனது குழந்தையுடன் சென்றார். அங்கு ஐசக் மற்றும் மரியா வான் வாகனன்ஸ் வீட்டிற்குச் சென்றார். அடிமை ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வரும் வரை இவர்கள் வீட்டில் பணி புரிந்தார். இதற்காக பழைய முதலாளி டூமாண்ட்டிற்கு 20 டாலரை வான் வாகனன்ஸ் கொடுத்தார். நியூயார்க் அடிமைத்தனத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்ட பிறகு ட்ரூத்தின் ஐந்து வயது மகன் பீட்டரை டூமாண்ட் ஏமாற்றி விற்றுவிட்டான். அலபாமாவில் உள்ள உரிமையாளருக்கு சட்ட விரோதமாக மறுவிற்பனை செய்யப்பட்டதை ட்ரூத் தெரிந்து கொண்டார். வான் வாகனன்ஸின் உதவியுடன் நீதி மன்றம் சென்றார். ஒரு வெள்ளை மனிதனுக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றார். இந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். நீதிமன்றத்திற்குச் சென்று வெற்றி பெற்ற முதல் கருப்பினப் பெண் ட்ரூத் ஆவார். தனது மகனை அடிமை முறையிலிருந்து மீட்டெடுத்தார். பேச்சாளர் […] ட்ரூத் தனது மகனுடன் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு கிறிஸ்துவ வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் கிறிஸ்துவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். இவர் 1843ஆம் ஆண்டில் இசபெல்லா என்கிற தனது பெயரை சோஜோர்னர் ட்ரூத் என மாற்றிக் கொண்டார். அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். அடிமை ஒழிப்பு அமைப்பில் சேர்ந்தார். பிரடெரிக் டக்ளஸ் போன்ற முன்னணி அடிமை ஒழிப்புவாதிகளைச் சந்தித்தார். அதன் சம உரிமை ஆர்வலராக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். 1851ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓஹியோ பெண்கள் உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டார். நான் ஒரு பெண் அல்லவா என உரையாற்றினார். இந்த உரை பெரும்பாலனவர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும், சம உரிமை போராளியாகவும் மாறினார். பெண்களின் வாக்குரிமைக்காகவும் போராடினார். இறுதி வாழ்க்கை பல முன்னணி பெண் போராளிகளில் ஒருவராக ட்ரூத் மாறினார். பெண்களுக்கு சொத்துரிமைக்காகவும் குரல் கொடுத்தார். வறுமையில் வாடும் கருப்பினத்தவர்களுக்கு வேலை தேடித் தருவதிலும் தீவிரமாக பங்களித்தார். 1870ஆம் ஆண்டில் அடிமைகளுக்கு நிலம் பெற்றுத் தர உதவினார். வெள்ளை மாளிகையில் அதிபரை சந்தித்துப் பேசினார். அடிமை ஒழிப்பு, பெண்ணுரிமைகள், சிறை சீர்திருத்தம் என பல உரைகளை நிகழ்த்தினார். தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். இவர் 1883ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவரது கல்லறையில் கடவுள் இறந்துவிட்டரா என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டன. எம்மலின் பான்கர்ஸ்ட் […] இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைக்காக 40 ஆண்டுகளாகப் போராடி பெற்றுத் தந்த ஒரு அரசியல் பெண் போராளி எம்மலின் பான்கர்ஸ்ட் (Emmeline Pankhurst) ஆவார். பெண்களின் வாக்குரிமைக்காக உலகளவில் போராடிய பெண்களில் மிக முக்கியமானர். பெண் வாக்குரிமையைப் பெற்றுத் தந்த உலகின் முதல் பெண் எனவும் போற்றப்படுகிறார். இங்கிலாந்து நாட்டில் பெண்களின் உரிமைக்காக, வாக்குரிமை இயக்கத்தின் தலைவராக இருந்தார். போராட்டக் குணம் மிக்கப் போராளி. பலரால் அடிக்கடி விமர்சிக்கப்பட்ட போதிலும் எதற்கும் அஞ்சாமல், தொடர்ந்த தான் மேற்கொண்ட இலட்சியத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடினார். 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய 100 நபர்களில் ஒருவராக டைம் இதழ் இவரை அறிவித்துள்ளது. சமூகத்தை ஒரு புதிய வடிவத்திற்கு மாற்ற முயன்றார். அதிலிருந்து பின்வாங்க முடியாது எனக் கூறினார். பிறப்பு இவர் 1858ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள மோஸ் சைட் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ராபர்ட் கோல்டன் மற்றும் தாயார் சோபியா ஆவர். இவர்கள் அரசியல் பின்னணி உடையவர்களாக இருந்தனர். இவர்களுக்கு 10 குழந்தைகள். ஐந்து பெண் குழந்தைகளில் மூத்தவர் எம்மலின் ஆவார். இவர் தந்தை சிறு வணிகம் செய்து கொண்டே உள்ளூர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இவரது தந்தை நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டவர். இவருக்கு ஒரு தியேட்டரும் இருந்தது. ஷேக்ஸ்பியர் எழுதிய பல்வேறு நாடகங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். இவர் சமூக அக்கறை கொண்டவராக இருந்தார். தங்களது குழந்தைகளையும் சமூகத்தின் மீது அக்கறையுடன் செயல்படக் கூடியவராக வளர்த்தார். […] பள்ளியில் ஆசிரியர்கள் இவரை எமிலி என அழைத்தனர். அப்படி அழைப்பதை பெருமையாகக் கருதினார். தனது இனம் வயதிலேயே புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். இவர் தனது 9 ஆவது வயதிலேயே ஒடிஸி என்னும் காவியத்தைப் படித்தார். இது கி.மு. 900ஆம் ஆண்டில் ஹோமர் என்னும் பண்டைய கிரேக்கப் புலவரால் எழுதப்பட்ட இதிகாசமாகும். இவர் பிரெஞ்ச் புரட்சியின் வரலாற்றையும் படித்தார். இது இவரது வாழ்நாள் முழுவதும் உத்வேகத்துடன் செயல்பட உதவியதாகக் கூறினார். இவர் பல்வேறு அறிவு பூர்வமான புத்தகங்களைப் படித்த போதிலும், அவளுடைய சகோதரர்கள். அனுபவிக்கும் கல்விச் சலுகைகள் இவருக்கு பெற்றோர்கள் கொடுக்கவில்லை. இவரது பெற்றோர்கள் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை ஆதரித்தனர். பெண்களின் முன்னேற்றத்தை ஆதரித்தனர். ஆனால் ஒரு பெண் கல்வியின் முக்கிய பணி என்பது ஒரு வீட்டை திறமையாக நிர்வகிப்பது மற்றும் கணவர்கள் விரும்பும் கலையைக் கற்றுக் கொள்வது இதுதான் ஒரு பெண்ணின் கல்வித் தேவை எனக் கருதினர். தங்களின் மகன்களின் எதிர்காலத்தைப் பற்றி கவனமாக ஆலோசனை செய்தனர். ஆனால் மகள்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஊதியம் பெறும் வேலையைத் தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். பெண்களின் வாக்குரிமை மற்றும் சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை ஆதரித்த போதிலும், ஆண்களை போல அவர்களால் செயல்பட முடியாது. சீர் தூக்கிப் பார்த்து வாக்களிக்க முடியாது என அவர் தந்தை கருதினர். தான் ஒரு பையனாக பிறக்காதது ஒரு பரிதாபம் என எமிலி தனது கவலையை தந்தையிடம் கூறினார். […] அக்காலத்தில் கல்வி என்பது பெண்களுக்கு வேதியியல் மற்றும் புத்தகம் பராமரிப்பு வகுப்புகளை வழங்கியது. மேலும் பெண்களுக்கு பாரம்பரிய கலையான எம்பிராய்டரி போன்றவற்றை வழங்கியது. இவர் 18 வயதில் பள்ளி படிப்பை முடித்தார். திருமணம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டு எம்மலின் வேதனைப்பட்டார். பெண்களுக்கு அக்காலத்தில் வாக்குரிமை மறுக்கப்பட்டது. 1878ஆம் ஆண்டில் ரிச்சர்ட் பான்கர்ஸ்ட் என்பவரைச் சந்தித்தார். அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சோசலிஸ்ட்வாதி. பெண்களின் வாக்குரிமை பேச்சு சுதந்திரம் மற்றும் கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சமத்துவ போராட்டங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தார். வீட்டிற்கு வெளியே பெண்கள் அரசியல் பணியில் ஈடுபடுவதை ஆதரித்தார். இவர் எம்மலினின் அரசியல் மற்றும் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்ட குணத்தை ஆதரித்தார். இவர்களின் பரஸ்பர பாசம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. எம்மலினுக்கு 20 வயது. ஆனால் ரிச்சர்ட் பான்கர்ஸ்டுக்கு வயது 44. இருவரும் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெண்களின் வாக்குரிமைச் சங்கம் உள்பட பல அரசியல் அமைப்புகளில் செயல்பட்டனர். அக்காலத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு இருந்தது. மேலும் திருமணம் ஆகாதப் பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிற கருத்தை எதிர்த்தனர். அவர்கள் அரசியலில் ஈடுபடவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றனர். பான்கர்ஸ்ட் பல பணக்கார வணிகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடினார். கர்ப்பிணிப் பெண்கள் மண்டியிட்டு தரையைத் துடைப்பது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவை பிறக்கப் போகும் குழந்தையை பாதிக்கும் என எம்மலின் தெரிவித்து வந்தார். ஏழை பெண்களின் நலனுக்காவும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்காகவும் பாடுபட்டார். அரசியல் பான்கர்ஸ்ட் 1889ஆம் ஆண்டில் பெண்கள் உரிமைக் கழகத்தை நிறுவினர். எம்மலின் அரசியலில் ஈடுபாடு கொண்டார். சுதந்திர தொழிலாளர் கட்சியில் (ILP) சேர விண்ணப்பித்தார். பெண் என பாலியல் காரணம் காட்டி உள்ளூர் கிளையில் இவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இருப்பினும் இவர் தேசிய அளவில் கட்சிப் பணியில் சேர்ந்தார். ஏழைகளுக்கு உணவு விநியோகிப்பது, வேலையில்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என பணிபுரிந்தார். இவருக்கு 5 குழந்தைகள் பிறந்தன. இவரது கணவர் பான்கர்ஸ் 1889 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் எம்மலினுக்குப் பொறுப்பு அதிகரித்தது. கடன் சுமையும் இருந்தது. குடும்பத்தின் வருமானத்திற்காக ஒரு சிறிய கடையை திறந்தார். இவர் 1903ஆம் ஆண்டில் பெண்கள் சமூக மற்றும் அரசியல் சங்கம் (WSPU) என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் பல்வேறு இனப் பெண்களையும் உறுப்பினராகச் சேர்ந்தார். தனது மகள்களும் தீவிரமாக இதில் ஈடுபட்டனர். இது போர்குணமிக்க ஒரு அமைப்பாக மாறியது. பெண் பாலினத்தின் நிலை மிகவும் பரிதாபகரமானது. நமது உரிமையைப் பெறுவதற்காக சட்டத்தை மீறுவது நமது கடமையாகும் என அவர் உரையாற்றினார். பெண் வாக்குரிமைக்காக பல்வேறு நாடுகளுக்கும் இவர் பயணம் செய்தார். சுதந்திரம் அல்லது இறப்பு என்கிற தலைப்பில் உரையாற்றினார். கைது […] பாராளுமன்றத்தில் வாக்குரிமை மசோதா கொண்டு வந்த போது பல முறை தோல்வி அடைந்தது. இவர் 5 லட்சம் பெண்களைத் திரட்டி பேரணி நடத்தினார். 1905ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வாக்குரிமை மசோதா கொண்டு வந்த போது பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களைத் திரட்டிப் போராடினார். இருப்பினும் மசோதா நிறைவேற்றப்படவில்லை. பெண்கள் அமைப்பை ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றினார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்பட பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டது. 7 முறை கைது செய்யப்பட்டார். சிறையில் பல்வேறு கொடுகளைச் சந்தித்தார். சுகாதார மற்ற உணவு, அடி, உதை ஆகியவற்றை போன்ற கொடுமைகள் சிறைக்காவலர்கள் இழைத்தனர். சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். வலுக்கட்டாயமாக குழாய் மூலம் உணவு செலுத்தினர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். வாக்குரிமை இவரின் நீண்ட கால போராட்டத்தின் பலனாக 1918ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கியது. இவரது மகள் கிறிஸ்டெபல் 1918 ஆம் ஆண்டில் நடந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 47.8 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். ஆனால் 775 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எம்மலின் உடல் நலக் குறைவால் 1928ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று இயற்கை எய்தினார். இவர் இறந்த சில வாரங்களுக்குப் பிறகு 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை என்ற சட்டம் நிறைவேறியது. ஹேரியட் டப்மன் […] ஹேரியட் டப்மன் (Harriet Tubman) என்பவர் ஒரு சமூக சேவகி. