[] 1. Cover 2. Table of contents க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - 2 க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - 2   க.அயோத்திதாஸப் பண்டிதர்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/iyothee_dass_thoughts_2 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : வள்ளுவர் வள்ளலார் வட்டம் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Valluvar Vallalar Vattam Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் தொகுதி இரண்டு இந்திரர் தேச சரித்திரம் ஒடுக்கப்பட்ட மக்கள் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாறு […] மின்னாக்கம் த. கார்த்திகேயன் ** பதிப்புரை** அண்ணல் அம்பேத்கர், பெளத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்தவரான அயோத்திதாஸப் பண்டிதர் கோவை மாவட்டத்தில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் காத்தவராயன். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் தனது குருவான அயோத்திதாஸ் கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார். தமிழில் மிகுந்த புலமை கொண்டிருந்த பண்டிதர், பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். 1870 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி “ஒரு பைசா தமிழன்” என்ற வாரப்பத்திரிகையை அவர் துவக்கினார். அயோத்திதாஸப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட சாக்கிய பெளத்தர்கள் சங்கம் தமிழ் சமுதாயத்தின் சமூக அரசியல் போக்கையே மாற்றியமைத்தது. தமிழ் இலக்கியங்களைப்பற்றியும், சித்த மருத்துவம் குறித்தும் அயராது எழுதி வந்த பண்டிதர் அரிய தமிழ் நூல்களை பதிப்பித்தும், தமிழ் இலக்கியங்களுக்கு குறிப்பாக வள்ளுவர், ஒளவையார் ஆகியோர் படைப்புகளுக்கு பெளத்த மார்க்கத்தின் கோணத்திலிருந்து புதிய விளக்கங்களை எழுதியும் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார். தமிழில் அதுவரையிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல அவரால் புதுவிளக்கமும். கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாஸப் பண்டிதர் கல்வியாளராக, படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர். தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் சிந்தனையில், நடைமுறையில் முன்னோடியாகத் திகழ்ந்த அயோத்திதாஸப் பண்டிதரின் முக்கியத்துவத்தை இன்று வரை தமிழுலகம் அறியவில்லை. அவரது படைப்புகள் இந்தத் தலை முறையினருக்கு எடாமல் போனதும் அதற்கொரு காரணம், அந்தக் குறையை நீக்கிடும் நோக்கில் அவரது படைப்புகளில் கிடைப்பதனைத்தையும் தொகுத்துத்தர திட்டமிட்டு முதலில் புத்தரது ஆதிவேதம் எனும் நூல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதி (1999) வெளியிடப்பட்டது. அடுத்து அயோத்திதாஸப் பண்டிதரின் பிறந்த நாளான இன்று (மே, 20) இரு தொகுதிகளாக அவரது படைப்புகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடுகிறோம். மேலும் இரண்டு தொகுதிகள் சில நாட்களில் வெளிவரவுள்ளன. இரண்டாவது தொகுதியான இதில் ஸ்ரீ அம்பிகையம்மன் எனப் பண்டிதரால் குறிக்கப்படும் ஒளவையின் மூன்று நூல்களுக்கு - ஆத்திச்சுவடி, குன்றை வேந்தன், வெற்றிஞானம் - அயோத்திதாஸப் பண்டிதர் உரையெழுதியுள்ளார். தமிழ் அறிவுலகம் அறிந்திராத கோணத்தில் பௌத்தநெறிநின்று ஒளவையின் நூல்களைப் பண்டிதர் விளக்குகிறார். இவற்றுடன் கூடவே அம்பிகையம்மன் எனப்படும் ஒளவையின் வரலாற்றையும் அவர் இயற்றியுள்ளார். அதையும் இத்துடன் இணைத்து வெளியிடுகின்றோம். தமிழில் ஒளவையென்ற பெயரில் கிடைக்கும் பாடல்கள் யாவும் ஒருவரால் பாடப்பட்டவையல்ல. ஒளவையென்ற பெயரில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. சங்கப்பாடல்களில் அகம், புறம் இரண்டு மாகச் சேர்த்து 59 பாடல்கள் ஒளவையென்ற பெயரில் காணப்படுகின்றன. சங்ககாலம் தவிர்த்து பத்தாம் நூற்றாண்டிலும், பத்தாம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கிடையில் சோழர்காலத்திலும், 14, 15-ஆம் நூற்றாண்டுகளிலும் ஒளவையென்ற பெயர் கொண்ட புலவர்கள் வாழ்ந்திருக்கக் கூடுமென இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கணிக்க முடிகிறது. இதுதவிர வேறு இருவரும் இருந்துள்ளனர். சித்தயோகம், அறநெறி முதலியவற்றில் ஈடுபாடு கொண்டு பாடல்கள் இயற்றியவர்கள் இவர்களேயாவர். சங்கப் பாடல்களை இயற்றிய ஒளவையின் காலமாக கி.பி 150 - 300 வரையிலான பகுதியைக் குறிப்பிடலாம். இவர் விறலியர் குலத்தைச் சேர்ந்தவரெனவும் மன்னன் அதிக மான் நெடுமான் அஞ்சியுடன் நட்பாயிருந்து அரிய நெல்லிக் கனியைப் பெற்றவர் இவரேயெனவும் தெரிகிறது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் இவரது பாடல்களைக் காணலாம். கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒளவையின் பாடல்கள் பல ஸ்தல புராணங்களில் காணப் படுகின்றன. மு. அருணாச்சலத்தின் “தமிழ் இலக்கிய வரலாறு” மூலமாய் அறியவரும் செய்திகளைக் கொண்டு நோக்கும் போது பாரிமகளிரான அங்கவை, சங்கவையைப் பாதுகாத்தவ ரெனத் தெரிகிறது. கி.பி. பத்து, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அறியப்பட்ட ஒளவை முதலாம் குலோத்துங்கள் காலத்தில் (1071-1192) வாழ்ந்திருக்கலாமெனத் தெரிகிறது. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலான நூல்களை இயற்றியவர் இதுவேயென அறியமுடிகிறது. நல்வழியில் திருமூலர் மற்றும் சில சைவப் புலவர்கள் குறித்த குறிப்புகள் வருவதால் இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருக்க வாய்ப்பில்லையென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கொன்றை வேந்தன், யாப்பருங்கலத்துடன் இணையான காலத்தில் (12-ஆம் நூற்றாண்டு) வைத்துப் பார்க்கப்படுகிறது. இந்த ஒளவையின் பாடல்களே ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல்களாகும். (1708). மத்திய காலத்தில் வாழ்ந்தவரும், சித்தம் யோகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவருமான ஒளவையின் காலம் 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியாக இருக்கலாம். ஒளவைக் குறள் அல்லது ஞானக்குறள், விநாயகர் அகவல் ஆகியவை இவர் படைத்தவை. ஒளவையைப் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்கிவருகின்றன. திருவள்ளுவரின் சகோதரியென்றும், உறையூருக்கருகில் பிறந்து தனது அன்னையால் கைவிடப்பட்டு பாணன் ஒருவனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரென்றும்; திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியாக 240 ஆண்டுகள் வாழ்ந்தவரென்றும்; கம்பன், புகழேந்தி, ஒட்டக்கூத்தன் ஆகியோரது சமகாலத்தவரென்றும்; கூழுக்குப் பாடியதால் கூழுக்கவ்வையென அழைக்கப்பட்டவரென்றும் (பெருந்தொகை) பலவாறான கதைகள் உள்ளன. முருகனும், விநாயகனும் ஒளவையை விண்ணுலகுக்கு கூட்டிச் சென்றதாகவும் ஒரு கதை உள்ளது. இவ்வாறு பலவாறாகவும் பேசப்படுகின்ற ஒளவையின் வரலாற்றினை அயோத்திதாஸப் பண்டிதர் அவர்கள் தனது நோக்கில் கட்டமைத்துள்ளார். பல்வேறு இலக்கிய ஆதாரங் களைக் கொண்டு பண்டிதர் தொகுத்துரைக்கும் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமீபகாலங்களாய் நிகழ்ந்துவரும் அகழ்வாராய்ச்சிகள், இந்த நூற்றாண்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகளின் துணை கொண்டு பார்க்கும் போது தமிழ் மண்ணில் இருந்த பௌத்தத் தின் செல்வாக்கு மென்மேலும் தெளிவு பெற்று வருகிறது. அவ்விதத்தில் பண்டிதரின் இந்த வரலாறும் முக்கியமான தாகிறது. புகழ் பெற்ற தமிழ் ஆய்வாளர் காமில் ஸ்வலபில் தொகுத்துள்ள தமிழ் இலக்கிய அகராதியில் (Lexicon of Tamil Literature - Kamil V.Zvelebil, E.J. Brill - New York, 1995) ஒளவையைப் பற்றிய குறிப்பில் அயோத்திதாஸப் பண்டிதரின் ஆய்வு பற்றிய செய்தி இடம் பெறவில்லை. ஸ்வலபில் போன்ற ஆய்வாளர்களும் அறியமுடியாத அளவுக்கு அயோத்திதாஸப் பண்டிதரின் படைப்புகள் இருட்டடிப்புக்கு ஆளாகியுள்ளன. அறிவுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் அவரது சிந்தனை களைப் புறக்கணிக்க முடியாதவைகளாக இடம் பெறச்செய் வதற்கு இந்தத் தொகுப்பு முயற்சி உதவுமெனில் அதுவே எமக்கு அளவில்லா மகிழ்ச்சி. இந்த விளைச்சலின் பலன் வெகுமக்களுக்கு உரித்தா கட்டும் 20.5.1999. தலித் சாகித்ய அகாடமி, சென்னை. ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம் ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம் அ. முதல் வாசகம் -ஆத்திச்சுவடி ஸ்ரீ புத்தாய நம தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா, ஞானத்தாய், ஔவையார் என்னும் ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிய தி ரி வா ச க ம் (ஆத்திச்சுவடி, குன்றைவேந்தன், வெற்றிஞானம்) ஸ்ரீமத். க. அயோத்திதாஸ் பண்டிதர் உரை திருவாளர். M. குப்புசாமி ஜமதார் அவர்களின் உதவியைக் கொண்டு, தென்னிந்திய பெளத்த சங்கங்களின் கோலார் கோல்ட் பீல்ட் சாம்பியன் ரீப் ஸ்ரீ சித்தார்த்தா புத்தக சாலையாரால் பதித்து பிரசுரிக்கப்பெற்றது 1927 ** முன்னுரை** இந்திரர் தேசத்துள் குடி புகுந்த தந்திரிகளாகிய பார்ப்பார்கள் மாறுபடுத்திய பல கதைகளுள் இந்த ஒளவையார் கதையுமொன்றாகும். அதாவது, அம்பிகையம்மன் (1) இளங்கன்னிகா ஸ்திரியா யிருந்ததைக்கொண்டு, அதிகமானெடுமான் வஞ்சியென்றும், அதிகமானென்றும், அதிகனென்றும் பெயர் பெற்ற வஞ்சிநகர் வள்ளல் எல்லையிலிருந்த கருநெல்லிக் கனியை மேற்கூறு மரசனிடம் இரந்துண்டு அக்கனியால் தன் வயதினுமுதியவளாய விளங்கி ஒளவையாரென்ற பெயர் பெற்றனளென்றும், (2) தென்பழனி மலைபுரத்தரசாகிய சுப்ரமணியனிடம் ஜம்புகனி கேட்டு அவமானமடைந்தனளென்றும், (3) தொன்மையிலா தென்மதுரை தமிழ் சங்க மமிழ்ந்தடங்க வென்றாளென்றும், (4) பொய்யுறு கம்பன் மெய்யுரு நடுங்கிப் போற்ற வாதிட்டாளென்றும், (5) ஆரியர்களாகிய பிரம்மருத்ர விட்டுணு எனும் மூன்று பார்ப்பார்களுடைய மனைவிமார்கள் அவதாரமே ஒளவையா ரென்றும், (6) இந்து மத பகவன் என்னும் பார்ப்பானாகிய பாரசீகதேசத்தானும் இந்தியா தேச ஆதி என்னும் பறைச்சியும் செய்த விபசாரத்தால் அவ்வையார் பிறந்தாளென்றும் பிறந்து தனது தாய்க்கு ஆறுதல் கூறினதாகவும், (7) ஆதி நாடக மென்றொரு கூத்தாடி பறையரை யிழிவு செய்தும் (8) சகல வஞ்ஞான கதைகளிலும் ஒளவையாரெனுமோர் கிழவி யிருந்தாள் அவளால் பல நன்று விளைந்ததென்றும், (9) ஒளவையா ரெனுமோர் பறைச்சி கூழமுதிரந்து கவிபாடும் வாணியாயிருந்தா ளென்றும், புகழ்ந்து மிகழ்ந்தும் வரைந்து வைத்த கதைகள் யாவும், பார்ப்பார்கள் பௌத்தர்களை யழிக்க இவ்விதம் மாறுபடுத்திய தாகும். இக்காரண காரியங்க ளறிந்தொழுகா தமிழர்கள் வாதவூரார் பெயரிலேயே பதித்துள விருத்தத் தொகைக்கு திருவாசகமென்று நம்பி மோசம் போய்விட்டார்கள். இத்திருவாசகம் எனும் பெயர் நந்தேய இலக்கியமுறைக்கு மாறுபட்ட தென்றும், அம்பிகையம்மனருளியதே யதார்த்த திரிவாசகமென்றும், இவ்வம்மனே நாம் வணங்கும் பூமிதேவியும், வானொளியுமாகு வாள் என்றினியேனு மிதனாலறிவார்களாக. ஸ்ரீ. சிபு.சா. ** முகவுரை** பூர்வகாலத் தென்பரத தேசத்தில் புந்நாட்டை யரசு நடாத்தி வாழ்ந்த சுந்திரவாகு அரசன் பெரும் பேறாக வந்துதித்து பெதும்பை வயதில் புத்த சுவாமியின் திருவுருவத்தை சிரந்தாங்கி, சங்கஞ் சார்ந்து உலகோர்க் கருண்மொழியருளி, உலக நாயகி, தேவமாதா, ஆண்டாள், சரஸ்வதி, உமையவள், திருசெல்வி, பாரதமாதா, ஒளவை பிராட்டி என்று பல பெயர் பெற்ற அம்பிகையம்மன் உமளநகர் சங்க வேம்புமரத்தடியிலமர்ந்து அக்கால கல்வி லக்ஷணப்படி சிறுவர்க்கு இந்திரர் தர்மத்தை எளிய நடையில் உயிர் மெய்வர்க்க மாலை போல் முதல் வாசகம் நூற்றியெட்டு நெறிகளும் அவைகட்கு காப்பாக கடவுள் வாழ்த்து, ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை ஏற்றியேற்றி தொழுவோமி யாமே" என்றும் வரைந்தனர். இவ்வாழ்த்தின் முதலடியிலுள்ள பதங்களே இக்காலத்தி லிந்நூலுக்கு " ஆத்திச்சுவடி" என்று பெயர் விளங்கி வருகின்றது. சைவர்கள் இம்முதல் வாசகத்தை தங்களுடைய தாக்கிக்கொள்ள “ஆத்திசூடி யமர்ந்த தேவனை யேத்தி யேத்தி தொழுவோமியாமே என்றும், ஆத்திமலர்மாலை யணிந்த பேயோடாடி மகன் யானைமுகனைத் தொழுவோம் என்று விரிவுரை யெழுதியும் பிரசுரித்து விட்டார்கள். இந்நூலுள்”இணக்க மறிந்திணங்கு," “வைகறை துயிலெழு” “எண்ணெழுத்திகழேல்” “ஓதுவ தொழியேல்” என்ற வாசகங்களில் எதுகையும் மோனையும் பொருந்தி யிருக்கின்றன இன்னுமற்ற வாசகங்களில் பொருந்தியும் பொருந்தாமலு மிருக்கின்றன. இரண்டாம் வாசகம் : இது தொண்ணூற்றொரு நெறிகளும், இவைகளுக்கு இந்திரன் வணக்கம், “குன்றை வேந்தன் செல்வனடியிணை யென்று மேத்தித் தொழுவோமி யாமே” என்றும் முதல் வாசகம் போல் வர்க்கமாலையாகவும் எதுகைப் பொருந்த அகவலடியென நினைக்க வரைந்திருக்கின்றனர். இக்காலத்தி லிந்நூற் காப்பாகிய கடவுள் வாழ்த்திலுள்ள முதலடி சீர்களால் ’’குன்றை வேந்தன்" எனவழங்கும், இந்த இரண்டாம் வாசகத்தை சைவர்கள் அபகரித்துக்கொள்ள, “கொன்றை வேந்தன் செல்வனடி யிணை யென்று மேத்தித் தொழுவோமியாமே” என்றும், கொன்றைமாலையான் ஈன்ற யானைக் கன்றைத் தொழுவோம், என்றுரை பிறித்தும் மாற்றிவிட்டர்கள். வைஷ்ணவர்களோ! இந்நூலைத் தங்க ளுடையதாக மாற்றிவைக்க “கன்றுமேய்க்குங் கண்ணனடி யிணையென்றுமேத்தித் தொழுவோமியாமே” என்றும், பாரத தூதனாகிய மணிவண்ணனைத் தொழுவோமென்றுரையுடன் கூறி வருகின்றார்கள். இவ்விருவாசகங்களும் அம்மனாலெழுதி யருளவே அவைகளை சமணாசிரியர்கள் பள்ளிப் பிள்ளைகட்கு கற்பித்து வந்தார்கள். இருவாசகங்களும் வழங்கிவருங்காலத்தில், ’சயம்பு" சிற்றரசனை “திவாகரவரசன்” நல்விசாரிணையின்றி தண்டித்து சிறையிலடைப்பித்து வைத்திருக்கும் அநீதியையம்மன் முற்றுமறிந்து வேறொரு வாசகமுரைத்தாள். அது எழுபத்தாறு நெறிகளும் அவைகளுக்கு காப்பாகும், கடவுள் துதி, “வெற்றி ஞானம் வீரன் வாய்மெய் முற்றுமறிந்தோர் மூதறிவோரே” என்று எழுதியருளினார். துதியிலுள்ள முதலிருபதங்களே நூலுக்கு நாமமாக “வெற்றி ஞானம் என்று இக்காலத்தில் வழங்கி வருகின்றது. மதுரை தமிழ் சங்கத்தார்களால் அதிவீரராம பாண்டியன் பாடிய வெற்றி வேற்கை யென்னும் நறுந்தொகை என்ற நவீன பெயரும் அதிவீரராம பாண்டியன் கூறாத”பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரவணற் புதமலர் தலைக்கணிவோமே என்று நரகஜன் ஆகிய யானைமுகன் வணக்கமும், வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன் புகல் நற்றமிழ் தெரிந்த நறுத்தொகைதன்னால் குற்றங்களை வோர் குறைவிலாதவரே என்ற நூற்பயனும் எழுதி யுணர்த்திவிட்டார்கள். இதில் ஒளவையார் கூறிய “மன்னர்க்கழகு செங்கோன் முறைமை” " மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல் வழியே ஏகுக வழியே மீளுக" “துணையோடல்லது நெடுவழிபோகேல்” முதலிய நெறிகளிலும் இன்னம் மற்ற நெறிகளிலும் எதுகை மோனை பொருந்தவும் பொருந்தாமலுமிருக்க எழுதியருளினார். முன்னிரண்டு வாசகங்களுடன் இதனையுஞ் சேர்த்து திரிவாசகமென அக்காலத்திலேயே வழங்கப்பட்டது. ஆதியில் புத்த சுவாமி அருளிய. திரிபிடகமாம் ஆதி வேதத்திற்கு வழிநூலாக திருவள்ளுவ நாயனார் திரிக்குறள் எழுதி இந்திரராம் புத்தபிரான் தர்மத்தை சிறப்பித்தது போல், அவ்வையா ரென்னும், அம்பிகையம்மன் முதல் வேதத்தையும் வழிநூலையும் அநுசரித்து சார்பு நூலெழுதி புத்த தர்மத்தை போதித்துள்ளாள். திரிவாசக மென்பவை மூவகையான வசனங்களை யறிவிக்குமேயன்றி பலபாக்க ளடங்கிய நூலையுணர்த்தாது. இக்காலத்தில் பலவபுத்தர்கள் தோன்றி பல்வகை விருத்தங்களுக் கும் “திருவாசகம்” என்று பெயர் சூட்டி பொய் புகல்வதால், பள்ளிக்கூடப் புத்தகங்களுக்கு முதல் வாசகம், இரண்டாம் வாசகமென்றும் அமிர்தவாசகன் மாணிக்க வாசகன் என்றும் வழங்கும் பெயர்களின் யதார்த்தமுணரவும் சக்தியற்றவர்கள் திருவாசகமே! விருத்தம் என்று தாளங்கள் தட்டி வருகிறார்கள். இத்தாள வோசையைக் கேட்டு மயங்கி, ஒளவையார் அருளிச்செய்த மூன்று வாசகங்களையுங்கண்டு இவைகள் வாசகமா? அல்லது பாசுரமா? என்று சிலர் சந்தேகித்தும் சிலர் பாசுரமென்றும் சிலர் பாசுரமும் வாசகமுமல்லவென்றும் சிலர் பாசுரமே வாசகம் போல் தோன்றியுந் தோன்றாமலிருக்கின்ற தென்றும், சிலர் வாசகப்பா வென்றும் உரைத்துவருகின்றார்கள். சிலர் தெய்வ வாக்கென்றும் அருண்மொழியென்றும் கூறுவர். புத்ததர்மம் சங்கவடைக்கலம் புகுந்து தெய்வமாக விளங்குவோர் நற்போதனைகளையே! தேவ வாக்கென்றும், அருளறவாழியான் பெருவழி யடைந்து கூறலே அருண்மொழி யென்றும் புகலப் படுமேயன்றி வேறல்ல அல்ல. தேவவாக்கும் அருண் மொழியும் இந்திரனாம் புத்தசுவாமி போதனையாகவும், பெளத்தர்களெழுதிய ஐந்திலக்கண வனுசரிப்புமாக இல்லாமல் வேறாகவொருவிதங் காணப்பட்டாலல்லவா? ஏனைய மதத்தோர்கள் கூறும் பொய் தேவ வாக்கும், பொய்யருண் மொழியும் நிலைபெறும், அங்கனமில்லா யித்திமிவாசகத்தை விவேகிகள் உற்று நோக்கல் தகுதியாகும். முற்காலத்தில் தமிழ் பாஷையானது மிக விசாலமாகவுந் தெளிவாகவும் அமரவாசியிலிருந்து தோன்றிவரும் வளர்பிறை போல் ஓங்கி வளர்ந்துக் கொண்டிருந்தது. அக்காலத்தார்கள் பெரும்பாலும் பாவிலக்கணந் தெரிந்தோர்களும் சொல்நெறி யுணர்ந்தவர்களுமாயிருந்ததால் சமணாசிரியர்கள் சிறுவர்க்குக் கல்வியாரம்பிக்குங் காலத்திலேயே எழுத்திலக்கணமும், வாசகாரம்ப காலத்திலேயே சொல்லிலக்கணமும் கற்பிப் பதியல்பாயிருந்தது. இதனால் சர்வ ஜனங்களும் ஒருவித வொலியானந்த முண்டாக வாக்கியப் பிரயோகஞ் செய்து வந்தார்கள். அவைகளை எதுகையென்றும், மோனையென்றும் விளம்புவர். பூரணை வாசியிலிருந்து தேய்ந்து வரும் பிறைபோல் தமிழ் பாஷைக் குறைந்து வருமிக்காலத்திலும் ஓசையானந்தமின்றி பேசுவோர்களைப் பெண்டீர்கள் கேட்டு "என்ன நீர் எதுகை மோனையின்றி பேசுகிறீரே’’ என்று கேட்பது பிரத்தியக்ஷமாயிருந்தால் முற்காலத்திலிதற்குண் டாகிய சிறப்பைப் படிப்பவர்களே தெரிந்துக்கொள்ளலாம். இதனாலேயே ஒளவையார் எதுகை மோனை பொருந்தவும் பொருந்தாமலும், சிறுவர்க்கும் பெரியோர்க்கும் பயன்படுமாறு நீதிவாசக மெழுதியிருக்கின்றாரென்பது அனுபவ வுறுதியாகுமே யன்றி, வேறன்று அன்று. இத்திரிவாசகத்தை பராய மதத் தோர்கள் முன்னச்சிட்டிருப்பதால் தங்கள் கருத்துக்களுக்கிசைய சொற்களையும், உரைகளையும், மாற்றி அச்சிட்டுள்ளார்கள். அவற்றை முற்றும் விலக்கி பூர்வ தர்ம சம்பந்தமாய் இது முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளோம். இந்நூல் வெளியிடும் உத்தேசமாய் தனது சிரமத்தைக் கவனியாது பெரும்பாலும் ஊக்கத்துடன் பொருள் சேகரித்து உதவிய (Q.V.O. Madras Sappers & Miners) பட்டாளத்தைச் சேர்ந்த D.2 கம்பனி அவுல்தார் மேஜர், ம-௱-௱-ஸ்ரீ. எம். இரங்கசாமி உபாசகர் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். கோலார் கோல்ட் பீல்ட் சாம்பியன் ரீப், புத்தகம் 3413 ஸ்ரீ சித்தார்த்தா பிரபவளு வைகாசி மீ புத்தக சாலையார். பௌர்ணமி ஸ்ரீ புத்தாய நம: தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவராகிய பாரதமாதா ஒளவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிச்செய்த முதல் வாசகம் ஸ்ரீலஸ்ரீ க. அயோத்திதாஸ் பண்டிதர் உரை ஆத்திச்சுவடி ** காப்பு** ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை ஏற்றி யேற்றித் தொழு வோமியாமே. ஆத்தி - கல்லாத்தி, சுவட்டில் - நிழலின் கண், அமர்ந்த - வீற்றிருந்த, தேவனை - ஆதிதேவனாம் புத்தபிரானை, யேற்றி யேற்றி - புகழ்ந்து மகிழ்ந்து, தொழுவாம் - வணங்குவாம் யாம் - யாங்களென்றவாறு. திராவிட பாஷையில் கல்லாலம் கல்லாத்தி யென்று வழங்கி வந்த மரப்பெயர், அரசன் மரத்தடியில் வீற்றிருக்கின்றனர் வீற்றிருக்கின்றாரென்னுங் காரியப் பெயர்கொண்டு அரச மரமென வழங்கலாயிற்று. கல்லாலங் கல்லாத்தியென்று வழங்கிவந்தப் பெயர்களை தாயுமானவர்க் கூறியுள்ள “கல்லாலடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே” எனும் வாக்கியத்தினாலும் மணிமேகலையிற் கூறியுள்ள ஆலமர்ச் செல்வன் மதன்விழாக்கோல் கொள் எனும் வாக்கியத்தினாலும். ** அருங்கலைச் செப்பு** ** கல்லாலப்பத்து** ஆத்தியடியமர்ந்து ஆகமங்களாய்ந்து சாத்தன மக்களித்த சீர். எனும் செய்யுளாலு மறிந்துக் கொள்ளுவதன்றி தேவனென்னுமொழி ஆதி தேவனையே சிந்தித்துள்ள தாதலின் அவ் வாதி தேவனென்னும் பெயர் புத்த பிரானுக்குரிய வாயிர நாமங்களிலொன்றென்பதை அடியிற் குறித்துள்ள தெய்வப் பெயர்ச்செய்யுளாலு மறிந்துக் கொள்ளலாம். ** பின்கலை நிகண்டு** ** தெய்வப் பெயர் தொகுதி 1, பாட்டு 17.** தருமராசன் முனீந்திரன் சினன் பஞ்ச தாரைவிட்டே யருள் சுரந்த வுணர்க் கூட்டுந் ததாகதன் ஆதிதேவன் விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன் அரசு நீழலிலிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன். இத்தகைய கலைவாசகத்தை தமிழ் மொழியாலமைக்க வாரம்பித்த ஞானத்தாய், புத்தபிரானாம் ஆதிதேவனை காப்புக்கு முன்னெடுத்த காரணம் யாதென்பீரேல் உலக சீர்திருத்த மக்களுள் ஆதி பகவனெனத் தோன்றி தமிழ் பாஷையையி யற்றி அதனிலையால் சத்திய தன்மத்தைப் பரவச்செய்து தமிழர் பெருமானெனக் கொண்டாடப்பெற்ற வராதலால் தான் கூறியதமிழ் வாசக நூலுக்குத்ததாகதரையே காப்பாக சிந்தித் துள்ளாள். ** பின்கலை நிகண்டு, தொகுதி 12. பாட்டு 139** காப்புக்கு முன்னெடுக்குங் கடவுடான் மாலேயாகும் பூப்புனை மலரின் செல்வி புனைபவனாத லானும் காப்பவ னாதலானுங் கதிர்முடி கடகத்தோடு வாய்ப்பதா மதாணிபூணூல் வரிசையிற் புனைதலானும். ** வீரசோழியம்** ஆவியனைத்துங் க,ச,த,நப,ம,வ், வரியும் வவ்வி லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லாவுலகு மேவிய வெண்குடை செம்பியன் வீரரா சேந்திரன்றன் நாவியல் செந்தமிட் சொல்லின் மொழி முதனன்னுதலே. ** யாப்பருங்கலக்காரிகை** திறந்திடு மின்றீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்றெரிதா மேதம் உறந்துயர்கோன் தண்ணார் மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாறக் காணக் கதவு. ** நூல்** ** 1. அறன் செயல் விரும்பு** அறன் - அறக்கடவுளாகும் புத்தபிரான், செயல் - செய்கை களாம், நற்காட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கருத்து நல்லமைதி இவைகளை விரும்பு ஆசைக்கொள்ளுமென்பதாம். இச்செயலானது ஏழைகள் முதல் கனவான்கள் வரையிலும், பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரையிலும், பிணியாளர்கள் முதல் சுகதேசிகள் வரையிலுஞ் செய்யக்கூடிய பொதுதன்மமாதலின் இவற்றை முதலில் விளக்கியுள்ளாள். அறனென்னும் வல்லின றகர மமைந்த தெய்வப் பெயர் உண்டோ வென்பாருமுண்டு. ** சீவகசிந்தாமணி** கொடு வெஞ்சிலைவாய்க் கணையிற் கொடிதாய் நடு நாளிரவின் னவைதான் றிருமா னெடு வெண்ணிலவின் னிமிர்தேர் பரியா தடுமா ரெழினின்றற னேயருளே. இதற்காதரவாய் அறனை மறவேலென்னும் - வாசக முமுண்டு. அறக்கடவுளின் செயலாகும் அஷ்டாங்க மார்க் கத்தை பற்றுவோர் பாசபந்த பற்றுக்கள் யாவையு மறுத்தற்குப் பாதையதுவேயாதலின் அறன் செயலாம் பற்றினை விரும்பு ஆசைக் கொள்ளுமென்றாள். ** திரிக்குறள்** பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றை பற்று கபற்று விடற்கு. அறன், அறமென்னும் மொழிக்கு யீகையென்னும் பொருளையேற்பதாயின் இல்லறந் துறவறம், நல்லறம், பொல்ல றம், மெய்யறம், பொய்யறமாகுமிம் மொழிகளுக்குயெப் பொருள் பொருந்தும். செல்வப் பொருளுள்ளவனுக்கு யீகை யென்னும் மொழியேற்குமேயன்றி, செல்வப் பொருளில்லாதவனுக்கு யீகையென்னுமொழி பொருந்தாவாம், ஆகலின் அறமென்னு மொழி சகலருக்கும் பொருந்தும் சத்தியதன்ம மொழியேயாம். ** 2. ஆறுவது சினம்.** ஆறுவது - தணியத் தகுவது, சினம் - கோபமேயாம். அறன்செய லென்னும், பற்றற்றான் பற்றை விரும்பக்கூறி, உடனே கோபாக்கினியை தணிக்க வேண்டுமென்று கூறியக் காரணம் சகல நற்கிருத்திய செயல்களையுங் கெடுக்கக் கூடியவை சின மென்னுங் கோபமே யாதலின் அறவாழியான் செயலை விரும்புவோர், அகக்கொதிப்பாகுங் கோபத்தை யாற்ற வேண்டும். தன்னை சகல தீங்குகளினின்றுந் தப்பித்துக் கொள்ள யெண்ணமுடையவன் தன்னிடத் தெழுங் கோபத்தைக் காக்க வேண்டுமென்பதாம். ** பாம்பாட்டி சித்தர்.** மனமென்னுங் குதிரையை வாகனமாக்கி மதி யெனுங் கடிவாளம் வாயிற் பூட்டி சின மென்னுஞ் சீனிமேல் சீரா யேறி தெளிவுடன் சார விட்டாடாய் பாம்பே. ** வேமன்ன சதகம்** கோபமுன்ன நரக கூபமுஜெந்துனு கோப முன்ன குணமு கொஞ்ச மகுனு கோப முன்ன பிரதுகு கொஞ்சமைபோவுனு விஸ்வதாபிராம வினரவேமா ** 3. இயல்வதுகரவேல்.** இயல்வது - உன்னால் செய்யத் தகுவது ஆகிய வித்தையை, கரவேல் - ஒளிக்காதே. உனது அறிவின் விருத்தியினாலும், கேள்வியினாலும், விடாமுயற்சியினாலும், இயல்பினாலும் உன்னால் தெரிந்து கொண்ட வித்தையை நீ மட்டிலும் அனுபவித்து சுகியாமல் ஏனையோரும் அவ்வித்தையைக் கற்று சுகிக்கும் வழியைக் காட்ட வேண்டுமென்பதாம். இயல்பில் கண்டடைந்த வித்தையை யேனையோர்க்குதவாமல் ஒளிப்பதால் உள்ள வித்தை பிறர்க் குதவாமல் விருத்தி கெடுமென்பதாம். இதுவே அன்பு மிகுத்தவர்களின் செயலாகும். ** அறநெறி தீபம்.** ஐயெனத் தாம் பெருகுவதும் அறிவினால் விளங்குவதும் உய்தவங் கேட்டுணர்வதுவும் உணர்ந்தவற்றைப் பிர ருளத்திற் செய்தவ நன்றாக்குதலுஞ் சிறந்தார் சொற்றேருதலும்னு மெய்யன்பை யுள்ளத்தில் மேவியவன் பயனாகும். ** 4. ஈவதை விலக்கேல்.** ஈவதை - ஒருவருக்கொருவர் கொடுப்பதை, விலக்கேல் - தடுக்காதீ ரென்பதாம். மக்கள் ஒருவருக்கொருவர் உபகாரங் கருதியே சேர்ந்து வாழ்பவர்களா யிருக்கின்றார்கள். அத்தகைய வுபகாரச் சேர்க்கையை ஒருவருக்கொருவர் தடுத்து கொடுப்பதால் மநுகுல விருத்திக் கெட்டுப்போமென்பதாம். உனக்குள்ள வுலோப குணத்தை யெதிரிக்குங் கற்பித்து உனக்குள்ளக் கேட்டில் எதிரியையுஞ் சேர்த்துக் கொடுத்தல் இழிவேயாகும். கொடுக்கும் ஈகையுள்ளோன் குணத்துடன் கொடுக்கும் லோபியின் குணங் கலக்கு மாயின் பொன்னுடன் பித்தளையும், சோற்றுடன் மண லும், பாலுடன் நீருங் கலந்தது போல் அதன் பெருந்தகைய குணமுஞ், சிறந்த மதிப்பும், பரந்த கீர்த்தியும் நாசமடைந்துப் போம். ஆதலின் ஒவ்வோர் புருஷனும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமென்னும் நான்கிலும் நிலைத்தல் வேண்டும். அத்தகைய வுயர்ந்தோர்மாட்டே வுலகமுமென்னப்படும். எழியோர்க் கீவதை விலக்கு வோனின் குணா குணகதி ** விவேகசிந்தாமணி** நாய் வாலை யளவெடுத்துப் பெருக்கித் தீட்டி நற்றமிழை யெழுத வெழுத்தாணியாமோ பேய் வாழுஞ் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளி பெரிய வினக் கேற்றி வைத்தால் வீடதாமோ தாய் வார்த்தைக் கேளாத ஜக சண்டிக் கென் சாற்றிடினு முலுத்தகுணந் தவிரமாட்டான் ஈயாரை யீயவொட்டா னிவனாமீயா னெழு பிறப்பினுங் கடையா மிவன் பிறப்பே. பற்பல யிடுக் கண்களினால் இழிய நிலைமெய் யடைந் தவர்களுக்கும் யாதொரு தொழிலுஞ் செய்ய சக்தி யற்றவர் களுக்கும் ஈதலே பேருபகாரம் அவைகளைத் தடுத்தலே இழிய நிலையைத் தரும். ** விவேகசிந்தாமணி** இடுக்கினா விழிமெய் யெய்தி யிரப்பவர்க்கிசைந்து தானங் கொடுப்பதே மிகவு நன்று குற்றமே யின்றி வாழ்வார் தடுத்ததை விலக்கு வோர்க்குத் தக்க நோய் பிணிகளுண்டாய் உடுக்கவுந் துணியுமற் றுண்ணாஞ்சோ றுதவாதாமே. இத்தகைய யீகையைவீணருக்குஞ், சோம்பேறிகளுக்கும்; பொய்யர் களுக்குங் கொடுப்பதானால் ஈவோர்களுக்கே யிடுக் கணுண்டாய் இழிய நிலைபெற வேண்டும் ஆதலின் பாத்திர மறிந்து பிச்சையிடுவதே பாக்கியம் பெருக்க வழியாகும். ** குறுந்திரட்டு** பொய்யைச் சொல்லி பிதற்றிடும் பேயர்க்கும் அய்ய மேற்கவே அஞ்சாமிலேச்சர்க்கும் துய்ய ஞான சுகுண செல்வாதியர், இய்யுந்தான மிடுக்கத்திழுக்குமே, ஊனமின்றி யுருபெருத்தோருக்குங் கானமற்றுமெய் காணாகசடர்க்கும் மோன ரென்னு முழுமோசக்காரர்க்குந் தான மீவது தப்பரையாகும்மே. ** 5. உடையதை விளம்பேல்.** உடையதை - உன்னிடத்துள்ள திரவியத்தை, விளம்பேல் - பிறருக்குறையாதே. இடம்பத்தினால் உனக்குள்ள ஆஸ்தியை பிறரறியக் கூறுவாயாயின் உன்னை யொத்த திரவியவான் அவற்றைக் கருதமாட்டான். வன்னெஞ்சனுங் கள்ளனு மறிவார்களாயின் உன்னை வஞ்சித்துங் களவாடியுந் துன்பப்படுத்துவார்கள் ஆதலின் ஆட்கொல்லியாகும் உனக்குள்ள திரவியத்தை அனைவருமறியக் கூறுவாயாயின் அவ்வாட்கொல்லி யென்னுந் திரவியமே உன்னைக் கொல்லுமோராயுதமாகிப்போம். இது கொண்டே உள்ள திரவியத்தை உடன் பிறந்தானுக்கும் உரைக் கலாகா தென்பதோர் பழமொழி. உனக்குள்ள திரவியத்தை யுலகோ ரறியக்கூறி உலோபியாக விளங்கி வுன்மத்தனா வதினும் உனக்குள்ள திரவியத்தைக் கொண்டு உலக வுபகாரியாக விளங்குவாராயின் உன்திரவியமும் பெருகி உன் ஆயுளும் வளர்ந்து கீர்த்தியும் அழியாமல் நிலைக்கு மென்பதாம். ** காக்கை பாடியம்.** அறநெறி நின்று வாயுளை வளர்த்து பிறருபகாரம் பேணிப் பெருக்கி நிறைமொழி மாந்தரெனு நிலை நிற்கில் துறந்தவர் கீர்த்தித் தொடர்புமீ தாமே ** 6. ஊக்கமது கைவிடேல்.** ஊக்கமது - உனக்குள்ள முயற்சியில் கைவிடேல் - சோர்வை யடையாதே. வித்தையிலேனும் கல்வியிலேனும் ஊக்கமாயிருந்து அவற்றை கைவிடுவதாயின் எடுத்த முயற்சி யீடேறாமற்போம் ஆதலின் ஊக்கத்தினின்று நடாத்தியச் செயலைக் கைவிடுவ தானால் வீண் முயற்சியேயாம். எடுத்த முயற்சியைக் கைவிடாது சாதித்துக் கைகண்ட தொழில்களாகும் இரயில்வே, டிராம்வே, டெல்லகிராம் கிராம் போன் முதலியத் தொழில்கள் யாவும் கைவிடா ஊக்கத்தினால் விருத்தி பெற்றக் காட்சிகளென்னப் படும். நாம் இத்தகைய வித்தியா விருத்தியையும், புத்தியின் விருத்தியையும், ஈகையின் விருத்தியையும், சன்மார்க்க விருத்தியையுங் கைவிடுத்து பொய்க் குருக்களால் போதிக்கும் பொய் புராணக் கட்டுக் கதைகளை நம்பி சாமி கொடுப்பார் சாமி கொடுப்பாரென்னும் ஊக்கமற்ற சோம்பேறிகளாய் சோற்றுக்கு வழியற்று பிச்சை யிரந்துண்பதே பெரும் வித்தியா விருத்தி யென்றெண்ணிப் பாழடைவோமென்னும் வருங்கால சம்பவமுணர்ந்த ஞானத்தாய் உருக்க வலிமேயாம் ஊக்கச் செயலை வுறுதிபெறக் கூறியுள்ளாள். ** திரிக்குறள்** தெய்வத் தாலாகா தெனினு முயற்சிதன் மெய்வருந்த கூலிதரும். ** அருங்கலைச் செப்பு** வாழ்விப்ப தெவரென மயங்கி வாழ்த்துதல் பாழ்பட்ட தேவமயக்கு. ** 7. எண்ணெழுத்திகழேல்** எண் - எட்டென்னுங் கணிதாட்சரமாகவும் எழுத் தென்னும் அக்ராட்சரமாகவும் விளங்கும் வரிவடிவை, இகழேல் - அவமதியாதே என்பதாம். அகர அட்சரமானது சகல வட்சரங்களுக்கும் ஆதியாய்த் தோன்றி அறிவை வளர்த்து ஞானக் கண்ணாகவும் விளங்குவது அதுவேயாதலின் அதனை அவமதியாதே என்று கூறியுள்ளாள். ** ஒளவையார் ஞானக்குறள்** ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன் விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீரறிவு. அகரத்தின் சுழியானது அங்கத்தின் புருவமத்திய சுழிமுனையினின்று முதுகின் தண்டெலும்புள் அளாவி உந் நிதியில் முனை கூடி பூணுநூல் அணைவதுபோல மார்புட் சென்று கண்டத்தில் கால்வாங்கி நிற்கும் இதையே தாயின் வயிற்றில் குழவி கட்டு பட்டிருக்குங்கால் மூச்சோடிக் கொண்டிருக்கும் பிரமாந்தின மென்னும் குண்டலி நாடியென் றும் குண்டலி சத்தியென்றும் குறியெழுத்தென்றுங் கூறுவர். இத்தகைய எட்டெழுத்தாம் அகாரட்சரத்தை கண்டத்தி லூன்றி குண்டலியை நிமிர்த்தி குணங் குடிக்கொள்ளும் வழிக்கு ஆதியட்சரமாதலின் நாம் எப்போதும் வாசித்து வரும் அகர எழுத்துத் தானேயென்று அவமதித்து அறிவின் விருத்தியை விட்டு விடாதீர்களென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ஆதியட்சரமாம் அகாரமே அறிவின் விருத்திக்குக் காரணமாகி உகாரமாம் உண்மையொளிகண்டு மகாரமாம் காமவெகுளி மயக்கங்களற்று சிகாரமாம் அன்பில் நிலைப்பதே நிருவாண சுகமாகும். ** சிவவாக்கியர்** அகார காரணத்துளே அநேகநேக ரூபமாய் உகார காரணத்துளே வொளிதரித்து நின்றனன் மகார காரணத்தின் மயக்கமற்று வீடதாம் சிகார காரணத்துளே தெளிந்ததே சிவாயமே. ** ஞானக் கும்மி** கட்டுப் படாதந்த வச்சுமட்டம் - அதின் காலே பன்னிரண் டாகையினால் எட்டுக் கயிற்றினால் கட்டிக் கொண்டால் அது மட்டுப் படுமோடி ஞானப் பெண்ணே. எட்டென்னும் கணிதாட்சரமாகவும், எழுத்தென்னும் இலக்கிய முதலாட்சரமாகவும், விளங்கும் குறியெழுத்தாம் அகராட்சரத்தை அவமதியாதே என்பது அறிவுறுத்தும் பலனாம். ** ஒளவையார் ஞானக்குறள்** கூடகமானக் குறியெழுத்தைத் தானறியில் வீடகமாகும் விரைந்து. இத்தகைய சிரேஷ்டமாம் அகராட்சரத்தை ஒவ்வொரில் லந்தோரும் வழங்கி வருதற்கு அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி, அக்கா, அத்தை, அத்தான், அப்பி என்று அழைப் பிலும் உச்சரிக்கும்படி செய்திருக்கின்றார்கள். ** 8. ஏற்பதிகழ்ச்சி** ஏற்பது - ஒருவர் சொல்லும் வார்த்தையை விசாரிணை யின்றி ஏற்றுக்கொள்வது, இகழ்ச்சி - இழிவைத்தரு மென்பதாம். அதாவது ஒரு மனிதன் முன்னில் வேறொருவன் வந்து நான் பிரமா முகத்திலிருந்து வந்தவன், நானே பெரிய சாதியென்று கூறுவானாயின், அவன் வார்த்தையை மெய் யென்று ஏற்றுக் கொண்டு யாதொரு விசாரணையுமின்றி அவனைப் பெரிய சாதியோனென்றுயர்த்திக்கொண்டு தன்னைத் தாழ்ந்த சாதியாக வொடுக்கி சகலத்திலும் முன்னேறு வதற்கில்லாமல் ஒடுங்கி தானே சீர்கெட்டு இழிவடைந்து போகின்றான். எவ்வகைய தென்னில் – யதார்த்த பிராமணர் களுக்குரிய அறுவகைத் தொழிலாம் ஓதல், ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்பவற்றுள் அந்தணர்கள் ஏற்றலும் ஒரு தொழிலாகும். அரசன் வரியிறை யேற்றலும் ஒரு தொழிலாகும். ஆதலின் இத்தகைய ஏற்பு இழிவடைய மாட்டாது. சுயப்பிரயோசன முள்ளோர் சொற்களை விசாரிணையின்றி ஏற்றுக் கொள்ளுவதே இழிவைத் தருமென்பது அனுபவக் காட்சியாகும். ** 9. ஐயமிட்டுண்.