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். அமெரிக்க நாட்டில் இருந்த அடிமை முறையை ஒழிப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர். அடிமைகளாக இருந்த பலரை துணிச்சலுடன் விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த பெண்மணி ஹேரியட் டப்மன் ஆவார். அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில், போரின்போது ராணுவத்தில் பணியாற்றிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியாக இவர் கருதப்படுகிறார். அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ரூபாய் தாளில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் பெண் ஹேரியட் டப்மன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறப்பு இவர் பிறந்த தேதி சரியாக தெரியவில்லை. இவர் 1822ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டில் மேரிலாந்தில் உள்ள டோர்செஸ்டர் கவுண்டியில் பிறந்தார். இவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமையாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டனர். இவர் ஹேரியட் கிரீன் மற்றும் பென் ரோஸ் என்பவருக்கு மகளாக பிறந்தார். இத்தம்பதியருக்கு எட்டாவதாக பிறந்த பெண் இவர் ஆவார். இவரது பெற்றோர்கள் மேரி பார்ட்டிசன் என்பவருக்கு அடிமைகளாக இருந்தனர். இவருக்கு அரமிண்டா மின்டி ராஸ் என பெயரிட்டனர். இவர் ஒரு போதும் படிக்கவோ, எழுதவோ கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தைரியசாலியாகவும் புத்திசாலியாகவும் இருந்தார். இவருக்கு ஐந்து வயது இருக்கும் போதே அண்டை வீட்டாருக்கு இவரது உரிமையாளர் விற்பனை செய்தார். அங்கு குழந்தையை கவனிக்கும் வேலை இவருக்கு வழங்கப்பட்டது. இவரே ஒரு குழந்தை. அப்படி இருக்கும்போது மற்றொரு குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை. அக்குழந்தை அழும் பொழுதெல்லாம் இவர் தண்டிக்கப்பட்டார் அடியும் உதையும் வாங்கினார். […] அதன் பிறகு ஜேம்ஸ் குக் என்பவரின் தோட்டத்திலும் வேலை செய்தார். குழந்தை என்றும் பாராமல் கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தனர். ஓயாமல் தொடர்ந்து வேலை வாங்கினார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். நீ வீட்டு வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டாய் எனக்கூறி மாடுகளை மேய்த்தல், உழவு செய்தல், விறகு சுமப்பது மற்றும் கட்டைகளை உருட்டுதல் போன்ற கடுமையான வேலைகள் இவருக்கு கொடுக்கப்பட்டன. அடி உதை போன்ற கொடுமைகளை தாங்க முடியாமல் உயிருக்கு பயந்து ஏழு வயதில் தப்பித்து ஓடினார். அவர் இரவு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தார். எங்கே செல்வது என்று தெரியாமல் ஓடினாள் ஒரு பன்றி குடிசையில் உள்ளே சென்று பன்றிகளுடன் மறைந்து கொண்டார். பன்றிகள் சாப்பிட்டு முடித்த மிச்சம் மீதி உணவுகளை சாப்பிட்டு உறங்கினார். இப்படி சில நாட்கள் அங்கே தங்கினார். இவரது தந்தை மகளை தேடிக் கண்டு பிடித்தார். வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது வடக்கே தெரிந்த நட்சத்திரத்தை காட்டினார். அந்த நட்சத்திரம் நமக்கு சுதந்திரத்தை கொடுக்கும். வடக்கு நோக்கிச் சென்றால் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஹேரியட் டப்மனுக்கு தோன்றியது. இவரது மூன்று மூத்த சகோதரிகள் அடிமையாக விற்பனை செய்யப்பட்டனர். அடுத்தது நீதான் தயாராக இருந்து கொள் என்று அவர்கள் இவரின் கையைப்பிடித்து ஆறுதல் கூறினர். இவர் அழ ஆரம்பித்தார். அவரை எப்படி சமாதானம் செய்வது என்பது தெரியாமல் போனது. இரவு முழுவதும் அழுதார். தனது அப்பா, அம்மா உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற கவலை இவருக்கு ஏற்பட்டது. ஆடு, மாடு, குதிரை, பன்றி போன்றவற்றை விற்பது போல் தன்னையும் விற்று விடுவார்கள். என்னை யார் வாங்குவார்கள் என்று எனக்கு தெரியாது. எங்கே கொண்டு சென்று அடிமையாக வைத்துக் கொள்வார்கள் என்பது தெரியாது என புலம்பினார். மூன்று பேரை விற்ற பிறகு இவர்களது எஜமானர் இவருடைய தம்பியையும் விற்க முயன்றார். அப்போது இவரது தாய் கடுமையாக எதிர்த்துப் போராடினார். அதனால் அவனை விற்பனை செய்ய முடியவில்லை. இதைக் கண்டு போராடினால் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது. இவரது தந்தைக்கு வயது அதிகம் ஆனதால் அவருக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைத்தது. இருப்பினும் சிறு, சிறு வேலைகளை தனது முதலாளிக்கு செய்து கொடுத்தார். இவரது தாயாருக்கு 45 வயது ஆகிவிட்டது. அவருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் அவரது முதலாளி அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஆகவே இவர்கள் வழக்கறிஞரை சந்தித்தனர். ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது என அவர் தெரிவித்தார். பணபலம் இல்லாத காரணத்தால் இவரால் வழக்கு தொடுக்க முடியவில்லை. ஆகவே இவரது தாயார் தொடர்ந்து அடிமை வேலைகளை செய்து வந்தார். கொடுமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தப்பித்து ஓட வேண்டும் என இவர் முடிவு செய்தார். தனது சகோதரர்கள் பென் மற்றும் ஹென்றி இருவருடன் சேர்ந்து தப்பித்து ஓடினார். ஆனால் பென்னுக்கு அப்போதுதான் திருமணமாகி குழந்தை பிறந்து இருந்தது. மனைவியை தனியாக விட்டும், குடும்பத்தை விட்டும் செல்ல அவரது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே அவரும், அவரது சகோதரரும் மீண்டும் எஜமானரின் நிலத்திற்கு திரும்பினார்கள். வேறுவழியின்றி ஹேரியட்டும் அவர்களுடன் திரும்பி வர வேண்டியதாயிற்று இருப்பினும் தான் எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டும் என்கிற லட்சியம் அவருக்கு ஏற்பட்டது. […] பண்ணையில் ஒரு அடிமையை கடுமையாக தாக்கினார்கள். இதைக் கண்ட ஹேரியட் அதைத் தடுக்க முயன்றார். அப்போது இவரது தலையில் பலத்த அடி விழுந்தது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதல் வலிப்பு ஏற்பட்டது. அதனால் வாழ்நாள் முழுவதும் தலைவலி, வலிப்பு, உடல் நல பாதிப்பு என தொடர்ந்தது. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும் முதலாளி தொடர்ந்து வேலைகளை கொடுத்துக் கொண்டே இருந்தார். விடுதலை இவர் தனது இருபதாவது வயதில் 1844ஆம் ஆண்டு ஜான் டப்மன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு சுதந்திரமான கருப்பின மனிதராவார். அதன் பிறகு தனது பெயரான அரமிண்டா என்பதை ஹேரியட் டப்மன் என மாற்றிக் கொண்டார். இவர் 1849ஆம் ஆண்டில் தப்பித்து பிலடெல்பியாவிற்குச் சென்றார். இவருடன் இவரது கணவர் வர மறுத்துவிட்டார். இவர் இரவு நேரத்தில் ரகசிய பாதையின் வழியாக மறைந்து மறைந்து சென்றார். வழியில் சில சீர்த்திருத்தவாதிகள் இவருக்கு உணவு அளித்தனர். தான் மட்டும் தப்பித்தால் போதாது. தனது குடும்பத்தினரையும் விடுதலை செய்ய வேண்டும் என விரும்பினார். இதற்காக மீண்டும் இரவு நேரத்தில் மேரிலாந்து வந்து சேர்ந்தார். தனது பெற்றோர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளை அழைத்துச் சென்றார். பிலடெல்பியா பகுதியானது அடிமைத்தன முறை இல்லாத இடமாக விளங்கியது. ஆகவே அங்கு குடியேறினார். மேலும் யாருக்கெல்லாம் விடுதலை வேண்டுமோ அவர்களை விடுவிக்க தயாராக இருந்தார். இவர் ரகசிய பாதையை நன்கு அறிந்தவராக இருந்தார். ஆகவே பதிமூன்று முறை மேரிலாந்து பகுதிக்கு வந்து 70க்கும் மேற்பட்ட அடிமைகளை விடுதலை செய்து, தன்னுடன் அழைத்துச் சென்றார். மேலும் பலரை தப்பிக்க வைக்க திட்டம் தீட்டினார். 1850ஆம் ஆண்டு அடிமைத்தளையில் இருந்து தப்பித்து ஓடுவதையும், தப்பிக்க உதவுவதும் சட்டப்படி குற்றமென அரசு அறிவித்தது. இவரால் பல முதலாளிகளுக்கு நஷ்டம். இவரை பிணமாகவோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுப்பவருக்கு 40000 டாலர் பரிசு அளிப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இவர் ஒரு போதும் பிடிபடவில்லை. இவரது ஒவ்வொரு பயணமும் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. பயணத்தின்போது ஒரு சிறிய துப்பாக்கியையும் கையில் வைத்திருந்தார். இரவு நேரத்தில் பயணம் செய்வது என்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. அடிமைகளை சுதந்திரமாக வாழ வைப்பது அல்லது சாவது என்ற இலட்சியத்தின் அடிப்படையில் மிகவும் தைரியமாக செயல்பட்டார். […] உள்நாட்டுப் போர் அமெரிக்காவில் 1861ஆம் ஆண்டில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டது. இப்போரில் ஹேரியட் டப்மன் கலந்து கொண்டார். இவர் சமையல்காரராக, செவிலியரராகவும், உளவாளியாகவும் பணிபுரிந்தார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தார். மேலும் ஆயுதமேந்தி போரில் பங்கு கொண்டார். ஆயுதமேந்தி வழிநடத்திய முதல் பெண்மணி என்கிற பெருமைக்கு உரியவர் ஆனார். இச்சமயத்தில் 700க்கும் மேற்பட்ட அடிமைகளை விடுவித்தார். தனது சொந்த உயிருக்கு பெரும் ஆபத்து இருந்த போதிலும் பல அடிமைகளை விடுவித்தற்காக இவரை மோசஸ் என்று பெருமையாக அழைத்தனர். மனிதாபிமானி போருக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கு உதவி செய்ய நிதி திரட்டினார். இவர் அர்பன் நகருக்கு குடிபெயர்ந்தார். முதியோர்களுக்கான ஒரு இல்லத்தைத் துவக்கினார். பலருக்கு பாதுகாப்பும், உணவும், வேலையும் வாங்கித் தந்தார். இவர் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் மற்றும் சூசன் பி. அந்தோணி யுடன் இணைந்தார். அதன் பிறகு பெண்களின் வாக்குரிமைக்காகவும் போராடினார் ஒரு சிறந்த பேச்சாளராகவும் மாறினார். இவர் 1874ஆம் ஆண்டில் டேவிஸ் என்ற ஒரு மகளை தத்தெடுத்தார். தனது வீட்டில் பல வயதானவர்களுக்கு உதவி செய்து வந்தார். இவர் நர்கோலெப்ஸி என்னும் கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் எந்நேரமும் தூக்கம் வரக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பல துணிச்சலான வேலைகளை செய்து வந்தார். இவர் 1913ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று நியூயார்க் நகரில் உள்ள அரபன் நகரில் இயற்கை எய்தினார். இவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆன்னி பிராங்க் உலகளவில் பல இனப் படுகொலைகள் நடந்துள்ளன. இதில் யூதர் படுகொலை என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய இனப்படுகொலை எனக் கூறப்படுகிறது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வி அடைவதற்கு யூதர்கள் தான் காரணம் என ஹிட்லர் கூறினார். அவர் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன் மூலம் ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்திற்கு 1933ஆம் ஆண்டு ஹிட்லர் வந்தார். அதன் பிறகு இவர் யூதர்களுக்கு பல்வேறு கொடுமைகளைச் செய்தார். ஜெர்மனியில் முதன்முதலாக மூனிச் நகரில் டச்சவ் (Dachau) என்னுமிடத்தில் சித்திரவதை முகாம் திறக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கைதிகளை அங்கு அனுப்பினர். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு பல சித்திரவதை முகாம்களை ஹிட்லர் ஜெர்மனியில் திறந்தார். குறிப்பாக 23 பிரதான சித்திரவதை முகாம்களும் 900 கிளை முகாம்களும் திறக்கப்பட்டன. இந்த முகாம்களில் மனிதனை மனிதன் அழிக்கும் காட்டு மிராண்டித்தனம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 9 மில்லியன் மக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். இதில் குறிப்பாக ஐரோப்பிய யூதர்கள் சுமார் 6 மில்லியன் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். யூதர்கள் மட்டுமல்லாமல் மாற்றுக் கருத்து உடையவர்கள். ரோமானிய இனக்குழுக்கள், ரஷிய போர்க்கைதிகள், ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 3 மில்லியன் மக்கள் ஈவு இரக்கமின்றி நாஜி படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். யூத இன மக்களை அழிப்பதற்கு என்றே சித்திரவதை முகாம்கள் ஜெர்மனியில் திறக்கப்பட்டது என்பது கொடுமையிலும் கொடுமையாகும். இரண்டாம் உலகப்போர் 1945ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரில் ஹிட்லர் தோல்வி அடைந்தார். ஹிட்லர் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்டார். ரஷியப் படைவீரர்கள் […]சித்திரவதை முகாமில் இருந்த அனைவரையும் விடுதலை செய்தனர். இரண்டாம் உலகப்போரின்போது ஒரு சிறுமி இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். அவர் அங்கு நடைபெற்ற கொடுமைகளை தனது டைரியில் தினமும் எழுதி வந்தார். அவர் சித்திரவதை முகாமில் மரணம் அடைந்தார். தனது மரணத்துக்குப் பிறகும் வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அவருடைய டைரி அவரது தந்தையின் கைக்கு கிடைத்தது. அதை படித்த பின்னர் அவர் நூலாக வெளியிட்டார். இந்த நூல் உலகம் முழுவதும் பிரபலமான நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மூலம் மரணத்திற்குப் பிறகு உலகப்புகழ் பெற்ற சிறுமி ஆன்னி பிராங்க் (Anne Frank) ஆவார். பிறப்பு இவர் 1929ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று ஜெர்மனி நாட்டின் பிராங்போர்ட்டில் உள்ள அம்மெய்னில் ஒரு சிறிய யூத குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓட்டோ பிராங்க் என்பவர் ஒரு சிறு வணிகர். இவரது தாயார் எடித் நன்கு படித்தவர். இவரது வீட்டில் நூலகமும் இருந்தது. இவருக்கு மார்க்கெரட் என்னும் சகோதரி இருந்தார். அவர் இவரை விட மூன்று வயது மூத்தவர். இவரின் பெயர் அன்னெலீஸ் மேரி பிராங் என்பதாகும். ஆனால் இவரை ஆன்னி பிராங்க் என்றே அழைத்து வந்தனர். இவரது தந்தை தாராளவாத கொள்கையை கடைபிடித்து வந்தார். யூத மத பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை கடைபிடிக்கவில்லை. அனைத்து மக்களிடமும் நெருக்கமாக பழகி வந்தார். எந்த பாகுபாடும் இல்லாமல் மனித நேயத்தோடு வாழ்ந்தார். பெற்றோர்கள் அறிவார்ந்தவர்களாக இருந்தனர். ஆகவே குழந்தைப் பருவத்திலேயே ஆன்னி பிராங்க் பல புத்தகங்களை படித்தார். முதல் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியில் வறுமை அதிகமாக இருந்தது. பலரின் வாழ்க்கை நடத்துவது கடினமாக இருந்தது. நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணம் யூத மக்கள் என ஹிட்லர் குற்றம் சாட்டினார். மோசமான பொருளாதார நிலைக்குக் காரணம் யூதர்களே எனக் கூறினார். […] ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு யூதர்களை வெறுத்தார். யூதர்களை பிடித்துப் படுகொலை செய்தனர். மேலும் யூத எதிர்ப்பு மற்றும் வெறுப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆகவே இனி ஜெர்மனியில் வாழ முடியாது. இங்கு வாழ்வது உயிருக்கு ஆபத்து என ஓட்டோ பிராங்க் முடிவு செய்தார். நெதர்லாந்து ஓட்டோ 1934ஆம் ஆண்டு நெதர்லாந்து சென்று அங்கு ஆம்ஸ்டர்டாமில் குடியேறினார். சில மாதங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவருடன் வந்த சேர்ந்தனர். அங்கு டச்சு நிறுவனமான ஓப்ட்கா நிறுவனத்தைத் துவங்கினார். அந்த நிறுவனம் மூலம் ஜாமிற்கு தேவையான பெக்டின் தயாரித்து விற்பனை செய்தார். ஆன்னியின் தாய்வழிப் பாட்டி ஜெர்மனியை விட்டு வெளியேறி ஜனவரி 1939இல் நெதர்லாந்து வந்து சேர்ந்தார். அவர் 1942ஆம் ஆண்டு இறக்கும் வரை பிராங் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆன்னிக்கு 10 வயது இருக்கும்போது ஜெர்மனியின் நாஜிப்படை 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று போலந்தை ஆக்கிரமிப்பு செய்தது. இதனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதன் பிறகு சிறிது காலத்தில், 1940ஆம் ஆண்டு மே 10 அன்று நாஜிக்கள் நெதர்லாந்தையும் ஆக்கிரமிப்பு செய்தனர். நெதர்லாந்து நாஜிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. யூத விரோத சட்டங்களை அமல்படுத்தியது. பூங்காக்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் செல்லவும் அனுமதி மறுத்தது. ஆன்னி யூதர்கள் நடத்தும் பாடசாலைக்கு சென்று படித்து வந்தார். பின்னர் 1941ஆம் ஆண்டு மாண்டிசோரி பள்ளியில் படித்தார். அங்கு இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே கல்வியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். இவர் அனைவரிடமும் அன்பாக பழகியதால் பல நண்பர்கள் கிடைத்தனர். யூதர்கள் மீது தீவிர தாக்குதல் நடக்கத் தொடங்கின. திரையரங்குகள் மற்றும் கடைக்குச் செல்ல முடியாத நிலை உருவானது. யூதர்கள் தங்கள் சொந்த தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. யூதர்கள் நெதர்லாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்கின்ற வதந்தி பரவியது. ஓட்டோ அமெரிக்கா சென்று விடலாம் என முடிவு செய்தார். அமெரிக்காவின் விசா அலுவலகமும் மூடப்பட்டது. நெதர்லாந்தின் எல்லையும் அடைக்கப்பட்டது. ஆகவே இவரது குடும்பம் வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தலைமறைவு ஆன்னியின் 13ஆவது பிறந்தநாள் 1942ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று கொண்டாடப்பட்டது. அப்போது அவரது தந்தை அவருக்கு ஒரு ஆட்டோகிராப் புத்தகத்தை பரிசாக அளித்தார். இது சிவப்பு வெள்ளை செக்கர்ஸ் துணியால் ஆனது. மேலும் முன்புறத்தில் ஒரு சிறிய பூட்டும் இருந்தது. இந்த நாட்குறிப்பிற்கு கிட்டி எனப் பெயரிட்டார். இவர் உடனடியாக இதில் எழுதத் தொடங்கினார். நெதர்லாந்தில் வாழக்கூடிய யூதர்களை நாடு கடத்த அரசு திட்டமிட்டது. ஆகவே ஓட்டோ தனது குடும்பத்துடன் தலைமறைவு ஆனார். இவர்கள் 1942ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று மறைவிடத்தில் சென்று பதுங்கினர். ஒரு நூலக அலமாரிக்கு பின்புறம் இவர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடம் ஓட்டோவின் நண்பர்கள் சிலருக்கு மட்டுமே தெரியும். இவரது கடையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் பல உதவிகள் கிடைத்தன. மேலும் இவர்களுடன் ஒரு பல் மருத்துவ யூதக்குடும்பமும் வந்து சேர்ந்தது. எட்டு பேர் அங்கு தங்கி இருந்தனர். போதிய அளவு உணவு கிடைக்கவில்லை. மூன்று பேருக்கு கிடைத்த உணவை 8 பேர் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் ஜன்னல்கள் கூட கருப்பு வர்ணம் பூசப்பட்டு இருந்தது. ஆன்னி தனது நண்பர்களுடன் விளையாட முடியவில்லை. அறையின் உள்ளே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை இருந்தது. சிறு கதைகள் மற்றும் கவிதைகளை எழுதி வந்தார். மேலும் பதுங்கிய இடத்தில் சந்தித்த பிரச்சனைகளையும் எழுதி வைத்தார். இதற்கு இடையே ஒரு நாள் டச்சு அரசு பேர் ஆவணங்கள் மற்றும் டைரி குறிப்புகளை பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டது. ஆன்னி தொடர்ந்து நாஜிகளால் ஏற்படக்கூடிய துன்பங்களையும், துயரங்களையும் தனது டைரியில் எழுதி வந்தார். இவர் 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 […]வரை டைரி எழுதி வந்தார். வதை முகாம் இரண்டு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தனர். பின்னர் யாரோ ஒருவரால் இவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒரு சரக்கு ரயிலில் அடைக்கப்பட்டு, வதை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் பயணம் மூன்று நாட்கள் நடந்தது. அதன் பிறகு மாட்டு வண்டியில் நெருக்கமாக அமர வைத்து வதை முகாமுக்குக் கொண்டு சென்றனர். கழிப்பிட வசதி கூட இல்லாமல் இவர்களது பயணம் முடிந்தது. வதை முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மற்றும் வேலை செய்ய முடியாதவர்கள் 350 பேரை உடனே எரிவாயு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டனர். ஆன்னி மற்றும் மார்கெரட் ஆகிய இருவரும் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு ஒரு முகாமிற்கு வேலைக்கு அனுப்பினர். இவரது தாயார் பெண் தொழிலாளர்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓட்டோ ப்ராங்க்கை ஆண்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். சித்திரவதை முகாமில் உணவு பற்றாக்குறை, சுகாதாரச் சீர்கேடு போன்ற காரணங்களால் ஆன்னி மற்றும் அவரது சகோதரியும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்கள் டைபஸ் என்னும் நோயால் 1945ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இறந்தனர். இறந்த சரியான தேதி கிடைக்கவில்லை. இவரது தாயாரும் டைபஸ் நோயால் இறந்தார். ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோல்வியைத் தழுவியது. ரஷியப் படை சித்திரவதை முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்தது. ஓட்டோ ப்ராங்க் மட்டும் நாடு திரும்பினார். நூல் இவரின் குடும்பத்திற்கு உதவி வந்த மிப் ஷீஸ் என்ற பெண்மணி ஆன்னியின் டைரியை தனது மேஜை அலமாரியில் பாதுகாத்து வைத்திருந்தார். டைரியில் தான் ஒரு பத்திரிக்கையாளர் ஆக வேண்டும் என ஆன்னி குறிப்பிட்டிருந்தார். தான் இறந்த பிறகும் உயிர் வாழ வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தார். ஓட்டோ பிராங்க் இதை ரகசியப் பதுங்கிடம் (The Secret Annex) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்தப் புத்தகம் 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. உலக அளவில் மூன்று கோடி பிரதிகள் விற்பனையானது. இந்தப் புத்தகம் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட கொடுமைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இனத்தின் பெயரால் எந்த மனிதரும் சாகக்கூடாது என்பதை ஆன்னி வலியுறுத்தி இருந்தார். தென் ஆப்பிரிக்க விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா ஆன்னியின் புத்தகத்தைப் படித்தார். சக சிறைவாசிகளும் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த புத்தகம் உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்கள்படும் துயரங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. இது மீட்சியின் அடையாளம் என அவர் குறிப்பிட்டார். நினைவிடம் ஆன்னி ரகசியமாக வாழ்ந்த இடம் 1960ஆம் ஆண்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. இது ஆன்னி பிராங்க் இல்லம் என பெயரிடப்பட்டது. இங்கு ஆன்னியின் அசல் டைரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது இனப்படுகொலையால் இறந்த குழந்தையின் சின்னமாக விளங்குகிறது. பேகம் ரோக்கியா பேகம் ரோக்கியா (Begam Rokeya) என்பவர் வங்காளத்தின் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் தெற்காசியாவில் பெண் விடுதலையின் முன்னோடி என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் பெங்காலி இஸ்லாமிய பெண்ணியவாதி எனவும் இவர் போற்றப்படுகிறார். இவர் ஒரு வங்காளப் பெண் எழுத்தாளர், இஸ்லாமியப் பெண்ணியவாதி, சமூக ஆர்வலர், பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். கல்வியாளர் மற்றும் பெண்களின் கல்விக்காக பாடுபட்டவர் ஆவார். […] 2004ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய வாக்கெடுப்பில் பேகம் ரோக்கியா சிறந்த வங்காளப் பிரஜை பட்டியலில் ஆறாம் இடத்தில் தேர்வு ஆனார். அதுமட்டுமல்லாமல் தரவரிசையில் முதல் வங்காளப் பெண்மணியாக பேகம் ரோக்கியா தேர்வு செய்யப்பட்டார். ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஒவ்வொருவரும் பகுத்தறிவு மனிதர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பெண்களுக்கு கல்வி இல்லாததே அவர்களின் தாழ்ந்த பொருளாதார நிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டார். பெண்களின் விடுதலைக்கு கல்வியே மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மற்றும் பெண்ணிய எழுத்தின் முன்னோடியாகவும் இவர் விளங்கினார். கொல்கத்தாவில் முதன் முதலில் இஸ்லாமிய பெண்களுக்கானப் பள்ளியை உருவாக்கியவர் ரோக்கியா ஆவார். இந்திய பிராந்தியத்திற்கு அப்பாலும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தார். அக்காலத்தில் ஒரு பெண்ணியப் போராளியாக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பிறப்பு இவர் தற்போதைய வங்காளதேசத்தில் ரங்பூர் மாநிலம், மிதபுகூர் மாவட்டத்தில் உள்ள பைராபந்த் என்னும் கிராமத்தில் 1880ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் ரோக்கியா கதுன் ஆகும். பேகம் என்பது மரியாதைக்குரிய ஒரு பெண்பால் சொல்லாகும். இவரது தந்தை நன்கு படித்தவர். இவர் ஒரு வசதி படைத்த ஜமீன்தார் ஆவார். இவரது முன்னோர்கள் முகலாய ஆட்சியின் போது ராணுவம் மற்றும் நீதித் துறையில் பணியாற்றினர். […] இவரது தந்தை ஜஹருதீன் முகம்மது அபு அலி ஹைதர் சபேர் ஆவார். இவர் பல மொழிகளைக் கற்ற ஒரு அறிவுஜீவி. இவர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். ரகத்துன்னிசா என்னும் தாய்க்கு ரோக்கியா மகளாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் இருந்தனர். ஒரு சகோதரர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். இவரது தந்தை இஸ்லாமிய சட்டத்தின் விதிகளைக் கடுமையாக பின்பற்றினார். அவர் குடும்பத்தில் உள்ள பெண்கள் பர்தா (முக்காடு) அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அக்காலத்தில் அரபு மொழியும் பாரசீக மொழியும் கற்றுக் கொள்வது வழக்கம். ரோக்கியாவும் அவரது சகோதரி கரிமுன்னிசாவும் பெங்காலி மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை அவரது தந்தை படிக்க வைக்கவில்லை. அந்த வாய்ப்பு அவரது சகோதரர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இவரது மூத்த சகோதரர் இப்ராஹிம் குடும்பத்தில் பெரும் செல்வாக்கு பெற்றவர். அவர் தங்கை இருவருக்கும் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளை கற்றுக் கொடுத்தார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இரவில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளைக் கற்றுக் கொடுத்தார். ஆங்கிலம் கற்றுக் கொண்ட இருவரும் பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக திகழ்ந்தனர். திருமணம் இவர் தனது 18ஆவது வயதில் 1888ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் கான் பகதூர் செகாவத் ஆவார். இவரது கணவருக்கு 38 வயது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி இறந்ததால் ரோக்கியாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் இங்கிலாந்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இங்கிலாந்து விவசாயச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். இவர் பீகாரில் உள்ள பாகல்பூர் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பெண் கல்வியை ஆதரித்தார். முற்போக்கு எண்ணமும், பரந்த குணமும் கொண்டவராக இருந்தார். ரோக்கியாவை ஆங்கிலமும், வங்காளமும் கற்றுக் கொள்ள உதவி செய்தார். ரோக்கியா இரண்டு மொழிகளையும் கற்றுக் கொண்டு தேர்ச்சி அடைந்தார். கணவர் கொடுத்த உற்சாகத்தின் அடிப்படையில் இவர் சிறுகதைகளையும், நாடகங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். இவை பெரும்பாலும், முக்கியமாக பெண்களின் அடக்குமுறை சார்ந்தே எழுதப்பட்டன. பெண் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தி எழுதினார். பெண்களின் அவல நிலையை மாற்ற வேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதினார். இவர் 1902ஆம் ஆண்டில் பிபாசா அதாவது தாகம் என்ற பெயரில் வங்காளக் கட்டுரை ஒன்றை எழுதினார். இதன் மூலம் இவரது இலக்கியப் பணி தொடங்கியது. அவர் மத்திச்சூர் என்னும் கதையை 1905ஆம் ஆண்டில் எழுதினார். பிறகு சுல்தானாவின் கனவு என்ற புத்தகத்தையும் 1908ஆம் ஆண்டில் எழுதினார். சுல்தானாவின் கனவு என்கின்ற கதை ஒரு நையாண்டிக் கதையாக அமைந்தது. இக்கதையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பாத்திரங்களைத் தலைகீழாக எழுதினார். அதில் பெண் ஆதிக்கம் செலுத்தும் பாலினமும், ஆண்கள் கீழ் படிந்தவர்களாகவும் காட்டிருந்தனர். இக்கதை பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் அறிவியல் புனைவு, சடங்குகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் என பலவற்றை எழுதினார். இதனால் இவர் புகழ்பெற்ற ஒரு பெங்காலி எழுத்தாளராக மாறினார். பள்ளி இவரது கணவர் இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் துவக்க வேண்டும் என கூறிவந்தார். அதற்காக பணத்தை சேமித்து வைக்கும்படி மனைவியிடம் கூறிவந்தார். இதற்கிடையே அவரது கணவர் 1909ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அதன் பிறகு ஐந்து மாதம் கழித்து உருது மொழி பாரம்பரியமாகப் பேசும் பகுதியான பாகல்பூரில் ஒரு பள்ளியை துவங்கினார். அதற்குஷெராவத் நினைவுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிட்டார். இவரது கணவரின் சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு காரணமாக ரோக்கியா கொல்கத்தாவிற்கு சென்றார். அங்கு 1911ஆம் ஆண்டு இஸ்லாமிய பெண்களுக்கான பள்ளியை துவக்கினார். இது இஸ்லாமிய பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளியாகும். முதன் முதலாக 5 மாணவர்கள் சேர்ந்தனர். இவர் வீடு வீடாகச் சென்று முஸ்லீம் குடும்பங்களைச் சந்தித்து தங்கள் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டிக்கொண்டார். பழமைவாதிகளிடம் இருந்து பல எதிர்ப்புகள் வந்தன. மேலும் எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன. பல்வேறு சமூகத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெண்களுக்குக் கல்வி தான் விடுதலையை பெற்றுத் தரும் என்ற நோக்குடனே இஸ்லாமியப் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறக்கும் வரை இந்தப் பள்ளியை நடத்தி வந்தார். இஸ்லாமியப் பெண்களுக்காக நடத்தப்படும் ஒரு புகழ் பெற்ற பள்ளியாக இது மாறியது. கொல்கத்தாவில் ஒரு சேரி இலக்கிய நிகழ்ச்சியை நடத்தினார். சேரிகளில் உள்ள பெண்களை எழுத, படிக்க வைக்கவும், அவர்களது தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை கற்பிப்பதற்காக பல பணிக்குழுக்கள் உருவாக்கினார். இதன் மூலம் சேரியில் வாழக்கூடிய பெண்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தினார். சங்கம் இவர் 1916ஆம் ஆண்டில் முஸ்லிம் பெண்கள் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காகப் போராடும் ஒரு முன்னணி அமைப்பாக இது மாறியது. அதன் உறுப்பினர்கள் பெண்களின் சட்டம் மற்றும் அரசியல் உரிமைக்காக வாதிட்டனர். பள்ளியில் படிக்க வரும் பெண்களுக்கு நிதி உதவி செய்தனர். அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர். விதவைகளுக்கு சட்டம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இது வங்காளத்தில் பெண்ணிய இயக்கம் தோன்றியதற்கு முதல் அடித்தளமாக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது அவர்களது பிற்போக்கு மனநிலையும், பழமைவாதமும்தான் காரணம் எனக் கூறினார். இதற்குப் பல சீர்திருத்தங்கள் அவசியம் தேவை என எடுத்துரைத்தார். குர்ஆனில் பொதிந்துள்ள முற்போக்குச் சிந்தனைகளை எடுத்துக் காட்டினார். நபிகள் நாயகத்தின் உண்மையான போதனைகளில் உள்ள முற்போக்குக் கருத்துக்களை எல்லோரும் அறியும் வண்ணம் முகமதிய பெண்கள் சங்கத்தின் மூலம் பல கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தி வந்தார். […] பெண்கள் தங்கள் சொந்த உரிமைகள் மற்றும் பொறுப்புகள் அறியாதவர்களாக இருந்தனர். பெண்கள் தங்களது கனவுகளைத் தொடர விடாமல் தடுக்கக்கூடிய சமூக அமைப்பு நிலவி வந்தது. இவர் அனைத்து தடைகளையும் நீக்கப் போராடினார். சவால்களுக்கு எதிராக குரல் எழுப்பிய வங்காள பெண்ணாக இவர் மாறினார். சமூகத்தில் நிலவிய ஆணாதிக்க மனநிலையை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். பெண்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமே சிறந்த நியாயமான சமூகத்தை உருவாக்க முடியும் என கூறினார். காலனித்துவ வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கருத்து வருவது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாலின சமத்துவம் பற்றி தனது சமூகத்தில் பேசிய முதல் பெண் இவராகத்தான் இருக்க முடியும். நாங்கள் சமூகத்தில் ஒரு பாதியாக இருக்கிறோம். நாங்கள் பின்தங்கி இருந்தால் சமூகம் எப்படி முன்னேறும் என்றார். பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கொல்கத்தாவில் வங்காளப் பெண்களுக்கான கல்வி என்னும் மாநாடு 1926ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கினார். இது மகளிருக்கான கல்வி உரிமையைப் பெற ஒன்று இணைந்து போராட பேருதவியாக இருந்தது. இவர் இறக்கும் வரை பெண்களின் உரிமைக்காகப் போராடினார். புகழ் இவர் தொலைநோக்குப் பார்வையும், சகிப்புத்தன்மையும், பரந்த மனப்பான்மையும் கொண்டவராக இருந்தார். தனது எழுத்து மூலமும், பேச்சு மூலமும் பெண் கல்விக்காகவும், உரிமைக்காகவும் கடைசி வரை பாடுபட்டார். இவர் 1932ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று இயற்கை எய்தினார். இவரின் பிறந்த தினமும், இறந்த தினமும் ஒரே நாளில் அமைந்தது. இன்று வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 அன்று ரோக்கியா தினமாக கொண்டாடப்படுகிறது. அலெக்சாண்டிரா கொலந்தாய் […] ரஷ்யாவில் புரட்சியில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர். இவர் ஒரு ரஷ்ய கம்யூனிஸ்ட்ப் பெண் புரட்சியாளர் ஆவார். ரஷ்யாவில் அமைக்கப்பட்ட சோவியத் சோசலிச குடியரசு ஆட்சியில் பதவி வகித்த முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் சோவியத் தூதரக அதிகாரியாக வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற அமைச்சராகப் பணிபுரிந்தார். இதன் மூலம் ஒரு நாட்டில் பிறந்து மற்ற நாடுகளில் அமைச்சராக பதவி வகித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்கு உரியவர் ஆனார். இவர் உலகை மாற்றிய பெண்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர்தான் அலெக்சாண்டிரா கொலந்தாய் ஆவார். பிறப்பு இவர் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னும் நகரில் 1872ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று பிறந்தார். இவரது தந்தை மிகைல் அலெக்ஸீவிச் டோமண்டோவிச். அவர் ஒரு உக்ரேனிய குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் ரஷிய துருக்கியப் போரில் குதிரைப்படை அதிகாரியாக பணியாற்றினார். அவர் போரில் பங்கேற்ற பிறகு பல்கேரிய நகரமான டார்னோவோவின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 1879ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார். இவரது தாயாரின் பெயர் அலெக்ஸாண்ட்ரோவ்னா மசலினா என்பதாகும். அவரை மசலினா என்று அழைத்து வந்தனர். இவரது தாயார் பின்லாந்தைச் சேர்ந்த ஒரு பெரும் நிலச்சுவான்தாரின் மகளாவார். அலெக்சாண்டிராவை அவரது வீட்டில் உள்ளவர்கள் ஷூரா என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தனர். இவர் தந்தையுடன் மிக நெருக்கமாகப் பழகினார். அவருடைய வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். இவர் பொம்மைகளைத் தானே தயாரிப்பது. அதை ஒழுங்குபடுத்துவது, உள்ளாடைகளை சரியாக உரிய இடத்தில் வைப்பது, சரியாகத் துவைப்பது போன்ற பணிகளைச் சரியாக செய்து வந்தார். மேலும் பாடங்களை உரிய நேரத்தில் படித்தார். இவரது வீட்டில் வேலை புரியும் பணியாளர்களுடன் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார். சிறு வயதிலேயே நல்ல பண்புகளைக் கொண்டவராக இருந்தார். […] இவர் ஒரு நல்ல மாணவியாக வளர்ந்தார் : தனது தந்தையுடன் வரலாற்றை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார். இவர் பல மொழிகளை கற்றுத் தேர்ச்சி பெற்றார். தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் இருந்து பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டார். தனது ஆயாவிடம் இருந்து ஆங்கிலத்தையும், தாத்தாவிடமிருந்து பின்லாந்து மொழியையும் நன்கு கற்றுக்கொண்டார். தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உயர்கல்வி பயில விருப்பம் தெரிவித்தார். பெண்களுக்கு உயர் கல்விக்கான உண்மையான தேவை எதுவும் இல்லை என இவரது தாயார் கூறினார். உயர்கல்வி படிப்பதே தேவையற்ற, விரும்பத்தகாதச் செயலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிடும் என அவர் கூறினார். ஆகவே இவரது பெற்றோர்கள் இவரை மேற்கொண்டு படிக்க அனுமதி மறுத்தனர். திருமணம் இவரது மூத்த சகோதரிக்கு 19 வயது இருக்கும் போது சமூகத்தில் மிகவும் வசதி படைத்த 70 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது மரபு ரீதியாக, பணத்துக்காக செய்து வைக்கப்பட்ட திருமணம் ஆகும். இந்த திருமணத்தை இவர் முழுமையாக வெறுத்தார். தான் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதியாக முடிவு எடுத்தார். இவர் விளாடிமிர் கொலந்தாய் என்பவரை காதலித்தார். அவர் வசதியறற்வர் மற்றும் கையில் பணம் இல்லாதவர். ஆகவே இவரது தாயார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இவரை மேற்கத்திய ஐரோப்பிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் அனுப்பி வைத்தனர். அப்படி செய்வதன் மூலம் இவரது காதல் தடைபடும் என பெற்றோர்கள் நம்பினர். இவர் காதல் தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருவரை ஒருவர் உறுதியாக நம்பினார். இவர்களது திருமணம் 1993-ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு மிகைல் என்ற மகன் 1894ஆம் ஆண்டு பிறந்தான். இவர் மார்க்சிய அரசியல் இலக்கியங்களை படிக்கத் தொடங்கினார். புனைக் கதைகள் எழுதிவதிலும் ஈடுபட்டார். இவர் தீவிர அறிவுஜீவிகள் பலரை சந்தித்தார். தொழிலாளர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு கிடைக்க ஞாயிற்றுக்கிழமை மட்டும் வகுப்புகள் நடந்தன. நூலகத்தில் நடக்கும் இந்த வகுப்பிற்கு இவர் சில மணி நேரம் உதவினார். சோசலிச கருத்துக்களைப் பாடங்களாக வைத்து தொழிலாளர்களுக்கு வகுப்புகள் நடந்தன. எலினா ஸ்டாசோவா என்பவரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சந்தித்தார். அவர் வளர்ந்து வரும் மார்க்சிஸ்ட் இயக்கத்தின் ஆர்வலர் ஆவார். இவர் பல ரகசிய கடிதங்களை தங்களின் தோழர்களுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்தார். இதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொண்டு சேர்ப்பதற்கு அலெக்சாண்டிராவை ஒரு கூரியராகப் பயன்படுத்தினார். கடவுச் சொல்லை சரியாக உச்சரிப்பதன் மூலம் இந்தக் கடிதங்கள் உரிய நபர்களுக்குப் பரிமாறப்பட்டன. உயர் கல்வி இவர் தனது கணவரை மிகவும் நேசித்தார். அதே சமயத்தில் பெண் என்பவள் குடும்பத்திற்குத் தியாகம் செய்ய வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு அக்காலத்தில் நிலவி வந்தது. தான் சுயமாக செயல்பட முடியவில்லை என்பதை அவரால் நன்கு உணர முடிந்தது. கணவரை அண்டி வாழ்ந்தால் சுயம் என்ற அம்சமே இல்லாமல் போய்விடும். ஆகவே அவர் தனது கணவரை விட்டுப் பிரிந்தார். தனது மகனை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சூரிச் நகருக்குச் சென்றார். சூரிச் பல்கலைக்கழகத்தில் ஹூன்ரிச் ஹெர்கனர் என்ற பேராசிரியரிடம் அரசியல் பொருளாதாரம் கற்றார். அங்கு பல பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர் படித்தார். பிறகு அவர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு சிட்னி மற்றும் பீட்ரைஸ் வெப் உட்பட பல பிரிட்டிஷ் சோசலிச இயக்க உறுப்பினர்களை சந்தித்தார். ஒரு நெசவு தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு 12000 பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். 12 மணி முதல் 18 மணி நேரம் வரை தினமும் பணிபுரிந்தனர். எந்த அடிப்படை வசதியும் தொழிற்சாலையில் கிடையாது. சிறைக் கைதி போல் அங்கேயே தூங்கி தங்கள் காலத்தைக் கழித்தனர். தொழிற்சாலையைச் சுற்றி பார்க்கும் போது ஒரு இளம் பெண்ணின் குழந்தை இறந்து போனது தெரிய வந்தது. ஆனால் அங்கு எதுவும் நடக்காதது போல் எல்லோரும் நடந்து கொண்டனர். […] அரசியல் இவர் மார்க்சிய் இயக்கத்தில் சேர்ந்து தொழிலாளிகளின் நலனுக்காக பாடுபட வேண்டும் என முடிவு செய்தார். 1899ஆம் ஆண்டு ரஷியா திரும்பினார். இவர் லெனினைச் சந்தித்தார். அதன் பிறகு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். இக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்தார். இவர் பெண் பாட்டாளிகளைத் திரட்டும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அதில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். என்பதை லெனின் வலியுறுத்தினார். பெண் பாட்டாளிகளை எப்படி திரட்டுவது என்பது குறித்து சரியான மார்க்சிய திட்டம் கையில் இல்லை. ஆனாலும் குரூப்ஷ்கயா எழுதி வெளியிட்ட பெண் பாட்டாளிகள் என்ற புத்தகம் மட்டுமே இருந்ததது. இது 1900ஆம் ஆண்டில் எழுதப்பட்ட 24 பக்கம் கொண்ட சிறு புத்தகமாகும். இதுதான் பெண் பாட்டாளிகள் குறித்து இருந்த ஒரே ஆவணம் ஆகும். புரட்சி கட்சியின் புரட்சிகரமான கருத்துக்களை தொழிலாளர்கள் மத்தியில் பரப்பினார். புரட்சி என்ற வார்த்தையை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். 1905ஆம் ஆண்டு குளிர்கால அரண்மனைக்கு முன்னால் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மக்களின் புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சியில் இவரும் கலந்து கொண்டார். மிகப் பெரிய ரத்தக்களறி ஏற்பட்டது. ஆனால் இந்தப் புரட்சி தோல்வியில் முடிந்தது. இந்த புரட்சி பல படிப்பினைகளைக் கற்றுத் தந்தது. புரட்சி தோல்வி அடைந்ததற்கான காரணத்தைத் தேடினர். இந்த புகழ்பெற்ற முதல் ரஷ்யப் புரட்சியில் இவர் பங்கு கொண்டதன் மூலம் பெண்களின் பிரச்சினையை எப்படி கையாள்வது என்ற படிப்பினையைக் கற்றுக்கொண்டார். அமைச்சர் இடதுசாரியாக இருந்தபோதிலும் மென்ஷிவிக் கட்சியில் சேர்ந்தார். 1908ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். பின்லாந்தில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக போராடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் மக்களை எழுச்சியுடன் பங்கு பெறும்படி அழைப்பு விடுத்தார். அதன் பிறகு இவர் மேற்கு ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு கார்ல் காட்ஸ்கி, கிளாரா ஜெட்கின், ரோசா லம்சம்பர்க் மற்றும் கார்ல் லிப்க்னெடக்ட் ஆகியோரை 1910ஆம் ஆண்டில் சந்தித்து பழகினார். இவர் 1914ஆம் ஆண்டு ஜெர்மனி விட்டு வெளியேறினார். 1915ஆம் ஆண்டு மென்ஷிவிக் கட்சியிடம் இருந்த உறவை முறித்துக் கொண்டார். அதிகாரப்பூர்வமாக லெனின் தலைமையில் இயங்கிய போல்ஸ்விக் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு தேச பக்தியுடன் லெனின் தலைமையில் இயங்கிய போல்ஸ்விக் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு தேச பக்தியுடன் போராடினார். இவர் ரஷ்யா முழுவதும் பயணம் செய்தார். ரஷ்யாவில் ஒரு பேச்சாளராகவும், துண்டுப்பிரசுர எழுத்தாளராகவும், போல்ஷிவிக் பெண்கள் பத்திரிக்கையான ரபோடனிட்சாவிலும் பணிபுரிந்தார். ரஷியாவில் கிளர்ச்சியாளராகச் செயல்பட்டார். அவர் பல போல்ஷிவிக் கட்சித் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். 1917ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுதலை செய்யப்பட்டார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தார். 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தலைமையில் சோசலிச ஆட்சி அமைந்தது. முதல் சோவியத் அரசாங்கத்தில் சமூக நலனுக்கான மக்கள் ஆணையராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1919ஆம் ஆண்டு பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மகளிர் துறையை நிறுவினார். இதனால் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். பதவிகள் இவருக்கு வெளிநாடுகளில் ராஜதந்திர பணி வழங்கப்பட்டது. நார்வேயில் சோவியத் வணிகப்பணிக்கு இணைப்பாளராக அனுப்பப்பட்டார். நவீன காலத்தில் இராஜதந்திரிகள் பணியாற்றும் முதல் பெண்களில் ஒருவரானார். பின்னர் மெக்சிகோ, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும் அமைச்சர் பதவி வகித்தார். 1943ஆம் ஆண்டில் தூதராகப் பதவி உயர்வு பெற்றார். இறப்பு இவர் பெண் விடுதலை மற்றும் மார்க்சிய லட்சியங்கள் ஆகிய இரண்டிற்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். கம்யூனிசத்தின் கீழ் ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பத்திற்காக அல்ல. சமூகத்திற்காக வேலை செய்வார்கள் மற்றும் ஆதரவை கொடுப்பார்கள். இதேபோல் அவர்களின் குழந்தைகள் சமூகத்திற்காக உழைப்பார்கள். கம்யூனிச சமூகம் குழந்தைகளின் கல்வியில் ஈடுபடும். மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளை கம்யூனிசம் நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். இவர் 1952ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று மாஸ்கோவில் இயற்கை எய்தினார். எலிசபெத் பிரை சிறையில் இருக்கும் ஒவ்வொரு கைதியும் மனிதர்கள்தான். அவர்களை அடிமையாக நடத்தக்கூடாது என 200 ஆண்டுகளுக்கு முன்பே எலிசபெத் பிரை (Elizabeth Fry) என்பவர் தெரிவித்தார். இவர் ஒரு சிறை சீர்திருத்தவாதி, சமூகவாதி, சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். சிறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பலாத்காரம் மற்றும் பாலியல் சுரண்டலிருந்து பெண் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். தண்டனை கொடுப்பதால் மட்டும் குற்றவாளிகளைத் திருத்த முடியாது. அன்பும், கருணையும் காட்டுவதன் மூலம் தான் அவர்களின் உள்ளத்தை மாற்ற முடியும் என்பதையும் தெரிவித்தார். சிறையில் இருக்கும் பெண்களுக்காகவும், பெண் கைதிகளின் குழந்தைகளுக்காகவும் பள்ளிக்கூடத்தை துவங்கினார் எலிசபெத் பிரை. பிரிட்டிஷ் சிறைச்சாலையின் அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்த சாதனைக்காக மிகவும் பிரபலமடைந்தார். ஒரு பெண் இந்த வகையான வேலைகளை மேற்கொள்வது முற்றிலும் புதியது. ஆகவே சிறைகளில் இருக்கும் கைதிகள் இவரை சிறைகளின் தேவதை என அழைத்தனர். மேலும் சிறைச்சாலையில் சீர்திருத்தங்களை கொண்டு […]வந்த உலகின் முதல் பெண்மணி என்றும் இவரை போற்றுகின்றனர். பிறப்பு இவர் இங்கிலாந்து நாட்டில் நார்விச் நகரில் உள்ள மாக்டலன் தெருவில் 1780ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மிகவும் வசதியானவர்கள். இவர்கள் ஒரு குவாக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குவாக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமத்துவம் மற்றும் அமைதி ஆகிய லட்சியங்களைக் கொண்டிருந்தனர். அடிமை வர்த்தகத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தார்கள். இவரது பெயர் எலிசபெத் கர்னி ஆகும். இவரை பெட்ஸி கர்னி என அழைத்தனர். இவரது குழந்தைப் பருவ குடும்ப வீடு ஏர்ல்ஹாம் ஹால் ஆகும். இது இப்போது கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இவரது தந்தை ஜான் கர்னி. இவர் வங்கியில் பங்குதாரராக இருந்தார். இவரது தாயார் கேத்தரின். இவரது தாயார் பார்க்லேஸ் வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான பார்க்கலே குடும்பத்தைச் சேர்ந்தவர். எலிசபெத்திற்கு 12 வயது இருக்கும் போது இவரது