** ஐயம் - புலன் தென்பட வொடுங்கி னோராகும் தென்புலத் தோர்க்கு, இட்டு - வட்டித்துள்ள அன்னத்தை முன் புசிக்கக் கொடுத்து உண் - நீயும் உண்ணுமென்பதாம். பூர்வமித்தேச மெங்கும் புத்த தர்மம் நிறைந்திருந்த காலத்தில் பாசபந்தத்திற்கையமுற்று பற்றறுக்க முயலும் சமண முநிவர்களாகும் தென்புலத்தோர் ஒருமடத்தை விட்டு மறு மடத்திற்குப் போவதியல்பாம். அவற்றை யுணர்ந்துள்ள இல்லறத்தோர் தாங்கள் புசிப்பதற்கு முன்பு வெளிவந்து, அறஹத்தோ, அறஹத்தோ என்று ஐம்புல னொடுக்க வைய மேற்போரை அழைப்பார்கள். அவர்கள் வந்தவுடன் வட்டித்துள்ள வன்னத்தை முன்பு புசிக்கக் கொடுத்து, பின்பு தாங்களும் உண்பது. ஐயமிட்டுண்ணென்னும், போதனா வொழுக்கத்தைப் பின்பற்றியச் செயலேயாம். ** சிலப்பதிகாரம்** அறவோர்க்களித்தலும் அந்தண ரோம்பலும் துறுவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வெண்ணையும். ** நீதிவெண்பா** தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க லென்னுமிவ ரின் புறத்தாலுண்டலினிதாமே - அன்பிறவே தக்கவரை யின்றித் தனித்துண்ண றானிகமீன் கொக்கருந்த லென்றே குறி. * - இத்தகையாய் பாசபந்தத்திற்கு ஐயமுற்று பற்றறுக்க முயலும் பெரியோர்களுக்கு இட்டுண்பதே பேருபகார மாதலின் ஞானத் தாய் முதியோர் கருத்தைக் குறுக்கல் விகாரப் படுத்தி ஐயமிட்டுண்ணென்று கூறியுள்ளாள். ** 10. ஒப்புரவொழுகு** ஒப்புர - உள்ளத்திற் சாந்தத்தை நிறப்பி முகமலர்ச்சியுடன், ஒழுகு - இல்வாழ்க்கையில் நடவுமென்பதாம். ஒப்புரவினின்று வார்த்தையாடலும், ஒப்புரவினின்றுண வளித்தலும், ஒப்புரவினின்று உள்ளந்திருத்தலுமே உலக சிரேஷ்டமாகக் கொள்ளுதலான் ஒழுக்கத்திற்குதவி ஒப்புர வென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். விவேகசிந்தாமணி ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மெய்ப்பேசி உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர்தமாகும் முப்பழ மொடுபாலன்னம் முகங்கடுத்திடுவராயின் கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே. ஒப்பு - மனப்பூர்வமாய், உரவோர் - அறிவு மிகுத் தோரா கும், சமண முநிவர் பால், ஒழுகு - நெறிபிறழாது வாழக்கடவா யென்பது மோர் பாடபேதம். திரிபிடகத்தையும், திரிக்குறளாம் முப்பாலையுந் தழுவியதே திரிவாசக மாதலின் நீதிநெறி வொழுங்குகளையே புதைப் பொருளாக வமர்ந்துளதாகும். ** 11. ஓதுவதொழியேல்** ஓதுவது - அறிவைப் பெருக்குங் கலை நூற்களை வாசிப் பதில், ஒழியேல் - நீங்கிவிடாதே என்பதாம். ஓதலும், ஓதிவைத்தலும், கற்றலுங் கற்பித்தலுமாயவை கலை நூற்களே யாதலின், அவற்றை யோதுவதினின்று ஒழியேலென வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** அறநெறிச்சாரம்.** எப்பிறப் பாயினு மேமாப் பொருவதற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை - அப்பிறப்பில் கற்றலுங்கற்றவை கேட்டலுங் கேட்டதன்கண் நிற்றலுங் கூடப் பெறின். கலை நூற்களையே கற்க வேண்டு மென்னுங்காரணம் யாதெனில் சிற்றறிவின் விர்த்தியால் வித்தியா விருத்திக ளோங்கி உலக வாழ்க்கை சிறப்படையவும், பேரறிவின் விர்த்தி யால் பூரணமுற்று சுகவிருத்தியடைவதற்குமேயாம். நுண்ணிய வறிவை விருத்தி பெறச்செய்யுங் கலைநூற்கள் ஓதுவதை ஒழியேலென்பது கருத்தாம். இதனையனுசரித்தே விவேக மிகுத்தோர் "கண்டு படிப்பதே படிப்பு மற்ற படிப்பெல்லாந் தொண்டு படிப்பென்றறி’’ யென்றுங் கூறியிருக்கின்றார்கள். ** 12. ஒளவியம் பேசேல்.** ஒளவியம் - ஒருவருக்கொருவர் பொறா மெயையுண்டு செய்யும் வார்த்தையை, பேசேல் - மறந்தும் பேசாதே என்பதாம். உலகத்திற்றோன்றியுள்ள மக்கள் வாழ்க்கைத் துணையாய் ஒருவருக் கொருவர். நெருங்கி வாழ்கவேண்டுமென்பது நீதிநூற் சம்மதமாதலின் அத்தகைய சேர்க்கை வாழ்க்கையில் ஒருவர்க் கொருவர், பொறாமையை யுண்டு செய்யத்தக்க வார்த்தைகளைப் பேசி பொருந்தியுள்ள அன்பைக் கெடுத்து விரோதத்தைப் பெருக்கி வாழ்க்கைத் துணையைப் பிரித்துக்கொள்ளாதே என்று விளக்கியுள்ளார். ** அறநெறி தீபம்.** அவ்வியமே கூறி மிகுவன்பினிலை மாற்றுதலுஞ் செவ்விய வுள்ளத்தினிடந்தீங்கு நினைவூட்டுதலும் பவ்விப் பிறர்தாரமனைபற்றி மனமோடுதலும் கவ்விய சுணங்கன் படுங்காட்சியதன் பயனாகும். ** 13. அஃகஞ் சுருக்கேல்.** அஃகம் - எக்கால மிருந்த போதினும் குறைந்து அழியக் கூடிய தேகத்தை, சுருக்கேல் - நீயே வொடுக்கி சுகங்கெடாதே என்பதாம். தேகமானது பாலதானம், குமரதானம், அரசதானமென வளர்ந்து மூப்புதானம், மரணதான மெனத்தேய்ந்துக் குறைந்து சீர்க்கெடுவதியல் பாதலின் குமர, அரச தானங்களையே தேய்த்துக் குறைப்பதானால் அவ்விருதானங்களையே மூப்புதான மென்னும் பெயர் பெற்று மரணத்திற் காளாக்கி விடுமென் பதாம். மக்களுக்குள்ள ஆயுள் வருடம் பதினாரைப் பாலதான மென்றும், வருடம் முப்பதை குமரதான மென்றும், வருடம் நாற்பத்தைந்தை அரசதானமென்றும், வருடம் எழுபதை மூப்புதானமென்றும், வருடம் - நூற்றை மரணதான மென்றும் வகுத்திருக்கின்றார்கள். இத்தகைய அழிவுக் குரிய ஆயுளா மஃதை குமரதானத்திலேயே குறைத்து சீர்கெடுப்பதானால், அக் குமரதானமே மூப்புதான நிலைப்பெற்று மரணத்திற் குள்ளாக்கு மென்பது கருத்து. ** அருங்கலைச்செப்பு இழிவொடுக்கப்பத்து** சோற்றைக் குறைத்து சொரூபத்தை தானடக்கல் மாற்றான் மதியென்றுணர் ஊனைச்சுருக்கி வுடம்புருக்கித் தானிருத்தல் பேணப்படுமாம் பிழை. கூற்ற னுடம்பின் குறிப் பறியாதே குறைத்தல் சீற்றச் சிறை யென்றறி நாதனொடுங்கினனவழிந்த முற்றுறவைப் போத முணர்ந்து புணர். ** 14. கண்டொன்று சொல்லேல்.** கண்டொன்று - கண்ணினாற் பார்த்த வொன்றைவிட்டு, சொல்லேல் - மற்றொன்றைச் சொல்லாதே என்பதாம். கண்ணினாற் பார்த்த தொன்றிருக்கக் காணாத மற்றொன்றை சொல்லுவதானால் அதைவிடப் பெரும் பொய் வேறில்லை யென்பதாம். ஆதலின் கண்ணினாற் கண்டதை விட்டு மற்றொன் றைக் கூறாதே யென்று வற்புறுத்தி கூறியுள்ளாள். ** விவேகசிந்தாமணி** மெய்யதைச் சொல்வா ராகில் விளங்கிடுமேலு நன்மெய் வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவராவர் பொய்யதைச் சொல்வராகிற் போஜன மற்பமாகும் நொய்யவ ரிவர்களென்று நோக்கிடா ரறிவு ளோரே. ** 15. ஙப்போல் வளை.** ஙப்போல் - தன்னைப் போல, வளை - மற்றவர்களையுஞ் சூழ வாழ்க்கைச் சுகந்தருவா யென்பதாம். இல்வழ்க்கையில் தன் சுகத்தை மட்டிலுங்கருதி வளைந்து, ஏனையோர் சுகத்தைக் கருதாது அகற்றி வாழும் வாழ்க்கையில் தனக்கு சுகங்கெடுமாயின் ஏனையோர் அச்சுகக் கோட்டைக் கருதாது விலகி நிற்பார்கள் ஆதலின் இல்வாழ்க்கையில் வளையாபதியாய் நிற்றல் அவலோகிதர்கட் செயலும், சுற்றத் தோருடன் வளையும் பதியில் வாழ்தல் லோகயித செயலுமாகும். ** அறநெறிச்சாரம்** செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப் பல் கிளையும் வாடாமற் பார்த்துண்டு - நல்ல தான மறவாத தன்மெயரே லஃதென்பார் வானகத்து வைப்பதோர் வைப்பு. ** விவேக சிந்தாமணி** தன்மானங் குலமானந் தன்னைவந்தே யடைந்தவர்க டங்கள் மானம் என்னாகி லென்னவல்ல லெல்லவருஞ் சரியெனவே யெண்ணம் போந்து நன்மானம் வைத்தெந்த நாளுமலர் தங்களுக்கு நன்மெய்செய்வோர் மன்மானி யடைந்தோரை காக்கின்ற வள்ளலென வழுத்துவாரே. ** 16. சனி நீராடு.** சனி - உலோக ஊற்று, நீர் - நீரில், ஆடு - தேகம் முழுவதுமழுந்த குளித்தெழூஉம் என்பதாம். அதாவது, பாலி பாஷையில் சனி என்னு மொழிக்கு இருளென்றும், சனிமூலை என்னு மொழிக்கு வடகிழக்கென்றும், சனிபிந்து, என்னு மொழிக்கு நீலக்கல் லென்றும், சனி நீரென்னு மொழிக்கு உலோக வூற்று, ஜனிக்கும் நீர் தீர்த்த மென்றும், கூறியுள்ளபடியால், மூலபாஷையை முற்று முணர்ந்த மாதவி உலோக ஊற்றுக்களாந் தீர்த்த மாடுதலினால் தேகத்திலுண்டாகும் சருவரோக நிவர்த்திக்கும் ஓடதி மூலமாகும். சனி நீரில் விளையாடுங் கோளென்று கூறியுள் ளாள். - ஜனி - ஜனித்தல், உற்பவம், ஊற்று என்பவைகளொரு பொருளாகும். இந்த வலோக ஊற்றாம் சனி நீரின் குணா குணத்தை உலக நாதனே தனது சங்கத்தோருக்கு விளக்கியுள்ளதை திருவேங்கடமென்னுந் திருப்பதியிலும், சீன தேசத்தைச் சார்ந்த கொரியாவென்னும் நாட்டிலும் தீபகற்பமென்பவற்றுள் ஓர் லோக ஏற்றுள்ளதை நாளது வரையிலுங் காணலாம். சருவாங்க சவரஞ் செய்து சனி நீருள் மூழ்குவதினால் சர்வரோக நிவர்த்தி யுண்டா மென்பது சரக சாஸ்திர மூலபாடம். ** சூளாமணி** ஆங்க வேங்கடஞ் சேர்ந்தபினையகா ணீங்கி வெங் கடுங்கானகத் தீடென வேங்கு நீர்கடல் வண்ணலுக் கின்னனாம் வீங்கு வேண்டிரை வண்ணன் விளம்பினான். ** சீவக சிந்தாமணி** தீரா வினைதீர்க்கும் தீர்த்தந் தெரிந்துய்த்து வாராக் கதியுரத்த லாமன்றானியாரே வாராக் கதியுரைத்த வாமன் மலர்துதைந்த காரார் பூம்பிண்டி கடவுணீயன்றே. எள் நெய் கண்டு பிடித்த காலம் ஆயிர வருஷங்களுக்கு பிந்தியும், கானிஷ்காவரசனுக்கு முந்தியது மாகும். இந்திய மாதா என்னும் அம்பிகையம்மன் வாசக நூலியற்றிய காலம் ஆயிரத்தி யைந்நூறு வருஷங்களுக்கு மேற்பட்டதாகும். ஆதலின் எள் நெய் தேய்த்து தலைமுழுகென்பது வாசக நூலின் காலவரைக்குப் பொருந்தாது. இன்னும் சகல தேச மக்களுக்கும் எண்ணெய் ஸ்நானம் பொருந்தாதென்பதுந் திண்ணம். ** 17. ஞயம்படவுரை** ஞயம் - நியாயம், பட - இதயத்தி லூன்றும் படி, உரை - சொல்வாயென்பதாம். நீர் ஓதும்படியான நீதிநெறி யமைந்த வாக்கியங்கள், எதிரியின் உள்ளத்திற்பட்டு உணரும்படி உரைக்க வேண்டு மென்பது கருத்தாம். ஓர் நியாயமுள்ளோன் கள்வனை நோக்கி அன்னியர் பொருளை அபகரிக்காதே என்பானாயின், அக்கள்ளன் நியாயத்தை யுட்கொள்ளாது கோபமீண்டு நீர் களவாடாயோ? என்பான். அதே நியாயத்தைக் கள்வனை நோக்கி அப்பா நீவீர் மிக்க கஷ்டத்துடன் சம்பாதித்தப் பொருளை, மற்றொருவன் அபகரித்துக் கொள்வானாயின், உனக்கு பொருள் மீதுள்ள அவா விடுமோ? உன் மனம் ஆறுதலடையுமோ? என்றால், விடாது ஆறுதலுமடையாது என்பான். மீண்டு மவனை நோக்கி, அதுபோல் நீயும் அன்னியன் பொருளை அபகரியாதிருப்பது அழகன்றோ ? வென்பானாயின், அழகென்றும் சரியென்றும் தன துள்ளத்திற்பட்டு களவு தொழிலை யகற்றுவான் ஆதலின் ஒதும் நியாயமானது ஒவ்வொருவருள்ளத்திற் படும்படி யுரைக்க வேண்டு மென்பதாயிற்று. ** திரிக்குறள்** நயனின்று நன்றி பயக்கும் பயனின்று பண்பிற் றலைபிரியாச் சொல். ** 18. இடம்படு வீடிடேல்** வீடு - மனைக்கோலுங்கால், இடம் - அதனுள் அமையு மில்லம், படு - வீணே கெடும்படியாக, இடேல் - அமைக்காதே என்பதாம். வீண் டம்பத்தினால் வீட்டைப் பெருக்கக்கட்டி அதற்குத் தக்க செலவு செய்யாவிடினும் இல்லம் பாழ்படும். அதனை யாளும் மக்களில்லாவிடினும் பாழ்ப்படும், என்பது கருத்தாம். இதனை யநுசரித்தே ’சிறுகக்கட்டி பெருக வாழ்க வேண்டும் என்பதும் ஓர் பழமொழியேயாம். ஆங்கிலேயர்கள் பெருகக்கட்டிப் பெருக வாழ்கின்றார்களே அவ்வில்லம் படுவதற் கேதுவில்லை. யோமென்பாருமுண்டு. கனத்தின் பேரில் வளைவென்பது போல் வரவுக்குத் தக்க செலவு செய்யுங் கனவான்களுக்கு அஃது பொருந்துமேயன்றி செலவிற்கே போதாத வரவுள்ள ஏழைகளுக்குப் பொருந்தாவாம். உலகத்தில் நூறு கனவான்க ளிருப்பார்களாயின் லஷம் ஏழைகளிருப்பார்க ளென்பது திண்ணம். ஆதலின் பகவனது சத்ய தர்மத்தைப் பின்பற்றிய சங்கத்தோர்கள் யாவரும் தங்கள் சீர்திருத்த போதங்களை செல்வமற்றோர்க் கூட்டி சிறப்புப் பெறச் செய்வதியல்பாம் வீதியிற் போக்குவருத்துள்ளவர்கள் பார்த்து மெச்சவேண்டிய டம்பங்கொண்டு வீதியின் பெருந் திண்ணை, சிருந்திண்ணை, நடைத்திண்ணை, சார்பு திண்ணை முதலியவை களைக் கட்டி விட்டு உள்ளுக்கு நுழைந்தவுடன் உட்காருவதற் கிடமின்றி ஓலை குடிசைகள் போட்டுக்கொண் டிருப்பவர்களு முண்டு. இதனனுபவங் கண்டோர் உட் சுவரிருக்கப் புறச் சுவரு பூசுவோர் என்று கூறும் பழமொழியு முண்டு இத்தியாதி டம்பச் செயல்களை அனுபவத்தி லறிந்துள்ள ஞானத்தாய் வீணே இடம்படும்படி வீடு இடேல் என்று விளக்கியுள்ளாள். ** 19. இணக்கமரிந்திணங்கு** இணக்கம் - ஒருவரை - யடுத்து வாழ்க வேண்டுமாயின், அரிந்து - அவரது குணாகுணங்களை நன்காராய்ந்து, இணங்கு - நேசஞ் செய்வா யென்பதாம். துற்குணமுற்ற குடும்பத்தையேனும் நேயனையேனும் அடுத்து சேர்வோமாயின் அவர்களுக்குள்ள துற்குணச் செயல்களே நம்மெயும், நம்மெய் அடுத்தோர்களையும் பற்றி நாசத்திற்குள்ளாக்கிவிடும். அவரவர்களின் குணா குணங்களை நற்குண முற்றோர் குடும்பத்தையேனும், நேயனையேனும் அடுத்து சேர்வோமாயின் அவர்களுக்குள்ள நற்குணச் செயல்களே நம்மெயும், நம்மெயடுத்தோர்களையும் சுகம்பெறச் செய்யும். ** விவேகசிந்தாமணி** கற்பகத் தருவைச் சார்ந்த காகமு மமிந்த முண்ணும் விற்பன விவேக முள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார் இப்புவி தன்னி லென்று விலவு காத்திடு கிள்ளைப் போல் அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வ தரிதரி தாகு மம்மா. ** 20. தந்தை தாய்ப் பேண்.** தந்தை - தகப்பனையும், தாய் - அன்னையையும், பேண் - பாது காப்பா யென்பதாம். நாம் மதலைப்பருவத்தி லிருக்குங்கால் பசியரிந் தமுத மூட்டியும், ஈ எறும் பணுகாது பாதுகாத்தும், அன்ன மூட்டியும், வித்தியா விர்த்தியைக் காட்டியும், சீர்பெறச் செய்தவர்கள் ளாதலின், அவர்கள் உபகாரத்தை என்றும் மறவாது யாதாமோர் தொழில் செய்வதற்கு மேதுவின்றி, தடி யூன்றி தள்ளாடி கண்பஞ்சடைந்து, பாலுங் கடைவாய்ப்பட்டு மூப்புதான முற்றக்கால் அவர்களுக்கு வேணவமுதூட்டி யாதோர்க்குறைவுமின்றி, அதியன்பு பாராட்டி பாதுகாத்தல் வேண்டும், அத்தகையப் பாதுகாத்த பிற்பலன் தன் மக்களால் தான நுபவித்தற்கூடும். தன் மக்களைத் தான் மிக்க வன்புடன் காப்பாற்றுவது போல் தன்னையும், தன் தாய் தந்தையர் காப்பாற்றி யிருப்பார்க ளென்றுணர்ந்து அவர்கள் மூப்பு காலத்தில் யாதொரு கவலையும் அணுகவிடாமல் போஷிக்க வேண்டுமென்பது கருத்து. ** அறநெறி தீபம்.** அன்னைபிதா சுற்றத்தை யன்புமிக காப்பதுவும் பின்னமற பெற்றோரைப் பிழை யணுகாதோம் புதலும் தன்மகவுந் தானுமிகு சன்மனமா வாழ்க்கை பெறுங் கன்ம மதாம் நற்கரும் காட்சியதன் பயனாகும். ** 21. நன்றி மறவேல்.** நன்றி - ஒருவர் செய்த நல்லுதவியை, மறவேல் - என்றும் மறவாதே யென்பதாம். சகலராலும் இஃது நல்லுதவி, நற்பேதம், நல்லிகை யென்று கூறும் நன்றியென்னுஞ் செயலால் சுகம் பெற்றும், அச்சுகத்தையளித்தோன் செயலை மறப்பதாயின் மறுசுகமடை வதற்கும் அவனிடம் செல்லுவதற்கும் சங்கை, முன்செய்த நன்றியாம் உதவியை மறந்தவனாச்சுதே மறுபடியு மிவனுக்குதவி புரியப் போமோ? வென்று மறைவான். அதுபோல் ஒருவர் செய்த உதவியை உள்ளத்திலூன்றி செய் நன்றியை மறவாதிருத்தலால் அந்நன்றியே ஏனையோருக்கு நன்னன்றியருளி உள்ளக் களங்கம் நீங்கி சதாநந்தத்தைய னுபவிப்பார்களென்பது கருத்து. ** திரிக்குறள்** நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. ** 22. பருவத்தே பயிர் செய்.** பருவத்தே - அந்தந்த தானியங்கள் விதைக்கக்கூடிய காலங்களுக்குக் காத்திருந்து, பயிர் - தானிய வளைவை, செய் - விதைக்க வேண்டுமென்பதாம். காரணம் கைப்பொருளுண்டாயின் வேண்டியபோது தானியங்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வேண்டிய போது பருவமென்னும் விளைவுக்குத் தக்கக் காலங்களை வாங்க வியலாது. ஆதலின் பூமியைத் திருத்தி பயிரிடும் ஒவ்வோர் வேளாளனும், பயிர்களை விளைக்க கூடிய காலங்களை எதிர்பார்த்திருந்து விளைவிக்க வேண்டுமென்பது கருத்து. ** கம்பர் ஏறெழுபது** பருவத்தே கார்த்து நிலம் பண்படுத்தி பயிர்செய்து உருவத்தா லாய பயன் வுழுது பயிர் செய்தளிக்கும் பருவத்தான் வேளாளன் பக்குவத்தா லுலகோம்பும் திருவத்தான் கோலத்தையும் தேற்றுங்கோல் தாக்கோலே ** 23. மண்பறித் துண்ணேல்** மன்று பறித் துண்ணேல் என்பது மற்றுமோர் ஒலப்பிரிதி மூலபாடம். மண் - அன்னியனுடைய பூமியை, பறித்து - அபகரித்து உண்ணேல் - அதில் விளைபொருளை புசியாதே யென்பதாம். மன்று - அன்னியப் பொருளை, பரித்து - அவர்களை யறி யாது வவ்வி, உண்ணேல் புசியாதே யென்பது மற்றும் பாடம். இவ்விரண்டு வாசகங்களும் அன்னியனுடைய பொருளையோ, அவனது பூமியையோ, அவனை யறியாத மோசத்தினாலுங் களவினாலும் அபகரித்துண்பது அக்கிரம மாதலின் சுத்த தேகத்தை சோம்பலினாலும், களவினாலும், வஞ்சினத்தாலும் வளர்க்காதேயென்பது கருத்து. ** மேறு மந்திர புராணம்** தானத்திற் குறித்து மன்று தன் கிளைக் கீயற் சால வீனத்து ளுய்க்கு நிற்கு மெஞ்சத்தை யிழக்க பண்ணும் மானத்தை யழிக்குந் துய்க்கு மற்றவர்க்கடிமை யாக்கு மூனத்து கரகத்துய்க்கும் பிறற் பொருளுவக்கின் மாதோ. ** 24. இயல்பலாதன செயேல்.** இயல்பு - தன்னளவில், அலாதன - செய்யக் கூடாத வற்றை, செயேல் - நீ செய்யாதே யென்பதாம். அதாவது தன்னா லியலாததும், தான் முன் பின் பாராததும், தன் அனுபவத்தில் வராததுமாகியச் செயலைச் செய்வதானால் தேகத்தைக் கஷ்டப்படுத்துவதன்றி திரவியத்தை யும் நஷ்டப்படுத்தி விடு மென்றுணர்ந்து ஞானத்தாய் இயல்பில்லாதச் செயலை செய்யே லென்று கூறியுள்ளாள். ** 25. அரவமாட்டேல்** அரவம் - சீரலுள்ள விஷப் பாம்புகளை, ஆட்டேல் - மற்றவர்கள் மிரளுவதற்காக விளையாடிக் காட்டாதே யென்பதாம். துஷ்டர்களின் சவகாசமும், குடியர்களின் இணக்கமும், பாம்புகளின் பழக்கமும், எவ்வகையானுந் துன்பத்திற் காளாக்கி விடும். ஆதலின் கெட்டவஸ்து வென்றறிந்தும் அதனுடன் பழகுதலும் எவ்வகையானு மோர்கால் தனக்கும் பிறருக்கும் துன்பத்தை விளைவிக்கு மென்றறிந்த ஞானத்தாய் விஷ ஜெந்துக்களைக் கொண்டு பிறர் பயப்படு விதமாய் விளையாட் டுக் காட்டாதே. அது கொடுவினையாய் முடியுமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** விவேகசிந்தாமணி** அரவினை யாட்டு வாரு மருங்களி ரூட்டுவாரும் இரவினிற் றனிப் போவாரு மேரிநீர் நீந்து வாறும் விரை செரி குழலியான வேசையை விரும்புவாரும் அரயனைப் பகைத்திட்டாரு மாருயிரிழப்பர் மாதோ. ** 26. இலவம்பஞ்சிற்றுயில்** இலவம் - மிகு மிருதுவாம், பஞ்சில் - பஞ்சி மெத்தையில், துயில் - நித்திரை செய். பருத்திப் பஞ்சு, பனைப் பஞ்சு, இலவம் பஞ்சு யென்பவற் றுள் இலவம் பஞ்சே மிக்க மிருது வானதும், சுகுணமுள்ளது மாதலின் இலவம்பஞ்சு மெத்தை யிற்றுயிலென்று கூறியுள்ளாள். அதன் சுகுணமோனெனில் பற்பல உஷ்ண ரோகங்கட் போம், மேக காங்கையாற் குடும்பப் பரம்பரையிற் றோன்றும் மதுமேகம்போம், குட்டரோகத்தாலுண்டாம் நமைகள்போம், குழவிகளுக்குக் காணும் மலபந்தங் குறைவுபடும், குமரகண்ட வலிபோம். தாது விருத்தி யுண்டாகும். ஆதலின் பொதுவாய் சுகங்கருதி இல்வம் பஞ்சிற்றுயிலென வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** பதார்த்த சிந்தாமணி** பல பல வெப்பம் போகும் பற்றிய மேக்காங்கை குலவரை தோன்று மேகங் குட்டத்தின் தினவுபாலர் மல பந்தங் குமரம் நீங்கும் மன்மத நிலையுமுண்டாம் இலவ மெத்தைப் பதிந்த வில்லறமக்கட் கென்றும். ** 27. வஞ்சகம் பேசேல்.** வஞ்சகம் - உள்ளத்திற் கெடு எண்ணத்தை வைத்துக் கொண்டு வெளிக்கு நல்லவன் போல், பேசேல் - பேசாதே யென்பதாம். அத்தகைய வஞ்ச நெஞ்சமுள்ளவன் உலகத்தில் எவ்வகையாய் உலாவுவானென்னில் நஞ்சுள்ள பாம்பானது தனக்குள்ள நஞ்சுட மெயறிந்து மற்றவர்களுக்கு பயந்து வொளிப்பது போல வஞ்ச நெஞ்சனும் மற்றவர்களுக்கு பயந்துலாவுவான். ** அறநெறிச்சாரம்** தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின் பின்னைத்தா னெய்தா நலனில்லை - தன்னைக் குடி கெடுக்குந் தீநெஞ்சிற் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப்பட்ட களிறு. * - ** 28. அழகலாதன செயேல்.** அழகு - அந்நியர் கண்களுக்கு ரம்மியமும், மனோசம் மதமும், அலாதன - இல்லாதவற்றை, செயேல் - என்றுஞ் செய்யாதே யென்பதாம். அதாவது ஓர் காரியத்தை யெடுத்துச் செய்யுங் கால் அக்காரியமானது தனக்கு சுகத்தையும், நற்கீர்த்தியையுந் தருவதுடன் ஏனையோர் கண்களின் பார்வைக் கழகாவும், இதயத்திற்கானந்த மாகவும் விளங்க வேண்டுமென்பது கருத்து. ** நாலடி நாநூறு** குஞ்சியழகுங் கொடுந்தானைக் கோட்டழகு மஞ்சளழகு மழகல்ல - நெஞ்சத்து நல்லம் யாமென்னு நடுவுநிலையாமெய்க் கல்வி யழகே யழகு. முகத்தழகு, அகத்தழகு மயிரழகு யாவும் வெயில் பூர்க்கும் மஞ்சள் போலும், புல்நுனி நீர்போலும் மறைவது திண்ண மாதலின், எத்தே சத்துள்ளோருங் கண் குளிர வாசித்துணர வேண்டிய அழகு, எக்காலு மழியா உண்மை யுணர்த்தும். மெய்க்கல்வியாம் கலைநூற்களி னழகே மிக்க சிறப்புற்ற தாதலின், அத்தகைய வழகினை உலகோர்க்கு சிறக்கச் செய்யாது அழகலாதனவற்றைச் செய்தல் வீணே யென்பது கருத்தாம். ** 29. இளமெயிற் கல்.** இளமெய் - தேகம் இளர்தையாம் பச்சை பருவத்திலேயே, கல் - கலை நூற்களை உள்ளத்துணர்த்து மென்பதாம். பச்சை பருவத்தினின்று பாலப்பருவம், குமரப்பருவம் வளருவதுபோல் கல்வியாகிய கலை நூல் கற்றலாம் கலையென் னும் சந்திரன் நான்காம்பிறை, ஐந்தாம்பிறையென வளர்ந்து பூரண சந்திரனென்பது போல், தேகம் வளரும் போதே கலை நூற்களாம் நீதி நூற்களின் பழக்கத்தால் சிற்றறிவென்னும் பெயரற்ற பேரறிவு வளர்ந்து பூரணம் பெறுவானென்னும் அன்பின் மிகுதியால் இளமெயாம் பச்சை பருவத்திலே கலைநூற்களைக் கல்லென்று கூறியுள்ளாள். ** 30. அரனை மறவேல்** அறனை - அறவாழிக் கடவுளாம் புத்தபிரானை, மறவேல் - என்றும் மறவாதே யென்பதாம். புத்தபிரான் புவியில் உலாவிய காலத்தில் தன்னைத் தொழுவுங்க ளென்றாயினாம், தன்னை மறவாதிருங்க ளென்றா யினாம் அவர் நாவினார் கூறாதிருக்க, நமது ஞானத்தாய் ஒளவையார் மட்டிலும் அறனை மறவாதிருங்கோ ளென்று கூறியக்காரணம் யாதென்பீரேல் அறனை சிந்திக்குங்கால் அறன் மொழிந்த பொருள் முற்றுஞ் சிந்திக்க யேது உண்டாகும். அத்தகைய சிந்தனா முயற்சியால் உண்மெய்ப் பொருள் விளங்கி துக்க நிவர்த்தி யுண்டாகி சுகவாரியென்னும் நிருவாணத்தை யடைவார்களென்பது சத்தியமாதலின், சத்தியமாம் அறனை என்றும் மறவேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** அருங்கலைச் செப்பு - அறனார் பத்து** அறனன் றளித்த வாய்மெயாம் நான்கும் பிறவி கடல் கடக்கும் பேழ். ** 31. அனந்த லாடேல்** அனந்தல் - அதிக வெள்ளப் பெருக்கத்தில், ஆடேல் -நீ நீந்தி விளையாடாதே. ஆறுகளிலுண்டாகும் பெரு வெள்ளப்போக்கில் நீந்தி விளையாடுவதினால், அனந்தலாம் நீர் ததும்பலிலும், சுழலிலும், சிக்குண்டு கைகால்களயர்ந்து உதவியற்று வீணே மடிவதற் கேதுவாகும். ஆதலின் அனந்தலாம் வெள்ளப் போக்கில் விளையாடலாகாதென்பது கருத்து. அனந்த னென்பதின் பொருள் - சிவன், மால், மிக்கோன், நிராயுதன், அருகனென்றுங் கூறத்தகும். அனந்த மென்பதின் பொருள் - மிகுதி, சேடமெனக் கூறத்தகும். அனந்தலென்பதின் பொருள் - நீர் ததும்பிய வெள்ளப் போக்கென்று கூறத்தகும். பாலி பாஷையில் அனந்தலென்னு மொழிக்கு வெள்ளம், பேரலை, நீர்வேக மெனப் பொருளளித்திருக்கின்றார்கள். திரிபிடகம், திரிக்குறள், திரி மந்திரம், திரிகடுகம், திரிவாசக முதலிய நூற்கள் யாவற்றிலும் பாலி மொழிகளே மிக்க மலிவுள்ளது கொண்டு, அனந்த லென்னு மொழிக்கு வெள்ள மென்னும் பொருளை விவரித்துள்ளோம். அனந்த லென்பதற்கு நித்திரை யென்னும் பொருட் கூறுவாராயின், அனந்தலாடெலென்னும் வாக்கியத்திற்கு நித்திரை விளையாடாதே யென்னும் பொருளைத்தரும். அங்கன மின்றி அதிநித்திரை செய்யாதே கொஞ்ச நித்திரை செய்யென்னும் பொருள் மொழிக்கு முற்றும் பேதமேயாகும். ** 32. கடிவது மற** கடிவது - ஒருவரைக் கொடு மொழியால் கடிந்து பேசும் வார்த்தையை, மற - நீ எக்காலும் பேசாதே யென்பதாம். முகங் கடுகடுத்தும் வாக்கால் சிடுசிடுத்தும் பேசுவதா னால் தனது மனைவி மக்களுக்கு வெறுப்புண்டாவதன்றி, குடும்பத் துவேஷியென்னும் பெயர்பெற்று திருவென்னும் அருளு மகலுமென்பது கருத்தாம். ஆதலின் ஒருவரைக் கடிந்து பேசவேண்டிய காலம் நேரினும் அவ்வாக்கை மிருதுவாகவும் நியாயவாயலிலும் உபயோகிப்பதாயின் மாநுஜீகை தருமத்தையும் அதன் சிறப்பையும் விளக்கும். ** அறப்பளீச்சுர சதகம்** கடிதாயெனச் சீறி யெவரையுஞ் சேர்க்காத கன்னிவாழ் மனையகத்தும் ததிவார்த்தையின்றி மிகு கடிவார்த்தை கொண்டுலவு தண்மெயற் றோரிடத்தும். ** 33. காப்பது விரதம்.** காப்பது - உனக்குள்ள நல்லொழுக்கங்களை நிலைக்கச் செய்தல், விரதம் - உடற்காப்பேயாம். அதாவது ஒவ்வோர் மனிதனும் உலகத்தில் சுகமாக வாழ வேண்டுமாயின் தேகக்காப்பு, வாக்குக் காப்பு, மனோகாப் பென்னும் தன் தேகத்தால் மற்றய சீவராசிகளுக்குத் துன்பஞ் செய்யாமற் காப்பதும், தன் வாக்கினால் மற்றோரை மனநோகப் பேசுதலும், தீங்குண்டு செய்தலுமாகியச் சொற்களைச் சொல்லாது காப்பது, தன் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளையக்கூடிய வண்ணங்களை யெண்ணாமலும், உள்ளத்திற் கபடு சூது வஞ்சினமிவைகளை யணுகவிடாமலுங்காப்பதும் விரதமென்னப்படும். ** அறநெறித்தீபம்.** பொய்யகற்றி மெய்ப்புகலும் போதரடி போற்றுதலும் வையத்தோ ரென்றுமிகு வாழ்த்தி சுகமேற்றுதலுந் துய்யனென சீவனெலாந் தொண்டு நிலை யாற்றுதலும் உய்யுமுடல் வாக்கு மனக் காப்பதனின் பலனாகும். ** 34. கிழமெய்ப் படவாழ்** கிழமெய் - அறிவு முதிர்ந்தோன், பட - என்று சொல்லும் படியாக, வாழ் - உன் வாழ்க்கையை சீர்பெறச் செய்யு மென்பதாம். அறிவு மிகுந்த ஞானிகளையே கிழவரென்றுங் கிழமெய் என்றும் கிழமெய்யரென்றும், மூத்தோரென்றும், முத்த ரென்றும், அறநூற்கள் முறையிடுகின்றபடியால் நமது ஞானத்தாயும் கிழமெய்ப்படும் வாழ்க்கையால் முத்தனாகக் கடவாயென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். கிழமெய் யென்பது முதிர்ந்தோர், மூத்தோர் மிக்கோ ரென்னும் பொருட்களின் அதாரங் கொண்டு புத்தபிரானையுங் கிழவனென்றே வழங்கி வந்தார்கள். ** சூளாமணி** ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை யொதிங்கினை போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய சேதியென் செல்வனின் றிருவடி வணங்கினம். குடிவாரம் - நிலவார மென்பதும், குடிக்கிழ மெய் நிலக் கிழமெயென்பதும், ஒர் பலனைக் குறித்த மொழிகளாகும். அப்பலன் பிரிதி பலனைக் கருதாதீயும் பரோபகாரப் பலனாயுளதேல் அத்தேகியை கிழவன், மூர்த்தோன், மூப்பன் என்னுஞ் சிறப்புப் பெயராலழைத்து வந்தார்கள். இதை யனுசரித்து நமது ஞானத்தாயும் உனது வாழ்க்கையிற் கிழமெய்ப்பட வாழ்கவென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 35. கீழ்மெ யகற்று** கீழ் - தாழ்ந்த செயலுக்குரிய, மெய் - தேகியென்று சொல்லுதற்கிடங்கொடாது, அகற்று - நீங்கி நில்லென்பதாம். அதாவது உனது உருவை மற்றொருவன் கண்டவுடன் ஆ! இவன் வஞ்சகன் குடி கெடுப்போன், பொருளாசை மிகுந்தோன், கள்ளன், கொலையாளி, குடியன், வியபசார மிகுத் தோன், பொய்யன் கீழ்மகன் இவனென, உன்னை மற்றொருவன் அகற்றுதற்கிடங்கொடாது நீயே யக்கீழ்மகன் செயற்களை யகற்று மென்னுங் கருத்தை கீழ் மெயகற்று மென்று முன்னிட்டுக் கூறியுள்ளாள். கீழ்மக்கள், மேன்மக்களென்னும் பெயர்கள் இத்தகையச் செயல்களால் தோற்றியவைகளேயாம். ** வளையாபதி - தீவினையச்சம்** கள்ளன் மின் களவாயின யாவையுங் கொள்ளன் மின் கொலை கூடி வருமற மெள்ளன் மின்னில் ரெண்ணியாரையு நள்ளன்மின் பிற பெண்ணோடு நண்ணன்மின். ** 36. குணமதுகை விடேல்** குணம் - உமக்கு தோற்றிய சுகம், அது - அதினாலாய தென்றறிந்துக் கொள்ளுவாயாயின், கைவிடேல் - அவற்றை நழுவவிடாதேயென்பதாம். அதாவது நீவீர் புசித்த அவுடதத்தினால் வியாதி நீங்கி வருங்குணத்தை சுக நிலையிற் காண்பாயாயின் அதை கைவிடா மற் புசிப்பாயாக. புசித்துவரும் பதார்த்தங்களில் சுகநிலை தோற்று குணமுண்டாயின் அவற்றையுங் கைவிடேல். நீவிர் ஆதுலர்க்களிக்கும் அன்னதானத்தாலும், அறஹத்துக் களிக்கும் போஷிப்பினாலும், அன்னியரைக் காக்கும் ஆதரவினாலும் உமக் குண்டாய சுகுண நிலையாம் உற்றச் செயலைக் கைவிடேல் உம்மால் மற்றவர்களுக்குப் போதிக்கும் நற்போதக விருத்தியால் தாமு மப்போது நிலையினின்று சொற்குணங் காண்பீராயின் அவற்றையுங் கைவிடேலென் பதாம். தனக்கும், பிறருக்கும், சுகுண முண்டாகச் செய்தல் நியாயகுணமும், தனக்கும் பிறருக்கும் அசுகுண முண்டாகச் செய்தல் தீயகுணமு மாதலின் எக்காலுந் தீயகுணங்களையகற்றி நியாயகுணங்களை நிறப்பு வதே நீதி நெறியி னிலைகளாம். குலமென்னும் ஓர் குடும்பத்தில் வஞ்சினம் பொருளாசை குடி கெடுப்பு, களவு மிகுந்திருக்குமாயின் அக்குலத்து சிறுவர் களுக்கும் அக்குணங்களே மிகும். அந்தந்தக் குடும்ப குலத்தின் குணங்களால் அவரவர் களுநபவிக்கும் துக்கங்களையுஞ் சுகங்களையும் அநுபவக் காட்சியா லுணர்ந்து நல்வாய் மெகளைப் பெருக்கி சுகுணங் கண்டவிடத்து அக்குணமதைக் கைவிடேலென்று நற்குண நிலையை வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 37. கூடிப் பிரியேல்.** கூடி - ஒருவரை நேசித்து, பிரியேல் - அவரை விட்டு நீங்காதே என்பதாம். அவரவர்களுக்குள்ள தீய குணங்களையும், நியாய குணங்களையும் நன்காராய்ந்து நியாய மிகுத்தோர் பால் நேயம் புரிந்து அவர்களைக் கூடிப் பிரிவதாயின், தீயகுண நிலையே நியாய குணத்தோடு நிலைக்கவிடாது அகற்றியதென்பது கருத் தாகும். ஆதலின் நல்லோரை யடுத்த அவர்களுடன் கூடி நல்லுணர்ச்சி மிகுங்கால் அவர்களை விட்டு பிரியேலென்று கூறியுள்ளாள். ** ’மூதுரை** நல்லாரைக் காண்பதுவு நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவு நன்றே - நல்லார் குணங்களுரைப்பதுவு நன்றே யவரோ டிணங்கி யிருப்பதுவு நன்று. ** 38. கெடுப்ப தொழி** கெடுப்பது - மற்றோர் குடிக்குக் கேடுண்டாக்குதலை, ஒழி - அகற்றிவிடுமென்பதாம். கெடு எண்ணத்தையும், கெடு தொழிலையும் ஒழித்து வாழ வேண்டிய காரணம் யாதெனில், தனக்குள் தோன்றுங் கெடு எண்ணத்தின் விரிவே தன்னுள் ளத்திற் கொதிப்பேற்றி சுடுவதுடன், தன்னை யறியா மலே வாழைப் பழத்திலே ஊசி நுழைவது போல் நுழைந்து கெடுத்துவிடும். தன்சுகத்தை நாடுகிறவன் எதிரியின் சுகத்தையுங் கோறல் வேண்டும். அங்ஙனமின்றி தன் சுகத்தை நாடி எதிரியின் சுகத்தைக் கெடுப்பதாயின் அக்கேட்டின் பலனே தனக்குங் கோட்டை யுண்டு செய்யுமாதலின் கெடுப்ப தொழி யென்னும் வாசகத்தை சுருக்கிக் கூறியுள்ளாள். ** பட்டினத்தார்** இருப்பது பொய் போவது மெய் யென் றெண்ணி நெஞ்சே யொருத்தருக்குந் தீங்குநினை யுன்னாதே - பெருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய் கழுகு தம்மதென்று தாமிருக்குந்தான். ** 39. கேள்விமுயல்.** கேள்வி - உனது செவிகளால் அறநெறி வாக்கியங்களைக் கேட்பதற்கு, முயல் - முயற்சியிலிரு மென்பதாம். பூர்வம் வரிவடிவாம் அட்சரங்களில்லாத காலத்தில் புத்த பிரானால் போதித்த திரிபேத வாக்கியங்களென்னும் திரிபீடமாம். சப்ப பாபஸ்ஸ அகரணம், குஸலஸ உபசம்பதா, சசித்த பரியோதபனங், என்னும் பாபஞ் செய்யாதிருங்கள். நன்மெய்க் கடைபிடியுங்கள் உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங் கோளென்னும் மூன்று பேதவாக்கியங்களையே ஒருவர் சொல் லவும் மற்றவர்கள் கேட்கவுமாயிருந்தபடியால் சுருதியென்று வழங்கிவந்தார்கள். இத்தகைய நீதி நெறிகளமைந்த சுருதி மொழிகளைக் கேட்டலும், அதின் அந்தரார்த்தங்களை சிந்தித்தலும், தான் சிந்தித்துணர்ந்த வற்றால் தெளிதலும், அத்தெளிவால் துக்க நிவர்த்தியடைதலுங் கொண்டு, வரிவடிவ அட்சரங்களுள்ள சகடபாஷையாம் சமஸ்கிருதமும் திராவிட பாஷையாந் தமிழும், புத்தபிரானாலியற்றி அவர் போதித்துள்ள நீதி நெறிகள் யாவும் அட்சரவடிவிற் பதிந்துள்ள போதினும் செவிச் செல்வமாங் காதுகளினாற் கேட்டுணர்வதே தெளிவாதலின் ஞானத்தாயுங் கேள்வி முயலென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்** செவியிற் சுவையுணரா வாயுணர் வின்மாக்க ளவியனும் வாழினு மென். பொருள் சம்பாதிக்கும் உபாயத்தைக் கருதி பொய் சொல்லி வஞ்சிக்கும் அஞ்ஞான குருக்களின் கேள்வியில் முயலாமல் பொருளாசையற்று கண்டிறப்பான நீதிநெறிகளைப் புகட்டும் மெய்ஞ்ஞான குருக்களின் கேள்வியில் முயல வேண்டுமென்பது கருத்தாம். ** 40. கைவினை கரவேல்** கைவினை - உனது கைத்தொழிலாஞ் செயலை, கரவேல் - கை சோர்ந்து பின்னடையச் செய்யாதே என்பதாம். அதாவது, கைவினையாம் செய் தொழிலில் மேலும் மேலும் அறிவினை விருத்தி செய்து முன் செய்யும் பொருளினும் பின் செய்யும் பொருட்கள் சிறப்புப் பெற்றே விளங்கல் வேண்டும். அங்ஙனமின்றி கைவினையாம் செய்தொழிற் பொருட்கள் முன்பு செய்தவற்றினும் சிறப்புக் குன்ற தோற்றுமாயின் அப்பொருள் நாளுக்கு நாள் சிறப்புக்குன்றுவது மன்றிசெய் தொழிலாங் கைவினையுங் கரந்து பாழடைந்து போம். ஆதலின் செய்தொழிலை நாளுக்கு நாள் சிறப்படையச் செய்ய வேண்டுமேயன்றி ஒளித்து கரவேலென்று கூறியுள்ளாள். ** 41. கொள்ளை விரும்பேல்** கொள்ளை - பொருட் கொடுத்து கொள்ளாத பொருளை, விரும்பேல் - நீ ஆசைவையாதே என்பதாம். முதலீய்ந்து கொள்ளாதப் பொருளே கொள்ளை யென்று கூறப்படும். அத்தகையாய் கொள்ளை கொடுத்தோன் மனங் குமரவும், தேகம் பதரவும், அவன் பொருளை விரும்புவதினால் விரும்பினோன் பொருளை அவனையறியாது மற்றொருவன் கொள்ளைக் கொள்ளுவானென்பது அனுபவமாதலின் அன்னியற் பொருளை யபகரிக்க விரும்பாதே யென்பது கருத்தாம். ** 42. கோதாட்டொழி** கோது - உன்னை குற்றத்திற் காளாக்கும், ஆட்டு - விளையாட்டை, ஒழி - எக்காலும் நீக்கிவிடு மென்பதாம். தன்னைத்தானே குற்றத்திற் காளாக்கிவிடும் விளையாட் டுகள் யாதெனில், கள்ளினைக் கூடி குடிக்குங் களி விளையாட் டும், மற்றவன் பொருளை அபகரிக்க சுருங்கி விளையாடும் சூது விளையாட்டும், அடுத்த வுறவோர்கள் முன்னிலும், அதிகாரிகள் முன்னிலும் குற்றவாளியாக ரூபிக்கும் ஆட்டத்தை விளையாடே லென்று கூறி யுள்ளாள். ** அறநெறிதீபம்.