தாயார் இறந்துவிட்டார். இவர் குடும்பத்தின் மூத்த பெண்களில் ஒருவர். ஆகவே தனது சகோதரர் ஜோசப் ஜான் கர்னி மற்றும் இளைய சகோதரிகளையும் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார். இளம் பருவத்திலேயே சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கு ஏற்பட்டது. ஆகவே இவர் ஒரு பொறுப்புள்ள பெண்மணியாக வளர்ந்தார். அவர்களை வளர்க்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். […] இவர் நன்றாக படித்தார். இவரது தந்தை சேவை மனப்பான்மை கொண்டவர். பல்வேறு பொதுச் சேவைகளில் ஈடுபட்டார். ஆகவே இவருக்கும் பொதுச் சேவை செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் ஏற்பட்டது. ஏழை எளிய மக்களுக்காக ஒரு பள்ளியை தனது 17ஆவது வயதில், தனது சொந்த வீட்டில் ஆரம்பித்தார். இவர் அப்பள்ளியை இலவசமாக நடத்தி வந்தார். திருமணம் இவர் தனது 20ஆவது வயதில் அதாவது 1800ஆம் ஆண்டு ஜோசப் பிரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் லண்டனில் ஒரு வங்கி அதிபராக இருந்தார். அதனால் லண்டனில் குடியேறினார். அங்கும் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்தார். நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் உதவி செய்தார். பழைய துணிகளைச் சேகரித்து ஏழை குழந்தைகளுக்கு வழங்கினார். ஏழை குழந்தைகளுக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்தார். இவருக்கு 11 குழந்தைகள் பிறந்தனர். இதில் 5 மகன்கள் மற்றும் 6 மகள்கள் ஆவர். மிகப்பெரிய குடும்பப் பொறுப்பு இவருக்கு இருந்தது. இருப்பினும் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்து வந்தார். இது மற்றவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிறைச்சாலை இவர்களது குடும்ப நண்பரான ஸ்டீபன் கிரெல்லட் மூலம் 1813ஆம் ஆண்டு லண்டனில் உள்ள நியூகேட் சிறைச்சாலைக்குச் சென்றார். சிறைச்சாலையில் கண்ட காட்சிகள் இவரது மனதை மிகவும் புண்படுத்தியது. நியூகேட் சிறைச்சாலை பெண்கள் மற்றும் குழந்தைகளால் நிரம்பி வழிந்தது. அங்கு இருக்கும் கைதிகளில் பலரை இதுவரை விசாரணை கூட செய்யவில்லை என்பதைக் கண்டார். இங்கு 300க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் ஒரே சிறிய இடத்தில் கூட்டமாக இருப்பதை கண்டு திகில் அடைந்தார். பலர் படுக்கவே இடமில்லாமல் தவித்தனர். தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நோய்வாய்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சூடான ஆடைகள் கிடையாது. இவர் அவருடன் தங்கி அந்த துன்பத்தை அனுபவித்தார். சிறைச்சாலையில் உள்ள எல்லாவற்றிற்கும் கைதிகள் பணம் செலுத்த வேண்டி இருந்தது. மேலும் உணவு, பானம் மற்றும் நிலக்கரியை நெருப்புக்காக சிறைக்காவலர்களிடம் விலை கொடுத்து வாங்கினார்கள். உணவை தாங்களே சமைத்துக் கொண்டனர். துணிகளையும் தாங்களே துவைத்துக்கொண்டனர். அங்கு போதிய கழிப்பறைகள் இல்லை. மூலையில் ஒரு வாளியில் கொஞ்சம் குடிநீர் மட்டும் இருந்தது. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு சூடான துணிகளையும். படுப்பதற்கு வைக்கோலையும் சேகரித்துக் கொண்டு போய் கொடுத்தார். சிறைச்சாலையில் ஏழை மற்றும் பணக்காரர்கள் ஆகிய இருவருக்கும் வழங்கப்படும் தண்டனைகளில் பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டார். கம்பளி மற்றும் மரங்களை சேதப்படுத்தியதாக குழந்தைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முயலை திருடிய அல்லது வேட்டையாடிய ஒரு பணக்காரச் சிறுவனுக்கு ஒரு சிறிய தொகை அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவன் விடுவிக்கப்பட்டான். ஆனால் ஒரு ஏழைக் குழந்தை முயலை திருடி இருந்தால் அக்குழந்தையை சிறையில் அடைப்பது, ஆஸ்திரேலியாவுக்கு சிறைக் கப்பலில் நாடு கடத்தவும் செய்தனர். சிறையில் கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகளை நேரில் கண்டார். இவர் தனது அனுபவங்களை தொகுத்து ஸ்காட்லாந்திலும், வட இங்கிலாந்திலும் உள்ள சிறைச் சாலைகளைப் பற்றிய குறிப்பு என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். பள்ளி கைதிகள் எலிசபெத்தின் அன்பால் ஈர்க்கப்பட்டனர். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும்படி கேட்டுக் கொண்டனர். 1817ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குள் குழந்தைகளுக்கான ஒரு சீர்த்திருத்த பள்ளியை தன்னுடைய நிதியின் மூலம் தொடங்கினார். பிறகு பெண் கைதிகளுக்காக சிறையில் ஒரு பள்ளியைத் துவக்கினார். அங்கு வழக்கமான கல்வியைக் கற்றுக் கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கு தேவையான தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்தார். பெண் கைதிகள் தண்டனை முடிந்து விடுதலையான பிறகு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள தொழில் மற்றும் வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்திட பல முயற்சிகள் எடுத்தார். சங்கம் […] இவர் நியூகேட் சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கான சீர்திருத்த சங்கம் ஒன்றை 1817ஆம் ஆண்டில் தொடங்கினார். இதுவே இங்கிலாந்தில் தோன்றிய முதல் தேசிய மகளிர் சங்கம் ஆகும். இது பெண் கைதிகள் சீர்திருத்த முன்னேற்றச் சங்கம் என பெயரிடப்பட்டது. இவர் சிறைச்சாலையில் நடக்கும் அநீதிகள் பற்றி பிரச்சாரம் செய்தார். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களை சிறைக்கு வரவழைத்து, சிறைக் கைதிகளின் மோசமான வாழ்க்கை நிலையை பார்க்கச் செய்தார். இவர் தனிமைச் சிறையில் கைதிகளை அடைத்து வைப்பதை கடுமையாக எதிர்த்தார். மேலும் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் பற்றி வாதிட்டார். தொடர்ந்து கைதிகளின் முன்னேற்றத்திற்காக பல சீர்த்திருத்தக் கருத்துக்களையும் கூறினார். இவர் சிறைச்சாலைகளைப் பார்வையிட ஒரு குழுவையும் அமைத்தார். அக்குழுவின் மூலம் பெண்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ வசதியும் செய்து கொடுத்தார். கைதிகளின் கால்களில் விலங்கு போட்ம் கொடிய பழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் எனச் சங்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்தார். சிறையில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும். என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரைகளை எழுதி அனுப்பினார். பாராளுமன்றத்தில் சிறைக்கைதிகளின் அவல நிலை பற்றி பேசும்படி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். சீர்திருத்தங்கள் எலிசபெத் 3 முக்கியமான சீர்த்திருத்தங்களை முன்வைத்தார். ஆண் மற்றும் பெண் கைதிகளைப் பாலின அடிப்படையில் பிரிக்க வேண்டும். இவர்கள் தனித்தனியாக தங்க வைக்கப்பட வேண்டும். காவலர்கள் கைதிகளின் பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதுவே பின்னர் நிலையான சர்வதேச நடைமுறையாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கைதிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை செய்து கொடுக்க வேண்டும். சிறையிலிருந்து விடுதலையான கைதிகளுக்கு வேலைக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதுதவிர பெண் கைதிகளுக்கு மதம் மற்றும் மதச்சார்பற்ற போதனைகளுக்கு போதுமான ஏற்பாடு செய்ய வேண்டும். பயனுள்ள வேலை வாய்ப்புப் பயிற்சிகளை சிறைச்சாலையிலேயே வழங்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை இவர் வலியுறுத்தி வந்தார். இவர் இங்கிலாந்து முழுவதும் பல சிறைச்சாலைகளுக்கு பயணம் செய்தார். விக்டோரியா மகாராணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை செய்தார். இதன் அடிப்படையில் 1823ஆம் ஆண்டு சிறை சீர்திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் ஒவ்வொரு குற்றவாளி கப்பலையும் பார்வையிட்டார். தண்டனை கப்பலில் பல சீர்திருத்தங்களை செய்தார். மருத்துவ சேவையை மேம்படுத்த பாடுபட்டார். மேலும் ஒரு நர்சிங் பள்ளியையும் துவக்கினார். இவர் கைதிகள் நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தார். இதன் அடிப்படையில் பெண் கைதிகளை நாடு கடத்தக் கூடிய கொடிய தண்டனையும் சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது. புகழ் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் சிறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக இவரிடம் ஆலோசனை வழங்கும்படி கேட்டுக் கொண்டன. இவர் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து, டென்மார்க், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். அங்கு சிறைகளை ஆய்வு செய்து அறிக்கையாக எழுதி வழங்கினார். இந்த நாடுகளிலும் கைதிகளின் நலனுக்காக பல சிறப்புத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தார். இவரது மகத்தான சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி விக்டோரியா இவருக்கு மதிப்புமிகு என்ற பட்டம் வழங்க முன்வந்தார். ஆனால் தன்னலமற்ற தொண்டுக்குப் பரிசு வேண்டியதில்லை என மிகவும் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் கைதிகளின் நலனுக்காகவே பாடுபட்டார். இவர் 1845ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று இயற்கை எய்தினார். இவரது நினைவாக 1925ஆம் ஆண்டு ஒரு அறக்கட்டளை துவங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டில் அவரது பணியைப் போற்றும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் 5 பவுண்டு ரூபாய் நோட்டில் இவருடைய உருவப்படம் சித்தரிக்கப்பட்டு அதன் மூலம் கௌரவிக்கப்பட்டார். அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமூகப்பணிப் பள்ளி இவரது பெயரில் எலிசபெத் பிரை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சியாங் ஜிங்யு […] சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப கால பெண் உறுப்பினர்களில் ஒருவர். சீனாவின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் இயக்கத்தை தொடங்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப கால பெண்ணியத் தலைவர்களில் மிக முக்கியமானவர். சீனாவின் ஏகாதிபத்திய காலத்தில் ஒரு பள்ளியில் படித்த முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர். இவர் தனது 33ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்தார். ஆகவே இவரை கம்யூனிஸ்ட் தியாகி எனவும் அழைக்கின்றனர். மேலும் முதல் கம்யூனிச இளம் தலைமுறையினருக்கு ஒரு புரட்சிகர முன்மாதிரிப் பெண்ணாக விளங்கினார். இவர் சீனாவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் மற்றும் பெண்கள் இயக்கத்தின் தலைவி. இவர் சீனப் புரட்சியின் பாட்டி என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் சியாங் ஜிங்யு (Xiang Jingyu) என்னும் புரட்சிப்பெண் ஆவார். பிறப்பு இவர் 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷிபூ (Xupu) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை சியாங் ருயிலிங் என்பவர் ஆவார். இவர் ஒரு வணிகர் மற்றும் துஜியா இனத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் டெங் யுகுய். இந்த தம்பதியருக்கு 10 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய செல்வாக்கின் காரணமாக நான்கு சகோதர்கள் ஜப்பானில் படிக்கச் சென்றனர். இவர் பிறந்த போது சியாங் சூன்ஜியான் (Xiang Junxian) என இவருக்குப் பெயரிடப்பட்டது. ஜப்பானில் படித்த இவரது மூத்த சகோதரர் சியான் சியான்யூ என்பவர் மேற்கு ஹுனானில் ஒரு சமூகக் குழுவின் தலைவராக இருந்தார். இவர் மிகவும் செல்வாக்கு மிக்கவர். இவர் 1903ஆம் ஆண்டு ஒரு ஆரம்பப் பள்ளியை நிறுவினார். தனது சகோதரரின் செல்வாக்கின் காரணமாக இந்தப் பள்ளியில் இவர் சேர்ந்தார். கல்வி நிலப்பிரபுத்துவக் காலத்தில் ஒரு