** சூதுடனே கள்ளருந்துந் தொல்லை விளையாட்டகற்றி ஆதுலர்க்கே யன்னுமளித் தானந்தமாடுதலும் தீதகற்றி யெஞ் ஞான்றுந் தேவ னென போற்றுதலும் போதி நிழல் வீற்றிருந்தோற் போதறத்தின் பயனாகும். ** 43. சக்கரநெறிநில்** சக்கர - அறவாழியாம் தருமச்சக்கர, நெறி - ஒழுக்கத்தில், நில் - நிலைத்திரு மென்பதாம். புத்தபிரான் அரச புத்திரனாகத் தோன்றி சத்திய தன்மத்தைப் போதித்தபடியால் அதனைக் கோனெறி யென்றும், அஃது சகலருக்கும் பொதுவாய தன்மமாதலின் அறநெறி யென்றும், அவர் உலகமெங்கும் சுற்றி அறக்கதிராம் சத்திய தன்மத்தை விளக்கியபடியால் சக்கர நெறி யென்றும் வழங்கி வந்தார்கள். ** மணிமேகலை** தருமசக்கரம் உருட்டினன் வருவோன் அறக்கதிராழி திரப்பட வுருட்டிய காமற் கடந்த வாமன் பாதம் பொன்னனி நேமி வலங் கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் மகனெமக்களித்த எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும் அண்ணலறக்கதிர் விருக்குங்காலை. திரிபேதமென்றும், திரிபீடமென்றும் வழங்கிய சுருதி மொழிகளை கலைநூற்களில் வகுத்து நூனெறியென்றும், செய்யுட்களில் வகுத்து பாநெறியென்றும், அரசர்கள் செவ்வி யக் கோல் வழியில் வகுத்து கேனெறியென்றும், பொதுவாய் நீதிநெறியில் வகுத்து நீணெறி என்றும் போதித்துள்ளவற்றில் உலகெங்குஞ் சூழ்ந்துள்ள சருவ சீவர்கண் மீதுங் கருணை வைத்துக் காக்கும் நெறியே விசேஷ நெறியாதலின் நமது ஞானத்தாய் சக்கர நெறி நில்லென வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** சீவகசிந்தாமணி** நூனெறி வகையி நோக்கி நுண்ணுதினுழைந்து தீமெய் பானெறி பலவுநீக்கி பரிதியங் கடவுளன்ன கோனெறி தழுவி நின்ற குணத்தோடு புணரின் மாதோ நீ ணெறி வகையினின்ற நல்லுயிர்க் கமிர்தமென்றான். ** 44. சான்றோரினத்திரு.** சான்றோர் - சகலராலும் நன்கு மதிக்கும், இனத்து - கூட்டத்தாரிடத்து, இரு - நீ சேர்ந்து வாழக்கடவா யென்பதாம். சான்றோ ரென்பார் சகல மக்களாலும் மேலோர் மேதாவிய ரென்று சான்றுதற் குரிய மேன் மக்களாகும் சாந்தமிகுத்தோர்களேயாவார். சகல நற் கிரித்தியங்களுக்கும் சான்றாகும் மேன் மக்களாம் நல்லினத்தோரையடுத்து வாழ்வதி னால் தனக்குள்ள பொய்யும், களவும், கொலையும், காமமும், வெறியுமற்று மெய்யும், யீகையும், காருண்யமும், சாந்தமும், நிதானமும் பெருகி நிருவாணமார்க்கமும் சுருக்கமாக விளங்கும். ஈதன்றி தன்னையீன்ற தாயானவள் எக்காலும் அன்பு கொண்டொழுகுபவளாயினும் உமது புத்திரன் மேன்மக்களாம் விவேகி களையடுத்து கலைநூற்களைக் கற்று சாந்தரூபியாய் சகலராலும் நல் லோனென்று கேழ்விப் பட்டவுடன் யீன்றாள் அகமகிழ்வையும் அன்பையும் சொல்லத் தருமோ ஒருவராலுஞ் சொல்லத்தரமன்றாம். ஆதலின் நல்லினத்தைச் சார்ந்தொழுகுஞ் சாட்சியே நன்றென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்** ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனை சான்றோனெனக் கேட்டதாய். ** குமரேசர் சதகம்** அந்த மிகு மரகதக் கல்லைத் தரித்திடி லடுத்ததும் பசிய நிறமாம் ஆன பெரியோர்களோடு சகவாசமது செய்யி லவர்கள் குணம் வருமென்பர்காண். ** 45. சித்திரம் பேசேல்** சித்திரம் - பொய்யாகிய வார்த்தைகளை மெய்போல் அலங்கரித்து, பேசேல் - நீ யென்றும் பேசாதே யென்பதாம். அதாவது தன் கண்ணினாற் காணாததைக் கண்டது போலலங்கரித்து பேசுதலும், தன் செவியினாற் கேளாததைக் கேட்டது போலலங்கரித்துப் பேசுதலும், தன் நாவினால் உருசிக்காததை உருசித்தது போலலங்கரித்துப் பேசுதலும், தன் நாசியினால் முகராததை முகர்ந்தது போலலங்கரித்து பேசுதலும், தன் உடல் பரிசிக்காதனவற்றை பரிசித்ததுபோ லலங்கரித்துப் பேசுதலும், மனமுற்றுச் சொல்லும் பொய்யாதலின் அப்பொய்யே மேலு மேலுந்திரண்டு உண்மெய்யை மறைத்து உலக பந்தத்திற் சிக்கிமாளா துன்பத்திற்காளாக்கிவிடும். ஆதலின் தான் சொல்லும் வார்த்தைகள் பொய்யென்றறிந்தும் மனசாட்சி யுண்டென்றும் அஞ்சாது அப்பொய்யையே மெய்போல் அலங்கரித்துப் பேசுதலிலும் வாய்மெய்க்கேடு வேறில்லை யென்பதாம். ஈதன்றியும் ஒளவையாகிய ஞானத்தாய் முக்காலமு முணர்ந்தவளாதலின், வருங்காலத்தில் ஒளவையார் அவசரப் பூசை செய்ய அதையுணர்ந்த யானைமுகக் கல்விநாயகர் அவசரப் பூசை செய்ய வேண்டாமென்றுங் கூறி தனது துதிக் கையா லெடுத்து கைலாயத்தில் விட்டு விட்டாரென்னுஞ் சித்திரவார்த்தையாக் கற்பனாக் கதையைக் கட்டி விடுவார்கள். அத்தகைய பொய்யாகும் கட்டுக் கதைகளில் மெய்யுணராது மேலுமேலுந் துக்கத்திற் காளாவரென்றுணர்ந்த ஞானத்தாய் சித்திரம் பேசேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** காக்கை பாடியம்** முத்திர மாய்ந்த மூதறிவாளர் குத்திரமிய்யுங் கோடுரையாது சித்திரங்கூறி சீரழியார்க ளெத்திரத்தாலு மெய்துவர் வீடே. ** 46. சீர்மெய் மறவேல்** மெய் - தேகத்தை, சீர் - சுத்தி செய்யும் விஷயத்தில், மறவேல் - ஒருக்காலும் மறவாதே யென்பதாம். சீர்மெ யென்பதி னிலக்கணம் மெய் சீராதலின் புறமெய்ச் சீராம் தேகச் சுத்திகரிப்பால் தெளி நிலையும் விவேக விருத்தியு முண்டாவதன்றி இதயசுத்தத்திற்கும் ஏதுவுண்டாகும். அத்தகைய விதயசுத்தத்திலேயே சகல சுகமும் விளங்குகிற படியால் அவற்றிக்கு மூலகாரணமாம் புறமெய்ச்சீரென்னும் சீர்மெயாதலின் தேக சுத்தத்தை திடம் பெறக் கூறியுள்ளாள். பிரிட்டீஷ் ஆட்சியோராய் நமது தேசத்தை யரசாண்டு வரும் ஆங்கிலேயர்கள் வெண்மெய் நிறத்தால் சுத்த தேகிகளாகும். எக்காலுந் தங்கள் தேகத்தை சுத்திகரிப்பவர்களா கவும், சுத்த உடையை யுடையவர்களாகவுந் தோன்றியபடியால், அவர்களை சீர்மெயர், சீர்மெய்யோரென்று இத்தேசத்தோர் வழங்கிவந்த வார்த்தையைக் கொண்டு, இவர்கள் காணாத வைரோப்பா தேசத்திற்கும் சீர்மெ யென்னும் பெயர் வாய்த் திருப்பதை தேக சுத்த தோற்றமாம் சீர்மெயென்றே தெளிந்துக் கொள்ளலாம். ** அருங்கலைச் சேப்பு - உள்ளொளிபத்து.** சீர்மெயதாகி சுகங்கெடா சுத்தத்தாற் றூய்மெயதா முள்ளொளி. ** 47. சுளிக்கச் சொல்லேல்.** சுளிக்க - ஒலிக்கும் வார்த்தை பிறருக்குப் புலப்படாமல், சொல்லேல் - பேசாதே யென்பதாம். அதாவது பேசும் வார்த்தைகளை சுழித்து சுழித்து உள்ளுக் கொன்றும் வெளிக்கொன்றுமாக பேசுதலினும் பேசாதிருப்பது சுகமாதலின் பேசும் வார்த்தைகளை பூர்த்தியாக வெளியிடாது உள்ளுக்கே சுளித்துப் பேசலாகாதென்பது கருத்தாம். முகசுளிப்பால் வாக்குச்சுளிப்பும் வாக்குச் சுளிப்பால் அகச் சுளிப்பாம் வஞ்சநெஞ்சத்தின் நஞ்சு விளங்குகிறபடியால் அந்நஞ்சின் விஷமீறி இதயகோசத்தைக் கெடுப்பதுமன்றி தேகமும் பாழடைவதற்கு சுளிப்பே ஓர் மூலமாதலின் வஞ்சத்தை நெஞ்சிலூன்றி சுளிக்கச் சொல்லேலென்பது உட்கருத்தாம். ** 48. சூது விரும்பேல்.** சூது ஒருவரை வஞ்சித்தும் குடி கெடுத்தும் தானாய் கெடுங்கரவடைச் செயலை, விரும்பேல் -நீ யெப்போதும் ஆசை வையாதே என்பதாம். அதாவது தான் வேறுதொழில் யாதுமின்றி மற்றொருவன் பொருளை வஞ்சகவிளையாட்டையாடி பறிப்பதும் சூதென்னு மோர் தொழிலையே நெஞ்சிற் குடிகொளச்செய்வதுமாகிய அத்தீயவிளையாட்டையே மிக்க விரும்பி தானுங் கெடுவதுடன் மற்றவர்களையுங் கெடுத்து பாழ்படுத்துகிறபடியால் வஞ்சித்துக் கெடுக்கும் சூதை விரும்பேலென்பது கருத்தாம். ** காக்கை பாடியம்.** கோதுட்டுளமே குலநல மழிக்கும் வாதிட்டார்ப்ப வாழ்க்கையிங் குன்றும் சூதுற்றாடல் சூழ்கிளை யழிக்கும் போதித்தானப் பொக்கிடம் போற்றீர். ** 49. செய்வன திருந்தச் செய்.** செய்வன - நீ செய்யவேண்டிய காரியங்களை, திருந்த - சீர்பெற, செய் - செய்யவேண்டுமென்பதாம். அதாவது தானெடுத்து முடிக்க வேண்டிய காரியாதிகள் யாவும் சகலருக்கும் - உபயோகமாகக் கூடியதாகவும் சகலருங் கொண்டாடுவதாகவுமிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றி யெடுத்த காரியத்தை திருத்த முடிக்காது குறைந்தழியுமாயின் தனக்கு வதிகக் கஷ்டமுண்டாவதுடன் பொருளும் நஷ்ட முண்டாகிக் கெடும். ஆதலின் எத்தகயை காரியங்களைச் செய்ய முயன்ற போதிலும் அவற்றைத் திருந்தச் செய்வதே அழகாகும். ** 50. சேரிடமறிந்து சேர்.** சேரிடம் - இஃது சேரக்கூடிய நல்லோரிடமா, அல்லது சேரக்கூடாத பொல்லாரிடமாவென்று, அறிந்து - தெரிந்துக் கொண்டு, சேர் - நீ சேர்ந்து வாழக்கடவாய் என்பதாம். தீயரென்றும், நியாயரென்றும், நல்லோரென்றும், பொல்லா ரென்றும் வழங்கும்படியானக் கூட்டத்தாரைக் கண்டாராய்ந்து நல்லோருடன் சேர்தலே நன்மக்களென்பதற் காதாரமாதலின் நியாயர்களையும், அன்பு மிகுத்தோரையும், தன்னவரன்னியரென்னும் பேதமற்ற மேன் மக்களையும், அடுத்து வாழ்கவேண்டியதே விவேக மிகுக்கக் கோறுவோர் குணமாதலின் சேரிடமறிந்துச் சேரவேண்டியதே சிறப்பாகும். ** நீதி வெண்பா** நிந்தையிலா தூயவரும் நிந்தையச் சேரிலவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு தாலநிழற் கீழிருந்தான் றன்பாலருந்திடினும் பாலதனைச் சொல்லுவரோ பார். ** 51. சையெனத் திரியேல்** சையென - கியானியென்று உன்னை மெச்சும் படியான வேஷம் பூண்டு, திரியேல் - நீயுலாவாதே என்பதாம். பாலி பாஷையில் ஸை என்னு மொழிக்கு ஞானமென் றும், ஸைலமென்னு மொழிக்கு ஞானக்குன்றென்றும், ஸைவமென்னு மொழிக்குத் தன்னை யறிதலென்றும், ஸையோக மென்னு மொழிக்கு ஞானபாக்கியம் அல்லது கியானவதிர்ஷ்ட மென்றுங் கூறியுள்ளபடியால் (ஸை) யெனக்கூறும் ஞானவான் போலும், மெளனி போலும் வேஷமிட்டுக் கொண்டு மற்றவர்களை வஞ்சித்தும் பொருள் பரித்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை யற்றவர் போல் நடித்து மூவாசையும் முற்றப்பெருக்கி ஞானியெனத் திரிதல் யதார்த்த ஞானிகளை இழிவுபடுத்துதற் கேதுவாகத் தோற்றலால் ஸை யெனத் திரியேலென்று சத்திய நிலையை விளக்கியுள்ளாள். ** மேருமந்திர புராணம்.** சித்தமெய் மொழிகளிற் செரிந்துயிர்க் கெலா மித்திரனாய பின் வேதனாதியி லொத்தெழு மனத்தனா யுவகையுள்ளூலாயத் தத்துவத் தினான் றனுவைவாட்டினான். ** 52. சொற் சோர்வுபடேல்** சொல் - ஒருவர்க்குச் சொல்லிய வுருதிவாக்கியத்தில், சோர்வு - தவறுதல் வுண்டாகும்படி, படேல் - செய்துக் கொள்ளாதே. ஒருவருக்குப் பொருள்ளிப்பேன் வாவென்று கூறியும், அன்னமளிப்பேன் வாவென்று கூறியும் அவன் வந்த பின்பு சொல்லிய சொற்றவருமாயின் மிக்க அவாவால் நாடி வந்தவன் மனங்குன்றி நாணடைந்து போவான். அவ்வகையா லவன் மனங்குன்றிப் போவ தினாலும் அவனுக்குக் கொடுப்பே னென்று சொல்லிய வாக்கைச் சொல்லாமலிருப்ப தழகாகும். ஒருவனுக்கு அவா மிக்கச் சொல்லி அச்சொல் சோர்வுபடு மாயின் அதனினும் வாய்ப் பொய் வேறில்லை யெனவுணர்ந்த ஞானத்தாய் தேகசோர்வினும் சொற்சோர்வுபடேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 53. சோம்பித் திரியேல்** சோம்பி - ஒரு தொழிலுஞ் செய்வதற்கியலாதவனாய், திரியேல் - உலாவாதே யென்பதாம். அதாவது ஓர் தொழிலுக் குதவாதவனாகவும், ஓர் வித்தைக் குதவாதவனாகவும் சோம்பேறி திரிவானாயின் விவேகிக ளவனை சீவ அசீவ மிரண்டினுங் கடையாக மதிப்பர். ** விவேக சிந்தாமணி** கருதிய நூல் கல்லாதான் கசடனாகும் கணக்கறிந்து பேசாதான் மூடனாகும் ஒரு தொழிலு மில்லாதான் முகடியாகும் வொன்றுக்கு முதவாதான் சோம்பனாகும் பெரியோர்கண் முன்னின்று மரத்தைப் போல பேசாமலிருப்பவனே பேயனாகும் பரிவு சொல்லி தழுவுபவன் பசப்பனாகும் பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே. ** 54. தக்கோனினத்திரு** தக்கோன் - எடுக்குங் காரியங்களை முடிக்கத்தக்கவனது, இனத்து - கூட்டுறவில், இரு - நீ சேர்ந்திருக்கக்கடவா யென்பதாம். ஓர் சபையி லெழுந்து பேசுவதற்குத் தக்கவன் ஓர் சுபகாரியாதிகளை முடிப்பதற்குத் தக்கவன் நீதிநெறிகளைப் போதிப்பதற்குத் தக்கவன் நடுநிலையிலும், நியாயவாயலிலும் பேசுவதற்குத் தக்கவன், எடுத்த காரியங்களை எவ்விதத்திலு முடிக்கத் தக்கவனென்று பலருஞ் சொல்லும்படியாக வீற்றிருப் பானாயின் அவனைக் கொண்டே சகல சீர்திருத்தங்களை முடித் துக் கொள்ளுவதுடன் மற்றவர்களும் தக்கவனென்னு மேறை நடந்து சுகம் பெறுவார்கள் என்பது மெய்யானதால் அப்படிப் பட்டவனை யணுகி நீயும் தக்கோனென விளங்குவாய் என்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்** தக்கா ரினத்தனாய்த் தானொழுகு வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். ** 55. தானமது விரும்பு** தானம் - ஈகையாம், அது - அச்செயலை, விரும்பு - நீ ஆசைக்கொள்ளும். அன்பு மிகுத்தோரிடத்து ஈகை மிகுத்திருப்ப தியல் பாதலின் ஈகையிருக்கு மிதக்கத்தால் எல்லா சுகமுந் தோன்று மென்பது துணிபு. இத்தகைய தானத்துள் உத்தமதான மென்றும் மத்திம தானமென்றும், அதம தானமென்றும் மூன்று வகைப்படும். இவற்றுள் உத்தம தானமாவது மெய்ப் பொருளை விரும்பும் மேன்மக்களாகவும், முக்குற்றங்களை யகற்றும் மூதறி வாளரா கவும் விளங்குவோரைக் கண்டு அவர்களெடுத்துள்ள முயற்சியை முடிக்கத்தக்க வுதவியாம் தானஞ்செய்து வருதலே உத்தமதான மென்னப்படும். ** முன்கலைதிவாகரம்** அறத்தினாற்றியவரும் பெரும் பொருளை புறத்துறைக் குற்ற மூன்றறுத்த நற்றவற்கு கொள் கெனப் பணிந்து குறையிரந்த வர்வயி னுள்ள மூவந்தீவ துத்தம தானம். திக்கற்று மிக்க மெலிந்து யேழைகளுக்கும், குருடர்களுக் கும், ஊமெகளுக்கும், தொழில் செய்ய சக்தியற்ற அங்கவீன ருக்கும் செவிடர்களுக்கு மீவது மத்தி மதான மென்னப்படும். ஆதுலர்க்கந்த கரும ருறுப்பிலிகள் செவிடர்க்கீவது மத்தியதானம். சகலருமறியக் கூச்சலிட்டளிப்பதும், கீர்த்தியாம் புகழ்வேண்டு மென்றளிப்பதும், நம்மெய் லோபியென்று சொல்லுவார்களென பயந்தளிப்பதும், ஒரு பலனைக் கருதியளிப் பதும், பிரபுவென்று பலர் சொல்லும்படி யளிப்பதும், பார்ப்போர் மெச்சும்படி யளிப்பதும் ஒருவர் கேட்டுக் கொண்டதின் பேரிலளிப்பதும் அதமதானமென்று கூறப்படும். ஆர்வம் புகழே, யச்சங், கைம்மாறு, காரணங் கண்ணோட் டம் கடப்பாடென்றிவை ஏழுங்கடைபடு வதமதானம். இத்தகைய மூவகை தானத்தில் உலக சீர்திருத்தத்திற்கும் மக்கள் சீர்திருத்தத்திற்கும் ஆதியாக விளங்கி புலன் தென்பட நோக்கும் தென்புலத்தோராகும், சமண முநிவர்களுக் கீவதே உத்தமதா நமாதலின் அதன் சாதனங்களா லுணர்ந்த ஒளவையும் தானமது விரும்பு என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** திரிக்குறள்** தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கறானென்றாங் கைம்புலத்தா றோம்பறலை. ** இஸ்காந்தம்** துறந்தவர்கள் வேண்டியதோர் துப்புரவு நல்கி யிறந்தவர்கள் காமுறு மிருங்கடனியற்றி அறம்பலமாற்றி விருந்தோம்பு முறையல்லாற் பிறந்த நெறியா லுளதோர் பேருதவி யாதோ ** 56. திருமாலுக் கடிமை செய்.** திரு - மனுமக்களுட் சிறந்த, மால் - புத்தபிரான், அடிமை - பாத தூளி யென்றிரஞ்சி, செய் - துதி செய்யுமென்பதாம். தன்மச்சக்கரப் பிரவர்த்தன னென்ன உலகெங்கும் வட்டமிட்டு அறவாழியை யுருட்டியது கொண்டு மாலென்னும் பெயர்பெற்ற புத்தபிரானின் பாததூளி யென்றெண்ணி சங்கத்தோர்களையே சங்கறனெனப் பாவித்து சங்க தருமத் தையே சிந்தித்து பற்றறுக்க வேண்டு மென்னுங் கருத்தால் பற்றற்றானுக் கடிமையாகவேண்டுமென்பது கருத்து. ** சீவகசிந்தாமணி** மலரேந்து சேவடியே மாலென்ப மாலா வலரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுவா னலரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுமே லிலரே மல ரெனினு மேத்தாவா றென்னே. ** சூளாமணி** கருமாலை வெவ்வினைகள் காரளரநூறிக் கடையிலா வொண் ஞானக் கதிர்விரித்தாயென்று மருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்று மடியே முன்னடி பரவு மாற்றிவதல்லாற் றிருமா லே தேனாரு மறவிந்த மேந்துந் திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ பெருமானே நின்பெருமெய் நன்குணரமாட்டா பிணங்குவார் தம்மெய் வினைபிணக் கொழிக்கலாமே. இத்தகயைாய் புத்தபிரானைத் திருமாலென்று சிந்தித்திருப் பதுமன்றி பின்கலை நூலாகும் நிகண்டில் காப்புக்கு முன் னெடுக்குங் கடவுள்தான் மாலே யாகுமென்று கூறியுள்ள விதியின்படி புத்தபிரானை கண நாயகரென்றும், விநாயக ரென்றும் சகல நூலாக்கியொன்களுந் தங்கடங்கணூற்களின் காப்பில் சிந்தித் திருக்கின்றார்கள். இதினந்தரார்த்தம் உணராமலே சிந்தித்தும் வருகின்றார்கள். தேவரென்பார் யாவருக்கும் வழிகாட்டியும், ஆதிதேவனு மாக சிறந்திருந்தபடியால் நாயனார் திரிக்குறளுக்குச் சான்றுக்கவிகொடுத்துள்ள புத்த சங்கத்தோராகும் கவிசேகர பெருந் தேவனார் “தேவிற் றிருமாலெனச்” சிறந்த தென்னுந் திருவாக்கினாலும் திருமாலென்னும் பெயர் புத்தருக் குரிய சகஸ்திர நாமங்களிலொன்றென் றறிந்துள்ள ஞானத்தாய் தனது ஞானகுருவாம் திருமாலுக் கடிமைசெய் யென்று திருந்தக் கூறியுள்ளாள். ** 57. தீவினையகற்று** தீய - கொடிய, வினை - செயலை, அகற்று - இதயத்திற் பதிய விடாது நீக்கு மென்பதாம். பொய்யைச் சொல்லி வஞ்சிப்பதும், அன்னியர் பொருளை யபகரிப்பதும், பிறர் மனையாளை யிச்சிப்பதும், சீவப்பிராணி களை வதைப்பதும், மதி கெடுக்கும் பானங்களைக் குடிப்பதும் ஆகிய தீவினைகளாம் பஞ்சமா பாதகங்களை யகற்றவேண்டு மென்பது கருத்து. ** திரிக்குறள்** வினைக்கண் விளைகெட லோம்பல் வினைக்குறை தீர்த்தாரிற் றீந்தன்றுலகு. இத்தகையத் தீவினைகள் ஒழிந்த விடத்து ஞானச்சுடர் விளங்குவதை அனுபவங்கொண்டு அறவாழியான் போதித் துள்ளபடியால் அவரது போதனையைப் பின்பற்றிய புத்த சங்கத்தோருந் தங்கள் தியானங்களில் விளக்கியுள்ளார்கள். ** 58. துன்பத்திற் கிடங்கொடேல்.** துன்பத்திற்கு - உபத்திரவமுண்டாவதற்காய, இடம் - ஆதரவை கொடேல் -நீ எக்காலுங் கொடாதே யென்பதாம். அதாவது, சூதாட்டத்திற்கு யிடங் கொடுத்தலுந் துன்பம் கொலைபாதகனுக் கிடங்கொடுத்தலுந்துன்பம், கள்ளருந்தும் களியாட்டலுக் கிடங்கொடுத்தலுந் துன்பம், விபசாரிகளுக்கு வீடு கொடுத்து வைத்தலுந் துன்பம், பொய்யைச் சொல்லித் திரிபவ னென்றுணர்ந்தும் அவனுக்கிடங் கொடுத்தலுந் துன்பம், ஈன செயலை யுடையார்க்கு இல்லிடங் கொடுப்பின் அதிகாரிகளால் அவர்களுக்குத் துன்பம், இல்லங் கொடுப்பவ னுக்குந் துன்பம் உண்டாவது நிட்சயமாதலின் துன்பத்தை யுண்டு செய்யுஞ் செயலுக்கு யிடங் கொடேலென்று வற்புறுத்தியுள்ளாள். ** காக்கை பாடியம்.** வானவர்க்கரசன் வாய்மை யுணர்ந்து ஈனச் செயலுக் கிடந்தரா தகற்றி மோனவரம்பி லுற்று நிலைத்து ஞானத் தானம் நல்குவரன்றே. ** 59. தூக்கிவினை செய்.** தூக்கி - சீர்தூக்கி, வினை - ஒவ்வோர் தொழிலையும், செய் - செய்யக் கடவாய் என்பதாம். நீ செய்யப்படும் ஒவ்வோர் தொழிலையும் சீர்தூக்கி நிதானித்துச் செய்ய வேண்டு மென்பதாம். ** குறுந்திரட்டு.** "ஆராய்ந்து செய்பவனே யறிவுள்ளோனாம் அடக்கமறிந்தடைபவனே யருளுள்ளோனாம்" ** 60. தெய்வமிகழேல்.** தெய்வம் - தேய்வகமாம் உள்ளொளி கண்டோரை இகழேல் - நீ தாழ்வு செய்யாதே என்பதாம். அதாவது, மக்களென்னும் ஆறாவது தோற்றத்திற்கு மேலாம், ஏழாவது தோற்றமென்னும் தெய்வமென்போனை, ஆறாவது தோற்ற மான மனுகுலத்தோன் இகழ்வானாயின், அக்கொடுமொழியால் உள்ளக் களிம்பாம் வஞ்சக மிகுந்து தாழ்ந்த பிறவிக்கேகி தவிப்பா னென்பது கருத்து. ** விவேகசிந்தாமணி** ஆசாரஞ் செய்வாராகி லறிவொடு புகழு முண்டாம் ஆசார நன்மெயானாலவனியிற் றேவராவர் ஆசாரஞ் செய்யாராகி லறிவோடு புகழுமற்று பேசார்போற் பேச்சுமாகி பிணியொடு நரகில் வீழ்வார். இவற்றுள் மெய்த் தேவர்களென்றும், பொய்த் தேவர்கள் ளென்றும் இருவகையுண்டு. அவர்களுள், மக்களென சீல மிகுத்து ஒழுக்கத்தினின்று விவேக மிகுத்தோர்களை சருவ மக்களுந் தேவர்களென்று கொண்டாடி வருவ தியல்பாகும். இவர்களே மெய்த் தேவர்களாவர். பொய்வேதப் புலம்பலாலும், பொய்புராணக் கட்டுக் கதைகளாலும், ஆகாயத்தினின்று பூமியில் வந்து தோன்றினா ரென்னும், பொய் தேவக் கதைகளையும் ஆகாயத்திலிருந்த தேவர் பெண்வயிற்றிற் பிறந்தாரென்னும் பொய் தேவக் கதைகளையும், அவனைக் கொல்ல அவதரித்தான் இவனைக் கொல்ல அவதரித்தானென்னும் பொய் தேவர்களையும், அந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான் இந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தா னென்னும் பொய் தேவர்களையும், விசாரணைப் புருஷர் இழிவு கூறுவதில் ஒரிடுக்கணுமில்லை, புகழ்ச்சி செய்வதால் ஓர் பிரயோசனமுமில்லை. மக்களினின்று தேவரெனத் தோன்றியவர்கள் பிறப் பிறப் பற்று மறுபடியுங் கருவில் வந்து தோன்றார்களென்பது சாத்தியமாம். ** சீவகசிந்தாமணி தேவர்கள் லட்சணம்.** திருவிற் பொற்குலத்திற் றேர்ந்த தேவர்தன் தண்மெய் செப்பிற் கருவற்று சென்று தோன்றார் கானிலந் தோய்தல் செல்லா குருவமே லெழுகலாகா வொளியுமிழ்ந் திலகுமேனி பருதியினியற்ற தொக்கும் பன்மலர் கண்ணினாடா பொய்க் குருக்களின் கற்பனா வேதங்களிலும் புராணங் களிலும் வரைந்துள்ள பொய்த் தேவர்கள் கதைகளையும், அவர்கள் நம்பிக்கைகளையும் ஒழித்து மெய்த் தேவர்களும், எக்காலுந் தோற்றக்கூடிய யேழாவது தோற்ற முடையவர்களு மாகிய மகா ஞானிகளை யிகழலாகா தென்னும் பெரு நோக்கங் கொண்டு தெய்வமிகழேலென்னுந் தெளிவுபடக் கூறியுள்ளாள். ** சொரூபசாரம்.** எங்கும் பொதுவா யிருக்குமொரு சீவன்முத்தர் தங்கு மிடந்தானே தலவாச - மங்கவர்கள் பார்வையே தீர்த்தமவர் பாதார விந்தமலர்ச் சேவையே சாயுச்சியம். ** 61. தேசத்தோடொத்துவாழ்.** தேசத்தோடு - தேசத்துள்ளோர் சீலத்துடனும் ஒழுக்கத் துடனும், ஒத்து- மனமுவந்து வாழ் -நீ வாழக் கடவாய் என்பதாம். அதாவது, தேகத்துடன் ஒத்து வாழ்தலும், ஒரு தேசத்துடன் ஒத்து வாழ்தலும், ஒரு பொருளைத் தரும் தேகத்துடன் ஒத்து வாழ்தலாவது மிகு புசிப்பால் மந்த வேதனையுண்டு, மிகு போகத்தால் தாது கெட்டு நஞ்சடைதலுண்டு, மிகு அவாவால் பெருந்துக்கமுண்டு, இவற்றை நிதானித்து மித புசிப்பு, மித போகம் மித அவாவினின்று வாழ்தலே தேகத்தோ டொத்துவாழ்த லென்னப்படும். அவைபோல்; தேசத்தோருக் குள்ள பொய்யாவிரத சீலத்திலும், கொல்லாவிரத சீலத்திலும், களவாவிரத சீலத்திலும், காமமிகா விரத சீலத்திலும், மதுவால் மயங்காவிரத சீலத்திலும் ஒத்து வாழ்க வேண்டுமென்பது கருத்தாம். இத்தகைய பஞ்சசீலத்தோருடன் ஒத்து வாழாது பஞ்சபாதகச் செயலாம் சீலங்கெட்டு ஒத்து வாழ்வானாயின் சீலமிகுத்தோர் யாவரும் சீ சீ யென்றிகழ்ந்து சேரவிடா தகற்று வார்கள். அத்தகைய வாழ்க்கைத் துணையற்று வாழ்வதினும் மடிவது மேலாம். இத்தகைய சீலத்தோருடன் ஒத்து வாழ்க வேண்டு மென்பது அம்மன் கருத்தேயன்றி நீதிநெறி கெட்டு அவன் பெரிய சாதி, இவன் சிறிய சாதியென்போருடனும், அவன் சாமி பெரிய சாமி, இவன் சாமி சின்ன சாமியென்போருடனும் ஒத்து வாழ்க வேண்டு மென்னுங் கருத்தன்று. நீதியும், நெறியுமமைந்த தேசம் சீரும் சிறப்புமடையுமேயன்றி, அநீதியும் அறநெறியும் அமைந்த தேசம் ஒரு காலும் சீரும், சிறப்பு மடையப் போகிறதில்லை. ஆதலின் சீலமாம் நீதி நெறியமைந்த தேசத்தோருடன் ஒத்து வாழ்க வேண்டுமென்பது துணிபு. ** பழமொழி விளக்கம்.** தேரோடு மணிவீதி தண்டலையார்த் திருவமைந்த தேசமெல்லாம் பேரோடும் படைத்த வீராதி வீரனெனும் பெரியோனேனும் நேரோடும் உலகத் தோடொன்றுபட்டு நடப்பதுவே நீதியாகும் ஊரோடவுடனோடி நாடோட நடுவோட லுறுதிதானே. நீதிநெறியாம் நேர்வழியில் ஊரோட வுடனோடலும், நாடோட நடுவோடலும் சுகநிலையுறுதி தருவதாகும். ** 62. தையல் சொற்கேளேல்.** தையல் - கொடூரமாம், சொல் - வார்த்தைகளை, கேளேல் செவி கொடாதே என்பதாம். எதிரியால் உன்னைத் தைக்கக்கூறு மொழிக்கு, செவி கொடுப்பாயாயின் கோபமீண்டு அவனுடன் போர்செய்ய நேரும் அதனால் துக்கம் பெருகும். ஆதலின் எதிரி தையல் சொற்களுக்கு செவி கொடாதிருக்க வேண்டுமென்பது கருத்து. அதாவது, குத்திக்குற்றி யிழுக்குங் கொடூரச் செயலுக்குத் தைத்தலென்றும், பனியின் கொடூரத்தால் இலையுதிரு மாதத்திற்குத் தைமாதமென்றும்; கொடூர நெய் கலந்த வஸ்துக் களுக்குத் தைலமென்றும், புண்பட யிதயத்தில் தைக்கக்கூறும் கொடூர வார்த்தைக்குத் தையல் மொழியென்றுங் கூறப்படும். அன்னியனாற் புண்படக்கூறுந் தையல் மொழியாங் கொடூர வார்த்தையை செவியிற் கேட்டவுடன் கோபமீறும். அக்கோபத்தால் ஒருவருக்கொருவர் கைகலக்குந் தையலுண் டாம். அத்தையலால் துன்பம் பெருகிமாளா துக்கத்திற் காளாக்கிவிடும். ஆதலின் எதிரிகளாற் கூறுங்கொடூர சொற்களை கேளாதிருப்பதே சுகமென்றறிந்த ஞானத்தாய் தையல் சொற்கேளேலென்று வற்புறுத்தித் கூறியுள்ளாள். ** 63. தொன் மெய்மறவேல்.** தொல்-பூர்வ, மெய் -தேகிகளாம் பழமெயாங் குடும்பத் தோரை, மறவேல் - என்றும் மறவாதே என்பதாம். வாழையடி வாழைபோல் தொன்று தொட்டு தோன்றி வரும் பழ மெய் தங்கிய குடும்பத்தோரை மறவாதிருக்க வேண்டுமென்பது கருத்து. தொன்றுதொட்டு வழங்கிவரும் பூர்வ குடும்பத்தோரை மறவாமலிருப்பதினாலுண்டாகும் விருத்தியும், மறப்பதினாலுண்டாகுங் கேடும் யாதென் பீரேல். தொன்மெய் மறவாச் செயலால் குடும்பம் விருத்தி யடைந்து அவர்களுக்குள் விவேக விருத்தியடைந்தோர் சார்பால் முக்குடும்பத்தோர் சுக விருத்தியும், ஞானமும் பெறுவதுடன் பின் குடும்பத்தோரும் விருத்தியினின்று சுகவாழ்க்கைப் பெறுவார்கள். தொன்மெயாம் பூர்வசுற்றத்தோரை மறந்து பற்றற்ற வரைப் போல் நடித்தல் முன் குடும்பத்தோர் தோற்றமும், சேர்க்கையும் மறைந்து போவதுடன் பின் சந்ததிகளும் விருத்தியின்றி பாழடைந்து போம். ** திரிக்குறள்.** பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றன் றேகம் பலவுந் தரும். ** 64. தோற்பனை தொடரேல்.** தோற்பனை - உன்னால் முறியடிக்கப்பட்டோனை, தொட ரேல் - பின்பற்றிச் செல்லாதே என்பதாம். வில்லால் தோற்றவனுக்கும், வித்தையால் தோற்ற வனுக்கும் உள்ள விரோதம் எதிரியை யெவ்வகையேனும் ஜெயிக்குமளவும், உள்ளனவாதலின் அத்தகைய தோற்பனைத் தொடர்ந்து செல்லுவதினால் எத்தகையுந் துன்பமுண்டா மென்றுணர்ந்த ஞானத்தாய் தோற்பனைத் தொடரேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். இவற்றுள் தோற்பன தோடரே, லென்னும் பாட பேதமு முண்டு. தோற்ற வியாஜியத்தை தொடர்ந்தும் ஜெயித்த தனந்த முண்டு. தோற்ற யுத்தத்தை விடாமுயற்சியாற் றொடுத்து ஜெயித்தயுத் தங்களும் அனந்தமுண்டு. ஆதலின் தோற்பனை தொடறே லென்னும் வாசகமேயன்றி தோற்பன தொடரே லென்னும் வாசகமன்று. ஓர் வியாஜியத்திலேனும் யுத்தத்திலேனும், வாக்கு வாதத்தி லேனும் அபஜெயமடைந்தோனின் உள்ள வஞ்சினத்தையும் பொறாமையையு முணராது மித்துருவென்றெண்ணி தோற்ற வனைத் தொடர்வதாயின் கேடுண்டென்பது கருத்தாம். ** 65. நன்மெய்க் கடைபிடி.** நல் - நல்ல, மெய் - தேகி, நற்றேகி, நல்லவன் என உலகோர் சொல்லுஞ் செயலை, கடைபிடி - முடிவாய பாக்கியமென்று பற்றுமென்பதாம். உலகத்தோரால் நல்லவன், நன்மார்க்கன், நற்குணத் தோன், நற்புத்திரன், என்று சொல்வதற்கேதுவாம் நன் மெய்யைத் தோற்றி வைப்பான் வேண்டி நன்மெய்க் கடைபிடி யென்று, இரண்டாவது பேதவாக்கியத்தைக் கூறியுள்ளாள். அதாவது பொய்ச் சொல்லாமெய், பிறர்மனை நயவாமெய், களவு செய்யாமெய், கள்ளருந்தாமெய், கொலை செய்யாமெய் ஆகிய சுத்த தேகிகளாக வாழ்தலே நன்மெய்க்கடை பிடித்த லென்று கூறத்தகும், நல்வாய்மெய் நல்லூக்கம் நற்சாட்சியுடைய நன்மையாம் சுத்த தேகியாக வாழ்தலே நிர்வாணத்தின் சுருக்க பாதையுமாகும். ** 66. நாடொப்பன செய்.** நாடு - நாட்டோர் நன்செய் புன்செய் பூமியின் செயலுக்குரியோர், ஒப்ப - அவர்கள் சம்மதிக்கும் படியான செயலை, செய் -நீ செய்யக் கடவாய் என்பதாம். அதாவது - நாடென்றும், நகரமென்றும், பிரித்துள்ள இரு வகுப்பார்க்குள், நகரவாசிகள் யாவரும் அரசனது செங்கோ லுக்குள் அடங்கி வாழ்தல் போல் நாட்டு வாசிகள் யாவரும் வேளாளத் தொழிலாம் ஏரடிக்கும் கோலுக் கொப்பி வாழ்க வேண்டுமென்பது கருத்தாம். அஃது யாதென் பீரேல் பூமியை உழுதுண்போனாம் வேளாளனுக்கு ஏரும், மாடும் இல்லாவிடில் மற்றவனிடம் ஒப்பி உதவி புரிதலும், நீர் வாய்க்காலின் ஒழுக்குகளை ஒருவன் பூமிக்குப் பாய்ந்தபின் மற்றவன் பூமிக்கு ஒப்பிப் பாய விடுதலும் ஆகிய சர்வ மேழிச் செயலையும் கோழைப்படாது செய்தற்கு நாடொப்பச் செய்தலே நலமாகும். நாடொப்பாது ஒருவன் ஏரிக்கால் நீர் பாய்ச்சுமுன் மற்றொரு வன் பாய்ச்சுதலும், ஒருவன் மேழி முடியுமுன் மற்றொருவன் ஏரைப் பிடித்தலுமாகிய ஒப்பாச் செயலைச் செய்தல், நாட்டுக்குக் கேட்டை விளைவிக்குஞ் செயலாதலின் உழவோ ராம், நாட்டோர் நாடொப்பனச் செயல் வேண்டுமென வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 67. நிலையிற் பிரியேல்.** நிலையில் - கியான விழிப்பினின்று, பிரியேல் - நீ நழுவாதே என்பதாம். அதாவது தோற்றும் பொருட்கள் யாவும் கெடுவ தியல்பாதலின் அத்தோற்ற நிலையிலும் அதன் அவாநிலையிலும் நில்லாது உண்மெய் உணரும் சுழிமுனை நிலையைப் பிரியெ லென்பது கருத்தாம். குருவருளாற் காட்டிடு நிலையும் அந்நிலையே யாம். ** அகஸ்தியர்.** விழித்துமிக பார்த்திடவே பொரிதான் வீசும் முச்சந்தி வீதியிலே தீபந் தோன்றும் சுழித்தியிலே போகாது ஒருமனதாய் நின்றால் சுத்தமென்ற நாதவொலிக் காதிற் கேழ்க்கும் இழுத்ததென்று நீ கூடத் தொடர்ந்தாயானால் எண்ணெண்ணா பிறப்பிறப்பு எய்தும் பாரும் அழுத்திமன கேசரத்தில் நின்று மைந்தா அப்பனே லலாடத்தில் தூங்கு வாயே. ** ஞானக்குறள்.** ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண்டங் காதி நிலை. அழியும் நிலையைப்பற்றி நிற்பது அழுகைக்கும் பற்கடிப் பிற்கும் ஆதாரமாதலின், அத்தகைய துக்கத்தையகற்றுவான் வேண்டி அழியா நிலையாம், உள்விழிநோக்க நிலையிற் பிரியே லென்று கூறியுள்ளாள். ** 68. நீர்விளையாடேல்.** நீர் - பங்குனி பருவத்தில் ஜலத்தால், விளையாடு - விளையாட்டை, ஆடேல் நீவிளையாடாதே யென்பதாம். அதாவது பூர்வ காலத்தில் சித்தார்த்தியார் காமனையுங் காலனையும் வென்ற பங்குனி மாத பருவத்தில் பௌத்தவர சர்களும், குடிகளும் ஒன்றுகூடி பெண்களும் புருடரும் நீர் விளையாடுவதும் காமன் பண்டிகைக் கொண்டாடுவதும் வழக்கமாகும். அத்தகைய விளையாட்டினால் மதிமயங்கி பெண்களின் கற்பு நிலை தவறுதலும், புருஷர்கள் பஞ்சவிரதங் கெடுதலு மாகிய நீர் விளையாட்டை சத்திய சங்கத்தோர் தடுத்துள்ளது மன்றி அம்மனும் அவ்விளையாட்டைக் கண்டித்திருக்கின்றாள். அது கண்டே சருவதேச பௌத்தர்களும் நீர்விளை யாட்டை நீக்கிவிட்டபோதிலும் மார்வாடிகளும் குஜிராத் தியரும் பெண்களை நீக்காமலும், நீக்கியும் புருஷர்கள் அந்நீர் விளையாட்டை நாளது வரையில் விளையாடி வருகின்றார்கள். பூர்வம் புருஷர்களும் பெண்களும் அந்நீர் விளையாடுவதினா லுண்டாகுங் கேடுகளை யுணர்ந்த ஞானத்தாய் நீர்விளையாடே லென்று காமன் விழாவையே கண்டித்திருக்கின்றாள். ** சீவகசிந்தாமணி** காசறு துறவின் மக்க கடவுளர் சிந்தை போல மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயனமுன்னி யாசற நடக்குநாளுமைங்கணைக் கிழவன்வைகி பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனி பருவஞ் செய்தான். முழவங்கண் டுயிலாத முதுநகர் விழவுநீர் விளையாட்டு விரும்பினாற் றொழுவிற் றோன்றிய தோமரு கேவலக் கிழவன் முதெயில் போற்கிறர் வுற்றதே. இன்று நீர் விளையாட்டினு ளேந்திழை தொன்று சுன்னத்திற் றோன்றிய வேறுபா டின்றென் னாவிக்கோர் கூற்றமென்மெயா நின்று நீலக்கணித்திலஞ் சிந்தினாள். சீராவச் சிலம் பேந்து மென்சீரடி யாராவக் கழலாட வரோடும் பேராவக் களம் போன்று பொன்றார்புன னீராவும் விளைத்தார் நிகரில்லார். கார்விளையாடிய மின்னனை யார்கதிர் வார்விளையாடிய மென்முலை மைந்தர் தார்விளையாட்டொடு தங்குபு பொங்கிய நீர்விளையாட்டணி நின்றதை யன்றே. ** 69. நுண்மெய் நழுவேல்.** நுண் - நுட்பத்திலறியும் விவேக மிகுத்த, மெய் - தேகி யெனத் தோன்றி, நழுவேல் - அதினின்று கேடடையாதே என்பதாம். நுட்பத்திலறிந்துக் கொள்ளக்கூடிய விவேகமும் நுண்ணி திலாய்ந்து ணரக்கூடிய விசாரணை மிகுதியிலிருந்து நழுவி, விவேக மற்றோன் விசாரணை யற்றொனென்பதாயின், முன்தேக தோற்ற சிறப்புக் கெடும். ஆதலின் நுண்ணிய அறிவை மேலும் மேலும் விருத்தி செய்ய வேண்டுமே யன்றி அவற்றினின்று நழுவேலென்பது கருத்தாம். இவற்றுள் தற்காலம் அச்சிட்டுள்ளப் புத்தகங்களில் நுண்மை நுகரேல் எனும் வாசகபாடபேதமும் ம-௱-௱-ஸ்ரீ. மீனாட்சி சுந்திரம் பிள்ளை மாணாக்கர் கோவிந்தப் பிள்ளை யவர்கள் ஏட்டு பிரிதியிலும் (நுண்மெய் ஈழுவேல்), என்னும் வாசக பாடபேதமும் உள்ளது கண்டு உசாவுங்கால் நுண்மை நுகரேல் எனும் வாசகஞ் சிதைந் துள்ளதன்றி சகலதேச மக்களுக்கும் பொருந்தா பொருளுள்ளதால் நுண்மெய் நழுவேல் எனும் சகல மக்களுக்கும் பொருந்தும் வாசகத்தை வெளியிட் டுள்ளோம். ** 70. நூற்கலை கல்.** நூற்கலை - அறிவை வளர்க்குங் கலை நூற்களை கல் - நீ வாசிக்கக் கடவாய் என்பதாம். அதாவது காமவெகுளி மயக்கங்களைப் பெருக்க கூடிய பல வகை நூற்களிருக்கின்றபடியால் அவற்றை கண்ணோக் காமலும், கற்காமலும் அறிவை விருத்திச் செய்யக்கூடிய கலை நூற்களையே கற்க வேண்டுமென்பது கருத்தாம். தற்காலம் பதித்துள்ள புத்தகங்களில் நூற்பல கல் என்றிருந்த போதினும் புராதன வேட்டுப் பிரதிகளில் நூற்கலை கல்லென்றே வரையப் பட்டிருக்கின்றது. ** காக்கை பாடியம்.** பலநூல் கற்றுப் பாழடை வதினுங் கலைநூற் கற்று காட்சி வடிவாஞ் சிலைநுதற் காம சேட்டை யகற்றி யுலகமவர் மாட்டென்னலு முவப்பே. ** 71. நெற்பயிர் விளை.** நெல் - நெல்லென்னும் பயிர் - தானியத்தை, விளை - நீ வுழுது பயிரிடு மென்பதாம். அதாவது சகல ஜீவர்க்கும் உணவாக விளங்கும் தானியம் நெல்லாதலின் அவற்றை வேண முயற்சி செய்து விளைவிக்க வேண்டுமென்பது கருத்தாம். பெளத்தர்கள் யாவரும் தங்கள் சுய பிரயோசனத்தைக் கருதாது பலர் பிரயோசனத்தையே மிகக் கருதுவராதலின் சகல ஜீவர்களுக்கும் பிரயோசனமாகும் நெற்பயிரை விளைவிக்கும்படி வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 72. நேர்பட வொழுகு.** நேர் - சகலவருக்கும் நல்லவன் நேரானவனென்று, பட காணும் படி, ஒழுகு-நீ வாழக்கடவாயென்பதாம். நஞ்சுள்ள பாம்புகள் யாவும், பெரும்பாலும் சகலர் கண் களுக்கும் புலப்படாமல் உலாவும், நஞ்சிலா நீர் பாம்பு களோ சகலர் கண்களுக்கும் நேர்பட உலாவும். அதுபோல் நன்மெய்க் கடைபிடித்து சகலர் கண்களுக்கும் நேர்பட ஒழுகவேண்டு மென்பது கருத்தாம். ** 73. நைவன நணுகேல்.** நைவன - வாக்கால் நையவுரைக்கும் கூட்டத்தாரும் தேகத் தால் நைய புடைக்கும் கூட்டத்தாருமாகிய தீயரை, நணுகேல் நெருங்கிய வாழ்க்கையை புரியாதே என்பதாம். சுகதேகமும், சுகுணமும் தீயர் சேர்க்கையால் நைவத னுபவ மாதலின் அத்தகைய தீயச் செயலோரால் நைவன நணுகேல் என்று கூறியுள்ளாள். தன்னிற்றானே கேட்டை வருவித்துக் கொள்ளுஞ் செயலுக்கு. நையலென்றும் நைவன வென்றுங் கூறப்படும். ** 74. நொய்யவுரையேல்.** நொய்ய - அன்பு மிகுத்தோர் மனமுடைய, உரையேல் - ஒரு வார்த்தையும் பேசாதே என்பதாம். அதாவது குடும்பத்தில் அன்பு திரண்டு வாழ்பவர்களையும் சினேகிதத்தில் அன்புதிரண்டு நேசிப்பவர்களையும் அடுத்து அவர்களுக்குள் திரண்டுள்ள அன்பை நொய்ய வுடைப்பதா யின் குடும்ப மென்னுங் கூடி வாழும் வாழ்க்கையுமற்று, சிநஹித மென்னும் அன்புமற்று சேர்க்கைப் பிரிந்துபோம். அத்தகைய பிரிவினால் வாழ்க்கைக் கனத்தங் கேடுண்டாவதை யுணர்ந்த ஞானத்தாய் வார்த்தைப் பேசுவதில் நொய்யவுரையேல் என்று கூறியுள்ளாள். ** 75. நோய்க்கிடங்கொடேல்.** நோய்க்கு - தேகத்தில் வியாதி தோன்றற்கு, இடம் - ஓராதா ரத்தைக், கொடேல் - என்றுஞ் செய்துக் கொள்ளாதே என்பதாம். மித மிகுத்தப் புசிப்புந் கிடங்கொடுத்த விடத்திலும், பல தேக போகத்திற்கு இடங்கொடுத்த விடத்திலும் வியாதி தோன்றி உடலை வதைப்பது உள்ள சுவாப மாதலின் இன்னின் னக் கொரூரச் செயல்களால் இன்னின்னான் இன்னினிய நோய் கண்டு உபாதைப்படுகிறானென் றுணர்ந்தும், அதனை மறந்தும் வாதைப்படுவது மக்களியல் பாதலின் அதினின்று விழிப்பான் வேண்டி நோய்க்கிடங் கொடேலென்று கூறியுள் ளாள். ** 76. பழிப்பன பகரேல்.** பழிப்பன - மற்றவர்களைப் பழித்தலும் இழிவு கூறுதலு மாகிய மொழிகளை, பகரேல் - மறந்தும் பேசாதே யென்பதாம். தனது குற்றங்களையுந் தனது குடும்பத்தோரிழிவுகளையும், தான் செய்யுமிழிய தொழிலாம் செயலையுங் கருதாது ஏனையோர் குற்றங்களையும், ஏனையோர் குடும்ப யிழிவையும், ஏனையோர் தொழிலிழிவையும் எடுத்துக் கூறுவதாயின் ஏனையோரிவனி ழிவையும், பழியையுமெடுத்துக் கூறியேளனஞ் செய்வதுடன் எல்லோர்க்கும் விரோதியாய் சகலரானுஞ் சீ, சீ யென்றிகழப் படுவான் ஆதலின் பகரு மொழிகளில் பழிப்பன பகரே லென்று கூறியுள்ளாள். ** 77. பாம்பொடு பழகேல்.** பாம்பு - விஷப்பற் பையை யுடைய, ஓடு - ஜெந்தினோடு, பழகேல் - எப்போதும் நேசிக்காதே என்பதாம். பற்களில் விஷப்பையை சேர்த்து வைத்துள்ள ஜெந்துக் களுடன் பழகுவதாயின் எக்காலத்திலேனும் ஓர்கால் அப்பையி லுள்ள விஷத்தை வெளியிடுவதற்கு வழிதேடும். வழிதேடுங் காரணமோ அதன் மீரிய கோபமேயாம். அக்கோபத்தால் கடித்து விடுத்த விஷமானது பழகியவன் தேக முழுவதும் பரவி நஞ்சமைந்து விடுவதுடன் நசிந்தும் போகின்றான். ஆதலின் நஞ்சுள்ள ஜெந்துக்ளுடன் பழகலாகா தென்பது கருத்து. ** 78. பிழைபடச் சொல்லேல்.** பிழை - குற்றம், பட-உண்டாகச், சொல்லேல் - பகராதே யென்பதாம். அதாவது துஷ்டர்கள் தங்களுக்குள் வன்னெஞ்சங், குடிகெடுப்பு, பொறாமெய், நீச்சச் செயல் முதலியன நிறைத்துக் கொண்டு குற்றமற்றப் பெரியோர்களைக் கண்டவுடன் வெகுண்டு தங்களது நீச்சகுணச் செயலா லவர்களைப் பிழை படக் கூறுவது சுவாபமாகும். அவ்வகைப் பெரியோர் களைப் பழித்தலால் அவர்களுக் குண்டாகும் மனத்தாங்கலின் கொதிப்பே பழித்தவனையும் பழித்தோன் குடும்பத்தோரையும் பாழாக்கும். ஆதலின் இதனந்தரார்த்தங் கண்ட ஞானத்தாய் பெரியோர்களைப் பிழைபடச் சொல்லேலென்று கூறியுள்ளாள். ** 79. பீடுபெற நில்.** பீடு - வல்லமெய், பெற உண்டாகத்தக்க நிலையில், நில் - நிற்கக்கடவா யென்பதாம். தேகமானது தக்க வலுவிலுள்ள வரையில் யாதொரு தொழிலுக்கும், முயற்சிக்குமஞ்சாது எடுத்த காரியங்களை முடிப்பதற் கேதுவானதன்றி பற்பல பிணிகளுந் தோன்றி வுபத்திரவஞ் செய்யாவாம். பீடு குறைந்த கால் எடுக்கும் முயற்சி களுஞ் சோர்வடைவதன்றி தேகத்திற் பற்பல வியாதிகளுந் தோன்றி வுபத்திரவத்தை யுண்டு செய்யும். ஆதலின் ஒவ்வோர் மக்களுந் தங்களது தனங் குறையினும் தானியங் குறையினும் தேகபலங் குறையாது வாழ்தல் சுகநிலையாகும். சிற்றின்பப் பெருக்கத்தினால் தேகசக்தியைக் குறைத்துக் கொள்ளுவதும் பணம் சேர்க்கும் விஷயத்தால் புசிப்பைக் குறைத்து தேக சக்தியைக் குறைத்துக் கொள்ளுவதுமான அனுபவமறியா பொய் வேதாந்த வேஷத்தால் தேக சக்தியைக் குறைத்துக் கொள்ளுவதும் உள்ள வழக்கமாதலின் திரிகாலச் செயலு முணர்ந்த ஞானத்தாய் பொய் விரதங்களாலும் பொய் வேதாந்தத்தாலும் பொய் பொருளாசையாலும் புசிப்பையகற்றி தேகத்தின் பீடுரையாது வொடுக்கிப் பாழடைவார்களென் றுணர்ந்து பீடுபெற நில்லென்று கூறியுள்ளாள். ** 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.** புகழ்ந்தாரை - மற்றவர்களால் புகழத்தக்க பெரியோர்களை போற்றியும் துதிசெய்து கொண்டாடி, வாழ்-வாழக்கடவா யென்பதாகும். அதாவது வித்தையில் மிகுந்தப் பெரியோரென்றும் புத்தியில் மிகுந்த பெரியோரென்றும், ஈகையில் மிகுந்த பெரியோரென்றும் சன்மார்க்கத்தில் மிகுந்த பெரியோரென் றும் புகழ்ந்து அவர்களை போற்றி வாழ்வது ஒழுக்க மிகுத்த வுலகத் தோர் சுவாபமாகும் அவற்றைக் கொண்டொழுகும் நீயும் அவ்விவேக மிகுந்த புருடர்களைப் போற்றி வாழக்கடவா யென்பதாகும். அத்தகைய விவேக மிகுத்த மேன்மக்களாம் பெரியோர்களைப் போற்றி வாழ்தல் அவர்களது வித்தியா விருத்தியின் செயலும், புத்தி விருத்தியின் செயலும் ஈகை விருத்தியின் செயலும் சன்மார்க்க விருத்தியின் செயலுந் தங்களுக்கு விளங்கும் மற்ற பின் சந்ததியோர்களால் தாங்களும் போற்றத்தக்க வாழ்க்கை பெறுவார்கள். ஆதலின் ஒழுக்க மிகுத்தோரால் புகழத்தக்கப் பெரியோர்களை நீயும் போற்றி வாழென்று கூறியுள்ளாள். ** 81. பூமிதிருத்தியுண்.** பூமி - உனது நிலத்தை, திருத்தி - கல் காடுகளைப் போக்கிப் பயிர் செய்து, உண் - நீ புசிக்கக்கடவா யென்பதாம். அதாவது, சகல தொழிலிலும் பூமியைத் திருத்தி உண்ணும் வேளாளத் தொழிலே விசேஷித்ததாகும். எவ்வகையிலென்னில் மகாஞானிகள் அரசர்கள் முதல் ஜீவராசிகளீராக அன்ன மூட்டி ஆதரிக்கும் தொழிலாகலின், பூமியின் பலனை போதித்துள்ளாள். ** ஏரெழுபது.** வெங்கோப கலிக்கடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல முடிதிருந்த பார்வேந்தர் முடிதிருந்தும் பொங்கோதை களியானை போர்வேந்தர் நடத்துகின்ற செங்கோலைத் தாங்குங்கோ லேரடிக்குஞ் செங்கோலே ** 82. பெரியாரைத் துணைக்கொள்.** பெரியாரை - வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் மிகுந்த மேன்மக்களை, துணைக்கொள் - வுதவி பற்றி நில்லு மென்பதாம். மக்களுள் மூர்க்கர் கேண்மெயால் கோபலாபமும், காமிய மிகுதியால் பிணியின் லாபமும் பெற்று துன்புறுவது அனுபவ காட்சி யாதலின் அவிவேகிகளை யணுகாது விவேகிகளை அணுக வேண்டுமென்று கூறியுள்ளாள். ** நீதிவெண்பா.** அரிமந்தி ரம்புகுந்தா லானை மருப்பும் பெருங்கொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில் வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கத்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல். ** 83. பேதமெயகற்று** பேத - பலவகைக் குணங்களும் பலவகைக் செயலு மமைந்த மெய் - நிலையற்ற தேகியென்று பிறர் சொல்லுஞ் செயலை, அகற்று - நீக்கிக்கொள்ளுமென்பதாம். பேதமாகிய நிலையற்ற குணங்களும், நிலையற்ற செயலு மமைந்தவரென்று மற்றவர் காண்பாராயின் எத்தொழிலு மிணங்க விடாமலகற்றி விடுவார்கள். அவற்றால் பலவகை இடுக்கண்களுண்டாகி துக்கம் பெருகிப்போம் ஆதலின் உமக்குள்ள பேதகுணத்தை யகற்று மென்பது கருத்தாம். ** திரிக்குறள்.** நாணாமெய் நாடாமெய் நாரின் மெய் யாதொன்றும் பேணாமெய் பேதை தொழில். ** 84. பையலோ டிணங்கேல்.** பையல் - பரியாசமாம் சிறு சேஷ்டை, ஓடு - உள்ளவர் களுடன், இணங்கேல் சேராதே என்பதாம். அதாவது, மக்களுரு வமைந்தும் குரங்கு சேட்டையுள்ளவர் பாலிணங்கிடில் விவேக விர்த்திக்கு தக்க வார்த்தைகளும், செயலுமின்றி களியாட்டுங் கலகமும், பெருகி வீணே மனத் தாங்க லுண்டாகும். அதனால் வித்யாபுத்தி விருத்திக் குறைந்து வீணே அல்லலடைவார்க ளென்றரிந்த ஞானத்தாய் பரியாசக் காரரை யணுகலாகாதென்னுங் கருத்துடன் பையலோ டிணங்கேல் என்று கூறியுள்ளாள். ** 85. பொருடனை போற்றிவாழ்.** பொருள் - மெய்ப்பெருள், தனை - தன்னை, போற்றி - சிந்தித்து, வாழ் - வாழக்கடவா யென்பதாம். தன்னைத்தா ணுணரென்னுந் தனக்குள்ள நற்செயல் களையுந் துற்செயல்களையு முணர்ந்து தனக்கொரு கேடும் வராது துற்செயல்களை யகற்றி நற்செயல்களைப் பெருக்கி சுகநிலையாம் உண்மெய்ப் பொருளுணர்ந்து நிற்றலே நித்திய வாழ்க்கைக் காதாரமாதலின் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்து கொண்டே போகும் பொய்ப் பொருளை போற்றாது நித்திய ஒழுக்கமாம் நீடு வாழ்க்கை யைத்தரும் மெய்ப் பொருளைப் போற்றி வாழென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்.** பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ** 86. போர்த்தொழில் புரியேல்.** போர் - எக்காலும் வாது வழக்குக் கேதுவாம், தொழில் - கன்மங்களை, புரியேல் - நீ செய்யாதே என்பதாம். ஓர் தொழிலை யாரம்பிக்குங்கால் அத னேது கொண்டு எக்காலமும் வாது வழக்கை யுண்டு செய்யுங் கன்மத்தை புரியாதே யென்று கூறியுள்ளாள். ** 87. மனந்தடு மாறேல்.** மனம் - ஒன்றையெண்ணி, தடு - மந்றொழன்றை, மாறேல் - பிறழாதே என்பதாம். ஊனக்கண் பார்வையிராது நடக்கில் உடல் தடுமாறுவது போல், உள்விழி பார்வையாம் கியான நிலை தவரி மனந்தடு மாறுவ தியல்பாதலின், எக்காலும் விழிப்பினின்று மனந்தடு மாறும் செயலாலுண்டாகும் துக்கவிருத்திகளையும், மனந்தடு மாறாச் செயலாலுண்டாகும் சுகவிர்த்திகளையும், காட்சியின நுபவத்தா லுணர்ந்து கியானக் கண் நிலைப்பதற் காய் மனந்தடுமாறேல் என்று கூறியுள்ளாள். ** 88. மாற்றானுக் கிடங்கொடேல்.** மாற்றானுக்கு - வாக்கிலொன்று மனதிலொன்றுமுள்ள வன்னெஞ்சனுக்கு, இடம் நெருங்கிய இல்லத்தைக் கொடேல் -நீ கொடுக்காதே யென்பதாம். அதாவது உள்ளத்தில் மாறுபட்டவனும் மனதில் மாறு பட்டவனும் செய்கையில் மாறுபட்ட வனுமாகிய வன்னெஞ்ச சத்துருக்களுக்கு இடங்கொடே லென்று வற்புறுத்திக் கூறியுள் ளாள். மாற்றானென்பது - கூற்றனென்பவனுக்கும் பொருளாத லின், காலனுக்கிடங்கொடேலென்பதும் மற்றோர் பாடபேத மாகும். காலனுக் கிடங்கொடுக்கும் வழிகள் இராகத்துவேஷ மோகங்களேயாகும். இம்மூவழிகளிலும் இடந்தரா தகற்றி, யாள்வதே ஜாக்ரதையாம். ** 89. மிகைப்பட சொல்லேல்.** மிகை - துன்பத்தை, பட-உண்டாக்கத்தக்க வார்த்தையை, சொல்லேல் - நீ மறந்தும் பேசாதே என்பதாம், அதாவது உனது குமாரன், குளத்தில் முழுகி விட்டான், உன் கணவனை அடித்துவிட்டார்களென்று வேடிக்கையாக சொல்லும் வார்த்தைகள் கொடு வினையாக முடிந்து பலவகை துன்பத்திற்காளாக்கி விடுகிறபடியால் திடீரென்று மக்களுக்குக் கேட்டையுண்டாக்கத்தக்க வார்த்தைகளைப் பேசலாகாதெனும் தன்மநோக்கத்தால் ஞானத்தாய் மிகைப்பட சொல்லேல் என்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்.** மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழி னறஞ் சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. ** நீதிவெண்பா.** வெய்யோன் கிரணமிகச் சுடுமே வெய்யவனில் செய்யோன் கிரணமிகத் தீதாமோ வெய்யகதிர் எல்லோன் கிரணத் தெரியினிலு மெண்ணமிலார் சொல்லே மிகவுஞ் சுடும். ** 90. மீதூண் விரும்பேல்.** மீ-அதிக, ஊண் - புசிப்பை, விரும்பேல் இச்சியாதே என்பதாம். அதாவது மிதமின்றி மீதூண் இச்சிப்பவர்க்கு சோம் பலும் மந்தமுண்டாகி சர்வ தொழில் விருத்திகளுங் கெடுவ தன்றி சுற்றத்தாரும், பெருவயற்றோனென்றிகழப் பேரெடுப் பான். ஆதலின் மிதாகாரம் புசித்து வித்தியா விருத்தியையும், அறிவின் விருத்தியையும், பெருக்கி சுகவாழ்வைப் பெற வேண்டுமென்னுந் தர்மசிந்தையால் அதிகப் புசிப்பை விரும்பா தேயுங்களென்று கூறியுள்ளாள். ** நீதிவெண்பா.** ஒருபோது யோகியே யொண்டளிர்ச்சைமாதே இருபோது போகியே யென்ப - திரிபோது ரோகியே நான்கு போதுண்பானுடல்விட்டுப் போகியே யென்று புகழ். ** 91. முனைமுகத்து நில்லேல்.** முனை - கூறிய அம்பையேந்தி முனைந்தோன், முகத்து - எதிரில், நில்லேல் - நிற்காதே யென்பதாம். எப்படியெனில் எய்யவேண்டியவன் தவறிடில், எதிர்த் தோன்றியவன் மீது அவ்வம்பு பட நேரிடு மாதலின் சினந்து முனைந்தோர் எதிர் நிற்கலாகாது ஒருவனை நோக்கிவிடும் அம்பின் முன் மற்றொருவன் நிப்பானாயின் அது தவறி யிவன் மீது பட்டு கலகத்தை யுண்டு செய்யும் என்பது கருத்து. ** 92. மூர்க்கரோடிணங்கேல்.** மூர்க்கர்- கோபிகள், ஓடு - உடன், இணங்கேல் நெருங்கே லென்பதாம். முற்கோப மிகுந்த மூர்க்கரை நேசிப்பதனால் இவனுமோர் மூர்க்கனென்று, மற்றவர் மதிப்பதுடன் நல்லோர் நெருங்கவு மாட்டார்கள். நெருங்கினும் நேசிக்கமாட்டார்களென்பது கண்டு, நல்லவனென்று விளங்குங்கால் மூர்க்கரது கேண்மெய் தோன்றின், நல்லவனென்னும் பெயரற்று சுகமிழப்பா னென்னுங் கருணையால், மூர்க்கரோடிணங்கே லென்று கூறியுள்ளாள். ** நீதிவெண்பா.** நல்லொழுக்க மில்லா ரிடஞ் சேர்ந்த நல்லோர்க்கு நல்லொழுக்க மில்லாச்சொ னண்ணுமே - சொல்லிவிடின் பாம்பென வுன்னாரோ பழுதையே யானாலுந் தாம்பமரும் புற்றெடுத்தக் கால். ** 93. மெல்லியா டோள் சேர்.** மெல்லியாள் - மிருது வாக்குடையவள், தோள் - உடன், சேர்- கூடி வாழ்கக் கடவாயென்பதாம். மெல்லிய வாக்கும் மெல்லிய செயலும் மெல்லிய நடையு முடையாளை இல்லாளாக்கி வாழக்கடவா யென்பதாம். ** அறப்பளீசுர சதகம்.** கணவனுக் கினியளாய் மிருது பாஷியாய் மிக்க கமல நிகர் ரூபவதியாய் காய்சினமி லாளுமாய் நோய் பழியிலாத தோர் கால் வழியில் வந்தவளுமாய் மணமிக்க நாணமட மச்சம் பயிர்ப்பென னருமினிய மார்க்கவதியாய் ** 94. மேன்மக்கள் சொற்கேள்.** மேல் - சிறந்த, மக்கள் - மனுக்களின், சொல் வார்த்தையை, கேள் - கேழ்க்கக் கடவா யென்பதாம். வித்தையிலும் புத்தியிலும் மிகுத்துள்ள தன்றி அன்பு ஈகை சாந்தத்தில் உயர்ந்தோர் மாட்டே உலகம் சீர்திருந்துவ தனுபவங் கண்ட ஞானத்தாய் மேன்மக்கள் சொற்கேளென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். சிலர் மேன்மக்களென்றால் உயர்ந்த ஜாதி யென்றும், கீழ்மக்களென்றால் தாழ்ந்த ஜாதி யென்றும் அதனுட்பொருளறியாது வேஷ ஜாதியோர் வகுப்பின்படி பொருட்கூறித்திரிவர். அஃது பொருந்தாவாம். ** 95. மைவிழியார் மனையகல்.** மைவிழியார் - கண்ணில் மையிட்டு மயக்கவல்லார், மனை - வீடுகளுக்கு, அகல்- தூர நில்லு மென்பதாம். தூண்டிலிட்டும் வலைவீசியும் மச்சங்களை யிழுப்பது போல், கண்களுக்கு மையிட்டு வாலிப மக்களுக்கு வலைவீசும் மைவிழியார் மனையைக் கண்டவுடன் அவ்விடம் நில்லாது தூர வகல வேண்டு மென்பது கருத்து. ** 96. மொழிவ தறமொழி.** மொழிவது - ஓர் வார்த்தை புகலுங்கால், அற -சந்தேக மற, மொழி சொல்லவேண்டு மென்பதாம், ஒரு வார்த்தையை புகலுங்கால் அவ்வார்த்தையின் பொருள் தெரிந்தும் தெரியாது மிருக்குமாயின் பிரயோசன மற்றுப்போம். ஆதலின் மொழியின் வாக்கு முழுவதும் தெளிவுற சொல்லவேண்டு மென்பதாம். ** 97. மோகத்தை முநி.** மோகத்தை-காமிய மயக்கத்தை, முநி-கடந்து நில்லென்பதாம். காமவெகுளி மயக்கங்களாம், மூன்றினுள் காமியமே மிக்கக் கொடிய தாதலின் அவற்றை முநிந்து ஜயித்தாலே மக்களுக் கழகாம், ஆதலின் மோகத்தை முனியென்று வற்புறுத்தியுள்ளாள். ** 98. வல்லமெய் பேசேல்.** வல்ல - மிக்க சாமார்த்தியமுடைய, மெய் - தேகியென்று, பேசேல் - பலருமறியக் கூறாதே யென்பதாம். அதாவது மாமிக்கோர் மாமியுண்டென்பதை யுணர்ந்து, எமக்கு மேற்பட்ட வல்லமெய்ப் புருஷனில்லை யென்று கூறுவானா யின் அவனுக்கு மேற்பட்ட வல்லமெய்யன் அழித்து விடுவான். ஆதலின் எத்தகைய வல்லமெயோராயினும் தனது வலத்தை பலரறிய கூறாதிருப்பதே சிறப்பைத் தருமென்று விளக்கியுள்ளாள். ** அறப்பளீசுர சதகம்.** தனக்கு வெகு புத்தியுண்டாயினு வெறொருவர் தன்புத்தி கேழ்க்க வேண்டும் தானதிக சூரனே யாயினுங் கூடவே தள சேகரங்கள் வேண்டும் கனக்கின்ற வித்துவானாயினுந்தன்னினுங் கற்றோரை நத்தவேண்டும் காசினியை யொருகுடையி லாண்டாலு வாசலி கருத்துள்ள மந்திரி வேண்டும். ** 99. வாது முற்கூறேல்.** வாது - தருக்கம் புரிவதில், முன் - முன்பு, கூறேல் - யோசி யாது பேசாதே யென்பதாம். அதாவது குற்றங் கூறுதலும், கூறும் பொருள் விளங்காது கூறுதலும், கூறியதைக் கூறுதலும் மிகப்பட கூறுதலும் முன் கூறியவற்றைக் கூறுதலும் முன் கூறிய பொருளுக்கு மாறு கொள பொருள் கூறுதலும் முன்மொழிக்கு பின் மொழி விரோதிக்கக் கூறுதலும் நூலுக்குக் குற்றமாதல் போல், வாதாகுந் தருக்கத்தில் யோசியாது முன் பேசலாகாதென்பது கருத்து. துரிதத்தில் முன் பேசலால் எதிரி கொணர்ந்தவை இலக்கிய தருக்கமா இலக்கண தருக்கமா மதோ தர்க்கமா வென்பது வீணே விளங்காது விரிந்து போம். அவற்றால் எடுத்த வாது முடிவு பெறாதென்றறிந்துள்ள அவ்வையார் வாது முற்கூறே லென்று கூறியுள்ளாள். ** தருக்கக் கௌமுகி. 113-சூ** வாது முற்கூறி வழுவுற விடுத்தல் ஏது பயனின் றிழிவது மாகும். ** 100. வித்தை விரும்பு.** வித்தை - கைத்தொழிலை, விரும்பு - நீ கற்பதற்கு ஆசைக் கொள்யென்பதாம். அதாவது வித்தையை விரும்பி கற்றுக்கொள்ளுவதில் ஓர் பாஷையைக் கற்பதே வித்தையென்று கூறுவாறு முண்டு. அஃது பொருந்தாவாம். எவ்வகையி லென்பிரேல் “கற்றோர்க்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு” என்னும் முதுமொழியை சிரமேற்கொண்டு தமிழ் பாஷையைத் தெளிவுறக் கற்றவன் கன்னட தேசம் போவானாயின் சிறப்படைவானோ. கன்னட பாஷையைத் தெளிவுறக் கற்றவன் மராடதேசம் போவானாயின் சிறப்படைவானோ ஒருகாலுஞ் சிறப்படையான். ஓடதி வித்தை, மரவினைவித்தை, தையல் வித்தை பொன்விளை வித்தை. பயிரிடும் வித்தை, செய்யும் வித்தை, உலோக பொருத்த வித்தை, காந்த வித்தை, இரசவித்தை முதலிய வற்றுள் ஒன்றைத் தேறக் கற்று எத்தேசம் போயினும் சிறப் படைவான். அதற்குப் பகரமாய் நமது ஐரோப்பியர் அமரிக்கர் சீனர் ஜப்பானியர் முதலிய மேன்மக்கள் மற்ற தேசத்தோர் பாஷைகளைக் கற்காதிருப்பினும் தங்களிடமுள்ள வித்தைகளின் தைரியத்தால் எங்கும் உலாவி சுகம் பெற்றிருக்கின்றார்கள். ** 101. வீடுபெற நில்.** வீடு - முத்தி, நிருவாண மென்னும் நிலையை, பெற - அடைதற்கு, நில் - ஞானவரம்பில் நிற்கக் கடவா யென்பதாம். வீ டுபேறாம் நிருவாணமாகும் பிறவியற்ற நிலையே துக்கத்தை யொழித்த விடமாதலின் அவற்றிற்கு கேடிலாபருவம், மோட்சம், கேவலம், சித்தி, வீடு, கைவல்லியம் மீளாகதி நிருவாணம் பரகதி, சிவம், முத்தி, அமுதம் என வழங்கி வந்தார்கள் நாளது வரையிலும் வழங்கி வருகின்றார்கள். ** 102. உத்தமனா யிரு** உத்தமனாய் - உன்னை சகலரும் நல்லவனென்று சொல்லத் தக்கவனாய், இரு - நீ வீற்றிருக்கக் கடவா யென்பதாம். மக்களுள் மத்திபனென்றும், உத்தமனென்றும், அதம னென்றும், வழங்கக்கூடிய நிலையில் அதமனையும், மத்திபனையும் நீக்கி உத்தமனையே உலகங் கொண்டாடுவது இயல்பாதலின் ஞானத்தாய் உத்தமனாயிருமென்று கூறியுள்ளாள். ** 103. ஊருடன் கூடிவாழ்.** ஊருடன் - மநுக்களாம் கிராம வாசிகளுடன், கூடி - சேர்ந்து, வாழ் - வாழக்கடவா யென்பதாம். அதாவது ஒருவருக்கொருவர் விலகி வாழ்க்கைப் புரிவதினால் ஆபத்துக்குதவாமல், அல்லலடைய நேரிடுமென்ற றிந்த ஞானத்தாய், மக்கள் ஒருவருக்கொருவர் உபகாரிகளா யிருக்க வேண்டுமென்னுங் கருத்தால் குடிகள் சேர்ந்து வாழ்க்கை பெற ஊருடன் கூடி வாழென்று கூறியுள்ளாள். மேன்மக்கள் வாக்கு தவிராது சேர்ந்து வாழ்ந்து வந்த பௌத்த தன்ம அரசர்களும் குடிகளும், வாழ்ந்த யிடங்களை சேரி, சேரி யென்று வழங்கி வந்தார்கள். ** 104. வெட்டெனப் பேசேல்.** வெட்டென - மனந் துண்டிக்கத்தக்க கடின வார்த்தைகளை, பேசேல் - மறந்தும் பேசாதே யென்பதாம். கடின வார்த்தைகளில் அனந்தக் கேடுண்டாவதை யுணர்ந்த ஞானத்தாய் வெட்டெனப் பேசேலென்று விளக்கிக் கூறியுள்ளாள். ** 105. வேண்டி வினைசெயேல்.** வினை - குறித்த தொழிலை ஒருவன் செய்து வருகின்றானென்றறிந்தும், வேண்டி - அத்தொழில் நீயும் விரும்பி, செயேல் - செய்யாதே யென்பதாம். அதாவது ஒருவன் ஒரு தொழிலை நடத்தி வருகின்றா னென்றறிந்திருந்தும் அதை நாடு வதாயின் எதிரியைக் கெடுப்பதற்கு யேதுவென்றுணர்ந்த ஞானத்தாய் வேண்டி வினைசெயேலென்று கூறியுள்ளாள். ** 106. வைகரைத் துயிலெழு.** வைகரை - சூரிய வுதய காலத்தில், துயில் - நித்திரையை விட்டு, எழு - நீ எழுந்திரு மென்பதாம். வைகரை விழிப்பே சூர்யகலை, சத்திரகலைக் காதார மாதலின் சூரியன் கரைகட்டுக்கு விழிக்கவேண்டுமென்று கூறியுள்ளாள். ** 107. ஒன்னாரைச் சேரேல்.** ஒன்னாரை - பகைவர்களாகுஞ் சத்துருக்களை, சேரேல் - நெருங்காதே என்பதாம். அடுத்துக் கொடுப்பது பகைவர் சுவாபமாதமலின் அவர்களை நெருங்கலாகாதென்பது கருத்து. ** 108. ஓரஞ் சொல்லேல்.** ஓரம் - ஒருவர் சார்பாய் சார்ந்து கொண்டு மற்றொரு வர்க்குத் தீங்குண்டாகத்தக்க வார்த்தையை, சொல்லேல் - எக்காலுஞ் சொல்லாதே என்பதாம். எக்காலும் நடுநிலையினின்று சகல கார்யாதிகளிலும் பேச வேண்டுமென்பது கருத்தாம். ஒளவையார், அம்மன் என்னும் பெயர்பெற்ற ஞானத்தா யருளிய முதல் வாசகம். ** முற்றிற்று.** ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம் ஆ. இரண்டாம் வாசகம் -குன்றைவேந்தன் ஸ்ரீ புத்தாய நம: தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா ஒளவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிச்செய்த இரண்டாம் வாசகம் திருவாளர் க. அயோத்திதாஸ பண்டிதர் உரை குன்றை வேந்தன் ** காப்பு.** குன்றை வேந்தன் செல்வனடி யினை யென்று மேற்றித் தொழுவோமியாமே. குன்றை வேந்தன் - மலைக்குன்றில் வாழரசனென்றும், செல்வன் - அழியா சம்பத்தனென்றும் வழங்கப் பெற்ற புத்த பிரானின், அடியினை - செந்தாமரைப் பாதங்களை, என்றும் - எக்காலுமும், ஏற்றி - போற்றி, தொழுவோம் - வணங்குவோம், யாம் - யாங்கள் என்றவாறு. அரசன் மரத்தடியில் உட்கார்ந்திருந்தது கொண்டு அரசன் மரம், அரசமரமெனக் காரணப் பெயரைப் பெற்றது போல், விம்பாசார வரசன் ஆளுகைக்குட்பட்ட ஓர் குன்றின் மீது சித்தார்த்தியாம் அரசன் வீற்றிருந்து சாத்திய தன்மமாம் தசபார மென்னும் தசசீலங்களைப் பதிலித்து விம்பாசாரனால் பலவகை தன்மங்களையும் செய்வித்து வந்த பீடமாகுங் குன்றையே ஆதாரமாகக் கொண்டு, குன்றை வேந்தனென்றும், வரையாது கொடுக்கும் ஈகையை ஆதாரமாகக் கொண்டு செல்வனென்றும், வழங்கிவந்தப் பெயர்களையே ஞானத்தாய் தானியற்றியுள்ள இரண்டாம் வாசகக்காப்பிற் கூறியுள்ளாள். ** பின்கலை நிகண்டு.** சிறத்திடுங் குன்றை வேந்தன் குணபத்திரன் சீலநூலை யறஞ்செயா வாறேகற்ற வதிமயக்கத்தினாலே குறைந்திடுந் தமது மேற்கோள் கொளியமற்றது கரந்தே யறிந்தது மறியாதாரை யேற்றலு மிழிமடந்தான். ** சூளாமணி** மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க டொத்த வரடி தொழத் தோன்றுந் தோன்றலா யக்கிரி பெருஞ்சிறப் பெய்தியா யிடை சக்கரப் பெருஞ்செல்வன் சாலைசார்ந்ததே. ** சீவக சிந்தாமணி** சினவுணர் கடந்த செல்வன் செம்மலர்கலநாளை ** நூல்.** ** 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.** அன்னையும் - தாயாரும், பிதாவும் - தகப்பனாரும், முன் ஆதியாகவும் முந்நிலையாகவும், அறி - காணக்கூடிய, தெய்வம் கடவுளர்களென்பதாம். அதாவது குழவியாகத் தோன்றியக்கால் அமுதூட்டி ஆராட்டியவளும், அன்னமூட்டி பாராட்டியவளுமாகிய தாயாரும், சேயையுந் தாயையும் ஆதரித்து வந்த தந்தையும், காப்பு இரட்சை யிரண்டிலும் முதற் கடவுளாகத் தோன்றியுள்ள படியால் அவர்களையே கண்ணிற்கண்ட முதற் தெய்வமென்று கூறியுள்ளாள். ** 2. ஆலயந்தொழுவது சாலவுநன்று.** ஆலயம் - முதற்றெய்வமாகக் காணுந்தந்தை தாயாரை மனோவமைதி பெற, தொழுவது - வணங்குவது. சாலவும் - எக்காலும், நன்று - சுகமென்பதாம். அதாவது தந்தை தாயாரை தெய்வமாகக் கொண்டவன் அவர்கள் காப்பையும், இரட்சையும், நன்றியறிந்து அவர்க்கன் பான ஆதரணையை யிதயத்தூன்றி வணங்கியும், அவர்களை அன்புடன் போஷித்தும், வருவானாயின் அச்செயலைக் கண்ணுற்றுவரும் இவனது மைந்தனும் அன்னைத் தந்தையரை தெய்வமெனக்கொண்டு, ஆலயந்தொழுது வருவான். அங்கன மின்றி அன்னையையும் பிதாவையும் அன்புடன் போஷித்து ஆலயம் பெறத்தொழுவதை விடுத்து, கல்லையுஞ் செம்பையும் தொழவேண்டு மென்பது கருத்தன்றாம். ** பட்டினத்தார்.** சொல்லினுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லினு மாசற்ற வாகாயந்தன்னிலு மாய்ந்துவிட்டோர் இல்லினும் அன்பரிடத்திலு மீசன் இருப்பதல்லால் கல்லினுஞ் செம்பிலுமோ யிருப்பானென் கண்ணுதலே. ** கடவுளந்தாதி** வீண்பருக்கெத்தனைச் சொன்னாலும் பொய்யது மெய்யென்றெண்ணார் மாண்பருக்குப் பொருளாவதுண்டோ மதுவுண்டு வெறி காண்பரைக் கும்பிட்டு கல்லையுஞ் செம்பையுங் கைதொழுது பூண்பவர் பாதக பூதலத்தொல்லை பிடித்தவரே. என்று மகா ஞானிகள் கூறியுள்ளவற்றை நாம் பின்பற்ற வேண்டியதன்றி, அஞ்ஞானிகளின் கருத்தை பின்பற்ற லாகாதென்பது கருத்து, பாலிபாஷையில் ஆலயமென்றும், ஆவிலயமென்றும் மனோலயமென்றும் வழங்கும் வாக்கியங்கள் மூன்றும் ஒரு பொருளைத்தரும். ** ஒளவைக்குறள்** வாயு வழக்க மறிந்து செறிந்தடைங்கில் ஆயுட்பெருக்க முண்டாம் வாயுவினாலய உடம்பின் பயனே ஆயுவி னெல்லை யது. ** 3. இல்லறமல்லது நல்லறமன்று.** இல்லறம் - மனையாளுடன் கூடி வாழும் வாழ்க்கையில் மனமொத்து வாழ்தலே, நல்லறமெனப்படும் அல்லது - அவ்வகையல்லாதது, நல்லறமன்று - நல்லறமென்பதற்று பொல்லறமென்று கூறுதற் கேதுவுண்டாம். இல்வாழ்க்கையில் மனையாளனும் மனையாட்டியும் மனமொத்து வாழ்தலே இல்லறமென்னும் நல்லறமாவதுடன் இகவாழ்க்கையிலும் சுகவாழ்க்கை பெறுவார்களென்பது கருத்து. மனமொத்து வாழும் இல்லாளின் வாழ்க்கைப் பெற்ற வன் துறந்த பெரியோர்களுக்கும், துறவா சிரியோர் களுக்கும், மறந்திரந்த மக்களுக்கும் உதவி புரியும் உத்தமனாதலின் இல்லறத்தில் நல்லறத்தோனை மிக்க மதித்துக் கூறியுள்ளாள். ** திரிக்குறள்** இல்வாழ் வானென்பானியல்புடைய மூவர்க்கு நல்லாற்றினின்ற துணை. ** அறநெறிச்சாரம்** மடப்பது உமக்கட் பெறுவதூஉம் பெண்பான் முடிப்பது உமெல்லாருஞ் செய்வர் படைத்ததனால் இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதா னல்லறத்தே நிற்பரேல் பெண்டீ ரென்பார். ** நாயனாதிகாரர் காப்பியம்.** தலைவனாந் தலைவியென்பார் தங்களிற் பக்கமன்பு நிலைமன மொருமெயோடு நீணிலந்தன்னில் வாழ்தல் பலனவ னென்னில் வானிற் பரமனு மருள்பேரின்ப நலனுநீ டூழிகாலம் நன்கொடு வாழ்குவாரே. ** 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.** ஈயார் - மற்றவர்க்குக் கொடாத லோபியரின், தேட்டை - சுகப்பொருளை, தீயார் - வஞ்சகர், கள்ளர் பொய்யர்களாகியக் கொரூரச் சிந்தையை யுடையவர்கள், கொள்வர் - அபகரித்துக் கொள்ளுவார்கள் என்பதாம். ** நாலடி நானூறு** உடாஅத முண்ணாதுந்த முடம்பு செற்றுங் கெடா அத நல்லறமுஞ் செய்யார் கெடாஅது வைத்தீட்டி னாரிழப்பர் வான்றோய் மலைநாட வுய்த் தீட்டுந் தேனீக்கரி. ** 5. உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு.** உண்டி - உண்ணும் புசிப்பை, சுருங்குதல் - மிதாகாரத்தில் நிறுத்தல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - சிறப்பாகும். அதாவது பெண்கள் தங்களது புசிப்பை அதிகமுமல்லாது கொஞ்சமுமல்லாது புசிப்பார்களாயின் தன் கணவனையும் பந்துக்களையும் வரும் விருந்தினரையும் அன்புடன் போஷிப் பார்கள். அங்கனமின்றி பெருந்திண்டியை விரும்புவரேல் தன் கணவரையும், பந்துக்களையும், விருந்தினையும் வோம்பார் களென்பது திண்ணமாதலின் உண்டி சுருக்கி வாழ்தலே இல்வாழும் பெண்களுக் கினியதென்று கூறியுள்ளாள். ** நீதிநெறி விளக்கம்.** கற்பின் மகளிர் நலம் விற்றுணவுகொளா பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தங் கேள்வர்க்கு மேதிலர்க்குந் தங்கட்கு தங்கிளைஞர் யாவர்க்குங் கேடு சூழார். ** 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.** ஊருடன் - ஓர் கிராமத்துட் சேர்ந்து வாழும் எல்லோரு டனும், பகைக்கின் - விரோதித்து கொள்ளின், வேருடன் - தனது புத்திரமித்திர சந்ததியோர்களுடன், கெடும் - சீரழிவார்க ளென்பதாம். ஆதலால் ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்க வேண்டுமென்றும், ஒருவருக்கொருவர் ஆதரவாக யிருக்க வேண்டுமென்றும், எண்ணமுடையவர்களாய் ஓரிடஞ் சேர்ந்து வாழ்தற் காரம்பித்தவர்கள் வாழ்க்கை எண்ணத்தை விடுத்து விரோத சிந்தையைப் பெருக்கிக் கொள்வதாயின், அக்குடி வாழ்க்கையில் தான் கெடுவதுமன்றி தனது குடும்பசம்பந்த முள்ள யாவருங் கெடுவார்களென்றுணர்ந்த ஞானத்தாய் ஊராரெல்லோருடனும் விரோதித்துக் கொள்ளாதீர்களென்று கூறியுள்ளாள். ** 7. எண்ணுமெழுத்துங் கண்ணெனத்தகும்.** எண்ணும் - கணிதத்தில் (அ) எட்டென்னும் வரிவடிவும், எழுத்தும் - அட்சரத்தில் (அ) அகரமென்னும் வரிவடிவம் உண்மெய்ப் புறமெய்யென்னு மிரண்டையும் கூடியக் கண் ணென - அருட்கண்ணாம் ஞானவிழியென, தகும் - கூறுத லொக்கு மென்பதாம். அதாவது (அ) அகரமா முதலெழுத்தின் சுழியே ஞான சாதகர்க்கு உள்விழி பார்வை நிலையா தலின் எண்ணுக்கு (அ) எட்டாகவும் எழுத்தில் அகரமாகவும் விளங்கும் வரிவடிவே ஞானக் கண்ணென்று விளக்கியுள்ளாள். ** திரிக்குறள்.** எண்ணென்பவேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. ** ஞானக்கும்மி** கட்டுபடாதந்த வச்சுமட்டம் - அதன் காலே பன்னிரண் டாகையினால் எட்டுக் கயிற்றினால் கட்டிக்கொண்டால் – அது மட்டுபடு மடி ஞானப்பெண்ணே. ** அறநெறிச்சாரம்.** தன்னோக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப் பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை எழுத்தெண்ணே நோக்கி யிருமெயுங் கண்டாங் கருட் கண்ணே நிற்பதறிவு. ** 8. ஏவாமக்கள் மூவாமருந்து.** ஏவா - பெரியோரேனும், தாய் தந்தையரேனும் ஒன்றை நோக்கி யேவல், கூறுவதற்கு முன்பு மக்கள் - மநுக்களவற் றையுணர்ந்து செய்யுஞ் செயலானது, மூவா - என்றுங் கெடாது சுகம் தரும், மருந்து - அவுடதத்தை யொக்கு மென்பதாம். எஜமானனாயினும் தாய்தந்தையராயினும் இன்னதைக் கேட்கின்றார்கள் இனியதைத் தேடுகின்றார்களென் றுணர்ந்து அவ்வேலைப் புரிவோர் தேவாமிர்தத்திற் கொப்பானவ ரென்பது கருத்து. ** 9. ஐயம்புகினுஞ் செய்வினைசெய்** ஐயம்புகினும் - பிச்சையேற்றுண்ணுங்காலம் வரினும் அச்சோம்பேரிச் செயலைக் கருதாது, செய்வினை - உனக்குத் தெரிந்த தொழிலை விடாமுயற்சியுடன், செய் - செய்து சீவிக்கக் கடவாயென்பதாம். அதாவது கால யேதுக்களாலும் வியாதிகளினாலும் செய்தொழில் முயற்சிகுன்றி பயந்து ஒருவரை யிரந்து கேட்க நேரிடும். அவ்வகை யிரந்துண்ணாந் தொழிலையே கடை பிடிப்பதாயின் பிச்சைக் கிடையாவிடத்து களவு சூது வஞ்சக முதலிய துற்கிருத்தியங்களுக் காளாக்கிவிடும். ஆதலின் இரந்துண்ணும் காலம் வரினும் அவனவன் செய்தொழிலில் முயற்சிகுன்றாதிருந்து செய்யக்கூடிய வினையை செய்து சீவிக்கவேண்டுமென்பது கருத்து. ** 10. ஒருவனைப்பற்றி யோரகத்திரு.** ஒருவனை - தன்மெய்தானே, பற்றி - யுணரப்பிடித்து, ஓரகத்து - உள்ளத்தின்கண், இரு - நிலைத்திருமென்பதாம். தன் தொழிலால் தனக்கு போஷப்பும், தன்னை யுணர்ந்து ஒடுங்கலால் தனக்கு சுகமும் உண்டாவதியல்பு. ஏனைய மக்களால் சுகங்காணலரி தாதலின் தன்னொருவனைப்பற்றி தன்னகத்தொடுங்க வேண்டுமென்பது கருத்தாம். ** அறநெறிச்சாரம்** செய்வினை யல்லாற் சிறந்தார் பிரதில்லை பொய்வினை மற்றைப் பொருளெல்லா – மெய்வினவில் தாயார் மனைவியார் தந்தையார் மக்களார் நீ யார் நினைவாழி நெஞ்சு. தானே தனக்கு பகைவனா நட்டானும் தானே தனக்கு மறுமையு மிம்மையும் தானே தான் செய்தவினைப் பயன்றுய்த்தலால் தானே தனக்குக் கரி. ஒற்றுமைய் நயத்தால் ஒன்றெனத் தோன்று மொருவன் தன்னைத்தானுணர்ந்து மனத்தை வணக்கலென்னும் நன்மைய்க் கடைபிடித்து, ஒருவனைப்பற்றி உடலுயிரென்னும் ஓரகத்திரு வென்று கூறியுள்ளாள். ** சூளாமணி** அருந்தவ மமையும்பார மிரண்டையு மறிந்துதம் மெய் வருந்தியு முயிரையோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் திருந்திய விரண்டுதத்தஞ் செய்கையிற் றிரியுமாயின் பெருந்துயர் விளைக்குமன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய் இவற்றை யநுசரித்தே சமணமுநிவர்கள் யாவரும் தாங்களியற்றியுள்ள விலக்கணநூற்கள் யாவிலும் தன்மெய், முன்னிலை, படர்க்கை யென்றும், ஒருமெய், பன்மையென்றும், ஒருமெய்யென்னும் ஒருவனாய் தன் தேகத்தை சுட்டியும் தனக்குள்ள பஞ்சஸ்கந்தங்களை விளக்கி தன்னகத் தடங்கும் நிலையை பூட்டியுள்ளார்கள். ** 11. ஓதலினன்றே வேதியர்க் கொழுக்கம்.** வேதியர் - சமண முநிவர்களின், ஒழுக்கம் - நற்கிருத்தியம் யாதெனில், ஓதல் - வேதவாக்கியங்களாம் நீதிமொழிகளை சகலருந் தெளிவுற போதித்தலே, நன்றாம் - சுகந்தருமென்பதாம். அதாவது புத்தபிரனா லோதியுள்ள சௌபாபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபஸம்பதா, ஸசித்த பரியோதபனம், பாபஞ் செய்யாதிருங்கோளென்னும் கன்மபாகைகளையும், நன்மெய்க் கடைபிடியுங்கோளென்னும் அர்த்த பாகைகளையும், இதயத்தை சுத்தி செய்யுங் கோளென்னும் ஞான பாகைகளையும் அடக்கியுள்ள திரிபேத வாக்கியங்களை யுணர்ந்தும் அதன் மேறை யொழுகி சாதனை புரியும் வேதியர்களாம் சமண முநிவர்கள் தாங்கள் கண்டடைந்த திரிவேத வாக்கியங்களாம். நீதி மார்க்கங்களை சகல மக்களுக்கு மூட்டி அவ்வழியில் நடைபெறச்செய்வதே வேதியர்களாம் சமணமுநிவர்களின் ஒழுக்கமாகும். ஆதியில் மூன்று நீதிமார்க்கங்களை திரிபேதமாக சுருதியாய் போதித்தவரும், மாதம் மும்மாரி பெய்யும் ஒழுக்கங் களையூட்டி சருவசீவர்களுக்குஞ் சுகத்தையளித்தவரும் புத்த பிரானேயாகும். ** நெஞ்சறி விளக்கம்** அறியதோ ரரசன்மைந்தன் அவனியிற் பிறந்துமுன்னாள் பெரியபேரின்பஞானம் பெறுவதே பெரிதென்றெண்ணி உறியவே தாந்தவுண்மெய் யுரைக்குமா சானுமான தெரிவுறு நாகை நாதர் சீர்பதம் போற்றுநெஞ்சே ** பாரதம்.