பெண் பள்ளியில் சேர்வது என்பது மிகவும் கடினம். இவர் பள்ளியில் சேர்ந்து ஆரம்பக் கல்வியை படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவர் 1908ஆம் ஆண்டில் செங்டேயில் தனது படிப்பைத் தொடர்ந்தார். சீனாவில் ஏற்பட்ட சின்ஹாய் புரட்சியானது குயிங் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவை கொண்டு வந்தது. அப்போது இவர் சாங்ஷாவுக்குச் சென்று ஹுனானின் முதல் மாகாண பெண்கள் சாதாரண பள்ளியில் சேர்ந்து பயின்றார். இப் பள்ளியில் படித்த பிறகு தனது பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் இவர் சியாங் ஜிங்யு என அழைக்கப்பட்டார். இவருடைய புத்திசாலித்தனம், நேர்மையான குணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை இப்பள்ளியில் மூன்று சிறந்த பெண்களில் ஒருவராக அவருடைய ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் அவரது பள்ளித் தோழிகளுக்கு அவள் ஒரு மதிப்புமிக்க நண்பராக விளங்கினார். அதன் பின்னர் இவர் சோவ் நான் (Zhou Nan) மகளிர் பள்ளியில் சேர்ந்து பயின்றார். இது ஒரு நவீன, முற்போக்கு சீர்திருத்தக் கருத்துக்களை கொண்ட பள்ளியாகும். இக்காலகட்டத்தில் இவர் மாநில பொது விவகாரங்களில் அக்கறைக் கொண்டிருந்தார். பல மாணவர்களுடன் சேர்ந்து தெருக்களில் போராடினார். சீன மக்களின் தேச பக்தியை வளர்க்கும் இப்பள்ளியில் இவர் பட்டம் பெற்றார். இப்பள்ளியில் பல புரட்சிகரமான சீனப் பெண்கள் படித்தனர். இப்பள்ளியில் படித்த பல சீன பெண்களின் வாழ்க்கையை அறிஞரும், பத்திரிக்கையாளருமான நிம் வேல்ஸ் என்பவர் ஆய்வு செய்தார். அவர் இப்பள்ளியை சீனக் கம்யூனிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் தொட்டில் என்று அழைத்தார். இப்பள்ளியில் படித்த பெண்களில் ஒருவர் யூ மன்சென் என்பவர் குறிப்பிடத்தக்கவர். சீன பெண்ணியவாதியும், எழுத்தாளருமான டிங் லிங் என்பவரின் தாயார் ஆவார். இப்பள்ளியில் டிங் லிங் மற்றும் சியாங் ஜிங்யு ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாகவும், புரட்சிகரமான தோழர்களாகவும் இருந்தனர். பள்ளி இவர் பள்ளிப் பட்டத்தை 1916ஆம் ஆண்டில் பெற்றார். அதன் பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். சீனாவை கல்வியால் மாற்ற முடியும் என அவர் நம்பினார். அவர் உள்ளூரில் உள்ள முற்போக்காளர்களின் ஆதரவின் கீழ் ஒரு பள்ளியை நிறுவினார். இப்பள்ளியில் பல முற்போக்கு இளைஞர்களை ஆசிரியராக நியமித்தார். ஆரம்பத்தில் சில மாணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்தனர். இப்பள்ளி வெள்ளத்தால் அழிந்தது. அதன் பிறகு தனது குடும்பத்தினர் மற்றும் சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியை கட்டினார். அவர் பள்ளியின் முதல்வர் ஆனார். அப்போது அவருக்கு வயது 20 மட்டும் தான். இப்பள்ளியில் தனது பள்ளித் தோழர்களுக்கு முன்னுரிமை அளித்தார். அவர் எப்போதும் கல்விச் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் பல பெற்றோர்களை சமாதானப்படுத்தி தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்படி வலியுறுத்தினார். பிறகு மலைப்பகுதிக்குச் சென்று மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தார். புதிய அறிவை கற்பிப்பதில் இப்பள்ளி முழு கவனம் செலுத்தியது. ஆகவே இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து படித்தனர். திருமணம் மாவோ சேதுங் மற்றும் காய் ஹெசென் ஆகிய இருவரும் 1918ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹுனானில் புதிய குடிமக்கள் கல்விச் சங்கத்தை நிறுவினார். 1979ஆம் ஆண்டில் காய் ஹெசெனை இவர் பெய்ஜிங்கில் சந்தித்தார். பிறகு காய் ஹெசென் உள்பட பல மாணவர்களுடன் சேர்ந்து இவர் பிரான்சில் படிக்கச் சென்றார். அங்கு மகளிர் பல்கலைக் கழகத்தில் படித்தார். இவர் பிரெஞ்சு மற்றும் மார்க்சியம் போன்ற பல விஷயங்களை கற்றுக் கொண்டார். காய் ஹெசென் மிகவும் பிரபலமான மாணவர் தலைவராக கருதப்பட்டார். அவருடன் சியாங் ஜிங்யு நண்பராக பழகினார். இவர்கள் இருவரும் பிரான்சில் படித்த போது உலகம் மற்றும் சீனாவின் நிலைமை குறித்து அக்கறை கொண்டிருந்தனர். பெண் விடுதலை மற்றும் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி காய் ஹெசென் கட்டுரையாக எழுதினார். பெண் விடுதலை என்பது சமூகத்தின் மறுவடிவமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தினார். […] இவர்கள் இருவரின் நட்பும் காதலாக மாறியது. தங்கள் சொந்த மகிழ்ச்சியை விட சீனாவில் அரசியல் புரட்சி முக்கியம் என்று இருவரும் உணர்ந்தனர். ஆகவே தங்கள் திருமணத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்த போது அது புரட்சிகர மார்க்ஸியத்தின் மையமாக இருந்தது. வியட்நாமிய தலைவர் ஹோசிமின் போன்ற சர்வதேச தலைவர்கள் அங்கு செயல்பட்டனர். பல அறிவுஜீவிகளும் மார்க்சிஸ்ட்டுகளாக இருந்தனர். ஹெசென் மற்றும் சியாங் ஜியுங் ஆகிய இருவரின் திருமணம் 1920ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த இவர் மார்க்சியத்தின் மீதும் கம்யூனிசத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவராக மாறினார். கல்வியால் சீனாவை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை மாறியது. அரசியல் போராட்டங்கள், சமூகத்தில் சீர்திருத்தம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் மூலமே சீனாவின் முழு சுதந்திரத்தை அடைய முடியும் என்று நம்பினார். 1921ஆம் ஆண்டில் இவர்கள் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். உடனே இவர்கள் சீனா திரும்பினார். இவர்கள் இருவரும் 1922ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தனர். கட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக காய் ஹெசென் மாறினார். ஆரம்ப கால கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர்களில் ஒருவராக சியாங் ஜிங்யு இருந்தார். இவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முதல் பெண் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெண்கள் பணியகத்தின் முதல் பெண் இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டார். போராட்டம் சீனப் பெண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து பல கட்டுரைகளை இவர் எழுதினார். இந்த கட்டுரையில் சீனப் பெண்கள் ஒன்றுபட்டு விடுதலைக்காகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இவர் 1923ஆம் ஆண்டு தி ரிபப்ளிகன் டெய்லி என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1923ஆம் ஆண்டில் நடந்த மூன்றாவது தேசிய மக்கள் காங்கிரஸில் இவர் மீண்டும் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பெண்கள் இயக்கக் குழுவின் முதல் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இவர் பெண்கள் இயக்க மசோதாவை உருவாக்கினார். பெண்கள் இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்கள் செல்வாக்கைப் பெறுவதற்கு வழி வகுத்தது. இதில் பெண்களின் வாக்குரிமை, வாரிசுரிமை, திருமண சுதந்திரம், கல்வி, சமத்துவம், இழப்பீடு சமத்துவம் போன்ற பாலின சமத்துவம் இந்த வரைவில் அடங்கியிருந்தது. இவர் 14 வெவ்வேறு பட்டுத் தொழிற்சாலையில் பணிபுரியும் 10000 பெண் தொழிலாளர்களை ஒன்று திரட்டி 1924ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு வேலை நிறுத்தத்தை நடத்தினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார். அதிக இழப்பீடு மற்றும் வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது வேலை நிறுத்தத்தின் மிக முக்கிய கோரிக்கையாகும். 1925ஆம் ஆண்டு மே 13 ஆவது இயக்கத்தின் போது ஷாங்காய் நகரில் பல வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கினார். இவர் 1925ஆம் ஆண்டில் மீண்டும் மூன்றாவது முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மாஸ்கோ ஓரியண்ட் கம்யூனிஸ்ட் தொழிலாளர் பல்கலைக்கழகத்தில் படிக்க ரஷ்யா சென்றார். இவர் 1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் சீனாவுக்கு திரும்பினார். தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் விளம்பரத் துறையில் பணியாற்றுவதற்காக வுஹானுக்குச் சென்றார். இறப்பு […] சியாங் காய் ஷேக் 1927ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரில் கம்யூனிச எதிர்ப்புப் போரை தொடங்கினார். ஷாங்காயில் இளம் கம்யூனிஸ்டுகள் பலரை கொன்று குவித்தனர். இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் வாழ்க்கை ஆபத்தான மற்றும் கடினமான ஒன்றாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் என்று கருதுபவர்கள் விசாரணை இன்றி அடிக்கடி சுடப்பட்டனர். இதற்கெல்லாம் அஞ்சாமல் இவர் தனது பணியை தைரியமாக செய்து வந்தார். வுஹான் தேசிய அரசாங்கத்தால் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சியாங் ஜிங்யு 1928ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று கைது செய்யப்பட்டார். இவர் பிரெஞ்சு அதிகாரிகளால் தேசியவாத அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். சிறையில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்தார். ஆனால் இவர் தங்கள் கட்சியின் ரகசியங்களை ஒரு போதும் வெளிப்படுத்தவில்லை. இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நாளில் தேச பக்தி உணர்வை மக்களிடம் ஊட்டினார். இதனால் காவலர்களால் தாக்கப்பட்டார். வாயை மூடிக் கொண்டு இருக்கும்படி அவர்கள் அடித்தார்கள். இவர் 1928 ஆண்டு மே 1 அன்று தூக்கிலிடப்பட்டார். அப்போது இவருக்கு வயது 33 தான். இதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து இவரது கணவரும் தூக்கிலிடப்பட்டார். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் என்கிற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. வில்மா எஸ்பின் இவர் கியூபா பெண்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் நீண்ட காலத் தலைவராக இருந்தவர். இவர் ஒரு பெண்ணியவாதி மேலும் கியூபா புரட்சியில் பங்கெடுத்த ஒரு பெண் புரட்சியாளர். இவர் ஆயுதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். இந்தப் பாடத்தை கியூபாவில் படித்த முதல் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் சமூக மாற்றுத்திற்காகவும், கியூபாவில் சோசலிச அமைப்பு உருவாவதற்கும் பாடுபட்டார். இவரை கியூபாவின் புரட்சிகரப் பெண் போராளி என அழைக்கின்றனர். அது மட்டுமல்லாமல் புரட்சிக்குள் புரட்சி செய்தவர் என இவர் புகழப்படுகிறார். கியூபாவில் துவங்கப்பட்ட கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். அவர்தான் வில்மா எஸ்பின் (Vilma Espin) என்பவர் ஆவார். […] பிறப்பு இவர் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று சாண்டியாகோ டி கியூபாவில் பிறந்தார். இவர் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜோஸ் எஸ்பின் என்பவர் ஒரு பணக்கார கியூபா வழக்கறிஞர். இவரது தாயார் பெயர் மார்கரிட்டா குய்லோயிஸ் ஆகும். இவருக்கு வில்மா லூசிலா எஸ்பின் குய்லோயிஸ் (Vilma Lucila Espin Guillois) என பெயரிட்டனர். ஆனால் வில்மா எஸ்பின் அல்லது எஸ்பின் என்றே அழைத்தனர். இவருக்கு நில்சா, இவான், சோனியா மற்றும் ஜோஸ் ஆகிய நான்கு உடன்பிறப்புகள் இருந்தனர். தந்தை உயர் நடுத்தர குடும்பத்தினர் இருக்கும் ரோட்டரியன், லயன்ஸ் கிளப் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். இவர் மிகவும் வசதியான ஒரு வாழ்க்கைச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை பாரம்பரியமான கருத்துக்களைப் பின்பற்ற கூடியவராக இருந்தார். பழமையானக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும் தனது மகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுப்பதில் எந்த