** நீதியும் நெறியும் வாய் மையு முலகில் நிறுத்தினோன் வேதியன் அன்றி வேதியனேனும் இழுக்குறிலவனை விளம்பும் சூத்திரனென வேத மாதவர் புகன்றா ராதலாலுடல் மாய்ந்தபின் பாவதோர் பொருளோ கோதிலா விந்தப் பிறவியில் வேதக் குரவனீயல்லையோ குறியாய். ** 12. ஒளவியம் பேசுத லாக்கத்திற்கழிவு** ஒளவியம் பேசுதல் - ஒருவனைக் கெடுக்கத்தக்க வாலோ சனையைப் பேசுதல், ஆக்கத்திற்கு - தன் தேகத்திற்கே. அழிவு - கெடுதியை வுண்டாக்கு மென்பதாம். தங்கள் வாக்கினாலும், செயலினாலும் நற்கிருத்தியஞ் செய்வோர் சுகபலனை யடைவது போல் தங்கள் வாக்கினாலுஞ் செயலினாலும் துற்கிருத்தியங்களைப் பேசினும், செய்யினும் துக்கத்தையடைவார்களென்பது அனுபவமாதலின் ஞானத்தாய் ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவென்று கூறியுள்ளாள். ** அறநெறிச்சாரம்.** முற்பிறப்பிற்றான் செய்த புண்ணியத்தி னல்லதோர் இற்புறத்தின் புறா நின்றவ - ரிப்பிறப்பே யின்னுங் கருதுமே லேதங்கடிந் தறத்தை முன்னு முயன்றொழுகற் பாற்று. ** 13. அஃகமுங்காசுஞ் சிக்கென்றகற்று** அஃகமும் - தேகத்தா லுண்டாகுங் குற்றங்களையும், காசும் - மனத்திலெழுவுங் களங்கங்களையும், சிக்கென - பாசபந்தக் கயிற்றின் வலையென, அகற்று - கண்டு நீக்கிவிடுமென்பதாம். காஸு யென்னும் பாலிமொழிக்கு களிம்பு ஆசா பாசமென்னும் பொருளைக் குறித்திருக்கின்றார்கள். ** அருங்கலைச் செப்பு.** ஆசாபாசத்தோடஃக விருளகற்றி பேசாதான் பெற்ற பலன். ** 14. கற்பெனப்படுவது சொற்றிரும்பாமெய்.** கற்புயெனப்படுவது - பெண்களுக்குக் கற்பென்று கூறப்படுவது, சொல் - கணவன் வாக்குக்கும், மாமனார் மாமியார் வாக்குக்கும் திரும்பாமெய் - கோணாமல் நடக்குந் தேகத்தைப் பெற்றவள் என்பதாம். அதாவது இல்லா ளென்னும் மனைவாழ்க்கைக் குடையவள் கணவனையே தெய்வமாக பாவித்து அவனது வாக்கை கடவாமலும் மாமன் மாமியார் வாக்கை மீறாமலும் நடக்குந் தேகத்தையுடையாளை கற்புடைய மகளீரென்று கூறப்படும். ** அறநெறிச்சாரம்** வழிபாடுடையவளாய் வாழ்க்கை நடா அய் முனியாது சொல்லிற்றுச் செய்தாங் - கெதிருரையா தேத்தி பணியுமே வில்லாளை யாண்மகன் போற்றிப் புனையும் புரிந்து. ** 15. காவறானே பாவையர்க்கழகு.** காவல்தானே - பெண் விவேகியாயினும் அவளை விவேகமுடன் காக்குங் காவலாளன் இருப்பானாயின், பாவையர்க்கு - பதுமையாம் அழகு நிறைந்த பெண்களுக்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம். நாணம், அச்சம், மடம், பயிற்பு இன்னான்கு மமைந்த பெண்ணுருக் கொண்டவளாயினும் அவளுக்கோர் நற்காவ லனில்லாவிடின் பெண் மெய்க்கு எவ்விதத்துங் கேடுண்டா மென்றுணர்ந்த ஞானத்தாய் காவல்தானே பாவையர்க் கழகென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 16. கிட்டாதாயின் வெட்டென மற.** கிட்டாதாயின் - நீ இச்சிக்கும் பொருள் கிடைக்காவிடின், வெட்டென - துண்டிக்கும் பொருளைப் போல் அவ்விச்சையை, மற - அகற்றிவிடு மென்பதாம். மக்கள் நாடும் சிற்றின்பப் பொருள் கிட்டாதாயினுந் துக்கம், ஓர்கால் கிட்டுமாயின் அப்பொருளை கைதவரினும் துக்கம் ஆதலின் ஓர் பொருளின் மீது மிக்க அவாப்பற்றி நிற்கலாகா தென்பது கருத்து. ** 17. கீழோராயினுந் தாழவுரை.** கீழோராயினும் - உம்மையடுத்து யாதா மொன்றைக் கேட்போர் யேழைகளாயினும், விவேகமற்றவர்களாயினும், தாழவுரை - மிருது வாக்கியத்தால் அவர்களுக்கு பதிலுரைக்கக் கடவா யென்பதாம். விவேகமிகுந்த மேலோர்களிடம் அவிவேகிகளாம் கீழோர்கள் ஒன்றைநாடி சென்றக்கால் அவர்களை யன்புட னழைத்து வேண்டியவற்றை விசாரித்து உபசரித் தனுப்பு வார்களாயின் அதன் சார்பால் அவிவேகிளாகும் கீழோர் களுக்கும் ஓர் நற்கிருத்தியம் உதயமாமென்பது கருத்தாம். ** 18. குற்றம்பார்க்கின் சுற்றமில்லை.** குற்றம் - குடும்பமென்று கூடியவிடத்து தொடுத்த மொழி எடுத்தச் செயல் யாவற்றிற்குங் குற்றங்கூறித் திரிவதாயின், சுற்றமில்லை - குடும்பத்தோரென்னும் பெயரில்லாமற்போம் என்பதாம். ஓர் குடும்ப விவகாரத்துள் சொல்லுக்குச் சொல் குற்றம் பிடித்தலும், செய்கைக்கெல்லாம் குற்றம் பிடித்தலுமாகிய கொடூரச் சிந்தையை விருத்தி செய்வதால் குடும்பமென்னும் பெயரற்றுப் போவதுடன் வாழ்க்கையுங் குன்றுமென் றுணர்ந்த ஞானத்தாய் குடும்பமென்னும் வாழ்க்கையில் எடுத்த செயலுக் கெல்லாங் குற்றம் பார்ப்பார்களாயின் சுற்றத் தோரென்னும் உரன்முறையோரில்லாமற் போய் விடுவார்களென்று கூறியுள்ளாள். ** 19. கூரம்பாயினும் வீரியம் பேசேல்.** கூரம்பாயினும் - உம்மிடத்திலுள்ள அம்பு மிக்க கூறுள்ளதாயினும், வீரியம் - மிக்க வல்லமையாகப் பேசேல் - சபதங்கூறாதே யென்பதாம். அதாவது அம்பு கூரியதாயினும் வின்னாணி சோர்வுற்றுப் போம். வின்னாணி தளரா நிற்பினும் மெய் சோர்வுற்றுப்போம். மெய் சோர்வுராது வல்லமெயுற்றிருப்பினும் காலக் கேடயரும், ஆதலின் கால பலம், தன் பலம், வில்லின் பலம், நாணின் பலம், எதிரியின் பலம் யாவையும் நோக்காது தனது அம்பு கூரியதா யினும் அம்பை நம்பி வீரியம் பேசலாகாது என்பது கருத்து. ** 20. கெடுவதுசெய்யின் விடுவது கருமம்.** கெடுவது செய்யின் - செய்யுந்தொழிலில் கேடுண்டா மாயின், விடுவது - அச்செயலை விட்டுவிடுவதே, கருமம் - தொழிலுக்கழகாகும் என்பதாம். எடுத்து செய்யுங் கருமத்தில் கேடுண்டா மென்றுணர் வாராயின் அக்கருமத்தை கருவிகளுடன் விட்டுவிட வேண்டு மென்பது கருத்தாம். தொடுத்த கருமத்தில் கேடுண்டென் றுணர்ந்தும் அதே கருமத்தை முடிக்க முயல்வானாயின் அவன் கெடுவதுடன் அவன் சந்ததியோருங்கெட்டு அவனையடுத்த கருமிகளும், கருவிகளும் பாழடைந்து போமென் றுணர்ந்த ஞானத்தாய் கெடுதியுண்டாகுஞ் செயலை விடுவதே கருமமென்று கூறியுள்ளாள். ** 21. கேட்டிலுறுதி கூட்டுங்குறைவை.** கேட்டில் - தனசம்பத் தேனும், தானிய சம்பத்தேனுங் குறைந்துக் கெடினும், உறுதி - பொருள் போச்சுதேயென் றுள்ளங் கலங்காது திறத்தில் நிற்பானாயின், குறைவை - குறைந்த பொருள்யாவும்; கூட்டும் - சேரு மென்பதாம். மக்கள் சேர்ந்துவருந் தானியங் குறைந்த தென்றும், தனங்குறைந்த தென்றுங் கலங்காது முன்னவற்றை சேகரித்த முயற்சி யிலிருப்பானாயின் குறைந்த வஸ்துக்கள் யாவும் நிறைந்து வருமென்பது கருத்தாம். ** 22. கைப்பொருடன்னின் மெய்ப்பொருட்கல்வி.** கைப்பொருள் - ஒவ்வொருவர்க் கைகளால் ஆளும் தனப் பொருள், தானியப் பொருள், தன்னினும் - அதனினும், மெய்ப் பொருள் - அழியாப் பொருள் யாதென்பீரேல், கல்வி - அறிவை விருத்தி பெறச் செய்யுங் கலைநூற்களே என்பதாம். அதாவது அவனவளுள்ளத்திற் பதிந்துள்ள மண்பொருளி னழகும். பொன் பொருளினழகும், பெண் பொருளி னழகுந்தோன்றி தோன்றி கெடுவது சுவாபமாகும். கல்வியென் னும் மெய்ப்பொருளோ கற்றவளவினின்று கலை நூல் உசாவுவனேல், அதன் பலனாம், அதனழகும் அதனொலியும் இவனதுருவுங்காணா தழிந்த விடத்தும் பிரகாசிக்கு மென்பதாம். ** மூவர் தமிழ் - நாலடி நானூறு.** குஞ்சியழகுங் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால் கல்வி யழகே யழகு. ** 23. கொற்றவனறித லுற்றுடலுதவி** கொற்றவன் - வல்லவன், அறிதல் - தன்னையறிந் தடங்கற்கு, உதவி - ஆதாரமானது, உடல் - தேகமேயாம். அதாவது வல்லமெயுற் றோனெனத் தோன்றியும், தன்னை யாராய்ந் தடங்காது வல்லபத்தை விழலுக்கிரைத்த நீர்போல் விட்டு விடுவானாயின் தேகந்தளர்ந்து பாலுண்கடைவாய் படிந்து நோக்குங்குறைந்து வருங்கால் பற்பல பிணிகளாலும், துன்புற்று துன்பத்தைப் பெருக்கிக் கொள்வான். ஆதலின் தேகசக்தி மிக்கவன் ஒவ்வொருவனும் தன்னையறியுஞ், சாதனத் துழைப்பனேல் தேகமெடுத்த பலனை யடைவானென்பது கருத்து. ** அறநெறிச்சாரம்.** நீக்கரு நோய்மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு சாக்காடென்றைந்து களிருழக்கப் - போக்கரிய துன்பத்துட்டுன்ப முழப்பர் துறந்தெய்தும் இன்பத் தியல்பறியாதார். ** மூவர் தமிழ் -நாலடி நானூறு** நிலையாமெய் நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணி தலையாயார் தங்கருமஞ்செய்யார் - தொலைவில்லா சித்து முடலுஞ் செய்யநிலை யென்னும் பித்தரிற் பேதையாரில். ** இச்செய்யுளில் பாட பேதங்கள்.** 1831ளு ம-௱-௱-ஸ்ரீ தாண்டவராய முதலியாரவர்களால் அச்சிட்டுள்ள நாலடி நானூற்றில், “சத்தமுஞ் சோதிடமு மென்றாங்கிவை பிதற்றும்…………” என்றும், ம-௱-௱-ஸ்ரீ மயிலை குப்புலிங்க நாயனாரவர்க ளேட்டுப் பிரிதியிலும், “சித்துமுடலுஞ் செய்யநிலையென்றும்” * - என்னும் பாடபேதங்களைக் கண்ணுற்றபோது இருவ ரேட்டுப் பிரதி களிலுள்ளச் செய்யுள் சிதையினும் பொருள் பொருந்தியுள்ளது கண்டு உடற்கூற்றையே வெளியிட்டுள்ளோம். சத்தமுஞ் சோதிட முமென்னு மொழிமுற் சீருக்குப் பொருந்தாதாதலினும், சோதியின் இடங்கண்டு கூறுவோரைப் பித்தரென்றுக் கூறியுள்ளதும் பிழையேயாம். எங்ஙன மென்பீரேல் தற்காலமுள்ள பிரிட்ஷ் ஆட்சியில் (அஸ்ட்ரானமர்) என்னும் வான சாஸ்திரிகள் சோதிகளாகும் நட்சத்திரங்களுள்ள விடங்கண்டு இன்னசோதி, யினியவிடம் போமாயின் காற்றடிக்கும் மழை பெய்யு மென்று கூறுதலும், சாக்கையர்கள் குணிப்பில் இன்னசோதி யின்னின்ன விடங்களில் மாறுபடுமாயின் சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் உண்டா மென்னுங் குறிப்பும் அனுபவத்திலும் காட்சியிலு மிருக்குங்கால் சோதியின் இடமறிந்து பலாபலன் கூறுவோரை பித்தரென்றும், பேதையரென்றுங் கூறியுள்ளது பிழையென்று துணிந்து கூறியுள்ளோம். ** 24. கோட்செவிக் குறளைகாற்றுடனெருப்பு.** கோட்செவி - எக்காலுங் குற்றமாகிய சொற்களையே கேட்க விரும்பும் சுரோத்திர முடையவன், குறளை - விருப்ப மானது, காற்றுட நெருப்பு - மனைகள் தீப்பட்டெரியுங்கால் காற்றுஞ் சேர்ந்துக் கொள்ளுமாயின் உள்ள மனைகளுமெரிந்து பாழாவது போல் தான் கெடுவதுடன் தன் சுற்றமுங் கெடுமென்பதாம். குடும்பத்தோர் குற்றங்களையாயினும் நேயர்கள் குற்றங்களை யாயினும் தங்கள் செவியாரக்கேட்க விருப்ப முடையவன் மனமானது யெப்போதும் கோபமென்னுந் தணலில் எரிந்திருக்குங்கால் மேலுமேலுங் கோட்சொல் நுழை யில் காற்றுடன் சேர்ந்த நெருப்பைப் போல் உள்ள கோபாக் கினி மீறி தன்னையுந் தன் குடும்பத்தையுந், தன்னேயரையு மழிக்கு மென்றுணர்ந்த ஞானத்தாய் குற்றத்தைக் கேழ்க்கும் விருப்பமிகுத்தோன் காற்றுடன் சேர்ந்த நெருப்புக்கொப்பாய் தன்னைத்தானே தரித்துக் கொள்ளுவா னென்பது கருத்து. ** 25. கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை.** கௌவை சொல் - எதிரிக்கு மற்றொருவன் கூறிய வார்த்தை சொல்லுதலும், மற்றவன் கூறிய வார்த்தையை எதிரிக்கு சொல்லுதலும், எவருக்கும் பகை - ஒருவருக்கொரு வரை விரோதிக்கச் செய்துப் பாழ்படுத்துவதுடன் அத்தகையக் குட்டுணி செயலால் சகலருக்கும் விரோதியாவான் என்பதாம். உடும்புக்குள்ள இரட்டை நாவைப்போல் இருவருக்கும் நேயனைப் போலிருந்து கௌவைப்போல் அவர் சொல்லை இவருக்கும் இவர் சொல்லை யவருக்குஞ் சொல்லி கலகத்தை யுண்டு செய்வோன் இருவருக்கும் விரோதியாவதுடன் இவன் இருநாக்கன் கௌவைச் சொல்னென் றுணர்ந்தோர் யாவரும் இவனைக் கண்டவுடன் பயந்து யாதொரு சொற்களையும் பேசா மல் துரத்திவிடுவார்கள், ஆதலின் ஒருவர் சொல்லை மற்றவனுக் குச் சொல்லுங் கௌவை சொல் எக்காலும் பேசலாகாது என்பது கருத்து. ** 26. சந்ததிக்கழகு வந்தி செய்யாமெய்.** சந்ததி - புத்திர பாக்கிய விருத்திக்கு, அழகு - சிறப்பு யாதெனில், மெய் - தனது தேகத்தை, வந்தி செய்யா - அறுவகை கற்பதோஷத்திற் குள்ளாகாது கார்க்க வேண்டியதென்பதாம். அதாவது இஸ்திரீகளை மலடாக்கிப் புத்திர பாக்கியத்தைக் கெடுப்பது அறுவகைக் கருப்பைப் தோஷங்களேயாதலின் சந்ததியின் அழகைக் கோரும் பெண்கள் யாவரும் கருப்பை தோஷ முண்டாகாது காக்கவேண்டுமென்பது கருத்து. ** 27. சான்றோரென்கை யீன்றோட்கழகு.** சான்றோர் - நற்குணங்கள் யாவும் நிறைந்த ரூபி, என்கை - என்று கூறப்படுவானாயின், ஈன்றோன் - பெற்ற தாயாருக்கு அழகு - சிறப்பாகும் என்பதாம். தானீன்ற புத்திரன் நல்வாய்மெய், நல்லூக்கம், நற்கடை பிடி என்னும் சான்ற ரூபியாய் சகலராலுங் கொண்டாடப் படுகிறானென்று பல்லோரும் புகழக் கேட்பதே பெற்றவளுக் குப் பேரழ கென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்.** ஈன்றப் பொழுதிற் பெரிதுவக்குந்தன் மகனை சான்றோ னெனக் கோட்டத்தாய். ** 28. சிவத்தைப் பேணிற் றவத்திற்கழகு.** சிவத்தை - உனக்குள்ள அன்பை, பேணில் - பெருக்க முயலில், தவத்திற்கு - சகசாதனத்திற்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம். ** திருமூலர் - திரிமந்திரம்.** அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார் அன்பே சிவமாவதி யாருமறிகிலார் அன்பே சிவமாவதி யாருமறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே. கோபமென்னும் அக்கினிக்குன்றின் மீதேறி யவித்து அன்பே ஒருருவுகொண்ட சாந்தரூபியாம் புத்த பிரானை குண காரணத்தால் சிவனென்றும், சதாசிவனென்றுங் கொண்டாடி வந்தார்கள். ** அறநெறித்தீபம்.** அவன் கோ லிவன்கொ லென்றையப் படாதே சிவன்கண்ணே செய்ம்மின் கண்சிந்தை - சிவன்றானும் நின்றுக்கால் சீக்கு நிழறிகழும் பிண்டிக்கீழ் வென்றிச்சீர் முக்குடையான் வேந்து. ** 29. சீரைத்தேடி னேரைத்தேடு** சீரை - சுக வாழ்க்கையை, தேடில் - ஆராய்வதில், ஏரை - உழுதுண்ணுஞ் செயலை, தேடு - கண்டறிந்துக்கொள் என்பதாம். அதாவது உலகத்தில் சுகவாழ்க்கையைத் தேடுபவன் பூமியைத் திருத்தியுண்ணும் வேளாளத் தொழிலை நாடுவானா யின் சகலருக்கும் உபகாரியாக விளங்குவதுமன்றி தானும் சுகவாழ்க்கையைப் பெருவான் என்பதாம். ** திரிக்குறள்** உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர். ** 30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல்.** சுற்றத்திற்கு - உறவின் முறையாரென்போருக்கு, அழகு - சிறப்பு யாதெனில், சூழவிருத்தல் - ஒருவருக் கொருவர் உதவி புரிந்து சேர்ந்து வாழ்தலேயாம். என் சகோதரன், என் மாமன், என்மைத்துனி யென்று சொல்லுங் குடும்பங்களுக்கு, சிறப்பும், வாழ்க்கையும் சுகமும் யாதெனில், ஒருவருக்கொருவர் நெருங்கி வாழ்வதுடன் ஒருவருக் கொருவர் உபகாரிகளாக விளங்குவதே என் குடும்பத்தோர், என் சுற்றத்தோ ரென்பதற் கழகாகும் சேர்ந்த வாழ்க்கைப் பெற்றும் உபகாரமற் றிருப்போருக்கு வாழ்க்கைக்கு அழகாகாவாம். ** திரிக்குறள்** சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். ** 31. சூதும் வாதும் வேதனை செய்யும்.** சூதும் - ஒருவரை வஞ்சினத்தாலும், வாதும் - ஒருவர் வாக்குக்கு எதிர்வாக் குரைத்தலாலும், வேதனை - துன்பத்தை, செய்யும் - அனுபவிக்க நேரிடுமென்பதாம். சூதாகும் வஞ்சக கிரியைகளையும், வாதாகுங் குதர்க்க வாதகங்களையுஞ் செய்துக்கொண்டே வருவதினால், விவேக மிகுந்தோ ரிவனை புறம் பேயகற்றுவதுடன் அதிகாரிகளால் வேதனையு மடைவானென்பதுங் கருத்து. ** 32. செய்தவமறந்தாற் கைதவமாளும்** செய் - தான் செய்துவரும், தவம் - நல்லொழுக்கத்தை, மறந்தால் - செய்யானாயின், கைதவம் - அனுபவத்திற் கை கண்ட சுகங்களானது, மாளும் - கெட்டு போமென்பதாம். தான் விடாமுயற்சியாய் சாதித்து வந்த நற்காட்சி, நல்வாய் மெயாகுந் தபோபலங் குறையின் துற்காட்சி மிகுத்து முன் செய்த தவமுமாய்ந்து போ மென்பது கருத்து. ** 33. சேமம்புகினுஞ் சாமத்துறங்கு** சேமம் - சுகசீர், புகினும் - அடைந்திருப்பினும், சாமத்து - ஐந்து நாழிகை வரையிலும், உறங்கு - நித்திரை செய்யென் பதாம். அதாவது யாதாமோர் தொழிலுமின்றி சுகசீர் அடைந் திருப்பினும், சோம்பலால் அதிக வுறக்கத்திற்கிடந்தர லாகாதென்பது கருத்து. ** 34. சையொத்திருந்தா லையமிட்டுண்.** சை - சையத்தோராம் தன்னையறியும் சாதனை நிலையோர், ஒத்திருந்தால் - தோற்றுவாராயின். ஐயம் - அவரொடுக்கத்தை யறிந்த முது, இட்டுண் - முன்பவருக் கன்னமளித்து நீயுண்பா யென்பதாம். பாலியில் ; சைவர், தன்னை யாராய்வோர், சைனர். சினமற்றோர், தன்னையறிந்தோ ரென்னப்படும். ** அகப்பேய்சித்தர்.** சைவமாருக்கடி யகப்பே தன்னையறிந்தவர்க்கே சைவமானவிட யகப்பே தானாக நின்றதடி. ** 35. சொக்கரென்பவ ரத்தம்பெறுவர்.** சொக்கர் - சகல பாசபந்தங்களையும் களைந்த சுயம்பு, என்பவர் - என்று சொல்லத் தகுந்தவர், அத்தம் - நிருவாண மென்னு முத்திநிலையை பெறுவர் - அடைவாரென்பதாம். அதாவது சருவ குற்றங்களையும் அகற்றியவர், களங்கமற்ற நெஞ்சினர், மனமாசொழிந்தவர், சுயம்பு சொக்கர் என்று சொல்லும்படியான நிலையை வாய்த்தவர்கள் அத்தமாம் வீடுபெற்று பிறவித் துக்கத்தை யொழித்தவர்களென்பது கருத்து. சுயம்பு நிலையால் புத்தரை சொக்கநாத ரென்றும், பிறவியற்ற நிலையால் புத்தரை அத்தனென்றும் வழங்கி வருகின்றார்கள். அதுகொண்டே நமது ஞானத்தாய் அகக்களிம்பற்று சொக்கமானவர் அத்தம் பெறுவரென்று கூறியுள்ளாள். சொக்க மென்னுமொழி சுயம்பாம் சுவர்க்க மென்னு மொழி யினின்றும், அத்தமென்னு மொழி முடிவாம், வீடு பேற்றினின்றும், தோன்றியவைகளாம். ** 36. சோம்பரென்பவர் தேம்பித்திரிவர்.** சோம்பர் - யாதொரு தொழிலுமற்ற சோம்பேறி, என்பவர் - என்றழைக்கப் பெற்றவர்கள், தேம்பி - துக்க மதிகரித்து, திரிவர் - அலைந்து கெடுவாரென்பதாம். அதாவது மனிதவுருவெனத் தோன்றி ஓர் தொழிலின் றியும், யாதாமோர் முயற்சியின்றியும் தேகத்தை யசையாது சோம்பலில் இருத்தியுள்ளவன் உண்ண யுணவிற்கும், உடுக்க வுடைக்குமின்றி வீதிகடோறுந்திரிந்து பசியின் கொடூரத் தாலும், துக்கவிருத்தியாலும் நலிந்து கெடுவான். ஆதலின் ஒவ்வோர் மனிதனும் சோம்பலின்றி தேகத்தை வருத்தி சம்பாதித்துண்பதே மனித தோற்றங்களுக்கு அழகாதலின் ஒவ்வோர் மனிதனும் தனக்குள்ள முயற்சியையும் உழைப்பை யும் நோக்காது சோம்பித்திரியலாகாதென்பது கருத்து. ** 37. தந்தை சொன்மிக்க மந்திரமில்லை.** தந்தை - தன்னையீன்ற தகப்பனும் தனக்கு நீதிவழி காட்டியுள்ள சற்குருவாகிய தகப்பனும், சொல் - சொல்லிய மொழிகளுக்கும், சுருதி வாக்கியங்களுக்கும் மிக்க - மேலான, மந்திரம் - ஆலோசனை, இல்லை - வேறில்லையென்பதாம். அதாவது, சற்குருவின் திரிபேத வாக்கியங்களாம் நீதிநெறி ஒழுக்கங்களைத் தழுவிவந்த தனது தந்தையால் சொல்லிக் கொடுத்துவரும் புத்திக்கும், மேற்பட்ட ஆலோசனை யாதுமில்லையென்பது கருத்து. மற்றபடி கள் குடியனாகுந் தந்தையும், களவாடுந் தந்தையும் அப்பா கொஞ்சங்கள் குடி, அய்யா அவன் பொருளை யபகரித்து வாவென்று சொல்லுஞ் சொற்களை மந்திரங்களாகும் ஆலோசனை களென் றேற்கப் போமோ ஒருக்காலும் ஏற்க லாகா வென்பதாம். ஆதலின் ஞானத்தாய் நீதிநெறி யொழுக்கங் களை யநுசரித்தோது முதுமொழிகளையே மந்திரங்களென்று கூறியுள்ளாள். ** 38. தாய் சொற்றுறந்தால் வாசகமில்லை.** தாய் - தன்னையீன்ற தாயாரும், வாசக நெறியோதியுள்ள ஞானத் தாயாரும். சொல் - சொல்லியுள்ளவற்றை, துறந்தால் - அவற்றிற்கு மாறுகொள் நடந்தால், வாசகமில்லை - ஞானத் தாயோதியுள்ள, திரிவாசகமுமில்லை அவற்றை யநுசரித்து வந்த ஈன்ற தாயாரின் ஒழுக்கமுமில்லை யென்பது கருத்தாம். பெரும்பாலும் நமது ஞானத்தாய் ஓதியுள்ள திரிவாசகங் களை யெளிதிலும், வாசக நடையிலுமுணர்ந்து அம்மார்க்கத்தில் நடந்து வரும் தன்னை யீன்றத் தாயானவள் ஒதுஞ்சொற்களைக் கடந்து நடப்பதாயின் ஞானத்தா யோதியுள்ள திரிவாசகத்தையே மீறி நடந்ததற் கொக்கும். ஆதலின் நீதிமார்க்கத்தில் நடக்கும் தன்னை யீன்ற தாயின் சொற்களை மீறலாகாதென்று கூறியுள்ளாள். கொலையிலும், களவிலும், பொய்யிலும், விபச்சாரத் திலும், குடியிலு மிகுத்தவளைக் கூறாது திரிவாசகங்களை யேற்று நடந்த தாயின் மொழிகளையே யிவ்விடம் வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 39. திரைகடலோடியுந் திரவியந்தேடு.** திரை - அலைபெருக்கில், கடலோடியும் - கடன் மடை திரண்டோடும் வோடத்திற் சென்றும், திரவியஞ் - செல்வத்தை, தேடு - சம்பாதிக்க முயற்சிச் செய்யுமென்பதாம். யாதாமொரு களங்கமும் பயமுமின்றி கடல்மீது கப்பல் யாத்திரைச் செய்து புற தேசங்களுக்குச் சென்று தனது நீதிநெறி யாம் ஒழுக்கங்களினால் அத்தேசத்தோருக்கு மேலானவனென விளங்கி தனது முயற்சியினாலும், தேக கஷ்டத்தினாலும், வித்தியா விருத்திகளினாலும் திரவியத்தை சேகரித்து தான் சுகிப் பதுடன் தனது குடும்பத்தோரையும், தன்னையடுத்துள்ள ஏழைகளையும் ஆதரிக்க வேண்டு மென்னுங் கருத்தால் திரவியந்தேடு முபாயத்தைக் கூறியுள்ளாள். ** 40. தீராக்கோபம் போராய் முடியும்.** தீராக்கோபம் - தன்னாலாற்ற முடியாக் கோபம், போராய் - பெருஞ் சண்டைக்கேதுவாய், முடியும் - தீருமென்பதாம், தனக்குள்ளெழுங் கோபாக்கினியை சாந்தமென்னும் நீரினால் விக்காமற் போவானாயின் தனதுள்ளுறுப்புகள் யாவுங் கொதிப் பேறி நடுக்கமுற்று நாசமடைவதுடன் எதிரிகளாற்றனது தேகமும் நையப் புடைக்கப்பட்டு நசிந்து போவாறென்பதாம். ** 41. துடியாப் பெண்டிர் மடியினெருப்பு.** துடியா - தனது கணவனுக்கு ஆபத்து நேரிட்டகாலத்து பதரா, பெண்டிர் - ஸ்திரீயானவளிருப்பளேல், மடியில் - கணவன் தன திடுப்பில் கட்டியுள்ள வஸ்திரத்தில், நெருப்பு - அக்கினியை கட்டியுள்ளா னென்பதற் கொக்கும் என்பதாம். புருடனுக் கோர் ஆபத்து நேரிட்டதென்று கேள்விபட்ட மனைவியின் தேகந் துடியாமலும், மனம் பதராமலும் இருக்கு மாயின் அவளது எண்ணம் பரபுருடனை நாடியிருப்பது மன்றி தனது கணவன் சீக்கிறந் துலையவேண்டு மென்னும் நோக்க முடையவளேயாவாள். அத்தகையத் தீயகுண முள்ளாளைச் சேர்ந்து வாழ்தல் தனது மடியில் நெருப்பைக் கட்டிவைத்திருப்பதற் கொக்கும். தன் கணவன் மீது வெறுப்பும், அன்னிய புருடன் மீது விருப்புமுள்ள பெண்டீர் வாழ்க்கைக்குத் துணை நலமாகாதது கண்டுள்ள ஞானத்தாய் துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பென்று கூறியுள்ளாள். ** 42. தூற்றும் பெண்டீர் கூற்றெனத்தகும்.** தூற்றும் - மனைவிவகாரங்களை வெளியில் தூற்றித் திரியும், பெண்டீர் - பெண்களை, கூற்றென் - நசிக்குங்கால னெனத், தகும் - சொல்லுதற் கேதுவுண்டா மென்பதாம். அதாவது தனது மாமன் மாமியார் வார்த்தைகளையும், மாதுலன் மாதுலி வார்த்தைகளையும் கணவன் வார்தைகளையும், தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் சொல்லித் திரிபவள் தனது குடும்பத்தை யழிக்குங் கூற்றனுக் கொப்பாவாளென்பது கருத்து. ** 43. தெய்வஞ்சீறிற் கைதவ மாறும்.** தெய்வம் - தெய்வகமாம் உள்ளதை, சீறில் - சீற்றமுறில், கைதவம் - உள்ளங்கை நெல்லிக்கனி போல் கண்டுள்ள வொழுக்க சுகமானது, மாளும் - மாய்ந்து போ மென்பதாம். அதாவது ஒவ்வோர் மக்களுக்குமுள்ள காமாக்கினி கோபாக்கினி பசியாக்கினியாந் தேய்வினிலை மீறி சீறி நிற்குமாயின் செய்தவமும் மழிந்த தேகமாளும். அங்ஙனமின்றி திரிபுராந்த தனலாய்த் தேய்வென்னும் நிலையுள்ள காமாக்கினி, கோபாக்கினி, பசியாக்கினி யென்னுங் குன்றின் மீதேறி சாந்த மென்னும் நீரால வித்து, தண்மெயாம் குளிர்ந்த தேகியாய் விளங்க வேண்டு மென்பதே சற்குருவின் போதமாதலின் அவற்றை பின்பற்றியுள்ள ஞானத்தாய் அகத்துள்ளவனலை யதிகரிக்கச் செய்யாதேயுங்க ளென்று கூறியுள்ளாள். தேய்வனலாகுந் திரிபுராந்தக ஸ்வயம்பிரகாச சாந்தரூபி யானோர் தேய்வன லகற்ற காரணங்கொண்டு தேவர் தேவர்க ளென்னும் பெயரைப் பெற்றார்கள். ** விவேகசிந்தாமணி - சாந்தபலன்** ஆசாரஞ் செய்வாராகி லறிவோடு புகழுமுண்டாம் ஆசார நன்மெயானாலவனியிற் றேவராவர். ** 44. தேடாதழிக்கிற் பாடாய் முடியும்.** தேடாது - ஓர் பொருளை தானே கஷ்டப்பட்டு சேகரிக்காது, அழிக்கில் - விரயஞ் செய்யில், பாடாய் - பாழாக, முடியும் - தீரு மென்பதாம். ஒருவன் தேகத்தை வருத்தி ஓர் பொருளைச் சேகரிக்காது தனது முன்னோர் சேகரித்து வைத்திருந்த பொருளை கஷ்டமின்றி யழிப்பானாயின் மறுபடியும் பொருளை சேகரிக்க வழிதெரியா மலும், சோம்பலினாலும், பாழடைந்து போவான். ** 45. தையுமாசியும் வைத்தியர்க்குழவு.** தையும் - தைமாதமும், மாசியும் - மாசிமாதமும், வைத்தியர் களுக்கு - மாமாத்திரர்களுக்கு, உழவு - பூமியை யுழுது பூமியின் நீராகும் பூநீரெடுக்குங்கால மென்பதாம். அதாவது, மாமாத்திரர்கள் ஆடி - ஆவணி மாதங்களில் சமுத்திரவுப்பென்னுங் கடலுப்பையும், தை - மாசி மாதங்களில் பூமியுப் பென்னும் நாதத்தையுந் தோண்டி யெடுப்பதற்கு முன், பனி காலமாகும் தையிலும், மாசியிலும் உவர்மண் பூமியை யுழுது வைத்து மீன மேஷமென்னும் பங்குனி - சித்திரையில் பூத்திருக்கும் பூமியின் நீர் ஓங்கி யெழுமிடங் கண்டு அடி படை தோண்டி நாதமெடுத்து கடலுப்புடன் சேர்த்து வைத்திய உப்பை முடித்து வைத்துக் கொண்டு ஓடதிகளை செய்து பிணியாளருக்களித்து சுக மீவதியல்பாகும். உப்பினது போக்கும், அவற்றை யெடுக்குங் காலமும், அதனால் முடியும் வோடதிகளும், மாமாத்திரர் காலமறிந்து செய்ய வேண்டிய விதியாதலின் வைத்தியர்க ளக்காலத்தை மறவாதிருப்பான் வேண்டி தையும், மாசியும் வைத்தியர்க் குழவென்று கூறியுள்ளாள். ** பதஞ்சலியார் ஞானம்** காக்கை யார்க் கெனுங் கம்பிதிறப்படும் காக்கை யாளுவர்ச் சாரமுங் கைக் குள்ளாம் காக்கையாற் சவுக் காரமுங் கட்டலாம் காக்கை காக்கை நடுக்கடற் காக்கையே ஆடியாவணி யாழித் திரண்டதை தேடினால் வருமே வந்து சிக்கினால் பாடினார் பலநூற்களிற் பாஷையா லோடி யோடி யுழன்று தவிக்கவே தையுமாசியுங் கண்டு வுழுவதற் கையனே பனிகால மதன் குறி செய்யுங் கங்கையின் தீட்சை யறிந்த பேர் கையுஞ் செய்யு மெய்யாகவே காண்பரே. ஏட்டுப் பிரிதிகளின் பாடபேதத்தால் வையகத் துறங்கு மென்று மொழியை யேற்று பனிகாலத்தில் வைக்கோல் வீட்டில் உறங்குக வென்று கூறுவதாயின் அம்மொழி காட்டு வாசிகளுக்குக் கேற்குமேயன்றி இதரவாசிகளுக் கேற்காவாம். அத்தகைய காட்டுவாசிகளுக்கும் பனையோலையாலும், தெங்கினோலையாலும், விழல் கொத்துக்களினாலும் வீட்டின் மேடு வேய்ந்துள்ளாரன்றி வைக்கோலினா லிட்டுள்ள வோர் குடிசையுங் கிடையாவாம். ஆதலின் அனுபவத்திற்கு வராததும், நூல் சார்பற்றது மாகிய மொழியை யேற்பது பொருந்தாவாம். ** 46. தொழுதூண் சுவையினுழு தூணினிது.** தொழுது - ஒருவரை வணங்கி, தூண் - பெற்ற வுணவை புசிப்பதினும், உழுது - பூமியைத் திருத்தி பயிரிட்டு, ஊண் - புசிப்பது, இனிது - இன்பமாகு மென்பதாம். தேகத்தை சோம்பலாலும், மந்த புத்தியாலும், டம்பத் தாலும் வளர்ப்பதற்கும், தம்மைய் யொத்த தேவியை வணங்கி அவனிடந் தனக்கு வேண்டிய புசிப்பைப் பெற்று, உண்பதிலும் பூமியைத் திருத்திப் பயிட்டு உண்பதில் தேகத்தை வருத்திப் புசிப்பானாயின் அதுவே தேக சுகயினிய புசிப் பென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்** உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர். ** 47. தோழனோடு மேழைமைப்பேசேல்.** தோழனோடு - தன் புஜபலத்துக் குதவுவோனோடு, ஏழைமை - தன் வல்லமைக் குறைவை, பேசேல் - மறந்தும் பேசாதே என்பதாம். புருஷர்களில் தோழர்களென்பதும், ஸ்திரிகளில் தோழிகளென்பதும் தங்கள் எஜமானன் எஜமாட்டிகளுக்கு ஆபத்து பந்து போலிருந்து அஞ்சலியஸ்தராய் ஆதரிப்பவர் களாதலின் அவர்களிடத்துத் தங்கள் வல்லப்பக் குறைவை சொல்லுவதாயின் மதிப்பற்று ஆபத்துக்குதவாதென்பது கருத்து. ** 48. நல்லிணக்கமல்ல தல்லற்படுத்தும்.** நல் - நல்ல, இணக்கம் - நேயர் சேர்க்கை, அல்லது - இல்லாமற் போமாயின், அல்லல் - துன்பத்திற்கு, படுத்தும் - ஆளாக்கு மென்பதாம். நல்லவர்களை யடுத்திருத்தலும், நல்லவர்களின் வார்த்தை யைக் கேட்குதலும் நன்றாகும் அத்தகைய நல்லோர்களை யடுக்காமலும், அவர்கள் வார்த்தையைக் கேளாமலும் இருப்பு தாயின் எவ்விதத்துங் கேடு பெருகி மாளா துக்கத்துக் காளாக்கு மென்றுணர்ந்த ஞானத்தாய் நல்லோரிணக்கம் வேண்டு மென்றும் அஃதல்லாதார் அல்லற் படுவரென்றும் வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 49. நாடெங்கும் வாழ்க கேடொன்று மில்லை.** நாடு - நன்செய் புன்செய் பூமிகளில், எங்கும் - எங்கு முள்ளவர்கள், வாழ்க - சுகவாழ்க்கையி லிருப்பார்களாயின், கேடு - சுகக்கேடுகள், ஒன்றும் - ஒன்றாயினும், இல்லை - இராது யென்பதாம். நன்செய் புன்செய் பூமிகளைத் திருத்தி பயிரிட்டு மக்கள் வாழ்க்கை புரியுமிடத்தை நாடென்றும் அரசனும் அரசாங்கத் தோரும் வாழுமிடத்தை நகரமென்றும், வழங்கி வருபவற்றுள் நன்செய் புன்செய் தானியங்கள் செழித்திருக்குமாயின் நாட்டார் யாவருஞ் செழித்திருப்பார்கள். நாட்டார்கள் செழிப்புற்றிருப் பார்களாயின் நகரவாசிகள் யாவரும் சுகமுற்று வாழ்வது அனுபவ மாதலின் பயிரிடுங் குடிகளின் சுகத்தைக் கண்டு எங்கும் சுகமுண்டென்பதை விளக்கியுள்ளாள். ** 50. நிற்கக்கற்றல் சொற்றிரமாகும்.** நிற்க - மனதில் நிலைக்க, கற்றல் - வாசித்த, சொல் - வார்த்தை களானது, திரம் - உருதியாக, ஆகும் - முடியு மென்பதாம். கற்குங் கல்வியை நிலை பெறக்கற்று தான் கற்ற கல்வியளவாய் ஒன்றைக் கூறுவானாயின் அஃது உருதி பெற்றே நிற்கும். தான் கற்ற கல்வியை நிலைக்க வைக்காமலும், கற்றக் கல்வியினளவே நில்லாமலும் ஒன்றைக் கூறுவானாயின் சேற்றில் நாட்டியக் கம்பம் போல் தன்னிற்றானே திரம் பெறா தாதலின் கற்போர் யாவருந் தாங்கள் கற்றக் கல்வியை தங்களுக் குள்ளத்தில் பதியக் கற்றல் வேண்டு மென்பது கருத்தாம். ** 51. நீரகம் பொருந்திய வூரகத்திரு.** நீர் - சலதாரையூற்றுக்கு, அகம் - இடம், பொருந்திய - அமைந்துள்ள, ஊரகத்து - தேசத்தின் கண், இரு - வீற்றிரு மென்பதாம். நீர்வளமானது நிலவளத் தூறிய வகத்து வாழ்தலே பஞ்சமற்ற வாழ்க்கைக் கிடமாதலின், நீர்வளம் பொருந்திய விடத்து வாழ்க வேண்டுமென்பது கருத்து. நீர்வளம் நிறைந்தவிடம் மக்கள் தேக சுத்தத்திற்கும், சுகத்திற்கும், தானிய விருத்திக்கு மிடமாதலின், மனோ சுத்தம் வாக்கு சுத்தம் தேக சுத்தமாம் திரிகரண சுத்தத்தை நாடும் ஞானத்தாய் முதல் வாசகத்திற் கூறியுள்ள சனி நீராடென்னும் வாசகத்துக் கிணங்க இரண்டாம் வாசகத்தில் சனிக்கும் நீரூற்றுள்ள வூரகத்து வாழென்று கூறியுள்ளாள். ** 52. நுண்ணியகருமமு மெண்ணித்துணி.** நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலேயாயினும், எண்ணி - தேறவாராய்ந்து, துணி - செய்வதற்கு முயலு மென்பதாம். ஓர் சிறிய காரியமேயாயினும் அக்காரியத்தை சரிவர வாராய்ந்து செய்தலே நன்று. அங்ஙனமின்றி காரியம் சிறிதென்று கவனமற்று செய்வதாயின் சிறு காரியமே பெரு நஷ்டத்திற்குள்ளாக்குமென் றுணர்ந்த ஞானத்தாய் நுட்பச் செயலாயினும் முன் பின் ஆராய்ந்துச் செய்யுமென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்** எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் ணெண்ணுவ தென்ப திழுக்கு ** 53. நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.** நூல் - கலை நூலின், முறை - வழியை, தெரிந்து - அறிந்து, சீலத்தில் - நன்மார்க்கத்தில், ஒழுகு - நடவாயென்பதாம். உலகத்திலுள்ள மக்களில் சிற்சிலர் தங்கடங்கட் சுயப்பிரயோசனங் கருதி எங்கள் தேவனே தேவன் எங்கள் தேவனை நம்பினவர்களே நேரில் மோட்சம் போவார்கள். மற்றவர்கள் நரகம் புகுவார்களென்று பேதை மக்களை வஞ்சித்து பொருள்பரிப்பான் வேண்டி வரைந்துள்ள பொய்நூற்களும் அனந்தமுண்டு. அத்தகைய நூற்களை நன்காராய்ந்து பொய்யகற்றலே நூன்முறை தெரிதலாகும். அங்ஙனமாய் பொய்யகற்றி அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்திய மெய் காணவேண்டியவர்கள் ஆதிதேவனாம் புத்த பிரானால் கண்டருளிய முதநூலும், அதையடுத்த சார்பு நூற்க ளுமே, சீலத்திற்கும், ஒழுக்கத்திற்கும் ஆதாரமாகும். ஆதலின் பேதை மக்கள் பல நூற்களையும் நம்பி பாழடையாது நூன்முறை தெரிந்து ஒழுக வேண்டுமென்பது அம்மன் கருத்தாம். ** அருங்கலைச்செப்பு.** என்று முண்டாகி யிறையால் வெளிப்பட்டு நின்றது நூலென்றுணர். ** நன்னூல்** வினையினீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதநூலாகும். ** 54. நெஞ்சையொளித்திரு வஞ்சகமில்லை.** நெஞ்சை - மனதை, ஒளித்து - அடக்கி, இரு - இருப்பாயா யின், வஞ்சகம் - உள்ள கடுஞ்சினம், இல்லை - அகன்று போ மென்பதாம். தன் மனமாகிய நெஞ்சமே தனக்கு சான்றாதலின் அதிற்றோன்றும் வஞ்சினம், பொறாமெய், சூது, முதலியவற்றை யகற்றி நெஞ்சை நன்மார்க்கத்தினோடே யொளிப்பானாயின் அவனுக்கு துக்கமென்பது யெக்காலுமில்லையாகும். அங்ஙனமின்றி நெஞ்சை யொளித்தவர் போல் துறந்தோ ரென வேஷ மிட்டு பேதைகளை வஞ்சித்து பொருள் பரித்துண் பாருமுண்டு. அத்தகைய வஞ்சிக்கும் வாழ்க்கை பெறாது நெஞ்சையொளித்திருப்பதே நலமென்று கூறியுள்ளாள். ** திரிக்குறள்** நெஞ்சிற்றுறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணாரில் ** 55. நேராநோன்பு சீராகாது.** நேரா - தனக்கு கூடிவரா, நோன்பு - கொல்லாமெய், சீராகாது - தனக்கு சுகங்கொடா தென்பதாம். அதாவது கொல்லா விரதமென்னும் நோன்பை நோற் பவன் மற்றொருவன் கொன்ற மாமிஷத்தைத் தின்பானாயின் தானோற்கும் நோன்பிற்கு நேராகாதென்பது கருத்து. மாமிஷம் தின் போனில்லாவிடின் கொல்வோ னதிகரிக்கான். தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின்யாரும் விலைப்பொருட்டா லூன்றருவாரில். ** 56. நைபவரெனினு நொய்யவுரையேல்** நைபவர் - வருந்தும் ஏழைகளாக, எனினும் - இருப்பினும், நொய்ய - அவர்கள் மனம் வருந்த, உரையேல் - பேசாதே யென்பதாம். நமக்குள் அடங்கி வாழக்கூடிய யேழைகளா யிருப்பினும் அவர்களது மனங்குன்ற பேசலாகா தென்பது கருத்து. ** 57. நொய்யவரென்பவர் வெய்யவராவர்.** நொய்யவரென்பவர் - ஒருவரை மனனோகப் பேசுகிற வர்கள், வெய்யவர் - கொடுஞ் சினத்தோர், ஆவர் - என்னப் படுவார்கள். ஒருவரை மனனோகப் பேசும்படியாய வார்த்தையை யுடையோர் கோபத்திற் குடிகொண்டிருப்பவ ரென்பது கருத்து. ** 58. நோன்பென்பது கொன்றுதின்னாமெய்.** நோன்பென்பது - தம்மெய்யை காப்பதென்பது, கொன்று - சீவப்பிராணியை வதைத்து. தின்னாமெய் - மாமிஷத்தைப் புசியா தேகியென்பதாம். தன்தேகத்தை காக்க வேண்டிய நோன்பினுடையோன் சீவப் பிராணிகளுக்குத் துன்பத்தைச் செய்யாது காக்க வேண்டுமென்பது கருத்து. அங்ஙனமின்றி புறமெய்யை வதைத்து தன்மெய்யை வளர்க்க வேண்டியதாயின் புற வுயிரை வதைத்துண்டு வளர்ந்த தேகம் அஃதுணர்ந்த வுபாதையை வுணர்ந்தே தீரல் வேண்டும். ** திரிக்குறள்** தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிதூனுண்பா றெங்கன மானுமருள். ** 59. பண்ணியபயிரிற் புண்ணியம் தெரியும்** பண்ணிய - தான் வுழுது விளைத்த, பயிரில் - தானிய வளர்ச்சியில், புண்ணியம் - தனது நற்கருமம், தெரியும் - விளங்கும் என்பதாம். “சூதன் கொல்லையில் மாடுமேயு” மென்னும் பழமொழிக் கிணங்க அவனவன் துற்கன் மத்தின் பாபபலனையறிய வேண்டின் அவன் விளைத்த பயிர் மழையின்றி மடிவதும் வெட்டுக் கிளிகளால் நாசமடைவதும், புழுக்களால் மாளுவது மாகிய செயலால் விளங்கும். அவனவன் நற்கருமத்தின் புண்ணிய பலனையறிய வேண்டின் அவன் விளைத்த பயிர் காலமழையால் ஓங்கி வளரவும், வெட்டுக் கிளிகளும் புழுக்களுமணுகாது தானிய விருத்தி கூடுவதுமாகிய செயலால் விளங்கும். புண்ணிய பலனை பண்ணியபயிரில் காண்கவென்று கூறியுள்ளாள். ** 60. பாலோடாயினுங் காலமறிந்துண்.** பால் - பசுவின் பாலுடன், ஆயினும் - அன்னத்தை யாயினும், மற்றும் பலகாரத்தையாயினும் புசிப்பதாயின், காலமறிந்து - காலை மாலை, மத்தியமென்னும் முக்காலமறிந்து, உண் - புசிக்கக்கடவாயென்பதாம். பாலுடன் கலந்த பழத்தையாயினும், பாலுடன் கலந்த சோற்றையாயினும் உண்ணவேண்டுமாயின் காலையில் உண்ணவேண்டுமென்று பாக சாஸ்திரங் கூறியுள்ளபடியால் காலமறிந் துண்ணென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** கன்மச்சூத்திரம்** காலையி லமுதும் மத்தியந் தயிர்மோர் மாலையில் வென்னீர் வழங்குக நன்றே. ** 61. பிறன் மனை புகாமெ யறமெனத் தகும்.** பிறன் - அன்னியனுடைய, மனை - மனைவியை யிச்சித்து, புகா - அவளில்லம் நுழையாத, மெய் - தேகமே, அறம் - சத்திய தருமத்தை பெற்றது, எனத்தகும் - என்று கூறத்தகும் யென்பதாம். அன்னியனுடைய மனைவியை யிச்சித்து அவளில்லம் புகாத தேகமே அறச்சுக தேகமென்று கூறியுள்ளாள். ** மூவர்தமிழ் - நாலடி நானூறு** அறம்புகழ் கேண்மெய் பெருமெ யிந்நான்கும் பிறன்றார நச்சுவார் சேரா - பிறன்றார நச்சுவார் சேரும் பகைபழிபாவ மென் றச்சத் தோடிந்நாற் பொருள். ** 62. பீரம் பேணிற் பாரந்தாங்கும்.** பீரம் - வீரம், பேணில் - கொள்ளில், பாரம் - பெருஞ் சுமையை, தாங்கும் - சுமக்கக்கூடும் என்பதாம். யாதொன்றுக்கும் அச்சமின்றி வீரமுற்றுள்ள புருஷன் தனக்கு அதிக பாரமுற்ற சுமையேயாயினும் வீரத்தன்மையால் அதனை யெளிதிலேந்திச் செல்வானென்பது துணிபு. மனோதிடமும், தைரியமுமுள்ள புருஷன் எடுத்த காரியத்தை யெளிதில் முடிப்பானென்பது கருத்து. ** 63. புலையுங் கொலையுங் களவுந் தவிர்.** புலையும் - மாமிச யிச்சையையும், கொலையும் - ஜீவயிம் ஸையையும், களவும் - அன்னியர் பொருளை யபகரித்தலையும், தவிர் - அகற்று மென்பதாம். நாவுக்குரிய உருசியின் அவாமிகுதியால் மாமிஷ விச்சையுண்டாயின், கொலையாம் சீவயிம்சைக்கு அஞ்சான் சீவர்கள் கிடையாவிடின் அவற்றை விலைக்குக் கொள்ளுதற்கு அன்னியர் பொருளை களவு செய்ய வஞ்சான் அக்களவின் அவாவால் தன்மையொத்த மக்களையும் வதைக்க அஞ்சான் ஆதலின் ஞானத்தாய் புலையின் யிச்சை முதலாவதகற்ற வேண்டுமென்று கூறியுள்ளாள். ** 64. பூரியோர்க்கில்லை சீரியவொழுக்கம்** பூரியோர்க்கு - நீச்சமிகுத்த கீழ்மக்களுக்கு, சீரிய - சீர் பெறவேண்டிய, ஒழுக்கம் - நன்மார்க்கம், இல்லை - கிடையாதென்பதாம். அதாவது, பொய், வஞ்சினம், சூது, பொறாமெய்க் குடி கெடுப்பு நிறைந்த கீழ்மக்களுக்கு மெய்ப்பேசுதல் சகலரிடத்தும் அன்பு பாராட்டல், நெஞ்சங்களங்கமற்றிருத்தல், சகலர் சுகத்தை யுங் கண்டு ஆனந்தித்தல், தங்களைப் போல் சகலரும் சுகமடைய விரும்பல் ஆகிய சீர்பெறும் ஒழுக்கங்களை நோக்கார்களென்பது கருத்து. ** 65. பெற்றியார்க்கில்லை சுற்றமுஞ் சினமும்.** பெற்றியார்க்கு - குணங்குடி கொண்டார்க்கு, சுற்றமும் - உறவின் முறையாரும், சினமும் - கோபமும், இல்லை - கிடையா தென்பதாம். பெற்றி யென்னுங் குணத்தை குடி கொள்ள வைத்தவர் களுக்கு சுற்றத்தாரென்னுங் குடும்பமென்பதுமில்லை, சின மென்னுங் கோபமுமில்லை யென்பது கருத்து. ** 66. பேதமே யென்பது மாதர்க்கொரு பெயர்.** பேதை - அறிவற்ற, மெய் - தேகமென்பது, மாதர்க்கு - பெண்களுக்கு, ஒருபெயர் - குறித்துள்ள வோர் பெயராகு மென்பதாம். பெண்களுக்குரிய வாலை, தருணி, பிரிவிடை, விருத்தை யென்னும் நான்கு பருவத்துள் எழுவகைவயதின் பெயர் களுண்டு. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதளவும் பேதைப் பெண்ணென்றும், எட்டு வயது முதல் பதினொரு வயதளவும் பெதுமெய்ப் பெண்ணென்றும், பன்னிரண்டு முதல் பதின் மூன்று வயதளவும் மங்கை பெண்ணென்றும், பதினான்கு வயது முதல் 19 வயதளவும் மடந்தைப் பெண்ணென்றும், இருவது வயது முதல் இருபத்தைந்து வயதளவும் அரிவைப் பெண் ணென்றும், இருபத்தாறு வயது முதல் முப்பத்தோரு வயதளவும் தெரிவைப் பெண்ணென்றும், முப்பத்திரண்டு வயது முதல் நாற்பது வயதளவும் பேரிளம் பெண்ணென்றும் எழுவகைப் பெயர்களுண்டு. இவ்வெழுவகைப் பெயருள் ஏழு வருஷத்துள் அறியாசிறி யாளாகும் பேதமெய்யென்பது பெண்களுக்குரிய ஓர் பெயராதலின் மாதருக்குரிய பெயர்களில் பேதமே யென்பது மோர் பெயரென்று குறிப்பிட்டுள்ளாள். காரணம் முன்பே பேதமெய்க்குணம் பொருந்தியிருந்த மாதர்களாயிற்றே அவர்களை, ஏமாற்றலும், மிருகம் போல் நடத்துவதும் தகுதியல்ல அவர்களை சமமாக நேசியுங்களென்று ஆண்மக்களுக்கு அறிவுறுத்தலாம். ** 67. பையச்சென்றால் வையந் தாங்கும்.** பைய - மெல்லெனச், சென்றால் - செல்லுவோமாயின், வையம் - பூவுலகு, தாங்கும் - யேந்து மென்பதாம். உலகத்தின்கண் வார்த்தை மிருதுவாகவும் நடத்தை யமைதியாகவும், செயலை நிதானமாகவும் செய்து வருவோ மாயின் வையத்துள்ள சகலமக்களாலும் ஏந்திப் புகழப்படுதல் அநுபவமாதலின் சகல காரியங்களையும் நிதானித்துச் செய் வோர்களை வையந்தாங்குமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 68. பொல்லாங் கென்பவை யெல்லாந்தவிர்.** பொல்லா - கொடிய, ஆங்கு - அங்கம், யென்பவை - யென்று சொல்லும்படியான, எல்லா - சகல குற்றங்களையும், தவிர் - அகற்றி விடுமென்பதாம். அதாவது தேக்குற்றம், வாக்கு குற்றம் மனோ குற்றங்க ளாகும். முத்தோஷங்களமைந்த பொல்லா வங்கத்தோ னென்னும் பெயரெடாது அக்குற்றங்களைத் தவிர்த்து வாழ்க வேண்டு மென்பது கருத்து. ** 69. போனகமென்பது வானவர் விருந்து** போனகம் - காமதேனு அல்லது கற்பக விருட்சம், என்பது - என்று கூறும்படியானது, வானவர் - மக்கள் நிலை கடந்து தெய்வநிலையடைந்தவர்கள், விருந்து - தங்களை யண்டினோர்க்களிக்கும் அமுத மென்னப்படும். தாயுமானவர் கூறியுள்ளபடி “போனகமமைந்ததென வக்காம தேனுநின் பொன்னடியினின்று தொழுமே” என்னுஞ் செய்யுளுக்குப் பகரமாய் காட்டிலும், குகைகளிலுந்தங்கி ஞான கருணாகர முகமமைந்த பெரியோர்களைக் காணவேண்டிவரும். அரசர்களுக்கும், குடிகளுக்கும் அக்காலுண்டாகும் பசிதாகத்தை நிவர்த்திக்கக்கூடிய ஓரமுதமென்னப்படும். காட்டில் தங்கியுள்ளவர்களுக்குக் கேட்டதையளிக்கும் ஓர் சித்தின் நிலைக்குப் போனகமென்னும் பெயரையளித்துள்ளார்கள். ** காக்கை பாடியம்** கேட்டவை யாவுங் கொடுக்கும் போனகம் நாட்டுள் மாரியாய் நடக்கும் வானகம் வீட்டினி லடங்கியுள்ளொளி கண்டோர் வாட்டமொன்றில்லா வாழ்க்கையதாமே! புத்தசங்கத்தோர் பிட்சா பாத்திரத்திற்கும் போனக மென்னு மோர் பெயருண்டு, அதுகொண்டே பட்டினத்தார் வற்றாத பாத்திரமென்றுங் கூறியுள்ளார். அதற்கு பகரமாய் மணிமேகலையிலுள்ள ஆபுத்திரன் காதையைக் காணலாம். ** அருங்கலைச் செப்பு** வானகத்துட் சென்றார் மாபாத்திர மெடுத்தார் போனகத்தா லுண்ட பொருள் கரபாத்திர மெடுத்தார் காட்சி நிலைத்தார் திரநேத்திர மமைந்த சீர். ** 70. மருந்தும் விருந்தும் முக்குறை யகற்றும்** மருந்தும் ஓடதியும், விருந்தும் - விரும்பியுண்போர் புசிப்பும், முக்குறை மூன்று தோஷங்களை, யகற்றும் நீக்குமென்பதாம். அதாவது, மருந்துண்பதினால் வாததோஷம், பித்ததோஷம், சிலேத்துமதோஷம் ஆகிய முத்தோஷங்களையும், விருந்தளிப் பதினால் எதிரிக்குக் காலத்திலில்லா குறையும், பசியின் குறையும், பிராண துடிப்பின் குறையும் நீங்கி சுகமடைவதால் விருந்தினால் நீங்கும் முக்குற்றங்களையும் மருந்தினால் நீங்கும் முக்குற்றங் களையும் ஏகபாவனையால் புசிப்பிற்சுட்டி பகர்ந்திருக்கின்றாள். ** 71. மாரியல்லது காரிய மில்லை.** மாரி - மழை, அல்லது - இல்லாமற் போமாயின், காரியம் - எடுக்குந் தொழில் யாவும், இல்லை - நடப்பதரிதாகுமென் பதாம். உலகத்தில் மழை பெய்யாமற் போமாயின் சகல காரியங் களுக்கும் ஆனியுண்டாய் பஞ்சமதிகரித்துப் பாழாகுமென் பதாம். ** 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை.** மின்னுக் கெல்லாம் - வானில் மின்னல் தோன்றுவதின் சாட்சி, பின்னுக்கு மழை - பிறகாலத்துக்குத் தகுந்த மழைப் பெய்யுமென்பதாம். வானில் மின்னல் மீருங்கால் ஆழி நீரையுண்டு ஆகாய கருப்பங் கொள்ளுவதனுபவமாதலின் மின்னல் சாட்சியைக் கொண்டு மழையுண்டென்பதை யுணர்ந்து உழுதுண்போர் விளைக்க விளக்கியுள்ளாள். ** 73. மீகாமனில்லா மரக்கலமோடாது.** மீகாமன் - வோட சூஸ்திரன், இல்லா - இல்லாமற் போவானாயின், மரக்கலம் - ஓடம், ஓடாது - நீரிலோட்டுவது அரிதாகும் என்பதாம். ஓடத்தை யோட்டும் சூஸ்திரனாகும் மீகாம னில்லாவிடில் மரக்கலத்தை நீரில் வோடச்செய்வது கஷ்டமாகும். அதுகொண்டே “மாலுமியில்லா மரக்கலமேற லாகா” தென்பதும் பழமொழி. மீகாமன், மாலுமி, ஓடசூத்திரன், சுக்கானனென்னும் நான்கு தொழிற் பெயரும் நீரின் வேகமும், காற்றின் வேகமுமறிந்து ஓடத்தை வோட்டுவோன் பெயராகும். ** 74. முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்.** முற்பகல் - காலையில், செய்யின் - செய்யும் வினையின் பயனானது, பிற்பகல் - மாலைக்குள், விளையும் - வெளிவரு மென்பதாம். யாவருக்குத் தெரியாதென்னும் ஓர் காரியத்தை மறைத்து செய்த போதினும் அக்காரியம் தன்னிற்றானே வெளிவரு மென்பது கருத்து. ** 75. மூத்தோர் சொல் வார்த்தையமிர்தம்.** மூத்தோர் - விவேகமுதிர்ந்தோர், சொல் - வாக்கிய மானது, வார்த்தை - சொற் சுவையாம், அமிர்தம் - நீதி போத மென்னப்படும். விவேக மிகுத்தோர் போதிக்கும் நீதிவாக்கியங்களை செவியிற் கேட்டு அதன்மேறை நடப்பவனெவனோ அவன் சகல துக்கங்களையும் போக்கி சுகநிலையடைபவனாதலின் மூத்தோர் வாக்கியமாம் அமுதுண்ண வேண்டுமென்பது கருத்து. ஓடதியென்னும் அவுடத முண்பதால் பிணி நீங்கி ஆரோக்கிய மடைவதுபோல் மூத்தோர் வாக்கியமென்னும் அமுதால் துக்கம் நீங்கி சுகமடைவதே காட்சியினினி தென்னப்படும். ** 76. மெத்தெனப்படுத்தல் நித்திரைக்கழகு.** மெத்தென - மெல்லிய பஞ்சணையில், படுத்தல் - சயனித் தல், நித்திரைக்கு - தூங்குகைக்கு, அழகு - சுகமென்னப்படும். மிருதுவாகிய பஞ்சுமெத்தையின் மீது படுத்தல் சுகமான நித்திரைக் கேதுவுண்டாமென்று விளக்கியுள்ளாள். ** 77. மேழிச்செல்வங் கோழைப்படாது.** மேழி - ஏரு பிடித்து உழுதுண்பவனின், செல்வம் - திரவியமானது. கோழைப்படாது - குறைவுபடாது என்பதாம். அதாவது ஏருபிடித்து உழுதுண்ணும் உழைப்பாளியா னவன் எத்தொழிலையும் அஞ்சாது செய்யும் தைரியமுடையவ னாதலின் அவன் கஷ்டமாகியத் தொழில்களில் எவற்றை யேனுஞ் செய்து சம்பாதித்து தனது திரவியங் குறையாது நிறப்பு வான் என்பது கருத்து. ** 78. மைவிழியாடன் மனையகன்றொழுகு** மைவிழியள் - கண்களில் மைதீட்டும் விலைமகள், மனை - வீட்டிற்கு, அகன்று - விலகி, ஒழுகு - நன்மார்க்கத்தில் நட வென்பதாம். கண்ணால் விழித்து மயக்கி தனது வயப்படுத்தும் விலைமகளின் வீட்டினருகே வாழ்தல் எவ்விதத்துங் கேட்டைத் தரும் வாழ்க்கையாதலின் அவள் வீட்டின் அருகே வாழ்தல் ஒழுக்கத்திற்கு இழுக்கென்பது துணிபாம். மைவிழியாள் - ஆண்மக்களை மயக்கக்கூடிய கண்களையுடையவளென்பதும் பொருந்தும். ** 79. மொழிவது மறக்கி னழிவது கருமம்.** மொழிவது - தனது தாய் தந்தையாராலேனும், தன்னை ஆண்டு வருபவனாலேனும் கூறிய வார்த்தையை, மறக்கின் - மறந்துவிடில், கருமம் - அத்தொழிலானது, அழியும் - கெட்டுப் போமென்பதாம். தனது எஜமானனாகும் ஆண்டவன் ஏவிய மொழியை மறப்பானாயின் அக்கருமத்திற்கே கேடுண்டாய தென்பது கருத்து. ** 80. மோனமென்பது ஞானவரம்பு** மோனமென்பது - பற்றற்ற நிலையென்று கூறுவது, ஞானம் - அறிவினாற் கட்டப்பட்ட, வரம்பு - வரப்பு என்பதாம். விவேக விருத்தியற்று வீணில் அலைந்து திரியும் மனதையடக்கி யாள்வதென்னப்படும். அதாவது விவேக மென்னும் அறிவைக்கடந்து மனமலையாது நிற்கும் சுகவாரிக் கொப்பாய பற்றற்ற நிலையென்பது கருத்து (வரம்பு - வரப்பு, அத்து, எல்லை) ** 81. வளவனாயினு மளவறிந்தெடுத்துண்.** வளவன் - தானிய சம்பத்துள்ளவன், ஆயினும் - இருப்பினும் அளவறிந்து - தன் குடும்பத்துக்குப் போதுமான திட்டந்தெரிந்து எடுத்து - பண்டியினின்று மொண்டு, உண்ணு - சமைத்துப் புசிக்கக்கடவா யென்பதாம். பூமிச்செல்வமாகும் தானிய சம்பத்து ஏராளமாக விருப் பினும் அவற்றை வீண்விரயஞ் செய்யாது தன் செலவுக்குத் தக்கவாறெடுத்து உபயோகித்துக்கொள்ள வேண்டுமென்னுஞ் செட்டு நிலையைஞானத்தாய் உழுதுண்ணும் வேளாள தொழிலாளருக்கு விளக்கியுள்ளாள். ** 82. வானஞ்சுருங்கிற்றானஞ் சுருங்கும்.** வானம் - காலமழை, சுருங்கில் - குறைந்து போமாயின், தானம் - பூமிவளம், சுருங்கும் - தானியவிளைவு குன்று மென்பதாம். எத்தகைய பெருக்க தானிய பண்டிகள் நிறைந்திருப் பினும் ஓராண்டு காலமழை தவறுமாயின் தானிய விருத்தி குன்றி குடிகள் கஷ்டத்தை யநுபவிக்க வேண்டி நேரிடு மாதலின் வளநாடனும் தானியச்சம்பத்து நிறைந்துள்ளவனா யினும் அளவறிந்து செலவு செய்யவேண்டு மென்று முன்வாசகத்திலு மொழிந்துள்ளாள். ** 83. விருந்திலோர்க்கில்லை பொருந்திய வொழுக்கம்.** விருந்து - நிதம் ஒருவருடன் கலந்து புசிக்கும் புசிப்பு, இல்லார் அற்றிருப்போர்க்கு, பொருந்திய - சேர்ந்து வாழக் கூடிய, ஒழுக்கம் - நல்வாழ்க்கைத்துணை, இல்லை - அவர்களுக் குக் கிடையாதென்பதாம். அனவரதம் ஒருவருக்கு அன்னமிட்டுண்ணும் அன்பில் லாமல் லோபம் நிறைந்திருக்குமாயின் அவனை நெருங்கி யொருவனுமணுகாது வாழ்க்கைத்துணை யற்றுபோமென்பது கருத்து. ** 84. வீரன் கேண்மெய் கூரம்பாகும்.** வீரன் - யுத்தவல்லபனை கேண்மெய் - நேசித்த தேகிக்கு, கூரம்பு - சாணை - தீர்த்த வேலை, ஆகும் - கையிலேந்தியுள்ளதற்கு ஒக்கும் என்பதாம். யுத்தத்தில் வல்லமெய் யுடையோனை நேசிந்ததுள்ளவன் (கூறிய அம்பை எக்காலுங் கரத்திலேந்தி யிருக்குங்கால் எவ்விதத்துந் தன்கரத்தைக் காயப்படுத்துவதுபோல்) ஏதேனும் ஓர்நாளில் வீரனால் உபத்திரவமடைய நேரும் ஆதலின், வீரன் கேண்மெயை விரும்பாதே யென்பது கருத்து. ** 85. உரவோனென்கை யிரவாதிருத்தல்** உரவோன் - தேகவுரம் பெற்றவன், என்கை - யென் போன், இரவாது - மற்றொருவர்பா லிரந்துண்ணாது. இருத்தல் - இருக்க வேண்டு மென்பதாம். அதாவது தேகத்தில் யாதாமோர் பழுதின்றி உரமாகும் பலமுற்றிருப்போன் ஒருவரையடுத்து இரந்துண்ணாது தேகத்தை வருத்தி உழைத்துண்ண வேண்டுமென்பது கருத்து. ** 86. ஊக்கமுடைமெய் யாக்கத்திற் கழகு** ஊக்கம் - இடைவிடாமுயற்சி, உடைமெய் - உடையவ னின், யாக்கத்திற்கு - உருவிற்கு, அழகு - சிறப்பென்னப்படும். எத்தொழிலை யெடுப்பினும் அவற்றை இடைவிடா முயற்சியினின்று சாதித்து முடிக்கும் தேகியை சிறப்பித்துக் கொண்டாடுவதியல்பாதலின் முயற்சியின் அழகை சிறப்பித்து தேகத்தில் சிறந்தது முயற்சியுள்ள தேகமென்றும் அஃதில்லா தேகம், பூமிபாரம் என்றுங் கூறியுள்ளாள். ** 87. வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை.** வெள்ளைக்கு - சுத்தவிதயமுள்ளார்க்கு, கள்ளச்சிந்தை - வஞ்சினம், கபடு, சூது முதலிய துற்குணங்கள், இல்லை - இராவென்பதாம். குணமென்னுங் குன்றேறிய சுத்தகுணமுள்ளாரிடத்து வஞ்சினம், கபடு, சூது முதலிய துற்குணங்கள் யாவும் அணுகா தென்பது கருத்து. ** 88. வேந்தன் சீறினாந் துணையில்லை** வேந்தன் - ஆளும் அரசனானவன், சீறின் - சினந்து நிற்கின், ஆந்துணை - அவனை தடுத்தாளுமுதவி, இல்லை - வேறில்லை யென்பதாம். தேசத்தை யாளும் அரசனுக்கு ஒருவன் மீது மீறியக் கோபமுண்டாயின், அவனது கோபத்தை யடக்கி காப்போர் அங்கு ஒருவருமில்லையென்பது கருத்து. ** 89. வையந் தொடருந் தெய்வந்தொழு.** வையம் - புடவி பாசமானது, தொடரும் - உன்னை யெக்காலத்திலும் பின்பற்றுமாதலின், தெய்வம் - தேய்வகமாம் உண்மெய்யைத், தொழு - உள்ளொளிகண்டொடுங்கு மென்பதாம். பாச அடலியின் பந்தப்பற்றானது வண்டி எருதின் காலை சக்கரந் தொடர்ந்து செல்லுவதுபோல் மாறாபிறவிக்கும், மீளா துக்கத்திற்குங் கொண்டு போய்விடும். ஆதலின் தெய்வகமாம் உள்ளொளியிலன்பை வளர்த்தி ஒடுங்க வேண்டுமென்பது கருத்து. ** ஒளவைக்குறள்** அந்தத்தி லங்கி யழல் போலத் தானோக்கில் பந்தப் பிறப்பறுக்கலாம். ** 90. ஒத்தவிடத்து நித்திரைக்கொள்.** ஒத்தவிடத்து - உன்சாதனத்திற்கு நேர்ந்தவிடத்து, நித்திரை - தூங்காமற்றூங்கும் நிலையில், கொள்ளும் - உட்காரு மென்பதாம். நேர்ந்தவிடத்து ஆனந்த நித்திரையாம் துங்காமற்றூங்கும் நிலையை வற்புறுத்தி யுள்ளாளன்றி தன்னையறியாமற் றூங்கும் மரணத்தூக்கத்தைக் கூறினாளில்லை. ** 91. ஓதாதார்க்கில்லை யுண்மெயிலொழுக்கம்.** ஓதாதார்க்கு - நற்கேள்வியில் முயலாதார்க்கு, உண்மெயி லொடுக்கம் - தன்னுட்டானே யொடுங்கி சுயம்பாம் நிலை, இல்லை - கிடையாதென்பதாம். ஆதலின் ஒவ்வோர் மக்களும் நீதிநூற்களை யோதி யுணர்ந்து உண்மெயிலன்பை வளர்த்து புறமெய் வெறுத்து பிறவியறுத்து நிருவாணமடைய வேண்டுமென்பது கருத்து. அவ்வையார் அம்மன் என்னும் பெயர் பெற்ற ஞானத்தாய் அருளிய இரண்டாம் வாசகம் ** முற்றிற்று.** ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம் இ. மூன்றாம் வாசகம்- வெற்றி ஞானம் ** முன்னுரை** வெற்றிஞானமாகிய மூன்றாம் வாசக தென்தேச பாண்டிய வம்ஸத்தைச் சார்ந்த கிள்ளிவளவன் எனும் அரசனுடைய மூதாதையாகிய சயம்பு சிற்றரசன் தனது மாளிகையைவிட்டு வேணு வியாஹார அறஹத்துக்களை தரிசிக்கப் போகுங்கால் வழியே சென்று வழியே மீளாமல், திவாகர சிற்றரசனின் நந்தவனத்துட் புகுந்தான். அவ்வனத்துள் திவாகர வரசனின் குமாரத்தி தன் தோழிமாருடன் உலாவிக் கொண்டிருந்தவள் சயம்பு சிற்றரசனைக் கண்டு பிரிதியுண்டாகி யருகிலணுகிச் சென்றாள். இதனை யுணர்ந்தவன் தான் குறுக்கிட்டுச் செல்லுங் காரணங்களைக் கூறி மனமிணங்காமல் வெறுத்துச் சென்றான். இக்கோபத்தால் ராஜகுமாரத்தி சேவகரை திட்டப்படுத்தி வைத்திருந்து, சயம்புவரசன் வியாரஞ் சென்று திரும்பி யவ்வனத்துள் வந்தவுடன் பிடிக்கச் செய்து, தன் தந்தையிடம் அவனைக் கொணர்ந்து, இவனென்னை வலிய கைப்பற்றினானென்று கூறினாள். அதனைக் கேட்ட மன்னன் சீற்றமுற்று இவ்விசாரிணையை மந்திரிகளால் விசாரித்து தண்டிக்க வநுமதியளித்தான். பின்பு மந்திரிகள் சரிவர விசாரியாமல் சயம்பு வரசனே குற்றமுடையவனென்று, அவனைத் தண்டித்து சிறையிலிட்டு வைத்தார்கள். இவ் விவரங்களை சயம்பு வரசனின், ஏவலாளரால் உலகமாதாவாகிய ஒளவையாரெனும் அம்பிகையம்மன் அறிந்து, வெற்றிஞானம் எனும் ஒரு நூலெழுதி, திவாகர சிற்றரசனுக்கனுப்பினார். அதைப் பெற்று முற்றும் வாசித்து, தனது குமாரத்தியையும் சயம்பு மன்னனையும் தேரவிசாரித்து, தன் குமாரத்தியே துஷ்டியெனத் தெரிந்து சயம்பு சிற்றரசனுக்கு வேண திரவியமும், அம்மனாலளித்த வெற்றி ஞான நூலும் கொடுத்து சிறையிலிருந்து விடுவித்தவன் நாட்டுக்கனுப்பினான். ஒளவையாரால் அருளிய முதல் வாசகம் ஆத்திச்சுவட்டில், இரண்டாம் வாசகம் குன்றை வேந்தன். ஆகிய இவ்விரண்டும், அக்காலத்தில் சிறு பிள்ளைகட்டு கற்பிக்கப்பட்டு வந்ததுடன் இந்த வெற்றி ஞானத்தையும் பள்ளிப்பிள்ளைகட்கு கற்பிக்கும்படி சயம்பு வரசன் சமணாசிரியர்களை வேண்டிக்கொண்டான். அது முதல் மூன்று நூற்களையுஞ் சேர்த்து திரிவாசகம் என்று அக்காலத்திலேயே வழங்கிவந்தார்கள், திரிவாசக முண்டாய தற்கு காரண மிதுவேயாகும். இக்காதையை கிறிஸ்து பிறந்த (95) தொண்ணூற்றியைந்தாம் வருஷம் அரசாண்ட கிள்ளிவளவன் மூதாதை வம்ஸ வரிசையிற் காணலாம். இக்காலத்தில் முதல் வாசகமும் இரண்டாம் வாசகமும் அம்பிகையம்மனா லியற்றியதென்றும், மூன்றாம் வாசகமாகிய இந்த வெற்றிஞானம் அதிவீரராமபாண்டியன் எழுதிய தென்றும், பல பிழைபடு நெறிகளை நிறைத்து பாழாக்கி விட்டார்கள். ஸ்ரீ. சித்தார்த்தா புத்தக சாலையார் ஸ்ரீ புத்தாயநம : தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ** ஸ்ரீ அம்பிகையம்மன்** ** அருளிச்செய்த** ** மூன்றாம் வாசகம்.** ** திருவாளர். க. அயோத்திதாஸ் பண்டிதர்** ** உரை.** ** வெற்றிஞானம்.** ** காப்பு.** வெற்றி ஞான வீரன் வாய்மெய் முற்று மறிந்தோர் மூதறிவோரே. ஞான வெற்றி - அறிவில் ஜெயமுற்றவனாகும் வாலறிஞ னாம், வீரன் - அதிதீவிரனெனப் புகழ் பெற்ற புத்தபிரானா லோதிய, வாய்மெய் - மெய் வாக்கியங்கள் நான்கையும், முற்றும் - முழுவதும், அறிந்தோர் - தெரிந்து கொண்டவர்கள். மூதறிவோரே - முற்று முணர்ந்த பேரறிவாள ராகு மென்பதாம். அதாவது நூன் முகத்து சதுர்முக னோதிய நான்கு வாய்மெயாம், துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவக் காரணம், துக்க நிவாரண மென்னும் சதுர்வித சாத்தியங்களையும் குறைவற உணர்ந்த வர்களெவரோ அவர்களே முற்று முணர்ந்த வர்களென்பது கருத்து. ** நறுந்தொகை நான்கு** பற்ற முலகப் பற்றினை யறுத்து பொற்றாமரையிற் பரந்தவன் பகர்ந்த நற்றமிழ் தெரிந்து நறுந்தொகை தன்னால் குற்றங்களைவோர் குறைவிலாதவரே. பற்றாமுலகம் - உலக பாசபந்தக் கட்டாகும், பற்றினை - பாசக் கயிற்றினை, அறுத்து - துண்டித்து, பொற்றாமரையில் - பதுமாசனத்தில், பரந்தவன் - வீற்றிருந்தவன், பகர்ந்த - ஓதிவைத்த, நற்றமிழ் - சிறந்த தமிழ் பாஷையை, தெரிந்து - கற்று, நறுந் தொகையாம் - வாய்மெய் நான்கினையும் உணர்ந்து, தன்னால் - அதனாதரவால், குற்றங்களைவோர் - இராகத்து வேஷ மோக மென்னுங் குறுந்தொகையாம் முக்குற்றங்களை யகற்றினோர், குறை விலாதவரே - சுகவாரிக் கொப்பாம் சகல சுகமும் பொருந்த வமைதியுற்று வாழ்வார்க ளென்றவாறு. ** திரிக்குறள்.** மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். ** சிலப்பதிகாரம்.** அருக ரறிவனருகற் கல்லதென் இருகையுங் கூடி யொருவழிக் குவியா மலர்மிசை நடந்த மலரடிக் கல்லதென் தலைமிசை யுச்சி தானணி பொறாது. ** ஞான வாசிஷ்டம்** புண்டரீக வாதனத்தில் புத்தன் போல் உத்தர முகனாய் ** நூல்.** ** 1. எழுத்தறிவித்தவன் இறைவனாகும்.** எழுத்து - வரிவடிவாம் அட்சரங்களை, அறிவித்தவன் - ஓதி வைத்தவன், இறைவனாகும் - குடிகள் பால் வரியிறைக் கொள்ளும் ஓரரசனேயாகும். அவ்வரசன் யாரென்பீரேல் வீரவாகு, குலவாகு, இட்சுவா கென்னும் சக்கரவர்த்திகள் மரபிற்றோன்றிய சித்தார்த்தி திருமகனேயாகும். இவ்விறைவன் காலத்தில் பாலிபாஷை வரிவடிவாம் எழுத்துக்களின்றி ஒலிவடிவாம் சப்தமொழியும், அம்மொழி களோ ஒருவர் சொல்லவும் மற்றொருவர் கேட்கவுமான சுருதிகளாயிருந்தது. இறைவன் உலகபாசத்தைத் துறந்து அவலோகிதரென்றும், ஐயிந்திரியங்களை வென்று இந்திர ரென்றும், நிருவாண நிலையடைந்தபோது சகலமுந் தன்னிற் றோன்றிய விளக்கத்தால் தான் சுருதியாக வோதியுள்ள திரிபீடவாக்கியம், திரிபேத வாக்கிய மென்னும் தன்மபாகை அருத்த பாகை, ஞானபாகை யாகிய மூன்று, அருமொழிகளும் மறைந்து போமென்றுணர்ந்து மகடபாஷையாம் பாலியினின்று சகட பாஷையாம் சமஸ்கிரு தாட் சரங்களையும், திராவிடபாஷையாம் தமிழட்சரங்களையு மியற்றி வரிவடிவாய் கற்களில் வரைந்து கல்வியைக் கற்பித்துக்கொண்டு எழுத்தறித்தவ னிறைவனாகுமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** தொல் காப்பியம்.** மங்காமரபி னெழுத்து முறைகாட்டி மல்குநீர் வரைப்பினிந்திர னரைந்த ** விரசோழியம்.** ஆவியனைத்துங் க,சத நப, மவ்வரியும் வவ்வி லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லாவுலகு மேவிய வெண்குடை செம்பியன் வீரராஜேந்திரன்றன் நாவியல் செந்தமிழ் சொல்லின் மொழி முதனண்ணுதலே. மதத்திற் பொலிவும் வடசொற் கிடப்பும் தமிழ் மரபு முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமுமோங்கு வினை பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்க பன்னூறாயிரம் விதத்திற் போலியும் புக ழவலோகிதன் மெய்த்தமிழே. ** சிலப்பதிகாரம்** தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு ** முன்கலைதிவாகரம்.** ஒருவர்க் கொருவனாகி யுதவியும் பரிசின் மாக்கள் பற்பலராயினும் தானொருவன்னே தரணி மாதவன் செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரம். ** சிவஞான யோகிஸ்வரர்.** இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியு மான்றவரே தழீ இயினாரென்றாலிவ் இருமொழியு நிகரென்று மிதற்கைய முளதேயோ. இத்தகைய விலக்கிய நூல் இலக்கண நூற்களினா தாரங் களைக் கொண்டு தமிழட்சரங்களை இயற்றியளித்தவர் புத்த பிரா னென்றே தெளிவாக விளங்குகிறபடியால் எழுத்தறிவித்தவன் சிறப்பைக் கூறி அன்னோர் தன்மத்தை விளக்கலுற்றாள். ** 2. கல்விக்கழகு கசடறமொழிதல்.** தான் கற்ற கல்விக்கு சிறப்பு யாதெனில், கூறும் வாக்கில் குற்றமெழாமலும், மற்றவர்களிதயம் புண்படாமலும் முன்பின் யோசித்து பேச வேண்டுமென்பது கருத்து. ** 3. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.** திரவிய சம்பத்தைப் பெற்றவர்களுக்கு சிறப்பு யாதெனில், தனது குடும்பம் ஓங்கி செழிக்கவும், தன்னை யடுத்தோர் குடும்பம் ஓங்கி செழிக்கவும் அன்புடன் உதவி புரிந்து வருவானாயின் அதுவே தனவந்தன் அழகென்பது கருத்து. ** 4. வேதியர்க் கழகு வோதலு மொழுக்கமும்.** சத்திய தன்மமாம் சதுர்பேத மொழிகளை ஓதுவோர்க்கழகு யாதெனில், எத்தேச எப்பாஷைக்கரனா யிருப்பினும் நீதியும், நெறியும் வாய்மெயும் நிறைந்து சகலருக்கும் நன்மெயை விளக்க வேண்டியவனாகவும் அன்றேல் ஓதியுணர்ந்த பயனால் சகலருக் கும் நல்லவனாகவும் விளங்குவோ னெவனோ அவனே வேதமோதும் சிறப்புடையானென்பது கருத்து. ** நல்லாப்பிள்ளை பாரதம்.** நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் நிறுத்தினோன் வேதியனன்றி வேதிய னேனு மிழுக்குறி லவனை விளம்பும் சூத்திரனென வேத மாதவர் புகன்றாராதலாலுடல் மாய்ந்தபின் பாவதோர் பொருளோ கோதிலர் விந்தப் பிறவியில் வேதக் குரவனீயல்லையோ குறியாய். ** 5. மன்னவர்க்கழகு செங்கோல் நடத்தல்.** அரசர்களுக்கு அழகாவது யாதெனில், செவ்விய நீதியின் கோலேந்தி தன்னவரன்னிய ரென்னும் பட்சபாதமின்றி நீதியை செலுத்துவதுடன் குடிகள் யாவருந் தனது பாதுகாப்பிலிருக் கின்றபடியால் அவர்களுக்கு யாதாமோர் தீங்கு நேரிடா வண்ணம் ஆதரிப்பதே மன்னர்க்கு சிறப் பென்பது கருத்து. ** 6. வாணிபர்க்கழகு வளர் பொருளீட்டல்.** வியாபாரிகளுக்கு அழகு யாதெனில், ஒன்றைக் கொடுத்து, மற்றொன்றை மாறுவதில் மிக்கச் செட்டுடையவனா யிருந்து எக்காலத்திலேச் சரக்கைப் பிடித்துக் கட்ட வேண்டியதென்றும் எச்சரிக்கை நிலவரத்திலும், தராசு கோணா நிலையிலும் தன் செல வழிவுபோக சொற்பலாபத்திலும் விற்று பொருளை வளர்த்து சருவ சீவர்களுக்கும் உதவியுள்ளோராக விளங்குதல் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றைப் பெறும் வாணிபர்களுக்கு சிறப்பென்பது கருத்து. ** 7. வேளாளர்க்கழகு உழுதூண் விரும்பல்.** பூமியை திருத்தி பயிர் செய்கிறவர்களுக்கு அழகு யாதெனில், நன்செய் பூமியை யுழுது பயிர் இடுங்கால மீதென்றும் புன்செய் பூமியை பயிரிடுங்காலமீதென்றும் நன்காராய்ந்து தான், மழையை வேண்டி ஆகாயத்தை நோக்குவது போல் சர்வ ஜீவர்களும் தானியத்தை வேண்டி வேளாளனை நோக்குகிற படியால் பூமியின் பலனைக் கருதுங்கால் ஈகையைப் பெருக்கி சர்வ ஜீவர்கள் மீதும் இதக்க முடையவனாய் ஆதரிக்குஞ் செயலிலிருப்பதே வேளாளர் சிறப்பென்பது கருத்து. ** 8. மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்.** ஆலோசனை கர்த்தனுக்கு அழகு யாதெனில் தன தரகனுக்கு அரிய வாக்கியங்களை விளக்கி தேசத்தை சீர்த்திருத் தலும், வருங்காலச் செயல்களையும் போங்காலச் செயல்களையும் ஆராய்ந்து சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் அகற்ற வேண்டியவற்றை யகற்றியும் ஆண்டு வருவதே சிறப்பென்பது கருத்து. ** 9. தந்திரிக்கழகு தன் சுற்றங்காத்தல்.** தன்னிற் றிரமுள்ளவர்களுக்கு அழகு யாதெனில், விருந்தினருடனும் அன்புடனும், புசித்து அன்னத்தாலவர்களைப் போஷிப்பதே சிறப்பென்பது கருத்து. ** 10. உண்டிக்கழகு விருந்தோடுண்டல்.** உண்ணும்படியான புசிப்புக்கழகு யாதெனில், விருந்தின ருடன் அன்பு பாராட்டி புசித்து அன்னத்தாலவர்களைப் போஷிப் பதே சிறப்பென்பது கருத்து. ** 11. பெண்டீர்க்கழகெதிர் பேசாதிருத்தல்.** பெண்களுக்கு முக்கிய வழகு யாதெனில் தனது கணவன் கூறும் வாய்மொழிகளுக்கு விவேகமற்ற எதிர்மொழி கூறாமல் இட்ட வேலை யின்போடு செய்தலே சிறப்பென்பது கருத்து. ** 12. குலமகட்கழகு கொழுநனைப் பேணுதல்.** நற்குடும்பத்திற் பிறந்த பெண்களுக்கு அழகு யாதெனில், தன் கணவனையே கடவுளாகவும், காப்பவனாகவுங் கருதி அவனுக்கு நீராட்டலை அங்க சுத்தமாகவும், அன்னமூட்டுதலை யபிஷேக மாகவும், அவன் கரங்களைப் பிடித்துப் பூசுதலே பூசையாகவும், அவன் உத்தரவளித்துள்ள வாக்கியங்களை மந்திரமாகவுமெண்ணி நடத்தலே சிறப்பென்பது கருத்து. ** 13. விலைமகட்கழகு மேனிமினுக்குதல்.** விலைகொடுத்து வாங்கும் அடிமைப் பெண்களுக்கு அழகு யாதெனில், எக்காலுந் தங்கள் தேகத்தை சுத்தத்தில் வைக்க வேண்டு மென்பது கருத்து. ** 14. அறிவோர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்.** அறிவுள்ளோரென்று கூறுதற்கு அழகு யாதெனில், தான் கற்ற கலை நூற்களுக்கு அளவாய் அடங்கி சகலருக்கும் உபகாரியாக விளங்குதல் அன்றேல், சகலராலும் நல்ல வனென்று நன்கு மதிக்கப் பெறுதலே சிறப்பென்பது கருத்து. ** 15. வரியோர்க்கழகு வருமையிற் செம்மைய்.** ஏழைகளாகி மிக்க துக்கத்தை யநுபவிப்போர் நடந்துக் கொள்ள வேண்டிய அழகுயாதெனில், இந்த தேகம் மறைந்து மறுதேக மெடுக்கினும் அதனிலேனும் சுகத்தை யநுபவிக்கும் படியாக யெடுத்த தேகத்தின் துக்கத்தை மிக்கக் கருதாது நன்மார்க் கத்தில் நடத்தலே சிறப்பென்பது கருத்து. ** 16. (அதனால்) தேம்படு பனையின் றிரட்பழத் தொருவிதை வானுறவோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க்கிருக்க நிழலாகாதே.** ஆதலின் பனை விதையானது மிக்கப் பருத்திருப்பினும் அதன் மரமானது ஒருவர் தங்கி நிற்பதற்கு நிழலிராது என்பது கருத்து. ** 17. தெள்ளியவாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிய தாயினு மண்ணல் யானை அணிதேர்ப்புரவியாட்பெரும் படையோடு மன்னர்க்கிருக்க நிழலாகும்மே.** ஆலமரத்தின் விதையானது மீன் சினைக் கொப்பாய சிறியதாயிருப்பினும் அதன் மரத்தின் நிழலோ இரதகஜ துரக பதாதிகளுடன் அரசனும் வந்து தங்குவதற்கு நிழலைத்தரு மென்பது கருத்து. ** 18. (அதுபோல்) சிறியோரெல்லாம் சிறியோருமல்லர்.** சிறுவயதாயிருப்பினும் அவர்களை சிறியவர்களென்று அவமதிக்கலாகாது காரணம் விவேகத்தில் பெரியோர்களா யிருப்பார்கள். ** 19. பெரியோரெல்லாம் பெரியோருமல்லர்.** வயதில் - முதிர்ந்தோர்களாயிருப்பினும் அவர்களைப் பெரியோர்களென் றெண்ணப்படாது காரணம், விவேக மற்றிருப்பார்கள். ** 20. பெற்றோரெல்லாம் பிள்ளைகளல்லர்.** பெற்றப் பிள்ளைகள் யாவரையும் தன்னுடையப் பிள்ளை களே யென்று நம்பப்படாது. காரணம், தாய் தந்தையரைக் கவனியாது களியாட்டத்திலிருக்கும் பிள்ளைகளுமுண்டு. ** 21. உற்றோரெல்லா முறவினரல்லர்.** மிக்க வுரியவர்களென்று சொல்லும்படியான குடும்பத் தோர் யாவரும் உறவினராகமாட்டார்கள். காரணம் உறவினர் உரிமெயாம் சுகதுக்கங்களைப் பொருத்தி நிற்பர். ** 22. கொண்டோரெல்லாம் பெண்டிருமல்லர்.** குடும்பத்திற்கு வேண்டுமென்று கொண்டப் பெண்கள் யாவரும் குடும்பிகளாக மாட்டார்கள். காரணம், சிலப் பெண்கள் குடும்பத்தைக் கலைக்கும் வேர்ப்புழுவாகத் தோற்றுவார்கள். ** 23. அடினுமாவின் பால் சுவைகுன்றாது.** பசும்பாலினை சுண்டக் காய்ச்சினும் அதனது சுவை யானது குன்றாது என்பது கருத்து. ** 24. சுடினுஞ் செம்பொன் றன்னொளி கெடாது.** சாம்புனதமாம் பொன்னை நெருப்பிலிட்டு மேலுமேலு முருக்கினும் அதன் பிரகாசங் குறையமாட்டா தென்பது கருத்து. ** 25. அரைக்கினுஞ் சந்தனந் தன் மணமாறாது.** சந்தனக் கட்டையை நீர் வார்த் துரைக்கினும் அதன் பரிமளம் மாறாது என்பது கருத்து. ** 26. புகைக்கினுந்தண்கடல் பொல்லாங்கு கமழாது.** குளிர்ந்த சமுத்திர நீரை புகையெழக் கொளுத்தினாலும் கொடிய நாற்றமெழாது என்பது கருத்து. ** 27. கலைக்கினுந்தண் கடல் சேறாகாதே.** குளிர்ந்த கடல் நீரை எவ்விதம் கலக்கினாலும் சேறு காணமாட்டாது காரணம், அதனதன் செயலும், குணமும் அதனதன் நிலையிற் காணும். அதனால், ’ ** 28. பெருமெயும் சிறுமெயுந்தன் செயலாமே.** ஓர் மனிதனைப் பார்த்து இவன் பெரியோன் மேன்மக னென்று கூறுவது, மற்றொருவனைப் பார்த்து இவன் சிறியன் கீழ்மகனென்று கூறுவதும், அவனவன் நற்கரும துற்கருமக் கூற்றாதலின் சகலமும் தன் செயலாலாவ தென்பது கருத்து. ** 29. சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம்** பெரியோராயின் பொறுப்பது கடனே. சிறியோராகும் அறியாப் பிள்ளைகள் செய்தக் குற்றங்களை பெரியோராகும் விவேகிகள் பொறுப்பதே யியல்பாகும். ** 30. சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்** பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. சிறியோரென்னும் அறியாப் பிள்ளைகளாயினும் பெருங் குற்றங்களைச் செய்துவிடுவார்களாயின் அப்பிழையை பெரியோர்கள் பொறுக்கமாட்டார்களென்பது கருத்து. ** 31. (அதனால்) வாழிய நலனே வாழிய நலனே.