தீங்கும் கிடையாது என்ற நம்பிக்கை உடையவராக இருந்தார். கல்வி இவர் ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலை கல்வி அனைத்தும் சாண்டியாகோவில் முடித்தார். இரண்டு ஆண்டுகள் மதச்சார்பற்ற போதனையைத் கற்றார். பிறகு இரண்டு ஆண்டுகள் மதப் பள்ளியில் படித்தார். இருப்பினும் இவருக்கு இயற்கையாகவே மத நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாண்டியாகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றார். கியூபாவில் இந்தப் பாடத்தை படித்த முதல் பெண்களில் ஒருவர் என இவர் கருதப்படுகிறார். இவரது வேதியியல் அறிவு எதிர்காலத்தில் கியூபாவிற்கு பயன்படும் என அவரது தந்தை நம்பினார். பட்டம் பெற்ற பிறகு கேம்பிரிஜ் மாசசூசெட்ஸில் உள்ள எம்ஐடி யில் சேர்ந்து படிக்குமாறு அவரது தந்தை ஊக்குவித்தார். இவர் அமெரிக்கா செல்வதன் மூலம் சோசலிச நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என அவரது தந்தை நம்பினார். இவர் அமெரிக்கா சென்று எம்ஐடியில் கல்வி கற்க சம்மதித்தார். அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். இதன் மூலம் இவர் ஒரு முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். கியூபா இவர் மெக்சிகோ வழியாக கியுபா வந்து சேர்ந்தார். சொந்த மண்ணுக்கு திரும்பிய பிறகு அவர் கண்ட காட்சி அவருக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இங்கு ஆட்சி நடந்து வந்தது. கொடுங்கோலன் பாடிஸ்டா மக்களை வாட்டி வதைத்தான். திமிர்பிடித்த அமெரிக்கர்களின் கேளிக்கை பூமியாக கியுபா இருந்தது. கியூபாவில் பெண்கள் விலங்குகளை விட மிகவும் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டார். இதனால் அமெரிக்காவின் மீது இவருக்கு அதிக வெறுப்பு ஏற்பட்டது. இயக்கம் சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவுக்கு எதிராக கியூபாவில் போராட்டங்கள் வெடித்தன. பாடிஸ்டாவின் ஊழல் மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ தலைமையில் போராட்டங்கள் வெடித்தன. சாண்டியாகோவில் 1952ஆம் ஆண்டு பாடிஸ்டா அரசுக்கு எதிராக கிளர்ச்சி உருவானது. இந்தக் கிளர்ச்சியானது அறிக்கைகள், பிரகடனங்கள், அணி வகுப்புகள் மற்றும் காவல் துறையிடம் மோதல்கள் என பலவற்றை கொண்டிருந்தன. கிளர்ச்சி […]சரியாகத் திட்டமிடாதக் காரணத்தால் தோல்வியைத் தழுவியது. சாண்டியாகோவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் மோன்காடா இராணுவமுகாம் 1953 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று தாக்கப்பட்டது. இது பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியது. பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. பல படுகொலைகளும் நடந்தன. மோன்காடா தாக்குதலுக்குப் பிறகு வரலாறு என்னை விடுவிக்கும் என்ற தலைப்பில் பிடல் காஸ்ட்ரோ பேசினார். இவரது உணர்ச்சிமிக்க பேச்சு சாண்டியாகோவில் இளைஞர்களை தட்டி எழுப்பியது. தீவு முழுவதும் போராட்டம் வெடித்தது. அனைவரும் பிடல் காஸ்ட்ரோவை தலைவராக ஏற்றுக் கொண்டனர். உடனே பிடல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு கிளர்ச்சி அமைதி ஆகிவிட்டதாக பாடிஸ்டா நம்பினார். மோன்காடா தாக்குதலிலிருந்து தப்பியவர்களுக்கும், பிடல் காஸ்ட்ரோவுக்கும் 1955ஆம் ஆண்டில் பாடிஸ்டா பொதுமன்னிப்பு வழங்கினார். பிடல் காஸ்ட்ரோ மெக்சிகோவிற்கு தப்பிச் சென்றார். 1953ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று சாண்டியாகோ ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தினத்தை நினைவு கூறும் வகையில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அதற்கு ஜூலை 26 இயக்கம் என பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து மெக்சிகோவில் ஒரு கொரில்லா படையை பிடல் காஸ்ட்ரோ உருவாக்கினார். இது கியூபாவின் முன்னணிப் புரட்சிகர இயக்கமாக மாறியது. சாண்டியாகோவில் பிராங்க் பயஸ் என்பவர் பாடிஸ்டா எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்தார். இவர் ஜூலை 26 இயக்கத்தை முன்னின்று அங்கு நடத்தினார். 1956ஆம் ஆண்டு சாண்டியாகோவிற்கு வில்மா எஸ்பின் வந்து சேர்ந்தார். அங்கு பிராங்க் பயஸ் என்ற புரட்சிகர போராளியால் இவர் புரட்சிப் பாதைக்கு ஈர்க்கப்பட்டார். பாடிஸ்டாவிற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் வில்மா தன்னை இணைத்துக் கொண்டார். […] பிராங்க் பயஸுடன் இணைந்து ஓராண்டு காலம் புரட்சியில் பணியாற்றினார். கிழக்கு கியூபாவில் நகர்ப்புற புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். 1957ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு கூலிப்படையால் பிராங் பயஸ் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு வில்மா அங்குள்ள சியாரா மிஸ்ரா மலைப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அங்கு சக போராளிகளுக்கும் உதவி செய்தார். அங்கு பல வீரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு படிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுத்தார். புரட்சி இவருக்கு ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியும் பேசும் திறமை இருந்ததால் சர்வதேச அளவில் புரட்சிகர இயக்கத்திற்கு இவரால் உதவ முடிந்தது. மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். கிளர்ச்சியின் போது உயிர் பிழைத்த காஸ்ட்ரோ மற்றும் சில தோழர்கள் ஓரியண்டே மாகாணத்தின் சியராவிற்கு தப்பினார். அச்சமயத்தில் எஸ்பின் பிடிபடாமல் தப்பித்தார். இவர் 1957ஆம் ஆண்டில் சாண்டியாகோவில் தொடர்ந்து பணிபுரிந்தார். சாண்டியாகோவில் ஒரு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். அங்கிருந்து காஸ்ட்ரோவுக்கு ரகசியச் செய்திகளை எடுத்துச் செல்லும் பணியையும் இவர் செய்தார். வேதியியல் பொறியாளரான இவர் தமது கல்வியைப் பயன்படுத்தி கிளர்ச்சி படைக்கு தேவையான நேபாம் குண்டை உருவாக்கினார். இதை வீசுவதற்கு என ஒரு விமானமும் இருந்தது. சியரா சென்று காஸ்ட்ரோவை சந்தித்தார். அதன் பிறகு அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவையும் முதன் முறையாகச் சந்தித்தார். அச்சமயத்தில் எஸ்பினைக் கைது செய்ய சாண்டியாகோவில் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். இவர் சாண்டியகோவிற்கு மீண்டும் செல்வது ஆபத்தானது என்பதை உணர்ந்தார். […] இவர் அப்போது டெபோரா என்ற ரகசிய பெயரில் புரட்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவர் சிரியாவில் இருந்த போது 11 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மேலும் 100 பள்ளிகளின் பராமரிப்புக்கு தேவையான ஒரு நிர்வாக வலையமைப்பை உருவாக்குவதற்கு கடினமாக உழைத்தார். இவர் கருத்தியல் ரீதியாக எதுவும் அறியப்படாதவராகவே இருந்தார். ஆனால் பாடிஸ்டாவின் அழிவை விரும்பினார். அவருக்கு மார்க்சியம் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு மார்க்சியம் பற்றி ராவுல் காஸ்ட்ரோ கற்றுக் கொடுத்தார். கியூபா புரட்சி 1959ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று வெற்றி பெற்றது. பாடிஸ்டா நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார். அதன் பிறகு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. புதிய புரட்சிகர அரசாங்கத்தில் எஸ்பினுக்கு ஒரு முக்கியமான பதவி வழங்கப்பட்டது. பெண்களின் முன்னேற்றம் கியூபாவில் பெண்களை அணிதிரட்டும் பணி இவருக்கு அளிக்கப்பட்டது. இவர் 1960 ஆம் ஆண்டில் கியூபா பெண்கள் கூட்டமைப்பை நிறுவினார். இக் கூட்டமைப்பின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் பயணம் செய்து நர்சரிகளை நிறுவுதல் போன்ற செயல்களின் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்தினார். வில்மா எஸ்பின் கியூபாவில் பாலின சமத்துவத்தை வெளிப்படையாக ஆதரித்தார். புரட்சியில் அவரது ஈடுபாடு கியூபாவில் பெண்களின் பங்கை மாற்ற உதவியது. கியூபா புரட்சி உண்மையில் பெண்களுக்கு 2 விதமான விடுதலையை பெற்றுத் தந்தது. ஒன்று விடுதலை, மற்றொன்று பாலின சமத்துவம். கியூபா பெண்களின் கூட்டமைப்பு நாட்டில் ஒரு அவசர மருத்துவப் படையை உருவாக்கியது. கியூபா அரசாங்கமும் கூட்டமைப்பும் சேர்ந்து பெண் தொழிலாளர்களை படையில் சேர ஊக்குவித்தது. உழைக்கும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க ஆண்கள் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு உதவ வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. பெண்கள் கூட்டமைப்பு 36 லட்சம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட பெரும் அமைப்பாக உருவெடுத்தது. கியூபா கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது இதன் ஸ்தாபகர் உறுப்பினராக வில்மா இருந்தார். பிறகு பொலிட் பீரோ உறுப்பினராக உயர்ந்தார். கியூபாவின் முதல் பெண்மணியாக 45 வருடங்களுக்கு மேலாக சேவை செய்தார். வாழ்க்கை கியூபா புரட்சி வெற்றி அடைந்த மூன்று மாதத்திற்கு பிறகு பிடல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. தோழர் வில்மா எஸ்பின் 2007ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று இயற்கை எய்தினார். அரசு சார்பாக ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் கியூபா அரசாங்கம், நம் நாட்டிலும் உலகிலும் பெண் விடுதலைக்காகப் போராடிய போராளிகளில் இவரும் ஒருவர் என பாராட்டி அறிக்கை வெளியிட்டது. Reference : 1. இணைய தளம் 2. ரோசா லம்சம்பேர்க் – தமிழோடை 3. சிறப்பு பதிப்பு ரோசா லம்சம்பேர்க் – Madras Review 4. கலைஞர் TV.com 5. இனியொரு புரட்சிகர அரசியலுக்கான உரையாடல் வெளி ; கிளாரா ஜெட்கின் – ஆர். பார்த்தசாரதி 6. தமிழ் இந்து, தினத்தந்தி, தினமலர் நாளிதழ்கள் 7. ஆன்னி பிராங்க் – BBC தமிழ் 8. 100 Women of the year – Time The Weekly News Megazine. 9. The Nineteenth Amendment women Get the vote – Karen Price Hosell ஆசிரியர் பற்றிய குறிப்பு தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கியப் பங்காற்றுகிறார். 2000ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசயத் தாவரங்கள். அன்றிலிருந்து 22 ஆண்டுகளாக தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார். […] தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கியக் காரணகர்த்தாவாகவும் உள்ளார். இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய் கிரகமும், செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். இவர் எழுத்துச் சிற்பி, அறிவியல் மாமணி, வல்லமைமிகு எழுத்தாளர், உழைப்பாளர் பதக்கம் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை, மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார். இணையதளம் பொதுவகத்தில் 23 துணைப்பகுப்புகளின் மூலம் 19,390 படங்களை இணைத்துள்ளார். ஏற்காடு மலையில் உள்ள தாவரங்களை வகைப்படுத்தி, பெயரிட்டு, அனைத்து புகைப்படங்களையும் இணையதளம் பொதுவகத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை 2,653 தாவரங்களின் 10,081 படங்களை இணைத்துள்ளார். பிரிதிலிபி என்னும் இணையத்தில் 109 கட்டுரைகளை எழுதியுள்ளார். இதுவரை 21,985 பேர் அக்கட்டுரைகளைப் படித்துள்ளனர். பிரிதிலிபி தளத்தில் 1,00,000 வார்த்தைகள் எழுதியமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ப்ரீ தமிழ் இ-புக்ஸ் மூலம் 33 புத்தகங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஜூன் 2015 முதல் ஜூன் 2022 வரை 5,64,612 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 105 புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளார். தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.