** ஒவ்வோர் மக்களும் நல்வாழ்க்கையாம் நன்மார்க்க நடையி லொழுக வேண்டியதே நலனாதலின் வாழியநலனே என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ** 32. நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மெய் நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாதே.** மூர்க்கனெனக் கூறும் பெயர்பெற்ற தேகியுடன் நூறு வருஷம் பழகி யிருப்பினும் நீரின் மேற் படர்ந்துள்ள பாசை போல் ஒட்டா நேயத்தி லிருப்பானன்றி நீரினுள் வேரூன்றும் விருட்சம் போல் நிலைக்காக்கேண்மை யென்பது கருத்து. ** 33. ஒருநாட்பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே.** பெரியோராகும் விவேக மிகுத்த மேன்மக்களிடம் ஒருநாட் பழகினும், அப்பழக்கமானது மத்திய பாதாளமென்னும் இரண்டிலும் வீழ்ந்துருகியுள்ள வேர்போல் பதிந்துள்ள கேண்மையா மென்பது கருத்து. ** 34. (அதனால்) கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே.** மேற்கூறியக் கீழ்மக்கள் மேன்மக்களென்னும் பெயர் வாய்ந்த வகையறிந்தோர் கலை நூற்களைக் கற்றல் நன்று, அவற்றுள் பிச்சைப்புகும் வறிய காலம் வரினும் கலை நூற்களைக் கற்றுத் தெளிய வேண்டுமென்பது ஞானத்தாயின் கருத்து. ** 35. கல்லானொருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே.** கலை நூற்களைக் கற்றுணராதவன் தனது குடும்பத்தை உயர்த்தியும் விசேஷித்தும், பேசுதல் பயனற்ற சொற்காளாகி நெல்லினுட் டோன்றும் பதர்போ லொழியு மென்பது கருத்து. ** 36. (ஆதலின்) நாற்பாற் குலத்தின் மேற்பாலொருவன் கற்றிலனாயிற் கீழிருப்பவனே.** அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் எனும் நான்கு வகைத் தொழில் நடித்தும் நான்கு குடும்பத்தோருள் விவேக மிகுந்த மேற் குடும்பமாம் அந்தணர் குடும்பத்திற் பிறந்தும் கலை நூற்களைக் வாசித்துணராதவனாயிருப்பானாயின் அவனைக் கீழ் குடும்பமாம் கடைகுலத்தா னென்றே யழைக்கப்படுவான். ** 37. எக்குடி பிறப்பினும் யாவரேயாயினும் அக்குடியிற் கற்றோ ரறவோராவர்.** மேற்கூறியுள்ள நால்வகைக் தொழிலை நடாத்தும் நாற் குடும்பத்தோருள் எக்குடும்பத்திலாயினும் எவனொருவன் கலை நூற் களைக் கற்று பூரணமடைகின்றானோ அவனே அறிவோனாம் அந்தணனென்றழைக்கப்படுவான். ** 38. அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்.** கலை நூற் பயிற்சியால் நீதியும் நெறியும், வாய்மெயும் நிறைந்த அறிவுடையோனை அரசனும் தேசத்தை யாளும் மன்னனும் விரும்பி கொண்டாடுவான். ** 39. அச்சமுள்ளடக்கி அறிவகத்தில்லா கொச்சைமக்களை பெறுதலினக் குடி எச்சமற்றென்று மிருக்கை நன்றே.** கலைநூற் கற்ற விவேக விருத்தியால் மனுகுலத்தோனென வெளிதோன்றாது கல்லாக் குறையால் மனுக்களாம் விவேகி களைக் கண்டவுடன் மிருகங்க ளச்சமுற்று ஒடுங்குதல் போல் அடங்கும் பேதை மக்களைப் பெறுவதினும் எச்சமாம் புத்திரபாக்கியமற்றிருப்பதே நன்றென்பது கருத்து. ** 40. யானைக்கில்லை தானமுந் தருமமும்.** யானைக்கு யீயுங்குணமும், நன்மார்க்கமும் இல்லை யென்பது கருத்து. ** 41. பூனைக்கில்லை தவமுந் தயையும்.** பூனைக்கு ஒழுக்கமும், பரோபகாரமும் இல்லை யென்பது கருத்து. ** 42. ஞானிக்கில்லை யின்பமுந் துன்பதும்.** விவேக மிகுத்தப் பெரியோர்களுக்கு பேராசையாம் அதியிச்சையும், உபத்திரவமாந் துக்கமும் இல்லை யென்பது கருத்து. ** 43. சிதலைக்கில்லை செல்வமுஞ் செருக்கும்.** சிதலென்னுங் கறையானுக்கு திரவியசம்பத்தும், அகங்கா ரமு மில்லை யென்பது கருத்து. ** 44. முதலைக்கில்லை நீச்சும் நிலையும்.** முதலையாம் நீர் மிருகத்திற்கு நீரில் நீந்தும் செயலும், நிலைக்குஞ் செயலு மில்லை யென்பது கருத்து. ** 45. அச்சமும் நாணமும் அறிவிலார்க்கில்லை.** விவேகவிருத்தி யில்லாதவர்கள் பெரியோர்களிடத்தில் பயமும், கெட்ட செய்கைகளில் வெழ்க்கமு மடையாரென்பது கருத்து. ** 46. நாளுங் கிழமையு நலிந்தோர்க்கில்லை.** நல்ல நாளைப் பார்ப்பதும் நற்பலன் வேண்டுமென வாரத் தைக் கருதிப் பார்ப்பதுமாகியச் செயல்களை வியாதியஸ்தருக்குப் பார்ப்பதில் பயனில்லை. நோய்க் கண்டவுடன் சிகிட்சை செய்வதை விட்டு நாளையும் அதன் பலனையும் நோக்குவதனால் வியாதி யதிகரித்து நோயாளி துன்பமடைவானாதிலின் அக்காலத்தில் யாதொரு நாளையுங் கருதாது நோயைக் கருதி உடனுக்குடன் பரிகாரஞ் செய்ய வேண்டுமென்பது, கருத்து. ** 47. கேளுங்கிளையும் கெட்டோர்க்கில்லை.** சுருதி விசாரிணையும், குடும்ப விசாரிணையும் சுகநிலை கெட்டு எளியநிலை யடைந்தோர்க்கில்லை யென்பது கருத்து. ** 48. உடைமெயும் வருமெயு மொருவழி நில்லா** தற்காலந் தோன்றி உடைத்தாய தேகமும் மறு பிறவிக் காளாகும் தேகமும் எண்ணிய மார்க்கத்திற் சென்று நிலைக்கா தென்பது கருத்து. ** 49. குடை நிழலிருந்து குஞ்சமமூர்ந்தோர்** நடைமெலிந்தோரூர் நண்ணினு நண்ணுவர். ஏகச் சக்கிராதிபதியாய் வெண்குடை நிழலில் யானை மீதேறி சென்றவர்களும், ஒடுங்கிக் கால் நடையில் நடப்பினும் நடப்பர் என்பது கருத்து. ** 50. சிறப்புஞ்செல்வமும் பெருமெயுமுடையோர் அறக்கூழ்சாலை யடையினுமடைவர்.** சிறந்த வாழ்க்கையும், திரவிய சம்பத்தும் பெரியோ ரென்னும் பெயரும் பெற்று வாழ்ந்தவர்கள் அன்னசத்திரத்திற் சேரினுஞ் சேருவர் என்பது கருத்து. ** 51. அறத்திடு பிச்சை கூறயிரப்போர் அரசரோடிருந்தரசாளினு மாளுவர்.** தருமஞ் செய்வோரிடத்துக் கையேந்தி பிச்சையிரப்போர் ஓர் காலத்தில் அரசரோடு வீற்றிருந்து இராட்சியமாளினு மாளுவர். ** 52. குன்றத்தனைய நிதியை படைத்தோர் அன்றைப்பகலே யழியினுமழிவர்.** மலைக்கொப்பாய திரவியக் குவியலை யுடையவராயினும் அதே மத்தியானத்துள் இழந்தாலுமிழப்பர். ** 53. எழுநிலைமாடங் கால் சாய்ந்துக்குக் கழுதை மேய்ப் பாழாகினுமாகும்.** விதை முதலும், பூமியும் ஏருங் கையிருப்பிலிருக்க அவற்றை வுழுது பயிர்செய்து சீவிக்காது தன்னை யேழையாக்கி வெளிதோன்றி வருபவன் பதருக்கொப்பாவன். *[………….. …………….. ……………..] - கிடைத்த மூலப்பிரதியில் இரண்டு பக்கங்கள் விடுபட்டுள்ளன. ** 64. (ஈதன்றி) காலையும் மாலையும் நான் மறையோதர அந்தண ரென்போரனைவரும் பதரே.** காலையிலும் மாலையிலும் நீதிநெறியமைந்த நல்வாய் மெய்களை யோதியுணராது வேஷத்தினால் தங்களை அந்தண ரென்று கூறித்திரியும் அனைவரும் பதருக் கொப்பாவர். ** 65. தன்னையுந் தனது தேய மக்களையும் முன்னின்று காவா மன்னனும் பதரே.** தனது ராட்சியபார வாட்சியையும், தனக்குள் அடங்கி வாழும் குடிகளையும் முன்பின் ஆராட்சியினின்று காப்பாற்றாத மன்னனும் பதருக் கொப்பாவான். ** 66. முதலுள பண்டங்கொண்டு வாணிபஞ் செய் ததன் பயனுண்ணா வணிகரும் பதரே** திரவிய முதலைக் கொடுத்து சரக்கை வாங்கிவந்து வியாபாரத் தைப்பெருக்கி அதன் பலனைப் பெறாது வியாபாரி யெனத் தோன்றியும் வீணேயலைந்து திரிபவனும் பதருக் கொப்பாவான். ** 67. ஆளாளடிமை யதிநிலமிருந்தும் வேளாண்மெயில்லா வீணரும்பதரே.** வேணபூமியும் ஆள் அடிமைகளுமிருந்து உழுது பயிர்செய் துண்ணும் புருஷவல்லப மற்றவனும் பதருக் கொப்பாவான். ** 68. தன்மனையாளைத் தாய்மனைக்ககற்றி பின்பவட்பாரா பேதையும் பதரே.** தனது மனையாளை அவள் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மறுபடியும் அவளையழைக்கமாலும், அவளைக் கவனியாமலும் இருப்பனெவனோ அவனும் பதருக் கொப்பாவான். ** 69. தன் மனையாளைத் தன் மனையிருத்தி வன்னியே யுணரா வுலுத்தனும் பதரே** தனது மனையாளைத் தனது வீட்டி லிருக்கச்செய்து அவனுக்கு அன்னமும் ஆடையுமளிக்காது வேறு சிந்தையால் உப்புத் தூண்போல் உலுத்துப் போவோனும் பதருக் கொப்பாவான். ** 70. தன் ஆயுதத்தையும் தன் கைப்பொருளையும் பிறர்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.** தனக்கென்றுள்ள ஆயுதத்தையும் தனது திரவியத்தையும் அன்னியன் கையிற் கொடுத்துவிட்டு விழிப்பவனும் பதருக் கொப்பாவான். ** 71. வாய்பறையாகவும் நாக்கடிப்பாகவும் சாற்றுவதொன்றை போற்றிக் கேண்மின்** நாலின் சொற்களையே மேளம் போற் பறைந்து கொண்டும் அச் சொற்களைக் கொண்டே சுட்டுத்திரியும் வகைகள் யாவற்றையும் யெடுத்துரைக்கிறேன். செவிசாயங் கோளென்று கூரலுற்றாள். ** 72. பொய்யுடையொருவன் சொல்வன் மெயினால் மெய்போலும்மே மெய்போலும்மே** பொய்யைச் சொல்லித்திரிவோன் அதைச் சொல்லும் வல்ல பத்தினாலும், சாதுரியத்தினாலும் மெய்யைப் போற் கூறுகின்றான். ** 73. மெய்யுடை யொருவன் சொற்சோர்வதனால் பொய்போலும்மே பொய்போலும்மே** மெய்யை சொல்லும்படியானவன் அவற்றை சொல்லும் வல்லபக் குறைவாலும் சொற்சோர்வினாலும் பொய் போற் றிகைப்பான். ** 74. (ஆதலின்) இருவர் சொல்லையு மெழுதரங் கேட்டு இருவரும் பொருந்து வுரையாராயின் மநுநெறி முறையால் வழுத்துத நன்று.** நியாயாதிபதியானவன் வாதிப் பிரதிவாதி யிவர்களின் வார்தைகளை எழுதரம் மடக்கி விசாரித்து யதார்த்த மொழிகண்டு நீதியளித்தல் வேண்டும். ** 75. மநுநெறி முறையின் வழக்கிழந்தவர்தாம் மனமறவுறுகி யழுதகண்ணீர் முறையுறத் தேவர் முநிவர்க் காக்கினும் வழிவழி யூர்வதோர் வாளாகும்மே,** அங்ஙனம், மநுக்களுக்காய நியாய நெறி வழுவி கெடு நீதியுரைத்து, விடுவானாயின், அந்நியாய மடைந்தோன் தான் அடைந்தக் கோட்டை முநிவரிடத்தேனும். தேவரிடத் தேனும் அழுது முறையிடுவானாயின் அம்முறைப்பாடு பொய்ச் சான்று கூறியவன் சந்ததியையும், அநியாயமளித்தவன் சந்ததியையும், விடாமல் வாள் போன்றறுத்து வரும். ** 76. (ஆதலின்) பழியாய் வருவதும் மொழியாதொழிவதும் சுழியாய் வருபுன லிழியா தகல்வதும் துணையோடல்லது நெடுவழிபோகேல் புணைமீதல்லது நெடும்புன லேகேல் வழியே யேகுக வழியே மீளுக இவை காணுலகிற் கியலாமாறே.** ஒருவர் பழிச் சொல்லை நீதிமொழியா லகற்றுவதும், சுழலிட்டு வரும் நீரோட்டத்தில் இரங்கா தகல்வதும் யாதொரு துணையுமின்றி நெடுவழிச் செல்லுதலும், யாதாமோர் ஓடத்தின் உதவியின்றி ஆறுகளைக் கடப்பதுங் கூடாது. (ஆதலின்) சரியானப் பாதையிற் செல்லுவதும் சரியானப் பாதையில் மீளுவதுமே உலகில் வாழும் விவேகிகளுக் கழகாகு மென்பது கருத்தாம். ** வெற்றிஞான மூலமுங் கருத்துரையும்** ** முடிவு பெற்றது.** ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு சி.சா. பிரசுரம் 11. ஸ்ரீ புத்தாய நம: தென்னிந்திரர் தேச புத்த தர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா ஒளவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு. திருவாளர் க. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது. இதில் அம்பிகையம்மன் வரலாறு, காளிகா தேவியின் சுருக்கக்கதை. பரமேஸ்வரி சுருக்கக்கதை, பாரதமாதா பதிகப் ஆகிய நான்கும் அடங்கியுள்ளது. நான்காம் பதிப்பு தென்னிந்திய பெளத்த சங்கங்களின் கோலார் கோல்ட் பீல்ட், ஆண்டர்சன்பேட்டை, ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலையாரால் பதித்து பிரசுரிக்கப்பட்டது. பு.2478) (கலியுகம் 5031) (கி.1929 விலை அணா 2 ** முகவுரை** தென்னிந்திரர் தேச சகோதரர்களே! சிறிது கேளுங்கள். பூர்வம் நமது தேசத்துப் பெண்களுள் மிகவும் கல்வி கேள்விகளில் சிறந்து, ராஜகன்னிகாஸ்திரியாய் தேவேந்திரன் வியாரஞ் சேர்ந்து தரும் பால் கடல் சரண நிலையினின்று, பரிநிர்வாணம் பெற்று வானுலகாம், தேளுலகு ஜோதி மயமாகச் சென்று, இந்திய வுலகில் பகவதியாகவும், ஸ்திரிகளுள் சிறந்த ராஜ கன்னியாஸ்திரீயாகவும், தேவ பிராட்டியாகவும், கிராம தேவியாகவும், தர்ம போதகியாகவும், விளங்கியவள் அம்பிகையம்மனே அவ்வம்மனை நம் மூதாதைகள் ஒளவையார், அம்மை, தேவி, ஜினதேவி என ஆடி மாதந்தோறும் பாடி துதித்ததுடன் அம்மனாலோதிய “கொலையும் புலையங் களவுந் தவிர்” “காப்பது விரதம்” “நோன்பென்பது கொன்றுண்ணா மை” என்னும் சில மொழிகளையும் போற்றி சுகவாதியில் நிலைத்திருந்தார்கள். இதுவே பூர்வந்தொட்டு நாட்டினோர்கள் ஸ்ரீ ஆண்டாளை வழிபட்டு வந்த விவரமாகும் அதுவே நாம் ஒற்றுமையாயும் நற்கடைபிடித்தும் ஜாதியில் ஒரு தாய் பிள்ளைகளாயும் நிலவியிருந்த காலம். இப்படிப்பட்ட சிறந்த நம் சகோதரர்களை யழிக்கபல் லாண்டு கட்டு முன் பாரசீக தேசத்தில் பஞ்சத்தால் ஆட்பட்டு இந்திரர் நாட்டில், குடி புகுந்த ஒரு சிறு கூட்டத்தாராகிய ஆரிய மிலேச்சர்கள் நம் நாட்டில், ஜாதி, குலம், வருணம், பிறப்பு பேதம், மனித பேதம், தொழிற் பேதம் முதலிய ஆபாச மொழிகளோடு பிர்மாவின் முகத்தையும், புஜத்தையும், தொடையையும் காலையும் முறையே யோனியாகக் கொண்டு பிறந்த ஜாதியார்களும் உண்டென்று சாற்றி இந்தியர்களைப் பல வழிகளிலும் ஏமாறச்செய்து பணம் பறித்துத் தின்று கொழுத்து நாங்களே பிராமணர், நாங்களே உலகக் கடவுள் என்று கர்வித்து இந்திரர் தர்மத்திற்கெதிராக பொய் ஜாதிகளையும், பொய் ஆசாரங்களையும் மதமாய் உண்டாக்கி, நம்மை சேர்ந்து வாழவிடாமல், அண்ணன் மஞ்சள் திருமண்ணும் தம்பி சிவப்பு திருமண்ணும், தாய் ஒற்றைத் திருமண்ணும், தகப்பனார் வடகலை குறியும், சிற்றப்பன் தென்கலை குறியும், மாமன் குழைத்த சந்தனம் பூசலும் மைத்துனன் குழைக்கா விபூதி பூசலும், தங்கை தட்டைப் பொட்டும், தமக்கை நெட்டைப் பொட்டும், மருமகன் குழைக்காமல் பூசிய விபூதியை நடுவில் நெடுக கலைத்து விடுதலும், நெற்றியில் நெம்பர் ஒன்று (1) போல ஒரு கோடு போடலுமான சின்னங்களை யணிந்து பல வேதக்காரர்களாகத் திரிந்து கெட்டழிய எப்படி நம்மைத் திருப்பி விட்டார்களோ! அப்படியே நம் கிராம தேவியாகிய, கொல்லா விரதம் நமக்கு உபதேசித்த நம் பாரத மாதாவுக்கு. நம்மை கொலைச்செய்ய சிறுக சிறுக கற்பித்து விட்டு. நம்மிடமிருந்து, அவர்கள் நாக்கு ருசிக்கத் தின்பதற்கும் குடிப்பதற்கும் கள் சாராயத்திற் குதவியாக இளங் கன்றுக் குட்டிகளையும், இளம் ஆட்டுக்குட்டிகளையும், இளம் புறக் குஞ்சுகளையும், பலி கொடுத்தால் சுகமடைவீர்கள், கிராமம் ஷேமமாக நீர் நெல்லோங்குமெனவும், ஆடு மாடு இவைகள் தலை யில் பாபத்தையும், காணிக்கையையும் கட்டி கோவிலிடத்தில் விட்டு விட்டால் புண்ய மென்றும் போதித்து விட்டார்கள். அம்மூடர்கள் கொள்கையில், நாமும் சிக்குண்டு கெட்டழிகின் றோம். இக்காலத்திலேனும், நமது அம்மனுக்கு பலி கொடுப்பது முறைமையல்லவென்றறிந்து பார்ப்பார் பொய் சொற்களையும், அவர்கள் வேதங்களையும் அவசியம் நிராகரித்து நமது தேச சகோதரர் ஒற்றுமையில் நல் விசுவாசம் வைத்து நமது சொந்த மரியாதையான புத்த தர்மத்தைக் கைக்கொண்டு வாழ இப்புத்த கத்தை முற்றும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம். காளிகா தேவிக்கும், கன்னகைக்கும் ஒரு காலத்தில் நடந்த உயிர் பலியை போல் நம் அம்பிகையம்மனாகிய கிராம தேவதைக்கு செய்யக்கூடாது. அம்மன் ராஜ சுகபோகங்களைத் துறந்த பின்னர், சன்யாசினியாய் நின்றுபதேசித்த அறம் பொருள் இன்பத்தைத் துறந்து சங்கத்தில் சேர்ந்து நீதியில் நிலைத்தவர்களுக்குத்தான் தேவர்களென்று பெயர். அவர்களை வணங்குவதுதான் நம் நாட்டு வழக்கம் அவர்கள் கூறும் தர்ம நூலுக்கு சங்கநூலென்றும் சங்க மருவிய நூலென்றும் புகழ்வர். ஆதலால் அம்மன் துறவறந்தான் துதிக்கத்தக்கது மற்றவையல்ல. ஆண்டர்சன்பேட்டை K.G.F ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலையார் புத்தகம் 9473 சுக்ல – ஆடி பௌர்ணமி . ஸ்ரீ புத்தாய நம; தென்னிந்திரர் தேச புத்த தர்ம சாக்ஷியக்காரர்களில் ஒருவளாகிய ** ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு** அறிவோம் நன்றாக குருவாழ்க குருவே துணை தியானம் ** அளவடி விருத்தம்** உம்பர் கோனுல காதி குருபர னெம்பிரா னடியைச் சிரந்தாங்கிமெய் பம்பை சேர்திரி சீலமே யோதுமா வம்பிகை யம்மை யாற்ற லரைகுவாம். ** இல்லற வியல்.** ஆயிரத்தி யைந்நூறு வருடங்களுக்கு முன்பு தென்பரத கண்டத்துள் புந்நாட்டை யரசாண்டு வந்த சாக்கைய சுந்திரவாகு அரசனுக்கு ஓர் பெண்குழந்தைப் பிறந்து அம்பிகை என்றும் பெயரிட்டனந்த சீராட்டி வளர்த்து வந்தார்கள். பெண்களின் பேதைப்பருவமாகும் ஏழுவயதுக்குள் இனிய அமுதென்னும் தமிழட்சரங்களையு மொழிகளையு மூட்டி, அறிவை மலரச் செய்யுங்கால் ; பெதும்பை வயதாகும் பதினோராம் ஆண்டில் நமதருகனாகும் புத்தபிரான் செயலையும் அவர் குணாதிசயங்களை யும் நாளுக்குநாள் கேள்வியுற்று அவர் பதுமாசன மீற்றிருந்ததைப் போல் மரக்கட்டையில் ஒரு சிறிய உருவ (பொம்மை) செய்து அதை தன் முடியிற் கட்டிக்கொண்டு இடைவிடா நீதியின் சாதனங்களால் அவரை சிந்தித்து வந்தாள் இவ்வகை நிகழ்ச் சியில் மங்கைப் பருவமாகும் பதின்மூன்றாம் வருடமுதித்து வதுவை வாக்கியங்க ளெழும்பிற்று. அதைக் கேள்வியுற்ற அம்பிகை, தன் தந்தை சுந்திரவாகுவையணுகி, எனதருமை தந்தையே! நமது குலகுருவா லேற்படுத்தியுள்ள பெண்களின் ஞானசங்கத்திற் சேர விருப்புற்றிருக்கின்றேன் தடை செய்யாமல் உத்திரவளிக்க வேண்டுமென வருந்தினாள். அதைக் கேட்ட வரசன் மனங்கலங்கிஞான தேற்றலடைந்த குழந்தாய்! பெண்களின் ஞான சங்கத்திற் சேரும் விருப்பம் உனக்கு பேதைப்பருவத்தி லிருக்க வேண்டும் அல்லது விவாக முடிந்து சிலகாலம் உன் புருஷனும் நீயும் சுகவாழ்க்கை கழிந்து உன் கணவன் புருஷ சங்கத்திலும், நீ பெண்கள் சங்கத்திலும், சேரவேண்டியது தருமகட்டளை, இதைத்தவிர்த்து மங்கை பருவமுற்ற உன்னை பெண்கள் சங்கத்திற் சேர்க்கமாட்டார்களே யாது செய்யுதுமென்றான். அம்பிகை, யரசன் முகத்தை நோக்கி என்னருமைத் தந்தையே, நீரெவ்வித முயற்சியேனுஞ் செய்து பெண்கள் சங்கத்தில் என்னை சேர்த்துவிடல் வேண்டுமென வருந்தினாள். அரசன், மந்திரிப் பிரதானியரைத் தருவித்து தனது புத்திரிக்கும் தனக்கும் நடந்த விருத்தாந்தங்களை விளக்கினான். அதை யவர்கள் தீர்க்க வாலோசித்து அரசே, உமது புதல்வியின் கழுத்தில் தாய்மாமனால் ஓர் பொட்டுக்கட்டி அறஹத்துக்களுக் கறிக்கை யிட்டு பெண்கள் சங்கத்திற் சேர்த்துவிடுவதே விதியென்றார்கள். உடனே யரசன் அம்பிகையின் தாய்மாமன் கந்தருவதத் தனை யழைத்து சங்கதிகள் யாவையும் விளக்கி பொன்னினா லோர் பொட்டு செய்து சரட்டிற் கோர்த்து தன் புதல்வியின் கழுத்திற் கட்டும்படிச் செய்து வெண்டு கிலாடை யுடுத்தி சமணநீத்தோர் உத்திரவு பெற்று உமளநாட்டு வியாரத்துப் பெண்கள் சங்கத்திற் சேர்த்து விட்டான். இதுவே அம்மன் இல்வாழ்க்கை. ** பார்த்தன் அருளிய அம்பிகா தன்மம்.** திருவாளர் செல்வி தேவி யம்பிகை யருமறைப் பீடிகை யாதன முணர்ந்து போதி மாதவன் பொற்கழலேந்தி யாதிதேவியென் றறவோர் போற்றும். 5. அவ்வை யென்னு மைந்நெறிகிளத்தி செவ்விய தன்மம் செப்புவங் கேண்மின் தென்பரதத்து துறை புந் நாட்டின் மன்னவன் சாக்கை சுந்திரவாகு நற்றவத் துதித்த நானில் முதல்வி 10. பேதைப் பெதும்பை பாலையுங் கடந்து மாதர்ப் பருவ மங்கைமெய் யடைந்து அம்மையார் தன்ம சங்க மமரு மிம்மெயி னோக்க மிகுதியினின்று தாதையை யணுகி தற்பரன் வியார 15. சாதன மமருந் துறையருள்வீரென வோதிய மொழியை யுள்ளத் தமைத்து தாதையு மந்திர சாதனர்க் கோதி மங்கைப் பருவம் வாய்ந்த மகட்கு தன் தாய் மாமன் பொன்சரடிட்டு 20. சமண நீத்தோர் தன்னுரைக் கொண்டு துறவற வியல். திரிபிடக விசாரணையினின்று காவியணைந்து சீலசா சனங்கொண்டு உண்மெயுணர்ந்த வானந்தத்தால் பெண்கள் வியாரத் தெதிரிலுள்ள பூக மரமென வழங்கும் வேம்பு மரத் தடியில் வந்து உட்கார்ந்து பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரையில் எளிதி லுணருமாறு திரிபிடக தரும் போதங்கள் எளிய வாசக நடையில் திரிவாசகங்களாக போதித்து வந்தாள். பிடகத்தை யறிவித்தவளாதலின் பிடகறி பிடகறியென்று முதற்போ ரளித்தார்கள். அறவுரை யென்று மடுத்துணர் திரிவி பிரவியம் பாசப் பந்தங் கழற்றி பிடக மும்மொழிப் பிரித்துல கோர்க்குத் திடமுறு திரிவா சகமதாய் விரித்து 25. உமன நாட்டு ளுமை வியாரத்தில் சமண நீத்தோர் தண்ணந் தம்மருள். பிடகறி பிடாறி யென்னுங் காரணப் பெயர்பெற்ற வேம்படியம்பாள் தான் மோனநிலையாலடைந்த ஞானவிழி பார்வையால் செல்லல் நிகழல் வருங்கால் மூன்றின் பலன்களை யும் குடிகளுக்கு விவரித்து வந்த காலத்தில் நாகை நாடென்னும் தேயத்தில் மழைகுன்றி சாமளை யென்னும் விஷப் பூச்சுக்களின் கொடூரத்தால் வைசூரி, உவாந்தி பேதி யென்னும் மாரியாகிய வியாதிகள் தோன்றி மக்களும் விலங்கும் துன்புறுங்கால் குடிகள் பயந்து காவிரி உமளம் உமை வியாரத்துள் வேம்படி நிழலில் வீற்றிருக்கும் அம்மனிடஞ் சென்று விசாரித்தால் இம்மாரிக்கு ஏதேனும் பரிகாரஞ் சொல்லுவாளென்னும் அவாக்கொண்டு உமள நாடணுகி அம்பிகையை சேவித்து நாகை நாட்டின் குறைகளை விளக்கினார்கள். அம்மன் உள்விழி நோக்கி மக்களை யழைத்து உங்கள் உள்ளங்களிலுள்ள அன்பையும் அறனையு மகற்றி வஞ்சகம், பொறாமை, பொருளாசை, கெடு மதி இவைகளை நிரப்பிக் கொண்டபடியால் வானம் பெய்யாது சாமளையென்னும் விஷப்பூச்சுக்கள் உங்கள் நாட்டிற் பரவி உயிர்களைக் கொள்ளைக் கொள்ளுகின்றது. இப்பவும் உங்களுள்ளங்களி லுள்ள கள்ளங் களையகற்றி, இதயசுத்தஞ் செய்வதுடன் வீதிகளையும் வீடுகளையுஞ் சுத்தஞ் செய்து மட்டிப் பால் புகை கற்பூரப்புகைகளை வீடுகளெங் குங் கமழ நிரப்பி, நிம்பத்தா ரென்னும் வேப்பிலைத் தோரணங் களைக் கட்டி வீட்டின் வாயற்படிகளிலுஞ்சொருகி, பல தானியங் களை உப்பிடாமல் அளித்து ஏழைகளுக்கு தானங் கொடுப் பதுடன் பச்சரிசி மாவுங் கூழுந் தானமளிப்பீர்களானால் இதய சுத்தத்தாலும், தேகசுத்தத் தாலும் வேப்பிலை மணத்தாலும், கற்பூரப் புகையாலும், அவிரிப் புகையாலும் சாமளைப் புழுக்களகன்று கொள்ளை நோய் தணிந்து குணமடைவீர் களென்றாள். இவ்வாக்கை கேட்டவுடன் நாகை நாட்டுக்குடிகள் இதயசுத்தம் தேகசுத்தம் செய்ததுடன் அன்பைப் பெருக்கி தானமளித்ததால் கொள்ளை நோய் நீங்கி உள்ளங்குளிர்ந்தார்கள். இதனால் அம்மனுக்கு மாரியாற்றினாள் ஆரோக்கிய அம்மன் என்ற மறு பெயரையு மளித்தார்கள். பெற்று காவிரி பூகநீழ லுற்று யாக்கை யுண்மெ யுணர்ந்து நாகை நாடு நடுக்குதுள்மாரி 30. வேக மாற்ற வுரவோர்க்கன்று வன்பு மறனு மகலவிட்டீர் துன்பக் கிருமி துடர்ந்த துள்ளம் உள்ளக் களங்க மகற்றி யூரின் தெள்ளுந் தூசித் துடைத்து மட்டிப் 35. பாலின் புகையும் பூரப்புகையும் நீலிப் புகையும் நிரம்பப் பயின்று பாகு பாவுங் கூழும் பயிறும் வேகுங் கும்பிக் கிட்டு மவித்து உண்டி கொடுத்து முயிரளிப்பீரேல் 40. பண்டை வினையின் பற்றுறுப்பீர்காள் நீம்பத்தாரி னிரை தோரணங்க ளம்பல வீதியெங்கு நிரப்பி வாய னிலையிலு மாட மலைவிலும் நேய நிம்பத் தார்மண மூட்டி 45. மங்கைமாதர் வேராமஞ்சள் கெங்கைக்கிழங்கைக் கூட்டரைவித்து தேகமெங்குத் தீட்டி குளித்து வேக்கன்னக் குங்குமமிட்டு யகசுகவாசி யன்பினிலையால் 50. தகை மும்மாரிப் பெய்து சாமளைக் கிருமி யகன்றுக் கிருபாக் கடலா மருகனருளும் வாய்மெயு முறுமென சாமளை யுற்ற சிலுகை விளக்கி வாமன் பிடகம் வரை யறுத்தோதி. அம்மன் வாக்கினாற் சொன்னபடி நாகை நாட்டாரை வதைத்தக் கொள்ளை நோய் அகன்று சுகமுற்றவைகளைக் கண்ட ஒவ்வோர் அரசர்களும் குடிகளும் அம்மனை வந்து தாமரைப் புட்பத்தால் அர்ச்சித்துக் கொண்டாடி வருங்கால் அம்மன், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் நீதிமார்க்கத்தி னின்று நிருவாண சுகமடையும், போதி போதங்களா ளடங்கிய ஆதி வேதமாம் திரிபிடகத்தையும், இம்முதல் நூலைத் தழுவிய வழி நூலாம் திரிக்குறளையும், அநுசரித்து, தாம் சார்பு நூலாக ஆத்திச்சுவட்டில் என்ற முதல் வாசகத்தையும், குன்றை வேந்தன் செல்வன் என்னும் இரண்டாம் வாசகத்தையும் அருளி குருக் களால் பரவச்செய்து வருங்கால், திவாகர வரசன் சயம்பு மன்னனை சிறைப்படுத்தி வைத்திருக்கும் குற்றத்தை வெளிப்படுத்த வெற்றி ஞானம் என்னும் மூன்றாம் வாசகத்தை வரைந்து திவாகர வரசனை நீதியில் நிலைக்கச் செய்த மூன்றாம் வாசகத்தையும் வாசகம், கூட்டி திரிவாசகம் மூதுரை, ஞானக்குறள் இரத்தின கரண்டகம், முதலிய நூற்களியற்றி அரசர்கள் கரங்களி லீயந்து மடங்களுக்கு மனுப்பி தசசீலாம்சங்களைப் பரவச்செய்து வந்ததுமல்லாமல் ஆதியங்கடவுளாகிய சாக்கைய முநிவரின் மும்மொழியும் மும்மொழிகளைத் தழுவிய நான்கு பேதவாக் கியங்களின் முடிவும் மூவர் நாயனார் திரிக்குறளும் நானியற் றியுள்ள திரிவாசகமுமாகிய நூற்களில் முனிவர் நூல் முதனூலும், நாயனார் நூல் வழிநூலும், மற்றும், நூற்கள் சார்பு நூற்க ளென்றும் விளக்கிக் காண்பித்தாள். 55. முனிவன் கண்ட முதனூனிருவி இனிய வழிநூ லியற்றினன் நாயன் முதனூல் வழி நூல் முற்று முணர்ந்து விதய மும்முறை முடி புரையாற்றி படிமிசை மூவர் பெருதிரு மந்திரம் 60. முடி புரை யாற்றி மொழிந்தன் சார்பாய் மூவர் மொழிந்த மந்திர மூன்றுஞ் சால மொழிந்தேன் திரிவாசகம் யான். எங்கெங்கு மழை குறைந்து புழுக்கத் தோன்றுகிறதோ அவ்வவ்விடங்களில் பதின்மூன்று வகை வைசூரியும் மூன்று வகை பேதியுந் தோன்றி சீவர்களைக் கொள்ளைக் கொள்ளுவதற்கு கண்ணுக்குத் தோற்றா சாமளையென்னுஞ் சிறுப் புழுக் கூட்டங் களே காரணமாயிருந்தது. அப்புழுக் கூட்டங்கள் அகலுவதற்கு வேப்பிலை கற்பூரப் புகை, மட்டிப்பால் புகை, அவரிப்புகை இவைகளை வீடுகள் வீதிகளெங்கும் கமழச்செய்து ஜீவராசிகளின் நாசியிலும் நாவிலும் புழுக்கள் நுழைந்து கொள்ளைக் கொள்ளு வதால் பல தானியங்களை உப்பிடாம லவித்துப் பச்சரிசி மாவிடித்தும் அதில் வேப்பிலையைக் கலந்து சகலரையுஞ் சாப்பிடும்படி தானஞ் செய்வதால் உள்ளுக்கு நுழைந்த புழுக்கள் கழிந்து மாரி தோன்றாம் னிற்கவும் போதித்து, கொடிய மாரி யென்னுங் கொள்ளை நோய் வெப்பத்தை ஆற்றினவளா தலால் கொடுமாரியை யாற்றிய மாரியாற்றாள் மாரியாற்றா ளென்றுங் கொண்டாடி வந்தார்கள். அம்மன் வாக்கில் தோன்றுந் திரிகாலக்கியானங்களுக்கும் மகிழ்ந்து அரசர்கள் முதல் பலதேசக் குடிகளும் வந்து அவளைச் சூழ்ந்துக் கொண்டார்கள். அல்லாமல் சிம்மம், யானை, பாம்பு முதலிய ஜெந்துக்களுஞ் சூழ்ந்து மௌன முற்றதுடன் அவரவர் களுக்குள்ள அந்தரங்கக் குறைகளையுங் கேழ்க்கும்படி நெருங்கிய கோஷத்திற்கஞ்சி அம்மன் ஆகாயத்திலெழும்பி அந்தரமாக நின்றுவிட்டாள். ** ஞானவெட்டி 445 – பாட்டு** வானத்தெழுந்த வாலாம்பிகைதன்னை மதியாலறிந்து கதியடையாமலும் ஏனந்தனின் முளைத்தெழுந்த கொழுந்தை யிறுக்கினானினிமுறுக்கிக் கிள்ளியே ஞானப்பிரகாச மெய்ஞ்ஞான வித்தாகையால் நாடிக் கருவூரில் நாதத்துடன் கூடி மீன மேஷமறியாமல் குரு வந்து வீணதாம் பூசை விருதாவிற் செய்யவும் அவற்றைக் கண்ட குடிகளும் அரசர்களும் அந்தரத்துள்ள அம்மனை சரணாகதிக் கோரி வந்தித்ததின் பேரில் அம்மன் மறுபடியும் வேம்பு மரத்தடியில் வந்துட்கார்ந்து அரசர்களை வரவழைத்து திரிபிடக வாக்கியங்களாகும் திரிசீலமே தத்துவம், திரிசீலமே - சத்தியம், திரிசீலமே - உத்தமம், அதுவே யுங்களைக் காக்கும் தெய்வமென விளக்கி திரிசீல ஜாக்கிரதம் ஜாக்கிரத மென் றருளி கொல்லா நோன்பு, குறளா நோன்பு, கள்வா நோன்புகளாகிய திரி நோன்புகளையும் பதித்து வாக்குக்காப்பு, மனோ காப்பு, தேகக் காப்பாகுந்திரி விரதங்களையு மோதி, தான் பரிநிருவாணமடையுங் காலத்தையுஞ் சகலருக்குத் தெரிவிக்கச் செய்து ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆதிவாரம் பெளர்ணமி திதியில் அம்மன் பதுமாசனத்திருந்து இருவிழிகளை மூடி சுகசமாதி யுற்றனர். அக்கால் சுயம்பிரகாசசோதி உச்சியின் வழியாய் தீபம் போலொளிர்ந்தது. அதைக் கண்ட வரசர்களுங் குடிகளும் பதரிப் பிரலாபித்து தங்கடங்கட் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய சிரமீ திருகரங்களைக் கூப்பி அம்ம வடிவுடையாட்டி வால் அம்பிகை, அறமுதற் செல்வி, ஆதி தேவி, உற்ற எண்ண முரைக்கும் ஆயி, உள்ளக்குறையை அகற்றுஞ்சீலி, பச்சைப்பருவ பகவதி, அம்பா உச்சியில் வளர்ந்த உள்ளொளிகண்டு நிச்சயமாக நிலைகுலைந்தோம்; யாம் இனி யாவரால் அறவுரைக் கேட்டு ஆனந்திப்போம் யாரை, நாடி ஆபத்து பந்து வென்போம்; அம்மே! எங்கள் வீடு கடோறுங் குல தேவதையா யிருந்து காப்பதுடன் கிராம தேவதையாக நின்று, தோன்றும் இடுக்கண்களை நீக்குவதற்கு ஊர் காவற் காரியாகவும், காவலூர் அம்மனாகவும் விளங்க வேண்டும். அங்ஙனம் காக்கும் காப்பு நிச்சயமாயின் சிரசிற்றோன்றிய தீபம் ஓங்கி வளர வேண்டு மென்று கதரினார்கள். அவர்கள் கோரிக்கையின்படி உச்சியின் சோதி வளர்ந்து மறைந்தது. வடநாட்டிற் சாக்காவென்றும், தென்னாட்டில் வள்ளுவ ரென்று வழங்கும் கர்ம குருக்களும், அரசர்களுங் குடும்பத்துடன் வந்து அவ்வையென்னு மம்பிகா தேகத்தை தகனஞ் செய்து சாம்பலைக் காவிரிநீரில் விடுத்து தாங்களும் நீராட்டித் தங்கடங்க ளில்லஞ்சேர்ந்து, ** ஞானவெட்டி, 563 – செய்** விட்டகுறை வருமளவு முபதேசங்காண் மெய்யுடலுந் தளர்ந்து புவி மேலுநோக்கி தட்டழிந்து விழும்போது வோதிவைத்த சாத்திரத்தை கணப்போது முரைக்கப்போமோ எட்டிரண்டு மறியாதார் குருக்களாமோ என்னையினிப் பறையனென்று தள்ளலாமோ மட்டமரும் பூங்குழல்வா லாம்பிகைப்பெண் வங்கிஷத்தி லுதித்த சாம்பவனும் நானே. ********** என்று மொழிந்த இறையறச்செல்வி குன்றா மொழியின் குறிப்பை யறிந்தோர் * - * - 65 மாரியாற்று மகமாயென்று கூறி மன்னோர் குடிகடன்பால் வீரு சிம்ம மரவோ பானை யூருசூழ்ந்த விடுக்கங் கண்டு சிந்தை நிறைத்த செல்வக் கிழத்தி * - * - 70 யந்தர மெழுவி யருள்வடிவாகி நின்றப் பேற்றை யுணர்ந்த வரயர் குன்றாக் குறையால் கோடமுற்றார் வாலை யம்பிகை மகிழுளங்கொண்டு வேலின் கண்ணி விரவியென்பதாய் * - * - 75 நிம்பநீழல் நிரைகமலத்து அம்பற் போற்ற வாவீற்றிருந்து ஆலமர்ச்செல்வ னருளிய பிடக சீல மூன்றின் திடநிலையாகு முத்த தத்வ மெய்மை யோதி * - * - 80 சுத்த சாதனத் தூய நிலையாம் நோன்பு மூன்றி னுட்பங்காட்டி ஆன்ற விரதக் காப்பு மருளி தான் சென்றோங்கு சமாதி கால மான்ற வுலகோர்க் கூறுகவென்று * - * - 85 பருகடகத்துப் பதினெண் பாநாள் உருகதிர் வார முற்ற பூரணை சிகிரி தீப சிற்சுக சோதி பகிர்முக முற்றப் பாங்கைக் கண்டோர் அம்மைவல்லி யவ்வை யறத்தி * - * - 90 உம்மை பிரிந்து முலகத் துறவோம் பொங்கு மாரி யாற்றிய வடிவை வங்கு கண்டு விறைஞ்சுவ தென்தாய் உந்தன் காவ லூருமுளத்து முந்து காக்கு முன்னவளாயின் * - * - 95 உச்சி சோதி யோங்கி வளர்ந்து பிச்ச மருள்க பெருமுதல் வாணி என்று மிக்க வேக்க முறுகால் பின்னும் வல்லி பகிர்முக சோதி நந்தாதீப நற்சுக மோங்கி * - * - 100 எந்தாய் வளர்ந்து மேகமுற்றாள் உற்ற யாக்கைக் குரியோர் நிமித்தர் பெற்ற மன்ன ராவர் கைகொண் டீமச் சுடலை யிட்டு பூதிச் சாமக் காவிரி நீர் விளையாடி * - * - 105 இல்ல மெங்கு மாதி தேவியை வல்லி வாணி மகமா யென்றும், பாடி பாடி பல்பெயரிட்டு நீடு வாழ்க நிறைகுல தேவி சேரி யெங்குஞ் சிறப் பறைவித்து * - * - 110 நூரி பொங்கல் நோன்பு நூற்று யெங்கு மெண்ணான் கரமது கொண்டு பொங்குஞ் சோற்றுக் கும்ப நாட்டி வறியோர்க் கூட்டி மனக்குறையாற்றி உறிய விரத முளத்தி லூன்றி. * - அன்ன தானத்துக் காகும் பதார்த்தங்களைச் சேகரித்து அம்மன் பரிநிருவாணமுற்ற வேம்பு மரத்தடியில் வந்து பொங்கல் வைத்து எல்லோர் சோற்றையும் ஒரு போராகக் குவித்து ஏழைகளைப் பூர்த்தியாக சாப்பிடவைத்து அவரவர்க ளில்லங்களுக் கனுப்பிவிட்டு, விவேகிகள் ஒன்றுகூடி அம்மன் பாலபருவ மாதலின் வாலை யென்றும், சகலமுந் தெரிந்தவளா தலின் அவ்வையென்றும், இளந்தேகி யாதலின் பச்சையம்ம னென்றும், அதிரூபியாதலின் வடிவுடையம்மனென்றும், குணங்குடியாதலின் மனோன்மணியென்றும், வேல் போன்று பிரகாசமுற்றக் கண்ணுடையவ ளாதலின் வேற்கண்ணி, வேலாங்கண்ணி யென்றும், கவிபாடும் பாணர் நிலையுற்றமை யின் வாணியென்றும், சரமாகும் வாசியைத் தன்வசந்திருப்பிக் கொண்டமையின் சரசுவதியென்றும், தாமரைபுட்பாசனத்தில் வீற்றிருந்தமையின் கமலாசனியென்றும், இராகத்துவேஷ மோகத்தை யகற்றியவளாதலின் திரிபுராந்தகியென்றும், முப்பத்தி ரண்டறங்களையும் விவரித்து சற்குருவின் தருமத்தைப் பரவச் செய்தவளாதலின் அறச்செல்வியென்றும், அவரவர்க ளிதயத்துள்ள விருளை யகற்றியவளாதலின் பகவதி யென்றும், ஸ்திரீகளுக்குள் முதற்றேவியாக விளங்கினமையின் ஆதிதேவி யென்றும், கிரசினுச்சியிற்றீபம் போல் பிரகாசித்தமையின் நந்தா விளக்கென்றும், இந்திரர் தேசத்தில் ஸ்திரீகளுக்குள் முதல் தர்ம சாக்ஷியக்காரியானதால், பாரதமாதா, இந்திய மாதாவென்றும், ** சூளாமணிசுருக்கம் 8- செய்-37** மௌவன் மலர்வேய்ந்து மதுநாறு மணியைம்பார் கொவ்வைவதுயில் கொண்ட துவர்வாய்க் கொடியோ டொப்பா டெய்வமணநாறு திருமேனி புறங்காக்கு மவ்வையரோடெய்திமுத லவ்வையடி சேர்ந்தாள். ** மணிமேகலை, காதை 14- வரி 17.** சிந்தாதேவி செழுங்கலை நியமத்து நந்தாவிளக்கே நாமிசைபாவாவாய் வானோர் தலைவி மண்ணோர் முதல்வி யேனோருற்ற விடர் களைவாயென. ** சீவகசிந்தாமணி செய்-3144.** செந்தாமரைக்கு செழுநாற்றங் கொடுத்ததெங்கோ ளந்தாமரையாளகலத்தவள் பாதமேத்திச் சிந்தாமணியின் சரிதஞ்சிதர்ந்தேன்றெருண்டா நந்தாவிளக்குச் சுடர் நன்மணி நாட்டம் பெற்றே. பல் பெயரிட்டு சேரிகடோறும் அம்மன் வியாரங் கட்டி வைத்து அக்கட்டிடங்கள் வீதியிலிருக்குமாயின் திருவீதியம்ம னென்றும், மத்திய எல்லைக்குள்ளிருக்குமாயின் எல்லம்மனென் றும், கழிகளின் ஓரங்களி லிருக்குமாயின் திருக்கழியம்மனென் றும், முல்லை நிலத் திருக்குமாயின் துளிர்கானத்தம்மனென்றும், பனை மரச்சோலைகளி லிருக்குமாயின் கருக்கம்மனென்றும், தண்டுகள் (இருக்கும்) இரங்குமிடத்திலிருக்குமாயின் பாளையத் தம்மனென்றும், நந்தவனத்திலிருக்குமாயின் பூஞ்சோலையம் மனென்றும் ஒவ்வோர் பெயர்களை வைத்து அம்மன் நிருவாண முற்ற ஆடி மாதம் பௌர்ணமி திதி வருங்காலம் பத்து நாளைக்கு முந்தி அத்திருநாளில் அம்மனை உற்சாகப்படுத்தி ஆனந்திப் பதற்கு சேரிக்குள் கொலை, களவு, காமம், கள்ளருந்தல், பொய் முதலிய பஞ்ச பாதகங்கள் அணுகாமலிருக்க வேண்டுமென்று, காப்புக்கட்டி அம்மன் கழுத்தில் பொட்டுக் கட்ட வேண்டிய குடும்பத்தான் கரத்திலு மோர் காப்புக் கட்டி, அவன் கையினால் அம்மன் பீடங்களை சுத்தி செய்து வைத்து கொண்டு ஒன்பது நாள்வரையில் நீதியிலும் தர்மத்திலும், உற்சாகமுண்டு பண்ணி பத்தாநாள் குடிகள் யாவரும் புதுப்பானைகள் கொண்டு பொங்கல் வைத்து எல்லோர் சாதத்தையும் ஒரேயிடத்தில் கும்பிட்டு ஏழைகளைப் பசிதீர வுண்ணும்படிச் செய்து காவிரி நதி யருகில் சேலை, குங்குமம், சந்தன தாம்பூலங்கள் கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படிச் செய்து வந்தார்கள். அதை யநுசரித்துக் குடும்பத்தோர்கள் குலதேவதையாகக் கொண்டாடி வந்தது மன்றி மற்றுங் கிராமவாசிகளும், அந்தந்த சேரிகளில் அம்மன் வியாரங்கட்டி பகவன் உட்கார்ந்து நிருவாணமடைந்த அரசமரத் தையும், அம்மன் உட்கார்ந்து பரிநிருவாணமடைந்த வேம்பு மரத்தையும் நாட்டி மெய்யறமாகும் புத்த தருமத்தை சகலருக்கு மூட்டி அம்மனாலோதிய முப்பத்திரெண்டறங்களையும் பரவச்செய்து வந்தார்கள். ** பின்கலை நிகண்டு. தொகுதி 1 செய்-31 தருமதேவதையின் பெயர்.** மரகத வல்லி பூச மரநிழ லுற்ற வஞ்சி பரம சுந்தரி யியக்கி பகவதி யம்மை யெங்கள் அருகனை முடி தரித்தா ளம்பிகை யறத்தின் செல்வி தரும் தேவதை பேரம்பாலிகையென்றுஞ் சாற்றலாமே. ** பின்கலை நிகண்டு தொகுதி - 12 செய்-139** காப்புக்கு முன்னெடுக்குங் கடவுடான் மாலே யாகும் பூப்புனை மலறின் செல்வி புனைபவனாதலானும் காப்பவனாதலானுங் கதிர்முடி கடகத்தோளில் வாய்ப்பதா மதாணி பூணூல் வரிசையிற் புனைதலானும். ** பின்கலை 12- து நிகண்டு 134,135,136 - செய்** அம்பிகாதருமம். ஆதுலர்சாலை ஐயம் அறுசமயத்தோர்க்குண்டி ஒதுவார்க் குணவினோடரண் வச்சிரமுடனே சேலை மாதுபோகம் மகப்பால் மகப்பேறு மகவளர்த்தல் வேதைநோய் மருந்துக்கெல்லாம் விலைகொடுத்துயிர் நோய்தீர்த்தல் கண்ணாடி பிறரிற் காத்தல் கன்னிகா தானங் காவே. வண்ணார் நாவிதர் பெண்காத்தல் மடந்தடங்கண்மருந்து தண்ணீர் பெய்பந்தல் கோலத்தலைக்கெண்ணெய் சிறைச்சோறோடு பண்ணான விலங் கூணல்கள் பசுவின் வாயிறை கொடுத்தல். அறவையாம் பிணமடக்கல் அறவைத் தூரியம் வகுத்தல் நிறுவியோர்க்கிடங் கொடுத்தல் நிரையத்தீம் பண்டனல்கள் உறுதியாயுண்மைவாய்ந்த வுத்தமமாமெண்ணான் கறநிலை யன்பாலோது மம்பிகை தானமாமே. இவ்வகை சிறப்புற்ற அம்மனைத் தழிழ்நா டெங்குமுள்ள வாசர்களும் குடிகளும், சிந்தித்து வந்ததுமல்லாமல் சோழ நாட்டுள் உம்பள கிராமமென்னும், வண்டுவாஞ்சேரியில் அவ்வை வியாரமென்றோர் மடமும், நாகை நாட்டில் வேற் கண்ணி வியாரமென்றும், வேலாங்கண்ணி மடமென்றுங் கட்டி, அதில் நகைநாட்டாருக்குற்ற யிடுக்கணாகுங்கொடு மாரி யென்னுங் கொள்ளை நோயை யகற்றி யாரோக்கியம் பெற செய்தவளாதலின் அன்னாட்டார் அம்மனை ஆரோக்கியமாதா வென்றழைத்து விசேஷ வுற்சாகங் கொண்டாடி வந்தார்கள். ** வீரசோழியம் பக்கம் -106 வரி - 2** பேரரக்கரோறைவர்க்கற வமிழ்தம் பொழிந்தனையே ஆரமிழ்தமணி நாகர் குலமுய்ய வருளினையே. பாலிபாஷையில் நாகரென்றும், இபுருபாஷையில் இஸ்ரேலரென்றும், தற்காலம் சீனரென்றும் வழங்கும் ஓர் கூட்டத்தாருக் குண்டாயிருந்த விடுக்கங்களை யகற்றி ஆதரித்த புத்தபிரானைக் கொண்டாடுங் கூட்டத்தார் நாகை நாதர் வியார மென்னும் ஓர் கட்டிடங்கட்டி புத்ததன்ம சங்கமென்னு மும்மணிகளை ஆனந்தமாகக் கொண்டாடி வந்தார்கள். அதுபோல் வேலாங்கண்ணியம்மன் வியாரத்திலும் அம்மனா லோதியக் கொன்று தின்னாமை யென்னும் நோன்பை யும், 1.வாக்குகாப்பு, 2. மனோகாப்பு, 3. சேகக்காப்பு என்னும் மூவிரதங்களையும் அனுஷ்டித்து வருங்கால், தேகத்தால் யாருக்கேனு மோர் தீங்கு செய்து அத்தீவினை யால் தங்களுக்கோர் தீங்குண்டாகுமாயின் அம்மன் விரதத்தைக் கடந்த வபசாரத்திற்கு அங்கப்பிரதட்சணஞ் செய்து வந்து வேற்கண்ணி வியாரத்துள்ள பிட்சுவரிகளை வணங்கி யேழை களுக்கு, அன்னதானம் வஸ்திரதானங்கள் செய்தும், தன் நாவைக் காக்காமல் ஒருவரை வைதும், வடுகூறியும் வஞ்சித்தும், பொய் புகன்றுங் கெடுத்தத் தீங்கினால் தனக் குண்டான தீவினைகளை யுணர்ந்து வெள்ளியினாலேனும், பொன் னினாலேனுங் கம்பி செய்து குற்றஞ்செய்த தன் நாவுக்கலகிட்டு மோனத்துடன் வேற்கண்ணி வியாரம் வந்து பிட்சுணிகளை வணங்கி நாவினால் செய்த குற்றங்களை விளக்கி அலகை அதிபதிகளிடங் கொடுத்து அன்னதானம் வஸ்திரதானங்கள் செய்தும், தன் மனதைக் காக்காமல் போனப்போக்கில் விட்டு ஒருவரைக் கெடுத்தும் வஞ்சித்துங் காமவெகுளி மயக்கங்களைப் பெருக்கியுஞ் செய்த தீங்குகளினால் தனக்குண்டாய தீவினைகளை யுணர்ந்து வஞ்சத்தால் பொஞ்சித்தப் பொருட்களை வியாரத்துட் கொண்டு வந்து பிட்சுணி யதிபர்களிடமளித்து முப்பத்திரண் டறங்களையும் பரவச்செய்து வந்தார்கள். இத்தகைய தன்மராச்சிய நிறைவில் குறைவுதோன்றி கொள்ளை நோய் கண்டு பால பருவமுற்றப் பெண்களேனும் பிள்ளைகளேனும் பிராணாவஸ்தையி லிருக்குங்கால் தாய் தந்தையர்கள் ஆண்பிள்ளை யதி யவஸ்தையி லிருக்குமாயின் அரசமரத்தடியிலிருந்து அருளறம் விளக்கிய ஆதிதேவனைச் சிந்தித்து குழவி சுகமுற்றவுடன் துவராடை யணிந்து ஆண்ட வனுக் கடிமையென்று ஆண்பிள்ளைகள் மடத்திற் சேர்த்து விடுவதும், பெண்பிள்ளை யதி யவஸ்தையி லிருக்குமாயின் வேம்பு மரத்தடியிலிருந்து வேதவாக்கியங்கள் மூன்றையும் விளக்கிய விண்ணவர் முதல்வியை வணங்கிக் குழவி சுகமுற்ற வுடன் மஞ்சள் சரட்டை கழுத்தில் கட்டி மஞ்சளாடையுடுத்தி அம்மனுக் கடிமையென்று பெண்கள் வியாரத்தில் விடுத்து ஞானசாதன மடையும்படிச் செய்து, அச்சுதிருவென்றும், அம்மன் விழாவென்றுங் கொண்டாடி நீதிமார்க்கத்தை நிலைபெறச் செய்து வந்தார்கள். உள்ளத்துண்டா மூழதுக்கண்டோர் கள்ளத்துண்டக் கைப்பொருள் கொண்டும் அங்கங்கொண்ட வகவினைகண்டோர் துங்கங்கண்ட தூளிலுருண்டும் கலகமுண்டுக் காவாநாவில் அலகுமிட்டே வம்மைகாவ லூருள்ளாயி தீபங்கண்டும் பேருள்வேலின் கண்ணிவியாரம் போற்றியம்மை பொன்னடிவணங்கி யேற்றியெண்ணான் கறமதுமுந்தை உண்டி யீயந்து முயிரையோம்பர் பண்டைகாலப் பாங்கென்றெண்ணி கூழுமாவுஞ் சோறுங் கொண்டு ஏழைக்கங்கங் கீயந்து வளர்ந்தும் ஊழ்வினையற்றே வுளமகிழற்கு சூழறமொன்றே சூட்சியென்றுந் தேம்புமாறி தீக்குறிகண்டோர் வேம்படியம்மை வியாரம் விடுத்து ஞானசங்கை நாடொறும்வினவி மோனவரம்பை முற்றுமெழுப்பி அண்ணலறத்தை யருளி பண்ணவளறத்தை பகர்ந்தனன் மார்த்தன். ஒளவையார் கோவில் எங்குளதென் றறியவேண்டியவர் கள் மாயூரம் முத்துப்பேட்டை ரயில் பாண்டி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கில் 7-வது மயிலிலிருக்கும் வண்டுறைவாள் மாரியம் மன் ஒளவையார்க் கோவிலென்று கல்வெட்டில் எழுதியிருக்கு மவற்றாலும் அடியிற் குறித்துள்ள பாடலாலுந் தெரிந்து கொள்ளலாம். ** ஒளவையார் துதி** ஒரு பேயாகமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா. மாமேவு சோணாட்டு வளஞ்சேரி யும்பள நாட்டுத் தேமேவு வண்டுறைவாள் சேரியெனுந் திருப்பதியில். ** அராகம்.** மூதுரையென்றிசைக்கு நின்சொன்முதுமறையை நிகற்பதுதான் யாதுரையென் றிசைப்பனினி யெவனுரைக்கு மிவ்வுலகம் செல்வழி யீதென ஞாலந் தெளிந்திட நீ முனமுரைத்த நல்வழியே வழியாக நான் மறையு நடக்குமால், மிருதிநூ லாகமநூல் விளம்புவவெலாமுனநீ > கருதியருள் புரிந்துரைத்த கல்லூரியறவுரையால் >> எவ்வயினு மெனையவரு மிசைப்பதிடை நிகழ்த்துமொழி >> ஒளவையார்வசன மிதென்றறியாதாருளரேயோ. இவ்வகை அன்பும் அமைதியும் ஆற்றலுமுற்ற தன்ம ராச்சியத்தின் வடவெல்லை குமானிடர் தேசத்தின் ஓர்வகை மிலேச்ச சாதியார் வந்து குடியேறி யாசகசீவனஞ் செய்து கொண்டு வஞ்சினத்தாலும் மித்திரபேதத்தாலும் புத்ததருமங் களை மாறுபடுத்தி வந்து துமில்லாமல் புத்த தருமத்தைச் சார்ந்தவர் களையுந் தாழ்த்தி நிலைகுலையச் செய்யுங்கால், மகமதிய துரைத் தனத்தார் வந்து குடியேறி, மிலேச்சர்களின் மித்திரபேதத்தால் மகமதியர்கள் செய்துவந்த இடுக்கண்களுக் கஞ்சி திரிசிரபுரத் திலும் நாகை நாட்டிலு மிருந்து புத்த தருமத்தைப் பரவச் செய்து வந்த தமிழ் வித்துவான்களாகும் பாணர்களும் யாழுடன் இசைகலந்து பாடும் யாழ்ப்பாணர் களும் இலங்கை முதலிய தீவுகளுக்குக் குடியேறினவர்கள் நீங்கலாக மற்றக் குடிகள் மகமதியர் மதத்தைத் தழுவியும் நின்றுவிட்டபடியால், நாகை நாட்டு நாகை நாதர் வியாரத்திருந்த பொன் சிலைகளைத் திருடிக் கொண்டு போய் விற்பனைச்செய்து ஸ்ரீரங்கத்துள்ள புத்த மடத்தை மாறுபடுத்தி வேறுவகைக் கட்டிடங்களையும் மதில்களை யுங் கட்டிக்கொண்டார்கள். இதன் மத்தியில் போர்ச்சுசீய துரைத்தனத்தார் வந்து குடியேறிய போது வேற்கண்ணியம்மன் வியாரமும் பாழ டைந்து நிலைகுலைந்தும் வருடந்தோறும் ஆடி மாத பௌர்ணமி யில் அம்மனை தெரிசிக்கும்படி தூர தேசங்களிலி ருந்து வருங் குடிகள் வழக்கம்போல் வந்தும் திகைத்து நிற்பவர்களைக் கண்ட போர்ட்ச்சுசீய குருக்கள் அதே யிடத்தில் தங்கள் மதக் கோவிலொன்றைக் கட்டி அம்மனைச் சிந்திக்கும்படிச் செய்து அம்மன் பெயரால் வரும் தட்சணை திரவியங்களை தன்மஞ் செய்யாமல் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்கெடுத்துக் கொண் டிருக்கிறார்கள். இதன் சரித்திர பூர்த்தியைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் நாகை நாதர் பொன்விக்கிரகங்களை யபகரித் துக்கொண்ட சங்கதியை சிலாசாசன பதிவின் புத்தகத்திலுந் திருமங்கையாழ்வார் சரித்திரப் புத்தகத்திலுந் தெரிந்து கொள்வது டன் வேற் கண்ணியம்மன் வியார மாறலை க்ஷ சிலாசாசன புத்தகத்திலும் இலங்காதீவத்து வித்தியாதன சாலையிலுள்ள போர்ட்ச்சுகீயர் சரித்திரத்திலுந் தற்காலம் ஆடி மாதந்தோறும் நிறைவேறிவரும் அங்கப்பிரதட்சண வனுபவச் செயல்களினாலுந் தெரிந்து கொள்ளலாம். புத்த, தன்ம சங்கமென்னுந் திரி மணிகளையே திரி சிரமாகக் கொண்ட திரிசிரபுரத்தில் ஸ்ரீ அரங்கர்மடமென்றும் அழகர் மடமென்றும் வழங்கிய இந்திரவியாரமும் நாகப் பட்டிண நாகை நாதர் வியாரமும் மாறுபட்டது போல, தென்னிந்தியாவிலுள்ள இந்திர வியாரங்களையும் அரசு விழாக்களையும் அம்மன் உற்சாகங்களையும் பலவகையில் மாறுபடுத்திக்கொண்டு தன்மத்தைச் சாதித்து வந்தவர்களையுந் தாழ்ந்த சாதியாக வகுத்துத் தங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போதித்து தாழ்ச்சியடையச் செய்து தருமங்களையும் மாறு படுத்திவிட்டார்கள். அதாவது அரசு திருவென்றும் போதி பண்டிகையென் றுங் கொண்டாடி வந்த பௌத்தர்கள் அரசமரத்தை யெவ்விடத் திற் காண்கின்றார்களோ அங்கு சாக்கையமுநிவரைச் சிந்தித்து நீதிநெறியினின்று சுகவாழ்க்கைப் பெற்று வருவதை புத்த தன்மத் திற்குச் சாத்துருக்களாகிய பராயசாதியார் கண்டு அவற்றை மாறுபடுத்திக் கொடுக்க வேண்டுமென்னும் பொறாமையால் விவேகமற்றக் குடிகளை நெருங்கி நீங்க ளரசமரத்தடியில் சிந்திக்கும் முநியாண்டவனுக்கு ஆடேனுங் கோழியேனும் பலி கொடுத்து கள், சாராயம், அபினி, கஞ்சா, சுருட்டு முதலியவை களை வைத்துப் படைப்பீர்களானால் உங்கள் கோரிக்கை நிறைவேறும். அவ்வகை செய்யாமல் வெறுமனே சித்திப்பதால் யாது பயனு மடைய மாட்டீர்களென்று, மான் தோலைப் போர்த்திருக்கும் குக்கலைப்போன்று பெரிய மனிதனெனச் சொல்லிக்கொண்டு திரியும் மிலேச்சர்கள் வார்த்தையை கல்வியற்றக் குடிகள் நம்பி அரசுதிருவின் ஆனந்த சீலத்தை மறந்து கள்ளருந்துங் களவாணியில் நிறைந்து கேட்டுக்குப் போகும் வாசலைத் திறந்துகொண்டார்கள். அதுபோல் அம்மன் விழாவென்றும், வேம்புதிருவென் றுங் கொண்டாடுங்கால் கிராமத்தில் வாழுங் குடிகள் ஒவ்வொரு வரும் பத்து நாள் வரையில் கொலை, களவு, காமம், கள்ளருந்தல், பொய் முதலிய பஞ்சபாதகங்களை யற்றிருக்க வேண்டு மென்னுங் காப்புக்கட்டி ஒன்பது நாள் வரையில் அம்மன் உற்சாகமும் அறநெறியுமூட்டி பத்தாநாள் கிராமக் குடிகளில் வீட்டிற்கு ஒருவர் புதுப்பானைகளும் அரிசி முதலிய வைகளையுங் கொண்டு போய் அம்மன் பீடத்திலும் பொங்கல் வைத்து வாழையிலைகளைப் பரப்பி எல்லோர் பொங்கிய சாதங்களையுங் குங்கமிட்டு ஆறியப்பின் ஏழைகளைப் பசிதீர உண்பிக்கச் செய்து ஆனந்த கோஷத்துடன் அவரவர்க ளில்லங்களிற் சேர்ந்து சுகவாழ்க்கை யுற்றிருப்பதைக் காணும் பராய சாதியோர் இவ்வொழுக்கைக் கெடுக்க வேண்டுமென்னும் பொறாமை யினால் தங்களால் ஏற்படுத்திக்கொண்ட கசிமல சாதிக்கட்டு களினால் ஒருவர் பொங்கலை ஒருவருடன் சேர்க்கவிடாமலும், சாதங்களை ஒன்றாகக் கொட்டவிடாமலும் ஆடுகளையும் மாடுகளையுங் கோழிகளையும் பலி கொடுக்கும்படி செய்து நல்லொழுக்கங்களை மாற்றிவிட்டார்கள். இவ்வகைப் பாழுக்கெல்லாம் பராய ஜாதியாராகிய பார்ப் பார்களே காரணமா யிருந்து, பகவன் புத்தரையும், புத்ததர்ம போதகர்களையும், தர்ம சாக்ஷியக்காரர்களாகிய திருவள்ளுவ நாயனாரையும், ஒளவையார் என்னும் கிராமதேவியையும், புத்ததர்ம வொழுக்கத்தார்களையும் பறையர் பறையர் என்று இகழ்ச்சிச் செய்ததல்லாமல், சோழனாட்டில் செத்த மாடுகளைத் தின்னும்படிச் செய்தும், வதைத்தும் வந்திருக்கின்றார்கள். ** சாம்பவனார் ஞானவெட்டி 494-செய்** இவ்வித மென்றறியா ருலகினி லெந்தன் குலத்தை யிகழ்ச்சிகள் பேசினார் வந்தவிதி யென்றறியாத மாந்தர்கள் மாலப் பறையனென்றே சோழனூரினில் மாடுகள்செத்து மடிந்ததைக் கண்டவ ரோலமென்றே யதை யுண்ணும்படிச் செய்தார் பாடுபட்டுப் பலன்காணா தழியுமிப் பாவிகளெங்கள் பரநிலை காண்கிலர். என்று நம் மிந்திய சகோதரர்கள் புலம்பியிருக்கின்றார்கள். ஆரிய பார்ப்பனர்கள் நம் மூதாதைகளைச் செய்த உபத்திரவம் இத்தனை என்று சொல்லி முடியாது. மாடுகளை மந்தையில் மடக்கிவைப்பது போலும், கள்ளர்களைக் கழுவில் கொல்வது போலும், அரசர்களைக் கொண்டும் சீமான்களைக் கொண்டும், வெளியூர்களிலிருந்து இந்தியாவில் குடியேறிய கமதியர்களைக் கொண்டும், ஆங்கிலேயர்களைக் கொண்டும் நம்மை அடக்கி நமது ரத்தத்தையும் நமது சுயமரியாதையான பகுத்தறிவையும், நமது சுத்த சீலங்களையும் கரும்பிலிருந்து சாறு எடுப்பது போல் நம்மை நசுக்கிக் கசக்கி யழித்து, நமது தெய்வ சிந்தனையை மாற்ற வங்காள தேச இராணிக் கதையையும், மதுராபுரியைச் சார்ந்த கன்னகைக் கதையையுஞ் சொல்லி பூர்வ நம் மூதாதைகளை மயக்கி நம்மையும் நம் சேரிகளையும், பாழ்ப்படுத்தி விட்டார்கள். அம்மாதர்களின் விர்த்தாந்தங்களையும், நம் அம்மனுக்கு வழங்கி வந்துள்ள வர்ணனையையும் புகழையும் சீர்தூக்கிப் பார்ப் போமானால் மெய் விளங்காமற் போகாது. ** கிராம தேவி தோத்திரம்** திருவளரு மண்ணவர்க்கு முதல்வி நீயே தேடரிய விண்ணவர்க்கு மாதி நீயே குருபரனா லோதியமுப் பிடகந் தன்னை குவலயத்தோர்க் கோதுபிட கறியு நீயே கருமருவு வாணிசர சுவதி யாகி கலாசனத்தி வேம் படிய மர்ந்தோய் மருவுநெறி தன்மசங்க வடிய வர்க்கு வல்லபைநின் தீபவொளி யருளு மாதோ தீநெறி யுற்ற மனிதர்களை வழிபட்டு புத்தி கெடுவதை யெக்கழித்து, நன்னெறியுற்ற, நம்நாட்டு தெய்வ தர்ம சாக்ஷியக் காரியாகிய நம் அம்மனைப் பின்றொடர சுதேச தெய்வ தூதர்கள் வேண்டுகின்றோம். ** காளிகா தேவியின் சுருக்கக்கதை.** வட இந்திய பாகத்தில் வங்காளம், காம்போஜம், பப்பிரம் என்னும் மூன்று பெரு நகரங்களையும் சிற்றரசிகளையு மடக்கி அரசாண்டு வந்த காளி என்னு மரசி ஒருவளிருந்தாள். அவள் தன்னரசுக்குள் பல வீர செயல்கள் செய்தாள் அவளின் அரச வல்லபத்தையும் புத்தி கூர்மையையும் அறிந்த அவளினத்தார், அவள் மண்ணுலகை விட்டு மறைந்த பின்னர், அவளுக்கு வாகனம் சிங்கமென்றும், ஆயுதம் வாளென்றும், வல்லமையை பல புஜங்களென்றும் புகழ்ந்து, அரசர்களை ஜயிக்கத்தக்க வல்லமை அருளுகிறவளே என்று தங்கள் ஆயுதங்களை அவள் உருவச்சிலை முன்னில் வைத்து மிருகங்களை பலிகொடுத்து யாங்கள் வெற்றி யடைய வரங்கொடுங்காளி! சாமுண்டி மாதுர்க்கையே! என்று வணங்கினார்கள். இந்த மிருக உயிர்வதை பலி பூஜை வங்காள காளிகட்டட மென்னும் அவள் வசித்த அரண்மனையாகிய காளி கோயிலில் நாளது வரையிலும் நடந்தேறி வருகிறது. இக்காலத்தில் அவளை தெய்வமாக வணங்குகிறவர்கள், அவள் கோயிலில் சிதறிக் கிடக்கும் ரத்தங்களை நாக்கினால் நக்கி வருகிறார்களென்றும், தங்கள் சேலையிலும் சீலையிலும் மூலை முடக்குகளிலுள்ள ரத்தத்தை ஒற்றி யொற்றி யெடுத்து அத்துணியை உருஞ்சுகிறார்கள் ளென்றுந் தெரிகிறது. இத்தகைய அநாகரீகத்தை தெய்வ பிராட்டியாகிய ஒளவையாரான நம்கிராம தேவிக்குச் செய்வது எட்டுணையும் பயனடையக்கூடிய வழியும் அன்பு பெருகக்கூடிய சீலமு மாகாவாம். பரம்பரையான நன்னெறி போதங்களைத் துறந்து குரும்புத்தனமான காரியங்களைச் செய்து அழிவுக்கும், மதிமயக்கத்திற்கும் ஆளாகுதல் பாரதமாதாவைப் பழிப்பதாகும். காளிகாதேவி பெயரில் தான் ஆயுதபூஜை பண்டிகையும் நடந்தேறி வருகின்றது. காளிக்குதான் பலியிட்டார்களே யொழிய, அம்பிகையம்மனுக்கல்ல வென்றினியேனும் அறிந் தொழுகக் கோருகின்றோம். இதுவே காளியம்மன் சுருக்கக்கதை கிராம தேவிக்கு வழங்கிய பெயர்களில் காளியம்மனென்பது மொன்று. அம்பிகா தேவியின் பெயர் பெற்றவள் காளி அரசியாகும். ** கன்னகாபரமேஸ்வரியின் சுருக்கக் கதை** அம்மன் உற்சாகத்திற் செய்யும் நல்லொழுக்க தானங்கள் தீயொழுக்க நிலைக்கு மாற்றி வைப்பதற்கு, இக்கன்னகை சரித்திரமே ஒரு ஆதரவாகக் கொண்டார்கள். எப்படி எனில், அம்பிகையம்மன் நிர்வாணத்திற்கு நெடுங் காலங்களுக்கு பின் மதுரையில் கோவலன் மனைவி கன்னகை யென்பாளின் சிலம்பினால் கோவலனுக்கு நேரிட்ட துன்பத்தை ஆற்றாமல், அவள் தனது ஒரு புறத்து மார்பைத் திருகியெடுத்து உதிரத்துடன் அரண்மனை மேல் வீசிய சாபத்தினால், பத்தினி விரத கோபம் பற்றி அரண்மனை பாழடைய நேரிட்ட காலமும் அக்கோபா வேசந்தணிய ஆயிர மனிதர்களை பலியளித்தகாலமும், ஆடி மாத மாகையால், அக்காலத்தில் கன்னகையை வருஷந்தோறுஞ் சிந்திப்பவர்கள் மனித பலியைத் தவிர்த்து ஆடு மாடுகளை பலிகொடுத்ததால் அதையொரு ஆதாரமாகக் கொண்டு நெடு நிதியாகும் ஒளவையாரின் சுத்த தன்மத்திற் சேர்த்து பாழாக்கி விட்டார்கள். ** சிலப்பதிகாரம் காதை 23-24.** கோமுறை யரைந்த கொற்ற வேந்தன் றான் முறை பிழைத்த தகுதியுங் கேளீர் ஆடி திங்கள் பேரிருள் பக்கத் தழல் சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண வுறைசால் மதுரையோ டரசுகே டுறுமெனும் நிறங்கிள ரருவிப் பரம்பின் றாழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி. யீரே தொண்டகத் தொடுமின் சிறுபறை தொடுமின் கொடுவாய் வைம்மின் னெடுமணி யியங்குமின் குறிஞ்சி பாடுமின் னறும்புகை யெடுமின் பூப்பலி செய்ம்மின் காப்புக்கடைநிறுமின் பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் ஒருமுலை யிழந்த நங்கைக்கு பெருமலை வஞ்சாது வளஞ்சுரக் கெனவே. கோவலன் மனைவி கன்னகை யென்பவளுக் குண்டான கோபாவேசத்தை யடக்குதற்கு ஆயிரங் கொல்லர்களை பலி கொடுத்து விட்டு, மதுரையில் கன்னகை பீட மமைத்து மனிதர் பலிக்கு பதிலாக ஆடு, மாடு, கோழி முதலியவைகளை பலி கொடுத்து வந்தார்கள். ** சிலப்பதிகாரம் காதை 27 வரி 127.** கொற்கையி லிருந்த வெற்றிவேர் செழியன் பொற்றொழிற் கொல்ல ரீரைந் நூற்றுவ ரொருமுலை குறைத்த திருமா பத்தினிக் கொருபக லெல்லை யுயிர்பலி யூட்டி. கிராம தேவதையாயிருந்து ஊர்க்குடிகளைக் காப்பாற்றும் வாக்களித்தவள் கன்னகை யல்ல. இக் கன்னகைக்குச் செய்யும் தீய வழக்கங்களை தீயர்கள்தான் கையாள வேண்டுமே யொழிய நியாயவான்கள் செய்யத் தகுந்ததல்ல. இதுவே கன்னகையின் சுருக்கக்கதை. நம்கிராம தேவிக்கு வழங்கிய பல பெயர்களில், கன்னகை யென்பதுமொன்று. அம்பிகாதேவியின் பெயர் பெற்றவள் கன்னகைப் பத்தினியாகும். காளி என்பவளும் கன்னகை என்பவளும் தெய்வ நிலையுடையவர்களல்ல. தெய்வங்களுக்குடைய சுசீலங்கள் இவ்விரு மாதர்களுக்கு மிருக்குமாயின் இவர்களைத் தெய்வமாகக் கொண்டாட நியாய முண்டாகும். அந்நிலை இல்லாதபோது இவர்களைக் கொண்டாட நியாயமில்லை. அப்படிக் கொண்டாடு வதிலும், இவர்களுக்கு உயிர்பலி கொடுத்திருப்பதாக சரித்திரம் கூறுவதால், இவர்களும் இவர்களைக் கொண்டாடியவர்களும் மிருகத்தன்மைப் பொருந்தியவர்களென்றொதுக்கி தெளிதலில் கூறுவனவற்றைக் கைக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளு கின்றோம். ** தெளிதல்.** புத்த தன்மத்தைக் கைப்பிடித்து அரசு செய்த மன்னர்கள் காலத்தில் ஏதொரு விசாரணையற்ற விஷயங்களும் நடந்ததே கிடையாது. அப்படி நடந்தாலும் அதை எடுத்துரைக்க பல குருமார்களும் பல சங்கங்களும் இருந்தது. அக்காலத்தில் பௌத்த நீதிகள் விளக்கமாக எல்லா மக்களிடத்திலும் வித்தியாசமின்றி கையாடி வரப்பட்டது. அப்படி தர்மம் சிறந்திருந்த நம் மிந்திய நாட்டில், சங்கத்தைச் சார்ந்து துறவடைந்து நிர்வாணமுற்ற ஆண்மக்களை தேவர்களென்றும், பெண் மக்களை தேவிக ளென்றும், கொண்டாடி வந்தார்கள். ** சிலப்பதிகாரம், வாழ்த்துக்காதை பக்கம் - 576** போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழி மணிமேகலை துறவுங் கேட்டாயோ தோழி. இந்திரன் தர்ம சாக்ஷியக்காரர்களில் ஒளவையாரைப் போல் ஓடேந்தி மடத்திற் சேர்ந்து பிக்ஷிணி, நிலையடைந்த மாதவியின் மகள் மணிமேகலை என்பவள், நிர்வாணமடைந்து சாந்ததேவிகளில் ஒருவளாக விளங்கிய போது கம்பன் மகன் அம்பிகாபதி என்பவன் மணிமேகலா தெய்வத்தை தன் மனதினால் சிந்தித்துள்ளான். ** அம்பிகாபதி மணிமேகலா தெய்வத்தை தியானித்த பாடல்.** காதன் மடந்தையர் கையறுங்க காலையு மெய்யகலா மேதகுநாணு மெலியவன்றோ விழிப்போலு நெய்தல் போதவிழ்மென் மலர்ப்புன்னை யங்கானல் பொருந்துமிந்த மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே இத்தகைய பாரத தேச சத்திய தர்ம தேவிகளையும் தேவர் களையும் வணங்கியது போலவே, நம் மணிமேகலையும் கிராம தேவியாகிய இவ்வம்பிகை யம்மனை சிந்தித்துள்ளார். ** மணிமேகலை, காதை 14- வரி 17.** சிந்தாதேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே நாமிசை பாவாய் வானோர் தலைவி மண்ணோர் முதல்வி யேனோ ருற்ற விடர்களைவாயெனத் தான்றொழு தேத்தித் தலைவியை வணங்கி இவ்வகைத் தொழுகையில் சற்குருவையும், அம்மனையுஞ் சீலத்தொழுகையால் சிந்திக்குந் தோரும் புட்பங்களைக் கொண்டே யர்ச்சித்து வந்தார்கள். ** மணிமேகலை காதை -10 வரி 3.** விரைமலரேந்தி வீசும்போடிழிந்து பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென வந்து தோன்றிய மணிமேகலா தெய்வ முந்தை பிறப்பெய்தி நின்றோள் கேட்ப. ** சீவகசிந்தாமணி செய் - 910.** தண்ணந்தீம்புன லாடியதண்மலர் வண்ணவார்தளிர்ப் பிண்டியினானடிக் கெண்ணியாயிர மேந்து பொற்றாமரை வண்ணமாமல் ரேற்றி வணங்கினாள். சற்குரு நாதனையும், ஒளவையையுந் தாமரைப் புட்பத்தைக் கொண்டு அர்ச்சித்து வந்தபடியால் மடங்களைச் சார்ந்தக் குளங்களிலெல்லாம் தாமரைச் செடிகளை வளரவிட்டு அக் குளத்தை தாமரைக் குளங்களாக வழங்கினார்கள். பூர்வ பெரியோர்களெல்லாம் சீலத்தில் நிலைத்து ஞானத் தாயைப் போற்றி வந்திருக்க, இக்கால சில போலி ஜாதிகள், அம்மன் கூறிய திரி சீலமென்ற வாக்கை திரிசூலமென்றும், அம்மன் தாய்மாமனால் இல்வாழ்க்கைக் கல்லாமல், குறிப்பு விளங்க கட்டிய பொட்டின் நற்கருத்தை மாற்றி தாய்மாமனுக்கு பெண்களை வாழ்க்கைப் படுத்தி முறை கெடுப்பதும், அம்மன் பெயர் சொல்லி, பொட்டு கட்டி கோவில் தாசிகள் என்று பெயர் வைத்து பெண்களை விபசாரிகளாக்குவதும், அம்மன் அடியார் கள் புட்பத்தால் அர்ச்சித்த காலை அம்மன் உருதெரியாமல் புட்பங்களால் மூடப்பட்டதே கரகமென்று முற்காலத்தில் வழங்கி யிருக்க, அதை இக்காலத்தில் தங்கள் ஜீவனத்திற் கிசைந்த விதமெல்லாம் மாற்றியும், கொலை, களவு, காமம், பொய், கள்ளருந்தல் முதலாய பஞ்சமா பாதகங்கள் நிறைந்த ஆண்கள் மேலும் பெண்கள் மேலும் அம்மனே வந்து ஆடி பாடி குறி சொல்வதைப் போலும் நடித்து, அம்மன் மகிமையை நாசனம் செய்து, நம் சகோதரி சகோதரர்களை யெல்லாம் கிறிஸ்து மார்க்கத்திலும் மகமது மார்க்கத்திலும் சேர்த்து வருகிறார்கள். தசபாரமிதை சக்கர முருட்டிய ஸ்ரீ புத்தர் தர்மத்தை மாறு படுத்தி மிலேச்ச வேஷ பிராமண மதத்தை நாட்டிய பராய ஜாதியோர், வஞ்சக போதத்தை யறியா பேதை மக்கள், சாந்த தேவியின் சுத்த சீல மெய்யறத்தை மறந்து தாங்கள் செய்யுந் துற் கன்ம தீங்குகட்காய்த் தோன்றும் தீவினைகளைக் குறைத்துக் கொள்வதற்கும், மிருகம், பஷி, ஸ்தாவர கனி வர்க்கங்களின் மேல் மாற்றி விடுவதற்கும், ஆடுகளையும், கோழிகளையு மறுத்து அம்மனுக்கு பலி கொடுத்து, முன் செய்த தீவினையுடன் ஜீவராசிகளைக் கொல்லுந்தீவினையுங் கூட்டிக்கொண்டு, தங்கள் கிராமத்தைப் பாழடையச் செய்வதுடன் தாங்களும் பாழடைந்து போகின்றார்கள். இதை மிருகங்களே மனிதற்கு புத்தி புகட்டுவதாக நம் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ** பெருந்திரட்டு.** உங்கள் மக்களும் நீங்களும் நோய்பட எங்கள் மக்களும் யாங்களு மென்செய்தோம் உங்கள் தீவினை யோடு முதவியாய் எங்கள் தீவினை யேற்பது திண்ணமே. ஒருவன் ஒரு மிருகத்தைக் கொல்ல முயற்சித்து வரும் போது, அது அம்மா வென்று அலறும் சப்தத்தைக் கேட்டுச் செல்லும் மனிதர்களுக்கே நரக தண்டணை யென்று நம் மூதோர் கள் கூறியிருந்தால், அம்மிருகத்தைக் கொல்பவனுக்குண் டாகும் துன்பத்தைப்பற்றி நாம் சொல்ல வேண்டுமோ! ** சிவஞான வள்ளலார்** அம்மா வென்றலர வாருயிரைக் கொன்றருந்தி இம்மானிடரெல்லா மின்புற்றிருக்கின்றார் அம்மா வெனுஞ்சத்தங் கேட்டகன்ற மாதவர்க்கும் பொய்ம்மா நிரையமெனிற் புசித்தவர்க்கென் சொல்லுவதே. சில வருடங்களுக்கு முன் பக்ஷிகளையும் மாடுகளையும், குதிரைகளையும், ஆடுகளையும், மச்சங்களையும், சுட்டுத்தின்றுச் சோம்பேறிகளாய்த் திரிந்த மிலேச்சர்கள் மேன்மக்களாயதும், ஒழுக்கம், சீலம், ஞானம், விடாமுயற்சி, கருணை, ஈகை முதலிய நற்குணமிகுந்த விவேகிகள் கீழ்மக்களாயதுங் காரணம், அடிமை வாழ்வும் சுயமரியாதை யறியா விசாரணைக் குறைவு மேயாம். ஆடிமாத ஆதிவாரம் பௌர்ணமியில் சிந்திக்கும் ஒளவை யாராம். கிராம தேவி இயற்றியுள்ளத் திரிவாசகமாகும் நீதி நூலில் “புலையுங். கொலையுங் களவுந்தவிர்” என்று கூறியிருக்க அவ்வம்மனை சிந்திக்கும் நாம் ஆடுகளையும், கோழிகளையும், அவளுக்கு பலி கொடுத்தால் ஏற்பளோ? ஒருக் காலு மேற்காள். பெளத்த தர்மசுத்த சீலர்களின் குல தேவதை யாக விளங்கிய சாந்த தேவிக்கு மன சிந்தனையை விடுத்து உயிர்வதையும், ரத்த பலியும் கொடுப்பதினால், அம்மன் நிருவாணகாலத்திற் கொடுத்திருந்த வாக்கும் மயங்கி, கிராமங் களும் சீர்குலைந்து உள்ளக் குடிகளும் நாளுக்கு நாள் பாழடைந்து வருகின்றார்கள். இன்னம் சிலர் அம்மனை நாங்கள் மெய்யாக தொன்று தொட்டு பூஜித்து வருகிறோம் என்பார்கள். ஆனால் அம்மன் புத்த சுவாமியை சிரசிலேந்தியதின் காரண மறிவார்களா? அப்படிய றிந்திருந்தால், இவர்கள் அம்மனை பூங்கரகமாக ஜோடித்து தங்கள் சிரசிலேந்தி தெருவில் திரிவார்களா? இல்லை. பூவாடை காரியாகிய அம்மன் புத்தரை யேந்தியது அவருடைய தர்மத்தை சிரசிலேந்தியதே. அப்படியே நம் சகோதரர்களும் அம்மனை சிரசிலேந்தினால் அம்மனடைந்த புத்த தர்மத்தை நாமடைய வேண்டியதே காரணமாகும். ஆகையால் அன்பர்கள் அம்மன் சிரசிலேந்திய புத்த தர்மத்தை ஒவ்வொருவரும் கைக்கொள்ள கோருகிறோம். ** அம்மன் சரிதத்தை ஒவ்வோர் மதத்தோர்களும் மாற்றிக் கொண்டுள்ள விவரம்.** உலகமாதா, வானவர்முதல்வி, அம்பிகை முதலிய பெயர்களை சிவன் மனைவிக்கும், நித்ய செல்வி, வாழ்வலங்காரி, பாக்யவதி, இலக்குமி முதலிய பெயர்களை விஷ்ணு மனைவிக்கும் சரஸ்வதி, கல்விக்கரசி, ஞானத்தாய் முதலிய பெயர்களை பிரமன் மனைவிக்கும் சூட்டிக்கொண்டார்கள். அம்மன் விவாக சரித்திரம் அம்மன் ஆண்டவனைச் சுமந்த சரித்திரம் இவ்விரண்டும், மரியாள் பெயரால் மாற்றிவைத்திருப்ப தல்லாமல் காளிக்கும் கன்னகைக்கும், சில பெயர்களைச் சூட்டி விட்டார்கள். சிலர் அம்மன் நித்திய கன்னிகையாக இருந்ததைக் கொண்டு கற்பலங்காரி என்றும், அம்மன் பானைச் சிரமேந்தி யதை பானை ஈன்றவ ளென்றும், பானை யீன்றும் கன்னிசுத்தம் கெடவில்லை என்றும் சொல்கிறார்கள். முற்காலத்தில் அம்மன் விவாக நியமனத்தை எடுத்தாண்டுக் கொண்டிருந்தவர்கள், இக்காலத்தில் வேண்டாமென்று நீக்குகிறார்கள். சிலர் அம்மனை, ஆதியென்ற பறைச்சிக்கும், பகவனென் னும் பார்ப்பானுக்கும் பிறந்தவள்; பறை வள்ளுவனுக்கு தங்கை என்றும் பரிகசித்து புத்தக மெழுதி வைத்திருக்கின்றார்கள். அம்மன் இன்னும் பல விஷயங்கள் பேசியதாகவும் செய்ததாக வும் பல பொய்க்கதைகள் படைத்திருக்கின்றார்கள். இன்னுஞ் சிலர், பிர்மனுடைய மனையாளே! அவ்வை யாராக அவதார மெடுத்தாளென்றும், தமிழர் சங்கத்தை வென்றாளென்றும் பற்பல பொய்யாதரவுகளைப் புகுத்தியதல் லாமல் நாகைநாட்டு வேற்கண்ணி அம்மன் வியாரத்திற்கு வருடந்தோறும் வருபவர்கள் மயங்கி மாரியாற்றியவளைக் காணாமல், போர்ச்சுகீயர் கொணர்ந்த மேரி அம்மாள் கோவிலில் தஞ்சம் அடைந்து பிறகு சிறுக சிறுக, ரோமான் கத்தோலிக்க வேதக்காரர்களாக மாறுபட்டு வேல்கண்ணி வியாரம் பெயரை வேளாங்கண்ணி, வேலாங்கண்ணி என்றும், நாகைநாட்டார் மாறியை சுகம் செய்த ஆரோக்கிய அம்மனை ஆரோக்கிய மரி என்றும், புறட்டிக் கொண்டார்கள். இப்படி ஒவ்வொரு வேதக்காரர்கள் காலத்திலும் மாறுபட்ட அம்மன் சரித்திரம். இக்காலத்தில் பௌத்தர்களுக்குரியதென்று துணிந்து சுதந்திரம் கொண்டுள்ள சுயமரியாதை சகோதரர்களுக்கு உள்ள ஊக்கமும் உண்மை சாதனமும், ஓங்க தாழ்த்தப்பட்ட சகோதரர் கள் உதவி புரிவார்களாயின் நம்மைக் கெடுத்து வரும் பார்ப் பனர்களை அடியோடே துலைத்து தேச தெய்வத்தையும் தேச சகோதர ஒற்றுமையையும் அன்றே பெற்று நீடூழி வாழலாம். அம்மன் துறவறத்தில் நின்று தர்மம் போதித்தபடியால், அம்மன் குருவாக விளங்கிய பேரற மகுத்துவத்தையும் தெய்வீக வாக்ய சீலங்களையும் நாம் கொண்டாடி துதிக்க வேண்டிய கடமையிருக்க இதை மறந்து திரிசீலத்தை திரிசூலமென்றும் அதற்கு காலிநூல் போடுதல் அம்மனுக்கென்று கரகம் வைத்தல், அம்மன் வந்தாளென்று ஆடு கோழியின் ரத்தங் குடித்தல், வீடு வீடாக அம்மன் பெயரில் லஞ்சம் வாங்குதல், அம்மனுக் கடிமையென்று சிறுமிகளை வீட்டில் வைத்து அவர்களால் பிழைத்தல், அம்மன் குறிச்சொல்லுவாள் என்று மனிதர்களை ஏமாற்றல், சூலம் அம்மன், மலையேறி அம்மன், துவாபர அம்மன், மாரியம்மன், காலியாட்டம்மன், காணக்கால் அம்மன், சவாரி அம்மன், முதலிய இல்லாத பொய்ப்பெயர்களைச் சூட்டி அதனால் ஜீவிப்பதும், அம்மனுக்கு இல்லறத்தில் நடந்த பொட்டு கட்டும் கிரியையும், அவசர நிமித்தமாக தாய் மாமனால் பொட்டுக் கட்டும் நியமன தர்மகாரியத்தின் கருத்தரியாமல், தன் குமாரத்தி போன்ற தமைக்கை குமாரத்திகளையே விவாகம் செய்து முறை பிறழ்ந்து வருவதும் அம்மனை அவமதிப்பதாகும். நம் பாரதமா தாவை மெய்யாக வழிபடுபவர் நாமாயின், அம்மன் துறவரத்தில் நின்று போதித்த உண்மையையும் அம்மன் கைக்கொண்டிருந்த புத்ததர்மத்தையும் நாம் கைப்பற்றுவதே அம்மனை துதிப்பதாகும். சகோதர சகோதரிகள். இனியேனும் நம் கிராமதேவியை சுத்த சீலத்தில் தியானிக்க, சுயமரியாதையை அபிவிர்த்தி செய்யும் சுதேச தெய்வ தூதர்கள் வேண்டுகின்றோம். ** வாழி விருத்தம்** வாழி வேம்படி யம்மையறசிச் செல்வி வாழி யம்பிகை வல்லபை வாழியே வாழியே வளர் சங்க சாக்கை தேவி வாழியே தர்மம் நீடூழி வாழியே. ** சம்பூர்ணம்** ** சுதேச தெய்வ தூதர்கள் சங்க, ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலை.** ** அயோத்திதாஸப் பண்டிதர் (1845 - 1914)** அண்ணல் அம்பேத்கர், பௌத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்தவரான அயோத்திதாஸப் பண்டிதர் கோவை மாவட்டத்தில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் காத்தவராயன். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் தனது குருவான அயோத்திதாஸ் கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார். தமிழில் மிகுந்த புலமை கொண்டிருந்த பண்டிதர், பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். 1870 வாக்கில் நீலகிரியில் அத்வைதாந்த சபையை நிறுவினார். 1891-ல் திராவிட மகாஜன சபை அயோத்திதாஸப் பண்டிதரால்தான் நிறுவப்பட்டது. சிந்தனையாளர்கள் மதிக்கும் மேதைமையோடு விளங்கிய பண்டிதர், ஒடுக்கப்பட்ட மக்களின் பால் பேரன்பு கொண்டவராயிருந்தார். அம்மக்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டப் பாடுபட்டார். சென்னையில் அந்தக் குழந்தைகளுக்காக இலவச பள்ளிக்கூடங்களை துவக்க உதவினார். 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி ‘’ஒரு பைசா தமிழன்’’ என்ற வாரப் பத்திரிகையை அவர் துவக்கினார். அயோத்திதாஸப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட சாக்கிய பௌத்தர்கள் சங்கம் தமிழ் சமுதாயத்தின் சமூக அரசியல் போக்கையே மாற்றியமைத்தது. தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் குறித்தும் அயராது எழுதிவந்த பண்டிதர் அரிய தமிழ் நூல்களை பதிப்பித்தும்; தமிழ் இலக்கியங்களுக்கு குறிப்பாக வள்ளுவர், ஔவையார் ஆகியோர் படைப்புகளுக்கு பௌத்த மார்க்கத்தின் கோணத்திலிருந்து புதிய விளக்கங்களை எழுதியும் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார். தமிழில் அதுவரையிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல அவரால் புது விளக்கமும், கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாஸப் பண்டிதர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்தவாதியாக, அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர். தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் சிந்தனையில், நடைமுறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் இவர். ** தலித் சாகித்ய அகாடமி** FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.   ------------------------------------------------------------------------ 1. இச்சரித்திரம் ஒளவையால் அருளிய திரிவாசகத்தில் பார். விலை அணா-6↩︎